Kudi Arasu — 1938, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1938-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 27
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1938-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 344
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
சிறையிலிருந்த பெரியார் நீதிக்கட்சி தலைவரானார்
பெரியாரின் சுயமரியாதை - சமதர்மப் பிரச்சாரம் - தீவிரமாகப் பரவிய காலகட்டம்; பார்ப்பனரலலாதார் எதிர்ப்பு உணர்வு அலை சுழன்று வீசியது: சென்னை மாகாணத்தில் ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் 8 பேர்; சட்டமன்றத் தலைவர், மேலவைத் தலைவர் உள்ளிட்ட 10 பதவிகளில் 6 பேர் பார்ப்பனர்கள். தமிழகத்தில் மூண்டெழுந்த பார்ப்பனரல்லாதார் எழுச்சிக்கு எதிர்வினையாக: ராஜகோபாலாச்சாரி, சென்னை மாகாணத்தில் இந்தியை பள்ளிகளில். கட்டாயப் பாடமாக்கி உத்தரவிட்டதை எதிர்த்து, கிளர்ச்சி சூடு பிடித்தது. அப்போது இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் ஆட்சிதான்.
நடந்தது. ஆனால், இந்தியை கட்டாயப் பாடமாக்கிய ஒரே ஆட்சி ஆச்ளரியார் ஆட்சி தான் என்பதே ஆச்சாரியாரின் உள்நோக்கத்துக்கு சான்றாகும்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காங்கிரசாருக்கு எதிராக பயன்படுத்திய கிரிமினல் திருத்த சட்டம் என்ற கொடூரமான தடுப்புக் காவல் சட்டத்தை. இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய ராஜகோபாலாச்சாரி,
எடுத்து அடிக்க வேண்டியது தானே” என்ற இழிவான உதாரணம் கூறி, நனது பார்ப்பன வெறியை வெளிப்படுத்தினார்: பிரதமர் வீட்டுக்கு மூன் (அன்றைய முதல்வருக்கு பெயர்) ஆச்சாரியார் ஆட்சி ஒழிக! என்ற முழக்கமிட்ட "குற்றத்துக்காக! - மாதக்கணக்கில் தண்டனை வழங்கப்பட்ட இந்தி எதிர்ப்பாளர்கள் சிறையில் கேப்பை கூழ், களி வழங்கப்பட்டு, மொட்டை அடிக்கப்பட்டு சிறை உடைய அணிய உத்தரவிடப்பட்டு, கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். காங்கிரஸ் பார்ப்பன தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி - ராஜ துரோக குற்றத்தில் இந்தி எதிர்ப்பாளர்களைக் கைது செய்து தூக்கில் போட வேண்டும் என்று பேசினார். 'ஆனந்த விகடன்", 'தினமணி' பார்ப்பன நாளேடுகள் - இந்தி எதிர்ப்பாளரைக் கடுமையாகத் தாக்கி எழுதின. 'இந்தி எதிர்ப்பாளரை ஒடுக்க சர்க்காரைத். தூண்டிக் கொண்டே இருந்த தினமனி', “இந்தி எதிர்ப்பாளரை கொல்லவும் பாமர மக்களுக்கு மறைமுக உபதேசம் செய்தது.
இந்தியை எதிர்த்து 50000 பேர் திரண்ட சென்னை கடற்கரைக்
கூட்டத்தில், “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன் வைத்த பெரியாரின் வரலாற்றுப் பேருரை இத் தொகுதியில் தான் இடம். பெற்றுள்ளது. மதவாதிகளின் பிரதிநிதியாக மறைமலை அடிகளும்; காணான் கரற்றிறயாக R நாரதா SR பிரதிநிதியாக ஈ.வெ. ராமசாமி பெரியாரும் இணைந்து முன் வைத்த தமிழ்நாடு விடுதலை முழக்கம் தமிழ்நாட்டின் “பூரணமான அபிப்பிராயம்” என்று 'குடி அரசு' எழுதியது. திருச்சியில் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் படையின் வழியனுப்பும் விழாவில் காங்கிரசார் புகுந்து “காந்திக்கு ஜே” போட்டு குழப்பம் விளைவித்ததைக் கண்டித்த பெரியார், “நான் பயந்து விட்டேன். போலீசும் தென்படவில்லை. நமக்கோ நம் ஆள்களுக்கோ. பந்தோபஸ்து இல்லை என்று நான் கவலைப்படவில்லை. ஆத்திரத்தோடு. கைகலக்க ஏற்பட்டால் எதிரிகள் கதி என்னவாகும்? அப்புறம் இந்தி எதிர்ப்பாளர்கள் பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொல்வதா?” என்று பேசியிருப்பது, இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை, பலாத்காரம் இன்றி. நடத்திச் செல்வதில் அவர் பெரிதும் கவலை கொண்டிருந்ததை உணர்த்துகிறது. இந்தி எதிர்ப்புப் போரில் 73 பெண்கள், 32 குழந்தைகள். உட்பட 1269 பேர் சிறைப்பட்டனர். சி.டி. நாயகம், ஈழத்து சிவானந்த அடிகள், அறிஞர் அண்ணா, பாவலர் பாலசுந்தரம் போன்றோரும் சிறையேகினர்.
தமிழர்களின் ஒருமித்த பேராட்டமாக முன்னெடுக்கப்பட்ட “இந்தி எதிர்ப்பை” எதிர்கொள்ள முடியாமல் திணறிய ராஜகோபலாச்சாரியின். ஆட்சி, படிப்படியாக இந்தித் திணிப்பில் இறங்கி வந்தாலும் போராட்டம். உறுதியாகத் தொடர்ந்ததோடு பெண்களும் களத்தில் இறங்கினர். சென்னை ஒற்றைவாடைக் கொட்டகையில் தமிழ்நாட்டுப் பெண்கள். 13.11.1938 இல் நடத்திய மாநாட்டில் பெரியார் தமிழ்நாடு விடுதலைக்கு பெண்களை போராட அழைத்த உரையும் - இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. ஈ.வெ.ரா.வுக்கு பெண்கள் பெரியார் பட்டம் தந்தது இம்மாநாட்டில்தான்.
“குடி அரசு, 'விடுதலை: ஏடுகளின் வெளியீட்டாளர் - ஈ.வெ.கிருஷ்ணசாமி, 'விடுதலை' நாளேட்டின் ஆசிரியர் பண்டித எஸ். முத்துளமிபிள்ளை ஆகியோர் மீது பெரியார் பேச்சுகளை வெளியிட்டதற்காக
ராஜ துரோகம்- வகுப்புதுவேச குற்றச்சாட்டுகளை சுமத்தி அரசு கைது செய்தது. தொடர்ந்து பெரியார் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டுப் பெண்கள். மாநாட்டிலும், அடுத்த நாள் சென்னை பெத்துநாயக்கன்பேட்டையிலும் பெரியார் பேசிய இரண்டு பேச்சுகளும் குற்றமாகக் கருதப்பட்டு 2 ஆண்டு கடுங்காவலும், 2000 அபராதமும் கட்ட தவறினால் ஒரு. ஆண்டு கடுங்காவல் தண்டனையும் நீதிமன்றம் விதித்தது. பெரியார். அபராதம் கட்டாது 3 ஆண்டு தண்டனையை ஏற்றார். வழக்கம்போல்.
வழக்காடாமல் வாக்குமூலம் ஒன்றை நீதிமன்றத்தில் பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு கட்டுப்பட்ட பார்ப்பன நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காது என்று குறிப்பிட்ட பெரியார்,
“கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ” அவ்வளவையும் தருமாறும், பழிவாங்கும் உணர்ச்சியோடு, “எவ்வளவு தாழ்ந்த வகுப்புகொடுக்க உண்டோ அதையும்” கொடுக்குமாறும் பெரியார் தனது வாக்குமூலத்தில்.
குறிப்பிடுகிறார். காங்கிரசில் இருந்த போதும் சரி, அதை விட்டு வெளியே வந்த போதும் சரி, ரகசிய போலீஸ் கண்காணிப்புக்கும், ராஜதுரோக குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி வரும், தன்னை தேசத் துரோகி என்று கூறுவதும் - வெள்ளையர்களுக்கு நல்ல பிள்ளையாக அவர்களோடு கூடி குலாவிடும் பார்ப்பனர்களை தேச பக்தர்கள் என்று கூறுவதும் என்ன நியாயம் என்ற கேள்வியை பெரியார் எழுப்பி, தன் மீது சுமத்தப்படும்.
“தேசத் துரோகி' குற்றச்சாட்டுக்கு பதிலடி தருகிறார். தனது 20 வருட பொது வாழ்க்கையில் பேசிய ஆயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களில் கலவரங்களால் மிரட்டி, தனது உரையை நிறுத்த முடியவில்லை என்று ௯றும் பெரியார், தான் பேச முடியாமல் திருப்பி வந்த கூட்டங்கள் இரண்டு மட்டுமே என்று குறிப்பிடுகிறார். அய்யம் பாளையம் (பட்டிலீரன்பட்டி அருகில்), சென்னிமலை ஆகிய இந்த இரண்டு ஊர்களில் தனது கூட்டங்கள் நிறுத்தப்பட்டதற்கான காரணங்களை விளக்குகிறார்.
சிறையிலிருக்கும் போதே பெரியாரை - நீதிக்கட்சி தனது தலைவராக சென்னையில் டிசம்பர் 29, 30 இல் நடந்த மாநாட்டில் தேர்ந்தெடுத்தது. இத்தனை வரலாற்றுப் பதிவுகளோடும் உண்ணாவிரதப் போராட்டம், துருக்கி நாட்டின் சீர்திருத்தவாதி கெமால்பாட்சா மறைவு, மகாத்மா: புரட்டு, காந்தியாரின் வார்தா கல்வித் திட்டம், ரக்ஷிய நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கி பெரியார் எழுதியுள்ள ஆழமான கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ரஷ்ய மக்களின். வாழ்க்கை முறையை விளக்கிடும் 'கூட்டுறவு வாழ்க்கை; சமூகத் துறையில் மட்டுமல்லாது, பொருளாதார அரசியல் துறையிலும் வேலை செய்ய வேண்டும் என்பதை விளக்கி எழுதப்பட்ட “நமது லக்ஷியம்” ஆகிய கட்டுரைகள், 'பகுத்தறிவு' இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகும். இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியின் வெற்றியை எந்த அடிப்படையில்: மதிப்பிடுவது? சர்க்கார் நடவடிக்கைகளால் கொள்கைகட்கு கிடைத்த வெற்றி என்ன? லட்சியம் கை கூடுவதற்கு கிளர்ச்சியை முன்னெடுக்க
வேண்டிய முறைகள் என்ன? என்ற கேள்விகளுக்கு தெளிவான. விளக்கமளிக்கிறது. 'நான் சிறை புகுந்தால்! எனும் தலைப்பில் பெரியார். எழுதியுள்ள அறிக்கை.
பார்ப்பனர்களையும், காங்கிரசாரையும் எதிர்த்து சுயமரியாதை: இயக்கம் தீவிரமாகப் போராடிய காலகட்டத்தின் வரலாறுகளைப் பதிவு
செய்கிறது, இத்தொகுதி
அஞ்சும் கணவர்களைத் திருத்த...
நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல்லைக்கோ எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது -
நாட்டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம் பார்த்து அவர்களைக் குத்த வேண்டும். வீட்டிற்குள்ளே அனுமதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதே போல் அநேக நாடுகளில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்தியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அநேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக் காண பயப்படுகிறார்களாம். அவர்களைத் திருத்த வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப் போவதாக வீட்டில். சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விடவேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின் வந்துவிடுவார்கள். நம்மில் ஜாதி மத உயர்வுகளையும் சுயநலத்தையும் மறக்கவேண்டும்.
- பெண்கள் மாநாட்டில் பெரியார், உரை 'குடி அரசு' 27.11.1938.
- பதிப்பாளர்.
பொருளடக்கம்
நமது விண்ணப்பம்
வெளிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோள்
ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும்
ஒரு வருஷ ஆட்சி படலம்
சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு
கிருஷ்ணகிரியில் ஈ.வெ.ரா.
சேலம் ஜில்லாவில் ஈ.வெ.ரா
காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா.
இருச்சியில் இந்தி எதிர்ப்பு படை
ஆச்சாரியார் கடற்கரைப் பேச்சு
100
இந்தி எதிர்ப்பும் பார்ப்பனப் பத்திரிகைகளும்
102
திருவிதாங்கூர் அலங்கோலம்.
109
காலஞ்சென்ற தோழர் ஏ.ஆர். சிவானந்தம்.
112
சாஸ்திரியார் - ஆச்சாரியார் சம்பாஷணை
115
குடு குடுப் பாண்டி
119
23. சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன்.
120
24. உஷார்! உஷார்! சுபாஷ் போஸ் வருகிறார்!
ஏன் வருகிறார்?
121
25. ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்
139
131
S 3
136
28. கோவை தமிழர் படை
137
140
29. நான் சிறை புகுந்தால்?
30. மீண்டும் ஒன்றரைக் கோடி கடன்:
144
148
31. நமது வேண்டுகோள்
151
o 5
33. ஈ.வெரா. அறிக்கை
152
156
35. காங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்.
164
36. திருவிதாங்கூர் அலங்கோல தர்பார்.
167
174
37. தமிழ்நாடு தமிழருக்கே
38. காங்கரஸ்காரர் இழி செயல்
177
180
40. பகிரங்கப் பேச்சு
187
41. காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி
190
42. இந்தி செத்தது! இனி ஆச்சாரியாரின். அடுத்த ஆட்டம் என்ன?
194
43. இன்றைய பிரச்சினை
200
44. சென்னையில் மாபெருங் கூட்டம்
202
45. இனி செய்ய வேண்டியதென்ன?
210
46... தீபாவளி பண்டிகை:
214
218
224
49... காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு
226
50. ஒரு யோசனை
231
51. காங்கிரசும் கல்வியும்
234
52. காலஞ் சென்ற கெமால் பாஷா
239
243
58. தமிழ்க்கொலை:
54 ஆச்சாரியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?
245
55. சென்னைக் “கலவரங்கள்”
249
255
57. எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி
259
58. சென்னையில் ஈ.வெ.ரா.
266
273
59. கூட்டுறவு வாழ்க்கை:
283
60. இந்தி எதிர்ப்பு ஒழிந்து விட்டதா?
61. ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்
287
62. பெரியார் சென்னைப் பிரசங்கம்
289
63. பெரியார் சிறைவாசம்
303
309
64. சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு
65. பெரியார் ஈ.வெ.ரா. வழக்கு
310
66. இரண்டு மாநாடுகள்
324
67. பெரியார் திருநாள்.
330
335
69. அருஞ்சொல் பொருள்.
342
நமது விண்ணப்பம்
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி “நமது” சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மெண்ட் ஆத்ட் 7-1-எ. படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக்கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.
மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.எ. (ஒரு சந்யாசி), கே. எம். பாலசுப்பிரமணியம். பி.எ.பி.எல்., ஷண்முகநந்த சுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை எம்.ஏ. (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3-வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117 பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில். இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் இனமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும்: 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண்டும் வருகிறார்கள். “இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங்கள் மாத்திரம் தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்துவிடுவார்கள்?” என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக்கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி “நமது” தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அறுப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில் “இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள்மீது ஆயுள் பரியந்தம் அல்லது
தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். மிக "தயாள" குணத்தோடு “இழகிய" மனம் கொண்டு பேசியிருக்கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.
மெயில் விளாசல்
அதாவது தோழர் சத்தியமூர்த்தியாரே! நீர் இந்தியை எதிர்க்கிறவர்களுடைய தலைகளையெல்லாம் வெட்டவேண்டும் என்று சொல்லுகிறீர்களே! அப்படியானால் சென்னை கடற்கரையில் தோழர்
ஈ.வெ.ராமளமி பேசும்போது 50000 ஐம்பது ஆயிரம் ஜனங்கள் கேட்டுக். கொண்டிருந்ததோடு தோழர் திருச்சி கே.எ.பி. விஸ்வநாதம் அவர்கள். சர்க்காரை கண்டித்து தீர்மானம் பிரேரேபித்ததற்கு அந்த 50000 பேர்களும் ஏகமனதாய் ஓட்டுக்கொடுத்திருக்கிறார்களே ஆதலால் இந்த 50000 பேர்களுடைய தலைகளையும் தானே வெட்ட வேண்டும்! இது தானா உமது சுயராஜ்யம்? இது தானா காந்தியார் கூறும் “அன்பினால். ஆளப்படும்” “ராஜ்ய பாரம்?” என்று கேட்டிருக்கிறதே தவிர மற்ற எந்த பார்ப்பனப் பத்திரிகையும் எந்த காங்கிரஸ் பத்திரிகையும் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது மாத்திரமல்லாமல் அதைப்பற்றி இதுவரை எந்த காங்கிரஸ் தலைவர் என்பவர்களும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றால் இன்றைய சுயராஜ்யத்தில் தமிழ்மக்களின் தலை - உயிர் எவ்வளவு அற்பமாய் மதிக்கப்படுகின்றது என்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஆச்சாரியாருக்கு மூர்த்தியார் உதவி. உண்மையில் தோழர் சத்தியமூர்த்திக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் ஒருவருக்கொருவர் தனிமையில் கண்டால் வெட்டிக் கொள்ளும்படியான.
ஆத்திரமும் குரோதமும் இருந்து வருவது யாவரும் அறிந்ததாகும். அதாவது சத்தியமூர்த்தியாருக்குக் கிடைக்க வேண்டிய மந்திரி பதவியை தோழர் ஆச்சாரியார் திடீரென்று திருச்சி டாக்டர் ராஜனுக்குக். கொடுத்துவிட்டதால் அன்று முதல் இன்றுவரை ஆச்சாரியாரை வைத: வண்ணமாகவும் அவர்மீது எதிர்ப்புப் பிரசாரம் செய்த வண்ணமாகவும் இருந்து வருகிறார். அப்படிப்பட்டவர் ஆச்சாரியாரின் இந்தி கட்டாய நுழைப்பும் எதிர்ப்பும் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற விஷயமாக இருந்து வருகிறது என்று தெரிந்தவுடன் இந்தியை எதிர்ப்பவர்களை: ஆச்சாரியார் 6 மாதமும், 3 வருஷமும் தண்டித்தால் போதும் என்று சொன்னால் தோழர் சத்தியமூர்த்தியார் இந்தியை எதிர்ப்பவர்களை: ஆயுள் பரியந்தம் தண்டிக்க வேண்டும் அல்லது தலையை வெட்ட வேண்டும் (தூக்கில் போட வேண்டும்) என்று பகிரங்கமாக ஒரு பொது மேடையில் பேசி ஆச்சாரியாருக்கு உதவி செய்கிறார்.
வேறு உதாரணம் வேண்டுமா?
100 க்கு 3 பேராய் உள்ள பார்ப்பனர்கள் மற்ற 100க்கு 97 பேர்களாக உள்ள மக்களை எப்படி அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா. என்று கேட்கிறோம். பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலனுக்காக என்றாலும் தங்கள் சமூக நலனுக்குக் குறைவு வருகிறது என்றாலும் உடனே. கன்யாகுமரி மூதல் இமயமலை வரை உள்ள சகல மாதிரியான. பார்ப்பனரும் ஒன்று சேர்ந்து ஒரே அபிப்பிராயம் கொண்டு விடுகிறார்கள்.
குடிஅரசு டட
அவர்களில் யார் எவ்வளவு கொடுமையும் குற்றமும் செய்தாலும். ஒருவரையொருவர் சிறிதும் விட்டுக்கொடுக்காமல் ஆதரிக்கிறார்கள். எதிரிகள் மீது ஒரே மூச்சில் விஷமப்பிரசாரம் செய்து ஒழிக்க எக்கருமத்தையும் கையாளுகிறார்கள். ஆனால் பார்ப்பனரல்லாதாராகிய குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழ் மக்களோ இப்படிப்பட்ட சமயத்தில்தான் விபீஷணர்களாக: மாறுகிறார்கள் என்பதற்கு இப்படிப்பட்ட கட்டுப்பாடாக வன்மனமாக தமிழ் மக்களை அடக்கி ஆதிக்கம் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பார்ப்பன ஆட்சிக்கு நமது தோழர் ராமநாதன் அவர்கள் மாட்டு வண்டி ஓட்டப்படவும் எதிரிகளை நல்லவர்களாகவும் நம்மக்களை அயோக்கியர் களாகவும் விளம்பரம் செய்யும் கேவலத் தொழிலுக்கு ஆளாகவும் துணிந்து விட்டார் என்றால் தமிழ் மக்கள் நிலைக்கு வேறு உதாரணம்: வேண்டுமா என்று கேட்கின்றோம்.
நமது மகிழ்ச்சி. இவைகளைப் பற்றி எல்லாம் உண்மையிலேயே நாம் சிறிதும் கவலைப்படவில்லை. மிக்க உற்சாகமே கொண்டிருக்கின்றோம். எப்படியெனில், வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசிவிட்டு வீணே முதுமைக்கும் நோய்க்கும் ஆளாகி நமக்கு இஷ்டமில்லாமல் சாவதைவிட இப்படிப்பட்ட ஏதாவது ஒரு சிறிய காரியத்திற்காகவாவது அல்லது இம்மாதிரியான ஒரு சிறிய நன்மை உடைய காரியத்திற்காகவாவது வாழ்ந்து மறைவது அறிவுடைய காரியம் என்பதாக கருதி இருப்பதால் அதை நாம். வெகுநாளாக எதிர்பார்த்த காரியம் கை கூடிற்றென்ற மகிழ்ச்சியிலேயே இருக்கிறோம். அவ்வளவு மாத்திரம்தானா? அல்ல! அல்ல!! இந்நாட்டு உண்மை தமிழ் மக்களுக்கு அவர்களுடைய வீரத்தையும் தன். மானத்தையும் காட்டுவதற்கும் அவர்களது வாழ்வும் செல்வமும்.
உயிரும் நற்கருமத்துக்குப் பயன்படுத்துவதற்குமான ஒரு கிடைத்தற்கரிய அரும் சமயம் கிடைத்திருக்கிறதென்றும் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு கேள்வி
தமிழர்களே! நீங்கள் எத்தனை மேதாவிகளானாலும் அறிவாளி. களானாலும் செல்வவான்களானாலும் மற்றும் யாராய் இருந்தாலும். நீங்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாளில் முடிவெய்தப் போவது திண்ணம். ஆனால் இந்த அறிவையும் மேதாவித் தன்மையையும். செல்வத்தையும் மற்றதையும் இப்பொழுது எதற்கு செலவழிக்கிறீர்கள்?' பொய்ப்புகழ் தேடுவதிலும் பின்னால் என்ன ஆகப் போகிறதோ என்றுகூட அறிய முடியாத காரியத்திற்காக பொருளைத் தேடிப் பெருக்கி வைப்பதிலும் பயன்படுத்துகிறீர்கள். இம்முயற்சியில் நீங்கள் எவ்வளவு ஏமாற்றம் அடைகிறீர்கள்? எவ்வளவு சங்கடம், கவலை, மன வேதனை, syl பிரயாசை அடைகிறார்கள்? இவை மாத்திரமா? இந்தக் 1௨ ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
காரியங்களுக்கு நீங்களே உங்கள் வாழ்வில் மனமார எவ்வளவு பொய் வஞ்சகம் பித்தலாட்டம் பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டியவர்களாக ஆகின்றீர்கள் என்பவற்றையும். நினைத்துப் பாருங்கள். ஆகவே மானம், வீரம், அறிவு பெற்ற மனிதன். தன் வகுப்பை மற்றொரு வஞ்சக அறிவு பெற்ற வகுப்பு சூறையாட அனுமதித்துக் கொண்டிருந்து விட்டு மறைவது அறிவுடைமையா? என்பதை யோசித்து பாருங்கள்.
தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கொடிய நிலை இன்று நேற்று. ஏற்பட்டதல்ல. இதை ஒழிக்க அழிக்க தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டவையல்ல. ஆயிரக்கணக்கான. வருஷங்களாக இருக்கலாம் என்று சொல்லலாம். ஆனாலும் இன்றுதான். எதிரிகளின் கொடுமைகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி வெளிச்சம் ஏற்பட்டு வருகிறது. மனிதன் மானத்துக்கும் அறிவுக்கும் வாழ வேண்டியவன்: என்பது இன்றுதான் மக்களுக்கு விளக்கி வைக்க முடிகிறது. ஆதலால். இச்சமயம் செய்யப்படும் எவ்வித முயற்சியும் பயன்படக் கூடியதாகும். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது தற்காலத் தேவை
இன்று இக்கொடுமையில் இருந்து தப்புவதற்கு தமிழ் மக்களுக்கு வேண்டியது முதலாவது ஒற்றுமையாகும். நிலைகுலைந்த தமிழ் மக்கள். முதலில் நிலை பெற வேண்டும்; ஒன்றுசேர வேண்டும்; சில்லறை அபிப்பிராய பேதங்களை அசூயை பொறாமையை விட்டு உடன். பிறப்பு (சகோதர) உணர்ச்சி கொள்ள வேண்டும். தங்கள் தங்கள். வாழ்க்கையில் எந்த பாகத்தை இந்த அருமையான முக்கியமான. காரியத்துக்கு உதவலாம் என்று கவலை கொள்ள வேண்டும். தங்களிடம். சவுகரியமாக உள்ள செல்வத்தில் சிக்கன உணர்ச்சி இல்லாமல் எவ்வளவு அளிக்கலாம் என்பதை தாராளத் தன்மையோடு யோசித்து உதவ முன்வர வேண்டும். எதிரிகளின் கொடுங்கோன்மையை ஒழிக்க தங்கள். தங்களைப் பொறுத்தவரை எவ்வளவு தூரம் தியாகத்தை செய்யலாம். என்று நன்றாய் யோசித்து முடிவுக்கு வந்து வெளியில் புறப்பட்டு விட வேண்டும். இத்யாதி காரியங்கள் செய்யாவிட்டால் இந்த 50 அல்லது 100 ஆண்டுகளுக்குள் தமிழ்மக்கள் அடைந்துள்ள சுதந்திரம், மானம், சமத்துவம் எல்லாம் நாசமாகி பழய (வருண தர்ம) நிலைக்குப் போய் சேர்ந்துவிடுவோம் என்பதை நன்றாக உணருங்கள்.
இது எவர்மீதும் கொண்ட விரோதமல்ல, குரோதமல்ல, ஹிம்சையல்ல, பலாத்காரமல்ல. நமது உரிமையை நாம் பெற காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். இம்முயற்சியிலிலும். யாரிடமும் துவேஷமும் காட்டுவதில்லை. யாரிடமும் பலாத்கார
கடி அரசு 1938 (2) —— 0
செய்கைக்கோ ஹிம்சையைத் தரும் செய்கைக்கோ நாம் செல்வதில்லை
- செல்லும்படியாகவும் யாரையும் தூண்டவும் வரவில்லை. அன்றியும் அப்படிப்பட்ட காரியம் செய்யக்கூடாதென்றும் வன்மையாகக் கூறுகிறோம்.
பணம்! பகம்!
தமிழ் மக்களே! இப்போது இந்த முயற்சிக்கு அவசரமாக அவசியமாக வேண்டியது பணம் - பணம் - பணமேயாகும். பணம்: இல்லாவிட்டால் இம்முயற்சி உடனே செத்து மடிந்து நசுக்கப்பட்டு மறைந்தே போகும். பிறகு என்ன ஆகும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. ஒரு லட்ச ரூபாய் இருந்தால்தான் நாம் உண்மையில். ஒரு அளவு இக்கொடுமையிலிருந்து மீளலாம். கொடுமை என்றால். விளையாட்டுக் கொடுமையா? தமிழ்நாட்டில் உள்ள தமிழ் வீரர்கள் செல்வர்கள் மேதாவிகள் எல்லோரும் அடங்கி ஒடுங்கி நடை பிணங்களாக நடந்து திரியும்படி செய்யப்பட்டுவிட்ட கொடுமையாகும். உதாரணம் காட்டுகிறோம் பாருங்கள். தென்கோடியில் இருந்து எடுத்துக்கொள்ளுங்கள். திருநெல்வேலி ஜில்லாவில் தோழர்கள் மேடை தளவாய் குடும்பம், ஈஸ்வரம் பிள்ளை குடும்பம், சிவ சின்னக் கண்ணு பிள்ளை குடும்பம் முதலிய 20, 30, 50 லட்சம் செல்வமும் பாரிஸ்டர் பி.ஏ.பி.எல். முதலிய கல்வியும் பரம்பரை பெருமையும் மிட்டாவும் உள்ள குடும்பத்தார்கள் இன்று எவ்வளவு அடிமைநிலையில் அஞ்ஞாதவாசமாய் (தங்களைக் காட்டிக் கொள்ள முடியாத) நிலையில் இருக்கிறார்கள். ராமநாதபுரம் ஜில்லாவில் ராமணாதபுரம் ராஜா எங்கே? சிவகங்கை ஜமீன் எங்கே? சேத்தூர் எங்கே? எட்டயபுரம் எங்கே? கோடீஸ்வரர்களான செட்டிமக்கள் எங்கே? பல லக்ஷ£திகார வியாபாரிகளான நாடார் குல பெரியார்களெங்கே? இவர்கள் நிலை இன்று எவ்வளவு அடிமைத்தனமாகவும், பரிதாபகரமானதாகவும் இருக்கிறது பாருங்கள். மற்றும் மதுரை ஜில்லாவில் உத்தமபாளையம் குடும்பம் எங்கே? போடி ஜமீன் எங்கே? பெரியகுளம் எங்கே? சுப்பஞ்செட்டியார் குடும்பம் எங்கே? மற்ற பல மிராசுதார்களும் வியாபாரிகளும் பி.ஏ.பி.எல்., எம்.ஏ.க்களும் எங்கே? விலாசம்கூட அறியக்கூடாத அளவு மறைந்து கிடக்கிறார்களே? அது திருச்சி ஜில்லாவில் காட்டுப் புத்தூர், மீனாம்பள்ளி, உறையூர் ஜமீன்கள் கடவூர் சமஸ்தானங்கள் எங்கே? மற்ற பிரபல மிராசுகள் எங்கே? பத்து லக்ஷக் கணக்கான செல்வம் படைத்த செளகார்கள் எங்கே? தஞ்சை ஜில்லாவில் உடையார் எங்கே? வடபாதி மங்கலம் எங்கே? சீர்காழியார் எங்கே? இவர்கள் போன்ற மற்ற மேதாவிகளும் எங்கே? அது போலவே மற்ற சகலை தமிழ் ஜில்லாக்களிலும். மற்றும் ஆந்திர, மலையாள ஜில்லாக்களில் உள்ள மேதாவிகளும், செல்வவான்களும், ஜமீன்களும், ராஜதந்திர நிபுணர்களும் அடக்கப்பட்டு. விட்டனரே! இவை எதனால்? இந்த நாடு ஏதாவது பொது உடமை-
17 ௨. ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
அல்லது சமதர்ம நாடாக ஆகிவிட்டதா? சர்வாதிகார கொடுங்கோன்மை: நாடாக திகழ்கின்றதா? அதாவது “இந்தி படிக்க மாட்டேன்” என்றால். ஒருவர் 6-மீ' கடின காவல் போடச் சொல்லுகிறார். ஒருவர் 3-ஹ போடச் சொல்லுகிறார். ஒருவர் தலையை வெட்டு என்கிறார். தொழிலாளிகள். தெருவில் திண்டாடி சோற்றிற்கு இல்லாமல் சொத்துப் பொத்தென்று மடிந்து விழுகிறார்களே! பசிக்குதே என்றால் ஒருவர் ஜெயில் என்கிறார். தட்டிக்கேட்டால் மற்றவர் சுடு என்கிறார். நாட்டு மூன்னேற்றமோ ஆகாயக் கப்பலில் இருந்து கட்டை வண்டிக்கு வந்துவிட்டது. பார்ச்மெண்டு. பேப்பரில் இருந்து பன ஓலைக்கு வந்துவிட்டது. சல்லா வேஷ்டியிலிருந்து கோணிரட்டுக்கு வந்துவிட்டது
ஜாதி வித்தியாசமோ கூட இருந்து சாப்பிட்டதற்கு கட்டிவைத்து உதைத்து மொட்டை அடித்து சாணிப்பால் உத்சவம் நடந்ததாக கூப்பாடுகள். வானத்தைப் பிளக்கின்றது. உத்தியோகமும் அதிகாரமும் ஒரு தனிச் சதிக்குத்தான் உண்டே ஒழிய மற்றவர்கள் நினைக்கவே தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். சமத்துவமோ சர்வகுண்டி தீர்த்தம்போல் வழங்கும் காப்பிக்கடையில். கூட சமத்துவம் கிடையாது. அங்கும் “பிராமணன், சூத்திரன்” பலகை: தொங்கிக் கொண்டு “பஞ்சமரும் பெரும் வியாதிக்காரனும் நாயும் உள்ளே. பிரவேசிக்கக்கூடாது” என்கின்ற அறிவிப்புப் பலகை வெளியில் வைக்கப்பட்டும் இருக்கிறது
சமதர்ம ராஜ்யம் வந்துவிட்டதா?
மற்றும் பணக்கார ராஜ்யம் ஒழிந்து ஏழைகள் ராஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டதோ என்று சொல்லப்படுமானால் அப்படியும் இல்லாமல் காலிகள் குண்டர்கள் இழிகுண இழி பிறப்பு மக்கள் என்று கல்லுப் போல் ருஜுவு செய்யக்கூடிய மக்கள் பலரை சேர்த்துக்கொண்டு. அவர்களது ஆதரவில் யோக்கியர்கள், தகுதியுடைய மேதாவிகள், 'கண்ணியமுள்ள நாணயஸ்தர்கள் துரத்தி அடிக்கப்பட்டுவிட்டார்கள். இவைகளை ஏன் சொல்லுகிறோமென்றால் இந்த நாட்டில் செல்வவான்கள், மேதாவிகள், அறிவாளிகள், ஒடுக்கப்பட்டார்கள் ஒழிக்கப்பட்டார்கள். என்று சொல்லுவதால் சிலர் “சமதர்மம் ஏற்பட்டுவிட்டது” என்று சொல்லி ஏமாற்ற வருவார்களோ என்னவோ என்று கருதி அந்த யோக்கியதையையும் மக்கள் உணரட்டும் என்பதற்கு எடுத்துக் காட்டுகிறோம்.
“இந்தக் காரியங்களைப் பற்றி எவ்வளவுதான் உணர்ந்தாலும். நம்நாட்டு செல்வவான்களில் பலருக்கு சுலபத்தில் மான உணர்ச்சி வராது என்பது நமக்கு தெரியும். ஏன் என்றால் இவ்வளவு இழிநிலை தங்களுக்கு ஏற்பட்டும் இன்னமும் பல செல்வவான்கள் எதிரிகளின். காலை “மோக்ஷ"த்திற்கு ஆகவும் பதவி வாழ்வுக்காகவும் நக்கிக் கொண்டு. திரிகிறார்கள். நக்க தூது அனுப்புகிறார்கள்.
குடி அரசு -1988(29௨ ௨ ட
தமிழ் வக்கீல்களோ அவர்கள் பலருடைய அகராதியில் மானம் மனிதத்தனம் என்கின்ற வார்த்தைகளே கிடையாது என்று சொல்லலாம்.
ஆதலால் சாதாரண நடுநிலையிலுள்ள தமிழ் மக்களே தங்கள்
சமூகத்துக்கு நேர்ந்த இந்த ஆபத்திலிருந்து தப்புவிக்க உதவி செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இந்நாட்டு தமிழ் வாலிபர்களே அடக்குமுறை ஆயுதத்தை மழுங்கச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இந்நாட்டுத் தமிழ் பெண்மணிகளே இவ்விரு கூட்டத்திற்கும் உற்சாக மூட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள். வெளி நாட்டிலுள்ள “இந்து” முஸ்லிம் தமிழ் மக்களே இம்முயற்சிக்கு உதவி அளித்து இந்நாட்டு பணக்காரர்களுக்கு புத்தியும் மானமும் ஏற்படுத்தி தாராளமாய் உதவச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். ஆதலால் மேற்கூறிய ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மக்களும். இது சமயம் தைரியமாய் வெளிவந்து தன் தன் கடமையைச் செய்து தமிழ்நாட்டை உலகத்தில் இல்லாவிட்டாலும் பூகோள படத்திலாவது உருவிருக்கச் செய்வார்களாக.
குடிஅரசு - தலையங்கம் - 03.07.1938
ழு... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
வெலிநாட்டுத் தோழர்களுக்கு வேண்டுகோன்
அன்புள்ள தோழர்களே!
இன்று நமது தமிழ் மொழியையும், தமிழர் நாகரீகத்தையும். கொலை செய்து தமிழர்களை, ஆரியர்களுக்கும் ஆரிய நாகரிகத்திற்கும் அடிமைப்படுத்தி பழைய மனுதர்ம முறைக்குக் கொண்டுவர இந்தி மொழியை கட்டாயமாகப் புகுத்த சென்னை மாகாண முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் முயற்சித்து விட்டார்.
இதைக் கண்டித்து சென்னை மாகாணம் முழுதும் பெருத்த கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இது சம்மந்தமாக சுமார் 114 பேர்கள் வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சுமார் 41 பேர்கள் வரை தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலரை கைது செய்யலாம். ஆகையால் வெளிநாட்டிலுள்ள தமிழ்நாட்டுத் தோழர்களே இந்தப் போரைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி தொடர்ந்து செய்ய வேண்டுமானால் அதிகமான பணம் வேண்டும். ஆகையால் நீங்கள். உங்களாலான பண உதவி செய்யும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 03.07.1938.
குடிஅரசு 0
தமிழர் இருப்பதா! இறப்பதா!
அமெரிக்கா செல்வப் பெருக்குடைய நாடு, சுதந்தர நாடு, ஜனநாயகத்துக்குப் பேர் போன நாடு. ஆனால் அமெரிக்க ஜனநாயகம். ஒரு புதுரகம். அமெரிக்க ஜனநாயகத்துக்கு அடிப்படையாக இருப்பது முதலாளி நாயகமே. இது கேட்போருக்குப் புதுமையாகத் தோன்றலாம். ஆனால் உண்மை நிலை அதுவே. ஜனநாயகத்தின் அங்கங்களான. காங்கரஸ், தேர்தல் தொகுதி, வாக்காளர், பொதுத் தேர்தல் முதலிய விநோதங்கள் எல்லாம் அமெரிக்காவில் உண்டு. ஆனால் காங்கரசுக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் தோரணைதரன் விசித்திரமானது அமெரிக்காவிலே ஆயில் கிங், மோட்டார் கிங், காட்டன் கிங் என பல கோடீசுரர்கள் உண்டு. தேர்தல் காலங்களில் இக்கோடீசுரர்கள் தம். ஆட்களைத் தேர்தலுக்கு நிறுத்தி தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெறும்படி செய்துவிடுவார்கள். ஈட்டி எட்டின. மட்டும்தான் பாயும்: பணமோ பாதாளம் வரை பாயக் கூடியது. ஆகவே இந்த கோடீசுரர்களின் கையாட்கள் தான் பொதுவாகத் தேர்தலில் வெற்றி. பெற்று அமெரிக்க காங்கரசுக்கு மெம்பர்களாகச் செல்வது. கோடீசரர். உதவியினால் காங்கரஸ் மெம்பர்களானவர்கள் கோடீசுரர் சொற்படியே நடப்பார்கள் எனக் கூறவும் வேண்டுமா? ஆகவே அமெரிக்க ஜனநாயகம்: கோடீசரருக்கு அடிமைப்பட்ட புது தினுசு நாயகமே.அந்த ஜனநாயகத்தின். யோக்கியதை எப்படி யிருக்குமென்று நாம் விளக்கவும் வேண்டுமா?
மாகாண சுய ஆட்சியா? பார்ப்பனீய ஆட்சியா?
நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் மாகாண சுய ஆட்சியும் அநேகமாக அமெரிக்க ஜனநாயகத்துக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. வாக்காளர் தொகுதி விரிவாக்கப்பட்டதும் வாக்காளர் தொகை பெருகியதும் உண்மையில் ஒரு சாபத்தீடாகவே முடிந்துவிட்டது. பிரசார பலமும் பத்திரிகை பலமும் பண பலமும் மிகுந்த காங்கரஸ் வாதிகள் கட்டுப்பாடாகப் பொய்ப் பிரசாரம் செய்து காந்தி பேரைச் சொல்லியும், எங்கரஸ் பேரைச் சொல்லியும், பாரத மாதா பேரைச் சொல்லியும் பாமர மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற்று ஏழு மாகாணங்களில் மந்திரி சபையும் ஸ்தாபித்து விட்டார்கள். இந்திய மாகாணங்களில் எல்லாம். மாகாண சுய ஆட்சியும் அமலுக்கு வந்துவிட்டது
A வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
ஆனால் காங்கரஸ் மந்திரிசபை ஏற்பட்டிருக்கும் ஏழு மாகாணங்களிலும் பார்ப்பனீய ஆட்சியே அமலில் இருந்து வருகிறது. ஆறு காங்கரஸ் மாகாணப் பிரதம மந்திரிகள் பார்ப்பனராயிருப்பதினாலும் ஒரு மாகாண: மந்திரி பார்ப்பன பக்தராயிருப்பதினாலும் அந்த ஏழு மாகாணங்களிலும் பார்ப்பனீய ஆட்சி நடைபெறுவது ஆச்சரியமா! சென்னை மாகாண நிலைமை
சென்னை மாகாணத்தை எடுத்துக்கொள்வோம். பத்து மந்திரிகளில் நான்கு பேர் பார்ப்பனர். அசம்பிளி, கெளன்சில் தலைவர் உபதலைவர்களில். மூன்று பேர் பார்ப்பனர். பார்லிமெண்டரி காரியதரிசிகளில் பெரும்பாலார் பார்ப்பனர். எனவே தற்கால சென்னை மந்திரி சபைக்கு அக்ரகார மந்திரிசபையென ஒரு காங்கரஸ் வாதியே பெயர் சூட்டினார். இந்த மந்திரிசபை தோன்றிய நாள் முதல் இன்றுவரை பார்ப்பன ஆதிக்கத்தை. நிலைநிறுத்தும் காரியங்களே பெரும்பாலும் நடைபெற்று வருகின்றன. மூன்று முறை கார்ப்பரேஷன் காங்கரஸ் கெளன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதாரை நீக்கி விட்டு ஒரு. பார்ப்பனரைக் கல்வி அதிகாரியாக நியமித்ததையும் 20 கார்ப்பரேஷன். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்களில் 19 பேர் பார்ப்பனர்களாகப் பொறுக்கி யெடுக்கப்பட்டதையும் மிருக வைத்தியர்கள் 20 பேரில் 17 பேர் பார்ப்பனராகப் பொறுக்கி யெடுக்கப்பட்டதையும் ஏற்கனவே எடுத்துக் காட்டியிருக்கிறோம். பார்ப்பனரல்லாதார் பப்ளிக் பிராசிகூட்டராகக்கூட வரக் கூடாதென்ற கெட்ட எண்ணத்தினால் பப்ளிக் பிராஸிக்கூட்டர் பதவிக்கு ஆட்களை சிபார்சு செய்யும் அதிகாரத்தை பார்ப்பன ஆதிக்கம் கொண்ட வக்கீல் சங்கங்களுக்கு விட்டுக்கொடுத்திருப்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறோம். இப்பொழுது ஸ்தல ஸ்தாபனங்களிலும் பார்ப்பனீயம் தாண்டவமாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு. விட்டன. இதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஜில்லா போர்டு நகரசபைத். தேர்தல்களில் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் தலைவர்களாகவும், உபதலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே தக்க ஆதாரம். இப்பொழுது ஜில்லா போர்டு நகரசபைத் தலைவர்களாகவும், உபதலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் யோக்கியதைகளையும் நாலைந்து வருஷங்களுக்கு முன் அந்த ஸ்தானங்களில் வீற்றிறாந்தவர்களின். யோக்கியதைகளையும் சீர்தூக்கிப் பார்த்தால் தென்னாடு இப்பொழுது பார்ப்பனியத்திற்கு அடிமையாகி வரும் உண்மை புலனாகாமல் போகாது. எங்கு பார்த்தாலும் மூன்றாந்தர, நான்காந்தரப் பார்ப்பனர்களின். செல்வாக்கே மிகுந்து நிற்கிறது. 100-க்கு 97- ஜனத்தொகை கொண்ட பார்ப்பனரல்லாதார் 100 க்கு 3 பேர் கொண்ட பூணூல் கூட்டத்தார் இஷ்டப்படியே காரியங்கள் நடத்த வேண்டியதாக ஏற்பட்டிருக்கின்றன.
கடிஅரக 192... 1)
பழங்குடிப் பெருமக்கள் எங்கே?
ஒவ்வொரு ஜில்லாவிலும் முனிசிபல் நகரத்திலும் செல்வத்தாலும், உயர்குடிப் பிறப்பாலும், பொது ஜன ஊழியத்தினாலும் படிப்பாலும், ஏனைய சிறப்புகளாலும் சமூகவாழ்வில் முன்னணியில் நின்ற தமிழர்கள் மூலையில் ஒதுக்கப்பட்டுவிட்டனர். அவர்கள் ஸதானங்களை ஊர் பேர் சொல்வதற்கில்லாத அநாமதேயர்கள் காங்கரஸ் பேரைச் சொல்லி கைப்பற்றிக் கொண்டு அட்டகாசம் செய்து வருகிறார்கள். சென்ற 7-ந் தேதி சேலத்தில் நடந்ததைக் கவனிப்போம். சேலத்தில் நடைபெறப். போகும் அகில இந்திய காதி சுதேசிப் பொருட் காட்சிக்கு விக்டோரியா மார்க்கட் மைதானத்தை வாடகையின்றி கொடுக்கும்படி நகரசபை தீர்மானித்திருப்பது பற்றி சேலம் மக்களுக்கு மிக்க மனக் கொதிப்பு இருந்து வருகிறது. அஜண்டாவில் இல்லாத பிரஸ்தாப விஷயத்தை: கூட்டம் முடியப்போகும் தருணத்தில் மெம்பர்கள் பலர் வெளியேறிக். கொண்டிருக்கும் தருணத்தில் நகர சபை முன்கொண்டு வந்து அவசரம் அவசரமாக நிறைவேற்றிவிட்டது. நியாய விரோதமானதென உணர்ந்த சேலம் மக்கள் அத்தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கிளர்ச்சி செய்ததின் பயனாக சென்ற 7-ந்தேதி அதை ரத்து செய்ய ஒரு விசேஷக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் குழப்பமூண்டாகி கூட்டத்தை. நடத்த முடியாத நிலைமை ஏற்படவே சேர்மன் கூட்டத்தைக் கலைத்துவிட்டார்.
காங்கரஸ் மெம்பர்கள் அட்டகாசம்.
அப்பால் காங்கரஸ் மெம்பர்கள் மட்டும் கூடி மார்க்கட் மைதானத்தை: சுதேசிக் காட்சிக் கமிட்டியாறாக்கு வாடகையின்றிக் கொடுக்கும்படி முன்: சாதாரணக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீண்டும். நிறைவேறியதாய்த் தீர்மானம் செய்து கலைந்து போனார்களாம். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கெல்லாம் மூலகாரணராயிருப்பது யார்? சுதேசிக். கண்காட்சி விஷயத்தில் அக்கரையுடையவர்கள் யார்? என ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் தமிழர்களின் தற்கால இரங்கத்தக்க இழிவான நிலைமை விளங்காமல் போகாது. சேலம் பொருட்காட்சியில் கைத்தறி நெசவாளர் துணிகளைக் காட்சிக்கு வைக்க பொருட்காட்சி நிர்வாகஸ்தர்கள் அநுமதி மறுப்பதினால் கைத்தறி நெசவாளருக்கும் சேலம் மக்களுக்கும். மிக்க மனக் கொதிப்பும் அதிருப்தியும் ஏற்பட்டிருக்கிறது.. இவர்கள் தொகை அதிகமாக இருந்தும் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய சிலரின் இஷ்டப்படி சேலம் நகரவாசிகள் எல்லாம் நடந்துத் தீரவேண்டுமென: ஏற்பட்டால் தமிழர்கள் உயிருடன் இருந்துதான் பயன் என்ன? திருநெல்வேலி நிலைமை, சேலம் கதையை இத்துடன் நிறுத்திவிட்டு திருநெல்வேலி கதையை கவனிப்போம். பப்ளிக் பிராஸிக்கூட்டர் நியமன விஷயமாக: திருநெல்வேலி வக்கீல் சங்கத்தார் நடந்துகொண்ட தோரணை திருநெல்வேலி ஜில்லா மக்கள் மனத்தைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது... காங்கரஸ் பத்திரிகையான “ஆனந்தவிகடன்” கூட திருநெல்வேலி வக்கீல் சங்கத்தார்
B ஹரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
போக்கைக் கண்டுத்திருக்கிறது. எனவே சென்ற 6-ந் தேதி திருநெல்வேலியில் கூடிய திருநெல்வேலி ஜில்லாக் காங்கரஸ் கமிட்டியார் அவசரக் கூட்டத்திலே. திருநெல்வேலி டவுன் காங்கரஸ் கமிட்டி தலைவர் தோழர் கூத்த நயினார். பிள்ளைபப்ளிக்பிராசிக்கூட்டர் நியமன விஷயமாகசர்க்கார் வெளியிட்டிருக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தாராம். அதை அநேக மெம்பர்கள் ஆட்சேபித்தார்களாம். கடைசியில் தீர்மானமே கைவிடப் பட்டதாம். தீர்மானத்தை நழுவ விடக் காரணம் என்ன? பிரஸ்தாப விஷயம் சர்க்காரையும் வக்கீல் சங்கத்தையும் பொறுத்ததென்றும் இல்லா காங்கரஸ் கமிட்டி அதில் தலையிடக் கூடாதென்றும் தோழர் யாக்ஞேசர: சர்மா ஜில்லா காங்கரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாராம். அவரது கட்டளைக்கு முரணாக ஜில்லா காங்கரஸ் கமிட்டியார் நடக்கலாமா? பப்ளிக் பிராஸிகூட்டர் நியமன விஷயமாக சர்க்கார் செய்துள்ள தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென்று திருநெல்வேலி ஜில்லா காங்கரஸ் கமிட்டியார் தீர்மானிப்பதினால் அந்த உத்தரவு ரத்தாகி விடுமென்று நாம் நினைக்க வில்லை. ஜில்லா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மனக்கொதிப்பைச் சாந்தப் படுத்த அம்மாதிரி ஒரு தீர்மானம் நிறைவேற்றக்கூட பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் பெற்ற ஜில்லாக் காங்கரஸ் கமிட்டிக்கு முடியவில்லையானால்:
- அங்கும் ஒரு பார்ப்பனர் அபிப்பிராயத்துக்கே மதிப்புக் கொடுக்கப்படு கிறதானால் தமிழர் அபிப்பிராயத்துக்கு மதிப்பேயில்லையென்பது விளங்கவில்லையா? எல்லாக் காங்கரஸ் கமிட்டிகளிலும் மெஜாரட்டியாக: இருப்பது தமிழர்கள்தான். ஆனால் அவர்களுக்கு சுயமாகக் காரியம். செய்ய சக்தியுமில்லை, உரிமையுமில்லை:
சூத்திரக்கயிறு யார் கையில்.
காங்கரஸ் கமிட்டிகளை ஆட்டிவைக்கும் சூத்திரக் கயிறு பார்ப்பனர் கையிலேயே இருக்கிறது. ஒரு புரோகிதப் பார்ப்பானுக்கு ஒரு பஞ்சாங்கப் பார்ப்பானுக்கு காங்கரஸில் இருந்து வரும் மதிப்பு குலத்தாலும் நலத்தாலும் பணத்தாலும் மற்ற சிறப்புகளாலும் மதிப்புப் பெறுவதற்குரிய தமிழனுக்கு இல்லையானால் தமிழர் இருப்பதா இறப்பதா என்ற நிலை ஏற்பட்டு விட்டதென நாம் கூறுவது பொய்யாகுமா? இவ்வண்ணம் காங்கரசிலும் நாட்டிலும் தமிழர்களுக்கு மதிப்புக் குறைந்து வருவதைக் கண்ணாரக் கண்டும் மேலும் மேலும் தமிழர்கள் பார்ப்பனர் கால்களுக்கிடையில் நுழைவதும் அவர்கள். புகழ்பாடுவதும் அவர்கள் ஆக்கத்துக்கு உழைப்பதும் மானக்கேடல்லவா? இந்நிலையில் மாற்றமேற்பட வேண்டாமா? வேண்டுமானால் மாற்றமேற்படுத்தக் கடமைப்பட்டவர்கள் யார்? அவர்கள் செய்யப் போவதென்ன? சுயமரியாதையுடைய தமிழர்களே யோசித்துப் பாருங்கள். காலம் தாழ்த்த வேண்டாம். ஆபத்து நெருங்கி வருகிறது.
குடிஅரசு - தலையங்கம் - 10.07.1938 குடிஅரசு ய
ஆச்சாரியார் ஆட்சி நீடிக்க வேண்டும்
அடக்குமுறைகளும் வலுக்க வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் உண்மையை உணர்வார்கள்
தலைவரவர்களே!
தோழர்களே!
இன்று இந்த சென்னை கடற்கரையில் இவ்வளவு பிரம்மாண்டமான கூட்டத்தில் நான் பேச நேர்ந்ததைப்பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தக் கூட்டமானது எனது நண்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள். தமிழ் மக்கள் மீது பலாத்காரமாய் சுமத்தும் பார்ப்பன பாஷையாகிய ஹிந்தியைத் தடுப்பதற்காக கூட்டப்பட்ட ஹிந்தி எதிர்ப்புக் கூட்டமாகும் என்பது நீங்கள் அறிந்ததேயாகும். இது தோழர் ஆச்சாரியார் சென்ற. வாரத்தில் இதே கடற்கரையில் ஹிந்தி ஆதரித்து பேசுவதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தில் அதன் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார். அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களை எழுந்து போகும்படி சொன்னது போல் அதாவது “இக்கூட்டம் ஹிந்தியை ஆதரிக்கின்றவர்களுக்கு மட்டுமேயன்றி ஆதரிக்காதவர்களுக்கு இங்கு வேலையில்லை!” என்று சொல்லி போலீஸ் குதிரைப் படையை விட்டு கூட்டத்தைக் கலைத்தும் போலீஸ் தடியைக்கொண்டு கூட்டத்தை விரட்டியும் அடித்தது போல். இக்கூட்டம் ஒரு சாராருக்கு மாத்திரம் ஏற்பட்டதல்ல. இக்கூட்டம். ஹிந்தியை எதிர்ப்பதற்கு உண்டான காரணங்களைச் சொல்லவே கூட்டப்பட்டதாணாலும் அன்றைய தினம் அந்த (ஆச்சாரியார்) கூட்டத்தில் பேசியவைகளுக்கு பதில் சொல்லவும் ஹிந்தியை எதிர்ப்பவர்களும். ஆதரிப்பவர்களும் நடுநிலைக்காரர்களும் யாவரும் வந்து கேட்கவும் தங்கள் அபிப்பிராபங்களைக் கொடுக்கவும் போடப்பட்ட பொதுக்கூட்டமாகும்.
போலீசாருக்கு பாராட்டு.
நாங்கள் இக்கூட்டத்திற்கு உண்மையிலேயே போலீஸ் உதவியையோ. குதிரைப்படை உதவியையோ கோரவில்லை என்றாலும் இது மகா பிரம்மாண்டமான கூட்டமாயிருப்பதால் போலீசார் தங்கள் கடமையைச்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
செய்ய ஒருசிலர் இங்கு நிற்பதைப் பார்க்கிறேன். அதற்காக நான் நன்றி செலுத்துகிறேன். என்றாலும் சென்னை பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது ௯ூலிப்பத்திரிகைகளும் முதல் மந்திரியார் (ஆச்சாரியார்) கூட்டம் போலீஸ் பந்தோபஸ்தில் நடக்க வேண்டி இருந்ததே என்கின்ற. அவமானத்தையும், கேவல நிலையையும் போக்கிக் கொள்ள ஒரு நொண்டிச்சாக்கு தேடிக்கொள்வதற்காக நமது (இந்த) கூட்டமும் “போலீஸ் பந்தோபஸ்தில் நடந்தது” என்று எழுதுவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. போலீஸ் பந்தோபஸ்து இருப்பதை நான் எப்போதும் குற்றங் கூறுவதில்லை. போலீஸ்காரர்கள் நம் உண்மையான காவல்காரர்கள். நம் பணத்தைக் கொண்டே அவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் நாம் வெட்கப்படவேண்டியதில்லை.ஆனால் கனம் ஆச்சுரியாரின். வாழ்க்கைக்கு இன்று அவ்வளவு போலீஸ் காவல் தேவை இருப்பதானது அவரது வாழ்க்கை மிகக் கொடியது என்பதையாவது அல்லது அவர். பொது மக்கள் வெறுப்புக்கும், ஆத்திரத்துக்கும், அதிர்ப்திக்கும் ஆளாகி வாழ்கிறார் என்பதையாவது காட்டுகிறது
அன்றியும் தன்னைப் பொதுஜன சேவகன் என்றும் ஜனநாயக முறைப்படி தான் பதவிபெற்றவன் என்றும், தனது எல்லா அக்கிரமமும் ஏதேச்சாதிகாரமும் கொண்ட காரியங்களுக்கு அடிக்கடி சமாதானம் சொல்லி ஏய்க்கப் பார்க்கும் அந்த ஒழுக்கம் கெட்ட காரியத்துக்கு இது ஒரு சரியான புத்தி கற்பிப்புமாகும்.
இன்றா நாங்கள் இந்தியை எதிர்க்கிறோம்
ஈழர்களே! இன்றைய தினம் நமது மாகாணத்தில் உள்ள ஹிந்தி எதிர்ப்புக்கு காரணஸ்தர்களில் நானும் இன்று இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் தோழர் கலீபுல்லா சாயபுவும் முக்கியஸ்தர்கள்.
என்றும் நாங்கள் ஏதோ வேறு காரணம் கொண்டு இந்த எதிர்ப்புப்பிரளாரம். செய்கின்றோமென்றும் ஆச்சாரியாரும் அவரது சிஷ்யகோடிகளும் பத்திரிகைகளும் கூப்பாடு போட்டு மக்களை ஏய்க்கப் பார்க்கின்றார்கள். நான் ஹிந்தியை 1924, 1925ம் வருஷத்திலேயே எதிர்த்திருக்கிறேன். அதற்கு ஆதாரம் “குடி அரசு” பத்திரிகையில் பார்க்கலாம். அப்போது ஆச்சாரியார் எனக்கு முக்கிய நண்பராகவும் தலைவராகவும் கூட இருந்தார் என்று சொல்லலாம். தோழர் கலீபுல்லா சாயபு அவர்கள் ஆச்சாரியார். மந்திரி ஆவதற்கு முன்பே ஹிந்தி கட்டாயமாகுமுன்பே ஹிந்தி இஷ்டபாடமாகக்கூட இருக்கக் கூடாது என்று பிரசாரம் செய்து பண்டித ஜவஹர்லாலுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவர். இன்றைய ஹிந்தி எதிர்ப்புத் தோழர்களில் மற்றும் அநேகரும் வெகு நாளாகவே தமிழ்நாட்டிற்கு ஹிந்தி ஏன் என்று கண்டித்து வந்திருக்கின்றார்கள். குடிஅரசு... 19
இந்தி பார்ப்பன பாலை:
இந்தி என்றால் பார்ப்பன பாஷை என்று தான் அருத்தம். இதற்கு வேறு எந்த அருத்தமும் இல்லை. உங்களுக்கு யாருக்காவது சந்தேகமிருந்தால். வீட்டிற்குப்போய் டிக்ஷனரி (அகராதி)யை எடுத்துப் பாருங்கள். பார்ப்பன. பாஷையை பார்ப்பனரல்லாதாருக்கு கட்டாயமாகப் புகுத்தினால் பார்ப்பனரல்லாதாருக்கு வீரமும், மானமும், அறிவும் இருந்தால்: ஒப்புக்கொள்ள முடியுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
இந்தி பாஷையைப் பற்றியும் அதன் யோக்கியதையைப்பற்றியும் அதனால் தமிழ்மக்களுக்கு ஏற்படும் கெடுதியைப்பற்றியும் ஆச்சாரியார். இதைக் கட்டாயமாய்ப் புகுத்தும் சூழ்ச்சியைப் பற்றியும் இந்தி எதிர்ப்பு மேடைகளில் வண்டி வண்டியாய் பேசப் பட்டிருக்கின்றன. இதற்கு ஆச்சாரியாரோ மற்ற அவரது ௯ூலிகளோ பத்திரிகைகளோ ஏதாவது சமாதானம் சொன்னார்களா? சொல்லுகிறார்களா என்று யோசித்துப் பாருங்கள். நாம் சொல்லும் காரணங்களைக் கூட சென்னை பத்திரிகைகள் பல வெளியிடும் கண்ணியமான குணமில்லாமல் இழிதன்மையில் நடந்து கொள்ளுகின்றன. ஆகவே இந்த ஒரு காரணமே ஹிந்தியை அயோக்கியத்தனமாகவும் அக்கிரமமாகவும் வஞ்சகபுத்தியோடும் நம். குழந்தைகளுக்கு ஒரு கூட்டத்தார் புகுத்தப் பார்க்கிறார்கள் என்பதற்குப் போதாதா என்று கேட்கின்றேன்.
இந்தி ஓழிந்துவிட்டது தோழர்களே! இந்தி கெட்ட பாஷை - சூழ்ச்சி பானை என்பதையும் இந்தியைப் புகுத்தப் பார்ப்பது அக்கிரமமென்றும் நாம் ௬ஜு செய்து விட்டோம். அந்த ருஜுவை ஆச்சாரியாரும் ஏற்றுக்கொண்டதோடு இந்தியைக் கையும் விட்டுவிட்டார் என்கின்ற அளவில் நாம் வெற்றியும். பெற்றுவிட்டோம். நமது கிளர்ச்சி வெற்றியளித்துவிட்டதென்கின்ற நற்செய்தியை இன்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். எப்படியென்று கேட்பீர்கள். கவனமாய் கேளுங்கள். ஆச்சாரியார் இந்தியைக் கைவிட்டு ஒருமாத காலமாகி விட்டது. அவர் இப்போது எங்கும் இந்தி என்று பேசுவதில்லை. பத்திரிக்கைகளும் இந்தி என்று எழுதக் கூடாதென்பதாக: பத்திரிகைகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு வேறு பெயர் கொடுத்து இந்துஸ்தானி என்று பேசுகிறார். அவரை ஆதரிக்கும். பத்திரிகைகளும் அப்படியே எழுதுகின்றன.
எனது கவலை:
ஆச்சாரியார் உண்மையில் நம் மக்களை சம்ஸ்கிருதம் படிப்பிக்கச் செய்ய வேண்டும் என்று தான் முதன் முதல் கருதினார். ஆனால் அதற்கு தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள எதிர்ப்பைக் கண்டு பயந்து அதற்கு
7 வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
மறுபெயர் கொடுத்து ஹிந்தி என்றார். அதை எதிர்த்து தமிழ் மக்கள். கிளர்ச்சி செய்தவுடன் அதை விட்டு விட்டு இப்போது இந்துஸ்தானி. என்கிறார். இதையும் அதே மூச்சில் எதிர்த்தோமானால் அதையும் கைவிட்டு விடுவார் என்பது உறுதி. சூழ்ச்சிக்காரர்களுக்கு மானமும் வீரமும் நேர்மையும் இருக்காது. அவை இருந்தால் சூழ்ச்சி செய்ய அவசியமும் இருக்காது. ஆதலால் நாம் ஹிந்தி போய்விட்டதே என்று எதிர்ப்பைக் கைவிட்டு விடக்கூடாது. ஹிந்துஸ்தானியை ஆச்சாரியார் கைவிட்டு விட்டதாகச் சொன்னாலும் நம்பி விடக் கூடாது. நமது எதிர்ப்பு தொடர்ந்து இருக்க வேண்டும். நம்மை அறியாமல் நமக்கு எவ்வளவோ கேடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் மக்களுக்கு சரியாய் விளங்க வேண்டுமானால் ஆச்சாரியார் இன்னம் ஒன்று இரண்டு. வருஷத்துக்காவது பதவியில் இருந்து ஹிந்தியையும் அல்லது ஹிந்துஸ்தானியையும் மாற்றாமல் பிடிவாதமாய் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். வந்தே மாதரப் பாட்டை நிறுத்தி விட்டதுடன். முஸ்லிம்களுக்கு காங்கரசின் முழு சூழ்ச்சியும் தெரியும்படியான அளவுக்கு நடைபெற வேண்டிய பிரசாரம் நின்று விட்டது. மூஸ்லிம்களின் கொதிப்பு
ஒரு அளவுக்குக் குறைந்து விட்டது. ஆதலால் ஹிந்திச்சூழ்ச்சியை ஆச்சாரியார். நிறுத்தி விட்டால் நம் மக்கள் கிளர்ச்சி அடங்கி விடுமே என்று உண்மையிலேயே நான் கவலைப்பட வேண்டியவனாக இருக்கிறேன்.
பட்டினியில் எனக்கு நம்ரிக்கையில்லை
மற்றும் தோழர் ஜெகதீசனின் பட்டினியைப் பற்றி சிலர் பேசினார்கள். இம்மாதிரி பட்டினியைப் பற்றி எனது அபிப்பிராயம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பட்டினியில் எந்த விதமான. ஆத்மார்த்தம் என்பதோ தெய்வீகம் என்பதோ ஆன தத்துவம் இருக்கிறது என்பதை நான் என்றும் நம்பினதில்லை. அதனால் எதிரியை மனம் இளகச்செய்து விடலாம் என்பதிலும். எனக்கு நம்பிக்கை இல்லை. எவ்வித பட்டினியையும் நான் ஆதரித்து அதனால் எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக நான். ஆசைப்பட்டதில்லை. தோழர் ஸ்டாலின் தான் தப்பு என்று காரியத்தை ஒழிக்க சரி என்ற பட்ட காரியத்தைச் செய்ய வேண்டுமென்று கருதி அதற்காக ஜீவன்களுக்கு மிக்க அருமையான உயிரைக் கொடுக்க முன். வந்த வீரத்தை மதிக்க வேண்டியது என்பதை மறுக்க முடியாது. அன்றியும் தோழர் ஸ்டாலினின் பட்டினியானது காந்தியாரின் பட்டினித் தத்துவத்தை. வெளியாக்கவும் தோழர் காந்தியாரின் இனி இம்மாதிரி பட்டினி காரணங்களால் மக்கள் ஏமாந்து போய்விட மாட்டார்கள் என்பதையும். விளக்கவும் அதாவது தோழர் ஸ்டாலின் பட்டினியை காந்தியாரும் காந்தி பக்தர்களும் எப்படி கருதுகிறார்களோ அதுபோலவே இனிமேல். குடிஅரசு 28
ஏதாவது ஒரு காரியத்துக்கு காந்தியாரும் மற்றவர்களும் பட்டினி இருந்தால் அப்படியே கருதும்படி செய்யவும் இப்பட்டினி பயன்படுவதால் இது ஒரு நல்ல சம்பவம் என்று சொல்ல பின்வாங்கவில்லை.
காந்தியார் விஷமத்தனம்.
ஆனால் காந்தியார் தான் பட்டினி இருந்த காலத்தில் அதற்கு. அவர் சொல்லிக்கொண்ட காரணங்களும் அதற்காக மற்ற மக்கள்: கீழ்ப்படிய வேண்டுமென்று கட்டாயப்படுத்திய செய்கைகளும் உலகம். அறிந்திருந்தும் தோழர் ஸ்டாலின் பட்டினியைப்பற்றி மிக்க விஷமத்தனமாக: கொடுத்த அபிப்பிராயத்தை கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. இதிலிருந்தாவது பொது ஜனங்களுக்கு காந்தியாரின் உண்மையான. நிலை தெரிய சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்பதற்காகவும் இந்த பட்டினி வரவேற்கத்தக்கதாகின்றது என்கின்றேன்.
மக்கள் உலகில் இறப்பது இயற்கையானாலும் ஒவ்வொரு: மனிதனும் கட்டாயம் இறந்தே தீர வேண்டியது முடிவே ஆனாலும் தானாகவே பட்டினி கிடப்பதன் மூலம் சாகத் துணிவது என்பது பொது மக்கள் கவனத்தை இழுக்க மிக்க பயன்படத்தக்கதாய் இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
இப்படிப்பட்ட நிலையில் இக்காரியத்துக்காக மனிதத் தன்மைப்படி பரிதாபப்படா விட்டாலும் இதை குறை கூறுவதும் குற்றம் சொல்வதும் சிறிதும் யோக்கியமான காரியம் ஆகாது என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை.
இதுதானா ராமராஜ்யம்?
ஹிந்தி கட்டாயத்திலிருந்து மக்களை மீள்விப்பதற்காக முயற்சித்த பலர் இதுவரை 100 பேர்கள் வரை சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். பலர்3மாதம்4 மாதம் கடின காவல் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் மீது 2 வருஷம் 3 வருஷம் தண்டிக்கக்கூடிய சட்டப்படி குற்றம். சாட்டியிருக்கிறார்கள். இதுதானா ராமராஜ்யம் அல்லது தர்மராஜ்யம். என்று கேட்கின்றேன். இந்த அக்கிரமத்தை சகிக்காமல் பார்ப்பனர்களிலேயே பலர் வெளிப்படையாய் ஆச்சாரியார் மீதும் அவரது ஆட்சி மீதும் குறைகூற வந்துவிட்டார்கள்.
பம்பாய் சோஷியல் ரிபார்மர் பத்திரிகை பார்ப்பனர்களால் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட பத்திரிகையாகும். அதன் பத்திராதிபரும் இந்திய பிரதான புருஷர்களில் ஒருவராய் கருதச் செய்யப்பட்டவருமான. தோழர் நடராஜ அய்யர் அவர்கள் தனது பத்திரிகையில் “ஆச்சாரியார் ஹிந்திக் கிளர்ச்சியை நிறுத்த இவ்வளவு பெரிய அடக்கு முறையை ஆரம்பிக்கும்படியான அளவுக்கு ஆத்திரம்கொண்ட ஒரு காரணமே!
2 ஹரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
இந்திக்கு சரியான எதிர்ப்பு இருக்கிறது என்பதை ருஜுப்படுத்திவிட்டது. இதனால் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் துவேஷத்தைக் கிளப்புகிறார்.” ஆதலால் இனி இதை கைவிட்டு விட வேண்டியது தான் என்பது ஆக எழுதியிருக்கிறார்.
விசுவநாத சாஸ்திரியார் கண்டனம்.
நமது மாகாண ஐகோர்ட் ஜட்ஜாயிருந்த தோழர் விஸ்வநாத சாஸ்தியார் ஹிந்தி கிளர்ச்சியை அடக்க ஆச்சாரியார் கையாண்ட முறை. அக்கிரமமானதென்றும் “ஒருகாலத்தில் பொதுஜன பிரதிநிதிகள் என்கின்ற. முறையில் ஆச்சாரியாராலேயே கண்டிக்கப்பட்ட சட்டத்தை தாங்கள். பதவிக்கு வந்த உடன் பொது ஜனங்கள் மீது பிரயோகிப்பது மாமியாள். உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்று கூறுகிற ஆதிக்கத்தைப் போலிருக்கிறது” என்றும் கண்டித்து 'மெயில்' பத்திரிகையில். எழுதி இருக்கிறார். மற்றும் ஆச்சாரியார் ஆட்சியில் ஜெயிலில் செய்யப்படுகிற கொடுமை காதில் கேட்க முடியவில்லை.
பலாத்காரம் வேண்டாம்.
இவ்வளவோடு இல்லாமல் காங்கரஸ்காரர்கள் கூலிக்கு சில ஆள்களைப் பிடித்து அனுப்பி ஹிந்தி கிளர்ச்சி பேரால் வேண்டுமென்றே. கிறைபிடிக்கச் செய்து ஜெயிலுக்கு அனுப்பி மன்னிப்பும் நல்ல. நடவடிக்கை ஜாமீனும் எழுதிக்கொடுத்துவிட்டு வெளியில் அழைத்து வருவதன் மூலம் அந்த முயற்சியை கேவலமானதாக செய்யப் பார்க்கிறார்கள். இந்த வேலையில் இரண்டொரு காங்கரசின் பேரால் வயிறுவளர்க்கும். ஆள்கள் மிகத் தீவிரமாய் ஈடுபட்டிருக்கிறார்கள். இது வரை சிறைசென்ற 100 பேர்களில் காங்கரஸ்காரர்களால் அனுப்பப்பட்டவர்களும் 10 பேர்களுக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மற்ற தொண்டர்களையும் பல விதமாக நிர்ப்பந்தப்படுத்துவதாகவும் தெரிய வருகிறது. எந்தக் காரியம் எப்படியிருந்தாலும் எந்தக்காரணத்தைக். கொண்டும் பலாத்காரம் ஏற்படக்கூடாது என்பதும் செய்யக்கூடாது என்பதும் எனது கொள்கை. இதை ஹிந்தி தொண்டர்களுக்கு மிக வற்புறுத்திக்கூறுகிறேன். பலாத்காரம் ஏற்பட்டால் நான் பிரிந்து கொள்ளுவேன் என்பதையும் கூறி விடுகிறேன்.
காந்தியத்தின் பலன்
ஆச்சாரியார் ஹிந்தியைக் கட்டாய பாடமாகப் புகுத்தி ஆணவமாகப் பேசிக் கொண்டு வர ஆரம்பித்த பின்பு அவருக்குச் செல்லுமிடங்களில் எல்லாம் பகிஷ்காரம் இருந்து வருகிறதை பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பார்க்கிறேன். இவற்றிற்குக் காரணம் தன்னுடைய அடாத செய்கை என்பதை மறைத்துக் கொண்டு யாரோ சில துவேஷக்காரர்கள்.
குடி அரசு - 1988 (2) —— 30
இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றப் பார்ப்பது தன்னையே ஏமாற்றிக் கொள்ளத்தான் பயன்படப் போகிறது. சிற்சில இடங்களில் கூட்டங்களில் ஏற்பட்ட கலவரங்களையும் செருப்பு முதலியன வீசி எறியப்பட்டன என்பதையும் நான் பலமாக வெறுக்கிறேன். அது கண்டிக்கப்பட வேண்டியதேயாகும். ஆனால் முற்பகல் செய்யின். பிற்பகல் விளையும் என்பது போல் காந்தீயம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடமும் அதனால் காங்கரஸ்காரர்கள் மற்ற தலைவர்களுக்கும் மந்திரிகளுக்கும் நடத்தின மரியாதையும் இன்று காங்கரஸ் மந்திரிகள் அடைகிறார்கள். விளையின் பயன் மிக வழிமை உடையதல்லவா? இது இன்னும் எங்கு கொண்டுபோய் விடுமோ என நான் பயப்படாமல் இருக்க முடியவில்லை.
நிற்க, தோழர்களே!
எனக்குப் பிறகு பலர் பேச வேண்டியவர்கள் இருப்பதால் நான். அன்றைய கடற்கரை கூட்டத்தில் தோழர்கள் முத்துரங்க முதலியார், ஆச்சாரியார், சந்தான அய்யங்கார் ஆகியவர்கள் பேசிய பேச்சுக்களுக்கு மாத்திரம் பதில் சொல்லிவிட்டு நிறுத்திக் கொள்கிறேன்.
ஆதரிப்பவர்களுக்குப் பந்தோபஸ்து ஏன்.
தோழர்களே!
1. அன்று தோழர் முத்துரங்க முதலியார் அக்கூட்டம் ஹிந்தி ஆதரிப்பவர்களுக்கு மாத்திரம் கூட்டப்பட்டது என்று சொன்னார். ஆதரிப்பவர்களுக்கு மாத்திரமென்றால் அவர்களுக்கு ஆக ஒரு கூட்டம். கூட்டுவானேன்? அதை கடற்கரையில் கூட்டி அவ்வளவு பந்தோபஸ்து வைப்பானேன்? பத்திரிகைகளில் அக்கூட்டத்தைப் பற்றி விளம்பரம் செய்து திரளான ஜனங்கள் வரும்படி வேண்டுகோள் விடுவானேன்? அவ்வேண்டுகோள்களிலும் பதினாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களிலும். ஆதரிப்பவர்கள் மாத்திரம் வரலாம் என்று ஏன் போடவில்லை என்பவை களைக் கவனித்தால் ஹிந்தி எதிர்ப்புக்கு ஆச்சாரியாரிடம் சரியான. சமாதானம் இல்லை என்பதும் பொதுஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் சுயநலம் கொண்டோ ஏதோச்சாதிகாரம் கொண்டோ ஹிந்தியைப் புகுத்துகிறார்கள் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றேன்.
ஸர்.கே.வி. ரெட்டி எதிர்ப்பு ஆந்திர நாட்டுக்கும் உரியதே
2. சர். கே.வி. ரெட்டியாரும், சர். கிருஷ்ணன் நாயரும், தோழர். கலீபுல்லாவும் தங்கள் நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு செய்யாமல் தமிழ்நாட்டில் செய்கிறதால் அதற்கு ஏதோ உள் காரணம் இருப்பதாக.
3 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தோழர் முதலியார் சொன்னாராம். சர்.கே.வி. ரெட்டி நாயுடு பேசுவதும் எழுதுவதும் எல்லா நாட்டுக்கும் சேர்ந்துதானே ஒழிய ஆந்திரர்களை: விலக்கவில்லை. சென்னையே ஆந்திராவின் ஒரு பாகம் கொண்டது என்பது முதலியாருக்குத் தெரியாதா? இதனால் ஆந்திராவில் இக்கிளர்ச்சி இல்லை என்று முதலியார் சொல்லுகிறாரா? ஆந்திராவுக்கு கனம் ரெட்டி நாயுடு போகவில்லை என்றதால் அவர் ஹிந்தி கூடாது என்கின்றதற்கு. கூறும் காரணங்கள் செல்லுபடி அற்றதாகி விடுமா? இதிலிருந்தே தோழர். முத்துரங்க முதலியாருக்கு ஹிந்தியை ஆதரிக்கத் தகுதியான காரணம் இல்லை என்பது விளங்குகிறது.
ஸர். கிருஷ்ணன் நாயர் எதிர்ப்பை மலையாலிகள் மறுக்க வில்லையே?
மற்றும் சர். கிருஷ்ணன் நாயர் அவர்கள் ஹிந்தியை எதிர்த்து மலையாள நாட்டிலிருந்துதான் அறிக்கை விட்டார். அதை எந்த மலையாளியும் மறுக்கவில்லை.
தோழர் கலீபுல்லா சாயபு “தனது நாட்டுக்குப் போய் ஏன் பிரசாரம் செய்யவில்லை” என்று முதலியார் சொல்லுவதிலிருந்து தோழர் முதலியாருக்கு தோழர் கலீபுல்லா சாயபு எந்த நாட்டுக்காரர் எந்த நாட்டில் கிளர்ச்சி செய்கிறார் என்பது கூட தெரியவில்லை என்று புலப்படுகிறது.
இழிவான சமாதானம் மறைமலை அடிகளும் தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும். கிளர்ச்சிக்கு காரணம் ஆரியத் துவேஷம் என்று சொன்னாராம். கனம்: ஆச்சாரியாரும் ஹிந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி இப்படியே சொல்லுகிறார். தமிழுக்கு ஆரிய பாஷையைப் புகுத்துவதும் அது கூடாதென்றால் ஆரிய துவேஷம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப். பார்ப்பதும் என்றால் இது மிக இழிவான சமாதானம் என்று தான். சொல்லுவேன். தோழர் மறைமலை அடிகளும் பாரதியாரும் வெகுகாலமாய் ஆட்சேபித்து வந்திருக்கிறார்கள். இதைக்கண்டித்து பல புஸ்தகங்கள். போட்டு இருக்கிறார்கள். அன்றியும் இந்த நாட்டு தமிழ் மக்களுக்கு ஆரிய துவேஷம் இருப்பது ஒரு அதிசயமா என்று கேட்கின்றேன். ஆரிய மதப்படி தமிழ் மக்கள் எவ்வளவு இழிவானவர்களாக கருதப்படக்கூடியவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு சமூகத்தை ஒரு சமூகம் கீழ் ஜாதியென்றும் தங்களுக்கு (ஆரியருக்கு) பாடுபட்டுப்போட்டு வாழ வேண்டியவர்கள் என்றும் சொல்லப்படுமானால்: கருதப்படுமானால் சமூகத்துக்கு சமூகம் துவேஷமில்லாமல் இருக்க முடியுமா என்று பாருங்கள். தமிழ்மக்களுக்கு ஆரியபாஷை கட்டாயமாய் கற்றுக் கொடுத்தல் கூட துவேஷப்படாமல் இருக்கமுடியுமா என்று குடிஅரசு ௦
நீங்களே யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர் மீது பார்ப்பனர்கள். குறை கூறி அவர்களை ஓட்ட வேண்டுமென்று கூறியது குற்றமில்லை, துவேஷமில்லை என்று கற்றுக் கொடுத்த இவர்கள் கொடுமையைப் பார்த்து இவர்கள் செய்கையைக் கண்டிப்பது துவேஷமா என்று கேட்கிறேன். இன்று பார்ப்பனர்கள் நடத்தும் ராஜ்யபாரம் வெள்ளைக்காரர் ராஜ்யபாரத்தைவிட ஆயிரம் மடங்கு கொடுமையானதாகவும், எதேச்சதிகாரமாகவும் இருக்கிறதே இதை நாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் நம் கதியா என்று நான் கேட்கிறேன்.
மணதறிந்த பித்தலாட்டம்
மற்றும் ஆச்சாரியார் ஹிந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது என்று மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ் பழக்க வழக்கம் சுதந்திரம் மானம் ஆகியவைகளை உணர்த்தும். தமிழ் வார்த்தைகள் எங்கே? ஒரு தமிழ்மகன் தன் மகளுக்கோ மகனுக்கோ கல்யாணம் செய்ய வேண்டுமானால் தமிழ்சொல் எங்கே? தமிழ் கருத்தினால் வாழ்க்கைத்துணை நலம் என்பான். ஆனால் ஆரிய கருத்தில் பேசும்போது கல்யாணம் விவாகம் கன்னியாதானம் என்கிறான்.
வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. இதற்குத்தகுந்தபடி புரோகிதம் சடங்கு செலவு பார்ப்பான் பிழைக்க வழி ஏற்படுவதல்லாமல். வாழ்க்கைத்துணை என்பதில் சம உரிமையும் கன்னியாதானம் என்பதில். ஆண்டான் அடிமை தன்மையும் புகுத்தப்பட்டு விடுகிறது. இம்மாதிரியே ஆரியக்கலப்பால் தமிழின் தன்மை, உரிமை, நேர்மை எல்லாம் கெட்டு ஆரியருக்கு தமிழன் அடிமை என்பதுதான் மிஞ்சி விடுகிறது அப்படியிருக்கும்போது இனியும் ஆரிய பாஷையை கட்டாயமாக்கினால் என்ன ஆகும்? ஆகையால் ஹிந்தியை ஆச்சாரியார் புகுத்துவது மத உணர்ச்சியாலேயே ஒழிய கல்வி உணர்ச்சியால் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 26.06.1938 ஆம் நாள் சென்னை கடற்கரையில் தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும். பொதுக் கூட்டத்தில் (சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர்)
இந்தி எதிர்ப்புக் குறித்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 10.07.1938.
B வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஒரு வருஷ ஆட்சி படலம்
காங்கரஸ் மந்திரிகள் பதவி ஏற்று ஒரு வருஷமாகி விட்டது. அதாவது அவர்கள் தேர்தலுக்கு நிற்கும் போது மந்திரி பதவி ஏற்பதில்லை என்றும். அரசியல் சட்டத்தை உடைத்தெறிவதற்கும் ஏகாதிபத்தியத்தைத் தொலைப்பதற்காகவுமே சட்டசபைக்குப் போகிறோம் என்றும் சொல்லி பாமர மக்களை ஏய்த்து ஓட்டுப் பெற்று சட்டசபை அங்கத்தினர்களான. பிறகு அரசியல் சட்டத்தை உடைப்பதானால் மந்திரி பதவி ஏற்றுத்தான். ஆகவேண்டுமென்றும் சொல்லி பதவி ஏற்க முன்வந்து காங்கரஸ் கமிட்டி பேரால் அனுமதி உண்டாக்கிக் கொள்ளத் துணிந்து கொண்டு. பதவி ஏற்ற பிறகு அரசாங்கத்தார் தங்களை பதவியில் வைக்காவிட்டால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக “நாங்கள் பதவி ஏற்றாலும் புதிய அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்கின்ற வாக்குறுதியை சர்க்காருக்கு கொடுக்கவும் காங்கரஸ் கமிட்டி மூலமே தீர்மானித்துக் கொண்டு அந்த வாக்குறுதி கொடுப்பதையும் பாமர மக்கள். ஏமாறும்படி அதாவது சர்க்காரை வாக்குறுதி கேட்பது போல் பாவனை: செய்து அந்த வாக்குறுதி கேட்பதற்கு ஆக வாக்குறுதி கொடுத்தாய் மக்களை நினைக்கும்படி செய்து அந்தப்படி அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்ததல்லாமல் ராஜ விஸ்வாச சட்ட விஸ்வாச பிரமாணமும் செய்து
கொடுத்து மந்திரி பதவி ஏற்று இன்று ஒரு வருட காலம் ஆகின்றது. ஆகவே இந்த ஒரு வருஷ காலத்தில் இந்த மந்திரி ஆட்சியில் நிகழ்ந்த பயன் என்ன என்று பார்ப்பது மெனக்கேடான வேலையாகாது என்று கருதுகிறோம் அந்தப்படிபதவியேற்று காங்கரஸ்காரர்கள் நடத்திய காரியங்களில்.
முதல் பலன்:
முதலாவதாகமந்திரி பதவிகளை காங்கரஸ்காரர்களுக்கு வினியோகம். செய்வதிலேயே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டார்கள். இரண்டாவது பதவி வினியோகத்தில் வகுப்பு உணர்ச்சிகள் பெருகி மனக்கசப்புகள் உண்டாயிற்று. அதாவது மந்திரிகள் 10 தலைவர்கள் 4 ஆக14 ஸ்தானங்களில்? ஸ்தானங்களைபார்ப்பனர்கள் எடுத்துக்கொண்டார்கள். இதிலும் முதல் மந்திரியும், இரண்டு சபை தலைவர்களும் பார்ப்பனர்களே. ஆகிக் கொண்டார்கள். “போதாகுறைக்கு” பார்லிமெண்டரி சீப் செக்ரட்டரி என்கின்ற பதவியையும் பார்ப்பனர்களே எடுத்துக்கொண்டார்கள். குடிஅரசு ய
இவ்வளவும் அல்லாமல் காங்கரசுக்கு துரோகம் செய்ததாய்.
தீர்ப்புக் கூறி காங்கரசைவிட்டு வெளியாக்கி அவரது பதவிகளையும். ராஜிநாமாச் செய்யும்படி வற்புறுத்தி அதேபடி ராஜிநாமா செய்துவிட்டு சொந்தப் பொறுப்பில் ஒரு தேர்தல் பதவிக்கு நின்று படுதோல்வி அடைந்த ஒருவருக்கு நாமினேஷன் கொடுக்கச் செய்து மந்திரி பதவி கொடுத்துவிட்டு இதற்கு பொது ஜனங்கள் காரணம் கேட்டதற்கு “அந்த காரணம் தனக்கு தெரியா'தென்றும் “நாமிநேஷன் கொடுப்பதும், மந்திரி பதவி அளிப்பதும் கவர்னர் பிரபுவின் அதிகாரம்” என்றும் பொய் சமாதானம் சொன்னதுமான காரியம் மற்றொன்று.
குறைந்த சம்பளப் புரட்டு இவை ஒருபுறமிருக்க தாங்கள் பதவி ஏற்றால் மீ'500 ரூ-க்கு மேல். ஊதியம் பெற மாட்டோம் என்றும் மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும். மீ£00 @ - க்கு மேல் கொடுக்கமாட்டோம் என்றும் ஓட்டர்களுக்கு கொடுத்த நம்பிக்கைக்கு துரோகமாக மந்திரிகள் ஒவ்வொருவருக்கு மீ 500,150, 150, 100, 250 - 1150 ரூ வீதம் அதாவது சம்பளம் 500, வீட்டு வாடகை 150, மோட்டார் கார் அலவுன்ஸ் 150,சர்க்கார் செலவில்: 4000 ரூ மோட்டார்கள் 4 அனுபவிப்பதில் ஒன்றுமில்லாமல் போவதும் அதற்கு மத்தியில் ரிப்பேர், டியூப், டயர் ஆகியவை சேர்ந்து 5 100 ரூபாயும், மந்திரிகளின் சுற்றுப் பிரயாண டிராவலிங் அலவுன்ஸ் பெறுவதில்: செலவு போக மீதி குறைந்தது 5 250 ரூபாயும் ஆக மொத்தம் மந்திரி 1-க்கு & 1-க்கு 1150 ரூபாய்க்கு குறையாமல் அனுபவிப்பதுமாய்
இருந்து வருவதாகும்.
மற்றும் மனிதனின் ஒழுக்கத்தையும், நாணையத்தையும், சுதந்திரத்தையும் கெடுக்கும் மாதிரியில் பலருக்கு பயன்படும்படி சட்டசபை மெம்பர்களுக்கும் (அவர்களுடைய பிரயாணப் படியல்லாமல்) மீ 1-க்கு 75 ரூ வீதம் சம்பளம் கொடுத்து அடிமைப்படுத்திக் கொண்டதும் ஆன காரியங்களை பதவி அமைப்பிலேயே ஏற்பட்டுவிட்டன.
இப்படிப்பட்டவர்கள் பதவி ஏற்ற இந்த ஒரு வருஷ காலத்தில். ஏற்பட்ட பலன் என்ன என்பதை சொல்லவேண்டுமானால் ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்வதிலேயே இவர்கள் செய்த காரியம் எப்படிப்பட்டது என்பது விளங்கிவிடும் என்றே கருதுகிறோம்.
ஓயாத பிரசாரம்.
அதாவது மந்திரிகள் ஒரு ஜில்லாவில் நிறுத்திவிட்டதாகக் கூறும். மதுவிலக்கைப் பற்றியும், விவசாயிகளுடைய கடன் பளுவை குறைத்து விட்டதாகக் கூறும் கடன் குறைப்பு சட்டத்தையும், மக்களுக்கு தேசீயக் கல்வியை புகட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டதாகக் கூறும் இந்தி
35 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கட்டாயபாடதிட்டத்தைப் பற்றியும் 10 மந்திரிகளும் 10 காரியதரிசிகளும். ஒரு நாளாவது இடைவிடாமல் ஒரு மணி நேரமாவது ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் சதா சர்வ காலம் நாடு முற்றும் சுற்றிச் சுற்றி “இவை நல்ல காரியங்கள்” “இவை நல்ல காரியங்கள்” இதனால் மக்களுக்கு நாட்டுக்கு நன்மையுண்டு நண்மையுண்டு என்று பிரசாரம் செய்து தீரவேண்டிய அவசியத்திற்கும் பிரசாரம் செய்த வண்ணமாய் இருப்பதற்கும் கொண்டு வந்து விட்டுவிட்டது என்றால் இந்த காரியங்களுக்காக மந்திரிமார் செய்யும் சுற்றுப் பிரயாணங்களில். செல்லுமிடங்களில் எல்லாம் பொது ஜனங்கள் 100 நூற்றுக்கணக்கான. பேர்கள் ஏன் 1000 ஆயிரக்கணக்கான பேர்கள் கறுப்புக்கொடி பிடித்து, பஹிஷ்காரக் குறி காட்டி இவர்களை மானபங்கப்படுத்தி அனுப்புவது என்றால் மற்றபடி அக்காரியங்களின் நன்மைகளைப் பற்றி விவரிக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
எங்கும் ஆறு பேரா?
இந்த கறுப்புக்கொடி முதலிய மரியாதைகளுக்கு முதல் மந்திரியார். சொல்லும் சமாதானமானது “ஒரு ஆறே ஆறு பேர் தான் நான். செல்லுமிடங்களிலெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்து கறுப்புக் கொடி காட்டிய வண்ணமாய் இருக்கிறார்கள்” என்பதாகும். ஆனால், கறுப்புக் கொடி பகிஷ்காரங்கள் “மெயில்” “சண்டே அப்சர்வர்” “விடுதலை” “நகர நூதன்" “நம் நாடு” “குடி அரசு” முதலிய பத்திரிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் 500 கணக்கான கறுப்புக்கொடி பிடித்த மக்களுடன் எடுக்கப்பட்ட போட்டோ பட பிளாக்குகள் டஜன். டஜனாக ஊர் பேர் தேதி நேரங்களுடன் பிரசரிக்கப்பட்டு வருவதை: பார்க்கும் ஜனங்கள் இந்த “ஆறே பேர்தான்” என்ற சமாதானத்தை எப்படி ஒப்புக்கொள்வார்கள் என்றும் தன்னைப்பற்றி பொது ஜனங்கள். யோக்கியர் என்று எப்படிக் கருதுவார்கள் என்று கருதினாரோ என்பது நமக்கு விளங்கவில்லை. முதல் மந்திரியாரின் கூட்டங்களும், கல்வி மந்திரி, விளம்பர மந்திரி, வைத்திய மந்திரி, சட்ட இலாக்கா மந்திரி முதலியவர்கள் கூட்டங்களும், சில தலைவர் முகவுரை கூட முடிவு பெறாமலும் பல முடிவுரை வந்தனோபசாரம் முடிவு பெறாமலும் கலைக்கப்பட்டு ஓட்டமெடுக்க நேரிட்டவைகள் மெயில், இந்து, மித்திரன். முதலிய பத்திரிக்கைகளில் இருப்பனவற்றிற்குக் கூட இந்த “ஆறே பேர்தான்” என்கின்ற சமாதானமே போதுமா என்றும் சென்னை கடற்கரை கூட்டத்தில் காங்கரஸ் தலைவரும் முதல் மந்திரியும் 500 போலீசாரை: வைத்துக்கொண்டு நடத்திய கூட்டத்திலாவது முடிவுரையும் வந்தனோபசார
சடங்கும் நடந்ததா என்றும் இது நடவாததற்கும் இந்த “ஆறே பேர். தான் காரணம்” என்றும் யோசித்துப் பார்க்கும்படி பொதுஜனங்களையே வேண்டிக் கொள்கிறோம். இவற்றை நாம் ஏன் இந்த வியாச முதலிலேயே
குடிஅரசு 1938 (2) —— 19
குறிப்பிடுகிறோம் என்றால் இந்த காங்கரஸ் பொது ஜன செல்வாக்குள்ள, நூற்றுக்கு எண்பது மஜாரட்டி உள்ள ஜனநாயக மந்திரிமார்கள் பதவி வகித்த ஒரு வருஷ காலத்துக்குள் இவர்கள் செய்த காரியங்களின் பயணாய் நாட்டில் இவர்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கும் பொதுஜன ஆதரவும் எப்படிப்பட்டது என்பதை சுருக்கமாய் விளக்குவதற்கு ஆகவே இதை முதலில் குறிப்பிட்டோம்.
கள்ளு.
மற்றும் “கள்ளு நிறுத்தத்தினால் கல்வியை குறைக்க வேண்டியதாய் விட்டது” என்றும் “கல்விக்கு ஆக கொஞ்சம் கூட பண உதவி செய்ய முடியாது” என்றும் மந்திரிகளே அதுவும் கல்வி மந்திரியே 12-6-38 தேதி திருநெல்வேலியில் கூறிவிட்டார் (இது சு.மி-ல் இருக்கிறது)
கடன் குறைப்பு
கடன் குறைப்பு மசோதாவில் பெரிய விவசாயிகள், விவசாயிகள். குறைக்கப்பட்ட கடனைக் கட்டக்கூட தங்களுக்கு கடன் கிடையாமலும் சிறு விவசாயம் செய்யக்கூடியவர்களுக்கு விதைப்பு செலவுக்குக்கூட பண சவுகரியம் கிடையாமலும் போய்விட்டதென்று இவர்கள் ௯க்குரல். இடுவதை முதல் மந்திரியாரே நன்றாய் உணர்ந்து பணக்காரர்களும், லேவா தேவிக்காரர்களும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும்படி விண்ணப்பம் செய்து கொண்டு கெஞ்சுகிறார். அதாவது “பணமிருப்பவர்கள் விவசாயிக்கு வேண்டிய கடன் தொகையை முதலில் கொடுத்துவிட்டு பிறகுமீதி இருந்தால் பாங்கியில் போட வேண்டும். நாட்டுக்கு அஸ்திவாரமாகிய விவசாயிகளை காப்பாற்றுங்கள்” என்று ஓலமிடுகிறார்.
(இதுவும் சு.மி. பத்திரிகையில் இருக்கிறது) மேற்கண்ட இரண்டு விஷயங்களிலும் அதாவது மதுவிலக்கு கடன். குறைப்பு ஆகிய இரண்டு விஷயங்களிலும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாய் கருதி செய்யப்பட்ட காரியங்கள் தீமையாக முடிந்து விட்டதை முதல் மந்திரியாரும் கல்வி மந்திரியாரும் நன்றாய் உணர்ந்துவிட்டார்கள்.
மாஜி திவான்: பகதூர் அரிப்ரிராயம்:
மற்றும் திவான் பகதூர் (பட்டத்தை விட்ட) தோழர் டிஎ.ராமலிங்க செட்டியார் எம்.எல்.சி., அவர்களும் இந்த சட்டத்தின் குறைபாடுகளைப். பற்றி எழுதும் போது
“கடன் இல்லாமல் விவசாயம் நடப்பது துர்லபம். குடியானவனுக்குச் சுலபமாய் கடன் கிடைப்பதற்கு வழி இல்லை, பணம் கொடுப்பவர்கள். ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து எழுதிக்கொண்டோ அல்லது சொத்துக்களை கிரையமாக எழுதிக் கொண்டோதான் கடன் கொடுக்கிறார்கள்” என்று 37௨ வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
எழுதி உடனே வேறு சட்டம் செய்து இதைத் திருத்த வேண்டும் என்றும் எழுதி “கூட்டுறவு” என்ற பத்திரிகையில் ஜுலை 1-ந் தேதி பிரசரித்துள்ளார். இவர் காங்கரசு எதிரியல்ல; பார்ப்பன துவேஷி அல்ல (ஜஸ்டிஸ் - சுயமரியாதை கட்சிக்காரருமல்ல) மிக்க மரியாதையான பாஷையில்: எழுதி இருக்கிறார். இவ்வித சட்டத்தை ஜஸ்டிஸ் மந்திரிகள் செய்திருந்தால் இவர் கிழித்து சின்னாபின்னமாக்கி இருப்பார். ஆனால் காங்கரஸ் ஒழுங்கு (அடக்குமுறை) நடவடிக்கைக்கு பயந்து திருட்டு பாஷையில்:
எழுதி இருக்கிறார்.
மந்திரிகள் இந்த ஒரு வருஷத்தில் செய்த 3 நல்ல காரியங்களில் இனி மீதி இருப்பது இந்தி.
இந்தி. இந்தி பாஷையை புகுத்துவது தவறு என்று மக்கள் கூப்பாடு. போடுவதை உணர்ந்து மூதல் மந்திரியாரே அதை மாற்றிக் கொண்டார். அதாவது “நான் கட்டாயமாகப் புகுத்தப் போவது இந்தி அல்ல ஹிந்துஸ்தானி” என்று சொல்லிவிட்டார். இதைப்பற்றி காங்கரசையே ஆதரிக்கும் மெயில் பத்திரிகை இந்தி என்றால் என்ன? ஹிந்துஸ்தானி. என்றால் என்ன? உருது என்றால் என்ன? சமஸ்கிருதம் என்றால் என்ன? இவைகளில் முதல் மந்திரி புகுத்தப் போவது எது? அதற்கு இலக்கியம். என்ன? இலக்கணம் என்ன? எழுத்து என்ன? என்றெல்லாம் கேட்டிருப்பதோடு தனக்கும் தெரியவில்லை என்றும் புகுத்துபவர்களுக்கும் தெரியவில்லை என்றும் புகுத்தப்படுபவர்களுக்கும் தெரியவில்லை என்றும் கிண்டல் செய்து குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுவது போல் இருப்பதாக பரிகாசம் செய்கிறது. ஆச்சாரியாரும் இந்தி உத்திரவை மாற்றி ஆக வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டார் என்றாலும் மானம் அவர் கையைப் பிடித்துக் கொள்ளுகிறது.
இந்திப் போர் எப்படி இருந்தாலும் ஒரு பாஷைக் கிளர்ச்சியை அடக்குவதற்கு கிளர்ச்சிக்காரர்களை அடக்குமுறை சட்டங்களால் அதுவும் பிரதம மந்திரியால் வெகு அற்பமான விஷயம் என்று கருதப்பட்ட ஒரு சிறு கிளர்ச்சிக்காகதானே அதை பல வழிகள் மாற்றிக் கொண்டிருந்தும் கூட காங்கரஸ்காரர்களாலேயே மிகவும் அநீதியானதும் மனித சமூகத்தார் மானத்துக்கு கேடானதுமான சட்டம் என்று பழி கூறி அதை ஒழிப்பதற்காகவே அங்ஙனம் ஏற்பதாகச் சொல்லி ஓட்டுப் பெற்றவர்கள். பதவிக்கு வந்த உடன் அதே சட்டங்களைக் கொண்டு சுமார் 200 பேர்கள் வரை 6 மீ வரையும் ஒரு வருஷம் வரையும். கடுங்காவல் தண்டனையும் தண்டிக்கப் படவேண்டியவர்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள் என்றால் இவர்களுடைய “நல்ல ஆட்சிக்கு. இனி வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
குடி அரசு -1988(29௨ ௨ ௦
அதுவும் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், வெடிகுண்டுக் காரர்களும் மன்னிக்கப்பட்டு நிபந்தனை இல்லாமல் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யுங்காலையில் “என் தாய் பாஷையை நேசிக்கிறேன்” என்ற பாவத்துக்கு ஆக இரண்டு வருடம் என்றால் அதுவும் சன்யாசிக்கு
- மடாதிபதி - தமிழ் பண்டிதருக்கு இரண்டு வருஷம் கடின காவல். என்றால் இந்த ஆட்சியின் ஒரு வருஷகால நிகழ்ச்சிக்கு பட்டியலோ ஜாப்தா - பாலன்ஸ் ஷீட்டோ இருக்க வேண்டுமா என்று கேட்கின்றோம். இவைகள் எல்லாம் எப்படியோ தொலைந்து போகட்டும், ஒரு. எமியார் ஒரு வருஷம் சிறையில் அவதிப்பட்டதால் உலகம் முழுகிப் போகும் என்று நாம் கவலைப்படவில்லை. 200 பேர் அல்ல 2000 பேர் சிறை சென்று துன்பப்பட்டதால் ஜன சமூகத்திற்கு ஏதும் கேடு. வந்து விடுமோ என்று நாம் கவலைப்படவில்லை. ஆனால் இன்றைய ஆட்சியானது பல நூற்றாண்டுகளுக்கு முன்,
முன்னோர் வாக்கு
ஒரு கவி அரசி “நூலாலே (பூணூல் ஆட்சியாலே ) நாடு. கெடும்” என்றும் ஒரு கவி அரசர் “முப்புரி நூல் பாப்புப் பெருத்து... துரைத்தனம் பாழ்த்ததுவே” பாப்பு (பார்ப்பனர்) பெருத்தல்லோ.... ராஜ்யம் பாழ்பட்டதுவே என்றும் பாடியதை மெய்ப்பிக்க முதல் மந்திரியாரின்
இந்த ஒரு வருஷ ஆட்சி உருவாரமாய் நிற்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம். மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள காரியங்களையும் அபிப்பிராயங் களையும் உறுதிப்படுத்த கனம் முதன் மந்திரியார் அவர்களே நமக்கு தேவைக்கு மேற்பட்ட ஆமோதிப்பை அளித்துவிட்டார்கள். “அதாவது அரசியலில் ணக்கு அனுபோகமில்லை. எதிர்ப்புகளைச் சமாளிக்க எனக்கு சக்தி இல்லை. அரசியல் ஞானம் எனக்கு. போதாது. வக்கீல் தன்மையிலும் காசு பெற்ற பக்கமே வாதம் பேசிப் பேசி பழகிவிட்டபடியால் உண்மை கண்டுபிடிக்கவும் நடுநிலைமையாய் நடக்கவும் எனக்கு முடிவதில்லை. அரசியல் இவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நான் அறியாமல் போய்விட்டேன். பிடிவாதமாக நான். நினைப்பதே சரியென பேசத்தான் தெரிகிறதே தவிர ஒத்துப் போகவும். நியாயம் உணரவும் என்னால் முடிவதில்லை” என்று கள்ளிக் கோட்டை, மங்களூர், அனந்தப்பூர் முதலிய ஜில்லாக்களின் சுற்றுப் பிரயாணத்தில். பேசி இருக்கிறார். இவை மாத்திரமல்லாமல் இந்த பதவியை விட்டுவிட்டு ஓடுவதற்கு. சமயம் தேடுவதாகவும் ஜாடைமாடையாய் அடிக்கடி கூறுகிறார். ஆகவே காங்கரஸ் ஆட்சியின் - ஆச்சாரியார் ஆட்சியின் ஒரு. வருஷ ஆட்சியின் பலாபலத்தின் வரவு செலவு திட்டத்திற்கு வேறு என்ன ஜாப்தா வேண்டும் என்று மறுபடியும் கேள்க்கின்றோம். 39௨ வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
மந்திரிமார் கைவிரிப்பு
நிற்க காங்கரஸ் ஆட்சியின் கல்வித்திட்டம் என்பது பள்ளிக்கூடங்களை: மூடி சாவடிகளிலும் ஊர் கேணிகளிலும் சில வார்த்தைகள் அடங்கிய அட்டைகளை எழுதிக் கட்டிவிட வேண்டியது என்பதாய் விட்டது (இது சர்க்கார் அறிக்கையிலேயே கூறுகிறது)
ஆஸ்பத்திரிகளுக்கு சம்பள டாக்டர் எடுக்கப்பட்டு கெளரவ டாக்டர்கள் நியமிக்கப்பட்டுவிட்டது
கிராமங்களுக்கு தண்ணீர் வசதிக்கு பொதுக் கிணறுகள் வெட்ட பணமில்லை என்று கண்டிப்பாக சொல்லப்பட்டாய் விட்டது.
ரோட்டுபாலம் முதலியன செப்பனிடவும் புதிதாய் போடவும் புது வரி போட்டாக வேண்டியதாகி புது புது சுங்கமும் ஏற்படுத்தி ஆகிவிட்டது.
கிராமத்தாருக்கு இதைவிடக் கேடான காரியம் இந்த மந்திரிகள் வேறு என்ன செய்யவேண்டும்?
காங்கரஸ் சாதிக்காதவை
நிர்வாக செலவை குறைப்பதாக கூப்பாடு போட்டவர்கள் ஒரு. வருஷத்தில் 3% கோடி ரூபாய் கடன் வாங்கிய பிறகும் பது வரிகள். போடாமல் நிர்வாகம் நடத்த முடியவில்லை என்று ஊர் ஊராக திரிந்து சொல்லுகிறார்கள்.
பழைய மந்திரிகள் பேரில் என்ன என்ன குற்றங்கள் சுமத்தினார்களோ அவைகள் எல்லாம் இவர்களும் செய்து கொண்டே வருகிறார்கள்.
ரிவினியூ போர்டை எடுக்க முடியவில்லை.
நிதி நிர்வாக இலாக்காக்களை பிரிக்க முடியவில்லை.
அடக்குமுறை அனுசரிக்காமல் இருக்க முடியவில்லை.
6.10. என்கின்ற ஒற்றர்களை எடுக்க முடியவில்லை. தொழிலாளர்களை அடிக்காமலும் சுடாமலும் இருக்க முடியவில்லை.
கவர்னர் சம்பளத்தையோ, வெள்ளைக்காரர் சம்பளத்தையோ ஒரு. காசு கூட குறைக்க முடியவில்லை.
“தேசீயக் கொடி“யை சர்க்கார் ஒப்புக்கொள்ளும்படி செய்யவோ, சர்க்கார் கட்டடத்தின் மீது கட்டவோ அல்லது அதற்கு தேரீயக் கொடி என்கின்ற பெயரையாவதுநிலைநிறுத்திஅரசியல் ஆதாரத்தில் புகுத்தவோ முடியவில்லை.
கடசியாக பிரிட்டிஷ் கொடியைக் கண்டால் தேசீயக்கொடி மறைந்து கொள்ள வேண்டும் என்றுகூட உத்திரவு போடப்பட்டாய் விட்டது குடிஅரசு 40
போலீசாருக்கு புகழ்மாலை
போலீஸ்காரர்களை நடுங்க வைப்பதாய் சொன்னவர்கள். காலாகாலம் இல்லாமல் போலீசாரை புகழ்ந்த வண்ணமாய் திரிய வேண்டியதாய் விட்டது வெள்ளைக்காரர்களை திணற வைப்பதாய் சொன்னவர்கள். வெள்ளைக்காரர்களுக்கு நல்ல பிள்ளையாய் நடந்து கவர்னர்களிடம் நற்சாட்சி பத்திரம் பெற அவர்கள் பின் திரிய வேண்டியதாய்விட்டது.
அரசியல் சட்டத்தை தகர்ப்பதாகச் சொல்லி உள்ளே புகுந்து அரசியல். சட்டத்தை ஒழுங்காக பக்தி விஸ்வாசமாக நடத்திக்காட்டி சன்மானம்: கேட்டு வாங்க அலைய வேண்டியதாக ஆகிவிட்டது.
உதாரணமாக சென்னை சர்க்கார் சீப் சிக்கரட்டரி தோழர் பேக்கன்பரி. துரை அவர்கள் சீமைக்குப் போகும்போது அவரை தங்களைப் பற்றி சில நல்ல வார்த்தை சொல்லிவிட்டுப் போக வேண்டுமென்று மந்திரிகள். கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரும் கப்பலேறும் போது பம்பாய் துறைமுகத்தில் ஒரு காலும் கப்பலில் ஒரு காலும் வைத்துக்கொண்டு “சென்னை மந்திரிகள் நல்ல அடிமைகள்” என்பது வினங்க “அவர்கள். அரசியல் சட்டத்தை மிக ஒழுங்காக நடத்திக்கொடுத்தார்கள்” என்று சொல்லிவிட்டு சவாரி பிடித்தார். அதை வெட்கமில்லாமல் காங்கரசுக்காரர்களும் அவர்களது பத்திரிகைகளும் தங்களுக்கு சன்மானம் கிடைத்ததாக புகழ்ந்துக் கொள்ளுகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியாரைப் பற்றி இதே வெள்ளையர்கள் கவர்னர்கள். வைசிராய்கள் புகழ்ந்து கூறியபோது இதை காங்கரஸ்காரர்கள் அவர்களை “அடிமை முத்திரை பெற்றார்கள்” என்று படுக்காளிப் பேச்சு பேசினார்கள். இப்போது போதாக்குறைக்கு “சமஷ்டியை” ஒப்புக்கொள்ளுவதாக பேசுகிறார்கள். காங்கரஸ் தலைவர் சுபாஸ் பாபு அது நாணையமல்ல என்கிறார். காங்கரஸ் அகராதியில் நாணையம் என்றோ மானம் என்றோ வார்த்தைகள் இருந்தால் தானே காங்கரஸ்காரரக்கு சொரணை தட்டும். அது இல்லாததால் என்ன காரியம் செய்தால் பார்ப்பனர் பிழைக்கலாம், ஆதிக்கம் செலுத்தலாம், என்ன காரியம் செய்தால் “சூத்திர மக்களை” கூலி கொடுத்து வசப்படுத்திக் கொண்டு எதிரிகளை நசுக்கலாம் என்பதில் அல்லும் பகலும் கவலையாய் இருக்கிறார்கள். அதற்கும் பலர் பிறந்திறாக்கிறார்கள். ஆகவே காங்கரசின் ஒரு வருஷ ஆட்சி படலத்தில். ஒன்றாவது அத்தியாயம் ஒருவாறு முடிந்ததெனலாம்.
குடிஅரசு - தலையங்கம் - 17.07.1938
A வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
சத்தியமூர்த்தி வாய்க்கொழுப்புக்கு ஆப்பு
ஆச்சாரியார் மந்திரிசபையின் ஆச்சியமான போக்கைப்பற்றியும், கட்டாய இந்தியின் தீங்கைப்பற்றியும், இந்தியால் தமிழ் மொழிக்கும். தமிழ்க் கலைக்கும், தமிழ் மக்கட்கும் நேரும் இன்னல்களைப் பற்றியும், அடக்கு முறையைப் பற்றியும், பிரஜா உரிமை, பேச்சுரிமை ஆகியவைகளைப்பற்றியும், கிரிமினல் அமென்மெண்ட் ஆக்டின். தன்மையைப்பற்றியும், காங்கரஸ் கட்சிக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள: ஒற்றுமையைப் பற்றியும், தேசீயப்போர்வையில் வகுப்புவாத ஆட்சி நடத்துவதுபற்றியும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், மதராஸ் ஆகிய விடங்களில் பள்ளிக்கூடங்களை மூடிவரும் கொடுஞ் செயல்களைப்பற்றியும், புதிய கடன் 3% கோடிக்கும், அதிக வரி 15க்கும் பள்ளிக்கூடங்களை: மூடி வேறு வேலையிருக்க முடியுமா? என்பதுபற்றியும் மக்கள் கண்ணை: மூடி காங்கரசை ஆதரித்ததினாலேயே கட்டாய இந்தி வந்து புகுந்தது என்றும் பொது ஜனங்கள் எதையும் நன்கு ஆலோசித்து உணர்ந்து செய்ய வேண்டும் என்றும் சுமார் 1% மணி நேரம் இடி முழக்க முழக்கினார்.
குறிப்பு: 08.07.1938 ஆம் நாள் தூத்துக்குடி மேலூரில் நடைபெற்ற. பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடிஅரசு - சொற்பொழிவு - 17.07.1998
குடிஅரசு 19328 @
சிறையில் இந்தி எதிர்ப்பானர் துயரம்
சட்டமறுப்புக் காலத்திலே கிரிமினல் திருத்தச் சட்டங்களை: நிறைவேற்றியபோது இந்திய தேசீய வாதிகள் எல்லாம் ஒரு முகமாக: எதிர்த்தனர். அச்சட்டங்களை நிறைவேற்றிய பிரிட்டிஷ் சர்க்கார் மீது ஓயாது வசை புராணம் பாடினர். தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாகமதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச். சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து பாமர மக்களின் வோட்டுகளைப் பறித்தனர். காங்கரஸ்காரர் செய்த விஷமப் பிரசாரத்தின் பயனாகவும் காங்கரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகிவிடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 - மாகாணங்களிலே காங்கரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லைப்புற மாகாணத்தைத் தவிர வேறு எந்த காங்கரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கரஸ்காரரால் வெறுக்கப்பட்ட ஸி.ஐ.டிகளும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும். காங்கரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்துவிட்டார்கள். காங்கரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
அவர்கள் செய்த குற்றம்.
இந்தி எதிர்ப்பாளர் செய்த குற்றம் என்ன? முதல் மந்திரியார் வீட்டு முன்னும் ஒரு பள்ளிக்கூடத்தின் முன்னும் நின்றுகொண்டு “இந்தி வீழ்க! தமிழ் வாழ்க!” என்று கத்தினார்களாம். இதுதான் அவர்கள் பேரில் கூறப்படும் குற்றச்சாட்டு. மற்றபடி பலாத்காரம் செய்ததாகவோ இடைஞ்சல் உண்டு பண்ணியதாகவோ காலாடித் தனம் செய்ததாகவோ. இதுவரைத் தொண்டர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் எவரும். சாட்சியம் கூறவில்லை: பொதுஜனங்களும் புகார் செய்யவில்லை.
B வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
சென்னையில் காங்கரஸ் தலைவர்கள் மேல் பார்வையில் போலீஸ் பந்தோபஸ்தில் சமீபத்தில் நடைபெற்ற கிராம்பு மறியலின் போது காங்கரஸ் தொண்டர்களால் கிராம்பு வியாபாரிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் உண்டான இடைஞ்சல்கூட இந்த இந்தி எதிர்ப்புத் தொண்டர்களால் எவருக்கும் உண்டாகவில்லை. மாஜி காங்கரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் தோற்றுவித்த பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தார் கொள்கைப்படி, சர்க்கார் முறை ஜனங்களுக்குத். இருப்திகரமானதாயில்லாதிருந்தால் சாந்தமான முறையில் மறியல் செய்ய எல்லாருக்கும் உரிமையுண்டாம். நமக்கு இதுவரைக் கிடைத்துள்ள. செய்திகளினால் அந்த சாந்தமான முறைப்படியே - சாத்வீக முறைப்படியே இந்தி எதிர்ப்பாளர் மறியல் செய்து வருவதாய்த் தெரிகிறது.
பம்பாய்ச் சங்கத்தார். கண்டனம்.
இம்மாதிரி சாத்வீக மறியல் செய்து வரும் இந்தி எதிர்ப்பாளர்மீது அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகம் செய்வது அடாத செயலென: பம்பாய் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தாரும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் தேசீயவாதிகள் மீது அன்னிய சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்களைப் பிரயோகம் செய்வதற்கும் பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் அச்சட்டங்களைப் பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டென சில குறுகிய புத்தியுடைய காங்கரஸ் பக்தர்கள் கூறுகிறார்கள். இது திருடன் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் நண்பர்கள் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டெனக் கூறுவதற்கு ஒப்பாகவே இருக்கிறது. சட்ட மறுப்புக்காலத்திலே அந்நிய சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்களின்படி அளித்த தண்டனைகள் எவ்வளவு கொடுமையாக காங்கரஸ்காரருக்குத் தோற்றப்பட்டதோ அவ்வளவு கொடுமையாகவே இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் அளிக்கும் தண்டனைகளும். தோற்றப்படுகின்றன. அடக்குமுறைச் சட்டக் கொடுமைகளை: அனுபவித்தறிந்த காங்கரஸ்காரர் தமது ஆட்சியிலே அதே சட்டங்களை: எதிரிகள் மீது பிரயோகம் செய்வது நீசத்தனமாகும்.
காங்கரஸ்காரர் அதிர்ஷ்டம்.
காங்கரஸ்காரர்களுக்கு ஏராளமான பத்திரிகைகளும் ஏஜண்டுகளும் இருந்ததினால் காங்கரஸ்காரர் சிறைகளில் அனுபவிக்கும் கஷ்டங்கள். ஒன்று பத்தாகப் பெருக்கி விளம்பரம் செய்யப்பட்டன. அந்த வசதிகள். இந்தி எதிர்ப்பாளருக்கு இல்லாததினால் அவர்கள் அனுபவிக்கும் சிறை. கஷ்டங்களைப் பொதுஜனங்கள் அறியமுடியவில்லை. சிறையிலே இந்தி எதிர்ப்புக்கைதிகள் சரியாக நடத்தப்படாததினால் அநேகருக்கு வயிற்றுக். கடுப்பு முதலிய நோயுண்டாயிருப்பதாயும், ஒருவருக்கு டபிள். குடிஅரசு
நியூமோனியா நோயுண்டாகி ஆஸ்பத்திரிச் சிகிச்சையில் இருந்து வருவதாயும். தெரிகிறது. தென்னாட்டார் பொதுவாக உண்பது அரிசிச் சாதமே. இந்தி எதிர்ப்பில் கலந்து கொண்டவர்களெல்லாம் அரிசிச் சாதமுண்டு பழகியவர்களே. கேப்பைக்களி தமது உடம்புக்கு ஒத்துக் கொள்ளாதென்றும் அரிசிச் சாதம். போட உத்தரவளிக்க வேண்டுமென்றும் அவர்கள் செய்து கொண்ட விண்ணப்பம் அதிகாரிகளால் கவனிக்கப்படவில்லையெனச் சொல்லப்படுகிறது. பத்து மந்திரிகளும், பத்து பார்லிமெண்டரி காரியதரிசிகளும் இருந்தும் இவர்களில் ஒருவராவது இந்தி எதிர்ப்புக் கைதிகளை பார்த்ததாகவோ அவர்களது குறைகளைப் பரிகரித்ததாகவோ தெரியவில்லை. ஜனங்களால். தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் நிர்வாகத்திலே - நம்ப ஆட்சி அமலில் இருக்கும் இந்நாளிலே- காந்தியாரின் அன்பு ராஜ்யம் நடைபெறுவதாகக் கூறப்படும் இக்காலத்திலே - சாத்வீக மறியல் நடத்திய தொண்டர்களை: இம்மாதிரி கொடுமைப்படுத்துவது நீதியாகுமா? தருமமாகுமா? அஹிம்ஸா வாதிகளான காங்கரஸ்காரர் ராஜ்யத்தில் இம்மாதிரி கொடுமைகள்: நடப்பது அஹிம்சாவாதிகளுக்குப் பெருமையளிக்கக் கூடியதாக இருக்குமா?
கைது செய்யாததினால் வந்த மோசம் எண்ணி
கொள்ளையடித்ததற்காகவும் கொலைபுரிய முயன்றதற்காகவும்
மற்றும் பல கிரிமினல் குற்றங்கள் செய்ததற்காகவும் தண்டிக்கப்பட்டுச் சிறைவாசம் செய்தவர்கள் விடுதலை பெற்றுவரும் இக்காலத்திலே சாத்வீக மறியல் செய்பவர்கள் இம்மாதிரிக் கொடுமைகளுக்கும் ஹிம்ஸைகளுக்கும் ஆளாவதென்றால் இதற்கு ஜவாப்தாரியாயுள்ள
சர்க்கார் என்றோ பொறுப்புடைய சர்க்கார் என்றோ ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்காரென்றோ அன்பு ராஜ்யம் நடத்தும் சர்க்கார். என்றோ கூற முடியுமா! சென்ற இரண்டு மூன்று தினங்களாக பிரதம. மந்திரி வீட்டு மூன் மறியல் செய்வோர் கைது செய்யப்படவில்லையெனத் தெரிய வருகிறது. வாஸ்தவத்தில் அவர்கள் செய்யும் மறியல் தூரக்ரகமானதாயிருந்தால் - பலாத்காரமுடையதாயிருந்தால் இந்த இரண்டு மூன்று நாட்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் உண்டாயிருக்க வேண்டாமா? அவர்களைச் சிறைப்படுத்தாததினால் எவ்வித அசம்பாவிதங்களும் உண்டாகவில்லையென்றே தெரிய வருகிறது. ஆகவே சாத்வீக மறியல். செய்யும் அவர்களை கைது செய்வதும் தண்டிப்பதும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்துடனேயே அன்றி அவர்களால் ஆபத்துண்டாவதினால் அல்ல என்பது விளங்கவில்லையா? இந்தி எதிர்ப்பாளருக்குத் தாம் பயப்படப்போவதில்லையென்று அவர்கள் சிறை புகுந்தால் மோரும். சாதமும் அளித்துக் காப்பாற்ற தயார் என்றும் பொதுக்கூட்டங்களில். ஜம்பம் பேசிய சிறை மந்திரி கனம் ராமன்மேனோன் என்ன செய்கிறார்? இந்தி எதிர்ப்புக் கைதிகளின் நிலைமையை ஒரு நாளாவது அவர் நேரில். சென்று விசாரித்தாரா?
ஆ e ஹரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
ஹம்பக் பேச்சு
காங்கரஸ்காரர் உயிருக்கும் உடலுக்குந்தான் மதிப்புண்டு: ஏனையோர் உயிருக்கும் உடலுக்கும் மதிப்பில்லையென்பது சிறை மந்திரியார் கருத்தா? இந்தி எதிர்ப்பாளர் சிறையில் கொடுந்துன்பம் அனுபவித்து வருகையில் காங்கரஸ்காரர் அஹிம்சையைப் பற்றியும் அன்பு ராஜ்யத்தைப் பற்றியும் பேசுவது ஹம்பக் பேச்சுத்தானே! பிரிட்டிஷ் சர்க்கார் மேற்பார்வையில் நடக்கும் மாகாணசுய ஆட்சியிலேயே சர்க்கார் கொள்கையைக் கண்டிப்பவர்களுக்கு இக்கதியானால் பிரிட்டிஷ் தொடர்பற்ற பூரண சுயராஜ்யத்திலே - ராம ராஜ்யத்திலே - அன்பு ராஜ்யத்திலே சர்க்கார் கொள்கையை எதிர்ப்பவர்கள் கதி என்னாகும்? காங்கரஸ்காரரின் மாகாண சுய ஆட்சி அநுபவங்களை முன்னிறுத்திப் பார்க்கும் எவனாவது காங்கரசின் பூரண சுயராஜ்யத்திலே பேச்சுச் சுதந்தரமும், எழுத்துச் சுதந்திரமும், அபிப்ராய சுதந்தரமும், உடல். பொருள் ஆலிப் பாதுகாப்பும் கிடைக்கும் என நம்புவானா? வரப்போகும் காங்கரஸ்காரரின் பூரண சுயராஜ்யத்திலே ஒடுக்கப்பட்டவர்கள். நிலைமை என்னாகும்? மைனாரட்டிகள் நிலைமை என்னாகும்? கராச்சித் தீர்மானப்படியுள்ள பிரஜா உரிமைகள் எங்கே? மாகாண சுய ஆட்சியை காங்கரஸ்காரர் கைப்பற்றியதும் அந்த கராச்சித்திட்டப் பிரஜா உரிமைகள் செத்துப் போய்விட்டனவா? காங்கரஸ்காரருக்கு மட்டுந்தான். அந்த பிரஜா உரிமையுண்டா? பார்ப்பன அடிமைகளுக்குத்தான் அந்தப் பிரஜா உரிமைகள் உண்டா? அப்படியானால் காங்கரஸ்காரர் கோரும் சுயராஜ்யம் காங்கரஸ்காரருக்கு மட்டும் அல்லவென்றும் சர்வ ஜனங்களுக்கும். அந்த உரிமை யுண்டென்றும் காங்கரஸ் நண்பர்களும், காங்கரஸ் எதிரிகளும் சமமான உரிமைகள் அனுபவிப்பார்கள் என்றும் கூறப்படுவதற்குப் பொருள் உண்டா? மதிப்புண்டா? காங்கரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் - யோக்கியப் பொறுப்புடையவர்களானால்.
- நேர்மையுடையவர்களானால் - அடக்குமுறைச் சட்டங்களை இதற்குள். ஒழித்திருக்க வேண்டாமா?
அடக்குமுறைச் சட்டங்கள் ஏன் ஓழியவில்லை?
அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க மசோதா கொண்டு வந்தால். கவர்னர் அனுமதிப்பாரோ மாட்டாரோ என்ற பீதியினால் அவைகளை:
ரத்து செய்ய சென்னைப் பிரதம மந்திரியார் ஒருகால் முயற்சி செய்யாதிருந்தாலும் அதை உபயோகப்படுத்தாமல் துருப்பிடித்துத் தன்படியே ஒழியும்படியாவது விட்டுவிடக்கூடாதா? சட்டங்கள் எவ்வளவு கொடியனவாயிருந்தாலும் அவைகளைக் கையாளப்பட்டவர்கள். நேர்மையுடையவர்களாயும் நீதி போதமுடையவர்களாயும் இருந்தால் அச்சட்டங்களினால் மக்களுக்குத் தீமையுண்டாகாது. சட்டங்களைக் குடிஅரசு டி
கையாளுகிறவர்கள் பழிக்குப்பழி வாங்கும் இயல்புடையவர்களாயிருந்தால். குற்றமற்ற சட்டங்களாலும்கூட பொதுஜனங்களுக்குத் துன்பங்கள் உண்டாகும். தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கொண்டு வரப்போகும் அடக்குமுறையொழிப்பு மசோதாவைப் பற்றி அபிப்பிராயம் கூறிய அசம்பிளி உபதலைவர் அம்மையார் ருக்மணி லக்ஷ்மீபதி பேச்சு
சுதந்தரத்துக்கும் செயலாற்றும் சுதந்தரத்துக்கும் இடையூறாக இருக்கும். இரிமினல் திருத்தச் சட்டம் ஒழியவேண்டியதுதான் என்று சொன்னாராம். தோழர் கிருஷ்ணமாச்சாரியார் கொண்டு வரப்போகும் மசோதாவை எந்த காங்கரஸ் சர்க்காரும் ஆட்சேபிக்க முடியாது.
முதல் வெற்றி. வாஸ்தவத்தில் இந்த மசோதாவை காங்கரஸ் சர்க்காரே கொண்டு வந்திருக்க வேண்டும் என தோழர் ராமதாஸ் பந்துலு கூறினாராம். சென்னை காங்கரஸ் சர்க்கார் சுயமதிப்பைக் காப்பாற்றும் பொருட்டாவது இரிமினல் திருத்தச் சட்டத்தை ஒழிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என: சென்னைமாஜி ஹைக்கோர்ட்டு நீதிபதி தோழர் வி.வி. ஸ்ரீநிவாஸய்யங்கார் அபிப்பிராயப்பட்டாராம். இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கடைசி முடிவு எப்படியானாலும் சரி காங்கரஸ்காரரின் சுயரூபத்தையும் பழிக்குப்பழி வாங்கும் நீச குணத்தையும் சிவில் உரிமைகளைக் காப்பாற்றுவதில். அவர்களுக்கு இருந்து வரும் ஆர்வத்தையும் வெட்ட வெளிச்சமாக்க ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டது அவ்வியக்கத்துக்கு ஒரு முதல் வெற்றியே. அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு. மசோதாவை அக்கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்பமளித்த காங்கரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம்: வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சரியார் முயற்சி காங்கரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்லவேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
பாஷ்யம் முயற்சி.
மற்றும் சென்னைப் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத் தலைவர். தோழர் கெ.பாஷ்யம் அய்யங்கார் பிரஜா உரிமைகளைப் பற்றியும் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகம். செய்வது பற்றியும் யோசிக்க சென்னைப் பிரஜா உரிமை பாதுகாப்புச் சங்கக் கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டப் போவதாக சொல்லப்படுகிறது.
இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் பிரயோகம். செய்வது தப்பென பம்பாய் பிரஜா உரிமை சங்கம் ஏற்கனவே 47௨... ஹரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
அபிப்பிராயம் கூறியிருக்கிறது. அதை ஆட்சேபித்த ஒரு காங்கரஸ் பத்திரிகை: சாத்வீக மறியல் செய்வதுதான் பிரஜா உரிமையென்றும் இந்தி எதிர்ப்பு பலாத்காரமானதும் துராக்ரகமானதுமாக இருப்பதினால் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தை பிரயோகம் செய்வது சரிதானென்றும் அபிப்பிராயம் கூறியிருக்கிறது. தோழர் பாஷ்யம். அய்யங்கார் பிரஜா உரிமைப் பாதுகாப்புச் சங்கத்தைக் கூட்டப் போகும். நோக்கம் என்ன? பம்பாய் சங்க அபிப்பிராயத்தை ஆதரிக்கவா? சென்னை: காங்கரஸ் பத்திரிகை அபிப்பிராயத்தை ஆதரிக்கவா? தோழர் கெ.பாஷ்யம் அய்யங்கார் மந்திரி கட்சியைச் சேர்ந்தவராயிருப்பதினால் பம்பாய்ச் சங்க அபிப்பிராயத்தைக் கண்டிக்கும் பொருட்டு சென்னை: சங்கத்தைக் கூட்டுகிறாரோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படலாம். ஆகவே சங்கம் கூட்டி முடிவு செய்யும் வரை நாம் காத்திருந்து பார்ப்போமாக!
குடிஅரசு - தலையங்கம் - 24.07.1938
குடிஅரசு i
கிருஷ்ணகியியில் ஈ.வெ.ரா.
இந்த காங்கரஸ் மந்திரி சபை பொய்யும் பித்தலாட்டமும் செய்து வோட்டுகளைப் பெற்று பதிக்கு வந்தது என்பதை எடுத்து விளக்குகையில். போலீஸ் சர்க்கிளின்ஸ்பெக்டர் அருகாமையிலிருந்து கொண்டு ஒரு காங்கரஸ்காரன் பொய் என்று கூச்சலிட்டான். இரண்டொரு காங்கரஸ் காலிகள் ஆங்கங்கே நின்று கொண்டு கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கலைக்க. முயன்றும் பலிக்காமையால் மறைந்து விட்டார்கள். பிறகு தோழர் ஈவெரா. அவர்கள் எப்படி காங்கரஸ்காரர்கள் மானமிழந்து சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியம் செய்து கொடுத்து சரணாகதியடைந்து மந்திரி பதவி பெற்றார்கள் என்றும், பிறகு வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களையும் கவர்னரவர்களையும் துதிபாடித் திரிகிறார்கள் என்றும், வகுப்பு வாதமில்லாதவர்கள் மந்திரி பதவிகளிலும் உத்தியோகங் களிலும் தங்கள் பார்ப்பன வகுப்புக்கே சலுகை காட்டி வருகிறார்கள். என்றும், எப்படி வரியைக் குறைப்பதற்காகப் போனவர்கள் வரியை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள் என்றும் எப்படி கட்டாய இலவச கல்வி கொடுப்பதாகச் சொன்னவர்கள் கட்டாய இந்தியின் பேராலும், பள்ளிக்கூடங்களை மூடுவதன் மூலமும், வார்தா திட்டத்தின் மூலமும் அட்டை கடுதாசி திட்டத்தின் பேராஜும் உள்ள கல்வியையும் பாழாக்கி விட்டார்கள் என்பதையும் விளக்கமாக சுமார் 2 மணி நேரம் பேசினார்.
குறிப்பு: 18.07.1938 இல் கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் மைதானத்தில். தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 24.07.1938
49 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
சேலம் ஜில்லாவில் ஈ.வெ.ரா.
எங்கும் ஆடம்பரமான வரவேற்புகள்.
ஆச்சாரியாரின் விபரீதக் கல்வித் திட்டம்
அவர் சொற்பொழிவில் இந்தி ஆரிய மொழியென்றும் அம் மொழியைக் கட்டாய பாடமாக்கினால் தமிழ் மொழியும் தமிழர் நாகரிகமும் எப்படி நசித்துபோகும் என்பதைப்பற்றியும் அதன். காரணமாக தமிழர்கள் ஆரிய கூட்டத்திற்கு அடிமைகளாக நேரிடும்
என்பதைப் பல உதாரணங்களோடு எடுத்துக் காண்பித்தார். தாய் பாஷையிலேயே 100க்கு 93 பேருக்குக் கையெழுத்துப் போடத் தெரியாத மக்களுக்கு இந்தி என்னும் அன்னிய பாஷை கற்பிக்க வேண்டிய அவசியமும் அவரசரமும் என்ன என்று கேட்டார். கல்விக்குப் பணமில்லை என்று கூறி பள்ளிக் கூடங்களை அடைத்துவரும் மந்திரி சடையாருக்கு, இந்தி உபாத்தியார்களுக்குச் சம்பளம் கொடுக்க ஏற்பாடு. செய்திருப்பதின் சூழ்ச்சியை விளக்கினார். ஆரம்பக்கல்வியை கட்டாயப்படுத்துவதாகச் சொல்லி வோட்டுப் பெற்றவர்கள் முதலில். அந்த கடமையை செய்யத் தவறிப் பொதுமக்கள் விரும்பாத இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதை கண்டித்தார். உபாத்தியாயரும் பள்ளிக்கூடமுமின்றி உதவியைக் கொண்டு கல்வியைப் போதிக்கப் போவதாக தோழர் ஆச்சாரியார் திட்டம் போட்டிருப்பதின் விபரீத. போக்கை எடுத்து விளக்கிக் காட்டினார். பிறகு இந்தி எதிர்ப்பு சத்தியாக்கிரகிகள் விஷயத்தில் அரசாங்கம் செய்து வரும் கொடுமைகளை:
எடுத்துக் கூறினார்.
வகுப்புவாத வெறி:
பிறகு காங்கரஸ் மந்திரிசபையின் வகுப்பு வாத வெறியைப் பற்றிக்கூறி பொதுமக்களுக்கு அவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகளுக்கு விரோதமாக. செய்திருக்கும் பலகாரியங்களை எடுத்துக் காட்டியதோடு இவ்வரளங்கத்தால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன்சுமை, வரிப்பளுவு ஆகியவற்றையும்
குடி அரசு - 1988 (2) —— 50
எடுத்துப் பேசினார். மதுவிலக்கு, கடன் நிவாரண மசோதாக்கள் ஆகியவற்றிலுள்ள குறைபாடுகளைப் பற்றியும் விளக்கிப் பேசினார்.
குறிப்பு: 17.07.1938 ஆம் நாள் தர்மபுரி யூனியன் போர்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் “கட்டாய இந்தியும் தற்கால அரசியல் நிலைமையும்" என்ற பொருள்: குறித்து ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடிஅரசு - தலையங்கம் - 24.07.1938
௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
காவேரிப்பட்டணத்தில் தோழர் ஈ.வெ.ரா. ஆடம்பரமான ஊர்வலம். பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்
தான் இந்தி எதிர்ப்பு சம்பந்தமாய் வந்திருப்பதாகவும் இந்தி எதிர்ப்புக்கு அவர்கள் உதவியை எதிர்பார்ப்பதாகக் கூறி - சென்ற ஒரு. வருட ஆட்சி பார்ப்பன வருணாச்சிரம ஆட்சியாக இருந்து வருகிறது என்பதைப் பல ஆதாரங்களைக் காட்டிப் பேசினார். உத்தியோகங்கள். எல்லாம் பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கிறது என்றும் பார்ப்பனரல்லாதார் ஆங்கில உயர்தரக் கல்வி பெற்று உத்தியோகங்கள் அடைவதைத் தடுக்க வார்தாத் திட்டம் என்றும் இந்திப் பாடம் என்றும், உபாத்தியார், பள்ளிக்கூடம், சிலேட்டுப் பலகை எதுவுமின்றி அட்டைகள் மூலம் கல்வி போதிப்பது என்றும் கூறி நமது தமிழ் மக்கள் மேல்படிப்புப் பெறுவதைத். தடுப்பதன் மூலம் நமது மக்களைத் தற்குறிகளாக்கித் தாங்களே எல்லாப். பதவிகளையும் வகித்து என்றென்றும் தலைதூக்க முடியாமல் செய்யும் சூழ்ச்சியிலிறங்கி இருக்கிறார்கள் என்று விளக்கினார். காங்கரஸ்காரர்கள். கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் காட்டி எந்த ஒரு. விஷயத்திலும் நாணயமாய் நடந்து கொள்ளவில்லை என்பதை ௬ுசுக்களோடு எடுத்துக் காட்டினார்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காலத்தில் இரட்டை ஆட்சியின் கீழ் பண நிர்வாகம் எதுவும் தங்களிடம் இல்லாதபோது கல்விக்காக, குறிப்பாக தமிழ் ஆரம்பக்கல்லிக்காக பார்ப்பன சூழ்ச்சிகளுக்கு இடையேயும் செய்து வந்த நல்ல முயற்சிகளையும் காரியங்களையும். காங்கரஸ் ஆட்சியோடு ஒப்பிட்டார்.
இந்தி எதிர்ப்பாளர்கள் பொது மக்கள் வேண்டாத இந்தி பாஷையை நமது நாட்டு சிறுவர்களுக்கு வாயில் நுழையாத கடின தொனிகளைக் கொண்ட இந்தியை பலவந்தமாக சிறுவர்கள் தலைமீது சுமத்தும் அக்கிரமத்தை கண்டிப்பதற்காக பலரை சிறைபடுத்தி சிறையில் இழிவாக நடத்தி வருவதை எடுத்துக்காட்டினார். இந்தியை நுழைப்பதால் தமிழர்கள். தங்கள் கலை நாகரிகம் முதலியவைகளை இழந்து பார்ப்பனர்களுக்கும். ஆரிய நாகரிகத்திற்கும் அடிமைப்பட வேண்டுமென்றும் கூறினார்.
குடி அரசு - 1938 (2)
கடன் நிவாரண மசோதா மூலம் விவசாயிகளுக்கு நன்மை செய்து விட்டதாகக் கூறுவதில் உள்ள பித்தலாட்டத்தை விளக்கி உண்மையில்: விவசாயி கூலியாகப் போகவேண்டிய நிலைமைக்கு விவசாயி வந்து விட்டான் என்றும் விவசாய அபிவிருத்திக்கான வற்றிற்கு பணம்: கிடைப்பதற்கு மார்க்கமின்றி தவிக்கிறான் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
கூட்டத்தில் காங்கரஸ்காரர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும்
தகுந்த பதிலளித்தார்.
குறிப்பு: 18.07.1938 இல் காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 24.07.1938.
3 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இந்தி எதிர்ப்பும் அரசாங்கமும் எதியிகளும்
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காக இதுவரை 197-பேர்கள். சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். நூற்று இருபது பேர்கள் வரை தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு 4- மாதம், 5-மாதம், 6-மாதம் கடின காவலும், ஒரு மடாதிபதி சந்யாசிக்கு 2-வருஷ கடின. காவலும், மற்றொரு பி.ஏ. படித்த யாழ்ப்பானத்து சன்யாசியாருக்கு 18 மாதம் கடுங்காவல் தண்டனையும் அளித்திருப்பதோடு இவர்கள். எல்லோருக்கும் ஜெயிலில் 6 (சி) கிளாஸ் உணவும் தகுதியும்தான். கொடுக்கப்பட வேண்டுமென்றும் தீர்ப்பளித்து அந்தப்படியே அவர்கள். அத்தனை பேரையும் மொட்டை அடித்து கிரிமினல் கைதிகள் உடுப்புக் கொடுத்து மிகக் கொடூர வாழ்வு வாழும்படி நடத்தப்பட்டு வருகிறார்கள்.
சிறை சென்ற தொண்டர்களில் பலர் பெருத்த செல்வவான்களின். பிள்ளைகள் சிலர் மாதம் 100, 200- ரூபாய் சம்பாதிக்கக் கூடியவர்கள். சில தொண்டர்களின் பெற்றோர்கள் சென்னை வந்து தொண்டர்களுக்குப் பல வித உபசாரங்கள் சொல்லி காங்கரஸ்காரர்கள் தயவு பிடித்து அழைத்துப் போக முயற்சித்தும் தொண்டர்கள் மறுத்து விட்டார்கள். இரண்டொரு லட்சாதிபதிகள் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
ஒரு முக்கிய விஷயம்
ஒரு விஷயத்தை வாசகர்கள் நினைவில் இருத்த விரும்புகிறோம். அதாவது இந்தி எதிர்ப்பு கமிட்டியார் தங்கள் கிளர்ச்சிகளை சட்டத்திற்கு. உட்பட்டு நடத்த வேண்டும் என்றும், எவ்வித நிலைமையிலும் சட்டம் மீறுதல் கூடாது என்றும், சர்க்கார் உத்திரவுகளைக் கூட மீறி ஒன்றும் செய்யக்கூடாது என்றும் தீர்மானித்திருப்பதுடன் இம்முடிவை இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சங்கத்தை சேர்ந்தவர்கள் உணர்ந்து வெகு கண்டிப்பாய் நடக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கும் போதே பதட்டமுள்ள -
சர்க்கார் அக்கிரமத்தை சகிக்க முடியாத - பல தோழர்கள் சிறைபிடிக்க இணங்கி இருக்கிறார்கள் என்றாலும் இவர்களில் எவரும் சட்டத்தை
மீறத் தீர்மானித்து சிறை சென்றவர்கள் என்று சொல்லிவிட முடியாது குடிஅரசு 54
மறியலுக்குக் காரணம். உண்மையிலேயே யாரும் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று கருதிக்கூட சிறை செல்லவில்லை. நடந்த காரியம் என்னவென்றால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது ஒரு தோழர் “ராமசாமி நாயக்க" ராலும் மற்றொரு காங்கரஸ் - ஆரிய விரோதியாலும் நடக்கின்றதே ஒழிய பொது ஜனங்களின் எதிர்ப்பல்ல என்று கனம் ஆச்சாரியார் வெளியிலும், சட்டசபையிலும் கூறிய கூற்று தவறு என்று நிரூபிப்பதற்காக “நாங்களும் எதிர்க்கின்றோம்” “நாங்களும் எதிர்க்கின்றோம்” என்பதைக் காட்ட வேண்டி பல தோழர்கள் மூயற்சித்தார்கள். அம்முயற்சியில் ஒன்றுதான் ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்தில் ஆச்சாரியார் கண்ணில் படும்படி நின்றதாகும். அதுவும்கூட அப்படிநின்ற தோழர்கள் “தமிழ் வாழ்க - இந்தி ஒழிக” என்று சொல்லிக் கொண்டு நின்றதாகும். இதைத் தவிர அத்தொண்டர்கள் எந்த அடாத காரியத்தையும் செய்யாது யாருக்கும். எவ்வித அசெளகரியத்தையும் தொந்தரவையும் கொடுக்காது இருக்கும்போது (கொடுத்ததாக போலீசார் சாகஷியத்திலும் மற்றும். அவர்கள் கொடுத்த சார்ஜி ஷீட் பிராதிலும் கூட காண முடியவில்லை) அந்தப்படி நடந்துகொண்டவர்களைத்தான் ஆச்சாரியார் சர்க்கார் கைது செய்து 200-பேர்கள் வரை கணக்கு காட்டி இருக்கிறார்கள்.
மந்திமிமார் ஏனம்:
ஆனால் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி கமிட்டியார் “நியாயமான. முறையில் சமாதானத்துக்குப் பங்கமில்லாமல் செய்யப்படும் கிளர்ச்சியை சட்டம் மீறியது என்று சொன்னாலும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை” என்று தீர்மானித்திருப்பார்களேயானால் கூட இதுவரை 2000 பேர்களாவது சிறைபிடிக்கப்பட்டிருப்பார்கள் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. அந்த நிலையை ஏற்படுத்தாமல் இனியும் பார்ப்போம். இனியும் பார்ப்போம் என்று இந்தி எதிர்ப்புக் கமிட்டி பொறுமை காட்டி வருவதை மந்திரிகள் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் கருதி ஏளனம் செய்து வருகிறார்கள்.
“இந்தி எதிர்ப்புத் தலைவர்கள் ஏன் இன்னும் சிறைக்கு வரவில்லை?” என்று கூட்டங்களிலும் மேடைகளிலும் இருந்து கேட்பதோடு தனிபேச்சு வார்த்தைகளிலும் பேசி பரிகாசம் செய்கிறார்கள். மந்திரிகள் என்னவோ சொல்லட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. அது பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு இரண்டறக் கலந்து விட்ட கூட்டமாகும்.
ஆனால் அற்பக் ௯ூலிகளும் இதைப் பின்பற்றி சில அயோக்கிய காலிப் பத்திரிக்கைகளும் ஏளனம் செய்கின்றன. 5௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
அற்பர்கள் புரவி
மக்களுக்கு வாழ்க்கையின் கொடுமையால் மானம் ஈனம்: இல்லாமல் போவது இயல்பு. ஆனால் புத்தி கூட இல்லாமல் போகுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தி எதிர்ப்புக் கமிட்டி தலைவர்கள். சட்டத்தையும் சர்க்கார் உத்திரவையும் லட்சியம் செய்யாமல் சிறை. செல்லும்படி அபிப்பிராயப்பட்டு விட்டார்களா, தீர்மானம் போட்டு. அனுமதித்துவிட்டார்களா என்றுகூட கவனிக்காத இந்த அற்பர்கள் அயோக்கியர்கள் தங்களிடம் பத்திரிகை இருப்பதாலும் தங்களுக்கு வாய்: இருப்பதாலும் அவைகளை ஒழுங்காக உபயோகப்படுத்தாமல் துஷ்ப்பிரயோகப்படுத்துகிறார்களே! இந்த இழிபிறப்பாளருக்கு புத்தி வரும்படியான வார்த்தைகள் கிடைக்காமல் வெகு கஷ்டப்பட்டுக். கொண்டு இதை எழுத வேண்டியிருக்கிறது.
இந்திக் கிளர்ச்சி நடப்பதேன்?. இன்றைய நிலைமை இந்நாட்டு தமிழ் மக்களுக்குப் பேராபத்தாய். வெகு நெருக்கடியாய் இருக்கிறது என்று கருதியே இந்தி எதிர்ப்பையும். மற்றும் பல காரியங்களையும் செய்ய பல சுயநலமற்ற மக்கள் கிளர்ச்சி. துவக்கி இருக்கிறார்களே தவிர இதனால் எவ்வித கூலியும் பெறுவதற்கல்ல. இம்முயற்சியில் அவர்கள் படும்பாடும் அடையும். கஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல. அவர்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும் ஏற்படும் ஆபத்தும் கவலையும் அபாயகரமானதாக இருந்து வருகிறது. இவ்வளவு கஷ்டத்தில் அவர்கள் வேலை செய்து வரும்போது தங்களது. மான ஈனத்தை காசுக்கு விற்று வயிறு வளர்க்கும், பதவி பெற்று வாழும். அற்பர்கள் இதை பரிகசிக்கவோ உண்மைக்கு விரோதமாக பேசவோ எழுதவோ என்ன யோக்கியதை என்று கேட்காமல் இருக்கவும் இந்த அயோக்கியர்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும்படி வெளிப்படுத்தாமல்:
இருக்கவும் பொது நலத்தை உத்தேசித்து நம்மால் முடியவில்லை. ஆதலால்: இதை விளக்குகிறோம். சர்க்காரை நடத்துகிறார்கள் என்கின்ற முறையில்: மந்திரிகள் ஏதாவது பேசலாம். அவர்கள் சில சமயங்களில் வக்கீல்களைப் போலும் வியாபாரிகளைப் போலும் தாசி வேசிகளைப் போலும். உண்மைக்கு மாறாகவும் உணர்ச்சிக்கு மாறாகவும் பேசலாம், நடக்கலாம்.
யொதுஜனங்களுக்கு வேண்டுகோள்
ஆனால் மற்றவர்கள் அதிலும் பொதுநல சேவை பத்திரிகைகள், பொதுநல சேவை பிரசாரகர்கள் என்று சொல்லிக்கொண்டு இம்மாதிரி அற்பத்தனமாக அயோக்கியத்தனமாக நடந்து பொதுஜன சமூகத்துக்கு. கேடு உண்டாகும்படியான காரியத்தைச் செய்து வாழப் பார்ப்பதை
குடிஅரசு -1938 (2) —— 9௦
எப்படி சற்றாவது மதித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகையால் பொது ஜனங்கள் இவ்விஷயங்களில் உண்மைகளை அறிய கவலை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்.
தவிர இவ்வியக்கத்துக்கு பணம் வசூல் செய்வதைப் பற்றியும் ஈனத்தனமாக சிலர் பேசிவருவதாக அறிகிறோம். “சில தலைவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக இந்தி வசூல் பணம் பயன்படுத்தப்படுகிறது” என்று பேசினார்களாம். இது எவ்வளவு கண்டிக்கப்படத்தக்கது என்பதை வாகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
காங்கரஸ் வீரர்களுக்கு ஓரு கேள்வி.
காங்கரஸ்காரர்கள் பலர் காங்கரசில் வந்து சேரும் போது எச்சிலை. நக்கிப் பிழைக்கும் யோக்கியதையிலும் - காமுகனுக்கும் காமக்: ழத்திக்கும் தரகனாய் இருந்து வயிறு வளர்த்துக் கொண்டும் இருந்தவர்கள். இன்று பல ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உடைமஸ்தர்களாய் இருக்கக் காரணம் என்ன? அவர்களது வரவு செலவு என்ன? தொழில் வரி வருமான வரி என்ன? என்று கணக்குச் சொல்ல முடியுமா என்று கேட்கிறோம். இந்நிலையுள்ள அயோக்கிய கூட்டத்தார் மற்றவர்களைப் பார்த்து அதுவும் பொதுநல சேவைக்கு வந்தபின்பு தங்களுடைய ஏராளமான வருவாய்களை இழந்து பல லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் இழந்து பல நல்ல வீடுகள் மொத்தத்தில் மாதம் 1000, 1500 ரூ. வாடகை: வந்த வீடுகள் குட்டிச்சுவராக நிற்க விட்டு விட்டும், பல பதினாயிரக்கணக்காக கடன் கொடுத்த ரூபாய்களை வசூலிக்காமல் (கடன் நிவாரண சட்டத்தால்: அல்ல) விட்டு விட்டும் மற்றும் ஒருவர் தனது பல ஆயிரக்கணக்கான
ஏக்கர் பூமிகளின் சொந்த விவசாயத்தை பாழாக்கிக் கொண்டும் மற்ற. ஒருவர் தனது @ 4000, 5000 லாபம் வரும் வியாபாரத்தை லட்சியம் செய்யாமல் இருந்து கொண்டும். எந்தப் பதவியையும் எந்த லாபத்தையும் ஆசைப்படாமல் தமிழ் மக்கள் நலத்தையே கருதி பல கஷ்ட நஷ்டங்களுக்குக்கிடையில் தங்கள் சொந்தச் செலவில் தொண்டாற்றி வருகிறவர்களை சிறிதும் நன்றி கெட்ட மிருகக் குழந்தைகள் போல். கேவலமாக இழிவாக பேசி விஷமப் பிரசாரம் செய்வதென்றால் இதை எப்படி சகிக்க முடியும் என்று கேட்கிறோம்.
ஸ்டாலின் கதை
அடுத்தாற்போல் ஸ்டாலின் ஜகதீசன் என்பவருடைய விரதத்தைப் பற்றி செய்யும் கிண்டல் இயக்கத் தலைவர்களையும் சேர்த்து விஷமப் பிரசாரம் செய்யப்படுகின்றன. இயக்கத் தலைவர்களின் நாணையத்தை பாதிக்கும்படியும் ஜகதீசனை ஆதரிக்கும் காங்கரஸ் பத்திரிகைகள் எழுதுகின்றன. 57௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஜகதீசனின் “விரதம்” உண்மையற்ற பித்தலாட்ட விரதமாய் முடிந்தது என்பதில் தலைவர்களுக்கு சிறிதும் சந்தேகமில்லை. அவ் “விரதம்” அந்தப்படி முடிய மந்திரிகள், போலீசு, சி.ஐ.டி.க்கள் மற்றும். மந்திரிக்கு வேண்டிய சில நண்பர்கள் இவ்விரதத்தை அழித்து மந்திரிக்கு நன்மை செய்து கிப்பாத்தும் பலனும் அடையக் கருதிய சில இயக்கத் தோழர்கள் முதலியோர் எடுத்துக்கொண்டு வரும் முயற்சியைப் பற்றி தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் சி.ஐ.டி. சுருக்கெழுத்து நிருபர் முன்னிலையில் அவரை குறித்துக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டு. நெடுநாளாகவே பல கூட்டங்களில் பேசி இருக்கிறார். இந்த ஒரு மாத காலத்திய சி.ஐ.டி சுருக்கெழுத்து ரிபோர்ட்டுகளில் அவற்றைக்
காணலாம். ஜகதீசனுக்கும் இவ்விஷயம் தெரிவித்து கண்டிக்கப்பட்டிருக்கிறது. அவர் தான் அப்படி இல்லை என்றும் அந்த பிரஸ்தாபம் பொய்யென்றும். மற்றும் எங்கள் தகப்பனார் குதிருக்குள் இல்லை என்ற மாதிரி சமாதானம் எழுதியிருக்கிறார்.
ஸ்டாலின் ஈரோட்டுக்கு வந்தது உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சுமார் 3 மீத்துக்கு மூன்: ஜகதீசன் ஈரோட்டிற்கு வந்து தான் உண்ணாவிரதமிருக்கப் போகிறேன். என்று தோழர் ஈ.வெ.ராமசாமியிடம் தெரிவித்தபோது அவருக்கு சரியாக: முகங் கொடுத்துப் பேசாமல் தனக்கு அக்காரியங்களில் நம்பிக்கை: இல்லை என்றும் அதை ஆதரிக்க முடியாதென்றும் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் கூறி அலட்சியப்படுத்தி அனுப்பிவிட்டார்.
பிறகு அவர் தோழர் ஈ.வெ.ரா. பேரைச் சொல்லிக் கொண்டு சென்னை சென்று அங்குள்ளவர்களை ஏய்த்து எப்படியோ தோழர் டி. நாயகம் அவர்கள் வீட்டில் இடம் தேடிக் கொண்டார்.
அங்கு உண்ணாவிரதம் ஆரம்பித்ததாய் வந்த சேதிகளை: “விடுதலை” பத்திரிகையில் போட முதலில் அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து பல தோழர்கள் சிபார்சு செய்தார்கள். பல பொதுக் கூட்டங்களில் தோழர் ஈ.வெ.ராமசாமியை ஏன் போடவில்லை என்று கேள்வி கேட்டார்கள். அக்கேள்விகளுக்கு பதில் சொல்லுகையில் ஸ்டாலினைப் பற்றி தனக்கு தெரியாதென்றும், அவரைத் தான். நம்பவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அதோடு அந்த உண்ணாவிரதப் புரளி சென்னையில் உள்ள பல மூட நம்பிக்கைக்காரர்களால் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும், பிரசாரத்திலும் கலக்கப்பட்டுவிட்டதால் அதன் பயனாய் இந்தி எதிர்ப்பு தோழர்களுக்குள் அபிப்பிராய பேதம். வரும்போல் இருந்ததால் ஸ்டாலின் கபட நாடகத்துக்கு அனுமதி கிடைத்துக் கொண்டேதான் வந்திருப்பதாய் தெரிகிறது.
குடி அரசு -1988(29௨ ௨ 5
“விடுதலையும் உண்ணாவிரதமும்.
ஸ்டாலின் “உண்ணாவிரதம் ஆரம்பித்தது” மே- 5 15 தேதி அதை “விடுதலை” 10 நாள் வரை பிரதானப்படுத்தவோ விளம்பரப்படுத்தவோ இஷ்டப்படவில்லை. ஏதோ நிருபர் சேதியாக ஒன்று இரண்டு செய்தி போடப்பட்டது. பல இந்தி எதிர்ப்பு தொண்டர்களின் வற்புறுத்தலின் மீது 10-ந் தேதி கோடு கட்டி போட்ட பிறகும் மறுபடியும் அதற்கு பிரதானம் கொடுக்கக்கூடாது என்று நிறுத்தப்பட்டுவிட்டது. பிறகு 17-ந் தேதி மறுபடியும் பலர் வேண்டுகோள் பேரில் போடப்பட்டு வந்தது. மறுபடியும் அதை சிறு சேதியாய் போடப்பட்டது. இதற்காக சென்னை தோழர்களுடன் சதா தகரார் செய்து கொண்டு போடாமல் நிறுத்துவதும் மறுபடியும் சேதியாக போடுவதும் இப்படியாக இருந்து வந்ததும் விடுதலையை பார்ப்பவருக்கு விளங்கும். கடைசியாக நமது நிருபர் சென்னைக்கு சென்று நேரில் பார்த்து பலரை விசாரித்து உண்மையாக பட்டினி கிடக்கிறார் என்றும் (அவர் ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தால். குளிக்கும் போதோ அல்லது வெளியில் போகும் போதோதான் இருக்கலாம் என்றும்) தண்ணீரும் எலுமிச்சம்பழ சாறும் மாத்திரம். சப்பிடுவதாய் நம்பிக்கை உள்ள இடத்தில் இருந்து தெரிந்து வந்தார். அப்படி இருந்தும் இந்தி எதிர்ப்பு கமிட்டியார் அதை ஆதரிப்பதில்லை என்று திருச்சி கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஜகதீசன் காங்கரஸ் ஜற்றர்.
தோழர் ஈ.வெ.ராமசாமி திருபுவனம் மகாநாட்டில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் அதை யாரும் நம்பாதீர்கள் என்றும் ஜகதீசன் காங்கரஸ்காரர்களால் அனுப்பப்பட்ட ஒற்றராக இருந்தாலும் இருக்கலாம் என்றும் பேசி பதில் அளித்து இருக்கிறார். அதுவும். 8.ஐ.டி ரிப்போர்ட்டரும் மெயில் ரிப்போர்ட்டரும் குறித்திருப்பார்கள்.
கடற்கரைக் கூட்ட நிகழ்ச்சி.
பிறகு சென்னை திருவல்லிக்கேணி பீச் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா. பேசும்போதும் இம்மாதிரி பட்டினியில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், தான் இதை இயக்கத்திற்கு சம்மந்தப்படுத்தி காரியம். சாதித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அதன். மீது பலர் அவர் இருந்தால் சரியான பட்டினியாகவாவது இருக்கட்டும், இல்லாவிட்டால் வெளியில் அனுப்பிவிடவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டு அவரை அதிகமாக காவல் செய்ய ஏற்பாடு செய்தவுடன் அவர் வேறு இடத்திற்கு போக ஆசைப்பட்டுவிட்டார். அந்த சாக்கில் அவரை எப்படியாவது விரதத்தை குலைக்கச் செய்ய வேண்டும், சாப்பிட வைக்கவேண்டும் என்று கவலை கொண்ட தோழர் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டு விட்டது.
59 uRweRdr எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஜூன் 28-ந் தேதி செய்தி. அன்றைய தினமே அதாவது ஜூன் 28-ந் தேதி “விடுதலையில். ஒரு தந்தி சேதி பிரசரிக்கப்பட்டிருக்கிறது. அதன் கடைசி பாகத்தில் இந்த. கருத்தும் காட்டப்பட்டிருக்கிறது. என்னவென்றால் “ஸ்டாலின் ஜெகதீசன். ராயப்பேட்டைக்கு கொண்டு போகப்பட்டு விட்டார். தோழர் சிவராஜ் உண்ணாவிரதத்தை நிறுத்த முயற்சிக்கிறார். அது வெற்றி பெற வேண்டுமென்று மகாஜனங்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிறகு அடுத்தநாளே அந்த வீட்டிற்கு பல ஸி.ஐ.டி போலீசார், போலீசு டிப்டி கமிஷனர், கனம் ஆச்சாரியார் நண்பர்கள் பலர் சென்று இருக்கிறார்கள். மற்றும் ஆச்சாரியார் சார்பாக ஸ்டாலினிடம் வியாபாரம். பேசுவதாகவும் தெரியவந்தது. இதைப்பற்றி அப்போதே தோழர் ஈ.வெ.ரா. ஜகதீசனைக் கண்டித்ததோடு அவரது சம்மந்தம் யாரும் வைத்துக்கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார். இதை அறிந்த ஜகதீசன். ஈ.வெ.ரா.வுக்கு ஆச்சாரியார் பெயர் போட்டு ஒரு சமாதானக் கடிதம் எழுதி இருக்கிறார். அதன் பின் பத்திரிக்கைக்கு பிரசரிக்கும்படி வந்த செய்தியில் காங்கரசார் ஜகதீசனை சுவாதீனம் செய்து கொண்டார்கள். என்றும் நமக்கு விரோதமாய் அவரை பயன்படுத்தப்போகிறார்கள். என்றும் சேதிகள் வந்தன. இந்த சமயத்தில் இது நம்பத் தகுந்த மாதிரியில் ஜகதீசன் பலருக்கு ரூபாய்க்கு ஆகவும் நகைகள் மோதிரங்களுக்கு ஆகவும் பலவித உடுப்பு கண்ணாடி வகையராக்களுக்கு ஆகவும் கடிதம் எழுதிய வண்ணமாக இருந்ததாகவும் பல ஊர்களில் இருந்து அவை வந்ததாகவும் இந்தி எதிர்ப்பு தலைவர்களில் சிலரே ஏமாந்து மோதிரம், பணம், உடுப்பு, கண்ணாடி, தங்க சங்கிலி முதலியவைகள் சன்மான. மளித்ததாகவும் தெரிய வந்தது. இந்த சமயத்திலும் ஸ்டாலின் தான். பட்டினி கிடப்பதாகவும் நாளை அல்லது மறுநாள் தன் உயிர் பிரிந்துவிடும் என்றும், தான் செய்த சகல குற்றங்களையும் மன்னித்து தனக்கு தரிசனம் கொடுக்கும் படியும் தோழர் ஈ.வெ.ரா.வுக்கு கடிதம். அனுப்பிக்கொண்டே இருந்தார். இவைகளுக்கு பதிலாக நடந்த விஷயங்களை வெளிப்படுத்தப் போவதாகவும் மரியாதையாய் சென்னையை விட்டுப் போய்விடுவது மேல் என்றும் தோழர் ஈ.வெ.ரா. சொல்லியனுப்பிய பிறகே அவர் சென்னையை விட்டு ஓட நேர்ந்தது இவைகளை வெளியிட வேண்டிய அவசியமேற்பட்டது, ஸ்டாலின். இப்போது சில இந்தி எதிர்ப்பு தலைவர்கள் மீது குறைகள் கூறிவருவதும், காங்கரஸ்காரர்களும் இவரை கையாளாகக் கொண்டு இழிதகமை: விஷமப் பிரசாரம் செய்ய அவரை விலைக்கு வாங்கப் போவதாக: அறிவதாலும், மற்றும் இரண்டொரு காரியங்களாலுமேயாகும். (அவற்றைப் பின்னால் அவசியம் நேர்ந்தால் ஆதாரங்களோடு வெளியிடக்:
கருதி இருக்கிறோம்.)
குடிஅரசு -1938 (2) —— ல
அரஸ்ட்டு நிறுத்தப்பட்டது.
பட்டினி எப்படியோ போகட்டும். இந்தி எதிர்ப்பு அரஸ்டுகளில் இப்போது ஒன்று நிறுத்தப்பட்டு விட்டது. இதன் பெருமையை ஜகதீசன். அடைவதில் நமக்கு ஆகேஷபணை இல்லை. அதாவது கனம் ஆச்சாரியார் வீட்டுக்கு பக்கத்தில் நிற்கும் தொண்டர்களை இந்த 10-நாளாக கைதி செய்வதில்லை. சும்மா வாய் மிரட்டலோடு விட்டுவிடுகிறார்கள். ஆனாலும் தொண்டர்கள் தினப்படி நின்று கொண்டுதான் வருவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே ஆச்சாரியார் இவர்களை கைதி செய்ய வேண்டாம் என்று சொல்லி எதிரிகளை அன்பினால் வெல்லக் கருதி இருந்தாலும் அல்லது போலீஸ் இலாகவே இது குற்றமாகாது என்று தெரிந்து அரஸ்டு செய்வதை கைவிட்டு இருந்தாலும் அல்லது காங்கரஸ் ஆட்சிக்கு வெளியில் ஏற்பட்ட கெட்ட பெயருக்கு பயந்து கொண்டு கைவிடப்பட்டிருந்தாலும் அல்லது தொண்டர்கள் மீது கருணை காட்டிஅவர்களை சும்மா விட்டுவிடுவதானாலும் எப்படியானாலும் சரி இதற்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றி செலுத்துகிறோம். சர்க்கார் நடத்தையையோ ஆச்சாரியார் நடத்தையையோ கோழைத்தனம் என்றோ அல்லது அவர்கள் முட்டாள் தனத்தை திருத்திக் கொண்டார்கள் என்றோ, தோற்றுவிட்டார்கள் என்றோ சொல்ல வரவில்லை. மற்றவர்கள் எப்படி நினைத்தாலும் நம்மைப் பொறுத்தவரை ஆச்சாரியாரை மனமார பாராட்டுகிறோம்.
சர்க்காருக்கு மரியாதையிருந்தால்! ஆனால் இதே காரியத்துக்காக என்று இது வரை 150 -க்கு மேற்பட்ட தொண்டர்களை கைதி செய்து, கடுந் தண்டனை விதித்து, களி போட்டு கொடுமை படுத்தி வரும் காரியம் இனியும் நியாயமானதா என்றுதான் கேட்கின்றோம்.
இந்த 150- பேர்களைப் பொறுத்தவரையாவது இத்தொண்டர்கள். செய்து வந்த காரியம் துர்ஆக்கிரகமா, சத்தியாக்கிரகமா என்று கேட்கின்றோம். இத்தொண்டர்கள் நடத்தைக்கு காரணபூதர்கள் என்று கைதி செய்யப்பட்டு ஒன்றரை வருஷம் இரண்டு வருஷம் கடுந் தண்டனை. விதிக்கப்பட்ட சந்யாசிகள், மடாதிபதிகள் நடத்தையை இனியும் துராக்கிரகத்துக்கு தூண்டினவர்கள் நடத்தையாகும் என்று இனியும் காங்கரசோ, ஆச்சாரியாரோ, சர்க்காரோ, காங்கரஸ் பத்திரிக்கைகாரர்களோ. கருதுகிறார்களா என்று கேட்கின்றோம். விவகார முறையில் பார்க்கும்போது இந்த 150 பேர்களையும் சர்க்கார் மரியாதையாக வெளியில் அனுப்பிவிட்ட பிறகே கைது செய்வதை: நிறுத்தி இருக்க வேண்டியது அவர்கள் கடமை என்று கூறுவோம். ட வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஏனெனில் சர்க்கார் பயந்து கொண்டு அரஸ்டை நிறுத்திவிட்டார்கள். என்றோ அன்பு காரணமாக நிறுத்திவிட்டார்கள் என்றோ கூற முடியாது. எப்படி எனில் “கடைசி வரை இரண்டிலொரு காரியம் பார்த்துவிடுகிறேன்" என்று கூறிய முதல் மந்திரியார் போலீசும் பட்டாளமும் தாம் சொல்லுவது போல் நடக்கத் தகுந்த அதிகாரமும் சக்தியும் கொண்ட மந்திரியார் இந்த இரு இளைஞர்களை பிடிக்க பயந்து விட்டார்கள் என்று எந்த மடையனும் கருதமாட்டான். மற்றும் சன்யாசிகள் உள்பட 150-பேர்களை சிறையிலடைத்து கொடுமைக்குள்ளாக்கும் ஆச்சாரியார் இரு வாலிபர்களுக்கு அன்பு காட்டினார் என்று எந்த “மகாத்மாவும்” கருத முடியாது
மற்றும் மன்னிப்பு கேட்காதவர் மீதும் குற்றத்தை நிறுத்திக் கொள்ளாதவர்கள் மீதும் எந்த வீரரும், கோழையும் கூட அன்பு காட்ட முன்வர மாட்டார் என்பது யாவரும் உணர்ந்ததேயாகும்.
நடு நிலைமையில் இருந்து பார்த்தால் இக்காரியம் அதாவது 150- தொண்டர்கள் செய்த காரியம் குற்றமற்றது என்றும் சிறைப்பிடித்து கடின தண்டனை கொடுக்கத்தக்க காரியமல்லவென்றும் கருதி இருக்கலாம். என்றுதான் கருத வேண்டும். ஏனெனில் இந்தி எதிர்ப்பை ஆதரிக்காத அறிஞர்களும் காங்கரஸ் பத்திரிகைகளில் சிலவும் நடுநிலை மக்கள். பலரும் இப்படித்தான் சொல்லி வந்தார்கள். தோழர் கனம் ஆச்சாரியார் இதற்கு செவி சாய்த்திருக்கலாம். அல்லது ஊர் பழிக்கு பின்வாங்கியிருக்கலாம்.
மற்றும் கவர்னர் பிரபு வெகு அவசரமாக கனம் ஆச்சாரியாருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து மேட்டுப்பாளையம் சத்திரத்தில் பேசினார். என்று ஒரு சேதி வந்தது. ஒரு சமயம் இது அதன் விளைவாய் இருந்தாலும் இருக்கலாம் அல்லது காங்கரஸ் தலைவர் சுபாஷ் பாபு அவர்கள் கனம் ஆச்சாரியாரிடம் சமாதானம் கேட்டதாக சொல்லிக் கொள்ளப்படுகிறது, அதன் விளைவோ என்னவோ என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அந்த நூற்றி ஐம்பது பேரையும் முதலில் கண்ணியமாக வெளியில் அனுப்பிவிட்டு பிறகு கைது செய்யப்படுவதை நிறுத்துவதுதான் ஆச்சாரியாருக்கு புத்திசாலித்தனமான. காரியம் என்று கூறாமல் இருக்க முடியவில்லை.
ஆச்சாரியாருக்கு வேண்டுகோள்.
இதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஏனெனில் ஆச்சாரியார். கைது செய்வதை மத்தியில் நிறுத்தி சிறையில் உள்ளவர்களை: விட்டுவிடுவார்கள் என்று கருதி கொண்டு யாரும் சிறைக்கு செல்லவில்லை. அவர்களில் அனேகர் வெளியே விடப்பட்டாலும் மறுபடியும் இந்தி ஒழியும் வரை சிறை செல்லக்கூடியவர்கள் என்றே தெரியவருகிறது. குடிஅரசு ௦
ஒன்று கடைசியாக ஆச்சாரியாரை நட்புமுறையில் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆச்சாரியார் இது விஷயத்தில் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி இந்தியோ இந்துஸ்தானியோ கட்டாய பாடம் என்கின்ற முறையை நிறுத்திக் கொண்டால் ஒழிய “மாற்றிக் கொண்டால்” ஒழிய கிளர்ச்சி நிறுத்தப்படமாட்டாது. சில கூலிகளும் காலிகளும் எச்சிலைப் பத்திரிகைகளும் எவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் விஷமத்தனமாகவும் பிரசாரம் செய்தாலும் எதிர்ப்புக். காரியம் நிற்காது. இதில் இறங்கிவிட்ட பிறகு இனி எந்தவிதமான. விஷமப் பிரசாரத்துக்கும் பயந்து (பொய் மானம் காப்பாற்றிக்கொள்ள கருதி யாரும் பின் வாங்கப் போவதில்லை. ஏனெனில் உண்மையில் இது அரசியல் போராட்டமல்ல, வகுப்புப் போராட்டம்) இதில் இறங்கியவர்கள் இரண்டிலொன்றுதான் முடிவு பெறுவார்களே தவிர மத்திய வாழ்வில் திருப்தி அடைய மாட்டார்கள். ஆதலால் மெய்யான மானம் போவதானாலும் சரி இந்த முயற்சியில் இந்தி கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கப் போவதில்லை. இதற்கு வள்ளுவர் வாக்கே ஆதாரம். ஆச்சாரியார் குறளை மொழிபெயர்த்து குறளை தனது பேச்சுக்கு அடிக்கடி ஆதாரம் காட்டி வருபவர். ஆகவே, அக்குறளையே ஆச்சாரியார் இனி ஒரு தரம் படித்துப் பார்க்கட்டும். அதாவது 103-வது அதிகாரம் குடி செயல் வகை 1028-ம் குறன்.
“குடி செய்வார்க்கில்லைப் பருவமடி செய்து மானங் கருதக் கெடும்”
என்பதாகும். இதன் பொருள்:-
ஒருவன் தான் பிறந்த குடியை உயரச் செய்யவோ காப்பாற்றவோ. முயற்சிப்பானேயாகில் அவன் ஒரு காலத்தையோ தக்க சமயத்தையோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்பதோடு, இம்முயற்சியில் சிறிதும் சோம்பல் கொள்ளக்கூடாது, தனது மானத்தையும் கூட. லக்ஷியம் செய்யக்கூடாது என்பதோடு அந்தப்படி எவனாவது இந்த விஷயத்தில் மாத்திரம் மானாபிமானம் பார்த்துக்கொண்டு சிறிதாவது தயங்குவானேயானால் அக்குடி அடியோடு கெடும் என்பது பொருளாகும்.
ஆச்சாரியார் வெற்றி பெற்றாலும்? ஆகவே இந்தி கிளர்ச்சியை அடக்கவேண்டிய அவசியம் இன்றைய தினம் ஆச்சாரியாருக்கு அவரது குடியை (குலத்தை) உயரச் செய்வதற்கு இல்லை என்றால் மற்றபடி ஒரு வீம்பு காரணமாயாவது அவசியப்படலாம். அப்படியானால் இந்த வீம்பை காப்பாற்றிக்கொள்ள. ஆச்சாரியார் இனியும் அனேகம் தப்புகளும், முட்டாள்தனமான. காரியங்களும் செய்ய வேண்டி ஏற்படும் என்பதை அவருக்கு 8௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
எக்சரிக்கை செய்து அறிவுறுத்துகிறோம். இந்த லீம்பில் ஆச்சாரியார் வெற்றி பெற்றாலும் அவ்வெற்றிக்கு செயலாற்றுவதின் பயனாய் வெற்றிப் புகழைவிட பல மடங்கு அதிகமான அளவு குறைபாடும், இகழ்தலும் அடைய வேண்டியவராவார் என்று உறுதி கூறுகிறோம். பொறுப்பற்ற - கீழ்மக்களின் பத்திரிகை உதவியும் நாவன்மையும் கீழ்மக்களையும் பாமர மக்களையும் மாத்திரம் தான் ஏமாறச் செய்யுமே ஒழிய மேன்மக்களையும் அறிவுடையோரையும் ஒன்றும் செய்துவிடாது. அவை மேலும் மேலும் உண்மை விளங்கவே பயன்படும். ஆதலால்: அன்பர் கனம் ஆச்சாரியார் அவர்கள் நன்றாய் சிந்தித்துப் பார்த்து கட்டாய இந்தி முறையை மாற்றிக் கொள்வதே சாலவும் சிறந்த கருமம். என்பதை வணக்கத்துடன் அறிவித்துக் கொள்கிறோம்.
ஆச்சாரியாருக்கு பதவி மாத்திரம் அல்லாமல் உதவிக்கு பெரும் படைகள் இருக்கின்றன. அவை ஆச்சாரியார் என்ன சொன்னாலும் செய்தாலும் “ஆமாம் சாமி” கூறி கூலி அடையக் காத்திருப்பவைகளேயாகும்
- ஆச்சாரியார். சற்று இளைத்துப் போனார் - களைத்துப் போனார் என்றவுடன் விட்டுவிட்டு ஓடக்கூடியவர்களுமே யாகும். ஆச்சாரியார் வெற்றி பெற்று அடிமை கொண்டு விட்டதாக காட்டிவரும் அரசாங்கம், ஆச்சாரியாரை காலை வாரிவிட சமயம் பார்த்துக்கொண்டிருக்கும். அரசாங்கம் என்பதையும் ஆச்சாரியார் ஞாபகத்தில் வைத்துக் கொள்வாராக.
எதிர்ப்பாளர் நிலைமை:
ஆனால் இந்தி எதிர்ப்புக்காரர்களோ தனித்தனியே தங்களையே நம்பி இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் தோல்வி அவர்கள் முடிந்த பிறகு தான் காண்பார்கள். இவை தர்ம உபதேசமல்ல. அன்பு அறிக்கை: என்பதாய் கொள்ள வேண்டுமென்று கேட்டுகொள்ளுகிறோம்.
தமிழ் மக்களே!
இனித்தான் போராட்டம் இருக்கிறது. வார்தா காரியக் கமிட்டி தீர்மானப்படி காங்கரஸ் தலைவர் முடிவு நாளை மறுநாள் வெளியாகிவிடும். நம் பிரமுகர்கள் வழக்கும் நான்கு நாளையில் முடிந்துவிடும். அப்புறம். நாம் என்ன செய்வது? ஓடி ஒளிவதா அல்லது அடக்குமுறை ஆயுதத்தை மழுங்கச் செய்து பிடுங்கி எறிவதா என்கின்ற முடிவுக்குவர வேண்டியதுதான்.
எதிரிகளும் அவர்கள் கூலிகளும் கூப்பாடு போடுவதை லக்ஷியம் செய்யாதீர்கள்.
குடிஅரசு - தலையங்கம் - 31.07.1938
குடிஅரசு o
திருச்சியில் இந்தி எதிர்ப்பு படை வழியனுப்பு உபசாரம்
7000 பேர் கூட்டம்
தோழர்களே! இன்றைய கூட்டம் இந்தி எதிர்ப்புப் பிரணரத்துக்கு ஆக செல்லும். படையை வழியனுப்புவதற்காக என்றே கட்டப்பட்டது என்பது அழைப்பு விளம்பரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட கூட்டத்தில் வந்து சிலர் குழப்பம் விளைவிக்க நினைத்தது சுத்த முட்டாள்தனமாகும். இந்த கூட்டத்தில் இரண்டொருவர் “காந்திக்கு ஜே” போடுவதும் “இந்தி வாழ்க” என்று கத்துவதும் மண்ணை வாரி இறைத்து வேஷ்டியை வீசி மக்களை எழுந்து போகும்படி காலித்தனம் செய்வதும் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். கூட்டத்தை கலிபுல்லா சாயபு மிக்க வலுவுடன். அடக்கி இராவிட்டால் இன்று பலர் உதைபட்டு துன்பப்பட்டு இருப்பார்கள். போலீசும் இல்லாத இந்த சமயத்தில் காலிகளுக்கு இக்கூட்டத்தார் புத்தி கற்பிக்க ஆரம்பித்து இருந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும்? கூட்டத்தில் இந்தியை ஆதரிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்று தோழர். கலிபுல்லா சாயபு கேட்டபோது கை தூக்கிய எண்ணிக்கையிலிருந்தே இத் தொல்லைக்காரர்களின் யோக்கியதை நன்றாய் விளங்கி இருக்கும். அவர்களும் பெரிதும் பார்ப்பனர்களாகத்தான் இருந்திருப்பதாய் தெரிகிறது. இம்மாதிரி காலித்தனத்தால் இன்னும் எவ்வளவு நாள்களுக்கு இப்பார்ப்பனர் வெற்றிபெற முடியும்?
நாங்கள் உண்மையிலேயே இந்தியை எதிர்ப்பவர்கள். இந்தி பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆக புகுத்தப்படுவது என்பதை இக்கூட்டத்தில். உள்ள பார்ப்பனர்களே மெய்யாக்கிவிட்டார்கள். தமிழ் மக்கள் வயிறு எரிந்து மனம் நொந்து கிடக்கும் காலத்தில் அதுவும் பிரிந்து ஆதரவற்றுக் கிடக்கும் இந்நாளில் ஏதோ சில கூலிகள் தங்கள் வசத்தில் இருப்பதாகக். கருதி எங்கள் முயற்சிகளை இப்படி அடக்கப் பார்ப்பது தர்மமா என்று கேட்கின்றேன்.
எதிரிகள் சூழ்ச்சி. எங்களுடைய சேதிகளை பொதுப் பத்திரிக்கை எனச் சொல்லும். பார்ப்பனப் பத்திரிக்கைகள் கேலி செய்து கிண்டல் செய்து மறைத்து 65— வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
திரித்து கூறுகின்றன. சில அடியோடு அடக்கிவிடுகின்றன. எங்கள். ஒற்றுமையை கலைக்க சூட்சி செய்கின்றன. மக்கள் அநீதியாக சிறைபிடித்து கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
எங்களுக்குள்ளாகவே துரோகிகள் கற்பிக்கப்படுகிறார்கள். கீழ் மக்களை சுவாதீனம் செய்து அவர்கள் மூலமாக நம் இயக்கத்தை ஒழிக்க முயற்சி செய்யப்படுகின்றது.
இந்தி எதிர்ப்பு ஜஸ்டிஸ் கட்சியின் மற்றொரு அவதாரம் என்றும்.
பழி சுமத்தப்படுகிறது ஜஸ்டிஸ் கட்சிக்கு சட்டஃபையில் உள்ள இரண்டு தலைவர்களும் பார்ப்பன தாசர்களாய் இருக்கும்போது இது எப்படி ஜஸ்டிஸ் கட்சி காரியமாக இருக்க முடியும். இந்தி எதிர்ப்பு பார்ப்பன துவேஷத்துக்கு. ஒரு கருவி என்று சொல்லப்படுகிறது. தோழர்கள் டிஆர்.வெங்கிட்ட ராமசாஸ்திரி, கே.நடராஜன், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, சி.வி. விஸ்வநாத சாஸ்திரி, உவே. சாமிநாதய்யர், பரவஸ்து ஆச்சாரியார், கே.பாஷ்யம் அய்யங்கார், வி.பாஷ்யம் அய்யங்கார், வி.வி.சீனிவாசய்யங்கார் குனச்ரு, டில்லி நிர்வாகசபை வர்த்தக மெம்பர் சர்.மகம்மது யாகூப் இவர்கள். எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா?
“சென்டினல்” “அமிர்த பஜார்" “மாடான் ரிவ்பூ” “னேஷியல் ரிபார்மர்”
“லீடர்” “ள் வெண்ட் ஆப் இந்தியா” முதலாகிய பத்திரிகைகள் ஜஸ்டிஸ் பத்திரிகைகளா? அல்லது பம்பாயிலும், சென்னையிலும் உள்ள பிரஜா உரிமைச் சங்கங்கள் ஜஸ்டிஸ் கிளைச் சங்கங்களா? அடக்குமுறையை ஒன்று இரண்டு தடவையாவது கண்டித்து எழுதிய “சுதேசமித்திரன்” ஜஸ்டிஸ் பத்திரிகையா? இப்படியெல்லாம் இருக்க தமிழ் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு அவர்களை அடிமை கொள்ளச்செய்யும் இம்மாதிரியான. சூழ்ச்சியும் கொடுமையும் நியாயமா? என்று உங்களைக் கேட்கிறேன்.
சில்லறை சேஷ்டை செய்வது நியாயமா?
நாங்கள் சொல்லுவதும் செய்வதும் தப்பானால் நாளை இங்குக் கூட்டம் போட்டு பாருங்கள், உங்கள் பத்திரிகையில் எழுதுங்கள், மற்றபடி பொய்யாகவாவது கூட்டத்தில் கலகமும் குழப்பமும் ஏற்பட்டது என்று எழுதுவதற்கு ஆகவே இங்கு விஜயம் செய்திருக்கும் சில அயோக்கிய நிருபர்களுக்குச் சேதி கொடுக்க வேண்டும் என்று கருதி சில்லறை. சேஷ்டைகள் செய்வது நியாயமா? என்று கேட்கிறேன். இன்றைய ஆட்சியில் தங்கள் அபிப்பிராயம் சொல்லக்கூடவா. இடமில்லை? இந்த கூட்டத்தில் “காந்திக்கு ஜே” ஏன் போட வேண்டும்? இவர்கள் காந்தியை யோக்கியர் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களா. அல்லது தங்களையாவது காந்தி சிஷ்யர்கள் என்று எண்ணிக்
குடிஅரசு - 1938 (2) —— 66
கொண்டிருப்பவர்களா? நான் பார்த்தேன் ஒருவன் மண்ணை வாரி இரைத்துக்கொண்டு “காந்திக்கு ஜே” போட்டான். முதுகில் இரண்டு அப்பளம் விழுந்தவுடன் அறுத்துவிட்ட கழுதைகள் போல் பலர் ஓட்டமெடுத்தார்கள். இந்த சமயம் நான் பயந்துவிட்டேன். போலீசும் தென்படவில்லை. நமக்கோ நம் ஆள்களுக்கோ பந்தோபஸ்தில்லை என்று நான் கவலைப்படவில்லை, ஆத்திரத்தோடு கைகலக்க ஏற்பட்டால் எதிரிகள் கதி என்னவாகும். அப்புரம் இந்தி எதிர்ப்புகாரர்கள் பலாத்காரம் செய்கிறார்கள் என்று சொல்லுவதா? எவ்வளவு கஷ்டப்பட்டு பலாத்காரம் ஏற்பட இருந்ததை இப்போது அடக்க வேண்டியதாயிற்று. போலீசார் கூட்டத்திற்கு காவல் அளிக்க வேண்டியதில்லை என்றாலும் காலிகளுக்காவது காவல் அளிக்க வேண்டாமா? இன்று இவ்வூர் போலீசு தண்டாரோ அடிக்கக் கூட அனுமதி கொடுக்கவில்லை. நோட்டீசு அச்சடிக்க அச்சாபீசுகள் பயப்படுகின்றன.
இந்த கிளர்ச்சிக்கு பணம் வசூல் செய்வதை தடுக்க பல போக்கிரித்தனமான அற்பத்தனமான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நாங்கள் என்ன செய்வது?
தொண்டர்களுக்கு தண்டனையா?
தொண்டர்களை சிறைபிடிப்பதையும், தண்டிப்பதையும், அவர்களை: நடத்துவதையும் சற்று பாருங்கள். 150 பேர்களை சிறை பிடித்து தண்டித்து விட்டு இப்போது அந்த காரியத்துக்கு சிறை பிடிப்பது நிறுத்தப்பட்டுப் போய்விட்டது என்றால் இதுவரை பிடித்தது ஒழுங்கா, நியாயமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி காங்கரஸ் காரியக் கமிட்டி “தப்பு அபிப்பிராயத்தின் மீது அக்கிளர்ச்சி நடப்பதால் அதை விளக்க:
காங்கரஸ் தலைவருக்கு அதிகாரமளித்திருக்கிறது” என்று தீர்மானித்திருக்கிறது. அப்படியானால் அபிப்பிராய பேதத்தினால் நடத்தும் காரியத்துக்கு 615", ஒரு வருஷம், இரண்டு வருஷம் கடின காவலா என்று கேட்கின்றேன். இதுதான் ஜனநாயகமா? இதுதான் அபிப்பிராய சுதந்தரமுள்ள பிரஜா உரிமை ஆட்சியா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
இந்த அரசாங்கம் இந்தி எதிர்ப்புக் கமிட்டியை சட்டம் மீறுவதற்கும் ஆயிரக்கணக்கான மக்களை சட்டம் மீறித் தீர வேண்டுமென்று கட்டாயப்படுத்தவும் தூண்டச் செய்கிறது. இதில் சர்க்காருக்கு என்ன. லாபம் கிடைக்கப்போகிறது என்று கேட்கிறேன்.
அரசாங்கத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்து போவது அவமானம். என்று மக்கள் கருதும்படி செய்கின்றது
நாம் என்ன செய்வது, கிளர்ச்சி கூட செய்யக்கூடாதா? தோழர் கத்தியமூர்த்தியார் இந்திக் கிளர்ச்சிக்காரரை ராஜத்துரோக சட்டப்படி ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
வழக்குத் தொடுத்து தூக்கில் போடும்படி சர்க்காருக்கு யோசனை: கூறுகிறார். இப்போது நடத்தும் சட்டமே கொடுங்கோலாட்சி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே காங்கரஸ் ஆட்சியின் யோக்கியதையும் அதைக் கையாளும். பார்ப்பனர்கள் யோக்கியதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். என்பது ஆக விட்டு படை தொண்டர்களுக்கு ஈ.வெ.ரா. செய்த உபதேசமாவது:-
தொண்டர்களுக்கு உபதேசம் இப்படையை நடத்துகிறவர்கள் பொறுப்புள்ள பெரியார்கள். இவர்கள். நடத்தையில் படை வெற்றிகரமாய் முடிவுபெறும் என்றே கருதுகிறேன். ஒற்றுமை, சிக்கனம், சமரச எண்ணம் ஆகியவை தலைவர்களுக்கு வேண்டும். தொண்டர்களுக்குப் பொறுமை, சகிப்புத் தன்மை கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் தன்மை ஆகியவை வேண்டும்.
எதிரிகள் பல சூழ்ச்சி செய்வார்கள். சிறியதைப் பெரியதாக்கி பழி கூற பல எதிரிகள் இருக்கிறார்கள். எதிரியிடம் கூலி வாங்கிக் கொண்டு. நம்மைக் காட்டிக் கொடுத்துப் பிழைக்கும் பல ஈனர்கள் நமக்குள்ளாகவே
இருந்து குடி கெடுத்து வறாகிறார்கள். இந்நிலையில் இயக்கத்துக்கு கேடு. வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். எவ்வளவு பழி சுமத்தினாலும் எவ்வளவு இழிவு படுத்தினாலும் இவற்றை எவ்வளவு பேர் நம்பினாலும் நான் மாத்திரம் களைத்துப் பின். வாங்குகிறவனல்ல. எனக்கு எனது லக்ஷ்யம் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதற்கு ஆகவே உயிர் உள்ள அளவும் பாடுபட்டுத்தான் சாவேன். யார் என்ன சொன்னாலும் வெட்கப்படப் போவதில்லை. யார் என்ன. மோசம் செய்தாலும் சரி, துரோகம் செய்தாலும் சரி, வாழ்நாள் முடிகிறவரை கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு காரியம் செய்கிறதென்ற முடிவில் தான். இருக்கின்றேன். ஆகவே தோழர்களே! இம்மாபெரும் லகடியத்திற்கு. தொண்டாற்றும் வேலை யாவரும் தங்கள் வாழ்வுக்கு பயன்படுத்திக். கொண்டு காரியத்தை கெடுக்காமல் லக்ஷ்யத்துக்கு தங்களால். கூடுமானவரை தொண்டாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு: திருச்சி டவுன்ஹால் மைதானத்தின் முன்புறம் 01.08.1938 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் படை வழியனுப்பு விழா
கூட்டத்திற்கு தலைமையேற்று ஆற்றிய நிறைவுரை:
குடி அரசு - சொற்பொழிவு - 07.08.1938.
கடி அரசு - 1938 (2) —— ௦
சுயமமியாதை இயக்கப் போதனை “சாந்தி வாழ்வே எனது ஆசை”
தோழர்களே! சுயமரியாதை இயக்கம் என்ன போதிக்கிறது என்பதை மக்கள் முதலில் தெரிந்து கொண்டால்தான் சுயமரியாதை இயக்கத்தில்: சேருவதும் அதைப்பற்றி பேசுவதும் ஒருவனுக்கு பொருத்தமாகும். சுயமரியாதை இயக்கம் ஒவ்வொரு மனிதனையும் முதலில் தன்னை மதிக்கச் சொல்லுகிறது. தன்னை மதிப்பது என்றால் தனது பஞ்சேந்திரியங்களையும் அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளால் ஏற்பட்ட பிரத்தியகஷ அனுபவங்களைக் கொண்டு ஆராய்ந்தறிந்த உண்மையை மதிக்கச் சொல்லுகிறது. இன்று மனித சமூகத்தில் பெரும்பாலான மக்கள் அனேக காரியங்களில் இந்த தன்மையை மதிப்பதில்லை, அனேக காரியங்களுக்கு இந்த அனுபவங்களைப் பொருத்துவதில்லை.
மனிதன் உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளை விட மேலானவன்: என்பதற்கு எடுத்துச் சொல்லும் ஆதாரம் மற்ற ஜீவர்களுக்கு உள்ளதைவிட மேலான ஐம்புலன் உணர்ச்சி இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் சுயமரியாதை இயக்கமும் ஆதரித்து அவைகளை மரியாதை செய், அவற்றிற்கு மதிப்புக் கொடு, அவற்றின்.
முடிவுப்படி நட என்று சொல்லுகிறது.
நம்மவர்கள் போக்கு, மனிதனுக்குண்டான ஆலோசிக்கும் தன்மையும் பகுத்தறிந்து ஆராய்ச்சி செய்யும் தன்மையும் மனிதனுக்கு அமைந்துள்ள. பஞ்சேந்திரிய சக்தியால் மற்ற எல்லா ஜீவராசிகளையும் விட மேலானதாய் இருக்கிறது. அதை மனிதன் சரியானபடி உபயோகிக்காமலும் தகுந்தபடி பயன்படுத்திக் கொள்ளாமல் மிருகப் பிராயத்திலும் கீழாக வாழ்கிறான் என்பதை பல விஷயங்களிலும் பலர் விஷயங்களிலும் காண்கிறோம். உதாரணமாக மனிதன் தனது புலன்கள் உணர்ச்சிக்கு தேவையான ஒவ்வொரு காரியத்தையும் எப்படி பரி சோதித்து பிரத்தியக்ஷ அனுபவத்தைக்கொண்டு நடந்து கொள்கிறானோ அது போல் வேறு பல காரியங்களில் நடந்து கொள்வதில்லை. இது விஷயமாக உங்களுக்கு உதாரணங்கள் எடுத்துக் காட்டவேண்டுமானால்:-
ல ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஒரு மனிதன் உங்களிடம் வந்து ஒரு அணா நாணயத்தைக் கொடுத்து அதற்கு செம்புக்காசுகளாக சில்லறை கேட்பானேயானால் நீங்கள் அந்த நாணயத்தை பரிசோதித்துப் பார்த்து உங்களுக்கு திருப்திப் படும்படியான. மாதிரியில் சோதனைகள் செய்து பிறகுதான் அதற்கு சில்லறை கொடுப்பீர்கள்.
ஒருவன் உங்களிடம் வந்து ஒரு பணவிடை பொன்துண்டை கொடுத்து அதற்கு அரை விலை கொடுக்கும்படி கேட்டாலும் நீங்கள். அத்துண்டை உரைத்துப் பார்த்து எடை பார்த்துக்கொண்டுவந்த ஆளின். யோக்கியதையையும் பார்த்து பிறகுதான் அதை வாங்குவீர்கள். நீங்கள். சாப்பிடுவதிலும் அனுபவ விஷயத்திலும் இப்படியே ஆராய்ச்சி செய்து அனுபவப்பட்டு பார்த்தே பின்பற்றுகிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள். உயிரினும் பெரியதாய் கருதும் மதம் அல்லது சமயம் - மார்க்கம் என்கின்ற விஷயங்களிலும் நீங்கள் உயிரோடு வாழும்போதும் நீங்கள். முடிவெய்திய பின்பும் அதாவது செத்த பிறகும் உங்களுக்கு மேன்மையை அளிக்கவல்லது என்று கருதி விளங்கும் கடவுள் அல்லது தெய்வம். என்னும் விஷயத்திலும் அதற்கு ஆக உங்கள் வாழ்நாளில் நல்ல பாகத்தையும் உங்கள் செல்வத்தின் குறிப்பிடத்தக்க பாகத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் செலவழிக்கும் காரியங்களிலும் மேல்கண்ட அதாவது ஒரு அணாவுக்கு சில்லறை கொடுக்க எடுத்துக்கொண்ட ஜாக்கிரதை: ஆராய்ச்சி பகுத்தறிவு பிரயோகம் முதலியனவைகளை பிரயோகிக்கின்றீர்களா பயன்படுத்துகின்றீர்களா என்று யோசித்துப் பாருங்கள்.
சுயமரியாதை இயக்கம் போதிப்பதென்ண?
சுயமரியாதை இயக்கம் மக்களுக்குப் போதிக்கும் மூதல் காரியம்
இதுதான். ஏனெனில் இந்த ஒரு காரணத்தாலேயே மனித சமூகம் பகுத்தறிவு உடையது என்று சொல்லப்பட்டும் கூட மிருகத்தை விட மற்றும் கீழான. ஈரறிவு மூவறிவு பிராணிகளை விட கேவலமாக நடந்துகொண்டு மக்களை மக்கள் பகைத்துக்கொள்ளுகிறார்கள். மக்களை மக்கள் பிரித்துக் கொள்ளு. கிறார்கள். மக்களிடம் மக்கள் துவேஷம் வெறுப்புக் காட்டி மனித சமூகத்திற்கே ஒற்றுமையும், சாந்தியும், திருப்தியும் இல்லாமல் இருக்கச்செய்து கொள்ளுகிறார்கள். இந்தத் தன்மை ஒன்று மாறினால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு மாபெரும் மாறுதல் காணலாம். சுகமும் சந்தோஷமும். நீடித்த இன்ப வாழ்வும் காணலாம். ஆதலாலே சு.ம. இயக்கம் மனிதனைத் தனது அறிவையும், ஆராய்ச்சித் திறனையும் பயன்படுத்தி எம் முடிவையும் செய்யும்படிபோதிக்கிறது. வேண்டிக்கொள்ளுகிறது.
இந்தக் காரியங்களுக்கு இணங்க முடியாதவர்களும் இணங்கத்தக்க.
அறிவும் ஆற்றலும் அற்றவர்களுக்கும் மக்கள் இந்த நிலையை அடைந்து விட்டால் தங்களது வாழ்வும் மேன்மையும் ஒழிந்துவிடுமே என்று கருதும்.
குடி அரசு - 1988 (2) —— 7௦
சுய நலக்காரர்களுக்கும் மோசக்காரர்களுக்கும் இவ்வியக்கம் குற்றமாய், நமனாய் காணப்பட்டு இவ்வியக்கத்தை இழித்துப் பழித்துக் கூறி மூடப் பிரச்சாரமும், விஷமப் பிரச்சாரமும் செய்ய வேண்டியதாகிவிடுகின்றது.
இதன் பலன்தான் சுயமரியாதை இயக்கமென்றால் அது “நாஸ்திக இயக்கம்” என்றும் ஒழுக்கமற்ற இயக்கம் என்றும் மடையர்களும். அயோக்கியர்களும் சொல்லித் தீரவேண்டி இருக்கிறது. இதைக் கேட்டுக். கொண்டு ஆராய்ச்சிக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்திப் பார்த்து முடிவுகாண சக்தியற்ற மக்கள் பலர் இதை நம்பிக்கொண்டு மூடர்களாக வாழவேண்டியவர்களாகவும் ஆக்கப்பட்டு விடுகிறார்கள். கடவுளையோ மதத்தையோ மாத்திரம் கருதி ஆரம்பிக்கப்பட்ட இயக்கமல்ல இந்த சுயமரியாதை இயக்கம்.
எதற்காக ஆரம்ரிக்கப்பட்டது.
எந்தக் காரியத்தையும் ஆராய்ந்தறிந்து செய்யவேண்டும். என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டதாகும்.
மனிதன் எந்த மதஸ்தனாகவும் எப்படிப்பட்ட கடவுளை அல்லது கடவுள்களை உண்மை என்று நம்புகிறவனாகவும் இருந்தாலும் நமக்குக். கவலை இல்லை. ஆனால் அவன் அவற்றைத் தனது அனுபவத்தால் ஆராய்ந்து பார்த்து அம்முடிவுக்கு வந்தானா இல்லையா என்பதைப் பற்றித்தான் சுயமரியாதை இயக்கத்துக்கு கவலை உண்டு.
இதனால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அநேக மதவாதிகள் என்பவர்கள் எந்த தனிப்பட்ட மதத்தைப்பற்றியும் சிந்தியாமல் “எம்
மதமும் சம்மதம்” என்று சொல்லி இருக்கிறார்கள் என்பது ஒரு புறமிருந்தாலும். அநேக பெரியார்கள் “அன்புதான் மதம்” என்கிறார்கள், “சத்தியம் பேசுவதுதான். மதம்” என்கிறார்கள், “மக்கள் துயர்களையும் தொண்டாற்றுவதுதான் மதம்" இவை தவிர்த்த வேறு மதம் இல்லை என்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் இந்த மதங்களை ஆட்சேபிப்பதில்லை. ஏற்றுக் கொள்ளவும் தயாராய் இருக்கிறது. அதுபோலவே கடவுளைப் பற்றியும் அநேகர்களால் ஒப்புக்கொண்ட பெரியார்கள் அன்பே கடவுள் அருளே கடவுள் அறிவே கடவுள் சத்தியமே கடவுள் வேறு கடவுளே இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள், இன்றும் சொல்லுகிறார்கள். இந்தக் கடவுள்கள் விஷயத்தில் சுயமரியாதை இயக்கம் தகராறு செய்வதில்லை ஏற்றுக்கொள்ளச். சொன்னாலும் தயங்குவதில்லை. இப்படிப்பட்ட மதமும் கடவுளும் மனித சமூக வாழ்வுக்கு ஒரு அளவில் இன்றியமையாதது என்றுகூட சுயமரியாதை இயக்கம் ஒப்புக்கொள்ளத் தயார்தான். ஆனால் இவை அல்லாத கடவுள்களும் மனித சமூக ஒற்றுமையான அன்பான வாழ்வுக்கும் ஒழுக்கத்துக்கும் எவ்வளவு கேட்டை பிரத்தியக்ஷத்தில் உண்டாக்கி இருக்கிறது என்று பாருங்கள்.
N e வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
நாம் ரிரத்தியக்ஷத்தில் பார்ப்பதென்ன?
ஒருவன் கடவுளை மற்றவன் ஒப்புக்கொள்வதில்லை. ஒருவன். மதத்தை மற்றவன் ஒப்புக்கொள்ளுவதில்லை. இதை நாம் எல்லோரும் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறோம்.
ஒருவன் பசுவை கடவுளாக கும்பிடுகிறான். ஒருவன் பசுவை அறுத்து சாப்பிடுகிறான். ஒருவன் மதம் பிரார்த்தனை கொட்டு முழக்கு தப்பட்டை சத்தம் வேண்டாம் என்கின்றது. மற்றவன் மதம் பிரார்த்தனை: மணி, சேகண்டி, சங்கு, மேளம், நகார் வேண்டுமென்கின்றது. இருவர் கடவுளும் மதமும் சேர்ந்தாற்போல் வாழவேண்டும் மதிக்கப்படவேண்டும். என்றால் போலீசு, துப்பாக்கி, பட்டாளம், ஜெயில், அடி, உதை தயாராய் இருக்க வேண்டியதிருக்கிறது. இங்கு அன்புக் கடவுளுக்கும் சத்தியக் கடவுளுக்கும் “எம்மதமும் சம்மதத்துக்கும்" அறிவு மதத்துக்கும் இடமே. இல்லை. ஒருவன் கடவுளுக்கு உருவம் கற்பிக்கப்படுகிறது. மற்றவன். கடவுளுக்கு உருவம் குணம் செய்கை எதுவும் கற்பிக்கப்படுவதில்லை.
ஒருவன் கடவுளுக்கு பெயரும் பெண்டுபிள்ளை குடும்பமும் ஆபாச ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையும் கற்பிக்கப்படுகிறது. மற்றவன். கடவுள்களுக்கு அவை கண்டிப்பாக இல்லை. இந்த இரண்டில் ஒன்றைத் தவிர வேறு கடவுளும் மதமும் இன்று “காண”ப்படுவதில்லை. கேட்கப்படுவதில்லை. இம்மாதிரி வழக்கங்கள் உள்ள கடவுள் மத சேற்றில் விழுந்தவன் எப்படிக் கரையேறுவான்.
எப்படி இருந்த போதிலும் நான் கருதுவது என்ன வென்றால் மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும். மற்ற ஜீவன்களுக்கு. தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேஷம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத. சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை. இதை மதம் என்றாலும் கடவுள் என்றாலும் நான் கோபித்துக் கொள்வதில்லை. ஆகவே தோழர்களே இன்று இங்கு இந்த சிறு வார்த்தைகளோடு. ஆரம்பித்து வைக்கிற இந்த சுயமரியாதை சங்கத்தை நீங்கள் தக்கபடி பயன்படுத்திக்கொண்டு நெடுங்காலம் இருந்து அது மனித சமூகத்துக்கு தொண்டாற்றி வரும்படியான மாதிரியில் இருந்துவர ஆதரவளிக்க: வேண்டுமென்று கேட்டுக்கொண்டு இச் சங்கத்தை திறந்து வைக்கிறேன்.
குறிப்பு: 26.07.1938 இல் நன்னிலம் வட்டம் வெளவாலடியில்
சுயமரியாதைச் சங்கத்தை திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 07.08.1938
குடிஅரசு 2
பார்ப்பன ஆட்சி! இன்னும் என்ன செய்ய வேண்டும்?
“தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, மனிதனைக் கடிக்க ஆரம்பித்து விட்டது”
என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் பார்ப்பனீயம் அதாவது பார்ப்பன ஆட்சி, அங்கு கை வைத்து இங்கு கை வைத்து அடிமடியில்: கையைப் போட்டுவிட்டது என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது.
காங்கரசைப் பற்றியும், காந்தியைப் பற்றியும் நாம் எதிர்த்தும் மக்களை ஜாக்ரதையாய் இருக்க வேண்டுமென்று எச்சரித்து வந்ததுமானது, அரசியல் ஆதிக்கம் நமக்கு கூடாதென்றோ வெள்ளையர், அன்னியர் இந்நாட்டை விட்டு போகக் கூடாதென்றோ அல்ல என்பதை: அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின்றோம்.
காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பதேன்? ஆனால் மற்றென்ன காரணம் என்றால் இந்நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வயிறு பிழைக்க வந்து இந்நாட்டு ஆதி மக்களை பல வழிகளிலும் ஏய்த்தும், கொடுமைப்படுத்தியும் வெற்றி கொண்டு, அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி ஆட்சி புரிந்த 3 - வகையாரில் அதாவது ஆரியர், முஸ்லீம்கள், ஐரோப்பியர் ஆகியவர்களில் ஆரியர்களே. மிக மிக கொடுமை செய்து மக்களை காட்டுமிராண்டிகளாக்கி மதத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் அடிமை கொண்டு ஆட்சி புரிகின்றவர்கள். ஆதலால் எந்தக் காரணம் கொண்டும் அதாவது ஐரோப்பியரே இன்னமும். ஆயிரம் வருஷம் ஆட்சி புரிவதாய் இருந்தாலும் முஸ்லிம்களே. இன்னம் பதினாயிரம் வருஷம் ஆட்சி புரிவதானாலும் ஆரியப் பூண்டின். ஆதிக்கம் மாத்திரம் கூடவே கூடாது என்று கருதி காங்கரசும், காந்தியும். ஆரிய ஆதிக்கத்துக்கு ஆயுதமாகவும், கூலியாகவும் இருந்து வருவதால்: ஆரிய ஆதிக்கம் ஒழிவதற்கு இவ்விரண்டும் அதாவது காங்கரசும், காந்தியும் அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லி எதிர்த்து வந்தோம்.
ஆரியர் பிறவிக் குணம்:
ஆரியர்களின் பிறலிக்குணம், ஜாதிக் குணம் இவ்விரண்டும். ஆரியரல்லாதவர்களை ஒழிப்பது அல்லது அடிமை கொண்டு அவர்கள்.
B வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
உழைப்பில் வாழ்வது என்பதேயாகும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் ஜர்மெணியரை - ஹிட்லரைப் பார்த்தால் விளங்கும். ஆரியரல்லாதவர்கள். ஒழிய வேண்டும் என்பதே ஹிட்லருடையவும், நாசி ஸ்தானத்தினுடையவும் கொள்கையாகும். நம் நாட்டு காங்கரஸ் கொள்கையும், ஆரியர் கூலியாக: உபயோகப்படுத்தும் காந்தியின் கொள்கையும் அதுவேயாகும். அதாவது “காங்கரஸ் மனுதர்மம், வருணாச்சிரம முறை ஆகியவைகளின்படி இந்தியா புதுப்பிக்கப்படவேண்டு” மென்று சொல்லப்படுவதே இந்த நமது கூற்றை மெய்ப்பிக்கும். மற்றும் ஆரியருடைய எந்த ஆதாரங்களை: எடுத்துப் பார்த்தாலும் ஆரியரல்லாதார் நாடு மிலேச்ச நாடு, ஆரியரல்லாதார் பாஷை மிலேச்ச பாஷை, ஆரியரல்லாதார் மிலேச்சர், அசுரர், ராக்கதர் என்பதாகக் காணக்கிடப்பதை இன்றும் பார்க்கலாம்.
இவை இந்நாட்டு ஆதி குடிகளுக்கும் ஆரியர் கொள்கைகளை: ஒப்புக்கொள்ளாத முஸ்லிம்களுக்கும் அவர்களது பாஷைக்கும் அவர்களது தேசத்துக்கும் தான் பொருந்தக்கூடியதாய் இருக்கிறதே தவிர மற்ற ஜர்மனியர் போன்றவர்களுக்கு பொருத்தப்படுவதில்லை.
ஆரிய சம்பந்தமுடையதெல்லாம் நமக்கு எமனே
ஆகவே இந்த கொள்கைகள் கொண்ட ஆரியர்கள் நமது நாட்டுக்கும். நம் நாட்டு பழங்குடி சமூக மக்களுக்கும் ஆரியம், ஆரிய பாஷை, அவர்களது மத உபதேசங்கள் முதலியவை நமன் என்றும் கூடாது என்றும் கூறி வருகிறோம்.
இதில் நம்மவர்களான அதாவது ஆரியரல்லாதாரான சிலருக்குப் பல காரணங்களால் இக் கொள்கை பிடிக்காததாகக் காணப்படலாம். அவர்கள் “ஆரியரும் நாமும் இந்நாட்டு மக்கள்” என்றும் “உடன் பிறந்த முறை கொண்டவர்கள்” என்றும் நமக்கு உபதேசம் செய்ய வரலாம். இதை அறியாமை என்றும் அல்லாவிட்டால் கூழுக்குப் பாடும் கூலிக் கவி என்றும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஏனெனில் இன்று நம் பிள்ளைகளுக்கு பள்ளிக் கூடங்களிலும் உயர்தரக் கல்லூரிகளிலும் படிக்கக் கொடுத்திருக்கும் இந்து தேச சரித்திரம் என்னும் புத்தகத்தில் ஆரியர்கள் என்பவர்கள் யார் என்னும். தலைப்பின் கீழும் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து இந்நாட்டுப் பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்கி வெற்றி பெற்று அடிமை கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் யார், யார் என்பதின் தலைப்பின் கீழும் உள்ள. சேதிகளைப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.
ஆரியர் குடிபுகுந்த கதை.
ஆரியர்கள் இந்த நாட்டுக்கு மத்திய ஆசியாவில் இருந்து ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டு கணவாய் வழியாக வந்தவர்கள் குடிஅரசு ௩
என்றும் ஆரியர் என்றால் உழவர்கள் - பயிரிடுவோர்கள் என்று அர்த்தமென்றும், அவர்கள் வருவதற்கு மூன் இந்த நாட்டில் வடக்கில் தஸ்யூக்கள். என்பவர்களும் தெற்கில் திராவிடர்கள் என்பவர்களும் ஆதிகுடிகளாய் இருந்தார்கள் என்றும் இந்த இரு சமூகத்தாரை விட ஆரியர்கள். தந்திரசாலிகளாகவும், பலசாலிகளாகவும் இருந்ததால் இவர்கள்மீது படையெடுத்து அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் கொண்டார்கள் என்றும் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட சரித்திரங்களிலேயே இருந்து வருகிறது. மேலே குறிப்பிட்டபடி அதை இன்றும் பள்ளிப் பிள்ளைகள் படிக்கிறார்கள்.
வேதத்தில் காணப்படுவதென்ண?
மற்றும் இதை மெய்ப்பிக்க ஆரியர்களின் வேதம் என்று சொல்லப்படும் ஏடுகளைப் பார்த்தாலும் அவற்றுள்ளும் ஆரியர்கள். ஆடுமாடுகளை மேய்த்துப் பயிரிட்டதையும் அதற்கு அனுகூலமானவற்றை கடவுளாக கற்பித்துக்கொண்டு அக்கடவுள்களை மழை பெய்யவும், வெள்ளாமை விளையவும் பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்கு அக்காலத்தில் எதிரிகளாகக் காணப்பட்ட தஸ்யூக்கள் என்பவர்களையும், திராவிடர்களையும் கண்டபடியெல்லாம் வைது சபித்தும்இவர்கள் அடியோடு அழிந்தொழிய வேண்டுமென்று தங்கள் ஜாதிக் கடவுளாகக் கற்பித்துக். கொண்ட இந்திரன் முதலியவர்களை பிரார்த்திப்பதுமான பல பாசுரங்களைக் காணலாம். இன்றும் ஆரியர்களின் வேதமாக மாத்திரம் அல்லாமல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஒழிந்த, கிறிஸ்தவர்கள். ஒழிந்த மற்ற எல்லா மக்களுக்குமே மத வேதம், புராணம், இதிகாசம் என்று சொல்லப்படும் எல்லா ஆதாரங்களிலும் நூல்களிலும் இவற்றைக் காணலாம். ஆனால் இவைகளை சரித்திர மூலமாகவும் பழந்தமிழ் நூல்கள் மூலமாகவும், வடநூல் படித்ததின் மூலமாகவும் படித்தறிந்த சில தமிழ் மக்கள் தங்கள் இழி பிறப்பினாலும் தங்களுக்கு மானத்துடன் பிழைக்க வேறு வழியில்லாத இழி தன்மையிணலும் இவைகளை மறைத்துக்கொண்டு. ஆரியர்க்கடிமையாக வாழ்ந்து காலம் கழிக்க ஒருப்பட்டிருக்கிறார்கள்.
இவை எப்படி இருந்தாலும் இந்த ஆரிய ஆட்சி அல்லது ஆதிக்கம் இந்நாட்டு பழங்குடி மக்களுக்கு முஸ்லிம் ஆட்சி செய்ததாய்ச் சொல்லுவதைவிட ஐரோப்பிய ஆங்கில ஆட்சி செய்ததாய்ச் சொல்லுவதை விட மிக மிகக் கொடுமை செய்து வந்திருக்கிறது என்பதல்லாமல். இன்னமும் சகிக்க முடியாத துன்பங்களடையும்படி வதைத்து வருகின்றது என்று சொல்லவேண்டியிருக்கிறது
ஆறிய அடிமைகள்.
நம் நாட்டைப் பொறுத்தவரை ஆரிய ஆதிக்கத்தில் திராவிட மேன்மக்களுக்கு சிறிதும் இடமில்லை. வீணர்கள், ஈனர்கள் ஆரியர்களுக்கு
7 e வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கையாளாக ஆனதினால் அவர்களே இன்று பிரகாசிக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களையே பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களை அடியோடு நசுக்க அதாவது ஆரியஆட்சி ஒழிந்து முஸ்லிம்களாலும் ஆங்கிலேயர்களாலும். தமிழ்மக்கள் பெற்ற சமுதாய (பொருளாதார) கல்வி விடுதலையை அடியோடு. ஒழித்து மறுபடியும் பழயபடியான அடிமைகளாக்கவே முயற்சிக்கிறார்கள்.
ஆரிய நீதி. ஆரிய ஆட்சியில் மனுதர்ம சாஸ்திரப்படி - வருணாச்சிரம தர்ம முறைப்படி ஆரியரல்லாதவன் கல்வி கற்கக் கூடாது. பொருள் (பணம்) வைத்திருக்கக் கூடாது. சமூதாயத்தில் ஆரியருக்கு சமமாய் இருக்கக் கூடாது. அதாவது கீழ் ஜாதியானாகவும், சூத்திரனாகவும், சண்டாளனாகவும். இருக்க வேண்டும் என்பதாகும். இந்தமுறை வெகுகாலம் இந்தியாவில் ஆரியர்களால் கையாளப்பட்டு. வந்திருக்கிறது என்பதற்கு ஆரியர்களின் புராண இதிகாசங்களின். சாட்சியங்கள் மாத்திரமல்லாமல் இன்றும் கூட இந்த முறை இருந்து வருகிறதை திராவிடர்கள் - தமிழர்கள் சூத்திரர்களாகவும், சண்டாள. ஜாதியாகவும் கூப்பிடப்பட்டும் பல விஷயங்களில் நடத்தப்பட்டும் பொது ஓட்டல், சத்திரம், கோவில், இந்து லா சட்டம் ஆகியவைகளில் பேதம் காட்டி தாழ்மைப்படுத்தப்பட்டும் வருவதைப் பார்க்கலாம்.
காந்தியார் உபதேசம். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் தோழர் காந்தியார் ஆரியரல்லாதவர்களைப் பார்த்து “நீங்கள் பாடுபட்டு மற்ற மக்களுக்கு. உழைத்துப் போட வேண்டுமே ஒழிய உங்கள் பெட்டிகளில் கிறிய வெள்ளி நாணையம் கூட இருக்கக் கூடாது” என்று சொல்லி வருவதும் “பழய வருணாச்சிரம முறையை அமைக்கவே சுயராஜ்ஜியம் கேட்கிறோம்” என்று சொல்வதும் “வருண முறைப்படி அவனவன். தகப்பன் செய்த தொழிலை தான் அவனவன் மகன் செய்ய வேண்டும்” என்று சொல்லுவதும் “அதற்காகவே தான் வார்தா திட்டம் வகுத்திருக்கிறேன்” என்பதும் அதை அனுசரித்தே இன்று மதுவிலக்கு என்கின்ற சாக்கை வைத்து கிராமப் பள்ளிக் கூடங்களை மூடிவிட்டு “ஊர்ச் சாவடியில், கிணற்று மேட்டில் நத்தத்தில் - அட்டையில் வாசகம் எழுதிக் கட்டச் செய்து அதை தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களைக் கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்வதின் மூலம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று சொல்லுவதும் ஆகும்.
ஆங்கிலம் செய்த நண்மை:
“ஆங்கிலத்தினால்தான் மக்களுக்கு அறிவும் சுதந்திர உணர்ச்சியும். விஞ்ஞான வளர்ச்சியும் ஏற்பட்டது” என்று அனேக இந்திய கல்விமான்களும்
குடி அரசு 1938 (2) —— 7௦
தேசியவாதிகள் எனப் பெயர் பெற்ற பெரியார்களும் பல காங்கரஸ் மகாசபை தலைவர்களும் உலகம் மதிக்கும் இந்தியக் கல்வியாளர்களும் சொல்லி இருக்க இன்றும் சொல்லிக் கொண்டிருக்க அவைகளை ஆணவமாய் அலட்சியம் செய்துவிட்டு வேறு பாஷையை அதாவது மேற்குறிப்பிட்ட எந்தக் காரியங்களுக்கும் பயன்படாததும் ஆரிய ஆதிக்கத்தை மாத்திரம் வலியுறுத்துவதுமான ஆரிய பாஷையை (இந்தியை) கற்கும்படி இளங் குழந்தைகளை கட்டாயப்படுத்துவது அது கூடாது என்பவர்கள் எவ்வளவு பெரிய மதிப்பு வாய்ந்தவர்களாய் இருந்தாலும் சிறைபிடித்து கடின காவல் கொடுத்து வருஷக்கணக்காய் தண்டித்து துன்புறுத்துவதும் ஆகிய காரியங்கள் இவைகளை: மெய்ப்பிக்கிறதா இல்லையா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
தமிழனை டுக்கும் சூழ்ச்சி.
மற்றும் ஆங்கில ஆதிக்கத்தில் அரசியலிலும் சமுதாய இயலிலும். பெற்ற சில சம சந்தர்ப்பங்களையும் அழித்து மற்றும் ஆரியரல்லாதவர்கள் என்றென்றும் தலையெடுக்கவே முடியாதபடி கொடுமை செய்வது எவ்வளவு கொடுங் கோன்மையானது என்பதையும் யோசிக்க வேண்டுகிறோம். ஆங்கில ஆட்சியும் ஆதிக்கமும் உள்ள காலத்தில். ஆரியரல்லாதவர்களுக்கு படிப்புக்கு செளகரியம் செய்து கொண்டது, இன்று மறுபடியும் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் படிக்க முடியாத மாதிரி செய்யக் கருதி அந்த சவுகரியங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன.
எப்படியெனில் முதலாவது பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள். இருந்த இடம் பார்ப்பனர்களாலேயே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது கல்லூரிகளில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளும் அளவுக் கிரமப்படி சேர்த்துக் கொள்வதற்காக செய்யப்பட்ட முறை ஒழிக்கப்பட்டு விட்டது.
மூன்றாவது பார்ப்பனரல்லாத பிள்ளைகள் சுலபத்தில் படிக்க முடியாதபடி சமஸ்கிருதத்தை (இந்தியை) சிறுவயதிலேயே கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. நான்காவது சென்னை தவிர வெளியில் பட்டணங்களில் பெரிய கிராமங்களில் இருந்து வருகிற மத்தியதரப் பள்ளிக் கூடங்கள் மூடப்பட குழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது. அதாவது மேல் படிப்புகளுக்கு சம்பளம் உயர்த்தப்படுகிறது. இன்னும் பல இரகசிய ஏற்பாடுகள். செய்யப்படுகிறது. (அதாவது வார்தா திட்டம் முதலியன)
உத்தியோகங்களுக்கு முட்டுக்கட்டை
உத்தியோக விஷயத்தில் பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கைக்கு, கிரமமாய் கிடைக்க வேண்டிய அளவுக்கு 3-ல் ஒரு பங்கோ 4-ல் 77௨. வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஒரு பங்கோ ஆவது கிடைக்கும்படி செய்திருந்த சில முறைகள் அடியோடு ஒழித்து பார்ப்பனர். தவிர மற்றவர்கள் உத்தியோகம் என்று நினைப்பதற்கு கூட யோக்கியதை இல்லாமல் செய்யப்பட்டு வருகிறது. சில செய்தும் ஆய்விட்டன. அதாவது சர்க்கார் வக்கீல் என்னும் பொறுப்பு வாய்ந்த (பப்ளிக் பிராஸிகூட்டர்) உத்தியோகம் வக்கீல்களின் ஓட்டின்மீது தெரிந்தெடுக்கும் படியான தேர்தல் முறையில் விட்டாய் விட்டது. அத்தேர்தல் முறைப்படி பார்ப்பனரல்லாதாருக்கு அந்தஸ்தானம் கிடைக்கவே எவ்விதத்திலும் முடியாது.
அல்லாதார் கதி எண்ணாகும்?
மற்றும் இந்த முறைப்படியே அதாவது வக்கீல் ஓட்டின் மீதே மேஜிஸ்ட்ரேட் பிராசிக்கஷன், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய உத்தியோகஸ்தர்கள். தெரிந்தெடுக்கப்படுவார்களாம். ஒரு பிராசிகூட்டிவ் இன்ஸ்பெக்டர் கூட பார்ப்பனராக தெரிந்தெடுக்கப்பட்டாய் விட்டது. ஆகவே கிரிமினல் பவர் என்னும், மக்களை விரட்டி, அடக்கி, தண்டித்து துன்பப்படுத்தும் அதிகாரம் அடியோடு பார்ப்பனர்கள் கையிலேயே இருக்கும்படி செய்துகொள்ளப்பட்டு விட்டால் இனி பார்ப்பனரல்லாதார் சுதந்திரமும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ளவர்கள், யோக்கியர்கள், அப்பாவிகள்: ஆகியவர்கள் கதி என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.
மற்றபடி சர்க்காரால் கொடுக்கப்படும் உத்தியோகங்களிலும் பழைய முறைகள் கூட அழிக்கப்பட்டு விட்டன. பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயர் வேலை 10- காலியானதற்கு 10 -ம் பார்ப்பனருக்கே. கொடுக்கப்பட்டுவிட்டன.
மிருக வைத்தியர் வேலை 26-க்கு 19 பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டாய் விட்டன.
சப் ரிஜிஸ்டரார் பதவியில் இருந்து ஜில்லா ரிஜிஸ்டரார் பதவிக்கு. உயர்த்தும் வேலை 1-ல் 11- பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன.
ஒரு பார்ப்பனரல்லாதார் ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை காலியானதும் உடனே ஒரு பார்ப்பனருக்கு கொடுக்கப்பட்டு விட்டது.
புது நியமணங்கள் எல்லாம் பார்ப்பணருக்கே
மற்றும் இப்போது செய்யப்படும் புதிய நியமனங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டு வருகின்றன என்பதோடு மாத்திரம் அல்லாமல் கலெக்டர் முதலிய மேல் வேலைக்குப் போகத் தகுதியுள்ள. பெரிய உத்தியோகஸ்தர் விஷயங்களிலும் தயாராய் அடுத்தபடி லிஸ்ட்டிலுள்ள பார்ப்பனரல்லாதார்களை மட்டம் தட்டி விட்டு அவருக்கும் கீழிருக்கும் பார்ப்பனர்கள் உயர்த்தப்படுகிறார்கள்.
குடி அரசு - 1988 (2) —— ௦
பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இருக்கும் இடங்களில் உள்ள. பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களை மாற்றிவிட்டு பார்ப்பனர்களாகப். போட்டு விடப்படுகிறது. இவை தவிர இன்னமும் காங்கரஸில் வெறும் சாதாரண: காலியாகவும் கூலியாகவும் இருந்த பார்ப்பனர்களுக்கு இன்று பெரிய பொறுப்புள்ள உத்தியோகங்கள் கொடுக்கப்படுகின்றன.
விசுவ ரிராமணர் துன்பம்.
சமுதாயத் துறையிலோ “பிராமணர்” வேறு பிராமணரல்லாதார் வேறு. அதாவது ஆரியர் தவிர வேறு யாரும் பிராமணர் என்ற. தலைப்பில் வரக் கூடாது என்று கருதி இதுவரை சில சமூகங்களுக்கு இருந்து வந்த பிராமணப் பட்டமும் பிரம்ம ஸ்ரீ பட்டமும் ஆச்சாரியார். பட்டமும் சட்டபூர்வமாய் எடுக்கப்பட்டுவிட்டது. சமுதாயத் துறையில்: இனியும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்ய யோசிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வளவும் போதாமல் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் பேரால்: இருந்துவரும் தெருவு, பார்க்கு, பள்ளிக்கூடம் முதலிய ஸ்தாபனங்களுக்கும் அப்பெயர்களை மாற்றி ஆரியப் பெயர்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. சில நாளைக்கு முன்பு திருநெல்வேலியில் தோழர் ரங்கநாத முதலியார். பேரில் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயரை மாற்றி சன்னதி தெருவென்று பெயர் வைக்கப்பட்டு பழைய பெயர் பணச் செலவு செய்து அழிக்கப்பட்டு விட்டது
தெருப்பெயரிலும் கோபமா?
அது நிலைத்த உடனே சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தின். ஒரு பிரபலஸ்தர் அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர் அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று. பெயர் இடப்பட்டு விட்டது. இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது. செட்டியாருடைய பெயர் மறைந்துவிட்டதே என்பதற்கு ஆக நாம் இதை பெரிதாக்க வரவில்லை. இதன் கருத்து என்ன என்பதை: பொதுமக்கள் உணரவேண்டுமென்பதே நமது நோக்கம். சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சினிவாசபுரம், சிவசாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது போன்ற புரங்களும் ராமதாஸ் வீதி, பிரகாசம் வீதி, சுப்பய்யர் வீதி, வரதய்யர் வீதி என்பது போன்ற 100 - கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு. பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய - அதுவும் சாகும் வரை 30 @ காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை
9 ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மாற்றி அதற்கு பதிலாக ஒரு பார்ப்பனர் பெயரை கொடுப்பது என்றால் அதுவும் “ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின். மெஜாரட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்” என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள. ஸ்தாபனங்களில் நம்மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம். இந்தக் காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிக கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இனி இந்த பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.
பாற்ப்பணரல்லாதாருக்கு சுயமரியாதை இருந்தால்
பூரண சுயராஜ்யம் என்பது பூரண பார்ப்பன ராஜ்யமாகத்தான். ஆகிவிட்டது
வார்ப்பரேஷனில் காங்கரஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள். பலர் இருந்தும் அத்தனை பேரும் இந்த சண்டாளத்தனமான காரியத்துக்கு ஓட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டால் உண்மையிலேயே பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு சுயமரியாதை இருக்கிறதா என்று பார்ப்பனர்களே கேட்க மாட்டார்களா என்று வெட்கப்படுகின்றோம்.
தோழர்கள் சாமி வெங்கடாசாலம் செட்டியார், முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் ஆகியவர்கள் இத்தீர்மானத்தில் பங்கு கொள்ளக்கூடாது என்றுதான் கவுன்சிலர்கள் பதவியிலிருந்து ராஜிநாமாக் கொடுத்து விட்டார்கள். என்றும் சொல்லப்படுகின்றது. காங்கிரசின் பேரால் கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாத மற்ற மெம்பர்களும் மானமிருந்தால் ராஜிநாமா செய்திருக்க வேண்டாமா என்றுதானே மற்றவர்கள் கேள்ப்பார்கள். எனவே கார்ப்பரேஷனின் இத்தீர்மானத்தால் ஒரு வீதிக்கிருந்த தனிகாசலம் செட்டியாரின் பெயரை எடுத்துவிட்ட அவமானத்தைவிட பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு மானமே இல்லையே என்று அன்னியர்கருதும்படி ஆகிவிட்டதே என்கின்ற துக்கம்தான் நம்மை வாட்டுகின்றது என்பதைத் தெரிவித்துக். கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
குடி அரசு - தலையங்கம் - 07.08.1938.
குடிஅரசு 1938 (2) —— 80
வங்காளம் கற்பிக்கும் பாடம்
வங்காளத்திலும் பாஞ்சாலத்திலும் சிந்துவிலும் ஆசாமிலும். முஸ்லிம் மந்திரிசபை ஏற்பட்டது. இந்தியாவிலே ராமராஜ்யம் ஸ்தாபித்து மீண்டும் வர்ணாச்சிரம ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபட்டு வரும் காங்கரஸ்காரருக்கு மிக்க மனக் கொதிப்பையும் பொறாமையும் வயிற்றெரிச்சலையும் உண்டு பண்ணியது. சென்ற ஏப்ரில் 1 - ந்தேதி முதற்கொண்டே அந்த நான்கு மந்திரிசபைகளையும் கவிழ்க்க காங்கரஸ்காரர் பகிரங்கமாகவும் அந்தரங்கமாகவும் சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். அவர்கள் முயற்சி பாஞ்சாலத்திலும் வங்காளத்திலும் ஆசாமிலும் பலிக்கவில்லை. சிந்துவில் ஒரளவு பலித்தது. முதலில் ஸர். குலாம் ஹுசேன் ஹிதயத்துல்லா ஸ்தாபனம் செய்த மந்திரி சபையைக் கவிழ்த்து காங்கரஸ்காரர் சொற்படி நடக்கும் அல்லாபக்க்ஷ மந்திரி சபையை ஏற்படுத்தினார். அந்த மந்திரி சபை முஸ்லிம் நலனுக்கு முரணாகவும் மாகாண கஷமத்திற்கு பாதகமாகவும் நடந்து வருவதினால். அதைக் கவிழ்க்க வேண்டுமென்று முஸ்லிம் லீக் தீர்மானித்து விட்டது. தற்கால சிந்து மந்திரிகள் காங்கரஸ்காரர் உதவியினாலே உயர்வாழ: வேண்டியவர்களாக இருக்கின்றனர் காங்கரஸ்காரருக்குச் சொந்த பலம் அதிகமில்லையாயினும் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி பேசி சிந்து மந்திரிகளை ஏய்த்துக் கொண்டு வருகின்றனர். ஆகவே சிந்து மந்திரி சபையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
பாஞ்சால, ஆசாம் நிலைமை
பாஞ்சால மந்திரி ஸர்.சிக்கந்தர் ஹயாத்கான் ஒரு பெயர் பெற்ற ராஜ்யதந்திரி.. ஷாதிக்த் கஞ்சு மசூதி விஷயமாக அவர் தமது சமூகத்தார் வெறுப்பையும் லட்சியம் செய்யாமல் பாஞ்சால கேஷேமத்தையும் சர்வ சமூகங்களின் ஒற்றுமையையும் மூன் நிறுத்தி மிக்க ராஜ்ய தந்திர நோக்குடன் நடந்துகொண்டு பாஞ்சால மக்கள் பாராட்டையும், அகில இந்திய பாராட்டையும் பெற்று விட்டதினால் அவரது மந்திரி சபையைக்: கவிழ்க்கவும் காங்கரஸ்காரரால் முடியவில்லை. ஆசாமிலே காங்கரஸ்காரருக்கு சொந்த கட்சி பலமில்லாவிட்டாலும் தேசீய மனப்பான்மையுடையவர்களை காங்கரசில் சேர்த்து ஒரு காங்கரஸ் மந்திரிசபை ஸ்தாபிக்க முயற்சி செய்யப்பட்டது. மந்திரி சபை வெகு
௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கிரம் ஸ்தாபிக்கப்பட்டு விடும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது ஆனால் இதுவரை ஸர். முகம்மது சாதுல்லா மந்திரி சபையை காங்கரஸ்காரருக்குக் கவிழ்க்க முடியவில்லை.
வங்காளத்தில் காங்கரஸ் சூழ்ச்சி.
வங்காளத்திலே பச்ஜுல் ஹக் மந்திரிசபையைக் கவிழ்க்க சென்ற ஒரு வருஷ காலமாக காங்கரஸ்காரர் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். அரசியல் கைதிகள் விடுதலையை முன்னிட்டு அடிக்கடி கல்கத்தா சென்றதாகக் கூறப்படும் காந்தியார் வங்காள காங்கரஸ்காரருக்கு. தம்மாலான உதவிகளெல்லாம் செய்து பார்த்தார். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சட்டசபை மெம்பர்கள் எல்லாம் காங்கரஸ் கட்சியில் சேருமாறும் மறைமுகமாகத் தூண்டினார். ஒடுக்கப்பட்டவகுப்பு மெம்பர்கள். எல்லாம் காங்கரசில் சேர முடிவு செய்துவிட்டதாகவும் காந்தியார் அறுமதியையும், ஆசிர்வாதத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாயும் கூட பத்திரிகைகளில் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலே பிரஜா கட்சி மெம்பர்களில் சிலர் முதன் முந்திரி கனம்: பச்லுல் ஹக் மீதுள்ள கோபத்தினால் பிரஜா கட்சியை விட்டுப் பிரிந்து சுயேச்சைப் பிரஜாக் கட்சியை ஸ்தாபித்தனர். எனினும் ஹக் மந்திரிசபை
மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கரஸ்காரருக்குத். துணிச்சல் உண்டாக இல்லை. எனவே ஹக் மந்திரி சபையை ஒழிக்க வழி என்ன என்று காங்கரஸ்வாதிகள் யோசித்துக்கொண்டிருக்கும்போது சுகாதார, ஸ்தல ஸ்தாபன மந்திரி சையது நெளஷர் அலிக்கும் பிரதம. மந்திரி கனம் பச்லுல் ஹக்குக்கும் அபிப்பிராய பேதமுண்டாயிற்று. அந்த. அபிப்பிராய பேதம் நாளுக்கு நாள் முற்றி சையது நெளஷர் அலியை வெளியேற்றும் நிலைமைக்கு வந்தது. ஹக் மந்திரி சபை ராஜிநாமா செய்து மீண்டும் கனம் பச்லுல் ஹக்கினால் இரண்டாவது மந்திரி சபை ஸ்தாபிக்கப்பட்டபோது சையது நெளஷர் அலியை பிரதம மந்திரி கனம் பக்லுல் ஹக் இரண்டாவது மந்திரி சபையில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர் மந்திரி கட்சியை விட்டுப் பிரிந்து எதிர்கட்சியில் சேர்ந்து கொண்டார். எதிர்கட்சியில் சேரவே அவரை ஆதரிக்கும் மூஸ்லிம் மெம்பர்களும் எதிர்கட்சியில் சேர்ந்து கொண்டனர். எதிர்கட்சியில் இப்பொழுது 111 மெம்பர்கள் இருந்தாலும் அவைகளில் 53 பேரே காங்கரஸ்வாதிகள். ஆகவே தற்கால நிலைமையில் காங்கரஸ்காரருக்கு. சொந்தப் பொறுப்பில் காங்கரஸ் மந்திரி சபை அமைக்கவே முடியாது இதர கட்சிகளுடன் சேர்ந்து ஐக்கிய மந்திரிசபை அமைக்கும் விஷயத்தில். காங்கரஸ்காரருக்குள்ளேயே அபிப்பிராய பேதம் இருந்து வருவதினால்: காங்கரஸ் கூட்டு மந்திரி சபை ஏற்படுவதும் சாத்தியமல்ல. குடிஅரசு 8
சரத் சந்திரர் வீச்சு
எனினும் மகன் செத்தாலும்பரவாயில்லை மருமகள் முண்டையாணல் போதும் என்ற மனப்பான்மையுடன் ஹக் மந்திரி சபையை ஒழித்துவிட்டு அங்கரஸ்காரர் சொற்படி நடக்கும் ஒரு மந்திரிசபையை ஸ்தாபிக்க சென்ற இரண்டு மூன்று மாதகாலமாக காங்கரஸ்காரர் தீவிர முயற்சி செய்தனர். ஜனாப் சையது நெளஷர் அலி கட்சி மூலம் தமது நோக்கம் எளிதில். கைகூடுமென காங்கரஸ்காரர் நம்பியிருக்கவும் கூடும். விளையாட்டுக்காகத்
தாம் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரவில்லையென்றும். ஹக் மந்திரிசபை வீழ்த்தப்பட்டால் ஒரு மந்திரி சபை ஸ்தாபிக்கும். நோக்கத்துடனேயே எதிர்கட்சியார் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வந்தனரென்றும் அவ்வாறு ஸ்தாபனமாகும் மந்திரிசபையில். ஒரு முஸ்லிமே பிரதம மந்திரியாக இருப்பாரென்றும் அந்த மந்திரிகள் இன்னின்ன காரியங்கள் சாதிப்பார்கள் என்றும் எதிர்கட்சித் தலைவர். தோழர் சரத் சந்திரபோஸ் நம்பிக்கையில்லாத் தீர்மான விவாத காலத்திலே பகிரங்கமாகவும் கூறினார். ஹக் மந்திரி சபையை எதிர்த்தால் வேறு மந்திரி சபை ஏற்பட வழியில்லாமல் மன்னர்பிரான் சர்க்காருக்கு முட்டுக்கட்டை விழுமோ என்ற அச்சத்தினால் ஐரோப்பியக் கட்சி மெம்பர்களும் ஆங்கிலோ இந்தியர்களும் எதிர்கட்சித் தீர்மானத்துக்கு ஆதரவளிக்காமல் இருந்து விடக் கூடுமென்றெண்ணி அவர்களைத் தம். வழி இழுக்கும் பொருட்டு தோழர் சரத் சந்திர போஸ் அவ்வாறு முன்னாடியே கூறியிருந்தாலும் இருக்கலாம்.
பச்லுல்ஹக் சவால்
நம்பிக்கையில்லாத் தீர்மான விஷயத்தில் எதிர்கட்சியார். கையாண்ட குறும்புத்தனமான முறையையும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். மந்திரி சபையார் கூட்டுப் பொறுப்பை வங்கப் பிரதம மந்திரி ஒப்புக் கொண்டிருப்பதினால் மந்திரி சபை மீது பொதுவாக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டியதே நியாயம். ஆனால் ஒருமுறை ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தோல்வியுற்றால் மீண்டும் ஆறுமாத காலத்துக்கு சட்டப்படி தீர்மானம் கொண்டுவர முடியாது. ஆகவே 10 மந்திரிகள் மீதும் தனித்தனி நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும். கூட்டுப் பொறுப்பை முன்னிட்டு தம்மீது முதலில் நம்பிக்கையில்லாத். தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அதை நிறைவேற்றினால் 10 மந்திரிகளும் ராஜிநாமாச் செய்து விடுவதாயும் பிரதம மந்திரி கனம் பச்லுல் ஹக் சவால் விடும் மாதிரி கூறியும் எதிர்கட்சித் தலைவர். தோழர் சரத் சந்திரபோஸ் ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே முதன் முதலில். தொழில் மந்திரி கனம் எச்.எஸ்.சுஹ்ரா வாதி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் பிரேரணை செய்யப்பட்டது. அவர் மந்திரியான பிறகு
8 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தொழிலாளருக்கு எத்தகைய நன்மையும் செய்யவில்லை என்றும். தொழிலாளருக்குள்ளே வகுப்பு துவேஷ முண்டாக அவர் உதவி செய்தாரென்றும் அவர் மீது எதிர் கட்சியார் குறை கூறினார்கள். மற்றும். அவர் மீது கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தபோது
பிரதமமந்திரி பச்லுல் ஹக்பந்துக்களுக்கு உத்தியோகங்கள் கொடுத்தாரென்றும். வகுப்பு துவேஷம் உண்டாகும்படி காரியங்கள் நடத்தினாரென்றும் குற்றம். சாட்டப்பட்டது. விவாதத்துக்கு பதிலளிக்கையில் தொழில் மந்திரி கனம்: எச்.எஸ். சுஹ்ராவாதியும் பிரதம மந்திரி கனம் பச்லுல் ஹக்கும். எதிர்கட்சியார் குற்றச்சாட்டுகளையெல்லாம் சின்னாபின்னப்படுத்தினர்.
ஹக் முழக்கம் கனம் பச்லுல்ஹக் பேசுகையில் தாம் பந்துக்களுக்கு உத்தியோகம். கொடுத்ததாய் ருசுப்படுத்தப்பட்டால் பிரதமமந்திரி பதவியை ராஜிநாமாச். செய்துவிடுவதாகவும் விவாத முடிந்த பிறகு தம்மீது குற்றம் சாட்டிய மெம்பர்மீது உரிமைக் கமிட்டி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அசம்பிளித் தலைவரைத் தாம் கேட்டுக் கொள்ளப் போவதாகவும், இதர மாகாணங்களில் எல்லாம் வகுப்புக். கலவரங்கள் நடந்து கொண்டிருக்கையில் வங்காளத்தில் இதுவரை இந்து - முஸ்லிம் கலவரங்கள். உண்டாகாமலிருப்பதே தாம் வகுப்புத் துவேஷம் உண்டாகும்படி நடந்து கொள்ளவில்லை யென்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சியென்றும். கூறினார். மற்றும் அசம்பிளி மண்டபத்தில் நம்பிக்கையில்லாத். தீர்மானத்தைப் பற்றி விவாதம் நடந்து கொண்டிருக்கையில் 25 ஆயிரத்துக்கு. மேற்பட்ட பல வகுப்பைச் சார்ந்த ஆலைத் தொழிலாளர்கள் பச்சை, சிவப்பு கொடிகள் தாங்கி “ஹக் மந்திரி சபை வாழ்க, காங்கரஸ் வீழ்க" என கோஷித்துக் கொண்டு ஊர்வலம் வந்து கூட்டம் கூடி ஹக் மந்திரி சபையை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதினால் கனம் எக்.எல்.சுஹ்ராவாதி தொழில் மந்திரியான பிறகு தொழிலாளர்களுக்கு எத்தகைய நலனும் ஏற்படவில்லையென எதிர்க்கட்சியார் குற்றம் காட்டியதற்கு ஆதாரமே இல்லையென வெளியாகிவிட்டது.
ஐரோப்பியர் கட்சித் தலைவர் விளக்கம்
ஐரோப்பிய கட்சித் தலைவர்ஸர். ஜார்ஜ் காம்பெல், நம்பிக்கையில்லாத். தீர்மானத்தை எதிர்த்தும் ஹக் மந்திரிசபையை ஆதரித்தும் பேசுகையில். கூறிய ஒரு அபிப்பிராயம் முக்கியமாக கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. பொருளாதார நிர்வாக விஷயமாகவும் சட்ட சமாதான பாதுகாப்பு விஷயமாகவும் ஹக் மந்திரி சபையார் ஒழுங்காக நிர்வாகம் செய்துவருவதைப் பாராட்டிவிட்டு ஹக் மந்திரி சபை வீழ்ச்சியுற்று ஒரு புது மந்திரிசபை ஏற்படும் பட்சத்தில் அந்த மந்திரி சபையை நம்ப ஐரோப்பிய கட்சியார் தயாராயில்லை யென்றும் அதனால் ஹக் மந்திரி சபையை ஆதரித்துத் குடிஅரசு w4
தீர வேண்டியது ஐரோப்பிய கட்சியின் கடமையென்றும் ஸர். ஜார்ஜ் கம்பெல் கூறினார். புது மந்திரிசபையை நம்பமுடியாது என ஸர். ஜார்ஜ் காம்பெல் கூறக் காரணமென்ன? எதிர் கட்சியிலிருக்கும் 111 பேரும். திட்டமான கொள்கை யுடையவர்களல்ல. 53 காங்கரஸ்காரரைத் தவிர மற்றவர்களுக்கு திட்டமான கொள்கையில்லை. அவர்களில் பலர் கட்சி மாறியவர்கள். கட்சி மாறியவர்கள் அரசியல் சம்பிரதாயப்படி அவர்களைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் நம்பிக்கையை இழந்தவர்கள். கட்சி மாறுவோர் நேர்மையுடையவர்களானால் தமது சட்டசபை மெம்பர். பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டுத் தாம் சேரப் போகும் கட்சியின் பேராலோ அல்லது சொந்தக் கொள்கையின் பேராலோ மீண்டும் தேர்தலுக்கு நிற்க வேண்டும். அதுவே அரசியல் ஒழுங்கு. ஆகவே கொள்கையற்றவர்களும் வாக்காளர் நம்பிக்கை இழந்தவர்களுமான சட்டசபை மெம்பர்களின் ஆதரவு பெற்ற ஒரு மந்திரி சபையைத் தம்மால் ஆதரிக்க முடியாதென ஜார்ஜ் காம்ப்பெல் கூறியது நியாயமே. கடைசியில் தொழில் மந்திரி கனம் சுஹ்ராவாதி மீது கொண்டு வரப்பட்ட முதல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் 19 வோட்டு மிகுதியினால். தோற்கடிக்கப்பட்டது. அப்பால் கூட்டுறவு ரெஜிஸ்டிரேஷன் மந்திரி கனம் முகுந்த மால்லிக் (ஓடுக்கப்பட்டவர்) மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வோட்டு எடுக்காமலே தோற்கடிக்கப்பட்டது. எனவே மற்ற மந்திரிகள் மீது எதிர்கட்சியார் கொண்டு வர எண்ணியிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பிரேரணை செய்யப்படவே இல்லை. இவ்வண்ணம் வங்காள காங்கரஸ்காரர் சூழ்ச்சி படு தோல்வியடைந்தது. வங்காள மந்திரி சபையைக் கவிழ்க்க அவர்கள் செய்த சூழ்ச்சி வங்க மந்திரி சபைக்கு இருந்துவரும் ஆதரவை. எல்லாரும் உணரும்படி செய்து விட்டது. காங்கரஸ்காரர் தம் முட்டாள்தனத்தை மறைக்கும் பொருட்டு ஐரோப்பிய மெம்பர்கள் உதவியினாலேயே ஹக் மந்திரிசபை உயிர் பிழைத்ததெனக் கேலி செய்கிறார்கள். கனம் பச்லுல் ஹக் கூறுவதுபோல் ஐரோப்பியர் வோட்டினால். வங்க மந்திரி சபை பிழைத்தது குற்றமோ அவமானமோ அல்ல. ஐரேப்பிபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே; ஐரோப்பியர்களுக்கும் வங்காள மாகாண கேஷமத்தில் அக்கரையுண்டு. சட்டசபை மெம்பர்களுக்குள் ஜாதி மதம் காரணமாக வித்தியாசம் கற்பிப்பது அறிவீனமாகும். ஒருகால் காங்கரஸ் மந்திரிசபை ஏற்பட்டாலும் ஐரோப்பியர் உதவியினாலேயே இயங்க முடியும்.
காங்கரஸ்வாதிகளுக்கு எச்சரிக்கை:
மற்றும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மான நாடகம் மூலம். வங்க காங்கரஸ் முஸ்லிம்களிடத்து வங்க முஸ்லிம் சமூகத்தாருக்குள்ள வெறுப்பும் புலனாகிவிட்டது. வங்க காங்கரஸ் முஸ்லிம் சட்டசபை
௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மெம்பர்களை முஸ்லிம்கள் படுத்திய பாட்டை காங்கரஸ் முஸ்லிம் சட்டசபை மெம்பர்கள் அவர்கள் ஆயுட் காலத்தில் மறக்க மாட்டார்கள்.
கனம் பச்லுல் ஹக் பெருந்தன்மையுடன் முன்வந்து முஸ்லிம்களை: அடக்கி காங்கரஸ் மூஸ்லிம் சட்டசபை மெம்பர்களுக்கு அபயம்: அளித்திருக்காவிட்டால் அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். பொதுஜன அபிப்பிராயத்துக்கு முரணாக நடப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய கதியே அவர்களுக்கும் ஏற்பட்டது. இதற்காக கனம் பச்லுல் ஹக்கைக் குறை கூறுவது சரியல்ல. ஆர்ப்பாட்டங்களையும், கிளர்ச்சியையும் அடக்க மந்திரி கட்சியார் எத்தகைய முயற்சியும் செய்யவில்லையென. மந்திரி கட்சியை ஆதரித்த ஸர். காம்ப்பெல்லும் கூட முறையிட்டார். முதல் தீர்மானம் தோல்வியடைந்தவுடன் ஒரு லக்ஷம் ஜனங்கள் கூடி மந்திரிகளுக்கு வாழ்த்துக் கூறி சந்தோஷ ஆரவாரம் செய்தார்களாம். ஆகவே ஒரு லக்ஷம் ஜனங்கள் ஈடுபட்டுச் செய்த கிளர்ச்சியையும். ஆரவாரங்களையும் பத்து மந்திரிகளால் எங்வனம் அடக்க முடியும். மற்றும் ஹக் மந்திரி சபையைக் கவிழ்க்க காங்கரஸ்காரர் செய்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் பொதுஜனங்கள் மனத்திலே மிக்க ஆத்திரத்தையும் வெறுப்பையும் உண்டாக்கிவிட்டன. பொது ஜனங்களுக்கு ஆத்திரமும் வெறுப்பும் உண்டானால் அப்பால் என்னதான் நடக்குமென: எவராலும் கூறமுடியாது. ஒரு லக்ஷம் பேருக்குண்டான மனக்கொதிப்பினால் ஹக் மந்திரிசபை மீது வங்க மகாஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையும் மதிப்பும் இருந்து வருகிறதென்பது தெளிவாகி விட்டது. இந்த சம்பவம் மூலமாவது வங்க காங்கரஸ்வாதிகள் ஒரு பாடம் கற்று ஒழுங்காக நடக்க முன் வருவார்களாக!
குடிஅரசு - தலையங்கம் - 14.08.1938
குடிஅரசு 1938 (2) —— 0௦
ஆச்சாமியார் கடற்கரைப் பேச்சு
தற்காலம் நமது நாட்டில் நடைபெறும் புரோகித ஆட்சியானது தனது தகுதியற்ற தன்மையையும், சக்தியற்ற தன்மையையும் வெளிப்படுத்திவிட்டது
சென்ற வாரம் சென்னை கடற்கரையில் பிரதம மந்திரி கனம்: ஆச்சாரியார் தலைமையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஆச்சாரியாரும், மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரியான கனம் டாக்டர் ராஜனும் முக்கிய பேச்சாளர்களாக விளங்கி இருக்கிறார்கள்.
அதுபோலவே வெள்ளிக்கிழமை நடந்த சென்னை சட்டசபை நடவடிக்கையிலும் கனம் ஆச்சாரியாரும், ஆந்திரப் பார்ப்பனரான. கனம் பிரகாசமும் முக்கிய பேச்சாளராக இருந்திருக்கிறார்கள். இவர்களது இரண்டு இடத்துப் பேச்சுகளிலும் கடற்கரைப் பேச்சைவிட சட்டசபைப்
பேச்சு சற்று பிகுவாகவும், முறுக்காகவுமே இருந்திருக்கிறது. அதைப்பற்றி பின்னால் கவனிப்போம்.
என்றாலும் பார்ப்பன ஜாதிக்கு ஆட்சி தகாது என்பதும், அதற்கு. ஆட்சி தெரியாது என்பதும் இந்த இரண்டு இடத்து 4 பேச்சுகளிலும். நன்றாய் விளங்கி விட்டது. கடற்கரைக் கூட்டத்தில் மூதலில் பேசிய கனம் டாக்டர் ராஜன் முழுதும் நடுக்கத்துடன் உண்மைக்கு விரோதமாக, பித்தலாட்ட பாஷையில் கூட்டத்தாரை ஏமாற்றி சமாளித்துப் போகிற. தன்மையிலேயே உப்புமில்லாமல், உறைப்புமில்லாமல் சப்பையாக ஏதோ சில வார்த்தைகளைக் கொட்டிவிட்டு தந்திரமாக தப்பித்துக்கொண்டார்.
அவர் பேசியதில் உள்ள ஆபாசங்களை வாசகர்கள் கவனிக்க வேண்டுமென்றே ஆகஸ்ட் மீ” 15 தேதி, “சுதேசமித்தர"னில் உள்ளபடியே எடுத்து எழுதி விளக்குகிறோம்.
1. “தமிழ்த்தாயின் வயிற்றில் பிறந்த தமிழ் மக்களாகிய நாம். தமிழ்த்தாயின் உண்மை புதல்வர்கள் என்று எவ்விதம் காட்டுவது என்பதற்கு இப்பொழுது சந்தர்ப்பமேற்பட்டிருக்கிறது..' வாஸ்தவத்திலேயே கனம் டாக்டர் ராஜன் தன்னைத் தமிழ்த்தாயின். புதல்வன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாரா? அவர் உண்மையாகவே தமிழனா? தமிழனுக்குப் பூணூலும் உச்சிக்குடுமையும் உண்டா? அப்படித்தான் அவர் தமிழனாக இருப்பதாக வாதத்துக்காக ஒப்புக்கொண்ட 7௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
போதிலும் இந்தி படித்தால் தான் மற்றவர்களும் தமிழர்கள் என்று காட்டிக். கொள்ள முடியுமா? உண்மைத் தமிழனுக்கு இந்தி தான் அடையாளமா என்று கேட்கிறோம்?
2 “தமிழ் நாட்டை தமிழ் நாடாக்க செய்யும் சக்தியை நீங்கள். எங்களுக்கு அளிக்கிறீர்களா?'”
தமிழ்நாட்டைத் தமிழ்நாடாக்குவதற்கு இந்தியைக் கட்டாயமாகப். புகுத்துவதினால் தான் முடியுமா? அல்லது தமிழை எல்லோரும் கட்டாயமாய் படிக்கும்படி செய்வதால் தான் முடியுமா? எனவே இதில். எவ்வளவு சூதும், பித்தலாட்டமும் இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
3. “தமிழ்த்தாயைத் தட்டி எழுப்பின கூட்டம் எது?” “தமிழ்த்தாயை தூக்கத்தில் இருந்து எழுப்பினது யார்?” தமிழ்த்தாயை இவர்கள் தட்டி எழுப்புகிறார்களா? இந்தியைப் புகுத்துவதன் மூலம் கொலை செய்து குழியில் போட்டு புதைக்கிறார்களா?
4 “இப்பொழுது தமிழின் பெயரால் கிளர்ச்சி செய்பவர்கள். ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். பேச்சு வன்மையில்லாமல் மேடைகளில்: ஏறிப்பேச முன் வருகிறார்கள். இவர்களை நீங்கள் மறந்து விடாதீர்கள்”
தமிழின் பேரால் கிளர்ச்சி செய்பவர்கள் இங்கிலீஷில் பேசுவதால். முழுகிப் போன காரியம் என்ன? தமிழ் சுத்தமாக பேசத் தெரியாத காரணத்தாலேயே ஒருவருக்கு தமிழைக் காக்க கவலை உண்டாகாதா? இதற்கு ஆக அவரை பொது ஜனங்கள் ஞாபகத்தில் வைத்து என்ன. செய்யவேண்டும்? அசட்டுத்தனமான கோள் சொல்லும் புத்திதானே. இந்தப் பேச்சு. பேசத் தெரியாமல் சிலர் மேடை ஏறுகிறார்கள் என்பது இம்மாதிரி முட்டாள்தனமாகவும் விஷமத்தனமாகவும் பேசுவதைவிட பேசத் தெரியாதது பல பங்கு மேலானதாகும்.
5... “சரஸ்வதி கடாக்ஷம் தமிழ் நாட்டினருக்கே ஒதுக்கி
வைக்கப்பட்டிருக்கிறது.”'
தமிழர்களுக்கு “சரஸ்வதி கடாக்ஷ" மிருப்பதால்தான் தமிழர். 100-க்கு 95-பேர் தற்குறிகளாவும், பார்ப்பான் (ஆரியன்) 100-க்கு 100-பேர் படித்தவர்களாகவும் இருக்கிறார்கள் போலும்.
6. “தமிழ் உயிருள்ள பாஷை ஆனதால் சமஸ்கிருதத்தை கபளீகரம் செய்து அந்த பாஷையின் சொற்களையும் நாகரிகத்தையும். தன்னுடையதாக்கித் தனி மணம் வீசித் திகழ்கின்றது.”
இப்பேச்சுத்தான் சத்தியமான பேச்சு எனலாம். தமிழில் சமஸ்கிருதம் பூராவும் புகுந்து சமஸ்கிருதமயமாகி! சமஸ்கிருத (ஆரிய) நாகரிகத்தையும் தன்னுடையதாக்கிக் கொண்டது.
கடி அரசு - 1938 (2) — ௦
இதை நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். இதற்காகத்தான் இந்தியை (சமஸ்கிருதத்தை) வேண்டவே வேண்டாம் என்கிறோம். ஏன் என்றால். இந்தி கட்டாயமாய் வந்தால் கொஞ்ச நஞ்சம் இருக்கும் தமிழும். சமஸ்கிருதமாகி தமிழ் நாகரிகமே - தமிழனே இல்லாமல் போய்விடும். பிறகு சூத்திரன் தான் இருப்பான். ஆகவே கனம் டாக்டர் சொன்னதிலிருந்தாவது நாம் இவ்வளவு நாளாக சொல்லி வந்தது அதாவது இந்தி வந்தால் தமிழ் உருக்குலைந்து விடும் என்று சொல்லி வந்தது தமிழர்களுக்கு புரிந்ததா என்று கேள்க்கிறோம்.
7. “ஒரு உண்மைத் தமிழன் மற்றொரு பாஷையைக் கண்டு அஞ்சினால் தமிழரைப் போன்ற கோழைகள் யாரும் இருக்கமாட்டார்கள்” தமிழர்களை பார்ப்பனர்கள் கோழையென்றாலும் சரி கழிசடைகள்: என்றாலும் சரி இந்தியைப் படிக்கச் செய்யாமல் இருந்தால் போதும். இது விஷயத்தில் பார்ப்பனர்களே வீரர்களாக இருக்கட்டும்.
8. “தர்மம் குன்றியதால் ஒரு சிலர் இந்தி கிளர்ச்சியில்
ஈடுபட்டிருக்கிறார்கள்””
இந்தி படிப்பது தர்மம், இந்தி வேண்டாமென்பது அதர்மம் என்பது பார்ப்பன அகராதிப்படியே ஒழிய அறிவுப்படி அல்ல. பார்ப்பான் சொல்வது எல்லாம் தர்மம் என்பதும், தேசியம் என்பதும், மற்றவை. அதர்மம் என்பதும், தேசத் துரோகம் என்பதும் நாம் இந்த 20 வருஷமாய். கேட்டுக்கேட்டு காது செவிடுபட்டிருக்கிறது.. ஆதலால் கனம் டாக்டர் ராஜன் பேசுவது ஒன்றும்புதிதல்ல. அதற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை.
9. “இந்தியா முற்போக்கடைய வேண்டுமானால் இந்திய நானிகத்தில். பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்.” இந்தியா முற்போக்கடைய இந்திய நாகரீகத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்பதில் ஒரு இரகசியம் வெளியாகிவிட்டது. அதாவது இந்தி படித்தால் இந்திய நாகரிகம் பிடிபடும் என்பது. இந்திய நாகரிகம் என்றால் ஆரிய நாகரிகம் தானே. (வேறு தமிழ் நாகரீகம். ஏற்கனவே தமிழர்களிடம் உள்ளதாகும்) ஆதலால் ஆரிய நாகரிகத்தை தமிழனுக்குள், தமிழ்நாட்டிற்குள் புகுத்தவே இந்தி கட்டாயமாக பார்ப்பன. ஆட்சி புகுத்துகின்றது என்று நாம் கூப்பாடு போட்டு வருவது இப்போதாவது தமிழ் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறோம்.
10. “தமிழ்நாட்டுக் கல்வியையும், திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் வட இந்தியாவில் பரப்ப வேண்டுமானால் இந்தி கற்க வேண்டியது மிக அவசியம்.”
குறளையும், கம்பராமாயணத்தையும், தமிழ் கலையையும் வட இந்தியாவில் பரப்ப தமிழன் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்லுவதில் 9௨ வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
எவ்வளவு அசட்டுத்தனமும், மனந்துணிந்த பித்தலாட்டமும் இருக்கிறது. என்பதை வாசகர்கள் அறியவேண்டும். இந்தி படித்தால் துளசிதாஸ். இராமாயணமும், மற்ற இந்தி (சமஸ்கிருத)க் கலையையும் நாகரிகமும்தான் தமிழன் படிக்க முடியுமே ஒழிய வட நாட்டான் குறளையோ, கம்பராமாயணத்தையோ எப்படி படிக்க முடியும்? தமிழ் நாகரிகத்தை வடக்கத்தியானுக்கு எப்படி புகுத்த மூடியும் என்பது விளங்கவில்லை.
குறளும், கம்பராமாயணமும் மொழி பெயர்க்கும் நூல்கள் அல்ல. பாஷையுடைய, இலக்கியத்தினுடைய ருசியை அனுபவிப்பதாகும். கருத்தை மொழிபெயர்க்கலாமானாலும், மொழிபெயர்க்க வேண்டுமானாலும்.
அந்த கருத்தை வடநாட்டானுக்குப் புகுத்த வேண்டுமாணலும் 2 கோடி தமிழ் மக்கள் இந்தி படிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்க்கிறோம். ஆகவே கனம் டாக்டர் ராஜன் அவர்கள் கடற்கரையில் பேசிய பேச்சுகளில் தமிழ் மக்கள் இந்தி கட்டாயமாய் படிக்க வேண்டும். என்பதற்கு நியாயமான - யோக்கியமான ஆதாரமோ, சமாதானமோ: ஏதாவது இருக்கிறதா என்பது யோசிக்கத்தக்கதாகும். ஆகவே கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் பேசிய இப்பேச்சுகளில்: எந்த வரியிலாவது, எந்த எழுத்திலாவது உண்மையோ, நாணையமோ, நியாயமோ, சரியான சமாதானமோ இருக்கிறதா என்பதை வாசகர்கள். கவனித்து பார்க்க வேண்டுகிறோம்.
இனி ஆச்சாரியார் சேதிைப் பார்ப்போம் பொய் பாவனை:
மகா புத்திளலி என்றுகருதப்படுகிறநமதுகனம் சி.ராஜகோடாலச்சரியார் அவர்கள் அன்று பேசிய பேச்சுகளிலாவது அறிவு உடமையோ, நியாயவாதத் தன்மையோ சிறிதாவது இருக்கிறதா என்பதை கவனிப்போம்.
15-ந் தேதி “சுதேசமித்திர"னில் உள்ளதையே குறிப்பிடுகிறோம்.
௮. “இந்தி எதிர்ப்பு இயக்கம் இந்தி எதிர்ப்பு இயக்கமும் அல்ல, தமிழ் இயக்கமும் அல்ல. இது பெரும்பான்மையோர் சக்திக்கும். சிறுபான்மையோர் சக்திக்கும் போட்டி” என்கிறார். உண்மைதான், இதில் சிறிதும் தவறில்லை. 100-க்கு 97-பேர்களாய் இருக்கும் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் சக்திக்கும், 100-க்கு மூன்று பேராய் இருக்கும் பார்ப்பனர் சக்திக்கும் ஒரு போட்டி மாத்திரமல்ல போராட்டமேயாகும்.
இந்தப் போராட்டம் ஆச்சாரியாருக்கு மிக்க சமானதாயிருக்கிறதாம்.
இருக்கலாம்தான். எப்படியெனில் கை தூக்கி முண்டங்கள் தனது காலடியில் மிதிபட்டுக் கிடக்கின்றன என்கின்ற ஆணவத்தால்தான்.
குடிஅரசு 198 00
ஆனால் அப்படிப்பட்ட முண்டங்கள் இந்தி எதிர்ப்பாளருக்கு. இல்லாவிட்டாலும் இந்தி எதிர்ப்பாளர் ஒவ்வொருவரும் தன்னைப்பற்றிய நம்பிக்கை உடையவர்கள், மற்றும் சுதந்திரத் தமிழ் மக்களின். சுயமரியாதையில் நம்பிக்கை உள்ளவர்கள். ஆதலால் இப்போராட்டத்தை. ஆச்சாரியார் வெளிப் பேச்சில் சுகமானது என்று சொன்னாலும் உள்ளுக்குள். நடுக்கமும், தாங்கமுடியாத தொல்லையும் கஷ்டமுமானதாக இருக்கிறது என்று கருதி திண்டாடுகிறார் என்பது நமக்கு தெரியும். அவரது பேச்சுகளினாலேயே அவற்றை விளக்கப் போகிறோம். ஆனால் இப்போராட்டம் இந்தி எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்க முடியாத ஒரு. மாபெரும் புதையலெனவே கருதுகிறார்கள் என்பதுறுதி. “இப்போராட்டம்” இனியும் கொஞ்ச காலத்துக்கு ஆவது தொடர்ந்து நடக்க வேண்டும். என்பதே நமது ஆசை. அல்லது சீக்கிரத்தில் மூடிக்கும்படியான இதினும் கடினமான முயற்சிகளை அதாவது ஆச்சாரியார் கையாள வேண்டுமென்பது நமது அவா. ஏனெனில் இந்திக் கிளர்ச்சியை அடக்க ஆச்சாரியார் கருதும் கடின முறைகள் நெருப்பை அவிக்க பெட்றோல் எண்ணை விடுவது போல் பயன் தரும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.
பொய் சமாதானம்.
ர்தலில் தோற்றவர்கள் காங்கரசுக்குள்ளாகவே கலகம் வரும் என்று பார்த்தார்கள்” ஆ.
“அதில்லாமல் போனதால் இந்தியை பிடித்துக் கொண்டார்கள்” என்கிறார்.
“தேர்தலில் தோற்றவர்கள் யார்? ஒருவராவது இந்திக் கிளர்ச்சியில் இருக்கிறார்கள் என்று ஆச்சாரியார் மெய்ப்பிப்பாரா? ஊர் ஜனங்களை: ஏமாற்ற வேறு ஞாயமான சமாதானம் சொல்ல வகையில்லாதபோது தப்பு வழியில் செல்லும் வக்கீல் புத்தியைக் காட்டுகிற ஒரு இழிவான. செய்கையே அல்லாமல் இதில் மெய்யோ ஒழுக்கமோ இருக்கிறதாக கடுகளவு அறிவுள்ளவனாவது கூற முடியுமா என்று கேள்க்கின்றோம்.
தமிழர்கள் இந்தியை எதிர்ப்பது
இந்தியைத் தமிழ் மக்கள் 10, 12 வருஷ காலமாக எதிர்த்து வருகிறார்கள். 1926-ம் வருஷம் “குடிஅரசு” பத்திரிகையில் இந்தி பார்ப்பன சூழ்ச்சி என்றும் பார்ப்பன ஆதிக்கத்தைப் புகுத்த அரசியலின் பெயரால் செய்யப்படும் பித்தலாட்டம் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. மறைமலை அடிகள் 10 வருஷங்களுக்கு முன்பே மறுப்பு எழுதி இருக்கிறார். “மார்டன் ரிவ்யூ” போன்ற பிரபல நடுநிலை அறிவு பத்திரிக்கைகள் இந்தியை பொது பாஷையாக ஆக்கக் கூடாது என்று
சுமார் 15 வருஷங்களுக்கு முன்பே எழுதி இருக்கின்றன. இந்தி வந்தால். ஜூ. வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
தமிழ் எப்படிக் கெடும், தமிழர் நாலீகம் கலை எப்படிகெடும், ஆரிய ஆதிக்கம். எப்படி ஏற்படும் என்பனவாகிய விஷயங்கள் இந்தி எதிர்ப்பாளர்களால் புட்டுப்புட்டு தக்க ஆதாரங்களுடன் பல பெரியார்கள் - தேர்தலில் தோல்வி அடையாதவர்கள் - காங்கிரசினிடத்தில் துவேஷம் இல்லாதவர்கள்.
- வருணாச்சிரமத்தில் வெறுப்பில்லாதவர்கள் - ஆரியத் துவேஷம் வகுப்புவாதம் இல்லாதவர்கள் ஆகியவர்கள் எடுத்துக்காட்டி வரும்போது இத்தனைக்கும் சமாதானம் “தேர்தலில் தோற்றவர்கள் கிளர்ச்சிதான். இந்தி எதிர்ப்பு” என்று சொல்லுவதாலேயே இந்தி புகுத்துகிறவர்களுக்கு. யோக்கியமான நாணையமான சமாதானம் இல்லை என்பதும் எதிர்ப்பவர்கள் சொல்லும் மறுப்புகள் எல்லாம் உண்மையும், ஆணித்தரமுமானதென்பதும் விளங்கவில்லையா? என்று கேள்க்கிறோம்.
பச்சை வக்கீல் புத்தி.
தோழர்கள் பன்னீர்செல்வம், கலீபுல்லா சாயபு, சர்.கே.வி ரெட்டிநாயுடு போன்றவர்களை இந்தி எதிர்ப்பாளர்களும் இந்தி எதிர்ப்பு கமிட்டியாரும் கூப்பிட்டால் அதுவும் 4 - தரம் கூப்பிட்டால் ஒரு தரம். அதுவும் எதிர்ப்பாளர்கள் வைவார்களே என்று பயந்துகொண்டு ஏதோ ஒன்று இரண்டு கூட்டங்களில் பேசுவதல்லாமல் அவர்கள் இதில் எந்த அளவுக்கு சிரத்தை காட்டுகிறார்கள்? இன்று வரை இந்தச் சட்டசபை அங்கத்தினர் யாராவது 1 - தம்பிடி இந்த இயக்கத்துக்கு உதவி இருப்பார்களா? கனம் ஆச்சாரியார் இதெல்லாம் மனப்பூர்வமாய் அறிந்தே. (தான் அனந்தப்பூரில் சொன்னதுபோல்) பச்சை வக்கீல் புத்தியில் சமாதானம் சொல்ல இந்த இழி முறையை கையாளுவாரேயானால் அவரை ோக்கியரென்றோ, அல்லது “மனப்பூர்வமாக இந்தி கிளர்ச்சியை எதிர்ப்பதும் அடக்குவதும் வெகு சுலபமான காரியம்” என்று கருதி இருக்கிறார் என்றோ எந்த மடையன் நம்புவான் என்று கேட்கின்றோம். அடுத்த மூச்சில் அவரது யோக்கியதை வெளியாகிவிட்டது. அதாவது
இ. “முடிவேற்படும் வரைதான் கட்சி நடத்தலாம். முடிவேற்பட்ட பிறகு. ரஜா எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிக்கில்லாமல் அரசாங்கத்தை நடத்த முடியாமல் கஷ்டங்களையும், தடைகளையும் ஏற்படுத்துவது. நியாயமல்ல” என்கிறார்.
இது புறமுதுகிட்டு ஓடும் ஒரு பிறவிக் கோழையின் கூற்றாகும். “ஒருவன் நான் ஜெயித்துவிட்டேன் இனி நீ அடங்க வேண்டும்” என்றால் வெற்றியை வைத்துக் காப்பாற்ற யோக்கியதை இல்லை என்றோ, அல்லது யோக்கியமான முறையில் வெற்றி பெறவில்லை என்றோதான் பொருள் கூற வேண்டும். அது எப்படியோ போகட்டும். இந்தி எதிர்ப்பானது கனம் ஆச்சாரியாருக்கு அரசாங்கத்தை நடத்த முடியாத அளவுக்கு கஷ்டங்களையும், முட்டுக்கட்டைகளையும் குடிஅரசு 02
விளைவித்து விட்டது என்பதிலேயே ஆச்சாரியாரின் வீரமும் தீரமும் விளங்கிவிடவில்லையா என்று கேட்கின்றோம். இந்தி எதிர்ப்புக் காரர்களால் அரசாங்க நடைமுறைக்கு எந்த விதத்தில் கஷ்டமும், நஷ்டமும் ஏற்படுகின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.
வந்தே மாதரத்தின் கதி:
வந்தே மாதரம் பாடியதை முஸ்லிம்கள் கூடாதென்றார்கள். ஆச்சாரியார் அரசாங்கம் வாயும், பவனமும் அடைத்துக் கொண்டு பாட்டை நிறுத்திக்கொண்டு. இது ஆச்சாரியார் வீரத்துக்கு மாத்திரம் தோல்வியல்ல. மற்றும் எவ்வளவோ காரியத்துக்கு இந்தியா பூராவுக்கும் தோல்வியும் இழிவுமாகும். மேலும் தேசியக் கொடி “கட்டப்பட்ட"தானது யூனியன் ஜாக் கண்டவுடன் அவிழ்க்கப்பட்டு விட்டது. தேசியக் கொடி பெயரே அடியோடு எடுக்கப்பட்டு வர்ணக் கொடியாகிவிட்டது. இதில். ஆச்சாரியாருக்கும், காங்கரசுக்கும், தேசியத்துக்கும் சிறிதும் அவமானமோ, தோல்வியோ, இழிவோ, கேவலமோ இல்லை என்று ஆச்சாரியார் கருதுகிறார். அவரது தோல் இது விஷயத்தில் அவ்வளவு மொத்தையாக இருக்கலாம்.
மற்றும் விசுவப் பிராமணர்களிடம் காட்டப்பட்ட வகுப்பு உணர்ச்சி உடனே கண்டிக்கப்பட்டு சரணாகதி அடைந்துவிட்டது. இதிலும் ஆச்சாரியாருக்கு அவமானமில்லாமலிருக்கலாம். இவைகளினால் எல்லாம் அவரது வீரமும், தீரமும் சிறிதும்மங்கவில்லையென்றே வைத்துக்கொள்வோம்.
தணிகாசலம் செட்டியார் ரோட்டு.
மற்றும் தணிகாசலம் செட்டியார் ரோட்டுக்கு ரங்கசாமி அய்யங்கார். ரோட்டு என்று பெயர் வைக்கப்பட்ட வகுப்புவாத உணர்ச்சியானது தோழர் ஓ.கந்தசாமி செட்டியார் ஒரு “வெடிகுண்டு” போட்டவுடன் உடனே கொல்லப்பட்டு விட்டது. இதிலும் ஆச்சாரியாருக்கோ, காங்கரசுக்கோ, தேசியத்துக்கோ சிறிதும் அவமானமோ, இழிவோ, கேவலமோ, சிரிப்புக்கு இடமோ, காறி உமிழ சவுகரியமோ ஏற்பட்டு விடவில்லை. இவைகள் சம்மந்தமாக நடந்த கிளர்ச்சிகளும், ஆச்சாரியாரின் அரசாங்கத்தை நடத்த கஷ்டமாகவோ, முட்டுக்கட்டையாகவோ' இருக்கச் செய்யவில்லை. ஆதலால் அவற்றிற்கு உடனே தலைவணங்கி விட்டார். இப்போது தமிழர்களுக்கும், ஆரியருக்கும் என்று வெளிப்படையாக நடக்கும் இந்த இந்தி எதிர்ப்புத்தான் ஆச்சாரியாரின் ஆட்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது போலும்.
ஈ. “காங்கரசைப் பார்த்து இந்தி எதிர்ப்பாளர்கள் சத்தியாக்கிரகம் செய்கிறார்கள். சத்தியாக்கிரகத்தில் காங்கரஸ் வெற்றி பெற்றது. இந்தி எதிர்ப்பாளர்களுக்கு தாங்கள் வெற்றி பெறவில்லையே என்கின்ற கோபம்” என்று அசட்டு பேச்சு பேசுகிறார்.
B வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
சத்தியாக்கிரகத்தாலா காங்கரஸ் வெற்றி பெற்றது?
காங்கரஸ் இன்றுவரை எந்த சத்தியாக்கிரகத்திலாவது வெற்றி பெற்றது என்று யாராவது ௬ஜு செய்ய முடியுமா? காங்கரஸ் சத்தியாக்கிரக கைதிகள் காரியம் வெற்றி பெற்று விடுதலையாகவில்லை. அதற்கு பதிலாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே வெளியானார்கள். ஆனால் இந்தி எதிர்ப்புக்காரர்கள் சத்தியாக்கிரகம் என்று எதையும். செய்யவே இல்லை. செய்வதுமில்லை. அவர்களுக்கு சத்தியாக்கிரகம் என்பது மூழுப்புரட்டு, பித்தலாட்டம் என்பதும் அது ஒரு சண்டித்தனமே என்பதும் நன்றாய் தெரியும். மற்றென்ன செய்கிறார்கள் என்றால். “இந்தியை எதிர்ப்பவர் ஒரு ராமசாமிதானேயொழிய பொதுஜனங்கள். அல்ல” என்று கனம் ஆச்சாரியார் சட்டசபையில் சமாதானம் சொல்லி தப்பித்துக் கொண்ட சூழ்ச்சியை விளக்கவே ராமசாமி மாத்திரமல்ல. நாங்கள் வெகுபேர் இருக்கிறோம் என்பதை ஆச்சாரியாருக்குக். காட்டவே பொது ஜனங்கள் அடையாளம் காட்டுகிறார்கள். அவர்களைப் பிடித்துத்தான் காங்கரஸ்காரர்கள் 6 மீ” தண்டிக்கிறார்கள். இவ்வளவே தவிர இதில் சத்தியாக்கிரகம் என்ன அழுகின்றது என்று. கேட்கின்றோம். இந்த லக்ஷணத்தில் சத்தியாக்கிரகம் தங்களுக்குதான். பலிக்குமாம். மற்றவர்களுக்கு பலிக்காதாம். இது “நாங்கள் தான். அயோக்கியர்களே தவிர எங்களுக்கு தான் ஏமாற்ற தெரியுமே தவிர மற்றவர்கள் யோக்கியர்கள் அவர்களுக்கு ஏமாற்ற தெரியாது” என்று காங்கரஸ்காரர் முட்டாள் வீரம் பேசுவது போல் இருக்கிறது.
உ. மற்றும் ஆச்சாரியார் (மெயில் பத்திரிகையில் காணப்படுகிறபடி)
“ரஷியாவுக்குச் சென்றுவிட்டு வந்து நாஸ்திகம் பேசி பொது உடமை பிரளரம் செய்யும் பொது உடமைவாதி ஒருவர் இந்தியை எதிர்ப்பது ஆக்சியமாய் இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.
இதற்கு முன் கூட்டப்பட்ட சட்டசபையில் கனம் ஆச்சாரியார். “எனது நண்பர் ராமசாமி நாயக்கர் தான் இந்தியை எதிர்க்கிறாரே ஒழிய பொதுஜனங்கள் எதிர்க்கவில்லை” என்றார். 15-தேதி கடற்கரை கூட்டத்தில் “மற்றவர்கள் எதிர்ப்பதுதான் சரி ரஷ்யாவுக்கு போய் வந்தவர் (ராமசாமி) கூட எதிர்ப்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்றால் இதில் இருக்கும் அறிவுடைமையையோ, நாணையத்தையோ முன்னுக்குப் பின் மூரண் இல்லாத தன்மையையோ இருக்கிறதா என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க ஆசைப்படுகிறோம். அந்தக் காலத்தில் அதாவது சட்ட சபையில் “ராமசாமி தான் எதிர்க்கிறார்” என்ற காலத்தில். ஆச்சாரியாருக்கு ஆச்சரியம் தோன்றவில்லை. அப்போது ராமசாமி எதிர்ப்பது சாதாரணமாய், நியாயமாய் தோன்றி இருக்கிறது. ஏன் எனில் “காங்கரஸ் எதிரியும் ஆரியர் எதிரியுமான ராமசாமி” காங்கரசுகாரரும், குடிஅரசு o
ஆரியருமான கனம் ஆச்சாரியார் சூழ்ச்சியை எதிர்க்க வேண்டியதுதான். போலும். ஆனால் இப்போது கடற்கரை கூட்டத்தில் அதே ராமசாமிக்கு ரஷியா, நாஸ்திகம், பொது உடமை என்கின்ற அடைமொழி கொடுத்து அவர் எதிர்ப்பதில் ஆச்சியப்படுவது என்பது எப்படி பொருந்துகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. ரஷ்யா போய் வந்தவனும், 'நாஸ்திகனும் பொதுஉடமைவாதியுமாய் ஒருவன் இருந்தால் ஆச்சாரியார். சொல்லுவது எதையும் எதிர்க்கக்கூடாது என்பது சட்டமா “வேதமா” என்று கேட்கின்றோம்.
ஒரு சமயம் தோழர் ராமசாமியை போலவே “ரஷியா போய்வந்த. நாஸ்திகன் பொதுஉடமைவாதி”யான தோழர் விளம்பர மந்திரி கனம் ராமநாதன் போல் ராமசாமி இல்லையே என்று கருதி இப்படிச் சொன்னாரோ அல்லது ஒருவனை பொதுஉடமைக்காரன், நாஸ்திகன் என்று சொன்னால் பொதுஜனங்கள் ஆளுக்கொரு கல் எடுத்துப் போட்டு ராமசாமியை அடக்கிவிடுவார்கள் என்று கருதி ஒரு சுருக்க வழி கண்டுபிடித்தாரோ என்னவோ தெரியவில்லை. இதிலிருந்து ஆச்சாரியாரின் ஜீவ சுபாவம் எப்படிப்பட்டது என்பது பொதுமக்களுக்கு விளங்காமல் போகாது.
ஜழுக்கமும் தைமியமும் இருந்தால்? ஊ “இந்தி இயக்கமும், சத்தியாக்கிரகமும் ஜனங்களை ஏமாற்றும் வரை, தைரியம் ஒழுக்கம் மூதலியவைகளுடன் காங்கரஸ் ஆட்சி நடத்தினால் காங்கரஸ் ஆட்சி அசையாது. சந்தேகப்படாதீர்கள். நம்புங்கள்” என்று பேசி இருக்கிறார்.
இது ஒரு சமயம் இந்தி எதிர்ப்பால் ஆச்சாரியார் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று பொது ஜனங்கள் நினைத்துவிட்டால் என்ன. ஆவது என்கிற பயத்தால் உளறியதாகும். ஆனால் காங்கரசிடமோ, ஆச்சாரியார் இடமோ அது மாத்திரம் கிடையாது. அதாவது “தைரியமும். ஒழுக்கமும்" மாத்திரம் கிடையாது. தைரியமிருந்தால் - ஒழுக்கமிருந்தால். “வந்தே மாதரமே” ஒழிந்திருக்காது. மற்றும் இந்தி 3 வகுப்புக்கு மாத்திரமாகி 125 பள்ளிக் கூடத்திற்கு மாத்திரம் ஆகி பரீட்சையில் தேற வேண்டியதில்லையாகி படிக்காவிட்டாலும் மேல் வகுப்புக்கு போகலாமாகி இரண்டு பாஷை எழுத்தில் படிக்கலாமாகி 200 வார்த்தை கற்றால் போதுமானதாகி கடைசியாக இந்துஸ்தானியாக ஆகி தப்பபிப்பிராயப்பட்டு இந்தியை தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்றாகி காங்கரஸ் காரியக்கமிட்டி சிபார்சும் காங்கரஸ் தலைவர் ஆதரவும் காந்தியாரின். “ஸ்ரீ முகங்"களும் வந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடைசியாக தனது நடுக்கத்தையும் சுக்கிவிட்டதோடு கடைசி ஆயுதத்தையும், இந்தி எதிர்ப்புக்காரர்கள் மீது வீசிவிட்டார். அதாவது,
%5 வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
மாணமுன்னவர் கூறும் சமாதாணமா?'
எ. “நாம் வெறுத்த கிரிமினல் சட்டத்தை நாம் பிரயோகப்படுத்துவது தப்பென்கிறார்கள் சிலர். அது தப்பாகாது. புதிய இந்திய சீர்திருத்தச் சட்டத்தை நாம் வேண்டாமென்றுதான் சொன்னோம். ஆனால் புதிய சட்டப்படி நாம் இன்று (மந்திரியாய்) இருந்து அந்த சட்டப்படி ஆட்சி புரியவில்லையா?” என்கிறார். ஆகவே இது எவ்வளவு - வெட்கம் கெட்ட மானம் கெட்டதனம். என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. “புதிய அரசியல் சட்டத்தை ஒழிக்கிறோமென்றவர்கள் இன்று எப்படி நடத்திக் கொடுக்கிறீர்கள்” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு நாளது வரையிலும் ஒருவரும் பதில் சொல்லவில்லை. அதுபோலவே “நாமினேஷனே. கூடாது என்று சொன்ன நீங்கள் டாக்டர் ராஜனுக்கு எப்படி நாமினேஷன். செய்து மந்திரியாக்கினீர்கள்” என்பதற்கும் நாளது வரை பதில் இல்லை.
“இரிமினல் சீர்திருத்த சட்டத்தை வெறுத்த நீங்கள் இப்போது ஏன் நீங்களே அச்சட்டத்தை உபயோகப்படுத்துகிறீர்கள்'” என்றால் “மந்திரி வேலை ஏற்று அரசியலை நடத்திக் கொடுப்பது போலும். நாமிநேஷன். செய்து மந்திரியாக்கினது போலும்” என்று சமாதானம் சொல்லப்பட்டால் இந்த சமாதானம் மானமுள்ள மக்கள் சொல்லுவார்களா? அறிவுள்ள மக்கள் ஏற்பார்களா என்பது யோசிக்கத்தக்கதாகும்.
“இரிமினல் சீர்திருத்தச் சட்டத்தை உபயோகிப்பதற்கு இதைத் தவிர வேறு பதில் இல்லை என்பது இப்போதாவது பொது ஜனங்களுக்கு விளங்கி இருக்குமென்று கருதுகிறோம். மற்றொரு “புத்திசாலி"த்தனமான. சமாதானமும் சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால் “பணம் ஆள் சேகரித்து ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல். புறப்பட்டு வந்து தினமும் நியூசென்சாக இருந்தால் என்ன செய்வது, கிடைத்ததை எடுத்து உபயோகிக்க வேண்டியதுதானே” என்றும். “திடீரென்று வீட்டுக்குள் திருடன் வந்துவிட்டால் கைக்கு அகப்பட்டதை: எடுத்து அடிக்க வேண்டியதுதானே” என்றும் பேசியிருக்கிறார். இவர்தான் மகாதீரராம், மகாவீரராம். கடைசி வரை பார்க்கப் போகிறாராம்.
இந்தப் பேச்சில் இவரது பயங்காளித்தனமும், புறமுதுகிட்டோடப். போகும் கோழைக் குறியும் எவ்வளவு புதைந்திருக்கிறது என்பதைத். தெரிந்துகொள்ள எவ்வளவு வசதி கிடைத்துவிட்டது என்பதை வாசகர்கள். உணரவேண்டுகிறோம்.
கடைசி ஆயுதம்
3 மாத காலமாய் 250 தொண்டர்கள் தான் ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்திலும், பள்ளிக் கூடத்தின் பக்கத்திலும் நின்று இருக்கிறார்கள்.
குடிஅரசு 1938 (2) —— 0௦
அதுவும் பெரிதும் ஒரு ஜில்லாக்காரர்கள்தான். அதுவும் தமிழ் வாழ்க. இந்தி ஒழிக என்ற “கூச்சல்” உடன்தான். இந்த நிலையே ஆச்சாரியாருக்கு ஈசல் புற்றுப் போல் காணப்பட்டு அதை சமாளிக்க வேறு வழியில்லாமல். நேர்நிதானம் இல்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்து அதாவது கைக்கு கிடைத்ததை எடுத்து அடித்து பார்த்துவிட்டார் என்றால் அந்த ஆயுதம். பயன்படுத்தியும் 2 மீ£ காலமாகி இனியும் முன்போலவே ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் நடந்துவருகிறது என்றால் இப்பொழுதே ஆச்சாரியார் ஆயுதமில்லாத ஆளாக ஆகிவிட்டாரா இல்லையா என்று கேட்கின்றோம். இவரின் கையில் கிடைத்த கடைசி ஆயுதத்தால் கூட திடீரென்று வந்த திருடன் ஓடிவிடவில்லை என்றால் திருடனிடம் அகப்பட்டு திக்குமுக்காடி விழிக்கிறார் என்றுதானே அர்த்தம்.
இவரால் வெறுக்கப்பட்ட வெகு கொடுமையான ஆயுதமே இந்த இயக்கத்தை அடக்க இந்தி எதிர்ப்புத் திருடர்களை விரட்டப் போதுமானதாக இல்லாத மாதிரியில் இயக்கம் வலுத்திருக்கிறது என்பதையாவது ஆச்சாரியார் இப்பொழுது ஒப்புக்கொண்டவராகி விட்டாரா இல்லையா என்று கேட்கின்றோம்.
ஆச்சாரியார் பந்தய விளையாட்டில் பேஸ்த்து (நாணையத் தவறுதல்காரர்) ஆகிவிட்டார். அதாவது சீட்டாட்டத்தில் எப்படிப்பட்ட ஆட்டமானாலும் அதற்கு ஒரு முறை-விதி உண்டு. அப்படிக்கில்லாமல் கையில் மேல் சீட்டு இல்லாததால் கீழ் சீட்டைப் போட்டால் தோற்றுப் போகுமே என்று கருதி ஜாதிச் சீட்டு இருந்தும் துருப்பைப் போட்டு வெட்டினால் அப்படிச் செய்தவனை பேஸ்து என்பார்கள். அதுபோலவே கனம் ஆச்சாரியாருக்கு நேர் வழியில் தோல்வி ஏற்படும் என்ற பயமும் தப்பு வழியில் வெற்றி பெற ஆசையும் வந்துவிட்டது. விதிமுறைகள் எல்லாம் தடுமாறிவிட்டது. ஆனதினாலேயே
அவருக்கு இந்தி எதிர்ப்பு இயக்கம் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுகிற. மாதிரியாக ஆகிவிட்டது. கையில் கிடைத்ததை எடுத்து போட்டுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
ஆச்சாரியார் பேஸ்து ஆகவே ஆச்சாரியார் பேஸ்தாகிவிட்டார். கூடிய சீக்கிரம் மூன்றாம். பேஸ்த்தாகி பிரித்துக் கொடுத்துவிட்டு அடங்கப்போகிறார். சாகப் போகிறவன் ஜன்னியில் திமிருவது போல் முடுக்குகிறார் - உளறுகிறார்
- விறைக்கிறார் என்ன என்னமோ செய்கிறார். நாடு சிரிப்பதும், காறி உமிழ்வதும் அவருக்குத் தெரியவில்லை. தன்னுடைய சகாக்களையும் கூலிகளையும் ஒரு பெரும்பலமாக நினைத்திருக்கிறார். நியாயம் ஒழுங்கு சமாதானம் அவர் கண்முன் தென்படவே மாட்டேன் என்கின்றன.
9 வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
அப்படிக்கில்லையானால் கடற்கரையில் 14-ந்தேதி 2- மணி நேரம். பேச்சில் 10 பேர்கள் பேசியதில் இந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாய் புகுத்துவதற்கும், தமிழ் மக்கள் கூடாது என்று சொன்ன காரணங்களுக்கும் சொல்லப்பட்ட சமாதானங்கள் என்ன?
தேசியத்துக்கு இந்தி அவசியம்” மெஜாரட்டி பலம் உள்ள நான். நினைத்ததை செய்ய முடியுமா இல்லையா என்று பார்த்துவிடுகிறேன்” “கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு அடித்தேன்” “இனியும் எந்த ஆயுதத்தையும் உபயோகிக்க பின்வாங்க மாட்டேன்” “கையில். கிடைத்ததையெல்லாம் எடுத்து பயன்படுத்தப்போகிறேன்” என்றுதான். டயர் மாதிரி சமாதானம் சொல்லப்பட்டதே தவிர வேறு சமாதானம். என்ன? இந்த லக்ஷணத்தில்.
“பத்திரிகைகளில் இஷ்டப்படி எழுதுவதையும், வாசலில் இஷ்டப்படி கத்துவதையும், இஷ்டப்படி சத்தம் போடுவதையும் அடக்க எனக்குத் தெரியும். ஜாமீன் வாங்கி பேச விடாமலும் செய்வதோடு. இன்னமும் எவ்வளவோ செய்யவும் எனக்குத் தெரியும். ஆனால்: தொந்திரவு செய்யக்கூடாது என்று இருக்கிறேன். அன்றியும் இப்படியெல்லாம். செய்வது அடக்குமுறையாகும். அது என் மனோதர்மத்துக்கு விரோதம்” என்று பேசி தனது பெருந்தன்மையைக் காட்டிக்கொண்டார்.
நமது நன்றி. வாசகர்களே! இதில் ஏதாவது புத்திசாலித்தனமிருக்கிறதா? என்று பாருங்கள். “எழுத்து வாசனையில்லாத யாதொரு பாவமும் அறியாத யாரோ சில பிள்ளைகளை சிலர் பின்னால் இருந்து அனுப்பி வருகிறார்கள். அவர்களை அடக்க வேண்டும்” என்று வீரப்பிரதாபம் பேசும் ஆச்சாரியார், அப்படிப்பட்ட யாதொரு பாவமும் அறியாத பிள்ளைகளை அடக்க “கையில் அகப்பட்டதை எடுத்து அடித்து ஒழிக்க வேண்டியதுதான்” என்று சொல்லுகிறவர் மற்ற சாதாரண காரியங்களை செய்வதுதான். அடக்குமுறை யென்றும் இம்மாதிரி தண்டிப்பது ஆபத்துக்கு ஏற்றதென்றும் சொல்லுவது எப்படி புத்திசாலித்தனமாகு மென்பது நமக்கு விளங்கவில்லை. ஆனாலும் அந்த அளவுக்கு அதுவரை நன்றி செலுத்துகிறோம், பாராட்டுகிறோம்.
“பேய்க்கும் அதன் பங்கைக்கொடு” என்று பழமொழி சொல்லுவார்கள். அதற்கிணங்க நன்றி செலுத்துகிறோம்.
சிறை நடத்தையைப் பற்றி கனம் ஆச்சாரியார் கூறியிருப்பதைப். பாருங்கள்.
“நாம் (காங்கரஸ்காரர்கள்) சிறை செல்லும்போது இருந்த மாதிரிதான் இப்பொழுதும் இருக்கிறது. அதைவிட தாழ்வுமில்லை உயர்வுமில்லை.'
குடி அரசு - 1938 (2) —— ௦
என்று சொல்லுகிறார். மூன் இருந்த சிறை நிர்வாகம் அன்னிய ஆட்சி நம்மை சுரண்டிக்கொண்டு போகவந்த கொடுங்கோலாட்சி, அஹிம்சை சமாதானம் பொருமை மனிதத் தன்மையில் நம்பிக்கை: ஆகியவை இல்லாத மிருக ஆட்சி என்று காங்கரஸ்காரர்கள் சொன்னார்கள். காந்தியாரும் சொல்லி இருக்கிறார். “இன்றைய ஆட்சி நம்ம ஆட்சி, ஜனப் பிரதி ஆட்சி, சுயராஜ்ய சர்க்கார், பொதுஜன மெஜாரட்டியின் பேரில் நடக்கும் வெகுஜன ஆட்சி” என்று அதே காங்கரஸ்காரர்களால். சொல்லப்படுகிறது. அப்படி இருக்க “சிறைக்கூடம் முன் இருந்த கொடுமைகளுக்கு குறைவில்லாமல் நடத்தப்படுகிறது என்பதை நம்புங்கள்” என்றால் வெள்ளையர்கள் சுரண்டுகிறவர்கள் அன்னியர்கள். கொடுங்கோலர்கள் ஆட்சியைவிட பார்ப்பன ஆட்சி புரோகித ஆட்சி எந்த விதத்தில் மேலானதென்று சொல்லிக்கொள்ள உரிமை உண்டு என்று கேட்கின்றோம். ஆகவே தோழர்கள் ஆச்சாரியார், டாக்டர் ராஜன் ஆகியவர்களின். கடற்கரைப் பேச்சிலிருந்து பார்ப்பனரல்லாதாராகிய தமிழ் மக்களாகிய நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சங்கதி என்ன என்பதை இந்த வியாசத்தை ஒரு தடவைக்கு இருமுறை படித்து ஆராய்ந்து பார்த்து தமிழ் மக்கள் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி செய்வது சரியா, தப்பா என்பதை: உணர்ந்து பார்த்து சரி என்று பட்டால் உடனே உங்களுடைய பங்கை செலுத்துங்கள். உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு. இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.08.1938.
W வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
தமிழ் மக்களே!
பார்ப்பனர் ஆட்சி இந்தி என்றும், இந்துஸ்தானி என்றும் சொல்லிக்கொண்டு வடமொழியை (ஆரிய மொழியை) தமிழர்களுக்குள். வலுக்கட்டாயமாக நுழைப்பதின் கருத்து என்ன என்பது உங்களுக்குத். தெரியுமா?
தெரியாவிட்டால் மலையாளத்தைப் பாருங்கள். மலையாளத்தில் வடமொழியும் வடமொழி நூலும் புகுந்து ஆதிக்கம் பெற்ற பின்னரே மலையாளப் பெண்கள் அதிலும் மேல் ஜாதி உயர் குடும்பப் பெண்களை: பார்ப்பனர்கள் வைப்பாட்டிகளாக அனுபவிக்க முடிந்தது. இன்றும் சில பெண்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகளாக இருக்கவே விரும்புகிறார்கள்.
சில மலையாளிகள் தங்களை மலையாளித் தகப்பன் மகன் என்று சொல்லிக் கொள்வதைவிட மலையாளப் பார்ப்பானின் மகன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறார்கள்.
நாம் எதற்காக இதை எடுத்துக்காட்டுகிறோம் என்றால் இந்தி - வடமொழி இந்நாட்டில் ஆதிக்கம் பெற்றால் தமிழ் மக்களை இந்த நிலைக்குத்தான் கொண்டு வந்து விடும் என்பதை எடுத்துக்காட்டவேயாகும். இப்பொழுது சூத்திரன் என்றால் யார்?
குத்திரச்சி என்றால் யார்? வடமொழி நூலும், பாஷையும் இங்கு ஆதிக்கமில்லாமல் இருந்தால் தமிழ் மக்களில் ஒரு சாரார் தம் பெண்களை வெளிப்படையாக விபசாரத்திற்காக விட்டுப் பிழப்பை நடத்துவார்களா? வடமொழி தெய்வங்கள் நம் நாட்டில் ஆதிக்கம் பெறாமல் இருந்தால் தெய்வங்களின். பேரால் நம்மில் ஒரு சாராரின் பெண்களை விபசாரத்திற்கு விடுவோமா? ஆகவே வடமொழி கட்டாயமாய் புகுத்துவது என்பது தமிழர்களை ஆரியர்களுக்கடிமையாக்கவே தமிழர்கள் பெண்கள் ஈன: நிலையை அடையவே. ஆகவே இப்படிப்பட்ட காங்கரசுக்கு ஓட்டுக்கொடுக்கப் போகிறீர்களா?
குடி அரசு - வேண்டுகோள் - 21.08.1938.
கடி அரசு 1938 (2) —— 0
இந்தி எதிர்ப்பும்
பார்ப்பனப் பத்தியிகைகளும்
இந்தி எதிர்ப்பு விஷயமாய் சென்னை மாகாணத்தில் இருந்து வரும் கிளர்ச்சியைப் பற்றியும், அது விஷயமாய் சர்க்கார் கையாளும் கொடுங்கோன்மை அடக்குமுறையைப் பற்றியும் அந்த அடக்குமுறையை சரியென்று சொல்லி பொது ஜனங்களை சமாதானப்படுத்த அரசாங்கத்தார். சொல்லும் காரணங்களாகிய அதாவது “இந்தி எதிர்ப்பில் அரசாங்கத்துக்கு பல தொல்லைகள் ஏற்படுகிறது” என்பதைப் பற்றியும் மற்றும் “இந்தி எதிர்ப்பு காரியங்கள் அரசாங்கத்தார் சகிக்கமுடியவில்லை” என்றும் “அது அரசாங்கமே நடைபெற வொட்டாமல் சங்கடத்தை விளைவிக்கக். கூடியதாய் இருக்கிறது” என்று திணறுவதாகக் காட்டிக் கொள்வதைப். பற்றியும் இந்தி எதிர்ப்புக்காரர்களுக்கு தாராளமான பணம் இருப்பதாகவும், கட்டுப்பாடாக இயக்கம் நடத்தப்படுவதாகவும் அதனால் தொண்டர்கள் ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல். புறப்பட்டு திக்குமுக்காடச் செய்வதால் கடுமையான அடக்குமுறைகளைக்: கையாள வேண்டி இருந்தது என்று சொல்லுவதுடன் ஒரு பெரிய மெஜாரிட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் தங்கள் இஷ்டப்படி காரியம் செய்யாமல் தடுக்கும்படியான பெரிய கிளர்ச்சியாய் போய். விட்டதால் இப்போது இதை அடக்க தங்களுக்கு இருக்கிற அதிகாரமும் சட்டப் பாதுகாப்பும் போதவில்லை என்று தாங்கள் கருதுவதாகவும். சொல்லி ஆதலால் இதைவிட அதாவது இப்போது இந்தி எதிர்ப்புக். கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தும் சட்டத்தைவிட அடக்குமுறை கொள்கைகளைவிட இன்னமும் கொடுமையான. சட்டங்களை கூடிய சீக்கிரம் செய்ய வேண்டி இருக்கிறது என்றும். மந்திரிகள் பதறித் துடிதுடிப்பதுவும் ஆகிய பேச்சுக்களும் காரியங்களும் மந்திரிகள் கடற்கரையில் பேசின பேச்சின் மூலமும், சட்டசபை பேச்சின். மூலமும் - வாசகர்கள் பொதுஜனங்கள், மெயில், இந்து, மித்திரன். பத்திரிகைகளின் மூலமே பார்த்திருக்கலாம்.
கூலிப் பத்திரிகைகள் விஷமம்:
குறிப்பாக கடற்கரையில் அய்யங்கார் ஆச்சாரியார் ஆகிய இரு: பார்ப்பன மந்திரிகள் பேசிய பேச்சுக்களில் சிலவற்றை எடுத்து அப்படியே
குடி அரசு - 1938 (2) — 102
போட்டு ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விளக்கமும், சமாதானமும் சென்ற. வார “குடி அரசு” தலையங்கத்தில் பிரசுரித்திருந்ததை வாசகர்கள்
அறிந்திருக்கலாம். அவ்வளவு தூரம் அவற்றை தெளிவாக எடுத்துப்போட்டு அதுவும் பச்சை பார்ப்பன, அதிலும் அய்யங்கார் ஆதிக்க பத்திரிகையாகிய “சுதேசமித்திரனில் இருந்தது போலவே தேதி, பக்கம், கலம் முதலியவைகளையும் குறிப்புக்காட்டி எடுத்துப் போட்டு விளக்கிய பிறகும், சில பார்ப்பன ௯லிப் பத்திரிகைகளும், எச்சிக்கலை காலிப். பத்திரிகைகளும் மக்களை ஏமாற்றி பார்ப்பனரல்லாத பொதுமக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியை போட்டு தங்கள் ஜாதி சோம்பேறி வாழ்வுக்கும், ஊரார் உழைப்பை நோகாமல் பயன்படுத்தி ஏமாற்றி வாழும் இழி வாழ்வுக்கும் அனுகூலமாக சூழ்ச்சியும், பித்தலாட்டமும் செய்து மானம் கெட்டாவது, ஈனத்தனத்தை லட்சியம் செய்யாமலாவது வாழக் கருதும் சில பத்திரிக்கைகள் “இந்தி எதிர்ப்பு இயக்கம். செத்துப்போய்விட்டது. அதற்கு கருமாதி ஆகிவிட்டது. சமாதிகட்டி பாறாங்கல்லைத் தூக்கி வைத்தாய் விட்டது” என்று ஜாடைமாடையாயும், வெளிப்படையாயும் எழுதி வருகின்றன.
இதிலிருந்தே அந்த ஜாதியோ, அல்லது அந்த ஜாதிப் பத்திரிக்கையோ யோக்கியமாய், நாணயமாய், மனிதத் தன்மையாய், இந்த நாட்டில். வாழ முடியாத கேடான நிலைமைக்கு வந்துவிட்டது என்பது கடுகளவு அறிவுள்ளவர்களுக்கும் பச்சையாய் விளங்கிவிடும் என்றே சொல்லலாம். ஆண்மையுள்ளவர்கள் சுத்த ரத்த ஓட்டமுள்ள மனிதத் தன்மையுள்ளவர்கள் ஒரு காரியத்தையோ, அல்லது தங்களுக்கு இஷ்டமில்லாததோ, அன்றி தங்களுக்கு கேட்டைத் தருவதோ ஆன. ஒரு இயக்கத்தையே எதிர்ப்பதாய் இருந்தால் நேரிய முறையில், வீரத் தன்மையில் எதிர்க்கவேண்டும்.
ஈணத்தனமாண முயற்சிகள்
அல்லது சரியான, நாணையமான சமாதானத்தைச் சொல்லி முறியடிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஈனத்தனமான முறையில். இழி தன்மையான பொய்யையும், பித்தலாட்டத்தையும் பேசியும், எழுதியும் தகாத கேவலமான மாதிரி சூழ்ச்சிகள் செய்தும் ஒழிக்கப். பார்ப்பது எப்படி யோக்கியமானது என்று சொல்ல முடியும்?
“இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டது” என்று விஷமத்தனமான. முறையில் ஒரு பக்கம் அயோக்கியப் பிரசாரம் செய்வதும், மற்றொரு பக்கம் ஈசல் புற்றுப்போல் புல புலெனப் புறப்பட்டால் நான் என்ன செய்வது என்று கோழைப் பேச்சு பேசி கொடுமையான காரியத்தைச்
13 ௨ ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
செய்ய முயற்சிப்பதும், கோர்ட் என்று சொல்லப்படும் நீதிஸ்தலங்களில் உண்மையான தொண்டர்களை தாருமாறான கேள்விகள் கேட்டு யோக்கியமற்ற முறையில் நீதி செலுத்துவதும் நீதிபதி என்பவர்களே அதிகப்பிரசங்கித்தனமான. முறையில் “ஈ.வெ.ராமசாமி தானே உங்களை அனுப்புகிறார்?” என்று கேட்டு ஒப்புக்கொள்ளச் செய்ய முயற்சிப்பதும் எச்சிலை சோம்பேறிப் பையன்களைப் பிடித்து கூலி கொடுத்து இந்தியை எதிர்ப்பது போல் வஞ்சக வேஷம் போடச் செய்து இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்குள் புகுத்தி மறியல் செய்யச் செய்து போலீசாரை பிடித்துப் போகச் சொல்லி கோர்ட்டுக்கும், ஜெயிலுக்கும் போன பின்பு ஈ.வெ.ராமசாமிதான் தன்னை. அனுப்பினான் என்று வாக்குமூலம் கொடுக்கும்படியும் மாய்மால அழுகை அழுகும்படியும் சொல்லிக் கொடுத்து இயக்கத்தை பரிகாசம். செய்ய முயற்சிப்பதுமான பல இழிவான காரியங்கள் செய்து கொண்டும் மற்றொரு பக்கம் செல்வாக்குள்ள முக்கியஸ்தர்களை கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது இயக்கத்தை நிறுத்த முயற்சிப்பதுமான காரியங்கள். செய்யப்பட்டு வருவது யாருக்குத் தெரியாது என்று கேட்கின்றோம். இவற்றுள் எதையாவது யோக்கியமான காங்கரஸ்காரனோ, காங்கரஸ் பத்திரிக்கையோ மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் காங்கரஸ் பத்திரிகைகள் கையாளும் முறைகளில் ஒரு விஷமத்தனமான இழிமுறைப் பத்திரிக்கையின் செயலையும் குறிப்பிட விரும்புகிறோம்.
ஆச்சாரியார் பொய்ப் பிரசாரம்.
அதாவது கனம் பொப்பிலி அரசர் சென்னை வந்து சேர்ந்தவுடன் பொப்பிலி அரசர் கனம் பிரதம மந்திரி ராஜகோபாலாச்சாரியாரை சந்தித்ததாகவும், இந்தி எதிர்ப்பை பொப்பிலி ராஜா அவர்கள். ஆதரிக்கவில்லை என்றும், இந்தி எதிர்ப்பை நிறுத்திவிடப் போவதாக ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கூட்டத்தில் பிரேரேபிக்கப் போவதாகவும் சிறிதும் மானம், வெட்கம், நாணையம், ஒழுக்கம் இல்லாமல் எழுதி
இயக்கத்தின் வேகத்தை குறைக்க முயற்சித்து இருக்கிறது. அதன் உண்மை என்ன என்று விசாரிக்கப் புகுந்தால் கனம் பிரதம மந்திரியே பொப்பிலி ராஜா வீட்டிற்கு போய் அவரிடம் உண்மைக்கு மாறான. அநேக விஷயங்களை எடுத்துச் சொல்லி இந்தி எதிர்ப்பு முறையின்.
மீது ராஜா அவர்கள் அதிருப்திப்படச் செய்ய முயற்சித்ததாகவும் அதற்கு ராஜா அவர்கள் அம்முறைகள் உண்மையானால் அது கைவிடப்பட வேண்டியது தான் என்று அபிப்பிராயப் பட்டதாகவும் தான் நடந்திருக்கிறது.
இருந்தாலும் கனம் பொப்பிலி ராஜா பத்திரிக்கைகளில்: களில் கனம் ஆச்சாரியார் தன்னை சந்தித்தபோது
கடி அரசு - 1938 (2) — 14
பல பொது வாழ்க்கை விஷயங்களைப் பற்றித்தான் பேசப்பட்டதே ஒழிய மற்றபடி சென்னை பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட விஷயம் அபாண்டமானது.
என்று கண்டிருக்கிறது.
மணந் துணிந்த கற்பனை: எனவே பத்திரிக்கைகளின் விஷமப்பிரசாரம் எவ்வளவு தூரம் மனந் துணிந்த கற்பனை - பித்தலாட்ட நடவடிக்கை கொண்டவைகளாக இருக்கின்றன என்பதற்காக இந்த விஷயத்தை குறிப்பிடுகிறோம்.
மற்றும் கனம் பிரதம மந்திரி ஆச்சாரியார் அவர்கள் சென்னை: கவர்னர் பிரபு வீட்டிற்கும், சென்னை வெள்ளை அதிகாரிகள் வீட்டிற்கும்,
தமிழ் பிரமுகர்கள் வீட்டிற்கும் சென்று இந்தி எதிர்ப்பு முறைகளைப் பற்றி. எவ்வளவு துணிவாக உண்மைக்கு விரோதமான பேச்சுகளை கட்டுப்பாடாகச் சொல்லி அவர்களுக்கு இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் மீதும், எதிர்ப்பாளர்கள்
மீதும் வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படி செய்து வருகிறார் என்பதற்கு சில விஷயங்களைக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
பிரதம மந்திரியார் மாயக் கண்ணீர். அதாவது கனம் ஆச்சாரியார் அவர்கள் இந்தி எதிர்ப்பைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் எதிர்ப்பாளர்கள் தன்னைப் பற்றியும்.
தம் பெண்டு பிள்ளைகளைப் பற்றியும் ஆபாசமான வார்த்தைகளை, அசிங்கமான வார்த்தைகளை காதால் கேட்க, வாயால் உச்சரிக்க முடியாத அவ்வளவு கடூரமான வார்த்தைகளைப் பேசுவது தன்னால் சகிக்க முடியவில்லை என்றும், உங்கள் வீட்டு பெண்டு பிள்ளைகள் வேறு, என் வீட்டு பெண்டு பிள்ளைகள் வேறா என்று கண்ணில் தண்ணீர் விட்டு அழுது கொண்டு பேசுகிறார் என்றும் நம்பத்தகுந்த இடத்தில்.
இருந்து சேதி வந்திருக்கிறது. அதாவது இன்று ஆச்சாரியார் வகிக்கும் ஸ்தானத்துக்கு எந்த விதத்திலும் கீழாதைல்லாத ஸ்தானம் வகித்தவர்களே பல பெரியார்கள் தங்களிடம் இப்படிச் சொன்னதாக சொல்லுகிறார்கள். கனம் ஆச்சாரியார். அவர்கள் அவர்களிடம் (பல பெரிய மனிதர்களிடம்) சொன்னது மாத்திரமல்லாமல் சட்டசபையிலும் பொதுக்கூட்டத்திலும் கூட இப்படிச் சொல்லி இருக்கிறார். இதுதானா நேரான போர் முறை? என்று கேட்க வேண்டியிருக்கிறது.
சாட்சிகள் சொன்னதென்ன?' ஏறக்குறைய சுமார் 100 தொண்டர்களின் கேசுகள் நீதி ஸ்தலத்தில் விளரணை ஆகும்போது நேரில் இருந்தவர்களும் மற்றும் பக்கத்தில். இருந்த தக்க பொறுப்புள்ளவர்களும் இன்றும் எந்த இடத்தில்
15 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
வேண்டுமானாலும் வந்து சொல்லத் தயாராய் இருக்கிறார்கள். என்னவென்றால் கோர்ட்டு விசாரணையில் தொண்டர்கள் மீது குற்றம் கூறி சாகஷிகள் போலீசுகாரர்கள் சொன்னதெல்லாம், இத்தொண்டர். பிரதம மந்திரியார் வீட்டுக்குப் பக்கம் நின்று கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று சொன்னார்கள் என்றும், கத்தினார்கள் என்றும், கூப்பாடு போட்டார்கள் என்றும் தான் பெரிதும் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு மேல் சுமார் 100 தொண்டர்கள் வழக்கு நடந்து தண்டிக்கப்பட்ட பிறகே ஆச்சாரியார் ஆட்சி ஒழிய-பார்ப்பன ஆட்சி ஒழிய என்று சொன்னதாக சாகஷிகள் சொன்னார்கள். பிறகு அடக்குமுறை வலுவடைந்த: பிறகு ஆச்சாரியாரும், அவர்கூட பத்திரிகைகளும் ஆளுகளும் ஆணவமாகவும் திமிறாகவும் பேசவும் எழுதவும் செய்தபிறகு பூணூல். ஆட்சி ஒழிக உச்சிக் குடுமி ஆட்சி ஒழிக என்று கூப்பாடு போட்டார்கள். என்று சொல்லப்படுகிறது. இவைகளை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், இது எப்படி பெண்டு பிள்ளைகளை பற்றி இழிவாக, ஆபாசமாக, அசிங்கமாக பேசியதாக சொல்ல முடியும்?
நம்புவதைச் சொல்வது தப்பா?
பார்ப்பன ஆட்சி என்பதும், பூணூல், உச்சிக்குடுமி ஆட்சி என்பதும் ஒரே கருத்தைத்தான் குறிப்பதாகும். அதாவது இன்று நடைபெறுகிற ஆட்சி முறை பார்ப்பன சமூகத்துக்கு மாத்திரம் பயன்படத்தக்கதாகவும். மற்ற சமூகத்துக்கு கேட்டை விளைவிப்பதாகவும், பார்ப்பன ஆதிக்க. ஆட்சியாகவும் இருக்கிறது என்று சரியாகவோ தப்பாகவோ உணருகிற. ஒருவன் அதைச் சொன்னால் தப்பு என்ன என்று கேட்கின்றோம். இதே பார்ப்பனர்கள் கனம் ஆச்சாரியார், அய்யங்கார், அய்யர்கள். உள்பட காங்கரஸ்காரர்கள் வெள்ளையர் ஆட்சி ஒழிக என்று சொல்லவில்லையா? ஜமீன்தார்கள் சரிகைக் குல்லாய்க்காரர்கள் ஆட்சி ஒழிக என்று கூப்பாடு போடவில்லையா? பனகால் ராக்ஷத ஆட்சி ஒழிக! பொப்பிலி அரக்கர் ஆட்சி ஒழிக என்று கூப்பாடு போடவில்லையா? அப்போது கனம் ஆச்சாரியார் காதை மூடிக்கொண்டாரா என்று கேட்கின்றோம்.
காங்கரஸ்கரரர் சொன்னவைதானே
மற்றும் பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டதாகக் கருதி பனகால் டெட் (DEAD) பனகால் செத்தான் என்று பார்ப்பனர்கள். வீட்டுக்கு வீடு புகையிலை வழங்கவில்லையா? தெருவில் சங்கு ஊதச் செய்து பனகால் சங்கதி சங்கூதிப் போச்சுது என்று சொன்னதோடு இவைகள் காங்கரஸ் பத்திரிகைகளில் கூட கொட்டை எழுத்துக்களில். போடப் படவில்லையா என்று கேட்கின்றோம். முஸ்லிம்கள் இந்து
குடி அரசு - 1938 (2) —— 0௦
ஆட்சி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லையா? வில்லிங்டன். ஆட்சிக்கு சாவுமணி அடித்தாய்விட்டது என்று சொல்லவில்லையா? என்ன வார்த்தைகள் இது வரை காங்கரஸ்காரரும் பார்ப்பனப் பையன்களும் சொல்லாததைவிட இந்தி எதிர்ப்புக்காரர்கள் சொன்னார்கள் என்று கேட்கின்றோம்.
மற்றும் வெள்ளையர் ஆட்சி ஒழிக! பணக்கார ஆட்சி ஒழிக! ஜமின். ஆட்சி ஒழிக!!! முதலாளி ஆட்சி ஒழிக!!! என்று கூப்பாடு போட உரிமை: இருக்கும்போது இந்த நான்கு கூட்டத்தை விட நாட்டு மக்களுக்கு கேட்டையும், தொல்லையையும், இழிவையும், சுரண்டுதலையும் உண்டாக்கும் சோம்பேறி. விஷம சூழ்ச்சிக்கார பார்ப்பன ஆட்சி ஒழியவேண்டும் என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கின்றோம். வெள்ளை ஆட்சி ஒழிக, சரிகைத் தலப்பா ஆட்சி ஒழிக என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இருக்கும்போது பார்ப்பன ஆட்சி ஒழிக! உச்சிக்குடுமி ஆட்சி ஒழிக! பூணூல் ஆட்சி ஒழிக!!! என்று சொல்ல மனிதனுக்கு உரிமை இல்லையா என்று கேட்கின்றோம்.
பெண்களை அவமானப்படுத்தியவர் யார்?
பெண்டு பிள்ளைகளைப் பற்றி பேசுவது என்பது குற்றம்தான், கூடாதது தான். ஆச்சாரியார் பெண்டு பிள்ளைகளைப் பற்றி மாத்திரம். அல்ல விவசாரத்தையும், குச்சிக்காரத் தொழிலையும் குலத்தொழிலாய் குடும்பத் தொழிலாய் கொண்டிருக்கும் பெண்டு பிள்ளைகளைப் பற்றி பேசினாலும் குற்றம் என்றுதான் சொல்லுகிறோம். அவர்கள் பெண்டு பிள்ளை வேறு, இவர்களுக்கு வரும் அவமானம் இழிவு வேறு என்று நாம் கருதவில்லை, கருதுவதுமில்லை என்று உறுதி கூறுகிறோம். அப்படிப்பட்ட பேச்சு பேசியவனையும், கூப்பாடு போட்டவனையும். எப்படி தண்டிப்பதிலும், எவ்வித அடக்குமுறை கையாளுவதிலும் நமக்கு சிறிதும் ஆட்சேபணை இல்லை. ஆனால் அப்படி இது வரை யார். சொன்னார்கள். அது எங்கே பதிவு செய்யப்பட்டது. அது உண்மையானால். அதற்கு தனிப்பட்ட நடவடிக்கை ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை: வெளிப்படுத்த வேண்டாமா என்று கேட்கின்றோம். அதற்கு யார் பொருப்பாளி. என்று கண்டுபிடிக்க என்ன முயற்சி செய்யப்பட்டது என்று கேட்கின்றோம்.
கட்டுக் கதை
இவைகளுக்குச் சரியான சமாதானம் இல்லை என்றால் இந்த பேச்சு கற்பனைப் பேச்சு என்றும் கனம் ஆச்சாரியார் தாம் செய்யும் அடாத காரியத்துக்கு நேரடியாக சமாதானம் சொல்ல முடியாமல் பொய் மாமாலப் புரட்டு செய்து பழிவாங்கப் பார்க்கிறார் என்று தானே சொல்ல வேண்டும். ஒரு மாஜி கவர்னரும் இந்த விஷமப் புரட்டுக்கு உதவியாய்
17 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தன் பங்காசாரம் தானும் இப்படித்தான் இந்தி எதிர்ப்புக்காரர்கள் மீது பழிசுமத்தி வருகிறார் என்றும் கேள்விப்படுகிறோம். கனம் கவர்னர் பிரபு அவர்களும் இதை நம்புவதாகவும் கேள்விப்படுகிறோம். ஆதலால் இந்த விஷயம் அதாவது மந்திரிகள் குறிப்பாக பிரதம. மந்திரிகள் பெண்டு பிள்ளைகளைப் பற்றி தொண்டர்கள் கேவலமாகப் பேசியது என்பது கட்டுக்கதை, ஜோடிப்பானது. நியாயமான ஒரு. கிளர்ச்சிக்கு அதன் எதிரிகள் நேரிட்டு சமாதானம் சொல்லவோ, முகம். கொடுக்கவோ சக்தி இல்லாமல் அதன்மீது எவ்வளவு நெஞ்சுத் துணிவுடன் பழிசுமத்தி அதை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்பதை இதிலிருந்தாவது பொதுஜனங்கள் உணர வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.08.1938.
குடி அரசு - 1938 (2) — 108
திருவிதாங்கூர் அலங்கோலம்
திருவிதாங்கூர் திவான் ஸர்.சி.பி.ராமணமி நடத்தும் ஹிட்லர் தர்பாரைக் கண்டித்து சென்னை “ஹிந்து” பத்திரிக்கை ஒரு நீண்ட தலையங்கம். எழுதத் துணிந்து மூன் வர வேண்டுமானால் திருவிதாங்கூர் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்க வேண்டுமென்று நாம் கூறவும் வேண்டுமா? ஆம் திருவிதாங்கூர் நிலைமை இளி ஒரு நாளும், எவராலும் பரிகரிக்கவே முடியாதபடி அவ்வளவு பாழாகப் போய் விட்டது. சர்.ி.பி. திவாணயிருக்கும் வரை திருவிதாங்கூர் நிலைமை சீர்படாது என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. சர்.சி.பி.யின் அடக்குமுறைகளைத் தாங்க. முடியாமல் இன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழை, கோட்டயம் ஆகிய நான்கு நகரங்களிலும் சர்.சி.பி. சர்க்கார் பிறப்பித்திருக்கும் தடை யுத்தரவுகளை மீற திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் தீர்மானித்து விட்டன். இப்பத்திரிக்கை இன்று வெளிவருமுன் இந்த நான்கு நகரங்களிலும் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள். என்பது நிச்சயம். தர்மராஜ்பம் எனப் புனை பெயர் பெற்ற திருவிதாங்கூரிலே கலவரங்களும், தடை யுத்தரவுகளும், சட்ட மறுப்புகளும், “அரஸ்டுகளும்” தாண்டவமாடுவது சமாதானப் பிரியர்களும் சாதுக்களுமான திருவிதாங்கூர் பிரஜைகளுக்கு வியப்பாகவும், திகைப்பாகவும், நெஞ்சைப் பிளக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.
கொடிய யதேச்சாதிகாரி ஆனால் என் செய்வது? துரதிர்ஷ்ட வசமாக ஒரு கொடிய யதேச்சாதிகாரி கையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் சிக்கிக் கொண்டு. தவிக்கிறது. மகாராஜாவோ உலக அநுபவம் இல்லாத ஒரு இளைஞர். தம்மால் - நியமிக்கப்பட்ட திவானைக் கண்டிக்க அல்லது கல்த்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்ப அவருக்கு இருக்கும் அதிகாரத்தைப் பிரகாயமே செய்ய முடியாதபடி சில கூட சக்திகள் அவருக்கு முட்டைக்கட்டை போடுகின்றன. சமஸ்தான உள்நாட்டு விவகாரங்களில் தடையிடக் கூடாதென்ற சம்பிரதாயம் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் தடைக்கல்லாக நிற்கிறது. மேலும் 10 வருஷம் திருவிதாங்கூரில் ஹிட்லர் தர்பார் நடத்துவதற்கு மகாராஜா அவர்களிடமிருந்து ஸர்.ஸி.பி. அதிகார மாத்திரமும் பெற்று விட்டார். இந்நிலையில் அவரது யதேச்சாதிகாரத்தைத் தடுக்கச் சக்தியில்லாத நிலைமையில் சமஸ்தான மக்கள் இருந்து வருகிறார்கள். எனினும் எல்லாருமே வாயை மூடிக் கொண்டிருந்தால்
109 ௨ ஸரயாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
சமாதானம் பாழாகி விடுமே என அஞ்சி சமஸ்தான கேஷமத்தில் ஆர்வமும், கவலையும் கொண்ட சமஸ்தானப் பிரஜைகள் சிலர் சமஸ்தான கேஷமத்துக்காக எத்தகைய தியாகமும் செய்வதெனத் துணிந்து முன் வந்து விட்டன். ஸர்.ஸி.பி கோபத்துக்கு ஆளான திருவிதாங்கூர் சமஸ்தான காங்கரஸ் நிர்வாகிகள் செய்த பாபம் என்ன? திருவிதாங்கூருக்கு பொறுப்பாட்சி வேண்டுமென அவர்கள். கூறினார்கள் இதுவே அவர்கள் மீது ஸர்.ஸி.பி. பழிக்குப்பழி வாங்கக் கங்கணம்:
கட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம். கொச்சி சமஸ்தானத்தில் பொறுப்பாட்சிக்கு அடிகோலப்பட்ட பிறகும் சமஸ்தானங்களில் பொறுப்பாட்சிக்கு இடமே இல்லையென ஸர்.ஸி.பி. பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆகவே அவர் திவான் பதவி வகிக்கும்வரை அவரது யதேச்சாதிகாரத்துக்கு, பங்கம் ஏற்படக் கூடாதென்பதே அவரது நோக்கம். எனினும் சமஸ்தான. காங்கரசுக்குப் போட்டியாகத் தோன்றியிருக்கும் தேகீய காங்கரஸ்காரர். அவர்கள் இஷ்டப்படி பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்கள் லக்ஷ்யமும். பொறுப்பாட்சி என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவர்கள் மீது ஸர்.ஸி.பி.சர்க்கார் தடையுத்தரவுகள் பிறப்பிக்க வில்லை. இம்மாதிரி. பாரபட்சம் காட்டப்படுவதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் சமஸ்தான. காங்கரஸ்காரர் ராஜத்துரோகிகள் என்றும், சர்க்காரைக் கவிழ்க்க இரகசியமாக வேலை செய்கிறார்கள் என்றும் ஸர்.ஸி பிசர்க்கார் கூறுகிறது. ஆணல் சமஸ்தான. காங்கரஸ்காரர் முதல் கூட்டம் கூட்டும் முன்னமேயே - அவர்களது நோக்கம். என்ன என்பதை வெளியிடு முன்னமேயே அவர்கள் மீது ஸர்.ஸி.பி. சர்க்கார் தடையுத்தரவு போட்டுவிட்டதே என்றால் அதற்கு பதில் இல்லை.
அந்தரங்கக் காரணம்: ஆகவே சமஸ்தான காங்கரஸ்காரர் பொறுப்பாட்சிக்காகக் கிளர்ச்சி. செய்வதே ஸர்.ஸி.பி. சர்க்கார் கோபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுவது. சரியல்ல. அந்தரங்க காரணம் வேறாகவே இருக்க வேண்டும். அந்தக் காரணம் என்ன? சமஸ்தான காங்கரஸ் வாதிகள் ஸர்.ஸி.பி. சர்க்கார் ஊழல்களை வெட்டவெளிச்சமாக்கி விட்டனர். மேற்கொண்டு 10 வருஷம் திவானாக இருக்க ஸர்.ஸி.பி.மகாராஜா அவர்களிடமிருந்து அதிகாரப் பத்திரம் பெற்று விட்டதை அவர்கள் ஆதரிக்கவில்லை. ஸர்.ஸி.பி.திருவிதாங்கூரை விட்டு வெளியேறினாலல்லாமல் சமஸ்தானம். உருப்படாது எனக் கூறுகின்றனர். இதுவே ஸர்.ஸி.பி. சர்க்கார் கோபத்துக்குக் காரணம். தம் மீது பழி சுமத்துவதும் ராஜ துரோகமென: ஸர்.லி.பி. பகிரங்கமாகக் கூறுகிறாராம். ஸர்.ஸி.பி. ஆட்சி ஊழல்களை: மக்களும் வெறுக்கத் தொடங்கி விட்டனர். திருவிதாங்கூர் பொருளாதார அபிவிர்த்திக்காக ஸர்.ஸி.பி. வகுத்திருக்கும் ஆக்கத் திட்டங்கள் திருவிதாங்கூர் செல்வநிலையை உயர்த்துவதற்கு பதிலாக ஸர்.ஸி.பி.க்கு. வேண்டியவர்கள் சிலர் செல்வநிலையை உயர்த்துவதற்கே அதிகம் உதவி. புரியக் கூடியவைகளாக இருக்கின்றன என திருவிதாங்கூர் மக்கள்.
குடி அரசு - 1988 (2) —— 0
ளியாகவோ, தப்பாகவோ நம்புகிறார்களாம். ஸர்.ஸி.பி.யின் ஆக்கத். திட்ட ஊழல்களை விளக்கி சமஸ்தான காங்கரஸ்காரர் பகிரங்க அறிக்கைகளும். வெளியிட்டிருக்கிறார்கள். ஸர்.ஸி.பி. நேர்மையுடையவராக இருந்தால். அந்த பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு நேர்மையான முறையில் பதிலளிக்க: முன் வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சமஸ்தான காங்கரசையே ஒழித்துவிட ஸர்ஸி.பி. முடிவு செய்திருப்பது அவரது கோழைத்தனத்தையும், நிர்வாக ஊழல்களையும் உறுதி செய்யக் கூடியதாக இருக்கிறது.
பயங்கரக் குற்றச்சாட்டு. சமஸ்தான காங்கரஸ் மீதுள்ள கோபத்தினால், இந்தியா முழுதும் தொழில் நடத்திப் பிரக்கியாதி பெற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தை விருத்தி செய்து வந்த திருவிதாங்கூர் நாஷனல் அண்டு கொயிலோன் பாங்கியை ஒழிக்க அவர் சூழ்ச்சி செய்தார் எனக் கூறப்படுவது அவருக்கு அழியாக் களங்கத்தையுண்டு பண்ணும் ஒரு பயங்கரமான குற்றச்சாட்டாகும். அந்தக் குற்றச்சாட்டுக்கு நேர்மையான பதிலளியாதவரை திருவிதாங்கூர் மக்கள் அவரை வெறுக்கத்தான் செய்வார்கள். மற்றும். சமஸ்தான காங்கரசை எதிர்க்க ஒரு போட்டி காங்கரஸை அவர். தோற்றுவித்திருப்பதாகக் கூறப்படுவது அவரது அரசியல் ஞானசூனியத்தையே காட்டுகிறது. கெளரவமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாயிருக்கும் ஒரு. நிருவாக அதிகாரியின் ஆதரவை பெற்ற அந்த ஸ்தாபனமானது பொது ஜன ஆதரவைப் பெறுமா? பொது ஜன ஆதரவு பெறாத ஒரு ஸ்தாபனத்தின் துணையால் தமது பெயரையும், வாழ்வையும் காப்பாற்றிக் கொள்ளலாமென எந்த விவேகியான அதிகாரியாவது எண்ணுவாரா! தற்பொழுது சர்வாதிகாரியாக விளங்கும் ஸர்.ஸி.பி. மூலம் பல நலன்கள் பெறலாம் என்ற ஆசையினால் சில சமய சஞ்சீவிகள் ஸர்.ஸி.பி.யின் திருவிதாங்கூர் நேஷனல் காங்கரசில் மெம்பர்களாகி தாமும் பொறுப்பாட்சிக்காக உழைப்பதாய் பொது ஜனங்களை ஏமாற்ற
முன் வரக்கூடும். ஆனால் அவர்களைப் பார்த்து பொது ஜனங்கள். சிரிப்பாய் சிரித்து விடுவார்கள் என்பது மெய். திருவிதாங்கூர் நேஷனல் காங்கரஸ் ஆதரவில் கூட்டப்பட்ட ஒரு கூட்டமாவது இது வரை வெற்றிகரமாக முடிவு பெறாததே நமது கூற்றுக்கு ஆதாரம். பொதுவாக
திருவிதாங்கூருக்கு இது ஒரு சோதனை காலமென்றே தோற்றுகிறது. சமஸ்தான மக்கள் ஆண்மையோடும், அமைதியாகவும் நடந்து கொண்டால் சமஸ்தான நெருக்கடியை வெகு சுளுவாக சமாளித்து விடலாம். தற்காலம் இதற்கு மேல் எழுத நமக்கு மனம் வரவில்லை.
(26.08.1938 "விடுதலை! தலையங்கம்)
குடிஅரசு - கட்டுரை - 28.08.1938 ம. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
காலஞ்சென்ற தோழர்
ஏ.ஆர். சிவானந்தம்
வாழ்க்கை வரஸாறு
உள்ளம் உவந்த உணர்ச்சியது வழியே கள்ளம் இன்றிக் காலங் கடத்தியவருள் தோழர் சிவானந்தம் ஒருவராவார். களர் தாலூகாவில்: அரவக்குரிச்சியில் தோழர் இராமசாமி முதலியாரது திருமகனாக, 1884ம். ஆண்டிற் பிறந்தார். தோழர் இராமசாமி முதலியார் தொண்டை மண்டல வேளாள மரபினர். மிக்க செல்வந்தர். பிரபல மிராசுதாரருமாவர்.
தோழர் சிவாநந்தம் பண்டை முறைப்படி தமிழ்க்கல்வி நன்கு பயின்று தமது 20-வது வயதிலேயே குடும்ப பாரத்தையும் தாங்கலாயினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமை யான்”
என்னும் தமிழ் மறையின் தூய கொள்கையை நிலைபெறச் செய்ய வேண்டுமென்னும் உண்மை நோக்குடன் அவர் தமது 20-வது வயதில் பொது வாழ்க்கையிற் பெரிதும் ஈடுபடலாயினார். இயற்கையிலேயே ஏழைகளிடமும், தாழ்த்தப்பட்டோர்களிடமும் அளவற்ற பரிவும் அன்பும் உடையவர். இளமைதொட்டே தீண்டாமை, ஜாதி ஆணவம் முதலியவற்றை உள்ளூர வெறுத்து வந்தார். இவைகளே, மக்களுள் பிரிவினை: உணர்த்தும் வன்பகையென்றும், இந்திய சமுதாயத்தை அரித்து வருங் கொடும் புழுக்களென்றும் உணர்ந்தவர். தாய்நாட்டின் அடிமைத்தன்மை, பிறப்பால் மேல் கீழ் பார்க்கும் சாதி வேற்றுமை தீண்டாமை யாகிய இவை அடியோடு அழிந்தொழிந்தாலன்றி மக்களுக்கு விடுதலையில்லை. என்னும் ஒரே உறுதியைக் கொண்டவராய், அப்பகைப் புழுக்களைத். தொலைப்பதற்குச் சமரச சன்மார்க்க சங்கம் என ஒரு கழகத்தை நிறுவி அதன் வாயிலாகத் தொண்டாற்றினார். சோழவந்தான், தமிழ்ப்புலவர். அரசன் சண்முகனார் சைவ சித்தாந்த சங்கம் நிறுவிய போது அச்சங்கத்திற்குத் தோழர் சிவானந்தம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்று அதன் வழியாகச் சின்னாள் பணியாற்றினார்.
பிராமணரல்லாதார் இயக்கப் பற்று:
1917ல் நமது தோழர் கோவைக்குச் சென்றிருந்த போது அங்கு கூடிய முதல் பிராமணரல்லாதார் மகாநாட்டைக் காணும் பேறு பெற்றார்.
குடி அரசு - 1938 (2) — 1
அவ்வியக்கக் கொள்கைகள் தோழர் சிவானந்தத்தின் உடல் பொருள். ஆவி மூன்றையும் ஒருங்கே கொள்ளை கொண்டு விட்டன. திரும்பித் தமது ஊருக்கு வந்ததும் அக்கட்சிக்காகப் பாடுபட முயன்றார். தமது. தாலூக்காவின் பலவிடங்களிலும் பல சங்கங்களை நிறுவி வைத்தார். அவ்வியக்கத்தின் கொள்கைகளை மாகாண முழுவதும் பரப்புதற் பொருட்டுத் தமது சொந்தச் செலவில் ஊர் ஊராகப் பிரசாரம் செய்து வந்தார்.
பார்ப்பனர் தொல்லை.
பிராமணர்களால் இவருக்கு நேர்ந்த இன்னல்கள் பல. இவர் மீது எண்ணிறந்த அநீதி வழக்குகளும் தொடர ஏற்பாடு செய்தனர். மதுரை மகாநாட்டில் ஒரு சமயம் பிராமணீயத்தின் கொடுமையைப் பற்றி மேங்காட்டுப் பொட்டலில் வெகு உருக்கமாகச் சொல்மாரி பொழியுங்காலை இவர் மீது கல்மாரி பொழிய ஆரம்பித்தது. முழங்காலிலும் தலையிலும். கற்கள் தாக்கி இரத்தம் பெருக்கெடுத்தது. எதுவரினும் தளராத ஈடுமெடுப்பும் கொண்டவராதலால், தமது உயிரை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது அஞ்சாத நெஞ்சுடன் நின்று ஆண்மை ததும்பும் சொற்களால் அன்று மக்களைத் தட்டி எழுப்பினார். பண்டைக் காலந்தொட்டுப் பிராமணியத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்துழலும் மக்களைத் தட்டியெழுப்பி வந்த ஆண்மை வீரர்களுள். தோழர் சிவானந்தமும் ஒருவராவார்.
“நம்மனோர் இயக்கத்தின் உண்மையும் டாக்டர் நாயர் ஞாபகச் சின்ன நிதியும்” என்ற வெளியீட்டைத் தமது சொந்த செலவில் அச்சிட்டுப் பரப்பி அருநிதி திரட்டித் திராவிடன் பத்திரிகைக்கு அளித்துதவினார் நமது தோழர் சிவானந்தம்.
சங்கீத உலகத்தில் பார்ப்பனரல்லாதார் பலர் சீரிய ஞானம். சிறந்தமைந்தும் சாரீர வளனும் சார்ந்தமைந்தும், ஆதரிப்பாரற்று ஒடுக்கப்பட்டு உள்ளமழிந்து வருந்துவதைத் தோழர் சிவானந்தம் கண்டு. அவர்களது வருத்தத்தை ஒழிக்க அவர் கையாண்ட முயற்சிகள் எழுதி முடியாதவை. அதன் பொருட்டு இவர் முயற்சியால் ஈரோட்டில். நடைபெற்ற 2-வது மாகாண சுயமரியாதை மகாநாட்டின் போது ஒரு. சங்கீத மகாநாடும் நடத்தப்பட்டது.
கோவைக்கு மாற்றம்
சமதர்ம இயக்கத்துக்காகவும் அரும்பாடு பட்டார். இடைவிடாது உழைத்து வந்ததால் உடல் நலங்குன்றி நீரிழிவு என்னும் கொடி நோய் அவரைப் பற்றியது. டாக்டர்களின் கருத்துப்படி அவர் தமது ஊரை: விட்டுக் கோவைப்பதிக்கு வந்து வாழ்வாராயினார். இந்நிலையிலும் அவர் வாளாவிருக்கவில்லை. கோவை சுயமரியாதை வாலிப சங்கத். மு. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தலைவராகவும், சென்னை மாகாணச் சுயமரியாதைத் தொண்டர் சங்கத் துணைத் தலைவராகவும் கோவை Sir RK 33 social ஸம் தலைவராகவும். இருந்து உண்மைத் தொண்டாற்றி வந்தார். மேலும் நம் நாட்டு மக்களின். உடல்நலம் மேம்பாடடைய வேண்டும் என நாட்டங் கொண்டு கோவை ஆரோக்கிய அபிவிருத்தி சங்கம் என்னும் ஓர் கழகத்தைப் பல: தோழர்கள் உதவியால் நிறுவி அதன் துணைத் தலைவர்களில் ஒருவராக:
இருந்து பணியாற்றி வந்தார். சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதும் அவ்வியக்கத்திலும் சேர்ந்து அதன் கொள்கைகளை எங்கும் பரப்பி வந்தார்.
தோழர் சிவாநந்தம் இனிய மனப்பாங்குடையவர். தம்மோடு பழகியவர் எவரேயாயினும் எவ்வளவு மாறுபட்ட கொள்கையைக் கொண்டவரேயாயினும் அவர்கள் அவரை ஒரு பொழுதும் நொந்திருக்க மாட்டார்கள். “இனியவுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”
என்னும் குறள் மறையைக் குறிக்கொண்ட உள்ளத்தினராவர்.
இரக்கச் சிந்தை இத்தகைய இனிய தன்மையராதலால் எடுத்த காரியத்தைக் கொடுத்து முடிக்கும் ஆற்றலும், செய்வன திருந்தச் செய்தலும் இவருக்கு. எளிதாகவும் இயல்பாகவும் இருந்தன. நொந்தவர்களுக்கென்று தனிப்பட்டதோர் இரக்கம் இவருக்கு என்றும் இருந்து வந்தது சொற்பொழிவாற்றும் பொழுது இவர் வெகு நிதானமாகப் பேசுவார் நா வன்மையும், சொல் வளப்பமும், சொல் அமைப்புப் பொருளோடு கெழுமிக் கேட்போருக் குள்ளத்தில் தெளிவாகப் பதிந்து நிலைத்திருக்குமாறு எடுத்த பொருளை விரிவுரை செய்வார். அந்தோ! அந்தோ! அவ்வளவு தான். என்றைக்கிருந்தாலும் ஒருநாள் அடங்க வேண்டியது தானே. ஆம். ஆம். “நெரு நல் உளன். ஒருவன் இன்றில்லையென்னும், பெருமையுடையத்திவ் வுலகு”. நமது பெரியார். நமது தோழர் சிவானந்தம் சமீபத்தில் நீரழிவு நோயின். காரணத்தால் ஒரு வாரம் வரையில் ஆஸ்பத்திரியில் இருந்து 17.8.38ம். தேதி புதன்கிழமை இரவு 3 மணிக்கு இயற்கை முடிவையடைந்தார். அவருடைய முடிவு பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு ஓர் பெருங்குறைவாகவே நேரும். குன்றின் மேலிட்ட நந்தா விளக்கம் போலும் நின்று விளங்க. இக்குணக்குன்றின் நினைவுக்குறியாக ஏதேனும் ஓர் திருப்பணி செய்யப் பார்ப்பனரல்லாதார் சமூகம் கடமைப்பட்டுள்ளது.
குடி அரசு - இரங்கற் கட்டுரை - 28.08.1938
குடி அரசு 1938 (2) — ப
சாஸ்தியியார் - ஆச்சாயியார் சம்பாஷணை
சாஸ்திரியார்: ஓய், ஓய், ஆச்சாரியாரே! உம்ம காந்தியும் நீரும் ஒழிந்து போக மாட்டீர்களா?
ஆச்சாரியார்: என்ன, என்ன இப்படி கோபிக்கிறீள் சாஸ்திரிவாளே?' ச கோபமா, மண்ணாங்கட்டியா? உம்ம தலையிலே நெருப்பை வாரிக் கொட்ட!
ஆட சும்மா சொல்லுங்கள் சாஸ்திரிகளே. கோபப்படாதீர்கள், சங்கதி என்ன?
சா: சங்கதியா வேணான்றா! இங்காராவது சூத்திரப்பயல்கள். இருக்கிறார்களா? (என்று சுத்தியுமுத்தியும் திரும்பி பார்க்கிறார்.
ஆ: ஒருத்தருமில்லை சொல்லுங்கோள்.
சா: நீர்தான் மகாபுத்திசாலியாயிற்றே அப்படி இருக்க இந்த எம்.சி.ராஜா என்கிற - யன் பிராம்மணாள் ஓட்டலிலே, காப்பிகடைகளிலே “பறையன் பள்ளன்” எல்லாம் ஒண்ணா பின்னா புழங்கலாம் என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் நீங்கள் 50-60 பிராம்மணாள் கொழுக்கட்டையாட்டமா அங்கே இருந்துண்டு அதெ பாசாக்கீட்றதா? இது என்ன கலி காலம். நீர் தான் உம் பெண்ணை காந்தி மகனுக்கு
தந்தீர். தொலைந்து போமே. குரங்கு வனத்தைக் கெடுத்ததுமல்லாமெ. சந்திரபுஷ்கரணியையும் கெடுத்த மாதிரி இப்படிப் பண்ணீட்டீரே இது நியாயமா? உம்ம தலையில் இடி விழாதா? ஆ கோபித்துக் கொள்ளாதேயும் சாஸ்திரிகளே, நன்னா யோசித்துப் பார்த்து பேசுங்கோள். சட்டத்தை நன்னா படித்து பாருங்கோள். அப்படி ஒண்ணும் நீங்கள் சொல்ற மாதிரி ஆபத்து இல்லை. அதெல்லாம் பழய மாதிரிதான் இருக்கப்போறது. ௪ அப்படியில்லையே. எல்லோரும் சொல்றாளே: இனிமேல். எல்லாம் ஒண்ணுதாண்ணு சொல்றாளே. எல்லாப் பயல்களும் வந்து ரகளை பண்ணுவான்களே. உமக்குத் தான் மெஜாரிட்டி இருந்ததே ஏன் அதை ஒழித்திருக்கப்படாது?'
ட .. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஆ: அதிலே இரண்டு கஷ்டம் வந்து சேர்ந்தது சாஸ்திரியளே; என்னான்னர ஒண்ணு இரண்டு சட்டமும் ஒண்ணாய் ஒரே தடவையிலே
வந்தூட்டது. ௪௩ என்னா சட்டம் இரண்டு அப்படி வந்தது?
ஆ: அப்படி கேளுங்கள். ஒண்ணு கோவிலுக்குள் அவணுண: ஸ்தாளையெல்லாம் விடணுமென்னு. இன்னொண்ணு ஓட்டல்களிலே யெல்லாரையும் விடணுமெண்ணு.
இரண்டையும் ஏக காலத்திலே ஒழிக்க முடியாது. ஏதாவது ஒண்ணைத்தான் ஒழிச்சூடலாம்.
சா: ஏன்? அந்த நாசமாய்ப் போன சட்டங்களை ஒவ்வொண்ணாய்ப் போட்டுண்டூட்றதானே. ஏன் ஓட்டாய் போட்டுண்டீர்?
ஆ: அதிலே இன்னம் ஒரு கஷ்டமும் வந்துடுத்து. என்னான்னா. அந்த நாயக்கன் இருக்கான்லோ. எந்த நாயக்கன்? ராமசாமி நாயக்கன். அவன் ஒரு மாதத்து முன்னே என்ன சொன்னான் தெரியுமா?
சா: யாரு அந்த ஈரோடு ராமசாமி நாயக்கனா? அவன் இராக்கதன். ஆச்சே! அவன் என்ன சொன்னான்?
ஆ: நீடாமங்கலத்லே மொட்டை அடிச்ச தகராறு சாக்கை வச்சுண்டு. ஆதிதிராவிடாளே முஸ்லீமாக்கப் போகிறெண்ணு சொன்னான். அதனாலே ஒண்ணையாவது ஒப்துண்டூடலாம் என்னு இப்படி செய்தேன். எனக்கு தெரியாதது போல சொல்லவந்தூட்டீளே?
சா: எவனோ என்னமோ சொன்னால் அதுக்கோளம் பிராம்மணணும். பறையணும் ஒண்ணாப் பூட்றதா?
ஆ: அப்டீன்னா பறையன்கள் எல்லாம் துலுக்கனாப்பூட்டா பரவாயில்லையா?
சாட ஏன் துலுக்கனாவான்? அதுக்கொரு சட்டம் போட்டு. திருட்டு. யா பிள்ளைகளை 2-வருஷம் 3-வருஷம் களி இின்னப்போட்டா போராது.
ஆ: போதும் போதும் சாஸ்திரிவாளே. 6 - மாதம் ஒரு வருஷம். எண்ணு இந்தி எதிர்க்கிறவாளே போட்டே இந்தியா பூராவும் நாற்றது. இது வேறே சொல்றீளாக்கும்?
சா அது நீர் பண்ணினது தப்புத்தானே? சமஸ்கிரதம் சூத்ராள், மிலேச்சாள், சண்டாளாள் வாசிக்கலாமா? நீர் வாசிக்கச் சொல்றீரே அதுதான் பகவான் உமக்கு தொல்லையை கொண்டு வந்து விட்டார். அதற்கு யாரென்ன செய்வார்?
குடி அரசு -198(29௨ ௨ 1௦
ஆட சரி, சரி. அவாள்ளாம் சமஸ்கிருதம் படிச்சாலும் சரி, படிக்காட்டாலும் சரி, நம்ப புராணங்கள் எல்லாம் படிக்கலாமல்லோ. அதனால்தான் கட்டாயம் படிக்கணுமென்னு சொன்னேன். அதுகளாவது படிக்கிறதாவது அந்த சாக்கிலே புராணக் காலகேஷபம் செய்யலாமுண்ணுதான் பின்னேயும் வேறே படிப்பு படிக்கிறதும் கொஞ்சமாவது தடை ஆகாதா?
சா: சரி எப்படியோ போகட்டும். நீராயிற்று அவாளாயிற்று. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. இதை சொல்லும்.
ஆ: சாஸ்திரீளே, ஒண்ணுக்கும் பயப்படாதேள். அதல்லாம் நான். பாத்துண்டூடுவேன்.
சா: கோயில் பிரவேச தீர்மானமும் ராஜா கொண்டு வந்து தோற்றுப்போனது சரிதான். நீர் என்னமோ வேறு ஒரு மசோதா கொண்டு வரப் போகிறீராமே?
ஆ: அப்படி ஒண்ணும் இல்லை. அது மலையாளத்துக்கு மாத்தரம். அது ஒரு மாதிரி சட்டம். நீங்கள் கவலைப்பட வாண்டாம்.
சா அங்கேதான் ஏன் இந்த சட்டம்? அப்பறமும் கலகம் தானே?
ஆட உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. இப்பவே மலையாளத்தில், திருவாங்கரில் அந்த சட்டம் இருக்கு. மலையாளத்திலே
சிலர் கூப்பாடு போட்றா. இல்லாட்டாலும் நாம் ஒரு மாதிரி சட்டம். செய்தூட்டா கொச்சி ராஜ்ஜியத்திலே ஒரு பெரிய ரகளை நடக்கும். இங்கே நாமும் திண்டாட்றோம். திருவாங்கூரிலே நம்ம சி.பி.ராமசாமி அய்யர் திண்டாட்றார். கொச்சியிலே மாத்தரம் அந்த ஆள் ஹாய்யா ஐரோப்பா பிரயாணம் செய்துண்டிருக்கார். ஆகையால் அங்கேயும் ரகளை நடக்கட்டுமே இது தான் ரகசியம்.
௪௩ என்னமோ ஆச்சாரியாரே, நீர் செய்யரது உமக்கென்னமோ குயுக்த்தியாக தோன்றுது. எனக்கு இதெல்லாம் பைத்தியக்காரத்தனமென்னுதா தோணறது
ஆ: அப்படி ஒண்ணும் இல்லை. நானும் சமாளிக்கிற வரையில்: சமாளிப்பேன். அவர்ணஸ்த்தாள் எல்லாம் முஸ்லீம்களாவதனால் நான். ஒப்பமாட்டேன். திருவாங்கூர் மாதிரி தான் செய்தூடுவேன். ஆனாலும் என்னாலானவரை பார்த்துத்தான் செய்வேன், நம்புங்கள். மற்றதெல்லாம் எனக்குத் தெரியும். அதில் அனேக சூஷ்மங்கள் உண்டு. இப்போது - விளக்காதீர். அடங்கட்டும். ஆகட்டும் ஆகட்டும் என்று சொல்லிண்டே வந்து ஆலய பிரவேச சட்டத்தை சமயம் பார்த்து நேற்று சட்டசபையில்: மர... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கழுத்தறுத்துவிட வில்லையா. இதே சட்டத்தை 4 வருஷத்துக்கு மூன். இந்திய சட்டசபையில் காந்தியார் பெயரைச் சொல்லி கொலை செய்து விடவில்லையா. மற்றும் ஆந்திர மாகாணம் பிரிவினை பாசாயும் கூட அமலுக்கு வராமல் செய்யவில்லையா?
சா என்னமோ நீர் செய்யரது உமக்குத்தான் சரின்னு தோன்றாப்லே. இருக்கு. கடைசியா மோசம் நாசம் கம்பளி வேஷம் தான். நான். போயிட்டு வர்றேன்.
குடி அரசு - உரையாடல் - 28.08.1938
குடி அரசு - 1938 (2) — 1௦
குடு குடுப் பாண்டி
குடு குடு, குடு குடு குடு, குடுக் குடுக். சதியாலோசனை நடக்குது சதியாலோசனை நடக்குது நடக்குது.
கூடு குடு, குடு குடு, குடுக் குடுக். அந்த மூலையிலெ நடக்குது கடலோரத்திலே, காற்று வாக்கிலே, பத்து மந்திரி கூட்டத்திலே மாபாவிகள் நினைப்பிலே நடக்குது, நடக்குது, சதியாலோசனை நடக்குது.
குடு குடு குடு குடு குடுக். என்ன நடக்குது சொல்லடி கம்பளத்தாயி? குடு குடு குடு குடு குடக். பத்திரிகையை நிறுத்தலாமா? ஜாமீன் கேட்கலாமா? பாண்டியனைப் பிடிக்கலாமா? விஸ்வநாதனைப் பிடிக்கலாமா வேண்டாம் - வேண்டாம், ராமசாமி ஒருவனைப் பிடித்தால் போதும். அப்புறம் பத்திரிக்கையைப் பிடிக்கலாம் என்று நடக்குது நடக்குது சதியாலோசனை நடக்குது. குடு குடு குடு குடு கூடக். ஒரு பழைய சொக்காய் நீங்கள் கட்டிக் கிழித்த பீத்தல் துணி கொடுங்க.
நடக்குது நடக்குது அந்த மூலையிலே நடக்குது. இந்தி எதிர்ப்பு படைக்கு 144 போடலாமா என்னு நடக்குது சதியாலோசனை. வாண்டாம் - வாண்டாம் பெருசு பண்ணாதே பெரிசு பண்ணாதே
பெரிசு பண்ணாதே எங்குது ஒரு மந்திரி. குடு குடு குடு குடு குடக்.
இந்தி எதிர்ப்பு இயக்கம் சட்ட விரோதம் எண்ணு உத்திரவு போடு. எங்குது ஒரு மந்திரி. ஐயோ வாண்டாம் ஐயோ வாண்டாம் என்குது
ஒரு அய்யங்கார் மந்திரி. குடு குடு குடு குடு குடக் குடக். இன்னம் நடக்குது இன்னம் நடக்குது சதியாலோசனை இன்னம். நடக்குது... பேப்பரை பிடிக்க.
குடிஅரசு - கட்டுரை - 28.08.1938
09— வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
சென்னை கார்ப்பரேஷன் எலக்்ஷன் இனியும் மஞ்சள் பெட்டியா? வெட்கம் இல்லையா.
காங்கரஸ்காரர்கள் கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கு 13 ஆட்களைப் பொறுக்கி எடுத்து விட்டார்கள். இவர்களுக்கு வரிகொடுப்போர் எதற்காக ஓட்டுச்செய்ய வேண்டும்? சட்டசபையிலேயே ஒரு மந்திரி சொல்லுகிறபடி ஒன்பது மந்திரிகள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு சொந்த புத்தி கிடையாது.
இருந்தாலும் உபயோகிக்க முடியாமல் மானங்கெட்டு தவிக்கிறார்கள். சட்டசபை மெம்பர்கள் கதியும் அப்படியே.
அது போலவே கார்ப்பரேஷனிலும் ஒருவர் (சத்தியமூர்த்தி என்கின்ற ஒரு பார்ப்பன தோழர்) சொன்னபடிக்கு தான் மற்றவர்கள். கேட்க வேண்டும்.
கேட்காவிட்டால் லஞ்சம் வாங்கினான் என்றோ, அடங்காப் பிடாரி - கட்டுப்பாட்டை மீறினான் என்றோ குற்றம் சாட்டி பெயரைக். கெடுத்து ராஜிநாமா செய்யச் சொல்லி வெளியில் விரட்டி விடுகிறார்கள். அய்யருடைய யோக்கியதை சிவசைலம் பிள்ளையை அவமானப் படுத்தியதிலும் தணிகாசலம் செட்டி ரோட்டுப் பெயர் மாற்றியதிலும் தெரியவில்லையா? ஆகவே காங்கரசின் பேரால் நிற்பவர்க்குத் தான் வெட்கம் இல்லை, மானம் இல்லை என்றாலும் காங்கரஸ் நிறுத்தின ஆட்களுக்கு ஓட்டுப்போடும் ஓட்டர்களுக்காவது மானம் வெட்கம் இருக்க வேண்டாமா?
மானமிருந்தால் மஞ்சள் பெட்டியை காறித் துப்புங்கள்!
குடி அரசு - வேண்டுகோள் - 28.08.1938.
குடி அரசு - 1988 (2) —— 00
உஷார்! உஷார்!!
சுபாஷ் போஸ் வருகிறார்!!!
ஏன் வருகிறார்?
காங்கரஸ் தலைவர் என்னும் பேரால் சுபாஷ் பாபு சமீபத்தில். நம் நாட்டுக்கு வரவழைக்கப்படப் போகிறார். அதாவது இம்மாதம் 9- ந் தேதி சென்னை மாகாணத்துக்கு வரப்போகிறாராம். இரண்டு வாரம் சுற்றுப் பிரயாணம் செய்வாராம்.
அவர் ஏன் வருகிறார்? அவரை யார் வரவழைக்கிறார்கள்?'
அவர் எதற்காக வரவழைக்கப்படுகிறார்?
அவர் எப்படிப்பட்டவர்? அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்?
என்கின்ற விஷயங்களை தமிழ் மக்கள் அறிய வேண்டியது மிகவும் அவசியமும்அவசரமுமானகாரியமாகும். எனவேஅதைப்பற்றி விளக்குவோம்.
தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கரஸ் சர்க்காரால். (பார்ப்பனர்களால்) சமாளிக்க முடியாத நிலைமையில் நடைபெறுகின்றது. இந்த இந்தி எதிர்ப்பைப் பற்றி பார்ப்பனர்களும், பார்ப்பன மந்திரிகளும், பார்ப்பன பத்திரிகைகளும், மற்றும் அவர்கள் தம் நிபந்தனை இல்லாத கூலிகளும் எவ்வளவுதான் விஷமத்தனமாகவும், இழிதன்மையாகவும் பழித்தும், பொய்க் கூற்றுகள் கற்பித்தும், வீணான குற்றச்சாட்டுகள் கூறியும், தப்புப் பிரசாரம் செய்து அலட்சியமாகப் பேசியும் எழுதியும் வந்த போதிலும் இந்தி எதிர்ப்பானது கிரிமினல் லா அமெண்டுமெண்டு ஆக்டுப்படி நடவடிக்கை எடுத்து அடக்க முயற்சிக்க வேண்டியதாய். விட்டது என்பதை எந்தமானமுள்ள உண்மை இந்தியனும் மறுக்கமாட்டான்.
ஆச்சாரியார் திகைப்பு
மற்றும் இந்தி எதிர்ப்பானது “வீரமும்: கூர்மையும்” “சகல வித ராஜ தந்திரம்” உடையவர் என்று விளம்பரப் படுத்தப்பட்டிருக்கும் தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கே என்ன மட... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
செய்வது என்று தோன்றாமல் பொறுமையும் முன் யோசனையும் இல்லாமல் “கைக்குக் கிடைத்ததை எடுத்து இடம் சந்தர்ப்பம் பாராமல் அடித்து ஒழிக்க வேண்டிய அவ்வளவு ஆபத்தான காரியம்” ஆகப் போய்விட்டது.
பின்னும் இந்தி எதிர்ப்பானது. தமிழ்நாடோ, சென்னை மாகாணமோ மாத்திரமல்லாமல் இந்தியா பூராவும், தென் ஆப்பிரிக்கா, மலாயா, பர்மா, சிலோன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களும் வெள்ளையர்களும் காங்கரசை கண்டித்து பழித்து இகழும்படியானநிலைமையை ஏற்படுத்திவிட்டது.
மேலும் இந்தி எதிர்ப்பானது தோழர் கனம் ஆச்சாரியார் வாயினாலேயே “ஏராளமாக பணம் சேர்த்துக் கொண்டு கட்டுப்பாடாக. இருந்து கொண்டு ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்படுவது போல் தொண்டர்கள். வந்து அரசாங்கமே நடக்க ஒட்டாதபடி தொந்திரவு கொடுத்து வருகிறது” என்று “50000” பேர் கொண்ட கூட்டத்திலும், சட்டசபையிலுமே சொல்லி நெஞ்சு இடிந்து கண் கலங்கப் பேச வேண்டிய நிலைமையை உண்டாக்கி விட்டது.
தெருப் பிரசாரம்.
இவ்வளவும் அல்லாமல் தோழர்கள் கனம் ஆச்சாரியார் அவர்கள் காலையும் மாலையும் சென்னையில் தெருத்தெருவாய் அலைந்து பெரிய
மனிதர்கள் வீடுதோறும் புகுந்து “இந்தி எதிர்ப்பானது வகுப்பு துவேஷம். உண்டாக்குகிறது. “பூணூல்” உச்சிக் குடிமி ஒழிக, பார்ப்பன ஆட்சி ஒழிக என்று மக்களை கூப்பாடு போடச் செய்கின்றதுமல்லாமல் மற்றும் மிகக் கேவலமான அசிங்கமான ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு நேரில் தனிப்பட்ட முறையில் வையச் செய்கிறது” என்று சொல்லியாவது இந்தி எதிர்ப்பை நிறுத்த சிபார்சு செய்யும்படியோ அல்லது அடக்க உதவி செய்யும்படியோ முறையிடச் செய்துவிட்டது
கடைசியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தி எதிர்ப்பை அடக்க இது வரை “வன்னெஞ்ச வெள்ளையர்கள்” செய்துவைத்து இருக்கிற கொடிய சாத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் போதவில்லை என்றும் புதியதொரு சட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கனம் ஆச்சாரியார் வாயினாலேயே சொல்லும்படியும் செய்துவிட்டது. கடைசி ஆயுதமாக இந்தி எதிர்ப்புக்கு பட்டினி இருந்தவனையும். இந்தி எதிர்ப்பில் கலந்துள்ளவர்களையும் ஒவ்வொருவராக விலைக்கு வாங்கியும் இயக்கத்தை கெடுக்கும்படியும், அதற்கு கெட்ட பேர் உண்டாக்கும்படியும், இந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் தலைமை வகித்து யாரையும் சிறைக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சி உபதேசம் செய்யும்படியும், இந்தி எதிர்ப்புத் தலைவர்களை இழிதன்மையாய் வையும்படி ஏவிவிட்டுப் பார்த்தாய் விட்டதுடன்,
குடி அரசு - 1938 (2) —— !
பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்தம் கூலிகளும் சிறிதும் மான. ஈனமில்லாமல் “இந்தி எதிர்ப்பு செத்துப்போய்விட்டது” என்றும் அது “துராக்கிரகம்” என்றும் “துவேசப் பிரசாரம்” என்றும் தங்களால் ஆனவரையில் விஷமப் பிரசாரம் செய்து பார்த்தும் தோல்வி அடைந்து இன்று தோழர் சுபாஷ் பாபுவைத் தருவித்து பிரசாரம் செய்யச் செய்விக்க வேண்டிய நிலைமையும், நிர்பந்தமும் ஏற்பட்டுவிட்டது.
காங்கரஸ் வஜ்ராயுதம். இவை ஒரு புறமிருக்க சுபாஷ் பாபுவை தருவிக்க வேறு ஒரு அவசரமும் வந்துவிட்டது. அதாவது சென்னையிலும் மற்றும் சில வெளி ஜல்லாக்களிலும் கார்ப்பரேஷன் கவுன்சிலர்கள் எலக்ஷனும், ஜில்லாபோர்டு. மெம்பர்கள் எலக்ஷனும் அடுத்தாப்போல் வரப்போகிறது என்கின்ற விபரம்
நாம் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. நாமறிந்த வரையில் ஏறக்குறைய இந்த சுமார் 20, 25 வருஷ காலமாக தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு நெருக்கடியும், ஆபத்தும் வந்துவிட்டதாகவோ, வரப்போவதாகவோ, வரக்கூடுமென்றோ கருதும்படியான காலங்களிலெல்லாம் வெளி மாகாணங்களில் இருந்து யாராவது ஒருவரைப் பிடித்து வந்து அவரை இந்திரன், சந்திரன், மகான், தியாகி என்பது போன்ற விளம்பரங்கள். கொடுத்து குரங்காட்டி வித்தை காட்டுவது போல் அவரை ஆட வைத்து அதன் மூலம் மக்களை ஏமாற்றி சமாளித்துக் கொள்வதையே முக்கிய வஜ்ராயுதமாக கையாண்டு வந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் கூட இப்படியேதான் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில். தேர்தல்கள் வந்தபோதெல்லாம் கூட இப்படியேதான் நடந்து வந்திருக்கிறார்கள். ஆதலால் இப்போதும் இந்தி எதிர்ப்பு நெருக்கடியும் அதன் மூலம் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி ஏற்படுகிறதே. என்கின்ற பயமும், கார்ப்பரேஷன் ஜில்லா போர்டு தேர்தல்களும் வருவதை உத்தேசித்து வழக்கம்போல் தோழர் சுபாஷ் போஸ் தருவிக்கப்படுவதில் ஆச்சரியமொன்றுமில்லை.
சுபாஷ் செய்யப் போவது
அவர் வந்த உடன் இந்தி பிரசாரம் செய்வார் என்பதிலும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தையும் அது செய்யும் வேலைகளையும் குறை கூறுவார் என்பதிலும் தேசீயப்புரட்டு புராண காலகேஷமம் செய்து காங்கரசுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று மக்களுக்கு சொல்லுவார் என்பதிலும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றோம். ஆகவே அவர் இந்த காரியங்களுக்காகத்தான் வரவழைக்கப்படுகிறார். இதைத்தான். ம. ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
செய்யப்போகிறார். ஆதலால் தான் தமிழ் மக்கள் உஷாராய் இருக்க: வேண்டும் என்று எச்சரிக்கை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்.
தோழர்களே! தோழர் சுபாஷ் போஸ் யார் என்பது உங்களுக்கு தெரிய வேண்டாமா?
போஸ் சாதகம்.
தோழர் போஸ் அவர்கள் காலம்சென்ற சென்குப்தா உயிருள்ளவரை காங்கரசுக்கும் காந்தியாருக்கும் எதிரியாய் இருந்தவர் - பெரிதும். சமதர்மமும் பொது உடமையும் பேசினவர். அது மாத்திரமல்லாமல். காங்கரசினால் நாட்டுக்கு எந்தவிதமான நன்மையும் கண்டிப்பாய் ஏற்படாதென்றும் காங்கரஸ் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனமென்றும் காங்கரஸ் தலைவர்கள் மக்களை ஏமாற்றி எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய். நடந்து நாட்டைக் கெடுக்கிறவர்கள், ஏழை மக்களை காட்டிக் கொடுக்கிறவர்கள் என்றும் நாடு நலம்பெற வேண்டுமானால் காங்கரஸ் அழிக்கப்பட்டு வேறு ஒரு நாணையமும் யோக்கியமுமான ஸ்தாபனம். ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னவர்.
இர்வின்-காந்தி ஒப்பந்தம் பயங்காளிகள் செய்கை என்றும். முதலாளிகள் புரட்டென்றும் பச்சையாக எடுத்துச் சொன்னவர். மற்றும் காங்கரசை விட்டு விட்டு தான் வேறொரு ஸ்தாபனம் ஆரம்பிக்க போவதாகவும் சொல்லி அதே சமயத்தில் தனது திட்டத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
புது ஸ்தாபன நோக்கங்கள். அதாவது சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும். அரசியலிலும் மக்கள் சுதந்திரம் பெறவேண்டும் என்பது அந்த ஸ்தாபனத்தின் கொள்கையாகும். அதற்காக
ஜாதி வேற்றுமைகளை அறவே ஒழிக்க வேண்டும்.
களத்
சமூகம் மதம் என்கின்றதான மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு புதிய தர்மத்தை புகட்டி வேலை வாங்க வேண்டும். இளைஞர் படை ஒன்று திரட்டி இதற்காக வேலை செய்ய வேண்டும்.
பிரிட்டிஷ் சாமான்கள் அடியோடு பகிஷ்கரிக்கப்பட வேண்டும்.
சமதர்ம கொள்கையின் படி விவசாயிகளும் தொழிலாளிகளும் ஒன்றாக்கப்பட வேண்டும்.
ஆகிய இந்தக் கொள்கைகளைக் கொண்டு புதிய ஸ்தாபனம். ஏற்படுத்தப் போவதாகச் சொன்னவர்.
குடிஅரசு - 1938 (2) —— 14
எனவே இன்று தமிழ்நாட்டுக்கு வரவழைக்கப்படும் சுபாஷ் போஸ் அந்த சுபாஷ் போசா அல்லது பார்ப்பன அடிமை சுபாஷ் போசா மற்றும் பட்டம் பதவிக்காக தனது கொள்கைகளைப் பறிகொடுத்து விட்டு காந்தியார் ஆச்சாரியார் என்கின்றதான கிராமபோன் பிளேட்டுக்கு சவுண்ட் பாக்ஸாய் இருக்கிற சுபாஷ் போசா என்று கேட்கிறோம்.
பல்டிக்குக் காரணமென்ன
அன்று அதாவது கராச்சி காங்கரசன்று அந்தப்படி சொன்னவர் இன்று காங்கரசுக்கு வர காரணமென்ன? இன்று காங்கரஸ் யோக்கியமான. ஸ்தாபனமாகி விட்டதா?
அல்லது பாபுவின் அன்றைய கொள்கைகளை இன்றைய காங்கரஸ் நடத்துகிறதா? ஏற்றுக்கொண்டதா? ஒன்றும் இல்லையே. பின் ஏன்: அங்கரசுக்கு வந்தார் என்றால் தோழர் போசைப் பொறுத்தவரை இவருக்கு என்றும் சொந்த அபிப்பிராய மென்பதாக ஒரு அபிப்பிராயம் இருந்ததாக நம்மால் காணவே முடியவில்லை. அவர் காலம் சென்ற சி.ஆர். தாஸ் காலத்தில் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர். அவர் உள்ளவரை அவருக்கு அடப்பக்காரனாய் இருந்து வந்தார். அவர் இறந்தபிறகு தோழர் எஸ். சீனிவாசய்யங்காருக்கு முன்னோடும் பிள்ளையாய் இருந்தவர். காலம் சென்ற சென்குப்தா உள்ளவரை தின தினத்திற்கு ஒரு கொள்கை பேசி சதா அவரோடு போட்டி போட்டுக்கொண்டு. இருந்தவர். காந்தியாருக்கோ அவரது 12 சிஷ்யர்களுக்கோ இவரிடம். என்றும் மதிப்பு இருந்ததில்லை. அப்படிப்பட்டவர் இன்று காங்கரஸ் தலைவர் பதவிக்கு காங்கரசில் இப்போது வேறு தகுதியான ஆள் ஒன்று இல்லாததால் இவருக்கு சலங்கைக் கட்டிவிட்டு காங்கரஸ் தலைவர்கள். என்பவர்கள் தங்கள் தங்கள் சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
வேறு காரணமுண்டானால் சொல்லட்டும்.
ஆகவே இப்போது இவர் வரவை பிரமாதப்படுத்தி தமிழ்நாட்டில்.
இழுத்தடித்து கூட்டம் சேர்த்து கொடுத்து இந்தியை ஆதரிக்கும்படியும். காங்கரசுக்கு ஓட்டு செய்யும்படியும் சொல்லச் செய்யப் போகிறார்கள். இதைத் தவிர வேறு என்ன காரியத்துக்காக வரவழைக்கப்படுகிறார் என்று யாராவதுதான் சொல்லட்டுமே பார்ப்போம்.
இவருக்கு (சுபாஷ் பாபுவுக்கு) சுதந்திரத் தன்மை கிடையாது. என்பதற்கு மற்றொரு உதாரணமும் கூறுவோம். அதாவது சென்னை மாகாண இந்தி எதிர்ப்பைப் பற்றி காரியக்கமிட்டியில் பிரஸ்தாபம் வந்தபோது காரியக்கமிட்டியார் யோக்கியப் பொறுப்புடன் ஒரு முடிவுக்கு 05— ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
வர தைரியம் இல்லாமல் “தென்னாட்டில் நடக்கும் இந்தி எதிர்ப்புப் போரானது தப்பபிப்பிராயத்தின் மீது துவக்கப்பட்டிருப்பதால் அதை: விளக்கி அந்த தப்பு அபிப்பிராயம் நீங்கும்படி ஒரு அறிக்கை: வெளியிடும்படி காங்கரஸ் தலைவர் சுபாஷ் போசை கேட்டுக். கொள்ளுகிறது” என்று ஒரு தீர்மானம் செய்து மழுப்பி விட்டு தங்கள். பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்டார்கள். அதுமுதல் இதுவரை தோழர் போஸ் என்ன செய்தார். சுதந்திரப் புத்தியோ, வீரமோ, நியாயமோ அவரிடத்தில் கடுகளவாவது இருந்திருக்குமானால் அவர் செய்திருக்க வேண்டிய வேலை என்ன?
சுதந்தரம் பறிகொடுத்த ஜீவன்:
அபிப்பிராய பேதத்தின் மீது நடைபெறும் கிளர்ச்சிக்கு கிரிமினல். அமெண்மெண்ட் ஆக்ட் என்னும் பிரிட்டிஷாரின் கடைசியான. அடக்குமுறை ஆயுதம் பயன்படுத்துவதை இவர் பொறுத்துக் கொண்டிருக்கலாமா? இந்த சட்டம் பயன்படுத்துவதால் இந்தி எதிர்ப்பு எழுச்சிக்கு ஏற்படும் கெடுதியை விட கங்கரசின் யோக்கியதைக்கு இழிவு உண்டாகி வருவது இவருக்கு உண்மையிலேயே தெரியாதா? அப்படியிருந்தும் தோழர் சுபாஷ் வாயை மூடிக்கொண்டு கையை கட்டிக்கொண்டு இருப்பதின் காரணம் என்ன என்றால் சுதந்திரமும், வீரமும் பறிகொடுத்து தலைவர் பட்டத்தை தாங்கித் திரியும் தகுதியற்ற ஜீவன் என்பதைத் தவிர வேறு என்ன என்று சொல்லக்கூடும்?
இந்தி எதிர்ப்புக் காரகங்கள்:
தென்னாட்டில் இந்தியைப் பற்றி குறைகூறுகிறவர்கள் இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லுகிறார்கள்.
(1) ஏற்கனவே 100-க்கு 10 வீதம்கூட தாய்பாஷையில் கல்வி இல்லாத மக்களுக்கு அந்நிய பாஷை (இந்தி) கட்டாயமேன்?
(2) இந்தி, தமிழ் மக்களுக்குள் ஆரிய கலை, நாகரிகம் ஆகியவைகளைப் புகுத்தி பார்ப்பனர்களுக்கு அடிமையாக்கி அறிவற்ற. மிருகமாக ஆக்கும் என்பதாகும். மற்றும் பல காரணங்கள் இருந்தாலும் இந்த இரண்டு காரணங்களையும் நன்றாய் அறிந்த காரியக் கமிட்டியும் சுபாஷ் பாபுவும் என்ன சமாதானம் சொன்னார்கள் என்று கேட்கின்றோம்.
இங்கிலீஷுக்குப் பதில் இந்தியா?
இங்கிலீஷாக்குப் பதிலாக இந்தி வைக்கப்படுகிறது என்று சுபாஷ் பாபு ஏதோ ஒரு கூட்டத்தில் சொன்னார். அது பொருத்தமான சமாதானம். என்று யாராவது சொல்லக்கூடுமா? இங்கிலீஷாக்குப் பதில் இந்தி
குடி அரசு - 1938 (2) —— 1௦
என்றால் இங்கிலீஷ் எடுக்கப்பட வேண்டாமா? இங்கிலீஷ் எடுக்கப்படக்கூடுமா? பிரிட்டிஷ் ஆட்சி உள்ளவரை இங்கிலீஷைத். தொடுவதற்கு யாராலாவது முடியுமா? இங்கிலீஷ் ஆட்சியை விரட்டவோ, அது கூடாது என்று சொல்லவோ இன்று காங்கரசில் எந்த. ஆண்மகனாவது இருக்கிறானா? காங்கரசிலாவது திட்டம் உண்டா?
சத்தியமூர்த்தி அய்யர் இங்கிலீஷ்காரருடன் ராஜி செய்து கொள்வது பூரண சுதந்திரம் என்றார். (பொள்ளாச்சி தோட்டக்காரர். சங்கப் பேச்சு) ஆச்சாரியார் பிரிட்டிஷாருடன் கண்ணியமான சமரசத்தை
ஏற்படுத்திக் கொள்வதுதான் காங்கரசின் வெற்றி என்றார். (29.9.34-ந் தேதி கோயமுத்தூர் மகாநாட்டுத் தலைமை பிரசங்கம்.
காந்தியாரோ “பிரிட்டிஷார் நம்மை சம அந்தஸ்தாக நடத்த வேண்டும். சம அந்தஸ்து பெற்ற குடியாக நாம் வாழ வேண்டும். என்பது தான் எனது சுயராஜ்யம்” என்றார். (வட்டமேஜையிலும் இந்தக்.
கருத்தைக் காண்பித்து இருக்கிறார்.)
இன்று நானை நடக்கக்கூடியதா?'
இப்படிப்பட்ட இவர்கள் பிரிட்டிஷார் ஓட்டமெடுத்தபின்பு நமக்கு. இந்தி அவசியம், இங்கிலீஷ் வேண்டி இருக்காது என்றால் அது இன்று நாளை நடக்கக்கூடிய காரியமா? அல்லது அதற்காக இந்தியை இன்றே கட்டாயமாகப் புகுத்த வேண்டுமா? என்பதற்கு தோழர் போஷ் என்ன. சமாதானம் சொன்னார் அல்லது சொல்லுவார் என்று கேட்கின்றோம். எனவே மக்களை ஏமாற்றுவதற்குத்தான் இந்தி விஷயமாகவுள்ள. அபிப்பிராய பேதத்துக்கு அறிக்கைவிட்டு விளக்குவது என்று கருதி அழைத்து வருகிறார்கள். அவரும் இந்தப் புரட்டுக்கும் மோகத்துக்கும். மனப்பூர்த்தியாய் ஒப்பியே ஏய்க்க வர சம்மதித்து இருக்கிறார்.
சுபகஹை பகிஷ்கரியுங்கள். எனவே அப்பேர்ப்பட்டவரை உண்மைத் தமிழன் சுத்த ரத்த ஓட்டமும் மனிதத்தன்மையும் உள்ள தமிழன் வரவேற்க முடியுமா? மற்றும் தனது அதிர்ப்தியை காட்டாமலாவது இருக்க முடியுமா? ஒரு சமயம் எப்படியேனும் நாம் போனால் போகட்டும் என்று சும்மா இருந்துவிட்டால் இந்தப் பார்ப்பனர்கள் நம்மை இன்னும் எவ்வளவு கேவலமாக்கி வட நாட்டாரைக் கொண்டு நமக்கு இன்னம் என்ன என்ன கொடுமையான காரியங்கள் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்பதை கூறவும் வேண்டுமா? ஆகவே காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் இந்தி எதிர்ப்பை ஒழிக்கவும் ஓட்டு வேட்டை ஆடவும், தமிழ் மக்களின் பரம்பரை
0 வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
பிறவி எதிரிகளால் அழைத்து வரப்படுகிறார் என்கின்ற முறையில் அவர் (சபாஷ் பாபு) தென்னாட்டின் உண்மை நிலையை அறிவதற்காக அவரது வரவில் அதிர்ப்தியைக் காட்டி பகிஷ்கரிக்க வேண்டியது ஒவ்வொரு: தமிழனின் பிறப்புரிமையாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமாதான பங்கமோ சட்டவிரோதமோ ஏற்படாதபடி ஜாக்கிரதையாய். பார்த்துக் கொண்டு பகிஷ்கார நடவடிக்கைகள் நடைபெற வேண்டும் என்பதை முக்கியமாய் ஞாபகப்படுத்தி பகிஷ்காரத்தை வலியுறுத்துகிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 04.09.1938
குடி அரசு - 1938 (2) —— 1௦
ஆம்பூரில் ஈ.வெ.ரா. விஜயம்
தலைவர் அவர்களே! சகோதரர்களே!
நான் இன்று நண்பர் தோழர் சித்தக்காடு கே.ராமையாவைப் பார்த்துப் பேசிவிட்டுப் போவதற்காகவே இங்கு வந்தேன். நான் வந்ததைத் தெரிந்து கொண்ட நீங்கள் என்னை பேசிவிட்டுத்தான் போகவேண்டுமென்று கண்டிப்பாக இட்ட கட்டளையை என்னால் மீற முடியவில்லை. எனக்கு அவசரமான வேலைகளிருக்கின்றன. என்னைப்பற்றி கூட்டத் தலைவர் நான் முஸ்லிம்களுக்கு அதிகம் வேலை செய்து வருவதாகவும், எனது பார்வையில் நடக்கும் பத்திரிகைகள் முஸ்லிம்களின் நன்மைக்கு தொண்டாற்றுவதாகவும் புகழ்ந்தார்கள். அப்படி அவர்கள். என்னைப் புகழ்ந்தது என்னைப் பெருமைப்படுத்துவதற்காகவும் நான். எடுத்துக் கொண்டிருக்கும் வேலையில் உற்சாக மூட்டுவதற்காகவும் சொல்லப்பட்டனவைகளாகவே கருதுகிறேன். ஆனால் உண்மை என்னவெனில் பிராமணரல்லாதாருடைய நன்மைக்கும் குறிப்பாக ஆதிதிராவிடர்கள் நன்மைக்குமே நான் முஸ்லிம்களுடைய உதவியை நாடியதாக இருக்குமே ஒழிய நான் முஸ்லிம்களுக்கு எதுவும் செய்திருக்க முடியாதென்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அன்றியும் முஸ்லிம்களுக்கு இன்று யாருடைய உதவியும் தேவையில்லை. இன்று இந்து மத சம்பிரதாயப்படி முஸ்லிம்களைப் பற்றி என்ன எழுதப் பட்டிருக்கிறதோ அதையே அதிதிராவிடர்களுக்கும் எழுதப்பட்டிருக்கிறது.
பார்ப்பனர் தவிர மற்றெல்லாம் ஜன்றே.
மற்ற பிராமணரல்லாத ஜாதி இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களைப் பற்றியும் அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுவாகப். பார்த்தால் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத பார்ப்பனர் தவிர மற்ற இந்துக்களும் ஆதிதிராவிடர்களும் மிலேச்சர்கள், தாழ்ந்த ஜாதி மக்கள். என்றுதான் இந்து சாஸ்திரங்களில் எழுதப்பட்டிருப்பதால் நாம் மூவரும் ஒன்று சேர்ந்து வேலை செய்தாலொழிய எந்தத் துறையிலும் நமது சுதந்திரத்தையும் சுயமரியாதையையும் பெற்று முன்னேற முடியாது. எனது நண்பர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “மெஜாரட்டி கட்சியாராகிய நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் கட்டாய இந்தியை
9 ௨. ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மைனாரட்டியார் எப்படி தடுக்கலாம்” என்று கேட்கிறார். நமது சென்னை: மாகாணத்தில் 100-க்கு 97-பேர்களாகிய பிராமணரல்லாதார் 100-க்கு 3-பேர் வீதமுள்ள மைனராட்டி பிராமணர்கள் நாட்டை விட்டு ஓடி விடச் சொன்னால் ஓடி விடுவார்களா? என்று கேட்கிறேன். நண்பர் கனம் ஆச்சாரியார் எப்படி மெஜாரட்டியடைந்தார் என்பதை பொது ஜனங்கள் கவனிக்க வேண்டும். இந்தியை கட்டாயப்படுத்தப் போவதாகச். சொல்லி மெஜாரட்டி பெற்றாரா? இந்த அரசியல் சட்டத்தை ஒழிப்பதாக. சொல்லி ஓட்டுப் பெற்றாரா?
மெஜாரட்டிக்கு மைணாரட்டி கீழ்படிய வேண்டுமா?
மெஜாரட்டி பெற்று விட்டதாலேயே எல்லோரும் பூணூல் போட்டு உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டுமென்று சொன்னால் எல்லோரும் கீழ்ப்படிய வேண்டுமா? மாட்டேன் என்றால் “அடக்குமுறை செய்து ஆறு மாதம் ஒரு வருஷம் கடின காவல் தண்டிப்பது தான் மெஜாரட்டி யா?” என்று சொன்னதோடு காங்கரஸ் சபையிலும் ஆச்சாரியார் று O யிலும் ஆச்சாரி ஆட்சியிலும் பிராமணரல்லாதார்களுக்கும் முஸ்லிம்களுக்கும். ஆதிதிராவிடர்களுக்கும் செய்யப்பட்டு வரும் அநீதங்களை அநுபவ பூர்வமாக ஆதாரத்துடன் 8மணி நேரம் பேசினார்கள்.
இந்தி எதிர்ப்புப்படையின் அவசியம்:
முடிவாகப் பேசுகையில் இந்த ஜில்லாவிலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்படுவதின் அவசியத்தைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அப்படைக்கு முஸ்லிம்கள் வேண்டிய ஆதரவு கொடுக்கவேண்டுமென்றும் கேட்டுக். கொண்டார். இப்படையை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் சித்தக்காடு கே.ராமய்யாவைப்பற்றி குறிப்பிடுகையில் கூறியதாவது:- “தோழர் ராமய்யாவை எனக்கு 15 வருஷங்களுக்கு அதிகமாக பழக்கமுண்டு. நான் காங்கரசிலிருக்கும்போதும் அவர் காங்கரஸ்காரர். பிறகு இன்றுவரை சுயமரியாதைக்காரராகவு மிருந்து வருகிறார். அவர் எடுத்துக் கொண்டிருக்கும் இந்தி எதிர்ப்புப் படைக்கு வேண்டிய ஆதரவைக்: கொடுத்து உதவி செய்ய வேணுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்”
குறிப்பு: 30.08.1938 இல் ஆம்பூர் மகமதலி சவுக்கில் 'அஞ்சுமனெ முஹ்லினுல் இஸ்லாம்! சார்பில் நடத்தப்பெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடிஅரசு - சொற்பொழிவு - 04.09.1938
குடி அரசு -1988(29௨ ௨ 0
தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்?
- உண்மை கண்டோன்'
இப்போது நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்துக்கு சில. நாட்களுக்கு முன் காங்கரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பல ரசமான. விவாதங்கள் நடந்தன. அதுசமயம் காங்கரஸ் தலைவர்களின் அந்தரங்க மனப்பான்மை வெளியாயிற்று. சட்டசபைக் காங்கரஸ் மெம்பர்களுக்குள்ளேயே சிறு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது தாய்ப்பாஷையபிமானமும், தேசீய வேட்கையுமுடைய எம்.எல்.ஏ. ஒருவர் காங்கரஸ் தலைவர்களைக் கண்டு நாம் சென்ற வருஷ ஆகஸ்டு மாதத்தில் நடந்த கமிட்டி கூட்டத்திலேயே இந்தியைக் கட்டாய பாடமாக வைக்கும்போது தாய்ப்பாஷையையும் கட்டாயமாக்க வேண்டும் என்று இர்மானித்திருக்கிறோமே இப்போது தாய்ப் பாஷையைக் கட்டாயப்படுத்தாமல் இந்தியைக் கட்டாய பாடமாக்கியதால் தானே இவ்வளவு எதிர்ப்பு உண்டாகி விட்டது: தாய்பாஷையும் கட்டாய பாடமாகப் பத்தாம் வகுப்பு வரையில் இருக்க வேண்டுமென்று உத்தரவு செய்து விடுங்கள் என்று கேட்டார். உடனே, தலைவர் அவரை ஏற இறங்கப் பார்த்து உண்மையாகவா இப்படி கேட்கிறீர் என்று கேட்டு “தாய்ப் பாஷையை - தமிழைக் கட்டாயமாக்கினால் எப்படி இந்தி எதிர்ப்பு அடங்கிவிடும்?” என்றார். அதற்கு அவர் “இந்தியை எதிர்ப்பவர்களில் பெரும்பாலார் தமிழுக்கு ஆபத்து வந்ததென்று கருதுகிறவர்களே. இந்தியென்பது சமஸ்கிருதத்தின் கலப்புப்பிள்ளை என்று தெரிந்திருக்கிறது. இப்பொழுது தாய்ப் பாஷையின் ஸ்தானத்தில் சமஸ்கிருதம் இருக்கிறது. மாணவர்கள். தமிழோ சமஸ்கிருதமோ எதையேனும் ஒன்று எடுத்துக்கொள்ள. வேண்டுமே தவிர தாய்ப் பாஷையைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்ற. நியதி கிடையாது. இந்தி கட்டாய பாடமானால் - இந்திக்கு செல்வாக்கு அதிகப்பட்டால்- பெரும்பாலார் இந்தியைச் சலபமாய்க் கற்றுக்கொள்வதற்காக. மமஸ்கிருதத்தைத் தான் எடுத்துக்கொள்வர். அதனால் தமிழ் செல்வாக்கு குறைந்து பெரிய ஆபத்துக்குள்ளாகி விடுமல்லவா"” என்று கூறினார்.
தாய்மொழி அரிவிருத்தி வேண்டாமா?
தலைவர் “இதர பாடங்களைத் தமிழில் கட்டாயமாகச் சொல்லித்தரவேண்டுமென்று ஏற்பாடாகியிருக்கிறதே. அதனால் எப்படி மட... வரயாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி
தமிழ் கெட்டுவிடும்?” என்றார். உடனே மற்றவர் “இதர பாடங்கள். தமிழில் கற்பிக்கிறேன் என்பது உங்கள் ஏற்பாடல்லவே.. ஏற்கெனவே தீர்மானித்திருக்கிற விஷயமாயிற்றே. மேலும் அவை யாவும் பாஷா பாடமல்ல. அவற்றால் மாணவர்களுக்கு பாஷாஞானம் உண்டாகாதே. சிறுவர்களுக்கு போதுமான பாஷா ஞானமே இல்லாதபோது பாஷா பாடமல்லாத பாடங்களைத் தமிழில் படித்தால் பாஷாஞானம் உண்டாகுமென்று சொல்லுவது தப்பல்லவா? எத்தனை பாஷைகளைப் படித்தாலும் ஒருவன் தன் தாய் பாஷையில் நல்ல அபிவிருத்தி பெறுவது தானே முக்கியமாகும். தமிழ் எப்படியும் கட்டாய பாடமாக வைக்கவேண்டியது அவசியம் தானே. ஆகையால் தமிழை உடனே. கட்டாய பாடமாக வைக்கவேண்டும்” என்று வாதித்தார்.
தலைவர் 'சரி, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது ஆந்திரர்கள் ஆந்திர மாகாணத்துக்குப் போராடுகிறார்கள். தமிழர்கள். தமிழ் கட்டாய பாடமாக வேண்டும் என்று வாதாடுவார்களானால். காங்கரஸ் பலவீனமாய் விடுமே. பிறகு எதிரிகள் கைகொட்டி சிரிப்பார்கள்" என்றார். இப்படி இவர்கள் பேச்சில் பல ரசமான மர்மங்கள் வெளியாயின.
சட்டசபைக் காங்கரஸ் மெம்பர்கள் கருத்து?
1. தமிழைக் கட்டாயமாக்கினால் காங்கரஸ் பலலீனப்படும். இதன். மர்மம் என்ன? தாய் பாஷையில் ஜனங்களுக்கு மூடத்தனம் நிரம்பியிருக்க வேண்டும் என்பது காங்கரசின் முழுக் கொள்கை போல் இருக்கிறதல்லவா? தமிழர்கள் தமிழைக் கட்டாயமாக்க: வேண்டும் என்று போராடினால் உடனே பிராமணர்கள் சமஸ்கிருதம் வேண்டும் என்பர். அதனால் காங்கரசுக்குள் தமிழ்க் கட்சி, மமஸ்கிருதக்கட்சி எனக் கட்சிகள் தோன்றிவிடும். அது காங்கரசுக்குப் பலவீனமாகும். ஆகவே காங்கரசுதான் முக்கியமே தவிர, நமது சட்ட சபை மெம்பர்களுக்குத் தங்கள் தாய் பாஷை, தேசமக்களின். ஞானம் என்ற இவற்றில் முக்கிய கறுத்தில்லையென்று படுகிறதல்லவா?
2. இப்போதுதான் தமிழர் சிலர் தமிழ் படித்து வித்வான்௧ளாக வந்திருக்கின்றனர். இவர்களால்தான் பார்ப்பனரல்லாதார் கட்சி வளம் பெறுகிறது. இவர்கள்தான் தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகம் என்று பிரித்துப் பார்ப்பனர்களைத் தூஷிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் கட்டாயமாய் விட்டால் தமிழர், வங்காளிகளைப் போல ஓங்கி உயர்ந்து விடுவர். பிறகு பார்ப்பனர் தலைகுனிந்து வணங்கிப்போக: வேண்டிவரும். இது இரண்டாவது மர்மம். இதனால், காங்கரசில் இருக்கும் பார்ப்பனர்கள் யாவரும் ஒருமுகமாய் தமிழ் கட்டாயமாகக் கூடாது என்பதன் நோக்கம் தமிழர்களை தமிழறியாத மூடர்களாக்கி விடவேண்டுமென்பது எனத் தெரிகிறதல்லவா?
குடி அரசு - 1938 (29௨ 1n
சட்ட சபைத் தமிழன் அறியவேண்டியது
3. தமிழ் கட்டாயமாய் விட்டால், சமஸ்கிருதத்துக்கு இடமில்லாமல். போய்விடும். சமஸ்கிருதம் படிப்பவர் இல்லாமல் போய்விடுவர். ஏற்கனவே அது பேசுவாரற்று செத்துப்போய் கிடக்கிறது. இதற்கு ஆக்கம் தேடவேண்டுமானால், தாய் பாஷையை - தமிழை - கட்டாயமாக்கக் கூடாதாம், சமஸ்கிருதம் தலையெடுத்தால் தமிழ். நாட்டில் பிரமத்துவேஷம் நீங்கிவிடுமாம்! எப்படியென்றால், இந்தியென்பது சமஸ்கிருதத்தின் வேறொரு தோற்றமே. கட்டாய இந்தி ஒரு பக்கம் நிற்க, தாய் பாஷையின் ஸ்தானத்தில் சமஸ்கிருதம். வீற்றிறாக்க பாஷா பாடமல்லாத இதர பாடங்களை 100-க்கு 80 சமஸ்கிருத பதம் கலந்த மிலேச்ச தமிழில் கட்டாயமாகக் கற்பிக்கத் தொடங்கினால், சுத்த தமிழ் என்பது மாண்டுமறையும். அதனால் தான் இப்போது வந்திருக்கும் கணக்கு, விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் முதலிய பாடபுத்தகங்கள் 100-க்கு 80, 85 வீதம். சமஸ்கிருத பதம் செறிந்த மிலேச்சத் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பிறகு, தமிழர்கள் “தூய தமிழ்” “செந்தமிழ் மணம்;” “தமிழ். நாகரிகம்" என்றெல்லாம் பேசமாட்டார்கள். “இப்படி நாலாவகையிலும். சமஸ்கிருதத்துக்கு வழி செய்து விட்டால், பிரமத்துவேஷமே தலைகாட்டாமல் போய்விடும்” என்று காங்கரஸ் பார்ப்பனர். கருதுகின்றார்களென்று தெரிகிறது. வடநாட்டுக் காங்கரஸ் தலைவர்கள் பாஷையெல்லாம் சமஸ்கிருதத்தின் வழிவந்தவை. அதனால் அவர்கள் சமஸ்கிருதம் தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெறுவது நல்லதென்று கருதுகிறார்கள். மேலும் அவர்களுக்குத் தென்னாட்டுப் பார்ப்பனரின் சூழ்ச்சிவகையும், தமிழின் தனிப்பட்ட சிறப்பும். தெரியாது. மேலும், அவர்களுக்கு போதுமான பாஷா ஞானமும். கிடையாது. இவைகளைச் சட்ட சபையிலிருக்கும் தமிழன் நன்றாய். அறிய வேண்டும்.
தமிழா மயங்காதே ஆகவே ஏ, சட்டசபைத் தமிழா! நீ சர்வமுட்டாள் அல்ல. தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறிதலை யல்ல. தாய் பாஷையைக்: கட்டாயமாக்கக் கூடாதென்று கருதித்திரியும் சண்டாளனல்ல. நீ தமிழன்; உன் தந்தை தமிழன்; உன் தாய் தமிழ் மகள்; உற்றார் தமிழர், உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத்தமிழர் குறுதி கட்டாய இந்தியால், உன் தமிழ் நாலா வகையிலும் நசுக்கப்படுகிறது. பாஷா பாடங்களைத் தமிழில் கற்பிப்பதால் தமிழ் விருத்தியாய் விடும் என்று கருதி மயங்காதே தனராசி எண், ரிணராசி எண், வியாசார்த்தம், அனுபூரகம், குணரங்கம் என்றெல்லாம் உன் தமிழ் பாஷையில் நீ ம. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கேட்டதுண்டா? இவையெல்லாம் உன் தாயை, உன் தமிழைக் கொல்லுவதற்குப் பார்ப்பனர் விடும் அம்புகள் என்று நினைக்கின்றாயா?
நீ காந்தியைக் கும்பிடு; உன் சி. ஆரைக் கட்டிக்கொண்டு அழு; உன். காங்கரஸை மோக்ஷ சாதனம் என்று பின்பற்று; ஆனால், அவர்கள். பேச்சு வழி நின்று உன் தாயை - உன் தமிழை - இம்சிக்காமல், தமிழைக். கட்டாய பாடமாக்க வேண்டுமென்று இப்போதே தீர்மானிப்பாயாக. இல்லையானால், தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று மூயலாயானால்,
நீ உன் நாட்டுக்குத் துரோகியாவாய்: உன் நாட்டு மொழிக்குத் துரோகியாவாய்; உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய். நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின். தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே - ஏன் இன்றே - எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக:
உங்கள் தலைவர் சி.ஆர். அவர்கள் தமிழினிடத்தும், தமிழ் பிள்ளைகளிடத்தும் மிகுந்த அன்புடையவர் என்று சொல்லுகிறாரே, அவரே தமிழன் என்று சொல்லிக்கொள்ளுகிறாரே, உண்மையில் அவர். தமிழனானால் தமிழ் மொழி விருத்தியாக வேண்டுமென்ற எண்ணமுடையவரானால், தமிழை - தாய் பாஷையை - இந்தியைச் சொன்னதைப் போலக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருக்க மாட்டாரா? தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டுபண்ண முடியும். “தமிழைக் கட்டாய மாக்கமாட்டோம், எங்கள் சமஸ்கிருதம் இல்லாமல்போகும். உங்கள் தமிழ் கெட்டாலென்ன” என்று கருதும். பார்ப்பன மனப்பான்மை எங்கே அவரை விட்டது? தமிழில் ஆபாசமான. நடையில் சில கதைகள் எழுதிவிட்டு, “எனக்குத் தமிழில் எவ்வளவு ஆசையிருக்கிறது தெரியுமா” என்கிறார். இவற்றைக் கேட்டு வாய்: பிளக்கும் மூடமக்களைப் போல, நீங்களும் உங்கள் தமிழைக் கட்டாயமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சியில்லாத விலங்குகளா? தாய் பாஷையில் அபிமானமில்லாத தசைப்பிண்டங்களா?
துரோகியாகப் போகிறாயா?
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது ஒத்து 100-க்கு 95 பேர் தமிழ் தெரியாமல் இருக்கும்போதே சமஸ்கிருதத்தை தாய் பாஷையாகவும், இந்தியைக் கட்டாய பாஷையாகவும், ஆங்கிலத்தை ராஜாங்க பாஷையாகவும் வைத்து, தமிழ்ப் பதங்களை எல்லாம் போக்கி, சமஸ்கிருதமாக்கி, தமிழன் மானத்தை தமிழன் பிதிரார்ஜித பாஷையை, தமிழன்னையைக் கெடுப்பதற்காக உங்கள் சி. ஆரை உள்ளிட்ட
குடிஅரசு - 1938 (2) —— ப
பார்ப்பனர்கள் தந்திரமாய் வேலை செய்யும்போது, தமிழனாகிய நீ: தமிழைக் கட்டாய பாடமாக்கி, தமிழன் ஒவ்வொருவனும் தமிழை: நன்றாகக் கற்றிருக்க வேண்டுமென்று முயற்சி செய்யாத நீ! தமிழ். கெட்டாலும் கெடட்டும், தமிழர்கள் மானமழிந்தாலும் அழியட்டும், நான் காங்கரஸ் செய்யும் எல்லா அயோக்கியத்தனத்துக்கும் உள்ளாகியிருப்பதே. போல, என் தாய் பாஷையை என் அருமைத் தலைவர் சி.ஆர். அவர்களும் அருமைத் தோழர்களான பார்ப்பனர்களும் கூடிக் கொலை செய்வதற்குத் துணையிருப்பேன் என்று நினைக்கிறாயா? தேசத்தின் பெயரையோ சமூகத்தின் பேரையோ, அரசியல் கொள்கையின் பெயரையோ சொல்லிச் சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ, விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் பாஷை
குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு! தாய் பாஷைக்காகச் சிறை புகுந்தான், புகுகிறான், புகுவான்; தடியடி பட்டான், படுகிறான், படுவான்; சகல துன்பங்களையும் அனுபவிப்பான், அவன் பேசும் தமிழை தாய் பாஷையாக உடைய நீ இப்படித் தாய்பாஷையை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா? போவாயானால் ஏ.துரோகி உன் சட்டசபை வாழ்வுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்.
குடி அரசு - கட்டுரை - 04.09.1938
5. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
சர்வம் பார்ப்பண மயம் ஜகத்
தாழ்த்தப்பட்ட மக்களுடைய குறைபாடுகளை கவனித்து சீர்திருத்தம். செய்து முன்னேற்றம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட லேபர் கமிஷனர் வேலையை ஒரு பார்ப்பனருக்குக் கொடுத்து அதில் பார்ப்பனீயம் புகுத்தப்படுவதோடு அந்த இலாக்காவும் பார்ப்பனமய மாக்கப்படுகிறது. இப்போது போதாக்குறைக்கு சென்னை இன்ஸ்பெக்டர் ஆப். லோக்கல் போர்டாக தோழர் எஸ்.ரங்கநாதம் ஐ.சி.எஸ். அவர்களை: நியமித்திருக்கிறார்கள். இவர் எவ்வளவு பிடிவாதப் பார்ப்பன. ஆதிக்கக்காரர் என்பது தோழர் தேவர் விஷயத்தில் நடந்து கொண்டதிலிருந்தும் மற்றும் அவரது கலெக்டர் உத்தியோகத்தில் இருந்தும் மக்கள் நன்றாய் உணர்வார்கள். இம்மாதிரி பெரிய பெரிய பயனுள்ள அதிகார ஆதிக்கமுள்ள உத்தியோகங்களுக்கெல்லாம் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள்.
இதற்குப் பெயர்தான் ஜனநாயகம் போலும். இதுதான் ராமராஜ்யம். போலும். இதுதான் “இப்போது நடப்பது நம்ப ஆட்சி” போலும்.
நடந்தது நடக்கட்டும். இன்னும் என்னென்ன நடக்குமோ நடக்கட்டும். அதிக முறுக்கேறினால் அறுந்துபோகும் என்கின்ற ஆப்த வாக்கியம். மெய்யாகுமா பொய்யாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
குடிஅரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 04.09.1958
கடி அரசு - 1938 (2) —— 109
கோவை தமிழர் படை பவானியில் மாபெருங் கூட்டம். காங்கரஸ் காலித்தனம்.
இன்று இங்கு தமிழர் படை வந்திருக்கிறது என்றும், அந்தப்படை வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கே தான் வந்திருப்பதாகவும், இந்த ஊருக்கு தான் 10, 12 வருடத்திற்கு முன் வந்து பேசி இறாப்பதாகவும், இன்று தமிழர் படை செல்வதின் நோக்கத்தைப்பற்றிப் பேசப்போவதாகக் கூறினார்.
இது சமயம் பார்ப்பனரால் தூண்டப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாத கூலி “வந்தே மாதரம்” என்று கூறினார். அதற்குத் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “இப்போது வந்துதான் ஏமாற்றுகிறீர்களே இன்னுமா ஏமாற்ற வேண்டும்?” என்று கூறிவிட்டு தான் கூறுவதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் நாளைக் கூட்டம் போட்டு பதில் கூறுங்கள். இல்லாவிட்டால் பேசுவதில் ஏதாவது சந்தேகமேற்பட்டால் சந்தேகங்களை தலைவர் மூலம் எழுதிக்கொடுத்தால் பதில் சொல்வதாகவும், வீணில் கூட்டத்தில் கலகம் செய்து காலித்தனம் செய்தால் நான் பயந்து விட்டு ஓடி விடப்போவதில்லை. யென்றும், தான் இந்த ஊரில் பழகினவரென்றும் தன்னை பயமுறுத்தினால். பயந்து விட மாட்டாரென்றும், இவர்கள் கலகம் செய்வதால் இவர்கள் சூழ்ச்சிகளை வெளியிலெடுத்துக் கூறத் தனக்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதென்றும் கூறி பேச்சு சுதந்திரம் வேண்டும் என்று கூறும் இவர்கள், ஒருவர் தனது அபிப்பிராயத்தைக் கூற விடாமல் விஷமத்தனம் செய்தால். ஜனங்கள் இவர்கள் வண்டவாளத்தை அறிந்து கொள்ளுவார்களென்ற அச்சமா என்றும் காங்கரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போவதற்கு ஓட்டு கேட்கும் போது புதிய சீர்திருத்தத்தை உடைக்கப் போவதாகவும், வரி குறைக்கப் போவதாகவும் ஓட்டுக் கேட்டார்கள் என்றும், இன்று மாதிரி அந்த புதிய சீர்திருத்தத்தை உடைத்தார்களா? வரியைக் குறைத்தார்களா? எந்தச் சட்டத்தை உடைக்கிறேன் என்று கூறினார்களோ அந்த சட்டத்தின் கீழே இன்று அரசாட்சி செய்கிறார்கள் என்றும், வரியைக் குறைப்போம். என்றவர்கள் இன்று புதிய வரிகளைப் போடுகிறார்கள் என்றும், நாங்கள் வந்தால் வெள்ளைக்காரனைத் துரத்துவோம் என்றவர்கள் இன்று வெள்ளைக்காரனை ரோஜாப்புச் செடியென்றும், அவர்கள் ஞாணாசிரியர் களென்றும் கூறி அவர்கள் காலில் விழுந்து கொண்டிருக்கிறார் களென்றும்
B வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தான் காங்கரசை பார்ப்பன சபை என்று கூறி வருவதாகவும் அதனால்: தன்னை வகுப்புவாதி என்று சில பார்ப்பனக் கூலிகளும், பார்ப்பனர்களும். கூறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் குறிப்பிட்டதாவது:-
இன்று சட்டசபையில் பாமர மக்களை ஏமாற்றி மெஜாரட்டியாக காங்கரஸ்காரர்கள் வந்தார்கள். வந்ததும் பத்து மந்திரிகளில் 4% மந்திரிகள். பார்ப்பனர்கள். அதில் பொறுப்பான உத்தியோகம் பார்ப்பனர்களுக்கே. கொடுக்கப்பட்டிருக்கிற தென்றும், உபயோகமில்லாத உத்தியோகங்களே. பார்ப்பனரல்லாதார்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும், முதல்மந்திரி பதவியும் ஒரு பார்ப்பனரக்கே கொடுக்கப்பட்டிருக்கிறதாகவும், அதுவும் போலீசும், பண இலாகாவும் அவருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் பேசிக் கொண்டு வரும்போது பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட சிலர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டார்கள். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள். ஆணித்தரமான பதில் கூறினார். அவை வருமாறு:-
கேள்விகள்
1. உங்களுடைய ஜஸ்டிஸ் கட்சியாரின் 20 வருட ஆட்சியில் ஏன்: சமஸ்கிருத பாஷையை எடுக்கக்கூடாது? அது பார்ப்பனருடைய ஆட்சிக்கு ஆதரவா?
2. 1914-ம் வருடம் ஹிந்தி வேண்டுமென்று பேசினது உண்டா இல்லையா?
3. தாங்கள் காங்கரசில் சேர்ந்து உழைத்தது உண்டா இல்லையா?
4 தங்களால் “விடுதலையில் புகழப்பட்ட ஸ்டாலின் ஜகதீசனின். நிலைமை என்ன? அவர் இப்போது எங்கே இருக்கிறார்?
5. தாங்கள் ஏன் காங்கரசை விட்டு விலகி விட்டீர்?
6... தமிழை ஆதரிக்கும் தங்கள் “விடுதலை”ப் பத்திரிகை ஏன்: “விடுதலை” என்று இந்த “லை! போட வேண்டும்?
7. ஆரியர்கள் யார்? இவர்கள் விருந்தாந்தம் என்ன? தாங்கள் அந்த. வர்க்கத்தைச் சேர்ந்தவரா அல்லவா?
ஈ.வெ.ரா பதில்
1. ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சியிலிருக்கும்போது அந்தச் சட்டப்படி அவர்கள் ஒன்றும் செய்யமுடியா தென்றும், அவர்கள் கவர்னர். சொல்லுகின்றபடிதான் நிர்வாகம் நடத்த முடியும் என்றும், அப்பொழுதும் தங்களால் ஆனதை மக்களுக்கு செய்தார்களென்றும் கூறிவிட்டு.
குடி அரசு -198(29௨ ௨ 5
இன்று அரசாட்சி செய்யும் காங்கரஸ் மந்திரிகள் அவர்கள் வெறுத்த புதிய சட்டத்தின் கீழ் அரசாட்சி செய்கிறார்களென்றும் அவர்களுக்கு முன்னிருந்ததைவிட, எவ்வளவோ அதிகாரம் இருக்கிறது என்றும் இந்தக் கேள்வி கேட்டதிலிருந்து கேட்டவருக்கோ கேட்கும்படி தூண்டியவர்களுக்கோ அரசியல் ஞானம் இல்லை என்று தெரிகிறது.
2 1914 @ எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. இருந்தாலும் இஷ்டமுள்ளவர்கள் எந்த மொழியையும் படிக்கட்டும். அதை விட்டுவிட்டு கட்டாயம் என்று சொல்லி சிறுவர்களைக் கெடுப்பதையே எதிர்க்கிறேன்.
3. ஆம்.
4. தோழர் ஸ்டாலின் ஜெகதீசனை இப்போதைய சர்க்கார் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். அதனால் தான் அவனை விட்டிஅடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது கல்லு பிள்ளையார் போல் தமது சொந்த: ஊரில் சுகவாசியாக இருக்கிறார்.
5... காங்கரசில் அயோக்கியர்களும், புரட்டர்களும், ஏமாற்றுக்காரர்களும், சூழ்ச்சிக்காரர்களும் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருவதால் அதை விட்டு விலகினேன்.
6. அது மாணவர்கள் நன்மைக்கும், தமிழ்ப் பண்டிதர்கள் செளகரியத்திற்குமே தான்.
7. ஆரியர்கள் என்பவர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர் களென்றும், அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இங்கு பிழைக்க வந்தவர்களென்றும் பல சரித்திரங்களிலிருக்கிறது. அதுதவிர இது பற்றிப் பள்ளியில் மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் இருக்கின்றன.
குறிப்பு: பவானியில் 06.09.1938 ஆம் நாள் கோவை ஜில்லா தமிழர் படையை வரவேற்று ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 11.09.1938
B வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
நான் சிறை புகுந்தால்?
அன்புமிக்க சுயமரியாதைத் தோழர்களே! இந்தி எதிர்ப்புத் தோழர்களே!
நான் இன்று சென்னைக்கு செல்லுகிறேன். பார்ப்பன ஆட்சி அடக்கு. முறையின் பயணய் அநேகமாக 11-ந்தேதி கைது செய்யப்பட்டு விடுவேன்.
எனக்கு சுமார் மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பே வாரண்டு பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றும் என்னை சென்னைக்கு வெளியில் பிடித்தால் கிளர்ச்சி பலப்பட்டுவிடுமோ என சர்க்கார் யோசித்து நான். சென்னைக்கு வந்தவுடன் கைதியாக்கிவிட வேண்டுமென்று காத்திறாக். கிறார்கள் என்றும் கொஞ்ச நாளைக்கு முன்பே கேள்விப்பட்டேன். என்றாலும் கொஞ்ச நாள் வரையில் நான் சென்னைக்கு வருவேன். என்று சர்க்கார் காத்திருந்து பார்த்துவிட்டு அப்புறம் சென்னைக்கு வெளியில் வந்து என்னை கைதியாக்குவார்கள் என்று கருதி நானும் கொஞ்சநாள் தயாராக காத்திருந்து பார்த்தேன். ஆனால் என்ன. காரணத்தினாலோ சர்க்கார் அந்தப்படி செய்ய துணிவு கொள்ளவில்லை. என்பது எனக்கு தெரிந்துவிட்டது.
சர்க்கார் மனோபாவம்.
சர்க்கார் தங்களுடைய அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள். எவ்வித எதிர்ப்பு கிளர்ச்சியும் செய்யக்கூடாது என்கின்ற கடுமையான. மனோபாவத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கும் மீறி யாராவது ஏதாவது செய்தால் அதைக் கொடுமையான அடக்குமுறைகளைக்: கையாண்டு எப்படியாவது அடக்கிவிட வேண்டும் என்கிற துணிவு கொண்டு விட்டார்கள் என்பதற்கும் போதுமான ருஜுவு சர்க்கார் இதுவரை பல பிரபலஸ்தர்கள் தலைவர்கள் உள்பட மூன்று மாத காலமாக சுமார் 300 பேர்கள்வரை கைதியாக்கி கடினமாக தண்டித்ததிலிருந்தும் மற்றும் சர்க்கார் மந்திரிகள் கடற்கரை கூட்டங்கள் வெளிப் பொதுக்கூட்டங்கள். காங்கரஸ் மகாநாடு கூட்டங்கள் சட்டசபை மீட்டிங்குகள் முதலியவைகளில்: பேசிய பேச்சுக்களில் இருந்தும் நன்றாய் விளங்கிவிட்டதுடன் மேலும் இந்த முறைகளினால் அதாவது இப்போது சர்க்கார் கையாண்டு வரும்: அடக்குமுறையினால் எதிர்ப்பு கிளர்ச்சி நசுக்கப்படவில்லையானால்:
குடி அரசு 1938 (2) —— ப
இன்னமும் கொடுமையான - கடுமையான அடக்குமுறைகளை உண்டாக்கியாவது அழித்துத் தீருவது என்கின்ற முடிவுக்கு சர்க்கார் வந்திருப்பதாக சொல்லிக் கொள்ளுவதிலிருந்தும் தெளிவாகிவிட்டது
இனியும் தெளிவாக வேண்டுமானால் சர்க்கார் உத்திரவை எதிர்ப்பவர்கள் மீது (TREASON) ராஜ துரோக கதிக்குற்றச்சாட்டு செய்து ஆயுள் காலம் அல்லது தூக்கு தண்டனை வரை கையாட வேண்டும் என்று
தோழர் சத்தியமூர்த்தியார் கனம் ஆச்சாரியாருக்கு புத்தி கூறியதிலிருந்தும் அதற்கு ஏற்ற மாதிரியான மந்திரிசபை நடவடிக்கைகளை காங்கரஸ்காரர்கள். முழுமனதுடன் ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தும் பார்த்துக் கொள்ளலாம்.
எனது கடமை:
எனவே இது சமயம் என்னுடைய கடமை என்னவெனில் இந்தி கட்டாய கற்பிப்பை ஒழிக்கச் செய்வதற்கு முன்பு நான் வெகுகலமாகவே சொல்லிக் கொண்டு வந்தது போலும் வருவது போலும் காங்கரஸ் பார்ப்பன ஆட்சி என்றும் அது வருணாச்சிரம தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்து நிலை நிறுத்துவதற்கு ஆகவே பாடுகிறது என்றும் இப்படிப்பட்ட ஆட்சியில் மனிதன் வாழ்வதைவிட கொடும்புலி வாழும். காட்டு வாழ்வே மேல் என்றும் நான் கருதுவதை சரியென்று பொது ஜனங்கள் கருதுவதற்கு வேண்டிய ஆதரவுகளை காட்டிவிட வேண்டியது முக்கியமான காரியம் என்று கருதுகிறேன். ஆதலால் அதற்கு ஏற்ற காரியங்களை பார்ப்பன மந்திரிகள் ஆட்சியானது செய்யும்படி செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிட மனமில்லை. அதற்கு ஆகவே எந்த விதத்திலும் சிறிதும் பலாத்காரம் இல்லாததும் நியாயமான மனப்பான்மை உள்ள உண்மையாளர்களின் மனம் சிறிதும் நோகாததுமான முறையில். வெகு ஜாக்கிரதையுடனே செய்யப்பட்டு வருகிற இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
எனது விண்ணப்பம்.
மற்றும் எந்த விதமான சட்டத்தையும் எந்த விதமான. அடக்குமுறை உத்திரவையும் மீறாத முறையிலேயே இதுவரை கிளர்ச்சி நடந்து வரவும் என்னாலான துணைபுரிந்தும் வந்திருக்கின்றேன். என்பதோடு நானோ மற்றும் இந்தி எதிர்ப்புக் கமிட்டியோ இந்தி எதிர்ப்பு சம்மந்தமான தனிப்பட்ட நபரோ கண்டிப்பாக அஹிம்சையுடனும். பலாத்காரம் இல்லாமலும், துவேஷம் மனக்கசப்பு இல்லாமலுமே பேச்சு சரியம் முதலியவைகளில் மிக்க கவனம் செலுத்தி வந்திருக்கிறோமாதலால் இனியும் அப்படியே நடந்துவர வேண்டும் என்றும் கண்டிப்பாக தெரிவித்துக் கொள்வதுடன் ஒவ்வொருவரும் அதை மனமொழி மெய்களால். கண்டிப்பாய் அனுளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகிறேன்.
மட... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
சுயமரியாதைக்காரர் கடமை:
சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட இதைவிட நல்ல சமயம் கிடைப்பதரிதாதலால் அவர்கள் எல்லோரும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை சாந்தமும் சமாதானமுமான முறையில் நடத்தி கொடுமையான. அடக்குமுறைக்கு மகிழ்ச்சியோடு ஆளாகி பார்ப்பன ஆட்சியின். யோக்கியதையை வெளியாக்கி விட வேண்டியது அவர்களது உண்மையான கடமையாகும்.
ஏனெனில் இப்படிச் செய்வதன் மூலம் நாம் ஏன் பார்ப்பனீயம் கூடாது என்கிறோமென்பது இதன்மூலம் விளக்கப்பட்டுவிடும்.
இந்தி எதிர்ப்பு இயக்க நிலை.
இந்தி எதிர்ப்பு இயக்கம் அதன் எதிரிகளுடைய சூழ்ச்சி-விஷம- நாணையமற்ற - இழிவான பல எதிர்ப்புகளைத் தாண்டி இதுவும் ஒரு பொதுஜன இயக்கம்தான் என்று இந்தியா முழுமையும் வெளிநாடும் மதிக்கப்படத்தக்க நிலைக்கு வந்துவிட்டது. அன்றியும் சர்க்கார் தங்களுடைய வெறுக்கத் தகுந்த கடைசி ஆயுதத்தைப் பிரயோகப்படுத்த வேண்டிய அவசியத்திற்குக் கொண்டு வந்துவிட்டது. தமிழ்நாடோ சென்னை மாகாணமோ மாத்திரமல்லாமல் இந்தியா பூராவும் சென்னை: சர்க்காரை எள்ளி நகையாட வேண்டிய நிலைமைக்குக் கொண்டு. வந்துவிட்டது. இந்தியா பூராவிலும் உள்ள அரசியல் தலைவர்கள். பிரதான புருஷர்கள் கவனிக்கப்படத்தக்க பத்திரிகைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக இந்தி எதிர்ப்புக்குத் தலை கொடுக்க முடியாமல்: சென்னை சர்க்கார் கையாளும் முறையைப் பற்றி கவனித்துக். கண்டிக்கும்படியான நிலைமையை உண்டாக்கிவிட்டது. இதுவரை காங்கரஸ்காரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியையும், ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியையும். பற்றி என்னென்ன குற்றம் குறை கூறி வந்தார்களோ அவற்றையெல்லாம் இன்றைய காங்கரஸ் சர்க்கார் செய்து தீரவேண்டிய அவசியத்திற்கும், அப்படி செய்யப்பட்ட காரியங்களுக்கு அந்தக்கால ஆட்சி என்ன. சமாதானம் சொல்லிற்றோ அதே சமாதானத்தை தேடிக் கண்டுபிடித்து சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கும் கொண்டு வந்துவிட்டுவிட்டது.
கவலை வேண்டாம். ஆதலால் நமது கிளர்ச்சி பயன் கொடுக்கவில்லை என்பதாக நாம். சிறிதும் நினைக்க வேண்டியதில்லை. மற்றும் இது வெற்றிபெறுமா தோல்வியுறுமா என்பதாகவும் நாம் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. நம் கடமையைச் செய்கிறோமா, செய்தோமா இல்லையா என்பதேதான். நாம் இனி யோசிக்கப்படத்தக்கதாகும்.
குடி அரசு - 1938 (2) — ம
நாம் பெற்ற வெற்றி.
காங்கரஸ் சுமார் 18 வருஷ காலமாக செய்துவந்த எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஒன்றிலாவது வெற்றிபெற்றது என்பதாக காங்கரசே சொல்லும்படியான காரியம் ஒன்றுமே இல்லை. காங்கரசானது எதிர்ப்பின் பேரால் சட்டம் சமாதானம் நல்ல ஆட்சி முதலியவைகளுக்கு விரோதமாக செய்து வந்த காரியங்களில் நாம் நூற்றிலொரு பங்குகட இன்னம் செய்யவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து அவற்றை. ளியான கணக்கு காட்ட முடியாதபடி செலவு செய்தும் லக்ஷக்கணக்கான. பேர்கள் சிறை சென்றும் பலர் அடிபட்டும் சிலர் மடிந்தும்கூட ஒரு காரியத்திலாவது எவ்வித வெற்றியும் பெறாமல் நிபந்தனை கொடுத்து ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தலில் ஓட்டுப் பெறமாத்திரம் பயன்பட்டது என்றால் இப்போது நாம் செய்த கிளர்ச்சிக்கும் சிறை சென்ற. தொண்டர்களுக்கும், பொதுஜனங்களால் கொடுக்கப்பட்ட பணத்துக்கும் செலவிடப்பட்ட முறைக்கும் மற்றும் அனுபவித்த கஷ்ட நஷ்டத்திற்கும் இதைவிட என்ன அதிகமான வெற்றியை எதிர்பார்க்க முடியும்?
சிறை நோக்கிச் செல்கின்றேன் எனவே காங்கரசின் கிளர்ச்சி, தியாகம், போர் முதலானவைகள். எல்லாம் ஒட்டுப்பெறவே ஒழிய எதிரியிடம் காரியம் வெற்றி பெறுவதற்கு அல்ல என்பது நமக்கு பட்டாங்கமாய் தெரிந்துவிட்டதால் நமது எதிர்ப்பும், கிளர்ச்சியும், தியாகமும், கோரும் காரியம் வெற்றி பெறுவதற்கு பயன்படாவிட்டாலும் பாமர மக்கள் இனிமேலாவது ஏமாறாமல் உண்மை கண்டு மனம் திரும்பவாவது பயன்பட்டால் அதுவே போதுமானதாகும். ஏதோ ஒரு வழியில் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை அதிகமாய் கஷ்ட நஷ்டமில்லாமல் சாவதானமாய் சந்தோஷமாய் சுளுவில் நடத்திக். கொண்டிருக்க இந்த சர்க்கார் இடம் கொடுத்துக் கொண்டிருப்பதே நமக்கு ஒரு எதிர்பாராத வெற்றி என்று கருதவேண்டும்.
இந்தி கட்டாய முறையை ஒழிக்க சர்க்கார்கண்ணியமான முறையில். ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நமது கிளர்ச்சியானது முறையே நடந்து கொண்டிருப்பதால் சர்க்காரை அறியாமலே அந்த நமது இலட்சியம் கைகூடும்படியான நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதோடு பொது ஜனங்களது அபிப்பிராயமும். ஆதரவும் நமக்கு சாதகமாய் இருக்கும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை. இருக்கிறது என்பதோடு இந்தி எதிர்ப்புக்காரரும், சுயமரியாதைக்காரரும், ஜஸ்டிஸ்காரரும், முஸ்லிம் லீக்குகாரரும் மற்றும் காங்கரஸ் நடப்பும் போக்கும் பிடியாதவர்களும் ஒன்று சேர்ந்து காரியம் செய்யவும் இந்த இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி ஒரு பெரும் சாதனமாகும் என்பதை தெரிவித்துக். கொண்டு இன்று சிறை வாயிலை எதிர்நோக்கி சென்னை செல்லுகின்றேன்.
குடி அரசு - அறிக்கை - 11.09.1938.
W வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மீண்டும் ஒன்றரைக் கேட கடன்:
ஒரு சம்பாஷலைக
- சித்திரபுத்திரன்
காங்கரஸ்காரன்:இப்படிகோடி கோடியாய் கடன் வாங்குகிறீர்களே! இது அடுக்குமா? நாமோ எந்த சமயத்தில் விட்டுவிட்டு ஓடப்போகிறோமோ' யார் கண்டார்கள். அப்புறம் இந்தக் கடனை யார் கட்டுவது?
மந்திரி: கடன்பட்டவன் கட்டிவிட்டு சாகிறானா, சம்பாதித்தவன். சாப்பிட்டு விட்டு சாகிறானா? என்னமோ நம்ம காலம் வரை சக்கரம். ஓடினால் சரி. எவனோ கட்டுகிறான் நமக்கு அந்தக் கவலை எதற்கு?
கா முன்னமே மூன்றேகால் கோடி இப்பொழுது வேறே ஒன்றரை கோடியா? இது என்ன ஊரா, பாழா? பொது ஜனங்கள் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவர்கள் கேட்க மாட்டார்களா?
ம: கேட்டு அவர்கள் தாலி அறுந்தது. எங்கேயோ அடித்துப் பிடித்து பணக்காரனிடம் பணம் பிடிங்கி தங்களுக்கு நல்லது செய்வதாகத்தான். கருதுவார்கள். மற்றபடி இது தங்கள் மீது சுமத்தப்படப்போகும் கடனே. என்று ஒருவருக்கும் தெரியாது.
கா: காங்கரசல்லாத பத்திரிகைகள் இவற்றை வெளியாக்கி விடுமே அப்புறம் கூடவா தெரியாது?
ம: நாம்தான் காங்கரசல்லாத பத்திரிகைகள் எல்லாம் தேசத்துரோக: பத்திரிகைகள் என்று சொல்லிவிட்டோமே. அப்புறம் அதைப்பார்த்துக். கொண்டு எவனாவது பேசினால் அவன் மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவனானாலும் சி அவன் கதர் பெட்டிக்கு ஓட்டுப் போட்டவனானாலும் சரி அவர்கள் எல்லாம் தேசத்து ரோகிகள்தான்! அவர்கள் சொல்வதைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்?
கா: மக்கள் ஒவ்வொருவராய் நம்மைவிட்டு விலகிவிட்டால்...?
ம: போனால் போகிறார்கள். நம்மிடம் என்ன செய்தாலும் போகாத. அடிமைகள் - நாம் என்ன சொன்னாலும் கை தூக்கும் கூலிகள் - போதுமானதற்கு மேல் 20, 30 இருக்கிறது. ஆதலால் அதற்காக பயப்படவேண்டியதில்லை.
குடிஅரசு - 1938 (2) —— ய
௧ அப்படி நினைக்கலாமா? எத்தனை நாளைக்குத்தான் ஒருவன். மனமில்லாமல், மனிதத் தன்மை இல்லாமல் நமக்கு கை தூக்குவார்கள்?
ம: ஓஹோ! அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே. எவனும். சும்மா தூக்குவதில்லை. மாதம் 75 ரூபாய்க்குத்தான் தூக்குகிறார்கள். 15 ரூபாய் சம்பாதிக்க வழியில்லாதவர் அநேகம் பேர்களுக்கு மாதம் 75 ரூபாயென்றால் இதில் மானமென்ன, மனிதத்தன்மை என்ன?
௧௩ எல்லோருமா அப்படிப்பட்டவர்கள்? இதனால் பிழைக்காதவர்கள். சிலராவது இல்லையா? அப்புறம் அவர்கள் போய் விட்டார்களானால் என்ன செய்வது?
மா: அப்படியும் அதிகம் பேர் இல்லை... இருந்தாலும் எங்கு போய் விடுவார்கள்? யார் கூடப் போய்ச் சேருவார்கள்? அவர்களை ஒழிக்க நமக்கு வழி தெரியாதா? அப்படித்தான் யாரை நினைத்துக்கொண்டு நீ இப்படிக் கேட்கிறாய்?
கா: ஸ்ரீகள் தேவர், நாடிமுத்துப் பிள்ளை, வெங்கிட்டப்ப செட்டியார் இப்படிப்பட்டவர்கள் 10 பேராவது இல்லையா?
ம: ளி இருந்திருந்து நல்ல ஆசாமிகள் பெயர் சொன்னாய். இவர்களை: நாமே பல தடவை வெளியில் போகும்படி சொல்லி ஆதிவிட்டது. இன்னம். சில பேரையும் சொல்லி ஆகிவிட்டது. ஒழுங்கு நடவடிக்கைகளும். எடுத்தாய்விட்டது. “வார்த்தை வாரம்மா வள்ளித்தாயே” என்று மூறாகன் வள்ளியைக் கையேந்திக் கொஞ்சியதுபோல் அவர்கள் “என்னமோ செய்து கொள்ளுங்கள் எங்களை வெளியில் தள்ளிவிடாதீர்கள்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.
கா: மந்திரிகளில் சிலரும் மொண மொனணத்துக் கொண்டிருக்கறாப். போல் இருக்கிறது. அவர்கள் நிஷ்ட்டூரம் வந்தாலும் வரும் போலிருக்கிறதோ!
ம: ஒரு நாளுமில்லை. 75 ரூ. காரர்கள் ஓடினாலும் ஓடுவார்கள். என்று சொல்லு. 500+300+350-1150 @. காரர்கள் ஓடுவார்கள் என்று கனவிலும் நினையாதே நீ யாரை சந்தேகப்படுகிறாய்? டாக்டர் சுப்பராயனையா?
கா இல்லை. அவர் பிறவியிலேயே மந்திரி என்று கருதிக் கொண்டிருக்கிறவர். பெரிய குடும்பம். ஒரு நாளும் பதவியும் வரும்படியும் இல்லாமல் தனித்திருக்க சம்மதிக்கமாட்டாரா?
ம: பின்னை யார்? ஸ்ரீ ராமநாதனா?
காட இல்லை, இல்லை. அவர் 75 ரூ. காரனாயிருந்தால் கூட விட்டுவிட்டு ஓடவே மாட்டார். ஏன் என்றால், இலாக்கா இல்லாமல்.
மீ£ 1000-த்து சில்வானம் பணம் வாங்குபவர். அவருக்குத் தெரியாதா? நன்றி விசுவாசமிருக்காதா? ஆதலால் அவர் போகமாட்டார்.
B o வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ம: மற்றபடி யாரை சொல்லுகிறாய்? ஸ்ரீகள் முனிசாமி, யாகூப் ஹாஸன் இவர்களைப் பற்றியா?
கா: இல்லை, இல்லை. அவர்கள் போய் விடுவார்களா என்றுகூட நான் நினைப்புக்குக்கூட கொண்டு வரவில்லை:
ம: பின்னை யார், ஸ்ரீகள் ரெட்டியும் மேனனுமா?
கா: இவர்களைப் பற்றியும் எனக்கு அதிகம் தெரியாது
ம: அப்படியே வைத்துக்கொள்ளேன். இதுகள் ஆரும் போய் விட்டாலும் நமக்குப் பயமில்லை. 12 பேர் புதிதாக வருவார்கள். வராவிட்டாலும் பயமில்லை. 5 வருஷத்திற்குச் சக்கரம் ஓடும். பின்னை: என்ன பயம்?
கா பத்திரிகைகள் எல்லாம் கன்னாபின்னா என்று கூப்பாடு போடுமே.
ம: ஒன்னும் கூப்பாடு போடாது. நாம் கடன் வாங்க ஆரம்பித்தால் அதுகளுக்குக் கொண்டாட்டம்தான்.
கா: அதென்ன கொண்டாட்டம்?
ம: கடனுக்கு விளம்பரம் கொடுப்போம். அதில் அவைகளுக்கு 1000, 2000 கிடைக்கும். ஆதலால் வாயை மூடிக் கொண்டு விகடன். ஸ்ரீகள் சுப்பய்யாவுக்கும், பாரதிக்கும் போட்ட பொம்மைகள் போல் கைகட்டி வாய் பொத்தி தலை குனிந்து சலாம் போட்ட வண்ணம் கிடக்கும். இது தவிர அதுகளுக்கு நாம் வேறு வகையிலும் எலும்புத்துண்டு. போட்டு வருகிறோம். ஆதலால் எது எப்படி நடந்தாலும் பத்திரிகைகள். மாத்திரம் நம்மிடம் வாலாட்டாது. மெயில் பத்திரிகைகூட 10 நாளில் சரியாய் போய்விடும். அதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்தாய் விட்டது.
காட எல்லா பத்திரிகைகளுக்குமா விளம்பரம் கொடுப்போம்? குட்டிப் பத்திரிகைகள் குலைக்காதா?
மடகுட்டிப் பத்திரிகைகள் குலைத்தால் ஒரே அடிதான். பத்திரிகையே நடக்காது. நம்மையோ? காங்கரசையோ தைரியமாய் தாக்கினால். மூட்டை கட்ட வேண்டியதுதான். அவை தேசியம், காங்கரசு, சுயராஜ்யம், காந்தி என்று சொல்லிக் கொண்டுதான் பிழைக்க வேண்டும். இல்லாவிட்டால்: பிச்சைதான் எடுக்க வேண்டும். அதுவும் கப்பலேறிப் போய் பிச்சை எடுக்க. வேண்டும். ஆதலால் அவை ஒன்றும் கொஞ்சம்கூட வாலாட்டமுடியாது.
கா: வெள்ளைக்காரன் பார்த்து பரிகாசம் பண்ணமாட்டானா?
ம: அவன் காரியம் நாம் பார்க்கிறோம். நமக்கு கஷ்டக்கூட்டுத்தான். உண்டு. இதில் அவன் கோபம் என்ன வந்தது- வந்தால் பழையபடி “ஏகாதிபத்தியம் ஒழிய” என்றால் தீர்ந்தது. யுத்தம் வேறே வரப்போகுது. அவனும் கோடி கோடியாய் கடன் கேட்பான். அப்புறம் நமக்கு கோபம்.
குடிஅரசு - 1938 (2) —— 00௦
வராதா? அளந்த வள்ளத்தில் நாம் அளப்போம் என்று அவனுக்குத் தெரியும். தவிரவும் நாம் எவ்வளவோ மானம்கெட்டு வெட்கம் கெட்டு அவனுக்கு நல்ல பிள்ளையாய் இருக்கிறோம். இதெல்லாம் அவனுக்குத் தெரியாதா?
கா: இதெல்லாம் போனால் போகட்டும். மகாத்மா காந்தி இருக்கிறாரே, அவர் சகிப்பாரா இந்த அக்கிரமங்களை?
ம: அந்த மகாத்மா நாம் செய்து வைத்த மகாத்மா தானே. அப்படி ஏதாவது அவர் குறை கூறினால் அப்புறம் நமக்கு தெரியாதா அவரை சதாரண ஆத்மா பண்ணிவிட. நம்மைவிட அவருக்கு நன்றாய் தெரியும். தென்னாட்டுப் பார்ப்பான் நினைத்தால் தாம் சாதாரண ஆத்மாவாகக் கூட இருக்க முடியாது என்பது
கா: கடைசியாக கடவுள் ஒருவர் இருக்கிறாரே அவருக்காவது பொறுக்க வேண்டாமா?
ம: எந்தக் கடவுளப்பா? நாம் கற்பித்த கடவுள்தானே? “கடவுளே. நாங்கள் செய்வதைப் பார்க்காதே கண்ணை மூடிக்கொள்” என்றால் கண்ணை மூடிக் கொள்ளும். நாம் படைத்த கடவுளுக்கே நம் இஷ்டம். போல் அவயவம், குணம் கற்பிக்க நமக்கு முடியும். ஆதலால். ஒன்றுக்கும் நீ கவலைப்படாதே.
காட சரி இவ்வளவு அக்கிரமங்களை சகித்துக் கொண்டு நாங்கள். உங்களுக்கு “ஜே” போடுகிறோமே அப்புறம் எங்களுக்கு என்ன லாபம்?
ம: அதை வேண்டுமானால் கேளு, கதர் வேஷ்டி சும்மா தருகிறோம். அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு எங்கேயோ போய் எப்படியோ நடந்துகொள். நாங்கள் கவனிப்பதில்லை.அவ்வளவதான் முடியும். வேண்டுமானால் கவுன்சிலர், சேர்மென், வைஸ் சேர்மென், பஞ்சாயத்து மெம்பர், பிரசிடெண்ட், வைஸ்பிரசிடெண்ட் சக்தி இருந்தால். அடித்துக் கொள். உனக்கு விட்டுவிடுகிறோம். குறை கூறாதே!
காட போதும் ஸ்வாமி, பிழைத்தோம்! இன்னும் இரண்டு கோடி வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளுங்கள்.
ம: போதும் இனி நாளை வருஷத்துக்குத் தான்.
கா: போய்ட்டு வருகிறேன்.
குடி அரசு - உரையாடல் - 11.09.1938
யர... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
நமது வேண்டுகோன்
தேச விடுதலைக்காக காங்கரசில் சேர்ந்து உழைத்த அனுபவத்தினால். இந்திய விடுதலைக்கு வெள்ளைக்கார ஆட்சியைவிட பார்ப்பனீயக் கொடுமையே பெரிய தடையாக இருக்கிறதென்றும் காங்கரசில் இருந்து கொண்டு அந்தப் பார்ப்பனீயக் கொடுமையை ஒழிக்க முடியாதென்றும் உணர்ந்த தோழர் ஈ.வெ.ரா. காங்கரசிலிறாந்து விலகி சுயமரியாதை: இயக்கம் கண்டு அவரது சக்திக்கும் புத்திக்கும் இயன்றபடி உழைத்து வரவே பார்ப்பனீயத்துக்குப் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த. கடவுள்களும் பெருந் துணையாயிருப்பதினால் பார்ப்பன மதமும். பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் ஒழிந்தால்தான் பார்ப்பனீயம் அழியுமெனக் கண்டு பார்ப்பன மதத்தையும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களையும் தாக்கி வரலானார். அதனால் தென்னாட்டுப் பார்ப்பன. சமூகம் முழுதும் அவருக்கு எதிரியாயிற்று. எல்லாத்துறைகளிலும். பார்ப்பனர் ஆதிக்கமே இறாந்து வந்ததினால் பலவழியிலும் தோழர் ஈ.வெ.ரா. ஹிம்சிக்கப்பட்டார். டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களை: அரசியல் விதவையாக்கி மூலையில் உட்கார வைத்துவிட்டது போல்-தோழர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவரது தமிழ் உணர்ச்சி முழுமையையும் அடக்கிக் கொண்டு மறைமுகமாகவாவது பார்ப்பனிபத்துக்கு ஆதரவளிக்கும்படி செய்துவிட்டதுபோல் - தோழர் ஈ.வெ.ராமசாமியை அரசியல் சமூக விதவையாக்கவும் அது சாத்தியமில்லையானால் பார்ப்பனீபத்துக்கு புகழ் பாடும்படி செய்யவும். தென்னாட்டு பார்ப்பன உலகம் பெரிதும் முயன்று பார்த்தது.
ஈ.வெ.ரா. மீது பழி.
தோழர் ஈ.வெ.ரா.வை நாஸ்திகன் என்றும் தேசத்துரோகியென்றும் பிராமணத் துரோகியென்றும், சர்க்கார் தாசன் என்றும் இகழ்ந்து கூறி அவர் மீது பொது ஜனங்களுக்கு-முக்கியமாக மத நம்பிக்கையுடையவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகும்படி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் தோழர் ஈ.வெ.ரா. வெளியுதவியை நம்பாது தமது சுயபலத்தையும் நாணயத்தையும் நேர்மையையுமே முக்கியமாக நம்பியிருந்ததினால் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை. ஆகவே பெரிய நெருக்கடிக்கிடையில் - விபீஷணர்களான நம்மவர்களின். தொல்லைகளையும் ஒருவாறு தாங்கிக்கொண்டு கருமமே கண்ணாய்
குடி அரசு -198(29௨ ப
உழைத்துவரும் காலையில் ஏழு மாகாணங்களில் காங்கரஸ் ஆட்சி. ஆரம்பமாயிற்று. அதிர்ஷ்டவசமாகவோ, துரதிர்ஷ்டமாகவோ சென்னை: மாகாணத்துக்கு தோழர் ஈ.வெ.ரா.வின் பழைய நண்பரான தோழர் ராஜகோபாலாச்ளரியார் முதன் மந்திரியானார். 'பாம்பறியும் பாம்பின். கால்: என்றபடி, தோழர் ஆச்சாரியாருடன் வெகுநாள் பழகிய தோழர். ஈ.வெடரா.வுக்கு ஆச்சாரியாரின் தனிக்குணம் நன்கு தெரியுமாகையினால்: அவரது ஆட்சியிலே பார்ப்பனீயத்தை நிலைநாட்டவும் தமிழர்களை: ஒடுக்கவும் அவரால் சாத்தியமான காரியங்களையெல்லாம் செய்து விடுவார். என உறுதியாக நம்பி அவரது ஆட்சிப் போக்கை வெகு நுட்பமாக கவனித்துக். கொண்டிருந்தார். ஆச்சாரியாரின் மதுவிலக்குத் திட்டமும் விவசாயிகள். கடன் நிவாரணச் சட்டமும் ஆச்சாரியாரின் அந்தரங்க நோக்கத்தை தோழர். ஈ.வெ.ரா.வுக்கு பளிச்சென்று காட்டிக் கொடுத்தது பார்ப்பனரல்லாதாரை அடி முட்டாளாக்குவதும் பார்ப்பன அடிமைகளாக்குவதுமே ஆச்சாரியாரின். அந்தச் சீர்திருத்தச் சட்டங்களின் அடிப்படையான நோக்கம் என்பதை உணர்ந்த தோழர் ஈ.வெ.ரா. அவ்விரண்டையும் கண்டித்து விடுதலையிலும் குடிஅரசிலும் பத்தி பத்தியாய் எழுதத் தொடங்கினார். தென்னாடு முழுவதும்
சுற்றுப் பிரயாணம் செய்து நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்களிலும் கண்டித்துப் பேசினார் தமிழ்மக்கள் ஆச்சாரியார் சூழ்ச்சிகளை ஓரளவு உணர்ந்து வரும்போது 125 பள்ளிக் கூடங்களில் இந்தி கட்டாயப் பாடத்தை புகுத்த. தோழர் ஆச்சாரியார் ஏற்பாடு செய்தார். வருணாச்சிரமக் கொடுமைகளிலிருந்து தமிழர்களை மீட்பதற்கு சுமார் 1 வியாழ வட்ட காலமாக அரும்பாடுபட்டுவரும். தோழர் ஈ.வெ.ரா. தமிழர்களை மீண்டும் ஆரியத்துக்கு அடிமைப்படுத்த இந்தி கட்டாய பாடத்தின்பேரால் - தேசீயப் பொது மொழியின் பேரால்: அடிகோலி வருவதைக் கண்டு தம் முழு சக்தியையும் பிரயோகித்து தோழர். ஆச்சாரியாரை எதிர்ப்பதென முடிவு செய்தார்.
இந்தி கட்டாயப் புரட்டை உணர்ந்தவர் தோழர் ஈ.வெ.ரா. மட்டுமல்ல. சிவமதவாதியான மறைமலையடிகளும், காங்கரஸ்வாதியான தோழர். சோமசுந்தர பாரதியாரும், ஜஸ்டிஸ்வாதியான ஸர்.கெ.வி. ரெட்டி நாயுடு, ஸர்.எம்.கிருஷ்ணன் நாயர், மிதவாதியான தோழர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார், வர்ணாச்சிரம தர்மியான தோழர் சாரநாதய்யங்கார் போன்ற இன்னும் பற்பல தென்னாட்டுத் தலைவர்களும் உணர்ந்து தத்தம் அபிப்பிராயங்களை வெளியிடலாயினர்.
இந்தி எதிர்ப்புக் கமிட்டி அதன்பயனாக திருச்சியில் தமிழர் மகாநாடு கூட்டப்பட்டதையும் இந்தி எதிர்ப்புக் கமிட்டி ஸ்தாபிக்கப்பட்டதையும் அனைவரும் அறிவர். நாளடைவில் இந்தி எதிர்ப்பு இயக்கம் வலுப்பெற்று வருவதுகண்டு, திகைப்படைந்த தோழர் ஆச்சாரியார் இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத். தமிழர்கள் எல்லாம் ஆதரிக்கவில்லையென்றும் ஆரிய விரோதியான.
M வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஒரு நண்பருடையவும் காங்கரஸ் விரோதியான ஒரு நண்பருடையவும் குழ்ச்சியே இந்தி எதிர்ப்பு புரளியென்றும் சட்டசபையிலும் பொதுக்: கூட்டங்களிலும் பேசத் தொடங்கினார். அதைப் பார்த்து ஆத்திரமடைந்த தமிழர்கள் சிலர் இந்தியை எதிர்ப்பவர்கள் ஆரிய விரோதியும் காங்கரஸ் விரோதியும் அல்லவெனக் காட்ட நேரடியாக தமது எதிர்ப்பை காட்ட முன்வந்தனர். அதன் பயனாக இன்று வரை 310-6ேர் சிறை புகுந்திருக். கின்றனர். பலர் வழக்கு விசாரணையிலிருந்து வருகிறது. காங்கரஸ்காரர். வெறுத்த கிரிமினல் திருத்தச் சட்டமும் சென்னை மாகாணத்திலேதான். தாண்டவமாடுகிறது. வடநாட்டு காங்கரஸ் பத்திரிகைகள் எல்லாம் கனம்: ஆச்சாரியாரைத் தாக்குகின்றன. தென்னாட்டுக்கு விஜயம் செய்ய இருந்த காங்கரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திரபோசும் தென்னாட்டில் தலைநீட்ட அஞ்சி தமது பிரயாணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்கிறார். சென்னை மாநகரம் முழுதும் காங்கரஸை எதிர்த்து நிற்கின்றது. இந்தத் தொல்லைகளை எல்லாம் ஒழித்துத் தாம் நிம்மதியாகத் தூங்க வேண்டுமானால் தோழர் ஈ. வெ. ராவை சிறையில் போட்டாக வேண்டுமென்று ஆச்சாரியார் எண்ணி அவரை கைது செய்ய முடிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே சிறை புகத் துணிந்து இன்று தோழர் ஈ.வெ.ரா. சென்னைக்குச் சென்றுவிட்டார்.
தமிழர்கள் கடமை:
மற்ற விஷயங்க எல்லாம் வேறிடத்து வெளிவரும் அவரது அறிக்கை விரித்துக் கூறும். இந்நிலையில் தமிழர்கள் கடமை என்ன? சுயமரியாதைக்காரர்கள் கடமை என்ன? தோழர் ஈ.வெ.ரா. அறிக்கையை கருத்திருத்திப் படித்துப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இந்த நெருக்கடியான. சமயத்திலே அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது விளங்கா. தொழியாது. பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் காங்கரஸ் கொள்கை பிடியாமல் விலகியவர்களுக்கும் காங்கரஸிலிருந்து விரட்டப்பட்டவர்களுக்கும் கருவியாக விடுதலை, குடி அரசு, பகுத்தறிவு ஆகிய மூன்று பத்திரிகைகளுமே. இருந்து வருகின்றன. அம்மூன்று பத்திரிகைகளும் தென்னாட்டுக்கு. ஆற்றிவரும் தொண்டை நாமே விரித்துக் கூறுவது தற்புகழ்ச்சியாக முடியுமென அஞ்சுகிறோம். தோழர் ஈ.வெ.ராவின் ஊழியத்துக்கு நன்றி செலுத்தக்கடமைப்பட்டவர்களுக்கு அவரது பத்திரிகைகள் தளர்ச்சியடையாமல் காப்பாற்றுவதைவிட நன்றி காட்டும் மார்க்கம் வேறே இல்லை. ஆகவே அவரது பத்திரிகைகளை ஆதரிப்பதுடன் மேற்கொண்டு அவர் அவ்வப்போது வெளியிடும் கட்டளைகளைச் சிரமேற்றாங்கி கடனாற்றவும். தமிழர்கள் சித்தமாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.09.1938.
குடிஅரசு -1938 (2) —— 0
இந்தியை இன்று எதிர்க்கவில்லை
12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த அதாவது 1923-ம் வருடத்திலிருந்தே இந்தியைக் கண்டித்து வந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் சார்பில் கூடுகிற ஒவ்வொரு மகாநாடுகளிலும் இந்தியைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் பட்டிருக்கின்றன. உதாரணமாக 1931 வருடம் ஜுன் மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா சுயமரியாதை மகாநாட்டில் இந்தியை கண்டித்து ஒரு: தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அந்த தீர்மானத்தை தோழர் சாமி சிதம்பரணர் அவர்கள் பிரேரேபித்தார். தோழர் 5. ராமநாதன் (இப்பொழுது விளம்பர மந்திரியாக இருப்பவர்) அவர்கள் ஆமோதித்து அதனால் ஏற்படும்தீமைகளைப் பற்றிப்பேசி இருக்கிறார்.
அந்தத் தீர்மானத்தின் பேரில் 1931-ம் வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி “குடி அரசு” பத்திரிகை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி இருக்கிறது அந்தத் தலையங்கத்தில் பெரிதும், அந்தத் தீர்மானத்தை பிரேரேபித்தவரும். ஆமோதித்தவரும் பேசிய பேச்சுக்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பின்னார் பிரசரிக்கப்படும்.
அந்த மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் வருமாறு- “பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவை வளர்க்கும் விஷயங்களுக்குதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கற் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடை பரப்பவும், நவீன தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில். எழும்பியிருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடை தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது...”
பிரேரேபித்தவர், சாமி சிதம்பரனார். ஆமோதித்தவர், எஸ். இராமநாதன்.
குடி அரசு - கட்டுரை - 11.09.1938. மட... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
ஈ.வெ.ரா. அறிக்கை
பரீஸக்ஷ பார்க்க தொண்டர்களுக்கு வேண்டுகோள்.
இதுவரை எந்த பத்திரிகைகளுக்கும், இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி சம்பந்தமாக நான் ஒரு அறிக்கையும் விடுக்கவில்லை.
ஆனால், இப்பொழுது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை குறித்து எனது. அபிப்பிராயத்தை வெளியிட வேண்டும் என நான் கருதுகிறேன். அதோடு. களம் பிரதம மந்திரி தோழர் சி.ராஜகோபாலாச்சரியார் இந்தி எதிர்ப்பாளர்களை: குண்டர்கள் என்றும் குண்டர்கள் கிளர்ச்சி என்றும் கூறியிருப்பதற்கும் இச் சமயத்தில் பதில் எழுத வேண்டுமென்று கருதுகின்றேன்.
சென்றவாரம் பொப்பிலிராஜா சாஹிப் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக்: குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுமிக்க பெருந்தன்மையாகவும் அவரது பரம்பரைக்கு ஏற்றதாகவும் இருந்தது என்பதுடன் அதில். நிலைமையை நன்கு ஆராய்ந்து விளக்கப்பட்டுமிருந்தது. மேலும் அதில். இந்தி பிரச்சினையை குறித்து பொதுஜன வாக்கு எடுக்க வேண்டும். என்றும் இரு கட்சியினரும் இதற்கு கட்டுப்பட வேண்டுமென்றும் காட்டப்பட்டிருந்தது.
அது ஒரு நேர்மையான யோசனைதான். அதை எவரும் மறுக்கவு மாட்டார்கள். காங்கரசுக்காரர்களும் காந்தியாரும் இந்த பொதுஜன. வாக்கை மதித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இது சமயம் மாத்திரம் கனம் ராஜகோபாலாச்சாரியார் இந்த யோசனையைக் கண்டு ஆத்திரங் கொண்டு விட்டார். வேறு பதில். சொல்ல வகையில்லாததால் இந்த இயக்கத்தில் சம்பந்தப்பட்டவர்களை: வாயில் வந்தபடி கன்னா பின்னா என்று வசைமாரி பொழிய ஆரம்பித்துவிட்டார். இதன்மூலம் ஆச்சாரியாரின் உண்மை நிறம். விளங்கிட்டதுடன் இந்தி எதிர்ப்பாளர் மீது கிரிமினல் திருத்தச் சட்டத்தை பிரயோகிப்பது காங்கரஸ் மந்திரிகளுக்கு எவ்வளவு முரணான. காரியம் என்பதையும் ராஜா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தி எதிர்ப்பாளர் மீது காங்கரஸ் மந்திரிகள் “கொடிய” கிரிமினல். திருத்தச் சட்டத்தை பிரயோகிப்பதை ராஜா சாஹிப் மட்டுமல்ல, தோழர் ஆச்சாரியாரின் அந்தரங்க நண்பர்களும் கண்டித்திருக்கிறார்கள்.
குடி அரசு - 1938 (2) —— ௦
தோழர் ஆச்சாரியார் கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிப்பதை. அவரது நண்பர்கள் மட்டுமல்ல வடநாட்டு காங்கரஸ் பத்திரிகைகள். எல்லாமும் கண்டித்திருக்கின்றன.
அப்படியிருந்தும் “ராஜாவுடன் ராஜீய விஷயங்களைக் குறித்தோ நிர்வாக விஷயங்களைக் குறித்தோ வாதஞ்செய்ய விரும்பவில்லை' என தோழர் ஆச்சாரியார் கூறுகிறார். வாதத்துக்கு ஆதாரமிருந்தால். ஆச்சாரியார் அப்படிச் சொல்லி மறைந்து கொண்டிருப்பாரா?'
தோழர் ஆச்சாரியாருடன் ராஜீய விஷயங்களைக் குறித்தோ நிர்வாக விஷயங்களை குறித்தோ வாதஞ் செய்ய ராஜா சாஹிப் ஆவல் கொண்டிருக்கிறார் என நான் கருதவில்லை.
அன்று எந்தச் சட்டத்தை தோழர் ஆச்சாரியாரும் அவரது காக்களும் கண்டித்தார்களோ இன்னும் அவரது சகாக்கள் கண்டித்து வருகிறார்களோ அதே சட்டத்தை தோழர் ஆச்சாரியார் உபயோகித்து வரும் மதியீனத்தைத் தான் ராஜாசாஹிப் விளக்கியிருக்கிறார்.
கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிப்பதற்குத் தகுந்த காரணங்கள் நாளதுவரை தோழர் ஆச்சாரியார் விளக்காமல் பொருத்தமற்ற கதைகளையும் பழமொழிகளையும் உதாரணங்களையும் சொல்லிக். கொண்டு தமது தப்பிதத்தை மறைத்துக் கொண்டு ராஜா சாஹிப்பின் நண்பர்களையும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களையும் குறைகூறிக். கொண்டு அவர்கள் மீது பழி சுமத்தி வருகிறார். இதுவரை அவர் தமது செய்கைக்கு சமாதானமாக கூறுவது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள் வாயில் வந்தபடி ஆபாசமான வார்த்தைகளை உபயோகிக்கிறார்கள் என்றும் அதை தடுப்பதற்காகத்தான் இந்தச் சட்டத்தை உபயோகிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதைத்தான் அவர் திருப்பித் திருப்பிச் சொல்லி வருகிறார். வடநாட்டுத் தலைவர்களும் இதை நம்பியிருப்பதாகவும் தெரிய வருகிறது.
தோழர் காந்தியார்கூட இந்தி எதிர்ப்பாளர் ஆபாசமான. வார்த்தைகளை உபயோகித்து வருவதாக கருதுகிறாராம். இதற்குக் காரணம் தோழர் ஆச்சாரியார் விடாமல் அதையே சொல்லிக் கொண்டு வருவது என்பதேயாகும்.
எனது நண்பர் தோழர்ஆச்சாரியார் சொல்வது உண்மையாயிருந்தால் தூஷணையான வார்த்தைகளை உபயோகிப்பவர்கள் மீது ஏன் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கேட்கிறேன். இதுவரை கிரிமினல் திருத்தச் சட்டப்படி சுமார் 300 பேர்கள். தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் எவரும் ஆபாசமான. வார்த்தைகளை உபயோகித்தனர் என்று குற்றம் சாட்டப்படவில்லையே.
ம வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் தோழர் ஆச்சாரியார் வீட்டுமுன்: கூச்சல் போடும் போது போலீஸ்காரர்கள் பிரசன்னமாயிருக்கிறார்கள். அவர்கள் இம்மாதிரி ஆபாச வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் அப். போலீஸ்காரர்களை சாட்சியாக கொண்டு வந்திருக்கலாம். ஏன் தோழர் ஆச்சாரியார். இந்த அற்ப விஷயத்தை செய்யவில்லை? இதைச் செய்யமாட்டாத இவர் இந்தி எதிர்ப்பாளர்கள் காலித்தனமாக நடந்து கொள்ளுகிறார்கள், அதை அடக்க கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக்கிறேன் என்று சொல்லுவது உண்மையாகுமா? இக்காரியத்தை நோக்கும்போது எனக்கு ஒன்று ஞாபகத்துக்கு. வருகிறது. அதாவது ஆங்கிலத்தில் “Givethe dog abadname and hang it” என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது நாயைக் கொல்ல வேண்டுமானால் அதற்கு முதலில் கெட்ட பெயரை உண்டு பண்ணி அப்புறம் அதைக் கொன்றுவிடு என்பதாகும். அதுபோலவே ஒரு. இயக்கத்தையோ, ஒரு முயற்சியையோ அழிக்க வேண்டுமானால் அதற்கு. ஒரு கெட்ட பெயரையோ அல்லது அதன்மீது ஒரு பொய் பழியையோ உண்டு பண்ணி பிரசாரம் செய்து அழித்துவிடுவது என்பதாகும்.
“நடு இரவில் வீட்டில் திருடன் புகுந்துவிட்டால் கைக்குக் கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு தானே திருடனைத் தாக்க வேண்டு”மென: திருவல்லிக்கேணி கடற்கரையில் தோழர் ஆச்சாரியார் பேசுகையில். தனது அடக்குமுறைக்கு சமாதானம் கூறியிருக்கிறார். இந்த ஒரு கூற்றே தோழர் ஆச்சாரியார் மனக் கருத்தை பளிங்கு. போல் விளக்கி விட்டது
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி வலுவடைந்து வருவதைக் கண்டு தோழர். ஆச்சாரியார் உடல் தளதளர்த்து -விடவிடத்துவிட்டார் என்பதில் சந்தேகமில்லை.
இந்தி எதிர்ப்புக்கு நாட்டில் எவ்வளவு செல்வாக்கிருக்கிறது என்பதை திருவல்லிக்கேணி கடற்கரை கூட்டங்கள் நன்கு விளக்கி விட்டன. ஆதலால் தோழர் ஆச்சாரியார், இந்தி எதிர்ப்பாளர் ஆபாச வார்த்தைகளைச் சொல்லி வருகிறார்கள் என்று சாக்கு சொல்லிவரும் வாதத்தை ஒழிப்பதற்காக, இனிமேல் இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள், பொது ஜனங்களுக்கு உண்மையை அறியச் செய்ய வேண்டியது அவசியமாகும். எப்படி என்றால் மறியல் என்றால் அது எப்படி நடக்கிறது, அங்கு என்னென்ன நடக்கிறது, தொண்டர்கள் என்ன சொல்லுகிறார்கள்? என்பன போன்ற விஷயங்கள் பொது ஜனங்கள் அறியமுடியாதபடி ஒரு மூலையில் குடி இருக்கும் தோழர் ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்தில் தொண்டர்கள் நிற்பதால் அவர்கள் என்ன வேண்டுமாணலும் கற்பித்துக் கொள்ள சவுகரியமாகிவிடுகிறது. ஆதலால் அதை நிறுத்தி வைக்க வேண்டுமென்று தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
குடி அரசு - 1938 (2) —— யப
“தமிழ் வாழ்க” “இந்தி வீழ்க” என்ற கோஷங்களைத் தவிர வேறு கோஷங்களை இந்தி எதிர்ப்பு வாலிபத் தொண்டர்கள் செய்யமாட்டார்கள் என்பதும் செய்யவில்லை என்பதும் எனக்கு நன்கு தெரியும். சமாதானமாகவும், ஒழுங்காகவும் நடந்துகொள்வார்கள் என்பதும். எனக்குத் தெரியும். என்றாலும் இது எல்லோரும் அறியும்படி இப்போது நடந்து வருவதை போலவே இனிமேலும் பள்ளிக்கூடத்தின் முன் மட்டும். நடத்திப் பார்ப்பது நலமாகும். இதன் பேரிலாவது தோழர் ஆச்சாரியார். இந்த பழிகூறாமலும் கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு அடக்கப் பார்க்காமலுமிருக்கிறாரா என்று பார்ப்போம்.
தோழர் காந்தியார் கூட அந்த சட்டத்தின் கொடுமையான பகுதிகள். தாமதமன்னியில் ஒழிக்கப்பட வேண்டுமென தமது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இப்பொழுது இங்கு தோன்றியுள்ள பிரச்சினை இக்கிரிமினல். திருத்தச் சட்டம் இந்தி எதிர்ப்பாளர் மீது மட்டுந்தான் பிரயோகிக்கப்படுமா, மற்ற விஷயங்களிலும் பிரயோகிக்கப்படுமா என்பதாகும். ஏனெனில். ஜான்சிபார் கிராம்பை பகிஷ்கரித்து கடைக்காரர்கள் முன் மறியல் செய்த காங்கரஸ்காரர்கள் மீதும் அதற்கு ஆதரவளித்து கட்டளை இட்ட தலைவர்கள் மீதும் ஏன் இந்தச் சட்டம் பிரயோகிக்கப் படவில்லை.
ஒரு வேளை தோழர் ஆச்சாரியாருக்கு ஆளுக்கொரு நீதி காட்டும். குணம் இருக்கிறது போலும். ஆகவே தோழர் ஆச்சாரியார் வீட்டு மூன் மறியல் செய்வதை நிறுத்தி வைத்து பார்க்க வேண்டுமென்று இந்தி எதிர்ப்புத் தொண்டர்களை: மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு: இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தொடர்பாக சுயமரியாதை இயக்கத் தலைவர்தோழர் ஈ.வெ.ரா: செப்டம்பர் 16 இல் செய்தித்தாள்களுக்கு: அளித்த அறிக்கை:
குடி அரசு - அறிக்கை - 18.09.1938
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
*மகாத்மா? புரட்டு
“கடவுள்'களையும், அவதாரங்களையும் காட்டி மக்களை: ஏமாற்றுவது இந்தியாவிலே தொன்று தொட்ட வழக்கமாக
இருந்திருக்கிறது. 'கடவுள்' ஆகவும், அவதார புருஷர்கள் ஆகவும் விரும்பாதவர்களையும் கூட பாமர மக்கள் பிற்காலத்தில் கடவுள்களாக்கி அவதார புருஷர்களாக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து தேர்திருவிழா. நடத்திக் கொண்டாடுவது இந்தப் பாழும் இந்தியாவிலே, ஒரு வாடிக்கையாகிவிட்டது. புத்தர் ஒரு சீர்திருத்தக்காரர். மதப்புரட்டையும் பார்ப்பனப் புரட்டையும் வெட்ட வெளிச்சமாக்கி மக்களுக்கு நேரான. பகுத்தறிவுக்குப் பொருந்திய ஊந்தி வழிகாட்டுவதே அவரது லக்ஷயமாக: இருந்தது. அவரையும் கூட அவரது சிஷ்யர்கள் பிற்காலத்தில் அவதார புருஷராக்கி ஆலயப் பிரதிஷ்டை செய்து புத்தமதத்தை இந்து மதத்திலும். கீழான மதமாக்கி இந்தியாவிலே புத்தமதம் பூண்டு அற்றுப்போகும்படி செய்துவிட்டார்கள். குருட்டு நம்பிக்கையுடையவர்களை வசியப்படுத்த மதம் ஒரு சுளுவான கருவியாக இருப்பதினால் மத சம்பந்தமில்லாத துறைகளிலும் ஒரு சொட்டு மதத்தைப் புகுத்தி மக்களை ஏமாற்றுவது ஒரு பெருவழக்காகப் போய்விட்டது. இந்த உண்மையை உணர்ந்தே தோழர் காந்தி இந்திய அரசியலில் புகுந்ததும் அரசியலோடு மதத்தையும் புகுத்தினார். தென்னாப்பிரிக்கா ஒத்துழையாமைப் போருக்குப் பிறகு காந்தியார் இந்தியாவுக்கு வந்தவுடன் அவருடைய அபிமானிகள் சிலர் தாங்கள் இந்திய அரசியலில் ஈடுபட்டு. இந்தியர்களுக்கு ஏன் தலைமை வகித்து நடத்தக் கூடாது எனக்கேட்டபோது “அரசியலை ஒரு மதமாக அனுஷ்டிக்கும் காலம் இன்னும் இந்தியாவில் வரவில்லை. அக்காலம் வரும்போது நான். அரசியலில் வலிய ஈடுபடுவேன்” எனச் சொன்னாராம்.
காந்தி அரசியல் பிரவேசம்.
திலகர் மறைந்ததோடு அந்தக் காலமும் வந்தது. அதுவே தருணமென எண்ணி காந்தியாரும் இந்திய அரசியலில் புகுந்தார். பாமர மக்களை ஏய்க்க மேனாட்டு உடையோ, அவரது மரபுடையான. பனியாவுடையோ பொருந்தாதென எண்ணி இடுப்புத்துணி கட்டிக்கொண்டார். பழங்கால முனிவர்களைப் போல் கந்தமூலம் புசிப்பதாக பாவனை:
கடி அரசு - 1938 (2) —— 10
பண்ணிக் கொண்டு நீலகிரித் தேனும் போஷணை யளிக்கும் சுவைபொருந்திய கனிகளும் அருந்தத் தொடங்கினார். அடிக்கடி பட்டினி விரதம் இருந்து மெளனவிரதம் பூண்டு ஞானி வேஷமும் பூண்டார். காலை மாலை பிரார்த்தனைகளும் நடத்தலானார். பாமர மக்களுக்கு இனி என்ன வேண்டும்? காந்தி கடவுள் அவதாரம் எனக் கண்ணை மூடிக் கொண்டு நம்பத் தொடங்கினர். பட்டதாரிகளான சோம்பேறிகளும் அவளைச் சூழ்ந்து கொண்டு அவரை விளம்பரப்படுத்தி தம் வாழ்நாளை: கழிக்க வகை தேடிக் கொண்டனர். நல்ல வேளையிலோ பொல்லாத வேளையிலோ ஆனிபெசண்டு அம்மையாரும் காந்திக்கு “மகாத்மா” பட்டம் சூட்டினார். ஆனிபெசண்டம்மையார் எல்லா மத தத்துவங்களும் அடங்கிய எம்மதமும் சம்மதம் என்னும் கொள்கையுடைய பிரம்ம ஞான மதத்தராயினும் பிராமண மதத்திலேயே அவருக்கு அதிகபத்தி. பிராமணர்களை “பிராமின்ஸ்” என ஆங்கிலத்தில் எழுதுவதுகூட அவருக்கு மிக வெறுப்பு. ஆங்கிலத்திலே “பிராஹ்மனர்” என முழு ஒலியுடன் எழுதத் தொடங்கியவர் ஆனிபெசண்டு அம்மையாரே. ஆகவே காந்தியையும் “மகாத்மா” என விளம்பரம் செய்தால் காந்தி பக்தர்கள் ஆதரவு தமக்குக் கிடைக்குமெனவும் அவர் ஒருகால். நம்பியிருக்கலாம். அவர் என்ன நோக்கத்துடன் மகாத்மா பட்டம். அளித்திருந்தாலும் “மகாத்மா” பட்டம் அவரை விடமாட்டேன் என: தொத்திப் பிடித்துக் கொண்டே இருக்கிறது.
மாயாஜாலம்
“மகாத்மா” பட்டத்தில் விருப்பமில்லாதவரென அவர் சில சந்தர்ப்பங்களில் ஜாலம் செய்து கொள்வதுமுண்டு. வாஸ்தவத்தில் அவருக்கு “மகாத்மா” பட்டத்தில் விருப்பமில்லை யானால் எவரும் என்னை “மகாத்மா” என அழைக்கக்கூடாதென ஏன் அவர் கண்டிப்பாகக் கூறிவிடக்கூடாது? கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றி “ஹரிஜன்! பத்திரிகைக்கு வாரந்தோறும் வெள்ளைக் காகிதத்தில் கறுப்பு மையால் கிறுக்கிக் கொண்டிருக்கும் காந்தியார் “மகாத்மா! பட்டம் வேண்டாம் என ஏன் ஒரு கட்டுரை எழுதித் தொலைக்கக்கூடாது? அவரது எச்சரிக்கையையும் மீறி யாராவது “மகாத்மா” என எழுதினால் அல்லது அழைத்தால் “சாகும் வரை பட்டினி கிடப்பேன்" என ஏன். புரளி செய்யக்கூடாது? உண்மையில் “மகாத்மா” பட்டம் கிடைத்திருப்பது அவருக்கு உள்ளூர மெத்த சந்தோஷற்தான். வெகு திருப்திதான். எனினும் பட்டம் பதவிகளில் ஆசையில்லாத் தியாகி எனக் காட்டிக் கொள்ளும் பொருட்டு அடிக்கடி பட்டம் வேண்டாம் எனப் பாசாங்கு செய்து வருகிறார். எனினும் எல்லாரும் அவரை “மகாத்மா என அழைப்பதில்லை. காங்கரஸ் அடிமைகளைத் தவிர மற்றவர்கள் எல்லாம். அவரை மிஸ்டர் காந்தி யெனவே எழுதுகிறார்கள், அழைக்கிறார்கள்.
மர... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
பட்டத்தைக் காக்கச். சட்டமா?
எந்த சர்க்காரும் அவரை மகாத்மா என அழைப்பதில்லை. ஆகவே “சர்க்கார் கடிதப் போக்கு வரவுகளில் காந்தியாரைப் பற்றி குறிப்பிடும்போது அவரை மிஸ்டர் என்று குறிப்பிடாமல் மகாத்மா என்று குறிப்பிட வேண்டும் என மத்திய மாகாணப் பிரதம மந்திரி பண்டிட் சுக்லா உத்தரவு போட்டிருக்கிறாராம். ஆகவே சர்க்கார் உத்தரவு மூலம் “மகாத்மா” பட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது வெளிப்படை. இதுபற்றி காந்தியார் பெருமையடையப் போகிறாரா வருத்தப்படபோகிறாரா என்பது தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி நடந்துகொண்டளரேயைக் கொலைசெய்து காங்கரஸ்காரராலேயே - காங்கரஸ் பத்திரிகைகளாலேயே - ஜனநாயக முறைக்கு முரணாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பண்டிட் சுக்லாவுக்கு மத்திய மாகாணப் பிரதம மந்திரி பதவியளிக்கும்படி செய்த காந்திக்கு பண்டிட் சுக்லா நன்றி செலுத்தக் கடமைப் பட்டவரே. நன்றிக்குப் பிரதி நன்றி காட்டுவது உத்தமமானகுணமே. ஆனால் பண்டிட் சுக்லா காந்தியாருக்கு நன்றி காட்டிய முறை அவருக்கு அவமதிப்பையும் உண்டுபண்ணக் கூடியதாகவே இருக்கிறது. அது எப்படியிருந்தாலும் “மகாத்மா” பட்டத்துக்குரிய யோக்கியதை காந்தியாரிடம் உண்டா என ஆராய்ந்து பார்ப்போம். பகுத்தறிவை முன்நிறுத்தி விஷயங்களையும் ஆட்களையும் பரிசீலனை: செய்யும் நேர்மையாளர் எல்லாம் “மகாத்மா” பட்டத்துக்குரிய யோக்கியதை ஒன்றாவது காந்தியாரிடம் இல்லையென்றே கூறுவார்கள்.
காங்கரசில் காந்திக்கு என்ன வேலை.
நான்கு அணா மெம்பர்கூட இல்லாத காந்தியார் காங்கரசிலே சர்வாதிகாரி நாடகம் நடத்தி வருவதே அதற்கு முதல் காரணம். காங்கரசிலிருந்து அவர் நீங்கக் காரணம் என்ன? பார்லிமெண்டரி முறையில் தமக்கு நம்பிக்கையில்லை யென்று சொன்னவர் காங்கரஸ்காரர் பதவியேற்பதை ஆதரித்ததேன்? “காங்கரசிலே பலாத்காரமும் பதவி வேட்டையும், போட்டியும் அதிகமாகிவிட்டது அதன் ஊழல்களின். பளுவினாலேயே அது சின்னாபின்னப்பட்டு அழிந்தொழியக்கூடும். அகிம்ஸையிலும் சத்தியத்திலும் நம்பிக்கையுடையவர்கள் காங்கரஸ் நலத்தை முன்னிட்டு காங்கரசைவிட்டு வெளியேறி காங்கரசில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு ஆக்க வேலை செய்ய வேண்டும்” என 'ஹரிஜன்' பத்திரிகையில் அவரது சொந்தக் கையினாலே எழுதிக்கொண்டு மாகாணங்களில் அரசியல் நெருக்கடியுண்டாகும்போது தலையிட்டு வைஸ்ராய்களுக்கும், கவர்னர்களுக்கும் எச்சரிக்கைகள். அனுப்பி “பலாத்காரமும் பதவி வேட்டையும் போட்டியும் நிரம்பிய” காங்கரஸை ஆதரிக்க முயல்வது என்ன யோக்கியதை? வாக்குக்கும்.
குடி அரசு -198(29௨ ௨ 1
செயலுக்கும் ஒற்றுமை காட்டாத ஒருவரை எப்படி “மகாத்மா” என அழைக்க முடியும்? பட்டினி கிடப்பதும் பிரார்த்தனை நடத்துவதும். மெளன விரதமிருப்பதும் “மகாத்மா” பட்டத்துக்குரிய குணங்களானால். இம்மூன்றிலும் காந்தியாரைத் தோற்கடிக்கக்கூடிய ஆண்டிகள். எத்தனையோ பேர் நாட்டில் இருக்கிறார்களே. அவர்களை ஏன் காங்கரசுக்கு தலைவராக்கக்கூடாது? காங்கரசில் அவருக்கு சர்வாதிகாரி பதவியளித்திருப்பது அவரது அரசியல் ஞானத்துக்காகவா? நேர்மையான குணத்துக்காகவா? அல்லது நாட்டு மக்களுக்குத் தலைமை வகித்து நடத்துவதற்கு அவருக்கிருக்கும் ஆற்றலுக்காகவா? “காந்தியார் காங்கரசைத் தேடிப் போகவில்லை - காங்கரசே காந்தியாரைத் தேடிப் போகிறது. அவருடைய உதவி காங்கரசுக்கு இன்றியமையாததாயிருக்கிறது" என காந்தி பக்தர்கள் ஒரு நொண்டிச் சமாதானம் கூறுவது சர்வ எதாரணமாக இருந்து வருகிறது. அப்படியானால் காந்தி செத்துப் போன. பிறகு காங்கரஸ் என்ன செய்யப்போகிறது? காந்தியை விட்டால். காங்கரஸை இயக்க வேறு ஆளில்லையென ஏற்படுமானால் காங்கரஸை இப்பொழுதே கலைத்து விடுவதல்லவா நல்லது! இந்தியாவுக்கு பூரண: சுயராஜ்யம் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டு பிரமாதமான. திட்டங்கள் போட்டு வேலை செய்து வருவதாய்ச் சொல்லிக்கொள்ளும். காங்கரசுக்கு, காந்தி செத்தால் வேறு கதியில்லையென ஏற்படுமானால் அந்த காங்கரஸ் இப்பொழுதே ஒழிய வேண்டியதுதானே நியாயம்?
தனி மனிதனை நம்பினால்?
காங்கரஸ் திட்டங்களையும் கொள்கைகளையும் நம்பிக் கொண்டு. காங்கரஸ் மந்திரிகள் ஏதேதோ வேலைகள் செய்து வருகிறார்கள். உதாரணமாக சென்னை முதன்மந்திரியார் காங்கரஸை நம்பி சுமார் 4% கோடி வரை கடன் வாங்கி நிருவாகம் நடத்தத் தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் தற்கால நிலையில் எந்த நிமிஷத்திலும் அரசியல் நெருக்கடி
ஏற்படக்கூடும். ஏதேனும் ஒரு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நிலைமையை: சமாளிக்க சக்தியில்லையானால் காங்கரஸ் மந்திரி சபைகள் கவிழத்தானே. செய்யும். கவிழும்போது அவர்கள் போட்டத் திட்டங்களின் கதி என்னாகும்? ஒரு தனி மனிதனை நம்பி வாழும் ஸ்தாபனம் உருப்படுமா? ஒரு ஸ்தாபனத்தின் வெற்றி ஆளைப் பொறுத்ததா? கொள்கையைப் பொறுத்ததா? ஒரு ஸ்தாபனத்தின் கொள்கையும் வேலைத் திட்டமும் ஒழுங்காக இருந்தால் எவர் வேண்டுமானாலும்
அந்த இயக்கத்தை நடத்த முடியும். ஒரு ஆளின் திறமையினாலோ மகிமையினாலோ அல்லது வேறு ஏதேனுமொன்றினாலோ நடத்தப்படும் இயக்கம் நாம் நினைக்கும் பலனை அளிக்கவே செய்யாது. பொய்யான. அடிப்படையின் மீதே இன்று காங்கரஸ் ஸ்தாபனம் நின்று வருகிறது. 19௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மூன்று திட்டங்கள்.
கதர், தீண்டாமை விலக்கு, வார்தா திட்டம் முதலியன குருட்டு. நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டவை காந்தியார் ஆயுட்காலத்திலேயே காதிவஸ்திராலயங்களில் பல லக்ஷம் விலை பிடிக்கக்கூடிய கதர் தேங்கிக் கிடப்பது கதர் திட்டத் தோல்விக்கு மறுக்க முடியாத அத்தாட்சி. நூற்போருக்கு அதிகக் கூலி கொடுக்கும் பொருட்டு கதர் விலையைக் கூட்டும் பொருளாதார ஞானத்தை மதக்கிறுக்கரான காந்தியிடமின்றி வேறு எவரிடமும் காண முடியாது. வங்காளத்திலே கதர் திட்டம் தோல்வியடைந்து விட்டதென்று ஒரு காலத்திலே பெரிய கதர் பக்தராயிருந்தவரும் தம் வாழ்நாளில் ஒரு கண்ணியமான பகுதியை கதர் பிரசாரத்தில் செலவு செய்தவருமான ஸர். பிரபுல்லா சந்திரரே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார். அம்மட்டோ! பொருளாதாரச் சார்பாகப் பார்த்தால் கதர் திட்டம் பெருந்தோல்வியெனவும் தீர்ப்புக் கூறிவிட்டார். இரண்டாவதாகத் தீண்டாமையொழிப்பின் நிலைமை: என்ன? வர்ணாச்சிரமத்தைக் காப்பாற்றிக் கொண்டே தீண்டாமையை ஒழிக்க முடியுமா? நான் கூறும் வர்ணாச்சிரமம் வேறு, வைதீகர் கூறும் வர்ணாச்சிரமம் வேறு என காந்தியார் கூறிக் கொண்டாலும் கிரியாம்சையில் இரண்டும் ஒன்றாகத்தானே இருக்கிறது. ஜாதியை ஒழியாமல் தீண்டாமையை ஒழிக்க முயலும் காந்தியார் முயற்சி எந்நாளாவது வெற்றி பெறுமா? “ஹரிஜன”ங்களுக்கு அனுமதியளியாத அகமாதாபாத் ஹோட்டல்களின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என பம்பாய் சர்க்கார் உத்தரவு போட்டார்கள். ஆனால் அந்த உத்தரவை அமலில் கொண்டு வர பம்பாய் சர்க்காரால் முடியவில்லை. “ஹரிஜன”ங்களுக்கு அனுமதியளிப்பதை விட ஹோட்டல்களையே மூடிவிடுகிறாம் என: ஹோட்டல்காரர்கள் பிடிவாதம் செய்கிறார்கள். அகமதாபாத்தில் காந்தியாருக்கு மிக்க செல்வாக்குண்டு. சர்க்கார் உத்தரவை அமலில்: கொண்டுவரும்படி உதவிபுரிய காந்தியார் ஏன் அகமதாபாத்துக்கு வரக்கூடாது? வந்தால் அவருடைய செல்வாக்கின் யோக்கியதை வெட்ட வெளிச்சமாகிவிடும். அதனாலேயே அகமதாபாத் சமாசாரம் தமது காதில் விழாதது போல பாவனை செய்து கொண்டிருக்கிறார். அப்பால் வார்தா கல்வித்திட்டம் உருப்படாத் திட்டமென கல்வி விஷயமாக அபிப்பிராயம். கூற உரிமையும், ஆற்றலுமுடையவர்கள் எல்லாம் கூறிவிட்டார்கள். கதர், தீண்டாமையொழிப்புத் திட்டங்களுக்கு ஏற்பட்ட கதியே வார்தா. திட்டத்துக்கும் ஏற்படப் போகிறது.
காந்தி கபட சந்யாசி.
காந்தியாரை ரஷ்ய மாய சன்யாசியான ரஷ்புடீனுக்கு ஒப்பிடுவது தப்பாகுமா என “விடுதலை” இம்மாதம் 1-ந் தேதி எழுதிய தலையங்கத்தில் கேட்டது. “சந்தேகம் வேண்டாம். காந்தி அசல்ரஷ்புடீன்தான்.
குடிஅரசு -1938 (2) —— ல
அவருடைய காந்தி சேவாசங்கம் “குளு க்ளக்ஸ் கிளான்! குழுதான்” என பீரார் மாகாணத்தைச் சேர்ந்த தோழர் என்.கே. வாத்யா ந்தியாருக்கு எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த பகிரங்கக் கடிதத்தில் அவர் காந்தியாரைப் பற்றி கூறியிருக்கும். கதை ஒரு பெரியகதை. காந்திக் கிறுக்குகளில் நம்பிக்கையில்லாதவர்களை: அநாமதேயங்களாக்கி காந்தியார் அரசியல் கொலைசெய்துவிட்டார். என்பது தோழர் என்.கே.வாத்யாவின் முதல் குற்றச்சாட்டு. ஆம். கதர் உடுப்பவர்கள்தான் தேசபக்தர்கள், நூல் நூற்பவர்கள்தான் தேசபக்தர்கள், சிறை புகுந்தவர்கள்தான் தேசபக்தர்கள் என ஏற்பட்டுவிட்டதினால் தென்னாட்டிலே அரசியல் அயோக்கியர்களாகிவிட்ட எத்தனையோ அறிவாளிகளையும், அனுபவசாலிகளையும் நாம் பார்க்கவில்லையா? மாஜி திவான் பகதூர் டி.எ.ராமலிங்கம் செட்டியாருக்கு ஆச்சாரியார் தயவினால் கெளன்சிலில் ஒரு மெம்பர் பதவியாம். தோழர் சுப்பய்யாவுக்கு உரிமையினால் அசம்பிளியில் மெம்பர் பதவியாம். (ஊங்கரசில் சோத பார்ப்பனரல்லாதாரி) அவர்கள் எவ்வளவு மேதாவிகளாக இருந்தாலும் அரசியல் வாழ்வுக்கு யோக்கியர்களல்ல என: வைத்துக்கொண்டாலும் மாஜி அட்வகேட் தோழர் டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியாருக்கு தோழர் ஆச்சாரியார் ஆசீர்வாதம் பெற்ற பிறகும். கெளன்சிலிலோ அசம்பிளியிலோ ஒரு ஸ்தானம் பெற முடியாது போய்விட்டதென்றால், இந்திய அரசியல் பொதுவாழ்வு எவ்வளவு தூரம் கேவலமாகிவிட்டதெனக் கூறவும் வேண்டுமா? தோழர் மயிலை ஸ்ரீரிவாசய்யங்கார் மீண்டும் அரசியலில் புகுங் காலத்தைப் பற்றி பிரஸ்தாபித்த போது அரசியலுக்கும் மதத்துக்கும் உள்ள தொடர்பு நீங்கிணல்தான் தோழர் எஸ். ஸ்ரீநிவாசய்யங்கார் மீண்டும் அரசியலில்
புகக் கூடும் என ஸர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஒரு பொதுக் கூட்டத்திலே சொன்னார். ஆம் காந்தியார் மதத்தையும் குருட்டு நம்பிக்கைகளையும் அரசியலில் புகுத்தி இந்திய அரசியல் வாழ்வையே குட்டிச்சுவராக்கிவிட்டார். காலிகளுக்கும், கூலிகளுக்கும், கலாட்டாக் காரர்களுக்குமே இப்பொழுது அரசியலில் இடமுண்டென்ற நிலைமை: ஏற்பட்டுவிட்டது. இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாமல் இந்தியாவுக்கு விமோசனம் ஏற்படப் போவதே இல்லை.
இரண்டாவது குற்றச்சாட்டு.
மாயசந்நியாசி வேஷம் பூண்டு பாமர மக்கள் ஆதரவைப் பெற்று அதன் பயனாக பிரிட்டிஷாரோடு பேரம் பேசிப் பெற்ற அரசியல் அதிகாரத்தை தேசமுன்னேற்றத்துக்கு மூரணான முறையில் காந்தியார். பிரயோகம் செய்து வருகிறார் என்பது தோழர் வாத்யாவின் இரண்டாவது குற்றச்சாட்டு. ஆம் மெய்யே! எப்படியோ காந்தியார் காங்கரஸ் சரவாதிகாரியாகிக் கொண்டார். காந்தியாரோடு பேரம் பேசினாற்றான்.
1... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
அரசியல் விவகாரங்கள் முடிவுபெறுமென பிரிட்டிஷாரும் மனப்பால்.
குடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே காங்கரஸ் மந்திரிகள் மீது அவருக்கு மிகச் செல்வாக்கு இருந்து வருகிறது. காந்தியார் ஆசீர்வாதம். பெறாதவர்களுக்கு மந்திரி பதவியோ காங்கரஸ் தலைவர் பதவியோ கிடையாது என்பது ஒரு காங்கரஸ் ஐதீகமும் ஆகிவிட்டது. இவ்வாறு. பெற்ற அதிகாரத்தை அவர் பிரயோகம் செய்யும் முறை மிகவும். அருவருக்கத்தக்கதாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது. அவருக்கும். அவருடைய சகாக்களுக்கும் வேண்டாதவர்களையெல்லாம் சிரச்சேதம் செய்துவருகிறார். சர்தார் படேலுக்கு வேண்டாத நரிமனும், டாக்டர் காரேயும் கவிழ்க்கப்பட்டுவிட்டனர். காந்தி ஆதரவு பெற்ற படேலின். யதேச்சாதிகாரக் கொடுமையினால் பம்பாய் மாகாண காங்கரஸ் இரண்டுபட்டு நிற்கிறது. காந்தியாருக்கு வேண்டியவரான தோழர் ஆச்சாரியார் செய்யும் அட்டூழியங்களுக்கெல்லாம் காந்தியார் பகிரங்கமாக ஆதரவளித்தும் வருகிறார். காங்கரஸ் தலைவரையோ காங்கரஸ் காரியக் கமிட்டியையோ அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியையோ லக்ஷ்யம் செய்யாமல் தன்னிஷ்டப்படி காரியங்கள் நடத்தி வருவதுடன் தமது உதவியில்லாமல் காங்கரஸ் காரியங்களே நடைபெறாதென பெரும்பாலான. காங்கரஸ் தலைவர்கள் நம்பும்படி இந்த இந்திய ரஸ்புடீனான காந்தியார் மாயாஜாலம் செய்து வெற்றியும் பெற்றுவிட்டார். இவ்வாறாக காந்தியார் திருக்கூத்துக்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போனால்: அது ஒரு பாரதமாக வளர்ந்துவிடும். ஆகவே கடைசியாக அவர். நடத்திய ஒரு திருவிளையாட்டைப் பற்றி மட்டும் சில வார்த்தைகள். கூற விரும்புகிறோம்.
கடைசித் திருவிளையாட்டு.
தரித்திர நாராயணர்களான இந்தியர்களுக்கு சுவர்க்கலோகம். அளிக்கும் பொருட்டு காந்தியார் கிராம கைத்தொழில் அபிவிருத்தி சங்கம். ஒன்று ஸ்தாபித்திருப்பதையும் அது வேலை செய்து வருவதையும் அன்பர்கள் அறிந்திருப்பார்கள். அந்தச் சங்கத்தார் வார்தாவிலே வெல்ல ஆராய்ச்சி நடத்துகிறார்கள். அந்த ஆராய்ச்சிக்காக மத்திய மாகாண -
பீரார் சர்க்கார் இலவசமாக கொஞ்சம் கள்ளிறக்கும் மரங்களையும் கொடுத்திருக்கிறார்களாம். அந்த மரங்களிலிருந்து வார்தா ஆச்சிரம தொண்டர்கள் “கள்! இறக்கி வெல்லம் காய்ச்சும் பொருட்டு செம்புப் பானைகளில் வைத்திருந்தார்களாம். அதைச் சில தொண்டர்கள். குடித்தார்களாம். புளித்துப்போன கள்ளின் விஷத்தினால் மாண்டார்களாம். இந்த ரகசியத்தை வெளியிடாமல் வாந்தி பேதியால் அவர்கள் மாண்டதாக ஒரு கதை கட்டி விடப்பட்டிருக்கிறது. ஆகவே அந்த சம்பவத்தை பற்றிப் பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தோழர் என்.கே. வாத்யா தமது பகிரங்கக் கடிதம் மூலம் காந்தியாரைக் கேட்டிருக்கிறார்.
குடி அரசு -198(29௨ ௨ ௦
கல்விகள்.
1. தங்கள் ஆச்சிரமவாசிகள் மூவர் வாந்தி பேதியால் இறக்க வில்லையென்றும் வேறு நோயால் இறந்தார்கள் என்றும் கூறப்படுவது மெய்தானா?
8. அவர்கள் “பொட்டமின்” விஷத்தால் இறந்தார்கள் என்பது உண்மைதானா?
3. அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நோய்க்காக சிகிச்சை செய்ய வேண்டுமென்று தாங்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ யோசனை சொன்னதுண்டா?
4. வெல்ல ஆராய்ச்சி நடத்தும் பொருட்டு மத்திய மாகாண -பீரார் சர்க்கார் கருணைகர்ந்து இலவசமாக அகில இந்திய கிராமக்: கைத்தொழில் அபிவிர்த்தி சங்கத்துக்களித்த மரங்களிலிருந்து இறக்கிய பதநீரை ஆச்சிரமவாசிகள் சிலர் குடித்ததுண்டா?
5 அப் பதநீரை ஒரு செம்புப் பானையில் வைத்திருந்ததும் அது புளித்து விஷமானதும் மெய்தானா?
6... அந்த விஷமாக மாறிய பதநீரைக் குடித்த ரகசியத்தை வெளியாக்கக் கூடாதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மெய்தானா?'
இக்கேள்விக்கு காந்தியார் விடையளித்தாலும் சரி; விடையளிக்கா. விட்டாலும் சரி. இதுகாறும் நாம் கூறியவற்றால் காந்தியார் “மகாத்மா” பட்டத்துக்கு லாயக்குடையவரல்லவென தைரியமாகக் கூறிவிடலாமல்லவா! அவருடைய செல்வாக்கிலிருந்து - அதிகாரத்திலிருந்து இந்தியா விடுதலை பெறாதாவரை இந்தியா முன்னேற்றமடையப் போவதில்லை. யென்றும் முடிவு கூறலாமல்லவா?
குடி அரசு - தலையங்கம் - 18.09.1938.
18 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
காங்கரஸ் கவுண்சிலர்கன் லஞ்சம் வாங்குவதில்லையாம்
நண்பர்களுக்கு கண்டிராக்ட் கொடுப்பதில்லையாம்
கண்டிராக்டில் பங்கில்லையாம். உத்தியோகத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில்லையாம்
இதற்கு ஆதாரம் ஓரு காங்கரஸ் கவுண்சிலர்.
தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யர் ஒரு காங்கரஸ் வீரராம். தேக்தராம். அவர் சிறைக்குப் போனாரோ என்னவோ தெரியாது. ஆணல் பெரிய தேச பக்தர் நாடகம் ஆடி வருவது ஏதோ உண்மைதான். அவர் சென்னைக் கார்ப்பரேஷனிலே மெம்பராகவுமிருக்கிறார். பார்ப்பனர் நிறைந்த ஒரு தொகுதியால் அவர் இரண்டு முறை கார்ப்பரேஷன். மெம்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 'தினமணி' ஆசிரியர் தோழர் சொக்கலிங்கம் பிள்ளையின் பிரதம தனகர்த்தர். அவர் மூலம் வெளியான கார்ப்பரேஷன் ஊழல் நாடகத்தில் முக்கிய நடிகராயிருந்தவர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யரே. அவர் சென்னை கார்ப்பரேஷன். பள்ளிக்கூடப் புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட கதையை விளக்கும் அவருடைய கடிதம்* அடுத்த பத்திகளில் பார்க்கவும்.
கார்ப்பரேஷன் கவுன்சிலர் அதிலும் காங்கரஸ் கவுன்சிலர். மேற்கண்ட மாதிரி பங்கு கேட்ட விநோதத்தைப் பாருங்கள். சென்னை: முனிசிபல் ஆக்ட் செக்ஷன் 53-கிளாஸ் (ல) பிரகாரம் ஒரு கவுன்சிலர். நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்பரேஷனில் யாதொரு: வியாபார சம்பந்தமோ பணம் சம்பாதித்தலோ கூடாது. அப்படி செய்பவரை கவுன்சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இதைப்பற்றி சென்ற வருஷம் நடந்த விசாரணைக் கமிட்டிக்கு
தெரிவித்திருந்தும் மேற்படி கடிதத்தை அனுப்பி இருந்தும் தோழர்.
குடி அரசு -198(292௨ ய
முத்துரங்க முதலியார் அதை கவனிக்காமல் அவரையே சாட்சியாக வரவழைத்து அவர் வாக்கு மூலங்களை தெய்வ வாக்காக மதித்தாரென்றால். தோழர் முத்துரங்க முதலியாரை தலைவராகக் கொண்டு நடத்திய விளரணைக் கமிட்டியார் எவ்வளவு பொறுப்பற்று நடந்து கொண்டுள்ளார்கள் என்பது நன்கு விளங்கும்.
“திருடனுக்குப் போடப்பா தேங்காய்ப்பால் சாதம்” என்றபடி ஊழல் நிறைந்த, யோக்கியதை இழந்த அந்தப் பிராமணரையே மறுபடியும் பிராமணர் நிறைந்த டிவிஷனில் அபேட்சகராகப் போட்டு. வெற்றி அடையச் செய்தார்கள். இந்தப் பிராமணரும் இவருடைய “மாபெருந் தலைவர்” எனும் 'தினமணி' சொக்கலிங்கம் 16-11-37ல் தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர்... ஆகியோர் ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் புலிகள் என்று கூறுவேன். இவர்கள் ஜாக்கிரதை, சிரத்தை உதவியால் தான் அநேக ஊழல்களை விரட்டி அடிக்க முடிந்தது என்று கோகேல் மண்டபத்தில் கூடிய கூட்டத்தில் போற்றினாரென்றால். (17-11-37 'இனமணியில் பார்க்கவும்) அவர் எந்த மதியுடன் பேசினாரென்று தெரியவில்லை. தோழர் சுப்பிரமணிய அய்யர் "ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் புலியா” அல்லது 'ஊழல் புலியா” என்பது பொது மக்கள் தீர்மானிக்க வேண்டியது. இவ்வாறான யோக்கியர்களுக்குத் தலைவரான தோழர் முத்துரங்க முதலியாரால். தலைமை வகித்து வரப்போகும் தேர்தலுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுத்திருக்கும் அட்ஹாக் கமிட்டியின் யோக்கியதையையும் நீங்களே பரிசீலனை செய்து கொள்ளலாம். உண்மை ஊழல் கோஷ்டியார்.
யார்? அவர்கள் யாருடைய தயவில் இருக்கிறார்கள் என்று சிந்தித்துப்
பார்த்தால் அதுதான் “மஞ்சள் பெட்டியின் மர்மம்” என்று சொல்லாமல். விளங்கும். ஊழல்காரர்களுக்குத் தஞ்சம் அளிக்கும் பொறுப்பற்ற. தலைவர்களை நம்பவேண்டாம். மஞ்சள் பெட்டியின் பெயரால் நம். நகரசபையில் நடைபெறும் அநீதிகள் பல உளன. அவை அடுத்தடுத்து வெளிப்படுத்தப்படும்.
ஆகையால் பொறுப்பு வாய்ந்த வாக்காளர்களே! ஏமாற வேண்டாம். “திருடனுக்குத் துணைபோன கைம்பெண்ணை”ப் போல் ஊழல்காரர்களைப். போற்றும் கங்காணிமார்களின் பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள். சென்னை நகரத்தில் ஊழலே உருக்கொண்டிருக்கும் காங்கரசின் சார்பாக, ஊழல் காரர்களை ஆதரிக்கும் மானங்கெட்ட அட்ஹாக் கமிட்டியால். தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சள் பெட்டி அபேட்சகர்களுக்குத்தான்
165 ௨... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
வெட்கமில்லையென்றாலும் பொறுப்பு வாய்ந்த வாக்காளர்களாகிய நீங்களாவது தோழர் முத்துரங்க முதலியாருக்கும் அவரது ஊழல்: கோஷ்டியாருக்கும் நன்கு புத்திபுகட்டி வரப்போகும் தேர்தலில் மஞ்சள். பெட்டியில் உமது ஓட்டைப் போடாமல் வெருட்டி அடிக்கவும்.
குடி அரசு - கட்டுரை - 18.09.1938
ண் சுப்பிரமணியய்யர் புராணம்
புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட படலம் கல்விக் கமிட்டி அங்கத்தினரைக் காக்காய் பிடித்த அத்தியாயம்.
160, THAMBU CHETTY ST,
315. SUBRAHMANIA AIYER
Author & Journalist Councillor, Corporation of Madras
Madras, 23.4.1937.
சோதரர் ஸ்ரீமான் இலட்சுமண சுவாமி முதலியாரவர்கள். சமூகம். சுபம். ஆசி பல எல்லாம் வல்ல இறைவனருளால் தங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாகுமாக. நேற்றும் இன்று காலையும் தங்களைக் காண முயன்றேன், ஆனால் முடியவில்லை.
தங்கள் கல்வி கமிட்டியில் பாட புத்தகங்களை மாற்றும் யோசனை இருப்பதாகக் கேள்வி. ஸ்ரீமதி அம்முவையும் பார்த்தேன். புதிதாகப் புத்தகங்கள் வைப்பதானால், எனக்கும் ஒரு சிறிது பங்கு தருதல் வேண்டும். மங்கள வாசகங்கள் ஐந்தும் என்னுடையன. வேறு புத்தகங்களில் எனக்குப் பங்கு கிடையாது.
எல்லாம் எனக்கே கொடுக்கும்படி கேட்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். தங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். மற்றவை நேரில். தங்கள் உதவியை மறக்க: மாட்டேன்.
அநேக ஆசீர்வாதம்
தங்கள்.
115. சுப்பிரமணிய ஐயர்.
குடிஅரசு -1938 (2) —— ல
திருவிதாங்கூர் அலங்கோல தர்பார்
திருவிதாங்கூர் இந்தியாவின் தெற்குக் கோடியிலுள்ள ஒரு: சிறுநாடு. எல்லா சுதேச சமஸ்தானங்களையும் போல் வைதீகப் பற்றுடைய நாடு. திருவிதாங்கூர் அரசர்கள் வைதீகப் பற்றுடையவர்களாக இருந்தாலும் பொதுவாக நல்ல அரசர்கள் என்றே சொல்லவேண்டும். வடநாட்டு மன்னர்களின் ஆடம்பர வாழ்வு அவர்களிடம் கிடையாது. “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்ற ஐதீகப்படி வாழ்க்கை நடத்துகிறவர்கள். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி முறைகளைப் பின்பற்றி. சமஸ்தானத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை அவ்வக்காலத்து செய்து வந்தார்கள். ஆகவே கல்வித்துறையில் திருவிதாங்கூர் வெகுதூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆண் கல்வியும் பெண் கல்வியும். வெகுதூரம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது. தேசபாளஷைப் பள்ளிக்கூடங்கள். இல்லாத கிராமங்களே அங்கு இல்லையென்று சொல்லிவிடலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 100-க்கு 10-பேர்கூட இருக்கமாட்டார்கள். ஆங்கிலப் பயிற்சியுடையவர்கள் 100-க்கு 50 விகிதம் இருக்கலாம். உயர்தர கலாசாலை பட்டங்கள் பெற்ற திருவிதாங்கூர் சுதேசிகள் - ஆண்களும் - பெண்களும் - இந்தியாவின் நாலாபாகங்களிலுமன்றி. உலகத்தின் பலபாகங்களிலும் உயர்வான பதவி வகித்து வருகிறார்கள். அரசியல் துறையிலும் திருவிதாங்கூர் காலதேச வர்த்தமானத்துக்கு.
ஏற்றபடி சீர்திருத்தமடைந்தே வந்திருக்கிறது.
ஸ்ரீ மூலம் திருநாள்
தற்கால மகாராஜாவுக்கு முன் திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீ மூலம் திருநாள் ஒரு வைதீகராயிருந்தாலும் சமஸ்தான மக்களுக்குப் பல திருத்தங்கள் வழங்கினார். சட்டசபை ஸ்தாபிக்கப்பட்டதும் குடிகளின். குறைகளை சமஸ்தான நிருவாகம் நேரில் அறிய ஸ்ரீ மூலம் பிரஜா சபை ஸ்தாபிக்கப்பட்டதும் அவரது காலத்திற்றான். நாட்டு முன்னேற்றத்திற்கான பல புது இலாகாக்களும் அவரது காலத்திலே தோற்றுவிக்கப்பட்டன. எனவே அவரது ஆட்சியில் திருவிதாங்கூர் ஒரு “மாடல் ராஜ்யம் என்ற புனை பெயரும் பெற்றது. அவர் நாடு நீங்கியபோது பட்டத்துக்குரிய தற்கால மகாராஜா மைனராக இருந்ததினால் அவரது பெரிய தாயாரான. ராணி லக்ஷ்மிபாய் மைனர் மகாராஜாவின் ரீஜண்டாக பிரிட்டிஷ் சர்க்கார் 17௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
அனுமதிப்படி அரசாட்சி புரிந்து வந்தார். தற்கால மகாராஜாவின் பெரிய தாயாரும், தாயாரும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தில் ஸ்வீகாரமானவர்கள், அவ்விரு இராணிமாரும் மிக இளவயதில் திருவிதாங்கூர் மகாராஜாவால்: ஸ்வீகாரம் செய்யப்பட்டார்கள். ஸ்வீகாரம் செய்யப்பெற்ற அந்த ராணிமாரின் கார்டியனாக பிரசித்திபெற்ற காலஞ் சென்ற கேரள வர்ம கோயில் தம்பிரான் நியமிக்கப்பட்டார். அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம் மலையாளம் ஆகிய பாஷைகளில் பெரிதும் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருத மலையாள கவியும் கூட. வேட்டை ஆடல், சதுரங்கம். முதலிய விநோத கலைகளிலும் நிபுணர். பெரிய சீர்திருத்தவாதி சுகாதாரப் பிரியர். ஆகவே அவரது மேற்பார்வையில் வளர்ந்து வந்த இராணிமாரும் கீர்திருத்தவாதிகளாகவே வளர்ந்து வந்தனர்.
ஸக்ஷ்மிபாய் மகாராலி.
லக்ஷ்மிபாய் மகாராணியார் ரீஜண்டான போது அரசியல்: துறையில் ஒரு சமஸ்தானத்தில் அக்காலத்து இயல்பாகச் செய்யக்கூடிய சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் சமூகச்
சீர்திருத்தத் துறையில் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருந்தன.
ஸ்ரீ மூலம் திருநாள் வைதீகராயிருந்ததினால் சமூகச் சீர்திருத்த விஷயமாக: பாராட்டக்கூடிய சீர்திருத்தங்கள் எதையும் அவர் செய்யவில்லை. அவர்: அறைகுறையாக விட்டுப்போன வேலையை ரீஜண்டு மகாராணி லக்ஷ்மிபாய் செய்யத் தொடங்கினார். முதன்முதலில் “சேர்த்தலைப்
புரங்களி” என்ற ஆபாசத் திருநாள் நிறுத்தப்பட்டது. அந்தத் திருநாள். பத்து நாட்களிலும் சேர்த்தலையிலே (ஆலப்புழைக்கு வடக்கே ஒரு. தாலூகாத் தலைநகரம்) பல ஆபாசப் பாட்டுகள் பாடப்படுவது வழக்கம். அந்த ஆபாசப் பாட்டுகள்தான் சேர்த்தலை பகவதிக்கு மிகப் பிரியமாம். அந்த அனாசாரத்தை ரீஜண்டு மகாராணியார் எதிர்த்தார். அப்பால். ஆலயங்களுக்குத் தேவதாசிகளைப் பொட்டுக்கட்டி விபசார முத்திரைபோடும். கெட்ட வழக்கத்தையும் நிறுத்தினார். சர்க்கார் ஆலயங்களில் மிருகபலி நடத்துவதற்கும் முற்றுப் புள்ளி போட்டார். இவையாவும் திருவிதாங்கூர். நிலைமைக்குப் புரட்சிகரமான சீர்திருத்தங்களாயினும் பொது ஜனங்கள் ஆட்சேபிக்கவில்லை. மாறாக வரவேற்றார்கள் என்று கூடச் சொல்லலாம். இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் செய்து முடித்த காலத்து தற்கால மகாராஜா மேஜர் ஆனார்; அவருக்குப் பட்டமும் சூட்டப்பட்டது.
அவர் இளைஞராக இருந்ததினால் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர். மகாராஜாவின் அரசியல் உபதேசகராக நியமிக்கப்பட்டார். தற்கால. மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் மகாராஜாவாக இருந்தாலும் அவரது தாயார் இளைய ராணியார் யோசனைப்படியே தேச காரியங்கள் நடைபெற்று வந்தன. அரசியல் உபதேசகர் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யருக்கும் அரண்மனையில் வெகு செல்வாக்குக் கிடைத்தது
குடி அரசு - 1938 (2) — 168
திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தார் இயல்பாகவே “பிராமண பக்தி” உடையவர்களாகையினால் ஸர்.ஸி.பிக்கு திருவிதாங்கூர் அரண்மனையில். அதிகச் செல்வாக்கு கிடைத்தது அதிசயமல்ல. ஆகவே இளைய ராணியார், ஸர்.ஸி.பி. ராமசாமியய்யர் கூட்டு யோசனைப்படியே சமஸ்தானக் காரியங்கள் நடத்தப்பட்டுவந்தன.
அரசியல் உபதேசகர் நியமனம்: இளைய ராணியாருக்கு தமது சகோதரியான மூத்த ராணியார் செய்த சீர்திருத்தங்களைவிட அதிகப்படியான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கலாம். ஆகவே சுளுவாக புகழ்தரக்கூடிய சீர்திருத்தம் எது என இளையராணியார் அரசியல். உபதேசகரான ஸர்.ஸி.பி.யிடம் யோசித்திருக்க வேண்டும். ஸர்.ஸி. பி. பெரிய சாணக்கியரல்லவா! பிரிட்டிஷ் இந்தியாவிலே காந்தியாருக்கு பெரிய செல்வாக்கு இருந்து வருவதும் அவர் பார்ப்பன தாசராக விளங்கி வருவதும் அவருக்கு தீண்டாதார் ஆலயப் பிரவேச விஷயத்தில் பெரிய கிறுக்கு இருந்து வருவதும், ஸர்.ஸி.பி. அறிந்திருந்ததனால் திருவிதாங்கூர் ஆலயங்களில் தீண்டாதாருக்கு பிரவேசனமளித்துவிட்டால் திருவிதாங்கூர் மகாராஜா பெயரும் இளைய ராணியார் பெயரும் உலகப் பிரசித்தமாகிவிடுமென்று ஸர்.ஸி.பி. இளைய ராணியாருக்கு யோசனை கூறினாராம்.
ஸர். ஹரிபுல்லா இணங்கவில்லை ஆகவே ஸர்.ஹபிபுல்லா திவாணயிருந்த போதே ஆலயப் பிரவேச ஸ்ரீமூகம் வெளியிட முயற்சி நடந்ததாம். ஆனால் ஸர் ஹபிபுல்லா அதற்கு சம்மதிக்கவில்லையாம். ஒரு ஹிந்து சமஸ்தானத்திலே ஒரு. முஸ்லிம் திவான் காலத்திலே அவ்வளவு தோசைப் புரட்டான மதாசாரச் சீர்திருத்தம் செய்து ஹிந்துக்கள் வெறுப்புக்கு ஆளாக அவர் இணங்கவில்லையாம். ஆகவே அவருக்கு பிறகு ஸர்.ஸி.பி.திவானாக வந்தபோது ஆலயப் பிரவேச ஸ்ரீமுகம் வெளியிடுமாறு மகாராஜா தூண்டப்பட்டாராம். வெகுநாள் அந்த யோசனைக்கு மகாராஜா இணங்காமலே இருந்தாராம். தாயாரான ராணியாரும் திவான் ஸர்.ஸி.பி.யும் கட்டுப்பாடாக நிர்ப்பந்தம் செய்து வந்ததினால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற நியாயப்படி மகாராஜா இணங்கி கடைசியாக ஆலயப்பிரவேச ஸ்ரீமுகம் வெளியிட்டாராம். அந்த ஸ்ரீமுகத்தினால் தீண்டாதாருக்கு ஏற்பட்ட நன்மை என்ன என நாம் இப்பொழுது ஆராயப் புகவில்லை. தீண்டாதாருக்கு பாராட்டத்தக்க நன்மை ஏற்படாவிட்டாலும் மகாராஜாவுக்கும் அவரது தாயாருக்கும். திவான் ஸர்.ஸி.பி.க்கும் அது பெரிய விளம்பரமாக முடிந்தது மகாராஜாவையும் அம்மையாரையும் திவானையும் பாராட்டி இந்தியா
160 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
முழுதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தியாரே திருவனந்தபுரம் சென்று ராஜ குடும்பத்தாரையும் திவானையும் வாழ்த்தினார் மகராஜாவுக்குச் சிலை நாட்ட திருவிதாங்கூரில் ஏற்பாடுகள் நடக்கின்றன. கொஞ்சகாலம் திருவிதாங்கூர் மகாராஜா பெயரும் ஸர்.ஸி.பி. பெயருமே இந்தியப் பத்திரிகைகளில் தாராளமாகஅடிபட்டன. ஸர்ஸி.பி.யின். ராஜ்ய தந்திரமும் பெரிதும் பாராட்டப்பட்டது. திருவிதாங்கூரில் இவ்வண்ணம் சீர்திருத்தம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து கொச்சி. சமஸ்தான மக்கள் ஒரு சாராருக்கும் சீர்திருத்த மோகம் ஏற்பட்டது. கொச்சி ஆலயங்களிலும் தீண்டாதாருக்கு அனுமதியளிக்கவேண்டுமென: சிறிது கிளர்ச்சியும் நடந்தது. ஆனால் கொச்சி மகாராஜா முதியவர், பகட்டான சீர்திருத்தங்கள் செய்து புகழ் நாட்ட விருப்பமில்லாதவர். ஆகவே ஆலயப் பிரவேசக் கிளர்ச்சிக்கு செவி சாய்க்கவில்லை.
கொச்சியில் இரட்டை ஆட்சி. அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு கொச்சி திவான். ஸர்.ஷண்முகம் செட்டியாரை சென்னை பார்ப்பனப் பத்திரிகைகள். திட்டத் தொடங்கின. சுயமரியாதைக்காரரான ஸர்.ஷண்முகம் ஆலயப்பிரவேச உரிமையளிக்க கொச்சி மகாராஜாவை ஏன் வற்புறுத்தவில்லை யெனவும் சென்னைப் பத்திரிகைகள் கிண்டலாகக் கேட்டன. அதற்கு ஸர். ஷண்முகம் ஆணித்தரமாகப் பதிலளித்தார். “அரசியல் வேலைகளில் யோசனை கூறுவதே என் வேலை; மதவிஷயங்களில் யோசனை: கூறுவது என் வேலையல்ல” என ஸர் ஷண்முகம் தெரிவித்தபோது சென்னைப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூச்சல் அடங்கிற்று. ஆனால். ஆலயப்பிரவேச உரிமையினால் ஒடுக்கப்பட்டவர்களின் கலி தீராதென்றும், அவர்கள் விரும்புவது முக்கியமாக பொருளாதார முன்னேற்றமே என்றும், அரசியல் துறையில் முற்போக்கான சீர்திருத்தங்கள் வழங்குவதே. அவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு நேரான வழியென்றும். கொச்சி மகாராஜா அவர்களும் அவரது திவானான ஸர். ஷண்முகமும் உணர்ந்து பொறுப்பாட்சிக்கு முதற்படியான இரட்டையாட்சியை கொச்சி மக்களுக்கு அளித்துவிட்டனர். கொச்சியிலே எவ்வளவு எளிய நிலைமையிலுள்ள ஒடுக்கப் பட்டவருக்கும் ஏனைய ஜாதியாருக்கும் சமமான சிவில் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலே. உண்மையான தேசீய ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் மத்தியசர்க்காரின். உறுதியான சமஷ்டி அரசியல் ஏற்பட வேண்டும். மாகாண சுயாட்சி நடத்தும் மாகாணங்களும் யதேச்சாதிகாரம் நடத்தும் சமஸ்தானங்களும். அவ்வளவு ரம்மியமாக ஐக்கியப்பட முடியாது. ஆகவே சமஸ்தானங்களில். பொறுப்பாட்சி ஏற்பட வேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது
குடி அரசு - 1988 (2) —— 10
ஆகவே பொதுவான இந்திய கேஷமத்தை முன்னிட்டு கொச்சியில் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பாட்சியைப் பின்பற்றி வடநாட்டிலே சில சுதேச சமஸ்தானங்களும் பொறுப்பாட்சி அளித்து விட்டன. ஒரு சின்ன. சமஸ்தானமான காசியிலும்கூட சட்டசபை ஸ்தாபிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
திருவிதாங்கூரில் பொறுப்பாட்சிக்கு கஸ்த்தா
ஆனால் பெரிய சீர்திருத்தக்காரரும், ராஜ்ய தந்திரியும், ஒரு. காலத்திலே பெரிய ஹோம்ரூலர்ஆகவும் இருந்தவருமான ஸர்.ஸி.பி.ராமளமி அய்யர் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குப் பொறுப்பாட்சி வழங்கவே முடியாது என்கிறார். “சமஸ்தானாதிபதிகள் தமது குடிகளுக்கு பொறுப்பாட்சி வழங்கினால் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை என இந்திய மந்திரியும் உதவி மந்திரியும் தெளிவாகக் கூறியதற்கும் கண்டிப்பாகப் பொறுப்பாட்சி அளிக்க முடியாதென ஸர். லி.பி.பிடிவாதம். செய்கிறார். பொறுப்பாட்சி கிளர்ச்சி சட்ட விரோதமானது என்றும் கிரிமினல் திருத்தச் சட்டம் பிறப்பித்து விட்டார். திருவிதாங்கூரில் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி தோன்றியது இன்று நேற்றல்ல. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூருக்கு செல்லுமுன்னமேயே பொறுப்பாட்சிக் கோரிக்கையை திருவிதாங்கூர் ஜனங்கள் வெளியிட்டே வந்திருக்கிறார்கள். பழைய சட்டசபையிலும் கூட அதுபற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஆகவே பொறுப்பாட்சிக்கு ஸர்.ஸி.பி. இப்பொழுது எதிரியாகத் தோன்றியிருப்பதற்கு அந்தரங்க காரணங்கள் வேறுண்டென பெரும்பாலார் கூறுவது அவ்வளவு ஆதாரமற்றதாயிராதென்றே நினைக்க வேண்டியதாக இருக்கிறது.
சமஸ்தான காங்கரஸ் எதிர்ப்பு
சமஸ்தானப் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஸர்.ஸி.பி.
வகுத்திருக்கும் ஆக்கத் திட்டங்கள் சமஸ்தானங்களுக்கு நன்மையளிப்பதைவிட ஸர்.ஸி.பி.க்கு வேண்டிய சிலருக்கே அதிக நன்மையளிக்குமென சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். மற்றும் ஸர்.ஸி.பி.யின். திருவிதாங்கூர் சர்வகலா சங்க ஸ்தாபனம் பார்ப்பனர்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கும் சூழ்ச்சியேயென்றும் திருவிதாங்கூரின் தற்கால நிலைமைக்கு அவ்வளவு பெரும் பணச் செலவு பிடிக்கக்கூடிய ஒருகல்வி ஸ்தாபனம் தேவையில்லையென்றும் அவர்கள் வாதிக்கிறார்கள். ஆடம்பரப் பெயர்கள் சூட்டி பெரிய பெரிய புது உத்தியோகங்களை: ஸர்.ஸி.பி. சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டுவதையும் அவர்கள் ஆதரிக்கவில்லை. மற்றும் 5000 ரூபாய் மாதச் சம்பளமும். மற்றும் விசேஷ சலுகைகளும் உடைய ஒரு திவான் திருவிதாங்கூர் நிலைமைக்கு இப்பொழுது தேவையில்லையென்பதும் அவர்கள் கட்சி.
பட... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இவ்விஷயங்களை யெல்லாம் ஒரு மெம்மோரியல் மூலம் சமஸ்தான. காங்கரஸ் தலைவர்கள் மகாராஜா அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த மெமோரியலே ஸர்.ஸி.பி.யின் மூலைக் குழப்பத்துக்குக் காரணம்.
சமரசத்திற்கு ஸர்.ஸி.ரி. நிபந்தனை:
சமீபத்தில் சில சர்க்கார் அதிகாரிகள் பிரேரணையின் பேரில். சமஸ்தான காங்கரசுக்கும் சர்க்காருக்கும் சமரசம் செய்ய முயற்சி நடந்தபோது அந்த மெமோரியலை சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் வாபீஸ் வாங்கி மன்னிப்பு கேட்கவேண்டுமென்று ஒரு முக்கியமான நிபந்தனையை ஸர்.ஸி.பி. ஏற்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூரில் கால்வைத்து இப்பொழுது 7-வருஷங்களுக்கு. மேலாகிறது. மேலும் 10-வருஷம் திவானாக இருக்க மகாராஜா. அவர்களிடமிருந்து முன்னாடியே ஒப்பந்தம் வாங்கிக்கொண்டிருக்கிறார்.
இது எந்த சமஸ்தானத்திலும் இதுவரை நடந்திராத ஒரு விநோத ஒப்பந்தம். 7-வருஷ திருவிதாங்கூர் வாழ்வினால் சமஸ்தான மக்களின். அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட இளைய மகாராஜாவிடமிருந்து இவ்வண்ணம் ஒரு ஒப்பந்தம் பெற்றுக்கொண்டது சாதாரண அரசியல்: மரியாதைக்கே அடுத்ததல்ல.
திருவிதாங்கூர் மக்கள் முடிவு ஆகவே ஸர்.ஸி.பி. அலங்கோல ஆட்சி ஒழிய வேண்டுமானால். பொறுப்பாட்சி ஏற்படுத்தி தீரவேண்டுமென்று திருவிதாங்கூர் மக்கள். முடிவு செய்துவிட்டார்கள். பொறுப்பாட்சிப் போர் தொடங்கியும் ஆகிவிட்டது. ஆகஸ்டு 26-ந் தேதி ஆரம்பமான போர் நாளதுவரை முட்டின்றி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரத்தில் சமஸ்தான. காங்கரஸை அடக்கி விடுவதாக உறுதிமொழி கூறி கிரிமினல் திருத்தச்சட்ட ஸ்ரீமுகம் வெளியிடுமாறு ஸர்.ஸி.பி., மகாராஜா அவர்களைக் கேட்டுக். கொண்டாராம். இப்பொழுது சட்டமறுப்புப் போர் ஆரம்பமாகி 4 வாரங்கள். முடியப் போகின்றன. சுமார் ஆயிரம் பேர் வரை சிறை புகுந்தாய்விட்டது. ஆறு இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களும் நடைபெற்றிருக்கின்றன. டஜன் கணக்கான பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையும் ஆபிருக்கின்றனர். எத்தனையோ இடங்களில் தடியடிப் பிரயோகங்களும் நடைபெற்றிருக். கின்றன. எனினும் சட்டமறுப்புப் போரின் வலிமை குறையவில்லை. சமீபத்தில் குறையு மென்றும் தோன்றவில்லை. பெண்களும்கூட துணிந்து போர்முனைக்கு வந்திருக்கிறார்கள். திருவிதாங்கூர் மாணவர் உலகம்
திரண்டு எழுந்திறுக்கிறது. ஒரு வருஷத்துக்கு பள்ளி பகிஷ்காரம் செய்ய வேண்டுமென கோட்டயம் மாணவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழர், நாயர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள், ஈழவர், சில பார்ப்பனர்.
குடி அரசு - 1938 (2) —— 1
ஆகிய சகல ஜாதியாரும் மதத்தாரும் இப்போரில் மணப் பூர்த்தியாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும் ஸர்.ஸி.பி.யின் ஆணவம் அடங்கவில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கம் வலுக்க வலுக்க கனம் ஆச்சாரியாரின் பிடிவாதமும், ஆணவமும் விருத்தியாகி வருவது போலவே சட்டமறுப்புப் போர் வலுக்க. வலுக்க ஸர்.ஸி.பி.யின் திமிரும் பெருகி வருகிறது. திருவிதாங்கூரில் ஒரு அய்யரும், சென்னையில் ஒரு ஆச்சாரியாரும், காஷ்மீரத்தில் ஒரு. அய்யங்காரும் மக்கள் சுதந்தரத்துக்கு யமனாய் முளைத்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு நாடாளும் அதிகாரம் கிடைத்தால் ஏழைகளுக்கு ஏற்படும். சதியை திருவிதாங்கூரும் சென்னை மாகாணமும் காஷ்மீர் சமஸ்தானமும். விளக்கிக் காட்டுகின்றன. இந்த பார்ப்பனீபக் கொடுமை ஒழிவது எந்நாள்?
குடி அரசு - தலையங்கம் - 25.09.1938
1 வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தமிழ்நாடு தமிழருக்கே
காங்கரஸ் லக்ஷ்யம் “சுயராஜ்யம்” என முதன் முதல் கூறியது காலஞ் சென்ற தாதாபாய் நவரோஜி. அது போல "தமிழ்நாடு. தமிழருக்கே” என தமிழர்களின் பிரதிநிதிகளான மூன்று பெரியார்கள். சென்ற 11-ந்தேதி சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் முன்னிலையில் கூறிவிட்டார்கள். அக்கூட்டத்துக்குத். தலைமை வகித்த மறைமலை அடிகள் மதவாதிகள் பிரதிநிதி, அக்கூட்டத்தில். பேசிய தோழர் பாரதியார் காங்கரஸ்காரர் பிரதிநிதி, அன்று பேசிய ஈ.வெ. ராமசாமிப் பெரியார் பகுத்தறிவுவாதிகள் பிரதிநிதி. ஆகவே தமிழ்நாட்டின் அபிப்பிராயம் அக்கூட்டத்திலே பூரணமாகப் பிரதிபலித்தது என தைரியமாகக் கூறிவிடலாம். தமிழ் நாட்டார் மதவாதிகள், பகுத்தறிவுவாதிகள், காங்கரஸ் வாதிகள் என்ற மூன்று பெரும் பிரிவில் அடங்கி விடுவர். அந்த மூன்று பிரிவார் அபிப்பிராயத்தையே அந்த மூன்று பெரியார்களும் தமிழர்களுக்கு அன்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் இப்பொழுது தோன்றியிருக்கும் தமிழர் இயக்கம் எந்தக் கட்சிக்கும் உரியதல்ல வென்பதும் ஜாதி மத நிற கட்சி வித்தியாசமின்றி தமிழர்கள் அனைவருக்கும் சொந்தமானது. என்பதும் விளங்கிவிட்டது. இனி “தமிழ்நாடு தமிழருக்கு” என்பதே. தமிழர்களின் மூல மந்திரமாக இருக்க வேண்டும். "தமிழ்நாடு. தமிழருக்கு” என்னும் பொன் மொழியைத் தமிழர்கள் சதா ஞாபகத்தில். வைத்துத் தமிழர் இயக்கத்தை வலுப்படுத்த முயல வேண்டும். “தமிழ்நாடு தமிழருக்கே" என்ற பொன்மொழியே பெரிய எழுத்தில் அச்சிட்டு ஒவ்வொரு தமிழனும் தன் வீட்டுச் சுவரில் ஒட்டி வைக்க வேண்டும். அச்சுக்கூடச் சொந்தக்காரரான தமிழர்கள் எல்லாம் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற பொன்மொழியை அழகிய எழுத்தில் அச்சிட்டு. தமிழ் மக்களுக்கெல்லாம் இலவசமாக வழங்க வேண்டும். “தமிழ்நாடு. தமிழருக்கே” என்ற பொன்மொழியை தமிழ்நாடு முழுதும் ஒலிக்க வேண்டும். உண்ணும் போதும், உறங்கும் போதும், நடக்கும் போதும், வேலை செய்யும்போதும், “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற ஞாபகமே
தமிழருக்கு இருக்க வேண்டும். தமது மரபுக்கு ஆபத்துண்டாகும். காலத்துத் தமிழர்கள் கட்சி பேதங்களையும், அபிப்பிராய பேதங்களையும் மறந்து ஒன்றுபடத் தவற மாட்டார்கள் என்பது சந்தேகமற விளங்கிவிட்டது. பல பிரிவினராய்ப் பிரிந்து நின்ற தமிழர்கள்.
கடி அரசு 1938 (2) —— 1
ஒன்றுபட ஒரு தருணமளித்த கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கு தமிழர்கள் எல்லாம் நன்றி செலுத்த வேண்டியதுதான். பன்னூற்றாண்டு காலம் ஆரியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்கள் ஆங்கிலக் கல்வியால் அறிவு விளக்கம் பெற்று ஆரியப் பீடையிலிருந்து ஒருவாறு விடுபட்டு வருகையில் தேசீயத்தின் பெயரால் மீண்டும் தமிழர்களை ஆரியர்களுக்கு அடிமைப்படுத்தச் சூழ்ச்சி வேலைகள் நடைபெறுகின்றன. அச் சூழ்ச்சி வெற்றிபெறத் தமிழர்கள் சம்மதிக்கவே கூடாது. ஆரிய நாகரிகத்தை எதிர்த்துப் போராடிய சித்தர் இயக்கத்தை சூழ்ச்சிக்காரப் பார்ப்பனர்கள் தமது பார்ப்பன மதம் மூலம் அடக்கி விட்டனர். அப்பால் ஆரிய நாகரிகத்தை ஒழிக்கப்போராடி வெற்றி பெற்றுவரும் சுயமரியாதை: இயக்கத்தை தேசியத்தின் பேரால் ஒழிக்க காங்கரஸ் பார்ப்பனர். முயல்கின்றனர். இச்சூழ்ச்சியை உணராது காங்கரஸ் தமிழர்களும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாக இருந்து கொண்டு உதவிபுரிந்து வருகிறார்கள். காங்கரஸ்வாதியான பாரதியாரைப் பார்த்தாவது அவர்கள் நல்லறிவு பெறுவார்களாக.
தோழர் ஈ.வெ.ரா. 11ந்தேதி சென்னைக் கூட்டத்தில் கூறியது போல் தமிழ் நாட்டைத் தனியாகப் பிரிக்கத் தமிழர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் மாகாணப் பிரிவினை இயக்கத்துக்கு முதல்படியே. தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட்டால் தமிழர் மொழியும் இலக்கண இலக்கியங்களும் கலைகளும் நாகரிகமும். விருத்தியடையும். தமிழ்மொழி வளரும் தன்மையுடைய சீரியமொழி - ஜீவமொழி. எல்லாக் கலைகளையும் எல்லா அறிவுகளையும் தன்னுள் அடக்கிக்கொள்ள தமிழுக்கு சக்தியுண்டு. தமிழர் கலைகளையும் மத: அறிவையும் வடமொழியில் சேர்த்தே ஆரியப் பார்ப்பனர் வடமொழியை வளப்படுத்திக் கொண்டனர். இதனை ஒரு பார்ப்பனரான காலஞ்சென்ற பண்டித வி.கெ. சூரிய நாராயண சாஸ்திரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். தமிழர்களுக்கு இப்பொழுது முக்கியமாக வேண்டப்படுவது மேணாட்டு விஞ்ஞான அறிவு. மேனாட்டு விஞ்ஞான நூல்களை - தமிழில் - நல்ல சுத்தத் தமிழில் மொழிபெயர்த்தாக வேண்டும். மொழிபெயர்க்குங்கால் சொற் பஞ்சம் ஏற்படுமோ என அஞ்சத் தேவையில்லை. இன்றியமையாத இடங்களில் ஆங்கிலப் பதங்களையும் தாராளமாக வழங்கலாம். பிலாஸபி, லாஜிக், பிசிக்ஸ், கெமிஸ்டிரி முதலிய ஆங்கில அறிவு நூல்களில் வழங்கப்படும் சொற்கள் எல்லாம் ஆங்கில பதங்கள் அல்ல. கிரிக், லத்தீன், பிரஞ்சு, ஜெர்மன், ஸமஸ்கிருதம் முதலிய பதங்களை ஆங்கிலப் பேராசிரியர்கள் தாராளமாகக் கையாண்டிருக்கின்றனர். அம்முறை எம்மொழிக்கும். இழுக்காகாது. தமிழ் மொழியைப் பல வழிகளிலும் வளப்படுத்துவதே. நமது முழு நோக்கமாக இருக்க வேண்டும். தமிழ் மொழி அவ்வுயரிய நிலையை அடைய வேண்டுமானால் அது ராஜாங்க பாஷையாகித் 15... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தீரவேண்டும். தமிழ் மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டால்தான் தமிழ் ராஜாங்க பாஷையாக முடியும். ஆகவே தமிழ் மாகாணப் பிரிவினை: விஷயத்தில் தமிழர்கள் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும் எனக்: கேட்டுக்கொள்கிறோம்.
காங்கரஸ் கொள்கைப்படி பாஷா வாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டால் எல்லா மாகாணங்களுக்கும் பொதுவான ஒரு பொதுமொழி வேண்டியது அவசியமே. அதற்கு ஏற்றமொழி இப்பொழுது இந்தியப் பொதுமொழியாக இருக்கும் ஆங்கிலமே. ஆங்கிலம் இந்தியப் பொதுமொழியாக மட்டுமன்றி உலகப். பொதுமொழியாகவும் இருக்கிறது. மக்களுக்கு சுதந்தர உணர்ச்சியையும், நல்லறிவையும் புகட்டக் கூடியது ஆங்கிலமே. மறைமலையடிகள்: 11-ந்தேதிக் கூட்டத்தில் கூறியதுபோல இந்தியர்களை மனிதராக்கியது ஆங்கிலமே. இந்தியர்களுக்கு சுதந்தர உணர்ச்சியைக் கொடுத்ததும். ஆங்கிலமே. இந்தியர்களைப் பகுத்தறிவாளராக்கியதும் ஆங்கிலமே. இந்தியமொழிகளுக்குப் புத்துயிரளித்ததும் ஆங்கிலமே. இந்திய மொழிகள் புதுமுறையில் உருப்பெற்று வருவதற்குப் பெரிதும் உதவி புரிந்தது ஆங்கிலமே. நேருணர்ச்சியுடைய மொழிவல்லாரெல்லாம் இதனை ஒப்புக்கொள்வர். ஆங்கிலம் இந்தியர்களுக்கு அடிமை: மனப்பான்மையை உண்டுபண்ணி விட்டதென காங்கரஸ்காரர் கூறுவது மிகவும் நன்றிகெட்ட பேச்சாகும். இந்தியால் இந்தியாவில் ஒற்றுமை ஏற்படுமெனக் கூறுவது குறும்புத்தனம் - போக்கிரித்தனமானதாகும். இந்தியின் யோக்கியதைகளை விளக்கிப் பலர் “விடுதலை”யில் எழுதியிருப்பதினால் நாமும் மீண்டும் எழுத விரும்பவில்லை ஆங்கிலத்தினால் நாம் பெற்ற நலங்களையெல்லாம் ஒழித்து தமிழரை வட நாட்டாருக்கும் ஆரிய நாகரிகத்துக்கும் அடிமைப் படுத்தவே காங்கரஸ் பார்ப்பனர்கள் முயல்கின்றார்கள். ஆகவே தமிழ் மாகாணத்தை தனியாகப் பிரித்து தமிழை ராஜாங்க பாஷையாக்குவதையும் ஆங்கிலத்தை இந்தியப் பொதுமொழியாக்குவதையும் லக்ஷ்யமாகக் கொண்டு தமிழர் இயக்கம் உழைக்க வேண்டுமென்பது நமது பேரவா.
- 19.09.1938 'விடுதலை' தலையங்கம்.
குடி அரசு - கட்டுரை - 25.09.1938
குடி அரசு - 1938 (2) —— 1௦
காங்கரஸ்காரர் இழி செயல்
இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வலுப்பெற்று வருகிறது. கனம் ஆச்சாரியார் கிரிமினல் திருத்தச் சட்டத்தைக் கையாளுவதைப் பார்த்து இந்தியா முழுதும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. சென்னை மாநகரம் முழுதும் காங்கரசை எதிர்க்கிறது; வெறுக்கிறது. எனவே தமது மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தம் காங்கரஸ்காரருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நேர்மையான முறையில் ஏதாவது அவர்கள் செய்ய முயன்றால் எவரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் இழிவான முறைகளைக் கையாண்டால் யாராவது கண்டிக்காமல் இருப்பார்களா! இந்தி எதிர்ப்பாளர் மானத்தைக் கெடுக்கும் பொருட்டு பலபொய்க். கதைகளை காங்கரஸ் பத்திரிகைகள் கட்டிவிட்டன. சிறையிலிருக்கும். இந்தி எதிர்ப்பாளரை மன்னிப்புக் கேட்டு வெளியேறும்படி விளம்பர: மந்திரி கனம் எஸ். ராமநாதன் தூண்டியதாகவும் கூட சென்னை “சண்டே அப்சர்வர்" பத்திரிகை எழுதிற்று. ஸ்டாலின் ஜெகதீசனை விலைக்கு வாங்கி அவரைக்கொண்டு இந்தி எதிர்ப்பாளரைத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிடும்படியும் காங்கரஸ்காரர் சூழ்ச்சி செய்து பார்த்தார்கள். திருச்சித் தமிழர் பெரும்படை சோற்றுப்படை என்றும் கால் நடைக் கூட்டம். என்றும் கேலி செய்யப்பட்டது. எனினும் இந்த அயோக்கியப் புரளிகளைத் தமிழ் நாட்டார் லக்ஷியம் செய்யவில்லை. வழிநெடுக ஊங்கரஸ்காரர் உட்பட தமிழர்கள் தமிழர் பெரும்படைக்கு வரவேற்பளித்து ஆசி கூறினார்கள். கடைசியாக தமிழர்படை சென்னையை அடைந்தபோது ஒன்றரை லக்ஷம் தமிழர்கள் கூடி படையை வரவேற்று உபசாரம் செய்தார்கள். அம்மாதிரி ஒரு பிரம்மாண்டக் கூட்டம் இதுவரை சென்னை மாநகரத்திலே நடந்ததில்லையென்றே சொல்லலாம். அதைப்பார்த்ததும் காங்கரஸ்காரர் மூளை கலங்கி விட்டது. தமிழர் பெரும்படையைச் சேர்ந்த யாரோ சிலர் பேரால் காங்கரஸ் பத்திரிகைகளில் ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டு தமிழுலகத்தை ஏய்க்க காங்கரஸ்காரர் முயன்றார்கள். அது எவ்வளவு கேவலமான - போக்கிரித்தனமான முயற்சி என்பதை பின்பக்கத்தில் வெளிவரும்..*
தோழர் சைமன் ராமசாமியின் மறுப்பு நன்கு விளக்கிக்காட்டும். தமிழர் பெரும்படைத் தலைவர்கள் மீதும், தோழர் ஈ.வெ.ரா. மீதும் பழி 7... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
சுமத்தி காங்கரஸ் பத்திரிகைகளில் வெளிவந்தஆபாசமான பொய்ச் செய்திக்கும், தமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையென்றும், அதைப் பார்த்துத் தாம் திடுக்கிட்டுப் போனதாகவும் தோழர் சைமன் ராமசாமி கூறுகிறார். ஆகவே காங்கரஸ்காரர் போக்கு எவ்வளவு அயோக்கியத் தனமானதென்பதை: தென்னாட்டாரே முடிவு செய்து கொள்ளட்டும். காங்கரஸ்காரர் பிரேரணையில் தோழர் ஸ்டாலின் ஜெகதீசன் வெளியிட்ட அறிக்கையைப் பற்றிய நெஞ்சம் திடுக்கிடக்கூடிய பல மர்மங்களையும் தமிழ் நாட்டார் வெகு சீக்கிரம் அறிவார்கள் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- 22.09.1958 "விடுதலை! துணைத் தலையங்கம்.
குடி அரசு - கட்டுரை - 25.09.1938
* சைமன் ராமசாமி! மறுப்பு
காங்கரஸ் பத்திரிகைகளின் புரட்டும் யோக்கியதையும்
இருச்சி. செப். 21.
பிரபல இனசரிகளாகிய ஹிந்து” 'சுதேசமித்திரன்' 'இனமணி' “ஜெயபாரதி” முதலியவைகளில் தமிழ் படையினர் தவிப்பு, காங்கரஸ் கட்சியின் உதவி, தமிழ் படைத்தலைவர் குட்டு வெளியாகியது, வசூல் ரூ.100 எங்கே? ஈ.வெ.ரா.வின் யோக்கியதை, படையினர். சந்தியில் விடப்பட்டனர், ஊர்போகப் பணங்கிடையாது என்று 17-0-385 தேது 'ஜெயபாரதி"யிலும், ஜெயிலுக்குப் போகிறாயா? பட்டினி கிடக்கிறாயா? என்றும் இன்னும் அயோக்கயத்தனமாகவும் 17-9-88 'இனமணியிலும், தெருவில் தவிக்கவிடப்பட்டனர் என்று 16-9-38 'சுதேசமித்திரனிலும் தலைப்புகள் கொடுத்தும் அறிக்கை: கொடுத்தவர்கள் நால்வர்களில் என் பெயரை முதலில் பிரசுரித்தும் இருப்பதைப் பத்திரிகைகளில் பார்த்ததும் அப்படியே திடுக்கிட்டுப். போனேன். பத்திரிகா உலகு இவ்வளவு கட்டுப்பாடாயும் கேவலமாயும் நடப்பதையறிந்து மனமுடைந்து போனேன். அவ்வறிக்கையில் கண்டது அத்தனையும் சுத்தக் கட்டுக்கதை என்றும் புராணப் புரட்டு. என்றும் அதற்கும் எனக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது என்றும் இவ்வறிக்கையின் மூலம் எல்லோருக்கும் அறிவிக்க விரும்புகிறேன்.
குடி அரசு - 1938 (2) — 1
இத்துடனில்லாது, சென்னை சட்டசபை காங்கரஸ் கட்சியினர், எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சாப்பாடு போட்டு, டிக்கட் வாங்கிக்கொடுத்து, தமிழர் படையினர்களை அனுப்பியதாக “ஜெயபாரதி'யில் வந்திருக்கும் செய்தி பெரும் பொறுப்பற்ற பொய்களில் ஒன்றாகும். அத்தகைய காரியங்கள் யாதும் நடைபெற வில்லையென்பதையும் இதனால் பொது மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.
தமிழர்களின் ஒற்றுமையை குலைக்க சோம்பேறிக் கூட்டத்தார். கையாளும் பல சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகக்கருதவும். நம் செந்தமிழ் மக்கள் இனிமேலாவது இம்மாதிரியான கட்டுப்பாடான பொய்ப் பிரசுரத்தை நம்பாதிருக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். சைமன் ராமசாமி என்கின்ற
எஸ். ராமசாமி,
துறையூர்.
(குடி அரசு - 25.09.1938, பக். 8).
19 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
காந்தி ஜயந்திக்கு அர்ப்பணம்
காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், மூஸ்லிம் லீக்கையும் உத்தியோக வேட்டைக் கட்சிகள் என்றும், கண்டிறாக்ட் கொள்ளை கட்சிகள். என்றும் ஆதலாலேயே இவர்கள் கையில் இருக்கும் நிருவாக அதிகாரத்தை எப்படியாவது பிடிங்கிவிட வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டு என்ன என்னமோ சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து வந்தார்கள். இந்தக் காரியத்திற்காக பார்ப்பனர்கள் ஒரு காந்தி என்பவரை பிரமாத விளம்பரப்படுத்தி அவர் பேரச் சொல்லி மக்களை பலவழிகளில் ஏமாற்றி வந்தார்கள். இதற்கு ஆக பிரசாரம் நடைபெறுவதற்கு தனிமையில் யோக்கியதை அற்றவர்களையும் சமுதாயத்தில் இழிவான ஈன வாழ்க்கை: உள்ளவர்களையும் வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் எப்படிப்பட்ட ஈனக் காரியங்களும் செய்துவந்த அனுபவமுள்ளவர்களையும் பிடித்து கூலியும் கொடுத்து மற்ற கட்சியாரை வையும் படியும் அதாவது தங்களைத்தவிர மற்றவர்கள் உத்தியோக வேட்டைக்காரர் என்றும். கண்டிறாக்ட் ஆட்சிக்காரர் என்றும் நிர்வாகத்தில் லஞ்சம் வாங்குபவர்கள்.
என்றும் கூப்பாடு போட்டு குரைக்கும்படியும் செய்தார்கள். பாமர மக்கள் தங்களது மடமையினாலும் பொறுப்பற்ற தன்மையினாலும் அற்ப சுயநல குணத்தாலும் இவர்கள் பேச்சில் ஏமாந்து ஓட்டுக்கொடுத்து காங்கரஸ்காரர்களை ஆதரித்துவிட்டார்கள். அதன் பயனாய் இன்று. அரசியலில் பல மாகாணங்களில் காங்கரஸ் ஆட்சி ஏற்பட்டுவிட்டது. புதிய அரசியலில் சட்டசபைக்கு பல அதிகாரங்களும் சுயேச்சையும் கொடுக்கப்பட்டிருப்பதால் ஏறக்குறைய இன்று காங்கரஸ் ஆட்சி என்பது ஒரு அளவுக்கு சுதந்திரமூள்ள ஆட்சியென்று சொல்லும்படியாக நடத்தக்கூடியதாக இருந்து வருகிறது. அது மாத்திரமல்லாமல் காங்கரஸ்காரர்கள் ஓட்டு கேள்க்கும்போது பதவி ஏற்பதில்லையென்று சொல்லி ஓட்டுக் கேட்டிருந்தாலும் தங்களுக்கு மெஜாரிட்டி கிடைத்தவுடன் நிபந்தனை மீது பதவி ஏற்றதாக வேஷம் போட்டதில் காங்கரஸ் மந்திரிகள் நடத்தும் நிர்வாகத்தில் அரசாங்கத்தார் தலை இடுவதில்லை என்று சொல்லி ஒரு. மாதிரி வாக்கு கொடுத்திருப்பதால் பதவி ஏற்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இன்று தங்களுக்கு ஒரு அளவு சுயராஜ்யம் கிடைத்துவிட்டதாகவும் இன்றைய ஆட்சி காங்கரஸ் ஆட்சியே ஒழிய
குடிஅரசு -1938 (2) ௮ 180
வெள்ளைக்காரர் ஆட்சி அல்ல வென்றும் ஆதலால் சர்க்காரைக் குறை கூறக் கூடாது என்றும் இன்று இந்தியாவில் காங்கரஸ் ஆட்சி உள்ள. மாகாணங்களில் பறப்பது காங்கரஸ் கொடி என்றும் சொல்லி நித்தியம் நூறு இடங்களில் தேசீய கொடியேற்றுவிழாவும் நடத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு பெரும் வெற்றியை காங்கரசுக்கு உண்டாக்கிக். கொடுத்தவர் காந்தியார் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதற்காக விசேஷ முறையில் காந்தி ஜயந்தி கொண்டாடுகிறார்கள்.
காங்கரஸ் ராஜ்யத்தில் நடப்பது எண்ணி: ஆகவே இப்படிப்பட்ட காங்கரஸ் ராஜ்யத்தில் நடப்பது என்ன. என்பதை காந்தி ஜயந்தியான இன்றைய “புண்ணிய”தினத்தில் சற்று அலசிப்பார்ப்போம் என்பதற்காகவே அதைப்பற்றி சில எழுதத் துணிந்தோம்.
காங்கரஸ் மந்திரிகள் லஞ்சம் வாங்கினார்கள் என்றும் தகுதியற்ற. தங்கள் பந்துக்களுக்கு பெரும் பெரும் உத்தியோகங்களைக் கொடுக்கிறார்கள். என்றும் கண்டிறாக்ட் காரியங்களில் பிரவேசிக்கிறார்கள் என்றும் சில. மந்திரிகள் மீது பல புகார்கள் வந்து அதை காரிய கமிட்டி விசாரணையும் செய்தது. இப்புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறது என்று மாஜி ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் தீர்ப்பு கூறியும் விட்டார்கள். அதன் மீதும் காந்தியோ காரியக் கமிட்டியோ ௮.இ.கா. கமிட்டியோ அப்படிப்பட்ட மந்திரிகளை நீக்கவும் இல்லை.
மற்றும் சில மந்திரிகள் கண்டிறாக்ட்களில் பிரவேசித்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, வரிப்பணம் லட்சக்கணக்கில் நஷ்டமாகும்படியும் குறைந்த டெண்டரை விட்டு உயர்ந்த டெண்டருக்கு ஒழுங்குமுறைக்கு விரோதமாயும் கண்டிறாக்ட் கொடுக்கிறார்கள் என்று மந்திரிகள் மீது குறைகூறிவந்த புகார்களுக்கு ஆதாரமில்லை என்று எந்த மந்திரியும் தங்கள் நிரபராத தன்மையை நிரூபிக்க முன்வரவில்லை. உத்தியோக விஷயங்களிலும் தங்கள் சுற்றத்தார்களுக்கு கலுகைகாட்டிமற்றவர்களுக்கு அநீதி செய்கிறார்கள் என்று ஆதாரங்களோடு எவ்வளவோ புகார்கள் வந்தன. அவற்றை மறுக்க மந்திரிகள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.
மேலும் காங்கரஸ் கைப்பற்றி பலமான மெஜாரட்டியுடன் நடந்து வரும் பல ஸ்தல ஸ்தாபனங்கள் சென்னை கார்ப்பரேஷன் அதாவது 2000 ரூ. சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர் நிர்வாக அதிகாரியாய் இருந்து மேல்பார்வை பார்த்துவரும் சென்னை கார்ப்பரேஷனில் லஞ்ச தாண்டவமும் உத்தியோக சலுகையும் கண்டிறாக்ட் கொள்ளையும். வகுப்பு உணர்ச்சியும் நடக்கிறது என்று காங்கரஸ் பத்திரிகைகள் உள்பட கூப்பாடு போடத்தக்க நிலை ஏற்பட்டும் மந்திரிகள் பிரவேசித்ததாகவோ:
ர... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கவலை செலுத்தினதாகவோ இனிமேலாவது இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள ஏதாவது முயற்சி எடுத்ததாகவோ சிறிதும் தெரியவில்லை.
கார்ப்பரேஷன் லஞ்சப் புராணம்:
சமீபத்தில் ஒரு பார்ப்பன கார்ப்பரேஷன் கவுன்சிலர் புஸ்தக கண்டிறாக்ட் தனக்கு கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரமுடையவருக்கு. எழுத்து மூலமாக விண்ணப்பித்துக் கொண்ட ஆதாரம் வெளியாகியும் அது லக்ஷக்கணக்கில் துண்டு பிரசுரமாக பொதுஜனங்களுக்கு வினியோகிக்கப்பட்டும் காங்கரசோ காங்கரஸ் ஆட்சியோ இதை ஏன். என்றுகூட கேள்க்கவில்லை. அந்த பார்ப்பன கவுன்சிலர் இந்தி மறுப்பின். பேரால் சிறை பிடிக்கப்பட்ட தொண்டர்களை மன்னிப்புக் கேள்க்க தூண்டவும் மன்னிப்பு வாங்கிக் கொடுக்க அதிகாரிகளிடம் சிபார்சு நடக்குமான காரியத்தில் வெளிப்படையாய் ஈடுபட்டிருக்கிறார். என்பதற்காகவோ அல்லது அவர் பார்ப்பனராய் இருக்கிறார் என்பதற்காகவோ அவரைப் பற்றி கவனிக்கவில்லை போல் தெரிகிறது. ஆகவே காங்கரஸ் ஆட்சியில் லஞ்சம் (நியாயமற்ற முறையில். கண்டிறாக்ட் வினியோகம்) உத்தியோக சலுகை ஆகியவை சர்வ சாதாரணமாய் நடைபெறுகிறது என்பதற்கு நடு நிலைமைக்காரர்களுக்கும். யோக்கியர்களுக்கும் இந்த ஆதாரங்களும் எடுத்துக்காட்டுகளுமே போதும் என்று நினைக்கிறோம்.
இதுவும் போதாது என்று சொல்ல யாராவது வருவார்களானால். அந்த யோக்கியர்களுக்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் அத்தாட்சிகளும். ஆதாரங்களும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதென்னவென்றால்,
மத்திய மாகாண முதல் மந்திரியாய் இருந்து நிர்வாகம் நடத்தியவரும் பழைய காங்கரஸ்வாதியும் இதுவரையில் காங்கரஸ் கார்களில் எவ்வித குற்றமும் குறையும் கூறப்படாதவருமான தோழர். காரே என்கிற ஒரு பார்ப்பன மாஜி மந்திரியார் நேற்று வெளியிட்டிருக்கும். ஒரு அறிக்கையிலிருந்தே எடுத்துக்காட்டுகிறோம். அவ்வறிக்கை இன்று வேறு ஒரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
காங்கரஸ் தலைவர்கள் வண்டவாளம்.
அதில் காங்கரஸ் தலைவர்கள் காரியக் கமிட்டி அங்கத்தினர்கள். ஆகியவர்கள் ஆடிய உத்தியோக வேட்டையும், கண்டிறாக்ட் வேட்டையும் நீதி சலுகை வேட்டையும் வெட்ட வெளிச்சமாய் குருடனுக்கும் மடையனுக்கும் விளங்கும்படி திறந்து காட்டப்பட்டிருக்கிறது.
அதில் முதலாவது தோழர் பட்டேல் அதாவது பார்லிமெண்டரி. சப்சுமிட்டி பிரசிடெண்டும். காந்தியாரின் அந்தரங்க நண்பரும்.
குடிஅரசு -1938 (2) — ய்
மந்திரிகளை நியமிக்கவும் நீக்கவும் கூடிய அதிகாரம் உள்ளவருமான தோழர் பட்டேல் என்பவர் தனது நண்பரொருவருக்கு கண்டிராக்ட் கொடுக்கும்படி ஒரு சிபார்சு கடிதம் எழுதியிருக்கிறார் என்பது விளங்கும். அதில் காட்டியிருக்கும் விஷயம் எவ்வளவு மானக்கேடும், நாணையக்: கேடுமானது என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. கண்டிறாக்ட்டுக்கு டெண்டர் போட்டிருப்பவர் காங்கரஸ்காரருக்கு சகோதரராம் மற்றும் அந்த காங்கரஸ்காரர் காங்கரசுக்கு பல தடவை உதவி செய்திருக்கிறாராம். அதற்காக அவர்சகோதரருக்கு காண்ட்றாக்ட் கொடுக்க வேண்டுமாம். இந்த. முறை நிர்வாகமானது லஞ்சமுறையா அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொதுஜனங்களை வேண்டுகிறோம். ஆகவே காங்கரஸ் தலைவர்கள் என்பவர்கள் காங்கரசுக்கு ஆள் சேர்க்கும் முறையும் அந்த. ஆட்கள் காங்கரசுக்கு செய்யும் உதவியும் அதற்கு காங்கரஸ் தலைவர்கள். செய்யும் மறு உதவியும் கைம்மாறும் எப்படி இருக்கிறது என்பது இதிலிருந்தாவது பொதுமக்களுக்கு விளங்குமென்று நினைக்கிறோம்.
தோழர் பட்டேல் அவர்களைப் பற்றி நாம் அடிக்கடி எழுதி வந்திருக்கிறோம். அதாவது அவர் பம்பாய் சத்தியமூர்த்தி என்று எத்தனையோ தடவை எடுத்துக்காட்டி இருக்கிறோம். இவர் நரிமன் விஷயத்தில் நடந்துகொண்டதும் மற்றும் இவரைப் பற்றிப் பம்பாய் பத்திரிகைகளில் வெளிவந்த விஷயங்களும் அறிந்தவர்களுக்கு நாம். மேல் கொண்டு தெரிந்து கொள்ளும்படியாய் எதுவும் எழுதிவிட முடியாது. ஆனாலும் இப்படிப்பட்டவர்கள் கையில்தான் இன்றைய மந்திரி நியமனம்
நீக்குதல் முதலிய அதிகாரங்கள் பதவிகள் ஆகியவை இருக்கின்றன என்றால்: இவர்களால் நியமிக்கப்பட்ட மந்திரிகளிடம் நாணையம் ஒழுக்கம் நீதி ஆகியவைகள் இருப்பது ஆச்சரியமாகத்தானே இருக்கமுடியும்.
மற்றொரு படலம்
அடுத்தாற்போல் மற்றொரு கடிதம் எழுதப்பட்டதாகவும் அந்த (டாக்டர் காரே) அறிக்கையில் காணப்படுகிறது. அதென்னவெனில் காங்கரஸ் தலைவரான தோழர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தனக்கு வேண்டிய யாரோ ஒருவருக்கு ஒரு டாக்டர் உத்தியோகம் கொடுக்கும்படி சிபார்சு கடிதம் எழுதினதாகும். எனவே காங்கரஸ் தலைவர் என்பவருடைய யோக்கியதையே இப்படி இருக்கும்போது இனி மந்திரிமார்கள் தகுதியற்றவர்களுக்கோ அல்லது பணம் கொடுத்தவர்களுக்கோ உத்தியோகம் வழங்கினாலும் அது எப்படி குற்றமாகுமென்பது நமக்கு விளங்கவில்லை. இவை தவிர டாக்டர் காரே அறிக்கையில் மற்றொரு காரியக் கமிட்டி அங்கத்தினரான தோழர் சரோஜனி அம்மாள் தனக்கு வேண்டிய யாரோ ஒருவருக்கு ஒரு அட்வொகேட் ஜனரல் உத்தியோகம் 18— வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கொடுக்கும்படி சிபார்சு கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அக்கடிதத்தில் இருந்து மற்றோர் பிசாசு
புறப்படுகிறது. அதாவது இவருக்கு (தோழர் காரேக்கு) முன்னிருந்த ஒரு மந்திரி ஹைக்கோர்ட்டு சிபார்சை புறக்கணித்து விட்டு தனக்கு (மந்திரிக்கு) வேண்டிய ஒருவருக்கு அவ்வத்தியோகத்தை வழங்கிவிட்டார் என்று அம்மையார் குறிப்பிட்டு குறைகூறி இருக்கிறார். ஆகவே காங்கரஸ் மந்திரிகள் யோக்கியதை எப்படி இருந்து வந்தது என்பதை அது காட்டுகிறது இதுதவிர மற்றொரு விஷயமும் அக்கடிதத்தில் காணப்படுகிறது. அதாவது அந்த அம்மாள் அக்கடிதத்தினடியில் முக்கிய குறிப்பு என்று போட்டு ஒரு ஜட்ஜ் வேலை காலியிருப்பதாக தெரிகிறது என்று
குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து இந்த வேலைக்கும் அந்த அம்மாள் யாரையோ சிபார்சு செய்யப்போகிறார் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. ஆகவே சரோஜனி தேவியும் டாக்டர் காரேயிக்கு முன் இருந்த மந்திரியும் இந்த யோக்கியதை உடையவர்களாக இருந்தால் சென்னை. மந்திரி பப்ளிக் பிராசிகூட்டர் வேலை பார்ப்பனர்களிடம் இருந்து சிபார்சு பெற்று வந்தவர்களுக்குத்தான் கொடுப்பேன் என்பதிலும். சில சந்தர்ப்பங்களில் அந்த சிபார்சையும் தள்ளிவிட்டு தனக்கு வேண்டியவனுக்குத்தான் கொடுப்பேன் என்று கொடுத்து வந்ததிலும் ஏதாவது ஆச்சரியமிருக்க முடியுமா என்று கேள்க்கிறோம்.
பஜாஜ் நாடகம்.
இவ்வளவும் தவிர, மற்றொரு காரியக் கமிட்டி மெம்பரான தோழர். ஜம்ணலால் பஜாஜ் என்பவர் அதாவது காந்தியாரை தெய்வமாகக். கொண்டாடும் குபேரசம்பத்துடைய பஜாஜ் என்பவர் டாக்டர் காரேய்க்கு ஒரு சிபார்சு கடிதம் எழுதியிருக்கிறார். அதன் யோக்கியதை என்னவென்றால் ஒரு கொடிய குற்றம் செய்த யாரோ ஒருவனை: அவனுடைய தண்டனை காலம் முடிவதற்குமுன் விடுதலை செய்யும்படி வேறு ஒருவருக்காக தோழர் பட்டேல் அவர்களால் எழுதப்பட்ட ஒரு. சிபார்சு கடிதத்திற்கு மேல் தோழர் பஜாஜ் தானும் சிபார்சு செய்து அனுப்பினதாகும். இது ஒரு சமயம் தோழர் பட்டேல் சிபார்சை டாக்டர். காரே கவனிக்கமாட்டார் அலட்சியம் செய்துவிடுவார் என்று கருதி தோழர் பட்டேல் தோழர் பஜாஜ் இடமும் மேலொப்பம் வாங்கி இருக்கக்கூடும் எனவும் தோன்றுவதோடு இதிலிருந்து தோழர். பட்டேலுக்கும் டாக்டர் காரேய்க்கும் அவ்வளவு நம்பிக்கையான. சினேகம் இல்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. இவைகளை:
குடிஅரசு - 1938 (2) — ய
யெல்லாம் பார்க்கும்போது சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர் என்பவர் ஒரு கண்டிறாக்டில் பங்கு கேட்டு தோழர் லக்ஷ்மணசாமி முதலியாருக்கு எழுதிய கடிதம் காங்கரஸ் நாணையப்படியும், காங்கரஸ் தலைவர்கள் காரியக்கமிட்டி மெம்பர்கள், பார்லிமெண்டரி போர்டு தலைவர்கள் ஆகியவர்கள் நாணையப்படியும் அவ்வளவு பெரிய தப்பிதம் என்று தோன்றா தென்றே கருதுகிறோம்.
அன்றியும் நம் தமிழ்நாட்டில் அட்ஹாக்கமிட்டி மெம்பர்கள், தலைவர்கள் அவர்களுக்கு வேண்டியவர்கள் பலர் திடீர் திடீர் என்று பணக்காரர்கள் ஆவதும் பங்களாக்கள் கட்டுவதும் வங்கிகளில் பணம் டிபாசிட் செய்யப்படுவதுமான காரியங்களில் நமக்கு சிறிதும் ஆச்சரியம் தோன்றுவதில்லை. எனவே பொதுஜனங்கள் தகவலுக்கு இவ்வளவு சேதிகள். ஆதாரத்தோடு கைப்பிடியாய் கிடைப்பதாய் இருந்தால் இன்னமும். பொதுஜனங்களுக்கும் வெளிக்கும் தெரியாமல் நடக்கும் காரியங்கள் எவ்வளவு இருக்கக்கூடும். அவைகள் எப்படிப்பட்டவைகளாய் இருக்கக்கூடும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளட்டும்.
அரிப்ரிராய பேதமுண்டாகாததற்கு காரணம்?
இந்த நிலையில் காங்கரஸ் தலைவர்கள் ஒரு குடும்பம்போல். ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குள் அபிப்பிராய பேதமில்லை என்றும் சொல்லப்படுவது எப்படிப் பொய்யாகும்? இந்தக் காரணங்கள் அவர்களை மேலும், மேலும் ஒற்றுமைப்படுத்தாமல் அபிப்பிராய பேதத்தை எப்படி உண்டாக்கும்? இவர்களுக்குள் இந்த விதமான சம்மந்தமிருக்கும் போது ஒரு மந்திரி காரியத்தை மற்றொரு மந்திரி ஆதரிக்கவும், மந்திரிகள் காரியத்தை காரியக் கமிட்டி ஆதரிக்கவும் காரியக் கமிட்டி காரியத்தை அ இ.கா. கமிட்டி ஆதரிக்கவும். இந்தக் காரணம் போதாதா? என்று கேட்கின்றோம்.
கட்சிக் கொள்கை நீதி நிர்வாகம் ஆகியவைகளிலும் தியாகம். ஆகியவைகளிலும் இவர்கள் யோக்கியதை இப்படி இருந்தபோதிலும். காங்கரஸ்காரர்களுக்குள் இருக்கும்போது ஒழுக்கம்தான் எப்படிப்பட்டது என்பதைப்பற்றி காந்தி ஜயந்தியின் போது இரண்டு வார்த்தை சொல்லுவது அதிகப் பிரசிங்கித்தனமாகுமென்று கருதவில்லை:
சபர்மதி முனிவர் ஆச்சிரமத்திலேயே முனிவரது பத்தர்களுக் குள்ளாகவே பல ஒழுக்கக்கேடான காரியங்கள் நடந்து காந்தியார் பட்டினி விரதப் புரட்டால் அது மறைக்கப்பட்டது என்பது யாவரும் அறிந்ததேயாகும். காந்தியாரைப் பற்றியே வேறுபல கதைகளும். வெளியாயின. அவை ஒருபுறம் கிடக்கட்டும். 18... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இந்தி பிரசார மண்டலத்தில் இந்தி பிரின்சுபால் அவர்கள் இந்தி கற்க வந்த பெண்களில் சிலரை கற்பழித்துவிட்டார் என்ற சேதியும். அதற்காக காந்தியார் அந்த பிரின்சுபாலை தமிழ்நாட்டுக்கு வந்த சமயத்தில். டிஸ்மிஸ் செய்துவிட்டதாகச் சொல்லி மறந்துபோகும்படி செய்து விட்டார் என்ற சேதியும் பொதுமக்கள் உணர்ந்ததே ஆகும். இதுபோல் மற்றும் எவ்வளவோ சங்கதிகள் கூறப்படுகின்றன. ஆகவே இவற்றை யெல்லாம் காந்தி ஜயந்தி என்னும் “மகா புண்ணிய" தினத்தில் ஏன்: சொல்லுகிறோம் என்றால் காங்கரஸ்காரர்கள் பலர் ஒருவரைப்பற்றி ஒருவர் தங்கள் தங்கள் மனதார எவ்வளவோ கேவலமான இழிவான.
- அற்பமான ஈனப்பிறவியான நடத்தையுடையவர்கள் என்பதாக: உணர்ந்து கொண்டும் அதுபோன்ற பல காரியங்கள் நித்திய கருமத்தில் சிலர் செய்து கொண்டும் சிலர் தங்களின் வாழ்க்கை பூராவையுமே இப்படிப்பட்ட அஸ்திவாரத்தின் மீது கட்டிக்கொண்டுமிருந்தும் மற்றவர்களைப் பற்றி மிக சுலபமாக வெகு இழிவாகப் பேசுகிறார்கள் - விஷமப்பிரசாரம் செய்கிறார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் நிதானத்தையும் பொறுமையையும் இழக்கும்படி செய்கிறார்கள் என்பதற்காகவே இவற்றை காந்தி பக்தர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.10.1938
கடி அரசு - 1938 (2) —— 19
பகிரங்கப் பேச்சு
கொறடா
“நம் ராஜாஜி ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தால் அதில் தவறு இருக்குமா? தவறுதான் இருந்தாலும் அதைத் தவறு என்று தான் எண்ண முடியுமா? அப்படியே யாராவது எண்ணிவிட்டாலும் மகாத்மா காந்திதான் அப்படி எண்ணுவதற்கு இடங்கொடுத்து விடுவாரா? ஒருக்காலும் இடங்கொடுக்கமாட்டார் என்பதை, மகாத்மா காந்தி தாம் சமீபத்தில் எழுதிய “ஹரிஜன்” கட்டுரையின் மூலம் காட்டிக்கொண்டுவிட்டார். ஹிந்தி எதிர்ப்பாளர்கள் விஷயத்தில் ராஜாஜி நடந்து கொண்டதும், அதன் சம்பந்தமாக அவர் கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகித்ததும் சரிதான். என்று மகாத்மா காந்தி அக்கட்டுரையில் கூறிவிட்டார். “மகாத்மா ந்தியே சரிதான் என்று கூறிவிட்ட பிறகு, ராஜாஜி செய்தது தவறு என்று கூற யாருக்கு வாயிருக்கிறது?" என்று சில பத்திரிகைகளும் கூறிவிட்டன.
அனாவசியம்.
வாஸ்தவந்தான். மகாத்மா காந்தி ஒருவர் செய்ததில் எது சரி, எது தவறு என்பதை யோசித்துப் பார்க்காமலா கூறுவார்? கூறமாட்டார் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அதோடு அனாவசியமாக மற்றோர் விஷயத்தையும் காந்தி அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் என்று கூடக் கூறுவேன். ராஜாஜியைப் போன்ற சிறந்த அறிவாளி, வேறு எந்த மாகாணத்திலும் முதன் மந்திரியாயிருக்கவில்லை யென்பது மகாத்மாவின் கருத்து. இதைப் பற்றி மற்ற மாகாணங்களில் பிரதம மந்திரி ஸ்தாபனங்களிலிருப்பவர்கள் ஒருவேளை பொறாமைப்படலாம்.
சிலர் ராஜாஜியின் நுட்பபுத்தி தமக்கும் இல்லாமல் போய்விட்டதேயென்று வயிற்றில் குத்திக்கொள்ளலாம். அவர்கள் அப்படிக் குத்திக்கொண்டு செத்தாலும் ளிதான். நுட்பபுத்தியில் ராஜாஜியை விடச் சிறந்தவர்கள் வேறு யாருமே இல்லை யென்பதை நானும் தைரியமாகக் கூறித்தான் தீருவேன். தோழர் ராஜகோபாலாச்சாரியார் மகாபுத்திசாலி என்பதை: நாமெல்லோரும் நன்றாய் அறிந்திருந்தும் அதை மகாத்மாவும் எடுத்துக். கூறியது அனாவசியம் என்றுதான் கூறவேண்டும்.
17 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
எனக்குத் தெரியாது
மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி இரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக்காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள் தனமாயிருந்திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார். கடைசியில் அச்சட்டத்தை சீக்கிரத்தில் ரத்துச் செய்யாவிட்டால்: அது பெரியமுட்டாள் தனமென்கிறார். இதில்தான் எனக்கு ஒரு விஷயம். புரியவில்லை. கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகித்தது சரியென்றால் அதை சீக்கிரத்தில் ரத்துச்செய்யாதது எப்படி முட்டாள்தனமாகும். ரத்துச் செய்யாதது முட்டாள்தனமாகில், அதை உபயோகித்தது எப்படி சரியானதாகும்? இந்த விஷயந்தான் எனக்கும் என்னைப்போன்ற. இன்னும் அநேகருக்கும் புரியவில்லை. ஆனால் இதன் கூடார்த்தப் பொருள் ஒரு வேளை ராஜாஜிக்கும் மகாத்மாவுக்கும் மாத்திரம் புரிகிறதோ என்னமோ, அது எனக்குத் தெரியாது
அதற்கும் தயார்
அது போகட்டும். இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் ராஜாஜி வீட்டிற்கு முன்பு நின்றுகொண்டு அவரை வாயில் வந்தபடி யெல்லாம் தூஷிப்பது உண்மையானால், அது அக்கிரமந்தான். அதை ஞானமோ: மரியாதையோ உள்ளவர்கள் யாரும் சகித்துக்கொண்டு மிருக்க முடியாது இவ்விதம் திட்டும் விஷமங்களை அடக்க அதிகாரத்திலிருக்கும் ஒரு. பிரதம மந்திரி தக்க முறைகளைக் கையாளுவாராகில் அதைக் கண்டு நியாய புத்தியுள்ளவர்கள் யாரும் வருத்தப்பட இடமில்லை. தொண்டர்கள் தூஷிப்பது வாஸ்தவமென்றால் அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமென்றுதான் நானும் பிடிவாதமாகக் கூறுவேன். ஆனால் இதற்கு. சாதாரண சட்டங்கள் போதாதா? நாம் வெறுத்த - நாம் ரத்துச் செய்தே தருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத்தானா. நாம் கையாளவேண்டுமென்பதுதான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மாஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமே யென்று தான் நான். கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு 'தேசத்துரோகி”ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
கையில் கிஸடைத்த ஆயுதம்.
“நடுநிசியில் திடீரென்று திருடன் வந்துவிட்டான். அவனை: அடித்து விரட்ட கையில் கிடைத்த தடியைத்தான் எடுத்துக்கொள்ள. வேண்டுமேயன்றி, அதைத் தொடலாமா இதைத் தொடலாமா என்று எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?” என்று ராஜாஜி கேட்கிறார்.
கடி அரசு - 1938 (2) — 1
அவ்வளவு பெரிய ஆபத்தான திருடன் வந்துவிட்டானென்ற எண்ணம்: ராஜாஜிக்கு எந்த காரணத்தினால் உதயமாகிறதோ வென்பது எனக்கு விளங்கவில்லை. ஆனால் நிதானத்தை இழந்து, இந்தி தொண்டர்களை அடக்க கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்ட இக்காரியம், எவ்விதம். சங்கரசிற்கே வெட்சக்கேடானதாகப் போய்விட்டதென்பதை ராஜாஜி கொஞ்சம். பெரிய மனது வைத்து யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வாயிருக்கா?
இரிமினல் திருத்தச் சட்டம் கொடியது என்றே மத்திய மாகாணத்தில். அதை ரத்துச் செய்திருக்கிறார்கள். சென்னை காங்கரஸ் சர்க்கார் அதை: ரத்துச் செய்யாதது மாத்திரமல்ல. அதை உபயோகித்துவிட்டு, உபயோகித்தது சரிதான் என்றும் கூறுகிறது. எல்லைப்புற மாகாணத்தில். சட்டசபை, அச்சட்டத்தை ரத்து செய்யவேண்டுமென்று தீர்மானஞ். செய்தது. கவர்னர் அதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார். சட்டசபைத் தீர்மானத்திற்குக் கட்டுப்பட்டு கவர்னர் நடக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்த என்ன செய்வதென்பதைக் குறித்து எல்லைப்புற எங்கரஸ் மந்திரிகள் யோசித்துக்கொண்டிருந்தார்கள். ராஜாஜி அச்சட்டப் பிரயோகம் சரிதான் என்று கூறிய பிறகு எல்லை மந்திரிகள் கவர்ணிடம் கொஞ்சம் முரண்டிப் பேச இப்பொழுது வாயிருக்கிறதா?
வெட்கக் கேடல்லவா?'
அது போகட்டும் மற்றோர் தமாஷையும் கூறுகிறேன். டில்லியில். இரிமினல் திருத்தச்சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. இதைக் கண்டிக்க ஜனாப் அஸாப் அலி இந்திய சட்டசபையில் ஒரு அவசரத் தீர்மானம் கொண்டுவர நோட்டீஸும் கொடுத்துவிட்டார். டில்லி பிரதம கமிஷனர் உடனே என்ன செய்தார் தெரியுமா? டில்லியில் அச்சுட்டத்தை நான் உபயோகிப்பது சரிதான் என்பதற்கு, ராஜாஜி சென்னையில் அச்சட்டத்தைப் பற்றிக் கூறிய சப்பைக் கட்டுகளையே ஆதாரமாக எடுத்துக் கூறிவிடுவதாகக் கூறினார். இது என்ன வெட்கக் கேடாகி விடுமேயென்று இந்திய சட்டசபை காங்கரஸ் கட்சியினர் அவசரத் தீர்மானத்தைக். கொண்டு வருவதில்லையென்று தீர்மானித்து விட்டார்களென்பது பகிரங்க ரகசியம். இதே கிரிமினல் திருத்தச் சட்டத்தைப் போன்றதோர் கொடிய சட்டத்தை சர்.சி.பி. ராமசாமி ஐயர் திருவாங்கூரில் பிரயோகித்திருக்கிறார். அவரும் இதற்கு ராஜாஜியை ஆதாரமாகக் காட்டுகிறார். இது காங்கரசிற்கும் ராஜாஜியைப் போன்ற அதி நுட்ப புத்திசாலிகளுக்கும். வெட்கக்கேடானதல்லவா?''
குடி அரசு - கட்டுரை - 02.10.1938
19 ௨. ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி
தலைவர் அவர்களே! தோழர்களே கோவை ஜில்லா இந்தி எதிர்ப்புத் தொண்டர் படையை வரவேற்கும் இந்த பெரிய கூட்டத்தில் போலீசார். சம்மந்தமான விஷயங்களை பேசவேண்டாம் என்று இருந்தேன். ஆனால் எனக்கு முன் பேசிய தோழர்கள் அந்த விஷயத்தை இழுத்துவிட்டுவிட்டதாலும், சற்று கடுமையாய் பேசினதாலும் நான். அதைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளாவது முதலில் பேசவேண்டி ஏற்பட்டுவிட்டது. தோழர் நடேசன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மகன்: ஆதலால் போலீசாரின் யோக்கியதையை நன்றாய் அறிந்தவராதலாலும். வாலிபரானதாலும் சற்று வீரமாகவே பேசினார். ஆனால் என்னால் அப்படிப் பேச முடியாது. அதோடு போலீசாரால் ஏற்படும் நன்மை தீமை இரண்டைப் பற்றியும் பேசவேண்டும்.
போலீசார் உதவி
நமக்கு போலீசார் உதவி இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது இந்த 15, 20 வருஷம் பொதுத் தொண்டு வாழ்வில் இம்மாகாணம் பூராவும் குறிப்பாக தமிழ்நாடு பூராவும் சுற்றிச்சுற்றி 100 முதல் ஒண்ணரை லக்ஷம் ஜனங்கள் வரை கொண்ட ஆயிரக்கணக்கான மீட்டிங்குகளில் பேசி இருக்கிறேன். அவைகளில்: அனேகத்துக்கு போலீசார் உதவியும் பாதுகாப்பும் இருந்திருக்கிறது. அனேக இடங்களில் போலீசார் உண்மையான கவலை எடுத்து மீட்டிங்கை ஒழுங்காக நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நான் பேசிய ஆயிரக்கணக்கான மீட்டிங்குகளில் இந்த 20 வருஷ காலங்களில் இரண்டே இரண்டு மீட்டிங்குகள் பேசத் தொடங்காமல் பேச முடியாமல் நிறுத்திக் கொண்டுவர நேரிட்டிருக்கிறது
முதலாவது பட்டிவீரன் பட்டிக்கு அடுத்த அய்யம்பாளையம் மீட்டிங்காகும். இரண்டாவதாக சென்னிமலை மீட்டிங்காகும். பட்டி வீரன்பட்டி மீட்டிங்கில் காலிகள் விஷமம் அடக்க போதிய போலீஸ் பந்தோபஸ்து இல்லையென்று ஒரு சப் இன்ஸ்பெக்டரே சொல்லி நிறுத்திவிடும்படியும் அடுத்தநாள் நடத்தும்படியும் கேட்டுக்கொண்டார்.
குடிஅரசு - 1938 (2) அ ல
அதன்மீது நிறுத்திக்கொண்டேன். பிறகு அக்காலி கூட்டத்தை போலீசில் எர்ஜ் செய்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளச் செய்து தொல்லைப்படுத்தி தேர்தல் காலம் முடிந்தபிறகு விட்டுவிட்டார்கள். இரண்டாவது நடத்த முடியாமல் நிறுத்தப்பட்ட கூட்டம் சென்னிமலை கூட்டமேயாகும்.
சென்னிமலை சம்பவம்.
சென்னிமலை கூட்டத்தில் காலித்தனம் செய்தவர்கள் அவ்வளவு தைரியமுள்ள காலிகள் அல்ல. ஆனால் அவர்கள் போலீசின் உதவியால் அதிகமான காலிகளானார்கள். கல், மண் எடுத்து வாரி இறைத்து எங்களை:
சற்று இழிவாகவும் பேசினார்கள். அதை நாங்களோ எங்களை வரவழைத்து வரவேற்று உபசரித்தவர்களோ அடக்குவது என்பது சாத்தியப்படக். கூடியதாய் இருந்தாலும், நிலையான கலவரமும் பலாத்காரமும். அதிகமாக ஏற்பட்டுவிடும் என்று அறிந்தே நம்மவர்களை சமாதானம். சொல்லி அமைதிப்படுத்திவிட்டு 20-மைல் தூரத்திலுள்ள ஈரோடு. போலீஸ் டிப்டி சூப்பரண்டெண்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. போலீசு குப்பரண்டெண்டவர்கள் ஏற்கனவே தனக்கு தெரிந்திருந்தால் தக்க. பந்தோபஸ்தை அளித்திருக்க முடியுமேயென்று சொல்லி இன்ஸ்பெக்டருக்குச். சொல்லி அனுப்பினார். அவர் தனக்கு உடம்பு செளகரியமில்லையென்று சில கான்ஸ்டபிள்களை அனுப்பினார். அவர்கள் வந்த பிறகு கூட்டம்.
சற்று அமைதியாய் நடக்க இடமேற்பட்டது என்றாலும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெளிப்படையாகவே தான் ஒரு காங்கரஸ்காரனென்றும்.
கூச்சல் போடுவதற்கு அவர்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத். தடுக்க தன்னால் முடியாதென்றும் வெளிப்படையாய் சொன்னதால் காலிகளுக்கு சற்று உற்சாகம் அதிகமாகிவிட்டது. அதன் பேரில். முன்னிலும் அதிகமாக கூப்பாடு போட்டு வைதார்கள்.
இந்த விபரத்தை மறுபடியும் போலீசு டிப்டி சூப்பரண்டெண்டுக்கு சொல்லி அனுப்பப்பட்டது. அப்போது ஈரோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் கலந்து “மணி நடு இரவு 1 ஆகிவிட்டதால் இனி 20 மைல் போய் கூட்டம் நடக்கச் செய்வது பயனற்றது” என்றும் “அடுத்தநாள். கூட்டம் போட்டுக் கொண்டால் பக்கத்தில் இருந்து நடத்திக் கொடுப்போம்” என்றும் சொல்லி அனுப்பினார்கள். அந்த சேதி 2 மணிக்கு சென்னிமலைக்கு வந்தபிறகு கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மறுநான் கூட்டம்
மறுநாள் கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். நான். சென்னிமலைக்கு பறப்படும் போது போலீஸ்காரர்கள் பலர்சென்னிமலைக்குப் போய் இருப்பதாயும், சர்க்கிளும் வருகிறார் என்றும் சொல்லப்பட்டது. மட... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
நான் சென்னிமலைக்குப் போய் கூட்டம் ஆரம்பிக்கும்போது மற்றும். 45 கான்ஸ்டேபிள்கள் மாத்திரம் வந்தார்களே ஒழிய பொறுப்புள்ள. அதிகாரிகள் யாரும் வரவில்லை. கூட்டம் ஆரம்பித்தவுடன் போலீசார். சுற்றி நின்று கொண்டார்கள். பேச ஆரம்பித்து ஒரு நிமிஷம் காலிகள்: போலீசாருக்கு பயந்து சும்மா யிருந்தார்கள். சப்-இன்ஸ்பெக்டர் சற்று மறைந்துவிட்டு கூட்டத்துக்கு வந்தார். உடனே முன்தினம் போல். கூச்சல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி சொல்லிவிட்டேன். பிறகு கூட்டத்தின் நிலைமையைப் பார்த்து மறுபடியும் ஈரோட்டிற்கு ஆள் அனுப்பி ஈரோடு சர்க்கிள். இன்ஸ்பெக்டர் (அய்யங்கார்) “கலகமாகாமல் பார்த்துக் கொள்ளத்தான். முடியுமே ஒழிய கூச்சல் போடுகிறவர்களை அடக்க முடியாது” என்று சொல்லி மற்றும் சில போலீஸாருடன் ஈரோடு சப்-இன்ஸ்பெக்டரை அனுப்பினார். ஈரோட்டுக்கு 7 மணிக்கு அனுப்பிய ஆள் 12 மணி வரையும். சென்னிமலை வந்து சேரவில்லை.
காங்கரஸ் தொண்டர் மண்ணிப்பு
இதன் மத்தியில் ஒரு காங்கரஸ் தொண்டர் தோழர் திருப்பூர் ராமசாமி என்பவர் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து வந்து தலைவர் அனுமதி கேட்டு மேடைமேலேறி காங்கரஸின் பேரால். செய்யப்பட்ட காலித்தனங்களைக் கண்டித்து விட்டு தோழர் நடேசனைப் பேசும்படி கேட்டுக்கொண்டார். தோழர் நடேசன் பேச ஆரம்பித்ததும் ஒரு 2 நிமிஷம் கூட்டம் அமைதியாய் இருந்தது. மறுபடியும் கூச்சல்காரர்களில் சிலர் சப் இன்ஸ்பெக்டர் முகத்தைப் பார்க்கும்போது அவர் தலை சற்று அசைந்தது. அவ்வளவுதான் தாமதம் உடனே. பழயபடி குழப்பமேற்பட்டது. அக்குழப்பமேற்படும் மூன் குழப்பத்துக்கு தலைவராக இருந்தவர் கூட்டத்தில் கற்களை போட்டதற்கும் மணலை: வாரி இறைத்ததற்கு வருந்துவதாகவும் பெரியாரின் இருகாலையும் பிடித்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதாகவும் தெரிவித்தார். அதையும் சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர் எழுதிக்கொண்டதாக நினைக்கிறேன். சப்இன்ஸ்பெக்டர் தலை அசைத்ததையும் அவர் பார்த்து இருக்கக்கூடும். கடைசியாக அங்கு பேச முடியாமலே போய்விட்டது. இந்த நிலை. போலீசாரால் ஏற்பட்டதாகும். இந்த மாதிரி போலீசார் நடந்து கொண்டது மிகவும் அநீதியாகும். போலீசாருக்கு நாங்கள் எப்போதும் அடங்கி நடப்பவர்கள். அவர்கள் மதிப்பும் அதிகாரமும் செல்வாக்கும் குறையக் கூடாது என்பது எப்போதுமே எங்கள் கவலை. காங்கரசைப் போல்: நாங்கள் போலீசை நாய்கள் என்றும் நாய் குட்டிகள் என்றும் பணிய வைப்போம் என்றும் குனிந்து சலாம் போடச் செய்வோம் என்றும் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் போலீசு யோக்கியமாகவும் நாணையமாகவும் நடக்கவேண்டும் என்பதில் கவலை எடுத்துக்கொண்டதுண்டு.
குடி அரசு - 1938 (2) — ௦
காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் தர்பார்.
காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் யோக்கியமாய் நடைபெறுமென்று எதிர்பார்த்தவர்களில் நான் ஒருவன். ஆனால் காங்கரசுக்குப் பிறகு வரவர போலீஸ் அக்கிரம தர்பார் ஆகிவிட்டது. வெள்ளைக்கார மேலதிகாரிகளுக்கு பயந்து சில போலீசார் யோக்கியமாய் நடக்கிறார்கள். பார்ப்பனரல்லாத இந்து முஸ்லீம் போலீசார் சற்று யோக்கியமாய் நடக்கிறார்கள். பார்ப்பனப் போலீசார் தாங்களே பிரதம மந்திரி என்று கருதிக் கொள்ளுகிறார்கள். எப்போதும். அவர்கள் தகுதிக்கு மேற்பட்ட பேச்சுப் பேசுகிறார்கள். காங்கரஸ் கூட்டத்தில் ஒருவிதமும் மற்றவர்கள் கூட்டத்தில் ஒருவிதமுமாய் நாணையக் குறைவாய் நடக்க அவர்கள் கையும் வாயும் சிறிதும். அஞ்சுவதில்லை. வன்னெஞ்சோடு பொய் பேசுகிறார்கள். ஒரு சாதாரண: குறை கூறப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் யோக்கியதையைவிட சில இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலிருப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள். இந்த இழிவும் அவமானமும் வெள்ளைக்கார அதிகாரிகளுக்கு குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கும் கவர்னருக்கும்தான் போய்ச்சேரும். மந்திரி வாழ்க்கை நீர்மேல் குமிழி. அவர்களைப் பற்றி மக்கள் நினைப்பதும் வெகு அற்பம். ஆதலால் ஜில்லா சூப்பரண்டெண்டும், ஐ.ஜீ.யும், கவர்னரும். இவ்வக்கிரமங்களைக் கவனிப்பார்களா? அல்லது அவர்களது கோழைத்தனமும் தகுதியற்ற தனமும் வெளியாகும்படியான நிலையில். பலாத்காரம் கொலை முதலியவைகள் நடக்க இடங்கொடுப்பார்களா? என்பதே நமது கேள்வி.
குறிப்பு: ஈரோட்டில் 02.10.1938 ஆம் நாள் நடைபெற்ற கோவை ஜில்லா தமிழர் படை வரவேற்புக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு:
குடி அரசு - சொற்பொழிவு - 09.10.1938
193 வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இந்தி செத்தது! இணி ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன?
நம் சரணாகதி மந்திரிகள் தமிழ் மக்களுக்குள் ஆரியக்கலை ஆரிய நாகரிகம் ஆகியவைகளைப் புகுத்தி வருணாச்சிரம தர்மத்தை புதுப்பித்து நிலைநிறுத்தச் செய்யும் சூழ்ச்சியான இந்தி கட்டாயமாய் கற்பிக்கும்.
திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்கள் போர்புரிந்து வருவதும் அதற்காக இதுவரை சுமார் 360 பேர்கள் பார்ப்பன ஆட்சிக் கொடுமைக்கும் வண்நெஞ்ச அடக்குமுறைக்கும் ஆளாகி பலர் வருஷக் கணக்கான கடின காவல்: தண்டனை அடைந்து சிறையில் வதிந்து வருவதும் வாசகர்கள் அறிந்ததாகும்.
நம் சரணாகதி மந்திரிகள் ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்து தன்மானமற்று பெற்ற பதவியை நாட்டு நலனுக்கோ மனித வர்க்க உயர்வுக்கோ கால நாகரிகத்துக்கோ பயன்படுத்தாமல் வஞ்சம் தீர்க்கவும் தம் வகுப்புக்கு நிலையான ஆதிக்கமும் அதிகாரமும் ஏற்படுத்தச் செய்யவும் மற்ற வகுப்பார் என்றென்றும் தலையெடுக்க வகையில்லாமல் அழுத்தி வைக்கவும் மூறட்டுத்தனமாய் பயன்படுத்தி வருவதும். “உள்ளங்கை நெல்லிக்கனி” என்பது போல் யாவருக்கும் விளங்கக் கூடிய காரியமேயாகும். சரணாகதி மந்திரிகள் பதவியேற்ற 15 மாத காலத்துக்குள். பார்ப்பனரல்லாதார் பவிசையும் உரிமையையும் பாதிக்கும்படி பல கெடுதிகள் செய்து வந்திருப்பதோடு பார்ப்பனரல்லாத பெரும் பெரும் உத்தியோகஸ்தர்கள் பலரையும் வெகு இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தி அவர்களில் பலரைத் தலையெடுக்க ஒட்டாமல் அழுத்தியும். தாழ்த்தியும் நீக்கியும் தண்டித்தும் செய்துவரும் இம்சைகள் தினமும். பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பரக்கக் காண்கின்றோம்.
காங்கரஸ் மந்திரிகள் சூழ்ச்சி முறை:
மற்றும் இம்மந்திரிகள் பதவியேற்றதும் சர்க்கார் உத்தியோக நியமன. வினியோக முறையில் கண் வைத்து அவை சிறுகச் சிறுக மாற்றப்பட்டும் கைவிடப்பட்டும் வருவதோடு பார்ப்பனரல்லாதார்களில் உத்தியோகங்களுக்கு கொஞ்ச நாளைக்குள் ஆள்களே கிடைக்க முடியாதபடியான. சூழ்ச்சிமுறைகளும் கையாளப்பட்டு வருவதோடு அதற்கேற்றபடி கல்வி முறையே திருத்தப்பட்டும் குறைக்கப்பட்டும் பல பள்ளிக்கூடங்கள்.
கடி அரசு - 1938 (2) —— ல
கலாசாலைகள் எடுக்கப்பட்டும் வருவதும் வெள்ளையாக அறிந்து வருகிறோம். இன்னும் பல கேடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவைகளின் பரிகாரத்திற்காக என்று பார்ப்பனரல்லாதார் என்ன. முயற்சிகளை கையாண்டபோதிலும் சரணாகதி மந்திரிகளுக்கு அடிமைகள் ஏராளமாய் இருப்பதாலும் மந்திரி ஜாதியைச் சேர்ந்த பத்திரிகைகளும் அடிமைப் பத்திரிகைகளும் ஏராளமாய் இருப்பதாலும் இவைகளைக்: கொண்டு வெகு இழிவான முறையில் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு கெட்ட பெயர்கள் கொடுத்து அழிக்கவும் அடக்கவுமான காரியம் கையாளப்பட்டு வருகின்றது.
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்தது? எனவே இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது இந்த விஷயங்களையெல்லாம் பாமர மக்களுக்கு ஒரு சிறு அளவாவது விளக்கவும் சற்றாவது கண் திறக்கச் செய்யவும் ஒரு சாதனமாய் இருந்து வருவதால் அது சம்மந்தமான காரியங்களில் நாமும் ஒரு அளவு தகவல். வைத்துக்கொண்டு நாமறிந்தவரை சரியானமுறையில் அவ்விஷயங்களை பொது மக்களுக்கு எடுத்துக்காட்டும் தொண்டாற்றி வருகிறோம்.
இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி சேதி இந்தியா பூராவும் பரவியாய்விட்ட விஷயமாகும். அக்கிளர்ச்சியை அடக்க காங்கரஸ் பேராலும், காந்தீயத்தின் பேராலும், சுயராஜ்யத்தின் பேராலும் சரணாகதி மந்திரிகள். செய்துவரும் அடக்குமுறை கொடுமைகள் இந்தியா பூராவும் வெறுத்துக் கண்டித்து இகழ்ந்து உமிழ்ந்துவரும் காரியமாகும். இந்நிலையில் இதை: சமாளித்த சரணாகதி மந்திரிகளுக்கு தங்களது பலவித சூழ்ச்சிகளும். பலிக்காமல் போனதால் இனி புதிய வழியில் அதாவது கட்டுப்பாடாக அயோக்கியப் பிரசாரம் செய்து அழித்துவிடத் துணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதுவரை செய்து வந்த நேர்மையற்ற காரியங்கள் என்னவெனில்
நேர்மையற்ற காரியங்கள்
இந்தி எதிர்ப்பானது,
1. ஈ.வெ. ராமசாமியின் தொல்லை.
2. தோற்றவர்கள் பிரசாரம்.
3. ஜஸ்டிஸ் கட்சிப் பிரசாரம்.
4. மந்திரிகளை கவிழ்க்க சூழ்ச்சி
5... பார்ப்பன துவேஷ பிரசாரம்.
6. பணம் சம்பாதிக்க வழி. என்பன போன்ற பலபெயர்களைச் செல்லி அடக்கிவிடப் பார்த்தார்கள். 5... வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
பிறகு இந்தி எதிர்ப்புக் காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறவர்களை: விலைக்கு வாங்கப் பார்த்தார்கள்.
இந்தி எதிர்ப்பு காரியங்களுக்கு உதவி செய்கிறவர்களை மிரட்டி அடக்கப் பார்த்தார்கள்.
இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்கு ஆக சிறை சென்றவர்களைப் பணம்: கொடுத்தும் ஆசை வார்த்தை காட்டியும் மன்னிப்புக்கொள்ள முயற்சித்தார்கள்.
இந்தி எதிர்ப்பு வேலையில் ஈடுபட்ட ஆள்களுக்குப் பணம் காசு கொடுத்து இயக்கத்தையும் இயக்கப் பெரியார்களையும் நிந்தித்தும் பழித்தும் எழுதி கையெழுத்து வாங்கிப் பிரசுரிக்க முயற்சித்தார்கள்.
பட்டினி விரதமிருப்பதாகச் சொல்லிக் கொண்டவர்களை: விலைக்கு வாங்கி அவைகள் நிறுத்தப்பட்டதாகச் செய்தி விடுவதின். மூலம் இயக்கத்தின் வேகம் குன்றிவிடச் செய்ய முயற்சித்தார்கள். கடைசியாக இயக்கத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் பெரிய மனிதர்கள் என்பவர்களுக்கு அசிங்கம் ஏற்படச் செய்து விடலாம் என்று கருதி “தொண்டர்கள் மந்திரிகள் வீட்டு பெண்டு பிள்ளைகளைப் பற்றி ஆபாசமாக அசிங்கமான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள்'” என்று பெரிய மனிதர்கள் என்பவர்கள் வீடுதோறும் சென்று முதல் மந்திரி விஷமப் பிரசாரம் செய்து வந்தார்கள்.
கடைசி முய
இப்போது கடைசியாக “இயக்கம் செத்து விட்டது, மறியல் நின்று விட்டது, பொது மக்கள் கைவிட்டு விட்டார்கள், செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள், மறியலுக்கு ஆள் கிடைக்கவில்லை - அடக்கு முறை பயன்பட்டுவிட்டது, ஆச்சாரியார் ஜெயித்து விட்டார்” என்றெல்லாம் எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
அதிலும் முதல் மந்திரி வீட்டின் மூன் நிற்பது இம்மாதிரி விஷமப் பிரசாரத்திற்கு இடமாகின்றதென்று கருதி தொண்டர்களே முதல் மந்திரி வீட்டுக்குப் பக்கத்திற்கு போகாமல் இருந்தால் நலம் என்று தோழர் ஈ.வெ. ராமசாமி முதலியவர்கள் கேட்டுக் கொண்டதற்கு தொண்டர்கள். இணங்கியதாக காட்டிக்கொண்டதாலேயே முதல் மந்திரியார் உட்பட சிலர் இயக்கம் செத்துப்போய் விட்டது என்றும் அதனாலேயே தன். வீட்டின் பக்கத்திற்கு வந்தவர்கள் இப்போது வருவதில்லை என்றும் அடக்குமுறை பலித்துவிட்டது என்றும் பெறுமை பேசிக் கொள்கிறார்கள். பொது ஜனங்கள் இடமும் சொல்லுகிறார்கள் என்றும் தெரிகிறது
இவர்கள் இவ்வளவு செய்தும் இயக்கமானது அடிக்கும் பந்து கிளம்புவது போல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதே ஒழிய எங்கும். இளைக்கவில்லை. மற்றும் எதிரிகளின் விஷமச் செயல்கள் எல்லாம்.
குடிஅரசு - 1938 (2) —— 10௦
வெளியாகிக் கொண்டும் வருகிறது. தோழர்கள் ஸ்டாலின், சைமன்: ராமசாமி இவர்கள் பேரால் கூலிகொடுத்து வெளியாக்கப்பட்ட பார்ப்பனப் பத்திரிகை ஸ்டேட்மெண்டுகள் பார்ப்பனர்கள் யோக்கியதையையும். மந்திரிகள் யோக்கியதையையும் பார்ப்பனப் பத்திரிகைகள் யோக்கியதையையும். வெளியாகும்படி அத்தோழர்களாலேயே மறுப்பு ஸ்டேட்மெண்டுகள். வழங்கப்பட்டு எதிரிகளை அவமானப்படும்படி செய்து விட்டது. எல்லாவற்றையும் விடக் குறிப்பிடத்தக்க சேதி என்னவென்றால். ஸ்டாலின் ஜகதீசன் பட்டினி விரதமென்பது பொய் - வேஷ விரதம். என்பதாக மக்கள் உண்மையிலேயே கருதிய பிறகும் இந்தி எதிர்ப்பு இயக்கம் சிறிதும் தளராமல் அதற்குமுன் வளர்ந்துவந்த வேகத்தைவிட
2 பங்கு 3 பங்கு வேகத்தில் முன்னேறி வந்துகொண்டிருக்கிறது என்பதாகும்.
சென்னையில் ஆதரவு உதாரணமாகத் தோழர் ஸ்டாலின் ஜெகதீசன் பட்டினியோடு இருந்த காலத்தில் தானும் ஆஜராகி இருந்த இந்தி எதிர்ப்பு பீச்சு மீட்டிங்கில் 50000 பேர் கூட்டமென்றால் இரவு 11மணி வரை அக்கூட்டம் நடந்தது என்றால் அவ்விரதம் வேஷ விரதம் என்று விளங்கிய பின்பு போடப்பட்ட பீச்சு கூட்டங்களுக்கு 70000 மக்களும்.
ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ஜனங்களும் வந்து கூடுவதும் நடு. ஜாமம் 1 மணிவரை கூட்டங்கள் நடப்பதும் பல ஆயிரக்கணக்கான பெண்கள். வந்து கடைசிவரை காத்திருப்பதும் இந்தியையும், அடக்குமுறையையும், நீதிபதிகள் யோக்கியமற்ற நடவடிக்கைகளையும் கண்டிக்கும் தீர்மானங்கள். ஒரு ஆள் எதிர்ப்புக் கூட இல்லாமல் ஏகோபித்த ஓட்டுகளால். நிறைவேறுவதுமாய் இருப்பதே போதுமான உதாரணமாகும்.
மற்றும் இந்தி எதிர்ப்பு இயக்கம் “செத்துப்போய்விட்டது'' என்று. எவ்வளவோ அயோக்கிய முறையில் பார்ப்பனர்களும் அவர்களது. பத்திரிகைகளும் அடிமைகளும் விஷமப்பிரசாரம் செய்து வந்தும் வெளி இடங்களில் கூட ஸ்தல ஸ்தாபன - யூனியன் - தேர்தல்களில் காங்கரசுக்கு. நிறுத்த ஆள் இல்லாமலும் நிறுத்திய இடங்களில் படுதோல்விகளும். கிடைத்து வரும் சேதி பார்ப்பன - காங்கரசு பத்திரிகைகளிலேயே தெரியும்போது இவ்விஷமப் பிரசாரம் சிறிதும் பயன்படவில்லை. என்பதற்கு இனி வேறு என்ன உதாரணம் வேண்டும்?
முக்கியமான விஷயம் இவைகளையெல்லாம் விட கவனிக்கத் தக்க ஒரு முக்கிய விஷயமென்னவென்றால் கனம் ஆச்சாரியார் செய்த இந்தி கட்டாய முறையையும் அதற்கு ஆக ஏற்பட்ட அடக்கு முறையையும் பிறகு இந்தியல்ல இந்துஸ்தானி என்று மாற்றிக்கொண்ட பித்தலாட்ட முறையையும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் அரங்கேத்திக்.
7 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கொண்டுவர சென்னை மந்திரிகளுடன் ஆச்சாரியார் டில்லிக்குச் சென்று பலமான படுபாதாள தோல்வி அடைந்து வந்த ஒரு காரியமட்டுமே இந்தி எதிர்ப்பு செத்துவிட்டதா அல்லது எங்கும் பரவி இந்தியைக் கொன்றுவிட்டதா என்பதை விளக்கும் காரியமாகும்.
அ.இ.கா. கமிட்டித் தீர்ப்பு அஇகா. கமிட்டியில் இந்தி குழிதோண்டி புதைக்கப்பட்டாய்விட்டது. அதாவது “இந்தி வகுப்புக் கலவரத்தை உண்டாக்குவதாலும் கஷ்டமான வார்த்தைகள் கொண்டதாலும் பொது ஜனங்கள் எதிர்ப்பதாலும். இந்தி கற்பிக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட வேண்டும்” என்று தோழர். அஷரப் கொண்டுவந்து பேசி அது காரியக்கமிட்டியிலும் ஒப்புக்கொள்ளப்பட்டு. விட்டது. அந்தப்படியே இந்தியை கைவிட்டதற்கு அறிகுறியாக இனிமேல் இந்துஸ்தானியில் காரியம் நடக்க வேண்டுமென்று ஒரு “பழைய தீர்மானத்தை” பொது ஜனங்கள் நினைவுக்கு கொண்டுவந்தும் விட்டது.
ஆச்சாரியாருக்கு மற்றும் ஒரு பெரிய தோல்வி என்னவென்றால். “காங்கரஸ்காரர்கள் (மந்திரிகள் அல்ல) இந்துஸ்தானி பாஷை பரவச்செய்ய வேண்டியது” என்று கொண்டுவரப்பட்ட தீர்மானம் ௮.இ.கா. கமிட்டியில் அடியோடு தள்ளப்பட்டு தோற்றுப்போய்விட்டது. இதற்காக காரியக்கமிட்டி வருந்துவதாகக்கூட ஒரு தீர்மானம்: நிறைவேற்றி அழுது இருக்கிறது. இந்த சேதி 27-9-38 “இந்து” “மெயில்” பத்திரிகைகளில் இருக்கிறது. ஆகவே இனி ஆச்சாரியார் எந்த முகத்தைக் கொண்டு இந்தியோ இந்துஸ்தானியோ கட்டாய பாடமாகக் கற்பிக்கிறார் என்பது விளங்கவில்லை.
எது செத்து விட்டது?
இதிலிருந்து பொது ஜனங்கள் இந்தியும் - இந்துஸ்தானியும் செத்து விட்டதா இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டதா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். “இந்தி கூடாதென்றும் “இந்திப் பிரசாரத்தில். இருந்து காங்கரஸ்காரர்கள் விலகிக் கொள்ள வேண்டும்” என்றும் அ.இ.கா. கமிட்டித் தீர்மானித்த பிறகு இந்திப் பிரசார சபாவுக்கும் அதன். பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனருக்கும் இந்தி புத்தகம் அச்சுப் போட்டுப் பிழைக்கும் பார்ப்பனருக்கும் இனிப் பொதுப் பணம் அழுவது யோக்கியமா நாணயமா என்று கேட்கின்றோம். எனவே இந்தியை எதிர்ப்பதோ இந்தி ஒழிக என்று சொல்லுவதோ: இனி எந்த விதத்திலும் காங்கரஸ் துரோகமே ஆகாது என்பதை இனியாவது காங்கரஸ் பக்தர்கள் உணர்வார்களாக. இந்தி வகுப்பு வாதத்துக்கு ஆதாரமாயிருக்கிறது என்றும் கஷ்டமான வார்த்தைகள்.
கடி அரசு - 1938 (2) — 0௦
கொண்ட பாஷை என்றும் அதை விட்டுவிட வேண்டும் என்றும் கா. கமிட்டி தீர்மானித்த பிறகாகவாவது காங்கரஸ் பக்தர்கள் இனி “இந்தி வாழ்க' என்று கத்தமாட்டார்கள் என்று நினைக்கிறோம். பொது ஜனங்கள் ஒரு விஷயம் நினவில் இறுத்த வேண்டிக்கொண்டு இதை முடிக்கின்றோம். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள். இந்தி கட்டாய நுழைவால் என்ன என்ன கெடுதி ஏற்படும் என்று சொல்லி வந்தார்களோ அவையும் இந்தி கட்டாயம் எடுபட்டால். மாத்திரம் போராது இந்தி பிரசாரமே ஒழிய வேண்டுமென்று எதிர்ப்பாளர் பலர் சொல்லி வந்ததும் இன்று அ.இ.கா. கமிட்டி மூலமே மெய்யாக ஆகி விட்டது என்பதோடு இந்தி நுழைக்கும் மனப்பான்மையும் வெளியாகிவிட்டது என்பதாகும். ஆகவே இனி கனம் ஆச்சாரியாரின் அடுத்த ஆட்டம் என்ன. என்பதை கவனிப்போம். கடைசியாக ஒரு மகிழ்ச்சியான சேதி என்னவென்றால் இந்தியை எதிர்த்து சிறை சென்று 4 மாத தண்டனை காலம் கழிந்து விடுதலையான தோழர் ராமச்சந்திரன் இன்று மறுபடியும் இந்தியை எதிர்த்து சிறை சென்று 4 மாத கடின காவல் தண்டனையை தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்னும் கோஷத்துடன் மகிழ்ச்சியோடு ஏற்று சிறைசென்று இருக்கிறார். என்பதாகும்.
(04.10.1938 “விடுதலை! தலையங்கம்).
குடிஅரசு - கட்டுரை - 09.10.1938
199 ௨ ஸரயாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இன்றைய பிரச்சினை
“குடி அரசு” பத்திராதிபரும் பிரசுரகர்த்தாவும் “விடுதலை” பிரசுரகர்த்தாவுமான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமியும், “விடுதலை” ஆசிரியர் பண்டித எஸ். முத்துசாமி பிள்ளையும் 124 ௭. ராஜ நிந்தனைச் சட்டப்படியும் 153 (௭) வகுப்புத்துவேஷச் சட்டப்படியும் அக்டோபர். 7-ந்தேதி சென்னை சர்க்காரால் கைது செய்யப்பட்டு ஈரோடு. சப்ஜெயிலில் காவலில் வைத்திருக்கின்ற சேதியை தினசரி வாயிலாக அறிவீர்கள். இதிலிருந்து சொந்த மனசாட்சிப்படி எவரும் பொதுநல: சேவையில் ஈடுபட முடியாதென்றும், சுய மதிப்போடும், தன். மனசாட்சிப்படியும் ஒருவர் நடக்க வேண்டுமானால் அவர் எத்தகைய கஷ்ட நஷ்டத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டுமென்பது நன்கு புலனாகும். இத்தகைய துன்பங்கள் ஏகாதிபத்தியத்தையே எதிர்க்கிறோம் - உடைக்கிறோம் - தகர்க்கிறோம் என்று சொல்லிக். கொண்டிருக்கும் ஆட்சியில் ஒருவர் அனுபவிக்க வேண்டியிருக்கிற தென்பதைக் குறித்துதான் நாம் வருந்த வேண்டியிருக்கிறது. இந்தச் சம்பவத்தை நோக்கும்போது கனம் ராஜகோபாலாச்சாரியார் ஹிட்லரைப்போல தனக்கு விரோதமான அபிப்பிராயமூடைய நோக்கமுடைய கட்சியோ இயக்கமோ நாட்டிலேயிருக்கக்கூடாது என்று. கங்கணம் கட்டிக்கொண்டு அவருக்கு எதிராக இருக்கிற இயக்கத்தை அழிக்க புறப்பட்டுவிட்டார் என்பதற்குச் சந்தேகமேயில்லை. என்ற. போதிலும் உண்மை உழைப்பாளர்கள் என்பவர் எந்தவித கஷ்டத்திற்கும். அஞ்சார். தமது லக்ஷ்யம் உயர்வான தாயிருக்கையில் எதைக்கண்டும். அஞ்சவேண்டியதில்லை. தாம் செய்வது பொதுநல விருத்திக்கு தேவையானது என்று மனப்பூர்வமாய் நம்பியிருக்கும் வரை எத்தகைய இடுக்கண்களுக்கும் அஞ்சாது பாடுபட்டுக் கொண்டே வருவார்கள். தமிழர்கள் என்றென்றும் தலையெடுக்காமல் அடிமை வாழ்விலிருந்து மீளாமலிருக்க என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டுமோ அவைகளை ஒன்றன் பின்னொன்றாக கனம் ஆச்சாரியார் செய்து வருகிறார். எனவே இந்த ஆட்சியில் மானமுள்ள - ரோஷமுள்ள தமிழ். மகன் சுயமரியாதையோடு வாழமுடியாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம். பார்ப்பனீய கொடுமையை பாமரமக்களுக்கு எடுத்துரைப்பது வகுப்புத் துவேஷம்: குடிஅரசு 20
என்று சொல்லப்படுமானால் பார்ப்பனீய ஆதிக்கத்திலிருந்து விடுதலை. பெற வழி எடுத்துரைக்க உரிமையில்லையானால் பார்ப்பனீயத்துக்கு அடிமையாயிருந்து உயிர் வாழ்வதைவிட சுத்த வீரனாக - வீரப் புருஷனாக - ஒரு நாளாவது விளங்கி விட்டு மறைவது தான் மேல். என்று சொல்லுவோம். ஆகவே இன்றய அடக்கு முறையிலிருந்து - தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமா அல்லது தங்கள் முயற்சியில் இறந்து பின்வாங்கிக் கொள்வதா என்பது தான் நமதியக்கத்தவர்கள், நமதியக்கத்தில் அபிமானமும் அனுதாபமும் கொண்டவர்கள் மூன். தற்போது இருக்கிற முக்கிய பிரச்சினையாகும்.
- எம்.வி.
குடி அரசு - தலையங்கம் - 9.10.1938
W வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
சென்னையில் மாயெருங் கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே! வடசென்னைத் தமிழர் முன்னேற்றக் கழகக் காரியதரிசி தோழர் செ.சி.ந. காசிராஜன் அவர்கள். முயற்சியினால் கூட்டப்பட்ட இம்மாபெருங் கூட்டத்தில், நானும் பேசக். கட்டளை இடப்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்தி எதிர்ப்பிற்கு நாட்டில் அதிக ஆதரவு கிடைத்துவரும் இக்காலத்தில், இந்தி எதிர்ப்பைப் பற்றி நான் அதிகம் பேசத் தேவையில்லை. இந்தி எதிர்ப்பு செத்துவிட்டதென்று பார்ப்பன பத்திரிகைகளும், சில கூலிப் பத்திரிகைகளும், செய்துவரும் பொய்ப்பிரசாரத்தைக் கண்டு வெளி ஜல்லாவாசிகள் சிறிது ஏமாந்தாலும், சென்னையிலுள்ள நீங்கள் ஏமாற மாட்டீர்களென நினைக்கிறேன். (கைதட்டல்) ஏனெனில் தினம் ஐந்துபேர் நான்குபேர் இரண்டுபேர் இந்தி எதிர்ப்புக்காகச் சிறை செல்வதை நீங்கள். நேரில் பார்த்து வருகிறீர்கள்.
ஆனால், இந்தி எதிர்ப்புச் செய்திகளை வெளிப்படுத்திவரும். “விடுதலையை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாதென: நினைத்து அதன் ஆசிரியரையும் வெளியிடுவோரையும் கைது செய்தனர். இன்றைய பார்ப்பன மந்திரிகள். (வெட்கம் என்ற கூச்சல்) இன்னும். நாம் பணிவதா. அன்றி யாரைக் கைது செய்யலாம், நாடு கடத்தலாம்.
எனப் பலவாறு நினைத்துத் திண்டாடி ஒரு முடிவுக்கு வராது இந்தி எதிர்ப்புச் செத்துவிட்டது என்று மட்டும் கூறுகிறார்கள்.
நாங்கள், இந்தி எதிர்ப்புச் சாகவில்லை; மாறாக நாள்தோறும். வளருகிறது என்று கூறுகிறோம். மேலும் இந்தியினால் உண்டாகும் கெடுதிகளைப் பற்றி நான் இனி இந்தியா பூராவுக்கும் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. ஏன்? “இந்தியினால் கலவரமேற்படுகின்றது. வகுப்புணர்ச்சி உண்டாகின்றது. இந்தியைப் பொதுமக்கள் ஆதரிக்கவில்லை” என அகில இந்திய காங்கரஸ் கமிட்டியே முடிவு செய்துவிட்டது. (கைதட்டல்) இந்தியுடன் இந்துஸ்தானியையும் சேர்த்துக்கொண்டு வரப்பட்ட தீர்மானம் ௮.இ.கா.க.யில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இதனால் இந்தி-உருது சச்சரவு உண்டாகின்றதென அங்கு பேசப்பட்டிருக்கின்றது. இங்கு வந்திருந்தால் தமிழ் விவகாரத்தையும் அத்துடன் சேர்த்திருப்பார்கள். ஆனால் இந்தியில் காரியக் கமிட்டி நடவடிக்கைகள் நடைபெற:
குடி அரசு -198(29௨ ௨ 0௦
வேண்டுமென்றும், அதற்கு ஒரு கமிட்டியை நியமித்தும் ஒரு தீர்மானம். கொண்டு வந்தனர். தோழர் அபுல்கலாம் ஆசாத் அதை ஒப்புக்கொண்டு, முன்பே ஒரு கமிட்டி இருப்பதால் கமிட்டி என்ற பாகத்தை மட்டும் நீக்கிவிட்டு அசல் தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றனர். இதற்கு அர்த்தமென்னவென்றால், காங்கரஸ் கமிட்டி நடவடிக்கைகள் பல பாஷைகளில் நடைபெற நேரிடுமாதலால் அதை விளக்க அதனை இந்தியில் நடத்த வேண்டுமெனத் தீர்மானித்திருக்கின்றனர். இதனை உணராது காரியக் கமிட்டி ஏமாந்ததெனக் கூறுகின்றனர் நமது ஆச்சாரி வர்க்கத்தார். என்னே அவர்களின் வியாக்யானம்.
இந்த தீர்மானத்தைப் பற்றி நாளைவரை ஒரு காங்கரஸ் பத்திரிகையும் எழுதவில்லை. வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். எனவே காங்கரஸ் காரியக் கமிட்டியே இந்தி வேண்டாமென்று தீர்மானித்திருக்கையில், இந்தி எதிர்ப்பு தேசத்துரோகமா? இதைக் கூறும். நாங்கள் தேசத் துரோகிகளா? இதை மறைத்து வரும் அவர்கள். தேசீயவாதிகளா? நீங்களே கூறுங்கள்.
நிற்க எனது மதிப்பிற்குரிய நண்பர் இராஜகோபாலாச்ளரியார் (சபையில் சிரிப்பு)
நாட்டைக் கெடுத்தவன் யார்?
“இந்தி எதிர்ப்பு எனது நண்பன் ராமசாமியின் வேலை” என்று சட்டசபையிலேயே கூறியிருக்கிறார். ஆனால் இந்தியை காங்கரஸ் கொண்டு வந்ததா? ஆச்சாரியார் கொண்டு வந்தாரா? தமிழர் நலங்கருதி இதை நான் எதிர்க்கவேண்டாமா? எதிர்க்க உரிமையில்லையா? நாங்கள். என்ன ஆடுமாடு மேய்த்துக் கொண்டு இங்கு வந்தவர்களா? ஊராரை ஏமாற்றினவர்களா? சோம்பேறி வாழ்க்கையுடையவர்களா? எங்களுக்கு மட்டும் தேசாபிமானம் கிடையாதா? தேசாபிமானம் என்பது ஆச்சாரியாருக்கும் அவரது கட்டத்தாருக்கும் காபிரைட் உரிமையா? (கைதட்டல்) அவர்கள் கூறுவதுபோல் நாங்கள் ஏன் தேசத்தை விற்று வயிறு வளர்க்க வேண்டும்? இதற்காக நான் மற்றவர்களை வையவில்லை. வையுமாறு உங்களையும் ஏவவில்லை. ஆனால் எங்களை தேசத்துரோகி, நாட்டைக் கெடுத்தவன் என்று கூறினால். நாங்கள் பொறுப்போமோ? இந்நிலையில் அவர்கட்கும் நமக்கும் உள்ள. சம்பந்தத்தை எடுத்துக் கூறுவது எனது கடமையல்லவா? நான். கேட்கிறேன் அவர்களுக்கு இங்கு என்ன வேலை? (வெட்கம் என்ற
கூச்சல்) வயலை உழுதார்களா? நெல்லை அறுத்தார்களா? அல்லது வீடுகளைக் கட்டினார்களா? நாட்டை சீர்படுத்தினார்களா? என்ன காரியத்தைச் செய்தார்கள் அந்த சோம்பேறிகள்! (வெட்கம்! வெட்கம்! என்ற பலத்த கூச்சல்)
MW வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி -
இனி ஏமாற்ற முடியாது
ஆதி முதல் தமிழர்களை ஏமாற்றி வயிறு வளர்த்த இவர்கள், தேசத்திற்காக உடல் பொருள்களைத் தத்தம் செய்த எங்களை தேசத். துரோகிகள் என்று கூறத் துணிவு கொண்டு விட்டார்களே! இவர்கட்கு. கஞ்சி வார்த்தது - வார்ப்பது யார்? இந்நிலையில் அம் என்றால். சிறைவாசம்; உம் என்றால் வனவாசம்! யார் அப்பன் வீட்டுச் சொத்து? இதில் உனக்கு என்ன சம்பந்தம்? உனக்கு என்ன யோக்கியதை உண்டு? அன்று மோட்சத்தின் பேரால் எங்களை ஏமாற்றியது போல இன்று தேசீயத்தின் பேரால் எங்களைத் தூக்கிலிடு என்று கூறுகிறாய்! நீ துரோகியா? நாங்கள் துரோகிகளா? இன்று கூறுகின்றேன் தேசவிடுதலைக்காக உண்மையில் உயிரைக் கொடுக்க தயாராயிருக்கிறேன். (ஈ.வெ.ரா. வாழ்க என்ற கூச்சல்)
வெள்ளையன் சுரண்டுகிறான், அதை எனக்குக் கொடு என்பவன். தேசீயவாதியா? வட நாட்டுக்காரன் எங்களை கொள்ளை அடிக்கிறானே; மார்வாடிகள் கொடுமை செய்கிறார்களே; அவர்களை என்ன செய்தாய்? அவர்களிடம் பங்கல்லவோ கேட்கின்றாய்! பிர்லா, பஜாஜ் இவர்களிடம். ரகசியமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு எங்களை மோசம் செய்து வஞ்சிக்கின்றாயே. இந்நிலையில் நீங்களல்லவோ எட்டு பங்கு குலாம்கள். (கைதட்டல்) காங்கரசின் பேரால் ஆட்சி செய்ய உங்கட்கு வெட்கமில்லையா?
தேர்தல் வாக்குறுதி எங்கே? இப்பதவி உங்களுக்கு எப்படி வந்தது? தேர்தல் காலத்துக்குரிய வாக்குறுதிகள், பேசிய வீரங்கள் என்ன? ஆப்பக்காரியிடம் சென்று நீ ஏன் இந்த அனலில் உட்கார்ந்து கொண்டு கஷ்டப்படுகிறாய் மஞ்சள். பெட்டியில் ஓட்டைப்போடு, கடையிலிருந்து அரிசி பருப்பு முதலியவைகளை சும்மா அள்ளி வரலாம் என்றாய். அவசரமாக: ரயிலுக்கு போவோனிடம் சென்று நீ ஏன் இவ்வாறு ஓடுகிறாய், காங்கரசை ஆதரி. நினைத்த இடத்தில் கையைக் காட்டினால் வண்டி நின்றுவிடும் என்று கூறினாய்; வயலில் உழுபவனிடம் சென்று நீ ஏன்: இவ்வாறு மழையிலும், வெய்யிலிலும் துன்புறுகின்றாய் மஞ்சள். பெட்டியை நிரப்பு நெல் வீடு தேடிவரும் என்று அறைந்தாய்; மழை வேண்டுபவனிடம் சென்று மஞ்சள் பெட்டியை மனதில் நினைத்தால் மழை வரும் என்று மார்தட்டிக் கூறினாய்; அறிவாளியிடம் சென்று எங்களை தேர்ந்தெடுங்கள் வெள்ளையரை விரட்டலாம், போலீசிடத்துச் சலாம் வாங்கலாம் என்று சாற்றினாய்.
ஆனால் இன்று அவைகளையெல்லாம் மறந்து கவர்னரை “வழிகாட்டி' நண்பன், ஞானாசிரியன்' என்று கூறினால் எங்கள் வயிறு எரியாதா? செய்வதைச் செய்துவிட்டு எங்களை வீணே ஏன் வையவேண்டும்?
குடிஅரசு 1938 (2) 04
எல்லாரையும் ஏமாற்றி என்றென்றைக்கும் தலைதூக்காமற் செய்யும் கழுத்தறுக்கும் வலையை இன்று செய்கின்றாய். இதைக் கூறினால் - கண்டித்தால்-சிறைவாசமா? நாடு கடத்தலா?
ஏகாதிபத்திய ஓழிப்பு எங்கே?
அன்று ஜவஹர்லால் மொண்டியாணாலும் முடமானாலும் ஆளைக் கவனிக்காது காங்கரசை ஆதரி என்றும் காங்கரஸ் மந்திரி பதவியை ஏற்காதென்றும் கூறினார். மஞ்சள் பெட்டி நிரம்பியவுடன் மாகாண சுயாட்சியை உடைத்தார்களா? அன்று கூறியது போல் எப்படி உள்ளே. புகவேண்டுமென்று தானே நினைத்தார்கள். அன்று வீரம் பேசிவிட்டு பூணுலைப் பிடித்துக் கொண்டு இராஜ விசுவாசப் பிரமாணம் செய்ய வெட்கமில்லையா? (கைதட்டல்) உங்கள் ஏகாதிபத்திய ஒழிப்பு எங்கே?
கட்டுப்பாடு, ஒழுங்கு நடவடிக்கை என்பதன் மூலம் பல. மந்திரிகளையும் முனிசிபல் கெளன்சிலர்களையும் ஜில்லாபோர்டு. மெம்பர்களையும் ஒழித்து வருகின்றனர். ஆனால் அதிலும் நியாயம் உண்டா? இன்று சுகாதார மந்திரியாகவிருக்கும் டாக்டர் ராஜன் எந்தவிதத்தில் காங்கரஸ்காரர்? எந்தத் தொகுதியில் அபேட்சகராக நின்றார்? அவர் திருச்சி நகர சபையில் காங்கரஸ் அபேட்சகராக நின்ற ஒரு தமிழரை எதிர்த்து ஒழித்தார். அதனால் எல்லா இந்திய கா. கமிட்டியில் தண்டிக்கப்பட்டார். இதைக் கண்டு கனம் ஆச்சாரியாரும். அன்று துறவு பூண்டாரே ஆனால் பதவி கிடைத்தவுடன் வலியச் சென்று அவரை அழைத்து வந்து நியமனம் மூலம் சுகாதார மந்திரி ஆக்கினார். தோழர் ஆச்சாரியார் இது என்ன வருணாச்சிரம தர்மமா? காங்கரஸ் நியாயமா? சற்று சிந்தியுங்கள் ஆச்சாரியார். நியாய புத்தியுடையவரானால், டாக்டர் ராஜனை ஏதேனும் ஒரு தொகுதி மூலம் சட்டபை உறுப்பினராக்கி யிருக்கலாம். அல்லது அவரிடம் மன்னிப்பு வாங்கியிருக்கலாம். அன்றி ௮.இ.கா.விடம் கூறி அவரை மன்னித்துவிட்டதாக அறிவித்திருக்கச். செய்யலாம். இவை ஒன்றினையும் செய்யாத இவர் செய்கை ஒழுங்கானதா? நாணயமானதா? பார்ப்பனர்க்கு ஒரு நீதி; அல்லாதாருக்கொரு நீதியா? இந்த நிலையில் அவர்கள் நம்மை மிரட்டுவதற்குக் காரணம் நமது இளிச்சவாய்த்தனமே ஒழிய வேறில்லை.
நிற்க இக்கூட்டம் எலக்ஷனுக்காகக் கூட்டப்பட்டதென யாரோ சொன்னாராம். நான் அப்படி வரவில்லை. இன்ன பெப்டியில்தான் போடுங்கள் என்று கூறவில்லை.
எனது கூற்று: ஆனால் யோக்யர்கட்குப் போடுங்கள் என்றுதான் கூறுகின்றேன். (பலத்த கை தட்டல்) நாணையமுள்ள ஏழைகளிடத்து அன்புள்ள தன்னல:
35 ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
மற்றவர்கட்குப் போடுங்கள். இதைக் கூறும் என்னைத் தேர்தல் பிரசாரகன்' என்று கூறினாலும் நான் கவலை கொள்ளப்போவதில்லை. ஏனெனில் நான் மொண்டியானாலும் முடமானாலும் போடு என்று கூறவில்லை. கழுதைகளை நிறுத்தினாலும் கவலைகொள்ளாது போடுங்கள் என்று கூறவில்லை. ஏனெனில் சர்க்கார், எலக்ஷனில் நிற்க மனிதனுக்குத்தான். உரிமை உண்டு என்று சட்டஞ் செய்துள்ளனர். எனவே, காங்கரஸ்காரர் கூற்று சட்டப்படி தப்பாகும். ஆதலின் தகுதியுள்ளவர்களுக்குப் போடுங்கள் என்று கூறுகின்றேன். காங்கரஸ்காரன் கழுவினால் தான். கக்கூஸ் நாற்றம் போகுமா? வீதி சுத்தமாகுமா? இல்லையே. அப்படிச் சொன்னால் அவன் கன்னத்தில் அன்றோ அறைய வேண்டும். (கைதட்டல்) ஒரு கட்சிதான் முனிசிபாலிட்டியை நடத்த வேண்டுமென்பது சட்டமல்ல. அது முன்புள்ள சர்க்கார் சட்டப்படி தான் நடக்க வேண்டும். ஆதலின் ஒரு கட்சியார்தான் வரவேண்டுமென்று. கூறுவது பித்தலாட்டமாகும்.
எங்கு வாழ்கிறது
ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அபேட்சகராக நிற்பவன், சோற்றுக்கு வகையுடையவனா என்று பாருங்கள். (பலத்த கைதட்டல், சிரிப்பு) ஏன் சிரிக்கின்றீர்கள்? அவன். என்ன சாணியைத் தின்பானா? சோற்றைத் தானே தின்பான்! சோற்றுக்கில்லாதவனை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினால், அவன். இருடவும் பார்ப்பான்; லஞ்சம் வாங்கவும் பார்ப்பான்; எதற்கும்.
பார்ப்பான். (பலத்த சிரிப்பு).
காங்கரஸ் கை வைத்த இடமெல்லாம் நாசமாகிவிட்டது திருநெல்வேலி முதல் சென்னை வரை பாருங்களேன். ஊழல்: எங்கில்லை? லஞ்சப் பேச்சில்லாத இடம் எது? கங்கையுடன் சேர்ந்த சாக்கடையும் புனிதமடைவதுபோல 4 அணா கொடுத்துக் காங்கரசில். சேர்ந்தால் அவன் புனிதமான தேசீயவாதி ஆகிவிடுவான்! என்று அன்று ஆச்சாரியார் கூறினார். ஆனால் இன்று பலர் துரோகம் செய்தாரென்றும், கட்டுப்பாட்டை மீறினாரென்றும் தள்ளப்பட்டு விட்டார்களே. எங்கே அவர்கள் புனிதத் தன்மை? தள்ளப்பட்டவர்கள் யார்? பெரும்பாலும். தமிழர்கள்தானே காரியம் கை கூடிய பின்னர் யார் எக்கேடு கெட்டாலென்ன. என்றால், எதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவேண்டும்? லஞ்ச ஒழிவதற்காகக் காங்கரசிற்கு ஓட்டளியுங்கள் என்று கூறினார்களே எங்கே. லஞ்சம் ஒழிந்தது? வடநாடு பூராவும் லஞ்சத் தாண்டவம். சேலத்தில் லஞ்சம். சென்னையில் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் லஞ்சப்படலம் சிரிப்பாய்ச் சிரிக்கின்றது. சரோஜனி அம்மையார், படேல் முதலியவர்கள். மீது லஞ்சக் குற்றத்தை மாஜி மந்திரி டாக்டர் காரே சுமத்துகிறாரே, இது
குடிஅரசு - 1938 (2) —— 0௦
காரியக் கமிட்டிக்கும் வந்ததே. ஆனால் இதனை விசாரித்த நீதிபதி, இது ஆதாரமில்லாமல் வரவில்லை ஆனால் சரியாக ௬ஜூ ஆகவில்லை என்று கூறியிருக்கிறாரே. (கைதட்டல்)
பதவி வகிக்கப் பார்ப்பனர்கட்கு யோக்கியதை இல்லை என்று நான் என்றும் கூறியது கிடையாது. ஆனால் ஆச்சாரியாரவர்கள். மற்றவர்களைவிட எங்கட்குத்தான் யோக்கியதை அதிகம் என கூறுகின்றாரே.. இதுபோல மற்றவர்கள் கூறுவது தப்பா? தமிழர்கள் அதில் நிழலுக்கு கூட ஒண்டக் கூடாதா?
பெரிய அதிகாரங்களெல்லாம் பார்ப்பணகட்குக் கொடுக்கப்படுகின்றன. பார்ப்பனர்கட்காகப் புதிதாக உண்டாக்கப்படுகின்றன. ஆனால் பார்ப்பனரல்லாதார் அநாவசியமாகத் தள்ளப்படுகின்றனர். இவைகள் மனப்பூர்வமாக - பச்சையாக இன்று நடைபெறுகின்றனவே. மாகாண அதிகாரிகள் சஸ்பெண்டு டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர். ஆனால் ஜஸ்டிஸ் ஆட்சி நடக்கும் காலத்தில் இவைகள் நடக்கவில்லையே.
வார்தா திட்டம்
இனி தமிழர்கள் சூத்திரத் தன்மையை விட்டுத் தலையெடுக்க முடியாதபடிச் செய்யும் சூழ்ச்சிகளில் காந்தியாரின் வார்தாத் திட்டமும் ஒன்று. தகப்பன் செய்த தொழிலை மகன் செய்யவேண்டுமாம். இது நடக்கக் கூடியதா! ஆனால் நம் தாய்மார் மஞ்சள் சீலையைக் கட்டிக் கொண்டு. மூட பக்தியால் மஞ்சள் பெட்டியை நிரப்பினர். காந்தியோ முழங்கால். வரை வேட்டி உடுத்தி, பழம், ஆட்டுப்பால் உண்டு மக்களிடத்து ஒரு மூடநம்பிக்கையுண்டு பண்ணி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகின்றார். இதை நோக்க, காங்கரஸ்காரர்களில் காந்தி தலைமைக் கொள்ளைக்காரர் என்று கூறுவேன் (வெட்கம் என்ற கூச்சல்)
இந்த நாடு விடுதலை பெற்றால் என்னைவிட ஆனந்தமடைகிறவர்கள். வேறு யாவருமில்லை. ஆனால் வெள்ளைக்காரனால் ஒரு பங்கு கஷ்டம். உங்களாலோ 999 பங்கு தமிழர்கட்குத் துன்பம் உண்டாகிறது. இந்நாட்டிற்கு வெள்ளையரைக் கொண்டு வந்தது யார்? நீ உள்ளவரை: அவர்கள் நாட்டை விட்டு போகமாட்டார்களோ!
எதிரியை விரட்டக் கோட்டை வாயிலில் துளசியைத் தெளித்த நாயக்க அரசனைப்போல தோழர்கள் முத்துரெங்கம், சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் ஆகியோர் ராட்டினத்தையும் தக்கிழியையும் எடுத்துச் சுற்றினால், நம்மீது எதிரிகள் போடும் குண்டு போய்விடுமென்று இன்னமும் கூறுகிறார்களே! (கைதட்டல்) 20 வருஷமாகச் சுற்றினோமே. ஒரு வெள்ளையன் போனானா? ஒரு வெள்ளைக்காரனுக்கு தலைவலிகூட வரவில்லையே! புராணகாலத்து விஷ்ணு சக்கரம் போலல்லவா இன்று ராடடினத்தைக் காட்டி ஏமாற்றுகின்றனர்.
W வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இனி கதருக்காக 2 லக்ஷம் ஒதுக்கியுள்ளார் கனம் ஆச்சாரியார். உண்மையில் இது கதருக்கா? அன்றி காங்கரஸ் பிரசாரம் செய்வதற்கா? மேலும் 30 ரூபாய் சம்பளம் பெறும் உபாத்தியாயர், உபாத்தியாயனிகளும். 15 ரூபாய் பங்கா இழுப்பவரும் கதர் உடுத்த வேண்டும். இல்லையேல். வேலை போய்விடும் என்கின்றனர். பெரிய உத்தியோகஸ்தர்கள் கதர். உடுத்த வேண்டுமென்று உத்தரவிட பயமா?
அன்று ஜஸ்டிஸ்காரர்கள் மூன்று மந்திரியை நான்கு பேராக்க: வேண்டுமென்று கூறிய காலத்து கூச்சல் போட்டார்கள். இன்று கைதூக்கும் 240 பேர்கட்கு 75 ரூபாய் தலைக்கு மந்திரிகள் 10 அதற்கு. விரல்கள் 10. சம்பளம் 500 ரூபாய், வீட்டு வாடகை கார் அலவன்ஸ் 300 ரூபாய். ஆனால் எல்லா மந்திரிகளும் சர்க்கார் காரில் பிரயாணம். செய்கின்றனர். ஆனால் ஆச்சாரியார் வசிப்பது 45 ரூபாய் வாடகையுள்ள வீடுதானே. அவர் நாணையமுள்ளவரானால் மீதி 105-ரூபாயைத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டாமா?
இன்று சிறையில் நடப்பதென்ன?
நிற்க இந்தி வீழ்க தமிழ் வாழ்க! என்று சாத்வீக முறையில். கூறுபவர்கட்குச் சிறை, மொட்டை, களி போடுதல், நெல் குத்தச்சொல்லல்: இவைகளா தண்டனை? முன்பு வெடிகுண்டு போட்டவர்கட்கும் பலாத்காரம்: செய்தவர்கட்கும் பி. கிளாஸ் வேண்டுமென்று கூச்சல் போட்டனர். விடுதலை செய்ய வேண்ட மென்றனர். இன்றும் காந்தியார் பலாத்காரக்: கைதிகளை வங்காளத்தில் விடுதலை செய்ய வேண்டுமென்று கூறுகிறார்.
ஆனால், நேற்று சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட் தொண்டர்களைக் கைது செய்து வந்த போலீசாரைப் பார்த்து இவர்கள் (தொண்டர்கள்) இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்று தான் கூறினார்களா? வேறேதேனும். கூறினார்களா என்று கேட்டபோது வேறு ஒன்றும் கூறவில்லை என்று கூறியுள்ளனர் போலீசார். இதற்கு 4 மாதம் விதிக்கின்றார் உடனே மாஜிஸ்திரேட். இதுதானா காங்கரஸ் நீதி? நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை... ராஜத்துரோகியுமல்ல.. நாங்கள் ராஜாவைப் பார்த்தது கூட இல்லை. ஆனால் மந்திரிகள் தவறு செய்தால். அதைக் கண்டிக்கிறோம். இது தவறானதா?
இனி கனம் ஆச்சாரியார் பெண் பிள்ளைகளை இழுத்துக் கேவலமாகப் பேசுகின்றனர் தொண்டர்கள் என்று கூறுகின்றார். அப்படி அவர்கள் பேசினார்கள் என்பதற்கு என்ன சான்று? அப்படிஅவர்கள் கூறியிறாந்தாலும் அவர்களை ஒடுக்க கிரிமினல். சட்டத்தைத் தானா உபயோகிக்க வேண்டும்? இந்தி எதிர்ப்பாளர்களை: சோற்று ஆட்கள் என்று கூறுகின்றனர். யார் சோற்றாட்கள்? அன்று
குடி அரசு -198(29௨ ௦0
காங்கரஸ் பெரியார்கட்கு - சோற்றுக்கு இந்தக் கைதானே 'செக்' எழுதிக் கொடுத்தது நான் காங்கரசின் தலைவர் காரியதரிசியாயிறாந்த காலத்தில். ஆனால் அது என் பணம் அல்ல. காங்கரஸ் பணந்தான்.
பார்ப்பனப் பத்திரிகையாக ஒரு கேலிப் பத்திரிகை இந்தி எதிர்ப்புத் தொண்டர்களைப் பிச்சைக்காரர்களாகவும் தலைவர்களை *வாங்கித்தா' என்று கேட்பவர்கள் போலும் படம் போட்டுக் காட்டுகிறது. நமது கஷ்டத்தை - ஆதரவற்ற தன்மையை - அவன் கேலி செய்கிறான். நமக்கு ஆண்மை யிருந்தால் நாம் ஒற்றுமையுடையவர்களாயிருந்தால் அவனுக்கு இங்ஙனம் படம் போட்டுப் பரிகசிக்கத் தைரியம் வருமா? நமக்குப் புத்தி இல்லை என்பது அவனுக்குத் தெரியும், நம்மில் சிலருக்கு சில. எலும்புகளைப் போட்டு நம்மைப் பிரித்து ஏமாற்றுகிறார்கள். இவைகளை அலசிப் பார்த்து நியாயத்தைக் கடைப்பிடியுங்கள். மேலும் கூட்டங்களில் நாம் நியாயமாகச் சொல்லும் சொற்களை எழுதிக் கொள்வதில்லை. நாம் எங்கு தவறுகிறோம் என்பதை மட்டும் எழுதிக் கொண்டு மேலதிகாரிகளிடம்.
தெரிவித்து நம்மைக் கைது செய்யத் தூண்டுகின்றனரெனத் தெரிகிறது. இது ஆண்மையா, பேடித்தனமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். (பேடித்தனம் என்ற கூச்சல்)
இறுதியாகக் கூறுகின்றேன். தோழர்களே! இவைகள் ஒழிய வேண்டுமானால் பார்ப்பனப் பூண்டு இந்நாட்டைவிட்டு அடியோடு ஒழிய வேண்டுமென்று கூறுவதுடன் எனது பேச்சை முடித்துக்கொள்ளுகிறேன்.
(பார்ப்பன ஆட்சி ஒழிக ஈவெரா. வாழ்க என்ற போரொலி யாண்டும்)
குறிப்பு: 13.10.1938 ஆம் நாள் சென்னை ராயபுரம் ராபின்சன். தோட்டத்திற்கடுத்த மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இந்தி. எதிர்ப்புக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 16.10.1938
299 ௨ வரயாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
இனி செய்ய வேண்டியதென்ன?
உலகிலே நாம் எத்திசையை நோக்கினும், எந்நாட்டை நோக்கினும் சுதந்திரத் தீ மூண்டு கொண்டிருப்பதையும், சுவாலை விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடு வாழ விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சுதந்தரமாக வாழ விரும்புகின்றனர். எத்தகைய பழக்கவழக்கத்தையும். கட்டுத் திட்டத்தையும் உடைத்தெரிந்துவிட்டு சுதந்திரத்தோடு, மனிதாபிமானத்தோடு வாழ ஆசைப்படுகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் அடிமையிலிருந்து விடுதலை அடைய ஆர்வங் கொண்டுழைக்கின்றனர். ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் ஆதிக்கத்திலிறாந்து விடுதலை அடையப் போராடி வருகிறது. சமத்துவமாக, சம உரிமையோடு, சம அந்தஸ்தோடு விளங்க வேண்டுமென்று ஒவ்வொரு சமூகமும் பல. வருடங்களாக போராடி வருகிறது. இதை எவரும் மறுக்கத் துணிவு கொள்ளார்.
'இடுக்கண்களையும், அவமானத்தையும், தாங்கள் அடைந்த நிலைமையையும் எடுத்துரைத்தல் நியாயமா அல்லவா? அதற்கு உரிமையிருக்க வேண்டியது அவசியமா அல்லவா? அப்படி எடுத்துரைப்பதால், அடிமையாக: வைத்திருந்த நாட்டாருக்கோ, சமூகத்தாருக்கோ, வகுப்பாருக்கோ மனச்:
சஞ்சலம் நேருவதும் சகஜமே. இதனால் துவேஷத்தை உண்டு பண்ணுவது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? வாஸ்தவத்திலே ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தினிடமிருந்து விடுதலையடைவதற்காக தாங்கள். அடைந்த இழிநிலைமைக்குக் காரணத்தை எடுத்துரைப்பது துவேஷமானால் - குற்றமானால் இந்திய சமூகத்திற்கு பிரிட்டிஷ்
சமூகத்தின் மீது வெறுப்பையும், துவேஷத்தையும் கற்பித்து வந்தது. எப்படி நியாயமாகும்? அதற்கு மட்டும் பிரிட்டிஷ் சட்டம் இடங்கொடுத்தது. ஆனால் இந்தியாவிலே ஒரு சமூகம் மற்றொரு: சமூகத்தின் ஆதிக்கத்தினின்று விடுதலையடைய போராடுவதற்கு மட்டும் பிரிட்டிஷ் சட்டம் இடங் கொடுக்கவில்லையா?
பிரிட்டிஷ் மன்னர் பிரான் ஆட்சியில் வெள்ளையரும் இந்தியரும். மன்னர் பிரான் பிரஜைகள் என்றே நாம் கருதுகின்றோம். ஆகவே மன்னர்
குடி அரசு - 1988 (29௨ 0
பிரான் பிரஜைகளுக்குள் வெள்ளையரை வெறுக்க, விரட்டியடிக்க, மூட்டை முடிச்சுகளுடன் சப்பலேற்ற இடங்கொடுக்கும் சட்டம் ஒரு சமூகம் தன்னை அடிமை வாழ்விலே வைத்திருக்கும் மற்றொரு சமூகத்தை விரட்டியடிக்க இடம் கொடுக்கவில்லையென்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
இனி வகுப்பு துவேஷிகள் என்பவர்கள் யார் என்பதை சிறிது ஆராய்வோம். வகுப்புகளை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து வேலை செய்கின்றவர்களா? அல்லது அது ஒழிய வேண்டுமென்று வேலை செய்பவர்களா?
வகுப்பு என்பது யாரால் ஏற்பட்டது? வகுப்புக்கு வகுப்பு பேதமும், மேல் கீழ் தன்மையும் யாரால் ஏற்பட்டது?
கீழ் வகுப்பார் என்பவர்களைக் கொடுமை செய்து வருபவர்கள் யார்?
பெருங்குடி மக்களை சூத்திரன் என்றும், 4-வது வகுப்பான். என்றும் சொல்லுகிறவர்கள் யார்?
பிராமணனுக்கு வேறு இடம், சூத்திரனுக்கு வேறு இடம் என்று சொல்லி எழுதிக் கட்டியிருப்பவர்கள் யார்?
பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதி வைத்திருப்பவர்கள் யார்?
பார்ப்பண்களுக்கு மாத்திரம் என்று விளம்பரம் செய்தவர்கள் யார்?
மக்களைப் “பிறப்பித்த கடவுளை” ஆராதிக்க வேண்டுமாணல் எங்கள்.
மூலம்தான் ஆராதிக்க முடியும். ஐந்தாவது வகுப்பானுக்கு அந்த உரிமையும். இல்லை என்றும் அவன் கோவிலுக்குள் குளத்துக்குள் வரக்கூடாதென்றும். தடுக்கிறவர்கள் யார்? அதுவும் சட்டபூர்வமாகவும் சாஸ்திர மூலமாகவும். தடுத்து வருகிறவர்கள் யார்? இவர்கள் எல்லாம் வகுப்புவாதிகள். அல்லாதவர்களா? வகுப்புத்துவேஷக்காரர்கள் அல்லாதவர்களா?
வகுப்பு அபிமானிகளா? வகுப்பு அன்பர்களா? என்று கேட்கின்றோம்.
எவ்வாறு இந்தியாவில் இந்தியர் அல்லாத மற்றவர்கள். அன்னியர்களோ அவர்களுக்கு உரிமையில்லையோ அது போலவே தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத ஏனையோர் அன்னியர்தானே? அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எப்படி உரிமையிருக்க முடியும்?
தவிர, காங்கரசிலே பாஷா வாரியாக மாகாணம் பிரிக்க வேண்டு. மென்றும் பிரிப்பதற்கு அவரவர்களுக்கு உரிமையுண்டென்றும் காங்கரஸ் தீர்மானித்திருக்கையில் தமிழர் தமிழ்நாட்டின் விடுதலைக்காக, தமிழர். உரிமைக்காக போராடுவது எப்படி தவறாகும். தமிழர் ஒற்றுமையை பலப்படுத்த செய்யப்படும் காரியம் எப்படி வகுப்புத் துவேஷமாகும்?'
M வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
ஏதோ தங்கள் கையில் அதிகாரம் இருக்கிறதென்ற மமதையால் - ஆணவத்தால் - நியாயமாகப் போராடுகிறவர்கள் எத்தகையோராயிருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு படைத்தோர்களாயிருந்தாலும், பிரிட்டிஷ் அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு அடக்கிவிடலாமென்று இன்று கருதுவார்களேயானால் பிற்காலத்தில் இவர்கள் நிலைமை எவ்வளவு பயங்கரமாக முடியுமென்று நாம் சொல்லத் தேவையில்லை. சரித்திரங்களே. சொல்லும். உலகத்தின் பற்பல தேச சரித்திரங்களை ஒருமுறை உற்று நோக்கியிருந்த எவரும் அந்நிலை நேரும் என்பது துர்லபம் என்று நினைக்கமாட்டார்கள். உதாரணமாக இங்கிலாந்து தேச சரித்திரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 8-ம் ஹென்றிற்குப்பின் அரசாட்சியை நடத்திய இரண்டு அரசுகளின். ஆட்சியில் நடந்த மாறுதலை புரட்சியைக் கண்டுமா சந்தேகம் என்று கேட்கின்றோம். அந்தவிதமான நிலைமை நமது நாட்டிலும் வரக்கூடா தென்பதுதான் நமது ஆசை. ஆனால் காங்கரஸ்காரர்கள் போக்கைப் பார்த்தால் எதிர்கால நிலைமையைக் குறித்து கண்ணீர் விட வேண்டியதிருக்கிறது நகர சபைகளையும், ஜில்லா போர்டுகளையும், சட்டசபைகளையும். கைப்பற்றிய காங்கரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் போக்கைப் பார்த்தால் அவர்களே அந்நிலைமையை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
தமிழன் சுதந்தரத்தோடு, மானத்தோடு, ஒரு மனிதனாக விளக்க வேண்டுமானால் வெள்ளையினிடமிருந்து விடுதலைப் பெற்றால் மட்டும் போதாது. பார்ப்பனிபத்திலிருந்தும் விடுதலையடைய வேண்டும். ஆகவே பார்ப்பனீயத்தையும் அதன் கொடுமையையும் எடுத்துரைப்பது சட்ட விரோதமானால் தமிழன் என்று விடுதலையடைவது என்று கேட்கின்றோம். வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த தமிழன் பார்ப்பனிபத்துக்கு அடிமையாக வாழ வேண்டியதுதானா? நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனீய ஆதிக்கத்தின் மானங்கெட்ட வாழ்வைவிட வெள்ளையர் ஆதிக்கத்தின் வாழ்வு எவ்வளவோ மடங்கு மேலேன்று கூறுவோம். கடைசியாக ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள பிரியப்படுகிறோம். அதாவது இன்றைய பார்ப்பனர் ஆட்சி, தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள், இதுவரை அவர்கள் துடையில் கயிறு திரித்து வந்தது போல இனிமேல் முடியாது, இதுவரை அவர்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வந்த சோம்பேறி வாழ்க்கை செல்லாது, அந்த காலம் மலையேறிவிட்டது, இனி நாம் பேசாது இருந்தால் தங்களது பழைய கால சூழ்ச்சிகள் வெளிப்பட்டு தாங்கள் பழையபடி கூடாரம் தூக்கி தேச தேசமாக சஞ்சாரம் செய்ய வேண்டிய காலம் நேரிடும் என்று எண்ணி பிரிட்டிஷ் சர்க்கார் “சாத்தான்! சர்க்கார் அடக்குமுறை சட்டங்களை - வாய்ப்பூட்டுச் சட்டங்களை - சுதந்தரத்தை ஒடுக்க ஏற்பட்ட சட்டங்களைக் கொண்டு தமிழர்களை அடக்கியாள முற்பட்டுவிட்டது.
குடி அரசு - 1938 (2) — m
அத்தகைய அடக்குமுறைக்கு முதல் முதலாக இரையானது “விடுதலை' ஆசிரியரும் பத்திராதிபரும் என்று சொன்னால் மிகையாகாது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிறிஸ்தவ, முஸ்லீம், பார்ப்பனரல்லாத மக்களின் வாக்காக சர்க்காருடன் போரிட்டு வந்த “விடுதலை” இன்று வாய் மூடி மெளனியாக வெளிவர வேண்டியிருக்கிறது.
அதன் வாயை திறப்பதற்கு சாவி தமிழர்கள் கையில்தான் இருக்கிறது. அந்தச் சாவிதான் ஒற்றுமை. தமிழர்களாகிய பார்ப்பனரல்லாதாரும், கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகிய அந்த சாவியைக்: கொண்டு திறந்தால் “விடுதலை' யின் வாய் திறக்கப்படுவது பெரிய காரியமல்ல. ஆகவே சுதந்தரத்தோடு தமிழன் வாழ விரும்பினால். மானாபிமானத்தோடு வாழ வேண்டுமானால் தனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்திலிருந்து “விடுதலை”யடைய வேண்டுமானால், சுத்தத் தமிழனாக வாழ வேண்டுமானால் தமிழர்கள் தங்களுக்குள்ளிருக்கும். பேதா பேதத்தை ஒழித்துவிட்டு ஒற்றுமைப்பட்டு, ஒருமனப்பட்டு கட்டுப்பாடுடன் ஒரு தலைவரின் கீழ் போராட வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். இதுதான் இனி தமிழர்கள் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையுமாகும்.
- மா.வா.
குடிஅரசு - தலையங்கம் - 16.10.1938
W வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
தீபாவளி பண்டிகை
இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப்போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையை கொண்டாடப்போகின்றீர்களா? என்பதுதான் “நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?” என்று கேட்பதின் தத்துவமாகும். நண்பர்களே சிறிதும் யோசனையின்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சியின்றி சுயமரியாதை இயக்கத்தின்மீது வெறுப்புக்கொள்ளுகின்றீர்களே யல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும், உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும் ஜீவனற்ற தன்மையான “பழைய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான. வியாதிக்கு இடங்கொடுத்துக்கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும். செலவழிக்கத் தயாராயிருக்கின்றீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவை சிறிதுகூட செலவழிக்கத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பனரல்லாதார். களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராண புஸ்தகவியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான. மக்கள் ஞானமற்று மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப்பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
புராணக் கதைகளைப் பற்றி பேசினால் கோபிக்கிறீர்கள். அதன். ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளை பொத்திக்கொள்ளுகின்றீர்கள். “எல்லாருக்கும் தெரிந்ததுதானே; அதை ஏன் அடிக்கடி கிளருகின்றீர்கள்.
கடி அரசு - 1938 (2) ——
இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா" என்று கேட்கின்றீர்கள். ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்குள்ள அறுபது நாழிகை காலத்திலும். புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராண புரட்டை உணர்ந்தவர்களா?' புராண ஆபாசத்தை வெறுத்தவர்கள் ஆவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். பண்டித, பாமர, பணக்கார ஏழை சகோதரர்களே!
இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினிரகள், எவ்வளவு யாத்திரை செய்தீர்கள், இவற்றிற்காக எவ்வளவு பணச்செலவும் நேரச்செலவும் செய்தீர்கள், எவ்வளவு திரேக பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோலிப்பதில். என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள்மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றி பேசுவதால் என்ன பயன்? “நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்” என்றால் அதற்கு “நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்” என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? அன்பர்களே! சமீபத்தில் தீபாவளிப்பண்டிகை என்று ஒன்று வரப்போகின்றது. இதைப் பார்ப்பனரல்லாத மக்களில் 1000க்கு 999-பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள். பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால் பொதுவாக எல்லோரும் அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும், பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று. மக்கள், மரு மக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததானதுமான. துணிகள் வாங்குவது என்பது இரண்டு. அர்த்தமற்றதும், பயனற்றதுமான. வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசுவகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று. பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடுவீடாய் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சி பணம் வாங்கி அதை: பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு. இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து. அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவதும். ஆறு. இந்தச் செலவுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இது போன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும் அதற்காக கடன்படவேண்டியிருக்கின்றது என்பதுமான விஷயங்களொருபுற மிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ,
A வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளி பண்டிகை என்றால் என்ன, அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத் தான் முடியுமே ஒழிய மற்றபடி எந்தவிதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவிற்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம்: பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. கந்தப்புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள. மக்கள் பொதுவாக இவை யெல்லாவற்றையும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான சம்பவங்களில். ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்ல வேண்டும் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்: சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி. நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இம்மாதிரியான ஒரு. பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமா வென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள் தங்களை ஒரு பெரிய சமூகவாதிகளென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள். என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ “காளைமாடு கண்ணு (கன்றுக் குட்டி) போட்டிருக்கின்றது” என்றால். உடனே “கொட்டடத்தில் கட்டி பால் கறந்து வா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கிறோமே யொழிய “காளை மாடு எப்படி கண்ணுபோடும்” என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும். கிராமாந்தரங்களில் இருப்பவர்களைவிட பட்டணங்களில் இருப்பவர்கள்.
குடி அரசு - 1938 (2) —— ௦
மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களைவிட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும் மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதையும் பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூசை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, அவிட்டம் முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களைவிட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவே யிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும் குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில். சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய்ப் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் சரீரமில்லாத ஒரு தலைமுண்ட உருவத்தை வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயண காலக்ஷேபங்களும் பெரிய புராண திருவிளையாடல் புராணக்: காலகேஷபங்களும், பொது ஸ்தாபனங்கள் தோறும் கதா காலகேஷ்பங்களும் நடைபெறுவதையும் இவற்றில் தமிழ்ப் பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கெளரவப்பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள்தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு” என்பாரும். “புராணங்களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் “பார்ப்பனர் சம்மந்தம் கூடாது" என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு “நாங்கள் தான் பிரதிநிதிகள்" என்பாரும் மற்றும் திராவிடர்கள் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு மென்பாரும். பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இம்மாதிரியான விஷயங்களில். படித்தவர்கள் பணக்காரர்கள் உத்தியோகஸ்தர்கள் என்கின்றவர்கள் போன்ற. கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்கள். எதிர்பார்ப்பதைவிட, பிரசாரம் செய்வதைவிட, உலக அறிவு உடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதே, பிரசாரம் செய்வதே பயன் தரத்தக்கதாகும்.
எப்படியாணாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை: உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 16.10.1938
W வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
தமிழர் செய்ய வேண்டிய வேலை
தமிழர்கள் சமூக வாழ்வில் தமிழ்நாட்டிலேயே கீழ் ஜாதியாய் இழி ஜாதியாய் சூத்திரராய் கருதப்படுகிறார்கள்.
தமிழர் தலையில் சுமத்தப்பட்ட மதங்களும் தமிழர்களை 4-ம் ஜாதி 5-ம் ஜாதி சூத்திர ஜாதி சண்டாள ஜாதி என்று சொல்லுகின்றன.
தமிழர்களுக்குள் புகுத்தப்பட்ட கடவுள்களும் தமிழ் பெண்களிலேயே தாசிகள் இருக்கச் செய்வதோடு அக்கடவுள்கள் இந்தத் தாசிகள். வீட்டுக்கு போகும் உற்சவங்களும் கொண்டாடப்படுகின்றன.
தமிழர்கள் அறிவும் சமயத்தின் பேரால் மழுங்கச் செய்து மூட நம்பிக்கை குருட்டு பழக்கவழக்கங்களுக்கு ஆளாக்கப்பட்டு உலகிலேயே தமிழ் மக்கள் முதல்தர மூடர்கள் என்றும் காட்டுமிராண்டிகள் என்றும். கருதும்படி செய்யப்பட்டுவிட்டது.
தமிழன் செல்வ நிலையைப் பற்றி யோசிப்போமேயானால். ஆரியமுறை ஜாதிப்பிரிவு காரணமாகவே தமிழர்களில் 4-ல் ஒரு பங்கு. மக்கள் படிப்புக்கும் வைத்தியத்திற்கும் அறவே வழியில்லாமலும் உணவிற்கு அரைவயிற்றுக் கஞ்சிக்குக்கூட வழிஇல்லாமல் கூலி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உழைத்துத் தீரவேண்டும் என்கின்ற. நிலையில் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். மற்ற 3 பாகத்தவர்களில். பெருமக்களும் சரீரப் பாடுபட்டு உழைப்பதே அவர்களது கடமை: என்கின்ற முறையில் கூலிக்கும் கூழுக்குமே பிறந்தவர்கள் என்கின்ற நிலைமையில் இருக்கிறார்கள். ஏதோ சிலர் தேவைக்குமேல் தேடத்தக்க நிலையில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தேடுவதை தங்கள். “ஜாதியை” உயர்த்திக் கொள்ளவும் தங்கள் தொழில் 'இழிவை' மாற்றிக் கொள்ளவும், “மேல் உலோகத்தில் நல்லிடம்' தேடிக் கொள்ளவும் சுயநல காரியத்தில் பாழாக்கி ஒரு சோம்பேறிக் கூட்டத்தின் நல்வாழ்வுக்கும். உயர்நிலைக்கும் ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தப்பட்டு விடுகிறது.
தமிழர் மேன்மைக்கு தமிழன் ஒரு சிறு உதவி செய்வதும் பொருளளிப்பதும் பிச்சையாகவும்,.ஈகையாகவும், தயவாகவும் கருதப்படுகிறது. தமிழரல்லாத சோம்பேறிகளுக்கு உதவியளிப்பதும், பொருள் கொடுப்பதும் தமிழ் மக்களின் கடமையாகவும் ஒழுக்கமாகவும்
கருதப்படுகிறது.
குடி அரசு - 1938 (2) —— ௦
சமுதாய வாழ்க்கைப்படியில் சரீரப் பிரயாசைப்படவேண்டியது தமிழனின் தர்மமாகவும், கடமையாகவும், சரிரத்தால் பாடுபடாமல் அன்னியரின். உழைப்பிலும் பொருளிலும் வாழவேண்டியது தமிழனல்லாதவனுடைய கடமையாகவும் கற்பிக்கப்பட்டுவிட்டது.
உண்மை தமிழன் வேலை
இதற்கெல்லாம் இன்றைய ஒரு தனி மனிதனோ ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களோ பொறுப்பாளிகளல்ல என்றாலும் வேறு எந்த மனிதராவது அல்லது ஏதாவது ஒரு காரணமாவது இருந்து தீரத்தானே வேண்டும்? அதைக் கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுவதைவிட உண்மை தமிழனுக்கு இன்று வேறு வேலை என்ன என்று கேள்ப்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
இக்கொடுமைகளுக்கும், குறைகளுக்கும், இழிவுகளுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை குறைகூற முடியுமா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமே. தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு விட்டால் இவை ஒழிக்கப்பட்டுவிடுமா?'
அல்லது பிரிட்டிஷாருக்குமூன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம். அரசாங்கம் இக்கேடுகளுக்கு காரணமாயிருந்தது என்றாவது சொல்லிவிட முடியுமா? அப்படியானால் முஸ்லிம் ஆட்சி ஒழிந்து இன்றைக்கு 200-
வருஷங்கள் போல் ஆகின்றதே. இதற்குள் அக்கேடுகள் ஒழிந்திருக்க வேண்டாமா?
முஸ்லிமும் பிரிட்டிஷாரும் இக்கேட்டிற்கு சிறிதாவது காரணஸ்தர்கள். என்று சொல்ல ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அவர்களது சமயங்களில்:
இக்கேடுகளுக்கு ஏதாவது கடுகத்தனை ஆதாரம் உண்டு என்று யாராவது காட்ட முடியுமா? அல்லது இன்று பிரிட்டிஷாரும் முஸ்லிம்களும். ஏகபோக *சுயஆட்சி' புரியும் அவர்களது நாடுகளிலாவது நாம் மேலே கூறிய ஏதாவது குறைகள் உண்டு என்றோ ஒரு வகுப்பை மற்றொரு: வகுப்பு சமயத்தையோ பிறவியையோ சொல்லிக் கொண்டு கொடுமைப்படுத்தி இழிவுபடுத்துவதாகவோ சொல்ல முடியுமா? என்பனவாதியவைகளை ஆராய்ந்து பார்த்தால் இக்கொடுமைகளை நமக்கு நாமே தேடிக் கொண்டு நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளுகின்றோம் என்பது நன்றாய் விளங்கும்.
ஆரிய மதமே காரணம்:
தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் இன்றைய எடி இழிநிலைக்கு தமிழ் மக்களின் அறியாமையால் சுமத்தப்பட்டிருக்கும் இந்து மதம் என்னும். ஆரிய- “பிராமண” மதமே காரணம் என்பதாக சென்ற பத்தாண்டுகளாக கூறி வருகிறோம், எழுதி வருகிறோம்.
A வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
நமக்கு முன்னிறாந்த அநேக பழந்தமிழ் மக்களும் கற்றறிந்த பெரியார்களும் அந்நிய நாட்டு ஆராய்ச்சிக்காரர்களும் இதை எவ்வளவோ எடுத்துக்காட்டி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் சரித்திர ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார்கள்.
இன்றும் தமிழர் கலைகள், தமிழர்களின் பழைய நாகரிகத்தைக்.
காட்டும் ஆதாரங்கள், தமிழர்கள் தங்களுடைய பழஞ் சமயம் என்று சொல்லிக் கொள்ளப்படுவதின் உண்மைகள், நூல்கள் ஆகியவைகளும்.
நம் கூற்றை நன்றாய் விளக்கிக் காட்டக் கூடியவைகளாக இருக்கின்றன.
மற்றும் தமிழ் மக்களிலேயே ஆரிய (இந்து) மதத்தை விட்டு. வெளிவந்து வேறு மதத்தை தழுவின ஏராளமான தமிழ் மக்கள். மேலே குறிப்பிடப்பட்ட குறைகளையும் கொடுமைகளையும் இழிவுகளையும். பெரு அளவுக்கு நீங்கப்பட்டவர்களாகி சமுதாயப் போட்டியில் - வாழ்வுப் போட்டியில் - சரி சம உரிமையாளராக வாழ்கின்றார்கள்.
ஆகவே தமிழன் சமுதாயத் துறையில் கீழ்மை அடைந்து இழிவுபட்டு. நிரந்தர ஏழையாய் கூலியாய் வாழ்வதற்கும், கல்வித்துறையில். தற்குறிகளாய் மூடர்களாய் பாமரர்களாய் இருப்பதற்கும் அரசியல்: துறையில் அடிமையாய் ஏவலாளராய் இருப்பதற்கும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள “பிராமண மதமும் அதன் உதவியால் ஆதிக்கம். பெற்ற ஆரிய அரசியல் முறையுமேயாகும் என்பது நமது துணிபு
முதற்காரியம்.
தமிழ் மக்கள் இன்று தங்களை உண்மைத் தமிழரென்றும். கலப்படமற்ற தனித்தமிழ் ஜாதி (856) என்றும் ஒருவன் சந்தேகமாய் கருதுவனாயின் அவன் உடனே தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் - தனக்கு. எவ்வகையிலும் எப்போதும் சம்மந்தமிருந்திராததான, தன்னை (தமிழ் மகனை) சூத்திரன் என்றும் சண்டாளன் என்றும் கூறும்படியான - சமயத்தை உதறித் தள்ளிவிட வேண்டியது முதற் காரியமாகும்.
அடுத்தாற்போல் அத்தமிழ்மகன் தமிழ்நாட்டின் விடுதலையும், சுதந்திரமும், செல்வப் பெருக்கும், தொழில் மேம்பாடும்தான். தன்னுடையது என்றும், இவற்றிற்காக உழைப்பதுதான் தனக்காக தமிழ். மக்களுக்காக தமிழ் நாட்டுக்காகச் செய்யும் தொண்டு கடமை என்றும் கருத வேண்டும். இப்படிக் கருதாததாலேயேதான் தமிழன் இன்று முற்கூறப்பட்ட பல இழிவுகளுக்கு ஆளாகி நிரந்தர இழி மகனாய் இருக்க வேண்டியவனாய் இருக்கிறான்.
சுருங்கக்கூறின் தமிழன் ஈனநிலைக்கு காரணம் இந்து மதத்தை தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு (தேசம்)
குடி அரசு - 1988 (2) —— ௦
என்று கருதியதும் இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே மக்கள் தொண்டு தேசத் தொண்டு (தேசாபிமானம்) என்று கருதியதும் கருதி வருவதுமேயாகும்.
இந்து மதம் என்று சொல்லப்படுவதாவது ஒரு வகுப்பாருக்கு. மாத்திரமே மேம்பாடு தருவதாகும்.
இந்தியா தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும்.
இந்த இரு நிலையும் அடியோடு அழியாமல் தமிழனுக்கு விடுதலை - சுதந்திரம் - தன்மானம் என்பவை ஏற்படப் போவதில்லை.
தமிழ்நாட்டு தொழில்முறைகளை எடுத்துக் கொண்டோமேயானால்: அதுவும் தமிழனுக்கு பயன்படுவதில்லை என்பது விளங்கும்.
இரும்புத் தொழில் பம்பாய்க்காரர் பார்சீகக்காரர் செய்து பயனடைகிறார்கள். உலோகத் தொழிலையும் பம்பாய்க்காரன் ஷோலாப்பூர்காரன்: உரிமையாக்கி பயனடைகிறான்.
துணித் தொழிலைப் பம்பாய் ஆமதபாத்காரர்கள் கைப்பற்றி பயனடைகிறார்கள். இந்த தொழில்கள் யந்திர உதவியினால். செய்யப்படுவதையே இங்கு குறிப்பிடுகிறோம். அதனால் தமிழ் தொழிலாளிக்கு வேலையில்லை; தமிழ் முதலாளிக்கும் லாபமில்லை:
மற்றும் லேவாதேவி தொழிலை எடுத்துக்கொண்டால் அவை பெரிதும் மார்வாடி நாட்டானும், குஜராத்தி நாட்டானும் முல்தான் நாட்டானுமே ஏகபோக உரிமையாக்கிக் கொண்டு திரட்டிக் கொண்டு போகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகிறது என்பதைப் பார்த்தால் தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள் ஏழைகள் ஆகியவர்களின் செல்வம் கையைத் திருகிப் பிடிங்கிக் கொண்டு போவது போல். மார்வாடிகள் கொண்டு போகிறார்கள்.
பகற்கொள்ளை:
மற்றும் தமிழ் வியாபாரிகள் ஏழைக்கிராமக்குடியானவனையும். எமான்கள் வாங்கும் பாமர மக்களையும் ஏமாற்றி வஞ்சித்துத் தேடும். செல்வம் அத்தனையும் பகல் கொள்ளை தீவட்டிக் கொள்ளை என்று சொல்லப்படுவதுபோல கோடி கோடியாய் சிந்து மாகாணத்துக்கு வட்டியின் பேரால் கடத்திச் செல்லப்படுகிறது. அதன் பயனாக தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் வர்த்தகர்கள் மிக மோச நிலைக்கு. வந்துவிட்டார்கள். மணல் வீடு சரிந்து மட்டமாவது போல் தமிழ் வியாபாரிகள் தினம் தினம் கடன்காரராகி, பாப்பராகி, இன்சல்வெண்டாகித்
DI வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
தற்கொலை செய்து கொள்ளும் நாட்டைவிட்டு ஓடுவதுமான நிலையில். இருந்து வருகிறார்கள். வியாபார நிலைய காரியஸ்தர் என்பவர்களுக்கோ, மாதம் 100 ரூ சம்பளம் வாங்கின குமாஸ்தாவுக்கோ, இன்று மாதம் 25 ரூ கொடுக்க வியாபாரிக்கு சக்திஇல்லை. மாதம் 7-ரூபாய்க்கும் 8-ரூபாய்க்கும் கணக்குப் பிள்ளைகள் தவிக்கிறார்கள். மூல்தானி - மார்வாடி - வீட்டுச் சமையல்காரன் மாதம் 60-ரூ சம்பாதிக்கிறான்.
கம்பிளத் தொழிலும் பஞ்சாப் மாகாணக்காரன் கொள்ளைக்கு உதவுகின்றது. இதுபோலவே மற்றும் அநேகமாக சரீரக் கூலித் தொழில் போக மற்ற லாபம்தரும் யந்திரத் தொழில்கள் மூளைத் தொழில்கள். என்பவைகளில் எல்லாம் பெரிதும் தமிழ் நாட்டல்லாதவர்களால் தமிழரல்லாதவர்களால் கைப்பற்றப்பட்டு செல்வம் தேடப்பட்டு திரட்டிய செல்வமனைத்தும் தமிழ்நாட்டைவிட்டு வெளிநாட்டிற்குக் கடத்தப்படுகிறதுடன். தமிழனுக்கு விரோதமாயும் அவை உபயோகப்படுத்தப்படுகிறது இந்தப்படி பாழாவதும் கடத்தப்படுவதுமானது மேல்நாட்டுக்குப் போனால் என்ன? வடநாட்டுக்குப் போனால் என்ன? அல்லது கீழ்நாட்டுக்குப் போனால் என்ன?
அரசியல் துறையிலும் நாம் (தமிழன்) வேறு நாட்டானுக்கே அடிமையாய் இருக்க வேண்டுமானால் அது மேல் நாட்டானுக்கு அடிமையானால் என்ன, வடநாட்டானுக்கு அடிமையானால் என்ன? மத விஷயத்திலும் தமிழன் தனது சமயம் அதாவது தான் எவனுக்கும் சமயத்தாலே இழிவானவனல்ல என்கின்ற உரிமையும், வாழ்க்கையில். யாருடனும் எந்தப் போட்டியும் போடத் தனக்கு உரிமை உண்டு என்கின்ற உரிமையும் இல்லாத ஒரு அந்நிய சமயத்தையே சுமந்து திரிய வேண்டுமானால் அச்சுமை இந்து (ஆரிய) மதமானால் என்ன? இஸ்லாம் மதமானால் என்ன? கிறிஸ்தவ மதமானால் என்ன? புத்த மதமானால் என்ன? சீக்கிய மதமானால் என்ன?
தமிழனின் செல்வம் தானாகட்டும் தமிழ் நாட்டைவிட்டு. கடத்தித்தான் ஆக வேண்டுமானால் அதுமேல் நாட்டுக்குப் போனால்: என்ன? வடநாட்டுக்குப் போனால் என்ன? எனவே, தோழர்களே! இக்கட்டுரையில் இக்கருத்து சம்மந்தமான. சில விஷயங்களை மட்டும் வெகு சுருக்கமாக குறிப்பிட முடிந்தது. இன்னம் இதைப் பற்றி ஏராளமாகத் தக்க ஆதாரங்களோடு எழுதலாம்; எடுத்துக் காட்டலாம். ஒவ்வொரு தமிழ் மகனும் இவைகளை நன்றாய் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்த்தபின் ஆரியப் புரட்டு, வடநாட்டுப் புரட்டு ஆகியவைகள் இருந்து மனிதன் விடுதலையாக முயற்சிக்க வேண்டும். பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளை: பாழாக்கி விட்டோம். நாட்டையும் மக்கள் சமூகத்தையும் உண்மையாய் மேன்மையடையச் செய்ய முயற்சித்த ஒப்பற்ற பெரியார்களை:
குடி அரசு - 1988 (29௨ m
நாஸ்திகன், தேசத்துரோகி, மக்கள் துரோகி, சுயநலக்காரன் என்றெல்லாம் வைது அவர்கள் பாடு பயன்படாத முறையில் செய்துவிட்டோம்.
உதைக்கும் காலுக்கும் மூத்தமிட்டுப் பூசை செய்கிறோம்! மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந்தோம். பஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம். மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத் தானா தமிழன் உயிர் வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை: ஏய்த்து அழுத்தி நம் தலைமேல் கால் வைத்து ஏறி மேலே போக வட நாட்டானுக்கும் தமிழரல்லாதவனுக்கும் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள். அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன்: என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!
தமிழ்நாடு தமிழருக்கே!
தமிழ்நாடு தமிழருக்கே!! தமிழ்நாடு தமிழருக்கே!!!
குடிஅரசு - தலையங்கம் - 23.10.1938
M வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
மேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு.
தலைவரவர்களே! தோழர்களே!
ஆதிதிராவிடர்கள் என்பவர்கள். ஆயிரக்கணக்காகக் கூடியுள்ள. இந்த பெரிய கூட்டத்தில் பேசும்படியான சந்தர்ப்பம் கிடைத்ததற்காக நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதில் ஆதிதிராவிட அபிவிர்த்தி என்பதைப் பற்றி நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசிப்பேசிக் களைத்துப் போய்விட்டது. இனி பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. உங்கள்.
நிலை பல நூற்றாண்டுகளாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. அதற்கு முன் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நீங்கள் இப்படித்தான். இருந்து வந்ததாக புராணங்களும் சரித்திரங்களும் கூறுகின்றன. இவ்வளவு நாள் பேசப்பட்டிராத விஷயம் இனி என்ன பேசப் போகிறேன்? உங்கள் சமூகம் சரித்திரங்களிலும் புராணங்களிலும் இருந்ததைவிட இப்போது அதிலும் இந்த 10 வருஷ காலத்தில் சிறிது மேலான நிலைமையில் இருக்கிறதாக நான் அறிகிறேன். கொடுமை சிறிது குறைந்தது
யார் என்ன சொன்னபோதிலும் ஆங்கிலேய அரசாக்ஷி ஏற்பட்ட
பிறகு உங்களுக்கு ஓரளவு கொடுமை குறைந்திருக்கிறதென்று நான். தைரியமாய்ச் சொல்லுவேன். பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்ட பிறகு இனியும் சிறிது உங்கள் நிலை உயரவும் உங்கள் கஷ்டங்கள். கொடுமைகள் போகவும் செளகரியமேற்பட்டதென்று சொல்லுவேன்.
பயப்படத் தக்க நிலை
ஆனால் இவைகள் எல்லாம் 100ல் ஒருபங்கு அளவு என்றுதான். சொல்லலாம். இனியும் 99 பாகம் இருக்கிறது. ஆனால் இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும்போது இதுவரை கிடைத்துவந்த நன்மைகளும் சவுகரியங்களும் ஒழிக்கப்பட்டுப் போகும் என்ற பயப்படத்தக்க நிலை ஏற்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்தால்
குடிஅரசு - 1938 (2) —— 4
உங்களுக்கு ஏற்பட்ட நன்மையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால். ஏற்பட்ட நன்மையும் அடியோடு ஒழிந்து போகும்போல் இருக்கிறது.
புதிய அரசியல் ஓரு யமன்
புதிய அரசியல் உங்கள் சமூகத்துக்கு எமனாய்த் தோன்றி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் கல்வி ஒழிந்தது என்று வைத்துக்கொள்ளுங்கள். வார்தா கல்வித் திட்டப்படி இனி உங்கள் ஜாதித் தொழில்கள் என்பவை புதிப்பிக்கப்படப் போகின்றன. அப்படியானால் உங்கள் தொழில் என்ன?
குறிப்பு: 07.10.1938 ஆம் நாள் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் நடைபெற்ற கணேசபுரம் ஆதிதிராவிட மாநாட்டில் அளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரங்களுக்கு பதிலளித்து பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 23.10.1938
05 வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
காங்கரஸ் காலித்தனத்துக்கு ஆப்பு
அன்பார்ந்த தலைவர் அவர்களே! தோழர்களே!
இது இந்தியை எதிர்ப்பதற்காகப் போடப்பட்ட கூட்டமாகும். நாங்கள் இந்தியை எதிர்ப்பதற்குக் கூறும் காரணங்களைக் கேட்டு. சிந்தித்துச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். பிடிக்காதவர்கள். இங்கு நாளை ஒரு கூட்டம் போட்டு ஆதாரமிருந்தால் நேர்மையான. காரணங்களைக் கூறி மறுக்கட்டும். அதைவிட்டுப் பொறுப்பற்ற வகையில் காலித்தனமாக குழப்பம் விளைவிக்க முயலுவது இழிவான. காரியமாகும். இதுதான் காங்கரஸ்காரர்களின் சமாதானம் என்றால். அதையும் சமாளிக்க தயாராயிருக்கிறோம். காங்கரஸ் அஹிம்சை என்று. கூறிக்கொண்டு காலித்தனத்தைக் கையாளுகின்றது. ஆனால் தாங்கள். அஹிம்சைவாதிகள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.
யார் தேசத் துரோகி?
அதே மாதிரி தாங்கள்தான் வெள்ளையர்களை இந்நாட்டைவிட்டு. விரட்டப் போகின்றவர்கள் என்று மக்களிடம் கூறுகின்றனர். ஆனால் வெள்ளைக்காரர்களிடம் சென்று உங்களை இந்நாட்டில் என்றென்றும் நிலைத்திருப்பதற்கு உதவி செய்கிறோம், எங்களுக்கென்ன செய்கிறீர்கள். என வெள்ளையரிடம் ரகசிய ஒப்பந்தம் பேசுகின்றனர். ஆதியில் அன்னிய ஆட்சியை இந்நாட்டிற்கு கொண்டு வந்தது யார்? இதே பார்ப்பனர்கள்தான். இப்பார்ப்பனர்கள் இந்நாட்டுக்குச் செய்ததென்ன? வாய்க்கால்கள் வெட்டினார்களா? சாலைகள் போட்டார்களா? வீடுகள். கட்டினார்களா? இவர்கள் வெட்டிப் புறட்டியதென்ன? இவர்கள் நம். நாட்டிற்குத் தந்ததெல்லாம் தர்ப்பைப் புல்லும் கோவில் மணியும் தவிர வேறென்ன? இத்தகைய யோக்கியர்கள் இவர்களின் சூழ்ச்சிகளை: விளக்கித் தங்கள் நாட்டு மக்களுக்காகப் பாடுபடுவோரை தேசத்துரோகிகள். என்று கூறுகின்றனர். எங்கள் நாட்டு மக்களுக்கு உழைப்பதற்கு எங்களுக். கல்லாத கவலை இந்தியாவுக்கு வெளியிலிருந்து ஆடுமாடு மேய்த்துப் பிழைக்க வந்தவர்கள் என்று சரித்திரம் கொண்ட இப்பார்ப்பனர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று கேட்கின்றேன். எங்களைத் தேசத் துரோகிகள். என்று கூறும் இவர்களுக்கும் இந்த தேசத்துக்கும் என்ன சம்பந்தம்? வெள்ளைக்காரர்களுக்கு நாங்கள் இந்தத் தேசத்தை காட்டிக் கொடுக்கிறோம்
குடி அரசு - 1938 (2) —— ௦
என்கிறார்கள். வெள்ளையர்கள் எங்கள் சொந்தக்காரர்களா? அல்லது அவர்களுக்கும் எங்களுக்கும் இரத்தக் கலப்பு இருக்கிறதென்று சரித்திரம். எழுதி வைத்துக் கொண்டிருக்கிறோமா? பார்ப்பனர்கள்தான் எங்களை வெள்ளையரின் தாயாதிகள் என்று எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நான் அன்று காங்கரசிலிருந்த பொழுதும் என்னை சி.ஐ.டிக்காரர்கள். கவனித்து வந்தனர். காங்கரசை விட்டு வெளியேறிய பிறகும் எனக்குத். தானே “ஷேடோ' போட்டு பலமுறை ராஜத்துவேஷத்துக்கு தண்டித்தனர். இப்பொழுதும் எங்களைத்தான் வெள்ளைக்காரன் தங்களுக்கு விரோதியென்று கருதியிருக்கிறானே ஒழிய பார்ப்பனர்களையல்ல. இன்று லை வெள்ளையரும்- கவர்னர் முதல் - பார்ப்பனருடன் கொஞ்சுகிறார்கள், குலாவுகிறார்கள். இன்று ஒரு பார்ப்பானுக்கும் சி.ஐ.டி. கிடையாது. எனவே வெள்ளைக்காரனுக்கு நல்ல பிள்ளைகள் யார், அவர்களது கூலிகள் யார், தேசத்துரோகிகள் யார், மக்களை காட்டிக் கொடுத்து மந்திரியானது யார் என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள். வெள்ளையரை விரட்டுவதாக உங்களிடம் சொல்லி ஓட்டு வாங்கின பார்ப்பனர் இன்று வெள்ளையரோடு விருந்துண்கிறார்கள். வெள்ளையருக்கு விருந்தளிக்கிறார்கள். இந்த லக்ஷணத்தில் வெள்ளையரை விரட்ட மந்திரியாயிறாக்கிறோம் என்று இன்னும் அவர்கள் பேசுகிறார்களே!
யார் கொள்ளையடிக்கிறார்கள்? வெள்ளையர் நம் நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அதற்காக இதுவரை இவர்கள் என்ன செய்தார்கள்?
வடநாட்டான் தமிழர்களைக் கொள்ளையடிப்பதையும் நம்மை: வடநாட்டாருக்கு அடிமைப்படுத்த முயற்சிப்பதையும் மறைத்து நம். கவனத்தை வேறு வழியில் திருப்புவதற்காக அவர்கள் வெள்ளையர். கொள்ளை பல்லவி பாடுவதாகும். மற்றும் நம்மை வடநாட்டார்க்கு அடிமைப்படுத்தவும் நம்மை அவர்களை இன்னமும் நன்றாய் சுரண்டுவதற்காகவும் தான் வடநாட்டான் பாஷையாகிய இந்தியை நம்மீது இன்று காங்கரஸ் பார்ப்பனர் வலிந்து சுமத்துகின்றார்கள். இதற்காக. வடநாட்டார்களான தோழர்கள் பிர்லா, பஜாஜ் போன்றவர்களிடமிருந்து
நம் நாட்டுப் பார்ப்பனர்கள் பெருந்தொகை பெறுகின்றனர்.
வடநாட்டார்கள் தமிழர்களைச் சுரண்டுவதையும் தமிழர்களின். நெசவு முதலிய கைத்தொழில்களை வேரறுப்பதையும் மறைப்பதற்காக “வெள்ளைக்காரன் அன்னியன்; அவன் நம் நாட்டைக் கொள்ளையடிக்கிறான்” என்று வெள்ளைக்காரன் மேல் நமக்கு துவேஷத்தை உண்டுபண்ணி அவன் துணியை வெளுக்க, கசக்கச் செய்து ஆமதாபாத்காரன் துணியை வாங்கச் செய்து சேலம், கோயமுத்தூர் நெசவாளிகள் தலையில் கை
DV வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
வைக்கிறார்கள். இந்நாட்டு தொழிலாளி மக்கள் லக்ஷக்கணக்கில் பட்டினி கிடக்க தாங்கள் உடல் நோவாது உண்டு, நம்மை வடநாட்டாருக்கு அடிமைப். படுத்தி நம் தொழிலையும் செல்வத்தையும் அவர் அனுபவிக்கச் செய்து நம் தொழிலாளர்களையும் முதலாளிகளையும் ஓட்டாண்டியாக்குகிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான நெசவுக்காரர் பிச்சை எடுக்கும்படியான நிலையில் இருப்பதற்குக் காரணம் காங்கரசுக்கு லஞ்சம் கொடுத்து ஆமதாபாத் முதலாளி அடிக்கும் கொள்ளைதான்.
இந்திக் கொடுமை
இந்த லக்ஷணத்தில் நம்மீது உள்ள அன்பால் இந்தியைக் கட்டாய பாடமாக வைத்திருப்பதாக கனம் ஆச்சாரியார் கூறுகிறார். தமிழர்களின். மீது இவர்களுக்கு உண்மையாக அன்பிருக்குமானால் இந்த நாட்டு தொழிலாளிகளான உண்மைத் தமிழர்கள் 100 க்கு 97 பேர் தற்குறிகளாக: இருப்பதை அறிந்தும், காங்கரஸ் மந்திரிகள் தமிழ் பள்ளிக்கூடங்களை: மூடச் செய்து இந்தி பள்ளிக்கூடங்களைத் திறப்பார்களா? தமிழை ஒவ்வொருவரும் கட்டாயமாய் படிக்க வேண்டுமென்று சொல்லாமல் இந்தியை கட்டாய பாடமாகக் கற்பிப்பார்களா? ஜஸ்டிஸ்காரர்கள் தமிழ். கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்றுக் கொடுக்க சட்டமும், திட்டமும். வகுத்தார்கள்; பணமும் ஒதுக்கி வைத்தார்கள். காங்கரஸ்காரர் அதை:
ஒழித்துவிட இன்று இந்திக்குச் சட்டமும், திட்டமும் வகுத்திருக்கிறார்கள். இவர்கள் தமிழர்களா, தமிழ் அன்பர்களா - தமிழ்நாட்டுப் பற்றுடையவர்களா?
தமிழர்களின் வரிப்பணத்தைக் கொண்டு தமிழர் மொழிக்கும், தமிழர் கலை, நாகரிகம் முதலியவைகளையும் கெடுக்கக்கூடிய வடநாட்டு. பாஷையை தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாகச் சுமத்துவதென்றால் இதைவிட வேறு அக்ரமம் வேண்டுமா? தமிழர்களின் வரிப்பணத்தை தமிழர்களின் நன்மைக்காக உபயோகப்படுத்தாமல் தமிழர்களைக் கெடுப்பதற்கும் அடிமைப்படுத்தப்படுவதற்குமான பாஷைக்கு உபயோகப்படுவதுதான் கனம் ஆச்சாரியார் தமிழர்கள் மீதும் தமிழ்நாடு மீதும் தமிழ்பாஷை மீதும் கொண்டுள்ள அன்புக்கு அறிகுறியா?
பார்ப்பனர்கள் தமிழர்களை அடிமைப்படுத்த செய்துவரும் குழ்ச்சிகளை விளக்கி மக்களுக்கு எடுத்துச் சொன்னால் அது சட்ட விரோதமாம். அதற்குப் பெயர் ராஜத் துவேஷமாம் - வகுப்புத் துவேஷமாம். சொல்லுகிறவர்கள் மீது நாடு கடத்தக்கூடிய சட்டங்களையும் தண்டனைகளையும் இந்த அஹிம்சா தர்ம காந்தி - ராமராஜ்ய சர்க்கார் பிரயோகம் செய்கிறது. இது வெகு நீதியாம்! இக்காரியங்கள் எல்லாம் தமிழர்களின் சுதந்தர உணர்ச்சியை அடக்கச் செய்யும் கொடுங்கோன்மை அல்லவா? இதற்காக நான் அஞ்சவுமில்லை ஆச்சரியப்படவும் இல்லை.
குடி அரசு - 1938 (2) — ௦
தமிழும் ஆரியமும் ஓன்றா?'
ஆனால் ஒரு சில தமிழர் தங்களை தமிழ் ரத்தம் ஓடும் தமிழர். என்று சொல்லிக்கொண்டு திராவிடம் வேறு தமிழ் வேறு என்றும், திராவிடமும். ஆரியமும் ஒன்று என்றும், கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் தமிழ். அல்ல என்றும், கன்னடியராம், தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்கள். அல்லவென்றும் குலைக்கிறார்களே! இவர்கள் கலப்படமற்ற தமிழர்களா? என்பது தான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. இவர்களுடைய இந்த. உணர்ச்சிதான் சில தமிழ் பெண்களைப் பொட்டுக் கட்டிவிடச் செய்ததோ. என்று கருதுகிறேன். இந்த நபர்கள் இனி எந்த இழிவான காரியத்தைத்தான். செய்ய அஞ்சுவார்கள். இவர்களை தமிழர்கள் என்று எந்த மடையன்தான் நினைக்க: முடியும் ஆரியருடன் திராவிடர்கள் கலந்து விட்டார்கள் என்றும். தமிழர்களும் கலந்துவிட்டார்கள் என்றும் இவர்கள் சொல்லுவதற்குக். காரணம் இதுதான் போலும். இதுதான் ராமராஜ்யத்தில் தமிழனுக்கு. ஏற்படும் புதிய புத்திபோலும். இந்த மாதிரி தமிழ் மக்களைப் பார்த்துத்தான்.
நம் பழந்தமிழ்ப் பெரியார்கள் பார்ப்பனர் ஆண்டால் நாடு உருப்படாதென்று. ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் கூறியிருக்கிறார்கள் போலும். “நூலெனிலோ கோல் சாயும் (நூல் - பூணூலணிந்த பார்ப்பான். பூமிஆளுவானேயானால் கோல் சாயும்) செங்கோல் முறை கெட்டுப்போ என்றும், “பாப்புப் பெருக்கல்லோ நாயக்கர் ராஜ்யம் பாழ்த்ததுவே' என மற்றோர் தமிழ் பெரியாரும் சொல்லியிருக்கிறார்களாக்கும். இவர்கள் கூறியது மூற்றிலும் உண்மையென்பதை இன்று ஆச்சாரியாரின். ஆட்சி மெய்ப்பிக்கின்றது. பார்ப்பன ஆட்சியில் இனி உண்மைத்
தமிழர்கள் மானத்தோடு, சுதந்திரத்தோடு வாழ முடியாதென்பதையும். ஆரிய ரத்தமும் திராவிட ரத்தமும் ஒன்றாக கலந்துவிட்டது என்று. கருதுகிற - கலக்கச் சம்மதிக்கிற தமிழர்தான் வாழ முடியும் என்பதையும் ஆச்சாரியாரின் அடக்கு முறைப் பிரயோகங்கள் வெளிப்படுத்துகின்றன.
எனவே தமிழர்கள் இனி சும்மாயிருப்பதில் பயனில்லை: பார்ப்பானுக்கு தமிழ்நாட்டை தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து இம்மாதிரி ஈன வாழ்வு வாழ்ந்துகொண்டு கன்னடியனுக்கு ஆந்திரனுக்கு இந்த நாட்டில் என்ன வேலை என்று கேட்கும் அற்பர்கள் அயோக்கியர்கள். இழி பிறப்புக்காரர்களை லட்சியம் செய்வதில் பயனில்லை. தமிழர்களுக்குத் தனி மாகாணம் வேண்டும். ஆரியனும் நாமும் ஒன்றுதான் என்று கருதும் ஈனத்தமிழனுக்கும் வடநாட்டாருக்கும் நமக்கும் எத்தகைய தொடர்பும் இருக்கக்கூடாது. வேண்டுமானால் நமது விருந்தினர்களாக நட்பினர்களாக வாழட்டும்; நமக்கு எஜமானர்களாக - தமிழ்நாட்டின். தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக வடநாட்டாரும் ஆரியபுத்திரர்களும். இருப்பதை ஒழிக்க வேண்டும். தன் வீட்டுக்கு தானே எஜமானனாய்
09 வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இருக்க வேண்டுமென்பது சில தமிழருக்கு அவமானமாய் - கேலியாய் இருக்கிறதாம். ஆரிய சாவகாசம் இந்த தமிழனுக்கு எவ்வளவு மானங்கெட்ட நிலையை உண்டாக்கிவிட்டது பாருங்கள். தமிழ்நாடு தமிழ் மக்களுக்கே என்ற உரிமையிருக்க வேண்டும். ஆரியரோ ஒரு. அய்யர் - அய்யங்கார் - ஆச்சாரி - சாஸ்திரி - சர்மாவோ அல்லது ஒரு வடநாட்டாரான ஒரு காந்தி - படேல் - நேரு-போஸ்-பிரசாத் போன்றார்க்கோ தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் ஆவனவற்றையும் - அல்லாதவற்றையும். பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது என்று கேட்கின்றேன்.
நம் விஷயத்தில் அவர்கள் அனாவசியமாகத் தலையிடுவதை ஆண்மையுள்ள தமிழன் எவனும் இனி பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. தமிழனை சூத்திரன் என்றும், தாசி மகன் என்றும் எழுதி வைத்துக் கொண்டிருக்கும் வேத புத்தகத்தை கிழித்து நெருப்பில் போட்டு சாம்பலாக்கச் சம்மதிக்க இஷ்டப்படாத காந்திகளும், ஆச்சாரிகளும், சத்தியமூர்த்திகளும் தமிழனைப் பற்றியோ தமிழரைப். பற்றியோ பேச உரிமை உண்டா? இவர்களுக்கு பேச உரிமையளித்திருக்கும் தமிழன் உண்மை கலப்படமற்ற தமிழனாவானா என்று கேட்கிறேன். வெள்ளையர் இந்த நிமிஷமே ஒழியட்டும் எனக்கு கவலை இல்லை. ஆனால் தமிழன் சூத்திரன், தமிழ்ப் பெண் சூத்திரச்சி தாசி மக்கள். என்கிற வருணாச்சிரமத்தையும் ராமராஜ்ஜியத்தையும் நிலைநிறுத்தும் காந்திகளும் ஆச்சாரிகளும் அதற்கு முன்பே ஒழிய வேண்டாமா? எனக் கேட்கிறேன். எனவே வடநாட்டாரும் ஆரியர்களும் சோம்பேறி பார்ப்பனர்களும் நமக்குக் கட்டளையிட்டு அதன்படி தான் அவர்கள் தலைமையில் தான். நாம் வாழ வேண்டும் என்றால் அதைவிட தமிழன் உயிர் விடுவதே மேல். வடநாட்டார் நம்மீது ஆதிக்களு செலுத்துவதை தடுக்க வேண்டுமானால் வடநாட்டார், சுரண்டுவதைத் தடுக்க வேண்டுமானால். தமிழ்நாடு தனி மாகாணமாகப் பிரித்து ஆக வேண்டும். இதற்கு நாம். விடாது போராட வேண்டும். தமிழ்நாடு தமிழருக்கே என்று கிளர்ச்சிகளும் கூப்பாடுகளும் மூலை முடுக்குகளிலும் தோன்ற. வேண்டும். உண்மைத் தமிழர்கள் அனைவரும் வீறுகொண்டெழுந்து போராட வேண்டும். அப்பொழுதுதான் தமிழர்கள் தமிழர்களாக மானமுள்ள மனிதர்களாக வாழ முடியும்.
குறிப்பு: சேலத்தில் 16.10.1938-இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 30.10.1938.
குடி அரசு - 1938 (2) —— 0
ஓரு யோசனை
எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களது கொடுமையானது சகிக்கமுடியாத அளவில் பெருகிக் கொண்டு வருகிறது என்ற செய்தி நமக்கு எட்டிக்கொண்டே வருகின்றது.
இதற்குக் காரணம் அனேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில். எல்லாம் பார்ப்பனர்களே அதிகாரியாயும் பரீட்சை அதிகாரிகள் பெரும்பாலும் பார்ப்பனர்களாயிருப்பதாலும் அவர்களுடைய சலுகைக்கு பாத்திரர்களாக பார்ப்பன ஆசிரியர்கள் இருப்பதாலும் என்பதே.
இந்நிலை ஒழிய வேண்டுமானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள். ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்றுதான் ஒரு கண்ணியமுள்ள ஒருவன். சொல்வான். ஏனெனில், முதலாவதாக இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பானும் தான் பிறப்பினாலே உயர்ந்த ஜாதியானென்றும், தானே அறிவாளியென்றும், வருணாச்சிரமப்படி தாம் “பிராமண "ரென்றும், மற்றவர்கள் “சூத்திர”ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான்.
எந்தக் கொள்கைப்படி தங்களை “பிராமணனென்றும் மற்றவர்களை:
“சூத்திர' ரென்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அதே கொள்கைப்படி பிராமணர் சூத்திரரை படிக்க வைக்கக்கூடாது என்றும் சூத்திரர் படித்தால். வருணாச்சிரம தர்மம் கெட்டுவிடுமென்றும் பார்ப்பனரல்லாதார் படித்தால் பார்ப்பனருக்கு ஆபத்தாய் எமனாய் விடுவார்கள் என்றும், 100-க்கு 3 பேர்கள் 97 பேர்களின் உழைப்பில் வாழும் சோம்பேறி வாழ்வு அழிவுற்றுவிடும் என்றும் கருதி வருகிறார்கள். இத்தகைய கொள்கையை உடையவர்கள் பார்ப்பனரல்லாதார் படித்து அறிவுபெற்று சமத்துவமாக வாழ விரும்புவார்களா? அதற்கு இடந்தான் கொடுப்பார்களா?
பார்ப்பன ஆசிரியர்கள் பெரும்பாலும், பார்ப்பனரல்லாத பிள்ளைகளை பள்ளிக்கூடப் பரீட்சைகளில் கூடுமானவரை ஒவ்வொரு வருடமும் அழுத்தி வைக்கவே பார்க்கின்றார்கள். பிறகு உனக்கு படிப்பு வராது, வீணாக ஏன் பணத்தை பாழ்படுத்துகிறாய், வேறு வேலை பார்த்துக்கொள். இருக்கிற பணத்தை வைத்துக் கொண்டு ஏதாவது பிழைப்புப் பார்த்துக்கொள், பெஞ்சுக்கு வாடகை கொடுக்காதே என்று
Bl வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
பேசி பிள்ளையின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றார்கள். இதுதான் இன்றைய பார்ப்பனரல்லாதார். கல்வியின் நிலை. ஏதோ சில பார்ப்பனரல்லாத ஆசிரியர்களின் தன் மதிப்போடு. விளங்கும் ஆசிரியர்களின் - பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியின் காரணமாய் சில பார்ப்பனரல்லாத பிள்ளைகள் கல்வி கற்று முன்னுக்கு வர மார்க்கம்.
இருந்து வருகிறது. இதை ஒழிக்கத்தான் இன்று “மகாத்மா” பட்டத்தை வேண்டாம் என்று கூறிக்கொள்ளும்பார்ப்பன தாசறாகிய தோழர் காந்தியார் வினோத திட்டமாகிய வார்தா திட்டத்தை உண்டு பண்ணியிருக்கிறார்.
வார்தா திட்டம் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியின்மையை நிலைக்கச் செய்யவே அவனவன் தன்தன் குலத்தொழிலை செய்து பார்ப்பனர்களுக்கு உழைத்துப் போடவேண்டும். பார்ப்பனர்கள் மட்டும். பார்ப்பனரல்லாதார் உழைப்பில் கொழுக்க வேண்டும் என்று செய்யப்படும் சூழ்ச்சிதான் யென்று நாம் பன்முறை விளக்கியிருக்கிறோம்.
மேலும் நமக்கு வேண்டுவது உயர்தரக் கல்வி, விஞ்ஞானக் கல்வி, தொழிற் கல்வி, வர்த்தகக் கல்வி முதலியவைகளேயாகும்.
ஆனால் வர்த்தகக் கல்வியினால் குழந்தைகள் ஏதேனும் ஒரு. கைத்தொழில் கற்பிக்கப்பட வேண்டுமென்பதே வார்தாக் கல்வித் திட்டத்தின் தத்துவம்.
இந்த உண்மையை பார்ப்பனரல்லாதார் அறிந்து கொண்டால். எங்கு ஒருகால் மெஜாரிட்டியாக அவர்கள் சேர்ந்து குழ்ச்சியை அறிந்து அதை விளக்கிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தாலோ அல்லது பார்ப்பனர்கள் இத்திட்டத்தைக் குறித்து அறிந்துகொண்டால்தான். பார்ப்பனரல்லாத பிள்ளைகளை என்றென்றும் தலையெடுக்க முடியாமல் தன்மதிப்போடு வாழவிடாமல் செய்யலாம் என்ற கருத்தின் மீதோ இன்று காங்கரஸ் ஆதிக்கம் வார்தா கல்வி முறையை பயின்றுவர இவ்வளவு பெரிய எதிர்ப்பினிடையிலும் 3 பார்ப்பன ஆசிரியர்களையே பொறுக்கியெடுத்து சர்க்கார் செலவில் பயிற்சி பெற்றுவர வார்தாவுக்கு அனுப்பியிருக்கின்றது. அந்தச் செய்தி வேறொரு இடத்தில் வருகிறது.
இந்த மாதிரி பார்ப்பனர்கள் பார்ப்பனீயத்தை நிலைநாட்ட வடநாட்டு ஆதிக்கத்தை தமிழ்நாட்டில் என்றென்றும் இருந்துவர பட்ட பகல் கொள்ளைபோல் துணிகரமாக - தைரியமாக ஆரிய வர்க்கத்தார்
சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்றால் தன் மதிப்புடைய - சுத்த இரத்தம். ஓடும் - மானத்தோடு வாழும் பார்ப்பனரல்லாத தமிழர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்று பார்ப்பன கும்பலின் மனதில் கடுகத்தனையாவது எண்ணமிருக்கிறதா என்று கேட்க வேண்டியிருக்கிறது.
குடி அரசு -198(29௨ ௨ m
இதிலிருந்தாவது பார்ப்பனர்களால் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் பார்ப்பனரல்லாத தமிழனை தனது பாதத்தின் கீழே அழுத்தி வைக்க செய்யப்படும் காரியம் ஆகும் என்று உணர்ந்து வீரத்தோடு. ரோஷத்தோடு எழுந்து பார்ப்பனீபத்தை இப்பொழுதே - முளையிலே கிள்ளி யெறீய முற்படுகிறார்களா அல்லது ராவணன் ஆண்டால் என்ன? ஆண்டால் என்ன? என்று மெளடீகத்தில் இருக்க விரும்புகிறார்களா? என்று கேட்கிறோம்.
பார்ப்பனரல்லாதார் மானத்தோடு வாழ வேண்டுமானால் அதற்கு. வேண்டியன செய்து கொள்வதற்கு இதைவிட சந்தர்ப்பம் கிடைக்காது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் எல்லாம் ஒன்று கூடித் தங்களுக்குள்ளிருக்கும் வேற்றுமைகளையும் அபிப்பிராய பேதங்களையும் போக்கி பார்ப்பனீயத்தை வெட்டி வீழ்ந்த வீறு கொண்டெழவேண்டும் என்று யோசனை சொல்ல ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.10.1938
B வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
காங்கிரசும் கல்வியும்
தாவர வர்க்கத்திலே காணப்படும் புல்லுருவிகளைப் போல் மனித வர்க்கத்திலும் புல்லுருவிக்கொப்பான ஒரு கூட்டத்தார் இருந்து வருகின்றனர். அவர்கள்தான் பிறர் உழைப்பினால், பிறர் ரத்தத்தை அட்டைபோல் உறிஞ்சி நெற்றி வேர்வை நிலத்தில் விழாமல் நகங்களில். அழுக்கு படாமல், சோம்பேறி வாழ்க்கை நடத்தும் புரோகிதக் கூட்டத்தார். இத்தகையோர் தமது இந்திய நாட்டிலுமல்ல உலகமெங்கும். எல்லா நாட்டிலும் பண்டு தொட்டு இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் இருக்கின்றனர். ஆனால் ரஷ்யாவில் மட்டும் இவர்கள் ஒரு அளவுக்கு ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். என்று சொல்லலாம். இவர்கள் தங்கள். சோம்பேறி வாழ்க்கை நடத்துவதற்கு அவர்களுக்கு உபயோகமாகயிருந்து வருவது கல்வியின்மை - அறியாமை - மூடத்தனம் என்பதேயாகும். மக்கள் அறியாமையைப் போக்கிக்கொண்டால் - அறிவு பெற்றுக்கொண்டால் தங்களது சோம்பேறி வாழ்க்கைக்கு கேடு வந்துவிடுமே என்று எண்ணி. அக்கூட்டத்தார் மக்கள் கல்வியறிவை பெற முடியாமல் செய்து வந்திருக்கின்றனர். நம் நாட்டிலே வேதங்கள், நீதி நூல்கள் என்று சொல்லுகிற மனுநீதி சாஸ்திரம் போன்றவைகளிலிருந்து இதற்கு வண்டி வண்டியாய் ஆதாரங்கள் கோட்பாடுகள் எடுத்துக் காட்டலாம். அதே. மாதிரி மேல்நாடுகளின் பூர்வீக சாஸ்திரங்களையும் ஒவ்வொரு நாட்டின். மத சம்பந்தமான பழைய நூல்களையும் அரசியல் சரித்திரங்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்கள் கையாண்ட கொடுமைகளை இன்றும். காணலாம். பெரிய பாதிரிமார்கள் சிறிய பாதிரிமார்கள் மக்களுக்குக் கல்வி, இலக்கணம் முதலியவைகளைக் கற்றுக்கொடுத்ததால் அவர்களை: எவ்வாறு தண்டித்திருக்கின்றனர் என்பதை சரித்திரங்களே கூறும். ஆகவே இந்நிலைமை மாறுவதைக் கண்டு சோம்பேறி வாழ்க்கை வாழ்ந்து வந்த கூட்டம் வாளாவிருக்குமா? அல்லது இருக்கத்தான் முடியுமா? அதன். மனந்தான் இடம் கொடுக்குமா? கொடுக்காதல்லவா? ஆதலால் தன்னால் ஆன சாமார்த்தியங்களை சூழ்ச்சிகளையெல்லாம் செய்து தனது வாழ்க்கையை நிலைநிறுத்தச் செய்யும், செய்துதான் தீரும். அதைக். கண்டு நாம் ஒன்றும் ஆச்சரியப்படுவற்கில்லை.
ஏனெனில் இன்று இப்பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் பொதுவாக மக்கள் எவ்வளவு சுதந்தரமும் கல்வி அறிவும்
குடிஅரசு - 1938 (2) — o
பெற்றிருக்கின்றனர் என்பதை நடுநிலைமையோடு ஒரு மனிதன் சிறிது யோசித்துப் பார்த்தால் உண்மை பளிங்கு போல் விளங்காமல் போகாது. “பிரிட்டிஷ் ஆட்சியில் நமக்கு அளிக்கப்பட்ட கல்விதான் நமக்கு மனித. உணர்ச்சியை கொடுத்தது” என்று தாதாபாய் நெளரோஜியும் “பிரிட்டிஷ் சர்க்கார் நமக்கு அளித்த கல்விமுறை இந்தியர்களுக்கு கிடைத்த மகத்தான ஒரு பாக்கியமேயாகும்” என்று பண்டிட் கிருஷ்ண நாராயண தாஸும் “இந்தியாவுக்குப் பிரிட்டனால் மிகச் சிறந்த ஒரு பெரிய நன்மை ஏற்பட்டிருந்தால் அந்த நன்மை அவர்கள் நமக்கு அளித்து வந்த உயர்தர கல்வியேயாகும்” என்று சுரேந்திரநாத் பானர்ஜியும் “நமது ம அபிவிருத்திக்கான வழிகளைத் திறந்துவிட்டிருப்பது இங்கிலீஷ் கல்வியேதான்” என்று சர்.சங்கர நாயரும், “பிரிட்டிஷ் சர்க்கார் கல்வி சம்மந்தமாக இந்தியாவுக்குச் செய்திருக்கும் நன்மைகளுக்கு நாம். பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று பண்டித மாளவியாவும் மற்றும் காங்கரஸ் தலைவர்களும் மற்றவர்களும் கூறும் அளவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டபின் மக்கள் கல்வியறிவு பெற்று விழித்துக் கொண்டு, இதுவரை ஒரு கூட்டத்தார் சகல உரிமைகளையும் ஏகபோகமாக அனுபவித்து வந்ததுபோல் அனுபவிக்க இடங்கொடுக்காமல், எல்லா வகுப்பாரும் சரி பங்கு கேட்க வந்துவிட்டதால், இக்கல்வியை ஒழிக்க நீண்ட நாட்களாக சுயநலக்கூட்டத்தார் காத்துக் கொண்டிருந்தனர். இதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது விருப்பத்திற்கு ஏற்க எப்படி ஆடு கசாப்புக்காரனை நம்புகிறதோ அதேபோல் தனது செல்வாக்குக்கே - வாழ்க்கைக்கே உலை வைக்கக். காத்துக் கொண்டிருந்த கூட்டத்தாரை பாமர மக்கள் நம்பி தெரிந்தெடுத்து தன்னை யாளும் ஆட்சியினராக அமர்த்திவிட்டனர். அவர்கள் ஆட்சி ஆளத் தொடங்கியதிலிருந்து பாமர மக்களின் கல்வியைக் கெடுக்கவே கலை துறைகளிலும் தங்களது கருத்தை செலுத்தி வருகிறார்கள். கல்வி மான்யத்தைக் குறைத்து தாங்களாகவே பள்ளிக் கூடங்களை மூடும்படிச் செய்துவருகின்றனர். உபகாரச் சம்பளம் கொடுத்து கல்வி கற்பித்து வந்ததை ஒரு வகுப்பாருக்குத்தான் உண்டென்று சொல்லி இதுகாலம் வரை அனுபவித்து வந்தவர்கள் வாயில் மண்ணைப் போட்டும் வருகிறார்கள். ஆசிரியர்களும் சம்பளமில்லாமலும் பிள்ளைகளும் புஸ்தகம், கற்பலகை முதலிய உபகரணங்கள் இல்லாமலும் கல்வி
கற்கும் நூதன முறையையும் புகுத்தி வருகிறார்கள். இந்தத் தத்துகளுக்கும். கண்டங்களுக்கும் மீறி கற்றுவிட்டால் என்ன செய்வதென்பதற்காக தோழர்
காந்தியாரைக் கொண்டு ஒருபதிய கல்வித்திட்டத்தைச் சிருஷ்டித்திருக்கின்றனர். இத்திட்டத்தைக் குறித்து ஆராயப் புகுவதற்கு முன் ஏதாவது ஒரு திட்டம். போட வேண்டுமானால் உலகிலே அந்தத் துறையில் விளங்கும். நிபுணர்களைக் கொண்டுதான் ஒரு திட்டம் வகுக்கப்படுகின்றது. ஆனால் 3௨ வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
இத்திட்டம் இப் பொது விதிக்குட்படவேயில்லை என்பதை நாம் முதலில். கூற ஆசைப்படுகிறோம். அடுத்தப்படியாக தோழர் காந்தியார் வகுத்திருக்கும் கல்வித் திட்டம்.
1. பிள்ளைகளுக்கு 7 வயது முதல், 14 வயதுவரை இலவச கட்டாயப் படிப்பு படிப்பித்தல்.
2. இந்த 7 வருஷமும் தாய் பாஷையிலேயே பாடங்கள் கற்பித்தல்.
3. ஒரு நாளியில் பெரும்பாகம் கைத்தொழிலே கற்றல்.
4 அந்தக் கைத்தொழிலைக் கற்றல் மூலமே வரும்படி ஏற்படும்படி செய்து அந்த வரும்படியிலே பள்ளிக் கூடம் நடைபெறச் செய்தல்.
5. இம்மாதிரி பள்ளிக் கூடங்களை சர்க்காரே நடத்தல். என்பவைகளே முக்கிய அம்சங்களாகும். இத்திட்டத்தைக் குறித்து நமது அபிப்பிராயத்தை இதற்குமுன் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதாவது மக்களை அறிவுக் கல்வி படிக்க வொட்டாமல் செய்து என்றென்றும் ஒரு வகுப்பார் அடிமையாக - உழைப்பாளியாக - தொழிலாளியாக இருந்து வரச் செய்வதேயாகும். இத்திட்டப்படி பிள்ளைகள் 7 வயது முதல் 14 வயது வரை கட்டாயமாக படிப்பிக்கப்படுவார்கள் அல்லவா? 7 வயது வரை பையன்கள் என்ன. செய்வது? 14 வயதுக்கு மேல் இங்கிலீஷ் படிப்பில்லாததால் மேல். வகுப்புக்கு உயர்தரப் படிப்புக்கு எப்படி அனுப்புவது என்று நாம் அதாவது சென்ற டிசம்பர் 21-ம் தேதி குடியரசில் கேட்ட கேள்வியையே இன்று அதாவது 3.11.38 ந் தேதி கூடிய மைசூர் சமஸ்தானக் கல்விச் சங்கத்தில் தலைமை வகித்த சென்னை சர்வகலாசாலை உப அத்யக்ஷகரான திவான் பகதூர் எஸ். இரங்கனாதன் அவர்கள். பேசுகையில் “குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு
முன்பு அதாவது 7 வயதுக்கு முன்பு அவர்களுக்குக் கல்வி புகட்டுவதற்கும் 14 வயதுக்குப் பிறகு பிள்ளைகளுக்கு மத்திய தரக் கல்வியை போதிக்கவும், மேற்படி திட்டத்தில் வகை காணப்படாமலிருப்பது மிகவும் துரதிஷ்டமாகுமென்று” கூறியிருக்கிறார். மேலும் இத்திட்டத்தை தோழர். காந்தியார் வாயிலிருந்து வந்துவிட்டதால் யாரும் குறை கூறக் கூடாது என்று ஒருவரும் பேசமாட்டார்கள் என்று நாம் அன்று கூறினோம். அதைத்தான் சேலத்தில் 211385 தேதி ஜி.எச்.எம். ஸ்கூலில் கல்வி வாரத்தை ஆரம்பித்து வைக்கையில் சேலம் காலேஜ் பிரின்சிபால் தோழர் எ.ராமசாமி கவுண்டர் அவர்கள் பேசுகையில் “இத்திட்டம்” “பெரிய மனிதரான” “மகாத்மா” காந்தியாரால் வகுக்கப்பட்டதென்ற காரணத்தால் குற்றங்குறைகளை எடுத்துரைப்பது தவறு என்று கருதுகிறார்கள் போலும், இல்லையேல் வேறு யாராவது இம்மாதிரி
கடி அரசு - 1938 (2) —— 1099
ஒரு கல்வித் திட்டத்தை வகுத்திருந்தால் அதை உதறித் தள்ளியிராக்க. மாட்டார்களா?” என்று ஆச்சரியப்பட்டார். திருச்சி நேஷனல் கல்லூரி. பிரின்சிபால் தோழர் சாரணாத அய்யங்கார் அவர்கள் சென்ற ஜூலை மாதத்தில் டவுன் உபாத்திமைச் சங்கத்தின் 35-ம் வருட ஆண்டு. விழாவில் “ஆரம்பக் கல்வியும் அதன் புதிய போக்கும்” என்பது குறித்து பேசுகையில் வார்தாத் திட்டம் வெறும் விவகாரத் திட்டமேயொழிய காரியத்தில் வெற்றியாக நடக்காதென்றும் அத்திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் தமது பூணூலை துண்டித்து எறிவேன் என்றும் கூறினாராம். தவிர இத்திட்டம் பெரும்பாலும் கிராமாந்திரங்களுக்கே. வகுக்கப்பட்டிருக்கிறது. இதில் கைத்தொழில் கற்பித்தல் தான் மிக முக்கிய அம்சமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. கிராமாந்திரங்களில் மக்கள் வறுமைப் பிணியால் வருந்துவதற்கு கைத்தொழில் தெரியாமலா அவர்கள். வறாந்துகிறார்கள்? எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் நெசவுத் தொழில் செய்யத் தெரிந்தும் தொழில் கிடைக்காமல் ஊர் ஊராய் காவடி எடுத்துச் செல்லுகிறார்கள்? எத்தனை மக்கள் இன்னும் எத்தனையோ வகையான தொழில்கள் செய்யத் தெரிந்தும் தொழில் கிடைக்காமல் தவிக்கின்றனர். அப்படியே இவர் கூறுவதுபோல் இத்திட்டத்தில் சொல்லப்பட்டது. போல் தொழிலிலே கற்று உதாரணமாக தையல் தொழிலே கற்று வருடா: வருடம் வெளியேறும் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கும் தையல்: தொழில் எங்கிருந்து கிடைக்கும். அவர்கள் கற்ற கல்வியால் அடையும். பயன்அத்தொழிலாளிகள் உதாரணமாக 1 ரூ சம்பாதித்துக் கொண்டிருக்கிறவன். வருடா வருடம் கூலி அணாக்கணக்கில் வந்து சேருவதைத் தவிர பலன். வேறு என்ன? இம்மாதிரிதான் ஒவ்வொரு தொழிலின் நிலைமையும். வந்தடையும் என்பதற்கு என்ன சந்தேகம் என்று கேட்கின்றோம். முஸ்லிம்கள் இத்திட்டத்தைக் குறித்து கண்டிக்காத ஒரு மகாநாடுகூட இருக்க முடியுமென்று நாம் நினைக்கவில்லை. “அலஹாபாத் ஸ்டார்" என்ற ஆங்கிலப் பத்திரிகையில், இந்திய சட்டசபை மெம்பரும் பிரபல: முஸ்லிம் தலைவருமான ஆலி ஜனாப் டாக்டர் சர்.ஜியாவுத்தீன் அகமது, ஸி.ஜூ£ஈ.,. எம்.எல்.ஏ. அவர்கள் வார்தா கல்வித் திட்டத்தைப்பற்றி முஸ்லிம்களின் அபிப்பிராயத்தை குறித்து வெளியிடுகையில் “தோழர் காந்தியாரால் தயாரிக்கப்பட்டுள்ள கல்வி திட்டத்தில் முஸ்லீம்களின்.
மதக் கல்விக்கு வசதியளிக்கவில்லை. இது மறைமுகமாக முஸ்லிம்களின். கலை நாகரிகத்தைப் பறிமுதல் செய்வதாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். முஸ்லிம்கள் இவ்வாறு ஐக்கியமாக இருப்பதற்கு அவர்களது கலையும். நாகரிகமும் தான் காரணமென அறிந்தே அதை ஒழிப்பதற்கு கல்வியில். அவர்களது கலை, நாகரிகம் சம்பந்தமில்லாது செய்துவிட்டால் சுலபமாக தாங்கள் எண்ணிய காரியம் கைகூடும் என்று செய்த சூழ்ச்சியேயென்று எழுத வேண்டியிருக்கிறது.
B வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
ஆகவே இத்திட்டம் அவனவன் தான் தன் ஜாதித் தொழில் என்று ஒரு கூட்டத்தாரால் பிறப்பிக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட தொழிலையே செய்து வர வேண்டும் என்பதும் மக்களை ஏய்த்து - ஏமாற்றி - உயிர் வாழ்பவன் என்றென்றும் அவ்வண்ணமே வாழ இடமளிப்பதும் என்பதுமேயொழிய காதறுந்த ஊசிகூட பாமர மக்கள் பயன் பெறப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. காட்டு மிராண்டித் தனத்துக்கு மக்களை கொண்டு செல்லும் இத்திட்டத்தை ஒழிக்க பொதுமக்கள். சிறப்பாக நமது தமிழ்மக்கள் உடனே தக்கவை செய்ய ஆங்காங்கு கண்டனங்கள் போட்டு அனுப்புவதோடு நின்றுவிடாமல் பாமர மக்களுக்கு இதனால் வரும் கேடுகளை விளக்கி தடுக்க வேண்டிய முறைகளையும். கைக்கொள்ளும்படி செய்வார்களாக.
தவிர இன்றைய ஆட்சி நமது மாகாணத்தை பொறுத்தவரையில். 4% கோடி மக்களில் 70 லக்ஷம் பேர்களால் அதாவது 15.5 சதவிகிதப் பேர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 215 பேர்கள் கையில் அதிலும் சிறப்பாக பிரதம மந்திரி கையில்தான் இருந்து வருகிறது. பொது மக்களது பிரதிநிதிகள். என்று சொல்லிக் கொண்டு இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இலாகாக்களில் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆதலால்: பொதுமக்களில் 85 சதவிகிதமுள்ள மீதியுள்ள ஓட்டுரிமையற்ற மக்கள். தங்களுக்கு அச்சிறுபான்மையினரால் வரும் கேடுகளை அறிந்து அதைத் தடுக்கத் தக்கவைகளை செய்ய வேண்டியது மிகவும் அவசியமும். அவசரமுமானதோடு இவர்களது கடமையுமாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.11.1938
குடி அரசு -198(29௨ ௨ 5
காலஞ் சென்ற கெமால் பாஷா
1918 - வரை “ஐரோப்பாவின் நோயாளி” என்ற பழிப்புரைக்கு இலக்காயிருந்தது துருக்கி நாடு. துருக்கி சுல்தான்களின் சோம்பேறி ஆடம்பர வாழ்க்கையும் மதபோதகர்களின் அட்டூழியங்களுமே துருக்கியின். இழிவான நிலைமைக்குக் காரணம். துருக்கி சல்த்தான்கள் மதாசிரியர்களுக்கு அடிமைப்பட்டே வாழ்ந்து வந்தனர். பகுத்தறிவற்ற பாமர மக்கள் மிகுந்த நாட்டிலே மதாசிரியர்களுக்குச் செல்வாக்குப் பெருகி யிருப்பது இயல்பு எனவே துருக்கியிலே கிலாபத்தே கிரியாம்சையில் சுல்த்தான்களையும். அடக்கியாண்டு வந்தது. மதாசிரியர்களுக்கு நாட்டு முன்னேற்றத்தில் இயல்பாகவே விருப்பமிராது. அவர்கள் தமது செல்வாக்கு அழியாமல் இருப்பதற்குத் தேவையான காரியங்களையே செய்து வருவார்கள். எனவே சோம்பேறிச் சுல்த்தான்களும் சுயநல கிலாபத்தும் ஆதிக்கம் செலுத்திய நாடு “ஐரோப்பாவின் நோயாளி” என இகழ்ந்துரைக்கப்பட்டது ஆச்சரியமன்று. துருக்கியிலே மக்களுக்குள் ஒற்றுமை சூனியமாக: இருந்தது. மேட்டுக்குடிப் பிரபுக்கள் சதா ஒருவருக்கொருவர் பூசலிட்டுக். கொண்டிருந்தனர். செல்வ வருவாய்க்குரிய மார்க்கங்கள் தடைப்பட்டன. இவ்வாறாக நாடு சீரழிந்து கிடந்த காலத்தில் ஐரோப்பிய மகாயுத்தம். உண்டாயிற்று. ருஷியாவுக்குப் பயந்து துருக்கி மத்திய ஐரோப்பிய நேசங்களுடன் கலந்து கொண்டது. ஜெர்மன் கட்சி தளர்ச்சியடைந்து ஐக்கிய நேச கட்சி வெற்றியடையும் அறிகுறிகள் தோன்றியபோது துருக்கியைப் பங்கு போட ஐக்கிய கட்சியார் பரஸ்பரம் போட்டி போட்டுக். கொண்டிருந்தனர். இந்த ஆபத்தான தருணத்திலே நமது கெமால் பாஷா முன் வந்தார். காலி பொலியில் பிரிட்டிஷ் படையை எதிர்த்துத் தடுத்து நிறுத்தினார்; கிரேக்கர்களை புறமுதுகு காட்டியோடும்படி செய்தார். துருக்கிக்கு தன்னைத்தானே காத்துக் கொள்ள சக்தியுண்டென ஐரோப்பிய தேசங்களுக்குப் பிரத்தியட்சமாக விளக்கிக் காட்டினார். ஐரோப்பிய வல்லரசுகளைப் போல துருக்கியும் ஒரு வல்லரசே என நிலை நாட்டினார். ஐரோப்பாவின் நோயாளி என்ற துருக்கியின் இழிபெயரை அகற்றினார். துருக்கி மக்கள் எல்லாம் கெமாலை இரு கைகூப்பித் தொழுதனர். ஆடாடர்க் அல்லது துருக்கியின் தந்தையெனப் புனைபெயர் சூட்டினர்.
ஆம். நமது கெமால் துருக்கியின் உண்மைத் தந்தையே. அவர் மட்டும் அந்த ஆபத்து காலத்தில் தோன்றியிருக்காவிட்டால் துருக்கி
B வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
நாடு பூண்டோடு ஒழிந்திருக்கும். ஐரோப்பிய தேசங்கள் அந்நாட்டைப் பங்கு போட்டுக்கொண்டிருக்கும். அக்காலத்திய சுல்த்தான்கள் அதற்கு தடைகூறவும் முன்வந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள். அவ்வளவு ஆண்மையற்றவர்களாயிருந்தனர். யுத்த பீடையிலிருந்து துருக்கியைக் காப்பாற்றிய பிறகு நாட்டைத் திருத்தியமைக்க கெமால்: பாஷா முயன்றார். சுல்த்தானை வெருட்டியோட்டினார்; கிலாபத்தை யொழித்தார். குடி அரசு அரசியல் திட்டம் ஒன்று அமைத்து பார்லிமெண்டு ஏற்படுத்தி தாமே முதல் குடிஅரசுத் தலைவராகிக். கொண்டார். அவர் பெயரளவில் குடிஅரசுத் தலைவராயிருந்தாலும் இரியாம்சையில் ஒரு சர்வாதிகாரியாகவே விளங்கினார். குடிஅரசின். ஆரம்ப காலத்திலே தலைவர் ஓரளவு சர்வாதிகாரியாக இருந்தால்தான். தேச நிருவாகம் வெற்றிகரமாக நடைபெறும். மற்றும் குடிஅரசு முறை துருக்கிக்குப் புதியதாகையினால் துருக்கி மக்கள் குடிஅரசு நுட்பங்களைச் சரிவர அறியாதிருந்தார்கள். எனவே முதல் தலைவரான கெமால் பாஷா சர்வாதிகாரம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று. ஆனால் கெமால் பாஷா முசோலினி ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியல்ல. முசோலினியும் ஹிட்லரும் மண்ணாசை பிடித்து வெளிநாடுகளை: விழுங்கி வருவதுபோல் கெமால் அன்னிய நாடுகள் தலைமீது கை. வைக்க முயலவில்லை. ஐரோப்பிய யுத்த நெருக்கடியில் துருக்கியிழந்த. வெளிநாடுகளை மீண்டெடுக்கக்கூட அவர் முயலவில்லை. போனது போக மீதமாயிருந்த துருக்கியை விருத்தி செய்து வலுப்படுத்தவே அவர் முயன்றார். துருக்கி முன்னேற்றத்திற்காக அவர் செய்த சீர்திருத்தங்கள் அளவிடற்கரியன. அவைகளை இத் தலையங்கத்துக்குள். தொகுத்துரைப்பது சாத்தியமன்று. எனினும் முக்கியமானவை கீழ்வருமாறு:
1. அரசியலிலிருந்து மதம் பிரிக்கப்பட்டது.
2. மத பாடசாலைகள் ஒழிக்கப்பட்டன.
3. ஜாதி, மத, கட்சிப் பிரிவு தகர்த்தெறியப்பட்டன.
4. மதச் சின்னங்கள் அழிக்கப்பட்டன. (தாடி தொப்பி, அங்கி முதலியவை)
5. பெண்கள் முகமூடி அணிவதை நிறுத்தினார்.
6... பலதார மணம் தடுக்கப்பட்டது.
7
விவாகரத்து ஏற்படுத்தப்பட்டது.
8
கிறுவர்சிறுமியருக்கு 6 வயதிலிருந்து கட்டாயக் கல்வியளிக்கப்பட்டது.
9
மதுவிலக்கு அமலில் கொண்டு வரப்பட்டது.
1
0. மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடிஅரக 19... 0
11. ராணுவம் திருத்தியமைக்கப்பட்டது.
12. பழைய துருக்கி லிபியை ஒழித்து ரோமன் லிபியை அமலுக்குக் கொண்டு வந்தார்.
13. துருக்கி சர்க்கார் எந்த மத ஸ்தாபனத்துக்கும் ஆதரவு காட்டக் கூடாதெனச் சொல்லி மதாலயங்களையும், சங்கங்களையும் மூடினார்.
14 பத்திரிகைகளுக்கு சர்க்காரிலிருந்து பணமுதவ வேண்டுமென்று சட்டமியற்றினார்.
15. ஸ்திரீகளுக்கு அரசாங்கத்தில் தாராளமாக உத்தியோகங்கள் அளித்தார்.
இன்று பெண்கள் போலீஸ், இராணுவம் முதலிய இலாகாக்களில் வேலை செய்து வருகிறார்கள். முதன் முதலில் துருக்கியில்தான். பெண் போலீஸ் ஏற்படுத்தப்பட்டது
16. பார்லிமெண்டிலும் இதர ஸ்தாபனங்களிலும் பெண்களுக்கு ஸ்தானம் வழங்கப்பட்டன.
பன்னூற்றாண்டு காலம் குருட்டுப் பழக்க வழக்கங்களிலும் மூட நம்பிக்கைகளிலும் ஆழ்ந்து இருள் சூழ்ந்து கிடந்த துருக்கியிலே சுமார் 15 வருஷ காலத்துக்குள் இவ்வளவு மாபெரிய சீர்திருத்தங்கள் செய்வது அவ்வளவு சுளுவான வேலையா? மதவெறி கொண்ட மக்கள் வாழும். நாட்டிலே சீர்திருத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தான வேலையே. ஆப்கான் அமீர் அமானுல்லாகானுக்கு நேர்ந்த கதியை உலகம். அறியாதா? எனினும் கெமால் பாஷாவின் சீர்திருத்தங்களை துருக்கி மக்கள் எதிர்க்கவில்லை. துருக்கியரும் ஆப்கானியரைப்போல மதவெறி கொண்டவர்களே. கெமால் பாஷாவின் சீர்திருத்தங்கள் வெற்றி பெற்றதற்கும் அமானலுல்லாவின் சீர்திருத்தங்கள் தோல்வியடைந்து கடைசியில் அவருக்கே ஆபத்து உண்டானைற்கும் ஒரு முக்கிய காரணம்: உண்டு. சீர்திருத்த வேலையைத் தொடங்குமுன் கெமால் பாஷா துருக்கி மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் முதலில் பெற்றுக் கொண்டார். ஐரோப்பிய தேசங்கள் பங்கு போட்டுக்கொள்ளும் நிலைமையிலிருந்த துருக்கியை ஆபத்திலிருந்து மீட்டெடுத்த கெமால் பாஷாவே துருக்கியின் காப்பாளர் என துருக்கியர் நம்பினர். துருக்கிப் புணருத்தாரனத்துக்காகவே கெமால் பாஷா தோன்றினார். என்றும் அவர்கள் உணர்ந்தனர். ஆகவே அவர் செய்வதெல்லாம் நாட்டின். நன்மைக்கே என எண்ணினர். கெமால் பாஷாவின் வெற்றிக்குக். காரணம் இதுவே. இவ்வண்ணம் துருக்கியின் தந்தையாக விளங்கிய கெமால் பாஷா மறைந்தது துருக்கிக்கு மட்டுமன்றி முஸ்லிம் உலகுக்கே ஒரு பெரிய நஷ்டமாகும்.
MW வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
நவம்பர் மாதம் 18-ந்தேதி வெள்ளிக் கிழமையன்று கெமால். தினம் எங்கும் கொண்டாட வேண்டுமென்றும் இதற்காக மாகாண ஜில்லா முஸ்லீம் லீக்குகள் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் எங்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தவேண்டுமென்றும் இந்திய முஸ்லிம்கள். கெமால் மரணத்துக்குக்காக துருக்கிக்குத் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ள வேண்டுமென்றும் அகில இந்திய முஸ்லிம் லீக். தலைவர் ஜனாப் ஜின்னா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். முஸ்லிம். உலகத்துக்கு நேர்ந்த நஷ்டத்தில் பார்ப்பனரல்லாதாருக்கும் பங்குண்டு. ஆகவே முஸ்லிம் லீக் தலைவர் கட்டளைப்படி முஸ்லிம்களும், பார்ப்பனரல்லாதாரும் நவம்பர் 18ந தேதி கெமால் தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 13.11.1938
குடிஅரசு 198) ம்
தமிழ்க்கொலை
தற்காலத்தில் பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பாடப். புத்தகங்களிலுள்ள குற்றங் குறைகளை எழுத வேண்டுமானால் அதற்கே ஒரு தனிப் புத்தகம் எழுதலாம். அந்த வேலை மணற்சோற்றில் கல். ஆராய்வது போன்றது.
315 கேடி!
1. சென்னை ராஜதானிக் கல்லூரியில் ஆசிரியராயிருக்கும் ஒருவித்வான் எழுதிய தமிழக வாசகம் நான்காம் புத்தகத்தில் இந்தியாவின். ஜனத்தொகை சுமார் 315 கோடியென்று முட்டையெழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கிறது.
2 “செஞ்சி நகரக் கோட்டைச் சிறப்பு” என்பது ஒரு பாடத்தின் பெயர்.
3. “தஞ்சையில் விஜயராகவரிடம் வேலை பார்த்து வந்த இராயசம்: வெங்கண்ணா என்ற ஒரு கணக்குப்பிள்ளை ஒருவர் இருந்தார்” என்பது ஓர் அழகான வாக்கியம்.
4. அநுமானும் கீதையும் என்ற ஒரு பாடத்தில் அநுமான் அசோகவனத்தில் சீதையைக் கண்டு.
“தாயே.... தங்களை இராமரிடம் எடுத்துப் போக நான் விரும்புகிறேன். ஓர் இமைப்பொழுதில் நான் அவரிருக்கும் இடம் செல்வேன். தங்கட்குச் சிறு துயரம் நேராது” என்று சொல்வதாகக் கூறப்பட்டிருக்கிறது.
கிறு துயரம் நேராது என்பது சென்னை ராஜதானிக் கல்லூரியில் தமிழாசிரியராயிருக்கும் ஒரு வித்வானின் எழுத்து:
8... மீன்கள் என்ற பாடத்தில் “ஒரு வகை மீன் கப்பல்களின் ஓரங்களிலும் திமிங்கிலம் முதலிய கடற் பிராணிகளின் உடல்களிலும் ஒட்டிக்கொண்டு அவற்றுடன் வெகுதூரம் போகக்கூடிய உடலமைப்பைப் பெற்றிருக்கிறது. அவற்றிற்கு உரிஞ்சு மீன்கள் என்று பெயர்: என்று சொல்லுகிறார். இதுவும் வித்வான் வாக்கு.
W வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
6. இதிலுள்ள அச்சுப் பிழைகளுக்கும், வல்லின மெல்லினத் தவறுகளுக்கும், விட்டுப்போன ஒற்றெழுத்துக்களுக்கும் வேண்டாத ஒற்றுகளுக்கும் கணக்கில்லை.
“சென்னை நகர பூகோள சாஸ்திரமும் பிற நாட்டு மக்கள். வாழ்க்கையும்” என்பது மற்றொரு புத்தகம். இது பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்ற, ஆணோ, பெண்ணோ என்று ஐயுறக் கூடியவாறு தமது பெயரை அமைத்துக்கொண்டிருக்கிற ஓர் அறிஞரால் எழுதப்பட்டிருக்கிறது. இதில். வடிக்கட்டும் என்பது போல வேண்டாத ஒற்றுகள் சில இடங்களில் போடப்பட்டிருக்கின்றன. அச்சுப் பிழைகளுக்குக் கணக்கில்லை. ப், க்,
த் முதலிய ஒற்றெழுத்துக்கள் வர வேண்டிய இடங்களிலெல்லாம் ஒரே அடியாக விட்டுவிட்டார். சிக்கனம் போலும்!
தற்காலத்தில் பொது நலத்தையும் கல்லி நலத்தையும் கருதாமல். சுயநலம் கருதி வைக்கப்படும் பள்ளிக்கூடப் புத்தகங்களையெல்லாம். ஆராய்ந்தால், அது ஒரு பரிதாபமான ஆராய்ச்சியாயிருக்கும். இத்தகைய புத்தகங்களை எழுதுகிற ஆசிரியர்களுக்கும், வித்வான்களுக்கும், அவற்றை வெளியிடுகிற புத்தக வியாபாரிகளுக்கும் அவர்கள். உடம்புகளில் தகுதியான இடங்களில் நல்ல புளியம் விளாரால் முறையே ஒரு டசன், அரை டசன் அடிகள் தக்கவர்களைக் கொண்டு கொடுக்க வேண்டுமென்பது நமது தாழ்மையான அபிப்பிராயம். இத்தகைய புத்தகங்களை அங்கீகாரம் செய்யும் டெக்ஸ்ட்புக் கமிட்டியார் என்பவர்களுக்கு என்ன தண்டனை விதிக்க வேண்டும் என்பதைப் பொது மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 13.11.1938
குடிஅரசு 198) ய
ஆச்சாமியார் இதற்கென்ன பதில் சொல்லுவார்?
சென்னையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி செய்து சிறைப்பட்ட பெண்களது வழக்கு விசாரணையில் முடிவு சொன்ன நீதிபதி அவர்கள் எழுதிய தீர்ப்பு “விடுதலை”யில் பிரசரிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-
“தளர்ச்சி செய்த பெண்களில் இருவர் கவுரவமான பெண்கள்; மற்றும் சிலர் வயதானவர்கள். ஆதலால் அவர்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். அதாவது அவர்கள் “ராஜகோபாலாச்சாரியார் ஒழிக” என்றும் “பார்ப்பனர். ஒழிக” என்றும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே கருதுகிறேன். அன்றியும் “இந்தி ஒழிக” “தமிழ் வாழ்க” என்று. கோஷிப்பதாலும் குற்றமில்லை என்றும் அந்த வார்த்தைகள் குற்மானவை அல்ல என்றும் ஒப்புக்கொள்ளுகிறேன்”' என்பதாகும்.
இதிலிருந்து நீதிபதி அவர்கள் போலீசாரை நம்பவில்லை. என்பதும் போலீசார் சொன்ன சாக்ஷியம் உண்மை அல்ல என்பதும் நன்றாய்க் காணக்கிடக்கின்றது. இந்தப் போலீசார்தான் இதுவரை அனேகத் தொண்டர்கள் மீது இதே மாதிரி சாக்ஷி சொல்லி தண்டிக்கச் செய்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணர்வார்களாக. அதோடு மாத்திரமல்லாமல் சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் தம் அடிமைகளும் இந்தி எதிர்ப்புக்காரர்கள் யோக்கியமான. முறையில் கிளர்ச்சி செய்யவில்லை என்றும் கெட்ட வார்த்தைகள் சொல்லி பிறர் மனதை நோவச் செய்கிறார்கள் என்றும் துராக்கிரகம் செய்கிறார்கள் என்றும் சொன்னதும் சொல்லி வருவதும் முழுப்பொய் என்பதும் அயோக்கியத்தனமாகவும் அற்பத்தனமாகவும் வேண்டுமென்றே செய்யும் விஷமப்பிரசாரமே ஒழிய சிறிதும் உண்மையல்ல என்றும்
கருத இடம் தருகிறது. இவை மாத்திரமல்லாமல் வாக்குச் சுதந்திரமூம் நியாயமான. கிளர்ச்சி சுதந்திரமும் மக்களுக்கு அளித்திருப்பதாய் கூறும் காங்கரஸ்காரர்கள். யோக்கியதையும் அவர்களது ஆட்சி யோக்கியதையும் எப்படிப்பட்டது என்பதும் நன்றாய் விளங்குகிறது
MW வரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
கவுரவமான பெண்கள் வயது முதிர்ந்த பெண்கள், தெருவில். நின்று “இந்தி ஒழிக” “தமிழ் வாழ்க” என்று சொல்வது கிரிமினல். அமெண்டுமெண்ட் ஆக்ட்டுப்படி எப்படிக் குற்றமாகிறது என்பதை பொதுமக்கள் தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்தக். காரியங்களைச் செய்யும்படித் தூண்டுவது தானாகட்டும் எப்படி உடந்தைக் குற்றமாகின்றது என்பதும் நமக்கு விளங்கவில்லை:
ஆகவே காங்கரஸ் ஆதிக்கமானது தனது அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் அதை எந்த விதமான முகாந்திரத்தைக் கொண்டும் வெளியிடக் கூடாது என்பதும் காங்கரசுக்கு விரோதமாக யாரும் நினைக்கவும் பேசவும் கூடாது என்பதுமான காட்டுராஜா ஆதிக்கம். செலுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது
தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மேல் குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்புக்கு என்ன பதில் சொல்லுகிறார் என்று கேட்கின்றோம்.
நீதிபதி அவர்கள் “கிளர்ச்சி செய்தவர்கள் கவுரவமானவர்கள்; அவர்கள் கோஷம் செய்த வார்த்தைகளும் குற்றமானவை அல்ல” என்று சொல்லிவிட்டார்.
மேலும் பள்ளிக்கூடத்திற்கு சென்ற பிள்ளைகளையும் செல்லாமல் தடுக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவருகிறது. சாட்சி சொல்லுவது என்னவெனில் இவர்கள் கூட்டத்தால் பிள்ளைகள் பள்ளிக். கூடத்திற்குள் போக முடியவில்லை என்றும் உள்ளே இருக்கிற பிள்ளைகள்: இந்த சத்தம் கேட்டு வெளியில் வருகிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். இதைப்பற்றி ஒரு பையனாவது ஒரு உபாத்தியாராவது க்ஷி சொல்லவே இல்லை.அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும். அதற்கும்கிரிமினல் அமெண்டுமெண்ட் ஆக்ட்டுக்கும் என்ன சம்மந்தம். என்றும் பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் ஏகபோக ஆட்சியில் இந்த மாதிரியான காரியங்களுக்காக இந்த ஆக்டை உபயோகித்தார்களா என்றும் யோசித்துப்பார்த்தால் காங்கரஸ் ஆட்சியின் யோக்கியதை: யாருக்கும் புலப்படாமல் போகாது
தவிரவும் நீதிபதி அவர்கள் தீர்ப்பில், மறியல் செய்த பெண்மணிகள் கவுரவமானவர்கள் டாக்டர்கள் என்று எழுதியிருந்தும்கூட போலீசார் அவர்களுக்கு அன்று பகல் முழுதும் பட்டினி போட்டு இங்குமங்குமாய் இழுத்தடித்திருக்கிறார்கள் என்றால் காங்கரசின் நீதி எங்கே என்று கேட்கின்றோம்.
காங்கரஸ்காரர்கள் இக்கிளர்ச்சியை அழிப்பதற்காக இதுவரை எத்தனையோ வித சூழ்ச்சிகள் செய்து பார்த்துவிட்டார்கள். இனிமேற்
குடிஅரசு - 1938 (2) —— 010
கொண்டு பெண்கள் இதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக ஏதேதோ சூழ்ச்சி செய்வதாகவும் அதற்கு சில பெண்களை விலைக்கு வாங்குவதாகவோ வாங்கி இருப்பதாகவோ நம்பத்தகுந்த இடத்திலிருந்து சேதிகள் வருகின்றன. இது உண்மையானால் ஒரு உண்மையான இயக்கத்தின் கிளர்ச்சியை ஒடுக்க இம்மாதிரி இழிவான முயற்சிகளைக். கையாளுகின்ற ஒரு இயக்கமும் அதன் தலைவர்களும் யோக்கியமானவர்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.
காங்கரஸ் பத்திரிகைகள் மிக்க இழிவான முறையில் இவ்வுண்மை களையும் கிளர்ச்சியின் உண்மையான நடவடிக்கைகளையும் மறைக்கவும். தரித்துக் கூறவும் விஷமத்தனம் செய்யவுமான காரியங்கள் சிறிதும். கைகூசாமல் மான வெட்கமின்றி செய்து வருகின்றன. பாமர மக்கள் இப்பத்திரிகைகளின் உண்மை யோக்கியதையை உணர முடியாத நிலையில் இருப்பதால் இப்பத்திரிகைகளின் அட்டூழியங்கள் செலவணியாகிக் கொண்டு வருகின்றன.
ஆதலால் இனிமேல் மக்களுக்கோ நாட்டுக்கோ ஒழுக்கத்துக்கோ நீதிக்கோ செய்ய வேண்டிய அருந்தொண்டு என்னவென்றால் இவ்வற்ப அயோக்கியப் பத்திரிகைள் ஒழிக்கப்பட வேண்டியதே முதல் கடமையாகும் என்றுகூட கருத வேண்டியதாய் இருக்கிறது.
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் சில சூழ்ச்சிப் பத்திரிகைகளுக்கும் சில துரோகக் கூலிப் பத்திரிகைகளுக்கும் நாட்டில். செல்வாக்கேற்பட்டதன் பயனே நாட்டில் இவ்வளவு அக்கிரமங்களும் அநீதிகளும் கொடுமைகளும் ஏற்படவும் அதுபோன்றவைகளுக்கு அதற்கேற்றதுமான மக்கள் ஏற்படவும் இடமேற்பட்டதென்பதே நமதபிப்பிராயமாகும்.
கூலிப் பத்திரிகைகளும் மலிந்துவிட்டன.. என்ன எழுதியாவது எந்த இழிவான காரியம் செய்தாவது வயிறு வளர்க்கலாம் உயிர் வாழலாம் என்ற இழிகுண மக்களே பெரிதும் பத்திரிகையாளுபவர்களாக ஆகிவிட்டார்கள். இந்த நாட்டின் ஈனநிலைக்கு இவர்கள் இருப்பதே ஒரு மாபெரும் உதாரணமாகும். இதைப் பொதுமக்கள் உணருங் காலம்
வரும் போதுதான் மக்களுக்கு மானமுண்டு, மான உணர்ச்சி உண்டு என்று. சொல்லக்கூடும் என்பதே நமதபிப்பிராயமாகும். ஆகவே மக்கள் உண்மையை உணர வேண்டுமானால் பார்ப்பனரல்லாதாராலும் பார்ப்பனக் கூலிகளுமல்லாதவர்களுமானவர் களாலும் நடத்தப்படும் பத்திரிக்கைகளைப் பார்த்தால் தான் உண்மையை உள்ளபடி அறியலாம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
W வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இந்தி எதிர்ப்பு விஷயத்திலும் அதன் கிளர்ச்சி விஷயத்திலும். காங்கரஸ் பத்திரிகைகள் செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல. என்று சொல்லுவோம். இவைகள் என்ன செய்தும் இந்தி எதிர்ப்பு இனத்துக்கு தினம் மேலோங்கிக் கொண்டு வருவதுடன் அது கூடிய கககிரத்தில் இன்னமும் புதிய புதிய முறையில் கிளம்பப் போகிறது என்பதை இப்பொழுதே “ஜோசியம்” கூறுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.11.1938
கடி அரசு - 1938 (2) —— 013
சென்னைக் கலவரங்கள்?
கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஆபத்து உண்டாகுமெனத் தமிழர்கள் நம்புகிறார்கள். கட்டாய இந்தியினால். தமிழர்களுக்கு ஏற்படும் தீமைகளை மறைமலையடிகளும் தோழர். சோமசுந்தர பாரதியாரும், சிறு சுவடி மூலமும், பகிரங்கக் கடிதம் மூலமும் காங்கரஸ் மந்திரி சபையாருக்கு அறிவுறுத்தியுமிருக்கிறார்கள். திருச்சி, காஞ்சீவரம், சோழவந்தான் முதலிய இடங்களில் கூடிய தமிழர் மகாநாட்டிலும் கட்டாய இந்தியால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும். இடையூறுகள் விளக்கப்பட்டு கண்டனத் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில். பொதுக்கூட்டங் கூட்டி கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. சென்னைக் கடற்கரையில் கூடிய மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறெல்லாம் தமிழர்கள் கட்டாய இந்தியை பகிரங்கமாக எதிர்த்தும். கனம் ஆச்சாரியார்கள் மனமிளகாததினால் ஆவேசங்கொண்ட தமிழர்கள். நேரடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள். உடனே அவர்கள் மீது இரிமினல் திருத்தச் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டு இன்றுவரை 446 பேர் சிறை புகுந்திருக்கிறார்கள். ஆண்கள் சிறை புகுந்தும் பலன் ஏற்படாததினால் இப்பொழுது பெண்களும் சிறைபுக முன்வந்திருக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டுக்குப் பிறகு சென்னைப் பெண்ணுலகம் விழித்தெழுந்திருக்கிறது. திங்கள் கிழமை தோறும் கட்டாய இந்தியை எதிர்த்து மறியல் செய்து சிறை புகுவதென சென்னை மாதர்கள் முடிவு செய்திருப்பதாயும் தெரியவருகிறது. இவ்வண்ணம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் இந்தி எதிர்ப்புச் செத்துவிட்டதென தேசியப் பத்திரிகைகள் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தி எதிர்ப்புக் கூட்ட நடவடிக்கைகளை தேசியப் பத்திரிகைகள் பிரசுரம் செய்வதே இல்லை. ஒருகால் பிரசுரம் செய்தாலும் திருத்திச் சுருக்கி மழுக்கிப் பிரசுரிப்பதே வாடிக்கையாகவும் இருந்து வருகிறது. இந்தத் திருப்பணியில் முன்னணியில் நிற்பது “தமி) நன்மைக்காக தமிழரால் நடத்தப்படும் தமிழ் தினரியான “தினமணியே. இந்தி எதிர்ப்பாளரைக் கேலி செய்வதிலும் விகடப் படங்கள் பிரசரித்து இழிவுபடுத்துவதிலும் தலைசிறந்து விளங்குவது “ஆனந்த விகடன்”. 39௨ வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
காங்கிரஸ் பத்திரிகைகளும் தேசியப் பத்திரிகைகளும் இந்தி எதிர்ப்பாளரைத் தாக்கி வந்தாலும் “தினமணி”யையும் “ஆனந்த விகடனையும்” போல் விஷமத்தனமாகவும் இழிவாகவும் எந்தப் பத்திரிகையும் தாக்குவதில்லை. “தினமணி” ஆசிரியர் சட்டசபை மெம்பர். கனம் ஆச்சாரியார் தயவினால் மாதம் தோறும் 75 ரூபாய் சம்பளம் பெறுபவர். “ஆனந்த விகடன்' ஆசிரியர் கனம் ஆச்சாரியாரின். பிரதம அரசியல் சிஷ்யர். கனம் ஆச்சாரியாரின் கட்டுரைகள் மூலமும் ஆதரவு மூலமும் “ஆனந்த விகடனை' விளம்பரப்படுத்துவதில் மிக்க ஆர்வமுடையவர். ஆகவே இவ்விரு பத்திரிகாசிரியர்களும் இந்தி எதிர்ப்பாளரை எப்பொழுதும் கட்டுப்பாடாகத் தாக்கி எழுதி வருவது ஆச்சரியமல்ல. கட்சிப் பிரதி கட்சி ஏற்பட்டுவிட்டால் ஒரு கட்சியார். மற்ற கட்சியாரைத் தாக்குவதும் தூற்றுவதும் இயல்பே. எனினும் அதற்கும் ஒரு எல்லையுண்டு. இந்தி எதிர்ப்பாளரை அடக்கும். பொறுப்பை சுயமாகவே மேற்போட்டுக் கொண்ட “தினமணி' இந்தி எதிர்ப்பு ஆரம்பமானது முதற்கொண்டே இந்தி எதிர்ப்பாளரை ஒடுக்க சர்க்காரைத் தூண்டிக்கொண்டே வந்திருக்கிறது. சில இடங்களில். நடைபெற்ற கூட்டங்களில் உண்டான கலவரங்களுக்கு இந்தி எதிர்ப்பாளரே காரணம் என்று ஒரு கதை கட்டிவிட்டு தற்காப்புக்காக எவரையும் கொல்லலாமென்றும் அவ்வாறு கொலை புரிவது குற்றமாகாதென யாரோ ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதாகவும் “தினமணி” எடுத்துக்காட்டி இந்தி எதிர்ப்பாளரை கொல்லவும் பாமர மக்களுக்கு மறைமுகமாக உபதேசம் செய்தது. மற்றும் ஒருமுறை, யாரோ காங்கரஸ் தலைவர்களுக்கு பயமுறுத்தல் கடிதங்கள் அனுப்பியிருப்பதாயும். அவர்கள் இந்தி எதிர்ப்பாளராகத்தான் இருக்க வேண்டுமென்றும் இந்தி எதிர்ப்பாளரை அடக்க சர்க்கார் தீவிரமான முறைகளைக் கையாள: வேண்டுமென்றும் “தினமணி” எழுதியது. “தினமணி” யின் சொக்காரப் பத்திரிகையான “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கட்டாய இந்தியை ஆதரித்தாலும் இந்தி எதிர்ப்பாளர்மீது அநாவசியமாக கிரிமினல் திருத்தச் சட்டத்தைப். பிரயோகஞ் செய்வதைக் கண்டித்திருக்கையில் “தினமணி” கிரிமினல். திருத்தச் சட்டப் பிரயோகம் ஞாயமானதென்றும் எழுதியிருக்கிறது “தினமணி” என்ன எழுதியும், சர்க்கார் எவ்வளவு கொடிய அடக்குமுறைகளைக்: கையாண்டும் இந்தி எதிர்ப்பு ஒழியவில்லை. மாறாக நாளுக்கு நாள். வளர்ந்தோங்கியே வருகிறது. போதாக்குறைக்கு சென்னைப் பெண்களும் இந்திப் போரில் இறங்கிவிட்டார்கள். இந்நிலைமையை “தினமணி"யும் ஏனைய காங்கரஸ் பத்திரிகைகளும் எவ்வாறு பொறுத்துக் கொண்டிருக்கும்? ஆகவே இந்தி எதிர்ப்பை அடக்க காங்கரஸ் பத்திரிகைகள் இப்பொழுது ஒரு புதிய முறையைக் கையாளத் தொடங்கியிருப்பதாய் தோன்றுகிறது. இம்மாதம் 21ந் தேதி இந்தி எதிர்ப்பாளர் திரளாகச் சேர்ந்து “தினமணி”
குடிஅரசு - 1938 (2) —— ல
“ஆனந்த விகடன்" காரியாலங்களைத் தாக்கி மிகுந்த சேதம் உண்டாக்கி விட்டதாக சென்னை தினசரிகளில் செய்திகள் வெளிவந்திருப்பதை அன்பர்கள் படித்திருக்கலாம். இந்தச் செய்திகளை மிகைப்படுத்திக் கூறி இந்தி எதிர்ப்பாளர் தலைகளை வாங்க தீவிரப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருப்பது “தினமணி”யே. பிரஸ்தாப கலவரத்தைப் பற்றி சென்னை காங்கரஸ் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கும் செய்திகள் பரஸ்பரம் மூரணாக இருப்பதினால் வெளியூரிலிருக்கும் நம்மால் எது ளி எது தப்பு எனக் கூற முடியவில்லை. கலவரம் நடந்தது உண்மையெனவே வைத்துக் கொண்டாலும் கலவரத்துக்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் இந்தி எதிர்ப்பாளரா இதரர்களா என்பதையே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். ஆனால் இந்தி எதிர்ப்பாளர் இதுவரை பலாத்காரச் செயலில் இறங்கியதாக நமக்குத் தெரியவில்லை. மறியல் செய்ததற்காக தண்டிக்கப்பட்டவர்களும் பலாத்காரம் செய்ததாகவோ கலவரம் செய்ததாகவோ குற்றம் சாட்டப்படவில்லை. நாமறிந்த வரையில் பொதுக் கூட்டங்களில் கலவரம் செய்வதும் கல், மண், செருப்புகள் எறிவதும் காங்கரஸ்காரர் “காபிரைட்! ஆகவே இருந்து வருகிறது இதரர்கள் கூட்டங்களில் காங்கரஸ்காரர் கலவரம் செய்தால் அதற்குப் பொது ஜனங்கள் கோபம் எனத் தலைப்புக் கொடுத்து காங்கரஸ் பத்திரிகைகள் கலவரம் செய்தவர்களைத் தட்டிக் கொடுப்பதும் மேலும் கலவரம் செய்யத் தூண்டுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. நமக்குக் கிடைத்த சில கடிதங்களினாலும் தோழர் பாசுதேவ் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கையினாலும் “ஜனவாணி' தெலுங்கு திரியில் வெளிவந்துள்ள செய்தியினாலும் தினமணி காரியாலயத்தாரும் “தினமணி” காரியாலயத்தின் பக்கமுள்ள ஒரு வீட்டாரும் ஜனக் கூட்டத்தின் மீது முறையே ஈயத் துண்டுகளையும், கற்களையும், செருப்புகளையும் வீசியதினாலும் அழுக்குத் தண்ணீரை ஊற்றியதனாலுமே பொதுஜனங்கள் கோபங்கொண்டு பதிலுக்குப்பதில் கற்களை வீசியதாகவும் தெரிய வருகிறது. ஆகவே “தினமணி” காரியாலயத்தாரே வேண்டுமென்று தெருவில் சென்ற பொது ஜனங்களை வலியச் சண்டைக்கு இழுத்து
இந்தி எதிர்பபாளர் மீது வீண் பழி சுமத்த முயன்றிருப்பதாகத் தோற்றுகிறது. இந்தி எதிர்ப்பாளர் மீது ஆதி முதற்கொண்டே வன்மம் வைத்து எழுதி வரும் “தினமணி” இந்த சம்பவத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு கொடிய அடக்குமுறைகளைக் கையாளுமாறு சர்க்காரை வேண்டி வருவது வியப்பல்ல. இந்தி எதிர்ப்பாளரைகாலாடி பாஷையில் திட்டுவதும் காலிகள் என்றழைப்பதும் “தினமணியின் வாடிக்கையாகிவிட்டது. இந்தி எதிர்ப்பாளரான ஸர்.கேவி. ரெட்டி, மறைமலையடிகள், ஸி.டி.நாயகம், மாஜி மந்திரி முத்தைய முதலியார், சிவராஜ தம்பதிகள், ஸர்.எ.டிபன்னீர்செல்வம், உமாமகேசுவரம்பிள்ளை, ராவ்சாகேப், ஐ.குமாரசாமி பிள்ளை,
Bl வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
எஸ்.சோமசுந்தரபாரதியார், கா. சுப்பிரமணியபிள்ளை, சர்.பி.டி.ராஜன், டபிள்யூபி.ஏ. செளந்தரபாண்டியன், கெ.எ.பி.விஸ்வநாதம், தளவாய். குமாரசாமி முதலியார், சாமி ஷண்முகானந்தா, ஈழத்து சிவானந்தா: அடிகள், சாமி அருணகிரிநாதர், சி.என் அண்ணாத்துரை, எம்.ஏ. போன்றவர்கள் காலிகளா என “தினமணி” யைக் கேட்கிறோம். இவர்கள் எல்லாம் காலிகள். ஆனால் ஏனை யோக்கியர்கள் எல்லாம் ஒழிய வேண்டியதுதான். அந்த யோக்கியர்கள் ஒழிந்து போவதைப் பார்த்து எவரும் சங்கடப்படமாட்டார்கள்.
இந்த “கலவரத்தை” ஒரு ஆதாரமாக வைத்துக் கொண்டு இந்தி எதிர்ப்பாளரை அடக்கிவிடலாமென “தினமணி” எண்ணினால் அது ஏமாந்து போவது உறுதியென இப்பொழுதே “தினமணி”க்கு எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.11.1938
குடி அரசு - 1988 (2) —
சென்னையில் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு.
தலைவரவர்களே! தாய்மார்களே!
இத்தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில், உங்கள் முன்னால் பேச சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். சமுத்திரம் போல் பெண்கள் கூடியுள்ள இக்கூட்டத்தைப் பார்க்க என்: மனமே ஒருவித நிலைகொள்ளா மகிழ்ச்சியடைகிறது.
சென்னையைப் பற்றி! இவ்வளவு பெரிய ஒரு பெண்கள் கூட்டம் சென்னையில் கூடும். என நான் நினைக்கவில்லை. சென்னையைப்பற்றி நான் சில சமயங்களில். பரிகாசமாய் நினைப்பதுண்டு. என்ன வென்றால் சென்னை மூடநம்பிக்கைக்கு இருப்பிடமானது என்று நான் சொல்லுவதுண்டு. இதை நான் அடிக்கடி பத்திரிகையிலும் எழுதி வந்திருக்கிறேன். சென்னையிலுள்ள எனது சில தோழர்களுக்கு நீங்கள் முடநம்பிக்கையை விடுங்கள் பகுத்தறிவுடன் வாழுங்கள் என்று கூறுகின்ற காலத்து அவர்கள் நீங்கள் சொல்வதெல்லாம் ளி என்றும் அவற்றை அப்படியே ஒப்புக் கொள்வதாகவும் ஆனால் தங்கள். வீட்டிலுள்ள பெண்கள் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறார்களே என்றும். உங்களை இழித்துக் கூற உங்கள் மீது பழியைப் போட்டதை நான் பல தடவை கேட்டிருக்கிறேன். ஆனதால்தான் வெளி ஜில்லாக்களைப் போல் சென்னையில் பகுத்தறிவியக்கக் கொள்கைகள் அவ்வளவு அதிகமாக பரவவில்லையோ என்றும் கருதுவதுண்டு. ஆனால் இன்று இப்பெண்கள் மாநாட்டையும் இங்குள்ள உணர்ச்சியையும் ஊக்கத்தையும் இங்கு நடந்த உபன்யாசங்களையும் தீர்மானங்களையும் பார்க்கும்போது எனக்கு ஒரு புதிய எண்ணம் தோன்றுகிறது. அதாவது சென்னை பெண்மக்கள் ஆண்மக்களை விடஎந்த வகையிலும் பின்னடைந்தவர்களல்ல என்பதைக் காட்டுகிறது.
ஆச்சாரியாருக்கு நன்றி.
இங்கு நான் அநேக வயது சென்ற பெண்களைக் காண்கின்றேன். அவர்களது ஊக்கம் எனக்குப் பெரியதொரு வெளிச்சத்தையும் தைரியத்தையும் கொடுக்கிறது. சென்னை தாய்மார்களுக்கு இப்படிப்பட்ட
B வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
உண்மையில் இன்றைய தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரதிநிதித்துவம் வழிந்தோடுகின்றது. அநேக பிரபல பெண்கள்.
ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு உலகந்தெரியாத சில பெண்கள் கூடிக்கொண்டு இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் ஒரு. அறையில் உட்கார்ந்து கொண்டு இந்நாட்டு மக்களபிப்பிராயத்துக்கு நேர்மாறாக இந்தியை ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர் என்பதாகத் தெரிகிறது. இதற்கு நமது எதிரிகள் பத்திரிகைகள். பிரமாதமாகப் பெருக்கி விளம்பரப்படுத்தியிருக்கின்றன. அது எதற்காகச். செய்யப்பட்டது என்றால் இம்மாநாடு கூடப்போவது தெரிந்து இம்மாநாட்டுத் தீர்மானங்களை அசட்டை செய்யச் செய்வதற்காகவும், இங்கு செய்யப்படும் தீர்மானங்கள் சரியான பிரதிநிதித்துவம்: பெற்றதல்லவென்று கருதும்படி செய்வதற்காகவும், நமது சுயமரியாதைக்குக் கேடு சூழவும் கூட்டப்பட்ட ஒரு சூழ்ச்சி மாநாடு ஆகும். நம்மிடையில் (தமிழர்களிடத்து) ஒற்றுமை இல்லாததால் அவர்கள் யாரோ அகவிலை
நம்மில் பல ருத்துக்காரர்களிருக்கலாம். சவவைணவ மதக்காரர்களிருக்கலாம், முஸ்லிம் கிறிஸ்தவர்கள் இருக்கலாம், மேல் சாதி கீழ் சாதிக்காரர்கள் என்பவர் களிருக்கலாம், எந்த மதத்தையும், சாதியையும் நம்பாதவர்களுமிருக்கலாம். எனவே நம்மில் ஒருவருக்கும் தீங்கு வராத நிலையில் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டுவது இன்றியமையாததாகும். நம் தாய்மொழி மீதுள்ள பற்று காரணமாகவே
குடிஅரசு - 1938 (2) —— வ
நம் மானத்துக்கு ஏற்க கலைகள், உணர்ச்சிகள் காரணமாகவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம். உண்மையிலேயே ஒருவனுக்கு நாட்டுப்பற்று உண்டானால் - மொழிப்பற்று உண்மையில் ஏற்படுமானால் அதனை கனம் ஆச்சாரியார் அடக்க நினைப்பாரானால் அது ஒரு நாளும் முடியாத எரியமாகும். அதற்கு மாறாக பற்றும், உணர்ச்சியும் வளரத்தான் செய்யும். மேலும் அவர் கடினமான அடக்குமுறைகளைக் கையாளுவாரானால் அதனால். தமிழர்கள் மனங் கொதிப்படையுமாணல் அது எங்குபோய் நிற்கும் என்பதைச். சொல்வதற்கில்லை. அது தமிழர்களிடத்திலும் ஏன் ஹிட்லருணர்ச்சியை உண்டாக்காது எனக் கேட்கிறேன். எதற்காக இந்த அடக்குமுறை?
பெண்கள் பாராட்டு.
இன்று 400 பேர் சிறைசென்றதைப் பாராட்டி நீங்கள் தீர்மானம். நிறைவேற்றியபோது உண்மையிலேயே எனக்கு பரிகாசமாயிருந்தது. ஆண்கள் சிறை செல்வதில் அதிசயம் ஒன்றும் இல்லையே! ஆண்கள். சென்றதைப்பற்றி நீங்கள் பாராட்டி விட்டால் நீங்கள் வீரப்பெண்மணிகள் என்று அர்த்தமா? நீங்கள் 400 பேர் சிறை சென்று அதை ஆண்கள் அல்லவா பாராட்ட வேண்டும்? நீங்கள் ஏன் செல்லக்கூடாது? இது கனம் ஆச்சாரியார் கோவில் பிரவேச விஷயத்தில் திருவிதாங்கூர் ராஜாவை பாராட்டிவிட்டு தோழர் எம்.சி.ராஜாவை ஏமாற்றி விட்டது போலல்லவா இருக்கிறது. (சிரிப்பு) இன்று ஒரு அம்மையார் என்னிடம் வந்து தான் சிறைக்கு போகத் தயார் என்றார் அந்த பேச்சு எனக்கு மகிழ்ச்சியாயிருந்தது.
ஆனால் அது நாளைக்குத் தெரியப்போகிறது. அக்காலம். அதாவது தமிழ் பெண்களை கிறை செய்யும் காலம் வந்தால் தான் நமக்கு நன்மையுண்டாகும். மாநாட்டுத் திறப்பாளர் முற்காலப் பெண்களின். வீரத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். நான் கூட அப்போது அக்காலத்தில் ஒரு பெண்ணாய்ப் பிறந்திருப்போமோ என்று கூட நினைத்தேன். அவ்வளவு பெருமையாய்ப் பேசினார். ஆனால் பழம். பெருமைப் பேசிப் பயனென்ன? இது பார்ப்பனர் பேசுவதுபோல் தான் இருக்கிறது. இன்றைய பெண்களைப் பற்றியும் அவர்கள் கடமையைப் பற்றியும் பேசினால்தானே நீங்கள் உரிமை பெறலாம் - நன்மையடையலாம். பெரியவர்கள் தேடிவைத்த சொத்தைக்கொண்டு எவ்வளவு நாளைக்குப் பிழைக்கலாம்? நமது வாழ்வுக்கு வகை என்ன? இவைகட்கெல்லாம் -
பெண்கள் முன்னேற்றத்திற்கும் வீரத்திற்கும் - இம்மாநாடு ஒரு வழிகாட்டிவிட்டது.
பார்ப்பனர்கள் ஊர் பெயர் தெரியாத பெண்களைப் பிடித்துத் தங்களைப்பற்றியே தங்களுக்கு தெரியாத பெண்களைப் பிடித்தும். 3௨ வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
படம்போட்டு விளம்பரப்படுத்தி பட்டம் பதவி வாங்கிக்கொடுக்கின்றனர். உண்மையாக எத்தகைய கஷ்டங்களையும் அனுபவிக்கத் தயாராக உள்ள. நாட்டு நலனுக்குப் பாடுபடக்கூடிய பல பெண்கள் நம்மில். இருக்கின்றார்கள். ஆனால் நம் ஆண்கள் அவர்களை வெளியில் விடாது வீட்றிற்குள்ளேயே அடைத்து வைக்கின்றனர்.
நமது நண்பர்கள் கனம் ராமநாதனுக்கும் கனம் சுப்பராயனுக்கும். பல ஊர்களில் எத்தனையோ பார்ப்பனப் பெண்கள் கார் ஓட்டினர். அதற்காக எந்தப் பெண்ணை அவர்கள் தள்ளிவிட்டனர்? யார் மீது அவர்கள் குறைகூறினார்கள்? பெண்களாகிய நீங்கள் தலைநிமிர்ந்து “எங்கள் உரிமையில் தலையிட்டால் நாங்கள் சும்மாயிரோம் என்றால். என்ன? இதைவிட்டு அல்லிராணி, கண்ணகி, மாதவி முதலிய நமது பாட்டிமார்களைப் பற்றிப் பெருமை பேசுவதில் என்ன பலன்: இருக்கிறது? ஆணுடன் பெண்களும் ஒத்துழைத்துப் போராட மூன். வரவேண்டும். போராட்டத்தில் ஆணுக்கு ஒரு வேலை பெண்ணுக்கு. ஒரு வேலை என்று இல்லை. இருவரும் சமமே. ஆகவே ஆண்களைப் போல் பெண்களும் தமிழ் போராட்டத்தில் இறங்கினால் கூடிய கீத்கிரம். தமிழ்நாடு தமிழனுக்கே ஆகிவிடும்.
கணவர்களைத் திருத்துங்கள்
நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஏன் சிறையை நிறப்பக்கூடாது?. சிறை என்றால் பயமா? அதற்காக யாரையாவது அடிக்கவோ வையவோ வேண்டுவதில்லை. எந்தச் சட்டத்தையும் மீற வேண்டியதில்லை. காங்கரஸ். பேரால் சட்டம் மீறியவர்கள் பிரதிநிதிகளாக சட்டப் பாதுகாப்பாளர்களாகி விட்டார்கள். ராஜத்துவேஷம் எனது மதம் என்றவர்கள் மகாத்மாக்களாகி விட்டார்கள். நாம் அப்படிக் கூடச் செய்ய வேண்டியதில்லை. தமிழ். வாழ்க! என்றால் சிறைபிடிப்பார்கள். இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்றால். போதும். உடனே ஆச்சாரியார் சிறைக்கு வா என அழைத்துக் கொள்வார். (கை தட்டல்) எனக்கு ஒரு பயம்! என்னவென்றால் எங்கே அவர். பின்வாங்கி விடுவாரோ என்று. முதலில் நான்கு பேர் போனால். பின்னால் அவர் பிடிக்கிறாரா என்று பார்த்து பிறகு 8, 10, 100, 1000 என்று போகவேண்டும். நமக்கு ஏற்படும் வேதனைக்கோ, தொல்லைக்கோ. எல்லையில்லை. இந்நிலையில் நீங்கள் சொல்வதைக் கேட்காது -
நாட்டுக்குப் பாடுபடாது ஆண்கள் உங்கள் கிட்ட வருவார்களானால் ரோஷம் இருக்கும் இடம்பார்த்து அவர்களைக் குத்த வேண்டும். வீட்டிற்குள்ளே அனுமதிக்கக் கூடாது. கதவை மூடிவிட வேண்டும். இதே போல் அநேக நாடுகளில் பெண்கள் தங்கள் கணவர்களை இடித்துத் திருத்தியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அநேக ஆண்கள் நீங்கள் சிறைக்குப் போவதைக்காண பயப்படுகிறார்களாம். அவர்களைத் திருத்த
கடி அரசு - 1938 (2) —— 09
வேண்டுமானால் நீங்கள் ஏதாவதொரு ஊருக்குப் போவதாக வீட்டில். சொல்லிவிட்டு அவர்கட்குத் தெரியாது சிறைக்குப் போய்விட வேண்டும். அப்படிச் செய்தால் அவர்களும் பின் வந்து விடுவார்கள். நம்மில் ஜாதி மத உயர்வுகளையும் சுயநலத்தையும் மறக்க வேண்டும்.
இங்கு ஒரு தோழர் (பெயர் கூற ஆசைப்படவில்லை) ராமசாமி. நாஸ்திகன் அவரோடு சேரலாமா என்று ஒருவரிடம் கூறினாராம். ராமசாமி எப்படிப்பட்டவனாயிருந்தாலென்ன? அவன் கூறுவது சரியா, தப்பா என்பதைத் தானே நீங்கள் ஆலோசிக்க வேண்டும். இப்பொழுது இங்கு நான் ஒரு கடை வைத்தால் நாஸ்திகன் என்று சாமான் வாங்க. மாட்டீர்களா? அன்றி நான் ஏறின ரயில் வண்டியில் ஏறமாட்டீர்களா? அல்லது உங்கள் வண்டியில் தான் எனக்கு இடம் கொடுக்க மாட்டீர்களா? நான் நாஸ்திகனா அல்லவா என்று உங்களிடம் விளக்கவேண்டியதில்லை. ஏனெனில் இது சில காங்கரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சி, அதைக்கேட்டு. சில சோணகிரிகள் ஏமாறலாம்.
இழி குணமில்லை
இன்று தேசீயமகாசபை என்று கூறப்படும் காங்கரஸ் தலைவராக: ராஷ்டிரபதி என்னும் பேரால் தோழர் ஜவஹர்லால் தலைவராயிருந்தார். அவர் தன்னை நாஸ்திகன் என்று சொல்லிக் கொள்கிற முறையில் எனக்குச் சத்தியத்தில் - கடவுள் மீது நம்பிக்கையில்லையென்பதாகக் கூறி கோர்ட்டில் சத்தியப்பிரமாணம் கூற மறுத்திருக்கிறார். இன்று அவருடைய வீரத்தைப்பற்றி சூரர் தீரர் என்று பாராட்டுகிறார்களே ஒழிய எந்தப் பார்ப்பனராவது பண்டித ஜவஹர்லால் நாஸ்திகர் என்பதற்காக அவரை வெறுத்தார்களா? ஆனால் எங்களிடத்து இவ்விழிகுணம் கிடையாது.
ஜஸ்டிஸ், சுயமரியாதை முதலிய கட்சிகளிருந்தாலும் நாம் என்ன. செய்தால் வாழ முடியும் என்பதை யோசிக்க வேண்டும். “காடு வாவா என்கிறது, வீடு போ போ” என்கிறது. எனக்கு மட்டிலும் இதிலென்ன அத்துணை அக்கறை? சென்ற 25 ஆண்டுகளாகப் பார்க்கிறேன். பார்ப்பனர்கள் நாடோறும் நம்மைப் பற்றி கேவலமாக - அகங்காரமாகப். பேசுகிறார்கள் - எழுதுகிறார்கள். ஒரு குரங்குப் பத்திரிகை தோழர் ஷண்முகம் செட்டியாரைப்பற்றி செக்கு போட்டு செக்கு ஆட்டுகிற மாதிரி படம் போட்டு இழிவுபடுத்திற்று நம்மைக் கழுதை என்றும், நாய் என்றும் வயிற்றுச் கோற்றுக்காரர்க சென்றும் கூறி வருகிறது... இதைப்பார்த்து உங்கள் ரத்தங் கொதிப்பதில்லை; கண் சிவப்பதில்லை. இந்நிலையில் வீணே 'தமிழ்நாடு தமிழனுக்கு” என்று கூற உங்கட்கு யோக்கியதை உண்டா? தமிழ்மொழி, கலை, நாகரிகம். காப்பாற்றப்பட நாடு வளர வேண்டுமானால் பெண்மணிகளாகிய நீங்கள். துணிந்து முன்வர வேண்டும். இதைக்கருதியே இம்மாநாட்டைக்
ர ௨ வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
கூட்டினீர்கள். பல தீர்மானங்கள் நிறைவேற்றினீர்கள். பெண்கள் உண்மையில்: வீரமுடையவர்கள்தான். நினைத்ததை முடிக்கும் ஆற்றலுடையவர்கள். தான் என்பதை செயலில் காட்ட வேண்டும். ஆனால் சிறைக்குச் செல்லும். ஆண்களை மட்டும் பாராட்டுவதுடன் நில்லாது நீங்கள் செல்வதைப் பார்த்து ஆண்கள் பாராட்ட வேண்டிய நிலையை உண்டாக்க வேண்டும். இதற்குச் சிறிதும் பின்னிடலாகாது. (நீண்ட கைதட்டல்)
குறிப்பு: 13.11.1938 ஆம் நாள் சென்னை ஒற்றை வாடைக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938
குடி அரசு -198(29௨ ௨ 5§
எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி.
காங்கரஸ்காரர்கள் எப்படிப்பட்ட காலித்தனம் செய்தாலும் அதை பொது ஜனங்களின் கோபம் என்றும், ஆத்திரமென்றும் “தினமணியும் சதேசமித்திர"னும் “ஆனந்த விகடனும் எழுதி வருகின்றன.
காங்கரஸ் காலித்தனங்களுக்குப் பொது ஜனங்களால் புத்தி கற்பிக்கப்பட்டால் அது ச௬.ம.காரர்கள் காலித்தனம் என்றும், சில நாளாக: இந்தி எதிர்ப்பவர்கள் காலித்தனமென்றும் அப்பத்திரிகைகள் எழுதி வருகின்றன.
இந்தி எதிர்ப்பை அடக்க காந்தியாரும், ஆச்சாரியாரும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாய் விட்டன. கனம் ஆச்சாரியார் புளுகுகளுக்கு இன்று பொது ஜனங்களிடம் அரைக்காசு மதிப்புக்கூட இல்லாமல் போய்விட்டதானது யாவருக்கும் தெரிந்துவிட்டது.
மாஜிஸ்ட்ரேட் நற்சாட்சிப் பத்திரம்
கனம் ஆச்சாரியார் இந்தி தொண்டர்கள் மீது அபாண்டப் பழி சுமத்தினார். பிரமுகர்கள் வீடுவீடாய் ஏன்? வெள்ளைக்காரர்கள் வீடு வீடாய் சென்று “இந்தி எதிர்ப்பாளர்கள் என்னையும் என் பெண்டுபிள்ளைகளையும் கண்டபடி பேசுகிறார்கள் என்று நினைக்க முடியாத வார்த்தைகளை:
கட்டுக் கட்டி கூறினார். அவரது கூலிப்பத்திரிகைகளும் அவற்றை அப்படியே எடுத்துப் பெருக்கி விஷமப் பிரசாரம் செய்தன. அவ்வளவும் தோழர் ஈ.வெ.ரா.வின் ஒரு அறிக்கை மூலம் இருந்த இடம் தெரியாமல். போய்விட்டதுடன் அது முதல் ஆச்சாரியாரின் முக்காடும் இரட்டைத்துணி கொண்டுவிட்டது. இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் ஒழுங்கு தவறாகவோ, அமைதிக்கு விரோதமாகவோ நடந்ததாக இதுவரை ஒரு ஆதாரமும். ஒரு புகாரும் கூட இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. ஏதோ கோர்ட்டில். ஒரு போலீசு அதிகாரி இந்தி எதிர்ப்பு பெண்கள், பார்ப்பன ஆட்சி ஒழிக என்று சொன்னார்கள் என்று சொன்னதையும் நீதிபதி நம்பவில்லை. என்றும் இந்தி எதிர்ப்பாளர் குற்றமான வார்த்தைகள் சொல்லவில்லை என்றும் தீர்ப்புக்கூறி விட்டார்.
29 வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இந்தி எதிர்ப்பை அடக்க புதிய முறைகள். இவ்வளவு கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்துவரும் ஒரு கிளர்ச்சியை அடக்க இப்போது காங்கரஸ்காரர்களும், பார்ப்பனப். பத்திரிகைகளும், காங்கரஸ் கூலிகளும் அவர்கள் தம் பத்திரிகைகளும் புதிய முறைகளைக் கையாள ஆரம்பித்துவிட்டன. 21-ந் தேதி “தினமணி” பத்திரிகையும், “இந்து” பத்திரிகையும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள். மீது பலாத்கார குற்றமும் காலித்தனக் குற்றமும் சுமத்தும்படியான. சேதிகளைப் பிரசுரித்துவிட்டு 22-ந தேதி பத்திரிகையில் இந்தி எதிர்ப்பு இயக்கத்தையே இன்னமும் கடினமான முறையில் அடக்க தலையங்கங்கள். எழுதுவதுடன் சில காங்கரஸ் கூலிகளின் கையெழுத்தின் பேரால் பல சேதிகளையும் பிரசுரித்துவர முயலுகின்றன.
21-ம் தேதி”திமைணி” பத்திரிகை முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும்போதே “இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வர வர கேவலமாய்க் கொண்டு வருகின்றன” என்று எழுதி இருக்கிறது
நமது மகிழ்ச்சி.
இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி செத்துப்போய்விட்டது என்று எழுதி எழவுக்குப் போய் துக்கம் விசாரித்து விட்டு வந்த “தினமணி” கண்ணுக்கோ காதுக்கோ இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனியும் உயிரோடு இருப்பதும் அது வரவர மிக '“மோசமாக"ப் போய்க். கொண்டிருப்பதன் மூலம் இன்னமும் வளர்ந்து விடுமோ என்று பயப்படுவதாகவும் தெரிவிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றது என்பதை அறிய மகிழ்ச்சி அடைகிறோம். சரியாகவோ சூழ்ச்சியாகவோ இந்தி எதிர்ப்பை அடக்க புதுமுறை வேண்டும் என்று அது ஆசைப்படுவதைப் பார்த்து இன்னமும் அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு கூடவே இந்தி கட்டாய நுழைவுக்குக் கர்த்தாவான கனம்: ஆச்சாரியாரின் காலடியில் கிடக்கும் இலாகாவாகிய போலீசை அறைகூவி அழைத்து அது “தூங்குகிறதா” என்று கேட்கும்படியான. தன்மையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இருப்பதாக ஒப்புக்கொண்டதற்கு. மேலும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
“தினமணி?க்கு நன்றி.
இந்தி எதிர்ப்பை அடியோடு ஒழிப்பதற்கு ஆக என்று இந்த “தினமணி” எவ்வளவு பெரிய அபாண்டப் புளுகு புளுகி மிக்க வன்னெஞ்சத்தோடு சாடி சொல்லி இருந்தாலும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி சாகவில்லை என்பதையாவது ஒப்புக்கொண்ட அதன் கண்ணிய தன்மைக்கு நாம் நன்றி செலுத்தாமல் இருக்கமுடியவில்லை. இன்று “தமிழ் மணி”க்கும் “சுதேசமித்திர"னுக்கும் இருக்கும் ஆசையும் நாளை: குடிஅரசு 260
“ஆனந்த விகடனி'"லிருந்து நாம் அறியக் கிடக்கும் ஆசையும் என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தெரிவித்ததுபோல். இந்தி எதிர்ப்பாளர்களை தூக்கில் போட வேண்டுமென்பது தான். என்பதாக நினைக்கவேண்டி இருக்கிறது. அதைப்பற்றி பின்னால். எழுதுவோம். முதலில் “தினமணியின் துவேஷ புத்தியையும் புளுகையும் கவனிப்போம்.
“தினமணி” 21-ந் தேதி பத்திரிகை இந்தி எதிர்ப்பாளர். ஊர்வலத்தில் 100 பேர்களே தான் இருந்து இந்தி ஒழிக, தமிழ் வாழ்க:
என்று கூச்சல்போட்டுக்கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
புன்வி விவரப் புரட்டு.
ஆனால் அதே தேதி “இந்து” பத்திரிகையில் ஊர்வலத்தில் 700. பேர்கள் இருந்தார்கள் என்றும் போகப்போக பெருகி விட்டது என்றும். இருக்கிறது. “தினமணி” ஆபீஸ் கட்டிடத்தில் நடைபெறும் “இந்தியன். எக்ஸ்பிரஸ்” பத்திரிகை 1000 பேர்கள் ஊர்வலத்தில் சென்றார்கள் என்று எழுதி இருக்கிறது. “மெயில்: பத்திரிகை ஊர்வலத்தில் 3000 பேர்கள். தொடர்ந்து சென்றார்கள் என்று எழுதி இருக்கிறது. அந்த “தினமணி” ஆசிரியர் இந்து பத்திரிகைக்கு கொடுத்த ஸ்டேட்மெண்டில் ஊர்வலத்தில். 200 முதல் 300 பேர்கள் என்று சொல்லி இருக்கிறார். ஏறக்குறைய இத்தனை பெரும் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிரிகளேயாகும்.
என்றாலும் "தினமணி”யின் துவேஷ புத்தி தலைசிறந்து விளங்குவதற்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை 100 பேர் என்று எழுதியதே போதுமானதாகும்.
கந்தபுராணப் புளூகு.
மற்றும் ஊர்வலமாகச் சென்றவர்கள் மறுபடியும் 'தினமணி' ஆபீசு பக்கம் வந்து ஆபீசுக்கு முன்னால் நின்று ஆபாசமாக கத்தினார்கள்
என்று எழுதிவிட்டு இந்த “நூறு'பேருக்குப் பக்கத்திலிருந்த ஒரு. வெள்ளக்கார இன்ஸ்பெக்டர், மூன்று சப் இன்ஸ்பெக்டர், ஐந்தாறு போலீஸ் ஜவான்கள் தான் இருந்தார்கள் என்றும் எழுதி இருக்கிறது. ஆகவே 100 பேருள்ள கூட்டத்திற்கு மேல் அதிகாரிகள் உள்பட 10பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது “தினமணி” சேதியிலேயே பச்சையாய் விளங்குகிறது. இந்த 10 பேர் பக்கத்தில் இருக்க 100 பேர் உள்ள கூட்டம் “திடீரென்று கீழே இருந்து கற்களை எடுத்து எறிய ஆரம்பித்தனர். 5 நிமிஷங்கள்வரை கற்கள் சரமாரியாக இருந்தது போலீசார் மெளனமாக இருந்தார்கள்" என்று எழுதி இருக்கிறது. வாசகர்களே இதை நம்புகிறீர்களா என்று கேட்பதைத் தவிர நம்மால் வேறு என்ன சமாதானம். எழுத முடியும். 3... வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
“ஜணவாணி?? பாசுதேவ் கருத்துகள்: “ஜனவாணி'” என்கின்ற தெலுங்கு தினசரிப் பத்திரிகை இச்சம்பவத்தைக் குறிப்பிடும் போது “ஊர்வலத்தின்மீது முதல் முதல். “தினமணி” பத்திரிகை காரியாலயத்தில் உள்ளவர்கள் தான் தண்ணீரை இறைத்தார்கள்” என்று எழுதி இருக்கிறது. தொழிலாளர் தலைவரும். ஒரு கார்ப்பொரேஷன் அங்கத்தினருமான தோழர் சி. பாசுதேவ் அவர்கள். நமக்கு அனுப்பி இருக்கும் ஒரு அறிக்கையில் தான் கொஞ்ச தூரத்தில் இருந்து வரும் போது “தினமணி” காரியாலயத்திலிருந்து கூட்டத்தின். மீது ஏதோ எறியப்பட்டதைப் பார்த்ததாகவும் அது ஈயத் துண்டுகள். என்று பின்னால் தெரிந்ததாகவும் எழுதியிருக்கிறது. “தினமணி” பத்திரிகை: இச்சம்பவங்களுக்கு போலீசாரை கண்டபடி குறைகூறியிராந்தாலும். “மெயி”லும் “இந்துவும் போலீசார் கூட்டத்தை உடனே கலைத்து விட்டார்கள் என்று எழுதி இருக்கின்றன.
போலீசார் மீது பழி
“தினமணி” ஆசிரியர் “இந்து” நிருபருக்குக்கொடுத்த பேட்டியின்போது “போலீசார்கள் வந்த உடன் கூட்டம் கலைந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார். ஆகவே போலீசார் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. என்பதற்கும் “போலீசார் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா?'” என்பதற்கும் “போலீசார் தங்கள் கடமையைச் செய்யாததால் பாராட்டவேண்டியதில்லை'” என்பதற்கும் என்ன ஆதாரம் என்ன உள் எண்ணம் என்பதையும் சிந்திததுப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம்.
ஒரு சப்இன்ஸ்பெக்டர் கதை
போலீசார்கள் மீது “தினமணி” குறை கூறுவதைப் பற்றி நமக்குக். கவலை இல்லை. நம் விஷயத்திலும் போலீசாரின் அஜாக்கிரதையையும். அவர்கள் வேண்டுமென்றே நமக்கு தொந்திரவு கொடுத்து வருவதையும். நாம் பலமுறை அறிந்திருக்கிறோம். உதாரணமாக கோவை ஜில்லா. இந்தி எதிர்ப்புப் படை சென்னிமலைக்கு வந்திறாந்த சமயம் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் சில காலிகள் கூட்டத்தின்மீது, தோழர் ஈ.வெ.ரா. முதலியவர்கள் கூட்டத்தில் பிரசன்னமாயிருக்கும் போதே, கல், மண்: வாரி இறைத்து பல இழிவான காரியங்கள் செய்ததை ஒரு சப் இன்ஸ்பெக்டர் லாந்தர் கம்பம்போல் இடுப்பில் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை: பார்த்துக்கொண்டே இருந்தார். அவ்வளவு மாத்திரமல்லாமல் அந்த சப் இன்ஸ்பெக்டர் தைரியமாய் தானும் ஒரு காங்கரஸ்காரன் என்று சொல்லிக்கொண்டார். இதை டிப்டி குப்ரண்ட்டிடம் சொன்னார்கள். அவர் கூட்டத்தை நடத்திக்கொடுக்க சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு உத்திரவு
குடி அரசு -198(29௨ ௨ ௦.
போட, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அய்யங்கார் “என்னிடம் சொல்லாமல். சப்பிரண்டிடம் சொல்லிவிட்டாயா? என்று கோபித்துக் கொண்டபோதிலும் சில போலீசாரை அனுப்பிக்கொடுத்தார். அவர்களும் வந்து லாந்தர். கம்பம் போல் நின்று காலிகள் அட்டகாசத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காலித்தனம் 5 - மணி நேரம் தொடர்ச்சியாய் நடந்தது. பிறகும் டிப்டி சூப்ரண்டிடம் சொல்லப்பட்டது. அடுத்த நாள். நடத்திக் கொடுப்பதாய் சொன்னார். போலீஸ் இன்ஸ்பெக்டரும். வருவதாய் சொன்னார். அந்தப்படி வரவில்லை. மறுநாள் கூட்டத்திலும் பழையபடியே தொடர்ச்சியாய் காலித்தனம் நடந்தது. இன்ஸ்பெக்டர் வரவே இல்லை. கடைசியாக இன்ஸ்பெக்டர் கட்டத்தில் நாங்கள் நின்றுகொண்டுதான் இருக்கமுடியுமே ஒழிய இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிட்டார். இதுவும் மேலதிகாரிகளுக்கு எழுதப்பட்டது. “விடுதலை” ப்பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. கடைசியாக என்ன ஆயிற்று? இந்தப்புகார்கள் குப்பைத் தொட்டிக்கு அணியாயிற்று என்றுதான் தெரிந்தது.
மனிதனுக்கு கூட்டம் போட்டு பேசும் உரிமை இல்லை என்று அக் கூட்டம் நடவாமல் செய்யும் காலித்தனங்களை அடக்க சட்டம். இல்லை என்றும் ஈரோடு போலீசு முடிவு கூறி விட்டது. இதை எந்த அதிகாரியும் ஏன் என்று கேட்டதாக தெரியவில்லை. ஜில்லா கலெக்டரும். கவனிக்கவில்லை.
எனவே இந்த காங்கரஸ் ஆட்சியில் போலீஸின் ஒழுங்கற்ற. தன்மைக்கு கேள்வி கேட்பார் இல்லை என்பதற்கு நமக்கும் இதுபோன்ற பல உதாரணங்கள் உண்டு என்றாலும் சில சமயங்களில் ஏன் அதிக சமயங்களில் போலீசார் உதவியும் கிடைத்து வருகின்றது. ஆனால் அதற்கு போலீஸ் அதிகாரிகள் போலீஸ்காரர்கள் சுத்தமான பார்ப்பனரல்லாதாராய் இருந்தால்தான் முடிகிறது.
காங்கரஸ் பத்தியிகைகள் இழிசெயல்:
அது எப்படியோ போகட்டும். இந்த சென்னை சம்பவங்களை பெருக்கி கூட்டிக் காட்டி அந்த சரக்கை வைத்துக்கொண்டு இந்தி எதிர்ப்பை ஒழிக்க புதிய முறை கையாளும்படி செய்வதற்காக காங்கரஸ் பத்திரிகைகள் செய்யும் இழிசெயலைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
22-ந் தேதி “சுதேசமித்திரன் பத்திரிகை தனது உபதலையங்கத்தில். “இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு வேண்டுமென்றே வகுப்பு துவேஷத்தை வளர்த்து வருகிறார்கள்” என்று எழுதிவிட்டு போலீசார். “இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்?” என்று கேள்க்கிறது.
28 ௨. வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
நோக்கமென்ன
ஆகவே இது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வகுப்புத் துவேஷ இயக்கமென்று பேர் வைத்து ஒழிக்கச் செய்ய வழிகாட்டுவதா இல்லையா என்பது சிந்திக்கத்தக்கதாகும். “தினமணி” ஆபீசு மீது ஒருவன் அல்லது ஒரு கூட்டம் கல். போட்டதாகவே வைத்துக்கொண்டாலும் அது எப்படி வகுப்பு துவேஷமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை. “இந்த இயக்கத்துக்கு இனி பொது ஜனங்கள் ஆதரவு கொடுக்கக்கூடாது” என்று மக்களுக்கு இதோபதேசம் செய்கிறது "சுதேசமித்திரன்."
“சுதேசமித்திரனி”ன் உபதேசம் கேட்டு இதுவரை ஒருவரும் இந்தி எதிர்ப்புக்கு உதவவும் இல்லை. இனியும் இதன் உபதேசம் கேட்டு உதவாமல் போகிறவர்களும் யாரும் இல்லை என்பது குருடனுக்கும் ஊமைக்கும்கூட தெரிந்த விஷயமாகும். ஆதலால் நாம் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இன்று “சுதேசமித்திரன்” ஜாதியாய் பார்ப்பனரைத் தவிர வேறு எந்த வகுப்பும் மானத்தோடு வாழக்கூடாது என்பது தான். தேசீயமாகவும் மற்றவர்களும் வாழ வேண்டாமா என்ற கருதுவது வகுப்பு துவேஷமாகவும் 'சுதேசமித்திர"னுக்கு ஆகிவிட்டதைப் பற்றி நமக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. அதற்காகவோ அதனால்: ஏற்படப்போகும் பயனுக்கு ஆகவோ நாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவுமில்லை. “வாழ்ந்தால் மானத்தோடு வாழ வேண்டும் இல்லாவிட்டால் தூக்கு மரத்திலோ அல்லது தூக்கிக்கொண்டோ சாக வேண்டுமென்று இருக்கிற “கோழை” களை இந்த “மித்திரன் ஜாதி என்ன செய்யமுடியும் என்றுதான் கோபுரத்தின் மீது நின்று கொண்டு அறை கூவுகிறோம். மக்களை இழிவுபடுத்துவதுடன் இல்லாமல்: மானத்துடன் வாழவேண்டுமென்று முயற்சிக்கின்ற மக்களைச் சித்திரவதை செய்வதோடு அவர்களது அழுகையைத் திரித்துக் கூறி விஷமப்பிரசாரம் செய்து விட்டு தப்பித்தவறி ஏதாவது சிறிது தலையெடுத்தால் அடியோடு நசுக்கும் கொலை பாதகச் செயலுக்கு ஒப்பாக இவ்வளவு பெரிய அபாண்டப் பழியைப் போட்டு அடக்கச் செய்வது யோக்கியமா. என்பதையும் அவ்வடக்குமுறை வெற்றி பெறப்போகின்றதா என்பதையும் ஒருகை பார்த்து விடவே நாம் இருந்து வருகிறோம்.
ஒரு வேண்டுகோள்
பொதுமக்கள் இதிலிருந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்ன. என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.
சமீபத்தில் சற்று கடினமான அடக்குமுறை ஏற்படப்போவது உறுதி அதற்கு ஆக செய்யப்பட்ட சதியாலோசனை பெற்ற பிள்ளைகள்தான். இன்று “தினமணி” “மித்திரன்” “இந்து” எழுதுவதும் நாளைக்கு 'விகடன்'
குடிஅரசு 19 64
எழுதப்போவதும், பல கூலிகளின் பெயர்களால் பல சேதிகள் வெளியிடப்போவவைகளுமாகும். இந்தி எதிர்ப்பாளர் இவைகளுக் கெல்லாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பயப்படவோ பின் வாங்கவோ நிதானந் தவறவோ கண்டிப்பாகக்கூடாது என்பதை மனதில். இருத்தவேண்டும். பலாத்காரச் செய்கைக்கும் காலித்தனங்களுக்கும். கிறிதும் இடம் கொடுக்கக் கூடாது; மனதிலும் நினைக்கக்கூடாது. ஆனால் நமது நியாயமான செய்கைகளுக்கு நம் எதிரிகள் கொலை பாதகத்தொழில் என்று பெயர் கொடுத்தாலும் அல்லது சத்தியமூர்த்தியார் சொன்னது போல் தூக்கில் போடத் தகுதியான மகா கொடுமையான செயல் என்று பெயர் கொடுத்தாலும் சிறிதும் மனம் கலங்கவோ பின்வாங்கவோ கூடாது என்பதற்கு ஆகவே இவ்வளவு எழுதுகிறோம்.
(23.10.1988 விடுதலை)
குடி அரசு - கட்டுரை - 27.11.1938
28 ௨ வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
சென்னையில் ஈ.வெ.ரா. சிறை சென்ற தாய்மார்களுக்குப் பாராட்டு.
தாய்மார்களே! தோழர்களே!
அருமைச்சிறுவன் - லூர்துசாமியும், சகோதரி பார்வதியம்மையாரும். பேசிய பேச்சு என் மனதை உருக்கிவிட்டது. அதனால் நான் பேசக். கருதியிருந்ததை மறந்தேன். நிற்க, காலை நடைபெற்ற சம்பவம். நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இரண்டு குழந்தைகளுடன் சென்ற.
5 தாய்மார்கட்கும், 2 தொண்டர்கட்கும் 6 - வாரம் தண்டனை: விதிக்கப்பட்டது. இன்று ஒரு முத்துக்குமாரசாமிப் பாவலருக்கு 18 - மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனவே இந்த நாள். மிக வன்மத்துடன் மனதில் வைக்கவேண்டிய நாளாகும். உண்மையுடன். சிறை செல்பவருக்கு அங்கு ஒருவித கஷ்டமுமில்லை. கஷ்டமென்று நினைப்பவருக்கு வெளியில் கூடக் கஷ்டமாய்த் தானிருக்கும். என்: அனுபவத்தில் 56 மூறை சிறை சென்றிருக்கின்றேன். 18 ஆண்டுகளுக்கு. முன் நான் சிறைசென்ற காலத்து மூத்திரம் கழிப்பது, தண்ணீர் குடிப்பது எல்லாம் ஒரே சட்டியில் தான். அவ்வளவு கொடுமையாவிருந்தது; கேள்வி முறையில்லை. ஆனால் இன்றைய சிறையோ பெரிதும் மாற்றமடைந்துள்ளது. காங்கரஸ்காரர் சிறை சென்ற காலத்துப் பெருங்கூச்சலிட்டு, வேண்டிய வசதிகள் செய்துவிட்டார்கள். அங்குள்ள. சில அதிகாரிகள் ஒருவித வன்மத்துடன் பார்த்தால் சிறிது கஷ்டம். உண்மையாகவே நடப்பார்களானால் சிறை செல்பவர்கட்கு ஒருவிதத். தொல்லையுமில்லை. சிறையில் வார்டர்கள் நேசிக்கிறார்கள். சில அதிகாரிகள் மட்டும் வகுப்பு கருதி நம்மை வெறுக்கின்றார்களெனக்: கேள்விப்படுகின்றேன்.
கடின மனம் மாறும் விதம்.
வீட்டில் ராஜாவாயிருந்தாலும் தினம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைப்பதில்லை. சிறையில் ஏழையானாலும் நேரத்தில் உணவு, மணியடித்த சாப்பாடு. (கைதட்டல்) அப்படிக் கஷ்டமென்றே வைத்துக் கொள்வோம். சாப்பாட்டை நினைத்தா சிறைக்குப் போகின்றோம்? காரியத்தின் மேலுள்ள ஊக்கம் உணர்ச்சிஅல்லவோ நம்மைப்பிடித்துத் தள்ளுகிறது. யார்மேலும் கோபத்தாலோ அன்றி விரோதத்தாலோ நாம்.
குடிஅரசு - 1938 (2) —— 0
சிறை செல்லவில்லை. தமிழர்கட்கு ஒரு சமூகத்தாரால் செய்யப்படும். இன்னல்களை தொல்லைகளை ஒழிக்கவே செல்ல நேரிடுகிறது. நீங்கள். இந்தியை எதிர்ப்பது உண்மையானால் ஆயிரக்கணக்காகச் சிறை செல்லவேண்டும். இந்நிலையில் கவர்னர் கெட்டவருமல்ல; அவ்வளவு முட்டாளுமல்ல. அவருக்கு இன்னும் தமிழர்கள் இந்தியை உண்மையில். எதிர்க்கின்றார்களா என்பது சந்தேகமாகவிருக்கின்றது. எனவே அவருக்கு நன்றாகத் தெரிவிப்பதற்காக, பல்லாயிரக் கணக்கானவர்கள் சிறை செல்ல வேண்டும். பட்டினி கிடக்கச் செல்லவேண்டும். ஒரு சிறிதும் நன்மை கேட்கக்கூடாது. இந்த உணர்ச்சி தமிழர்கட்கிறாந்தால் அவர்களது கடின மனம்மாறும், தோழர் ஆச்சாரியார் புத்திசாலி. அவர்மனத்தில் இன்னும் படவில்லை. அவர் கூறுகின்ற மாதிரி நீங்களும் சில சமயங்களில் உணர்ச்சி மிகுதியில் நானே தான் என்று கூச்சல் போட்டு விடுகின்றீர்கள். இந்தி எதிர்ப்பை விட்டு ராமசாமி ஓடினாலும் நாங்கள் விடப்போவதில்லை என்று காட்டினீர்களானால் அவர் இந்தியை விட்டுவிடுவார்.
ஆச்சாரியாருக்கு நடுக்கம்
இன்று பெண்கள் 5 பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதைக் கேட்டவுடன் ஆச்சாரியாருக்கு நடுக்க மேற்பட்டிருக்கும். மேலும் அவர்கள் உற்சாகத்துடன் சிறைக்குச் சென்றனர் என்பதைக் கேட்க அளவுக்கு
மீறி நடுங்கி இருப்பார். இன்று கோர்ட்டில் தாய்மார்கள் இந்தி ஒழிய வேண்டும் அல்லது நாங்கள் ஒழியவேண்டும் என வீரத்துடன் பதில். கொடுத்தார்கள். ஆனால் ஆச்சாரியார் இனி வேறு பெண்களில்லை எனச் சமாதானப் பட்டிருப்பார். யாராவது துர்மந்திரிகளும் அவ்வளவுதான் இனிப் பெண்கள் வரமாட்டார்கள் என்று கூறியிருப்பார்கள். இல்லாவிட்டால், நான் பழகியவரை ஆச்சாரியார் இப்படிக் கவலையில்லாதிருக்க மாட்டார். மேலும் 2,3 சாமியார்கள் தான் இருக்கிறார்கள்: சிலர் தான் எதிர்க்கின்றார்கள் என்று அவர் கருதக்கூடாது. அதற்காவன நீங்கள் செய்ய வேண்டும். தோழர் பொன்னம்பலம் அவர்கள் கூறியதுபோல். ஒன்றரை ஆண்டில் 4% கோடி கடன் வாங்கிவிட்டனர். அதைப்பார்த்து கவர்னருக்கு இப்பொழுது தான் சிறிது தலைவலிக்க ஆரம்பித்திருக்கின்றது. இது 2 நாளில் நின்றுவிடும் என ஆச்சாரியார் நினைக்கின்றார்.
நாட்டில் இந்நிலையை அவர் உண்டாக்கி இருக்காவிட்டால். இவர்கள் - எனது தாய்மார்கள் மூன் வந்திருப்பார்களா? தாய்மார்கள். வந்து எங்கட்குப் புத்தி கற்பிக்க - ஊக்கமூட்ட வேண்டுமென்றால் இது யாருடைய தர்மம்? தோழர் ஆச்சாரியார் அளித்தது தானே! அவர் அன்புடன் நல்கியது தானே. உண்மையோடுழைப்பதன் மூலம். வெற்றியடைந்து, இனி தமிழர்களிடத்து “வால் நீட்டக் கூடாது' என்ற. எண்ணத்தை அவர்கள் அடையுமாறு செய்ய வேண்டும். தமிழர்கள் -
37 ௨... வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
தமிழ்ப் பெண்கள் - சரியாகக் கவனிக்க வில்லை என்றுதான் அவர். கொடுமை செய்து வந்தார். இப்பொழுது சற்று யோக்கியமாக நடந்து வருகிறார். தமிழர்கள் வெறுப்பிற்கு பயந்து பல் பிடுங்கப்பட்ட பாம்பைப் போல் இரசுசியங்களில் காரியங்கள் செய்து வருகிறார். இன்றைய தாய்மார்களைப் போல் நாமும் நடந்தால் நமது தொல்லைகள்.
நீங்கும். சிறை செல்லச் சிறிதும் பயப்படக் கூடாது. இத்தகைய நிலையில். பெண்களைச் சிறையிட்ட அரசு எங்கும் கிடையாது. அரசாங்கத்திற்கு விரோதமாக ஏதாவது குற்றம் செய்தால், சட்டத்தை மீறினால் தண்டனை: உண்டு. ஆனால் இன்றைய ராம ராஜ்யத்தில் தாய் மொழியிடத்து அன்பு கொண்டால் போதும் உடனே சிறைத்தண்டனை. நமக்குப் பல காலமாகத். தொல்லை கொடுத்து வருவதோடில்லாது வீணே இன்று சிறை என்றால். என்ன நினைப்பது?
தமிழன் வாழ்வு அவளுக்கு பொறுக்கவில்லை.
நேற்றுவரை சட்டம் மீறலைத் தவறெனக் கண்டித்து வந்தேன். பொதுமக்கள் மனதை அவ்வாறு வளர்க்கக்கூடாது என்று நினைத்து வந்தேன். இனி நீங்கள் சிறைக்கூடத்தை மாமனார் வீடு போலவும் படுக்கையறை போலவும் எண்ணிச் செல்லுங்கள். நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டுவதில்லை. ஒருவரை வையவோ அன்றி அடிக்கவோ வேண்டுவதில்லை. 'தமிழ்வாழ்க' என்றால் போதும் உடனே தம்பீ! வா! வென ஆச்சாரியார் அழைத்துக் கொள்ளுவார். நான் பிழைக்க வேண்டும் என்று நினைத்தால் போதும்; எதிரிகள் சாகவேண்டுமென: நினைக்கவேண்டாம்.
தமிழன் வாழ்வு அவர்கட்குப் பொறுக்கவில்லை. என்றென்றும். நம்மை அடக்கி அடிமைப்படுத்தி ஆளவே விரும்புகின்றார்களென்று. சென்ற 20 ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றேன். பானகல் அரசர் வெற்றி பெற்ற காலத்துப் 'பானகல் இறந்தார்! என ஒரு செய்தியைப் பரப்பிப் புகையிலை வழங்கினர். ஜஸ்டிஸ் மந்திரிகளை இராட்சதர்களென்றும் அரக்கர்கள் என்றும் இராவணர் என்றும் கூறினர். ஆனால் இன்று "உச்சிக்குடுமி ஒழிக: எனத் தொண்டர்கள் கூறினார்களென்று ஆச்சாரியார் தனது உச்சிக்குடுமியைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுகிறார். உச்சிக் குடுமி ஒழிக என்றால் என்ன? உச்சிக்குடுமித் தன்மை தானே ஒழிய வேண்டுமென்பது. இதற்கு இவ்வளவு ரோஷம் வருவானேன்? சிறிதாவது ஞானம் வேண்டாமா? அன்று 'சரிகைக்குல்லாய் ஒழிக! என்று இவர்கள் சொல்லவில்லையா? 2000-தர்ப்பையோ அன்றி உச்சிக்குடுமியோ. ஒழிக என்றாலும் ஒரு அரக்கன் ஒழிய என்றதற்குச் சரியாகாதே! (கைதட்டல்) பிறன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான். இராவணன் என்று கதை எழுதி வைத்து, அந்தப் பெயரால் தமிழர்களை:
கடி அரசு - 1938 (2) — 0
அழைக்கும் போது உச்சிக்குடுமி, டவாலி, தர்ப்பை ஒழிக என்றால். என்ன? அத்தன்மைகள் ஒழிய வேண்டும் என்பதுதானே பொருள்.
விநோத சாட்சியம்
இன்று காலை, கோர்ட்டு நடவடிக்கைகளை நேரில் கவனித்தேன். ஒரு சாட்சியம் கூறும் சப்இன்ஸ்பெக்டர் தாய்மார்கள் கூறாதவற்றைச் சேர்த்துக் கூறுகின்றார். அவரது மயிர் காம்பிலுள்ள ஒவ்வொரு துளி. ரத்தமும் நம்முடைய உழைப்பினால் கிடைத்த பணத்தினால் ஊறியது என்பதை நினைக்கவில்லை. அவர் என்ன செய்வார்? மேலே உள்ளவர்களின் தயவுக்காகக் கிளிப் பிள்ளை போல் கூறுகிறார். அதுபற்றி நமக்குக். கவலையில்லை. இது தானா சத்திய ஆட்சி, ராமராஜ்ய ஆட்சி, காந்தியின். அனீம்சா ஆட்சி எனக் கேட்கின்றேன். எனக்குச் சத்தியத்தில் சிறிதும். நம்பிக்கையில்லை. ஆனால் உண்மைக்கு மதிப்புக் கொடுக்கின்றேன். சத்தியம் என்று நினைத்தால் பழுக்கக் காய்ந்த கொழுவை உருவலாம். என்றும் பண்டைப்பெண்கள் மணலைச் கோறு ஆக்கியிருக்கின்றனர் என்றும் கூறுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. அதே கொழுவை இன்று சத்தியத்தில் நம்பிக்கையுள்ள சத்தியமூர்த்தியாலும் உருவமுடியாது அல்லது காந்தியாலும் முடியாது (கைதட்டல்) எனவே எனக்கு அதில் சிறிதும் நம்பிக்கையில்லை. இன்று தாய்மார்கள் எந்தப் பையனை: அல்லது உபாத்தியாயரைக் காலைக் கட்டிப் பள்ளிக்கூடத்திற்குப் போகக். கூடாதெனத் தடுத்தனர்.
ஆனால் சென்ற ஆண்டு காங்கரஸ்காரர்கள் கிராம்பு மறியலில், கப்பலை விட்டு மூட்டைகளை இறக்கக் கூடாதெனத் தடுத்தனர். மூட்டை ஏற்றிய வண்டியை ஓட்டவிடாது சக்கரத்தின் கீழ்படுத்துத் தடுத்தனர். கடையில் விற்கக் கூடாதென்றும், வாங்க வருபவர்களையும் தடுத்தனர். இதற்குக் காங்கரஸ் மந்திரிகள் உத்தரவு கொடுத்தனர். தொண்டர்களைப் பாராட்டினர். அதைவிட 'இந்தி ஒழிக' என்று கூறுவது தவறானதா? இந்தி உண்மையில் ஒழிந்துவிட்டது. செத்த பாம்பை ஆச்சாரியார். ஆட்டுகிறார். இந்தி எதிர்ப்பாளர்கள் என்ன செய்தார்கள்? அவர்களுக்கு 18 மாதம், 2 வருஷம் தண்டனை விதிக்கப்படுகின்றது
மணம் மாறாவிட்டால்...
உண்மையில் சொல்லுகிறேன் தினம் 5 பேர் வீதம் பெண்கள் ஒரு. மாதம் தொடர்ச்சியாகச் சென்றால் கட்டாயம் ஆச்சாரியார் நிலை மாறும். மாறாவிட்டால் தமிழர்கள் இரத்தம் கொதிக்கும்; உணர்ச்சி பெருகும், உதாரணமாகச் சென்ற வாரம் நான் திருவிதாங்கூர் சென்றிருந்த போது அங்கு நடைபெற்ற அடக்குமுறை காரணமாக தோழர் சி.பி. ராமசாமி அய்யர் எதேச்சையாக வெளியில் வர முடியவில்லை. பொது மக்கள்.
29 ௨ வரயாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
மனத்தில் உண்டாயிருக்கும் கொதிப்புகண்டு பயப்படுகிறார். இதைச் சமாளிக்க, சிறையிட்டவர்களையெல்லாம் வெளியில் திறந்து விட்டார். மக்கள் மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். மீண்டும் ஒரு வக்கீல் அம்மையார் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இதைப்பற்றி தோழர் ராமசாமி அய்யரின் அடக்குமுறையைப் பற்றி எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது கண்டித்தெழுதிற்றா?
கவர்னருக்கு பயந்து தேசீயக் கொடி, மூவர்ணக் கொடியாயிற்று. இன்று காந்தியார் அக்கொடியைக் கண்ட இடத்தில் கட்ட வேண்டாம்; யூனியன் ஜாக் இருந்தால் அவிழ்த்து விடுங்கள் எனக் கூறுகிறார். ஆனால் காங்கரஸ்காரர்கள் மட்டும் இன்னும் அதைத் தேசீயக்கொடியென்றே. பொய் சொல்லி வருகின்றனர். முஸ்லிம்கள் எதிர்ப்பிற்கு பயந்து வந்தே. மாதரம் கைவிடப்பட்டது. விசுவபிராமணருக்குப் பயந்து விசுவகர்மா உத்தரவு நீக்கப்பட்டது. பேரிச்செட்டிகளுக்குப் பயந்து, தணிகாசலம் ரோடின் பெயர் மாற்றம் தள்ளப்பட்டது. வக்கீல்கள் எல்லாம் சேரவே பப்ளிக் பிராசிகூடர் நியமன உத்தரவு பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.
1500 ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் மாகாண அதிகாரியைத் தள்ளி வைத்தனர். நமக்கு உண்மையான உணர்ச்சியிருக்கின்றதென்று. தெரிந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது அவர்கட்கு தெரியும். சந்தர்ப்பத்திற்குத்தகுந்தாற் போல் நடந்து கொள்வார்கள். எதற்கும் அவர்கள் பார்ப்பார்களல்லா! (கைதட்டல்)
ஒரு கதை
நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால். நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு. ஒரு இடந்தான வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே. கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல். இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார். அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும். அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வரவேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை.
நமது நண்பர் இராமநாதன் ஆச்சாரியார் பக்கத்திலிருந்து கொண்டு. “நெருப்பு சிலீரென்றிருக்கிறது” என்று கூறிவருகின்றார். அவருக்கும் சுட்டால் தெரியும். இன்று சென்ற தாய்மார்களைப் போல் நாளையும்.
குடி அரசு - 1988 (2) —— ௦0௦
தொடர்ந்து நடக்குமென்று நம்புகிறேன். தொண்டர்களும் கருத்து வேற்றுமையை விளக்கிக் கூறி வந்தால் இரண்டு கட்சிகளிலும் சேராது பொதுவிலிருக்கின்றவர்களும் இதிலீடுபடுவார்கள். நாம் சொல்லும் காரணங்களைப் பார்த்து நம்மிடத்துக் குற்றமில்லை என்றால், தானே. வருகின்றார்கள். 75 ரூபாய் வாங்கும் சில பெரியார்களுக்குக் கூட இன்றைய நிகழ்ச்சியால் மனமிளக்கம் ஏற்பட்டிருக்கும்.
தூங்கினால் தலையெடுக்க முடியாது.
ஒரு எம்.எல்.சி. கூறினார். ஆச்சாரியை விட டாக்டர் ராஜன். செய்வது பிடிக்கவில்லையென்று. நம்மைப்பற்றியும், நம் தாய்மார்களைப். பற்றியும் பல பத்திரிகைகள் கேவலமாக எழுதி வருவது எனக்குத் தெரியும். கொச்சி திவான் தோழர் ஷண்முகம் செட்டியார் யாராலும் செய்ய முடியாத பொறுப்பாட்சியை வழங்கி இந்தச் சமஸ்தானங்கட்கு வழிகாட்டினார். இதைச் செய்ய மற்ற திவான்கள் பயப்படுகிறார்கள். செட்டியார் சிறந்த அரசியல் அறிவாளி. அவரைப் பற்றி ஒரு சமயம் ஒரு குரங்குப் பத்திரிகை அவர் சாதியை இழித்து “செக்கு'ப் படம் போட்டு. கேலி செய்திருந்தது. ஆனால் இன்று திருவிதாங்கூரில் ஒரு அய்யர் அமளிப்படுத்துகின்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் அதைப்பற்றி ஒரு. வார்த்தைகூட எழுதாமல் செக்கோவைப்பற்றியும், ஸ்பெயின், சீனாவைப். பற்றியும் உருகித் தலையங்கம் எழுதுகின்றன. இந்தச் சமயம் தூங்கிவிட்டார்களானால் இனி என்றென்றைக்கும் தலையெடுக்க. முடியாது. தமிழர்களைப்பற்றிப்பேச சட்டசபையில் ஸர். பன்னீர்செல்வம்
6 தடவை எழுந்தார். ஆனால் அவரைப் பேச விடாது அடக்கி விட்டனர்.
நிற்க, இன்று “விடுதலை” மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில். வாதாட பிரத்யேகமாக பல ஆயிரக்கணக்கான செலவில் தோழர் எத்திராஜைக் கோவைக்கு அனுப்பியிருக்கின்றனர். ஏன் கோவையில். தகுந்த வக்கீலில்லையா? “விடுதலையை எப்படியாவது அழித்துவிட வேண்டுமென்றுதானே எண்ணம்? எனவே இன்று “விடுதலை” மயிர்ப்பாலத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வழக்கில். நம்மவர் தோல்வியடைந்தால் நம் பின் சந்ததியின் கதி என்னாவது? தனிப்பட்ட முறையில் எங்கட்கு என்ன வேண்டும்? எங்கள். வாழ்க்கையை ஊரிலிராந்தே எங்களால் நடத்த முடியாதா? அல்லது தோழர் ராமநாதனைப்போல் ஆச்சாரியாரிடம் நான் சென்றால் எனக்கு ஒரு மந்திரிபதவி கிடைக்காதா? எனது காரோட்டிக்கு ஒரு மந்திரி பதவி கொடு என்றால் ஆச்சாரியார் கொடுக்க மாட்டாரா? ஆகவே நாமனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட்டால் தான். வெற்றியடைய முடியும். நம்மை சூத்திரன் என்றும் தாசிமகனென்றும் பல விதத்தில் இழித்துக் கூறிவரும் அவர்களை இன்றும் 'சாமி இட்லி
M வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
கொண்டு வா' என்று தானே கேட்கின்றோம். நாட்டை யாராண்டாலும் நமக்குக் கவலையில்லை நமக்கு வேண்டியது நன்மையே. எனவே நான். கூறியுள்ளவைகளை ஆராய்ந்து பாருங்கள். இன்று சென்னையை ஏன்: தமிழ்நாட்டையே சிறப்பித்த - தமிழ்ப்பெண்களின் வீரத்தை இந்தியா முழுவதும் அறியச் செய்த தாய்மார்களைத் தொடர்ந்து அவர்களுக்குக். கெளரவமளிக்க வேண்டுகிறேன். (நீண்ட கைதட்டல்)
குறிப்பு: 14.11.1938 ஆம் நாள் சென்னை காசி விசுவநாதர் கோயில். தெருவில் சென்னை பெத்து நாயக்கன் பேட்டைத் தமிழர்.
கழகத்தின் ஆதரவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938
குடி அரசு - 1988 (2) —— M
கூட்டுறவு வாழ்க்கை
நான் (கோவாப்ரேடிவ்) கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில். ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். சுமார் 25 வருஷத்திற்குமுன் நம்முடைய சென்னை மாகாண கூட்டுறவு ரிஜிஸ்திராராயிருந்த தோழர் ராமச்சந்திராவும், இங்கு டிப்டிக் கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி பிள்ளை அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் பாங்கு ஸ்தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார்கள். எங்கள் வீட்டில்தான் முதல் கூட்டம் கூட்டப்பட்டது. பங்கு புஸ்தகத்தைப் பார்த்தாலும் நான் தான் அதில் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக்காலங்களில் உழைத்திருக்கிறேன். என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைடிகளிலிருந்து சிறிது விலகி அலக்ஷிய அபிப்பிராயமுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும். கசஷியையும், ஸ்தாபனங்களையும் சுயநலத்திற்கு உபயோகித்துக். கொள்வதும் அவற்றின் உத்தேசங்களுக்கு விரோதமாக பணக்காரர்கள் அதில் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்துவருவதேயாகும். தோழர் கணபதி ஐயர் அவர்கள் ஒருசமயம் என்னிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நம்முடைய நிலைமையானது இப்படித்தான் இருக்க முடியுமென்று குறிப்பிட்டார். அது மிகமிக உண்மையே தான். ஏனெனில் நம் நாட்டில். நிலைபெற்றுள்ள பல்வேறு விஷயங்களையும் சமுதாய முறைகளையும். அடியோடு மாற்றாமல் நம்முடைய ஜனசமூகத்திற்கு நன்மையைக்: கொண்டு வந்து விடுவது என்பது சுலபத்தில் முடியாத காரியமாகும்.
ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப் பற்றி நான் பேசுவேன். என்று உங்களுக்குத் தலைவர் எடுத்துச் சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கியபாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒரு: காலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு சுற்றுப்பிரயாண: அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளை நேரில் கவளித்துப்பார்க்க நேர்ந்த பின், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது ஆசை சாத்தியமாகக் கூடியது தான் என்ற. எண்ணம் மிக்கப் பலமாக உறுதிப்பட்டது
M வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
என்னைப் பொருத்தவரையில் என்னைப்பற்றி யார் என்ன. நினைத்துக் கொண்டிருந்த போதிலும் எனது முடிவான லக்ஷ்யம், அதாவது எனது எண்ணம், ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற. உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகக்தானிருக்கும் என்பது என்: அபிப்பிராயம்.
கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில். நம்முடைய நாட்டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று
- சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வது என்று ஏங்கி தத்தளித்துக். கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக - சாந்தியாக - திருப்தியுடன்.
- குதூகலமாக வாழ வழி ஏற்பட்டுவிடும். நம்முடைய நாட்டில் ஏதாவது ஒரு சங்கம் ஏற்பட்டால் அதைப்பற்றி. நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்களென்றால் அதில் தங்களுக்கு. எவ்வளவுதூரம் லாபமிருக்கிறதென்றும் அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் (சுயநலத்திற்கு) பிரயோஜனப்படுத்திக். கொள்ளலாமென்றும் தான் கருதிக்கொண்டு அதில் சம்மந்தம் வைத்துக். கொள்ளுகிறார்களே ஒழிய அதனால் உலக நன்மைக்கு ஜனசமூக: மேம்பாட்டிற்குப் பாடுபட வேண்டுமென்பதைப்பற்றிய பொறுப்பையும், கவலையையும் அறவே விட்டு விடுகின்றார்கள். அதுபோலவே நம்முடைய (கூட்டுறவு கோவாப்ரேடிவ்) ஸ்தாபனங்களிலும் இருந்து வருகிறது. அந்த ஸ்தாபனத்திலுள்ள. மக்களுக்குள்ளாகக்கூட கூட்டுறவு உணர்ச்சி கிடையாதென்றே உறுதியாகச் சொல்லலாம். ஆகவே ஏதோ சிலர் தங்களுடைய நன்மைக்காகவும், பட்டம் பதவிகளுக்காகவும், கெளரவத்திற்காகவும் ஏதோ சிறிது சம்பந்தம் வைத்திருப்பதினால் மாத்திரம் என்ன பலன் ஏற்பட்டு விடும்?
சாதாரணமாக இந்த ஊர் கூட்டுறவு ஸ்தாபனங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றில் 2000, 3000 பேர்கள் வரை பங்குதார மெம்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த ஸ்தாபனத்தினால் உருப்படியாகப் பொதுமக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கிறது? ஏதோ ஒருசில சொற்பப் பேர்கள், தங்கள் சொந்தத்திற்கு எப்படிக் கடன். பெறலாமென்று பெருத்த பிரயாசை எடுத்துக் கொள்பவர்களே சில அனுகூலங்கள் அடைகிறார்கள். மற்றபடி இவர்களுக்கு ஷி ஸ்தாபனத்தைப். பற்றிய கவலையே இல்லை. இன்றைய உலக எல்லா வாழ்க்கையும் இப்படித் தான் இருக்கிறது. வெறும் குற்றத்தையே பேசுவதால் பயனில்லையானாலும் இவைகள் தக்க படிப்பினையாக இருக்க உதவ வேண்டுமென்று கருதியே பேசுகிறேன். கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது, எவ்வாறு உதவுவது என்கிற
குடிஅரசு 1938 (2) —— 0
விஷயங்களே நமது வாழ்க்கையின் முக்கிய லக்ஷியமாய் இருக்க வேண்டும். வாழ்க்கை என்பது தனித்தனி மனிதனைப் பொறுத்த தத்துவம் என்பது கூடவே கூடாது.
சாதாரணமாக நாம் நம்மிடையே ஒருவரை புதிதாகக் கண்டால். அதாவது சந்தித்தால் அவருடைய ஸ்திதி என்னவென்றும், உத்தியோகம். என்னவென்றும் வினவ ஆசைப்படுகிறோம். அவர் ஒரு பெரிய உத்தியோகஸ்தராகவோ, பணக்காரராகவோ இருந்தால் அதற்காக ஒரு தனி மதிப்பும், ஒரு குமாஸ்தாவாகவோ, கூலியாகவோ இருந்தால் அதற்காக ஒரு தனி மதிப்பும் தான் கொடுக்கின்றோம். இது தான். நம்முடைய நாட்டில் ஒரு மனிதனை மதிப்பதைப்பற்றிய முறையாகும். ஆனால் ரஷியாவிலோ இங்குள்ள இதுபோன்ற கேள்விகளை அங்கு யாரும் கேட்பதில்லை. அங்கு ஒருவருடைய உத்தியோக அந்தஸ்தைப். பற்றியோ, செல்வத்தைப்பற்றியோ சிறிதும் யோசிப்பதே இல்லை; விசாரிப்பதுமில்லை. அவற்றில் ஒருவருக்கொருவர் வித்தியாசமும். இருக்காது. ஆதலால் அங்கு அக்கேள்விக்கு இடமே இல்லை. மற்றப்படி என்ன கேட்பார்கள் என்றால் ஒருவனைக் கண்டதும் அவன் (5௦வ்ம் Service) சமுதாய சேவை என்ன செய்திருக்கிறான் - செய்கிறான் என்று மட்டுமே தான் பிரதானமாகக் கவனிப்பார்கள். அதைத்தான் கேட்பார்கள். ஒருவர் பிறருக்கு என்ன நன்மை புரிய ஏற்றுக்கொள்ளுகிறார் என்பது தான் மனிதனை அறிய முக்கிய தத்துவமாகும். அதுதான் அங்கு அவனுடைய பெருமையைக் காட்டுவதாகும். அங்கு உத்தியோகத்தைப்பற்றிய பேச்சோ, வருமானமோ, மேல் கீழ் வரும்படி என்பது போன்ற பேச்சோ, எங்கும் எவ்வித ரூபத்திலும் கிடையாது. அங்கு எங்கும் யாவரும் சமுதாய வேலை செய்வோரேயாவார்.
நான் ரஷியாவில் இருந்த காலத்தில் ஒரு நியாய ஸ்தலத்தைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஒரு குற்றவாளியை விசாரிக்கக் கண்டேன். அவன் ஒரு விசேஷ நாளில் குடித்து வெறியனாகி கலகம் செய்தான் என்பதாகக் குற்றவாளியாக்கப்பட்டவன். இவனை: அந்த விசாரணை ஸ்தலத்தில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றால் உன்னுடைய Social Service Work (சமூதாய ஊழிய வேலை) என்ன என்பதேயாகும். அவன் அதற்கு எனக்கு Social Service (சமுதாய வேலை) இல்லை என்றான். இதைக் கேட்டதும் நீதிபதியும், ஜூரியான ஒரு பெண்ணும் “உனக்கு சமுதாய வேலையில்லாமல் போய்விட்டது என்கிறாயே வெட்கமில்லையா? உன்னை உலகுக்கு உபயோகப்படுத்திக்கொள்ள வகையற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லுவது அவமானகரமானதாகத் தோன்றவில்லையா?” என்று கடிந்தார். அதற்கு அவன் எல்லா லோஸியல் சர்விசையும் சிறு பிள்ளைகளாகிய கம்சமால் கூட்டத்தார்
M5 வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
எடுத்துக் கொள்ளுகிறார்கள், நான் என்ன செய்வது” என்றான். அந்தம்மாள் வெட்கம் வெட்கம் என்றாள். இவைகளைக் கேட்ட பிறகு. தான் சோஷியல் சர்வீஸ் Social Service என்பதைப் பற்றி அதிகம். அறிய ஆசைகொண்டேன். அதன் பயனாய் ரஷியர்கள் சமூக ஊழியம். செய்வது தான் தங்கள் வாழ்க்கையின் மேலான லக்ஷியம் என்பதை: முதலாகவும், அடுத்தபடி கூட்டுறவு வாழ்க்கையே மேலான வாழ்க்கை என்பதாகவும் அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். ரஷ்பர்களுடைய வாழ்க்கையானது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் Social Service சும் கூட்டுறவு வாழ்க்கையை நடத்த முனைந்து நிற்பதுமேயாகும். அவர்கள். வாழ்க்கையில் மேற்போட்டுக்கொள்ளும் இந்த வேலையானது மனித சமூகத்துக்கு கவலை, துன்பம், மனச்சோர்வு என்பவைகளே இல்லாமல்: செய்து விடுகிறது. அங்குள்ள சர்வ ஜனங்களுடைய எண்ணமெல்லாம் பிறருக்கு நாம் எவ்வளவு தூரம் நன்மை செய்யலாம் என்பதேயாகும். இந்த நோக்கமில்லாத மனிதனை மனிதனல்ல என்று வன்மையாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நம்முடைய நாட்டில் உத்தியோகத்தின் பேராலும் மற்ற பதவிகளின் பேராலும் மாதம் 1-க்கு 1000, 2000, 5000, 10000 ரூபாய்கள். கொள்ளை கொள்வது போன்ற கொடுமைகள் ரஷ்யாவில் கிடையாது. அங்குள்ளவர்களுக்கு தனக்கு வேண்டிய அளவுக்கு மேல் வரும்படி - லஞ்சம் - லாவணம் என்பன போன்றவைகளே அடியோடு கிடையாது. அங்கு தனிப்பட்டவர்களுக்குள் ரூபாய் 10, 5 கூட கடன் கொடுக்கும். முறையோ, கடன்படும் முறையோ கிடையாது. அது குற்றமான. முறையே யாகும். எல்லாம் கூட்டுறவின் மூலம்தான் நடைபெற வேண்டும்.
ஆனால் அந்த முறைகள் எல்லாம் நம்முடைய நாட்டின் இன்றைய நிலைமைக்கு சாத்தியமில்லை என்று சொன்னாலும் நம்நாட்டு நிலைமைகளை யெல்லாம் அடியோடு மாற்றி அமைத்துத்தான் ஆக வேண்டும். இக்கருத்தைத் தான் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இது சிறிது சிறிதாய் கோவாப்பரேடிவ். ஸ்தாபனங்களின் மூலமே ஒழுங்காகச் செய்யலாம். நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச்செருக்கு கொண்டவர்களையும், கள்நெஞ்சம் படைத்த கனத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோபஸ்தாக வைத்துக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டக்காரர்களையும், பிச்சைக்காரர்களையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது? இதுபோன்ற நிலைமை ரஷ்யாவில் இல்லையே! சுயநல ஆதிக்கக்காரனுக்கும் - ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிறவரையிலும் தொல்லைப்படுகிறவர்களும் - தொல்லையும். தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.
கடி அரசு 1938 (2) —— 009௦
இன்று காலை முதல் மாலை வரையினும் என்னிடம் 5, 6 பேர்கள். வரை வந்து “வேலை கொடு - வேலை கொடு" என்று வருந்தினார்கள். ஒவ்வொருவருக்கும் மந்திரிகள் கலைக்டர்கள் தாசில்தார்கள் ஆகியவர்களுக்கு.
சிபார்சு கடிதம் எழுதித் தரவேண்டுமாம். ஒருவர் தனது “குழந்தைகளுக்கு, அம்மை போட்டிருக்கிறது, சம்சாரத்திற்கும் பிரசவ நோவு. நான் என்ன செய்வேன்? 4 மாதமாக வேலையில்லையே காப்பாற்றுவாறில்லையே!” என்று கதறினான். நான் அவருக்கு 2 படி புழுங்கள் அரிசி கொடுக்கும்படி வீட்டிற்கு சீட்டுக்கொடுத்தேன். இதுபோன்ற கொடுமைகளின் தன்மையை இன்று என்னுடன் தங்கியிருந்த நண்பரும் நன்கறிவர். எங்கும் வேலை. இல்லை என்ற கூக்குரல் அதிகரித்து விட்டது. ஏன் வேலை இல்லாமல். போய்விட்டது? வேலை இல்லாமை எப்படி ஏற்படும்? என்று யோசித்துப்பார்த்தீர்களா? ஒரு வேலைக்காரன் காலை 6 மணி முதல். இரவு 10 மணி வரை வேலை செய்கின்றான். ஒரு தையல்காரன் 3 - மிஷின்களை வைத்துக்கொண்டு இரவெல்லாம் வேலை செய்து ஒரு நாளைக்கு 5-ரூ, 10- ரூ சம்பாதிக்கின்றான் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்தப்படி ஒருவன் அதிக நேரம் வேலைசெய்து அதிகப் பணம் ஒருவனே சம்பாதிப்பது எதற்கு? இவைகளையெல்லாம் கணக்குப் போட்டு ஒரு ஒழுங்கு முறைப்படுத்தி வேலைகளையெல்லாம் ஒரு. கூட்டுறவு முறையில் அமைத்தால் அவரவர்களுக்குப் போதுமான: அளவுக்குக் குறையாமல் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக போதிய பலன் கிடைக்கும். நம்முடைய நாட்டில் அடிப்படையான மாறுதல் செய்யாவிட்டால்: கூடிய சீக்கிரத்தில் நாம் என்ன கதிக்கு ஆளாக வேண்டிவரும் என்பதை: யோசித்துப் பாருங்கள்.
நாம் செலவழிப்பதிலும் வகை தகையற்ற முறையில் வீண் செலவு செய்து வருகின்றோம். நமது வாழ்க்கையைக் கூட்டுறவு முறையில்: நடத்தினால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம் தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் 8 - பேருக்கு உதவும். உதாரணமாக ரஷ்யர்களின் சாப்பாட்டு முறையைக் கவனியுங்கள். அங்கு சாப்பாடும் கூட்டுறவு முறைதான். அங்கு ஒரு இடத்தில் நாள். ஒன்றுக்கு ஒருவேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிடுமிடத்தைக். கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில். சமையல் செய்வதென்றால் தேவைக்குமேல் அதிகமாய்த்தான் போட்டுச் சமைக்கிறார்கள். 4 - 5 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணை: கண்டிப்பாகச் சமையலுக்கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு: குடும்ப சமையலுக்காக என்று ஒரு தனி அறையும், பாக்கி வசதிகளுக்கென்று. ஏராளமான அறைகளும் இடமும் ஒதுக்கிவைத்துக்கொண்டு எவ்வளவு அக்கிரமமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்குக்கூட உண்டாக்கிக். கொண்டிருக்கிறோம். 7... வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
ரஷியாவிலுள்ள மேற்சொன்ன பொது சமையல் சாலையில் (General Kitchen) 970 பேர்கள் தான் சமையல் வேலையிலீடு பட்டிருக்கிறார்கள் என்று நான் கணக்குக் கேட்டுத் தெரிந்தேன். நம்முடைய நாட்டிலோ 4 பேர்களுக்கு ஒரு பெண் வீதம் சமையலுக்கு ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கிற கணக்குப்படி 40000 பேர்களுக்கும் எத்தனை பெண்களை ஒதுக்கித் தள்ளிக் கொடுமைகளாக்கி வருகிறோம் என்பதை யோசித்துப் பார்க்கும்படி கோருகிறேன். நம்முடைய சமயலைப்பற்றி ஏதாவது பந்தோபஸ்து உண்டா? சமயலறையையும் சாப்பாட்டுச் சாமான்களையும் சமைத்த பிறகும் அங்கு தினம் டாக்டர். சரியானபடி பரிசோதனை செய்கிறார். ஒரு பெரிய எம்.டி. டாக்டர் பரீகைஷக்கென்றே ஒவ்வொரு கூட்டுறவு சமையலுக்கும் உண்டு. இங்கு
நாம் என்ன செய்கிறோம்? சல்லீசான சரக்குகளை வாங்கிப்போட்டு. வெந்தும் வேகாமல் அவித்துத் தின்று, சாப்பாட்டின் காரணமாகவே பெரும்பாலும் நோய் அடைகின்றோம். மேல்நாட்டு வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டக்குறைவு, அனுகூலம், பணம் மிச்சம், சுகாதாரம், செளக்கியம். ஆகியவைகள் கவனிக்கப்படுகிற தென்பதை யோசியுங்கள். அங்கு ஒரு ரொட்டிக்கிடங்கில் (Bakery) நாள் ஒன்றுக்கு 250 டன் ரொட்டிகள் ஒரே காலையில் செய்யப்படுவதைப் பார்த்தேன். கூட்டுறவு முறையினால். ஒருநாள் ஒன்றுக்கு ஒரு இடத்தில் இருபதினாயிரம் முப்பது ஆயிரம்
வீதம் ஷர்ட்டுகள், டிரெளசர்கள், ஜாக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு உள்ள அத்தனை பேரும் வேலையிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். அங்கு வேலையில்லாதவர்களே கிடையாது.
இங்கு நாம் துணி வாங்கிக் கொடுத்தால் காலே அரைக்கால் பாகம். திருட்டுடன் சேதமாகிற தென்றும் சொல்லலாம். அங்கு அப்படியில்லை. துணியை அப்படியே 200, 300 வீதம் மடிப்பு மடித்து முதலிலேயே சின்ன சின்ன வேலைக்கானவைகளுக்கு அதாவது பாக்கெட் கழுத்துப்பட்டை கைப்பட்டை முதலானவைகளுக்கு ரம்பத்தில் அறுப்பது போன்ற மிஷினில் அறுத்து எடுத்துக் கொண்டு பாக்கியை அப்படியே சேதாரம் இல்லாமல் முழுதும் மற்ற பாகங்களுக்கு உபயோகப்படுத்திவிடுகிறார்கள்.
அங்கு ரஷியாவில் 2,000 - 3,000 ஜனங்கள் சந்தோஷமாக - செளக்கியமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிரம்பி வாழ்வதைப் பார்த்தேன். இங்கு நம்முடைய ஒரு வீட்டை 4, 5 பேர் கொண்ட ஒரு. குடும்பத்திற்கென்று எவ்வளவு அனாவசியமாக 3, 4 அடுக்கு மெத்தைகளுடன். கட்டுகிறோம்? அதில் பகுதி பாகம் நாம் உபயோகப்படுத்துவது கூட இல்லை. அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம், சுகாதாரம் இருப்பதில்லை. நம்முடைய வீட்டை நிரப்புவது ஒடிந்து போன மத்து, கெட்டுப்போன. நாற்காலி, முறம், கூடை, கிழிந்து போன பாயும், அவிந்து போன தானிய
குடி அரசு - 1938 (2) — ௦
குப்பைகளாலும் தான். இந்த முட்டாள் தனத்திற்காகவா நாம் பெரும் வீடு வைத்துக்கொண்டு இருப்பது என்பதை யோசித்துப்பாருங்கள்.
அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்கலாம். சர்வாதிகாரியான ஸ்டாலினுக்கும், சாதாரணத் தொழிலாளிக்கும் சுமார். 10-க்கும், 16 அடிக்கும் உள்ள ஒரே மாதிரி அளவு அறைதான். அங்கு ஒரேமாதிரி சாதிக்காய் பலகை கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும். அங்கு ஒரு கிறு 8-6 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது. தோட்டியே கிடையாது. அதைப்பார்த்தால் அது கக்கூலா என்று நாம் சந்தேகப்பட்டே போய்விடுவோம். அவ்வளவு
சுத்தம். அதில் எவ்வித வாடையும் இருக்காது. அழகு, ஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது. இங்கு ஒரு வீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கக்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்? அப்படி இருந்தும் என்ன சகிக்க. முடியாத நாற்றம், சுகாதாரக்குறைவு? இங்கு 300 பேர்களுக்கு ஒரு தோட்டி வீதம் இருப்பானென்று நம்புகிறேன். இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்? எத்தனை வீடு, தெருக்கூட்டுகிறவர்கள்? எத்தனை வேலைக்காரர்கள்? இப்படியிருந்தும் இங்கு அசுத்தம். அசுந்தந்தானே, என்றும் அசெளக்கியமாகத்தானே இருக்கிறது. அங்கு கக்கூசக்கு பக்கத்திலேயே படுக்கை அறை இருக்கும். அங்குள்ள முறை கஷ்டத்திற்கோ - நாற்றத்திற்கோ இடமில்லை வழியுமில்லை. ஒவ்வொரு கூட்டுப்பண்ணை யிருக்கும் இடத்திலும், ஒவ்வொரு: தொழிற்சாலை இருக்கும் இடத்திலும் ஒரு நல்ல Pak நந்தவனம், சினிமா, விளையாட்டு இடம், டிராமா, சுகாதார வசதிச்சாலை எல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும், 10000 பேருக்கும் கூட்டுறவு முறைப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டு சம்பளம் ஒரே அளவுதான் கொடுக்கப்பட்டு வருகிறது. சம்பளம் போக மேல்கொண்ட
மீதி லாபத்தை அந்த ஸ்தாபன பொது ஜனங்களுடைய நன்மைக்கே உபயோகப்படுத்தப்படுகிறது.
கூட்டுறவு சிக்கனம்.
இங்கு ஒரு மனிதனுக்கு ஒரு வண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவன் எப்பொழுதும் போய்க் கொண்டிருக்கிறானா? அதற்கு தினம் 10 மணி நேரத்திற்கும் வீணில் தீனி போட்டு 3-மணி நேரத்திற்கும் குறைவாகவே வேலை வாங்குகிறான், 3-மணி நேரம் மாத்திரம் அனுபவிப்பதனால் பாக்கி 7-மணி நேர கலியும் செலவும் முதலும் வீணாகிறது. இப்படியே தான் ஒவ்வொரு விஷயத்திலும் தனிப்பட்டவர்கள் தன்மையால் நஷ்டங்கள் உண்டாகின்றன. அநேகமாய்
M வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
நம்முடைய நாட்டில் தேசசெழிப்பும் அனுபவப் பொருள்களுற்பத்தியும். ஒன்றுக்கு எட்டாக விளங்குகிறதா இல்லையா? அப்படி இருந்தும் மக்களின் கஷ்டத்திற்குக்காரணம் என்ன? தனித்தனி, அவனவன் சுயநலம் என்னும் உணர்ச்சியே இதற்குக்காரணம். எனவே இந்த உணர்ச்சி ஒழிய வேண்டுமா வேண்டாமா? மனிதனுக்குக் கவலையற்றும், குறைவற்றும்
வாழும் வாழ்வுதான் சிறந்தது. அதற்குக் கூட்டுறவு முறையேதான்' பெரிதும் தேவையானது.
நிற்க, இந்த ஈரோடு முனிசிபாலிட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அது வாழ்க்கை சம்மந்தமான எல்லா விஷயங்களையும் மேல்கண்டபடி கூட்டுறவு முறையில் பூர்த்தி செய்விக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு பிரயோஜனமேற்படும்? எவ்வளவு செலவு மிச்சமாகும்? எவ்வளவு அனுகூலம்? எவ்வளவு லாபம்? எல்லாவற்றிலும் நன்மையேதான் ஏற்படும். அப்படிக்கிருக்க தனிப்பட்டவர்கள் நன்மைக்கு. மாத்திரம் என்பதாக ஏன் ஒவ்வொன்றும் இருக்க வேண்டும்?
ஒரு சாப்பாட்டு விடுதியை பொதுவாக பல குடும்பங்களுக்குச் சேர்த்துவைத்து நடத்தினால் இரண்டணாவுக்கும் கீழாகவே நல்ல சாப்பாடு போடலாம். அது சத்துள்ளதாகவும், சுகாதார முறைப்படியும் இருக்கும். நம் வீட்டில் சமையல் என்னும் பேரால் சரிபாக சாமான்கள்: வீணாய்ப்போய்கிறது. நம்முடைய நாட்டில் என்ன பொது உணர்ச்சி இருக்கிறது? பொது சமயல்களில் டாக்டர் பரீகைஷசெய்து எவ்வளவு செளக்கியமாக எத்தனை காரியங்களைச் செய்யலாம். இது போலவே வியாபாரத்திலும் கடையில் பேரம் செய்யும்போது கிராமக்குடியானவனிடம் 9-சாக்குப்போட்டு விட்டு 10 சாக்கு என்று பித்தலாட்டம் செய்வது
எனக்குத் தெரியும். குடியானவரிடமிருந்து ஒன்றுக்கு ஒன்றரையாய் எடுத்துக். கொள்வதும் எனக்குத் தெரியும். இதை நானும் செய்திருக்கிறேன். நம்மிடம் நிறைந்திருப்பது பொய். சாக்கோ கலப்படம் உபயோகிப்பதோ முக்கால் அளவுள்ள நிறைதான். இவைகளினாலெல்லாம் தனிப்பட்டவர்க்கு எவ்வளவு நஷ்டம்? இவையெல்லாம் கூட்டுறவு முறையில் லக்ஷியம் கொண்ட ஜனத்தலைவர்கள் என்பவர்கள் ஏன் Contol செய்து அடக்கி தடுக்கக்கூடாது? ஒவ்வொரு தனிப்பட்டவனையும் “ஒன்றுபடுத்தி நீயும் வா எல்லோரும் ஒரு காரியத்தைச் செய்வோம். எல்லோரும் லாபம் பெறுவோம்” என்று ஏன் கூட்டுறவு தன்மை பிரயோகிக்கக்கூடாது?'
மனித சமூக நல்வாழ்க்கைக்கு இம்முறைகள் என்றைக்காவது தலைதூக்கித் தான் ஆக வேண்டும். இதற்காக பொதுவுடமை வேண்டு. மென்பதில்லை. பொதுவுடமை பேச்சே வேண்டியதில்லை. ஆனால் கூட்டுறவு தன்மையைக் கைப்பற்றினால் போதும். வட்டிவிஷயத்திலும். இங்கு பாங்குகளில் ஏராளமான ரூபாய் தூங்குகிறது. ஆனால்:
குடிஅரசு - 1938 (2) —— %0
குடியானவன் விவசாய செலவுக்கு பணம் வேண்டுமானால் தனிப்பட்ட முதலாளியிடம் மாதம் 1-க்கு ரூ.10-க்கு கால் ரூபாய் வட்டிவீதம் கடன் வாங்குவதென்றால் என்ன கொடுமை? ரஷ்யாவில் தனிப்பட்ட மனிதர் எவரும் லேவாதேவி செய்யக்கூடாது? ஒருவனுக்கு மற்றொருவன் 5- ரூபாய் கடன் கொடுத்தால் அது அங்கு திருட்டு ஆகிவிடுகிறது. ஆபத்தில். உதவ வேண்டாமா என்றால் கஷ்டத்துக்காக வேண்டுமென்றால் - ஏன் -
எப்படி ஆபத்தும், - கஷ்டமும் ஏற்படும்? என்பதுதான் அங்கு கேட்கப்படும். கேள்வியாகும்.
ஜன சமூகம் கவலையற்று வாழ ஒழுங்கான முறை கூட்டுறவுத்: தத்துவ வாழ்க்கை முறையேயாகும். நான் அதிகமாகச் சொல்ல வரவில்லை. இவைகளைத்தான் சொல்ல நினைத்தேன். இதற்கு மக்கள் தயாராகி விட வேண்டும். சுயநலத்தை ஒதுக்கி வைத்து விட வேண்டும். பலருடைய நன்மைக்கு என்றே கருதி வாழ்வில் இறங்க வேண்டும். இவற்றைச்
சர்க்கார் செய்ய வேண்டியதா? பொது ஜனங்கள் செய்ய வேண்டியதா? என்பது ஆஸ்திகர்கள் விதி பெரிதா? மதி பெரிதா? என்று தர்க்கிப்பதை: ஒத்ததாகும். இவ்விவகாரங்களில் வலுத்தவன், வாய்ப்பேச்சுக்காரன் தான்: ஜெபமடைவான். சர்க்கார்தான் ஜனங்கள், ஜனங்கள் தான் சர்க்கார். என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்ன வென்று இருப்போமா? அதுபோல் நமது பொதுஉணர்ச்சிகள் இருக்க. வேண்டும். சிப்பியானது திறந்திருக்கு பொழுது மழைஜலம் விழும்போதுதான். முத்தாகிறது. அதுபோல் தான் நமது உணர்ச்சிகள் பக்குவப்படுத்தி சரிப்படுத்தி வைத்துக் கொண்டு தயாராகவே இருக்க வேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டு விடும். நம்முடைய அபிப்பிராயந்தான். ஜனசமூக அபிப்பிராயம் என்று தன்நம்பிக்கையுடன் நாம் வேலை செய்ய
வேண்டும். நமது உடலில் தனித்தனித் தத்துவ இரத்தத்தை எடுத்துவிட்டுக். கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்சுதல் (jection) செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா? என்று இருக்கக்கூடாது. கண்டிப்பாய்.
இது முடியக்கூடியதே.
நம்முடைய மக்கள் மடத்தனத்தில் இருக்கிறார்கள். அதனால்தான். முடியாது என்ற அறியாமை அந்தகாரம் கூழ்ந்திருக்கிறது. 1914 - 18 வருஷத்தில் நடந்த கொடிய மகா யுத்தத்தைக் கூடக் கேள்விப்படாத ரஷ்யர்கள் ரஷ்யாவில் இருக்கிறார்கள். இப்போதும் (6௯) ஜார் அரசன் இருந்து அரளளுகின்றான் என்று கருதிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள். இதனால் எல்லாம் அங்கு கூட்டுறவு தன்மை ஏற்படாமல் போய்விட்டதா? எப்படி காய்ந்த தீய்ந்த சருகில் அதிவேகமாய் நெருப்புத்தீ பற்றிக் கொள்ளுகிறதோ அப்படியே
Bl வரயாரின் எழுத்தும் பேச்சும்! தொகுதி - 27
தான் அங்கு மதம் ஒழிந்து- கடவுள்மாய்ந்து - அரசர்கள் மண்ணாங்கட்டிளாகி, செல்வவான்கள் பனிக்கட்டிகளாகி, மழை பெய்தாலும், வெய்யில் அடித்தாலும் இவைகள் எல்லாம் கெடுவதுபோல் கெட்டு ஒழிந்து 16-கோடி ஜனங்களையும் கூட்டுறவு வாழ்க்கைக்காரராகி விட்டது என்பதை நீங்கள் ஞாபகத்தில் நன்கு பதிய வைத்துக்கொண்டு இந்நாட்டுக்கொடுமை, பஞ்சம், அநீதி ஆகியவை ஒழிப்புக்குத் தைரியங்கொண்டு கூட்டுறவு மூலம் போராடி உழையுங்கள். உங்கள் உணர்ச்சிகள் இவைகளுக்கு எப்பொழுதும் அனுகூலமாகவே இருக்கட்டும் - நீங்கள் வெற்றி அடைவது நிச்சயம்.
பகுத்தறிவு (மா.இ) - சொற்பொழிவு - நவம்பர் 1938
குடிஅரசு 198) w®
சென்னை மாகாணத்தில் 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக். கட்டாயப் பாடமாக்கப் போவதாக கனம் ஆச்சாரியார் கூறியது முதற் கொண்டு நாளிது வரை தமிழர்கள் எல்லாம் கட்டாய இந்தியை ஒருமுகமாக எதிர்த்து வருவதை சென்னை மாகாணத்தார் நன்கறிவார்கள். முதன்முதல் “பொதுமொழி தேவையா?” என்ற சிறு நூலை மறைமலையடிகள் வெளியிட்டார். அப்பால் இந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் சென்னை முதன்மந்திரிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார். திருநெல்வேலி தமிழ்ப்பாதுகாப்புச் சங்கத்தாரும். கட்டாய இந்தியைக் கண்டித்துப் பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர். இப்பிரசுரங்கள் எல்லாம் பதினாயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு தமிழ்நாடு முழுதும் வினியோகம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டார் அவைகளைப் படித்துக் கட்டாய இந்திச் சூழ்ச்சியை நன்குணர்ந்தனர். 26-12-37-ல் இருச்சியில் கூடிய சென்னை மாகாண 3-வது தமிழர் மகாநாட்டில் கட்டாய இந்தி வன்மையாகக் கண்டிக்கப்பட்டதுடன் இந்தி எதிர்ப்புக் கமிட்டியும். ஸ்தாபிக்கப்பட்டது. இம்மகாநாட்டில் காங்கரஸ்வாதிகளும்ஜஸ்டிஸ்வாதிகளும், சுயமரியாதைக் கட்சியாரும், எக்கட்சியிலும் சேராத தமிழர்களும் மனமுவந்து தாராளமாகக் கலந்து கொண்டனர். இந்தி எதிர்ப்புக்கு ஒரு உருவம் கொடுத்தது திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் மகாநாடே. அப்பால், காஞ்சீவரத்தில் ராவ்பகதூர் ஸர்கெ.வி ரெட்டி தலைமையில் கூடிய இந்தி எதிர்ப்பாளர் மகாநாடும் கட்டாய இந்தியைக். கண்டித்தது. அதுகாலை மகாநாட்டுத் தலைவர் ஸர்.கெ.வி.ரெட்டி நாயுடு நிகழ்த்திய தலைமைப் பிரசங்கமும் மகாநாட்டுத் திறப்பாளர் காலஞ். சென்ற திவான் பகதூர் ஸர்.எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள் நிகழ்த்திய திறப்புவிழா பிரசங்கமும் இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி தேவை யில்லையென்றும், தேவையானால் இங்கிலீஷே பொது மொழியாக இருக்க வேண்டுமென்றும் இந்தியப் பொதுமொழியாக இருக்க இந்திக்கு எத்தகைய யோக்யதையுமில்லையென்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிவுறுத்தின. அதே சமயத்தில் வடஆற்காடு ஜில்லா திருவத்திபுரத்தில்: தோழர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடிய தமிழர் மகாநாட்டு. மூலமும் கட்டாய இந்தியின் யோக்கியதையைத் தமிழ் நாட்டார் அறிந்தனர். விருதுநனில் ஸர்.எ.டிபன்னீர்செல்வம் தலைமையில் கூடிய ராமநாதபுரம் ஜில்லா தமிழர் மகாநாட்டிலும் சோழவந்தானில் பேடை ௨ வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
தளவாய் குமாரசாமி முதலியார் தலைமையில் கூடிய மதுரை ஜில்லா. மகாநாட்டிலும் பள்ளியக்ரகாரம், சாக்கோட்டை, சேலம், ஓமலூர், நாமக்கல், ராசிபுரம், திருப்பத்தூர் முதலிய இடங்களில் கூடிய சுயமரியாதை: மகாநாடுகளிலும் கட்டாய இந்தி வன்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இம்மாநாடுகளில் எல்லாம் பதிணயிரக்கணக்கான தமிழர்கள் பங்கு கொண்டு. மிருக்கின்றனர். இம்மகாநாடுகளைத் தவிர தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான கண்டனக் கூட்டங்கள் கூடிக் கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டும் இருக்கின்றது. திருச்சியில் கூடிய சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டின் போது நியமிக்கப்பட்ட இந்தி எதிர்ப்புக் காரியக் கமிட்டியார் 1-6-38 முதல் 12-6-38 வரை தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்களுக்கெல்லாம் சென்று இந்தி எதிர்ப்புப் பிரசாரம் செய்து இந்தி எதிர்ப்புக் கமிட்டிகள் ஏற்படுத்தி தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை விளக்கிக் கூறியுமிருக்கின்றனர். 1938 ஜனவரி 4-ந்தேதி இந்தி எதிர்ப்பு முதல் சர்வாதிகாரி தோழர் ஸி.டி.நாயகமும், இந்தி எதிர்ப்புத் தொண்டர் தோழர் பல்லடம் பொன்னுசாமியும் முதன் முதல் கைது செய்யப்பட்டது முதற்கொண்டு இந்தி எதிர்ப்பு இயக்கம் பஞ்சாப் மெயில் வேகத்தில் முன்னேறி வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் இந்தி எதிர்ப்பின். வன்மையை எதிரிகளுக்கு நன்கு விளக்கிக் காட்டியும் உள்ளன. மறியல் செய்தவர்களை ஒடுக்க சர்க்கார் கொடிய அடக்குமுறைகளைக் கையாண்டு. வந்தும் இந்தி எதிர்ப்பாளர் சலிப்படையவோ, பீதியடையவோ செய்யவில்லை. சர்க்கார் அடக்குமுறை வலுத்ததின் பயனாய் தமிழ் நாட்டு மாதர்களும் விழித்தெழுந்தனர். சென்னையிலே தமிழ்நாட்டுப் பெண்கள் மகாநாட்டைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தினர். இப்பொழுது மறியல் போரிலும் தமிழ்நாட்டுத் தாய்மார்கள் ஈடுபட்டுவிட்டனர். இன்றுவரை 481 பேர்கள் சிறை புகுந்துமிருக்கின்றனர். இவ்வண்ணம்: இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வந்தாலும். காங்கரஸ் பத்திரிகைகள் இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டதென: பொய் விளம்பரம் செய்யத் தயங்கவில்லை. திருச்சி முதல் சென்னை: வரை கால்நடையாகச் சென்று பிரசாரம் செய்து சென்னையில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டமும் நடத்தி வெற்றிக் கொடி நாட்டிய தமிழர் படையைப் பற்றி காங்கரஸ் பத்திரிகைகள் கேவலமாகவே எழுதி வந்தன. கோவைத் தமிழர் படை, மதுரைத் தமிழர்படை வரலாறுகளையும் காங்கரஸ் பத்திரிகைகள் அமுக்கின. சென்னையில் நடைபெற்ற 3-பிரமாண்டக். கூட்ட நடவடிக்கைகளையும் சிதைத்துச் சுருக்கிப் பிரசுரம் செய்தன.
இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழர்களுக்கெல்லாம் பொதுவான. இயக்கம் என்பதையுணராமல் கனம் ஆச்சாரியாருங்கூட இந்தி எதிர்ப்பு
குடிஅரசு 198) வ
இயக்கம் ஒரு ஆரிய நாகரிக விரோதியுடையவும் ஒரு காங்கரஸ் எதிரியுடையவும் புரளியென அசெம்பிளியிலே வாய்கூசாது கூறினார். இதனால் தமிழர்கள் ஆத்திரங் கொண்டனர். கட்சிபேதம், ஜாதிபேதம், மதபேதம் பாராட்டாமல் தமிழர்களான இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து கட்டாய இந்தியைக் கட்டுப்பாடாக- ஒரு முகமாக: எதிர்த்து வருகையில் இந்தி எதிர்ப்பு இரண்டு விஷமிகளின் புரளியென கனம் ஆச்சாரியார் கூறியது தமிழர்களையெல்லாம் தட்டியெழுப்பியது இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழராய்ப் பிறந்தவர்களுக்கெல்லாம். பொதுவானதெனக் காட்டும் பொருட்டு மறியல் செய்து சிறைபுகவும் தமிழர்கள் துணிவு கொண்டனர். மறியல் செய்வதையும் சிறை புகுவதையும் இந்தி எதிர்ப்புக் கமிட்டியார் ஒரு வேலைத் திட்டமாக இதுவரை ஒப்புக்கொள்ளாதிருந்தும் மறியல் போர் முட்டின்றி நடைபெற்று வருவதற்கு தமிழ் மக்களின் பேராதரவு இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு இருந்து வருவதே காரணம். சென்னையில் இதுவரை நடைபெற்ற மூன்று பிரம்மாண்டமான கூட்டங்களையும் எத்தனையோ ஊர்வலங்களையும் இப்பொழுது முனிசிபல் டிவிஷன் தோறும் வாரந் தவராமல் நடைபெற்றுவரும். ஊர்வலங்களையும் நாள் தவறாமல் நடைபெற்று வரும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களையும் சென்னை மக்களைத் தட்டி எழுப்பிய மாதர். ஊர்வலங்களையும் கண்ணாரக் கண்டும் அல்லது காதாரக் கேட்டும். இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டதென வீண் புரளி செய்யும் காங்கரஸ் காலிப் பத்திரிகைகளின் அற்ப புத்தியை என்னவென்று சொல்வது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களை காலிகள் கூட்டமென்றும் கூலிகள் கூட்டம் என்றும். எழுதும் காங்கரஸ்காரரை அற்பப் புத்திகள் என்று கூறுவதா? வீணர்கள் என்று கூறுவதா? பொய்யர்கள் என்று கூறுவதா? இவர்கள் வேண்டுமென்றே இந்தி எதிர்ப்பு இயக்கத்தை இழித்து பழித்துக். கூறினாலும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நேரில் காணும் பொதுஜனங்கள் உண்மையை அறியாமலா இருக்கப்போகிறார்கள். இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்திருந்தால் சென்னை கார்ப்பரேஷன். தேர்தலில் காங்கிரசுக்குப் படுதோல்வி ஏற்பட்டிருக்குமா? காங்கரஸ் எதிரிகள் வெற்றி பெற்றிருப்பார்களா? கட்டாய இந்தியை தமிழர்கள் எதிர்க்கவில்லையானால் காங்கரஸ் மந்திரிகள் ஆதரவில் சென்னைக் கடற்கரையில் கூடிய இந்தி ஆதரிப்புக் கூட்டங்கள் குழப்பத்தில் முடிந்திருக்குமா? காங்கரஸ் மந்திரிகள் ஆதரவில் கூடிய இந்தி ஆதரிப்புக் கூட்டங்கள் அரை மணி முக்கால்மணி நேரத்துக்குள் முடிந்திருக்கையில் இந்தி எதிர்ப்பாளர் கூட்டிய மூன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள். நள்ளிரவு வரை அமைதியாக நடந்திருக்கக் காரணம் என்ன? பொதுஜன. ஆதரவு இந்தி எதிர்ப்பாளருக்கு இருந்து வருவதினாற் நானே இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் நள்ளிரவு வரை அமைதியாக நடைபெற்றன.
B வரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
மாகாணம் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து வெள்ளோட்டம் பார்த்த கனம் ஆச்சாரியார் “எவ்வளவோ பெரிய சட்டங்கள். இயற்றியிருக்கிறேனே இவ்வளவு எதிர்ப்பிலேயே இந்த அற்ப கட்டாய இந்திக்கா இவ்வளவு எதிர்ப்பு!” என மனமுடைந்து கூறினாரென்றால். இந்தி எதிர்ப்பின் வன்மைக்கு அது ஒரு சான்றாகாதா! இந்நிலையிலும். இப்பொழுதும் இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒழிந்துவிட்டது, செத்துவிட்டது எனக்கூறும் காங்கரஸ் காலிப் பத்திரிகைகள் இந்தி எதிர்ப்பாளர் மீது வழக்குத் தொடருகிறவர்களும் இந்தி எதிர்ப்பாளரை தண்டிப்பவர்களும் கூறுகிறவைகளையாவது நம்புமா? இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு. நாள் வலுப்பெற்று வருவதைக் கண்ட பிராசிக்கியூட்டிங் இன்ஸ்பெக்டர். ஈழர் அமிர்தலிங்கம் பிள்ளை இந்தி எதிர்ப்பாளருக்கு கடினமான. தண்டனையளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாராம். டிசம்பர்.
1-ந் தேதி மறியல் செய்த 11 தொண்டர்களை தண்டித்த நான்காவது மாகாண மாஜிஸ்டிரேட்டு தோழர் மாதவராவ், பிராசிக்கூட்டிங் இன்ஸ்பெக்டர் சொன்னதை ஒப்புக்கொண்டு “மறியல் கட்டுப்பாடாக வன்மையாக நடந்து வருகிறதென்பது தெளிவாகிவிட்டது. ஆகவே தொண்டர்களுக்கு கடினமான தண்டனை யளித்தால் தான் மறியல் போரை ஒடுக்கமுடியும்” எனக் கூறி தலைநாள் வரை 2 வாரம் 4 வாரம் தண்டனை யளித்து வந்த அவர் 6-மாத கடுங்காவல் தண்டனையும். 500-ரூபாய் அபராதமும் அளித்தாராம். இதற்கு காங்கரஸ் காலிப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப்போகின்றன? மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கு 5-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று அவர் எதிர் வழக்காடாமல் சிறை புகுவது உறுதி. அவர் சிறை புகுந்தால் அதிகப் பேர் பிரதி தினமும் மறியல் செய்து சிறைபுக நேருமாகையினால் எதிர்காலத்து மறியல் செய்ய முன் வருவோர் அச்சமடையும் பொருட்டு நீண்ட கால தண்டனைகளும் அபராதமும் விதிக்கப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது. பெரியார். ஈ.வெ.ரா.வை வரப்போகும் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கு தலைவராக: தேர்ந்தெடுக்கப் போவதை முன்னாடியே உணர்ந்த சர்க்கார் அவர் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்குத்தலைமை வகிக்காமல் தடுக்கும் பொருட்டே இப்பொழுது அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கின்றனரென்றும். சொல்லப்படுகிறது. அவ்வதந்திகள் மெய்யோ, பொய்யோ எப்படி இருந்தாலும் சி, இந்ததண்டனைகளாலும் பெரியார் தண்டிக்கப்படுவதினாலும். இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒடுங்காது. ஈ.வெ.ரா.வையும் அவரது தமையணாரையும் கிறைப்படுத்துவதால் கிளர்ச்சி அடங்கிவிடாது என்பது மட்டும் நிச்சயம். சாகத் துணிந்தவர்களுக்கு சமுத்திரம் முழங்கால் என்பதை யாரே அறியார்!
குடிஅரசு - தலையங்கம் - 04.12.1938
குடிஅரசு - 1938 (2) —— 09
ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்
கோவை ஜில்லா போர்டில் காங்கரஸ் ஆதிக்கமும் கட்டுப்பாட்டுப்
புரட்டும் வெளியாகிவிட்டது குறித்தும் காங்கரஸ் ஒழுங்கையும் மீறி காங்கரஸ் அபேட்சகர் வெள்ளியங்கிரிக் கவுண்டரையே ஒரு காங்கரஸ் எம்.எல்.ஏ.வான தோழர் வேணுடையாக்கவுண்டர் (சங்கரண்டாம்பாளையம்.
பட்டக்காரர்) முறியடித்ததை மக்கள் ஆரவாரத்திற்கிடையே எடுத்துக் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் முன்னால் பேசிய தலைவர்கள் தம்மை மிகைப்பட புகழ்ந்து கூறியதற்கு தாம் அருகதையுடையவரல்லவென்றும் அவர்கள் தம்மைப் பொதுத் தொண்டில் தீவிரமாக ஈடுபடவே அவ்வாறு உற்சாக மூட்டினர் எனக் கருதுவதாகவும் கூறிவிட்டு சர்.பன்னீர்செல்வமும் மற்ற தலைவர்களும் ஆதிகால முதற்கொண்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பெரிதும் தமிழர்களுக்கும் செய்த சேவைகளைப் புகழ்ந்துவிட்டு குறிப்பாக சர். பன்னீர்செல்வத்தைப் பாராட்டிப் பேசினார்.
சென்னைச் சம்பவங்கள்
சென்ற 21-11-38-ந் தேதி சென்னையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஆர்ப்பாட்டங்களைப்பற்றி பெரியார் பிரஸ்தாபித்துத் தொடர்ந்து பேசுகையில் இந்தி எதிர்ப்பியக்கத்தை எவ்வழியிலேனும் - அவ்வழிகள் எவ்வளவு கேவலமாயிருந்த போதிலும் - அவற்றின் மூலம். ஒழித்துவிடவேண்டுமென்று கங்கணம் பூண்ட ஒரு கோஷ்டியார் கட்டுப்பாடாக வெறும் புரளிகளைக் கிளப்பி விட்டு பயங்கர நிலைமை: ஏற்பட்டு விட்டதாக பயங்காட்டி தமது சார்பான காங்கரஸ் சர்க்காருக்கு. இந்தி எதிர்ப்பியக்கத்தை அடக்க வழி தேடிக்கொடுக்கவே இவ்வளவு பிரமாத பொய் விளம்பரம் செய்கிறார்கள் என்றும் தாம் இவ்வண்ணம் புரளிகள் உண்டாகும் என்பதையும் முன்னாகவே அறிந்திருப்பதாகவும் எவ்வித உண்மையான இயக்கத்திற்கும் அதன் எதிரிகளால் இது போன்ற. இடையூறுகள் ஏற்படுவது சகஜமென்றும், உண்மையிலேயே அச்சம்பவங்கள். சென்னையில் நடந்திருக்குமானால் தாம் வெட்கமடைவதுடன் அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவும் தயார் என்றும். ஆனால் அது பெரிதும் கட்டுக்கதை என்றும் ஆதாரங்களோடு கூறினார்.
B வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இச்சம்பவத்தைப் பற்றி ஜனவானி பத்திரிகையின் செய்தியையும் தோழர். பாசுதேவ் அறிக்கையையும் குறிப்பிட்டுக் காட்டி அப்புரளிகள் எவ்வளவு அபாண்டமானது என்பதையும் விளக்கினார்.
முடிவாக இந்தி எதிர்ப்பு இயக்கத்தை இந்தி ஒழியும்வரை தொடர்ந்து நடத்தி இடையறா பாடுபடவும் அதனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஏற்கவும் தமிழர்களை வேண்டிக்கொண்டார்.
குறிப்பு: 22111938 ஆம் நாள் ஈரோடு தியாகராய கட்டடத்தில். நடைபெற்ற தமிழர் கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1988
குடிஅரசு - 1938 (2) — 0
பெரியார் சென்னைப் பிரசங்கம்
பெருமை மிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய கூட்டத்தை, நாளை நான் எனது அருமை நண்பர் ஆச்சாரியாரின். விருந்தினராகப் போகப் போகின்றேனெனக் கருதி, என்னை உங்கள் எல்லோருக்கும் காட்டுவிக்க இவ்வளவு அவசரத்தில் கட்டினார்கள் போலும். நானும் நாளை எனது கீட்டுக்கிழிந்து விடுமென்று கருதினேன். ஆனால், 1-ந் தேதி விசாரணை போட்ட பழைய சம்மன் ரத்தாகி 5-ந்தேதி வாய்தா போட்டு இன்று புதிய சம்மன் என்னிடம் கொடுக்கப்பட்டது. எனவே எனது வழக்கு நாளைக்கல்ல; 5-ந்தேதியாகும். நானும் அதற்குள் ஊருக்குச் சென்று வரவும், 4-ந்தேதி காரைக்குடியில் நடைபெறும் தமிழர் மகாநாட்டிற்குச் சென்று வரவும் ஏற்பாடு செய்துள்ளேன். தலைவரும் காரைக்குடிக்கு வருவார். எனவே மீண்டும் ஒன்றிரண்டு அல்லது மூன்று. வருடங்களுக்குச் சென்னையில் இது எனது கடைசிப் பேச்சாக இருக்கலாம். மீண்டும் வருவேன் என்ற தைரியத்தில்தான் செல்லுகின்றேன்.
கெமால் செய்த நன்மைகள்.
உலகத்திற்கே-மனித சமூகத்திற்கே வழிகாட்டியாயிருந்த இரண்டு பெரியார்கட்கு இங்கு அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்களின் நோக்கம் அவர்களின் பெருமை பேசவல்ல. அவர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு நீங்களும் நடக்க: வேண்டுமென்பதற்காகவே. அவர்களைப் பற்றியும் அதிகம் கூற வேண்டுவதில்லை. கெமால் பாஷா அவர்கள் ஒரு பெரிய விஷயத்தை வழிகாட்டியாகக் காட்டிச் சென்றார். அதாவது தேச விடுதலை, மக்களின் சமூக சுதந்திரத்தைப் பொறுத்திருக்கின்றது என்பதை நன்றாகக் காட்டிச் சென்றார். அரசியலுடன் மதக் கொள்கைகளை கலக்கக்கூடாது என்றும் மதத்தைவிட மானம் பெரிது எனக் காட்ட வேலை செய்தார். ஆனால். ஒரு சிலர் நம்நாட்டில் அரசியலில் மதத்தைப் புகுத்தி, அதை வளர்ப்பதையே தேசிய விடுதலை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால்:
வீரர் கெமால் அவர்கள் நாட்டின் விடுதலை தனியெனக் கருதி அதனின்றும் மதத்தைச் சடங்கை கத்தரித்தார். அரசியலில் மதம் குறுக்கிடக் கூடாது என்றார். 1921-ல் காங்கரஸ் கிலாபத் இயக்கத்துடன் ஒட்டியிருந்தது. அன்று முஸ்லிம்களைக் கிளப்பி அதனால் பயன்பெறக் கூப்பாடு போட்டனர்.
B வரயாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
ஆனால் கெமால் அவர்கள் வந்தவுடன் அதுவேறு விஷயமென்று - தொட்டதற்கெல்லாம் மதம் என்பதைத் தனிப்படுத்தினார். மேலும், மதத்தில் பிரவேசித்துப் பல சீர்திருத்தங்கள் செய்தார். மத உணர்ச்சி மிகுந்துள்ள முஸ்லிம்கள் சிலர் இவரைக் குறை கூறினர். ஆனால் கெமால் அவர்கள் அவைகளைச் சிறிதும் லட்சியம் செய்யாது, அவர்களே பின்னால். உணர்வார்கள் என்று கருதி தன்னிஷ்டம் போல் சீர்த்திருத்தங்களைத் துணிந்து செய்தார். உலகத்தில் துருக்கி ஒரு நோயாளி நாடு என்று அழைக்கப்பட்டு வந்த பெயரை நீக்கினார். என்னைப் போலொத்தவன் சில சீர்திருத்தங்கள். செய்ய வேண்டுமென்று சொன்னால், உடனே ஒரு சிலர் கடவுள். போச்சு, மதம் போச்சு என்று கூச்சலிட்டு, வீட்டிலுள்ள கிழங்களை: உசுப்படுத்தி விடுகின்றனர். அவர்களும் உண்மை அறியாது நம் வேலைகளில் குறுக்கிடுகின்றனர். அது கூடாதென்பதற்காகவே கெமால் அவர்களின் செய்கைகளை எடுத்துக் காட்டுகின்றேன்.கெமால் துருக்கியில். படுதா முறையை ஒழித்தார். அதைப்பற்றிப் பலர் பல வித அபிப்பிராயங்கள். கூறுவர். என்னைப் பொறுத்த வரை நமது பெண்களுக்கு நாம் என்ன. சுதந்தரம் கொடுத்திருக்கின்றோம் என்பதை கவனிக்காது முஸ்லிம்களின். படுதா முறையைக் குறை கூறமுடியாது என்பேன். நமது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டா? படிப்புச் சுதந்திரம் உண்டா? விதவை மணம் உண்டா? ஆனால் முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு சொத்து, கல்வி, விதவை மணம் முதலிய சுதந்தரங்கள் கொடுத்திருக்கின்றனர். நாம் அந்த. நிலைமைக்கு வந்த பிறகு படுதா முறையைப் பற்றி பேசலாம். இதேபோல் பலவிதக் குறைகள் நம்மிடத்திருக்கும்போது, அவர்களின். படுதா முறையைக் குறைகூறும் நிலைக்கு இன்னும் நாம் வந்துவிடவில்லை.
அலி சகோதரர்கள் பெருமை
இரண்டாவதாக ஷவுக்கத் அலி அவர்களின் மரணத்திற்காக அனுதாபம் கூறப்பட்டது. அவரும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாயிருந்தவர். இந்த நாட்டில் பார்ப்பனர்களால், எவனொருவன் உண்மையாளனாகவும்' தனது சமூக நலனுக்காக எவ்வித துன்பத்தையும் அனுபவிக்கத் தயாரா: யிருக்கின்றானோ அவன் உடனே “தேசத் துரோகி' என அழைக்கப்படுகிறான். எவன் தங்கள் சமூக உயர்வைக் குறித்து பேசுகிறானோ அவனும் தேசத்துரோகியாகின்றான். ஆனால் தேசத்துரோகப் பட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது தனது மதம், கலை, பழக்கவழக்கம், நாகரிகமே முதலாவதானது; மற்றவை இரண்டாவது என்று கூறியவர் நமது ஷவுக்கத்
அலி. நாட்டில் இன்று தங்கள் நாட்டு சமூக முன்னோர் பெருமை தனது வகுப்பு மானம் இவைகளைக் கருதுபவன் தேசத் தலைவர் பட்டத்தைவிட்டு வெளியே வரவேண்டும். ஒருசமயம் காந்தியாரிடத்து ஷவுக்கத் அலி அவர்கள் முதலில் நான் ஒரு முஸ்லிம், இரண்டாவதும் முஸ்லிம். மூன்றாவதே இந்தியன் எனக் கூறினார். ஆனால் இன்று தமிழனை:
குடிஅரசு - 1938 (2) —— லை
ஒருவன் நீ யாரென்று கேட்டால் “நான் முதலில் தேச பக்தன், இரண்டாவது தேசியவாதி, மூன்றாவது தமிழனோ என்னமோ அதை: எங்கள் ஐயாவை (அப்பாவை)க் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்” என்பார். இத்தகைய அடிமை மனப்பான்மையும், சுயநல எண்ணமும், பொறுப்பற்ற தன்மையும்தான் நமது அடிமைத்தனத்திற்குக் காரணம். அலி சகோதரர்கட்கு இந்துக்களும், காந்தியாரும், மற்றவர்களும் கொடுத்த பெருமை எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும். அலி சகோதரர்கள் இருவரையும் இரண்டு சிங்கங்களாகப் போட்டு நடுவில் சந்தியை நிறுத்தி சிங்கங்களின் கழுத்திலுள்ள சங்கிலிகளைக் காந்தியார். கையில் கொடுத்துப் படம் போட்டுப் புகழ்ந்தனர். அதாவது அலி சகோதரர்கள் இருவரும் சிங்கங்களென்றும், அவர் பிரிட்டிஷ்காரர் மீது பாய்ந்து விடாது காந்தியார் உத்தரவை எதிர்நோக்கி நிற்கின்றனர் என்றும் காந்தியார் சங்கிலியை விட்டால் வெள்ளையர் மீது பாய்ந்து கிழித்து விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்து தேசிய வியாபாரம் செய்து வந்தனர். அவர்களும் காந்தியாரை பாபுஜீ - தந்தையே என அழைத்து உண்மையுடன் காந்தியார் கொள்கை நாட்டில் பரவ, இரு தூண்கள் போல் இருந்து வேலை செய்து வந்தனர். சிறிது நாட்களுக்கெல்லாம் உள்ளேயிருந்த மர்மம் சுயராஜ்யப் புரட்டு (நேரு திட்டப்புரட்டு) தெரிந்தவுடன் நாங்கள் முதல், இரண்டாவது முஸ்லிம், மூன்றாவதுதான் இந்தியன் எனக் காந்தியாரிடம் கூறி வெளியே வந்தார்கள். ஒருவனுக்கு எவ்வளவுதான் தேசபக்தியிருந்தாலும் தனது சமூக விஷயத்தில் ஏமாந்து விடக்கூடாது. சமூகப் பிரிவு, மதப்பிரிவு ஒழிந்து விட்டால் பிறகு பார்ப்போம். இதுவரை இரு பெரியார்களின் சரித்திரத்தையும் பெருமைக்காகக் கூறவில்லை. அவர்களை நாமும் பின்பற்றி நமது உண்மை சமய சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டுமென்பதை
எடுத்துக்காட்டவேயாகும்.
ஜஸ்டிஸ் கட்சித் தலைமைப் பதவி. இவை கிடக்க சென்ற வாரம் முதல் காங்கரஸ் பத்திரிகைகளிடையே ஒரு பெரிய பிரசாரம் நடந்து வருகின்றது. அடுத்த டிசம்பர் கடைசி வாரத்தில் சென்னையில் நடைபெறும் ஜஸ்டிஸ் மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று பல தோழர்கள் முயற்சி செய்து வருகின்றதாகத் தெரிகிறது. நான் அத்தலைமைப் பதவிக்குத் தகுதியுடையவனல்ல. ஆனால் தகுதியுடையவனாக்க தோழர்கள் முயலுகின்றார்கள் போலும். இதைக் கேட்டவுடனேயே எதிரிகள் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது, அதற்குச் சமாதியும் கட்டியாய்விட்டது என்று
கூறி வந்தவர்களுக்கு இப்பொழுது ஒரு மகாநாடு நடப்பதையும் அதற்கு, ஒரு தலைவராகப் போடுவதையும் பார்த்தால் சிறிது நடுக்கமாகத்தான்
VI வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இருக்கும். ஆதலால் அவர்கள் கொஞ்ச நஞ்சம் மீதியிருக்கும் கட்சியை ஒரு நாஸ்திகனைத் தலைவனாகப் போட்டு ஒழிக்கப் போகின்றார்கள். என்று கூறி ஏளனம் செய்வதில் அதிசயமில்லை. நம்மவர்களும் அவர்கள். பேச்சை நம்பி ஏமாந்துவிடுவார்கள் என்று எண்ணக்கூடும். சாமி அருணகிரிநாதர் கூறியதுபோல் ஒண்ட வந்தவர்கள் நம்மைத் துரத்தத்தானே நினைப்பார்கள். மதப்பூச்சாண்டி காட்டி ஏய்க்கின்றனர். அப்பூச்சாண்டியைத் திருப்பிக். கேட்க நம் மக்கள் துணிவதில்லை. ஆனால் ராஷ்ட்ரபதியென்றும் தேசிய வீரரென்றும் கூறப்படும் தோழர் ஜவஹர்லால் எல்லா இந்திய காங்கரஸின். பல வருஷ தலைவராயிருக்கும் போதே கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூறுவதை மறுத்தும், தனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்றும் கூறினார். அன்று தேசீயப் பத்திரிகைகளெல்லாம் அவர் வீரத்தைப் புகழ்ந்தனவே! அதற்காக அவர்மீது யார் கோபிப்பது? எந்த காந்தி தபஸ் செய்யச் சென்றார்? எந்த ஆஸ்திக வீரர் காங்கரசை விட்டு ராஜினாமாச் செய்தார்?
குறைகூறக் காரணம் எண்ணி
நமது சமூகம் சிறிதும் தலையெடுக்கவிடாது செய்யவே இவ்வாறு. அவர்கள் யாரையும் குறைகூறி கட்டுப்பாடாக வேலை செய்கின்றனர். எப்படி இருந்தாலும் ஜஸ்டிஸ் மகாநாடு நடைபெறும் வரை நான். வெளியில் இருக்கமாட்டேன் என்றே கருதுகின்றேன். நான் தலைமை வகிக்க நேராது என்றே கருதுகிறேன். என் வழக்கில் நான் வாதாட சட்டமிருக்கலாம். காரண காரியங்களிருக்கலாம். ஆனால் இந்தக் காங்கரஸ் அரசாங்கத்தில் அது செல்லுமா என்பதுதான் கேள்வி. எனவே வழக்கில். நான் எதிர்வாதம் செய்யப்போவதில்லை. சீக்கிரம் முடியுங்கள் என்றே கூறுவேன். முடிற்துவிடுமென்றே கருதுகின்றேன். ஆதலால் நான் தலைமை: வகித்து விடுவேன் என்கின்ற கவலை அவர்களுக்கு வேண்டியதில்லை. எனவே, நான் வெளியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள். பார்ப்பனரல்லாத அந்த இயக்கத்துக்கு வேண்டிய உதவி செய்து பெருவாரியாக மெம்பர்கள் சேர்ந்து மகாநாட்டைச் சிறப்பாக நடத்தி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை எதிரிகளுக்கு அறிவியுங்கள். முன்னிலும் அதிக ஒற்றுமையாக: ஊக்கமாக வலுவாக இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். "ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையின் பெயர் பின்னர் கட்சிக்கே வந்துவிட்டது... தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதே இதன் பெயராகும். தென்னிந்திய மக்களின். நலத்திற்காக உரிமைக்காகப் பாடுபடும் கட்சி இக்கட்சி பார்ப்பனரல்லாதார். நன்மைக்காகவே ஏற்பட்டதாகும். ஆதியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற விதியிறுந்தது. பின்னர் இக்கட்சிக் கொள்கையை பின்பற்றும் - தென்னிந்திய மக்கள் நன்மையை நாடும் பார்ப்பனரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனத் திருத்தப்பட்டது. ஆனால் இவ்வியக்கத்தில் எல்லாப் பார்ப்பனர்க்கும் இடமில்லை.
குடிஅரசு 198) 0
நாம் இந்நிலைக்கு ஏன் வந்தோம்?
பார்ப்பனர்கள் இக்கட்சியை தேசத்துரோகக் கட்சி வெள்ளையனுக்குக். காட்டிக் கொடுக்கும் கட்சி எனக் கூறின். இரண்டையும் கேட்டு ஒரு முடிவுக்கு வரத்தகுந்த பலமில்லா உள்ளமுடையவர்களாய் நம் தமிழர்களிலிருந்ததால்தான் நாம் இந்நிலைக்கு வர நேர்ந்தது. நமது பார்ப்பனரல்லாத மக்கள் சென்ற தேர்தலில் மிகுந்த கஷ்டப்பட்டனர். இன்று தங்கள் தவறையுணர்ந்து குறைகளை நீக்க நினைக்கையில் நம்மிலிருந்து விலகிய பலர் அனுதாபம் காட்டுகின்றனர். அதன் நுனியைப் பற்றி மேலே செல்வோமேயானால் இழந்தவைகளை மீண்டும் பெறலாம். எனவே இதில் எல்லோரும் பூரண: பங்கு கொள்ளவேண்டும். தகுந்த திட்டங்கள் வகுத்துத் தொண்டு செய்வதன் மூலம் தமிழனாக வாழ முற்படுங்கள்.
நான் ஒன்று சொல்லுகின்றேன் கோபிக்காதீர்கள் . காலஞ் சென்ற. அறிஞர் பா.வே. மாணிக்க நாயகர் அவர்கள் ஒரு சமயத்தில் நம்மை: நாய்கள் என்றும், பார்ப்பனர்களைப் பூனைகள் என்றும் கூறினார் தமிழர்களை இழிவாகக் கருதி நாய் என்று கூறவில்லை. நாய் செய்நன்றி உடையது. அன்பு விசுவாசம் உடையது. பூனையோ திருட்டுப் புத்தி உள்ளது. (கைத்தட்டல்) ஆனால் நாய்க்கு இன்னொரு குணமுண்டு. அதாவது தன்னினத்துடன் ஒற்றுமையாக இருப்பதில்லை. தமிழர்களும். மற்றவரிடத்து நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், அன்பு, பக்தி, விசுவாசம் பாதுகாப்பாளராக இருப்பார்கள். தங்களுக்குள் ஒற்றுமையாக மட்டுமிருப்பதில்லை. நம்மிடத்தோ அந்தப் பூனை திருட்டுக் குணம் மட்டும் கிடையாது. நம்மில் - ஒருவருக்கொருவர் பகையை விட வேண்டும். பொறாமையை விடவேண்டும். தன்னலம் விடவேண்டும். பார்ப்பனரிடத்து நாய்க்குணம் கிடையாது. காரியம் வருமானால். தங்களுக்குள்ளிருக்கும் சொந்தப் பகையை மறந்து ஒன்றுபட்டு தங்களுக்கு வேலை செய்வார்கள். எனவே நமது வேற்றுமைகள் நீங்கி எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று கருதித் தன்மானத்துடன் வாழத் தொடங்கும் அன்றுதான் நாம் தமிழ் வீரராவோம். தமிழ் மன்னருமாவோம். (கைதட்டல்) ஒருவன் செல்வாக்காக வாழ்வதைப் பார்த்துப் பொறாமை கொள்பவன் தமிழ்நாடு தமிழருக்கே என்று எவ்வாறு கூற முடியும்? தமிழ்நாடு பார்ப்பனருக்கே என்றுதான் அவன் கூறவேண்டும்.
1938-ம் வருட தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டிற்குப் பிறகு சென்னை மாகாணம் தமிழ்நாடு பெருமை பெற்றதென்றால் அது தமிழர்களின் ஒற்றுமையால் என்றிருக்கவேண்டும். மானத்தைக் கருதுங்கள். சுயநலம், பெருமை, பதவி ஆசை முதலியவைகளைக் கைவிடுங்கள்.
03 வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
இன்று இவர்கள் செய்வது orcncn?
ஜஸ்டிஸ் மந்திரிகள் ஆட்சி காலத்துப் பார்ப்பனர்கள் எவ்வளவு குறை கூறினார்கள்? ஜஸ்டிஸ் ஆட்சியைவிட வெள்ளையர் ஆட்சியே மேலென்று வெள்ளையரச் சொந்தம் பாராட்டினர். ஆம், உண்மைதான். நம்மை எப்படிஅவர்கள் சொந்தம் பாராட்ட முடியும்? வெள்ளையராட்சிதான் மேலென்று ஆச்சாரியார் 10 தடவை கூறினார். பிரகாசம் 100 மூறை கூறினார். சத்தியமூர்த்தியோ 1000 மூறை கூறினார். அன்று நம்மை அவர்கள் எவ்வளவு இழிவாகப் பேசி வந்தாலும் இன்று பதவி வகிக்கும் அவர்களால் என்ன செய்ய முடிந்தது? அன்று மங்களூரில் ஒரு வெள்ளை நீதிபதி அபராதம் கட்ட வகையில்லை என்று கூறிய பெண்ணிடம்: தாலியின் நிலையை அறியாது கழுத்தில் அதோ தங்கமிருக்கின்றதே என்று கூறியது தான் தாமதம், உடனே பார்ப்பனர்கள் தாலி அறுத்துவிட்டான் என்று கூச்சலிட ஆரம்பித்தனர். அந்நீதிபதியின் வெறும் வாய்வார்த்தையால். ஜஸ்டிஸ் கட்சி தாலியறுத்தது என்ற வரை சென்று கடைசியில். ஸர்.ஏ.ராமசாமி முதலியார் தாலி அறுத்தார் என்றாகிவிட்டது. ராமசாமி. முதலியார் தேர்தலில் தாலியறுத்தவருக்கு ஓட்டா என்று சில தாலி கட்டிய அம்மாமார்கள் கூறிச் சத்தியமூர்த்திக்கு ஓட்டுக்கேட்டனர். அத்தகையவர்கள் இன்று என்ன செய்தார்கள் தெரியுமா? 75 வயது பாட்டியைச் சிறையிலிட்டனர். அந்த அம்மையார் பள்ளிக்கூடத்தின் முன் நின்றதும், ஒரு சப்இன்ஸ்பெக்டர். முன்வந்து “அம்மா உங்களை அரஸ்டு செய்திருக்கிறேன்” என்றாராம். உடனே “வாடா என் கண்மணியே, இதற்குத்தானே நெடுநாளாக
காத்திருந்தேன்!” என்று கூறி கைடக்கெடுத்து திருஷ்டி கழித்தாராம் அந்த மூதாட்டியார். இதை ஒரு நண்பர் சொன்னார். இதற்குப் பிரதிப் பிரயோஜனம் சிறைதானா? எந்த அரசியல் - தேசியவாதியாகிலும் என்னிடம். முன் வந்து ஆம் என்று கூறட்டுமே பார்ப்போம்.
பேச்சுரிமை எங்கே?
லண்டனில் பெண்கள் சட்டசபை மெம்பர்களின் வீட்டுக் கண்ணாடிச் சன்னல்களை உடைப்பார்கள், வின்சென்ட் சர்ச்சிலை ஒரு அம்மையார். ஒரு சமயம் சவுக்கால் (சாட்டை) அடித்தார். அதற்காக சர்க்கார் ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொண்டார்களா? கொஞ்சநாளைக்கு முன்பு வைக்கத்தில் பெண்கள் 6- மாதம் தொடர்ந்து சத்தியாக்கிரகம் செய்தனர். அதனால் பலநாள் கோயில்பூசைகள் தடைபட்டன. அதற்காக அப்பெண்களை ஒரு போலீஸார் கூடத் தொடவில்லை. தண்டிக்கவும் இல்லை. இது ஒரு. அற்ப காரியம். இந்தி ஒழிக என்றார்களாம். இதற்கா சிறைவாசம். யார். ஜெயிப்பது பார்ப்போம் என்று வெட்கமில்லாது கூறுகின்றாய். (வெட்கம், கூச்சல்) அதை எண்ணிடத்துச் சொல். அல்லது மீசையிருக்கும். தலைவரிடத்தில் சவால் போடு. அப்பொழுது உண்மையில் உனக்கு.
குடிஅரசு - 1938 (2) — லை
ஆண்மையுண்டென எண்ணுவேன். அதைவிட்டு அன்புப் பெண்ணிடத்தா உன்வீரம் காட்டுவது? 75 வயது பாட்டி இடத்தா? எங்களைச். சிறையிலடைத்துச் செக்கிழுக்கவும், இரும்பு உலக்கை பிடித்து நெல்குத்தவும் சொல். பெண்ணையா இவ்வாறு துன்பத்திற்காளாக்குவது?. அவர்கள் என்னதான் குற்றம் செய்தார்கள்? இந்தி வேண்டாம் தமிழ்தான். வேண்டுமென்றனர். இதைச் சொல்ல ஒரு பெண்ணிற்கு இந்நாட்டில். உரிமையில்லையா? எங்கே நீங்கள் கூறிய பேச்சுரிமைகள்? 5 ஆயிற்று.
8 ஆயிற்று. இந்த வாரம் 4 பெண்கள் சிறை சென்றனர். அடுத்த வாரமும். இதோ இங்கிருக்கும் அம்மையாருடன் இன்னும் சிலபேர் சிறைக்கு வரத் தயாராக விருக்கின்றனராம்.
அதுதான் போகட்டும். இக்காங்கரஸ்காரர் எல்லா இந்திய காங்கரசின். தீர்மானத்திற்காவது மதிப்புக் கொடுத்தார்களா? இந்திப் பிரச்சனை: வகுப்புக் கலவரத்தை உண்டாக்குகின்றது. அபிப்பிராய பேதங்களைத் திருத்துங்கள் என்று கூறினார்களே அதைக் கவனித்தார்களா?'
காங்கரஸ் மந்திரிகள் இந்நிலையில் மேலும் சிறையிலடைப்போ மென்றால் நான் ஆச்சாரியார் மேல் குறை கூறுவதா? அல்லது உங்கள். மேல் குறை கூறுவதா? நீங்கள் அன்றே சரியாக நடந்திறாந்தால் இந்த நிலைமை வந்திருக்காதல்லவா?
“ஆனந்த விகடன்” சென்ற வாரத்திற்கு முதல் வாரத்தில் ஆச்சாரியார் பிடிவாதக்காரரல்ல பொது மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்புக். கொடுப்பவரே. அதற்காகத் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவும். பின்வாங்க மாட்டார். தேசீயக் கொடியைக் கைவிடவில்லையா? பப்ளிக். பிராஸிகூடர் தீர்மானத்தைக் கைவிடவில்லையா? ரோட்டுப் பெயர். மாற்றத்தைக் கைவிடவில்லையா? தாழ்த்தப்பட்டோர் ஸ்காலர்ஷிப் பிடித்தத்தைக் கைவிடவில்லையா? (இன்னும் இதுபோன்ற 20 விஷயங்களை காட்டுகிறது) இந்திக் கட்டாய பாட விஷயத்தில் மட்டும். ஆச்சாரியார் ஏன் அவ்வளவு பிடிவாதம் காட்டவேண்டும்? இந்தியைப் பலரும் வரவேற்கின்றனர். ஒருசிலர்தான் மறுக்கின்றனர் என்று கருதித். தானே” என எழுதுகின்றது. ஆதலால் இக்கிளர்ச்சி - இந்தி எதிர்ப்பு பொதுமக்கள் கிளர்ச்சிதான் என்பதை நீங்கள் ஆச்சாரியாருக்குக் காட்ட வேண்டும். ஆனால் சென்ற வாரம் சென்னை தேசியப் பத்திரிகைகள். இந்த எதிர்ப்புக்காரரை காலிகள் என்றும், துரோகிகள் என்றும்
எழுதியிருந்தன. அதே பத்திரிகைகள் இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு 30000 பேர் வந்திருந்தனரென எழுதியிருந்தன. உத்தியோகத்தைப் பற்றிக். கவலையில்லை. இதைக் கண்டு நான் மிகுந்த ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் 30000 பேர் காலிகளில் 3 பேர் நல்லவர்களாக அவர்கள் கண்களுக்குப்பட்டன போலும். ஒரு மூட்டைக் கல்லில் 3 அரிசியிருந்தால்.
05 வரயாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 27
அரிசியைத் தானே வெளியில் எடுத்து எறிய வேண்டும். நமது ஒற்றுமையின்மையை அப்பத்திரிகைகள் நன்றாக அறிந்திருக்கின்றன. அதனால்தான் வாய்கூசாது அவ்வாறு கூறுகின்றன. உத்தியோகத்தைப். பற்றி - மந்திரி பதவியைப் பற்றி நமக்குக் கவலை வேண்டாம். அவர்களே. ஆளட்டும் அல்லது வெள்ளையரோ வேறுயாரோ ஆளட்டும். ராமன்: காலத்தைப் போல 1 ஜதை செருப்பு வேண்டுமானாலும் நாட்டை ஆளட்டும். (கைதட்டல்) இஷ்டப்பட்டவர்கள் ஆட்சியை நடத்தட்டும். நாம் ஒழுங்காக அவர்களிடம் வேலை வாங்குவோம். எங்களால்தான். அக்குதிரை மீது சவாரி செய்ய முடியும், அவ்வண்டியை நாங்கள் தான். ஓட்டமுடியும் என்று ஆச்சாரியார் கூறுகின்றார். ஆனால் வண்டியைக்: குடையடிக்கவிடாது பார்க்க வேண்டிய பொறுப்பு நம்மைச் சேர்ந்தது அந்தப் பாத்தியம் நமக்குத்தான். சரியாகக் குடையடிக்காது ஓட்ட முடியவில்லையென்றால் கீழே இறங்கி ஓட்டட்டும். நாம் வண்டி ஓட்ட வேண்டாம். வண்டியைக் கவிழ்க்காது சந்து பொந்தில் ஓட்டிச் சென்று நம்மைக் கொள்ளையடிக்காது பார்த்துக் கொள்ள வேண்டாமா? யோக்கியமாக வேலை வாங்க வேண்டாமா? நாம் மந்திரி பதவியைப் பெற விரும்புகிறோமென்று ஆச்சாரியார் கூறுவார். வண்டியினுள். இருக்கும் நான்கு பேரும் நான்கு பக்கமாக திரும்பிக் கொண்டால். நிச்சயம் வண்டியைக் குடையடித்து விடுவார்.
அன்று நடந்தது எண்ணி
நான் சிறைக்குப் போவதற்கு முன்பு முதலில் மோசம் செய்தது சென்னை என்றே கூறுவேன். பெரியார் தியாகராயச் செட்டியாரையும், டாக்டர் நாயரையும் அந்தக்காலத்து என்ன பாடு படுத்தினர்! தொண்டர்கள். தங்கள் வீட்டுப்பெண்களை வைதனர் என்றதற்குக்கூட ஆச்சாரியார். ஆத்திரம் பொங்காது இன்று தாய்மார்களைப் பச்சிளங் குழந்தைகளுடன். கிறையிட்டாரே! உங்களுக்குத் தெரியுமா? அன்று அவர்கள் என்ன. செய்தார்களென்று என்னை விட சென்னையிலுள்ள நீங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம். தமிழர் நன்மைக்கு உழைத்த பாபத்திற்காக தியாகராயச் செட்டியாரின் வீட்டுக்கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர். கதவைத் தட்டினர். பலவாறு பலாத்காரம் செய்ய முனைந்தனர். வீட்டிலிருந்த தியாகராயரின் மனைவி தனது கணவனை உள்ளே. வைத்துக் கதவைச் சாத்திவிட்டு வெளியில் வந்து அங்கு நின்று கலகம் செய்தவர்களிடம் முந்தானை ஏந்தி மாங்கல்யப்பிச்சை கேட்கவில்லையா? டாக்டர் நாயரின் மண்டை உடையவில்லையா? அன்று அதிகாரம் அவர்களிடத்திலிருந்தும் அவர்கள் யாரைச் சிறையிலிட்டனர்? எந்த அம்மாமாரைச் சிறை பிடித்தனர். இத்தகைய பலாத்காரச் செயல்கள். செய்வது தவறுதான். அவைகளை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது சிறுவயதில் பற்றி யெரியும் ஒரு வீட்டை அணைப்பவரை
குடிஅரசு - 1938 (2) —— 00
கோபிப்பேன்! வலியச் சண்டைக்குப் போவேன். அடிப்பேன். அடியும் படுவேன். ஆனால் நான் என்று பொதுவாழ்வில் நுழைந்தேனோ அன்றே பலாத்காரம், வசவு இவைகள் செய்வது தவறெனக் கருதினேன்.
பலாத்காரம் கூடவே கூடாது.
அன்று முதல் இதை ஒவ்வொரு கூட்டத்திலும் கூறி வருகிறேன். சிறிது துடி துடிப்புள்ள தோழர்களுக்குக் கூறுகின்றேன். ஒருவரை வைவதாலோ, அடிப்பதாலோ நமது லட்சியம் கைகூடாது. அதை ஒருவர் விரும்பினால் வங்காளத்திலுள்ளதுபோல் நம்மிலிருந்து பிரிந்து தனிச் சங்கம் பலாத்காரத்திற்கென்று ஒன்று வைத்துக்கொள்ளட்டும். அவர்களுக்கு இங்கு - இத்தமிழரியக்கத்தில் வேலையில்லை. இவ்வொரு கொள்கை: ஒழுங்காக நடைபெற்றால்தான் நானும் தலைவரும் மற்றவர்களும் இதிலிருப்போம். சற்று ஒழுங்குக்கு மாறாக நடக்கிறதென்று கண்ட உடனே விலகியே தீருவோம். நமக்கென்ன அறிவில்லையா? திறமை யில்லையா? பார்ப்பனர்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள்? உச்சிக் குடுமியைக் கத்தரித்தா? ஒருவரை அடித்தா? சென்ற வாரம் சென்னையில். நடந்ததாகப் பார்ப்பனப் பத்திரிகைகளால் கூறப்படும் சம்பவம்: உண்மையில் நடந்திருக்குமென்று நான் கருதவில்லை. அது இந்தி எதிர்ப்பை உடைக்க - அமுக்க வேண்டுமென்றே செய்த சூழ்ச்சியாகும். யாரோ 'தினமணி' “ஆனந்த விகடன்” காரியாலயங்களில் கல்லெறி என்றார். பத்திரிகைகளைக் கூர்ந்து கவனிக்கும் போது இது இட்டுக் கட்டிக் கூறியதென்றே தெரிகிறது. எனது அருமை நண்பர் பாசுதேவ் “தினமணிக் எரியாலயத்தார் ஈயத்துண்டுகளை எறிந்ததைப் பார்த்தேன் என்று கூறுகின்றார்.
சூழ்ச்சிகளுக்கு அஞ்சேல்.
நேற்று “தினமணி! ஈயத்துண்டு விலையுள்ளதல்லவா? அதை: எப்படி எறிந்திருக்க முடியும் என்று கேட்கின்றது. விலை கோடி ரூபாய் இருக்கட்டுமே! ஆத்திரம் கொண்டு எறிபவன் அதன் விலையையா பார்ப்பான்? மேலும் அழுக்குத் தண்ணீரையும் எச்சலையும் துப்பினால். எவனாவது சும்மாயிருப்பானா? அன்றே நினைத்தேன் எனக்கு சர்க்கார் அழைப்பு வருமென்று. நான் ஆதி முதல் அஹிம்சை வேண்டும், பலாத்காரம் கூடாதென்று கூறி வருகின்றேனாதலால் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்யப்பட்டாலும் சிறிதும் அஞ்ச வேண்டாம் என்று கூறுகின்றேன்.
நிற்க, சூலையில் நடைபெற்ற சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தி எதிர்ப்பாளர் கூட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்த பார்க்கில் அதே நேரத்தில் காங்கரஸ்காரர் உள்ளே புகுந்து கொள்வதா? பார்க்கில் கூட்டம் நடத்த இந்தி எதிர்ப்பாளர்க்குத்தான் உரிமையுண்டு எனக்: கூறவில்லை. இவர் அனுமதிபெற்ற நேரத்திற்கு முன்போ பின்போ நடத்தட்டுமே. அதைவிட்டு அதே நேரத்தில் முன்னாடியே உள்ளே.
97 ௨ வரயாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 27
புகுந்து கொண்டால் என்ன அர்த்தம்? மேலும் கல்லை வாரி யிறைக்கவும் தலைவர்கள் மீது எச்சில் துப்பவும், பெண்களை வையவும் என்ன காரணம்? இதை நாங்கள் சொல்லவில்லை. காலித்தனம் செய்தது யாரென்று சர்க்கார். ரிகார்டில் பாருங்கள். போலீசாரால் அடி வாங்கினவரைப் பாருங்கள். இதைக் கண்டு நாம் ஓடுவதா?
காங்கரஸ் ஆட்சி ஓஸ்தியா?
ஜஸ்டிஸ் கட்சியின் 15 வருட ஆட்சியை விட காங்கரஸ்காரர்களின். இன்றைய ஆட்சி எந்த விதத்தில் சிறந்தது? அவர்கள் ஆட்சி எந்தவிடத்தில். தவறானது என்பதை எந்த தேச பக்தனாவது என் முன் வந்து ஆதாரத்துடன். கூறினால் இன்றையிலிறாந்து எனது பிரசாரத்தை விட்டுவிடுகின்றேன். எந்த தேதியில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமாணலும் கூறட்டும். ஜஸ்டிஸ் கட்சியார் என்ன தப்பு செய்தார்கள்? காங்கரஸ்காரர்கள். என்ன நன்மை செய்தார்கள்?
ஜஸ்டிஸ் கட்சி செய்த நன்மைகள்:
ஜஸ்டிஸ் மந்திரிகள் ஆட்சியிலிருக்கும் மூன் சென்னை அரசாங்கம் கல்விக்காகச் செலவிட்டது ஒரு கோடியே நாற்பது லட்சம். அந்த ரூபாய்கள் பெரும்பாலும் பார்ப்பன மாணவர்கட்கும், பார்ப்பன. அதிகாரிகட்கும், பார்ப்பன ஆசிரியர்கட்கும் பயன்பட்டு வந்தன. அப்பொழுது பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படிப்பு மிகக் குறைவாகவிருந்தது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சிக்கு வந்த பின்னர் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவிட்டனர் இது 1936 ம் வருடக் கணக்காகும். முன்பிருந்ததைவிட ஜஸ்டிஸ் ஆட்சியில் 2 பங்கு உயர்த்தப்பட்டது. இதனால் 100 க்கு 200 பேர் பார்ப்பனரல்லாத மக்களும், 10066 300 பேர் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளும் படிக்க வசதி கிடைத்தது அதனால்தான் இன்று பார்ப்பனரல்லாதாரிலும் சிலர் படிப்பாளிகள் என்று கூறிக் கொள்ளுகின்றனர். 100க்கு 100 கல்விக்காகச் செலவிடுவோம். என்று கூறி 100க்கு 100 ஓட்டு வாங்கிவிட்டதாகப் பீத்திக் கொண்ட காங்கரஸ்காரர்கள், கல்விக்கு எவ்வளவு மான்யம் ஒதுக்கினார்கள். தெரியுமா? வடாற்காட்டில் 240 பள்ளிகளையும், கோவையில் 50 பள்ளிகளையும், மலையாளத்தில் 200 பள்ளிகளையும் மூடிவிட்டனர். நான் பொய் சொல்லவில்லை. சர்க்கார் கணக்கு கூறுகின்றது. இதனால்: எத்துணை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதை நீங்களே. யோசித்துப் பாருங்கள்.
யார் வீட்டுப் பணம்?
ஆச்சாரியாரிடம் இவைகட்குப் பணம் கேட்டால் பணமில்லையே எங்கிருந்து கொடுக்கிறது என்று கேட்கிறார். இவர் அப்பா வீட்டிலிருந்தா
குடிஅரசு - 1938 (2) — 0
கொடுக்கிறார்? அன்று “அதிக வரி” “கொள்ளை போகிறது! என்று கூச்சலிட்டனர். ஆனால் இவர்கள் இடைக்கால மந்திரிகள் நிரந்தரமாக குறைத்த 75 லக்ஷத்தைக் கூட அமுலுக்குக் கொண்டு வரமுடியவில்லை. அவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதா செய்தார்கள். ஒரு மாஜி கவர்னரை: வைத்தல்லவோ வரி குறைப்புத் திட்டம் வகுக்கப்பட்டது. வரவு செலவில் மீதி கூட வைத்துக்கொள்கிறார்களே. அதைக் கேன்சல். செய்துவிட்டு இன்று 1% கோடி 1% கோடி 1% கோடி என 4% கோடி எதற்காக கடன் வாங்க வேண்டும்?
ஆச்சாரியார் ஆட்சிப்பலன்
“தம்பி தலையெடுத்துத் தறிமுதலும் பாழாயிற்று” என்பது போல ஒரு காசு மீதியில்லை. எவ்வளவு கடன். என்ன ஆகாய விமானம் பறக்கிறதா! போக்குவரத்திற்கு அதிகச் செலவா! சுகாதார வசதிக்கா? படிப்புக்கா? எதற்கு? அதிலும் கெளரவ டாக்டர்கள் வேறு. அவர்கள் நோயாளிகளின் கையைப் பார்ப்பார்களா? அல்லது மடியைப் பார்ப்பார்களா? (கைத்தட்டல்) பள்ளிக்கோ, ரோட்டிற்கோ, ஸ்தல ஸ்தாபனங்கட்கோ ஒருவித உதவித் தொகையுமில்லை. இதில் என்ன சவாரி? ஒரு சாண் முன்னே போனால் 2 கஜம் பின்னால் தள்ளுகிறது. இதைப் பற்றி ஒருவன் குண்டூரில் கேட்டால் “எனக்கு நிர்வாகப் பழக்கமில்லை. எனக்கு வக்கீல் வாதாடத்தான் தெரியும். அதுவும் ஒரு கட்சிக்காக” என்று கூறுகிறார் ஆச்சாரியார். சென்னை மாகாணத்தில் காங்கரஸ்காரர்கள் கைப்பற்றிய எந்த முனிசிபல், ஜில்லா போர்டு, பஞ்சாயத்து ஆகியவைகளில். கலவரமில்லை. கண்டராக்ட் லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறிச் சென்றவர்கள். தாங்களே - மந்திரிகளே லஞ்சத்தில் தலையிடுகின்றனர். அதுவும் 1 ரூபாயா 2 ரூபாயா? 5 லகஷத்தில் மந்திரிகளுக்கு என்ன வேலை?
என் வேண்டுகோள்.
எனவே நீங்கள் அனைவரும் கட்டுப்பாடாக ஒற்றுமையுடன் இவைகளை ஒழிக்க வேலை செய்யவேண்டும். இதில் தாய்மார்கள். உதவியில்லாது ஒன்றும் செய்ய முடியாது. தெருக்கள் தோறும் தாய்மார் படை செல்ல வேண்டும். இழந்த மானத்தை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இவைகளை இங்கே வந்துள்ள தாய்மார்கட்கு மட்டும் கூறவில்லை... நீங்கள் வீட்டில் பூட்டி வைத்து வந்திருக்கும் அத். தாய்மார்கட்கும் கூறுகின்றேன். “நாங்கள் ஊரானுக்கு அடிமையானோம். நீங்கள் சென்று அடிமையை நீக்குங்கள்” எனக் கூறி அவர்களை: வெளியே அனுப்புங்கள்.
எனது அருமை நண்பர் ஆச்சாரியார் தயவால் குறைந்தது 1 வருடமாவது சிறையில் ஓய்வு கிடைக்கும். ஏனெனில் எனது 4, 5 வருடத்திய அலைச்சல் - கஷ்டம் அவருக்குத் தெரியும். ஒரு வருடத்திற்
29 ௨ வரயாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
காவது ஓய்வளித்து உடலைத் தேற்றி அனுப்ப வேண்டும் என்று அவர் கருதியுள்ளார். நான் சிறைக்குள்ளிருக்கும் காலத்து எனக்கு எனது தாய்மார்கள்தான் உதவி செய்யவேண்டும்.
தொழிலாளருக்கு ஓரு வார்த்தை
கடைசியாகத் தொழிலாளர்களைப் பற்றி ஒரு வார்த்தை. சென்ற ஆண்டு ஒரு நண்பர் என்னிடம் நான் தொழிலாளர்களைப் பற்றிக் கவனிப்பதில்லை என்றார். தொழிலாளர்களிடத்து நான் நல்ல பாடம் கற்றுத் கொண்டேன். முன்பு நாகைத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் நான். ஈடுபட்டிருந்தபோது தொழிலாளர்கள் என்னை ஒரு சாமியாரைப் போல் கருதி - எனக்கு நல்ல மதிப்புக் கொடுத்தார்கள். 50, 60 ஆயிரம் ரூபாய் தொழிலாளர் சங்கத்திலிருந்து. 5000 தொழிலாளருக்கு மேலிருந்தனர். அக்காலத்து பார்ப்பனர்களே தலைவர், காரியதரிசியாகத் தங்களை ஆக்கிக் கொண்டு எங்களை மோசம் செய்தனர். நான் வேலை நிறுத்தம் கூடாதென்றேன். அவர்கள் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு வேலை: நிறுத்தம் செய்யச் செய்து பத்திரிகைகாரர்களிடமிருந்தும், ரயில்வேக்காரர். களிடமிருந்தும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தொழிலாளர்களுக்குத் துரோகம். செய்தனர். அப்பொழுது வேலைநிறுத்தம் கூடாதென்று தொழிலாளர் நன்மைக்காகப் பாடுபட்ட என்னையும், தோழர் சிங்காரவேலுச் செட்டியாரையும் சர்க்கார் கைது செய்தார்கள். ஏதோ காரணத்தால் அன்று மந்திரியாயிருந்த பனகல் அரசர் எங்களுக்காக கவர்னரிடம் பரிந்து பேசி என்னையும் சில நண்பர்களையும் விடுதலை செய்தனர். என்மீது கொண்டு வந்த வழக்கையும் சர்க்கார் வாபீஸ் வாங்கிக் கொண்டனர். அன்று தொழிலாளர்க்காக எந்தப் பத்திரிகையாவது சிறிது அனுதாபம். காட்டிற்றா? தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்து லாபமடைந்தனர். ஒருசிலர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியையும் ஒழித்தனர்.
போலித் தலைவர்களை நம்பாதீர்
ஆனால் இன்றும் பொன்மலை போன்ற இடங்களில் அவர்கள். சூழ்ச்சிக்ககப்படாத தொழிலாளர்களிருக்கின்றனர். என்னை அழைக்கும் தொழிலாளர்களிடத்துப் போக அதிலிருந்து பயப்படுகின்றேன். வீணே. தொழிலாளர்களிடையே கலகத்தை ஏற்படுத்திப் பிற்போல் லாபமடைய, வியாபாரம் செய்ய நான் விரும்பவில்லை. நான் தொழிலாளரை விட்டு விலகவுமில்லை. காலம் வரும்போது தொழிலாளர்கள் இன்று தங்கள். தலைவர்கள் என்று யாரை நினைத்து கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் யோக்கியதையைக் கூடிய கீத்கிரம் உணரப்போகின்றார்கள். நாங்கள் தொழிலாளர்களை மறக்கவில்லை; விலக்கவுமில்லை. எங்கள். ஒவ்வொரு மூச்சும் அவர்களால் அவர்களுக்காகத்தானிருக்கிறது தமிழ்நாடு தமிழனுக்காக - தமிழ்நாடு மானத்துடன் வாழ தொழிலாளர்கள்.
குடிஅரசு - 1938 (2) —— 30
தான் உதவப் போகிறார்கள். எனவே, எனது தொழிலாள நண்பர்களே! போலித்தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நாங்கள் தொழிலாளர்களை விலைக்கு வாங்கி அவர்களுக்குள் சண்டை உண்டாக்கி அதன் பேரால். வாழ விரும்பவில்லை. காங்கரஸ் யோக்கியதையும் அதன் பேரால். தொழிலாளர் தலைவர்களானவர் யோக்கியதையும் விளங்கி வருகிறது. பசுமலை, சென்னை, கோவை, பம்பாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களே இதற்குச் சான்று. தென்னிந்திய நல உரிமைச்சங்க மனநாட்டிற்குப் பிறகு தமிழர்கள் தொழிலாளர்களையே நம்பியிருக்கின்றார்கள். அவர்களும் எதனால் நன்மை என்பதை அறியப் போகின்றார்கள்.
போய் வருகிறேன்.
நான் இறுதியாக விடைபெற்றுக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும். தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அங்கத்தினர்களாகச் சேர்ந்து அதன் மேம்பாட்டிற்கு ஆதரவளித்து, உங்கள் பின் சந்ததிகள் சுகமாக வாழ உதவி செய்யுங்கள். அன்று ஜஸ்டிஸ் மந்திரிகளைச் சரிகைக் குல்லாயென்றும், ஜமீன்தார்களென்றும், தேசத்தைக் காட்டிக் கொடுத்துக் கொள்ளையடிக் கிறார்களென்றும் கூறினர். எனது அருமைத் தலைவர் பன்னீர்செல்வம். 3-வருடம் மாதம் 5000 ரூபாய் வாங்கினார்.
இன்று அவரிடம் என்ன மீதமிருக்கின்றது? பொப்பிலி ராஜா உங்களைக் காட்டிக் கொடுத்து என்ன காரியத்தை பெற்றார்? ஆனால்.
ச். உஸ்மானைப் பற்றி அன்று எவ்வளவு குறை கூறினார்கள். தடியடிப் பிரயோகம் செய்தார் என்றும் அவர் பேரைக் கூறி ஜஸ்டிஸ் இயக்கத்தையே குறை கூறினர். அவரால் ஜஸ்டிஸ் இயக்கத்திற்கு இழிவே தவிர ஒரு நன்மையுமில்லை. அதே உஸ்மானுடன் தான் இன்று ஆச்சாரியார் கட்டிப் புரளுகிறார். ஆச்சாரியார் வாக்கு உஸ்மானுக்கு மதக் கட்டளையாகவும் உஸ்மான் பேச்சு ஆத்சாரியாருக்குக் கவசமாகமிருக்கிறது. அன்று தடியடி செய்தவர் உஸ்மானானால் இன்று ஆச்சாரியார் அவரை: உண்மைத் தோழராகக் கொள்வாரா? நாளை நாங்களும் 4 அணா கொடுத்து காங்கரசில் மெம்பராகச் சேர்ந்தோ அன்றி ஆச்சாரியார் செய்வது ளி என்று கூறி விட்டால் எங்களையும் குரு என்று கூறிவிடமாட்டாரா? அவர்கள் செய்கை தவறு என்றால் எல்லாப். பழிகளும் நம்மீது; தவறில்லை சரி என்று கூறிவிட்டால் வானமளாவப் புகழ்வார்கள்.
உங்கள் கடமை:
இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன புதிய காரியங்களைச் செய்து தமிழ்நாட்டைப் பொன்னாடாகச் செய்துவிட்டனர். இதை எண்ணி நீங்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உயிர்பித்தால்தான். முன்னேற முடியும். அவர்கள் கூறியது போல் இக்கட்சி ஜமீன்தார் கட்சியோ, பணக்காரர் கட்சியோ அல்ல. ஜமீன்தார்களும் பணக்காரர்களும்.
N வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
பிடிக்கப் பிடிக்க ஓடுகிறார்கள். நமக்கு இந்தப் பார்ப்பனத் துவேஷம் வேண்டாமென்று ஏழைகளின் நன்மைக்காக ஏற்பட்ட கட்சியாகும் இது எனவே இவைகளை நீங்கள் நன்றாக ஆலோசித்து இக்கட்சியை உயிர்ப்பித்தால் தான் அது தமிழர் முற்போக்கடைவதற்காகச் செய்யும் வழி என்று கூறுவேன்.
நாட்டில் இந்த நிலையை நீங்கள் உண்டாக்கினால்தான். ஆச்சாரியாரும் காந்தியாரும் தங்களால் வண்டியை ஓட்ட முடியவில்லை. என்று ஓடுவர். நாமும் இல்லை, இல்லை நீங்களே ஓட்டுங்கள் என்று கூறலாம். எனவே, தமிழர்களே! ஒன்றுபட்டுழையுங்கள். இந்த அருமையான. சந்தர்ப்பத்தை எனக்கு அளித்த உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறி எனது பேச்சை முடித்துக்கொள்ளுகின்றேன்.
குறிப்பு: சென்னை கடற்கரையில் 30.11.1938இல் ஸர்.ஏ.டி.பன்ணிசெல்வம். தலைமையில் சென்னைப் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற.
தமிழர் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 11.12.1938
குடிஅரசு -1938 (2) ௮ 0
பெயியார் சிறைவாசம்
டிசம்பர் 6-ந்தேதி தென்னாட்டு சரிதத்தில் ஒரு முக்கியமான. நாளாகும். அன்றுதான் சுயமரியாதை இயக்கத் தலைவரும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் ஆகப் போகிறவரும், தமிழர்களைத் தட்டி எழுப்பி சுயமரியாதையுடன் வாழக் கற்பித்தவரும், தமிழ்நாட்டின் தனிப்பெரும். தலைவருமான பெரியார் ஈ.வெ.ராமசாமி தமிழர் விடுதலைக்காகச் சிறை
புகுந்தார். தமிழர் சிதம் எழுதப்படும் போது அந்நன்னாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதற்கு ஐயமே இல்லை. ஒரு பெரியார் சிறை புகுந்ததாளை நன்னாள் எனக் கூறியது பலருக்கு வியப்பாக இருக்கலாம். சிறை புகுவது துன்பம் தரக்கூடியதாகையால். கிறைபுகும் ஒரு நாளை நன்னாள் எனக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காதிருக்கலாம். நாம் வேண்டுமென்றே அந்நாளை நன்னாள் என்றோம். அந்நாள் பெரியாருக்கு துன்பகரமான நாளாயிருந்தாலும் தமிழர்களுக்கு நலந்தரக்கூடிய நாளாகும். பெரியார் சிறை புகுந்தது மூலம் தமிழுலகம் புத்துயிர் பெறப்போகிறது; தமிழர்கள் அடிமை வாழ்வு நீங்கி சுயமரியாதை வாழ்வு - சுகவாழ்வு வாழப் போகிறார். நமது சந்ததிகள் ஆரியப் பீடையிலிருந்து விடுபட்டு தனித்தமிழ் வாழ்வு
- திராவிடப் பொது வாழ்வு - நல்வாழ்வு வாழப் போகின்றன. எனவே டிசம்பர் - 6 ந்தேதி நன்னாள் எனக்கூறுவது குற்றமாகுமா? ஆகவே ஆகாது. பெரியார் சிறை புகுந்த அந்நாள் தமிழர்களுக்கு நன்னாளே - பொன்னாளே ஆகும். பிறப்பால் கன்னடரான பெரியார், தாம் குடிப்புகுந்த நாட்டுப் பெருங்குடி மக்களின் விடுதலைக்காக தம்மையும் தம் குடும்பத்தையும் தம் செல்வத்தையும் தயக்கமின்றி சந்தோஷமாக - அர்ப்பணம் செய்துவிட்டார்.
சிறை புகுந்ததேன்? சிறை வாழ்வே சுகவாழ்வெனத் துணிந்துவிட்டார். ராஜபோகம். அனுபவிக்கும் வசதிகள் இருந்தும் அவற்றையெல்லாம் சுயமாகவே வெறுத்துச் சிறை புகுந்து கூழும் கஞ்சியும் உண்டு கல் அடித்தும் மண் சுமந்தும் உடலை வருத்தி தமிழர்களை ஈடேற்றத் தவம் செய்யச் சென்றுவிட்டார். அவர் சிறை வாழ்வைப் பெருவாழ்வாகக் கொள்ளும்
303 ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
நோக்கம் என்ன? “தமிழ்நாடு தமிழருக்கே சொந்தமாக வேண்டும், முழு உரிமையுடையதாக வேண்டும், வட ஆரியருக்கு உரிமையாகக். கூடாது, தமிழன் எந்நாளும் தமிழனாகவே வாழ வேண்டும்” என்பதற்காகவே அவர் சிறை புகுந்தார். அவர் எத்தகைய கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. சட்டமறுப்புச் செய்யவோ பலாத்காரச் செயலில் ஈடுபடவோ அவர் எவரையும் தூண்டவில்லை. பலாத்காரம் அல்லது ஹிம்ஸை அவருக்கு உடன்பாடானால் காங்கரஸ் பத்திரிகையான. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கூறுவதுபோல், அதை பகிரங்கமாகக் கூறப் பயப்படும் கோழையல்ல நமது பெரியார். தமது மனதில் தோன்றியதை: எவருடைய விருப்பையும் வெறுப்பையும் லக்ஷ்யம் செய்யாமல் பகிரங்கமாகக் கூறும் ஆண்மை நமது பெரியாருக்குண்டு. அவரது பெருந்தன்மைக் குணங்களைப் பற்றி காங்கரஸ் பத்திரிகையான. “நவசக்தி” கூறுவதைப் பாருங்கள்.
பெரியார் மாட்சி.
“சிறைப் பறவையாகிய இராமசாமி நாய்க்கர் வரலாற்றை விரித்துக் கூற வேண்டுவதில்லை. அவர் தம் வரலாற்றில் அறியக் கிடக்கும். நுட்பங்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன. இடையறாச் சேவை, சமத்துவ நோக்கம், சுதந்திர உணர்ச்சி, நட்புரிமை, 'தாட்சண்யமின்மை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமை, அஞ்சாமை, ஊக்கம், சோர்வின்மை, சலிப்பின்மை, எடுத்த வினையை முடிக்கும் திறன், காவு, சூழ்ச்சியின்மை முதலியன.”
உத்தமஸரச் சிறைப்படுத்தும் ஆட்சி நீதியுகடைய ஆட்சியா?
“நவசக்தி” சமயப்பற்றும் காங்கரஸ் பற்றும் உடைய பத்திரிகை பெரியாரோ சமய வெறுப்பும் காங்கரஸ் வெறுப்பும் உடையவர்; ஆகவே பெரியாருக்கு “நவசக்தி” எதிரியென்றே கூறவேண்டும். பெரியார் கொள்கைகளைத் தாக்கி “நவசக்தி” எத்தனையோ முறை எழுதியுள்ளதை தமிழுலகம் நன்கறியும். அத்தகைய “நவசக்தி” யுங்கூட பெரியார் குண: விசேஷங்களைப் புகழ்ந்தெழுத வேண்டுமானால் பெரியார் ஒரு உத்தம புருஷராக இருக்க வேண்டும் என்பது மிகையாகுமா? தமது எதிரிகளிட மிறாந்தும் இத்தகைய நற்சாட்சிப் பத்திரம் பெறும் மாட்சியுடையவர்கள். தமிழ்நாட்டில் - ஏன்? இந்தியாவில் - எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள்? இத்தகைய ஒரு உத்தமனை தண்டித்துச் சிறையிலடைக்கும் ஒரு சர்க்கார். நீதியுடைய சர்க்காராகுமா? ஜனநாயக சர்க்காராகுமா? அவரைச் சிறைப்படுத்திய காங்கரஸ் சர்க்கார் அவர்மீது சுமத்தும் குற்றமென்ன? 1938 மார்ச்சு 21-ந்தேதி 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கியிருப்பதாக காங்கரஸ் சர்க்கார் பிறப்பித்த உத்தரவை
குடிஅரசு - 1938 (2) ல
பலாத்கார முறைகளால் ஒழிக்கத் தோன்றிய இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்குக். காரணஸ்தர் நமது பெரியாரென்றும் மறியல் செய்ய மக்களைத் தூண்டினாரென்றும் ஆச்சாரியார் சர்க்கார் பெரியார் மீது குற்றம். சாட்டியிருக்கிறார்கள். இது எவ்வளவு தப்பான குற்றச்சாட்டென: ருசுப்படுத்த அவ்வளவு பிரயாசைப்படத் தேவையில்லை. வாஸ்தவத்தில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தோன்றியது இன்று நேற்றல்ல.
இந்தி எதிர்ப்புத் தோன்றியது எப்போது?
1930-ல் அதாவது கனம் ஆச்சாரியார் கட்டாய இந்தி உத்திரவு பிறப்பித்த 23.4.38-க்கு எட்டு வருஷங்களுக்கு முன் நன்னிலத்தில் கூடிய சுயமரியாதை மகாநாட்டில் இன்று விளம்பர மந்திரியாக இருக்கும் கனம்: எஸ். ராமநாதனே இந்தியைக் கண்டித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். கனம் ஆச்சாரியார் மந்திரியாக வருவாரென்றும் கட்டாய இந்தியை 125 பள்ளிக்கூடங்களில் புகுத்துவாரென்றும். அக்காலத்து யாராவது எண்ணிருந்தார்கள்! மற்றும் 1937-வது வருஷத்திலேயே மறைமலை அடிகள் “இந்தி பொது மொழியா?” என்ற கண்டன் சிறு நூலும் வெளியிட்டிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் தோழர் சோமசுந்தர பாரதியாரும் கட்டாய இந்தியைக் கண்டித்து கனம் ஆச்சாரியாருக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார். 1937 டிசம்பரில் திருச்சியில் கூடிய தமிழர் மகா நாட்டார் இந்தியைக்: கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிராப்பதுடன் சுவர்னர் பிரபுவிடம் தூது செல்ல வேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள். மற்றும் 1938 பிப்ரவரியில், காலஞ்சென்ற திவான் பகதூர் ஸர் கிருஷ்ணன் நாயரவர்களால் திறக்கப்பட்டு ஸர்.கெ.வி. ரெட்டிநாயுடு அவர்கள் தலைமையில் கூடிய காஞ்சீவரம் மகாநாட்டிலும் இந்தியைக் கண்டித்துத் தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 1938 ஏப்ரல் 21 ந் தேதி கட்டாய இந்தி உத்திரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே சில சுயநலக்காரரால், இந்தி எதிர்ப்பு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட தென்றும் அதற்குப் பெரியார் ஈ.வெ.ராவே காரணமென்றும் கூறுவது எவ்வளவு உண்மைக்கு மாநானதென்று நாம் கூறவும் வேண்டுமா?
இந்தி. எதிர்ப்பு தமிழர்களுக்கெல்லாம் பொது:
மற்றும் இந்தி எதிர்ப்பு சில சுயநலக்காரராலோ காங்கரஸ் எதிரியான பெரியார் ராமசாமியாலோ தோற்றுவிக்கப்பட்டதல்ல. இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழர்களுக்கெல்லாம் பொதுவான இயக்கம். தமிழர்களான இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்சி வாரியாக பார்த்தால். காங்கரஸ் கட்சி, ஜஸ்டிஸ் - சுயமரியாதைக் கட்சி, முஸ்லீம்லீக் கட்சி மெம்பர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மத
305 ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
வாரியாகப் பார்த்தால் சைவர், வைஷ்ணவர், நாஸ்திகர், சந்தேகிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் முதலியவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில். ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மை இவ்வாறு இருக்க பெரியார் ஈ.வெ.ராமசாமியே இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் கர்த்தா, அவராலேயே இந்தி மறியல் நடக்கின்றது எனக் கூறுவது எவ்வளவு அபாண்டப் பழி! வெறுக்கத்தக்கப் பொய்! படுமோசப் பிதற்றல்! பெரியார் ஈ வெ.ராமளமிலைச் சிறைப்படுத்துவதற்கு சர்க்கார் கூறும் பகிரங்கக் காரணங்கள் கண்துடைப்புத் காரணங்களே; ஊற்றுக்கு நிற்காத காரணங்களே அவரைச் சிறைப்படுத்தியதற்கு அந்தரங்க காரணங்கள் சில வுண்டு. அது விஷயமறிந்தவர்களுக்கெல்லாம். தெரிந்தவைதான். தென்னாட்டு அரசியல், சமூக நிலைமையை அறிந்தவர்கள். எல்லாம் உணர்ந்தவைதான். எனினும் பொதுமக்கள் அறிந்தவர்கள் எல்லாம் உணர்ந்தவைதான். எனினும் பொதுமக்கள் அறிந்திருக்கும் பொருட்டுச் சுருக்கமாக்கி கீழே விளக்குகிறோம்.
அந்தரங்க காரணம்.
பார்ப்பனரல்லாதார் மூன்னேற்றங் கருதித் தோன்றிய “ஜஸ்டிஸ்” கட்சியார் உழைப்பின் பயனாய் அரசியல் உலகத்தில் பார்ப்பனர் ஆதிக்கம். ஒருவாறு ஒழியவே, பார்ப்பனர்கள் காங்கரஸ் பேரால் ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்கிப் பொய்ப்பிரசாரம் செய்து அதன் செல்வாக்கை ஓரளவு குறைத்தனர். அத்தருணத்திலே நமது பெரியார். சுயமரியாதை: இயக்கத்தைத் தோற்றுவித்து பார்ப்பனர் செல்வாக்குக்கும் மதிப்புக்கும். காரணமாயிருக்கும் பார்ப்பன மதத்தைத் தாக்கிப் பிரசாரம் செய்யவும். எழுதவும் தொடங்கினார். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சுகவாசிகள்; அறைக்குள் இருந்துகொண்டு கட்சிப் பிரசாரம் செய்வார்கள்; பெரியார். அப்படிப்பட்டவரல்ல. ஊரூராய்க் கிராமம் கிராமமாய்ச் சென்று பிரசாரம். செய்பவர். ஆகவே தென்னாடு முழுதும் சுற்றுப்பிரயாணம் சென்று பிரசாரம் செய்து தமிழ் மக்களைத் தட்டியெழுப்பினார். ஆகவே பார்ப்பன. மதச் சூழ்ச்சிகளையும் புரோகிதக் கொடுமைகளையும் கொள்கைகளையும், பாமர மக்கள் நன்குணர்ந்து கொண்டு விட்டனர். மதத்தின் பேரால் மோக்ஷ நரகத்தின் பேரால் பாமர மக்களைப் பார்ப்பனர் ஏமாற்றி வந்த. காலம் மலையேறிவிட்டது. “பார்ப்பனரை அய்யரென்ற காலமும். போச்சே” என பாரதியார் பாடியது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகுதான் மெய்யாயிற்று. தென்னாட்டு சமூக வாழ்விலே பார்ப்பனருக்கு இருந்து வந்த மதிப்பு 100 க்கு 75 குறைந்துவிட்டதென்று தைரியமாகச் சொல்லலாம். இவ்வண்ணம் சுயமரியாதை இயக்கம் காரணமாக பார்ப்பன. மதமும் பார்ப்பன செல்வாக்கும் ஒடுங்கி வருவது கண்ட காங்கரஸ் பார்ப்பனர் சமஸ்கிருதத்தின் கிளையான இந்தியைத் தென்னாட்டில் புகுத்தி பார்ப்பனீயத்துக்கும் ஆரிய மதத்துக்கும் நாகரிகத்துக்கும் புத்துயிரளிக்கலாமென எண்ணினர்.
குடிஅரசு - 1938 (2) —— ௦
1923-ல் எச்சமிக்கை.
இச்சூழ்ச்சியை முதன்முதலில் கண்டறிந்தவர் நமது பெரியாரே. பார்ப்பனர் ஜீவனத்துக்கு வழி விடுவதை மனதில் வைத்துக்கொண்டு காங்கரஸ் பார்ப்பனர் தென்னாட்டில் இந்திப் பிரசார சபை ஏற்படுத்தி பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பணம் வசூல் செய்து இந்திப் பிரசாரத்துக்கு உதவி செய்து வரும் சூழ்ச்சியை உணர்ந்த பெரியார் 1926 மார்ச்சு 14 ந்தேதியிலேயே இந்திப் பிரசாரச் சூழ்ச்சியைக் கண்டித்து எழுதினார். அப்பால் காங்ரஸ்காரர் சென்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற போது, காங்கரஸ்காரர் பதவியேற்றால் இந்தியைக் கட்டாய பாடமாக்க முயற்சி செய்யக்கூடும் என அவர்கள் பதவி ஏற்கு முன்னமேயே ஒரு வதந்தி இந்தியா முழுதும் பரவிற்று. அதை உணர்ந்த திருச்சி கான் பகதூர் கலிபுல்லா சாகிப் அவர்கள் இடைக்கால மந்திரியாக இருந்தபோது ராஜிகிரி பிரசங்கத்தில் இந்திப் புரட்டை வன்மையாகக் கண்டித்துப் பேசினார். இந்தியை தேசியப் பொதுப் பாஷையாக்கச் செய்யப்படும் முயற்சி மாகாண மொழிகளுக்கு உலை வைப்பதுடன் இஸ்லாம் நாகரீகத்தையும், கலைகளையும் ஒழிக்கும் சூழ்ச்சி எனவும் அவர் வற்புறுத்தினார். அப்பால் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற கல்வி மான்களும் இந்திப் புரட்டின் யோக்கியதையை வெட்ட வெளிச்சமாக்கினர்.
பார்ப்பனத் தலைவர்கள் எதிர்ப்பு
தோழர்கள் டி.ஆர்.வெங்கடராம சாஸ்திரியார், சாரநாத அய்யங்கார். போன்ற பார்ப்பன அறிவாளிகள் எதிர்ப்பும் இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு உரமளித்தது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். காங்கரஸ்காரர் எதிர்பாராதபடி இந்தி எதிர்ப்பு வலுப்பெற்றுவிட்டதினால் அதை எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்ற துணிச்சல் காங்கரஸ் மந்திரிகளுக்குண்டாயிற்று. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கு நமது பெரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதாய் முன்னாடியே வெளிவந்த செய்தி காங்கரஸ் மந்திரிகளுக்கு அதிக பீதியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். பெரியார் ஜஸ்டிஸ் கட்சித் தலைவரானால் 6-மாத காலத்துக்குள் ஜஸ்டிஸ் கட்சி பழைய சக்தியைப் பெற்றுவிடுமென்றும், பெற்றால் அது காங்கரசுக்கு பெரிய எதிரியாகத் தீருமென்றும் காங்கரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்க வேண்டும். எனவே பெரியார் ஜஸ்டிஸ் கட்சி மணநாட்டுத் தலைவராகு முன்னமேயே கிறைக்கனுப்பப்பட்டிருக்கிறார் எனப் பலர் ஊகிப்பது அவ்வளவு தப்பான ஊகம் என்று கூறுவதற்கில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கத்தை. ஒரு திருடனாக உவமைப்படுத்தி அந்தத் திருடனைக் கையில் கிடைத்த ஆயுதத்தால் தாக்குவது குற்றமில்லையென கனம் ஆச்சாரியாரே பகிரங்கமாகக். கூறியிருப்பதினால் மேலே எடுத்துக்காட்டியபடி ஊகிப்போரை யாரும். கண்டிக்க முடியாது.
307 ௨. வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
எதிரிகள் நோக்கம் பலிக்குமா!
எந்த நோக்கத்துடன் பெரியார் சிறைப்படுத்தப்பட்டிருந்தாலும் சரி இந்தி எதிர்ப்பு இயக்கம் அடங்காதென்பதும் ஆரிய மதமும், நாகரிகமும். தமிழ்நாட்டில் பழைய செல்வாக்கைப் பெறாது என்பதும் உறுதி. சென்ற. 16 வருஷ காலமாக பெரியார் செய்த பிரசாரம் வீண் போகவே செய்யாது புராணப் புரட்டுகளையும் ஆரிய மத ஆபாசங்களையும் மக்கள். நன்குணர்ந்து விட்டனர். அவர் நாட்டிலே விதைத்த சீர்திருத்தக் கருத்துகள். முளைத்து பூத்து காய்த்துப் பழுத்துப் பலன்தரத் தொடங்கிவிட்டன. பாமர மக்கள்கூட பகுத்தறிவுணர்ச்சியுடையவர்களாகிலிட்டனர். இனி எதையும் குருட்டுத்தனமாய் நம்ப மாட்டார்கள். பெரிய பெரிய சிர்திருத்தக்காரர்கள் பன்னூற்றாண்டு உழைத்துச் சாதியாத காரியங்களை: நமது பெரியார் சுமார் 15 வருஷ உழைப்பினால் சாதித்துவிட்டார். 'சாதிக்கோட்டை தகர்த்தெறியப்பட்டுவிட்டது. கலப்பு மணங்கள் - புரட்சிகரமான கலப்பு மணங்கள் - தாராளமாக நடைபெறத் தொடங்கிவிட்டன. வாயில்லாப்பூச்சிகளாய் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களும்கூட - சுதந்தர உணர்ச்சியும் ஆண்மையும் பெற்றுவிட்டனர். அடுப்பூதும் பாவைகளாயிருந்து வந்த பெண்களும் சுதந்தர உணர்ச்சி பெற்றுவிட்டனர். ஆகவே பெரியார் கிறைப்பட்டதினால், அவரைச் சிறைபடுத்தியவர்கள் நோக்கம் எதுவா யிறாப்பினும் சரி அது நிறைவேறாதென்று தைரியமாகச் சொல்லி விடலாம்.
குடி அரசு அரிமானிகளுக்கு வேண்டுகோள்
கடைசியாக “குடி அரச” அபிமானிகளுக்கு ஒரு வார்த்தை. சென்ற 15 வருஷகாலமாக “குடி அரசை” வளர்த்து வந்த பெரியார் சிறைக்குச் சென்றுவிட்டார். ஆகவே “குடி அரசை” பேணும் பொறுப்பு முழுதும் அதன். அபிமானிகளையே இப்பொழுது சார்ந்திருக்கிறது. அவர் வெளிவரும். வரை அவரது இறகுப் பிறப்பான அருமையான வியாசங்களை “குடி அரசு" வாககர்கள்காண முடியாது எனினும் அவரது லகஷயங்களையும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் உணர்ந்த அறிவாளிகள் வியாசங்கள் குடி அரசில் வெளிவந்து கொண்டிருக்கும். சிறை புகுந்த பெரியாருக்கு தம்மைப். பற்றியோ, தமது குடும்பத்தைப் பற்றியோ ஒரு சிறிதும் கவலையில்லை. அவர் தோற்றுவித்து வளர்க்கும் பத்திரிகைகளான “விடுதலை” “குடி அரசு” “பகுத்தறிவு” முதலியவைகளைப்பற்றியேசுவலை.ஆகவே அப்பத்திரிகைகளை: வியாசங்கள் மூலமும் பணவுதவி மூலமும் ஆதரிக்க வேண்டியது பெரியார் மீதுஉண்மைப் பற்றுடையோரின் நீங்காக்கடன் அவரது பத்திரிகைகள் முட்டின்றி நடப்பது சிறையிலிருக்கும் அவருக்குப் பெருமகிழ்ச்சியும் ஆறுதலும். அளிக்குமாகையினால் பத்திரிகைகளுக்கு தேவையான உதவிகளை எல்லாரும் மனமுவந்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.12.1938
குடி அரசு - 1938 (2) — 308
சுயமமியாதை இயக்கத் தோழர்களுக்கு பெரியார் அறிக்கை சிறைபுகு முன் கூறியது.
சென்னை, டிச. 6
நான் இன்னும் சிறிது நேரத்துக்குள் சிறைக்குள் அனுப்பப்படுவேன். நமது இயக்க சம்பந்தமாக இனி நடக்கவேண்டியவைகளை தலைவர் செளந்திரபாண்டியனும், தோழர் கி. ஆ. பெ. விஸ்வநாதமும் இருந்து கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். இயக்கத் தோழர்களும் தலைவர்களுடன் ஒத்துழைத்து நான் வெளிவரும் வரை செவ்வனே நடைபெற ஒத்தாசை செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். ஜஸ்டிஸ் கட்சிக்கு நான் தற்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதிலும் பொப்பிலி அரசர் இருந்து எல்லா காரியங்களையும் கவனித்துக் கொள்வார் என்கிற திட நம்பிக்கை எனக்கிருப்பதினாலும். அவருடைய தலைமைப் பொறுப்பு நீங்கி விட்டதாக மற்ற தோழர்களும். கருதமாட்டார்கள் என்ற நம்பிக்கையிருப்பதாலும் அதைப்பற்றி கவலையில்லாமலே செல்லுகிறேன்.
இந்தி எதிர்ப்பு இயக்கம் பொது ஜன இயக்கமானதினாலே, தமிழ் மக்கள் எல்லோரும் அந்த இயக்கத்தைப் பற்றி கவலை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கையுண்டு. இதைப்பற்றி யாருக்கும் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. ஆனால் பலாத்காரமில்லாமலும், துவேஷ உணர்ச்சி இல்லாமலும் பலாத்காரத்துக்கும் துவேஷுத்துக்கும். இடமேற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பது தான் எனது மனப்பூர்வமான வேண்டுகோள்.
குடி அரசு - அறிக்கை - 11.12.1938.
309 ௨ வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
Quilwmi ஈ.வெ.ரா. வழக்கு சர்க்கார் தரப்பு சாட்சியம் பெரியார் வாக்கு மூலம்
3 வருஷம் கடுங்காவல் 2000 ரூபாய் அபராதம்
சென்னை, டி௪.5
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் 14-வது மகாநாட்டின். தலைவரும், சுயமரியாதை இயக்கத் தலைவருமான பெரியார் ஈ.வெ ராமசாமி அவர்கள் மீது, சென்னை அரசாங்கத்தாரால் 117-வது 7(1) ஏ: செக்ஷன் கீழ் கொண்டுவரப்பட்ட வழக்கு, இன்று காலை 11-25 மணிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் போலீஸ் கோர்ட்டு 4-வது நீதிபதி தோழர் மாதவராவ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலை 10-45 மணிக்கே படுக்கையுடன் தயாராகக் கோர்ட்டிற்கு வந்துவிட்டார். வழக்கைக்: கவனிக்கத் தோழர்கள் ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி,
டி. சுந்தரராவ் நாயுடு பி.எ. பி.எல்., கி.ஆ.பெ. விசுவநாதம், எஸ்.வி ராஜன், பி.எ.பி.எல்., தாமோதரம்பிள்ளை, ராவ்சாகிப் தர்மலிங்கம் பிள்ளை, டி.ஆர். கோதண்டராம முதலியார் பி.எ., பி.எல்., சி. பாசுதேவ் பி.எ. பி.எல். திருவெற்றியூர் சண்முகம் பிள்ளை, சேலம் எ. சித்தையன், ஓ.எஸ். சதக்தம்பி மரைக்காயர், ஜமால் இப்ராஹிம், டி.எஸ். முகம்மது இப்ராகிம், சாமி சிதம்பரனார், திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி நாயுடு, ஈரோடு வேணுகோபால் பி.எ.பி.எல்., ஆகியோர் வந்திருந்தனர்.
கோர்ட்டில் எல்லோரையும் அனுமதிக்காததால் ஏராளமான தமிழ். மக்கள் கோர்ட்டிற்கு வெளியே பீச் ரோட்டில் நின்று வழக்கின் முடிவை ஆவலுடன் எதிர் நோக்கினர். பெரியார் ஈ.வெ.ரா. வந்திறங்கியதும். மக்கள் ஆரவாரித்து வாழ்த்தொலி செய்தனர்.
பெரியாருக்கு பிராசிக்கிமுஷன் மரியாதை
நீதிபதி 11.25 மணிக்கு வந்து வழக்கை ஆரம்பித்தார். கிரவுன். பிராசிகூடர் தோழர் டி.எஸ். அனந்தராமன் சாட்சிகளை விசாரித்தார்.
குடி அரசு - 1988 (29௨ 0
கோர்ட்டார் பெரியாரைக் கூப்பிட்டதும் பெரியார் ஈ.வெ.ரா. எழுந்து நின்றார். உடனே கிரவுன் பிராசிக்கூட்டர் நீதிபதியிடம் தோழர் நாயக்கரவர்கள் உட்கார்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று வேண்டினார். பின்னர் பெரியாரும் உட்கார்ந்து கொண்டார்.
ஆரம்பத்திலேயே ஈ.வெ.ரா. அவர்கள் தான் எதிர் வழக்காடப் போவதில்லை என்றும், தனக்கு யாரும் வக்கீல் இல்லை என்றும் கூறிவிட்டார்.
முதல் சாட்சி வாக்குமூலம்
சர்க்கார் தரப்பின் முதல் சாட்சியான சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டர். தோழர் கேசவமேனன் தனது சாட்சியத்தில் கூறியதாவது:-
“நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மெண்டில் தமிழ். சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டராக சென்ற 5-வருடங்களாக இருந்து வருகிறேன். எனக்குத் தோழர் ஈ:வெ. ராமசாமி நாயக்கரை நன்றாகத் தெரியும். அவரது சொந்த ஊர் ஈரோடு. அவர் 1923-ம் வருஷம் வரை காங்கரசிலிருந்தார்.
பின்னர் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார். அவ்வியக்கம் பார்ப்பனரல்லாதாரின் சமூக முன்னேற்றத்திற்காக உழைக்கவும், பார்ப்பனரை எதிர்க்கவும் ஆரம்பிக்கப்பட்டது. ஜஸ்டிஸ், சுயமரியாதை இவை இரண்டும் ஒரே கொள்கை கொண்டுள்ளவை 214385 தேதிய 911நெ. இந்திக் கட்டாய பாட சர்க்கார். உத்தரவிற்குப் பிறகு இந்தி எதிர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த
உத்தரவிற்குப் பிறகே ஒரு பகுதி தமிழர்கள் இந்தி எதிர்ப்பியக்கத்தை. ஆரம்பித்து கட்டாயபாட உத்தரவை ரத்து செய்யுமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி வருகின்றனர். பின்னர் சென்னை நகரத்திலும், சென்னைக்கு வெளியிலும் இந்தியைக் கண்டித்துப் பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் முதல் கூட்டம்.
சென்னையில் இந்தி எதிர்ப்பு முதல் கூட்டம் 31-5-38 அன்று தியாகராய நகரில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பிற்கென கட்டப்பட்ட புதுக்கட்டடத்தில் (நிலையம் ந.நி) அக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம்: மாலை 6-30 முதல் 9-30 வரை நடைபெற்றது. ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு தலைமைவகித்தார். தோழர் எஸ். முத்தையா முதலியார் தமிழ்க்கொடி ஏற்றினார். நான் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அன்று எதிரியும், முதல் சர்வாதிகாரி சி.டி. நாயகமும், மற்றும் பல இந்தி எதிர்ப்புத் தலைவர்களும் பேசினர். பல்லடம் பொன்னுசாமியை அவர் நாளை உண்ணாவிரதமிருக்கப் போவதாக தோழர் சி.டி. நாயகம். கூட்டத்திற்கு அறிமுகப் படுத்தினார். அடுத்த நாள் காலை 6-30.
M வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மணிக்குப் பல்லடம் பொன்னுசாமி, முதன் மந்திரி வீட்டின் முன்: உண்ணாவிரதமிருந்தார். அப்படியே 2 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். 3-6-38 அன்று அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் “பேச” தொண்டர்கள் மறியலுக்காக வந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டுத் தண்டிக்க பட்டனர். இதேபோல் 1-7-38 அன்று இந்து தியாலாஜிக்கல் பள்ளியின் முன்பும் தொண்டர்கள் மறியல் செய்யத் தொடங்கினர். 3 மாதம்வரை முதன் மந்திரி வீட்டின் முன் மறியல் நடந்து வந்தது. தொண்டர்கள் அவ்வப்போது கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். இரண்டு இடங்களிலுமாக நவம்பர் கடைசிவரை கைது செய்யப்பட்டவர்கள் சுமார் 400. இதில் முதன் மந்திரி வீட்டின். முன்பு கைதியானவர்கள் சுமார் 165... தியாகராய நகரிலிருந்த இந்தி எதிர்ப்பு நிலையம் பிரிக்கப்படும் வரை அங்கேயே மறியல் தொண்டர்கள்.
தங்கியும், உணவு உண்டும் வந்தனர்.
மே 29-ந் தேதி திருச்சியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கமிட்டிக். கூட்டத்தில் எதிரி இந்தி எதிர்ப்புக்கமிட்டியின் ஒரு அங்கத்தினராகத். தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டில் 60-பள்ளிகளிலும், ஆந்திராவில் 54 பள்ளிகளிலும், மலையாளத்தில் 11 பள்ளிகளிலும் இந்தி கட்டாய பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றது. கட்டாய இந்திக்கு மலையாளத்திலும், ஆந்திராவிலும் எதிர்ப்பில்லை. எதிரி முதன் முதல் 31-5-38 அன்று சென்னையில் இந்தி எதிர்ப்புப்பிரசாரம் செய்தார். பின்னர் இந்தி எதிர்ப்புக் கமிட்டியின் ஆதரவில் நடைபெற்ற பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ஈரோட்டிலிருந்து வெளிவரும் 'விடுதலை' தினசரியும், “குடி அரசு: வார வெளியீடும் எனக்குத் தெரியும். தோழர் ஈ.வெ கிருஷ்ணசாமி அவைகளின் வெளியிடுவோரும் ஆசிரியருமாவர். 13-11-38 ஒற்றைவாடைக் கொட்டகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மகாநாட்டிற்கு நான் சென்றிருந்தேன்.
நீதிபதி கேள்விக்கு பெரியார் பதில்
நீதிபதி: நீங்கள் ஏதாவது சாட்சியைக் கேட்க வேண்டுமா? ஈ.வெ.ரா அவர் கூறியது என் காதில் சரியாக விழவில்லை: இருந்தாலும் இந்தக் கோர்ட்டில் நியாயம் கிடைக்குமென்ற நம்பிக்கை யில்லை. எனவே சாட்சியை நான் ஒன்றும் கேட்க வேண்டியதில்லை. கேட்பதாலும் ஒன்றும் பயனில்லை.
2வது சாட்சி வாக்கு மூலம்.
பின்னர் 2-வது சாட்சியாக தோழர் எ. கிருஷ்ணய்யர் (சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-
குடி அரசு - 1938 (2) — 3D
நான் சென்ற 20 வருஷங்களாக சுருக்கெழுத்து சப்இன்ஸ்பெக்டராக இருந்து வருகின்றேன். சென்னையில் 13-11-38 அன்று நடந்த தமிழ். நாட்டுப் பெண்கள் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். மாநாடு மாலை 2-45-க்கு ஆரம்பித்து இரவு 8-15-க்கு முடிவுற்றது. நான் கடைசிவரை இருந்தேன். மாநாட்டிற்கு வந்திருந்த 1500 பேரில் 700 பெண்கள். ஆகும். நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெற்றன. தோழர் ஈ.வெ ராமசாமி அவர்கள் அம்மாநாட்டிற்கு வந்திருந்தார். அம் மாநாட்டில். எதிரி பேசினார். அவர் பேசும்பொழுதும் நான் அங்கிருந்தேன். நான் தமிழ்ச் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து பின்னர் தமிழ் நெட்டழுத்தில் எழுதினேன். அவர் பேச்சை ஒழுங்காகவே குறிப்பெடுத்தேன். மறுநாள் 14-11-38 பெத்துநாயக்கன் பேட்டை காசி விசுவநாதர் கோயில் மூன் எமி - அருணகிரிநாதர் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கும். சென்றிருந்தேன். அக்கூட்டம் மாலை 6-15க்கு ஆரம்பித்து 9-15க்கு முடிவுற்றது. அங்கு எதிரியும் பேசினார். அவர் பேச்சை சிறிதும் விடாது குறிப்பெடுத்தேன். அவரது பேச்சுகள் பொது மக்களிடையே மிகுந்த உணர்ச்சியை உண்டாக்கின. பின்னர் சாட்சி பெரியார் ஈ.வெ.ராவின் 2 பிரசங்கங்களையும் கோர்ட்டில் படித்தார்.
நீதி: இதில் ஏதாவது தவறிருக்கின்றனவா? சாட்சியை ஏதாவது கேட்க வேண்டுமா?
ஈ.வெ.ரா: பல தவறுகள் காணப்படுகின்றன. ஆனால் அதுபற்றி நான் ஒன்றும் கேட்க விரும்பவில்லை.
3-வது சாட்சி வாக்கு மூலம்:
பின்னர் 3-வது சாட்சியாகத் தோழர் ரஞ்சித்சிங் (சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர்) விசாரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-
நான் சர்க்காரின் இன்டெலிஜென்ஸ் செக்ஷனில் சுருக்கெழுத்தாளனாக இருக்கிறேன். 13-11-38ல் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள். மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். கடைசிவரை இருந்தேன். அம்மாநாட்டிற்கு மறுநாள் 145 தேதியன்று பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி மூன் மறியல் செய்தனர். அப்பெண்கள் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டனர். அவர்கள் அபராதம் செலுத்தவில்லை. இந்தி எதிர்ப்புக் கழக ஆதரவில் அன்று மாலை காசி விசுவநாதர்கோயில் முன்பு ஒரு. பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கிரவுன் பிராசிக்கூடர் இந்தப் பிரசங்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டியிருப்பதால் வாய்தா கொடுக்கவேண்டுமென்று கேட்டார்.
M வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
நீதிபதி: பிரசங்கங்கள் விளக்கமாக இருப்பதால் இதற்கு வாய்தா வேண்டியதில்லை. சில மணி நேரங்களில் மொழி பெயர்த்து விடலாம் என்று கூறினார்.
பின்னர் சர்க்கார் சாட்சிகள் மீண்டும் கிரவுன் பிராசிகூடரால்
குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்.
குறுக்கு விசாரணை
குறுக்கு விாரணையில் முதல் சாட்சி கேசவமேனன் கூறியதாவது:-
இந்தி உத்தரவை எடுக்குமாறு முதன் மந்திரியை வற்புறுத்தி முதன் மந்திரி வீட்டின் முன்பும் தியாலாஜிக்கல் பள்ளி முன்பும் மறியல் நடந்தன. அப்பள்ளியில் இந்தி கட்டாயபாடமாக்கப்பட்டிருப்பதால். பையன்களை படிக்கவிடாது தடுக்கவே மறியல்நடைபெறுகிறது. அப்படி பையன்கள் போகாவிட்டால் பள்ளிக்கூடம் மூடப்படும் என்று கருதியே இம்மறியலால் ஏற்படும் கூச்சல் ஆசிரியர்களையும் வகுப்பு நடத்த முடியாமல் தடை செய்கிறது.
3-வது சாட்சி தோழர் ரஞ்சிட்சிங் கூறியதாவது:-
14-11-38 அன்று 5 பெண்கள் இந்து தியாலாஜிக்கல் பள்ளி
மூன் நின்று இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று கூறி மறியல் செய்தனர். இதனால் ஆசிரியரும், பையன்களும் உள்ளே புக முடியாமலும், நடத்திக் கொண்டிருக்கும் வகுப்பு மேலும் நடைபெறாமலும் தடைப்படுகின்றது. வேடிக்கை பார்க்க ஆசிரியர்கள் வெளியே வந்து விடுகின்றனர்.
நீதி: நீங்கள் ஏதாவது வாக்கு மூலம் கொடுக்கின்றீர்களா?
ஈ.வெ.ரா: சிறிது அவகாசம் கொடுத்தால் சாட்சியங்களைப்
பார்த்து வாக்கு மூலம் கொடுக்கின்றேன்.
நீதி: சாட்சிக் காப்பிகள் மாலை தான் கிடைக்கும். எனவே வழக்கை நாளை காலை 11 மணிக்கு ஒத்திவைக்கிறேன்.
மீண்டும் வழக்கு நாளை நடைபெறும்.
1-30 மணிக்கு வழக்கு முடிந்து பெரியார் கீழே வரும் வரை வெளியில் ஏராளமான மக்கள் காத்துக்கொண்டே நின்றனர். பெரியார்
காரில் ஏறியதும் மக்கள் "பெரியார் ஈவெரா. வாழ்க என ஆரவாரம் செய்தனர். மக்கள் காட்டிய உணர்ச்சி அளவு கடந்ததாயிருந்தது. கோர்ட்டிலும் வெளியிலும் பலமான போலீஸ் பந்தோபஸ்து செய்யப்பட்டிருந்தது
குடிஅரசு - 1938 (2) —— ய
[மறுநாள் நடவடிக்கை] சென்னை, டிச. 6- சென்னை அரசாங்கத்தாரால் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மீது 117-வது செக்ஷன் கீழ்க்கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு, சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது மாகாண நீதிபதி தோழர் மாதவராவ் முன்பு இன்று காலை 11-30 மணிக்கு மீண்டும் விசாரணைக் கெடுத்துக். கொள்ளப்பட்டது.
பெரியார் வருகை
சரியாகப் 11-மணிக்குப் பெரியார், ஸர்.ஏ.டி. பன்னீர் செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியவர்களுடன் படுக்கை சகிதமாகக் கோர்ட்டிற்கு வந்து சேர்ந்தார். கோர்ட்டிற்கு வெளியில் நின்றிருந்த பதினாயிரக்கணக்கான மக்கள் கைதட்ட வாழ்த்தொலி செய்தனர். இன்றும் கோர்ட்டுக்கு அருகில். யாரையும் வரவிடாது பலத்த போலீஸ் பந்தோபஸ்து இருந்தது. நேற்று இரவு 10 மணிக்குத்தான் பெரியாருக்கு சர்க்கார் சாட்சியத்தின் நகல் கிடைத்ததாகையால் கோர்ட்டில் வந்தும் விரைவாக வாக்கு மூலத்தின். எஞ்சிய பகுதிகளை எழுதிக் கொண்டிருந்தார்.
ரசாக்கான் சநட்சியம்:
ஆரம்பத்தில் கிரவுன் பிராசிக்கூட்டர், சப் இன்ஸ்பெக்டர் தோழர் ரசாக்கானை சர்க்கார் சாட்சியாக விசாரிக்க வேண்டும். அவர் இந்து தியாலாஜிகல் பள்ளி இருக்கும் செக்ஷனின் சப்இன்ஸ்பெக்டர் என: நீதிபதியைக் கேட்டார்.
நீதிபதியும் சம்மதிக்க, தோழர் சப்பின்ஸ்பெக்டர் ரசாக்கான். விளரிக்கப்பட்டார். அவர் கூறியதாவது:-
நான் யானை கவுணிபோலீஸ் ஸ்டேஷன் சப்இன்ஸ்பெக்டர். இந்து தியாலாஜிக்கல் பள்ளி எனது ஜாரிஸ்டிக்ஷனில் உள்ளது. நாடோறும். நடைபெறும் மறியல் காலத்து நேரில் பள்ளி முன் இருந்து வருகிறேன். 14-11-38 அன்று 5-பெண்கள் பெரிய ஊர்வலமாக வந்து, பள்ளியின் வாசற்படிக்கு அருகில் நின்று கொண்டு தமிழ் வாழ்க' இந்தி வீழ்க எனக் கூச்சலிட்டு மறியல் செய்தனர். அன்றும் நான் அங்கிருந்தேன். 2000 அல்லது 3000 பேர் ஊர்வலமாக வந்தனர். எதிரியும் ஊர்வலத்துடன். அன்று வந்தார். பெண்கள் மறியலால் ஆசிரியர்களும் மாணவர்களும். உள்ளே போகத் தடங்கலாயிற்று. வகுப்பு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் வெளியே வந்து விட்டனர். பெண்களை அங்கிருந்து போய்விடுமாறு நான் எச்சரித்தும், இந்தி ஒழிந்தால் ஒழிய போக மாட்டோமென்றனர். பின்னர் அவர்களைக் கைது செய்தேன். எதிரியும் நான் கைது செய்யும் 35— வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
வரை அங்கேயே இருந்தார். பின்னர் இரண்டாவது மாகாண நீதிபதி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு பெண்கள் தண்டனை பெற்றனர்.
பெண்கள் அபராதங் கொடுக்க மறுத்தனர். கோர்ட்டிலும் எதிரி ஆஜராகியிருந்தார். இதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் மறியல் செய்து வருகின்றனர். 21-11-38 அன்று 8-பெண்கள். மறியல் செய்தனர். அன்றும் பெரிய ஊர்வலமாக அவர்கள் வந்தனர். மேலும் அவர்கள் செய்யும் மறியலால் பெருங்கூட்டம் கூடி, போக்கு வரத்திற்கு இடைஞ்சல் ஏற்படுகின்றது. அவர்களையும் நான் எச்சரித்தேன். கேட்காததால் கைது செய்தேன். அவர்களும் தண்டனை பெற்றார்கள். அன்று வழக்கு முடிந்த பிறகு வழக்கைப் பார்க்க வந்திருந்த ஏராளமான. மக்கள் திரும்பி 2 மணிக்கு வீட்டிற்குச் செல்லும்போது பல இடங்களில் கல்லெறிந்து பலருக்கு நஷ்டம் உண்டாக்கியிருக்கின்றனர். முதன் முதலில். தினமணி ஆபீஸ் மீது கல்லெறிந்ததாக அறிந்தேன். அதற்குப் பின். மற்றும் சில இடங்களில் குழப்பம் நேரிட்டதாகத் தெரிகிறது. ஆனால், நேரில் நான் பார்க்கவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு திங்கட்கிழமையும் பெண்கள் தொடர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.
கிராஸ் செய்ய பெரியார் மறுப்பு
ஈ.வெ.ரா. சாட்சியை ஒன்றும் கேள்வி கேட்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
நீதி: உங்கள் பேரில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றதாகையால். வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட ஸ்டேட்மெண்டைத்தான் கொடுக்க வேண்டும். சம்மந்தப்படாத வெளி விஷயங்களை நான் ஏற்க மாட்டேன்.
ஈவெரா: நான் சட்ட நிபுணனல்ல. சாட்சியங்களைக் காதில் கேட்டேன். பார்த்தேன். பதில் கூறுகிறேன். எனக்கு பதில் கூற உரிமையுண்டு என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் தள்ளிவிடுங்கள். நான். வழக்கிற்குச் சம்பந்தப்பட்டவைகளையே கூறுகின்றேன்.
பின்னர் பெரியார் தமது நீண்ட வாக்கு மூலத்தைப் படித்து நீதிபதியிடம் கொடுத்தார். படிக்கும்போது நடுவில் நீதிபதி சரி சரி யெனத் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார்.
பின்னர் கிரவுன் பிராசிக்கூட்டர் எழுந்து தங்களுக்கு இவ் வழக்கில் தண்டனையளிக்க வசதியாயிருக்கும் பொருட்டு எதிரியின். பேச்சுகளில் ஆட்சேபகரமானவற்றை சிகப்பு மையினால் மார்க் செய்கிறேன் என்று கூறி, மார்க் செய்து அப்பகுதிகளைக் கோர்ட்டில் வாசித்துக் காண்பித்தார்.
அதன் பின் நீதிபதி குற்றப்பத்திரிகை வாசித்தார்.
கடி அரசு - 1938 (2) —— ௦
தீம்ப்புக்கூற ஜத்தி. வைப்பு
பெரியார் தான் குற்றவாளியல்லவென்றார்.
மணி 1-30 ஆனமையால் தீர்ப்புக் கூற வழக்கை மாலை 2 மணிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி
வழக்கைக் கவளிக்க வந்திருந்த முக்கிய பெரியார்கள் ஸர்.எ.டி பன்னீர்செல்வம், ஈ.வெ. கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம், டி சந்தரராவ் நாயுடு பி.ஏ.பி.எல்., டி ஷண்முகம் பிள்ளை, பாரிஸ்டர் கே.சி. சுப்பிரமணியம் செட்டியார், எம். தாமோதரம் நாயுடு பி.எ.பி.எல்., ஜஸ்டிஸ் ஆசிரியர் டி.எ.வி. நாதன், சண்டே அப்சர்வர் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியம், டி.ஆர். கோதண்டராம முதலியார், சாமி அருணகிரிநாதர், கடலூர் தெய்வசிகாமணி முதலியார், சேலம். சித்தையன், சர்வாதிகாரி எஸ். சம்பந்தம், எர்னஸ்ட் காவேரி பாக்கம். சம்பந்தம் முதலிய பல பெரியார்களாகும்.
தண்டணை:
சரியாக மாலை 3-25 மணிக்கு நீதிபதி வந்து தீர்ப்பை வாசித்தார்.
“இரண்டு பேச்சுகளும் 2 குற்றங்களாகின்றன. ஒரு குற்றத்திற்கு 1. வருஷம் கடுங்காவலும் 1000 ரூபாய் அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவலும் விதிக்கிறேன்” என்றார். ஆக இரண்டு குற்றங்கட்கு 2 வருடம் 2000 ரூபாய் அபராதம் அல்லது மேலும் 1 வருஷம் ஆக 3 வருஷம் கடுங்காவல் தண்டனையாகும்.
இரண்டு தண்டனைகளையும் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறினார்.
பெரியார் அபராதம் கட்ட மறுத்து 3 வருஷக் கடுங்காவல். தண்டனையைப் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
ஸர். பண்ணீர்செல்வம் கண்லலீர். தண்டனை பெற்ற பெரியாரை ஸர். எ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் கோர்ட்டிலேயே கட்டித் தழுவிக் கண்ணீர் விட்டார்.
பெரியார் அவர்கள் தான் இனி ஒரு கைதி (Prisoner) என: சிரித்துக்கொண்டே கூறினார்கள்.
பின்னர் கோர்ட்டிற்கு வந்திருந்த எல்லா பெரியார்களும் வக்கீல்களும் தோழர்களும் பெரியார் ஈ.வெ.ரா. பாதத்தைத் தொட்டு இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு வணக்கம் தெரிவித்தனர்.
3T வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
சிறைக்குப் புறப்பாடு. காலையிலேயே பெரியார் படுக்கை பெட்டியுடன் வந்திருந்தார். அவைகளை எடுத்துக்கொண்டு மாலை 3-45 மணிக்கு "மோட்டார். வேனில்! ஏறும்போது வெளியே ஆவலாகக் காத்து நின்றிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் "பெரியார் வாழ்க' என்று ஆரவாரித்துக். கரகோஷம் செய்தனர். பெரியாருக்கு மாலைகளிடப்பட்டன. பெரியார். ஈ.வெ.ரா. வாழ்க என்ற வானலாவிய ஒலியினிடை பெரியார் ஏறியிறாந்த கார்புகுந்துசென்றது. வழக்கைக் கவனிக்க காலை 10 மணிக்கு வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மாலை 4 - மணிக்கு வழக்கு முடியும் வரை மத்தியானம் சாப்பிடக்கூடப் போகாமல் காத்து நின்றனர். பெரியார் தண்டிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கரை கொள்ளாததாயிற்று.
சென்னை நகரத்தார் துயரம்
இச் செய்தியைக் கேட்டு சென்னைத் தமிழர்களனைவரும். எல்லையில்லாத் துயரமடைகின்றனர். இச் செய்தி சிறிது நேரத்திற்கெல்லாம் காட்டுத்தீபோல் நகரெங்கும் பரவிவிட்டது. வழக்கைக் கவனிக்க ஏராளமான பார்ப்பன வக்கீல்களும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர்.
பெரியார் வாக்குமூலம்.
பெரியார் கொடுத்த வாக்குமூலம் வருமாறு
நான் சம்மந்தப்பட்டிருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியானது காங்கரசிற்கு விரோதமானது என்றும், காங்கரஸ் கட்சியினரைக் கவிழ்ப்பதற்காக என்றும், பார்ப்பன துவேஷம் கொண்டதென்றும் கனம்: முதல் மந்திரியாரே சட்டசபையிலும் பொதுக் கூட்டங்களிலும் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கோர்ட்டு காங்கரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது.
அடக்குமுறைக் காலத்து நியாயமேது?
தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவை தவிர இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்கவேண்டுமென்பதில் காங்கரஸ் மந்திரிகள் அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம் அநியாயம் பார்க்கவேண்டியதில்லை என்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டும் என்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று வந்து புகுந்த திருடர்கட்கு ஒப்பிட்டு. கனம் முதல் மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக்கொள்ளும்.
குடி அரசு - 1938 (2) — ௦
நடவடிக்கைகள் அடக்கு முறையே என்பது எனது கருத்து. அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயம் எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
ஆதலால் இந்தக் கோர்ட்டு நியாயத்தில் இந்த வழக்கில் எனக்கு, நம்பிக்கையில்லை. இன்று நடக்கும் வழக்கு விசாரணையில் நான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன்.
பொது மக்களுக்கு அறிக்கை
பொது மக்கள் தவறுதலாய்க் கருதாமல் இருப்பதற்கும் தப்பு வழியில் செல்லாமலிருப்பதற்கும், நான் நிரபராதி என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும். ஒரு அறிக்கை எழுத்து மூலமாகச் சமர்ப்பிக்கிறேன். அதனை வழக்கு ஆதாரங்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டிக்கொள்ளுகிறேன்.
நான் இந்த வழக்கு விசாரணைச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை.
வக்கீல் வைக்கவில்லை.
சர்க்கார் கட்சி வக்கீல் ஆங்கிலத்தில் பேசினார். நான் எட்டி இருந்ததனாலும் ஆங்கிலம் சரியாய்த் தெரியாததனாலும் அவர்கள். பேசினதும் சில சாக்ஷிகள் சொன்னதும் சரியாய்ப் புரியவில்லை. ஆனால். பின்னால் நடந்த சங்கதிகளைக் கவனித்தேன். ஒரு அளவுக்குப் புரிந்தது.
இவற்றுள் பிராதில், முதலாவதாக 21-4-38-ல் கவர்ன்மெண்ட்டார் இந்தி கட்டாயமாய்ப் படிப்பிப்பதை அமலுக்குக் கொண்டுவர உத்தரவு பிறப்புவித்தார்கள் என்றும், அதற்குப் பிறகு சில சுயநலக்காரர்களால். தாங்களே இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிப் பிரசாரகர் என்று பெயர் குட்டிக்கொண்டு கனம் முதல் மந்திரியாரை நிர்ப்பந்தப்படுத்தி அந்த
உத்தரவைக் கேன்சல் செய்யச் செய்ய வேண்டுமென்கிற நோக்கத்தோடு. கனம் மந்திரியாரின் உரிமையைத் தடைப்படுத்தினார்கள் என்று
குறிப்பிட்டிருக்கிறது.
இந்தி. எதிம்ப்புத் தேரன்றியது எப்போது?
இது முழுவதும் உண்மைக்கு நேர் மாறானதாகும். மந்திரியார். ஜி.ஓ.21-4-38-ல். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், கிளர்ச்சி ஸ்தாபனமும். அதற்கு முன்பே ஏற்பட்டதாகும். 1930-ல் நடந்த நன்னிலம் சுயமரியாதை
மகாநாட்டில் இந்தி புகுத்தும் நோக்கத்தையும், இந்தி புகுத்துவதால் ஏற்படும் கெடுதியையும் பற்றி இன்றைய காங்கரஸ் விளம்பர:
மந்திரியார் கனம் ராமநாதன் அவர்களே தீர்மானம் கொண்டு வந்து கண்டித்துப் பேசி அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 39— வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இந்தியை எதிர்ப்போர்
தமிழ்ப் பண்டிதரும், தமிழ்ப் பாஷை, கலைகள் ஆகியவற்றில். நிபுணருமான சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் இந்திப் பொதுமொழியாகுமா? என்று கண்டித்து எழுதியிருக்கிறார்கள். அண்ணாமலை சர்வகலாசாலைப் புரபசர் எஸ். சோமசுந்தர பாரதிப் பெரியார் அவர்களும் 1937-ம் வருஷத்திலேயே இந்தியைக் கண்டித்து கனம் முதல் மந்திரியாருக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
1937 டிசம்பரில் மாகாணத் தமிழர் மனநாடு கூடி சென்னை மாகாண: கவர்னர் பிரபுகளிடம் தூது சென்று இந்திக் கட்டாயத்தை மாற்றும்படிக் கேட்டுக்கொள்ளத் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பல பெரியார்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதன் பின் 1938 பிப்ரவரி வாக்கில் காஞ்சிபுரத்தில் ஒரு தமிழர். மகாநாடு சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் தலைமையில் கூடி காலம் சென்ற சர்.எம். கிருஷ்ணன் நாயரால் திறக்கப்பட்டுப் பல பெரியார்கள். முன்னிலையில் பல தீர்மானங்கள் இந்தியைக் கட்டாய பாடமாய்ப் புகுத்துவதைக் கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆதலால் கனம் முதல் மந்திரியாருடையவோ, சர்க்காருடையவோ. ஜி.உவுக்குப் பிறகு சுயநலக்காரர்கள் கூடிக் கிளர்ச்சி செய்கிறார்கள். என்பது தவறு.
எதிர்ப்பின் நோக்கம்
கனம் முதல் மந்திரியார் இந்த வேண்டு கோள்களையும் பொதுஜன. அபிலாஷைகளையும் லக்ஷ்யம் செய்யாமல் இவற்றை அலகஷியப் படுத்துவதற்குச் சாக்காக “இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி (அவரது) நண்பர் ஒரு இராமசாமி நாயக்கர் தான் செய்கிறாரே தவிர இது பொது ஜனக்கிளர்ச்சி அல்ல" என்று சட்டசபையிலேயே சொல்லி விட்டதால் பொது ஜனங்கள், இதைப் பொது ஜனங்களது கிளர்ச்சியென்று கனம் முதல் மந்திரியாரும், கவர்னர் பிரபுவும் அறிய வேண்டும் என்பதற்காகவே, இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒரு டெமான்ஸ்ட்ரேஷன் (Demonsiration) ஆகம் செய்யப்பட்டு வருகிறதே ஒழிய, அதில் எவ்வித நிர்ப்பந்தப்படுத்தும். கருத்தும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
காரியக் கமிட்டித் தீர்மானம்
அன்றியும் இந்தியைப் பொது பாஷையாக்கக் கூடாதென்றும், பள்ளியில் வைப்பது முதலிய இந்திப் பிரசாரம் செய்வது வகுப்புக். கலவரத்தை உண்டாக்குகின்றதென்றும், காங்கரஸ் கூட்ட நடவடிக்கைகளுக்கு. இந்தி தெரிந்து கொள்ளும்படிச் செய்தால் போதுமென்றும், காங்கரஸ் காரியக்கமிட்டி தீர்மானித்திருக்கிறது. குடிஅரசு... 30
சென்னை மாகாணத்தில் நடக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இந்தி மீதுள்ள அபிப்பிராய பேதத்தால் நடைபெறுவதாகவும் அதை விளக்கிக் காட்டிச் சரிசெய்யும்படிக் காங்கரஸ் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் கேட்டுக்கொண்டுமிருக்கிறது. ஆகவே இந்தக் கிளர்ச்சி காங்கரஸ் துவேஷத்தால் செய்யப்படுவதும் அல்ல என்பதற்கு இதுவே ஆதாரம் போதுமென நினைக்கிறேன்.
1938 ஜூன் மாதம் முதல் தேதி கனம் முதல் மந்திரியார் வீட்டிற்கு முன் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் நடவடிக்கைகளுக்கும் எனக்குமாவது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்திற்காவது யாதொரு சம்பந்தமுமில்லை.
எதிர்ப்பானர் கொள்கை
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஸ்தாபனத்தின் கொள்கைகளில் சட்டம்.
மீறக் கூடாதென்பது முக்கிய காரியமாகும்.
முதன் மந்திரியார் வீட்டிற்கு மூன் தொண்டர்கள் எந்தக் காரியத்தை. முன்னிட்டும் போகக்கூடாதென்று தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டு. அறிக்கை விடுத்திருக்கிறேன். அந்த வேண்டுகோள் பொது ஜனங்களாலும், தொண்டர்களாலும் மதிக்கப்பட்டு, அது முதல் முதன் மந்திரியார் வீட்டின் முன் தொண்டர்கள் செல்லவில்லை. அதற்குப் பிறகு, பள்ளிக்கூடத்திற்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் காரியங்களும் சரியல்ல. அங்கு தொண்டர்கள் செல்வது உபாத்தியாயர்களையும், பிள்ளைகளையும் தடுப்பதற்காக வல்ல. இந்தியைப் பொதுஜனங்கள் ஏற்கவில்லை என்பதைக் காட்டுவதற்காகவேயாகும். எந்த உபாத்தியாயரும் எந்த பிள்ளைகளும் தங்களைத் தடுத்ததாகவோ அல்லது இந்தக் காரியத்தால். தங்கட்குப் பள்ளிக் கூடத்திற்குப் போக முடியாமல் போயிற்றென்றோ, இனியும் உபாத்தியாயரோ மாணாக்கரோ இதனால் ஒரு நாளாவது “ஆப்சென்ட்' ஆனதாகவோ சொல்லப்படவோயில்லை; ரசுக்களோ இல்லை. பிராதில் குறிப்பிட்ட விஷயங்கள் சரியல்ல. சட்டத்திற் கண்டபடி, குற்றமாவதற்கு ஜோடித்தவைகளேயாகும். நான் பேசியிருப்பதாய்ச் சொல்லப்படும் 2 பேச்சுகளிலும் சட்டம் மீறும்படி நான் யாரையும் தூண்டவேண்டுமென்றோ, தூண்டும்படியான கருத்துக் கொண்டோ பேசவில்லை. அந்தக் கருத்துகள் கொண்ட வாக்கியம் பேசியதாகக் குறிப்பிட்டிருப்பது உண்மையல்ல. ஏனெனில் நான் சம்பந்தப்பட்ட சுயமரியாதை இயக்கமும், தமிழரியக்கமும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், ஜஸ்டிஸ் இயக்கமும் எதுவும் சட்டப்படி சட்டத்திற்கு உட்பட்டுக் கிளர்ச்சிசெய்ய வேண்டும் என்கிற கொள்கை கொண்டதேயாகும். இதுவரை அக்கொள்கை மாற்றப்படவேயில்லை. என்னுடைய பேச்சு பூராவையும் படித்துப் பார்த்தால் இது விளங்கும்.
N வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மற்றும் அப்பேச்சுகளில் சட்டம் மீறக்கூடாது, யாருக்கும் எவ்வித. தடையும், சங்கடமும் மனநோவும் உண்டாக்கக் கூடாது. துவேஷ உணர்ச்சி கட்டுப்பாட்டிற்கு விரோதமான உணர்ச்சி கூடாதென்றெல்லாம் வியக்தமாய்ப் பேசியிருப்பதை அதில் காணலாம்.
பெண்கள் மகாநாட்டுத் தீர்மாணம்.
என் பேச்சிற்குப் பிறகே பெண்கள் பள்ளிக்கு முன் போய் நின்றார்கள். என்று சொல்வதும் சரியல்ல. நான் பேசுவதற்கு முன்பேயே மகாநாட்டில் தீர்மானம் ஆகியிருக்கிறது. அதையும் என்பேச்சிலேயே காணலாம்.
பெண்களும் எவ்வித தடங்கலான காரியம் செய்தார்களென்றும் எவ்விதக் குற்றமான காரியங்கள் செய்தார்களென்றும் எப்போதும் ௫௬ செய்யப்படவில்லை. ஏதாவது ஒரு கிளர்ச்சி நடக்க வேண்டுமென்றால் ஒரு முறை கொண்டுதான் நடத்த வேண்டும். அம்முறையால் குற்றம், தடை, பலாத்காரம், துவேஷம் உண்டாகும்படி இருக்கக்கூடாது என்பதில். நான் எப்போதும் கவலை கொண்டிருக்கிறேன்.
குற்றச்சாட்டு சரியானதல்ல.
நான் சம்பந்தப்பட்ட எந்த ஸ்தாபனத்திலும் இவ்வித தப்பான. கொள்கைகட்கு இடம் கொடுக்கவே யில்லை. காங்கரஸ்காரர்கள், காங்கரஸ் மந்திரிகள் ஆதிக்கத்தில் உள்ள காலத்தில் பல தடையான. காரியங்கள் அதாவது கிராம்பு மறியல் முதற்கொண்டு பிரளரக் கூட்டங்கள். நடைபெறாமல் தடை, குழப்பம், பலாத்காரம் முதலியன நடத்துவது வரையில் நடந்த காரியங்கள் குற்றமாகக் கருதப்படவில்லை. காங்கரஸ் சர்க்காரும் அவை கூடாதென்று உத்தரவு போட்டதில்லை. தவிரவும். என்மீது சுமத்தப்பட்ட இந்த சட்டப்பிரிவும் கொஞ்சமும் சரியானதல்ல. இது ஏதாவது ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்கை ஆகியவைகளைத் தடுப்பதற்கு என்பதும் அதையும் பொது மக்களும் குறிப்பாகக் காங்கரஸ்காரர்களும் வெறுத்துக் குறைகூறிக் கண்டித்த தென்பதும் பொது மக்கள் அறிந்ததேயாகும். அப்படியிருக்க அந்தச் சட்டத்தை ஒரு நியாயமான. உரிமையுள்ள காரியத்தைச் செய்ய தடுப்பதற்கு உபயோகப்படுத்துவது அந்தச் சட்டத்தின் தத்துவத்திற்கே முரண்பட்டதாகும்.
சாட்சி சுயமரியாதை இயக்கம் பார்ப்பனருக்கு விரோதமான. உணர்ச்சி ஊட்டக் கூடியது என்று சொன்னார். தோழர் வக்கீலும் அந்த உணர்ச்சி இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலுமிறாப்பதாகக் கருதும்படிச் செய்யப் பிரயத்தனப்பட்டார். அந்தக் கருத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள். என் இரண்டாவது பேச்சாகக் கோர்ட்டில் ஒப்புவிக்கப்பட்ட சர்க்கார் ஆதாரத்திலேயே இருக்கிறது.
குடி அரசு - 1988 (29௨ m
அறிக்கை வெலியிட்டதின் நோக்கம். ஆகவே, இந்த விஷயங்களைத் தங்கள் கவனத்திற்கு என்றே நான் சமர்ப்பிக்கவில்லை. தங்களால் காங்கரஸ் மந்திரிகள் இடத்திற்கு விரோதமாக எதுவும் செய்ய முடியாது. பொது ஜனங்களுக்கு விஷயம் தெரியட்டும் என்றும், நான் சட்டம் மீறினேனென்றும் மற்றவர்கள் கருதி அதைச் செய்யத் துணிந்துவிடக் கூடாது என்பதற்கும் இந்த இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும் என்னுடைய எவ்வித முயற்சியும் செய்கையும் இன்று வரையிலும் கூடச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதென்றும், துவேஷம், குரோதம், பலாத்காரம் சிறிதும் சம்மதப்பட்டதல்ல வென்றும் தெரிவிப்பதற்காகவே யாகும். ஆகவே, கோர்ட்டாரவர்கள் தாங்கள் திருப்தியடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தியடையும். வண்ணம் எவ்வளவு அதிக தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவைகளையும் பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும். எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து விடும்படி வணக்கமாகக். கேட்டுக்கொள்ளுகிறேன்.
லக்ஷ்யத்துக்கு விலை
மற்றும் வழக்கை வக்கீல் முடித்துவிட்ட பிறகும் சட்டப்படிக் குற்றம். ஏற்படத் தகுந்த மாதிரி, வக்கீல் சாட்சியை மிரட்டி வாக்குமூலம் வாங்கி சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்ற தென்பதாகவும் எழுதிக் கொடுத்தார். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும். அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வாறு வேண்டிக் கொள்கிறேன்.
(ஒப்பம்)
ஈ.வெ. ராமசாமி.
குடி அரசு- நீதிமன்றத்தில் அறிக்கை - 11.12.1938
0 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
இரண்டு மாநாடுகள்
வேலூரில் 27-12-1938 & நடைபெறப்போகும் 4-வது சென்னை மாநிலத் தமிழர் மாநாடும் சென்னையில் டிசம்பர் 28-ம் 29-ம் 30-ந் தேதிகளில் நடைபெறப்போகும் தென்னிந்திய நல உரிமைச் சங்க 14 வது மாநாடும் தென்னாட்டுச் சரித்திரத்திலே மிகவும் முக்கியமான. மாநாடுகள் ஆகும். வேலூர் மாநாடு தமிழர்களுக்கெல்லாம் பொதுவான. மாநாடு. ஜாதி மத வித்தியாசமின்றி - அரசியல் கொள்கை வித்தியாசமின்றி, தமிழராகப் பிறந்தோரெல்லாம் அம்மாநாட்டில் பங்கு கொள்ளப் போகிறார்கள். ஆதியிலே தமிழர்களாக இருந்து ஆரிய மதக் கொடுமை காரணமாகப் பிற மதம் புகுந்து பிறந்தவர்களும் அரசியல் அபிப்பிராயங் காரணமாகப் பிரிந்தவர்களும் தம் தாய்மொழிக்கு இடுக்கண்: நேர்ந்திருப்பது கண்டு சர்வ வித்தியாசங்களையும் மறந்து ஐக்கியப்பட்டு வேலூரில் கூடப் போகிறார்கள். வேலூர் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கப் போகும் ஸர்.எ.டி. பன்னீர் செல்வம் அம்மாநாட்டுக்கு தலைமை வகிக்க எல்லாவற்றாலும் தகுதியுடையப் பெரியார்.
பன்னீர் செல்வம் மாட்சி.
தமிழர் முன்னேற்ற இயக்கமான இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் அவர் எவ்வளவு தீவிரமாக ஈடுபட்டுழைக்கிறார் என்பதை தமிழ் மக்கள். நன்கறிவார்கள். இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை வகித்து நடத்தத் தகுதியுடைய அறிவும் ஆற்றலும் செல்வாக்கும் உடைய பல: பெரியார்கள் ஆச்சாரியார் ஆட்சிக்கு பயந்தோ வேறு எக்காரணத்தினாலோ இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் முற்றிலும் கலக்காமலும் கலப்பதுபோல்: பாவனை காட்டித் தொட்டும் தொடாமலும் இருந்து வருகையில் அவர்களது விருப்புக்கும் வெறுப்புக்கும் அஞ்சாமல் தமிழர் நலம். ஒன்றையே பெரிதாகக் கருதி மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் சட்டசபையிலும் ஆச்சாரியார் அட்டூழியங்களைக் கண்டித்தும் கட்டாய இந்தியால் விளையும் தீமைகளை விளக்கியும் அறப்போர் தொடுக்கும். நமதுதலைவர் ஸர்.எ.டி பன்னீரசெல்வத்தின் தைரியத்தையும் தமிழ்ப்பற்றையும் எவ்வளவு தான் வியந்து கூறினும் மிகையே ஆகாது.
குடிஅரசு - 1938 (2) —— 4
நெருக்கடியான காலம்
வேலூர் மாநாடு மிகவும் நெருக்கடியான சமயத்தில் கூடுகிறது. அந்தப் போரில் ஈடுபட்டு இதுவரை 525 ஆண்களும் 26 பெண்களும். 10 குழந்தைகளும் மொத்தம் 561 பேர் சிறை புகுந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாபெருந் தலைவரான ஈ.வெ.ராமசாமி பெரியாரும் சிறை புகுந்துவிட்டார். மற்றும் பல தலைவர்கள் சிறைக்கு இழுக்கப்படும் நிலைமையில் இருந்து வருகிறார்கள். தமிழர்களின் ஒரே தினரியான. “விடுதலையும் கனம் ஆச்சாரியார் கோபாக்கினிக்கு இரையாகும் நிலைமையில் இருந்து வருகிறது. பேச்சு, எழுத்து சுதந்தரங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இதைவிட நெருக்கடியான காலம் - ஆபத்தான காலம் - அஞ்சத்தக்கக் காலம் தமிழர்களுக்கு வேறுண்டா?
தாருல் இஸ்லாம் அபிப்பிராயம்.
இப்பொழுது அரசியல் நடத்துவோர் காங்கரஸ் பத்திரிகையான. “தாருல் இஸ்லாம்” அபிப்பிராயப்படி “வட நாட்டுக்கு உட்பட்ட மக்கள். சுயேச்சையாக இருப்பவர்கள் அல்லர். சுருக்கமாகச் சொன்னால் ஊந்தியாருக்கு அடிமைப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்கள். தமிழர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக இல்லை. காந்தியாரின். விருப்பப்படி செயல் நடத்துகின்றனரே தவிர தமிழர்கள் விருப்பப்படி செயல்கள் நடத்துவதாகக் காணோம்.”
ஆச்சாரியார் பத்திரிகை கருத்து.
கட்டாய இந்தியை காங்கரஸ் சர்க்கார் தமிழ்நாட்டில் புகுத்துவது தமிழர்களை வடநாட்டாருக்கு அடிமைப்படுத்துவதற்கேயாயினும், ஆச்சாரியார் பத்திரிகை இன்று கூறுவதென்ன? கனம் ஆச்சாரியார். பிடிவாதக்காரரே அல்லவாம்; கடன் ஒத்திவைப்பு மசோதா, பப்ளிக் பிராசிக்யூட்டர் நியமனம், தணிகாசலம் செட்டியார் ரோடு பெயர் மாற்றம், விசுவப் பிராமணர் பெயர் மாற்றம் முதலிய பிரச்சினைகளுக்கு உண்டான எதிர்ப்புக்கு பொதுஜன ஆதரவு ஏராளமாக இருந்ததினால். கனம் ஆச்சாரியார் விட்டுக்கொடுத்தாராம். ஆனால் கட்டாய இந்தி எதிர்ப்பு விஷயத்தில் பொது ஜன ஆதரவில்லையாம். ஒரு சிலரே கட்டாய இந்தியை எதிர்க்கிறார்களாம். ஆகவே இவ்விஷயத்தில் விட்டுக். கொடுத்தால் மைனாரிட்டிகள் மிரட்டலுக்கு மெஜாரிட்டி விட்டுக்கொடுத்ததாக ஏற்பட்டுவிடுமாம். அதனாலேயே கட்டாய இந்தி விஷயமாகத் தாம் செய்த முடிவை மாற்றவே முடியாதென்று கனம் ஆச்சாரியார் கண்டிப்பாகக் கூறுகிறாராம். இவ்வாறாக ஆச்சாரியார் பத்திரிகையான “ஆனந்தவிகடன்” ஒரு போலிச் சமாதானம் கூறுகிறது.
05 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
போலிச் சமாதானத்தின் பொருள்
இந்தப் போலிச் சமாதானத்தினால் விளங்குவது என்ன? இதுவரைத் தமிழ்நாட்டில் கூட்டப்பட்ட இந்தி எதிர்ப்பு மகாநாடுகளினாலும் கண்டனக். கூட்டங்களினாலும் ஊர்வலங்களினாலும் கட்டாய இந்தி எதிர்ப்புக்கு. இருந்து வரும் பேராதரவை கனம் ஆச்சாரியார் உணரவில்லையென்றும். பல தமிழர் பெரும்படைகள் செய்த பிரசாரங்கள் மூலம் இந்தியை எதிர்ப்போர் எவ்வளவு தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை கனம் ஆச்சாரியார் கண்டு கொள்ளவில்லையென்றும் சென்னை மாநகரத்திலே திருவல்லிக்கேணி கடற்கரையிலே நடைபெற்ற மூன்று பிரம்மாண்டமான. இந்தி எதிர்ப்புக் கூட்டங்களும் கனம் ஆச்சாரியார் கண்ணைத் திறக்க வில்லையென்றும் சென்னை நகரத்திலே வாரந் தவறாமல் நடந்து வரும் ஊர்வலங்களும் தவறாமல் நடைபெற்றுவரும் கண்டனக் கூட்டங்களும் போடும் கூச்சல் கனம் ஆச்சாரியார் கேட்கும் செவியில் புகவில்லையென்றும்
நன்கு விளங்குகிறது.
தமிழர் கடமை: ஆகவே இந்தி எதிர்ப்புக்குத் தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு தருகிறார்கள் என கனம் ஆச்சாரியாரை உணர்த்தும் புது மார்க்கங்களைத் தமிழர்கள் இனிக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த மார்க்கங்கள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும். இந்தப் பொறுப்பு வேலூர் மாநாட்டாரை சார்ந்திருக்கிறது. அறிவு, ஆற்றல், அனுபவம் மிக்க. ஸர்.எ.டி. பன்னீர்செல்வம் தலைமையில் கூடும் வேலூர் மாநாடு கனம் ஆச்சாரியாரை அறிவுறுத்தும் புது மார்க்கங்களைக் கண்டுபிடிக்குமென: நம்புகிறோம்.
சென்னை மாநாடு.
அப்பால் சென்னை மாநாட்டைப் பற்றி கவனிப்போம். சென்னை: மாநாடு திராவிடப் பெருங்குடி மக்களுக்கெல்லாம் பொதுவானது. சென்னை: மாநாட்டுக்கும் ஜாதியில்லை; மதமில்லை: திராவிட மரபில் தோன்றியவர்கள். எல்லாம் அம்மாநாட்டில் பங்கு கொள்ளலாம். ஆனால் அரசியல் விஷயங்களில் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையை ஆதரிப்பவர்களுக்கே. அங்கு இடமுண்டு. வேலூர் மாநாட்டைப் போல் அரசியல் அபிப்பிராய வித்தியாசங்களுடையவர்களுக்கு அங்கு இடமில்லை.
மாநாட்டின் நோக்கம்
சுமார் 16 வருஷ காலம் தென்னாட்டு நிர்வாகம் நடத்திய ஜஸ்டிஸ். கட்சி பதவியிழந்த பிறகு இப்பொழுதுதான் முதலாக அம்மாநாடு.
கூடுகிறது. வலுவிழந்து நிற்கும் கட்சியை உறுதிப்படுத்தி அடுத்த தேர்தலில்.
கடி அரசு - 1938 (2) —— 109
வெற்றி பெற்று மந்திரி பதவிகளைக் கைப்பற்றும் மார்க்கங்களை ஆராய்வதே அம்மாநாட்டின் நோக்கமாக இருக்கக்கூடும்; அல்லது இருக்க. வேண்டும். ஏனெனில் அரசியல் கட்சிக்கு அதிகார பதவியே முக்கிய லகஷயம். அதிகார பதவி வகிப்பவர்களுக்கே நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை செய்ய முடியுமாகையினால் மந்திரி பதவியை ஒரு லக்ஷயமாகக். கொள்வது தவறுமல்ல, இழிவுமல்ல. வரவேற்புக் கழகத்தார் அம்மாநாட்டுக்குத் தலைமையை பெரியார் ஈ.வெராமசாமிக்கு அளித்தார்கள்.
பெருங்குடி மக்கன் நஷ்டம்.
ஆனால் அவர் கனம் ஆச்சாரியாரின் விருந்தினராகச் சென்று விட்டதினால் அவரது தலைமையில் மாநாடு நடத்தும் பாக்கியத்தை தென்னாட்டுத் திராவிட பெருங்குடி மக்கள் இழந்து நிற்கிறார்கள். ஆயினும் பெரியார் எழுதிய தலைமைப் பேருரையையே ஸர்.எ.டி.பன்னீர்செல்வம் மாநாட்டில் வாசிப்பாரெனத் தெரிகிறது. திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற்றம் ஒன்றையே தமது ஜீவிதலக்ஷ்யமாகக் கொண்டு பாடுபட்டு வரும் பெரியார் ஜஸ்டிஸ் கட்சி முன்னேற்றத்துக்கான மார்க்கங்களை அவரது தலைமைப் பிரசங்கத்தில் நன்கு விளக்கிக் காட்டியிருப்பார் என்பது நிச்சயம்.
ஜஸ்டிஸ் கட்சியார் போக்கு
மாநாடு கூடுவதும் தீர்மானங்கள். நிறைவேற்றுவதும் ஜஸ்டிஸ்: கட்சிக்கு புதியவை அல்லவாயினும் நிறைவேறிய தீர்மானங்களை அமலுக்குக். கொண்டு வருவது ஜஸ்டிஸ் கட்சிக்குப் பதுமையாகவே இருக்கும். மாநாட்டுத் தீர்மானங்களை அமலில் கொண்டு வரவேண்டுமென்ற எண்ணம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு இல்லையென்று மிக்க வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாகவே இருக்கிறது. தாய்ச் சங்கத்தார் போக்கே இவ்வாறானால். கிளைச் சங்கத்தார் போக்கைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
மற்றும் ஓர் குறை:
மற்றும் ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை பாமர மக்களை லக்ஷியம். செய்யவே இல்லை.ஒரு கட்சிக்கு வலிமையும் பெருமையும் அளிப்பது கிராமவாசிகள் என்ற உண்மையையும் ஜஸ்டிஸ் கட்சியார் அறியவில்லை: அதனாலேயே இதுவரைக் கூட்டிய மாநாடுகள் எல்லாம் சென்னையிலும். ஏனைய வெளி நகரங்களிலும் கூடி இருக்கின்றன. காங்கரசுக்குப் பாமர மக்கள் ஆதரவு பெருகுவதற்கு அகில இந்திய காங்கரஸ் மாநாடும் மாகாண மாநாடுகளும் கிராமங்களில் கூடி வருவதே முக்கிய காரணம். மாநாடு நடவடிக்கைகளை நேருக்கு நேர் காணும் போது தான் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களையும் அது இதுவரை செய்துள்ள வேலைகளையும். கிராமவாசிகள் சரிவர உணர முடியும். காங்கரஸ் பிரசாரகர்கள் கிராமங்கள்.
N வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தோறும் சென்று காங்கரஸ் பிரதாபங்களை பிரசாரம் செய்வதுடன் ஜஸ்டிஸ் கட்சியைப் பழித்தும் பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கு பதிலளித்து உண்மை நிலையை கிராமவாசிகள். சரியாய் அறியத் தேவையான ஏற்பாடுகளும் செய்யவேண்டும். மாகாண மாநாடுகள் மட்டுமின்றி ஜில்லாத் தாலூகா மாநாடுகளும் வருஷந்தோறும் கூட்ட வேண்டும். ஜில்லாத் தாலூகா சங்கங்கள் செவ்வையாக அமைக்கப் பட்டால்தான் இந்த வேலைகள் சரிவர நடைபெறும்.
மாநாடு செய்ய வேண்டுவன
பெரியார் சுதந்தரராயிருந்தால் இந்த வேலைகளிலேயே அவரது முழு கவனத்தையும் செலுத்துவார் என்பது நிச்சுயம். ஜஸ்டிஸ் கட்சி ஜமீன்தார் கட்சி, பணக்காரர் கட்சி என்ற பழி நீங்க வேண்டுமானால் கிராமவாசிகளும். ஜஸ்டிஸ் கட்சி எங்கள் கட்சி எனக்கூறும் நிலைமையை உண்டுபண்ண: வேண்டும். மாநாடு கூடும் தேதிவரை மாகாணம் முழுதும் சேர்ந்துள்ள. மெம்பர்கள் தொகையை வெளியிடுவதுடன் ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் இவ்வளவு மெம்பர்கள் சேர்க்க வேண்டுமென: வரையறுத்து அந்தந்த ஜில்லாக் சமிட்டியார் அப்பொறுப்பை ஏற்குமாறும் தூண்ட வேண்டும். ஓய்வு நேர அரசியல்வாதிகளுக்கு இனி அரசியலில். இடமில்லை என்ற உண்மையையும் மாநாட்டார் எல்லாருக்கும் உணர்த்த வேண்டும். பூரா நேரத்தையும் கட்சித் தொண்டில் செலவிடும் வசதியும் ஆற்றலும் உடையவர்களே ஜஸ்டிஸ் கட்சியில் இனிப் பொறுப்பான. பதவிகள் வகிக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும். சென்னை நகர முனிசிபல் டிவிஷன்கள் தோறும் கிளைச்சங்கங்கள் ஸ்தாபிக்கும் விஷயத்தில் நகர சங்கத்தார் கவனம் செலுத்துமாறும் தூண்ட வேண்டும். ஜில்லாக் கிளைச் சங்கங்களுக்கு வழிகாட்ட வேண்டிய நகர கிளைச்சங்கம் இவ்விஷயத்தில். அலக்ஷயமாக இருந்து வருவது பெரிதும் வருந்தத் தக்கதாகும். மற்றும். கட்சி அதிகார பதவி வகிக்கவில்லையானால் கட்சிக்கே வேலையில்லை. யென்ற மனப்பான்மை நமது தலைவர்களிடமிருந்து ஒழிய வேண்டும். எதிர்க்கட்சியிலிருக்கும் போதுதான் நமக்கு அதிக வேலையென்ற உண்மையை கட்சிப் பிரமுகர்கள் உணர வேண்டும்.
ஜஸ்டிஸ் எதிரிகள் செய்ததென்ண?
ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி வகித்தபோது எதிரிகளான காங்கரஸ்காரர் மந்திரிமாரின் ஒவ்வொரு செயலையும் கண்டித்து வாரந்தோறும் கூட்டங் கூட்டிப் பேசியதை நமது கட்சிப் பிரமுகர்கள் மறந்துவிட்டார்களா? காங்கரஸ் மந்திரிசபை ஏற்பட்டு சுமார் 18-மாதங்கள் ஆதியும் ஜஸ்டிஸ். கட்சி சார்பில் கூட்டம் கூட்டி காங்கரஸ் மந்திரிகளின் ஆட்சேபகரமான. செயல்களை இதுவரை யாராவது கண்டித்ததுண்டா? கட்சிப் பிரமூகர்கள். இவ்வண்ணம் பேசா மடந்தைகளாய் இருந்து வருவதினாற்றானே.
குடி அரசு - 1938 (2) —— ௦
சத்தியமூர்த்தி கம்பெனியார் ஜஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விட்டது, 500 அடி ஆழத்தில் புதைத்தாய்விட்டது என ஓயாமல் கூச்சல் போடுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சி பேரால் சட்டசபையில் பிரதிநிதிகளாயிருந்தவர்கள், மெம்பர் பதவி போனதோடு தம் வாழ்நாளே போய்விட்டதென்றும் கட்சிக்குச் செய்யவேண்டிய கடமைகள் இனி இல்லையென்றும் எண்ணிவிட்டார்களா?' ஒரு தேர்தலில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றியடைவதற்கான மார்க்கங்களைத் தேடுவதே புத்திசாலித்தனமும், ஆண்மையுமாகும்.
அனுதாபம் மட்டும் போதாது.
கட்சி நல்ல நிலைமையில் இருக்கையில் பதவிகள் வகிக்கப் போட்டி போட்டு, கட்சி தளர்ச்சியடைந்தவுடன் கட்சிப் பேரைச் சொல்ல. கச்சப்படுவோரைகட்சியிலிருந்து நீக்க வேண்டும். இனிவரும் தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சி பெயரால் போட்டி போடாதவர்களை கட்சியில் ஒரு பொழுதும் சேர்க்கக்கூடாது. மற்றும் ஜஸ்டிஸ் கட்சியார் இந்தி எதிர்ப்புக்கு அனுதாபம் காட்டினால் மட்டும் போதாது; போரிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். தலைவர் ராமசாமிப் பெரியார் வெளியிலிருந்தால் கட்சிக்கு நேர்வழிகாட்டி உதவி புரிந்திருப்பார். அந்தப் பாக்கியத்தை நாம் இழந்து நிற்கையில் கட்சிக்கு நேர் வழிகாட்டி வலுப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏனைய தலைவர்களுக்கே. ஆகவே அப்பொறுப்பை நன்குணர்ந்து அடுத்த தேர்தலில் நாம் வெற்றிக்கொடி நாட்டுவதற்கான வேலைகளை, மாநாடு முடிந்த நாள் முதற்கொண்டே ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் செய்ய முன்வருவார்கள் என நம்புகிறோம். தென்னாட்டுப் பெருங்குடி மக்களும் மாநாட்டுக்கு ஏராளமாகச் சென்று மாநாடு வெற்றியடையுமாறு செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
குடிஅரசு - தலையங்கம் - 18.12.1938
0 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
Quflum திருநான்
தமிழரியக்கத் தந்தையாரான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டிலும், தெலுங்கு நாட்டிலும் மலையாள நாட்டிலும் வெகு விமரிசையாகச் சென்ற டிசம்பர் 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. தமிழரியக்கத் தந்தையாரின் பிறந்தநாள் மலையாள நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் கொண்டாடப்பட்டது பலருக்குவிநோதமாகத் தோன்றலாம். தமிழர் இயக்கத் தந்தையார் தமிழர் விடுதலைக்காக மட்டும் உழைக்கவில்லை, திராவிட மக்கள் அனைவருடையவும் விடுதலைக்காகவே உழைக்கின்றார். தமிழர் விடுதலையின் பயனாக மலையாளரும் தெலுங்கரும் விடுதலை பெறுவது உறுதி. அதனாலேயே மலையாளரும் தெலுங்கரும் மிக உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கின்றனர். மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு 60-வது பிறந்த நாள் கொண்டாட்டம். புதுமையாகத் தோன்றலாம். பெரியார் வெளியிலிருந்திருந்தால் இத்திருநாள் கொண்டாட சம்மதித்திருக்கவுமாட்டார். திருநாள், பெருநாள். போன்ற ஆடம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவருக்குப் பெரிய வெறுப்பு. பாராட்டுகளும் உபசாரங்களும் அவருக்கு வேப்பங்காய் ஆனால் இந்த அறுபதாவது பிறந்தநாள் ஒரு மதச்சடங்காகவோ சமுதாய மரியாதைச் சடங்காகவோ கொண்டாடப்படவில்லை. பெரியார் சிறைபுகுந்த காரணத்தினால் தமிழரியக்கம் தளர்ச்சியடையாமலிருக்கவும் அவரது லக்ஷ்யங்களும் கொள்கைகளும் பொதுமக்கள் மனத்திலிருந்து மறையாமலிருக்கவுமே 60-வது ஆண்டுவிழாக் கொண்டாடப்பட்டது. டிசம்பர் 6-ந் தேதி பெரியார் சிறைபுகுந்தார். டிசம்பர் 18-ந்தேதி வரும் அவரது 60-வது பிறந்த நாளை தமிழ் மக்கள் எல்லாம் விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்று தோழர் திருச்சி விசுவநாதம் டிசம்பர் 10-ந்தேதி, “விடுதலை“யில் ஒரு அறிக்கை வெளியிட்டார் . பிறந்தநாள். இனத்துக்கும் அவர் அறிக்கை வெளியிட்ட தினத்துக்கும் இடையில் 7 நாட்கள். அப்படியிருந்தும் சென்னை மாநகரம் முதல் திருநெல்வேலி ஜில்லாவின் தெற்கு கோடியிலுள்ள கிராமங்கள் வரை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படவேண்டுமானால் பெரியாரிடம் தமிழ் மக்களுக்குள்ள. அன்புக்கும் மதிப்புக்கும் எல்லை வகுக்க முடியுமா?
குடிஅரசு -1938 (2) —— 30
பெரியார் மாட்சி.
மதப் புரட்டர்கள் இந்தப் பொதுஜன மதிப்பை சுயநலத்துக்காக பயன்படுத்தி திரண்ட பொருள் தேடிக்கொள்வர். ஆனால் பெரியாரோ இந்த அபார மதிப்பை ஒரு பொழுதும் சுயநலவிருத்திக்காகப் பயன்படுத்தவே இல்லை. தனது ௬௧ துக்கங்களை லக்ஷ்யம் செய்யாமல் தமிழர் முன்னேற்றத்துக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் ஒரு தியாகிக்கு
- இல்லறத் துறவிக்கு அத்தகைய இழிவான ஆசை எங்ஙன முண்டாகும்? பொதுஜன சேவையையே தமது ஜீவித லகஷ்யமாகக் கொண்ட ஒரு புனிதறாக்கு சுயநல விருத்தியில் விருப்பமேற்படுமா? சுயநலமே அவருக்கு பிரதானமாகத் தோன்றியிருந்தால் காங்கரஸ் பித்தலாட்டங்களை சித்துக்கொண்டு காங்கிரஸ்காரர் ஆதரவினால் ஒரு பரமாத்மா பட்டம். பெற்றிருக்க மாட்டாரா? மந்திரி பதவி பெற்றிருக்க மாட்டாரா? அல்லது பொறுப்பு வாய்ந்த காங்கரஸ் பதவி பெற்றிருக்க மாட்டாரா? கையிலிருந்த காங்கரஸ் பதவியைக் களைந்திருப்பாரா? அவருக்குத் தமிழர் முன்னேற்றமே முக்கியம். தமிழர் சுயமதிப்புடன் வாழ வேண்டுமென்பதே அவரது ஓயாக் கவலை. ஆகவே தமிழர் முன்னேற்றதுக்குத் தடையாக: விருக்கும் காங்கரசிலிருந்து வெளியேறினார். காங்கரஸ் கொடுமைகளை வன்மையாக எதிர்க்கத் தொடங்கினார். காங்கரஸ் துணை கொண்டு தமிழரை அடக்கி ஒடுக்கி, நசுக்கி வரும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத். தொடங்கினார். அந்த எதிர்ப்புப் போரில் அவர் தீவிரமாக ஈடுபட்டபோது பார்ப்பனர் ஆதிக்கத்துக்கும் செல்வாக்குக்கும் பார்ப்பன மதம் துணையாயிருப்பதை உணர்ந்தார். மதம் காரணமாக பார்ப்பனரல்லாதார். பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டிருப்பதையும் பார்ப்பனர்களுக்கு அஞ்சுவதையும் கண்டு கொண்டார். ஆகவே பார்ப்பன மதப்புரட்டை விளக்கி தமிழர்களுக்கு நல்லறிவுச்சுடர் கொளுத்த முயன்றார். அதுவே மதங்களை எதிர்ப்பதற்கும் காரணம். மதங்களை எதிர்த்தால். கடவுள்களையும் எதிர்க்காமல் முடியுமா? கடவுள்களே மதங்களுக்கு அடிப்படை. அடிப்படையைத் தகர்த்தெரியாமல் கட்டிடத்தை தகர்த்தெரிய முடியுமா? ஆகவே கடவுள்களையும் எதிர்த்தார். எதிர்க்கவே மதப்பற்றுடைய பார்ப்பனரல்லாதாருக்கும் பகைவரானார். பார்ப்பனர்களும் வைதீகப் பார்ப்பனரல்லாதாரும் சேர்ந்து கொண்டு பெரியாரை நாஸ்திகர் எனப், பழிக்கத் தொடங்கினர்: தூற்றத் தொடங்கினர்; திட்டத் தொடங்கினர். ஆனால் பெரியார் எதற்கும் அஞ்சவில்லை. தமிழர் முன்னேற்றம். என்னும் தமது லக்ஷ்யத்தை முன்நிறுத்தி அவர் போக்கில் தொண்டாற்றிக் கொண்டே இருந்தார். எனினும் இந்த கடவுள் பக்தர்களாலும் மத வெறியர்களாலும் அவருக்கு நேர்ந்த தொல்லைகள் அற்ப சொற்பமல்ல. அவர் மீதும் அவரது தமையனார் மீதும் பொய் வழக்குகள் தொடுக்குமாறு பலரைத் தூண்டிவிட்டு துன்புறுத்தினர். அவ்வழக்குகளிலும் பெரியார் வெற்றியடைந்தார். பொய் வழக்குத் தொடுத்தவர்கள் வெட்கித் தலைகுனிந்து ஓடினர்.
Bl வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
தமிழர்கள் விழிப்பு கடைசியாக கட்டாய இந்திச் சனியன் வந்தபோதுதான் பெரியாரின். உண்மையான, உழைப்பைத் தமிழர்கள் உணர்ந்தனர். ஆரிய நாகரீக. பீடையிலிருந்து - மதப்பீடையிலிருந்து விடுதலை பெறாவிட்டால் தமக்கு வாழ்வில்லையெனத் தமிழர்கள் எல்லாம் ஒரு முகமாக உணர்ந்தனர். ஆகவே பெரியாரின் இந்தி எதிர்ப்புக் கொடியின் கீழ் இன்று வைஷ்ணவரும், சைவரும், காங்கரஸ் வாதிகளும், கிறிஸ்தவரும், முஸ்லிம்களும், சமணரும், மதப்பற்றற்றவர்களும் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர். பெரியாரும் தமிழரியக்கத் தலைவராக விளங்குகிறார். தமிழ்நாட்டின் தனிப்பெரும். தலைவராய் விளங்குகிறார். அவரைச் சிறைப்படுத்தியல்லாமல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒழிக்க முடியாதென எண்ணி காங்கரஸ் சர்க்காரும் அவரைச் சிறையில் அடைத்துவிட்டனர். 60-வது வயது ஆரம்பத்தில். பெரியார் சிறையிலிருப்பது அவரது பழைய நண்பரும் காங்கரஸ் வாதியுமான தோழர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாருக்கு உள்ளக். கொதிப்பை உண்டு பண்ணியிருக்கிறது
ஆச்சாரியார் அதிகார வெறி: ஆகவே பெரியாரை 60-வது பிறந்தநாளுக்கு முன்விடுதலை: செய்ய வேண்டுமென்று அவரது பழைய நண்பரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை தோழர் முதலியார் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆச்சாரியார் பழைய ஆச்சாரியாரல்ல. காந்தியாரின் மனச்சாட்சிப் பொக்கிஷக் காப்பாளரான ஆச்சாரியாரல்ல.கண்ணன் காட்டிய வழி கண்ட ஆச்சாரியாரல்ல. பகவத்கீதை பாராயணத்தில் பொழுது போக்கிய ஆச்ளாரியாரல்ல. இப்பொழுது அவர் கனந்தங்கிய ஆச்சாரியாராயிருக்கிறார். சென்னை மாகாண முதன் மந்திரி பதவி தாங்கும் ஆச்சாரியாராயிருக்கிறார். அதிகார பதவி வகிப்பவர்களுக்கு பொதுவாக அதிகார வெறி தலைக்கு. ஏறுவது இயல்புதானே. அந்த மரபுப்படி கனம் ஆச்சாரியாருக்கு அதிகார வெறி தலைக்கு ஏறி இருக்கிறது. தம்மை எதிர்ப்பவர்களை நசுக்கி விடுவதென்று. முடிவு கட்டி இருக்கிறார். இந்தி எதிர்ப்பாளரைக் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன் என பகிரங்கமாக மார்தட்டி கூறுகிறார். ஒரு காலத்திலே அவரும் அவருடைய சம்பந்தியாரும். அவருடைய சகாக்களும் வெறுத்த - கண்டித்த - அடக்குமுறைச் சட்டத்தை இந்தி எதிர்ப்பாளர் மீது கூசாமல் பிரயோகம் செய்கிறார். நண்பர்களையும். பழைய தோழர்களையும் கூட அவர் லக்ஷ்யம் செய்யவில்லை.
இறுமாப்புக்குக் காரணம்.
இவ்வளவு இறுமாப்பு அவருக்கு உண்டாகக் காரணமென்ன? சென்ற தேர்தலில் தமிழர்கள் காங்கரஸ்காரருக்கு அளித்த ஆதரவே அவரது இறுமாப்புகளுக்கும் அட்டகாசங்களுக்கும் காரணம். காங்கரஸ்காரர்களின்.
குடிஅரசு -1938 (2) ௨ 3
பொய்ப்பிரசாரங்களினால் மயங்கி, காங்கரஸ்காரர் பதவியேற்றால் இந்த மண்ணுலகம் பொன்னுலகமாகிவிடுமென எண்ணி தமிழர்கள் எல்லாம் சென்ற பொதுத் தேர்தலில் காங்கரஸ்காரரைப் பெருவாரியாக சட்டசபைக்கு அனுப்பினார்கள். அந்த மெஜாரிட்டிபலமே கனம் ஆச்சாரியாரின் அறிவை மழுக்கிவிட்டது. அறிவு மயங்கினால் அப்புறம் கேட்கவா வேண்டும்? மக்கள் செய்வதெல்லாம் தலைகீழ் தர்பாராகவே இருக்கும். தமது கையில்: சிக்கியிருக்கும் அதிகாரத்தின் தன்மையை உணராமல் சாசுவதமென: எண்ணிக்கொண்டு தமிழர் வேண்டாத இந்தியை இந்துஸ்தானி என்னும் கபடப் பேரால் தமிழர்கள் தலைமீது வலுக்கட்டாயமாகச் சுமத்தி விட்டார். எதிர்ப்பவர்களை வகுப்புவாதிகள் ராஜத்துரோகிகள் என குற்றம் சாட்டிச் சிறைக்கு அனுப்புகிறார். ஆச்சாரியார் போகும் போக்கைப் பார்த்தால் அவரது உத்தியோக காலத்தில் அவரது போக்கை மாற்றிக்கொள்ளமாட்டார் என்றே தோற்றுகிறது. மாற்ற வேண்டுமானால் தமிழர்கள் பெரிய மனது வைக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு பொது ஜன ஆதரவில்லாததினாலே ஆச்சாரியார் லக்ஷ்யம் செய்யவில்லையென்று ஆச்சாரியார் புகழ்பாடும் பத்திரிகை ஒன்று கூறுகிறது.
தமிழர் கடமை ஆகவே இந்தி எதிர்ப்புக்கு தமிழர்களின் பேராதரவு இருப்பதாக. தமிழர்கள் காட்ட வேண்டியது மிகவும் அவசியம். தமிழர்கள் எல்லாம். கட்டாய இந்தியை எதிர்ப்பதாக அறியவேண்டியவர்கள் அறியும்படி செய்துவிட்டால் பெரியாரும் வெளிவருவார், கட்டாய இந்தியும் ஒழியும்; ஆச்சாரியார் ஆணவமும் அடங்கும். ஆகவே கனம் ஆச்சாரியாரின். அதிகார வெறிக்குச் சரியான மருந்து தமிழர்கள் கையிலேயே இருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை பெரியார். திருநாளை மிக விமரிசையாகக் கொண்டாடியவர்கள் எல்லாம் அந்த உணர்ச்சியை இந்தி எதிர்ப்பு விஷயத்திலும் காட்டிவிட்டால் நமக்கு வெற்றியும் ஆச்சாரியாரியாருக்குத் தோல்வியும் நிச்சயம். தமிழர்களே! என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் சட்டங்களை மீற வேண்டாம்; சிறை புக வேண்டாம்; எவருக்கும் தீங்கிழைக்க: வேண்டாம், கட்டாய இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மனப்பூர்வமாக - ஒரு முகமாக ஆதரிப்பதாய் சட்டபூர்வமான முறைகளினால் காட்டிக் கொண்டால் போதுமானது.
செய்யவேண்டுவன:
முதன் முதலில் இந்தி கட்டாய பாடமுள்ள பள்ளிக் கூடங்களுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பக்கூடாது: உங்கள் நண்பர்களும் தத்தம் குழந்தைகளுக்கு இந்தி கட்டாய பாடமுள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தி கட்டாய பாட அபிமானிகளுடன், நீங்கள் எத்தகைய சம்பந்தமும் வைத்துக்கொள்ளக். 33௨. வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
கூடாது. சாத்வீக முறையில் நீங்கள் அவர்களை முற்றிலும் பகிஷ்கரிக்க வேண்டும். உங்கள் ஊர்களில் இந்தி எதிர்ப்புச் சங்கங்கள் ஸ்தாபித்து தமிழர்களை எல்லாம் அச் சங்கங்களில் மெம்பர்களாகச் சேர்க்க வேண்டும். கட்டாய இந்தியினால் வரக்கூடிய தீமைகளை தமிழ் மக்கள் எல்லாம். உணரும்படி செய்ய வேண்டும். “தமிழ்நாடு தமிழருக்கே! என்ற உணர்ச்சி தமிழராய் பிறந்தோர் உள்ளத்தெல்லாம் தோன்றி விருத்தியடையுமாறு தூண்டவேண்டும். இவை யாவற்றிற்கும் மேலாக இந்தி எதிர்ப்பு நிதிக்கு. ஏராளமாகப் பொருள் உதவ வேண்டும். இவைகளே நீங்கள் பெரியாருக்குச் செய்யும் கைம்மாறு. இவைகளையே பெரியாரும் எதிர்பார்க்கிறார். தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது. தமிழ்த்தாயும் எதிர்பார்க்கிறாள்.
குடி அரசு - தலையங்கம் - 25.12.1938
குடிஅரசு - 1938 (2) —— வ
நமது லக்ஷியம்
சுயமரியாதை இயக்கம் இதுவரை சமூக முன்னேற்ற இயக்கமாக இருந்ததுமாறி இப்போது பொருளாதாரத்திலும், அரசியலிலும் பிரவேசித்துவிட்டதாகவும் இதனால் இயக்கம் ஆதரவற்று அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாகி நசித்துப்போகுமென்றும் சொல்லுகிறார்கள்.
சிலர் தாங்கள் அரசாங்க ஆக்கினைக்கு தயாராயில்லை என்றும் ஆதலால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் சொல்லுகிறார்கள்.
இக்கூட்டத்தார் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சி யடையத்தக்க ஒரு விஷயமிருக்கிறது. அதென்னவென்றால் அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாக முடியாது என்கின்ற காரணம் மாத்திரமே அல்லாமல், இக்கொள்கை: விஷயத்தில் ஆட்சேபனை யிருப்பதாகக் காணப்படவில்லை என்பதேயாகும். இது எப்படியிருந்தபோதிலும் விஷயத்தை சற்று கவனித்துப் பார்ப்போம்.
சமூக முண்ணேற்றம்
சமூக முன்னேற்றமென்றால் என்ன? எந்த சமூக முன்னேற்றம்? என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றம் என்பது மனிதர்கள் குளிப்பது, மதக்குறி இடுவது, புராணங்கள் படிப்பது, கோவில்களுக்கு யாத்திரை உற்சவம் செய்வது முதலாகிய இவைகள் தானா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிப்பது, சத்திரம் சாவடி கட்டுவது, பள்ளிக் கூடம் வைப்பது முதலியவைகள் தானா? இந்த மாதிரியான சமூக முன்னேற்றம் பல ஆயிர வருஷகாலமாக நடந்து வந்திருப்பதை: சரித்திர வாயிலாக அறிகிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான. மகாத்மாக்களும், முனிவர்களும், ரிஷிகளும், கடவுள் தூதர்களும். அவதாரங்களும், கடவுள் அம்சங்களும் தோன்றி ஞானோபதேசம். செய்து வண்டி வண்டியான ஆதாரங்கள் ஏற்பட்டிருப்பதும் அவைகள் கடவுள்கள் பேரால் வெளியானவை என்று சொல்லி அதில் கண்டபடி கட்டுப்பாடுகள் செய்து வைத்திருப்பதும் நாம் பார்க்கிறோம். இவற்றிற்காக.
உலகத்தையும், உலக மக்களையும், தேசமென்றும், மதம் என்றும், ஜாதி என்றும், வகுப்பு என்றும் பிரித்து இவற்றின் பேரால் பல ஸ்தாபனங்களையும் ஏற்படுத்தி 10-லட்சக்கணக்கான மக்கள் மதாச்சாரியார், உபதேசியார்,
B வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
மடாதிபதிகள் முதலிய பெயர்களால் வாழ்ந்து வருவதையும் பார்க்கின்றோம். இவ்வளவெல்லாம் இருந்தும் மனித சமூக முன்னேற்றத்திற்கு என்ன. பலன் ஏற்பட்டது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
சுமார் 2000, 3000 வருஷத்திற்கு முந்திய மக்கள் சமூக நிலையை எடுத்துக்கொண்டால் அதில் இன்று என்ன மாறுதல், என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? அந்தக்காலத்தில் இருந்த கொடுமை, ஏழ்மை, உழைப்பு, கஷ்டம், மனக்கவலை, அடிமைத்தனம் முதலிய எல்லாம் இன்றும். இருந்துதான் வருகின்றது. ராமர் காலத்தில், அரிச்சந்திரன் காலத்தில். இருந்து வந்த மேல்ஜாதி, கீழ்ஜாதி, பெண்ணடிமை, பிரபு - கூலிக்காரன், பிராணன் - சண்டாளன், அடிமை - எஜமான் முதலிய கொடுமைகள். இன்றும் இருந்துதான் வருகின்றன. பெண்களுக்கு உரை போட்டு தம்பூர் போலும், தலையணை போலும் வைத்திருக்கும் கொடுமை இன்று இல்லையா? பெண்களை விற்கும் கொடுமையும், அடிமைகொள்ளும். கொடுமையும் இன்று இல்லையா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி இன்று இல்லையா? மக்களைத் தெருவில் நடக்கவிடாமை, தொட முடியாமை, கண்ணால் பார்க்க முடியாமை ஆதிய மூர்க்க குணங்கள். இன்று இல்லையா? யாதொரு பாடும் படாமல் ஒரு நாளைக்கு நாலு வேளை, ஆறுவேளை சாப்பிடுகின்ற மக்களும், ஒரு நாளைக்கு 10-மணி நேரம் 12-மணி நேரம் பாடுபட்டும் அவர்கள் பெண்டுபிள்ளைகள். இரண்டுநாளைக்கு ஒரு தரங்கூட சமயல் செய்ய யோக்கிதை இல்லாத மக்களும் இல்லையா? இவைகள் எல்லாம் மதக் கட்டளை, கடவுள். சித்தம், அரசாங்க விதி என்பவைகளின் மீதே நடந்து வருகின்றனவா. இல்லையா? இவைகளை யோசித்துப்பாருங்கள்.
மனித சமூக முன்னேற்றம் என்பதில் நாணையமாயும், யோக்கியமாயும் பாடுபடுவதாய் இருந்தால் மேற்கண்ட கொடுமைகளை யெல்லாம் ஒழிக்கவேண்டுமா வேண்டாமா என்று யோசித்துப் பாருங்கள். மனித. சமூகம் என்றால் இதில் எந்த தேசத்தானாவது, எந்த மதத்தானாவது, எந்த சமயத்தானாவது, எந்த ஜாதியாணவது விலக்கப்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எல்லா தேசத்திலும், எல்லா மதத்திலும், எல்லா ஜாதியிலும், எல்லா அரசாங்கத்திலும் இந்தக் கொடுமைகளைப் பார்க்கின்றோம். சிலர் “எங்கள் மதத்தில் தீண்டாமை, பார்க்காமை முதலியவை இல்லை” என்று சொல்லக்கூடும். தீண்டாமை, பார்க்காமை என்பது ஒரு மதத்தையே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதே. எனது அபிப்பிராயம். தீண்டாமை என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதென்ன வென்றால் ஒருவன் பாடுபட வேண்டும், ஒருவன் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழவேண்டும். என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது
குடிஅரசு - 1938 (2) —— 109
உதாரணமாக பறையன் என்றால் என்ன? அவன் சதா கஷ்டமான. வேலையைச் செய்ய வேண்டியவன் என்பதே. பார்ப்பான் என்றால். என்ன? அவன் சரீரத்தால் வேலைசெய்யக் கூடாதவன் என்பதே. எங்காவது பார்ப்பனன் போர்ட்டர் வேலை, மண்வெட்டி வேலை, வீதி கூட்டும் வேலை, கக்கூஸ் எடுக்கும் வேலை, வண்டி இழுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய கஷ்டமான வேலை செய்கிறானா? பார்ப்பனப் பெண்களாவது காட்டு வேலை, தோட்ட வேலை, வீட்டுக் கூலி வேலை முதலியவைகள் செய்கின்றார்களா? இதற்காகத் தான் ஜாதி பிரிக்கப்
பட்டிருக்கிறது. இந்தக் கொள்கைகள் - அதாவது இந்த மாதிரி ஒரு ஜாதி (பல ஜனங்கள்) கஷ்டப்படுவதும், ஒரு ஜாதி (சில ஜனங்கள்) சுகப்படுவதுமான நிலை எந்த தேசத்தில் எந்த மதத்தில் எந்த ராஜரிகத்தில். இல்லை என்று யோசித்துப் பாருங்கள். இதைச் சீர்படுத்த வேண்டுமானால். எந்தவிதமான சமூக முற்போக்குடன் வேலை செய்வது?
பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல்:
சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்குப் பொருளாதாரமும். அரசியலும் அவசியமானதா அல்லவா? இந்த இரண்டையும் விட்டுவிட்டு. செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாக புராண முட்டாள். தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே. சுயமரியாதை இயக்கம் என்றால் அது அழிந்து போவதே மேலான. காரியம் என்று சொல்லுவேன்.
அரசியலைப் பற்றியும், பொருளாதாரக் கொடுமையைப் பற்றியும் பேசுவதே குற்றமான காரியம் என்று சில தோழர்கள் கருதி இருப்பதாகத் தெரிகின்றது. அது வீண் பயங்காளித்தனமேயாகும். இந்த மாதிரி பயங்காளித்தனம் கொண்ட மனிதனால் ஒரு காரியமும் செய்யமுடியாது. அரசியலுக்காகவும், பொருளாதாரத்துக்காகவும், நாம் யாரையும் அடிக்கவோ, குத்தவோ, கொல்லவோ, சுடவோ, வெடிகுண்டு எறியவோ' அல்லது எவ்வித பலாத்காரத்தை உபயோகிக்கவோ வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஜாதிவித்தியாசம் ஒழியவேண்டும் என்பதற்கு நாம் எத்தனை பேரைக் கொன்றுவிட்டோம்? யாரைச் சுட்டோம்?யார்.
மீது வெடிகுண்டு போட்டோம்? வெறும் நமது வாய்க்கிளர்ச்சியின் பயனாகவே - நமது அபிப்பிராயத்தை தயவு தாட்சண்யம் இல்லாமல்: வெளியிட்டதின் பயனாகவே மனித சமூகத்திற்குள் ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விடவில்லையா? “சுயராஜ்யம் கிடைத்த பின் தீண்டாமையை விலக்கிக் கொள்ளலாம்” என்று சொன்ன தோழர் காந்தி இரண்டு. வருஷத்திற்குள் இன்று “தீண்டாமை ஒழிய 21 நாள் பட்டினி கிடக்கிறேன்” என்று சொல்லவும், “இந்தப் பட்டினி வெகு நாளைக்கு முன்னதாகவே இருந்திருக்க வேண்டும்” என்று சொல்லவும் கூட நாம்
B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
செய்து விட்டோமா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள். நமது பயமற்ற, தாக்ஷண்ணியமற்ற உண்மைப் பிரசாரத்தால் பார்ப்பன. ஆதிக்கம் இந்த 4, 5, வருஷத்தில் எவ்வளவு தூரம் அடக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதே பணக்கார ஆதிக்கத்தையும் நாம் சரியானபடி கண்டிக்காததால் பணக்கார ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவி புரிகின்றது. ஆதலால்: பொருளாதாரத் துறையில் இரங்கித் தைரியமாய் தாக்ஷண்ணியமில்லாமல் அக்கொடுமையை வெளியாக்கினால் கண்டிப்பாய் பணக்கார ஆதிக்கத்துக்கு. சாவுமணி அடிப்பதோடு பொருளாதாரக் கொடுமையும் சற்றாவது குறையும். பொருளாதார உயர்வு தாழ்வைப் பற்றியும், கொடுமையைப் பற்றியும், அது சம்மந்தமான அரசியலமைப்பைப் பற்றியும், நாம் பேசும்போது பயங்காளிகளுக்கும், சுயநலக்காரர்களுக்கும், ரஷியா ஞாபகம் வந்துவிடுகின்றது. இது பைத்தியக்காரத்தனமேயாகும். “அன்னிய அரசாங்கம் வேண்டியதில்லை; எங்கள் தேசத்தை எங்களிடம் ஒப்புவித்துவிட்டு வெளிநாட்டார் வெளியாகிவிடவேண்டும்” என்று சொல்லும் தேசியவாதிகளின் அரசியலைவிட நம்முடைய அரசியல் கொடுமையானதுமல்ல; முட்டாள்தனமானதுமல்ல.
நாம் எண்ண சொல்லுகின்றோம்?
அன்னியன் என்பதற்காக யாரையும் நாட்டைவிட்டுப் போகும்படி சொல்லுவதில்லை. அன்னியர் ஆட்சி என்பதற்காக எந்த ஆட்சியையும் நாம் அழிக்க வேண்டும் என்று சொல்வதில்லை.
ஆனால் நாம் என்ன சொல்லுகிறோம்? முதலாளி தத்துவ முறைகொண்ட ஆட்சி வேண்டாம், பாடுபடும் மக்கள் அதன் பயனை: அடையும்படியான முறைகொண்ட ஆட்சி வேண்டும் என்றுதான். சொல்லுகிறோம். ஏனெனில் உலகத்தில் பாடுபடும் மக்கள், 100-க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். சோம்பேறிகள் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100-க்கு 10 பேர்கள் தான் இருப்பார்கள். ஆதலால் 100-க்கு 90 பேருக்கு அனுகூலமான ஆட்சி, அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக்கூடிய ஆட்சியாக இருக்கவேண்டும். என்கின்றோம். இதனால் என்ன தப்பு? இது ஏன் முடியாத காரியமாக வேண்டும்? இதை ராஜத்துவேஷம் என்றோ, வகுப்புத் துவேஷம் என்றோ சொன்னால் அதற்காக பயந்துவிடுவதா என்று கேட்கிறேன். அப்படியானால் வருவதுதான் வரட்டுமே. என்ன முழுகிப் போய்விடும்? சதா சர்வகாலம் உழைத்து சோம்பேறிகளுக்கும் போட்டுவிட்டு பட்டினியாகவே ஒரு. சமூகம் உலகில் உயிர் வாழவேண்டுமானால் அந்த சமூகம் பூண்டற்றுப் போவதில் யாருக்கு என்ன சங்கடம்? சோம்பேரிகள் தானே இதற்காக
கடி அரசு - 1938 (2) — 39
வருத்தப்படவேண்டும். கசாப்புக் கடைக்காரனுக்காகவே ஆட்டுச் சமூகம்: இருக்கின்றது என்றால், அந்த ஆட்டுச் சமூகம் உலகில் அற்றுப் போவது ஆடுகளுக்கு நஷ்டமா என்று யோசித்துப்பாருங்கள். உதாரணமாக தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். காவேரி ஆற்று பாசனம் முழுவதும் அங்குதான் பயன்படுகின்றது. எத்தனை ஆறுகள் ஓடுகின்றன? கொல்லைக்கு போகக்கூட இடமில்லாமல். ஜில்லாவின் பெரும்பாகம் நஞ்சையாக இருக்கிறது. ஜில்லா போர்டு, தாலூள போடு, முனிசிபாலிட்டி எல்லாம் “பொது ஜனங்கள்" கையிலேயே இருக்கிறது. இருந்தும் என்ன லாபம்? சிலர் கொள்ளை அடிக்கிறார்கள்,
சிலர் 1000 ஏக்கரா, 5000 ஏக்கரா, 10000 ஏக்கரா என்பதாக வைத்துக். கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் மாத்திரமல்லாமல் கோயில், மடம் முதலியவைகளுக்கும் இதுபோலவே லட்சக்கணக்கான ஏக்கராவும்,
செல்வமும் இருக்கிறது. அங்குள்ள சுவாமிகளுக்கும், மடாதிபதிகளுக்கும் உற்சவம், திருக்கல்யாணம், சோபணம் ஆகியவைகளுக்குக் கணக்கு வழக்கிலடங்காத. பொருள் செலவழிக்கப்படுகின்றது. இவ்வளவும் இருந்து பயன் என்ன?
சிங்கப்பூர், பினாங்கு, மலேரியா, மோரிசு பிஜி, கண்டி முதலிய இடங்களில் இருக்கும் கூலிகளில் அதிகமான விகிதாச்சாரம் தஞ்சாவூர் ஜல்லாக்காரர்களாகவே இருந்து வருகிறார்கள். தஞ்சாவூரில் அன்ன கத்திரங்களுக்கும், சமஸ்கிருத காலேஜுகளுக்கும் குறைவில்லை என்றால் இதன் கருத்து என்ன என்று யோசித்துப் பாருங்கள். பாடுபடும் மக்கள். பறையனாய், பள்ளனாய், குடும்பனாய், சாம்பனாய் கஞ்சிக்கு வகையில்லாமல் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு போய் நாயிலும், கழுதையிலும் கடையாய் பாடுபடுவதும், பாடுபடாத சோம்பேறிகள். அன்னச்சத்திரத்தில் சாப்பிட்டு சமஸ்கிருத காலேஜில் வாசிப்பதும், அங்குள்ள மிராசுதாரர்கள் தினம் தினம் நிலாவிருந்தும், சதிரும், பாட்டுக். கச்சேரியும், ஜலக்கிரீடையும் அனுபவிப்பதும், அங்குள்ள மடாதிபதிகள். ராஜபோகம் அனுபவித்துக்கொண்டிருப்பதும் சகிக்கக்கூடிய காரியமா என்று யோசித்துப்பாருங்கள். இதுபோலவே இன்னமும் எத்தனை ஜில்லாக்கள், எத்தனை: மாகாணங்கள், எத்தனை தேசங்கள் இருந்து வருகின்றன? இன்னும் “நமது சுதேச" ராஜாக்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் யோக்கியதையை சொல்லவேண்டுமா? அனேக ராஜாக்கள் தங்கள் தேசத்தினுடைய மொத்த வருமானத்தில் 100-75 விகிதம் தேவடியாளுக்கும், குதிரைப் பந்தயத்துக்கும், விருந்துக்கும், மோட்டாருக்கும், வசந்தோற்சவத்திற்கும் பாழாக்குகிறார்கள்.
B வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
படிப்பு விஷயத்தில்:
நமது நாட்டில் இவ்வளவு கொடுமைக்கும், அக்கிரமங்களுக்கும், அயோக்கியத்தனத்திற்கும் பணம் இருந்தும், படிப்பு விஷயத்தில் 100-க்கு
8 பேர்களே அதுவும் பார்ப்பனர்களும், பணக்காரர்களும் மாத்திரமே. படிக்க முடிந்தது என்றால் இந்த ஆட்சியைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ எப்படிப் பேசாமல் இருப்பது என்று யோசித்துப்பாறாங்கள். நாம் உண்மையான மனித சமூகத்திற்குப் பாடுபடுபவர்களாயிருந்தால். மேல்கண்ட அக்கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும் காரண பூதங்களா யிருப்பவைகளை அழித்தே ஆகவேண்டும். அது கடவுளானாலும், மதமானாலும், அரசாங்கமானாலும் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியதேதான். கடவுள் பக்தர்களும் மத பக்தர்களும் எங்கள் மீது பாய்வதில் பயனில்லை. தங்கள் தங்கள் கடவுள் மீதும், மதத்தின் மீதும் பாய்ந்து அவைகளுக்குப் புத்திவரும்படி செய்யுங்கள். நாங்கள் கடவுளும், மதமும் மேல்கண்ட அயோக்கியத் தனங்களுக்காக சோம்பேறிகளால், சுயநலச் சூட்சிக்காரர்களால், மூடர்களால் கற்பிக்கப்பட்ட தென்றே கருதுகின்றோம். ஆதலால் நாங்கள். அதைப்பற்றி லட்சியம் செய்வதில்லை. இன்றைய அரசியலையும், சோம்பேறிகளுக்கும் பணக்காரர்களுக்கும் காப்பளிக்க ஏற்பட்ட கவசம். என்றே கருதுகிறோம்.
ஆகையால் அவைகளையும் அடியோடு மாற்றி பாடுபடுபவர்களுக்கும். ஏழைகளுக்கும் காப்பளிக்கக்கூடியதான ஒரு ஆட்சியை நமது அரசாங்கத்தாரைக்கொண்டே அமைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
இப்படிக் கருதுவதால் ஆபத்து வந்துவிடும் என்று கருதுகிறவர்கள். எங்களையே இந்த ஆபத்துக்குள்ளாக்கிவிட்டு மரியாதையாய் விலகி தப்பித்துக்கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்குப் பயமில்லை. ஆனால் எங்களுக்கு முட்டுகட்டைப் போடவேண்டாம். உள்ளே இருந்து துரோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம். இவைகளை எல்லாம் பலாத்காரம் அடிதடி, குத்து வெட்டு, ரத்தக்களரி இல்லாமல் அஹிம்சை முறையிலேயே சட்டங்கள் செய்வதின் மூலமே சாதித்துக்கொள்ள தாராளமாய் இடமிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளுகிற எந்த ஸ்தாபனத்துடனும் கலந்து வேலை செய்யத் தயாராய் இருக்கிறோம். நாங்கள் காங்கரசுக்கு எதிரிகள் என்று இந்த ஊரில் சிலர் கருதியிருப்பதாகக் கேள்விப்பட்டோம். இந்தக்கொள்கைகள் காங்கரசுடைய கொள்கைகளாய் இருந்தால் நாங்கள் காங்கரஸ்காரர்கள்தான். வருணாச்சிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்க வேண்டும் ராஜாக்கள் இருக்கவேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் வேண்டும், வேதம் புராணம். இதிகாசம் இருக்கவேண்டும், இன்றைக்கு இருக்கிறதெல்லாம் இருக்க
குடி அரசு - 1938 (2) —— 340
வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவைகளையெல்லாம் பலப்படுத்த நிலைக்க வைக்கவேண்டி - “வெள்ளைக்காரன் மாத்திரம் போக: வேண்டும்” என்கின்ற காங்கரசோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, ஊந்தயமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும். சுயமரியாதை: இயக்கத்தார்களால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்த காங்கரசும், ந்தீயமும் ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் மாத்திரம். இறுப்பதாய்க் கருதுகிறீர்கள். அது தவறு... உலகில் எங்கும், எந்த மூலை முடுக்குகளிலும் இருக்கின்றது. இந்தியாவில் மலையாளம், ஆந்திரம், வங்காளம், பம்பாய், பஞ்சாப், ஐக்கிய மாகாணம் முதலிய அனேக மாகாணங்களில் இருக்கிறது. அவைகளைப் பார்க்கும்போது நமது 5.0 இயக்கம் மிகவும் வேகமற்ற சக்திகுறைவான தன்மையில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். நாம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கிறவர்கள் அல்ல. நமது தகுதிக்கு நிலைமைக்கு ஏற்ற அளவில். இருக்கிறோம். பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறையையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும், நேர்மையும் ஆனதால் நமக்கு பலாத்காரமும், ரகசியமும் வேண்டாம்.
தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும், கவலையாயும் வேலை செய்தோமேயானால் நம் ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம்.
பகுத்தறிவு (மா.இ) - கட்டுரை - டிசம்பர் 1938
U வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 27
அருஞ்சொல் பொருள்
தவச விலை. பொறாமை
அகவிலை:
அசூயை
இருள், அறியாமை
அந்தகாரம்.
வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலன், வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன்.
அடப்பக்காரன்.
அனாசாரம்
தீய நடத்தை கட்டளை
ஆக்கினை
வானாள் முழுவதும்
ஆயுள்பரியந்தம்
இதோபதேசம்
நல்லறிவூட்டல்
ஒப்புயர்வும்
ஈடுமெடுப்பும்
பிரதிமையாய்
உருவாரமாய்
கிழங்கு வேர் கனிகள்.
கந்தமூலம்
வறுமை, துன்பம்
கலி
காலகேஷபம்.
இசைக் கதையாடல்
காலதேசவர்த்தமானம்
கால இடங்களின் நிலைமை:
காலாடித்தனம்.
தொழிலற்றுத் திரிவோன் செய்யும் வேலை:
கிப்பாத்தும்
ஊதியமும்.
கரியாம்சையில்.
செய்கையில்
குச்சிக்காரி
விலைமகளீர்
குலாம்.
அடிமை:
குடி அரசு - 1938 (2)
342
யாத்திரை
சஞ்சாரம்
மூத்திரம் தண்டனை
ச்வகுண்டி
சிட்சை
செலவுக்குக் கொடுத்ததை மிகுத்து வைக்கும் பணம்
சில்வானம்
கோல் கொண்டு அடிக்கும் வட்ட மணி வகை.
கேண்டி
சொக்காரன்
சகலன்
தத்தம்
நீர் வார்த்துக் கொடுக்கும் கொடை
தத்துகள்.
ஆபத்துகள்.
தம்பூர்
பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி
ஒரு குடியில் பிறந்த உரிமைப் பங்காளி
தாயாதி
துர்லபம்
பெறுதற்கரியது
வீண்பகை, பேராசை தோரணை தரித்தவன்.
துராக்ரகம்.
தோரணைதரன்
நமன்.
யமன்:
நித்தியம்
நாள்தோறும்
கொடுமை
நிஷ்ட்டூரம்
பங்கா
படவிசிறி
பஞ்சேந்திரியங்கள்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அய்ம்பொறிகள்
பட்டாங்கம்
உண்மை நிலை
படுகாளி.
போக்கிரி, பொய்யன்
பரிகரிக்க
நீக்க
இல்லம், அரண்மனை
பவனம்:
பாப்பர்
இல்லான், பொருளிலி
பிரக்கியாதி
புகழ்
u3
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 27
பிதிரார்ஜித
முன்னோர் தேட்டை
நெருக்கடியின்றி
முட்டின்றி
ரஜா
விடுமுறை
வசந்தோற்சவம்.
காமன் பண்டிகை, இளவேனிலில் நடைபெறும்
திருவிழா
தங்கி
வதிந்து
வன்மனம்
கன்னெஞ்சு
விட்டி
கோழி
விருத்தாந்தம்
வரலாறு
வியக்தமாய்
வெளிப்படையாய்.
வியாழவட்டம்
பன்னிரு
வானமண்டலத்தில் குருவின்
ஆண்டுச் சுற்று.
ஹைரி
பகைவன்.
குடி அரசு - 1938 (2)
344