Kudi Arasu — 1938, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1938-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 26
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1938-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 400
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
ஆச்சாரியார் ஆட்சிக்கு ஏதிராக பெரியார்
போர்முரசு
1938 ஆம் ஆண்டு! சுயமரியாதை இயக்க வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்த காலகட்டம். ஜனவரி முதல் ஜூன் முடிய 6 மாத 'குடிஅரசு' இதழ்களில் இடம் பெற்றுள்ள பெரியார் - பேச்சு எழுத்துகளின் இந்த மூதல் தொகுதி 400 பக்கங்கள் வரை நீளுகிறது
பிரிட்டிஷாரின் இரட்டை ஆட்சி முறையின் கீழ் 17 ஆண்டுகாலம் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த நீதிக்கட்சி - 1937 இல் காங்கிரசிடம் தோற்றது. வெற்றி பெற்ற காங்கிரசார், அமைச்சர்களின் அன்றாட அலுவல்களில் ஆளுநர்கள் தலையிடக் கூடாது என்று பிரிட்டிஷ் ஆட்சி உறுதி தரக் கோரி சுமார் மூன்றரை மாத காலம் பதவி ஏற்க மறுத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.
இந்த நிலையில் ஆளுநர்களே - அமைச்சர்களை நியமனம் செய்து, அமைச்சரவை அமைத்தனர். இந்த நியமன அமைச்சரவையில் நீதிக்கட்சியினர் பங்கேற்க பெரியார் தடைபோட்டு விட்டார். அதிகாரப் பசியை பொறுக்க முடியாத காங்கிரசார் மூன்று மாதங்களில் நிபந்தனைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு பதவி ஏற்க முன் வந்தனர். 1937 ஜூலை 14 இல் இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் முதல் காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்றது. வீராப்பு பேசியவர்கள், பிறகு பதவிக்கு ஓடியதால் பெரியார், 'சரணாகதி மந்திரி சபை' என்று அதற்குப் பெயர் சூட்டினார். பார்ப்பன இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைந்த “சரணாகதி மந்திரிசபை'க்கு எதிராக பெரியாரின் அனல் பறக்கும் கருத்துகள் இத் தொகுதி முழுதும் அடங்கியுள்ளன.
சேலம் மாவட்டத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்திய காங்கிரஸ், அதன் பொருள் இழப்பை ஈடுகட்ட கல்வி, சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடுகளை நிறுத்துகிறது. காங்கிரஸ் கொடியையே தேசியக் கொடியாக மாற்ற முயற்சித்தபோது, பிரிட்டிஷார் எதிர்த்தவுடன் அந்த முயற்சியை கை விடுகிறது. சட்டசபை கூட்டம் தொடங்கும் முன் 'வந்தே மாதரம்” என்ற பாடலை பாடத் தொடங்கிய காங்கிரஸ், முஸ்லீம்கள் எதிர்த்தபோது அதை கைவிடுகிறது
சேலத்தில் பார்ப்பனரல்லதார் நிர்வாகத்தில் நடந்த, நகராட்சி செயல்படுத்த முனைந்த குடிநீர் திட்டத்தில் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி தலையிடுகிறார். சேலம் நகராட்சி முடிவுக்கு மாறாக - பார்ப்பன நிறுவனம் ஒன்றுக்கு - திட்டத்தை நிறைவேற்றும் உரிமை வழங்கி, நகராட்சிக்கு ரூ.5
லட்சம் கூடுதல் செலவை உருவாக்கவே நகராட்சி தலைவரும், உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுகிறார்கள்
நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் மாநாட்டில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டதற்காக அவர்களுக்கு மொட்டை அடித்து சாணிப்பால் ஊற்றி அவமதித்த தீண்டாமை வெறியை துணிவுடன் பெரியாரின் 'விடுதலை'யும், 'குடிஅரசு'ம் அம்பலப்படுத்தியது. ஆத்திரமடைந்த காங்கிரசார் தொடர்ந்த வழக்கை பெரியார் உறுதியுடன் எதிர் கொண்டார். நீதிமன்றம் அபராதம் விதித்தாலும் அது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்ற தீர்ப்பு என்று துணிவுடன் பிரகடனம் செய்கிறார்.
அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்ற காரணத்தால் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் பெரியார் பேசிய சுயமரியாதை கூட்டங்களில் காங்கிரசார் குழப்பம் உருவாக்கி வன்முறைகளில் ஈடுபட்டபோது அந்த மிரட்டல்களை உறுதியுடன் எதிர்கொண்ட செய்திகளும் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
அக்கால கட்டத்தில் கொச்சி சமஸ்தானத்துக்கு சர்.ஆர்.கே. சண்முகம், மைசூர் சமஸ்தானத்துக்கு சர்.பிள்ளை, இஸ்மாயில் என்ற பார்ப்பனரல்லாதாரும், திருவனந்தபுரம் சமஸ்தானத்துக்கு சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரி, காஷ்மீர் சமஸ்தானத்துக்கு கோபால்சாமி அய்யங்கார் ஆகிய பார்ப்பனர்களும் திவான்களாக இருந்தார்கள். அப்போதுதான் சர்.ஆர்.கே. சண்முகம் தனது நிர்வாகத்திலுள்ள கொச்சியில் மன்னர் ஆதரவோடு 100 அரசு பதவிகளில்.
4 பார்ப்பனர்களுக்கும் 38 பதவிகளை ஈழவர், புலையர் ஆகிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர்களுக்குரிய துறைகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை வழங்கும் முறையையும் ஆர்.கே.சண்முகம் அறிமுகப்படுத்தினார். இந்த சீர்திருத்தங்களை 'குடி அரசு' அழுத்தமாக ஆதரித்தது. பார்ப்பன திவான்கள் சமஸ்தானத்தின் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியது
முஸ்லீம்களும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து பார்ப்பன
காங்கிரசை எதிர்த்துப் போராடிய காலகட்டம் அது. இந்த இணைப்பைப்
பிரிக்க பார்ப்பன பத்திரிகைகள் மேற்கொண்ட சூழ்ச்சிகளை பெரியார் எச்சரித்ததோடு, “இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பது ஒரு சமயம் பொய்யாகவும் ஆகாத காரியமாகவும் இருக்கலாம் என்று சொல்லுகிறவர்கள் சொல்லட்டும்.
ஆனால் காங்கிரஸ் ஆதிக்கத்தை ஒழிக்க காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க ஆரிய சூழ்ச்சியிலிருந்து தப்ப முஸ்லீம்களும், சுயமரியாதைகாரர்களும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பது எனது உறுதி” என்று எழுதினார்.
நீதிக்கட்சி செத்துப் போய் விட்டது என்றும், அதை 5000 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் விஷமப் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் எதிரிகளுக்கு பதிலளித்து, "காங்கிரஸ் நாணய விளக்கம்' எனும் தலைப்பில் பெரியார் எழுதியுள்ள கட்டுரையில் பெரியார் தனது தொண்டை சுய மதிப்பீடு செய்கிறார். காங்கிரஸ் கட்சியிலே தமக்கு தலைவர், காரியதரிசி பதவிகள் கிடைத்ததுகூட, ஆச்சாரியார் போன்றவர்கள் இஷ்டப்படி ஆட சம்மதித்ததால்தான் கிடைத்தது” என்று எழுதி, தனது ஒளிவுமறைவற்ற நேர்மையை பெரியார் வெளிப்படுத்துகிறார்
“பார்ப்பன ஆதிக்கத்தை முறியடித்து வெட்டி வீழ்த்துவதையே
கருமமாகக் கொண்ட நம் நிலை மிக்கத் தொல்லைப்படத் தக்கதாகவும்
துன்பப்படத்தக்கதாகவும்'' அமைந்துவிட்டதைக் குறிப்பிடும் பெரியார்,
“அவற்றின் பலன் முடிவில் வெற்றி முகத்தையே காட்டி வந்திருக்கிறது”
என்று நம்பிக்கையை முன் வைக்கிறார். தமது உணர்ச்சியும் ஊக்கமும்
குறையாமல் இருப்பதற்கு பெரியார் கூறும் காரணம்தான் அவரது உறுதியான. தலைமைத்துவத்துக்கு சான்றாக நிற்கிறது. பெரியார் எழுதுகிறார்
“எதிரிகளுக்கு ஸ்தாபனமுண்டு. பொறுப்பு உண்டு. கூட்டுக் கவலை உண்டு. பொது மக்களிடம் கோடிக்கணக்காய் பொருள் திரட்டும் தந்திரம் உண்டு.
நமக்கு என்ன உண்டு? சகலமும் நாமேதான் என்னும் ஆணவமும் அகம்பாவமும் தான் உண்டு. ஏன் என்றால் அப்படிப்பட்ட ஆணவமும் அகம்பாவமும் கொண்டதால் தான் நான் இவ்வளவு காலமாவது உயிர்வாழ முடிந்தது. நமக்கென்ன குறை? எதற்கும் மற்றவர்கள் இருக்கிறார்கள். ஸ்தாபனங்கள் இருக்கின்றன. கவலையும் பொறுப்புமுள்ள சக்தி வாய்ந்த தோழர்கள் இருக்கிறார்கள் என்று சிறிதாவது கருதி இருந்திருப்போமானால், நமது உணர்ச்சியும் ஊக்கமும் குறைவுபட்டு, தொட்டதிலெல்லாம் தோல்வியே தலைகாட்டி பொது வாழ்விலிருந்து விலகி மறைந்திருப்போம்'”
- என்று எழுதியிருப்பது ஆழமான சிந்தனைக்குரியது.
“பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்'',
“ஒழுக்கம்” ஆகிய தலைப்புகளில் பெரியார் எழுதிய காலத்தைக் கடந்து நிற்கும் சிந்தனைக் கருவூலங்கள் இத்தொகுதியில்தான் இடம் பெற்றுள்ளன.
இராஜகோபாலாச்சாரியின் ஆட்சி கட்டாய இந்தியைப் பள்ளிகளில் கொண்டு வரும் ஆணையை எதிர்த்து பெரியாரின் போர்ப் பிரகடனம்
இத்தொகுப்பின் இறுதியில் தொடங்குகிறது. இந்தியைப் புகுத்துவது மனுதர்ம பார்ப்பனியத்தைப் புகுத்தும் சூழ்ச்சியே என்று வலியுறுத்தும் பெரியார் - இந்தி எதிர்ப்புப் போரை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து பார்ப்பனரல்லாத மக்களை விடுவிக்கும் போராகவே திட்டமிட்டு களமிறங்கியதை அவரது எழுத்துகள் உணர்த்தி நிற்கின்றன.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆச்சாரியார் நடத்திய பார்ப்பன கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக சிம்ம முழக்கமிட்ட பெரியாரின் வரலாறுகளைப் பதிவு செய்கிறது, இத் தொகுதி!
- பதிப்பாளர்
பொருளடக்கம்
ஒழுக்கம்
11
© ® N ஓத வ ஜட
கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
17
காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும்
23
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை
30
வைத்திய உதவிக்கு ஆபத்து தாழ்த்தப்பட்டவர்களும் முஸ்லீம்களும்
36
40
காங்கரஸ் கொடி தேசீயக்கொடி அல்ல
43
கொச்சியில் அரசியல் சுதந்தரம்
45
காங்கிரஸ் வண்டவாளம்
49
தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம் ஹரிஜன” மந்திரிக்கும் மேயருக்கும் சவால்
66
71
காங்கரஸ் நாணயம் விளக்கம்
72
காங்கரஸ் விஷமப் பிரச்சாரத்துக்கு மறுப்பு
77
புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை
86
பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஒப்பந்தமா?
87
தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?
92
கடவுள் பற்றிய விளக்கம்
97
நீடாமங்கல உண்மை
107
ஈரோட்டில் பொதுக்கூட்டம்
111
நீடாமங்கலத்தில் நடந்ததென்ன?
114
காங்கரஸ் புரட்டு விளக்கம்
116
ஆத்திரப்பட்டு பயன் என்ன?
23
'திணமணி'யின் ஊளை
24
விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது
25
தேசிய காங்கிரஸ் கலப்புமணப் பிறவி
26
இதற்குப் பரிகாரமென்ன?
27
பார்லிமெண்ட்டில் ராஜிநாமா விஷயம்
28
காங்கரசும் சுயமரியாதையும்
29
பானகல் ராஜா வாசகசாலை ஆண்டுவிழா
30
ஒரு தொல்லை ஒழிந்தது மறுதொல்லையை ஒழிக்கத் தயாராயிருங்கள்.
31
171
சரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு
32
“பார்ப்பன” பாம்புக்கு தேசீயப் பால்!
33
181
34
கண்ட்ராக்ட்டு ராஜ்யம்
வரவேற்கிறோம் கொலையை வரவேற்கிறோம்
35
பார்ப்பனரும் வகுப்புவாதமும்
36
201
மதுரை ஜில்லா 2-வது சுயமரியாதை மகாநாடு
37
202
கஷ்டமான பிரச்சினை
38
207
நெருக்கடி சர்வகட்சி தமிழர் மகாநாடு
39
213
பார்ப்பனர்கள் ஆரியர்களா? யூதர்களா?
40
217
அவர்கள் யூதர்களே!
ஆச்சாரியார் இந்திரஜாலம்!
41
220
42
ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்; முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்
223
சேலத்துக்கு என்ன பதில்.
43
232
சபாஷ் பரோடா
44
240
திருவாங்கூரும் பார்ப்பனீய கொடுமையும்
45
242
ஆச்சாரியாரும் கதரும்
46
248
கங்கை கொண்ட (காங்கரஸ்) சாக்கடை
47
253
ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்
48
256
காங்கரஸ் வகுப்புவாத விளக்கம்
49
266
மொண்டிச் சாக்கு
50
277
சேலம் மக்களே உஷார்
51
284
எல்லா வரிகளும் எம்மனோர்க்குத்தானா? ஜனநாயகமா? தடிநாயகமா?
52
285
53
289
காந்தி எச்சரிக்கை
54
294
பகிரங்கக் கடிதங்கள்
55
295
பெண்கள் விடுதலைக்கு 'ஆண்மை' அழிய வேண்டும்
56
297
'பஞ்சகன்யாஸ்மரே.
57
301
ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன?
58
307
பகிரங்கக் கடிதங்கள்.
59
314
நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி
60
316
ஈரோடு காங்கரஸ் நாற்றம்
61
324
தமிழா என்ன செய்யப்போகிறாய்
62
இந்தி வந்து விட்டது! காங்கரசும் மைனாரட்டியும் தொண்டர்களே - சென்னை செல்க இன்னமுமா காங்கரஸ்
327
63
328
64
338
65
344
பகிரங்கக் கடிதங்கள்.
66
349
காங்கரஸ் பித்தலாட்டம்
67
351
போர் மூண்டு விட்டது தமிழர் ஒன்று சேர்க
68
360
தமிழர் போர் மூண்டுவிட்டது எதற்காக? தமிழுக்காக
69
368
ஹிந்திப் போர்
70
369
பழிக்குப் பழிவாங்கும் பார்ப்பனர் ஆட்சி
71
372
ஆச்சாரியார் அறிக்கை
72
377
நீடாமங்கலத்துக்கு “நீதி” ஆச்சாரியார் அடக்குமுறைக்கு ஜே!
73
383
74
386
ஹிந்தியும் முஸ்லிம்களும் தமிழ்த்தாயின் மக்களுக்கு ஓர் வேண்டுகோள் அருஞ்சொல்பொருள்
75
392
76
397
77
399
ஒழுக்கம்
உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்னவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே யல்லாமல்,
அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம்,
நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் “பூச்சாண்டி” “பூச்சாண்டி” என்பதுபோல் இவை எளியோரையும் பாமர மக்களையும் வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச்செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்
எப்படி குழந்தைப்பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அதுபோலவேதான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்கம் முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கிற ஆட்களின் வலிமையையும், அறிவையும்கொண்டு மதிக்கப்படுகிறதே யல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை சாதாரணமாக உலகில் “விபசாரம்” பொய்” “களவு” “ஏமாற்றம்” முதலிய காரியங்களை ஒழுக்கங்கெட்ட காரியங்கள் என்று சொல்லப்படுகிற தென்றாலும், இந்தக் காரியங்கள் யாவையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ இல்லாத மனிதர் எவரையும் இதுவரையில் உலகத்தில் காண முடியவே இல்லை.
ஒரு சமயம் நமது கண்ணுக்குத் தென்படவில்லை என்று சொல்லுவதானால் அப்படிச்சொல்லும் மக்கள் ஒவ்வொருவரும் முதலில் தங்களைப்பற்றியே நினைத்துப்பார்த்து தங்களுடைய சிறு பிராயம் முதல் இன்றையவரையில் உள்ள பல பக்குவ வாழ்நாளில் மேற்கண்ட ஒழுக்கங்கெட்ட" காரியங்கள் என்பவைகளில் எதையாவதொன்றை மனோவாக்கு காயங்களால் செய்யாமல் இருந்திருக்க முடிந்ததா, அல்லது செய்யாமல் இருக்கின்றார்களா என்று நினைத்துப் பார்த்தால் உண்மை
விளங்கிவிடும். (NB. மற்றும் தங்களுடைய சுற்றத்தார், நண்பர், சுற்றிலுள்ள அறிமுகமான ஜனங்கள் நன்றாய்த் தெரிந்த அந்நியர் முதலாகியவர்களில் யாராவது ஒழுக்கத்துடன் நடந்து வந்ததுண்டா என்று
சிந்தித்துப் பாருங்கள். இந்த இருவித முடிவைக் கண்டுகொண்ட பிறகு உலகத்தை நினைத்துப் பாருங்கள்.)
மற்றும் உலகில் மக்கள் வாழ்க்கைக்கென்று இருந்து வருகிற தொழில்களில் முக்கியமானவைகளாகக் காணப்படுவது விவசாயம், வியாபாரம், கைத்தொழில், கூலி, வக்கீல், உத்தியோகம், வைத்தியம், விலை
மாதர் தொழில் ஆகியவைகள் முதல், குருத்துவம், சன்னியாசம், துரைத்தனம், தேசீயம், ஈறாகவுள்ள அனேக துறைகள் ஆகும். இவற்றின் மூலமே மக்கள் பெரும்பாலும் வாழுகின்றார்கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம். இந்த மக்களில் யாராவது ஒருவர் ஒழுக்கமாக நடந்துகொள்ளுவதை நாம் பார்க்கின்றோமா? ஒழுக்கம் என்றால் என்ன? அது எது என்கின்ற விஷயத்தில் நாம் இப்போது பிரவேசிக்கவில்லை அதற்கு இந்த வியாசத்தில் இடம் வைக்கவுமில்லை. மற்றப்படி நாம் ஒழுக்கம் என்பதாக உலக வழக்கில் எதை எடுத்துக்கொண்டு பேசுகின்றோமோ, மேற்கண்ட வாழ்க்கைத் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள். அந்தந்த துறைக்கும் எதை யெதை ஒழுக்கம் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளுகிறார்களோ அதையும், அவரவர்கள் மற்றவர்களைப்
பார்த்து எதை யெதை ஒழுக்கம் கெட்ட காரியம் என்று சொல்லுகிறார்களோ அதையும் மாத்திரமே இங்கு ஒழுக்கம் என்பதாக வைத்துக்கொண்டு யாரிடமாவது இந்த ஒழுக்கத்தைக் கண்டுபிடிக்க முடிகின்றதா என்றுதான். கேட்கின்றோம்.
ஒரு வேலைக்காரன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை அந்த வேலைக்காரன் முன்னிலையிலேயே எஜமான் செய்துவிட்டு வேலைக்காரனை மாத்திரம் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான்.
ஒரு குமாஸ்தா செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை மேல் அதிகாரி அந்தக் குமாஸ்தா முன்னிலையிலேயே பல தடவை செய்துவிட்டு குமாஸ்தாவை ஒழுக்கங்கெட்டவன் என்று கூறுகிறான். (NB. ஒரு மகன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை தகப்பன் செய்துவிட்டு மகனை ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான்)
இதுபோலவே, எல்லாத்தொழில் துறையிலுமுள்ள மக்களும் அவரவர்கள் வாழ் நாட்களில் ஒழுக்க யீனமாக நடந்து கொண்டே மற்றவர்களை ஒழுக்க யீனர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இவை
நாம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரம் இருப்பதாய்ச் சொல்ல வரவில்லை. 'ஒழுக்கமாய்” மக்கள் யாராலும் நடக்க முடியாது என்றும்,
ஒழுக்கம் என்பதாக ஒரு குறிப்பிட்ட குணமோ, செயலோ இல்லை என்றும், ஒழுக்கம் என்று சொல்லி வருவதெல்லாம் எளியோரையும்
குடி அரசு- 1938 (1) 12
பாமர மக்களையும் அடிமைத்தனத்தில் இருத்திவரப் பயன்படுத்தக்கூடிய
சூழ்ச்சி ஆயுதமே தவிர, மற்றபடி அது மக்கள் சமதர்மத்துக்கு பயன் படக்கூடியது அல்லவென்றும் சொல்லுவதற்காகவே எடுத்துக்காட்டுகிறோம்
உண்மையிலேயே ஒழுக்க ஈனம் என்பது ஒன்று உண்டென்றும், அது திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய குணங்கள்தான் என்றும் சொல்லுவதாய் இருந்தால் அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாய் குடிகொண்டு இருக்கும் இடங்கள், அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசீயவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும்
மனிதர்களுக்கு துன்பமிழைத்து அவர்களது அமரிக்கையைக் கெடுத்து ஏமாற்றி வஞ்சித்துவாழும் கூட்டங்கள் மேற்கண்ட கூட்டங்களே யாகும்
இது அந்தந்த துறையைக் கைக்கொண்ட ஆட்களை மாத்திரமல்லாமல், அந்தத் துறைகளுக்கே ரத்தமும், சதையும், எலும்பும் போலக்
கலந்திருக்கும் காரியங்களுமாகும்
இந்தக் கூட்டத்தாரைக் கண்டு எந்த மகனும் அசூயைப்படுவதே யில்லை. இவர்களிடத்தில் மக்கள் வெறுப்புக் காட்டுவதுமில்லை. அதற்குப்பதிலாக, இந்தக் கூட்டத்தாருக்குத் தான் நாட்டிலே மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும், இருந்து வருகின்றது. மனித சமூகத்திற்கு எலும்புருக்கி வியாதிபோன்ற இந்தக் கூட்டம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்திவருவது என்பது மக்களின் அறிவீனத்தையும் பலமற்ற தன்மையையும் காட்டுவதல்லாமல் வேறில்லை.
வாழ்க்கைத் துறையின் ஒழுக்கம்தான் இம்மாதிரி இருக்கின்றதென்றால். மற்றபடி, பக்தி, பரமார்த்திகம், ஆத்மார்த்தம், ஆசாரத்துவம், மகாத்மாத்துவம் என்பவை முதலான துறைகளிலாவது ஒழுக்கம் என்பதை காணமுடிகின்றதா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
அவையும் இப்படித்தான் இருக்கின்றன என்பதே நமது அபிப்பிராயம்.
பகுத்தறிவு (மா.இ) - கட்டுரை - ஜனவரி 1938
பகுத்தறிவு (மா.இ) - பகுத்தறிவு மாத இதழ் மட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
குடி அரசு- 1938 (1) 14 15
ஆட்கட த க்வி s TN அண
பதின் பயல படட
இப்ங்கிரதிஙுவக்டட5 T5S555595555 6. ற இல்லைய?
[துறைய 9 ஆடி எலாம்]
அலவ்வோலம என்று ட்டு]
யாத்த பர்த் vt a0 1 காத் தொலை நும்
இண்டு த்வத் | வடைய ந் அண்னன் அன்ட் = லவ்
தப்த வண்கை எ ண்க்கொல்னுல் கப வண்ட த
க பங்க் “கல் | க்க கலைக் தைஇ (த் வல S Sy லு
வ 5 595555699955953 s ல்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
குடி அரசு- 1938 (1) 16
கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
திருப்பி அழைத்துக் கொள்ள இந்தியா
மந்திமிக்கு வேண்டுகோள்
தலைவரவர்களே! தோழர்களே!
நான்* இத்தீர்மானத்தைப் பிரேரேபிக்க எழுந்ததில் எனக்கு உற்சாகமில்லை. மிகவும் சங்கடத்துடன் முன் வந்திருக்கிறேன். பிரிட்டிஷ் ஆட்சி நம் பழங்கால ஆட்சியைவிட மேலானது என்று எண்ணுபவர்களில் நான் ஒருவன். பிரிட்டிஷார் உலகில் உள்ள மற்ற மக்களைவிட யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்பதை நான் உலகம் சுற்றிப்பார்த்துப் பிரிட்டிஷார் வாழும் இங்கிலாந்து முதலிய நாடுகளில் கிராமங்கள். தோறும் சுற்றிப்பார்த்து நேரில் அறிந்தவன். இந்தியா நாடானது இந்தியர்களால் ஆளப்பட முடியாமல் அன்னிய நாட்டார்களால் தான் ஆளப்பட வேண்டும் என்கின்ற நிலைமை நிரந்தரமாக ஏற்பட்டால் நான் பிரிட்டிஷாருக்குத்தான் ஓட்டுக் கொடுப்பேன். ஏன்? மற்ற நாட்டார்களையும் அவர்களது ராஜரீகத்தையும் நான் அறிவேன். ராமராஜ்யம், சேர, சோழ, பாண்டியன், நாயக்கர் ராஜ்யம் ஆகிய கதைகளையும் புராணங்களையும் அவர்களது ராஜரீக முறைகளையும் பற்றி சிறிதாவது உண்மையை உணர்ந்திருக்கிறேன்.
ஏகாதிபத்தியத்து விரோதமல்ல
ஆதலால் இத்தீர்மானம் பிரிட்டிஷ் ராஜ்யபாரத்துக்கு விரோதமாக நான் இப்போது கொண்டு வந்ததாக நீங்கள் கருதாதீர்கள். அதற்கு அவசியம் வரும்போது வேறு யாரையும்விட குஷாலாக நானே
பிரேரேபிப்பேன். அப்பேர்ப்பட்ட காலம் சீக்கிரம் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும் ஆகும். ஆனால் அது பிரிட்டிஷ்
ராஜ்யம் என்பதற்காக அல்ல. மற்றபடி அது முதலாளிகளுடையவும், புரோகிதர்களுடையவும் ராஜ்யமாய் இருக்கிறதே என்பதற்காகவாகும் ஆனால் பிரிட்டிஷார் போய்விட்டால் ஆச்சாரியார் ராஜ்யமோ, நேருக்கள் ராஜ்யமோ, காந்திகள், சத்தியமூர்த்திகள் அல்லது 75 ரூபாய்க்குக் கை
தூக்கும் ஜனநாயக ராஜ்யமோ வருவதாய் இருந்தால் என் உயிரைக் மட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
கொடுத்தாவது பல உயிர் அழிவதை லக்ஷ்யம் செய்யாமலும் தடுக்கக் கடமைப்பட்டவன். ஆதலால் இத் தீர்மானத்துக்கும் பிரிட்டிஷ் ஆட்சி விருப்பு வெறுப்புக்கும் சம்பந்தமில்லை.
தற்கால நிலை
மற்றென்னவென்றால் நாம் எத்தனை நாளைக்கு நமக்குள்ளாக சண்டை போட்டுக் கொண்டிருப்பது? இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். சண்டை சுலபத்தில் ஒழியக்கூடியதாயில்லை. நாளுக்கு நாள் வளருகிறது.
பார்ப்பனர்களும் ஒரு வழிக்கு வருகிறவர்களாயில்லை. நாளுக்கு நாள்: அவர்கள் ஆதிக்கத்துக்கு பூண் பலப்படுத்துகிறார்களே ஒழிய சமாதானம் அவர்களுக்கு லட்சியமில்லை. காங்கரஸ் - முஸ்லீம் தகராறு எங்கு போய்
நிற்குமென்று முடிவு கட்ட முடியாத நிலையில் இருக்கிறது. மற்றும் இவைகளால் நம் நாட்டில் கலகமோ குழப்பமோ ஏற்பட்டால் பார்ப்பானுக்கு ஒன்றும் நஷ்டமில்லை. கை கலக்கும்படியான சமயத்தில் அவன் வீட்டுக்குள் புகுந்து கதவை தாழ்போட்டுக்கொள்வான். நாம்தான் ஒருவருக்கொருவர் குத்திக்கொண்டு வெட்டிக்கொண்டு சுட்டுக்கொண்டு சாக வேண்டும். ஆதலால் பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற சண்டையால் லாபம் வந்தால் பார்ப்பானுக்கும், நஷ்டமும் அடியும் வந்தால் பார்ப்பனரல்லாதாருக்கும் தான் வந்து முடியும். அதனாலேயே அதை வளர்த்துக் கொண்டு போக எனக்கு இஸ்டமில்லை.
பலாத்காரம் வேண்டாம்
அது போலவே காங்கிரஸ் முஸ்லீம் சண்டையும் வலுத்தால் அந்த சமயத்தில் பார்ப்பான் முஸ்லீமிடம் சேர்ந்து கொண்டு நம்மை கைகாட்டிவிடுவான். நாமும் முஸ்லீமும் தான் மண்டை உடைத்துக்கொள்ள வேண்டிவரும். இந்தக் காரணத்தை முன்னிட்டே வகுப்புதுவேஷமும் பலாத்காரமும் கூடாது என்று சுமார் 20 வருஷகாலமாகவே பிரசாரம் செய்து வருவதோடு எவ்வளவோ கவலையாய் ஜாக்கிரதையாய் தடுத்தும் வந்திருக்கிறேன். எங்கள் ஊரில் சில பார்ப்பன காலிகள் சில பார்ப்பனரல்லா. தார்களை தூண்டி விட்டு கூலி கொடுத்து என்னையும் நம் இயக்கத்தையும் கோபமும் ஆத்திரமும் வரும்படி வைய தூண்டிவிடுவதுண்டு. போலீசு இலாக்காவும் அதற்கு அலட்சியமாய் இருப்பதாக நான் கருதுவதுமூண்டு. எப்படியிருந்தாலும் நான் பதில் செய்ய எண்ணியதில்லை. எண்ணினால் எதிரிகளுக்கு உள்ள சவுகரியத்தை விட எனக்கு சற்று அதிக சவுகரியமே உண்டு. அப்படியிருந்தும் அடங்கித்தான் கிடக்கின்றேன். சுத்த ஆகாசங்கள் எல்லாம் நம்மூருக்கு வந்து மேடை மீது நின்று நம்மை வைவது தெரியும். ஆனால் வெகு ஜாக்கிரதையாக நமது ஆள்களை அக்கூட்டங்களுக்கு செல்லவிடுவதில்லை. சென்றாலும் கண்டித்து விடுவேன். ஏன்? கை கலந்தால் பார்ப்பனரல்லாதார்தான் ஒருவருக்கொருவர்
குடி அரசு- 1938 (1) 18
அடித்துக்கொண்டு வைதுகொண்டு தொல்லைப்பட வேண்டும். மற்ற ஊர்களிலும் நான் இப்படியே தொல்லைப் படுகிறேன். இதற்கு பார்ப்பனர்கள். ஆக்கமளித்து விட்டு ஒதுங்கிக் கொள்ளுகிறார்கள்
ஆனால் சர்க்கார் நிர்வாகத் தலைவராய் இருப்பவர்களுக்கு இம்மாதிரி காரியங்களில் கவலை இருக்க வேண்டாமா? இது நம்ம சொந்த காரியமா?
கவர்னர் நோக்கம் எண்ன?
10 நாள்களுக்கு முன்பு ஒரு சிறிய விஷயத்தில் ஈரோட்டிலுள்ள பெரிய மனிதர்களுக்கு, சில பொறுப்பற்ற சாதாரண மக்களின் கூச்சலுக்கு ஆள்பட்டு ஜில்லாக் கலெக்டர் ஒரு பெரிய அவமானத்தை உண்டாக்கி வைத்தார். மக்களின் மன உணர்ச்சி தெரியாத கலெக்டர் என்று சொல்லிவிட
முடியாது. ஆனால் நிர்வாக முறை அப்படி இருந்து வருகிறது. இதற்கு யார் பொறுப்பாளி? இவை போகட்டும். இன்று நாம் இங்கு கூடி இவ்வளவு கஷ்டத்துடன் நடத்தும் இம் மகாநாட்டிற்கு யார் பொறுப்பாளி? கவர்னர் பிரபுவுக்கு இந்நாட்டு மக்களின் உணர்ச்சி தெரியாதா? இதுவரை
சுமார் 1000 கூட்டங்கள் கூடி ஹிந்தியைக் கண்டித்து இருக்கும் விஷயம் அவர் அறியாரா? சட்டத்தின் பெயரைச் சொல்லி தனக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? எப்படியாவது நாமும் பார்ப்பனர்களும் சண்டை பிடித்துக் கொண்டே இருந்தால் ஆட்டு சண்டையில் ஓநாய் ரத்தம் குடிக்கிற கதை போல் தனது ஆட்சியை சுலபமாய் நடத்திக்கொண்டு போகலாம் என்கின்ற எண்ணமும் பார்ப்பனர் தொல்லைக்கு நாம் ஏன் ஆளாக வேண்டும் என்று கருதி நழுவிக்கொள்ளும் தன்மையும் ஆகாதா என்று யோசித்துப் பாருங்கள். “ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய்விட்டது. பார்ப்பன ராஜ்யம் ஏற்பட்டுவிட்டது. ஆதலால் நாம் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருக்க வேண்டும்” என்று கருதி இருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன். பல தடவை கவர்னர் பிரபுவை பிரவேசிக்கும்படி கேட்டுக் கொண்டாய் விட்டது. அவர் மந்திரிகளை ஆதரிப்பதையே கருத்தாய் கொண்டிருக்கிறார்.
சட்டத்தின் மூலம் நமக்கு உள்ள பாதுகாப்பைப் பற்றி கவனிப்பதில்லை. மந்திரிகளுடன் ஒத்துழைக்கும்படி அதிகாரிகளுக்கு கட்டளை இட்டிருப்பதாய் தெரிகிறது. அல்லாத பட்சம் காங்கரஸ் காலித்தனங்களுக்குக் கலக்டர்கள். முதல் போலீசு வரை இவ்வளவு அலட்சியமாய் இருக்கமாட்டார்கள். ஆதலால்தான் நமக்கு மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதோடு அவர் இனியும் நம் நாட்டில் இருப்பதால் நிலைமை இனியும் மோசமாகும் என்றும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.
பழைய கதை
முன்பு ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்த உடன். கனம் ஆச்சாரியார் ஸ்தானத்தில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் இருந்து மட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
கொண்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் ஸ்தானத்தில் கோஷன் பிரபு அவர்கள் இருந்துகொண்டு விளைவித்த தொல்லைகள் கொஞ்சமா என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுதும் நான் தான் இதே மாதிரி மனம் தாளாமல் கோஷன்பிரபு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தேன். அதன் பிறகே கோஷன் பிரபு அவர்களுக்கு நன்றி அறியும் தன்மையும் உண்மை உணர்ச்சியும் ஏற்பட்டது. இப்பொழுதும் அதையே பின்பற்றுகிறேன் என்று கருதாதீர்கள்.
பின் என்னவென்றால் நாட்டில் குழப்பமும் சமாதானக் கேடும் ஏற்பட்டு விடும் என்று பயந்தே இந்தத் தீர்மானம் கொண்டு வருகிறேன். இந்தக் கவர்னர் பிரபுவிடம் எனக்குச் சொந்தத்தில் இவர் வந்த நாள் முதலே நம்பிக்கை இல்லை. காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க மாட்டேன். என்று வேஷம் போட்ட காலத்தில் நான் ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு இந்த நன்றி கெட்ட அரசாங்கத்தில் மந்திரி பதவி ஏற்பது மானக்கேடு என்று தந்தி கொடுத்தேன். அது இன்று சட்டசபையில் உள்ள 2 மாஜி கவர்னர்களுக்கும் தெரியும். அந்த தந்தி இன்றும் ஜஸ்டிஸ் ஆபீசில் இருக்கிறது. ஆதலால் உண்மையிலேயே நான் கவர்னர் பிரபுவிடம் நம்பிக்கை அற்றுத்தான் இப்பிரேரேபணை கொண்டு வருகிறேன். நீங்கள் எனக்காக ஓட்டுக் கொடுக்காதீர்கள். விஷயம் சரி என்று பட்டால் ஆதரியுங்கள். இல்லாவிட்டால் நிராகரித்து விடுங்கள். நம்மவர்களுக்குள் உள் கலகம் ஒழிந்து நாம் பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற துவேஷமும் பார்ப்பன சூழ்ச்சி காரியங்களில் பார்ப்பனர்களுக்கு வெற்றியும் ஏற்படாமல் செய்யவேண்டுமானால் இப்படிப்பட்ட வேடிக்கை பார்க்கும் கவர்னர் பிரபுக்களோ உதவியாக இருக்கும் கவர்னர் பிரபுக்களோ இருந்தால் ஒரு நாளும் முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீர்மானத்துக்கு ஆதரவு
தோழர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் இத்தீர்மானத்தை ஆதரித்தார்.
இத்தீர்மானம் பிரேரேபிக்கப் பட்டவுடன் பெருத்த கரகோஷம் ஏற்பட்டது உடனே தலைவர் தோழர் கருமூத்து தியாகராய செட்டியார் அவர்களை இத்தீர்மானத்தை எதிர்த்து பேச அழைத்தார்.
அவர் இரண்டு விஷயம் சொன்னார். அதாவது மக்கள் ஏமாந்து ஓட் செய்ததால் இக்கதி ஏற்பட்டதென்றும் இவைகளை ஜனங்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் மந்திரிகளுடன் வாதாடவேண்டுமென்றும் எல்லோரும் காங்கரசில் சேர்ந்து மந்திரிகளை கவிழ்க்க வேண்டும் என்றும் கவர்னரிடம் போவதற்கு அதற்குள் சமயம் வந்துவிடவில்லை என்றும் மந்திரிகள் செய்கை வாய்ப்பேச்சில் இருக்கிறதே ஒழிய காரியத்தில் இல்லை என்றும் சொன்னார்.
குடி அரசு- 1938 (1) 20
பிறகு தலைவர் எழுந்து அதை ஒட்டியே பேசினார். பொது ஜனங்கள் ஏமாந்துபோய் ஓட்டு செய்ததால் ஏற்பட்ட கெடுதியே ஒழிய கவர்னருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்றும் இது விஷயமாய் கவர்னரை நாம் இன்னமும் முறைப்படி கேட்கவில்லை என்றும் சொன்னார். இதற்குள் சுமார் 10, 20 சீட்டுகள் பலபேர்களிடம் கையெழுத்து வாங்கி தீர்மானத்தை வாபீஸ் வாங்கக்கூடாதென்றும் எச்சரித்தும் தோழர் ஈ.வெ. ராவிடம் கொடுக்கப்பட்டன.
தலைவர் பேசியபின் தோழர் ஈ.வெ.ரா. எழுந்து எதிர்த்தவர்களுக்கு பதில் சொல்லும் முறையில் சில வார்த்தைகள் பேசினார்:- அதாவது நாம் ஓட்டு செய்தோம் என்று சொல்லுவது தகாது என்றும் பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு செய்த ஓட்டுக்களே என்றும் அவ்வோட்டுகளை ஓட்டு என்றும் அதன்மீது மெம்பராகி மந்திரியானவர்களை நமது பிரதிநிதிகள் என்றும் சொல்லிக்கொள்வது வெட்கக்கேடென்றும் அவர்கள்
நம் பிரதிநிதிகள் என்று தோழர் செட்டியாரும், தலைவர் பாரதியாரும் உண்மையில் நம்பி இருப்பார்களானால் அவர்கள் இம்மகாநாட்டுக்கே வந்திருக்க மாட்டார்கள் என்றும் அரசியல் சட்டம் வேறு எந்த வழியில் மோசமானதாய் இருந்தாலும் இம்மாதிரி பாமரமக்களின் முட்டாள் தனத்தால் பதவிக்கு வந்து விட்டவர்களின் கொடுமையில் இருந்து தப்புவதற்கு இடம் இருக்கிறதென்றும் காங்கரசுக்குள் போய் காங்கரசைப் பிடித்து மந்திரிகளை வெளியாக்குவது கறுப்பு நாயை சாயம் அடித்து வெள்ளையாக்கும் கதை போன்ற தென்றும் அதெல்லாம் பார்த்தாய்விட்ட தென்றும் கவர்னருக்கு விஷயம் தெரியும்படி பல தடவை எழுதி ஆய்விட்ட தென்றும் பல விண்ணப்பங்கள் அனுப்பி தூது கோஷ்டி பேட்டிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பப்பட்டு ஆய்விட்டதென்றும் சொன்னார்.
தலைவர் சமாதானம்
இந்த சந்தர்ப்பத்தில் தலைவர் பாரதியார் அவர்கள் இந்த மகாநாட்டில் கவர்னரைப் பார்த்து விஷயங்களை விளக்க ஒரு கமிட்டி போட்ட பிறகு இத்தீர்மானத்தை நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றி அனுப்பலாம் என்று தெரிவித்ததுடன் மந்திரிகள் தந்தி விஷயத்தை நிறுத்திக்கொள்ள தீர்மானித்து விட்டார்கள் என்று தெரிய வருவதாகவும் ஏதோ சில பள்ளிக் கூடங்களில் மாத்திரம் பரீக்ஷ£தமாய் வைப்பதாகவும் அதற்கும் பரீகை்ஷ வைக்கப்போவதில்லை என்று தெரிவித்திருப்பதாகவும் தோழர் ராமசாமி அவர்கள் கொண்டு வந்திருப்பதால் இத்தீர்மானம் ஓட்டுக்கு விட்டால் ஓட்டுத்தவிர மற்றபடி ஏகமனதாய் நிறைவேறிவிடும் என்றும் ஆதலால் தற்காலம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றும் தலைவர். என்கின்ற முறையிலும் எந்த முறையிலும் கேட்டுக் கொள்வதாக சொன்னார். தோழர் ஈ.வெ.ரா. எழுந்தார். கூட்டத்தினர் கூடாது கூடாது ஓட்டுக்கு விடுங்கள் என்று கோஷம் செய்தார்கள். A0 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஈ.வெ.ரா. முடிவுரை
தோழர். ஈ.வெ.ரா. எழுந்து கவர்னர் பிரபுவை நேரில் காண கமிட்டி போட்டு அதன் முடிவு விரோதமாய் விட்டாலும் ஹிந்தி கண்டிப்பாய் பாடம் வைத்து பரீக"ஷ நடத்துவது என்பதை அனுபவத்தில் கொண்டு வந்து விட்டாலும் பிறகு எல்லோரும் ஏகமனதாய் இத்தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று சொல்வதாலும் எனக்காக என் செல்வாக்கில் நிறைவேற்ற நான் முனைந்திருப்பதாய்ச் சொல்லுவதாலும் நான் இதை நிறுத்திக் கொள்ள சம்மதிக்கிறேன் என்பதோடு தலைவர்களும் தோழர் செட்டியார் அவர்களும் பிறகாவது தாங்களும் கலந்து கொள்ளுகிறார்களா என்பதைப் பார்க்கலாம் என்றும் சொல்லி கவர்னர் பேட்டி தூதுக்கமிட்டியில் தன்னை ஒரு மெம்பராய் போடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.
பிறகு ஒரு தூதுக்கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் தோழர் ஈ.வெ.ரா. பெயர் படிக்கப்பட்டவுடன் அவர் எழுந்து மறுத்து விட்டார். பிறகு தூதுக்கமிட்டி தீர்மானம் ஏகமனதாக நிறைவேறிற்று
குறிப்பு: திருச்சியில் 26-12-1937இல் சென்னை மாகாண 3ஆவது தமிழர் மாநாட்டில் சென்னை கவர்னர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 02.01.1938
* "தங்கள் சுயநலத்துக்கென்றே சர்க்காருடன் ஒத்துழைக்காமல் ஒத்துழையாமை என்னும் பேரால் அரசின் யந்திரத்திற்கு தொந்தரவு கொடுத்தும் பொதுஜன ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஒழுங்குக்கும் விரோதமாகவும் ஒரு சுயநலக் கூட்டத்தார் சண்டித்தனம் முதலிய தொல்லைகள் விளைவித்து வந்த நெருக்கடியான சமயத்தில் நல்ல ஆட்சியையும் பொதுஜன நன்மையையும் கருதி மனப்பூர்வமாக சர்க்காருடன் ஒத்துழைத்தும் அதனால் விளக்கமறியா பாமர மக்கள் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி வருவதையும் லக்ஷ்யம் செய்யாமல் அதற்காக தொண்டாற்றியும் வந்த தமிழ் மக்களுக்கு சிறிதும் நன்றி விசுவாசம் காட்டாமல் சுயநல புரோகித கூட்டத்தாருக்கு வசப்பட்டு நம்மை அவர்களது பழிவாங்கும் தன்மைக்கு ஆளாக்கி விட்டுக் கொண்டிருக்கும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவின் நடத்தைக்கு ஆக இம்மகாநாடு வருந்துவதுடன் அவரிடம் இம்மாகாண தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட இடமில்லையென்று இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.
இம்மாகாண மக்களின் நன்மையையும் சாந்தியையும் சமாதானத்தையும் உத்தேசித்து மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று இந்தியா மந்திரியை கேட்டுக் கொள்கிறது.”
குடி அரசு- 1938 (1)
ப 3
காங்கரஸ் ராஜ்யமும் கவர்னர் கடமையும்
எச்சமிக்கை
காங்கரசுக்காரர்கள் தங்களுடைய முட்டாள்தனமானதும் சூழ்ச்சி கரமானதுமான காரியங்களைப்பற்றி யார் சமாதானம் கேட்டாலும் காலித்தனத்தையும் பலாத்காரத்தையுமே சமாதானமாக உபயோகிக்கத் தீர்மானித்து விட்டார்கள் என்றுதான் முடிவு செய்ய வேண்டி இருக்கிறது
காங்கரஸ்காரர்கள் தவிர வேறு யாருக்கும் பொதுக் கூட்டம் கூட்டும் உரிமையே இருக்கக்கூடாது என்பதுதான் காங்கரஸ்காரர்களின். சுயராஜ்யமாகவும், பேச்சுச் சுதந்திரமாகவும் இருந்து வருவதாகவும் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. சற்றேறக்குறைய இந்த இரண்டு மூன்று வருஷ காலமாய் காங்கரஸ்காரர்களின் காலித்தனத்தை அவ்வப்போது
நாம் வெளியிட்டு வந்திருப்பதுடன் அப்படி வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொதுஜன சமாதானத்துக்கும் அமைதிக்கும் காப்பளிக்கும்படி பொறுப்பான அதிகாரிகளுக்கும் கவர்னர் பிரபுவுக்கும் வேண்டுகோள் செய்து கொண்டே வந்திருக்கிறோம். என்ன காரணத்தைமுன்னிட்டோ இவ்விஷயத்தில்
சர்க்கார் போதிய கவலை செலுத்தாமலே இருந்து வந்திருக்கிறது.
காலித்தனத்துக்கு காங்கரஸ் பத்தியிகைகள் ஆதரவு
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் 100-க்கு 99 கூட்டங்களில் காங்கரஸ் காலிகள் கலகம் செய்தே வந்திருக்கிறார்கள். இவற்றை காங்கரஸ் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி காலிகளுக்கு உற்சாகமூட்டி மறுபடியும் மேற்கொண்டும் மற்ற இடங்களிலும் காலித்தனம் செய்ய தூண்டியே வந்திருக்கின்றன. இதன் பயனால் காங்கரஸ் காலிகளால் கூட்டங்களில் மிக்க இழிவானதும் கோபமூட்டத் தக்கதுமான வார்த்தைகளையும் வேண்டுமென்றே தூஷணையான விஷயங்களையும் கொண்ட துண்டுப் பிரசுரங்களை அள்ளி இறைப்பதும் கையில் கொடுப்பதும் தபாலில் அனுப்புவதுமான அயோக்கியத்தனங்கள் ஏற்பட்டு வேண்டுமென்றே மக்களை வம்புக்கு இழுப்பது போன்ற காரியங்கள் நடந்த வண்ணமாகவே இருந்து இருக்கின்றன. கூட்டங்களை எப்படியாவது கலைத்து விடுவதிலேயே காலிகள் கவலை வைத்து B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
எவ்வளவு பொறுப்புடனும், பயத்துடனும் நடந்துகொள்ளும் கூட்டங்களிலும் காங்கரஸ் காலிகள் சிலர் கூடிக்கொண்டு ஜே போட்டு கலகம் செய்வதும் சிறுபிள்ளைகளை தூண்டிவிட்டு தொல்லை விளைவிப்பதுமான காரியம் செய்தே வந்திருக்கிறார்கள். இவ்வளவையும் பொறுமையுடன் சமாளித்து பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.
சர். ரெட்டியார் பட்டபாடு. இவை ஒருபுறமிருக்க ஜஸ்டிஸ் கட்சி மந்திரிமார்கள் கூட்டத்தில் கில காங்கரஸ் தலைவர்கள் என்கிற காலிகள் நடந்து கொண்ட விதம் சொல்லத் தரமல்ல. உதாரணமாக தோழர் சர். குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மதுரையில் பேசும்போது அவரை மதுரை காலிகள் பேச விடவில்லை. மறுநாள் ஷி காலிகளுக்கு புத்தி கற்பிக்கும்படியான ஏற்பாட்டுடன் வந்து கூட்டம் நடத்திய பிறகு பல காங்கரஸ் காலிகள் மறுநாள் தலைவர்களாகி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோழர் சர். ரெட்டியார் அவர்களையே ராஜபாளையத்தில் பொதுக் கூட்டத்தில் பேசவிடாமல் காலித்தனம் செய்தார்கள். மறுபடியும் தோழர்
சர். ரெட்டியார் அவர்களையே திருச்சி ஜஸ்டிஸ் மகாநாட்டில் கொட்டகைக்குள் வந்து பேசவிடாமல் காங்கரஸ் காலிகள் குழப்பம் செய்தார்கள். மற்றும் திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு முதலிய இடங்களிலும் அவரை இதே மாதிரி செய்தார்கள்.
சர். ராஜன் அனுபவம்
மற்றும் சர். PT. ராஜன் அவர்கள் மந்திரியாய் இருக்கும் போதே சேலம், கோயமுத்தூர் முதலிய இடங்களில் பொது கூட்டங்களில் அவரை பேச விடாமல் காங்கரஸ் காலிகள் குழப்பம் விளைவித்தார்கள். அது சமயம் போலீசைப்பற்றியும் கூட்டத்தில் நன்றாய் கண்டிக்கப்பட்டிருக்கிறது மற்றும் ஜஸ்டிஸ் கட்சி தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் பிரதம மந்திரியாய் இருக்கும்போதே திருச்செங்கோடு முதலிய இடங்களில் அவர்கள் பேசும்போது பொதுக் கூட்டத்தில் காங்கரஸ் காலிகள் காலித்தனம் செய்து தொல்லை விளைவித்து இருக்கின்றார்கள். இவைகளில் ஒரு எழுத்துக்கூட உண்மைக்கு மாறானதல்ல என்பதற்குப் போலீஸ் CLD. சிப்பந்திகளும் அவர்களது ரிக்கார்டுகளும் இன்றும் சாட்சியாக இருக்கின்றன.
பொப்பிலி, ராஜன் கவர்னரிடம் முறையீடு இவ்வளவு மாத்திரமல்லாமல் கனம் பொப்பிலிராஜா அவர்களும் சர், ராஜன் அவர்களும் இதைப்பற்றி கவர்னர் பிரபுவிடமும் போலீஸ் இலாக்காத் தலைவரிடமும் நேரில் சொல்லிக் கொண்டிருப்பதற்கும் சர்க்காரிடம் ரிக்கார்டு இருந்து வருகிறது
குடி அரசு- 1938 (1) 24
மற்றும் சமீபகாலம் வரை சு.ம. கூட்டத்தில் செருப்பு, கல், சாணி, மண் முதலியவை எறியப்பட்டதாக காங்கரஸ் பத்திரிகைகளிலேயே பல சேதிகள் வெளிவந்திருக்கின்றன.
திருச்சி, சேலம் சம்பவங்கள் இவை தவிர சேலத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்களை ஏதோ இரண்டொரு கேள்விகள் கேட்டதற்காக தோழர்கள் சித்தையன், நடேசன் முதலியவர்களை மேடைக்கு வஞ்சகமாய் அழைத்து நையப் புடைத்து விட்டார்கள். திருச்சியில் தோழர்கள் ஈ.வெ.ராவும் ௮. பொன்னம்பலம் அவர்களும் பேசிய சமயம் கூட்டத்தில் காங்கரஸ் காலிகள் பெரும் கலகம் விளைவித்தபோது போலீசார் அதை அடக்கமுடியாமல் கூட்டத்தை கலைத்து விடும்படி யோசனை சொன்னார்கள். பிறகு தோழர் விஸ்வநாதம் அவர்கள் கூட்டத்தை கலைக்காமல் தைரியமாய் பலாத்காரத்துக்கும் துணிந்து நின்ற பிறகு கூட்டம் நடத்தப்பட்டது.
“தினமணி? குறும்பு சென்ற மாதம் சேலத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அ.பொ. அவர்கள் பேசும்போதும் காங்கரஸ் காலிகள் கல் போட்டு கலவரம் செய்த போது தோழர் ஜெகதீசன் அவர்கள் சமாளித்து கூட்டத்தை நடத்திக் கொடுத்தார். இம்மாதிரி ஜஸ்டிஸ் ௬.ம. கூட்டம் ஒவ்வொன்றிலும் காங்கரஸ் காலிகள் இப்படியே நடந்து வந்திருக்கிறார்கள். இதற்கு அனுகூலமாகவே “தினமணி” பத்திரிகையும் காலிகளுக்கு ஆக்கம் கொடுத்தே தூண்டிவிட்டுக் கொண்டு வந்திருக்கிறதை அவ்வப்போது எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம். உதாரணமாக, “தினமணியின் ஒரு தலையங்கத்தில் “இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேறாமல் பொதுஜனங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்று பச்சையாக தூண்டிவிட்டிருக்கிறது. மற்றொரு சமயம் பொது ஜனங்களுக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று எழுதி இருக்கிறது. மற்றும் சில சமயம் “பொதுஜனங்கள் சும்மா இருப்பார்களா? என்றெல்லாம் எழுதி கிளப்பிவிட்டு இருக்கிறது. இவைகளைப் பற்றியும் அவ்வப்போது “குடி அரசு" “விடுதலை” பத்திரிகைகள் கண்டித்து கலவரம் நடந்தால் கவர்னரும் இந்தப் பத்திரிக்கைகளும்தான் ஜவாப்தாரி ஆக வேண்டும் என்று எழுதியிருக்கின்றன. இப்படி இருக்க சமீபத்தில் திருச்சியிலும், சேலத்திலும் நடந்த காலித்தனங்களைப் பற்றி சற்று கவனிப்போம்.
திருச்சிக் காலித்தனம்
திருச்சியில் தமிழர் மகாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடனும், வாத்தியங்களுடனும், ஊர்கோலம் போகும்போது ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளை கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டுபோய் கொடுப்பதும் 3 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
கோபமுண்டாகும்படி ஜே போடுவதுமான காரியங்களை செய்து கொண்டே வந்ததுமல்லாமல் கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்? போலீசார் இந்த காலிகளை விரட்டி விரட்டி விட்டார்களே ஒழிய அவர்களை கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை . ஊர்கோலம் மகாநாட்டு மண்டபத்துக்கு வந்த பிறகு மகாநாட்டு கொட்டகைமீதும் கல் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காங்கரஸ் கற்றுக் கொடுத்த பாடம்
கூட்டங்களில் கேள்விகள் கேட்பது, மற்றவர்கள் கூட்டங்களில் வந்து ஜே போடுவது, செருப்பு, கல் வீசுவது, கறுப்புக்கொடி பிடிப்பது முதலிய காரியங்கள் காந்தியாரும், காங்கரசும் கற்றுக் கொடுத்ததல்லாமல். வேறு யாரால் இக் காலித்தனங்கள் சமூக வாழ்வில் புகுத்தப்பட்டன என்று கேட்கின்றோம்
“குடி அரசு" பத்திரிகையும், தோழர் ஈ.வெராவும் பொதுக் கூட்டங்களில் குழப்பம் செய்வதும் காலித்தனம் நடப்பதும் பலாத்காரம் ஏற்படுவதும் ஆகிய காரியங்களை கண்டித்தும் புத்தி புகட்டியுமே வந்திருக்கிறார்கள்.
தேசீயப் பத்தியிகைகள் சூழ்ச்சி.
இவைகள் ஒருபுறமிருக்க “மித்திரன்” “தினமணி” “இந்து முதலிய பத்திரிகைகள் கூட்டங்களில் நடந்த காரியங்களை கட்டுப்பாடாக மறைத்தும் திரித்துக் கூறியும் வந்து பொதுஜனங்களுக்கு காலித்தனத்தில் உற்சாகமூட்டி வந்திருக்கும் சம்பவங்கள் அனேகமாகும். தோழர் சத்தியமூர்த்தியார் தொண்டர்களுக்கு காலித்தனத்தில் உற்சாகம் ஏற்படும்படியாக பல தடவை பேசிவந்திருக்கிறார். இந்நிலையில் காலித்தனங்களை அடக்குவதற்கு சர்க்கார் அது காங்கரஸ் சர்க்கார் அல்லாமல் அதாவது நீதியையும் சமாதானத்தையும் பாதுகாக்கும் தனி அதிகாரத்தை தங்களுக்கென்று ஒதுக்கி வைத்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதியாகிய கவர்னர் பிரபு தலையிட்டு தக்க முயற்சி எடுத்துக்கொண்டால் ஒழிய வேறு வழிகளில் சாத்தியமில்லை என்பதுதான் நமது அபிப்பிராயம். அப்படி இல்லாமல் நடப்பது நடக்கட்டும் என்று கவர்னர் பிரபு வேடிக்கை பார்த்து வருவாரானால் நிலைமை மிகமிக மோசமாகப் போய்விடும் என்றே பயப்படுகிறோம்.
ஆச்சாமியார் ஆணவம்
பெட்றோல் எண்ணெய்க்குப் பக்கத்தில் நெருப்பை வைத்துக் கொண்டு விளையாடுவதுபோல் முஸ்லீம் லீக் விஷயமாய் காங்கரஸ் காலிகள்
குடி அரசு- 1938 (1) 26
நடந்து கொள்ளும் தன்மையும் காங்கரஸ் தலைவர்கள் நடந்து கொள்ளும் தன்மையும் இருந்து வருகிறது. மாகாண பிரதம மந்திரியார் தோழர் கனம். ஆச்சாரியார் அவர்கள் நடந்து கொள்ளும் மாதிரியும் முரட்டுத்தமாகவே இருக்கிறது. அதாவது “நான் அப்படித்தான் செய்வேன், உனக்கு இஷ்ட மில்லையானால் அடுத்த தடவை ஓட்டுக் கொடுக்காதே” என்கிறார்.
அதிகாரிகளுக்கு மதிப்பில்லை
மிக்க சாதாரண மக்கள் மந்திரி ஆக நேரிட்டு விட்டால் சகல காரியங்களிலும் தலையிட்டு அதிகாரங்களை உபயோகிக்கும் முறை
சிகரெட், பீடி கடைகள் வியாபாரம் போல் ஆகிவிட்டதால் பொறுப்பு வாய்ந்த சர்க்கார் அதிகாரிகளிடம் ஜனங்களுக்கு உள்ள மதிப்பு குறைந்து வருவதல்லாமல் போலீசுக்கும் ஜில்லா மேஜிஸ்திரேட்டுகளுக்கும் சுத்த சுத்தமாய் மொத்த மதிப்பும் குறைந்துவிட்டது. ஒரு பரம காலியைக் கண்டாலும் போலீசு நடுங்குகிறது. ஜில்லா மாஜிஸ்திரேட்டுகள் நாணயம், கண்ணியம் ஆகியவைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு காலிகளுக்கு நல்ல பிள்ளைகளாக மூயற்சிக்கிறார்கள். நாட்டில் சாதுவாய் கண்ணியமாய் இருக்க வேண்டும் என்று கருதுகிற மக்களுக்கு இடமே இல்லாமல் போகும்படியாக இருந்துவருகிறது. ஒரு சிறு விஷயங்களுக்குக் கூட போலீசும் மேஜிஸ்திரேட்டுக்களும் நீதிபதிகளும் மந்திரிகள் செல்வாக்குக்கு மாத்திரமல்லாமல் “மந்திரி கட்சி” காலிகள் செல்வாக்குக்கும் பயப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் சமாதானத்தையும் நீதியையும் மக்கள் எப்படி எதிர்பார்க்க மூடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அரசாங்கம் என்பது நீதியைப் பார்க்கிலும் மதிப்பையும் கவுரவத்தையும் அதிகமாய் கொண்டதாகும்
காங்கரஸ் மந்தியிசபை யோக்கியதை.
பொதுவாக காங்கரஸ் ராஜ்யத்தில் நிர்வாகத்துக்கும் நீதிக்கும் ராஜரீகத்துக்கும் மதிப்பும், கவுரமூம் அடியோடு போய்விட்டது. 15 75௫ சம்பளத்துக்கு கைதூக்கும் சட்டசபை மெம்பர்களுக்கு எங்காவது மதிப்பு இருக்க முடியுமா என்பதும், இப்படிப்பட்ட மாதக் கூலி மெம்பர்களின் ஆதரவை வைத்துக்கொண்டு இருக்கும் மந்திரியை, ஜனநாயக மந்திரி யென்றோ, பொதுஜன பிரதிநிதி என்றோ, மதிக்கத்தக்கது என்றோ யாராவது மதிக்க முடியுமா என்றும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். இன்று நமது சென்னை மந்திரிகளின் தனிப்பட்ட யோக்கியதைகள், ஒழுக்கங்கள் சென்னை மூர்மார்க்கெட்டில் சிரிப்பாய் சிரிக்கின்றது ஒருபுறம் இருக்க சட்டசபை மெம்பர்கள், காங்கரஸ் தலைவர்கள், பத்திரிகைகள் ஆகியவர்களின் யோக்கியதையும், மிருகப் பிராய காலத்தையும், காட்டு மிராண்டி காலத்தையும் காட்சி அளிப்பதாய் இருக்கிறது. இந்த நிலையில் இவர்களது ராஜரீகத்தின் யோக்கியதையும் 7 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இந்தப்படி இருக்குமானால் இந்தநாடு கூடிய சீக்கிரத்தில் கலகக்காரர்கள் கையில் சிக்கி வலுத்தவர்களின் தன்னரசு நாடாக ஆகிவிடுவதில் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா என்று கேட்கிறோம்
காங்கரஸ் சர்க்கார் சூழ்ச்சிகன்
தவிர ஏற்கனவே மக்கள் உள்ளத்தில் இந்த மந்திரிசபையில் ஒருவித ஆத்திரம் பொங்கிக் கொண்டு இருக்கும்போது அதாவது ஒரு ஜில்லாவில். மதுவிலக்கு என்று சாக்கு காட்டிக் கொண்டு மாகாணம் பூராவும் உள்ள கல்வி வசதியை ஒழிக்கவும்,
பொது பாஷை என்று சாக்கு வைத்துக் கொண்டு மக்களின் சுதந்திர
எழுச்சியையும், சுயமரியாதை உணர்ச்சியையும் அழிக்கவும், விவசாயிகளுக்கு நன்மை செய்வது என்று சொல்லிக் கொண்டு பணக்காரர்களுக்கு உதவியும் ஏழைகள் வாயில் மண்ணு அடிக்கவும்,
உத்தியோக சீர்திருத்தம் என்று சொல்லிக் கொண்டு ஒரு வகுப்புக்கு ஆக்கமளித்து மற்ற வகுப்புகளை அடக்கவும்,
சம்பளம் குறைப்பதாக சொல்லிக்கொண்டு கட்சி சேர்க்க ஓட்டு
சேர்க்க உத்தியோகங்களை பெருக்கி மக்களை தப்பான வழியில் அடக்கி, ஒடுக்கி, நிரந்தர ஆதிக்கம் செலுத்த சூழ்ச்சி செய்வதுமான காரியங்களைச் செய்வதாயிருந்தால் எப்படித்தான் ஒரு ஆட்சிக்கு நாட்டில் மரியாதை இருக்கமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
கவர்னர் பிரபுவுக்கு எச்சமிக்கை
ஆகவே காங்கரசுக்காரர்கள் பதவி பெற்ற 45 மாதங்களுக்குள் நாடு
குட்டிச் சுவரான நிலைக்கு வந்துவிட்டதோடு ராஜாங்கத்துக்கு அடியோடு மதிப்பும் கெட்டு காலிகள் ஆட்சியாக ஆவதற்குத் திரும்பி விட்டது என்று சொல்லவேண்டியிருக்கிறது. ஆகையால் மறுமுறையும் மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவுக்கு எச்சரிக்கை செய்கிறோம். என்னவென்றால்,
நாட்டில் நீதியும் சமாதானமும் குலைந்து வருகிறது. போலீசுக்கும் மேஜிஸ்திரேட்டுகளுக்கும் மதிப்பு குறைந்து வருகிறது
காலிகள் நிலை உச்சம் பெறுகிறது. கவுரவமாக சுதந்தரமாக மக்கள் வாழ்வதற்குள்ள மார்க்கம் அடைபட்டு வருகிறது
இனி சீக்கிரத்தில் வகுப்புக் கலகம், உள்நாட்டுக் கலகம் தோன்றும் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆகவே இதற்கு ஏதாவது பரிகாரம் தேடி சமாதானத்தையும் நல்ல ஆட்சியையும் விரும்பும் மக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டியது மிக்க அவசரமும் அவசியமுமான காரியமாகும் என்பதை உண்மையாக
குடி அரசு- 1938 (1) 28
வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் உண்மை நிலையை மக்களின் உள்ளத்து உணர்ச்சியை நன்றாய் அறிந்தே மிக்க பொறுப்புடன் இதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
ஓரு யோசனை
கவர்னர் பிரபுவுக்கு நாட்டின் உண்மைநிலை தெரிவதற்கு இல்லை என்று நாம் கருதுவதாலேயே இதை தெரிவிக்கவேண்டியதாகிறது. ஏனெனில் பத்திரிக்கைகள் உண்மையை தெரிவிப்பதில்லை. கவர்னர் பிரபுவுக்கு யோசனை சொல்லும் அதிகாரிகள் நடுநிலமையில் இருக்க முடியவில்லை. கில சில்லறை சிப்பந்திகள் வகுப்பு உணர்ச்சியோடு விஷயங்களை பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். மேன்மை தங்கிய கவர்னர் பிரபு யார் யாரை பெரிய மனிதர்கள் யோக்கியர்கள் என்று கருதி இருக்கிறார்களோ
யார் யாரை பொது நோக்குடையவர்கள், கட்சித் தலைவர்கள் என்று கருதி இருக்கிறார்களோ அவர்கள் 100க்கு 99 பேர்கள் சுயநலத்துக்கு எதுவும் செய்யத் துணியும் வீரர்களாவார்கள். ஆதலால் தகுந்த கண்ணியமும் நடுநிலை புத்தியும் உள்ள ஒரு வெள்ளைக்கார அதிகாரியை வேவுக்காரராகப் போட்டு உண்மை உணர்ந்தால் நாம் சொல்லுவதின் தன்மை விளங்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.01.1938
0 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஹிந்து முஸ்லிம் ஓற்றுமை
தலைவரவர்களே! தோழர்களே! இன்று இங்கு கூடியுள்ள இப்பெரிய கூட்டத்தில் பேச எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்ளுகிறேன். அதிலும் எனது பழய தோழர் மாஜி மந்திரி கனம் கலிபுல்லா சாயபு அவர்கள் தலைமையில் பேசுவதைப் பற்றி மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். முஸ்லீம் லீக்கு சம்பந்தமாய் முஸ்லீம் சமூகத்தினரால் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் என்ன பேசுவேன் என்று குறிப்பிடாத நிலையில் என்ன பேசுவது என்று யோசித்ததில் தலைவர் அவர்கள் பேசியதை ஒட்டியும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பேசுவது பொருத்தமுடையதாக இருக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்து அதைப்பற்றியே பேச தலைவர் அனுமதியளிப்பார் என்று கருதுகிறேன்.
இந்து முஸ்லிம் ஓற்றுமை இந்தியாவைப் போலுள்ள ஒரு நாட்டுக்கு இன்று முக்கியமாய் வேண்டியது இந்து முஸ்லிம் ஒற்றுமையேயாகும். அது மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு ஜாதி வகுப்பாரின் ஒற்றுமையுமாகும். இந்தக் காரியங்களை செய்யாமல் அரசியல், பொருளாதாரம் முதலிய பெரிய விஷயங்களைப் பற்றி பேசுவதோ செய்ய முயற்சிப்பதோ மானங்கெட்டதும் முட்டாள்தனமானதும் அல்லாவிட்டால் பித்தலாட்டம் சூழ்ச்சிகரமான சுயநலமானதுமாகும் என்பது எனது அபிப்பிராயம்.
எல்லாவற்றையும் விட இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் இந்நாடு ஒரு விரற்கிடை அளவாவது முன்னேற்ற மடையாது. இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் இந்நாட்டு மக்களுக்கு ஒரு கடுகளவு சுதந்தரம் கூட ஏற்பட்டு விடாது. இந்து - மூஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் இந்நாட்டு மக்களுக்கு வினாடி நேர சாந்தியும் ஏற்பட்டுவிடாது
ஒரு காலத்தில் காந்தியார் நடித்தது இதை நான் மாத்திரம் சொல்லவில்லை. தோழர் காந்தியார் அவர்களே உண்மையான மனிதராய் நடித்த காலத்தில் சொன்ன விஷயமாகும் அதற்கு ஆக என்றே 21 நாள் பட்டினி விரதமிருந்த காரியமும் ஆகும் “இந்து முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுயராஜ்யம் பெறுவது என்பது
குடி அரசு- 1938 (1) 30
பித்தலாட்டமான காரியம்” என்று சொன்னதுமாகும். சென்னையில் ஒரு சமயத்தில் தோழர் காந்தியார் பேசும்போது தோழர் கனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் கேட்ட கேள்விக்கு “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டாலொழிய சுயராஜ்யம் என்கிற வார்த்தையை உச்சரிக்கக்கூட மாட்டேன்" என்று சொன்னார். அதோடு மாத்திரமல்லாமல் “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுவதற்கு முன் சுயராஜ்யம் கிடைப்பதாயிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்றும் சொன்னார்.
பிரபலஸ்தர்கள் ஆதரவு
இதை உண்மையென்று நம்பியே மெளலானாக்கள் ஆகிய அலி சகோதரர்களும் அக்கம் அஜ்மல்கான் ஆசாத் சோபானி முதலியவர்களும் அப்துல் பாரி முதலிய மத தலைவர்களும் காந்தியாரை மதித்து அவரைப் பின்பற்றி வந்தார்கள். இந்த சமயத்தில் தென்னாட்டிலும் வடநாட்டிலும் பல இந்து மத உணர்ச்சித் தலைவர்களும், பார்ப்பனத் தலைவர்களும் காந்தியார் மீது அதிர்ப்தி அடைந்ததோடு “முஸ்லீம்களுக்கு இவ்வளவு இடம் கொடுக்கலாமா?” என்றும் கேட்டார்கள். இப்படிக் கருதியவர்களையும் கேட்டவர்களையும் தோழர் காந்தியார் முட்டாள்கள் என்றும் சுயநலக்காரர்கள் என்றும் யோக்கியர்கள் அல்லாதவர்கள் என்றும் கூடக் கூறினார்.
காந்தியார் கிலாபத்து வேஷம்
மற்றும் கிலாபத்து விஷயத்தைக் காந்தியார் அவ்வளவு பிரமாதமாகப் பேசி அதில் இந்திய காங்கிரசையும் இந்திய அரசியலையும் புகுத்திக் கிளர்ச்சி செய்த வேஷமும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைக் கருதியேயாகும். அதனாலேயே காந்தியாரின் நிர்மாணத்திட்டத்தின் முதல் அம்சமாக
இந்து முஸ்லீம் ஒற்றுமைத்திட்டம் இருந்து வந்தது. ஆகவே இந்து முஸ்லீம் ஒற்றுமையைப்பற்றி நான் பேசுவதும் அதை வற்புறுத்துவதும் என் சொந்த அபிப்பிராயமல்ல என்றும் காந்தியார், பெசண்டம்மையார் ஆகியவர்கள் காலத்திலிருந்தே ஏற்பட்டதாகும் என்றும் சொல்லுகிறேன்.
40, 50 வருஷமாய் பாடுபடுகிறேன்
தவிர என்னைப் பொறுத்தவரை இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பது இன்று நேற்று பேசிவரும் பேச்சல்ல. எனக்கு விபரம் தெரிந்த 40, 50 வருஷ காலமாகவே இந்த ஊரில் நான் முஸ்லீம்களோடு குடும்பத் தோழனாகவே இருந்து வந்திருக்கிறேன். விளையாட்டுப் பிள்ளையாக இருந்த காலத்திலும் மைனராக இருந்த காலத்திலும் வியாபாரியாக இருந்த காலத்திலும் கவுரவ வாழ்க்கை பொது நல சேவகத்தில் இருந்த காலத்திலும் பொதுவாக இவ்வூரில் முஸ்லீம்களுக்கு நான் ஒரு உண்மையான நண்பனாகவே இருந்து வந்திருக்கிறேன். இதை நான் வேறு ஊர்களில் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
போய் சொல்லவில்லை. இங்கேயே உள்ளூர்காரர்களாகிய உங்களிடத்தில் சொல்லுகிறேன். ஏனெனில் நீங்கள் விஷயங்களை நேராக அறிந்தவர்கள். ஆவீர்கள். ஆதலால் இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவது முஸ்லீம்களுக்கு இடம் கொடுத்ததாகவோ முஸ்லீம்களுக்கு இந்துக்களைக்
காட்டிக் கொடுத்ததாகவோ அதிவிடாது. அப்படி யாராவது கருதுவார்களானால் அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். அது சற்று ஒரு கூட்டத்தாருக்கும் விஷயம் அறியாதவர்களுக்கும் முறையே எரிச்சலாகவும் அதிருப்தியாகவும் இருக்கலாம். ஆனாலும் நான் விளக்கித் தீர வேண்டியவனாக இருக்கிறேன். ஏனெனில் இதற்கு ஆகவே இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கு ஆகவே என்னைப்பற்றி
சிலர் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு நான் சமாதானம் சொல்லியாக வேண்டும். என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
சேலத்தில் விஷமப் பிரசாரம்
சென்ற வாரத்தில் சேலத்தில் சில காங்கிரஸ்காரர்கள் நான் இந்துக்கள் மீது முஸ்லிம்களை தூண்டி விட்டதாக துண்டுப் பிரசுரம் போட்டு வினியோகித்து இருக்கிறார்கள். மூஸ்லிம்களுடைய கோரியின் சுவரை ராத்திரியில் போய் இடித்து இருக்கிறார்கள். இது இப்படியே வளர்ந்தால் அப்புறம் என்ன ஆகும்? ராணுவ ஆட்சிதானே ஏற்படும். குட்டி நாய்கள் குலைத்து தாய்களுக்கு ஆபத்து வருவதா?
இந்து முஸ்லீம் என்றால் எண்ண
இந்த நாட்டு இந்து முஸ்லீம்கள் என்றால் இவர்கள் யார்? இதே நாட்டில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள் அல்லவா? இந்த நாட்டுக்கு ஆரியர்களும், ஆரிய மதமும் வருவதற்கு முன் இன்று இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறவர்கள் பூர்வீக இந்தியர்கள் அல்லவா? என்று கேட்கின்றேன். இங்கிருக்கும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள். தலைவர் உள்பட கனம் ஷேக்தாவுத் சாயபு உள்பட இவர்கள் எல்லோரும் ஆப்கானிஸ்தானம் அரேபியா ஆகிய இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா? அல்லது அவர்களது பெற்றோர்களாவது வெளிநாட்டிலிருந்து வந்த சந்ததிகளா?
ஆரியர் வந்த பிறகே முஸ்லிமாணார்கள்
ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வந்து அவர்களுடைய மதத்தை நமக்குள் புகுத்தி நம்மை அவர்களது அடிமைகளாகவும் நமது பெண்களை அவர்களது போக மாதர்களாகவும் ஆக்க சூழ்ச்சி செய்த காலத்தில் அதை சகிக்க மாட்டாமல் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஆரிய மதத்தை ஏற்க மறுத்து இஸ்லாம் ஆனவர்களாவார்கள். கிறிஸ்தவர்களும் அப்படியேதான். நாமோ நமது
குடி அரசு- 1938 (1) 32
சுயமரியாதையில் லக்ஷ்யமில்லாமல் மானம் கெட்டு இன்றும் ஆரிய மதத்தினராய் இருந்து கொண்டு இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆளுகிறவர்களை சாமி என்று கூப்பிட்டுக் கொண்டு மிருகத்திலும் கேடாய் வாழ்ந்து வருகிறோம் இதுதான் இந்து முஸ்லிம் என்பது.
இந்து முஸ்லீம் ரத்த சம்பந்தம்
மற்றும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ரத்த சம்மந்தமுண்டு என்று நான் சொல்வதை நீங்கள் சிறிது நன்றாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும். விவசாரித்தனத்தால் ரத்த சம்மந்தம் என்று நான் சொல்லவரவில்லை. முஸ்லிம்கள் நம்மில் இருந்து போனவர்களே. நம்முடையவும் அவர்களுடையவும் மூதாதைகள் இந்தியர்களே ஆவார்கள்
ஆனால் ஆரியர்கள் அப்படி அல்ல, வெள்ளைக்காரர்களைப் போலவே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள். மேலும் அவர்கள் தங்கள் ஆதிக்கக் கொள்கைகளையே மதம் என்று ஆக்கி தங்களையும் தங்கள் மூதாதைகளையும் கடவுள்கள் என்று ஆக்கி அவற்றை நம்மீது சுமத்தி நம்மை அடிமை கொண்டவர்களாவார்கள். அதனால்தான். அவர்களை பெரிய ஜாதியார் என்றும், நம்மை கீழ் ஜாதியார் என்றும்
கருதப்பட்டு வருகிறது. மற்றபடி நமக்கும் அவர்களுக்கும் ஏதாவது ரத்த சம்பந்தம் உண்டு என்று சொல்லுவதானால் அது விவசாரத் தனத்தாலும்
ஒட்டி செடி முறையாலுமே இருக்கலாம். அதுவும் சில மேல் ஜாதியார் என்கின்றவர்களுக்குள்தான் இருக்க முடியும். மற்றபடி நமக்கும் (இந்நாட்டு பழங்குடி மக்களுக்கும்) ஆரியர்களுக்கும் ரத்த சம்பந்தமோ நாட்டு சம்பந்தமோ மூதாதை சம்பந்தமோ ஒன்றும் இருக்க இடமில்லை.
ஆரியரும் நாமும் சகோதரர்களா?
ஆனால் இன்று சிலர் ஆரியர்களும் நாமும் சகோதரர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஆரியர் வாழ்வுக்கும் நம்மை அடிமைகளாக்கத் தரகர்களாயும் கூலிகளாயும் இருக்கிறார்கள். இவர்களை
நாம் ஒரு வகுப்பாரை ஆங்கிலோ இந்தியர்கள் என்று சொல்லுவதுபோல் ஆரியோ - இந்தியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி ஆரியர்கள் நமக்கு மூஸ்லிம்களைவிட அதிக நெருக்கமோ சொந்தமோ நாட்டு உரிமையோ உடையவர்கள் அல்ல.
இதை ஏன் சொல்லுகிறேன் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் என்னை வைவதற்கும் என்மீது பாமர மக்களுக்கு வெறுப்பும் துவேஷமும் ஏற்படுத்துவதற்கும் நான் முஸ்லிம்களின் கூலியாய்ப் பிரசாரம் செய்கிறேன். என்று சொல்லுவதற்கு சமாதானமாக சொல்லுகிறேனே ஒழிய வேறில்லை. B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
நம் கடமை
மற்றும் நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது இந்தியாவில் இருந்து நாம் இன்று அல்ல, இன்னமும் ஆயிரக்கணக்கான வருஷங்கள் பொறுத்து ஆனாலும் முஸ்லிம்களையோ, ஆரியர்களையோ விரட்டிவிட முடியாது. முஸ்லிம்கள் மொத்த தொகையில் 100-க்கு 25 வீதமும் உலகில் இல்லாத ஒற்றுமையையும் கட்டுப்பாடும் கொண்டவர்களாவார்கள். ஆரியர்கள் ஜனத்தொகையில் 100-க்கு 3 வீதம் என்றாலும் அவர்களும் உலகில் வேறு எந்த சமூகத்தினிடமும் இல்லாத சூழ்ச்சியும் தந்திரமும் கட்டுப்பாடும் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களை அடக்கி ஆளவோ இந்தியாவை விட்டு விரட்டி விடவோ முடியாது. ஆதலால் நமது கடமை என்னவென்றால் இந்தியாவில் உள்ள எல்லா மதமும் எல்லா சமூகமும் ஒன்றுபட நாம் பாடுபடவேண்டும். மதத்தில் ஜாதியில் சமூகத்தில் மக்களை மக்கள் இழிவாய் வேற்றுமையாய் கருதப்படுவது ஒழியவேண்டும். நமக்கு எவ்வளவு சுயராஜ்யம் என்பது வந்துவிட்டாலும், மதத்தால், ஜாதியால், வகுப்பால் மக்களை இழிவாய் கருதுவதும் நடத்துவதும் ஒழியாவிட்டால் நமக்கு சாந்தியோ, விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது என்பது எனது பலமான அபிப்பிராயம். அதனாலேயே நான். இதை சொல்லுகிறேன்.
காப்பிக்கடை தேசபக்தி
நம்ம ஊர் காப்பிக்கடைக் காரர்களும் வக்கீல்களும் தான் இன்று பெரிய தேசீய வீரர்களாகவும் சுயராஜ்ய பிரயத்தனக்காரர்களாகவும் இருக்கிறதைப் பார்க்கிறோம். காப்பிக்கடைகளில்தான் காங்கரஸ் கொடிகள் பறந்த வண்ணமாய் இருக்கின்றன. வக்கீல்கள்தான் மேடையில் பேசிய வண்ணமாயிருக்கிறார்கள். இவர்கள் மற்ற மக்களை எப்படி மதிக்கிறார்கள்? இவர்களிடத்தில் வகுப்பு உணர்ச்சி இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.
காங்கரஸ் கொடிக்குக்கீழ் தொங்கும் போர்டுகள் ஒவ்வொன்றிலும் பிராமணாள் ஓட்டல் - பிராமணாள் காபி கிளப்பு என்று பரங்கிக்காய் பிரமாணத்தில் எழுத்துக்கள் எழுதி தொங்கவிட்டு இருக்கிறார்கள் உள்ளே போய் பார்த்தாலும் பிராமணாள் சாப்பிடும் இடம் - பிராமணரல்லாதவர்கள் சாப்பிடுமிடம் என்று எழுதி இடம் பிரித்து இருக்கிறார்கள். சில இடங்களில் மூஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடமே இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயம்கூட அங்கு பேச முடியாது. வக்கீல்கள் ஓட்டல்காரர்களுக்கு அண்ணன்மாராய் இருக்கிறார்கள். அவர்களது ஒழுக்கமும் நாணையமும் நடத்தையும் நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமா? ஓட்டல் மாத்திரம் தானா? “சாமிகள்” என்பவை இருக்கும் கோவில்கள் என்பவைகளிலும் மடங்களிலும்
குடி அரசு- 1938 (1) 34
சத்திரம் சாவடிகளிலும் சில இடங்களில் ரோட்டுக்கள், கிணறுகள் ஆகியவைகளிலும் இடம் வேறு வேறு. சிலருக்கு அடியோடு இடமே இல்லை. இந்தநிலையில் இந்த யோக்கியர்கள்தான் நமக்கு அதாவது இந்து முஸ்லிம் தீண்டாதார் என்பவர்களுக்குச் சுதந்திரம் சுயராஜ்யம் சம்பாதித்துக் கொடுப்பவர்களாம். இவர்களுக்குப் பின் கொடி தூக்கிக் கொண்டு 'கோவிந்தா' போடாவிட்டால் நானும் நீங்களும் தேசத் துரோகியாம். இதற்கு யார் பயப்படக்கூடும் என்று கேட்கிறேன்.
குறிப்பு: ஈரோடு முஸ்லிம் லீக்கு பொதுக் கூட்டத்தில் 02.01.1938 ஜனாப் கான்பகதூர் கலிபுல்லா சாயபு எம்.ஏ.பி.எல், எம்.எல்.ஏ அவர்கள்
தலைமையில் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 09.01.1938
s வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
வைத்திய உதவிக்கு ஆபத்து
சரணாகதி மந்திரி சபையின் வைத்திய இலாகா மந்திரியான கனம் டாக்டர் ராஜன் அவர்கள் சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விஷயமாய் வெளிப்படுத்தி இருக்கும் அபிப்பிராயங்களும் உத்திரவுகளும் பல பத்திரிகைகளில் வெளியாய் இருப்பதை நமது வாககர்கள்கவனித்திருக்கலாம். அவ்வுத்திரவினுடைய முக்கிய கருத்தானது சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர்களை நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி கவுரவ டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதாகும்
இதற்குச் சரணாகதி மந்திரிகள் சொல்லும் முக்கிய காரணம் என்ன. வென்றால், சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு வருஷம் 1க்கு சுமார் 30 லக்ஷ ரூபாய் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமானால் வைத்திய இலாகாவில் உள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்துவிட்டு, படித்துவிட்டு வரும்படி இல்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ - சம்பளமில்லாமல் கவுரவ டாக்டர்களாக நியமித்து விடுவதன் மூலமும், சில பள்ளிக் கூடங்களை எடுத்து விடுவதன் மூலமும் கல்வி சுகாதார இலாகாவில் சில சிக்கனம் செய்து விடுவதன் மூலமும் சரிப்படுத்தியாக வேண்டும் என்பதாகும்
பாமர மக்கள் மதுவருந்தக் காரணம் போதிய கல்வி அறிவும், சுகாதார ஞானமும் இல்லாததோடு சில இடங்களில் சரீர கமின்மையும் மத அனுமதியுமேயாகும். இந்தக் காரியங்களைச் சரிப்படுத்திவிட்டால், மதுபானத்தால் ஏற்படும் கெடுதிகள் அடியோடு ஒழிந்தே போகும் சரணாகதி மந்திரிகளுக்கு இது தெரியாதென்று சொல்லிவிட முடியாது ஆனால் சரணாகதி மந்திரிகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பாடுபடும் சூழ்ச்சித்திறன் மந்திரிகளானதால் அவர்கள் தங்களுக்கு கீழ்ப்பட்ட அடிமைகளை சகாவாக வைத்துக்கொண்டு எந்தெந்த வழிகளில் பார்ப்பனரல்லாத மக்களை அடக்கி ஒடுக்கி வைத்து எந்தெந்த வழிகளில் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்கள் வசம் ஆதிக்கம் இருக்கும்படி செய்யலாம் என்கின்ற கருத்துடனேயே இந்த சூழ்ச்சிகரமான மதுவிலக்கின் பேரால் பல தந்திர வேலைகள் செய்பவர். களாய் இருப்பதால் இக்காரியங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள்.
வைத்திய இலாகாவென்பது மிகவும் பொறுப்புள்ள இலாகாவாகும் அது பெரிதும் சரீரத்தையும் உயிரையும் பொருத்ததாகும்
குடி அரசு- 1938 (1) 36
காயலாவில் சாகப்போகும் ஒரு மனிதனை பிழைக்க வைக்க எப்படி வைத்திய இலாகா உதவக் கூடுமோ அது போலவே காயலாவிலிருந்து பிழைக்கப் போகும் ஒரு மனிதனை சாகடிக்கவும் பயன்படலாம். இப்படிப்பட்ட முக்கியமான உயிரைப் பொறுத்த ஒரு இலாகாவில் கவுரவ வைத்தியர்களை - சம்பளமில்லாத ஆட்களை வைத்தால் மக்கள் எப்படி காப்பாற்றப்படக்கூடும்? எப்படி நம்பிக்கையோடு வைத்திய வசதி பெறக்கூடும்? சர்க்கார் தவிர வேறு தர்ம ஆஸ்பத்திரிகள். தவிர மற்றபடி எந்த டாக்டர்களும் வைத்தியர்களும் இலவசமாய் வைத்தியம் பார்ப்பதே கிடையாது. அந்தப்படி இலவசமாய் வைத்தியம் பார்த்தால் டாக்டர்களுக்கு ஜீவனம் எப்படி நடைபெறும் என்பது யோசிக்கத்தக்கதாகும். வைத்திய இலாக்காவில் உள்ள சம்பளக் கொள்ளையால் இப்போது அநேகம் பேர் டாக்டர் வேலைக்கு படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள் என்பது உண்மைதான். இவைகளில் 100க்கு 75 பேர்கள் பார்ப்பனர்களாய் இருக்கிறார்கள் என்பதினாலேயே இப் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்க இந்தத் தந்திரம் செய்யப்படுகிறது. ஆனால் வரி கொடுக்கும் பொது ஜனங்கள் இந்த மாதிரி சம்பளமில்லாத டாக்டர்களை நம்பி வைத்தியம் செய்து கொள்ளக்கூடுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். சம்பளம் வாங்கும் டாக்டர்களே சிலர் ஒழுக்கயீனமாய் நடந்து கொண்டு பணம் சம்பாதிப்பதை அடிக்கடி பார்த்து வருகிறோம் அப்படியிருக்க சம்பளமில்லாத டாக்டர்கள் நியமிக்கப்பட்டு விடுவார் களேயானால் ஒழுக்கயீனமான காரியங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தது போல் தானே முடியும் என்று பயப்படுகிறோம். மற்றும் இந்த வைத்தியர்களுக்கு தனியாய் பணம் கொடுக்காவிட்டால் அவர்கள் மனம் எப்படி குளிரும்? ஆகவே பொதுஜனங்கள் வரி கொடுப்பதல்லாமல் வைத்தியர்களுக்கு வேறு அழுக வேண்டிவிடும். இது இந்த மந்திரிகளால் போடப்பட்ட புது வரி அல்லவா? என்று கேட்கிறோம்.
தவிரவும் வைத்திய முறைகளும் வைத்திய வசதிகளும் பெருகி அவற்றுள் அநேக புதுமைகள் ஏற்பட்டு மனிதன் நோயுற்று சாகாமல் வெகுகாலம் இருக்கலாம் என்கின்ற நிலை ஏற்பட்டு வருகிற இக்காலத்தில் வைத்திய இலாகாவை கவுரவ உத்தியோகஸ்தர்கள் கையில் ஒப்புவித்து விட்டால் அது உருப்படுமா? முன்னேற்றமடையுமா? என்று கேட்கின்றோம்.
இப்பொழுதே நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இருந்துவரும் அரசியல் சமுதாய இயல் கட்சி பிரதி கட்சிகளுக்கும் ஒற்றுமை இன்மைக்கும் கலவரங்களுக்கும் இந்த கவுரவ டாக்டர்கள் ஆகப் போகும் டாக்டர்களே பெரிதும் காரணமாய் இருந்து வருவது யாவரும் அறிந்ததேயாகும். அதிலும் 100-க்கு 99 இடங்களில் பார்ப்பன டாக்டர்களின் தொல்லையேயாகும். இந்த நிலையில் இவர்கள் வசம்
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆஸ்பத்திரிகளையும், மருந்து பாட்டல்களையும், சர்டிபிகேட்டு கொடுக்கும் அதிகாரங்களையும் ஜெயில் மேற்பார்வைகளையும் ஒப்படைத்து விட்டால் பார்ப்பனரல்லாத மக்கள் என்ன கதி அடைவது என்பது விளங்கவில்லை வரி செலுத்துவோர் பணத்தில் வாங்கி இவர்கள் வசம் ஒப்புவிக்கப்படும் மருந்துகளின் கதி என்ன ஆகும் என்பதும் யோசிக்கத் தகுந்ததாகும் வைத்திய பரீக்ஷ பாஸ் பண்ணி விட்டதினாலேயே மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும் யோக்கியர்களாய் விடுவார்கள் என்று கருதவேண்டுமானால் சட்ட பரீக்ஷ செய்துவிட்டு வீட்டு வாடகைக்கு வழியில்லாமல் ஆந்தைகள் போல் பகலில் ஒளிந்துகொண்டு இருந்து ராத்திரியில் இரை தேடும் வக்கீல்களை முன்சீப், சப் ஜட்ஜி, ஜில்லா ஜட்ஜி ஆகிய உத்தியோகங்களுக்கு கவுரவ ஜட்ஜிகளாய் நியமித்து விடலாமல்லவா? இதற்காக ஏன் 500, 1000, 2000 ரூபாய்கள் வீதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம்
நமது நாட்டு ஆனரரி கவுரவ உத்தியோகங்களின் யோக்கியதை
யார் அறியாதது? காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்ற ஸ்தாபனங்கள் ஸ்தல ஸ்தாபனங்கள் உள்பட இன்று எது யோக்கியமாயும் நாணயமாயும் நடப்பதாகச் சொல்ல இடமிருக்கிறது? சென்னை கார்ப்பரேஷன் முதல். திருநெல்வேலி ஜில்லா போர்டு வரை காங்கிரஸ் மெம்பர்களின் யோக்கியதை எப்படி நடந்து வருகிறது என்பது காங்கரஸ் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் பத்திரிகைகளிலேயே நாற்றமெடுக்கவில்லையா? என்று கேட்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் பாழாய் போனது போதாமல் வைத்திய இலாக்கா உதவியும் கல்வியும் குட்டிச் சுவராக்கப்படவேண்டுமா என்று கேட்கின்றோம். மற்றும் யாரோ பல பார்ப்பனர்கள் டாக்டர் பரீக்ஷை பாஸ் செய்துவிட்டு வேலை இல்லாமல் பட்டினி கிடப்பதற்கு ஆக பொது ஜனங்களின் உயிரைப்பற்றிய வைத்தியத் துறையே பாழாக்கப்படுவதா? என்றும் கேட்கின்றோம்
இதற்கு காரணம் சர்க்காரில் பணமில்லை என்று சொல்லப்படு மானால் இந்த மந்திரிகள் அரசியல் நிர்வாகத்தில் இருக்க யோக்கியதை அற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் தாங்க முடியாத அளவில் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் வைத்தியத்துக்கும் கல்விக்கும் கூட பணம் இல்லை என்று சொல்லப்படுமானால் மற்று வேறு எதற்குத்தான் இந்த வரி பயன்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே இந்த மந்திரிகளுக்கு சிறிதாவது பொறுப்போ, சுயமரியாதையோ இருக்குமானால் மரியாதையாய் வெளியில் வந்து அரசியல் ஞானமுள்ளவர்களிடத்தில் பதவியை ஒப்படைத்துவிட வேண்டியது அவசியமாகும். “வரியைக் குறைக்கிறோம்; ஜனங்களுக்கு அதிக சவுகரியம் செய்கிறோம்; தற்குறித் தன்மையையும் நோயையும் இந்தியாவை விட்டே விரட்டி அடித்து விடுகிறோம்” என்றெல்லாம்
குடி அரசு- 1938 (1) 38
சொன்ன பார்ப்பனர்கள் இன்று பதவி பெற்றதும் கல்வி இவ்வளவு வேண்டியதில்லை, வைத்தியம் இவ்வளவு வேண்டியதில்லை என்று சொல்லத்தக்க மாதிரிப் பள்ளிக்கூடங்களை குறைக்கவும் டாக்டர்கள். பொறுப்பையும் தகுதியையும் குறைக்கவும் முற்பட்டு விட்டார்கள். என்றால் இதன் சூழ்ச்சி விளங்கவில்லையா என்றும் கேட்கின்றோம்
இன்றுள்ள வைத்திய வசதியும் கல்வி வசதியும் ஜஸ்டிஸ் மந்திரிகள் பதவிக்கு வந்த பின்பு எவ்வளவோ கஷ்டப்பட்டு செய்த காரியமாகும் அதனாலேயே பார்ப்பனரல்லாத மக்கள் பல வகுப்பாரின் கல்விக்கு
100க்கு 100 ஆக பெருகி இருக்கிறது.
வைத்திய விஷயத்திலும் அநேக தொத்து வியாதிகள் 100க்கு 90 பாகம் மறைந்ததுடன் சாவு எண்ணிக்கையும் குறைந்து விட்டது வைத்திய வசதியும் கிராமங்களுக்கெல்லாம் கிடைக்கும்படியாக இருந்து வருகிறது. எல்லா வகுப்பிலும் டாக்டர்கள் ஏற்படவும் யாரும் வைத்திய பரீகைஷக்கு படிக்கவும் சவுகரியம் ஏற்பட்டது
இன்று பார்ப்பன ஆட்சி ஏற்படவும் முதல் எடுப்பில் இந்த கல்வியிலும் வைத்தியத்திலேயும் கை வைக்கப்படுவதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. வயிறு எரிகிறது. இதை ஏன் என்று கேட்க சட்டசபையில் ஆள் இல்லாத நிலையில் நமது அரசியல் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது என்றால் வெளியிலும் ஆள் இல்லை. எனவே இம் மாதிரியான ஒரு நெருக்கடியான காலம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இதுவரை வந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
குடி அரசு - தலையங்கம் - 09.01.1938
0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தாழ்த்தப்பட்டவர்களும் முஸ்லீம்களும்
இப்போது நம் இந்திய நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் நிலையும், முஸ்லீம்களின் நிலையும் சமூகம் அரசியல் ஆகியவைகளில் ஒன்று போலவே இருந்து வருகிறது என்று நாம் வெகு நாளாகவே சொல்லி வருகிறோம். இதையே தோழர் ஜின்னா அவர்களும் அலகாபாத்தில் தன்னைக் காண வந்த ஒரு தாழ்த்தப்பட்ட மக்கள் தூது கோஷ்டிக்கு
எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
இந்து மதப்படிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சுமத்தப்பட்ட தீண்டாமையானது அவர்கள் செத்தால் ஒழிய - செத்த பிறகும் கூட
(தீண்டாமை) ஒழியாது என்பது தத்துவமாகும். இதற்கு இந்துமத வேத சாஸ்திரங்களும் அவைகளில் நிபுணத்துவம் பெற்ற சாஸ்திரிகளது வாக்குகளுமே ஆதாரங்களாகும். அது போலவே இந்து மதப்படி முஸ்லீம்கள் விஷயமும் ஆகும். மற்றும் கவனமாய் பார்த்தால் முஸ்லீம்கள். விஷயம் தீண்டப்படாதவர்களைவிட மோசமானதாகும் என்று தெரியவரும். ஏனெனில் மத அகராதிப்படி ஆதாரப்படி முஸ்லீம்கள். சோனகர் என்றும் மிலேச்சர்களென்றும் அழைக்கப்படுகிறவர்களாய் இருக்கிறார்கள். துருக்கியனை அசுரன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களது பாஷையையும், தேசத்தையும் மிலேச்ச பாஷை மிலேச்ச தேசம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே முஸ்லீம்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவருடன் சேர்க்கப்பட்டவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் அந்நியர்கள் - இந்தியர்கள் அல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது
இனி பார்ப்பன மந்திரிகள் ஆக்கினைப்படி மக்கள் யாவருக்கும் ஹிந்தி கற்பிக்கப்பட்டு அதன் மூலம் இந்துமத சாஸ்திரங்கள் படிக்கப்படுகிற காலத்தில் முஸ்லீம்கள் தீண்டப்படாதவர்கள் என்பது இன்னும் பலமாக அமுலில் வரப்போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
அது மாத்திரமா என்று பார்த்தால் பார்ப்பனரல்லாத மற்ற ஜாதியார்களும் ஜாதிக்கு ஜாதி தொடப்படாதவர்களாகவே ஆகிவிடப் போகிறார்கள் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
குடி அரசு- 1938 (1) 40
இப்பொழுதே திருநெல்வேலி வேளாளனும் தஞ்சாவூர் வேளாளனும் கோயமுத்தூர் வேளாளனும் ஒருவர் சாப்பிடுவதை ஒருவர் பார்த்துக்கொள்ள. முடியாதென்றால் - இப்பொழுதே விசுவப் பிராமணாள் என்னும் ஆசாரியும் நகரத்து வைசியன் என்னும் செட்டியாரும் வாணிய வைசியன் என்னும் செட்டியாரும் ஆரிய வைசியன் என்னும் கோமுட்டி செட்டியாரும் ஒருவருக்கொருவர் சாப்பிடுவதை பார்த்தால் தோஷம் -
தீட்டு என்றால் இனி ஹிந்தி படித்த பின்பு கூட நாயக்கன், படையாட்சி, நாயுடு, கவுண்டன், உடையார், சடையார், நாடார், ஏகாலி, அம்பட்டர் முதலியவர்களின் கதி என்ன ஆகும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்
கூற வேண்டியதில்லை. அப்புறம் பஞ்சமர்கள் என்பவர்கள் கதி நினைக்கவே வேண்டியதில்லை.
இந்த மத்தியில் காந்தியார் விரும்பும் வார்தா கல்வித்திட்டம் அமுலுக்கு வந்து அவனவன் ஜாதித்தொழிலே அவனவனுக்கு கற்பிக்கப்படவேண்டும் என்கின்ற முறை ஆரம்பித்துவிட்டால் பதினென் குடி மக்கள் கதி அதோகதிதான் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இந்த நிலையில் இருக்கும் இந்தியர்களில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் இந்த பிறவியில் தீண்டாமையோ, இழிவோ ஒழிவது என்பது காந்தி ராஜ்யத்திலோ, காங்கரஸ் ராஜ்யத்திலோ சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடிய காரியமல்ல என்பதே நமதபிப்பிராயம்
இதை உத்தேசித்தே சுமார் இருபது வருஷ காலமாக நாம் தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லிம்களுடன் சேர்ந்து கிளர்ச்சி செய்யுங்கள் என்று சொல்லி வருகிறோம். அதை இப்போதாவது வடநாட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்து ஜனாப் ஜின்னாவிடம் சென்று தங்களை அடைக்கலம் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொண்ட புத்திசாலித்தனத்தை பாராட்டுகிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்களை எப்பொழுதும் தலையெடுக்க ஒட்டாமல் இமயமலை போன்ற தடையாய் இருப்பது பூனா ஒப்பந்தமேயாகும் பூனா ஒப்பந்தம் இந்த நிலையில் இனி சுலபத்தில் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நம்புவதற்கு சிறிதும் இடம் இல்லை. ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கும் பூனா ஒப்பந்தத்தை ஒழிக்கப் பாடுபடுவதைவிட தோழர். அம்பத்கார் அவர்கள் விளம்பரப்படுத்தியபடி இந்து மதத்தை விட்டு வேறு
மதம் புகுவதே மேலானதும், சுலபமானதுமான காரியம் என்று சொல்லுவோம்
கொச்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் இன்று அரசியல் சுதந்தரம் பெற்றதற்கு காரணம் தோழர் அய்யப்பன் முதலியவர்கள் இந்து மதத்தை விட்டு விட வேண்டியது என்று செய்த தீர்மானமும் தோழர் டாக்டர் தையல் முதலியவர்கள் முஸ்லீம் மதத்தைத் தழுவியதுமே காரணமாகும்
41 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அதுபோல் இந்தியாவில் ஒரு தாழ்த்தப்பட்டார் மதம் மாறும் மிஷின் (கூட்டம்) என்று ஒரு கூட்டம் வெளியில் தைரியமாய் புறப்பட்டு தகுந்த செல்வாக்குள்ள தலைவர் தலைமை வகித்து 6 மாத காலத்தில் ஒரு 50 ஆயிரம் பேர்களையாவது முஸ்லீம்களாக ஆக்கிவிட்டால் பூனா ஒப்பந்தம் டபார் என்று உடைந்து போய் திருவாங்கூர் கொச்சி தாழ்த்தப்பட்ட
மக்கள் போல் அவரவர்கள் உரிமையையும் சுயமரியாதையையும் கண்டிப்பாக ஒரு நாளில் பெற்று விட முடியும். அப்படிக்கில்லாவிட்டால் தோழர் காந்தியாருக்கும் பார்ப்பனர்களுக்கும் இனியும் பல முனிசாமிகளும் சிவ ஷண்முகங்களும் வண்டி வண்டியாய் கிடைத்துக்கொண்டு தானிருப்பார்கள். கேவலம் ஜெயிலிலேயே ஜாதி பார்க்க முடிவதில்லை அப்படி இருக்க அதைவிட மோசமான சமூக வாழ்வில் நரகத்தில் உழன்று கொண்டு பசித்திருப்பவன் ஜாதிபார்க்க முடியுமா? ஒரு எலும்புத் துண்டை கண்டாலே நமக்குள் மண்டை உடைத்துக் கொண்டு எதிரிகள் காலை நக்க வேண்டியதுதான். ஆதலால் இன்று தாழ்த்தப் பட்டவர்களின் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் பூனா ஒப்பந்த உடைப்புக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அலகாபாத் தூது கோஷ்டி மாதிரியும் தோழர் அம்பத்கார் அபிப்பிராயப்படியும் இந்து மதத்தை விட்டு விலகி முஸ்லீம்களை தஞ்சமடைவதைவிட வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்
தாழ்த்தப்பட்ட மக்களை - இந்துக்கள் - பார்ப்பனர்கள் தங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கிக் காட்டுவதற்கும் தங்களுக்கு அடிமைகளாக ஆக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறவர்கள் ஆகையால் சுலபத்தில் சுதந்தரமோ சமத்துவமோ கொடுக்க இசைய மாட்டார்கள். ஆதலால் முஸ்லீம்களும் இந்து தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் இந்துக்கள் மைனாரிட்டி வகுப்பார் ஆகிவிடுவார்கள். அப்போதுதான் வெள்ளைக்காரர்களும் வழிக்கு வருவார்கள் என்பதோடு இந்துக்களுடைய ஜாதி தொல்லைகளும்
ஒரு வரியில் ஒழிந்துவிடும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.01.1938
குடி அரசு- 1938 (1) 42
காங்கரஸ் கொ௱டி தேசீயக்கொடி அல்ல
காங்கரஸ்காரர் மெஜாரட்டி பெற்று பதவியேற்றதும் சென்னைக் கோட்டையில் தேசீயக்கொடி யேற்றுவதாக பாமர மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஓரளவிலாவது நிறைவேற்றி வைத்துச் சமாளித்து விடவேண்டுமென்ற நோக்கத்தினால் சென்னை முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார், விருப்பமுடைய ஸ்தல ஸ்தாபனங்கள் தேசீயக்கொடியை (காங்கரஸ் கொடியை)த் தமது கட்டிடங்களில் விசேஷ காலங்களில் பறக்கவிடலாம் என ஒரு அறிக்கை தயார் செய்து சென்னை கவர்னர் பிரபுவின் ஆசீர்வாதம் பெறச் சென்றதாகவும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென ஒப்புக்கொள்ள முடியாதென்று கவர்னர் கூறியதாயும் அப்பால் காங்கரஸ் மூவர்ணக் கொடியே என கனம் ஆச்சாரியார் திருத்தி அறிக்கை வெளியிட்டதாகவும் தெரியவருகிறது. எனினும் காங்கரஸ் சர்க்கார் வெளியிட்ட அறிக்கையில் காங்கரஸ் மூவர்ணக் கொடி எனப் பிரத்தியேகம் குறிப்பிடப்பட்டிருந்தும் காங்கரஸ் மந்திரிகளும் ஏனைய காங்கரஸ்காரரும் காங்கரஸ் பத்திரிகைகளும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென புரளிசெய்து பொது ஜனங்களை ஏமாற்றும் வழக்கம் நிற்கவில்லை. நீலகிரி ஜில்லா போர்டு கட்டிடத்தில் காங்கரஸ் கொடியைப் பறக்கவிடவேண்டுமென்று ஒரு காங்கரஸ் மெம்பர் தீர்மானம் கொண்டு வந்ததையும் அது பற்றித் தகராறு ஏற்பட்டதையும் கடைசியில் காங்கரஸ் கொடி தேசீயக் கொடியாகுமா என்பது பற்றி சென்னை சர்க்கார் அபிப்பிராயம் அறிய வேண்டுமென்று நீலகிரி ஜில்லா போர்டார் தீர்மானம் செய்து சர்க்கார் அபிப்பிராயம் கேட்டிருந்ததையும் நாம் ஏற்கனவே '“விடுதலை''யில் குறிப்பிட்டிருக்கிறோம். வேறு பலரும் இதுபற்றி அபிப்பிராயம் கேட்டிருப்பதினால் சென்னை சர்க்கார் - அதாவது கனம் ஆச்சாரியாரை பிரதம மந்திரியாகக் கொண்ட காங்கரஸ் சர்க்கார் - இப்பொழுது வேறொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அது வேறிடத்து வெளிவருகிறது. காங்கரஸ் கொடி தேசீயக் கொடி அல்லவென்றும் ஸ்தல ஸ்தாபனங்கள் விரும்பினால் ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் காங்கரஸ் கொடியைப் பறக்க விடலாமென்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் காங்கரஸ் கொடியையும் யூனியன் ஜாக்கு கொடியையும் ஏக காலத்தில் பறக்கவிடக் கூடாதென்றும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது
43 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இந்த அறிக்கைப்படி யூனியன் ஜாக்கே தேசீயக்கொடி என்றும் சர்க்கார் கட்டிடங்களில் அந்த யூனியன் ஜாக்குக் கொடியைத்தான் பறக்க விடலா மென்றும் காங்கரஸ் கொடி தேசீபக்கொடி ஆகாதென்றும் ஸ்தல ஸ்தாபனங்கள். விரும்பினால் தமது காரியாலயங்களில் விக்ஷ காலங்களில் காங்கரஸ் கொடியைப்பறக்கவிடலாமென்றும் தெளிவாகிவிட்டது. இனியாவது காங்கரஸ் கொடியை தேசீயக்கொடியென அழைக்கும் பித்தலாட்டம் ஒழியுமா? காங்கரஸ் மந்திரி சபையார் முதலில் வெளியிட்ட அறிக்கையினாலேயே காங்கரஸ் கொடி தேசீயக் கொடியாகாதெனத் தெளிவுபட்டிருந்தும்
காங்கரஸ் மந்திரிகள், கூட்டங்களில் பேசும்போது காங்கரஸ் கொடியை தேசீயக்கொடியெனக் கட்டுப்பாடாக விளம்பரம் செய்து வருவது மிகவும் பித்தலாட்டமான தென்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 09.01.1938
குடி அரசு - 1988 (1) 44
கொச்சியில் அரசியல் சுதந்தரம்
** மித்திர 2 னின் ஜாதி புத்தி
கொச்சி ராஜ்யமானது நமது தமிழ் ஜில்லாக்களில் ஒரு நான்கு ஐந்து தாலூகாகளுக்கு சமமாகும். சுமார் 12 லக்ஷம் ஜனங்களும் சுமார் 1 கோடி
ரூ. வருஷ வருமானமும் உடையதாகும். இந்த ராஜ்யம் இன்று இந்தியாவிலேயே தலை சிறந்து விளங்கும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொச்சியில் இன்று இருக்கும் ராஜா 75 வயது கடந்த விருத்தரும் பழமை விரும்பியும் வைதீகப் பித்தருமாவார் என்றாலும் அவருக்கு கிடைத்த அருமையான திவானால் மகாராஜா இன்று குன்றின் மேலிட்ட தீபமாய் விளங்குகின்றார்.
இந்த மகாராஜா மீது பார்ப்பனர்கள் ஒரு குறை கூறுகிறார்கள் அதாவது கொச்சி மகாராஜா கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடவில்லை என்பதாகும். (எப்படிப்பட்ட பார்ப்பனர்கள் இந்தக்குறை கூறுகிறார்கள் என்றால் பார்ப்பன ராஜ்யம் இருக்கும் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் கோவிலைத் திறந்து விடுவதற்கு சட்டம் செய்யக்கூடாது என்று வாதாடும் பார்ப்பனர்கள்.)
ஏனெனில் பக்கத்து தேசமாகிய திருவாங்கூர் மகாராஜா கோவிலைத் திறந்து விட்டிருக்கும்போது கொச்சி ராஜா ஏன் திறந்துவிடக்கூடாது என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் திருவாங்கூர் ராஜாவுக்கு வயது
சுமார் 20 இருக்கலாம். கொச்சி ராஜாவுக்கு வயது 76. ஆதலால் திருவாங்கூர். ராஜாவைக் கொண்டு செய்யப்படும் காரியம் கொச்சி ராஜாவைக் கொண்டு செய்யப்படமுடியாது என்பது தவறாகாது. ஆனாலும் பொது நலம் கருதி அது செய்யப்படத்தான் வேண்டும் என்பதில் யாருக்கும் துக்ஷபமிருக்காது.
ஆனபோதிலும் கொச்சிக்கு ஏற்பட்ட திவான் உண்மையும் தீரமும் அரசியல் ஞானத்தன்மையும் கொண்ட காரியவாதி யாகையால் அவர் அதிகாரத்தை - உத்தியோகத்தை பெரும் பெரும் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொச்சி ராஜாவால் திறந்து விடும்படி செய்திருக்கிறார்.
திருவாங்கூரில் அதில்லை. திருவாங்கூர் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்லுடன் முட்டிக் கொள்ள வேண்டியது தான். இந்த கல்லுக்குப் பக்கத்தில் போய் முட்டிக்கொள்ளும் சுதந்தரமும் திருவாங்கூர் ராஜ்ய மக்கள் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லீம்களாகவும் பகுத்தறிவு வாதிகளாகவும்
48 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காகவே அப்படி செய்யப்பட்டதென்பது திருவாங்கூர் தீண்டாமை ஒழிப்பு கிளர்ச்சிக் கதையை அறிந்தவர்களுக்கு நன்றாய் விளங்கும்
ஆனால் கொச்சி சமஸ்தானத்தின் மேன்மையை அறிய ஆசைப்படுகிறவர்க ஒரு விஷயத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்
அதாவது கொச்சி சமஸ்தான சர்க்கார் பதவிகள், உத்தியோகங்கள் ஆகியவற்றில் 100 உத்தியோக பதவிகளில் ஏற்கனவே ஏகபோகமாய் அனுபவித்து வந்த பார்ப்பனர்களுக்கு 4-ம் ஈழவர் புலையர் மற்றவர்கள் என்பவர்களாகிய தீண்டப்படாதவர்கள் என்று கருதி வந்தவர்களுக்கு 38 பதவிகளும் ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றால் இதைப்பார்க்கிலும் முன்னேற்ற முறையைக் கையாண்ட தேசம் இந்தியாவில் வேறு எங்கிருக்கிறது என்று கேட்கிறோம்
கல்லைக்காட்டி திருவாங்கூர் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி விட்டதைப்பற்றி காந்தியார் புகழ்ந்து விட்டார். ஆச்சாரியார் இது விஷயத்தில் சிறிதுகூட சம்மந்தமில்லாத திருவாங்கூர் திவானுக்கு மாலை சூட்டினார். மற்ற சாஸ்திரி பார்ப்பனர்கள் “திருவாங்கூர் மகாராஜா நல்லதொரு சமயத்தில் இந்து மதத்தைக் காப்பாற்றினார்” என்று பாராட்டி விட்டார்கள் . ஆனால் இதனால் திருவாங்கூர் பொது மக்களுக்கு கிடைத்த அரசியல் சுதந்தரமென்ன, அதிகார சுதந்தரமென்ன என்று கேட்கிறோம்
திருவாங்கூர் திவானாலோ, மகாராஜாவாலோ கொச்சி ராஜா ஆரம்பத்திலேயே கொடுத்த இவ்வளவு பெரிய வகுப்புவாரி உரிமை சுதந்தரத்தை மனதிலாவது நினைக்க முடியுமா என்று கேட்கிறோம் ஏனெனில் திருவாங்கூர் என்றால் சர்வம் பார்ப்பன மயமாய் இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கொச்சி ராஜா ஒரு அரசியல் சுதந்தர பிரகடனம் செய்திருக்கிறார். இதுவும் இதுவரை எந்த சுதேச சமஸ்தானமும் செய்திருக்காத ஒரு மாபெரும் சுதந்தரப் பிரகடனமாகும். அதுவும் முதல் முதல் ஆரம்பத்தில் இவ்வளவு சுதந்தரம் நமது பிரிட்டிஷ் அரசாங்கம் கூடகொடுத்ததில்லை என்பது மாத்திரமல்லாமல் இந்திய தேசிய காங்கரசும் கேட்டதில்லை என்று சொல்லலாம்.
அதாவது சட்டசபை மெம்பர்களில் ஒருவரிடம் சில இலாகாக்களை ஒப்புவித்து அந்த மெம்பரை சட்டசபை மெம்பர்களுக்கு ஜவாப்தாரியாய் இருக்கவேண்டியது என்று செய்திருக்கிறார்கள்.
பிரிட்டிஷ் இந்தியாவில் இம்மாதிரியாகத்தான் முதல் முதல் ஜனப்பிரதிநிதிக்கு சில இலாகா கொடுப்பது என்று ஏற்பாடு செய்து முதல். பிரதிநிதியாக பொப்பிலி மகாராஜாவை (இன்றைய பொப்பிலி ராஜாவின் பாட்டனாரை) ஏற்படுத்தி அவர் வசம் சில இலாகாகளை கொடுத்தார்கள்.
குடி அரசு- 1938 (1) 46
ஆனால் அவர் சட்டசபைக்கு கட்டுப்பட்டவரல்ல. அந்த வழியில் வந்தவர்கள்தான் வீ.கிருஷ்ணசாமி அய்யர், சர். சிவசாமி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர் முதலியவர்கள் ஆவார்கள். இவர்கள் காலத்தில் இந்த அதிகாரமும் பொறுப்பும் போதாதது என்று காங்கரஸ் குறை கூறவில்லை. அதற்கு பதிலாக காங்கரஸ் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டுக்கு நன்றி செலுத்திற்று என்பது நமக்கு தெரியும். காரணமென்னவென்றால் அப்பதவி 1927 வரையில் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாய் இருந்து வந்ததுதான். ஆனால் இப்போது கொச்சி மகாராஜா ஆரம்பத்திலேயே சில இலாக்காக்களைசட்டசபைக்கு பொறுப்பானவர் வசம்ஒப்படைத்திருக்கும்போது சென்னை பார்ப்பன 'மித்திர"னாகிய “சுதேசமித்திரன் இது போதாது என்று கொச்சி திவான் சர்.ஆர்.கே.ஷண்முகம் அவர்கள் மீது குறை கூறுகிறது. இதன் காரணம் என்ன என்று பார்ப்போமேயானால் இதுவரை பார்ப்பனர்கள் திவான்௧ளாக இருந்த எந்த சமஸ்தானத்திலும் செய்திருக்காத
ஒரு பெரிய அரசியல் சுதந்தரத்தை ஒரு பார்ப்பனரல்லாத திவான் உள்ள சமஸ்தானத்தில் ஒரே தடவையில் ஏற்படுத்தி இருப்பதேயாகும்
இவ்வளவையாவது ''சுதேசமித்திர'' னின் தம்பி தோழர். சர்.என். கோபாலசாமி அய்யங்கார் மாதம் 5000 ரூ. வாங்கிக்கொண்டிருக்கும்
காஷ்மீரில் ஏன் செய்யவில்லை? 'சுதேசமித்திர' "னின் ஜாதியான தோழர் சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரியார் மாதம் 6000 ரூபாய் வாங்கிக்கொண்டிருக்கும் பரோடா சமஸ்தானத்தில் ஏன் செய்யவில்லை? “ சுதேசமித்திரன் *” ஜாதியான தோழர் சர்.சி.பி.மாதம் 5000 ரூபாய் போல் அனுபவித்து வரும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஏன் செய்யவில்லை? என்று கேட்பதோடு செய்யும்படியாகவாவது '“சுதேசமித்திரன்'' விரும்பிற்றா அல்லது யோசனை சொல்லிற்றா என்றும் கேட்கின்றோம்.
மேலும் தோழர் சர்.ஷண்முகம் ஆதரவளித்த கொச்சி சீர்திருத்தத்தில் ஒரு 10-ல் ஒரு பாகமாவது ஷெ பார்ப்பன திவான்களின் சமஸ்தானம் ஏதாவதொன்றில் ஏற்பட்டிருந்தால் “ மித்திரன்" எவ்வளவு புகழ்ந்திருப்பான். என்பதையும் மற்ற பார்ப்பனர்கள் எவ்வளவு புகழ்மாலை கூறி தந்தியடித்து அந்த திவானை எவ்வளவு ஆகாயத்தில் தூக்கி வைத்திருக்கும் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்க்கும்படி விட்டு விடுகிறோம். தோழர் சர்ஷண்முகம் இந்தப் போலிக் கூப்பாடுகளையும் விஷமப் பிரசாரங்களையும்
சிறிதும் லட்சியம் செய்பவரல்ல என்பதோடு தன்னால் கூடிய அளவு ஒவ்வொரு துறையிலும் செய்தே தீருவார் என்பதிலும் யாருக்கும் சிறிதும் சம்சயமிருக்காது என்பது நமக்கு தெரியும். மற்றும் தோழர் சர்.ஷண்முகம் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் அவரிடம் விவகாரத்துக்கு வந்த சகல பிராதுகளிலும் தீண்டாமை ஒழிவதற்கு அனுகூலமாகவே உத்தரவு போட்டிருக்கிறார் என்பது அந்த சமஸ்தான நடவடிக்கைகளை கவனித்து வருகிறவர்களுக்கு நன்றாய் விளங்கும்
47 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆகவே பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எவ்வளவு குரோத புத்தியுடனும் வஞ்சக புத்தியுடனும் நடந்துவந்து பார்ப்பனரல்லாதார் தலைவர்களையும் மேதாவிகளையும் குறைவு படுத்தி அழுத்திவைக்க முயற்சிக்கின்றன என்பதை தெரிவிக்கவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 09.01.1938
குடி அரசு- 1938 (1) 48
காங்கரஸ் வண்டவாளம்
தாழ்த்தப்பட்டவருக்குச் செய்த துரோகம் ஜனநாயகமா? சர்வாதிகாரமா?
தலைவரவர்களே! தோழர்களே!
இன்று அரசியலும் முஸ்லிமும் என்பதுபற்றி பேசுவேன் என்று
நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் இந்தியாவில் மூலை முடுக்குகள் உள்பட கிராமங்கள் பட்டினங்கள் எல்லாவற்றிலும்
வீட்டுப் பேச்சுக்களாய் இருப்பது இந்த விஷயம் தான்.
அரசியல் சீர்திருத்தம் வந்ததும் போதும், காங்கிரஸ் பதவிக்கு
வந்ததும் போதும்; பொது ஜனங்கள் அனைவர்களுக்குள்ளும் அரசியலும் வகுப்பு விஷயங்களுமாகவே பேசப்பட்டு வருகின்றது
காங்கரஸ்காரர்கள் பதவிகளுக்கும் அதிகாரங்களுக்கும் வெளியில் இருந்து கொண்டு பதவிகளை இழித்துக் கூறியும் அதிகாரங்களை காலாகாலமில்லாமல் சந்தர்ப்ப சந்தர்ப்பமில்லாமல் குற்றங் கூறியும் வந்த பலனும் அரசாங்க நிர்வாகத்துக்கும் சமாதானத்துக்கும் சட்டதிட்டங்களுக்கும் மதிப்பில்லாமல் போகும்படி செய்து வந்த பலனும் இன்று காங்கரஸ்காரர்கள் பதவியில் அமர்ந்து அதிகாரம் பெற்று நிர்வாகம் நடத்த ஆரம்பித்த முதல் ஜனங்களுக்கு காங்கிரசை கேவலப்படுத்தத்தக்க அவசியமும் செளகரியமும் தானாகவே ஏற்பட்டு விட்டதின் பயனாய் காங்கரஸ் கர்ம பலனை அனுபவித்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல காங்கரசின்: ஆட்சி, வகுப்பு ஆதிக்க சூழ்ச்சி ஆட்சி என்பதை சுலபத்தில் பொது ஜனங்கள் அறிந்து கொள்ளும்படியான அவ்வளவு முட்டாள்தனமாக காங்கரஸ் நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்து விட்டதால் இன்று நாட்டிலுள்ள. சகல வகுப்புகளுக்கும் வகுப்பு உணர்ச்சி வகுப்புவாதப் பேச்சாகவும் முயற்சியாகவுமே ஏற்பட்டு விட்டது. அதன் பிரத்தியட்ச உதாரணம்தான்:
நாம் இன்று இங்கு கூடியிருப்பதும் பேசுவதுமான காரியங்களாகும்
காங்கரஸ் இந்து ராஜ்யம்
முஸ்லீம்கள் இன்று சிறிதும் சந்தேகமற காங்கிரசை இந்து ராஜ்யம் என்றும் இந்து ராஜ்யத்தை நிரந்தரமாய் ஸ்தாபிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வரும் ஒரு ஆபத்தான ஆட்சி என்றும் கருதுகிறார்கள்.
49 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காங்கரஸ்காரர்களும் இந்து மகாசபைக்காரர்களும் விளம்பரமும் பொறுப்பும் பெற்ற தலைவர்களும் காங்கரஸ் ஆட்சியையும் அரசியல் விடுதலை முயற்சியையும் பூரண இந்து ஆதிக்க ஆட்சியாக ஆக்கவே பாடுபடுவதாய் பச்சையாய் சொல்லிக் கொண்டு விட்டார்கள்
தோழர் காந்தியார் “சுயராஜ்யம் என்றால் ராமராஜ்யம்!” என்று சொல்லுவதும் தோழர் ஜவஹர்லால் “வகுப்பு வாதத் தன்மையை ஒழிக்கவே சுயராஜ்யம் கேட்கப்படுகின்றது” என்றும் மற்றும் இந்து மகாசபைத் தலைவர்களான டாக்டர் மூஞ்சே, பாய் பரமாநந்தர் முதலியவர்களும் பங்களாவாசிகளும் “பிரிட்டிஷார் அளித்த வகுப்புத் தீர்ப்பை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதும் தோழர் ராஜகோபாலாச்சாரி சத்தியமூர்த்தி போன்றவர்கள் “வந்தே மாதரப் பாட்டும் மூவர்ணக் கொடியும்தான் தேசீயப்பாட்டாகவும் தேசீயக் கொடியாகவும் இருக்க வேண்டும்” என்பதும் “ஹிந்தி பாஷைதான் இந்தியாவின் பொதுப் பாஷையாக இருக்க வேண்டும், அதுவும் அது கட்டாய பாஷையாக இருக்க வேண்டும் என்பதும் ஏற்கனவே சமூக ஆதிக்கத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் வர்ணாச்சிரம சுயராஜ்யச் சங்க மகாநாடுகள் கூட்டி “சுயராஜ்யமென்பது வர்ணாச்சிரம ஆட்சியாக இருக்க வேண்டும்” என்று தீர்மானங்கள் செய்வதும் சாஸ்திரிகளும் கனபாடிகளும் பண்டிதர்களும் இளைப்பாறும் பார்ப்பன ஜட்ஜுக்களும் வக்கீல்களும் கூட்டம் கூடி “தீண்டாமையும் ஜாதிபேதமும் பிறவியில் ஏற்பட்டது”
என்றும் அது ''செத்தாலும் ஒழியாது” என்றும் “அதை மாற்றவோ திருத்தவோ யாருக்கும் அதிகாரமில்லை” யென்றும் தீர்மானங்கள் செய்வதும் ஆன காரியங்கள் இந்து ராஜ்யத்தை வலியுறுத்துகிறதா இல்லையா என்று யோசித்துப் பாருங்கள்.
இப்படிப்பட்ட நிலையில் காங்கரஸ் கொள்கைகளையும் காங்கரஸ் கோரும் ராஜ்யத்தையும் கொண்டு முஸ்லீம்கள் பயப்படுவதும் தங்கள் சமூகத்தை காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பதும் குற்றமென்று எந்த நடுநிலைமைக்காரனாவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
பார்ப்பணல்லாதார் நிலையும் அப்படியே
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதாராகிய நம்முடைய நிலையும் முஸ்லீம்களைப் போன்றதேயாகும். வடநாட்டுப் பார்ப்பனரல்லாதார். பெரும்பான்மையோருக்கு நமக்கிருக்கும் உணர்ச்சி இருக்கிறதில்லை. ஏனெனில் வடநாட்டு பார்ப்பனரல்லாதார், நமக்கு சமீபத்தில் இருக்கும் மலையாளிகளில் சில வகுப்பாரைப்போல் தங்களை சூத்திரர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கு கீழ்ப்பட்டவர்கள் என்றும் பார்ப்பனர்களால் செய்யப்படும் இழிவுக்கு தகுதியுடையவர்கள் என்றும் சிலர் பார்ப்பனர்களுக்கு பிள்ளையாய் பிறந்ததாகச் சொல்லிக் கொள்வதில் கவுரவமிருக்கிறதென்றும் கருதிக்கொண்டு இருப்பதால் காங்கரஸ்
குடி அரசு- 1938 (1) 50
ராஜ்யத்தைப்பற்றி நமக்கு இருக்கும் ஆட்சேபணைகளும் ஆத்திரமும் வடநாட்டார்களுக்கு இல்லை. ஆதலால் அவர்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நாம் முஸ்லீம்களைப் போலவேதான் காங்கரஸ் ராஜ்யத்துக்கு பயப்படுகிறோம். நமது பந்தோபஸ்துக்கும் சுயமரியாதைக்கும் காங்கரசை எதிர்த்து முயற்சிக்கிறோம். ஆகையினாலேயே இன்று நம்நாட்டு அரசியலில் முஸ்லீம்கள் நிலைமையும் பார்ப்பனரல்லாதாராகிய நம்முடைய நிலைமையும் ஒன்றாகவே இருக்கிறது
சுயராஜ்யம் ராமராஜ்யம் வர்ணாச்சிரம ராஜ்யம் இந்துராஜ்யம் எல்லாம் ஒன்றே
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் காங்கரஸ் கோரும் சுயராஜ்யமும், காந்தியார் கோரும் ராமராஜ்யமும் ஒன்றுதான் என்பதை யாராவது ஆட்சேபிக்க முடியுமா? காந்தியார் கோரும் ராமராஜ்யமும் டாக்டர் மூஞ்சே, பாய் பரமானந்தர் கோரும் இந்து ராஜ்யமும் வேறு வேறானது என்று யாராவது சொல்ல முடியுமா? இவற்றிற்கும் பார்ப்பனர் கோரும் வருணாச்சிரம சுயராஜ்யத்திற்கும் வித்தியாசம் இன்னது என்று யாராவது காட்ட முடியுமா? ஆகவே அவர்கள் எல்லோரும் கூறுவது இந்து ராஜ்யம் அல்லது ஆரிய ஆதிக்க ராஜ்யமே ஆகும். இப்படிப்பட்ட ராஜ்யம் முஸ்லீம்களுக்கு எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட நமக்கு சிறிது அதிகமான ஆபத்தும் இழிவுமானது. ஆதலால் நாமும் அதை எதிர்க்கவேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனால் நாம் இருவரும் சந்தேகமில்லாத பரிசுத்தமான வகுப்புவாதிகளாக இருக்கிறோம். நம் இருவர்களையும் அடக்கி ஒடுக்கி ஆளவே தோழர் ஜவஹர்லால் முதலியோர் “சுயராஜ்யம் வருவது தடைபட்டாலும் வகுப்பு வாதத்தை ஒழித்தே ஆகவேண்டும்" என்று தைரியமாகச் சொல்லுகிறார்கள்.
ஆனால் இன்றையநிலைமையில் உலகம் உள்ளவரை முஸ்லீம் வகுப்பும், பார்ப்பன வகுப்பும் பார்ப்பனரல்லாதார் வகுப்பும் இருந்துதான் தீரும் இவர்களது வகுப்புகள் உள்ள வரையும் - இந்த வகுப்பு வாதங்கள் இருந்துதான் தீரும். சுயராஜ்யம் தடைபட்டாலும் வகுப்புவாதம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று சொல்லுகின்ற ஜவஹர்லால்களாகிய பார்ப்பனர்கள் இருக்கும் வரையும் அந்நிய ஆட்சி இருந்துதான் தீரும் அதலால் நமது அரசியலும் சுயராஜ்யம் கோரும் காங்கரசும் வகுப்புவாத சபை என்பதுடன் அந்த வகுப்புவாதம் வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஆக போராடும் பார்ப்பனரல்லாதாரும் வகுப்பு வாதிகளேதான். நம் கண்முன் கல்லுபோல் வகுப்புகள் இருக்கும்போது - நாமும் நமது எதிரிகளும் ஆளுக்கொரு வகுப்பாளர்களாய் அதுவும் கீழ்மேல் வகுப்புக் காரர்களாய் இருக்கும்போது நாம் வகுப்புவாதிகள் என்பதற்கு ஆக நாம் வெட்கப்படவோ பயப்படவோ தேவையில்லை ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
உண்மையில் “வகுப்புவாதம் நம் நாட்டில் ஒழிய வேண்டுமானால் அது நாமெல்லோரும் தைரியமாய் வகுப்புவாதிகள் என்று சொல்லிக் கொள்வதில்தான் இருக்கிறதே தவிர அதைப்பற்றி பித்தலாட்டமாகப் பேசுவதனாலல்ல. இம் மாதிரி தைரியமாக வெளிப்படையாக நாம் வகுப்பு வாதிகள் என்று சொல்லிக் கொண்டு நமது வகுப்புக் கொடுமைகளையும் வகுப்பு இழிவுகளையும் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கிற காலத்தில் - முயற்சித்துத் தீரவேண்டிய காலத்தில் நாமும் (சுயமரியாதைக்காரர்களும்) முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் துணையாய் நின்று இருவரும்
ஒத்துழைத்து ஆபத்திலும் இழிவிலும் இருந்து மீள செளகரியம் ஏற்பட்டதானது ஒரு கிடைத்தற்கரிய செல்வமேயாகும்
ஏனெனில் ஒன்றாக நம் வகுப்பு இழிவும் நம் வகுப்பின் மீது மற்ற வகுப்பார் செலுத்தும் ஆதிக்கமும் ஒழிந்தாக வேண்டும்; அல்லது நமது வகுப்பே பூண்டற்றுப் போய்விடவேண்டும் என்று உயிருக்கு ஊஞ்சலாடும் இந்த சமயத்தில் இந்த ஒற்றுமையும் ஒத்துழைப்பும் மிகுதியும் பாராட்டவும் மகிழ்ச்சி அடையவும் தக்கதாகும்
முஸ்லீம்களைப் பிமிக்க காங்கரஸ்காரர் சூழ்ச்சி இதை நாம் என்றென்றும் காப்பாற்றவேண்டும். நம்மைப் பிரித்துவிட காங்கிரஸ் தலைவர்கள் சூழ்ச்சி செய்வார்கள். அச் சூழ்ச்சிக்கு நாம் ஆளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தமிழ்நாட்டில். இந்த 45 மாதமாய் பலப்பட்டு வரும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் முஸ்லீம்களுடைய கட்டுப்பாடும் கிளர்ச்சியும் இன்று காங்கரஸ் தலைவர்களை திக்கு மூக்காடும்படி செய்துவிட்டன. வடநாட்டிலும் முஸ்லீம்களுடைய கட்டுப்பாடும் அவர்கள் ஒன்று சேர்தலும் காங்கரசுக்கு பயத்தை உண்டு பண்ணிவிட்டது. இந்து முஸ்லீமின் ஒற்றுமையின் பலன்: இன்று காங்கரஸ்காரர்களுக்கும் காங்கரஸ் மந்திரிகளுக்கும் பொதுக் கூட்டங்களுக்கு மேடையே இல்லாமல் செய்து விட்டது. மந்திரிகளிடம் மக்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இல்லாமல் செய்துவிட்டது. இதன் பயனாய் சர்க்கார் யோக்கியதைகளும் வெளுத்து வருகிறது. ஆகவே எப்படியாவது இந்து முஸ்லீம்களைப் பிரிக்கவோ அல்லது முஸ்லீம்களை ஏமாற்றி சுவாதீனம் செய்து கொள்ளவோ காங்கரஸ் தலைவர்கள் சூழ்ச்சிசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள். முஸ்லீம்களுக்கு அடிபணிவதாய் வேஷம் போடத் துணிந்து விட்டார்கள்.
ஆரியத் தந்திரத்துக்கு ஆனாகக் கூடாது
வகுப்பு வாதத்தை அடியோடு ஒழிப்போம் என்றும் வகுப்பு வாதம் பேசும் எவரிடமும் காங்கரஸ் சம்பந்தம் வைத்துக் கொள்ளாதென்றும் காங்கரசை தவிர வேறு எந்த ஸ்தாபனமும் நாட்டில் இருக்கக் கூடாதென்றும்
குடி அரசு- 1938 (1) 32
காங்கரஸ்காரர்கள் காங்கரசைத் தவிர வேறு எதிலும் மெம்பர்களாக இருக்கக்கூடாதென்றும் வீரம் பேசிய காங்கரஸ்காரர்கள் இன்று வகுப்புவாதத் தலைவர் ஜின்னாவுக்கு விண்ணப்பம் போட ஆரம்பித்து விட்டார்கள். முஸ்லீம்களுக்கு பிரதிநிதி அல்ல என்று கூறிய ஜின்னாவை முஸ்லீம்களுக்கு ஆக என்ன வேண்டும் தயவு செய்து சொல்லுங்கள் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். இது காங்கரஸ்காரர்களின் இந்து மத
தந்திரமென்னும் ஆரியமத தந்திரமாகும். இந்து தந்திரம் எட்டினால் குடுமியைப் பிடிப்பதும் எட்டாவிட்டால் காலைப் பிடிப்பதும் இந்து சாஸ்திர புராணங்களில் காட்டப்பட்டிருக்கும் வழியாகும். இதுவரை ஜின்னாவை நீ யார்? உனக்கும் முஸ்லீம்களுக்கும் என்ன சம்பந்தம்? நீ முஸ்லீம்களுக்குப் பிரதிநிதியல்ல என்று வட்ட மேஜை மகாநாடு முதல் கர்ஜித்த காங்கரஸ்காரர்கள் இன்று ஜின்னாவை உங்களுக்கு என்ன. வேண்டும்? தயவு செய்து சொல்லுங்களேன் என்று கெஞ்சக் காரணமென்ன? எங்கள் கிராமவாசிகளைப்பற்றி ஒரு வேடிக்கை விஷயம் சொல்லுவதுண்டு. அதாவது பட்டிக் காட்டு குடியானவர்கள் ஈரோட்டிற்கு வந்தால் அவர்களைப் போலீசார்கள் வெட்டி வேலைக்கு பிடித்துக்கொள்ளுவது வழக்கம். அதாவது தெருவில் போகும் ஒரு பட்டிக்காட்டானைக் கூப்பிட்டு ஒரு போலீஸ்காரன் ஒரு மூட்டையை தூக்கி வரும்படி சொன்னால் அந்தப் பட்டிக்காட்டான் “போய்யா எனக்கு வேரவேலை இல்லையா? நான் என்ன வெட்டி ஆளா?” என்று நிமிர்ந்து பேசுவான். உடனே போலீஸ்காரன் தனது இடுப்பில் இருக்கும் டவாலியைக் கழட்டி பட்டிக்காட்டான் முதுகில் பட்டாசு வெடித்தால் போல் படீரென்று ரெண்டு கொடுத்தால் அதை வாங்கிக்கொண்ட பிறகு உடனே குடியானவன் “என்ன சாமி எடுக்கரத்துக்குள்ளே வெகு அதிகாரம் பண்ணரிங்கோ வேட்டியை தலையில் கட்டிக்கொண்டு தானே மூட்டையைத் தூக்க வேண்டும்? அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி சாமி முடியுங்கோ” என்று சொல்லிக் கொண்டு அவசர அவசரமாய் மூட்டையைத் தூக்க குனிந்து கொண்டு வேட்டியைத் தலையில் கட்ட ஆரம்பிப்பான். அதுபோல் பெரியார் ஜின்னாவை “நீ யார்? முஸ்லீம்களைப் பற்றிப் பேச உனக்கு என்ன யோக்கியதை? என்று கேட்ட ஜவஹர் பிரசாத்துகள் ஜின்னாவிடம் இன்று அடிபணிந்தது போல் நடிக்கிறார்கள். “நீங்கள் கேட்டதெல்லாம் கொடுத்து விட்டோமே" என்கிறார்கள். இன்னும் என்ன வேண்டுமென்று சட்டென்று சொல்லுங்களே'' என்கிறார்கள். “கேட்டால்தானே எங்களுக்குத் தெரியும்” என்கிறார்கள். இதெல்லாம் ஆரியப் பித்தலாட்டமேயாகும். ஆரியப் புராணங்களில் “காரியம் ஆக வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; எவ்வளவு பொய், பித்தலாட்டம், வஞ்சகம், துரோகம் வேண்டுமானாலும் செய்யலாம்; பெண்களை விட்டும் மயக்கலாம்” என்பது நீதியாகும் அதற்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஜவஹர்லால் யோக்கியதை
தோழர் ஜவஹர்லால் ஏகாதிபத்திய ஒழிப்புக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர். ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் இருந்து அடியோடு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று சொல்லி பூரண சுயேச்சைத் தீர்மானம் செய்தவர். சட்டசபைக்குப் போனாலே அடிமையாய் விடுவோம் என்று சொன்னவர். மந்திரி பதவி ஏற்றுக் கொண்டால் பிரிட்டிஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்தது போல் ஆகும் என்று கர்ஜித்தவர். அப்படிப்பட்ட அவர் இன்று தங்கள் (இந்துக்கள் - பார்ப்பனர்கள்) கைக்கு அதிக்கம் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்வது குற்றமல்ல; பிரிட்டிஷ் அரசருக்கும் அவர் சந்ததிக்கும் என்றென்றும் பக்தி விசுவாசமாய் நடந்து பிரிட்டிஷ் ஆட்சி சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அடிபணிந்து நடத்திக் கொடுப்பதாய் சத்தியம் செய்து மந்திரி பதவி ஏற்றுக் கொள்ளுவது குற்றமல்ல என்று சொல்லி பிரமாணம் செய்து பதவி பெறும்படி அனுமதி அளித்தார். அதோடு மாத்திரமல்ல அந்த மந்திரிகளை பிரிட்டஷுக்கு நல்ல அடிமைகளாக்குவதற்கு ஆக “மந்திரிமார்களை குறை கூறக் கூடாது. மந்திரிகள் காரியங்களை குற்றம் சொல்லக் கூடாது” என்று மக்களை இன்று கேட்டுக் கொள்ளுகிறார். இதற்கு பெயர் என்ன? “ஆனால் ராஜவிசுவாச பிரமாணம் செய்யும்போது மனதில் “இது பொய் பிரமாணம்” என்று நினைத்துக்கொண்டு பிரமாணம் செய்யுங்கள்” என்று கட்டளை இட்டார். எனவே காங்கரஸ்காரர்களின் நாணயத்துக்கு அவர்களது ஆரிய குழ்ச்சிக்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். இப்போது ஜின்னாவை சமாதானத்துக்கு அழைப்பது மனதில் எதை வைத்துக் கொண்டு இந்த சமாதான களைக் கும்பிடு வேஷம் போடுகிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். ஜின்னாவின் காலைப் பிடிக்கலாமா என்று காங்கரஸ்காரர்களை இந்து மகாசபைக்காரர்கள் கேட்பதற்கு காங்கரஸ்காரர்கள் “ நாங்கள் காலைப் பிடிக்கவில்லை. காலை வாரிப் போடுவதற்கு ஆக குனிகின்றோமே ஒழிய வேறில்லை “என்கிறார்கள்.
எச்சமிக்கை!
ஆகவே எச்சரிக்கை! இது சமயம் காங்கரசிடம் முஸ்லீம்கள் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். விடிய விடிய காவல் காத்து “விடியக்காலம் குமரி இருட்டில் தூங்கி விட்டால் அடியோடு கொள்ளைப் போய்விடும்”. இப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சிக்கு பூரண வெற்றியும் உச்சஸ்தானமும் இருக்கும்போது அதை கவிழ்ப்பதற்கு தேசியம் பேசி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் வாக்குறுதி தீர்மானம் உறுதி செய்து எங்களை ஏமாற்றி “கூலிக்கமர்த்தி” ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க பயன்படுத்திக் கொண்டார்கள். இன்று “ஜஸ்டிஸ்காரர்களை கொன்று புதைத்த குழியிலேயே” வகுப்புரிமையையும்
குடி அரசு- 1938 (1) 34
கொன்று புதைத்து விட்டதாகப் பெருமை பேசுகிறார்கள். நானும் வரதராஜுலுவும் கல்யாணசுந்தர முதலியாரும் மற்ற கூலிகளும் முகத்தை வெளியில் காட்ட யோக்கியதை இல்லாத நிலையில் இருக்கிறோம்.
தூழ்த்தப்பட்டவர்கன் தலையில் கை வைத்தது
மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமையை சற்று எடுத்துக்கொண்டு பாருங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சர்க்கார் கொடுத்த தனித் தொகுதி சுதந்திரத்தை வஞ்சித்துப் பிடுங்கிக் கொள்ளுவதற்கு ஆக காந்தியார் சாகப் போவதாக வேஷம் போட்டு இனியும் அரை நிமிஷத்தில் செத்துப் போய் விடுவாரென்பதாக டாக்டர்கள் மாய்மாலம் செய்து புராணங்களில் ஊர்வசியைக் காட்டித் தபசுகளை கலைத்த கதைகள் போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதேதோ பித்தலாட்டமும் தந்திரங்களும் கொண்டு ஆசை காட்டி, வாக்குறுதிகள் கொடுத்து அவர்கள் தலையில் கையை வைத்து விட்டு இன்று தோழர்கள் அம்பேத்காரும், எம்.சி.ராஜாவும், ரெட்டைமலை ஸ்ரீனிவாசனும், என். சிவராஜுவும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள். அல்ல என்று தைரியமாய் சொல்லிவிட்டார்கள். காந்தியாரின் மாய்மாலத்தின் போது இந்த ஆட்களிடம் தான் ராஜிக்கு கையொப்பம் வாங்கி சர்க்காருக்கு அனுப்பினார்கள்.
ஆகவே பார்ப்பனத் தந்திரம் ஆரியப் புரட்டு இரண்டும் சேர்ந்த இந்துமத வஞ்சகமும் துரோகமுமே இன்றைய இந்துத்தன்மை என்றும் காங்கரசின் யோக்கியதை என்றும் கருத்தில் வையுங்கள். எங்களுக்கும் என்போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கும் காங்கரசினிடம் இருக்கும் வெறுப்புக்கும் துவேஷத்துக்கும் காரணம் அது ஆரியமத தர்மப்படி அரசியல் நடத்தப்படுவதற்கு முயற்சிக்கும் ஸ்தாபனம் என்பது தான். அதை காந்தியார் பச்சையாய்ச் சொல்லி விட்டார்கள். மற்ற இந்து தலைவர்களும் பச்சையாய்ச் சொல்லி வருகிறார்கள். ஆதலால் முஸ்லீம்களும் சுயமரியாதைக்காரர்களும் இன்று காங்கரஸ் விஷயத்தில் ஒரே நோக்கம் கொண்டவர்கள் - ஒன்று சேர வேண்டியவர்கள்.
ஜஸ்டிஸ்காரர்கன் கிறிஸ்தவர்கன்
ஜஸ்டிஸ்காரர்கள் கிறிஸ்தவர்கள் அப்படியல்ல. ஏனெனில் ஜஸ்டிஸ்காரர்கள் பலரிலும் கிறிஸ்தவர்கள் பலரிலும் ஜாதி உயர்வு தாழ்வு உணர்ச்சி உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களும் பார்ப்பனர்கள் எப்படி தாங்கள் இந்துக்கள் என்று ஒரு பெரும் கூட்டத்தை சேர்த்து ஜனசங்கை எண்ணிக்கையை காட்டி பங்கு பெற்று அந்தப் பங்கை பார்ப்பனர்கள் மாத்திரம் 100க்கு 90 பங்கு அனுபவிக்கிறார்களோ அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியாரும் கிறிஸ்தவர்களும் தங்கள் கூட்டத்தில். தாழ்த்தப்பட்ட மக்களையும் சமூகத்தில் தாழ்ந்த நிலைமையிலும் பிற்பட்டும் இருக்கும் மக்களையும் தங்கள் எண்ணிக்கையில் சேர்த்துக் 55௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காட்டி பங்கு வாங்கிக்கொண்டு அப்பங்கை பணக்காரக் கூட்டமும் மேல் ஜாதி கிறிஸ்தவர்களும் ஏகபோகமாய் அனுபவித்து வருவதால் அவர்கள் முஸ்லிம்கள் நோக்கத்துக்கும் சுயமரியாதைக்காரர்கள் நோக்கத்துக்கும் சிறிது மாறுபட்டவர்களே யாவார்கள். ஆதலால் அவர்கள் சுயமரியாதைக் காரர்களோடு முழுமனதாக சேர்ந்திருக்க முடியாது
முஸ்லிம்களும் சயமமியாதைகாரர்களும்
மதவிஷயத்திலும் ஆத்மார்த்த விஷயம் என்பதிலும் மனிதனுக்கு மேம்பட்ட உயிரும் உணர்ச்சியும் உள்ள சக்தி யொன்று இருக்கிறது என்பதிலும் முஸ்லிம்களும் சுயமரியாதைக்காரர்களும் மாறுபட்ட அபிப்பிராயம் கொண்டவர்களாக இருக்கலாம். இது விஷயத்தில் இன்று எல்லா மதக்காரர்களுள்ளும் வகுப்புக்காரர்களுள்ளும் உள் வகுப்பார்களுக்
குள்ளும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வழியால் அபிப்பிராய பேதம் இருந்துதான் வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்றைய இந்து-முஸ்லிம், வகுப்பு - அரசியல் தகராறானது மார்க்க விஷயத்திலோ, ஆத்மார்த்தம் என்னும் விஷயத்திலோ மனிதனுக்கு மீறிய சக்தி விஷயத்திலோ ஏற்பட்ட தகராறு அல்ல. அப்படி இருந்தால் சிலவற்றில் ஒரே வித அபிப்பிராயம் கொண்ட இந்துக்கள் என்பவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இன்று அவநம்பிக்கையும் பயமும் அபிப்பிராய பேதமும் இருக்க காரணமில்லை. உடையிலும் வேஷத்திலும் பாவனையிலும் மனிதனுக்கு மனிதன் எப்படி வித்தியாசப்படுகிறானோ அதுபோல் தான். இவ்விஷயங்களிலும் வித்தியாசப்படுகிறான். இதனால் பொது லட்சியங்களில் ஒத்துழைப்பு கூடாதென்று கருத முடியாது. அப்படிக் கருதுவது முட்டாள்தனம் அல்லது விஷமத்தனமேயாகும்
சயநலக்காரர்கள் சூழ்ச்சி: இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இப்போது சமூகத்துரோகம் அல்லது சுயநல எண்ணம் கொண்ட ஒருசில இந்துக்கள் என்பவர்களும் முஸ்லிம்கள் என்பவர்களும் ஒரு விஷமத்தனமான சூழ்ச்சிப் பிரசாரம் செய்கிறார்கள். அதாவது "மார்க்கத்திலும் ஆத்மார்த்தம் என்னும் உணர்ச்சியிலும் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறுபட்ட முஸ்லிம்களோடு சேர்ந்து கொண்டு இருக்கும் சுயமரியாதைக்காரர்களுடன் இந்துக்கள். சேரலாமா?” முஸ்லிம்களை இந்துக்களுக்கு விரோதமாய் தூண்டிவிடும் சுயமரியாதைக்காரர்களுடன் இந்துக்கள் சேரலாமா?" என்று துண்டுப் பிரசுரம் போட்டு வழங்கி கூட்டங்களிலும் வந்து காலித்தனம் செய்கிறார்கள். இது சென்ற வாரம் சேலத்திலும் திருச்சியிலும் நடந்து அடிதடி, கல்வீச்சு, செருப்படி, சாணி எறிதல் முதலிய பல இழிவான காரியங்கள் நடந்ததை நீங்கள் பத்திரிக்கைகளில் பார்த்து இருப்பீர்கள்.
அது போலவே “மார்க்கத்திலும் அல்லா உணர்ச்சியிலும் மாறுபட்ட சுயமரியாதைக்காரர்களுடன் முஸ்லீம்கள் சேரலாமா? அவர்களை
குடி அரசு- 1938 (1) 56
பள்ளிவாசலில் விடலாமா?” என்று சில முஸ்லீம்கள் கலகம் செய்ததோடு இந்தக் கூட்டத்திலும் விஷமத்தனமான துண்டுப் பிரசுரங்களை வினியோகித்ததாகவும் அதன் பயனாய் முஸ்லீம்களுக்குள்ளாகவே கலவரம் ஏற்பட்டு சேலம் கூட்டத்தில் நடந்த சங்கதியே இங்கும் ஏற்பட்டு விஷமிகளுக்கு நல்ல உதை கிடைத்ததாகவும் கேள்விப்பட்டேன். இது நான் மேலே கூறியது போல் எதிரிகளின் கையாளாக - கூலிகளாக - சுயநலக்காரர்களாக இருக்கும் சிலரின் விஷமப் புத்தி வேலையேயாகும்
அபிப்பிராய பேதங்கள் பல உண்டு.
எந்த மனிதனும் தான் அறியாத பல விஷயங்களோ பல சக்திகளோ இருக்க முடியாது என்று சொல்லமாட்டான். அப்படி ஒருவன் சொல்வதானாலும் அது அவனவன் இஷ்டம். அது நிர்பந்தப்படுத்தும் காரியம் அல்ல ஒருவன் தாடி நல்லது என்கிறான். ஒருவன் உச்சிக்குடுமி நல்லது என்கிறான். ஒருவன் வேஷ்டி கட்டுகிறான். ஒருவன் கால் சிராய் போடுகிறான். ஒருவன் தொப்பி வைக்கிறான். ஒருவன் வெறுந் தலையுடன் இருக்கிறான். இதனால் மனிதன் சேர்ந்து வாழ முடியாதா? என்று கேட்கிறேன். இந்த கும்பகோணம் முஸ்லீம் மகாநாட்டு மாலைத் தலைவர் ஜனாப் மெளலானா மெளல்வி அகமது சைது சாயபு அவர்கள்.
இந்த விஷமத்துக்குத் தகுந்த பதிலளித்தார். அதாவது “கடவுள்களுக்கு இணை வைக்கும் கூட்டத்தாருடனும் முஸ்லீம் மார்க்கத்தையும் சமூகத்தையும் இழிவாய் கேவலமாய் எழுதி வைத்துக் கொண்டும் கருதிக்கொண்டும் இருக்கிற கூட்டத்தாருடனும் மார்க்கத்தாருடனும் கலந்து கொண்டு அளவளாவும் பரிசுத்த நபிகள் பிறந்த தினங்களில் தலைமை வகிக்க அழைக்கவும் முஸ்லீம்கள் சம்மதிக்கும்போது கடவுளைப்பற்றிக் கவலைப்படாமல் மனித சமூகத்துக்கு ஜாதி மத வகுப்பு பேதமில்லாமல் தொண்டாற்றுவதே தங்கள் கடமையென்று கருதி முகமதுநபி அவர்கள் கொள்கைகளில் 100க்கு 90 பாகத்துக்கு மேல் மக்களுக்கு எடுத்துச்சொல்லி நபி அவர்களின் தொண்டை ஆற்றி வருபவர்களுடன் கலந்து நம் உரிமையைக் காப்பாற்ற மூயற்சிப்பதில் யாதொரு தவறும் இல்லை” என்று சொன்னார் என்று முஸ்லீம்
சமூகத்தாருக்குச் சொல்லுகிறேன். அது மாத்திரமல்ல. தலைவர் மெளல்வி சாயபு அவர்கள் பேசும் போது “தோழர் ராமசாமிப் பெரியார் காங்கரசில் இருக்கும்போதும் சுயமரியாதைக் கட்சி ஆரம்பித்ததிலிருந்தும் முஸ்லீம்களுடன் ஒத்துழைத்து வருகிறார்” என்றும் “முஸ்லீம் தலைவர்கள் அலி சகோதரர்கள் மற்றும் பல மார்க்கப் பிரபலஸ்தர்கள் முதலியவர்கள் அவர்கள் வீட்டில் தங்கி அவர்களால் மரியாதை செய்யப்பட்டார்கள்'' என்றும் சொல்வதோடு இதை ஒரு மெளல்வி மார்க்க விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லத்தக்க அளவு மார்க்க ஞானமுடையவன் என்கிற நிலையில் சொல்லுகிறேன்” என்றும் சொன்னார்.
ரர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அதுபோலவே தான் நானும் சொல்லுகிறேன். என்னவென்றால் நம்மை கீழ் ஜாதியான் என்றும் தனது அடிமை என்றும் வைப்பாட்டி மகன் என்றும் கருதப்படும் இழிவான வார்த்தையாகிய சூத்திரன் என்று நம்மை கூப்பிடும்- கருதி இருக்கும்- கடவுள்வாக்கென்று சாஸ்திரங்களில் எழுதி வைத்துக்கொண்டிருக்கும் மக்களோடு சேர்ந்து கொண்டு அவர்கள். நன்மைக்கு கூலிகளாய் இருப்பது அவமானமல்ல என்று கருதி இருப்பதைவிட நமது கொள்கைகளில் பெரும்பாகங்களில் வித்தியாசமில்லாத
- மனித சமூக சமத்துவத்துக்கு நலன் செய்துவரும் முஸ்லிம்களுடன். சேர்ந்துழைப்பது தவறல்ல என்று நான் எனது சுயமரியாதை தோழர்களுக்கு எடுத்துச் சொல்லுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களாய் கருதப்படும் எனது தோழர்களுக்கும் அவர்கள் இந்துக்கள் என்பவர்களுடன் கலந்துகொண்டு தங்கள் உரிமையையும் சுயமரியாதையையும் - பறி கொடுத்து திண்டாடுவதை விட முஸ்லிம்களோடு கலந்து வேலை செய்வதில் உண்மையிலேயே பலன் ஏற்படும் என்று சொல்லுகிறேன். ஆதலால் சு.ம.காரர்கள், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மூன்று பேரும் இதுசமயம் ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டியது அவசியமாகும்
பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட காலம் முதல் அந்த ஒப்பந்தம் சரி இல்லை என்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதனால் ஏமாற்றப்பட்டோம் என்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்கள் கூப்பாடு போட்டு வருகிறார்கள். இதை எந்த காங்கரசு வாதிகளாவது லக்ஷ்யம் செய்கிறார்களா? ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட தலைவர்களையும் தனித்தனியாய் ஒழித்து மூலையில் உட்கார வைத்து விட்டார்கள்.
ஆனால் முஸ்லிம்களிடம் காங்கரஸ்காரர்கள் எப்படி நடக்கிறார்கள். “நீங்கள் கேட்டதெல்லாம் கொடுத்து விட்டோமே இன்னும் என்னவேண்டும் சொல்லுங்கள்” என்று அடிபணிய ஆரம்பித்து விட்டார்கள்.
*உதைப்பானுக்கு வெளுப்பான்?? உதைப்பவர்களுக்கு வெளுப்பான் உயர்ந்த சலவைக்காரன்” என்பது போல் காங்கரஸ்காரர்கள் 'உதைப்பவர்”களைக் கண்டுதான் பயப்படுவார்கள். அதுதான் ஆரிய தர்மம்
இன்று முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்கிறார்கள்.நம்மைப்போலவே ஆரிய சூழ்ச்சியை நன்றாய் அறிந்து கொண்டார்கள். இனி முஸ்லீம்கள் காங்கரசுக்குத் தலைவணங்க மாட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் ஒரு கை பார்க்கத் துணிந்துவிட்டார்கள். ஆதலால் அம்மாதிரி பலமும் உறுதியும் கொண்ட சமூகத்துடன் ஒத்துழைப்பதில் ஆபத்து ஒன்றுமில்லை அவர்களுக்குக் கிடைக்கும் வகுப்புத் தீர்ப்பும் பாதுகாப்பும் நமக்கும் கிடைத்துத்தான் தீரும். உதாரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் “அர்த்த மண்டபம்” வரை போக இடம் கிடைத்துவிட்டால் “நாயக்கர்மார்கள் நாடார்கள் எதுவரையில் போவது” என்று ஒருதனிக்கேள்வி கேட்கவேண்டுமா?
குடி அரசு- 1938 (1) 58
நமது கொள்கை
நமது கொள்கை உயர்வு தாழ்வு வகுப்புகளும் மூட நம்பிக்கை மதங்களும் ஒழிய வேண்டும் என்பதில் மாறுதல் இல்லை. ஆனால் அவைகள் இருக்கத்தான் வேண்டுமென்றாலும் இருக்கும் வரையிலும் வகுப்புரிமையும் வகுப்பு பாதுகாப்பும் வேண்டும் என்பதேயாகும். முதல்
காரியத்தில் நாம் முஸ்லிம்களும் ஒரு சமயம் அபிப்பிராய பேதமுடையவர்களாய் இருந்தாலும் இரண்டாவது விஷயத்தில் நாமும் முஸ்லிம்களும் ஒரே கொள்கைஉடையவர்களே.அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
இப்போது முஸ்லிம்களும் பார்ப்பனர் அல்லாதாரும் ஒத்துழைப்பதைப் பார்த்து காங்கரஸ்காரர்கள் பொறாமையும் பயமும் கொண்டு சில பார்ப்பனரல்லாதார் பத்திராதிபர்களையும் அதுவும் பார்ப்பனரல்லாதார் நலத்துக்கு என்று உழைக்கும் பத்திராதிபர்களையும் மூஸ்லிம் நலத்துக்கு என்று உழைக்கும் பத்திராதிபர்களையும் விலைக்குவாங்கி முஸ்லிம்களுடன் இந்துக்கள் சேரக்கூடாது என்றும் சேருவது ஆபத்து என்றும் எழுதி மக்களைப் பிரித்துவிடவும் சுயமரியாதைக் காரர்களுடன் முஸ்லிம்கள் சேரக்கூடாது என்றும், சேர்ந்தால் ஆபத்து ஏற்படும் என்றும் எழுதி மக்களைப் பிரித்து விடவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாய் தெரிகிறது அதற்கு சில பத்திராதிபர்களும் இயக்க அன்பர்களும் இணங்கி விட்டதாகவும் தெரிகிறது. இதை சில இந்து சுயமரியாதைக்காரர்களும், முஸ்லிம்களும்கூட நம்புவதாகவும் அவர்களும் அப்படியே அபிப்பிராயப்படுவதாகவும் தெரிகிறது. இது சரியானாலும் தப்பானாலும் இந்தப்படி எண்ணுகிறவர்கள் இந்துக்களானாலும் முஸ்லிம்களானாலும் இவர்கள் இந்து முஸ்லீம் ஒற்றுமையில் நம்பிக்கையும் அவசியம் என்ற உணர்ச்சியும் இல்லாதவர்கள் என்பது எனது அபிப்பிராயம்.
இன்று அதிகாரத்தில் இருக்கும் ஆரிய ஆதிக்கக் காங்கரஸ் ஆட்சியை ஒழிக்க வேண்டுமானால் சுயமரியாதைக்காரர்கள் செய்யவேண்டிய வேலை என்ன? ஜஸ்டிஸ் கட்சியார் பதவிபட்டம் பெற்று
பணம் சம்பாதித்து வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டவர்கள் போல்
பேர் ஊர் விலாசம் தெரியாமல் ஓடி மறைந்து கொள்ளுவதா? அல்லது
சைவப் பிரமுகர்கள் போல் கவர்னர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தவுடன் “இந்தி வந்தாவது தொலைந்து போகட்டும் நமக்கு ஏன். இந்தத் தொல்லை!” என்று நடுங்குவதா?
முஸ்லிம்களும் சுயமரியாதைக்காரர்களும் ஒன்று சேர்ந்து இந்த
4, 5 மாதமாய் கிளர்ச்சி செய்யாதிருந்திருந்தால் காங்கரசும் காங்கரஸ் ஆட்சியும் எவ்வளவு உச்ச நிலைக்கு போய் எவ்வளவு விஷயங்களை
செய்திருக்கும்? இவ்வளவு கேவல நிலைமைக்கு வந்திருக்க முடியுமா? ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இன்று காங்கரஸ்காரர்களுக்குப் பொதுமேடை இல்லாமலும் அவர்கள் சூழ்ச்சி ஒரு காரியத்திலும் இதுவரை பலிக்க முடியாமலும் தொட்டதில் எல்லாம் தோல்வியும் அவமானமும் அடைந்துத் திண்டாடும்படி செய்தது. முஸ்லிம்-சுயமரியாதைக்காரர்களின் ஒற்றுமையும் கூட்டு வேலையுமா? அல்லவா? என்று கேட்கின்றேன். இந்த கூட்டு முயற்சிக்காக எந்த சுயமரியாதைக்காரர் தனது கொள்கையை விட்டு விட்டார்? அல்லது எந்த முஸ்லிம் தனது கொள்கையை விட்டுவிட்டார் என்பதுபற்றி யோசித்துப் பாருங்கள். விஷமிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமை என்பது ஒரு சமயம் பொய்யாகவும் ஆகாதகாரியமாகவும் இருக்கலாம் என்று சொல்லுகிறவர்கள் சொல்லட்டும். ஆனால் காங்கரஸ் ஆதிக்கத்தை ஒழிக்க காங்கரஸ் ஆட்சியை அழிக்க ஆரிய சூழ்ச்சியிலிருந்து தப்ப முஸ்லிம்களும் சுயமரியாதைக்காரர்களும் ஒன்று சேர்ந்தாக வேண்டும் என்பது எனது உறுதி. முஸ்லிம்கள் நம்மோடு சேராவிட்டாலும்
நாம் அவர்களை உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் நமக்கு ஒன்றும் மூழ்கிப்போய் விடாது. முஸ்லீம் தோழர்களுக்கும் சிறப்பாக முஸ்லிம் வாலிபர்களுக்கும் ஒன்று சொல்லுகிறேன். அதாவது மனிதனின் சுயமரியாதை எப்படிப்பட்ட உயர்ந்த மார்க்கத்துக்கும் சமூகத்துக்கும் இளைத்ததல்ல என்பதுதான்.
காங்கரஸ்காரர்கள் 1920ல் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க முஸ்லிம்களைச் சேர்த்துக்கொண்டு இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு 21 நாள் பட்டினி கிடக்கவில்லையா? கிலாபத்துக்காக “உயிர்” விடுவதாகச் சொல்லவில்லையா? இதனால் முஸ்லீம்கள் இந்துக்களை ஏறி மிதித்து விட்டார்களா? இந்துக்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லவில்லை கருதவும் இல்லை. இந்துக்கள் ஆதிக்கத்தில் தாங்கள் நசுங்கப்படாது என்றே அவர்கள் ஆசைப்படுகிறார்கள். நாமும் அதுபோலவே பார்ப்பனர் மீது ஆதிக்கம் செலுத்த ஆசைப்படவில்லை. பார்ப்பன. ஆதிக்கத்தில் நசுங்குண்டு அடிமையாய் மானம் கெட்ட இழி பிறப்பாய் இருக்கக்கூடாது என்றே ஆசைப்படுகிறோம்.
காங்கரசின் வண்டவாளம்
காங்கரஸ் அரசியலைப் பற்றி நான் உங்களுக்கு ஒன்றும் விளக்க வேண்டியதில்லை. அது ஊர் சிரித்துக் கிடக்குமொரு மானங்கெட்ட விஷயமாகும். இன்று காங்கரசானது பிரிட்டிஷாரின் அதரவிலேயே இருந்து வருகிறது. பிரிட்டிஷார் தங்களுக்கு நிபந்தனை இல்லாதவர்களும்
சற்று மானாபிமானமற்றவர்களுமான ஒரு உண்மையான அடிமைக் கூட்டம் தங்களது ஆட்சியை நடத்திக் கொடுக்க வலுவில் அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்து வந்து காலடியில் கிடப்பதால் அவர்கள்
குடி அரசு- 1938 (1) 60
(மந்திரிகள்) எவ்வளவு மானங்கெட்டவர்களாய் இருந்தாலும் யோக்கியப் பொறுப்பற்றவர்களாயிருந்தாலும் தங்கள் காரியம் ஆனால் போதுமென்று ஏற்று ஆதரவளித்து வருகிறார்கள். இல்லாத வரையில் இன்று காங்கரசுக்கு இந்த நாட்டில் பெயர் சொல்லக்கூட ஆள் கிடையாமல் போயிருக்கும்
காங்கரசுக்கு தலைவர் யார்?
இன்று காங்கரசுக்கு ஒரு ஒழுங்கு முறை உண்டா? ஒரு கட்டுப்பாடு உண்டா? ஒரு மானமும் பொறுப்பும் உள்ள தலைவர் உண்டா? என்று பாருங்கள். பெயருக்கு காங்கரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு ஆவார்கள். அவருக்கும் காங்கரசின் கொள்கைக்கும் சம்பந்தம் கிடையாது. இவர் பேசுவது பூரண சுயராஜ்யம். “கிளர்ச்சி” செய்வது ஏகாதிபத்திய எதிர்ப்பு. தனது கொள்கை என்று விளம்பரம் பெற்று இருப்பது பொது உடமை. அனுபவ சாத்திய கொள்கை என்று பேசுவது சமதர்மம். நடந்து கொள்வது பார்ப்பன சூழ்ச்சி. இவருக்கு காங்கரசிலும், காங்கரஸ் தலைவர் என்பவர்களிடத்திலும் உள்ள மதிப்பு கண்ணடித்து நாக்கை நீட்டுவதேயாகும்
இவரது வேலை வர்க்கிங் கமிட்டி தீர்மானத்தை விளம்பரப்படுத்தி ஆதரித்து பேசுவதேயாகுமே ஒழிய இவரது சொந்தக் கொள்கைக்கு இடமோ வலியுறுத்த சக்தியோ கிடையாது
அதிகாரம் செலுத்துவது யார்?
சட்டப்படி ஏற்பட்ட தலைவர் கதி இப்படியானால் காங்கரஸ் தலைவர்கள் கதி என்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் - அதிகாரம் செலுத்தும் தலைவரோ காங்கரசில் 4 அணா மெம்பராகக் கூட இல்லாத காங்கரஸ் நடத்தைகளுக்கு எவ்வித பொறுப்பு ஏற்றுக் கொள்ளுபவரும் அல்லாத தோழர் காந்தியாராகும். அவருக்கும் சர்க்காருக்குமோ ஜவஹர்லாலுக்கும் சர்க்காருக்குமோ கொஞ்சமும் சம்மந்தமும் ஜவாப்புதாரி தனமும் கிடையாது. நமது மாகாணத்தில் பார்த்தாலும் மாகாண காங்கரஸ் கமிட்டித் தலைவர் சட்டப்படி தோழர் முத்துரங்க முதலியார். தலைவர் காரியம் பார்ப்பது தோழர் சத்தியமூர்த்தியார். சர்வாதிகாரம் செலுத்துவது தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார்.
காங்கரஸ் கொன்கை
காங்கரஸ் அரசியல் கொள்கை இந்திய அரசியல் சட்டத்தை தகர்ப்பது.
இதற்கு காரணம் இந்த அரசியலில் வகுப்புத் தீர்ப்பு இருக்கிறதால் அதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டது. இதைச் சொல்லி ஓட்டு கேட்கப்பட்டது. இது புரியாத ஆட்களுக்கும் இதைப்பற்றி கவலைப்படாத ஆட்களுக்கும் வரி குறைப்பதாகவும் சம்பளம் குறைப்பதாகவும் வட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தொழிலாளிகளுக்கு பெரிய நன்மைகள் செய்து விடுவதாகவும் சொல்லி ஓட்டு கேட்கப்பட்டது. சில இடங்களில் பதவி ஏற்பதில்லை என்றும் அரசியலை. உடைப்பதற்கே சட்டசபைக்கு போவதாகவும் சொல்லி ஓட்டு கேட்கப்பட்டது
வெற்றி பெற்றபின் பதவிக்கு சூழ்ச்சி
பாமரமக்கள் மத உணர்ச்சி போன்ற மூடநம்பிக்கையின் பயனாய் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுகள் போட்டுவிட்டதால் வெற்றி பெற்றதும் பதவிபெற சூழ்ச்சி செய்யப்பட்டது. இதற்கு ஆக பாமர மக்களை ஏமாற்ற சர்க்காரிடம் வாக்குறுதி கேட்பதாக வேஷம் போடப்பட்டது. ஏன் அதை வேஷம் என்று சொல்லுகிறேன் என்றால் காங்கரஸ்காரர்களின் இந்த நடத்தை பொது ஜனங்களுக்கு சர்க்காரை காங்கரஸ்காரர்கள் வாக்குறுதி கேட்பது போல் இருந்தாலும் சர்க்காருக்கு காங்கரஸ்காரர்கள் தாங்கள் ஒழுங்காய் நடந்து கொள்வதாக வாக்குறுதி கொடுப்பதாகவும் அதை ஏற்றுக்கொள்ளும்படி சர்க்காரைக் கெஞ்சுவதாக சர்க்காருக்கு
படும்படியாகவும் இருந்தது
வாக்குறுதி கேட்டவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள்
ஆனால் சர்க்காரோ அரசியல் சட்டத்தில் உள்ளதற்கு மேல் வேறு ஒரு பேச்சும் பேசவோ வாக்குறுதி ஒப்புக் கொள்ளவோ கொடுக்கவோ முடியாது என்று சொன்னதோடு “அரசியல் சட்டப்படி நடக்க முடியுமா? முடியாதா?” என்று இறுதி எச்சரிக்கை செய்தவுடன் வாக்குறுதி கேட்ட காங்கிரஸ்காரர்கள் பயந்து நடுநடுங்கி வெட்கமிழந்து மானமிழந்து வாக்குறுதி கொடுத்து ராஜபக்தி, அரசியல் சட்ட பக்தி, ராஜ சந்ததி பக்தி விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து பதவியில் அமர்ந்தார்கள். ஆகவே அரசியலை ஒழிக்க சட்டசபைக்குப் போவதாக ஓட்டுக் கேட்டவர்கள் அரசியலை நடத்த பிரமாணம் செய்து கொடுக்க சட்டசபைக்கு போகவேண்டியவர்களானார்கள்
பதவி கிடைத்ததும் பார்ப்பனர்களே பற்றிணார்கள்
அது மாத்திரமல்லாமல் காங்கரஸ் என்பதே பார்ப்பன ஆதிக்க சபைதான் என்பதை காட்டிக் கொள்ள வேண்டியவர்களானார்கள். அதாவது மந்திரிகள் அமைத்ததில் காங்கரஸ் பிரதம மந்திரிகள் எல்லோருமே பார்ப்பனர்களாய் அமர்ந்து கொண்டார்கள். மற்ற மந்திரிகள் தலைவர்கள். ஆகிய பதவிகளிலும் பகுதிக்குமேல் பார்ப்பனர்களே எடுத்துக் கொண்டார்கள். இரண்டு சட்டகபைகளிலும் பார்ப்பனர்களே தலைவர்களாகிக் கொண்டார்கள். மற்ற மந்திரிகள் தலைவர்கள் ஸ்தானங்களுக்கும் பெரிதும் சுதந்தரமும் அனுபவமும் சுயமரியாதையும் அற்றவர்களாகவே பொறுக்கிக் கொண்டார்கள்.
குடி அரசு- 1938 (1) 62
ஜனநாயகம் சர்வாதிகார நாயகமாயிற்றூ
ஆட்சி முறையிலும் ஜனநாயகம் என்று சொல்லி வாக்குப் பெற்றுச் சர்வாதிகார நாயகமும் நாமிநேஷன் நாயகமுமே துவக்கினார்கள். கட்டுப்பாடு என்பதிலும் கட்டுப்பாடு மீறி தண்டிக்கப்பட்டவரை பார்ப்பனர் என்கின்ற காரணத்தால் வலிய கூப்பிட்டு அதிகாரம் நடத்த பதவி அளித்தார்கள்.
சகலத்திலும் தோல்வி.
சபையில் உட்கார்ந்ததும் வகுப்பு விரோதம் உண்டாகும்படியான வந்தேமாதர பாட்டுப்பாடி அதில் தோல்வி யுற்றார்கள் - தேசீயக் கொடி உத்திரவு போட்டு அதிலும் தோல்வி அடைந்தார்கள். அதாவது:-
1. மூவர்ணக் கொடி காங்கரஸ் கொடியே ஒழிய தேசீயக் கொடி அல்ல என்று தங்கள் கையாலேயே உத்திரவு போட்டார்கள். சர்க்கார் காரியாலயங்களில் அக்கொடியைப் பறக்கவிடக்கூடாது என்று தாங்களே உத்திரவு போட்டார்கள். ஸ்தல ஸ்தாபனங்களிலும்
சர்க்கார் பிரிட்டிஷ் கொடி பறக்கும் போது காங்கரஸ் கொடியைப் பறக்கவிடக்கூடாது என்று உத்திரவு போட்டார்கள்.
2. ஏற்கனவே சர்க்கார் வாங்கியிருந்த கடன்களைக் கேட்கில் - செல்லுபடி அற்றதாக ஆக்கிவிடப் போவதாய் சொல்லி ஓட்டுக் கேட்டவர்கள் பதவிக்கு வந்ததும் பழைய கடன்கள் பூராவையும் ஒப்புக்கொண்டு
புதுக் கடனும் கோடிக்கணக்காய் வாங்கினார்கள்.
3. இக்கடன்கள் வரும்படி உள்ள காரியங்களையோ வட்டி கட்டும்படியான காரியங்கள் எதையாவதோ செய்வதற்கென்று இல்லாமல் அரசியலை நடத்தவே வாங்கப்பட்டன. அதாவது பட்ஜெட் வரவு செலவுக் கணக்கு சரிக்கட்ட முடியாமல் போய்விட்டது.
4. வரி குறைப்பது என்று சொன்ன விஷயத்திலும் புது வரி போடவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்களே ஒழிய இவர்களுக்கு முன் இருந்த மந்திரிகள் சரிப்படுத்தி வைத்த பட்ஜட்டை நிறைவேற்றவோ குறைத்து விட்டு வந்த வரியை அமலில் கொண்டு வரவோ முடியாதவர்களாக ஆகிவிட்டார்கள். மில் ஜவுளி லைசென்ஸ் வரி, ரிஜிஸ்ட்ரேஷன்
பீசு, இரட்டித்த வரி ஆகிய புது வரிகளையும் போட்டு விட்டார்கள்.
5. பரிக்ஷார்த்தமாக நடத்திப் பார்க்கும் மது விலக்குத் திட்டம் என்பதினால் கல்வியும் வைத்தியமும் சுகாதாரமும் போக்குவரவு வசதியும் குறைவுபட்டுப் போகும்படியான நிலைமைக்கு வந்துவிட்டார்கள்
6. ஜன செளக்கியத்திற்காக புதிதாக செய்யப் போவதாகச் சொன்ன. சட்டங்கள் விஷயத்திலும் தோல்வியே அடைந்தார்கள். அதாவது
கடன் வாய்தா ஒத்திவைப்பு சட்டமாகிய ௫10ார்யயுபில் என்பதைக் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
கொண்டு வருவதாய்ச் சொல்லி மசோதா தயாரித்தவர்கள் தங்கள் ஜாதி வக்கீல்களுடைய எதிர்ப்பை மாத்திரம் கண்டு பயந்து நிறுத்திக் கொண்டார்கள்.
7. விவசாயக் கடன் வட்டி குறைப்பு மசோதா கொண்டு வருவதாய் சொன்னவர்கள் தங்களுக்கே புரியாததும் அமலில் சுலபத்தில் கொண்டு வர முடியாததும் உண்மையில் விவசாயிகளுக்கு 100ல்
20 பாகம் கூட பயன்படுவதற்கு அருகதை இல்லாததுமான மசோதாவை கொண்டு வந்து அதிலேயே திண்டாடுகிறார்கள்.
8. சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப் போவதாய் சூழ்ச்சிசெய்து வெகு உறுதியுடன் “யாருக்கும் பயப்படப் போவதில்லை செய்தே தான் தீருவேன்" என்ற இறுமாப்புடனும் ஆணவத்துடனும் புறப்பட்ட ஆச்சாரியார் பொது ஜன எதிர்ப்பைக் கண்டு இன்று மெள்ள நழுவ விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் மானம் பாதிப்பதால் இன்னமும் ஹிந்திக்கு உயிர் இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்.
9. புதிய கல்வித் திட்டம் என்று ஒன்று காந்தியாரால் வருணாச்சிரம தர்மத்தை உயிர்ப்பிக்க முயற்சித்த திட்டம் கர்ப்பத்திலேயே செத்துக் கொண்டு வருகிறது
10. ஜில்லா போர்டுகளை ஒன்றுபடுத்துவதாகச் சொன்னவர்கள் ஒன்றுபடுத்த முடியாமலும் எல்லா போர்டுக்கும் ஒரே மாதிரி கொள்கையை
நடத்த முடியாமலும் திண்டாடுகிறார்கள்.
11. ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சத்தையும் கண்டிராக்ட் ராஜ்யத்தையும்
ஒழித்து விடுவதாய் சொன்னவர்கள் காங்கரஸ் மெம்பர்கள் லஞ்சம் வாங்குவதையோ கண்டிராக்ட் பிழைப்பு நடத்துவதையோ ஒழிக்க முடியாமல் தாங்களே வெட்ட வெளியாக்கி மானங்கெடுகிறார்கள்.
12. தனிப்பட்டவர்கள் செலுத்தும் ஏகபோக ராஜ்யத்தை ஒழிக்கப் போனவர்கள் தாங்களுடைய சட்டசபை மெம்பர்களையே ஊமையாக்கி
செவிடாக்கி அவர்களது கைக்கு 75 ரூபாய் விலங்கு போட்டு வாய்க்கும்
கட்டுப்பாட்டுப் பூட்டுப் போட்டு நகரும் பிணங்களாக ஆக்கி ஒருவரே அதுவும் பார்ப்பனரே சர்வாதிகாரம் செலுத்தி வருகிறார்கள்.
13. நீதி நிருவாக இலாகாவை பிரிப்பதாகச் சொன்னவர்கள் அதைப் பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
14. உத்தியோகங்களில் வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும்
வித்தியாசம் கூடாது என்று சொன்னவர்கள் வெள்ளையர்கள் நிழலிலேயே இருக்க வேண்டும்; கறுப்பர்கள் வெயிலிலேயே
இருக்க வேண்டும் என்று தாங்களே சொல்லி விட்டார்கள்.
குடி அரசு- 1938 (1) 64
15. மூன் இருந்த மந்திரிகள் சர்க்கார் பணத்தை தாறுமாறாகச் செலவழிக்கிறார்கள் என்று சொன்னவர்கள் பதவிக்குப் போனவுடன். ஆளுக்கு ஒரு கார் சர்க்கார் பணத்தில் வாங்கிக் கொண்டு அதற்கு மாதம் 150 ரூபாயும் வீட்டு வாடகை ஆள் 1க்கு மாதம் 150 ரூபாயும் போட்டு எடுத்துக் கொண்டு தங்களுக்கு வால்பிடிக்க 10 காரியதரிசிகளையும் நியமித்துக் கொண்டு முன்னையை விட அதிக செலவும் தர்பாரும் செய்து வருகிறார்கள். இவை தவிர சர்க்கார் பிரயாணப் படியில் நாள் தோறும் ஊர் ஊராய்
கட்சிப் பிரசாரத்திற்குப் போன வண்ணமாயிருக்கிறார்கள். ஆகவே இந்த மந்திரிகள் பொது ஜனங்கள் வரிப்பணத்தை திலகர்
நிதி போலவும் கதர் பண்டு போலவும் தீண்டாமை விலக்கு பண்டு போலவும் கருதுகிற நாணயமுடையவர்களாய் இருக்கிறார்களே ஒழிய கொஞ்சமும், வரிப்பணமே இது பாழாகிறதே என்பதைப்பற்றி பயப்படுகிறவர்களாய் காணவில்லை.
உண்மையில் பொதுஜனங்கள் வரிப்பணத்தில் நாணயமிருக்குமானால் கை தூக்குவதற்காக ஆளுக்கு 75 ரூபாய் வீதம் கொடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
இன்னமும் இதுபோல் இந்த மந்திரிகளின் யோக்கியதையும் தகுதியும் நாணயமும் விடிய விடிய எடுத்துக் கூறலாம் ஆகவே இந்த மந்திரிகள் சட்டசபை மெம்பர்கள் வாழ்வுக்கு வகையில்லாதவர்களுக்கு இம்மாதிரி கூலி கொடுத்து விலைக்கு வாங்கி வைத்திருக்காவிட்டால் சராசரி பொறுப்பும் தகுதியும் செல்வமும் அனுபவமும் உள்ள சட்டசபை மெம்பர்களான தோழர்கள் ராமலிங்க செட்டியார், நாடிமுத்து பிள்ளை போன்றவர்களை பார்ப்பனர்கள். இவ்வளவு கேவலமாகவும் நடத்தி இருக்க முடியாது எனவே இன்றைய காங்கரஸ் ஆட்சிக்கும் பழய கால காட்டு ராஜாக்கள் பாளையப்பட்டுக்காரர்கள் ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் காண முடிகின்றது? அக்காலம் அவர்கள் கலகக்காரர்கள் உதவியால் காட்டுராஜா ராஜ்யபாரம் நடத்தி வந்தார்கள். இக்காலம் வரிப்பணத்தைப் பாழாக்கி மெம்பர்களுக்கு அள்ளிக்கொடுத்து அவர்கள் உதவியால் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
குறிப்பு: 9, 10, 11.01.1938 ஆகிய நாள்களில் கும்பகோணம், திருவாரூர், இளையான்குடி ஆகிய ஊர்களில் முஸ்லிம் மகாநாட்டிலும் பொதுக் கூட்டங்களிலும் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 16.01.1938 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்
காங்கரஸ் சரணாகதி மந்திரிகள் பதவிக்கு வந்தவுடன் ஸ்தல ஸ்தாபனங்களில் எங்கெங்கு காங்கரஸ் அல்லாத கட்சியார் தலைமைப் பதவி வகித்து வந்தார்களோ அவைகளை எப்படியாவது அழித்து பார்ப்பன ராஜ்யம் ஆக்கிக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள் என்பது
யாரும் அறிந்ததேயாகும்.
இதற்காக மந்திரிமார்களும் காங்கரஸ்காரர்களும் எவ்வளவு இழிவாகவும், கேவலமாகவும் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டியது அவசியமாகும்
உதாரணமாக தர்மபுரி ஜில்லா போர்டு இதுவரை காங்கரஸ்காரர் ஆதிக்கத்தில் இருக்கவில்லை. தர்மபுரி ஜில்லா போர்டு தலைவரும் உபதலைவரும் சுயமரியாதைக்காரர்கள் ஆனதால் அவர்களை ஒழிக்கக் காங்கரஸ்காரர்கள் சிறப்பாகப் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு பார்ப்பனரல்லாத மெம்பர்களைக் கொண்டே மகா பிரயத்தனங்கள் செய்து வந்து வெற்றி பெற்றுவிட்டார்கள். அதாவது தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் மிட்டாதார் D. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீதும், வைஸ் பிரசிடெண்ட் தோழர் MN. நஞ்சய்யா அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வந்து, தீர்மானமும் பாஸாகிவிட்டதாகச் சேதி வந்துவிட்டது. அந்த நாடகம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது
கிருஷ்ணமூர்த்தி, நஞ்சய்யா நிலைமை
தோழர்கள் கிருஷ்ணமூர்த்தியும் நஞ்சய்யாவும் சுயநல உணர்ச்சி அற்ற இளங்காளைகள், உண்மையாளர்கள் மிக மிக நேர்மையாளர்கள்: வயிற்றுப் பிழைப்புக்காக மானத்தை விற்கவோ, கொள்கைகளை விற்கவோ, அதிகாரத்தை பதவியை நடத்தவோ வேண்டிய அவசியமில்லாத செல்வவான்கள். அவர்களது பெற்றோர்களும் மிக்க நீதியான - தர்ம நியாயமான என்று சொல்லப்படும் முறைகளில் பொருளை ஈட்டி வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்கள் மீது உள்ள குற்றமெல்லாம் ஆரிய அந்நியருக்கு அடிமைகளாக சம்மதிக்காததேயாகும். அவர்கள் மாத்திரம் பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய்
குடி அரசு- 1938 (1) 66
இருந்து வாழ ஆசைப்பட்டிருப்பார்களேயானால் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தோழர் சுப்பராயனுக்கு மேல் ஒருபடி உயரத்தில் இருக்கும்படியான பதவியை பெற்று இருப்பார். பணமும் ஏராளமாய் சம்பாதித்துக் கொண்டிருப்பார். அப்படிக்கு பதவியும் பணமும் பெற பேராசை இல்லாததாலும் சுயமரியாதை உணர்ச்சி உடையவர்களாய் இருப்பதாலும் அவ்விருவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாக காங்கரசில் மெம்பராக முடியாதென்று - கண்டிப்பாய் முடியாதென்று - ஜில்லாபோர்டு தலைவர் உபதலைவர் பதவி மாத்திரமல்லாமல் வேறு எப்பதவி போனாலும் எவ்வளவு கஷ்ட நஷ்டமேற்பட்டாலும் ஒரு நாளும் முடியாதென வீர கர்ஜனையுடன் கூறி விட்டார்கள்
அதன் பேரில் இவர்கள் மீது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத ஆட்களைப் பிடித்தே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரச் செய்தார்கள்.
எதிமிகள் யோக்கியதை
இத்தீர்மானத்தை தயார் செய்தவர்கள் பார்ப்பனர்கள் ஆனாலும் பிரேரேபித்தவர்களும் ஆதரித்தவர்களும் கோடாரிக் காம்புகளான விபீஷணனும் அனுமாரும் போன்ற சகோதரத் துரோகியும் குலத் துரோகியுமான தோழர்கள் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி அவர்களும் ஒரு குப்புசாமி நாயுடு அவர்களுமான பார்ப்பனரல்லாதார்களே யாவார்கள். இத் தீர்மானம் நிறைவேற்ற பல மெம்பர்களை விலைக்கு வாங்க சுமார் 4000 ரூபாய்க்கு மேல் 5000 ரூபாய் வரை செலவு செய்தவரும் ஒரு பார்ப்பனரல்லாதாரேயாகும்
இதில் தோழர் எஸ்.வி. ராமசாமியைப்பற்றி நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. அவர்தான் தன் தகப்பனுக்கு மந்திரி வேலையோ மந்திரி காரியதரிசி வேலையோ கொடுக்காததற்கு ஆக காங்கரஸ் கட்சி தலைவரான, பிரதம மந்திரியான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியை பார்ப்பன பிளேக்கு என்பதாக கூறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு காங்கரசில் இருந்து விலக்கி காங்கரசின் பேரால் பெற்ற ஜில்லா போர்டு பதவியையும் ராஜிநாமாச் செய்யும்படியும் இனி காங்கரசில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்றும் தண்டிக்கப்பட்டவர். பின்பு தனது வாழ்வுக்கு வேறு வகையின்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறவர். ஆகவே இப்படியானவர் தான் இந்த “புண்ணிய கைங்கரியத்தை ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொண்ட அவர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீது சாட்டிய குற்றங்கள் என்னவென்றால் “மெஜாரிட்டி மெம்பர்களால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வில்லை” என்பது முதல் குற்றமாம். இதற்கு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சரியான.
பதிலளித்திருக்கிறார். அதாவது, ஏட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தலைவர் உண்மை விளக்கம்
ஜில்லா போர்டு மெம்பர்கள் எலக்்ஷனில் தனக்கு ஏற்கனவே மெஜாரிட்டி மெம்பர்கள் கிடைத்திருந்ததென்றும், மெஜாரிட்டி மெம்பர்கள் கையெழுத்துக்களை சர்க்காருக்கு காட்டியே நாமிநேஷன் பெற்றதாகவும், நாமிநேஷன் இல்லாதிருந்தாலும் கூட அந்த சமயத்தில் தனக்கு மெஜாரிட்டி இருந்ததென்றும் கூறியிருக்கிறார். விபரம் என்னவென்றால் தர்மபுரி ஜில்லா போர்டு மெம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தம் 25 மெம்பர்களில் காங்கரஸ் பேரால் நிறுத்தப்பட்டவர்கள் உள்பட தன்னை பிரசிடெண்டாக நிற்கும்படியும் ஆதரிப்பதாக வாக்களித்தும் கையொப்பமிட்ட வேண்டுகோள் அனுப்பினவர்கள் 13 பேர்கள் என்றும் அதை அரசாங்கத்தார் நேரில் பார்த்த பிறகே 7 நாமிநேஷன்கள் கொடுத்தார்கள் என்றும், இந்த இருபது பேர்களில் காங்கரஸ்காரர்கள் சிலரை விலைக்கு வாங்கிக்கொண்ட பிறகும் கூடத் தனக்கு 16 ஓட்டுகள் கிடைத்ததென்றும் புள்ளிவிபரம் காட்டியிருக்கிறார்.
மற்றும் ஜனநாயகத்தில் நாமிநேஷன் கூடாது என்பதற்கும் அவர் கூறியதாவது:- “காங்கரஸ் பதவிக்கு வந்தவுடன் கோ ஆப்ஷன் அதாவது மெம்பர்களே நாமிநேஷன் செய்துகொள்ள அனுமதி கொடுக்கவில்லையா? அது நாமிநேஷன் ஆகாதா? மெம்பர்கள் நியமித்தால் என்ன? பொது ஜன ஓட்டுகளால் வெற்றிபெற்று பொதுஜன பிரதிநிதிகளால் மந்திரியான மந்திரி நியமித்தால் என்ன? இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இந்த இரண்டு ஸ்தானங்களை எலக்ஷனுக்கு விட்டிருக்கக்கூடாது? தேர்தல் நடத்தி இருந்தால் என்னை பொது ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்பதும் காங்கரஸை ஜனங்கள் ஆதரிக்கவில்லை என்பதும் விளங்கிவிடும் என்கின்ற பயம்தானே” என்று பளீரென்று பதில் அறைந்திருக்கிறார்.
சவுக்கடி
மற்றொரு குற்றச்சாட்டான “அரசியல் சட்டத்தை வெறுக்கும் நாளில் பள்ளிக்கூடத்தை மூடவில்லை" என்கிற குற்றச்சாட்டுக்கு பதில். கூறுகையில் “நம் அரசியல் சட்டத்தை வெறுப்பதற்கு அறிகுறியாக பள்ளிக்கூடம் மூடவேண்டுமென்ற தீர்மானம் நீங்கள் கொண்டு வந்தது பித்தலாட்ட தீர்மானம். காங்கரஸ்காரர்கள் சரணாகதி அடைந்து அரசியல் சட்டத்தை நடத்திக்கொடுக்கப் போகின்றீர்கள் என்பதை மற்ற மெம்பர்கள் உணர்ந்தே அந்தத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டார்கள். அதற்கு நான் என்ன செய்வது? நிறைவேறின தீர்மானப்படி நடப்பதா? தோல்வி அடைந்த தீர்மானப்படி நடப்பதா? அப்படியாவது உங்கள் தீர்மானப்படி அரசியல் சட்டத்தை தள்ளிவிட்டீர்களா? உடைத்து விட்டீர்களா? என்று தலையில் சாணியை கரைத்து ஊற்றின மாதிரி பதில் சொல்லி இருக்கிறார்
குடி அரசு- 1938 (1) 68
மற்றும் ஜில்லா போர்டு சிப்பந்திகள் விஷயமாய் காங்கரஸ்காரருக்கு உள்ள வெறுப்பு விருப்புக்கு தன்னை பிணையாக்குவது பற்றியும் காங்கரஸ்காரர்களுக்கு புத்தி வரும்படி பதில் சொல்லியிருக்கிறார்.
நன்றி கெட்ட காங்கரஸ்காரர்
மற்றும் காங்கரஸ்காரர்களுக்கு தனித்தனி முறையில் நன்மை செய்யவில்லை என்கின்ற ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டதற்கும் காங்கரசுக்காரர் சிபார்சுப்படி நடந்திருப்பதையும் அவர்கள் சொந்தக்காரர்களுக்கு அவர்கள் சிபார்சுப்படி வேலை கொடுத்ததையும் தனது நியமனங்கள் சர்க்கார் சட்டத்தையும் ஆமோதிப்பதையும் தகுதி அனுபவம் ஆகியவைகளையும் ஆதாரமாகக் கொண்டதென்றும் மூடனுக்கும் புரியும்படி விளக்கி காட்டி இருக்கிறார். மொத்தத்தில் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்த மெம்பர்களுக்கே அதிக சலுகை காட்டி வந்திருப்பதை எடுத்துக்காட்டி காங்கரஸ்காரர்களின் நன்றி கெட்ட விசுவாசமற்ற குணத்தை சூரிய வெளிச்சம்போல் கண் (மானம்) கூசும்படி விளக்கி இருக்கிறார்.
இந்தப்படியே காங்கரஸ்காரர்களின் சகல பொய்ப்பழிகளுக்கும் விஷமத்தனமான குறைகளுக்கும் சமாதானம் சொல்லி விட்டுக் கடைசியில் தனது நிலைமையையும் விளக்கி விட்டார்.
உலகம் அறியட்டுமே
அதாவது உங்கள் “மந்திரிகள் செய்த சூழ்ச்சியின் பயனாகவும், உங்களுடைய நாணயமற்ற காரியத்தாலும் உங்களுக்கு மெஜாரிட்டி பலம் ஏற்படுத்திக்கொண்டதைக் கொண்டும் நீங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யோக்கியமாய் நிறைவேற்றிக் கொண்டு போகாமல் பொய்யும் புளுகும் பேசி வீண்பழி சுமத்தி மக்களை ஏமாற்றப் பார்ப்பது யோக்கியமா?” என்றும் “நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு நாங்கள் பயப்படவில்லை" என்றும் “உங்கள் யோக்கியதையும் நீங்கள் எங்கள்
மீது சுமத்தும் குற்றம் என்ன என்பதையும் உலகத்துக்கு அறிவித்து எங்கள் யோக்கியதையையும், உங்கள் யோக்கியதையையும் உலகம் அறியட்டும் என்பதற்காகவே நாங்கள் காங்கரஸ் அக்கிரம ஆட்சி ஏற்பட்டவுடன் ராஜிநாமா செய்யாமல் இருந்தோம்” என்றும் வெகு அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
மற்றும் வைஸ் பிரசிடெண்ட் மீது வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திலும் இது போலவே பொருத்தமும், யோக்கியதையும், நாணயமும், அறிவும் அற்ற குறைகள் சொல்லப்பட்டவைகளுக்கு அவரும் தகுந்த பதில் சொல்லி இருக்கிறார். ஆகவே இந்த இரு தோழர்கள் மீதும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அவர்களுக்கு ஒரு ஒப்பற்ற பெருமையையும்,
ல ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
கீர்த்தியையும் கொடுப்பதற்கு ஒரு அவசியமான முதற் சம்பவம் என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் இதனால் இத் தோழர்கள் இதுவரை செய்து வந்த சேவையையும் இனி காங்கரஸ்காரர்கள் செய்யப்போகும் சேவையையும் பொது ஜனங்கள் உணர ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படும் என்பது நமது அபிப்பிராயம்
விபீஷணர்கள் சூழ்ச்சி
மற்றும் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளவும் அதன் பிறகு பிரசிடெண்டு ஸ்தானத்துக்கு வரவும் ஆசைப்பட்ட தோழருக்கு இது விஷயத்தில் சுமார் 4000 ரூ. க்கு மேல் 5000 ரூ வரை செலவுக்காகவும் ஜில்லாபோர்டு மெம்பர்கள் பலரை விலைக்கு வாங்கி (Go as you please) “கோ ஆஸ் யூ பிளிஸ்” டிக்கட் வாங்கிக்கொடுத்து ஒவ்வொருவருக்கு ஒரு ஆள் காவல் போட்டு சதா சர்வ காலம் அவர்களுடைய சகலவிதமான ஆசைகளையும் திருப்திசெய்து வந்து எலெக்ஷன் சமயத்தில் மாத்திரம் அழைத்து வந்து ஓட்டுப் பெற்றார்களாம். இந்த காலத்தில் அதுவும் இந்த ஆட்சியில் இது சகஜமே ஒழிய இதற்காக யாரும் அத்தீர்மானம் செல்லுபடி அற்றதென்று தீர்ப்புப்பெற்று விட முடியாது. ஆனால் இதில் பகுதி தொகை செலவழிக்க தோழர் கிருஷ்ணமூர்த்தியோ, தோழர் நஞ்சையாவோ சம்மதித்திருப்பாரானால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது என்றும் தெரியவருகிறது
எப்படி இருந்த போதிலும் தோழர்கள் கிருஷ்ணமூர்த்திக்கும், நஞ்சையாவுக்கும் காங்கரஸ் தொல்லையிலும், காலித்தனத்திலும் இருந்து விடுபட சந்தர்ப்பம் கிடைத்ததை நாம் ஒரு பெரிய சொத்து ஆகவே கருதுகிறோம். ஏனெனில் இனி அவர்களது (தினம்) 24 மணி நேரமும் சுயமரியாதை இயக்கத் தொண்டுகளுக்கே பயன்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதேயாகும்
மற்றபடி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தால் காங்கரஸ் யோக்கியதையும் ஆட்சி நிர்வாக நாணயமும் வெளியாகித் தீரும். ஆகவே இவர்கள் வெளி வந்ததை வரவேற்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 16.01.1938
குடி அரசு- 1938 (1) 70
ஹரிஜன? மந்திரிக்கும் மேயருக்கும் சவால்
மராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப்படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் “ஹரிஜனங்"களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் மட்டும் மெளனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கரஸ் பத்திரிகையும் இந்த அக்கிரமத்தை இதுவரைக் கண்டித்து எழுதவில்லை.
காங்கரஸ் பேரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக்கும் “ஹரிஜன” மெம்பர்களோ, “ஹரிஜன! மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரியவில்லை. “ஹரிஜன” மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் “ஹரிஜன” மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம்பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன். சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை ''ஹரிஜன'' மந்திரியுடையவும் “ஹரிஜன” மேயருடையவும் சமூகத்துக்கில்லையா?” தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக்கொள்ளுவதுதான் நீதியாகுமா? சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போதுமென்பதே அவர்களது கருத்தா? பார்ப்பனக் கூத்துக்குத் தாளம் போடுவதற்குக் கைக் கூலியாகத்தான் “ஹரிஜன” மந்திரிக்கும் “ஹரிஜன” மேயருக்கும் சமபந்தி போஜன மரியாதை காட்டப்படுகிறதா?
தென் தஞ்சை காங்கரஸ் மகாநாட்டு அநீதி ஆதிதிராவிட சமூக முழுமைக்கும் மனக் கொதிப்பை யுண்டு பண்ணியிருக்கும் போது கனம் முனுசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் சும்மாயிருப்பது சரியே அல்ல. இந்த மானக் கேட்டுக்கு பரிகாரம் தேட அவர்களால் முடியாவிட்டால் அவர்களது பதவிகளை ராஜிநாமாச் செய்ய வேண்டியதே நியாயம். கனம் மூனிசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் என்ன செய்யப் போகிறார்கள்?
- விடுதலை
குடி அரசு - கட்டுரை - 16.01.1538
ர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காங்கரஸ் நாணயம் விளக்கம்
தலைவரவர்களே! தோழர்களே!
நம்முடைய எதிரிகள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடிவிட்டார்கள். எதிரிகளின் விஷமப் பிரசாரம் அளவுக்கு மீறி வெற்றியடைந்து விட்டது. அது மட்டுமா? ஜஸ்டிஸ் கட்சியை சாக அடித்து கருமாதி செய்ததாகவும் சொன்னார்கள். 5000 அடி ஆழத்தில் அவர்கள் புதைத்து விட்டதாகவும் சொன்னார்கள். அதுபோலவே முஸ்லீம் லீக்கும், சுயமரியாதைக் கட்சியும் செத்தே போய்விட்டதென்றும் கூறினார்கள். ஆனால் 5000 அடி ஆழத்தில் புதை குழியிலிருந்து செத்துப் போனவர்களாகிய நாங்கள் உங்கள். முன்னால் கிறிஸ்திவநாதர் கதை போல் வந்து நிற்கிறோம். நாம் செத்துப் போய் விட்டோமா? இல்லை. ஜஸ்டிஸ் கட்சிதான் செத்துப் போய்விட்டதா? இல்லை. லீக்தான் செத்துப் போய்விட்டதா? இல்லை. ஏன் அப்படி சொல்கிறேன். செத்துப் போனவர்களாயிருந்தால், இந்த கட்சிகள் எல்லாம் 5000 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தால் உங்கள் மூன் இப்போது இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நாங்கள் இதே கட்சியின் பெயரால் எப்படி நிற்க முடியும்? செத்தவர்களை பார்க்க போகுமிடங்களில் 10 ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வளவு உற்சாகமாக வரமுடியுமா? வாஸ்தவமென்னவென்றால் நாங்கள் செத்துப் போகவில்லை. ஆனால் முன்னிலும் 100 மடங்கு பலத்துடன் உங்கள் முன் வந்திருக்கிறோம். முன்னே நாங்கள் பேசியதைவிட 100 பங்கு அதிகமாக பேச ஆதாரத்துடன் வந்திருக்கிறோம்
இதற்கு முன் இதே இடத்தில் கொஞ்ச நாள் முன்பு அரசியலின். பேரால் ஒரு கூட்டத்தார் உங்கள் முன்வந்து பல அபிப்பிராயங்களை உங்களுக்கும் புரியாமல், அவர்களுக்கும் புரியாமல், “காந்தி செய்கிறார்,
காந்தி ஆணை, காங்கரஸ் திட்டம், சுயராஜ்யம், மோட்சம், சமதர்மம், வெள்ளையரை விரட்டல், அரசியலை உடைத்தல்” என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். நீங்களும் கேட்டிருப்பீர்கள். ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதையும், என்ன சொல்லப் போகிறேன் என்பதையும்
நீங்கள் தயவு செய்து கேட்டு, முன்னால் அவர்கள் சொன்னதையும் நன்றாக உங்கள் சொந்த பகுத்தறிவு மூலமாக ஆராய்ந்து பாருங்கள். எது சரி, எது தப்பு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். நான்
குடி அரசு- 1938 (1) 72
பேசிவருவது என் சொந்த அபிப்பிராயமே தவிர, அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று கண்மூடித்தனமாக நம்பச் சொல்லவில்லை.
காங்கரஸ் நாணயம்
காங்கரஸ்காரர் சொன்ன வாக்குறுதிகளில், பிரசாரம் செய்யும்போது மக்களிடம் சொன்னதில், அவர்களுடைய முதல் திட்டமாக “எல்லோருக்கும் அபிப்பிராய சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கொடுக்கப்படும்” என்று சொன்னார்கள். இதுதான் காங்கரஸ் திட்டத்தின் முதல் வரி. அது மட்டுமல்ல. காங்கரஸ் அல்லாதவர்கள் நிர்வாகம் நடத்தியபோது அப்போது இது சம்பந்தமான மேலதிகாரம் அவர்களிடம் இல்லாதபோதும் இதே காங்கரஸ் வீரர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “பிற்போக்கானவர்களின் நிர்வாகத்தில் பேச்சுரிமை இல்லை. மற்றும் சுதந்திர உரிமை இல்லை. காங்கரஸார் ஆட்சியில் இப்படியெல்லாம் இருக்காது” என்றதோடு நிற்காமல் அவர்களை அதாவது இடைக்காலத்தில் பதவி ஏற்றவர்களை கழுதை, நாய் என்றும் இன்னும் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டினார்கள். இப்போது அதே வார்த்தையை அவர்கள் மேல் திருப்புவதற்கு எங்களுக்கு நிரம்ப செளகரியம் ஏற்பட்டு விட்டதே? அப்படியிருந்தும் நாங்கள் யாரையாகிலும் இப்படி திட்டுகிறோமா? யாரையாகிலும் குறித்து அவர்கள் அப்படி இவர்கள் இப்படி என்று சொல்கிறோமா? மந்திரிகளைத்தான் ஏதாகிலும் சொல்கிறோமா? அதுதான் எங்கள் வேலையா? யாராகிலும் நம்ம ஆள் கோபித்துக் கொண்டால் தோழர் ராமநாதனை வேண்டுமானால் கோபித்துக் கொள்ளலாம். அதுவும் நான் கோபித்துக் கொள்கிறேனா
என்றால் அதுவுமில்லை. எப்படியோ ஒரு விதத்தில் அவருக்கு நல்ல. நிலைமை கிடைத்ததைப் பற்றி இரட்டை சந்தோஷம். எப்படியோ ஒரு விதத்தில் நல்ல செளகரியம் கிடைத்திருப்பது பற்றி திருப்திதான். அப்படித்தான் ஆச்சாரியார் விஷயமும். இப்போதும் சரிதான் அவர் என்னை நேரில் கண்டுவிட்டார் என்றும் மட்டற்ற மகிழ்ச்சியில் தழுவிக் கொள்வார். அவர் மாத்திரம் அல்ல அவரைப் போல் இன்னும் மற்ற மந்திரி நண்பர்களும் இருக்கிறார்கள். எனக்கு நன்றாய் தெரியும் இப்பவும் நானும் மற்ற பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களும் நேரில் சந்தித்தோமானால் “நீ இப்படி காங்கரஸை விட்டு போயிட்டேயே நீ மாத்திரம் காங்கரசில் இருந்தாயானால் கண்டிப்பாய் பார்ப்பனர்களை விரட்டியிருப்பேன்' என்று சொல்கிறார்களே தவிர மற்றபடி வேறு எவ்வித துவேஷத்தையும் அவர்கள் என்னிடம் கற்பிக்கவில்லை. அழுது கொண்டிருக்கிற தோழர்கள் நாடிமுத்து, ராமலிங்கம், வெள்ளியங்கிரி, தேவர்கள் போன்றவர்களெல்லாம் நம்மைக் கண்டவுடன் “வா! வா!!
நீயும் காங்கரசுக்குள் வந்து தான் இதையெல்லாம் சொல்லிப் போடேன்" B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
என்கிறார்களே தவிர வேறு எவ்வித குற்றத்தையும் எம்மீது இதுவரை சொல்லவில்லை. அன்னக்காவடிகள் வயிறு வளர்க்க வேண்டியவர்கள் சொல்லுகிறதைப்பற்றி காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.
என் நிலைமை
காங்கரஸில் சேருவதற்கு முந்தியும், சேர்ந்த பிறகும், இப்போதும், நாளைக்கும் சரிதான் பொதுவாழ்வினால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமெனக்கில்லை. அப்படி வயிறு வளர்க்க வேண்டிய அவசியமிருந்தால் இம்மாதிரி அதாவது நீங்கள் உயர்வாகவும், மிகவும் விசேஷமாகவும், உயிராகவும் கருதியிருப்பவைகளையெல்லாம் அது தப்பு, சூழ்ச்சி, இது கொடுமை என்றெல்லாம் சொல்வதைப் போன்ற ஒரு எதிர்நீச்சு வேலையிலே இறங்கியிருப்பேனா? என்று யோசித்துப் பாருங்கள். சலபமாக “தென்னாட்டு மகாத்மா” ஆக, எனக்கு வழி தெரியுமே. “வந்தே மாதரம்! அல்லாஹு அக்பர்! பாரதத்தாய் அலறுகிறாள்!!! வெள்ளைக்காரன் சுரண்டுகின்றான். சுயராஜ்யம் வேண்டாமா?” என்றெல்லாம் சொன்னால், நான் பெரிய தேசீயவாதியாக ஆகிவிடுவேன். நீங்களும் எனக்கு காணிக்கை கொடுத்து, ஓட் கூட போடுவீர்களே. ஆனால் அந்த மாதிரி தேசீய வேலையில் நாங்கள் பட்டபாடு பார்த்துவிட்டோம். எவ்வளவோ. கஷ்ட நஷ்டமடைந்தும் பார்த்தோம். அதில் எனக்கு மாத்திரம் பெருமை ஏற்பட்டு விட்டது. பயன் ஒன்றும் ஏற்படவில்லை. எதிரிகள் ஆதிக்கம் செலுத்த இடமேற்பட்டது
எனது காங்கரஸ் தொண்டு.
ஒரு சமயம் மன்னார்குடிக்கு லஜபதிராய் வாசக சாலை திறக்க என்னை அழைத்தார்கள். அது சமயம் குறிப்பிட்ட நேரத்திற்குப் போய் சேர வழியில்லாமல் 7, 8 மைல் நடந்தே சென்றோம். போகிற கூட்டங்களுக்கு ராட்டினத்தோடே சென்றோம். எங்கள் வீட்டிலும் சகலரையும் நூற்கச் செய்தேன். தறியும் என் வீட்டிலேயே இருந்தது. நமக்கு வேண்டியவர்கள். குடும்பத்திலுள்ளவர்கள் சகலரையும் கதர் கட்டச் செய்தோம். இப்போது
தோழர் நாடிமுத்து கதர் கட்டுவதைப்பற்றி பிரமாதப் படுத்தப்படுகிறது அவர்தான் கூட்டத்துக்கு வரும் போதாகிலும் கட்டித் தொலைக்கிறார். அவர்கள் வீட்டிலேயிருக்கிற அவர் சம்சாரம் சங்கதி என்ன? அந்தம்மாளும்
கதர் கட்டுகிறார்களா? (சிரிப்பு) அல்லது தோழர் ராமலிங்கம் செட்டியார், சுப்பராயன், வெள்ளியங்கிரி கவுண்டர் போன்றவர்கள் வீட்டில் உள்ளவர்களெல்லாம் கதர் கட்டுகிறார்களா? (பலத்த சிரிப்பு) (கூட்டத்திலொருவர் பார்ப்பனரையும் சொல்லுங்கள்) நம்ம தோழர்களை மாத்திரம் சொல்லுகிறேன். ஏனென்றால் அவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளமாட்டார்கள். ஏன் இவ்விஷயங்களை எல்லாம் சொல்கிறோம்.
குடி அரசு- 1938 (1) 74
நாங்கள் தியாகம் செய்தது பதவிக்காக வல்ல. 2-வருஷம் தலைவர். பதவி வகித்தேன். 2 வருஷம் காரியதரிசி பதவி வகித்தேன் என்றாலும் அதுவும் இப்போதிருக்கிற ஆச்சாரியார் போன்றவர்கள் தான் காரண
பூதர்கள். அவர்கள் இஷ்டப்படி ஆட சம்மதித்ததால் கிடைத்தது. மற்றபடி
நான் ஒன்றும் துரோகியல்ல.
ஒரு கதை
இன்னும் ஜெயிலுக்கு போகிற இப்போதைய யோக்கியதையை சொல்லுவதாணாலும் அதுவும் நான் 6,7 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். அந்த காலமோ மூத்திரச் சட்டியில் சாப்பிட்டு, கோணிச்சாக்கில் படுத்திருந்து, கல்லுகளை உடைத்த காலம். அப்போது ஜெயிலுக்கு போவதற்கு மிகவும் பயந்த காலம். அப்போது நாங்கள் பிறருக்கு ஜெயிலுக்கு போவதற்கு வழிகாட்டிய காலம். உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். யாரும் கோபித்துக்கொள்ள மாட்டீர்களென்று கருதுகிறேன். வேலூரில் (Working Committee) வேலைத்திட்டக் கமிட்டி நடந்த சமயம் நம் தோழர்கள். கல்யாணசுந்தர முதலியார், ஆதிநாராயண செட்டியார், சி.ராஜகோபாலச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன் முதலியோர்களும் இன்னும் பலரும் வந்திருந்தார்கள். 144 உத்திரவுகளை மேற்சொன்னவர்கள் எல்லோருக்கும் சார்வு செய்யப்பட்டது. இதை வாங்கியவுடனே இப்போது இம்மாகாணத்திற்கு பிரதம மந்திரியாய் இருக்கிற தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் கொல்லைப்புற வழியாக வந்திருக்கும் ராஜனும் ஆளுக்கொரு சொம்பு ஜலத்துடன் புறக்கடைக்குப்போய் வரவேண்டியவர்களானார்கள் (பலத்த கரகோஷம்) வெளிக்கும் போய்விட்டு வந்தார்கள். “அவரவர்கள் ஊரில் போய் மீறுவதைப் பற்றி யோசிக்கலாம்” என்று சொல்ல ஆரம்பித்து
விட்டார்கள். தோழர். திரு.வி.க.வும் செய்வது இன்னது என தெரியாமல் திகைத்துப்போனார். நான் அப்போதே மீறவேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லி பிறகு தைரியப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இப்போது ஜெயிலுக்குப் போவதோ கஷ்டமேயில்லாத காரியம்
தற்கால சிறைவாழ்வு
ஏன்? அதிகாரிகள் தொந்தரவு இல்லை. ஜெயில் சூப்பரிண்டெண்டு தொந்தரவு இல்லை. ஏன்? இன்றைக்கு ஜயிலிலிருப்பவன் நாளைக்கே மந்திரியாக வந்து நம்மை தண்டித்தால் என்ன செய்வது என்கின்ற பயத்தாலே அவர்களும் மூழ்கி, அவர்கள் வீட்டு பலகாரங்கள் அப்படியே சிலருக்கும் ஜெயிலில் தாராளமாக வினியோகிக்கப்படுகிறது. நானும் என்: தங்கையாரும் சமீபத்தில் ஏ.கிளாஸில் போடப்பட்டோம். அங்கிருந்த வசதி வீட்டில் கூட எனக்கில்லை. போதா குறைக்கு ஜெயிலிலே என் பக்கத்து அறைக்கு இப்போதைய பிரதம மந்திரி சி. ராஜகோபாலாச்சாரியார் 75௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இருக்க நேர்ந்தது. ஜெயிலிலே அக்காரவடிசல், ததியோதனம் வகையறாகவே எனக்கு அவர் கொடுத்தார். அதற்கு இப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆகவே இப்போதைய ஜெயில் வாழ்க்கை மிகவும் செளகரியமானது. இதற்கு நான் பயப்படப்போகிறேனா? அதெல்லாம் ஒன்றுமில்லை.
(தொடர்ச்சி 06.02.1938 குடி அரசு 'காங்கரஸ் புரட்டு விளக்கம்”)
குறிப்பு: 16.01.1938 நீடாமங்கலம் பொதுக்கூட்ட சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 23.01.1938
குடி அரசு- 1938 (1) 76
காங்கரஸ் விஷமப்
பிரசாரத்துக்கு மறுப்பு
தலைவரவர்களே! தோழர்களே!
பல சங்கங்களின் சார்பாக எனக்கு அனேக உபசாரப் பத்திரங்கள்.
படித்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவைகளில் அளவுக்கு மீறி என்னைப் புகழ்ந்திருக்கிறீர்கள். அவைகள் எனக்கு உரியதல்ல வென்றாலும் என் மீதுள்ள சொந்த அன்பினாலேயே என்னை இவ்வளவு
தூரம் அதிகமாக புகழ்ந்திருக்கிறீர்கள். நான் செய்யும் தொண்டைப் பற்றி நானே பல சமயம் மிகவும் கடுமையாக யோசிப்பதுண்டு. நான் செய்யும் தொண்டானது எங்கு நமது நாட்டிற்கு தீமையை விளைவிக்கிறதோ என்கின்ற சந்தேகம் எனக்கு பல சமயங்களில் எழுவதுண்டு. ஆனால் நான் இப்போது இங்கே இவ்வளவு பிரம்மாண்டமான பொதுமக்களின் ஆவலையும் கணக்கற்ற உபசாரங்களையும் பார்க்கும்போது எனது தொண்டானது சரியான வழியில் தான் இருக்கிறது என்றும், இந்த உபசாரப் பத்திரங்களும், வரவேற்புகளும் எனது தொண்டிற்கு மேலும் மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஊக்குவிப்பதாயிருக்கின்றன. என்பதாகவும் கருதி இவைகளை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
முதலில் சில விஷயங்களைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் கும்பகோணத்தில் முஸ்லீம்கள் மகாநாட்டில் பேசினேன். அங்கு காங்கரஸ்காரர்கள், என்னைப்பற்றி தப்பாகவும், தவறாகவும், ஆத்திரமூட்டக் கூடியதாகவும் உள்ளதுமான துண்டுப் பிரசுரங்களை வாரியிறைத்தார்கள். அதுவுமல்லாமல் மகாநாட்டுக் கொட்டகையிலேயே கொண்டு வந்து பிரபல முஸ்லீம் தலைவர்களிடையே அத்திரமுண்டாகும்படி வினியோகித்
தார்கள். அத்துடன் அவர்கள் அசம்பாவிதமாய் நடந்து கொண்டதினால் பலாத்காரமும் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் அடிதடியும் நடைபெறும்படி ஏற்பட்டது. இதேபோல் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றத் தமிழர். மகாநாட்டிலும் சில பொறுப்பற்றவர்கள் விஷமத்தனமான நோட்டீஸ்களை கொண்டு வந்து கூட்டத்திலேயே கொடுத்தும் குழப்பத்தையும் விளை:
வித்தார்கள். அதன் விளைவும் கடைசியில் பலாத்காரத்தில் முடிந்தது. தேசீயப் பத்திரிகைகள் இவைகளைத்திரித்துக்கூறி கற்பனைப் படங்களுடன் பிரசுரித்தன.
77௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
மற்றும் காங்கரஸ் கூலிகளும் சில போலித் தலைவர்களும் அநேக இடங்களில் வேண்டுமென்றே என்னைப்பற்றி தப்பபிப்பிராயம் ஏற்படும்படி விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். “ராமசாமி காங்கரசில் இருந்து தள்ளப்பட்டு வெளியே ஓடி வந்துவிட்டவரென்றும், பணம் கேட்டு இல்லையென்றதினாலே காங்கரசை விட்டு வெளியே வந்து எதிர்ப்பிரசாரம் செய்கிறார் என்றும், பொப்பிலி பணம் கொடுப்பதால் கூலிப்பிரசாரம் செய்கிறார். என்றும், இப்போது முஸ்லிம்கள் பணம் கொடுப்பதால் முஸ்லிம்களுக்கு ஹிந்துக்களை காட்டிக் கொடுக்கிறார் என்பதாக பல தப்புச் செய்திகளும் விஷமப் பிரசாரங்களும் செய்யப்பட்டு வருகிறது
அப்படி எல்லாம் இருந்தும் நான் போகுமிடங்களிலெல்லாம் எனக்கு ஆடம்பரமான வரவேற்பளித்து நான் பேசுவதை கேட்கவும் பல ஆயிரக்கணக்காக வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வந்தனத்தை மீண்டுமொரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.
அநேகமாக நான் போய் பேசிவிட்டு வருகிற இடங்களில் இவ்விடத்திலில்லா விட்டாலும் பெரும்பாலான இடங்களில் மறுநாளே காங்கரஸ்காரர்கள் எனப்படுவோரும், பொறுப்பற்றவர்களும், கூலிகளும், காலிகளும் கூட்டம் போட்டு மேற்சொன்ன மாதிரி பொறுப்பில்லாமல் ராமசாமி அப்படியென்றும், இப்படியென்றும், தேசத்துரோகியென்றும், நாஸ்திகனென்றும், தாடி வைத்திருக்கிறான் என்றும் பெரியார் சிறியார் என்றும் இப்படி பலவாறாய்த்தான் பிரசாரம் செய்கிறார்களே தவிர, ராமசாமி சொன்னதில் இன்னின்ன விஷயம் தப்பு, இன்ன விஷயங்கள் உண்மைக்கு மாறானவை என்று விபரம் சொல்லி, காரண காரியங்களுடன் பதில் சொல்லுவதோ கண்டிப்பதோ யில்லை.
என்னைப் பொறுத்தவரையில் நான் யாருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க இங்கு வரவில்லை. எப்படிப்பட்ட அபிப்பிராயமாகவிருந்தாலும் ஆளையும், அவர்களின் யோக்கியதையையும் நன்கு கவனியுங்கள். எப்படிப்பட்டவர்களின் அபிப்பிராயமாகவிருந்தாலும் அதை நன்றாய்
ஆராய்ச்சி செய்து அது தவறுதலாயிருந்தால் அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்றுதான் சொல்லி வருகிறேன்.
இது வயிற்றுச்சோற்று பிரசாரமல்ல
எனக்கு அரை வயிற்றுக்காவது சோற்றுக்கு மார்க்கமிருக்கிறது. காங்கரசுக்கு வரும்போதே பல பதவிகளும் இருந்தன. ஆதலால் தேசீயத் தொண்டினாலோ அல்லது வேறு வாழ்வினாலோதான் வயிற்றைக் கழுவவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கோ என் குடும்பத்துக்கோ எப்போதுமில்லை. கெளரவத்தை உத்தேசித்தோவென்றால் அதுவும் காங்கரசின் பொது வாழ்விற்கு முன்னரே மக்களால் எவை, எவை உயர்ந்த கெளரவமான
குடி அரசு- 1938 (1) 78
ஸ்தானங்களாகக் கருதப்பட்டனவோ, அவைகளிலேயும் ஓரளவு அங்கம்
வகித்தும், தலைமை வகித்தும் பதவிப் பெருமைகளை அனுபவித்து வந்திருக்கிறேன். நான் காங்கரஸ் பாரத்தில் கையெழுத்துப் போடும்போது
1. எனது இன்கம்டாக்ஸ் வருஷம் 900 ரூபாய் 2. எனது வீட்டுவரி வருஷம் 2500 ரூபாய்: எனது பொதுநல கவுரவப் பதவியோ முனிசிபல் சேர்மெனாக இருந்தேன். காங்கரசுக்காக சேர்மன் பதவியை ராஜினாமா செய்த பின்பும் சர்க்கார் எனக்கு ஆனரரி இன்கம்டாக்ஸ் கமிஷனர். வேலை கொடுத்தார்கள். அதற்கு தினம் 100 ரூபாய் அலவுன்சும் இரட்டை முதல் வகுப்பு ரயிலில் படியும் உண்டு. இவைகளுக்கு எல்லாம் இப்போதும் சர்க்காரில் ரிகார்டு இருக்கிறது. இவையெல்லாம் பொய்யாக இருக்க முடியாது. ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால் என்னைப் பற்றிய விஷமத்தனமான இங்கு விஷயங்கள் விவகாரத்திற்கு வந்ததினால்தான். ஏதோ என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமலிருப்பதற்கே ஒரு பயனுள்ள தொண்டை செய்யலாமென்று கருதி இதில் ஈடுபட்டிருக்கின்றேனே யன்றி பதவிக்கோ பணத்துக்கோ எதற்காகவுமல்ல. இந்த நிலையில்
இருந்த காங்கரசில் எவ்வளவு திருட முடியும்? இந்த நிலையில் இருந்த நான் பொது வாழ்வில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?
நமது நாட்டில் சரியாகவோ, தப்பாகவோ பல ஜாதி, பல மதம், பல வகுப்பு, பல மக்களிருப்பதையும் அவைகள் நன்றாக வேரூன்றி வேற்றுமையை உண்டாக்கி நாட்டைக் கெடுத்திருக்கிறதென்பதையும் நீங்கள் யாரும் ஆட்சேபிக்க முடியாது. இங்கு இந்து - முஸ்லிம் வேற்றுமை, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கின்ற நமது சண்டை, உயர்ஜாதி - தாழ்ந்த ஜாதி என்கிற போராட்டம், பணக்காரர் - ஏழை வித்தியாசம், முதலாளி - தொழிலாளி போன்ற பலத்த கொடுமை போன்ற பல குழப்பங்களும் இருப்பதை நீங்கள் யாரும் இல்லை என்று சொல்லமுடியுமா? ஒரு வகுப்பான் மற்றொரு வகுப்பானை நம்புவதில்லை. ஒரு வகுப்பான் மற்றொரு வகுப்பானை அடக்கியாள ஆசைப்படுகிறான். ஒவ்வொரு ஜாதியானும் தாங்கள் மற்றவனை விட உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறான். அல்லாவிடில் இருக்கும் நிலையிலிருந்து மேல் ஜாதிஆக ஆசைப்படுகிறான். ஒவ்வொருவனும் மற்றவனை தாழ்ந்தவன் என்று நினைக்கிறானே தவிர மற்றவன் இவனை தாழ்வாய் மட்டமாய் நினைப்பதை இவன் அறியமாட்டேனென்கிறான். ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தாங்கள் மேல்ஜாதி ஆவதற்கு ஜாதிச்சங்கங்களை தோற்றுவிக்கிறார்கள் பறையர்கள் ஆதிதிராவிடர் சங்கமென்றும், சக்கிலியர்கள் அருந்ததியர் சங்கமென்றும், பள்ளர்கள் தேவேந்திர குல சங்கமென்றும், ஆசாரிகள் விசுவகுல பிராமண சங்கமென்றும், பட்டு நூல்காரர்கள் செளராஷ்டிரப் பிராமணர்கள் என்றும் நெசவாளர் தேவாங்கப் பிராமணரென்றும், 9௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
நாயக்கர், நாடார், படையாச்சிகள், நாயுடுகள், க்ஷத்திரியர் என்றும், நாட்டுக்கோட்டையார், வாணியர், வைசியர் சங்கமென்றும் கூட்டி பார்ப்பனர்களுக்குக் கீழ் என்பதை நிலை நிருத்துகிறார்கள்.
காங்கரசிலேயே பாருங்கள். சத்தியமூர்த்தி சாஸ்திரி ராஜ கோபாலாச்சாரியாரை கவிழ்க்கப் பார்க்கிறார். ராஜகோபாலாச்சாரியார். சத்தியமூர்த்தியைக் கவிழ்க்கப் பார்க்கிறார். அங்கும் அய்யர் அய்யங்கார். சண்டை இருக்கத்தான் செய்கிறது. இது போலவே தான் மதங்களின் யோக்கியதைகளும். ஒரு மதம் மற்ற மதத்தைக் கண்டிக்காமல் குறை கூறாமல் திட்டாமல் எதுவுமில்லை.
இந்த விபரங்களை நமது எதிரிகள் எனப்படுவோரும் அல்லது நம்மை எதிரியாக பாவிக்கும் காங்கரஸ்காரர்கள் பார்ப்பனர்கள் என்பவர்களும் உங்கள் முன் பேசும் போது “இந்த விஷயங்கள் எல்லாம் மிகவும் அற்பத்தனமானவையென்றும், வெள்ளைக்காரனால்தான் இப்பிரிவினைகள் இங்கிருக்கிற தென்றும், சுயராஜ்யம் வந்தவுடன் ஒரு நொடியில் இவைகளையொழித்துப் போடலாமென்றும்'' தத்துவார்த்தம் பேசுகிறார்கள். இவைகளைக் கேட்டு நீங்களும் ஏமாந்துவிடுகிறீர்கள்.
நம் நாட்டிலுள்ள எல்லாக் குறைகளுக்கும், கொடுமைகளுக்கும் காரணமான. ஒரு கூட்டத்தார் எல்லாவற்றிற்கும் உங்களிடம் வெள்ளைக்காரனைக்
குற்றம் சொல்லியே தேசீயத் தியாகிபட்டமும், தலைமைப் பட்டமும்
சம்பாதித்து விடுகிறார்கள். அவர்களே நமக்கு பிரதிநிதிகளாகவும், நமக்கு டிரஸ்டிகளாகவும், பாதுகாப்பாளர்களாகவும் ஆகி விடுகிறார்கள். இதை
மறுத்து உண்மையை சொன்னால் உடனே எனக்கு தேசீய விரோதி, சுயராஜ்ய தாகமில்லாதவன், நாஸ்திகன், பணம் சம்பாதிக்கிறவன் என்ற பட்டப் பெயர் சூட்டி விடுகிறார்கள். நான் சொல்வதெல்லாம் எனது சொந்த அபிப்பிராயம். என்னுடைய நீண்ட அனுபவத்தினால் ஏற்பட்டதையே சொல்லுகிறேன். நான் சரி என்று பட்டதையே சொல்லுகிறேன். உங்களுக்குப் பகுத்தறிவு இருப்பதால் எது நல்லது, எது கெட்டது என்பதை நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். நான் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக நம்ப வேண்டுவதில்லை.
சுயராஜ்யம் என்றால் என்ன?
நானும் உங்களிடம் தந்திரமாய் உங்களுக்கும் எனக்கும் புரியாத, சுயராஜ்யத்தை, தேசியத்தை, அரசியல் மோகத்தைப் பற்றி நிறைய பேசி, அதாவது “அடுத்த நிமிஷமே வெள்ளைக்காரனை இந்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே! கனவான்களே! வகுப்பை மறந்து விடுங்கள், கதர் உடுத்துங்கள், ராட்டினம் சுற்றுங்கள்” என்றெல்லாம் பேசினால் நீங்களும் என்னைப் பெரிய தேசீய வீரனாக மதிப்பீர்களென்று எனக்குத் தெரியும். என் படத்தை
குடி அரசு- 1938 (1) 80
தேரில் கோவிலில் வைத்து பூஜை நிவேதனம் செய்வீர்களென்பதை அறிவேன். ஆனால் சுயராஜ்யமென்றால் என்னவென்பதையாவது நான் தெரிந்துகொள்ள வேண்டாமா? அல்லது நீங்களாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்தியாவிலுள்ள 35 கோடி மக்களின் பிரதிநிதி ஸ்தாபனம் காங்கிரஸ் என்றும் அது சுயராஜ்யத்துக்குப் பாடுபடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுயராஜ்யம் என்றால் என்ன? எல்லா இந்திய காங்கரசுக்குத் தலைமை வகித்து இந்தியாவிலேயே பெரிய அரசியல் ஞானி என்னப்பட்ட இன்றும் தேசீயசிங்கம் என்கின்ற சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்ன சொல்லுகிறார் தெரியுமா? “சுயராஜ்யம் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு காங்கரஸ் தலைவராலும் விளக்கப்படவில்லை. காந்திகளும் நேருகளும்கூட விளக்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார்.
இதை நான் பொறுப்பில்லாமல் சொல்லவில்லை. இதோ தேசீயப் பத்திரிகையான 4.8.36 தேதி தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் இருக்கிறது. வேண்டுமானால் யாரும் பார்த்துக்கொள்ளலாம்
நமது தேசீயவாதிகளிலோ, ஒருவர் வெள்ளைக்காரர்களை விரட்டி விடுவதுதான் சுயராஜ்யமென்கிறார். மற்றொருவர் வெள்ளைக்காரர்களை விரட்டினால் மாத்திரம் போதாது ஏகாதிபத்தியத்தையே ஒழிக்க வேண்டுமென்கிறார். இன்னொருவரோ ஏகாதிபத்தியம் ஒழிவது மட்டும் போதாது அபேதவாதம் வேண்டுமென்கிறார். வெள்ளைக்காரர்களை விரட்டுவதையே கவனிப்போம். வெள்ளைக்காரர்களை விரட்ட வேண்டுமென்றால் அதில் இரண்டு கேள்வி வருகிறது. 1. எப்படி விரட்டுவது? 2. விரட்டிவிட்டு என்ன செய்வது? வெள்ளைக்காரர்களை விரட்டுவதற்கு காங்கரஸ்காரர்களிடத்தில் என்ன திட்டமிருக்கிறது? பரணிமேலே எறிந்த ராட்டினத்தை எடுத்து வைத்துக்கொண்டு தினமும் சுற்றினால் வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு ஓடிப்போய்விடுவான். என்று காங்கரஸ்காரர்கள் ஓயாமல் சொன்னார்கள். வருஷம் இருபதாய் ராட்டினம் சுற்றிப் பார்த்தாய் விட்டது. அதற்காக கோடி ரூபாய் செலவும் செய்தாய் விட்டது. படுகர் பொதவர் போல் மூரட்டுத் துப்பட்டி போர்த்துப் பார்த்தாய் விட்டது. அவன் ஓடிப்போவதாகக் காணோம் அப்படித்தான் ஓடாவிட்டாலும் முன்னையவிட அதிகாரமாவது குறைந்ததாவென்றால் அதுவுமில்லை. அது ஏறிக் கொண்டேயிருக்கிறது துப்பாக்கி வெடி குண்டினால் துரத்துவோமென்றாலும் அடி வாங்கிக் கொள்கிறதற்கு எங்களை முன்னே தள்ளிவிட்டு பங்கு வரும்போது மாத்திரம் பார்ப்பான் வந்து அடித்துக் கொண்டு போய் விடுகிறான். அப்படியே விரட்டி விடுவோ மென்றாலும் விரட்டி விட்டு யார் ஆட்சியை இங்கு ஏற்படுத்துவது. நீயாக விரட்ட முடியாவிட்டாலும் வெள்ளைக்காரனாகவாவது ஒரு 10 நாளைக்கு இந்தியாவை விட்டு வட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
விட்டு போய் மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்புறம் நிலைமை என்னவாகும்? சீனா, அபிஸீனியா கதிதானே. அபிஸீனியா மன்னர் மாதிரி “கடவுளே எங்கள் மக்களை காப்பாற்றுவார்” என்று சொல்லி உட்கார்ந்து கொண்டிருப்பதா? அல்லது வெளிநாட்டுக்காரன் யுத்தத்துக்கு வரும்போது நமது காந்தியாரின் ராட்டினத்தை தூக்கிக் கொண்டு போய் எதிரில் நிற்பதா? ஓடிப்போய் வருவதா? அல்லது தர்ப்பைப் புல்லைக் கொண்டுபோய் போட்டால் பயந்து போய் விடுவானா? அல்லது யாகமோ சத்துரு சங்கார மந்திர ஜஐபமோ செய்தால் அழிந்து விடுவானா? அல்லது பழைய நாயக்கர்மார்கள் எதிரி வந்தபோது துளசியை கொண்டு போய் கொட்டிய மாதிரி ராட்டினங்களை கொண்டு போய் கோட்டை வாசலில் போட்டு விடலாமா? என்ன செய்கிறது? வெள்ளைக்காரன் அரசாங்கத்திலேயே, 100க்கு 3 பேர் இருப்பவர்கள் ஆகிய பார்ப்பனர்கள் 10-க்கு நாலரையே அரைக்கால் மந்திரி பதவியும் 4க்கு 3 தலைவரையும், கழுகு கோழிக் குஞ்சை தூக்குவதுபோலும், பூனை எலியை தூக்குவதுபோலும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த காங்கிரஸை நாங்கள் எப்படி நம்பமுடியும்? இங்கிலாந்தில் வெள்ளையன்தான் அரசாட்சி செய்கிறான். அங்கு அவ்வெள்ளைக்காரனாகப் பிறந்தவனுக்கு எல்லாம் கஷ்டம் ஒழித்து விட்டதா? அங்கு வேலையில்லாத் திண்டாட்டமில்லையா? பட்டினியில்லையா? என்று கேட்கிறேன். இவைகளுக்கும் அந்நியனை விரட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?
அங்காகிலும் அரசனிருக்கும் நாடு என்று சொல்லலாம். பிரெஞ்சு
தேசம் குடியரசு நாடாச்சே, அங்கு கலகங்களும், தொல்லைகளும், பல
பட்டினிகளும், பல வேலையில்லாத் திண்டாட்டங்களும் அடிக்கடி நிகழ்வதில்லையா? இதெல்லாவற்றையும் விட அமெரிக்கா பூரணமான சட்ட திட்டத்துக்குட்பட்ட சமஷ்டி குடியரசு நாடு. அங்கேயிருந்தும் தொழிலாளர்களிடையேயிருந்தும் அவர்களால் நடத்தப்படும் பத்திரிகை எங்கட்கு வருகிறது. அங்கும் சராசரியாக 1% கோடி பேர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களாகவும், அரைபட்டினி, கால்பட்டினி, முழுப்பட்டினி கிடப்பவர்களாகவுமிருக்கின்றார்கள். படுப்பதற்கு வீடு இல்லாமல் ரோட்டில் கிடக்கும் குழாயில் படுத்துக் கொள்ளுகிறவர் களாகவுமிருக்கிறார்கள்.
இது ஒரு புறமிருந்தாலும், அரசனை துரத்திவிட்டு சமதர்மம் ஸ்தாபித்து மக்கள் தங்களுக்குள்ள அரசுரிமையை பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் தேசத்து கதியை பாருங்கள். 1931-ம் வருஷம் ஏப்ரலிலோ, மேயிலோ அரசனை விரட்டியதாக எனக்கு ஞாபகம். அன்றிலிருந்து இன்று வரை அந்நாட்டில் கலகம். அனேகர் தங்கள் செல்வங்களையே இழந்து அயல் நாட்டிற்கு போய் பிச்சையெடுத்து உண்கிறார்கள். நல்ல கட்டடங்கள், கலைகள் பாழாகின்றன. இவைகள் எல்லாம் எது இல்லாததால்
குடி அரசு- 1938 (1) 82
இக்கதிக்கு ஆளாயிற்று? சுயராஜ்ஜியம் இல்லாததாலா? “என்னடா ஒரு முடிவுக்கும் வர இடமில்லாமலிருக்கிறதே மனது குழப்பமாய் விட்டதே!” யென நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மனிதனுக்கு மனிதன். மதம், ஜாதி, தொழில், செல்வம் ஆகியவை கொண்ட சமுதாயத் துறையில் வித்தியாசம், உயர்வு தாழ்வு, பேதா பேதங்கள் ஒழியும் வரை ஒரு ஆட்சியும் உருப்படாது. மற்றபடி ஒரு நாட்டைக் கழுதை ஆண்டாலும்
சரி, கடவுள் என்பது ஆண்டாலும் சரி, மனிதர்களுக்குள் வாழ்க்கையில் எல்லா விதங்களிலும் சமம், ஒற்றுமையேற்படும் வரை சாந்தி யேற்படுவதில்லை. திருப்தி ஏற்படுவதில்லை. இவை அற்ற இடங்களில் விடுதலை சுதந்தரம் இல்லை. அதற்கு காங்கிரஸ் சம்மதிக்கிறதா?
இந்து முஸ்லீம் ஓற்றுமை
காங்கரசின் மேலும் தோழர் காந்தியாரின் மேலும் ஜனாப் அலி சகோதரர்களுக்கிருந்த மரியாதை அளவற்ற நம்பிக்கை ஆகியவைகள். பற்றி யாவருக்கும் சந்தேகமிருக்காது. அவர்கள் காந்தியாரின் உத்தம சிஷ்யர்களாகக் கருதப்பட்டவர்கள். காந்தியார் அவர்களை சிங்கம் மாதிரி சங்கிலி போட்டுக் கட்டி தன் கையில் இரு சங்கிலியைப் பிடித்துகொண்டு ஒரு சங்கிலியில் முகமது அலியும், மற்றொன்றில் ஷவுகத் அலியும் அப்படியே பிரிட்டிஷார் மீது பாய்கிறது மாதிரியும் அவைகளை காந்தியார் மிகவும் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது போலும் படம் போட்டிருந்தார்கள். ஏன்? இவர்களிருவரையும் காந்தியார் விட்டு விட்டால் அப்படியே பிரிட்டிஷார் மேல் பாய்ந்து விடுவார்களென்று முஸ்லீம்கள் இவர்கள் யாரையும் நம்பாமலும் கவலைப்படாமலும் தாங்கள். தனித் தொகுதி கேட்டார்கள். வங்காளப் பிரிவினையை காங்கரஸ்காரர்கள் கண்டித்தபோது இந்துக்கள் என்ன சொன்னார்கள். “ஐயோ! முஸ்லிம் ராஜ்யமாகப் போய்விடுமே, இந்த முஸ்லீம்களை அடக்க வேண்டாமா?” என்றெல்லாம் ஓலமிட்டார்கள். இந்த சமயம் முஸ்லீம்களின் உரிமையை நசுக்க காந்தியார் 21 நாள் பட்டினி கிடந்தார். “நாங்கள் எல்லாம் ஒற்றுமையாய் விட்டோம், நீங்கள் ஆகாரம் உட்கொள்ளுங்கள்” என்று காந்தியாரிடம் அலி சகோதரர்கள் வணங்கி தவமிருந்தார்கள். அவர்களை மேலும் ஏய்க்க கிலாபத்து இயக்கத்தையும் காந்தியார் பைத்தியக்காரத்தனமாக. மிகப் பிரமாதமாக்கி இந்துக்கள் எல்லோரையும் பிரசாரம் செய்யச் செய்தார். என்ன செய்தும் ஏய்க்க முடியவில்லை
காங்கரஸ் 1885-ம் வருஷத்தில் ஏற்பட்டது என்று சொன்னாலும் 1890லேயே காங்கரசால் தங்களுக்கு கேடு என்று கருதி காங்கரசை எதிர்த்து தனி உரிமை கேட்டார்கள். 1906ல் முஸ்லிம்கள் லீக்கை ஸ்தாபித்து சர்க்காரை வகுப்புரிமை தனித் தொகுதி மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த தனித்தொகுதி உரிமையை 1916ல் காங்கரசையே ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டார்கள். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆகவே இதையெல்லாம் காந்தியாராலும் காங்கரசாலும் எவ்வளவு சூழ்ச்சி செய்தும் ஏய்க்கவோ அழிக்கவோ முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கரசானது முஸ்லீம்களின் தனித் தொகுதி உரிமையை ஒத்துக்கொண்டு தீர்மானமும் செய்து ராஜி செய்து கொண்டது. இதுதான் லக்னோ பேக்ட் என்பது. இந்தப் பழைய கதையை ஏன் சொல்கிறேன்? நமது சகோதரர்கள் சாயபுமார்கள் தான் வகுப்பு வாரி உரிமை கேட்க நமக்கு வழிகாட்டியவர்கள். இதே சாயபுமார் கற்றுக்கொடுத்த பாடத்தைதான் நமது பார்ப்பனரல்லாத தலைவர்களும் பின்பற்றி தங்கள் பங்கு எங்கே என கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை அதாவது பார்ப்பனரல்லாதார் வகுப்பு வீதாசாரம் கேட்க ஆரம்பிக்கும் வரை காங்கரஸ் என்ன செய்தது? ஒவ்வொரு வருஷமும் அகில இந்திய காங்கரஸ் நடவடிக்கைகளில் முதல் தீர்மானமே “இந்த அரசருக்கும் அவர்களுக்கு இனிமேல் பிறக்கும் பிள்ளைகளுக்கும் நாங்களும் எங்கள் பின் சந்ததியாரும் கட்டுப்பட்டு ராஜ விசுவாசத்துட னிருப்போம்'” எனக்கூறி ராஜவிசுவாசத் தீர்மானம் செய்வார்கள். 1914 சென்னையில் நடந்த காங்கரசிலே இந்த தீர்மானம் முதலில் ஆரம்பத்தில் ஒரு தடவை தீர்மானிக்கப்பட்டு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கையில் மத்தியானம் 2 மணிக்கு கவர்னர் துரை வந்தார். உடனே மறுபடியும் ஒரு தடவை அவருக்கு தெரியும்படியாக எல்லா விஷயங்களையும் அப்படியே நிறுத்திவிட்டு மீண்டுமொரு முறை ராஜவிசுவாச தீர்மானத்தை சுரேந்திரநாத் பானர்ஜியே கொண்டு வந்து 1 மணிநேரம் பேசினார். அது நிறைவேறியவுடன் கவர்னர் எழுந்து தலையை சற்று ஆட்டிக் காண்பித்து விட்டு உடனே போய் விட்டார். இக் காரியங்கள் எல்லாம் 1917 - 1918, 1919 வரை நடந்தன. லக்னோ பாக்டுக்கு பிறகு சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார். வகுப்பு உரிமை கிளர்ச்சி அதிகமானதால், கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதாரே சட்ட சபைகளுக்கும், ஜில்லா போர்டுகளுக்கும், தாலூகா போர்டுகளுக்கும், முனிசிபாலிடிகளுக்கும் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று பார்ப்பனர்கள் தெரிந்து கொண்டார்கள். அதுவரையில் காமதேனுவாக இருந்த பிரிட்டிஷ்ஆட்சி முறையும் சட்ட சபைகளும், ஜில்லா போர்டுகளும், காங்கரஸ்காரருக்கு திடீரென்று கசந்தன. ராஜ விசுவாச பிரமாணத்தை நழுவவிட ஆரம்பித்தனர். சீ! இப் பழம் புளிக்கும் என்று இழிவாகப் பேச ஆரம்பித்தார்கள். ஏன்? பார்ப்பனரல்லாதார் பங்கு கேட்க ஆரம்பித்ததால் பார்ப்பன சூழ்ச்சியை வெளியாக்கினதால் தான். இம்மாதிரி கிளர்ச்சியைக் கிளப்பியது யார் என்று நினைக்கிறீர்கள்? காங்கரஸிலிருந்த பார்ப்பனர்களுக்கே, சதா எலக்ஷனில் வேலை செய்த டாக்டர் நாயரும் சர்.பி.தியாகராய செட்டியாருமாவார் என்பதை நீங்களறிய வேண்டும். தியாகராய செட்டியார் எலக்ஷனுக்கு நின்றால். பார்ப்பனச் சூழ்ச்சியினால் அவரை எதிர்த்து டாக்டர் நாயர் ஒரு
குடி அரசு- 1938 (1) 84
பார்ப்பனருக்கு வேலை செய்வது வழக்கம். அது போலவே டாக்டர் நாயர் நின்றால் சர்.பி.டி. செட்டியார் எதிராக ஒரு பார்ப்பனருக்கு வேலை செய்வார். ஒரு எலக்ஷனில் தியாகராயர் நின்றபோது டாக்டர் நாயர் இவர் மீது இன்சால்மெண்டு என்று ஆட்சேபணை பெட்டிஷன் கூட கொடுத்தார்.
காங்கரசிலே பார்ப்பன ஆதிக்கம் மிக வலுவாக இருந்தது. எந்த உத்தியோகங்களும், பதவிகளும் கிருஷ்ணசாமி அய்யர், சினிவாச அய்யர்,
சி.பி. ராமசாமி அய்யர், சினிவாச சாஸ்திரி, பி.ஆர். சுந்தரமய்யர், பி.எஸ். சிவசாமி அய்யர் முதலிய பிரமுகர்களுக்கே வந்து சேர்ந்தன. மக்களுக்கும், கடவுளுக்கும் நடுவில் அடிக்கடி பேசிக்கொண்டு வந்ததாக சொல்லப்பட்ட லோகநாயகியம்மையார், பெசண்டம்மாள் ஆதிக்கத்தினாலும் தயவினாலும் அய்யர் மார்களுக்கும் ஓர் குறைவு மில்லாமலிருந்தது. அதனால் அந்தம்மாள் காங்கரஸ் தலைவராகவும் பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டார்.
உத்தியோகம், பட்டம், பதவி பூராவும் அந்தம்மாள் தயவில் அய்யர், சாஸ்திரிமார்களுக்கே போய்க்கொண்டிருந்ததால், அய்யங்கார் கூட்டம் இந்த பெசண்டம்மையாரையும் அய்யர் ஆட்சியையும் ஓர் முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்டார்கள். இதற்கு ஆக சத்தியமூர்த்தியாரை சம்பளத்துக்கு சேர்த்துக் கொண்டார்கள். இந்த சமயத்தில் தான் பார்ப்பனரல்லாதார். தங்களுக்குள் சுயமரியாதை பெற்று கிளர்ச்சி செய்தார்கள் (தொடரும்)
குறிப்பு: 19, 20, 21.01.1938 ஆகிய நாள்களில் பொள்ளாச்சி, உதக மண்டலம், குன்னூர் ஆகிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 23.01.1938
85— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை
சபாஷ் சந்திரபோசுக்கு பாம்ப்பனர்கவின் (ஆனந்தவிகடனின்) சர்ட்டிபிகேட்
சுபாஷ் போஸுக்கு ஒரே ஒரு குறை மட்டும் உண்டு. சுபாஷ் போசுக்கு மற்ற தேசத்தலைவர்களுடன் ஒத்து உழைக்கும் இயல்பு அவ்வளவு போதாது. தேசபந்து காலஞ்சென்றதும், உடனே தாம் வங்காளத்தின் தலைவராக வரவேண்டுமென்பதில் கொஞ்சம் அவசர புத்தி காட்டினார். இதன் பயனாக, உரிய காலத்தில் வங்காளத்தின் ஒப்பற்ற தலைவராக வரவேண்டியவர் ஒரு கும்பலின் தலைவர் ஆனார். வங்காளத்தில் காங்கரஸ்காரர்கள் பிளவுபட்டு, காங்கரஸ் வேலைகள் ரொம்பவும் சீரழிந்து போயிருந்ததற்கு ஸ்ரீ சுபாஷ் போஸ் பெரிதும் பொறுப்பாளி என்பதை தேசம் மறந்துவிடமுடியாது'' ஜவஹர்லாலுக்கு இதே பார்ப்பனர்கள் (சுதேசமித்திரன்) கொடுத்த நற்சாட்சி பத்திரம் முன்னமே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. எனவே எந்தத் தலைவரானாலும்
சரி, பார்ப்பன அடிமையாய் இருந்தால் விளம்பரப்படுத்தி மகாத்மா வாக்குவதும் சுதந்தர புத்தி கடுகளவாவது இருந்தால் அவர் எப்படிப்பட்ட தியாகியானாலும் இழிவுபடுத்தி ஒழிப்பதும் பார்ப்பன இயற்கை - ஆரிய தர்மம் என்பதை உணர்வோமாக
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 23.01.1938
குடி அரசு- 1938 (1) 86
பார்ப்பனருக்கும் ரயில்வேகாரருக்கும் ஓப்பந்தமா?
நம் நாட்டில் சுதந்தரமும் சுயமரியாதையும் சொந்த அரசியலும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களால் அழிந்து போனதல்லாமல் மனித சமூகம் வஞ்சக மதத்துக்கும் ஒழுக்கமும் நீதியும் அற்ற கடவுளுக்கும் முட்டாள்தனமும் பித்தலாட்டமும் நிறைந்த மூடநம்பிக்கைக்கும் அடிமைப்பட்டு பெருவாரியான மக்கள் ஒரு வெகு சிறுபான்மையான வன்னெஞ்ச வஞ்சகர்களுக்கு ஆளாகி இன்னல் படுவதும் மிருகங்களிலும் மலத்திலும் கேவலமாக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருப்பதும் தமிழ் நாட்டுச் சரித்திரம் அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள். இம் மாதிரியான நிலைமை நம் நாட்டுக்கு ஏற்பட்டதற்கு காரணம் மக்கள் ஒன்று சேர்வதற்கு இல்லாமலும் சுதந்தரத்தோடு விஷயங்களை ஆராய்ச்சி செய்து முடிவு பெறுவதற்கில்லாமலும் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பதற்கு இல்லாமலும் மக்களை அடிமை படுத்தி வைக்க வென்றே ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட இந்து மதம் என்னும் ஆரிய சூழ்ச்சி மதமே ஆகும். அம்மதமானது “சிறுபான்மையோர் பெரும்பான்மையோரை அடக்கி ஆட்கொண்டு ஆட்சி புரிய வேண்டுமானால் அம் மக்கள் சமூகத்தை பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்து ஒருவரை ஒருவர் வெறுத்து துவேஷிக்கும் படியும், உதை போட்டுக்கொள்ளும்படியும் செய்துவிட வேண்டும்.” அவர்கள் என்றும் ஒன்றுகூடாமலும், அறிவு பெறாமலும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற பஞ்ச தந்திர வாக்கியத்துக்கு இணங்க ஆரிய மதமானது நம் மக்களை பல்வேறு ஜாதி வகுப்பாய் பிரித்து உயர்வு தாழ்வும், மேன்மையும் இழிவும் கற்பித்து ஒருவரை ஒருவர் தொடவும், காணவும் கூட சகிக்க முடியாத மாதிரி ஆச்சார அனுஷ்டானம் கற்பித்து நம்மைச் சின்னாபின்னப்படுத்தி வைத்திருப்பதால் இன்று ஆரியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் 100க்கு 3 பேராய் இருந்தும் அவர்களே தங்களுக்கு வேண்டியவர்கள் இடம் நாட்டை பிடுங்கிக் கொடுத்து அவர்களுக்கு தாங்களே ஒற்றர்களாகவும் தரகர்களாகவும் இருந்து நம்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்கள் சரீரப் பிரயாசை இன்றி நல்வாழ்வு நடத்த முடிகின்றது. இது விஷயமாய் அனேக சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மேதாவிகள், நிபுணர்கள் முதலியவர்கள் தக்க ஆதாரங்களைக் காட்டி விளக்கி இருக்கிறார்கள் ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இவற்றை செவ்வனே உணர்ந்த நம் நாட்டு மக்கள் இக்கொடுமையில் இருந்து விடுதலை பெற சிறிதும் கவலையற்றவர்களாகி எப்படியாவது
உயிர் வாழ்தலே போதும் என்கிற அடிமை வாழ்க்கையிலேயே மூழ்கி அழுந்தி விட்டார்கள்.
ஆனால் காலத்தின் கோலமானது - இந்த இருபதாம் நூற்றாண்டின் உணர்ச்சியானது மக்களுக்கு மாத்திரமல்லாமல் காட்டு மிராண்டிகளும் மிருகாதி ஜீவன்களும் கூட விழித்தெழுந்து முற்போக்கடைய முனைந்து உழைக்கும் இக் காலத்தில் நம் தமிழ்மக்கள் மாத்திரம் “ஆரியர் பாதமே மோக்ஷ சாம்ராஜ்யம்” என்றும் அவர்களுக்கு அடிமையாய் இருப்பதே “இந்திர போகம்'' என்றும் கருதி வாழ்வது மிக மிக மானக்கேடான இழிவான வாழ்க்கை என்றே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது
அக்காலத்தில் தான் தமிழ் மக்கள் கடவுள் பேராலும் மோட்சத்தின் பேராலும் ஆரியத்திற்கு அடிமையானார்கள் என்றால் சுயமரியாதைக்காரர்கள். செயலால் கடவுளும் மோக்ஷமும் ஒரு அளவுக்கு வெட்ட வெளிச்சமாகியும் மேலும் பழையபடியே அரசியல், கல்வி இயல் முதலியவற்றால் பழைய உணர்ச்சியைக் கிளப்பி பழையபடியே மனிதன் மோகஷத்திற்குப் போவதற்குப் பார்ப்பனரிடமே அனுமதிச்சீட்டு பெறும்படி செய்து வருகிறார்கள்.
இதற்காக புராண உணர்ச்சியை மக்களுக்குள் ஏற்றுவதல்லாமல் மக்களது செல்வத்தைக் கொள்ளை கொள்வதல்லாமல் இவற்றிற்காக இதுவரை இருந்துவந்த முட்டாள்தனமானதும் மூடநம்பிக்கையானதுமான காரியங்கள் ஒருபுறமிருக்க இப்போது புதிதாக பல சூழ்ச்சிகள் செய்து வருகிறார்கள்.
மகோதய புண்யகாலம்
இச்சூழ்ச்சிகளில் தலைசிறந்து விளங்குவதும் புதிதாகக் கண்டுபிடித்திருப்பதும் “மகோதய புண்ணிய காலம்” என்பது போன்ற பித்தலாட்டங்களேயாகும்
சமீப காலமாக பத்திரிகைகளிலும், ரயில்வே கைட்களிலும், ஸ்டேஷன் சுவர்களிலும் பிரமாதமாய் விளம்பரப்படுத்தப்படுவது மேற்குறிப்பிட்ட “மகோதய புண்ணிய காலத்துக்கு வேதாரண்யத்துக்கு போய் மக்கள்
ஸ்நானம் செய்து, தங்களுடைய சகல பாவங்களையும் தொலைத்து ஒரு கோடி புண்ணியத்தைப் பெறுங்கள் என்கிற விளம்பரமும் பத்திரிகை வியாசங்களும் பார்ப்பன பிரசாரமுமாகும்.
இந்தப் பித்தலாட்டப் பிரசாரம் நமது புரோகிதர்கள் ரெயில்வேக்காரர். களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மக்களை ஏய்த்து காசுபறிக்க கற்பனை செய்து கொடுக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தப் பிரசாரம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதற்காக இந்த “மகோதய புண்ணிய காலத்துக்கு” ஆக 80% ரயில்வேகாரர் இந்த பார்ப்பனீயத்தை நம்பி வேதாரண்ய
குடி அரசு- 1938 (1) 88
சமுத்திரக்கரையில் பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து பந்தல் போடவும், மக்களை அங்கு கொண்டுவந்து சேர்க்கவுமான காரியம் ஒருபுறம் செய்கிறார்கள். நமது பார்ப்பனர்கள் மற்றொருபுறம் பத்திரிகைகளில் “புண்ணிய காலத்தின் பெருமை“யைப் பற்றிய புராணம் எழுதி பிரசாரம் செய்கிறார்கள். இந்த பிரசாரமானது என்ன குறைந்தாலும் சுமார் ஒரு 50 ஆயிரம் பேர்களையாவது வேதாரணியம் கோடிக்கரை துறைக்கு இழுத்து வந்துவிடும். இதனால் ரயில்வேகாரருக்கு செலவு போக 50, 60 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் லாபம் கிடைக்கும் என்பதிலும் புரோகிதப் பார்ப்பனர்களுக்கு குறைந்தது 30, 40 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் ஆதாயம் கிடைக்கும் என்பதிலும், மொத்தத்தில் பொது மக்களுக்கு மற்றும் பல செலவுகள் சேர்ந்து ஒரு இரண்டு மூன்று லக்ஷ ரூபாயாவது பாழாகப் போகும் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை. இந்தத் தொகைகள் மிக மிக குறைவான உத்தேசத்திட்டம் என்றே சொல்லவேண்டும்.
வருஷம் தோறும் தொல்லை வருஷா வருஷம் தவறாமல் நம் நாட்டில் கடிகாரம் சுற்றுவது போல் நடந்து கொண்டு வரும் உற்சவம் பண்டிகை புதிய தேர் திருவிழா முதலியவைகளால் மக்கள் அடையும் கஷ்டமும் நஷ்டமும் சொல்லி முடியாது. எழுதி ஆகாது. சென்னை மாகாணத்தில் எண்டோமெண்ட் போர்ட் கணக்குப்படி கடவுள்களுக்கு மடங்களுக்கு வரும்படி (255) இரண்டரை கோடி ரூபாய் ஆகும். இது தவிர மக்கள் தங்கள் சொந்தத்தில் இதற்கு ஆக செலவழிக்கும் போக்குவரவு செலவு தொகை 5 அல்லது 6 கோடி ரூபாய் என்றால் இது அரை குறை கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வருமானம் இரண்டரை கோடி ரூபாயிலும் சொந்தத்தில் செலவழிக்கப்படும் 5-6 கோடி ரூபாயிலும் % பாகம் ரயிலுக்கும் வண்டிக்கும் 3 பாகம் பார்ப்பனர்களுக்கும் மற்றபடி Y பாகம் வியாபாரிகள், தாசிவேசிகள், தரகர்கள், சோம்பேறிகள், அண்ணாத்தைமார்கள் ஆகியவர்களுக்குமே போகக் கூடும். இவற்றால் மக்கள், அல்லது நாடு, அல்லது சமுதாய ஒழுக்கம் முதலியவை அடைந்த பயன் என்ன? என்று யோசிக்க வேண்டியது அறிவு படைத்த மனிதனின் கடமையாகும். இது இப்படி இருக்க இந்த மகோதய புண்ணியகாலப் பித்தலாட்டப் பிரசாரம் இவற்றிற்கு மேலாக என்ன பயனைக் கொடுக்கக் கூடும். இது போன்ற பல புண்ணிய கால புரட்டுகளுக்கு நேரில் சென்று அங்கு நடக்கும் ஆபாசங்களையும் அயோக்கியத்தனங்களையும் கண்டறிந்த தோழர்கள் பலர் உண்டு. ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு எண்ணத்தின்மீது பெண்டு பிள்ளைகளுடன் ஸ்நானத்துக்குப் போவதும், அங்கு சென்று
கூட்டங்களின் பலவித ஒழுக்க ஈனமான காரியங்களுக்கு ஆளாவதும் நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நமது பெண்கள் சமுத்திரக் கரையில் ஸ்நானம் செய்வதும் ஹட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
மேலே வந்து துணியைப் பிழிந்து கட்டுவதும் அது காற்றினால் தலைக்கு மேலே தூக்கப்பட்டு விடுவதும் மானமிழந்து உட்கார்ந்து கையை போர்த்திக் கொள்ளுவதும் இதையே மகோதய புண்ணிய கால தரிசனம் என்று பல ஆண்கள், வாலிபர்கள் வேடிக்கை பார்ப்பதும் சாதாரண - வெகு சாதாரண காட்சியாய் இருந்து வருகிறது. மற்றும் திருடர்கள் முடிச்சவிழ்க்கிகள். வந்து பணம், நகை, திருடுவதும் வாலிபர்கள் பெண்களைக் கூட்டத்தில் கசக்கி பிசைவதும் ஒருவரை ஒருவர் ஆண் பெண்கள் பார்த்து சிரித்து கண் அடித்துக் கொள்வதுமான இம்மாதிரி காரியங்கள் மலிவாக நடைபெறுவனவாக இருக்கின்றன. எனவே இவ்வித சம்பவங் கொண்ட காரியங்களைப் பற்றி சிறிதும் கவலை இல்லாமல் புரோகிதர் தங்களுக்குப் பணமும் ரயில்காரருக்கு டிக்கட் விற்பனையும் கிடைத்தால் போதுமென்று இவ்விருவரும் ஒப்பந்தம் பேசிக் கொண்டு பாமர மக்களை பட்டி மாடுகள் போல் கொண்டு போய் அடைக்க முயல்வது யோக்கியமா? என்று யோசிக்க விரும்புகிறோம்.
“மித்திரன்? பிரசாரம்
இந்த மகோதய புண்ணிய காலத்தைப்பற்றி “சுதேசமித்திரன் 15.1.385 தேதி பத்திரிகையில் எழுதியிருப்பதின் சில வாக்கியங்களை குறிப்பிடுகிறோம்.
-கோடிக்கரையில் ஸ்நானம் செய்பவர் தாம் அறிந்தும் அறியாமலும் செய்துள்ள சகல விதமான பாபங்களினின்றும் விடுபட்டு, இம்மை மறுமைப் பயன்களை அடைகிறார்கள் என்றும் கோடி ஜன்மங்களில் செய்த தவத்தின். பயனாகவே ஒருவருக்கு மஹோதய ஸ்நான பலன் ஏற்படுகிறது என்றும் ஒரு கோடி சூரியகிரஹண புண்ய காலங்களில், கங்கா நதியில் ஸ்நானம் செய்த பலன் மஹோதய புண்ய காலத்தில் ஒரு தடவை சேது ஸ்நானம் செய்வதினால் கிட்டுமென்றும் கோடியக்ஞு பலனை அளிக்கக் கூடியதென்றும், இப்புண்ய காலத்தின் பெருமையை முனிவர்கள் பலர் வெகுவாகப் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள்” என்றும் எழுதுகிறது
சேது கட்டங்கள்
மற்றும் அப்பத்திரிகை “சேது கட்டங்கள் மூன்று. அவை கோடிக்கரையாகிய ஆதி சேதுவும், தனுஷ்கோடியாகிய ராம சேதுவும், மஹாபலிபுரமாகிய உத்தரசேதுவுமேயாகும். இம்மூன்று கட்டங்களிலும் மஹோதய புண்ய காலத்துக்கு மிகவும் சிரேஷ்டமாய்க் கருதப்படுவது கோடிக்கரை (Point சங்யஎயேயாகும்” என்றும்
எழுதி விட்டு மக்களுக்கு இந்தப் புண்ணியம் சுலபத்தில் கிடைக்க ரயில்வே கம்பெனியார், ஏராளமான சவுக்கியம் செய்திருப்பதாய் ரயில்வேகாரரையும் புகழ்ந்து கூறி மக்களை அவசியம் கோடிக்கரைக்கு வரும்படி அழைக்கிறது. இது யோக்கியமான பிரசாரமாகுமா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
குடி அரசு- 1938 (1) 9
எந்தப் பாவம் செய்தாலும் தெரிந்து மனதார வேண்டுமென்றே செய்தாலும் இந்த உப்புத்தண்ணீரில் குளித்துவிட்டால் மன்னிக்கப்பட்டு விடுமென்றால் மனிதன் பாவம் செய்யத்தூண்டுவதற்காகவே சேதுக்கள். என்பவை ஏற்பட்டன என்பது புலனாகவில்லையா? என்று கேட்கிறோம்
“எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் 4 அணா கொடுத்து காங்கரஸ் மெம்பராகிவிட்டால் மகா பரிசுத்த யோக்கியனாவதுடன். சுயராஜ்யமே பெற்று விடுகிறான்” என்று சொன்ன பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியாரின் பித்தலாட்டப் பேச்சுக்கும், இந்த “சுதேசமித்திரன்” பிரசாரத்துக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா? என்று கேட்கின்றோம் ஆகவே நம் பார்ப்பனர்கள் அரசியலையும், சமுதாய இயலையும், மத இயலையும் இம்மாதிரி தங்கள் சுயநலத்துக்கும் அந்நியனுக்கு நாட்டை, செல்வத்தை, மானத்தைக் காட்டிக் கொடுத்து சோம்பேறி வாழ்க்கை வாழ்வதற்கும் உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பதை வெளியாக்கினால் தேசத்துரோகி நாஸ்திகன் என்று சொல்லி அடக்கப் பார்த்தால் இதற்காக யார்தான் பயப்பட முடியும்? ஆகவே தமிழ் மக்களுக்குச் சிறிதாவது மானமோ அறிவோ இருக்குமானால் இப்படிப்பட்ட வஞ்சகங்களுக்கு இடம் கொடுக்க முடியுமா? என்று கேட்டு இதை முடிக்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 23.01.1938
ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தமிழர்கன் இனி என்ன செய்யப் போகிறார்கள்?
சரணாகதி மந்திரிசபை தமிழ் நாட்டிலே, ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம், வர்ணாச்சிரமமாகிய விஷங் கலந்த இத் திட்டத்தைத் தமிழர் உண்டு மாள்வரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரிசபையின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்காதிருக்க வேண்டுமே என கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மைப் போன்றே தமிழ் உலகும் கருதிற்று தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ் நாடு கொந்தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி பிரதி தினமும் ஹிந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றன. “தமிழ் மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கம் மூலை முடுக்குகளிலும் எழும்பிற்று. தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்பு சங்கங்களென்ன, ஹிந்தி எதிர்ப்பு சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ் நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும், மாஜி மந்திரிகளும், காங்கரஸ் மீது காதல் கொண்டோரும், பிரபலஸ்தர்களும், வாலிபர்களும், பொது மக்களிடை நிரந்தரமான தொடர்பைக் கொண்டுள்ள ௯.ம. இயக்கத் தலைவரும், தோழர்களும் இத்திட்டத்தை கண்டித்துப் பலத்த பிரசாரத்தை இடைவிடாது தென்னாடு பூராவும் நடத்தினார்கள். இக் கிளர்ச்சியின் உருவாகவே பல பிரத்யேக மகாநாடுகள் நடைபெற்றன.
கிளர்ச்சி, கண்டனம் ஆகியவற்றைக் கண்ட மந்திரி கனம் சுப்பராயனே கோவையில் “ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக மும்முரமாக இருப்பதாக” ஒப்புக்கொண்டார். அதிகார அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆச்சாரியார் இந்த பலத்த கிளர்ச்சிக்கு விடுத்த பதில் “தமிழர்கள் அறிவிலிகள் - குரங்குகள்” என்பதேயாகும். காங்கரஸ் திட்டமல்லாத தேர்தல் வாக்குறுதியில் காணப்படாத இத்திட்டத்தை மக்கள் விருப்பத்திற்கு மாறாக கொண்டு வரும் ஆச்சாரியாரின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து, திருச்சியில் தமிழ் மாகாண மகாநாடும் நடைபெற்றது, அதிலே மாஜி மந்திரிகளும், மற்றும் பொதுஜன அபிப்பிராயத்தை சிருஷ்டிக்கும் பிரபலஸ்தர்களும் பொது மக்களுமாக 5000 பேர்கள் கலந்து கொண்டனர்.
குடி அரசு- 1938 (1) 92
அது சமயம் அங்கு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் சொன்னதாவது இந்த ஹிந்தி பாடத்திட்டத்தை, மந்திரிமாரும் கவர்னரும் கலந்தே ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிகிறது என்றும் ஆதலால் கவர்னர் இதற்கு “ததாஸ்து” கூறத் தயாராகவே இருக்கிறார் என்றும் மற்றும் அவர் தமது அரசாங்கத்திற்குப் பழுது ஏதும் ஏற்படாத வகையிலே மந்திரிகள் காட்டிய இடத்தில் கையொப்பம் செய்துகொண்டு சரணாகதி மந்திரிகளை: பிரிட்டிஷ் ஏகாதிபத்திய இயந்திரத்தில் கை வைக்காதிருக்கப் பார்ப்பதிலே கவலை கொண்டு தமக்கும் தம் வர்க்கத்தவருக்கும் மந்திரிகளால் துதிபாடச் செய்து மகிழ்ந்து இருக்கும்போது தமிழர் தலையில் ஆச்சாரியார் கை. வைத்தாலும் அல்லது குரல் வளையைப் பிடித்து அழுத்தினாலும் அதற்காக, கவர்னர் சிறிதும் கவலைப்படவோ, அல்லது தமிழுக்காக பரிந்து பேசவோ, தமிழர் உரிமைகளைக் காப்பாற்றவோ முன்வரமாட்டார்” என்றுங் கூறினார். ஆச்சாரியாரை சட்டாம் பிள்ளையாகக் கொண்டு காங்கரஸ் ஜோதியில் கவர்னர் கலந்து விட்டார். ஆகவே அவரிடத்து நமக்கு நம்பிக்கைஇல்லை என்று கூறி தீர்மானமும் கொண்டு வந்தார். மகாநாட்டிலே சிலருக்கு இதனால் பயமும் கிலேசமும் ஏற்பட்டது. “நமது சத்தம் கவர்னர் செவிக்கு இன்னும் எட்டவில்லை. அது வரை நாம் பொறுப்போம்? என்றனர். தமிழருக்குத் தீங்கிழைக்கும் ஆச்சாரியாரின். போக்கை கவர்னருக்கு எடுத்துக் காட்டினால் அவர் நியாயம் வழங்குவார் என எண்ணி “கவர்னரைக் கண்டு விஷயத்தை விளக்க, ஒரு தூதுக் கோஷ்டியை அனுப்புவோம்” என்றனர். அதிலே தோழர் ஈ.வெ.ரா. கலந்து கொள்ள முடியாதென்பதை அப்போதே தெரிவித்தார். ஏன்? தமிழர் தூது கோஷ்டியை கவர்னர் மதிக்க மாட்டார் என்று தெரிந்தே
தான். ஆச்சாரியாரின் ஹிந்தி திட்டத்திலே கவர்னர் குறுக்கிடமாட்டார். ஏனெனில், பிரிட்டிஷ் சர்க்காரை பொறுத்த வரையில் அந்தத் திட்டத்தால் ஒரு விதமான நஷ்டமும் இல்லை. மக்கள் மூடர்களானால் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு லாபமோ அவ்வளவு பங்கு பிரிட்டிஷாருக்கும் உண்டு அல்லவா? ஆகவே இந்த கவர்னர் மீது தமிழருக்கு நம்பிக்கை இருக்கக் காரணமே யில்லை என்றார். அவர் எண்ணியபடியே இன்று விஷயம் நடந்தது. இரண்டு
மாஜி மந்திரிகளும், மற்றும் பல பிரபலஸ்தர்களும் கொண்ட தூது கோஷ்டியை பார்க்க முடியாதென கவர்னர் தெரிவித்துவிட்டார். தமது மொழி,
வாழ்வு இவற்றிற்கு ஆபத்து வருகிறது, அதனைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்வதற்காக தமிழ் மாகாண மகாநாட்டுத் தூது கோஷ்டியார் பேட்டி கேட்டனர். இந்த மாகாண கவர்னர் கையை விரித்து விட்டார். தமிழர்கள் விஷயத்திலே மேன்மைதங்கிய கவர்னர் கொண்டுள்ள கருணை விளங்கிவிட்டது.
இந்த மாகாணத்திலே சட்டத்தை, சாந்தத்தை, சமாதானத்தைக் குலைத்து சண்டித்தனமும், காலித்தனமும் செய்து அரசாங்கத்திற்குத் தொல்லையும் அல்லலும் தந்து வந்தவர்களுடன் கைகோர்த்து விருந்துண்டு. ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
குஷாலாக வாழ்ந்து வரும் கவர்னருக்கு சாந்தமும் சமாதானமும் நிலவ வேண்டும் - சட்டங்கள் சரியாகத் துலங்க வேண்டும் என்று பாடுபட்டவர்களும் வீண் கிளர்ச்சிக்காரர்களின் கை வலுக்காதிருக்க வேண்டி, வேலை செய்து வந்தவர்களும் இன்று கவர்னருக்கு அலட்சியமாகக் காணப்படுவதை நோக்கினால் - அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் ஒரு பேட்டி அளிக்கவுங்கூட மனமில்லை என்று கவர்னர் இருப்பதைப் பார்த்தால் உண்மையிலேயே சாந்தத்தை குலைத்து சட்டத்தை மீறி சர்க்காருக்குத் தொல்லை கொடுத்தால் தான் நியாயம் கொடுக்கப்படும் என்று கவர்னர் எண்ணுகிறாரென்றே தெரிகிறது. நேற்றுவரை சட்டத்தை உடைத்து, சண்டித்தனம் செய்தவர்கள், இன்று சரணாகதி சட்டாம் பிள்ளைகளானதால், கவர்னர் தமிழர் கொதிப்பையோ, கிளர்ச்சியையோ, லட்சியப் படுத்தமாட்டேன் என்று இறுமாப்பான பதிலளிக்கத் துணிந்து விட்டார் போலும். சட்டத்தை மீறி சதாகாலமும் சர்க்காருக்குத் தொல்லை கொடுப்பவர்களுடன், கூடிக் குலாவும் கவர்னர், தமது பதிலால் சாந்தத்தை விரும்பும் பெரும் பகுதியினரை சட்டத்தை
மீறி சர்க்காருக்குத் தொல்லை கொடுக்கும் வேலையில் இறங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் கொண்டு வருகிறார், தூண்டுகிறார். என்றே எண்ணுகிறோம். தமிழர்கள் தமது கிளர்ச்சியைக் கூடுமான வரையில் நல்ல முறையிலேயே நடத்திக் காட்டினார்கள். தமிழர்கள் தமது அதிருப்தியையும் தெரிவித்து விட்டனர். இவ்வளவிற்குப் பிறகும், தமிழர்களுக்குக் கவர்னர் தந்த பதில் “தூதுக் கோஷ்டியைப் பார்க்க முடியாது” என்பதுதான். தமிழர்களே! இது தான் உங்கள் நிலைமை. தமிழர்களைப் பற்றி கவர்னர் கொண்டுள்ள எண்ணமும், தமிழர்களிடம் நடந்து கொள்ளும் போக்கும் இதுதான். இனி தமிழர்களே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.01.1938
குடி அரசு- 1938 (1) 94 95
கணு சத்து @ I . ட
ங் No. M. 2041
1194ல் ஸ்தாபிக்கப் o ய்போருல் வா் வார் வாய்க்கேட்பிதாம் o கு அப்பொ S i எ:
காலை 13, { ஈரோடு Wanw-EP மைனி 17. |
வடஙஙஒடகக
SHSEETLESELTEEES வங்ஒ ஙந ஙு ஒங்களை நாக இலிழர்களுக்கு வேண்டுமோ
©LE655555555E50E0E! 3543 PELEEUEESSE65E6 S
கசவ்கன்
[நடல்பங்குளக் 1. தாரசயணன:]
(taiabal Guc)
58555555569555555 9659595 495955555
BLOEGELEESHEESEE5S
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
குடி அரசு- 1938 (1) 96
கடவுள் பற்றிய விளக்கம்
என் தொண்டிற்கு இடமுண்டு
கிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான். உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாகக் கூடும் அளவை விட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு - ஜாதி இழந்தவனெனவும், தேசத் துரோகி யெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும் அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுகள் உள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன். விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.
இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும்போது, உண்மையிலேயே என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், அதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன். உங்கள் வரவேற்புப் பத்திரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.
வீண் விவாதத்தைக் கிளப்புகிறார் இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம் கடவுள், மதம் என்பதாகும். வேறு எந்த விதமான பிரசாரகர் வந்த போதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களை பற்றி அவர்களை கேட்பதில்லை. ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள். நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவோ சீவன மார்க்கமாகவோ கொண்டவனுமல்ல. அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றிப்
பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல. எங்களுடைய வேறு முக்கியமான:
- நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும்போது அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடத்தில் ஏட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு. கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய
நிர்ப்பந்தத்திற்கு எங்களைக்கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படி இருந்த
போதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை:
கடவுள் - மத கற்பனை
மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல் - தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது. காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும் அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் செளகரியங்களை மனிதன் அமைத்துக்கொள்கிறான். இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை. சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை.
ஆனால் பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப்பற்றி கவலை இல்லை. அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால் மனித சமூகத்துக்குத் தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர - சுகவாழ்வுக்குப் பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார் - மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு - கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.
மதம் உதாரணமாக மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து ஆண்டான் அடிமை தன்மை மாறி ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்தரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால் தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும்
தம் பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கே போட்டு, எங்களைத் தடைபடுத்தும்போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறோம்
குடி அரசு- 1938 (1) o8
தீண்டாமையை மேல் ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆக வேண்டும் என்கிறோம். தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது. அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டி வந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, “மதம் போச்சுது மதம் போச்சுது" என்று விஷமப் பிரசாரம் செய்து, எங்களை மதத்துரோகி என தூற்றிவிட அவர்களால் சுலபமாக முடிகிறது
கடவுள்
கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக்கொண்டு பார்ப்போம் அதுவும் இப்படித்தான். அதாவது கடவுளைப்பற்றி விளக்க இதுவரை எத்தனையோ ஆத்ம ஞானிகள், சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடு பட்டிருக்கின்றனர். ஆனால் முடிந்ததா? முடிவு இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரிய வைக்க முடிந்ததா?
“கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது” என அடுக்கிக்கொண்டே போய், அப்படிப்பட்ட
ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக்கொண்டு தான் ஆகவேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.
இன்று இந்நாட்டினரால் மனித ஆத்மாவுக்கு மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி மகாத்மா என்று சொல்லப்படுபவராகிய தோழர்.
காந்தியார் “சத்தியம் தான் கடவுள்” என்கிறார்.
சைவசமயிகள் “அன்பே சிவம்” “அன்புதான் கடவுள்” என்கின்றனர்.
ராமலிங்க ஸ்வாமிகள் என்று சொல்லப்பட்ட பெரியார் “அறிவுதான் கடவுள்” (அறிவான தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோக்ஷ நரகங்களைக் கொடுக்கும் கடவுள்கள். ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என பச்சையாகச் சொல்லி விட்டார். தோழர்களே! உங்களை - ஆஸ்திகர்களை நான். கேட்கிறேன் இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?
ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித சமூக வாழ்வுக்கு நன்மையும் அவசியமுூமான. 0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காரியங்கள் குணங்கள் அவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள். இதைப் பார்த்தாவது மனிதனுக்கு அறிவு வந்து உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன்.
ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி மக்களிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின்படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்றுதான் கேட்கின்றேன். அன்பு அறிவு உண்மை இவை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்னதற்கும் தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனை விட கடவுளைப்பற்றி கவலைப்படாமல் கடவுளுக்கு பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தான் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன். இந்த உணர்ச்சியினாலேயே தான் நான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல்.
நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை நான் அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன்.
நான் கூறின மேல் கண்ட தத்துவங்கள், மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.
மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர். ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உர என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்க இடமில்லையே!
மகா அறிவாளியான சங்கராச்சாரியார் அஹம்பிரம்மம் நானே
கடவுள் என்று கூறினார். அதற்காக சைவர்கள் அவரைத் “தானே கடவுளெனும் பாதகத்தவர்” என்று தண்டிப்பதுமுண்டு இதைப்போன்றே சுமார் 10 வருஷங்களுக்கு மூன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் “இயற்கையே கடவுள்” எனக்கூறி விவாதத்தை முடித்துக்கொண்டார். அதுகண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், “அழகே கடவுள்; அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன்; ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது” என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற்போல் அவர் அடிக்கடி “என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்” என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.
குடி அரசு- 1938 (1) 100
இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு
விபரம் புரியாமல் “இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்கவேண்டாமா'' என்று கேட்கின்றனர். ஏதோ ஓர் சக்தி இருக்கட்டும் இருக்கவேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்துவிட்டோமா? அதைப்பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன்.
மேலும் “மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன் சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா?” என்று கேட்கிறார்கள் வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது
மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா. என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ வாழ்க்கையில் நீதி, அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர். மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்தில் கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான. ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல்கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும்படி செய்து விட்டார்கள். உதாரணமாக ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரையாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை, ஒற்றுமை, அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமா? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்கிரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ய ஸ்தல யாத்திரை, புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் - ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா? இன்று சிறையிலுள்ள 2 லக்ஷம் கைதிகளில் சம்சயவாதிகளோ, நாஸ்திகர்களோ,
விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள். மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித சந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும். ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாப நஸ்டப்பட்டி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன், 00— வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
இந்த திருக்கூத்துகள் ஏன்?
“இந்து” மத ஆள்களின் கடவுள் உணர்ச்சியை சற்று கவனிப்போம். “இந்து மதக்காரர்கள் இந்த கடவுள் உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்து
கிறார்கள்! மத உணர்ச்சியை எவ்விதம் காட்டிக் கொள்ளுகிறார்கள்? என்று பாருங்கள். மக்களைக் காப்பாற்ற இருக்கும் கடவுளை இவர்கள் காப்பாற்ற முற்பட்டு அதற்காக ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு
மூன்று இலட்சம் ரூ.கள் செலவில் கோயில்களும், ஒரு லட்சம் செலவில்
கோபுரமும், கலசமும் வைத்து அரை லக்ஷத்தில் கும்பாபிஷேகங்கள் செய்து பூசைக்கும் திருவிழாக்களுக்குமாகப் பாடுபடும் மக்களின் கணக்கற்ற பணத்தைப் பாழாக்கி விடுகிறார்கள்.
மனிதனில் இலட்சக்கணக்கான பேர் வீடின்றி வாடி வதைபடுவது இவர்களுக்குத் தெரியாதா? இந்த மனிதர்களைக் கவனியாது இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதை கவனியாது கடவுள் ஆலயங்களின் திருப்பணி பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்கிறார்கள். பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் லட்சக்கணக்கில் இருக்க நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ லக்ஷம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டி சாக்கடை போய்ச்சேரும்படி பாழாக்குவதும் ஆயிரக்கணக்கான டின் நெய்யை நெருப்பை எறித்தும் நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா? கடவுள் உணர்ச்சியை இப்படித்தான் காட்டுவதா? பாலும் நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ ஆஸ்திகர்களே! உங்களைத்தான் கேட்கின்றேன்.
இந்த முட்டாள்தனத்தையும், கொடுமையையும் ஒழிக்க இதுவரை என்ன செய்தீர்கள்? பச்சை வெண்ணெயை டின் டின்னாக கொண்டு போய் களிமண் மாதிரி வாரி வாரி நெருப்பில் எறிகிறதைப் பார்த்து ஆனந்தப் படுகிறாயே! கடவுளும் ஆனந்தப்படும் என்று எண்ணுகிறாயே!! ஏ ஆஸ்திகனே!
நீ உன்னை மனிதன் என்று எண்ணிக்கொண்டுதான் இருக்கிறாய்
இதுவா கடவுள் ஒழுக்கம்?
ஒழுக்கத்துக்காக மனிதனின் - நல் வாழ்க்கைக்கு ஆக கற்பிக்கப்பட்ட கடவுளை தாசி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறாயே. மற்றொருவன்: பெண்ணை தூக்கிக்கொண்டு வருகிற உற்சவம் நடத்துகிறாயே,
குறத்தியையும், துலுக்கச்சியையும் கூட்டி வந்ததாக அதற்கு ஒரு கோவிலும் கட்டி பொம்மை வைத்து விளையாடுகிறாயே இதுவா
கடவுள் ஒழுக்கம்?
குடி அரசு- 1938 (1) 102
அஹிம்சையா? அன்பா? அஹிம்சை, அன்பு, கருணை ஆகிய குணங்களைக் கொண்டது கடவுள் என்று சொல்லிவிட்டு கழுவேற்றுவதும் கழுத்தை வெட்டுவதும் வயிற்றை இழிப்பதும் இப்படிப்பட்ட கடவுள்கள் கைகளில் கத்தி ஈட்டி குலாயுதம் வில் வேல் தண்டாயுதம் கொடுத்திருப்பது யோக்கியமா? இவற்றிற்கு வேலை கொடுப்பதும் உற்சவம் செய்வதுமான காரியத்தால் மனிதனுக்கு ஒழுக்கம் அஹிம்சை அன்பு ஏற்படுமா? ஏ ஆஸ்திகர்களே! சிந்தித்துப்பாருங்கள்
கடவுளுக்கு செலவு
கடவுளுக்கு என்று ஒரு காசுதான் ஏன் செலவழிக்க வேண்டும்? ஏன் செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மகாநாட்டில் கடவுளுக்கு
ஒரு காசுகூட செலவழிக்கப்படாது என்று சகல ஹிந்து மத ஆஸ்திகர்களும் வந்திருந்து தீர்மானம் செய்தார்கள். அது சிறிதாவது கவனிக்கப்படுகிறதா? கடவுளுக்கு ஆக செலவழிக்கப்படும் பணம், காசு, செலவுகள் யார் வயிற்றை நிரப்புகிறது? பாடுபடாது வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களுக்கும் ரயில்காரனுக்கும்தான் பெரிதும் இப்பணம் போய்ச் சேருகிறது. இப்படிச் சேரும் பணம் வருஷம் பலகோடி என்பது உங்களுக்குத் தெரியாதா?
புதுப் பாம்ப்பண தந்திரம்
இருக்கும் ஸ்தலங்கள் போதாதென்றும் இருக்கும் புண்ணிய ஸ்தலங்களும் தீர்த்தங்களும் போதாதென்றும் ஒரு புதிய ஸ்தலத்தை புண்ணிய ஸ்நான கரையை பார்ப்பனரும் ரயில்வேக்காரரும் ஒப்பந்தம் செய்து கொண்டு, பிரமாதமாக விளம்பரப்படுத்துகிறார்கள். அதாவது கோடிக்கரை என்ற இடத்து உப்புத் தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டுவிட்டால் எப்படிப்பட்ட பாபமும், மூன்னோர் செய்த பாபமும், இனிமேல் செய்யும் பாபமும் போய்விடுமெனவும் அவ்வளவு மகிமை உடையது எனவும் “மித்திரன் விளம்பரப்படுத்துகிறது. இதற்கு 'மகோதய புண்ணிய கால ஸ்நானம்” எனப் பெயராம்
ரயில்வேக்காரரும், பார்ப்பனரும் சேர்ந்து செய்யும் இச்சூழ்ச்சியில் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி அங்கு சென்று தங்கள் பணம், மானம், சுகாதாரம் ஆகியவற்றை பாழாக்கிக்கொண்டு, திரும்பி வரும்போது கூடவே காலராவையும் அழைத்துக்கொண்டுதான் வீடு திரும்பப் போகிறார்கள். இது என்ன நியாயம் என்று கேட்கிறேன். “கோடிக்கரை” சென்று குளிக்கவேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன் காலை முதல் மாலை வரை பாடுபட்டு உழைத்து, பணத்தை முதலாளிக்கும், பார்ப்பானுக்கும் கொடுத்துவிட்டு, கையைத் தலையின்கீழ்
13 ய... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
வைத்துக்கொண்டு படுக்கிற நீங்கள் கோடிக்கரை செல்ல வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் எப்படிச் செய்தீர்கள்? தொழிலாளியின் வாழ்வே இதனால் பாழாகிறது. முதலாளியுடன் போட்டியிட்டு, தன் நிலைமையை உயர்த்திக் கொள்ள வேண்டிய சக்தியை இழந்து, இதனால் பணம்,
நேரம், புத்தி ஆகியவை இழந்து அவன் தவிக்கிறான். இதற்குத்தானே இந்த கடவுள் திருவிழாவும் புண்ணிய ஸ்நானங்களும் உதவுகின்றன.
விஞ்ஞான வளர்ச்சியே விமோசனம் தரும்
இந்துமத ஊழல்களை திருத்தப்பாடு செய்த புதுமதக் கொள்கைகளே இன்று கிறிஸ்து மார்க்கம், முஸ்லிம் மார்க்கம் மூதலிய பல புதிய மார்க்கங்களாக தோன்றலாயின.
இந்து மதகொடுமை தாங்கமாட்டாமலேதான் பல்கோடிப் பேர்கள். முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் ஆனார்கள். இன்றும் இந்துக்கள் தான் பிற மதம் புகுகிறார்கள் என்றாலும் மூஸ்லிம்மார்க்கம் தவிர வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே
ஜாதிச் சனியன் தொடர்ந்து கொண்டே போகிறது. உதாரணமாக ஒருவர் கிறிஸ்துவனான பிறகும், பார்ப்பனக் கிறிஸ்துவன், பள்ளக் கிறிஸ்துவன், பறை கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், ஆசாரி கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்கின்ற பாகுபாடும் சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்துவனையும் விட்டுத் தொலைவதில்லை. பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்து கோவில்கள் போல் பேதங்கள் பல இருந்து வருகின்றன.
ஆனால் இந்த இழிவு ஆபாசம் முஸ்லீம் மார்க்கத்திலே காண முடியவில்லை. ஒரு தீண்டாதவன், முஸ்லீம் மதத்தை தழுவிவிட்டால், உடனே தீண்டாமை பறந்து போகிறது. அவன், அந்த சமூகத்தில் மனித சுதந்தரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான். அங்கு பற முஸ்லீம் என்று யாரேனும் சொல்லி, தங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடை சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளார்கள். அதனாலேயே தீண்டாமையை விலக்கிக்கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லிம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த 10 வருஷமாய் சொல்லிவருகிறேன். இந்த மாபெரும் சனியனான ஜாதிமத பேத தொல்லைகள் மனித சமூகத்தை விட்டுத் தொலைய வேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான ஞானமும் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியும் தேவை. தொழில் காரணமாகத்தான் தொழில்கள் ஆதாரமாகத்தான் ஜாதிகளோ ஜாதிக்கொடுமைகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தோட்டி என ஒரு ஜாதியும் அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்பட்டது? மலம்
எடுக்கும் தொழிலை நாற்றமுள்ள தொழிலை அவன் ஏற்றுக்கொண்டதால்தான், இப்படியே கஷ்டமானதும் இழிவானதுமான வேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள
குடி அரசு- 1938 (1) 104
வேலை செய்கிறவர்கள் மேல் ஜாதியாகவும் ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வஞ்சித்துத் திரிகிறவர்கள் மகாமகா மேல் ஜாதியாகவும் ஏற்பட்டதற்குக் காரணம் விஞ்ஞான ஞானமில்லாமையே. மேனாட்டிலே, இம்மாதிரியான தொல்லை அநேகமாக தீர்ந்து விட்டது விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, சமத்துவம் அந்த சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது. நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள் பழய தொழில்முறை ஜாதி முறை திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக்கொண்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது பழமையான சகல முறைகளிலும் மாறி சகலதுறைகளிலும் புதுமை தோன்றியிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப்போகிறோம்
மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும் அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழமுடியும்; யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்குமேல் பெற மாட்டார்கள். ஆண் பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பேறுக்கும் சம்மந்தமில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு, குட்டி போடுகிற போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும் பிள்ளை பெறும் கொல்லை வளர்க்கும் தொல்லை அதற்கு சொத்து, சுகம், தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மனிதன் அறிவு பெற்றதற்கு காரணம் சாமி விளையாட்டும் பிள்ளைகள் உண்டாக்கும் விவசாயப் பண்ணையும்தானா?
மனித அறிவின் எல்லையைக் காண வேண்டாமா? செல்வம் தரித்திரம்,
சுகம் - கஷ்டம், கவலை-தொல்லை இதுதானா மனிதனின் கதி மோக்ஷம்?
பெண்கள்
பெண்களை ஆண்கள் நடத்துகிறமாதிரியும், படுத்துகிறபாடும்போல் உலகத்தில் வேறு எந்த ஜீவனாவது செய்கிறதா? பெண்களிடம் சக்தி சொருபத்தையும், தெய்வத்தன்மையையும், காதல் களஞ்சியத்தையும், தாய்மையையும், அன்பையும் கண்ட “பெரியார்கள்” என்னும் மிருக சிகாமணிகள் பெண்களைப் பற்றி எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்; எப்படி நடத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் உலகில் சுயமரியாதை உள்ள பெண்கள் குழந்தைகள் பெறவே மாட்டார்கள். அப்படி பெற நேர்ந்தாலும் பிறந்தது ஆண் குழந்தை என்று கண்டால் கழுத்தை திருகிவிடுவார்கள். இது விஷயத்தில் மனிதன் திருத்தப்பட முடியாவிட்டால் எந்த மனிதனும் மனிதத் தன்மைக்கு அருகதையற்றவன். என்றே சொல்லுவேன்.
15 ய... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
பெண்ணுக்கு சொத்து கூடாதாம், காதல் சுதந்தரம் கூடாதாம் அப்படியானால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் ரப்பர் பொம்மையா? அடிமை உருவா? அது என்று கேட்கின்றேன்.
விதவை
பெண்களில் விதவைகள் என்று ஒரு நிலைமை ஏன் இருக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டதால்தானே இந்தக் கொடுமை? கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக முடியும்? கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித லாபம் இருக்கிறது. குழந்தை பிறக்காது என்பதுடன் விதவையும் ஆக முடியாது. அடிமை நிலையும் சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது. உலகில் உள்ள சகல கொடுமைகளிலும் விதவைக் கொடுமையே அதிகமானது. மற்றும் விவசாரம் பெருகுவதற்கு விதவைத்தன்மையே காரணம். ஒவ்வொரு பெற்றோர்களும் பெரிதும் தங்கள் குழந்தை சகோதரி விதவைகளை இலை மறைவு காய்மறைவாய்” கலவி உணர்ச்சியை தீர்த்துக்கொள்ள சம்மதிக்கிறார்களே ஒழிய ஒரு புருஷனுடன் சுதந்தரத்துடன் வாழ இடம் கொடுப்பதில்லை. இது தானா கடவுள், மதத்தன்மை ஏற்பட்ட பலன் என்று கேட்கின்றேன்.
குறிப்பு: 23.01.1938 இல் ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் மதம், கடவுள் எனும் தலைப்பில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 30.01.1938
குடி அரசு- 1938 (1) 106
நீடாமங்கல உண்மை
நீடாமங்கலத்தில் நடந்த தென் தஞ்சை ஜில்லா 3- வது அரசியல். மகாநாட்டில் ஆதி திராவிட தோழர்கள் சிலர் சாப்பாட்டுப் பந்தியில் கலந்து கொண்டதற்காக அவர்களை துன்புறுத்தி மொட்டையடித்து சாணி ஊற்றிக் கொடுமை செய்து தண்டித்த நடத்தையைப்பற்றி அவர்கள் பெயர்கள் உட்பட நமக்கு கிடைத்த உண்மையான சேதி “விடுதலை” குடிஅரசு” பத்திரிகைகளில் வெளியாக்கப்பட்டதை வாசகர்கள். உணர்ந்திருக்கலாம். ஆனால் அதை காங்கரஸ் தோழர்கள் கவனித்து சமாதானம் சொல்லாமல் நடந்த விஷயத்தையே அடியோடு மறுத்துக் கூறுவதுடன் அவற்றைப் பொய்யாக்கிக் காட்ட தப்பான வழியில் முயற்சித்து வருவது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்
பொறுப்புள்ள ஆதி திராவிட சமூகப் பிரமுகர்களுங்கூட இவ் விஷயத்திற்காகத் துக்கப்படாமல் பரிகாரம் தேட முயற்சிக்காமல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு அடியோடு மறைக்க ஆசைப்படுவது மிகமிக வெறுக்கத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான செய்கையாகும் “விடுதலையில் இது விஷயமாய் வெளியான சேதிகளுக்கு 15 நாள். பொறுத்து - நாட்டில் கிளர்ச்சி ஏற்பட்ட பிறகு அடிபட்ட உதைபட்ட மொட்டை அடித்து சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆதி திராவிட மக்கள் சிலரை பிடித்துக்கொண்டு வந்தும் மிரட்டி அம்மாதிரியான. காரியம் ஒன்றுமே நடக்கவில்லையென்று எழுதிக்கொண்டு அதில் அவர்களது கையெழுத்து வாங்கி அதில் சேராதவர்களின் போட்டோவையும் வாக்குமூலத்தையும் பத்திரிகைகளில் போட்டு மக்களை ஏமாற்றப் பார்ப்பதுடன் “விடுதலை பத்திரிகை பொய்யான சேதியை வெளிப்படுத்திற்று" என்று தலைப்புக் கொடுத்து சேதி போடுவது என்றால் இக்கூட்டத்தார் தீண்டாமை ஒழிக்கவோ ஆதி திராவிடர்களை சமமாக நடத்தவோ ஆசைப்படுகிறார்களா? அல்லது பழய ராமராஜியப்படி சாமி கும்பிட்டதற்காக ஒரு பார்ப்பனரல்லாதவனின் தலையை வாங்கியது போல் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவனை கொலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை கிளப்புகிறார்களா என்று பயப்பட வேண்டியிருக்கிறது. தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்களின் நிலைமை இந்திய சமதர்மவாதிகளும் தேசீயவாதிகளும் தேசபக்தர்களும் அறிய வேண்டிய காரியமாகும். தஞ்சை ஜில்லாவில் ஆதிதிராவிடர்கள் நிலைமை
17 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
பழயகால அடிமைத் தன்மையே ஆகும். அங்குள்ள நிலங்களில் உள்ள
மரங்கள் எப்படி அந்த நிலக்காரனுக்கு சொந்தமோ அது போலவும் அந்த நிலம் விற்கப்பட்டால் எப்படி மரமும் வாங்கினவனுக்கு சேருமோ அது போலவும் ஒவ்வொரு நிலத்துக்கும் சில ஆதிதிராவிட மக்கள். அடிமைகளாக இருந்து பூமி கை மாறியவுடன் அவர்களும் கூடவே பூமியை விலைக்கு வாங்கினவனுக்கு அடிமையாவது இன்றும் வழக்கம் அந்த ஆதிதிராவிடன் அந்த வயல் நிலத்தில் வயல்காரனுடைய கருணையால் குடியிருக்க வேண்டியவனாவான். நந்தன் கதையில் உள்ளது போல் அந்தந்த வயலுக்கு அங்கங்கிருக்கும் ஆதிதிராவிடனே பரம்பரை பண்ணை ஆளாக இருக்க வேண்டியவனாவான். அவனுடைய சகல சுதந்திரமும் வாழ்வும் மிராசுதார் என்று அழைக்கப்படுகிற பூமிக்குடையவனை சேர்ந்ததாகும். பூமிக்குடையவன் அவனை அடித்தாலும் உதைத்தாலும் வேறு என்ன கொடுமை செய்தாலும் கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. அந்த மிராசுதாரன் மீது
பிராது செய்யவும் எவனும் துணிய மாட்டான். அப்படி ஏதாவது பிராது செய்து விட்டால் அவனுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அப்படிப்பட்டவன்
குடியிருக்க இடமில்லாமலும் சாப்பாட்டுக்கு வகை இல்லாமலும் பட்டினி
கிடந்து தெருவில் செத்துக் கிடக்க வேண்டியதுதான். வேறு மிராசுதாரன். இதற்கு சிபார்சுக்கு வரவோ ஆதரிக்கவோ ஆரம்பித்தால் பிறகு அவனது அடிமையை அவன் மீது ஏவி விட்டு விடுவார்கள். ஆதலால் மிராசுதார் கொடுமைக்கு ஆளாக இஷ்டப் படவில்லையானால் ஒரு ஆதிதிராவிடன் மலாய் நாட்டுக்கோ, மோரீஷிக்கோ ஓட வேண்டியதுதானே தவிர அவனுக்கு அந்நாட்டில் போக்கிடம் கிடையாது. ஆதலால் அங்கு ஆதிதிராவிடர்கள் மிருகங்களிலும் கேவலமாக கருதப்படுகிறார்கள்.
இதனாலேயே சிங்கப்பூர், மோரீஷ், சுஞ்சிபார் முதலிய தீவுகளில் அதிகம் தஞ்சை ஜில்லா ஆதி திராவிடர்களே கூலிகளாய் ஓடிப்போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை உணர்ந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தஞ்சை ஜில்லா ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க நிலம் வாங்கிக் கொடுக்கும்படி சர்க்காரில் ஏற்பாடு செய்தார்கள். அது சமயம் தஞ்சை மிராசுதாரர்கள், பார்ப்பனர்கள் உள்பட கூப்பாடு போட்டதால் அக்காரியம் சரிவர நடத்தப்பட முடியாமல் போய்விட்டது
இந்த நிலையில் அவர்கள் இவ்வளவு இழிநிலைக்கும், கஷ்டத்துக்கும் ஆளாகி வருகிறார்கள். இதைப் பற்றி கவனிக்க இந்த காங்கரஸ் ராஜியத்தில் யாரையும் காணோம். ஆதிதிராவிட மந்திரி கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் இந்தக் கொடுமையை மறைக்க உடந்தையாய் இருப்பதும், இக்குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமல், இருப்பதும் யோக்கியமாகுமா? என்று கேட்க வேண்டி இருக்கிறது
குடி அரசு- 1938 (1) 108
இந்த லட்சணத்தில் கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் திருநெல்வேலியில் இதை மறைத்துப் பேசும்போது நீடாமங்கல சேதி பொய்யென்றும் அயோக்கியத்தனமான விஷமப் பிரசாரமென்றும் பேசியிருக்கிறார். இவர் ஆதிதிராவிடர்களுக்கு யோக்கியமான பிரதிநிதியா என்று கேட்கிறோம். அப்படி இருந்தும் அவர் அதே சமயத்தில் தன்னை அறியாமலே வேறு ஒரு உண்மையை கக்கி விட்டார். அதாவது அங்கு அவர் பேசுகையில் “திருப்பதியில் ஒரு ஆதி திராவிடர் சாமி கும்பிட்டதற்காக அவனை அடித்து துன்புறுத்தினார்கள். இது நியாயமா” என்று கேட்டிருக்கிறார்கள். இந்தச் சேதி 21.1.38ம் தேதி தினமணி 8-ம் பக்கம் 4வது கலத்தில் இருக்கிறது
மற்றும் கனம் முனிசாமி பிள்ளை மதுரை கள்ள அழகர் கோவிலில் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காகவும் அதுசமயம் கோவில் அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்ததற்காகவும் கோவில் அதிகாரிகள் பேரில் நடவடிக்கை நடத்துவதாக சொல்வதல்லாமல் கோவில் சுத்தம் செய்ய வேண்டுமென்றும் இந்த மாகாண மதுரை வருணாச்சிரம சுய ராஜ்ஜிய சங்கத் தலைவர் தோழர் மதுரை நடேச சாஸ்திரியார் அவர்கள் கோவில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார். கனம் மந்திரிக்கும் இதைப்பற்றி கண்டித்தெழுதி இருக்கிறார். இது 25.1.38 தேதி இந்து பத்திரிகையில் 8 பக்கம் 6வது
கலத்தில் இருக்கிறது
மற்றும் தோழர் கனம் முனிசாமி பிள்ளை அவர்கள் “வேறு மதத்திற்கு போனால்தான் ஆதிதிராவிடர்களுக்கு சட்ட உரிமை கிடைக்கும்” என்பதாகவும் அங்கு பேசி இருக்கிறார். ஆகவே அவர் தங்கள் சமூகங்களுக்கு இந்து மேல் ஜாதியார்களும் குறிப்பாக பார்ப்பனர்களும் செய்யும் கொடுமையை உணர்ந்து கொண்டே 500 ரூ சம்பளத்துக்கும், 300 ரூ படிக்கும் பார்ப்பனர்களுக்கு
- மேல் ஜாதியாருக்கு வக்காலத்து பேசுகிறார் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த லக்ஷணத்தில் நீடாமங்கலம் சேதியை விடுதலை பிரசுரித்திருப்பதற்காக அதன் பிரசுரகர்த்தா தோழர் E.V. கிருஷ்ணசாமி மீதும், ஆசிரியர் தோழர் 8.முத்துசாமி பிள்ளை மீதும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளப் போவதாக தஞ்சை வக்கீல் தோழர் கே.டி. பாலசுப்பரமணிய அய்யர் பி.ஏ., பி.எல்., அவர்கள் ஒரு உடையாருக்காக நோட்டீசு கொடுத்திருக்கிறார்கள். தோழர் சந்தான ராமசாமி உடையார் அவர்கள் சிறுவயது. சுமார் 20 வயதே இருக்கும் அவரை இந்தப் பார்ப்பனர்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டு அவர்களது பணத்துக்கு தாறுமாறாக செலவு வைப்பதுடன் சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதாகவும் நம்மை பயமுறுத்துகிறார்கள். உண்மையில் நாம் இவ்விஷயத்தில் எந்த 109௨... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
தனிப்பட்ட நபரிடமோ தனிப்பட்ட ஜாதியாரிடமோ குறோதம் வைத்தோ குறைவு படுத்த எண்ணம் வைத்தோ இவ்விஷயங்களை எழுதுவதில்லை, பேசுவதில்லை. சம்மந்தப்பட்ட நபர்களைப் பற்றி நமக்கு விஷயமும் தெரியாது அறிமுகமும் கிடையாது. ஆனால் இந்த 20வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நாட்டில் ஆட்சி செய்யும்போது பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அடித்து துன்புறுத்தி மொட்டையடித்து சாணி அபிஷேகம் செய்து விட்டு இந்த விஷயத்தை வெளிப்படுத்தினதற்கு நம்மீது சிவில் கிரிமினல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவது என்றால் இந்த நாட்டில் மக்கள் வாழ முடியுமா? என்று பயப்பட வேண்டியிருக்கிறது.
துன்புறுத்தப்பட்ட தோழர்களான பலர் இனி அந்த கிராமத்தில் வாழ முடியாதென்று வேறு ஊருக்கு ஓடிவிட்டார்களாம். அவர்களது வாழ்வுக்கு உதவி செய்ய வேண்டிய பொறுப்பும் இது வெளியிட்டதற்கு ஆக சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்ல வேண்டிய பொறுப்பும் அதற்காக 1000, 2000 ரூபாய்கள் செலவிட வேண்டிய பொறுப்பும் நம் தலையில் விடியும் போல் இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் நமது நிலைமை எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது என்பதையும், காங்கரஸின் தன்மை மேல் ஜாதியாரின் யோக்கியதை அவர்களடைந்த சுயராஜ்யத்தின் போக்கு எப்படி இருக்கிறது என்பதையும் ஊன்றி கவனித்து பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 30.01.1938
குடி அரசு- 1938 (1) 110
ஈரோட்டில் பொதுக்கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே!
இங்கு மீட்டிங்குபோட நாங்கள் ஆசைபடுவதில்லை. உள்ளுர். தோழர்களுடன் கலகம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்காக நாங்கள். போடாமல் இருந்தோம். இந்த 10 நாளாய் அர்பன் பாங்கு தேர்தலை முன்னிட்டு சிலர் தினமும் கூட்டம் போட்டு எங்களை கண்டபடி வைவதும்
சிறு பிள்ளைகளிடம் கொடியை கொடுத்து எங்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று கொண்டு கேவலமாக வையச் சொல்வதும் கல்லு போட சொல்லுவதும் வீதிகளில் நடக்கும் போது எங்கள் பெயர்களைச் சொல்லி வெட்கம் வெட்கம் என்று வையச் சொல்லுவதுமான காரியம் தான் இங்கு என்னை உங்கள் முன் பேசச் செய்தது.
இந்த ஊர் அர்பன்பாங்கு ஆரம்பமானது 1911ல் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் தான். நான் தான் முன்னின்று ஆரம்பித்தவன். அந்த பாங்கு பங்குதார் பெயரில் என் பேர் தான் முதலில் இருக்கும். போய் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாங்கி நடவடிக்கையில் அக்கரை உண்டு ஆனால் நான் வேறு பல விஷயங்களில் ஈடுபட்டிருப்பதால் அதைக் கவனிக்க முடிவதில்லை என்றாலும் அதன் ஆரம்பத்தில் நான் முக்கியஸ்தனாய் இருந்தாலும் அந்த பாங்கி ஏற்பட்டது முதல் 1930-ம் வருஷம்வரை அதன் நிர்வாகம் அய்யர்மார்களிடம் வக்கீல்களிடம் தான் இருந்தது
நானும் அதற்குச் சம்மதித்து உடந்தையாய் இருந்து வந்தேன். கடைசியாக அது பார்ப்பனர்களுக்கே சொந்தம் போலவும் மற்றவர்களுக்கும் அதில் மதிப்பும் செல்வாக்கு இல்லாமல் வேறு பல வகுப்புவாத காரியங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்வது போலவும் இருந்ததால் 1930ல் மறுபடி தலையிட்டு அதை அக்கிரார பார்ப்பனர்களிடம் இருந்து எவ்வளவோ கஷ்டத்துடன் கைப்பற்ற வேண்டியதாயிற்று
இந்த 7,8 வருஷ பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் பாங்கின். நிர்வாகம் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் விகிதாச்சாரம் பயன்படும்படியும் பாங்கின் செல்வம், க்ஷேமநிதி பெருகும்படியும் அய்யர்மார்கள் நிர்வாகத்தில் தளுங்கிவிட்ட வாய்தா கடந்த வராக்கடன்கள் 30,40 ஆயிரம்
ரூ. வசூலாகும்படியும் செய்யப்பட்டிருக்கிறது. படட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அதன் டிபாசிட் 1700008 இருந்து 250000 ஆகி இருக்கிறது வராக்கடன் 61000ல் இருந்து 25000க்கு இறக்கப்பட்டது. ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சுலபத்தில் கடன் கிடைக்கும்படியும் செய்யப்பட்டு வருகிறது
அதன் சிப்பந்திகளும் இப்போது சிலர் பார்ப்பனரல்லாதாராய்
இருக்க முடிந்தது பாங்கியின் நிருவாகத்தைப்பற்றி ஆடிட்டர்களும், இலாகா அதிகாரிகளும் புகழ்ந்து கூறிவருகிறார்கள். இதன் தலைவர் தோழர் சிக்கய்ய நாயக்கர் அவர்கள் இந்த ஜில்லா கோவாபரேடிவ் ஆடிட் யூனியனுக்கு தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டு 5.6 வருஷமாய் இருந்து வருகிறார்.
இதைப்பற்றி பாங்கியின் மீது அபிமானமுள்ளவர்கள் பாராட்டாமல் அவரைப் பற்றி விஷமப்பிரசாரம் செய்வது ஒழுங்கா? அவர் மீது இதுவரை குறிப்பிட்டு ஏதாவது ஒரு குற்றம் சொல்லப்பட்டதா? இருந்தால் கொண்டுவாருங்கள். “ பாங்கிக்குள் புகுந்து கலகம் செய்யுங்கள் "” என்று தூண்டிவிடப்படுகிறது. கலகம் செய்து மினிட் புஸ்தகங்களையும் கிழித்து பார்த்தாய் விட்டது
அவர் வேண்டாமென்றால் தள்ளிவிடுங்கள். ஆனால் இந்த ஊர் வக்கீல் பார்ப்பனர்கள் 4,5 பேர் மாத்திரம் ஏன் இவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்? அவர்கள் வசம் ஏற்கனவே இருந்த ஸ்தாபனங்கள் என்ன ஆயிற்று? இவர்கள் தாங்கள் தொழிலில் அதிக வரும்படி சம்பாதித்துக் கொள்ள இதை பயன்படுத்தவிடலாமா?
கோவாபரேடிவ் ஸ்டோர் என்ன ஆயிற்று?
சேல்ஸ் லோன் சொசைட்டி என்ன ஆயிற்று? ஹவுஸ் மார்ட்டிகேஜ் பாங்கி என்ன ஆயிற்று? லேண்ட் மார்ட்டிகேஜ் பாங்கி என்ன ஆயிற்று?
இவைகள் எல்லாம் பார்ப்பனர்கள் கையில் தானே இன்னமும் இருக்கிறது. இந்த நிர்வாகம் சிலவற்றில் எவ்வளவு ஊழலாகி மூட வேண்டியதாகிவிட்டது. சில மூடும் நிலையில் இருக்கிறது. சில உத்தேசித்த பயளளிக்காமல் நிர்வாகிகள் நன்மைக்கு மாத்திரமிருந்து வருகிறது.
கடைசியாக இந்த அர்பன் பாங்கி ஒன்றுதான் பார்ப்பனரல்லாதார். நிர்வாகத்தில் இருக்கிறது. இதன் தலையிலும் கைவைக்கப் பார்க்கிறார்கள். உங்களுக்கு இஷ்டமிருந்தால் அவர்கள் வசம் ஒப்புவித்து விடுங்கள்.
ஆனால் வையவும், வீட்டின் மீது கல்லு போடவும் பெண்டு பிள்ளைகளை இழிவாய் பேசவும் இடம் கொடுக்காதீர்கள். நாளைக்கு உங்களுக்கும் இந்த கதிதான் நேரிடும்
குடி அரசு- 1938 (1) 112
இந்த மாதிரி நம்மவர்களுக்குள் கலகம் மூட்டிவிட்டதன் பலன் இன்று இந்த மாகாணத்தில் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் மூலையில் உட்கார வைக்கப்பட்டு விட்டார்கள். தோழர்கள் சத்தியவான் உண்மை பரோபகாரி ரத்தின சபாபதி முதலியார் எங்கே? காங்கரசில் சேர்ந்ததால் அவரை காங்கரசுக்காரர்கள் 5 - வருஷம் தண்டித்து விட்டார்கள். நல்ல ஞானமுள்ள ராமலிங்க செட்டியார் எங்கே? அவரை மூலையில் இருக்கச் செய்துவிட்டார்கள்.
வீரர் திருச்சி தேவர் எங்கே? கைக்கு வளையல் போட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வைத்துவிட்டார்கள்.
தஞ்சைக் குபேரன் நாடிமுத்து எங்கே? “ வைரக்கடுக்கன் ஆட்சியை" ஒழிக்க விரதம் கொண்டு விட்டார்கள்.
எங்கள் போன்றவர்கள் வீடுகள் மீது கல்லுபோடுகிறார்கள். நாங்கள் என்ன அவ்வளவு பாவிகள்? எங்களுக்கு இதுவா ஜீவனம்? போலீஸ் பந்தோபஸ்து கூட சரியாய் கிடையாது. இந்த ஊரில் காலித்தனத்துக்கும் விஷமத்தனத்துக்கும் மதிப்பு அதிகம் ஏற்பட்டுவிட்டது. கவர்னர் கவலையற்று வேடிக்கை பார்க்கிறார். இன்னமும் உங்கள் பிள்ளைகள் படிப்புக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டார்கள். ஹிந்தி படிக்க வேண்டுமாம், பள்ளிக்கூடத்தில் சாமான் செய்து விற்று வாத்தியாருக்கு சம்பளம் கொடுக்க. வேண்டுமாம். மகாஜன ஹைஸ்கூல் பார்ப்பனரிடமிருந்து நம் கைக்கு வந்த பிறகே நம் பிள்ளைகள் இவ்வளவு படிக்க முடிந்தது. பாஸ் செய்ய
முடிந்தது. பள்ளிக்கூடமும் இவ்வளவு யோக்கியதைக்கு வந்தது. அதற்கு இந்தப்பள்ளிக்கூடத்துக்கு எவ்வளவு ஆயிரம் ரூ. கொடுத்தோம். எந்த பார்ப்பனர் யார் இப்படி கொடுத்தார்? எங்களைப்பற்றி உங்களுக்கே தெரியும். பணம் என்றால் நாங்கள் தான் 500, 1000 என்று கொடுக்க வேண்டும். நிர்வாகம் அவர்கள் பார்க்க வேண்டுமா? ஆகையால் ஏமாந்து போகாமல் நன்றாய் ஆலோசித்து எக்காரியமும் செய்யுங்கள். எங்களுக்கு வந்த அவமானம் நாளைக்கு உங்களுக்கும் தான்.
குறிப்பு: 28.01.1938 இல் ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் ஈரோடு ஆதிதிராவிட நலவுரிமைச்சங்கத்தின் ஆதரவிலும். ஈரோடு பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கத்தின் ஆதரவிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 30.01.1938
W ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
நீடாமங்கலத்தில் நடந்ததென்ன?
*திணமணி?யில் வந்த மனமைறிந்த வஞ்சகப்
பித்தலாட்டப் புரட்டு
நீடாமங்கலம் அரசியல் மகாநாட்டில் ஆதிதிராவிடர்கள் பலர். தேசபக்தர்களின் சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக
அடித்துத் துன்புறுத்தி மொட்டையடித்து சாணித்தீர்த்தம் கொடுத்து அபிஷேகம் செய்த விஷயத்தை முன் தெரிவித்திருக்கிறோம்
அதற்கு 15 நாள் பொறுத்து ஒரு பொய் அறிக்கை தயாரித்து உதைபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஒருவரிடமும் மற்ற சம்பந்தமில்லாத இருவரிடமும் பொய் சொல்லி மிரட்டி பணம் கொடுத்து உட்கார வைத்து போட்டோ எடுத்து வெறும் காகிதத்தில் கையெழுத்து வாங்கி தங்கள் இஷ்டப்படி எழுதிக்கொண்டதை “தினமணி'' பிளாக் செய்து அச்சேதியையும் படத்தையும் “சுயமரியாதைக் காரர்களின் புளுகு” என்று தலைப்பிட்டு “தினமணி” பிரசுரித்திருக்கிறது
அதில் ஒரு விசேஷமென்னவென்றால் காங்கரஸ்காரர்களால் மொட்டை அடிக்கப்பட்டு சாணி அபிஷேகம் செய்யப்பட்ட தோழர் தேவசகாயம் என்பவரை மொட்டைத்தலையுடன் அதாவது காங்கரஸ் பக்தர்களான மிராசுதார், பெரிய ஜாதிக்காரர் ஆகியவர்கள் அடித்த மொட்டைத் தலையுடனேயே போட்டோ எடுத்து இருப்பது விளங்குகிறது.
இந்தப்படத்தையும் சேதியையும் கண்டவுடன் அதே தோழர் தேவசகாயம் என்பவர் நமக்கு தனது போட்டோவையும் தன்னிடம் காங்கரஸ் மிராசுதார் பண்ணையவர்கள் எப்படி நடந்து தனது போட்டோ எடுத்துக்கொண்டதுடன் எப்படி வெறுங் காகிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள் என்பதையும் விளக்கி ஒரு விண்ணப்பத்தை ஆதிதிராவிட
மந்திரி கனம் முனிசாமிக்கும் ஆ.தி.மேயர் தோழர் சிவஷண்முகத்துக்கும் அனுப்பிய நகல் நமக்கு கிடைத்திருக்கிறது.
இச்சேதி விவரங்களை வாசகர்களுக்கு விருந்தாக நாளைப் பிரசுரிப்போம்.
குடி அரசு- 1938 (1) 114
அந்த அறிக்கையில் மிராசுதார்கள் அடிக்கும்போது போலீசார் தலையிட்டு தடுத்ததையும், அடி தாங்கமாட்டாமல் எச்சில் கையுடன்
ஆற்றில் விழுந்து ஓடினதையும், மறு நாள் பிடித்து வந்தவர் பெயரையும் , கட்டி வைத்து அடித்ததையும், அடித்தவர் பெயரையும் தலை மொட்டையடித்ததையும் குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் பல ருசிகரமான சேதியும் வரும்.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 30.01.1938
s வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காங்கரஸ் புரட்டு விளக்கம்
காங்கரசில் நாண் எண்ண செய்ய முடியும்?
இப்பவும் காங்கரசில் நான் இல்லை என்று குறை கூறுகிறார்கள். நான் அங்கிருந்தால் தான் என்னவாகிவிடும்? நான் காங்கரசிலிருந்தால் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்குக் கஷ்டம் குறைந்துபோகும் எல்லோராலும் வெறுக்கப்படுகிற ஹிந்தியை என் வாயைக் கொண்டே “ஹிந்தி நல்லது இந்தியாவெங்கும் அது பொதுப்பாஷையாகத்தானிருக்க வேண்டும்” என்று சொல்லச் செய்து விடுவார். அதற்கு நான் சம்மதித்தால்தான் எனது காங்கரஸ் பக்தி பயன்படும். இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியம் நடக்கக் கூடும்? சுதந்தரமாகவும் சுயமரியாதையாகவும் ஏதாகிலும் செய்ய முடியுமா? அங்கிருக்கும் மற்ற. பார்ப்பனரல்லாதார் யோக்கியதை எப்படி இருக்கிறது? இப்போதையத் தொண்டிலும் அவர்கள் என்னை குற்றம் சொல்லவில்லை, என் சொந்த நாணயத்திலும் குற்றம் சொல்ல அவர்களுக்கு முடிவதில்லை. நாங்களும் தவறாக நடந்து கொள்வதில்லை. அதனாலேயேதான் “சுயமரியாதைக்காரர்கள். எல்லாம் நல்லவர்கள் என்றும் அவர்கள் நம் பக்கத்தில் இருந்தாலும் நன்றாக தொண்டு செய்வார்கள் என்றும் அவர்களும் காங்கரஸிற்கு வரவேண்டுமென்றும் பல தடவை ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார் மற்றும் பல காங்கரஸ்காரர் கூப்பிட்டிருக்கிறார்கள். பார்ப்பனர் உயர்வுக்கு ஆபத்து வரும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் என்னைப் பற்றி ஏதாவது தாறுமாறாக பேசுவதைத் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டார்.
“உலகம் புகழ்கின்ற” காந்தியாரையும், “எல்லோராலும் புகழப்படுகின்ற” காங்கரசையும் நான் குற்றம் சொல்வதன் காரணமென்ன? காங்கரஸை விட்டு வெளியே வந்தது முதல் காந்தியாரானவர் மக்களின் சுதந்திரத்திற்கு விரோதி என்றே சொல்லி வருகிறேன். நம்மிடமெல்லாம் சொன்னபடி வாக்குறுதி கொடுத்தபடி நடக்காததால்தான், காந்தியையும் காங்கரஸையும் எதிர்ப்பேன் என்பதாகச் சொல்லி விட்டுத்தான் காங்கரசிலிருந்து வெளியே வந்தேன். அப்போது என்கூட வெளியே வந்தவர்களில் ஒருவர்தான் இன்றைய விளம்பரமந்திரி தோழர் ராமநாதன்.
காங்கரசிடம் என்ன அபிப்பிராய பேதம்?
காங்கரசுக்கும் நமக்கும் ஏற்பட்ட அபிப்பிராயபேதம்தான் என்ன? தோழர் காந்தியார் 1920ல் காங்கரஸிலே அதிகாரத்தின் உச்சநிலைக்கு
குடி அரசு- 1938 (1) 116
வந்தபோது “மக்கள் பட்டத்தை விரும்பக்கூடாது. உத்தியோகத்தை விரும்பக் கூடாது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி வருகிற பல சமூகங்களின். வேற்றுமைகளை ஒழித்து, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையை உண்டாக்குவது, தீண்டாமை என்னும் சாபத்தை இந்தியாவிலிருந்தே விரட்டுவது. இதல்லாமல் சுயராஜ்யம் வராது. அப்படி வந்தாலும் நான். அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன்” என்று சொன்னார். இந்தப் பணியானது இந்த நாட்டிற்கு மகா உத்தமமானது என்று கருதித்தான் நாம் காங்கரஸில் சேர்ந்தோம். இதல்லாமல் வேறெந்த பிரதி பிரயோஜனத்தையும் உத்தேசித்தல்ல. அப்படி நான் காங்கரசில் சேரும் போது வெறும் அன்னக் காவடியாகவோ வெறும் ஆளாகவோ வரவில்லை. நான் அப்போது வகித்திருந்த ஈரோடு முனிசிபாலிட்டி சேர்மன் பதவியை ராஜிநாமா செய்து காங்கரஸ் பாரத்தில் கையெழுத்திட்டேன். தேதி வேண்டுமென்றாலும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் காங்கரஸில் சேர சேர்மென் ராஜிநாமா கொடுப்பதற்கு ஒரு 10 நாள் பின்பு இருக்கலாம். சர்க்காரால் அப்போது ஏற்படுத்தி இருந்த வருமான வரி இன்கம்டாக்ஸ் அப்பீல்கமிட்டி ஒன்றுக்கு என்னையும் தோழர்கள் தியாகராய செட்டியார், ஜமால்மகமது இவர்களையும் தினம் 100ரூ. படி இரட்டை முதல் கிளாஸ் பிரயாணச் செலவு கொடுத்து நியமித்தார்கள்.
இவைகளெல்லாம் ஒரே கால் கடுதாசியில் ராஜிநாமா செய்து
விட்டேன். பின்னர் சண்டை ஏன் என்றால் பிறருடைய உழைப்பின்.
மீது, வயிறுவளர்த்து பிறர்மேல் ஆதிக்கம் செலுத்தி ஒரு சாராருக்கு ஆதரவு அளிக்கவே காங்கரஸ் ஸ்தாபனம் இருக்கிறதென்பதாக நான். கருதியதால் அதைவிட்டு வெளியே வந்துவிட்டேன். இப்படியிருந்தால் பல சமூகங்களும் எப்படி ஒன்றுபடுவது. ஒருவர்க்கொருவர் நேசம்
எப்படி உண்டாவது என்பதாக கருதும்போது அதை விட்டுவிட்டு வருவதை தவிர வேறு வழியில்லை எனக் கண்டே வெளியே வந்தேன்.
காங்கரஸ் தோல்வி:
காங்கரஸ் தான் ஏற்படுத்திக்கொண்ட ஒவ்வொரு திட்டங்களையும்
சரிவர நிறைவேற்ற முடியாமல் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு திட்டங்களிலும் முன்னுக்குப்பின் முரணாகவே நடத்திருக்கிறது.
இத்துடனல்லாமல் காங்கரஸ் காரியத்தில் நடத்த எடுத்த திட்டங்களிலெல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறது. சுயராஜ்யத்துக்கு
முன் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுத்த வேண்டுமென்றவர்கள் அதை ஏற்படுத்தினார்களா? தீண்டாமை இருக்கக் கூடாதென்றவர்கள் அதை இல்லாமல் செய்தார்களா? இதே வீரர்கள் அதுவும் ஏக இந்தியாவின்
பர ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
ஏக பிரதிநிதியாகிய தோழர் காந்தியார் லண்டன் வட்ட மேஜை மகாநாட்டில் போய் இது விஷயத்தில் சரியான குட்டிக்கரணம் போட்டார். அதாவது “இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தீண்டாமை ஒழிவும் எல்லாம் சுயராஜ்யம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். இதை நான் சொல்லவில்லை. அப்போது சீமையில் இருந்து வந்த பத்திரிகைகளை பார்த்தீர்களானால் உங்களுக்கு தெரியவரும். எந்த தீண்டாதார்களை தீண்டாதார் பிரதிநிதி என்று அழைத்து கையெழுத்து வாங்கினாரோ அவர்களையே சர்க்கார் கூலி, சர்க்கார் அடிமைகள் என்றெல்லாம் மூன்னும் பின்னும் சொன்னார். இவைகளை நீங்கள் இன்று பார்த்துக்கொள்ள வேண்டுமானாலும் சர்க்கார் ரிக்கார்டுகளில் பார்த்துக் கொள்ளலாம்
கதர்
காங்கரஸ் எடுத்த திட்டங்களெல்லாம் தவறாகவும் தோல்வியாகவும் முடிந்தன என்று சொன்னேன். சாதாரணமாக கதர் திட்டத்தைத்தான்.
எடுத்துக்கொள்ளுங்கள். அது வருஷத்திற்கு ஒரு லக்ஷமோ இரண்டு லக்ஷமோ நஷ்ட பண்டு இல்லாமல் நடக்கமாட்டேன் என்கின்றது
1920-ம் வருஷத்திலிருந்து 1938 வரை இந்த கதர் திட்டத்திற்கு ஒரு கோடி ரூ. செலவாயிருக்கலாம். இப்படி செலவு செய்தும் இன்றும் ஒரு
ரூ. துணிக்கு இரண்டரை ரூ. கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் கோணிச்சாக்கு மாதிரி இருக்கிறது. இப்படியிருந்தாலும் 1000க்கு ஒருவர் கூட கதர் கட்டுவது கஷ்டமாகயிருக்கிறது. இப்போதும் காங்கரசிலும் ஸ்தாபனங்களிலும் அங்கத்தினராகவோ தலைவராகவோ இருக்க வேண்டியவர்கட்கு கதர் நிபந்தனை இருப்பதாலும் அவர்களே சர்க்காரை நிர்வகிப்பதாலும் ஏதோ ஒருவர் இருவர் கதர் கட்டுவது தெரிகிறது ஆனால் உண்மையில் கதருக்கு செல்வாக்கில்லை. அது அரசியல் வேஷமாக ஆகிவிட்டது. காங்கரஸ் மறைந்தால் அதுவும் மறைந்து
விடும். தீண்டாமை ஒழிப்பு விஷயமும் இன்று தீண்டாதார் தலைவர்கள் எல்லாம் தாங்கள் புனாவில் ஏமாந்தோம், அவ்வொப்பந்தம் ஒழிபட வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள்.
இந்து முஸ்லீம்
இந்து-முஸ்லீம் பிரச்சினை சம்பந்தமாய் ஒற்றுமை வேண்டுமென்று கத்தியவர்கள், இப்போது வேற்றுமையைக் கிளப்பிவிட்டு கலகம் உண்டாக்கி விட்ட விஷயம் நீங்கள் அறிந்ததே. அத்துடன் ஜவஹர்லால் அவர்களும் “சுயராஜ்யம் வருவது இன்னும் 100 வருஷம் தடைபட்டால் கூட பரவாயில்லை. ஆனால் வகுப்பு வாதிகளுக்கு (அதாவது முஸ்லிம்களுக்கு) கொஞ்சம் கூட இடம் கொடுக்கவே மாட்டேன்" என்று சொன்னதினால் இந்து முஸ்லிம் நிலைமை இன்னும் மிகவும் மோசமாகப் போய்விட்டது
குடி அரசு- 1938 (1) 118
ஆனால் காங்கரசிடம் வகுப்புவாதம் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? வகுப்பு வாதம் வேண்டாம், வேண்டாம் என்று கூச்சல் போடும் கனம் ராஜகோபாலாச்சாரியார், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்களிடம் உண்மையிலேயே வகுப்பு வாதம் குடி கொண்டிருக்கிறதா? இல்லையா? என்கிற விஷயங்களைப் பற்றி நான் சொல்லுவதற்கு முன். காங்கரஸ்காரரே சொல்லுவதைக் கேளுங்கள். உதாரணமாக தோழர் சத்தியமூர்த்தி கார்ப்பரேஷன் கூட்டத்தில் பேசும்போது “ஜஸ்டிஸ் கட்சியையும் பொப்பிலியையும் கூட ஒழித்து விட்டேன். ஆனால் இங்கே காங்கரஸ் கட்சிக்குள்ளேயே அநேக பொப்பிலிகள் வகுப்புவாதிகள் தோன்றிவிட்டார்கள்” என்று சொன்னார். இதல்லாமல் அய்யர்-அய்யங்கார் சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை. நாம் சிரிப்போமே என்றே யாருக்கும் தெரியாமல் வீட்டில் அடித்துக் கொள்கிறார்கள்.
வாக்குறுதி துரோகம்
மற்றும் தேர்தலில் ஓட்டர்களுக்கு அவர்கள் சொன்னதை ஏதாவது நிறைவேற்றினார்களா? வெற்றி வெற்றி வெற்றி என்றார்களே தவிர
எதில் வெற்றி அடைந்தார்கள்? நாட்டிற்கு ஏதாவது நல்ல திட்டம் போட்டு அதில் வெற்றி அடைந்தார்களா? இல்லை. பின் எதில் வெற்றியடைந்தார்கள் என்றால் பார்ப்பனரல்லாதார் முயற்சியை ஒழித்து அவர்களுடைய முன்னேற்றத்தின் பல அம்சங்களை ஒழித்து பார்ப்பனர்களுடைய முன்னேற்றத்திற்கான திட்டங்களில் வெற்றியடையப் பார்க்கிறார்கள். இதைத்தவிர வேறென்ன சொல்லக்கூடும்?
கனம் ராஜகோபாலாச்சாரியார் கொள்கை என்ன? காங்கரஸ் கொள்கை என்ன? நிர்மாணத் திட்டம் என்ன? பஹிஸ்கார கூப்பாடு என்ன? இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் கேள்வி முறையில்லை சட்டசபையில் உட்கார்ந்ததும் மூதல் முதலாக வந்தேமாதரப் பாட்டைக் கொண்டு வந்து பாடி விட்டார்கள். இதிலே சகலருக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டது. முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஆத்திரம் என்று நினைக்காதீர்கள். பார்ப்பனரல்லாதாரும் தங்கள் தவறை சீக்கிரம் உணர்வார்கள். நேற்று மன்னார்குடியில் ஜனாப் கலீபுல்லா அவர்கள் வந்தே மாதரப் பாடலின் புரட்டை நன்கு விளக்கினார். அது எடுக்கப்பட்ட ஆனந்தமடம் நாவலிலிருந்து எடுத்த விபரத்தையும் சொன்னார். இப்போது அந்தப்பாட்டு தேசீயப்பாட்டு அல்லவென்றும் பிரார்த்தனை என்றும் தோழர் சாம்பமூர்த்தியே சொல்லுகிறார். மற்றும் இந்த கடன் மறுப்பு வீரர்கள் வந்தே மாதரப் பாட்டு பாடியவுடன் 1% கோடி ரூபாய் கடன் வாங்கினார்களே இதில் ஏதாவது யோக்கியதையோ நாணயமோ உண்டு என்று சொல்ல முடியுமா? சர்க்கார் ஏற்கனவே வாங்கிய தேசீயக்
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
கடனாகிய 1000 கோடி ரூபாயையும் “ஒரேயடியாக கொடுக்க முடியாதென்று சொல்லி விடுவோம்” என்கிறார்களே இதைப்பற்றி இங்கிலாந்தில் கூட கூச்சல் எழுந்தபோது இந்தியா கவர்ன்மெண்டார் வாங்கிய கடனுக்கு தகுந்த டிபாசிட்டை பாங்கிலே கட்ட முயற்சித்தார்கள். சர்க்காருக்கு கடன் கொடுத்த தோழர் சேலம் ஸி. விஜயராகவாச்சாரியார். போன்றவர்களும் ஒரேயடியாய் கூப்பாடு போட்டார்கள். அதற்கு காந்தியார் நாங்கள் “ஒரே அடியாக சொல்லவில்லை. ஆனால் நாங்கள் ஒரு கமிட்டி நியமிக்கிறோம். அதில் வெள்ளையர்கட்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம். கடனில் லாபம் வரும் காரியத்திற்காக வாங்கியது எது பட்டாளத்துக்கும் அநாவசிய காரியங்கட்கும் வாங்கியது எது என்று விசாரித்து முடிவு செய்வோம்” என்றார். அப்போதும் இப்போதைய நமது சென்னை பிரதமமந்திரியார் ஒரேயடியாக எந்தக்கடனையும் ஒத்துக்கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்படிச்சொன்ன ஆச்சாரியார் அவர்களே இப்போது பதவி கிடைத்தும் 1% கோடி ரூபாய் கடன் வாங்கினார்கள். போதாக் குறைக்கு இக் கடனுக்கு கவர்னர் அனுமதி கொடுத்த கையெழுத்திட்டதை பற்றி மிகவும் பெருமையடித்துக் கொள்கிறார்கள். கவர்னர் இதற்கு கையெழுத்துப் போட்டதின் காரணம் என்ன என்பது யாருக்காவது தெரியுமா? கடன் விண்ணப்பம் வந்தபோதே அதிலே பழைய கடன் அந்தக் கடனின் வட்டி இப்போதைய கடன் கிடைத்தால் அதன் விவரம், அதற்கு வட்டி ஆக கூடுதல் கணக்குகள் எல்லாம் வெளிவந்தன. இந்தக் கடனுக்கு இவர்களை சரியாக சிண்டை பிடித்துக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதைப் பற்றித்தான். மகிழ்ச்சியாக கவர்னர் கையெழுத்திட்டாரே தவிர வேறல்ல (பலத்த கரகோஷம்) கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். ஆனால் ஒரு அரசாங்கம் கடன் வாங்குவதென்றால் மேட்டூர் திட்டம், ரயில்வே திட்டம் முதலிய பெரிய வட்டி கட்டி, வரும்படி வரும் திட்டங்களுக்கு வாங்க வேண்டியதுதான். இது அறிவாளிகள் செய்யக்கூடிய விஷயம், ஆனால் நமது கனம் ராஜகோபாலாச்சாரியாரோ சுகாதாரம், கிராமப்புனருத்தாரணம் முதலிய தினசரி நடப்பு, வாழ்விற்கே கடன். வாங்கியிருக்கிறார் என்றால் இந்தத் திட்டங்களினால் ஏதாவது வருமானம் வருமா? சுகாதாரத்துக்கும் கிராமப்புனருத்தாரணத்துக்கும் கடன் வாங்கினால் இது வரவுக்கு மிஞ்சின செலவல்லவா? எப்படி இக்கடனை திருப்பிக்கொடுப்பது அல்லது இந்த சாக்கை வைத்துக்கொண்டு நிறைய கடன் ஏற்படுத்திவிட்டு வெளியே ஓடவா? மேட்டூருக்கு வாங்கின கடனுக்கே தஞ்சை ஜில்லா மிராசுதாரர்கள் வட்டி கட்டும்படி வரி கொடுக்க முடியாமல் மண்டையை உடைத்துக் கொள்கிறார்கள். வரிச்சுமை தாங்கவில்லை என்கிறார்கள். இதற்கு இதுவரை ஒரு பரிகாரமும் காணோம்
குடி அரசு- 1938 (1) 120
கல்வி:
நமது நாட்டில் படித்தவர்கள் எண்ணிக்கையோ 100க்கு 8 ஆகத்தான் இருக்கிறது. பழைய காலத்து அரசர்களோ ஆரிய அதிக்கத்திற்கே. அடிமையாய் இருந்ததால் ஆரியர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாது என்கிற ஆரியக் கொள்கையை அப்படியே காப்பாற்றிக் கொடுத்தவர்கள். அதனால் கல்வி பயிலுவதற்கு ஆரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிரத்தையே யில்லை. கடவுள்களே அரசாண்ட காலம் என்னும் ராமன்: கிருஷ்ணன் காலத்திலும், அதன்பிறகு அரசாண்ட சேர, சோழ, பாண்டியர்கள் காலத்திலும் அதன் பிறகு பிரிந்து கிடந்த 56 தேச ஆட்சி இருந்த காலம் வரை பார்ப்பனர் தவிர மற்றவர்களுக்குக் கல்வியில்லை. வேதத்தை உச்சரித்தால் நாக்கையறுக்க வேண்டும், கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும், மனதில் இருத்தினால் நெஞ்சை பிளக்கவேண்டும் என்பன போன்ற கொடிய தண்டனைகள் விதிக்கப்பட்டன. இதை மேயோ அம்மையார் எழுதியதற்கு, அந்த அம்மையார் மீது நம் பார்ப்பனர்கள் பாய்ந்தார்கள். நமது தேசீய வீரர்கள் இதற்கு சமாதானம் சொல்ல வந்த தேசீய தியாகிகள் “படிக்கக் கூடாதென்கின்ற விதியானது வேதப்படிப்புக்கே தவிர வேறல்ல” வென்றார்கள். இதற்கு மறுபடியும் மறுப்பு சொன்னபோது “வேதத்தை படிக்காமல் அதன் புரட்டுகளையும், யோக்கியதைகளையும் எப்படி சொல்வது? அதிலும் அப்போது வேதத்தை தவிர புஸ்தகம் தான் ஏது?” என்றெல்லாம் கேட்டபோது ஒன்றும் பதில் இல்லை. வெள்ளைக்காரர்கள் ஆட்சி வந்த பிறகுதான். படிக்கக் கூடாதென்ற சமூகங்கள் படிக்க முன் வந்தது; இப்படி படிக்க
முன் வந்ததன் பயனாக தாழ்த்தப்பட்டவர்களாக இதுவரை இருந்தவர்களும் பிற்போக்காகவும், கொடுமைப்பட்டவர்களாகவும், இருந்து வருகிறவர்களும் படிக்க முன் வந்து உத்தியோகத்துக்கு போட்டிபோட ஆரம்பித்துவிட்டார்கள் இதைப்பார்த்த காங்கரஸ்காரர்கள் இதன் தலையில் கைவைக்க யுத்தி செய்து தந்திரமாக வார்தா கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து திணிக்கப் பார்க்கிறார்கள். கல்லாமையைக் கொல்லவோ, அல்லது தற்குறிகளே யில்லாமல் செய்யவோ, இவர்கள் ஒரு திட்டத்தையும் கொண்டு வருவதாக காணோம். இப்போதுள்ள மந்திரிகளும் காலேஜ்களை ஒழிக்க வேண்டும், உயர்தர பாடசாலைகளை மூட வேண்டும், 60 பிள்ளைகளுக்கு குறைந்த பள்ளிக்கூடங்களை எடுத்துவிடவேண்டும். கட்டாய இலவசப்படிப்பு வேண்டியதில்லை, கல்வி மான்யம் குறைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ஆகவே இப்போதுள்ள காங்கரஸ்
சர்க்கார் எந்த விதத்தில் நம்மை முன்னேற்றுவதற்கு உதவி செய்திருக்கிறது?
ஹிந்தி
இந்த லக்ஷணத்தில் ஹிந்தி திட்டம் எதற்காக? சுத்த தமிழ் - நல்ல அழகிய தமிழ் - பிறவி தமிழ் - தினமும் பேசும் பாஷை நமக்கு 2 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
செளகரியமாக இருக்கும்போது அதிலும் படித்த மக்கள் 100க்கு 8-பேரே தான் இருக்கின்ற நிலையில் ஹிந்தியும் வந்தால் என்னவாகும்? ல, 1,
ள எழுத்துக்களுக்கு வித்தியாசமே நம்ம ஆட்களுக்கு இன்னமும் சரியாக தெரியவில்லை. பள்ளிக்கு படிக்க வரும் நம் பிள்ளைகளைப் பார்த்து உனக்கு படிப்பு வராது வீட்டுக்கு போய் வண்டியோட்டுகிறவன் மகனாயிருந்தால் வண்டியோட்டு, உழுகிறவன் மகனாயிருந்தால் உழு” என்றெல்லாம் சொல்லி விரட்டி விட்டு இப்போது மாத்திரம் இந்த ஹிந்திக் கல்வியை கொண்டு வந்து அதையும் சேர்த்து அதையும் கட்டாயமாகப் படிக்கும்படி சொன்னால் எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடியும்? ஏழையைக் கெடுக்க ஒரு யானையைக் கொடு என்று சொல்லுவார்கள். அதுபோல் படிப்பில் மிக ஏழையாய் இருக்கும் நம் மக்களுக்கு யானை போன்ற ஹிந்தி உயர்வாயிருந்தாலும் அது இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருமா? அவர்கள் வாயில் நுழையுமா? ஒரு எழுத்துக்கு 4-சப்தமிருக்கிறது. உச்சரிப்பு கடினம். எழுத்துக்கள் அதிகம். 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் நம் பிள்ளைகள் இரண்டு அந்நிய பாஷையைப் படிக்க முடியுமா? அதில் போதுமான மார்க் வாங்க
முடியுமா? இந்த ஹிந்தி படித்து நன்றாய் தேர்ச்சி பெறுகிற அந்தக் காலத்திற்குள்ளே ஒருவன் பி.ஏ. ஒரு பட்டதாரியாக வந்து விடலாம்
ஆங்கிலம்
இந்த இந்தி திட்டத்தைக் கொண்டு வருகிற சந்தர்ப்பத்திலே காரணம் சொல்லும்போது, ''ஆங்கிலமானது அடிமைப் படிப்பு அதனால்தான் அதை ஒழித்து ஹிந்தியை புனருத்தாரணம் செய்கிறதாக" சொல்கிறார்கள். நமது காங்கரஸ்காரர்கள் தோழர் காந்தியார் முதற்கொண்டு மூர்த்தியார் வரை இப்போது ஆங்கிலம் அடிமைப்படிப்பு அடிமைப் படிப்பு என்று ஓலமிடுகிறார்கள். ஆனால் நாம் அந்தமாதிரி கருதி இருக்க முடியுமா? ஓட்டல்காரன் ஆங்கிலத்தில் பேசுகிறான்,
குச்சுக்காரத் தெருவில்கூட ஆங்கிலமே வழங்கப்படுகிறது. நாம் பார்ப்பனர்களுக்கும் நாம் உத்தியோகத்தில் போட்டி போட நினைக்காத வரை ஆங்கிலம் நல்ல பாஷையாய் இருந்து வந்தது. நாம் எப்போது போட்டிபோட ஆரம்பித்தோமோ அன்றே அவர்கள் ஆங்கிலம் அடிமை பாஷை, நீச பாஷை என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தோழர் காந்தியாருக்கு இங்லீஷ் தெரியாமல் இருந்தால் மகாத்மா பட்டமேது? அவர் சொல்லிக் கொண்டிருக்கிற துளசிதாஸ் இராமாயணம் படித்ததால் வந்த கவுரவமா? (சிரிப்பு) தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்குத்தான் இவ்வளவு கவுரவமேது? இவ்வளவு சூழ்ச்சிக் குணம் ஏது? இதெல்லாம் இங்கிலீஷ் தெரியாமலிருந்து வந்ததா? இது மற்றவர்கள் தலையில் கையை வைப்பதற்குச் செய்யப்படும் சூழ்ச்சிப் பிரசாரமா, அல்லவா என்று
குடி அரசு- 1938 (1) 122
யோசித்துப் பாருங்கள். முஸ்லீம்களும், தமிழர்களும் பங்கு கேட்கிறவரை இங்கிலீஷுக்கு ஒரு அனர்த்தத்தையும் காணோம். இங்கிலீஷைப் பற்றி காங்கரஸ் தலைவர்கள் எவ்வளவு புகழ்ந்திருக்கிறார்கள். செத்த தலைவர்களை விட்டு விட்டாலும், தோழர் மாளவியா இந்த ஆங்கிலக் கல்விக்காக பிரிட்டிஷ்காரர்களுக்கு நன்றி செலுத்தியிருக்கிறார். காங்கரஸ் பிரபல தலைவரான தோழர் தாதாபாய், சுரேந்திரநாத் பானர்ஜி, தோழர்
சர்.சி. சங்கரன் நாயர் முதலியவர்கள் பல தடவைகளில் “எல்லாத் துறைகளிலும் நாம் முன்னேறியதற்கு காரணம் காருண்யமுள்ள இந்த வெள்ளைக்காரர்களின் கல்வியினால்தான்' என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே உங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில்தான் எந்த ஜில்லாவிலுமில்லாத அளவு பார்ப்பனர்கள் உயர்ந்த படிப்பு படித்து உங்கள் தலையை நன்றாய் அழுத்திவிட்டார்கள். இதற்குக் காரணம் இந்த ஜில்லாவிலிருக்கிற 2 காலேஜுகள் தான். சர்.சி.பி. ராமசாமி அய்யர், மணி ஐயர், முத்துஸாமி அய்யர், கிருஷ்ணசாமி அய்யர், சீநீவாச சாஸ்திரி, வெங்கட்ட ராம சாஸ்திரி முதலிய உங்கள் ஜில்லாக்காரர்கள் ஆங்கிலம் படித்த போது அது தேசீய பாஷையாய் இருந்தது. ஆனால் அதே படிப்பை நாம் படிக்கும்போது அது அடிமைப்படிப்பாம்; நீச பாஷையாம். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூடாமலிருந்ததனாலும், அவர்களுக்கே மைசூர், திருவாங்கூர் போன்ற இடங்களிலும் பணத்தை கொடுத்து கல்வியும் கொடுத்ததாலும், தப்பித்தவறி நம்ம ஆட்கள் படிக்கப் போனால் அவர்களை பார்ப்பனர்கள் “உனக்கு படிப்பு எங்கேயடா வரப்போகிறது. எங்காகிலும் மூட்டைத் தூக்கு போடா” என்பன போன்ற வார்த்தைகளால் தாழ்த்தி வந்ததாலும் நம்முடைய பெரிய செல்வ சீமான்களும் நம் சமூகத்தைப் பற்றிய கவலையேயில்லாமல் பார்ப்பனர்களுக்கே தங்கள் செல்வங்களை தானம் செய்ததாலும் பார்ப்பனர்கள் சமூகம் 100க்கு 100 பேர் படிக்க முடிந்திருக்கிறது புரோகிதர் மகன் ஐ.சி.எஸ். படிக்க மூடிந்திருக்கிறது. இல்லாவிட்டால். அவர்கள் சமூகம் ஐ.சி.எஸ். வர்க்கத்தில் 100க்கு 58 பேர் எப்படி இருக்க முடிந்தது? பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு பணக்காரர்? பார்ப்பனரல்லாதார் என்ன அவ்வளவு அன்னக்காவடிகளா? ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தாங்கள் பதவியில் இருந்த போது எல்லா சமூகமும் படிக்கும்படியான வசதி செய்தார்கள். தோழர் நாடிமுத்து இந்தியை எதிர்க்கிறார், ராமலிங்கம் செட்டியார் ஆகபிக்கிறார், தோழர் உ.வே சாமிநாதய்யரும் ஆக்ஷேபிக்கிறார். இதையெல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு ராஜகோபாலாச்சாரியார் இந்த ஹிந்தி விஷயத்தில் இவ்வளவு பிடிவாதம் காட்டுவானேன்? இந்த காலத்தில் புராண நம்பிக்கை, வேத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை முதலியன குறைந்துவிட்டன. ஆகையால் அதைப் புனருத்தாரணம் செய்ய ஹந்தி 123 வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
உதவும் என்று கனம் ராஜகோபாலாச்சாரியார் கருதியே தான் இப்படி செய்கிறார். அல்லது ஹிந்தி பொது பாஷைகென்றால் பொது பாஷை இல்லாத தேசம் எது கெட்டு விட்டது? இந்த ஹிந்திப் பிரசாரத்திற்கு வட நாட்டிலேயிருந்து ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள். தோழர் காந்தியாருக்கு தமிழ் நாட்டிலே என்ன தெரியும்? என்ன செய்தார்? நமக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? (தொடரும்)
குறிப்பு: 16.01.1938 நீடாமங்கலம் சொற்பொழிவு 23.01.1938 தொடர்ச்சி
குடி அரசு - சொற்பொழிவு - 06.02.1938
குடி அரசு- 1938 (1) 124
ஆத்திரப்பட்டு பயன் என்ன?
ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே?
சுயமரியாதை இயக்கமானது நாஸ்திகத்தையும் மதங்கள் ஒழிப்பையும் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை என்பது பல தடவை விளக்கப்பட்ட விஷயமாகும். ஆனால் சுயமரியாதை மகாநாடுகளில் “மக்கள் சுதந்தரமும் ஒற்றுமையும் சுயமரியாதையும் பெற்று சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகிய துறைகளில் சமத்துவமும், சம உரிமையும், விடுதலையும் பெற வேண்டுமானால் மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்பதாகவும் இந்தக் கருத்தைக் கொண்டதாகவுமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் பல சுயமரியாதைத் தோழர்கள் தங்கள் தங்களை பொறுத்த வரையில் ஜாதிமதம் முதலியவைகளை
விட்டு விலகி அனுபவத்திலும் அதற்கு ஏற்றதுபோல் நடந்து வருகிறார்கள்.
இந்தக் கருத்தை அனுசரித்தே இந்த தத்துவத்தை அமுலில் கொண்டுவரவே இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்னிருந்தே பல பெரியார்கள் முயற்சித்து அதற்கு ஏற்ற பல காரியங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள். சுமார் 100 வருஷங்களுக்கு முன் வங்காளத்தில் “பிரம்ம சமாஜம்” என்னும் ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவித்த பெரியார்களும் ஜாதி மதம் ஆகியவை ஏதும் இல்லை என்றும் மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்றும் சொல்லி அக்கொள்கைக்கு பிரசாரம் செய்து கடசியாக ஜாதிமதமற்ற ஒரு ஸ்தாபனமாக அதை கையாண்டு இந்தியாவில் பல இடங்களிலும் அதற்கு கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை அக்கொள்கையைத் தழுவச் செய்துமிருக்கிறார்கள்.
இந்து மதமென்பதிலும் ஞானமார்க்கமென்றோ வேதாந்த மார்க்கமென்றோ சொல்லப்படுபவைகளில் தத்துவங்களில் மதம் ஜாதி எதுவும் இல்லை என்பதும் மற்றும் மக்களும் மற்ற ஜீவராசிகளும் ஒன்றுபோல் பாவிக்கப்பட வேண்டியவை என்பதும் இடம் பெற்றிருப்பது
யாரும் அறியாததல்ல.
மேலும் இந்துமதம் என்பதில் உள்பட்ட சைவம் வைணவம் என்பதிலும் மக்களுக்கு தனி ஜாதியோ மதமோ இல்லை என்றும் “சர்வம் விஷ்ணு மயம் ஜெகத்” என்றும் “சர்வம் சிவமயம் ஜெகத்” என்றும் 25— வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
சொல்லப்படுவதோடு இருசாராரும் சமரசமும் சன்மார்க்கமுமே மதமல்லாமல் மற்றெவ்வித மதமோ சமயமோ மார்க்கமோ இல்லை என்பதும் யாவரும் உணர்ந்ததேயாகும்
மத ஓழிப்புப் பிரசாரத்தால் யாருக்குக் கேடு. ஆகவே சுயமரியாதைக்காரர்கள் மதங்கள் ஒழிய வேண்டும் என்று சொல்வதில் இந்து மதக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களில் தங்களை மாத்திரம் மனித சமூகத்தில் உயர்ந்த பிறவி என்று ஏற்படுத்திக்கொண்டு மற்ற மக்களை பல படிகளாக தாழ்த்தித் தாழ்த்தி பிரித்து வைத்து மக்கள் ஒன்று சேருவதற்கில்லாமல் செய்து அதன் பலனாய் தாங்கள் பாடுபடாமல் வயிறு வளர்த்து உயிர் வாழ்க்கை நடத்தும் கூட்டத்தார் மாத்திரம் “மதம் போகின்றதே, மதம் போய்விடுமே, மதம் போச்சே" என்று கூப்பாடு போடலாமே ஒழிய மதங்கள் போகாமலிருக்க என்று பாடுபடலாமே ஒழிய மற்ற எந்த பிரிவு இந்துவுக்கும் எந்த உட்பிரிவு மார்க்கத்தாருக்கும் கவலைப்பட அவசியமில்லை என்பதே நமதபிப்பிராயம். ஆகையால் சுயமரியாதைக்காரர்களின் மதமொழிப்புப் பிரசாரத்தால் உலகுக்கு எவ்வித கெடுதியும் ஏற்பட்டுவிடும் என்றும் எந்த இந்துவும் பயப்படவேண்டியதில்லை என்றே கருதுகிறோம்
மதமாற்றம் புதியதல்ல.
சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு இந்துக்களில் மலையாளத்தில் ஒரு பெரும் வகுப்பாராகிய ஈழுவ சமூகத்தார் தங்கள் சமூக மகாநாடுகளிலும் அச் சமூக வாலிபர்கள் மகாநாடுகளிலும் மதமொழிக்கும் பிரச்சினையை கொண்டு வந்து நன்றாக ஆலோசித்து இந்து மதத்தையே தங்கள் சமூகம் விட்டு விட்டதாக தீர்மானங்கள் செய்தார்கள். அதுபோலவே பம்பாய் ஆதிதிராவிட சமூகத்தலைவராகிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ஆதிதிராவிடர்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டியது என்றும் தீர்மானம் செய்து இருக்கிறார். என்றாலும் சுயமரியாதை இயக்கம் ஏற்படுவதற்கு ஏறக்குறைய 500, 1000 வருஷ கால முன்பிருந்தே இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இந்து மதத்தை விட்டு அந்நிய மதத்தை ஏற்றுக்கொண்டும் வந்திருக்கிறார்கள்.
அந்நிய மதக்காரர்கள் யாராவது இந்து மதத்துக்கு வந்திருக்கிறார்களா. என்று பார்த்தால் அது எண்ணிக்கைக்கு மிக மிகச் சுருக்கமாய் இருக்கும் என்பதோடு அப்படிச் சேர்க்கப்பட்டவர்களுக்கு இந்து மதத்தில் என்ன அந்தஸ்து என்பது இன்னமும் முடிவு செய்யாததும் அரசியல் காரணங்களுக்காக அப்படிப்பட்டவர்களை இந்துக்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடியதாக மாத்திரமுமே இருக்கிறதே அல்லாமல்
சமூகத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு (அதாவது அந்நிய மதத்தில்
குடி அரசு- 1938 (1) 126
இருந்துவந்து சேர்ந்தவர்களுக்கு) எவ்வித உரிமையோ நிலைமையோ இருக்கிறது என்று சொல்லமுடியாமலே இருந்துவருகிறது.
இந்த 15 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் தோன்றி இக் குறைகளையும் கொடுமைகளையும் புரட்டுகளையும் முட்டாள்தனங்களையும் வெளியாக்கி கண்டித்து பிரசாரம் செய்து வந்ததின் பலனாகவே இந்தியர்களில் மகமதியரல்லாத மக்களை ஒன்று சேர்க்கவும் மகமதிய
சமூகத்திற்கு எதிர் நிற்கவும், இந்துக்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு ஓடிப்போகாமல் இருக்கவுமே ஏதேதோ சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்து வருகிறார்கள். அவற்றில் சிலவே தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை கொடுப்பது என்ற உணர்ச்சியும் சில சுதேச சமஸ்தானங்களில் ஆலயப் பிரவேச உரிமை அளித்து இருப்பதுமான காரியங்களும் சமுதாயத் துறையில் குழந்தை மணம் தடுப்பு சட்டமும், விதவை மணம் செல்லும் சட்டமும், பெண்கள் சொத்துரிமை சட்டமும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு கல்வி வசதி, ரோட்டில் நடக்கும் வசதி முதலிய செளகரியங்கள் அரசியலின் மூலமாக செய்ததுமான காரியங்கள் ஆகும்.
இப்படிப் பல காரியங்கள் நடந்தாலும் இவை சமூகசீர்திருத்த மாகவோ மத சீர்திருத்தமாகவோ இல்லாமல் வெறும் அரசியல் காரியங்களுக்கும் இந்துக்கள் என்பவர்கள் வேறுமதத்துக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றும், எண்ணிக்கை பாதுகாப்புக்குமாக செய்யப்பட்டனவே ஒழிய வேறில்லை.
குழந்தை மணத்தடுப்பு சட்டம், இந்து மதக்காரர்களால் மத தத்துவ நிபுணர்களால் மதப்பிரமுகர்களால் இன்னமும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆலயப்பிரவேசமென்பதும், இன்னமும் இந்துமதத் தலைவர்களால், மதப்பிரமுகர்களால் ஒப்புக்கொள்ளப்படவே இல்லை
திருவாங்கூர் ஆலயப்பிரவேச யோக்கியதை
திருவனந்தபுரம் ஆலயப்பிரவேசமானது திருவாங்கூர் கோயில்கள் இதுவரை மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கு மாத்திரம் செல்ல உரிமை இருந்ததானது இப்போதே கீழ்ஜாதியாருக்கு மாத்திரம் செல்ல உரிமையுள்ள கோயில்களாக ஆக்கப்பட்டுவிட்டது. அதாவது மேல்ஜாதியார்கள். கோவில்களை பஹிஷ்கரித்துவிட்டார்கள். அப்படி மீறி கோவில்களுக்கு சென்று வந்த மேல் ஜாதியார்களை மேல்ஜாதி சமூகத்தில் பஹிஷ்காரம் செய்கிறார்கள் என்பதோடு அவர்களை தாழ்ந்த ஜாதியார் என்பவர்களுக்கு பிரவேசமில்லாத கோவில்களில் விடப்படுவதுமில்லை. இதை பல பார்ப்பனப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்து வருகிறோம் ஆரம்ப முதல் நமக்கு இந்த சேதி தெரிவிக்கப்பட்டும் வந்திருக்கிறது.
மர ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
இந்த விஷயங்கள் மத சம்பந்தமான வைதீகர்கள் உலகில் நடக்கின்றன. என்பதாக மாத்திரம் சொல்லுவதற்கில்லாமல் அரசியல் உலகிலும் நடந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. நம் நாட்டு அரசியல் ஸ்தாபனங்களில் தங்களுக்கே தான் அரசியலைப் பற்றிப் பேச உரிமை உண்டு என்று வாதிக்கும் காங்கரஸ் ஸ்தாபனத்தில் ஜாதி உணர்ச்சி ஜாதி பாகுபாடு காப்பாற்றும் உணர்ச்சியும் மத உணர்ச்சியும் மதப்பாகுபாடு காப்பாற்றும் உணர்ச்சியும் வெகு கண்டிப்பாக கட்டாயமாக இருந்து வருகின்றன.
அந்தப்படி காங்கரஸ்காரர்களுக்கு ஜாதிமத பாகுபாட்டை காப்பாற்றும் உணர்ச்சி இல்லாதிருக்குமானால் சகல மக்களுக்கும் அரசியலில் சமஉரிமை கிடைக்கும்படி செய்யவும் மக்கள் ஜாதிமதம்
பேர் சொல்லி உரிமைகள் கேட்கவேண்டிய அவசியமில்லாமல் இருக்கும்படி செய்யவும் சிறிதாவது முயற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள் அப்படிக்கில்லாமல் அந்நியர்கள் ஜாதி மத உரிமை கேட்கும்போது மாத்திரம் “அவை கூடாது என்பதற்காகத்தான் காங்கரஸ் பாடுபடுகின்றது"' என்பதும் காங்கரசினால் அடையப் பெற்ற சாதனங்களை வழங்கும்போது
தங்கள் ஜாதி, தங்கள் மதம், தங்கள் வகுப்பு மாத்திரமே நூற்றுக்கு முன்னூறு நானூறு பங்கு வீதம் ஏகபோகமாய் அனுபவிக்கும்படியான சூழ்ச்சிகளையும் பலாத்காரங்களையும் சிறிதும் தயவு தாட்சண்யம் மனித தன்மை இல்லாதபடி கையாளுகிறார்கள்.
ஜாதிமத உணர்ச்சிக்கு பார்ப்பணரே காரணம்
இந்த மாதிரியாக ஒரு தனிப்பட்ட ஜாதியார் குறிப்பாக பார்ப்பனர்கள் நடந்து கொள்ளுவதாலேயே இன்று இந்தியாவெங்கும்
மூலைமுடுக்குச் சகலத்திலும், அரசியல் உலகத்திலும், மத உலகத்திலும் ஜாதிமத உணர்ச்சியும் கிளர்ச்சியும் தலைவிரித்தாடுகின்றன. இன்றுள்ள இந்து முஸ்லீம் பேத உணர்ச்சி பார்ப்பனர்களாலேயே அதாவது இந்துமத தர்மகர்த்தாக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களாகிய தோழர்கள் மாளவியா, மூஞ்சே, பாய்பரமானந்தா, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியவர்களாலுமே நம் மாகாணத்திலும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, ஏ. ரங்கசாமி அய்யங்கார், கஸ்தூரி ரங்கய்யங்கார் போன்றவர்களாலுமே ஏற்பட்டது என்பதும் இவர்களாலேயே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியர் திராவிடர் என்ற உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதும் யாராலும் மறுக்க முடியாது
பார்ப்பனர்கள் மிக்க தந்திரசாலிகள் சூழ்ச்சிக்காரர்கள் ஆனதால். முஸ்லிம்களில் மெளலானா அபூல்கலாம் ஆசாத், தாவுத்ஷா, உபயத்துல்லா போன்ற ஆட்களை விளம்பரம் கொடுத்து பிரமாதப்படுத்தி அவர்களைக் கொண்டு முஸ்லிம்களின் முன்னேற்ற உணர்ச்சியை தடுக்க முயற்சிப்பதும் பார்ப்பனரல்லாதார்களில் தோழர்கள் காந்தியார், முத்துரங்கம், குப்புசாமி,
குடி அரசு- 1938 (1) 128
சுப்பையா போன்றவர்களுக்கு விளம்பரம் கொடுத்து அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாதார்- திராவிடர் முன்னேற்றத்தைத் தடுப்பதுமான சூழ்ச்சி செய்கிறார்கள். அது போலவே தாழ்த்தப்பட்ட மக்களிலும், யாரோ சிறிதும் ஊர், பெயர் தெரியாத ஆட்களை விலை கொடுத்து வாங்கி பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்து அவர்களைக்கொண்டே அச் சமூக முன்னேற்றத்தையும் தடுக்கிறார்கள்.
இந்த வேலைதான் இந்நாட்டு பார்ப்பனர்கள் அரசியல் விடுதலை காரியமாகவும், காங்கரஸ் காரியமாகவும் செய்து வருகிறார்கள்.
இதை ஒழிப்பது என்பது இக்கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் தடுத்து மக்கள் சமூகத்துக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படும்படி செய்வது என்பது மிக மிக பிரயாசையான காரியமாய் இருப்பதோடு இக்காரியத்தை செய்வதற்கு எந்த மதத்திலும் எந்த ஜாதியிலும் முயற்சி இல்லை என்றும் எவ்வித ஸ்தாபனமும் இல்லை என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஜமால் முகமது கருத்து
முஸ்லிம் தோழர்கள் “இக்காரியங்களுக்காக முஸ்லிம் லீக்கு இருக்கிறது” என்று சொல்லவரக் கூடும். முஸ்லிம்லீக்கின் யோக்கியதை என்ன என்பது இம்மாகாண முஸ்லிம் லீக் தலைவரான தோழர் ஜமால் மகமது சாயபு அவர்கள் முஸ்லிம் லீக்கு எதற்காக இருக்கிறது என்று விளக்கியிருக்கும் வாக்குமூலத்தில் விளங்கிவிட்டது. அதாவது “முஸ்லீம்
லீக் என்பது நம்முடைய தேவைகளை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமே ஒழிய வேறல்ல” என்று சொன்னதாக சேதி வந்திருக்கிறது. அப்படியானால் முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம்களால். ஜீவாதாரமானதென்று கருதும் கொள்கைகளுக்கு ஆபத்தும் இடையூறும் ஏற்படும்படியாக மற்ற சமூகத்தாரோ, மதக்காரர்களோ செய்யும் தொல்லையில் இருந்து விடுபட முஸ்லிம்களுக்கு ஸ்தாபனம் எங்கே? மார்க்கம் எங்கே என்று கேட்காமல் இருக்க முடியவில்லை:
கனம் ஜமால் மகமது சாயபு கோடீஸ்வரர் - அவரிடம் பார்ப்பனர். சதா பணம் பறிப்பவர்களாய் இருப்பதால் அவரைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் அல்லது வேறு சில இந்துக்கள் என்பவர்கள் அவர். மகிழும்படியும், திருப்தி அடையும்படியும் நடந்து கொள்ளலாம். ஆனால் மற்ற முஸ்லீம்களின் கதி என்ன என்று யோசிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். 8 கோடி முஸ்லீம்களில் 100-க்கு 99 - தே முக்கால் பேர்களால் போற்றப்படும் ஜனாப் ஜின்னாவை இந்தப் பார்ப்பனர்கள் தோழர்கள் மோதிலால், ஜவர்லால், மூஞ்சே போன்றவர்களும் மற்றும் காங்கரஸ் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்னமாய் கருதின? எவ்வளவு கேவலமாய் இழித்துக் கூறின? மூஸ்லிம் சமூகத்தையே அவை எவ்வளவு அலட்சியமாய் பேசின? இவைகளை உணர்ந்தால்.
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
எப்படி ஒரு முஸ்லிம் காங்கரசினிடம் தயவு தாட்சண்யம் காட்டவோ பார்ப்பனருக்கு பரிந்துபேசவோ முடியும்? என்று கேட்கின்றோம். சர். மகமது உஸ்மான் அவர்கள் பார்ப்பனர் ஜோதியில் இரண்டறக் கலந்து விட்டது பற்றி நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் கனம் ஜமால் மகமது சாயபு அவர்கள் பார்ப்பனக் கெஞ்சுதலுக்கு இணங்கினது பற்றி ஆச்சரியப்படுகிறோம்.
கனம் ஜமால் மகமது சாயபு தனித்தொகுதி வேண்டாமென்றவர். ஆனால் பொதுத்தொகுதி பேரால் 2 தடவை சட்டசபை எலக்ஷனுக்கு அதுவும் வியாபாரத் தொகுதியில் நின்று இரண்டு தடவையும் பார்ப்பனர்களாலேயே தோற்கடிக்கப்படவும் வர முடியாமல் போகவும் செய்யப்பட்டவர். அப்படி இருந்தும் அவருக்குப் பார்ப்பனர்கள் இடம் சலுகையாக இருக்குமானால் மற்ற முஸ்லிம்களுக்கோ நமக்கோ அந்த மகான் தன்மை சுலபத்தில் வரும் என்று அவரே எதிர்பார்ப்பது சிறிதும் நியாயமும் தருமமுமாகாது
தூழ்த்தப்பட்டவர்கன் நிலை
நிற்க தற்கால தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமும் அது போலவேதான் இருந்து வருகின்றது
காங்கரசில் இந்து முஸ்லிம் ஒற்றுமைத் திட்டம் எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ அது போலவே தீண்டாமை விலக்குத் திட்டமும் தீண்டாதார் முன்னேற்றத் திட்டமும் இருந்து வருகின்றன.
இது தவிர பூனா ஒப்பந்தம் வேறு இருந்து வருகிறது. இப்படி இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் காங்கரசு நடந்து
வந்திருக்கும் யோக்கியதை திருச்சி ஜில்லா அரசியல் மகாநாட்டில் தோழர் சன்னாசிக்கு நடந்த மரியாதையும் தஞ்சை ஜில்லா அரசியல். மகாநாட்டில் நீடாமங்கலத்தில் தோழர்கள் தேவசகாயம், ரத்தினம், ஆறுமுகம் ஆகியவர்களுக்கு நடந்த மரியாதையும் கவளித்துப்பார்த்தால். எவருக்கும் நன்றாய் விளங்கிவிடும்
தோழர் சன்னாசிக்கு சாப்பாடு தெருவில் துணியை விரிக்கச்சொல்லி இலையில் காய்கறி சாதம் வைத்து கொண்டு வந்து போட்டார்கள்: இதை தோழர் சன்னாசியே தெரிவித்தார். எந்தக் காங்கரஸ் வாதியாலும் இது மறுக்கப்படவில்லை:
நீடாமங்கலக் கதை
தஞ்சை மகாநாட்டில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக தோழர்கள் தேவசகாயம், ஆறுமுகம், ரெத்தினம் ஆகியவர்களை உதைத்து தலை மொட்டை அடித்து சிரைத்து சாணிப்பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது, இது அவர்கள் ஸ்டேட்மெண்டுடன் உருவப்படத்தோடு.
குடி அரசு- 1938 (1) 130
வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அக்காரியத்தில் சம்மந்தப்பட்ட யாரும் இதுவரை மறுக்கவே இல்லை. யாரோ ஒரு தோழர் சூசை என்பவர் மறுத்து இருக்கிறார். அவர் இதில் சம்மந்தப்படவில்லை என்று அடிபட்டு மொட்டை அடிக்கப்பட்ட தோழர்கள் சொல்லுகிறார்கள். மற்றும் கட்டாயப்படுத்தி மிரட்டி கையெழுத்து வாங்கினதாக சொல்லப்படுவதும் மறுக்கப்படவில்லை.
மற்றும் சுமார் 20 பேர்கள் மொட்டை அடிக்கப்பட்ட சேதியையும் அவர்களது பெயர்களுடன் பத்திரிக்கைகளில் வெளிவந்ததையும் யாரும் மறுக்கவில்லை. இன்றும் இந்த 20 பேர்கள் தலை மொட்டையாய் இருப்பதை யாரும் பார்த்துக்கொள்ளலாம்
இது எப்படியோ போகட்டும். இந்த விஷயமாக எந்த ஆதிதிராவிட மெம்பராவது கவலை எடுத்து இவர்களைக் கண்டு அல்லது வரவழைத்து விசாரித்தார்களா? இல்லவே இல்லை. அல்லது இந்த அடிபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஆதிதிராவிட தோழர்கள் 20 பேர்களில் பகுதிக்கு கிறிஸ்தவர்களாயிற்றே. இந்த அதிதிராவிடர்களுக்கும் இவர்கள் முன் சந்ததியர்களுக்கும் ஞானம் ஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாக ஆக்கிய பாதிரிமார்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறோம். மற்றும் இந்தியாவில் இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களின். மொத்த எண்ணிக்கையை காட்டி உத்தியோகப் பங்கு பெற்ற கிறிஸ்தவ சமூக பிரமுகர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறோம்
இந்த மொட்டை அடித்து துன்புறுத்தி சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆட்களில் ஒருவராவது முஸ்லீமாய் இருந்திருந்தால் இன்று நீடாமங்கலமோ தஞ்சை ஜில்லாவோ சட்டசபையோ சர்க்கார் நிலையோ என்ன கதி ஆக்கியிருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்
ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்களாக வேண்டும்
ஆதிதிராவிடர்களை நாம் முஸ்லிம்களாக மாறிவிடும்படி இந்த இருபது வருஷகாலமாய் வெளிப்படையாய் சொல்லி வரும் காரணம் இதுவேயாகும். அவர்களது மோட்சத்தைப் பற்றியோ கடவுளது சன்மானத்தைப் பற்றியோ உண்மையில் நமக்கு சிறிதும் கவலையில்லை. அப்படி ஒன்று இருந்தால் அவரவர்கள் எண்ணங்கள் செய்கைகள் ஆகியவைகளுக்குகந்தபடி அவரவர்கள் அடைந்துதான் தீர்வார்கள். இல்லாவிட்டால் யாரும் அடையமாட்டார்கள். ஆனால் ஆதிதிராவிடர்கள் மனிதத்தன்மை பெற சுயமரியாதை அடைய இந்துக்களுடைய இம்மாதிரி கொடுமையிலிருந்தும், கிறிஸ்தவர்களுடைய இம்மாதிரி கோழைத்தனமும் கவலையற்ற தன்மையும் கொண்ட சுயநலத்தில் இருந்தும் தப்ப ஆதி
திராவிடர்களுக்கு இன்று ஒருவழிதான் இருக்கிறது Bl வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அதாவது ஆதிதிராவிடர்கள் இந்துக்கள் என்பதிலிருந்தும், கிறிஸ்தவர்கள் என்பதிலிருந்தும் வெளிப்பட்டு முஸ்லிம்களாக மாறிவிடுவது தான். உண்மையில் இந்த நீடாமங்கல அநீதிக்கு - அட்டூழியத்துக்கு சமாதானம் ஏற்படாத பட்சத்தில் மலையாளத்தைப் போலவே நமது
நாட்டிலும், ஆதி திராவிடர்களுக்கென்றே ஒரு பெரிய மதமாற்ற மகாநாடு ஒன்று கூட்டி ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்களாக ஆக்கப்படுவதற்கு சீர்திருத்த - சமூதாய சமத்துவ புரட்சிகர வாலிபர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமும் அவசரமுமான கடமையாகும். இந்த நிலை ஏற்பட்ட பிறகுதான் மலையாள கோவில் கதவு திறக்கப்பட்டது
நீடாமங்கல நிகழ்ச்சியை காங்கரஸ்காரர்கள் பொய்யாக்கி விடலாம், இதை வெளிப்படுத்தியதற்காக நமக்கு பல தொல்லைகளை விளைவிக்கலாம் அல்லது இதை வெளியாக்க உதவி செய்த ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க வசதி இல்லாமல் அடித்து விரட்டப்படலாம். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. நம்மைப் பொறுத்தவரை இந்நிகழ்ச்சி உண்மை என்றும் கல்லுப் போன்ற - சூரிய வெளிச்சம் போன்ற உண்மை என்றும் கருதி இருக்கிறோம். இதற்கு ஆதாரமாக இன்று 20 மொட்டைத் தலைகளும் இருந்து வருகின்றன. ஆகவே நீடாமங்கல நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள். மாத்திரமல்லாமல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள “இந்து” “கிறிஸ்தவ” ஆதிதிராவிட மக்களும் ஆங்காங்கு தனித்தனியே கூட்டம் கூட்டி சும்மா கண்டனத் தீர்மானம் செய்வதில் காலம் கடத்தாமல் இனி இம்மாதிரி அவமானம் கொடுமை ஏற்படாமல் இருப்பதற்கு நிரந்தரமான காரியமான விஷயத்தை பற்றி யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டுமென்று அழுத்தமாய் வேண்டிக் கொள்கிறோம். மத வேஷத்தால் பிழைக்கும் சில ஆதிதிராவிட தோழர்கள் இதற்கு இடையூறு செய்வார்கள். அதைப்பற்றி சிறிதும் காது கொடுக்காமல் கவனம் செலுத்தாமல் ஒரு தகுதியான முடிவுக்கு வரும்படி வேண்டிக்கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.02.1938
குடி அரசு- 1938 (1) 132
“தினமணி? யின் ஊளை
நீடாமங்கலம், காங்கரஸ் அரசியல் மகாநாட்டில், ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை, ஆதார பூர்வமாக, ருசுக்களுடன், கொடுமைக்கு ஆளானவர்களின் ஸ்டேட்மெண்டுகளுடன், நாம் எடுத்துக்காட்டியது, உள்ளபடியே தமிழ் நாட்டில், ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டதுடன் காங்கரசின் உடுக்கைகளுக்கு, கிலி பிடித்துவிட்டது. இந்தக்கொடுமையை விபரமாக விளக்கிக் காட்ட காங்கரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும், இவர்களுக்குத் தாளம் போடும், தன்னலக்காரரின். வண்டவாளமும் வெளிப்பட்டு, சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே, போகும் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள, கையில் எது அகப்படுகிறதோ. அதை எடுத்துப்போர்த்துக்கொள்ளலாயினர். வறுமை காரணமாக, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லாத ஏழை மக்கள், தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள கந்தலையும், தழையையும், கைகளையும் உபயோகித்துக்கொள்வதுபோல, “தினமணி''க்கு ஒரு பரிதாபகரமான நிலை ஏற்பட்டது காண, நமக்கு ஒரு பக்கம் இரக்கமும், மற்றொருபக்கம் அது பேசும் 'லண்ட' பாஷையைக்கண்டுசிரிப்புமே வருகிறது அபத்தம் தவிர வேறொன்றும் 'தினமணிக்கு' அகப்பட ஏதுவில்லை! ஏன்? நீடாமங்கலத்துக் கொடுமை மறைக்க, மறுக்க மறக்க முடியாத உண்மை. விஷயம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும், அதிகார பலம் முழுதும்கொண்டு எதிர்ப்பதானாலும், நம்மால் உண்மையை விளக்கப் போதுமான ருசுக்கள் தயாராக இருக்கின்றன. ஆகவே இடையிடையே, தமது மானம் போவதால் ஏற்படும் துக்கங் காரணமாக, இவர்கள் ஊளையிடுவதை நாம் பொருட்படுத்தப்போவதில்லை என்றாலும், விஷயங்களை மறுபடி ஒருமுறை விளக்கமாகக் கூறி, எவ்வளவு அநாச்சாரமான, அயோக்கியத்தனமான, பேடித்தனங் கலந்த போக்கிரித்தனமான சூழ்ச்சிகளை நமது எதிரிகள் கையாளுகிறார்கள் என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென இதை எழுதுகிறோம்
நேற்றைய “தினமணி"யில் ஒரு ஒட்டைவேட்டு,கிளப்பப்பட்டிருக்கிறது அது எழும்பியவிதம், அதை வெளிப்படுத்திய ஆசாமி, அவருக்கும் நீடாமங்கல அக்ரமத்திற்கும் உள்ள தொடர்பு, அதைப் பரிசாக ஏற்றுக்கொண்ட பிரமுகர், அதற்கு 'ததாஸ்து' கூறும் புளுகுமணி இவைகளின். 133 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
யோக்யதையை இனி அலசுவோம். நாற்றம் அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும் இது நமது குற்றமல்லவே! ஆப்பை அவர்களாக அகைத்துவிட்டுத் தானே அவஸ்தைப்படுகிறார்கள்!
நீடாமங்கலத்தில் நடந்த காங்கரஸ் அரசியல் மகாநாட்டு, சமபந்தி விருந்தில் கலந்து கொண்டதற்காக, ஆதி திராவிடத் தோழர்களை மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி, தலையை மொட்டை அடித்து, சாணிப்பால் ஊற்றிய கொடுமையை நாம், ஜனவரி 3ந் தேதி வெளியிட்டோம். அதை மறுக்கும் நாணயஸ்தர்கள் யார் வருகிறார்கள் பார்ப்போம் என பொறுத்துப்பார்த்தோம். எங்கும் நிசப்தம், உப்புக்கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல, இவர்கள் மூக்காடிட்டுத் திரிந்தார்கள்! ஜனவரி 125 தேதி, கோவை ஜில்லா, “ஹரிஜன்” ஊழியராகிய , தோழர் எம்.கோளப்பன் என்பவர், 'விடுதலை' மூலமாக பிரதம மந்திரிக்கே ஒரு 'சவால்: விடுத்தார். மந்திரியார் ஏதாவது வாயைத் திறந்தாரா? அவரது கோஷ்டி ஏதாவது முணுமுணுத்ததா? இல்லை! மறுபடியும், பழைய மெளனந்தான். பகிரங்கமாக ஒன்றும் சொல்வதற்கில்லாமற்போகவே திரைமறைவிலே சூழ்ச்சிகள் நடைபெற ஆரம்பித்தன. அடிபட்ட - மானத்தைப் பறிகொடுத்த ஆதி திராவிடரை, ஆசை காட்டியும் பயமுறுத்தியும் நாணயமற்ற முறையிலே ஒரு மறுப்பு வாங்கப் பிரயத்தனம் செய்யப்பட்டது. நமது நிருபர் இதை ஜனவரி 16ந் தேதி தெரிவித்தார். இந்தச்சூது நடக்குமென நாமும் ஜனவரி 175 தேதியே 'விடுதலை'யில் வெளியிட்டோம். அதன்படியே 18ந் தேதி 'தினமணி' யில் ௬.ம.புளுகு என்ற விஷயமும், தோழர்கள் தேவசகாயம், சூசை, ஆறுமுகம் ஆகியவருடைய போட்டோ, ஒரு ஸ்டேட்மெண்டுடன் வெளி வந்தது மறுதினமே, அதாவது ஜனவரி 195 தேதியே நாம் “புளுகுவது எது, தினமணியா விடுதலையா'' என மகுடமிட்டு, உபதலையங்கமெழுதி எம்மிடம் சகல ருசுக்களும் தயாராக இருப்பதையும் எவ்வித நடவடிக்கைக்கும் நாம் தயார் எனவும் எழுதினோம். மறுபடியும் நமது எதிரிகள் குதிருக்குள் குதித்துப் பதுங்கிக் கொண்டனர். நமது நிருபரை நீடாமங்கலம் சென்று சகல விஷயங்களையும் பரிசீலனை செய்யும்படி அனுப்பினோம். அப்போது காங்கரஸ்காரர் தப்பு ஸ்டேட்மெண்டு வாங்க கையாண்ட கேவலமான முறைகள் நமக்குத் தெரிய வந்தன. அடிபட்ட- ஹிம்சிக்கப்பட்டதோழர்களை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்தவரே தோழர் சூசை என்பவர். அவர்
மகாநாட்டு விருந்திலோ, அதற்குப் பிறகு நடந்த ''மிருகத்தனத்திற்கோ'"' ஆளாகாதவர்; சம்பந்தப்படாதவர். மற்ற இரு தோழர்களும், ஜாதி ஆணவக்காரரிடம் அகப்பட்டு அவஸ்தைப்பட்டவர்கள் தான்.
தங்கள் ஜாதிக்கே நேரிட்ட அவமானத்தை, காங்கரஸ்காரரின் கொடுமையை உலகறியட்டும் என்பதற்காகவே, எக் கஷ்டம் வரினும்
குடி அரசு- 1938 (1) 134
ஏற்போம் என முடிவு செய்துகொண்டு, தோழர் தேவசகாயம், தனக்கும் தன்: தோழர்களுக்கும் செய்யப்பட்ட கொடுமைகளையும், அதை மறைக்க தம்மை மிரட்டி தப்பு அறிக்கை வாங்கப்பட்ட சூதையும் விளக்கி, “ஹரிஜன'' விவசாய மந்திரியான கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் ஹரிஜன” மேயர் தோழர் சிவஷண்முகத்திற்கும் நமக்கும் மகஜர்கள் அனுப்பினார். நாம் அந்த மகஜரை தோழர் தேவசகாயத்தின் போட்டோவுடன்
26-ந் தேதி “விடுதலையில் பிரசுரித்தோம். ஆதி திராவிட வகுப்பில் பிறந்து, அந்தப் பெயரை உபயோகித்து பட்டம் பதவி பெற்று பரிமளிக்கும் அப்பிரமுகர்கள், தேவசகாயம் மகஜருக்கு' ஏதாவது பரிகாரந் தேடினார்களா? அல்லது மறுக்கவாவது முன் வந்தார்களா? இல்லை!
மறுபடியும் பழைய மெளனம். திருடனை தேள் கொட்டினால் அலறியா அழுவான்! விம்முவான். அதை போன்றே ஹரிஜன மந்திரியும், மேயரும் வாயைப் பொத்திக் கொண்டிருந்து விட்டனர். இந்த பேசாமடந்தைகளைப் பேச வைக்கவேண்டுமென ஜனவரி 27-ந் தேதி கனம் முனிசாமிப் பிள்ளை
நேரில் வந்தால், கொடுமைக்காளான தோழர்களைக் காட்டுவதாக ஒரு * சவால்' விடப்பட்டது. 28-ந் தேதி ஈரோடு பொதுக்கூட்டத்திலே, தோழர். தேவசகாயம், நீடாமங்கல அக்ரமத்தை விளக்கிக்கூறினார். 29ந் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் தோழர் தேவசகாயம், மட்டுமல்ல மற்றும் கொடுமைக்காளான தோழர் ரத்தினம், மொட்டையடித்த 'பள்ளப்பரியாரி"” ஆறுமுகம், ஆகிய மூவரும் பிரசன்னமாக இருந்தனர். தம் குறைகளையும் தெரிவித்தனர். நாணயமுள்ள யாவரும் மனங் கசிந்தனர். பிப்ரவரி முதல் தேதி மூன்று தோழர்களுமாகச் சேர்ந்து விரிவான அறிக்கையை ''விடுதலை''யில் வெளியிட்டனர். அத்துடன் தோழர் ரத்தினத்தின். போட்டோவும் வெளிவந்தது. பிப்ரவரி 2ந் தேதி, பரியாரி மொட்டை
அடித்த கதையை விளக்கினார். அதுவும், அவர் போட்டோவுடன் வந்தது இவ்வளவும் நடந்து கொண்டிருக்கையில் சூரர்கள் என்ன செய்தார்கள்? மெளனமாகவே இருந்தனர்.
திடீரென, ஒரு ஒட்டை வேட்டு, “தினமணி'' யில் பிப்ரவரி 2ல் வெளியாயிற்று. அதுதான் அபத்தத்தின் சிகரம்! அநாகரீகத்தின் உச்சி போக்கிரித்தனமும் பேடித்தனமும் கலந்த விஷமம்!
நீடாமங்கல கோர நாடகத்தில் சம்பந்தப்படாத, தோழர் சூசை
என்பவர், விளம்பர மந்திரி கனம் ராமநாதனிடம் நேரில் செய்து கொண்ட
விண்ணப்பமாம்! அடிபட்ட தோழர்கள் மகஜர் அனுப்பியது, அவர்கள்
ஜாதிக்காரப் பிரமுகர்களான, கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் மேயருக்கும்;
அதற்குப் பதில் இல்லை! பதில் கூற வக்கில்லை. ஆனால் விளம்பர
மந்திரியிடம் விஷயத்தில் சம்பந்தப்படாத தோழர் சூசை, “ உண்மையை விளக்குகிறாராம்! என்ன போக்கிரித்தனமான ஆபாசம்!! 135 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
தோழர் சூசை கூறுவது முழுதும் அபாண்டம். முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறார்-அல்ல-கதர்த்துப்பட்டியில் மறைக்கிறார் என்று கூறுவோம். ஏன்? இவர் சம்பவத்தில் சம்பந்தப்படாதவர். தன் சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க முன்வராது, எதிரிகளிடம் கையாளாக
இருக்கிறார். அபத்தமான இந்த அறிக்கையையும் சற்று அலசிப் பார்ப்போம். அதற்குள் சில கேள்விகளைப் பொது மக்கள் கவனத்திலிருத்த வேண்டுகிறோம். ஜனவரி 3ல் வெளி வந்த குற்றச்சாட்டிற்கு “தினமணி”
பதில் கூற 15 நாள் ஆனதேன்? கயிறு திரிக்க 15 நாள் தேவையாக இருந்தது
போலும். “ஹரிஜன” மந்திரியும் மேயரும் வாயை மூடிக்கொண்டிருப்பதேன்? வெளியில் சொல்லப்போனால் வெட்கக்கேடு என்பதினால்? பிரதம மந்திரிக்கு விடப்பட்ட சவாலுக்கு அவரும் மெளனமாக இருந்ததேன்? நடந்த உண்மையை எப்படி மறுப்பது என்பதினாலா அன்றி “அறிக்கைகள்” தயாராகாத குறையினாலா? அந்த சமயங்களிலெல்லாம் “தினமணி” யின்.
வாய் அடைந்து கிடந்த காரணமென்ன? ஒரே அடியாக 'பொய்' பேச தினமணியின் வாயுங் கூசிற்றா? அன்றி, இவ்வளவு பிரமாண்டமான பொய் சொன்னால் பொது மக்கள் சும்மாவிட மாட்டார்களே என்ற திகிலா?
நிற்க தோழர் சூசை, “எங்களுக்கு 12.1.38 தபாலில் தனித்தனியாக அச்சடித்த காகிதங்கள் கிடைத்தன. அதை எடுத்துக்கொண்டு மறுநாள் மகாநாடு நடத்திய நீடாமங்கலம் உடையார் அவர்களிடம் போய்க்காட்டினேன்” என்று கூறுகிறார். இங்கு தான் இரகசியம் இருக்கிறது! நீடாமங்கல விஷயமாகத் தனக்கு வந்த கடிதத்தை உடையாரிடம் காட்டுவானேன்? தோழர் சூசை தற்குறியல்ல. மூன்றாவது பாரம்வரை படித்தவர். ஒரு பள்ளியில் உபாத்தியாயராகக்கூட இருக்கிறாராம். அப்படி இருக்க உடையாரை நாடிய காரணம் என்ன? “காரியம் மிஞ்சிவிட்டதே என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்துகொண்டு, மந்திராலோசனை செய்யச் சென்றாரா என்று கேட்கிறோம். “மறுபடியும் 15-ந் தேதி, நீடாமங்கலம் பங்களாவிற்குப் போனோம். நாங்கள் போனபோது மகாநாட்டை நடத்திய சில காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ் காரியதரிசியான பிள்ளை அவர்களும் இருந்தார்!” என்கிறார் தோழர் சூசை.
12ந் தேதி சென்ற பயணம் பலிக்காது, 15-ந் தேதி வேறே செல்லவேண்டி வந்ததோ எனக் கேட்கிறோம்? “அப்பொழுதுதான் 3.1.38 “விடுதலை” யிலிருந்து இது காப்பி என்று தெரிந்தது” என்ற தோழர் சூசை கூறுகிறார். பாபம்! அவ்வளவு உலக மறிந்தவராக இருக்கிறார். இவர் தான் இப்போது ஹரிஜன”ங்களுக்கு இந்த “கைங்கரியம்” செய்ய முன் வருகிறார். அடிபட்ட தோழர்களிடம், 'மகாநாட்டிலும் போஜனத்திலும் கலக்காத என்னை வலிய இப்படி சந்தியில் ஏன் இழுத்து விட வேண்டும்” என தோழர்
குடி அரசு- 1938 (1) 136
சூசை அன்றுசொன்னதை மறந்துவிடக்கூடிய அளவு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிற்க அன்றே போட்டோ எடுக்கப்பட்டதாகவும், அப்போது தோழர் தேவசகாயத்திற்கு % அங்குலம் மயிர் தலையிலிருந்ததாகவும், முன்புறம்
மட்டும் க்ஷவரம் செய்திருந்தது எனவும் கூறி 26-ந் தேதி “விடுதலையில். வந்த போட்டோவைப் பார்த்தால், தோழர் தேவசகாயம் “அவன் உருவே மாறி” இருப்பதாக தோழர் சூசை உருகுகிறார். அவரை உருக வைக்கும் அற்புதத்தை நாம் அறிவோம். பொது மக்கள் “தினமணியில்” வந்த போட்டோவையும், ஒப்பிட்டுப்பார்த்து உண்மையை உணரட்டும் எனக்
கூறுகிறோம். போட்டோ எடுத்த அன்று ஒரு தடவை தோழர் சூசை,
'சு.ம. புளுகை' எழுதிக் கொடுத்தாராம். அத்துடன் நின்றாரா? இல்லையே!
16-ந் தேதி காங்கரஸ் காரியதரிசி நேரிலேயே அனுமந்தபுரம் வந்தாராம் அப்போது தோழர் சூசை தன் கையாலேயே மறுபடியும் விஷயத்தை எழுதிக்கொடுத்தாராம். மற்றத் தோழர்களுக்கு வாசித்துக் காட்டினாராம் சரிதான் என்று சம்மதித்தே தோழர் ஆறுமுகம் முதலில் கையெழுத்துப் போட்டாராம். அவருக்குத் தமிழ் எழுதப்படிக்கத்தெரியுமாம்! எழுதப்படிக்கத் தெரிந்த தோழர் ஆறுமுகம் இருக்கையில், ஏனோ பாவம், இந்த தோழர் சூசை இவ்வளவு கஷ்டப்பட்டு 2 நகல் எழுதி படித்துக் காட்டினார்? தோழர் தேவசகாயம் சிலரின் துர்ப்போதனையால் ஊரை விட்டுப்போனது அவனது பெற்றோருக்கும் மற்றுமுள்ள ஏழை ஹரிஜனங்களுக்கும் கவலையாக இருக்கிறதாம்! தோழர் தேவசகாயத்தின்.
உற்றார் பெற்றோரின் மனோ நிலையை விளக்கி நமக்கு கடிதம்
வந்திருக்கிறது. தோழர் சூசை போன்ற ஏழை ''ஹரிஜன''ங்களின் கவலையும் நமக்குத் தெரியும். “தினமணி'' யே நீடாமங்கல அக்ரமத்தைக் கண்டித்து சென்னை தாழ்த்தப்பட்டார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனவரி 17-ந் தேதி பிரசுரித்திருக்கிறது. அப்போதெல்லாம் தோழர் சூசையும், அந்தப் பொம்மையை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளும் மெளனமாக இருந்துவிட்டு, இப்போது சு.ம.காரர்கள், தேவசகாயத்தை அபகரித்து கொண்டுபோய், மொட்டை அடித்து பொய்ப்பிரசாரம் செய்து வருவதாகக் கூறுவது பேடித்தனங்கலந்த போக்கிரித்தனமன்றி வேறென்ன என்று கேட்கிறோம். விஷயம் விபரீதமாய் போகாதபடி, சப்பைக்கட்டுகட்டுவது இனி சாயாது. விளம்பர மந்திரியாய்
இதில் சற்று முடுக்காகவே முனைந்து நிற்கிறார் என்ற தகவல் நமக்குக் கிடைத்துமிருக்கிறது. ஆனால் நாம் இதற்காக அஞ்சப் போவதில்லை: நம்மிடம் மறுக்கமுடியாத ருசுக்கள் இருக்கின்றன. எந்தவிதமான “அக்கினி” பரீட்சைக்கும் நாம் தயார். நாணயமும், ரோஷமும், மானமும் உள்ளவர்களானால் நேரிடையாக, பகிரங்கமாக விசாரணை நடத்தட்டும் திரைமறைவிலே, சில பொம்மைகளை வைத்துக் கொண்டு கோமாளிக்கூத்துக்
137 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
காட்டுவது அசட்டுத்தனம். அதைப்பொதுமக்கள் லட்சியப்படுத்த மாட்டார்கள். தோழர்கள் தேவசகாயம் முதலியோருக்கு அன்று % அங்குல மயிர் தலையில் இருந்தது, இன்று உருமாறி விட்டது என உருகும் சூசையோ, அன்றி மற்றவரோ, இந்த “மயிர் ஆராய்ச்சியை வேண்டுமானாலும் கூடச் செய்யட்டும். எதையும் நாணயமாக, பகிரங்கமாக செய்யட்டும். அதற்குத் தயார் தானா? என்றே நாம் கேட்கிறோம். மொட்டை அடிக்கும் தொழில் நமக்குக் கிடையாது. மொட்டை அடித்துவிட்டு மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் தொழிலில் 'தினமணி' இறங்கியிருக்கிறது. இது வெற்றி பெறாது என்பதுடன் இந்தத் துடுக்குத்தனம், இனி சாயாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
- விடுதலை
குடி அரசு - கட்டுரை - 06.02.1938
குடி அரசு- 1938 (1) 138
விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியவிக்கக்கூடாது
காங்கரஸ் மந்திரிகள் என்னும் சரணாகதி புரோகிதக் கூட்ட ஆதிக்க மந்திரிகள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்கு ஆகவும் பாமர மக்களிடம் ஓட்டு வேட்டை ஆடுவதற்கு ஆகவும் “விவசாயிகள் கடன் விடுதலை மசோதா" என்னும் பெயரால் இரு சட்டசபைகளிலும் கூலி மெஜாரிட்டியைக் கொண்டும் கட்சி கட்டுப்பாடு என்னும் அடக்குமுறை மெஜாரிட்டியைக் கொண்டும் சர்வாதிகார முறையில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் மசோதாவானது நடுத்தர விவசாயிகளான பெருவாரியான விவசாயிகளுக்கே பெரும் கேட்டைத் தருவதாய் இருப்பதாலும்,
பூமிக்குடையோனுக்கும் பூமியை பயிர் செய்வோனுக்கும், கடன் கொடுத்தவனுக்கும் கடன் வாங்கினவனுக்கும், ஒற்றுமையின்மையும் போராட்டமும் தொல்லையும் பொய் கணக்கும் பொய் ஆதார சிருஷ்டியும் செய்து தீரவேண்டிய நிலையில் கொண்டு வந்து விடக்
கூடியதாய் இருப்பதாலும், ஏழை விவசாயிகளுக்கு நாணய செலாவணியே இல்லாமல் போய் அக்கிரமக் கடனுக்கே ஆளாக வேண்டிய நிலைமையைக் கொடுக்கக்கூடியதாய் இருப்பதாலும் மற்றும்
கொஞ்சம் பூமிகளையுடைய சிறுசிறு விவசாயிகளையும், சிறு மிராசுதார்களையும் விவசாயச் செலவுக்கும் எதிர்பாராத திடீர் சம்பவ குடும்பச் செலவுக்கும் கடன் கிடைக்க வகையில்லாமல் பூமியை விற்றுத்
தீர வேண்டிய நிர்ப்பந்த நிலையில் வைத்துவிடக் கூடியதாய் இருப்பதாலும் இதன் பயனாய் தானே நேரில் பயிரிடும் சிறு சிறு விவசாயிகளுடைய பூமிகள் எல்லாம் நேரில் உழாமல் குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கவும் விவசாய முறையில் பணம் திரட்டவும் உள்ள பெரும்பெரும் மிராஸ்தார்கள் ஜமீன்தார் (ஆப் சென்டி லேண்ட் லார்ட்)களுக்கே போய்ச் சேரக் கூடியதாய் இருப்பதாலும்,
விவசாயிகளுக்கு வேறு மொத்த லேவா தேவிக்காரனிடம் ஏற்கனவே கடன் வாங்கி கடன் கொடுத்திருக்கும் அதுவரை வட்டி பூராவையும்
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
செலுத்தி இருக்கும் லேவாதேவிக்காரர்களுடைய நஷ்டத்துக்கு சென்னை சர்க்காரார் யாதொருவிதமான பொறுப்பும், பரிகாரமும் ஏற்றுக் கொள்ளாதிருப்பதால் சில்லரை லேவாதேவிக் தொழிலாளிக்கும் பெருவாரியான நடுத்தர லேவாதேவிக்காரர்களை அடியோடு நசுக்கச்
செய்து விடும்போல் இருப்பதாலும்,
சட்டத்தை நம்பி நடத்தி வந்த காரியங்களின் கிரமமான பலா பலன்களுக்கு மாறாய் ஒருவர் சொத்தை ஒருவருக்கு எவ்வித பரிகாரமும் இல்லாமல் சட்ட விரோதமாய் பிடுங்கிக் கொடுப்பதாய் இருப்பதாலும்,
பொது தர்ம ஸ்தாபனங்கள் நிலைமையும் மைனர்கள் நிலையும் கிழவன்மார்கள் சம்பாதித்து வயிறு வளர்க்க சக்தியற்றவர்கள். ஆகியவர்களுடைய நிலைமையும் திடீரென்று திக்கற்ற நிலைமைக்கு வந்துவிடக் கூடியதாய் இருப்பதாலும்,
இம் மசோதா உண்மையாக கஸ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிக்கு பலனளிக்காமல் இருப்பதாலும்,
சென்னை அரசியலில் பெரும்பான்மையான மந்திரிகள் கடன்காரர்களாய் இருந்து கனவிலும் வாரண்டையும், சம்மனையும், நோட்டீசையும் எதிர்பார்த்த வண்ணமாய் இருந்து வருவதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அனுகூலமாய் செய்யப்பட்டு இருக்கிறது என்று எண்ணக்கூடியதாய் இருப்பதாலும்,
காங்கரஸ் தொண்டர்களில் பலருக்கு வாழ்க்கை வசதி அளிக்கக்
கூடியதாய் இருப்பதாலும்,
இந்த சட்டத்திற்கு கவர்னரும் வைசிராய் பிரபுவும் அனுமதி
அளிக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறோம். மற்றும்,
இந்த சட்டமானது சர்க்கார் சட்டங்களின் நடைமுறைகளையும் பாதிக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்
அதாவது சிவில் நடைமுறை (சிவில் புரோசிஜார் கோடு) சட்டத்துக்கும் சொத்து மாறுதல் (டிரான்ஸ்பர் ஆப் பிராபர்ட்டி ஆக்ட்) சட்டத்துக்கும் இந்தியா காலகரணம் (லிமிட்டேஷன் ஆக்ட்) சட்டத்துக்கும் விரோதமாய் இருப்பதோடு நிரந்தர நில வரி விதிக்கு முறைக்கும் விரோதமாய் இருக்கிறது
கடைசியாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் காங்கரஸ்காரர்களாலேயே ஆக்ஷ்பிக்கப்பட்ட ''பரிகாரமில்லாமல் பறிமுதல்” செய்யும் முறையை அடிப்படையாய்க் கொண்டதாகவும் இருக்கிறது.
குடி அரசு- 1938 (1) 140
அதாவது ஜஸ்டிஸ் கட்சியார் இனாம் பூமி மசோதா கொண்டு வந்த காலத்தில் காங்கரஸ்காரர்களும் இனாம்பூமி உடைய பார்ப்பனர்களும் என்ன என்ன காரணம் காட்டி அந்தச் சட்டத்திற்கு வைஸ்ராய் சம்மதம் கொடுக்கக் கூடாது என்று திருப்பித் திருப்பி சட்டசபைக்கு வாப்பீசு செய்யும்படி செய்யப்பட்டதோ அவ்வளவு காரணங்களும் இதற்கும் இருக்கின்றன. என்பதையும் வைஸ்ராய் பிரபு அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 13.02.1938
படட... வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
தேசீய காங்கரஸ் கலப்புமணப் பிறவி
தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஊருக்கு நாங்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலையின் ஆண்டு விழாவுக்கு வந்திருந்த சமயத்தில் எங்களை மிக ஆடம்பரத்துடன் வரவேற்று உபசரித்து பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளித்ததுடன் இன்று இரவு சமீபத்தில் நாங்கள் கண்டிராத இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டி எங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல அவகாசமளித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நான் இன்று இரவு இங்கு காங்கரசு, ஹிந்து மூஸ்லிம் சமூக ஒற்றுமை, அரசியலும் காங்கரசும் என்பவை பற்றி பேசுவேன் என்பதாக துண்டு விளம்பரத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள்.
எனக்கு உடல் நலம் சரியாய் இல்லை. இந்த வாரத்தில் மோட்டார். காரில் மாத்திரம் சுமார் 2000 மைல் கிராமம் கிராமமாய் சுற்றி அலைந்திருப்பதுடன் மதராசில் இருந்து தூத்துக்குடிக்கு காரிலேயே வந்திருக்கிறேன். அது மாத்திரமல்லாமல் இன்று இரவு இப்பொழுதே புறப்பட்டு காரிலேயே ஈரோடு போய் சேர வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி எனக்கு ஒரு கோர்ட்டில் இருந்து சம்மன் சார்வாய் இருக்கிறது. வாய்தா. கொடுக்கும்படி 2, 3 தடவை வக்கீல் வைத்து அபிடெவிட் கொடுத்து கெஞ்சியும் வாய்தா கிடைக்கவில்லை. ஆதலால் இன்னும் அரைமணி நேரத்தில் நான் சொல்ல வேண்டியவைகளை சுருக்கமாக சொல்லிவிட்டு இங்கிருந்தபடியே ஈரோட்டுக்கு புறப்பட்டுச் செல்லப் போகிறேன். ஆதலால் அதிக நேரம் பேச முடியாததற்காக மன்னிக்க கோருகிறேன்.
தாங்கள் அளித்த வரவேற்புப் பத்திரங்களில் வெறும் புகழ் வார்த்தைகளே நிரம்பி இருக்கின்றன. அப்புகழ்ச்சிகளுக்கு நான் உண்மையிலேயே தகுதி உடையவன் அல்லவாயினும் தகுதி உடையவனாக ஆவதற்கு முயற்சிக்கிறேன். அதோடு கூடவே அவ்வரவேற்பின் மூலம் எனது அரசியல், சமுதாய இயல், மத இயல் சம்மந்தமான கொள்கைகளையும் கருத்துக்களையும் நீங்கள் ஆமோதித்து பாராட்டி இருப்பதற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியும் ஊக்கமும் கொள்கிறேன்.
குடி அரசு- 1938 (1) 142
காங்கரஸ் தோன்றியதேன்? தோழர்களே! இந்து முஸ்லீம் விஷயமாய் நான் உங்களுக்குத் தெரியாத எதைப் பேசக் கூடும்? இது விஷயத்தில் எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்து முஸ்லிம் இரு சமூகத்திற்குள்ளும் என்றும் தீராப் பகைமைக்கு வினையாய் இருந்து இரு சமூகத்துக்குள்ளும் ஒற்றுமை இல்லாமலும் துவேஷமும் பழிவாங்கும் தன்மையும் வளரும்படியாகவும் இருக்கச் செய்து வருவதற்கே இன்று இந்நாட்டில் காங்கரஸ் ஸ்தாபனம் என்பதாக ஒன்று இருந்து வருகின்றது என்பதாகும். அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களிடம் இந்துக்களுக்கு இருந்து வந்த துவேஷம், பொறாமை, அசூயை காரணமாகவும் கீழ்ஜாதியார் என்பவர்களிடம் மேல் ஜாதியாருக்கு இருந்து வந்த பொறாமை, துவேஷம், அசூயை காரணமாகவும் தான் காங்கரஸ் ஏற்படுத்தப்பட்டது என்பதும் எனது திடமான அபிப்பிராயமாகும் நான் இதை சும்மா பொறுப்பற்ற தன்மையிலோ இன்று மாத்திரமோ சொல்லவில்லை. தக்க ஆராய்ச்சி, பிரத்தியக்ஷ அனுபவம் முதலியவைகளின் மீதே 10 வருஷ காலமாகவே பேசி வருகிறேன். மற்றும் இந்தக் காங்கரசு ஏற்படுவதற்கு சர்க்காராரும் அதாவது வெள்ளைக்கார துரைத்தனத்தாரும் முக்கிய காரணஸ்தர்கள் என்பதையும் நான் நன்றாய் அறிவேன். இதற்குக் காரணம் என்னவென்றால் இந்நாட்டில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி ஏற்பட்டவுடன் வெள்ளையர்களே பார்த்து வரவேண்டியது என்று கருதப்பட்ட பெரிய ஜில்லா உத்தியோகங்கள் தவிர மற்ற கறுப்பு மனிதர் பார்த்து வர வேண்டிய சாதாரண தாலூக்கா உத்தியோகங்கள் பூராவுக்கும் முனிஷி சிரஸ்தார் உத்தியோகங்கள் பூராவுக்கும் சற்று ஏறக்குறைய முஸ்லிம்களையும் மற்றும் வெள்ளையர்களுக்கு முன் இந்நாட்டில் ஆட்சி புரிந்து வந்த அரச வம்சத்தினர்களையுமே நியமித்து ஆட்சி நடத்தி வந்தார்கள். இதன் உண்மை உணர வேண்டுமானால் 50 வருஷத்துக்கு முன்னிட்ட 100 வருஷங்களின் உத்தியோக லிஸ்டை (பட்டியலை) பாருங்கள். அதாவது முஸ்லிம்கள், ரஜபுத்திரர்கள், நாயக்கர்மார்களும் இவர்களிடம் மந்திரிகளாய் இருந்த முதலியார், பிள்ளைமார் ஆகியவர்களுமே தாலூகா, கிராம சில்லறை அதிகாரிகளாய் இருந்து வந்திருக்கிறார்கள். ராணுவத்திலும் இந்த இனத்தவர்களே வெள்ளையருக்கு அடுத்த பதவியில் இருந்து வந்தார்கள். இந்தக் கூட்டத்தார் அதிகார பதவியில் இருந்தாலும் இவர்களுக்கு பள்ளிப் படிப்பு கொஞ்சமாகவே இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அக்காலத்தில் சில சாயபு தாசில்தாருக்கும் சில நாயக்கர் தாசில்தாருக்கும் கையெழுத்துக்கூட சரியாய் போடத் தெரியாது என்று சொல்லுவார்கள்
காங்கரசின் பெற்றோர்
ஆனால் அதிகாரம் நேர்மையாகவும் துடிதுடிப்பாகவும் இருக்கும் அதோடு கூடவே அவர்கள் மிக சுயேச்சை வாதிகளாக இருந்தார்கள்.
ய ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
வெள்ளைக்கார மேல் அதிகாரிகளைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டி வைப்பார்கள். மனச்சாட்சிக்கு விரோதமாய் கீழப்படிந்து நடக்கும்
காரியம் அவர்களிடம் மிக மிக அரிதாயிருந்தது. இதனால் இந்த கீழ் அதிகாரிகளின் அடங்காமைத் தொல்லை மேல் அதிகாரிகளுக்கு இருந்து வந்தது ஒரு புறம் இருக்க, முஸ்லீம்கள் அதிகாரியாய் இருப்பது இந்துக்களுக்கு அதிருப்தியாகவும் பொறாமையாகவும் இருந்ததோடு
“4ம் வருணத்தவர்'” என்பவர்கள் அதிகாரிகளாய் இருப்பது முதல் வருணத்தார் (பார்ப்பனர்) என்பவர்களுக்கு பொறாமையாகவும் ஆத்திரமாகவும் இருந்து வந்தது. இந்தக் காரணங்களால் இந்து பிரமுகர்களும்
மேல் ஜாதிக்காரர்களும் வெள்ளையர்களுடன் கலந்து சதியாலோசனை செய்ய வேண்டியவர்களானார்கள். அந்த சதியாலோசனை பெற்ற பிள்ளைதான் இந்த இந்திய தேசீயக் காங்கரஸ் ஸ்தாபனமாகும். இதற்குத்
தாய் இந்து பிரமுகர்களும் பார்ப்பனர்களுமாவார்கள். இதற்குத் தந்தை
பிரிட்டிஷ் சிவிலியன்களேயாவார்கள்.
இந்தமாதிரியான காங்கரசின் முதல் கொள்கை என்னவென்றால் “இந்தியர்களுக்கு ராஜவிசுவாசம் கற்றுக் கொடுத்து உலகமுள்ள அளவும் பிரிட்டிஷ்காரர்களே இந்தியாவை ஆளும்படியாக அவர்களது ஆட்சியை பயன்படுத்தி நிரந்தரமாக்குவது” என்பது ஆகும்
நீங்கள் காங்கரசின் ஆதி சரித்திரத்தையும் அதன் பிறப்பு வளர்ப்பு சரித்திரத்தையும் வாங்கிப் பார்த்தீர்களானால் உங்களுக்கு இந்த விஷயங்கள். நல்ல கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போல் தெரியும்
ஆதிகால காங்கரஸ் போக்கு
1885-ம் வருஷம் முதல் 1920 வருஷம் வரை காங்கரசின் முதல் தீர்மானம் ராஜலிசுவாசம், ராஜபக்தி தீர்மானமேயாகும். காங்கரசின் கடசி மங்களம் “இந்தியாவின் மீது பிரிட்டிஷ் ஆட்சி உலகமுள்ளளவும் இருக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பதாகும்”. எந்த காங்கரஸ்வாதியாவது இதை இல்லை என்று ரூபித்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
முஸ்லீம் லீக் தோற்றம்
காங்கரஸ் உற்பவித்த இந்த சதியாலோசனை இந்துக்களில் கீழான ஜாதியார் என்பவர்களுக்குத் தெரியாமல் போனாலும் முஸ்லிம்கள், காங்கரஸ் ஏற்பட்ட ஒரு நான்கைந்து வருஷங்களுக்குள் நன்றாய் தெரிந்து கொண்டு 1890ம் வருஷத்திலேயே காங்கரசை எதிர்க்கவும் சர்க்காரிடம் காங்கரசால் தங்கள் சமூகத்துக்கு நேரிட்டு வரும் குறைகளையும் கொடுமைகளையும் பற்றி முறையிடவும் 1906-லேயே தனி ஸ்தாபனம் ஏற்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். சர்க்கார் 1890
குடி அரசு- 1938 (1) 144
- ம் வருஷம் முதலே முஸ்லிம்களுக்கு அரசியலில் சரியான உரிமையும் பிரதிநிதித்துவமும் அளிப்பதாய் வாக்குறுதி கொடுத்து உத்திரவுகளும் சர்க்குலர்களும் வெளிப்படுத்திய வண்ணமாய் இருந்து வந்தார்கள்.
ஆனந்த மடமும் ஓரு மனுதர்ம சாஸ்திரமே
மேலும் இந்த காரணத்தால் அதாவது முஸ்லிம் லீக் ஏற்படுத்தி பங்கு கேட்டதால் முஸ்லிம்களிடம் அக்காலத்தில் இந்துக்கள் எவ்வளவு துவேஷம் கொண்டிருந்தார்கள் என்பதையும் முஸ்லிம்களை அழுத்தவும் ஒழிக்கவும் இந்துக்கள் எவ்வளவு தூரம் துணிந்திருந்தார்கள் என்பதையும் நடு நிலையில் இருந்து உணர வேண்டுமானால் அக்காலத்தில் பக்கீம் சந்திர சட்டர்ஜி என்னும் ஒரு ஹிந்து பென்ஷன் அதிகாரியால் உண்டாக்கப்பட்ட ஆநந்த மடம் என்னும் ஒரு கற்பனைக் கதையை வாங்கி பார்த்தீர்களானால் உங்களுக்கு நடு கண்ட தீர்ப்பு கிடைக்கும் ஆநந்த மடம் கதை மற்றொரு மனு தர்ம சாஸ்திரமேயாகும். பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை அடக்கி ஒடுக்கி தலையெடுக்கவிடாமல் இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டது அக்கால மனுதர்ம சாஸ்திரம் என்றால் முஸ்லிம்களை அடக்கி ஓடுக்கி அழுத்தி வைக்க ஏற்பட்டது ஆநந்த மடம் என்னும் இக்கால மனுதர்ம சாஸ்திரம் என்று தான் சொல்ல வேண்டும். அப்புத்தகத்தை பார்த்தால் முஸ்லிம்களை ஒழிக்க பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் அடிமைப்பட்ட விஷயம் விளக்கும். அதன். பிறகுதான் முஸ்லிம்கள் தங்கள் நிலைகண்டு உஷார் ஆய்விட்டார்கள் அதற்காக வங்காளிகள் மக்களுக்கு ஆநந்த மடம் கதையை பரப்பி வந்தேமாதரப் பாட்டு முதலியவைகளை பிரசாரம் செய்து மக்களுக்குள் முஸ்லீம் துவேஷம் கற்பித்து வந்தாலும் முஸ்லீம்கள் அக்காலத்தில் ஒரே பிடிவாதமாக ஒற்றுமையாக இருந்து 1910லேயே விகிதாசார
வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் தனித்தொகுதி தேர்தலும் பெற்று ஒரு அளவுக்கு ஹிந்துக்கள் தொல்லையில் இருந்தும் சூழ்ச்சியில் இருந்தும் தப்பித்துக் கொண்டார்கள்.
காங்கரசின் தற்கால சூழ்ச்சி. அதை ஒழிப்பதற்காகவே இன்று காங்கரஸ் தலைகீழாகப் பாடுபடுகிறது. அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த தனித் தொகுதி உரிமையை எப்படிப் பட்டினி வேஷம் போட்டு ஏமாற்றி பிடுங்கிக் கொண்டு இன்று அவர்களை மொட்டை அடித்து சாணி அபிஷேகம் செய்து மரியாதை செய்கிறார்களோ அது போல் முஸ்லிம்களின் வகுப்பு வாரி உரிமையையும் தனித் தொகுதி தேர்தல் முறை உரிமையையும் ஒழிப்பதற்கு காங்கரஸ் அதாவது தோழர் காந்தியார் முதல் சகல ஹிந்து தலைவர்கள் என்பவர்களும் செய்யக்கூடாத தந்திரங்கள் சூழ்ச்சிகள் எல்லாம் செய்கிறார்கள். இதற்கு நம் நாட்டு
us o வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
முஸ்லிம்கள் ஏமாறுவார்கள் என்று கருத இடமில்லை. காங்கரசின் சூழ்ச்சி மக்களுக்கு நாளுக்கு நாள் காங்கரசிடம் பற்றுதலும் நம்பிக்கையும் இல்லாமல் போகும்படி தான் செய்து வருகிறதே தவிர காங்கரசுக்கு எவ்வித மரியாதையையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது உறுதி
ஆதலால் இந்திய தேசீய காங்கரஸ் உள்ள வரை இந்து - முஸ்லிம் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை.
வர்ணாச்சிரமம் ஓழியாதவரை இந்து - முஸ்லிம் ஒற்றுமை இல்லை
அல்லது “காங்கரசுக்குள் ஆதீனகர்த்தாக்களாகவும் சர்வாதிகாரிகளாகவும் இருந்து வரும் வருணாச்சிரம - ராமராஜ்ய வாதிகள் மறைந்து ஒழிந்து போகும் வரையிலும் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை.
இதுதான் இந்து முஸ்லிம் விஷயமாகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமை விஷயமாகவும் எனது அபிப்பிராயமாகும்.” என்று சொல்லி இதற்கு ஆதாரமாக தோழர்கள் காந்தியார், ஜவஹர்லால் நேரு, ஆச்சாரியார், மூஞ்சே, மாளவியா முதலியவர்களின் வாக்குகளை எடுத்துக் கூறினார்.
அரசியலும் காங்கரசும் தோழர்களே! இனி அரசியலும் காங்கரசும் என்பது பற்றிப் பேசுகிறேன்.
இதுவும் பழைய சங்கதியேதான். அதாவது நம் நாட்டு அரசியலும் காங்கரசும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் பார்ப்பனரல்லாதார் அழிவுக்கும் இழிவுக்குமாகவே பிறந்து வளர்ந்து நாளொரு மேனியாயும் பொழுதொரு வண்ணமாகவும் பெருகி வருகின்றது
வடநாட்டில் காங்கரசின் சூழ்ச்சியும் கொடுமையும் கண்டு சகியாமல் எப்படி முஸ்லிம்கள் விழித்தெழுந்து முஸ்லிம் லீக் ஏற்படுத்தி
தப்பிப் பிழைத்தார்களோ! அதுபோல்தான் தென்னாட்டில் காங்கரசும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்து வந்த கொடுமையையும் சூழ்ச்சியையும் கண்டு சகியாமல் ஒருவருக்கொருவர் நேர் வைரிகளாகவும் பார்ப்பனர்கள் கையாயுதங்களாகவும் இருந்து வந்த தோழர்கள் நாயரும் தியாகராயரும் சேர்ந்து விழித்தெழுந்து காங்கரசையும் பார்ப்பனர்களையும் விட்டு வெளிவந்து ஏற்படுத்தியது தான் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகும் அது தான் ஜஸ்டிஸ் இயக்கம் என்பது
அவர்கள் அவ்வியக்கத்தை தோற்றுவித்ததும் அதற்கு ஆக போராடினதும் சரியா, தப்பா என்பதை நான் சொல்லப் போகும் சில விஷயங்களைக் கண்டு சில புள்ளிகளைக் கண்டு சற்று ஆராய்ச்சி செய்து
பாருங்கள். அதாவது:-
குடி அரசு- 1938 (1) 146
இந்தநாட்டு பெருங்குடி மக்கள் பார்ப்பனரல்லாதார். பாடுபட்டு உழைப்பவர்களும் செல்வவான்களும் அரசாங்கத்துக்கு 100க்கு 99 பாகம் வரி செலுத்துபவர்களும் பார்ப்பனரல்லாதாராவார்கள். காங்கரசில். சேர்ந்து பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் குரங்காட்டம் ஆடி காங்கரஸ் விண்ணப்பங்களுக்கெல்லாம் கைதூக்கி வெற்றி தேடிக் கொடுத்தவர்கள் பார்ப்பனரல்லாதார்களாவார்கள். அப்படிப்பட்டவர்களின் பொது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, கெளரவ வாழ்க்கை ஆகியவற்றின் கதி என்ன ஆயிற்று என்று பாருங்கள். இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்
புன்வி விவரங்கள்
கெட்டிக்கார பிரக்யாதி பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜிகள் முத்துசாமி
அய்யர் மணி அய்யர்.
கெட்டிக்கார வக்கீல்கள் பாஷ்யம் அய்யங்கார், சிவசாமி அய்யர், கெ.ஸ்ரீநிவாசய்யங்கார், எஸ். ஸ்ரீநிவாசய்யங்கார், சி.பி. ராமசாமி அய்யர், வெங்கிடராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்,
கெட்டிக்கார இங்கிலீஷ் பேச்சாளி ஸ்ரீநிவாச சாஸ்திரி,
பெண் பேச்சாளி சரோஜினி அம்மாள், உலகமறிந்த இந்தியன் மனிதன் ஸ்ரீநிவாச சாஸ்திரி, மகா உயர்ந்த பட்டம் ரைட் ஆனரபில் (மகாகனம்) பெற்றவர் ஸ்ரீநிவாச சாஸ்திரி
காங்கரஸால் கிடைக்கப் பெற்ற கெளன்சில் மெம்பர்கள் வி.கிருஷ்ணசாமி அய்யர், பி.எஸ்.சிவசாமி அய்யர், பி.ராஜகோபாலாச்சாரி, கே.ஸ்ரீநிவாச அய்யங்கார்,
உயர்ந்த பி.சி.எஸ். பரீக்ஷ பாஸ் பண்ணி கலெக்டர் போர்ட் மெம்பர் முதலிய பதவி பெற்றவர்கள்:-
ராமச்சந்திரராவ், ராஜகோபாலாச்சாரி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி,
என். கோபாலசாமி அய்யங்கார்.
“நல்ல கெட்டிக்கார” தமிழ்ப் பண்டிதர்கள்:- மகாமகோ பாத்தியாய சாமிநாதய்யர், ரா. ராகவய்யங்கார், மு ராகவய்யங்கார்,
நல்லகவி சுப்ரமணிய அய்யர் (பாரதி),
நல்ல பாகவதர்கள் முத்தய்யா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர்,
நல்ல பெண் பாகவதர் சரஸ்வதிபாய்,
நல்ல பரத நாட்டிய பெண் ருக்மணி அருண்டேல்,
நல்ல நாடகக்கார ஆக்டர்கள் கிட்டப்பா அய்யர், சுப்பையா பாகவதர்,
நல்ல நாடகக்கார பெண் ஆக்டர் டி.பி. ராஜலஷ்மி,
147 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தென்னாட்டு பெரிய மனிதர் யாருக்காவது சிலை வைக்கப்பட்டது
என்றால் அது வி.கிருஷ்ணசாமி அய்யர்,
கெட்டிக்கார பேச்சாளி தேசபக்தர் சத்தியமூர்த்தி சாஸ்திரி, இந்திய காங்கரஸ் அரசியல் சட்ட நிபுணர் சி.விஜயராகவாச்சாரி, சென்னை காங்கரஸ் சர்வாதிகாரி தோழர் ராஜகோபாலாச்சாரியார்,
முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார்,
சட்டசபைகளின் தலைவர்கள் கனம்கள் சாம்பமூர்த்தி அய்யர்,
ராமராவ்,
நல்ல பத்திரிகை இந்து, சுதேசமித்திரன்,
நல்ல பத்திராதிபர்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார்,
நல்ல அரசியல் ஞானம் படைத்தவர் நல்ல பொருளாதார ஞானம் படைத்தவர் எ.ரங்கசாமி அய்யங்கார்,
ஒரு நாட்டில் இந்த தமிழ் நாட்டில் இம்மாதிரியான முக்கிய ஸ்தானங்களும் பிரபல ஸ்தானங்களும் அதிகார பதவிகளும் அரசியல் பிரதானங்களும் கவுரவமும் சமூக வாழ்வில் 100க்கு 3 பேர்களாய் இருக்கும் ஜாதியாராகிய பார்ப்பனர்களுக்கே போவதும் பார்ப்பனரல்லாதார்களின் சாதாரண நிலை உயிர் வாழ்வுக்கு கூட பார்ப்பனர்களுக்கு அடிமையாயிருந்தாலொழிய முடியாத மாதிரியிலும் இருந்தால் அந்த மக்கள் ஒரு நாளாவது விழித்தெழ மாட்டார்களா? விழித்தெழ வேண்டாமா? என்று யோசித்துப் பாருங்கள்.
மதிப்பிழந்த நம்மவர்கள்
கேசவ பிள்ளை என்ன கதியாக்கப்பட்டார்? ஷண்முகம் செட்டியார் வெளிநாட்டுக்குப் போய் பிழைக்க வேண்டியதாயிற்று
ராமசாமி முதலியார் இந்தியாவையே விட்டு ஓட வேண்டியதாயிற்று, சாதாரண தேர்தலில் 3ந் தர, 4ந் தர ஆட்களால் போட்டி போடப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்.
வரதராஜுலு, ராமசாமி போன்றவர்கள் எல்லாம் தேசத் துரோகி
லிஸ்டில் சேர்க்கப்பட்டார்கள்.
காங்கரஸ் துரோகியென்று மாகாண காங்கரஸ் கமிட்டி, வேலைக்கமிட்டி, அகில இந்திய காங்கரஸ் கமிட்டியால் தீர்மானிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பார்ப்பனர் நாமினேஷன் கொடுக்கப்பட்டு மந்திரி ஆக்கப்பட்டார். மற்றும் இது போன்ற விஷயங்களையெல்லாம் நேரில் பார்க்கின்ற நீங்கள் காங்கரசை அரசியல் சபை என்கின்றீர்களா? அல்லது வருணாச்சிரம சபை என்கின்றீர்களா? என்று உங்களைப் பணிவுடன் கேட்கின்றேன்.
குடி அரசு- 1938 (1) 148
பட்டம் துறந்த பதிவிரதைகள். தோழர்களே! பட்டம் விட்டவர்கள் 5 பேர். அதாவது தோழர்கள்
டி.ஏ. ராமலிங்கம் செட்டி, எம்.கெ. ரெட்டி, சீதாராம ரெட்டி, ராமநாதன். செட்டியார், ஒரு ராவ். இதில் பெரிய பட்டங்கள் விட்டவர்கள் பார்ப்பனரல்லாதார்கள். இவர்கள் பல கவுரவ உத்தியோகம் நிர்வாகம் பார்த்து அனுபவமுடையவர்கள். ஸ்தல ஸ்தாபன சுயராஜ்யத்தில் தலைவர்களாக இருந்தவர்கள். இவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, கம்பவுண்டருக்கு அண்ணன் உத்தியோகத்தில் இருந்த ஒரு திக்குவாய் அய்யருக்கு மேல்சபைத் தலைவர் பதவி கொடுத்தது எதற்காக? தேசபக்திக்காகவா? வருணாச்சிரம தர்ம சக்திக்கு ஆகவா? என்று உங்களைப் பணிவோடு கேட்கின்றேன்.
காங்கரசுக்கு அரசியல் ஞானம் உண்டா? நாணயம் உண்டா? நாளது வரை அதன் கொள்கைகள் ஏதாவது வெற்றி பெற்றதுண்டா? அதன் தலைவர்கள் யாராவது நாணயமாய் நடந்து கொண்டதுண்டா? விரல் விட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்
அத்திரப்படுகிறவர்கள் என் மூன் வரட்டும். காலித்தனத்தில் என்ன காரியம் சாதிக்க முடியும்? கர்னாடகப் பெண்கள் மாதிரி மானம், வெட்கம் இல்லாமல் மண்ணைவாரி தூற்றுகிறீர்களே நீங்கள் மக்களுக்கு பிறந்தவர்கள்தானா என்று கேட்கின்றேன். 50-வருஷ காங்கரசும் மகாத்மா. என்ற பெயரில் விளம்பரப்படுத்த பட்டவரின் அஹிம்சை உபதேசப் பித்தலாட்டம் மண்ணை அள்ளிப் போடவும் நாய், கழுதை மாதிரி ஊளையிட்டு கூப்பாடு போட்டு கூட்டத்தைக் கலைக்கப் பார்ப்பதும்தானா உங்களுக்கு கற்றுகொடுத்தது? நாட்டை மனிதன் ஆண்டாலும் சரி அல்லது ராமராஜ்யம் என்பது போல் ஒரு ஜதை செருப்பு ஆண்டாலும்
சரி மனிதனுக்கு ரோஷமும் மரியாதையும் வேண்டாமா? என்று கேட்கின்றேன் என்றும் மற்றும் பழைய மந்திரிகள் செய்த வேலை, இடைக்கால மந்திரிகள் வேலை, புது மந்திரி செய்த “சிக்கனம்”. தேர்தல்,
வாக்குறுதி, ஹிந்தி, வந்தே மாதரம், கல்வித்திட்டம், கள்ளு நிறுத்தினது ஆகியவற்றின் புரட்டு, காண்டிராக்டு லஞ்சம் ஒழிப்பு, கட்டுப்பாடு ராஜ்ஜியம் முதலியவைகளைப் பற்றி புள்ளி விவரங்களுடன் பேசினார்.
குறிப்பு: 13.02.1938 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலை ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 20.02.1938
M வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
இதற்குப் பமிகாரமென்ன?
இந்நாட்டில் இன்று நடைபெறும் தேசீயம் பார்ப்பனர் - பார்ப்பனர். அல்லாதார் போராட்டமென்றும் அப்போராட்டமானது ராமாயணக் கதையில் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் ஏற்பட்ட போரில் ஆரியர்கள் மிருகப்பிராயமுள்ள காட்டு மனிதர்களான இழிகுல திராவிட மக்களை பல சூழ்ச்சிகளால் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு அனுமார் (குரங்கு) என்று பெயர் கொடுத்து திராவிட கூட்டத்தையும் அவர்களது அரசர்களையும் ஒழித்தது போல் இன்றைய பார்ப்பனர்கள் திராவிட மக்களில் மனிதத் தன்மையும் மானாபிமானமும் அற்ற சில. இழிமக்களை பல சூழ்ச்சிகளால் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு மற்றத் தமிழ் மக்களை அழுத்தி ஆதிக்கம் செய்ய முயற்சித்து வருகிறார்கள் என்றும் பல தடவை தக்க புள்ளி விபரம், ஆதாரம் ஆகியவைகளுடன் எழுதி வந்திருக்கிறோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நம் பழஞ்சரித்திரம் என்னும் புராணங்களில் தேவர்கள் - ராக்ஷதர்கள் சண்டை என்றும் தேவர்கள் - அசுரர்கள்சண்டை என்றும் காணப்படுவதை சகல விதத்தும் ஒத்தது போலவே இன்று திராவிடர் என்றும் ஆரியர் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். என்றும் சுமார் 100 வருஷகாலமாக பலவித போராட்டங்கள், கட்சிப் பிரதி கட்சிகள் மத சமுதாயங்களின் பேரால் நடந்து வந்து இன்று ஒரு அளவுக்கு மத சமுதாயப் பேரால் இனி போர் நடத்த முடியாது என்று உணர்ந்த பார்ப்பனர்கள் புதியதொரு வழி கண்டுபிடித்து அதன் பேரால் ஆதிக்கம் செலுத்தக் கருதிய சூழ்ச்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் இன்று உணர்ந்து பல வழிகளிலும் எதிர்த்தடிக்க துணிந்துவிட்டார்கள்.
என்றாலும் குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்புகளான சில பார்ப்பனரல்லாதாரே பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால் அந்தப் படைகளை வைத்துக் கொண்டு சிற்சில சமயங்களில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று மற்றவர்களின் முற்போக்கைத் தடுத்து விடுகிறார்கள். ஆகவே இதை வெளியாக்கி இப்போரை திறம்பட நடத்தி பார்ப்பன ஆதீக்கத்தை முறியடித்து வெட்டி வீழ்த்துவதையே கருமமாகக் கொண்ட நம் நிலை அடிக்கடி மிக்க தொல்லைப்படத் தக்கதாகவும் துன்பப்படத்தக்கதாகவும் ஏற்பட்டு வருவது வாசகர்கள் உணர்ந்ததேயானாலும் நமக்கு அவற்றின் பலன் முடிவில் வெற்றி முகத்தையே காட்டி
குடி அரசு- 1938 (1) 150
வந்திருக்கிறது. இனியும் அது போல எவ்வளவோ தொல்லையும் துன்பமும் நமக்கு ஏற்பட்டாலும் அதன் மூலம் ஏற்படும் முடிவு வெற்றிக்கு ஆதாரமாய் இருக்குமென்று கருதியே ஒவ்வொரு தொல்லையையும் துன்பங்களையும் வெற்றிக்கறிகுறியாய்க் கொண்டு போரை நடத்திவருகிறோம் உதாரணமாக நீடாமங்கல நிகழ்ச்சி இன்று சிவில் கிரிமினல் கோர்ட்டுகளில் கை கட்டி நின்று பதில் சொல்ல வேண்டிய நிலையை கொண்டு வந்து விட்டு விட்டது. மற்ற நமது தொண்டுகளும் இன்று பாமர மக்கள் முன்னிலையில் நம்மை மாபெரும் தேசத்துரோகியாகவும் செல்லுமிடங்களில் எல்லாம் எதிரிகளின் காலித்தனங்களுக்கு ஆளாக வேண்டியதாகவுமான நிலையைக் கொண்டு வந்துவிட்டு விட்டன.
மற்ற சாதாரண நிலைமையில் எவ்வித அசெளகரியங்களுக்கும் யாரையும் எவ்வளவுக்கும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நம் பொருளாதார நிலைமை இன்று நடக்கும் நமது போருக்கும் அதன். சைன்யங்களாகிய பத்திரிகைக்கும் பல கூட்டு வேலைத் தோழர்களின். நாணய வாழ்வுக்கும் பொது மக்கள் கையை எதிர்பார்க்கும் நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது
எதிரிகளுக்கு ஸ்தாபனமுண்டு, பொறுப்பு உண்டு, கூட்டுக்கவலை உண்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்காய் பொருள் திரட்டும் தந்திரம் உண்டு.
நமக்கு என்ன உண்டு? சகலமும் நாமே தான் என்னும் ஆணவமும் - “அகம்பாவமும்” தான் உண்டு. ஏன் என்றால் அப்படிப்பட்ட ஆணவமும் அகம்பாவமும் கொண்டதால் தான் இவ்வளவு காலமாவது நாம் உயிர்வாழ முடிந்தது. “நமக்கென்ன குறை? எதற்கும் மற்றவர்கள் இருக்கிறார்கள்: ஸ்தாபனங்கள் இருக்கின்றன; கவலையும் பொறுப்புமுள்ள
சக்தி வாய்ந்த தோழர்கள் இருக்கிறார்கள்” என்று சிறிதாவது கருதி இருந்திருப்போமானால் நமது உணர்ச்சியும் ஊக்கமும் குறைவு பட்டு தொட்டதிலெல்லாம் தோல்வியே தலைகாட்டி பொது வாழ்விலிருந்து விலகி மறைந்திருப்போம் ஆகையால் ஓய்வு ஒழிச்சல் சாந்தி சலிப்பு இல்லாமல் “நம் தலையில் தான் பாரம் இருக்கிறது. தலையை எடுத்துக் கொண்டால் சுமை முழுதும் கீழே விழுந்து விடும்” என்கின்ற பயத்துடன் சதா தலை கொடுத்த வண்ணமாய் இருப்போம்
நமக்கு உதவியாய் நம்கூட தோள் கொடுப்பதற்கு ஆள் இல்லையென்றோ பொருள் கொடுப்பதற்கு ஆள் இல்லையென்றோ அந்தப்படி இதுவரை யாரும் தோளும், பொருளும் கொடுத்து வரவில்லை என்றோ நாம் சொல்லுவதாக யாரும் கருதிவிடக் கூடாது என்று நாம் வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம். தோள் கொடுத்த பாரத்தில் 151 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
கொஞ்சம் ஏற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நமக்காகவே தோள் கொடுத்தார்கள்.
- கொடுக்கிறார்கள். பொருள் கொடுத்த - கொடுக்கிற மக்கள் நமக்காகவே நம்மிடம் உள்ள அன்பு, தாட்சண்யம் நேச உணர்ச்சி ஆகியவற்றிற்கு ஆகவே உதவினார்கள் - உதவுகின்றார்கள் என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம். அதாவது நமக்கு இத்தொண்டில் முழுப்பாரமும் இல்லை. என்றால் உடனே விலகிக் கொள்ளவும் நம்மோடு ஏதோ சிறு பிணக்கு என்றால் உடனே மாறிக் கொள்ளவும் வேண்டியவர்களாகவே பெரிதும்
நம் தோழர்கள் இருக்கக் கண்டு வருகிறோம்
நம் 20 வருஷத்திய பொது வாழ்வில் தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட உணர்ச்சியில் செய்துவரும் தொண்டில் நம் தோழர்கள் யாரிடமாவது பொருளாதார விஷயமாய், உதவி எதிர்பார்த்திருக்கக் கூடுமா என்று பார்த்தால் இந்த ஒன்று இரண்டு வருஷகாலமாகத்தான் பிரசாரத்துக்காகவும், 'விடுதலை' பத்திரிகைக்காகவும் சிலரிடம் உதவி எதிர்பார்க்கத் துணிந்திருப்பதாய்ச் சொல்லலாம். அவ்வெதிர்பார்ப்பில்
நம் சொந்த நட்பு, செல்வாக்கு வேண்டுகோள்தான் தொண்டின் தன்மையைவிட தலை சிறந்ததாய் இருக்க வேண்டியிருந்தது என்று சொன்னால் அது மறுக்கக் கூடியதாகாது
இங்ஙனமிருக்க பொருள் இல்லாமல் இனி எக்காரியமும் நடத்த முடியாது என்கின்ற இன்றைய நிலையில், மற்றும் இன்றைய நம் எதிரிகள் பொது மக்களிடம் கொள்ளை அடிப்பது போல் பணம் வசூல் செய்து தாராளமாய் அள்ளிக் கொடுத்தும் ஒவ்வொருவரையும் தங்கள். தங்கள் இஷ்டப்படி சக்திப்படி கொள்ளை அடித்துக் கொள்ள அனுமதியும் செளகரியமும் செய்து கொடுத்தும் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு நமக்கு தொல்லை கொடுக்கின்ற இன்றைய நிலையில் பொருளாதாரத்துக்குத் தக்க மார்க்கம் இல்லாமல் இனி மேலால் காரியம் நடப்பது என்பது பயப்படக்கூடிய விஷயமாகவே இருக்கிறது.
விடுதலை" பத்திரிகை இந்த 7,8 மாதகாலமாய் நடந்து வந்ததற்காக இதுவரை ஏற்பட்டு வந்த மாதம் 500ரூ நஸ்டத்திற்கு வகை: செய்து வந்தவர்கள் யார் என்று பார்ப்போமானால் சுயமரியாதைக்காரர்கள் மாதம் 300 போல் கொடுத்திருப்பார்கள். மற்ற பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதன் தலைவர்கள் மாதம் 200 போல் தான் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
இதுவும் அவர்களில் பலர் தாங்கள் செய்த வாக்குத்தத்தை துணிகரமாய் “இல்லை” என்று சொன்னவர்களும், “என்னமோ அப்போது வாக்குத்தத்தம் செய்தேன். இப்போது பொதுநல வாழ்வே வேண்டாம்
என்று தோன்றுகிறது. இது விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்தபின் யோசிக்கலாம்" என்று சொன்னவர்களும் எவ்வளவு கடிதம் எவ்வளவு
குடி அரசு- 1938 (1) 152
தந்தி அனுப்பினாலும் பதிலே எழுதாமல் இருப்பவர்களும் வாக்குத்தத்தம் செய்துவிட்டு ஆரம்ப முதல் இந்த 8 மாதகாலமாய் விரக்கடைத் தவணை: வைப்பவர்களும், வாக்குத் தத்தம் செய்த தொகையை பகுதியாக்கி, கால்வாசியாக்கி வருபவர்களுமாக இருப்பதையும் மற்ற நிலைமையும் பார்ப்போமானால் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிலும் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் ஒரு பைசா அளவு பொருளாதாரமோ,
மந்திரி பதவியோ ஜில்லாபோர்டு பிரசிடென்டோ பட்டம் பதவிகளோ வேறு பல குடும்ப சுயநலங்களோ பெறாதவர்களுமான சுயமரியாதைக் காரர்களுமாகத் தான் விடுதலை நஷ்டத்தையும் வேறு கஷ்டத்தையும்
ஈடு செய்து வர வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நீடாமங்கலம் கேசு ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் கேசு முடிவு எப்படி ஏற்படுவதானாலும் குறைந்தது 2000க்கு குறையாமல் 3000 ரூபாய் வரை செலவு செல்லும் என்பதாக எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது. கேசு “சுயராஜ்யத்தை”ப் பற்றியதாக இருந்தால் கோர்ட்டுக்கு ஆஜராவதற்கு கூட வாரண்டு வந்து சர்க்கார் செலவில் பிடித்துக் கொண்டு போகட்டும் என்று இருந்து சுலபத்தில் தேசீய வீரர் பட்டம் பெற்று விடலாம். ஆனால் நீடாமங்கலம் விஷயம் சுயமரியாதையைப் பொறுத்த விஷயமாக ஏற்பட்டு விட்டது. பொது மக்களுக்கு உண்மை விளங்கும்வரை போராடித் தீர வேண்டிய விஷயமாக ஏற்பட்டுவிட்டது இவ்விவகாரத்தில் எது வரை சென்று எங்கு போய் முடிவையோ திருப்தியையோ சலிப்பையோ அடையப்போகிறோம் என்பது தெரியவில்லை. இந்த விசாரணையானது பத்திராதிபர், பிரசுரகர்த்தா என்கின்ற முறையில் எவ்வளவு தூரம் நமது வேலையையும் மற்ற நமது விவகாரங்களையும் பாதிக்கப் போகிறதோ என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் முடிவு வரை எதிர் வழக்காடித் தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்
இதற்காக சமீபத்தில் ஒரு கமிட்டி ஏற்படுத்தவும் தொகை:
வசூலிக்கவும் தக்க முயற்சி சில தோழர்களால் நடந்து வருவது அறிந்து
ஒரு அளவுக்கு மகிழ்ச்சி அடைவதோடு அத் தோழர்களுக்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்
நிற்க, நாம் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் பார்ப்பனர்களோடு போராடிவரும் இத்தொண்டு அவசியமானதா, அல்லது வெறும் துவேஷம், குறும்பு, முட்டாள்தனம் ஆகியவைகளால் செய்யப்படும் அநாவசியமான தொண்டா? என்பதை கவனித்துப் பார்க்கும்படி ஒவ்வொரு தோழர்களையும் வேண்டிக் கொள்ளுகிறோம் இன்றைய தேசீயத்தையும் பார்ப்பனீயத்தையும் வன்மையாக எதிர்த்து அவற்றுடன் போராடும் காரணம் என்ன என்பதைப் பற்றி நம் தோழர்களுக்கு
13 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தேசியமும் பார்ப்பனீயமும் மக்களையும் ஆட்சியையும் வருணாச்சிரம ராஜ்யத்துக்கும் புராதன கால ஆட்சிக்கும் மிருகப்பிராயத்துக்கும் கொண்டுபோக பாடுபடுகிறது நாமோ கொஞ்சமும் ஒளிமறைவோ தங்கு தடையோ இல்லாமல் வருணாச்சிரம முறையை அழித்து மக்கள் பழமைக்கு அடிமையாக்கப் படுவதை ஒழித்து அறிவுலகத்துக்கு கொண்டுவர பாடுபடுகிறோம் இதுதான் நமக்கும் தேசீயத்துக்கும் உள்ள அபிப்பிராய மாறுபாடாகும் உண்மையைப் பேச வேண்டுமானால் அந்நிய ஆட்சி என்றும் சைத்தான். ஆட்சியென்றும் அடிமைத்தன ஆட்சி என்றும் தேசியவாதிகளால். தேசீயத் தலைவர்களால் சொல்லப்படும் பிரிட்டிஷ் ஆட்சிதான் மனித சமூகத்தையும் இந்திய நாட்டையும் இந்த 200 வருஷகாலத்தில் இத்துறையில் திருப்பச் செய்து வந்திருக்கிறது. இப்போதும் செய்து கொண்டும் வருகிறது. இதை நாம் மாத்திரம் சொல்லுவதாக யாரும் கருதிவிடக் கூடாது. பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி பழம்பெரும் காங்கரஸ் தலைவர்கள், பண்டித மதன் மோகன் மாளவியா, தாதாபாய் நவ்ரோஜி முதலிய சுமார் 10, 20 காங்கரஸ் தலைவர்கள் இந்திய சிரேஸ்டர்கள் என்பவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. அதாவது “இந்தியாவுக்கு பிரிட்டிஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகே நாம் கீழ்நாட்டு பழைய ஆட்சிகளாலும், முறைகளாலும் அடைந்து வந்த கொடுமைகளும் கஷ்டங்களும், நீங்கி முற்போக்கடையும் பாதையில் நடந்து போகிறோம் என்றெல்லாம் சொல்லி வந்திருக்கிறார்கள். நாம் அதற்காக பிரிட்டீஷார்களே இந்நாட்டில் என்றென்றும் ஆட்சி செலுத்த வேண்டும் என்று சொல்ல வரவில்லை. நாம் சொல்வதெல்லாம் மக்களை வருணாச்சிரம தர்ம முறைக்கும் காட்டுமிராண்டிப் பருவத்துக்கும் கொண்டு போகாமல் இருக்கும்படியானதும் அறிவு உலகத்திற்கு இட்டுச் செல்வதுமான ஒரு ஆட்சி அது யாருடையதானாலும் அப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமென்றுதான் போராடுகிறோம். இதற்கு ஆன திட்டம் எந்த தேசீயவாதி போடுவதானாலும் அதற்கு தலை குனியக் காத்திருக்கிறோம். அப்படிக்கில்லாமல் பரம்பரை தகப்பன் தொழிலை மகன் செய்யும்படியான கல்வியும் (வார்தா திட்டம்) சாஸ்திரங்களும் புராணங்களும் மனதில் பதியும்படி படிக்கத் தக்க பாஷையும் (ஹிந்தி) 26 உத்தியோகங்களில் 19 உத்தியோகம் பார்ப்பனர்க்கு கொடுக்கும் (மிருக வைத்திய டாக்டர் வேலை) 'வகுப்புவாதமற்ற' தன்மையும் 215 மெம்பர்கள் இருக்கத்தக்க சட்ட சபையில் (சென்னை) ஒரு மனிதர் சொல்கிறபடியே எல்லோரும் தலை வணங்க வேண்டும் என்கின்ற “ஜனநாயக சுதந்தரமும்” ஏற்படுத்தத் தக்க, இருக்கத்தக்க ஆட்சியை கொண்டு வரவும் நிலைக்க வைக்கவும் தேசியவாதிகள் என்பவர்கள் பாடுபடுவதும் அதற்கு எதிரிடையானவர்களை தேசத்துரோகி வகுப்பு
குடி அரசு- 1938 (1) 154
வாதி என்பதுமான காரியம் எதுவாயிருந்தாலும் அதை ஒழிக்க பாடுபடாமலோ அத் தொண்டில் உயிர்விடும் நிலை பெறாமலோ ஒரு வினாடியும் இரோம் என்பதை கண்டிப்பாய் தெரிவித்துவிட ஆசைப்படுகிறோம்.
நமது சமதர்ம தோழர்கள் பலர் இன்று காங்கரஸ் வீரர்களாய் இருக்கிறார்கள். காந்தியாருக்கு மனப்பூர்த்தியான தாசத்துவம் செலுத்தும் சிஷ்யர்களாய் இருக்கிறார்கள். காந்தி பிரசாரமே தங்கள் “இக பர” சாதனமாய்க் கருதி கருமம் செய்தும் வருகிறார்கள். ஆனால் காந்தியார் பச்சையாய் வெள்ளையாய் “நான் மக்களுக்கு சுதர்மம் (அவனவன். பரம்பரை வருணாச்சிரம முறைப்படி உரிமையுள்ள அந்தஸ்து அளிக்கும்) சுதர்மத்துக்கு ஆகவே சுயராஜ்யம் கேட்கிறேன். அதற்கு ஆகவே உயிர் வாழ்கின்றேன்" என்கிறார். காந்தியார் இப்படிச் சொல்லுவதை இந்த சமதர்ம வீரர்கள் முன்பும் உணர்ந்ததாகும், இப்போதும் தெரிந்ததாகும். இந்நிலையில் தான் காந்தியார் முயற்சியில் சமதர்மம் கிடைக்குமென்று காந்தீயத்துக்கு உதவி புரிகிறார்கள். காந்தியாரை சரணாகதி அடைந்திருக்கிறார்கள். சென்னை காங்கரஸ் தலைவர்கள் (பார்ப்பனத் தலைவர்கள்) வகுப்புவாதமற்றவர்கள் என்பது பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களுடைய கருத்தா சென்னை கார்ப்பரேஷனுக்கு ஒரு கல்வி அதிகாரியை தெரிந்தெடுப்பதில் அது சம்மந்தமான 3, 4 தேர்தலில் ஒரு பார்ப்பனரல்லாதார். (தோழர் சிவசைலம் பிள்ளை) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு பார்ப்பனரல்லாதார் என்பதற்காக அவ்வளவு தேர்தலும் பயனற்றுப் போய் விட்டது. கடைசியாய் தங்களால் வேறொருவரை தேர்ந்தெடுக்க முடியாமலும் போய்விட்டதே என்பதை உணர்ந்தவுடன் தங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் தியாகம் செய்தாவது அந்த பார்ப்பனரல்லாத தோழருக்கு அந்த வேலை கிடைக்காமல் செய்ய வேண்டியவர்களானார்கள். தோழர் சிவசைலம் பிள்ளை மீது யாரும் இதுவரை எவ்வித குற்றமோ, குறையோ கூறவில்லை. பார்ப்பனர்களாவது வேறு எந்த யோக்கியரையும் சிபார்சு செய்யவும் இல்லை. ஆகவே இன்றைய காங்கரசு “வகுப்பவாதமற்றது” என்பதற்கு வேறு என்ன
ருஜுவு வேண்டியிருக்கிறது.
மற்றும் பழைய மந்திரிகள் சில உத்தியோகத்தில் நியமித்துவிட்டு வந்த சிலர் பார்ப்பனர் அல்லாதார் என்பதற்காக காங்கரஸ் மந்திரிகள் பதவிக்கு வந்ததும் அந்த உத்தியோகங்களை மாற்றி பார்ப்பனர்களுக்கு போட்டு இருக்கிறார்கள். புது உத்தியோகம் பார்த்தவர்களைக் கூட தள்ளி விட்டார்கள். சில பார்ப்பனரல்லாதாரை “இந்த உத்தியோகம் ஏற்றுக் கொள்ளுகிறீர்களா?'” என்று கேட்டு சம்மதம் பெற்றபின் நியமித்த நியமனங்களை கூட மாற்றி விட்டார்கள். சில உத்தியோகங்களுக்கு பழைய மந்திரிகள் தெரிந்தெடுத்து வைத்தவர்களையெல்லாம் கூட மாற்றி விட்டார்கள். 155 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இம்மாதிரியெல்லாம் ஒரு சமூகமும் ஒரு ஸ்தாபனமும் கட்டுப்பாடாய் காரியம் செய்து ஆட்சி நடத்தி வருவதென்றால் அதற்கு
எதிர் ஸ்தாபனமோ இல்லாவிட்டால் எதிரிகள் தொல்லையை வெளியாக்கும் ஆயுதமோ ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லையா? என்று கேட்கவே இவைகளை எழுதுகிறோம். ஆகையால் இத்தொண்டிற்காக ஏதோ ஒரு சிறு ஆயுதமாகவாவது 'விடுதலை' பத்திரிகை இருந்து மானங்கெடப் பிச்சையெடுத்து நடத்திக் கொண்டு வரப்படுவதும் இரண்டொருவர் பிரசாரமூலம் வெளியாக்கி வருவதும் ஒழிந்து போகும்படியாக கேசுகள் விவகாரங்கள் தொல்லைகள் நடப்பதானால் இதற்கு பரிகாரம் செய்ய ஒவ்வொருவரும் தாங்களாகவே முன்னுக்கு வரவேண்டாமா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.02.1938
குடி அரசு- 1938 (1) 156
பார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்
பீஹார், ஐக்கிய மாகாண மந்திரிகள் ராஜிநாமா விஷயமாக காமன்ஸ் சபையில் ஆக்டிங் உதவி இந்தியா மந்திரி லார்டு விண்டர்ட்டன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் சாரம் மூன்றாவது பக்கத்தில் வெளிவருகிறது. அரசியல் கைதிகள் விடுதலை காங்கரஸ் வேலைத் திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்பதை லார்டு விண்டர்ட்டன் மறுக்கவில்லை. “மாகாணத்தின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படாத முறையில் ஏற்பாடு செய்து திருப்தி செய்து கொண்டு, ஒவ்வொரு கைதியின் நிலைமையையும் தனித்தனியாக யோசித்து அத்தகைய கைதிகளை விடுதலை செய்வதென்ற மந்திரிகளின் யோசனையை, கவர்னர். ஜெனரலுடன் கலந்து ஆலோசித்தபின் கவர்னர்கள் ஒப்புக்கொண்டனர். என்றும் அதன்படி ஐக்கிய மாகாணத்தில் 14 ராஜீயக்கைதிகளும் பீஹாரில் 15 ராஜீயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் இன்னும் ஐக்கிய மாகாணத்தில் 15 பேர்களும் பீஹாரில் 26 பேர்களும் விடுதலையாகாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் கொடூரமான பலாத்காரக் குற்றங்கள் செய்தவராகையினால் அவர்கள் விஷயத்தை தனித்தனியாகப் பரிசீலனை செய்து முடிவு கூற கவர்னர்கள் தயாராக இருந்தனர் என்றும் காங்கரஸ் மந்திரிகள் அந்த யோசனைக்கு இணங்காமல் எல்லாக் கைதிகளையும் அவர்களது குற்றங்களின் தரா தரங்களை கவனியாமல் ஒரே அடியாக விடுதலை செய்ய வேண்டுமென பிடிவாதம் செய்ததினாலேயே வைஸ்ராய் குறுக்கிடவேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றும் லார்டு விண்டர்ட்டன் கூறுகிறார். மாகாண விஷயங்களில் வைஸ்ராய் குறுக்கிட்ட காரணங்களை விளக்கிக் கூறுகையில் “பீஹார், ஐக்கிய மாகாணங்களில் மந்திரிமார் கூறிய யோசனைகளை கவர்னர்கள் ஒப்புக்கொண்டிருந்தால் இந்தியாவின் சமாதானத்துக்கும் அமைதிக்கும் பேராபத்து ஏற்படுமென கவர்னர் ஜெனரல் பூரணமாக நம்பியதினாலேயே மாகாண விஷயங்களில் அவர் குறுக்கிட்டார் எனவும் லார்டு விண்டர்ட்டன் குறிப்பிடுகிறார். ராஜீய நோக்கத்துடன். பலாத்கார குற்றம் செய்கிறவர்கள் பேரில் தேச சட்டப்படியும் நீதி நிர்வாக முறைப்படியும் நடவடிக்கை எடுக்கக் கூடாதென்று ஏற்பட்டால் இந்தியாவில் சட்டத்துக்கும், அமைதிக்கும் குழி தோண்டியதாக ஏற்பட்டு விடுமென்றும் லார்டு விண்டர்ட்டன் அபிப்பிராயப்படுகிறார். மற்றும்
157 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இந்தியா மந்திரியின் அநுமதி பெற்றே கவர்னர் ஜெனரல் மாகாண விஷயங்களில் தலையிட்டார் எனவும் லார்டு விண்டர்ட்டன் தெரிவிக்கிறார். எனவே கவர்னர் ஜெனரலோ காங்கரஸ் மந்திரிகளோ திடும்பிரவேசமாய் எதுவும் செய்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை விஷயமாக பீஹாரில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் கவர்னர் தமது ஏகோபித்த சிபார்சுகளை ஒப்புக்கொள்ளாததினால் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை யென்றும் காங்கரஸ் காரியக் கமிட்டியார் அனுமதியளித்தால் ராஜிநாமாச் செய்ய தயார் என்றும் பீஹார் மந்திரிகள் காங்கரஸ் தலைவர் ஜவஹர்லாலுக்கு தெரிவித்திருப்பதாகச் சென்ற வார ஆரம்பத்தில் ஒரு செய்தி வெளிவந்தது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஆனால் அச்செய்திக்கு ஆதாரமில்லையென நம்பத்தகுந்த இடத்திலிருந்து தகவல் கிடைப்பதாகவும் அ.பி.செய்தி ஒன்று அப்பால் வெளி வந்தது. அந்தச் செய்தி வெளிவந்த போதே நாம் சந்தேகப்பட்டதுண்டு. அம்மாதிரி முக்கியமான செய்திகள் தக்க ஆதாரமின்றி வெளிவந்திருக்க இடமில்லை என்றும் தமது யோசனைகளை கவர்னர் ஒப்புக்கொள்ளக்கூடும் என்ற நம்பிக்கையினால் பீஹார் மந்திரிகள் முதலில் வெளிவந்த செய்தியை மறுக்குமாறு அ.பிரக நிர்வாகிகளைக் கேட்டிருக்க வேண்டும். பீஹார் ஐ.மா.அரசியல் கைதிகள் விஷயத்தில் மந்திரிமார் யோசனைகளை கவர்னர்கள் முற்றும் நிராகரிக்கவில்லை யென லார்டுவிண்டர்ட்டன் அறிக்கையினால் தெரியவருகிறது. மந்திரிமார் யோசனைப்படி ஐக்கியமாகாணத்தில் 14 கைதிகளும் பீஹாரில் 15 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாகவும் உதவி இந்தியா மந்திரி கூறுகிறார். விடுதலையானவர்கள் போக ஐக்கிய மாகாண சிறைகளிலிருக்கும் 15 பேர்களும், பீஹார் சிறைகளிலிருக்கும் 26 பேர்களும் பலாத்காரக் குற்றங்கள் செய்து தேச சட்டப்படியும் நீதி நிர்வாக முறைப்படியும் தண்டிக்கப்பட்டவர்களாகையினால் அவர்கள் ஒவ்வொருவர் விஷயத்தையும் தனித்தனியாக பரிசீலனை செய்து முடிவு கூற பீஹார் ஐ.மா.கவர்னர்கள் தயாராயிருந்ததாகவும் லார்டு விண்டர்ட்டன் தெரிவிக்கிறார். இதை காங்கரஸ் மந்திரிகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ராஜிய கைதிகள் குற்றங்களின் தன்மையை லக்ஷ்யம் செய்யாமல் அவர்களை யெல்லாம் ஒரே மூச்சில் விடுதலை செய்ய வேண்டுமென்று மந்திரிகள் பிடிவாதம் செய்ததே நெருக்கடி ஏற்படக்காரணம் என சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிய வருகிறது. சிறையிலிருக்கும் கைதிகள் பெரும்பாலாரின். தண்டனைக்காலம் வெகு சீக்கிரம் முடிந்து விடும் என்றும் தெரிகிறது இந்நிலையில் காங்கரஸ் மந்திரிமார் பிடிவாதம் செய்தது சரியா என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், பெரிய பெரிய ஆக்கத்திட்டங்களை வகுத்துவேலை செய்து கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் ஒரு அற்ப விஷயத்தில் பிடிவாதம் காட்ட வேண்டுமானால் அதற்கு அந்தரங்க காரணங்கள் அலாதியாக இருக்க வேண்டுமென்றே நமக்குத் தோன்றுகிறது.
குடி அரசு- 1938 (1) 158
லார்டு விண்டர்ட்டன் அறிக்கையில் சந்தேகம் கொண்ட காந்தியார். “வைஸ்ராயின் செய்கை எனக்குப் புரியவில்லையே. காங்கரஸ் மந்திரிகள். ஆட்சியில் பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஏற்கனவே அலுப்புத்தட்டி விட்டதா? இந்த அரசியல் கைதிகள் விடுதலைப் பிரச்சனையை பிரிட்டிஷார் ஒரு சாக்காக வைத்துக் கொண்டார்களா? வைஸ்ராய் தலையிட்டதற்கு நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்கள் பொது ஜனங்களுக்குச் சொல்லப்படவில்லையே”' என காந்தியார் கூறுகிறார். அவரைப்போலவே பீஹார், ஐ.மா. காங்கரஸ் மந்திரிகள் ராஜிநாமா விஷயத்தில் சந்தேகம் கொண்ட நாமும் “காங்கரஸ் மந்திரிகள் செய்கை நமக்குப் புரியவில்லையே, மந்திரி பதவிகளில் அவர்களுக்கு ஏற்கனவே அலுப்புத் தட்டி விட்டதா? இந்த அரசியல் கைதிகள் பிரச்சினையை பீஹார், ஐ.மா. காங்கரஸ் மந்திரிகள் ராஜிநாமா விஷயத்தில் சந்தேகம் கொண்ட நாமும் “காங்கரஸ் மந்திரிகள் செய்கை நமக்குப் புரியவில்லையே மந்திரி பதவிகளில் அவர்களுக்கு ஏற்கனவே அலுப்புத் தட்டிவிட்டதா? இந்த அரசியல் கைதிகள் பிரச்சினையை பீஹார், ஜ.மா. காங்கரஸ் மந்திரிகள் ஒரு சாக்காக வைத்துக்கொண்டார்களா? அவர்கள் ராஜிநாமாவுக்கு வேறு நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்தக்காரணங்கள் பொது ஜனங்களுக்குச் சொல்லப்படவில்லை” எனவே கூற வேண்டியிருக்கிறது. 6 கோடி மக்களுக்கு நலம் செய்யக்கூடிய திட்டங்களைப்போட்டிருக்கும் ஐ.மா.மந்திரிகள் 15 பேருக்காக ராஜிநாமாச் செய்யலாமா? 15 பேர் விடுதலை பெரிதா? 6 கோடிப்பேரின் நலம் பெரிதா? என பயனீர் பத்திரிகை கேட்கும் கேள்வி அர்த்த புஷ்டியுடைய கேள்வியாகும். ஏற்கனவே நாம் தெரிவித்துள்ளபடி பீஹார், ஐ.மா. ராஜிநாமாக்களுக்கு அரசியல் கைதிகள் பிரச்சினை உண்மையான காரணமல்ல. மந்திரி பதவியின் பொறுப்புக்களையும் கஷ்டங்களையும் ராஜிநாமாச் செய்த மந்திரிகள் பதவியேற்ற பிறகு உணர்ந்திருக்கவேண்டும் தாங்க முடியாத பாரத்தை தெரியாத் தனமாய் தாமாகவே மேற்போட்டுக் கொண்டதையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மேற்கொண்டு அப்பொறுப்பைத் தாங்குவது சாத்தியமல்லவென உணர்ந்தவுடனே, அரசியல் கைதிகள் விடுதலைப் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வெகு நாசூக்காகவும் தளுக்காகவும் பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட்டு பீஹார், ஐ.மா.மந்திரிகள் வீரப்பட்டம், தியாகிப்பட்டம் சூட்டிக் கொள்ள மாரீசம் பண்ணிவிட்டார்கள். இதுவே உண்மையாக இருக்கவேண்டும்
- விடுதலை
குடி அரசு - கட்டுரை - 20.02.1938
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
காங்கரசும் சுயமரியாதையும்
மறுபடியும் வாக்குறுதி நாடகம்
காங்கரஸ்காரர்கள் அரசியலில் மத உணர்ச்சியைப் புகுத்தி புராண முறையில் பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்று மானத்தை இழந்து மனிதத்தன்மையைப் பறிகொடுத்து மந்திரி பதவி பெற்றார்கள் என்பது நம் வாசகர்கள் யாவரும் ஏற்கனவே உணர்ந்த சேதியாகும்.
காங்கரஸ்காரர்களுக்கு பகுத்தறிவாவது சுயமரியாதை உணர்ச்சியாவது இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு பெரும்பான்மையான ஓட்டுகளால் வெற்றிபெற்றிருந்தும் அவ்வளவு மெஜாரிட்டியாக அங்கத்தினர்கள் வந்திருந்தும் மந்திரி பதவி பெறுவதற்கு இவ்வளவு பெரிய சரணாகதி அடைந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருந்திருக்காது மெஜாரிட்டி பெற்றுவிட்ட ஆணவத்தால் அரசியல் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலும் பின் விளைவை யோசித்துப் பார்க்காமலும் கவர்னரிடம் பயனற்ற வாக்குறுதி கேட்கப் போய் தாங்கள் மானக்கேடான வாக்குறுதி கொடுக்க ஏற்பட்டதோடு வைஸ்ராய் பிரபுவின் சாட்டை அடி வாங்கிக் கொண்டு சரணாகதி அடைந்து பதவி ஏற்க வேண்டியதாயிற்று
பதவி ஏற்றது முதல் வந்தே மாதரம் பிரார்த்தனை, ஒன்றரைக் கோடி ரூபாய் கடன், பழய கடன் ஏற்பு முதல் மதுவிலக்கு, ஹிந்தி, புதிய வரிகள் விவசாயி கடன் குறைப்பு மசோதா வரையில், நாட்டுக்கு பயனற்றதும் கேடுகள் விளைவிக்கக் கூடியதும் கட்சிகள் வகுப்புக் கலவரங்கள் ஏற்படக்கூடியதுமான நிலைமைகளை உண்டாக்கி விட்டதோடு இன்று நாட்டில் காங்கரசின் செல்வாக்கும் குறைந்து மந்திரிகள் தங்கள் தலைகளை மறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது
முஸ்லிம் மந்திரிக்கு முஸ்லிம்களிடையே செல்வாக்கும் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மந்திரிக்கு ஆதிதிராவிட சமூகத்திலேயே மதிப்போ மரியாதையோ இல்லாமல் போய்விட்டது. பார்ப்பனரல்லாத மந்திரிகளுக்கு பார்ப்பனரல்லாதார். சமூகத்திலேயே மதிப்பும் மரியாதையும் லட்சியமும் சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இவற்றையெல்லாம் விட ஒரு அதிசயமான விஷயம் பார்ப்பன மந்திரிகளிடம் பார்ப்பனர்களுக்கே மதிப்பும் செல்வாக்கும் இல்லாமல் போய்விட்டது என்பதாகும்
குடி அரசு- 1938 (1) 160
இந்த நிலையில் இவர்கள் எல்லோருக்கும் பொது மக்களிடம் எவ்வளவு நம்பிக்கை இருக்க முடியும்? எவ்வளவு செல்வாக்கு இருக்க முடியும்? என்பதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியதில்லை. அவர்கள். செல்லுமிடங்களில் அவர்களுக்கு நடக்கும் மரியாதைகளைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு மூன்று மாத காலத்தில் மந்திரிகளின். சுற்றுப்பிரயாணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துவிட்டது அவர்களது மேடைப் பிரசங்கங்கள் சுவர்களும், கதவுகளும் போட்ட அறைக்குள் நடக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும் ஏற்பட்டுவிட்டது ஜனக்கூட்டம் அதிகாரிகளும் அவ்வவ்விடத்து காங்கரஸ்காரர்களும் மாத்திரம் கொண்ட கூட்டமாக ஆகிவிட்டது.
அவ்வளவு பெரிய மெஜாரிட்டியும், அவ்வளவு பெரிய பொது ஜன ஆதரவும் பெற்ற காங்கரஸ் மந்திரிகளின் யோக்கியதையும், செல்வாக்கும் இவ்வளவு சீக்கிரம் அதாவது ஒரு 4,5 மாத காலத்துக்குள் இந்த கதியை அடையும் என்று ஒருவரும் எண்ணி இருக்கமாட்டார்கள். ஆனால் காலநிலை, அவர்களை காங்கரஸ்காரர்களை இந்த கதிக்கு ஆளாக்கிவிட்டது.
இதற்கு காரணம் காங்கரஸ்காரர்களுக்கு நிர்வாக ஞானம் இல்லாமையும், பொய் பேசவும், காலித்தனம் செய்யவும் சட்டம் சமாதானத்துக்கு மாறாய் நடந்து கொள்ளவும் அதிகமான துணிவு கொண்டதுமேயாகும்.
காங்கரசின் அரசியல் ஞானமெல்லாம் அரசியலைக் குலைப்பது, சட்டங்களை மீறுவது, கட்டுப்பாடுகளை மறுப்பது, நிர்வாகங்களில்
புகுந்து குழப்பம், கலவரம், காலித்தனங்கள் செய்து நிர்வாகிகளுக்குத் தொல்லை விளைவிப்பது, பொறுப்பும் ஞானமும் அற்ற இளைஞர்களையும், கஞ்சிக்கு வகையற்ற ஆள்களையும், பொது ஜனங்களிடம் செல்வாக்கும் மரியாதையும் இல்லாத ஆட்களையும், பதவிக்கும், சுயநலத்துக்கும் மானத்தை விற்றுத் தங்கள் சமூகத்தையும், சமூக நலத்தையும் தியாகம் செய்யும் மிராசுதார் - பெரிய மனிதர் என்கின்ற பேர்வழிகளையும் சேர்த்துக்கொண்டு செய்து வந்த அட்டூழியங்களும் அவற்றின். அனுபவங்களும்தான் என்று சொல்ல வேண்டும் எப்படியோ காங்கரஸ் பதவிக்கு வந்ததும், அவர்களுக்கு இந்த அனுபவ ஞானம் தவிர வேறு அனுபவ ஞானமில்லாததால் சகலத்திலும் தோல்வியும், பொது ஜனங்களுடைய ஆதரவை இழப்பதுமான காரியத்துக்கு ஆளாக வேண்டி வந்துவிட்டார்கள்.
இன்று பீகாரிலும், மத்திய மாகாணத்திலும் மந்திரிகள் ராஜினாமா: செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். அங்கு மந்திரிகள் ராஜினாமா செய்வதற்காக சர்க்காருக்கும் மந்திரிகளுக்கும் எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டுவிடவில்லை. 15 கைதிகளை ஏக காலத்தில் விடுதலை செய்ய கவர்னர் சம்மதிக்காததினாலேயே மந்திரிகள் ராஜினாமா செய்வது என்பது உண்மையான காரணமாய்
ரவ ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இருக்குமென்று எந்த மூடனும் நம்பமாட்டான். இது ஒரு சமயம் காந்தியார் தண்டிக்கப்பட்டு ஜெயிலில் இருந்தபோது காலம் கடக்கு முன் வெளிவர ஆசைப்பட்டு “அரிஜனங்களுக்கு வேலை செய்ய பூரண சுயேச்சை கொடுக்காதவரை சாகும்வரை உண்ணவிரதம் இருப்பேன்" என்று சொல்லி பட்டினி கிடந்து விடுதலையாகி வெளிவந்த தந்திரம் போல் ஒரு தந்திரமான காரியமாய்த்தான் இருக்க முடியுமே ஒழிய இதில் வேறு எவ்வித நாணயமும் இருக்க இடமில்லை என்றுதான். எண்ண வேண்டியிருக்கிறது. ஏனெனில் சென்னையில் சென்னை மந்திரிகள் அரசியலின் பேரால் கைதிகளை ஏற்படுத்தி ஜெயிலுக்குள் தள்ளிவரும் போது ஐக்கிய மாகாணத்திலும், பீகாரிலும் ஏற்கனவே இருந்த கைதிகள் வெளிவராதது அவ்வளவு பெரிய அவமானகரமான காரியமா? அல்லது காங்கரஸ் வேலைத்திட்ட நிறைவேற்றத்துக்கு அவ்வளவு பெரிய தவறா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
தோழர் பாட்டிலிவாலாவும், தோழர் கிருஷ்ணபிள்ளையும் பலாத்காரத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. பலாத்காரம் ஏற்படுத்தியவர்களும் அல்ல. அவர்களது பேச்சால் செயலால் பலாத்காரம் ஏற்பட்டு விடவும் இல்லை. அவர்கள் தங்கள் வாக்காலேயே தாங்கள் பலாத்காரத்தை பிரசாரம் செய்யவில்லை என்றும் பிரசாரம் செய்பவர்கள் அல்லவென்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க சென்னை அரசாங்கம் அவர்களைத் தண்டித்து ஜெயிலில் வைத்து பொறுத்துக் கொண்டு, அனுமதித்துக் கொண்டு சென்னை மந்திரிகள் இருக்கும்போது, இதனால் மந்திரிகளுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்டிருக்காத அவமானமும், திட்டம் நிறைவேறாத குற்றமும் பீஹாருக்கும் ஐக்கிய மாகாணத்துக்கும் மாத்திரம் எப்படி ஏற்பட்டுவிட்டது என்பது நமக்கு புலப்படவில்லை. ஆகவே மேல்கண்ட இரு மாகாண மந்திரிகள். ராஜிநாமா என்பது ஏதோ ஒரு சூழ்ச்சியையோ வேறு உள் எண்ணத்தையோ ஏதாவது ஒரு நிர்ப்பந்த்தையோ பொறுத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.
இந்த ராஜிநாமா திடீர் என்று ஏற்பட்டு விடவும் இல்லை. மந்திரிகளின். இஷ்டத்தை கவர்னர்கள் மறுத்ததானது மந்திரிகளின் இஷ்டம் கவர்னர்களுக்கு தெரிந்து, அதை அவர் வைசிராய்க்கு தெரிவித்து, வைசிராய் இந்தியா
மந்திரிக்குத் தெரிவித்து, இந்தியா மந்திரி பிரிட்டிஷ் மந்திரிக்கு தெரிவித்து, அவர் தனது கேபிநட்டுக்குத் தெரிவித்து பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்த தீர்மானமாக இருக்க வேண்டும். அதுபோலவே மந்திரிகள் தங்கள் இஷ்டத்தை கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் வைசிராய்க்கு அனுப்பி இருப்பதும், வைசிராய் மறுத்து இருப்பதும் காரியக்கமிட்டிக்கு தெரிவித்து, தலைவர் ஜவர்லாலுக்கு
குடி அரசு- 1938 (1) 162
தெரிவித்து, காந்தியாருக்குத் தெரிவித்து அத்தனை பேருடைய
அபிப்பிராயமும் கலந்து ஒரு முடிவுக்கு வந்து, மந்திரிகளுக்கு அனுமதி கிடைத்த பிறகே அவர்கள் ராஜிநாமா செய்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் ஏற்பட்ட ராஜிநாமாவைப் பற்றி இனி வைசிராய்க்கும், கவர்னர்களுக்கும், மந்திரிகளுக்கும் மறுபடியும் என்ன பேச்சு வார்த்தையோ ராஜியோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர் காந்தியார் ராஜிநாமா ஏற்பட்ட மறுதினமே தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட்டார். அதாவது “நாளை பம்பாயும், மறுநாள் சென்னையும் ராஜிநாமாக் கொடுக்க வேண்டியதுதான்" என்று சொல்லி விட்டார்.
அப்படி இருக்க இப்போது “கவர்னர்களிடம் மந்திரிகள் பேசிப் பார்க்க வேண்டியது. பேசிய முடிவைக் கொண்டு மந்திரிகள் தங்கள். தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள வேண்டியது" என்று காந்தியார் சொல்லுகிறார். காங்கரஸ் தலைவர் சுபாஷ் போஸ் அவர்கள் “காங்கரசும் ஜனங்களும் நினைப்பதை காந்தியாரே சொல்லிவிட்டார். இனி நான் என்ன சொல்லுவது” என்று சொல்லிவிட்டு “இதைப்பற்றி பண்டிதர் ஜவர்லாலுடனும், காரியக் கமிட்டியுடனும் விவாதிக்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டார். ஜனங்கள் நினைப்பதையும், காங்கரஸ் கருதுவதையும் காந்தியார் சொன்ன பிறகு அதை சுபாஸ் போஸ் ஒப்புக்கொண்ட பிறகு, இனி எதற்காக பண்டித நேருவையும், காரியக்கமிட்டியையும் கேட்க வேண்டும்? இதனால் போஸ் பாபு அபிப்பிராயம் என்ன? காந்தியார் அபிப்பிராயம் என்ன என்பது வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் காந்தியாருக்கும் போஸ் பாபுவுக்கும் இவ்வபிப்பிராயம் பிடிக்கவில்லை என்பதும் நன்றாய் விளங்குகிறது
“இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காரியக் கமிட்டி தீர்மானிக்கும் என்று போஸ் பாபு கூறுகிறார். கவர்னர்களுடன் கலந்து பேசி மந்திரிகள் அவரவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள காந்தியார் உத்திரவு போட்டுவிட்ட பிறகு சுபாஷ்பாபும் மேலால் உத்திரவு போட்டுவிட்ட பிறகு காரியக் கமிட்டிக்கு இதில் இனி என்ன வேலை இருக்கிறது? என்று கேட்கிறோம் ஆகவே, இவைகளைப் பார்த்த பிறகு காங்கரஸ் வகை தெரியாமல் மாட்டிக் கொண்டது; அதன் ராஜிநாமா நாடக சூழ்ச்சி பலிக்கவில்லை என்றும் காரணம் சென்னை ஆச்சாரியார் ஏதோ மத்தியில் கரடிவிட்டு, வடநாட்டார், பண்டித நேரு, காந்தியார், காரியக்கமிட்டியார் ஆகியவர்களின் அபிப்பிராயத்தில் இஷ்டத்தில் - கொள்ளியை வைத்திருக்க வேண்டும் அதனால் காந்தியார் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடி இம்மாதிரி உளறி இருக்க வேண்டும் என்றும் கருத வேண்டியிருக்கிறது
நட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
இது தவிர இந்த 'நெருக்கடி"யைத் தீர்த்துக் கொள்வது பற்றி காங்கரஸ்காரர்கள் வைஸ்ராயுடன் ராஜி செய்து கொள்ள எடுத்துக் கொண்ட முயர்ச்சியிலும் காங்கரஸ் படுதோல்வி அடைந்து இருக்கிறது காங்கரஸ்காரருடைய நிபந்தனைகள் ஒன்றையும் வைஸ்ராய் ஒப்புக் கொள்ளவில்லை.
வைஸ்ராய் மந்திரிகளின் உத்திரவை ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் கூறுகையில் மந்திரிகள் இஷ்டப்படி எல்லாக் கைதிகளையும், எக்காலத்திலும் விட முடியாதென்றும் ஒவ்வொரு கைதியையும் பற்றிய விஷயங்களையும் தனித் தனியே பரிசீலனை செய்து பார்த்துத்தான். முடிவு செய்யப்படும் என்றும் சொல்லி மறுத்திருக்கிறார். “கைதிகளை விடுதலை செய்ய கவர்னர்கள் மறுத்தது நியாயமேயாகும். முடிவான பொறுப்பு அவருக்கே உண்டு. கவர்னருக்கு இருந்து வரும் பொறுப்புக்கு உட்பட்டுத்தான் மந்திரிகள் நடந்துகொள்ள வேண்டியவர்களாவார்கள்.”
என்று பளீரென்று கன்னத்தில் அறைந்தது போல் வைஸ்ராய் அறிக்கை விட்டிருக்கிறார். இந்நிலையில் காங்கரஸ்காரர்களுக்கு சுயமரியாதையோ, அரசியல் மானமோ இருக்குமானால் ராஜிநாமாவை வாபஸ் வாங்க வேண்டியதா அல்லது வெளியில் வந்து அரசியல் சட்டத்தை “உடைத்து நொறுக்க'' வேண்டியதா என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ள விட்டுவிடுகிறோம்
பின் வந்த செய்தியினால் பீஹார் ஐ.மா. மந்திரிகள் கவர்னர்களிடம் சரணாகதியடைந்து கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசுவதாகத் தெரிகிறது. இதில் எவ்வளவு யோக்கியப் பொறுப்பு, நாணயம், ஆண்மை உண்டென்பதையும் வாசகர்கள் முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுகிறோம்
காங்கரஸ் அரசியலால், காந்தியாரின் பார்ப்பன அடிமைத்தனத்தால் இந்தியாவின் மானமே சந்தி சிரிக்கும்படியாக ஆகிவிட்டது இந்தியாவின் சுயராஜியமும், பூரண சுயேச்சையும் ஏகாதிபத்திய ஒழிப்பும் ஏதோ நாலு பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் தங்கள் இனத்துக்கும் வேலை தேடுவதை முக்கிய கொள்கையாகவும் அதற்கு ஏற்ற பலவித சூழ்ச்சி செய்து அடிக்கடி மானங்கெட்டு, மரியாதை இழந்து சந்தி சிரிப்பதே வேலைத் திட்டமாகவும் ஆகிவிட்டது
குடி அரசு - தலையங்கம் - 27.02.1938
குடி அரசு- 1938 (1) 164
பானகல் ராஜா வாசகசாலை
ஆண்டுவிழா மேனாட்டு வாசகசாலை நிலைமை
அன்புள்ள தோழர்களே!
இன்று இங்கு பானகல் இலவச வாசகசாலையின் முதலாவது ஆண்டுவிழாவிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்களித்ததற்காக
இதன் நிர்வாகிகளுக்கும், அங்கத்தினர்களுக்கும் எனது நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த ஆண்டு விழாவிற்கு இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வூர் பிரமுகர்கள் எல்லோரும் இங்கு விஜயமாய் இருப்பதைப் பார்க்க இவ்வாசகசாலை மிகுதியும், செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றே கருதுகின்றேன்.
பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும் ஆனால் வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத்தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தகசாலையும் மனிதர்களை சகல விஷயங்களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர் களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின்மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.
நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு
சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4,5 வருடமாக அறிந்து வருகிறேன். ஆனால் அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுயநலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள். எண்ணத்திற்கும் பயன்பட்டு வருவதாக உணர்கிறேன். நம் நாட்டில் எப்படிப்பட்ட பொது நன்மையான காரியத்தையும் ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவாதீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது. இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாததேயாகும் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும், ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படுகிறதே ஒழிய மற்றபடி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா
என்று பாருங்கள். அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டு கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயிர் வாழ்வு நடத்தவும், மற்ற
மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது. அது போலவேதான் கல்வியை எடுத்துக்கொண்டாலும் சரி, வேறு எதை
எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க
வேண்டும். கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார். அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது
உழைப்பு நமக்கு பலன் யாருக்கு?
கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை
எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட்டத்தார் அடையும் பலனில் 4ல் ஒன்று 8ல் ஒன்று கூட
படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது. நம் கல்வித்திட்டம் பெரிதும்
கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது. இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.
புத்தகசாலை, வாசகசாலை ஆகியவைகளை வெளி நாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன். ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600
பேர் வேலையாட்கள் இருந்து வருவதை பார்த்தேன். 3 லக்ஷம் 4 லக்ஷம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும் எழுதிக்கொண்டு போவதும் புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவதுமான காரியங்களை
ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.
கிராமங்களுக்கும், மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால். மிக மிக ஆச்சரியமாய் இருக்கும். ரயில்வே வாகன் புத்தகாலைய மூன் வாசலில் வந்து நிற்கும். அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர்வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும். தபால் கட்டுபோல் அது ஸ்டேஷன் ஸ்டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். அது போலவே வரும்போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும். இந்தக் காரியம் ஒரு பெரிய இலாக்காவாக நடைபெறுகிறது
குடி அரசு- 1938 (1) 166
usSlflens அபிமானம்
அதுபோலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமூகத்தில் கேவலப்படுத்தப்படத் தக்கவராவர். சகல. கூலிக்காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறையாவது பத்திரிகை படிப்பார்கள். வீடு மெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே, மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன். பத்திரிகை வினியோகிக்கப்பட்ட 2 மணி
4 மணி நேரத்துக்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்து வாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான். அன்றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். அரசியல் ஞானமும் மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதேயாகும்
நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். இதனால் அதிக வாசகசாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல்: போனதோடு ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய் விடுகிறது. நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடையாது. தமிழ்புத்தகமெல்லாம் புராணங்களும், அவற்றிற்கு புதுப்புது உரைகளும், கருப்பொருள்களும், நுண்பொருள்களுமாகத்தான் இருக்கிறதே ஒழிய அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் “ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான் அங்கொரு பெண்ணைப் பார்த்தான் காதல் கொண்டான்” என்கின்ற துவக்கமும் “காதலுக்காக உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டாள்” என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும். நம் புத்தக வியாபாரிகள், வித்வான்௧ள், கலைவாணர்கள் எல்லோருடைய யோக்கியதையும் இப்படித்தான் இருக்கிறது
இங்கிலீஷின் சிறப்பு
இங்கிலீஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்மந்தமோ, பைபிள். சம்மந்தமோ கிடையாது. இங்கிலீஷ் பண்டிதர்களுக்கு மத சம்மந்தமான. விஷயம் தெரியாது. ஆனால் தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது. இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை. ஆதி பாஷையாக இருக்கலாம். கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம். அனேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக எட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
இருக்கலாம். அது வேறு விஷயம். அறிவுக்கு பயன் உண்டா என்பதற்குப்
பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய அறிவாளிகள் என்று சொல்லத் தக்கவர்கள் மிகச்
சிலரே யாவார்கள்.
ஆனால் தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை. நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந்திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்குகளாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமானால் பரப்ப வேண்டுமானால் மதத்திலிருந்து பிரிக்க வேண்டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுமாகத்தான். இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை
பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரிகைகள் மலிந்திருக்குமானால் மதத்தினால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா. ஆதலால் இந்த வாசகசாலை புத்தக சாலை நிர்வாகஸ்தர்கள் இவற்றை கவனிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாசகசாலைக்கு பானகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.
பானகல் பெருமை
பானகல் என்று பெயர் வைப்பது பானகல் ராஜராமராய நீங்கரின். தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவதற்கு ஆகும். பானகல் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவ நாயரையும் லெனினுக்கு ஒப்பிட்டால் பானகலை ஸ்டாலினுக்கு ஒப்பிடலாம். இவர்களுடைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு “சூத்திரர்களை” “இழிமக்களை” “கீழ்ஜாதியார்களை” மனிதர்களாக ஆக்கிற்று. இக்காரியம் மதங்களையும் கடவுள்களையும் ஒழிப்பதைவிட சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுப்பதைவிட முக்கியமானதும் பிரயாசையானதும் என்பதை உணருங்கள்.
ஒரு உதாரணம் இன்றைய “சூத்திரர்களுக்கும்” பார்ப்பனரல்லாத மக்களுக்கும் “சண்டாளர்களுக்கும்'' தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன். அருமையும், பெருமையும் தெரியாது. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்தவர்களுமாவார்கள். ஆதலால் அவர்கள்
குடி அரசு- 1938 (1) 168
பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமூகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன். சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூ இன்கம்டாக்ஸ் கட்டிவந்தவர். அவரை அக்காலத்தில் 12 % @ 15ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில். கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து “ராவால ராவால தேவடா'' வரவேணும், வரவேணும் ஸ்வாமீ என்று இருகைக்கூப்பி கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கெலக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு “ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆ இண்டினி சூசேகானிக்கு' ஏண்டா வெங்கிட்ட நாயுடு அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் “ஆ! ஹா” என்று சொல்லி வஸ்திரத்தை தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார். சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம் எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து “சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா” என்று சொல்லி வழியனுப்புவார். இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.
பார்ப்பண திமிர்
இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசுதாரையும் ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஆகவே எனக்கும் என் போன்றவர்களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பானகலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும் எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.
சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது? இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு
தூரம் மாற்றமடைந்திருக்கிறது? என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும்
இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின. இயக்கங்களுக்கும் புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும் அவற்றை ஞாபகப்படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம்மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது
ரல ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
ஒரு வேண்டுகோள்
இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசகசாலையை ஆதரிக்க வேண்டும். அங்கத்தினர்களாக வேண்டும். தாராளமாக பண உதவி செய்ய வேண்டும். பெண்களும் ஆண்களும் அங்கத்தினர்களாக வேண்டும் சீர்திருத்த உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும் அறிவுக்கு புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும் இந்நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும் சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது. ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்று கிடக்கின்றோமே ஒழிய சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது? எது சுதந்திரம்? என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை.
சிலர் வெள்ளைக்காரனை விறட்டுவது சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதை சுதந்திரம் என்கிறார். சிலர் கட்டுப்பாடு
ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார். சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார்.
சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்னையாய் இருக்கிறது. ஆகவே மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அன்னியன் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்படவேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப்புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லுகிறேன். தோழர்களே! இவ்வாசகசாலை ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து தலைவர் முகவுரை என்கின்ற முகத்தால் இதைப் பேசினேன். மற்றவை மூடிவுரையில் கூற நினைத்திருக்கிறேன்.
குறிப்பு: 01.03.1938-இல் காஞ்சிவரம் பனகால் அரசர் வாசகசாலை ஆண்டுவிழாவில் தலைமை வகித்து ஆற்றிய முகஉரை.
குடி அரசு - சொற்பொழிவு - 06.03.1938
குடி அரசு- 1938 (1) 170
ஒரு தொல்லை ஓழிந்தது மறு தொல்லையை ஒழிக்க தயாராயிருங்கள்
காங்கரசுக்காரர்கள் பதவிக்கு வந்தது முதல் மனித சமூகத்துக்கும் அவர்களது முன்னேற்றத்துக்கும் பலவித தொல்லைகள் விளைவித்து முட்டுக்கட்டை போட்டு நாட்டை ஆரம்பகால காட்டுமிராண்டித் தன்மைக்கு கொண்டு போக வேண்டுமென்றே மனப்பூர்வமாய் பாடுபட்டு வருவதை அவ்வப்போது வெளியிட்டு வந்திருக்கிறோம்
அவற்றுள் மிக்க அவசரமாகவும், அவசியமாகவும், கவனித்துப் பரிகாரம் தேடப்படவேண்டிய விஷயங்கள் மூன்று. அவையாவன 1 சட்டசபையில் வந்தே மாதரப் பாட்டுப்பாடுவது 2. கல்வித்துறையில் ஹிந்தி பாஷையை நம் மக்களுக்குக் கட்டாயமாகப் புகுத்துவது 3 காந்தியாரின் கல்வித் திட்டம்
இம்மூன்றும் மனித சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் கேடானது என்பதற்காக எடுத்துக்காட்டி எதிர்த்து வந்ததோடு அவ்வெதிர்ப்பை காங்கரஸ் தலைவர்கள் லக்ஷியம் செய்யாததால் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் கேட்டிற்கு உள்ளாகும் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி காங்கரஸ்காரர்களே கற்றுக் கொடுத்த பாடமாகிய சண்டித்தனத்தையும் காலித்தனத்தையும் கைக் கொண்டாவது தப்பித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்து
தீர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது இதை அறிந்த காங்கரஸ்காரர்கள் “இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நாங்களா பயப்படுபவர்கள்?' என்று வீரப்பிரதாபம் பேசத்தலைப்பட்டார்களே ஒழிய, தங்களுடைய யோக்கியப் பொறுப்பற்றதும் முட்டாள்தனமானதுமான காரியத்தில் இருந்து விலக சம்மதிக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்கன் துணிவு
பாதிக்கப்படும் மக்களுக்கு வேறு வழி இல்லாததால் சண்டித்தனத்திலும்
முடியாவிட்டால் மற்றதிலும் இறங்குவது என்ற முடிவுக்கு வந்து, அந்தப்படி காரியத்திலும் இறங்கத் துணிந்து அதற்கு ஆக வேண்டிய
படட... வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
சகல முஸ்தீபுகளையும் செய்து கொண்டு நாளையும் குறிப்பிட்டு மந்திரிகளுக்கு இறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. அது என்னவெனில்
ஒவ்வொரு தடவையும் அதாவது சட்டசபை துவக்கும் போதெல்லாம் வந்தே மாதரம் என்னும் பாட்டுப் பாடுவது என்கின்ற விஷமத்தனமான காரியத்தை செய்யக் கூடாது என்று முஸ்லீம் தோழர்கள் காங்கரசை பல தடவை கேட்டுக் கொண்டார்கள். இதை காங்கரசார் லக்ஷியம் செய்யாமல் அடக்குமுறையின் மூலம் இவ்வேண்டுகோளை அடக்கப் பார்த்தார்கள். அதன் மீது மேலால் உள்ள இந்திய காங்கரஸ் தலைவர்கள் காதுக்கு இவ்விஷயத்தை எட்ட வைத்துப் பார்த்தார்கள். காங்கரஸ் தலைவர்கள் எல்லோரும் ஏகோபித்து வந்தே மாதரப் பாட்டைத் தேசியப் பாட்டாகப் பயன்படுத்தக் கூடாது என்று அபிப்பிராயப்பட்டார்கள். அப்படி இருந்தும் சென்னை காங்கரஸ் தலைவர்கள் அதை கை விடாமல் “வந்தே மாதரப் பாட்டு தேசீயப் பாட்டல்ல வென்றால் அதை பிரார்த்தனைப் பாட்டாக பாடுவோம்” என்று பிடிவாதம் செய்து பிரார்த்தனைப் பாட்டாக பாட ஆரம்பித்தார்கள். இதையும் முஸ்லீம்கள் முதலியவர்கள் ஆகேஷ்பித்து “இந்துக்களுடைய பிரார்த்தனைப் பாட்டுக்கு நாங்கள் தலை குனியோம், எழுந்தும் நிற்கோம்'” என்று மறுத்தார்கள்.
காங்கரஸ் தந்திரம்
இதற்கு காங்கரஸ்காரர்கள் “ஒவ்வொரு மதஸ்தரும் அவரவர்கள். மத சம்பிரதாயப்படி பிரார்த்தனை பாடலாம், அதற்கு மற்ற வகுப்பாரும் தலை வணங்கலாம்; ஆதலால் எல்லோரும் எல்லா பாட்டிற்கும் எழுந்து நின்று தலைவணங்க வேண்டும்” என்று சொன்னார்கள். இந்துக்கள் தவிர மற்றவர்கள் இதற்கு இணங்கவில்லை. அதற்குப் பிறகும் காங்கரஸ்காரர் அதை மற்றவர்கள் லக்ஷியம் செய்யாததால் பிடிவாதமாய் பாட ஆரம்பித்தார்கள். இதைக் கண்டு மற்றவர்கள் அந்த சமயத்தில் வெளியே போக ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்த தலைவர் “பாட ஆரம்பித்த பின்பு யாரும் வெளியில் போகக்கூடாது" என்று கூறியதுடன் சட்டசபை மண்டபவாயில் கதவும் மூட உத்திரவு போட்டார். இது சட்டத்துக்கு விரோதமென்றும் கதவை மூடி உள்ளே இருக்கும் மெம்பரை வெளியே போகாமல் தடுத்தால் அது கிரிமினல் குற்றமாகிவிடும் என்றும் கருதிய தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் “கதவை மூடவேண்டாம் இஷ்டமிருக்கிறவர்கள் இருக்கட்டும், மற்றவர்கள் வெளியே போகட்டும்” என்று தலைவர்க்கு யோசனை சொன்னார். இதன் பிறகு முஸ்லிம் அங்கத்தினர்களும் கிறிஸ்தவ அங்கத்தினரும் வந்தேமாதரப் பாட்டுபாடும்போது உள்ளே போகவும் வெளியே வரவுமான காரியங்கள் செய்து பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்த காங்கரஸ்காரர்கள். வந்தே மாதரப் பாட்டை சட்டசபை நடவடிக்கை துவக்குவதற்கு முன்
குடி அரசு- 1938 (1) 172
பாடி முடித்துவிட்டு பின்னால் காரியம் துவக்கும் மணி அடித்த பிறகு மற்றவர்கள் உள்ளே வரலாம் என்று ஒரு குயுக்தி செய்து தனியாக தாங்கள் மாத்திரம் முதலில் வந்து பாடி விடலாம் என்று கருதினார்கள். சில முஸ்லீம்கள் அதே சமயத்தில் உள்ளே சென்று தாங்களும் தங்கள் இஷ்டப்படி ஏதாவது செய்வது என்றும் சட்டசபை நடவடிக்கை துவக்கப்படாததால் அங்கு அந்த சமயத்தில் யார் என்ன செய்தாலும் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் சொல்லி வாத்தியத்தோடு பிரார்த்தனை பாடலாம் என்று துணிந்தார்கள். இதனால் மூளைக் குழப்பமடைந்த காங்கரஸ்காரர்கள் முஸ்லிம் முதலியவர்களை தனித்துவிட்டு எப்படியாவது அப்பாட்டை பாடி விட வேறு பல குயுத்த்தி வழி தேடிக் கொண்டிருந்தார்கள்
ஆச்சாமியார் ஆணவம்
இந்த சந்தர்ப்பத்தில் கனம் ஆச்சாரியார் அவர்களைச் சந்திக்க நேர்ந்த தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் “வந்தே மாதரப் பாட்டால் முஸ்லிம்கள் மிக்க அதிருப்தி அடைந்திருக்கிறார்களாதலால் தாங்கள் தயவுசெய்து அதை விட்டு விடக் கூடாதா” என்று சிநேக முறையில் தயவாய் கேட்டுக் கொண்டார். அதற்கு ஆச்சாரியார் "பாட்டின் கருத்து எப்படி இருந்தாலும் அது எந்த சமயத்தில் என்ன எண்ணத்தில் யாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அந்தப் பாட்டு இந்தியாவில் 30 @ காலமாய் தேசியப் பாட்டாக பயன்படுத்தப்பட்டு வந்து விட்டதால் அதை நிறுத்துவது என்பது தேசியத்தையே விட்டு கொடுத்ததாகும் ஆதலால் அதைப் பற்றி மாத்திரம் பேசாதீர்கள்” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகே தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் திக்கு விஜயம் செய்யத் தொடங்கினார். தமிழ்நாடு முழுவதும் வீரகர்ஜனை செய்து போர் முரசடித்து வந்தார். முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்தார்கள். சண்டித்தனப் போருக்கு நாள் குறிப்பிட்டார்கள். மேலே சொன்னதுபோல் இறுதிக் கடிதம் அனுப்பினார்கள். அப்புறமேதான் ஆச்சாரியார் சுரம் படிப்படியாய் இறங்க ஆரம்பித்தது. கலகலத்தார்! விடவிடத்தார்!! நடுநடுங்கினார்!! ஞானோதயம் ஏற்பட்டது, நியாயம் தோன்றிற்று, ஆணவம் அடங்கிற்று. “வந்தே மாதரப் பாடலால் நாட்டில் தப்பபிப்பிராயம் சில வகுப்பாருக்கு ஏற்பட்டிருப்பதாய் தெரிவதால் அந்த தப்பபிப்பிராயம் விலகி மக்கள் ஒன்றுபடும் வரை வந்தே மாதரப் பாட்டை சட்டசபையில் பாடுவதை நிறுத்தி வைக்க வேண்டியது" என்று சட்டசபை கூடிய உடனே எழுந்து சொல்லிவிட்டார்.
தவைவர் முட்டுக்கட்டை
“இந்தப் புத்தி இத்தனை நாள் எங்கே போயிற்று" என்று கேட்டு, இப்போதாவது ஆச்சாரியாருக்கு நல்ல புத்தி வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று சொல்ல தோழர் அமீத்கான் எழுந்தார். தலைவர் அதை தடுத்து விட்டார்.
13— வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
இந்த கதையோடு ஒரு தொல்லை ஒழிந்தது. இதன் பெருமை தோழர்கள் கலிபுல்லா சாயபுக்கும் லால்ஜான் சாயபு அவர்களுக்கும்
உரியதாகும். மற்ற இரண்டு முக்கிய தொல்லைகளும் இது போலவே ஒழிய வேண்டியிருக்கிறது. நியாயமான, மரியாதையான, யோக்கியமான முறையில் இத் தொல்லைகளை அதாவது ஹிந்தி, காந்தி கல்வித்திட்டம் என்பவற்றை ஒழித்துக் கொள்ள முடியாது என்பதாகவே காணப்படுகிறது. காங்கரஸ்காரர்கள் வெள்ளையர்களிடம் நடந்து கொண்ட முறையை கையாண்டாலொழிய காங்கரசுக்காரர்களுக்கு நல்ல புத்தியோ நியாய உணர்ச்சியோ தோன்றப் போவதில்லை என்கின்ற முடிவுக்கே நாம் வரவேண்டி இருக்கிறது
நம் முயற்சிகளை காங்கரஸ்காரர்கள் “சாமி இல்லை என்று சொல்லுகிறவர்கள் முயற்சி” என்றும் “வெள்ளையர்களின் அடிமைகளுடைய முயற்சி” என்றும் “வகுப்புவாதிகள் முயற்சி என்றும் “மந்திரி பித்து பிடித்தவர்கள் முயற்சி” என்றும் “காங்கரஸ் மந்திரிகளை கவிழ்த்துவிட்டு அப்பதவியில் அமருவதற்காக பாடுபடும் சுயநலப்புலிகள் முயற்சி” என்றும் கூறி பாமரமக்களை ஏய்க்கப் பார்ப்பார்கள். இதற்கு காங்கரசின் 75ரூ பிரதிநிதிகளும் விஷமப் பிரசாரம் செய்வார்கள். மற்ற காங்கரஸ்
எச்சிலைப் பத்திரிகைகளும் காங்கரஸ் காலாடிக் காலிகளும் விஷமப் பிரசாரம் செய்து தொல்லை விளைவிக்கக் கூடும். ஆனால் இன்றைய காங்கரஸ் ஆட்சி இந் நாட்டில் தமிழ் மக்கள் மனிதர்களாய் இருப்பதா, மலம் தின்னும் நாய், பன்றிகளாக பார்ப்பனர்களின் அடிமைகளாக இருப்பதா என்கின்ற விஷயத்தைப் பொறுத்ததாக இருப்பதால் அதற்கென்றே ஹிந்தி, காந்தி கல்வித் திட்டம் புகுத்த முயற்சிப்பதால் இதை ஒழிக்கும் விஷயத்தில் தமிழ் மக்கள் சற்றும் மூன்பின் யோசனையோ தர்க்கமோ இல்லாமல் ஹிந்தியும், காந்தி கல்வித்திட்டமூம் ஒழிவதா தமிழ் மக்கள் பூண்டோடு அழிவதா என்கின்ற இரண்டிலொன்றுக்கு தங்கள் உடல். பொருள் ஆவியை ஒப்படைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்
பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு
காங்கரஸ்காரர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) மூன் யோசனை கிடையாது. அவர்களுக்கு சுயநல ஆத்திரத்தால் தோன்றியதைச் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பாமர மக்களை ஏமாற்றும் சக்தி தங்களுக்கு உண்டு என்னும் காரணத்தாலும் தமிழ் மக்கள் பலரை தமிழ் மக்களின் பத்திரிகைகள் பலவற்றை கூலிக்கு அமர்த்திக் கொண்டிருக்கிறோம் என்னும் ஆணவத்தாலும் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள். “பட்டால் தான் தெரியும் பார்ப்பானுக்கு" என்கின்ற நமது பாட்டன்மார்களது பழமொழி போல் கடிக்க ஆரம்பித்து விஷம் ஏற ஆரம்பித்த பிறகு தான் திரும்பிப் பார்ப்பார்கள். ஆதலால் தமிழ்
குடி அரசு- 1938 (1) 174
மக்களுக்கும் அவர்களது பரம்பரை வீரத்துக்கும் சுயமரியாதைக்கும் ஒரு நல்ல சோதனைகாலம் ஏற்பட்டிருப்பதை பயன்படுத்திக் கொண்டு உலகத்துக்கு வீரத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.
பிரித்தாளும் சூழ்ச்சியா?
இந்த சந்தர்பத்தில் வந்தே மாதர பாட்டு நிறுத்துவதற்கு ஏற்பட்ட அவசியத்தைப் பற்றி அதாவது இப்பாட்டை நிறுத்திவிட்டதால் காங்கரஸ்காரர்கள் மக்களை பிரித்து வைக்க ஒரு சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டதாக மனப்பால் குடித்து வருகிறார்கள். அதாவது வந்தே மாதரம், ஹிந்தி, காந்தி கல்வித் திட்டம் ஆகியவைகளை எதிர்ப்பதில் தமிழ் நாட்டில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து கிளர்ச்சி செய்வதால் பலம் அதிகரித்து விடுகின்றது என்று கருதி முஸ்லிம்களை எப்படியாவது பிரித்துவிட்டால் இக்கிளர்ச்சி பலமற்றுப் போகும் என்கின்ற சூட்சி மீது முஸ்லிம்களுடைய காரியத்தை மாத்திரம் கவனித்து அவர்களுக்கு இணங்கி வந்தேமாதரப் பாட்டை நிறுத்திவிட்டதாக அதுவும் தற்கால சாந்தியாய் நிறுத்தி இருப்பதாகச் சொல்லி முஸ்லிம்களை பிரிக்கப் பார்க்கிறார்கள். ஒரு சமயம் முஸ்லிம்களும், இதுவே போதும் என்று கருதி இனி மேலால் நடக்க வேண்டிய காரியத்துக்கு அலக்ஷியமாய் இருந்தாலும் இருந்துவிடலாம். அதைப்பற்றி
நாம் கவலைப்படவில்லை, முஸ்லிம்கள் நலத்துக்கு என்று நாம் ஒரு காரியமும் செய்யவில்லை. ஆதலால் முஸ்லிம்கள் ஹிந்தி, காந்தி கல்வித்திட்டம் ஆகியவற்றின் கிளர்ச்சிக்கு மற்ற தமிழ் மக்களுடன் ஒத்துழைக்காததற்காக குறை கூற இடமில்லை.
தமிழர்கள் நோக்கம்
அந்தப் பாட்டானது இந்து முஸ்லிம் ஒற்றுமையின் அஸ்திவாரத்தை பெயர்த்தெறிவதாய் இருப்பதாலும் இந்து முஸ்லிம் கலகம் ஏற்படில் பொது மக்களுக்கும் முன்னேற்றத்துக்கும் கேடுண்டாகும் என்றும் கருதியதாலுமே மற்ற தமிழ் மக்களும் அதில் கலந்து கொண்டார்கள். அது போலவே ஹிந்தியும், காந்திகல்வியும் அமுலுக்கு வருமானால் இந்து முஸ்லிம் உள்பட சகல மக்களுடைய முன்னேற்றமும் சுயமரியாதையும் பகுத்தறிவும் அடியோடு பாழ்படுத்தப்பட்டுவிடும் என்று கருதியே அதில் இவ்வளவு தீவிரமாய் இறங்கி இருக்கிறோம் இந்து, முஸ்லிம் உள்பட பொது ஜனங்களுக்கு வந்தே மாதரப் பாட்டை விட ஹிந்தியும், காந்தி கல்வியுமே அதிக தீங்கையும், வேற்றுமையையும் சதா சர்வ காலம் போரும், கலகமும் உண்டாக்கக் கூடியதாகும்.
ஆதலால் காங்கரசின் இந்த சூழ்ச்சியால் அதாவது வந்தே மாதரப் பாட்டை தற்கால சாந்தியாய் நிறுத்தி முஸ்லிம்களை திருப்தி செய்து விட்டதாய் மனப்பால் குடித்தால், ஹிந்தி கிளர்ச்சிக்கு வலுக்குறைந்து 15— வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
விடும் என்று எண்ணுவது முட்டாள்தனமான எண்ணம் என்றே சொல்லுவோம். எதிரிகள் பிரிக்கப்பட்டு கிளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது என்று தோன்றியவுடன் ஏதோ ஒரு தகரப் போகணி சாயபை தங்களோடு சேர்த்துக்கொண்டு “வந்தே மாதரப் பாட்டு தப்பிதமானதல்ல. அதில் முஸ்லிம்களுக்கு விரோதமானதொன்றுமில்லை. ஆதலால் எங்களுக்கு விபரம் விளங்கி விட்டது. எனவே வந்தே மாதரப் பாட்டு “இனிமேல் பாடலாம்” என்று அறிக்கை போட்டு “இந்துக்களும், முஸ்லிம்களும் ராஜியாய் போய் விட்டோம். தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த வந்தே மாதரப் பாட்டை பாடலாம்” என்று ஆச்சாரியார் சொல்ல எவ்வளவு நேரம் செல்லும் என்று கேட்கின்றோம். ஆகையால் இந்த தந்திரத்தினால் அல்லது வேறு காரணத்தினால் ஹிந்தி கிளர்ச்சியை தமிழ் மக்கள் விட்டு விடுவார்கள் என்று யாரும் கருதிவிடக்கூடாது என்பதோடு உண்மை தமிழ் மக்கள் கிளர்ச்சிக்கு தயாராய் இருக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்
காஞ்சி மகாநாடு.
இதற்கென்றே சென்ற ஞாயிற்றுக்கிழமை காஞ்சீபுரத்தில் தோழர்கள் கந்தசாமி முதலியார், ரத்தின முதலியார் முதலியவர்கள் முயற்சியினால் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மகாநாடு இக்கிளர்ச்சியில் முக்கியஸ்த்தம் வகித்தவர்களுக்கு மிக்க தைரியத்தையும், ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. அம்மகாநாட்டுக்கு மொத்தத்தில் 10000 பேர்கள் கலந்து கொண்டதும், கொட்டகையில் 3,4 ஆயிரம் பேருக்கே இடமிருந்தும், பாக்கி பேர்கள் ஒலிபரப்பும் கருவியிடம் காலை முதல் இரவு 7% மணி வரையும் காத்திருந்தும் காங்கரஸ் காலிகள் ஒலிபரப்பும் கருவியிடம் நின்றுகொண்டு உள்ளே நடக்கும் காரியத்தையும், பேசும் பேச்சையும் அறியவும் கேட்கவும் முடியாமல் செய்ய எவ்வளவோ வெகு தூரம் “காந்திக்கு ஜே” வந்தேமாதரம்" “சத்தியமூர்த்திக்கு ஜே" என்று கூப்பாடு போட்டு ஜனங்களை நெருக்கியும் ஜனங்கள் கொஞ்சமும் அசையாமல் நின்று கவனித்ததும் கொட்டகைக்குள் டிக்கட் உள்ளவர்களையே அனுமதித்ததும் 4000 பேர்களுக்கு மேலாகவே ஜனங்கள் கூடியிருந்ததும் இவர்களில் பெண்கள் சுமார் 1000 பேர்களுக்கு மேலாக வந்திருந்ததும் காங்கரஸ் சூழ்ச்சியையும் கொடுமையையும் மக்கள் நன்றாய் உணர்ந்துவிட்டார்கள் என்பதையே காட்டிற்று அம்மகாநாட்டு தீர்மானங்களும், அத்தீர்மானங்களை நடத்தி வைக்க ஏற்படுத்தப்பட்ட கமிட்டியும் நாம் உத்தேசித்த காரியம் கண்டிப்பாய் வெற்றி பெறும் என்பதையே வலியுறுத்துவதாய் இருந்தது காங்கரஸ்காரர்கள் ஜூலை மாதத்தில் ஹிந்தியை பள்ளிக்கூடங்களில். புகுத்த வேண்டியதுதான் பாக்கி. அதன் மீது தமிழ் நாட்டில் நடக்கும்
குடி அரசு- 1938 (1) 176
காரியம் என்ன என்பது மிகமிக ஆச்சரியப்படத்தக்கதாகவும், அக்காரியம் நிரந்தரமாய் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் மூக்கிய இடம் பெறக் கூடியதாய் இருக்கும் என்பதிலும் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை
காஞ்சி மகாநாடு நடந்த இந்த ஒரு வாரத்திற்குள் பல ஊர்களிலிருந்து பல வாலிபத்தோழர்கள் கமிட்டி இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு நடத்துவதாக 100க் கணக்கான விண்ணப்பங்கள் அனுப்பியிருப்பதுடன் பொருளுதவி செய்ய பல பெரியோர்கள் தாங்களாகவே முன்வந்தும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆதலால் “தமிழன்னை” (தமிழ் பாஷை) ஒவ்வொரு தமிழ் மகனையும்
தன் கடமையைச் செய்ய அழைப்பதை தமிழ் மக்கள் உணர்வார்களாக.
வெற்றி நமதே - நிச்சயமாய் வெற்றி நமதே!
குடி அரசு - தலையங்கம் - 06.03.1938
177 ௨... 96பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சரணாகதி! மந்திரிகள் மைனர் விளையாட்டு
1938-39வது வருஷத்துக்கு பொக்கிஷ மந்திரியும் முதன் மந்திரியுமான கனம் ஆச்சாரியார் “சர்ப்ளஸ்'” பட்ஜெட் தயார் செய்து விட்டதை காங்கரஸ் அபிமானிகளெல்லாம் பாராட்டுகிறார்கள். “பட்ஜெட் என்றால் இதுதான் பட்ஜட். இந்த பட்ஜெட்டே காங்கரஸ் பட்ஜெட் என்று சொல்லக்கூடிய அம்சங்கள் வாய்ந்திருக்கிறது'' என ஒரு காங்கரஸ்
பத்திரிகையும் பரவசத்துடன் கூறுகிறது. புதிய வருஷத்திலும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைத்தல், கிராமாந்தர ஜல வசதிக்காக தனிநிதி ஏற்படுத்துவதற்காக 15 லட்சம் ஒதுக்கி வைத்தல், விவசாயக் கடன் மசோதாவின்படி குறையக்கூடிய கடன்களைக் கொடுத்துத் தீர்ப்பதற்காக 50 லட்சம் ஒதிக்கிவைத்தல், கால்நடை மேய்ச்சல் கட்டணத்தை சரிபாதியாகக் குறைத்தல், சித்தூர் கடப்பை ஜில்லாக்களில் மதுவிலக்குச் செய்தல் முதலிய புண்ணிய கைங்கரியங்களைச் செய்த பிறகும் புதுவரிகள் போடாமல்
மிச்சம் ஏற்படும் முறையில் கனம் ஆச்சாரியார் பட்ஜெட் தயார் செய்திருப்பதைப்பார்த்து சாமானிய மக்கள் மயங்கத்தான் செய்வார்கள். புகழத்தான் செய்வார்கள். ஆனால் பட்ஜெட்டை சிறிது ஊன்றி நோக்கினால் மிச்ச மேற்படும் பட்ஜெட் தயார் செய்த ஆச்சாரியாரின் கைவரிசைகளை கண்டுகொள்ள முடியும். புதுவருஷத்துக்கு சென்னை மாகாணத்துக்கு ஒரு அதிர்ஷ்ட சீட்டு விழுந்திருக்கிறது. நீமெயர் தீர்ப்பின்படி வருமான வரியாக இந்திய சர்க்கார் சென்னை மாகாணத்துக்கு 21 லக்ஷம் ரூபாய் வழங்கப்போகிறார்கள். இது சாசு விதமான வருமானமல்ல. ரயில்வே வருமானம். சுபீக்ஷமாக இருந்தால் தான் வருமான வரிப்பங்கு மேற்கொண்டும் கிடைத்துக் கொண்டிருக்கும் ரயில்வே வருமானம் நிலையற்றது. குறைந்தால் நமக்கும் வருமானவரிப்
பங்கு கிடையாது. மற்றும் சேலம் மதுவிலக்கு மூலம் பிரஸ்தாப வருஷத்தில் சுமார் 13 லக்ஷம் நஷ்டம் ஏற்பட்டிருந்தும் மொத்த கலால் வருமானத்தில் 15 % லக்ஷம் அதிகம் கிடைத்திருக்கிறது. ஆகவே சேலம் மதுவிலக்கு நஷ்டம் இன்னும் நம்மை பாதிக்கவில்லை. இவ்வளவு அனுகூலங்கள் ஏற்பட்டிருந்தும் ஒன்றே முக்கால் கோடி கடன் வாங்கித்தான் கனம் ஆச்சாரியார் புதுவருஷ பட்ஜெட்டைச் சரிக்கட்டப்
குடி அரசு- 1938 (1) 178
போகிறார். எனவே கனம் ஆச்சாரியாரின் 'சர்ப்ளஸ்” பட்ஜெட்டுக்கு எவ்வளவு மதிப்பு உண்டென்பதை வாசகர்களே நிதானம் செய்து கொள்ளட்டும்
மற்றும் சென்னை மாகாணத்துக்கு ஏற்கனவே 1528 கோடி கடன் இருந்து வருகிறது. அதற்காக வருஷா வருஷம் வட்டி இனத்தில் 87.67
லக்ஷம் அழுது வருகிறோம். கனம் ஆச்சாரியார் செங்கோல் தாங்கிய பிறகு சென்னை மாகாணத்தின் தலைமீது ஏற்கனவே 1% கோடிக்கடன். சுமத்தப்பட்டிருக்கிறது. அடுத்த வருஷத்துக்கும் 1% கோடி கடன் வாங்கப்போகிறார். இந்த விகிதப்படி கனம் ஆச்சாரியார் கடன் வாங்கிக் கொண்டே போனால் அவருடைய உத்தியோக காலாவதி 5 வருஷமும் முடிவடையும் போது சுமார் 10 லக்ஷம் புதுக்கடன் ஏறிவிடும்போல் தோன்றுகிறது. தேசீயக் கடன்களை ஒழிக்கப்போவதாகக் கூறிய காங்கரஸ்காரர் மந்திரி பதவி ஏற்றபிறகு தேசத்தின் மீது மீண்டும் மீண்டும் புதுக்கடன்களை ஏற்றும் காட்சியைத் தான் நாம் காண முடிந்திருக்கிறது விவசாயிகள் முன்னேற்றத்தில் ஆர்வங்கொண்டவர்கள் என கூறப்படும் காங்கரஸ் மந்திரிகள் விவசாயிகளுக்கு சாசுவதமான நன்மைகள் செய்யமுடியவே இல்லை. இடைக்கால மந்திரிகள் விவசாயிகள் வரியில் சாசுவதமாக வருஷா வருஷம் 75 லக்ஷம் வஜா செய்ய ஏற்பாடுகள் செய்தார்கள். காங்கரஸ் மந்திரிகள் அந்த ஏற்பாட்டை ரத்து செய்து
இவ்வருஷத்துக்கு 75 லக்ஷம் வஜா செய்து அடுத்த வருஷத்திற்கும் 75 லக்ஷம் வஜா செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அப்பால் விவசாயிகள் நிலமை எப்படியிருக்குமோ தெரியவில்லை. காங்கரஸ்காரர் பதவியேற்று விட்டதினால் அவர்கள் வாக்களித்தபடி நிலவரி முறை நியாயமானபடி நிர்ணயம் செய்யப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் நிலவரியை நிர்ணயம் செய்வது இப்பொழுது சாத்தியமில்லையென கனம் ஆச்சாரியார் கண்டிப்பாகக் கூறிவிட்டார். கிராம சுகாதாரம், வைத்திய உதவி முதலிய பொது ஜனோபகாரமான விஷயங்களுக்குப் போதிய மானியம் அளிக்கப்படவுமில்லை. “சர்ப்ளஸ்” பட்ஜெட் தயார் செய்த பொருளாதார நிபுணரான கனம் ஆச்சாரியாருக்கு பொது ஐனோபகாரமான விஷயங்களுக்கு சுமார் 17 அல்லது 18 லக்ஷத்துக்கு மேல் ஒதுக்கி வைக்க முடியவில்லையென்றால் அவரது சமத்தின் அழகை வர்ணித்துக்கூற வேண்டுமா? கைத்தொழில், விவசாய பொதுமராமத்து, கல்வி இலாகாக்களுக்கு கஞ்சத்தனமாக, கனம் ஆச்சாரியார் மானியங்கள் வழங்கியிருப்பது காங்கரஸ்காரர் ஆர்ப்பாட்டப் பேச்சுக்கு பொருத்தமாகவே இல்லை. தத்தம் இலாகாக்களுக்கு அதிகப்படியான மானியங்கள் வழங்க வேண்டுமென்று மற்ற மந்திரிகள் பொக்கிஷ மந்திரியை ஏன் கேட்கவில்லை. அல்லது கேட்டும் பொக்கிஷ மந்திரி கொடுக்க மறுத்துவிட்டாரா என, தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கேட்ட கேள்வி நியாயமான கேள்வியாகும். சம்பளங்களைக் குறைத்து விட்டதாக பிரதம மந்திரி 19 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
பெருமையடிப்பதும் வெறும் பகட்டாகும். சம்பள வெட்டு இனத்தில் சர்க்காருக்குக் கிடைத்த இலாபம் மொத்தம் 41 ஆயிரம் ரூபாய் தான். இந்த சொற்பத் தொகைக்காக கீழ்தர உத்தியோகஸ்தர் உள்ளத்து அதிருப்தி விளையும்படி செய்தது நிர்வாகத்தையே பாதிக்கக்கூடிய செயலாகும். கெளரவ சர்ஜன்கள் நியமனம் மூலம் வைத்திய இலாகாவில் சிக்கனம் செய்வதும் இலாபகரமல்லாத மத்தியதரப்பள்ளிக்கூடங்களை மூடுவதும் எவ்வளவு தேசத்துரோகமான செயல் என நாம் விளக்கிக்கூறத் தேவையில்லை. மதுவிலக்கினால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை பரிகரிக்க இதுவரை மார்க்கம் காணப்படவுமில்லை. காங்கரஸ் திட்டப்படி பூரண மதுவிலக்கு ஏற்படும்போது 4 கோடி நஷ்டம் ஏற்படுமாம். அந்த நஷ்டத்தைப் பரிகரிக்கும் மார்க்கம் காணாமல் மதுவிலக்கு செய்து கொண்டே போவது மகா ஆபத்தானதல்லவா? பலவழி நோக்கினும் காங்கரஸ் மந்திரிகள் போக்கு மைனர் விளையாட்டாகவே இருக்கிறது. மஞ்சள் பெட்டியை நிரப்பியவர்கள் அவர்கள் கர்ம பலனை அனுபவிக்கவேண்டிய காலம் வெகு சீக்கிரம் வந்துவிடும் போல் இருக்கிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.03.1938
குடி அரசு- 1938 (1) 150
“பார்ப்பன பாம்புக்கு தேசீயப் பால்!:?
தலைவரவர்களே! தோழர்களே!
தாங்கள் அன்புடன் வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் எனது மனப்பூர்வமான நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
என் வாழ்க்கை லட்சியம்
தங்கள் வரவேற்புப் பத்திரத்தில் கூறியுள்ள அளவு தீண்டாமை ஒழிவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பாடுபட்டு விடவில்லை என்றாலும் எனது வாழ்நாள் லக்ஷியத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டுமென்பது முக்கியமான பாகமாகும் என்பதை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கேற்ப ஏதோ ஒரு அளவு பாடுபட்டேன் - பாடுபடுகிறேன் என்பதும் உண்மையே. நான் சிறை சென்ற பல தடவைகளில் தீண்டாமைக்காகவென்றும் 23 முறை நான் சிறை சென்றிருப்பதும் உண்மைதான். ஆனால், அவை அவ்வளவும் ஆதி திராவிட மக்கள், பள்ளர், பறையர், சக்கிலிகள் என்று இழிவாய்க் கருதப்படுகின்ற உங்களுக்காகவே அல்ல என்பதையும், உங்களைவிட சிறிது வித்தியாசத்தில் சற்று மேலான ஜாதி என்று கருதப்படுகின்ற எங்கள் ஜாதி என்பதைப் பொருத்துள்ள தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற சுயவகுப்பு நலத்தையும் முன்னிட்டே பாடுபட்டு வருகின்றேன்.
பார்ப்பனர் தவிர மற்றவர் யாரும் கீழாணவரே!
இந்த நாட்டில் தீண்டப்படாதவர் என்று அழைக்கப்படாத ஜாதி ஒரே ஒரு ஜாதிதான் உண்டு. அதுதான் பார்ப்பன ஜாதி என்பதாகும் அதைத்தவிர மற்றெல்லா ஜாதி வகுப்பு மக்களும் தீண்டப்படாதவர்களாகவே தான் கருதப்படுகிறார்கள். ஐரோப்பியர்களும், முஸ்லிம்களும், இந்திய கிறிஸ்தவர்களும் பார்ப்பனரொழிந்த ஏனைய இந்துக்கள் என்பவர்களும், பார்ப்பனர்களுக்கு தீண்டப்படாதவர்களேயாவோம். அவர்களுடைய கடவுள்களுக்கும் நாம் எல்லோரும் தீண்டப்படாதவர்களேயாவோம்.
அது சும்மா வாயினால் மாத்திரம் சொல்லப்படுவதல்ல. மத தர்மப்படி என்றும் வேத சாஸ்திர விதிப்படி யென்றும் சொல்லப்பட்டு தாழ்த்தப்பட்டிருக்கிறோம். முக்கியமாக ஒருவன் தன்னை ஹிந்து என்று
81— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சொல்லிக் கொள்வது என்றால் அவனுக்கு ஏதாவது ஒரு ஜாதிப்பிரிவு பெயர் இருந்துதான் இருக்கும். அவன் அதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அன்றியும் இந்து மத மாத்திரமல்லாமல் இந்து கடவுள்கள் என்பவையும் ஜாதிப்பாகுபாட்டுக்கு உட்பட்டதேயாகும். ஆகவே ஒரு மனிதன் இந்து என்கின்ற கூட்டத்தில் இருக்க ஆசைப்படுகிறவரை அவன். ஜாதிப்பாகுபாட்டுக்கு உள்பட்டும் அவன் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும் வரை கீழ் ஜாதியானாகவும் இருந்து தான் ஆகவேண்டும். எத்தனை காந்திகள் தோன்றினாலும் சரி அவர்களை எப்படிப்பட்ட மகாத்மாவாக விளம்பரப்படுத்தினாலும் சரி ஜாதிபாகுபாடும் கீழ் மேல் ஜாதியும் ஒருநாளும் ஒழிக்கப்படமாட்டாது என்றும் உறுதி கூறுவேன். இதுவரை இதற்கு ஆக எத்தனையோ பேர் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தாய்விட்டது. அப்படிப்பட்ட முயற்சியாளர்கள் எல்லோரையுமே பார்ப்பனர்கள் அடிமை கொண்டும் அடிமையாகக் கட்டுப்படாதவனை அழித்தும் வந்திருக்கிறார்களே ஒழிய ஒருவனையாவது தலையெடுக்க விடவில்லை.
பார்ப்பண பாம்புக்கு காந்தீயப் பால்!
ஆங்கில அரசாட்சியால் ஆங்கிலக் கல்வியால் ஆங்கில பழக்க வழக்கத்தால் ஆங்கில நாகரிகத்தால் ஜாதிப்பாகுபாட்டுக்கும் ஜாதி உயர்வு தாழ்வுக்கும் ஒரு அளவு கேடு காலம் கிட்டிற்று என்று சொல்லலாம் ஆனாலும், பார்ப்பனீயத்துக்கு எதிராக இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றி சென்ற 20 வருஷத்தில் இருந்து ஒரு அளவு பாடுபட்டு வந்ததின் பயனாய் ஒரு அளவுக்கு ஜாதி உயர்வு தாழ்வு அழியும் காலம் கிட்டிற்று என்றாலும், சுயமரியாதை இயக்கம் இந்த 10, 15 வருஷ காலமாய் செய்து வந்த சமூகப்புரட்சி வேலையின் பயனாய் பெரியதொரு மாறுதல் காணமுடிந்தது என்றாலும் மறுபடியும் இந்து மதம் என்ற பார்ப்பனப் பாம்புக்கு காந்தீயம் என்னும் பால் ஊற்றி வளர்க்கப்பட்டு இன்று அரசியல் ஆதிக்கத்தை அப்பாம்பு கைப்பற்றி மேற்கூறப்பட்டவர்களது இவ்வளவு முயற்சிகளையும் பாழாக்கி பழய நிலையை உற்பத்தி செய்ய முயன்று விட்டது
நெருக்கடி! ஆபத்து!
அவ்வாட்சியின் பயனாய் மனித சமூகத்தின் அறிவு, மானம், மனிதத்தன்மை எல்லாம் பாழாக கூடிய நிலைமை ஏற்படுத்தப்படுகிறது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் மாத்திரமல்லாது பார்ப்பனரல்லாத இந்து, கிறிஸ்தவ, மூஸ்லிம் மக்கள் எல்லோருமே இது சமயம் ஒன்று சேர்ந்து பார்ப்பனீபத்தில் இருந்து தப்பிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள். இந்த நூற்றாண்டில் இந்த சமயம் மிக நெருக்கடியானதாகும் மிக மிக ஜாக்கிரதையாய் விழித்திருந்து தப்பித்துக்கொள்ள வேண்டிய சமயமாகும். அதலால் பெரும் கூட்டம் கொண்ட மகாநாடுகணலோ, வெரும்
குடி அரசு- 1938 (1) 182
கட்டுப்பாடுகளாலோ, வீரத் தீர்மானங்களாலோ, பார்ப்பனர்களையோ பிரிட்டிஷ் சர்க்காரையோ வைவதினாலோ சரியான பயன் ஒன்றும் ஏற்பட்டுவிடாது
கிறிஸ்தவரின் இன்றைய நிலை
பார்ப்பனரல்லாத மக்கள் யாவரும் உண்மையான ஒற்றுமைப் படவேண்டும். என்னைப் பொருத்தவரை இந்திய கிறிஸ்தவர்கள் பலர் இடத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. அவர்களில் பலரைப் பார்த்தால் அவர்களுக்கு எப்படியோ தன் தன் சுயநலம் தான் பெரிது என்பதாக அவர்கள் மார்க்கம் கற்பித்து வருவதாக கருதவேண்டி
இருக்கிறது. சமூக ஒற்றுமையோ மத ஒற்றுமையோ சமூக பொதுநலமோ அவர்களிடத்தில் காண முடியவில்லை. அவர்கள் தனித்தனி நபர்கள் எந்தக்கட்சி வலுக்கின்றதோ அதில் சேருவதுதான் கொள்கையாய் கருதி இருக்கிறார்கள். ஒருவர் இருவர் உறுதியாக இருப்பதாய் காணலாம் அவர்களும் மற்றவர்களைப் பார்த்து பலவீனமடைந்து விடுகிறார்கள்.
ரோஷமுன்ள முஸ்லீம்கள்
ஆனால் முஸ்லீம்கள் நிலைமை அப்படி இல்லை. மார்க்கத்துக்கு
- பொது நலத்துக்கு என்றால் பெரும்பான்மையான பேர் 100க்கு 90
பேர். சுயநலத்தை விடத்தயாராய் இருக்கிறார்கள். எவ்வித தியாகத்தையும் செய்யத்தயாராய் இருக்கிறார்கள். மற்றவர்களிடம் காணமுடியாத ரோஷம், மானம், ஒற்றுமை, துடிதுடிப்பு அவர்களிடம் காணலாம். நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், சூழ்ச்சியும் விஷமமும் பொருந்திய பார்ப்பனீயம் இன்று ஆட்சியில் இருப்பதால் அக்கொடுமையில் இருந்து தப்ப தனி மனிதனாய் தனித்தனி சின்னாபின்னப்பட்ட வகுப்பாய் இருந்து கொண்டு போராடுவது என்பது சுலபமான காரியம் அல்ல என்பதற்காகவும் மற்றபடி நாம் எப்படி ஒற்றுமை அடைய முடியும் என்பதற்கு உதாரணத்துக்கு ஆகவுமே இதை எடுத்துச் சொல்லுகிறேன். உண்மையிலேயே முஸ்லிம்களைக் கண்டால்தான் பார்ப்பனர்களும் அவர்களில் முக்கிய வைதீகர்களும் பயப்படுகிறார்கள். மற்றவர்களைக் கண்டால் வெகு இழிவாகப் பேசுகிறார்கள். மற்ற வகுப்பிலேயே கூலிகளை சுலபமாய் அமர்த்தி இஸ்கே படுத்துகிறார்கள். காரணம் மூஸ்லிம் தங்களுள் ஒற்றுமையும் இந்துக்கள் தங்களுள் வேற்றுமையுமே தான்.
ஆச்சாமியார் ஆணவத்திற்கு ஆப்பு உதாரணமாக ஹிந்தி எதிர்ப்பும் வந்தே மாதர எதிர்ப்பும் ஏக காலத்தில் ஏற்பட்டது. வந்தே மாதர எதிர்ப்பு ஒருவரால் அல்லது இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. வந்தே மாதரப் பாட்டு 55 வருஷமாய்
நட... வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இருந்து வருவது அது தேசியத்துடன் இரண்டாகக் கலந்தது இந்தியாவின் பூராபாகத்திலும் பரவியுள்ளது. வந்தே மாதரப் பாட்டு நிறுத்தப்பட்டுவிட்டால் இந்திய தேசீயமே தோல்வி அடைந்தது என்றுதான் அருத்தம் என்றெல்லாம் சொல்லப்பட்ட அவ்வளவு உறுதியும் செல்வாக்கும் பிரதானியமும் உள்ள வந்தே மாதரப் பாட்டு ஒரு சாயபு தனிப்பட்ட முறையில் விரட்டிய உடன் “சத்தியாக்கிரகம் 5ந்தேதி ஆரம்பிக்கப்படும்” என்று சொன்னவுடன் 1ம் தேதியே வந்தே மாதரப்பாட்டு நிறுத்தப்பட்டு விட்டது என்று பிரதம மந்திரியும் சட்டசபைத் தலைவரும் உறுதி கூறிவிட்டார்கள். தவிரவும் காங்கரசைத் தவிர வேறு ஸ்தாபனங்களை ஸ்தாபனங்களாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் எப்படிப்பட்ட குறையானாலும் காங்கரசில் வந்து சேர்ந்த பிறகு தான் கவனிக்கப்படும் என்றும் ஆணவம் கூறி ஜனாப் ஜின்னாவையும் இழிவாகப் பேசிய காங்கரஸ் தென்னாட்டில் ஒரு 100,200 மூஸ்லிம் சங்கம் ஏற்படுத்தப்பட்டு ஒரு 100, 200 கூட்டம் கூடி காங்கரஸ் மந்திரிகளை கண்டித்த உடன் முஸ்லிம் லீக்கோடு நேசம் செய்து கொள்ள வேண்டும் என்றும் காங்கரசின் பேரால் தீர்மானிக்க தென்னாட்டுப் பார்ப்பனர்கள் நிர்ப்பந்தப்படுத்த காங்கரஸ் தலைவர்கள் இறங்கி வந்து விட்டார்கள்.
தமிழர் கின்ளுக்கரையா?
ஆனால் மற்றவர்கள் விஷயம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஹிந்தி கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று ஒரு ஆச்சாரியார் தனிப்பட்ட முறையில் கருதினார். தனிப்பட்ட முறையில் வெளியிட்டார். தமிழ்நாடு முழுவதும் திரண்டு எதிர்த்து தமிழ் மக்கள் பண்டிதர்கள் பட்டம் பதவி வகித்துள்ள பெரியார்கள், பாமரமக்கள் 100க்கு 90 பேர்கள் ஒன்று சேர்ந்து 1000 கூட்டம் போட்டு 1000 தீர்மானங்கள் செய்து அனுப்பியாய் விட்டது. கவர்னர் பெருமானுக்கும் தெரியப்படுத்தி ஆய்விட்டது
மாஜி கவர்னர் முதல் 4, 5 மாஜி மந்திரிகள் கூப்பாடு போட்டாய் விட்டது. காங்கரஸ் பக்தர்கள் என்பவர்கள் பலரும் 4 தடவை 8 தடவை ஜெயிலுக்கு போனவர்களும் போர் முரசடித்தாய்விட்டது. இதுவரை
சுமார் 200, 250 வீரர்கள் வரை ஹிந்தியை ஒழிக்க எவ்வித தியாகத்துக்கும் தயாராய் இருப்பதாக பறை சாற்றியாய் விட்டது இவ்வளவெல்லாம் நடந்தும் சிறிதும் லக்ஷ்யம் செய்யாமல் இது “ஒரு மனிதனுடைய கூப்பாடு இதை நான் சற்றும் மதிக்கமாட்டேன்” என்று
ஒரு ஒத்தை பார்ப்பனர் ஆணவமாய் அகம்பாவமாய் பதில் சொல்லிவிட்டார் என்றால் பார்ப்பனர்கள் முஸ்லீம்களை எப்படி மதிக்கிறார்கள் இந்துக்கள் என்பவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை கூர்ந்து பார்க்கும்படி விரும்புகிறேன்.
குடி அரசு- 1938 (1) 184
முஸ்லிம் ஒற்றுமையைப் பார்!
மற்றும் மூஸ்லிம் ஒற்றுமையையும் ஹிந்து ஒற்றுமையையும் பாருங்கள். முஸ்லிம் சமூக நலனுக்கு விரோதமாய் காங்கரசில் இருக்கும் முஸ்லிம்களை அவர் மந்திரியானாலும் காரியதரிசியானாலும், தினம் 8 அணா கூலியராகிய மற்ற பிரசார முஸ்லிமானாலும் மூஸ்லிம்கள் ஒரே மாதிரி கருதி பகிஷ்கரிப்பதும் கறுப்புக்கொடி பிடித்து அவமானப் படுத்துவதும் காங்கரசிலிருக்கும் மற்ற முஸ்லிம்களையும் கூண்டோடு ராஜினாமாக் கொடுக்கும்படி சமூகத்தின் பேரால், மார்க்கத்தின் பேரால், கட்டளையிட்டுப் பணியச் செய்தும் வருகிறார்கள். வந்தே மாதரப் பாட்டுக்கு மாறுபட்ட அபிப்பிராயமுள்ள முஸ்லிம் 1000க்கு % வீதம் கூட இல்லை. முஸ்லிம் லீகை குற்றம் சொல்லுகிற முஸ்லிம் 1000க்கு 1/16 வீசம் வீதம் கூட இல்லை. ஆனால் பார்ப்பனரல்லாத இந்துக்கள் யோக்கியதை என்ன? இப்படிப்பட்ட நெருக்கடியில் காந்தி கல்வித் திட்டமும் ஹிந்தியும் பார்ப்பனரல்லாத சமூகத்தையே மிருகப் பிராயமாக்கி மானம் ஈனம் இன்னது என்று அறியாத தாசி மக்கள், குக்சுக்காரி மக்கள் நிலைக்கு கொண்டு வந்துவிடக் கூடியதாய் இருக்கிறது என்பதை உணர்ந்த மக்கள் பார்ப்பனர்கள் காலை நக்கி அவர்களுடைய பாதத்துக்கு தேங்காயும் உடைத்து வைத்து கர்ப்பூர ஆலாத்தி நடத்தி வயிறு வளர்க்கிறார்கள் என்றால் ஒரு மானமுள்ள மனிதன் ஹிந்துவாய் இருப்பதற்கு எவ்வளவு வெட்கம் வேண்டும் என்று உங்களை கேட்கிறேன்.
அம்பேத்கார் காட்டிய வழி. சாதாரண மக்களைப் பற்றி நான் இப்போது பேசவில்லை ஹிந்துக்கள் என்பவர்களில் தாழ்த்தப்பட்ட மக்களாய், இழி மக்களாய், தீண்டப்படாதவர்களாய் பன்றி, கழுதை என்னும் இழிவான மிருகங்களாய் கருதப்படுபவைகளிலும் கேவலமாய் நடத்தப்படும், இங்கு கூடியுள்ள பத்தாயிரக்கணக்கான மக்களைப் பார்த்தே பேசுகிறேன். தோழர்களே உங்கள் வரவேற்புப் பத்திரத்தில் இந்தக் கொடுமையும், இழிவும் ஒழிய என்னை ஒரு வழி கண்டுபிடித்து ஒரு திட்டம் போட்டு கொடுக்கும்படி கேட்டிருக்கிறீர்கள். நான் என்ன திட்டம் போடுவது? உங்கள் பெரியவர்கள், உங்கள் தலைவர்கள், அக்கம் பக்கத்து சமஸ்தானத்திலுள்ளவர்கள் திட்டம் போட்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவற்றையே உங்கள் திட்டமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். நான் போடவேண்டும் என்கிற அவசியம் இப்போது உங்களுக்கு இல்லை.
அதென்னவென்றால் சுமார் 3 - த்துக்கு முன்னால் உங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அம்பேத்கார் அவர்கள் இந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தீண்டாமைக்கொடுமையும் சமூக இழிவும் தீரவேண்டுமானால் அவர்கள் அத்தனை பேரும் இந்து மதத்தை விட்டு
நட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
விலகி விட வேண்டும் என்பதாக தீர்மானித்து இருக்கிறார். அது மாத்திரமல்லாமல் திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதாவது அவர்கள் உங்கள் ஜாதி என்பதைவிட எவ்வளவோ பங்கு மேலாக கல்வி, அறிவு, சுத்தம், செல்வம் ஆகியவற்றில் சிறந்தவர்களான ஈழவர்கள் என்பவர்கள் பத்தாயிரக்கணக்காக ஊருக்கு ஊர் மகாநாடு கூட்டி தங்களுக்கு உள்ள வைதீகக் கொடுமையும் சமூக இழிவும் தீரவேண்டி எவ்வளவு பாடுபட்டும் முடியாமற் போனதால் இனி இந்து மதத்தையே விட்டு இச்சமூகம் விலகிவிட்டது என்று தீர்மானம் செய்து இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பலபேர் இந்துமதம் விட்டு முஸ்லிம்களாகவும் சீக்கியர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இதன் பிறகுதான் திருவனந்தபுரத்தில் ஜாதிக் கொடுமை ஒழிந்து கோவில் கதவுகளும் திறக்கப்பட்டு எல்லா தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோவில் பிரவேசமும் கிடைத்து இருக்கிறது.
துருக்கித் தொப்பி அணியுங்கள்
இங்கு உங்களுக்கு கோவில் பிரவேசம் வேண்டும் என்று நான். சொல்ல வரவில்லை. உங்களுக்கு அரசியல் சுதந்திரம் பிரிட்டிஷ் சர்க்கார் கொடுத்தார்கள். அதைப் பார்ப்பனர்கள் தோழர் காந்தியார் மூலம் என்ன என்னமோ சூழ்ச்சி செய்து பிடுங்கிக் கொண்டார்கள். இன்று உங்களுக்கு அரசியலில் உண்மையான பிரதிநிதித்துவம் இல்லை. பார்ப்பனர் கால். கழுவின தண்ணீரை மோக்ஷத்துக்கும் பாவ மன்னிப்புக்கும் தீர்த்தமாகக்
குடிப்பவனுக்குத்தான் பிரதிநிதித்துவம் இருக்கிறது. உங்களை பற்றி கவனிக்க ஆள் கிடையாது. கவனிப்பவர்கள் பாடும் திண்டாட்டமாய்
விடுகிறது. கேவலம் நீடாமங்கல விஷயம் எங்களை ஜெயிலுக்கு அனுப்பும் போலிருக்கிறது. 1000, 2000௫ செலவாகும் போல் இருக்கிறது. இக்கொடுமையை எத்தனை நாளைக்கு சகிப்பது. ஆகவே தோழர்களே உங்களுக்கு இழிவு போக வேண்டுமானால் நீங்கள் மனிதர்களாய் மதிக்கப்படவேண்டுமானால் உங்களை மேல் ஜாதிக்காரர்கள் நாயிலும் மலத்திலும் கேடாய் மதிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் ஒரே கூட்டமாய் துருக்கி குல்லா தலையில் அணியுங்கள். உங்களைக் கண்டால் மேல் ஜாதியார்கள் நடுங்குவார்கள். அரசியல் சமுதாய இயல் பொருளியல் ஆகியவற்றில் உங்களுக்கு சமபங்கு கிடைக்கும். உங்களை எவனும் இழிவு படுத்தமாட்டான். நீங்கள் ஒரு வீரமும் சுயமரியாதையும் பொருந்திய சமூகமாக வாழ முடியும்.
காந்தியார் உங்கள் உரிமைகளைக் கைப்பற்றி ஏழைகளாகிய உங்களுக்கு 2 தேர்தல் வைத்து உங்களை தலையெடுக்க விடாமல் செய்த கொடுமைக்கும் சூழ்ச்சிக்கும் நீங்கள் அவருக்கு செய்ய வேண்டிய பதில் நீங்கள் துருக்கிக் குல்லாய் போட்டுக்கொண்டு அவர் எதிரில்
குடி அரசு- 1938 (1) 186
நிற்பதேயாகும். நீடாமங்கல தொல்லை என்பதற்கும் இதுவே தக்கபதில் ஆகும். ஆகவே தோழர்களே உங்களுக்கு தைரியம் புத்தி இருந்தால் உங்கள் கொடுமையும் இழிவும் நீங்க வழி இல்லாமல் இல்லை. நான். காட்ட வேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. உங்கள் அகில
இந்தியத் தலைவர் அம்பேத்காரும் ஈழவத் தலைவர் அய்யப்பன், கமால் பாக்ஷா தையல் ஆகியவர்களும் காட்டிய வழியை பின்பற்றினாலே போதும் என்று சொல்லுகிறேன். மற்ற விபரம் இன்று மாலை நடக்கும்
லீக் மகாநாட்டில் பேசுகிறேன்.
குறிப்பு: 05.03.1938 இல் பெரம்பலூரில் நடைபெற்ற ஆதிதிராவிட மாகாண மாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 13.03.1938
18— வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
கண்ட்ராக்ட்டு ராஜ்யம்
காங்கரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களிலே, நுழைந்த காலத்திலே, அங்கு கண்டிராக்ட் ராஜ்யம் நடப்பதாகவும் பொதுமக்களின் பணம் கொள்ளை போவதாகவும், நகரசபை, ஜில்லா போர்டுகளிலிருந்து கொண்டு உற்றார். உறவினருக்கு கண்டிராக்ட் வாங்கித்தருவதாகவும், லஞ்ச லாவணம் தாண்டவமாடி நிர்வாகமே சீர்குலைந்து நாறுவதாகவும், இடிமுழக்கம் செய்தார்கள். நமது மக்களும் ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்து கொண்டு, காங்கரசாரின் பேச்சைக் கேட்டு, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர் சிருஷ்டித்த சதியாலோசனையில் பங்கெடுத்துக் கொண்டனர். காங்கரஸ்வாதிகள் தாங்கள் முனிசிபாலிட்டி, ஜில்லாபோர்டு முதலிய இடங்களைக் கைப்பற்றினால் கண்டிராக்ட்டு ராஜ்யத்தை ஒழித்து அவைகளைப் பரிசுத்தப்படுத்தப் போவதாகவும் சொன்னார்கள். நமது மக்களும் அதனை நம்பி காங்கரஸ்காரர்களிடம் ஸ்தல ஸ்தாபனங்களை ஒப்படைத்தனர்.
பிறகு நடந்ததென்ன? யார் கண்டிராக்ட்டு ராஜ்யமென்ற வீண்கூச்சலைக் கிளப்பினார்களோ அவர்களே கண்டிராக்ட்டு ராஜ்யத்தின் கர்த்தாக்களானார்கள்! யார் ஊழலை ஒழிப்போம் என்ற பித்தலாட்டப் பேச்சுப் பேசி ஓட்டுகளைப் பறித்தார்களோ அவர்களே ஒருவர் சிண்டை மற்றொருவர் பற்றிக் கொண்டு “நீ அயோக்கியன், நீதான் அயோக்கியன்” என்று சந்தி சிரிக்க வெளியே வந்துவிட்டார்கள். இந்த அவ லட்சண ஆட்சியைப்பற்றி நாம் பலமுறை எழுதினோமென்றாலும், பொது மக்களும் காங்கரஸ் ஆட்சியின் கோளாறுகளை படிப்படியாக உணர்ந்து வருகிறார்களென்ற போதிலும், காங்கரஸ்காரர்கள் தங்கள் அக்கிரமப் போக்கின் அளவையோ, வேகத்தையோ கொஞ்சமேனும் குறைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை:
பொது மக்களின் வயிறு எரிய எரிய ஸ்தல ஸ்தாபன முறைக்கே பெரிய அவமானம் வரும்படியாக, சமீபத்திலே சேலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. சென்னை மாகாணம் மட்டுமேயன்றி, எல்லா மாகாணமுமே இந்த சேலம் சேதியைக் கேட்டால் திடுக்கிட்டுப் போவதுடன், இது ஒன்றையே அளவுகோலாக வைத்துக்கொண்டு ஆச்சாரியார் ஆட்சியின் யோக்கியதையை அளந்துபார்க்கும் அவ்வளவு அக்கிரமமான சம்பவம் பொதுமக்களின் கீற்றத்தை வெகுவாகக்
குடி அரசு- 1938 (1) 188
கிளப்பிவிட்ட சம்பவம். சேலம் நகரசபைத் தலைவரை தமது பதவியை ராஜிநாமாச் செய்யும்படி தூண்டிவிட்ட சம்பவம். ஐந்து இலட்ச ரூபாய் அநியாயமாகக் கொள்ளை போகும் அக்கிரமமான சம்பவம்
சேலம், வரட்சிமிக்க ஜில்லா சரியான ஜல வசதியின்றி அந்த ஜில்லாவாசிகள் படும்பாடு யாவருமறிந்ததே. அக்குறை நீங்கினால்தான் அவர்கள் சுகம் பெற முடியும். இந்நிலையில் சேலம் நகர சபையார், ஒரு “தண்ணீர் சப்ளைத் திட்டம்” தயாரித்தனர். நகரசபைத் தலைமைப் பதவியைத் தீவிரமாக, சுயமரியாதை உணர்ச்சி காரணமாக ராஜிநாமாச் செய்த தோழர் டாக்டர் ராஜரத்தினம் அவர்கள் கூறியுள்ளபடி இதுவரையில்: நகரசபையார் தீர்த்து வைத்ததற்குள் இதுவே பெரிய திட்டம் இத்திட்டத்தில் இலட்சக் கணக்கான பொதுமக்களின் பணமும், சுகமும் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றி, நகரசபை அங்கத்தினர்களின் வெற்றி, ஸ்தல ஸ்தாபன முறையின் வெற்றி என்றுங் கூறலாம். அப்படிப்பட்டத் திட்டத்தை, நகரசபையார் தயாரித்தனர். டெண்டர்களை வரவழைத்துப் பரிலைனை செய்தனர். சர்க்கார் நிபுணர்களைக் கலந்து அவர்கள் ஆலோசனையை ஏற்றனர். அதன் படியே பம்பாய் ஹ்யூம் ணட) கம்பெனியாரின் டெண்டரை ஒப்புக்கொள்வது என்று நகரசபை தீர்மானித்து ஹ்யூம் கம்பெனியாரின் ஸ்டீல் குழாய்கள் சிலாக்கியமானவை என்றும், அவைகளையே உபயோகிக்கலாமெனவும் சென்னை சர்க்கார் நிபுணர்கள் 7.7.37ல் கூறினார்கள். அதன்படியே 1580-ம் நம்பர் சர்க்கார் உத்திரவும் அன்றே பிறந்தது
சுதேசி கம்பெனியாகிய ஹ்யூம் கம்பெனி சரக்கு நல்லதென அத்தாட்சியும் நிபுணர்கள் அங்கீகாரமும் பெற்றதுடன் அந்தக் கம்பெனியார் வேலையை பத்து மாதங்களுக்குள் தீர்த்துக்கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டனர். இவ்வளவு செளகரியத்துடன், இந்தக் கம்பெனியாரே மற்ற கம்பெனிகளைவிடக் குறைந்த அளவு பணத்திற்கு, மேற்படி திட்டத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பதாக டெண்டர் சமர்ப்பித்தனர். ஆகவே, பொது மக்களின் க்ஷேமத்தில் அக்கரையும் பொது ஜன வரிப்பணத்தைச் செலவிடும் பொறுப்பில் நாணயமும் நீதியும் காட்ட வேண்டி நகரசபை மேற்படி ஹ்யூம் கம்பெனியின் டெண்டரை ஒப்புக்கொண்டு இதை அங்கீகரிக்கும்படி சென்னை சர்க்காருக்கு எழுதிக் கேட்டது பெருந்தொகை செலவிடப்படவேண்டிய திட்டமாதலால், இதனைப் பைசல் செய்யும் உரிமை சென்னை சர்க்காருக்கே உண்டு. அதனை நகரசபைத் தலைவரோ, மற்றும் யாரோ ஆக்ஷேபிக்கவில்லை. நியாயமான, சிக்கனமான திட்டத்தை சர்க்கார் ஒப்புக்கொள்வதில் தகராறும் வரக் காரணமில்லை. ஆயினும் நடந்தது என்ன? சென்னை
சர்க்கார் சேலம் நகரசபை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதுடன் மைசூர் பத்ராவதி கம்பெனியின் டெண்டரை ஏற்றுக்கொள்ளும்படி
நஜ ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
வற்புறுத்தலாயிற்று. இந்தக் கம்பெனியின் டெண்டரை ஒப்புக்கொண்டால்
ஹ்யூம் கம்பெனியார் டெண்டரின்படி தர வேண்டியதைவிட அதிகமான பணத்தை சேலம் தரவேண்டும். மேலும் மைசூர் பத்ராவதி டெண்டர்
பூர்த்தி பெறாதது. ஆச்சாரி சர்க்கார் கட்டாயத்தின் மீது பத்ராவதி கம்பெனியின் டெண்டரை சேலம் நகரசபை ஒப்புக்கொள்வதானால்,
சுமார் ஐந்து இலட்ச ரூபாய், சேலம் நகரவாசிகளுக்கு நஷ்டமாகும். ஐந்து லட்ச ரூபாய் கொள்ளை போவதை யார்தான் சகிப்பார்கள்? ஆச்சாரியார் ஆட்சியிடம் மோகங் கொண்டவர்களும், அவர் பாசத்தால். கட்டப்பட்டவர்களானாலுங் கூட, வீணாக, மனதறிந்து, ஐந்து இலட்ச ரூபாயைப் பாழாக்க யாருக்குத்தான் மனம் வரும்? பொது மக்களின் வரிப்பணத்தில் ஐந்து இலக்ஷ ரூபாயை ஆச்சாரியாரின் ஆணவ ஆட்சிக்கென்றே அர்ப்பணம் செய்யவேண்டுமா? எங்கு நடக்கும் இவ்வளவு பெரிய அக்கிரமம்? நகரசபை நீதியின் வழி நின்றது தலைவரும், அங்கத்தினர்களும் சர்க்கார் கூறிய யோசனையை ஏற்க மறுத்து, பழையபடி ஹ்யூம் கம்பெனிக்கே கண்டிராக்டை தரவேண்டுமெனவும் அதற்கான காரணங்களைக் காட்டியும், மைசூர் கம்பெனியின் டெண்டரை ஒப்புக்கொள்வதால் பெரும் நஷ்டம் வருமென்பதை விளக்கியும், சென்னை சர்க்காருக்கு மனுச்செய்து கொண்டார்கள். ஆச்சாரியார். ஆட்சியிலே வேண்டுகோள், நுழைய இடமேது? சேலம் பொதுமக்கள். இந்த அக்கிரமத்தைக் கண்டித்துப் பல கூட்டங்கள் போட்டனர். சேலம் கொதித்தது. ஆச்சாரி சர்க்கார் ஏன் இந்த அநியாயத் தீர்ப்பு கொடுத்தனர். என பொது மக்கள் வினவினர். ஆச்சாரி சர்க்காருக்கு மைசூர் பத்ராவதி கம்பெனி மீது இப்படி திடீர்க் காதல் ஏற்படக் காரணமென்ன? என்று கேட்டனர். ஐந்து லக்ஷ ரூபாயை நஷ்டமாக்கிக் கொண்டாவது, இந்த பத்ராவதி கம்பெனிக்கே கண்டிராக்ட்டைத் தரவேண்டிய காரணந்தான். என்ன? ஆச்சாரியார் ஆட்சி முறையில் இவ்வளவு கோணலா இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் மனங்கொதித்துக் கேட்டனர். பத்ராவதி கம்பெனியிடம் வேலையை ஒப்புவிக்க ஒருவிதமான காரணமும் காட்டப்படவில்லை. பத்ராவதி கம்பெனிக்கு யோகம் பிறக்கும்படியான அவ்வளவு சிலாக்கியம் அதன் சரக்கினிடம் உண்டா, டெண்டரில் உண்டா என்று பார்த்தால் “இல்லை” “இல்லை” என்றே பதில் கிடைக்கிறது. அப்படியிருக்க பத்திராவதி கம்பெனிக்கு சலுகை காட்டி, ஐந்து லக்ஷம் ரூபாய் நஷ்டம் வருவதானாலும், அந்தக் கம்பெனிக்குத் தான் கண்டிராக்ட்டு தரப்படவேண்டுமென ஆச்சாரி வர்க்கம் வற்புறுத்துவது ஏன்? “பொது மக்கள் க்ஷமமே என் உயிர்; அவர்கள் பணத்தை கண்டிராக்டு ராஜ்யம் கொள்ளை கொண்டு போகிறது. அதை நான்
ஒழிக்கப் போகிறேன்'' என்று கூறிவந்த ஆச்சாரியார், சேலம் வாசிகள், வயிறு பற்றி எரியும்படி, ஐந்து லக்ஷ ரூபாயை அதிகமாகக் கொட்டி அழச் சொல்லக் காரணம் என்ன? ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட
குடி அரசு- 1938 (1) 190
தொகையுள்ள டெண்டர்களை இறுதியாக அனுமதிக்கும் உரிமை சர்க்காருக்கு உண்டு என்றாலும், அதனை இப்படி அநியாயமாகப் பிரயோகித்து, சேலம் வாசிகளுக்குத் துரோகம் செய்யலாமா? என்று கேட்கிறோம். பத்ராவதி கம்பெனி ஒரு பார்ப்பனக் கம்பெனி! அதைத்தவிர, அதனிடம் வேறு ஒரு விசேஷமுமில்லை. சாமான்களிலோ, வேலை பூர்த்தி செய்து தரும் கால அளவிலோ, டெண்டர் தொகையிலோ, டெண்டர் அனுப்பிய 16 கம்பெனிகளில், பத்ராவதி கம்பெனியார் தங்கள் விசேஷத்தைக் காட்டவில்லை. மாறாக, நகரசபையின் அபிப்பிராயத்தின்படி, இந்தக் கம்பெனியின் டெண்டர் சுமார் ஐந்து இலக்ஷம் ரூபாயைப் பாழாக்குகிறது. எனினும் இந்தப் பார்ப்பனக் கம்பெனிக்கே சேலம் நகரசபை இணங்க வேண்டுமென ஆச்சாரியார் சர்க்கார் வற்புறுத்துகின்றனர். இதைவிடக் கொடுமை வேறெதுவுமிராதே. இதைக் காட்டிலும் அநியாயம் வேறெங்கு காட்டமுடியும்? “ஆச்சாரியார் மைசூர் விஜயஞ் செய்தாரல்லவா; அவருக்குத் தெரியாதா பத்ராவதி கம்பெனியின் பெருமை?” என்றும், இன்ன மந்திரியின் பந்து அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறார், ஆகவேதான் இந்த சலுகை என்றும், “ஊர் வதந்தி உலவுகிறது. பொதுக் கூட்டங்களிலே, சர்க்கார் போக்கு கண்டிக்கப்பட்டு, நகரசபையிலே விவாதிக்கப்பட்டு, விஷயம் பூராவும் வெளிக்கு வந்த பிறகு, பொதுமக்கள் கண் விழித்துக் கொண்டிருக்கையிலேயே, ஆச்சாரியாரின் தண்டம், நகரசபை மீது வீசப்பட்டும் விட்டது. இடையே, சேலம் விஜயம் செய்த, கனம் டாக்டர் ராஜன் இது விஷயமாக 6.2.38ல் நகரசபைக் கவுன்சிலர்களை, நகரசபைக் கட்டிடத்தில் தனி அறையில். அழைத்து வைத்துப் பேசி, என்ன பேசினார் என்பதை வெளியே சொல்லக் கூடாதென்று வாக்குறுதியும் பெற்றுப் போனாராம்! டாக்டர் ராஜன் அவர்கள் இதில் ஏன் பிரவேசிக்க வேண்டும்? பகிரங்கமாக
சர்க்கார் போக்கை விளக்கி, பொது மக்களின் சந்தேகத்தைப் போக்காமல், திரைமறைவில் 'திவ்வியப்பிரபந்தம்' படிப்பானேன்? மூடு மந்திரமா? உபதேசமா? என்ன நடந்தது அன்றைய இரகசியக் கூட்டத்திலே? சேலம் நகரவாசிகளைப் பொறுத்த விஷயமல்லவா? பல இலக்ஷக்கணக்கான ரூபாய் சம்மந்தப்பட்ட பொதுக்காரியமல்லவா? இதிலே ரகசியம் ஏன்? டாக்டர் ராஜன், இந்த 'நாடகத்தில்' நுழைந்த காரணம் என்ன? என்று கேட்கலாம். ஆனால், டாக்டர் ராஜன் மந்திரி சபையில் நுழைந்த விந்தையைக் கண்டு, சகித்துக்கொண்டிருக்கும் தமிழர்கள், சேலம் சம்பவத்தில் அவர் நுழைந்ததைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்ற துணிபு அவருக்கு இருக்குமென எண்ணுகிறோம்
டாக்டர் ராஜன் விஜயம், சேலம் சிக்கலைத் தீர்த்துவிடவில்லை. 9.2,38ந் தேதி நடந்த நகரசபை விசேஷக்கூட்டத்தில், நகரசபையின். தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டனர். சர்க்காரின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதென நகரசபை தீர்மானித்து W வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
புனராலோசனை செய்யும்படி சர்க்காரை வேண்டிக்கொண்டது. பார்ப்பன. “பிளேக்” பரவுவதாகக் கூறி ஈரோடு இனாகுலேஷன்'' பெற்ற வீரரின் தந்தையாரும், மற்றொரு காங்கரஸ் மேல்சபை மெம்பரும், அன்றைய நகரசபைக் கூட்டத்திற்கு வரவில்லையாம். அவர்களுக்கு வேறு தொல்லை இருந்திருக்கலாம். ஆனால் வந்தவரில் பெரும்பாலோர், சர்க்கார் யோசனையை ஏற்க மறுத்தனர். நியாயபுத்தி படைத்த, நீதி செலுத்துவதில் நோக்கங்கொண்ட, நிதான சுபாவமுடைய, பாரபட்சமற்ற சர்க்காராயிருந்தால். நகரசபையின் வேண்டுகோளின் படியன்றோ நடந்திருக்கும். ஆனால். ஆச்சாரியார் ஆட்சியிலே நடந்ததென்ன? 2.3.38ல், சென்னை சர்க்கார், தமது அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள முடியாதென இறுதியாகத் தெரிவித்தாகிவிட்டது. சேலம் வாசிகள் தலையில் இடி விழுந்தேவிட்டது. ஐந்து இலக்ஷ ரூபாய் அனியாயமாகப் பாழாக்கப்படப்போகிறது ஆச்சாரி சர்க்காரின் ஆதரவைப் பெற்ற பத்ராவதி கம்பெனி, சேலம் நகர வாசிகளைக் கேலிசெய்து கைகொட்டி நகைக்கப் போகிறது. ஆம்! நகரசபை இருக்கலாம். அதிலே மெம்பர்கள் பலர் இருக்கலாம். தலைவர் இருக்கலாம். பொதுக்கூட்டங்கள் போடலாம். கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றலாம். ஆனால் ஆச்சாரியாரின் அதிகாரம் இவைகளைச் சட்டை செய்யக் கூடியதல்ல! அவர் ஒரு ஹிட்லர்! அவரிடம் சிக்கிய
பிறகு, அவர் வார்த்தையே சட்டம்! அவர் பார்வையே யோகம்! அந்த நிலைக்குத்தான், தமிழ்நாடு வந்துவிட்டது. இல்லையேல் இவ்வளவு பகிரங்கமான “பாதகம்” இழைக்கப்படுமா? பத்ராவதி கம்பெனியாரின். டெண்டரைத் திருத்தி அமைக்க சலுகை காட்டப்பட்டது. ஆனால் அதே சலுகை மற்ற கம்பெனிகளுக்கு இல்லை, ஏன்? ஆச்சாரியாரின் ஆட்சியிலே, ஏன்? என்ற கேள்விக்குப் பதில் கிடையாது. நான்கு மாதங்களுக்கு முன்னால், ஹியூம் கம்பெனி குழாய்களை சிலாக்கித்த
சர்க்கார் நிபுணர்கள் இப்போது அதைக் கண்டிக்கிறார்கள்! இது என்ன விசித்திரம்? நிபுணர்கள் நான்கு மாதத்திலே ஏன் இப்படி தமது அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டனர்? என்று கேட்கலாம். சனாதன சர்க்காரிலே இது சகஜம் என்பதைத் தவிர வேறு பதில் இதற்கும் கிடைக்காது
நகரசபையின் உரிமையில் காரணமின்றி கைவைத்து, ஆச்சாரி
சர்க்கார், ஸ்தலஸ்தாபன நிர்வாகப் போக்கிற்கே உலை வைத்து விட்டது.
நீதி, நியாயம், நேர்மை, பாரபட்சமற்ற தன்மை, சிக்கனம், யாவும் ஆச்சாரியார் ஆட்சி முன்னம் ஓடிப் பறக்கின்றன. பொதுஜன அபிப்பிராயம், புகலிடமின்றித் தவிக்கிறது. மக்களின் சுயமரியாதை சிதைக்கப்படுகிறது. இதுகண்ட நகரசபைத் தலைவர் டாக்டர் ராஜரத்தினம், இந்த “பாதகத்தில்” பங்கெடுத்துக்கொள்ளாது, ஆச்சாரியார் அடி பணியாது, பொது ஜனக்ஷேமத்தை மதித்து தமது பதவியை ராஜிநாமாச் செய்தார். அந்த சுயமரியாதை வீரரை நாம் வாழ்த்துகிறோம் அதைப்போலவே 11 கவுன்சிலர்களும் தமது பதவிகளை ராஜிநாமாச்
குடி அரசு- 1938 (1) 192
செய்து விட்டனர். அதற்காக அவர்களையும் நாம் பாராட்டுகிறோம் ஆனால் அத்துடன் அவர்கள் பொறுப்பு நின்று விடவில்லை. சர்க்காரின். இந்த சனியன் பிடித்த போக்கை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவேண்டும் பொது மக்களிடம் விஷயத்தை விளக்க வேண்டும். ஆச்சாரியார். ஆட்சியின் அலங்கோலத்தை நாடறியச் செய்யவேண்டும். நகரசபைக்குத் தலைவராக இருந்தவரின் கடமை அது. கவுன்சிலராக இருந்தவர்களும் இக்கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அதை அவர்கள் செய்வார்களாக. கண்டிராக்டு ராஜ்யத்தைத் தொலைக்கவே காங்கரசை ஆதரித்தோம் என்று கூறிய மக்கள், எங்கு கண்டிராக்டு ராஜ்யம் தாண்டவமாடுகிறது என்பதை இனியேனும் உணர்வார்களாக. வெளிவந்த நகரசபை அங்கத்தினர்கள், நாடு முழுவதும், இந்த நாற்றமடிக்கும் ஆட்சியினை விளக்க வேண்டும் அக்கிரகார அடிமைகளுக்குத் தவிர வேறு யாருக்கும் இந்த ஆட்சியிலே பங்கு இல்லை, நீதியில்லை நியாயம் கிடைக்காது என்பதை வருத்தத்துடனே மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்
குடி அரசு - கட்டுரை - 13.03.1938
193 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 26
வரவேற்கிறோம் கொலையை வரவேற்கிறோம்
சென்னை காங்கரஸ் கூலி கேடிப் பத்திரிகை ஒன்று தனது மார்ச்
10-ந் தேதி பத்திரிகையில் சுயமரியாதைக் கட்சியின் மீது அபாண்டமாக முழுப்பொய்யான விஷயங்களைக் கற்பித்து எழுதி அதை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டு “தற்காப்புக்காக கொலை செய்யலாம் அது குற்றமாகாது” என்று மக்களைக் கொலை செய்யத் தூண்டிவிட்டு மக்களுக்கு மேலும் தைரியம் வரும்படியாக “கொலை செய்தவர்கள் சர்க்காரால் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்” என்று ஏதோ ஒரு கோர்ட் ஜட்ஜிமெண்டையும்
எடுத்துக்காட்டி தூண்டிவிட்டிருக்கிறது. இதைப்பற்றி சிறிதும் நாம் கவலைப்படவில்லை. உண்மையிலேயே அப்படிப்பட்ட நிலைமையை வரவேற்கிறோம். இந்த நாட்டில் உள்ள சுயமரியாதைக்காரர்களில் 10 பேர்களோ, அல்லது 20 பேர்களோ அல்லது 100 பேர்களோ தான் இந்த தூண்டுதலால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இதனால் சுயமரியாதைக்காரர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமென்றோ, சுயமரியாதைக்காரர்களது உணர்ச்சி மாறி தங்கள் தொண்டில் அடங்கிவிடுவார்கள் என்றோ நாம்
சிறிதும் கருதவில்லை.
மற்றும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுவது எது வெற்றி
பெறுகிறது, எது நிலை நிற்கிறது, எது பொக்கி கோழைக்கூட்டம் என்பது புலனாவதற்கு ஒரு சரியான பரீக்ஷையுமாகும்.
கூத்தி மகன் வீரம்
காங்கரஸ் இதுவரை ஏதோ ஒரு மகத்தான பொறுமையுடன் இருந்து “அஹிம்சா தர்மம்” என்பதைக் கடைபிடித்து வந்திருப்பதாகவும் அதில் அது தோற்றுவிட்டதாகவும் ஆதலால் தற்காப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு ஹிம்சை முறையில் அதுவும் கொலை செய்யும் துறையில் இறங்க வேண்டும் என்றும், கூத்தி மகன் வீரம் பேசுவது போன்ற அயோக்கியத்தனமான பேச்சு வேறு இல்லை என்றே சொல்லுவோம்
குடி அரசு- 1938 (1) 194
காங்கரசின் “பொறுமையும்” “அஹிம்சா தர்மமும்” யாரையும் விட நமக்கு நன்றாய்த் தெரியும். காங்கரசின் சரித்திரத்தில் அஹிம்சை
என்ற பேச்சு வந்து புகுந்தது முதல் நாளது வரை எந்த சந்தர்ப்பத்தில் தங்களுக்கு திருப்பி அடிக்கச் சக்தியிருந்த காலத்தில் அஹிம்சை தர்மத்தைக் காட்டிவந்தது என்று ஏதாவது ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக்காட்டுமா? என்று கேட்கின்றோம். சண்டித்தனத்துக்கு உதை விழுந்தால் நிமிர்ந்து பார்க்கக்கூட திறமில்லாத காலத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்த சந்தர்ப்பத்தில் சக்தியிருக்க பொருமை காட்டப்பட்டிருக்கிறது என்று மறுபடியும் கேட்கின்றோம்
காங்கரஸ் காலித்தனம் செய்யாத கூட்டமுண்டா?
இதுவரை சுயமரியாதைக்காரர்கள் சுமார் 3000, 4000 பொதுக் கூட்டங்கள் கூட்டி 500 முதல் 20000 ஜனங்கள் கொண்ட கூட்டம் வரையில் பேசியிருக்கலாம். இவற்றுள் காங்கரஸ்காரர்கள் வந்து காலித்தனம் செய்யாத, செய்ய முயற்சித்துப் பார்க்காத செய்து பார்க்கலாமா என்று எண்ணாத கூட்டங்கள் ஒரு 10 அல்லது 20 கூட இருக்காது என்று சொல்லலாம். மற்றபடி காலித்தனங்கள் செய்ய நேர்ந்த ஒவ்வொரு கூட்டத்திலும் கல்லு, மண்ணு, கோழி முட்டை, சாணி எறியப்பட்டதும், குடிகாரர்களுக்கு கள்ளு வாங்கிக் கொடுத்து கூப்பாடு போடச் செய்ததும்
சிறு பிள்ளைகளை விட்டு ஜே! போடச் செய்து கலவரம் செய்தும் அனாவசியமான கேள்விகள் - தாடி யேன் வளர்க்கப்படுகிறது? மீசையேன் நரைத்துப் போச்சுது? நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பன போன்ற அசட்டுக் கேள்விகள் கேட்டு காலித்தனம் செய்வதும்,
௯.ம. கூட்டம் நடக்குமிடத்தில் பக்கத்தில் வேறு கூட்டம் போட்டு கூப்பாடு போடுவதும் பக்கத்தில் தப்பட்டை மேளம் அடித்து தொல்லை விளைவிப்பது சமீபத்தில் நின்று கொண்டு ஜனங்களை கூட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்து திருப்பி அனுப்புவதும் துண்டு நோட்டீச்களை கொண்டுவந்து கூட்டங்களில் வினியோகித்து கலாட்டா செய்வதுமான
மற்றும் பல அற்பதனமான காரியங்களும் எப்படிப்பட்ட இழிமகனும் செய்யத் துணியாத கேவல செய்கைகளும் செய்துதான் வந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த 3000, 4000 கூட்டங்களில் ஒரு கூட்டமாவது கலவரத்தினால் கலைக்கப்பட்டு விட்டதென்றோ, பேச்சுக்கள் மூடிந்து தலைவர் மூடிவுரை நடந்து தலைவருக்கும் கூட்டத்துக்கும் வந்தனோபசாரம் சொல்லி முடிக்கப்படாத கூட்டம் ஏதாவது ஒன்றை ௬ுஜூவு செய்தால் ரூ.1000 சன்மானம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்கின்றோம் வேண்டுமானால் ஒரு உதாரணம், பட்டி வீரம்பட்டிக்கு அடுத்த அய்யம்பாளையத்தில் போலீஸ்காரர் கூட்டம் கூட்டப்படாது என்று ஆரம்பத்தில் தடுத்து நிறுத்திவிட்டார்கள். அதுவும் அன்றே அங்கேயே
15— வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
தோழர் ராமசாமி சொன்னதுபோல் இந்த 15-வருட காலத்துக்கு ஒரே ஒரு கூட்டம்தான் அதுவும் போலீசாரால் நிறுத்தப்பட்டது என்பதாகும். மற்றபடி எவ்வளவு பெரிய காலித்தனமானாலும் கடைசி வரை நின்று பேசி கூட்டத்தை நடத்தி விட்டுத்தான் சென்று இருக்கிறார்கள்.
முன்சொன்னபடி சு.ம. கூட்டங்களில் எவ்வளவு காலித்தனமும் கலாட்டாவும் நடந்திருந்தாலும் சு.ம.காரர்கள் ஒரு ஆளையாவது ஒரு
சிறு பையனையாவது அடித்தார்கள் கையால் தொட்டு தள்ளினார்கள். என்றாவது ரூபித்துவிட முடியாது. ஏனெனில் தோழர் ஈ.வெ.ரா. இருக்கும்
கூட்டங்களில் எல்லாம் தோழர் ஈ.வெ.ரா. எவ்வளவு தொல்லைகள்.
ஏற்பட்டாலும் சமாளித்து சம. காரர்களையே கண்டிப்பதின் மூலம் எதிரிகள்:
வெட்கப்படும்படி செய்து அடக்கி காரியம் மூடித்து வரப்பட்டிருக்கிறது
சில உதாரணங்கள் உதாரணமாக இந்த ஒரு மாத காலத்தில் 3, 4 இடங்களில் சு.ம கூட்டங்களில் காங்கரஸ் காலிகள் கலகம் நடத்தி இருக்கிறார்கள். அவைகள் காங்கரஸ் பத்திரிகைகளிலேயே வந்திருக்கின்றன. காஞ்சீபுரத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா, அண்ணாத்துறை ஆகியவர்கள் பேசும்போது காங்கரஸ்காரர்கள் காலித்தனம் செய்தார்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.
ஒருவர் பக்கத்திலேயே இருந்தார். அவரிடம் சொன்னதற்கு அவர் பிராமணாளை குறை கூறினால் ஜனங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்று நம்மவர்களுக்கு சமாதானம் சொன்னாரே தவிர காலித்தனத்தை அடக்கவில்லை. அப்புறம் ஒரு சாயபு இன்ஸ்பெக்டர் வந்து சப்-இன்ஸ்பெக்டரை ஒரு ஏத்து ஏத்தினார். பிறகு காலித்தனம்
அடங்கிற்று. தெரிந்தோ என்னமோ காங்கரஸ் ராஜ்யம் அந்த சாயபை உடனே மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக ஒரு அய்யரையே போட்டிருக்கிறது. காஞ்சீபுரம் மகா நாட்டின் போதும் காங்கரஸ் காலிகள். கொட்டகைக்கு வெளியில் இருந்து கூப்பாடு போட்டு ஜனங்கள் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் இருக்கச் செய்தார்கள். போலீசார். சரியாக கவனிக்கவில்லை. இதன் மீது தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்கள் போலீசாரை அறை கூவியழைத்தார். அதாவது உங்களால். காலிகளை அடக்கமுடியுமா முடியாதா? அல்லது நாங்கள் அடக்கலாமா என்றார், உடனே போலீஸ் ஓடிற்று. காலிகள் பரந்தார்கள்.
தஞ்சாவூரில் காலித்தனம்
தஞ்சாவூர் மகாநாட்டின் போதும் போடப்பட்ட பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசும்போது காங்கரஸ்காரர்கள் பலருக்குக் கள்ளை வாங்கி ஊற்றிக் கலவரம் செய்யச் செய்தார்கள். கைகலக்கும்படியான நிலைமை ஏற்பட்டது. உடனே தோழர் ஈ.வெ.ரா. சு.ம.காரர்களை கோபித்துக்
குடி அரசு- 1938 (1) 196
கொண்டதால் காங்கரஸ் காலிகள் தங்கள் இஷ்டம் போல் கூப்பாடு போட்டு அவர்கள் வாய் வலித்ததால் தானாக அடங்கினார்கள். அன்று அது காரணமாய் இரவு 10 மணி வரை கூட்டம் நடந்தது. மாயவரம் மகாநாட்டின் போதும் கும்பகோணம் காந்திபார்க்கில் தோழர் ஈ.வெ.ரா. பேசும்போதும் காங்கரஸ் காலிகள் கலவரம் செய்தார்கள். மழை பெய்தும் கூட்டம் கலையாமல் கிரமப்படி முடிவு பெற்றது. போனமாதம்
13-ந் தேதி தூத்துக்குடி நாகம்மாள் வாசகசாலை ஆண்டு விழாவின்போது நடந்த பொதுக்கூட்டத்தில் 10000 ஜனங்கள் உள்ள கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ராவும் ஜனாப் கலிபுல்லா சாயபும் பேசுகையில் காங்கரஸ் காலிகள் மண்ணை வாரிப்போட்டு கற்கள் எறிந்து ஜே! கூப்பாடு போட்டு மிருகங்கள் போல் கத்திச் செய்த தொல்லைகள் போலீசார் வந்த பிறகே அடங்கிற்று. அந்த சமயம் சு.ம. காரர்களை ஈ.வெ.ரா. கண்டிக்காமலும் ௯ூம.காரர்கள் பேசாமல் இருக்கவிட்டால்தான் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடிப்போவேன் என்றும் மிரட்டியதால் சு.ம. காரர்கள் சும்மா இருந்தார்கள். அப்புறம் தோழர்கள் ஈ.வெ.ரா., கலீபுல்லா சாயபு, விஸ்வநாதம் ஆகியவர்கள் பேசி 11 க்கு கூட்டம் கிரமப்படி முடிவு
பெற்றது. அப்படி இருந்தும் கல் விழுந்தது, செருப்பு விழுந்தது ராமசாமியை மடக்கிக் கொண்டார்கள்; கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டார் என்று காங்கரஸ் பத்திரிகைகள் மற்றவர்களையும் இது போல் கலகம் செய்ய தூண்டிவிட்டன. அதில் ஒரு பத்திரிகையின். புளுகுக்கும் அதன் நிருபர் வேண்டுமென்றே செய்த அயோக்கிய
தனத்துக்கும் ஒரு உதாரணம் கூட கூறுகிறோம். அதாவது அன்றைய கூட்டத்தில் “தோழர் அண்ணாத்துரை ஹிந்தியை கண்டித்து பேசினார்.” அதனால் கூட்டம் கோவித்துக்கொண்டது என்பதாக எழுதி இருந்தது உண்மையில் தோழர் அண்ணாத்துரை அவர்கள் அன்று தூத்துக்குடிக்கே வரவில்லை. இப்படியாக காங்கரஸ் பத்திரிகைகள் என்பவைகளும், பார்ப்பன நிரூபர்கள், பார்ப்பன பத்திராதிபர்கள் என்பவர்களும் பொய்யும் புளுகும் அயோக்கியத்தனமான தூண்டுதலும் செய்வதன். மூலமே காங்கரஸ் காலிகள் காலித்தனத்துக்கு தூண்டப்பட்டு விடுகிறார்கள்.
காங்கரஸ் யோக்கியதை
காங்கரஸ்காரர்களுக்கு முதலாவது அரசியல் ஞானம் கிடையாது என்பதோடு ஒழுக்கமும், நாணயமும் இல்லாமல் இருப்பதோடு சர்வம் சூழ்ச்சிமயமாய் கூலிக்கு கூப்பாடு போடும் மயமாய் இருப்பதால் ஒரு கூலி போர்ட்டர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லாத திறமையற்று ஓடி ஒழிந்து கொள்ள வேண்டியவர்களாகி விடுகிறார்கள். இந்த லக்ஷணத்தில் அவரவர்கள் நாக்கை அடக்குவதில்லை - இதற்கு யார் என்ன செய்யமுடியும். 197 வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 26
காஞ்சியில் நடந்ததென்ன? உதாரணமாக சென்ற வாரம் காஞ்சிக்குப் போன காங்கரஸ்காரர்கள் மகாநாடு நடந்து 4வது நாளையில் அங்கு போய் ஏன் அயோக்கியத்தனமாய் பேச வேண்டும். காஞ்சீபுரம் பொதுமக்கள் 3000 ரூபாய் வசூல் செய்து 4000 ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டுக்கு செலவழித்திருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் 3000 வசூல் செய்து 2000 ரூபாய் மீத்திக் கொண்டார்கள் என்று முட்டாள்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசினதால் ஒருவர் மறுக்க வேண்டியதாயிற்று. அவரும் அவ்வூர் பெரிய மனிதர்களில் முக்கியமானவரே ஒழிய முனிசிபல் கவுன்சிலராயிருந்து லஞ்சம் வாங்கிப் பிழைப்பவரோ அல்லது சட்டசபை மெம்பராயிருந்து சர்வத்தையும் 75-ரூபாய்க்கு தியாகம் பண்ணி எச்சிலைக் கூலியாய் இருப்பவரோ அல்ல. அப்படிப்பட்டவரை பொய்யாக்க வேண்டுமென்று போக்கிரித்தனமாய் பேசினால் கலவரம் உண்டாகாதா என்று கேட்க்கின்றோம். இந்த கோபத்தால் தான் தலைமை வகித்த “தினமணி” ஆசிரியர் ஊருக்கு போனவுடன் கொலை செய்யத் தூண்டி விட்டார் போலும். இந்த விபரம் மெயில் பத்திரிகையில் இருக்கிறது. இதை “தினமணி” கோழைத்தனமாய் மறைத்து விட்டது. இந்த கோழை தான் கொலை செய்யத் தூண்டுகிறது. “அடி உதை கொலை செய்'' என்று எப்படிப்பட்டவன் சொன்னாலும், எழுதினாலும் அவர்களை பக்கா கோழைகள் என்று பொது ஜனங்கள் கருதிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது நமது 50 வருஷ அனுபவம். அடிக்கும், உதைக்கும், கொலைக்கும் மற்றவர்களை தூண்டப் பயப்படுபவன் எப்பொழுதும் வீரனாவான் என்பதோடு சந்தர்ப்பம் நேர்ந்தால் முதல் அணியிலும் நிற்பான் என்பதையும் அனுபவத்தில் கூறுகிறோம். நிற்க,
கும்பகோணம் யோக்கியதை
கும்பகோணம் கலவரத்தைப் பற்றியும் சிறிது கூறுகிறோம். இது விஷயமாய் வாசகர்கள் “ஹிந்து” பத்திரிகையைப் பார்க்க விரும்புகிறோம். அதாவது, 11 தேதி மெயிலில் கும்பகோணம் காங்கரஸ் கமிட்டி காரியதரிசி ஒரு சுயமரியாதைக்காரன் அடிபடுவதைத் தடுப்பதற்காக ஓடினார். பொது ஜனங்கள் அந்தக் காரியதரிசியை சந்தேகித்து அடித்துவிட்டார்கள் என்று எழுதி இருக்கிறது. எனவே சுயமரியாதைக்காரர்களை யார் அடிக்க முயற்சித்து இருக்க முடியும்? பொது ஜனங்கள் காங்கரஸ் காரியதரிசியை யாராய் நினைத்து அடித்து இருக்க மூடியும்? என்பதை கவனித்தால் காங்கரஸ்காரர்களால் பலாத்காரம் நடந்திருக்கிறதா சுயமரியாதைக்காரர்களால். நடந்திருக்கிறதா என்பது விளங்கும்
குடி அரசு- 1938 (1) 198
“தினமணி?” புளுகு
மற்றும் கும்பகோணம் கலவரத்தைப் பற்றி தினமணி 8-ந் தேதி பத்திரிகையில் “சுயமரியாதை காலிகளும் இன்னும் பலரும் காங்கரஸ்காரர் களையும் பொது ஜனங்களையும் உதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று எழுதி இருக்கிறது. “இன்னும் பலர்” என்றால் அவர்கள் யாராய் இருக்க முடியும்? “பொது ஜனங்களையும் உதைக்க ஆரம்பித்தார்கள்" என்றால் பொது ஜனங்களை உதைக்கக் காரணம் என்ன? என்பவைகளைக் கவனித்தால் காங்கரஸ்காரர்கள் யோக்கியதையும் அங்கு நடந்த காரியமும் அவர்கள் மீது பொது ஜனங்களுக்கு உள்ள எண்ணமும் நன்றாய் விளங்கும் வாஸ்தவம் சொல்ல வேண்டுமானால் அக்கலவரம் காங்கரஸ்காரருக்கும், சமதர்மக்காரருக்கும் ஏற்பட்ட கலவரமாகும். இதை உள்ளபடி வெளியிட தினமணிக்கு யோக்கியதையும், தைரியமும், நாணயமும் இல்லாததால் இம்மாதிரி அயோக்கியத்தனமாக மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போடுகிறது
நிற்க தூத்துக்குடி கலவரத்தைப்பற்றி சிறிது கவனிப்போம்
தூத்துக்குடி காங்கரஸ் யோக்கியதை
தூத்துக்குடியில் காங்கரசுக்காரர்களுக்குள் இரண்டுக் கட்சி. அது காங்கரஸ் கமிட்டி தலைவர் தோழர் வீரவாகுப்பிள்ளைக்கும், காங்கரஸ் கமிட்டி காரியதரிசி தோழர் கந்தசாமி பிள்ளைக்கும் ஏற்பட்ட கட்சியாகும். மூன்னவர் சமதர்மக்காரர், பின்னவர் வருணாச்சிரமதர்மி இருவருக்கும் பலமான கட்சி பிரதிக்கட்சியும் பின்பற்றுபவர்களும் கொஞ்ச காலமாகவே இருந்து வருகிறது. பத்திரிகையில் எழுதி இருக்கிறார். அதைக் கண்டித்து மற்றொரு கட்சியார் கூட்டம் போட்டு மறுக்கட்சி மீது அதாவது காங்கரஸ் காரியதரிசி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கலவரத்தை தினமணியே ஒப்புக்கொண்டு 10-தேதி பத்திரிகையில் மேலால் எழுதிவிட்டு கீழாக வம்பில் காரணகாரியமில்லாமல் சு.ம. காரர்களை இழுத்து போட்டு அவர்கள் இந்த பிளவை உபயோகித்துக் கொண்டு கேள்வி கேட்டார்கள்” என்று எழுதி இருப்பதுடன் இந்த காலித்தனத்துக்கு பயந்து
“ காரியதரிசியும் மற்றொருவரும் ஓடி ஒழிந்து கொண்டார்கள்" என்று எழுதியிருக்கிறது. மற்றும் காலிகள் விளக்கை உடைத்ததாகவும் 5.0 பேர்வழிகள் கொடியைப் பிடித்து கிழித்துவிட்டதாகவும் எழுதி இருக்கிறது. ஆனால் அதே தேதி அதே சேதிக்குக் கீழாக “நமது நிருபர்” என்னும் பேரால் தூத்துக்குடி காங்கரஸ் கமிட்டி காரியதரிசி கந்தசாமிப்பிள்ளை அவர்கள் “அந்த (குறிப்பிட்ட) கலகத்துக்கு காரணமானவர்கள் காங்கரஸ் கமிட்டித் தலைவர்களான தோழர்கள் வி.எஸ். சுப்பய்யர், ஜெ.பி.ரோட்ரிக்ஸ்,
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 26
யம்.சி.வீரவாகு பிள்ளை மற்றும் 26 காங்கரஸ் தொண்டர்கள்" என்று போலீசில் பிராது கொடுத்திருப்பதாய் தினமணி நிருபரே அனுப்பிய சேதி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. போலீசில் ௬.ம. காரர்கள் பெயர் குறிப்பிடவே இல்லை. ஆகவே தினமணி அசிரியர் புத்தி கோளாறாக ஆகிவிட்டதென்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது. பார்ப்பனர் வலையில் சிக்கி பார்ப்பன கூலியான அவர் இனி கூடிய சிக்கிரத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய நிலையடைந்துவிட்டார் என்பதல்லாமல் மற்றபடி அவரை ஒரு அறிவுள்ள, சுதந்திரமுள்ள மனிதனாக கருதி விவகரிப்பது மெனக்கெட்ட வேலை என்றே தோன்றுகிறது
குடி அரசு - தலையங்கம் - 13.03.1938
குடி அரசு- 1938 (1) 200
பார்ப்பனரும் வகுப்புவாதமும்
நமது காங்கரஸ் (பார்ப்பன) பத்திரிக்கைகளுக்கு வகுப்புவாதம் கிடையாது. வகுப்பு துவேஷமும் கிடையாது என்பதற்கு உங்களுக்கு உதாரணம் கூறவேண்டுமானால் சொல்லுகிறேன் கேளுங்கள்.
இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகள் கொச்சி திவான் சர். ஷண்முகத்தையும், மைசூர் திவான் சர். மிர்சா இஸ்மாயிலையும் தான். கண்டிக்குமே தவிர, திருவனந்தபுரம் திவான் சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரியையும், காஷ்மீர் திவான் கோபாலசாமி அய்யங்காரையும் கொஞ்சங் கூட கண்டிக்காது. அவர்கள் சொந்த முறையில் கூட எவ்வளவு கெடுதலாய்
நடந்து கொண்டாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாது
அன்றியும், கொச்சி, மைசூர் இரண்டிலும்தான் காங்கரஸ்காரர்கள். தொல்லை விளைவிப்பார்களே தவிர மற்ற அய்யர், ஆச்சாரி, அய்யங்கார். திவானாயுள்ள இடங்களில் சிறிதும் தலைகாட்டாது. ஏனென்றால் பார்ப்பனருக்கு வகுப்புவாதம் கிடையாதல்லவா? எந்த வகுப்புவாதம் என்றால் பார்ப்பனருக்குள் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, ராவு, ராயர், சர்மா, ஜடாவல்லபர், தீக்ஷதர், ஸரெளத்திரி முதலிய எந்த வகுப்பு ஜாதியாரானாலும் அவர்களுக்குள் மாத்திரம் வகுப்புவாதம் என்பது சிறிதுகூட கிடையவே கிடையாது. ஆனால் இவர்கள் அல்லாத வேறு எந்த வகுப்பானாலும் என்ன செய்தாவது மானத்தை, கற்பை, ஒழுக்கத்தை, நாணயத்தை காசுக்கு ஒரு வண்டி வீதம் விற்றாவது வகுப்புவாதம் கிளப்பாமல் இருக்கமாட்டார்கள். ஆகவே காங்கரசுக்கோ, பார்ப்பனர்களுக்கோ வகுப்புவாதம் இல்லை என்கின்ற கருத்துரையை உணர்வார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1938
00 ட... ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
மதுரை ஜில்லா 2-வது சுயமரியாதை
மகாநாடு வெங்கிடுசாமி படத்திறப்பு விழா
தலைவர் அவர்களே! தோழர்களே!
இன்று இம்மகாநாட்டில் காலஞ்சென்ற நமது தோழர் வெங்கிடுசாமி அவர்கள் உருவப்படத்தைத் திறந்து வைக்கும் பணியாற்றுவதை நான் ஒரு மகிழ்ச்சியின் காரியமாகவே கொள்கிறேன்.
இந்தச் சமயத்தில் இப்பணியைச் செய்யும் யாரும் திறந்து வைக்கப்படும் உருவத்தினரைப் பற்றி சில வார்த்தைகள் கூறுவது இயல்பேயாகும். தோழர் வெங்கிடசாமி அவர்கள் இவ்வூர் வாசி அவரைப்பற்றி இவ்வூர் வாசிகளாகக் கூடியிருக்கும் இப்பெரிய கூட்டத்திற்கு உங்களுக்குத் தெரியாத எதை நான் கூறப் போகிறேன். நான் ஏதாவது சொல்லுவது என்பது “அப்பன் வீட்டுப் பெருமையை அண்ணனுக்கு தங்கை எடுத்துச் சொல்ல முயற்சித்தது போல!” தான் முடியும் என்றாலும் நான் இது சமயத்தில் தோழர் வெங்கிடுசாமியைப் பற்றி மாத்திரம் அல்லாமல் இம் மாதிரியான படத்திறப்பு விழா முதலியது போன்ற காரியங்களை நாம் ஏன் செய்கிறோம் என்பதைப் பற்றியும் சிறிது கூற ஆசைப்படுகிறேன். ஏனெனில் இம் மாதிரி மகாநாடுகளில் நாம் அடிக்கடி பல பெரியார்களது படத்திறப்பு விழா நடத்துகிறோம். அன்றியும் வழிபாட்டை மறுக்கிறவர்களான நாம் இம் மாதிரி உருவப்பட திறப்பு ஏன் செய்கிறோம் என்பதற்கும் சமாதானம் சொல்ல வேண்டியது அவசியமாகும்
உருவப்படத் திறப்பின் நோக்கம்
நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூஜை செய்யவோ, தேங்காய் பழம் ஆராதனை செய்து விழுந்து கும்பிட்டு
பக்தி செய்து நமக்கு வேண்டியதைக் கோரி பிரார்த்தனை செய்யவோ,
நாம் செய்த செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாக கருதிக் கூட நாம் எந்தப்பட திறப்பு விழாவும் செய்வதில்லை.
மற்றும் எப்படிப்பட்ட படத்திற்கு பூஜை செய்யும்படியோ, கோவில்களிலோ,
குடி அரசு- 1938 (1) 202
தேர், ரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம், ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கு ஆகவும் அல்ல. ஆனால் மற்றெதற்கு என்றால் மனித சமூகநலனுக்கு சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்வித கூலியோ புகழோ, பிரதிப் பிரயோஜனமோ பெறாமலும் தன் முயற்சியால் தன் பொருளால் தன் பொறுப்பென்று கருதி தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும், தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம் மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா? என்பதற்கு ஆகவே தான் - மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம் கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரசாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்
தியாகர், பனகால் தண்மை
நாம் அடிக்கடி தியாகராயர், பனகால் அரசர், நடராஜன் முதலியவர்கள் படத் திறப்பு விழா செய்கின்றோம், எதற்காக? அவர்களது கொள்கை, எண்ணம், தொண்டு ஆகியவைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆகத்தான். மற்றபடி இவர்கள் எல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள், பல தேசீயத் தலைவர்கள் என்பவர்களைப் போன்று மக்களுக்கு மோட்சம் காட்டும் பக்தியைப் பற்றி பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி புகழ் பெற்றவர்களோ செத்த பின். கடவுளானவர்களோ, கடவுளுடன் கலந்தவர்களோ அல்ல. பாமரர்களிடம் பேரும், புகழம் பெற்ற மகான்களுமல்ல. தங்களைக் கோவிலிலும், பூஜை வீட்டிலும், வைத்து பூஜிக்கும்படியான மாதிரியில் நடந்து கொண்டவர்களுமல்ல. அவர்கள் வெகு தைரியமாய் பழைய பழக்க வழக்கங்களையும், மூட மக்களிடமும், சுயநல சூழ்ச்சிக்காரர்களிடமும் மிகவும் செல்வாக்கு பெற்று இருக்கும் பழைய கொள்கைகளையும், உணர்ச்சிகளையும், தகர்த்தெரிந்து மக்களுக்கு சமத்துவ உணர்ச்சியையும், மனிதத் தன்மையையும் உதிக்கப் பாடுபட்டவர்கள், அப்படிப் பாடுபட்ட எவரும் அவர்களது வாழ்நாள்களில் கஷ்டப்படும் பாமர மக்களால் தூற்றப்பட்டும், துன்பப்படுத்தப்பட்டவர்களாகவே இருப்பார்கள்.
சீர்திருத்தக்காரர்கள் பட்டபாடு. உதாரணமாக கிரீஸ் தேசத்து சாக்ரடீஸ் என்பவர் எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்து கொல்லப்பட்டார். கெளதம புத்தர் என்பவர் ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார், யேசு கிறிஸ்து விக்கிரகாராதனை, கோவில் பூஜை முதலியவைகளை எதிர்த்துப் பிரசாரம் செய்ததற்கு ஆக சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். முகமது நபி அனேக மூடப் பழக்க
203 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
வழக்கங்களையும், பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்து பல நல்ல கொள்கைகளைப் பிரசாரம் செய்ததற்கு ஆக பல சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல. புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இது போல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லை படுத்தப்பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானு கோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள். கோடிக் கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள். அது போலவே தான் முற்கூறப்பட்ட பெரியார்களும், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவு தான் வெறுக்கப்பட்ட போதிலும் பாமர மக்களாலும், சுய நல சூழச்சிக்காரர்களாலும் எவ்வளவு தான். வெறுக்கப்பட்டு தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும் பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன்தரக் கூடியதாயும், பாராட்டக் கூடியதாயும் மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறோம் இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டை பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்
புகழப்பட்டோர் கதி:
நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதாலேயே எங்கள். தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்து பக்தி செலுத்தி புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும் அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப் பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப் பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித
ராஜுவும் இதுவரை கிடைத்ததில்லை. நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார், பெசண்டம்மையார் புகழப்பெற்றார், காந்தியும் புகழப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ
பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் தெய்வீகம் கற்பிக்கப்பட்டார்கள். பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களாலெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன்: மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காண்கின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்கு புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி பாமரர்களுடைய பக்திக்கும், பூஜைக்கும் பாராட்டுதலுக்கும் ஆளாகி முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய், புகழ் பெற்று
குடி அரசு- 1938 (1) 204
வருகிறோமே என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள். சாகின்றார்கள், சாகப்போகின்றார்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறதே தவிர கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்.
இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றிஇருக்குமானால் அவை அனைத்தும் ஒரு காலத்திலோ, நேற்றோ, இன்றோ கல்லடிப்பட்டு, கொல்லப்பட்டு, கையடிப்பட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர். வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்
தேசீய வாலிபர்கள் யோக்கியதை
இன்று தியாகராயரையும், நாயரையும் பனகாலரசரையும் தூற்றுகின்ற வாலிபர்களை எனக்குத் தெரியும். அவர்களுக்குத் தேசீய
வீரர் பட்டம் இருப்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் தாய், தகப்பன்மார்கள் நாயிலும் பன்றியிலும் கீழான ஜெந்துவாய் மதித்து நடத்தப்பட்டதையும் அது எப்படி மாறி அவர்கள் வயிற்றில் பிறந்தவர்கள் தேசீய வீர வாலிபர்கள் ஆனார்கள் என்பதும் அவர்கள் அறியார்கள். இன்றைய தேசீய வாலிபர்கள் பலர் கருத்தரிப்பதற்கு முன்பாகவே அவர்களில் பலர் அறிவு பெறுவதற்கு முன்பாகவே தியாகராயரும், நாயரும், பனகால் அரசரும் புரட்சி செய்து மனிதத் தன்மை உணர்ச்சியை கிளப்பிவிட்டு உயிர் துறந்து விட்டார்கள். ஆதலாலேயே அது தெரிய முடியாத வாலிபர்கள் இன்று தங்கள் பிறவி யோக்கியதையே இப்படித்தான் இருந்தது என்று கருதி தலைகீழாக நடக்கிறார்கள். பலர் தெரிந்திருந்தும் தாங்கள் கீழ் மக்களாய் இருத்திவிடப்பட்ட உணர்ச்சியில் கீழ்மை புத்தி கொண்டு நன்றி மறந்த மக்களாய் நடந்து கொள்ளுகிறார்கள். எப்படியானாலும் இந்த சில. மக்களுக்கு அறிவு இல்லாததாலோ நன்றி காட்டும் குணம் இல்லாததாலோ அப்பெரியார்களுடைய பெருமையும் அருந்தொண்டுகளும் பயனற்றதாக ஆகிவிடும் என்று சொல்ல முடியாது
வெங்கிடுசாமி பெருமை
அப்பெரியார்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதி தொண்டாற்றியவர்களே ஒழிய மக்கள் தங்களை போற்றிப் புகழ்ந்து பூஜிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்ல. ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி அவர்கள் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து அம்மாதிரியான உள்ளம் பெற்று மனித சமூகத்துக்கு தொண்டாற்ற முற்பட வேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப்படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து
205 ௨... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இவற்றை எடுத்துக் கொள்ளுகிறோம். அந்த முறையில் நமது தோழர் வெங்கிடுசாமி அவர்களும் குறிப்பிடத் தக்கவராவர். வெங்கிடுசாமி உண்மை சுயமரியாதை வீரர். 1926-முதலே சுயமரியாதை சங்கம் வைத்து உழைத்தவர். அப்போதே சு.ம. திருமணம் செய்து கொண்டவர். சங்கத்துக்கு தாராளமாய் பணம் கொடுத்து உதவி வந்தவர். ஒவ்வொரு கொள்கையையும் அனுபவத்தில் பிறருக்கு செய்து காட்டியவர். அவரது மனைவியார் ஒரு காலத்தில் ஏதோ ஒரு பஜனைக் கூட்டத்தின் காலில் விழுந்து கும்பிட்டு “பிரசாதம்” வாங்கியதற்கு ஆக பலமாதம் “திருநீலகண்டராய்” இருந்து மனைவிக்கு உண்மை ஞானம் ஏற்பட்ட
பின்பு கணவரானவர். அவர் காலமான பின்பு உண்மையிலேயே மதுரையில் சு.ம. சங்கம் சரியாக வேலை செய்யவில்லை. சு.ம உணர்ச்சியும் வீறு கொண்டெழவில்லை. இதிலிருந்தே அவர் எவ்வளவு அவசியமானவரும் உண்மை கவலையுள்ளவருமாய் இருந்தார் என்பதும் விளங்கும். இதனைக் கேட்டபின் அவரைப் பின்பற்றி பல தோழர்கள் வெளிப்படுவார்கள். அதனால் இயக்கத்துக்கு மேன்மை உண்டாகி மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதற்கு ஆகவே இப்படத் திறப்புவிழா நடத்துகிறேன். இப்படத்தைத் திறந்து வைக்கிறேன்.
குறிப்பு: 13.03.1938 இல் மதுரை விக்டோரியா எட்வர்டு அரங்கில் நடைபெற்ற மதுரை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் மதுரை சுயமரியாதை இயக்கத் தோழர் வெங்கிடுசாமி அவர்கள்
திருஉருவப் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.03.1938
குடி அரசு- 1938 (1) 206
கஷ்டமான பிரச்சினை
- சித்திரபுத்திரன்
மதங்கன் யாரால் உண்டாக்கப்பட்டவை
ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை.
ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை.
ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய்
ப-தி: மதங்கள் எத்தனை உண்டு?
ஆ-ன்: பல மதங்கள் உண்டு.
ப-தி: உதாரணமாக சிலது சொல்லும்.
ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு
ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு.
ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு.
ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை.
ஆஸ்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.
ப-தி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன!
ஆ-ன்: மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்கு பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.
ப-தி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்.
ஆ-ன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது பெரியார்களைக் கண்டு பேசி பிறகு பதில் சொல்லுகிறேன்.
மதவிபரம்
ப-தி: அதுதான் போகட்டும் இந்து மதம் என்பது என்ன? அது கடவுளால் எப்படி ஏற்படுத்தப்பட்டது
207 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆரன்: ஹிந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர்.
ப-தி: வேதம் என்றால் என்ன?
ஆரன்: கிறுக்கு, எஜசு, சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத முறைதான் ஹிந்துமதம் என்பது
ப-தி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப்பட்டவை.
ஆன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை
ப-தி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று யார் சொன்னார்கள்?
ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது. வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது
ப-தி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?
ஆரன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதாரமோ சாட்சியோ கேட்பது என்றால் அது பாவமான காரியமே யாகும்
ப-தி: அது பாவமாக இருக்கலாம். ஆனால் ஆதாரம், ரூஜு இல்லாமல் ஒன்றை ஒருவன் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?
ஆ-ன்: இதுவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
ப-தி: சரி புத்தமதம் என்றால் என்ன?
ஆரன்: புத்த மதம் என்பது புத்தர் என்கிறவருடைய கொள்கை.
ப-தி: அது யாரால் ஏற்பட்டது?
ஆரன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது
ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆ-ன்: புத்தர் என்கிறவர் சொன்னதாக சொல்லப்படும் வாக்குகள்தான்.
ப-தி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?
ஆரன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக்கிறது. அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங்களைப் போல் கடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில் பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை ஆகையால் அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை,
ப-தி: சரி, ரொம்ப நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால் அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை
குடி அரசு- 1938 (1) 208
ப-தி: கிறிஸ்து மதம் என்பது என்ன?
ஆரன்: கிறிஸ்த்தவ மதம் என்பது கிறிஸ்துவால் சொல்லப்பட்ட கொள்கை,
ப-தி: அது எது?
ஆரன்: பைபிள்.
ப-தி: கிறிஸ்து என்பவர் யார்?
ஆரன்: கிறிஸ்து கடவுள் குமாரர்
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்.
ஆரன்: கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.
ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று ரூபிக்க அவரது வாக்குமூலமே போதுமா?
ஆ-ன்: ஏன் போதாது.
ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் தான் கடவுள் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?
ஆ-ன்: இதுவும் கஷ்டமானப் பிரச்சினைதான். பெரியவர்களைக் கேழ்க்க வேண்டும்.
முகம்மதிய மதம்
ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?
ஆ-ன்: முகம்மது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.
ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?
ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்
ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?
ஆ-ன்: கடவுளால் மகமது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.
ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?
ஆன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறு பல சாக்ஷியங்களுமிருக்கின்றன.
ப-தி: வேறு பல சாக்ஷியங்கள் என்பது எவை
ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு இருக்கிறது
ப-தி: அவை உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன?
209 ௨... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆஎன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.
ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?
ஆ-கன்: ஆம்
ப-தி: அனேகமான கடவுள் வாக்கு, கடவுளால் அனுப்பப்பட்டவர்கள், கடவுள் அவதாரங்கள் என்பவர்கள், அவர்களது வாக்குகள், சம்மந்தப்பட்ட மதங்களின் தத்துவம், பலவித கடவுள் தன்மை பெற்றவர்கள் ஆகிய எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார், சிருஷ்டித்தார் என்பதும் நியாயமாகுமா? ஆதலால் இம்மாதிரி மதம் என்பது வியாபாரம் மத
கர்த்தர், வேதம், புராணம் என்பவைகள் வியாபாரச் சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர்களுக்கும் படும் விஷயம். இது ஒரு சமயம் தப்பாக
இருந்தாலும் இருக்கலாம்
ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.
ப-தி: அப்படி இருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார் என்று நீரே நம்புகிறீரா? அதனால்தான் இவைகள். ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களால் அறிவாளிகளால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித சமூகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்ற கவலை கொண்டவர்களால் (மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும், மத கர்த்தருக்கும் ஆதார புருஷர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர்களுக்கு மேன்மை கொடுப்பதற்காக கடவுளை முட்டாளாக்குவதும் பல கடவுள்களை சிருஷ்டிப்பதும் பல வேதங்களை சிருஷ்டிப்பதும் சரியா?
நாம் இருவரும் இவ்விஷயங்களில் ஒரே கருத்துடையவர்களாகி இவைகள் எல்லாம் சற்று நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம் அதாவது இந்து மதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், கிறிஸ்து கடவுள் அவதாரம் என்பதையும், முகம்மது நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும் குறானையும், மற்ற மதத்தையும் ஒப்புக் கொள்வோம். ஆனால் அவைகள். எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு அபிப்பிராயங்களாகவும், சில முரணானவைகளாகவும் ஒரு மதத்துக்கும், ஒரு மததத்துவத்துக்கும் மற்ற மத தத்துவத்துக்கும் மற்ற தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிர்ப்தி, வெறுப்பு, துவேஷம் உடையவைகளாக இருப்பானேன்?
ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது பெரியவர்களைக் கேட்க வேண்டும்.
குடி அரசு- 1938 (1) 210
ப-தி: சாவகாசமாய் பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?
ஆ-ன்: இவைகள் எல்லாம் உண்மை என்றோ, அல்லது உண்மை அல்ல. என்றோ எப்படியோ இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்படவேண்டாம் உலகில் மனிதன் உயிருள்ளவரை நல்லது எண்ணு, நல்லது செய் அவ்வளவுதான்.
ப-தி: நல்லது எது? தீயது எது என்பதற்கு அளவு கருவி என்ன?
ஆ-ன்: இது மிகவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது ஆனாலும் பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லி இருப்பது இவைகளைக் கண்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரை பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக்கொள்வதில்லை. அவருக்கு மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களை பெரியவர் என்கிறான். இதற்கு ஒரு பரீஷை குறிப்பு வேண்டுமே?
ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது இதற்கெல்லாம் உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லும் பார்ப்போம்.
ப-தி: என் சமாதானம் என்ன? நான் தான் மதத்துவேஷி, பார்ப்பனத் துவேஷி, நாஸ்த்திகன், சுயமரியாதைக்காரர்கள் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே, என்பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆஸ்திகராயிற்றே உமக்கு தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத்தில் சதா குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார்.
என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன்னீரே அதுவே எனக்கு ரொம்ப திருப்தி. ஆஸ்த்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை, மிக அருமை. சந்தேகம் கேட்டால் அடி, உதை, நாஸ்திகன், பிராமண துவேஷி, ஆரிய துவேஷி... என்றெல்லாம் வெறிபிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால் உம்மைப்பற்றிக்கூட எனக்கு சந்தேகம்தான்.
ஆ-ன்: என்ன சந்தேகம்?
ப-தி: நீர் ஆஸ்திகரோ என்னமோ என்று
ஆ-ன்: நான் உண்மையில் ஆஸ்திகன். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று நம்புகிறவன்.
ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும் அந்தந்த மத வேதங்களையும் அவையெல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவை என்பதிலும் அவ்வேதக் கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவன்தான். M வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ப-தி: அப்படியானால் நீர் இருப்பர் என்ற கடவுள் நம்பிக்கையை
யார் எந்த ஆஸ்திகர் லட்சியம் செய்வார். ஒரு குறிப்பிட்ட கடவுள், அல்லது
ஒரு குறிப்பிட்ட மதகர்த்தர், அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை
ஏற்றுக் கொளாதவர், நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக்காரனுக்கு நாஸ்திகனே - நம்பிக்கையற்றவனே யாவான். நாஸ்திகம் என்பதும் நம்பிக்கை யற்றது என்பதாக எல்லா ஆஸ்திகர்களுக்கு ஒரே பொருள்தான்.
ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன என் புத்திக்கு
சரி என்று பட்டதை செய்து விட்டு செத்துப்போகிறேன்.
ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன் தான் இருமே உமக்கு சரி என்று படாதைத்தான் செய்யுமே, எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆஸ்திகர்கள் வைது கொண்டுதானிருப்பார்கள்
குடி அரசு - உரையாடல் - 20.03.1938
குடி அரசு- 1938 (1)
ப
ப்
நெருக்கடி சர்வகட்சி தமிழர் மகாநாடு
தமிழ்நாட்டில் இது சமயம் நல்ல ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு அதை சமாளிக்க சக்தி இல்லாமல் போய்விட்டது. நாம் எவ்வளவு சொல்லியும் மக்கள் அலட்சியமாக இருந்ததாலேயே இக்கதி ஏற்பட்டது. அலட்சியமாய் இருந்து விட்ட
மக்கள் அதன் பயனை அனுபவிக்க வேண்டியதுதான். ஒரு பெரியார். நம்மை “துக்கம்” விசாரிக்க வந்தவர் “வைசிராய் கடன் நிவாரணச் சட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று இருந்தேன். அளித்து விட்டாரே” என்று சொல்லி அது சம்மந்தமான துக்கம் விசாரித்தார். வைசிராய் பிரபு செய்ததில் ஒன்றும் தவறு இல்லை. நமது யோக்கியதைக்கு உண்டான பயனை நாம் அடைவதில் சங்கடப்படுவானேன் என்று வெறுப்போடு சமாதானம் கூறினோம் என்றாலும் தமிழ் மக்களின் கேவல நிலை இவ்வளவு மோசமாக இருந்ததை நாம் இதுவரை கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
கடன் நிவாரண சட்டம் தமிழ் மக்களுக்கு செய்யப் போகும் கொடுமை இவ்வளவு அவ்வளவு என்று இப்போது யாருக்கும் புலப்படாது பின்னால் அதன் பயனை அனுபவிக்கும் போது தான் தெரியப் போகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அச்சட்டம் விவசாய முன்னேற்றத்தை அடியோடு பாழ்படுத்துவதோடு சிறிய விவசாயிகளை கூட்டோடு அழித்துவிட்ட பெரிய மிராசுதார்களை - ஏன் நாளடைவில் ஒரு சில ஜமீன்தார்கள், காட்டுராஜாக்கள் என்பவர்களைத் தவிர மற்ற கிராம வாசிகளையெல்லாம் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஆதி திராவிடர்களைப் போல் பரம்பரை அடிமை குடும்பங்களாக ஆக்கப்படபோகின்றது அப்போதுதான் நம் நாட்டில் இருந்து இன்னும் ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு கூலிகளாகப் போகப் போகிறார்கள். ஒன்று இரண்டு குடும்பம் சமாளித்துக் கொண்டு இங்கு இருக்க ஆசைப்பட்டால் அவையும் பிரவி அடிமைக் குடும்பங்களாகத்தான் இருக்க முடியும்
இது ஒரு புரமிருக்க இச்சட்டத்தால் பூமியை பெருவாரியாக வாரிக்கட்டி அணைத்துக்கொள்ளும் பெரிய ஜமீன்தாரனாவது ஒழுங்காக வாழ முடியுமா என்றால் அவனும் திண்டாடி தெருவில் நின்று தன்: நழட... வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
செல்வம் முழுவதையும், உத்தியோகப் பார்ப்பானுக்கும், வக்கீல் பார்ப்பானுக்கும், வைத்தியப் பார்ப்பானுக்கும், புரோகிதப் பார்ப்பானுக்கும்
மற்றும் மந்திரி பார்ப்பானுக்கும், மாமா பார்ப்பானுக்கும் அழுதுவிட்டு வருணாச்சிரபடிப் பிரகாரம் 4ம் படிக்கு இரங்கி விட வேண்டியதுதான் என்பதைத் தவிர வேறுநிலை ஏற்படப் போவதில்லை. சுமார் 200 வருஷகாலமாக முன்னேறி விடுதலை பெற்று வந்த நம் நாட்டு மனித சமூகம் மனு ஆட்சிக்குப் போக தள்ளப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்தக் கடன்காரனுக்கு இச்சட்டத்தால் கடன்பாகை ஒழிந்ததாக மனப்பால் குடிக்கிறோமோ அந்தக் கடன்காரனுக்கு ஒரு காசும் லாபம் ஏற்படப் போவதில்லை. கையில் ஒரு காசும் நிலைக்கப் போவதில்லை. ஒரு சிறு விவசாயியானவன் சற்று பெரிய விவசாயி அல்லது மிராசுதாரன் இடம் வாங்கியிருந்த கடன் இல்லை என்று ஆகப் போகிறது. ஆனால் இதனால் சிறு விவசாயிக்கு லாபம் என்ன? என்றால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறு விவசாயி கையில் காசு இருந்தால் முன்னமேயே கொடுத்துக் கடன் தீர்த்து இருப்பான். கையில் இல்லாததால் பாடுபட்டு கிடைக்கும் பலனில் ஒரு பங்கு தான்
எடுத்துக் கொண்டு ஒரு பங்கு பூமிக்காரனுக்கோ, கடன் கொடுத்தவனுக்கோ கொடுத்துக் கொண்டு அப்படியே காலம் கழித்து வருவான். கடன். கொடுத்தவனும் பூமிக்காரனும் விளைந்ததில் கஷ்டக் கூட்டு மாதிரி ஒரு பங்கு விவசாயிக்குக் கொடுத்துவிட்டு தன் பூமி பொருமானத்துக்கு
நூத்துக்கு 4 அணா, 6 அணா வட்டி கட்டும்படியோ அல்லது தான் கொடுத்த பணத்துக்கு 8 அணா, 12 அணா வட்டி கட்டும்படியோ எப்படியாவது வசூல் செய்து கொண்டு வருவான். இப்படிப்பட்ட இந்த லேவாதேவிக்காரனும், பூமி உடையவனும் மற்றொரு பெரிய லேவாதேவிக்காரனிடம் முன் வட்டி கொடுத்தோ, அல்லது மாதா மாதமோ மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ வட்டி கட்டிக் கொண்டு வந்தோ ஒரு அளவுக்கு வருஷம் 200, 300 ரூபாய் சம்பாதனை மீதக்காரனாகவோ அல்லது குடும்ப செலவு மாத்திரம் தாட்டிக் கொள்ளக் கூடியவனாகவோ வாழ்ந்து வருவான். இந்த சட்டமானது இவ்வளவு காரியத்தையும் தடைப்படுத்தி ஒரு 10 ரூபாய் கடன் வேண்டுமானால் 100 ரூபாய் பூமியையோ, 50 ரூபாய் மாட்டையோ விலை பேசினால் ஒழிய ரூபாய் கிடைக்காத மாதிரியும் ஒரு 100, அல்லது 200 ரூபாய் கடன் வேண்டியிருந்தால் 500 ரூபாய் 1000 ரூபாய் பூமியை விலைக் கிறையம் செய்தால் ஒழிய கிடைக்காத மாதிரியும் செய்து விட்டது
கடன் அல்லது லேவாதேவி என்று சொல்லுவது ஒரு பாபமான காரியமோ, அல்லது மோசடியான காரியமோ என்று சொல்லி விட முடியாது. பொது உடமை தேசமாய் இருந்து மக்களுக்கு சுதந்திரமாய் தொழில் , வியாபாரம், விவசாயம் செய்து சம்பாதிக்க இடம் இல்லாத நிலையில் சவுகரியம் சட்டம் செய்து வைக்கப்பட்டிருக்கும் நாட்டில்.
குடி அரசு- 1938 (1) 214
கடனும், லேவாதேவியும் குற்றமான காரியம் என்று சொல்லலாம். நம் நாட்டையும் அப்படி ஆக்குவதானால் இரு கையேந்தி வரவேற்கலாம் ஆனால் நம் நாடு அப்படி இல்லை.
விவசாயி ஆனாலும் சரி, பெருமித பூமி உடையவரானாலும்
சரி, சதா சர்வகாலம் வெருங்கையனாய் இருந்து அன்னியர் கை பார்த்தே பணம் பெற்று விளைவு வந்தபின் கொடுப்பதும், விளையாவிட்டால் கடன் சொல்லி புதிய கடன் வாங்குவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பணம் இல்லாமல் தடுத்து விட்டால் விவசாயத் தொழில் முறை எப்படி நடக்கும் என்று கேழ்க்கிறோம்
இந்த சட்டம் செய்ததைப் பற்றி விவரமரியாதவர்களும், பார்ப்பனர்களின் கூலிகளும், அடிமைகளும் புகழ்ந்து கூறி பாமர மக்களை ஏமாற்றலாம். ஆனால் இதன் பலன் என்ன என்றால் பார்ப்பனீயத்திற்கு ஆதரவளிப்பதும், வருணாச்சிரம வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் காணமுடியாது என்பதே நமதபிப்பிராயம். உண்மையில் சிறு விவசாயியும், பெரு விவசாயியும் அழிந்து போவார்கள். இவர்களுக்கு விவசாயத்துக்கு பணம் கிடைக்கும்படி சட்டத்தில் ஒரு மார்க்கமும் செய்யப்படவில்லை. அவசர காரியத்துக்கும் திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்கும் பணம் கிடைக்க சட்டத்தில் ஒரு மார்க்கமும் செய்யவில்லை. இதனால் கிரமமான முறையில்லாமல் நிமித்திய மாத்திரம் என்றும் அவசரத்துக்கு என்றும் பெரும் நிபந்தனைகளை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு கிரயம் எழுதிக் கொடுக்கவும், அதிக தொகைக்கு எழுதிக் கொடுக்கவுமான காரியங்கள் தாராளமாக நடந்து வர இடமேற்படும். இதன் முடிவு என்ன ஆகும் என்று பார்ப்போமானால் பெரும்பாகமான வரவு செலவுகள் கோர்ட்டுக்குப் போய் வக்கீல்கள். பிழைக்கவே கொடுத்தவன், வாங்கினவன் ஆகிய இருவர் சொத்தும் பாழாய்விடப் போகிறது. இவை தவிர இச் சட்டத்தால் இன்னும் பல தொல்லைகளும் விளையப் போகின்றன. இவற்றைப் பற்றி தமிழ் மக்கள் ஆத்திரப் பட்டார்களே ஒழிய சரியாக முயற்சி ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. தக்க எதிர்ப்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தால் வைசிராய் பிரபு இதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டார் என்றுதான் கருதுகிறோம்
இப்படிப்பட்ட விஷயங்களில் பார்ப்பனர்களுக்கும், நமக்கும் ஒரு பெரிய வித்தியாசமிருப்பதை நாம் மறைப்பதில் பயனில்லை.
விவசாரம் ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு முதலிய ஒரு சிறு சட்டமானாலும் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் வரும்படிக்கும், சோம்பேரிப் பிழைப்புக்கும் கெடுதி தரத்தக்கது என்று உணர்ந்தால் உடனே அவர்கள் அத்தனை பேரும் கூப்பாடு போடுவார்கள். சகல பெரிய மனிதர் என்பவர்களும் A5 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
அபிப்பிராயம் கூறி வைசிராயையும், இந்தியா மந்திரியையும், பிரிட்டிஷ் பிரதம மந்திரியையும் தொல்லை படும்படி செய்வார்கள். நேரில் போய் பார்த்து விட்டும் வருவார்கள். உதாரணமாக தேவஸ்த்தான சீர்திருத்த சட்டம், இனாம் பூமி சட்டம் முதலியவைகளில் எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? எத்தனை தடவை திரும்பி வரும்படி செய்தார்கள்? அப்படியெல்லாம் இருக்க மனித சமூகத்தின் ஒரு பெரும் சமூகமாகிய விவசாயிகளை அடியோடு அழித்து அடிமைகளாக்கும் இக்கொடிய சட்டம் வெகு சுலபமாக நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால் தமிழ் மக்கள் கேவல நிலைக்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
பொருளாதாரத் துரையில் நம்மவர்களுக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட கொடுமை ஒருபுரமிருக்க இனி கல்வித் துரையிலும் அறிவுத் துரையிலும் நமக்கு ஹிந்தியாலும், காந்தி கல்வித் திட்டத்தாலும் வரப்போகும் கேட்டிற்கு அளவு கூற முடியாது. இவற்றை பொதுமக்கள் கூட்டோடு எதிர்க்கிறார்கள் என்றாலும் எதிர்ப்பை சரியானபடி நடத்தி கிளர்ச்சி செய்ய நாதி இல்லாமல் போய்விட்டது. திருடனைத் தடம் கேழ்ப்பது போல் நமது பிரதிநிதிகளாகச் சட்டசபையில் உள்ள தலைவர்கள் எதிரிகளின் ஒற்றர்களாக அமைந்து விட்டார்கள். நம்மைக் காட்டிக் கொடுப்பதற்கே அவர்கள் சட்ட சபையில் இருக்கிறார்கள் என்றுதான். சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களது ஆதரவுகளை நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பெற்றுவிட்டதாலேயே எதிரிகளின் காரியங்களுக்குப் பொதுமக்கள் ஆதரவு இருப்பதாக சர்க்காரும் கருதி வருவதாக தெரிகிறது வெளியில் உள்ள கட்சித் தலைவர்களும் இது விஷயத்தில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாகவோ, எடுத்துக் கொள்வதாகவோ தெரியவில்லை.
ஆதலால் கடன் நிவாரணச் சட்டம் ஒழியவும், ஹிந்தி முயற்சி அழியவும், காந்தி கல்வித் திட்டம் கைவிடும்படி செய்யவும் தமிழ் மக்கள் பெரியதொரு முயற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமுமான காரியமாய் இருந்து வருகிறது. பொருளைப் பற்றியாவது எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் சரியான பொறுப்பும், நம்பிக்கையும் உள்ள தலைவர்கள் யார் என்பது கடினமான பிரச்சினையாக இருந்து வருகிறது. யார் எப்படி இருந்த போதிலும் இந்த விஷயங்களையும் மற்றும் சில அரசியல் விஷயங்களையும் பற்றி ஆலோசித்து முடிவு செய்ய ஏப்ரல் மாதத்தில் ஒரு சர்வ ககஷி தமிழர்கள் மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டியது அவசியம் என்பதையும் அதிலிருந்து தக்கதொரு கிளர்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் மிக்க கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 20.03.1938
குடி அரசு- 1938 (1) 216
பார்ப்பனர்கன் ஆமியர்கணா£ மூதர்கணா? அவர்கள் மூதர்களே!
- ஒரு சந்தேகி
பார்ப்பனர்களிடம் ஆரியர்கள் என்பதற்கு என்ன குணம் இருக்கிறது? எதைக்கொண்டு அவர்களை ஆரியர் என்பது?
யூதர்களது புராதன பாஷையாகி எபிரேய பாஷையில் ' எல் ' என்பது கடவுள் என்ற அருத்தம் கொண்டதல்லவா?
இயேசு (தெய்வ குமாரன்) மனுஷ குமாரனாக அவதரிப்பார் என்பது எபிரேய பாஷையில் எழுதப்பட்ட பழய ஏற்பாடு சொல்லுகிறதும் உலகம் அறிந்த விஷயமல்லவா? பழய ஏற்பாட்டின்படி ஜெஹோவா'' பிரதானமான ஒரே கடவுளல்லவா?
இந்து மதத்துக்கும் யூதர் நாகரீகத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதிலிருந்து இந்து மதத்தின் ஆதீனக்காரர்களான பார்ப்பனர் யூதர்கள் தான் என்று யூகிக்க இடமில்லையா?
எருசலேம் தேவாலயமும் இந்து கோவில்களும் சுற்றுப்பிரகாரம், தெப்பக்குளம், கொடிமரம், மண்டபம் , மூலஸ்தானம், தூபம், பூசை முதலிய விஷயங்களில் ஒன்றுபட்டிருக்கிறது
பாலஸ்தீன நாட்டில் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவிலும் பிரதான புருஷர்களை தெய்வமாக கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. ஆகையால் இவ்வழக்கம் அங்கிருந்து தானே வந்திருக்கவேண்டும்?
யூதர்களின் ஜிஹோவா இந்துக்களின் சிவா என மறுவி இருக்கலாமல்லவா?
எல் என்ற எபிரேய பதம் வேல் என்று மறுவி இருக்காதா? யேசு பிறப்பார் என்ற யூத ஏற்பாடுப்படி பிறந்த பிள்ளையே தான் குமாரக்கடவுள் பிறப்பார் என்ற ஏற்பாட்டுப்பாகு ஏற்பட்டதாகாதா? பிள்ளையார் கோவிலுள்ள நாகம் அரசமரம் வேம்பு முதலியவற்றிற்கும் முறையே ஏதன் சர்ப்பத்திற்கும் தேவதாரு மரத்துக்கும் நன்மை தீமை அறியும் மரத்துக்கும் ஒற்றுமை இல்லையா? இவ்வொற்றுமைகள் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? 07 ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
யூதர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் கடவுள் முகத்திலிருந்து சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்பதற்கும் என்னவித்தியாசம். யூதர்கள் தீபதூபம் காட்டி மணியடிக்கின்றார்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் அதே மாதிரி அர்ச்சகர் என்பதற்கும் ஒற்றுமை இல்லையா?
யூதர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்து கொள்ளாமல் ஒதுக்கி நிர்ப்பவர்கள் என்பதற்கும், பார்ப்பனர்கள் மற்ற ஜாதியாரோடு கலந்துகொள்ளாமல்
ஒதுங்கி நிற்கிறதற்கும் ஒற்றுமை இல்லையா? யூதர்களுக்கு குடியிருக்க குறிப்பிட்ட நாடு இல்லை நாட்டுப்பற்றும் இல்லை என்பதற்கும் பார்ப்பனர்களுக்கு குறிப்பிட்ட ஊர் இல்லை என்பதற்கும் நாட்டுப்பற்று இல்லை என்பதற்கும் ஒற்றுமை இருக்கிறதா? இல்லையா?
யூதர்கள் தங்கள் சுகந்தேடுவதும் எப்படியாவது சரீரப்பாடுபடாமல் பொருள் தேடியலைவதுமான குணம் கொண்டவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்கள் தங்கள் சுயநலமும் எப்படியாவது பாடுபடாமல் பொருள்தேடி அலைகிறவர்கள் என்பதற்கும் பொருத்தம் சரியாக இல்லையா?
யூதர்கள் சிறிதும் தங்களை தவிர வேறு எதிலும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்துக்கொண்டு ஆளுவதில் கலந்துக்கொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்க வாளுகிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களை சுவாதீனம் செய்து கொண்டு ஆக்ஷியில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப்பார்க்கிறவர்கள். என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?
யூதர்கள் கதைகளும் சித்தாந்தங்களும் பகுத்தறிவுக்கு முரணான. கற்பனைகள் என்பது போலவே பார்ப்பனர்களின் புறாணங்களும் அவர்களது சித்தாந்தங்களும் போதனைகளும் பகுத்தறிவுக்கு முரணானதாக இருக்கிறதும் மிக மிக பொருத்தமானதாக இருக்கிறதா இல்லையா?
யூதர்கள் வீரங்கொண்டு மக்களை ஆளாமல் வகுப்பு வாதத்தாலும்
மற்றும் பிரிவினைகளாலும் பிரித்து வைப்பதில் கைதேரியவர்கள் போலவே பார்ப்பனர்களும் இருப்பதால் இருவரும் ஒரே வகுப்பினர் என்று சொல்ல இடமிருக்கிறதா இல்லையா?
வடிவத்திலும் நிரத்திலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றுபோல் இல்லையா?
இந்த பார்ப்பனர்களை ஆரியர்கள் என்பதை விட யூதர்கள் என்பது பொருத்தமாக இல்லையா? ஆகவே இப்பொருத்தங்களை சரியானபடி கவனித்து ஆறாய்ச்சி செய்து பார்த்து பார்ப்பனர்கள் யூதர்களா அல்லவா என்பதை தெரிவிக்கும்படி ஆராய்ச்சி ஆளர்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 20.03.1938
குடி அரசு- 1938 (1) 218
R-No- M. 2041
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆச்சாமியார் இந்திரஜாலம்!
சேலம் தகராறு மறுக்கமுடியாத ரஜுக்கள்
பொம்மைப் பிரதிநிதிகள் மெனனம்!
சேலம் தண்ணீர்த் திட்டத் தகராறு விஷயமாக சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜன் சார்பில் பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார். சென்னை அசம்பிளியில் கூறிய சமாதானம் வழக்கம் போல் மழுப்பல் சமாதானமாகவே இருக்கிறது. தகராறு பற்றிய பூரா விஷயங்களையும் அசம்பிளியில் விளக்கிக் கூறாமல் அவரது செயலுக்கு ஆதாரமாக விஷயங்களைத் திரித்துக் கூறுவது காங்கரஸ் ராஜ்ய தந்திர முறையானால் அந்த முறை ஆதரிக்கத்தக்கதா என்பதை சேலம் நகரத்தாரே முடிவு செய்ய வேண்டும். தண்ணீர் திட்டச் செலவு 24 லட்சம் ரூபாயில் 12 லக்ஷத்தைக் கடனாகவும் 12 லக்ஷத்தை மானியமாகவும் சர்க்கார் கொடுப்பதினால் தண்ணீர்த் திட்ட விஷயத்தில் சர்க்கார் அதிக கவலை செலுத்துவதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. தண்ணீர் திட்டத்துக்கு செலவாகும் 24 லக்ஷமும் பாழாகக் கூடாதென்னும் விஷயத்தில் சர்க்காருக்கு எவ்வளவு கவலையும் பொறுப்பும் உண்டோ அவ்வளவு கவலையும் பொறுப்பும் சேலம் நகரசபையாருக்கும் உண்டு சிக்கனத்தைக் கருதியும் உறுதியைக் கருதியும் பத்ராவதி டெண்டர் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது உண்மையானால் சேலம் நகரசபையார் குறுக்கே விழுந்து தடை செய்யவே மாட்டார்கள். ஆனால் சென்னை சர்க்கார் ஆதரிக்கும் பத்ராவதி கம்பெனியாரின் வார்படக்குழாய் உறுதியற்றதாகவும் அதிகச் செலவு பிடிக்கக் கூடியதாயும் இருப்பதால் சேலம் நகரசபையார் நம்புவதினாலேயே அவர்கள் பத்ராவதி கம்பெனியார் டெண்டரை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நீண்ட நாள் அனுபவத்தினால் உறுதியுடையதாக மதிக்கப்படும் பழைய வார்ப்பட இரும்புக் குழாய்களே மேலானவையென கனம் ஆச்சாரியார் கூறுவதற்கு ஆதாரமென்ன? கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி உறுதியானதாய் மதிக்கப்படும் வார்ப்பட இரும்புக் குழாயை சேலம் தண்ணீர்த் திட்ட வேலைக்கு சர்க்கார் நிபுணர்களிடம் அபிப்பிராயம் கேட்டபோது உபயோகிக்கக் கூடாதென்றும் சிமண்டு குழாய்களையே உபயோகிக்க வேண்டுமென்றும் சென்ற டிசம்பர் 4ந்தேதி ஜி.ஒ.நெ.1580- உத்தரவு அனுப்பியதை கனம் ஆச்சாரியார் அறியாரா? டிசம்பர் 4ந் தேதி பத்ராவதி கம்பெனி
குடி அரசு- 1938 (1) 220
குழாய்களை ஒப்புக்கொள்ளக் கூடாதெனக் கூறிய ஆச்சாரியார். சர்க்காரின் நிபுணர், டிசம்பர் 30ந் தேதி அதாவது 26 நாட்களுக்குப்
பிறகு பத்ராவதி குழாய்களை ஒப்புக்கொள்ளுமாறு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதின் மர்மம் என்ன? கரூர், திருப்பூர், பெஜவாடா முனிசிபாலிட்டிகள் தண்ணீர் திட்டங்களுக்கு ஹியூம் கம்பெனி குழாய்களை உபயோகித்து வரும்போது கேலத்துக்கு மட்டும் ஹியூம் கம்பெனி குழாய்கள் ஏன் விஷமாக வேண்டும். நாகப்பூர் நகரசபையில் தண்ணீர்த் திட்ட விஷயமாகக் கிளம்பிய ஒரு தகராறில் வார்ப்படக் குழாயை உபயோகிப்பதா சிமெண்டு குழாயை உபயோகிப்பதா என்னும் விஷயத்தை முடிவு செய்ய (1) மைசூர் சர்க்கார் மாஜி இஞ்சிநீயர் ரங்கையாவையும் (2) நைஜாம் சர்க்கார் சீப் இஞ்சீனியர் நவாப் எ.ஹசன்.
எர்டிங் பகதூரையும் (3) மத்திய மாகாண சர்க்கார் எக்ஸிகியூட்டிவ் இஞ்சினியர் மெக்கல்லி அவர்களையும் ஒரு கமிட்டியாக நியமித்தபோது அவர்கள் பரிசீலனை செய்து முடிவு செய்தபடி நாகப்பூர் நகரசபையார் சிமெண்டு குழாய்களை உபயோகித்து வேலை நடத்தி வருவதை கனம் ஆச்சாரியார் இதுவரை அறியவில்லையானால் இனியாவது அறிய முயல்வாரா? மற்றும் நாகப்பூர் நகரசபையாருக்கு பத்ராவதி கம்பெனியார். அந்தர் எடை 5ரூபா விகிதத்துக்கு வார்ப்படக் குழாய்களுக்கு டெண்டர் போட்டிருக்கையில் சேலம் திட்டத்துக்கு அந்தர் எடை 8 ரூபாய் விகித டெண்டர் அனுப்பியிருப்பது நயமானதென்றும் இலாபகரமானதென்றும் கனம் ஆச்சாரியார் கூறுவதற்கு ஆதாரமென்ன? சேலம் நகரசபையார். விளம்பரம் செய்திருந்தபடி வந்த 16 டெண்டர்களில் இந்தியன் ஹியூம் கம்பெனி டெண்டர் உட்பட மூன்று டெண்டர்கள் தானே சர்க்கார். நிபந்தனைப்படி பூர்த்தியான டெண்டர்களாயிருந்தன. அத்தகைய பூர்த்தியான டெண்டர்களில் உட்படாத பத்ராவதி கம்பெனி டெண்டருக்கு ஆச்சாரியார் சர்க்கார் சலுகை காட்டக் காரணம் என்ன? சர்க்கார் விதிப்படி பூர்த்தியான அந்த மூன்று டெண்டர்களில் எதை ஒப்புக்கொள்ளலாமென சேலம் நகரசபையார் சென்னை சர்க்கார் சானிட்டரி இன்சினீயரின் அபிப்பிராயம் கேட்ட போது ஹியூம் கம்பெனி டெண்டரே எல்லா வகைகளிலும் சிலாக்கியமானதென்றும் சீக்கிரத்தில் வேலை பூர்த்தியாகக் கூடியதென்றும் சென்ற நவம்பர் 11ந் தேதி அபிப்பிராயம் கூறியதை கனம் ஆச்சாரியார் மறைப்பதின் நோக்கம் என்ன? வார்ப்பட இரும்புக் குழாய்களே சிலாக்கியமானவை என கனம் ஆச்சாரியார் முடிவு கட்டியதற்கு ஆதாரமென்ன? வார்ப்பட இரும்புக் குழாய்களை உபயோகித்தால் வருஷா வருஷம் தண்ணீர் பம்பு செய்யும் போது துருப்பிடித்து தண்ணீர் வரும் அளவு குறைந்துவிடுமென்று 1112376 வெளிவந்த “ஹிந்து” பத்திரிகையில் லண்டன் இஞ்சினீயர்கள் சங்க அங்கத்தினரும், பெர்மிங்காம் தண்ணீர் சப்ளை பிரதம இஞ்சினீயருமான எப்.டப்ளியூ மெக்காலே எழுதியிருப்பதை கனம்
221 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆச்சாரியார் படித்துப் பார்ப்பாரா? அந்த வியாசத்தில் சிமெண்டு குழாய்களே சிலாக்கியமானவை யென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது சேலம் தண்ணீர்த் திட்ட தகராறு விஷயங்கள் இவ்வளவு தெளிவாக இருந்தும் கனம் ஆச்சாரியார் திறந்த சட்டசபையிலே இந்திரஜாலம் செய்து ஏய்க்கத் துணிந்து நிற்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம் சேலம் நகரசபை மெம்பர் தோழர் வெங்கடப்ப செட்டியாருக்கும் தோழர் சடகோப முதலியாருக்கும் செவ்வையாகத் தெரிந்திருந்தும் அசம்பிளியிலும் கெளண்சிலிலும் அவர்கள் இவ்விஷயங்களை விளக்கிக் கூறாதது ஆச்சரியமாகவே இருக்கிறது
சேலம் ஜில்லாப் பிரதிநிதிகளாக அசம்பிளியிலும் கெளண்சிலிலும் சுமார் அரை டஜன் பேர் இருந்தும் காங்கரஸ் கட்டுப்பாட்டுக்கு பயந்து அவர்கள் வாய்மூடி மெளனிகளாகவே இருந்து வருகிறார்கள். இத்தகைய பொம்மைப் பிரதிநிதிகளால் சேலம் ஜில்லாவுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன? மஞ்சள் பெட்டியை நிரப்பியதற்கு சேலம் ஜில்லா வாசிகளுக்குக் கிடைத்த பலன் இது தானா?
குடி அரசு - கட்டுரை - 27.03.1938
குடி அரசு- 1938 (1)
ப ப் 3
ஸ்தல ஸ்தாபனத் தேர்தல் முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்
ஏப்ரல் மாதத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்னும் முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளுக்கு தேர்தல் நடக்கப் போகின்றது. இத்தேர்தல்கள் சென்ற நவம்பர் மாதத்திலேயே நடந்திருக்க வேண்டியவைகளாகும் ஆனால் நவம்பரில் தேர்தல் நடத்துவதில் காங்கரஸ்காரர்களுக்கு சிறிது கஷ்டமிருந்தது. என்னவெனில் முனிசிபல் ஓட்டர்களாக அப்போது முனிசிபாலிட்டிக்கு வரி செலுத்துகின்றவர்கள் மாத்திரம் இருந்து வந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் பெரும்பாலோர் பார்ப்பனரல்லாதாராய். இருந்ததோடு சிறிது விஷயமறிந்த ஞானவான்களாகவும் இருந்தார்கள். அந்த ஓட்டர்களைக் கொண்டு தேர்தல் நடந்தால் பெரிதும் பார்ப்பனரல்லாதார்களும் அதுவும் மூன் இருந்தவர்களில் பலருமே வருவார்கள் என்றும் அதனால் பார்ப்பனர்களோ பார்ப்பனக் கூலிகளோ வர முடியாமல் போய்விடுமென்றும் கருதி அது சமயம் நவம்பரில் நடக்க வேண்டிய தேர்தலை நிறுத்தி விட்டு பெரிதும் பாமர மக்களைக் கொண்ட (அசம்பிளி) மஞ்சள் பெட்டி ஓட்டர்கள் அத்தனை பேரையும் முனிசிபல் ஓட்டர்களாக ஆக்க ஒரு சூக்ஷி செய்தார்கள்
சகல பார்ப்பனரும் ஓட்டர்கள்
அப்படிச் செய்தும் பார்ப்பன மந்திரிகள் தங்கள் இனத்தாரும்
தங்கள் கூலிகளும் கவுன்சிலுக்கு வரமுடியாது என்று கருதி சகல பார்ப்பனர்களும் ஓட்டர்களாகும்படியான மற்றோர் சூக்ஷி செய்தார்கள் அதென்னவெனில் “எழுதப் படிக்கத் தெரிந்தவர் எல்லோரும் ஓட்டர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்” என்று ஒரு சூழ்ச்சி செய்தார்கள். இதனால் அந்த முறைப்படி பார்ப்பனர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் ஆண் பெண் அத்தனை பேரும் ஓட்டராக முடிந்தது ஏனெனில் பார்ப்பனர்களில் இன்றைய சர்க்கார் கணக்குப்படி 100க்கு 100 பேர் படித்திருக்கிறார்கள். அவர்களில் படியாதவர்கள் ஆணிலோ பெண்ணிலோ ஒருவர் கூட காண முடியாது. அதிலும் முனிசிபல் பட்டணங்களாகிய நகரங்களில் கண்டிப்பாய் பார்ப்பனர்களில் ஒருவர் கூட படியாதவர்கள் இருக்கமாட்டார்கள். கோவில்மணி, உண்டை கட்டி, காப்பிக் கடை, சந்து மாமா, அம்மங்கார் ஈராக சகலரும் படித்து 23 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இருக்கிறார்கள். “இந்த அக்கிரமமான அந்நிய ஆட்சியாகிய சைத்தான் ராஜாங்கத்தில்'” பார்ப்பனரல்லாதார் தான் 100க்கு 5 பேர், 6 பேர், பெண்களில் 1000க்கு 5 பேர் 8 பேர் படித்திருக்கிறார்களே ஒழிய பார்ப்பனர்களைப் பொருத்தவரை இருபாலரும் 100க்கு 100 பேர். படித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன என்று கேட்டால் பார்ப்பனர்கள் தேசபக்தர்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் ராஜ பக்தர்கள். என்றும் அதனால் பார்ப்பனரல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்படவில்லை
என்றும் இந்த அந்நிய ஆட்சியை ஒழித்து சக்கரவர்த்தியையும் அழித்து விட்டால் தான் பார்ப்பனரல்லாதாருக்கும் கல்வி வருமென்று சொல்லுகிறார்கள். உண்மையாகவே பார்ப்பனரல்லாதாருக்கு பிறந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்களில் அநேகர் இதை நம்பி பார்ப்பானுக்கு குனிந்து கொடுக்கிறார்கள். அந்நிய அக்கிரம ஆட்சியிலே பார்ப்பான் மாத்திரம் 100க்கு 100 பேர் படிக்க முடிந்த சூழ்ச்சி என்ன என்பது இந்த உண்மைச் 'சூத்திரர்களுக்கு' தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்கட்டும் இன்று படித்தவர்களுக்கு எல்லாம் ஓட்டு என்பதால் பார்ப்பனர்கள் அத்தனை பேரும் ஓட்டர்களாகி சகல வார்டுகளிலும் கலகம் செய்யத்தக்க சக்தி அடைந்து விட்டார்கள். பார்ப்பனரல்லாதாரில் படிப்பு இருந்தவர்கள் எல்லாம் அதாவது மிக குறைந்த எண்ணிக்கையாய் இருந்தவர்கள் அவர்களுக்கு உள்ள வீடு சொத்து பூமி ஆகியவைகளைக் கொண்டு ஏற்கனவே ஓட்டராகி இருந்ததால் அவர்களில் அதிகம் பேர் புதிதாக ஓட்டராக முடியவில்லை.
அதிகாமிகள் கொடுமை ஒருபுறம் அதோடு கூடவே காங்கரஸ் ஆட்சிக்குப் பயந்த ரிவினியூ அதிகாரிகளும் பார்ப்பன அதிகாரிகளும் ஓட்டர்களை பதிவு செய்வதிலும் காங்கரஸ் காலிகளுக்கே அதிக இடம் கொடுத்து வந்தார்களே தவிர அவர்களால் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாமல் போய்விட்டது இதனாலும் பார்ப்பனரல்லாதார்கள் ஓட்டுரிமை அவர்களது ஜன சங்கைக்கு தகுந்தபடி ஏற்பட வழி இல்லாமல் போய்விட்டது
மந்தியிகள் தலையீடு. இவ்வளவு மாத்திரமல்லாமல் இப்போது இருந்து வரும் முனிசிபல் நிர்வாகத்திலும் பார்ப்பன மந்திரி ஆதிக்கம் அனாவசியமாய் பிரவேசித்து எந்தெந்த வழிகளில் நிர்வாகத்தின் மீது பொதுமக்களுக்கு
அதிருப்தி ஏற்பட முடியுமோ அவற்றிற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது. இவ்வளவும் செய்து இப்போது தங்களுக்கு ஆங்காங்கு சிறிது செளக்கியம் ஏற்பட்டிருக்கிறது என்கின்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகே 4 மாதம் கழித்து தேர்தல் நடக்க உத்திரவு போட்டிருப்பதோடு பழய வர்ணப்
குடி அரசு- 1938 (1) 224
பெட்டி (மஞ்சள்) புரட்டில் உள்ள அளவுக்கு மீறிய நம்பிக்கையில் முனிசிபல் தேர்தலுக்கும் வர்ணப் பெட்டி முறைவைத்து நடத்த உத்திரவு போட்டிருக்கிறார்கள்.
காங்கரஸ் காலித்தனம்
இவ்வளவும் செய்ததோடு அவர்கள் திருப்தியடையாமல் இனியும் அவர்களாலான காரியங்கள் அதாவது தேர்தல் காலங்களில் அவர்கள். வழக்கமாக நடத்தி வரும் காலித்தனம் முதலியவைகளும் செய்வார்கள். அதாவது கொடி ஊர்வலம் என்னும் பேரால் வசவு பஜனை, எதிரிகள் வீட்டின் மீது கல், மண் வாரி வீசுவது, கூட்டங்கள் போட்டு அயோக்கியத்தனமாய் போக்கிரித்தனமாய் வேண்டுமென்றே பொய்யும் புளுகும் ஆபாசப் பேச்சுகளும் கொட்டி அளப்பது, காங்கரஸ் அல்லாதார்கள் கூட்டம் போட்டால் அங்கு போய் கேள்வி கேட்பது என்னும் பேரால் கலகம் செய்வது கல் மண் வாரி இறைப்பது, பாம்பு விடுவது, காந்திக்கு ஜே! சத்தியமூர்த்திக்கு ஜே! உபயதுல்லா குப்புசாமிக்கு ஜே! போட்டு தொல்லை விளைவிப்பது, பக்கத்தில் தப்பட்டை அடிப்பது, கள்ளு வாங்கிக் கொடுத்து போதையேற்றி கலகம் செய்யும்படி அனுப்புவது முதலான பல காரியங்கள் செய்வதோடு. காங்கரஸ் கட்சி மந்திரிகள் பெயரைச் சொல்லி போலீசார்களை மிரட்டி அவர்களை தங்கள் கடமைகளைச் செய்ய ஒட்டாமல் செய்து கூட்டங்களை கலைப்பது, இவைகளோடு மாத்திரமல்லாமல் இது சம்பந்தமான அதிகாரிகள் பார்ப்பனர்களாய் இருந்து விட்டால் அவர்களது வகுப்புணர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு பச்சையாக அடி தடிக்குப் புறப்படுவது முதலிய காரியங்களை செய்துதான் தீருவார்கள்.
பல காரணங்களால் ஒன்று, இரண்டு, மூன்று இடங்களில் இம்மாதிரி காரியங்கள் நடக்காதிருக்கலாம் என்றாலும் இந்த முனிசிபல் ஜில்லா போர்டு தேர்தல்களில் 100க்கு 90 இடங்களில் காங்கரஸ் தோழர்கள் இந்த முறையில் தான் எலக்ஷன் காரியங்கள் நடத்தப் போகிறார்கள் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை: காஞ்சீபுரம் போன்ற இடங்களில் இப்போது காங்கரஸ்காரர்கள் நடந்து வரும் மாதிரியும், அதற்கு சில காலிகள் ஆதீனத்தில் உள்ள பத்திரிகையின் தூண்டுதலும் இதற்கு போதிய உதாரணமாகும்.
ஸ்தல ஸ்தாபனங்கவில் காங்கரகக்கு என்ன வேலை?
இவை ஒரு புறமிருக்க ஸ்தல ஸ்தாபனங்களை காங்கரஸ்காரர்கள் கைப்பற்ற வேண்டும் என்கிற ஆத்திரம் ஏன் என்பதை நாம் முதலில் சிந்திக்க வேண்டும். சுமார் 18 வருஷ காலமாகவே “ஒத்துழையாமை” 25 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
காங்கரஸ் ஏற்பட்டு பதவிகளை வேட்டையாட சூழ்ச்சி செய்த காலமாகிய 1920ம் வருஷம் முதல் கொண்டே ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில்
கட்சிப் பிரதிகட்சி பேரால் காங்கரஸ் பிரவேசம் கூடாது என்றும் தனிப்பட்ட நபர் போட்டி போட்டுக் கொள்ளலாம் என்றும் கூறி வந்திருப்பதோடு ஸ்தல ஸ்தாபனங்களைப் பொருத்தவரை கட்சிக் கொள்கைகளில் வித்தியாசம் இல்லை என்றும், இருந்தாலும் மேலே உள்ள இலாக்காவால் செய்யப்பட்ட சட்டப்படி தான் நடக்க வேண்டுமென்றும் சொல்லி வந்திருக்கிறோம். இதை இப்போதைய முதன் மந்திரியும் அப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கு விரோதமாக எவ்வித
சமாதானமும் இதுவரை யாரும் கூறவுமில்லை அல்லது செய்கையாலாவது எவ்வித மாறுதலும் காட்டப்படவில்லை.
ஆகையால்ஸ்தலஸ்தாபனங்களில் க௯்ஷிப்பெயரை உபயோகிப்பதானது உபயோகித்துப் போட்டி போடுகிறவர்களுக்கு சொந்தத்தில் கவுன்சிலராகவோ. போர்டு மெம்பராகவோ ஆவதற்கு தகுதியும் யோக்கியதையும் இல்லை என்றோ தான் அர்த்தமாகுமே தவிர வேறு பொருள் அதிலிருப்பதாக
யாராலும் கூறமுடியாது
முட்டான் காரணவ்கன்
அப்படிக் கூறுவதானால் தோழர் சத்தியமூர்த்தியாரவர்கள். மானாமதுரையிலும் மற்ற இடங்களிலும் சொன்னதுபோல் அசட்டுத்தனமான. முட்டாள்தனமான அரசியல் ஞானமில்லாத காரியங்களைத்தான் சொல்லக்கூடும். அதாவது “காங்கரசுக்கு ஓட்டு போட்டுவிட்டால் மழை பெய்யும், போலீஸ்காரன் குனிந்து சலாம் போடுவான், வரி இருக்காது, வரி குறைக்கப்படும்” என்றெல்லாம் முட்டாள்தனமாகவோ அல்லது மக்களை ஏமாற்ற வேண்டுமென்ற அயோக்கியத்தனமாகவோ பேசலாம் ஆனால் அவை உண்மையா? அந்தப்படி நடக்குமா என்று பார்த்தால் அப்படிச் சொல்லி ஓட்டு வாங்கிய டில்லி அசம்பிளி மெம்பர், சட்டசபை மெம்பர் ஆகியவர்கள் எங்கு மழை பெய்யச் செய்தார்கள்? எங்கே போலீஸ்காரன் குனிந்து சலாம் போட்டான்? எந்த வரி எடுபட்டது என்று பார்த்தால் விளங்கிவிடும். அவ்வளவு தூரம் கூட போக வேண்டியதில்லை. அப்படிச் சொன்ன தோழர் சத்தியமூர்த்தி இன்று எங்கே? என்ன சொல்லுகிறார் என்று பார்த்தாலே போதும். விலாசம் தெரியாமல் இருந்து கொண்டு 2 மாதம் 3 மாதத்துக்கு ஒரு முறை மந்திரிகள் பேரில் சூசனையாய் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
சட்டசபை மெம்பரான பிரசாரகர்கன்
மற்ற பிரசாரகர் கதி என்னவென்று பார்த்தால் அவர்கள் சட்டசபை மெம்பர்களான பிறகு நமது வரிப்பணத்தில் மாதம் 75 ரூபாய் சம்பளம்
குடி அரசு- 1938 (1) 226
வாங்கிக் கொண்டு பார்ப்பன மந்திரி, மலத்தை ஆகாரம் என்று சொன்னால் “ஆம், நானும் ஆராய்ச்சி செய்தேன், அதில் வைட்டமின். ABCD., கூட இருக்கிறது” என்று கூறிக்கொண்டு வயிறு வளர்க்கிறார்கள். இவை தவிர மஞ்சள் பெட்டியால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்று கேட்கிறோம் ஆகவே கட்சி முறையில் தேர்தல் கடந்த சட்ட சபையிலேயே ஒரு நன்மையும் செய்ய முடியவில்லை என்றால் முனிசிபாலிட்டியில் தாலூகா போர்டில் கட்சிப் பிரதி கட்சியால் என்ன நன்மை ஏற்பட்டு
விடும் என்று கேட்கின்றோம். கட்சி புகுந்தால் கலகம் குழப்பம் காலித்தனம் ஏற்பட்டு நிர்வாகம் குட்டிச் சுவராகலாம்
முன்பு கூறியது கொஞ்ச காலத்துக்கு முன் இதே தேர்தல்கள் நடந்த காலத்தில் காங்கரஸ்காரர்கள் தாங்கள் போட்டி இடுவதற்கு வேறு பல காரணங்கள். சொன்னார்கள். என்றாலும் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்ற பல ஸ்தல ஸ்தாபனங்களில் அவைகள் பரிக்ஷிக்கப்பட்டாய் விட்டது
அதாவது காங்கரசுக்காரர்களல்லாதார் மெஜாரிட்டியாய் இருக்கும் ஸ்தல ஸ்தாபனங்களில் கட்சி இருப்பதாகவும் கட்டுப்பாடு இல்லையென்றும்
கண்ட்ராக்ட் ராஜ்ஜியமாயிருக்கிற தென்றும், லஞ்சம் தாண்டவமாடுகிறதென்றும், வகுப்பு உணர்ச்சியில் நிர்வாகம் நடத்தப்படுகிறதென்றும் தேசீய உணர்ச்சி இல்லை என்றும், பலவாராக குறைகூறி மக்களை ஏமாற்றி ஓட்டு பெற்றார்கள். அந்தப்படி ஓட்டுப்பெற்று மெஜாரிட்டி அடைந்து கைப்பற்றிய மூனிசிபாலிட்டியையும் ஜில்லா போர்டையும் எந்த
விதத்தில் மேலே சொன்ன குற்றங்களில் இருந்து விலக்கி தப்பித்துக் கொண்டனர் என்று கேட்கின்றோம்
இன்று காங்கரஸ் மெஜாரிட்டி பெற்ற எந்த முனிசிபாலிட்டி ஜில்லா போர்டில் கட்சி இல்லை என்று கூற மூடியும். எதில் கட்டுப்பாடு இருக்கிறது என்று சொல்ல மூடியும். காங்கரஸ் கைப்பற்றிய பல ஜில்லா போர்டுகளில் தங்களுக்குள்ளாகவே நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள். வந்தன. சில தோற்றும் விட்டன.
காங்கரஸ் மெஜாரிட்டியாய் வந்த முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவற்றில் காங்கரசின் பேரால் நிருத்தப்பட்ட தலைவர்கள் தோற்றார்கள். வெளிப்படையாகவே காங்கரஸ் மெம்பர்கள் எதிர்கட்சித் தலைவருக்கு ஓட்டு செய்தார்கள். சிலரதில் பணம் வாங்கிக் கொண்டு எதிரிகளுக்கு ஓட்டு செய்தவர்கள் என்று சந்தேகப்பட்டு அடியோடு ராஜினாமாச் செய்யச் செய்தார்கள்.
227 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சிலரதில் எதிரிக்கு ஓட்டு போட்டவர்களை காங்கரசிலிருந்து தள்ளி வைத்து மெம்பர் பதவியை ராஜினாமா கொடுக்கும்படி செய்து பிறகு அதே நபருக்கு மந்திரி வேலை கொடுத்தார்கள். காங்கரசின் பேரால். வந்தவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருந்தவர். காங்கரசுக்காரராக்கப் பட்டிருக்கிறார். பல ஸ்தாபனங்களில் கட்சி கலகம் மாகாண கமிட்டி விசாரணை சப்கமிட்டி விசாரணை ஆகியவைகளில் இருக்கின்றன. கண்டிறாக்ட் ராஜ்யம் என்பதும் மெம்பர் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதும் காங்கரஸ்காரர்கள் 100க்கு 75 பேர்களாக உள்ள ஸ்தல ஸ்தாபனங்களில் நடைபெற்று வருகிறது
குறிப்பாக சென்னை கார்ப்பரேஷனில் கவுன்சிலர்கள் கண்ட்ராக்ட் சம்பந்தமிருப்பதும் கண்ட்றாக்டர்கள் இடம் லஞ்சம் வாங்குவதும் உத்தியோக நியமனத்துக்கு லஞ்சம் வாங்குவதும் காங்கரஸ் பத்திரிகைகளிலேயே வெளியாகி அதை ஆதாரமாய் வைத்து காங்கரஸ் கமிட்டியும் விசாரித்து சில காங்கரஸ் கவுன்சிலர்களை அக்கமிட்டி தண்டித்து அதை ஆதாரமாய் வைத்து காங்கரஸ் மந்திரியையும் காரியங்கள் செய்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த குற்றச் சாட்டை ஒரு காங்கரஸ் தினசரி, பார்ப்பனரல்லாத காங்கரஸ் மெம்பர்கள் மீது சுமத்தி பார்ப்பன காங்கரஸ் மெம்பர்களை தப்பித்து வைக்க பாடுபட்டது என்றாலும் பிறகு காங்கரஸ் பார்ப்பன கவுன்சில் மெம்பர்களும் லஞ்சம் வாங்கியதாக வெளியாக்கப்பட்டு விட்டது. இந்த மாதிரியான இழிவான காரியம் சுமார் 15, 20, 25 வருஷங்களுக்கு முன்னால் ஈரோடு முனிசிபாலிட்டியில் திருட்டு, போர்ஜரி, லஞ்சம், கண்ட்றாக்ட்டு பித்தலாட்டம் நடக்காத சங்கதி நடந்ததாக தீர்மான புத்தகத்தில் நுழைய வைத்தல் போகாத ஊருக்கு போனதாக பொய் பில் கொடுத்து படிவாங்குதல் சொந்தக்காரனுக்கு வாரண்டுக்கு முனிசிபல் பணத்தில் செக் எழுதிக் கொடுத்து தப்பித்துக் கொள்ளுதல் முதலிய பல காரியங்கள் நடந்திருக்கலாம். ஆனாலும் ஜஸ்டிஸ் கட்சியின் 17 வருஷத்திய ஆட்சியில் காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களாகிய சென்னை கார்ப்பரேஷன் முதலிய இடங்களில் நடந்தது போல வேறு எங்காவது காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்
கண்ட்ராக்ட் ராஜ்யம் என்று பேசப்படுகிறது. ஆனால் சேலத்தைப் பாருங்கள் மந்திரிசபையே கண்ட்ராக்ட் ராஜ்யமாக ஆகிவிட்டதென்று சேர்மென் முதல் 11 கவுன்சிலர்கள் ராஜிநாமா கொடுத்து மந்திரி சபை வண்டவாளத்தை வெளியாக்கி வருகிறார்கள். இவற்றிற்கு எந்த தேசபக்தர் தேசீய வீரர் பதில் சொன்னார்.
திருச்சி ஜில்லா போர்டில் சட்டசபை மெம்பர்கள்போல் மெம்பர்களுக்கு சம்பளம் ஏற்படுத்திக் கொண்டார்கள். காரணம் கேட்டால் மெம்பர்களுக்கு சாப்பாட்டிற்கு வழி என்ன என்கிறார்கள்.
குடி அரசு- 1938 (1)
ப ப் 8
வகுப்பு உணர்ச்சி இல்லையா?
ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கரஸ்காரர்களிடம் வகுப்பு உணர்ச்சி இல்லையா என்பதற்குக்கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி நியமனத்தையும், அதன் கதையையும், ஸ்கூல் எட்மாஸ்டர் 10 ஸ்தானம் காலிக்கு 10 பார்ப்பனர்களை நியமித்ததையும் மற்றும் இஞ்சிநியர் ரிவன்யூ அதிகாரி முதலிய பதவிகளுக்குக் கார்ப்பரேஷன் நடந்து கொள்ளும் யோக்கியதையையும் பாருங்கள்:
காங்கரஸ்காரர்கள் பாப்பர்களா?
காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியாரை மனதில் வைத்து பணக்காரர்கள் ராஜ்ஜியம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இன்று காங்கரசின் பேரால் போட்டி போடுகிறவர்கள் எல்லோரும் பாப்பர்கள். இன்சால்வெண்டுகளா? அதில் பணக்காரர்கள் இல்லையா என்று பார்த்தால் அந்த வண்டவாளமும் விளங்கிவிடும். பணம் கொடுக்கிறவர்கள். கிடைத்த வரையில் பணக்காரர்களை போட்டுக் கொள்கிறார்கள். கிடைக்காவிட்டால் “ஏழைகளை” போடுகிறார்கள். ஏழைகளைப் போட்டால் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? கண்டிராக்டு எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் லஞ்சம் வாங்க வேண்டும், இல்லாவிட்டால் முனிசிபாலிட்டியில் சம்பளம் போட்டுக் கொள்ள வேண்டும், ஒன்றும் முடியாவிட்டால் மந்திரிகளிடமும் அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கு காரியங்கள் சாதித்துக் கொடுப்பதாக தரகுவேலை செய்யவேண்டும். இவற்றைத் தவிர வேறு எந்த வழியில் ஏழைகள் பிழைக்க மூடியும் - முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு சட்டசபை மெம்பர்கள் பதவி வகிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
பெரிய மானக்கேடு
இவைகளையெல்லாம் விட காங்கரஸ்காரர்களின் பெரிய மானக்கேடான காரியம் என்னவென்றால் காங்கரஸ் காரனல்லாதவராய் இருந்த காலத்தில் எவன் ஸ்தல ஸ்தாபனங்களில் திருடினானோ, கொள்ளையடித்தானோ, திருடினான், கொள்ளை அடித்தான், போர்ஜரி பண்ணினான், பொய் கணக்கு பொய் பில்லு போட்டு பணம் சம்பாதித்தான் கண்ட்றாக்டில் கொலை பாதகமாய் நடந்து கொண்டான்.
என்று கூப்பாடு போட்டார்களே அவனேயே காங்கரஸ் சார்பாய் காங்கரஸ்: மெம்பர்கள் நிறுத்துகிறார்கள் என்றால் காங்கரசின் யோக்கியதைக்கு வேறு எதை உதாரணமாகச் சொல்லுவது என்பது நமக்கு புரியவில்லை.
“காலிகள் 100 - க்கு 90 காங்கரசில்??
பஞ்சப் மந்திரியும் தோழர் கல்யாணசுந்தர முதலியாரும் கூறியது போல் “அயோக்கியர்கள், திருடர்கள் உழைத்துச் சாப்பிட முடியாத 20 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
சாப்பாட்டுக்கு வேறு வழியில்லாத தத்தாரிகள், காலிகள் ஆகிய
கூட்டங்களில் 100க்கு 90 பேர்கள் காங்கிரசை தஞ்சமடைகிறார்கள், காங்கரசில்: புகுந்துவிட்டார்கள்” என்று சொன்னது போல்தான் இருக்கிறது. இன்றைய நிலைமை மற்றும் காங்கரஸ்காரர்கள் ஆள் பொறுக்கும் யோக்கியதையை என்னவென்று தான் சொல்லவேண்டி இருக்கிறது. இதைப் பற்றி காங்கரஸ்காரர்கள் அந்த மந்திரி மீது கூட கோபித்துக் கொண்டார்களாம். கோபித்து என்ன செய்வது தங்களுடைய ஸ்தாபனத்தை சுத்தப்படுத்திக் கொள்ள யோக்கியதை இல்லாத இவர்கள். மனதார தெரிந்து அயோக்கியர்களையும் காலிகளையும் சேர்த்துக்கொண்டு பதவிக்கு நிறுத்தி மெஜாரட்டி ஸ்தானம் பெறப்பார்க்கும் இவர்கள் நாட்டை, மனித சமூகத்தை, ஸ்தாபனங்களை பரிசுத்தப்படுத்தப் போகிறோம் என்று சொன்னால் அறிவாளி நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்? தோழர் கல்யாணசுந்தர முதலியார் 25.3.38ந் தேதி “நவசக்தி” தலையங்கத்தில் எழுதியுள்ள வாசகங்களை வாசகர்களுக்கு, ஓட்டர்களுக்கு எடுத்துக் காட்டிவிட்டு இதை முடிக்கிறோம்
அதாவது
“புன்மை (அயோக்கிய) சிந்தையுடைய “அறிஞர்” (படித்த
அயோக்கியர்)கள் வழியே பெரிய பெரிய அமைப்புகள் (ஸ்தாபனங்கள்)
சிக்கிக் கொண்டு தவிக்கின்றன. அவைகளைக் கருவிகளாகக் கொண்டே தற்கால “அறிஞர்கள் (அற்பர்கள்) தங்கள் சுயநலங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்”
என்றும்,
“நாளுக்கு நாள் ஜனநாயகம் (சுயராஜ்யம்) என்னும் பெயரால் அமைப்புகள் (ஸ்தாபனங்கள்) பலவும் குண்டர்கள் (காலிகள்) வசப்பட்டே வருகின்றன. ஸ்தல ஸ்தாபனங்கள் சட்டசபைகள் பத்திரிகாலயங்கள்... குண்டர்கள் (காலிகள்) வயப்பட்டு வருங்காலம்
நேர்ந்திருக்கிறது'”
என்றும்,
“*காந்தீயத்தை” “அறிவுக்” குண்டர்கள் (படித்த சூட்சிக்கார அயோக்கியர்கள்) தங்கள் வழியே திருப்பிப் பாழ்படுத்துகிறார்கள்'”
என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
(இது 25.3.38 “நவசக்தி” தலையங்கம் 8வது பக்கம் 2வது 3வது கலத்தில் உள்ள வாசகமேயாம்) இதில் பிராக்கட்டுக்குள் இருப்பவை
“குடி அரசு" ஆசிரியரால் நவசக்தி ஆசிரியர் கருத்துப்படி விளக்கப்பட்டதாகும் ஏனெனில் குண்டர்கள் என்பது காலிகள் என்று முன்னமே காந்தியாராலும்,
குடி அரசு- 1938 (1) 230
விளக்கப்பட்டிருக்கிறது. நவசக்தியிலும் இதே பொருளை பல தடவை எடுத்தாளப்பட்டிருக்கிறது. அறிஞர் என்பதற்கு அற்பர்கள் அயோக்கியர்கள் என்று போட்டதின் கருத்து அறிஞர் என்ற வார்த்தைக்கு "' இந்த குறிப்பு (இன்வெர்டட் கமா) நவசக்தி ஆசிரியர் கொடுத்திருக்கிறார். ஆகவே தற்கால காங்கரஸ், அதன் தலைவர்கள், அதனால் கிடைத்த ஸ்தாபனங்களை கையாளுகிறவர்கள், அவர்களது கருத்து அவர்கள் நடந்து கொண்டிருக்கும் மூறை ஆகியவை எல்லாவற்றைப் பற்றியும் தோழர்கள் யாராயிருந்தாலும் எக்கட்சிக்காரராயிருந்தாலும் நன்றாய் யோசித்து ஸ்தல ஸ்தாபன தேர்தல் தொண்டில் இறங்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 27.03.1938
231 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சேலத்துக்கு என்ன பதில்
இது என்ன கத்தமிக்காய் பட்டணமா?
இன்று பதவியில் உள்ள மந்திரிகள் சத்திய கீர்த்திகளாம், மகா யோக்கியர்களாம், தேசாபிமானத்துக்காகவும், மக்களுக்கு நன்மை செய்வதற்குமாகவே மந்திரி வேலை பார்க்கிறார்களாம். அவர்கள் தான் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாம். அதற்கு ஆதாரம் எலக்ஷனில் மெஜாரிட்டி ஓட்டுகளால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதுதானாம்
மற்றும் அவர்களுக்கு உதவியாய் அவர்களது கட்சியில் காங்கரசின்.
பேரால் இருக்கிற சட்டசபை மெம்பர்களும் காரியதரிசிகளும்கூட அவர்களைப் போலவே மகா யோக்கியர்களாம், உத்தமர்களாம், கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதர்களாம். ஆதலால் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சரியானவைகளாம். அக்காரியங்களைப் பற்றி வேறு
யாரும் ஆக்ஷபணை சொல்லக்கூடாதாம். அப்படி மீறி யாராவது ஆக்ஷேபணையோ குறையோ சொல்லுகிறவர்கள் தேசபக்தர்கள் அல்லாதவர்களாம். தேசாபிமானம் இல்லாதவர்களாம். சுயநலக்காரர்களாம். அவ்வளவு மாத்திரம் அல்லாமல் யோக்கியர்கள் கூட அல்லவாம் கெட்ட எண்ணக்காரர்களாம். இவையும் இவை போன்றனவுமேதான் இன்றைய மந்திரிகள் முதல் அவர்களுடைய காரியதரிசிகள், கூலிகள்,
பத்திரிகைகள் முதலாகியவர்கள் வரை எல்லோர்களுடைய சகல செய்கைகளுக்கும் சமாதானமாக சொல்லப்பட்டு வருகின்றன.
பழைய மந்திமிகள்
இந்த மந்திரிகள் பதவிக்கு வரும் காலம் வரையில், மந்திரி பதவி வைத்து வந்தவர்கள் எல்லோரும் பொது ஜன ஓட்டினாலும், மெஜாரிட்டி பலத்தினாலும் பொது ஜனப்பிரதிிதி என்கின்ற உரிமையினாலும் மற்றும் தங்களுடைய உண்மையான யோக்கியதாம்ஸம் யோக்கியமான நடத்தை முதலியவைகளாலுமே மந்திரி பதவி வகித்து சட்டத்திற்கு உட்பட்டு தங்களால் கூடுமானதை செய்து வந்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, அவர்கள் பதவியிலிருந்த 17 வருஷங்களில் செய்த சகல: காரியங்களுக்கும் அப்போது மாத்திரமல்ல இப்போதும் சமாதானம் சொல்லித் தாங்கள் செய்தது சட்டப்படியும் ஒழுங்கு ஒழுக்கம் ஆகிய
குடி அரசு- 1938 (1) 23
ப்
குணங்கள் படிக்கும் மக்களுக்கு கொடுத்த வாக்குப்படிக்கும் நியாயமானது என்பதை ருஜுவு செய்யத் தயாராய் இருக்கிறார்கள் உதாரணமாக ஒன்று இரண்டு சம்பவங்களையும் எடுத்துக் காட்டுவோம்
ஜஸ்டிஸ் மந்திமிகள் செயல்
ஜஸ்டிஸ் மந்திரிகளை காங்கரஸ்காரர்கள் நிலவரி குறைக்கவில்லை என்று குற்றம் சொன்னார்கள். அதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் “பொருளாதார (பொக்கிஷ) இலாகா வரி இலாகா எங்கள் கையில் இல்லை. அவை சட்டப்படி சர்க்கார் மெம்பர் கையில் இருக்கிறது” என்று சொன்னதோடு தங்களால் கூடுமானவரை சர்க்காரை நெருக்கிக் கேட்டு வரி குறைக்கச் செய்கிறோம் என்று சொல்லி நிலவரியில் ரூபாய்க்கு 2 அணா கில இடங்களில் 3 அணா சில இடங்களில் 4 அணா வீதம் குறைக்கச் செய்தார்கள்.
இப்படிச் செய்ததும் கூட தங்களுக்கு அந்த அதிகாரமில்லாதபோது சர்க்காரை நெருக்கி வரி குறைக்கச் செய்தார்கள்:
அப்படிஇருந்தும் நமது காங்கரஸ் யோக்கியர்கள் இதையும்
குற்றம் சொன்னார்கள். என்ன குற்றம் சொன்னார்கள் என்றால் “ஏன்: 100க்கு 50 வீதம் குறைக்கவில்லை? முடியாவிட்டால் 33 வீதமாவது ஏன் குறைக்கக் கூடாது” என்று கேட்டார்கள்
காங்கரஸ்காரர்கள் குறும்பு
அதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் “எங்களால் இவ்வளவுதான் முடிந்தது. அதிகாரமில்லாத துறையில் நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று உண்மையைச் சொல்லிக் கொண்டார்கள். இதற்கு காங்கரஸ்காரர்கள் குறிப்பாக தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டித் தலைவராய் இருந்த தோழர் சத்தியமூர்த்தியாரும் மற்ற காங்கரஸ் தலைவர்களும் “அந்தப்படி குறைக்க உங்களுக்கு அதிகாரமில்லையானால் நீங்கள் குறைக்க வேண்டும் என்று சொன்னதை பொக்கிஷ மந்திரி ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் உடனே ராஜிநாமா கொடுத்துவிட்டு வெளியில் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் “எங்களுக்கு அதிகாரமில்லாததை செய்யச் சொல்லுவதும், செய்யாவிட்டால் ராஜிநாமா கொடுப்போம் என்பதும் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் முரணானது என்பதோடு, அம்மாதிரி செய்வது பொது ஜனங்களுக்கும் சர்க்காருக்கும் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது” என்றும் சொன்னார்கள். இந்த சமாதானத்தை வைத்துக் கொண்டு காங்கரஸ்காரர்கள் பொது ஜனங்களிடம் “ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சுயமரியாதை இழந்து மந்திரி பதவியில் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று விஷமப் பிரசாரம் செய்தார்கள். பாமர மக்களில் மடையர்களும் முட்டாள்களுமாய் இருந்த பல ஜனங்கள் இதை நம்பி மஞ்சள் பெட்டியை நிரப்பினார்கள் 8 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இன்றைய மந்திரிகள்
இது போன்ற இன்னும் அனேக காரியங்களுக்குப் பல உதாரணங்கள்
எடுத்துச் சொல்ல விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் நாம் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு போக வேண்டியது அவசரமாயிருக்கிறபடியால் அவ்விஷயங்களை விவரிப்போம். ஜஸ்டிஸ் மந்திரிகள் நிர்வாகத்தில் கண்ணியமும், நாணயமும் சிறிதும் சந்தேகப்படுவதற்கு இடமில்லாத
மாதிரியிலும், அவர்களது சொந்த எதிரிகளோ அரசியல் எதிரிகளோ: ஏமாற்றமடைந்த எதிரிகளோ கூட குறை கூறுவதற்கு இடமில்லாமலும் இதுவரை யாராலும் குறைகூறப்படாமலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படிப்பட்ட மந்திரிகளை வீழ்த்தி பதவிக்கு வந்த மகா உத்தமர்களும் நாணையஸ்தர்களும் சுயநலம் என்பதே சிறிதும் இல்லாதவர்களுமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள் வாழ்வு ஆரம்பமாகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகவில்லையென்றாலும் அவர்கள் எவ்வளவு கேவல நிலைக்கும் இழி நிலைக்கும் வந்துவிட்டார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகிறோம். இன்றைய
மந்திரிகளின் சில நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் இருப்பதோடு பொது ஜனங்களால் சந்தேகம் கொள்ளாமல் இருக்கும்படி கூட நடக்க முடியாமல் இருக்கிறார்கள் என்றால் இது இந்திய தேசீயத்துக்கே ஒரு மானக் கேடான சங்கதி என்று மிகமிக வருத்தத்தோடு
கூற வேண்டியிருக்கிறது.
கட்சிப் போட்டி
அரசியலில் மாத்திரம் அல்ல சகலத் துறைகளிலும் கட்சிப் பிரதிகட்சி போட்டி உண்டு என்பதையும் ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் தாசிகள், வக்கீல்கள், வியாபாரிகள் முதலாகியவர்களுக்கு ஓர் அளவு நாணையக் குறைவுக்கும் ஒழுக்க ஈனத்துக்கும் சமூதாயம் இடம் கொடுத்திருப்பது போல் அரசியலுக்கும் கொடுத்திருக்கிறது என்றும் அப்படி கொடுக்கப்பட்டதாக பட்டாங்கமாய் இல்லாவிட்டாலும் பழக்கத்தில் பிரத்தியக்ஷ அனுபவத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது என்றும் நாம் மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம்.
தகராறைக் கிளப்பியவர்கன் யார்?
ஆனால் இன்றைய மந்திரிகளின் சில காரியங்கள் அவ்வெல்லை களையெல்லாம் மீறினவைகளாக இருக்கின்றன என்று கருதுவதால், அவற்றை பொதுநலத்தைக் கோரியும் அரசியல் வாழ்வு கூடியவரை
குடி அரசு- 1938 (1) 234
சிறிதும் சந்தேகத்துக்கு கூட இடமில்லாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும், சேலம் தண்ணீர்க் குழாய் வேலைதிட்ட விஷயமாய் சென்னை அரசாங்கத்தின் நடத்தையை ரண சிகிச்சை (ஆப்பரேஷன்) செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் சேலம் முனிசிபல்
சேர்மென் வைஸ்சேர்மென் உள்பட 11 மெம்பர்கள் தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அரசாங்கத்தில் ஏன் என்று கேட்க ஆளில்லை. ராஜினாமா செய்தவர்கள் சர்க்கார் தலையீட்டினால் முனிசிபாலிட்டிக்கு ஒண்ணரை லக்ஷ ரூபாய் நஷ்டமாகிறது என்று புள்ளி விவரங்களோடு கணக்கு காட்டிவிட்டு ராஜினாமா செய்திருக்கிறார்கள். ராஜினாமா செய்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாருமல்ல, சுயமரியாதைக் கட்சியாருமல்ல. முதல் மந்திரியாரின் ஒப்பற்ற ஆயுதமாகிய ராமசாமிக்கு வேண்டியவர்கள் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுமல்ல. சேலம் சேர்மென் முதலிய 11 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதற்கு காரண பூதமான காரியம் ராஜிநாமா செய்யப்பட்டவர்களால் மாத்திரம் கிளப்பப்பட்ட விஷயமுமல்ல. காங்கரஸ் தலைவர்களான காங்கரஸ் மெம்பர்களான காங்கரஸ் எம்.எல்.சி., எம்.எல்.ஏ., மெம்பர்களான தோழர்கள் வெங்கட்டப்ப செட்டியார், சகோப முதலியார் போன்றவர்களால் கிளப்பப்பட்டவையாகும்
கத்திமிக்காய் பட்டணமா?
இப்படி இருக்க இக்குறையை நீக்கிக்கொள்ள இன்றைய அரசாங்கம் அல்லது காங்கரஸ் மந்திரிசபை அல்லது சம்மந்தப்பட்ட மந்திரிமார் என்ன முயற்சி எடுத்தார்கள், என்ன கவலை எடுத்தார்கள் என்பதை கவனிக்கும்போது விஷயமும் நிலைமையும் சிறிதும் சகிக்கக் கூடியது என்பதாக தோன்றவில்லை. சாதாரணமாக வேண்டுமென்றே குறும்புக்காக அயோக்கியத்தனத்துக்காக அதாவது தங்களுக்கு மெஜாரிட்டி இல்லையே, தங்கள் ஆள்கள் தலைவர்களாக வரமுடியவில்லையே என்கின்ற காரணத்துக்காக சற்று வெளியில் எழுந்து போய் தாழ்வாரத்தில் இருந்துவிட்டு உடனே உள்ளே வந்து உட்கார்ந்து கொண்ட பித்தலாட்ட நாடக காட்சிகளையெல்லாம் பிரமாதப்படுத்தி எதிரி மீது குற்றம் சாட்டி வந்த காங்கரஸ்காரர்களும் - காங்கரஸ் பத்திரிகாசிரியர்களும் கையும், களவுமாய் பிடித்த இந்த காரியத்துக்காக ஒரு பிரபல நகரசபையின், பிரபல தலைவர் உபதலைவர் மெம்பர்கள் 11 பேர் குற்றத்தைப் பொது ஜனங்கள் உணரும் பொருட்டு ராஜிநாமா கொடுத்த விஷயத்தை இவ்வளவு அலட்சியப்படுத்தி, மக்கள் கண்களில், வாயில் வயிற்றில். மண்போட முயற்சி செய்கிறார்கள் என்றால் இது என்ன கத்திரிக்காய் பட்டணமா என்று கேட்க வேண்டியதாகவே இருக்கிறது
சேலம் விஷயத்தைப்பற்றி கவலைப்படுகிறவர்கள் அல்லது உண்மை அறிய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் முதலில் சில
25 ட... ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
விஷயங்களை ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மந்திரிகள் கண்ட்டிராக்ட் விஷயத்தில் ஏன் புகுந்தார்கள்? இதுவரை ஸ்தலஸ்தாபன காரியங்களில் மந்திரிகள், கண்டிறாக்ட் காரியங்களில் பிரவேசித்த வழக்கம் இருந்திருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்
கவனிக்க வேண்டிய விஷயங்கன்
1. நிற்க, சேலம் தண்ணீர் குழாய் வேலைக்கு டெண்டர் கேட்டது சேலம் முனிசிபாலிட்டியார்.
2. டெண்டர் போட்டவர்கள் 16 கம்பனிகள்.
3. அவற்றில் சரியானபடி டெண்டர் நிபந்தனையின்படி போடப்பட்ட
டெண்டர்கள் 3 தான்.
4. அவற்றுள் குறைந்த ரேட்டு டெண்டரான ஹியூம் அண் கோ டெண்டரை குறிப்பிட்டு சிபார்சு செய்து சர்க்காருக்கு மற்ற டெண்டர்களுடன்
அனுப்பப்பட்டது
5. அவற்றை பரிசோதனை செய்து மேற்குறிப்பிட்ட ஹியூம் கம்பெனி டெண்டரையே ஒப்புக் கொள்ளும்படி சர்க்கார் சேலம் நகர சபைக்கு சிபார்சு செய்து விட்டார்கள்.
6. இதற்கு இடையில் கிறிஸ்துமஸ் விடுமுறை வந்து விட்டதால்
டெண்டர்கள் முனிசிபாலிட்டியில் பைசல் செய்யப்படாமல் சற்றுத்
தயங்கி இருந்தன.
7. இந்தச் சந்தர்ப்பத்தில் திடீரென்று ஒழுங்குப்படி நிபந்தனைப் பிரசாரம் எழுதப்படாத சேலம் மூனிசிபாலிட்டியாரால் சிபார்சு செய்யப்படாத ஒரு மைசூர் பத்திராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சர்க்கார் சேலம் முனிசிபாலிட்டிக்கு தந்தி கொடுத்தார்கள்.
8. இந்த பத்ராவதி கம்பெனி டெண்டர் ஹியூம் கம்பெனி டெண்டரை விட ஒரு லக்ஷத்து இருபது ஆயிரம் ரூபாய் அதிகமான தொகை கொண்டதாகும்
9. அது மாத்திரமல்லாமல் இந்த பத்திராவதி கம்பெனி டெண்டரையும் வேலை முறையையும் சென்னை குழாய் இலாக்கா தலைமை அதிகாரியும் நிபுணருமான சானிட்டரி இஞ்சிநீயர் சிபார்சு செய்யவில்லை (தள்ளிவிட்டார்)
109. ஒரு லக்ஷத்து இருபது ஆயிரம் ரூபாய் அதிக செலவாவதாலும் சானிட்டரி இஞ்சிநீயர் ஒப்புக்கொள்ளாததாலும் சேலம் முனிசிபாலிட்டியார் பத்திராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ள. மறுத்துத் தீர்மானம் செய்துவிட்டார்கள்
குடி அரசு- 1938 (1) 236
11. இந்த மறுப்பு தீர்மானத்தை சேலம் முனிசிபல் கவுன்சிலில் பிரேரேபித்தவர் காங்கரஸ் கவுன்சிலரும் காங்கரஸ் சட்டசபை மெம்பருமான மாஜி சேர்மன் தோழர் எஸ்.வி.வெங்கட்டப்ப செட்டியாராவார்.
12. இதை ஆதரித்தவரும் காங்கரஸ் கட்டளைப்படி சர்க்கார் உத்தியோகத்தை ராஜிநாமா செய்தவரும் சேலம் ஜில்லா காங்கரஸ் கமிட்டி தலைவராயிருந்தவரும், இன்றும் கதர்கட்டி வருபவருமான வைஸ்சேர்மென் தோழர் ராமச்சந்திர நாயுடு ஆவார்.
13. இந்தத் தீர்மானம் சேலம் நகர சபையில் ஏகமனதாய் நிறைவேறி சர்க்காருக்கு அனுப்பப்பட்ட பிறகும் சர்க்கார் பத்ராவதி கம்பெனிக்குத்தான் கண்ட்ராக்ட் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். இதன் மீது சுயமரியாதையும் உண்மையான நாணையமும் கவலையும் நிர்வாக ஒழுங்கில் ஆர்வமுள்ளவர்கள் ராஜிநாமா கொடுக்காமல் வேறு என்ன செய்வது?
சில ருசிகரமான விஷயங்கன்
சர்க்கார் பிரவேசமும் ராஜிநாமா காரணமும் இப்படி இருக்க,
மற்றும் சில ருசிகரமான விஷயங்களை வாககர்கள் மனதில் பதியவைக்க வேண்டியவையாகும். அதாவது சேலம் தண்ணீர் குழாய் வேலைக்கு இரும்பு தண்டவாளக் குழாய் போடுவதா, சிமெண்டு குழாய் போடுவதா என்கின்ற விஷயம் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு இங்கிலாந்து முதலிய மேல்நாட்டு நிபுணர்களுடைய ஆராய்ச்சி அபிப்பிராயத்தையும் பல இடங்களில் பிரத்தியக்ஷ அனுபவத்தையும் முறையே கேட்டும் கண்டும் இரும்புக் குழாய் கூடாது என்றும் சிமெண்டு குழாய் போட வேண்டும் என்றும் இலாகாத் தலைவர்கள் அபிப்பிராயப்பட்டு, சிமிண்டு குழாய் டெண்டர் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க பத்திராவதி கம்பெனியாரின் இரும்பு குழாய் டெண்டரை அதுவும் பத்திராவதி கம்பெனியாராலேயே வேறு ஒருவருக்கு அந்தர் 5 ரூபாய் வீதம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கும் போதும் மற்றவர்களும் குறைந்த ரேட்டுக்கு கொடுக்க தயாராய் இருக்கும் போதும் அந்தர் ஒன்றுக்கு 8ரூ வீதம் கொடுத்து பத்திராவதி கம்பெனியாரிடம் தான் வாங்க வேண்டும் என்று சேலம் மூனிசிபாலிட்டியை மந்திரிசபை கட்டாயப்படுத்துவதென்றால் ஹியூம் கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சர்க்கார் செய்த உத்திரவுக்கும், பத்திராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சர்க்கார் செய்த உத்திரவுக்கும் மத்தியில் நாற்றம் - துர்வாடை அடிக்கின்றதா இல்லையா என்று நன்றாக மோப்பம் பிடித்துப் பார்க்கும்படி வாசகர்களை, பொது ஜனங்களை ராஜிநாமாக் கொடுத்த கவுன்சிலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
ர ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
மற்றும் மூன்று காமியங்கன்
இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்கள் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதாவது பத்திராவதி கம்பெனி சிப்பந்திகளுக்கும் ஒரு மந்திரிக்கும் நெருங்கிய பந்துத்துவம் இருக்கிறது என்கின்ற சேதி
ஒன்று. ஒரு மந்திரி மைசூர் சென்றுவிட்டு வந்ததாலேயே இந்நிலை ஏற்பட்டது என்பது இரண்டு. இந்த பத்திராவதி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சேலம் கவுன்சிலர்களை வசப்படுத்த ஒரு மந்திரி மெனக்கெட்டு சேலம் வந்து பல கவுன்சிலர்களிடம் ரகசியமாய் பேச்சு வார்த்தை நடத்தும் அளவுக்கு முயற்சித்து இருக்கிறார் என்பது மூன்று. இன்னும் இப்படிப்பட்ட பல காரியங்களையும் சேர்த்து சேலம் நகரசபை தண்ணீர் குழாய்த்திட்ட டெண்டரையும் மந்திரிகள் நடத்தையும் பார்த்தால் ஊழை ஊழை நாற்றம் நாறுகின்றதா இல்லையா என்பதை கவனிக்க விரும்புகிறோம். நாம் ஏன் இதை எழுதுகிறோம் என்றால் இந்த மந்திரிகள். அட்சி எந்த விதத்தில் முன்னைய மந்திரிகள் ஆட்சியை விட நாணையமானது, சந்தேகத்துக்கு இடமில்லாதது என்றும் பொது மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம்
பார்ப்பனக் கம்பெனிக்குப் பார்ப்பன மந்திமிசபை சலுகையா?
சேலம் நகரசபை பொது ஸ்தாபனம். அதன் தண்ணீர் குழாய் வேலைக்கு செலவாகும் பணம் பொதுப்பணம் சென்னை அரசாங்கம் பொது அரசாங்கம். இப்படி இருக்க ஒரு பார்ப்பன நிர்வாக ஆதிக்க கம்பெனிக்குப் பார்ப்பன ஆதிக்கமுள்ள மந்திரிசபை நியாய முறைக்கும்
ஒழுங்கு முறைக்கும் ஒழுக்க முறைக்கும் மாறான லக்ஷக் கணக்கான ரூபாய் நஷ்டமேற்படும்படியான காரியத்தை செய்து விட்டு இது சகிக்க மாட்டாமல் ராஜினாமா கொடுத்த கவுன்சிலர்களை வைவதும் வேண்டுமென்றே பழிகூறுவதும் ராஜினாமா செய்த சேர்மெனும் உபசேர்மெனும் கவுன்சிலர்களும் வேறு ஏதோ கம்பெனிக்காரர்கள் இடம் வைத்துக்கொண்ட சம்மந்தத்தால் இம்மாதிரி கலவரம் செய்கிறார்கள். என்று காலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்வதும் யோக்கியமான காரியமா என்று கேட்கின்றோம். உண்மையிலேயே நடுநிலையில் இருந்து பார்த்தால் சர்க்காரின் காரியந்தான் நாணையக் குறைவானதாகவும் யாராவது ஒரு இலாக்கா தலைவரின் சுயநல உணர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும் என்று பட்டாலும் படலாமே ஒழிய ஒரு விதத்திலும் ராஜினாமா செய்தவர்கள் மீது பழிசுமத்த இடமில்லை என்றுதான். சொல்ல வேண்டும். ஏனெனில் சர்க்கார் காரியத்தை கண்டித்ததானது காங்கரஸ் மெம்பராகவும், காங்கரஸ் எம்.எல்.ஏ. ஆகவும் இருக்கிறவர்கள். என்பதேயாகும். ஆதலால் இன்றைய நமது மந்திரி சபை காங்கரஸ்
குடி அரசு- 1938 (1) 238
ஆட்சி சத்தியமும், நீதியும் கொண்ட வழிகளில் சுயராஜ்ஜியம் சம்பாதிக்கும் ஸ்தாபனத்தில், யோக்கியம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் அறியவேண்டியும், சமீபத்தில் வரப்போகும் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களில் காங்கரஸ் கூலிகளும், காங்கரஸ் அபேட்சகர்களும் மற்ற அபேட்சகர்களை எப்படிக் குறைகூறக் கூடும் என்பதையும் எதற்காக காங்கரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு வர ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் வாசகர்கள் உணர்வார்களாக,
குடி அரசு - தலையங்கம் - 03.04.1938
B0 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
சபாஷ் பரோடா
மதத்தின் போல், நமது நாட்டில், பரப்பி வைக்கப்பட்டுள்ள பலவித ஆபாசங்களில் மோசமான, ஆபத்தான ஆபாசம் மாந்திரீகம், யக்ஷணி வசியம் என்பனவாகும். வினைகளைத் தீர்க்கவும், நோய் போக்கவும் கூடாதவரைக் கூட்டி வைக்கவும் போன பொருளை மீட்கவும் புத்திர சந்தானம் உண்டாகவும் மந்திரக்காரனைத் தேடி அலையும் குடும்பங்கள் பல உள்ளன. பேய், பில்லி, சூனியம் முதலிய எண்ணற்ற ஆபாசங்கள், பலருக்கு வயிற்றுப்பிழைப்பு மார்க்கமாகவே போய்விட்டது. நெற்றியில் ஒரு அங்குல அளவு குங்குமப்பொட்டும், கையில் ஒரு உடுக்கையும் வைத்துக்கொண்டு காளி அருள் பெற்றவன், நெற்றி வியர்வை நிலமீது சிந்த, கையில் மண் வெட்டியோ, கோடாரியோ, கலப்பையோ தாங்கி பாடுபடும் பாட்டாளியைவிட பல நூறு மடங்கு செளக்கியமாக வாழுகிறான். மதத்தின் பேரால் முளைத்துள்ள ஆபாசங்கள், பேயர்கள் பலருக்கு, வெறியாட்டத்தையும், களியாட்டத்தையும் தந்து மக்களின் வாழ்வைப் பாழ்படுத்துகிறது. பட்டம் பெற்ற படிப்பாளிகளும், இந்த உடுக்கைக்காக உலுத்தர்களிடம் நம்பிக்கை வைக்கிறார்கள். பூசாரி, சாமி, சுவட்டோலைச் சோதிடன், அநுமார் உபவாசி, காளி வசியக்காரன், மதுரை வீரன் பூஜை போடுபவன், மாந்திரீகன், பில்லி சூனியக்காரன் என்போர் மக்களுடைய மதியீனத்தையே தங்கள் wsors(Capital)s கொண்டு மக்களை உருட்டி மிரட்டி, வஞ்சித்து வாழ்கின்றனர்.
வருங்கேடு
மதி நாசம், நிதிநாசம் ஆவதுடன், மானமும் இவர்களால் நாசம் ஆவதுடன் மானமும் இவர்களால் நாசமாகிறது. சில சமயம் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. வேண்டுமென்றே, குரோதத்தால், இத்தகைய மாந்திரீகனால் யாருக்கேனும் கேடு விளைந்தாக ருஜுப்படுத்தினால் இந்தியன் பீனல் கோடு 319-வது செக்ஷன்படி அவர்களைத் தண்டிக்கக் கூடும்! ஆனால், கெட்ட எண்ணத்துடன் இது நடந்தது என்று எப்படி முடியும்? இந்த ஆபாசத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், மந்திரக்காரன், சூனியக்காரன் முதலியோரின் செயலால்தான் விபத்து வந்ததென எண்ணமாட்டார்கள். பிள்ளை வரம் கேட்கப்போய் கற்பை இழந்தவரும், சாமியை வீட்டில் பூஜை செய்யச் சொல்லி கொள்ளை கொடுப்பதும், காமாந்தகாரர், காவி அணிந்து வந்து ஏதோ ஒரு 'மந்திர' உச்சாடனம் செய்தானென்பதில் மயங்கி, பெண்களைப் பறி கொடுப்பதும், புதையல்
குடி அரசு- 1938 (1) 240
தேடப்போய் உள்ள பொருளை இழப்பதும், பாழாய்ப் போன நமது சமூகத்திலே, நடந்தபடியேதானே இருக்கிறது. மக்களின் மதியீனத்தைப்போக்க முற்பட்டால், அது மிக சுலபமாக முடிவதில்லை. தத்துவங்களும் , வியாக்கியானங்களும், 'அன்று அவர் சொன்னது' என்றும், வாய்க்கு வந்ததை எல்லாம் மக்கள் கூறுவர். பல்லிக்கும், பூனைக்கும் பயந்து வாழ்க்கையை நடத்தும் பாமரரின் அஞ்ஞானத்தை எளிதில் ஒழிக்க முடியுமா? ஆகவே, அந்த மூட நம்பிக்கையை வளர்த்து, அதனால் வாழ்வு நடத்தும் வன்னெஞ்சப்பாதகர்களை, நாகரிக சமூகத்திலே, நாணயமுள்ள
சர்க்கார் விட்டு வைப்பது கூடாது
சட்ட விரோதமான செயல்
இந்த உயரிய, சீரிய, பகுத்தறிவுள்ள கருத்து கொண்டு பரோடா சமஸ்தானத்திலே, ஒரு மசோதாவை, சமீபத்தில் தயார் செய்கிறார்கள். பேய், பில்லி, சூனியம், மந்திரம், ஜாலம் முதலிய மூடப்பழக்கத்தால் பிழைப்பவரை இனி தண்டிக்க வேண்டுமெனவும், அவர்கள் மக்களுக்கு விபத்து உண்டாக்கினார்களா என்ற விசாரணை தேவையில்லை என்றும், அவர்கள் செயலே சட்டவிரோதம் என்றும், மேற்படி மசோதா குறிப்பிடுகிறது. இது பொது ஜன அபிப்பிராயத்திற்கு விடப்பட்டிருக்கிறது கூடிய சீக்கிரம் சட்டமானால், பரோடாவில் பாமரரை வஞ்சிக்கும் பாதகம் ஒழியும்! மூடப்பழக்க வழக்கம் மண்மூடிப்போகும்! அஞ்ஞானம் அழியும்!
ஒரு சிறு சமஸ்தானம், முனைந்து இந்த அரிய செயலைச் செய்கிறது. நாம் என்ன செய்கிறோம்? மதத்தின் உண்மையான கருப்பொருள் காண்போர், என் செய்கின்றனர்? காவியம்புகளும் கலியாண சுந்தரனார்கள் என்: செய்கின்றனர்? விருத்தியுரைகள் எழுதி அடக்கவிலைக்கு விற்று காலந்தள்ளுபவர்கள், ஏன் வீறு கொண்டெழுந்து இக்கொடுமைகளைப் போக்க முற்படக்கூடாது? வெள்ளையனை விரட்டும் வீராதி வீரர்கள், தங்கள் சொந்த நாட்டிலே, காணப்படும் இந்த சோம்பேறிக் கூட்டத்தின் தொல்லையை ஒழிக்க ஏன் வரக்கூடாது? சென்னை பரோடா காட்டிய வழியைப் பின்பற்றுமா? வஞ்சகர் வலையினின்றும் மக்களை மீட்குமா? வாலிபர்கள் இத்தகைய சட்டமொன்று நம் மாகாணத்திலே ஏற்பட வேண்டுமென கிளர்ச்சி செய்வார்களா? “தேசீய ஒற்றுமைக்காக" ஹிந்தியைத் தேடிக்கண்டுபிடித்த ஆச்சாரி வர்க்கம், பரோடாவில் கொண்டு வரப்படும், மசோதா போன்ற தொன்றைக் கொண்டு வருவார்களா? அல்லது திருவாங்கூர் தீண்டாதார் கோவில் பிரவேசத் திருத்தாண்டகம் பாடிக்கொண்டே, சென்னை மாகாணக் கோவில் கதவுகளை அடைத்து வைத்துக்கொண்டு, சனாதனிகளிடம் சரணடைந்திருப்பது போல, “சபாஷ்! பரோடா'' என்று கூறிவிட்டு, காரியத்தில் ஒன்றும் செய்யாது காலந்தள்ளுவார்களா? யாரறிவர் இந்த சர்க்கார் போக்கை
குடி அரசு - கட்டுரை - 03.04.1938 1 ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
திருவாங்கூரும் பார்ப்பணீப கொடுமையும்
திருவாங்கூரில் ஸர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்யமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பன கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள் உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக ஜாமீன் பறிமுதல் செய்யப்பட்டதோடு பத்திரிகை நடத்த கொடுத்திருந்த அநுமதியையும் கேன்சல் (தள்ளுபடி) செய்யப்பட்டு வருகிறது அசோசியேட் பிரஸ் என்னும் இந்தியப் பத்திரிகை செய்தி ஸ்தாபனத்தையும் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது வேறு வழியில் கைவசப்படுத்தப்பட்டோ அதன் மூலம் விஷயம் வெளியாக்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது சென்னைத் தினசரிப் பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பனப் பத்திரிகைகளானாலும் பார்ப்பன நிருபர்களையே கொண்டவைகளானதாலும் விஷயங்கள் வெளியாகாமல் அடக்கிவிடப்படுகின்றன.
சர்வம் பார்ப்பணமயம்
இந்நிலைமையில் திருவாங்கூர் பிரஜைகள் வதைக்கப்படுகிறது ஒருபுறம் இருக்க அதிகார ஸ்தானம், பெரும் பெரும் உத்தியோகம்
மற்றும் பெருத்த வியாபாரத்துறை முதலியவை பார்ப்பன மயமாகி பகற்கொள்ளைக்கு லைசென்சு பெற்ற மாதிரி திருவிதாங்கூர் சர்க்கார் பொக்கிஷமும் மிகவும் கொள்ளை போவதாகச் சொல்லப்படுகிறது மகாராஜா புத்திசாலியானாலும் இளம்பருவம், உலக அனுபவம் இல்லை. மகாராணியார் சமஸ்தான விஷயங்களில் கவலையற்றவர் போல் இருந்து வருகிறாராம். ஏனெனில் பெரிய மகாராணியார் கையிலிருந்த ராஜ்ய பாரத்தை தனக்கு வாங்கிக் கொடுத்தவர் ஸர்.சி.பி. தான் என்கின்ற நம்பிக்கையினால் அவர் இஷ்டப்படி காரியங்கள் நடத்துவதைப்
பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது
குடி அரசு- 1938 (1) 24
ட்
ஸர்சி.பி. திருவாங்கூருக்கு திவானாகப் போனது முதல் அதிகாரமும், செல்வமும் அய்யர்மார் ஏகபோக உரிமையாகி விட்டதாக மேலே குறிப்பிட்டோம்.
வர்த்தகத் துறையிலும் பூணூல் அதாவது 5 லட்ச ரூபாய் முதலீடு வைத்து சர்க்கார் நடத்திய ரப்பர் தொழிற்சாலை ஒரு சாமிநாதய்யர் கம்பெனிக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம்
மற்றும் தக்கலையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய சர்க்கரை ஆலைக் கம்பெனியை ஒரு ஐரோப்பிய கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். சாராயம் காய்ச்சும் கம்பெனியும் வேறு ஒரு கம்பெனிக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம். ஒரு பார்ப்பனரல்லாதார் கம்பெனியால் பெரிதும் நடத்தப்பட்ட போக்குவரத்து பஸ் சர்வீசை சர்க்கார் மயமாக்குவது என்னும் பேரால் ஒழித்து சர்க்கார் ஏற்று நிர்வாகம் செய்வதில் பெரிதும் பார்ப்பன மயமாக்கி 10 லக்ஷ ரூபாய் போல் மோட்டார் பஸ்கள் வாங்கி கமிஷன் அபேஸ் ஆகிவிட்டதாம். ஸர்.ஸி.பி மகன் சம்மந்தப்பட்ட கம்பெனிகளுக்கு பெரிய கண்ட்ராக்டுகள். கொடுக்கப்பட்டிருக்கின்றனவாம்
உத்தியோக மண்டலத்தில் உச்சிக் குடுமிகள் உத்தியோக நியமன விஷயமும் மோசமானதெனவே சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான ரூ. சம்பளமுள்ள பொருளாதார காரியதரிசி ஒரு பார்ப்பனர், இன்கம்டாக்ஸ் அதிகாரி ஒரு பார்ப்பனர், பாரஸ்ட் நிபுணர் என்பவரும் ஒரு அய்யர், அவர் ஒரு மாஜி திவான் மாப்பிள்ளையாம். இவருக்கு 1800 ரூ சம்பளம், மற்றும் பப்ளிசிட்டி ஆபீசர் ஒரு பார்ப்பனர், இவர் மெட்ரிகுலேஷன் பரீக்ஷ கூட பாஸ் செய்தது கிடையாது. வயது 45 -க்கு மேலான பிறகு உத்தியோகம் கொடுக்கப்பட்டது. சம்பளமோ 400. மற்றும் தோழர் பரமேஸ்வரய்யர் என்பவர் யுனிவர்சிட்டி சம்மந்தமுள்ளவர். இவருக்கு சம்பளம் ரூ.1500 இரண்டு சட்ட கலாசாலை பிரின்சிபால்களும் பார்ப்பனர்கள், கல்வி இலாகா அதிகாரிகள் (இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்) 3 பேரும் பார்ப்பனர்கள்.
சர்க்கார், பொட்டகிராபர் கூட பார்ப்பனர். இம்மாதிரி பெரிய பெரிய 1000, 1500, 2000 ரூ சம்பளமுள்ள உத்தியோகங்கள் பார்ப்பன மயமாக்கப்பட்டவை தவிர இனியும் பல பெரிய உத்தியோகங்கள் அட்வொகேட் ஜனரல் என்றும், சர்ஜன் ஜனரல் என்றும், புரோசேன்ஸல்லர், வைஸ்சேன்ஸலர் என்றும், லாமெம்பர் என்றும் இப்படியாக மற்றும் மாதம் 1000, 2000 ரூ சம்பளமுள்ள பல புதிய உத்தியோகங்களைச் சிருஷ்டித்து பெரிதும் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படப் போவதாலும் M3 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
மற்றும் இது போன்ற காரணங்களாலும் திருவாங்கூர் பொக்கிஷம் காலியாகி கடனும் ஏற்பட்டு அரைகோடி ரூ. கடனும் வாங்கப்பட்டு விட்டதாம்.
சென்னை மாதி௰ி திருவிதாங்கூரும்
சென்னை மாகாணத்தில் ஆச்சாரியார் ஆட்சியில் சென்ற வருஷம் ஒன்றரைக் கோடி ரூபாய் கடன் இவ் வருஷம் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடன், அடுத்த வருஷம் காங்கரஸ் ஆட்சி இருந்தால் 2 கோடி ரூபாய் கடன் ஆகும் என்பது போல், ஸர்.சி.பி. திவானாவதற்கு மூன் தங்கப்பாளங்களும், வைரம், சிவப்பு, பச்சை ஆகிய ரத்தினங்களும் வண்டி வண்டியாய் குவிந்து கிடந்த திருவிதாங்கூர் பொக்கிஷம் அய்யர் கால் வைத்த உடன் இறகு முளைத்துக் கடல் தாண்டிப் பறந்து விட்டதால் பாப்பராகி இவ்வருஷம் % கோடி, அடுத்த வருஷம் ஒரு கோடி என கடன் ஏறி 40 லட்சம் ஜனங்களுக்கு 3% கோடி வருஷ வருமானமுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் அழுத்தப்படுவதைப் பார்த்த திருவாங்கூர் பிரஜைகளான, வரிசெலுத்துவோரான பார்ப்பனரல்லண்த மக்கள் இனி தங்கள் நாடு என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழியப் போகிறதே என்று கருதி மனம் பதறி வயிறு வெந்து அத்திரப்பட்டு,
மாரடித்துக் கொண்டு அழுது ஓலமிடும் காட்சி நமது ஸர்.சி.பி. அய்யர் அவர்களுக்கு ராஜத்துரோகமாய் வகுப்புத் துவேஷமாய் காணப்பட்டு மிருகப்பாய்ச்சல் பாய்ந்து ஒரே அடியில் அடக்கி ஒடுக்கி அழித்து விடப் பார்க்கிறார் போலும்
தர்மராஜ்ய தர்ம தேவதை தாண்டவமே இப்படி இருந்தால் இனி மற்ற ஆட்சி எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே பயமாய் இருக்கிறது
நாராயணபின்ளை கதி: இவற்றை வெளிப்படுத்த முயற்சி எடுத்துக் கொண்ட திருவனந்தபுரம் ஹைக்கோர்ட்டு வக்கீல் தோழர் நாராயண பிள்ளை அவர்கள் ஏதோ ஒரு பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் என்பதற்காக அவர் மீது ராஜத்துரோக குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முறையைவிட குற்றவாளி நடத்தப்பட்ட முறையும் அக்கிரமமாக விசாரணை நடத்தப்பட்ட முறையும் நீதி வழங்கப்பட்ட முறையும் தான் நாம் மிகுதியும் கவனிக்கத்தக்கவையாகும். இதை உணர்ந்து, பார்த்து, ஊன்றி கவனித்தால் திருவாங்கூரில் இன்று நீதி, நிர்வாக ஆட்சி நடக்கின்றதா அல்லது டையர் ஓட்வியர் ராணுவ ஆட்சி நடக்கின்றதா என்று சந்தேகம் கொள்ள வேண்டி இருக்கும்
எதிமி பட்ட கஷ்டங்கன்
ஏனெனில் தோழர் நாராயணபிள்ளை குற்றம் சாட்டப்பட்டவுடன் ரிமாண்ட் செய்யப்பட்டார். இது விஷயத்தில் பொதுக் கூட்டங்கள்
குடி அரசு- 1938 (1) 244
தங்கள் அபிப்பிராயங்களை தெரிவிக்க கூட்டம் கூட்டப்படாது என்று தடைப்படுத்தப்பட்டு விட்டது. தோழர் நாராயணபிள்ளைக்கு கீழ்க் கோர்ட்டில் கிடைத்த ஜாமீன் உத்தரவு மேல்கோர்ட்டில் சர்க்கார் கட்சி அப்பீலின்மீது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது
தக்க வக்கீல் வைத்து வாதாட பொது ஜன ஆதரவுக்கு தடை செய்யப்பட்டது. திருவிதாங்கூர் ராஜ்யத்தில் உள்ள திறமையுடைய வக்கீல்கள் நாராயணபிள்ளைக்காக ஆஜராகி கேசை நடத்த பயப்பட்டு விட்டார்கள். எதிரிக்காக கேசை நடத்த வெளி மாகாணத்தில் இருந்து தோழர் நாரிமன் வரவழைக்கப்பட்டார். அவர் ஆஜராகக் கூடாதென்று தடுத்ததுடன் அவர் திருவாங்கூரில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடைப்படுத்தப்பட்டு வந்த வழியே திருப்பி அனுப்பப் பட்டுவிட்டார். இந்தக் காரணங்களால் எதிரி நிர்க்கதியாகி விசாரணையில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. சர்க்காருக்கு செளகரியமாகப் போய்விட்டது போலும். தோழர் நாராயணபிள்ளைக்கு ஒன்றரை வருஷம் வெறுங் காவலும் 200 ரூ அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
யொக்லக் ஆட்சி. ஆகவே இன்று திருவாங்கூர் ராஜ்யம், செல்வம், நிர்வாகம், அதிகாரம், நீதி முதலியவைகளில் பழங்கால காட்டுராஜா ஆட்சி என்றும், நவாப் தர்பார் என்றும், அதிலும் மகமத் டொக்லக் ஆட்சி என்றும் சொல்லப்படும் ஆட்சி போல் நடக்கின்றது என்பதோடு வரவுக்கு மிஞ்சின செலவும், பொக்கிஷம் காலியும் ஏற்படுகிற நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம்.
பூணூல் மகிமை இவை தவிர இனியும் எவ்வளவோ ஆபாசங்கள் நடப்பதாயும் கூறப்படுகின்றன. இவ்வளவு சங்கதிகளும் இன்று பொது ஜனங்களுக்கு புலப்படாமல் இருக்கவும், மேலும் மேலும் ஸர். சி.பி. அய்யருக்கு தைரியம் ஏற்படவும் காரணமாய் இருப்பது பூணூலே ஆகும். அதாவது திவான் ஒரு பார்ப்பனராய் இருப்பதேயாகும். கொச்சி திவான் தோழர்
ஸர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் கொச்சி சென்றவுடன் “கொச்சியில் திவான் வேலை பார்க்க கொச்சியில் ஒரு ஆள் கிடைக்கவில்லையா?
என்ற எடுப்பை பல்லவியாக வைத்து ஒரு வருஷகாலம் அவருக்கு சென்னை பார்ப்பன பத்திரிகைகள் கொடுத்த தொல்லை கொஞ்ச நஞ்சமல்ல. சென்னை பார்ப்பனப் பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கொச்சிக்குச் சென்று அங்குள்ள காலாடிகளைப் பிடித்து கலகத்தை மூட்டி தொல்லை கொடுத்தார்கள்.
ந ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ஆர். கே. கொச்சிக்குச் செய்த நண்மைகள் இவ்வளவையும் சமாளித்து தோழர் ஷண்முகம் கொச்சி சமஸ்தானத்துக்கு வருஷத்துக்கு பத்து லகஷக்கணக்கான ரூபாய் வரும்படி கிடைக்கும்படியான கொச்சித் துறைமுக திட்டத்தை ஏற்படுத்தி மகாராஜாவுடையவும் பிரஜைகளினுடையவும் ஆதரவையும், அன்பையும் பெற்று இந்திய சமஸ்தானங்களில் வேறு எங்குமில்லாத முறையில் பிரஜைகளுக்கு முதல்படியாக பொறுப்பாட்சியும் வழங்கினார். இதைக் கண்டாவது பார்ப்பனப் பத்திரிகைகள் புகழாலிட்டாலும் சும்மாவாவது இருக்காமல் இதென்ன கண்ணைத் துடைக்கிற வித்தை என்றும், இதில் என்ன பிரயோஜனம் என்றும், அயோக்கியத்தனமாகவும் அற்பத்தனமாகவும் எழுதிப் பரிகாசம் செய்தன.
ஸி.பி. சமாதானம்
இதையாவது ஏன் திருவாங்கூர் ஸர். சி.பி.யும் பரோடா திவான். ஸர்.வி.டி. கிருஷ்ணமாச்சாரியும், காஷ்மீர் திவான் திவான்பகதூர் என்: கோபாலசாமி அய்யங்காரும் ஆகிய பார்ப்பனர்கள் செய்யவில்லையே என்று பொது ஜனங்கள் கேட்க ஆரம்பித்தபோது “சுதேச சமஸ்தானங்களுக்கு சீர்திருத்தம் வழங்க பிரிட்டிஸ் சர்க்கார் சம்மதிக்க மாட்டார்கள்” என்று ஒரு பொறுப்பற்ற யோக்கியமற்ற சமாதானத்தை ஸர்.சி.பி. சொன்னார்.
பிரிட்டிஷார் பதில்
பிரிட்டிஷார் இதைக்கேட்டு நகைத்துவிட்டு, நாங்கள் தடையாயில்லை. எவ்வளவு சீர்திருத்தம் வேண்டுமானாலும் கொடுங்கள் என்று சொல்லி
விட்டார்கள். இதன் மேலாவது சர்.சி.பி. வாயை மூடிக்கொண்டிருக்காமல் அதைவிட போக்கிரித்தனமானதும் யோக்கியப் பொறுப்பற்றதுமான.
பதில் சொன்னார். என்னவென்றால் கொச்சி முதலிய சாதாரண சமஸ்தானங்கள் தவிர “தர்மராஜ்யமான திருவாங்கூருக்கு சீர்திருத்தம் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு சொன்ன எட்டு நாளிலேயே
இந்த திருக்கூத்தை நடத்தி இருக்கிறார்.
நாணயமற்ற சாக்குப் போக்கு
தவிரவும் திருவாங்கூர் பார்ப்பனரல்லாதார் வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டதிலும் இது மாதிரியே நாணையமற்ற சாக்கு போக்கு சொல்லி அடக்கிவிட்டு, பெரிய உத்தியோகங்களை பார்ப்பனர்களுக்கே ஏராளமாக கொடுத்து வருவதோடு பொக்கிஷம் பாப்பராகும்படி புது உத்தியோகங்களையும் சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்போகிறார். ஸர். ஷண்முகம் அவர்கள் தனது திவான் ஆதிக்கத்தில்
2-வருஷத்துக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்தி
குடி அரசு- 1938 (1) 246
தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கே 100க்கு கிட்டத்தட்ட 40 உத்தியோகங்கள் போல் கிடைக்கும்படி செய்து விட்டார்.
ஆர்.கே.யும் பார்ப்பனப் பத்தியிகைகளும்
ஆகவே தோழர் ஷண்முகம் அவர்கள் துறைமுக வரும்படியில் பொக்கிஷத்தை நிரப்பினார். அரசியல் சுதந்திரத்தால் பொறுப்பாட்சி அளித்தார். வகுப்புவாரி உத்தரவால் சமுதாயத்தை மேன்மைப்படுத்தினார். அதாவது ஸர். ஷண்முகம் ஆட்சியானது அரசியல் சமுதாய இயல் பொருளாதார இயல் ஆகிய மூன்று துறையையும் இந்தியாவில் வேறு எந்த சமஸ்தானத்திலும் இல்லாத அளவுக்கு மேன்மைப் படுத்தியும், அவர் ஒரு பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால், அவரை பார்ப்பனர்களும் பத்திரிகைகளும் வைகின்றன, குறை கூறுகின்றன. “பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட்டார்?” என்று போக்கிரித்தனமாய் எழுதி விஷமப் பிரசாரம் செய்கின்றன.
ஹிட்லர் சி.பி.க்கு புகழ்மாலை
ஆனால் திருவாங்கூரில் இவ்வளவு திருக்கூத்தும் இன்னும் எழுத முடியாத பல திருக்கூத்தும் நடத்தி டயராட்சி நடத்தும் ஸர்.சி.பி ராமசாமி அய்யர் பார்ப்பனராய் இருப்பதால் சென்னை மாகாண முதன்
மந்திரி தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் பூமாலை போட்டு புகழ்கிறார். காந்தியாரைக் கொண்டும் புகழச் சொல்லுகிறார். திருவாங்கூர் மகாராஜா ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை அளித்ததற்கு வேறு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஸர்.சி.பி.யை பார்ப்பனர்கள்.
புகழ அதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டாலும் அதுவும் இன்று ஒரு வேஷமாகவும், நாடகமாகவும் தான் முடிந்துவிட்டது. அதாவது திருவாங்கூர் சமஸ்தான கோவில்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலாக செய்யப்பட்டு விட்டது என்று சொல்லப்படுகிறது. இவை எப்படியோ இருக்கட்டும். ஆனால் நமது நாட்டில் பார்ப்பனர்கள் பார்ப்பன. அரசியல் பார்ப்பனப் பத்திரிகைகள் முதலியவைகளின் ஆட்சி ஆதிக்கம் எவ்வளவில் இருக்கிறது என்பதை விளக்கவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.04.1938
M ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ஆச்சாரியாரும் கதரும்
- கதர் கட்டி அலுத்தவன்
தோழர் கனம் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை பட்ஜட் விவாதத்தின்போது கதர் சம்மந்தமாய் எழுந்த பிரச்சினைக்கு பதில் அளிக்கையில் “ எனக்கு அதிகாரமிருந்தால் கதர் கட்டாததற்கு ஆக சர்க்கார் தொழில் இலாக்கா டைரக்டரை டிஸ்மிஸ் செய்து விடுவேன்" என்று பேசியிருக்கிறார். இது தினசரி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது இதுவரை அந்த சேதிக்கு எவ்வித மறுப்பும் வரவில்லை. ஆனதால் கனம் ஆச்சாரியார் அந்தப்படி பேசியிருக்கிறார் என்பது உண்மையேயாகும்
இதிலிருந்து காங்கரஸ்காரர்கள் உத்தியோகம் பார்ப்பதின் கருத்தும் அவர்களது நிர்வாக யோக்கியதையும் எப்படிப்பட்டது. என்பது நன்றாய் விளங்கும்.
அது ஒரு புறமிருக்க அரசாங்க சிப்பந்திகள் கனம் ஆச்சாரியார். பேச்சிலிருந்து என்ன நினைப்பார்கள் என்பதை யோசிப்போம். கதர்கட்டாத ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டிய அளவுக்கு அயோக்கியராக பாவிக்கப்படவேண்டியவராகிறார். கனம் ஆச்சாரியாரால். அதிகாரமில்லாத காரணத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட முடியாத உத்தியோகஸ்தர்கள் போக மற்றபடி டிஸ்மிஸ் செய்யவோ அல்லது வேறுவிதமாய் தொலைக்கவோதொல்லை கொடுக்கவோ செய்யப்படக்கூடிய உத்தியோகஸ்தர்கள் கதி அதோகதி தான் என்பது பளிங்குபோல் விளங்குகிறது
சர்க்கார் சிப்பந்திகள் கடமை
பொது ஜனங்கள் வரிப்பணத்தில் பொது ஜனத்தொண்டு செய்வதற்காக நியமனம் பெற்ற சிப்பந்திகள் கதர் கட்டாததற்கு ஆக டிஸ்மிஸ் செய்யப்படுவது என்றால் காங்கரஸ் ஆட்சியின் - நீதியின் யோக்கியதையை என்னவென்று சொல்லுவது! சர்க்கார் அதிகாரிகளுக்கும் சிப்பந்திகளுக்கும்
சில குறிப்பிட்ட கடமை உண்டு. அக்கடமைகளில் அவர்கள் சரியாய் நடந்துகொள்கிறார்களா என்பதே நிர்வாகப் பொறுப்புடையவர்கள் கவனிக்க வேண்டிய கடமையாகும். கதர் ஒரு கட்சியாருடைய திட்டம். அது மூவர்ணக்கொடி போல் அக்கட்சிக்கு உரிய அடையாளமாகவுமிருக்கலாம். ஆனால் அதை அந்தக்கட்சி அங்கத்தினரல்லாதார் மீது திணிப்பது என்பது
குடி அரசு- 1938 (1) 248
எப்படி நீதியாகும்; மூவர்ணக் கொடி தேசியக்கொடி அல்ல என்று சொல்ல எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ-அதை தேசியக்கொடி என்று ஏற்றுக்கொள்ளாமல் இருக்க எப்படி ஒருவனுக்கு உரிமையுண்டோ அப்படிப்போலவே கதரை ஒரு தேசாபிமானக் குறி அல்லவென்றும் அது ஒரு நீதிக்குறியோ அல்லது ராஜாங்க பக்தி குறியோ அல்லவென்றும் சொல்ல எந்த யோக்கியமான சுயமரியாதை உள்ள அதிகாரிக்கும் சிப்பந்திகளுக்கும் உரிமை உண்டு. அதை மறுத்து கனம் ஆச்சாரியார் கதர் கட்டாதவர் டிஸ்மிஸ் செய்யத்தக்கவர் என்று சொல்வதில் உண்மையிலேயே ஆச்சாரியாருக்கு கதர் அவ்வளவு பிரதானமானதும் அவசியப்படுத்தத் தக்கதுமான காரியம் என்று கருதுவாரானால் கதர் தவிர வேறு துணி நெய்யக்கூடாது என்று சட்டமூலம் தடுத்திருக்கலாம். கதரைத் தவிர வேறு துணி விற்பனை இல்லாமல் தடுத்திருக்கலாம். அப்படியெல்லாம் செய்யாமல் கதர் கட்டாதவனை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று சொல்வதானால் யோக்கியனுக்கு சர்க்கார் உத்தியோகத்தில் இடமில்லை என்று தானே அர்த்தமாகிறது ஆகவே காங்கரஸ் ராஜியத்தில் உத்தியோகங்களில் நேர்மையும் பந்தோபஸ்தும் இல்லாமல் போய் விட்டது என்பதே நமது முடிவு
கதர்க் கதை
அடுத்தாப்போல் கதரைப்பற்றி சற்று யோசிப்போம். கதர் தோழர் காந்தியாரால் உபதேசிக்கப்பட்டதாகும். இந்த உணர்ச்சி காந்தியாருக்கு
வரக் காரணம் என்னவெனில் வங்காள சுதேசிக் கிளர்ச்சி-பாய்க்காட் கிளர்ச்சி ஆகியவைகளைப் பார்த்து அவற்றிற்கு சிறிது முற்போக்கு கொடுத்து மக்களுக்கு பழமையில் உணர்ச்சி ஏற்படுவதற்கு ஆக தனது சொந்த புதிய கண்டுபிடிப்பு போல் வெளியிடப்பட்டதாகும்.
அந்தக்காலத்தில் திலகருக்கு சுதேசி உணர்ச்சி இருந்தது. அவர் பாய்காட்டை உபதேசித்து வந்தார். அதை பீட் செய்வதற்கு அதைவிட சுதேசீயம் கண்டுபிடிக்கவேண்டிய அவசியமும் காந்தியாருக்கு இருந்தது
ஆனால் சுதேசியப் பொருள் பிரசாரம் என்பது இங்கிலீஷ் பொருள் பாய்க்காட் (பஹிஷ்காரத்தில் இருந்து சிறிது முற்போக்கடைந்ததாகும்) வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதை எதிர்த்து பார்த்து முடியாமல் போய்விட்டவுடன் சர்க்காருக்கு தொல்லைகொடுக்க ஆரம்பித்ததில் இங்கிலீஷ் சாமான் பாய்காட் பிரசாரம் ஏற்பட்டதை சில மிதவாத உணர்ச்சி உள்ளவர்கள் பாய்க்காட் பஹிஷ்காரம் என்று சொல்லுவது இங்கிலீஷ் மீது விரோத உணர்ச்சியைக் காட்டுவதாகும் என்று கருதி சுதேச சாமான்களை ஆதரிப்பது என்னும் பேரால் பாய்க்காட் பிரசாரம் செய்தார்கள். காந்தியார் இரண்டையும் விட்டு விட்டு “ பாய்காட்டும் வேண்டாம் சுதேசியமும் M9 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
வேண்டாம். அதில் விரோத உணர்ச்சி இருக்கிறது'' என்று சொல்லி கதர் என்பது பொருளாதார திட்டமும் அவனவன் அவனவனையே நம்பி வாழும் தன் நம்பிக்கை திட்டமும் கொண்டது என்று அவனவன் ராட்டினத்தில் நூற்ற நூலை அவனவனே நெய்து கட்ட வேண்டும் என்பதாகச் சொல்லி அதற்கு மத உணர்ச்சியையும் தெய்வீக உணர்ச்சியையும் கற்பித்து பிரசாரம் செய்யத் துடங்கினார். ஆரம்பத்தில் பாமர மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். படித்தவர்கள் 100க்கு 99 பேர்கள் அதை எதிர்த்தார்கள்.திலகரையும் பெசண்டையும் ஒழிக்கவேண்டும் என்று கருதின கூட்டம் மாத்திரம் இதை ஆதரித்து பிரசாரம் செய்ய முன் வந்தது. திலகர் செத்தார். காந்தியாருக்கு செல்வாக்கு அதிகமாயிற்று பெசண்டு ஒடுங்கினார். பிறகு கதரை எதிர்த்த அரசியல் வாதிகள் பெரும்பாலோர் காந்தீயத்தில் ஐக்கியமாகிவிட்டார்கள். அப்புரம் கதர். தலைவிரித்தாடத் துடங்கி விட்டது. காங்கரஸ் சந்தாவே கதர் நூலாக ஆகிவிட்டது. திலகர் நிதியில் மூக்கால் வாசி பணம் கதர் பிரசாரத்துக்கே. பயன்படுத்தப் பட்டதும் அல்லாமல் கதருக்கு ஆக ஒரு நிதியும் சுமார் 3000000 முப்பது லக்ஷம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. கதருக்கு ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு அரசியல் வாதியும் தனித்தனி அபிப்பிராயம் சொல்ல ஆரம்பித்தார்கள். என்ன பண்ணியும் திருட்டுத் தொழில் குடி சூதாட்டம் விபசாரம் கொலை கொள்ளை ஆகிய தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களைவிட கதரில் ஈடுபட்ட மக்கள் - கதர் தரிக்கிறவர்கள் மிகச் சுருக்கமாகவே குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களாகவே இருக்க முடிந்தது. அவைகளுக்கு உள்ள செல்வாக்கைவிட கதர் செல்வாக்கு குறைவாகவேதான் இருக்கக் கூடியதாக ஆகிவிட்டது
காங்கரஸ்காரர் கதர் அபிமானம்
பல உற்பத்தி ஸ்தாபனங்களும் பல விற்பனை ஸ்தாபனங்களும் அதற்கனுகூலமான பலவித நிர்ப்பந்தங்களும் இருந்தும் கதர் போலீஸ் உடை தரித்திருப்பது போல் காங்கரஸ் சேவகர்கள், பிரசாரகர்கள் காங்கரசால் பதவி ஏற்றவர்கள், வயிறு வளர்ப்பு உடையவன் ஆகியவர்கள் மாத்திரம் பெரிதும் அந்த சமயங்களில் கதர் தரித்திருக்க வேண்டியதாயும் இருந்து வருகிறது. இக்கூட்டங்களிலும் அவரவர்கள் பராமரிப்பிலுள்ள பெண்டுபிள்ளைகளை சிப்பந்திகள் கதர் கட்டுவது மிகமிக ஆச்சரியப்படத்தக்க தாகவே இருக்கும்
கதருக்கு சொல்லப்படும் பெருமைகளில் ஒரு பெருமை காங்கரஸ்காரர்களாக இல்லாவிட்டாலும் கதர் உடுத்துவது தேசாபிமானம் ஏழை அபிமானமாகும். ஆதலால் ஒவ்வொருவரும் உடுத்த வேண்டியது என்று சொல்லப்படுகிறது. ஆனால் காங்கரஸ்காரர்களில் 100-க்கு 5 - பேர் வீதமாவது கதர்கட்டி இருப்பதாக அந்தந்த மாகாண ஜில்லா காங்கரஸ்
குடி அரசு- 1938 (1) 250
மெம்பர்கள் லிஸ்டை பார்த்து கணக்கு சொல்ல முடியுமா என்றால் எப்படிப்பட்ட காங்கரஸ் தொண்டரும் விழிக்க வேண்டியதைத் தவிர சமாதானம் சொல்ல முடியாது.
சுருக்க வழியில் உண்மை உணர வேண்டுமானால் 10 மந்திரி 10 காரியதரிசி 4 தலைவர்கள் ஆகிய 24 பதவிகளில் இருந்து காங்கரசின் பயனாய் பணம் பெற்று வாழுகிறவர்களின் குடும்பங்களின் எத்தனை பேர் மனைவி மக்கள் விவரமறியாக் குழந்தைகள் கதர் கட்டி இருக்கிறார்கள் என்பதை பார்த்தால் விளங்கிவிடும். அல்லது காங்கரஸ் பிரதம தலைவர்களில் தொண்டர்களில் எத்தனைபேர் ராட்டினம் நூற்கிறார்கள் என்று பார்த்தாலும் கதர் தத்துவத்தின் உயர் வாழ்வும் ஆதரிப்பும் எவ்வளவு என்பது விளங்கிவிடும்
இவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கதரின் யோக்கியதை என்ன என்று பார்ப்போம். சுமார் 20 வருஷகாலமாக ஒரு கோடி ரூபாய்க்கு குறையாத அளவு செலவு செய்து மீதம் 100, 200, 300 ரூபாய் சம்பள செலவில் பி.ஏ.பி.எல்., எம்.ஏ. முதலிய பட்டம் பெற்ற நபர்களை பெரிய படிப்பாளிகளை சிப்பந்திகளாய் வைத்து மாகாண மாகாணமாய் ஜில்லா ஜில்லாவாய் கதர் ஆச்சிரமங்கள் மூலம் பிரசாரம் செய்து வருஷம் பல லக்ஷம் கெஜம் கதர் உற்பத்தி செய்து கெஜம் 0-2-6 அணாவுக்கு வாங்குவதற்கு பதிலாக கதர் என்பதற்கு ஆக கெஜம் 8 அணா 10 அணா
12 அணா கொடுத்து சில மக்களாவது வாங்கத் துணிந்தும் இன்று கதரின் நிலைமை பிரதம மந்திரியார் என்பவர் தனது சிப்பந்திகளைப் பார்த்தே நீங்கள் கதர் கட்டாவிட்டால் நான் உங்களை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்று கட்டாயப்படுத்தி மிரட்டி தண்டித்து கதர் கட்டச் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது என்றால் கதரின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கிறோம்.
கதரால் வரும் கேடுகள்
காங்கரஸ்காரர்கள் காங்கரஸ் வேலைக்காக அவர்களது அரசியல் திட்டத்துக்காக (அதாவது வருணாச்சிரமம் ராஜியம் ஸ்தாபிப்பதற்கு ஆக) அவர்கள் செய்யப்போகும் காலித்தனம் போக்கிரித்தனம் ஆகியவைகளுக்கு சைனியம் சேனை திரட்டி வைத்திருப்பதற்கு ஒரு ஏமாற்றுச் சாக்காக கதர் ஸ்தாபனமும் ஹரிஜன ஸ்தாபனம் என்னும் தீண்டாமை விலக்கு ஸ்தாபனமும் வைத்து அதற்கு பொது ஜனங்களிடம் வசூலித்த பணத்தையும் சர்க்கார் வரிப்பணத்தையும் பாழாக்கி வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல மூடியும்.
1. கதரினால் 4 வேஷ்டிகளுக்கு பயன்படும் பஞ்சு ஒரு வேஷ்டி சப்பிட்டு விடுகிறது. இதனால் நம் நாட்டு மூலப்பொருள் 100-க்கு 75 பாகம் வீணாகிறது தட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
2. கதர் நூற்பதால் ஒரு மனிதன் மூன்று, நாலு ராத்தல் நூற்கும்படியான நேரம் ஒரு ராத்தலுக்கே சரியாய் போய் விடுகிறது. இதனால் பாடுபடும் மக்களுடைய பாடு நேரம் 100-க்கு 75 பாகம் வீணாகிறது
3. கதர் நெய்வதால் 4 கெஜம் நெய்யக்கூடிய நேரம் ஒரு கெஜத்துக்கு பிடிக்கிறது. இதனால் நெசவாளிகளது நேரம், பாடு 100-க்கு 75 வீதம் பாழாகிறது
4. இவ்வளவு வீணாகியும் கதர் விலை மற்ற நூல் கைத்தறி நெசவுத்துணி கெஜம் 0-2-6 அணா 0-3-0 அணாவுக்கு கிடைத்தால் கதர் துணி கெஜம் 10 அணா 11 அணா 12 அணா போட்டு தான் வாங்கவேண்டி இருக்கிறது. இதனால் தேசத்தின் பொருளாதாரம் 100-க்கு 75 பாக பணம் நஷ்டமடைகின்றது
5. பொது மக்கள் இவ்வளவு நஷ்டமும் கஷ்டமும் நாசமும் அடைவதினால் யாருக்காவது லாபம் உண்டா என்று பார்த்தால் யந்திரம்போல் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கு மேலாக 12 மணி வரை வேலை செய்தால் 1 அணா பெறக்கூடிய அளவு தான் கூலி கிடைக்கத்தக்கதாய் இருக்கிறது
6. இவ்வளவு காரியத்தையும் பொறுத்துக்கொள்ள கதர் துணியாவது அழகானதாகவோ கெட்டியானதாகவோ வனப்பானதாகவோ இருந்து வருகிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஆகவே இந்த நிலையில் உள்ள கதர் எப்படி ஒரு தொழில் திட்டமாகவோ பொருளாதாரத் திட்டமாகவோ ஒரு தேசிய அறிகுறியாகவோ இருக்கமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் உள்ள கதரை கட்டாவிட்டால் டிஸ்மிஸ் செய்வேன் என்று ஆச்சாரியார் சொல்லுவது மனுதர்மக்கொடுமையை விட அதிகமான கொடுமையா அல்லவா என்று கேட்கிறோம்
மனு 10 மூட்டை நெல்லை கொடுத்து 10 மூட்டை அரிசி கேட்கிறார் என்றால் ஆச்சாரியார் 10 மூட்டை உமியைக் கொடுத்து 10 மூட்டை அரிசி கேட்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிகாரிகளே! சிப்பந்திகளே!! வரி கொடுக்கும் தமிழ் மக்களே!!! மஞ்சள் பெட்டிக்கு ஜே சொன்னப் பலன் அனுபவியுங்கள்! அனுபவியுங்கள்!
புத்தி வரும்வரை அனுபவியுங்கள்!
குடி அரசு - கட்டுரை - 10.04.1938
குடி அரசு- 1938 (1)
ப O ப்
கங்கை கொண்ட [காங்கரஸ்] சாக்கடை
காங்கரசானது கங்கைக்குச் சமமாக ஒப்பிடப்படுவதுண்டு. கங்கைப் புனித நதியெனப் பெயர் பெறும். காங்கரசும் தேசீயம், சுயராஜ்யம் ஆகிய விஷயங்களில் நாட்டினுக்கும் மக்களுக்கும் அளப்பறிய நன்மை செய்யும் ஸ்தாபனமாகக் கருதப்படுகிறதன் காரணமாகக் கங்கைக்கு உவமானங் கூறப்படுகிறது. கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன. காங்கரஸ், கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன, கங்கையில் கலக்கும் சாக்கடைக் கங்கையுடன் ஐக்யமாகிப் புனிதமாகி விடுகிறது. காங்கரஸ் கங்கையில் கலக்கும் சாக்கடைகளோ தாம் புனிதமடைதல் ஒரு புறமிருக்கக் காங்கரஸ் கங்கையையே அசுத்தப்படுத்திவிட்டன.
தேசீயம் வேண்டும் சபையில், சுயராஜ்யம் வேண்டும் சபையில், நாட்டினடிமையொழிய விரும்பும் சபையில், நாட்டின் க்ஷமாபிவிர்த்தியை கோரும் சபையில் இன்று நர்த்தனமிடுபவை எவை எனக் கூர்ந்து நோக்கின் உண்மை வெளியாகும். காங்கரஸ் மகாசபையில் கூடியிருப்போர். அத்தனைபேரும், ஏன் 30 லக்ஷ மக்களும் சுயராஜ்யத் தாகங் கொண்டுதான், தேசீயப் பற்றுக் கொண்டுதான் சேர்ந்து இருக்கின்றனரா. என்பதனைச் சிறிது ஆராய்ந்தால் உண்மை புலனாகும்
காங்கரஸ் மகாசபையில் இன்று வகுப்பு வாதிகள், பதவி வேட்டைக்காரர்கள், சர்வாதிகாரிகள், சுயநலமிகள், பழமை விரும்பிகள், பணக்காரர்கள், மனுவாட்சி மக்கள், அடிமை வளர்ப்பவர்கள், அறிவு வளர்ச்சிக்கு அணைகோலுபவர்கள், வருணாச்சிரப் பித்துக்கொண்ட வைதீகப் பிடுங்கல்கள், ஜாதிசமயப் பூசல்கொண்ட ஜடங்கள், தாந்தோன்றிகளாகியவர்களே மலிந்து கிடக்கின்றனர். ஆதியில் காங்கரஸ். ஆரம்பிக்கப்பட்ட நோக்குக்கும் இன்று காங்கரஸ் அடைந்த நிலைமைக்கும் அல்லது இன்றைய காங்கரஸ் நோக்குக்கும் ஏணி வைத்துப் பார்க்கவேண்டியிருக்கின்றது.
காலபேத வர்த்தமானங்களுக்கொப்ப, உலக நடைமுறைகளுக்கொப்ப நாட்டினைத் திருத்தியமைக்க முற்படுங் கட்சிகளுக்கு முரண்பட்டவர்களும், அக்கட்சிகளை அடக்குவதற்கெனவே சர்வாதிகாரத்துவஞ் செய்பவர்களும்; மக்கள் எவ்வளவுக் கெவ்வளவு மடமையாக இருக்கின்றனரோ 2335 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
அவ்வளவுக்கவ்வளவு தமது மதிப்புப் பெருகுகின்றதென எண்ணுவோரும், வகுப்புவாதம் வளர்ந்தால் வயிறு கழுவ வகையறியாதவர்களும், பாட்டாளி மக்கள், உழைத்து உழைத்து ஓய்ந்த மக்கள் உறுப்பசிக்கானப் பங்கு கேட்டால் கொடாது அவர்களை யடக்கியாளுதற்கெனப் பணக்காரக் கும்பல்களும் காங்கரசில் நுழைந்து கொண்டு இன்று அதை
நடத்த முற்பட்டிருக்கின்றன. இவர்கள் வகுப்பதுதான் வழி. வோட்டு சேகரிக்கும் காலத்துத் தாங்கள் ஏழை மக்களுக்காகத்தான் பாடுபடப் போகிறோம். பணக்கார ஆட்சியைப் பாதாளத்திலாழ்த்தப் போகிறோம் என்பது. ஓட்டுப் பெற்றுச் சென்ற பின் நாங்கள் என்றும் சமதருமக் கட்சியிலிருந்ததில்லையே இன்று பணக்கார வர்க்கத்தினிடம்தான் அகப்பட்டுத் தவிக்க நேரிட்டது ஆகவே அவர்கள் இழுத்த வழிதான் செல்லவேண்டும் என்கின்றனர். கட்டாயக் கல்வி வேண்டுமென்றுக் கரைந்தவர்கள் கட்டாயக் கல்விக்குப் பணம் ஒதுக்க மறுதளித்ததுடன் கவைக்குதவாக் கல்வித்திட்டம் (வார்தா) ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எந்தப் போலீசையும் ஸி.ஐ.டி.யையும் எடுக்கவேண்டும் என்று காங்கரஸ்காரர்கள் விழைந்தார்களோ அவர்களே இன்று மேற்படி இலாக்காக்களினது சேவைகளைப் பெரிதும் புகழவும் மானியம் ஒதுக்க மகாத்மியம் பாட வேண்டியதாகிவிட்டது. ஹிந்தியென்னும் எவரும் வேண்டாப் பாஷையொன்று இந்தியா முழுவதுக்கும் ஏற்புடைத்தானப் பாஷை என எப்படி எப்படியோ விளக்கிக்கூற முற்படுகின்றனர். கல்வி விஷயத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தினால் தங்கள் மக்கள் தாராளமாய் உத்தியோகம் வகிக்கலாம் என்பதே இப்பாஷையைப் புகுத்துவதின் நோக்கம். இதைக் காட்டிக்கொள்ள மறுத்த ஏதேதோ காரணங்களைக் கூறுகின்றனர். ஹிந்தியைக் கற்ற வாலிபர்கள் இம்மாகாணத்தில் ஹிந்தியில் நாலைந்து வார்த்தைகள் கூட பேசச் சக்தியற்றவர்களா. யிருக்கின்றனர் என்றும், எந்தப் பாஷையைக் கற்றிருந்தபோதிலும் வடநாட்டினரைத் தென்னாட்டினர் வாயார வாழ்த்தி வரவேற்றுபசரிப்பதே போல் தென்னாட்டினரை வடநாட்டினர் உபசரிப்பதில்லை. அதற்குப் பதிலாகத் தென்னாட்டினரைச் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியைப் படித்து உத்தியோகம் பெறுவதென்பதெங்ஙனம்? தென்னாட்டினர் ஹிந்தி பயின்று வடநாட்டில் பேசுவதாயினும் மிக்க சுலபமாக இருக்கின்றதாவெனின் அஃதுமில்லை. குஜராத் சென்றால் குஜராத்தியும், வங்காளஞ் சென்றால் வங்காள பாஷையும், பஞ்சாப் சென்றால் பஞ்சாபியும், உருதுவும் தேவையாக இருக்கின்றதால் ஹிந்திப் பயின்ற ஒருவன் இங்கிலீஷ் என்பதே யறியாதிருப்பின் என்ன கதியையடைவான் என்பதனை ஹிந்திக்கு வியாக்கியானங் கூறுவோர் சிந்திக்கட்டும். தானளித்த வாக்குறுதியை நிறைவேற்றவோ, தனது வகுப்பினர் குற்றச் சலுகையளிக்கவோ, தனது
குடி அரசு- 1938 (1) 254
வகுப்பினர் உயர்வுற்று விளங்கவோ ஒரு பாஷையை பல பாஷாபிமானங் கொண்ட மக்களிடம் அவர்களனுமதி பெராமலே தமது அதிகார வெறியில் புகுத்தியே தீருவேனென்று பேசுவோர் இன்றைய காங்கரஸை. நடத்துபவராயின் எல்லாருடைய கலைகளுக்கும், பாஷைகளுக்கும் பாதுகாப்பளிக்கப்படும் என்னும் அன்றையக் காங்கரஸின் புனிதக் கொள்கையாண்டு சென்றது. ஓர் அந்நிய பாஷை ஓர் தாய்பாஷை வழங்கப்படும் நாட்டில் கட்டாயமாகவோ, இஷ்டமாகவோ புகுத்தப்பட்டால் அந்நாட்டுத் தாய்க் கல்வியழிவுறும் என்ற அற்றை நாள் கூக்குரல் யாண்டுசென்றது? தங்கள் நாட்டின் மதத்தை விஞ்ஞான ரீதியாய் பதில். சொல்வதர்க்கேற்ப செய்து வருவதாய் மேனாட்டுப் பெரியார் ஒருவர். இந்திய சுற்றுப்பிரயாணக் காலத்து சமீபத்தில் கூறிச் சென்றார். இந்திய
நாட்டு மதம் காலநிலைச் சொத்து அழிவுறுவதாயிருந்தாலும் அழிவுருதுத் தடைசெய்யக் கராச்சித் திட்டத்தின் காப்பாற்றுதலும் இருக்கின்றது இந்திய மதங்களேயன்றி இந்தியாவை இயக்குஞ் சட்டங்களும், விஞ்ஞான ரீதியாய் பதிலளிக்கச் சக்தியற்றுப் புராண ரிதிக்குப் புகலிடமாக்கக் குல்லூகப் பட்டர்கள் குவிந்திருக்கும் குகைக் காங்கரஸே ஆகவே காங்கரசானது இன்னுஞ் சிலரது கைவசத்திலகப்பட்டு உழலுகிறது. காங்கரசின் புனிதக் கொள்கை ஆரம்ப லக்ஷியம் மேற் கூறியவர்களது சேர்க்கையினால் ஆட்டங்கொடுத்துவிட்டது. எவன். ஒருவன் சூது மார்க்கமாய் ஒரு சமூகத்தையோ, ஒரு நாட்டின் மக்களையோ மெளடிகத்திலாழ்த்தி மதிப்புப் பெற விரும்புகிறானோ: அவனும், எவன் ஒருவன் மந்திரோச்சடனம்போல் மகாத்மா, பாரத மாதா, வந்தேமாதரமாகியவற்றைச் சொல்லி மக்களை மயக்கி அதன் பேரில் தனது வாழ்க்கையந்தஸ்தை நிலைக்கச் செய்து கொள்ளுகிறானோ. அவனும் அவன் போன்றவர்களுமே இன்று காங்கரசால் போற்றப் படுகின்றனர். உண்மையில் நாட்டின் உயர்வில், நாட்டின் விடுதலையில், மக்களடிமைப் போக்கில், நாட்டின் க்ஷமாபிவிர்த்தியில் கருத்துக்கொண்டவன் ஒருவனையும் இன்றையக் காங்கரசில் காணுதல் அரிது. பதவி வெறுத்த காங்கரசை பதவி மோகத்துக்குள்படுத்திவிட்டனர். பட்டந்துறந்த காங்கரசை பட்டமளிக்கவும், பட்டம் பெறவுஞ் செய்துவிட்டனர். வகுப்பு வாதத்தை வெறுத்த சபையை உண்மை வகுப்புவாதச் சபையாக்கி விட்டனர். ஏழ்மைக்கிரங்க வேண்டிய சபையை ஏழையை ஏய்க்குஞ் சபையாகிவிட்டது. சுறுங்கக் கூறின் இன்றைய காங்கரஸ் நாட்டின். நல்லறிவியக்கங்களை நசுக்கும் நாசக்காரக் கும்பல்கள் சேர்ந்ததோர் நாகரிகச் சபை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கும்பல்கள் கூண்டோடு ஒழியும்வரை காங்கரஸ் கங்கையை சாக்கடைக் கொண்டு விட்டதாகத்தான் கொள்ளப்படும்
குடி அரசு - கட்டுரை - 10.04.1938 55 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்
இம்மாதம் (ஏப்ரல்) 30ந் தேதி தமிழ் நாடெங்கும் மூனிசிபல் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போட முனைந்து அபேட்சகர்களை நிறுத்தி இருக்கிறார்கள். இன்று முதல் 15 நாள்களுக்கும் தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்கள் எல்லாம் கலவரமாகவும், குழப்பமாகவுமே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. இது ஒருபுறம் இருக்க தேர்தல் பலாபலன்களைப்
பற்றியும் நமக்கு கவலையில்லை.
ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு மூனிசிபாலிட்டிகளில் வேலை செய்ய ஒருவித திட்டமும் இல்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
பின் ஏன் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி தேர்தல்களில் பிரவேசிக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் சமாதானம் என்னவென்றால்,
1. முனிசிபாலிட்டிகளில் லஞ்சம் தாண்டவமாடுகிறதாம்
2. முனிசிபாலிட்டிகளில் கண்டிராக்டர்கள் ராஜ்யம் நடக்கின்றதாம்
3. முனிசிபாலிட்டிகளில் வகுப்புவாதம் தாண்டவமாடுகின்றதாம்
4. முனிசிபாலிட்டிகளில் பணக்காரர்கள் ஆட்சி நடக்கிறதாம்
5. முனிசிபாலிட்டிகளை காங்கரஸ்காரர் அல்லாதார் கைப்பற்றி விடுவதால் சுயராஜ்யம் கிடைப்பது தாமதப்பட்டு விடுகிறதாம் ஆகிய இந்த ஐந்து காரணங்களுக்காக காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இன்று தமிழ் நாட்டில் எந்த முனிசிபாலிட்டியிலாவது கண்டிராக்ட் ராஜ்யம் நடக்கின்றது என்றால் அது காங்கரஸ் கைப்பற்றிய முனிசிபாலிட்டியாகிய சென்னை கார்ப்பரேஷனிலும், சேலம் முனிசிபாலிட்டியிலும் மற்றும் சில காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள இடங்களிலும்தான் நடைபெற்று வருகிறது என்று சந்தேகமறக் கூறலாம்.
லஞ்சத்துக்கு காரணம்
இந்த மாதிரியாக கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடக் காரணம் என்னவென்போமானால் கார்ப்பரேஷன் கவுன்சில் ஸ்தானத்துக்கு காங்கரஸ்காரர்கள் ஆட்களை பொறுக்கும்போது மனதார தெரிந்தே
குடி அரசு- 1938 (1) 256
ஜீவனத்துக்கு பொதுவாழ்வைத் தவிர வேறு வழியில்லாத, மார்க்க மில்லாதவர்களைப் பொறுக்கினார்கள். அப்படி பொறுக்கி எடுத்தவர்களுக்கு சட்டசபையில் செய்தது போல் வெற்றிபெற்ற பின்பு அவர்களுக்கு ஏதாவது மாதச் சம்பளம் போட்டு முனிசிபாலிட்டி பணத்தையாவது மாதாமாதம் கொடுத்து வந்திருந்தால் அந்த கவுன்சிலர்களுக்கு லஞ்சத்தினால் பிழைக்க வேண்டியதான அவசியம் வந்திருக்காது அப்படிக்கில்லாமல் ஜெயிலுக்குப் போனவர் என்றும், கூட்டத்தில் பாடக்கூடியவர் என்றும், பிரசாரம் செய்யத் தகுந்தவர் என்றும், மேடைகளில் பேசத் தகுந்தவர் என்றும், காலித்தனத்தில் கெட்டிக்காரர் என்றும், மற்றவர்களை வைவதில் வீரர் என்றும் இப்படியாகப் பல காரணங்களைக் கருதியும் சில தொண்டர்களின் காலித்தனத்துக்குப் பயந்தும், கண்டபடி அபேக்ஷகர்களைப் பொறுக்கி எடுத்ததால் அவர்கள் கண்டிப்பாய் லஞ்சம் வாங்கி லஞ்சத்தால் பிழைத்து லஞ்சத்துக்கு தக்கபடி நிர்வாகத்தில் அபிப்பிராயம் கொடுத்துத் தீர வேண்டிய அவசியத்திற் குள்ளாய்விட்டார்கள். கார்ப்பரேஷனில் லஞ்சம் தாண்டவமாடினதற்கும், தாண்டவமாடுவதற்கும் காங்கரஸ்காரர்கள் இந்த உண்மையான காரணத்தை ஒப்புக் கொள்ளாமல் “ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ஆட்களை காங்கரசில் சேர்த்து காங்கரஸ் அபேட்சகர்களாக அவர்களை நிறுத்தியதால் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினார்கள்!” என்று காங்கரஸ் பத்திரிகையான “தினமணி” காரணம் எழுதி லஞ்சத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறது. அப்படி இருந்தும் இன்றும் கூடத்தான். காங்கரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்களை பொறுக்கி இருக்கிறார்கள். லஞ்சம் வாங்குவது கட்சியைப் பொறுத்ததா, ஆளைப் பொறுத்ததா என்பதை ஓட்டர்கள் கவனித்துப் பார்க்க வேண்டும் கட்சியைப் பொறுத்ததென்றால் காங்கரசுக்கு வந்தும் ஏன் ஒருவன். லஞ்சம் வாங்க வேண்டும்? ஆளைப் பொறுத்ததென்றால் கட்சியைப் பற்றி ஏன் பேசவேண்டும்? அப்படியானாலும் “காங்கரசுக்கு கால் ரூபாய் கொடுத்துவிட்டால் எப்படிப்பட்ட அயோக்கியனும் யோக்கியனாய் விடுவான்” என்று கனம் சி.ஆர். ஆச்சாரியார் சொன்னது என்ன ஆயிற்று?
லஞ்சத்தை ஆதமிப்போருண்டா?
நிற்க, முனிசிபாலிட்டிகளில் ஜில்லா போர்டுகளில் லஞ்சம் கூடாது என்பது நாட்டில் எல்லாக் கட்சியாருடையவும், எல்லாத் தனிப்பட்ட மனிதருடையவும் அபிப்பிராயமேயாகும். எந்த கட்சியிலும் லஞ்சம் வாங்குவது ஒரு திட்டமாக இல்லை. ஆனால் இதுவரை காங்கரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சி கவுன்சில் மெம்பர்களும் லஞ்சம் வாங்கியதாக எதிரிகளால் கூடச் சொல்லப்படவில்லை. இப்படி இருக்க காங்கரஸ்காரர்கள் முனிகிபாலிட்டிகளில் லஞ்சத்தை ஒழிப்பதற்கு ஆக போகிறோம் என்று சொல்லுவதில் ஏதாவது நாணையமிருக்க மூடியுமா என்று கேட்கிறோம்
257 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஒவ்வொரு ஊர்களிலும் காங்கரஸ்காரர்கள் மூனிசிபாலிட்டிக்கு நிறுத்தி இருக்கும் ஆட்களின் ஜாப்தாவைப் பார்த்தால் அந்த ஆட்களில் பலர் லஞ்சம் வாங்காமல் அவர்கள் எப்படி ஜீவனம் செய்ய முடியும் என்று யோசித்தால் காங்கரசால் லஞ்சம் நிறுத்தப்பட்டுவிடுமா என்பது விளங்கிவிடும்.
லஞ்சம் ஒழிய வேண்டுமானால்
மற்றும் மனைவி இருக்கிற காங்கரஸ் கவுன்சிலர்களே சிலர் சென்னை கார்ப்பரேஷனில் பெண் சிப்பந்திகளிடம் ஒழுக்க குறைவாக நடக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்லப்படுமானால் மனைவி யில்லாத கவுன்சில் மெம்பர்கள் நாணையமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் சொல்ல முடியும்? பெரிய மனிதர்களாகவும், சமுதாயத்தில் மரியாதையும் கண்ணியமும் விரும்பி மதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டியவர்களுமான கனவான்கள் என்கின்றவர்களை விட சமுதாயத்தில் எவ்வித மரியாதையும் பொறுப்பும் இல்லாத சாதாரண: மனிதர்கள் மெம்பர்களாவார்களானால் அவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்களாகவும், நாணையமுள்ளவர்களாகவும் கனவான்கள் போலவும் நடந்து கொள்ள முடியும் என்று கேட்கிறோம். ஆகவே காங்கரசானது உண்மையில் மூனிசிபாலிட்டியில் லஞ்சத்தையும், ஒழுக்க ஈனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கருதுமாகில் அது முதலில் காங்கரசில் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லாமலும் நிறுத்தும் ஆட்களில் அம்மாதிரியான ஆட்களாவதற்கு இடமில்லாதவர்களாகவும் பார்த்து நியமித்து இருக்க வேண்டும். இதுவரை பல இடங்களிலிருந்தும் நமக்கு வந்திருக்கும் காங்கரஸ் அபேட்சகர் லிஸ்டுகளிலிருந்து பார்ப்போமானால் காங்கரசின் பேரால். போடப்பட்டிருக்கும் நபர்களில் பலர் தாங்கள் நாணையக் குறைவாகவும் ஒழுக்க ஈனமாகவும் நடந்து கொள்ளுவதுடன் மற்ற யோக்கியமான ஆட்கள் யாராவது இருந்தால் அவர்களையும் கெடுத்துவிடக் கூடியவர்கள் என்றே காணப்படுகின்றனர். ஆதலால் காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டி களுக்கு லஞ்சத்தை ஒழிப்பதற்காக போகிறோம் என்பது சுத்த ஹம்பக் என்பதோடு பலர் லஞ்சம் வாங்கிப் பிழைப்பதற்காகவே இப்படிச் சொல்லி கொண்டு போகிறார்கள் என்று கூற வேண்டியிருக்கிறது
கண்டிராக்ட் ராஜ்யம் எது?
இனி கண்டிராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் யோக்கியத்தைப்பற்றி சிறிது யோசிப்போம். காங்கரஸ் ஆதிக்கத்தில் உள்ள எந்த ஸ்தாபனத்தில் இன்று கண்டிராக்ட் ராஜ்யம் இல்லை என்று சொல்ல முடியும்? சென்னை கார்ப்பரேஷன் மேயராய் இருந்த தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கு கார்ப்பரேஷனில் கண்ட்றாக்ட் சம்மந்தமிருந்தது
குடி அரசு- 1938 (1) 258
என்பது ரிக்கார்டுகள் மூலமாய் ரசு செய்யப்பட்டு அது அவருக்காகக் கொடுக்கப்பட்ட இரசீது மூலமாய் ருஜுவாகி அந்த இரசீதுகளும் பிரசுரிக்கப்பட்டு செட்டியார் சென்றவிடமெல்லாம் இதைப்பற்றி கேள்வி கேட்கப்பட்டு செட்டியார் அவர்களும் பதில் சொல்ல முடியாமல் ஒவ்வொரு கூட்டங்களிலிருந்தும் பின்புறமாய் ஓடினதோடு அன்று முதல் இன்று வரை அவர் பாவம் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் தலை காட்டக்கூட பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறதை யாரும் எந்த காங்கரஸ்வாதியும் மறுக்க முடியாது.
சென்னைக் கதை
மற்றும் சென்னை கார்ப்பரேஷனில் அரிசி கண்றாக்டில் ஒரு சாயபு கவுன்சிலர் கலந்திருந்ததாயும் புத்தகக் கண்டிறாக்ட்டில் ஒரு பார்ப்பன கவுன்சிலர் அதுவும் சட்டசபை மெம்பர் கவுன்சிலர் சம்மந்தம் வைத்திருந்ததாயும், ஸ்டேஷனரி சாமான்களிலும், மாட்டுக்கு தீவனம் முதலியவைகளிலும் வேறு பல காரியங்களிலும் ஜாதிக்கொருவர் என்று சொல்லத்தக்க வண்ணம் கார்ப்பரேஷன் கவுன்சிலர்களுக்கு சம்மந்தமிருப்பதும் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் சொல்லிக் காட்டிக் கொள்ளுவதும் காங்கரஸ் பத்திரிகைகளான 'தமிழ்மணி' “நம் நாடு 'வினோதினி' முதலாகிய பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிப்படையாயும், சூசனையாகவும் வருவதை யார்தான் இல்லை என்று மறுக்க முடியும்? இவைகள் எல்லாம், காங்கரஸ் கமிட்டியார் லஞ்சம் வாங்கின கவுன்சிலர்களை விசாரித்தபோது பல வழிகளில் வெளியாகவில்லையா?
போர்டு பிரசிடெண்டுகள் ஓழுக்கம்
காங்கரஸ் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளில் கண்டிராக்ட் ராஜ்யமில்லாமல் யார் ஒழுங்காய் நடந்து கொண்டார்கள் என்று எந்த காங்கரஸ்வாதியாவது சொல்ல முடியுமா என்று கேட்கிறோம் போர்டிலுள்ள காங்கரஸ் மெம்பர்களுக்கு கண்ட்றாக்ட் கொடுக்கவில்லை என்றுதானே திருநெல்வேலி, திருவண்ணாமலை போர்ட் பிரசிடெண்டுகள் மீது காங்கரஸ்காரர்கள் நம்பிக்கைஇல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது? மெம்பர்களும், மேயர்களும், பிரசிடெண்டுகளும் நடந்து கொள்ளும் யோக்கியதைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கரஸ் மந்திரிகளின் யோக்கியதை என்ன என்று சவால் விடுகிறோம்
மந்திரிகள் யோக்கியதை என்ன?
காங்கரஸ் மந்திரிகளுக்கு சர்க்கார் பணத்தில் மோட்டார்கார் வாங்கினார்களே அதில் அவர்கள் நடந்து கொண்ட யோக்கியதை என்ன என்று பார்ப்போம். முதலாவது கார்களுக்காக டெண்டர் கேட்கவில்லை 60 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
என்பதோடு அவை மந்திரிகளுக்கு வேண்டியவர்கள் என்பவர்களான பார்ப்பனர்களிடமே வாங்கப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றி சட்டசபையில். கேள்வி வந்தபோது ஒரு மந்திரியார் அன்று வரை அதாவது அந்த கேள்வி கேட்கப்படும் வரை அந்த மோட்டார்கார் சப்ளை செய்த கம்பெனியார் யார் என்று எனக்குத் தெரியாது என்று பதில் சொன்னாராம், இது உண்மையாக இருக்க முடியுமா என்று கேட்கிறோம். ஒரு சமயம்
கார் வாங்கும்போது அந்த கம்பெனியார் யார் என்று தெரியாமல் இருந்தாலும் இருக்க நியாயமுண்டு. கார் வாங்கிய பிறகு 6 மாத காலமாய் அதைப் பற்றி பத்திரிகைகளில் புகார்களும், மந்திரிகளின்
மீது குறைகளும் பறந்து கொண்டிருந்த காலத்தில்கூட அந்த மந்திரியாருக்கு அவை எந்தக் கம்பெனியில் வாங்கியது என்று அதுவரையில் தெரியாமல் இருந்தது என்றால் அவரும் அது வரையில் அதைப்பற்றிய விஷயம் தமக்கு எட்டமுடியாமல்படி அவ்வளவு தூரம் காதை அடைத்துக் கொண்டிருந்தார் என்றால் இதை உலகத்தில் எட்டாவது அதிசயமெனத்தானே சொல்ல வேண்டி இருக்கிறது?
சேலம் நாற்றம்
அதுதான் போகட்டும். சேலம் வாட்டர்வர்க்ஸ் குழாய் வேலை கண்டிராக்டில், மந்திரி சபையும், கண்டிராக்ட் ராஜ்யம் ஆய்விட்டதற்கு காங்கரஸ்காரர்கள் இதுவரை என்ன பதில் சொன்னார்கள் சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம்
இது கூட மந்திரிகளுக்கு தெரியாமல் போன கம்பெனியா அல்லது தங்களுக்கு அக்கரை இல்லாமல் முடிவு செய்யப்பட வேண்டிய விஷயமாய் இருந்ததா என்று கேட்கிறோம்.
“பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்களைத்தான் வீட்டுக்குள் எடுத்து எறியும்படி செய்யுமே தவிர வீட்டுக்குள் இருக்கும் சாமானை வெளியில் எறியச் செய்யாது” என்று
ஒரு பழமொழி உண்டு.
அதுபோல் நமது பார்ப்பன மந்திரிகள் தெரியாமலும் லட்சியம் இல்லாமலும் கவனிக்காமலும் எந்த காரியம் தூக்க வெறியில்
செய்தாலும் அவையெல்லாம் பார்ப்பனர்களுக்குத்தான் அனுகூலமாகவும் பார்ப்பனர்களைத் தேடிப் போகக் கூடியதாகவும்தான் இருக்குமே தவிர அவை ஒன்றுகூட பொதுவாகவோ, பார்ப்பனரல்லாதார் ஒருவருக்காவது பயன்படக் கூடியதாகவோ இருப்பதில்லை.
ஆகவே இப்படிப்பட்ட மந்திரிகளையும், மேயர்களையும், பிரசிடெண்டுகளையும், காங்கரஸ் மெம்பர்களையும் கொண்ட
குடி அரசு- 1938 (1) 260
காங்கரஸ்காரர்கள் முனிசிபாலிட்டியில் கண்டிராக்ட் ராஜ்ஜியத்தை ஒழிக்கிறோம் என்பது “ எனக்கு பயித்தியம் தெளிந்துபோய்விட்டது உலக்கை எடுத்துக்கொடு அதை கோவணமாய் கட்டிக்கொண்டு வெளியில் வருகிறேன் என்று அடைப்பட்டுக் கிடக்கும் ஒரு பயித்தியக்காரன் கேட்பது போல் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. அடுத்தாப்போல் முனிசிபாலிட்டியில் பணக்காரர்கள் வராமல் தடுக்க வேண்டும் எனப்படுவதைப் பற்றி யோசிப்போம்
பணக்காரனை எப்படித் தடுப்பது?
எந்த ஸ்தாபனத்திலாவது பணக்காரர்கள் வராமல் தடுக்க யாராலாவது முடியுமா என்று கேட்கின்றோம். அன்றியும் பணக்காரன்
ஏன் தடுக்கப்பட வேண்டும்? பணக்காரன் ஏற்கனவே சம்பாதித்துக் கொண்டதால் இனி பாப்பர்கள் முனிசிபாலிட்டிக்கு சென்று சம்பாதிக்கட்டும் என்கிற ஒரு மாறுதலுக்கு ஆகவா? என்று கேட்கிறோம். காங்கரசால் நிறுத்தப்பட்டவர்களுக்குள் பணக்காரர்கள் இல்லையா? அல்லது சுயேச்சையாய் நின்று இருக்கிறவர்களுக்குள் பணக்காரர்கள் அல்லாதவர்கள். இல்லையா? என்று கேட்கிறோம்
அப்படிக்கிருக்க சில பணக்காரர்களிடம் மாத்திரம் இந்த காங்கரஸ் பரிசுத்தவான்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்று யோசித்துப் பார்த்தால் காங்கரஸ்காரர்கள் சில பணக்காரர்களை வேண்டாம் என்பதற்கு காரணம் விளங்காமல் போகாது
சர்க்காரோ காங்கிரஸ்காரர்களோ நாட்டின் சகல தொழிலையும், வர்த்தகத்தையும் ஏற்றுக்கொண்டால் மாத்திரம் மூனிசிபாலிட்டியிலிருந்து பணக்காரர்களை விலக்க முடியுமே ஒழிய மற்றபடி இதில் காங்கரஸ்காரர்கள் பணக்காரர்களைப் பற்றிப் பேசுவது, கடைந்தெடுத்த காலித்தனமும் அயோக்கியத்தனமுமேயாகும். ஏனெனில் தாங்கள் செய்ய முடியாததைப் பேசுகிறார்கள் என்பதோடு இப்படிப் பேசும் காங்கரஸ்காரர்களிலேயே
பலர் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரர் வீட்டு எச்சில் தொட்டிகளை
காத்துக் கொண்டிருக்கிறவர்கள் என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு பணக்காரரால் உதைத்து விரட்டி அடிக்கப்பட்டவர்கள் என்றும் அறியக் கிடப்பதாலேயே சொல்லுகிறோம். உதாரணமாக தஞ்சாவூர் காங்கரஸ் பாப்பர் பக்தர்கள் தோழர் நாடிமுத்து பிள்ளையிடம் ஏழாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டுதான் தோழர் சாமியப்ப முதலியாரின் “பணக்கார ராஜ்யத்தை” ஒழித்தார்கள். இப்படியே தான் இருக்கும் மற்றும் தமிழ் நாட்டில் “பணக்காரர்கள் ராஜ்யம்” ஒழிக்கப்பட்ட யோக்கியதை. ஆகவே
இந்த சாக்கும் அருத்தமும், பொருத்தமும், நாணையமும் மற்றதென்றே சொல்லுவோம். பிறகு முனிசிபாலிட்டிகளில் வகுப்பு வாதம் ஒழிப்பது என்பது பற்றி யோசிப்போம் 61— ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
வகுப்புவாதம் எங்கு இல்லை?
இன்று இந்தியாவில் எங்கு வகுப்பு வாதம் இல்லை என்று சொல்ல முடியும்? காங்கரஸ் சட்டசபைகள் பூராவும் வகுப்புவாத சபைகளாகவே இருக்கின்றன.
காங்கரஸ் “வெற்றி” பெற்ற பிறகே நாட்டில் வகுப்பு வாதம் நாளொரு வண்ணமும், பொழுதொரு மேனியுமாய் வளர்ந்து வருகிறது. வகுப்பு வாதம் இல்லாவிட்டால் சென்னை அசம்பளியில் தோழர் கனம் முனிசாமிபிள்ளையைக் காட்டி முக்கால் கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கண்களிலும் தோழர் யாகூப் ஹாசன் சேட்டைக்காட்டி ஒரு கோடி முஸ்லிம்கள் கண்களிலும் தோழர் ராமநாதனைக் காட்டி இரண்டுகோடி தமிழ் மக்கள் கண்களிலும் இந்தப் பார்ப்பனர்கள் மண்ணைப் போட்டிருக்க முடியுமா? என்று கேட்கிறோம். வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள்தான் பிரதிநிதிகளாக இருந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்
வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் சென்னை இரண்டு சட்ட சபைக்கும் பார்ப்பனர்களே தலைவராக ஆகி இருக்க முடியுமா என்று கேட்கிறோம்
வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியாரும் பார்ப்பனர்களாய் வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்
வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் இந்தியாவில் காங்கரஸ் காரர்கள் கைப்பற்றிய ஆறு மாகாணங்களிலும் பிரதம மந்திரிகள் ஆறு பேரும் பார்ப்பனர்களாகவே வந்திருக்க முடியுமா என்று கேட்கிறோம்.
வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பட்டங்கள் விட்ட பார்ப்பனரல்லாதார் அனுபவம் பெற்றவர்களும் 10, 20 வருஷம் பொது வாழ்வில் உழைத்து மதிப்பு பெற்றவர்களுமிருக்கும்போது காங்கரஸ் துரோகிகளுக்கு மந்திரி வேலை கிடைத்து இருக்குமா? என்று கேட்கின்றோம்
வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் தமிழ்நாட்டில் மந்திரிகளான
5 தமிழ் மெம்பர்களில் 4 பேர்கள் காங்கரஸ் துரோகிகளாகவும் வகுப்புவாதிகளாகவும் இருந்தவர்களே மந்திரிகளாக வந்திருக்க முடியுமா? கடைசியாக ஒன்று குறிப்பிடுகிறோம். காங்கரசில் வகுப்பு வாதம் இல்லாமல் இருந்தால் காங்கரசுக்காக எவ்வளவோ உழைத்தவரும் எவ்வளவோ தியாகம் செய்தவரும் கல்வி விஷயத்தில் சென்னை மாகாணத்தில் நிபுணரும், கல்வி இலாக்கா தலைவராய் இருந்து அனுபவம் பெற்றவருமான தோழர் சி.ஆர். ரெட்டியார் இருக்க கல்வி இலாக்கா (யூனிவர்சிட்டி) தொகுதிக்கு சி.ஆர். ஆச்சாரியார் நிறுத்தப்பட்டு மந்திரி பதவியும் பெற்றிருக்க முடியுமா என்று கேட்கிறோம்
குடி அரசு- 1938 (1) 26
2
ஸ்தல ஸ்தாபனங்கவில் வகுப்புவாதம்
இப்படியே காங்கரசின் வகுப்புவாதத்துக்கு இனியும் ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எடுத்துக் காட்டலாம்.
ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாதம் இல்லையா என்பதற்கு கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி கட்சியாக, கார்ப்பரேஷன் காங்கரஸ் மீட்டிங்கில் 3 தடவை தெரிந்தெடுக்கப்பட்டவரும் கார்ப்பரேஷன் பொது மீட்டிங்கில் தெரிந்தெடுக்கப்பட்டவருமான தோழர் சிவசைலம் பிள்ளைக்கு பதவி கொடுக்காமல் ஒழுக்கத்துக்கும் நாணையத்துக்கும் விரோதமாக ஒரு பார்ப்பனருக்கு அந்த பதவி கிடைத்திருக்குமா என்பதும் கார்ப்பரேஷன் தலைமை உபாத்தியாயர் வேலைகள் காலியாவதெல்லாம் பார்ப்பனருக்கே போய்க் கொண்டிருக்குமா என்பதுவுமே போதுமான ஆதாரமாகும் இவ்வளவு சமாதானமும் போறாது என்று வைத்துக்கொண்டாலும் ஒவ்வொரு ஊரிலும் அட்ஹாக் கமிட்டியார் அபேக்ஷகர்களை தெரிந்தெடுக்கும் போது பார்ப்பனர்களை மாத்திரம் அவர்களது எண்ணிக்கைக்கு மேல் 100க்கு 200 - வீதம் 300- வீதம் சில இடங்களில் 500 வீதம் அதிகமாக தெரிந்தெடுக்கப்படுவதின் காரணம் என்னவென்று கேட்கின்றோம். இனியும் காங்கரஸ்காரர்கள் பதவிபெற்றால் தங்களுக்குள் வகுப்பு வாதம் கிடையாதென்றும் ஆனால் பார்ப்பனர் என்கின்ற ஒரு வகுப்பார்தான் யெல்லாவற்றிற்கும் தகுதி உள்ளவர்கள் என்று சொல்லிக்கொண்டு சர்வம் பார்ப்பனமயமாய் ஆக்கிவிடுவார்களா இல்லையா என்று கேட்கின்றோம்
சுயராஜ்யம் எது
இனிக் கடைசியாக காங்கரஸ் எதிரிகள் ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்ற விட்டு விட்டால் சுயராஜ்யம் தடைபட்டு போகும் என்பதைப்
பற்றி யோசிப்போம்
சுயராஜ்யம் என்பதற்கும் மூனிசிபாலிட்டிக்கும் என்ன சம்மந்தமிருக்கிறது என்பது முதலில் கவனிக்கப்படத் தக்கதாகும்
சட்டசபை என்பது ஒரு நாட்டில் ஆட்சி நடக்க சட்டம் செய்யும் ஸ்தாபனமாகும். ஆதலால் அங்கு சட்ட வல்லவர்கள் சென்று
சுயராஜ்யத்துக்கு சட்டம் செய்யலாம். அதுவும் அதற்கென்று ஏற்கெனவே ஏற்பட்டுள்ள சட்டத்திற்கு அடங்கி சட்டம் செய்யவேண்டும். ஆனால் முனிசிபாலிட்டிகளோ அப்படி அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டப்படி நடப்பதற்கு ஆக ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அங்கு சுயராஜ்ய சம்மந்தமாகவோ, வேறு எந்த விதமாகவோ ஒரு சட்டமும் செய்ய முடியாது. செய்தாலும் செல்லாது
2 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
முனிசிப்பாலிட்டி வேலை
முனிசிபாலிட்டியில் செய்யக் கூடியதெல்லாம் சர்க்கார் கட்டளைப்படி வரிவிதித்து சர்க்கார் மிரட்டலுக்கு பயந்து வரி வசூலித்து ஊருக்குள் உள்ள ரோடுகளை பராமரிக்கவும், தெருக்கள் கக்கூசுகள்
சுத்தம் செய்யவும், சுகாதாரம், கல்வி ஆகியவைகளை நிர்வகிக்கவுமே ஏற்பட்ட ஸ்தாபனங்களாகும். அதற்கும்கூட முனிசிபாலிட்டிகளுக்கு ஜவாப்தாரிகளல்லாத மேல் அதிகாரிகளும் நிபுணர்களும் உண்டு. அவ்விஷயங்களில் அவர்கள் சொன்னபடிதான் முனிசிபல் கவுன்சிலர்கள் கேட்க வேண்டுமேயொழிய முனிசிபல் கவுன்சிலர்கள் சொல்லுகிறபடி
அவர்கள் கேட்கமாட்டார்கள். இவை தவிர நேரிட்டு நிர்வாகம் நடத்த சர்க்காருக்கு ஜவாப்தாரி ஆனவரும், கவுன்சிலர்க்கு ஜவாப்தாரி அல்லாதவருமான நிர்வாக அதிகாரி ஒருவர் ஒவ்வொரு மூனிசிபாலிட்டிக்கும் உண்டு. அப்படி இருக்க முனிசிபாலிட்டியில் என்ன சுயராஜ்யம் பெற முடியும் இப்படிப்பட்ட முனிசிபாலிட்டியில் யார் போனால்தான் எப்படிப்பட்ட சுயராஜ்யம் எப்படி தடைப்பட்டு விடும் என்று கேட்கிறோம்
காங்கரஸ் கைப்பற்றும் மர்மம்
முனிசிபல் கவுன்சிலராவதற்கு தகுதியான யோக்கியதா பக்ஷமும் தனிப்பட்ட நாணையமும் ஒழுக்கமும் இல்லாத அயோக்கியர்களும் கவுன்சிலர்களாவதற்காக செய்துகொண்ட சூழ்ச்சிகளும் இழிவான தந்திரங்களும்தான் முனிசிபாலிட்டியை காங்கரஸ் கைப்பற்ற வேண்டும் என்று சொல்லும் காரணமாகுமே தவிர மற்றபடி அதில் சிறிதும் நாணையமில்லை என்று உறுதியாகச் சொல்லுவோம் பொதுவாக மேற்கண்ட எல்லாவற்றையும்விட மூனிசிபாலிட்டியில் காங்கரஸ்காரர்களல்லாதவர்கள் செல்ல இடம் கொடுத்தால் சுயராஜ்யம் வருவது தடைப்பட்டுப் போகும் என்று சொல்வது மகா மகா அற்பத்தனமும் அயோக்கியத்தனமும் மனதறிந்து பேசும் போக்கிரித்தனமான பேச்சாகும் என்று மறுபடியும் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம். ஏனெனில்,
பார்ப்பனர் தோற்றம்
இந்தச் சாக்கினால்தான் பார்ப்பனர்கள் முனிசிபாலிட்டிகளில் தங்களை யோக்கியதைக்கு மீறி உள் நுழைய முடிகின்றது. உதாரணமாக ஈரோட்டை எடுத்துக் கொள்ளுவோம். இந்த 20 வருஷகாலமாக பார்ப்பனர்கள் ஈரோடு மூனிசிபாலிட்டிக்கு ஒருவர் மாத்திரமே புக முடிந்தது. இப்போது சுயராஜ்யத்தை அவசரப்படுத்துவது என்னும் பேரால் 3, 4 பார்ப்பனர்கள் அபேக்ஷகர்களாய் முன்வந்து விட்டார்கள்.
குடி அரசு- 1938 (1) 264
மற்ற பல ஊர்களில் இதைவிட அதிகம் பேர் இந்தச் சாக்கில் உள்ளே
புகப் பார்க்கிறார்கள். இதை கருத்தில் கொண்டே பார்ப்பனப் பத்திரிக்கைகள் பல இந்த அயோக்கியத்தனமான சாக்கினை சொல்லுகின்றன. ஆகவே இந்தக் காரணத்தால்தான், இதுவே பார்ப்பனர்கள் பொது ஸ்தாபனங்களுக்கு அருகதை அற்றவர்கள் என்பதையும் பொதுநலங்களில் நாணையமற்றவர்கள் என்பதையும் காட்டுவதற்கு போதுமான ஆதாரங்களாகும் ஆகையால் அவ்வவ்விடங்களிலுள்ள முனிசிபல் ஓட்டர்கள் ஒவ்வொருவரும் பார்ப்பனர்களாய் இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட தகுதியையும் நாணையத்தையும் உரிமையையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தங்கள் ஓட்டுகளை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். அப்படிக்கு இல்லாத பக்ஷம் முனிசிபாலிட்டிகள்
கட்சிச் சண்டைகளுக்கு இடமாகவும், காலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு புகலிடமாக அதிக வரிகள் கொள்ளை போவதுடன் முனிசிபல் வாழ்க்கையும் நாசமாகிவிடும் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 17.04.1938
65— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
காங்கரஸ் வகுப்புவாத விளக்கம்
தோழர்களே! அதிக நேரமாய் விட்டது. மணி இப்போது 9.30 நான் 10.30 மணி வண்டிக்குப் போக வேண்டும். அபிராமத்தில் நாளை இது போலவே பல ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். ஆதலால் நான் அதிகம் பேச நேரமில்லை. நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கிடையில் உடல் அசெளகரியத்தில் இங்கு வந்தும் பகல் 12 மணியிலிருந்து கூட்டத்தை 5 மணிக்கே கூட்ட வேண்டுமென்று சொல்லியும் ஒருவரும் லட்சியம் செய்யாமல் ஏதேதோ பாட்டு, பிரார்த்தனை, வரவேற்பு, தொழுகை என்னும் பேரால் 7% மணி ஆக்கி விட்டீர்கள். பிறகு இருவர் பேச மணி 9-30 ஆகிவிட்டது. நாங்கள் இங்கு வருவதின் கருத்து என்ன? ஏதாவது பேசிவிட்டு போக வேண்டுமென்பதேயல்லாமல் விளம்பரம் செய்து எங்கள் முகங்களைக் காட்டிவிட்டுப் போவதற்காக அல்ல. அநேகமாய் நம்மவர்கள் பொதுக் கூட்டங்களை இப்படித்தான் செய்து விடுகிறார்கள். இம்மாதிரி கூட்டத்தை ஒரு பண்டிகை மாதிரி ஆடம்பரம் செய்து விடுகிறார்களே தவிர எங்களைச் சரியானபடி பயன்படுத்திக் கொள்வதில்லை. நம் நிலை காங்கரஸ்காரர்கள் பொய்யும் பித்தலாட்டமும் பேசி வெளி மாகாணக்காரர்களைக் கூட்டி வந்து பொறுப்பற்ற முறையில் ஏமாற்றுவதல்ல. தகுந்த ஆதாரங்களுடன் எதிரிகளுடன் போராடுவதேயாகும்
ஆதலால் எனது அதிருப்தியைக் காட்டிக் கொள்வதற்காகவே நான். இன்று பேசுவதில்லை என்று முடிவு செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் 5 மணி முதல் இந்த 9.30 மணி வரை பல மக்கள் நான் ஏதோ பேசுவேன் என்று எதிர்பார்த்திருப்பதாக சில தோழர்கள் சொல்லுவதாலும் சில காலிகள் தோழர் கலீபுல்லா சாயபு பேசும்போது இடையில் குறுக்கிட்டு கேள்வியும் மறுப்பும் செய்ததாலும் நான் 10, 15 நிமிஷமாவது ஏதோ இரண்டு வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன்.
அதுவும் இப்போது எங்கும் பேச்சாயிருக்கும் முனிசிபல் தேர்தலைப் பற்றி பேசுகிறேன்.
காங்கரகக்கு முனிசிபாலிட்டியில் என்ன வேலை?
தோழர்களே! சமீபத்தில் தமிழ் நாட்டில் எங்கும் முனிசிபல் தேர்தல் நடக்கப் போகிறது. அதில் காங்கரஸ்காரர்கள் போட்டி போடுகிறார்களாம்.
குடி அரசு- 1938 (1) 266
காங்கரஸ்காரர்களுக்கு முனிசிபாலிட்டியில் என்ன வேலை இருக்கிறது அங்கு முனிசிபாலிட்டியில் இந்த வீரர்கள் எந்தச் சட்டத்தை உடைக்கப்போகிறார்கள்? முனிசிபாலிட்டியில் எந்த ஏகாதிபத்தியத்தை ஒழிக்கப்போகிறார்கள்? முனிசிபாலிட்டியில் எந்த வெள்ளையனை அன்னியனை விரட்டி அடிக்கப் போகிறார்கள்? அங்கு இவர்களுக்கு காங்கரஸ் திட்டத்தில் ஒரு வேலையும் குறிப்பிட்டில்லை. வெறும் காலிகளுக்கு ஒரு வயிற்றுப் பிழைப்பை உண்டாக்கிக் கொள்ளவும், அயோக்கியர்கள் பொறுக்கித் தின்னவுமே காங்கரசின் பேரால் சிலர் உள்ளே நுழையப் பார்க்கிறார்கள். சிலர் உண்மையாகவே போகிறவர்களாக இருக்கலாம். ஆனால் காங்கரசுக்காரர்கள் இதுவரை கைப்பற்றிய சகல ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதைகளையும் பாருங்கள். எது நாணையமாய் யோக்கியமாய் நடக்கின்றது
சென்னை கார்ப்பரேஷன்
சென்னை கார்ப்பரேஷனை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு கவர்னர் இருக்கிறார். மந்திரிகள் இருக்கிறார்கள். CLD. புலிகள் இருக்கின்றன. அப்படி இருந்தும் அங்கேயே காங்கிரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்கினதாக காங்கரஸ் பத்திரிகைகளே “தினமணி உட்பட கூறுகின்றன. காங்கரஸ் கவுன்சிலர்கள் சிலர் பெண் உபாத்தியாயர்களிடமும் நர்சுகளிடமும் எவ்வளவோ அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதாக சென்னையில் பிரசுரங்கள் பறந்தன. அங்கு கார்ப்பரேஷன் அதிகாரங்களை சர்க்காருக்கு விட்டுக் கொடுத்ததாகவும் முனிசிபாலிட்டிகளுக்கே மானக்கேட்டை உண்டுபண்ணி விட்டதாகவும் குறைகள் கூறப்பட்டன. முனிசிபல் கண்டராக்டுகளை கவுன்சிலர்களே எடுத்ததாக புள்ளி
விவரங்கள் காட்டப்பட்டன. சில கவுன்சிலர்கள் இன்னமும் அந்த வேலையால் பிழைக்கிறார்கள் என்று காங்கரஸ் கவுன்சிலர்களே கூறினார்கள். சில கவுன்சிலர்கள் மீது லஞ்சம் முதலிய குற்றத்திற்கு காங்கரஸ் கமிட்டி நடவடிக்கை எடுத்து தண்டித்து இருக்கின்றன. அப்படித் தண்டிக்கப்பட்டவர்களும் இன்னமும் காங்கரஸ் கவுன்சிலராக இருக்கிறார்கள். மறுபடியும் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்
அங்கு வகுப்பு வாதம் தாண்டவமாடுவதாகவும் மெஜாரிட்டிகளாக உள்ள சிலருடைய அபிப்பிராயம். பார்ப்பனர் அல்லாதார் என்பதற்கு ஆக புறக்கணிக்கப்படுவதாகவும், பார்ப்பன ஆதிக்கமும், பார்ப்பன சலுகையும் தலைவிரித்தாடுவதாகவும் ஆதலால், பார்ப்பனரல்லாத கவுன்சிலர்கள் அபிப்பிராயம் புறக்கணிக்கப்படுவதாகவும் கூக்குரல்கள் இடப்படுகின்றன.
முனிசிபாலிட்டிகளைக் கைப்பற்றுவதற்கு காங்கரசுக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லுவதற்கு உங்களுக்கு இனி என்ன ஆதாரம் வேண்டும். ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
கல்வி அதிகாரி
கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி வேலைக்குத் தோழர் சிவசைலம்பிள்ளை பி.எ.எல்.டி., டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல் காங்கரஸ் மெம்பர்களால் அதிக மெஜாரிட்டியால் 3 தரம் தெரிந்தெடுக்கப்பட்டார். கடைசியில் என்ன ஆயிற்று? அது செல்லுபடியற்றதாக்கப்பட்டுவிட்டது. காரணம் காங்கரஸ் கவுன்சிலர்கள் லஞ்சம் வாங்குகிறவர்களாம். ஆனால் இதில் லஞ்சம் வாங்கவில்லையாம். சிவசைலம் பிள்ளையும் லஞ்சம் கொடுக்கவில்லையாம். அவர் மிகுதியும் தகுதியுடையவர்தானாம். இவற்றைத் “தினமணி"யும், ஆனந்தவிகடனு'மே எழுதியிருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு பார்ப்பனர்தான் அந்த வேலைக்கு நியமிக்கப்பட்டுவிட்டார். அங்கு இனியும் மற்ற பெரிய வேலைகளுக்கும் பார்ப்பனர்களே நியமிக்கப்படுகிறார்கள். நியமிக்கப்படவும் போகிறார்கள். சின்ன வேலைகளுக்கும் அதாவது கார்ப்பரேஷன் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயர்கள் வேலைக்கும் 100க்கு 100 பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்படுகின்றன. இதுதான் முனிசிபாலிட்டிகளில் காங்கரஸ் செய்யப்போகும் வேலைத் திட்டம் என்பதோடு பெறப்போகும் சுயராஜ்யமா என்று கேட்கிறேன்.
திருச்சி யோக்கியதை
இனி அடுத்தாப் போல் திருச்சி முனிசிபாலிட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கும் காங்கரஸ் மெஜாரிட்டியாய் வந்தது. ஆனால் அங்கு காங்கரஸ் பெற்ற சுயராஜ்யம் என்ன? ஒரு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் (தோழர் தேவர்) சேர்மனாய் வரக்கூடாது என்று பார்ப்பனர்களால் கட்டுப்பாடாய் சூழ்ச்சி செய்து யோக்கியதைக்கும், நாணையத்துக்கும், காங்கிரஸ் கட்டுப்பாட்டுக்கும் விரோதமாய் காங்கரஸ் அல்லாத - காங்கரசுக்கு விரோதமாய் போட்டி போட்ட ஒருவருக்கு காங்கரஸ் பார்ப்பனர்கள் ஓட்டுக் கொடுத்து தோழர் தேவரை கவிழ்த்ததல்லாமல் வேறு நன்மை என்ன செய்யப்பட்டது? இந்த மாதிரியாக நடந்த ஒரு பார்ப்பன காங்கரஸ் மெம்பரை காங்கரஸ் கடைசியாக என்ன செய்தது? காங்கரசால் குற்றம் சாட்டப்பட்ட அப்படிப்பட்ட பதுரோகிக்கு'' காங்கரஸ் மந்திரி வேலை கொடுத்ததே அல்லாமல் மற்றபடி காங்கரஸ் ஒழுக்கமாக நடந்து கொண்டதா? என்று பாருங்கள். அந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட துரோகமான காரியம் ஒரு பார்ப்பனல்லாதார்: செய்திருந்தால் அவன் கதி என்ன ஆயிருக்கும்? காங்கரசுக்கு உழைத்து திருச்சியில் ஜஸ்டிஸ் கட்சியை “புதைத்த” தோழர் தேவர் இன்று எங்கே?
அவர் விலாசம் உங்களுக்கு தெரியுமா? ஜில்லா போர்டிலாவது அவரை தலையெடுக்க விட்டார்களா? ஆளையே ஒழித்து விட்டார்களே!
குடி அரசு- 1938 (1) 268
காங்கரஸ் வகுப்புவாதம்
ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்பு வாதத்தை ஒழிக்கப் போகிறோம் என்று சொன்ன யோக்கியர்களை, இன்று எந்த ஸ்தல ஸ்தாபனத்தில் வகுப்பு வாதம் இல்லை என்று கேட்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்படுத்தி வைத்திருந்த எல்லா வகுப்பிலும் உத்தியோக நியமன முறையை ஒழித்துவிட்டு காலி ஏற்படும் ஸ்தானங்களுக்கெல்லாம் ஒரு வகுப்பாரை அல்லது பார்ப்பனர்களைப் போடவே சூழ்ச்சியும், செளகரியமும் செய்யப்பட்டு வருகிறது
தேசீயக்கொடி பறக்கவிடுதல்
காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற சொல்லப்பட்ட காரணங்களில் மூனிசிபாலிட்டிகளின் மீது தேசீயக்கொடி பறக்க விடுவதாய் ஜம்பம் சொன்னது ஒன்று. இன்று தேசீயக் கொடி எங்கு பறக்கிறது? முதலாவது தேசீயக் கொடி என்று ஒன்று இருக்கிறதா? கவர்னர் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடி என்று கூறக்கூடாது என்று சொன்னவுடன் சரணாகதி மந்திரிகள் தலைவணங்கி ஒப்புக்கொண்டு தங்களுக்கு தேசீயக் கொடி இல்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்கள். மூவர்ணக் கொடி - காங்கரஸ் கட்சியின் சின்னமேயொழிய அது ஒரு தேசத்தையோ, தேசீயத்தையோ குறிப்பதாகாதென்று காங்கரஸ் மந்திரிகள் ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டு விட்டார்கள். அந்தக் கொடியையும் அரசியல் விசேஷக் காலங்களில் கட்டக்கூடாதென்று கவர்னர் சொன்னதை ஒப்புக் கொண்டு விட்டார்கள். மற்றும் சர்க்காருக்கு தேசீயக் கொடி கட்ட வேண்டிய அவசியம் வரும்போது யூனியன் ஜாக் கொடிதான் கட்ட வேண்டுமென்றும் காங்கரஸ் கொடியை அவிழ்த்துவிட வேண்டுமென்றும் சர்க்கார் தேசீயக் கொடி பறக்கும்போது எந்த சமயத்திலும் காங்கரஸ் கொடி பறக்கக் கூடாது என்று சொன்னதையும் காங்கரஸ் தலைவணங்கி ஒப்புக்கொண்டு சர்க்கார் பேரால் காங்கரசே அறிக்கை வெளியிட்டு விட்டு சிறிதும் மானம், வெட்கம், ஒழுக்கம், நாணையம் இல்லாமல் பாமர மக்களிடத்தில் காங்கரஸ்காரர்கள் மூவர்ணக் கொடியை தேசீயக்கொடி என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
வரி குறைப்பு எங்கே?
சுங்கம் ஏற்படுத்துவதா?
மற்றபடி காங்கரஸ் ஸ்தல ஸ்தாபனங்களில் எந்த ஐட்டத்தில் வரி குறைத்தது என்று கேட்கின்றேன். புது வரிகள் போட யோசனை கூறுகிறதுடன் சர்க்கார் கொடுத்து வந்த கிராண்டு (உதவித் தொகைகளை) நிறுத்திக் கொள்ள யோசனை செய்து வருகிறது. பள்ளிக்கூடமும் ஆஸ்பத்திரிகளும் செத்துக் கொண்டு வருகின்றன. அப்படி இருந்தும் டோல்கேட்டுகள் ஏற்படுத்திக் கொண்டார்கள். ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
கண்ட்ராக்ட் ராஜ்யம் சேலம் முனிசிபாலிட்டி
மற்றும் ஸ்தல ஸ்தாபன கண்ட்ராக்ட் விஷயத்திலும் காங்கரஸ். காரர்களும், காங்கரஸ் மந்திரிகளும் ஒழுக்கத்தையும் நாணையத்தையும் லட்சியம் செய்யாமல் முனிசிபல் பணங்கள் நாசமாக்கப்படுகின்றன. உதாரணமாக கேலம் முனிசிபாலிட்டி வாட்டர்வர்க்ஸ் கண்ட்ராக்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் காங்கரஸ் மந்திரிகள் நடந்து கொண்ட ஒழுக்கம் கெட்ட - முறைகெட்ட நடத்தை போல் வெள்ளைக்கார மந்திரிகளாவது, ஜஸ்டிஸ் மந்திரிகளாவது, இடைக்கால மந்திரிகளாவது நடந்து கொண்டதாக ஒரு சிறு ஆதாரம் காட்ட முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றேன்.
ஸ்தல ஸ்தாபனங்களுக்கு காங்கரஸ் மந்திரி சபை கொடுத்த சுதந்திரம் என்ன என்று கேட்கின்றேன். ஸ்தல ஸ்தாபன அதிகாரத்தில் மந்திரிகள் குறுக்கிட்டு அவர்கள் அதிகாரத்தைப் பிடுங்கி துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். முறையற்ற - லாபமற்ற நன்மையற்ற தனங்களோடு நிபுணர்கள் இலாகாத் தலைவர்கள் அபிப்பிராயங்களுக்கு விரோதமாக மந்திரிகள் டெண்டர்களைப் புதிதாகக் கற்பித்துத் திருத்தச் செய்து அதுவும் ஒன்றுக்கு ஒன்றே முக்கால் ஆக விலை சேர்த்து திருத்தி எழுதிக் கொடுத்த டெண்டர்காரர்களுக்கு - முனிசிபல் தீர்மானங்களுக்கு விரோதமாய் மந்திரிகள் கண்ட்ராக்டு கொடுக்கச் செய்தார்கள்.
இதற்குக் காரணம் ஒரு மந்திரியின் மருமகன் அந்த முறையற்ற டெண்டர்காரர் கம்பெனியில் அக்கரை உள்ளவர் என்றும் இதனால் அவருக்கு ஏராளமான பலன் கிடைக்கலாம் என்றும் பொது ஜனங்களால் கருதப்படும் பேசப்படும் அபிப்பிராயத்துக்கு எந்த மந்திரியும் நாளது வரை சமாதானம் சொல்லாமலும் சேலம் கவுன்சிலர்களும், சேர்மெனும் சேர்ந்து செய்த தீர்மானத்துக்கு விரோதமாய் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தரை அதுவும் கிரிமினல் அதிகாரம் உள்ள உத்தியோகஸ்தரை சேர்மெனாக நியமித்து பலாத்காரத்தில் தீர்மானம் செய்யச் செய்து அதுவும் சர்க்காரின் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட காரியத்துக்கு ஆக பொது ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கவுன்சிலர்களும், சேர்மெனும் வைஸ்சேர்மெனும் ராஜிநாமா கொடுத்த பிறகு இம்மாதிரி பார்ப்பன பலாத்காரத் தீர்மானம் சர்க்கார் அதிகாரி முயற்சியில் செய்யப்பட்டது என்றால் இது ஜனநாயகமா? காட்டுமிராண்டி, காட்டுராஜா ராஜ்யமா அல்லது கண்ட்ராக்ட் ராஜ்யத்தை ஒழிக்கும் ராஜ்யமா? என்று யோசித்துப் பாருங்கள்.
அவசரமென்ன?
மறுபடியும் தேர்தலும் புதிய கவுன்சிலும் ஏற்பட ஒரு மாதம் இருக்கும்போது இவ்வளவு அவசரமாக அந்த டெண்டர் விஷயம் இந்த முறையில் முடிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துப்
குடி அரசு- 1938 (1) 270
பாருங்கள். இந்த நடவடிக்கையில் துர்நாற்றம் வீசுகிறதா? இல்லையா என்று யோசித்துப் பாருங்கள். மந்திரிகள் முயற்சியால் மந்திரிகளின். வேண்டுகோளின் பேரில் டெண்டர் கொடுத்து கம்பெனிக்காரன் என்று சொல்லப்பட்ட அதே கம்பெனிக்காரர் அதே சாக்கை அதாவது வார்ப்பட குழாயை அந்தர் 1-க்கு 5 ரூபா வீதம் கொடுப்பதாக வேறு ஒரு கம்பெனிக்கு டெண்டர் கொடுத்துவிட்டு மந்திரிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வேண்டியவர்கள் என்ற தைரியத்தில் சேலம் வேலைக்கு அந்தர் ஒன்றுக்கு 8 ரூபாய் வீதம் டெண்டர் கொடுத்ததை பொது ஜனங்கள் எடுத்துக்காட்டிய பிறகும் மந்திரிகள் அந்த டெண்டரை
ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதையே சேலம் கவுன்சிலர்களின். பிடரியின் மீது பலாத்காரமாய் ஏற்றியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தால். இந்த மந்திரிகள் நாணயத்தில் யாராவது சந்தேகப்படாமல் இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். அல்லது எனது தோழர்.
கனம் ராஜகோபாலாச்சாரியாரே இது ஒழுங்கான காரியமா என்று சொல்லட்டும். மந்திரிமார்களே இவ்வளவு தைரியமாக டெண்டர்கள். விஷயத்தில் நடந்து வழிகாட்டுவார்களானால் அப்புறம் சாதாரண: கவுன்சிலர்களும், சேர்மெனும் இம்மாதிரி நடக்கவோ, டெண்டர்களில் ஒழுங்கீனமாய் நடந்து பணம் சம்பாதிக்கவோ பயப்படுவார்களா என்று கேட்கிறேன். இலாக்கா அதிகாரிக்குத்தான் இவர்களிடம் எப்படி மதிப்பு இருக்கும்? தோழர் ராஜகோபாலாச்சாரியார் இதில் பணம் சம்பாதித்திருக்க மாட்டார் என்றுதான் நான் எண்ணுகிறேன். ஆனால் மற்ற மந்திரிகளோ அல்லது அவர்களுக்கு சேர்ந்தவர்களோ பணம் சம்பாதிக்க இடம் கொடுத்தால் சம்பாதித்தார்கள் என்று கருதும்படி இடம் கொடுத்ததால் பொது அரசியல் நாணயத்துக்கும் ஒழுக்கத்துக்குமே கேடு ஏற்படவில்லையா என்று கேட்கிறேன்.
ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்து இப்படியா நடந்தது?
இவ்விஷயங்களில் மந்திரிகள் சிறிதும் சந்தேகத்துக்கிடமில்லாமல். நடந்து கொள்ள வேண்டாமா? ஜஸ்டிஸ் மந்திரிகளின் 17 வருஷம் ஆட்சியில். இப்படிப்பட்ட சம்பவம் ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்ட யாராவது முடியுமா? என்று பந்தயம் கட்டிக் கேட்கிறேன். இப்படிப்பட்ட யோக்கியதையில் உள்ள காங்கரஸ்காரர்கள் எந்த முகத்தைக் கொண்டு ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சத்தையும், கண்ட்ராக்ட் ராஜ்யத்தையும் நிறுத்தப்போகிறோம் என்றும் சொல்லுகிறார்களென்பதும் எந்த முகத்தைக் கொண்டு மறுபடியும் ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசிக்கப் போகிறார்கள். என்பதும் எனக்கு விளங்கவில்லை. அவர்களுக்கு சற்றாவது மானம் வெட்கம் இருந்தால் ஸ்தல ஸ்தாபனத்தைப்பற்றி நினைப்பார்களா? என்று கேட்கிறேன். பொது ஜனங்களுக்குதான் ஆகட்டும், சிறிதாவது பொறுப்போ புத்தியோ இருந்தால் இவர்கள் ஓட்டு கேட்க வாசப்படி மிதிப்பார்களா என்று கேட்கிறேன். M வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ஸ்தாபனங்களுக்கு கெளரவம் வேண்டாமா?
நிர்வாகம் நடத்துவதும், லஞ்சம் வாங்குவதும் கண்ட்ராக்டில் சுயநலம் குறுக்கிட்டு ஒழுக்க ஈனமாய் நடப்பதும், உத்தியோகத்தில் பார்ப்பனர்களையே புகுத்துவதுமான காரியங்கள் செய்வதையாவது செய்து நாசமாய்ப் போகட்டும் என்றாலும் அந்த ஸ்தாபனங்களுக்காவது ஒரு மரியாதை இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறேன். ஸ்தல ஸ்தாபனங்கள் வரவர கஞ்சித்தொட்டிகளுக்கும், காலாடிகளுக்கும், காவடிகளுக்கும் புகலிடமாய் - பிழைப்புக்கிடமாய் ஆவது என்றால் யார்தான் சம்மதிப்பார்கள்?
காலாடி ராஜ்யமா?
இது என்ன காலாடி ராஜ்யமா என்று கேட்கிறேன். சிலவித பிரசாரத்தையும் அதற்காக செய்யப்படும் காலித்தனத்தையும் பார்க்கிறபோது வயிறு பற்றி எரிகிறது. பணக்கார ஆட்சி ஓழிக்கப்படுவது என்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கு பதில் எச்சக்கலை ஆட்சியும், திருட்டுப்பசங்கள்- அதிலேயே பொறுக்கித் தின்று வயிறு வளர்த்துத் தீரவேண்டிய சோம்பேறிகள் ஆட்சியைத்தான் ஏற்படுத்த வேண்டுமா என்று கேட்கிறேன். அப்படியானால் ஸ்தல ஸ்தாபனங்களில். சென்னை கார்ப்பரேஷனை விட சட்டசபை, மந்திரிசபை ஆகியவைகளை விட மிக மிக மோசமான ஆட்சி ஏற்பட்டு விடாதா என்று கேட்கிறேன். பொது ஜனங்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஸ்தாபனங்கள் கொள்ளை போகாமலும் ஒழுக்க ஈனங்கள் நடக்காமலும் கவுரவம் குறையாமலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட பொது ஜனங்களுக்குத் தானாகட்டும் உரிமை யில்லையா என்று கேட்கிறேன்.
குடிக்க முடியாவிட்டால் கவிழ்ப்பதா?
பார்ப்பனர்களுடைய எண்ணம் நாடு ஒன்றாய் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காலிகள் கூலிகள் கையில் ஒப்புவித்துக் கவிழ்த்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறதாகத் தெரிகிறது.
நம் நாடு சமதர்ம நாடாகிவிட்டதா? அல்லது பொது உடமை நாடாகிவிட்டதா? அப்படி இருந்தால் சொத்தில்லாதவன் ஆட்சி புரிவது நியாயமாய் இருக்கலாம். அதிலும் பாடுபடுபவன் ஆட்சிபுரிவதுதான். நியாயமாக இருக்கலாம். அப்படிக்கூட இல்லாமல் இந்தத் தனி உடமை ராஜ்ஜியத்தில் சோத்துக்கு வேறு வழியில்லாதவன், வேறு வகையில் பிழைக்க முடியாதவன், பாடுபட முடியாத சோம்பேறி ஆகியவர்கள் சட்ட சபையையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்றுவதுதான் காங்கரஸ் முறை என்றால் அப்புறம் அவர்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லட்டும். சென்னை
குடி அரசு- 1938 (1) 272
கார்ப்பரேஷன் பேரால் ஸ்தல ஸ்தாபனங்களில் பொறுக்கித் தின்னவும் சென்னை அசம்பிளியில் போய் ஒரு வேலையும் செய்யாமல் கைகட்டி வாய்பொத்திக் கொண்டு கண் ஜாடை காட்டியவுடன் கை தூக்குவதற்கு ஆக மாதச் சம்பளம் எடுத்துக் கொள்ளவும் சம்பந்தப்பட்ட இலாக்காக்களிலெல்லாம் கண்றாக்ட்டில் ஒழுக்க ஈனமாய் நடக்கவும்தானே முடியும்
இந்த வார ஆனந்தவிகடன் என்னும் பத்திரிகையில் 3 அசம்பிளி மெம்பரை அசம்பிளியில் கைகட்டி வாய்பொத்தி பள்ளிக்கூட பிள்ளைபோல் உட்காரவைத்துக் காட்டி இருக்கிறது. இதன் அருத்தம் என்ன? மாதம் 75 ரூபாய் கூலிக்கு அடித்து உதைத்து அடக்கிவைக்கப்பட்ட
பள்ளிக்கூட பிள்ளைகள் போல் பார்ப்பனரல்லாத அசம்பளி மெம்பர்களை உட்காரவைத்து ஆச்சாரியார் ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதைக் காட்டுவதாகத் தானே அருத்தம். நம் நாட்டு அரசியல் வாழ்வுக்கும் பார்ப்பனரல்லாதார் யோக்கியதைக்கும் இதைவிட இழிவும் ஈனத்தனமும் வேறு வேண்டுமா என்று கேட்கிறேன்.
பணக்காரனாகவும், பாடுபட்டு வயிறுவளர்க்கத் திறமையுடையவ னாகவும் இருக்கிறவர்களே பலர் ஸ்தல ஸ்தாபனங்களில் சட்டசபைகளில் நாணையமாய் நடந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் இன்னும் தகரப் போகிணிகள் சங்கதி கேட்க வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள் நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் இந்த தகரப்போகிணிகள் ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவதற்கு ஆதாரமாகவே மக்களிடம் போய் “பணக்காரர்கள் ராஜ்யத்தை ஒழிக்கப் போகிறோம் ஆதலால் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கேட்கிறார்களாம் தெருவில் எச்சிலை பொறுக்கும் பிள்ளைகளுக்கும் பரிசுத்த ஆவி மக்களுக்கும் காசு கொடுத்து கொடி கொடுத்து பணக்கார ஆட்சி ஒழிய, பணக்காரர் ஒழிய, காங்கரசுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கத்தச் சொல்லுகிறார்கள். காங்கரசில் பணக்காரர் இல்லையா? எல்லோருமா இன்சால்வெண்டு பேர்வழிகள்? தோழர்கள் வெள்ளியங்கிரிக் கவுண்டர், ராமலிங்கஞ் செட்டியார், நாடிமுத்து, கோபால் ரெட்டி இவர்கள் யார் தகரப் போகிணிகளா மஞ்சள் காகிதங்களா? இந்த ஊரிலும் இதே பேச்சாயிருக்கிறதாம்
பணக்காரர் ராஜ்யம் ஏன் ஓழிய வேண்டும்
சட்டத்தில் பணக்காரன் இருக்க இடம் வைத்துக்கொண்டு அவனிடம் வருஷம் 1000, 2000, 5000, 10000 ரூபாய்களை பூமிவரி, வீட்டுவரி, வருமானவரி மூதலிய பல வரிகளாக வாங்கிக் கொண்டு அவனை ஒழிக்க வேண்டுமென்றால் அது ஒரு காசு வரி இல்லாத - ஒரு சதுர அங்குல இடமில்லாத - ஒரு நாழி உழைப்பதற்குக் கூட ஒரு சிறிதும் சக்தியும், அனுபவமும், இஷ்டமும் இல்லாத - ஊர் உழைப்பில், M3 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ஏமாற்றுதலில் ஒழுக்க ஈனமான காரியத்தில் வயிறு வளர்க்கும் அயோக்கியர்களும், அன்னக்காவடிகளும், ஆட்சி செலுத்தி பொறுக்கித் தின்று வயிறு வளர்ப்பதற்குத்தான் (பணக்கார ஆட்சி) ஒழிக்கப்படுவதா என்று கேட்கிறேன்.
காலிகன் ஆட்சிதான் ஜனநாயகமா?
இப்பொழுது பஞ்சாப் மந்திரியும் தோழர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரும் சொன்னது போல் ஜனநாயகம் என்னும் பேரால் இந்தியா காலிகள் ராஜ்யமாகி வருகிறது. அரசியலில் திருட்டு, புரட்டு, ஏமாற்றுதல், கொள்ளை அடித்தல் முதலாகிய மானங்கெட்ட காரியங்கள் சர்வ சாதாரணமாக அனுமதிக்கப்படுகிறது. இனி சர்வமும் காலிகள் மயமாகி விட்டால் இந்நாட்டில் மானமுள்ளவர்கள் மரியாதைக்காரர்கள் வாழ்வதா சாவதா? அவர்களது பெண்டு பிள்ளை சொத்துக்குப் பத்திரம் வேண்டாமா என்று கேட்க வேண்டியதாய் விடாதா?
நாணையமற்றவனை ஒழியுங்கள்
இந்த உடுமல் பேட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். தோழர். சிவசுப்பிரமணியக் கவுண்டர் 10 லக்ஷக்கணக்கான சொத்துக்கு உடையவர். அதற்கு ஆக அதாவது, அவர் பணக்காரராய் இருப்பதற்காக அவர் மூனிசிபாலிட்டியில் பொது வாழ்வில் இருந்து விரட்டப்பட வேண்டுமா? அவர் வரி கொடுக்கவில்லையா? அவர் முனிசிபாலிட்டியில்
பணம் திருடி இருந்தால் உதைத்துத் துரத்துங்கள். அல்லது அவர் முனிசிபாலிட்டி மெம்பர் பதவியாலோ சேர்மென் பதவியாலோ வயிறு வளர்ப்பதாய் இருந்தாலாவது அல்லது அவருக்கு வயிறு வளர்க்க அதைத் தவிர வேறு யோக்கியமான வழியில்லா விட்டாலாவது அடித்துத் துரத்துங்கள். அப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அடித்துத் துரத்துங்கள். இதையெல்லாம் விட்டு விட்டு அவர் பணக்காரராய் இருக்கிறார் என்பதற்காக அவரை முனிசிபாலிட்டியிலிருந்து விரட்ட வேண்டுமென்றால் அதுவும் விரட்டுகிறவர்கள் பாப்பராய் இதில் பிழைக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்ணியமாய் உணர்ந்தால் அப்படிப்பட்ட அன்னக்காவடிகளை நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அது விஷயத்தில் உங்கள் கடமை என்ன என்று கேட்கின்றேன்
ஏழைகள் வேறு சோம்பேறி வயிற்றுப் பிழைப்புக்காரர் வேறு
ஏழைகள் என்பதற்காக நாம் யாரையும் கேவலமாய் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு மரியாதை செய்வோம். அவர்கள் ஏழ்மைத் தன்மை ஒழியவும் அதற்கு அவசியமான பணக்காரத் தன்மை ஒழியவும் கூட நாம் பாடுவோம். பொதுவுடமை ஏற்படவும் மூயலுவோம்
குடி அரசு- 1938 (1) 274
பணக்காரர் பணங்களை பறிமுதல் செய்து சகல மக்களுக்கும் சரிசமமாய் பங்கிடவும் சட்டம் செய்ய ஆசைப்படுவோம். ஆனால் காலிகள் ராஜ்யமும் பதவியின் பேரால் ஒழுக்க ஈனமாய் பொறுக்கித் தின்பவர்கள் ராஜ்யமும் சோம்பேறிகள் ராஜ்யமும் ஏற்பட சிறிதும் நாம் இடம் கொடுக்கக்கூடாது. அந்த சாக்கை வைத்துக் கொண்டு காலிகளும், கூலிகளும், பணக்காரர்கள் என்பவர்களை வையவோ காலித்தனம் செய்யவோ கூட நாம் இடம் கொடுக்கக் கூடாது. ஏழைகள் வேறு. வயிற்றுப் பிழைப்புச் சோம்பேறிகள் வேறு. இருவரையும் ஒன்றாய்ப் பார்க்கக் கூடாது என்பது எனது கருத்து பணக்காரன் என்றால் யார்? வயிற்றுப் பிழைப்புக்கு பொது ஸ்தாபனங்களை எதிர்பாராமல் யோக்கியமான முறையில் மானத்தோடு பாடுபட்டு உழைப்பவனும் மரியாதையாக வாழ்பவனும் சட்டப்படி நாணைய ஒழுக்கத்தால் செல்வம் தேடி சாப்பிட்டு சிறிதாவது மீதி வைத்திருப்பவனும் எல்லோரும் பணக்காரர்கள்தான். அவன் 10 ரூபாய் உடையவனாயிருந்தாலும் பல லக்ஷ ரூபாய் உடையவனாயிருந்தாலும் ஒன்றுதான். அதிக பணம் ஒருவனிடம் சேரக்கூடாதென்றால் நல்ல வரிபோட்டு கரைக்கப் பார்ப்போம். அதற்கு ஆக சட்டம் செய்வோம் அதை விட்டு விட்டு அவர்கள் பொது வாழ்விலேயே தலைகாட்டக் கூடாதென்றால் அதுவும் நாளை சாப்பாட்டுக்கு வகையற்றவர்கள் சொல்வதென்றால் இது என்ன கொள்ளைக்காரர்கள் ராஜ்யமா என்று கேட்கிறேன். இதுதான் காந்தியாருடைய ராமராஜ்யமா என்று கேட்கிறேன்.
காங்கரஸ் ஆட்சியில் மரியாதை இல்லை
இன்று காங்கரஸ் ஆட்சியால் பொது வாழ்வில் மரியாதை அற்றுப் போய்விட்டது. மக்களுக்குப் பத்திரம், பந்தோபஸ்து அற்றுப் போய் விட்டது. மரியாதைக்கும் மானத்துக்கும் பயப்படுபவர்களுக்கு வெளியில் தலை நீட்ட இடமில்லாமல் போய்விட்டது. மரியாதைக்காரர்கள் தங்களுக்கென ஒரு கூட்டம் போட்டு விஷயம் எடுத்துச் சொல்ல இடம் இல்லாமல் போய்விட்டது. இங்கேயே பாருங்கள். நாங்கள் என்ன சொல்லுகிறோம் என்று கேட்பதற்கு முன்பே பேசப் பேச குறுக்கிட ஆரம்பித்து விட்டார்கள். நான் நாடெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு வந்து உண்மையைப் பேசுகிறேன்.
ஜெயில் திறக்கப்பட்டு விட்டது
கனம் ஆச்சாரியார் ராஜ்யத்தில் போதாக்குறைக்கு ஜெயிலை நிர்வகிக்கப் பணம் இல்லையென்று காரணம் சொல்லி ஜெயிலில் இருக்கிற கருப்புக் குல்லாய் கேடி, கொலைக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், தொல்லைக்காரர்கள், போர்ஜரி, பொய்சாட்சி, நம்பிக்கைத் துரோகக்காரர் முதலியவர்கள் எல்லாம் ஜெயிலிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள்
278 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
விடுதலையாகும்போது “காங்கரஸ் - காந்தி ராஜ்யம் வந்து உங்களை விடுதலை செய்திருக்கிறது. ஆதலால் காங்கரசில் சேருங்கள்” என்று உபதேசம் செய்து விடுதலை செய்யப்படுகிறதாம். இனி அதுபோலவே இவர்களும் காங்கரசில் சேர்ந்து விட்டால் அப்புறம் மக்கள் கதி என்ன ஆவது. நீங்களே யோசித்துப் பாருங்கள். யோக்கியர்கள் கூட காங்கரசில். சேர்ந்தால் இந்த கதி ஆகும் போது இவர்கள் சேர்ந்தால் என்ன ஆவார்கள்? இதுதானா நீதியும், அமைதியும், ஒழுக்கமும் நிலவும்படியான ராஜ்யமா என்று கேட்கிறேன். தோழர்களே!
துஷ்டர்களை நிபந்தனை யில்லாமல் விடுதலை செய்து அவர்களை காங்கரசிலும் சேர்த்துக் கொண்டால் நாட்டு மக்கள் கதி என்ன ஆவது
எங்களுக்கு உண்மையில் ஒரு பதவியும் வேண்டாம். ஜனங்களுக்கும் அவர்கள் பாடுபட்டுத் தேடிக்கொடுக்கும் வரிப்பணத்துக்கும், நியாயமும் யோக்கியமான வாழ்வுக்கும் இடமும் வேண்டாமா என்பதற்காகத்தான் நாங்கள் உழைக்கிறோம் ஆகவே காங்கரஸ் ஆட்சியில் ஜனங்களுக்கு இன்று சகிக்க முடியாத கஷ்டம், தொல்லை, துயரம், நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இவற்றை நீங்கள் சரியானபடி நிதானமாய் யோசித்துப் பார்த்து நாங்கள் சொல்லுவது சரியா தப்பா என்று தெரிந்து இதற்குக் காங்கரஸ்காரர்கள் சொல்லும் சமாதானத்தையும் பொறுமையோடு கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.
குறிப்பு: 11.04.1938 ஆம் நாள் உடுமலைப் பேட்டை அலிச் சவுக்கில் நடைபெற்ற முஸ்லீம் லீக் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 24.04.1938
குடி அரசு- 1938 (1) 276
மொண்டிச் சாக்கு
காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்ற பிறகு அவர்களுக்குப் பாமர மக்களிடம் இருந்து வந்த செல்வாக்கு இயற்கையிலேயே குறையத் தொடங்கி விட்டது ஒரு புறமிருக்க புண்ணில் ஊசியை விட்டுக் கிளறுவது போல் வயிரெறிந்து கிடக்கும் மூஸ்லிம் சமூகத்தை பரிகாசம் செய்வதுபோல் யாரோ ஒரு முஸ்லீமைப் பிடித்து அவருக்கு முஸ்லிம் பிரதிநிதி என்று பெயரைக் கொடுத்து, ஊர் ஊராக அழைத்துப் போய் வேடிக்கைக் காட்டி முஸ்லிம்களின் ஆத்திரத்தைக் கிளப்பி விடுவதும், அதுபோலவே தாழ்த்தப்பட்ட மக்கள் என்கின்ற கூட்டத்தாரும் மனவேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களையும் பரிகாசம் செய்வதுபோல் அவர்கள்
சமூகத்திலும் மதிப்பற்ற ஒருவரை பிடித்துக் கொண்டு அவரையே தாழ்த்தப்பட்ட சமூகப் பிரதிநிதி என்று ஊர் ஊராய் அழைத்துப் போய்
நடிப்புக் காட்டுவதுமான காரியத்தையே காங்கரசுக்காரர்கள் ஒரு பெரிய தேசாபிமானமென்றும், தேசிய கைங்கரியமென்றும் கருதிச் செய்து வருவதால் பொதுவாக காங்கரஸ்காரர்களுக்கு இவ்விரு சமூகத்தாரிடையும் செல்வாக்கில்லாமல் போனதோடு அதிருப்தியும், ஆத்திரமும் இருந்து வருகிறது என்பதை யாவரும் மறுக்க முடியாது
உடும்புப் பிடிவாதம்
இந்த அதிருப்தியையும், ஆத்திரத்தையும் இவ்விரு சமூகமும் தங்களது ஆயிரக்கணக்கான சமூக பொதுக் கூட்டங்களில் எடுத்துக் காட்டியிருப்பதோடு இவர்களில் காங்கரசில் கலந்திருந்தவர்களில் பெரும்பாலோர் காங்கரசிலிருந்து விலகியும் விட்டார்கள்.
இந்த நிலையில் காங்கரஸ்காரர்களுக்கு அறிவும், சமயோசித ஞானமும் இருந்திருக்குமானால், இவ்விரு சமூகத்துக்கும் தங்களிடம் பிரதிநிதிகள் இருப்பதாக நடித்து பொது ஜனங்களை ஏமாற்றும் வேலையை தற்காலீகமாகவாவது கைவிட்டு விட்டு வேறு காரியத்தில் மக்களை ஏமாற்றும் வேலையிலாவது முனைந்திருக்கலாம். அல்லது ஒன்று, இரண்டு, மூன்று, பத்து இடங்களில் ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டாவது படிப்பினை பெற்று சமயோசிதமாக நடந்திருக்கலாம் அதைவிட்டு முதலையும் உடும்பும் தான் பிடித்ததை விடாது என்பதாக
277 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
பிடிவாதமாக திரும்பத் திரும்ப அதே காரியம் செய்வதால் பொது ஜனங்களுக்கு மேலும் மேலும் ஆத்திரம் வரவும் தொத்து வியாதிபோல். ஒரு ஊரில் நடந்த காரியம் மற்றொரு ஊருக்கு உற்சாகத்தைக் காட்டி அதைவிட அதிகமாக காரியங்கள் நடக்கும்படியான நிலை ஏற்பட்டு வருகிறதானது உண்மையிலேயே வருந்தத்தக்கதாகும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் பொதுக்கூட்டங்களில் குழப்பம் நடப்பதோ, சிலசில விஷமங்கள் செய்யப்படுவதோ பலாத்காரமான காரியங்கள் செய்யப்படுவதோ, காலித்தனம் நடைபெறுவதோ நமக்கு மிகவும் வெறுக்கத்தக்க காரியமேயாகும். இதை இன்று நேற்றல்ல 15, 20 வருஷகாலமாகவே சொல்லியும், பொது மக்களுக்கு அறிவுறுத்தியும் வருகிறோம்.
காங்கரஸ் காலித்தனம்
ஆனால் அஹிம்சை, நீதி, சமாதானம் என்கின்ற பொய்ப் பெயர்களை வைத்துக் கொண்டு காங்கரஸ்காரர்கள் சட்டம் மீறுவது, உத்திரவை
மறுப்பது, பலாத்காரம் ஏற்படும்படியான நிலைமையை வலுவில் வரவழைத்து அடிபடுவது, சமாதானத்துக்கும் நீதிக்கும் விரோதமாய் நடந்து வலிய ஜெயிலுக்கு போவது என்பதான காரியங்களை சுயராஜ்ஜிய கொள்கைகளாகவும், எதிரிகளுக்கு மேடையில்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக காலிகளுக்கே பெரிதும் காங்கரசில் செல்வாக்கும், இடமும், பதவியும் கொடுத்து அவர்களில் பெரும்பாலோர்க்கு இதிலேயே வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கத்தையும் நிலையாக்கி எதிரிகளது சகல பொதுக் கூட்டங்களிலும் அது எப்படிப்பட்ட பொறுப்பும் பெருமையும் உள்ள பதவியாளர்கள் பேசும் கூட்டமானாலும் அவமரியாதை செய்வதும், குறுக்கிடுவதும், ஜே" கூச்சல் போடுவதும்,
கல் மண் வாரி இறைப்பது, சில்லரைத்தனம் செய்வது போன்ற காரியங்களில் இறங்கவைத்து கூட்டங்களைக் கலைக்கச் செய்துவிட்டு பிறகு பத்திரிகைகளில் “பொது ஜனங்கள் ஆத்திரம்" “ராமசாமி நாயக்கர்.
புத்தி கற்பிக்கப்பட்டார்', “பொப்பிலி ராஜா கூட்டத்தில் குழப்பம்," “குமாரசாமி ரெட்டியார் விரட்டி அடிக்கப்பட்டார்”, 'பி.டி.ராஜன் மீது பொது ஜனங்களுக்கு ஏற்பட்ட ஆத்திரம்”, “சவுந்திர பாண்டியனால். கூட்டம் கூட்ட முடியவில்லை” என்பது போன்ற தலைப்புகள் கொடுத்து எழுதுவதுடன், இக்காரியங்கள் செய்த காலிகளையே பொது ஜனங்கள் என்றும் அக்காலித்தனங்களை பொது ஜன நடவடிக்கைகள் என்றும் எழுதி அவர்களுக்கு சபாஷ் பட்டம் கொடுத்து உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு ஊரிலும் இக்காலித்தனங்கள் நடக்கும்படி தூண்டிவிட்டு உற்சாகப்படுத்தி வந்தால் இப்போது நடைபெறும் கடைந்தெடுத்த காலித்தனமே கடைந்தெடுத்த அசல் தேசாபிமானமாகவும், தேசிய வீரமாகவும், சுயராஜ்ய பாதையாகவும் ஆக்கப்பட்டு விட்டது
குடி அரசு- 1938 (1) 278
கூடி அரசு ““ஜோஸியம்??
காங்கரஸ்காரர்களின் இப்படிப்பட்ட இந்த காரியத்தைக் கண்டித்து வெறுப்புற்று சுமார் 10, 15 வருஷங்களுக்கு மூன்பு 'குடி அரசில் எழுதும் போதே காங்கரஸ்காரர்களின் காலித்தனம் பாண்டிச்சேரி எலக்ஷன் போது நடப்பது போன்ற பலாத்காரத்தில் நாட்டைக் கொண்டு வந்து விட்டுவிடப் போகிறது என்று அழுது அழுது குறிப்பிட்டிருந்தோம். யாரும் லட்சியம் செய்யவில்லை. சர்க்கார் அதிகாரிகளும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை பொதுக் கூட்டங்களுக்கு எவ்வித வரையறை என்பதும் ஏற்படுத்தவில்லை. ஆகவே, அது இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனுடைய உள்ளத்திலும் தேச சேவை, கட்சிசேவை, பொதுநல சேவை என்றால் காலித்தனம்தான் என்பதான உணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது
தற்கால நிலை
எந்தப் பொதுக் கூட்டமானாலும் காலித்தனத்தை சமாளிக்கும் முஸ்தீபுடனும், துணிவுடனும் சென்றால்தான் வீடு திரும்ப முடியும் என்கின்ற நிலை நம் நாட்டில் எங்கும் காணக்கிடக்கின்றது. இதற்கு காங்கரஸ்காரர்கள் தான் காரணம் என்பதை இனியாவது உணர்ந்து கட்சியும், கட்சிக்கொள்கையும் எப்படி இருந்தாலும் பேச்சுச் சுதந்திரம், பொதுக்கூட்ட சுதந்திரம் இன்னவிதமாய் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை ஏற்படுத்தி பல கட்சி, பல சமூக பிரமுகர்கள், தலைவர்கள் என்பவர்கள் ஆகியவர்கள் கலந்து ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது எந்தக் காரணத்தாலாவது அப்படி செய்வது காங்கரஸ் கவுரவத்திற்குக் குறைவு என்று கருதுவார்களானால் பொதுக் கூட்டம் பொது இடத்தில் போட சர்க்காரிடம் அனுமதி பெறவும், தக்க பந்தோபஸ்தும், தக்க அடக்கு முறையும் இருக்கும்படி சட்டம் செய்ய வேண்டும் அப்படிக்கில்லாமல் தங்களுக்கே சொந்தமான காலித்தனத்தை மற்றவர்களும் கையாளுகிறார்கள் என்று கண்டவுடன் அதை அடக்க தங்களுக்கு யோக்கியதை இல்லை என்று அறிந்தவுடன் ஊரார் மீது பழிசொல்வதென்பது சுத்த கோழைத்தனமேயாகும்.
கல்வி மந்திமி பூச்சாண்டி இதை ஏன் எழுதுகிறோமென்றால், நமது தோழர் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கள் சமீபத்தில் ஓமலூருக்குச் சென்றிருந்த பொழுது அங்கு ஏதோ காலித்தனம் நடந்ததில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் அதைக் கண்டிக்கும் முறையில்
“இந்த மாதிரி கலாட்டாவும் காலித்தனமும் நடக்கக் காரணம் எனது நண்பர் ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான்; அவரது தூண்டுதலால் தான், நான் செல்லுமிடங்களிலெல்லாம் இப்படியே 79 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இதை அடக்க போலீசையும், ராணுவத்தையும் தாராளமாய் உபயோகித்து அவரை நசுக்கிவிட்டு வேறு வேலை பார்க்கிறேன்'”
என்று சொன்னாராம். இவர் இப்படிப் பேசியதை நிருபர்கள் நமக்கு
எழுதி இருப்பதோடு, பக்கத்தில் இருந்த ஒரு பார்ப்பனரும் இது உண்மை என்றும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மிக்க ஆவேசத்தோடும், கோபத்தோடும் இப்படிப் பேசினது உண்டு என்றும், ஈரோட்டுக்கு வந்து சொன்னதோடு தனது அபிப்பிராயம் அப்படி இல்லாவிட்டாலும் தோழர் ஈ.வெ.ராமசாமி முஸ்லிம்களுக்கு இவ்வளவு இடம் கொடுத்ததால் இப்படி ஏற்படுகிறது என்று அப்பிராயப்படுவதாகச் சொல்லிப் போனார்.
ராமசாமிக்குப் பெருமையே!
இந்த சம்பவம் உண்மையாயிருந்தாலும், உண்மையற்றதாயிருந்தாலும், டாக்டர் அவர்கள் கருதியது சரியாயிருந்தாலும் தவறாய் இருந்தாலும், ஏதோ சமாளிப்பதற்காக வீரம் பேசுவதற்கும் வைவதற்கும் ஒரு ஆள் வேண்டுமே என்று தோழர் ராமசாமி பெயரை டாக்டர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், எப்படி ஆன போதிலும் டாக்டர். சுப்பராயன் அவர்கள் அவ்வளவு பெரிய கூட்டத்திலும் மற்றும் அவர்கள் செல்லுமிடங்களிலும் இம்மாதிரி பேசி வருவதன் மூலம் தோழர் ராமசாமி மீது சிலருக்காவது வெறுப்போ 'துவேஷமோ' ஆத்திரமோ ஏற்படக் கூடுமாயினும் பொதுவில் இது தோழர் ராமசாமிக்கு ஒரு பெருமையை அளித்தது போலவேதான் என நாம் கருதுகிறோம் ஏனெனில் தோழர் ராமசாமிக்கு, தமிழ்நாடு பூராவும் அவ்வளவு பெரிய செல்வாக்கு இருப்பதாகவும், அவர் தூண்டி விடுவதால் டாக்டர் போன்ற பெரியார்கள் கூட்டங்களில் அவராலும், அவரது அரசாங்கத்தின் கீழ் உள்ள போலீசாராலும், அவரது தலைமையின் கீழ் உள்ள தேசிய வீரர்களாலும் சமாளிக்க முடியாத குழப்பம் செய்ய சக்தி ஏற்பட்டிருப்பதாக டாக்டர் அவர்களே ஒப்புக் கொண்டு இதை அடக்க ராணுவத்தைப் பயன்படுத்தப் போவதாகச் சொல்லுவதென்றால் அது உண்மையில் “ஒரு சாதாரண, பொது ஜனங்களிடம் செல்வாக்கில்லாத, தேச நலத்துக்கு விரோதமாகப் பாடுபடுகிற ஒரு வகுப்புவாத சுயநலக்காரர்” என்பவருக்கு உண்மையிலேயே ஒரு பெருமை அல்லவா என்று கேட்கின்றோம். இது போலவே தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார்
ஆச்சாரியார் கவுரவம்
அவர்களும் ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேண்டி ஒரு “சாதாரணமான குறிப்பிடவோ, லட்சியம் செய்யவோ தகுதி இல்லாத ஒரு பிற்போக்கான மனிதன் என்பவனுக்கு” பிரதானம் கொடுக்கிறோமே என்று கூடக் கருதாமல்
குடி அரசு- 1938 (1) 280
“ஹிந்தி எதிர்ப்பு என்பது ஒரு தனிப்பட்ட நபராகிய எனது நண்பர் ஈரோடு ஈ.வெ.ராமசாமியால் நடத்தப்படுகிறதே தவிர இது பொதுஜன எதிர்ப்பல்ல'”
என்று சட்டசபைக் கூட்டத்தில் சொல்லி சமாளித்துக் கொண்டார். இதுவும் உண்மை எப்படி இருந்தாலும் இப்படிச் சொன்னது தோழர் ராமசாமிக்கு கனம் ஆச்சாரியார் கொடுத்த கவுரவமேயாகும்
ஆனால் இந்த இரண்டு தோழர்களும் இப்படி செல்லிவிட்டதாலேயே இவர்கள் சமாளித்துக் கொள்ளலாம் என்றோ அல்லது இந்த நொண்டிச் சாக்கைக் கொண்டே தங்களுடைய உத்தேசங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றோ கருதுவார்களானால் கண்டிப்பாக இரு பெரியார்களும் ஏமாற்றமடைவார்கள் என்று உறுதியாகக் கூறுவோம்
ஒரு சவால் சாதாரணமாக காங்கரஸ்காரர்கள் தமிழ்நாட்டில் அஹிம்சை, சமாதானம், நீதி என்கின்ற பெயரால் என்றைய தினம் ஒத்துழையாமை என்று ஒரு கிளர்ச்சி நடத்தினார்களோ அன்று முதல் ஏற்பட்ட காலித்தனத்திற்கு தோழர் ராமசாமி பொறுப்பாளி என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும் என்பது நமக்கு விளங்கவில்லை. 15 - வருஷ காலமாக நடந்து வரும் ''குடி அரசு" பத்திரிக்கையிலாவது அல்லது தோழர் ராமசாமியால் இந்த 20-வருஷ காலமாக நடத்தப்பட்டு வரும் பல ஆயிரக்கணக்கான பொதுக் கூட்டங்களிலாவது பலாத்காரத்தை தூண்டக் கூடியதாகவோ பலாத்காரத்துக்கு இடம் கொடுக்கக் கூடியதாகவோ
ஒரு எழுத்தோ ஒரு வார்த்தையோ இருந்தது என்று யாராவது எடுத்துக் காட்டமுடியுமா என்று கேட்கின்றோம்.
நஷ்டம் யாருக்கு?
தோழர் ராமசாமி அவர்கள் சாதாரண பேச்சிலும் கூட உதைத்தல், அடித்தல் என்கின்ற பதங்களை உபயோகித்தார் என்பதாக யாராலுமே சொல்ல முடியாது. பொதுக் கூட்டங்களில் கலவரம் செய்வதில் யார் ஜெயித்தாலும் தோழர் ராமசாமிக்குத்தான் நஷ்டம். என்னவென்றால் தோழர் ராமசாமி எப்போதும் எதிர்ப்புக் கட்சியில் இருப்பவர். எதிர் கட்சியின் வண்டவாளங்களை எடுத்துச் சொல்லி பாமர மக்களைத் திருத்த வேண்டுமென்று கருதி இருப்பவர். அப்படிப்பட்டவர் கூட்டத்தில்
குழப்பத்திற்கு இடம் கொடுத்தால் அவரது கருத்து நிறைவேறுவதுதான் குந்தகப்பட்டுப் போகுமே யொழிய, லாபம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. எதிர்க்கட்சியாராகிய காங்கரஸ்காரர்கள் பிரசாரம் நடப்பதை நிறுத்துவதிலும் அவருக்கு ஒன்றும் பயனில்லை. ஏனெனில் எதிர்கட்சியின்
பிரசாரம், புராண பிரசங்கமும் காந்திப் புராண பிரசாரமுமாகும். மக்களுக்கு
® QuRwiRdr எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
புரியாத சங்கதியாகிய சுயராஜ்யம், வெள்ளைக்காரனை விரட்டல் போன்ற நம்பப்பார்வதிபதே மாதிரியான அளப்புகள் தானே தவிர அவர்களிடம்
சரக்கு வேறு இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும். இந்த அளப்புகளும் 8 நாளில் புரட்டு, ஏமாற்றல் என்பது விளங்கிவிடக்கூடியதாகவே இருந்து வருவதால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை
ஆதலால் கூட்டங்களில் நடக்கும் குழப்பங்களுக்கும், நாட்டில் நடக்கும் கிளர்ச்சிகளுக்கும் தோழர் ஈ.வெ.ராமசாமி காரணம் என்றும், ராணுவத்தை உபயோகித்து அதை அடக்க வேண்டும் என்றும் ஒரு கவுரவமான பதவியில் இருந்து பேசுவது என்றால் அவர் அப்பதவிக்கு லாயக்கில்லை என்பதற்கும், அவருக்கும் போதிய ஞானமில்லை என்பதற்கும் இந்தக் காரணமே போதும் என்போம்
அன்றியும் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மிரட்டலுக்கும் உருட்டலுக்கும் ராமசாமி பயப்படக் கூடியவராகவோ, பின்வாங்கிக் கொண்டு ஓடுபவராகவோ இருப்பாரானால் அவர் இன்று ஒரு மந்திரியாகவும் அவருடைய டிரைவர் ஒரு மந்திரி அதுவும் போலீஸ் இலாக்காவை
நிர்வகிக்கும் மந்திரியாகவும் இருந்திருப்பார். அவரிடம் அந்தக் கோழைத்தனமும் சுயநலத் தன்மையும் இல்லாததாலேயே அவ்வளவு சிறிய மனிதரை இன்று இவ்வளவு பெரியார்கள் ராணுவத்தை பயன்படுத்தி அடக்கப் போகிறேன் என்று சபதங்கூறவும் அவரை எப்படி ஒழிப்பது என்பதற்கு சர்க்கார் கோட்டையில் (Fort st. George)ad 10-மந்திரிகள் கூடி சதா சதியாலோசனை செய்யவுமான முயற்சிகள் நடைபெற வேண்டியதாகிவிட்டன.
ராமசாமி! பூச்சாண்டிக்குப் பயப்படார்
தோழர் ராமசாமி இந்தப் பூச்சாண்டிக்குப் பயப்பட்டவரல்ல. எதிர்த்தால் எதிர்ப்பவன் பலமும் எதிர்க்கப்படுகிறவனுக்கே வந்துசேரும் என்கின்ற ஒரு கட்டுக்கதை தோழர் ராமசாமி விஷயத்தில் மெய்க்கதையே ஆகிவிடும் என்கின்ற உறுதியின் பேரிலேயே அவரது ரதத்தை ஒண்டியாக இருந்து ஓட்டிக்கொண்டிருக்கிறார். காலிதனத்துக்கும், குழப்பத்துக்கும் உண்மையில் தோழர் ராமசாமி ஒரு பயங்காளியே ஆவார். ஆனால் ஏற்பட்டு விட்டால் அது கண்ணியமான முடிவு அடைவதில் ஒரு கை பார்க்காமல் திரும்புகிற - ஓட்டமெடுக்கும் - காரியம் அவரது அகராதியிலேயே கிடையாது.
ராணுவப் போலீஸ் வரட்டுமே!
ஆகவே டாக்டர் சுப்பராயன் அவர்கள் அறிவுடையவரானால் காலிதனத்துக்கும், குழப்பத்துக்கும் காரணம் என்ன வென்பதையும் இதுவரை ஜஸ்டிஸ் மந்திரிகளிடம் செலாவணியாய்க் கொண்டிருந்த
குடி அரசு- 1938 (1) 282
காரணம் இந்த தேசாபிமான மந்திரிகளிடம் செலாவணி ஆவதற்குக் காரணம் என்ன என்பதையும் கவனித்துப் பார்த்துத் திருத்திக் கொள்ளட்டும் அல்லது அதைப்பற்றிக் கவலை இல்லாவிட்டால், உண்மையில் அவருக்கு ஆண்மை இருந்தால் அவரது போலீசையும், அவரது ராணுவத்தையும் பயன்படுத்திப் பார்க்கட்டும். இரண்டையும் வரவேற்கிறோம். ராணுவ இரத்தம்
யார் சரீரத்தில் ஓடுகிறது என்பதைப் பரீட்சிக்க டாக்டர் அவர்களிடம் ஏதாவது கருவி இருக்குமானால் பரீட்சித்துப் பார்த்து பிறகு ராணுவத்தைப்
பற்றி நினைக்கட்டும் என்றுகூட வாய்தா கொடுக்கத் தயாராயிருக்கிறோம்
ஒரு வேண்டுகோள் பொதுவாக ஒரு வேண்டுகோள் என்னவென்றால் சுயமரியாதைக் காரர்களோ, அல்லது முஸ்லிம் லீக் காரர்களோ தங்களுடைய பிரதிநிதிகள் என்பவர்கள் அல்லாதவர்கள் என்பதாக யாரையாவது கருதி அத்தாட்சி (காட்டவேண்டிய அவசியமில்லை) காட்ட வேண்டுமென்று கருதினால் காட்டட்டும். ஆனால் கலவரம், குழப்பம், காலித்தனம் அல்லது அப்படிப்பட்டவர்கள் கூட்டத்தில் ஏதாவது ஒரு சிறிய அசெளகரியம், குறுக்கிடல், கேள்வி கேட்டல் முதலாகிய காரியங்களைக் கண்டிப்பாக செய்யக்கூடாது என்று வணக்கமாக கேட்டுக் கொள்கிறோம். அநேகமாக அவர்கள் எதிரிகள் கூட்டத்துக்கு போகக் கூடாது என்பதே நமது பிரார்த்தனை. விஷயம் அறிய உண்மையில் ஆசையிருந்தால் கூடிய மட்டும் அடையாளம் தெரியாமல் இருந்துவிட்டு வந்துவிடவேண்டும் என்றே வணக்கமாக கேட்டுக் கொள்கிறோம். இது தோழர் டாக்டர் சுப்பராயன் மிரட்டுவதற்காக பயந்து கொண்டு சொல்வது அல்ல நாம் இந்த 15, 20 வருஷங்களாக கையாண்டு வந்த கொள்கையே இது. ஆதலாலும் இதை கண்டிப்பாக அனுசரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்
முஸ்லிம் தோழர்களுக்கு தனியாக ஒரு வார்த்தை என்னவென்றால் நமது பிரசாரம் இன்னும் தீவிரமாக நடைபெற வேண்டுமானால் எதிரி கூட்டமானாலும் சரி கண்டிப்பாக கலவரத்துக்கு இடமில்லாத முறையில் நடத்தும் படியாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதேயாகும்
மற்றப்படி டாக்டர் சுப்பராயன் அவர்கள் பூச்சாண்டியை எதிர்பார்க்கிறோம் என்பதையும் மறுமுறையும் காட்டி இதை முடிக்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 24.04.1938
8 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
சேலம் மக்களே உஷார்
சேலம் நகரசபைத் தோழர்கள் தேர்தல் விஷயமாக தோழர். ஜெகதீச செட்டியார் செய்து வரும் மூயற்சி வெற்றி பெற்று வருவது கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தோழர் ஜெகதீச செட்டியார் கட்சியை ஆதரித்து காங்கரஸ்காரருடன் போட்டி போட சேலம் பிரபலஸ்தர்கள். வலிய வந்திருப்பதாயும் அவர்களில் சிலர் சேலம் நகரசபை மாஜித் தலைவர்கள் என்றும் அறிகின்றோம். ஆகவே தோழர் ஜெகதீச செட்டியார் கட்சி மிகவும் வலிமையுடைய கட்சியாக இருக்கு மென்பதற்குச் சந்தேகமே இல்லை. தண்ணீர் குழாய் கண்ராக்ட்டு சம்மந்தமாக காங்கரஸ். மந்திரியார் பின்பற்றி வரும் கொள்கை சுயமரியாதையுடையவர்களை யெல்லாம் தட்டி யெழுப்பாமலிருக்குமா? எனவே தோழர் ஜெகதீச செட்டியார் கடசிக்கு முழு வெற்றியேற்படும்படி சேலம் மகாஜனங்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1938
குடி அரசு- 1938 (1) 284
எல்லாவரிகளும் எம்மணோர்க்குத்தாணா?
புரோகிதர்களுக்கு ஏன் வரி இல்லை? பிராமணர்களுக்கு சகல விதத்திலும் சலுகை
- பிராமணரல்லாதான்
தோழர்களே! இப்பொழுது சட்டசபை என்பது காங்கரஸ் சபை என்பதும், காங்கரஸ் என்பது பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்ற சபை என்பதும், நந்தமிழ் நாட்டார் அநேகர் அறிந்ததேயாகும். சட்டசபையில் பிராமண ஜாதி முன்னேற்றத்திற்காக எல்லா பிராமணர்களும் முழு வன்மையோடு உழைத்து வருவது, காங்கரஸ் பதவி ஏற்றதிலிருந்து கடந்த சில மாதங்களாக நடந்துவரும் நடவடிக்கைகளிலிருந்து பலர். அறிந்ததேயாகும். பல காங்கரஸ் பிரபலஸ்தர்களும் “பார்ப்பன நயவஞ்சக வார்த்தைகளுக்கிணங்கி மந்திரிப் பதவிகளை பார்ப்பனர்களுக்கு விட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார்க்கு ஏன் கஷ்டம் விளைவித்தோம்'' என்று இப்பொழுதுவருத்தப்படுவதாகவும் கேள்விப்படுகிறோம். இப்பொழுதிருக்கும் காங்கரஸ் சபையார் இயற்றும் எவ்வித சட்டங்களுக்கும் நாம் எல்லோரும் அடங்கி நடக்கத்தான் வேண்டும். அவர்களும், எல்லார்க்கும் பொதுவாகவும் சம்மதமாகவும் இருக்கும் சட்டங்களை ஏற்படுத்துவதே நியாயம். அதை விடுத்து அவர்கள் ஒருசாராருக்கு மட்டும் உதவி செய்வது அநியாயமல்லவா?
அதற்குச் சில உதாரணங்களைத் தந்து இக்கட்டுரையை முடிப்போம்.
தோழர்களே! கூர்ந்து கவனியுங்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்து அதனால் கிடைக்கும் வரும்படியால் பிழைப்பது இயற்கை. அப்படிப்பட்ட தொழிலால் ஒருவன் அதிக இலாபமடைந்தால் அதில் ஒரு பகுதியை அரசாங்கத்தார் வசூலித்து மற்ற ஏழைகளுக்கும் உதவும்படி செய்வது ஒருவிதத்தில் பரோபகாரந்தான். இம்முறையை சரியாக நடத்த வேண்டாமா என்பதே நமது கேள்வி
எப்படியெனில், இப்பொழுது காங்கரஸ் சட்டசடையார் விதித்திருக்கும் ஜவுளிவரி, ரிஜிஸ்ட்ரேஷன்வரி, டோல்கேட்டுவரி, கடன் நிவாரணச்சட்டம்,
நம் நாட்டு வைத்தியத்திற்கு வரி முதலியவைகளைப் பரந்த நோக்கத்துடன் பாருங்கள். 85 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
ஜவுவி வரி
இந்த வியாபாரத்தை பார்ப்பனரல்லாத தோழர்களே அதிகமாகச் செய்கின்றார்கள். எந்த பிராமணனும் ஜவுளிமூட்டையை தலைமேல் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாய், ஊரூராய், சுடு வெய்யிலில் திரிந்து விற்பதைக் காணோம். ஆகையால் இவ்வரிகளையும் பிராமணரல்லாத தோழர்களே கொடுத்துத் தீர வேண்டும்.
மிஜிஸ்ட்ரேஷன் வரி.
நம் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதாரே அதிகமான நிலக்சுவான்தாரர்கள். இவர்கள் நிலங்களை விற்பதிலும், குதவை வைப்பதிலும் அதிகமாகரிஜிஸ்டர் ஆபீசுக்குப் போகவேண்டி இருக்கிறது. பார்ப்பனர்கள் பெரும்பான்மையோர் உத்தியோகங்களில் இருக்கின்றார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிலங்களை விற்கவோ, குதவை வைக்கவோ விரைவான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை. தர்மம், தானம், டிரஸ்டு, உயில் எழுதி வைப்பதும் பார்ப்பனரல்லாதாரே. அதிகம் சில பிராமணர்கள் நிலச்சுவான்தாரர்களாக இருந்தாலும் நிலங்களை விற்பதிலும் குதவை வைப்பதிலும் பார்ப்பனரல்லாதாரை காட்டிலும் குறைந்துதான் இருக்கமுடியும். ஆகையால் ரிஜிஸ்டரேஷன் வரி மூலமாகவும் பிராமணரைவிட பிராமணரல்லாதாருக்கே அதிகப் பணம் நஷ்டமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
டோல்கேட்டு வரி
இதைச் சொல்ல வேண்டியதே இல்லை. ரிக்ஷா வண்டு, ஜட்காவண்டி, மோட்டார் வண்டி, மாட்டு வண்டி, எருமை வண்டி முதலிய எல்லா வண்டிகளையும் பார்ப்பனரல்லாதவர்களே வாடகைக்கு ஓட்டி ஜீவிக்கின்றார்கள். மோட்டார் வண்டிகளில் மட்டும் ஏதாவது ஒன்றிரண்டு பார்ப்பனர்களுக்கு இருக்கலாம். இருந்தாலும் வாசகர்களே, இதை சிந்தித்துப்பாருங்கள். பார்ப்பனரல்லாத ஏழை வண்டியோட்டிகளின் வயிற்றில் மண் விழுவதை
கடன் நிவாரணச் சட்டம்
இதிலும் பார்ப்பன விதவைகள் அதிகமிருப்பதால் பார்ப்பன. ஜாதிக்கு அனுகூலமாக இருக்கிறதென்று 'நகரதூதனில்' தெரிகின்றது பார்ப்பனர்கள் பெரும்பான்மையோர் உத்தியோக ஜீவனத்தில் இருப்பதால் அவர்கள் அதிகமாக கடன் வாங்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படுவதில்லை பார்ப்பனரல்லாத பெருங்குடிமக்களேவிவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும், கூலி ஜீவனக்காரர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் தான் கடன் வாங்குதல், கொடுத்தலில் அதிகமாக ஈடுபட்டுத் தீரவேண்டும். ஆகையால் இவர்கள் தான் தங்கள் தேவைக்கு கடன் கிடைக்காமல் கஷ்டப்பட வேண்டும் - கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
குடி அரசு- 1938 (1) 286
நம் நாட்டு வைத்தியம்
இதனால் ஏழை பார்ப்பனரல்லாத மக்களுக்கு பார்ப்பனரல்லாத நாட்டு வைத்தியர்கள் குறைந்த விகிதத்திற்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த வரியும் பார்ப்பனரல்லாதாரையே அதிகமாக பாதிக்கின்றது
இப்படிப்பட்ட வரிகள் விதிக்கும்போது, ஏன் புரோகிதர்களுக்கு வரி விதிக்கக்கூடாது? மடாதிபதிகள், குருக்கள் முதலியவர்களுக்கு வரும்படி குறைவா? இவர்கள் தான் பகற்கொள்ளை அடிக்கின்றார்களே! ஒவ்வொரு புரோகிதனும் சுமார் 10 அல்லது 15 கிராமங்களை வைத்துக்கொண்டு புரோகிதம் செய்கிறான். இந்தக் கிராமங்களில் வருடம் ஒன்றிற்கு 50 கல்யாணமானாலும் குறைந்தது 100 ரூபாயும், 10 ஜதை வேஷ்டியும், 2 மூட்டை அரிசி வகைகள் தானியமும், 5 படி நெய்யும், 10 படி எண்ணெயும் சேர்ந்து விடுகின்றது. 50 சாவிலும் சுமார் 100 ரூபாயும், விசிறி, குடை, செருப்பு, அரிசி, பருப்பு முதலியவை கிடைத்துவிடுகிறது. 50 குழந்தைகள் பிறந்தாலும் குறைந்தது 50 ரூபாய் கிடைக்கிறது. (இறப்பவைக்கும் இப்படியே) 10 பெண்கள் ருதுவானாலும் 25 ரூபாய் கிடைத்து விடுகிறது இவையன்றி நல்ல நாள், கெட்ட நாள் பார்ப்பது, கிரகப்பிரவேசம் போன்ற வரும்படிகள் மிகுதி. (விரிக்கின் பெருகும்) வாசகர்களே, மேற்கண்டவற்றை கணக்குப்போட்டுப்பாருங்கள். இவ்வளவு அதிகமான வரும்படியுள்ள ஒவ்வொரு புரோகிதனுக்கும் ஏன் வரி விதிக்கலாகாது? இது எல்லோருக்கும் தெரிந்த வரும்படிதானே. இதை ஏன் காங்கரஸ் சர்க்கார் கவனிக்கவில்லை? முதன் மந்திரி கனம் ஆச்சாரியார் பிராமணராயிருப்பதனால். தன் இனத்தாரைக்காட்டிக் கொடுக்கக்கூடாதென்ற எண்ணமா? இப்புரோகித கணக்கைப் புள்ளி விவரங்களுடன் விளக்கிய மந்திரி கனம் எஸ். ராமனாதன் அவர்களாவது ஏன் கவனிக்கவில்லை? கனம் ஆச்சாரியாரைவிட தாழ்ந்த சாதியார் என்பதினாலா? அல்லது மனுதர்ம சட்டப்படி "சூத்திரன் பிராமணனை எதிர்த்துப் பேசக்கூடாது என்னும் பழய சம்பிரதாயத்தை நிலை நாட்டவா? அல்லது 'கதரைப்பற்றி முன் நான் சொன்னது தவறு இப்பொழுது அதிக அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறது. ஆகையால் எல்லோரும் கதரைக் கட்டுங்கள்” என்று தனது அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டது போல், புரோகிதத்தைப்பற்றியும் “முன் நான் இழிவாகக் கூறியது தவறு. இப்பொழுது கனம் ஆச்சாரியாருக்கு அடிமைப்பட்டு, அவருக்கு கட்டை வண்டி முதலாகியதும் ஓட்டிஅனுபோகபட்டதில், கனம் ஆச்சாரியாரின் வர்க்கத்தவர் செய்யும் புரோகிதத்தினால் நன்மையுண்டு என அறிகிறேன். ஆகையால் எல்லோரும் புரோகிதம் செய்து கொள்ளுங்கள். எல்லோரும் அவரவர்களுடைய பிராமண குருக்களை வரச்சொல்லி அவர்களுக்கு நான் சொன்னதிலிருந்து கொடுக்காமல் நிறுத்தி வைத்த காணிக்கை பணங்களை யெல்லாம் இப்பொழுது வட்டியுடன் கொடுத்துவிட்டு, அவர்களுடைய கால் கழுவிய நீரைத் தீர்த்தமாகக் %7 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
குடியுங்கள்' என்று சொல்லுகிறாரா? அல்லது ‘bLrdudsardu பிராமணர்களுக்கு மாத்திரம் நிலத்தீர்வை மிக குறைவாகவே இருக்கட்டும் கஷ்ட ஜீவனக்காரர்களாகிய பிராமணரல்லாதார்க்கு மட்டும் கொஞ்சம் வரிகளை உயர்த்தலா'மென்கிறாரா? என்னே எலும்பூறிய அடிமைத்தனம்! குருக்களுக்கு தன் காணிக்கை, தலைமுறை காணிக்கை என்று பார்ப்பனரல்லாத தோழர்கள் அதிகமான பணம் கொடுக்கின்றார்களே! ஏன். இந்த குருக்களுக்கு வரி விதிக்கக்கூடாது? குருக்களில் பெரும்பான்மையோர் பிராமணர்கள் என்பதினாலா?
தோழர்களே! மேற்கூறிய பலவித வரி விதிப்புகளிலும் பார்ப்பனரல்லா தவர்களுக்குத் தான் கஷ்ட நஷ்டங்களே யொழிய, பார்ப்பனர்களுக்கு சுகஜீவனந்தான். ஒவ்வொரு புரோகிதனுக்கும் ஏன் வரிவிதிக்கக்கூடாது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். சட்டசபை அங்கத்தினர்கள் யாராவது இதைக் கவனித்து ஒரு மசோதா கொண்டு வருவார்களா?
குடி அரசு - கட்டுரை - 24.04.1938
குடி அரசு- 1938 (1) 288
ஜனநாயகமா? தடநாயகமா?
ஜனநாயகம் அல்லது குடி அரசு தோல்வியடைந்து விட்டது. முடி அரசு அல்லது யதேச்சாதிகார ஆட்சிதான் சிறந்தது என்கிறார் அந்தப் பழைய ஹோம்ரூல் வாதி திருவிதாங்கூர் திவான் ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர், ஆனிபெசண்டு அம்மையாரின் பிரதம தளகர்த்தராய்- வலக்கையாய் இருந்த தோழர் ஸி.பி. ராமசாமி அய்யர் இப்பொழுது இவ்வாறு கூறக் காரணம் என்ன? அவரது சொக்காரரான சென்னை அக்ரகார மந்திரிகளின் யதேச்சாதிகாரப் போக்கைப் பார்த்து - ஹிட்லரிஸத்தைக் கண்டு வெறுப்படைந்து தான் அவர் ஒருகால் அப்படிச் சொல்லுகிறாரோ என்ற சந்தேகம் நமக்கு உண்டாகிறது. ஜனநாயக ஆட்சி நல்லதுதான். இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஆட்சிகளில் அதுவே சிறந்த ஆட்சியாம். அதைக் கண்டிப்பவர்கள் பிரதியாக ஒரு நல்ல ஆட்சிமுறையை இதுவரைக் கண்டு பிடிக்கவில்லையாம். இவை ஜனநாயக பக்தர்கள் கூறும் வாதங்கள். ஆனால் ஜனநாயக ஆட்சியை நடத்தி வைப்போர் ஜனநாயக தத்துவத்தையே அறியாமலிருந்தால் - அல்லது அறிந்திருந்தும் வேண்டுமென்றே யதேச்சாதிகாரத் தோரணையில் தர்பார் நடத்தினால் - அதைப் போன்ற ஆபத்தான ஆட்சி முறை இல்லை என்று தைரியமாகக் கூறி விடலாம். யதேச்சாதிகாரக் கிறுக்கர்களிடம் ஜனநாயகத்தை ஒப்படைப்பது குரங்கின் கையில் கூரிய கத்தியைக் கொடுக்கும் செயலாகவே முடியும்.
அக்கிரமச் செயல் சென்னை மாகாணப் பிரதம மந்திரி, பதவி ஏற்ற முதல் தினத்திலேயே ஜனநாயக ஆட்சி நடத்த லாயக்கற்றவர் என காட்டிக் கொண்டார். எந்த ஜனநாயக நாட்டிலும் காண முடியாத ஒரு அக்கிரமச் செயலை அவர் வெகு துணிச்சலாகச் செய்தார். அதாவது காங்கரஸ்காரரால் “துரோகி” என புறக்கணிக்கப்பட்ட ஒருவரை மேல் சபைக்கு நியமனம் செய்து மந்திரியாகவும் ஆக்கிக் கொண்டார். தம்மை மந்திரி பீடத்தில் ஏற்றி வைத்த வாக்காளரிடம் அவருக்கு எள்ளத்தனையாவது மதிப்பிருந்தால்
- தாம் எந்த ஸ்தாபனத்தின் தலைவர் என்ற ஹோதாவில் மந்திரி பதவி பெற்றாரோ அந்த ஸ்தாபனத்தின் நற்பெயரில் அவருக்கு கடுகத்தனையாவது கவலையிருந்தால் - ஜனநாயக தத்துவத்துக்கு முரணாக நாமினேஷன் மெம்பர் ஒருவரை மந்திரியாக்கி யிருக்கவே மாட்டார். தமக்கு 80— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இஷ்டமானவரை மந்திரியாக நியமித்து 6 மாத காலத்துக்குள் தேர்தல். மூலம் அசம்பிளி மெம்பராகவோ கெளன்சில் மெம்பராகவோ ஆக்கிக் கொள்ள பிரதம மந்திரிக்கு சட்டப்படி அதிகாரமுண்டு. பொதுத் தேர்தலில் மஞ்சள் பெட்டியை நிரப்பியவர்கள் எல்லாம் உப தேர்தலிலும் தடையின்றி மஞ்சள் பெட்டியை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கை தோழர் ஆச்சாரியாருக்கு இருந்திருந்தால் டாக்டர் ராஜனை மந்திரியாக்கி ஒரு உப தேர்தல் மூலம் அவரை கெளண்சிலிலோ, அசெம்பிளியிலோ கொண்டு வர முயன்று இருக்கலாம். அவ்வாறு செய்ய அவர் ஏன் முயலவில்லை? டாக்டர் ராஜனை மந்திரியாக்கி ஒரு உபதேர்தலில் போட்டி போடும்படி நிறுத்தினால் தென்னாட்டு வாக்காளர் அவரை ஆதரிக்க மாட்டார்கள் என அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஏன்? அவரது செயல் அவ்வளவு அரசியல் ஒழுக்க ஹீனமானது; ஆபாசமானது; நேர்மையற்றது அவரது சம்மந்தியார் இப்பொழுது உபதேசம் செய்வது போல பிரதி தினமும் “ஆத்ம பரிசோதனை” செய்து தம்மை சுத்தம் செய்யும் வழக்கம் தோழர் ஆச்சாரியாருக்கு இருந்திருந்தால் தமது நண்பருக்கு சலுகை காட்டும் பொருட்டு இவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கமாட்டார்.
அன்றே தெரிந்தது
டாக்டர் ராஜனை மந்திரியாக்கிய அன்றே தோழர் ஆச்சாரியாரின். மந்திரி தர்பார் எவ்வாறு இருக்கக் கூடுமென்பதை தென்னாட்டு மக்கள் உணர்ந்து கொண்டார்கள். கனம் ஆச்சாரியார் பதவியேற்ற அன்று முதல் இன்று வரை தலைகீழ் தர்பாரே நடத்தி வருகிறார். சட்ட சபையில் அவரை ஆதரிப்பவர்கள் பொம்மைகளாக இருந்து வருவதினால் அவரது யதேச்சாதிகாரம் முட்டின்றி நடைபெற்றுக் கொண்டு வருகிறது பொதுஜன அபிப்பிராயத்தை அவர் லட்சியம் செய்வதேஇல்லை. பொது ஜன அபிப்பிராயத்தை அவர் புல்லாக மதித்திருப்பதற்கு சேலம் சம்பவமும் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சேலம் தண்ணீர்த்திட்ட விஷயமாக ஆச்சாரியார் மந்திரிசபை நடந்து கொள்ளும் தோரணை எந்த மந்திரி சபைக்கும் மதிப்பளிக்கக் கூடியதே அல்ல. வெள்ளைக் காக்காய் பறக்கிறது என ஆச்சாரியார் சொன்னால், “ஆமாம்” “ஆமாம்!” “நானும் கண்டேன்” என ஒப்புக் கொள்ள ஒரு மானங்கெட்ட கூட்டம் அசம்பிளியில் தனக்கு துணையாக இருக்கும் மமதையினால் சேலம் தண்ணீர் திட்ட விஷயமாக தோழர் ஆச்சாரியார் செய்யும் அட்டூழியம் ஹிட்லரிசத்தைவிட மிகவும் கொடுமையானது, பயங்கரமானது
சேலம் கதை
மேட்டூர் முதல் நங்கைவள்ளி வரை 7 மைல் தூரம் குழாய் அமைக்க நவம்பர் ஆரம்பத்துக்கு மூன் டெண்டர் சமர்ப்பிக்க வேண்டுமென்று 1937 செப்டம்பரில் சேலம் நகரசபையார் விளம்பரம் செய்தார்கள்.
குடி அரசு- 1938 (1) 290
அவ்விளம்பரப்படி கிடைத்த டெண்டர்களை உடைத்துப் பரீசிலனை செய்யும் முன்னமேயே 1937 ஜுலை 7-ந் தேதி ஜி.ஓ உத்தரவை ரத்து செய்து ஹியூம் குழாய்களுக்கு பதிலாக வார்ப்படக் குழாய்களை உபயோகப்படுத்த சர்க்கார் அனுமதி தர வேண்டுமென்று சேலம் நகரசபையார் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அந்த தீர்மானத்துக்கு பதிலளிக்கு முகத்தான் ஜுலை 7 -ந் தேதி ஜி.ஓ. உத்தரவை மாற்ற முடியாதென்று 1937 டிசம்பர் 4-ந் தேதி கனம் ஆச்சாரியார் சர்க்கார் தெரிவித்தனர். எனவே 1937 டிசம்பர் 4-ந் தேதி வரை ஹியூம் குழாய்கள் ஆச்சாரியார் சர்க்காருக்கு திருப்தியளிக்கக் கூடியவைகளாகவே இருந்திருக்கின்றன. அப்பால் பத்ராவதி கம்பெனியாரின் வார்ப்படக் குழாய் டெண்டர் உட்பட எல்லா டெண்டர்களையும் சானிட்டரி இஞ்சினீயருக்கு அனுப்பி அவைகளைப் பரிசீலனை செய்து சிபார்சு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது
சானிட்டரி இன்சினீயர் அந்த டெண்டர்களைப் பரிசீலனை செய்து மூன்று டெண்டர்களே சர்க்கார் விதிப்படி பூரணமானவை என்றும் அம்மூன்றிலும்
இந்தியன் ஹியூம் கம்பெனியார் டெண்டர்களே நயமும் மலிவும் ஆனவையென்றும் பத்ராவதி கம்பெனி டெண்டர்
சர்க்கார் நிபந்தனைப்படி எழுதப்படவில்லை யென்றும் சில அயிட்டங்கள் குறைவாக இருக்கின்றனவென்றும்
1937 டிசம்பர் 2ந்தேதி சர்க்காருக்குத் தெரிவித்தார் ஆகவே 1937 டிசம்பர் 21ந் தேதி பத்ராவதி கம்பெனியார் டெண்டரை சானிட்டரி இஞ்சினியர் ஒப்புக் கொள்ளவில்லை யென்பது வெளிப்படை. நிலைமை இப்படி யிருந்தும் “பத்ராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக் கொள்வதாய் சர்க்கார் முடிவு செய்து விட்டதாயும் அந்த டெண்டரையே நகர சபையார் டிசம்பர் 30ந்தேதிக்குள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்றும் 1937 டிசம்பர் 30ந்தேதி தந்தி மூலம் சர்க்கார் சேலம் நகரசபையாருக்கு தெரிவிக்கக் காரணம் என்ன?
அவசரப்படக் காரணம் எண்ண
அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய மூடியாதெனக் கூறி தலைவர், உபதலைவர் உட்பட 11 பேர் ராஜிநாமாச் செய்த பிறகு சர்க்கார் உத்தரவை
ஒப்புக் கொள்ளுமாறு செய்ய நாண் அபிஷ்யல் தலைவர் தலைமையில். 01 ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 26
இரண்டு மூன்று கூட்டங்கள் கூடியும் கோரம் இல்லாமல் போகவே நகரசபையின் கடைசி நாளான மார்ச்சு 31ந் தேதி சர்க்கார் உத்தியோகஸ்தரான
நாண் அபிஷ்யல் தலைவர் தலைமையில் கூடிய ஒரு போலிக் கூட்டத்தில் சர்க்கார் உத்தரவை ஒப்புக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது ஜனநாயக முறைக்கு அடுத்ததா? லட்சக்கணக்கான ரூபாய் செலவு பிடிக்கக்கூடிய விஷயத்தில் இவ்வளவு கண்மூடித்தனமாய் நடந்து கொள்வதை ஜனநாயகப் பற்றுடைய எந்த மந்திரிசபையாவது ஆதரிக்குமோ?
ஏப்ரல் 30 -ந் தேதி தேர்தலில் வெற்றி பெரும் நகரசபை மெம்பர்கள் மே மாதத்தில் கூடும் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை முடிவு செய்து கொள்ளட்டும் என ஆச்சாரியார் சர்க்கார் ஏன் ஒத்திவைக்கவில்லை?
நிபுணர்கள் அபிப்பிராயம் சிமெண்டு பூசிய ஹியூம் கம்பெனி குழாய்களுக்கு ஆதரவாக இருந்தும் பத்ராவதி கம்பெனியார் குழாய்களுக்கு ஆதரவாக மந்திரிமார் சலுகையைத் தவிர வேறு யோக்கியதைகள் இல்லாமல் இருந்தும், தமது மூன் உத்தரவுகளுக்கு மாறாக பத்ராவதிக்கு கம்பெனி குழாய்களையே சேலம் தண்ணீர்த் திட்டத்துக்கு உபயோகம் செய்ய வேண்டும் என்று கனம் ஆச்சாரியார் பிடிவாதம் செய்வதற்கு விசேஷ காரணங்கள் ஏதாவது இருக்க வேண்டுமென்று சாமானிய ஜனங்கள் எண்ணினால் அது தப்பாகுமா? மற்றும் மாஜி மந்திரி தோழர் எஸ். முத்தைய முதலியார் சேலம் தண்ணீர்.
திட்டத் தகராறு விஷயமாக எழுதிய ஒரு கடிதம் வேறிடத்து வெளிவருகிறது. அதில் கேட்கப்பட்டிருக்கும் ஆணித்தரமான கேள்விகளுக்கு தோழர் ஆச்சாரியார் பதிலளிக்க முன் வருவாரா? அதில் அடங்கியுள்ள சில புது விஷயங்களையும் வாசகர்கள் படித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மந்திரிமார்களில் ஒருவரின் பந்துவுக்கோ, நண்பருக்கோ பத்திராவதிக் கம்பெனியாரோடு தொடர்பிருப்பதாக சேலம் ஜனங்கள். எியாகவோ, தப்பாகவோ பேசிக் கொள்கையில் அவர்களது பேச்சுக்குப் பொருளும், உறுதியுமளிக்குமாறு அவசரம் அவசரமாக பத்திராவதி கம்பெனி டெண்டர் பிரச்சனையை முடிவு செய்வது நீதியாகுமா? ஒழுங்காகுமா? நேர்மையாகுமா?
சீசரின் மனைவியைப் போல் மந்திரிமார்கள் சந்தேகத்துக்கு இடமில்லாதவர்களாய் இருக்க வேண்டும். என தோழர் ஆச்சாரியாரின் சம்மந்தியார் கூறுகிறாரே! அவரது வார்த்தைக்காவது எள்ளளவு மதிப்பு தோழர் ஆச்சாரியார் கொடுக்க வேண்டாமா?
சேலம் தண்ணீர்த் திட்ட விஷயமாக உள்ள ஊழல் இவ்வளவு பகிரங்கமாக இருக்கையில் ஆச்சாரியார் சர்க்காரை ஆதரிக்கும் ஒரு
குடி அரசு- 1938 (1) 292
கூட்டம் சேலம் நகரசபைத் தேர்தலுக்கு நிற்கவும் முன் வந்திருக்கிறதென்றால் பொது வாழ்வு எவ்வளவு உளுத்துப் போய்விட்டதெனக் கூறவும் வேண்டுமா?
சேலம் மக்கள் கருத்தை லட்சியம் செய்யாமலும் மாகாண மக்கள் அபிப்பிராயத்தை மதியாமலும் தோழர் ஆச்சாரியார் நடத்திவரும் ஆட்சி ஜனநாயக ஆட்சியா? தடிநாயக ஆட்சியா?
காங்கரஸ் அட்டூழியங்கள்
இந்த லக்ஷணத்தில் ஆச்சாரியாரை ஆதரிக்கும் பொம்மைகளையே நேற்று 30ந் தேதி தேர்தலில் தேர்ந்தெடுத்துவிட வேண்டுமென்ற அநியாயத் துணிச்சலால், காங்கரஸ்காரர் என்னென்ன அட்டூழியங்கள் எல்லாமோ செய்வதாக நமக்குத் தகவல் கிடைத்து வருகிறது. நம்மவர்களில் ஒரு சாரார் மானத்தை விற்று வயிறு கழுவத் தயாராக காத்திருக்கையில் ஆச்சாரியார் இது மாத்திரமா? இதற்கு அப்புறமும் செய்யத் துணிந்துதான் நிற்பார். என் சர்க்கார்தான் நடக்கிறது, நான் நினைத்தபடி செய்வேன், இஷ்டப்படி போலீங் ஸ்டேஷனை மாற்றுவேன். ஆச்சாரியார் சர்க்காரை ஆதரியாதவர்களை சிறையிலடைப்பேன் என மஞ்சள் பெட்டி பேரால் அசம்பிளிக்குள் புகுந்த ஒரு ஆசாமி கூறவேண்டுமானால் ஆச்சாரியார் சர்க்கார் யோக்கியதையை விளக்கிக் கூறவா வேண்டும்? இத்தகைய ஜனநாயக ஆட்சியில் வாழ்வதை விட தற்கொலை செய்து கொள்வது மேலல்லவா? வரப்போகும் ராமராஜ்யத்துக்கு ஆச்சாரியாரின் தற்கால ராஜ்யம் ஒரு “சாம்பிள்”. ஆனால் அந்த ராமராஜ்யத்தில் நீதிக்கும், நேர்மைக்கும், ஒழுங்குக்கும் “மகாத்மா” போற்றும் உண்மைக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கக் கூடும்? இந்த ராஜ்யம் பெறவா தேச பக்தியின் பேரால் பல்லாயிரம் பேரின் உயிர் பலியிடப்பட்டது பல்லாயிரம் பேர் சிறை புகுந்தார்கள்! இந்த ராஜ்யம் பெறவா திலகர்.
நிதி ஒன்றேகால் கோடி பாழாக்கப்பட்டது! இந்த ராஜ்யம் பெறவா பல்லாயிரம் பேர் கோவணாண்டிகளானார்கள்!
இந்த இருபதாவது நூற்றாண்டிலே பட்டப்பகலிலே ஆச்சாரியார் இவ்வளவு துணிகரமான திருவிளையாடல் நடத்துவதை மன்னர்பிரான் பிரதிநிதியான கவர்னர் பிரபு கண்ணைத் திறந்து கொண்டு எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்? எப்படியாவது யூனியன் ஜாக் கொடி இந்தியாவில் பறந்தால் போதுமென்பது அவரது கருத்தா? மேலும் கவர்னர் பிரபு சும்மா இருப்பாரேல் என்னென்ன அநியாயங்கள் நடக்குமோ தெரியவில்லை
குடி அரசு - தலையங்கம் - 01.05.1938
03 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காந்தி எச்சரிக்கை
- ஒரு காங்கரஸ் சி.ஐ.டி.
காந்தியார் மந்திரிகள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்திருப்பதாக பத்திரிகைகளில் பார்த்தேன். இதற்குக்
காரணம் சில நாட்களுக்கு முன் சென்னையில் ஒரு மந்திரி தனது அந்தரங்க நண்பனுடன் நடு ஜாமத்தில் பெண் வேட்டைக்குச் சென்று திரும்பும் வேகத்தில் ஒரு நபரின் மீது மோட்டாரை விட்டுத் தள்ளினதோடு அந்த அடிபட்ட நபரை சிகிச்சைக்கு வேண்டிய காரியம் கூட செய்யாமல் விட்டு விட்டு ஓடிப்போய் விட்டதாகக் கூறப்படும் விஷயம் காந்தியாருக்குத் தெரிந்துதான் இம்மாதிரியான எச்சரிக்கை விட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.
போலீஸ் இலாக்கா கமிஷனருக்குக்கூட இது சேதி எட்டி கவர்னர்.
பிரபு காதுக்கு எட்டி இருப்பதாகவும் சொல்லிக் கொள்ளப்படுகிறது
குடி அரசு - செய்திக் குறிப்பு - 01.05.1938
குடி அரசு- 1938 (1) 294
பகிரங்கக் கடிதங்கள்
தோழர் அவர்களே!
தங்களது ஆத்மசக்தி கடைசியாகத் தங்களைக் காலைவாரி விட்டுவிட்டதா? இல்லாவிட்டால் மனமுடைந்து இருளில் தடுமாறிக் கொண்டிருப்பதாகச் சொல்ல நேரிடுமா? அப்படியிருக்கும்போது மற்றவர்களையும் ஆத்மசக்தியை வளர்க்கச். சொல்லுகிறீர்களே அவர்களையும் இருளில் திண்டாடவிடவா முடிவு செய்திருக்கிறீர்கள். இந்த யோசனை, "குருடன் குருடனுக்கு வழிகாட்டுவது: போலாகாதா? இந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்கு உடனே தங்களுடைய அந்தராத்மா (இன்னர் வாயிஸ்) என்ன சமாதானம் சொல்கிறதென்று கேட்டு அறிக்கை
ஒன்று வெளியிடவும். அதற்குள் அவசரப்படுகிறவர்களுக்கு உங்கள் தடுமாற்றத்தைப் பற்றி நான் ஒரு வியாக்யானம் செய்து அவர்களை அடக்கிவைக்கிறேன். அதாவது முஸ்லிம் பொது மக்களை ஏமாற்ற இது ஒரு வழியென்று தோன்றுகிறது என்பதாகச் சொல்லிவைக்கிறேன். அந்த வியாக்கியானம் சரியா என்று தோழர் படேலை கேட்டுத் தெரிவிக்கவும்
குட்பை.
தோழர் மகாதேவ தேசாய் அவர்கள் இருக்கிற ஊர்
தோழரே!
தாங்கள் “ஹரிஜன் பத்திரிகை நடத்துகிறீர்களே அதில் ஹரிஜன சமூகத்துக்காக ஒன்றையும் காணுமே. அந்தப் பேரை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றவா அல்லது பொழுது போக்குக்காகவா என்பதைத் தயை செய்து அடுத்த வார 'ஹரிஜனி-லேயே பதில் எழுதவும்
குட்பை.
தோழர் நேரு அவர்கள் ஏரோப்ளேன் சரி
தோழர் நேருவே,
உங்கள் பெயர் காந்தியார் பெயரைப் போலவே பல இடங்களிலும் பரவியிருப்பதாகச் சொல்லுகிறார்களே, அதற்குக் காரணம் தாங்கள் சோஷியலிஸ்டாயிருப்பதினாலா அல்லது சோஷியலிஸத்தைப் பேசுவதாலா 05 ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் தெரியும்படி பத்திரிகையில் வெளியிடவும் காலத்துக்குத் தகுந்தபடி நல்ல பிரசாரம் செய்தீர்கள் என்று
சிலர் சொல்லுகிறார்கள். அது உண்மைதானா என்றும் தெரிவிக்கவும்
குட்பை.
தோழர் ஆச்சாரிய சுவாமிகள் மாம்பலம்
தோழரே!
தாங்கள் ஹிட்லரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அப்படியில்லாவிட்டால் தாங்கள் செய்வதெல்லாம் யார் செய்வதைப்போல். இருக்கிறது என்று உங்களிடம் ஆடிக் கொண்டிருக்கும் எந்தப் பொம்மையையாவது அல்லது கைதூக்கும் எந்தக் கை காட்டி 'ஜென்டில்மானை'யாவது கேட்டுத் தெரிந்து கொள்ளவும். காங்கரஸ் என்றால் பார்பனீயத்தை வளர்க்கும் ஒரு 'வேஸ்தாபனம் என்று சொல்லுகிறார்களே அது சரிதானா என்று தயை செய்து “மாட்டு வண்டி
ஓட்டும் மந்திரியிடம் சொல்லி ஒரு அறிக்கை வெளியிடவும்
(குறிப்பு:- “தேவர்” என்பவர் கயவர் அனையர் என்று திருக்குறளில் காணக்கிடக்கிறது)
குட்பை.
குடி அரசு - கடிதங்கள் - 01.05.1938
குடி அரசு- 1938 (1) 296
பெண்கள் விடுதலைக்கு ஆண்மை? அழியவேண்டும்
பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில் அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்மூயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக்கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண் மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக் கொண்டேபோகும் என்பது நமது அபிப்பிராயம். எதுபோலென்றால் இந்தியப் பொது மக்கள் விடுதலைக்கு வெள்ளைக்காரரும், பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்துவருதின் பலனாக எப்படி நாளுக்குநாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம், விடுதலை பெறமுடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ, அது போலவும், சமூக சீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக்கொண்டு பார்ப்பனர்களும், புராணக்காரர்களும் சீர்திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக்கொடுமைகளும், உயர்வு
தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலைபெற்று பலப்பட்டு. வருகின்றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.
அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக்கொண்டிருக்கின்றன. பெண்களுக்கு மதிப்புக்கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால். ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்குவிடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால்
297 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
பார்ப்பனரல்லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலும்கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக்
கூடாது. அந்த “ஆண்மை” உலகிலுள்ளவரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லையென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை'' நிற்கும்வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தேவரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லையென்பது உறுதி. 'ஆண்மை"யால் தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
சுதந்தரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை” க்குத்தான். உதவியாக்கப்பட்டு விட்டன. “ஆண்மை”க்குத்தான் அவைகள் உண்டென்று ஆண்மக்கள் முடிவுகட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணரவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகின்றோம். எனவே பெண்மக்கள் அடிமையானது ஆண்மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை” யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண்மக்களும் இதை உண்மை என்றே நினைத்துக்கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும் நடுநிலைமைப் பெண்களுக்கும், ஆண்களுக்கும், யோசித்துப்பார்த்தால். விளங்காமற்போகாது. பொதுமக்கள், பிறவியில் உயர்வு தாழ்வு அழியவேண்டுமானால் எப்படிக் கடவுளாலேயே மக்களுக்குப் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச்
சுட்டுப் பொசுக்க வேண்டியது அவசியமோ, அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடுதலை பெற்று, உண்மைச் சுதந்திரம் பெறவேண்டுமானால், “ஆண்மையும்”, “பெண் அடிமையும்” கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாகவேண்டும்.
பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள், முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண் மக்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதின் அறிகுறிகளாய்க் கருதிக்கொண்டிருக்கிறார்கள் எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம் ஆனால்
குடி அரசு- 1938 (1) 298
ஆண் இல்லாமல் பெண் வாழமுடியா தென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக்கொண்டிருக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன. காரணம் என்று பார்ப்போமானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால், தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ
முடியும் என்பதை ருஜுப்படுத்திக்கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத்தொந்தரவு இல்லாததால் தாங்கள், பெண்கள் இல்லாமல் வாழமுடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும் பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளைபெறும் தொல்லை அடியோடு ஒழிந்துபோகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை வைத்துக்கொள்வதாயிருந்தாலும் பெண்கள். பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறுயாரும் சொல்லுவதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள். தனமே என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும், இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளைபெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத்
தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப்போன்ற உறுதியுடையதாயிருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதமென்று சொல்லவரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவைகள் இயற்கை வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே - அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே
வாழ்வு நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப்போய்விடாது.
தவிர, பெண்கள் பிள்ளைபெறுவதை நிறுத்திவிட்டால் “உலகம் விர்த்தியாகாது, மானிடவர்க்கம் விர்த்தியாகாது”” என்று தர்மநியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன கஷ்டம்? மானிடவர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன. ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்? அல்லது இந்தத் தர்மநியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாய்விடும் என்பது
நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக்கொண்டுவந்த மானிட வர்க்கத்தால் ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பது நமக்குத் தெரியவில்லை.
பெண்களின் அடிமைத்தன்மை, பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால்
நாம் இந்தக் காலத்தில் அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. 00 ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
பெண்களைப்பற்றியே கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் சிறிதுசிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில், ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இஷ்டமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் எப்படியெனில் ஒருமனிதன் தான் பிள்ளை குட்டிக்காரனாய் இருப்பதினாலேயே, தான் யோக்கியமாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய்விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் விரிக்கில் பெருகும் என்று இத்துடன்
முடித்துக் கொள்கின்றோம்.
பகுத்தறிவு (மா. இ) - கட்டுரை - மே 1938
குடி அரசு- 1938 (1) 300
பஞ்சகன்யாஸ்மரே.....?
- சித்திரபுத்திரன்
பார்ப்பன பாஷையில் ஒரு தோத்திர ஸ்லோக மூண்டு என்னவென்றால், ““ஆகல்யா, துரோபதி, சீதா, தாரா, மண்டோதரி, ஸ்மிருதா, பஞ்சகன்யாஸ்மாரே நித்தயம் மஹாபாதக நாசனம்” இதன் கருத்து அகல்யை துரோபதை, கீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து கன்னிகைகளை தினம் நினைத்தால் மஹாபாதகமெல்லாம் நாசமாய் விடும் என்பதே. இதில் ஏற்பட்ட விவகாரத்திற்காகத்தான் "ஐந்துக்கு இரண்டு பழுதில்லை' என்கின்ற பழமொழி உண்டாக்கப்பட்டது விவகாரத்தின் தன்மையாவது:-
கோபமில்லாமல், பகுத்தறிவோடு கேட்க வேண்டும். ஏனென்றால், கோபம் வந்தால் பார்ப்பான் ஏமாற்றி விடுவான். கோபமில்லாவிட்டால் தான் அதிலிருக்கும் ரகசியம் விளங்கும். நான் கிளப்பப்போகும் விவாதம் இந்த ஸ்லோகத்தை எந்தப் பார்ப்பான் எழுதினானோ அந்தப் பார்ப்பான் எழுதி வைத்த சங்கதியைத்தான் சொல்லப்போகிறேன். ஆதலால் நான் என் உத்தேசப்படி சொல்லப்போவதாக நினைத்து ஏமாந்து போகாதீர்கள். இதில் கண்டிருப்பது வாஸ்தவமா, இல்லையா என்று ஒவ்வொரு பார்ப்பானையும் கேளுங்கள்; வாஸ்தவமல்ல வென்று சொன்னால் என்னைக் கேளுங்கள். முதலாவது அந்த ஸ்லோகத்தில் மேல்கண்ட ஐந்து பெண்களையும் கன்னிகைகள் என்று குறிப்பிட்டிருக்கிறது கன்னிகை என்றால் கல்வி அறியாதவள். அதாவது புருஷர்கள் சாவகாசம் தொடங்காதவள். கல்யாணமில்லாதவள் என்பது பொருள். ஆகையால் அந்த ஸ்லோகம் முன்னுக்குப்பின் முரணானது என்று சொல்லுவேன்.
ஒரு சமயம் பார்ப்பனர்கள் இதற்கு இந்த சுலோகத்தில் ஷி பெண்களைக் குறிப்பிட்டு நினைக்கும்படி சொன்னதின் கருத்து கன்னித்தன்மையை உத்தேசித்ததல்ல. அவர்களுடைய கற்புத் தன்மையைப்பற்றி என்று சமாதானமாகச் சொல்ல வருவார்களானால், அதைப்பற்றி சற்று யோசிப்போம்
இந்த ஐந்து பெண்களையும் நான் 1 தாரை, 2 அகலியை, 3 துரோபதை,
4 கீதை, 5 மண்டோதரி என்கிற வரிசையில் எடுத்துக் கொள்ளுகிறேன்.
முதலாவது தாரை. தாரை என்பவள் தேவ குருவாகிய பிரகஸ்பதியினுடைய பெண்சாதி. இந்தம்மாளைப்பற்றிய விஷயம்
301 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அறிவதற்கு கட்டுச்சாதம் கட்டிக்கொண்டு காதம் காதமாய் ஊர்பயணம் போக வேண்டியதில்லை. இன்றைக்கும் தெருத்தெருவாய் தாரையும் சந்திரனும் படுத்து உருளுவதும், நிர்வாணமாய் நின்றுகொண்டு சந்திரனுக்கு எண்ணை தேய்ப்பதுமான சத்காலட்சேபத்தை தினம் தினம் பார்த்து வருகிறோம். தாரையம்மன் புருஷனே சங்கதி தெரிந்து இரண்டுபேருக்கும் சாபமிட்டதும், இவர்கள் இரண்டுபேருக்குமாக பிறந்த குழந்தை புதன் என்பவன் இருப்பதும் மேற்படி பார்ப்பனர்கள் சாஸ்திரங்களிலேயே இருக்கிறது ஆகவே குருவின் யோக்கியதை, குருபத்தினியின் யோக்கியதை, சிஷ்யனின் யோக்கியதை, ஆச்சிரமத்தின் யோக்கியதை, ஆரிய நாகரீகத்தின் யோக்கியதை ஆகிய இவ்வளவுக்கும் தாரையம்மாள் உதாரணமாக விளங்குகிறாள். இதையெல்லாம் விட கற்பின் லக்ஷணத்திற்கும் இது ஓர் ஆரிய இலக்கியமாய் விளங்குகின்றது
இரண்டாவதான அகலியை அம்மாள் விஷயம். அகல்யை அம்மாள் என்பவள் கெளதம முனிவர் என்கின்ற ஒரு ரிஷியின் பெண்டாட்டி தெய்வராஜனான இந்திரன் இந்த அம்மாள் மேல் ஆசைப்பட்டு, மாறுவேஷம் பூண்டு வீட்டிற்குள் நுழைந்ததாகவும், பிறகு ஒருவருக்கொருவர் இன்னார் என்று தெரிந்துகொண்டு இரண்டுபேரும் சுகித்ததாகவும், ரிஷி
இந்த விஷயம் தெரிந்து இருவரையும் தண்டித்ததாகவும், அத்தண்டனையால் இந்திரனுக்குச் சரீரமெல்லாம் பெண் குறியாகவும், அகலியை கல்லாகவும் ஆய்விட்டதாகவும் பார்ப்பன சாஸ்திரங்கள் என்பவைகளே சொல்லுகின்றன. அதுவும் தெருவில் போகின்ற சாஸ்திரங்கள். சொல்லவில்லை. ஐந்தாம் வேதம் என்று சொல்லப்படுவதாகிய இராமாயணம், பாரதம் முதலியவைகளில் தான் இந்த உண்மைகள் சொல்லப்படுகின்றன. இதனால் தேவர்களின் அரசனின் யோக்கியதையும், ரிஷி பத்தினிகளின் யோக்கியதையும் விளங்குகின்றது
மூன்றாவது, துரெளபதையம்மன் சங்கதி. இந்தம்மாள் முதலில் ஒரு புருஷனை மாத்திரம் கட்டிக்கொண்டு, பிறகு மாமியார் இஷ்டப்படி, மற்றும் நால்வருக்கும் பெண்டாட்டியாக இருந்து வந்திருக்கிறாள். ஐந்து பேரிருந்தும் ஆசை தீராமல் இன்னொரு புருஷனையும் மனதில் நினைத்து நினைத்து வருந்தியிருக்கின்றாள் என்பதை தானே ஒப்புக்கொண்டதல்லாமல் உலகப் பெண்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமானால், ஆண்மக்களே இருக்கக் கூடாது என்று தீர்ப்புங் கூறிவிட்டாள். இதனால் அக்காலக் கற்புக்கு லக்ஷணம் புருஷனும், மாமியாரும் யாரிடம் போகும்படி சொன்னாலும் போய்த்தான் ஆக வேண்டு மென்பதும், அதுவும் கற்பில் சேர்ந்ததுதான் என்பதும், பிறகு தன்னிஷ்டப்படி யாரை ஆசைப்பட்டாலும் அதுவும் கற்புடன் சேர்ந்ததுதான் என்பதும் அக்கால வழக்கத்தில் இருந்தாய் விளங்குகின்றது.
குடி அரசு- 1938 (1) 302
ஆகவே ஐந்து கன்னிகைகளில் மூன்றுபேர் சங்கதி இப்படியிருக்கின்றதே என்று கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் பார்ப்பனர்கள் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை' என்று சொல்ல அதிலிருந்து இந்தப் பழமொழி ஏற்பட்டது
இந்த இரண்டில் ஒன்றும் குற்றமில்லையா என்று பார்த்தால் அதிலும் ஒன்றைக்கழிக்க வேண்டியதாகத்தான் இருக்கின்றது. அடியோடு கழிக்காவிட்டாலும் சந்தேகத்திலாவது வைத்துத் தீரவேண்டியதாகத் தானிருக்கின்றது நான்காவதான சீதையம்மாள் சங்கதியை பார்த்தால் முன்சொன்ன கதைகளின் படி அவ்வளவு இல்லாவிட்டாலும் உத்தம ஸ்திரீ என்றோ முழுதும் பரிசுத்தமானவளென்றோ, கற்புக்கரசி யென்றோ சொல்வதற்கில்லை. குணவிஷேசத்தைப் பற்றியோ வென்றால், மாயமானைத் துரத்திக்கொண்டு ராமர் போன காலத்தில் வெகு நேரம்வரை திரும்பி வராதது கண்டு புருஷனைப்போய்ப் பார்த்து வரும்படி சீதை, லக்ஷமணனுக்குச் சொல்ல, லக்ஷ்மணன் போகவேண்டிய அவசியமில்லை, ராமர் எப்படியும் திரும்பி வருவார் என்று சொன்னதற்கு அண்ணன் செத்தால் என்னைக் கைப்பற்றலாம் என்று பார்க்கின்றாயா என்று சொன்னதிலிருந்தே லட்சுமணனிடம் பழகிய சீதைக்கும் போதிய அறிவும், உயர் குணமும், விஷயத்தை அறியும் சக்தியும் இல்லை யென்கின்ற தத்துவமும் நன்றாய் விளங்குகின்றது. தவிர, சீதையிடம் வெகுகாலம் நன்றாய்ப் பழகிய அவள் புருஷனாகிய ராமனும் பல தடவை சீதையின் கற்பில் சந்தேகப்பட்டிருக்கிறான். அதாவது ராவணனைக் கொன்ற பின் சீதையை முதல் தடவை சந்தேகப்பட்ட போது சீதையிடம் என்ன சொல்லுகிறான். என்றால் “ஏ கீதை, நான் உன்மேல் ஆசைப்பட்டு உன்னை மீட்டுக்கொண்டு போவதற்காக ராவணனிடம் யுத்தம் செய்யவில்லை. பின் என்னவென்று கேட்பாயானால் ஒருவன் பெண்ஜாதியை மற்றொருவன் அடித்துக்கொண்டு போய்விட்டால் அவனைச் சும்மா விட்டுவிடுவது வீரனுக்கு அழகாகுமா என்கின்ற ரோசத்தின்மேல் தான் சண்டைபோட்டு அவனைக்கொள்றேன். மற்றபடி ஒரு துஷ்டன் வீட்டில், அதுவும் அவனுடைய அதிகாரத்திற்கும் பலத்திற்கும் கட்டுப்பட்டு 10 மாதம் வசித்த தன் பெண்சாதியை சுயமரியாதையுள்ள எவனாவது மறுபடியும் சேர்த்துக்கொள்வானா?''
என்று சொன்னதோடல்லாமல் சகல வசத்திலும் அவனுடைய சுவாதீனத்திலிருந்த நீ, அவனுக்கு வசப்படாமலிருந்திருக்க முடியுமா? ஆதலால் நீ எங்கே வேண்டுமானாலும் உன்னிஷ்டப்படி போகலாம் உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கோபத்தால் சொல்லவில்லை: நெடுநேரம் ஆலோசித்து செய்த முடிவு இது” என்று சொன்னான்.
(இந்த இடத்தில் ராமன் உலக அபவாதத்திற்குக் கட்டுப்பட்டு இப்படி சொல்லவில்லை. தானே சந்தேகப்பட்டு ஒரு வித முடிவு செய்துகொண்டு
303 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சொல்லுகிறான் என்றுதான் அர்த்தம்) 'அதோடு பத்துமாதம் எதிரி
வீட்டில் வசித்த நீ" என்பதால் இதுவரை உயிர் வைத்திருந்தாயே என்கின்ற கருத்தும் தொக்கியிருக்கின்றது
இதற்கு கீதை சொல்லும் பதில் என்ன வென்றால்:-
ஏ. ராமா, நீ சொல்வது உண்மையா? அதற்கு நான் என்ன செய்யக்கூடும். நானோ ஒரு பெண். ஒண்டியாயும் அனாதையாயும் இருந்தவள். ராவணனோ ராட்சசன். அளவற்ற பலசாலி. என்னால் கூடியவரை தடுத்துப் பார்த்தேன். எனக்கு எள்ளளவாவது அவனுடன் போகவேண்டும் என்கின்ற ஆசை யிருந்ததா? விதியை நோகவேண்டியதே தவிர என்னைக் குற்றஞ் சொல்லக்கூடாது. என் தேகம்தான் பிறருக்கு வயப்பட்டதே ஒழிய என் ஹிருதயம் அப்பொழுதும் இப்பொழுதும் எப்பொழுதும் உன்னிடத்திலேயே இருக்கின்றது. சுதந்திரமற்ற நான். என்ன செய்ய முடியும்? அநுமானை அனுப்பி நான் இருக்குமிடத்தையும் ஸ்திதியையும் அறிந்துவரச் சொன்னதின் மூலம், நான் லங்கையில் ராவணனுடைய வீட்டில் இருப்பதாகத் தெரிந்தவுடனே என்னை ஏன். தள்ளிவிடவில்லை” என்றுதான் சொன்னாள். (இது வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் 117, 118-வது சருக்கத்தில் காணப்படுவது) இந்த இடத்தில் ராமன் சீதையைப் பார்த்து நீ கற்பழிந்துவிட்டாய் என்று நான் தீர்மானித்துவிட்டேன் என்று வெளிப்படையாய் சொல்லிக் காட்டியதற்கு சீதை ஏன் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று தைரியமாய் சொல்லியிருக்கக் கூடாது என்கின்ற கேள்விக்கு பதில் இல்லை. அதோடு என் சரீரம் அவன் வயப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதும் மனம் உன்னிடம்தான் இருந்தது. விதியை நோக வேண்டுமே யொழிய என்னை நோகக்கூடாது. ராவணன் வீட்டில் இருந்ததையும் என் ஸ்திதியையும் அனுமான் பார்த்துவிட்டு வந்து சொல்லி இருப்பாரே அப்போதே ஏன் என்னை தள்ளிவிட்டதாக சொல்லி அனுப்பவில்லை. என்பதாக வெல்லாம் சொல்லுவதினால் விஷயம் சந்தேகத்திற்காவது இடமுண்டாகிறதா, இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். ஒரு சமயம் இராவணன்
மீது அதிகமான பழியைச் சுமத்த வால்மீகி வேண்டுமென்றே இப்படி எழுதி இருக்கக்கூடும் என்று சொல்வதானால் அது வேறு விஷயம். என்னவென்றால் அது ராவணன் சங்கதியைப்பற்றிப் பேசும் போது கவனிக்கவேண்டிய விஷயம்
தவிர மற்றொரு தடவை வண்ணான் வார்த்தையைக் கேட்டுக் கொண்டு கொஞ்சமும் கூட முன் பின் யோசிக்காமல் திடீரென்று லக்ஷ்மணனை விட்டு கீதையை நடுக்காட்டில் கொண்டுபோய் விட்டு வந்ததும், அங்கு கீதை தன் கற்பைப்பற்றி யார் என்ன சொல்லிவிடப்போகிறார்களோ எனப் பயந்து “லக்ஷ்மணா, இதோபார் நான் இப்பொழுது கர்ப்பமாயிருக்கிறேன்” என்று சொன்னதும், காட்டில் இரட்டைப் பிள்ளை பெற்றதாக ஒரு
குடி அரசு- 1938 (1) 304
ராமாயணத்திலும், தர்ப்பை கிள்ளிப்போட்டு வால்மீகி ஒரு பிள்ளையை உண்டாக்கினார் என்று மற்றொரு ராமாயணத்திலும் சொல்லப்பட்டாலும் இந்த பிள்ளைகளை ராமன் ஒப்புக்கொள்ளாமல் வால்மீகி முதலிய பெரிய தவ சிரேஷ்டர்கள் என்போர்கள் பிரமாணம் செய்தும் ஒப்புக்கொள்ளாமல் மறுபடியும் நெருப்பில் இறங்கும்படி சொன்னதும், அதற்கு சீதை கட்டுப்படாமல் உலக அபவாதத்தையோ அல்லது ராமனுடைய சந்தேகத்தையோ நிவர்த்தி செய்ய வேண்டாமா என்கின்ற கவலையில்லாமல் பூமியைப் பிளக்கச் செய்து, பூமியில் இறங்கி மறைந்துவிட்டாள் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இன்னமும் என்னென்னமோ இருந்தாலும் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு இதுவே போதும் எனவே சீதையின் விஷயமானது சந்தேகப்படுவதற்கில்லாமல். போகவில்லை என்பதோடு, சீதையின் லக்ஷ்மித் தன்மையும், ராமனின். விஷ்ணுத் தன்மையும் எப்படிப்பட்டதென்று விளக்கவும், ஆரியர் பழக்க வழக்கங்களும் அக்காலத்திய ஆண் பெண்கள் வாழ்க்கை நிலைமையும் வெளியாக்கவும் உதவுகின்றது
கடைசியாக மீதி இருப்பது ஐந்தாவதான மண்டோதரி அம்மாள் இந்தம்மாள் விஷயத்தில் ஒரு தகராரையும் காணோம். கம்ப ராமாயணத்தில், புருஷன் பிரிந்த உடன் செத்து விட்டான் என்கின்ற சங்கதி தெரிந்து அழுது உயிர் விட்டுவிட்டதாகக் காணப்படுகின்றது தவிரவும் செத்துப் போன ராவணனைப் பார்த்து அழும்போது கீதை குலத்திலாவது ரூபத்திலாவது குணத்திலாவது சாமர்த்தியத்திலாவது என்னைவிட சிறந்தவளா என்று மாத்திரம் கேட்டிருக்கின்றார்கள். இது கீதையின் குணத்தை 10 மாதம் நேரிலிருந்து பார்த்தவள் கேட்டிருப்பதால் இதில் மண்டோதரி பேரில் குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் சீதையின் குணம்தான் வெளியாக்கப்பட்டதாக வைத்துக்கொள்ள வேண்டும்
ஆதலால் மண்டோதரியின்பால் மாத்திரம் குற்றம் சொல்ல இடமில்லை. கற்புள்ள பெண் என்றே சொல்லலாம். ஆனால், இது திராவிடச் சிறப்புக்கும் இலக்கியமாக வைத்துக்கொள்ளலாம்
பொதுவாக பஞ்ச கன்னிகைகளின் யோக்கியதையைப் பார்க்கின்றபோதும், கற்பு இலக்கணங்களைப் பார்க்கின்றபோதும், குரு, அரசன், ரிஷி, கடவுள் என்கின்றதைப் பார்க்கின்ற போதும் நன்றாய் கவனித்தால் இதன் ஆபாசங்கள் விளங்குவதோடு ஐந்துக்கு இரண்டாவது சுத்தமாய் தேர்கின்றதா என்பது வெளியாகும்.
முதலாவது விஷயம், குருபத்தினியின் சங்கதியையும், சிஷ்யனின் யோக்கியதையும், வெளியாக்கிற்று. இந்த இரண்டாவது விஷயம் தேவர்களுக்கெல்லாம் அரசனாயிருப்பவன் யோக்கியதையும் ரிஷி
பத்தினியின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று. இந்த இரண்டு விஷயமும்
305 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
புருஷர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லை என்பதையாவது காட்டிற்று மூன்றாவது விஷயமோ புருஷனும் ஒப்புக்கொண்டான், மாமியும் ஒப்புக்கொண்டார்கள், உலகமும் ஒப்புக்கொண்டது என்பதைக் காட்டிற்று நாலாவது விஷயம், அவதாரங்கள் என்பதின் யோக்கியதையையும் வெளியாக்கிற்று
மிஞ்சியது இராக்ஷசர்கள் என்றும் இராக்ஷச ஸ்திரீகள் என்றும் ஆரியர்கள் எப்பேர்ப்பட்டவர்களை சொல்லுகிறார்கள் சொல்லி வந்திருக்கின்றார்கள் என்பதையும் ஒரு திராவிடப் பெண்ணின் கற்பின் நிழலுக்குள் ஆரியர்கள் எப்படி வந்து கலந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும் வெளியாக்கிற்று, இந்த பழமொழி, ஒன்று உலகத்தை ஏமாற்றச் செய்திருக்கவேண்டும். அல்லது இது அவர்களின் பழக்க வழக்கமாயிருக்க வேண்டும். ஆகவே ஐந்துக்கு இரண்டு கூட அவர்கள் சொற்களில் உண்மையிருந்தால் அதுவும் நம்முடைய விஷயங்களில்தான் என்பதும் இந்த விஷயத்தினால் வெளிப்படுத்துகின்றேன்.
பகுத்தறிவு (மா.இ) - கட்டுரை - மே 1938
குடி அரசு- 1938 (1) 306
ஹிந்தி வந்துவிட்டது இணி என்ன?
ஜருகை பார்க்க வேண்டியதுதான்
தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி பாஷையை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரமல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும் அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த ஹிந்தியை கட்டாயமாக நுழைக்க முயற்சித்ததுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும் அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது ஹிந்தியை புகுத்திவிட்டுத் தான் மறு காரியம் பார்ப்பது என்கின்ற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ கெஞ்சிக் கொள்ளுவதாலோ சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கின்ற நிலைமை காணப்படுகிறது.
முயற்சி எல்லாம் பாழாய் விட்டது
இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை
ஒருபுறமிருக்க வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற
எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர்
பிரபுவையும் அணுகத் துணிந்து அவருக்கும் இது சம்மந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லையென்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளை சொல்லிக் கொள்ள பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக்
கொண்டும் கூட அதற்கும் முடியாது என்று முடிவு கூறிவிட்டார்.
307 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இனிச் செய்ய வேண்டியது என்ன?
இனி தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான். இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்குமூன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்கு பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத் தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேப்பாரற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்கு சமாதானம் தெரிந்த பிறகே மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். அதல்லாமல் வெறும் கோபத்திலோ ஆளுக்கு ஒரு யோசனை சொல்லுவதினாலோ ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒரு வித பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்
அலக்ஷ்யத்துக்குக் காரணம்
தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம்
மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ வீரமோ இருப்பதாக
காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை;
தமிழனுக்கு பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய தலைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்று தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும் தாள் ஆதாரங்கள் காட்டலாமே ஒழிய பிரத்தியக்ஷ அல்லது சமீப சரித்திர சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராண காலம் தொட்டு சூத்திரனாக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப் பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன
என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.
குடி அரசு- 1938 (1) 308
50 வருஷகால வாழ்வு
இவை தவிர நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ்
நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான், தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.
தமிழ் நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களின் சமீபகால சரித்திரமும் வாழ்க்கைக் குறிப்புகளும் தற்கால நிலையும் அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமேயானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமே தவிர வீரனென்றோ மானியென்றோ தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர் உதவினவர் என்றோ,
தமிழ் மக்களை நடத்தினவர் நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காண முடியாது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது
இன்று தானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள பொது நல உணர்ச்சியுள்ள தனி சுயநலமற்ற ஒரு தமிழ் மன்னனோ, தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்கு பூர்வகாலந் தொட்டு, வேத புராண சரித்திர காலந்தொட்டு எதிரியாய் - பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களை தாழ்த்தி, அழுத்தி, இழிவுபடுத்தி வரும் பார்ப்பனருக்கு அடிமையாய் ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழி குணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?
மாபெரும் விரோதி.
ஆகவே இவையும் இவை போன்ற இன்னும் பல காரணங்களும் ஏராளமாய் இருக்கும்போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை, வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் “எமனாய் 'உளைமாந்தையாய்' இருக்கும் ஹிந்திபாஷையை பார்ப்பனர்கள் கட்டாயமாக தமிழ் மக்களுக்குள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படி தடுக்கமுடியும் என்று கேட்கின்றோம்
கனம் ஆச்சாரியார் பார்ப்பனராய் இருந்தாலும், ஹிந்தியை ஒரு தமிழ் மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி - பெருங்குடி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.
309 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆச்சாரியார் மூர்க்க பலம்
மற்றும் கனம் ஆச்சாரியார், என்றும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ்மக்கள் சமூகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும்படி சூத்திரர்களாக ஆக்க ஹிந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் “ஆம், ஆம்" “நன்று, நன்று” “நடத்து நடத்து” என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனை தமிழ் மக்கள் கைகூப்பி
சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ்மக்களுக்கு பிடித்தமில்லாத - தமிழ்மக்களுக்குக் கேடு சூழும்படியான ஹிந்தியை கனம் ஆச்சாரியார் (பார்ப்பனர்கள்) மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம். ஆகவே, தமிழ் மக்களின் பழம் பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக்கேற்றதாக இல்லை என்பதோடு
தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்
இதனால் எந்த தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஹிந்தியை தடுப்பதற்காக நாம் செய்யப் போகும் காரியங்களை திட்டப்படுத்துவதற்கு முன் நம் நிலையை நன்றாக உணர்ந்து அதற்கு
ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும் நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?
நாம் வேண்டுபவர் உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ்
ரத்தம் ஓடும் வாலிபர்களே ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்
எப்படிப்பட்ட பார்ப்பன தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்
பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது.
இரண்டிலொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.
குடி அரசு- 1938 (1) 310
அடுத்தபடியாக பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும் ஒரு சமயம் கிடைக்காமல் போய்விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும்
ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத் தக்கதாகும்.
அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம் (ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்) ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடியவேண்டியதாகிவிடும்
காலம் அடுத்து விட்டது கோடை விடுமுறை முடிந்த உடன் ஹிந்தி கட்டாய பாட முறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும் அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும்.
தோழர்கள் எஸ். எஸ். பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்
சிறை புகுவது அற்ப விஷயம்
தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்கு சிறை செல்லுவது என்பது மிக சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக்காரியமாகவும் கருதிவிடக் கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாள சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராய் இருந்தால் போராதா என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும் அதில் யாதொரு கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. அதை 3 - ந் தரக் காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும் அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில்
நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக்கமற்ற மறத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொருவினைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான
நப ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்த வேண்டும்
இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள்
இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரைஹிந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” “நான் தயார்” “நானும் என் மனைவியும் தயார்” “உண்ணாவிரதத்துக்கு தயார்” “உயிர் விடத் தயார்” என்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிபடவும் ராப்பட்டினி பகல் பட்டினி கிடக்கவும், துலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனை சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.
பெரியோர்களுக்கு விண்ணப்பம்
பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்கு புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை
வாழ்க்கைக்கு கருதப்படும் மானம் அபிமானம் வேறு பொதுநல தொண்டுக்கு கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை
மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள்
மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள், வீர இளைஞருக்கு
நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடிவைக்கும்போதும்
ஞாபகத்தில் வையுங்கள்.
செல்வர்களுக்கு ஓரு வார்த்தை
தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா இறப்பதா என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும் பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள். நடந்தது நடந்து விட்டது. அதை பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தை தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.
குடி அரசு- 1938 (1) 312.
யொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்
பொதுத் தமிழ் மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஸ் ஆட்சியல்ல. வருணாச்சிரம புரோகித ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ் மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதை விட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டு கிடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்களும் நாமும் நம்
பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சி போராக, முயற்சியாக கருதுங்கள்.
உங்கள் செளகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களை போருக்குக் கச்சை கட்டி
விரட்டி அடியுங்கள்.
மடாதிபதிகளுக்கு மன்னிப்பு
தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்த சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது, கிடைக்காது ஆகவே பொதுமக்களே, இளைஞர்களே தயாராகுங்கள். மூன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 08.05.1938
M3 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
பகிரங்கக் கடிதங்கன்
தோழர் முத்துரங்கம் அவர்களுக்கு,
தாங்கள் “ஆண்மை, ஆற்றல்” இல்லாதவர் என்றும், தாங்கள் தமிழ் மாகாணக் காங்கரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் வரையில். காங்கரசில் ஊழல் இருக்கத்தான் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது. அத்துடன் தங்களுக்குச் சுயமதிப்பும், பொது நோக்கும் இல்லை யென்று ஏன் சொல்லக் கூடாது என்பதாக பலர் அபிப்பிராயப்படுகிறார்கள். பார்ப்பனத் தாசர் என்றால் எப்படி யிருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள பலர் ஆசைப்படுகின்றார்கள். தயை செய்து அவர்களின் மூன் தாங்கள் பிராப்தமானாலே போதும் என்று நினைக்கிறேன்.
குட்பை.
தோழர் சுப்பராயன் அவர்களுக்கு,
தாங்கள் போகும் இடங்களில் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் பொதுவாக சுயமரியாதைக்காரர்கள் என்றும் சிறப்பாகத் தோழர் ஈ.வெ.ரா. என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். இந்த மாதிரி தாங்கள் மாலை நேரத்தில்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆகையால் இனிமேல் காலை நேரத்தில் நிதானமாகப் பிரசங்கம் செய்வீர்களோனால் ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தமிழர்களே என்று உணர்ந்து கொள்வீர்கள்.
குட்பை.
தோழர் ராஜன் அவர்களுக்கு,
தங்களைச் “சாக்கடை” மந்திரி என்று அழைக்கிறார்கள் சுகாதாரத்துக்கு முக்கியமான சாதனம் சாக்கடை சுத்தமாக இருக்க வேண்டும். அதிலும் பெரிய நகரங்களில் சாக்கடையை மிகச் சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் ஜனங்கள் நோயில்லாமலிருப்பார்கள். இக்காரணம் பற்றித்தான் தங்களை அப்படி அழைக்கிறார்களா?
குட்பை.
குடி அரசு- 1938 (1) 314
தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு,
தாங்கள் வக்கீல் வேலைக்குப் படித்தவர் என்றும், ஆனால் தொழில் நடத்தவில்லையென்றும், பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்றும், ஆனால் பணம் செலவு செய்யவில்லையென்றும், ராஜபோகம் அனுபவிக்கிறீர்கள் என்றும் ஆனால் வரும்படி இல்லை என்றும் புகழ்ந்து சொல்லப்படுகிறது. இந்தக் காரியங்களுக்கு இன்னும் மனைவி மக்கள் பட்டுக் கட்டவும், வைரத்தோடு போடவும் ஒருவனுக்குப் பணம் வேண்டும். ஒரு வழியுமில்லாமல் தங்களுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்ததென்று ஒரு அறிக்கை வெளியிட்டால் இக்காலத்தில் வேலை இல்லாமல் திண்டாடுகிறவர்களுக்கு மிக உதலியாயிருக்கும் ஆனால் தங்களுடைய மேலான வழியை மற்றவர்கள் பின்பற்ற விடுவீர்களா என்பது சந்தேகம். இது தங்களுக்குப் பிறவித் தொழிலா அல்லது இடை நடுவில் வந்ததா என்று தெரிவியுங்கள்.
குட்பை.
தோழர் முனிசாமி அவர்களுக்கு,
தாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள். அப்படி யிருக்கும்பொழுது தாங்கள் அதி திராவிடர்களின் நன்மைக்காக பாடுபட வேண்டாமா என்றும் கேட்கிறார்கள். அவர்களுக்கு “தனக்கு மிஞ்சித்தான்தானமும், தருமமும்” என்ற பழமொழி தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் சொல்லவுமாட்டார்கள். கேட்கவு மாட்டார்கள்
தங்களுக்கு நடக்கும் மரியாதையும் கிடைக்கும் சுகமும் தாங்கள் ஆதி திராவிடர் என்று நினைக்கவிடுமா? அல்லது தங்கள் சமூகத்தின் நன்மைக்காக உழைக்கவிடுமா? ஆகையால் கடலில் அலை ஓயும் வரையில் தாழ்த்தப்பட்டவர்களைக் காத்திருக்கச் சொல்லுங்கள்
குட்பை.
குடி அரசு - கடிதங்கள் - 08.05.1938
நத ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
நெருக்கடி என்றுமில்லா நெருக்கடி
நம்நாட்டுப் பார்ப்பனீயமானது “தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து இப்போது மனிதனைக் கடிக்க வந்துவிட்டது” என்பது போல் உத்தியோக வேட்டை ஆடி, பிறகு நம் பிரமுகர்களையும் நமது ஸ்தாபனங்களையும் ஒழிக்க முயற்சியெடுத்து வெற்றி பெற்று பதவியும் ஆதிக்கமும் பெற்றவுடன் இனி என்றென்றும் தமிழ் மக்கள் சமூகமே தலையெடுக்க வொண்ணாதபடி செய்வதற்கு பல வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்த முறைகளை திரை மறைவில் கையாடி வந்து இன்று வெளிப்படையாகவே வெளிவந்து ஹிந்தி என்ற கத்தியுடனும், வார்தா கல்வித்திட்டம் என்ற சூலாயுதத்துடனும் நின்றுகொண்டு தமிழர்களை வெட்டியும் குத்தியும் கொன்று புதைக்க முனைந்து விட்டது
பார்ப்பணீயப் போராட்டம்
தமிழ் மக்களில் எவருடைய ஆக்ஷேபணையையும் எப்படிப் பட்டவர்களுடைய கூக்குரலையும், யாருடைய அழுகையையும் லக்ஷியம் செய்யாமல் ஒரே அடியாய் “சம்ஹாரம் செய்து விட்டுத்தான் அமருவேன்” என்ற ஆணவத்துடன் அது (பார்ப்பனீயம்) தலைவிரித்தாடுகிறது
தமிழனுக்கு இன்று கதி இல்லை, நாதி இல்லை, நடுத் தெருவில் பெண்டு பிள்ளைகளுடன் இழுத்துப் போட்டு உதை உதை என்று உதைத்தாலும், அடி அடியென்று அடித்தாலும், பெண்டு பிள்ளைகளை நிர்வாணத்துடன்
புரட்டிப் புரட்டி மானபங்கப்படுத்தினாலும் ஏன் என்று கேட்க ஆளில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியான சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது
தமிழ்ப் பிரதிநிதிகள் துரோகம்
தமிழன் பிரதிநிதி, தமிழ் நாட்டின் பிரதிநிதி என்று வேஷம் போட்டு வெளிவந்து தமிழ் மக்களை ஏமாற்றி காசு, பணம், பதவி, பட்டம் பெற்று பெரிய மனிதனான மக்களில் பெரும்பாலோர் இன்று தம் சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கவும், உயிர் வாழவுமான இழி நிலைக்கு வந்து விட்டார்கள். தாம் தமிழர் தமிழ்மக்கள் சந்ததி என்கின்ற சாக்கை சொல்லி உத்தியோகம் பெற்று பணம் தேடி அதனால். தங்களது பிள்ளைக்கும் குட்டிகளுக்கும் உத்தியோகமும், மேன்மையும் தேடிக்கொண்ட தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்களுக்கு வந்துள்ள இம்
குடி அரசு- 1938 (1) 316
மாபெரும் நெருக்கடியைப் பார்த்துக் கொண்டு அறியாதவர் போல். மாய்மாலம் செய்து எதிரிகளின் கால் பெருவிரலை சூப்பிக்கொண்டு தனது வாழ்வில் சுயநல வேலையில் ஒரு இம்மியளவும் குறைவராமல்
பார்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்
எதிமிகளுக்கு உதவி.
அரசியல் மன்றங்களுக்கும் மற்றும் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கும் தமிழன் பேரால் தமிழ் மக்கள் பிரதிநிதியாய் ஆவதற்குத் தன்னை உண்மைத் தமிழ் மகன் என்று சொல்லிக் கொண்டு தமிழர்களின் வாக்குகளைப் பெற்று பிரதிநிதி ஸ்தானம் அடைந்த தமிழ் மக்கள் இன்று தாம் தமிழ் மக்கள் என்பதை மறந்ததோடு மாத்திரமல்லாமல் தமிழர்களின் எதிரிகளிடம் சரண் புகுந்து அவ்வெதிரிகள் தமிழ் மக்களுக்குச் செய்யும் கொடிய வஞ்சகங்களை அலட்சியமாய்க் கருதி அவர்களுக்கு உதவி செய்து தன் சமூகத்தையே ஒழிக்க கத்தி தீட்டிக் கொடுப்பதான இணையில்லா இழிதொழில் செய்து வயிறு வளர்த்து வாழ வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள் என்றால், தமிழ் மக்கள் இது சமயம் சக்தியற்று நாதி அற்றுக் கிடக்கிறார்கள் என்பதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு வேண்டும் என்று கேட்கின்றோம்
மாஜி மந்தியிகள் என்ன செய்கிறார்கள்?
வெளிப்படையாகவே பேச ஆசைப்படுகிறோம். இன்று தமிழ் மக்களுக்கு இந்தியாவிலும், வார்தா கல்வித்திட்டத்தாலும் ஆபத்து இல்லை, கேடில்லை, தமிழன் மனிதத் தன்மையோடு வாழுவதற்கு தடையில்லை என்று எந்த தமிழ் மாஜி மந்திரியாவது கருதுகிறாரா? இல்லையே. எல்லா மாஜி மந்திரிகளும் ஒரு முகமாக இந்தியும் வார்தா: கல்வித் திட்டமும் தமிழனுக்கு கேடு என்றும் தமிழன் தன்மானத்துக்கு தடையென்றும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாய் விட்டது இந்நிலையில் அந்த மாஜி மந்திரிகள் அக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற என்ன முயற்சி செய்தார்கள்? செய்கிறார்கள்? செய்ய முன் வருகிறார்கள்? என்று கேட்கின்றோம்.
தமிழ் உத்தியோகஸ்தர்கள் செய்வதென்ன? மற்றொரு சமயம் தனித்தனியாக இவர்களது சதிகளையும் வஞ்சகங்களையும் சுயநல வேட்டைகளையும் எடுத்துக் காட்டுவோம் இனி அடுத்தாப்போல் தமிழன் என்ற காரணத்தால் உத்தியோகம் பெற்று மேற்பதவி அடைந்து பெரிய பட்டம் பெற்ற தமிழனும் இன்று பெரும் பதவியில் இருக்கும் தமிழனும் இந்நெருக்கடிக்கு என்ன உதவி செய்கிறார் என்று ஒவ்வொரு பெரிய (தமிழ்) உத்தியோகஸ்தனையும் பற்றி நினைத்துப் பாருங்கள். அதைப்பற்றியும் பின்னால் எழுதுவோம்
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இன்று இரு சட்டசபையிலும் தமிழனுக்கு பிரதிநிதியாய் பார்ப்பானுக்கு காங்கரசுக்கு எதிர்க்கட்சியில் இருப்பதாய் சொல்லிக் கொள்ளும் தமிழர்களின் யோக்கியதைதான் என்ன? அதையும் பற்றி பின்னால் குறிப்பிடுவோம்
காங்கரஸ் தமிழர்கள் நிலை என்ன?
“மற்றும் தேசத்துக்கு விடுதலை சம்பாதிக்கும் கட்சி காங்கரஸ்தான்" என்று சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு தமிழ் மக்கள் ஸ்தாபனத்தையே சீர் குலையச் செய்ய சம்மதித்து பார்ப்பனர்களை தஞ்சமடைந்து வயிறுவளர்க்கும் தமிழ் மக்கள் தானாகட்டும் தமிழனுக்கு ஏற்பட்ட இந்த மிகமிக நெருக்கடியான சமயத்தில் என்ன செய்கிறார்கள். என்று பாருங்கள். தோழர் டி.ஏ. ராமலிங்க செட்டியார் முதற்கொண்டு ஒவ்வொருவருடைய யோக்கியதையை முதலில் எடுத்துக்கொள்ளுவோம். இவர்கள் தான் என்ன செய்கிறார்கள்? தோழர் செட்டியார் தன்னை தமிழ் மகன் என்றும் தான் தமிழபிமானி என்றும் சொல்லிக்கொண்டு எவ்வளவு பெருமை பெற்றார் என்றெல்லாம் பார்ப்போமானால் தமிழனின் நிர்க்கதி விளங்கவில்லையா என்று கேட்கின்றோம். ஏன் இதை குறிப்பிடுகிறோம். ஏன் நமது பலவீனத்தையும் குறைகளையும் குற்றங்களையும் எடுத்துக்காட்டுகிறோம் என்று சிலர் கருதக்கூடும் ஏனெனில் நம் காலிலேயே நாம் நிற்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை ஞாபகமூட்டவும் பாமர மக்களும் நம் வீர வாலிபர்களும், நேரடியில் அப்பெரியார்கள், பிரமுகர்கள் என்பவர்களை எதிர்பாராமல்
இந் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கவுமே இதை எழுதுகிறோம்
தமிழன் செய்ய வேண்டியதென்ன?
தமிழன் என்கின்ற உண்மை உணர்ச்சி யார் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் ஒவ்வொருவரும் இந்நெருக்கடி தீரத் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதைப்பற்றி தீவிர யோசனை செய்ய வேண்டும் ஹிந்தியை ஒழிப்பதற்கு மாத்திரமல்ல நாம் செய்யப் போகும் போராட்டம் என்பதையும் தாங்கள் யோசனை செய்வதற்கு மூன் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும். பார்ப்பனீயக் கொடுமையில் இருந்து நாமும், நம்
பின் சந்ததிகளும் தப்புவதற்கு ஆக செய்ய வேண்டிய அரிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் கருதி
சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்த ஆசைப்படுகிறோம். அப்படி சிந்திக்கும்போது ஒவ்வொரு தமிழ் மகனும் தனது தன்மானத்தையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்
குடி அரசு- 1938 (1) 318
பார்ப்பனர் தமிழரை அடிமையாக்குவதெப்படி? அதாவது 100-க்கு 3 பேராயுள்ள ஒரு சமூகம் அதாவது பார்ப்பன சமூகமோ, ஆரிய சமூகமோ, வைதீக சமூகமோ அல்லது பிச்சையெடுத்து வயிறு வளர்க்கும் புரோகித சமூகமோ எதுவானாலும் சரி அந்தச் கிறு சமூகம் இவ்வளவு பெரிய மாபெரும் சமூகமாகிய பழம் பெரும் குடிகளாகிய தமிழ் மக்களை சமுதாயத்தில், பொருளாதாரத்தில் ஆத்மார்த்தம் என்பதில் இவ்வளவு கீழாக இழிவாக தாழ்மையாக அழுத்தி வைத்து ஆதிக்கம் செலுத்த முடிகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இக்கூட்டம் 100க்கு மூன்றே எண்ணிக்கை கொண்டதாக இருந்தாலும் இந்த 100க்கு மூன்றும் கெட்டியாகவும் - கட்டுப்பாடாகவும்
- தன் சமூக நலனுக்கு உயிரைத் தவிர வேறு எதையும் தியாகம் செய்து பாடுபட வேண்டும் என்கின்ற ஒரே கொள்கையை உண்மையாய்
கடைப்பிடித்து கட்டுப்பாடாய் உழைக்கும் சமூகமாய் இருந்து வருவதினாலேயே 100க்கு 97 கொண்ட சமூகத்தின் மீது ஆதிக்கம்
செலுத்தி வருகிறது
தமிழன் நிலைமை
தமிழன் எண்ணிக்கையில் 100க்கு தொண்ணூறாய் இருந்தாலும் என்ன பயன்? அவன் பொருளாதாரத் துறையில் சர்வத்தையும் பார்ப்பானுக்கு அழுது விட்டு “மோக்ஷத்தில் இடம்” தேடிக்கொள்ள கற்பிக்கப்பட்டவனாகி விட்டான். சமுதாயத் துறையில் பார்ப்பானுக்கு தொண்டு செய்து தன்னையே பார்ப்பானுக்கு அற்பணமாக்கி பார்ப்பான் கால் கழுவிய நீரை தீர்த்தமாக உட்கொண்டு அதன் மூலம் தான் தினந்தோறும் செய்யும் “பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக் கொள்ள வேண்டியவனாக அதிவிட்டான்.
பார்ப்பனர் உயர்வுக்குக் காரணம்
அரசியல் துறையிலும் பார்ப்பானையே தலைவனாக்கி பார்ப்பானுக்கு ஊழியனாக இருந்து பார்ப்பானை தலைமை மந்திரியாக்கி அவன் மூலம் ஆட்சி “விடுதலை” பெற அடிமைத்தொழில் செய்ய வேண்டியவனாக ஆகிவிட்டான். இப்படிப்பட்ட இந்த கேவல நிலையிலும் ஒரு தமிழனுக்கு தோன்றும் எண்ணம் மற்றொரு தமிழனுக்கு பிடிக்காது, ஒரு தமிழன் மேல் நிலையில் இருப்பது மற்றொரு தமிழனுக்கு
சகிக்காது. எந்த நிலைமையிலும் ஒருவனுக்கொருவன் ஏறுமாறு நடத்தையை கொண்டவனாக இருக்கிறான். ஆனால் பார்ப்பானோ, ஆரியனோ, புரோகிதனோ அப்படியில்லை. தென்கோடி கன்னியாகுமரியில் உள்ள “ஒரு ஒழுக்கங் கெட்ட” பார்ப்பானுக்கு தன் சமூக பாதுகாப்பு விஷயமாய் மற்ற சமூக மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் செலுத்தும் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
விஷயமாய் “ஒரு அபிப்பிராயம் தோன்றுமேயானால் அதே சமயத்தில் வடகோடி இமயமலை உச்சியில் இருக்கும் ஒரு “தவசிரேஷ்ட” பார்ப்பானுக்கு அதே அபிப்பிராயம் தோன்றி செயலில் இறங்கி விடுவான். இந்த ஒரு குணமே பார்ப்பனர் எண்ணிக்கையில் உழைப்பில் முறையே எவ்வளவு சிறிய தொகையாகவும் சோம்பேறிகளாகவும் இருந்தாலும் அவர்கள் பாடுபடாமல் மேன்மையான நிலையில் இருந்து கொண்டு மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்தவும் மற்ற சமூகங்களை என்றென்றும் தலையெடுக்க வொட்டாமல் செய்து அழுத்தி வைக்கவும் முடிகின்றது
ஹிந்திப்போர் நோக்கம்
இதிலிருந்து தமிழ் மக்கள் தப்பவேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டே இந்த ஹிந்திப் போரை நடத்த வேண்டுமேயொழிய கேவலம் ஹிந்தி ஒழிந்தால் மாத்திரம் போதும் என்கின்ற அற்ப ஆசையால் அல்ல என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் உணரவேண்டும். என்று ஆசைப்படுகிறோம்
ஹிந்திப் போரானது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க தமிழனின். தன்மானத்தைக் காக்க கிடைத்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் என்பதாகக் கருதி ஒவ்வொரு தமிழனும் அதில் பங்கு கொண்டு அந்த ஆயுதத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்
1922-ல் ஆச்சாரியார்
இன்று இந்நாட்டு அரசியல் தலைவராகவும், அரசாங்க முதல் மந்திரியாகவும், சமுதாயத்தில் மேல் ஜாதிக்காரர் என்பவராகவும் இருக்கிற நமது தோழர் கனம் ஆச்சாரியார் அவர்கள் ஒரு காலத்தில் அதாவது 1922ம் வருஷத்தில் திருப்பூரிலும், தர்மபுரியிலும் சொன்ன சில அகம்பாவமான வார்த்தைகளை இன்று தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறோம். (இவை முன்னமும் இரண்டொரு சமயம் எடுத்துக் காட்டிய விஷயங்களேயாகும்.) அதாவது 1922-ல் திருப்பூர் தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் கோவில் பிரவேச சம்மந்தமாக வந்த தீர்மான விவாத விஷயமாகவும் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் நடத்த தர்மபுரி தாலூகா அரசியல் மகாநாட்டில் கோவில் பிரவேச விஷயமாய் வந்த தீர்மான சம்மந்தமாகவும் நடந்த வாதப்பிரதி வாதங்களில் பார்ப்பனீபத்தைத் தாக்கிப் பேசிய விஷயங்களைப் பற்றி அங்கேயே பின்னால் சாவகாசமாக நடந்த சம்பாஷணைகளின் போது ஆச்சாரியார் அவர்கள் சொன்ன வார்த்தைகளை ஞாபகமிருக்கும்வரை அப்படியே எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது “பார்ப்பன ஆதிக்கம்
குடி அரசு- 1938 (1) 320.
நீங்கள் கருதுகிறபடி அவ்வளவு சுலபத்தில் ஒழிக்கக்கூடியதல்ல. அதை ஒழிக்க சரித்திர காலங்களில் புத்தரால் ஒரு கை பார்த்தாய்விட்டது, புராண காலங்களில் மகாவலிமை பெற்ற பல அரசர்களாலும் ஒரு கை பார்த்தாய்விட்டது. இவ்வளவையும் சமாளித்துக்கொண்டு நீங்கள் ஒழிக்க கருதும் பார்ப்பன ஆதிக்கம் இன்று உயிர் வாழ்கின்றது. அப்படிப்பட்டதை நீங்கள் ஒழிக்க வேண்டுமென்று கருதினால் அது ஆகக்கூடிய காரியமா" என சொன்னதோடு “அப்படி பார்ப்பனராதிக்கத்தை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறவர்கள் தங்களைத்தான் ஒழித்துக் கொள்வார்கள்” என்றும்
சொன்னார். இவ்வளவு வலிமையுடன் அவர் பேசிய காரணம் பார்ப்பன. சூழ்ச்சிக்கு இருக்கும் சக்தியையும் (தமிழ் மக்களுக்குள் இருக்கும் தன்மானமற்ற தன்மையையும்) தமிழ் மக்களுக்கு மதத்தின் பேரால் பார்ப்பனீயம் ஊட்டி இருக்கும் அடிமைத் தன்மையையும் நன்றாய் உணர்ந்து பார்த்துக் கூறியதேயாகும்
தமிழர் விடுதலை பெற வேண்டுமானால்?
இந்த ஹிந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால் அவன் சரீரத்தில் ஓடும் பார்ப்பன மத உணர்ச்சி ரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டு புதிய சுதந்திர அறிவு ரத்தம் பாய்ச்சப்பட்டு ஆகவேண்டும்
ஏனெனில் பார்ப்பனீயம் இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் கட்டாயமாக புகுத்த வேண்டும் என்கின்ற மூர்க்கப் பிடிவாதத்தைக் கொண்டிருப்பதின் உண்மைக் கருத்து என்ன வென்றால் அரசியலுக்கு அல்ல, பொருளியலுக்காக வல்ல அல்லது பார்ப்பனர்களுக்கு வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு என்பதற்காக அல்ல இவைகளுக்காக என்று சொல்லுவதும் நம்மை கருதும்படி செய்வதும் நம்மை ஏமாறச் செய்வதற்காகவே யாகும்
ஹிந்தி புரட்டின் அந்தரங்க நோக்கம் மற்றபடி உண்மையான காரணம் என்னவென்றால் இன்று தமிழ் மக்கள் பெரும்பாலோருக்குள் ஏற்பட்ட சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொடுத்து இருக்கும் பார்ப்பனீப மத உணர்ச்சியை தமிழ் மக்களுக்குள் மறுபடியும் சரியானபடி புகுத்தி அதை கெட்டிப் படுத்தி பார்ப்பனீயத்துக்கு தமிழ் மக்களை புராண காலம் போல நிரந்தரமாய் அடிமையாக்குவதற்காகவேயாகும். அதனால்தான் சோழவந்தான் ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டில் அதன் தலைவர் “ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்கப்படுவதை ஒழித்தால் போதாது. ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்பதற்கு உள்ள உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் நட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அமிய சந்தர்ப்பம்
ஆதலால் தமிழ்மக்களுக்கு ஹிந்திப் போர் ஒரு கிடைத்தற்கரிய பாக்கியம் என்றே ஒவ்வொரு தமிழ் மகனும் கருத வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இது போன்ற ஒரு பயனளிக்கத்தக்க போராட்டம் இனி சுலபத்தில் ஏற்படும் என்று எந்த தமிழ் மகனும் லேசில் கருதமுடியாது என்பதோடு இது அவ்வளவு சுலபமானதும் அவ்வளவு பெரிய பயனை அளிக்கக்கூடியதுமான ஒரு அரும்பெரும் போராட்டமாகும் அதிக காலம் நீடிக்காது அதிக துன்பமும் தொல்லையும் இருக்காது அதிக பண நட்டமும் கூட இருக்காது என்று சொல்லத் தகுந்த ஒரு
போர் என்றே சொல்லுவோம். ஆகவே இப்படிப்பட்ட ஒரு அருமையான
சந்தர்ப்பத்தை எந்த தமிழ் மகனும் இழந்துவிடாமல் ஆங்காங்கு உள்ள
தமிழ் மக்கள் ஆங்காங்கு அதாவது எந்த எந்த ஊர்களில் உள்ள பள்ளிக்
கூடங்களில் ஹிந்தி புகுத்தப்படுகிறதோ ஆங்காங்குள்ள தமிழ் மக்கள்: இப்போதே ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி போட்டு அங்கத்தினர்களைச் சேர்த்து
வைத்துக் கொண்டு ஹிந்தி எதிர்ப்புத் தலைமைக் கமிட்டியாரிடமிருந்து என்ன கட்டளை வருகிறதோ என்று எதிர்பார்த்துக் கொண்டு சகல:
தியாகத்துக்கும் தயாராய் இருக்க வேண்டுகிறோம்
சென்னை எதிர்ப்பு
சென்னையில் ஒரு தோழர் உண்ணாவிரதம் என்னும் பட்டினி நோன்பு இருக்கிறார். மற்றும் பல தோழர்கள் கிளர்ச்சிக் கூட்டம் முதலியன போட்டு பேசி கிளர்ச்சி ஊர்வலம் முதலியன செய்கிறார்கள் - கூடிய
சீக்கிரத்தில் இவைகள் இன்னும் ஒவ்வொரு துறையிலும் பெருகலாம். நடைமுறைக்காகவும் கிளர்ச்சிக்காகவும் என்று பல தக்க வழிகளை கமிட்டியார் ஆராய்ந்தெடுப்பார்கள். அனேகமாக சென்னை காரியங்கள் தோழர் சி.டி. நாயகம் அவர்களது ஆலோசனையிலும் மேற்பார்வையிலும் நடைபெறக் கூடும்
இம்மாதம் முடிவுக்குள் ஹிந்தி எதிர்ப்பு கமிட்டி கூட்ட தோழர். விசுவநாதம் அவர்கள் நாள் குறிப்பார். அதற்குள் இன்னும் அனேக தொண்டர்கள் பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். பெண்மணிகளும் தாராளமாய் வேண்டும்.
பண உதவி. பண விஷயத்தில் ஒவ்வொரு தமிழ் மகனும் தாராள நோக்கம் கொண்டு பணத்தை காரியதரிசி விசுவநாதம் அவர்களுக்கு அனுப்பி கொடுக்க வேண்டும். பொதுவாக காரியங்கள் ஒரு கை முறையாக நடத்தப்பட வேண்டும் என்பது நமது ஆசை. தனித்தனியாக பணம்
குடி அரசு- 1938 (1) 322.
வசூலிப்பது தனித்தனியாக அறிக்கைகள் விடுவது தனிதனியாக காரியங்கள் துவக்கப்படுவது முதலிய காரியங்கள் அவ்வளவு வலுவைக் கொடுக்கும் என்று கருத முடியவில்லை.
எதிம்ப்பு முறை ஒவ்வொரு ஊரிலும் ஹிந்தி எதிர்ப்பு சங்கம் இருக்க வேண்டும் அவை தலைமை சங்கத்துடன் சம்மந்தம் வைத்துக் கொள்ள வேண்டும் தீவிர செயல்கள் ஆற்றுவதற்கு துணிவும் சக்தியும் உள்ள அங்கத்தினர்கள் அக் கமிட்டிகளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். கமிட்டிகள் பேரால் தொகை வசூலித்து பத்திரப்படுத்தி சிக்கனமாய் செலவழிக்கவேண்டும் தொண்டர்களையும் அவர்கள் ஆற்றும் செயல்களையும் அவர்கள் மற்ற ஜனங்களிடம் நடந்து கொள்ளும் நடத்தைகளையும் பொதுஜனங்கள் கண்ணியமாகவும் பச்சாதாபப்படும் படியாகவும் அன்பும் ஆதரவும் காட்டும்படியாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்து வணக்கத்தோடு கேட்டுக் கொள்ளுகிறோம். தயார்! தயார்! போர் நெருங்கி விட்டது!!! வெற்றி நிச்சயம்!!!
குடி அரசு - தலையங்கம் - 15.05.1938
23 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஈரோடு காங்கரஸ் நாற்றம்
பொதுஜனங்கன் வெறுப்பு
- நேரில் கண்டு சிரித்தவன்
ஈரோடு, மே.10 ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மெஜாரிட்டியாக 16 காங்கரஸ் கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்று மாலை 5 மணிக்கு காங்கரஸ் கமிட்டியின் சார்பாக ஒரு சேர்மனைத் தேர்ந்தெடுப்பதற்காக காங்கரஸ் எலக்ஷன் ஆபீசில் அட்ஹாக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது
அக்கூட்டத்திற்கு தோழர்கள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், கோவை அவினாசிலிங்கம் செட்டியார், குட்டப்பாளையம் கே.எஸ். பெரியசாமிக் கவுண்டர், கோவை சுப்ரி முதலியவர்கள் விஜயம் செய்திருந்தார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16 கெளன்சிலர்களும் விஜயம் செய்திருந்தார்கள்.
கடந்த மூன்று நான்கு தினங்களாக 'பொது ஜனங்கள் பெயரால் தோழர் எம்.எ. ஈசுவரன் அவர்களையே சேர்மனாகத் தேர்ந்தெடுக்க வேண்டு மென்று பல துண்டு பிரசுரங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. சேர்மன் பதவிக்கு பலர் அபேட்சித்தார்கள். இதில் தோழர்கள் எம். எ. ஈசுவரன் பெயரும், ஆர்.கே. வெங்கிடசாமி பெயரும் முதன்மையாக அடிபட்டன.
தோழர் ஈசுவரனை ஆதரித்து பல வாலிபர்கள் வெளியில் நின்றுகொண்டு கிளர்ச்சிசெய்து, வெங்கிடசாமிக்குக் கொடுக்கக்கூடாதென்று ஆரவாரம் செய்தார்கள். “வெங்கிடசாமிக்குக் கொடுக்க வேண்டும், ஈசுவரனுக்குப் பொறுப்பில்லை” என்று பலர் வெளியில் நின்று ஆரவாரம் செய்தார்கள். இவ்வாறு ஆரவாரம் செய்த இரண்டு கட்சியாரும் காங்கரஸ்காரர். களேயாகும். இரண்டு பக்கத்தார் கிளர்ச்சியும் ஹத்து மீறுவது கண்டு காங்கரஸ் கமிட்டியார் அச்சமடைய கமிட்டிக் கூட்டத்தை 9-மணிக்கு ஒத்திவைத்து விட்டு பூந்துறைப் பொதுக்கூட்டத்திற்காக அவினாசிலிங்கம் செட்டியார் கோஷ்டியார் சென்றுவிட்டார்கள்.
தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் தோழர் வெங்கடசாமி அவர்களையும், அவரைச் சேர்ந்தவர்களையும் மிகவும்
குடி அரசு- 1938 (1) 324
கேவலமாகவும், இழிவாகவும் தூஷித்து கலகம் செய்து வந்தார்கள். இதனால் இரண்டு பக்கத்தாருக்கும் பெரிய கலகம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆரம்பமாயின. தோழர் வெங்கிடசாமி அவர்கள் கோஷ்டியாரின் சாந்த குணத்தால் அமைதி நிலவியது. தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் சுமார் 100 பேர்கள் ஒன்று சேர்ந்து தோழர் ஈசுவரனையே சேர்மனாக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தி தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் கார் முன் மறியல் கிடக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டு பூந்துறைக்குச் சென்றார்கள். அப்படி சென்று கொண்டிருக்கும்போது தோழர் அவனாசிலிங்கம் அவர்களின் கார் வந்து விட்டது. அதை மறித்து தோழர் ஈசுவரனையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
தோழர் அவனாசிலிங்கம் அவர்கள் 9 மணிக்குக் கூடும் கூட்டத்தில் முடிவு செய்வதாகக் கூறி வந்து விட்டார்.
மீண்டும் 9 மணிக்குக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. 8 கெளண்: சிலர்கள் தங்களுக்கு சேர்மன் பதவி வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
பின் 4 பேர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டார்கள்.
மீதி இருந்த 4 பேர்கள் மிகவும் பிடிவாதமாக தங்களுக்கு சேர்மன். பதவி வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். வாக்கு வாதம் கடுமையாக ஏற்படவே கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டதாகக் கூறி கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள். கூட்டத்தை கலைத்து விட்டு அவினாசிலிங்கம் கோஷ்டியார் வெளியில் வரும்போது தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் அவரை மறித்து மிகக் கேவலமாக மீன்கடை பாஷையில் பேசி ஈசுவரனையே ஆதரிக்க வேண்டுமென்று கலகம் செய்தார்கள்.
தோழர் கே. எஸ். பெரியசாமி அவர்களையும் மிகவும் கேவலமாகப் பேசி அவரை வெளியில் போகவிடாதபடி தடுத்துக் கலகம் செய்தார்கள்.
பின் தோழர்கள் அவினாசிலிங்கம், பெரியசாமி, ராமசாமி ரெட்டியார். முதலியவர்கள் வேறு ஒரு பிரபலஸ்தர் வீட்டிற்குச் சென்று தோழர் ஆர்.கே. வெங்கிடசாமியையே சேர்மன் பதவிக்கு நியமித்து விட்டதாய்க் கூறியதாகத் தெரிகிறது. இதனால் நிலைமை இன்னும் மிகவும் மோசமாக ஆகிவிட்டதென்று தெரிகிறது. தோழர் ஈசுவரன் சேர்மனாக வந்தால். சில கெளன்சிலர்கள் ராஜிநாமா செய்து விடுவதாகக் கூறுகிறார்கள்.
தோழர் வெங்கிடசாமி சேர்மனாக வந்தால் வேறு சில கெளன்சிலர்கள் ராஜிநாமா செய்து விடுவதாகக் கூறுகிறார்கள். ஈரோடு மகாஜனங்கள் எல்லாம் காங்கரஸ்காரர்களின் பதவி மோகத்தைக் கண்டு எள்ளி நகையாடுவதுடன் காங்கரஸ்காரர்களுக்கு ஓட்டுப் போட்டதற்காக வெட்கப்பட்டு பழைய கெளன்சிலர்களையும் சேர்மனையும் பாராட்டி ஜே கோஷம் செய்துவருகிறார்கள். 05 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஈரோடு முனிசிபாலிட்டிக்கு சேர்மனை நியமிப்பதற்குக் கூடிய அட்ஹாக் கமிட்டியார் தோழர் ஆர்.கே. வெங்கிடசாமி அவர்களை சேர்மன் பதவிக்கும் தோழர் எம்.எ. ஈசுவரன் அவர்களை வைஸ் சேர்மன் பதவிக்கும் நாமினேஷன் செய்திருப்பதாகத் தெரிகிறது. தோழர் ஈசுவரன் அவர்கள். வைஸ் சேர்மன் பதவி தனக்கு வேண்டியதில்லை யென்று மறுப்பதாகவும் கவுன்சிலர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தோழர் ஈசுவரன் அவர்களை சேர்மனாக நாமினேஷன் செய்யாததால் அவரை ஆதரிக்கும் கோஷ்டியார் கறுப்பு உடைகளுடனும், கறுப்புக் கொடிகளுடனும் இன்று மாலை ஊர்வலம் செல்லப்போவதாகவும் தெரிகிறது.
சேர்மன் தேர்தலுக்கு தோழர் ஈசுவரன் பெயரை நாமினேஷன். செய்யாததால் சேர்மன் தேர்தல் நடைபெறும் 14-5-38ந் தேதியன்று முனிசிபாலிட்டி ஆபீஸிற்கு முன்பு தோழர் ஈசுவரனை ஆதரிக்கும் கோஷ்டியார் காங்கரஸ் கெளன்சிலர்கள் முனிசிபாலிட்டிக்குள் செல்லாமல் தடுக்க சத்தியாக்கிரகம் செய்யப் போவதாகத் தெரிகிறது
தோழர் ஈசுவரன் அவர்களை நாமினேஷன் செய்ய வேண்டுமென்றும், அப்படிச் செய்யாவிட்டால் ஈரோட்டில் காங்கரசுக்கு செல்வாக்குப் போய் விடுமென்றும் பம்பாயிலிருக்கும் முதல் மந்திரி கனம் சி. ராஜகோபாலாச்சாரி அவர்களுக்கும், தமிழ்நாட்டுக் காங்கரஸ் கமிட்டித் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அவர்களுக்கும் தந்தி கொடுத்திருப்பதாயும் தெரிகிறது
கெளன்சிலர் ஸ்தானத்திற்கு நிற்கும்படி சிலரைக் கேட்கும்போது சேர்மன் பதவி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து இப்பொழுது கொடுக்காததால் அவர்கள் காங்கரஸிலிருந்து விலகப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஈரோடு காங்கரசில் இப்படி பிளவு ஏற்பட்டதைக் கண்ட பொதுஜனங்கள் மஞ்சள் பெட்டியை நம்பி ஓட்டுக் கொடுத்த மடமையை எண்ணி வருந்துகிறார்கள்.
ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் காங்கரஸ்காரர்களின் பதவி வேட்டையைக் கண்டு யாவரும் வெறுத்து கண்டித்து வருகிறார்கள்.
குடி அரசு - கட்டுரை - 15.05.1938
குடி அரசு- 1938 (1) 326
தமிழா என்ன செய்யப்போகிறாய்
இந்தி வந்து விட்டது!
பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த - தமிழனின் தன் மானத்தை அழித்து தமிழனை ஆரியருக்கு என்றென்றும் நிலையான அடிமையாக்க ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாயப் படிப்பாக ஏற்படுத்தப்பட்டாய் விட்டது.
யாரால்? ஆரியரால்
எப்படி? தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூக்குரலைச்
சிறிதும் மதியாமல்
தமிழா இனி என்ன செய்யப்போகிறாய்?
தலை வணங்கி வரவேற்கப் போகிறாயா?
எதிர்த்து நின்று விரட்டி அடிக்கப்போகிறாயா?
இதில்தான் தமிழன் இருப்பதா இறப்பதா என்கின்ற முடிவு இருக்கிறது தலை வணங்குவதானால் காங்கரசில் இரு. எதிர்த்து நிற்பதானால். உன் பெயரை எதிர்ப்புக் கமிட்டிக்குக் கொடு
குடி அரசு - அறிவிப்பு - 15.05.1938
3277 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காங்கரசும் மைனாரட்டியும்
அன்புள்ள தலைவரவர்களே! இந்து முஸ்லீம் தோழர்களே!
நான் நேற்று இங்கு நடைபெற்ற நபிகள் பெருமான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவதற்கு இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வேலையினால் வரமுடியவில்லை. அந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதற்காகவே இன்று இங்கு வந்திருக்கிறேன்.
இந்த ஒரு வாரமாகவே பல இடங்களுக்குச் சென்று தொடர்ச்சியாகப் பிரசாரம் செய்து வந்திருக்கிறேன். அதனால் எனது உடல் நிலையும் சரியாக இல்லை. அப்படி யிருந்தும் இங்கு பேசவேண்டுமென்ற ஆசையால் வந்தேன்.
துக்க சேதி:
அப்படி வந்த நான் ரயிலை விட்டு இறங்கி காரில் ஏறியதும் என்னை ரயிலுக்கு அழைக்க வந்த எனது நண்பர் தோழர் யாகூப் சாயபு அவர்கள் ஒரு வருத்தமான விஷயம் கூறினார். அது கேள்விப்பட்ட நேரத்திலிருந்து என் மனம் துடிக்கிறது. அதாவது தோழர் பரமேஸ்வரம் செட்டியார் காலம் சென்று விட்டதாகக் கூறினார்.
தோழர் பரமேஸ்வரம் செட்டியார் அவர்கள் எனது அருமை
நண்பர். நமதியக்கத்திற்காக பல வகையிலும் உதவி செய்து வந்தவர். அவர் ஒரு இளைஞர். மிகுந்த செல்வந்தர். அவரைப் போன்ற ஒரு பொது ஊழியர் இது சமயம் இந்த ஊருக்கு மிகவும் அவசியம். அவர் காலமானது சகிக்க முடியாத நஷ்டம். உலகில் பிறக்கிறவர்கள் இறந்து போவது இயற்கை என்றாலும், பரோபகாரியாகிய ஒருவர் இறந்து போவது துக்கப்படத்தக்கதாகி விடுகிறது
இக் கூட்டம் முஸ்லீம் லீக் சார்பில் கூட்டப்பட்டிருக்கிறது ஆதலால் இன்று பேச வேண்டிய விஷயம் முஸ்லீம்களின் தற்கால அரசியல் நிலைமை என்று வெளியிடப்பட்டிருக்கிறது
ஆனால் நமது கூட்டத்தின் தலைவர் கனம் கலிபுல்லா சாயபு
அவர்கள் தற்கால அரசியல் நிலை என்பதாகவும் பொதுவாகவும் பேச வேண்டுமென்று கட்டளை இட்டிருக்கிறார்
குடி அரசு- 1938 (1) 328
இந்து முஸ்லிம்
நான் இன்று பொதுவாக நமது நாட்டிலுள்ள அரசியல் நிலைமை என்பது பற்றியும், அதில் முஸ்லிம்கள் நிலை என்பது பற்றியும் முதலில் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றியும் சிறிது பேசுகிறேன்.
இப்பொழுது இங்கு கூடியுள்ள 5000 ஜனங்களில் இந்துக்கள் அதிகமாய் இருப்பதால் இந்துக்கள் என்பவர்களுக்கு முதலில் சில வார்த்தைகள் கூறுகிறேன். இன்று இந்தியாவில் முஸ்லிம் சமூகம் ஒரு பலமான நிலையான ஒரு சமூகம் என்பது நான் சொல்லாமலே விளங்கும் அப்படிப்பட்ட அந்த சமூகத்தைக் கண்டு இந்துக்கள் வெறுப்படையவோ, இழிவாக மதிக்கவோ செய்வது தற்கொலைக் கொப்பாகும்
நான் இப்படி சொல்லுவதால் என்னை முஸ்லிம்களுக்கு இந்துக்களைக்
காட்டிக் கொடுப்பதற்காக அவர்களைப்பற்றி புகழ்ந்து பிரசாரம் செய்து வருவதாகச் சில பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு உபதேசம் செய்து விஷமப்பிரசாரம் செய்து வருவது எனக்குத் தெரியும்
நான் உறுதியாக ஒன்று கூறுகிறேன். இந்த நாட்டை விட்டு முஸ்லிம்களை இந்துக்கள் விரட்டியடித்துவிடவோ, அவர்களை இந்துக்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கச் செய்யவோ, அடக்கி விடவோ ஒரு
நாளும் முடியாது
கனம் ஆச்சாரியார் ஒரு சமயம் வந்தே மாதரம் பாட்டுத் தகராறில் “இஷ்டமில்லாதவர்கள் இந்த நாட்டை விட்டு போகட்டுமே” என்று சொன்னாராம்
அசட்டுப் பேச்சு
அது அசட்டுப் பேச்சு, ஒரு நாளும் அவர்கள் போகமாட்டார்கள்.
அது போலவே இந்துக்களையும் இந்த நாட்டை விட்டு விரட்டிவிடலாம் என்றோ அடக்கி ஆளலாம் என்றோ எந்த முஸ்லிமும்
கருத முடியாது. அப்படிக் கருதுகிறவனுக்கு ஒரு நிமிஷமும் ஓய்விருக்காது இந்த நாடு உள்ள வரையிலும் இந்த இரண்டு சமூகங்களும் இருந்தே தீரும். அதிலும் ஒருவருக்கொருவர் சம சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ முயற்சித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த இரு சமூகத்தாரும் எப்படி ஒற்றுமையாக வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் வாழச் செய்வது என்பது தான் இன்று இந்தியாவில் முக்கிய பிரச்சினை. அந்த வேலையில்தான் நான் இப்போது ஈடுபட்டு வருகிறேன்.
ஏனெனில் இன்றைய நிலையில் இந்தியாவில் உள்ள எல்லா சமூகமும் ஜாதி மத வகுப்பு பேதமன்னியில் ஒரு குடும்பமாக, ஒற்றுமையாக வாழும்படி செய்தால் தான் நமது அரசியல், பொருளியல், சமுதாய 20 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இயல் ஆகியவற்றில் ஏதாவது முற்போக்கான மாறுதல் காணமுடியும் என்று
நான் உண்மையாய்க் கருதுவதால் அந்தப் பிரசாரம் செய்து வருகிறேன்.
கட்சியார் சொன்னதே. இதை நான் இன்று மட்டும் சொல்லவில்லை. அன்றியும் இதை நான் மட்டும் சொல்லவில்லை. இன்று இந்திய மக்களின் உண்மை விடுதலைக்காகப் பாடுபடுகிறவரென்றும், ஆத்ம சக்தி வாய்ந்தவரென்றும் கூறப்படுகின்றவரும் மகாத்மா பட்டம் பெற்று இருக்கிறவருமான தோழர் காந்தியாரே “இந்து முஸ்லிம்கள் ஒற்றுமை ஏற்படாவிட்டால் நம் நாட்டிற்கு விடுதலை கிடைக்காது, சுயராஜ்யம் கிடைக்காது” என்று 20 வருஷத்துக்கு முன் கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல, நமது நாட்டை விட்டு தீண்டாமை ஒழியும் வரையும் சுயராஜ்யம் கிடைக்காதென்றும் கூறி இருக்கிறார். அவ்வளவோடு. அவர் நின்றுவிடவில்லை. அவை ஏற்பட்டாலன்றி 'சுயராஜ்யம் வந்தாலும் உதைத்துத் தள்ளுவேன்' என்று கூறி இருக்கிறார்.
அதைத்தான் நான் இன்று சொல்லிவருகிறேன். அப்படி இருந்தும் என்னை வகுப்பு வாதியென்று தேசபக்தர்கள் என்பவர்கள் பிரசாரம் செய்கிறார்கள். இதைத்தான் நான் பார்ப்பன சூழ்ச்சி என்றும், பார்ப்பனத் தொல்லை என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது
21- நான் பட்டினி
நமது நாட்டில் ஒரு காலத்தில் ஒத்துழையாமை” என்ற ஒரு காங்கரஸ் கொள்கை இருந்து வருகையில் தோழர் காந்தியார் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக 21 நாள் பட்டினி விரதம் இருந்து வருவதாகக் கூறி பட்டினி கிடந்தது உங்களில் பலருக்குத் தெரியும்
அது சமயம் நானும் இன்று பிரதம மந்திரியாகவிருக்கும் நண்பர்.
சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் சென்னையிலிருந்து “இறந்து போவதற்கு இது காலமல்ல” என்று தோழர் காந்தியாருக்கு தந்தி கொடுத்தோம். அதற்குப் பதிலாக ஒரு கடிதம் காந்தியாருக்காக காந்தியாரின் காரியதரிசியான தோழர் மகாதேவதேசாய் எழுதி இருந்தார்
அதில் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாமல் உயிருடன். இருப்பதில் பயனில்லை என எழுதப்பட்டிருந்தது இப்போது நான் அதைப் பின்பற்றிப் பிரசாரம் செய்துவந்தால் நான் தேசத்தைக் காட்டிக் கொடுப்பவனென்றும் முஸ்லிம்களுக்கு இடம் கொடுப்பவனென்றும், தேசத்துரோகி என்றும் கூறிவருவது நியாயமா? நான் அதைப் பொருட்படுத்தாமல் நான் எது முக்கியமானது, அவசியமானது என்று கருதுகிறேனோ அதைச் செய்து வருகிறேன்.
குடி அரசு- 1938 (1) 330
தீண்டாமை ஓழிவதின் முக்கியம்
மற்றும் தோழர் காந்தியார் ஒரு சமயம் சிறையிலிருக்கும்போது சிறையிலிருந்து கொண்டே தான் தீண்டாமையொழிப்பு வேலை செய்யப் போவதாகவும் அதற்கு வேண்டிய செளகரியங்கள் செய்து கொடுக்க வேண்டுமென்றும், சிறை அதிகாரிகளைக் கேட்டிருந்தார். அதற்கு
அவர்கள் சம்மதித்தார்கள்.
அதற்குப்பின் தோழர் காந்தியார் சிறைக் கதவே மூடி இருக்கக் கூடாதென்கிற மாதிரியில் நிபந்தனை கூறினார். அதற்கு ஜெயில் ரூல்
இடம் கொடுக்கவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். அதற்குக் காந்தியார். “நான் சொல்லுகிறபடி கதவு திறந்திருக்காவிட்டால் நான் பட்டினி கிடந்து சாவேன்" என்று பட்டினி இருக்க ஆரம்பித்தார். இதை அறிந்த அதிகாரிகள் சிறைக்கதவுகளைத் திறந்து வைக்க முடியாது அதைவிட நீங்கள் வெளியிலே போய் அங்கிருந்து கொண்டு வேலை செய்யுங்கள் என்று வெளியில் அனுப்பிவிட்டார்கள்.
வெளியில் வந்து என்ன செய்தார். மறுபடியும் ஒரு பட்டினி விரதமிருந்து தீண்டாதார் தலையில் நிரந்தரமாய் இனி என்றென்றும் பட்டினி இருக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார். இதை யெல்லாம் நான் யார் மீதும் துவேஷம் கொள்வதற்காகச் சொல்லவில்லை.
நாங்கள் எது செய்தாலும் அவைகளைத் திரித்துக் கூறி விஷமப் பிரசாரம் செய்து வருவதால் இதையெல்லாம் உங்கள் மூன் கூறுகிறேன்.
முஸ்லிம் 9 கோடி இந்து 25 கோடி
இன்று நமது நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சற்றேரக் குறைய
9 கோடியே ஆகும். ஆனாலும் அவர்களுடைய பலம் எவ்வளவு? இந்துக்களின் எண்ணிக்கை 25 கோடி ஆகும் என்றாலும் இந்துக்களின் பலம் எவ்வளவு? என்பதையும் யோசித்துப் பாருங்கள். முஸ்லிம்கள். தங்கள் சமூக விஷயத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் அவர்கள் அப்படி ஒற்றுமையாகவிருப்பதால் தங்கள் காரியங்கள் எவ்வளவு சுளுவில் முடிகிறதென்பதைக் கவனித்துப் பாருங்கள்
25 கோடி எண்ணிக்கையுள்ள இந்துக்களின் ஒற்றுமையைச் சற்று கவனித்துப் பாருங்கள். 25 கோடியில் ஒரு கோடி பேராவது ஒற்றுமையாக ஒரு ஜாதியாக இருக்கிறார்களா? இவர்கள் ஜாதியென்றும் வகுப்பென்றும் பல பல பிரிவுகளாகப் பிரிந்து தனித்தனியாக தங்களில் உயர்வு தாழ்வு உணர்ச்சியுடன் இருந்து வருவதால் இந்துக்களுக்கு சுயமதிப்பு உணர்ச்சி தோன்றமுடிவதில்லை. தோன்றினாலும் எதையும் சாதிக்க முடிவதில்லை.அதனால்தான் நாம் சுயமரியாதை இழந்து “சூத்திரனாய்” கூலிகளாய் தவிக்கிறோம் B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
வெள்ளையனை விரட்டுவது
இந்த நிலைமையில் இருந்து கொண்டிருக்கிற நாம் இன்று இந்த நாட்டை விட்டே வெள்ளைக்காரர்களை விரட்டி அடிக்க வேண்டுமென்றும், நம்மை நாமே ஆண்டு கொள்ளும்படியான சுயராஜ்யம் பெறவேண்டுமென்றும், ஏகாதிபத்தியத்தை ஒழிக்க வேண்டுமென்றும் அருத்தமும், பொருத்தமும் அற்ற வார்த்தைகளைப் பாமர மக்கள் காதிற்கு இனிமையாகவும் அவர்கள் சுலபத்தில் ஏமாறக்கூடிய மாதிரியாகவும் கூறி வருகிறோம்
இவர்கள் இந்த நாட்டை ஆளும் வெள்ளைக்காரர்களை இந்த நாட்டை விட்டு எப்படி விரட்டுவார்கள்? இந்து முஸ்லிம் சண்டை ஒருபுறம்; இந்துக்களில் 1008 ஜாதி பதினாயிரத்தி எட்டு பிரிவு; இதில் தீண்டப்படாதவர்கள் 5 கோடி: மீதியிலும் பார்ப்பான் மற்றவர்களைத் தொடக் கூடாதாம். இப்படி இருக்கும்போது இந்தியர்களால் என்ன செய்ய முடியும்?
அப்படித்தான் சாதிப்பதாய் இருந்தாலும் இந்தியனின் ஆயுதம் என்ன? கைராட்டினமும் தக்கிளியுந்தானேயிருக்கிறது. அந்த ராட்டினமும் தக்கிளியும் வெள்ளைக்காரனை என்ன செய்யும்? ஒரு கோடி ரூபாய் செலவு செய்து 20 வருஷமாய் சுற்றிய ராட்டினமும் தக்கிளியும் வெள்ளைக்காரனை என்ன செய்தது?
ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்து சரணாகதி அடையத்தானே செய்தது?
நான் இப்படிக் கூறுவதால் வெள்ளைக்காரன் இந்தியாவில் இருந்து சுரண்டிக் கொண்டு போகும் பணத்துக்கு எனக்கு ஏதாவது கமிஷன் வருகிறது என்று நினைத்துவிடாதீர்கள். நாம் உண்மையை பேச வேண்டாமா?
போதிய பலம் வேண்டாமா?
வெள்ளைக்காரன் துப்பாக்கி, பீரங்கி, ஆகாயக் கப்பல் வெடிகுண்டு, விஷப்புகை முதலிய சாதனங்களுடன் ஒன்றுபட்ட ஒரே ஜாதி மக்களை பல லக்ஷக்கணக்காய் பட்டாளத்தில் வைத்திருக்கிறான். அவனை ஒழிக்க நமக்குப் போதிய பலமும் சாதனமும் ஒற்றுமையும் வேண்டாமா என்பதற்காகத் தான் இதைச் சொல்லுகிறேன். வெள்ளைக்காரனே இருக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. அவனுக்கும் எனக்கும் ரத்த சம்மந்த உறவு கிடையாது.
பார்ப்பனர்கள் வேண்டுமானால் வெள்ளையரும் தாங்களும் ஒரு வழியில் வந்தவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொள்ளுகிறார்கள்.
பார்ப்பனர்கள் நம்மிடம் ஒன்று சொல்லுகிறார்கள், அவர்களிடம்
ஒன்று சொல்லுகிறார்கள். நான் அப்படியில்லை, வெள்ளையன் ஓடிப்போவதில் எனக்கு ஆக்ஷபணை இல்லை. எப்படி ஓடச் செய்வது?
குடி அரசு- 1938 (1) 332.
இங்கிலீஷ் வெள்ளையன் போய்விட்டால் ஐப்பான் வெள்ளையனும் ஜர்மனி வெள்ளையனும் வராமலிருக்க வேண்டாமா? நம்மால் என்ன செய்ய முடியும்? கோட்டை வாசலில் துளசியைக் கொட்டி விட்டால் போதுமா? அல்லது கதவைத் தாழிட்டுக் கொண்டு வேதம் ஓதினால் போதுமா?
இந்த 50 வருஷ காலமாக காங்கரஸ் என்னும் பேரால் எவ்வளவோ தந்திரங்கள் செய்து பார்த்தாய் விட்டதே! வெள்ளைக்காரனை என்ன செய்தோம். நமக்குத்தானாகட்டும் உப்புக்காவது, புளிக்காவது பலனேற்பட்டதா? செம்புக்காசு பலனாவது உண்டா என்று கேட்கிறேன்.
சவால்
ஆண்மையிருந்தால் எந்த காங்கரஸ்வாதியாவது பதில் கூறட்டும்
காங்கரஸ்காரர்கள் யாராவது பொதுமக்களிடம் பேசும்போது காங்கரஸ் இதுவரை மக்களுக்கு இன்ன நன்மை செய்தது என்று கூறுகிறார்களா?
மகாத்மா காந்தி ஆட்டுப்பால் குடிக்கிறார். ஆரஞ்சு ரசம் சாப்பிடுகிறார். அவரை சிறையிலடைத்தால் இரவில் வெளிவந்து விடுகிறார். அவர் சிறுநீர் பன்னீர் வாசனை அடிக்கிறது என்று காந்தியார். பெருமையையும், அடிபட்டோம், உதைபட்டோம், சிறைபட்டோம் என்று “தியாக” பெருமைப் பேச்சுப் பேசி புராண காலக்ஷேபம் செய்து
ஏமாற்றுப் பிரசங்கம் செய்வதைத் தவிர வேறு என்ன அவர்களால்
எடுத்துக் காட்ட முடிகிறது.
நான் இவைகளையெல்லாம் உங்கள் முன் பொய்யாகப் பேசிவிட்டு ஓடுகிறவனல்ல. நான் பேசியதில் ஏதாவது தவறுதல் இருக்கிறதென்று யாராவது ரூபித்தால் தலை வணங்கத் தயாராகவிருக்கிறேன்.
காங்கரஸ் ஏற்பட்டதற்கு அப்புறமே வரிக்கொடுமை, சம்பளக் கொள்ளை, உத்தியோக வேட்டை, வகுப்புக் கலகம், பார்ப்பன ஆதிக்கம், பணக்காரர்கள் துரோகம் ஆகிய காரியங்கள் ஏற்பட்டன. புள்ளி விவரங்களுடன் நான் ர௬ஜு செய்வேன்.
காங்கரஸ்காரர்கள் தாங்கள் சிறை சென்ற பெருமையைப் பற்றி பேசுகிறார்கள். இன்று பெரிய அரசியல் தலைவர்கள் என்று சொல்லுகிறவர்கள் 2 - தடவை சிறை சென்றிருந்தால் நானும் 6 - தடவை சென்றிருக்கிறேன். அவர்களைவிட கிறையில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன்.
நான் கிறை செல்லும்போது சிறையில் மிகவும் கஷ்டமிருந்தது அப்பொழுது மூத்திரச் சட்டியும், தண்ணீர்ச் சட்டியும் ஒன்றாக இருந்தது
இவர்கள் சிறைவாசம்
வேலையும் செய்தோம். ஆனால் அவர்கள் சிறைக்குச் சென்ற இப்போதோ எ.கிளாஸ், பி.கிளாஸ், சி.கிளாஸ் என்ற விதிகளும், வீட்டுச் 3 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சாப்பாட்டைவிட நல்ல சாப்பாடும், அது பிடிக்காதவர்களுக்குத் தனிச் சமையல்காரனும், படிப்பதற்குப் பேப்பர்களும், புஸ்தகங்களும் கொடுக்கிறார்கள்.
இது தவிர மேஜை, நாற்காலி, கட்டில் மெத்தை கம்மோடுகளும் கொடுக்கிறார்கள். இப்படி இருக்க “சிறை சென்றேன். கஷ்டப்பட்டேன்" என்றெல்லாம் கூறுவது வீண் ஏமாற்றமாகும். நான் வெறுப்பினாலோ, பொறாமையாலோ உத்தியோக ஆசையினாலோ இவற்றைப் பேசவில்லை.
தோழர்களே! இன்னும் நான் ஒன்று உங்களுக்குக் கூறுகிறேன்.
நான் இஷ்டப்பட்டால் நமது மாகாண மந்திரியாக கஷ்டமில்லாமல். வந்து விடுவேன்.
எனது அருமை நண்பர் கனம் ராஜகோபாலாச்சாரியாருக்கு இன்று
ஒரு கடிதம் எழுதினேனென்றால் இன்றிருக்கும் ஏதாவதொரு அன்னக்காவடி
மந்திரியை வீட்டிற்கனுப்பிவிட்டு நாளையே என்னை மந்திரியாக நியமிப்பார். அதுவும் நான் ஆசைப்பட்டால் என்னை முதல் மந்திரியாகக் கூட நியமிப்பார். (சிரிப்பு)
ஏன் சிரிக்கிறீர்கள். இன்று காங்கரசையும், காந்தியாரையும் சதா
இகழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு காங்கரஸ் துரோகம் செய்தவர்களுக்கு, நாணையமில்லாதவர்களுக்கு 3, 4 பேர்களுக்கு மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அப்படி யிருக்கும்போது ஆச்சாரியாரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவனான எனக்கு ஏன் கொடுக்கமாட்டார்? ஆதலால் நான் வெறுப்பாலோ, விரோதத்தாலோ பேசவில்லை:
இன்று நாட்டிலுள்ளவர்கள் பாமரர்கள் அவர்களிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லி ஏமாற்றலாம் என்ற தைரியத்துடனேயே
காங்கரஸ்காரர்கள் ஒவ்வொரு காரியமும் செய்து வருகிறார்கள்.
காங்கரஸ்காரர்கள் இன்று பதவி ஏற்று சுமார் 300 நாட்களுக்கு மேலாக ஆகப்போகிறது
தேர்தல் வாக்கு எங்கே? இதுவரை தேர்தலில் வாக்குக் கொடுத்த எந்தக் காரியம் செய்திருக்கிறார்கள்
அவர்கள் வந்ததிலிருந்து இந்நாட்டில் மக்களை ஏமாற்றி சோம்பேறித்தனமாக வாழ்க்கை நடத்தி வந்த ஒரு கூட்டத்தார்தான் இன்று உயர்ந்திருக்கிறார்கள்.
உத்தியோகங்களை ஏகபோகமாய் அனுபவிக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் நமது மாகாண முதல் மந்திரியார் தனது முழு
குடி அரசு- 1938 (1) 334
நேரத்தையும், சகல சக்திகளையும் செலவழித்து வருகிறார். இதைத்தான் நான். இன்று பாமர மக்கள் மூன் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறி வருகிறேன்.
இன்று முதன் மந்திரியாக இருக்கும் நண்பர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், இன்று நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்திருக்கும் நமது தலைவரவர்களும், மற்றவர்களும் இடைக்கால மந்திரியாக இருந்த
காலத்தில் மிகவும் இழிவாகவும், கேவலமாகவும் அவர் வாயால் வரத்தகாத வார்த்தைகளையும் பேசினார்.
அதாவது ஜனங்கள் “குதிரைகளைத் தேர்ந்தெடுத்தனுப்பினார்கள் கவர்னர் கழுதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று கூறினார். ஆச்சாரியாருக்கு இருந்த ஆத்திரம் அவரை அப்படிக் கூறச் செய்தது
ஆச்சாரி மந்திரிசபையார் குதிரைகளேயானாலும் அவை சர்க்கஸ்காரன் குதிரைகளாக கவர்னர் சவுக்குக்கு நடுங்கிக் கொண்டு வளையத்துக்குள்ளாகவே ஓடுகின்றன. அவைகளைவிட சுதந்திர “கழுதைகள்'' மேலென்றே சொல்லுவேன்.
இந்த லக்ஷணத்தில் உள்ள இவர்கள் (காங்கரஸ்காரர்கள்) முஸ்லிம்கள் சபையாகிய மூஸ்லிம் லீகையும் பார்ப்பனரல்லாதார். முன்னேற்றத்திற்கு வேலை செய்யும் ஜஸ்டிஸ் கட்சியையும் வகுப்புவாத சபை என்று கூறுகிறார்கள். அவைகளை ஒழிக்கப் பார்க்கிறார்கள்.
வகுப்புவாதிகள் யார்?
நாங்கள் காங்கரஸ்காரர்களைவிட எந்த விதத்தில் வகுப்பு வாதிகள்? எந்த விதத்தில் தேசத் துரோகிகள்?
இன்று காங்கரஸ்காரர்கள் காங்கரஸ் கொள்கை பூரண சுயேச்சை என்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால் வெள்ளைக்காரர்கள். கேட்டால் அதற்கு தத்துவார்த்தம் வேறு கூறுகிறார்கள்.
முஸ்லிம் லீக் கொள்கையும் பூரண விடுதலையேயாகும். ஆனால் இது தத்துவார்த்தமில்லாத பரிசுத்தமான பூரண சுதந்திரமாகும் ஆகவே காங்கரசைவிட லீக் கொள்கை எந்த விதத்தில் குறைவானது என்று கேட்கிறேன்? ஜஸ்டிஸ் கட்சி கொள்கையும் எந்த விதத்திலும் காங்கரஸ் கொள்கையை விடக் குறைந்ததல்ல.
காங்கரஸ் மக்களுக்குப் புரியாதபடி சுயராஜ்யம் என்று சொல்லிக் கொண்டு ஒரு வகுப்பாரே ஏகபோகமாக அனுபவிக்க ஏற்பாடு செய்தால் யார்தான் சகித்துக் கொண்டிருக்க மூடியும்? மூஸ்லிம் லீக் தலைவர் தோழர் ஜின்னா அவர்கள் காங்கரஸ்காரர்களிடம் கேட்கும் பாதுகாப்புகளைப்
பற்றித் தப்புப் பிரசாரம் செய்து வருகிறார்கள். பாதுகாப்பு கேட்பதால் என்ன தப்பு? 35 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஓர் உதாரணம்
ஒருவர் என்னை அவர் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். நான் அவரிடம் ஐயா! உங்களுடன் வருவதற்கு எனக்கு பயமாகவிருக்கிறது. நான் யாரையாவது எனக்குத் துணைக்கு அழைத்து வருகிறேன், அல்லது கையில் தக்க ஆயுதமாவது கொண்டு வருகிறேன். இன்றேல் ஒரு சிறு தடியாவது கொண்டு வருகிறேன் என்று கூறினால் இதிலென்ன தப்பு இருக்கிறது
உன்னுடன் காங்கரசில் வருவதற்குப் பயப்படுகிறோம். நீ பலரை ஏமாற்றுகிறாய், அதனால் பாதுகாப்பு கேட்டால் வகுப்பு வாதமா? நான் சொல்லுகிறேன் காங்கரஸ் ஆரம்பமே வகுப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது. உத்தியோக வேட்டை காரணமாகத்தான் அது ஆரம்பிக்கப்பட்டது. நான் சொல்லுவது பொய்யென்று தோன்றினால் காங்கரஸ் சரித்திரத்தை வாங்கிப்படித்துப் பாருங்கள்.
ராஜ விஸ்வாசமும் உத்தியோக விண்ணப்பமுமே காங்கரஸ் கொள்கையாக இருந்தது
1920 வரை காங்கரஸ்
காங்கரசானது 1920ம் வருஷம் வரை மகாநாடு கூடுகின்ற ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மகாநாடும் முதல் தீர்மானமாக ராஜ விஸ்வாசமும், இரண்டாவதாக வெள்ளைக்காரர்களைப் புகழ்வதும், மூன்றாவதாக இந்தியர்களுக்கு அந்த உத்தியோகம் வேண்டும், இந்த உத்தியோகம் வேண்டுமென்ற தீர்மானம் செய்வதும், நான்காவதாக வகுப்புகள் ஒற்றுமையைப் பற்றியும் தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள்.
வகுப்புகள் ஒற்றுமை தீர்மானம் எதற்கென்றால் ஒரே வகுப்பார் உத்தியோகங்களை கொள்ளையடிப்பதை மற்ற வகுப்பார் கண்டு பொறாமைப்படக்கூடாது என்பதற்கே. நான் கூறுவது பொய்யென்று தோன்றினால் காங்கரஸ் சரித்திரத்தை வாங்கிப் படியுங்கள். இதையெல்லாம் ஏமாற்றுவதற்காக உங்கள் முன் கூற வரவில்லை.
பொதுவாகக் கூறினால் காங்கரசானது வெள்ளைக்காரனும், மேல் ஜாதிக்காரனும் சேர்ந்து பெற்ற பிள்ளை என்றே சொல்லலாம்
இன்னும் அதைப்பற்றி சில உதாரணங்கள் தருகிறேன். இதோ கோவையில் கூடிய ஒரு காங்கரஸ் கூட்டத்திலும் முதல் தீர்மானமாக ராஜ விஸ்வாசப் பிரமானத் தீர்மானம் நிறைவேறியது
சென்னையில் தோழர் போஸ் அவர்கள் தலைமையில் ஒரு காங்கரஸ் மகாநாடு கூடியது. அந்த மகாநாட்டில் காலையிலேயே ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்யப்பட்டு மற்ற நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தது
குடி அரசு- 1938 (1) 336
மத்தியானம் சென்னை கவர்னர் அந்த மகாநாட்டிற்கு வந்தார். தோழர் பானர்ஜி ஒரே அடியாகக் குதித்து கவர்னரை எதிர்கொண்டு அழைத்து வந்தார். காலையில் நிறைவேற்றிய ராஜ விஸ்வாசத் தீர்மானத்தை மீண்டும் கவர்னர் முன் நிறைவேற்றினார். அதோடு மட்டுமல்ல கவர்னரையும் வெள்ளைக்காரரையும் வானமளாவப் புகழ்ந்தார்.
காங்கரஸ் மகாநாடுகளில் தீர்மானம் நிறைவேற வேண்டியதுதான்
பாக்கி, உடனே பெரிய பெரிய உத்தியோகம் பெருகும். அது ஒரு ஜாதிக்காரர்கள் வயிற்றிலேயே போய் விழும்.
இதைக் கண்ட மற்ற வகுப்பார்களும் அந்த உத்தியோகங்களில் தங்களுக்குப் பங்கு கேட்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது தான் காங்கரசானது காங்கரசில் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத முஸ்லிம்களிலும் மற்றவர்களிலும் கூலிகளும் காலிகளும் என்ன செய்தாவது தங்கள் சுயநலம் பெருக்குவதே பிரதானமென்கின்ற சாதாரண மக்களும் தவிர வேறு எந்த யோக்கியனும் சுயமரியாதைக்காரனும் இருப்பதற்கு இல்லாமலும் வருவதற்கு இல்லாமலும் செய்து கொண்டார்கள்.
தொடர்ச்சி 29.05.1938 குடி அரசு 'காங்கரஸ் பித்தலாட்டம்.
குறிப்பு: 12.05.1938 இல் சேலம் மாவட்ட வேலூரிலும், 14.05.1938 இல் கோயம்புத்தூரிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 22.05.1938
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தொண்டர்களே — சென்னை செல்க
அக்கிரகார சரணாகதி மந்திரிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியம் நெருங்கி விட்டது. தமிழ்நாட்டில் ஒரு சிறு அளவுக்கு இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஆரம்பித்த உடன் அதை ஒடுக்குவதற்கு அவசியமான அடக்குமுறைகளைக் கையாள முதல் மந்திரி தோழர் கனம் ஆச்சாரியார், காரியக் கமிட்டியார் அதிகாரம் பெற்று வந்து விட்டாராம். மற்றும் எப்படிப்பட்ட கிளர்ச்சியாய் இருந்தாலும் அதற்கு வகுப்புவாதம் என்கின்ற பெயரைக் கொடுத்து அடக்கி விட அனுமதி பெற்று வந்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதே சாக்கில் தன்னை ஆதரிக்காத பத்திரிக்கைகளையும் தங்களது உண்மையான நடத்தைகளையும் யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் வெளியிடும் பத்திரிகைகளையும் ஒழிப்பதற்கும் அனுமதி பெற்று வந்து விட்டார்களாம்.
தலைவர்கள் யோக்கியதை
இந்த “அனுமதி"களின் யோக்கியதை நாமறியாததல்ல காங்கரஸ் தலைவரின் யோக்கியதையையும், காரியக் கமிட்டியாரின் யோக்கியதையையும், காங்கரசின் சர்வாதிகாரியான காந்தியாரின் யோக்கியதையையும் பற்றி தனித்தனியாகவும், சேர்த்தும் பல தடவை எழுதியும் சொல்லியும் வந்திருக்கிறோம். கனம் ராஜகோபாலாச்சாரியாரின் யோக்கியதையை அறிந்தவர்கள் காந்தியாரின் யோக்கியதையை தனியாக அறிவதற்கு முயற்சிக்க வேண்டிய அவசியம் இருக்காது. நம் நாட்டு தோழர்கள் சத்தியமூர்த்தி, வரதாச்சாரி, சந்தானம் ஆகியவர்கள் யோக்கியதையை உணர்ந்தவர்களுக்கு தோழர்கள் பண்டித நேரு, போஸ் போன்றவர்களின் யோக்கியதையை அறிய முயற்சிக்க வேண்டியதில்லை. அது போலவே தோழர்கள் முத்துரங்க முதலியார் பக்தவச்சலம் முதலியவர்களை உணர்ந்தவர்கள் தோழர் பஜாஜ் படேல் பிரசாத் முதலியவர்களின் யோக்கியதைகளை உணரக் கவலை யெடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இதுபோலவே மற்றும் தோழர்கள் குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா, உபயதுல்லா, சுப்பிரமணியம், காமராஜ், முத்துச்சாமி முதலிய தோழர்களை உணர்ந்தவர்கள் வடநாட்டு மற்ற. காரியக்கமிட்டி மெம்பர்களையும் மற்றத் தலைவர்களையும் பற்றி அறிய நினைக்க வேண்டியதில்லை
குடி அரசு- 1938 (1) 338
இதில் ஏதாவது வித்தியாசம் இருக்காதா என்றால் மேலே குறிப்பிட்ட நம்நாட்டுத் தோழர்களுக்கு நம்மைப்பற்றியும், நம்நாட்டைப்பற்றியும், இங்கு பார்ப்பனர்கள் நம்மை எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் மேலே குறிப்பிட்ட வடநாட்டுத் தலைவர்கள் என்பவர்களுக்கு நம்மைப்பற்றியும் பார்ப்பனர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப்பற்றியும் நன்றாய்த் தெரியாது
தென்னணாட்டைப் போன்றதே வடநாடும்
என்றாலும் நம்நாட்டு பார்ப்பனர்களின் நாணயத்திற்கும் யோக்கியப் பொறுப்புக்கும் நடத்தைக்கும் வடநாட்டு பார்ப்பனர்களின் நாணயத்துக்கும், யோக்கியதைக்கும், நடத்தைக்கும் சிறிது கூட வித்தியாசம் காணமுடியாது என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.
என்றாலும் நம்நாட்டு பார்ப்பனர்களின் குணம் அறிந்த அனேக பார்ப்பனரல்லாத தோழர்கள் வடநாட்டுப் பார்ப்பாரிடம் சற்று யோக்கியதையும், மரியாதையும் வைத்து இருப்பதாகக் காணப்படுவதற்குக் காரணம் வடநாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி நம்நாட்டுப் பார்ப்பனரும் அவர்களது பத்திரிக்கைகளும் செய்யும் பித்தலாட்டப் பிரசாரமும் நம்மவர்களைக் கூலிக்காரராகப் பிடித்து கூலி கொடுத்து கவிபாடும்படி செய்யும் பிரசாரமும் நம்நாட்டார்களைவிட வடநாட்டவர்கள் யோக்கியர்கள் என்றும் மாபெரும் தியாகிகள் என்றும் கருதும்படியாக ஆக்கிவிடுகிறது. இதைத்தவிர வடநாட்டுக்கும், தென்னாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறுவதற்கில்லை. இப்படிப்பட்டவர்களைக் கொண்டு கூட்டிய கூட்டத்தில் ஆச்சாரியார் அடக்கு முறைக்கு “அனுமதி” பெற்று வந்து விட்டார் என்றால் அது ஏதோ ஒரு மகாபிரமாதமென்றோ அல்லது அந்தப்படி செய்து தீர வேண்டிய அவசியத்தைக் காட்டுகிறதென்றோ மலைக்கத்தக்க காரியம் என்றோ நாம் கருதவில்லை
காரியக் கமிட்டி நாணயம்
தோழர் கனம் ஆச்சாரியார் தோழர் திருச்சி ராஜன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்ததை ஏற்றுக்கொண்ட காரியக் கமிட்டிக்கு எவ்வளவு நீதியும் நேர்மையும் இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. அது போலவே சட்டசபை மெம்பர்கள் சர்க்கார் கோட்டைக்குள் போய் பொய்ச் சத்தியம் செய்வதால் பாதகமில்லை என்று உபதேசம் செய்த தோழர் பண்டிதருக்கு எவ்வளவு ஒழுக்கமும் ஞானமும் இருக்கும் என்பதைப் பற்றி நாம் கேட்க வேண்டியதில்லை. அதுபோலவே காங்கரஸ் விஷயத்திலோ சட்டசபை மெம்பர்கள் என்ன செய்ய வேண்டியது என்கின்ற விஷயத்திலேயோ பிரவேசிப்பது என்பது ஒரு சத்தியாக்கிரகியாகிய எனக்கு சிறிதும் 30 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
நாணயமுடையதாகத் தோன்றவில்லை என்று சொன்ன காந்தியார் அப்படிச் சொன்ன 8 நாட்களுக்குள் சட்டசபை மெம்பர்களுக்கு கட்டளையும் உபதேசமும் விடுத்தாரானால் காந்தியாருக்கு எவ்வளவு யோக்கியதை இருக்கும் என்பது பற்றியும் அறிய யாரும் பிரமாதமாகப் பாடுபட வேண்டியதில்லை. தற்கால காங்கரஸ் தலைவரான தோழர் போஸ் அவர்கள் கொஞ்ச காலத்துக்கு முன்பு பச்சையாய் காங்கரஸ் மக்களை ஏய்க்கும் ஸ்தாபனமென்றும் காங்கரஸ் கொள்கை எப்படி மக்களை ஏய்ப்பது என்கிற சூழ்ச்சிதான் என்றும் காங்கரஸ் தலைவர்கள் மக்களைக் காட்டிக் கொடுத்து பதவி வேட்டையாடும் சுயநலமிகள் என்றும் கூறியவர் இப்போது தலைவரானவுடன் காங்கரஸ்தான் “கதிமோக்ஷம் அளிக்கவல்லது” என்று சொன்னால் அவரது யோக்கியதையைப் பற்றி
நாம் சந்தேகப்பட இடமுண்டா இல்லையா? என்று கேட்கின்றோம். இவர்களுடைய இந்த யோக்கியதைகள் ஒரு சமயம் சொந்த யோக்கியதையாய் இல்லாமல் அரசியல் யோக்கியதையாக இருக்கலாம் என்று சொல்வதானால் அதை நாம் ஒப்புக் கொள்ளத் தடையில்லை. ஆனால் நாமும் இவர்களுடைய அரசியல் யோக்கியதையைப் பற்றியே தான் கூறுகிறோமேயல்லாமல், சொந்த யோக்கியதையைப்பற்றிக் கூற வரவில்லை. அது நமது வேலையும் அல்ல.
ஆச்சாரியாருக்கு சக்தி யிருந்தால்
அப்படிப்பட்ட அரசியல் யோக்கியதை உடையவர்கள் கூட்டத்தில் “அடக்கு முறை கையாள வேண்டியது அவசிய” மென்று தீர்மானம் செய்துவிட்டதினாலேயே அதற்கு அவசியமும், நீதியும் இருக்கிறது என்பதாக ஆகிவிடாது. ஆனால் அடக்குமுறை நடத்த வேண்டும் என்பது கனம் ஆச்சாரியாரின் ஆசை என்பதும், அதையும் செய்து பார்த்து விட ஆச்சாரியார் துணிந்து விட்டார் என்பதும் விளங்கிவிட்டது. மற்றும் அவருக்கு சக்தி இருந்து காரியமும் நடைபெறுவதாய் இருந்தால் ஒரே மூச்சில் தமிழர்களை அனுமார்களாக்கி தாம் ஒரு ராமனாக அவருக்கு ஆசை இருக்கலாம் என்பது தமிழர்கள் பூராவும் சதா சர்வகாலம் ராம பஜணையும், ராமபக்தியும், ராமர் தொண்டும் செய்யும்படி செய்துவிடுவார். என்பதும் தெரிந்து விட்டது. அதற்கு யோக்கியதை இல்லாததால் தான் இப்போது ஹிந்தியை புகுத்தி தமிழர்களை ராம பக்தராக்கப் பார்க்கிறார் அதை எதிர்ப்பவர்களை அடக்கப் பார்க்கிறார். இந்த அடக்குமுறையையும் தமிழ்மக்கள் எதிர்பார்த்துத்தான் ஒரு கை பார்க்கிறது. என்கின்ற துணிவின்மீது இத் தொண்டில் இறங்கி இருக்கிறார்களே ஒழிய ஆச்சாரியார் பூச்சாண்டிக்கும் காரியக் கமிட்டியின் மிரட்டலுக்கும் பயந்து
ஓடுகிற நிலையில் இங்கு எந்த தமிழனும் இன்று ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் இறங்கவில்லை என்பதை காரியக் கமிட்டியும் ஆச்சாரியாரும் உணர வேண்டுமாய் ஆசைப்படுகிறோம்
குடி அரசு- 1938 (1) 340
காரியக்கமிட்டியார் பொறுப்புடையவர்களானால்
காரியக்கமிட்டிக்கு ஏதாவது கடுகளவு பொறுப்பாகிலும் கவலையாகிலும் இருக்குமானால் ஆச்சாரியார். அடக்குமுறைக்கு அனுமதி கேட்டவுடன் அப்படிப்பட்ட அனுமதி கேட்டும் காரியம் எதற்கு என்றும் அதற்கு அவசியம் என்ன என்றும் அறிய கவலை எடுத்து விஷயங்களை நன்றாய் உணர்ந்து பிறகு பரிகாரம் தேடி இருப்பார்கள். இந்தியாவில் அதிகாரவர்க்க ஆட்சி இருக்கிற காலத்தில் வகுப்பு துவேஷமும் வகுப்பு கலகமும் ஏற்படும்படியான காரியங்கள் நடக்கலாம் என்று சொல்லுவார்கள். ஆனால் இப்போது காங்கரஸ்காரர்களுடைய அதுவும் மாகாண ஆட்சி சுதந்திரத்துடன் கூடிய ஆட்சி நடக்கும்போது ஏன் வகுப்பு துவேஷமான காரியம் அவர்கள் எல்லைக்குள் நடக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்
வகுப்பு துவேஷத்துக்கு காரணஸ்தர் யார்?
ஆச்சாரியாரைப் பற்றிக்கூட கவனியாமல் காரியக் கமிட்டியார் நடந்து கொள்ளும் யோக்கியதையை பார்த்தாலே கண்டிப்பாக வகுப்பு கலகங்களும் வகுப்பு துவேஷங்களும் ஒவ்வொரு இடங்களிலும் வலிய ஏற்படும்படியாக அவர்களே செய்து வருகிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. உதாரணமாக சென்ற 16ந் தேதி பம்பாயில் கூடிய அதே காரியக்
கமிட்டியில் வந்தேமாதரப்பாட்டு விஷயமாயும் கொடி விஷயமாயும்
ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அதாவது
“பள்ளிக்கூடங்களில் வந்தே மாதரப் பாட்டு பாடக் கூடாதென்றும் தேசியக் கொடியை பள்ளிக்கூடங்களில் கட்டக் கூடாதென்றும் கமிட்டி முடிவு செய்திருக்கிறது”
என்று 17-ந் தேதி சுதேசமித்திரன், இந்து முதலிய பத்திரிகைகளில்
இருக்கிறது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு பிறகு “இவ் விஷயத்தில் மாகாண கவர்ன்மெண்டுகள் தலையிட வேண்டியதில்லையென்றும் பள்ளிக்கூடங்களினுடையவும் ஸ்தல ஸ்தாபனங்களுடையவும் உள் நிர்வாகத்தில் மாகாண கவர்ன்மெண்டுகள் தலையிடக் கூடாது என்றும் கமிட்டி அபிப்பிராயப்படுகிறது”
என்றும் தீர்மானித்து இருக்கிறார்கள். இதுவும் 17 - தி கமில் இருக்கிறது. இதன் கருத்து என்ன என்று கேட்கிறோம்.
பள்ளிக்கூடங்களில் வந்தேமாதரப் பாட்டு பாடக்கூடாது, தேசீயக் கொடி கட்டக்கூடாது ஆனால் பள்ளிக்கூட அதிகாரிகள் ஸ்தல ஸ்தாபனங்கள் பாடினால் கொடி கட்டினால் யாரும் கேட்கக்கூடாது என்றுதான் அர்த்தமா அல்லவா என்று கேட்கிறோம்.
நம ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காரியக் கமிட்டித் தீர்மானம்
வந்தே மாதரம் பாடும்போது குழப்பமும், காலித்தனங்களும் செய்யவும் கொடி கட்டும்போது மற்றொருவர் ஏறி தடுத்து பிய்த்து கிழிக்கவும் இத்தீர்மானம் இடம் கொடுக்கிறதா இல்லையா என்று கேட்கிறோம். ஏமாந்த சோணகிரிகள் இருக்கிற இடத்தில் காரியம் நடக்கட்டும் என்கின்ற கேவல உணர்ச்சியினாலேயே இத்தீர்மானம் செய்யப்பட்டிருப்பதாய்க் கருத வேண்டியிருக்கிறது.
இது போலவே கனம் ஆச்சாரியார் தனது சட்டசபை மெஜாரிட்டி பலத்தினால் என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்காகவே காரியக்கமிட்டி ஆச்சாரியாருக்கு அடக்குமுறைக்கு உத்திரவு கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. என்றாலும், ஒரு கை
பார்க்கும் எண்ணத்தில்தான் தமிழ் மக்கள் இதில் பிரவேசிக்கிறார்களே ஒழிய அடக்குமுறை வராது என்று கருதி யாரும் பிரவேசிக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
தவிர சென்னையில் இந்த ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி விஷயமாய் தோழர் ஸ்டாலின் ஜகதீசன் அவர்கள் 1- ந் தேதியில் இருந்து உண்ணாவிரதமிருக்கிறார். மற்றும் தோழர் பல்லடம் பொன்னுசாமி அவர்கள் முதல் மந்திரி வீட்டு வாசலில் உண்ணாவிரதமிருக்கப் போனவரை சிலர் நிர்வாகக் கமிட்டி கூட்டம் கூடி திட்டம் தீர்மானிக்கும்வரை பொறுத்திருக்கும்படி நிறுத்தி இருக்கிறார்களாம் எப்படியும் தோழர் பொன்னுசாமி ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து முதல் மந்திரி வீட்டின் முன் பட்டினி கிடந்து சாவதாக உறுதி கொண்டு இருக்கிறார் எனத் தெரிகிறது. இனி கல்வி மந்திரி வீட்டின் முன் மற்றொரு தோழர் பட்டினி கிடந்து சாகப் போகிறாராம். பல தோழர்கள் தடுத்தும் தோழர் ஸ்டாலின் ஜகதீசன் இணங்காமல் சாகப் போகிறார். இன்னும் பலர் இக்காரியத்தில் பிரவேசிக்கலாம் என்றாலும் எதிர்ப்பு கிளர்ச்சியின் திட்டம் இது மாத்திரமல்ல என்பதோடு அதில் இது முக்கியமானதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் எதிர்ப்பு கமிட்டியார் பல திட்டங்கள் வகுப்பார்கள். பல இடங்களில் கிளர்ச்சி நடக்க வேண்டி இருக்கும். ஆதலால் இப்பொழுது மூன் வந்துள்ள தொண்டர்கள் போல் இன்னும் பலர் வேண்டியிருக்கிறது வெளி நாட்டு நண்பர்கள் பலர் தங்கள் அனுதாபத்தை தெரிவித்து நம்மை ஊக்கி வருகிறார்கள். ஆனாலும் காரியத்திற்கு பொருளாதார உதவியும் வேண்டியிருப்பதால் இந்தியாவுக்கு வெளியிலும் நம் மாகாணத்துக்கு வெளியிலும் உள்ள தமிழ் மக்கள் தமிழ் அபிமானிகள் தகுந்த பொருளுதவி செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு- 1938 (1) 342
பொருளுதவி செய்பவர்கள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக் காரியதரிசியான தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்கள் திருச்சி என்ற விலாசத்துக்கு அனுப்பிக் கொடுக்கக் கோருகிறோம். தொண்டர்கள் முன்வர வேண்டுமாய் கோருகிறோம். இதன் அவசியத்தைப் பற்றி மூன்பு இரண்டு தடவை எழுதி இருக்கிறோம். இனி மேலால் எழுத செளகரியப்படுமா? அதுவரை நம் பத்திரிக்கைகளை விட்டு வைத்திருப்பார்களா? என்பன சந்தேகமாய் இருக்கிறதால் வெளிநாட்டு உள்நாட்டுத் தோழர்கள் இதை அலட்சியமாய்க் கருதாமல் சற்று மான உணர்ச்சியோடு கருதுமாறு வேண்டுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 22.05.1938
3 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இன்னமுமா காங்கரஸ்
தமிழ்நாட்டில் காங்கரஸ் புரட்டுக்கும் பார்ப்பன சூழ்ச்சிக்கும் சாவுமணி அடித்தாய்விட்டது. சமிபத்தில் நடந்த தேர்தலில் இருந்து காங்கரஸ் என்பது பார்ப்பனர்களும், தகுதியற்றவர்களும் பதவிவேட்டை ஆடும் ஒரு பித்தலாட்ட ஸ்தாபனம் என்பது வெட்ட வெளிச்சமாய்விட்டது மஞ்சள் பெட்டி என்றால் மக்கள் மயங்கி மெளடீகர்களாகும் மதிமோசமும் ஒழிந்துவிட்டது. இனி பார்ப்பனர்கள் பலாத்காரத்தாலும் மூர்க்கத்தனத்தாலும் பொது மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி காலிகளுக்கும் கூலிகளுக்கும் இறைத்து ஆள் சேர்த்துக் கொண்டு செய்யும் அட்டூழியத்தை ஆதரவாகக் கொண்டுமேதான் காங்கரஸ் இந்த நாட்டில் வாழவேண்டிய வெளிப்படையான நிலைமையில் இருந்து வருகிறது. இந்த நிலை கூட இனி எத்தனை நாளைக்கு இருக்கக் கூடும்? பொது ஜனங்கள் இந்த ஆட்களின் யோக்கியதைகளை நேரில் கண்டு மிக மிக சமிபத்திற்கு வந்து விட்டபடியால் அதுவும் வெளுத்துப் போகப் போகிறது என்பதில் ஐயமில்லை.
நாணயமற்ற காமியங்கன் இவ்வளவு தைரியமாய் நாம் எடுத்துக்காட்டுவதற்கு பிரத்தியட்ச ஆதாரம் சமீபத்தில் நடந்த மூனிசிபல் கவுண்சிலர், சேர்மன் முதலிய தேர்தல்களேயாகும். முனிசிபல் தேர்தல்கள் தகுந்த காலத்தில் கிரமமான ஓட்டர்களைக் கொண்டு நடைபெற்றிருக்குமேயானால் தமிழ் நாட்டில் காங்கரஸ்காரர்கள் ஒன்று இரண்டு ஸ்தானங்கள் கூட கைப்பற்றியிருக்க முடியாத மாதிரியில் பாதாளம் போய் சேர்ந்திருப்பார்கள். ஆனால் சரணாகதி அக்கிரார மந்திரிகள் அந்தப்படி நடக்க விடாமல் தங்களாலான நாணையமற்ற காரியங்களை எல்லாம் செய்து பார்த்து ஓட்டர்களையே மாற்றிவிட்டார்கள். முதலாவது பார்ப்பனர்கள் எல்லோரும் ஓட்டர்களாகும்படி செய்தார்கள். இரண்டாவது மூன் அசம்பிளித் தேர்தலில் மஞ்சள் பெட்டிக்கு மயங்கிவிட்ட ஓட்டர்களை யெல்லாம் முனிசிபல் தேர்தல் ஓட்டர் லிஸ்டிற்குள் புகுத்தினார்கள். ஓட்டர்களைச் சேர்ப்பதற்கு என்று பல தடவை வாய்தா கொடுத்தார்கள். இந்த ஓட்டர்களைச் சேர்க்கும் வேட்டை காங்கரஸ் கூலிகளுக்கே சாத்தியப்படுவதாய்ச் செய்ய பல தந்திரமும் சலுகையும் காட்டினார்கள். மற்றும் மூன்பு பொது மக்களை
குடி அரசு- 1938 (1) 34
ஏமாற்றிய காரியமாகிய வர்ணப்பெட்டி முறையையும் புகுத்தி தங்களுக்கு மஞ்சள் பெட்டி என்று வைத்துக்கொண்டார்கள்.
அசம்பிளித் தேர்தல் போலவே “தேர்தலுக்கு நிற்கும் ஆட்களை லட்சியம் செய்யாமல் கழுதை நின்றாலும் கவலைப்படாமல் மஞ்சள். பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற பிரகாரம் செய்து மக்களின்.
சீர்தூக்கிப் பார்க்கும் குணத்தைப் பாழாக்கினார்கள்.
ஒரு துரோகம்
மந்திரிகள், காரியதரிசிகள் ஆகியவர்கள் பொது ஜனங்களின் வரிப்பணத்தின் செலவில் ஊர் ஊராய்ச் சுற்றிப் பிரசாரம் செய்தார்கள். முனிசிபல் அதிகாரிகளையும், எலக்ஷன் ஆபீசர்களையும் மந்திரிகளின் சலுகையைக்கொண்டு மிரட்டி, செய்யத் தகாத இழிவான காரியங்களை யெல்லாம் தேர்தலில் செய்து நேர்மையற்ற முறையில் தேர்தலை நடத்தினார்கள். இவ்வளவும் போதாமல் மூன்பு மூனிசிபாலிட்டியில் சேர்மெனாகவும், கவுண்சிலர்களாகவும் இருந்த காங்கரஸ் அல்லாத தலைவர்களாய், பிரமுகர்களாய் இருந்தவர்கள், ஒழுக்க ஈனமாய் கோழைத்தனமாய், துரோகமாய் சில இடங்களில் நடந்து மற்ற ஜனங்களது முயற்சிகளையும் குலைத்து சுயநலத்துக்காக எதிரிகளுக்கு அடிமையாக ஆசைப்பட்டு மனதாரத் தைரியமாய் பல சூழ்ச்சிகள் செய்து காங்கரஸ்காரர்களுக்குப் பல இடங்களில் செளகரியங்கள் செய்து கொடுத்தார்கள். மற்றும் பலர் இப்படிப்பட்ட ஒழுங்கீனமான காலித்தனமான. தேர்தலில் கலந்து கொள்ளுவது தங்கள் கவுரவத்துக்கு இழிவு என்று கருதி ஒதுங்கி இருந்து விட்டார்கள். மேலும் காங்கரஸ்காரர்கள் அல்லாதவர்களுக்கு தேர்தலுக்கு நிற்க ஒரு ஸ்தாபனம் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் போட்டி போடாத ஸ்தானங்கள் போக போட்டியிட்ட ஸ்தானங்களில் பெரிதும் காங்கரஸ்காரர்கள் படுதோல்வி யுற்றிருக்கின்றனர்.
இப்படியெல்லாம் காரியங்கள் நடந்தும் காங்கரசுக்குச் சராசரி 100க்கு 60 பங்குதான் வெற்றி ஏற்பட்டிருக்கிறது என்பதாகச் சொல்லலாம்
காங்கரஸ் கட்டுப்பாட்டின் லட்சணம்
அந்தப்படி வெற்றி இருந்தாலும் காங்கரஸ்காரர்களுக்குள் இருந்த கட்டுப்பாடும் காங்கரஸ் பேரால் வெற்றி பெற்ற கவுண்சிலர்களுடைய நாணையமும் அட்ஹாக் கமிட்டியார் நடந்து கொண்ட யோக்கியமும் எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் சேர்மென், வைஸ் சேர்மென் ஆகிய தேர்தலிலிருந்து தெரிந்து கொள்ளலாம் ஈரோடு முனிசிபல் சேர்மென் தேர்தல் சிரிப்பாய் சிரித்து ஈரோடே
சந்தி சந்தியாய்க் காரி உமிழப்பட்டுத் துண்டுப் பிரசுரத்தின் மீது துண்டுப் பிரசுரமும் பொதுக் கூட்டங்களின் மீது பொதுக் கூட்டமும் “போடா
348 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
வாடா காலிப்பயலே” என்கின்றதான வசைமாரி மீது வசைமாரியும் கட்சிக் கூட்டத்துக்கு போலீஸ் தேவையும், பட்டினி விரதமும், கறுப்புக் கொடி ஊர்வலமும் மற்றும் பல இதில் எழுதத் தகுதியற்ற முறையும் காங்கரஸ்காரர்களுக்குள்ளாகவே நடந்து சேர்மென், வைஸ் சேர்மென் தெரிந்தெடுப்பு சடங்கு முடிந்தது. அதுவும் எதிர்கட்சியார் சிறிது முயற்சித்திருந்தால் அடியோடு காலை வாரிவிட்டிருக்கும்படியான நிலையில் இருந்தது. ஆனால் எதிர் கட்சியார் இதில் சிறிதும் பிரவேசிக்கவில்லை
மற்றும் அடுத்த தாலூகாவாகிய தாராபுரத்தில் 16 மொத்த கவுண்சிலர்களில் காங்கரஸ் பேரால் 11 மெம்பரும் சுயேச்சையாக 5 மெம்பருமே வந்திருந்தும் காங்கரஸ் கட்சியில் சிபார்சு செய்யப்பட்ட சேர்மென் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டிபோட்டவரே சேர்மென் ஆனார். 11 மெம்பர்கள் இருந்தும் காங்கரஸ் சேர்மெனுக்கு
6 ஓட்டுகள்தான் கிடைத்திருக்கின்றன.
தஞ்சையில் 32 ஸ்தானத்தில் காங்கரசுக்கு 20 ஸ்தானங்கள் கிடைத்திருந்தும், வைஸ் சேர்மென் எலக்ஷனில் காங்கரஸ் கட்சியில். சிபார்சு செய்யப்பட்டவருக்கு 12 ஓட்டுகளே கிடைத்து தோல்வி அடைந்தார்.
ராஜிநாமா பூச்சாண்டி
சித்தூர் முனிசிபாலிட்டியில் 20 ஸ்தானங்களில் காங்கரசுக்கு 15 ஸ்தானங்கள் கிடைத்திருந்தும் சேர்மென் தேர்தலில் காங்கரஸ் கட்சி சேர்மனுக்கு 8 ஓட்டுகளே கிடைத்து படுதோல்வி அடைந்திருக்கிறார். அந்த ஜில்லா காங்கரஸ் ஸ்தாபனம் காங்கரசின் பேரால் வந்த 15 கவுண்சிலர்களையும் வேலூர் ஜில்லா போர்டு போல் ராஜிநாமாச் செய்யும்படி உத்தரவு போட்டதில் 11 பேர்களே ராஜிநாமாச் செய்திருக்கிறார்கள். மற்ற 4 - பேர்கள் உங்கள் யோக்கியதைக்கு எங்கள் யோக்கியதை குறைந்து போகவில்லை, டாக்டர் ராஜனிடம் முதலில் ராஜிநாமா வாங்குங்கள் என்று சொல்லி ராஜிநாமாச் செய்ய மறுத்துவிட்டார்கள்.
300-நான் ஆட்சி பலன்:
மற்றும் பல ஊர்களில் காங்கரசின் பேரால் வந்த கவுண்சிலர்களில்
பலர் காங்கரசுக்கு ஓட்டுப் போடாமலும், தேர்தலுக்கு வராமலும்
இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஆந்திர நாட்டிலும் பல இடங்களில் குடிவாடா, கடப்பை, தென்னாலி, மசூலிபட்டணம், குண்டூர், நெல்லூர். முதலிய அநேக இடங்களில் காங்கரஸ் சேர்மென்கள் வரமுடியாமல்
காங்கரஸ் அல்லாதவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். இன்னும் பல.
இடத்துச் செய்திகள் தெரியவில்லை. இவைகளின் முடிவு எப்படி இருந்தபோதிலும் வேறொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் காங்கரஸ் பதவி பெற்று ஆட்சி நடத்திவரும்
குடி அரசு- 1938 (1) 346
இந்த 300 நாட்களுக்குள் காங்கரஸ் மந்திரிகள் வெளியில் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் போய்விட்டதோடு காங்கரஸ் எம்.எல்.ஏ.கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். என்பதல்லாமல் தேர்தல்களில் காங்கரசின் ஏகபோகம் சிதறடிக்கப்பட்டு சிரிப்பாய் சிரிக்கப்பட்டு விட்டது என்பது கண்கூடாகி விட்டது.
மற்றும் காங்கரசின் சுயமரியாதையும் வீரமும் எந்த அளவில் இருக்கிறது என்று பார்த்தால் முஸ்லிம் லீகை காங்கரசால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அது பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்றும் தோழர். ஜின்னா வகுப்பு வாதியே ஒழிய அரசியல்வாதி அல்லவென்றும் “மற்ற கட்சிகளுடன் (முஸ்லிம் லீகுடன்) ராஜி செய்துகொண்டு நாளைக்குவரும் சுயராஜ்யத்தை விட ராஜி செய்து கொள்ளாமல் 100 வருஷம் பொறுத்து வருகிற சுயராஜ்யம் மேல்” என்றும் சொன்ன காங்கரசும் காங்கரஸ் தலைவர்களும் இன்று கனம் ஜின்னா வாசல் படியில் காந்தியார் உள்பட மண்டி போடுவதும், காங்கரசிலிருந்து சாமி வெங்கடாசலம் போன்ற பலரை வெளிப்படுத்துவதும் காங்கரசைவிட்டு பலர் வெளிப்போவதும், அட்ஹாக் கமிட்டியைக் காங்கரஸ் மக்களே மதிக்காததும் அட்ஹாக் கமிட்டி நியமன அங்கத்தினர்களால் நிறுத்தப்பட்டவர்கள் கும்பல் கும்பலாய் தோல்வியடைவதும் ஒரு அட்ஹாக் கமிட்டி நியமன மெம்பருக்கும் மற்றொரு அட்ஹாக்கமிட்டி மெம்பர் போட்டி போட்டுத் தோற்கடிப்பதும் காங்கரசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தள்ளப்பட்டவர்கள் காங்கரஸ் அபேட்சகரை தோற்கடித்ததும் மூதலிய காரியங்களைப் பார்த்தால் இன்னமுமா காங்கரஸ்? காங்கரஸ் பெயரை
உச்சரிக்க வெட்கமில்லையா? என்று கேட்கிறோம்
மைணாரட் டி பாதுகாப்பு?
தவிர இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கரசின் பேரால் சில. பார்ப்பனர்கள் சேர்மென், வைஸ்சேர்மென் பதவிகளுக்கு வந்தார்களே ஒழிய ஒரு முஸ்லீமோ ஒரு ஆதிதிராவிடரோ வந்தார் என்று சொல்லுவதற்கு இல்லாமலே போய்விட்டது. அந்தப்படி யாராவது வரவேண்டு மென்றாவது காங்கரஸ்காரர்கள் பயனளிக்கத்தக்க மூயற்சி எடுத்துக்கொண்டார்களா என்றாவது தெரியவில்லை.
இதிலிருந்து காங்கரசின் மைனாரட்டி வகுப்பாரின் பாதுகாப்பு என்பது சந்து கிடைத்த இடத்தில் எல்லாம் பார்ப்பனர்களையும் பார்ப்பனப் பெண்களையும் திணிப்பது என்பதல்லாமல் வேறு எந்த முறையில் மைனாரட்டி வகுப்புக்கு காங்கரஸ் பதவியோ பாதுகாப்போ அளித்திருக்கின்றதா என்று கேட்கின்றோம். ஈரோடு முனிசிபாலிட்டியில் ஒரு தாழ்த்தப்பட்ட சுயேச்சை வாதி சேர்மென் பதவிக்கு நின்றார். பல விதத்திலும் அவர் தகுதியுள்ளவரேயாவர். அவரை காங்கரசுக்காரர்கள்
347 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தோற்கடித்தார்கள். காங்கரஸ் மெம்பர்கள் அதிகமாக உள்ள தாராபுரத்திலும், தஞ்சையிலும் காங்கரசினால் சிபார்சு செய்யப்பட்ட இரு முஸ்லிம்கள் காங்கரஸ் மெம்பர்களாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படியாகவுள்ள காங்கரஸ் “சிலரை எப்போதும் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம். எப்போதும் எல்லோரையும் ஏமாற்றலாம் என்பது முடியாத காரியம்” என்னும் ஆப்த வாக்கியத்துக்கு ஆளாகிவிட்டது ஆச்சரியமல்ல.
- 17.05.1938 'விடுதலை'
குடி அரசு - கட்டுரை - 22.05.1938
குடி அரசு- 1938 (1) 348
பகிரங்கக் கடிதங்கள்
அகில இந்திய காங்கரகக்கு,
ஏ அநாதியே!
நீ பிறந்ததற்கும், வளர்ந்ததற்கும் இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு வருவாயென்று நான் நினைக்கவேயில்லை. உன்னிடத்தில் பித்தலாட்டக்காரர்களும், காலிகளும், கூலிகளும் நிறைந்திருந்தால் எப்படி உன்னைப் பொது ஜனங்கள் நம்பி தேசத்துக்காகப் பாடுபடுவார்கள். புரட்டிப் புரட்டிப். பேசுகிறவர்களையும், கொள்கை மாறும் பச்சோந்திகளையும் எப்பொழுது ஒழிக்கப்போகிறாய்? மதத்தையும், புராண இதிகாசங்களையும் காட்டி நீ இன்னும் எந்தனை காலத்துக்குப் பாமர மக்களை ஏமாற்ற முடியும்? அயோக்கியத்தனம் நிறைந்த ஒரு ஜன்மம் இருப்பதைவிட இறந்துவிடுவதே மேல். நீயாக ஒழியாவிட்டால் மற்ற சக்திகளெல்லாம் சேர்ந்து உன்னைக் கொஞ்ச காலத்தில் தொலைத்துவிடும் என்பதை அறியவும்
குட்பை.
வர்ணாச்சிரமத்துக்கு,
ஏ நடைப்பிணமே!
நீ சாகிற காலத்திலே எதற்காக லபோ லபோ என்று அடித்துக் கொள்கிறாய்? உன்னாலேதான் உலகமே பாழாய்ப்போச்சே, இந்தியாவும் உருப்படவில்லையே. யார்செத்தாலும் சரி, யார் வாழ்ந்தாலும் சரி, கவலை யில்லாமல், நீ மாத்திரம் தின்று கொழுத்துக் கொஞ்சமும் மானமில்லாமல். உன்னுடைய குட்டிகள் மாத்திரம் இந்த உலகத்திலே சுகமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறாயே இது என்ன நியாயம்? உனக்கு எதற்காக இந்த By பாஷை இங்லீஷ்? உத்தியோகம் எதற்காக? இங்கே ஏன் இருந்து கொண்டு மக்களின் உயிரை வாங்குகிறாய்? ஊரைக் குட்டிச்சுவராக்குகிறாய்? எங்காவது மலைகளுக்குப் போய் அங்கேயே மடிந்து மாய்ந்துவிடு, இல்லாவிட்டால் உன் பேர் சொல்ல ஆள் இல்லாமல் விஞ்ஞானம் உன்னை ஒழித்துவிடும் என்பதை அறியவும்
குட்பை. M0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு,
ஏ இராவணன் தலை” ஸ்தாபனமே!'
நீ செத்துப்போய்விட்டாயென்றும், உன்னை வெகு ஆழத்தில் புதைத்தாச்சு என்றும், நீ இருக்கிறாயா இல்லையா என்றும் சில அயோக்கியர்கள், மடையர்கள், கீழ்மக்கள் சொல்லித் திரிகிறார்களே. நீ பிறந்தில்லா விட்டாலும், எவ்வளவோ எதிர்ப்புக்கு இடையில் நல்ல காரியங்களைச் சாதித்திருக்காவிட்டாலும் பார்ப்பனர் அல்லாதாரின். நிலைமை இருந்த இடம் தெரியாமல் புல் முளைத்திருக்காதா? நான்
தான் இந்த மாதிரி உனக்கு ஒரு காலத்துக் கடிதம் எழுத முடியுமா என்று யோசித்துப்பார். நீ உள்ளே இருந்து வேலை செய்வது போதாது. வெளிப்படையாக வந்து கச்சத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு கோணல்களை யெல்லாம் சேர்த்து நிமிர்த்து விட்டால் உனக்கு எதிராக உன்னைப் பற்றிக் கேவலமாக எந்த நாயாவது குலைக்குமா? எந்தக் கழுதையாவது கத்துமா? எங்கே உன்னுடைய பேர்வழிகளை யெல்லாம் அபிப்பிராய பேதங்களை விட்டுவிடச் சொல்லி ஒன்று சேர்த்து ஒரு கை பார்.
குட்பை.
தீண்டாமைப் பேய்க்கு,
ஏ நரித் தந்திரமுள்ள ஓநாயே!
நீ வஞ்சகர்களைக் காட்டி ஏழைகளை இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்? பதவிகளில் இருக்கும் தீண்டப்படாதார்கள் எல்லாரும் அவர்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் கொஞ்சம் மறந்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எலெக்டிரிக் லைட்டிலும், மெத்தை தைத்த சோபாவிலும் தூங்குவதைத் தவிர வேறுயார் என்னதான் செய்வார்கள்! அவர்கள் விழித்துக்கொண்டு, நாம் எதற்காக இங்கு வந்தோம், நம்மை யார் நம்பியிருக்கிறார்கள். அடாடா தூங்கிவிட்டோமே, பார்ப்பனீய மோகினியைக் கண்டல்லவோ மயங்கி விட்டோம்! என்று தட தடத்து எழுந்து மீசையை முறுக்கிக் கொண்டு நிமிர்ந்து நின்றால் நீ என்ன ஆவாய்? உன்னை ஆதரிக்கும் நூல்தான் என்ன ஆகும்? எல்லாம் அதோகதிதான் என்று அறியவும்.
குட்பை.
குடி அரசு - கடிதங்கள் - 22.05.1938
குடி அரசு- 1938 (1) 350.
காங்கரஸ் பித்தலாட்டம்
தோழர்களே!
இன்னும் இரண்டொரு முக்கிய விஷயங்களைக் கூறிவிட்டு
முடித்துக் கொள்ளுகிறேன்.
காங்கரஸ்காரர்கள் இன்று சர்க்காரில், சம்பளச் செலவு அதிகம், அதிகம் என்று கூறுகிறார்கள். இது யாரால் அதிகமாகியது என்று கவனியுங்கள்.
இந்த காங்கரஸ் ஏற்படாததற்கு முன்பு மூன்சீப்பிற்கு 200 ரூபாய்தான் சம்பளம். இப்பொழுது 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.
முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு 70 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்கள். இப்போது 150 ரூபாயில் ஆரம்பிக்கிறார்கள். இதுபோல்தான் எல்லா உத்தியோகஸ்தர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் வரி கொடுப்போர் பார்ப்பனரல்லாதார், உத்தியோகங்கள் பார்ப்போர் பார்ப்பனர்கள். ஆதலால் பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லை கொள்ளையடித்தவரை லாபமென்று கருதினார்கள். காங்கரஸ் எல்லா உத்தியோகங்களும் இந்தியர்களுக்கு வேண்டும் என்றும் வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கும் சம்பளமே இந்தியர்களுக்கும் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியதுதான் காரணம்.
காங்கரஸ் சாதித்ததென்னூ
இதுதான் போகட்டும். காங்கரஸ் தேர்தலில் நின்று பாமர மக்களை ஏமாற்றி மங்களகரமான மஞ்சள் பெட்டியென்றும், மஞ்சள் பெண்கள். தாலியின் நிறமென்றும் அனைவரும் குளித்து முழுகிவிட்டுத் தேங்காய் உடைத்து ஓட்டுப்போட வேண்டுமென்றும் புராணபிரசங்கம் செய்து
ஓட்டுக் கேட்டார்கள். அதை நம்பி பலர் ஓட்டுப் போட்டார்கள். அந்த வெற்றியினால் காங்கரஸ் என்ன செய்ய முடிந்தது? ஒன்றுமில்லை மூன். காங்கரஸ் தலைவரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஏகாதிபத்தியத்தை ஒழிக்கப் போகிறோம், வெள்ளை அறிக்கையை கிழிக்கப் போகிறோம், எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சவடாலடித்தார். பட்டினி ஒழியுது பஞ்சம் பறக்குது என்று கத்தினார். ஏகாதிபத்தியம் ஓழிந்ததா? வெள்ளை அறிக்கை கிழிக்கப்பட்டதா? நட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
பஞ்சம் மறைந்ததா? பட்டினி தீர்ந்ததா? 144-வது சட்டம் ஒழிப்பதாகக்
கூறினார் அது ஒழிந்ததா? ஒன்றும் இல்லை. எல்லாம் பித்தலாட்டமாய்த் தானே முடிந்தது?
வைஸ்ராய் வெடிகுண்டு:
அது போகட்டும். பொது ஜனங்கள் தேர்தலில் பெருவாரியான. ஓட்டுகளைக் கொடுத்து இவர்களை அளவு கடந்த மெஜாரட்டியுடன் சட்ட சபைக்கனுப்பினார்கள். உடனே அவர்கள் சர்க்காருக்கு நிபந்தனை கொடுத்தார்களே ஒழிய பொது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைப்
பற்றிக் கவலைப்படவே கிடையாது. அதுவும் “நாங்கள் உங்கள் சட்டத்திற்கு அடங்கி நடக்கிறோம். எங்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுங்கள்” என்று சர்க்காரை வலிய கெஞ்சினார்கள். இதற்கு கவர்னர்கள் “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் என்னமோ செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டார்கள். அதன் மீது வெட்கத்தால் சிறிது பிகுவு செய்தார்கள். உடனே கவர்னர்கள் வேறு மந்திரிகளை நியமித்து ஒழுங்காக வேலை நடக்கச் செய்துவிட்டார்கள். அதன் மீது காங்கரஸ்காரர்கள் தங்களது அதிகப் பிரசங்கத்துக்கு வருந்தி மந்திரி வேலைபெற ஏதாவது சாக்குத்தேட கஜகரணம் போட்டுப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. இதற்குள் வைஸ்ராய் பிரபு மரியாதையாய் உங்கள் வால்களை அடக்கிக்கொண்டு ஒழுங்காக நடக்கிறீர்களா? அல்லது நீங்கள் என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழுத்தப்பட வேண்டுமா? என்று ஒரு வெடிகுண்டு போட்டார்.
காங்கரஸ் தலைவர்கள் சரணாகதி:
காங்கரஸ்காரர்கள் நடுங்கிப்போய் சரணாகதி அடைந்தார்கள். இந்த மத்தியில் வைஸ்ராய் வெடிகுண்டைப் பற்றி காங்கரஸ் பத்திரிகைகள் வைஸ்ராயைக் கண்டிக்க ஆரம்பித்தன. ஆனால் காங்கரஸ் தலைவர்கள் வைசிராயைக் கண்டிக்க வேண்டாம் என்றும் வைசிராய் நல்ல வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்றும் எழுதும்படி செய்து கொண்டார்கள். மற்றும் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்ற உடனே அப்போது காங்கரஸ் தலைவராகவிருந்த பண்டித ஜவஹர்லால்நேரு அவர்களை சட்டசபைக்குள் போய் சத்தியமும் ராஜ விஸ்வாசமும் செய்ய வேண்டுமே அதற்கு என்ன செய்வது என்று கேட்டார்கள். அதற்கு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் “நீங்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் பொய் சத்தியம் செய்து விடுங்கள். அதனால் ஒன்றும் குற்றமில்லை” என்று கூறினார். இது யாரை ஏமாற்ற? சர்க்காருக்கு பொய் சத்தியம் செய்தார்களா? ஜனங்களுக்கு பொய் சத்தியம் செய்தார்களா? என்று இன்று அவர்களுடைய நடத்தையில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
குடி அரசு- 1938 (1) 352.
உதாரணம் வேண்டுமா?
காங்கரஸ்காரர்கள் இன்று வெள்ளைக்காரர்கள் சொல்வதற்கெல்லாம் தாளம் போடும் நிலைமையில் வந்து அவர்களை சதா புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
நமது மாகாண மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள்
தேர்தலுக்கு முன், வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. நமது இந்தியர்களுக்குச் சம்பளம் குறைச்சலாக
கொடுக்கப்படுகிறது. நாங்கள் சட்டசபைக்குப் போய் இந்தத் கொடுமையை
ஒழிக்கப் போகிறோம். எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று
சொன்னார். அதன்படி நாம் ஓட்டுக் கொடுத்தோம். இன்று என்ன.
சொல்லுகிறார்? வெள்ளைக்காரர்களுக்கு சம்பளம் குறைக்க முடியாதாம் அவர்கள் பங்களாக்களில் வைக்கக் கூடிய ரோஜாச் செடிகளை போன்றவர்களாம். இந்தியர்கள் காட்டில் இருக்கக்கூடிய பனைமரம் போன்றவர்களாம். இவர்களுக்குச் சம்பளம் குறைக்கலாம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் தைரியமாய் கூறுகிறார். முன் நீதி நிர்வாக இலாக்கா
பிரிக்கப்பட வேண்டுமென்றால் இன்று அதைப் பிரித்தால் சர்க்கார்
சரியாய் நடக்காது என்கிறார். மூன் சி.ஐ.டி. கூடாது என்கிறார். இப்போது
சி.ஐ.டி. அவசியம் வேண்டுமென்று சொல்லிவிட்டார் வகுப்புவாரி உத்தியோக உத்தரவை மாற்றுவதில்லை என்றார். இப்போது திரைமறைவில் அவ்வுத்தரவை கொலை செய்கிறார். கேட்டால் “நான் என் இஷ்டப்படிதான்
நடப்பேன். உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் இனிமேல் 5 வருஷம் பொறுத்து உங்களிடம் வருகையில் ஓட்டுக் கொடுக்காதீர்கள்” என்று ஆணவமாகவும், அகங்காரமாகவும் பதில் கூறுகிறார்.
யார் வகுப்புவாதிகள்?
கனம் ராஜகோபாலாச்சாரியார் ஜஸ்டிஸ் கட்சியையும், மூஸ்லிம் லீக்கையும் வகுப்புவாதக் கட்சி என்று சொல்லி அவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறாரே, இன்று அவரது மந்திரி சபையில் வகுப்புவாதமில்லையா என்று பாருங்கள். இன்று பத்து மந்திரிகளில் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் ஒன்றுக்கு ஐந்து வீதம் மந்திரிகளாக வந்திருக்கிறார்களே. இது வகுப்பு வாதமில்லையா?
அதுமட்டுமல்ல. கீழ் சபைக்கு இரண்டு தலைவர்களும் பார்ப்பனர்களாகவே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்பு வாதமில்லையா? மேல்சபைத் தலைவருக்கும் பார்ப்பனரையே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா? பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியும் பார்ப்பனர்களாகவே ஆக்கிக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா? நம் நாடு மாத்திரமல்லாமல் ஆறு மாகாண முதல் மந்திரிகளும் பார்ப்பனர்களாகவே அமர்ந்து கொண்டார்களே! அது வகுப்புவாதமல்லவா? திவான்பகதூர் பட்டம் விட்ட பெரிய o வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
படிப்பாளியும் அனுபவமும் உள்ள ராமலிங்க செட்டியாரை மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒரு சாதாரண படிப்பாளியும் அனுபவமுமில்லாத ஒரு பார்ப்பனர் மேல்சபைக்கு தலைவராக்கப்பட்டு விட்டாரே! அது வகுப்புவாதமல்லவா? திருச்சி தேவரை தெருவில் திண்டாட விட்டுவிட்டு காங்கரசுக்குத் துரோகம் செய்து காங்கரசால் தண்டிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் மந்திரியாக்கப் பட்டாரே அது வகுப்புவாதமல்லவா? 26 மிருக வைத்திய உத்தியோகத்துக்கு 19 உத்தியோகம் பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது வகுப்புவாதமல்லவா? கார்ப்பரேஷனில் 10 எட்மாஸ்டர் வேலை காலியாக்கப்பட்டதற்கு 10க்கும் பார்ப்பனர்களையே நியமித்தது. வகுப்புவாதமில்லையா? கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி வேலைக்கு தகுதியான ஒரு பார்ப்பனரல்லாத தோழர் சிவசைலம் பிள்ளை எம்.ஏ.எல்.டி.யை கார்ப்பரேஷன் கவுன்சிலும் காங்கரஸ் கட்சியும் தெரிந்தெடுத்தும் அதைத் தள்ளிவிட்டு குறைந்த யோக்கியதையுடைய ஒரு கிழப் பார்ப்பனரை அதிகச் சம்பளத்தில் நியமித்தது வகுப்புவாதமல்லவா? இன்னும் பார்ப்பனரல்லாதார் உத்தியோகங்கள் காலியாவதற்கெல்லாம் பார்ப்பனர்களைப் புகுத்துவதும் தப்பான வழியில் பார்ப்பனரல்லாத பெரிய உத்தியோகஸ்தர்களை ஒழிக்க முயற்சிப்பதும் வகுப்புவாதமல்லவா? மற்றும் காங்கரசிலும் சென்னை போன்ற இடங்களிலேயே சாமி வெங்கிடாசலம் செட்டியார், விநாயக முதலியார், லட்சுமணசாமி முதலியார், சக்கரை செட்டியார், ஆதி கேசவலு நாயக்கர் முதலிய பார்ப்பனரல்லாதார் மீது மாத்திரம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிப்பதும், காங்கரசை விட்டு விரட்டுவதும் பார்ப்பனர்களாயிருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்தாலும் அதைப்பற்றி சற்றும் கவனியாமல் இருப்பது வகுப்புவாதமல்லவா? இவைகள் எல்லாமுமா அகஸ்மாத்தாய் ஏற்பட்டவை என்று கேட்கிறேன்?
பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால்
பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்கள்தான் வீட்டிற்குள் போகுமே தவிர, வீட்டிற்குள் இருக்கும் சாமான்கள் ஒன்றுகூட வெளியில் எறியப்படமாட்டா என்பது போல் எல்லா அகஸ்மாத்தும் பார்ப்பனர்களுக்கேதான் அனுகூலமாயிருப்பானேன்?
20 வருஷத்திற்கு முன்பாக நமது மாகாணம் இரண்டே மந்திரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டது. காங்கரசின் உத்தியோக வேட்டையில் இன்று பத்து மந்திரிகள் ஆள வேண்டியதாகிவிட்டது இவர்களுக்கு 10 காரியதரிசிகள் வேண்டியதாகிவிட்டது. இவர்களிடம்
சர்க்கார் வேலைகளை ஒப்புவிக்க வேண்டுமாம். சர்க்கார் நடவடிக்கை கழுதை புரண்ட களமாகி குட்டிச்சுவர் ஆவதற்கு இதைவிட வேறு காரியம் என்ன செய்ய வேண்டுமா? என்று பாருங்கள்.
குடி அரசு- 1938 (1) 354.
காங்கரஸ் மந்திரிகள் காரியதரிசிகள் மெம்பர்கள் யோக்கியதை உங்களுக்குத் தெரியாத இப்போதே சேலத்தில் ராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அன்னக்காவடி எம்.எல்.ஏ. “கலெக்டரை மாற்றி விடுகிறேன் பார், போலீஸ் சூப்ரண்டெண்டைத் தொலைத்து விடுகிறேன்
பார், எனது பியூனை நிறுத்தினாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத்தான். ஆக வேண்டும்” என்று மேடைகளில் வீரம் பேசுகிறார். போலீசைக்
கண்டித்துத் தீர்மானம் போடுகிறார். இனி இவர்கள் தோழர்களான
காரியதரிசிகளிடம் சர்க்கார் பைல் (Files) ரிக்கார்டுகளைக் கொடுத்து
விட்டால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டும்
சர்க்கார் செலவில் தேர்தல் பிரசாரம்
இன்று முனிசிபல் தேர்தல் பிரசாரத்துக்கு மந்திரிகளும் மெம்பர்களும்
சர்க்கார் செலவில் சென்று தைரியமாய் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள்
வெய்யில் காலத்துக்கு மலைக்குப் போய் மலைவாசம் செய்யக்கூடாது என்று மற்ற மந்திரிகளைக் குறை கூறினார்கள். இவர்கள் பதவிக்கு வந்ததும் இவர்கள் கீழ் உள்ள வெள்ளைக்காரர்களுக்கு மலைக்குப் போகலாம் என்றார்கள். இப்போது மந்திரிகளே திருட்டுத்தனமாய் குடைக்கானலிலும், நீலகிரியிலும் உல்லாசமாய்த் திரிகிறார்கள். இவர்கள் காரியதரிசிகளுக்குக் கூட மலைவாசம் வேண்டியதாக இருக்கிறது இவர்களது நாணயமும், யோக்கியமும் என்ன என்று பாருங்கள்
தோழர் ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு ஒரு மந்திரி நீலகிரியில் இருந்து வந்து போனதற்கு “இதெல்லாம் யாருடைய செலவு” என்று சத்தியமூர்த்தியார் கேட்டார். இப்போது இந்த மந்திரிகளில் சிலர் எழவுக்குப் போகவும், தாசி வீட்டுக்குப் போகவும் வரிப்பணத்தில் போகிறார்களே, கேள்வி இல்லையா? என்று கேட்கின்றேன்.
கும்பகோணத்தில் ஒரு ஆளுக்குக் கையில் அடிபட்டது என்பதற்காக பிரதம மந்திரி ஜில்லா டாக்டர் (DMO)ass தந்தி கொடுத்து வைத்தியம் பார்க்கச் சொன்னாரே. இது என்ன யோக்கியதை? அப்படியானால் 21.0.க்கள் சரியாய் வைத்தியம் பார்ப்பதில்லை என்று அருத்தமா?. அல்லது அந்த நபர் ஆச்சாரியாருக்கு வேண்டியவர் என்பதற்காக 193ர.0.வைத்தியம் பார்க்க வேண்டுமா? பார்ப்பன ஆட்சி எவ்வளவு அந்தர தர்பார் என்று காட்டுவதற்காக இதை சொல்லுகிறேனே தவிர எனக்கு இது விஷயத்தில் பொறாமை ஒன்றும் இல்லை.
தோழர்களே!
தேசீயக் கடனை ஓழிக்காமல் மேலும் கடன் வாங்கலாமா?
இனி ஒரு பித்தலாட்டத்தைப் பாருங்கள். காங்கரஸ்காரர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கும்போது இதற்கு முன் இருந்த சர்க்கார்
3585 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
(ஜஸ்டிஸ் கட்சி உள்பட) நமது தேசத்தின் பேரால் கடன் வாங்கி தேசத்தில் உள்ளவர்களைக் கஷ்டமடையச் செய்து வருவதால் தாங்கள் பதவி ஏற்றவுடன் தேசீயக் கடன்களை அடியோடு செல்லுபடி அற்றதாக்கி, ஒழித்துவிடப் போவதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன செய்தார்கள் என்று பாருங்கள். பதவிக்கு வந்ததும் நமது தேசத்தின்
மீது முன் இருந்த கடனுக்கும் சேர்த்து கையெழுத்துப் போட்டு நமது மாகாணத்திற்கு மாத்திரம் 3% கோடி ரூபாய் புதிய கடன் வாங்கி விட்டார்கள். அது வாங்கி என்ன செய்தார்கள்? வாய்க்கால் வெட்டினார்களா? ரோட்டுப் போட்டார்களா? அணை கட்டினார்களா? ஏதாவது புதுக்காரியம் செய்தார்களா? 10 மந்திரி, 10 காரியதரிசி நியமிக்கவும், கார்கள் வாங்கவும், சதா ஊர் சுற்றவும், டாம்பீகமாக மைனர் விளையாட்டுகள் விளையாடவுமான காரியங்களுக்குத்தான் செலவு செய்தார்கள் என்பதோடு ஏற்கனவே இருக்கும் பள்ளிக் கூடங்களை மூடுகிறார்கள், ஆஸ்பத்திரி டாக்டர்களுக்குச் சம்பளமில்லை என்கிறார்கள், கிராமங்களில் கிணறு வெட்ட பணமில்லை. என்கிறார்கள். அப்படியானால் மூன்றரை கோடி கடன் வாங்கியது எதற்காக என்று பாருங்கள். முன்பிருந்த மந்திரிகள் வரவு செலவுகளைச் சரிப்படுத்தி வரிகளையும் குறைத்து கடனில்லாமல் சர்க்கார் ஒழுங்காக நடக்கும்படி செய்து ஆட்சி செலுத்தி வந்தார்கள். இப்போது இவர்களோ கடன் மேல் கடன் வாங்கி தாம் தூம் செய்து விட்டு அதன் பொறுப்பை நமது மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்.
ராஜிநாமாப் புரவி எதற்கு? யாராவது கேட்டால் ராஜீநாமா ஜேப்பில் இருக்கிறது என்கிறார்கள். இதன் கருத்து என்ன? கடன் வாங்கிக் கண்டபடி செலவழித்துவிட்டு ஓடிப்போனால் எவனோ வந்து மக்கள் மீது அதிக வரி போட்டு கடனைக் கட்டட்டும் என்று கருதி ஊரான் தலையில் கடன்பளுவை சுமத்தத்தானே அல்லாமல் வேறு என்ன? ஒரு ஜில்லாவில் செய்த மதுவிலக்குக்காக எத்தனை பள்ளிக்கூட கிராண்டு, எத்தனை ரோடு, பாலம் கிராண்டு, எத்தனை கிராம குடிதண்ணீர் கிராண்டு ஆகியவைகளைவயெல்லாம் நிறுத்தி விட்டார்கள் என்று பாருங்கள். இன்னும் செலவைக் குறைக்க ஆஸ்பத்திரிகளில் இருக்கும் டாக்டர்களை எடுத்துவிடுகிறார்களாம். இது என்ன அக்கிரமம். மாட்டுக்கும், எருமைக்கும், கழுதைக்கும், நாய்க்கும் வைத்தியம் பார்க்கும் டாக்டர்களுக்கு சம்பளமாம். ஆனால் மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்களுக்கு சம்பளம் இல்லையாம். தோழர்களே இந்த மந்திரிகள் நாய், கழுதை, குதிரை, மாடு, எருமை உயிர்களைவிட மனிதர் உயிர் கேவலமானதென்று இவர்கள் கருதுகிறார்களா அல்லவாவென்று கேட்கிறேன். மந்திரிகளுக்கு நோவு வந்தால் டாக்டர் குருசாமி காத்திருக்கிறார். நமக்கு நோவு வந்தால் ஒரு டாக்டரிடம் போக
குடி அரசு- 1938 (1) 356
வேண்டுமானால் நாம் கொடுக்கும் வரி வேறு எதற்குப் பயன்படுகிறது என்று கேட்கிறேன். சம்பளமில்லாத டாக்டர்கள் யோக்கியமாய் வைத்தியம் பார்ப்பார்களா?
நோயாளிகளைத் தமது வீட்டிற்கு வரும்படி சொல்லிப் பணம்
சம்பாதிக்க வழியாகுமே தவிர வேறு நன்மை ஏற்படாது யாரோ பைத்தியக்காரர்கள், மஞ்சள் பெட்டியை நிரப்பிய பாவத்திற்காக நமது கல்வி, வைத்தியம், சுகாதாரம், போக்குவரவு வசதி இவ்வளவும் நாசமாகப் போய் நாம் மிருகங்களிலும் கேடாக வாழ்வதா என்று உங்களைக் கேட்கிறேன்.
மற்றும் இந்தப் பார்ப்பனர்கள் பதவி பெற்ற ஆணவத்தால் நம்மவர்களை எப்படி மதித்திருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
பார்ப்பண ஆட்சியில் நாம் கண்ட பலன் இரட்டை ஆட்சியில் இலாகாக்களை ஒதுக்கிக் கொடுத்ததில்
“சர்க்கார் இலாகாக்களை பொறுப்புள்ள அதிகாரங்களை தாங்கள் வைத்துக் கொண்டு ஜனப்பிரதிநிதிகளுக்கு சொத்தை இலாக்காக்கள் கொடுத்தார்கள்"
என்று சொன்னார்கள். மற்றும் தகுதி உள்ளவர்களைத் தள்ளிவிட்டுச்
சர்க்கார் அடிமைகளுக்கும் சொத்தைகளுக்கும் பதவிகள் கொடுத்தார்கள்”
என்று சொன்னார்கள்.
இவர்கள் கைக்கு அதிகாரம் வந்தவுடன் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். பொறுப்புள்ள இலாகாக்களை அதாவது வெள்ளையர்கள் பார்த்துவந்த இலாகாக்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள் சொத்தைகளை தமிழர்களுக்குக் கொடுத்தார்கள். தோழர் ராமநாதன். அவர்களுக்கு விளம்பர வேலை கொடுத்து மாட்டி வண்டி ஓட்டச் சொன்னார்கள். தோழர் சுப்பராயன் அவர்களுக்கு கல்வி இலாகா
கொடுத்து ஹிந்தியைப் புகுத்த நிர்ப்பந்தப்படுத்தியதுடன் யாராவது தட்டிப் பேசினால் ராணுவத்தையும், போலீசையும் கொண்டு அடக்கச் சொன்னார்கள்.
தோழர் முனிசாமி பிள்ளைக்கு விவசாயமும், கலால் இலாகாவும் கொடுத்து அதிலும் காட்டிய இடத்தில் படித்துக்கூடப் பார்க்காமல் கையெழுத்து போடுகிற உரிமை மாத்திரம் கொடுத்தார்கள். மற்றபடி தமிழர்களுக்கு பார்ப்பனர் கொடுத்த இலாகா என்ன? என்று பாருங்கள்.
இவர்கள் பொறுக்கியெடுத்த ஆள்களின் யோக்கியதைதான் என்ன? கடைந்தெடுத்த அடிமைகளாகவும், பதவிக்கும், சம்பளத்துக்கும்
சற்றும் தயங்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருப்பவர்களாகவும் பார்த்து பதவி கொடுத்தார்களே ஒழிய மனிதத் தன்மை உடையவர்களைச் சற்றாவது கவனித்தார்களா? கவனிக்காவிட்டாலும் சும்மாவாவது விட்டார்களா?
357 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சமர்த்தர்கள் கதி.
உதாரணமாகச் சில விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதே கோவை ஜில்லாவில் தோழர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், டி.எ. ராமலிங்கம் செட்டியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், ஆர்.கே. ஷண்முகம் இவர்கள் லேசானவர்களா? 10, 20 வருஷங்களுக்கு முன்பிருந்து பொதுநல சேவகம் செய்பவர்கள். அரசியலின் பேரால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமில்லாத செல்வவான்கள். ஆங்கில ஞானமுடையவர்கள். நிர்வாக அனுபவமுடையவர்கள். சொந்த வாழ்க்கையில் கண்ணியமான நடத்தைக்காரர்கள். இப்படிப்பட்ட இவர்கள் கதி என்ன ஆயிற்று? காங்கரஸ்காரர்கள் தோழர் சி.எஸ்.ஆர் அவர்களை ஏமாற்றி வஞ்சித்து குற்றம் கூறிவிட்டார்கள். 20 வருஷ காலமாக தனது சொந்த முதல் லக்ஷக்கணக்கில் செலவழித்து பூரா நேரமும் பொதுநலத்துக்கு பாடுபட்ட அவர்கள் கதி இப்படியாயிற்று தோழர் டி.எ. ராமலிங்கம் செட்டியார் அவர்களும் 30 வருஷம் பொதுநல சேவை செய்து கடைசியில் திவான் பகதூர் பட்டத்தைவிட்டு மூலையில் உட்கார வேண்டியதாயிற்று. தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்களது சாமர்த்தியம் புத்தி எல்லாம் வேறு நாட்டுக்கு பயன்படும்படியாக ஆகிவிட்டதே தவிர, நமது நாட்டார் அனுபவிக்க முடியவில்லை. இந்த ஜில்லா பெருங்குடி மக்கள் கூட்டத்தில் முக்கியவரான தோழர் வி.சி வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களும் ஏனென்று கேட்பதற்கு ஆளில்லாமல் மற்றபடி கோவை ஜில்லாவுக்கு தலைவர்கள் தோழர்கள்
சுப்ரி, சுப்பையா, மகாலிங்கய்யர் மற்றும் யாரோ ஒரு அய்யர் இவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு ஜே போட்டு பின்பற்ற வேண்டிய தலையெழுத்து தோழர்கள் டி.எ. ராமலிங்கச் செட்டியாருக்கும்,
வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களுக்கும் இருக்கிறதென்றால், காங்கரசின் யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்
ஜில்லாத் தலைவர்கள் யார்?
மற்றும் ஒவ்வொரு ஜில்லாவையும் பாருங்கள். சென்னைக்கு தலைவர் தோழர் சத்தியமூர்த்தியார், வேலூர் ஜில்லாவுக்கு தலைவர் தோழர்:
குப்புசாமி, உபயதுல்லா, திருவண்ணாமலை ஜில்லாவுக்கு தலைவர் தோழர் அண்ணாமலை, ராமனாதபுரம் ஜில்லாவுக்கு தலைவர் தோழர்கள் காமராஜ நாடார், முத்துசாமி: மதுரைக்கு தலைவர் தோழர் மட்டபாறை அய்யர், திருநெல்வேலிக்குத் தலைவர் யாரோ ஒரு அய்யர். திருச்சிக்கு தலைவர் ஆலாசியம் அய்யர், தஞ்சைக்கு தலைவர் தோழர் பூவராகம்; சேலத்துக்கு தலைவர் சுப்பிரமணியம்; தென் ஆற்காட்டுக்கு தலைவர் நைனியப்பன். இப்படியாகத்தானே இருந்து வருகிறது. இது தமிழ் மக்களுடைய மானத்துக்கு மரியாதை அளிக்கக் கூடியதா என்று கேட்கிறேன்.
குடி அரசு- 1938 (1) 358
பார்ப்பன ஆட்சியில் நாணயமாவதுண்டா?
இன்று காங்கரஸ் இப்படித் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி மூலையில் வைத்துவிட்டு செயலாற்றுவதிலாவது நாணயமாயிருக்கிறதா வென்று பாருங்கள். சட்டசபையிலுள்ள மெம்பர்களுக்கு மாதம் 75 ரூபாய் சம்பளத்தை கொடுத்து பலரைக் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருக்கும்படி உட்காரவைத்துக் கொண்டு அவர்கள் எதிரிலேயே (தமிழர்களை) என்றும் தலையெடுக்க வொட்டாமல் இருக்கும்படியான காரியங்கள் செய்கிறார்கள். இதைத் தமிழன் 75 ரூபா காசுக்கு வேடிக்கை பார்க்கிறான். சிலர் வேறு கதியில்லாமல் சரணாகதி அடைந்து கிடக்கிறார்கள். இனியும் காங்கரசின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லத்தரமல்ல. இனி நம்மவர்கள் பப்ளிக் பிராசி கூட்டராய் வர முடியாது. காலேஜ் கமிட்டி எடுத்துவிட்டதால் நம் பிள்ளைகள் முன்போல் மேல்படிப்புக்கு வர முடியாது. ஹிந்தி கட்டாயத்தால் கீழ்படிப்பும் பாழாய் விடும். வார்தா கல்வித் திட்டத்தால் பிள்ளைகளுக்கு கையெழுத்துப் போடத் தெரிவதே கஷ்டமாய் மூடியும் கடன் நிவாரணச் சட்டம் என்கின்ற புரட்டால் சிறு குடியானவர்களும், கிராமவாசிகளும் பட்டணங்களுக்கு ஓடி அடிமையாய்த்தான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் விவசாயி கூலியாக ஆக வேண்டும் நாணையமே ஒழிந்தது
மொத்தப் பலன்
மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வருணாச்சிரம முறை தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. அது இந்த மந்திரி சபையில் பலப்பட்டு நிலை நிற்கப் போகிறது. இவைகளையெல்லாம் நன்றாய் மனதிலிருத்தி காங்கரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுவதையும் நன்றாய் கேட்டு உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அப்படி நடங்கள். மணி இரவு 11 ஆகி விட்டதால் இனி உங்களை காக்க வைக்க இஷ்டமில்லை.
குறிப்பு: வேலூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் ஆற்றிய உரை. 22.05.1938 குடி அரசு தொடர்ச்சி.
குடி அரசு - சொற்பொழிவு - 29.05.1938
0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
போர் மூண்டு விட்டது
தமிழர் ஒன்று சேர்க
ஆரிய சூழ்ச்சிக்கும், தமிழர் (திராவிடர்) வீரத்திற்கும் போர் மூண்டு விட்டது. மூளாமல் தடுக்க தமிழ் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் பயனற்றதாகி விட்டன.
தமிழர்கட்குள் ஒற்றுமை இல்லை என்றும், தமிழர்களை காட்டிக் கொடுத்து தமிழர்களை அழிக்க தமிழ் மக்களில் தங்களுக்கு வேண்டிய அநுமார், சுக்கிரீவன், விபீஷணன்!” போன்ற இழி மக்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் கிடைப்பார்கள் என்றும் கருதியிருக்கும் இறுமாப்பால் “நான் செய்வதைச் செய்கிறேன். உன்னால் ஆனதைப் பார்” என்று சூழ்ச்சியில் வல்ல நமது ஆச்சாரியார் போர்க்கோலம் கொண்டு விட்டார். பிரிட்டிஷ் ஆட்சியும் தனது சுயநலத்தையும், தமிழ் மக்களின் கதியற்ற நிலைமையும் கருதி தமிழர் மானத்தைச் சூரையாட ஆச்சாரியாருக்கு அனுமதிச்சீட்டு அளித்துவிட்டது. ஆதலால் எண்ணிக்கையில் பெருத்து ஒற்றுமையின்றிச் சிதறி வலிமையில் சிறுத்துக் கிடக்கும் தமிழ் மக்களுக்கு போக்கிடம் இல்லாமல் இன்று நலிய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது
தமிழ்நாட்டில் பள்ளிகள் குறைக்கப்படுகின்றன.
வைத்தியர்களின் பொறுப்புகள் அகற்றப்படுகின்றன. போக்கு வரவு சாதன வசதிகள் குறைக்கப்படுகின்றன.
கிராம நீர்நிலை சுகாதாரம் முதலிய சவுகரியங்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இவற்றிற்குக் காரணம் ஆச்சாரியார் ஆட்சிக்கு பொருளாதார சவுகரியம் இல்லையாம். ஒரு ஜில்லாவில் மதுவிலக்குச் செய்யப்பட்டது என்கின்ற சாக்கை வைத்து தமிழ்நாடு முழுவதிலும் இக்கொடுமைகள் செய்யப்படுகின்றன. தமிழ் நாட்டின் பேரால் இரண்டு வருஷ வரவு செலவு திட்டத்தில் 3% கோடி ரூபாய் அரசாங்க நிருவாகத்திற்கு என்று ஆச்சாரியார் ஆட்சி கடன் வாங்கியும்கூட பள்ளியைக் குறைத்து, பாதையைக் குறைத்து, பண்டிதத்தை குறைத்து, பாங்கைக் குறைத்து, குடி தண்ணீர் வசதியைக் குறைத்துதான் நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையில் இருந்து வருகிறது. இக் கொடுமையைத் தமிழ் மக்கள் இன்னும் சரியானபடி உணரவில்லை.
குடி அரசு- 1938 (1) 360
ஹிந்தி பலாத்காரம் இவை எப்படியோ போகட்டும் என்றாலும் ஹிந்தி பாஷை என்ற ஒரு பாஷையை ஆச்சாரியார் ஆட்சியானது தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த சபதம் செய்து கொண்டதானது பொறுக்க முடியாத கொடுமையாக இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்று 100க்கு 90 பேர்களுக்கு மேல் தங்கள் தாய் மொழியில் (தமிழில்) கூட கையெழுத்துப் போடத் தெரியாத அவ்வளவு தற்குறி - பாமரத் தன்மை இருந்து வருகிறது. இதில் ஒரு விகிதத்தையாவது குறைக்க ஆச்சாரியார் ஆட்சி இதுவரை ஒரு சிறு முயற்சியும் எடுத்துக் கொண்டதாகச் சொல்ல எவ்வித ஆதாரத்தையும் காண முடியவில்லை. இந்நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு மற்ற ஒரு அந்நிய பாஷையைக் கொண்டு வந்து “வலுவில் புகுத்தித்தான் தீருவேன்! என்று ஆச்சாரியார். ஆட்சி சொல்லுமேயானால் இதில் ஏதாவது சூழ்ச்சியோ வஞ்சகமோ இல்லாமல் சிறிதாவது யோக்கியப் பொறுப்பு இருக்க முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது உலகிலேயே இந்தியா தேசம் கல்வி, அறிவற்ற நாடு என்கின்ற தன்மையில் இருக்கும்போதும் குறிப்பாக தமிழ்நாடு மிக்க பாமர மக்களைக் கொண்டதாக இருக்கும்போதும் அதிலும் பழங்குடி மக்களாகிய தமிழர்களில் சராசரி 100க்கு 95 பேர்கள் தற்குறிகளாகவும், பெண்கள் 100க்கு 99 பேர் தற்குறிகளாகவும் இருக்கும் போதும் படிப்பில்லாதவர்களுக்கு படிப்பைக் கொடுக்க வழிகோலாமல் படித்து இருக்கும் மக்களுக்கே மற்றும் ஒரு பாஷை படிப்பிக்க முயற்சிப்பதும், பணம், ஊக்கம், நேரம் ஆகியவைகளை பாழாக்க முயற்சிப்பதும் எப்படி யோக்கியமானதும் நல்லெண்ணமுடையதுமான காரியமாகுமென்று மறுபடியும் கேட்கின்றோம்
மனு முறைக்குச் சூழ்ச்சி
கல்விக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி கல்வி இல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவா அல்லது கற்றவர்களுக்கு மற்றுமொரு பாஷை கற்பிக்கவா என்று கேட்கின்றோம். இவைகளைப் பார்க்கும்போதும் தோழர் காந்தியார் முதலிய பல அரசியல் தலைவர்கள். இந்தியா சுயராஜ்யம் பெறுவது என்றால் வருணாச்சிரம தர்மமாகிய மனுதர்ம ஆட்சி முறையை நிறுவுவதுதான்.”
என்று சொல்லி வந்ததை இப்போது எப்படியோ சமயம் கிடைத்த உடன் மனுதர்ம ஆட்சி ஏற்படுத்த காந்தியாரின் பிரதம சிஷியர் என்ற உரிமை பாராட்டிக் கொள்ளும் ஆச்சாரியாரின் ஆட்சி மூர்க்க முயற்சியில் இறங்கிவிட்டது. இந்த வருணாச்சிரம மனுதர்ம ஆட்சி ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
நிறுவப்பட்டால் இந்நாட்டுத் தமிழ் மக்களுடைய சுதந்திரம், வீரம், தன்மானம் ஆகியவை அடியோடு புதைக்கப்பட்டது என்பதுதான் கருத்தாகும்
ஹிந்தி வடமொழி பாஷையை தழுவியது என்பதோடு ஹிந்தி பாஷையின் எழுத்துக்கள் அநேகமாக வட மொழிக்கு ஏற்பட்ட எழுத்துக்களேயாகும். சப்தமும் பெரிதும் அதுவேயாகும். அப்பாஷையில் படிக்க வேண்டிய விஷயங்களும், படிக்க நேரும் விஷயங்களும் மனுதர்மத்தை ஆதரிக்க தூண்டும் விஷயங்களும் மனுதர்மப்படி நடக்கச் செய்யும் விஷயங்களுமேயாகும். தமிழ் நாடும் சிறப்பாக தமிழ்
மக்களும் இன்றுள்ள இந்த இழி நிலைக்கு அதாவது தன்மானமற்று, எதிரியைப் பணிந்தும், சார்ந்தும், வாழ்வு நடத்தும் மனப்பான்மை கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருப்பதற்குக் காரணம் ஆரிய சூழ்ச்சியால் மனுதர்ம முறையை ஒப்புக்கொண்டு இதுவரை வாழ்ந்து வந்ததேயாகும் ஏதோ இடைக்காலங்களில் அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழர்கள் தங்கள் நாட்டின் பழைய நிலைமையும், சமூகத்தின் பழந்தன்மையும், தங்கள் கலைகளின் உயர்வையும் ஓர் சிறிதாவது உணர்ந்து செய்து வந்த உண்மைத் தொண்டுகளினால் "தமிழர் ஆரியருக்கு அடிமைகளல்ல ஆரியருக்குத் தொண்டு செய்ய பிறந்தவரல்ல, ஆரியரின் போகப் பெண்டிர்களின் மக்களல்ல - சூத்திரர்களல்ல” என்று தலைநிமிர்ந்து பேசவும், பறை சாற்றவும் தமிழ் மக்களுக்கு உணர்த்தவுமான நிலை சற்று ஏற்பட்டும், மறைந்தும் மறுபடியும் தலைதூக்கியும் இப்படியே
நடந்து வந்திருக்கிறது
சைவரால் ஏற்பட்ட இழிவு பொதுவாக தமிழ் மக்களை இம்மாதிரியான ஆரியப் படுகுழியில் தள்ளி என்றும் தலை தூக்காமல் இருக்கத்தக்க வண்ணம் ஆரியருக்குத் துணைபுரிந்து வந்தவர்கள் - வருகிறவர்கள் சைவர்களேயாகும் அவர்களும், அவர்களது சைவ சமூகமே தமிழ்நாட்டில் ஆரியத்தை வளர்த்து ஆரியர்களுக்குத் தமிழர்களை அடிமையாக்கிற்று. இன்றும் பெரும்பாலும் சைவனேதான் ஆரியற்கு அனுமார், சுக்ரீவர்களாகவும், விபீஷணர்களாகவும் இருந்து வருகிறார்கள். இம்மாதிரி ஆரிய அடிமைச் சமய உணர்ச்சி ஏற்படாதிருந்திருக்குமானால் இன்று ஆரியருக்கு எந்நாட்டையும் விட இத்தமிழ் நாட்டில் மாத்திரம் இத்தனை சிறப்பும் மூர்க்க உணர்ச்சியும் ஏற்பட்டிருக்க முடியாதென்றே சொல்லலாம். எனவே ஆரியர்கள் நம் நாட்டில் சமயத்தின் பேரால் பெற்ற செல்வாக்கால் தான் சமூகத்தில் மேம்பாடடைந்தார்கள். சமூகத்தில் அடைந்த மேம்பாட்டால்தான் இன்று அரசியலில் ஆதிக்கம் பெற்றார்கள். அந்த அரசியல் ஆதிக்கத்தால்தான் நம்மை மநுமுறைக்கு தள்ளுகிறார்கள்.
குடி அரசு- 1938 (1) 362.
அப்படிப்பட்ட அவ்வாதிக்கத்திற்கு இன்றும் சைவர்களே பெரிதும் அனுமார்களாய் இருக்கிறார்கள் என்றால் சைவர்கள் தங்கள் அறிவற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டாமா என்று
கேட்கிறோம். உண்மைச் சைவர்களுக்கு கடுகளவாவது தன்மான
உணர்ச்சி ஏற்பட்டு தங்களுடைய சற்சூத்திர தத்துவத்தை சிறிதாவது
பின் வாங்கிக் கொள்ள அறிவு கொள்ளுவார்களேயானால் ஆச்சாரியாரின்
மூர்க்க ஆட்சி அன்றோடு அழியத் தொடங்கி விடும் என்பதில் யாதொரு
சந்தேகமும் கொள்ள இடமில்லை என்று உறுதி கூறலாம். அந்த உணர்ச்சி
சைவர்களுக்கு சுலபத்தில் ஏற்படாது என்கின்ற தைரியத்தாலேயே இன்று
ஆச்சாரியார் இவ்வளவு துணிச்சலுடனும், மூர்க்க உணர்ச்சியுடனும்
காரியாதிகள் செய்ய முடிகின்றன.
ஹரிஜனப் பட்டம் ஏன்? உதாரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு “ஹரிஜனங்கள்'' என்று பெயரிடவும், அது இன்று அரசியல் ஆதாரத்திலும் இடம் பெறவுமான அகந்தை ஏற்பட இடம் கொடுத்தவர்கள் சைவர்களேயாவார்கள்.
மற்றும் சமீபத்தில் தமிழ் மக்களின் மரியாதைக் குறிப்புக்காக பொதுவாக மகாராஜ ராஜஸ்ரீ என்று இருந்ததை மாற்றி ஸ்ரீ என்று வைணவ குறிப்பை தமிழ்நாட்டில் அரசியல் ஆதாரத்தில் வைத்துக் கொண்டதுமான காரியங்கள் இன்று ஏன் என்று கூட கேட்பாரற்றுக் கிடப்பதற்கு யார் பொறுப்பாளி என்று பார்த்தால் விளங்காமல் போகாது
மற்றும் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை
ஒழிக்கச் செய்த முயற்சிகளுக்கெல்லாம் சைவர்களே குறுக்கே விழுந்து
ஆரியத்துக்கு ஆக்கம் தேடிக் கொடுத்து வந்திருப்பதற்கு பல உதாரணங்கள் கூறலாம்
இன்று சைவர்களின் தெய்வங்கள், வழிபாடு, பூசை முறைகள்.
மற்றும் புராணம் சரித்திரம் கதைகள் பெரும்பாலும் ஆரியத்தை ஒட்டியதாகவே இருந்து வருவதற்குச் சைவர்கள் இசைந்து கொண்டு ஏதோ சில தனிப்பட்ட தங்கள் தனிக்காரியங்களுக்குத் தடை ஏற்படும் போது மாத்திரம் ஆரியன் கண்டாய் - தமிழன் கண்டாய் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள்.
இக்காரியங்கள் மற்ற வேறு வகைகளில் தொல்லை கொடுத்து
மக்களை இழிவுபடுத்துவது ஒருபுறமிருந்தாலும் இன்று அரசியலில் ஆதிக்கம் பெற்றுத் தமிழர்களின் தன்மானம் சரித்திரத்திலும் சித்திரத்திலும் இடம்பெற இடமில்லாத மாதிரியில் அழிவுறச் செய்து வருவதை ஒழிக்கவாவது சைவர்கள் துணை புரியக் கூடாதா என்றுதான் கதருகிறோம். @ வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஹிந்தி இஷ்டப் பாடமாகவாவது ஏன்?
ஹிந்தி பாஷை கட்டாய பாடமாகக் கூடாது என்பதுதான் இன்று தமிழ் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறதே தவிர மற்றபடி ஹிந்தி பாஷை தமிழர்கள் பள்ளியில் இஷ்டப் பாடமாகவாவது ஏன் நுழைய வேண்டும்? என்று கேட்பதற்கு இதுவரை எந்தத் தமிழனும் முன்வரவில்லை. இங்கிலீஷ் ஏன் வந்தது தமிழன் பள்ளியில் எப்படி நுழைந்தது என்று சிலர் கேட்கலாம். இங்கிலீஷை கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷை பரப்பினவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷால். பயனடைந்தவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷைப் புகுத்த உத்திரவு போட்டது பிரிட்டிஷார். ஆதலால் இங்கிலீஷ் தமிழர்கள் பள்ளியில் புகுந்ததற்கு தமிழர்கள் கிறிதும் பொறுப்பாளிகள் அல்ல. இங்கிலீஷின் உதவியில் ஆட்சி ஆதிக்கத்தைக் கைப்பற்றிய ஆரியர்கள் தங்களைத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு எதற்காக மற்றொரு அன்னிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு பள்ளிகளில் புகுத்த வேண்டும். அதுவும் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்பதுதான் நமது கேள்வியாகும் எவ்வளவோ அதிருப்தியையும், எதிர்ப்பையும், கெஞ்சுதல்களையும், பிரார்த்தனைகளையும் சிறிதும் லட்சியம் செய்யாது ஹிந்தியைத் தமிழன் பள்ளியில் தமிழன் வரிப்பணத்தில் தமிழன் சம்மதமின்றி புகுத்த உத்தரவு போட்டாய்விட்டது
இனி என்ன செய்வது? முஸ்லிம்களைப் பாருங்கள்
இனி என்ன செய்வது என்பதுதான் நாம் பெரிதும் கவனிக்க வேண்டியதாகும். தமிழர்களில் ஒற்றுமையும் ஒன்றுபட்ட முயற்சியும் இன்மையே இன்றைய ஹிந்தி பலாத்காரத்திற்கு ஆதாரமாகும். ஏன் என்றால் முஸ்லிம்கள் ஒற்றுமையும் ஒன்றுபட்ட முயற்சியும் ஆச்சாரியாரின் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் சிதறடித்து விடவில்லையா என்று பாருங்கள்.
**வந்தே மாதரம்? எங்கே?
வந்தே மாதரப் பாட்டு ஹிந்திபோல் புதிதாகக் கொண்டு வந்து நுழைக்கப்பட்டதல்ல. இந்திய தேசீயம் என்பதில் இரண்டறக் கலந்ததாகும் என்று சொல்லப்பட்டது. வந்தே மாதரப் பாட்டை நிறுத்துவது என்பது பாரத மாதாவைக் கொலை செய்வதாகும் என்றும் சொல்லப்பட்டது வந்தே மாதரப் பாட்டுக்கு எதிர்ப்பாய் மார்ச்சு 5 -ந் தேதி சத்தியாக்கிரகம் செய்யப்படும் என்று பிப்ரவரி மாதம் 7 -ந் தேதி சென்னை மெயிலில் ஒரு ஒத்தை முஸ்லிம் வாலிபர் தோழர் எஸ்.எஸ். பாமனி சாயபு தெரியப்படுத்தியவுடன் ஆச்சாரியார் மார்ச் 1-ந் தேதியிலேயே வந்தே மாதரப் பாட்டை நிறுத்திவிட்டதாக விளம்பரப்படுத்தி விட்டார்.
குடி அரசு- 1938 (1) 364
மற்றும் “ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமையை பூரண சுயராஜ்யம் பெறுவதற்கு முன் முடியாது” என்று காந்தியார் வட்டமேஜை
மகாநாட்டில் சொன்னார்.
மற்றும் “மூஸ்லிம் லீக்கை ஒரு ஸ்தாபனமாக ஒப்புக் கொள்ள முடியாது என்று தோழர் ஜவாஹர்லால் சொன்னார்.
வெற்றி பெற்ற மமதையில் அவரே “வேறு கட்சிகளுடன் சமாதானம் செய்து கொண்டு சுயராஜ்யம் பெறுவதைவிட சுயராஜ்யம் தூரமாகிவிட்டாலும் குற்றமில்லை” என்று சொன்னார். அதே நேருவே “ஜனாப் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தலைவரல்ல" என்று சொன்னார். முஸ்லிம்களின். ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட முயற்சியாலும் இன்று அவ்வளவு வீரர்களும் அவர்களது வீரமும் ஜனாப் ஜின்னா வீட்டு வாயிலில் அடிபணிந்து விடவில்லையா என்று கேட்கின்றோம். ஆனால் அதே வீரர்களால் இன்று தமிழன் வீரத்தை மடத்தனம் என்று சொல்லப்படுகிறது
தமிழன் கிளர்ச்சியை அடக்க அடக்கு முறை கோரப்படுகிறது தமிழன் எதிர்ப்பை சாராயப்புட்டி போட்டு குடிவெறி என்று காட்டப்படுகிறது தமிழன் பட்டினி கிடந்து உயிர்விடுவது மூர்க்கத்தனமென்றும் போக்கிரித்தனமென்றும் கூறப்படுகிறது. அதுவும் தோழர் காந்தியாலும், கனம் ஆச்சாரியாராலும் சொல்லப்படுகின்றது என்றால் தமிழர்கள் இனியும் உயிர்வாழ வேண்டுமா என்று கேட்பதோடு தமிழனுக்கு மானமுண்டு என்று சொல்லிக் கொண்டு வெளியில் தலைகாட்ட இடமுண்டா என்று கேட்க வேண்டியிருக்கிறது
காந்தி பட்டினி மர்மம்
தோழர் காந்தியார் ஜெயிலில் அடைபட்டபோது மனப்பூர்த்தியாக வேண்டுமென்றே ஜெயிலில் இருந்து வெளிவர ஒருதடவை பட்டினி
இருந்தார். அதாவது தனக்கு “ஹரிஜன சேவை செய்ய வசதி அளிக்க வேண்டும்” என்று பட்டினி இருந்தார். சர்க்கார் எவ்வளவோ வசதி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தும் “காலை முதல் இரவுவரை தன்னிடம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து போக வசதி இருக்கும்படி ஜெயில் கதவுகள் திறந்திருக்க வேண்டும்” என்று பட்டினி இருந்தார். அந்தப் பட்டினியால் சர்க்கார் காந்தியாரை வெளியில் விட்டு விட்டார்கள். இந்த பட்டினி காந்தியார் தன்னை பரிசுத்தம் செய்து கொள்வதற்காக இருந்தாரா? ஒரு குறிப்பிட்ட காரியத்தை அடைய எதிரிகள் இடமிருந்து இஷ்டமில்லாததை பலாத்காரமாய் தட்டிப் பறிக்க பட்டினி இருந்தாரா? என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
மற்றும் வட்டமேஜை மகாநாடு நடத்தையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சர்க்காரிடம் இருந்து பெற்று வந்த ஒரு சுதந்திரத்தைப் பறிக்க 65— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சாகும் வரை பட்டினி என்று பட்டினி கிடந்தார். அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுநாளாக தவமிருந்து பெற்ற தனித்தொகுதி உரிமை ஒரு வாரத்தில் பிடுங்கப்பட்டுப் போயிற்று. இதனால் காந்தியார் தன்னைச்
சுத்தம் செய்து கொள்ள பட்டினி இருந்தாரா அல்லது ஒரு சமூகத்தாரின். உயிர் போன்ற உரிமையை பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளப் பட்டினி கிடந்தாரா என்று யோசிக்கும்படி வேண்டுகிறோம்
மற்றும் இந்த 5, 6 வருஷ காலமாக இந்திய நாட்டில் எத்தனை பேர்கள் பட்டினி கிடந்திருக்கிறார்கள். அவர்களில் அனேகரை காந்தியாரே கேட்டுக் கொண்டு பட்டினியை நிறுத்தும்படி செய்திருக்கிறார். இவர்களை எல்லாம் பார்த்து அவர்களது பட்டினி பலாத்காரமானது என்ற காரணத்தைச் சொல்லிதான் நிறுத்தச் சொன்னாரா? என்று கேட்கிறோம். இவற்றை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இன்று 30 நாட்களாக ஹிந்தி கூடாது என்று சென்னையில் பட்டினி கிடக்கும் தோழர் ஸ்டாலின். ஜெகதீசன் அவர்களது பட்டினியைப்பற்றி தோழர் காந்தியார் “இந்த பட்டினியானது வடிகட்டின பலாத்காரம்” என்றும் “அதற்குச் சிறிதும் இணங்கக் கூடாது என்றும் தந்தி கொடுத்திருக்கிறார். என்றால் சுதேசமித்திரனும் இதை ஆதரித்து இந்த மாதிரி பட்டினிக்கு இணங்கக் கூடாது என்று எழுதுவது என்றால் மற்றும் சில பார்ப்பனப் பத்திரிக்கைகளும் பார்ப்பனரல்லாத மானங்கெட்ட கூலிப் பத்திரிக்கைகளும் “இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட முடியாது” என்று எழுதுவது என்றால் தோழர் ஆச்சாரியாரும் காந்தியார் பட்டினி தன்னைப் பரிசுத்தம் செய்து கொள்ளத்தக்கது என்றும் மற்றவர்கள் பட்டினி கலவரத்தை உண்டாக்கத்தக்கது என்றும் சொல்லுவதால் இதைக் குறிப்பிட்டோம் என்பதோடு இவர்களுடைய அகம்பாவமும் அயோக்கியத்தனமும் எப்படிப்பட்டது என்பதையும் தமிழர்கள் எப்படி நடந்தால் இவர்களுக்கு
புத்தி கற்பிக்க முடியும் என்பதையும் ஒவ்வொரு தமிழ் மகனையும் சிந்தித்துப்
பார்த்துச் செயலில் இறக்கும்படி வேண்டிக் கொள்வதற்காகவும் எழுதுகிறோம்
ராஜி முயற்சி
மற்றும் சில தமிழ் மக்கள் ஆச்சாரியாருக்கும், தோழர் ஸ்டாலின் ஜெகதீசனுக்கும் ராஜி செய்ய முயற்சிப்பதாக வெளிவந்து ராஜி நிபந்தனையாக “ஹிந்தியை கட்டாய பாடமாக வைக்கப்படுமே ஒழிய அதில் பரீட்சை வைக்காமலே மற்ற படிப்புகளில் மாத்திரம் தேறி இருந்தால் மேல் வகுப்புக்கு அனுப்பப்படும்” என்று ஆச்சாரியார் ஒப்புக்கொள்வதாகச் சொல்லி ராஜி பேசுகிறார்கள். ஹிந்தியை பரீட்சை வைப்பதில்லை என்று கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் 3 மாதத்திற்கு முன்பே ஈரோட்டில் சொல்லிவிட்டார். இதில் ஆச்சாரியார் தயவு என்ன வேண்டியிருக்கிறது என்பது விளங்கவில்லை. என்னவானாலும்
குடி அரசு- 1938 (1) 366
ஆச்சாரியார் பிடிவாதம் சிறிதும் குறையவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்பிடிவாதத்தை தமிழர்கள் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட முயற்சியாலும் தான் ஒழிக்க வேண்டியிருக்கிறது இதற்காகவே 28.5.38ல் திருச்சியில் ஒரு கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஹிந்தியை ஒழிக்கப் போர் தொடுக்க பல முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
பலாத்காரப் புரவி.
அம்முறைகளுக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்து போரில் இறங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் நீங்காக் கடமையாகும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும் என்பதாக வேண்டிக் கொள்ளுகிறோம். போரில் காந்தியார் மிரட்டும் பலாத்காரத்தைப் பற்றி எவரும் கவலைப்படக் கூடாது. பலாத்காரத்துக்கு இந்த உலகில் காந்தியார் மாத்திரமே பாஷியக்காரரென்று கருதும் முட்டாள் கோஷ்டியில் நாம் சேர்ந்தவரல்ல. உண்மையில் பலாத்காரம் என்றால் சரீரத்திற்கு நோவுண்டாகும்படி செய்வதும் மனிதனுடைய சரீர பலத்தை மற்றொரு மனித சரீரத்தின் மீது பிரயோகிப்பதையுமே நாம் பலாத்காரம் என்று கருதுகிறோம். அப்பேர்ப்பட்ட பலாத்காரம் நமக்கு சுமார் 20 - வருஷமாகவே கூடாத - கண்டிப்பாய் கூடாத காரியமாய் இருந்து வருகிறது. நாம் வகுக்கும் எந்த போர் முறையிலும் இம்மாதிரி பலாத்காரத்தை அறவே வெறுத்தும் நீக்கியும் வந்திருக்கிறோம். ஆதலால். திருச்சி போர் முறையானது இப்படிப்பட்ட பலாத்காரமில்லாமல் மற்றபடி எப்படிப்பட்ட முறையானாலும் அதற்கு தமிழ் மக்கள் இசைந்து ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 29.05.1938
67— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தமிழர் போர் மூண்டுவிட்டது எதற்காக? தமிழுக்காக
தமிழர் தன்மானத்துக்காக தமிழர் அறிவு, கலை, வீரம் ஆகியவற்றிற்காக, எனவே
தமிழா உன் கடமை என்ன?
மாதம் 75 ரூபாய் காசுக்கு எதிரியின் காலை நக்குவதா? அற்ப பதவிக்காக சகலத்தையும் உதிர்த்து தமிழை, தமிழனை, தமிழ்நாட்டை காட்டிக்கொடுத்துவிட்டு வளையல் போட்டுக்கொண்டு முக்காட்டிட்டு மூலையில் குந்தி இருப்பதா? சீச்சீ இது சிற்றினப் பிழைப்பல்லவா?
மற்றென்ன உன் கடமை?
எதிரியின் கூட்டுறவை ஒழி.
வீரத்துடன் வெளியில் வந்து மார்தட்டு.
கிளர்ச்சிப் போரில் முன்னணியில் நில்லு.
எதிரி வெட்கப்பட, அறிவு பெற, ஓடி ஒழிய
உன் உயிர்விடத் தயாராகு.
இவை உன்னால் ஆகாவிட்டால் காசுகொடுத்து ஆதரித்து நீ தமிழன் என்பதையாவது கட்டிக்கொள்.
குடி அரசு - அறிவிப்பு - 29.05.1938
குடி அரசு- 1938 (1) 368
ஹிந்திப் போர்
ஹிந்திப்போர் ஆரம்பமாகி விட்டது. ஹிந்தி எதிர்ப்பாளர் மூவர் சிறைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டு விட்டது இருவர் ஜாமீனில் விடப்பட்டிருக்கின்றனர். இவைகள் எல்லாம் எதிர்பார்க்கப்பட்டவைகளே. சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டு நிருவாகக் கமிட்டியார் இவைகளையெல்லாம் எதிர்பார்த்தே முடிவு செய்திருக்கிறார்கள். நிர்வாகக் கமிட்டியார் நியமனம் செய்த சென்னை சர்வாதிகாரி தோழர் ஸி.டி. நாயகத்துக்குப் பதிலாக யார் சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவார் என்றும் மேற்கொண்டு என்ன நடக்குமென்றும் தெரியவில்லை. இதற்கிடையில், காங்கரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திர போஸ் ஹிந்தி எதிர்ப்புத் தகவல்களைப் பூரணமாகத் தமக்கு தெரிவிக்க வேண்டுமென்று, ஹிந்தி எதிர்ப்பு சர்வாதிகாரி தோழர் ஸி.டி நாயகத்தை எழுத்து மூலம் கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு தோழர்
ஸி.டி. நாயகம் ஏற்கனவே பதிலனுப்பிவிட்டதாகவும் காங்கரஸ் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. தோழர் ஸி.டி நாயகம் தோழர் சுபாஷ் போசுக்கு அனுப்பிய பதிலில் காங்கரஸ் தலைவர் சென்னைக்கு வந்து ஹிந்தி எதிர்ப்பின் வன்மையை நேரில் உணர வேண்டுமென்றும், இது விஷயமாக ஒரு முடிவு ஏற்படும்வரை ஹிந்தி கட்டாய பாட விஷயமாக எதுவும் செய்யக் கூடாதென்று கனம் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டிருப்பதாக காங்கரஸ் பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால் இது விஷயமாக நமக்கு இன்று வரை ஹிந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியிடமிருந்து எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை. எனவே பிரஸ்தாப விஷயமாக
நாம் எதுவும் கூறமுடியவில்லை. தோழர் சுபாஷ்போஸ் மெய்யாகவே தோழர் ஸி.டி. நாயகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தால் சென்னை காங்கரஸ் சர்க்கார் ஹிந்தி எதிர்ப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திருப்பார்களா. என்ற சந்தேகமும் நமக்கு உண்டாகிறது. காங்கரஸ் ராஜ்யத்திலே சர்வ ஜனங்களுக்கும் பூரணமான பிரஜா சுதந்திரங்கள் - இருந்து வரும் என: காங்கரஸ்காரர்கள் விளம்பரம் செய்தனர்; செய்கின்றனர். ஆனால் அவர்களது பிரஜா சுதந்தரம் எத்தன்மையது என்பதை சென்னை மெயிலைப் போலவே நம்மாலும் உணர முடியவில்லை. ஒருக்கால் அவர்கள் கூறும் பிரஜா சுதந்தரம் காங்கரஸ்காரருக்கு மட்டும்தான்.
39 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
உண்டா? சமீபத்தில் சென்னையில் கிராம்பு மறியல் நடைபெற்றது மாகாண காங்கரஸ் தலைவர் ஆதரவிலேயே அந்த மறியல் போர் நடைபெற்றது. விவசாய மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் அந்த மறியல் போரைக் கண்ணுற்றார்.
ஆனால் அந்த மறியல்காரர் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே காங்கரஸ் சர்க்கார் பிரஜா சுதந்தரத்துக்கு வழங்கியிருக்கும் பொருள் நமக்கு மர்மமாகவே இருக்கிறது. ஹிந்தி
எதிர்ப்புப் போர் அனாவசியமாகவும், அக்கிரமமாகவும் தொடங்கப்பட்டதல்ல. காங்கரஸ் மந்திரிகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகளை காங்கரஸ் காரியக் கமிட்டியே நிர்ணயம் செய்யுமெனச் சொல்லப்படுகிறது பொதுபாஷை ஒரு அகில இந்தியப் பிரச்சினை. சென்னை மாகாணத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. தேசீய பொது பாஷையைப்பற்றி அகில இந்திய காங்கரஸ் கமிட்டியார் இதுகாறும் முடிவு செய்யவே இல்லை. ஹரிபுரா காங்கரசிலும்கூட தேசீய பொதுப்பாஷை விஷயம் பரிசீலனை செய்யப்படவில்லை. சென்ற பொதுத் தேர்தலுக்கு மூன், தேசீய பொது பாஷையைப்பற்றி காங்கரஸ்காரர் ஒரு வார்த்தையாவது பேசவுமில்லை எனவே திடும் பிரவேசமாய் ஹிந்தியை தமிழ் நாட்டில் புகுத்தப் போவது நேர்மையே அல்ல. இது பல ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டு முடிவுகள் மூலம் சென்னை காங்கரஸ் சர்க்காருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹிந்திக்கு தென்னாட்டில் இருந்து வரும் எதிர்ப்பின் வன்மை காங்கரஸ். சர்க்காருக்குத் தெரியாததுமல்ல. ஹிந்தி கட்டாயப் பாட விஷயமாக சென்னை முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியாரும், கல்வி மந்திரி கனம் டாக்டர் சுப்பராயனும் தம் அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு வந்திருப்பதே ஹிந்தி எதிர்ப்பின் வன்மையை சென்னை காங்கரஸ் மந்திரிகள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சி. ஈரோடு பொதுக் கூட்டத்தில் கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் பேசுகையில் ஹிந்தியில் பரீட்சை நடத்தப் போவதில்லையென்று கூறினார். சென்னை மாகாணம் முழுவதும் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கப் போவதாகக் கூறிய கனம் முதன்மந்திரி 125 பள்ளிக் கூடங்களிலே பரிக்ஷார்த்தமாக ஹிந்தியைக் கட்டாய பாடமாக்கப் போவதாகவும் ஹிந்திப் பரீட்சையில் மார்க்கு வாங்காதவர்களும் மற்றப் பாடங்களில் போதிய அளவுக்கு மார்க்கு வாங்கியிருந்தால் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என்றும் இப்பொழுது கூறுகிறார். கல்வி மந்திரி ஹிந்தியில் பரீட்சையே நடத்தப்படமாட்டாது என்று கூறியிருக்கையில் ஹிந்திப் பரீட்சையில். மார்க்கு வாங்காதவர்களும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என. கனம் முதன்மந்திரியார் கூறுவதின் மர்மம் என்ன? இதனால் ஹிந்தி விஷயமாக பிரதம மந்திரிக்கோ, கல்வி மந்திரிக்கோ திடமான கொள்கை இல்லை என்பது விளங்கவில்லையா? சென்னை மாகாண மாணவ மாணவிகளின் க்ஷேமத்தைப் பாதிக்கக் கூடிய கல்வி விஷயத்தில்
குடி அரசு- 1938 (1) 370
இம்மாதிரி வழவழாக் கொள்கையைக் காங்கரஸ் மந்திரிகள் பின்பற்றுவது நேர்மையாகுமா? தென்னாட்டு மக்களில் 100க்கு 93 பேர் எழுத்து வாசனை இல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறது. தாய் மொழிப் பயிற்சியிலேயே சென்னை மாகாணம் இவ்வளவு மோசமாக இருந்து வருகையில் ஹிந்தி கட்டாய பாடத்தைச் சென்னை மாகாண சிறுவர், சிறுமியர் தலையில் ஏற்றுவது என்ன நீதி? சென்னை மாகாணக் கல்வியின்மையைப் போக்க சென்னை பிரதம மந்திரி ஏன் முயற்சி செய்யவில்லை? கல்வியின்மையைப் போக்க வேண்டியதல்லவா. பொறுப்புடைய ஒரு மந்திரியின் முதல் வேலை. ஐக்கிய மாகாணத்திலே கல்வியின்மையைப் போக்க 10 - லக்ஷம் ரூபாய் ஒதுக்கிவைத்து வேலைகள் நடைபெற்று வருவதை சென்னைப் பிரதம மந்திரி அறியாரா?
கல்வி விஷயத்தில் ஐக்கிய மாகாண மந்திரி ஒரு விதமாகவும், சென்னை மாகாண மந்திரி வேறு விதமாகவும் நடப்பது காங்கரஸ் கொள்கைக்குப் பொருத்தமாக இருக்கிறதா? முக்கியமான விஷயங்களில் காங்கரஸ் மாகாணங்கள் எல்லாம் ஒரே மாதிரிக் கொள்கையையே பின்பற்றும் எனக் கூறப்படுவது சென்னை மாகாணத்துக்கு மட்டும் பொருந்தாதா? எப்படிப் பார்த்தாலும் சரி, சென்னை முதல் மந்திரியார் போக்கு ஆதரிக்கக் கூடியதே அல்ல. ஆகவே சென்னை மாகாண தமிழர் மகாநாட்டு. நிருவாகக் கமிட்டியார் முடிவுகளை நிறைவேற்றி வைப்பதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே நிர்வாகக் கமிட்டியார் கட்டளைப்படி நடக்க தென்னாட்டார் தயாராக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.06.1938
நட ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
பழிக்குப் பழிவாங்கும்
பார்ப்பனர் ஆட்சி
- பார்ப்பனனல்லாதான்
தமிழ்நாட்டு அரசர்கள் பலதடவைகள் வடநாட்டுப் பார்ப்பன அரசர்களின் மேல் படை எடுத்துப் பார்ப்பன அரசர்களை முறியடித்து வெற்றிமாலை சூடி இருக்கின்றார்கள். இது கலிங்கத்துப்பரணி போன்ற பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்தால் தெள்ளிதின் விளங்கும். நந்தமிழர் தமிழ் நூல்களில் நல்ல தேர்ச்சி பெறாமலும், சிறிது தேர்ச்சிப் பெற்றாலும் பிராமண-புராண மூடபக்தியின் மிகுதியால் பகுத்தறிவு கொண்டு ஆராயாமலும் தளரவிட்டதினால் தான், உலகம் புகழ்ந்த நந்தமிழ் நாடு பலமின்றிப் பாழ்த்து வருகின்றது. பார்ப்பன அரசர்களை நம் வீரத்தமிழ் நாட்டரசர்கள் பல தடவைகளில் போரில் வென்று விறற்கொடி ஏற்றி இருக்கின்றார்கள். உதாரணமாக:-
ஒரு சமயம் வடநாடுகளில் ஒன்றில் ஏதோ ஒரு விசேட
சந்தர்ப்பத்தில் பல பார்ப்பன அரசர்கள் சேர்ந்திருந்தார்கள். அவர்களில் பிரபலஸ்தர்கள் கனகன், விஜயன் என்னும் இருவர். இவர்கள் எல்லோரும் உண்டுகளித்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும்போது, தென்னிந்திய தண்டமிழ் அரசர்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தார்கள். அவர்களிலொருவன், தமிழரசர்களின் வீரப் பிரதாபங்களையும், போர்த் திறமைகளையும் பற்றிப் புகழ்ந்து பேசினான். உடனே கனகனுக்கும், விஜயனுக்கும் கோபம் வந்துவிட்டது. அவர்கள் '“முன் நம் ஆரிய அரசர்கள் மூடத் தனத்தினால் தோற்றுவிட்டார்கள். இப்பொழுது அந்த தமிழரசர்கள் படை எடுத்து வந்தால் அவர்களைப் புறமுதுகிட்டோடும்படி நாங்கள் அடித்து விடுவோம்'' என்று வீர வார்த்தை ததும்பப் பேசினார்கள். இந்த வார்த்தைகளைத் தமிழ் நாட்டிலிருந்து காசி முதலிய வடநாட்டு க்ஷேத்ர யாத்திரைச் சென்றிருந்த ஒருவன் கேட்டுக் கொண்டிருந்து திருப்பி
வந்து சேர ராஜனிடம் செப்பினான். உடனே சேர ராஜனுக்குக் கோபம் பிறந்து கண்கள் சிவக்க சின வார்த்தைகளால் சீறினான். இதைக்கண்ட அமைச்சன்(பார்ப்பனன்) தன் இனத்தாருக்கு ஆபத்து வந்ததென்றறிந்து அரசனைச் சமாதானப்படுத்த எண்ணி “அரசே! அவர்கள் தங்களைச்
குடி அரசு- 1938 (1) 372.
சொல்லவில்லை. முன் படை எடுத்துச் சென்று அவர்களை வாட்டிய பாண்டிய நாட்டரசனைத்தான் சொன்னார்கள்!” என்று வினயமாகப் புகன்றான். அரசன் முன்னிலும் மிக்க சினங்கொண்டு பாண்டியனை சொன்னாலென்ன, என்னைச் சொன்னாலென்ன? நாங்கள் தமிழ் நாட்டரசர்கள் தானே. இன்று பாண்டியனைச் சொன்னதுபோலத்தானே நாளை என்னையும் சொல்லுவார்கள். ஆகையால் நான் அவர்களை சும்மா விடமாட்டேன். அவர்களின் மேல் படை எடுத்துச் சென்று, பொருது வெற்றி பெற்று அவர்களைச் சிறைப்பிடித்து, அவர்களை இமயமலைக்கு அழைத்துச் சென்று அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து அவர்கள் தலைமீது வைத்துக்கொண்டு வந்து, கங்கை காவேரி நதிகளில் நீராட்டி அக்கல்லில் (கண்ணகி) காளி விக்கிரகம் செய்வேன். இல்லையேல் நான் வீரத்தமிழனல்ல. இது சத்தியம்” என்று தோட்கள் துடிக்க வீரம் பேசி, உடனே சண்டைக்குப் புறப்படும்படி சேனைகட் குத்தரவிட்டான். இதுவல்லவோ தமிழ்நாட்டின் தருமநெறி! (துஷ்ட நிக்ரக செளகரியம் சிஷ்ட பரிபாலன யோக்யம்) தமிழர்களின் ஒற்றுமை! உடனே சதுர்விதசேனைகளோடும் புறப்பட்டு வடநாடு சென்று போர்புரிந்து ஆரிய அரசர்களை எல்லாம் வென்று, கனகன், விஜயன் ஆகியவர்களைச் சிறைபிடித்து, இமயமலை சென்று அதைக் கடந்து அப்புறம் சென்று போர்புரிந்து வெற்றி பெற முடியாமையால், அம்மலையின் ஓர் பாறையில் தனது புலிக்கொடியைச் செதுக்கிவிட்டு, ஒரு கல்லை எடுத்து அப்பார்ப்பன அரசர்களின் தலைமேல் வைத்து சேரநாட்டிற்கு (மலையாளம்) சுமந்து வரும்படிச் செய்து அக்கல்லில் தான். (கண்ணகி) காளிவிக்கிரகம் செய்தான். இச்சரித்திர சம்பவம் தமிழரசர்களின். போர்த்திறமையையும் நாகரிகத்தையும், ஒற்றுமையையும் நன்றாய் விளக்குகின்றறன்றோ? இவ்விதமாக குமரி முதல் இமயம் வரை வியாபித்திருந்த தமிழர்களின் இராஜ்யம், பாஷை, நாகரிகம் முதலியவைகள் எப்படி அழிந்தன என்பது சிந்திக்கற் பாலதன்றோ? அது தான் ஆரியர்களின் வஞ்சகம்
மேலே சொல்லப்பட்ட தமிழர்களின் வீரத்தை அடக்க வேண்டுமென்று ஆரியர்கள் பலவித சூழ்ச்சிகள் செய்து தமிழர்களின் விரிந்த இராஜ்ஜியத்தையும், சிறந்த கலைகளையும் , மேலான நாகரிகத்தையும்
சிறுகச் சிறுகக் கெடுத்துவிட்டார்கள் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் விளங்காமல் போகாது
இந்து மதம்
இந்து மதம் என்பது பார்ப்பனர்கள் மற்றவர்களை அடக்கி ஆளவும் தாங்கள் எப்பொழுதும் சுகஜீவிகளாக இருக்கவும் பாப்ப்பனர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி நிறைந்த மதம் என்பது பல மேதாவிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டதாகும்
நந ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஹிந்தி பாஷை இது இறந்துபோன சமஸ்கிருதமாகிய பார்ப்பன பாஷையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் ஆரியக் கலைகளாகிய அடிமை கற்பிக்கும் கலைகளைக் கற்பித்து, சிறிது சுயமரியாதையடைந்த மக்களை மறுபடியும் அடிமைகளாக்கவும், மூடப்புராண பக்திகளால் இந்தியர்களை அந்நியருங்கண்டு நகைக்கக் கூடியவாறு மடையர்களாக்கவும் ஹிந்தி யென்னும் இலக்கண மில்லா பாஷையை மூரட்டு சப்தமுள்ள பாஷையை பார்ப்பனர்கள் வலியப் புகுத்துகின்றார்கள். தேசத்துக்கொரு பாஷை வேண்டுமென்றால் அது அடிமை கற்பிக்கும் பாஷையாகத்தான் இருக்கவேண்டுமா? பல ஜாதிகளைச் சொல்லி மனிதர்களைப் பிரித்துவைக்கும் பாஷையாகத்தான் இருக்கவேண்டுமா? சில லட்ச ஜனங்கள் பேசும் ஹிந்தி பாஷையை பல கோடி மக்கள் பழக வேண்டுமென்று சொல்லுவானேன்? அதிலும் நம் தண்டமிழ் நாட்டினரை நிர்ப்பந்தப்படுத்துவானேன்? தமிழரசர்கள் ஆரியர்களின் இராஜ்ஜியம், பாஷை முதலியவற்றை அழித்தார்கள் என்னும் வஞ்சந்தீர்க்கவா? தமிழன்பர்களே! இதைச் சிந்தித்துப் பாருங்கள்
ராம ராஜ்ஜியம் இப்பொழுது காங்கரஸ் தலைவர்கள் சுயராஜ்யம் என்றால் ராம ராஜ்ஜியந்தான் என்று சொல்லுவது எல்லோருக்கும் தெரிந்ததே இராமராஜ்ஜியம் என்றால் பார்ப்பன ஜாதிக்கு மிக்க அனுகூலமான சட்டங்களால் ஏற்படுத்தப்பட்ட இராஜாங்கமுறையுள்ள இராஜ்ஜியம் என்பது இராமாயணத்தை பகுத்தறிவோடு நடுநின்று படிப்போர்க்கு நன்றாய் விளங்கும். எப்படி எனில், பார்ப்பனரல்லாதான் (சம்புகன்) ஒருவன் தவம் செய்துக்கொண்டிருந்தான். அது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. உடனே இராமனை இழிவாகப் பேசி அந்த தவ சிரேஷ்டன்மேல் ஏவ, இராமன் அந்த பார்ப்பனனல்லாதானைக் கொன்றுவிட்டான். இவ்விதமான பார்ப்பனர்களுக்கு அனுகூலமான இராம ராஜ்ஜிய நீதிமுறைகளைக் கொண்ட சுயராஜ்ஜியம் அமைக்க வேண்டுமாம். இப்படிப்பட்ட சுயராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்குத் தானே அனுகூலம் ஜாதிப்பிரிவினை போதிக்கும் இராம ராஜ்ஜியம் இந்துமத ராஜ்ஜியம் என்பதில் என்ன சந்தேகம். ஹிந்து மதத்தை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள். ஆகையால் இராஜாங்கமும் பார்ப்பனர்களுடையதே!
அரசர்
மேற்கூறிய காரணங்களால் மக்கள் ஹிந்து மதத்திற்கும், ஹிந்தி பாஷைக்கும், இராம ராஜ்ஜியத்திற்கும் அடிமைப்பட்டு மூட பக்தி கொண்டவுடன் ஆரியன் (பார்ப்பனன்) தான் அரசனாவான் என்பதில்
குடி அரசு- 1938 (1) 374
என்ன சந்தேகம்? வேண்டுமானால் இப்பொழுதிருக்கும் காங்கரஸ் சபையின் போக்கைப் பாருங்கள். பதவி பெற்ற ஏழு மாகாணங்களில் ஆறு மாகாணங்களில் ஆரியர்கள் முதன் மந்திரிகள். சுயராஜ்ஜியமாகிய ராம ராஜ்ஜியம் வந்துவிட்டால் இந்தியாவிலிருக்கும் மாகாணங்கள் முழுவதிலும் ஆரியர்களின் ஆதிக்கம் வலுத்துவிடும் என்பதிலேதாவது சந்தேக முண்டா? ஆரியர்களின் ஆதிக்கம் வலுத்தவுடன் ஆரியன் தான் அரசனாகவோ, பிரசிடெண்டாகவோ, சர்வாதிகாரியாகவோ வருவான் என்பதில் எட்டுணையும் சந்தேகமில்லை. அப்படி வந்தவுடன் பழைய மனுதர்மச் சட்டம் தான் ராஜாங்க சட்டமாகும் என்பதில் ஏதேனும் சந்தேகம் உண்டா? சென்னை கார்பொரேஷனில் தலைமை உபாத்தியாயர்களின் நியமனத்தையும், மாட்டு வைத்திய இலாகா உத்தியோக நியமனத்தையும் பாருங்கள்-பார்ப்பன அதிகாரத்தை. இவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால், பார்ப்பனர்கள் இழந்துபோன தங்கள் இராஜ்யம், மதம், பாஷை முதலியவைகளை மறுபடியும் பெற சூழ்ச்சி செய்கின்றார்கள் என்பது நன்றாய் விளங்காமற் போகாது. இதற்கெல்லாம் அஸ்திவாரம் பாஷை. பாஷை ஆரியமாக
இருந்தால் மற்ற நடைமுறைகளும் அதைத் தழுவித்தானே இருக்கும் ஆகவே, பார்ப்பனர்கள் இழந்துபோன தங்கள் இராஜ்யம்,மதம் , பாஷை முதலியவைகளை மறுபடியும் அடைய வேண்டி ஹிந்தி பாஷையைக் கட்டாயமாகப் புகுத்துவதால், தமிழர் மேலும் பார்ப்பனரல்லாத மற்ற. இந்தியர் மேலும் ஆதிக்கம் செலுத்தி பழிக்குப் பழி வாங்க பார்ப்பனர்கள் ஹிந்தி பாஷை மூலம் அஸ்திவாரம் போடுகின்றார்கள் என்பது நன்றாய் விளங்குகின்ற தன்றோ. பார்ப்பனரல்லாத இந்தியர்களே! தண்டமிழர்களே! நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் ?
எந்தத் தென்நாட்டு காங்கரஸ்காரர் வடநாடு சென்று காங்கரஸுக்குப் பணம் வசூலித்திருக்கிறார்கள். வடநாட்டுக்காரர்கள் தானே தென்நாட்டில் வந்து பணம் வசூலித்துக் கொண்டு செல்லுகின்றார்கள். (தென்நாட்டுத் தரகர்களாகிய) கனம் ஆச்சாரியார், மகாகனம் சீனிவாச சாஸ்திரியார், தோழர் சத்தியமூர்த்தி, தோழர் சீனிவாச ஐயங்கார் போன்றவர்கள் வடநாட்டார்களை வரவழைத்து, தென்நாட்டிலுள்ள ஏமாந்த பணக்காரர்களாகிய நம்மனோரைக் காட்டிக்கொடுத்துப் பணம் பறித்துச் சென்று விடுகின்றார்கள். தென்நாட்டுப் பிரமுகர்கள் வடநாடு சென்று பணம் வசூலிக்க லாயக்கற்றவர்களா? வடநாட்டில் மேடைப்பிரசங்கஞ் செய்ய ஆற்றலற்றவர்களா? ஏன் இவர்களை அடக்கியே வைத்திருக்கின்றார்கள்? “கழுதைக்கு உள் ஏறி காட்டக்கூடாது” என்பதற் கிணங்க இவர்களுக்கு வடநாட்டுக்கு வழிகாட்டிவிட்டால் பிறகு பார்ப்பனர்களுக்கு மதிப்பிருக்கா தென்பதினாலா? இதை எல்லாம் காங்கரஸிலிருக்கும் நம் பார்ப்பனரல்லாத சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சில காலம் காங்கரஸ் 35 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
கட்சியில் சேர்ந்து தேச விடுதலைக்காக உடல், பொருள், ஆவியாலும் உழைத்து பார்ப்பன தந்திர-வஞ்சக உண்மை அறியும் சமயத்தில் பார்ப்பனரல்லாதாரைக் காங்கரஸிலிருந்து விரட்டி விடுகின்றார்கள் இவ்விதம் விரட்டி அடிக்கப்படும் உண்மைத் தியாகிகளில் சாமி வெங்கடாஜலம் செட்டியாரும் ஒருவர். சாமி வெங்கடாசலம் செட்டியாருக்கு சத்தியமூர்த்தி கொடுத்திருக்கும் சவுக்கடி அதிக சுருக்கென்றிருக்கின்றது உண்மையிலேயே இவர் கதியைப் பற்றி மிக வருந்த வேண்டியது தான். மெச்சத்தக்கத் தியாகம், நீண்ட அரசியல் அனுபவம், தாய்நாட்டு விடுதலையே தன் மானமாகக் கொண்ட இத்தகைய பெரியார்களின் கதியே இப்படியென்றால் மற்ற பார்ப்பனரல்லாதாரின் கதி காங்கரஸ் கட்டுப்பாட்டில் என்னாகும் என்பதை நினைக்க பயங்கரமாயிருக்கின்றதல்லவா? ஆகையால் பார்ப்பனரல்லாத தோழர்களே! தமிழர்களே! பழிக்குப் பழி வாங்கும் பார்ப்பன ஆட்சியை சிந்தித்துப் பாருங்கள்! வீறு கொண்டெழுங்கள்! தண்டமிழைக் காப்பாற்றுங்கள்!
குடி அரசு - கட்டுரை - 05.06.1938
குடி அரசு- 1938 (1) 376
ஆச்சாரியார் அறிக்கை
ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அசோசியேட்டட் பிரஸ் நிருபருக்கு பேட்டி அளித்து பேசியதில்
இப்போது உள்ள ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் இருந்து தாம் செய்து கொள்ள வேண்டிய முடிவானது “தமிழ் இருப்பதா ஒழிவதா என்பது அல்ல'' வென்றும்,
ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான தமக்கு இந்நாட்டு மக்களுக்கு தாராளமான முறையில் (தன் இஷ்டப்படி) கல்வி போதிக்க அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்றும்,
இந்நாட்டை ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தான் (சி.ஆர். ஆச்சாரியார், ப-ர்) ஆளுவதா அல்லது சிலருடைய மிரட்டுதலுக்குப் பயந்து விட்டு விட்டுப் போய்விடுவதா என்பதையும் ஒரு கை பார்த்து
விடப் போவதாகவும் சொல்லி வீர கர்ஜனை புரிந்து இதை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யச் செய்திருக்கிறார்.
நமது கவலை என்ன?
ஆகவே இதிலிருந்து இன்றைய தினம் கனம் ஆச்சாரியார் அவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாய பாடமாக ஆக்கும் காரியம் அவ்வளவு முக்கியமானதல்லவென்பதும், தனக்குள்ள அதிகாரம், பலம், சுதந்திரம் எவ்வளவு என்பதை முடிவு செய்வதற்காகவே இந்த ஹிந்தி பிரச்சினையை கைக் கொண்டிருப்பதாகவும் நன்றாய் விளங்குகிறது
ஆனால் நமது கவலையும் கருத்தும் அதுவல்ல. ஆச்சாரியாருக்கு சர்வ வல்லமை இருப்பதும் அவர் நினைத்த காரியத்தைச் சாதிக்கக் கூடிய ஆற்றலும் இருப்பதும் நமக்கு நன்றாய்த் தெரியும். எப்படியெனில் அவர் கையில் போதுமான அளவுக்கு மேற்பட்ட தமிழ் அடிமை மக்கள் தாராளமாய் இருக்கிறார்கள். அதாவது கனம் தோழர்கள் டாக்டர் சுப்பராயன், ராமநாதன், சுப்பய்யா, சுப்பிரமணியம், அண்ணாமலை போன்ற ஆள்கள் ஆச்சாரியார் என்ன சொன்னாலும் ஆதரிக்கவும், கை
தூக்கவும் (His Master's Voice) ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் என்பதுபோல் ஆச்சாரியார் சொன்னதையும் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே
377 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
உருக்குலையாமல் தங்கள் வாயினால் தங்கள் பொறுப்பில் என்று சொல்லவும் 100-க் கணக்கான மக்கள் இருக்கும்போது அவர் இரண்டிலொன்று பார்த்துவிடுகிறேன் என்று சொல்லுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கனம் ஆச்சாரியார் தனது வலிமை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள ஹிந்தி பிரச்சினையை விட்டு விட்டு வேறு பிரச்சினையை கைக் கொள்வாரானால் நமக்குச் சிறிதும் கவலை இல்லை என்பதோடு ஆச்சாரியாருக்கு சர்வசக்தியும் வல்லமையும் இருப்பதாக ஒப்புக் கொள்ள நமக்கு ஆக்ஷ்பணையுமில்லை. அப்படிக்கு இல்லாமல் ஒரு சமூகத்தையே அடியோடு நாசம் செய்து அழிக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு அதை செய்து மூடிக்க எனக்குச் சக்தி இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிடுகிறேன் என்று சபதம் கூறுவாரேயானால், அது மிகவும் கவலையையும், துன்பத்தையும், தொல்லையையும் கொடுக்கக் கூடிய காரியமாகத்தான் முடியுமே ஒழிய வீரப்பிரதாபத்தின் பரிகைஷைக்கு அளவு கருவியாக இருக்க முடியாதென்றே கருதுகிறோம்
ஆச்சாரியார் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா?
ஆச்சாரியார் பிரதம மந்திரியானாலும் ஒப்பற்ற ஒரே தனி மந்திரியானாலும் அல்லது சர்வாதிகாரமுள்ள தன்னாட்சி உள்ள ஏகபோக சக்கரவர்த்தியேயானாலும் அவர் இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களான (100க்கு 97 பேர்களான) பழங்குடி மக்களுக்கு அன்னியப்பட்ட ஒரு பார்ப்பனர் - அதுவும் ஆரியப் பார்ப்பனர் என்பதையும் அதிலும் ஆரிய மதம், ஆரியக்கலை, ஆரியப்பழக்கவழக்கம் ஆகியவைகளில் குரங்குப் பிடிவாதமுள்ள ஒரு வகுப்பைச் சேர்ந்த - ஒரு கருத்தை - கொள்கையைக் கொண்ட ஒரு அன்னிய மனிதன் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம். மற்றும் இந்நாட்டு ஜனங்களால் ஆச்சாரியார் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டு விடவில்லை என்றும் ஆச்சாரியாரே சென்ற வருடத்தில் தனக்கு மந்திரி வேலை கிடைக்காமல் போய்விட்ட காரணத்தால் ஏற்பட்ட கோபத்தில் இந்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களையே கழுதைகள், கழுதைகளுக்கு சமானமானவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டுச் சொன்னதை ஆச்சாரியாரே மறந்திருக்க மாட்டார் என்றும் கருதுகிறோம். ஆகையால் இந்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டதாலேயே அவர்கள் எல்லாம் அதிகாரம் செய்யச் சொல்லுகிறதா இல்லையா என்று இரண்டிலொன்றைப் பார்த்துவிட தகுதி உடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அதிலும் ஆச்சாரியார் போன்றவர்கள் தங்களை இந்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற பாத்தியம் கொண்டாடுவது சிறிதும் பொருத்தமற்றதேயாகும். ஏனெனில் ஆச்சாரியாரை தமிழ் மக்களோ, பொதுமக்களோ தெரிந்து எடுத்துவிடவில்லை.
அவர் , பார்ப்பனர்களே 100 - க்கு 75 பேர்கள் கொண்ட பட்டதாரிகள்
குடி அரசு- 1938 (1) 378
தொகுதியில் தெரிந்தெடுக்கப்பட்டவர். ஆச்சாரியாருக்கு அடிபணிந்து கைதூக்கி, வாய் உதடாய் இருந்து வாழும் பெரும்பான்மைத் தமிழ் மக்களும் மனிதர்கள் என்கின்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல. மற்றென்னவென்றால் “கூனாய் இருந்தாலும், குருடாயிருந்தாலும், மரக்கட்டையானாலும், கழுதையானாலும், மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற பிரசாரத்திற்கு ஆளாகி மத உணர்ச்சியில் மஞ்சள் பெட்டியை தெரிந்தெடுத்த முறையில் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாவார்கள். இந்த நிலையில் எப்படி தனது பதவியை ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மனிதனின் பதவி என்று சொல்லிக் கொள்ளக்கூடும் என்று கேட்கின்றோம் அப்படியேதான் ஆகட்டும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே அவர்களது ஆக்கினைகளுக்கெல்லாம் மக்கள் கீழ்ப்படிய வேண்டியது கண்டிப்பு என்றும் அவசியம் என்றும் ஆச்சாரியார் சொல்லுகிறாரா என்பதை அறிய ஆசைப்படுகிறோம்.
அப்படியானால் ஆச்சாரியார் ஆட்சிக்கு மூன் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் நடத்திவந்த காரியங்களையெல்லாம் ஆச்சாரியார் தலை வணங்கி ஏற்று அதன்படி நடந்து வந்தாரா என்று கேட்கின்றோம்
தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய மந்திரிகளுக்கு ஆச்சாரியார்
கீழ்ப்படிந்தரரா?
ஆச்சாரியார் பதவி ஏற்ற பின்பாவது தாம் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரானதால் தமது ஆக்கினை செல்லுகிறதா இல்லையா என்பதை “வந்தே மாதரப் பாட்டில்” ஏன் ஒரு கை பார்க்கவில்லை என்று கேட்கின்றோம்
மற்றும் கனம் ஆச்சாரியார் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்கின்ற விஷயத்தில் சந்தேகமற உறுதி கொண்டு தமது அதிகாரம் செல்லுகிறதா இல்லையா? என்பதை உண்மையில் அறிய ஆசைப்பட ஒரு ஆண்மை உள்ள வீரரானால் சென்னை மாகாணம் பூராவும் ஹிந்தியை புகுத்த முடிவு கொண்ட அவர் 125 பள்ளிக்கூடத்துக்கு மாத்திரம் குறைத்து கொள்வானேன்? கட்டாய பாடம் என்று சொன்னவர் பரிகைஷ இல்லை என்று சொல்வானேன்? முஸ்லிம்கள் உருதுவில் படிக்கலாம் என்று சொல்லுவானேன்? ஹிந்தி என்கின்ற உச்சரிப்பை மாற்றி ஹிந்துஸ்தானி என்று உச்சரிப்பானேன்? கூடுமானவரை தங்களுக்கு அதிக்கமுள்ள பள்ளிகளை மாத்திரம் பொறுக்கி எடுத்து அதில் வைக்கச் சொல்லுவானேன்? எல்லோருக்குமாக என்று ஆரம்பித்த ஹிந்தி 1, 2, 3 பாரங்களுக்கு மாத்திரம் என்று மாற்றப்படுவானேன்?
தேசீயத்துக்காக ஹிந்தி படிக்கவேண்டும் என்று சொன்ன ஆச்சாரியார் கல்விமுறை பூர்த்தி அடைய ஹிந்தி அவசியம் என்று 39 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சொல்லுவானேன்?
முன்பு ஹிந்தியை நாகரி லிபியில் படித்தாக வேண்டும் என்று சொன்ன ஆச்சாரியார் பின்பு முஸ்லிம்கள் உருதுவிலும், ஹிந்துக்கள். நாகரியிலும் படிக்க வேண்டும் என்று சொல்லுவானேன்?
பிறகு இன்று 9 -ம் தேதி அசோசியேட் பிரஸ் நிருபருக்கு அளித்த அதே பேட்டியில் எந்த மாணவரும் “எந்த எழுத்தில் வேண்டுமானாலும் அதாவது நாகரியிலோ, உருதுவிலோ கற்கலாம்” என்று சொல்லுவானேன் என்பவைகளையெல்லாம் பார்த்தால் ஆச்சாரியார் தமக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிறதை பார்த்து விடுவதற்காக ஹிந்தி பிரச்சினை வைத்திருக்கிறாரா அல்லது நடந்த வரையில் மக்கள் ஏமாந்த வரையில் பார்ப்போம் என்று கருதி எப்படியாவது ஹிந்தியை இன்று புகுத்திவிட்டால் மற்ற காரியத்தை நாளை சிறிதுச் சிறிதாக சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறாரா என்று கேட்கின்றோம். கடைசியாக, தாம் ஆட்சி நடத்துவதா விட்டுவிட்டுப் போய்விடுவதா என்பதைப் பார்த்து விடுவதாக வீரம் கூறுகிறார்.
ஆட்சிமுறையை சீர்திருத்த சட்டத்தை அழித்துவிட்டுப் போவதாக வாக்களித்து ஓட்டுப்பெற்று பதவி பெற்ற ஆச்சாரியார், ஆட்சி நடத்த முடிகிறதா இல்லையா சீர்திருத்த சட்டப்படி அதிகாரம் செய்ய முடிகிறதா இல்லையா என்பதை ஓட்டர்களிடம் ஒரு கை பார்ப்பதாகக் கூறும் இவர் உண்மையில் ஒரு வீரராக இருக்க முடியுமா? அல்லது கோழை வஞ்சகராக இருக்க முடியுமா என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.
ஆச்சாமியார் வீரப்பிரதாபம் ஒருபுறமிருக்கட்டும்
ஆச்சாரியாரின் வீரப்பிரதாபம் ஒருபுறமிருக்கட்டும். அவரது நல்லெண்ணத்தையும் நாணையத்தையும் பற்றி யோசிப்போம். மெயில். பத்திரிகை குறிப்பிட்டதுபோல் தாய்ப்பாஷை தெரியாத மக்கள் 100
-க்கு 93 பேர் இருக்கிற தமிழ்நாட்டில் அந்த பாஷையை, தமிழை, எல்லோருக்கும் கட்டாய இலவச பாஷையாக ஆச்சாரியார் ஆக்காமல் ஒருசில குழந்தைகளுக்கு அன்னிய - ஆரிய பாஷையைப் பணம் கொடுத்து கட்டாயமாக படிக்கும்படிசெய்வதின் கருத்து என்ன என்று கேட்கின்றோம்.
நாடு பூராவும் ஒரு பாஷையைப் பொது பாஷையாக சிலர் கற்றாக வேண்டுமென்றால் அந்நாட்டுமக்களின் தாய்பாஷை என்ன கதி அடைந்து அதை எல்லோரும் படிக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று யோசித்துப்பார்த்தால் ஆச்சாரியார் தமிழ் மக்களுக்கு அவர்களது தாய்பாஷையைக் கற்றுக்கொடுக்கவோ காப்பாற்றவோ தனக்கு அதிகமான கவலை இருக்கிறது என்று சொல்லுவதில் யோக்கியமோ: ஒழுக்கமோ இருக்கிறதா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்
குடி அரசு- 1938 (1) 350
தமிழ் பாஷையை ஆரியப்பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்ததாலேயே இன்று 100-க்கு 33 வார்த்தைகள் ஆரிய பாஷையை கலக்காமல் பேச முடியவில்லை என்றால் இனி ஆரிய பாஷையை கட்டாயமாக ஆரிய உபாத்தியாயர்களே கற்றுக்கொடுப்பதானால் அதன் மூலம் தமிழ் பாஷையில் இனியும் ஒரு 33 விகிதம் ஆரிய பாஷை தமிழ் பேச்சில் கலந்து விடாதா என்று கேட்கின்றோம்,
இன்று 100க்கு ஒருவர் இருவர் ஆங்கிலம் படித்திருப்பதாலேயே தமிழ் பாஷை கிராமங்களில் கூட 100-க்கு 10, 15 ஆங்கில வார்த்தை
கலக்காமல் பேசமுடியவில்லை என்றால் இந்த எல்லா பாஷைகளும் இனியும் குழப்பப்படுமானால் தமிழில் என்ன மீதியாகும் என்று கேட்கின்றோம்
இந்த நிலையில் கனம் ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாய் 10, 11, 12 வயது குழந்தைகளுக்குப் புகுத்தினால் தமிழ் சிறிதும் கெடாது என்கிறாரே, இது தெரியாமல் பேசுகிறாரா அல்லது தெரிந்தே மக்களை வஞ்சிக்க பேசுகிறாரா என்று கேட்கின்றோம்.
பாஷஹைத் தொல்லை ஓருபுறமிருக்கட்டும்
பாஷைத் தொல்லை ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் மக்கள் ஹிந்தி கட்டாய பாட விஷயத்தில் தங்களுடைய அதிருப்தியை காட்டிக் கொண்டால் அவர்களை அடக்குமுறை கொண்டு அடக்குவானேன் என்று கேட்கின்றோம். கனம் ஆச்சாரியார் ஹிந்தியை தோழர் ராமசாமி ஒருவர்தான் எதிர்க்கிறார் என்று சட்டசபையில் சொன்னார். ஆகவே ஆச்சாரியார் ஹிந்தியை பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். அதை அவர் அறியும்படி செய்ய அதாவது தோழர் ராமசாமியைத் தவிர வேறு 'சிலராவது' எதிர்க்கிறார்கள் என்பதை ஆச்சாரியார் அறிய வேண்டும் என்பதற்காக மக்கள் மூயற்சி செய்தால் அது சட்ட விரோதமா? என்று கேட்கிறோம். அதுவும் யாருக்கும் எவ்வித அசெளகரியம் விளைவிக்காமல், முனிசிபாலிட்டி ரோட்டில் டிச்சி ஓரத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தோ நின்று கொண்டிருந்தோ விளக்குவது சட்டவிரோதமா என்று கேட்கின்றோம். இதுவரை இக்காரியத்துக்காக சுமார் 30 பேர்களுக்கு மேல் கைதி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சாரியார் ஆட்சி பிரஜா உரிமை, சாவதானமான கிளர்ச்சி உரிமை உடைய ஜனநாயக ஆட்சியா என்று கேட்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தெருவில் ஓரத்தில் பேசாமல் நின்று இருப்பது சட்டவிரோதமானால், போனவாரத்தில் காங்கரஸ்காரர்கள் கிறாம்பு பகிஷ்காரம் என்னும் பேரால் வண்டியின் சக்கரத்தடியில் படுத்து மறித்தும் கடைகளின் மூன் நின்று கிராம்பு வாங்குபவர்களை வாங்க வொட்டாமல் தடுத்து மறியல் செய்ததும் சட்டத்துக்கு கட்டுப்பட்ட காரியமா என்று கேட்கின்றோம். B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
எனவே இப்படிப்பட்ட ஆச்சாரியார் ஆட்சியானது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டது என்கின்ற காரணத்தாலேயே எதுவும் செய்து விடலாம் என்றும் செய்ய முடிகிறதா இல்லையா என்றும் ஒரு கை பார்த்து விடப் போவதாகவும் பூச்சாண்டி காட்டினால் இதை எந்தத் தமிழ் மகன் லட்சியம் செய்வான் என்று கேட்கின்றோம்
ஆச்சாரியாருக்கு உள்ள வீரமும் உறுதியும் இரண்டிலொன்று பார்த்துவிடும் சூரத்தன்மையும் அதைத் தடுக்க முடியுமா முடியாதா? என்று பார்த்துவிட தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதை ஆச்சாரியார் உணர வேண்டுமாய் வணக்கமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.
அதுமாத்திரமல்ல. இந்தப் பிரச்சினையின் மூலம் இந்த நாட்டு வாழ்க்கை முறை தமிழ் முறையா ஆரிய முறையா என்பதை ஒரு கை பார்த்து விடுவதென்றே முடிவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கனம் ஆச்சாரியார் அவர்கள் அறிய வேண்டும் என்று பிறார்த்தித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 12.06.1938
குடி அரசு- 1938 (1) 382.
நீடாமங்கலத்துக்கு “நீதி?
நீடாமங்கலத்தில் 28-12-37ல் நடைபெற்ற காங்கரஸ்காரர்கள். மகாநாட்டில் நடந்த சாப்பாட்டு பந்தியில் சில ஆதிதிராவிட கிறிஸ்தவ தோழர்கள் உட்கார்ந்து சாப்பிட்டதற்காக அவர்களை அடித்துத் தொந்திரவு செய்து மொட்டை அடித்து அவமானப்படுத்தியதாக “விடுதலைப் பத்திரிகையில் வந்த செய்தியை அம்மகாநாட்டை நடத்திய பிரமுகர்கள் பொய் என்று மறுத்ததுடன் அச்செய்தி வெளியானதால் தனக்கு மான நஷ்டம் ஏற்பட்டு விட்டதென்று விடுதலைப் பத்திரிகை பிரசுரிப்பவர் மீதும், ஆசிரியர் மீதும் டிப்டி மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருந்ததும் அந்த வழக்கு சுமார் 4, 5 மாதமாக நடந்து வந்ததும் வாசகர்கள் அறிந்த விஷயமேயாகும். இந்த 4, 5 மாதமாக நடந்த வழக்கு சகல விசாரணையும் முடிந்த பிறகு இம்மாதம் 15தேதி முடிவு கூறப்பட்டது. அம்முடிவானது விடுதலை பிரசுரிப்பவரான தோழர்.
ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களுக்கு ரூ.200 அபராதமும் விடுதலை பத்திராதிபரான தோழர் பண்டித முத்துசாமிப் பிள்ளை அவர்களுக்கு ரூ.200 அபராதமுமாக தண்டனை விதித்து முடிவு பெற்றுவிட்டது.
இந்த வழக்கின் முடிவு இப்படித்தான் முடியலாம் என்று ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்லலாம். ஏனெனில் காங்கரஸ் தலைவர்களால் நடத்தப்பட்ட நடவடிக்கைகள் எதுவாய் இருந்தாலும் அதைத் குற்றமானதென்று காங்கரஸ் ராஜ்ஜியத்தில் ஒரு வேலை காயமில்லாத நீதிபதியிடம் இருந்து நீதி பெற்றுவிடலாம் என்று யாரும் கருதமாட்டார்கள். காங்கரஸ் பார்லிமெண்டரி செகரட்டரி என்பவர். பெட்டியேறி சரியாகவோ தப்பாகவோ ஒரு கட்சிக்குச் சார்பாய் சாட்சி சொல்லி இருக்கும்போதும் மற்றும் பல காங்கரஸ் தலைவர்கள்.
என்பவர்களும் ஒரு கட்சிக்கு அனுகூலமாய் சாட்சி சொல்லியிருக்கும்போதும்
ஒரு மேஜிஸ்ட்ரேட் நீதிபதி அதற்கு மாறாக முடிவு கூறுவதென்றால் இது சராசரி யோக்கியதையுள்ளவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாத காரியமேயாகும். ஆதலால்தான் இந்த முடிவு ஏற்கனவே பலரால் எதிர்பார்க்கப்பட்டதென்றே சொல்ல வேண்டியதாயிற்று. இந்த முடிவினால் யாரும் கலங்கவோ அல்லது நீடாமங்கலம் தோழர்களுக்கு 8 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
காங்கரஸ்காரர்கள் செய்த கொடுமை உண்மையற்றதாய் இருக்குமோ என்று யாராவது சந்தேகப்படவோ வேண்டியதில்லை என்பதை முதலில். தெரிவித்துக் கொள்ளுகிறோம்
எந்த தைரியத்தைக் கொண்டு அப்படிச் சொல்லுகிறோமென்றால் நீடாமங்கலம் சம்பவம் நடந்ததாக விடுதலை, குடி அரசு பத்திரிகைகளில். சேதி வந்தவுடன் அதன் உண்மையை விசாரிக்கச் சென்னை மாகாண தேவேந்திர வேளாள சங்கத்தார் உடனே ஒரு கூட்டம் கூடி இந்த விஷயத்தைப்பற்றி விசாரித்து முடிவு தெரிவிக்கும்படி ஒரு கமிட்டியை நியமித்துவிட்டார்கள். அக்கமிட்டியில் சாதாரண ஆள்களை நியமிக்காமல். அச்சங்கத்தின் மாகாண பிரசிடெண்டான தோழர் எம். பாலசுந்தரராஜ் அவர்களையும் அச்சங்கத்தின் காரியதரிசி தோழர் வி. ஐயராஜ் அவர்களையும் அக்கமிட்டியின் பொருளாளரும் காங்கரஸ் எம்.எல்.ஏ.யுமான. தோழர் எஸ்.சி. பாலகிருஷ்ணன் அவர்களையும் தமிழ்நாடு காங்கரஸ்கமிட்டி மெம்பரான தோழர் ஏ. அய்யனார் அவர்களையும் தோழர் ஜே தேவாசீர்வாதம், தோழர் எஸ்.வி. அக்கினிமுத்து ஆகியவர்களையும் நியமித்தார்கள். அக்கமிட்டியார் பிப்ரவரி -5 6-௨ நீடாமங்கலம் சென்று
நீடாமங்கலத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அநேக சாட்சிகளை முறைப்படி விசாரித்து சாட்சி பதிவு செய்து கவலையோடு ஆராய்ந்து
பார்த்து முடிவு எழுதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அவ்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் - இந்த கமிட்டியார் உடனே புறப்பட்டு போய் நீடாமங்கலம் முதலிய சுற்றுப்பக்கங்களில் விசாரித்ததில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உண்மையானது என்று தெரிந்தார்கள் என்பதாகவும் மற்றும்
கட்டி வைத்து அடித்ததைப்பற்றியும் மொட்டை அடிக்கப்பட்டதைப்பற்றியும் சாணிப்பால் ஊற்றி அவமானப் படுத்தப்பட்டதைப்பற்றியும் பலபேர்
சாட்சி சொன்னார்கள் என்றும் இதை மறைக்க பலர் முயற்சிப்பதாய் தெரிகிறதென்றும் சொல்லி இருக்கிறார்கள்.
எனவே இந்த விஷயம் நடந்தது உண்மையா பொய்யா என்பதில்
நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு கோர்ட் நடவடிக்கையில் நியாயம் கிடைக்காததால் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை
என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஷெ கேஸ் சம்மந்தமான கோர்ட் ஜட்ஜ்மெண்டை நாம் பார்க்காததால் அதன் உள் விஷயங்களைப் பற்றி
நாம் ஒன்றும் எழுத முற்படவில்லை என்றாலும் அந்த ஜட்ஜ்மெண்ட் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் நீடாமங்கலம் சம்பவம் சம்மந்தமாய்
ஒரு முடிவுக்கு வருவதை அது தடுக்கவில்லை என்றே கருதுகிறோம்
குடி அரசு- 1938 (1) 384
அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் “ஹிந்து” சமூகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத்துடன் வாழ முடியாது என்பதுடன் இம்மாதிரியான அவமானங்களுக்கும் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது என்பதேயாகும். அவமானப்பட்டு அடிபட்டு உதைபட்டு, துன்பப்பட்ட ஆட்களில் கிறிஸ்துவர்கள் அதிகமாய் இருந்துங்கூட அவர்களுக்கும் நியாயம் கிடைக்க முடியவில்லை. ஆனால் இவர்கள் முஸ்லிம்களாய் இருந்து இப்படிப்பட்ட அவமானம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரம் கிடைக்காமல் இருந்திருக்குமா என்பதை நீடாமங்கலம் ஆதி திராவிட தோழர்கள் சிந்தித்துப்பார்க்கும்படி வேண்டிக் கொண்டு இதை இப்போது முடிக்கிறோம். மற்றவை ஜட்ஜ்மெண்ட் பார்த்தபிறகு விளக்குவோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.06.1938
8 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆச்சாரியார் அடக்குமுறைக்கு ஜே!
இன்று இந்தியாவில் 7 மாகாணங்களில் நடப்பது காங்கரஸ் ஆட்சி. காங்கரசே சர்க்காராகவும் சட்டமாகவும் இருந்து, பெரும்பாலான ஓட்டுகளைக் கொண்டு வெற்றிபெற்ற பாத்தியதையால் நடத்தும் ஜனநாயக ஆட்சி, மற்றும் சுயராஜ்யத்தில் ஒரு சிறு பங்கு கிடைத்திருப்பதாகக் கருதி அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்கு இருக்கும் அதிகாரம் பூராவையும் செலுத்த பிரிட்டிஷாரிடம் அனுமதியும் “வாக்குறுதி“யும் பெற்று 100 - க்கு 85 வீதம் உள்ள மெஜாரிட்டி பலத்தில் நடத்தும் ஏகபோக ஆட்சியுமாகும். இப்படிப்பட்ட ஆட்சியில் காங்கரஸ்காரர்கள் செய்வது என்ன?
கொடுத்த கடன் செல்லாது, வாங்கின கடன் கொடுக்க வேண்டியதில்லை. மனப்பூர்வமாக சம்மதித்து எழுதிக் கொடுத்தபடி நடக்க வேண்டியதில்லை. நடக்கும்படி கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.
என்று சட்டம் செய்தாய்விட்டது. சமதர்மவாதிகள் பொது உடமை உணர்ச்சியாளர்கள் இதை ஆதரிக்கலாம். ஆனால் இந்த தனி உடமை ராஜ்யத்தில் கொடுக்கல் வாங்கல் நடக்க வேண்டுமே, அதற்கு சர்க்கார். என்னவழி செய்தார்கள்? இதன் மூலம் பணக்காரன் என்றும் பணக்காரனாய் இருக்கவும் ஏழை என்றும் ஏழையாய் இருக்கவும் உதவிபுரியும் (வருணாச்சிரம தர்மத்தைப் போல்) ஒரு பொருளாச்சிரம தர்மத்தை உண்டாக்கி விட்டார்கள்.
ஏழைகள் தலைதூக்க முடியுமா?
கொடுக்கல் வாங்கல் இல்லையானால் ஏழைகள் எப்படி முன்னேற்றமடைய முடியும்? கூலிக்காரனாய் இருக்கும் ஒரு குடியானவன் முன்னுக்கு வந்து அவன் ஒரு சிறு விவசாயி ஆகி பாடுபட்டு விவசாயம் செய்து அதிலிருந்து சிறிது மீத்தி அதைக்கொண்டு அரை ஏக்கராவோ ஒரு ஏக்கராவோ பூமி வாங்கி பிறகு அவன் ஒரு சொந்தப்பூமியுள்ள குடியானவன் ஆக வேண்டுமானால் அவனுக்கு ஒரு பத்து, ஐந்து ரூபாயாவது கடன் கிடைக்கும்படியான சவுகரியம் இருந்தால் தான் முடியும். ஆனால் காங்கரஸ்காரர்கள் இப்போது செய்திருக்கும் கடன் குறைப்பு சட்டத்தால் அதற்குச் சிறிதும் வழியில்லாமல் போய்விட்டது
குடி அரசு- 1938 (1) 386
குறைந்த வட்டியாவது கிடைக்கட்டும் என்று கடன் கொடுக்கவும் எவருக்கும் தைரியமில்லாமல் போய்விட்டது. ஏனெனில் இனி இவர்கள் (இந்த காங்கரஸ்காரர்கள்) நாளைக்கு என்ன சட்டம் செய்வார்களோ என்று பயந்து கையில் சிக்கிய பொருளைச் சர்க்கார் பாங்கியில் போடவோ புதைத்து வைக்கவோ தூண்டும்படி செய்துவிட்டது. இதனால் முதலாளிகளுக்குக் கஷ்டம் இல்லை என்றாலும் ஏழை விவசாயிகள் கூலி விவசாயிகள் நசுக்கப்பட்டார்கள் ஒழிக்கப்பட்டார்கள் என்பது தான் பலன்.
மதுவிலக்குப் பலன்:
மற்றும் சேலத்தில் (மாத்திரம்) மதுவை நிறுத்தினார்கள் என்ற பெயரை உண்டாக்கிக் கொண்டு அந்தச் சாக்கை வைத்துப் பல நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்களை மூடச் செய்தார்கள். பள்ளிக்கூட உதவித் தொகைகளை நிறுத்தினார்கள். போக்குவரத்து வசதி - கிராமக்
குடி தண்ணீர் வசதி - சுகாதார வசதி - வைத்திய வசதி ஆகியவைகளான உயிர் போன்ற ஜன வாழ்க்கை உரிமைகளையெல்லாம் ஒழித்து வருகிறார்கள்.
இவ்வளவு கஷ்டம் அனுபவித்தும் குடி ஒழிந்தபாடில்லாமல் ஒரு ஜில்லா குடி நிறுத்தத்துக்காக மற்ற 25 ஜில்லாக்களும், அந்த ஜில்லா நிருவாகத்துக்கும் குடி நிறுத்த மேற்பார்வைக்கும் வரி (செலவுக்குப் பணம்) கொடுக்கும்படியாகவும் சேலம் ஜில்லாவிலுள்ள குடிகாரர்கள் அதிகச் செலவு செய்து வெளி- எல்லை ஜில்லாக்களுக்குப் போய் குடித்துவிட்டு வரும்படியாகவும் இதனால் பல குடும்பங்கள் அரைக் கஞ்சி கால் கஞ்சியாவது குடித்து வந்த குடும்பங்கள் கூட்டோடு பிச்சை எடுக்கக் கிராமங்களுக்குப் போகும்படியாகவும் ஆகிவிட்டது.
இந்த இரண்டு காரியங்களையும் பற்றி கனம் ஆச்சாரியார் உண்மைக்கு மாறாக பிரசாரம் செய்யப் பல சூழ்ச்சி ஏற்பாடுகள் செய்து மக்களை ஏய்த்து வருகிறார். இது எப்படியோ போய்த் தொலையட்டும்
ஹிந்தி பேரால் அடக்குமுறை
ஹிந்தி பாஷை என்னும் ஆரிய பாஷையை தமிழ் மக்களுக்கு கட்டாயமாகப் புகுத்தியே தீருவேன் என்கின்ற மூர்க்கத்தனத்தில் இறங்கி அதற்காக இன்று தன்னுடைய கடைசி அடக்குமுறை ஆயுதத்தைப் பிரயோகித்து விட்டார்.
ஆச்சாரியாரின் புத்தி நுட்பத்தையும் சூழ்ச்சித் திறனையும் அறிந்தவர்கள் ஆச்சாரியார் இவ்வளவு சிக்கிரத்தில் இந்த நிலைக்கு வந்து விடுவார் என்றும், மற்றவர்கள் மீது இவர் குறை சொன்ன காரியங்களை எல்லாம் இவ்வளவு சீக்கிரத்தில் இவரே செய்து தீர வேண்டிய நிலைமைக்கு வந்துவிடுவார் என்றும் கருதி இருக்க மாட்டார்கள். ஆனால் மணல் வீடு - பொய்க்கோட்டை எவ்வளவு நாளைக்கு நிற்கும்?
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஆச்ளாரியார் மக்களுக்கு - நாட்டுக்கு நன்மை செய்யக் கவலையுடையவரானால்
- செய்ய வேண்டும் என்கின்ற நல்ல எண்ணம் உடையவரானால் - அவரது நல்வாழ்வு இன்னம் கொஞ்ச நாளைக்காவது இருக்க வேண்டாமா? என்கின்ற கவலையோடு யோசித்துப் பார்த்து எதையும் செய்ய மூன் வந்திருப்பார். அவர் எப்படியோ புரட்டு பித்தலாட்டம், தகிடுதத்தம் செய்தாவது பதவியைப் பெற்று மூன்று நாள் பதவியில் இருப்பதானாலும் அதற்குள் தமிழர்கள் வாழ்வுக்கு எவ்வளவு கேடு செய்யலாமோ அவ்வளவையும் செய்து ஆரியப்பார்ப்பனர் வாழ்வை வருண தர்மப்படி மேன்மையாக்கிவிட்டுப் போய்விடலாம் என்கின்ற முடிவில் இருக்கிறவர். ஆகவே அப்படிப்பட்டவர் இன்று எப்படியோ விழித்துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை எப்படி ஏய்க்க மூடியும்? அடக்கு முறையும் தடியடியும் கொடுங்கோல் ஆட்சியும் இல்லாமல் அவர் இனி அரை நாழிகையாவது எப்படி ஆதிக்கம் செலுத்த முடியும்? ஆதலால் இவ்வளவு சீக்கிரத்தில் அவரது ஆட்சி இந்தக் கதி அடைந்து விட்டது என்பதில் ஆச்சரியமில்லை.
ஆச்சாரியாருக்கு சில கேள்விகள்
ஆச்சாரியார் தமிழ்நாட்டு ஆட்சியில் தலைமை மந்திரி ஸ்தானம் வகிப்பவர். போலீசு இலாகாவும் உள்நாடு இலாகாவும் பொருளாதார இலாகாவும் தனக்கே என்று தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறவர். மற்ற இலாக்காக்களையும் தன் காலடியில் வைத்து மிதித்துக்கொண்டு, தனது அடிமை போன்றவர்களைக் கொண்டு நடத்தி வரும் ஏகபோக சர்வாதிகாரியாக இருப்பவர். இப்படிப்பட்ட இவர் இம் மாதம் 16-ந் தேதி சென்னைக் கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டி அதில் தாம் பேசப்போவதாக விளம்பரம் செய்து, உள்ளூர் பொது ஜனங்கள் எல்லோரையும் வரும்படி அழைத்த கூட்டத்திற்குத் தாம் வருவதற்கு முன்பே 100 குதிரைப் படையையும் 600, 700 போலீஸ் படையையும் வரவழைத்து வைத்துக் கொண்டு பின்புறமாக ரகசியமாக மாளிகைபோல் கட்டப்பட்ட மேடையில் தோன்றி பேச ஆரம்பிப்பாரானால் அதுவும் பேசுவதற்கு முன்பே கூட்டத்தில் குதிரைப்படையை விரட்டி கூட்டத்தைக் கலைத்து பொது ஜனங்களை ஓட ஓட போலீசாரால் குறுந்தடி கொண்டு.
அடித்துத் துரத்தி விட்டு தனக்கு வேண்டிய ஒரு சிலரை வெறும் பார்ப்பனராக மாத்திரம் வைத்துக்கொண்டு கூட்டம் நடத்திவிட்டு கூட்டத்தை முறைப்படி கூட முடிக்காமல் வளையம் போட்ட போலீஸ் காவலுடனே கார் ஏறி ஓடுவாரானால் பொதுஜன நன்மதிப்புப் பெற்ற ஜனநாயக மந்திரி என்று தம்மை இன்னமும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறாரா என்று கேட்கிறோம்.
அதுதான் போகட்டும். தாமும் தமது பிரதம சிஷ்யரும் தம்மை விளம்பரப்படுத்தும் விளம்பரம் மந்திரியுமான கனம் ராமநாதன்
குடி அரசு- 1938 (1) 388
அவர்களும் செல்லுமிடங்களிலெல்லாம் எதிர்ப்பும் பகிஷ்காரமும் குழப்பமும் கூட்டங்களிலெல்லாம் மண்மாரியும், செருப்புமாரியும், வசைமாரியும் கடுமழை போல் பெய்யும்போதும் கனம் ஆச்சாரியார் தம்மை இன்னமும் பொது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்றும், தம்மை இன்னமும் பொது ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும், பொது ஜன நம்பிக்கைக்குத் தாம் பாத்திரமானவர் என்றும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறாரா என்று கேட்கின்றோம்.
யொது ஜனங்கன் பதில்
ஆச்சாரியார் ஹிந்தியைக் கட்டாய பாடமாக்குவேன் என்றார். பொது ஜனங்கள் கூடாது என்று கிளர்ச்சி செய்தார்கள். ஆச்சாரியார் இதைப் பொது ஜன கிளர்ச்சி அல்ல என்றும் இது ஒரு தனி மனிதன். (ராமசாமி) கிளர்ச்சி என்றும் சொல்லி ஏய்க்கப் பார்த்தார். பொது ஜனங்கள் இதற்கு பதில் சொல்லுவதற்காக இது ஒரு மனிதன் (ராமசாமி) கிளர்ச்சி அல்ல, பொது ஜனங்கள் கிளர்ச்சி என்று காட்டுவதற்காக ஆச்சாரியார் முன் தங்களைக் காட்டிக் கொள்ளுகிறார்கள்
இதற்கு ஆச்சாரியார் செய்ய வேண்டிய பதில் ஹிந்திக் கிளர்ச்சி பொது ஜனக்கிளர்ச்சி என்பதை ஒப்புக் கொண்டேன் என்று யோக்கியமாய்
ஒப்புக் கொள்ள வேண்டியதேயாகும். அதை விடுத்து தடியடியும், குதிரைக் குளம்பு மிதியும், அக்கிரம அநியாய சட்டப்பிரயோகமும் செய்து சிறைத் தண்டனையும் சொத்துப் பறிமுதலும் ஆகிய அடக்குமுறைகளால் இக் கிளர்ச்சியை ஒழித்துவிடப் பார்த்தால், இதை பொறுத்துக் கொண்டிருப்பது ஹிந்தியை கட்டாய பாடமாய் நுழைப்பதால் ஏற்படும் கெடுதியை - ஆபத்தைவிட இது ஒரு பெரும் ஆபத்து அல்லவா என்று கேட்கின்றோம்
ஹிந்தி எதிர்ப்புக்காக இது வரை 100 பேர்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே சிறு சட்டங்களால் தண்டிக்கப்பட்டவர்கள்.
சுமார் 10, 15 பேர்கள் போக இப்போது அடக்குமுறைச் சட்டத்தின்படி 10, 15 பேர்கள் 3 மாத காலத்துக்கு கடின காவலும் 4 மாத காலத்துக்குக் கடின காவலுமாய்த் தண்டிக்கப்பட்டாய் விட்டது.
சிறை புகுவோர் நோக்கம்
பாக்கிப் பேர்களும், இனியும் கைது செய்யப்படப் போகும் ஆயிரக்கணக்கான பேர்களும் இது போலவே இன்னம் அதிகமாகவும் தண்டிக்கப்படலாம். “தூண்டுபவர்கள்” என்கின்ற பேரால் பலர் வருஷக் கணக்கில் தண்டிக்கப்படலாம். அதனால் எதுவும் முழுகிப் போய்விடும் என்று நாம் கருதவில்லை. “தமிழ் மக்கள் கோழைகள் - ஜெயில் என்கின்ற தியாகத்துக்குப் பயந்தவர்கள்” என்று காங்கரஸ் பார்ப்பனர்களும் 0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
அவர்களது கூலிகளும் குலாம்களும் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது வடிகட்டின அயோக்கியத்தனமான கூப்பாடு என்பதாக மெய்பிக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் ஏற்பட்டதென்றே நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால் அதற்காக வேண்டி பலாத்காரம் செய்ய வேண்டுமென்றோ மற்ற மக்களுக்குச் சட்ட விரோதமான முறையில் மனத் தாங்கல் ஏற்படும்படியான காரியங்கள் செய்ய வேண்டுமென்றோ யார் மீதும் யாருக்கும் அனாவசியமான வெறுப்பும் துவேஷமும் ஏற்படும்படி நடக்க வேண்டும் என்றோ நாம் சிறிதும் கருத மாட்டோம் என்பதோடு அந்தப்படி யாரும் நடக்கக் கூடாது என்றும் மிகக் கண்டிப்பாய் கூறுவோம் ஆனால் இந்த சர்க்கார் அல்லது காங்கரசு, அல்லது ஆச்சாரியார்.
எந்த அளவுக்குப் பொது ஜனங்களை அனுசரித்து - அடக்கு முறை இல்லாமல் யோக்கியமான முறையில் அன்பு கொண்டு நல்ல எண்ணத்துடன் நன்மையான காரியம் செய்து ஆட்சி புரிகிறார்கள்
என்பதையும், இதற்கு முன் இருந்தவர்கள் எந்த முறையில் இவருக்கு ஒழிக்கப்பட - அழிக்கப்பட - புதைக்கப்பட வேண்டியவர்கள் ஆனார்கள் என்பதையும் பொது ஜனங்கள் உணருவதற்கேற்றபடி உண்மையை வெளிப்படுத்துவதற்குத் தகுந்தபடி நம்மாலான காரியங்களைச் செய்து தருவதுடன் ஒவ்வொரு தமிழ் மகனும் தன்னாலான காரியத்தைச் செய்ய வேண்டியது அவரவர் கடமை என்று சொல்ல பின் வாங்க மாட்டோம்.
எதிர்ப்பாளர் செய்த குற்றம் இதுவரை நடந்த கேசு விசாரணையில் ஆச்சாரியார் பக்கம், அதாவது சர்க்கார் பக்கம் ஒவ்வொரு கேசுக்கும் இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் சர்க்கார் ஆள்களே. அதாவது ஆச்சாரியார் தான் நினைத்த உடன் ஒரு மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கிவிடத்தக்க மாதிரியில் தன் கீழ் உள்ள (போலீஸ்) இலாகாவில் சிக்குண்ட ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு கான்ஸ்டபிளுமேயாகும். அவர்கள் சொன்ன விஷயங்களோ “இவன் (இந்தத் தொண்டன்) தமிழ் வாழ்க! என்ற அட்டைக் கொடியை கையில் வைத்துக்கொண்டு ஆச்சாரியார் வீட்டுக்குப் பக்கத்தில் நின்று தமிழ் வாழ்க ஹிந்தி ஒழிக என்று கூச்சல் போட்டான்” என்று தான் சொன்னார்கள். அதுவே அந்தச் சட்டப்படி குற்றமாகிறதாம்
அதற்கு 3 மாத 4 மாத கடின காவல் தண்டனையாம். சாட்சிகள் உண்மையையே சொல்லி இருக்கலாம். நீதிபதி சட்டப்படி சரியாய் நடந்திருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளுவோம். ஆனால் இந்தக் காரியம் தர்ம நியாயமானதா என்று கேட்கிறோம். அடக்கு முறையை ஒழித்து பிரஜா உரிமையைக் காப்பாற்ற வந்த தர்மராஜ்ய பிரபாகரர்களாகியவர்களின் ராமராஜ்ஜிய தர்பார் இது தானா என்று கேட்கிறோம்
குடி அரசு- 1938 (1) 300
“சைமன் கமிஷன் ஒழிக” “சைமனே திரும்பிப் போ” என்று ஊர் முழுவதும் கூத்தாடினார்கள். சைமன் கமிஷன் முன்னேற வொட்டாமல் முன் நின்று தடுத்தார்கள். இன்னும் இப்படி எத்தனையோ செய்தார்கள். இவை பிரஜா உரிமை இல்லாத அடக்கு முறை ஆட்சியில் நடக்க இடம் கொடுக்கப்பட்டவையாகும்.
கிராம்பு பகிஷ்காரம்
ஆச்சாரியாரின் தர்ம ராஜ்யத்தில் சென்ற மாதத்தில் நடந்த கிராம்பு பகிஷ்காரம், கிராம்பு வண்டி சக்கரத்தின் கீழ்படுத்துக் கொண்டு வண்டியைப் போகவொட்டாமல் தடுத்து, கிராம்பு வாங்குகிறவனை: வாங்க வொட்டாமல் தடுத்தது, ஆகிய காரியங்கள் இந்தச் சர்க்காரில் இந்தச் சட்டத்தின் கீழ் வருவதில்லை என்றால் - இதை இந்தப் போலீசார் தடுக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் - ஆச்சாரியாரின் நல்ல ஆட்சிக்கும் பண்டித ஜவஹர்லாலின் பிரஜா உரிமைக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம் ஆகவே இக்கொடுமைகளை ஒழித்துத் தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்பாற்ற நீண்ட போர் தொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. 10000 பதினாயிரம் பேராவது சிறை செல்லாமல் தமிழ் மக்களுக்குச் செய்யப்படும் மாபெரும் கேடுகளும் அக்கிரம சட்டங்களும் அநியாய அடக்கு முறைகளும் ஒரு நாளும் ஒழியாது என்பதாகவே கருத வேண்டியதாய் விட்டது. சிறை செல்லத் தொண்டர்கள் பஞ்சமில்லை என்றே தெரிகிறது. மற்றபடி பணம் தான். அவசியமாகத் தேவைப்படுகிறது. தகுதியுடைய கனவான்கள் ஆயிரக்கணக்காய் அனுப்பிக் கொடுக்க வேண்டும். வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள தோழர்கள் பணம் வசூலித்து கமிட்டிக் காரியதரிசி தோழர் கே.எ.பி.விசுவநாதம் அவர்களுக்கு அனுப்ப வேண்டும். தமிழ் மக்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
-விடுதலை”'
குடி அரசு - கட்டுரை - 26.06.1938
o1 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
ஹிந்தியும் முஸ்லிம்களும்
ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சியில் முஸ்லிம்கள் சம்மந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று காங்கரஸ் பத்திரிகைகள் முஸ்லிம்களுக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டு விட்டன. இந்த பத்திரிகைகளுக்கு திடீரென்று இந்த ஞானம் உதயமானது நமக்கு ஆச்சரியத்தை விளைவிக்கவில்லை. ஏனெனில் காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கமுள்ள ஸ்தாபனம் என்பதும் இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர் அல்லாத மக்கள்
மீது இவ்வளவு ஆதிக்கம் அதாவது பார்ப்பனர்கள் 100 -க்கு 3 பேர்களாயிருந்தும் பாக்கி உள்ள மக்களை விட தாங்கள் பெரிய ஜாதி என்றும், மற்ற ஜாதி மக்கள் மோக்ஷத்திற்கு போவதற்குத் தாங்களே தான் வழிகாட்டிகள் என்றும், தங்கள் மூலமே தான் எவரும் மோஷத்திற்குப் போகமுடியும் என்றும் மற்றும் எவன் எப்படிப்பட்ட பாதகமான பாவகாரியங்களைச் செய்தாலும் தங்கள் மூலமாக மன்னிப்புக் கேட்டு கொண்டால்தான் மன்னிக்கப்படும் என்றும் சொல்லிக் கொண்டு - உலக மக்கள் பாவத்தை அகலச் செய்ய கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்று உரிமை பாராட்டிக் கொண்டு சரீரத்தால் பாடுபடாமல் வயிறு வளர்த்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தாங்கள் தவிர மற்ற மக்களை ஆயிரக்கணக்கான பிரிவுகளாகவும், நூற்றுக்கணக்கான உயர்வு, தாழ்வு படிகளாகவும் பிரித்து வைத்து அவற்றை வெகு பத்திரமாகக் காப்பாற்றி வருவதையே மத தருமமாகக் கொண்டு அதைப் பலப்படுத்தி பரிபாலிப்பதே கடவுள் தன்மையாக பிரசாரம் செய்து வருவதனால் அவர்களுக்கு மற்றவர்கள் மீது சுலபத்தில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. இதை ஒழிக்க வேண்டுமென்று பாடுபடுபவர்களில் முன்னணியில் நிற்பவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருப்பதால் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் அடிமைகளான பார்ப்பனரல்லாத சில காங்கரஸ்காரர்களுக்கும் சுயமரியாதைக்காரர்கள் “ராட்சதர்"களாக “அசுரர்"களாக “அரக்கர்"களாக காணப்படுகிறார்கள். அதனாலேதான், சுயமரியாதைக்காரர்களோடு, மற்ற யாராவது கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ, ஆதி திராவிடர்களோ சேருகிறார்கள் என்றால் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஆத்திரம் பொங்கி அறிவில்லாமல் மானமில்லாமல் உளறி தங்களின் முட்டாள் தனத்தையும் அயோக்கியத் தனத்தையும் இழி பிறப்பையும் காட்டிக் கொள்ளுவதில் ஆச்சரியமில்லை.
குடி அரசு- 1938 (1) 392.
ச.ம. காரர் ஹிந்தியை எதிர்க்கக் காரணம்
சுயமரியாதைக் காரர்களும் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என்பது
இன்று உலகறிந்த விஷயம். அதை அவர்கள் மறைக்கவில்லை. அவர்கள். ஹிந்தியை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்னவெனில் ஆங்கிலப் படிப்பினாலும் சுயமரியாதைக்காரர்கள் பிரசாரத்தினாலும் ஆடிப்போய் நெக்குவிட்ட பார்ப்பனீயத்தை மறுபடியும் பலப்படுத்தி நிலைநிறுத்தி பார்ப்பனர்கள் “ராம ராஜ்ய” காலத்து பூதேவர்கள் தன்மையை அடைவதற்காக வருணாச்சிரம முறையை பார்ப்பனரல்லாத சிறுவர்களுக்குள் புகுத்தச் செய்யப்படும் சூழ்ச்சி என்றும் மற்றும் பார்ப்பனரல்லாத குழந்தைகள் பொது-ஞானக்- கல்வியில் முன்னேற்றமடையாமல் “குத்திரத்” தொழிலுக்கே அவர்கள் லாயக்காக வேண்டும் என்பதற்காகவே பார்ப்பன மந்திரியால். கட்டாயமாகப் புகுத்தப்படுகிறது என்றும் உண்மையாய் மனதாலும் வாக்காலும் மெய்யாலும் உணருவதால்தான் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்.
இந்தக் கருத்தை முஸ்லிம் சமூக தலைவராகிய தோழர் ஜனாப் ஜின்னா அவர்களும் சொல்லி இருக்கிறார். அதாவது “காங்கரஸ்காரர்கள்
பள்ளிக் கூடங்களில் ஹிந்தியை கட்டாயமாகப் புகுத்துவதானது முஸ்லிம் ஆண் பெண் குழந்தைகளுக்கு ஆரிய மததுவத்தை கட்டாயமாகப் புகுத்துவதாகும்'” என்று சொல்லி இருக்கிறார்.
கிறிஸ்தவர், ஆதி. திராவிடர் எதிர்க்க வில்லையா? அதுபோலவே அதிதிராவிட சமூகத்தலைவர்களான தோழர்கள் திவான்பகதூர் ஆர். சீனிவாசன் எம்.எல். சி., மாஜி மந்திரி ராவ்பகதூர்
எம்.சி. ராஜா எம்.எல்.ஏ., ராவ்சாகிப், என்.சிவராஜ் பி.ஏ., பி.எல்.,
எம்.எல்.ஏ., முதலியவர்களும் “'காங்கரஸ்காரர்கள் ஹிந்தியைக் கட்டாயமாகப் புகுத்துவதின் இரகசியம் ஆதி திராவிட குழந்தைகளின் கல்வியை தடுப்பதேயாகும் என்றும் கிறிஸ்தவ சமூகத்தின் தலைவர்களான தோழர்கள் ஜார்ஜ் ஜோசப், சர்.எ.டி. பன்னீர் செல்வம், ரெவரெண்ட் அருள் தங்கையா, ரத்தினசாமி முதலியவர்களும் அது போலவே கட்டாய ஹிந்தியைக் கண்டித்தும் எதிர்த்துப் பேசியும் அதிருப்தி காட்டியும் இருக்கிறார்கள்.
பார்ப்பனர், மடாதிபதிகள் எதிர்க்கவில்லையா?
மற்றபடி பார்ப்பனரல்லாதார்களிலும் காங்கரசில் இருப்பவர்கள். முதற்கொண்டு மற்றும் ஒவ்வொரு கட்சியில் துறையில் இருப்பவர்களும் ஏகோபித்து எதிர்த்து அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள். பல பார்ப்பன பெரியார்களும் பார்ப்பன பண்டிதர்களும் எதிர்த்துப் பேசித் தங்கள். அதிருப்தியைக் காட்டி வருகிறார்கள். பல மடாதிபதிகளும் சன்யாசிகளும் கூட எதிர்க்கிறார்கள். 03 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
இப்படிப்பட்ட நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காரர்கள் சுயமரியாதைக் காரர்கள் ஆனதால் அவர்களுடன் முஸ்லிம்கள் சேரக்கூடாது என்றும், மற்றவர்கள் சேரக்கூடாது என்றும் சில பார்ப்பனக் கூலிப் பத்திரிக்கைகள் எழுதுவதின் அருத்தம் என்ன? என்பதும் அதற்கு யோக்கியமான காரணங்கள் காட்டாமல் ச.ம. காரர்கள் சாமி இல்லை மதம் இல்லை என்று சொல்லுகிறவர்களாச்சுதே அவர்களுடன் சேரலாமா என்றெல்லாம் அயோக்கியத்தனமான காரணம் சொல்லுவதின் கருத்து என்ன நமக்கு விளங்கவில்லை. இந்துக்களை பல ஜாதியாய்ப் பிரித்து சின்னா பின்னமாக்கியது போல் மூஸ்லிம்களையும் இந்துக்களுடன் சேராமல் பிரித்து தனிக் கூட்டமாக ஆக்கி அதிலும் சில கூலிகளைப் பிடித்து கலகமுண்டாக்கி கட்சி பிரித்து சிதறடித்து முஸ்லிம்களையும் அதிதிராவிடர்கள். போல் - மிலேச்ச ஜாதியாய் நடத்தலாம் என்கின்ற கருத்து அல்லாமல் வேறு என்ன இருக்க மூடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
நவாப் ஹக்கீம் சாயபு சொன்ன தென்ன?
தமிழ்நாட்டில் கொடை வள்ளலாயும் உண்மையிலேயே நூற்றுக்குத் தொண்ணுற்றொன்பது இந்து முஸ்லிம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உத்தமரான காலம் சென்ற சொளகார் நவாப் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்கள் தோழர் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் பேசும் கூட்டத்திலேயே தைரியமாய் எழுந்து “ஆச்சாரியாரை ஹிந்தியை கட்டாயபாடமாக வைக்கக் கூடாது” என்று தியாகராய நகர் கூட்டத்தில் கேட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த சேதி காங்கரஸ் - பார்ப்பன பத்திரிக்கைகளிலேயே பிரசுரமாகி இருக்கிறது
மற்றும் தமிழ் நாட்டில் மூஸ்லிம் லீக் மாகாண தலைவரான தோழர் ஜமால் மகம்மது சாயபு அவர்கள் திருச்சியில் ஒரு ஆண்டு விழாவில் தலைமை வகித்துப் பேசிய தலைமைப் பிரசங்கத்தில் “ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாய பாடமாக ஆக்க மாட்டார்” என்று முஸ்லிம்களுக்கு உறுதி கூறினார். இவை தவிர இன்று தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து வீர கர்ஜனை புரிந்து வெற்றிக் கொடி நாட்டிவரும் தமிழ் நாட்டு மூஸ்லிம் லீக்கின் உண்மையான தலைவரும் செல்வாக்குள்ளவருமான தோழர் பி. கலிபுல்லா சாயபு எம்.ஏ.பி.எல்., எம்.எல்.ஏ., மாஜி மந்திரி அவர்கள் ஹிந்தி எதிர்ப்பைத் தமிழ் நாட்டில் மூதல் முதல் ஆரம்பித்தவர் என்பதோடு இன்றும் முஸ்லிம்களைத் தட்டி எழுப்பி ஹிந்தியை இஷ்டப்பாடமாகக் கூட வைக்க இடங் கொடுக்க கூடாது என்று சங்க நாதம் முழக்கி வருவது எவரும் அறியாததல்ல. ஆகவே முஸ்லிம்கள் ஹிந்தியை வெறுக்கிறார்கள்
- எதிர்க்கிறார்கள் என்பதற்குக் காங்கரஸ்காரர்கள் இனி யாருடைய அத்தாட்சி வேண்டுமென்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை
குடி அரசு- 1938 (1) 304
முஸ்லிம்களுக்குப் புகலிடம் எங்கே?
தமிழ் நாட்டில் காங்கரஸ்காரர் ஆகட்டும் பார்ப்பனர்கள் ஆகட்டும் முஸ்லிம்களின் பிரதிநிதியாக யார் இருக்கிறார்கள் என்று சொல்லட்டுமே பார்ப்போம். தோழர்கள் ஜனாப் உபயதுல்லா சாயபு அவர்களும் ராமாயண: சாயபு என்று மறுபேர் வழங்கப்படும் ஜனாப் அல்ஹாஜ் தாவூத்ஷா சாயபுமல்லாமல் வேறு யார் இருக்கிறார்கள் என்பதோடு, இவர்கள் தவிர வேறு எந்த தெரிந்த மூஸ்லிம் இருக்கிறார்கள் என்று கேட்கின்றோம். ஆகவே இந்நாட்டு முஸ்லிம்கள் தங்களின் ஏகோபித்த ஹிந்தி எதிர்ப்பைக் காட்டிக்கொள்ள இந்தக் காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகள் வேறு ஏதாவது
ஒரு வழி காட்டிவிட்டு சுயமரியாதைக்காரர்களுடனோ அல்லது வேறு ஏதாவது இந்தி எதிர்ப்புக் கட்சியுடனோ சேராதீர்கள் என்று முஸ்லிம்களுக்கு ஞானோபதேசம் செய்ய முன் வந்திருந்தால், அதை ஒரு அளவுக்காவது நாணையமுடையது - யோக்கியமுடையது என்று சொல்லலாம் அப்படிக்கில்லாமல் ஹிந்தி தெய்வீக பாஷை - தேசீய பாஷை - சுயராஜ்யத்துக்கு (ராமராஜ்யத்துக்கு) அவசியமான பாஷை - வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு ஓட்டப்பட்டு விட்டால் பிறகு ஆளப்படவேண்டிய - பாஷை - சர்க்கார் உத்தியோகம் வேண்டுமானால் யோக்கியதாம்சம் காட்டப்படவேண்டிய பாஷை- துளசிதாஸ் ராமாயணம் தெரிந்து கொள்ளக் கூடிய பாஷை - சமஸ்கிருத சாஸ்திரங்கள், புராணங்கள். தெரிந்து கொள்ள சவுகரியமான பாஷை - கல்வி பூர்த்தியாகக் கட்டாயமாக படித்தாக வேண்டிய பாஷை - மெஜாரிட்டி ஓட்டில் வெற்றி பெற்று பதவியேற்று சர்க்கார் ஆட்சியில் இருக்கும் ஒருவன் தான் நினைத்தபடி செய்ய முடிகின்றதா இல்லையா என்பதற்கு அறிகுறியாய் பரிக்ஷ பார்க்க வைத்திருக்கும் பாஷை - 10, 11, 12 வயதில் 1, 2, 3, வது பாரத்தில் மாத்திரம் படித்து பாஸ் பண்ணாமல் மார்க்கு வாங்காமல் 13வது வயதில் 4வது பாரத்தில் அடியோடு விட்டுவிட வேண்டிய பாஷை - ஹிந்தி கட்டாயமென்பது பேச்சில் தான் கட்டாயமே ஒழிய காரியத்தில் ஒன்றும் கட்டாயமில்லை என்று மழுப்பும் பாஷை - முதலில் ஹிந்தி என்று சொல்லிவிட்டு முஸ்லிம் எதிர்ப்பு வலுத்தவுடன் ஹிந்துஸ்தானி என்று பெயர் கொடுத்து ஏமாற்றும் பாஷை - இந்தியா பூராவுக்கும் ஒரு தேசீய பாஷை வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் உருது எழுத்திலும் இந்துக்கள் சமஸ்திருத எழுத்திலும் படிக்கலாம். அதிலும் இரண்டு பேரும் ஒரே புராணக் கதை பாடத்தின் மூலம்தான் படிக்க வேண்டும் என்று சொல்லும் பாஷை. ஆகையால் இப்படிப்பட்ட பாஷையை கட்டாயமாகப் படிக்க வைத்தே தீருவேன், இதனால் என்ன ஆகிவிட்டாலும் சரி என்று மார்தட்ட ஆரம்பித்தால் முஸ்லிம்களுக்கு போக்கிடம் எங்கு என்று கேட்கின்றோம்.
நாஸ்தீக ராமநாதன் மட்டும் இனிப்பானேன்?
சுயமரியாதைக்காரர்கள் கடவுள் கூடாது மதம் கூடாது என்று சொல்லுகிறார்கள் என்று சிலர் சொல்லுவதாலேயே அவர்களுடன் யாரும் 05 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
சேரக்கூடாதா என்று கேட்கின்றோம். சுயமரியாதைச் சங்கத்தில் காரியதரிசியாயிருந்து சாமிக்கூடாது மதம் கூடாது என்று பிரசாரம் செய்து வந்தவரும் இன்றும் முழு நாஸ்த்திகராயும் மதமற்றவராயும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளுவது மாத்திரமல்லாமல் மனித சமூகத்துக்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் கூடத் தேவை இல்லை என்கின்ற கொள்கை உடையவராய் இருந்தவரை தங்கள் கட்சியில் சேர்த்து எல்லா சமய சமூகத்தாருக்கும் பொதுவான அரசியலில் மந்திரியாக்கி முழு ஆஸ்த்திகர் என்று சொல்லிக் கொள்ளும் ஆச்சாரியார் தம்மை விளம்பரம் செய்ய விளம்பர அதிகாரம் கொடுத்து தனக்கு முன்னோடும் பிள்ளையாய் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துப்போய் முன்னிறுத்தி பின்னின்று வாழ்கின்றாரே இது குற்றமில்லையா என்று கேட்கின்றோம். ஆகவே இப்படிப்பட்டவர்களையெல்லாம் இந்த காங்கரஸ் எச்சிலைப் பத்திரிகைகள் படம் போட்டு, புகழ்ந்து, கவிபாடி அவரது சேதிகளை பிரசுரிக்கின்னனவே இவைகளுக்கு மானமோ ஈன உணர்ச்சியோ, நற்குடிப்பிறப்போ இருக்கின்றனவா என்று கேட்கின்றோம்.
ஜவஹர்லால் ஆஸ்திகரா?
சாமி இல்லை, சத்தியம் இல்லை என்று சொல்லி கோர்ட்டில் சத்தியம் செய்யக்கூட மறுத்த தோழர் ஜவஹர்லால் அவர்களை ஆஸ்திக உருவரும் “தினம் கடவுளுடன் பேசும் பக்த”"ருமான தோழர் காந்தியார் (ஆச்சாரியார் கனம் ராமநாதனைப் பாவிப்பது போல்) பாவித்து பயன்படுத்திக் கொண்டிருப்பதோடு அவரை காங்கரசுக்கே தலைவராக்கி தலைமையில் உள்ள காங்கரசில் பல மெளலானாக்கள், மெளல்விகள், பல அஜாத்துக்கள், ஆலி ஜனாப்கள், அல் ஆஜ்ஜுக்கள் தலைவணங்கி பின்பற்றுபவர்களாக இருந்தார்களே இருக்கிறார்களே இதில் ஒன்றும் மானங்கெட்டுப் போகவில்லையா? ஒழுக்கம் கெட்டுப் போகவில்லையா? நாணையம் கெட்டுப் போகவில்லையா? கடவுள் மதபக்தி கெட்டுப் போகவில்லையா என்று கேட்கின்றோம். இன்னும் பல முஸ்லிம் வாலிபர்கள் காங்கரசிலுள்ள பொது உடமை - சமதர்ம நாஸ்திகர்களுக்கு சிஷ்யர்களாக சகாவாக பின்பற்றுபவர்களாக இருக்கிறார்களே இவர்களால் அச்சமூகத்துக்கு ஆபத்து வந்துவிட்டதாக இந்த எச்சிலைப் பத்திரிக்கை எப்போதாவது எடுத்துக் காட்டிற்றா என்று கேட்கின்றோம் எனவே இந்த எச்சிலைப் பத்திரிகை முஸ்லிம்களை எவ்வளவு பயித்தியக்காரர்கள் என்று கருதியிருந்தால் இவ்வளவு தைரியமாக முஸ்லிம்களுக்கு ஞானோபதேசம் செய்ய முன் வந்திருக்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிம் தோழரும் யோசித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.06.1938
குடி அரசு- 1938 (1) 396
தமிழ்த்தாயின் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்
தமிழ்த்தாயின் புதல்விகளே! புதல்வர்களே!!
அக்ரகார முதல் மந்திரி கனம் ஆச்சாரியார் 'தீட்டின மரத்திலே கூர்மை பார்ப்பது போல்' தமிழ் மக்களிடத்திலே தமது கூர்மையைக் காண்பிக்கிறார். தமிழ் மக்களால் ஓட்டுப்பெற்று முதல் மந்திரி பதவிக்கு வந்த கனம் ஆச்சாரியார், தமிழ் மக்களுக்கே துரோகம் செய்யத் துணிந்துவிட்டார். தேர்தல் காலத்தில் வாக்குக்கொடுத்ததும், தமிழ் மக்களால் மிக்க வேண்டப்படுவதுமான ஆலயப்பிரவேச மசோதாவை மூலையில் தள்ளிவிட்டு தமிழர்களால் வெறுக்கப்படுவதும் வேண்டப்படாததுமான அந்நிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ் மக்களிடத்தில் புகுத்தத் துணிந்திருப்பது கனம் ஆச்சாரியாரின் எதேச்சதிகாரமா? முதல் மந்திரி பதவி உத்தியோக மமதையா? பார்ப்பனத் தந்திரமா? அல்லது பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடுவதின் நோக்கமா? என்று கேட்கிறேன். இந்த அற்ப அதிகாரத்திலேயே இவ்விதமான எதேச்சதிகாரம் தாண்டவமாடினால், பூரண சுயராஜ்யம் கிடைத்துவிட்டால் என்னவாகுமோ? அம்மம்ம!! மயிர் கூச்சுறுகின்றதே!!!
தமிழ்நாட்டு வீரர்களே திரண்டெழுந்து ஆச்சாரியாரின் ஹிந்தி பாஷையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்யுங்கள்.
தமிழ்நாட்டு தாய்மார்களே, தகப்பன் மார்களே! உங்களது பிள்ளைகளை ஹிந்தி கட்டாய பாட பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாதீர்கள். மாணவர்களே ஹிந்தி கட்டாயபாட பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியேறிச் சத்தியாக்கிரகம் செய்யுங்கள்.
கனம் ஆச்சாரியார் ஹிந்தி பாஷையாகிய ஈட்டியைக் கையிலேந்தித் தமிழ்த்தாயை கொலை செய்யத் துணிந்து நிற்கிறார். கனம் ஆச்சாரியாரின் ஈட்டியைப் பார்க்க நமது தமிழ்த் தாயின் அழுகுரல் வீறிட்டு எழுகிறது
தமிழ் மக்களே நமது தாயை இந்த அலங்கோல நிலையில் பார்க்க மனம் சகிக்கின்றதா? இச்சமயத்தை நீங்கள் தவறவிட்டால் தமிழ்த் தாயின் நிலமை பரிதாபகரமாக முடியுமென்பது நிச்சயம். ஆகையினால் தமிழ் வீரர்களே இந்தச் க்ஷணமே யுத்தசன்னதமாகி தமிழ்த்தாயைக் காக்க முனைந்து வாருங்கள். கனம் ஆச்சாரியாரின் எதேச்சதிகாரத்தை உடைத்தெறியுங்கள்.
397 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
தமிழ்த் தாயின் அருந்தவ மக்களே, கனம் ஆச்சாரியார் தமிழ் மக்களை ஹிந்தி பாஷைக்கு அடிமையாக்க, கையில் மாயவலையுடன் சுற்றுப்பிரயாணம் வருவார். தமிழர்களே உஷாராகயிருந்து கனம் ஆச்சாரியாரின் மாயவலையில் சிக்காமல் கனம் ஆச்சாரியாரை புறமுதுகு காட்டி ஓடும்படி செய்வீர்களாக. ஹிந்தி வீழ்க “தமிழ் வாழ்க”
குடி அரசு - வேண்டுகோள் - 26.06.1938
குடி அரசு- 1938 (1) 398
அருஞ்சொல் பொருள்
அக்காரவடிசில் - சருக்கரைப் பொங்கல் வகை
அந்தர் - நிறுத்தல் அளவு (50 கிலோ எடை) அசூயை - பொறாமை
அமரிக்கை - அமைதி ஆக்கினை - கட்டளை
ஆப்பு - மூளை இஞ்சிநீயர் - பொறிஞர் உண்டை கட்டி - கோயிலில் தரும் சோற்று உருண்டை உளைமாந்தை - கடுநோய், உட்புண்:
ஒட்டை வேட்டு - பத்து விரற்கடை வெடி
காலாடிகள் - தொழிலற்றுத் திரிவோர்கள்
கிலேசம் - துன்பம்
குதவை - அடமானம்
குச்சுக்காரி - விலைமகளிர்
குமரி இருட்டு - விடியற்கு முன் உள்ள இருள் சம்சயவாதி - சந்தேகவாதி
சிலாக்கித்த - புகழ்ந்த
சைன்யங்கள் - படைகள்
சொக்காரன். - சகலன்
ததாஸ்து - அங்ஙனமே ஆகுக ததியோதனம் - தயிர்ச்சோறு
தகரப் போகிணிகள் - தகர நீர்க்கங்கள்
தாசாத்துவம் - அடிமைத்தனம் நெக்குவிட்ட - தள்ளிவிட்ட, பிளவுபட்ட
39 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 26
நிறைகோல் வழி
துலை வழி துக்ஷேபம்
தீமை
நீக்க
பரிகரிக்க
கூடிக் களிக்கும் உண்மையாய்
பரிமளிக்கும்
பட்டாங்கமாய்
பொக்கி
தறிதலை
பிரக்யாதி
புகழ்
புதல்வற் பேறு தன்மை, விதம்
புத்திர சந்தானம்
பிரகாரம்
மீண்டும் நிலை நிறுத்துகை
புனருத்தாரணம்
கவசம்
பூண்
வஞ்சகம், ஒய்யாரம்
மாரீசம்
புலி
மிருகாதி
நெருக்கடியின்றி
முட்டின்றி
சினம், வெறுப்பு, களைப்பு, வருத்தம்.
முனிவு
சகுனம், காரணம்
நிமித்தியம் வஜா
நிலவரித்தள்ளுபடி
உறுதி மொழி கூறல்
வாக்குத்தத்தம் விரக்கடை தவணை -
ஒருமாத தவணை முதமையோன், மேலோன்.
விருத்தன் வைரி
பகைவன்
முரண்டுத் தன
லண்ட
குடி அரசு - 1938 (1)
400