Kudi Arasu — 1937, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1937-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 25
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1937-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 352
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
“விடுதலை? நானேடாகியது!
1935 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி போட்டியிட்டு சென்னை மாகாணத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது என்ற உறுதிமொழியைக் கேட்டது. கில மாதங்கள் அமைச்சரவை அமைக்க மறுத்து நாடகமாடியது. ஆளுநர் உறுதிமொழி
ஏதும் தராத நிலையிலேயே காங்கிரஸ் இராஜகோபாலாச்சாரி தலைமையில். அமைச்சரவை அமைக்க முன் வந்தது. எனவே இதற்கு சரணாகதி” அமைச்சரவை என்று பெரியார் பெயர் சூட்டினார். சரணாகதி அமைச்சரவை நடத்தியபார்ப்பனஆட்சியை எதிர்த்து பெரியார் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் போர் முரசு கொட்டிய காலம் இது. சரணாகதி அமைச்சரவையையும், காங்கிரசையும் - காங்கிரசிடம் அடிமைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்ட பார்ப்பனரல்லாதார்களையும் அனல் பறக்கும் விவாதங்களால் அம்பலப்படுத்தி, காங்கிரசின் சூழ்ச்சிக்குப் பலியாகி விடாதீர்கள் என்று பார்ப்பனரல்லாத மக்களை எச்சரிக்கும் பெரியாரின் தலையங்கங்களும் எழுத்துக்களுமே இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன
பெரியார் தனது இளமைக்கால வரலாற்றை தன் வரலாறாகப் பதிவு செய்துள்ள முக்கியத்துவமிக்க கட்டுரை - சுயமரியாதை இயக்கம்” எனும் தலைப்பில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது
பல முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பெரியார், சுயமரியாதை இயக்கமும், முஸ்லீம் - ஆதி திராவிடர் - கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். “சுயமரியாதை இயக்கத்தை ஆதரிக்கவோ, தழுவவோ வரும் முஸ்லீம்களுக்கும், மற்றவர்களுக்கும் இயக்கத்தின் பேரால் நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது சுயமரியாதை இயக்கத்துக்கு என்று வகுத்திருக்கும் கொள்கைகளில் நாஸ்திகம் ஒரு கொள்கையாகவோ, நிபந்தனையாகவோ குறிப்பிட்டிருக்க வில்லை'' என்று கூறும் பெரியார், மூடநம்பிக்கைகளையும், சடங்குகளையும் ஒழித்து அனைத்து துறைகளிலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே சுயமரியாதை இயக்கம் என்று வரையறுக்கிறார் சென்னை மாநகராட்சிக்கு நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சுழற்சி முறையின் கீழ், முதன் முதலாக சிவசண்முகம் என்ற ஆதி திராவிடர் மேயரானார். நீதிக்கட்சியில் வளர்ந்தவர் தோழர் சிவசண்முகம். அப்போது சென்னை மாநகராட்சி காங்கிரசிடம் இருந்தது. காங்கிரசில் அதி
திராவிடர் உறுப்பினராக இல்லாத நிலையில், தோழர் சிவசண்முகம் காங்கிரசில் உடனே சேர்க்கப்பட்டு மேயராக்கப்பட்டார். காங்கிரசை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தாலும், பெரியார் இதை வரவேற்றார். 'மேயர் தேர்தலில் காங்கரஸ் வெற்றிபெற்றதால் நாம் எவ்வித அதிருப்தியும் அடையவில்லை. ஏனெனில்
ஒரு ஆதிதிராவிடர் மேயரானது உலக சரித்திரத்தில் இதுவே முதல் தடவை' என்று எழுதினார். “எப்படி ஆனாலும் சரி; நம் காலத்தில் இரண்டு ஆதி திராவிடர்களை மந்திரிகளாகவும், ஒரு ஆதி திராவிடரை மேயராகவும்
பார்த்து விட்டோம்” என்று பூரிப்போடு எழுதிய பெரியார் - இது, தாம் வலியுறுத்தி வந்த 'வகுப்புவாத' உரிமைக்கு கிடைத்த வெற்றி என்றார். (குடி
அரசு' 14.11.37) இதே தலையங்கத்தில் பெரியார் சுட்டிக்காட்டும் மற்றொரு கருத்து மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்
“தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு நாம் ஆரம்பம் முதலே சொல்லி வந்திருப்பது என்னவென்றால் நன்றி விசுவாசம் காட்டக்கூடிய சவுகரியமான நிலையில் அவர்கள் இல்லை என்றும், எப்படியாவது தங்களுக்கு காரியமானால் போதும் என்கிற கொள்கையே இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என்றும் சொல்லி வந்திருக்கிறோம். இப்போது நடைமுறையில் சொல்லப்படும் நன்றி விசுவாசம் என்பதும் ஒரு முதலாளித் தன்மையேயாகும்'' - என்று குறிப்பிடுகிறார்.
“ஆதி திராவிடர் மகாநாடென்று ஒரு மகாநாடு அவசியமா? என்று பல தேச பக்தர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை நான் ஒன்று
கேட்கிறேன். அதாவது ஆதி திராவிடர் என்று ஒரு மனித சமூகம் இருக்க வேண்டியது அவசியமா என்று கேட்கின்றேன்" என்று கேட்கும் பெரியார்.
“ஜாதி பேதம் ஒழிவதாலும், மேல்ஜாதி - கீழ் ஜாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசீயம் கெட்டுப் போகுமானால், சுயராஜ்யம் வருவது தடைபட்டுப் போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராஜ்யமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல் என்று சொல்லுவேன்” (குடி அரசு 18.07.1937) என்கிறார்.
முஸ்லீம்கள் மாநாட்டில் பங்கேற்று பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவுகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
காங்கிரஸ் தொடங்கிய அய்ந்தாண்டு காலத்திலேயே அதன் பார்ப்பனப் போக்கை புறிந்து கொண்ட முஸ்லீம்கள் முதன்முதலாக தங்களது உரிமைக்கு போர்க்கொடி உயர்த்தி போராடி வெற்றி பெற்ற வரலாற்றை குறிப்பிடும் பெரியார் பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவானதற்கு முன்னோடியாக விளங்கியதே முஸ்லீம்கள்தான் என்று சுட்டிக் காட்டுகிறார். முஸ்லீம்கள் அரசியல் உரிமையைப் பெற்றதால் தான், வங்காளத்தில் காங்கிரசார் கிளர்ச்சிகளைத் தொடங்கினர் என்று கூறும் பெரியார், ஜின்னாவின் பெருமைகளை எடுத்துக் கூறி, அவரை குறை கூறும் காங்கிரசார் அவரது கால் தூசிக்குக் கூட சமமாக மாட்டார்கள் என்கிறார். (குடி அரசு, 24.11.1937)
நாமக்கல் வட்ட சுயமரியாதை மாநாட்டில் பெரியார் நிகழ்த்திய உரை இத்தொகுப்பில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளையும், காங்கிரசின் பார்ப்பன ஆதிக்க அரசியலையும் படம் பிடிக்கும் கருத்துக்கருவூலமாக அந்த உரைதிகழ்வதை வாசகர்கள் உணர முடியும். விடுதலை: நாளேடாக வெளிவரத் தொடங்கியது, இதே காலகட்டத்தில்தான். “விடுதலையின் முக்கிய தலையங்கங்கள் “குடி அரசில் மறு வெளியீடு செய்யப்பட்டிருப்பதை, வாசகர்கள் கவனிக்கலாம்
குடிஅரசு-பொதுவுடைமைக் கொள்கைகளை கைவிட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் பெரியார், “அந்த எண்ணத்திலிருந்து 'குடிஅரசு'
சிறிதும் மாற்றமடையவில்லை” என்று தெளிவுபடுத்துகிறார். இப்படி 'குடிஅரசு'
மீது குற்றம் கூறும் தோழர்கள் பொது உடைமை கொள்கையை ஒழிப்தையே முக்கிய கவலையாகக் கொண்ட தலைவர்களுக்கு 'ஜே' போட்டுக் கொண்டிருப்பதை பெரியார் சுட்டிக் காட்டுகிறார். (குடி அரசு 15.8.37)
தோழர்கள் சிங்காரவேலரும், ஜீவானந்தமும் 1936 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரசில் இணைந்து அக்கட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது
நீதிக்கட்சி ஆட்சியில் அறிமுகப்படுத்திய கட்டாய இலவசக் கல்வியை ஒழிக்கும் காங்கிரசின் திட்டம், பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்பு, சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தியதற்காக பள்ளிக் கூடங்களை மூடியது போன்ற ஆச்சாரியார் ஆட்சியின் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் அரிய தலையங்கங்கள் இத் தொகுப்பு முழுதும் விரித்துள்ளன.
சட்டசபைக் கூட்டத்தில் 'வந்தேமாதரம்' பாடவேண்டும் என்ற காங்கிரஸ் ஆட்சியின் முடிவை எதிர்த்த முஸ்லீம் உறுப்பினரை சட்டமன்றத்தில் காங்கிரசார் மன்னிப்பு கேட்க வைத்தார்கள். 'வந்தே மாதரம்' முழக்கம் இந்து வெறியுடன் முன் வைக்கப்பட்டதை “ஆனந்த மடம்' நாவலிலிருந்து
'குடி அரசு' எடுத்துக்காட்டி கண்டித்தது பாரதியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றும் (குடிஅரசு, 17.10.1937) 'யாரதி ஆராய்ச்சி! எனும் தலைப்பில் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது
தொடர் வண்டிப் பயணத்தில் பெரியாரும் - கண்ணப்பரும் பயணம் செய்தபோது, பார்ப்பனர் ஒருவர் குறுக்கிட்டுப் பேசிய சுவையான நிகழ்ச்சி ஒன்று இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. (குடி அரசு 12.9.1937) சுயமரியாதை வீரர் மாயவரம் நடராசன் மறைந்ததும் “விடுதலை” நாளேடாக மலர்ந்தும், 'குடி அரசு' 13 - வது ஆண்டின் பயணத்தைத் தொடங்கியதும் இதே காலகட்டம்தான்.
352 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பில் 77 தலைப்புகளில் பெரியாரின் கருத்தாழமிக்க எழுத்துகளும் - பேச்சுகளும் அலங்கரிக்கின்றன.
- பதிப்பாளர்
பொருளடக்கம்
எனது விண்ணப்பம் பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு தெய்வ வரி
11
15
© ® N ஓளு O
20
ஒரு தொல்லை ஒழிந்தது மாயவரம் நடராஜன் மறைந்தார்.
24
32
காங்கரஸ் ஒரு சூழ்ச்சி சபை
33
39
ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு. சுயமரியாதை இயக்கம் இனி நடப்பதென்ன?
46
56
பார்ப்பன நீதி
10
61
பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை
11
66
12
70
கைதிகள் விடுதலை
“15 நாளில் 8 காரியங்கள்”
13
72
தியாகப் புரட்டு பொன்மலை சுயமரியாதைச் சங்கம் 4-வது ஆண்டுவிழா
14
77
15
78
காங்கரசில் சதியாலோசனை இரண்டு அய்யங்கார் மந்திரிகள் கூற்று
16
79
17
83
சாக்கடைக்கு பதில் எச்சிலை
18
91
தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமரியாதைத் தலைவருக்கும் வரவேற்பு பதின்மூன்றாவது ஆண்டு அட்ஹாக் கமிட்டிப் புரட்டு
19
97
20
99
21
104
முதல் மந்திரி மாய அழுகை!
22
106
109
23
சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? - 1T
24
25
ஓலம்! ஓலம்!! ஓலம்!!!
26
திருச்சியில் சுயமரியாதைக் கூட்டம்
27
சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? - 17 புரோகித ஆட்சியின் பித்தலாட்டங்கள்.
28
29
“தேசீய கீதப் புரளி
30
31
வரி குறைப்பு எங்கே?
32
ஆராய்ச்சி விளக்கம்
33
தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிக் கூட்டம்
34
35
36
சட்டசபை நாடகம்
37
38
சமஷ்டி (அல்லது) பிடரேஷன் தமிழர்கட்கு 'அறிவிலிகள்' பட்டம் காங்கரஸ்வாதிகள் மதுபானம் செய்வதுண்டா?
39
40
41
கோற்றுக்கில்லாதார் பிரசாரம் “விகடன் விஷமம்
42
43
பாரதி ஆராய்ச்சி
44
முஸ்லீம் லீக்கும் முஸ்லீம்களும்
45
46
எழுத்துச் சுதந்தரம் பேச்சுச் சுதந்தரம் இதுதானா?
47.
மது விலக்கின் சூழ்ச்சி
o PSS 4 S
பொழுது போக்கு
பெரியசாமி பெரும்பிரிவு
'ஐவஹர்லாலும் சமஷ்டியும். கார்ப்பரேஷனில் பார்ப்பனத் தொல்லை
எது பொய்?
கடன் வாய்தா மசோதா
அய்யர் அய்யங்கார் சம்பாஷணை:
நரிமன் கதி சென்னையில் வகுப்புவாதம்
ஜஸ்டிஸ் கொள்கையை அசைக்க முடியாது
காங்கரசின் ராணுவ ஆட்சி என்ன செய்யப் போகிறீர்கள்? ஈரோடு அர்பன் பாங்கு
காங்கரசின் நாசகாலம்
காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார்”
காங்கரஸ் தலைவர்கள் திண்டாட்டம்
மந்திரிகள் செயலும் செல்வாக்கும்
புதுநகரம் முஸ்லீம் லீக் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
ரிப்பன் மண்டபத்து மகான்கள் மனுதர்ம ஆட்சி தாண்டவம்
இன்னுமா சந்தேகம்? அருஞ்சொல் பொருள்
என்க வண்ட றறுவாம்யோ இனிப்பாக விளை இரு அணா: டட M. 2041
s T கணண டவுன் புட்டு,
எனது விண்ணப்பம்
இன்று முதல் 'விடுதலை' காலணா தினசரியாக வெளிவருகிறது
தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் முக்கியக் கருத்தாகக் கொண்ட ஒரு தினசரி வர்த்தமானத் தமிழ் பத்திரிக்கை வெளியாக்க வேண்டுமென்று கொஞ்ச காலமாகவே கவலைகொண்டு பலவழிகளிலும் முயற்சித்து வந்தேன். இதை அறிந்தோ அறியாமலோ.
தமிழ் மக்கள் பலரும் இப்படிப்பட்ட பத்திரிகையில்லாக் குறைவை எனது கவனக்குறை என்று குற்றம் சாட்டியும் ஊக்கப்படுத்தியும் பல தீர்மானங்களும் வேண்டுகோளும் செய்த வண்ணமாய் இருந்தார்கள். இதுவரை நான் எடுத்து வந்த பல முயற்சிகள் கைகூடாமல் போய் விட்டதானாலும் தமிழ் மக்கள் வாழ்வுக்கே கேடு உண்டாகும் படியான.
நிலையில் எதிரிகளின் ஆதிக்கம் பலப்படத் தக்க நிலைமை மேலேறிக் கொண்டு வருவதாக காணப்பட்டதாலும் அதற்கு பெருங்காரணம் ஒரு தமிழ் தினசரி வர்த்தமானப் பத்திரிக்கை இல்லாதது என்று உணர்ந்ததாலும் அதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்கள் பலரும் பயந்து எதிரிகளைத் தஞ்சமடைந்து மற்றத் தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கவும் துணிகிறார்கள் என்றும் நான் உண்மையாய் உணர்ந்ததால் எவ்வளவு நஷ்டமும் தொல்லையும் ஏற்பட்டாலும் சரி, அவற்றை சமாளிக்கத் தமிழ் மக்கள் ஆதரவு கிடைக்கலாம் என்கின்ற நம்பிக் கையின் மீது துணிந்து ஒரு தினசரி தமிழ்ப் பத்திரிகை நடத்தும் பொறுப்பை மேற்கொண்டு விட்டேன். இதற்கு ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களும்
பிரமுகர்களும் அனுதாபிகளும் ஆதரவளிப்பதாக வாக்களித்ததால் எனது துணிவு சீக்கிரத்தில் என்னை காரியத்தில் இறக்கி அனுபவத்தில் கொண்டுவர அனுகூலமாக்கி விட்டது.
ஆகவே விடுதலை தினசரி பத்திரிகையானது ஈரோட்டில் இருந்து வந்தாலும் எனது மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகிறது என்றாலும் அதன் கொள்கையானது ஆதரவாளிகளின் விருப்பத்திற்கிணங்க அதாவது விடுதலை சென்னையில் நடந்த பொழுது எந்த கொள்கை என்ன நோக்கம் கொண்டு நடந்து வந்ததோ அது போலவே நடத்தப்படும். என்னால் நடத்தப்படும் மற்றப் பத்திரிகைகளாகிய “குடி அரசு”, “பகுத்தறிவு” ஆகிய இரண்டு பத்திரிகைகளும் முன் போலவே அவற்றின் கொள்கைகளை
முன்னிலும் அதிகமாகக் கொண்டு வலியுறுத்தும் மூறையில் நடைபெறும். விடுதலையானது கொள்கை விஷயத்தில் அது இதுவரை கொண்டு வந்த தனது கருத்தை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொள்ளாது என்பதோடு மற்ற விஷயங்களில் பெரிதும் பொதுவர்த்தமானப் பத்திரிகை போலவே நடைபெறும்
தமிழ் நாட்டில் வருணாச்சிரம தர்மத்துக்கும் முதலாளிகள் ஆட்சிக்கும் எதிராக பத்திரிகைகள் நடத்துவது என்பது மிகவும் கஷ்டமும் நஷ்டமும் தொல்லையுமான காரியம் என்பது எனக்குத் தெரியும். அதனாலேயே
நான் இதுவரை பத்திரிகை உலகிலும் பொதுவாழ்விலும் அநேக கஷ்ட நஷ்டங்களுடன் பல தொல்லைகளும் அனுபவித்து வந்திருக்கிறேன். எனது மற்றப் பத்திரிகைகள் எப்படி அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்
பட்டு நடைபெற்று வருகிறதோ அதுபோலவே தான் விடுதலையும் அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடத்த அனுமதிக்கப் பட்டிருக்கிறது. நான் அரசாங்கத்துக்கு வேண்டியவன் என்றும் மந்திரி களுக்கு வேண்டியவன் என்றும் எதிரிகள் விஷமப்பிரசாரம் செய்து வந்ததை பொது ஜனங்களில் சிலரும் நம்பி சர்க்காரின் சில குற்றமான காரியங்
களுக்கும் மந்திரிகளின் சில கவலையீனமான - சுயநலமான காரியங்
களுக்கும் நான் ஆதரவளித்து வருவதாகக் கருதி வருவதும் எனக்கு தெரியும்.
ஆனால் நடு நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும் ஜாமீன். கேட்டல் - பறிமுதல் செய்தல் ராஜத்துரோகக் குற்றம் சாட்டி தண்டித்தல் முதலிய சம்பவங்களை கூர்மையாய் கவனிப்பவர்களுக்கும் நான் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக் கிறவனா அல்லது அவர்கள் அதிர்ப்திக்கு ஆளாகி தொல்லைப் படுத்தப்படு கிறவனா என்பது விளங்கும். மற்றொரு உதாரணமும் எடுத்துக்காட்டுகிறேன். அதாவது இந்த “விடுதலை”க்கே 1000ரூ. ஜாமீன் கேட்டதானது ஸ்தல அதிகாரியிடமிருந்து ஏற்பட்ட எண்ணமல்ல வென்றும் மந்திரிகள்
ஆதிக்கத்திலிருந்து பிறந்தது என்றும் சொல்லத்தக்க ஆதாரம் பல இருக்கின்றன.
ஆனால் தமிழ் மக்களின் மனிதத்தன்மைக்கும் விடுதலைக்கும் சுதந்தர பிரதிநிதித்துவத்திற்கும் அனுகூலமான காரியங்கள் சர்க்காரும் மந்திரிகளும் செய்ததற்கு ஆகவோ செய்து வருவதற்கு ஆகவோ செய்வதாக கருதி இருப்பதற்கு ஆகவோ தமிழ் மக்களின் எதிரிகளாலும்
எதிர் ஸ்தாபனங்களாலும் எதிரிகளின் ஆதரவில் வாழ்வு நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களாலும் குறை கூறப்படும் காலங்களிலும் தடை செய்யப்படும் காலங்களிலும் விஷமப் பிரசாரம் செய்யப்படும் காலங் களிலும் அவற்றைப் பொறுத்தவரையில் மந்திரிகளையும் சர்க்காரையும் பிடிவாதமாய் கண் மூடித்தனமாய் ஆதரித்து வந்திருக்கிறேன், ஆதரித்தும் வருவேன் என்பதை எந்த நிலையிலும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
குடி அரசு- 1937 (2) 12
ஏனெனில் அதற்கு ஆகவே நான் வாழ்கிறேன். அதற்கு ஆகவே சுவாசிக்கிறேன். அதற்கு ஆகவே என்னுடைய சகலத்தையும் ஆள்படுத்தி இருக்கிறேன்.
தமிழ் மக்கள் மனிதத் தன்மையும் விடுதலையும் சுதந்தர பிரதி நிதித்துவமும்தான் தேசம்; அவை தான் பூரண சுதந்தரம்; அவை தான் உயிர் நாடி இதற்கு மாறான எதுவும் துச்சமே யாகும் என்பது எனது கருத்து.
இதைத் தமிழ் மக்கள் உணர்வதில்லை என்பதும் உணர்ந்தாலும் அவர்களது வாழ்க்கை அமைப்பு இடம் தருவதில்லை என்பதும் இடம் தந்தாலும் அவர்களது சுயநலமும் அடிமைப் புத்தியும் காரியத்தில் நடந்துகொள்ள விடுவதில்லை என்பதும் எனக்குத் தெரியும் என்றாலும் முடிந்த வரை முடியட்டும் என்று கருதியே தமிழ் மக்கள் ஆதரவை எதிர்பார்த்து “விடுதலை” ஊழியத்தில் இறங்கி இருக்கிறேன்.
உண்மையை சொல்லுகிறேன்
நான் இதுவரை ஒரு டொனேஷன் லிஸ்டையோ உதவித்தொகை வசூல் பட்டியையோ கையில்தூக்கிக் கொண்டு எந்த காரியத்துக்கு ஆகவும் பொதுஜனங்களைத் தேடிப் புறப்பட்டது கிடையாது. என்னால் கூடிய அளவு இந்த 40, 50 வருஷ காலமாகவே சந்தாபட்டியல் கையொப்ப மிட்டு என் சக்தி இஷ்ட அனுசாரம் கொடுத்துவந்ததையே - வருவதையே பழக்கமாகக் கொண்டவன். “விடுதலை”யின் காரணமாகவும் பல தோழர்களின். ஆலோசனை- வேண்டுகோள் காரணமாகவும் பல அபிமானிகள்முன் வசூல் புத்தகத்துடன் போகவேண்டிய நிலைக்கு வந்து விட்டேன். பலர் மகிழ்ச்சியை முகத்திலும் கையாலும் காட்டி வரவேற்றார்கள். பலர் அதுவல்லாததையும் செய்தார்கள். பலர் முன்னால் மகிழ்ச்சி காட்டி கையையும் தாராளமாய் காட்டி பல தடவை ஞாபகப்படுத்தியும் கவலை யில்லாமலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஞாபகப்படுத்து வதினாலும் மற்றும் பலரிடம் சென்று பட்டியை நீட்டுவதினாலும் உண்மையிலேயே நான் இதுவரை அடைந்திராத வெட்கக்கேட்டை அடைகிறேன் என்பதை உணருகிறேன். ஆனால் இது, இந்த சொந்த வெட்கக்கேடு. தமிழ் நாட்டில் அதுவும் பெரும்பெரும் செல்வம் படைத்த ராஜாக்கள், ஜமீன்தார்கள், மிராசுதார்கள், பண்டார சன்னதிகள், லேவாதேவிக் காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் ஏராளமாக உள்ள தமிழ் மக்களைக் கொண்ட தமிழ் நாட்டில் - தமிழ் மக்கள் தன்மானத்துக்கும் தமிழ் மக்கள் விடுதலைக்கும் மாறாக தமிழ் மக்களின் பிறவி எதிரிகளால் நடத்தப்படும் தொல்லைகளையும் தடைமுறைகளையும் சமாளிக்கவோ எடுத்துக்காட்டவோ பாமர மக்கள் ஏமாந்து போகாமல் இருக்கும்படி வேண்டிக்கொள்ளவோ ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கை இல்லை என்னும் குறை தமிழ் நாட்டில் உள்ள எல்லாத் தமிழ் மக்களையும் சேரத்தக்க B ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஒரு பெரிய வெட்கக்கேடாயிருப்பதால் என் சொந்த வெட்கக்கேட்டை கவனியாமல் இப்பெரிய வெட்கக் கேட்டை நிவர்த்திக்க ஆதரவு தேட ஒவ்வொரு தமிழ்மகனையும் வேண்டத்துணிந்து விட்டேன்.
ஆதலால் வேறுவித அபிப்பிராய பேதம் எப்படி இருந்தாலும் தன்னை உண்மைத் தமிழ்மகன் என்று கருதும் ஒவ்வொருவரும் என்னை உண்மை உழைப்பாளி என்று கருதினால் ஒவ்வொருவரும் தங்களாலான உதவியைச் செய்து விடுதலைக்கு ஆதரவும் உதவியும் அளிக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறேன். பணம் உள்ளவர்கள் பணம் கொடுக்கலாம்; விளம்பரங்கள் கொடுத்து ஆதரிக்க வசதியுள்ளவர்கள் விளம்பரம் கொடுக்கலாம். சந்தாதாரரைச் சேர்த்து பணம் வசூலித்து அனுப்பக் கூடியவர்கள் சந்தா சேர்த்தனுப்பலாம். வாக்குச் சகாயம் எழுத்துச் சகாயம் செய்து பத்திரிகையின் தொண்டை பரவச்செய்ய வசதி உள்ளவர்கள் அத்தொண்டை பரப்பலாம்.
இவைகளிலும் இவைபோன்ற பிறவற்றிலும் ஒன்றும் செய்ய முடியாத உண்மைத் தமிழ் மக்கள் மனமொழி மெய்களால் இடையூறு செய்யாமல் இருக்கலாம். இதுவே விடுதலை மூலம் விடுதலைத்தொண்டு நடைபெறுவதற்கு அடியேனது விண்ணப்பமாகும்
- ஈ.வெ.ராமசாமி 01.07.1937 'விடுதலை' தலையங்கம்.
குடி அர - மறுபிரசுரம் - 04.07.1937
குடி அரசு- 1937 (2) 14
பண்டித ஜவஹர்லாலின் மதிப்பு
காங்கிரஸ் தலைவரான பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு நாட்டில் உண்மை மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை பொது ஜனங்கள் உணரவேண்டும் என்பதற்கு ஆகவே இக்கட்டுரை எழுதுகிறோம். பண்டித ஜவஹர்லால் பல சமயங்களில் முன்பின் யோசனையில்லாமலும் முறட்டு வீரமாகவும் பேசும் பேச்சுக்களையும், எழுதும் எழுத்துக்களையும் பல பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பயன்பெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். காங்கிரசின் பேரால் ஓட்டு கேட்கும் போது காங்கிரசின் வருணாச்சிரம தருமத் தன்மையையும் முதலாளித்துவ தன்மையையும் மறைப்பதற்கு ஆக பண்டிதரை காந்தியாரும் பார்ப்பனர்களும் பயன்
படுத்திக் கொள்ளும் தன்மை மற்றொரு பக்கம் இருக்கட்டும். வகையான வாழ்வுக்கு வகையற்ற வாலிபக்கூட்டமும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக அவ்வப்போது எந்தெந்த பேச்சுக்கும் ஸ்தாபனத்துக்கும் செல்வாக் கிருக்கின்றதோ அந்தந்த பேச்சுப் பேசி அந்தந்த ஸ்தாபனத்தைத் தொங்கிக் கொண்டு பிழைப்பதற்கு ஆக ஜவஹர்லாலுக்கு ஜே என்றும் சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் ஜே என்றும் கூறிக் குதிப்பது இனியொரு பக்கத்தில் இருக்கட்டும் இன்றைய சாதாரண நடைமுறை வழக்கில் பொதுப்படையாக பண்டிதருக்கு பொதுவாழ்வில் - அரசியல் உலகில் - காங்கிரசில் - அரசாங்கத்தில் என்ன மதிப்பு இருக்கிறது என்பதை அறிய வாசகர்களை நடு நிலைமையில் இருந்து சிந்தித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
ஜவஹர்லால் அவர்கள் தன்னை பொதுவுடமைவாதி, சமதர்மவாதி என்று காட்டிக் கொள்ளுகிறவர் என்பதில் யாருக்கும் ஆட்சேபணை: இருக்காது. ஆனால் தோழர் காந்தியாரும் மற்றும் அவரது “12 அந்தரங்க சிஷ்யர்களும்” அதாவது தோழர்கள் பட்டேல், ராஜேந்திர பிரசாத், ஜமன்லால் பஜாஜ், ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களும் பொது உடமைக் கொள்கைக்கு விரோதிகள் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபணை: இருக்காது. அதோடு மாத்திரமல்லாமல் பண்டிதர் தனக்கு ஜாதியில்லை என்றும் மதம் இல்லையென்றும் கடவுளைப் பற்றி கவலை இல்லை யென்றும் சொல்லிக் கொள்ளுபவர். சில இடத்தில் நாஸ்திகர் என்றும் காட்டிக்கொள்ளுபவர். (காரியத்தில் பார்ப்பன ஜாதிவேஷம், இந்துமத 18௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கொள்கை, கோவில் குளங்களுக்குப் போய் வணங்கி பிரசாதம், மதக்குறி முதலியவைகள் பெறுகிறவர், அணிகிறவர் ஆக இருந்தபோதிலும் வாயில் தைரியமாய் சொல்லுகிறவர்)
இந்த நிலைமையில் காங்கிரஸ் தலைமைப்பதவி பெறுவதற்கு ஆக இவற்றையெல்லாம் கைவிடத் துணிந்தவராக வெளியில் எடுத்துச் சொல்லி “என்னுடைய கொள்கை எப்படி இருந்தாலும் நான் காங்கிரசுக்கு தலைவனானால் காங்கிரசில் இக்கொள்கையை வலியுறுத்துவேன் என்று
யாரும் கருதிவிடக் கூடாது'' என்று சொல்லியே தலைமைப் பதவி சம்பாதித்துக் கொண்டவர். காங்கிரஸ் சர்வாதிகாரியும், சர்வாதிகாரியை நடத்துகிறவர்களும் இந்த சங்கதி தெரிந்தே பண்டிதரை தங்கள் தங்கள் சொந்தக் கருத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி சூழ்ச்சியாகவே பண்டிதருக்கு தலைமைப் பதவி கொடுத்து விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். இந்த காரணங்களாலேயே தென்னாட்டுப் பார்ப்பனர்கள் அவரை தமிழ் நாட்டுக்குத் தருவித்து பயன்படுத்திக் கொண்டதல்லாமல் அவரை ஊருக்கு வழியனுப்பும்போது “சுதேசமித்திரன்” பத்திராதிபர் “இந்து” பத்திரிகையில் ஒரு வழியனுப்பு உபசாரப் பத்திரம்
வாசித்துக் கொடுத்து அதில்,
ஓய் பண்டிதரே! உமக்கு சொந்ந புத்தியும் இல்லை சொல்பவர்கள்
புத்தியும் கேட்பதில்லை
உமக்கு பண்டித மோதிலால் நேரு தகப்பனாய் ஏற்பட்டும், காந்தியார் குருவாய் ஏற்பட்டும் இருவர் தன்மையும் உம்மிடமில்லையே. உமது ஆணவமே உம் முன் எப்போதும் நின்று உம்மை நடத்துகிறதே தவிர பெருந்தன்மையோ அடக்கமோ அறிவோ உம்மிடம் இல்லையே என்றெல்லாம் இன்னமும் இதைவிட மோசமான கருத்துக்களை திரட்டி
'ரங்கனாதர் மாலை'' மாதிரி பெரிய மாலையாகக் கட்டி தலையிலிருந்து கால்வரை படும்படியாக சாத்தி அனுப்பினார்கள்.
பண்டிதர் தலைவரானவுடன் வேலைக்கமிட்டி நியமிப்பதிலும் பண்டிதர் இஷ்டப்படி செய்து கொள்ள சட்டம் இருந்தும் அந்தப்படி செய்யவிடவில்லை. அப்படி இருந்தும் பண்டிதர் நடத்தையை அது விஷயத்தில் தோழர் ராஜேந்திரபிரசாத் கண்டித்தார்.
இவையும் இவை போன்றனவும் ஒரு புறமிருக்க, பதவி ஏற்பு விஷயத்தில் பண்டிதர் “காங்கிரஸ் எந்தக் காரணம் கொண்டும் பதவி
ஏற்கக் கூடாது” என்று ஒருபுறம் பிரசாரம் செய்து வரவும் தோழர். சத்தியமூர்த்தி போன்றவர்கள் மற்றொரு புறம் பதவியேற்க வேண்டும் என்று பிரசாரம் செய்து வரவுமான காரியம் நடந்து கொண்டே வந்தது அதை ஏன் என்று கேட்க பண்டிதருக்கு யோக்கியதை இல்லாமல் போய் விட்டது. உலகப் பொது வழக்கில் ஒரு ஸ்தாபனத்தின் தலைவர்.
குடி அரசு- 1937 (2) 16
அபிப்பிராயம் எதுவோ தலைவரால் பிரசாரம் செய்யப்பட்டுவரும் கொள்கை எதுவோ அதுதான் அந்த ஸ்தாபனத்தின் கொள்கையாகவும் அபிப்பிராயமாகவும் இருக்கும் - இருக்க வேண்டும் என்பதாகும் அப்படிக்கில்லாத பட்சம் நேர்மாறுபாடாய் இருக்குமானால் தலைமைப் பதவியில் இருப்பவர் ராஜிநாமா கொடுத்து அந்த ஸ்தாபனத்தின் அல்லது அந்த பதவியின் சுயமரியாதையை காப்பாற்றுவார்கள் என்பது உலக வழக்கு. நமது பண்டிதர் எப்படியாவது தலைவர் பதவிச் சட்டை தன்மீது சாத்தப்பட்டிருந்தால் போதும் என்று கருதிக்கொண்டு தன் மானத்தை சிறிது சிறிதாக பறிகொடுத்துக்கொண்டே வந்து விட்டார். அதன் பயன் தான் இன்று அரசியலில் பண்டிதருக்கு சிறிதும் மதிப்போ கவுரவமோ இல்லாமல் செய்து விட்டது
காங்கிரஸ் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மேலால். என்ன செய்வது என்பதில் பண்டிதரைக் கலக்கவோ பண்டிதர் அபிப்பிராயம் தெரியவோ பண்டிதர் நடத்துதலின் கீழ் இருக்கவோ யாருமே கருதவில்லை. உடனே காந்தியார் பட்டத்துக்கு வந்து விட்டார். அதுவும் எப்படிப்பட்ட காந்தியார் என்றால் காங்கிரசில் 4 அணா மெம்பராகக் கூட இல்லாத காந்தியாரை - சட்டசபை தேர்தலைப் பற்றியோ அதன். மேல் நடத்தையைப் பற்றியோ தனக்கு அபிப்பிராயம் கூற எவ்வித யோக்கியதையும் உரிமையும் இல்லை என்றும் இதை சத்தியமாக சொல்லுகிறேன் என்றும் சொன்ன காந்தியாரை திடீரென்று கொண்டுவந்து தலைவராக்கினார்கள். அப்பொழுது பண்டிதர் இஞ்சி சாப்பிட்ட ஆஞ்சநேயர் போல் விழித்துக்கொண்டு இருந்தார். பிறகு பண்டிதருக்கு இஷ்டமில்லாத காரியமாகிய மந்திரி பதவி ஏற்பதை காந்தியார் பேரால் அனுமதித்ததையும் சிறிதும் ஆக்ஷேபிக்க சக்தியில்லாதவராய் மூலையில் ஒடுங்கிக் கிடந்தார். அந்த மந்திரி பதவி ஏற்பதிலும் பண்டிதர் தகமைக்கு மிகமிக மானங்கெட்ட நிபந்தனையான சீர்திருத்த சட்டத்துக்கு கட்டுப் பட்டு அடங்கி அரசியலை நடத்திக் கொடுப்பதாகவும் கவர்னர்களும் அரசாங்கத்தாரும் தங்கள் மீது சந்தேகப்படாமல் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்னும் நிபந்தனையை கொடுத்து சர்க்கார் அனுமதியை எதிர்ப்பார்த்தார்கள். இதையும் பண்டிதர் வாயாலேயே ஆமோதிக்கும்படி செய்தார்கள். அதற்கும் சர்க்கஸ்காரர் சிங்கம்போல் வாலாட்டினார். கடசியாக சர்க்கார் அனுமதி கொடுக்காவிட்டாலும், அனுமதி கொடுக்க முடியாது என்று சர்கார் மறுத்ததும் மந்திரி பதவி ஒப்புக்கொள்வீர்களா மாட்டீர்களா என்று வைசிராய் பிரபு மிரட்டினதும் அனுமதி கொடுத்ததாகத்தான் அருத்தம். அதுமாத்திரமல்ல, காங்கிரஸ் கேட்டதெல்லாம் கொடுத்துவிட்டதாக அருத்தம் என்று சொல்லி மந்திரி பதவி ஏற்றுக் கொள்ள வேண்டிய தீர்மானம் செய்ய 5-ந்தேதி வார்தாவில். 7 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மீட்டிங் கூட்ட வேண்டியிருக்கிறபடியால் உடனே புறப்பட்டு வரவேண்டியது என்று பண்டிதருக்கு ஆச்சாரியார் சம்மன் அனுப்பின உடன் இப்போது ஓட்ட ஓட்டமாக ஒருநாள் முன்பாகவே வார்தாவுக்கு
ஓடுகிறார். இனி ஆதார பூர்வமாக பண்டிதருக்கு உள்ள மதிப்பு என்ன என்று பார்ப்போம்.
இந்தியா மந்திரி ஜெட்லண்ட் பிரபு காங்கிரஸ் ராஜகோபாலாச்சாரி என்று சொன்னாரே ஒழிய பண்டிதரைப் பற்றிய பேச்சே - காங்கிரஸ் தலைவரைப் பற்றிய பேச்சே காணப்படவில்லை. வைஸ்ராய் பிரபு பேச்சிலும் காந்தியாரைப்பற்றி இருந்ததே தவிர பண்டிதரைப் பற்றிய பேச்சே இல்லை. தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் காந்தியாருக்கும் ஆச்சாரியாருக்கும் மற்றும் வேறு யாருக்குமோ தன் அறிக்கை அனுப்பி யிருப்பதாக அறிக்கை வெளியிட்டாரே தவிர பண்டிதரை லக்ஷ்யம் செய்ததாகக்கூட காணப்படவில்லை. எல்லா இந்திய காங்கிரஸ் பத்திரிகைகளும் அல்லாத பத்திரிக்கைகளும் காந்தியார், ஆச்சாரியார். ஆகியவர்களைத்தான் முன்னிலைப்படுத்தி எழுதுகின்னனவே ஒழிய பண்டிதர் என்று ஒருவர் இருக்கிறாரா? என்று கூட அவை லக்ஷ்யம் செய்வதில்லை. மற்றும் காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாருமேதான் அடிக்கடி அறிக்கை மேல் அறிக்கைகள் விடுகின்றார்களே ஒழிய பண்டிதர் அறிக்கை காணப்படுவதே இல்லை. பண்டிதர் கருத்துக்கு காங்கிரஸ் கொள்கை,
திட்டம் ஆகியவைகளுக்கு விரோதமாய் வெளிவரும் அறிக்கைகளுக்கு கூட வாய் திறப்பதில்லை
ஒரு காங்கிரஸ் தலைவர் ஒரு விஷயத்தின் மீது தன் அபிப்பிராயத்தைச் சொல்லக்கூட தைரியமில்லாமல் யாராவது கேட்டால் “நான் இன்னமும் அறிக்கையை படிக்கவில்லை எனக்கு நேரமில்லை" என்று பதில் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் என்றால் இவரது வீரமும் தன்மானமும் எவ்வளவு என்பதை பொது ஜனங்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்திய வாலிபர்கள் லக்ஷக்கணக்கான பேர்கள் ஜவஹர்லாலை நோக்குகிறார்களாம். காந்தியாரையும் ஆச்சாரி யாரையும் யாரும் நோக்குவதில்லையாம். இது “சமதர்ம வாலிபர்” என்னும் வெட்கங்கெட்ட வாலிபர்கள் பேச்சாய் இருக்கிறது
இந்த லக்ஷணத்தில் உள்ள பண்டித ஜவஹர்லால் வீரர் “சுயமரியாதைக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவளித்ததால் தனக்கு சுயமரியாதைக் கட்சி என்றால் பிடிப்பதே இல்லை” என்று மலேயாவிலும்
மற்றும் பிற இடங்களிலும் பேசி வருகிறார். எந்த சந்தர்ப்பத்தில் என்றால்,
தான் பதில் சொல்ல முடியாதபடியான கேள்விகளைக் கேட்டால் அதிலிருந்து தப்பித்து ஓட இந்த பல்லவியை பாடுகிறார். இவரைப்பின்பற்றி சில “சமதர்ம வீரர்கள்" பேசிப்பழகிக் கொண்டிருக்கிறார்கள்.
குடி அரசு - 1937 (2) 18
ஆனால் “பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் சிறிது மனக்கசப்பு வந்தாலும் என் உயிரை விட்டாவது அதைத் தடுப்பேன் என்று சொல்லும் காந்தியாருக்கு சிஷ்யராய் இருப்பதிலும் ஜே போடுவதிலும் இந்த
வீரர்களுக்கு அவமானமோ அசிங்கமோ தோன்றுவதில்லை.
சட்டத்துக்கு அடங்கி நடந்ததாக வாக்குறுதி கொடுத்து மந்திரி பதவி ஏற்று அரசியல் சட்டத்தை நடத்திக்கொடுத்து “பிரிட்டிஷ் சர்க்காருக்கு தூண்களாய்" இருக்கப்போகும் காரியத்தைக் கண்டு இந்த வீரர்கள் வெட்கப்படவோ அசிங்கப்படவோ மூடிகிறதில்லை. ஆகவே நம்மை குறைகூறும் இவர்களுக்கு வெட்கமோ வாசனை பார்க்கும் மூக்கோ இருக்கிறதோ இல்லையோ என்பதை பொதுமக்களே உணர்ந்து கொள்ளட்டும்.
குடி அரசு - தலையங்கம் - 04.07.1937
9௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தெய்வ வரி
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை அரசாங்க சம்பந்தத்தில் பூமி வரி, வருமான வரி, கள்ளு வரி, துணி வரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிட்டி வரி, போர்டு வரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகளைக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற் காகவும் கொடுத்து வரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்ப தோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவை விட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும், மத விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதற்கில்லாமல் செய்து, நமது மூட நம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதி வைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்து வதல்லாமல் வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிரயாணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றிற்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு தெய்வத்திற்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும், மற்றும் சில தர்மத்திற்காகவும், அங்கு போகும் ரயில் சத்தம் வண்டிச் சத்தத்திற் காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இது போலவே இமய முதல் கன்னியா குமரி வரை உள்ள தீர்த்தம், ஸ்தலம், கோவில் முதலிய வைகளுக்கு மக்கள் போக்கு வரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு, திதி இவை களுக்காகவும், அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூட நம்பிக்கையும் தானே செய்விக்கின்றன. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வ யாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினும் பெற்று விடலாமென்றும் நினைக்கிற பேராசை
குடி அரசு - 1937 (2) 20
நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குண கர்ம யோக்கியதையைப் பொறுத்த தல்லாமல், தாம் வைதீகச் சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும் தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும், மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும் செலவும், தெய்வத்தின் பெயராலும் ஏமாற்று தலாலும் ஏற்பட்டிருக்கவே முடியாது தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன. வைதீகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன? இவ்விரு கர்மங் களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதை என்ன? என்பதை மக்கள் கவனிப்பதில்லை. காளை மாடு கன்றுப் போட்டதென்றால் கன்றுக் குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு என்றே சொல்லி விடுகிறோம் காளை மாடு எப்படிக் கன்றுப் போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கை போடுவதாலும் நமது
குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும்? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும், அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம், தத்துவம் வீணாகப் போவதல்லாமல் ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் போது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப் பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ, அப்படியே இந்த கேஷத்திரங் களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு மட்டும் அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்ட காரியங்களும் வளர்கின்றன. நல்ல யாத்திரைஸ்தலம் என்று சொன்னால் நல்ல வியாபாரஸ்தலம் என்பது தான் பொருளாக விளங்குகின்றது. தேர் திருவிழா ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை வியபசாரத்திற்கும் சூதுக்கும் போதை வஸ்துக்களுக்குமே பெரும்பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதிகச் சடங்கைப்பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு சிறு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கின்றோம் A ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர், ஒருவருக்கு வைதிக கர்மம் செய்து வைத்துக் கொண்டிருக்கும்பொழுது தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட ஒரு பெரியார் தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.
புரோகிதர்:- ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்துத் தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்?
பெரியார்: நீங்கள் கிழக்கு முகமாகப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?
புரோகிதர்:- இது மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.
பெரியார்:- நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.
புரோகிதர்:- இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச் சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!
பெரியார்:- நீர், இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தைவிட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்?
புரோகிதர்:- (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள். இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே.
குடி அரசு - கட்டுரை - 04.07.1937
குடி அரசு - 1937 (2) 22
w . Bt il கணக்லவானம்
அல்லது s asdnar வமியாரி வட்டு
வ பல்பம் விசாக
vl s | னவே. 00111 = பம்ப் Ll g, 1]
ஒரு தொல்லை ஒழிந்தது
கடைசி சரணாகதி:
காங்கிரசுக்காரர்களுக்குப் புத்தி வந்தோ அல்லது வேறு நிவர்த்தி இல்லாத நிலையில் சிக்கிக்கொண்ட நெருக்கடியால் ஞானோதயம் ஏற்பட்டோ கடைசியாக சரணாகதி அடைந்துவிட்டார்கள். இந்தப் பெருமை நமது சர்க்காருக்கே உண்டு. மகா கெட்டிக்காரத் திருடனாய் இருந்த கூளாங்காலன் என்பவனை யாராலும் பிடிக்க முடியாமல் போனவுடன் கடைசியாக அவன் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படியும் அவனைக் கண்ட இடத்தில் சுடும்படியும் உத்திரவு போட்டதாலும் அவன் சுற்றத்தார், உறவினர், அவனது ஊர்க்காரர் ஆகியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்காணிப்பு ஏற்படுத்தியதாலும் கூளாங்காலன் தானாகவே ஓடிவந்து எப்படி சரணாகதி அடைந்து சிறைப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டானோ அது போல் சர்க்காரார் காங்கிரஸ் தொல்லையை ஒழிக்க சாதாரண முறையில் எவ்வளவோ காரியம் செய்தும் அவை காங்கிரசுக்குச் சோதிக்காமல் போய்விட்டதால் கடைசியாக ஒரு உத்திரவு போட்டது போல் - வைஸ்ராய் பிரபு காங்கிரசுக்கு இறுதிச் சேதி விட்டது போல் இவ்வளவு நாளைக்குள் வந்து தாங்களாக சரணாகதி அடைந்து அவர்களது இடத்தில் அமர்ந்துகொள்ளாதவரை அந்த இடங்களைப் பறிமுதல் செய்யப்படுமென்றும், பறிமுதல் செய்யப்பட்டுவிட்டால் அப்புறம் ஐயா என்றாலும் வராது அப்பா என்றாலும் வராது என்றும் முடிவு செய்து கடினமான முறையைக் கையாளத் துணிந்துவிட்டவுடன் தானாகவே
காந்திஜ், ஜவஹர்ஜீ முதலிய எல்லா ஜீயும் நான் முந்தி, நீ முந்தி என்பதாகப் போட்டி போட்டுக்கொண்டு நின்ற நிலையில் தொப்பென்று விழுந்து சரணாகதி அடைந்துவிட்டார்கள்.
சமதர்ம வீரர்கள் அவர்களுக்கு அடிபடாமல் இருக்க கைலாகு கொடுத்து சரணாகதிக்குப் படுக்கவைத்தார்கள். மற்ற தேசீய வீரர்கள், தேசியவாதிகள், தேச பக்தர்கள், வாலிப சிங்கங்கள், சமதர்மவாதிகள், பொதுஉடமைப் புலிகள் என்கின்றவர்களான எல்லாக் கூட்டத்தாரும் ஒரே அடியாகத் ததாஸ்துபோட்டு சர்க்காரின் காலில் காங்கிரசின் தலை நன்றாய் படும்படியாக கெட்டியாய் பிடித்து அமுக்கி விட்டுவிட்டார்கள். காங்கிரசின் மானம் அடியோடு போய்விட்டது என்பதற்கு இனி என்ன பாக்கி இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
குடி அரசு- 1937 (2) 24
காங்கிரசு ஏற்பட்ட காலம் முதற்கொண்டு காங்கிரசுக்கு இப்படிப் பட்ட சரணாகதி ஒருபோதும் நேர்ந்ததில்லை என்றே சொல்லலாம்.
தோழர் காந்தியார் மகாத்மாவாகி காங்கிரசுக்குச் சர்வாதிகாரியான இந்த 17 வருஷ வாழ்வில் சுமார் 10 சரணாகதி ஏற்பட்டிருந்தாலும் இது அடியோடு காங்கிரசின் மானத்தையே போக்கடிக்கக்கூடிய சரணாகதி என்பதோடு இனி தலைதூக்க முடியாத சரணாகதி என்றுதான். சொல்லவேண்டும்.
நிர்மாணத்திட்ட சரணாகதி 1.
ஒத்துழையாமை சரணாகதி 2
பகிஷ்கார சரணாகதி 3
சர்க்கார் உத்திரவு மீறுதல் சரணாகதி 4
மறியல் சரணாகதி 5
சத்தியாக்கிரக சரணாகதி 6
சைமன் கமிஷன் பஹிஷ்கார சரணாகதி 7
உப்பு காய்ச்சுதல் சரணாகதி 8
காந்தி இர்வின் ராஜி சரணாகதி 9 வட்டமேஜை சரணாகதி 10
நான்கு அணா மெம்பராகக் கூட இல்லாமல் காங்கிரசை விட்டும், காங்கிரஸ் நிர்வாக காரியத்தை விட்டும் வெளியில் போன சரணாகதி 11
இப்படியும் இது போன்றவுமான முக்கியமான சரணாகதிகள் பல இருந்தாலும் கடைசியாக வெளிப்படையாக பச்சையாக தலைவணங்கி கோட்டைக்குள் சென்று சத்தியம் செய்து கொடுத்து, ராஜபக்தி காட்டி பிரமாணம் செய்துகொடுத்து, சட்டதிட்டங்களுக்கு கீழ்ப்படியும் பக்தி காட்டி சர்க்காரை நடத்திக்கொடுக்கும் சேவக வேலைக்கு போகவேண்டிய நிலைமை ஏற்பட்ட சரணாகதி விலைமதிக்க முடியாததாகும்
மற்றும் இதன் முழு விஷயங்களையும் தெளிவாய் உணரவேண்டு மென்று விரும்புகிறவர்கள் பதவி ஏற்பது விஷயமாய் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்த தீர்மானத்தை முதலில் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது,
“மந்திரிமார்கள் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் காரியங்களில் கவர்னர்கள் தங்களது விசேஷ அதிகாரங்களை பிரயோகிப்பதில்லை என்பதாக சந்தேகமற்ற முறையில் வெளிப் படையாக தெரிவித்தாலொழிய மந்திரி பதவிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளக்கூடாது'' என்பதாக தீர்மானித்து இருக்கிறது B3 ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இந்த தீர்மானமே சுயமரியாதை அற்ற தீர்மான மென்றும் அடிமை
முறித் தீர்மான மென்றும் சுயராஜ்யத்தை ஒழித்து அந்நிய ராஜ்யத்தை நிலை நிறுத்தும் தீர்மானமென்றும் இன்னும் பலவாறாக காங்கிரஸ் பக்தர்கள் பலர் கண்டித்து பேசியும் எழுதியும் இருக்கிறார்கள்
அப்படி இருக்க இப்போது காரியக்கமிட்டி செய்த தீர்மானத்தில், “பிரதம மந்திரி, கவர்னர்கள், வைசிராய் பிரபு ஆகியவர்கள் அறிக்கைகளை கவனமாய் படித்து பார்த்ததில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானப்படி கேட்கப்பட்ட உறுதி மொழி தரப்படவில்லை" என்று வியக்தமாக தீர்மானித்துவிட்டது. இதன் பேரில் பதவி ஏற்கக்கூடிய நிலை காங்கிரசுக்கு எப்படி ஏற்பட்டது என்பது விளங்கவில்லை.
ஆனால் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்கு காரியக்கமிட்டி செய்துள்ள தீர்மானம் மிக மிக வெட்கக்கேடாக இருக்கிறது என்பதை அதன் வாசகத்தைப் படிக்கும் யாரும் உணரலாம். அதாவது, இதுவரை நடந்த சம்பவங்களையும், அவைகளால் ஏற்பட்ட நிலைமையையும் பார்த்தால் கவர்னர்கள் சுலபத்தில் விசேஷாதி காரங்களை உபயோகிக்கமாட்டார்கள் என்று தெரிவதோடு சட்டசபை மெம்பர்களுடையவும் காங்கிரஸ்காரர்களுடையவும் அபிப்பிராயத்தை கவளித்ததிலும் காங்கிரஸ்காரர்கள் அழைக்கிற இடங்களில் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள அனுமதியளிக்கிறது”
என்று தீர்மானித்திருக்கிறது. கவர்னர்கள், இந்தியா மந்திரிகள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச்சொன்ன. காலத்திலேயே காங்கிரஸ்காரர்கள் அவற்றை கவனித்துப் பார்த்து அதில் வாக்குறுதி இல்லை என்றும் காங்கிரசை - காந்தியாரை அலக்ஷ்யப்படுத்தி பேசப்பட்டிருக்கிற தென்றும் எல்லா காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் சொல்லிவிட்டு இப்போது வைசிராய் மிரட்டியவுடன் இந்தியா மந்திரி அறிக்கையும் கவர்னர்கள் பேச்சும் காரியக்கமிட்டிக்கு எப்படி நம்பிக்கை கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதும் விளங்கவில்லை.
வைசிராய் பிரபு பேச்சு நடந்த உடனும் காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் “வைசிராய் பேச்சில் பழய புராணம்தான். அதாவது இந்தியா மந்திரியும் கவர்னர்களும் பேசிய பேச்சில் என்ன. கருத்து இருந்ததோ அதுதான் வேறு வார்த்தைகளால் உறுதிப்படுத்தப் பட்டு விட்டது என்பதோடு அவர் காங்கிரசை மிரட்டுகிறார்” என்றும் சொல்லிவிட்ட பிறகு அப்புறம் எப்படி அவர்கள் பேச்சில் “காங்கிரஸ் கோரிக்கையை திருப்தி செய்ய விருப்பம் காட்டப்பட்டிருக்கிறது'” என்றும் “சுலபத்தில் விசேஷாதிகாரங்களை பிரயோகிக்க மாட்டார் என்று காணப்படுகிறது என்றும் காரியக் கமிட்டி தீர்மானிக்கிறது என்பதும் நமக்கு விளங்கவில்லை. தவிரவும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டியானது
குடி அரசு- 1937 (2) 26
“கவர்னர்கள் விசேஷாதிகாரங்களை உபயோகிக்கமாட்டார்கள் என்று பகிரங்கமாக தெளிவாகத் தெரியப்படுத்தினாலொழிய பதவி ஏற்கக்கூடாது” என்று செய்த தீர்மானத்தின் யோக்கியதை என்ன ஆயிற்று என்று யோசிக்கும் படி பொது ஜனங்களை வேண்டுகிறோம்
“பின்னர் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பங்களினாலும் சில சம்பவங் களினாலும்'' என்றால் அதன் அருத்தம் என்ன என்பது விளங்கவில்லை.
பின்னர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் பல தடவை சென்னை கவர்னரைப் போய் பார்த்தார் என்பதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களும், சம்பவங்களும் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடுவதற்கு முன் என்ன சந்தர்ப்பம், என்ன சம்பவம்
ஏற்பட்டு இருந்ததோ அவை தானே ஒழிய புதிதாக ஏதாவது ஏற்பட்டுவிட்டதென்று யாராவது சொல்ல முடியுமா? ஆகவே முன் மார்ச்சு மாதம் 185 தேதி அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூடி செய்த தீர்மானம் முட்டாள்தனமானது என்று தலைவர்கள் என்பவர்களாலேயே கருதும்படி ஏற்பட்டதல்லாமல் வேறு சம்பவம் என்ன நடந்துவிட்டது என்று கேட்கிறோம். மற்றும் மறுபடியும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டி இது விஷயமாய் யோசிக்க நேரமில்லையென்றும் இதே சமயத்தில் ஒரு முடிவுக்கு வராவிட்டால் நாட்டிற்கு கெடுதியாக முடியும் என்றும் பதவி ஏற்க தீர்மானம் செய்யாவிட்டால் “பொது ஜனங்களிடையே குழப்பம் ஏற்படும்” என்றும் காரியக் கமிட்டி தீர்மானிக்கவேண்டிய காரியம் என்ன என்று கூர்மையாய் யோசித்துப் பார்ப்போமானால் முதலாவது, காரியக் கமிட்டியிடம் வேலைக் கமிட்டிக்கு நம்பிக்கை இல்லையென்பது ஒன்று, நம்பிக்கை இருந்தாலும் காங்கிரஸ் கமிட்டி கூடினால் காங்கிரசின் சாயமும் காங்கிரஸ் தலைவர்களின் நாணயமும் அதாவது பதவி ஆத்திரமும் வெறுத்துப்போகுமே என்கின்ற பயம் இரண்டு; இதைத் தவிர வேறு காரணம் இல்லை. அல்லது மிக அவசரம் நெருக்கடி என்றும் குழப்பம் ஏற்பட்டுவிடும் என்றும் காரியக் கமிட்டி கருதியது உண்மை என்றே வைத்துக்கொண்டாலும் என்ன அவசரம்? எப்படிப்பட்ட நெருக்கடி? என்ன குழப்பம் ஏற்படும்? என்பதை அவர்கள் விளக்கவில்லை. ஆனாலும்
நாம் யோசித்துப் பார்த்தால் காங்கிரஸ் தீர்மானத்திற்கு நாட்டில் செல்வாக்கில்லை என்பதும் பொது ஜனங்கள் கட்டுப்படமாட்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் காங்கிரசின் பேரால் நின்று வெற்றி பெற்ற சட்டசபை மெம்பர்களே கலைந்து காங்கிரசை விட்டு ஓடிப் போய் பதவி ஏற்றுக் கொள்ளுவார்கள் என்பதும் உறுதி என்று வேலைக் கமிட்டியார் தீர்மானித்துக் கொண்டார்கள் என்பதுதான் புலப்படும்
மற்றும் சிறிது “தாமதத்திலும் தேச நலத்துக்கு கேடு உண்டாகிவிடும்” என்றும் தீர்மானித்திருக்கிறதைப் பார்த்தால் தேசத்தாருக்கும் தேச 27— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நலத்துக்கும் தேவையில்லாத வாக்குறுதியைக் கேட்டு காங்கிரஸ் முட்டாள் தனமாக நெருக்கடியில் சிக்கிக் கொண்டதை நன்றாய் விளக்குகிறது.
இந்த நிலையில் உள்ள காங்கிரசுக்காரர்கள் ஒத்துழையாமை, பூரண சுயேச்சை, சீர்திருத்த உடைப்பு, சமதர்மம், ஜேப்பிலேயே ராஜிநாமா கடிதம் போட்டுக்கொண்டு போவது, சீர்திருத்தத்தில் யாதொரு பயனும் இல்லை என்றெல்லாம் பேசினது என்ன ஆயிற்று என்று கேட்கிறோம்.
காங்கிரசுக்கு கீர்திருத்தத்தை உடைப்பது உண்மையான, நாணைய மான கருத்தா யிருந்திருக்குமானால் சீர்திருத்தம் உடைபட இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் எப்போதாவது கிடைக்குமென்று எந்த முட்டாளாவது எதிர்பார்கக முடியுமா என்று கேட்கின்றோம். வைசிராய் பிரபுவே கண்டிப்பாய் சொல்லி விட்டார். அதாவது, காங்கரஸ்காரர்கள் சரணாகதி அடையவில்லையானால் “சீர்திருத்தம் உடைந்துபோகும் அதுவும் பிறகு சுலபத்தில் சீர்திருத்த முடியாத மாதிரி உடைபட்டுப் போகும்” என்று சொன்ன பிறகும் காங்கரசுக்காரர்கள் சீர்திருத்தம் தானாகவே உடைவதைப் பார்த்துவிட்டு அந்தப்படி அது உடைந்த உடன் 1000 தேங்காயை “பிள்ளையாருக்கு” உடைத்து பிரார்த்தனை செலுத்தாமல் சரணாகதி அடைந்தாவது சீர்திருத்தம் உடைபடாமல் காப்பாற்றிக் கொடுக்க வேண்டிய அவசரம் காங்கரசுக்காரருக்கு ஏன் வந்தது. என்பதை யோசித்துப்பார்க்கும்படி பொது ஜனங்களை கேட்டுக்கொள்கிறோம். ஆகவே இவைகளையெல்லாம் பற்றி மனம்விட்டு உண்மையை பேசவேண்டுமானால்
1. அகில இந்திய காங்கரஸ்கமிட்டியில் கவர்னர்களை வாக்குறுதி கேட்கச் செய்த தீர்மானம் தோழர் ராஜகோபாலாச்சாரியர் சென்னை கவர்னரின் பேச்சைக் கேட்டு ஏமாந்துபோன முட்டாள்தனமேயாகும்.
2. வாக்குறுதி என்ற பிரச்சினையை கிளப்பிய தோழர் காந்தியார், தோழர் ஜவஹர்லாலை ஏய்க்க கண்டுபிடித்த சூழ்ச்சியே யாகும்
3. பதவி ஏற்க அவசரப்பட்ட சத்தியமூர்த்தியார் போன்ற காங்கரஸ் காரர்கள் இதற்கு தலையாட்டியதின் காரணம் காங்கிரசு சும்மா சரணாகதி அடையவில்லை என்றும் ஒரு நிபந்தனை கேட்டு சர்க்காரைப் பணியச் செய்த பிறகுதான் பதவி ஒப்புக்கொண்டது என்றும் சொல்லி ஒரு பொய் சமாதானம் தேடிக்கொள்ள உதவியாயிருக்குமே என்றும் கருதி பதவி வேட்டைக்காரர்களும் தலையை அசைத்தார்கள் என்பதேயாகும். ஆகவே இந்த காரணங்கள் அ.இ.கா.க. தீர்மானத்துக்கு காரணங் களாக இருந்தாலும் இவ்வளவு பேர்களின் திருப்தியிலும் பிரிட்டிஷ்
சர்க்கார் பெட்றோல் விட்டு நெருப்பு வைத்துவிட்டு லார்ட் வில்லிங்டன். துரை எப்படி 1933ல் காங்கிரசை மிரட்டி பணியச் செய்தாரோ அதேபோல்
குடி அரசு- 1937 (2) 28
1937ல் லார்டு லின்லித்தோ துரைமகனார் காங்கிரசை மிரட்டி இனி என்றும் வீரம் பேசாதபடி சரணாகதி அடையச் செய்து விட்டார். தோழர் ஜவஹர்லால் உள்பட சில காங்கிரஸ்காரர்கள் இதற்கு சம்மதிக்காமல் சற்று கிளர்ச்சி காட்டி இருப்பார்கள் என்பது உண்மையாய் இருக்கலாம் ஆனால் வைஸ்ராய் சொன்னபடி அதாவது 10 நாளில் மந்திரி பதவி ஏற்காவிட்டால் ஒழிந்தீர்கள் என்று மிரட்டியது போல் காங்கிரசு இது சமயம் மந்திரி பதவி ஏற்காவிட்டால் பின்னர் அதன் கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்த்தால் ஜவஹர்லால் அடங்கிவிட்டதின் காரணம் விளங்கும்
1. அதாவது காங்கிரசுக்கு வேறு திட்டம் என்ன இருக்கிறது?
2. காந்தியார் நிலை என்ன ஆவது?
3. அப்புறம் ஜவஹர்லால் எங்கே போய் என்ன பிரசங்கம் செய்வது?
4. காங்கிரசையே தங்கள் இன்பவேலையாயும் சாதனமாயும் கொண்ட காங்கிரஸ் பக்தர் - காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேலை என்ன?
OqunisEséE சாப்பாட்டுக்கு வழி என்ன?
o
6. சட்டசபை மெம்பர்கள் பலர் தாங்கள் சட்டசபை மெம்பர்கள் ஆனதற்கே கஷ்டப்படுகிறார்கள். ஏனெனில் எம்.எல்.ஏ. என்கிற மாதிரிக்குத் தகுந்த துணி, சாப்பாடு, வீடு, போக்குவரத்து வசதிக்கு மிக மிக கஷ்டப்படவேண்டியிருக்கிறது. எலக்ஷன் பிரசார வேலையும் இல்லாததால் பலர்களுக்கு (எம்.எல்.ஏக்கு) முன் இருந்த நிலைமையில் கூட இருக்க முடியாமல் கஷ்டப்படும்படி செய்து விட்டது.
7. காங்கரசில் சேர்ந்து பட்டம் பதவி பெறலாம் என்ற சமயோசித வாதிகள் நிலை மரணாவஸ்தையாய் போய் விட்டது
8. இக்கூட்டத்தார் புதுக்கட்சி ஏற்படுத்த துணிந்து விட்டார்கள்.
9. இவ்வளவும் ஒரு புறமிருக்க, காங்கிரசுக்கும் தேர்தலுக்கும் வேலை செய்த உத்தியோகஸ்தர் ஜட்ஜி பார்ப்பனர் முதல் காப்பிக்கடை டமரா பார்ப்பனர் வரை சதா சர்வ காலம் வயிறு வெந்து இளைத்து வருகிறார்கள்.
10. ஜஸ்டிஸ் கட்சியின் பயனாகவும் சுயமரியாதை இயக்கத்தின் பயனாகவும் தங்கள் உத்தியோகமும் மதிப்பும் போய் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல். இரண்டு நாள்களுக்கு ஒரு சமயல் செய்யவும் பெண்களின் ஒழுக்க யீனமாக நடவடிக்கை மூலம் வயிறு வளர்க்கவும் சிலருக்கு இடம் ஏற்பட்டு விட்டதே என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் அடியோடு ஒழித்து ஆயிரம் கஜ ஆழத்தில் புதைத்து விடலாம் எனத் துணிந்து காங்கிரசுக்கு வேலை செய்த பார்ப்பனர்கள் ஒருபுறம், காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்காவிட்டால் 29௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தங்களுக்கு முன்னிலும் அதிகமான கஷ்டம் வந்துவிடுமே எனப் பயந்து சதா சர்வகாலம் தோழர் ஆச்சாரியாரை அவரது இயற்கையை வருணித்து வருணித்து வசவுமாலை சூட்டுவது ஒருபுறம் தொல்லைப்
படுத்தியது
11. கடைசியாக காந்தியார் காங்கிரஸ் பதவி ஏற்க தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்காவிட்டால் அவரது முக்கிய சிஷ்யர்கள் என்பவர்களிலேயே பலர் சர்க்காருக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வக்கீல் வேலைக்குப் போகவோ அல்லது பொது வாழ்விலிருந்து விலகி 'ரமணரிஷி'”' ஆகவோ தீர்மானித்து கொண்டதாக காந்தியாரை மிரட்டியது
12. மகாத்மா பட்டமே காற்றில் பறந்துவிடக்கூடிய நிலைமை ஏற்பட்டு விடுமே என்கிற பயம், ஆகிய இப்படிப்பட்ட இன்னும் பல காரியங்கள். காங்கிரசை சர்க்காரிடம் சரணாகதி அடையும்படி செய்துவிட்டது
எப்படியோ ஆகட்டும், நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை.
நமது தோழரும் உண்மையிலேயே நமது மரியாதைக்கு பாத்திரமான: வருமான அன்பர் சி. ராஜகோபாலாச்சாரியார் முதல் மந்திரியாவதையும் அரசாங்க நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவதையும்பற்றி மனப் பூர்வமாகவே மகிழ்ச்சி அடைகிறோம்
ஏன்? அவர் தகுதியுடையவர்; உரிமையுடையவர்; அதற்கு ஆக
தகுந்த விலை கொடுத்தவர். அவர் மந்திரி பதவி ஏற்றால் மந்திரி பதவிக்கு லாபமே ஒழிய அவருக்கு சொந்தத்துக்கு லாபமில்லை. மற்றும் ஜஸ்டிஸ் மந்திரிகளில் சிலரை விட ஆச்சாரியார் மேம்பட்டவர். ஜஸ்டிஸ் மந்திரிகள்
சிலர் தங்களுக்காகவே வாழ்ந்தார்கள்; சிலர் தங்களுக்காகக்கூட வாழாமல் தங்களையும் பதவியையும் பாழாக்கிக்கொண்டார்கள். சிலர் தாங்கள் எப்படி மந்திரியானோம், ஏன் மந்திரி ஆனோம் என்றுகூட கருதாமல் காலம் கழித்துக்கொண்டிருந்தார்கள்.
இப்படியெல்லாம் இருந்தாலும் ஜஸ்டிஸ் இயக்கம் பல நன்மைகளை இந்த மந்திரிகளாலேயே செய்யச் செய்து இருக்கிறது அதை எதிரிகளே ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆனால் ஆச்சாரியாரோ தனக்காகவோ தன் பெண்டுபிள்ளைகளுக்காகவோ என்று மந்திரி வேலை பார்ப்பவரல்ல, பிறருக்காகத்தான் பார்ப்பார். பணத்தை ஒரு நாளும் மூட்டைகட்ட மாட்டார்.
ஆனால் தன் காலத்திலேயே பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு பார்ப்பனரல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்றும் தலை எடுக்காமல் போகச் செய்யக் கூடியதையெல்லாம் செய்ய முழு முயற்சியும் செய்து பார்த்துவிடுவார்.
குடி அரசு- 1937 (2) 30
ஆகவே இவரது ஆட்சி காலம் பார்ப்பனரல்லாதார்களுக்கு கொடுமையானதாகவே இருக்குமென்று கருதுகிறோம். அப்படிப்பட்ட
ஆட்சியின் கீழ் இருப்பதை ஒரு அவமானமாகக் கூட கருதுகிறோம்.
ஏன்? ஆச்சாரியாருடைய தன்மையைக் கருதி அல்ல. அவரது கொள்கைகளைப் பொறுத்தே இப்படிக் கூறுகிறோம். அவரது ஆட்சி அசல் புரோகித ஆட்சியாயும் அசல் பார்ப்பன ஆட்சியாயுமே இருக்கும் என்றே நினைக்கிறோம். அதற்கு அனுகூலமாக காரியங்களையும் சாதித்துக்கொள்ள பொதுமக்களுக்கு ஏதேதோ சாதித்து விட்டதாக
தந்திரம் செய்யக்கூடும்
இதற்கு அனுகூலமாக தங்கள் வாழ்க்கைக்கு வேறு வழியில்லாமல் அவரைப்போய் சரணாகதி அடைந்த பார்ப்பனரல்லாத பலர் அதை ஆதரித்து விளம்பரம் செய்து பொது மக்கள் கண்களில் மண்ணைப் போட முயற்சிக்கலாம். எப்படி ஆனாலும் எல்லாவற்றையும் பொறுத்துப் பார்த்தே மேலால் நமது கடமை என்ன என்பதை தீர்மானிக்கப் போகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 11.07.1937
3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மாயவரம் நடராஜன் மறைந்தார்
நம் அருமைத் தோழன், ஆருயிர் நண்பன், உண்மை உழைப்பாளி மாயவரம் சி. நடராஜன் முடிவெய்திவிட்டார். காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை உலகில் நடராஜனை அறியாதார் வெகுசிலரே இருக்கலாம். சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அருந்தொண்டாற்றி வந்தவர். தனக்கென வாழாதவர். தனக்கென ஒரு அபிப்பிராயம் காட்டிக்கொள்ளாத போர்வீரராய் இருந்தவர். பணங் காசைப்பற்றியோ தண்டனை கண்டனைகளைப்பற்றியோ துன்பம் தொல்லை. ஆகியவைகளைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் தலைவரால் என்ன
உத்திரவு பிறப்பிக்கப்படுகிறதோ அதற்கு இசையவே படையை நடத்திய தளபதி திடீரென்று முடிவெய்திவிட்டார் என்று தந்தி வந்தது - நம்ப முடியவில்லை. மேலால் ஒன்றும் நினைக்க முடியவில்லை. எழுத பேனா ஓடவில்லை. இனி மேலால் தொண்டர் படைநிலை என்ன ஆவது!
அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சமும் அழியாக் காதலும் கொண்ட அருமை நடராஜனை எப்போது காண்பது! அல்லது நடராஜனைப் போன்ற மற்றொரு காதலனை எங்கே காண்பது! இயற்கையே! உன் கொடுமையே கொடுமை! எங்கும் சிறிதும் இணையில்லாத கொடுமை!
குடி அரசு - இரங்கற் கட்டுரை - 11.07.1937
குடி அரசு- 1937 (2) 32
காங்கரஸ் ஒரு சூழ்ச்சி சபை
முஸ்லீம்களுக்கு அதனால் நண்மை இல்லை
தலைவர் அவர்களே! தோழர்களே!
முஸ்லீம்களும் காங்கிரசும் என்பது பற்றி எனது அபிப்பிராயத்தை தாங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இதைப்பற்றி பல தடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். சுருக்கமாகச் சொல்லுவதானால் தென்னாட்டில் காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும் எப்படியோ அப்படியேதான் காங்கிரசும் மூஸ்லீம்களும் என்பதாகும்
சூழ்ச்சி சபை
தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதாராகிய நாங்கள் பெரும்பான்மையோர் காங்கிரசை எங்கள் சமூகத்தை ஏய்த்து பல வஞ்சக காரியங்களால் எங்களைப் பிரித்து அடக்கி வைத்து எங்கள் மீது ஒரு
சிறு கூட்டத்தார் ஆதிக்கம் செலுத்த ஏற்படுத்திக் கொண்ட சூழ்ச்சி சபை என்றே கருதுகிறோம். இந்த எண்ணம் எனக்கு இன்று நேற்று உதித்ததல்ல. நான் தீவிர காங்கிரஸ் வாதியாய் - தென்னாட்டு மாகாண காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவனாய் தேசத்துக்கு ஆக 3, 4 முறை சிறை சென்று தேசிய வீரனாய் இருந்த காலத்திலே ஏற்பட்டதாகும். அதாவது
சுமார் 12 வருஷத்துக்கு முந்தியே ஏற்பட்டு காங்கிரசிலிருந்து வெளி
வந்து பல்லாயிரமுறை பேச்சிலும், எழுத்திலும் செய்கையிலும் காட்டி வரும் எண்ணமுமாகும். இதே கருத்தைத்தான் இன்று தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியா பூராவிலுமிருக்கும் முஸ்லீம் தோழர்களும் காங்கிரஸ் விஷயமாய் 100க்கு 99 33 பேர் கொண்டிருக்கிறார்கள் என்று
நான் கருதுகிறேன்.
ஆனால் காங்கிரசில் சில கறுப்பு ஆடுகள் இருக்கலாம். அது
உலகம் பூராவிலும் உள்ள இயற்கை தன்மையே ஒழிய வேறில்லை.
ரஷியாவில்கூட பொது உடமை சமதர்ம ஆட்சிக்கு விரோதமாக ஒரு கூட்டம் எதிரிகளுக்கும் உளவாளிகளுக்கும் அனுகூலமாய் இருந்து வருவதை தினமும் அறிகிறோம்.
ஆதலால் அதைப்பார்த்து யாரும் ஏமாந்துவிடக்கூடாது எங்களிலும் எத்தனையோ பேர் எங்கள் சமூக நலனைக் காட்டிக் B ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கொடுத்து வெளிப்படையான எங்கள் ஜன்ம விரோதிகளுக்கு வால் பிடித்துக்கொண்டு அவர்கள் பின் சென்று வயிறு வளர்த்துக்கொண்டும் பதவிகள் பெற்றுக்கொண்டும் திரிகிறார்கள். இவற்றைக் கண்டு நானோ எனது தோழர்கள் பலரோ சிறிதுகூட மனந் தளரவில்லை. அன்றியும் இந்த நிலையை நான் பார்க்கும்போதும் கேட்கும் போதும் தான் எனக்கு அதிகமான உணர்ச்சியும் ஊக்கமும் உண்டாவதோடு எனது தொண்டை நடத்துவதில் அதிக உற்சாகமும் ஏற்படுகிறது.
கறுப்பு ஆடுகளுக்கு அஞ்சவேண்டாம் அதுபோலவே உங்களிலும் பலர் இருப்பதை உங்கள் தொண்டுக்கு அதிக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையான சமூக அபிமானம் இருப்பவனுக்கு இப்படிப் பட்ட காரியங்களால் உற்சாகமும் ஊக்கமும் அதிகமாகுமே தவிர புறமுதுகிட்டு ஓட மனம் இசையாது
காங்கிரஸ் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் ஒரு இந்திய அரசியல் பொது ஸ்தாபனம் என்று எல்லா மக்களுமே கருதி இருந்தார்கள். ஆனால் அது ஏற்பட்ட 5, 6 வருஷத்துக்குள்ளாகவே காங்கிரஸ் ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரின் சுயநல ஸ்தாபனம் என்பதை முஸ்லீம்கள் உணர்ந்து விட்டார்கள். அதாவது 1885-ல் காங்கிரஸ் ஏற்பட்டது என்று சொன்னால் 1890-லேயே முஸ்லீம்கள் காங்கிரசினால் தங்கள் நலம் பிற்போக் குடைவதை உணர்ந்து காங்கிரசு நடவடிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும் தங்கள் கருத்துக்கள் தனியாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். காங்கிரசின் கிளர்ச்சியில் ஏற்படும் உத்தியோகங்களும் சம்பளங்களும் தங்கள் சமூகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்கள். உடனே சர்க்காரார் 1892 வருட இந்தியக் கவுன்சில் ஆக்ட் என்ற ஒரு சட்டம் செய்து உத்தியோகத்திலும் நியமனத்திலும் முஸ்லீம்களுக்கு ஸ்தானங்கள் வழங்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அந்த சட்டமும் முஸ்லீம்களுக்கு போதிய திருப்தி அளிக்காததினாலும் காங்கிரசிடம் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை மேலும் குறைவுபட்டதினாலும் 1906-ம் வருஷத்தில் மேன்மை தங்கிய ஆகாகான் அவர்கள். தலைமையில் வைசிராய் பிரபுவிடம் தூது சென்று தங்கள் குறைகளையும் காங்கிரசால் தங்களுக்கு ஏற்படும் பிற்போக்கையும் எடுத்துச் சொன்னார்கள்.
ஹிந்துக்கள் எதிம்ப்பு
இதை காங்கிரசின் பேரால் பல இந்துக்கள் ஆக்ஷேபித்து இந்தியா மந்திரிக்கு விண்ணப்பித்துக் கொண்டார்கள். இந்தியா மந்திரியும் இதற்கு
குடி அரசு- 1937 (2) 34
இணங்கிவிட்டார். அதை அறிந்த பிறகு முஸ்லிம் லீக் தூது ஒன்று தோழர் அமிர் ஆலி தலைமையில் சீமைக்குச் சென்று இந்தியா மந்திரியை கண்டார்கள். அதன் பயனாக அரசாங்கத்தார் அரசியலில் முஸ்லீம்களுக்கு இவ்வளவு உத்தியோகம் என்றும் பிரதிநிதித்துவத்தில் இவ்வளவு ஸ்தானம் என்றும் பிரித்து முஸ்லீம்களுக்கு தனித்தொகுதியும் ஏற்படுத்தி 1909-ல் இந்தியன் கவுன்சில் ஆக்ட் என்று ஒரு சட்டம் செய்தார்கள். அதற்கான முயற்கியும் அதன் பயனாக முஸ்லீம்களுக்கு தனியாக பதவியும் பிரதிநிதித் துவமும் கொடுத்த காரணமுமேதான் 1907-வருஷ வாக்கில் பங்காளத்தில் இந்துக்களால் சுதேசி கிளர்ச்சியும் வந்தே மாதர கிளர்ச்சியும் ஏற்படச் செய்தன. அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளாததினால்தான் அரசாங்கத்தார் கொடுத்த உரிமையை பறிக்கவில்லை. அதன் பிறகு காங்கிரஸ் வெளிப் படையாகவும் இரகசியமாகவும் இப்பிரதிநிதித்துவத்தை ஒழிக்க வேலைகளும் பிளவு உண்டாக சூழ்ச்சி செய்ததால் முஸ்லீம்கள் வெளிப்படையாகவே காங்கிரசை புறக்கணித்து முஸ்லீம்கள் யாரும் காங்கிரசில் சேராதபடி கிளர்ச்சி செய்தார்கள். இதனால் காங்கிரசு 3, 4 வருஷத்திற்குள்ளாகவே வலுக்குறைய ஆரம்பித்துவிட்டது
காங்கரஸ்-லீக் ஓப்பந்தம் அதன்பிறகு தான் தோழர் பெசண்டம்மையார் காங்கரசில் ஆதிக்கம் வைத்திருந்த காலமாகிய 1916-ம் வருஷத்தில் மூஸ்லீம் லீத்கோடு ஒரு ஒப்பந்தம் செய்து லக்னோவில் கூடிய காங்கிரசில் அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்தார். இந்த சங்கதி முடிந்து காங்கிரஸ் வகுப்புவாரி உரிமையும் தனித்தொகுதி உரிமையும் ஒப்புக்கொண்டவுடன் அதே நிலைமையில் அதாவது முஸ்லீம்களுக்கு காங்கிரசில் எந்த விதமான கெடுதி இருந்ததோ அதுபோலவே தென்னாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கும் காங்கிரசில் இருந்ததால் தென்னாட்டு பார்ப்பனரல்லாதாரும் மூஸ்லீம்களைப் போலவே தனி உரிமை கேட்க ஆரம்பித்தார்கள். அதுதான் இன்றும் காங்கிரஸ் - தென் இந்தியர் அல்லது ஜஸ்டிஸ் என்றும் பார்ப்பனர் - பார்ப்பனல்லாதார் என்றும் சொல்லும்படியான கிளர்ச்சியாய் இருக்கிறது
1916-ம் வருஷம் மூஸ்லீம்களுடன் காங்கிரஸ் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ஒழிப்பதற்கு ஆகவே 1920-ல் தோழர் காந்தியார் வசம் காங்கிரசை பிடித்துக்கொடுத்தும், இந்து காங்கிரஸ் தலைவர்கள் பலர் அன்னிபெசண்ட் அம்மையாரை காங்கிரசில் இருந்து விரட்டியதும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்ட பிறகு தான் சுயராஜ்யம் கேட்கவேண்டு மென்று காங்கிரஸ் தீர்மானித்ததும், கிலாபத் விஷயத்தில் இந்துக்களுக்கும் காங்கிரசுக்கும் மிகவும் அக்கரை இருப்பதுபோல் நடித்ததுமான காரியங்கள் செய்யப்பட்டதாகும் 35— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சூழ்ச்சிகள் பலிக்கவில்லை
இந்த சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்காமல் போனதோடு வட்ட மேஜை மகாநாட்டில் தோழர் காந்தியாரும் தோழர் ஜின்னாவும் நேருக்கு நேராக முறையே இந்துக்களுக்கு ஆகவும் முஸ்லீம்களுக்கு ஆகவும் பேசி மனஸ்தாப மேற்படுத்திக் கொண்டதோடு கடைசியாக சுயராஜ்யம் கொடுத்தாலொழிய இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படமுடியாது என்று காந்தியார் சொல்லிவிட்டதுமான காரியங்களும் நடத்துவிட்டது. அவ்வளவு மாத்திரமல்லாமல் இன்று அரசியலில் முக்கிய பிரச்சனையானது “முஸ்லீம்களுக்கு சர்க்கார் அளித்துள்ள வகுப்புரிமை பிரதிநிதித்துவமும், தனித்தொகுதியும் ஒழிக்கப்படுவதேயாகு"மென்றும் “இதனால் சுயராஜ்யம் கிடைப்பது தடைப்பட்டாலும் கூட கவலை இல்லை" என்றும் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் பார்ப்பனர் அவர்களாலும் தென்னாட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராஜகோபாலாச்சாரியார், பிரகாசம், சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்களாலும் வெளிப்படையாய் சொல்லப்பட்டும் விட்டது
மைனாரிட்டிகளுக்கு துரோகம்
இவ்வளவு மாத்திரமல்லாமல் காங்கிரசார் சட்டசபை தேர்தலில் பகுதி மாகாணங்களில் நல்ல மெஜாரிட்டியாய் வந்தும் தாங்கள் சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்ளாமல் சண்டித்தனம் செய்து வருவதின் கருத்தும் இந்தியா மந்திரி அவர்கள் பேச்சால் விளங்கி விட்டது. அதாவது அரசியல் சீர்திருத்த சட்டத்தில் ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் போக மேல் கொண்டு விக்ஷ அதிகாரம் கவர்னர்களுக்கு வைத்திருக்கும் காரணம் முஸ்லீம் முதலிய சிறு வகுப்பாருடைய உரிமை முதலியவைகளை பாதுகாக்கவே என்பது விளக்கப்பட்டிக்கிறது. இதை அறிந்தும் காங்கிரஸ்காரர்கள் மேலும் தங்களுக்கு வாக்குறுதி வேண்டும் என்று கேட்டதிலிருந்தே காங்கரஸ் காரர்களின் உள் எண்ணம் நன்றாய் முஸ்லீம்களுக்கு விளங்கியிருக்கும். கடசியாக அரசாங்கத்தார் பிடிவாதமாய் - குரங்குப் பிடிவாதமாய் வாக்குறுதி மாத்திரம் கொடுக்க முடியாது என்றும், பொய்க் காரணங் களைக் காட்டி சந்தேகப்படுவதாய் வேஷம் போடுகிறீர்களே ஒழிய நீங்கள் படுவதாய் சொல்லப்படும் சந்தேகத்துக்கு கவர்னர்கள் விசேஷ அதிகாரங்களில் இடமில்லை என்றும், எதற்கு ஆக விசேஷ அதிகாரம் வைக்கப்பட்டிருப்பதாக சட்டத்தில் சூசனையாகவும் வெளிப்படையாகவும் காட்டப்பட்டிருக்கிறதோ அதற்கு மாறாய் காங்கிரஸ் நடக்காமல் இருந்தால் விசேஷ அதிகாரத்தைப்பற்றி காங்கிரஸ்காரர் பயப்பட வேண்டியதில்லையே என்றும் சொல்லி காங்கிரஸ் குட்டை வெளிப் படுத்திவிட்டதோடு இப்போது காங்கிரஸ்காரர்கள் சட்டப்படி பதவியில் அமராத வரையில் பின்னால் நிலைமை மிக மோசமாகிவிடும் என்றும்
குடி அரசு- 1937 (2) 36
அப்புறம் சுலபத்தில் சரிப்படுத்திக் கொள்ளமுடியாதென்றும் எச்சரிக்கை செய்து விரட்டிய பின்பும் மேலால் ஒன்றும் பேசுவதற்கில்லாமல் “ஏறிந்துவிட்ட கீரையையாவது வளித்து வந்து எலையில் வை'' என்று கேட்கின்ற மாதிரியில் இப்போது சொரணையற்று பதவி ஏற்கப்போகிறார்கள்.
இது நமக்கு ஒரு நல்ல சம்பவம்தான். காங்கிரசால் நாட்டுக்கு இருந்து வந்த தொல்லைக்கு சாவுமணி அடித்து விட்டது என்பதில் ஆக்ஷேபணை இல்லை. ஆனால் முஸ்லீம்களைப்பற்றி முஸ்லீம் கோரிக் கைகளைப் பற்றி முஸ்லீம் ஸ்தாபனங்களைப் பற்றி முஸ்லீம் தலைவர்களைப் பற்றி காங்கிரசின் கொள்கை என்ன, அதன் உள் எண்ணம் என்ன? என்பதை ஒவ்வொரு முஸ்லீமும் யோசித்துப்பார்க்க வேண்டியது இது சமயத்தில் மிகவும் அவசியமான காரியமாகும்.
இந்து மகாசபை, வருணாச்சிரம மகாசபை ஆகியவைகள் இந்தியாவில் உள்ளவரை முஸ்லீம்லீக், பார்ப்பனரல்லாதார் சங்கம், ஆதிதிராவிடர்: சங்கம் முதலியவைகள் இந்த நாட்டில் இருந்தே ஆகவேண்டும். காங்கிரஸ் இவைகளுக்கு சித்திரத்திலும் கதையிலும் எழுதுவதற்கு கூட இடமில்லாமல்: செய்ய சம்மதித்து அதில் முதலில் இறங்குமானால் மாத்திரம் மற்ற சங்கங்களையும் லீக்குகளையும் கட்டிவைத்துவிட்டு காங்கிரசுக்கு நம்மாலான உதவிகள் செய்யலாம். அப்படிக்கில்லாதவரை காங்கிரஸ் இந்திய மக்களுக்கு பொதுஸ்தாபனம் என்பது நம்மைப்போல் சமூக
வாழ்விலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பிற்படுத்தப் பட்டிருக்கும் மக்களின் விழிப்படையும் உணர்ச்சியையும் அழிக்க வைத்திருக்கும் பொறி என்றுதான் கருதவேண்டும்
குறிப்பாக முஸ்லீம்கள் காங்கிரஸ் விஷயத்தைப்பற்றி கவனிக்க வேண்டுமானால் அவர்கள் காங்கிரசை ஒரு வார்த்தை கேட்கட்டும் இந்துக்கள் என்றும் முஸ்லீம்கள் என்றும் சமூக மத பிரிவுடன் இந்நாட்டின் மக்கள் கவனிக்கப்படும் வரை முஸ்லீம்களுக்கு இன்று இருந்துவரும் அரசியல் உரிமைகளில் தலை இடுவது இல்லை என்று காங்கிரஸ் ஒப்புக் கொண்டு காங்கிரசில் ஒரு தீர்மானம் போட்டு அரசாங்கத்துக்கு அனுப்பிக் கொடுக்க சம்மதிக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்டுப் பார்க்கட்டும் இதற்கு காங்கிரஸ் சம்மதித்தால் காங்கிரஸ் வெள்ளைக்காரர்களையோ வெள்ளைக்காரர் ஆட்சியையோ இந்த நாட்டைவிட்டு ஓட்டவேண்டும் என்றும் வெள்ளைக்காரர் ஆட்சி இந்தியாவை விட்டு அடியோடு ஒழிய வேண்டும் என்றும் கருதுகிற காலவரையறைக்கு 5 நிமிஷத்து முன்னாலேயே அவை ஓட்டப்படட்டும் என்று கையொப்பம் இட தயாராயிருக்கலாம் நாம் எந்த ஆட்சியின் கீழும் அடிமையாய் இருக்க விரும்பவில்லை.
காங்கிரஸ் வெள்ளைக்காரர்களை மிரட்டுவது மூலமோ தொல்லை கொடுப்பது மூலமோ சண்டித்தனம் செய்வது மூலமோ இந்த நாட்டில் தந்திரக்காரர்கள் வாழ்க்கையையும் சோம்பேறிகள் வாழ்க்கையையும் 37... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பலப்படுத்தி ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்பார்களை அடக்கி ஒடுக்கி பழயகால “மனு” சூழ்ச்சியை நடத்த சூழ்ச்சி செய்யப்படுகிறது என்று கண்ணியமாக கருதுகிறவர்கள் எப்படி காங்கிரசுடன் ஒத்து உழைக்க முடியும்? காங்கிரசில் சேரமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
கிட்டத்தட்ட முஸ்லீம்களுடைய இந்த 30, 40 வருஷ கிளர்ச்சியாலும் அநேக தலைவர்கள் முயற்சியாலும் இந்திய முஸ்லீம்கள் இந்துக்களின். கண்களில் மனிதர்களாக தென்படும்படியான நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது நிலைபெறுவதற்குள் எதிரிகள் கைக்கு அதிகாரங்கள் வந்து விட்டன. விடியவிடிய கண்விழித்து காவல் காத்துவிட்டு விடியற் காலம் சமீபத்தில் இருக்கும் குமரி இருட்டு நேரத்தில் தூங்கி விட்டோமே யானால் காவல் காத்ததின் பயன் முட்டாள் தனமாக வந்து முடிந்துவிடும். ஆதலால் தனிப்பிரதிநிதித்துவத்தால் தனி உரிமையால் அல்லாமல் வாழ முடியாது என்றும், சுயமரியாதை பெற முடியாது என்றும், உண்மையாய் கருதுகின்ற மக்கள் முஸ்லீம்கள் மாத்திரம் என்பது அல்லாமல் வேறு யாராவது இருந்தாலும் அவர்களும் இந்த சமயத்தில்தான் ஜாக்கிரதையாயும் கட்டுப்பாடாகவும் ஒற்றுமையாகவும் இருந்து காங்கிரசுக்கு தொல்லை கொடுத்து அவர்கள் மற்ற சமூகத்தாருக்கு தீங்கு செய்யாமல் காத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆகவே காங்கிரசும் முஸ்லீம்களும் என்பது பற்றி எனது அபிப்பிராயத்தை வெளியிட்டேன். இதில் தங்களுக்கு ஏற்றவைகள் இருந்தால் ஏற்றுக்கொண்டு மற்றவைகளை புறக்கணித்து விட வேண்டுகிறேன்.
குறிப்பு: 28.06.1937 இல் கும்பகோணத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 11.07.1937
குடி அரசு- 1937 (2) 38
ஆம்பூர் ஆதிதிராவிடர் மகாநாடு
காங்கிரசால் உங்களுக்கு கதிமோட்சம் கிடையாது
மதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்
தலைவரவர்களே!
தோழர்களே!
இந்த ஜில்லாவில் மூதல் முதலாகக் கூட்டப்பட்ட இந்த மகா நாட்டுக்கு அழைக்கப்பட்ட எனக்கு உங்களால் வாசித்துக் கொடுக்கப் பட்ட வரவேற்புப் பத்திரத்திற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த வரவேற்பு பத்திரத்தில் என்னை அதிகமாக புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். மகாநாட்டைத் திறந்து வைத்த கனம் மந்திரியார்
எம்.சி. ராஜா அவர்களும் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர்
வக்கீல் சாமிநாயுடு அவர்களும் மிகவும் புகழ்ந்து பேசி விட்டார்கள். உண்மையில் இப்புகழ்ச்சிகளுக்கு நான் அருகனல்ல என்பதை மனப்பூர்வமாகவே தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் எல்லோருக்கும் என்பால் உள்ள அன்பே அவ்வளவு மெய்மறந்து கண்மூடித்தனமாக புகழச் செய்துவிட்டது. ஆனபோதிலும் அதற்கேற்றாப்போல் உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
அற்புதமான காலம்
உண்மையிலேயே நாம் ஒரு அற்புதமான காலத்தில் இருக்கின்றோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் காதில் கேட்டிராததும் மனதில் நினைத்திராததுமான பல ஆச்சரியமான காரியங்கள் வெகு சுலபத்தில் நடப்பதை நேரில் பார்க்கும் பேறு நமக்கு கிடைத்திருக்கிறது
மனுகாலத்திலோ “ராமன்”, “கிருஷ்ணன்”, “அரிச்சந்திரன்”, பாண்டியன்
நாயக்கன் காலத்திலோ ஒரு 'பறையர்'' என்பவர் அரசியல் மந்திரியாக வந்துவிடமுடியுமா? அல்லது எந்த ஒரு தெய்வம் என்பதுதான் ஆகட்டும் நேரிலேயே வந்து நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவதாயிருந்தாலும் 39௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பறையன் புலையன் என்பவர்கள் கோவிலுக்குள் அதுவும் குரங்குப்பிடி வைதீகமும் வர்ணாச்சிரம பைத்தியமூம் கொண்ட கேரள தேசத்தில் அதுவும் பார்ப்பானுக்குப் பிறந்தால் உயர் பதவி என்று ஆணும் பெண்ணும் எண்ணிக்கொண்டு “பறையனை'' கண்ணில் கண்டாலும் அவன் நிழல் மேலே பட்டாலும் அவன் பேச்சு காதில் பட்டாலும் பாவம் என்று கருதும் மக்களையும் அரசியலையும் கொண்ட கேரள தேசத்தில் கோவிலுக்குள் “பறையன்” போகவேண்டும் என்றால் இது சாத்தியப்படக்கூடியது என்று யாராவது எதிர்பார்க்கக் கூடிய காரியமா என்று பாருங்கள். இந்த
காரியம் நம் காலத்தில் தான் நடந்திருக்கிறது
இதற்கு முன்னும் கோவிலுக்குள் பறையன் போனான் என்கின்ற புராணக்கதை இருந்தாலும் அந்தப் பறையன் கோவிலுக்குள் போனதாகத் தான் கதை-கற்பனைக் கதையானாலும் கூட கதை இருக்கிறதே தவிர
திரும்பி வந்ததாக இல்லை.
ஆகவே அப்பேர்ப்பட்ட அதி அற்புதமான காலத்தில் நாம் இருக்கிறோம். இது யாரால் ஆகி இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலையில்லை. அந்தக் காரியங்கள் நம் கண் முன் முடிந்து விட்டது ஆதலால் அந்த மகிழ்ச்சியை முன்னால் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஒரு கேள்வி
தோழர்களே!
ஆதிதிராவிடர் மகாநாடென்று ஒரு மகாநாடு அவசியமா? என்று பல தேச பக்தர்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களை'நான் ஒன்று: கேட்கின்றேன். அதாவது ஆதிதிராவிடர் என்று ஒரு மனித சமூகம் இருக்க. வேண்டியது அவசியமா என்று கேட்கிறேன். ஆதிதிராவிட மகாநாடு வேண்டியதில்லை என்று சொல்லும் இந்த யோக்கியர்கள் “ஆதிதிராவிடர் என்ற ஒரு சமூகம் இருப்பதாக கதைகளில். கூடயாரும் குறிப்பிடக்கூடாது" என்று எங்காவது சட்டம் செய்தார்களா? எந்தக் கூட்டத்திலாவது தீர்மானம் கொண்டு வந்தார்களா? எந்த ஸ்தாபனத்திலாவது இதை கொள்கையாக புகுத்தினார்களா? என்று கேட்கின்றேன்.
அன்றியும் இப்படிக் கேட்கும் இந்த “தேசபக்தர்களே" பார்ப்பன. மகாநாடு, ஆரியர் மகாநாடு, வர்ணாச்சிரமதர்ம மகாநாடு, பிராமண: சம்மேளனம் என்றெல்லாம் கூட்டுகிறார்களா இல்லையா? மற்றும் இதுபோன்ற பல ஜாதி மத வகுப்பு மகாநாடுகள் நடப்பதில் கலந்து கொள்ளுகிறார்களா இல்லையா? அப்படியிருக்க ஆதி திராவிட மகாநாடு மாத்திரம் எப்படி அவசியமற்றதாக ஆகிவிடும்?
குடி அரசு- 1937 (2) 40
வகுப்புவாதப் பூச்சாண்டி ஆதிதிராவிட மகாநாடு என்று சொல்வதாலேயே வகுப்பு பிரிவினையும் வகுப்பு உணர்ச்சியும் ஏற்படுகின்றது என்று சிலர் சொல்லு கிறார்கள். இந்த யோக்கியர்களுக்கு “பிராமணாள் காப்பி கிளப்பு” “பிராமணாள் ஓட்டல்” “பிராமணர்களுக்கு - பிராமணர்கள் அல்லாதாருக்கு” “இதுவரை பிராமணர் போகலாம், இதுவரையில் தான் மற்றவர்கள் போகலாம்" என்றெல்லாம் விளக்கி பெரிய பெரிய கொட்டை எழுத்தில் கோவிலிலும் தெருவிலும் கிணற்றிலும் எழுதி தொங்கவிட்டு இருப்பதைப் பார்க்கும்போது அதில் வகுப்புப்பிரிவும் வகுப்பு உணர்ச்சியுமுண்டாவதில்லையா? என்று கேட்கின்றேன். வேறு பல மகாநாடு கூடி ஜாதிபேதமும் உயர்வுதாழ்வும் இருக்க வேண்டும் என்று போர்டு போட்டு கீழ் ஜாதி மேல் ஜாதிக்கென்று பிரித்துக்காட்டியும் நடத்தப்படுகிற கூட்டங்கள், செய்கைகள் ஆகியவைகளை விட ஜாதி பேதம் ஒழிய வேண்டும், ஜாதி உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாதென்று பேசுவதற்கும் தீர்மானிப்பதற்கும் ஒரு மகாநாடு கூட்டினால் அதனால் எந்த தேசீயமும் கெட்டுப் போகாது என்று அவர்களுக்கு உறுதி கூறுகிறேன்.
ஆதிதிராவிடர் மகாநாடு அவசியமே
அன்றியும் யாருக்கு வகுப்பு மகாநாடு இருந்தாலும் இல்லா விட்டாலும் ஆதிதிராவிடர்கள் என்கின்ற உங்களுக்கு ஒரு வகுப்பு மகாநாடு மிகமிக அவசியமாகும். ஏனெனில் நீங்கள் தான் இன்று இந்தியாவில் அதிகமான தீண்டக்கூடாத ஜாதியாய் இருக்கிறீர்கள். உங்களை தீண்டக்கூடாது என்றும் நீங்கள் கீழ் ஜாதி என்றும் சொல்லி நிலை நிறுத்த கூட்டப்படும் மகாநாடுகள் நடக்கும் போது நீங்கள் அவசியம் இம்மாதிரி ஆதிதிராவிட சமூக மகாநாடுகள் தினம் தினம் கிராமந்தோறும் வீதிதோறும் கூட்டி ஆகவேண்டும்
இன்று இந்தியாவில் - நம்நாட்டில் ஏதாவது கடுகளவு முற்போக்காவது
எந்தத் துறையிலாவது ஏற்பட்டிருக்குமானால் அது இப்படிப்பட்ட சமூக மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் சமூக குறைகளைச் சொல்லி பேசி அவைகளுக்கு பரிகார மார்க்கம் தேடியதிணாலேயே ஏற்பட்ட முற்போக்காகும். ஆகையால் இதை யாரும் வகுப்புவாதம் என்று சொல்ல முடியாது முற்போக்கு வாதம் என்றுதான் யோக்கியர்கள் சொல்லுவார்கள். இந்தியாவின் மதமும் அரசியலும் பொருளாதாரமும் சமூக வாழ்வும் வகுப்பு பேதத்தை ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அடிப்படையாகக்கொண்டே இருந்து வருகிறது. அதனாலேயேதான். சமூகத்தில் சிலர் மேலாகவும் பலர் கீழாகவும் வாழவேண்டியிருப்பதுடன் மக்களுக்கு இவ்விஷயத்தில் சுயமரியாதை உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. வகுப்புபேதமே தான் இந்த நாட்டில் அந்நியர்கள் என்பவர். களுக்கு அரசும் ஆக்கமும் கொடுத்ததே அல்லாமல் இந்த நாட்டு பழங்குடி
மக்களுக்கு பலமில்லாததால் அல்ல என்று நான் உறுதியாக சொல்லுவேன்.
நமது நோக்கம்
நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியை குறை கூறுவதற்காக இம்மகாநாடு கூட்டினதாகவும் யாரையோ குறை கூறுவதாகவும் சிலர் பிதற்றுகிறார்கள். நாம் யாவரையும் குறைகூறவில்லை. நம்மைக் குறை கூறுகிறவர்களை வன்மையாய் கண்டித்து புத்தி கற்பிப்பதற்கு ஆகவே
கூடி இருக்கின்றோம். “பல நாளாய் இருந்து வரும் கொடுமை நிதானமாகத்தான்
வெட்டித்தள்ள வேண்டிய அவரியத்தக்கு வந்து விட்போமி, சிறு சிரங்காய் இருந்தால் ஏதாவது ஒரு களிம்பு துடைத்துவிடலாம். பெரிய சிலந்தி
புத்து மாதிரி எழுந்து உடல் சதையை அழுகச்செய்து இரத்தத்தை சீழ் ஆக்குகிறது. ஆதலால் நன்றாய் அறுத்து கரண்டிபோட்டு சீவி காரமுள்ள மருந்து போட்டு கட்டவேண்டியதாகிறது. இதை குற்றம் என்றோ, அவசரம் என்றோ யாராவது சொன்னால் நம்மால் ஒப்புக்கொள்ள முடியாது
சுயராஜ்யமா? சூழ்ச்சி ராஜ்யமா?
உண்மையை சொல்லுகிறேன்.
இன்று இந்த மகாநாடு வேண்டாம். நமது குறைகளை ஒரு விண்ணப்பம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் ஜாதி மத வகுப்பு நிலைகளைக் காப்பாற்றவும் சகல துறைகளிலும் அவனவன் இன்று இருக்கும் நிலைகளைக் காப்பாற்றிக்கொள்ளவும் என்று ரகசியமாகவும், வெளிப்படையாகவும் திட்டங்கள் போட்டுக்கொண்டு மேல்
ஜாதிக்காரர்களும், மேல் நிலையில் உள்ளவர்களும் வேலை செய்வதால் நமக்கு இப்படிப்பட்ட மகாநாடுகளும் நமது குறைகளை விளக்கமாகவும், வேகமாகவும் எடுத்துச் சொல்லும் தன்மையும் வேண்டியிருக்கிறது
குடி அரசு - 1937 (2) 42
ஒரு உதாரணம்
உங்களுக்கு ஒரு உதாரணம் எடுத்துக்காட்டுகிறேன்.
காந்தியார் பட்டினி மர்மம்
மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு அரசாங்கம் கொடுத்த தனித்தொகுதி பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்குத்தான் தோழர் காந்தியார் பட்டினி விரதமிருந்து ஏமாற்றி கையெழுத்து வாங்கப்பட்டதே ஒழிய தீண்டாமை ஒழிய பட்டினி விரதமிருக்கப் பட்டதையெல்லாம் காந்தியார்
தடுத்தே வந்திருக்கிறார். இதுவரை தீண்டாமை விலக்கு சம்மந்தமாகவும் தீண்டாதார் என்பவருக்கு இருந்து வரும் கொடுமைகள் ஒழிப்பு சம்மந்தமாகவும் ஏற்பட்டுள்ள காரியங்கள் அவ்வளவும் உங்கள் சமூகத் தலைவர்களாலும், பார்ப்பனர் அல்லாதார் சமூகத்தாராலும் காங்கிரஸ் அல்லாத ஸ்தாபனங் களிலும் அவரவர்கள் ஸ்தாபனங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டு சர்க்கார். தயவாலும் நடந்த காரியங்களே தவிர வேறு ஏதாவது யாராலாவது நடந்ததுண்டா என்ற யோசித்துப்பாருங்கள். உங்களைப்பற்றி காங்கிரஸ் எப்போதாவது ஒரு தீர்மானமாவது கொண்டு வந்து கேட்டு சர்க்காரில் வலியுறுத்தி இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள்
பிரிட்டன் மூலமே கதி மோஷம் ஆகவே தோழர்களே! உங்கள் இழிவும் நீங்கள் அனுபவிக்கும் கொடுமையும் நீங்கவேண்டுமானால் நீங்கள் சர்க்காரோடு பிணங்கிக் கொள்ளக் கூடாது. சர்க்காருக்கு எதிர்ப்பு என்று சொல்லிக்கொள்ளக்கூடிய
3 QuRwREr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
IS
எந்த ஸ்தாபனத்திலும் தலையிட்டுக் கொள்ளக்கூடாது. உங்களுக்கு இரக்ஷிப்பும் மனிதத் தன்மையும் மானமும் அளித்து வந்தவர்கள் - அளித்து வருகிறவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரேயாகும்.
ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!
வேண்டுமானால் இனியும் கொஞ்சகாலம் பொறுத்து உங்களிலும் பார்ப்பனர்கள்போல் 100க்கு 100 படித்தவர்களாகவும் பார்ப்பனர்கள் போல் 100க்கு 90 பேர் சர்க்கார் உத்தியோகஸ்தர்களாகவும் மற்ற மேல் ஜாதிக்காரர்கள் போல் விகிதாச்சாரம் பணக்காரர்களாகவும் முதலாளிகளாகவும் மிராசுதாரர்களாகவும் ஆன பிறகு “இது சைத்தான் சர்க்கார்” என்றும் “சர்க்காரை வெட்டிப் புதைக்க வேண்டும்” என்றும் வாய்ச்சவடால் வீரம் பேசுவதும் காரியத்தில் கக்கூசு சந்து வழியில் புகுந்து பிரிட்டீஷ் சர்க்கார் கால் கழுவினதண்ணீரைதீர்த்தமாக அருந்துவதுமான அரசியல் அயோக்கியத்தனத்தில் பிரவேசியுங்கள். அதற்கு முன் பிரவேசித்தால் நசுங்குண்டு போவீர்கள். ஜாக்கிரதை ஜாக்கிரதை என்று முக்காலும் எச்சரிக்கிறேன்.
எந்த சம்க்காராணாலும் சரி.
எனக்கு இந்த சர்க்காரைப்பற்றி கவலை இல்லை. வேறு எந்த
சர்க்கார் வந்தாலும் கவலையில்லை. காந்தியார் சொல்லுவது போல் ராமராஜ்யம் வந்து ஒரு ஜதை செருப்பு (செருப்பின் பேரால்) 14 வருஷம் மாத்திரமல்ல, 50 @ ஆண்டாலும் கவலையில்லை. ஆனால் உங்களைப் போல் இழிவும் கொடுமையும் படுத்தப்பட்ட மக்கள் இந்த பித்தலாட்ட அரசியலில். தலையிட்டு நசுங்கிப் போகக் கூடாது என்றுதான் மறுபடியும் சொல்லுகிறேன்.
இந்து மதம் விடுங்கள்
உங்களைப் பொறுத்த வரையில் அம்மதத்தில் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆகையால் இதை உடனே விட்டு விடுங்கள். உங்களுக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு இஸ்லாம் மதத்தை சிபார்சு செய்கிறேன். பெளத்தர்களையும் பற பெளத்தர்கள் என்றும் பெளத்த பறையர்கள் என்றும் மற்றவர்கள் சொல்லுகிறார்கள். பல பெளத்தர்கள் ஆதிதிராவிடர்களாகத்தான் இன்னும் கருதப்படுகிறார்கள்.
குடி அரசு - 1937 (2) 44
கிறிஸ்தவர்களிலும் பறை கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பாதிரிகளே அப்படி கருதுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஆள் எண்ணிக்கைதான் கவலையே தவிர சுயமரியாதையில் கவலை கிடையாது
கிறிஸ்தவத்தில் சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கும் சுயமரியாதை வேண்டுமானால் அதை விட்டு இஸ்லாம்களாகுங்கள் என்று தான். சொல்லி வருகிறேன். மற்றபடி “மோட்சத்திலோ"! “பாப மளனிப்பிலோ!
திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைபட்டு திறக்கப்பட்டது? அங்குள்ள பலர் முஸ்லீம்களானார்கள். அதன்பேரில் தான் சர்க்காரும் மேல் ஜாதியாரும் நடுநடுங்கி கோவில் கதவை திறந்துவிட்டார்கள். அதுபோல் இங்கும் நடக்கும். தோழர்களே! இவை என் அபிப்பிராயம் இவற்றைக் கேட்ட நீங்கள் உங்கள் புத்திகொண்டு யோசித்து உங்களுக்கு
சரி என்று பட்டபடி நடவுங்கள்.
குறிப்பு: 04.07.1937 இல் ஆம்பூரில் நடைபெற்ற வட ஆர்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர்கள் முதலாவது மாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 18.07.1937
சுயமமியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் 1925-ல் என்னால் துவக்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும். அதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவர்களுக்கு அதன் கொள்கை என்ன? அது ஏன் துவக்கப்பட்டது? என்கின்ற விஷயம் முதலில் எடுத்துக்கூற வேண்டியது அவசியமல்லவா? அதற்கு முன் என்னைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னால்தான் என்னைப் பொறுத்தவரை நான் செய்தது சரியா, தப்பா? என்பது விளங்கும்.
இளமையில் நம்பிக்கை
எனக்கு சிறு வயது முதற்கொண்டு ஜாதியோ மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருந்திருப்பேன். அது போலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்ய வேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரே என்றோ தண்டிப்பாரே என்றோ கருதி (எந்தக் காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்க மாட்டேன். கடவுள் மகிழ்ச்சி யடைவார் என்று கருதியோ, சன்மானமளிப்பாரென்று கருதியோ (எனக்கு அவசியமென்று தோன்றாத) எந்தக் காரியத்தையும் செய்திருக்கவு மாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதிமதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு
முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிருந்து எனக்கு இவைகளில் நம்பிக்கையில்லையென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டு பிடிக்கமுடியவே இல்லை.
பன்வி வயதில் அநுபவம்
எனது ஆறாவது வயதில் நான் ஒரு திண்ணைப்பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். அப்பள்ளிக்கூடம் ஈரோடு டவுனுக்குச்
சற்று விலகிய தூரத்தில் இருந்தது. (இப்போது அது நடு ஊராய் விட்டது) அப்பள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டிமார்களின் வீடுகள் உண்டு.
குடி அரசு- 1937 (2) 46
எண்ணெய்ச் செக்கு சதா ஆடிக்கொண்டு இருக்கும். மூங்கிலில் பாய், முறம், கூடை பின்னுகின்றவர்கள், தெரு ஓரங்களில் குடிசை கட்டிக்கொண்டு தங்கள் வேலை செய்வார்கள். சில முஸ்லீம்கள் வீடும் குடிசை ரூபமாக அங்கே உண்டு
““பொழங்கக்கூடாத ஜாதி? ஆகவே அப்பள்ளிக்கூடத்தைச் சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டிமார், வேதகாரர்கள், சாயபுகள் ஆகியவர்கள். அந்த காலத்தில் இவர்கள் வீட்டில் மற்ற ஜாதியார்கள் என்பவர்கள் எவ்வித உணவும் அருந்தமாட்டார்களல்லவா? ஆகையால் என் வீட்டார்கள், நான் பள்ளிக்குப் போகும்போது எனக்கு ஞாபகமாய் சொல்லியனுப்புவார்கள். என்னவென்றால் “அங்குள்ள ஜாதியார், 'பொழங்கக்கூடாத' ஜாதிக்காரர்கள். அவர்கள் வீட்டில் தண்ணீர் குடித்துவிடாதே. வேண்டுமானால் வாத்தியார் வீட்டில் வாங்கிக் குடி“யென்று சொல்லியனுப்புவார்கள். அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன் வாத்தியார் ஓதுவார் ஜாதி. மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டுச் சிறு பெண் எனக்குத் தண்ணீர் கொடுக்கும்போது ஒரு வெண்கல டம்ளர் கீழே வைத்து அதில் தண்ணீர் ஊற்றி, எடுத்துத் தூக்கிக் குடிக்கச் சொல்லும். நான் குடித்த பிறகு கவிழ்த்து வைக்கச் சொல்லும். பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை எடுத்து நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றிக் கழுவி உள்ளே எடுத்துக்கொண்டு போகும். இதற்குள் எனக்குத் தூக்கிக் குடிக்கத் தெரியாமல் குடிக்கும்போது பகுதி தண்ணீர் மூக்கிலும் உடல் மேலும் விழும். பகுதி தண்ணீர் தான் வாயில் விழும். மூக்கில் விழுந்த தண்ணீரால் புரைபோய் இருமல் வந்து வாய்த் தண்ணீர் கீழே விழும் இதையெல்லாம் பார்த்து அந்தப் பெண் அசிங்கப்படும். சில சமயம் கோபித்து வையும். அதனால் நான் தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியச் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்பதில்லை. எழுந்து நின்று பெரு விரலை வாத்தியாருக்குக் காட்டியவுடன் “போய்விட்டுச் சீக்கிரம் வா! என்பார். பையன் ஓடோடி அவன் வீட்டிலோ, அவனது வீடு சற்று தூரமாய் இருந்தால் சமீபத்தில் உள்ள ஒரு செட்டியார். வீட்டிலோ குடித்து விட்டு ஓடிவருவான். ஒரு நாள் நானும் அங்கு போய்த் தண்ணீர் சாப்பிடலாமென்று கருதி ஒரு செட்டியார் பையன் எழுந்து பெருவிரல்
நீட்டும் போது நானும் நீட்டினேன். இருவரையும் போகும்படி வாத்தியார் தலையாட்டினார். இருவரும் ஓடினோம், வாத்தியார் “ராமா நீ எங்கே ஓடரை?” என்றார். “தண்ணீருக்கு ஐயா!” என்றேன். “தண்ணீக்கு அவன் கூடப் போறாயே?” என்றார். பிறகு நான் வாத்தியார் வீட்டுக்கு (அதாவது ஒரு கூரைச் சாலையில் ஒரு பாகம் நிரைச்சல் கட்டித் தடுத்து அதில் வாத்தியார் குடியிருக்கிறார்) போய் தண்ணீர் குடித்து தண்ணீரை 47௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தேகமெல்லாம் சிந்திக் கொண்டு வேஷ்டியையும் நனைத்துக்கொண்டு வந்து உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர் தாகமெடுத்த போது ஒரு செட்டியார் பையனுடன் கூடப் போகத் தீர்மானம் பண்ணிக் கொண்டு அந்தப் பையனிடம் பேசிவைத்து அவர் தண்ணீர்குடிக்கப் பெருவிரலைக் காட்டு முன்பே நான் ஒன்றுக்குப் போகக் கேட்பவன் போல் எழுந்து நின்று ஆள்காட்டி விரலை நட்டத்தில் நீட்டிக் காட்டினேன். வாத்தியார் தலையை அசைத்தார். நான் வாத்தியார் வீட்டுக்குப் பின்புறம் போய் நின்று கொண்டேன். செட்டியார் வீட்டுப் பையன் தண்ணீர் குடிக்க அனுமதி கேட்டுக்கொண்டு வந்தான். அவன் வீடும் பின்புறமாய் போகக் கூடியதுதான். அவனும் நானுமாக அந்தச் செட்டியார் வீட்டுக்கு ஓடி லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். நான் சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பதுபோல் லோட்டா விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். அந்தச் செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்ததும் “நீ நாய்க்கர் வீட்டுத் தம்பியா?” என்றார். நான் “ஆமாம்” என்றேன். “இங்கே தண்ணீர் குடிக்கிறயே! உங்க வூட்டிலே ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?" என்றார். 'சொல்லமாட்டாங்கோ" என்று சொல்லிவிட்டு ஓடினேன். அந்தப் பையனும் என்கூட ஓடிவந்தான். அதற்குள் அந்தம்மாள் அந்தப் பையனைக் கூப்பிட்டு “டே பழனியப்பா அந்தச் சொம்பைக் கழுவி உள்ளே வைத்துவிட்டுப் போடா” என்றார். அதேமாதிரி அந்தப் பையன் லோட்டாவைக் கழுவி வைத்துவிட்டு வீதி வழியாக முன்புறம் பள்ளிக்கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலேயே பின் புறமாக பள்ளிக்கூடத்திற்கு வந்தேன். பிறகு இப்படியே - இதே மாதிரியாக மற்றொரு சமயம் வேதகாரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். இது மெல்ல மெல்ல அவர்கள் வீட்டுப் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேஷ காலங்களில் செய்யப்படும் காய்கறி சாமான்களும் கூடச் சாப்பிடும்படியாகச் செய்து விட்டது. எங்கள் வீட்டுக்கு இந்தச் செய்தி எட்டியது. வீடோ நல்ல பணம் வருவாய் ஏற்பட்டு பணம் பெருகி அப்பொழுதுதான் பார்ப்பனர்களைப்போல் நடக்க ஆரம்பித் திருக்கலாம். எந்நேரம் பார்த்தாலும் ஆச்சாரம், அனுஷ்டானம் என்கின்ற வார்த்தைகள் தான் உச்சரிக்கப்படும். என்றாலும் என் தகப்பனாருக்கு இதைப்பற்றி (நான் கண்ட இடத்தில் சாப்பிடுவதைப்பற்றி) அதிகமான கவலை கிடையாது. “கீச்சி இனி அப்படிச் செய்யாதே” என்று சொல்லி விடுவதோடு அவர் வேலை ஒழிந்துவிடும். என் தாயார் ஏதோ முழுகி விட்டது போல் கருதி மிக துயரப்படுவார். என்ன பண்ணியும் காரியம் மிஞ்சிவிட்டது. சாயபுமார் பையன் கொடுத்த பண்டம் கூடச் சாப்பிட்டு விட்டேன் என்பது என் வீட்டிற்கு தெரிந்து விட்டது. இதற்குள் என் பள்ளிப்படிப்பு எனது பத்தாவது வருஷத்திற்குள்ளாகவே முடிந்து விட்டது. ஏனென்றால் என் சினேகம் தின்னாத (பொழங்கக்கூடாத) ஜாதியாருடன்
தான் அதிகம், அதனாலே நான் முறடனாகிவிட்டேன் என்பது அவர்கள்.
குடி அரசு - 1937 (2) 48
எண்ணம். காலில் விலங்கு இடப்பட்டேன். அந்த விலங்குகளுடனேயே அந்தப் பிள்ளைகளுடன் கூடித் திரிவேன். ஒரு பதினைந்து நாள் இரண்டு கால்களிலும் விலங்குக்கட்டை போடப்பட்டேன். அப்பொழுதும் இரு தோளிலும் இரண்டு விலங்குகளைச் சுமந்துக்கொண்டு திரிந்தேன். அப்போதும் அந்தப் பிள்ளைகளுடன் விளையாடப் போய்விடுவேன்.
“விதண்டாவாதம்?
கடைசியாக நான் அப்பள்ளிக்குப் போவது நிறுத்தப்பட்டு சர்க்கார் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டேன். அதாவது முனிசிபல் பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு அதுவும் 2-ஹுத்திலேயே, (10, 12வது வருஷத்திலேயே) நிறுத்தப்பட்டு எங்கள் கடையிலேயே வியாபாரத்தில் போடப்பட்டு விட்டேன். அதில் எனக்குள்ள வேலை, மூட்டைகளுக்கு விலாசம் போடுவது, சரக்குகள் ஏலங்கூறுவது, ஒழிந்த நேரங்களில் என் சொந்த வேலையாம் புராணங்களைப் பற்றி விவகாரம் செய்வது. இந்த வேலை எப்படி ஏற்பட்டதென்றால் எங்கள் வீட்டில் சந்நியாசிகளுக்கும், பாகவதர்களுக்கும், சமயப் பிச்சைக்காரர்களுக்கும் (பார்ப்பனர்களுக்கும்) வித்துவான்களுக்கும் ரொம்பவும் செல்வாக்கு இருந்ததினாலும் அவர்களைக் கண்டு எனக்குப் பிடிக்காததாலும், அவர்கள் சொல்வதைப் பரிகாசம் செய்ய ஆரம்பித்து
மறுத்துச் சொல்ல ஆரம்பித்து 'விதண்டாவாத'க் கேள்விகள் கேட்க ஆரம்பித்து மெல்லமெல்ல அதுவே ஒழிந்த நேரவேலையாகவும் அதுவே இளைப்பாறுவதற்கு ஒரு துணைக் கருவியாகவும் எனக்கு உண்மையிலேயே உற்சாகமுள்ள வேலையாகவும் நேர்ந்துவிட்டது. நான். புராணங்களையோ வேறு எந்தத் தனிப்பட்ட புஸ்தகங்களையோ படித்த தில்லையென்றாலும் சைவம், வைணவம் ஆகிய இரு சமய சம்மந்தமாக உள்ள கதைகளோ, சரித்திரங்களோ சதா சர்வ காலம் - எங்கள் வீட்டில் இரு சமய “பக்தர்"களாலும் பண்டிதர்களாலும், காலட்சேபம் செய்யப்பட்டு வந்தது. ஏன்? பணம் வந்து குவியும் போது தர்மம் செய்து தர்மப் பிரபு பட்டம் வாங்க வேண்டாமா? இவர் களைத்தானே தான பாத்திரங்களாகப் பேசப்படும். ஆதலால் இவர்கள் எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பார்கள்.
என் தாயார் இவர்கள் அளப்புகளை அதிக 'பக்திசிரத்தை'யுடன் கேட்டுக் கொண்டேயிருப்பார். தகப்பனாருக்கு இது ஒரு பெருமையாகவும் திருப்தியாகவும் இருக்கும். இதனால் எனக்கு சமய சம்மந்தமான - புராண சம்மந்தமான விஷயங்கள் தானாகவே தெரியவரும் அவற்றிலிருந்தே நான் பல கேள்விகள் கேட்கவும் அவர்கள் (பக்தர்கள், பண்டிதர்கள்) பல கேள்விகளுக்கு பதில் தாருமாறாகவும் ஆளுக்கு ஒரு விதமாகவும் சொல்லவுமாய் இருந்ததே எனக்கு அதிக உற்சாகத்தை விளைவித்ததோடு என்னை ஒரு “கெட்டிக்காரப் பேச்சுக்காரன்'' என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் சொல்லவுமான நிலைமை ஏற்பட்டது. என் 49௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தகப்பனார், நான் இப்படி “விதண்டாவாதமான' கேள்வி கேட்பதில் கோபம் வந்தாலும் உள்ளுக்குள் தனது மகன் இப்படி புத்தியாய் பேசுகிறானே என்கிற மகிழ்ச்சி உண்டு.
இந்தச் சம்பவங்கள் தான் எனக்கு மேலும் மேலும் ஜாதி மதத்திலும், கடவுள் சாஸ்திரங்கள் ஆகியவைகளிடத்திலும் நம்பிக்கையில்லாமல். போகும்படி செய்திருக்கலாமென்று நினைக்கிறேன்.
அனுபவத்திற்கு முரண்
ஆனால் சுற்றுச்சார்புதான் (Association and Surrounding) ஒரு மனிதனின் வாழ்க்கை லட்சியம், கொள்கை ஆகியவைகளுக்குக் காரணமானது என்று சொல்லப்படுகிறது. அனுபவத்தில் பெரிதும் அப்படித்தான் இருந்தும் வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு துறையிலாவது சுற்றுச்சார்பு என்னை அடிமைப்படுத்தியதாகச் சொல்லுவதற்கு இடமே கிடைக்கவில்லை.
நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு தன்மையிலும் என்னைச்
சுற்றி இருந்த சுற்றுச்சார்பு சகவாசம் ஆகியவைகளுக்கு மாறாகவே
இருந்து வந்திருக்கிறேன். உதாரணமாக எனது நல்ல வாலிபப் பருவத்தில் 20 முதல் 32 வயது வரையில் சகபாடிகள் ஏறக்குறைய அந்தரங்க சகபாடிகள் எல்லோரும் மதுவருந்துபவர்களாவார்கள். அது மாத்திரமா? என்னிடத்தில் அதிக
காதல் உள்ள சர்க்கார் அதிகாரிகள் ஜமீன், மிராசுதாரர்கள் ஆகியவர்களும் மதுவருந்துபவர்கள். மேல் கண்ட வயதில் அநேகமாக இரவெல்லாம் இந்த கூட்டத்தாருடனே கோலாகலமாய் இருந்து, காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து கொத்துச்சாவியை எடுத்துக்கொண்டு கடைதிறக்கப் போய்விடுவேன். ஒரு ராத்திரிக்கு 4 பாட்டல் 5 பாட்டல் (பிராந்தி) உடைபடும். எனக்கும் மாதத்தில் இந்தச்செலவு சுமார் 40, 50 ரூபாய் ஆகும். நானே என் கையால் டம்ளரில் ஊற்றி சோடா கலந்து கொடுப்பேன். சிலர் குடித்து விட்டு போதையில் என்மீது துப்புவார்கள். ஒரு காலத்தில் ஒரு டிப்டி கலெக்டரும்
சால்ட் அசிஸ்டெண்ட் கமிஷனரும் நான் ஊற்றிக் கொடுத்ததையே சாப்பிட்டுவிட்டு என்னைப் பிடித்துக் கீழே தள்ளி என் வாயில் பலவந்தமாக ஊற்றினார்கள். அப்படியெல்லாம் இருந்தும் என்னை அந்த சகவாசமும்
சுற்றுச்சார்பும் அது (மது அருந்தினால்) எப்படி இருக்கும் என்று
யோசிக்கக்கூடத் தூண்டவில்லை. என் மனைவியாருக்கு என் மீது அடிக்கடி சந்தேகம் தோன்றும். இம்மாதிரி கூட்டத்தில் இருந்து வீட்டுக்குப்போன உடன் என் வாயை ஊதிக்காட்டச் சொல்லுவார்கள். நான் கிராக்கி செய்வேன். கட்டாயத்தில் வாயை மோந்து பார்த்து திருப்தி அடைவார்கள். இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் சுற்றுச்சார்பு எதுவும் என்னை வசப்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கு ஆகவேயாகும்.
குடி அரசு- 1937 (2) 50
இனியும் அம்மாதிரியான சம்பவங்களே அதிகப்படியாய்க் காணப்படு.
கின்றன. அது என்ன காரணம் என்பது எனக்கு விளங்கவில்லை.
யொறுப்பு
இது இப்படியிருக்க, நான் இந்தக் கூட்டத்தில் இப்படிப்பட்ட கேளிக்கையில் இருந்து கொண்டே எனது வர்த்தகத் தொழிலில் நான் ஒரு அளவுக்கு வெற்றி பெற்றேன். எனது தகப்பனார் நம்பிக்கைக்குப் பாத்திரனானேன். என் தகப்பனார் இருக்கும்போது எங்கள் வியாபாரத்திற்கு தன் பெயரை எடுத்துவிட்டு என் பெயர் கொடுக்கப்பட்டு விட்டது. ஊர்ப் பெருமை விஷயங்களிலும் என் தகப்பனார் ஒவ்வொன்றிலும் இருந்து விலகிக்கொண்டு என்னையே தள்ளிவிட்டார்.
எங்கள் ஊர்ப் பொதுக்கோவில்கள், சர்க்கார் தேவஸ்தான சம்மந்தமான காரியங்கள் பெரிதும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரியம் போலவே நடைபெறும். ஆதலால் அவற்றிற்கு என்னையே முதன்மை யாக்கிவிட்டார்கள். ஒரு சமயம் இதனால் எனக்கு கடவுள் பக்தி ஏற்படலாம் என்கின்ற எண்ணமோ என்னமோ தேவஸ்தானக் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவனாகவும் ஆக்கப்பட்டுவிட்டேன்.
இப்படியெல்லாம் இருந்தும் ஏற்றுக்கொண்ட காரியத்தைச் சரியாய்
- உண்மையாய்ச் செய்வதென்பதல்லாமல் அநேக காரியங்களில் எனக்குப் பிடிவாதமான நம்பிக்கையென்பதே ஏற்பட்டது கிடையாது எப்படிப்பட்ட நம்பிக்கையில்லாத காரியத்தை ஏற்றுக்கொண்டாலும் நாணயமாகவும் அதிக கவலையாகவுமே செய்து வருவேன்.
பிடிவாதமில்லை
நிற்க, ஜாதி மதக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும் கடவுள் என்ற மூட நம்பிக்கை ஒழிக்கப்பட வேண்டுமென்பதிலும். மாத்திரம் எனக்கு உண்மையான நம்பிக்கையும் உணர்ச்சியுள்ள சிரத்தையும் உண்டு. அதுவும் நான் தான் செய்ய வேண்டுமென்றோ, அதற்காகத்தான். இருக்கிறேன் என்றோ கருதுவது இல்லை என்ன காரணத்தாலோ நாம் சவுக்கியமாக உயிர் வாழ்கின்றோம் எப்படியோ உயிர் வாழ்வுக்கு மற்ற எவருடைய தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் இருந்து வருகின்றோம் மனிதனுக்கு இந்த இரண்டு காரியந்தான் மேலான சம்பத்து ஆகும் அதாவது உழைக்க உறுதியும் ஆசையும் - அதாவது சோம்பேறித்தனமும் களுப்பிணித்தனமும் இல்லாத, திடம் உள்ள சரீரமும் தனது வாழ்வில் எந்தத் துறைக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கவோ, தனக்குச் சரியென்று தோன்றிய அபிப்பிராயங்களை - முடிவுகளை தனது வாழ்க்கைக்காக - வாழ்க்கை நலத்துக்காக மற்றவர்களின் தயவுக்காக மாற்றிக்கொள்ளவோ வேண்டிய அவசியமில்லாத- சாகும்வரை சுதந்திர உணர்ச்சியுடன் இருக்கத் 51— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தகுந்திலோ எதுவோ அதுவே மேல் கண்ட உயர்ந்த சம்பத்தாகும். அப்படிப்பட்ட நிலையில் நான் இருப்பதால் (இருக்கிறதாக நான் நினைத்துக்கொண்டிருப்பதால்) அந்த நிலையை பாழாக்குவதற்கு இஷ்டமில்லாமல் பயனுள்ள வேலையென்று எதைக் கருதுகின்றேனோ அதைச் செய்கிறேன் என்பதல்லாமல் வேறு எவ் வாதப் பிடிவாதமும் எனக்குக் கிடையாது
வேலை அவசியம் நாளை நான் சாகும்போது எனக்கு உணர்வு இருந்தால் நிம்மதியாகத்தான் சாவேனே ஒழிய ஒரு குறையும் இருப்பதாக நான். கருதமாட்டேன். எதையும் நான் குறையாய் விட்டு விட்டுப் போகிறேன் என்று அதிருப்திப் படமாட்டேன். நான் ஜீவனோடிருப்பதால் அதற்கு ஒரு வேலை இருந்து தானே ஆகவேண்டும்? எதாவது ஒரு வேலை யில்லாமல் உயிர்வாழ முடியாதே என்று கருதி ஏதோ ஒரு வேலை என்பதில் இதை அதாவது ஜாதி, மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன். இந்த உணர்ச்சி வலுத்துத்தான் அதே. முக்கியமானதும், முடிவானதுமான வேலையென்று இறங்கி விட்டேன். இந்த எண்ணத்தின் மீதே சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தேன். இந்த எண்ணம் கைகூடினால் மனித சமூகத்தில் உள்ள போராட்டங்கள். மறைந்து விடும். தனிப்பட்ட மனிதர்களுக்குள்ள குறைகள் நீங்கிவிடும்; தனக்கு என்கின்ற பற்றும் ஒழிந்துவிடும். உற்சாகத்துக்காக வேண்டுமானால். போராட்டங்களும் குறைகளும் அதிருப்திகளும் கவலைகளும் இருக்கலாம். அதாவது பண்டிகைக்காக ஓய்வெடுத்துக்கொண்ட மக்கள் பலர் கூடி சதுரங்கமோ, சீட்டாட்டமோ விளையாடும்போது யோசனைகள், கவலைகள், அதிருப்திகள் காணப்படுவதுபோல் இயற்கையின் ஆதிக்கத்தால் நமது வாழ்வுக்கு அவசியமில்லாததும் பாதிக்காததுமான யோசனை, கவலைகள் முதலியன காணப்படலாம். இவை எந்த மனிதனுக்கும் மனிதனல்லாத மற்ற எந்த ஜீவனுக்கும் உயிருள்ளவரை இருந்து தான்.
தீரும். சரீரமில்லாத ஆத்மாவுக்கும் கண்ணுக்குத் தெரியாத சூட்சம சரிரத்திற்கும்' கூட 'மோக்ஷமும்' முத்தியும்” கற்பித்திருப்பதில் ஜீவனுக்கு வேலை யில்லாமலும் அநுபவமில்லாமலும் மோக்ஷம் - முத்தி கற்பிக்க முடியவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டி இருந்து தீர வேண்டியதை உத்தேசித்து இந்த வேலையை நான் மேற்கொண்டேன்.
நிஷ்காமிய கம்மம் யாது?
இதைத்தான் நிஷ்காமிய கர்மம் என்று சொல்லலாம். மற்றபடி காமிய கர்மத்துக்குப் பலன் இல்லையென்றும் சொல்லலாம். நிஷ்காமிய கர்மத்துக்குத்தான் பலன் உண்டு என்றும் சொல்லப்படுவது முன்னுக்குப்
குடி அரசு- 1937 (2) 32
பின் முரணான கருத்தேயாகும். எப்படியெனில் நிஷ்காமிய கர்மமென்பதை அதாவது பயனை எதிர் பார்க்காத காரியத்தை ஒரு மனிதன் ஏன் செய்ய வேண்டும்? நிஷ்காமியமாய்ச் செய்தால்தான் பலன் உண்டு என்றதாலேயே “ஒரு பலன் ஏற்பட வேண்டும்” என்பதற்காக வேண்டி செய்வது என்பது அருத்தமாகிறது அல்லவா? ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்து காரியம் செய்கிறது என்பதில் எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ஆனால் உண்மையிலேயே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ, தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த வேலை சுயமரியாதை இயக்க வேலை செய்து வருகிறேன். ஆனால் இந்த வேலை நமக்கு எப்போதாவது ஏமாற்றத்தைக் கொடுத்து சலிப்பாக வேலை செய்யச் செய்யவில்லை; உற்சாகத்தையே ஊட்டி வருகிறது.
சுயமரியாதை தத்துவம்
சுயமரமியாதையே கதந்திரம் இன்றைய சுதந்திர வாதிகள் சுதந்திரத்திற்காகச் சுயமரியாதையை அலக்ஷயம் செய்கிறார்கள். அதாவது அடிமை தேசத்தில் சுயமரியாதைக்கு இடம் ஏது என்கிறார்கள். இது உண்மையிலே மூடவாதம் என்று சொல்லுவோம். சுயமரியாதை அற்றவர்களுக்கு சுயமரியாதை இல்லாதவர்களுக்கு சதந்திரமேது என்பதுதான் சரியான வார்த்தையாகும்
சுயமரியாதை இயக்கத்திற்குத்தான் சுதந்திர உணர்ச்சி தோன்றும் - சுதந்திரம் தேவைப்படும்; சுதந்திரத்திற்குச் சுயமரியாதை தேவைப்படாது சுயமரியாதைக்காரனின் சுதந்திரம் எல்லாவற்றிலும் சுதந்திரம் இருக்கத் தக்கதாய் இருக்குமென்றும் சுதந்திரக்காரனின் சுதந்திரமோ அவனுக்கே புரியாது; புரிந்தாலும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பொருத்ததாக மாத்திரம் இருக்கும் 33௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
உதாரணமாக இன்று அரசியல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுவோம் இன்று அரசியல் உலகில் இருவர் பெயர் அடிபடுகின்றது. ஒன்று தோழர் காந்தியார் பெயர், மற்றொன்று தோழர் ஜவஹர்லால் பெயர். முந்தியவர் இந்தியாவில் உலக அனுபவமுள்ள சோம்பல் கூட்டத்தார், மத உணர்ச்சியாளர். (மூட நம்பிக்கைகாரர்கள்) பழமை விரும்பிகள் ஆகியவர்களது உலகில்
மதிக்கப்படுகிறவர். அவரது சுதந்திரம் என்பதெல்லாம் பழமையை: அனுபவிக்கச் சுதந்திரம் வேண்டுமென்பதே. பிந்தியவர் உலக அனுபவமற்ற உற்சாகக்கார புதுமை விரும்பிகள். உலகத்தில் மதிக்கப்படுகிறவர் என்பதோடு குறிப்பற்று ஏதாவதொரு மாறுதல் வேண்டுமென்பவர். இந்த இரண்டு பேருக்கும் தெளிவான ஞானம் கிடையாது என்றே சொல்லலாம். ஏனெனில்
சுதந்திரத்தின் யோக்கியதையே- சுதந்திரம் விரும்புகின்றவர்களின் தன்மையே அவ்வளவுதான். எப்படியெனில் இருவர் கோரும் சுதந்திரம் இன்று உலகில் எந்தப் பாகத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அங்கெல்லாம் ஏறக்குறைய முழு மக்களும் சுயமரியாதை இல்லாமல் இருப்பதைக் காணலாம்.
காந்தியார் இந்து மதம் புனருத்தாரணம் ஆவதும் பழைய: ஜவஹர்லால்
பண்டிதர் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியிலிராந்து விடுபடுவது சுதந்திரம் என்கிறார். இவர்கள் இருவரும் கோரும் சுதந்திரங்களில் எது வந்ததானாலும் அல்லது இரண்டும் வந்து விட்டாலும் மனித சமூக வாழ்க்கையில் உள்ள துன்பங்களில் எது ஒழிக்கப்பட்டுவிடும் என்று ஆராய்ந்து பார்த்தால் சுதந்திரம் சுயமரியாதை அளிக்காது என்பது விளங்கும். எவ்வளவு சுதந்திரம் ஏற்பட்டாலும் சுயமரியாதைக்குத் தேவை இருந்து கொண்டுதான் இருக்கும்.
முழு சுயராஜ்யமுள்ள பிரிட்டிஷ் தேசத்தில் குடிகளுக்கு ஏன்? ராஜாவுக்கே தன் இஷ்டப்படி கல்யாணம் செய்துகொள்ள சுதந்திரம் இல்லாமல் ராஜ்யத்தை துறக்க வேண்டியதாகிவிட்டது என்றால் - அதுவும் ஜனப்பிரதிநிதிகளால் - அதுவும் பொது ஜனங்களுடைய விருப்பம், ஆமோதிப்பு என்பவைகளின் பேரால் என்றால் ஜவஹர்லால் சுயராஜ்யத்தில் காந்தியார் சுதந்திரத்தில் மனிதனுக்கு கடுகளவாவது சுயமரியாதை இருக்க இடமுண்டா என்று கேட்கின்றோம்
சுயமரமியாதையின் பெருமை
அப்படிக்கில்லாமல் சுயமரியாதை பெற்ற (சுயமரியாதைக்குப்
பிறந்த) சுதந்திரமாய் இருந்தால் “காதலுக்கு” பிரிட்டிஷ் அரசுக்கு ஏற்பட்டது போல் விலங்கு இருக்குமா? என்று கேட்கிறேன். சுயமரியாதை என்பது என்போன்ற சாதாரண மனிதனால் கையாளப்பட்டதனால் அதன் பெருமை விளங்காமல் போய்விட்டது என்று சொல்லலாமே தவிர அதற்கு நிகர் உலகில் மனிதனுக்கு உயிரைத் தவிர வேறு ஒன்றுமே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்
குடி அரசு- 1937 (2) 34
இந்தப் பத்து வருஷகாலமாய் தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி வெகு சாதாரண முறையில் எவ்வளவோ எதிர்ப்புக் கிடையில் நேரப்போக்குப் பிரசாரமாக நடந்து வந்திருந்தபோதிலும் அதற்கு எத்தனையோ இடையூறுகள் பல கூட்டங்களில் இருந்து - ஏன்? சுயமரியாதைக்
கூட்டத்தில் இருந்தவர்களுக்குள் இருந்து கூட - ஏற்பட்டு இருந்தாலும் ஒரு குடம் பாலுக்கு ஒரு சொட்டு விஷம் என்பதுபோல் தமிழ்நாடு, மலையாளநாடு, ஆந்திரநாடு ஆகியவைகளை சமுதாய இயலில் ஒரு கலக்குக்கலக்கி விட்டிருக்கிறது. மத இயலிலும் மகா பண்டிதர்கள் ஞானிகள், ஆச்சாரியார்கள் என்பவர்களையெல்லாம் மாறிக்கொள்ளச் செய்திருக்கிறது தோழர் காந்தியாரையே பல கரணங்கள் போடச் செய்து விட்டது
பெண்கள் உலகில் உண்மையான சுதந்திர வேட்கையைக் கிளப்பி விட்டு விட்டது. கீழ் ஜாதி மேல் ஜாதி யென்பவைகள் ஓடுவதற்கு ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று பந்தயம் போடுகின்றன. கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் பைபிளுக்கும் குர் ஆனுக்கும் புதிய வியாக்கியானங்கள் செய்யத் தலைப்பட்டு விட்டனர். தோழர் காந்தியாரோ அல்லது காங்கிரஸ் தொல்லையோ இல்லாமல் இருந்திருக்குமானால் இந்தியா பூராவையும் சுயமரியாதை இயக்கம் இன்னும் அதிகமாய் கலக்கி இருக்கும் என்பதோடு பார்ப்பனீயம் மாண்டு இருக்கும் என்றே சொல்லலாம்.
சுயமரியாதை இயக்கம் காந்தியாரை ஒரு அளவுக்கு மூலையில் உட்கார வைத்துவிட்டது என்றாலும் பார்ப்பனீயம் வேறு ஆட்களைப் பிடித்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முன்வந்து விட்டது. ஆனபோதிலும் காந்தீயம் பட்டு மாய்ந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பெருமை சுயமரியாதை இயக்கத்துக்கே உண்டு
இனி இரண்டு மாதம் சென்றவுடனே ஜவஹர்லாலை சுயமரியாதை இயக்கம் மூலையில் உட்கார வைக்க மூழு மூச்சில் முனையப் போகின்றது சுயமரியாதை இயக்கம் இதுவரை செய்து வந்த பிரசாரத்துக்கு மேலாக, கேரள ஆந்திர கர்நாடக தேசம் மாத்திரமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பிரசாரம் செய்யப் போகின்றது. அது தனது பழைய வாலிபர்கள் பெரும் பாலோர் வாழ்க்கைப் பருவம் அடைந்து விட்டதால் புதிய வாலிபர்களைச் சேகரித்துக்கொண்டு வருகிறது. ஏராளமான வாலிபர்கள் இருக்கிறார்கள். எனக்கு ஒரு சமயம் “குறை” ஏற்பட்டாலும் சுயமரியாதைக்கு குறை ஏற்படாது. வாலிபர்களே தயாராய் இருங்கள்!
(இக்கட்டுரை “நவமணி” ஆண்டு மலருக்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது.)
குடி அரசு - கட்டுரை - 18.07.1937
50— ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இனி நடப்பதென்ன?
காங்கிரஸ் மந்திரிகள் அதிகாரத்துக்கு வந்துவிட்டார்கள். மக்களுக்கு இனி தண்ணீரே குடிக்க வேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தேனும் பாலுமே அருவியாகவும், ஆறாகவும் ஓடப்போகிறது
ஆகாய கங்கை அகிலமெல்லாம் வேண்டியவுடன் வரவழைக்கப் படப்போகிறது. வரி என்கின்ற வார்த்தையே அகராதியில் கூட இல்லாமல் எடுபடப்போகிறது. இந்திய நாட்டில் எங்காவது பட்டினி என்றோ, வேலை இல்லாத கஷ்டம் என்றோ யாராவது உச்சரித்தால் ராஜத்துவேஷக் குற்றமாகக் கருதி தண்டனைக்குள்ளாக்கக் கூடிய சட்டம் செய்யப்படப் போகிறது
அற்ப ஆயுளில் யாரும் சாகாவண்ணம் எல்லோரும் 120 வருஷம் உயிர் வாழ ஏற்பாடு செய்யப்பட்டு மரணப் பதிவு இலாக்காவே எடுபடப்போகிறது. ஆகவே இனி என்ன வேண்டும்? இந்த சரணாகதி மந்திரிகள் ஆதிக்கத்தில் இவ்வளவு காரியம் ஆனால் போதாதா? இதற்கு மேலும் அனேக காரியம் செய்யப்படும் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்களித்திருந்த போதிலும் இதற்கு மேலும் மக்கள் ஆசைப்படுவது பேராசையைக் காட்டுவதாகிவிடாதா?
ஆனால் சரணாகதி மந்திரிகள் இவ்வளவோடு நிறுத்தி விடமாட்டார்கள். இன்னமும் அதிகமான அனேக நன்மைகளைச் செய்து விட்டுத்தான் ஓய்வெடுப்பார்கள். ஏனெனில் இவ்வளவு பெரிய நன்மைகள் செய்ய திட்டமும், சக்தியும் அவர்களுக்கு இல்லாதிருக்கு மானால் அவ்வளவு பெரிய மானங்கெட்ட சரணாகதி அடைந்து இந்த பதவியை அடைந்திருப்பார்களா? ஆகவே நாம் ஆவலோடு பொறுத்திருப்போம். ஆனால் ஒரு விஷயத்தை நாம் ஆலோசித்துப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
அதாவது இந்த சரணாகதி மந்திரிகள் யாருடைய பிரதிநிதிகள்? ஜனங்களுடைய பிரதிநிதிகளா? பிரிட்டிஷ் கவர்ன்மெண்டாருடைய பிரதிநிதிகளா? என்பதுதான். ஜனங்களால் இந்த மந்திரிகள் தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் என்பதைக்கூட நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை ஏனெனில் பத்தாவது மந்திரியாகிய டாக்டர் ராஜன் அவர்கள் ஜனங்களால் ஒதுக்கித்தள்ளப்பட்டவர், காங்கிரசினால் தண்டிக்கப்பட்டவர். அவர். அடைந்திருந்த இந்திய சட்டசபை அங்கத்தினர் பதவியையும் ராஜிநாமா
குடி அரசு- 1937 (2) 56
செய்யும்படி காங்கிரசால் சென்ற வருஷம்தான் உத்திரவிடப்பட்டு அந்தப்படி ராஜிநாமா செய்தவர். ஆகவே காங்கிரசுக்கும் பிரதிநிதி அல்ல என்பதோடு பொது ஜனங்களுக்கும் பிரதிநிதி அல்ல. அதுவாவது போகட்டும் என்று சொல்லப்படுவதானாலும் ஒழுக்கத்துக்கும் கட்டுப் பாட்டுக்குமாவது இவர் பிரதிநிதியா என்று பார்த்தால் அதுவும் 0 பூஜ்ஜியம் என்றுதான் சொல்லும்படியாக காங்கிரஸ் ரிக்கார்டே இருக்கிறது. அதாவது இவர் காங்கிரசுக்கு மகத்தான துரோகம் செய்து, இன்று முதல் மந்திரியாயிருக்கும் கனம் ஆச்சாரியார் அங்கம் பதறி ஆத்திரம் கொண்டு “இன்று முதல் நான் இனிமேல் எந்த காங்கிரஸ் நடவடிக் கையிலும் கலந்து கொள்வதில்லை" என்று பிரதிக்கினை செய்துவிட்டு வெளியேறும்படியான நிலைமை ஏற்படும்படி நடந்து கொண்டவர். மற்றபடி அதற்குப் பிறகாவது ஏதாவது தேர்தலில் நின்று பொதுஜன. ஆதரவு தனக்கு ஒரு கடுகளவாவது இருக்கிறது என்று காட்டிக்கொண்டவரா என்று பார்த்தால் அதுவும் சிறிதுமில்லாமல் மக்கள் மூன் தலைகாட்ட தயங்கிக் கொண்டு அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்தவர். ஆகவே கனம் டாக்டர் ராஜன் யாருடைய பிரதிநிதி என்பதை வாசகர்கள் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஒரு சமயம் யாராவது ஒரு வாசகர் இது தனக்கு புரியவில்லை என்றும் நாமே சொல்லிவிட்டால் அனுகூலம் என்றும் தெரிவிக்க ஆசைப்படுவாராயின் அவருக்கு நாம் நமதபிப் பிராயத்தை விளக்கவேண்டுமானால் ஒருவிஷயம் சுருக்கமாகச் சொல்லுவோம். அதாவது ஆரியர்களின் ஆணவத்துக்கும், மனுதர்ம ஆட்சியின் தத்துவத்துக்கும் இவர் பிரதிநிதி என்றுதான் சொல்லுவோம். கனம் டாக்டர் ராஜன் அவர்கள் செய்த குற்றத்தைவிட எவ்வளவோ மடங்கு குறைவான குற்றம் செய்தவர்கள் 5 வருஷ காலமும் ஆயுள் பரியந்தமும் கூட காங்கிரசால் “தண்டிக்கப்பட்டு” விட்டார்கள். ஆனால் கனம் டாக்டர் ராஜனோ இதுவரையில் காங்கிரஸ்காரர்களில் எவரும் செய்திருக்காத - செய்ய எண்ணக்கூட தைரியமிருக்க முடியாத “மகா பாதகமான" குற்றத்தைச் செய்தும்கூட அவர் ஒரு ஆரியராய் இருப்பதால் தண்டனை அடைவதற்குப் பதிலாக அமைச்சர் பதவி பெற நேர்ந்துவிட்டது.
மனுதர்ம சாஸ்திரத்தில் “ஒரு சூத்திரன் ஒரு பார்ப்பன விபசாரிப் பெண்ணை அப்பெண் சம்மதத்தின் மீது கலந்தாலும், அந்த சூத்திரனின் ஆண் குறியை வெட்டி சித்திரவதை செய்து கண்டம் கண்டமாய் துண்டு செய்து கொல்ல வேண்டும்” என்றும்,
“ஒரு “பிராமணன்” ஒரு சூத்திர குடித்தனப் பெண்ணை பலாத் காரமாய் புணர்ந்தாலும் அந்த பிராமணனுக்கு அரசன் மானியம் கொடுத்து தம்பதிகளை வேறு ஊருக்கு அனுப்பிவிட வேண்டும்" என்றும் வியக்தமாய் பொருள்பட விதி இருக்கிறது. அது போலவே கனம் ஆச்சாரியார் ஆட்சியில் 37... QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நமது கனம் டாக்டர் ராஜன் அவர்கள் அமைச்சரானது அவ்விதிக்கு சரியான
எடுத்துக்காட்டாக விளங்கி மனு ஆட்சியை பிரதிபலிக்கச் செய்து விட்டது.
மற்ற மந்திரிகளாவது யாருடைய பிரதிநிதிகள் என்று பார்ப்போ மானால் எந்த ஓட்டர்களுக்காவது எந்தக் கொள்கையையாவது எடுத்து விளக்கி ஓட்டுப்பெற்றிருந்தால் இவர்கள் ஏதாவது ஒரு கொள்கைக்கோ, ஓட்டர்களுக்கோ பிரதிநிதிகள் என்று சொல்லலாம். ஒன்றும் கிடையாது ஆளுக்கு ஒருவிதம், சமயத்துக்கு தகுந்தபடி, கனம் ஆச்சாரியார் ஒரு மாதிரி, தோழர் மூர்த்தியார் ஒரு மாதிரி, பண்டிதர் நேரு ஒரு மாதிரி, காந்தியார் ஒரு மாதிரி, தோழர் குப்புசாமி அண்ணாமலை கம்பெனியார் ஒரு மாதிரி, மற்ற பார்ப்பன வக்கீல்கள், சர்க்கார் பார்ப்பன உத்தியோக.
ஸ்தர்கள் ஒரு மாதிரி ஆக இப்படி இன்னும் பலபேர் பல மாதிரி பேசி படிப்பில்லாத ஓட்டர்களை மயக்கி வஞ்சித்து ஏமாற்றிப் பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கையில் வந்தவர்களானதால் உண்மையில் மற்ற
9 பேர்களை பொய்யும், ஏமாற்றும், சூதும் சூழ்ச்சியுமான “அருமை” குணங்களுக்கு பிரதிநிதிகள் என்றுதான் சொல்ல வேண்டும் இடைக்கால மந்திரிகளை கனம் ஆச்சாரியார் மெய்மறந்து வையும்போது ஆத்திரத்தில் அவருக்கு வேறு நல்ல வார்த்தைகள் கிடைக்காமல் “ஜனங்கள் சர்க்காருக்கு சவாரிசெய்ய குதிரைகளை கொடுத்தார்கள். ஆனால் சர்க்கார் கழுதைக்கு கடிவாளம் போட்டு விட்டார்கள்” என்று சொன்னது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்
இடைக்கால மந்திரிகள் கழுதைகளா அல்லவா என்பது பற்றி நமக்கு இப்போது விவகாரம் வேண்டாம். ஏனெனில் அவர்கள் யாராய் இருந்தாலும் 3 மாத வாய்தாவில் அவர்கள் (இடைக்கால மந்திரிகள்) மறுபடியும் “மனிதர்கள்” ஆகிவிட்டார்கள். ஆனால் “ஜனங்கள் கொடுத்த குதிரை மேல்” இப்போது பிரிட்டிஷ் சர்க்கார் சவாரி செய்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் மந்திரிகள் சர்க்காருக்கு சவாரி செய்யும் குதிரைகளாக ஆகிவிட்டார்கள். அக்குதிரைகளுக்கு சர்க்காரால் கடிவாளம் போட்டாய் விட்டது. அதுவும் “நன்றி விசுவாசத்துடன் உத்திரவுக்கு கீழ்படிந்து நடக்கிறேன்'' என்று மண்டியிட்டு அடிபணிந்து சரணாகதி அடைந்த பிறகே சர்க்கார் கடிவாளம் பூட்டி இருக்கிறார்கள். ஆகவே இந்த சரணாகதி மந்திரிகள் கடிவாளத்துக்கு (சர்க்காருக்கு)த்தான் பிரதிநிதி களாகவோ - பொறுப்பாளர்களாகவோ ஆவார்களே ஒழிய ஓட்டர்களுக்கு
அல்ல. பொது மக்களுக்கும் அல்ல.
இனி இவர்கள் செய்யப்போகும் காரியம் என்ன இருக்க முடியும்
என்று பார்த்தால் நிலவரி விஷயத்தில் இனி புதிய வரி போட வேண்டியது தான் பாக்கி இருக்குமே ஒழிய ஒரு காசும் குறைப்பதற்கும் இடம் இருக்காது. ஏனெனில் இடைக்கால மந்திரிகள் 100-க்கு 75 வீதம் அதாவது 1 ரூபாய்க்கு 4 அணாவீதம் நிலவரி குறைத்து வரவு செலவு
குடி அரசு- 1937 (2) 38
கணக்குகள் சரிக்கட்டி முடிவான உத்திரவும் போட்டுவிட்டு போய் விட்டார்கள். இதை “சுதேசமித்திரன் பத்திரிகையே ஒப்புக்கொண்டு “நடந்த வருஷத்துக்கு இல்லையாம். இனி நடக்கப்போகிற வருஷத்துக்கு தான் வரி குறைப்பாம்” என்று இடைக்கால மந்திரிகள் வரிகுறைத்து விட்டதாக வெளியிட்ட உத்திரவின் மீது ஆத்திரம் காட்டி விஷமமாக எழுதியிருந்தது. ஆகவே நிலவரி விஷயம் ஏற்கனவே தீர்ந்துவிட்டது
இனி சம்பள விஷயத்தில் சாதிக்கப் போவதாக சவடால் அடிக்கிறார்கள். என்ன குறைக்கப் போகிறார்கள்? ரூபாய்க்கு 16 அணாவாக முன் இருந்ததை சரணாகதி மந்திரிகள் ரூபாய்க்கு 192 காசாக குறைக்கப் போகிறார்கள். எப்படி எனில் 7 மந்திரிகள் 10 மந்திரிகளானார்கள்; 3 காரியதரிசிகள்
10 காரியதரிசிகளானார்கள்; இவை போதாமல் சட்டசபை மெம்பர்கள் எல்லோருக்கும் மாதம் 100 ரூபாயோ 150 ரூபாயோ வீதம் மாதச் சம்பளம் கொடுக்க திட்டம் வைத்து இருக்கிறார்கள். ஆகவே இந்தச் சம்பளம் அலவன்ஸ் படி ஆகியவைகள் சேர்ந்தால் பெருமாள் பெரிய பெருமாள் ஆனமாதிரிதான் ஆகக்கூடுமே தவிர குறைபடப் போவதில்லை.
இந்த அதிக மந்திரி, அதிக காரியதரிசி என்பதெல்லாம் சரணாகதி மந்திரிசபை அதிக காலம் நிலைக்கச் செய்வதற்கு ஆக செய்யப்பட்ட சூழ்ச்சியே ஒழிய இதில் உண்மையோ நியாயமோ அவசியமோ இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. சம்பளத்திலும் முன்பிருந்ததை விட ஒரு காசும் பொது ஜனங்களுக்கு மீதியாகப் போவதில்லை, 215 மெம்பர்கள் உள்ள சபையில் இப்போது உத்தியோகத்தின் மூலமே 9 மந்திரிகள், 10 காரியதரிசிகள், 2 தலைவர்கள் ஆக 21 பேர்கள் நிரந்தர சிப்பந்திகள் ஆகிவிட்டார்கள். மொத்தம் ஐம்பது பார்ப்பனர்களில் 10 பேர்கள் இந்த சிப்பந்தி கூட்டத்தில் சேர்ந்துவிட்டதால் இனியும் மீதி உள்ள 40 பார்ப்பனர்கள் அவர்களுடன் எப்போது மிருப்பார்கள். ஆகவே 21-ம்
40-ம் 61 பேர்கள் தவிர இனி கீழ் சபையில் மெஜாரிட்டிக்கு வேண்டிய எண்ணிக்கை 47 பேர்களே ஆகும். அதற்கு ஆக சட்டசபை மெம்பர்களுக்கு சம்பளம் என்பதாக ஒரு தொகை ஏற்பாடு செய்து விட்டால் இனியும் குறைந்தது சுமார் 50, 60 பேர்களுக்கு குறையாமல் சரணாகதி மந்திரிகளை 24 மணி நேரமும் “அனுமார்” மாதிரி கைகட்டி வாய்பொத்தி சுற்றிக்கொண்டும், நத்திக்கொண்டும் திரிந்து விடுவார்கள். இந்த சூழ்ச்சிமீதுதான் “சட்டசபை மெம்பர்" களுக்கு சம்பளம் ஏற்படுத்தப் போகிறார்களாம். ஆகவே சம்பளம் குறைப்பது என்பதில் உள்ள நாணையம் மக்களை ஏமாற்றுவது தானே தவிர பணக்செலவில் ஏதாவது குறைந்துவிடுமா என்பது சந்தேகந்தான்.
நிற்க நமது நாட்டுக்கு சீர்திருத்தம் வருவதற்கு முன் 2 மந்திரிமார்கள் தான் சென்னை மாகாண நிர்வாகத்தைக் கவனித்து வந்தார்கள். அப்புறம்
3 ஆகி பிறகு 7 ஆகி இன்று 10 மந்திரிகளும், 10 வால்களுமாக 20 உருப்படிகள் ஆகிவிட்டன. பணமும் அதுபோலவே பெருகிவிட்டது 39௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பொறுப்பும் சின்னபின்னப்பட்டு பாழாகி “குருட்டுக் கோமுட்டி கடையில் அள்ளாதவன் பாவி'' என்கின்ற மாதிரியில் போனதோடு ஒரு மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. எப்படியோ நடக்கட்டும். முடிவில் இன்று பார்ப்பனர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக மகா குதூகலத்தில் இருக்கிறார்கள். அவர்களில் யாரைப்பார்த்தாலும் முகத்தில் களை வழிந்து ஓடுகின்றது வாய் நிறையப் புன்சிரிப்பு அமிழ்ந்து கிடக்கின்றது. மனுப்பிரஜாபதி அவதரித்து விட்டதாகவே முடிவு செய்து கொண்டார்கள். இனி “கற்பகோடி"” காலத்துக்கு அசைக்க முடியாதபடி பார்ப்பன ஆட்சி பலம் பெற்று விட்டதாகவே மனப்பால் குடித்து மகிழ்கிறார்கள்.
ஆனால் இந்த வைபவத்தில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் போய்விடுமோ என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. அது முழு வெற்றி பெற்று விட்டது. இனியும் உச்சத்துக்கு வரப்போகிறது. இந்த
17 வருஷ ஆதிக்கத்தின் வரவு செலவு (பாலன்ஸ்ஷீட்) கணக்குபோட்டு பொதுஜனங்களுக்கு வெளியிடுவதற்கு ஆக அந்த வேலையில் இப்போது ஈடுபட்டிருக்கிறது. முன்னிலும் அதிகமாக இயக்கம் வேலை செய்யப்
போகிறது. அதற்கு ஆன எல்லா தளவாடங்களும் தயாராகின்றன. அவற்றிற்கு
நம் சரணாகதி மந்திரிகளே உற்சாகமூட்டி வருவார்கள். நம் சுயமரியாதை கொள்கையும் ஒரு நாளும் ஓய்வடையவில்லை. யாரையும் ஏமாற்றிவிடவு மில்லை. புடம் போட்ட தங்கம் போல் பிரகாசமும் பரிசுத்தமும் அடைந்து வருகிறது. எல்லா மக்களும் உணரத்தகுந்த தன்மையில் ஆதிக்கத்துடன் பிரகாசிக்கப் போகிறது. யாரும் எவ்வித மனத்தளர்ச்சியோ, சலிப்போ கொள்ள வேண்டியதில்லை
ஆனால் ஒன்று மாத்திரம் அவசியம். அதாவது பார்ப்பனரல்லாத மக்களாய் இருக்கிற ஒவ்வொருவருடையவும் கிறிஸ்தவர், முஸ்லீம், ஆதிதிராவிடர் “ஜாதி இந்துக்கள்” என்று சொல்லப்படும் எல்லாருடையவும் கடமையை - சுயமரியாதை உணர்ச்சியை பார்ப்பனரல்லாத இயக்கம் எதிர்பார்க்கிறது என்பதையும் இது ஒரு நல்ல தங்கமான சமயம் என்பதையும் உற்சாகமான உணர்ச்சியோடு வேலை செய்ய இதைவிட நல்ல சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்பதையும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் மனதிலிருத்த வேண்டும் என்பதாகும்
குடி அரசு - தலையங்கம் - 18.07.1937
குடி அரசு- 1937 (2) 60
பார்ப்பன நீதி
பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு திருச்சி தோழர் டாக்டர் ராஜன் அவர்களை சென்னை அரசாங்க மந்திரி சபைக்கு ஒரு மந்திரியாக கனம் ஆச்சாரியார். நியமித்தது ஒரு சரியான உதாரணமாகும்
காங்கிரசுக்கு ஆனாலும் சரி, பார்ப்பனர்களுக்கு ஆனாலும், காந்தியாருக்கு ஆனாலும் சரி பொதுவாழ்வில் ஏதாவது கட்டுப்பாடோ நாணயமோ ஒழுக்கமோ இருக்கிறதா என்பதை பொது மக்கள் சிந்தித்து பார்க்கவேண்டும் என்கின்றதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்.
டாக்டர் ராஜன் அவர்கள் காங்கிரசால் விலக்கி வைக்கப்பட்டவர். என்பதை வாசகர்கள் முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் அடுத்தபடியாக அவர் பொதுஜனங்களால் ஒரு முனிசிபல் ஸ்தானத்துக்குக் கூட அருகதை அற்றவர் என்று தோற்கடிக்கப்பட்டிருப்பதையும் அதுவும் காங்கிரஸ் அல்லாத அபேக்ஷகருடன் போட்டிபோட்டே தோற்கடிக்கப் பட்டவர் என்பதையும் இரண்டாவதாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்
மற்றும் இன்று அதாவது அவர் மந்திரி ஆவதற்கு முதல் நாள்வரை எந்த ஸ்தானத்திலாவது அல்லது வேறு எந்தக்காரியத்திலாவது பொது ஜனங்களின் பிரதிநிதி என்கின்ற ஹோதாவில் ஒரு அங்கத்தின ராகவோ அனுதாபியாகவோ இருந்திருந்தாரா என்பதையும் கவனித்து பார்த்து முடிவு செய்துகொண்டு அதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாத்திரமல்லாமல் எல்லா இந்திய காங்கிரஸ் ஆதிக்கத்துக்குள் உள்ள எந்த ஸ்தாபனத்திலாவது வேறு யாராவது ஒரு மெம்பர் இந்த மாதிரியாக அதாவது டாக்டர் ராஜன் அவர்கள் செய்தது போன்ற மகத்தான ஒரு துரோகம் காங்கிரசுக்கு செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். இவ்வளவும் பார்த்தபிறகு டாக்டர் ராஜன் அவர்கள் விஷயம் கவனித்தால் பார்ப்பனர்கள் நீதி என்பது எப்படிப்பட்டது என்பது விளங்கும்
டாக்டர் ராஜன் தோழர் தேவர் அவர்கள் தேர்தலில் செய்த துரோகத்துக்கு சமாதானம் சொல்லும் போது தேவர் அவர்களின் தகுதி இன்மையைப் பற்றி ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. மற்றென்ன சொன்னார் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
என்றால் “திருச்சியில் வகுப்பு ஆதிக்கத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிப்பதற்காகவே காங்கிரஸ் கட்டளையை மீறி நடந்தேன் என்று சொன்னார். அதாவது தேவர் வகுப்புவாதி என்றும் அவருக்கு முனிசிபல் சேர்மன் வேலை ஆகிவிட்டால் அவரின் வகுப்பாகிய பார்ப்பனரல்லாத “இந்து” மக்கள் ஆதிக்கம் வலுத்துவிடும் என்றும் அதை ஒழிக்கவே அப்படிச் செய்ததாகவும் நன்றாய் விளங்கும்படி கூறினார் இதற்காகவே டாக்டர் ராஜனை திருச்சி காங்கிரஸ்கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, எல்லா இந்திய வேலைக் கமிட்டி, பார்லிமெண்டரி போர்ட் கமிட்டி ஆகிய எல்லா ஸ்தாபனங்களும் குற்றவாளியாக்கி காங்கிரஸ் சம்மந்தத்தில் இருந்து விலக்கிவைத்தன. அவ்வளவு மாத்திரமல்லாமல் தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் “தாங்கமுடியாததும் மன்னிக்க முடியாததுமான துரோகத்தை டாக்டர் ராஜன் செய்துவிட்டதால் டாக்டர் ராஜன் அவர்களை தண்டிப்பது மாத்திரமல்லாமல் இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற மானமற்ற ஸ்தாபனத்தில் தான் அங்கத்தினராய் இருப்பது மானக்கேடான காரியம்” என்று கருதி “இன்று முதல் காங்கிரஸ் கமிட்டி சம்மந்தமான எல்லாக் காரியங்களில்
இருந்தும் விலகிக்கொண்டேன்'' என்று விளம்பரப்படுத்திவிட்டு
காங்கிரஸ் ஸ்தாபனத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
இன்றும் அதாவது தேர்தலுக்கு அபேக்ஷகராய் நிற்கும் வரையில் கனம் ஆச்சாரியாருக்கு காங்கிரசில் எந்த ஸ்தாபனத்திலும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படிப்பட்டவரை (ஆச்சாரியாரை) தேர்தலுக்கு நிற்கும்படி காங்கிரஸ் கமிட்டியில் வேண்டிக் கொள்ளப்பட்டதாக தந்திரம் செய்து அவர் அவ்வேண்டுகோளை ஒப்புக்கொண்டது ஒரு பெரிய தியாகம் என்றும் தேசத்தின் அதிர்ஷ்டவசம் என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளும் கூலிப் பத்திரிகைகளும் கூப்பாடு போடச் செய்து உள்ளே வந்து புகுந்துகொண்டார். தோழர் சி.ஆர். ரெட்டியார் அந்த தொகுதிக்கு அதாவது சர்வகலாசாலைத் தொகுதிக்கு தகுதியுடையவராய் இருந்தும் அவரை ஏன் காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு நியமிக்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது “ரெட்டியார் ஏன் விண்ணப்பம் போடவில்லை” என்று இதே பார்ப்பனரும் பார்ப்பனப் பத்திரிகைகளுமே கேட்டன.
ஆனால் விண்ணப்பமே போடாமல் இருந்தவரும் காங்கிரஸ் கமிட்டிகளின் சம்மந்தங்களையே விட்டுப் போனவருமான ஆச்சாரியாரை
மாத்திரம் எப்படி வலிய அழைத்து நிறுத்தினார்கள் என்றால் அதற்கு பதில் இல்லை. ஆனால் ஆச்சாரியார் சம்மதித்தது தான் தேசத்தின். பாக்கியம் என்று சொல்லப்பட்டது
கல்வியிலாகாவுக்கு சகல விதத்திலும் தகுதி உள்ளவரும் அவ்விஷயங்களில் அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளவரும் தென்னாட்டில் காங்கிரசுக்கும் காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கும் தலைவராய்
குடி அரசு- 1937 (2) 62
இருந்தவருமான ஒரு பார்ப்பனரல்லாதார் இருப்பது காங்கிரஸ் பார்லிமெண்ட் கமிட்டிக்கு தெரியாமல் போய் எங்கேயோ ஓடிப்போய் மறைந்து கொண்டிருந்தவரும் கல்வி இலாகாவில் அனுபவம் இல்லாத வருமான ஒருவர் மாத்திரம் கண்ணுக்குத் தென்பட்டு அவருக்கு விண்ணப்பம் போட்டு அழைக்கப்பட்டது என்றால் இதில் உள்ள பார்ப்பன நீதி எப்படிப்பட்டது என்பதை நாம் வாசகர்களுக்கு விளக்கவேண்டியதில்லை.
நிற்க அதுபோலவே தோழர் காந்தியாரும் காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தனக்கு ஒரு சாதாரண அங்கத்தினர் ஸ்தான சம்மந்தம் கூட இல்லை என்றதோடு காங்கிரஸ் சம்மந்தமான காரியங்கள் எதற்கும் அபிப்பிராயமோ ஆலோசனையோ சொல்ல தான் எந்த விதத்திலும் அருகதை இல்லை என்றவருமான காந்தியாரை இன்று தேர்தல் வெற்றிபெற்றவுடன் காங்கிரசுக்கு அபிப்பிராயம் சொல்லவும் ஆலோசனை சொல்லவும் தகுதி உடையவராக ஆக்கிவிட்டது என்பதான காரியங்கள் ஏதாவது நீதியையோ கட்டுப்பாட்டையோ ஒழுக்கக்தையோ கொண்டு நடைபெறுகிறதா அல்லது பார்ப்பனர்கள் இஷ்டம் எதுவோ அதுதான் சட்டம், அதுதான் ஒழுக்கம், அதுதான் நீதி, அதுதான் கட்டுப்பாடு என்கின்ற பார்ப்பன எதேச்சாதிகாரத்தைக் கொண்டு நடைபெறுகிறதா என்று பார்க்கும்படி வாசகர்களைக் கேட்கின்றோம் ஆகவே காங்கிரசின் ஆதிக்கம் உண்மையிலேயே காங்கிரசினிடத்தில் இல்லை என்பதும் காங்கிரசில் சம்பந்தமில்லாதவரிடத்திலும் காங்கிரஸ் கமிட்டிகளில் எதிலும் சம்பந்தமில்லாதவரிடத்திலுமே இருந்து அவர்களால்: சர்வாதிகாரம் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இதிலிருந்து விளங்கும்
நிற்க, எப்படியோ ஒரு விதத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று மந்திரிகள் நியமிக்கப்படும் காலத்தில் தோழர் கனம் ஆச்சாரியார், டாக்டர் ராஜன் அய்யங்காரை ஒரு மந்திரியாக்க வேண்டும் என்று கருதினார் என்றால் அதற்கு தோழர் டாக்டர் ராஜனும் சம்மதித்தார் என்றால். கனம் ஆச்சாரியாரும் டாக்டர் ராஜனும் தோழர் தேவர் சேர்மென் தேர்தலில் கோபித்துக்கொண்டதும், விலகிக்கொண்டதும் உண்மையான காரியங்களா அல்லது ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்கொண்டு தேவரை ஒழிப்பதற்கும் பார்ப்பனரல்லாதார் மேலுக்கு வருவதை அடக்கி
ஒடுக்கி நசுக்குவதற்கும் அப்பொழுதிருந்தே - அதற்கு முன்பிருந்தே செய்து வந்த சதியாலோசனையா? என்பதை சொந்த புத்திகொண்டு யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்
கனம் ஆச்சாரியார், டாக்டர் ராஜன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்ததற்கு காரணம் சொல்லும்போது “டாக்டர் ராஜன் அவர்களுடைய சேவையை இனியும் பொதுஜனங்கள் அனுபவிக்காதபடி தடை செய்வது நியாயமல்ல என்று கருதியே அவருக்கு மந்திரி வேலை கொடுத்தேன்" என்று சொல்லுகிறார். அதோடு தனக்குத் திடீரென்று தெய்வீகமாக அப்படித் தோன்றிற்றாம். அதனால் திடீரென்று கொடுத்தாராம் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இது இப்படி இருக்க டாக்டர் ராஜன் அவர்கள் தான் மந்திரி பதவி ஏற்றுக் கொண்டதற்கு காரணம் சொல்லுகையில் “எனது மாபெருந்தலைவர் கனம் ராஜகோபாலாச்சாரியார் ஆக்கினையை நான். இதுவரை மீறினது கிடையாது. ஆகையால் தலைவரிடமிருந்து ஆக்கினை: வந்தவுடன் ஏற்றுக்கொண்டேன்” என்று சொல்லியிருக்கிறார். இவை காங்கிரஸ் பத்திரிகையில் உள்ள வாக்கியங்கள். இவ்விருவர்கள் சொல்லுவதும் இப்போது உண்மை என்றே வைத்துக்கொள்வோம்
ஆனால் அந்தக்காலத்தில் அதாவது திருச்சி முனிசிபல் தேர்தல் காலத்தில் டாக்டர் ராஜன் அவர்கள் அவரது மாபெருந் தலைவரான ஆச்சாரியார் பேச்சை மீறி பொது நாணயத்தையும் ஒழுக்கத்தையும் மீறி துரோகம் செய்வானேன் என்பதையும் கனம் ஆச்சாரியார் சொல்லுகிறபடி டாக்டர் ராஜனின் சேவை தேசத்துக்கு அவசியமாய் இருந்தால் அந்தக் காலத்தில் அதாவது ஆச்சாரியார் கோபித்து துறவு பூண்ட காலத்தில் இதைச் சொல்லித் தானும் துறவு பூணாமல் டாக்டரையும் விலக்காமல். ஏன் இருந்திருக்கக் கூடாது என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம்.
எனவே இருவரும் உள்ளுக்குள்ளாகவே பேசி வைத்துக்கொண்டே
தமிழ் மக்கள் தலையில் பெரும் பாராங்கல்லைப் போடும் சூழ்ச்சிக்கு ஆகவே அம்மாதிரி வேஷமாய் நடந்து கொண்டார்கள் என்பது கண்ணாடிபோல் விளங்குகிறது. நிற்க,
காங்கரஸ் கமிட்டிக்கு ஆவது காங்கரஸ் ஸ்தாபனத்துக்கு ஆவது ஏதாவது நாணயமோ ஒழுக்கமோ கட்டுப்பாடோ ஒழுங்குமுறையோ இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கும்படியும் வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்
அதாவது டாக்டர் ராஜன் அவர்கள் செய்த துரோகம் இதுவரை எந்த காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் எந்த காங்கிரஸ்வாதியாலும் செய்திருக்க முடியாத செய்திராத மாபெரும் துரோகம் என்பதாக காங்கிரஸ் ஸ்தாபனங்கள். எல்லாம் கருதி அவரை நீக்கி இருக்கிறது என்று முன்னமேயே குறிப்பிட்டோம். அப்படி இருக்க இந்த ஸ்தாபனங்களில் ஏதாவது பார்லிமெண்டரி போர்ட்டாவது டாக்டர் ராஜன் அவர்களை மந்திரியாக நியமிக்குமுன்.
ஒரு சமாதானம் கேட்டு அல்லது அவராலாவது ஒரு மன்னிப்பு கடிதமோ வருத்தம் தெரிவிக்கும் கடிதமோ பெற்றதா என்று கேட்கின்றோம். செய்த தவறுதலுக்கு வருந்தாத ஒருவருக்கு காங்கரசில் மதிப்புள்ள உயர் பதவி கொடுப்பதாயிருந்தால் அவர் செய்த தவறுதலை காங்கரஸ் ஸ்தாபனம் தவறு என்று கருதவில்லை என்றுதான் அர்த்தமாக வேண்டும். அல்லது காங்கிரஸ் அத்தவறுதலை மன்னித்துவிட்டது என்று கருத வேண்டுமானால் டாக்டர் ராஜன் செய்த தவறுதலை விட மிக மிக குறைவான தவறுதல்கள் செய்தவர்களையெல்லாம் உடனே மன்னித்து பதவிகள் அளிக்க வேண்டும்.
குடி அரசு- 1937 (2) 64
உதாரணமாக தோழர் மேஹர் அலி அவர்கள் சட்டம் மீறிய குற்றத்திற்கு தண்டிக்கப்பட்டார். காங்கிரசு சர்க்கார் அக் குற்றவாளியின். சமாதானம் கேட்காமலும் குற்றவாளி விருப்பத்தை கேட்காமலும் அப்பீல் அதிகாரிகளினுடையவும் நிருவாக அதிகாரிகளினுடையவும் அபிப் பிராயங்களை அவமதித்து உடனே விடுதலை செய்து விட்டது
இதன் கருத்து என்னவென்றால் தோழர் மேஹர் அலி செய்தது குற்றமல்ல. அந்த காலத்துக்கு அப்படித்தான் செய்ய வேண்டி இருந்தது இப்போது இனி அப்படிச் செய்வதற்கு இடமிராது என்று கருதியதாகும் அதுபோல் டாக்டர் ராஜன் அவர்கள் அந்த சமயத்தில் செய்தது குற்றமல்ல என்று கருதினால் அதை விட குறைவான குற்றம் செய்தவர்களுக்கும் காங்கிரஸ் விடுதலை அளிக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் பார்ப்பனருக்கு அதிலும் அய்யங்காருக்கு ஒரு நியாயம் என்று ஆச்சாரியார் முடிவு செய்வதும் அதைப்பற்றி எந்த காங்கிரஸ் ஸ்தாபனமும் அபிப்பிராயம் கூறாமல் கண்டிக்காமல் வாய் மூடிக்கொண்டிருப்பதும் என்றால் காங்கிரசில் பார்ப்பனரல்லாதார் நிலை எவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் இருக்கிறது என்பதோடு காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதை உணர்ச்சி எவ்வளவு கேவலமானதாக இருக்கிறது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது
காங்கிரஸ் சட்டத்தை - ஒழுங்கை - கட்டுப்பாட்டை மீறி பார்ப்பனரல்லாதாருக்கு தீங்கிழைத்தவருக்கு காங்கிரசில் மந்திரி பதவி அளிப்பது என்றால் ஜனரல் டயருக்கு பிரிட்டீஷார் தங்கத்தில் வாள் அளித்ததைப்பற்றி எந்த காங்கிரஸ் இந்தியன் குறைகூற முடியும் என்று கேட்கின்றோம் ஆகவே இன்று காங்கிரசின் நீதியோ, காந்தி நீதியோ, ஆச்சாரியார் நீதியோ, அல்லது பார்ப்பன நீதியோ எப்படி இருக்கிறது என்பதை உணர இதை நன்றாய் ஆலோசித்துப் பார்க்கும்படி வாசகர்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 25.07.1937
ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பார்ப்பன ஆட்சி தேவேந்திரன் சபை
தேவேந்திரன் - தேவர்கள் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
தேவேந்திரன் கொலுமண்டபத்துக்கு தேவர்கள் வந்து கூடிவிட்டார்கள்.
தேவேந்திரன் வந்து விட்டான். தேவர்கள் எழுந்து ஜெய ஜெயீபவா கூறி அக்ஷதை புஷ்பம் வீசுகிறார்கள். தேவேந்திரன் ஆசனத்தமருகிறான்.
தேவர்கள் வாழ்த்துக்கூறி அமருகிறார்கள்.
தேவேந்திரன்:- தேவர்களே! உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தாலும் எனது அரிய தவத்தாலும் இந்த அரிய தேவேந்திர பதவியை அடைந்திருப்பதோடு இந்திராணியையும் அடைந்து இன்பமாகவும் பெருமையாகவும் வாழ்கிறேன் அல்லவா?
தேவர்கள்:- ஆமாம் பிரபு! எங்களுடைய பூரண ஆசீர்வாதமும் தங்களுடைய அரிய தவ மகிமையும் இருக்கும்போது தங்களுக்கு என்ன. குறை ஏற்படப் போகிறது?
தோன்:- சபாஷ்! நன்றாய் சொன்னீர்கள். உலகில் எனக்கு மேல். எவன் இருக்கப்போகிறான்? எவனை இருக்க விடுவேன் நான்?
ரம்ப சந்தோஷம். ரம்ப திருப்தி. உலகம் எப்படி நடக்கின்றது?
தோர்:- பிரபூ! தங்கள் ஆக்கினை சொர்க்க மத்திய பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் ராம பாணம் போல் நடந்து வருகிறது
என்றாலும்,
தேன்:- உம் என்ன, சங்கதியைச் சொல்லுங்கள்
தே-ர்:- சொல்லுகிறோம். அதற்கு ஆகவே இன்று தேவரீர் ராஜ சபையை நாடி வந்திருக்கிறோம்
யுகாந்திர காலமாக தேவர்களாகிய நாங்கள் தங்கள் ஆகஷியின்
கீழ் யாதொரு குற்றமின்றி கவலையற்று உயிர் வாழ்ந்து வந்தோம் அவ்வப்போது ஏதாவது ராக்ஷதர்களாலும் அசுரர்களாலும் எங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ தொல்லைகளோ ஏற்படுமானால் தங்களுடைய உதவியினால் அவர்கள் அடக்கப்பட்டு நசுக்கப்பட்டு
குடி அரசு- 1937 (2) 66
ஊழி, ஊழி காலத்துக்கும் தலை எடுக்கவொட்டாமல் செய்து மிகவும் கவலையற்று வாழ்வோம். ஆனால் இந்த காலத்தில் தலை கீழாக மாறிவிட்டது.
தர்மம் குன்றிவிட்டது. வர்ணமுறை கெட்டுவிட்டது. தேவர்கள் அசுரர்கள் என்கின்ற பேதம் அழிக்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்வது என்பது தெரியவில்லை. ராக்ஷதர்கள் ஆதிக்கத்துக்கு வந்துவிட்டார்கள். தேவதாசி முறைகளை கூட ஒழித்து விட்டார்கள் என்றால் வேறு என்ன கொடுமை வேண்டும் பிரபு?
தே-ன்:- அப்படியா? அவர்களை ஒழிக்க நீங்கள் தவம் செய்யக்கூடாதா? யாகம் செய்யக் கூடாதா? கடுமையான சாபங்கள் கொடுக்கும் படியான உங்கள் தவ மகிமை என்ன ஆயிற்று? மித்திர
தந்திர சக்தி என்ன ஆயிற்று? கேட்பதற்கே ஆச்சரியமாய் இருக்கிறதே.
உங்கள் குறைகள்!
தே-ர்- தேவேந்திர பூபதியே! கலி பிறந்தது என்று கருதி அதை
ஒழிக்க ஏதோதோ காரியங்கள் செய்து மனுதர்ம சாஸ்திரம் செய்து புராண இதிகாசங்கள் கற்பித்து அசுரர்களை ஏய்த்து அடக்கி ஒடுக்கி வந்தோம். அசுரர்களில் செல்வர்களாய் இருப்பவர்களின் பொருளை கோவில்,
குளம், உற்சவம், திதி திவசம், சடங்கு முதலிய காரியங்களால் அவைகளைக்
கறந்து அடக்கி அடிமைப்படுத்தி வந்தோம். அவைகளை எல்லாம் ஒழிக்க சுயமரியாதை ராக்ஷதன் தோன்றி மூர்ச்சையாகும்படி செய்து விட்டான். இனி நாங்கள் என்ன செய்ய போகிறோம், எப்படி வாழப் போகிறோம் என்பது தெரியவில்லை. தங்களையே சரண் அடைகின்றோம்.
தே-ன்:- உங்கள் குறைகளைக் கேட்க நானும் பயப்பட வேண்டிய வனாய் விட்டேன். என்கதி என்ன ஆகும் என்பதும் கவலைப்படத் தக்கதாக வல்லவா இருக்கிறது?
தோர்:- ஆமாம் பிரபு! சுயமரியாதை இராக்ஷதன் தங்கள் வேகத்தையே அழித்து விட்டான். தங்கள் இருப்பையும் ஒழிக்க ஆரம்பித்து அரைவாசி
இடித்தெறிந்து விட்டான்.
தே-ன்:- அப்படியா? ஆனால் நாம் சும்மா இருக்கக் கூடாது உடனே நாம் எல்லோரும் யோசித்து ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றால் அசுரர்களிலேயே ஒருவனைப் பிடித்து தேவனாக்கி -
ஏன்? தேவேந்திரனாகவே ஆக்கி நாம் எல்லோரும் வியாதிக்கு மருந்து சாப்பிடுவது போல் அவன் அடிபணிந்து நானுள்பட எல்லோரும் அவனுக்கு பல்லக்கு சுமந்து அவனையே தேவேந்திரனாக்கி அவன் மூலமாகவே அசுரர்களைக் கொன்று அழித்து விடலாம் கொண்டு
வாருங்கள்; ஒரு நல்ல அடிமையான அசுரனைப் பிடித்து அவனுக்கு தேவேந்திர பட்டம் சூட்டுவதாகத் தெரிவித்துக்கொண்டு வாருங்கள்.
ஏன் என்றால் முள்ளை முள்ளினால் குத்தித்தான் எடுக்க வேண்டும் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அதுபோல் அசுரர்களை அசுரர்களால் தான் ஒழிக்க வேண்டும். இந்த
மாதிரிப் போர்களும் தொல்லைகளும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. யுகாந்திரகாலம் தொட்டு இது மாதிரியே அசுரர்கள் செய்து வந்ததாகவும் அதற்கு இதுபோன்ற முறையை கையாடி வெற்றி பெற்றிருப்பதாகவும் ஆதாரங்கள் இருக்கின்றன. போய் ஒரு அசுரனைப் பிடித்து வாருங்கள்.
தே-ர்:- இதோ பிடித்து வந்து விட்டோம். சரியான அடிமை; சற்
சூத்திரர். தங்கள் இஷ்டம் போல் இந்த அசுர அடிமையை பயன் படுத்தலாம்.
தே-ன்- ஏ அசுரனே! நீ உங்கள் சமூகத்தை விட்டு நம்மிடம் சரணடைந்ததாக இந்த தேவர் குழாங்கள் சொல்லுகிறார்கள். உண்மைதானா? பரிசுத்தமான அடிமையாய் இருப்பாயானால் உன்னை மகாத்மாவாக்கி தெய்வீகத்தனம் பொருந்தியவன் என்று சொல்லும்படியாக ஆக்கி 33 கோடி தேவர்களையும் உன்னைப் பணியும்படி ஆக்குவேன். நன்றி விஸ்வாசத்தோடு நம்பிக்கைத்துரோகம் செய்யாமல் நடந்துகொள்வாயா?
அசுரன்:- அப்படியே செய்வேன்.
- பிரமாணமாக சத்தியமாக சொல்லு
அ-ன்: சத்தியமாக நான் நிபந்தனை இல்லாத அடிமையாக இருந்து இந்த தேவர்களுக்கு ஆயுள் காலமெல்லாம் தொண்டுசெய்து வருகிறேன்.
தே-ன்:- சரி, இன்று முதல் இந்த அடிமையை நாம் ஏற்றுக் கொண்டோம். இவனுக்கு மகாத்மா பட்டமளித்து இருக்கிறோம். இன்று
முதல் மகாத்மா என்று அழைக்கப்படவேண்டியது. இந்த அடிமையை ஆயுதமாககொண்டு அசுரக் கூட்டங்களை அழித்து நமது மநு ஆக்ஷியை புனருத்தாரணம் செய்யக் கடவீர்கள். நான் சென்று வருகிறேன்.
தோர்:- பிரபு இனியும் பலர் இப்படிப் பட்டவர்கள் வேண்டுமா?
தே-ன்:- தேவலோகம் பூராவுக்கும் இவனை நியமித்துள்ளோம். மற்றபடி அவரவர்கள் எல்லைக்கு அவரவர்கள் நியமித்துக்கொள்ள வேண்டியது, அந்தப்படி நீங்கள் நியமித்துக்கொள்பவர்களை விபீஷணர். போல் கருதி தேசியவாதிகள் என்னும் பட்டம் கொடுத்து அவர்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தோர்:- இப்படிப்பட்ட இவர்கள் தவிர ஆங்காங்கு வீதிலீதியாய்
சுற்றி தேவரிருக்கும் எங்களுக்கும் ஜே போடவும் விருதுகள் பிடிக்கவும் ஆள்கள் வேண்டுமே
தே-ன்- இதற்குத்தானா ஆள் கிடையாது? தெருவில் சோமாறியாய் திரியும் சோற்றுக்கில்லாத ஆள்களைப் பிடித்து அவர்களுக்கு தேசிய வீரர்கள், ஆஞ்சனேய வீரர்கள் என்று பட்டம் கொடுத்து கையில் கொடி விருதுகள் கொடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
குடி அரசு- 1937 (2) 68
தேர்- தாங்கள் சொன்ன யோசனைகள் மிகவும் தங்கமான யோசனைகள். அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு குறையை எப்படி நிவர்த்திப்பது? எங்களுக்கு தெரியவில்லையே
தே-ன்:- என்ன சொல்லுங்கள் அதற்கு தகுந்த உபாயம் சொல்லுகிறேன்.
தோர்:- பிரபு! சோமாறி கூட்டங்களை தேசிய வீரர்கள் ஆக்கச்சொன்னீர்கள். ஆனால் அவர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி?
தே-ன்:- இதுதானா கஷ்டம்? நம் சபையில் உள்ள ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்த்தமை முதலிய பெண்களை விட்டு ஆடவும் பாடவும் செய்து அதற்கு ஆக டிக்கட் போட்டு வசூல் செய்யுங்கள்
மற்றும் நமது ஸ்பரிசம் பட்டாலே மோக்ஷம் கிடைக்கும் என்று கருதி இருக்கும் நடனப் பெண்கள் அடியார் பெண்கள் ஆகியவர்களை அழைத்துக்காட்டி, அவர்கள் மூலமும் பணம் வசூல் செய்யுங்கள். இவர்களை யாராவது இழிவாய்ப் பேசினால் தேவர்கள் வீட்டு நங்கையர்களை ஆடவும் பாடவும் செய்து வசூல் செய்யுங்கள் - இவ்வளவும் போராவிட்டால் தேவர்களிலேயே உள்ள சங்கீத சிகாமணிகளைக் கொண்டு பாடச்செய்து பணம் வசூல் செய்யுங்கள். இவைகூடவா உங்களுக்கு தெரியாது?
தே-ர்- பிரபு! இந்தக் கூட்டத்துக்கு வேறு பணம் கொடுக்க வேண்டுமே! அதற்கென்ன செய்வது?
தே-ன்:- இதுதானா மகா கஷ்டம்? வைரக் கற்கள் பதித்த தங்கப் பதக்கம் (மெடல்) தருவதாய் கூப்பிட்டு பாடச் செய்து பிறகு பித்தளைக்கு முலாம் பூசிக்கொடுத்து விரட்டி விடுங்கள்.
தே-ர்- சரி பிரபுவே! அவன் கூப்பாடு போட்டால் என்ன செய்வது?
தே-ன்- எவனாவது கூப்பாடு போட்டால் அவனை ஒழிக்கத்தானா தெரியாது. நம்மிடமுள்ள வஜ்ஜிராயுமாகிய “தேசத் துரோகி! என்கின்ற பட்ட ஆயுதம் இருக்கிறதே அதைக்கொண்டு அவர்களை ஒழித்து விடுங்கள்.
தே-ர்- சரி, பிரபு அப்படியே செய்கிறோம். இன்னும் பல கஷ்டங்கள் க்கின்றன. அதையும் தெரிவித்து பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டியதாய் க்கின்ற தயும் தெரிவித்து டிக்! டியது இருக்கிறது. ஆனால் நித்திய கர்ம அனுஷ்டானங்களுக்கு நேரமாய்விட்டது. மறுபடியும் வருகிறோம். எங்களுக்கு விடை கொடுங்கள்,
தே-ன்:- நல்லது போய்வாருங்கள். அசுரர்களை ஒழிக்க - அழிக்க அவர்களைக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும். ஆதலால்
ங்கள் நேரில் கலந்து கொள்ளாதீர்கள் போய் வாருங்கள். ந ந்து ரு
முதல் காக்ஷி முடிந்தது. அடுத்த காக்ஷி ஒரு நாளைக்கு வரும்.
குடி அரசு - உரையாடல் - 25.07.1937
ஜட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கைதிகன் விடுதலை
அரசியல் கைதிகளை காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை செய்கின்றது.
இதற்கு பிரிட்டீஷ் அரசாங்கம் மேலொப்பம் போடுகின்றது. இதன்.
காரணம் என்ன என்பது மக்களுக்கு விளங்க வேண்டாமா? இதிலிருந்து
பிரிட்டீஷ் அரசாங்கம் பணிந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக்
கூடாது. அப்படி நினைப்பது களிமண் தலையேயாகும். பிறத்தியாரை
அந்தப்படி நம்பும்படி யாராவது எடுத்துச் சொல்வது வடிகட்டின. முட்டாள்தனமோ இல்லாவிட்டால் அயோக்கியத்தனமோ ஆகும்.
ஏனெனில் காங்கிரசானது 14.7.37-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தை சரணாகதி அடைந்து “அரசாங்கத்துக்கும் சட்டதிட்டத்துக்கும் அரசருக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துவருகிறேன்'' என்று சத்தியம் செய்து கொடுத்து விட்டு அரசாங்கத்தின் அபயம் பெற்றுக்கொண்ட
பிறகு அதற்கு முன் செய்த குற்றங்களுக்கு ஆக தண்டிக்கப்பட்டவர்களை
பிரிட்டீஷ் அரசாங்கம் % வினாடி யாவது ஜெயிலில் வைத்திருக்க அவசிய மென்ன? என்று கேட்கின்றோம்.
உப்பு சத்தியாக்கிரகத்தின்போது ஜெயில் வைக்கப்பட்ட கைதிகளை காந்தியார், இர்வின் பிரபுவிடம் “இனி உப்பு காச்சுவதில்லை,
மறியல் செய்வதில்லை, உத்திரவு மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வ தில்லை என்று வாக்குறுதி கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டு வந்தவுடன் (காங்கரஸ் சர்க்கார் இல்லாமலேயே) எல்லோரும் விடுதலை அடைந்து விட்டார்கள். ஆகையால் இனி அரசியல் கைதி என்பதாக ஒரு கைதி காங்கரசின்
பேரால் ஜெயிலில் இருக்க இடமே இல்லை. காங்கரஸ் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்தபிறகு காங்கரஸ் ராஜத் துரோக கைதி ஜெயில் இருக்கவும் வைக்கப்படவும் இடமே இல்லை. சர்க்காரை ஆதரித்து எழுதித் தீரவேண்டிய நிலைமை காங்கரஸ் பத்திரிகை களுக்கு ஏற்பட்டு விட்டது
காங்கரஸ் பத்திரிகைகளுக்கு இனி ஜாமீன் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. வாங்கியதையும் திருப்பி கொடுத்து விட வேண்டியதுதான். அதுபோலவே காங்கரஸ் தொண்டர்களுக்கோ காங்கரஸ் பொதுஉடமை - அபேதவாதிகளுக்கோ சர்க்கார் சி.ஐ.டி.களும் இனி
குடி அரசு- 1937 (2) 70
போடவேண்டிய அவசியமில்லை. எந்த சர்க்காரும் தங்களை முழு சரணாகதி அடைந்தவர்களுக்கு காவலோ நிபந்தனையோ ஏற்படுத்த மாட்டார்கள்.
ஆகையால் இதில் எவ்வித அதிசயமோ சுயேச்சை புத்தியோ கிடையாது என்பதோடு இந்த விடுதலை காரியம் பிரிட்டிஷ் சர்க்கார் அதிகாரிகளிடம் இருந்தே வெளியானதாகும் என்பதை வாசகர்கள் உணர வேண்டும் இதைபற்றிய ரகசியங்கள் இன்னும் சில பின்னால் வரும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.07.1937
டட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
€15 நாவில் 8 காரியங்கள்?
சென்னை சரணாகதி மந்திரி சபை 15 நாளில் 8 நன்மையான காரியங்கள் சாதித்துவிட்டதாக ஒரு சென்னை காங்கரஸ் பத்திரிகை சவடால் ஜம்பம் அடித்துக் கொள்ளுகிறது. அவ்வெட்டுக் காரியங்களாவன:-
1. மேஹர் அலி விடுதலை
2
சேலம் ஜில்லாவில் பூரண மதுவிலக்கு
சென்னை மெடிகல் காலேஜுக்கு இந்திய பிரின்ஸ்பால்
3
கொத்தபட்டணம் கைதிகள் விடுதலை.
4
5. எல்லா கைதிகளுக்கும் மோர்.
6. ஸ்தல ஸ்தாபன தேர்தலில் கலர் பெட்டி
7. பத்திரிக்கைகள், பிரஸ்கள் ஜாமீன் வாபஸ்.
8 ஜில்லா போர்டுகள் பிரிவினை கிடையாது. ஆக இந்த எட்டு காரியங்கள் 15 நாளில் சாதித்து விட்டதாக எழுதி அதன் பெருமை காங்கரஸ் (சரணாகதி) மந்திரிகளுக்கே உரியதென்றும்
கூறுகிறது. இதன் யோக்கியதையை சற்று அலசிப் பார்ப்போம்
முதலாவதாக மேஹர் அலி விடுதலை, கொத்தபட்டணம் கைதிகள். விடுதலை, பத்திரிகை ஜாமீன், பிரஸ் ஜாமீன் வாபஸ், ஆகிய 3 காரியங் களையும் பற்றி யோசிப்போம். இம்மூன்று காரியமும் ஒரு தலைப்புக் கொண்டது. அதாவது சர்க்காருக்கு விரோதமாகவும், சர்க்கார் சட்டதிட்டங் களை உத்திரவுகளை லக்ஷ்யம் செய்யாமலும் சர்க்கார் மீது ஜனங்களுக்கு அதிருப்தியும் துவேஷமும் ஏற்படும்படியாகவும் பிரிட்டிஷார் வெள்ளைக்கார வகுப்பார் ஆகியவர்களின் மீது துவேஷம் ஏற்படும்படியாகவும் காங்கிரஸ்
காரர்கள் நடக்காமல் இருப்பதற்கு ஆக சர்க்காரார் செய்து கொண்ட அடக்கு முறை சட்டத்தின்படி எடுத்துக்கொண்ட காரியங்களாகும். ஏனெனில் காங்கரசானது அரசாங்கத்தை சரணாகதி அடைந்து அரசாங்கத்துக்கு பக்தி விஸ்வாசப் பிரமாணம் செய்து கொடுத்து சர்க்காரை அபயம் அடையும் வரை காங்கரஸ் மீது பிரிட்டிஷ் சர்க்காருக்கு அடக்குமுறை சட்டங்கள்.
செய்து அடக்கி ஆள வேண்டிய அவசியமிருந்தது.
குடி அரசு- 1937 (2) 72
காங்கரஸ் சர்க்கார் அடக்கு முறைக்கு முகங்கொடுக்க யோக்கியதை இல்லாமல் முதுகு காட்டி ஓடி சரணாகதி அடைந்த பிறகு காங்கரசின் சர்வாதிகாரியான காந்தியார் “பிரிட்டிஷுக்கும் இந்தியாவுக்கும் ஒரு மயிர்க்கால் அளவு மன அதிருப்தி ஏற்படுவதாய் இருந்தாலும் என். உயிரை விட்டு விடுவேன்" என்று பிரிட்டிஸ் ஆட்சிக்கு வாக்குறுதி கொடுத்த பின்பும் காங்கரசின் பெயரளவுக்கு (டம்மி) தலைவரான ஜவஹர்லால். நேரு அவர்கள் “நான் காங்கரசுக்கு தலைவனானதினாலேயே என்னுடைய கொள்கைகளை காங்கிரசில் வலியுறுத்துவேன் என்று யாரும் கருதி விடாதீர்கள் என்று அறிக்கை வெளியிட்டு விட்டு காங்கரஸ்காரர்களை ஏகாதிபத்திய அஸ்திவாரமாகிய சர்க்கார் (சட்டசபை) மண்டபத்துக்குள் சென்று ஏகாதிபத்திய சக்கரவர்த்திக்கும் அவர் தம் பின் சந்ததிக்கும் வாழ்த்துக் கூறி பக்திவிஸ்வாசப் பிரமாணம் செய்து அவரது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாய் அடிமை மூறிச்சீட்டு எழுதிக் கொடுத்து அந்தப்படியே நடவுங்கள் என்று தேச மக்களுக்கும் மக்கள் “பிரதிநிதி"களுக்கும் ஸ்ரீமுகம் விட்டபிறகும், தேசீய வீரர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் அந்நிய ஆட்சியில் அரைவினாடி இருப்பதும் அவமானமாய் கொண்ட இந்திய வீராங்கனைகளும் சர்க்காருக்கும் அன்னிய ஆட்சிக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து சரணாகதி அடைந்து விட்ட பின்பும் அடக்கு முறைகள் எதற்கு ஆக பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் என்பதை பகுத்தறிவுள்ள மக்கள் ஒவ்வொருவரையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்
சர்க்காரால் பத்திரிகை பிரஸ் ஜாமீன்கள் வாபஸ் செய்ததற்கும் சட்டம் மீறிய காங்கரஸ் தொண்டர்களின் தண்டனையை மன்னித்து விடுதலை செய்ததற்கும் காரணம் மக்களின் எழுத்துச் சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் காங்கரஸ் அங்கீகரித்து விட்டதற்கு அடையாளம் என்று சொல்லப்படுமானால் காங்கரஸ் சரணாகதி மந்திரிகள் அவ்வங்கீ காரத்தை காங்கரஸ் பத்திரிகைகளுக்கும் காங்கரஸ் தொண்டர்களுக்கும் மாத்திரம் காட்டி இருக்கமாட்டார்கள். மற்றும் ஜாமீன் வாங்கப்பட்ட பத்திரிகைகளுக்கும் பிரஸ்களுக்கும் காட்டி இருப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை காங்கிரசுக்கு எதிரான பிரஸ் களுக்கும் பத்திரிகைகளுக்கும் ஜாமீன் வாங்கியவைகள் இன்னமும் கொடுபடாமல் தான் இருக்கின்றன. ஆகவே சரணாகதி அடைந்தவர்கள் மீது அடக்குமுறை இருப்பது நாகரிகத்துக்கும் ஆண்மைக்கும் அழகல்ல என்று கருதியே பிரிட்டிஷ் சர்க்கார் விடுதலை செய்து விட்டதே ஒழிய இதில் மந்திரிகளின் வீரமோ துணிவோ ஒன்றும் இல்லை என்று சொல்லுவோம்
இனி அடுத்தாப்போல் கைதிகளுக்கு மோர் கொடுக்கும் விஷயமும் சேலம் ஜில்லாவில் கள்ளுக்கடைகளை எடுத்து பரிகைஷ பார்க்கும் விஷயமும் ஆக இரண்டும் ஒரு தலைப்பில் வருவதாகும். இவை ஜயில், நிதி பரிபாலனம் ஆகியவற்றில் பட்டதாகும் B ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இதுவரை அதாவது புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரும் வரை ஜெயிலும் நிதி பரிபாலனமும் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட்ட இலாகாவாக - சர்க்காரின் தனி ஆட்சி அதிகாரத்துக்கு கட்டுப்பட்டதாக இருந்து வந்திருக்கின்றன. ஜெயில் அதிகாரம் சர்க்கார் மெம்பருடைய விஷயம். அந்த வேலைக்கு இந்தியர்கள் நியமிக்கப்பட்டிருக்கலாம். தோழர்கள் ஸ்ரீனிவாசய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஆகியவர்கள் எப்படி சர்க்கார் அதிகாரிகளாக கவுன்சில் மெம்பர்களாய் இருந்தார்களோ. அதுபோல் தான் தோழர்கள் கிருஷ்ணன் நாயர், சர்.கே.வி. ரெட்டிநாயுடு முதலியவர்கள் இருந்து வந்தார்கள். ஆகவே கைதிகளுக்கு மோர் கொடுப்பதும் அதற்கு ஆக பணம் ஒதுக்குவதும் இரட்டை ஆட்சியில் ஒதுக்கப்பட்ட இலாகாவில் சர்க்கார் அதிகாரிகளின் இஷ்டத்துக்கு ஒத்ததான விஷயமாய் இருந்தது. ஆகவே மோர் கொடுக்க சர்க்கார் இஷ்டப்பட வில்லை. இப்போது
இந்த அதிகாரம் மந்திரிகளுக்கு வந்து விட்டது. அதாவது ஜெயில் நிருவாகமும் பண நிருவாகமும் மந்திரிகளைச் சேர்ந்ததாகி விட்டது. இதனால் மந்திரிகள். இதைச் செய்வதில் யாதொரு சாமர்த்தியமும் வீரமும் தேசபக்தியும் காட்ட வேண்டிய அவசியமல்லாமல் ஆபீசு குமாஸ்தா இஷ்டத்திலும் பேனா முனையின் அதிகாரத்திலும் நடந்து விட்டது. இதைப்பற்றி பெருமை பாராட்டிக் கொள்வது வெண்ணெய்வெட்டி சிப்பாய்த் தனமேயாகும்
நிற்க, சில கள்ளுக்கடைகளை நிறுத்தியதும் அதுபோலவேதான் எப்படியெனில் பண நிருவாகம் மந்திரிகள் கைக்கு வந்ததால் நிறுத்தப்போகும் கள்ளுக்கடைகளின் வரும்படி ரூ.11 லக்ஷத்திற்கு வேறு ஏற்பாடு செய்வதாய் மந்திரிகள் ஒப்புக்கொண்டதால் அதுவும் ஒரு வரியில் முடிந்து விடக்கூடியதாய் விட்டது. பண நிருவாகம் மந்திரி கைக்கு வந்து விட்டதால் பூராக் கடைகளையும் கூட எடுத்துவிட இன்று செளகரியம் இருக்கிறது. ஆனால் பண வரவு செலவை சரிக்கட்ட வேண்டி இருப்பதால் பண சவுகரியத்தை கவனித்து எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம் இதற்கு ஒரு சிப்பாய் மந்திரி தேவையில்லை. இதன் பெருமையை காங்கரஸ் மந்திரிகளுக்கு சேர்ப்பது ஒரு இழிவான பித்தலாட்டமேயாகும். உண்மையில் இதன் பெருமை யாருக்காவது சேர்க்கப்பட வேண்டுமானால் அது ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கே உரியதாகும். எப்படி எனில் முன் அளித்த சீர்திருத் தங்களை அதன் அளவுக்கு கட்டுப்பட்டு ஒழுங்காக ஜனங்களுக்கும் சர்க்காருக்கும் நடுநிலைமையாக இருந்து ஆட்சி நடத்தி மேலாக இவ்வளவு சுதந்திரத்துடன் புதிய சீர்திருத்தம் வழங்கும்படி செய்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாரானதினால் இப்பெருமை அவர்களுக்கே உரியதாகும்.
அன்றியும் ஒன்றுக்கும் பயன்படாத உப்புச்சப்பில்லாத சீர்திருத்தம் என்றும் காங்கரஸ்காரர்கள் தள்ளிவிட்டதை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் தள்ளிவிடாமல் அதன் மூலம் இன்ன இன்ன நல்ல காரியங்கள்
குடி அரசு- 1937 (2) 74
செய்யக்கூடும் என்பதை விளக்கி ஞாபகப்படுத்தி காங்கரஸ்காரர்களுக்கு உபாத்தியாயராய் இருந்து அறிவுறுத்தியவர்கள் ஜஸ்டிஸ் கட்சியரானதால் அதன் பெருமை ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்ததாகும்
அன்றியும் காங்கரஸ் மந்திரி பதவி ஏற்க ஆரம்பத்தில் மறுத்த உடன் இடைக்கால மந்திரிகள் பதவி ஏற்று ஒரு வாரத்துக்குள் நிலவரியில் 100க்கு 25 வீதம் குறைக்க புதிய சீர்திருத்தத்தில் சவுகரியமும் அதிகாரமும் இருக்கிறது என்று எடுத்துக்காட்டி அவ்விதமே நிலவரியை
25 வீதம் குறைத்து உத்திரவிட்டு வழிகாட்டியதுடன் மதுவிலக்கு விஷயத்திலும்
தமிழ்நாட்டில் ஒரு ஜில்லாவிலும் மலையாளத்தில் ஒரு பகுதியிலும் ஆந்திராவில் ஒரு ஜில்லாவிலும் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த வரவு செலவு புள்ளி விபரம் தயாரிக்க உத்திரவு போட்டு வைத்து இருந்ததால் இப்பூரண மதுவிலக்கு ஒரு ஜில்லா பரீக்ஷ விஷயத்தின் பெருமை இடைக்கால மந்திரிகளுக்கு சேர்ந்ததாகும். இது எப்படியோ இருந்தாலும் பெருமை யாருக்கோ போனாலும் புதிய சீர்திருத்த சட்டத்தில் இவற்றில் இடமும் அதிகாரமும் இருப்பதால் காங்கரசு இதில் பெருமை கொண்டாடுவது மிக மிகக் கேவலமாகும் என்றே கூறுவோம்
மெடிகல் காலேஜுக்கு இந்திய பிரின்ஸ்பால் ஏற்படுத்திய பெருமை பனகால் மந்திரிசபைக்கே உரியதாகும். அக்காலத்திலேயே வைத்திய இலாகாவில் வெள்ளைக்காரர்களுக்கு என்று இருந்த ஸ்தானங்கள். எதற்கும் இந்தியர்கள் நியமிக்கப்படலாம் என்று விதி ஏற்படுத்திக் கொண்டார். அன்று முதல் இன்றுவரை காலியையும் அனுபவத்தையும் சர்வீசையும் கவனித்து சிறுகச் சிறுகச் செய்யப்பட்டே வந்திருக்கிறது இந்தக் காரியத்துக்கு இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது வெள்ளையர்களும் பார்ப்பனர்களும் எந்த விதத்திலும் ஆட்சேபிக்க முடியாத தக்க நபரும் கிடைத்தது. ஆகவே இதிலும் காங்கரஸ் மந்திரிகள். பெருமை அடித்துக்கொள்ள சிறிதும் இடமில்லை. இப்பெருமை பனகால் மந்திரிசபைக்கே உரியதாகும்
இனி, ஜில்லா போர்டை இனி பிரிப்பதில்லை என்பது பற்றி காங்கரஸ் பெருமைப்படுவது சுத்த பயித்தியக்காரத்தனமாகும். இது ஜஸ்டிஸ் மந்திரி காலத்திலேயே முடிவு பெற்ற விஷயம். இதற்கு சர்க்கார் உத்திரவே (ஜி.ஓ) இருக்கிறது. அதாவது பிரிக்க வேண்டிய ஜில்லா போர்டுகள் 1937 வருஷம் ஜனவரிக்கு முன்னமே பிரிக்கப்பட்டு விடும் மேலால் ஒரு போர்டும் பிரிக்கப்பட மாட்டாது என்பது ஆகும்.
முன்னும் ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டவைகளுக்கெல்லாம் இன்றைய கவர்னர் பிரபுவே “நான் தான் ஐவாப்தாரி'” என்று அறிக்கை
வெளியிட்டதும் காங்கரசுக்காரர்களுக்கு ஞாபகமிருக்கலாம் B QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தேர்தலுக்கு கலர்ப்பெட்டி (வர்ணப்பெட்டி) விஷயம். இது ஓட்டுரிமையை நாசப்படுத்தும் ஒரு காட்டுமிராண்டித்தனமான விஷயம், இது ஜனநாயகம் என்பதையே பாழ்படுத்தும் பித்தலாட்டமான விஷயம். இதனால் பாமர மக்கள் அரசியல் துறையில் தற்குறிகளாக முடியுமே தவிர சிறிதும் அரசியல் ஞானம் பெற முடியாது. ஏனெனில் ஓட்டர்களை வர்ணத்தை கவனிக்கும்படி செய்யுமே ஒழிய ஆள்களின் யோக்கியதை, நாணயம் முதலியவைகளை கவனிக்கும்படி செய்யாது. காங்கரஸ் தலைவரே சொன்னது போல் கழுதையோ குதிரையோ மரக்கட்டையோ களிமண்: உருண்டையோ யார் தேர்தலுக்கு நின்றாலும் கவனிக்காதீர்கள், மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற உபதேசத்துக்கு தான் ஆக்கம் அளிக்கும். மற்றும் இது சர்வாதிகாரத்தைத்தான் கொண்டு வந்துவிடுமே ஒழிய காங்கரஸ்காரர் சொல்லும் ஜனநாயகத்துக்கு இதில் சிறிதும் இடமிருக்காது. இது தேசத்தை பிற்போக்காக்கும். ஆகையால் வர்ணப்பெட்டி மூலம் தேசத்தின் யோக்கியமான - நாணயமான - முற்போக்கான நிலைமை யையும் ஆட்சியையும் பாழ்படுத்திய நாசகாரத்தனத்துக்கே காங்கரஸ் ஆளாயிற்று என்று தான் சொல்லவேண்டும்.
முடிவாக உண்மையிலேயே காங்கரஸ் ஆட்சியில் என்னதான் நன்மை ஏற்படுத்தப்பட்டதாக காங்கரஸ்காரர்கள் கூறினாலும் உண்மையில் காங்கரஸ்காரர்களின் எண்ணமெல்லாம் பார்ப்பன ஆதிக்கத்தை புதுப்பிப்பதேயாகும். ஆதலால் காங்கரசின் எவ்வித பித்தலாட்டங்களுக்கும் அற்ப நலன்களுக்கும் பசப்பு வார்த்தைகளுக்கும் ஆளாகாமல் பார்ப்பன ஆதிக்கத்தைஎவ்விதத்திலாவது அழிப்பதையே விரதமாகக் கொண்டு கங்கணம் கட்டுங்கள் என்று பார்ப்பனரல்லாத மக்களை வேண்டிக் கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.08.1937
குடி அரசு- 1937 (2) 76
தியாகப் புரட்டு
பதவியேற்ற காங்கரஸ்காரர் பெரிய தியாகம் செய்து விட்டார்களாம். பிரமாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. மந்திரிமார்சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார்கள். ஆனால் சர்க்காரிடமிருந்து 6 கார்கள் சன்மானம் வாங்கத் தவறவில்லை. சென்னை மேல்சபை உதவித் தலைவர் தோழர் வெங்கடசாமி நாயுடு தமது மாதச் சம்பளத்தை வாங்கப் போவதில்லையென்று சர்க்காருக்கு எழுதிவிட்டாராம். அப்பா கம்பெனி புரோப்ரைட்டருக்கு அந்தத் தொகை: எம்மாத்திரம்! எனினும் அவருடைய தியாகத்தை மேல் சபைத் தலைவர். டாக்டர் ராமராவ் “காபி” அடிப்பாரா? அவரும் பெருத்த வருமானமுடைய டாக்டர்தான். கீழ்கபை அல்லது அசம்பிளித் தலைவர் தோழர் புலுசு சாம்ப மூர்த்தி பெரிய தியாகியல்லவா? சட்டை, செருப்பு, குடைகளைக்கூட வெறுப்பவரல்லவா? அவருக்கு ஏன் மாதா மாதம் 500 ரூபாய்? தோழர் வெங்கிடசாமி நாயுடு மாதிரி புலுசுவும் அவருடைய சம்பளத்தை இழப்பாரா? அப்பால் வீராங்கனை தோழர் ருக்மணி லக்ஷ்மீபதிக்கு சம்பளம் எதற்கு? அவரும் தியாக ஊழியம் ஏன் செய்யக்கூடாது? குடும்பப் பொறுப்பு அவருக்கில்லை. அந்தப் பாரத்தை ஏற்க அவரது பர்த்தா இருக்கிறார். எனவே அம்மையார் தனது தேச ஊழியத்துக்குப் பிரதி பலன் பெறுவது நீதியுமாகாது; தேசீயமுமாகாது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.08.1937
77... QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பொன்மலை சுயமரியாதைச் சங்கம்
4-வது ஆண்டுவிழா
நானொரு அபேதவாதிதான். நான் தினசரி அபேதவாதத்தைப் பற்றிப் பேசுகிறேன். எழுதுகிறேன். நான் பொருளாதார அபேதவாதத்தை விட சமூக சமத்துவத்தை - உயர்வு தாழ்வை ஒழிப்பதை முதல் அபேதவாத மாகக் கருதுகிறேன். பிறகு தான் பொருளாதார சமத்துவ அபேதவாதம். இது எனது அபிப்பிராயம். அபேதவாதத்தைப்பற்றி பலர் பலவிதமாக பாஷ்யம் கூறலாம். அதுவும் இடத்திற்கும் - சமயத்திற்கும் தக்கபடி அர்த்தம் செய்யும்படி அபிப்பிராயம் கூறலாம். ஆனால் நமது நாட்டில் பிறவி காரணமாக உயர்வு தாழ்வு கூறப்பட்டு முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு உள்ளவரை பார்ப்பான் பறையன் என்ற வித்தியாசமூள்ளவரை பொருளாதார சமத்துவம் பேசுவதால் எவ்வித பயனுமில்லை. இது என்னுடைய அபிப்பிராயம்.”
குறிப்பு: 25.07.1937 ஆம் நாள் பொன்மலை தொழிலாளர் சங்கத்திடல் அருகில் நடைபெற்ற பொன்மலை சுயமரியாதைச் சங்கத்தின் நான்காவது ஆண்டு விழாவில் 'அபேதவாதத்தைப் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?” என்ற கேள்விக்குப் பதில் அளித்து பேசியதன் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 01.08.1937
குடி அரசு- 1937 (2) 78
காங்கரசில் சதியாலோசனை
- ஊர்வம்பன்
தேதி. 41-13-107
தத்தாரி நகரம். சோமாரி மண்டபம் தேசபக்த சிகாமணிகள் கூட்டம்
இக்கூட்டத்துக்கு பிராமணர்கள் அல்லாத தேசபக்தர்கள் மாத்திரமே ஆஜர் ஆகலாம் என்றும் “வகுப்புவாதம் பேசும் ஜஸ்டிஸ், சுயமரியாதை கட்சியை எப்படி ஒழிப்பது என்பதற்காக இரகசிய முயற்சிகள் செய்ய திட்டம் போட கூட்டப்படுவதாகு மென்றும் இதில் பார்ப்பனர்கள் கலந்தால். விஷயம்வெளியாகிவிடும் என்றும் வெளிக்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது.
நடு ஜாமம் 6-15 மணிக்கு பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் மண்டபம் நிறைய கூடிவிட்டார்கள். வெளி கேட்டில் சரியான காலிகளை நிறுத்தி பார்ப்பனர்கள் உள்ளே பிரவேசிக்காமல் செய்யப்பட்டு விட்டது
வந்திருந்தவர்கள் பெயரைக் குறிக்க முதலில் ஏற்பாடு செய்யப் பட்டது. அதில் கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், முஸ்லீம், பார்ப்பனரல்லாத இந்து என்பதான பிரிவுப்படி குறிக்கும்படி உத்திரவிடப்பட்டது. லிஸ்ட் முடிந்தது.
“இனி பேசலா" மென்றார் லிஸ்ட் எடுத்தவர். “தலைவர் வேண்டாமா” என்றார் ஒரு முஸ்லிம்
“ஒரு கிறிஸ்தவரை தலைவராகப் போடுங்கள். ஏனெனில் அச்சமூகம் தான் இப்போது கழுத்தறுக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு மந்திரி வேலை கொடுக்கப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கு தலைமை ஸ்தானமாவது கொடுக்க வேண்டும்” என்றார் ஒரு ஆதிதிராவிடர்.
“இங்கு பேசப்படும் வார்த்தை எதுவும் வெளியாகக் கூடாது அவரவர்கள் மனதிலேயே இருக்க வேண்டும்" என்றார் ஒரு சைவர். “அவ்வளவு பயமென்னய்யா வந்தது என்றார் ஒரு மிராஸ்தார். “ஏதோ மாதம் 100 ரூபாயோ 150 ரூபாயோ சம்பளம் போடப் போகிறார்களாமே, இந்த சங்கதி வெளியானால் அதை நிறுத்திவிடுவான்களே" என்றார் ஒரு தேசபக்த தொண்டர். 1171... 79௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“அப்படி பயந்து பிழைத்து அந்த 150 ரூபா காசு வாங்கி பிழைப் பதைவிட செலூன் ஒப்பன் பண்ணி பிழைக்கலாம்” என்றார் ஒரு முதலாளி.
''உங்களுக்கென்னையா? எப்படியோ சொத்து சம்பாதித்து லக்ஷாதிபதி ஆகிவிட்டீர். உமக்கு மாதம் 100 ரூபாய் செலூன் வரும் படியாகவும் லாண்டரி வரும்படியாகவும் தோன்றும். எங்களைப் போலொத் தவர்களுக்கு அது ஒரு பெரிய ரிசர்வ் பாங்கி கவர்னர் வரும்படியாகும்” என்றார் மற்றொரு போலீஸ் அடிபட்ட தொண்டர்.
“இப்படி பயந்தால் ஒரு காரியமும் நாம் நாளைக்கு செய்ய முடியாது”
என்றார் ஒரு லேவா தேவிக்காரர்.
“நான் அப்போதே இந்த பணக்காரர்களை சேர்க்காதே என்று சொல்ல வில்லையா?” என்றார் ஒரு வரும்படி இல்லாத வக்கீல்.
“அப்படியானால் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். நாங்கள் போகிறோம்
என்றார்கள் ஒரு நா. கோ. செட்டியார், ஒரு வியாபாரி முதலியார், ஒரு விவசாய ரெட்டியார் ஆகியவர்கள். “ஆரம்பத்திலேயே இப்படி நடந்து கொள்ளுகின்ற நாம் நாளைக்கு எப்படி இந்த பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கப்போகிறோம்" என்றார் ஒரு கவுண்டர்.
மெள்ளப் பேசு மெள்ளப் பேசு” என்றார் ஒரு சைவர்.
“சரி, இதிலேயே விடிந்துபோகும்போல் இருக்கிறது. காரியம் நடக்கட்டும்” ஸ்ரீமான் விக்டோரியா ரோட்ச் அவர்களை தலைவராகப் பிரேரேபிக்கிறேன்' என்றார் ஒரு சாயபு,
ரி, அவரே இருக்கட்டும் பாவம்” என்றார் ஒரு முதலியார்.
ரோட்சையார் தலைமை வகித்தார். கைதட்டினார்கள். “இந்த எழவுக்கு கைதட்டல் வேறு வேண்டுமா" என்றார் தலைவர்.
பயப்படாதீர்கள். 8 நாளில் கவிழ்த்து விடலாம். இந்த பார்ப்பன ராஜ்ஜியத்தை. நீங்கள் மாத்திரம் மனசை விட்டு விடாதீர்கள்!” என்றார் சேலத்து மூருகர்.
“நாம் மாத்திரம் உறைத்து நின்றால் 8 நாள் கூட வேண்டாம்" என்றார் திருவண்ணாமலை அருணாசலனார்.
“இவர்களை நம்பி படையெடுத்தால் என்ன கதி ஆவது?” என்றார் கோவைக் குமரன்.
'நல்லகுடி நாச்சி பேசவந்துவிட்டார். இவரை வைத்துக்கொண்டு பேசினால் கட்டாயம் இந்த சங்கதிகள் லெளட்ஸ்பீகர் வைத்தது போல் பூணூல் கூட்டத்துக்கு அவுட் ஆகிவிடும்” என்றார் விருதை மதனன்.
குடி அரசு- 1937 (2) 80
“இதெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு காரியமும் ஆகப் போவதில்லை. வீணாக பெயரைக் கெடுத்துக் கொண்டதாகத்தான் முடியப் போகிறது'' என்றார் மன்னனூர் வேலன்.
“தரி, சப்தம், காரியம் ஆரம்பிக்கப்படப் போகிறது. தயவு செய்து ஒவ்வொருவராய் அமைதியாய் பொறுமையாய் பேசவேண்டும்” என்றார். தலைவர்.
அமைதி நிலவிற்று:-
ஒரு கிறிஸ்தவர்:- “மந்திரிகள் நியமித்த விஷயத்தில் ஆச்சாரியார். பார்ப்பன புத்தியை காட்டிவிட்டார். எங்கள் சமூகத்துக்கு ஒரு மந்திரி வேலை கொடுக்கப்படவில்லை. ஆதலால் கிறிஸ்தவர்கள் வெளிப்படையாய் காங்கரசை விட்டு விலக வேண்டும்”
அருணாசலனார்:- 'காங்கரசை விட்டு வெளியேறுவது என்பது
மாத்திரம் கூடாது”
முருகனார்:- ''நானும் அதுதான் சொல்லுகிறேன்"
கோவையார்:- 'ரம்ப சரி”
விருதையார்:- விலகுவது என்பது மிகவும் ஆபத்தான காரியம்”
ஒருஅம்மையார்:- “ஆம்ஆம்அது (விலகுவது) பேரைக்கெடுத்துவிடும்.”
ஆ-திஃ- “ஆபத்தும் இல்லை, பேரையும் கொடுக்காது. & 100 ரூபாய் சம்பளத்தையும் சராசரி 75 ரூபாய் படியையும்தான் கொடுத்து
விடும். அதற்கு ஆகத்தான் இவர்கள் இப்படிச் சொல்லுகிறார்கள். எனக்கும்கூட ஆபத்தும் இல்லை பேருங்கெடாது என்று தோன்றினாலும் பணம் போய் விடுமே என்றுதான் பயப்படுகிறேன். ஆதலால் பணத்துக்கு ஒரு வழி சொல்லிவிட்டு பிறகு விலகுவதைப்பற்றி பேசுங்கள்.”
ஒரு பிள்ளை, ஒரு முதலியார்:- (இருவரும் ஏககாலத்தில்) “என் கையிலிருந்து 20, 30 ஆயிரம் ரூ. செலவு செய்து வந்தேன். எனக்கு காங்கரசில் இருப்பது மானக்கேடாக தோன்றுகிறது. நீங்கள் ஒரு காசு செலவு இல்லாமல் மாப்பிள்ளை மாதிரி மெம்பர் ஆனீரகள். உண்மையைப் பேசவேண்டுமானால் எலக்ஷனால் உங்களுக்கு பணம் மிச்சம் கூட ஆபிருக்கலாம்.அப்படிஇருக்கநீங்கள் வெளிவர இப்படிப் பயப்படுகிறீர்களே”
ஆ-திஃ- “நானும் உண்மையை சொல்லுகிறேன். நீங்கள் மந்திரி ஆகலாம் என்று வந்தீர்கள். அது ஆகவில்லை போகிறேன் என்கிறீர்கள். நாங்கள் படி வந்தால் நமக்கு சோத்துக்கு ஆகும் என்று வந்தவர்கள். இப்போது சம்பவம் வேறே 15 100 ரூ.150 ரூபாய் போகிறது. நாங்கள் ஏன் காங்கரசில் இருந்து விலகுவோம்.”
ஒரு “ரெட்டியார்- பணம் தானா காரணம்? நம்ம சமூக நலன்களை கவனிக்க வேண்டாமா?” ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கோவையார்:- “சமூக நலன்கள் ஞாபகம் தங்களுக்கு இப்போது தான் வந்ததோ. ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பட்டம், பதவி, 10 வருஷம் உத்தியோகம் இவ்வளவும் அனுபவித்து ஒரு மாசம் கூட பொறுத்துப் பார்க்காமல் வந்து நேற்று சேர்ந்துவிட்டு இன்றைக்கு மந்திரி கேட்டுக் கொடுக்காமல் போனால் சமூக நலன் போச்சு என்கிறீர்களே. உங்களை விடவா நாங்கள் சமூகத்தை காட்டிக் கொடுத்து பிழைக்க வந்துவிட்டோம். மற்றவர்கள் சங்கதிதான் என்ன? தேவர், பிள்ளை, செட்டியார் எல்லோரையும் சொல்லுகிறேனே.
சேலம் செட்டியார்:- கோவையார் அப்படி ஒரே அடியாய் எல்லா செட்டியாரையும் சேர்த்து பேசக்கூடாது. நான் ஆரம்ப காலம் முதல் காங்கரஸ்
காரன். என்னையும் தான் க்ஷவரம் செய்துவிட்டார்கள் பார்ப்பனர்கள்.
கோவையார்:- “தங்கள் சங்கதி வேறு. அப்படி இருந்தாலும் தாங்கள். சேரமென் ஆனிசள். 2 லக்ஷ ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. பிள்ளை குட்டிகள் பெண்கள் உள்பட படித்து இருக்கிறீர்கள். நாங்கள் இதை விட்டுப்போனால் எங்களை யார் சட்டை பண்ணுவார்கள்."
ஒரு கவுண்டர்:- “நாம் இன்று கூடிய நேரம் சரியில்லை. வீண்: கலகம் ஆரம்பமாய் விட்டது. இனி யொரு நாளைக்கு கூடுவாம். அதற்குள் பணக்கஷ்டமுடையவர்களுக்கு பணத்துக்கு காங்கிரசில் கிடைப்பதில் பகுதிக்கு அதாவது நாம் ஒரு ஏற்பாடு செய்து கொண்டு கூட்டம் கூட்டுவோம். இல்லாவிட்டால் ஒன்றும் நடக்காது. இப்பொழுது மேல்கொண்டு பேசுவதால் நம் யோக்கியதைகள் தான் வெளியாகும். பார்ப்பனர் சங்கதி பந்தோபஸ்தாகிவிடும். ஆகையால் நான் இக்கூட்டத்தை ஒரு மாதம் ஒத்திப்போடலாம் என்று பிரேரேபிக்கிறேன்.”
குடி அரசு - உரையாடல் - 01.08.1937
குடி அரசு- 1937 (2) 82
இரண்டு அய்யங்கார் மந்திமிகள் கூற்று
பார்ப்பன ஆதிக்கம் வந்தால் தமிழ் மக்களுக்கு என்னென்ன கெடுதல்கள் வரும் என்று எதிர்பார்த்தோமோ அவைகள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கிவிட்டன.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தோழர் டி.எஸ். எஸ்
ராஜன் அய்யங்கார் அவர்களும் பார்ப்பன அய்யங்கார் மந்திரிகள். அவர்கள். கொள்கை எப்படியாவது தமிழ் மக்களை அடிமைப்படுத்தி பார்ப்பன ஆதிக்கம் தலைசிறந்து விளங்குவதற்கு வேண்டிய காரியங்கள் செய்ய வேண்டியதே
யாகும். இதையறிந்து நாம் இந்த 20 வருஷகாலமாக தொண்டை கிழியவும் கை ஒடியவும் கத்தியும் எழுதியும் வந்திருக்கிறோம் இதை இந்த நாட்டு தமிழ் மக்கள் 100-க்கு 100 பேரும் உணர்வார்கள். இன்றும் இவ்வய்யங்கார் கோஷ்டிக்கு வால் பிடித்துத்
திரியும் தமிழ் மக்கள் பூராவும் தோழர் சுப்பராயன் அவர்கள் முதல் தோழர்கள்
குப்புசாமி அண்ணாமலை உபயதுல்லா கம்பெனிவரை சகல மக்களும் உணர்ந்தவர்களேயாவார்கள். மற்றும் அவ்வப்போது இவ்வபிப்பிராயங்களைப் பல வழிகளிலும் தெரிவித்தவர்களுமாவார்கள். அப்படி இருந்தும் நம்மக்களின். ஒற்றுமையின்மையாலும் சுயநலங்களாலும், வறுமையாலும் எப்போதும், ஒரு கூட்ட தமிழ் மக்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து குலாம் களாகி சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விபூஷணன் கதை போலவும், அனுமார். கதை போலவும் நடந்து பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவியும் ஆக்கமும் அளித்து வருகிறார்கள்.
நமது முயற்சி இதற்காக ஒரு தனிப்பட்ட தமிழ் மகனை குற்றம் சொல்ல நாம் முன்வரவில்லை. தமிழ் மக்களில் இப்படி ஒரு கூட்டம் புராண காலம் - சரித்திரகாலம் முதற்கொண்டே இருந்து வந்திருக்கிறது. இக்கூட்டத்தை அடியோடு இல்லாமல் செய்து விடமுடியும் என்று நாம் எப்போதும் நினைத்து விடவில்லை. ஆனாலும் சுயநலமற்ற - சமூகத்தை காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துத் தீரவேண்டிய அவசியமற்ற பொது மக்களும் சிறப்பாக பாமர மக்களும் இக்குலாம் கூட்டத்தின் பேச்சைக்கேட்டு ஏமாறாமல் இருப்பதற்காகவே நாம் முயற்சிக்கிறோம். 8௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நம் முயற்சி வீண் முயற்சி என்றோ நாம் சிறிதும் வெற்றி அடைய மாட்டோம் என்றோ சிறிதும் அதைரியம் கொள்ளவுமில்லை. ஏனெனில் இவ்விருபது முப்பது வருஷகாலங்களில் நமக்கு முன்னிருந்த அதிதீவிர வாலிபர்களும் கூட மனதினால் நினைத்திருக்கவும் முடியாத பல காரியங்கள். இன்று சர்வசாதாரணமாகிமக்கள் பலர் பின்பற்றவும் பல பலமான அமைப்புகள் இடிபடவும் பல அதி ஆச்சரியமான காரியங்கள் அமுலில் நடந்தேறவுமான காரியங்கள் நடந்து விட்டன.
அதுவும் பார்ப்பன எதிர்ப்பையும் அவர்களுடைய அடிமைகளான குலாம்களான பல தமிழ் மக்களின் எதிர்ப்பையும் தொல்லைகளையும் சமாளித்தும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நம் ஆசை
நம்முடைய முக்கியமான ஆசை - கொள்கை - ஆயுளுள்ள வரை ஈடுபட்டு தீருவது என முடிவு செய்துகொண்ட விஷயம் என்னவென்றால் ஒரே ஒரு காரியமாகும். அதாவது மனித சமுதாய அமைப்பை தலை கீழாக மாற்றுவது அல்லது உடைத்தெறிவது என்பதேயாகும்
இதைத் தவிர அரசியலைப் பற்றியோ பொருளாதாரத்தைப் பற்றியோ
நமக்கு சிறிதும் கவலை இல்லை. ஏனெனில் அரசியலும் பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிர தனித் தனி விஷயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ எப்படி உடைத் தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும்.
ஒரு மாறுதல் இன்றைய தினம் நமது சமூக அமைப்பில் ஒரு பெரிய மாறுதலை காண்கின்றோம். இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் சரி, ஒன்று மாத்திரம்
நிச்சயம். அதாவது தோழர்கள் காந்தியாருக்கும் ராஜகோபாலாச்சாரியாருக்கும் சத்தியமூர்த்தியாருக்கும் எதிராகவும் மற்றும் தோழர்கள் முத்துரங்க
முதலியார், வெள்ளியங்கிரிகவுண்டர், சீர்காழி சிதம்பரநாத முதலியார் ஆகியவர்களின் இஷ்டத்துக்கும் முயற்சிக்கும் எதிர்ப்புக்கும் விரோதமாகவும் அவர்களது விரோதங்களை சமாளித்துக்கொண்டு நடந்த காரியம் என்றே சொல்லுவோம்.
பறைய மந்திமி
அதாவது ஒரு “பறையனை'' அரசியல் மந்திரியாக இன்று கண்டு. விட்டோம். பறையன் என்று கூப்பிடுவது சட்ட விரோதமான காரியம் என்பதை அரசியல் ஆதாரத்தில்பார்த்துவிட்டோம். அவனவன்குலத்தொழில் பார்க்கும்படி
குடி அரசு - 1937 (2) 84
செய்வது தான் சுயராஜ்யத்தின் முக்கிய தத்துவம் என்ற கீதைத்
தத்துவத்தையும் மனு தத்துவத்தையும் இருக்குமிடம் தெரியாமல் கொளுத்திவிட்டோம். இவைகளை ஏன் தனியாக எடுத்துக் காட்டுகிறோம் என்றால் மேற்குறிப்பிட்ட கூட்ட மக்கள் இந்நிலை ஏற்படாமலிருப்பதற்காக பாடுபட்டார்கள், எதிர்ப்பை உபதேசித்தார்கள், இதற்கு மாறு ஏற்படாமல் இருக்கும்படி வைசிராய் இடம் தூது சென்றார்கள். இவ்வளவையும் சமாளித்தோம். மற்றும் சமூகத்துறையில் மதத்தின் பேரால் ஒதுக்கித்தள்ளி சமூகத்தின் பேரால் வெறுக்கச் செய்து தொடுவதற்கு அசூயைப்படத்தக்க முஸ்லீம் சமூகம் இன்று முற்போக்கு சமூகமாக இருக்கக் காண்கின்றோம்.
இந்த நிலை இனி ஒரு 15 வருஷங்களுக்கு கெடாமல் இருக்குமானால் அதற்கு அடுத்த பதினைந்து வருஷங்களில் இன்றுள்ள ஆட்சி பாடு பட்டுழைக்கும் மக்கள் அரசியலாக மாறிவிடும் என்பதில் நமக்கு ஆட்சேபணையில்லை.
பார்ப்பனச் சூழ்ச்சி:
அப்படிப்பட்ட ஒரு நிலைமை நாட்டில் உண்டாகாமல் இருப்பதற்கு ஆகவும் உள்ள நிலைமையையும் கெடுப்பதற்கு ஆகவுமே இன்று அரசியலின் பேரால் பார்ப்பனர்கள் முயற்சிக்கிறார்கள். அதற்கே தோழர் காந்தியாரையும் சில சமூகத்துரோகிகளையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். அதுதான் இன்றைய காங்கரஸ் சூழ்ச்சியாகவும் மாகாண ஆட்சியாகவும் சுயராஜ்ய முயற்சியாகவும் இருந்து வருகிறது
காங்கிரசின் பேரால் அரசியல் ஆதிக்கம் பெற்றுத் தலைமை ஸ்தானத்தில் பார்ப்பனர்கள் அமர்த்தவும் அவர்களது கண்ணோட்டம் எங்கே போயிற்று என்பதையும் விழிகளுக்குள் அடைந்து கிடந்து வெளிப்பட்ட ஆசை என்ன என்பதையும் தமிழ் மக்களை சற்று சிந்தித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்
தோழர் ஆச்சாரியார் பட்டத்துக்கு வந்த 10 நாளில் இந்தியா
பூராவும், தமிழ்நாடும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றார்.
இதை காங்கிரசிலுள்ள ஒரு தமிழ் மகனாவது கண்டிக்கவே இல்லை. ஒரு தமிழ்ப் பண்டிதனாவது ஆட்சேபிக்கவே இல்லை.
தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் எதற்கு ஆக சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதைப்பற்றிக் கூட எந்தத் தமிழனும் சந்தித்ததாகவும் தெரியவில்லை.
தங்கள் பெண்ஜாதியின் துகிலை சபையில் ஒருவன் பலாத்காரமாய் அவிழ்ப்பதை பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறும் காட்டு மிராண்டித் தனமான கதைக்கு நிகராகவே இருக்கிறது இந்த சம்பவம் 85— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
உண்மைத் தமிழருண்டா?
ஒரு பார்ப்பனர் தமிழ்மக்கள் பேரால் ஆட்சி பெற்று அரசியல். தலைமைப் பதவியில் இருந்து கொண்டு தமிழ் மக்களைப் பார்த்து “நீங்கள் எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று சொன்னால் அவரது நெஞ்சுத் துணிவு எவ்வளவாய் இருக்க வேண்டும்? இதையும் மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது என்று சொன்னால் இந்நாட்டில் உண்மைத் தமிழ்மக்கள் யாராவது இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? “தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து மனிதனைக் கடிக்க வந்து விட்டது” என்ற பழமொழிப்படி “ஜாதிப் பேச்சு கூடாது" “வகுப்பு பேச்சு கூடாது" “பாஷைப் பேச்சு கூடாது” என்றெல்லாம் ஞாணேபதேசம் செய்துவிட்டு அந்தப்படி யாராவது பேசினால் அது துவேஷப் பேச்சாகுமென்றும் பேசுபவர்கள். மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டு இப்போது தைரியமாய் தலைமை அதிகாரி பதவியில் இருந்து கொண்டு “எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுகிறார். இதன் அவசியத்துக்கு காரணம் என்னவென்றால் சமஸ்கிருதம் படிப்பதன்
மூலம்தான் மக்கள் புராண கால ஒழுக்கத்துக்கு போகமுடியும் என்று விளக்கிக் கூறுகிறார். தமிழ்மக்கள் எல்லோரும் ஹிந்தி படிக்க வேண்டும் என்று இவர்களால் சூழ்ச்சி செய்யப்பட்ட காலத்திலேயே நாம் இதை எடுத்துக் காட்டினோம். ஹிந்தி என்பதும் சமஸ்கிருத பாஷையே யாகும். இதை சுமார் 75 வருஷங்களுக்கு முன்பாகவே சரித்திரபுத்தகம் எழுதிய பாதிரிகள் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதாவது ஒரு பிரஞ்சு இந்திய பூமி சாஸ்திர புத்தகத்தில் இந்தியாவைப்பற்றி 70 வருஷத்துக்கு மூன் எழுதும் போது,
ஸம்ஸ்கிருத யோக்கியதை
“இந்தியாவானது முற்காலத்தில் அநேகவிதமான கலைகளுக்கும் அற்புதமான அறிவு பெருக்கத்துக்கும் இருப்பிடமாய் இருந்தது. நல்ல கல்வி சாஸ்திரங்கள் இருந்து வந்தன.
ஆனால் பிற்காலத்தில் பிராமணர் மதம் வந்து புகுந்தது. நிச்சயமுள்ள கல்வி அறிவு சாஸ்திரங்களுக்கும் உண்மை சம்பவங் களுக்கும் பதிலாக கட்டுக்கதைகளையும் மட்டுக்கடங்கா அபத்தங் களையும் புனைந்த சாஸ்திரங்களை புராணங்களை சமஸ்கிருதமாகிய ஹிந்திபாஷையில் ஏற்படுத்தி இந்த தேச மக்களை அஞ்ஞான - அறியாமை அந்தகாரத்தில் அமிழ்த்தினார்கள்.
ஆதலால் அது முதல் இதுவரை நல்லொழுக்கத்திலும், வித்தை, அறிவு, கல்வி, சாஸ்திரங்களிலும் யாதோர் விருத்தியும் காணாமல் தாழ்வும், அதிக மூடத்தனமுள்ள அபத்தங்களின் நிலைமையும் மாத்திரமே காணப்படுகிறது.
குடி அரசு- 1937 (2) 86
ஆகவே மேல்கண்ட அஞ்ஞானமும் மெளடீகத்தனமும் மக்களுக்குள். வளர்ந்துவருவதற்கு ஆதாரமான புராணம், இதிகாசம், விதி நூல் ஆகியவைகளை கொண்ட சமஸ்கிருதத்தை இந்த 20-வது நூற்றாண்டில்
பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் உள்ள மனிதன் படிக்க வேண்டுமென்று ஆட்சிதலைவர் ஆக்கினை இடுவாரானால் மக்களை பழயகால காட்டு.
மிராண்டித் தனமான வாழ்க்கைக்கு போகும்படி விரட்டி அடிக்கிறார் என்று தானே அருத்தம்?
சமஸ்கிருத பாஷையின் முக்கிய தத்துவம் வருணாச்சிரம தர்மமாகும். அதாவது வருணாச்சிரம தர்மத்துக்கு ஏற்ற கதை புராணம், சரித்திரம் “வேதவாக்கு” விதிநூல் அகியவைகளேயாகும். வருணாச்சிரம தர்மத்தின் முக்கியத் தத்துவம் பார்ப்பான் பிராமண ஜாதியை சேர்ந்தவன். மற்றவர்கள் சூத்திர (அடிமை) ஜாதியைச் சேர்ந்தவர்கள். முன்னையவனுக்கு பின்னைய வனுடைய சொத்து, பெண்டு பிள்ளை, சரீரம் ஆகியவை கட்டுப்பட்டவை களாகும் என்பதுதான். ஆகவே இந்த நிலையை மறுபடியும் ஏற்படுத்தப் பார்ப்பனர்கள் முயற்சியேதான் “தமிழ் மக்கள் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்” என்று ஆக்கினை இடுவதாகும்
முஸ்லீம் ஆதிக்கத்துக்கு உலை
ஹிந்தி பாஷையை வளர்த்ததின் மூலம் ஒரு அளவுக்கு முஸ்லீம் ஆதிக்கத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்தாய்விட்டது என்பதை மந்திரி யாயிருந்த தோழர் கலிபுல்லா சாஹிப் அவர்கள் வெகு நன்றாய் விளக்கி இருக்கிறார். ஆகவே இக்காரியங்களை பார்ப்பனர்கள் செய்வதானது இதுவரை குறிப்பாக இந்த 20 வருஷ காலமாக பார்ப்பனரல்லாத சமூக தலைவர்களும் சுமார் 35 வருஷங்களாக முஸ்லீம் தலைவர்களும் சமூக முன்னேற்றத்தில் செய்து வந்திருக்கும் அரிய வேலையையும் அதன் பயனையும் பாழ்படுத்தவும் இடித்தெறியவும் செய்யப்படும் சூழ்ச்சியேயாகும்
மற்றொரு அய்யங்கார் சூழ்ச்சி
இந்த நம் அபிப்பிராயத்தை உறுதிப்படுத்த மற்றொரு அய்யங்கார் பார்ப்பன மந்திரி தோழர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் மற்றொரு மாணவர்கள். கூட்டத்தில் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயத்தைக் கொண்டு உணரலாம்.
அதாவது,
“இந்த மாகாணத்தில் துரதிஷ்டவசமாக பொது வாழ்வில்
வகுப்புவாத முறை வளர்ந்து வருகிறது. அவர்கள் அதிகாரத்தில் இருந்த பொழுது ஜாதியையே ஒழிக்க வேண்டுமென்று பேசிக்கொண்டு ஜாதியை சட்டபூர்வமாக நிரந்திரமாக்கி இருக்கிறார்கள். இருந்தாலும் நாம் இனி பயப்பட வேண்டியதில்லை'” 87... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
என்று சென்ற ஜூலை மாதம் 31ந் தேதி வைத்திய மாணவர்கள் வகுப்பில்
பேசி இருக்கிறார். இது “இந்து” பத்திரிகையில் காணப்படுகிறது. (மேற்கண்ட வாசகத்தில் அவர்கள் என்பது ஜஸ்டிஸ் கட்சியைக் குறிக்கிறது. ப-ர்)
இவரது ஆணவத்தைப் பாருங்கள், வகுப்பு வாரி முறையைப்பற்றி இனி பயப்பட வேண்டியதில்லையாம். அப்படி என்றால் என்ன? அதை தாங்கள் அடியோடு அழித்து விடப்போகிறோம் என்பதுதானே? எதற்கு ஆக அதை அழிப்பது?
வகுப்புவாத முறையை ஜஸ்டிஸ் கட்சியார் ஒழிக்க வேண்டு மென்று சொல்லிக்கொண்டு அதை ஒழிப்பதற்கு அனுகூலமாக வகுப்பு வாதம் உள்ள வரை வகுப்பு உரிமை கொடுத்து வந்தால் எதற்கு ஆக ஆதியில் வகுப்புவாதம் (யாரால் கற்பிக்கப்பட்டிருந்தாலும்) ஏற்பட்டதோ அந்த காரியம் அழிவதன் மூலம் வகுப்பு இல்லாமல் போய்விடும் என்று கருதியே வகுப்புரிமை அளித்திருக்கிறார்கள். தோழர் ராஜன் அய்யங்கார் சொல்வதையே ஒப்புக்கொள்வதானாலும் அதாவது ஜஸ்டிஸ் கக்ஷியார் வகுப்பு முறை அல்லது ஜாதி முறையை சட்ட பூர்வமாக நிலைக்கச் செய்துவிட்டார்கள் என்றே வைத்துக் கொள்வதானாலும்
வேத சாஸ்திர வகுப்பு வாதத்தை ஓழிக்க வழியுண்டா?
இப்பார்ப்பனர்கள் அதாவது தோழர்கள் ராஜன் அய்யங்கார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் ஆகியவர்களின் முன்னோர்கள் இதே ஜாதி முறையை- வகுப்புமுறையை- வருணமுறையை மதத்தில் வேதத்தில் சாஸ்திரத்தில் புராணத்தில் ஏன்? “கடவுள்” வாக்கில் “கடவுள் சிருஷ்டியில்" உற்பத்தி செய்து நிரந்தரமாக்கி இருக்கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் ககஷியார் செய்த சட்டத்தை நாளைக்கு ஒரு அன்னக்காவடியோ தகரப்போகணியோ சட்டசபை அதிகார ஆசனத்தில் உட்கார்ந்து அழித்துவிடலாம், அதில். ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் இந்த அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரியார் கூட்டம் செய்த வேத சாஸ்திர கடவுள் வாக்கு ஆகியவைகள் மூலம் செய்யப்பட்ட கொடுமையான ஜாதிமுறையை எப்படி ஒழிப்பது? எந்தக் காலத்துக்கு யாரால் அழிப்பது? என்று கேட்கிறோம்
ஹிந்தியை சமஸ்கிருதத்தைப் பாராட்டுவதேன்? இவைகளை மேலும்மேலும் நிலைநிறுத்தத்தானே தோழர் ஆச்சாரியார் சமஸ்கிருதத்தையும் ஹிந்தியையும் படியுங்கள் என்று இன்று மாணவர்களுக்கு ஆக்கினையிடுகிறார். இந்தப் பார்ப்பனர்கள் “மனித வாழ்வில். ஒரே ஒரு ஜாதிதான் இக”“பர”ங்களில் சுகமாகவும், சுதந்திரமாகவும் வாழ
முடியும்” என்றும் அந்த ஒரு ஜாதிக்குத்தான் சுதந்திரமுண்டு என்றும் மற்ற ஜாதிகள் அந்த ஒரு ஜாதிக்கு அடிமையாய்த்தான் இருக்க வேண்டும்
குடி அரசு- 1937 (2) 88
என்றும் இருந்து வந்த கொடுமையை ஜஸ்டிஸ் கட்சி ஒழிக்கத்தான் வகுப்பு உரிமை அதாவது சகல வகுப்புக்கும் சம உரிமை உண்டு என்பதை அமுலில்: கொண்டு வரச்செய்ததே தவிர மற்றபடி ஜஸ்டிஸ்காரர் செய்த வகுப்பு முறையிலோ வகுப்பு உரிமை முறையிலோ எந்த ஜாதியையும் மேல் என்றோ கீழ் என்றோ எந்த ஜாதிக்கும் எந்த ஜாதியும் அடிமை என்றோ சட்டம் செய்யவில்லை. ஆகவே - ஐஸ்டிஸ்காரர் செய்த சட்டத்தைப் பற்றி பயப்படப்போவதில்லையென்றும் அதை அழிக்கவே தாங்கள் கங்கணங் கட்டிக்கொண்டு வந்திருப்பதாகவும் வீரப் பிரதாபம் கூறும் டாக்டர் ராஜன் அய்யங்கார் அவர்கள் வகுப்புரிமை, வகுப்புப் பிரிவு ஆகிய முறையைப்பற்றி உண்மையில் வருந்துபவராயிருந்தால் அவர் ஒரு காரியம் செய்வாரா என்று கேட்கின்றோம்.
எல்லாரும் அர்ச்சகராக இருக்கச் சட்டம் செய்வாரா?
அதாவது அவரது பதவி ஆதித்கத்திலுள்ள வகுப்பு முறை சுதந்திரத்தை ஒழிக்கிறாரா என்று கேட்கின்றோம் என்ன வென்றால் இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாக்கா மந்திரியாயிருக்கிறார். அவர். ஆதீனத்தில் தான் இந்நாட்டுக் கோவில்களின் “தலையெழுத்து” பூராவும் இருக்கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட்டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ, காங்கரசே சர்க்கார் - சர்க்காரே காங்கரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக்கொள்ளும் படியான நிலைமையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில்களுக் கெல்லாம் பார்ப்பானே மணி அடிக்கவேண்டும், பார்ப்பானே சோறு பொங்க வேண்டும், பார்ப்பானே வேதம் ஓத வேண்டும் என்பவை ஆன- பார்ப்பானே செய்யவேண்டும் என்கின்ற காரியங்களை மாற்றி “வகுப்பு வாதம் புரிகின்ற" ஜஸ்டிஸ் ககஷியார் உள்பட தனித்தொகுதி கேட்பதும் இந்து மதத்தை விட்டுப் போவதும் ஆபத்து என்று கூறி தடுக்கப்படும் ஷெடியூல் வகுப்பார் வரை உள்ளஎல்லா இந்துக்களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்திரவோ செய்து வகுப்பு வாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்கமாய் கேட்கின்றோம்.
இதாவது நாளைக்கு செய்யட்டும். இன்றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித்தியாச முறை இல்லாமல் “சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வ தயாபரமும் உள்ளவரான பகவானை தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப்படும்” என்று உத்திரவு போடட்டுமே என்று தான் கேட்கிறோம்
ஹோட்டல்களின் “பஞ்சம?” போர்டை ஓழிப்பாரா?
இதாவது கொஞ்சம் தாமதிக்கட்டும். அதைவிட அவசரமாக இனிமேல் எந்தப் பார்ப்பானும் ஓட்டல்களிலோ, காப்பிக் கடைகளிலோ பிராமணாள் காப்பிக் கடை - பிராமணாள் ஓட்டல் - பிராமணாளுக்கு
ஹூ ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மாத்திரம் - பிராமணாளுக்கு இங்கே சூத்திராளுக்கு இங்கே - பஞ்சமன்
நாய் பெரு வியாதிக்காரர்கள் ஆகியவர்கள் பிரவேசிக்கக் கூடாது - என்பன. போன்ற போர்டு- போடக்கூடாது என்று உத்திரவுகள் போடட்டுமே பார்ப்போம் எனவே இத்தியாதி காரியங்கள் செய்ய அதிகாரமும் அவசியமும் செளகரியமும் இருந்தும் இவற்றை செய்யாமல் வகுப்பு ஆதிக்கக் கொடுமையையும் வகுப்பு முறை துன்பங்களையும் வைத்துக்கொண்டு “ஜஸ்டிஸ்கக்ஷி வகுப்பு வகுப்புவாத முறை ஏற்படுத்தி விட்டது. நான் அதை ஒழிக்கப்போகின்றேன். பயப்பட வேண்டாம்" என்றால் என்ன அர்த்த மென்று கேட்கின்றோம். ஆகவே இந்தமாதிரிப் பேச்சுக்கள் எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியே கொடுங்கோன்மை ஆட்சிமுறைப் பேச்சென்றே
வருத்தத்துடன் கூற வேண்டியிருக்கிறது
குடி அரசு - தலையங்கம் - 08.08.1937
குடி அரசு- 1937 (2) 9
சாக்கடைக்கு பதில் எச்சிலை
சேலம் அதி தீவிர தேசபக்தர் (பார்ப்பன பக்தர்) வைதிக காங்கரஸ். வாதி (ஜஸ்டிஸ் கட்சியை சதா வைதவர்) குடும்பத்தோடு பார்ப்பன, காங்கரஸ் ஆரம்பித்த காலம் முதல் - வினா தெரிந்த நாள் முதல் காங்கரஸ்காரராய் இருந்த தோழர் எஸ். வெங்கிட்டப்ப செட்டியார் அவர்களுக்கும் அவரது திருக்குமாரருக்கும் பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன குலாமும் பார்ப்பன எச்சிலைப் பத்திரிக்கைகளும் இவ்வளவு சீக்கிரத்திலேயே நல்லதொரு “நற்சாட்சி பத்திர"மளித்து விட்டன. எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு எச்சிலைப் பத்திரிகையானது சேலம் பாரிஸ்டர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் சரணாகதி மந்திரி கனம் ஆச்சாரியாருக்கு அளித்த வெடிகுண்டுக்கு பதிலளிக்கிறதாக சாக்கு வைத்துக்கொண்டு மிக்க ஆணவமாகவும் யோக்கியமற்ற முறையிலும் என்னென்னவோ ஆபாசமாக எழுதி இருக்கின்றது. தோழர் எஸ்.வி. ராமசாமி ஆச்சாரியாருக்கு அறைந்த ஆப்புகளை பிடுங்கவோ அசைக்கவோ அவ்வெச்சிலை பத்திரிகை: களுக்கு சக்தி இல்லையானால் மரியாதையாகத் தலை குனிவதையோ மெளனமாகத் தலையை மறைத்துக் கொள்ளுவதையோ விட்டு விட்டு அவ்வாப்புகளை வெளியாக்கின பத்திரிக்கையை “சாக்கடைப் பத்திரிக்கை”
என்று எழுதுவது அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் ஒரு கை கூழுக்கு பார்ப்பான் காலை கழுவிவிடும் காரியம் போன்ற இழி குணமும் ஆகும் என்பதை தெரிவிக்க வருத்தப்படுகிறோம்
தேசீயப் பத்தியிகைகள் யோக்கியதை
தோழர் சேலம் ராமசாமி அவர்கள் விடுதலை பத்திரிக்கைக்கு அனுப்பிய சேதியை வெளியிடும்படி “விடுதலை” ஆசிரியரை கேட்டுக் கொண்ட தனிக் கடிதத்தில், இந்நாட்டு தேசியப் பத்திரிகை காங்கரஸ் பத்திரிகை, பார்ப்பனப் பத்திரிக்கை என்பனவாகியவைகளின் யோக்கியதைகளை தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டியே பிரசரிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:-
“தேசீயப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் பார்ப்பனப் பத்திரிகைகளாக மாறிவிட்டன. அவை பொஜனப் பத்திரிகைகளாக இல்லை. பார்ப்பனர்களின் அபிப்பிராயத்துக்கு சிறிது மாறுபாடாய் இருந்தாலும் எவ்வளவு முக்கியமான விஷயங்களையும் பிரசுரிக்க மறுத்தும் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மறைத்தும் விடுகின்றன. " என்று எழுதி இருக்கிறார். அதை சென்னை எச்சிலைப் பத்திரிக்கை நன்றாய் மெய்ப்பித்துவிட்டது. அதாவது, “விடுதலையை சாக்கடைப் பத்திரிகை என்று சொன்ன சென்னை எச்சிலைப் பத்திரிகைக்கு சிறிதாவது மானமோ நாணயமோ இருக்கு மானால் பாரிஸ்டர் ராமசாமி அனுப்பிய விஷயம் அல்லது எழுதிய விஷயங் களை பிரசுரம் செய்து விட்டு, ஆண்மையும் ரோஷமும் இருந்தால் வரி வரியாய் எழுத்து எழுத்தாய் கண்டித்து பிச்சுப் பிடிங்கித்தள்ளி இருக்கலாம் அதை விட்டு விட்டு அச்செய்தியை வெளியிட்ட பத்திரிகையை அற்பத் தனமாய் - அயோக்கியத்தனமாய் - இழி தன்மையாய் எழுதுவது மனிதத் தன்மையா? கேவலமான மிருகத்தன்மையா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
மேலும் அவ்வெச்சிலைப் பத்திரிகை சேலம் ராமசாமி வெளியிட்ட சேதிக்கு சமாதானம் சொல்லுவதாக நடித்துக்கொண்டு “159 பேர் சென்னை அசெம்பளியில் இருக்கும்போது, மந்திரிகள் 9, காரிய தரிசிகள் 10, தலைவர்
1, உப தலைவர் 1, ஆக 21 போக பாக்கி 138 பேருக்கும் மந்திரி வேலை கிடையாமல் போனதுக்கு தங்கள் சமூக ஏமாற்றமென்று ஆர்ப்பாட்டம் செய்வது கோரமாகும்"'
என்று சமாதானம் சொல்லுகிறது. மந்திரி வேலை வினியோகித்ததில். மற்ற சமூகங்களை ஏமாற்றி விடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் நியாயமான புத்தியோடு மந்திரி பதவிகள் வினியோகிக்கப்பட்டு இருக்குமானால் பூவிலே பூசாயபு, அதிலும் நல்ல பூ பூளைப் பூ என்பது போல் காங்கரசில் இல்லாத வரும் காங்கரசுக்கு துரோகியுமான திருச்சி டாக்டர் செளந்திரராஜன் அய்யங்காரை கார்விட்டனுப்பி கூட்டி வந்து மந்திரி வேலை கொடுப்பானேன்?
ராஜன் செலாவணிக்குக் காரணம்
ராஜன் அய்யங்கார் அவர்கள் காங்கரசுக்கு ஒரு காலத்திலாவது ஒரு காசும் உதவி இருக்க மாட்டார்.
காங்கரசில் சேர்ந்து ஜெயிலுக்குப் போனவர் என்றால், அவரது தொழிலானது அவர் ஒவ்வொரு தடவை ஜெயிலுக்குப் போனபோதும் திரும்பிவந்தவுடன் 15 300, 400 ரூ. வீதம் அதிக வரும்படி வரும் படியாகத்தான் செய்ததே தவிர அவரது வரும்படி ஒரு தம்பிடி கூட குறைந்து விடவில்லை. மீ£ 100 ரூபாய்க்கும் கஷ்டத்தில் இருந்த அவரது ஆரம்ப வைத்திய நிலை அவர் ஒரு பெரிய டாக்டராக விளம்பரமாவதற்கும்
மீ” 1000 கணக்கில் பணம் சம்பாதிக்கும் பொய் டாக்டர் என்று விளம்பரப் படுத்தப்பட்டு ஒரு கேசுக்கு 500, 1000 என்று பில் பண்ணும்படியான. தைரியமும் செலாவணியும் ஏற்படவும் இடம் கிடைத்ததற்கும் காங்கரசில்
சேர்ந்ததும் ஜெயிலுக்கு போவதும் தவிர வேறு எது முக்கிய காரணம் என்று கேட்கின்றோம்
குடி அரசு- 1937 (2) 92
ஜெயில் “கஷ்டம்?
அவர் ஜெயிலுக்கு போய் அங்கு கஷ்டப்பட்டார் என்றாவது சொல்லு வதற்கு யோக்கியமான காரணங்கள் இருக்கின்றனவா என்று கேட்கின்றோம்.
ஜெயிலும் எ கிளாஸ் பசும்பால், பருப்பு, நெய், தயிர், காப்பி, ரொட்டி, மாம்சம், பழவர்க்கம், சொந்த சமையலில் அக்கார வடிசல், சித்திரான்னம், பேணி ஆகிய “பத்திய” பதார்த்தங்கள் கொண்ட ஆகாரம், கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலி, எலக்டிரிக் விளக்கு கம்மோடு ஷவர் பாத் ஆகிய உபகரணம் இவைகளோடு ஜெயில் அதிகாரிகளையும் மிரட்டிக் கொண்டும் மற்றும் சில சொந்த சவுகரியங்களுடனும் ஓய்வெடுத்துக் கொண்டும் உட்கார்ந்திருப்பது கஷ்டமான காரியமா? பெரிய தியாகமா? என்று கேட்கின்றோம்
டாக்டர் ராஜன் அவர்கள் தியாகத்தை அறிய வேண்டியவர்களுக்கு ஒருசுருக்கமானவழிகாண்பிக்கின்றோம். அதாவது அவர் காங்கரசில் சேராததற்கு முன் அவரது சொத்து வரி, பூமி வரி, இன்கம் (டாக்ஸ்) வரி எவ்வளவு? இப்போது எவ்வளவு? என்று கணக்குப் பார்க்கும்படி வேண்டுகிறோம் ஆகவே அப்படிப்பட்ட ஒருவரை தேடிப்பிடித்துக் கொண்டு வந்து பட்டம் கட்டும்போது அந்தப்பட்டத்தை அடையப் பெறாத - அவரைவிட எந்த விதத்திலும் கட்டுப்பாட்டிலும் நாணயத்திலும் பின் வாங்காத சமுகத்தாருக்கு அது கிடைக்கவில்லை என்றால் அது உண்மையிலேயே ஏமாற்றமல்லவா? வஞ்சகமல்லவா? துரோகமல்லவா? வகுப்பு ஆதிக்க சூழ்ச்சியல்லவா? என்று நல்ல புத்தியும் நடுநிலைச் சிந்தனையும் நாணயமும் சுதந்தர உணர்ச்சியும் உள்ள தோழர்கள் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
இழிவில்லாத காரணம் எது?
“தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததற்கு காரணம் அவர் தமையனார் கனம் டாக்டர் சுப்பராயன் எஸ்டேட் மேனேஜராய் இருப்பதால் என்று பாரிஸ்டர் ராமசாமி” எழுதியதை இழிவான வியாக்கியானம் என்கின்றது சென்னை எச்சிலைப் பத்திரிகை. அவ்வியாக்கியானம் இழிவானதா மேன்மையானதா என்ற விவாதத்தை நாம் இப்போது மேற்போட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு கனம் ஆச்சாரியார் மந்திரி பதவி கொடுத்ததற்கு “இழிவில்லாத” மேலான வியாக்கியானம் வேறு எதையும் சென்னை எச்சிலைப் பத்திரிகை சொல்லவில்லையே. இப்பொழுதாவது சொல்லட்டுமே பார்ப்போம்
ராஜன் - ராயன் துரோகம்
கனம் டாக்டர் சுப்பராயன் ஜெயிலுக்குப் போனவர் அல்ல. கனம் டாக்டர் ராஜன் செய்த “காங்கரஸ் துரோகத்துக்கு" கடுகளவு எடையும் குறையாத B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“மா பெரும் துரோகம்” காங்கரசுக்கு செய்தவர் என்று கனம் ஆச்சாரியார் முதல் சர்வ பார்ப்பனர்களும், மற்றும் “ஹிந்து” “மித்திரன்” முதலாகிய பார்ப்பனப் பத்திரிகைகளும் இன்றைய அந்திர தேசத்து காங்கரஸ் மணிகளும் தேசபக்த இரத்தினங்களும் கூப்பாடு போட்டதும் போடுவதும் பொய்யா என்று கேட்கிறோம்
நமக்கு கனம் டாக்டர் சுப்பராயனிடம் வெறுப்பு இல்லை. அவர்
முதன் மந்திரியாயிருந்த காலத்தில் செய்ததற்கு இப்போதும் நன்றி செலுத்து
கிறோம். ஆனால் காங்கரசும், ஆச்சாரியாரும் அவருக்கு மந்திரி வேலை கொடுத்ததற்கு சென்னை எச்சிலைப் பத்திரிகை என்ன நாணயமான யோக்கியமான சமாதானம் சொல்லிற்று - சொல்லப் போகிறது என்று தான் கேட்கின்றோம்
தவிர “தோழர் வெங்கிட்டப்ப செட்டியார் காங்கரசக்கு ஆக எவ்வளவு தூரம் பாடுபட்டார் என்பதை எல்லோரும் அறிந்ததுதான்” என்று அவ்வெச்சிலைப் பத்திரிகை பரிகாசமாக எழுதுகிறது
தோழர் வெங்கிட்டப்ப செட்டியாரும் அவரது குடும்பமும்
காங்கரசுக்காகப் பாடுபட்டது எவ்வளவு என்பதைப்பற்றி நமது அபிப் பிராயத்தை வெளியிட வேண்டிய ஆத்திரம் இப்போது நமக்கு இல்லை.
வெங்கட்டப்பா செய்தது
ஆனால் தோழர் வெங்கிட்டப்ப செட்டியார் காங்கரசுக்கு செய்த தொண்டு எவ்வளவு என்பதாக அச் சென்னை எச்சிலைப் பத்திரிகையே
இதற்கு முன் எழுதி வந்தவைகளையும் அதே தோழர் வெங்கிட்டப்ப
செட்டியாருக்கு மற்றும் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் கனம் ஆச்சாரியார். உள்பட சேலம் பார்ப்பன குழாங்களும் நேற்று வரை பாடிய கவிகளையும்
அர்ச்சித்த ஸஹத்திர நாமாவளியையும் படித்துப் பார்க்கும்படியும் நினைத்துப்
பார்க்கும்படியும் வேண்டுகிறோம். சமீப காலத்தில் எம்.எல்.எ. தேர்தல் நடந்தபோது தோழர் வெங்கட்டப்ப செட்டியாரின் மாபெரும்
தேசபக்தியையும், மகா மகா காங்கரஸ் தொண்டினையும் புகழ்ந்து
புகழ்ந்து கூறியும் எழுதியும் வந்ததுமல்லாமல் காலிகளைப் பிடித்து
கூலிகளைக் கொடுத்து ஜே கூப்பாடு போடச் சொன்னதையும் கவனித்து
நினைவுறுத்திப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
தேவாங்கர்களுக்கு துரோகம்
தோழர்கள் எல்லப்ப செட்டியாரையும் தம்மண்ண செட்டியாரையும் ஒழிக்கவும் தேவாங்கர் சமூகத்தில் கலவரத்தையும் பிளவுகளையும் உண்டாக்கி தேவாங்கர் ஆதிக்கம் சேலத்தில் தலைதூக்காமல் இருக்கச்
குடி அரசு- 1937 (2) 04
செய்வதற்கும் தோழர் வெங்கட்டப்ப செட்டியாரையும் அவரது குடும்பத்தையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொண்ட காலத்தில் செட்டியாரின் சிறுநீர் பார்ப்பனர்கள் மடங்களிலும் தேசீப பத்திரிகை மண்டபங்களிலும் காங்கரசிலும் காங்கரஸ் தலைவர்களின் உச்சரிப்புகளிலும் நந்தா விளக்காய் எரிந்தது ஆனால் இப்போது, சர். பி. தியாகராயர் செய்த “பாவத்துக்கு” ஆக அச்சமூகம் அரசியல் உலகில் சித்திரத்திலும் உருவமிருக்க முடியாத மாதிரி ஒழிந்து விட்டதுடன் “வெங்கிட்டப்ப செட்டியாரின் அரசியல் வாழ்க்கையின் சரித்திரம் யாவரும் அறிந்ததுதான்” என்று சென்னை எச்சிலைப் பத்திரிகையுங்கூட தைரியமாய் எழுதி விட்டது
காங்கரசில் தோழர்கள் கனம் டாக்டர் சுப்பராயன், கனம் டாக்டர் ராஜன், கனம் ராமநாதன், கனம் யாகூப் ஹாசன் சாயபு, கனம் வி.ஐ. முனிசாமிப்பிள்ளை, கனம் டாக்டர் ராமராவ், கெ.வெங்கடசாமி நாயுடு, கனம் கோபால ரெட்டி ஆகியவர்கள் காங்கரசுக்கு செய்ததை விட எந்த விதத்தில் வெங்கட்டப்ப செட்டியார் குறைந்த தொண்டு ஆற்றி இருக்கிறார் அல்லது அதிக துரோக செய்துவிட்டார் என்று எச்சிலைப் பத்திரிகைக்கு வெளியிட முடியுமா?
அனுமத்துவம் ஆடியிருக்காவிட்டால்?
தோழர் வெங்கட்டப்ப செட்டியார் இந்தப் பார்ப்பனக் கூட்டத்திற்கு பின் தாளம் போடாமல் இருந்திருப்பாரானால் இன்று அரசியலில் சகல பதவிகளும் பெருமைகளும் அடைந்து அவர் குடும்பமும் தக்க உத்தியோகங்கள் பதவிகள் பெறுவதன் மூலம் உலகுக்கு நன்மை செய்யும் நிலை அடைந்து அநேக பார்ப்பனர்கள் போல் ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை அடைந்திருப்பார். அதை விட்டு பார்ப்பனர் வால் பிடித்து அனுமத்துவ நாடகம் நடித்த பலன் “வெங்கடப்ப செட்டியாரின் காங்கரஸ் யோக்கியதை தெரியாதா என்று பார்ப்பனக் கூலி எச்சிலைப் பத்திரிகை கேட்க வேண்டியதாய் விட்டது.
மற்றும் அவ்வெச்சிலைப் பத்திரிகை எழுதும்போது மெத்தப் போக்கிரித்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் “காங்கரசில் சேருவதே பெரிய தியாகம் என்று கிலர் கருதுகிறார்கள்” என்று எழுதி இருக்கிறது அப்படியானால் தோழர்கள் கே. வெங்கடசாமி நாயுடுவும், கனம் ராமநாதனும், கனம் டாக்டர் சுப்பராயனும் காங்கரசில் தேர்தலுக்கு முதல். நாள் சேர்ந்ததல்லாமல் வேறு என்ன தியாகம் செய்தார்கள்? மற்றும் பல பார்ப்பன மந்திரிகளும் காரியதரிசிகளும் சிலர் காங்கரசில் சேர்ந்ததோடு
மீ 100, 200, 300 என்பதாக காங்கரஸ் பண்டில் வயிறு வளர்த்தது மாத்திரம் அல்லாமல் வேறு என்ன மகத்தான தியாகம் செய்தார்கள். என்று கேட்கின்றோம் %5 ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆமாம் மெய்தான்
மற்றும் “மந்திரி வேலை கிடைக்காததற்கு ஆக சாக்கடைப் பத்திரிக் கைகளில் சாக்கடை பாஷைகளில் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இம்மாதிரி வகுப்புவாதப் புரளிகளைக் கண்டு ஏமாந்த காலம் மலை ஏறிவிட்டது” என்று அவ்வெச்சிலை பத்திரிகை எழுதி வீரம் பேசுகிறது. ஆம் வயிற்றுப் பிழைப்புக்கு வகையற்று மானத்தையும் நாணயத்தையும் சமூகத்தையும் விற்று வயிறு வளர்க்க வேண்டிய அவசியமுள்ள காலிகளுக்குக் கூலி கொடுத்து வாயிற்படியில் காவலுக்கு கட்டும் மிருகத்தைப் போல் கட்டி வைத்து வளர்க்க பார்ப்பனர்களுக்கு செளகரியமும் பார்ப்பனரல்லாத ஆள்களும் கிடைக்கும் போது வகுப்பு உரிமை மலையேறிவிடலாம்தான். பார்ப்பனர்களின் இச்சூழ்ச்சி வெளியாவதன் மூலமோ இக்காவல் உருப் படிகளுக்கு மானமும் ரோஷமும் ஏற்படுவதன் மூலமோ பார்ப்பன. ரல்லாத பாமர மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்படுவதன் மூலமோ மலையேறிவிட்டதாக மனப்பால் குடித்தோ அல்லது கூலிக்கு அழுதோ: வகுப்புரிமை மாண்டு விட்டதாகக் கூறும் போலிவாதம் வெகு
சீக்கிரத்தில் நன்றாய் தெரியப் போகிறது என்பதோடு இதை முடித்து விட்டு சென்னை எச்சிலைப் பத்திரிகையின் இன்னும் பல கூலிக் குரைப்புக்குப் பின்னால் சமாதானம் கூறுவோம்.
- 29.06.1937 'விடுதலை'
குடி அரசு - மறுபிரசுரம் - 08.08.1937.
குடி அரசு- 1937 (2) 96
தர்மபுரி ஜில்லா போர்டு
பிரசிடெண்டுக்கும் வைஸ் பிரசிடெண்டுக்கும் சுயமமியாதைத் தவைவருக்கும் வரவேற்பு
அன்புள்ள தோழர்களே!
நீங்கள் வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரங்களுக்கு உங்கள் ஜில்லா போர்டு தலைவரும் உப தலைவரும் தக்க பதில் கூறினார்கள். அவர்கள் மற்றவர்களைப் போன்று ஏமாற்றும் முறையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுப்போமென்று ஆசை வார்த்தையோ அல்லது சமயத்திற்கு பதில் என்ற முறையிலோ சொல்லாமல் தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட காரியங்களை தங்களால் முடிந்தவரை செய்வதாகத்தான் கூறினார்கள். அதுதான் உண்மை. ஜில்லா போர்டுகள் மக்களின் தண்ணீர் வசதி, ரோடு வாதி, சுகாதாரவசதி, பள்ளிக்கூட வசதி ஆகியவைகளைக் கவனிப்பதற்காகவே இருக்கின்றன. அங்கு பூரண சுயராஜ்யப் பேச்சுக்கு இடமில்லை. அங்கு கட்சி பேதம் வேண்டியதில்லை. வீணாகக் கலகமும் வேண்டியதில்லை:
பல ஜில்லா போர்டுகள் கூட்டங்களைப் பார்த்தால் மீன் கடைச் சண்டைகளைப் போல் கலகம் செய்து கொள்ளுவதையும் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதையும் காணலாம்.
இதனால் ஜில்லா மக்களுக்கு வேண்டிய வசதிகள் கவனிக்கப்படு வதில்லை. ஜில்லா போர்டு மெம்பர்களும் தலைவர்களும் லோகல் போர்டு. சட்டப்படி தான் நடக்க முடியுமே தவிர சுயேச்சையாக ஒன்றும் செய்துவிட
முடியாது. பல ஜில்லா போர்டுகளிலும் முனிசிபாலிட்டிகளிலும் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்து ஜில்லா போர்டுகளையும் முனிசிபாலிட்டிகளையும் எடுத்து விட்டு ஒரு பொறுப்புள்ள சர்க்கார் உத்தியோகஸ்தர் வசமே ஒப்புவித்து விடுவது நல்லதென்று முன்னொரு சமயம் நானும் தோழர். ராஜகோபாலாச்சாரியாருங்கூட கலந்து பேசினோம். அந்தப்படி காரியங்கள் விரைவில் நடந்தாலும் நடக்கலாமென்று எண்ணுகிறேன்.
ஜில்லா போர்டு தலைவருக்கும் ஒற்றுமையில்லாத கட்சிப் பிளவாயிருக்கும் காரணத்தால் அடிக்கடி எல்லாக் காரியங்களும் கவனிக்க முடியாமல்
97 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தங்கள் மெஜாரட்டி பலத்தை காப்பாற்றிக் கொள்வதிலேயே காலம் வீணாகின்றது. ஜில்லா போர்டுகள் எவ்வித கட்சி வேற்றுமையுமின்றி ஒற்றுமையாயிருந்தால் கிராம ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளை மெய்யாகவே செய்து கொடுக்க முடியும். நாம் விரும்பும் செளகரியங்களுக்குச் சர்க்காரும் உதவி செய்து அப்போர்டுகளை மதிக்கிறார்கள். கலகம் செய்து கொண்டிருக்கிற போர்டுகளையும் “சர்க்காரை ஒழிக்கும்” சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் நிறைந்த போர்டுகளையும் எப்படி சர்க்கார் மதித்து உதவி செய்வார்கள்? பல காங்கரஸ்காரர்கள் கைப்பற்றிய ஜில்லா போர்டுகளிலும் ஊழல்களும் நடப்பதைப் பார்க்கிறோம். ஆகையால் ஓட்டூுரிமையுள்ள நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு கட்சிகளை மதித்தோ கலர் பெட்டிகளை மதித்தோ ஓட்டுப் போட்டு உங்கள் பிரதிநிதிகள் ஒன்றாகக் கூடிக் கொண்டு கலகம் செய்யாமல் இருக்கும்படி பார்த்து உண்மையான பிரதிநிதிகளுக்கு உங்கள் நன்மைக்காக கவலையோடு பாடுபடும் பொறுப்புள்ள பிரதிநிதி களுக்கு ஓட்டுக்கொடுத்து பொது ஸ்தாபனங்களுக்கு அனுப்ப வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் இந்த வைபவத்திற்கு என்னைத் தலைமை வகிக்கும்படி கேட்டுக் கொண்ட தோழர்களுக்கு நன்றி கூறுகிறேன். உங்களுடைய வரவேற்புப் பத்திரம் மிகவும் வைதீக முறையில் எழுதப்பட்டிருக்கிறதென்று உங்கள் உபதலைவர் கூறிப்பிட்டார். அது உண்மைதான். நமக்கு வேண்டிய தேவைகளைக் குறிப்பிடும் ஒரு வரவேற்புப் பத்திரத்தில் நமக்கும் புரியாத பல அபிப்பிராயங்களைப் புகுத்தி வைதீக முறையில் வரவேற்புப் பத்திரங்கள் எழுத வேண்டிய அவசியமில்லை. அது உங்களுடைய பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட உணர்ச்சியே தவிர வேறில்லை. நாங்கள் மாலைக் கூட்டத்தில் வைதீகத்தின் வரலாற்றைப் பற்றியும் வேறு பல புது அபிப்பிராயங்களைப் பற்றியும் பேசுவதாக இருக்கிறோம். நீங்கள் யாவரும் வந்திருந்து விருப்பு வெறுப்பின்றி அமைதியாய்க் கேளுங்கள். உங்கள் அறிவிற்கும் அநுபவத்திற்கும் நாங்கள் கூறுவது உண்மையென்று பட்டால் அதைப் பின்பற்றி அந்தப்படி நடவுங்கள். மீண்டும் உங்களுக்கு என் வந்தனத்தைச் செலுத்துகிறேன்.
குறிப்பு: 01.08.1937 ஆம் நாள் தாரமங்கலத்தில் நடைபெற்ற தர்மபுரி ஜில்லா போர்டு தலைவர் & துணைத் தலைவர் வரவேற்புக் கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 08.08.1937
குடி அரசு- 1937 (2) o8
பதின்மூன்றாவது ஆண்டு
நம் குடி அரசு பத்திரிகை சென்ற இதழோடு 12-வது ஆண்டு
முடிந்து இன்று பதின்மூன்றாவது ஆண்டில் பிரவேசிக்கிறது. பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் அறிஞர்கள் உணர்ந்ததே யாகும். சுயநலமற்று சுதந்தரத்தோடு குறிப்பிட்ட ஒரு தனிக்கொள்கைக்கு
என்று ஒரு பத்திரிகை நடப்பது என்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும்
அப்படி இருந்தும் “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் எந்தக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே கொள்கையை உள்ளும்புறமும் உறுதியாய்க் கொண்டு எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் யாருடைய விருப்பு வெறுப்பு தயவு தாக்ஷண்யங்களுக்கும் அஞ்சாமல் ஒரே போக்கில் தன்னிஷ்டப்படி நடைபெற்று வந்திருக்கின்றது.
அரசாங்கத்தார் தொல்லை ஒரு புறமும், மதவாதிகள் தொல்லை மற்றொரு புறமும், பார்ப்பனர்கள் தொல்லையும் சூழ்ச்சியும் எல்லாப் புறமும், “குடி அரசி”ன் மூலம் வாழ்க்கை நடத்தவும் வயிறுவளர்க்கவும் விளம்பரம் பெறவும் வந்து சேர்ந்து ஏமாற்றமடைந்த தோழர்களின் தொல்லை மற்றொரு பக்கமுமாக பல வழிகளில் துன்பமும், தொல்லையும், நஷ்டமும் அனுபவித்துக் கொண்டே “குடி அரசு” தனது வளர்ச்சியிலும் கொள்கையிலும் சிறிதும் பின்னடையாமல் இது வரை உயிர் வாழ்ந்து வந்து இன்று பதின்மூன்றாவது வயதில் புகுவதைக் குறித்து அதன் உண்மை ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்கமாட்டார்கள்.
“குடி அரசை" நடுமத்தியில் ஆதரிக்க வந்த தோழர்களில் சிலர். “குடி அரசு" மீது இரண்டு குற்றங்கள் சாட்டுகிறார்கள்.
ஒன்று - “குடி அரசு பொது உடமைப் பிரசாரத்தை கைவிட்டு விட்டது” என்பதாகும்.
இரண்டு- “குடி அரசு ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறது” என்பதாகும்.
“குடி அரசு” ஆரம்பத்தில் “பொது உடமை”க் கொள்கைக்கு ஆக என்று ஆரம்பிக்கப்பட்டதல்ல என்பதையும் “குடி அரசு" ஆரம்பித்ததிலிருந்தே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் தன்னாலான உதவி புரிந்தும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியவர்களுடன் ஒத்துழைத்தும் அவர்களது 9 ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஒத்துழைப்புப் பெற்றும் நடந்து வந்திருக்கிறது என்பதையும் எல்லாத் தோழர்களுக்குமே வலியுறுத்திக் கூறுகிறோம். இதை யார் மறுப்பதாணலும் தைரியமாய் மூன் வரவேண்டுகிறோம்.
“குடி அரசு” ஆரம்பத்தில் “பொது உடமைக்' கொள்கையோடு ஆரம்பிக்கவில்லை என்றாலும் இன்று “குடி அரசு உண்மையான பொது உடமைக் கொள்கைகளை கைவிட்டு விட வில்லை. பொது உடமைப் பிரசாரம் என்பதை சட்டம் அனுமதிக்காததால் பொது உடமைப் பிரசாரம் என்பதின் பேரால் பொது உடமைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லுவதை விட்டு வைத்திருந்தது. ஆனால் உண்மையில் உலக சமாதானமும் சாந்தியும் ஏற்படுவதற்கு உண்மையான பொது உடமைத் தத்துவம் தான் ஏற்ற
மருந்து என்கின்ற எண்ணத்திலிருந்து "குடிஅரசு" சிறிதும் மாற்ற மடைய வில்லை.இன்றும் அதற்குஆகமுக்கியமாய் செய்யவேண்டிய தொண்டிலிருந்து
“குடி அரசு” ஒரு நிமிஷமும் ஓய்ந்திருக்கவில்லை. தோழர் எம்.என்.ராய் அவர்கள் தெரிவித்தபடி “இந்தியாவில் பொது உடமைத் தத்துவம் ஏற்படவேண்டுமானால் அதற்கு ஆக முயற்சிகள் செய்யப்படவேண்டுமானால் முதலில் சமூகத் துறையில் ஒரு மாறுதலை ஏற்படுத்தி ஆக வேண்டும்” என்கிற கருத்தையே “குடி அரசு" வெகு நாளைக்கு முன்பே கைக்கொண்டு அதற்கு ஆக சுமார் 10 வருஷ காலமாக விடாமல் தொடர்ந்து உழைத்து வருகிறது. “குடி அரசி”ன்: தொண்டினால் சமூகத்துறையிலும் ஒரு அளவுக்கு தக்க மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கிறது என்பதாக “குடி அரசு” உண்மையாக நம்பி இருக்கிறது.
ஆனால் “குடி அரசு" பொது உடமைக் கொள்கையை விட்டு விட்டது என்று கூறிக்கொண்டு வெளியேறி “குடி அரசை” வைதுகொண்டு திரியும் சில தோழர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் பொது உடமைக்கு உலைவைக்க நடந்துவரும் ஸ்தாபனத்தில் இருந்து கொண்டு பொது உடமைக் கொள்கையை ஒழிப்பதே தங்கள் முக்கிய கவலையாகக் கொண்ட தலைவர்களுக்கு ஜே போட்டுக்கொண்டு - அத்தலைவர்கள் வெற்றி. பெற அவர்கள் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள். ஆகவே இவர்களது கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளுமாறு விட்டு விடுகிறோம்.
மற்றும் தோழர் காந்தியார் “உப்பு சத்தியாக்கிரகம்” ஆரம்பித்த காலத்தில் அதற்கு காரணம் சர்க்காருக்கு சொல்லும்போது “நாட்டில் பொது உடமை உணர்ச்சி வலுத்துவருகிறது. இந்த உப்புக்காக்சும் சத்தியாக்கிரகமும், சட்டம் மீறும் கிளர்ச்சியும் ஆரம்பிக்காவிட்டால் இந்நாட்டு வாலிபர்கள் உணர்ச்சி அதில் பதிந்து விடும். ஆதலால் நான் இதை ஆரம்பித்தேன்" என்று சொன்னார். இதை அநேக தடவை அப்போதே “குடி அரசு" குறிப்பிட்டு கண்டித்து இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் காங்கரசின் பிரதம உண்மையான
குடி அரசு- 1937 (2) 100
செல்வாக்குள்ள தலைவர்களான தோழர்கள் ராஜேந்திரப் பிரசாத், வல்லபபாய் பட்டேல், ஜம்னாலால் பஜாஜ், ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களும் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் மூக்கிய வாயாடிகளான தோழர் சத்தியமூர்த்தி முதலியவர்களும் பொது உடமை தேசத்துக்கு கெடுதியை விளைவிப்பதென்றும் அதை ஒழிக்கவே காங்கரஸ் பாடுபடுகிறது என்றும் சொன்னதோடு சொல்வதோடு பொது உடமைப் பிரசாரம் கூடாது என்று சொல்லுவதையும் மற்றும் பொது உடமைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு உண்மையிலேயே காங்கரசில் செல்வாக்கும் மதிப்பும் சுயமரியாதையும் இல்லாமல் உதைத்து விரட்டி அடித்து வருவதும் அறியாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம். பொது உடமை வீரர் என்று போலி விளம்பரம் பெற்ற தோழர் ஜவஹர்லால் தானாகட்டும், தான் பொது உடமைத் தத்துவத்தை காங்கரசில் புகுத்துவதில்லை என்று வாக்குக் கொடுத்து காங்கரஸ் தலைவர் பதவியை வியாபார முறையில் பெற்றதும் அவர் மேடையில் பேசும் போது உம்முடைய பொது உடமைக் கொள்கை என்ன? அதை எப்படி வெற்றி பெறச் செய்வீர்கள்? என்று பல பொது உடமை வாதிகள் கேட்ட கேள்விகளுக்கு “என்னிடத்தில் இப்போது எவ்வித திட்டமும் இல்லை, அதற்கு என்று இங்கு தனியாகச் செய்யக்கூடியதும் ஒன்றுமில்லை. உலகப்புரட்சி ஏதாவது ஏற்பட்டால் அப்போது நாம் (அதாவது பொது உடமைக்காரர்கள்) அதனோடு ஒத்துழைக்க தயாராக வேண்டியதுதான்'” என்று பதில் சொல்லி இருக்கிறார். ஆகவே காங்கரசின் பொது உடமைக் கொள்கையையும் காங்கரஸ் தலைவர்களின் பொது உடமைக் கொள்கை ஆதரிப்பும் “பொது உடமை வீரர்” ஜவஹர்லால் நேருவின் பொதுஉடமை ஞானமும் முயற்சியும் உண்மையாய் உணர்ந்தவர்கள் “குடி அரசு பொது உடமைக் கொள்கையை கைவிட்டது என்றோ காங்கரசில் பொது உடமைக் கொள்கை இருக்கிறது என்றோ நாணயமாகச் சொல்ல முன்வரமாட்டார்கள்: கடைசியாக ஒரு விஷயத்தை வாசகர்களின் ஞாபகத்துக்கு கொண்டு. வந்து இந்த பிரச்சினையை முடித்துக் கொண்டு அடுத்த பிரச்சினைக்கு போகிறோம். அதாவது தோழர் ஈ.வெரா. ராஜத்துவேஷத்துக்காகவும் வகுப்புத் துவேஷத்துக்காகவும் என்று சர்க்காரால் 1934-ம் வருஷம் தண்டிக்கப்பட்டபோதும் கோர்டில் கொடுத்த தனது ஸ்டேட்மெண்டில் “குடி அரசி”ன் கொள்கை பொது உடமைத்தத்துவம் என்றும் அதைப் பிரசாரம் செய்வதற்கு ஆகவே சர்க்கார் அதற்கு ஆக நடவடிக்கை எடுத்துக் கொள்ள தைரியமில்லாமல் இம்மாதிரி ராஜத்துவேஷ கேசு எடுத்திருப்பதால் இதில் தனக்கு நியாயம் கிடைக்காதென்றும் அதனால் தனக்கு எதிர்வாதம் செய்ய இஷ்டமில்லை என்றும் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது. இதை இன்றைய முதல் மந்திரிதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தவர்கள். இது “இந்து” “மெயில்” முதலிய பத்திரிகை களிலும் வெளி வந்தது யாரும் அறியார்களா என்று கேட்கின்றோம் 1... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மற்றும் ஜெயிலில் ஈ.வெ.ராவுக்கு சர்க்கார் “ஏ” கிளாஸ் கொடுத்தும் அதை மறுத்து விட்டு “சி” கிளாசில் இருந்து வந்ததும் ஜெயிலில் இருந்து வந்த பிறகும் வேறு பல கேசுகள் மூலம் பலவித தொந்தரவுகள் கொடுத்து பலவித ஜாமீன் கேட்ட பிறகும் “குடி அரசு” பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்தாததால் “பொது உடமைப் பிரசாரம் சட்ட விரோதமானது" என்று
தீர்மானம் செய்த பிறகு மாத்திரமே ''குடி அரசு” பொது உடமைப் பிரசாரம் செய்யாதென்றும் ஆனால் பொருளாதார சமத்துவத்துக்கு - சமதர்மத்துக்கு சலியாது பாடுபடும் என்றும் “குடி அரசு" அறிக்கை வெளியிட்டதும் வாசகர்கள் அறியாததல்ல.
மற்றும் இந்த மாதிரி அறிக்கை வெளியான பிறகும் தோழர் ஈ.வெ: ராமசாமி ஜஸ்டிஸ் கட்சிக்கு சில திட்டங்கள் கொடுத்து அதை அக்கட்சியில் ஒப்புக்கொள்ளச் செய்த உடன் தோழர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்கள் அத்திட்டங்களை பொது உடமைத் திட்டம் என்றும் அவற்றை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்றும் இந்து
பத்திரிகையில் எழுதி சர்க்காருக்கு சாடி சொன்னதும் வாசகர்கள் அறிந்ததேயாகும்
நிற்க, ஜஸ்டிஸ் கட்சிக்கு “குடி அரசு” ஆதரவளித்ததால் “குடி அரசும் ராமசாமியும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கப்பட்டதாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு
சர்க்கார் எதிரியானார்கள் என்று ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலர் இன்றும் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் சுக்ஷியிலிருந்து தோழர் ராமசாமியை விரட்டவும் “குடி அரசை ஒழிக்கவும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிலர் எவ்வளவோ பாடு பட்டார்கள்.
ஒரு உதாரணம் காட்டுகிறோம். அதாவது தோழர் ஈ.வெ.ரா. தனது திட்டங்கள் சிலவற்றை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் வலியுறுத்தப் போவதாக
“குடி அரசில்” வெளிப்படுத்தியவுடன் சென்னையில் கடைசியாக நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டுக்கு ஈ.வெ.ராவுக்கு பிரதிநிதி டிக்கட் கொடுக்க மறுத்து விட்டார்கள். தோழர்கள் சி.டி. நாயகம், டி.ஏ.வி. நாதன் முதலியவர்கள் பாடு பட்டும் வரவேற்பு கமிட்டியார் மறுத்து விட்டார்கள். கடைசியாக செட்டி நாடு குமார ராஜா அவர்கள் தகவலுக்கு இவ்விஷயம் கொண்டு போகப்பட்டு அவரது சிபார்சின் மீது மகாநாட்டு பிரதிநிதி டிக்கட் கிடைத்தது என்றால் ஜஸ்டிஸ் கட்சியால் ராமசாமியோ “குடி அரசோ” எந்த விதத்தில் தனது கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டதாகச் சொல்ல. முடியும்? அன்றியும் அக்கட்சியை ஆதரித்ததால் இன்ன சுயநலம் பெற்று விட்டது என்று தான் சொல்ல முடியுமா? உண்மையை சொல்ல வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சி தலைவர் தோழர் பொப்பிலிராஜா அவர்கள் சமதர்மக்கொள்கையை கட்சியில் புகுத்தி அவரது தலைமையில் பல சட்டங்கள் செய்திருக்கிறார்கள்.
குடி அரசு - 1937 (2) 102
அவற்றை காங்கரஸ் எதிர்த்து வந்திருப்பதோடு இப்போதும் அழிக்கப் புறப்பட்டு விட்டது. ஆகவே இந்த இரண்டு காரியங்களால் “குடி அரசு" எவ்விதத்திலும் கொள்கை மாற்றம் அடைந்து விட்டதா என்பதை பொதுமக்கள் யோசித்துப் பார்க்கட்டும்
“குடி அரசு" எப்படியோ பன்னிரண்டு வருஷம் பிழைத்து விட்டது. இன்று பதின்மூன்றாவது வருஷத்தில் பிரவேசிக்கிறது. இது வரை நடந்து வந்தது போலவே இனியும் நடந்து வரும். வாசகர்கள் இது வரை அபிமானித்தது போலவே இனியும் அபிமானித்துவர வேண்டுகிறோம்
சமீபகாலத்தில் “குடி அரசு"க்கு 12 வருஷம் முடிந்த ஒரு ஆண்டு விழா நடத்த உத்தேசித்து இருக்கிறோம். அதுபோது அபிமானிகளின். ஆதரவை முன்னிலும் அதிகமாக “குடி அரசு” எதிர்பார்க்கும்
குடி அரசு - தலையங்கம் - 15.08.1937
103 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அட்ஹாக் கமிட்டிப் புரட்டு
எந்த இயக்கத்துக்கும் ஸ்தாபனத்துக்கும் சட்ட திட்டங்களும் கட்டுப்பாடும் அவசியமே. சட்டதிட்டங்களும் கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும் ஸ்தாபனங்களும் விருத்தியடையவே மாட்டா. ஆனால் சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பேரால் சூழ்ச்சிகள் நடைபெற்றால் அந்தச் சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் ஒழித்து ஒழுங்கு முறையை நிலைநாட்ட வேண்டியது முக்கியமாகும். சட்ட சபை, ஜில்லாபோர்டு, நகரசபை, பஞ்சாயத்து போர்டு முதலிய ஸ்தாபனங்களுக்கு பிரதிநிதி களைக் பொறுக்கியெடுக்க காங்கரசிலே அகில இந்திய அட்ஹாக் கமிட்டியும் ஜில்லா அட்ஹாக் கமிட்டிகளும் நகர, கிராம அட்ஹாக் கமிட்டிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே காங்கரஸ் காரியங்கள்.
எல்லாம் ஒழுங்காக நடைபெறுவதாக சாமானிய ஜனங்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் கிரியாம்சையில் நடப்பதென்ன?
அட்ஹாக் கமிட்டிகளில் எல்லாம் சூழ்ச்சிகளும் பித்தலாட்டங்களுமே தாண்டவமாடுகின்றன. உதாரணமாக பம்பாயை எடுத்துக்கொள்ளுவோம் பம்பாய் சட்டசபை காங்கரஸ் கட்சிக்கு காங்கரஸ் நியாயப்படி தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவரும் பம்பாய் முதன் மந்திரி ஆக வேண்டியவரும் தோழர் நரிமன் ஆகும். அவரே இப்பொழுது பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டித் தலைவராயிருந்து வருகிறார். ஆனால் அகில இந்திய பார்லிமெண்டரி கமிட்டித் தலைவர் சர்தார் படேல் சூழ்ச்சியினால்.
நரிமன் அலக்ஷ்யம் செய்யப்பட்டு விட்டார். சட்டசபை காங்கரஸ் கட்சித் தலைவர் தேர்தலுக்கு முன் தினம் வரை அநாமதேயராய் இருந்த ஒரு தெக்காணத்துப் பார்ப்பனர் பம்பாய் காங்கரஸ் சட்டசபைக் கட்சித் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு முதன் மந்திரியாகவும் நியமனம் பெற்றுவிட்டார். சென்னை மாகாணத்திலே தமிழ் நாடு காங்கரஸ் கமிட்டித் தலைவர் தோழர் முத்துரங்க முதலியார் அலக்ஷயம் செய்யப்பட்டதையும் காங்கரசை விட்டு ஓடிப்போன தோழர் ராஜகோபாலாச்சாரியார் சட்டகபை
கட்சித் தலைவராகி முதன் மந்திரியானதையும் எல்லோரும் அறிவர். தமிழ்நாட்டு அட்ஹாக் கமிட்டிகளின் போக்கை நுட்பமாகக் கவனித்தால் பார்ப்பனரல்லாதாரை நசுக்கும் பொருட்டே அந்த அட்ஹாக் கமிட்டிகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறதாகத் தோன்றுகிறது. தோழர்கள் ராமலிங்கம்
குடி அரசு- 1937 (2) 104
செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், ரத்னவேலுத் தேவர் ஆகிய பார்ப்பனரல்லாதார் மதிப்பிழந்ததற்கும் இந்த அட்ஹாக் கமிட்டிகளின் திருவிளையாடல்களே காரணம். பார்ப்பனர்களுக்கு வேண்டியவர்களை ஆதரிப்பதும் வேண்டாதவர்களை அலக்ஷ்யம் செய்வதும் இந்த அட்ஹாக் கமிட்டிகளின் வாடிக்கையாக இருந்து வருகின்றது. இந்த அட்ஹாக் கமிட்டிகளின். அட்டூழியங்களை உணர்ந்த காங்கரஸ் வாதிகள் ஒழுங்கு நடவடிக்கை களுக்கு
பயந்து வாயை மூடிக்கொண்டு இருக்கும்படி நேர்ந்திருக்கிறது. ஆகவே இந்த அட்ஹாக் கமிட்டிகளின் ஏமாற்றத்துக்கு ஆளாகாமலிருக்க தேவையானவை களைச்செய்ய வேண்டியது பொது ஜன க்ஷேமத்தைவிரும்புவோர் கடமையாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.08.1937
105 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
முதல் மந்திமி மாய அழுகை!
சம்பளம் குறையாவிடீல் ஏழைகளுக்கு சோறில்லையாம்!
இவருக்கு மாதம் ரூபாய் 800 எதற்கு?
சென்னை, ஒய்.எம்.சி.எ. தேகப்பயிற்சி கல்லூரியின் ஆரம்ப விழாவில் 12-8-37ல் சென்னை சரணாகதி மூதல் மந்திரி ஆச்சாரியார் பிரசங்கம் செய்ததில் ஒரு பாகம் வருமாறு:-
வீண் மாய அழுகை ஏன்? ஏழை மக்கட்கு அன்னமளிக்கவேண்டி மிக அதிகச் சம்பளங்களைக் குறைக்க வேண்டியது அவசியமாகின்றது. சர்க்கார் செலவைக் குறைக்க வேண்டும். தாங்களாகவே ஒவ்வொருவரும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்கப்பட்டது. இதற்கு வந்திருக்கும் பதில்கள் ஏமாற்றமளிக் கின்றன. தாங்களாகவே சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுகிறார்களோ இல்லையோ? சர்க்கார் செலவைக் குறைக்காவிட்டால் ஏழைகட்கு சோறில்லை. எல்லா ஜனங்கட்கும் உணவளிக்க வேண்டுமென்றே நான் கேட்கிறேன்.”
என்று வழக்கம்போல் மாய அழுகை அழுகிறார். இந்த வீண் மாய அழுகை எதற்காக?
இவருக்கு என்ன செலவு? சென்னை சரணாகதி முதல் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் அவர்கட்கு மாதச் சம்பளம் ரூ. 500 படிச்செலவு மாதம் ரூ. 300 ஆக ரூ.800 வாங்குகிறார். இது தவிர சர்க்கார் செலவில் 18000 ரூபாயில் 6 மோட்டார் கார்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இவருக்கு மாதம் ரூ. 800க்கு என்ன செலவிருக்கின்றது? இதுதானா சிக்கனம்? இந்தியரின் சராசரி தினசரி வரும்படி 0-1-9 என்று வறுமையை வர்ணிக்கின்றோம். இந்திய மக்கள் பட்டினியாலும் வேலையில்லாக் கஷ்டத்தாலும் வரிப்பளுவாலும் துயரப் படுகின்றார்கள் என்று ஆச்சாரியார் பொது மேடைகளில் மாய அழுகை அழுகிறார். சென்னை சரணாகதி முதல் மந்திரியார் ஆச்சாரியார் அவர்களுக்கு
மாதச் செலவிற்கு ரூபாய் ஐம்பது இருந்தால் அதுவே அதிகம். அவர்: சிக்கனமாக நடக்க பொது ஜனங்கட்கு வழிகாட்டக் கூடியவர். உதாரணமாக தனது வேஷ்டியை தானே தோய்த்து சுத்தம் செய்து கொள்கிறார். தனது
குடி அரசு- 1937 (2) 106
வீட்டுக் கக்கூசையும் தானே எடுத்து சுத்தப்படுத்தி விடுகிறார். சாப்பாட்டு விஷயத்திலும் கீரை, தண்டு, காய் முதலிய எளிய உணவே அவருக்கு போதுமானதாகும். அவருடைய உடைகள் சம்பந்தமாகவும் அதிகச் செலவு கிடையாது. மற்றும் சென்னைநகரில் தனி சொந்தக் கார் கூட வேண்டியதில்லை. எங்கும் தாராளமாக பஸ் சர்வீஸ் இருக்கின்றது. குதிரை வண்டி, மாட்டு வண்டிகட்கு நகரத்தில் பஞ்சமே கிடையாது. வேறு களியாட்டங்கட்கும் கிளப்புகளுக்கும் சென்று ஆச்சாரியார் அதிகப் பொருள் செலவு செய்து விட மாட்டார் என்பது உறுதி. மற்றும் விளம்பரங்கள், மாலைகள், வரவேற்புகள் உபசாரங்கள் விரும்பினால் அதுவும் நகரசபை ஜில்லா போர்டு பொது ஸ்தாபனங்கள் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. வெளியூர்கட்கு பந்து மித்திரர்களைப் பார்க்கப் போக வேண்டுமானால் தனி சலூன் தயாராக இருக்கின்றது. முதல் வகுப்பு வேண்டாமென்றால் (பொது ஜனங்களை ஏமாற்ற மூன்றாம் வகுப்பு முழுதும் ரிசர்வ் செய்து உல்லாசமாகப் பிரயாணம் செய்யலாம். சரணாகதி முதல் மாதிரி பதவி பெறுவதற்கு மூன் மாதம்
ரூ. 25ல் 50ல் சிக்கனமாக வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால் இப்பொழுது ஆச்சாரியாருக்கு மாதம் ரூபாய் 800-க்கு எவ்வித செலவும் கிடையாது
ஏதாகிலும் வேறு செலவுகளிருந்தாலும் “ஏழைகள் பசியைப்போக்க” பிறருக்கு உபதேசம் செய்யும் ஆச்சாரியார்தனது மாதச்சம்பளத்தையும் படிச் செலவையும் குறைத்து மாதம் 50 அல்லது ரூ. 100 மட்டும் ஏன் பெற்றுக்கொள்ளக் கூடாது? இவர் சகபாடி சரணாகதி மந்திரிகளையும் ஏன் மாதம் ரூ. 50 அல்லது ரூ.100 பெற்று கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது? சட்டசபை அங்கத்தினர். கட்கு மாதச் சம்பளம் ரூ. 100 எதற்கும் மாதம் ரூ. 10க்கும் 15க்கும் வழியின்றி கூப்பாடு போட்டு காங்கரஸ் தியாகிகட்கும் எளிய வாழ்க்கையில் மோகமுடைய தேசபக்தர்களுக்கும், “ஜெயிலில் மோரில்லாக் கஞ்சியும், உப்பில்லாக் கஞ்சியும், பூச்சி புழுக்களுடைய குழம்பும்” அரைவயிறு உண்டு பழகிய உண்மைத் தொண்டர்கட்கும், உத்தம தேசீய தலைவர்கட்கும், மாதம்
ரூ. 100 சம்பளமும் 500 ரூபாய் சம்பளமும் 300 ரூபாய் படிச் செலவும் எதற்காக? இந்த அக்கிரமச் சம்பளங்களைக் குறைத்து ஏழை மக்களின் பசிப் பிணியை நீக்கலாகாதா? ஆச்சாரியார் முதலில் தனது சம்பளத்தைக் குறைத்து வழிகாட்டுவாரா?
எப்படி முடியும்?
மற்ற சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் தாங்களாகவே சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுமாம்! இது எப்படி முடியும்? ஊருக்கு சிக்கன. உபதேசம் செய்யும் ஏழை பங்காளருக்கு மாதம் 50, 75-ல் பிழைத்தவருக்கு மாதம் ரூபாய் 800 மூதல் 1000 ரூபாய் வரை செலவிருந்தால் தினசரி ஆடம்பரமாகவும் செளகரியமாகவும் காலமெல்லாம் வாழ்ந்துவந்த பெரிய உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று உபதேசம் செய்தால் அது எப்படி நியாயமாகும்?
107 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தங்கள் கையிலிருந்த சொத்துக்களையெல்லாம் விற்றும் கடன். வாங்கியும் படித்துவிட்டு பிறகு உத்தியோகத்தின் மூலம் தனது குடும்பத்தைக் காப்பாற்றவும் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கவும் பழைய கடன்களை கொடுக்கவும் பட்டினியின்றி காலம் கடத்தவும் மற்ற இதர செலவுகட்கும் போதாமல் கஷ்டப்படும் வகையில் தங்கள் குடும்பச் செலவுகளை அமைத்துக்கொண்டு அவதிப்படுகிறவர்கள் எப்படி தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன் வருவார்கள்? அவர்கட்கு எளிய வாழ்வில் இன்பம் எப்படி ஏற்படும்?
இவர் வழி காட்டுவாரா?
சரணாகதி முதல் மந்திரி ஆச்சாரியார் முதலில் தனது சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு மற்ற சகபாடிகளான சரணாகதி மந்திரிகளையும் தாமதியாமல் உடனே சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளச் செய்து எல்லா மந்திரிகளும் உடனே பொது இடத்தில் பொது செலவில் எனிய முறையில் நித்திய வாழ்க்கையை நடத்திக் காட்டி ஆடம்பரம், விளம்பரம், வீண் செலவு களைக் குறைத்துக் கொண்டு பிறகு பெரிய சம்பள உத்தியோகஸ்தர்களுக்கு
புத்தி கூறட்டும். முதலில் ஆச்சாரியார் வழிகாட்டுவாரா? அல்லது மாதம் ரூ.800, 1000 சம்பளம், படிச்செலவு பெற்றுகொண்டு ஊருக்கு உபதேசமும், ஏழை பொது மக்கட்கு “பசிக்கொடுமையை யொழிக்க மருந்து சம்பளத்தைக் குறைக்க வேண்டும்” என்று மாய அழுகை அழுது கொண்டு பாமர மக்களை ஏமாற்றப் போகின்றாரா?
குடி அரசு - கட்டுரை - 15.08.1937
குடி அரசு- 1937 (2) 108
சுயாட் சியா? பழிவாங்கும் ஆட்சியா?
1
அக்கிரகாரச் சனியன்கள் பிரிட்டிஷ் சர்க்காரை சரணாகதி அடைந்து
மந்திரி ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு துறையிலும் பழி வாங்கும் குணத்தையும் அக்கிரகார ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்தும் கவலையையும் கொண்டு சூழ்ச்சி ஆட்சி
நடத்தப்பட்டு வருகின்றது அரசியல் துறையில் இச்சரணாகதி கூட்டங்கள் எவ்வித கொள்கைகள் கையாண்ட போதிலும் நமக்கு கவலையில்லை. வெள்ளைக்காரர்கள் விஷயத்தில் எவ்வளவு சீக்கிரமாக விரட்டி அடிக்க முயற்சித்தாலும் நாம் குறுக்கே நிற்கப்போவதில்லை.
ஆனால் பொய் பித்தலாட்டங்கள் பேசி பாமர மக்கள் ஏய்த்து பிரிட்டீஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் ஆட்சியை உலகமுள்ளளவும் காப்பாற்றித் தருவதாய் பிரமாண வாக்குக்கொடுத்து பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கத்தக்க சூழ்ச்சி ஆட்சி நடத்துவதை யார் தான்- எந்த உண்மைத்தமிழ் மகன் தான் சகித்துக்கொண்டிருக்க மூடியும்? பிரிட்டிஷ் ஆட்சி முறையைப்பற்றி நாம் குறை கூற வரவில்லை. ஏனெனில் அவர்களது ராஜ தர்மம் எல்லாம் எப்படியாவது இந்தியாவில் பிரிட்டிஷ் (யூனியன் ஜாக்) கொடி பறக்கவேண்டும் என்பதே ஒழிய, மற்றபடி நீதி, ஒழுங்கு, யோக்கியம், நாணயம் என்பவைகள் ஆகியவற்றிற்குப் பொருள் அவர்கள் அகராதியில் வேறு மாதிரியாகவும் நம் அகராதியில் வேறு மாதிரியாகவும் இருந்து வருகிறது.
இந்த ஒரு காரணத்துக்கு ஆகவே நாம் பார்ப்பனியம் நம் நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியாவை விட்டே உலகத்தை விட்டே அடியோடு ஒழியும் படியாக அழிக்கப்பட வேண்டும் என்பதாகப் போராடி வருகிறோம். இந்தப்போராட்டம்நமக்குஆக மாத்திரமேஅல்ல; அதாவது பார்ப்பனால்லாதார் சமூகத்துக்கு மாத்திரமே அல்ல; உலக முற்போக்குக்கும் மனித சமூக முன்னேற்ற உயர்வுக்குமே என்று கருதி நடத்தி வருகிறோம்
மந்திரி சபை அமைப்பைப் பற்றி முன்னமேயே பல விஷயங்கள்
எழுதி இருக்கிறோம். மற்றும் பல பத்திரிகைகள் மூலமும் பல அறிஞர்கள் பிரமுகர்கள் மூலமும் வெளியாகி இருக்கின்றன. அவற்றைப் பற்றிய மற்றும் அநேக ரகசியங்கள் இருக்கின்றன. அவை ஒருபறமிருக்கட்டும். இப்போது அம் மந்திரி ஆட்சியின் யோக்கியதைப்பற்றியே இதில் கூறுகிறோம். அக்கிரகார மந்திரி ஆட்சியை தோழர் சேலம் பாரிஸ்டர் எஸ்.வி. ராமசாமி சரியான உபமானத்துடன் வருணித்துக் காட்டினார். அதாவது இன்றைய மந்திரி ஆட்சியை ஒரு பிளேக்கு வியாதிக்கு ஒப்பிட்டார். அதுபோலவே அக்கிரகார சரணாகதி மந்திரி ஆட்சி இந்த நாட்டு முன்னேற்றத்துக்கும் சமூக வுயர் வாழ்வுக்கும் பிளேக்கு வியாதிபோன்று நாசத்தைக் கொடுக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது. அக்கிரகாரஆட்சி இன்று நம் மக்களின் அறிவுசுதந்திரம், பொருளாதாரம், நாகரிகம் ஆகிய மூன்று நான்கு முக்கிய காரியங்களிலும் வெளிப் படையாய் தைரியமாய் பழிவாங்கும் தன்மையோடு கை வைத்து காரியங்களைக் காட்டு மிருகத்தனமாய் நடத்த ஆரம்பித்து விட்டது. மனித சமூக அறிவைப் பாழ்ப்படுத்த வேண்டியதற்கு ஆகவே ஹிந்திபாஷையைத் தமிழ் மக்கள். படித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் கல்வியும், உண்மையான
சுதந்திரத்தை ஒழிப்பதற்கே பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் வர்ணப் பெட்டி முறைகளைப் புகுத்தவும், பொருளாதார முன்னேற்றமும் நாகரிகமும் பாழ்படவே கதரைப் பிரதானப் படுத்தவுமான காரியங்களில் இறங்கிவிட்டது.
கல்வி விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கிய விஷயம் கையாளப்பட வேண்டியது அவசியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.
மற்றொன்று மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ
அலுவல் பார்க்கவோ பயன்படவேண்டும்.
நம் நாட்டைப் பொறுத்தவரை இவ்விரண்டு காரியங்களுக்கும் அனுகூலமான கல்விக்கு ஏற்ற பாஷை தமிழும் ஆங்கிலமுமே ஆகும். பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டில் ஏற்பட்டிருந்தும் 200 வருஷகாலமாக அந்த ஆட்சி நடந்தும் கூட பார்ப்பன ஆதிக்கத்தின் பயனால் இந்த இரண்டுபாஷைகளிலும் பொது மக்களுக்கு சராசரி 100க்கு 10 பேருக்கு
குடி அரசு - 1937 (2) 110
கூட எழுத்து வாசனையே இல்லாமல் போய் விட்டது. தமிழ்நாட்டில் தாய் பாஷையான தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மக்களே இன்று 100க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலம் கற்ற மக்கள் இன்று 100க்கு 2 பேரோ 3 பேரோ இருக்கக் கூடுமானால் அதிலும் உள்ளதில் முக்கால்வாசிப் பேர்கள் பார்ப்பனர்களே யாவார்கள். தமிழ்பாஷையோ 100க்கு 100 பேர்கள் பார்ப்பனர்கள் தான் கற்றிருப்பார்கள். ஆகவே அறிவுப்பழக்கம், சமூகக் கட்டுப்பாடு, பொது வாழ்வு ஆதிக்கம் ஆகிய காரியங்களிலும் மேன்மையான. வாழ்க்கை நிலை உயர்விலும் பார்ப்பனர்களே முன்றிற்கிறார்கள். மற்றவர்கள். எவ்வளவுதான் மேன்மையான குணமுடையவர்களாய் இருந்தாலும் இன்றும் கீழ் மக்கள் கூட்டத்திலேயே சேர்க்கப்படுகிறது. இனியும் சுமார் 25 -வருஷத்துக்கு வெறும் தமிழும் ஆங்கிலமும் மாத்திரமே அதாவது அறிவுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற கல்விக்கு உற்ற பாஷை மாத்திரமே கட்டாயமாய் கற்பிப்பது என்று வைத்தாலும் இன்றுள்ள நிலை ஒரு கால்வாசியாவது மாற்றமடையும் என்று சொல்ல முடியாது. 100க்கு 25, 30 பேர்களாவது அறிவும் மேன்மையான வாழ்வும் வாழத் தகுதி உடையவர்களாக ஆகிவிடுவார்கள் என்றும் சொல்லி விட முடியாது இப்படிப்பட்ட நிலையில் அதுவும் ஏதோ ஒரு வழியில் பொது உணர்ச்சி ஏற்பட்டு எல்லா மக்களும் படிக்கவேண்டும் என்றும் எல்லா மக்களுக்கும் படிப்பு செளகரியம் ஏற்படுத்த வேண்டும் என்றும் உணர்ச்சி பரவி இருக்கிற இந்த காலத்தில் அதை பாழ்படுத்துவதற்கு பாமரமக்கள் கல்வியில் - மானத்தில் மனிதத் தன்மையில் வேரைப்பறித்து நெருப்பு வைப்பதற்கு ஆக இன்று பார்ப்பன ஆட்சியானது பிள்ளைகளின் சிறு பிராயத்தில் இருந்தே ஹிந்தியை புகுத்த வேண்டுமென்றும் அதுவும் கட்டாயமாக வைக்கப்பட்டு படிப்பிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தப் படுத்தும் படியான. ஒரு கல்வி முறையை ஏற்படுத்துவதென்றால் இதில் யோக்கியமோ நாணயமான கல்விமுறை அபிப்பிராயமோ இருக்கிறதென்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம்
தமிழும் இங்கிலீஷும் ஆகிய இரண்டு பாஷைகள் மாத்திரம் இருந்தே இன்று பள்ளியில் படிக்கும் மாணவர்களில் அதிலும் பார்ப்பனரல்லாத மாணவர்களில் 100க்கு 25 பேர் கூட தேர்ச்சி பெற முடிவதில்லை என்பது புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம். அப்படி இருக்க அதாவது 8 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைப் பிராயத்தில் உள்ள பிள்ளைகளை
3 பாஷையில் தேர்ச்சி பெற வேண்டுமென்று நிர்ப்பந்தப்படுத்துவது என்றால் இது மக்களை படிக்கச் செய்யாமல் - படித்து தேர்ச்சி பெற்றவர்கள் என்று செய்யச் செய்யாமல் பாழாக்கி குட்டிச்சுவராக்கும் சூழ்ச்சித்திறமா யோக்கியமான கல்வி புகட்டும் திறமா என்று கேட்கின்றோம்.
ஹிந்திகட்டாயபாடமாகஆகும்பட்சத்தில் கண்டிப்பாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் 100க்கு 90க்கு மேல் தேர்ச்சியில் தவறிவிடுவதோடு பார்ப்பனப் மம... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பிள்ளைகள் 100க்கு 100 பிரைஸ் விழுந்து தேர்ச்சி பெற உதவியாயிருக்கும். ஆகவே பார்ப்பனரல்லாத பிள்ளைகளை மேல் படிப்பில்லாமல் அழுத்தத்தான்
இது (ஹிந்தி) ஒரு நல்ல சாதனமாகுமே தவிர இந்தி மனித வாழ்க்கைக்கோ அறிவுக்கோ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் இன்றியமையாததாகாது
கட்டாயப் படிப்பு என்பது நாட்டின் சமூகத்தின் பொதுக்காரியமாகும் அதற்கு ஆக செலவு செய்யும் நேரம், பணம், ஊக்கம் ஆகியவைகள் நாட்டின் பொது சொத்தாகும். அப்படிப்பட்டதைக் கொண்டு போய் பாழான- பார்ப்பன சூழ்ச்சியான - முட்டாள் தனத்துக்கு வித்தான காரியத்துக்கு பயன்படுத்துவது என்றால் யார் தான் சம்மதிக்க முடியும்?
கம்பராமாயணத்தின் கருப்பொருள் கண்டு பிடித்துப் படித்த மக்களில் 100க்கு 5 பேருக்காவது சுயமரியாதையோ, சமூகப் பற்றோ, தாய் மொழிப் பற்றோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஆரிய ராமாயணத்தை நெருப்பிலிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஆதியில் நாம் சொன்ன காலத்தில் “ராமாயணக் கதை ஆபாசமானது, வெறுக்கத் தகுந்தது, கீழ் மக்கள் இயற்கையையும் கெட்ட குணங்களையும் சித்தரிப்பது என்றும் ஆனால் கம்பன் கவித்திறம், தமிழின் கலைத்திறம் முதலியவை கம்பராமாயணத்தில் மலத்தில் கிடக்கும் முத்துப் போல் பொதிந்துகிடப்பதால் அதைளிக்கக்கூடாது” என்றும் சொன்ன கம்பராமாயணக்
கருப் பொருள் பண்டிதர்கள் இன்று பக்கா பட்டரான ஆச்சாரியார் துளசிதாஸ் ராமாயணம் படிப்பதற்கு ஆக ஹிந்தியை குழந்தை களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து வரும் போது “மனைவியை மற்றொருவன் சேலையை அவிழ்த்துப் பலாத்காரம் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள் கதை” போல் இன்று வாய் திறவாமல் அடிமையாய் துரோகியாய் தமிழ்மாதுக்கு மாதுரு துரோகியாய் வீற்றிருக்கும் காரணம் என்ன என்று கேட்கிறோம்
குடி அரசு - 1937 (2) 112
அதை நம் மக்கள் சிறிதும் அறியவில்லை. ஆரிய புராணங்களை ஆரிய கடவுள்களின் தன்மைகளை மனிதன் படித்தால் அவன் மனிதன் என்று சொல்லக்கூடிய நிலையை அடைய முடியுமா என்று கேட்கின்றோம்
வசதி இருக்கிறது. நமது தமிழ் பண்டிதர் கம்பராமாயணத்தில் கருப் பொருள். தேடவும் திருவிளையாடல் புராணத்துக்கு 77வது உரை எழுதவும் பெரிய புராணத்துக்கு 113 வது உரையும் தத்துவார்த்தமும் எழுதவும் தான் தகுதியுடையவர்களாகவும் கவலையுடையவர்களாகவும் இருக்கின்றார்களே ஒழிய, பகுத்தறிவு அடையத்தக்கதாகவோ, மானத்துடன் பிழைப்புக்கு ஏற்ற ஒரு தொழில் கற்றுக்கொள்ளத் தக்கதாகவோ இன்று ஒரு புத்தகமும் ஒருவராலும் எழுதப்பட்டதாக இல்லை. சாமி வேதாசல மென்னும் மறைமலை
அடிகள் இந்த கருத்தை மனதில் கொண்ட “பாவத்துக்கு” சற்றேறக்குறைய 100க்கு 75 தமிழ்ப் பண்டிதர்கள் அடிகளை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க முற்பட்டார்கள் என்றால் தமிழ்ப் படிப்பதினாலாவது தமிழ் தாய் பக்தியினாலாவது மனிதனுக்கு சுயமரியாதை உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஒரு ஆரியப் பார்ப்பனர்- நாட்டை மனுஆட்சிக்கு கீழ் கொண்டு வரும் முயற்சிக்கு சூழ்ச்சி கர்த்தர் - தமிழ் பாஷையை எப்படி பரப்புவது, எப்படி மேன்மைப் படுத்துவது என்பதை விட்டு விட்டு குழந்தை களுக்கு கட்டாயமாக ஹிந்தி கற்பிக்க வேண்டும், துளசிதாஸ் ராமாயணம் மற்ற புராணம் ஆகியவைகள் மூலம் படிக்க வேண்டும் என்று சொல்லுவது என்றால் இந்த நாட்டில் உண்மைத் தமிழ் ரத்தம் ஓடும் மக்கள் ஒருவர். இருவராவது இருக்கிறார்களா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது
இந்த சரணாகதி மந்திரிகள் வாழ்வு இன்னும் எத்தனை நாள் என்பது ஒவ்வொருவரும் அறிந்ததேயாகும். உள்ளுக்குள்ளாகவே கரையான். அரிப்பது போல் ஆளுக்காள் குழி தோண்டும் புகைபுகைந்து கொண்டு இருக்கிறது ஒரு பக்கம், பொது ஜனங்கள் இவர்களுக்கு ஓட்டுக் கொடுத்த முட்டாள் தனத்தை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டு அடியோடு கவிழ்க்க சமயம் பார்த்து இருப்பது ஒருபக்கம், தாங்களாகவே விட்டு விட்டு ஓடித் தீர வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை அறியாமலே வளர்ந்து வருவது ஒருபக்கம், மற்றொரு பக்கம் இன்னம் சில கழுத்தறுப்புகள். கத்தி ஏந்திக் கொண்டிருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் வேகின்ற வீட்டில் பிடுங்கினவரையில் லாபம் என்பதுபோல் வட மொழியைப் புகுத்தி விட்டுப்போக துணிவு கொண்டிருப்பதற்கு எப்படி இடம் கொடுக்க முடியும் என்று கேட்கிறோம். W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆகையால் ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் பொதுக் கூட்டம் போட்டு இந்த சூழ்ச்சியைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு மேன்மை தங்கிய கவர்னருக்கும்தமிழ்-வேளாளமந்திரி கனம்டாக்டர்சுப்பராயன் அவர்களுக்கும் ஆரிய மந்திரி கனம் ஆச்சாரியாருக்கும் பத்திரிகைகளுக்கும் தெரியப் படுத்த வேண்டும்
விடுதலைப் பத்திரிகை மற்றும் ஒரு யோசனை சொல்லி இருக்கிறது அதன்படி திருநெல்வேலியிலிருந்து ஒரு “ஜாதா” அதாவது தமிழ் பாஷை அபிமானம் கொண்ட மக்கள் முறையீட்டுக் கூட்டம் ஒன்று தொடங்கி நேரே சென்னை வரையில் கால்நடையாய் நடந்து வழியில் ஆங்காங்கு கூட்டம் போட்டு தீர்மானமும் செய்து மக்களுக்கு ஹிந்திப் புரட்டையும் சூழ்ச்சியையும் விளக்கிக் கொண்டு போய் சரணாகதி மந்திரிகளுக்கு தெரிவித்துத் தமிழைக் காப்பாற்றவும் விரோதமான சூழ்ச்சியை அழிக்கவும் முயற்சிக்க வேண்டியது முக்கிய கடமையாகும். இந்த சமயம் தமிழ் மக்கள். தூங்கி இருப்பார்களேயானால் தமிழ் மக்கள் பின்னால் உண்மையிலேயே சூத்திரர்களாகவே ஆகிவிடவேண்டி வரும். இதில் காங்கிரஸ் ஜஸ்டிஸ் சுயமரியாதை என்கின்ற பிரிவுகளோ, ஆஸ்திகம் நாஸ்திகம் என்கின்ற உணர்ச்சிகளோசைவம் வைணவம் என்கின்ற சமயபேதமோ வேண்டியதில்லை. என்பதோடு ஆரியரல்லாத தமிழ் மக்கள் யாவரும் ஒன்றுகூடி முயற்சித்து வேலை செய்ய வேண்டியது அவசியமும் அவசரமுமான காரியம் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்
மற்ற விஷயங்களான கதர், எலக்ஷன் விஷயங்களைப்பற்றி பின்னால் எழுதுவோம்
குடி அரசு - தலையங்கம் - 22.08.1937
குடி அரசு- 1937 (2) 114
சூழ்ச்சிக்குப் பிறகு வந்த புத்தி “ஹிந்துமத பமிபாலன போர்டு அவசியமே?
கவர்னர் மறுத்த பிறகே மந்திமிக்குப் புத்தி வந்ததா?
- ஊர் வம்பு
ஜஸ்டிஸ் கட்சியாரின் அரும் பெரும் முயற்சியால் பனகல் ராஜா அவர்கள் காலத்தில் ஹிந்து மத பரிபாலன போர்டுகள் ஏற்பட்டு அறநிலையப்
பாதுகாப்புச் சட்டம் செய்யப்பட்டது. அக்காலத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் பட்டர்களும் குருக்கள் கூட்டத்தார்களும் சோம்பேறி வேதாந்தக் கூட்டப் பார்ப்பனர்களும் பலமாக எதிர்த்தார்கள். “சர்க்கார் மதத்தில் தலையிடக்கூடாது” என்றும், “ஹிந்து மத கோவில், மடம் ஆகிய நிர்வாகங்களில் சர்க்கார் தலையிடுவது அக்ரமம்” என்றும் ஆர்ப்பாட்டம்
செய்தார்கள். கோவில் சொத்துக்களைத் தங்கள் சொத்துக்களாகக் கருதி பங்கு போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருந்த தர்மகர்த்தாக்களும் குருக்கள்களும் பெரும் கூச்சல் போட்டார்கள். “மத விஷயங்களில் சர்க்கார் தலையிடு வதில்லை” என்று மகாராணியார் வாக்குக் கொடுத்திருப்பதாக வக்கீல் கும்பல்கள் வம்பளந்தார்கள். இப்படி பல எதிர்ப்புகளுக்கிடையில் “அறநிலையப் பாதுகாப்பு மசோதா” சட்டம் செய்யப்பட்டு விட்டது இப்பொழுது எங்கும் “ஹிந்துமத பரிபாலன போர்டுகள்” ஏற்பட்டு எல்லா தேவஸ்தானத்திற்கும் கமிட்டிகள் நியமித்து கணக்கு வரவு செலவுகள். ஒழுக்காக வைக்கும்படியும் எல்லாச் சொத்துகளையும் கமிட்டியாரால் நன்கு பாதுகாக்கும்படிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முன்னிருந்த அக்ரம நிர்வாகங்கள் ஒருவாறு குறைந்து வந்திருக்கின்றன. கமிட்டியார் முயற்சியால்
பல தேவஸ்தான சொத்துக்கள் அதிகமாக அபிவிர்த்தியடைந்துமிருக்கின்றன. பொது மக்கள் அறியத்தக்க குறைபாடுகளிருந்தால் கமிட்டியாருக்குத் தெரிவித்து சீர்திருத்தம் செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. இக்காரியத்தில் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் கிளர்ச்சியும் கூச்சலும் எவ்வித பயனு மளிக்காது போய்விட்டது. தென்னாட்டுப் பார்ப்பனர்கள் எல்லோருக்கும்
வயிற்றெறிச்சல்தான். “ஹிந்துமத பரிபாலன போர்டையும்” “அறநிலையப் பாதுகாப்பு மசோதாவையும்” ஒழித்துவிட சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வந்தது ராமராஜ்யம்
காங்கரஸ்காரர்கள் சரணாகதியடைந்து மந்திரி பதவியேற்று அதிலும் பாதிப்பேர் பார்ப்பனர்களாக வந்தார்கள். உடனே ஆரம்பித்து விட்டார்கள்அவர்கள்வேலைகளை. கட்டுப்பாடாகசரணாகதி முதல் மந்திரியார் ஆச்சாரியாரின் முழு முயற்சியால் நாமிநேஷன் மூலமாக வந்த காங்கரஸ் துரோகியான திருச்சி டாக்டர் செளந்திரராஜன் அய்யங்கார் அவர்கள் சரணாகதியடைந்து மந்திரி பதவி பெற்றுவிட்டார். பின் என்ன குறை? இந்த சரணாகதி மந்திரி ராஜன் அவர்களிடம்தான் சுகாதார இலாக்காவும் தேவஸ்தான போர்டும் ஒப்புவிக்கப்பட்டிருக்கின்றன. பின் அவர் சும்மா இருப்பாரா? உடனே நேரே ஸ்ரீரங்கம் போய் ரெங்கநாதரைச் சேவித்துக் கொண்டு அங்குள்ள அய்யங்கார் பட்டர்களுக்கு அபயம் கொடுத்து வந்திருக்கிறார். பிறகு திருவானைக் கோவில், மலைக்கோட்டை தேவஸ் தானங்களையும் பார்வையிட்டு கோவில் மரியாதைகளும், மாலைகளும், பரிவட்டங்களும் பெற்று வீடு திரும்பினார். இதில் பார்ப்பனர்கட்கு பரமானந்தம். எங்கும் பார்ப்பனக் கொண்டாட்டங்கள். ராமராஜ்யத்தில் பார்ப்பனர்கட்கு இனி என்ன கவலை? எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாக “ஹிந்துமத பரிபாலன போர்டை” எடுத்துவிட வேண்டுமென்று தூதுபோக ஆரம்பித்தார்கள். இம் முயற்சியை சரணாகதி மந்திரி ராஜன் அலட்சியம் செய்வாரா? “ஆகட்டும் பார்ப்போம்! எடுத்துவிடலாம். ஆயினும் பொதுஜன அபிப்பிராயம் கேட்பதாகச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் எல்லாம் ஒரே கட்டுப்பாடாக எங்கட்கு “ஹிந்து மத பரிபாலன போர்டு வேண்டாம்" என்று பெருங் கிளர்ச்சி செய்யுங்கள். கூட்டம் போட்டுத் தீர்மானஞ் செய்து அனுப்புங்கள். எல்லாம் நான் பார்த்துக்கொள்ளுகிறேன்" என்று தைரியம் சொல்லி அனுப்பினாராம்
ஹிந்து மத பரிபானை போர்டை ஓழிக்க சூழ்ச்சி
திருச்சி மலைக்கோட்டை மண்டபத்தில் சரணாகதி மந்திரி டாக்டர். ராஜன் அவர்கள் முயற்சியால் ஒரு பொதுஜனக்கூட்டம் கூட நடந்ததாம். இக் கூட்டத்திற்கு திருச்சி ஆண்டார் தெரு வக்கீல் பார்ப்பனர்களும் வேறு உத்தியோகப் பார்ப்பனர்களும் ஒரே கூட்டமாக வந்தார்களாம். இக் கூட்டத்திற்கு ஒத்துக்கு மத்தளம் போட அரியலூர் ஷண்முக சுந்தர முதலியார் அவர்களும் வந்திருந்தாராம். “ஹிந்து மத பரிபாலன போர்டை" எடுத்துவிடவேண்டுமென்று எல்லாப் பார்ப்பனர்களும் கட்டுப்பாடாகப் பேசினார்களாம்? இப் பார்ப்பனர்களைத் தாங்கி அரியலூர் முதலியார் அவர்களும் “ஹிந்துமத பரிபாலன போர்டை" ஒழித்துவிட வேண்டுமென்றாராம் இந்த ராமராஜ்யத்திலே, திருச்சி மலைக்கோட்டைக் கூட்டந்தான் பார்ப்பன. பொதுஜன அபிப்பிராயம் போலும்! இதை சர்க்காருக்கும் கவர்னருக்கும் திருச்சி டாக்டர் சரணாகதி மந்திரி தெரிவித்திருப்பார் போலும்! சர்க்காருக்கும் கவர்னருக்கும் கொஞ்சமாவது சுயமரியாதையும் சொந்தப் புத்தியு
குடி அரசு- 1937 (2) 116
மிருக்காமலா போகும்? சென்னை கவர்னர் “ஹிந்து மத பரிபாலன போர்டை" எடுக்க முடியாது, அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை யொழிக்க முடியாது என்று சரணாகதி மந்திரி ராஜனுக்குக் கூறி விட்டார் போலிருக்கிறது
திருநெல்வேலியில் மந்திரிக்குப் புத்தி. வந்தது சரணாகதி மந்திரி ராஜன் அவர்கள் சமீபத்தில் திருநெல்வேலிக்குச் சென்று தேவஸ்தானக் கமிட்டி ஆபீசை பார்வையிட்டு விட்டுப் பேசி யிருக்கிறார். அவர் பேச்சில் சில பாகம் பின்வருமாறு:- போர்டு ஏற்பட்டதால் கோவில் நிர்வாகத்தில் அபிவிருத்தி ஏற்பட்டிருக்கிறதா?'' வென்று கேட்கப்பட்டது தேவஸ்தான போர்டு ஏற்பட்ட பிறகு கோவில்களில் பல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருகிறதென்பதை ஒருவராலும் மறுக்க முடியாது. சில கோவில்களுக்குப் பண லாபமும் ஏற்பட்டிருக்கின்றது
மேலேயிருந்து கேள்வி வருமென்ற பயமிருப்பதால் நிர்வாகம் கொஞ்சம் கவனமாயும் பயபக்தியுடனும் நடக்கின்றது. ஜனங்களே அதைச் சொல்லுகிறார்கள்; உணர்கிறார்கள்” என்பதாகப் பேசியிருக்கிறார். போகட்டும். திருநெல்வேலியில் சரணாகதி மந்திரி ராஜன் அவர்கட்கு
புத்தி வந்து விட்டதற்காக நாம் மகிழ்ச்சியடையப் போவதில்லை. அவர். வேறு கதியற்ற வகையில்தான் தனது முயற்சியைச் சிறிது மாற்றி கொண்டு பேசியிருக்கிறார் என்றாலும் இனியும் பார்ப்பன ஆதிக்க சூழ்ச்சிகள் நடக்கத்தான் போகின்றன.
நமக்கு கவலையில்லை
இப்போர்டுகள் மூலம் தேவஸ்தான சொத்துகளில் பெரும்பாகம் மக்களின் கல்விக்காகவும், சுகாதார வசதிக்காகவும், இடவசதிக்காகவும், உபயோகப்படுத்தலாம் என்பதாக சட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நமது முக்கிய ஆசையே தவிர அதில்லாமல் இந்த போர்டுகள் இருப்பதின் மூலமாக பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் வகிக்கவும் தர்மகர்த்தாக்களாக இருக்கவுமில்லாமல் போகுமே என்ற கவலை நமக்கு கிடையாது
நன்றிகெட்ட துரோகிகள்!
ஜஸ்டிஸ் கட்சியின் தயவில் தேவஸ்தான போர்டு கமிஷனர்களாயிருந்து பணம் சம்பாதித்துக் கொண்டுபோன பார்ப்பனரல்லாதவர்களில் பெரும் பாலோர் இன்று நன்றி கெட்ட துரோகிகளாய் - பார்ப்பன அடிமைகளாய் -அநுமார்களாய் - விபீஷணர்களாய் - அடிக்கடி கட்சி மாறும் பச்சோந்திகளாய் இருப்பதை நாம் நன்கு அறிவோம். பார்ப்பனரல்லாத தர்மகர்த்தாக்களின் பெரும்பாலோர் யோக்கியதைகளையும் பிற செயல்களையும் நாம்
W ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நன்றாக அறிவோம். இந்த நன்றி கெட்ட துரோகிகளுக்காக நாம் ஒன்றும் கவலைப்பட போவதில்லை. மதத்தின் பேராலும் கோவில் பேராலும் பொதுச் சொத்துகள் கொள்ளை போவதைத் தடுக்கவும் அச் சொத்துகளைப் பரிபாலிக்கவும் மற்றும் பல கிர்திருத்தங்கள் செய்யவும் ஏற்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மசோதாவையும் ஹிந்து மத பரிபாலன போர்டையும் ஒழித்து விட்டு பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தச் செய்யும் சூழ்ச்சியை விளக்கவேதான் இதை எழுதுகின்றோமே தவிர வேறில்லை.
இனி வேறுவித சூழ்ச்சி
“ஹிந்துமத பரிபாலன போர்டை எடுக்க முடியாதென்ற அவர்கள். அபிப்பிராயம் தெரிந்த பிறகு சரணாகதி மந்திரியார் மேற்படி சட்டத்தைத் திருத்த வேண்டுமென்கிறாராம். சட்டத்திலுள்ள முக்கிய ஜீவன்கள் கொலை செய்யப்படலாம். தேவஸ்தான போர்டு முழுதும் தர்மகர்த்தாக்கள் முழுதும் பார்ப்பன ஆதிக்கமாய் விடலாம். இது மட்டும் உறுதி பார்ப்பனரல்லாத சோணகிரிகள், பார்ப்பன அடிமைகள், பார்ப்பன விபீஷணர்கள் எல்லாரும் வாயில் கையை வைத்துக்கொண்டு ஆமாம் சாமி போடப்போகின்றீர்களா? அல்லது வேறு என்ன செய்யப்போகின்றீர்கள்? பார்ப்பன ராமராஜ்யம் பலப்படுக! அய்யங்கார் ஆதிக்கம் வலுப்படுக!!
குடி அரசு - கட்டுரை - 22.08.1937
குடி அரசு- 1937 (2) 118
சுயாட் சியா? பழிவாங்கும் ஆட்சியா?
11
சென்ற வாரம் “குடி அரசில் இன்றைய சரணாகதி மந்திரி சபையானது சுய ஆட்சிக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை பாதாளத்தில் ஆழ்த்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பழிவாங்கு
வதற்கு ஆக ஏற்பட்டிருக்கிறதென்றும் உதாரணமாக தமிழ் மக்களுக்கு ஆரிய ஆதிக்க பாஷையாகிய வட மொழியை ஹிந்தி என்னும் பேரால் இள வயதிலேயே கட்டாயத்தின் மீது புகுத்தவும் அரசியல் பிரதிநிதித்துவ தேர்தல்களில் யோக்கியமான பிரதிநிதித்துவம் ஏற்படுவதற்கில்லாமல் பித்தலாட்டத்தில் தேர்ந்தவர்களே வெற்றி பெற்று வரவும், சரீரத்தினால். பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களல்லாதவர்கள் என்று தங்களை விலக்கிக்கொண்டு மற்ற எல்லா மக்களும் பொருளாதாரத் துறையில் தலை எடுப்பதற்கு மார்க்கமில்லாதிருப்பதற்கு சுலபத்தில் பொருள் தேட செளகரியமுள்ள தொழில் முறைகளை தலை எடுக்கவொட்டாமல் தடுத்து இந்நாட்டு பெருங்குடி மக்கள் என்றென்றும் ஆரியர்களுக்கு அடிமையாக இருக்கும்படியாக எவ்விதத்தும் பயனற்ற கதர்த் திட்டத்தைப் புகுத்தி பழி வாங்குகின்றது என்றும் குறிப்பிட்டுக் காட்டி அவற்றுள் ஹிந்தி சூழ்ச்சியைப்பற்றி விளக்கி இருந்தோம். இந்த இரண்டாவது விளக்கத்தில்
சூழ்ச்சித் தேர்தல் முறையைப்பற்றி விளக்குவோம்
ஸ்தல ஸ்தாபன தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும் நடந்தது போலவே வர்ணப்பெட்டியையே தேர்தல் நபராகக் கருதி ஓட்டுப்போடும் முறையை கையாள சரணாகதி மந்திரிகள் ஏற்பாடு செய்து விட்டார்கள். இந்த முறை பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு மூட நம்பிக்கையை கிளப்பிவிட்டு மக்களுடைய மத உணர்ச்சியினால் ஓட்டுப் பெறச் செய்யும் சூழ்ச்சி முறையேயாகும்
ஏனெனில் சட்டசபை தேர்தல் நடந்த காலத்தில் தேர்தல் பிரசாரமாக வர்ணப் பெட்டியின் வர்ணத்தையும் அதற்கு இந்து மத உணர்ச்சிப் படி இருந்துவரும் போலி உயர்வையும் பல வழிகளிலும் பிரசாரம் செய்து ஓட்டர்கள் ஓட்டுப் போடும் மனிதனின் யோக்கியதை, நாணயம் என்ன. என்பதை சிறிதும் அறியவோ கவனிக்கவோ இடமில்லாமலும் தாங்கள்
19 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
(ஒட்டர்கள்) ஓட்டுப்போடும் கட்சிக்கு என்ன கொள்கை? அதன் முன் பின் நாணயம், தகுதி என்ன? என்பதைக்கூட கவனிக்கவோ தெரியவோ முடியாதபடியும் ஏமாற்றி கண்களில் மிளகாய்ப் பொடி தூவி வழிப்பறிக் கொள்ளைக்காரன் படு இருட்டில் பிரயாணிகளிடம் பறித்துக் கொண்டு ஓடுவது போல் ஓட்டர்கள் கண்களில் மிளகாய் பொடி தூவி பறித்து விட்டார்கள்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சட்டசபைத் தேர்தல் பிரசாரம் எப்படிச் செய்யப்பட்டது என்று பார்த்தால் விளங்கிவிடும். அதாவது “மங்கள கரமான மஞ்சள் பெட்டியில் ஓட்டுப் போடுங்கள். யார் தேர்தலில் அபேக்ஷகராக நிற்கிறார்கள் என்று கவனிக்காதீர்கள். மொண்டியோ, முடமோ, கூனோ, குருடோ, ஊமையோ, செவிடோ யார் நின்றாலும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள்” என்று சொல்லி ஓட்டர்களின் ஆராய்ச்சி அறிவைக் கட்டி விட்டார்கள். மற்றும் பாமர மக்களுக்கு மஞ்சள் பெட்டி தெய்வீகத்தன்மை பொருந்தியதென்றும் அதில் தெய்வீக சக்தி இருக்கிற தென்றும் கற்பித்து மஞ்சள் துணி, பூஜை, விரதம் முதலிய பலவிதத் திட்டங்களை நியாயங்களைச் சொல்லி மயக்கவைத்து ஓட்டு வாங்கினார்கள்.
இந்திய மக்கள் அநாகரிக மத உணர்ச்சியுள்ளவர்களாகவும், மூட நம்பிக்கைக்காரர்களாகவும் இருப்பதால் இவர்களை ஏய்க்க மதப் பூச்சாண்டி காட்டினால் தான் முடியுமென்று கருதி அக்கருமத்தில் இறங்கி வெற்றி பெற்று விட்டார்கள். அதையே நினைத்துக் கொண்டு அம்முறையின் மூலமே ஸ்தல ஸ்தாபன தேர்தல்களிலும் வெற்றி பெற வர்ணப் பெட்டியை புகுத்தி இருக்கிறார்கள். கவர்னர் பிரபுவும் இக்காரியத்துக்கு தலையாட்டி விட்டார் என்று தான் நினைக்கவேண்டி இருக்கிறது. இதில் உள்ள ஒரு முக்கிய விஷயம் என்ன என்று பார்த்தால் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களுக்கு வர்ணப் பெட்டி முறை கூடாதென்பதற்கு சம்மதம் கொடுத்தவரும் இதே கவர்னர் பிரபு தான் என்பதாகும். இதிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால் இந்த சர்க்காருக்கு இந்திய நாட்டு ஆட்சியைப் பொறுத்த வரை சொந்தப் புத்தியை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் தங்கள் காரியத்தில் கை வைப்பதில்லை என்று வாக்குறுதி கொடுத்து சரணாகதி அடைந்தவர்கள் யாராயிருந்தாலும் எப்படிப்பட்டவர் களானாலும் அவர்களுக்கு மக்களைச் சூறையாட விட்டுக் கொடுத்துவிட வேண்டியது தான் என்றும் கருத வேண்டியிருக்கிறது என்பதேயாகும்
மஞ்சள் பெட்டி முறைக்கு ஓட்டர்கள் அதிகம் பேர் மூட மக்களாகவும் பார்ப்பனர்களாகவும் இருந்தால் தான் பயன்படும் என்கின்ற கருத்தில் இப்போது உள்ள ஓட்டர்கள் லிஸ்டையும் மாற்ற மந்திரிகள் முயற்சி செய்வதாய்த் தெரியவருகிறது
குடி அரசு - 1937 (2) 120
அதாவது இன்றைய ஓட்டர்கள் லிஸ்டில் ஏதாவது ஒரு சொத்து உரிமை அல்லது வரி உரிமை உள்ளவர்களுக்குத் தான் ஓட்டுரிமை இருந்து வருகிறது. இதன் பயனாய் பார்ப்பனர்களுக்கு ஓட்டு அதிகமில்லாமல் இருந்து வருகிறது. அதை மாற்றி எல்லாப் பார்ப்பனர்களுக்கும் ஓட்டு இருக்கும்
படி சூழ்ச்சி செய்து பழைய ஓட்டர் லிஸ்டை கிழித்தெறிந்து விட்டு அதாவது “படித்தவர்களுக்கெல்லாம் ஓட்டு இருக்கும்படியாகச் செய்வது” என்கின்ற சூழ்ச்சியின் மூலம் பெண்கள் உள்பட சகல பார்ப்பனர்களுக்கும் ஓட்டுரிமை வரும்படிஓட்டர் லிஸ்டை இனிமேல் திருத்தப் போகிறார்களாம். அதற்கு ஆக தேர்தலை ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கிறார்களாம். இதனால் பார்ப்பனர்களும் பார்ப்பன அடிமைகளும் தான் வெற்றிபெற செளகரிய மேற்படும்.
இந்த மாதிரியான அக்கிரம முறையைக் கையாடுவதற்கு சரணாகதி
மந்திரிகள் சொல்லும் காரணங்கள் மிக மிக வெட்கக் கேடானதாகும். அது மாத்திரமல்லாமல் குறும்புப் புத்தி கொண்டதுமாகும் என்றும் சொல்லலாம்
என்ன வென்றால் ஈரோடு ஓட்டர் லிஸ்டில் அநேக தவறுதல்கள் நடந்துவிட்டதாம். அதற்கு ஆக மாகாணம் பூராவுக்கும் உள்ள ஓட்டர் லிஸ்டுகள் மாற்றப்பட வேண்டுமாம். அப்படி மாற்றுவதிலும் பார்ப்பனர்களில்
மாத்திரம் எல்லோரும்ஓட்டராகும் படியான முறையைக்கையாள வேண்டுமாம் பார்ப்பனர்களுக்கு ஒரு சிறு அசெளகரியமாவது ஏற்படும்படியான எக்காரியமும் செய்யக்கூடாது என்பதும் பார்ப்பனரல்லாதார் தலையெடுக்கும் படியான எக்காரியமும் செய்யக்கூடாது என்பதும் தான் சரணாகதி மந்திரிசபையின் நல்லாட்சியாய் போய்விட்டது
இது “பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தால் வீதியில் உள்ள சாமான் களைத்தான் வீட்டுக்குள் எடுத்தெறிவானே ஒழிய வீட்டுச்சாமான். ஒன்றுகூட வீதிக்கு எறியப்படமாட்டாது'' என்ற தாத்தா காலத்துப் பழமொழி போல் நமது அக்கிரகார சரணாகதி மந்திரிகள் செய்யும்
சீர்திருத்தமும் நடத்தும் ஆட்சியும் பல விதத்தும் பார்ப்பனர்களுக்கு பயன்: ஏற்படும்படியாக நடந்து வருகிறது. 'பார்ப்பனரல்லாதார்களிலும் சில மந்திரிகள் இருக்கிறார்களே” என்று விஷயமறியாதவர்கள் சொல்ல வரலாம் ஹிந்தி கூடாது என்றும், கதர் கூடாது என்றும் கூப்பாடு போட்ட பார்ப்பன. ரல்லாத தமிழ் மக்கள் இன்று மந்திரி ஆசனத்தில் உட்கார்ந்த உடன் ஹிந்தி நல்ல பாஷைஎன்றும் கதர் தேசீயம் என்றும் சொல்லுவதோடல்லாமல் தாங்களும் அணிந்து கொண்டு ஊர் ஊராய் பிரசாரமும் செய்கிறார்கள் என்றால் அந்த 3, 4 தமிழ் மந்திரிகள் என்போர்களும் தங்களை தமிழ் மக்கள் என்றோ, தமிழர் பிரதிநிதி மந்திரிகள் என்றோ சொல்லிக் கொள்ளவாவது சம்மதிப் பார்களா என்பதே நமக்கு சந்தேகமாய் இருக்கிறது. “மங்களகரமான மஞ்சள்
பெட்டி” முறை இருந்ததினாலேயே இத்தமிழ் மந்திரிகள் மந்திரிகளாக முடிந்து இருக்கும் போது அவர்கள் எப்படி மஞ்சள் பெட்டியை ஆக்ஷேபிப்பார்கள்?
மட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“விபீஷணனுக்கு பட்டம் வேண்டியதில்லை என்ற உணர்ச்சி இருந்தால். தானே அண்ணனைக் காட்டிக் கொடுக்காமலும், சகோதரத் துரோகம் செய்யாமலும் இருந்திருக்க முடியும்?” (ராமாயணக் கதைப்படி) பட்டம், பதவி, பணம் ஆசைவந்தால் ஹிந்தியும் கதரும், மஞ்சள் பெட்டியும் மாத்திரம் தானா ஆதரிக்கப்படும்? இன்னும் என்ன என்னமோ ஆதரிக்கப்பட்டு எது எதற்கோ இடம் கொடுக்கப்படப் போகிறது என்பது நமக்குத் தெரியும்
ஈரோடு ஓட்டர் லிஸ்டில் உள்ள தவறுதல்கள் இன்னது என்று இதுவரை யாரும் எடுத்துச் சொல்லவில்லை. முன்பு ஈரோட்டில் சேர்மெனாய் இருந்த தோழர் சீனிவாச முதலியார் என்பவரின் பெயர் ஒரு வார்டில் ஓட்டர் லிஸ்டில் சேர்க்கப்பட வில்லையாம். இதனால் 19 வார்டுக்கு தயார் செய்த ஓட்டர் லிஸ்டில் ஓட்டை ஏற்பட்டு விட்டதாம்
தோழர் சீனிவாச முதலியாரைப் பற்றி தெரியாதவர்கள் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்கள். அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் சட்டப்படி நடுநிலமையாய் இருந்து ஒரு நீதிபதி கவனித்திருப்பாரானால் கவனிக்க சர்க்கார் அனுமதி கொடுத்திருந்திருப்பார்களானால் தோழர் முதலியார்
5, 6 தடவை செத்துப் பிறந்து ஒவ்வொரு பிறவியிலும் நூற்றாண்டு வாழ்ந்து செத்தாலும் தண்டனை காலம் முடிவடைந்திருக்க முடியாது.
இப்படிப்பட்டவர் ஓட்டராய் வரத்தகுந்த எந்தவித தகுதியும் இல்லாத காரணத்தால் ஓட்டர் லிஸ்டில் பெயர் வரமுடியாமல் போனதற்காக ஓட்டர் லிஸ்டில் ஓட்டை என்கிறார்கள் நம் அக்கிரகாரப் பார்ப்பனர்கள். இதே பார்ப்பனர்கள் மகாநாடு கூட்டி தோழர் முதலியாரின் சகல குணங்களையும் நடத்தைகளையும் வெளியாக்கி சர்க்காருக்கு அறிவித்த படலங்கள் இன்னும் வண்டி வண்டியாய் இருக்கின்றன. இவை எப்படியோ இருக்கட்டும். ஓட்டர் லிஸ்டை பரிசீலனை செய்ய சர்க்காரால் நியமித்த அதிகாரிகள் (ரிவைசிங் போர்ட் மெம்பர்கள்) மூவர். அவர்களில் ஒருவர் லண்டன் மிஷின் பாதிரியார் (ஐரோப்பியர்) மற்றொருவர். இன்கம்டாக்ஸ் ஆபிசர் (கஜட்டட் ஆபிசர்) மற்றொருவர் ஒரு பிரபல வக்கீல் (முனிசிபல் நிர்வாகத்தோடு வெகு காலமாக அபிப்பிராய பேதமுள்ள குடும்பம்). இப்படிப்பட்ட மூவர் மாத்திரம் சேர்ந்து ஓட்டர் லிஸ்டு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.
தோழர் சீனிவாச முதலியாருக்கு வீடு கிடையாது. கடன்காரர் தொல்லைக்கு பயந்து ஈரோட்டில் இருக்க வேண்டிய நாள் இருக்கவே யில்லை. கோர்ட்டு இல்லாத காலங்களில் இரவில் ஈரோடு வந்து தலைகாட்டி விட்டுப்போவது வழக்கம். ஓட்டர் லிஸ்டு தயாரிக்கும்போது முனிசிபல் கமிஷனர் தோழர் சீனிவாச முதலியார் எந்த கோர்ட்டிலாவது தொழில் நடத்த எப்போதாவது ஆஜராயிருக்கிறாரா என்று கேட்டதில் எந்த கோர்ட்டு
குடி அரசு - 1937 (2) 122
வக்கீல் லிஸ்டிலும் இவர் பெயர் இல்லை என்று அதிகாரிகள் லிஸ்ட் அனுப்பி இருக்கிறார்களாம். விசாரணையில் தோழர் முதலியாருக்கு ஈரோடு விலாசம் போட்டு வந்த கடிதக் கட்டுகளை முதலியார் ஆஜர்செய்த போது அதில் இரண்டொரு ரிஜிஸ்டர் கடிதமும் இருந்ததால் அந்த ரிஜிஸ்டர் கடிதங்களின் கூடுகள் எங்கே என்று ரிவைசிங் அத்தாரட்டி ஆபிசர் (பாதிரியார்) கேட்ட போது அது மாத்திரம் காணாமல் போய்விட்டது என்று தோழர் முதலியார் அவர்கள் சொன்னதால் எல்லோரும் சிரித்து முதலியாரின் விண்ணப்பத்தைத் தள்ளி விட்டார்களாம். இதனால் ஓட்டர் லிஸ்டு தயாரித்த முறை தவறு என்று எப்படி ஏற்படும்?
ஓட்டர் லிஸ்டை மாற்ற வேண்டுமானால் ஈரோடு ஓட்டர் லிஸ்ட்
மீது ஏன் குறைகூற வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துக்காட்டினோம் ஆகவே அக்கிரகாரத் தொல்லை நம்மை எப்படிப் பழி வாங்குகிறது என்பதைக் காட்டவே இதை எழுதினோம். கதரைப்பற்றி அடுத்த வாரம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.08.1937
1233 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
லம்! ஒலம்!! ஓலம்!!! ஓ ஓ ஓ
ஓ தமிழனே! தமிழ் அன்னை உன் கடமையைச் செய்ய அழைக்கிறாள்.
ஆரியக் கொடுமையில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி
ஓலமிட்டுக் கெஞ்சுகிறாள்.
தாய்நன்றி கொன்ற மகனும், தாய்ப் பணிக் கடமை கொன்ற மகனும் மனிதனாவானா?
குடி அரசு - வேண்டுகோள் - 29.08.1937
குடி அரசு- 1937 (2) 124
திருச்சியில் சுயம௰ியாதைக் கூட்டம்
காங்கிரஸ் காலிகள் விஷமம்
காலிகள் விஷமத்துக்கு போலீஸ் உடந்தை
தலைவர் அவர்களே! தோழர்களே!!
இக்கூட்டத்தில் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் காலித்தனத்தைப் பாருங்கள். காங்கரஸ் மந்திரிசபை ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் நமக்கு பேச்சு சுதந்தரம் எப்படியிருக்கிறது. கலவரம் செய்வதும் காலித்தனம் செய்வதும் காங்கரஸ்காரர்கட்கு மட்டும் சொந்தமல்ல; காப்பி ரைட்டல்ல. கட்சி அபிப்பிராய பேதங்கட்காக ஒருவர் கூட்டத்தை ஒருவர் கலைத்து விடுவது, கலவரம் செய்வது என்றால் அது இந்நாட்டில் எக்கட்சியாரும் இனி பொதுக் கூட்டங்கள் அமைதியாக நடத்தமுடியாது. கலகத்திற்கு நாங்கள் பயப்படவில்லை. அடிதடிக்கும் நாங்கள் அஞ்சவில்லை. வீண் கூச்சல் போட்டு எங்களை மிரட்டிவிட எண்ணுவது அறியாமையாகும். இந்தக் கூலிகளின் - காலிகளின் கூப்பாட்டுக்குப் பயந்தால் நாங்கள் எங்கள் வேலைகளை எப்படி செய்ய மூடியும்? பார்ப்பன ஆதிக்கத்தையும் காங்கரஸ் பித்தலாட்டங்களையும் எப்பாடு பட்டாவது ஒழிக்கவேண்டு மென்பதுதான் எங்கள் வேலையாகும். இதற்காக எங்கள் உயிரையும் கொடுப்போம். இதற்காக எத்தனை கலவரங்கள்; கூச்சல்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் நாங்கள் வரவேற்கத் தயாராக யிருக்கின்றோம். பொது மக்கள் காங்கரஸ்காரர்கள் காலித்தனங்களையும், அட்டூழியங்களையும் இன்று இங்கு தெரிந்துகொள்ளும்படி நேர்ந்ததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.
போலீசார் அலக்ஷ்யம்
இங்கு வந்திருக்கும் போலீஸார் காலிகளின் கூச்சல்களை அடக்காமல் அலட்சியமாயிருக்கிறார்கள். போலீஸ் நிர்வாகம் காங்கரஸ் மந்திரிகள் கையிலிருப்பதினால் காங்கரஸ்காலிகளின் அட்டூழியங்கட்கும் கலவரங் கட்கும் சலுகை காட்டுவதாகத் தெரிகிறது. பொதுஜன வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் போலீஸ் அதிகாரிகள் போலீஸ் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள் பொதுக்கூட்டங்களில் ஒரு கட்சியார் கலகம் செய்யும் பொழுது கலகத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டு அலட்சியமாய் இருப்பது ஒரு நாளைக்கு போலீஸ் இலாகாவுக்கே கேடு பயக்கும்
125 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தோழர்களே!
நாங்கள் வகுப்புவாதிகள்தான். இந்த நாட்டில் பார்ப்பான் உயர்வு, பறையன் தாழ்வு என்ற பல பிளவுகள் உள்ள வரை உயர் சாதிக்காரர்கள் மட்டும் எல்லாத் துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிக்க நாங்கள் பாடுபடுகிறோம். பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கு காங்கரஸ் பயன்படும் வரை நாங்கள் காங்கரஸை எதிர்ப்போம். மந்திரி சபை அக்ரகாரமயமாகப் போய்விட்டது. ஹிந்தி படிக்க வேண்டுமென்றும் அதனால்தான் ஆரிய நாகரிகம் வளரும் என்றும் பார்ப்பன மந்திரிகள் துணிவாகக் கூறுகிறார்கள். நம்மவர்கள் மதத்தின் பெயராலும் சமூகத்தின் பெயராலும் அடிமைப் படுத்தப் பட்டதைப்போன்றே அரசியல் பெயராலும் நம்மவர்கள் அடிமைப்படுத்தப்
பட்டும் ஏமாற்றப்பட்டும் வருகிறார்கள். காங்கரஸ் திட்டங்களால் கிளர்ச்சிகளால் மக்கள் என்ன பயன் அடைந்தார்கள்? காங்கரஸ் மந்திரிகள் சம்பளம் குறைவா? காங்கரஸ் கட்சியார் பலவித திட்டங்களும் என்ன கதியாயிற்று? சர்க்கார். காங்கரஸ்காரர்கட்கு பணிந்தார்களா? காங்கரஸ்காரர்கள் சர்க்காரிடம் சரணாகதியடைந்தார்களா?
காங்கரஸ் பார்ப்பனர் பித்தலாட்டம்
புதிய சீர்திருத்தம் உடைந்ததா? ஏகாதிபத்தியம் ஒழிந்ததா? ஏழைகள். வரிச்சுமை நீங்கிற்றா? பசிக்கொடுமை, வேலையில்லாத் திண்டாட்டம்
நீங்கி விட்டதா? காங்கரஸ் ராமராஜ்யத்தில் பார்ப்பான் மண் வெட்டி வயல் வேலை செய்து பிழைப்பானா? வர்ணாச்சிரமம் பேசி சோம்பேறியாகயிருந்து ஊரை ஏமாற்றி உயிர் வாழ்வானா? பொதுமக்கள் இவைகளை நன்றாக உணர்ந்தால் காங்கரஸ் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களும், பொய்ப் புரட்டுகளும், பார்ப்பன அதிக்கத்திற்குப் பாடுபடும் சூழ்ச்சிகளும் நன்றாகத் தெரியவரும். இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கம், காங்கரஸ் புரட்டு காங்கரஸ் அக்ரஹார மந்திரிசபை யாவும் விரைவில் வீழ்ச்சியடையத்தான் போகின்றது மீண்டும் ஜஸ்டிஸ் கட்சியாரிடம் ஆதிக்கம்வரத்தான் போகிறது. நீங்கள் நம்புங்கள். அக்ரகார மந்திரி சபை ஒழியவும், காங்கரஸ் பார்ப்பன ஆதிக்கம் வெட்டிப் புதைபடவும், நீங்கள் எங்களுடன் ஒத்துழைக்கும்படி வேண்டுகிறேன்.
குறிப்பு: 28.08.1937 இல் திருச்சி டவுன்ஹால் முன்பாக திருச்சி மாவட்ட சுயமரியாதைச் சங்கம், நகர சுயமரியாதைச் சங்கம் ஆகியவைகளின். சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 05.09.1937
குடி அரசு - 1937 (2) 126
சுயாட் சியா? பழிவாங்கும் ஆட்சியா?
பா
கதர் மோசம்
சென்ற வாரமும் அதற்கு முந்தின வாரமும் இன்றைய சரணாகதி பார்ப்பன ஆதிக்க மந்திரி கூட்டம் நாட்டின் விடுதலைக்கு ஆக ஏற்பட்டதல்ல வென்றும் இந்நாட்டு பழந்தமிழ் மக்களை புராணகாலக் கதைகள் போல் மிருகங்களாக ஆக்கி ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தி ஆரியர்களுக்கு தமிழ் மக்கள் என்றென்றும் அடிமையாயிருக்கச் செய்யும் சூழ்ச்சிக்கு ஆக ஏற்பட்ட கூட்டம் என்றும் அதற்கு ஆக இப்போது பார்ப்பன ஆதிக்க மந்திரிகள் ஆட்சி செய்துவரும் மோசமான காரியங்கள் மூன்று என்றும் அவற்றில் முதலாவதாக தமிழ் பாஷை, தமிழ் கலை, தமிழ் பழக்க வழக்கம், தமிழ் சுதந்தர உணர்ச்சி, தமிழ் மக்களுக்கு ஆரியர்கள் ஆதி முதல் செய்து கொண்டு வந்த கொடுமைகள் ஆகியவைகளை மறக்கடித்து ஆரிய உயர்வையும், மற்றவர்களின் தாழ்வையும், அடிமைத்தனத்தையும் புகுத்தும் மறைவான சமஸ்கிருதமான ஹிந்திபாஷையை தமிழர்களின் இளங்குழந்தைகள் படிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அநீதியைப் பற்றியும் இரண்டாவதாக தேர்தல்களில் எப்படி பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளுமே வெற்றிபெறக்கூடும் என்பதற்கு அனுகூலமாகவே தேர்தல் முறைகளை மாற்றி அமைக்கப் போடும் தந்திரங்களைப் பற்றியும் விளக்கி இருந்தோம்.
இந்த வாரம் மூன்றாவது காரியமாகிய தமிழ் மக்களின் பொருளா தாரத் துறையில் கைவைத்து தமிழ் மக்கள் என்றும் தலை தூக்காமல் இருப்பதற்கும் பழைய வர்ண தர்மமாகிய “சூத்திரர்கள் என்றென்றும் ஏழையாகவே இருக்கவேண்டும்" என்று வலியுறுத்தும் மனுதர்மத்தை நம்மீது சுமத்தி நிலை நிறுத்தவும் முதலாளிமார்களை தங்கள் வசம் செய்து கொண்டு அவர்கள் மூலம் தங்களது சோம்பேறி வாழ்க்கையையும், புரோகித ஆட்சித் தத்துவத்தையும் நிலை நிறுத்திக்கொள்ளவும் சூழ்ச்சி செய்யும் படியான கதர் மோசத்தைப் பற்றி எழுதுவோம்.
கதர்
கதர் என்பது இன்றைய பொருளில் கையால் நூற்ற நூலைக்கொண்டு. கையால் நெய்த துணி என்பதாகும்.
127 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இதைப்பற்றிய ஆட்சேபணை சமாதானங்கள் ஏற்கனவே வண்டி வண்டியாய் வெளியாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது மறுபடியும் வெளியாக்கப்பட வேண்டிய அவசியமென்னவென்று சில வாசகர்கள் நினைக்கலாம். இன்றைய பார்ப்பன ஆதிக்க ஆட்சியானது கதரை அரசியல் சட்டமூலம் அரசியலில் புகுத்த முனைந்திருப்பதால் மறுபடியும் மக்கள் அதைப்பற்றிய உண்மைகளை உணர வேண்டும் என்கின்ற ஆசையேயாகும்
கதர்த் தத்துவம்
கதர் 1920ம் வருஷத்தில் அரசியலில் கலந்து பேசப்பட்ட போது கதர் மனிதனின் சுயநிர்ணயத்திற்கு என்றும், சுரண்டுவதற்காக இந்நாட்டில் ஆட்சி புரியும் அந்நிய ஆட்சியைப் பணியவைத்து விரட்டியடிப்பதற் கென்றும், மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு என்றும் பிரிட்டிஷ் முதலாளி களின் கொட்டத்தை அடக்குவதற்கென்றும் பல காரணங்கள் சொல்லப்பட்டன.
சுயநிர்ணயம் என்றால் ஒரு மனிதன் தனக்கு வேண்டிய எந்த செளகரியத்துக்கும் வேறொரு மனிதனை எதிர்பாராமல் தானே செய்துகொள்ளவேண்டுமென்று பொருள் கூறி அந்த வகையிலும் மனிதனுக்கு வேண்டிய ஆடையை அவனவனே தன் வீட்டுக் கொல்லையில்
பருத்திச் செடி முளைக்கவைத்துப் பருத்தி யெடுத்து பஞ்சாக்கித் தானே.
நூற்று தன் வீட்டிலேயே தறி பூட்டி தானே நெய்து ஆடையாக்கிக்
கட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த முறையில்தான் ஒவ்வொரு வீட்டிலும் பருத்திச் செடி வளர்த்ததும் கைராட்டினங்கள் சுற்றியதும் வைதீகக் காந்தி பக்தர்கள் வீடுகளில் தறிகள் பூட்டியிருந்ததுமாகும்
இது ஒரு வருஷத்திலேயே தவறாகிவிட்டதால் அதாவது சகல: மக்களும் தங்கள் தங்கள் ஆடையை தாங்களே நெய்து அணிந்து கொள்வது என்பது முட்டாள்தனமான யோசனை என்றும் மிகுந்த அறிவாளியின் நேரம்
நூல் நூற்பதிலும் துணி நெய்வதிலும் செலவிடப்பட்டால் நாகரிகமும் முன்னேற்றமும் நற்காரியங்களும் தடைப்பட்டுப் போகும் என்றும் தோழர்கள் லஜபதிராய், தாஸ், நேரு, மாளவியா முதலியவர்கள் காங்கரசின் சார்பாகவே எதிர்த்து முறியடித்து விட்டதால் பிறகு அந்த சாக்கு கைவிடப் பட்டு “சரண்டிக்கொண்டு இருக்கும் அந்நிய ஆட்சியை ஒழிக்கவும், அந்நிய நாட்டு முதலாளிகளை அடக்கவும்!” என்கின்ற காரணம் தலை தூக்கிற்று அதுவும் பயன்படாது என்றும் வெறும் ஆகாயக் கோட்டை என்றும் பெரிய பெரிய அரசியல் நிபுணர்கள் எடுத்துச் சொன்னதோடு சுமார் 5, 6 வருஷம்
கதர் பிரசாரம் செய்து அந்நிய ஆட்சியை ஒழிக்க கதர் சிறிதாவது பயன் படவோ அந்நிய முதலாளிகள் சிறிதாவது கதரினால் தங்கள் வியாபாரம் குந்தகமடைகின்றது என்று கருதவோ முடியாமல் போய் விட்டதால் பொது ஜனங்கள் கதரை அலக்ஷ்யம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
குடி அரசு - 1937 (2) 128
அதன் பிறகே “கதர் ஏழைகள் நண்பன் என்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உரியது” என்றும் மாத்திரம் கூறப்பட்டது. இதை ஆக்ஷ்பித்தும் அநேக பொருளாதார நிபுணர்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டு
பரிகாசம் செய்தார்கள். இதன் மத்தியில் காங்கரசிலேயே பலவித அபிப் பிராயங்கள் ஏற்பட்டு கதர் ஒரு அரசியல் சின்னமென்று சிலரும் அது ஒரு
போர் ஆயுதம் என்று ஒரு சிலரும் அது தற்கால உபாயம் என்று ஒரு சிலரும் கூறி வந்ததோடு சுதேசி சாமான்களோடு ஒன்றாய்க் கருதலாம் என்றும், பணக்காரர்கள் கதர் வாங்கட்டும், ஏழைகள் சுதேசி துணி வாங்கட்டும் என்றும் கடசியாக சிலருடைய பசியைப் போக்கவாவது பயன்படவில்லையா.
என்றும் குடியானவர்களுக்கு விவசாயமில்லாத காலத்தில் ஒரு தொழிலாக வாவது இருக்காதா என்றும், இப்படி பல விதமாக தோழர் ராஜகோபாலாச் சாரியார், பண்டிதர் ஜவஹர்லால் போன்ற காங்கரஸ் பிரமுகர்களாலும் சொல்லப்பட்டு வந்தது
காரியத்தில் இதுவரை மேற்கண்ட காரியங்களில் ஒன்றும் பலிதமடையாமல் கதருக்கு என்று மாகாணம் ஒன்றுக்கு வருஷம் 10,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பொது ஜனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து நஷ்ட ஈடுகொடுத்துக் கொண்டுவந்த காரணமே இந்த கதர் பிரசாரமோ கதர் உற்பத்தியோ கதர் மூலம் ஏழை களுக்கு உதவியோ செய்யப்பட்டு வந்திருப்பதாகத் தான் பெரிதும் அறியக் கிடக்கின்றதே ஒழிய கதரின் அவசியத்துக்காக சொல்லப்பட்ட மேற்கண்ட பல காரணங்களில் ஒன்றுக்காவது பயன்படவே இல்லை.
முதலாவது கதர் இன்று ஒரு மனிதன் வாங்க வேண்டுமானால் மில்.
நூல் கைத்தறித்துணி ஒரு கஜம் வாங்குவதற்கு 3 அணா கொடுப்பதற்கு பதிலாக அதே யோக்கியதை உள்ள, கையில் நூற்று கையில் நெய்யப் பட்ட கதர் துணி வாங்கினால் கஜம் ஒன்றுக்கு 1-0-0 கொடுக்க வேண்டி இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதை விட மட்டமான துணி வாங்க வேண்டுமானால் கூட அதுவும் கஜம் ஒன்றுக்கு 12 அணா 10 அணா கொடுத்தால் தான் கிடைக்கும் நிலையில் இருக்கிறது என்பதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் இப்படி செய்தால் மாத்திரம் கதர் நூல் நூற்பவர்களுக்கு தினம் 1 அணா
கூலி கிடைக்கலாம். “இந்த ஒரு அணா கூலியாவது கிடைக்கிறது லாபமல்லவா”
என்று சிலர் கேட்கலாம். ஒரு 'ஏழைக்கூலி” தினம் ஒரு அணா சம்பாதிக்க வேண்டுமானால் அதே கூலி 4 மாதத்துக்கோ, 3 மாதத்துக்கோ வரும் படியான 5 முழ கதர் வேஷ்டி ஒரு ஜதை வாங்க வேண்டியதற்கு அவன் குறைந்தது 3 ரூபாயாவது கொடுக்க வேண்டும். இந்த 5 கஜ துணியை
மில் நூல் கைத்தறியாக வாங்கினால் 0-12-6 அணாவுக்கு வாங்கலாம் உயர்ந்த துணியாக வேண்டுமானால் 1 ரூபாய்க்கு வாங்கலாம். ஆகவே ஒரு ஜதை வேஷ்டி 2 ரூ. வீதம் நஷ்டமடைய ஒருமனிதன் அல்லது ஒரு சேலைக்கு
19 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
4 ரூ. வீதம் நஷ்டமடைய ஒரு பெண் தயாராய் இருந்தால்தான் கதரினால்
ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு அணா சம்பாதிக்க முடிகிறது என்பதை எங்கும் ருஜுபிக்கத் தயாராய் இருக்கிறோம்
“திராம ஏழை ஜனங்கள் பிழைக்கக் கண்டுபிடித்தது இந்த மார்க்கம், ஆதலால் கதர் பூராவையும் பட்டண வாசிகளோ, பணக்காரர்களோதான் வாங்க வேண்டும்” என்று சொல்லப்படுமானால் இது அதாவது கதர் திட்டம் என்பது ஒரு கட்டாய வரித் திட்டமா? அல்லது பொருளாதார கைத்தொழில் திட்டமா என்று கேட்கின்றோம். அப்படியே கட்டாய வரித்திட்டமென்று சொல்லுவதானாலும் சரி, வேறு காரியங்களில் இவ்வரித் திட்டத்தை புகுத்தாமல் மனிதனின் நாகரிக வளர்ச்சியையும் சாதாரண இயற்கைத் திருப்தியையும் பாதிக்கும்படியான காட்டுமிராண்டித்தனத்தை வலியுறுத்தும் முறையில் கட்டாய வரியைப் புகுத்துவது கொடுங்கோன்மை ஆட்சி ஆகாதாவென்று கேட்கின்றோம். இவ்வளவு பெரிய கொடுங்கோன்மையான காரியத்தைக் கையாளுவதன் மூலம் ஏழைகளுக்கு சரியான பலனாவது ஏற்படுகிறதாவென்று பார்த்தால் அதுவும் 12 மணி நேரம் ஓயாமல்
சரீரம் வருந்தப் பாடுபட்டால் 1 அணா கூலிதானே கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது என்பதை உணர்ந்தால் மக்களின் நஷ்டத்திற்கும் காட்டுமிராண்டிக் காலத்துக்கு போகும்படி மக்களை விரட்டியடிக்கும் இந்த கொடுங்கோன்மை முறைக்கும் அதனால் மக்கள் அனுபவிக்கும் மனக்கஷ்டத்திற்கும் அதிருப்திக்கும் இது சரியான பிரதிப் பிரயோஜனமாகுமா என்று கேட்கின்றோம். ஆகவே கதர் என்றால் நூற்கிறவர்களையும் கஷ்டப்படுத்தி நெய்கிறவர்களையும் தொல்லைப்படுத்திக் கட்டுகிறவர்களையும் சித்திரவதை செய்வது போன்ற கொடுமைப்படுத்துவதாக ஆகவில்லையா. என்று கேட்கின்றோம்
காந்தியார் முழங்காலுக்கு மேல் துணி கட்டுவதால் மக்களை மத உணர்ச்சியால் ஏமாற்றப் பயன்படுகிறது. மற்றும் இரண்டொருவர் அவரைக் காப்பி அடிப்பதால் அவர்களது கூடா ஒழுக்கங்கள் மறைக்கப்பட்டு ஏமாற்றப் படுகின்றது. காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் கதர் கட்டுவதால் உண்மை யிலேயே சுயமரியாதையும் சுதந்திர உணர்ச்சியும் அரசியல் ஞானமும் பகுத்தறிவு சுதந்திரமும் இருக்கின்றவர்களை காங்கரசுக்குள் நுழையாமல் விரட்டி அடிக்கப் பயன்படுகின்றது. இவை தவிர மற்றவர்களுக்கு கதரினால் ஏதாவது பயன் ஏற்படுகிறதா என்று கேட்கின்றோம்
மற்றும் கதரைப் பற்றி பேசும்போது கைத் தொழில்களை ஆதரிக்க வேண்டும் என்றும் யந்திரங்கள் அபிவிருத்தியை தடுக்க வேண்டும் என்றும் பழங்கால முறையையே கையாள வேண்டுமே ஒழிய “புதிய நாகரிகமாகிய சைத்தான் ஆட்சிக்கு போகக்கூடாது என்றும் சொல்லப் படுகிறது. இந்தக் காரணங்களாவது யோக்கியமான காரணங்கள் என்றோ புத்திசாலித் தனமான காரணங்கள் என்றோ சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
குடி அரசு- 1937 (2) 130
கைத்தொழில் யந்திரத்தொழில் என்பதற்கு பொருளும் வித்தியாசமும் என்ன என்றால் தொழிலாளிகள் சரிரத்தால் சதா கவலையுடன் கவனமாகப் பாடுபடுவது கைத்தொழிலாகும். சரீரப்பிரயாசை இல்லாமலும் அதிக கவலையும் கவனமும் தேவை இல்லாமலும் பாடுபடுவது யந்திரத் தொழிலாகும். இதுமாத்திரமல்லாமல் மிக கொஞ்ச உற்பத்தி மாத்திரமே செய்யக் கூடியது கைத்தொழிலாகும். தாராளமாகவும், ஏராளமாகவும் உற்பத்தி செய்யக்கூடியது யந்திரத் தொழிலாகும். இந்த இரண்டில் அறிவுள்ள மனிதன் - ஜீவன்களிடத்தில் அன்பும் கருணையும் உடைய மனிதன் எதை ஆதரிக்க வேண்டும் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்.
யந்திரங்கன்
தவிர யந்திரங்கள் எத்தனையோ முட்டுக்கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் மதப்பித்தலாட்ட தந்திரங்களையும் சமாளித்துக் கொண்டு வெளி வந்து விட்டன. தரித்திரமும் யந்திரங்களை நாணையமாகவும் புத்திசாலித்தனமாயும் உபயோகித்ததன் மூலமே ஒரு அளவுக்கு ஒழிந்து
செல்வ விருத்தியும் அறிவுவிருத்தியும் ஏற்பட்டிருப்பதோடு மனித வாழ்க்கைத் திட்டமும் ஒரு அளவு உயர்ந்து ஏழ்மையும் ஒழிக்கப்பட்டு வருகிறது எங்கெங்கு காட்டுமிராண்டித்தனமும் வருணாச்சிரமதர்ம ஆட்சியும் சோம்பேறி வாழ்க்கையாரின் ஆட்சியும் இருக்கிறதோ அங்கு மாத்திரம்தான் அப்படிப் பட்டவர்களால் நடக்கும் யந்திரசாலையும் தான் மக்களை கஷ்டப்படுத்துகிறது யோக்கியர்களாக உண்மை மனிதாபிமானிகளாக இருப்பவர்கள் வர்ணாச்சிரம ஆட்சியை ஒழிக்கவும் வர்ணாச்சிரம ஆட்சியினர் ஆதரவில் இருக்கும் யந்திரசாலைகளை அழிக்கவும் முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய யந்திரங்கள் கூடாது என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமும் அறிவுடமையுமாகாது என்றே சொல்லுவோம்
கராச்சி காங்கிரஸ் திட்டத்தில் யந்திரசாலைகளை தேகீபமாக்குவது என்று ஒரு தீர்மானமிருப்பதாக காங்கிரஸ்காரர்களால் சொல்லிக் கொள்ளப்படுகிறது.
ஜஸ்டிஸ் கட்சியாரும் தங்கள் திட்டங்களில் இதையும் ஒன்றாய் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க யந்திரசாலைகளைப் பற்றியோ அவற்றை தேசீயம் அதாவது சர்ககாருடைய ஆதிக்கமாக ஆக்குவதைப் பற்றியோ யோசிக்காமல் பொருளாதார புனருத்தாரணத்துக்கும் தொழில் முறை புனருத்தாரணத்துக்கும் காங்கிரஸ்காரர்கள் கதரைப்பற்றி பேசுவது எப்படி யோக்கியமாகும்?
“வேலையில்லாதவர்களுக்கு வேலையும் சோறு இல்லாதவர்களுக்கு சோறும் போடப்படும்” என்று சொல்லி ஓட்டு வாங்கிய யோக்கியர்கள் தங்கள் வாக்குத்தத்தப்படி நடக்க வேண்டுமானால் அதிக நேரம் வேலை செய்வதைத் தடுத்து வேலை செய்கிறவர்களையும், வேலை இல்லாதவர் களையும் கணக்கு போட்டு உள்ள வேலையையும் உள்ள நேரத்தையும் மட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எல்லோருக்கும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். சோறு இல்லாதவர்களுக்கு சோறு என்றால் இது வரையில் சம்பாதித்து தேவைக்கு மேல் அதிகமாய் சேர்த்து வைத்திருக்கிறவர்களைப் பற்றி வேண்டுமானால். பின்னால் யோசித்துக் கொள்ளலாம் என்று அனாமத்தில் வைத்து விட்டு இப்போது யார் யார் தேவைக்கு மேல் சம்பாதிக்கிறானோ எவன் எவன் சராசரி தகுதிக்கு மேல் சம்பாதிக்கிறானோ அவர்களை கணக்குப்போட்டு அந்த முறைகளையும் கவனித்து அப்படிப்பட்டவர்கள் அதிகமாய் சம்பாதிக்க மார்க்கமில்லாத மாதிரி தொழில் முறையை திருத்தி அமைப்பதை விட்டு விட்டு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்களும் எஸ். சீனிவாசய்யங்கார்களும் " 10000, 20000 மும் “ஹிந்து” பத்திராதிபர் கூட்டமும், ராஜா சர். அண்ணா. மலைகளையும், ஜமால் மகம்மதுகளையும், நவாப் அப்துல் ஹக்கீம்களையும், வருஷம் 2 லக்ஷம் 3 லக்ஷம் போல் சம்பாதித்து முதல் சேர்க்கவும், இன்னும் இதுபோல் பல ஜமீன்தார்களும் மிராசுதார்களும் வருஷம் 10 லக்ஷம் 12 லக்ஷம் என்பதாக சம்பாதித்து முதல் சேர்க்கவும் தாராளமாய் வழியைத் திறந்து விட்டு விட்டு அவர்களிடம் ரகசியமாய் பிரதிப் பிரயோஜனம் பெற்றுக் கொண்டு ஏழைகளுக்கு 12 மணி பாடுபட்டு 12 சல்லிக்காசு வரும்படி வரும் படியான கைராட்டின அக்ஷய பாத்திரத்தை கொடுக்கிறேன்; அதில் காசு போடுகிறவர்கள் 3 அணா துணியை ஒரு ரூபாய்க்கு வாங்குவதன் மூலம் போடுங்கள் என்றால் இந்த கதர் திட்டம் முதலாளிகளுக்கும் யந்திர சாலை முதலாளிகளுக்கும் திருட்டுத்தனமாக இரகசியத்தில் ஏழைகளைக்
காட்டிக் கொடுக்கும் துரோக ஆட்சிமுறை அல்லவா என்று கேட்கின்றோம்.
இந்த நாட்டில் ஏழைகள் என்று ஒரு கூட்டமும் முதலாளிகள் என்று ஒரு கூட்டமும் இந்த ஏழைகளை செக்கில் போட்டு ஆட்டி ரசம் பிழிந்துகொள்ள காட்டிக் கொடுக்கும் சோம்பேறித் துரோக புரோகித மந்திரிகள் என்று ஒரு கூட்டமும் நிலையாய் இருந்து ஆட்சி செலுத்தச் செய்யப் படும் சூழ்ச்சி அல்லவா என்று கேட்கின்றோம்
கதரை எதற்கு ஆக இன்று அரசியலில் சம்மந்தப்படுத்தி மந்திரிகள் பேச வேண்டும்? அதற்கு ஆக 200000 ரூபாய் வரி செலுத்துவோர் பணத்தை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? கதர் வியாபாரத்தை மந்திரிகளே (சர்க்காரே)
ஏன் ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளவேண்டும் என்பனவாகிய விஷயங்களைக் கவனித்தால் இதில் நாணயம் எங்கே இருக்கக்கூடும்?
சர்க்கார் ஏகபோக உரிமையாய்க் கொண்டு அரசாங்க நிர்வாகத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமானால் யாருக்கும் நஷ்டமோ கஷ்டமோ இல்லாத எவ்வளவோ நல்ல தொழிலும் மார்க்கமும் இருக்கின்றன. அதை விடுத்து தரை ஏகபோகமாக்கிக் கொண்டதும் வலியறுத்துவதும் அதற்கு ஆக 2 லக்ஷம் ஒதுக்கி வைத்துக்கொண்டதும் பார்ப்பன ஆட்சிக்கு பலம் தேட அடிமை களை சேர்க்கவும் அடிமைகளை ஆதரிக்கவும் செய்து கொண்ட தந்திரமே அல்லாமல் வேறு என்ன காணமுடியும்?
குடி அரசு - 1937 (2) 132
இன்று நாட்டில் கதருக்கு ஏதாவது மதிப்போ செல்வாக்கோ நாணயமான அபிப்பிராய ஆதரவோ இருக்கிறதா என்று பார்த்தால் காங்கரசின் பேரால் பதவியிலிருப்பவர்கள் காங்கரசின் பேரால் ஓட்டுக்கேட்பவர்கள் காங்கரசின். பேரால் வயிறு வளர்ப்பவர்கள் அல்லாமல் வேறு யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்கிறோம்
கதரைப்பற்றி நன்றாய் அனுபோகப்பட்டு கதரின் புரட்டையும் துரோகத்தையும் புட்டுப்புட்டு விளக்கிக்காட்டி கதரை நெருப்புவைத்துக் கொளுத்திய பகுத்தறிவு வீரர்கள் இன்று பதவிக்கும் வயிறு வளர்ப்புக்கும் ஆசைப்பட்டு தங்களுக்கு புதிய ஞானோதயம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கொண்டு கதர் வேஷம் போடுவது என்றால் இதற்கு நாம் என்ன பதில் சொல்லக் கூடும்? கவர்னர்களும் வைசிராய்களும் பிரதம காரியதரிசிகளும் கொஞ்ச நேரத்துக்கு கதர் கட்டுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு உள்ள கதர் பக்தியா? அல்லது அவர்களது ராஜதந்திரமா என்று யோசித்துப் பார்த்தால் முழு மூடனுக்கும் உண்மை விளங்கிவிடும்
ஆனால் சர்.மகமது உஸ்மான்கள் சர்.கே. வெங்கிட்ட ரெட்டி நாயுடுகள் போன்றவர்கள் கதர் கட்டுகிறார்கள் என்றால் இதை யார் தான் ராஜதந்திரம் என்று சொல்லக்கூடும்? மானங்கெட்ட இழிநிலை தந்திரம் என்றுதானே சொல்லுவார்கள். சமதர்மம் பேசும் பொது உடமை உணர்ச்சி வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜவஹர்லால் போன்றவர். களும் ஜெயப்பிரகாஸ் நாராயணன் போன்றவர்களும் கதர் கட்டித்தான். ஆகவேண்டும் என்கின்ற நிலை வந்திருக்கிறபோது மற்ற சுண்டாங்கிகள்
கதர் கட்டுவதும் கதர் உபதேசம் செய்வதும் பதவிக்கோ வயிற்றுப் பிழைப்புக்கோ கதரை ஆதரிப்பதும் நமக்கு அதிகமாய் தோன்றவில்லை ஏனெனில் “உச்சிப் பிள்ளையாரே கோவிலோடு ஆகாயத்தில பறக்கின்ற போது எச்சிக்கலை என்ன செய்யமுடியும்?” என்று ஒரு பழமொழி உண்டு. ஆதலால் இதைப்பற்றி நாம் கவலை கொள்ளவில்லை. ஆனால் நம் வரிப்பணங்களைக் கொண்டு இம்மாதிரி அடாத காரியமும் கேடான காரியமும் செய்யப்படுவதையும் இந்தக் காரியத்துக்குள் புகுந்து கொண்டிருக்கும் ஏழைகளை முதலாளிகளுக்குக் காட்டிக்கொடுத்து நிரந்தர ஏழைகளாகப் பெரும்பான்மையான ஒரு கூட்ட மக்களை அழுத்தி வைக்கும் தந்திரத்தை புரோகித ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியையும் வெளியிடாமலிருக்க முடியவில்லை.
குடி அரசு - தலையங்கம் - 05.09.1937
133 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
புரோகித ஆட்சியின் பித்தலாட்டங்கள்
பன்னெடுங்காலமாய் நம் தமிழ் மக்கள் சமுதாயத்திலும் அரசியலிலும் பார்ப்பனர்க்கடிமைப்பட்டு மானமிழந்து அடிமைகளாய் வாழ்ந்து வந்த இழிவும் கொடுமையும் நீங்க சுமார் இருபது வருஷ காலமாக பார்ப்பனரல்லாதார் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் தோன்றி பார்ப்பன அரசியல் ஆதிக்கத்தை ஒழிக்க பார்ப்பனரல்லாதார் இயக்கமும் சமுதாய ஆதிக்கத்தை ஒழிக்க சுயமரியாதை இயக்கமும் தனித்து நின்றும்
அவசியத்துக்கு ஏற்றாற்போல் ஒத்துழைத்தும் பாடுபட்டு வந்ததும் அதன் பயனாய் ஒரு அளவு அவ்வாதிக்கங்களின் வேகம் குறைந்து பார்ப்பனரல்லாத மக்களுக்கு விடுதலையும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட்டு வந்திருப் பதையும் எந்த உண்மைத் தமிழ் மகனும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
இப்படிப்பட்ட முன்னேற்றகரமான ஒரு நல்நிலை முயற்சியை பார்ப்பனரல்லாத தமிழ் மக்களிலேயே ஈனத்தன்மையுள்ள ஒரு சிலர் தங்கள் வயிற்றுப் பாட்டுக்கும் சுய நலத்துக்குமாக எதிர்த்து எதிரிகளுக்கு “அநுமாராய்” இருந்து காட்டிக்கொடுத்து தொல்லை விளைவித்து பாமர: மக்களை பார்ப்பனர் ஏய்க்கப் பங்காளிகளாய் இருந்து பழைய புரோகித ஆதிக்கம் ஏற்பட உதவி புரிந்து இன்று இந்நாட்டில் பச்சைப்புரோகித ஆட்சியை ஏற்படுத்தி விட்டார்கள்.
இவ்வாட்சி (இப்புரோகித ஆட்சி) ஏற்படுவதற்கு பார்ப்பனர்கள். ஆசைப்பட்டார்கள் என்றாலும் எவ்வளவோ கட்டுபாடாக சகல துறைப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாகப் பாடுபட்டார்கள் என்றாலும் குலத்தைக் காட்டிக் கொடுக்கும் கோடாரிக் காம்புகளான
சில பார்ப்பனரல்லாத இழி மக்கள் உதவியும் ஒற்றர்கள் தொழிலும் செய்யாமல் இருந்திருந்தால் மாண்டு மடிந்துபோன புரோகித ஆட்சி எக்காரணம் கொண்டும் மறுபடியும் தலை தூக்கி இருக்காது. எப்படியோ இன்று புரோகித ஆட்சி உச்சநிலையில் இருக்கிறது. அது எவ்வித அஸ்திவாரமும் இல்லாது சேற்றில் நட்ட கம்பம்போல் இருந்தாலும் ஒரு
சிறு புயல் காற்றுக்கும் சிறு வெள்ளத்துக்கும் கூட தாக்குப் பிடிக்க யோக்கியதை இல்லாத மாதிரியில் ஊன்றப்பட்டிருந்தாலும் இன்று அதன்: ஆர்ப்பாட்டமும் தொல்லையும் அதன் நாசத் தொழிலும் கொஞ்ச நஞ்சம் என்று சொல்லுவதற்கு இல்லை.
குடி அரசு- 1937 (2) 134
எந்தச் சூழ்ச்சி செய்தாவது எப்படிப்பட்ட மோசமான காரியத்தில் இறங்கியாவது தமிழ் மக்களை நசுக்கி பழய மனு ஆட்சிச் சூத்திரர் களாகவும் சண்டாளர்களாகவும் ஆக்கிவிட வேண்டும் என்கின்ற உறுதியை இன்றைய புரோகித ஆட்சி கைக்கொண்டு விட்டது
தக்க செல்வநிலை உள்ள பல தமிழ் மக்கள் புரோகிதர்கள் காலுக்குள் நுழைந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள புரோகிதர்கள் பாதங்களில் தஞ்சமடைந்து விட்டார்கள். தமிழ் - ஆங்கிலக் கல்வியுள்ள பல தமிழ் மக்கள் தங்கள் தன்மானத்தையும் தமிழ் உணர்ச்சியையும் புரோகிதர் ஆட்சிக்குப் பயந்து நடுங்கி பாதகாணிக்கையாக வைத்து படுகிடையாய்ப் பணிந்து வயிறுவளர்க்கிறார்கள்.
இந்நிலை புரோகித ஆட்சிக்கு மேலும் மேலும் எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் விட்டுக் கொடுப்பதுபோன்ற உற்சாகத்தைக் கொடுத்து ஐந்து வருஷ காலத்தில் தமிழர்கள் விழிப்பை அழித்து அடிமை உணர்ச்சியை உண்டாக்கிலிடலாம் என்று கருதி திட்டம் போட்ட புரோகித ஆட்சி இன்று 5 மாதங்களில் அழித்து அடிமை கொண்டுவிடலாம் என்கின்ற தைரியம் கொள்ளும்படி செய்து விட்டது. இன்று தமிழ் நாட்டில் பல வியாபாரிகளும், பல மிராசுதாரர்களும், பல மிட்டாதார் ஜமீன்தார் என்பவர்களும் போட்டிபோட்டுக் கொண்டு புரோகித ஆட்சியை தஞ்சமடைவதானது பொதுவாகவே தமிழ் மக்கள் இயற்கையிலேயே மானமற்ற இழிதகமையுடையவர்கள் என்றும் காட்டிக் கொடுத்து உயிர் வாழ்பவர்கள் என்றும் புரோகிதக் கூட்டத்தார் எழுதி வைத்த புராணங்களும் சாஸ்திர கதைகளும் உண்மையாய் இருக்குமா என்று கூட பலரை நினைக்கும் படி செய்துவிட்டது
இன்றைய புரோகித ஆட்சிக் கொடுமையை பிரிட்டிஷ் ஆட்சியின்:
நம் நாட்டுப் பிரதிநிதிகளிடம் முறையிட்டால் “நீங்கள் இதற்கு மேல் வேறு
எதற்குத் தகுதி உடையவர்கள்?" என்று வெகு துணிவாய்க் கேட்கிறார்களாம். இதை குற்றம் என்று சொல்ல நம்மிடம் பலமான ஆதரவும் இப்படிச் சொல்லுவதைத் தடுக்க உறுதியான வீரமும் இருக்கிறதா? என்று பார்க்கவேண்டி இருக்கிறது.
“ஆட்சி முறையை திருத்தி அமைக்கின்றோம்; அந்நிய ஆங்கில ஆட்சியை அடியோடு ஒழிக்கின்றோம்; மக்கள் வரிச்சுமையை நீக்குகின்றோம்” என்று பாமர மக்களை ஏமாற்றி பதவிக்கு வந்த புரோகித கூட்டத்தார் சதையற்ற எலும்புத்துண்டுகள் சிலவற்றை நம் துரோகிகள் சிலருக்கு போட்டு சுவாதீனம் செய்துகொண்டு “அந்நிய ஆங்கில ஆட்சியை அடியோடு ஒழிக்கின்றோம் என்று சொன்னதின் கருத்து தமிழ் மக்களின் தமிழ் உணர்ச்சியையும் தன் மானத்தையும் அடியோடு அழித்து ஆரிய பாஷையை
135 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
புகுத்தி அதன் மூலம் புரோகித ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது தான்" என்று இன்று பச்சையாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இன்று தமிழ் மக்களை தாங்களும் மனிதர்கள் தான் என்று நினைக்கும்படி செய்ததும் தங்களை புரோகித கூட்டத்தார் அடிமை கொண்டு அந்நிய ஆட்சிக்குப் பலி கொடுத்து ஆதிக்கம் செய்கிறார்கள் என்றதை உணர்த்தியதும் தமிழ் பாஷையால் அறிந்த தமிழ் மக்களின் பண்டைய தனி நிலை உணர்ச்சியேயாகும்.
இந்த உணர்ச்சி தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பிறகே தமிழர்கள் புரோகித ஆட்சியின் சூழ்ச்சியையும் அதன் கொடுமையையும் உணரத் தலைப் பட்டார்கள். இந்த உண்மையை உணர்ந்தால்தான் புரோகித ஆட்சி இன்று தமிழை ஒழித்து ஆரியக் கலையையும் உயர்வு கற்பித்தலையும் தமிழர் களுக்குள் புகுத்தி பாழ்படுத்தி புரோகித ஆட்சிப் பிரதமர் துணிவோடு புறப்பட்டு விட்டார்.
இன்றைக்கு சுமார் 4, 5 மாதத்துக்கு முன் சென்னையில் நடந்த ஹிந்தி சம்மேளனம் என்பதில் தோழர் காந்தியார் அவர்கள் தன் வாயினாலேயே தமிழ் பாஷையின் எழுத்துக்கள் தமிழ் எழுத்துகளாக இருப்பதை மாற்றி தேவநாகரி (ஆரிய பாஷை - சமஸ்கிருத பாஷை) எழுத்தாக ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனது யாவருக்கும் ஞாபகமிருக்கும் அதுபோலவே காங்கரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் அவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து பதினாயிரக்கணக்கான தமிழ் மக்கள் முன்னிலையிலேயே “தமிழ் கடபடா பாஷை" என்று பரிகாசம் செய்து அது தனக்கு பிடிக்க வில்லை என்கின்ற அதிருப்தியை காட்டிவிட்டு போனார். இந்த இரண்டும் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்பதுபோல் இன்றைய புரோகித ஆட்சிப் பிரதமருடைய உள் கருத்தையும் செய்யக் காத்திருக்கும் தீவிர முயற்சியையும் தெள்ளத்தெளிய விளக்கியவை என்பது புலனாகிறது.
புரோகித ஆட்சியானது ஹிந்தி பாஷையை தமிழ் மக்கள் கட்டாயம் படித்தாக வேண்டும் என்று சொல்வதானது ஒரு வெடியில் இரண்டு ஜீவன்: களைக் கொல்லும் தந்திரமாக இருப்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும். என்னவெனில் ஒன்று தமிழ் மக்கள் தாங்கள் தமிழர்கள், தங்கள் காலில் நிற்கும் மனிதத்தன்மை வாய்ந்த தனி மக்கள், மற்றெந்த மக்களுக்கும் சரிசமமானவர் என்கின்ற உணர்ச்சி அற்று ஆரிய முறைக்கு அடிமையாகி புரோகித ஆட்சிக்கு ஆளாக இருப்பது
இரண்டு இன்றைய தமிழ் மக்களின் பெருங்கூப்பாடாகவும் பெரு முயற்சியாகவும் இருந்து வருவதுதான். அதாவது அரசியல் ஆட்சி முறையில் பங்கு பெறவும் பிரதிநிதித்துவம் பெறவும் அருகதையான கல்வித் தகுதியை ஒழித்து பார்ப்பான் பாதம் தாங்கும் பணியே தமிழ் மக்களுக்குத் தர்மமாகும் என்பதைக் காரிய மூலமாக பிரத்தியக்ஷத்தில் நிலை
நிறுத்துவது என்பதாகும்.
குடி அரசு - 1937 (2) 136
புரோகிதம் என்பது எப்படி மனிதனின் அறிவைப் பாழ்ப்படுத்தி மிருகத்தன்மையாக்குவதற்கு பயன்படுகிறதோ அது போலவே புரோகித ஆட்சியும் மனிதன் அறிவுத் தன்மையையும் ஆண்மைத் தன்மையையும் அடக்கி ஒழித்து அரசியலில் அடிமையாக்குவது என்பதை விளக்கி விட்டது இன்று தமிழ் நாட்டில் சிற்சில இடங்களில் மாத்திரமே உள்ள சிற்சில
தமிழ் மக்கள் இந்த உண்மையை உணர்ந்து சிறிது கவனிக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு வந்துள்ள இவ்வளவு பெரிய ஆபத்துக் காலத்தில் தமிழ் மக்கள் இதனை அலக்ஷ்யமாக கருதிக் கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் தமிழ் மக்கள் இழி நிலைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்
கொஞ்ச காலத்துக்கு முன்பு புரோகிதக் கூட்டத்தார் சென்னையில்
தமிழ் அன்பர்கள் மகாநாடு என்று ஒரு மகாநாடு கூட்டி அதில் தமிழ் பாஷையின் ஆதிக்கம் பூராவும் தங்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியை மனதில் கொண்டு ஒரு பெரிய முயற்சி செய்ததும் அதை மற்ற எல்லாத் தமிழர்களும் தமிழ்ப்பண்டிதர்கள் என்கின்ற மாம்ச பிண்டங்கள் சிலரும் பார்த்துக் கொண்டு மெளனம் சாதித்ததும் சிலர் ஆதரவளித்ததும் தமிழ் செல்வர்கள் பலர் சற்றும் மனித உணர்ச்சியின்றி பொருளுதவி செய்ததும் அறியாதார் யார்? அப்படிப்பட்ட ஒரு பெரிய தமிழ் துரோகத்தை - தமிழ்க் கொலையை சுயமரியாதைக்காரர்கள் மாத்திரமே உணர்ந்து பெரும் ஆத்திரம் கொண்டு பெரும் பணம் செலவு செய்து அம்மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாகப் போய் அப்புரோகிதக் கூட்டச் சூழ்ச்சி எண்ணத்தில் நெருப்பை வைத்து பொசுக்கிவிட்டு வந்தார்கள். அம்மகாநாடும், அம் மகாநாட்டு தீர்மானங்களும், கமிட்டிகளும், கமிட்டி வேலைகளும் பார்ப்பனர் மனக்கோட்டையும் அக்கூட்டத்திலேயே அழிந்து நாசமாயின. அன்று நாசமான எண்ணம் இன்று மறுபடியும் தலை தூக்கி அரசியல் ஆதிக்கத்தோடு அதிகாரத்தின் உதவியால் ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்கின்ற ஆக்கினை மூலம் தாண்டவமாடத் தலைப்பட்டுவிட்டது
இந்த நாட்டை யாரோ ஆளட்டும், அல்லது ராமாயணக் கதைபோல்
1 ஜதை செருப்புகள் அரியாசனத்தில் இருந்து ஆக்கினை செய்யட்டும் நமக்கு ஆளைப்பற்றியோ வகுப்பைப் பற்றியோ நாட்டைப்பற்றியோ நிறத்தைப்பற்றியோ கவலை இல்லை.
“ஆங்கிலேய ஆட்சி இங்கிலாந்து நன்மைக்கு ஆக ஆங்கிலேயர் உயர்வுக்கு ஆக இந்நாட்டில் ஆட்சி புரிகிறதால் அவ்வாட்சியை அடியோடு. விரட்டி அடித்துத் தீர வேண்டும்” என்று சொல்லப்படுமானால் புரோகிதக் கூட்ட ஆட்சியானது புரோகித வகுப்பு நன்மைக்கும் ஆதிக்கத்துக்குமாக இந்நாட்டில் ஆட்சிபுரிவதோடு ஆங்கிலேய ஆட்சியை விட கொடுமையாக: அதாவது ஆங்கிலேயர் தங்கள் மத உணர்ச்சியை பெருக்கவோ தங்கள்
157... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வகுப்பை உயர் வகுப்பு என்று நிலை நிறுத்தவோ ஒரு நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்கின்ற கொள்கைக்கு விரோதமாக புரோகித ஆட்சி வந்த மூன்றாம் நாளே புரோகித மத உணர்ச்சிக்கும் புரோகித ஜாதிக்கும் நாட்டை அடிமைப்படுத்துவதற்கும் கட்டாயப்படுத்தி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யுமானால் ஆங்கில ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு முன்னால் எவ்வளவு சீக்கிரத்தில் இப்புரோகித ஆட்சியை பூண்டற்றுப் போகும்படி செய்ய ஒவ்வொரு உண்மைத் தமிழ் மகனும் உடனே துணிந்து முயல வேண்டாமா என்று கேட்கின்றோம். நாம் இதை சுயமரியாதை உணர்ச்சியோடே எழுதுகிறோம் ஆகவே ஆங்காங்கு உள்ள வாலிபர்கள் உண்மைத் தமிழ் வாலிபர்கள் புரோகித ஆட்சி ஒழிப்புச் சங்கம் ஏற்படுத்த வேண்டும். புரோகித மறுப்புச் சங்கங்கள் போலவே புரோகித ஆட்சி மறுப்புச் சங்கங்கள் தோற்றுவிக்க வேண்டும். இந்தப் புரோகித ஆட்சி ஒழியும் வரை வேறு காரியத்தில் ஈடுபடுவதில்லை என்று மார்பைக் கீறி ரத்த மெடுத்து ஈட்டி முனையில் தொட்டு சங்க அங்கத்தினர் பத்திரத்தில் கையெழுத்திட விட வேண்டும். அதையே முதல் லக்ஷ்யமாகவும் நடு லக்ஷ்யமாகவும் கடை லக்ஷ்யமாகவும் கொள்ள வேண்டும். இம்மாதிரியான ஒரு பெரு முயற்சியில் ஈடுபட்டு உறுதிகொண்டு உழைக்காவிட்டால் வெகு சீக்கிரத்தில் தமிழர் என்ற ஒரு சமூகம் நாட்டில் இல்லாது சண்டாளர் என்றோ, இழி மக்கள் என்றோ, பிறவி அடிமைகள் (சூத்திரர்) என்றோ கல்லின்மேல் எழுதப் பொறும்படியான ஒரு பரிதாபத்திற்குரிய சமூகமாய் நெடுங்காலம் வாழவேண்டி வந்து விடும். இப்படி வாழுவதைவிட இன்றும் நாளையும் நமக்கு வேறு கதி இல்லை என்றால் பாஷாணத்தைச் சாப்பிட்டுவிட்டு மடிவதே மேல் என்று கூறுவோம். அடிமை நிலையில், தேவடியாள்
நிலையில், விவசாரி மக்கள் நிலையில் பார்ப்பனர்களுக்கு மனைவியாவது மோட்சம் என்றும் பார்ப்பனருக்கு பிள்ளையாய் பிறப்பது கிரேயசு என்றும் பார்ப்பனர் பாத தூளியும் தீர்த்தமூமே நம்மை உஜ்ஜீவிக்கும் மார்க்கம்,
பார்ப்பான் காலை அலம்பி புரோக்ஷணம் செய்து கொண்டாலொழிய, தீர்த்தமாக உட்கொண்டாலொழிய சுவர்க்கம் இல்லை, ஆத்மாவுக்கு விடுதலை இல்லை என்ற நிலையில் இருந்த இன்றைய தமிழ்ச் செல்வர்களை
- தமிழ்ப் பண்டிதர்களை - தமிழ்ப் பெரியார்களை இன்று மனிதத் தன்மையை உணர்ந்து தேவடியாள் மகனும்” ஏன் “குச்சிக்காரி”மகனும் “சக்கிலி” மகனும் “பறையன்” மகனும் “சங்கராச்சாரிக்கும் ஆச்சாரியார் சாமிக்கும்” சமமாக வீற்றிருந்து “உன் ரத்தத்துக்கும் என் ரத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?'' என்று கேட்கும் தன்மையை உண்டாக்கியது தமிழ் உணர்ச்சியும் சுயமரியாதைக் கிளர்ச்சியும் என்பதை இன்றைய வாலிப ஒவ்வொரு தமிழ் மகனும் மனதில் இருத்தி இத்தொண்டில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துவோம்
குடி அரசு - 1937 (2) 138
தமிழ் வாலிபர்களே - சுத்தத் தமிழ் ரத்தம் ஓடும் வீரத் தமிழர்களே! புரோகிதக் கூட்டத்திற்கு குற்றேவல்புரிந்து வயிறு கழுவும் ஈனர்கள் தங்களையும் வீரத் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டு மானமில்லாமல் ஈனமில்லாமல் உங்களை ஏய்க்க வருவார்கள்; நம்மையும் நம் பணிகளையும்
திரித்துக் கூறி ஏமாற்ற வருவார்கள். ஏமாந்து விடாதீர்கள். பதவிக்கும் அற்ப சுயநலத்துக்கும் ஆசைப்பட்ட தமிழ்ச் செல்வர்கள், கல்வியாளர்கள் புரோகிதக் கூட்டத்துக்கு பயந்து மானத்தை விற்று மனிதத் தன்மையைப் பறிகொடுத்து புரோகிதர்களுக்கு பின் தாளம் போடுவார்கள். அவர்களைப் பார்த்தும் ஏமாந்து போகாதீர்கள். இன்று நம் வேலையும் தமிழ் மக்கள் வேலையும் சமுதாயத்துறை வேலையாகும், புரோகித ஆட்சி ஒழிப்பு வேலையாகும் என்பதை உணருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 12.09.1937
159 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“தேசீய கீத?ப் புரவி
ஆகஸ்டு 31ந் தேதி கூடிய சென்னை அசம்பிளி - கெளன்சில் கூட்டு சம்மேளனத்தில் 'வந்தேமாதர” தேசீய கீதம் பாடியபோது இரண்டு முஸ்லீம் மெம்பர்கள் எழுந்து நிற்கவில்லையென்று தெரிய வருகிறது காங்கரஸ்காரரான ஹிந்துக்கள் வந்தேமாதர கீதத்தை தேசீய கீதமென்றோ தேசிய ஞான சங்கீர்த்தனமென்றோ கூறிக்கொள்ளலாம். ஆனால் இதர கட்சி மெம்பர்களும் இதர சமூக மெம்பர்களும் அதை காங்கரஸ் கீதம் என்றே மதிப்பார்கள். முக்கியமாக முஸ்லீம்கள் வந்தேமாதர கீதத்தை அறவே வெறுக்கிறார்கள். எனவே “வந்தே மாதர கீதம் பாடியபோது உட்கார்ந்திருந்த அந்த இரண்டு முஸ்லீம்களையும் குறை கூறுவதற்கில்லை. வந்தேமாதர
கீதம் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்த மடம்” என்ற நாவலில் முதன் முதல் வெளிவந்தது. முஸ்லீம் சமூகத்தை அழிப்பதே “ஆனந்த மடத்தின்” நோக்கம். 168- வருஷங்களுக்கு மூன் இருந்து வந்த இந்திய நிலைமையப் பற்றியே “ஆனந்த மடம்” எழுதப்பட்டிருக்கிறது. கதாநாயகனான பவாநந்தன் வங்காள முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க எண்ணிப் படை திரட்டுகிறான். அவன் மஹேந்திரன் என்பான் ஒருவனைச் சந்தித்துத் தனது புரட்சிப் படையில் சேரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறான். பவாநந்தன் வந்தே மாதர கீதம் பாடியபோது மஹேந்திரன் மதிமயங்கி அந்த கீதத்தை மீண்டும் பாடும்படி கேட்டுக் கொள்ளுகிறான். மஹேந்திரன் வேண்டிக் கொண்டபடியே பவாநந்தன் மீண்டும் பாடி தாய் நாட்டை முஸ்லீம் ஆட்சியிலிருந்து மீட்க வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறுகிறான். “ஸ்டேட்ஸ்மன்'' பத்திரிகையில் ஒரு முஸ்லீம் நிருபர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஆனந்த மடத்திலிருந்து பல மேற்கோள்கள். எடுத்தாளப்பட்டிருக்கின்றன. முஸ்லீம் ஆட்சியை ஒழிக்க முயல்வது புத்திசாலித்தனமாகுமா என்று மஹேந்திரன் கேட்டபோது “நமது மதம் போச்சு, நமது வர்ணாச்சிரம தர்மம் போச்சு, இப்பொழுது நமது உயிருக்கும் கூட ஆபத்து நேரிட்டிருக்கிறது. இந்த முஸ்லீம்களை ஓட்டா விட்டால் ஹிந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது” என்றெல்லாம் பவாநந்தன் கூறி மஹேந்திரனை தன் வழி இழுக்க முயல்கிறான். “நீ ஒண்டியாக முஸ்லீம்களை ஓட்டி விடுவாயா?” என்று மஹேந்திரன் கேட்டபோது வந்தேமாதர கீதத்திலுள்ள சில வரிகளை பவாநந்தன் பாடுகிறான். “ஏழுகோடி தொண்டைகள் முழங்கும் போது, 14 கோடிக் கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது பாரதமாதா
குடி அரசு- 1937 (2) 140
பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதே அந்த வரிகளின். பொருள். அதற்கு பதிலாக மஹேந்திரன் முஸ்லீம்கள் வீரப் பிரதாபங்களையும் படை பலத்தையும் எடுத்துக் காட்டுகிறான். பவாநந்தன் அதை ஒப்புக் கொள்ளவில்லை. “முஸ்லீம்கள் எல்லாம் பயங்காளிகள், கோழைகள். பிராணனுக்கு ஆபத்து ஏற்படும்போது கூட ஆங்கிலேயன் போர்க்களத்தி லிருந்து ஓட மாட்டான். வியர்வை வடியத் தொடங்கும்போது முஸ்லீம்கள்
பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் ஒரு வெடிகுண்டு விழுந்தால் போதும். முஸ்லீம்கள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள்” என பவாநந்தன் கூறி மஹேந்திரனை உற்சாகப்படுத்துகிறான். தனது புரட்சிப்படையில் சேர்ந்து முஸ்லீம்களை எதிர்த்து தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டியதின் அவசியத்தைப்பற்றி பவாநந்தன் எவ்வளவோ. கூறியும் மஹேந்திரன் மசியவில்லை. மறுநாள் காலையில் பவாநந்தன். மஹேந்திரனை ஆனந்தமட ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறான்.
அந்த ஆலயத்தில் ஒரு விஷ்ணுவின் விக்கிரகத்தையும் அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் விக்கிரகத்தையும் மஹேந்திரன் பார்த்து அந்தத் தேவியார் யார் என்று கேட்கிறான். “ஹோ! அவள்தான் நம் மாதா. நாமெல்லாம் அவளது குழந்தைகள்” எனப் பூசாரி விடையளிக்கிறான். அப்பால் ஆலயத்தின் வேறொரு பகுதிக்கு மஹேந்திரனை பூசாரி அழைத்துக்கொண்டு போய் “ஜெகத்தாத்ரி” தேவி தேஜோமயமாய் விளங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறான். “ஆதியிலே நமது பாரதமாதா இம்மாதிரியே இருந்தாள்” என பூசாரி மஹேந்திரனுக்குக் கூறி மீண்டும் வேறொரு ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். அங்கே நிர்வாண கோலத்திலிருக்கும் ஒரு கருங்காளி விக்கிரகத்தை பூசாரி மஹேந்திரனுக்குக் காட்டி “இப்போது பாரத மாதா இருக்கும் கோலம் இது” எனக் கூறுகிறான். அப்பால் வேறொரு இடத்துக்கு அழைத்துக்கொண்டு போய் பத்துக் கரங்களுடைய துர்க்கா தேவியின் விக்கிரகத்தைக் காட்டி “நமது சத்துருக்களான முஸ்லீம்கள் ஒழிக்கப்பட்ட பின் நமது பாரத மாதா இவ்வாறே இருப்பாள்” என மஹேந்திரனிடம் கூறுகிறான். மீண்டும் பூசாரி, லக்ஷ்மி, ஸரஸ்வதி தேவிகள் விக்கிரகங்களை மஹேந்திரனுக்குக் காட்டி “பத்துக் கரங்களுடைய துர்க்கையே! தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் லக்ஷ்மி தேவியே! கல்வித் தெய்வமான ஸரஸ்வதியே! போற்றி! போற்றி!” எனப் பாடி பூசாரி ஆனந்தத் தாண்டவமாடுகிறான். கடைசியில் மஹேந்திரன் தேசபக்தனாகி
புரட்சிப் பிரதிக்ஞை செய்து கொள்கிறான்.
புரட்சிப் படையில் ஆட்சேர்க்கும் முறையைப்பற்றி “ஆனந்தமட” நாவலிலிருந்து சில மேற்கோள்களை அந்த முஸ்லீம் நிருபர் எடுத்துக் காட்டியிருக்கிறார். 'தாய் நாட்டை மீட்கும் வரை உற்றார் பெற்றார் உறவினரைத் துறந்து சநாதன தர்மத்தை நிலைநாட்டுவதாக புரட்சிப் படையில் சேரும் ஒவ்வொருவனும் சபதம் செய்து கொள்வானாம். புரட்சிப் W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
படையில் சேர்ந்த பிறகு ஒவ்வொருவனும் ஒவ்வொரு கிராமத்துக்கு அனுப்பப்படுவானாம். கிராமங்களில் புரட்சிக்காரர் செய்யும் அட்டூழியங்களை விளக்கி “ஆனந்த மடத்'தில் கூறப்பட்டிருப்பதாவது,
“புரட்சிக்காரன் ஒவ்வொருவனும் கிராமங்களுக்குச் சென்று ஹிந்துக் களைச் சந்தித்து “சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா! எனக் கூறி 20 அல்லது 25 பேரைச் சேர்த்துக்கொண்டு முஸ்லீம் கிராமங்களுக்குச் சென்று முஸ்லீம் குடிசைகளை தீக்கிரையாக்குவார்களாம். உடனே முஸ்லீம்கள் நானா பக்கங்களிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வார்களாம் உடனே முஸ்லீம்கள் சொத்துக்களையெல்லாம் புரட்சிக்காரர் சூறையாடு வார்களாம். அவ்வாறு கொள்ளையடித்த பொருள்களை விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக வழங்குவார்களாம். கொள்ளைப் பொருள்களில் பங்கு கொண்ட கிராம வாசிகள் மகிழ்ச்சியடைந்து புரட்சிப் படையில் தாமும் சேர்ந்து கொண்டதாக விஷ்ணு பேரில் ஆணையிட்டுக் கொடுப்பார்களாம். ஆநந்தமடம் மூன்றாம் பகுதி எட்டாவது அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றிப் பின் வருமாறு கூறப்பட்டிருக்கிறது. “திடீரென ஒரு முழக்கம் கேட்டது. சிலர் முஸ்லீம்களைக் கொல்! கொல்! என ஆர்ப்பரித்தார்கள். சிலர் வந்தே மாதர கீதம் பாடினார்கள். சிலர் “சகோதரர்களோ! மசூதிகளையெல்லாம் தரைமட்டமாக்கி அந்த இடத்திலே ராதாமாதவ ராலயத்தைக் கட்டும் நாள் என்று வரும்" என்று கர்ஜித்தார்கள். இடையிலே பலர் வந்தேமாதர கீத கோஷம் செய்தார்கள்
“வந்தேமாதர" கீதத்தின் தோற்றத்தையும் நோக்கத்தையும், விளக்கிக் கூறி விட்டு அந்த முஸ்லீம் நிருபர் மேலும் எழுதியிருப்பதாவது:-
“விக்ரக வணக்கத்தை ஆதரிப்பதும் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்ச்சியை எழுப்பக் கூடியதுமான வந்தேமாதர கீதத்தை இந்திய முஸ்லீம்கள் ஒப்புக்கொள்வார்களா என ஹிந்துக்களையும் பாரபட்சமற்ற ஐரோப்பியர் களையும் நான் கேட்கிறேன். இந்நிலையில் எல்லாருக்கும் பொதுவெனக் கூறிக்கொள்ளும் காங்கரஸ் எல்லாரும் வந்தே மாதர கீதம் பாடுமாறு கட்டாயப் படுத்துவது நீதியாகுமா? உண்மையான தேசீய கீதம் தேசமக்கள் உள்ளத்தில் தேசபக்தியை உண்டு பண்ணக் கூடியதாக இருக்க வேண்டும். “வந்தேமாதர கீதம்” முஸ்லீம்கள் உள்ளத்தில் தேச பக்தியை எழுப்புமா?
தாய்நாட்டின் பெருமையை விளக்கக் கூடிய தேசிய கீதத்தை முஸ்லீம்கள் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அந்த கீதம் மத துவேஷத்தையோ, வகுப்பு துவேஷத்தையோ மூட்டக் கூடியதாயிருக்கக் கூடாது."
இந்த அபிப்பிராயத்தை நாமும் ஆதரிக்கிறோம். ஒரிஸா அசம்பிளியிலும் தேசீயக் 855 தகராறு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. ஒரிஸா அசம்பிளியில் தேசீய கீதம் பாடிய போது சில
குடி அரசு- 1937 (2) 142
உத்தியோகஸ்தர்கள் எழுந்து நிற்கவில்லையாம். காங்கரஸ்கட்சி மெம்பர்கள். அதை ஆட்சேபித்து அசம்பிளித் தலைவரிடம் முறையிட்டார்களாம் தலைவரும் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்தவரே. தலைவர் பிரஸ்தாப விஷயத்தைப்பற்றித் தீர்ப்புக் கூறுகையில் “உத்தியோகஸ்தர்கள் சட்டசபை மெம்பர்கள் அல்லவென்றும் சட்டசபை மண்டபத்தில் பிரசன்னமா யிருப்பவர்கள் இன்னின்ன மாதிரி நடந்து கொள்ளவேண்டு மென்று கட்டளையிடத் தமக்கு அதிகாரமிருந்தாலும் பிரஸ்தாப விஷயத்தில் தாம் எதுவும் செய்யப்போவதில்லையென்றும் தேய கீதம் பாடும்போது உட்கார்ந்
திருப்பதும் எழுந்து நிற்பதும் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்ததென்றும் எனினும் உத்தியோகஸ்தர்கள் உட்கார்ந்திருந்தது வருந்தத்தக்கதென்றும் அந்தத் தகராறை அத்துடன் விட்டு விடுவதே நல்லதென்றும் பிரஸ்தாபித்தாராம் சட்ட சபைகளில் வந்தே மாதர கீதம் பாடுவதை பெரும்பாலார் ஆதரிக்க வில்லை. மரியாதைக்காகச் சிலர் எழுந்து நின்றால் அதைச் சாக்காக வைத்துக் கொண்டு காங்கரஸ் பத்திரிகைகள் பெரிய புரளி செய்கின்றன. இந்த தர்ம சங்கடம் ஒழிய வேண்டுமானால் எல்லாக் கட்சியாரும் ஒன்று சேர்ந்து ஒரு மகாநாடு கூட்டி சர்வ கட்சியாருக்கும் சமூகத்தாருக்கும் உடன்பாடான. முறையில் தேசீய கீதமும் தேசீயக் கொடியும் வகுக்க வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு செய்யாமல் காங்கரஸ்காரர் வந்தேமாதர கீதத்தையும் மூவர்ணக் கொடியையும் எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டு மென்று பிடிவாதம் செய்தால் தேசீய கீதத்தின் மானமும் தேசீயக் கொடியின். கெளரவமும் அழிவது நிச்சயமென்று எச்சரிக்கை செய்கிறோம்.
- “விடுதலை
குடி அரசு - மறுபிரசுரம் - 12.09.1937.
W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்
தோழர் ஈ.வெ. ராமசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தினர்கள், உண்மை நண்பர்கள் ஆதியவர்கள் பார்ப்பனியத்துக்கு எதிரிகளே தவிர, தங்கள் செல்வம், உழைப்பு, ஊக்கம் உணர்ச்சி ஆகியவை களைப் பார்ப்பனீயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தி பார்ப்பனீயத்தை ஒழித்து அதன் மூலம் மக்களுக்கு பகுத்தறிவையும் சுயமரியாதை உணர்ச்சியையும் உண்டாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்களே ஒழிய இன்று தனிப்பட்ட எந்தப் பார்ப்பனரிடமும் விரோதமோ குரோதமோ கொண்டு எந்த தனிப்பட்ட பார்ப்பனரின் எவ்வித காரியத்திலும் பிரவேசித்து எவ்வித இடையூறோ இடஞ்சலோ செய்ததில்லை. மற்றும் அநேக பார்ப்பனர்களுக்கு தனிப்பட்ட முறையில். உத்தியோக முதலிய சிபார்சுகளும் செய்து சராசரி சமூக வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட இயற்கையின் பரஸ்பர உதவி முதலிய காரியங்கள் வகுப்பு உணர்ச்சி இல்லாமல் மனித உணர்ச்சி கொண்டு கூடுமான அளவு உதவியே வருகிறார்கள். தனிப்பட்ட மனிதர்களிடத்தில் காட்டும் மரியாதை, அன்பு முதலிய காரியங்களில் சிறிதும் பிறழாமல் எப்பொழுதும் போலவே நடந்து வருகிறார்கள். ஆனால் பார்ப்பனர்கள் இவ்விஷயத்தில் எவ்வளவு கேவலமாய் குரோத புத்தியுடன் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை பொது ஜனங்களுக்கு அறியச் செய்து மற்றவர்களையும் ஜாக்கிரதையாய் இருக்கும்படி செய்வதற்கு ஆகவே எடுத்துக்காட்டாக இரண்டொரு காரியத்தையாவது எடுத்துக்காட்ட வேண்டியது அவசரமாகிறது கொள்கை விஷயத்தில் நம் பிரசாரத்துக்கு இடையூறு செய்வதையும்,
நம் பத்திரிகைகளுக்கு தொல்லை விளைவிப்பதையும், சம்மந்தப்பட்ட உத்தியோகஸ்தர்கள் கூட்டங்களிலும், ரயிலிலும், தபாலாபீசிலும், அரசாங்க நிர்வாகத்திலும் உள்ளவர்கள் நடந்து கொள்வதைப்பற்றியும்
நாம் கவலைப்பட்டு வருத்தப்படவோ அல்லது அப்படிப்பட்டவர்கள் யார்மீதும் தனிப்பட்ட முறையில் ஆவலாதியோ மேலதிகாரிகளுக்கு பிராதோ சந்தர்ப்பம் கிடைத்தபோது தனிப்பட்ட மனிதன் மீது குறையோ அகியவை செய்யுங் காரியங்களில் இக்குடும்பம் அல்லது தனி நபர்கள் யாரும் பிரவேசிப்பதில்லை.
குடி அரசு- 1937 (2) 144
இதை நாம் ஒரு பெருமையின் குணமாகச் சொல்லவில்லை. மனித சுபாவமான சாதாரண குணத்தில் இருந்து மாறவில்லை என்று மாத்திரம் சொல்லுகிறோம். தனிப்பட்டவர்கள் இடம் பேசும்போதும் தனிப்பட்டவர். களைப்பற்றிப் பேசும் போதும் கூடுமானவரை மனிதத் தன்மையோடே நடந்துகொள்ளுகிறோம். இந்த சமயத்தில் ஒரு சிறு சம்பவத்தை குறிப்பிடுகிறோம். ஒரு சமயத்தில் தோழர்கள் ஈ.வெ. ராமசாமியும் கண்ணப்பர். அவர்களும், ரயிலில் மதுரைக்கு பிரயாணம் செய்யும்போது கண்ணப்பர் 2-வது வகுப்பிலும் ராமசாமி 3-வது வகுப்பிலும் பிரயாணம் செய்து கொண்டு போனார்கள். அப்போது திண்டுக்கல் ஸ்டேஷனில் தோழர் கண்ணப்பர் இறங்கி தோழர் ராமசாமி இருந்த 3-வது வகுப்பு வண்டிக்கு வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஒரு சு.ம. திருமணத்தில் நடந்த சொற்பொழிவைப் பற்றிப் பேசும் போது அருகில் இருந்த பார்ப்பனர் ஒருவர் “இந்த மாதிரி பேசி இருந்தால் அங்கிருந்த ஜனங்கள் உங்களை
சும்மா விட்டு விட்டார்களா என்று கேட்டார்? உடனே கண்ணப்பர் “பேசியதில் என்ன தப்பு?" என்றார். பார்ப்பனர் வைதீக முறையில் ஆத்திரம் கொண்டு சில கடும் பதங்களை உபயோகித்தார். தோழர் கண்ணப்பர் கூடக்
கூட அது போலவே பதில் சொல்ல ஆரம்பித்தார். தோழர் ராமசாமி தோழர் கண்ணப்பர் மீது கோபித்து “அவர் அவரது வைதீக உணர்ச்சியில் பேசுகிறார்.
நீங்கள் சமாதானம் சொல்லாமல் கூடக் கூட கோபித்துக் கொண்டால் சமாதானம் சொல்லக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விடுகிறீர்களே"' என்று கண்டித்து அடக்கினார்.
இதற்கு அந்தப் பார்ப்பனர் “அவர்களுக்கெல்லாம் சமாதானம் உங்களால் சொல்ல முடியாதையா! இவர்கள் அந்த ராமசாமி நாயக்கனுடைய கடன்கள்; அவன் புத்திதானே இவர்களுக்கும் இருக்கும்” என்று சொன்னார். உடனே தோழர் ஈ.வெ.ரா. தோழர் கண்ணப்பரை ஜாடை காட்டி அடக்கி விட்டார். வண்டி கொடைக்கானலுக்கு வந்த உடன் தோழர் கண்ணப்பர் 2-வது வகுப்பு வண்டிக்கு போய் விட்டார். உடனே தோழர். ஈ.வெ.ரா எழுந்து ரயில் கக்கூசு அறைக்குள் சென்றார். அப்போது வெளியில் இருந்த ஒருவர் அந்த பார்ப்பனரைப் பார்த்து “இப்போ இங்கிருந்தாரே அவர் யார் தெரியுமா?” என்ற கேட்டார். அதற்கு அந்தப் பார்ப்பனர் “அவர் யாரோ ஒரு கிழவர்; சூத்திரராகத் தான் தெரிகிறது. ஆனாலும் மகா பெரிய மனுஷர் போலிருக்கிறது" என்றார். உடனே மற்றவர் “அவர்தான் ராமசாமி
நாயக்கர்" என்று சொல்லி விட்டார். தோழர் ராமசாமி கக்கூஸ் அறையிலிருந்து வெளியில் வந்த உடன் அந்தப் பார்ப்பனர் எழுந்து நின்று கைகூப்பி மன்னிக்க வேண்டும் என்று ஆரம்பித்து “பத்திரிகையில் வரும் விஷயங்களையும் பிராமணர்கள் சொல்லிக் கொள்வதையும் கேட்டு நான் அந்தப்படி நினைத்து விட்டேன். இன்று ஒரு பெரிய சுதினமாகும். பெரியவாளை சந்தித்தது
145 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எனது பாக்கியம். " என்று வெகு நேரம் பேசிவிட்டு தன் பெயர் 16.சுப்ரமணிய அய்யரென்றும் காரைக்குடியில் இன்சூரன்ஸ் ஏஜண்டாய் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டு வெட்கமடைந்த தன்மையிலேயே மதுரை வரையில் வந்து இறங்கி விட்டார். இதை எடுத்துக் காட்டுவதற்கு காரணம் தனிப்பட்ட எந்த பார்ப் பனரிடமும் மரியாதைக் குறைவாய் பேசுகிற வழக்கம் ஈ.வெ.ரா.விடம் கிடையாது. அப்படி நடந்து வந்தும் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன?
என்றும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு இழிவான தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்? என்றும் பொது ஜனங்கள் உணர ஆசைப்படுகிறோம்.
என்னவெனில் மஞ்சுளாபாய் அம்மாள் என்கின்ற ஒரு பெண் ஒரு விதவையாய் இருந்து சுயமரியாதை இயக்கத்தின் மூலமாய் விளம்பரம் செய்யப்பட்டு திருச்சி புரோகித மறுப்புச் சங்கத்தின் ஆதரவில் ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள ஜானோஜிராவ் என்கின்ற ஒரு போஸ்டல் இலாகா
சிப்பந்திக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டது. அதோடு அத்திருமணத்தை ரிஜிஸ்டர் செய்யப்பட்டுமிருக்கிறது. அந்த ஜானோஜிராவ் என்பவர்
குடிகாரர். போஸ்டல் இலாகாவில் நாணையக் குறைவாய் நடந்ததற்கு ஆக
முன் ஒரு தடவை வேலை போய் மறுபடியும் இயக்க சம்மந்தமான பலரின் சிபார்சின்மீது போஸ்ட்மேனாய் இருந்தவர். குடிப்பழக்கமுள்ளவர். இவை ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் தான் ஒரு போஸ்டாபீசு கிளர்க்கு என்று சொல்லி கலியாணம் செய்து கொண்டவர். அப்படியிருந்தும் கல்யாணத்துக்கு பிறகு மறுபடியும் பல சிபார்சால் குமாஸ்தா பதவி அடைந்தார். இந்த நிலையில் கல்யாணத்துக்கு மூன் எதிர்பாராத பலவித கஷ்டங்களுடன் மஞ்சுளாபாய் அம்மாள் அவருடன் கடசியாக உலவக்கோட்டில் வாழ்ந்து வருகையில் அவர் தோழர் மஞ்சுளாபாயை ஒரு சுயமரியாதை மகாநாட்டுக்கு அனுப்பிவிட்டு தபாலாபீசில் ஒரு ரிஜிஸ்டர் கடிதத்தை கைப்பற்றி உடைத்து அதிலுள்ள 20 ரூ. நோட்டை எடுத்துக் கொண்டு பழயபடி ஒட்டி வைத்து விட்டார். இந்த இருபது ரூபாய் நோட்டை 2, 3 நாளில் நன்றாகக் குடித்துப் புரண்டு செலவு செய்து
விட்டார். ஆபீசில் இது அறிந்து அதிகாரிகள் இவரை சஸ்பெண்ட் செய்து கேஸ் எடுத்து ரிமாண்டில் வைத்து 10 மாதம் வரை காலம் தள்ளி கடைசியாகக் குற்றவாளி எனத் தீர்மானித்து ரிமாண்டில் இருந்த நாள்களை தண்டனைக்குப் பரிகாரமாகக் குறித்து ஒரு வருஷ நல்ல நடவடிக்கை ஜாமீனின் பேரில் விடுதலை செய்து வேலையிலிருந்தும் டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்.
ஜெயிலிலிருந்து வெளி வந்த பிறகு பெண்ஜாதியை வைத்து வாழ முடியாமலும் பெண்ஜாதிக்கு ஜீவனத்துக்கு வழி செய்யாமலும் தன்னிச்சையாய்த் திரிந்து கொண்டும் சாப்பாட்டுக்கு வகை செய்யாமல்
குடி அரசு- 1937 (2) 146
மனைவியை ஓட்டல் வைத்து சம்பாதித்துப் போடும்படி கட்டாயப்படுத்தியும் கொடுமைப்படுத்தியும் வந்தார். அந்தம்மாள் இவர் தொல்லைக்குப் பயந்து இயக்க சம்பந்தமான பல தோழர்கள் வீட்டிலும் மதுரையில் தாயார் வீட்டிலுமாகக் காலம் கழித்து வந்தார். அந்தம்மாள் செல்லுமிடங்களிலும் இயக்க விஷயமாய் அழைக்கப்பட்ட இடங்களிலும் சென்று தொல்லை விளைவித்து வந்ததால் அந்தம்மாள் பயந்து சட்டப்படி தோழர் ஜானோஜிராவ் இடமிருந்து விலகிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில் அந்தம்மாள் ஒரு நாள் ஈரோட்டுக்கு வந்திருக் கையில் அன்று தோழர் ஜானோஜிராவும் ஈரோட்டுக்கு வந்து தெருவில் போகும் போது கடைத் தெருவில் அந்தம்மாளை அவமானமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது காங்கரஸ்காரத் தோழர்கள் இரண்டொருவர் அவரைப் பார்ப்பனர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் இவரை தோழர்கள் ஈ.வெ ராமசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி ஆகியவர்களுக்கு விரோதமாக எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள விட்டுவிட்டார்கள். உடனே. நான்கு பார்ப்பன வக்கீல்கள் ஒன்று கூடி ஈ.வெ.ரா, ஈ.வெ.கி. ஆகியவர்கள்
மீது பிராது தயார் செய்து டிப்டி கலெக்டரிடம் அழைத்துக்கொண்டு போய் கொடுத்து மஞ்சுளாபாயம்மாளை அவர்கள் வீட்டில் சட்ட விரோதமாய் அடைத்து வைத்திருப்பதாயும் சோதனை வாரண்டு கொடுக்க வேண்டு மென்றும் கோரினார்கள்.
இந்தபடி எழுதிக்கொடுத்த பிராதில் அந்தம்மாளை என்ன நோக்கத்துடன் என்ன காரியத்துக்கு ஆக பூட்டி வைத்திருக்கிறார்கள் என்று காரணம் காட்டியிருப்பதில் “மஞ்சுளாபாயை விவசாரித்தனத்தில் ஈடுபடுத்தி மற்றவர். களுக்கு அனுமதிக்கவிட்டு லாபம் சம்பாதிக்கும் வேலையில் ஈடுபடுத்தி அடைத்து வைத்து இருக்கிறார்கள்” என்றும் “ஒழுக்கமற்ற காரியத்துக்கு ராமசாமி கிருஷ்ணசாமி மற்ற தோழர்களும் உபயோகித்துக் கொள்ளுகிறார்கள்” என்றும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.
இதில் தோழர் செளந்திரபாண்டியன் அவர்கள் பெயரையும் மற்றும்
சிலர் பெயரையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த வழக்கை நடத்த 4 பார்ப்பன. வக்கீல்கள் கோர்ட்டுக்கு வந்திருந்தார்கள். இரண்டு பேர் வக்காலத்து போட்டு எழுந்து, எழுந்து பேசினார்கள். வேறு இரண்டு வக்கீல்கள் தோழர் ஜானோஜிராவுக்கு இன்ன இன்ன மாதிரி சொல்லும்படி விசாரணையின் போதே பாடம் கற்பித்தார்கள். கடசியாக “இவைகளுக்கு சாட்சிகள் உண்டா” என்று டிப்டி கலெக்டர் கேட்ட பொழுது “நாளை கூட்டிக் கொண்டு வருகிறோம்” என்று சொல்லி வாய்தா கேட்டுக் கொண்டு வந்தவர்கள் மறுநாள் ஒரு வக்கீலும் கோர்ட்டுக்கு வராமல் தோழர் ஜானோஜிராவை மாத்திரம் அனுப்பி விட்டார்கள். மறுநாள் ஜானோஜிராவ் குடிகார பாஷையில் இந்த நான்கு வக்கல்களையும் கண்டபடி வைது கொண்டு கோர்ட்டுக்கு வந்து W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“சாட்சிகள் இல்லை” என்று சொல்லி அழுக ஆரம்பித்து பிராதை வாபீஸ் வாங்கிக்கொள்வதாகச் சொல்லி விட்டார். பிராதைத் தள்ளி விட்டதாகச் சொல்லி பிரதிவாதிகளைப் போகும்படி சொல்லி விட்டார் எனவே பார்ப்பனத் தொல்லை எந்த அளவுக்குத் துணிகின்றது என்பதையும் இந்தக் கூட்டம் வேறு எந்தக் காரியத்தைத்தான் செய்யப் படுவார்களா என்பதையும் பொது மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டு மென்றே இதை எழுதுகிறோம். பார்ப்பனர்களின் வக்கீல் பதவிகளே இவ்வளவு அயோக்கியத்தனமான காரியங்களுக்குப் பயன்படும் போது அந்த டிப்டி கலெக்டர் பதவியில் ஒரு பார்ப்பனர் இருந்திருந்தால் அப்பதவி எப்படிப்பட்ட காரியங்களுக்கு உதவி இருக்க முடியும் என்பதைப் பற்றி எழுத வேண்டியதே இல்லை.
இதே பார்ப்பன வக்கீல்கள் கூட்டம்தான் ஈரோடு முனிசிபாலிட்டி ஓட்டர் லிஸ்ட் தயார் செய்த போது ரிவைசிங் அத்தாரட்டியிடம் வந்து தோழர்கள் ஈ.வெ.ரா. ஈ.வெகி. அவர்கள் வீடுகளில் குடி இருந்த சர்க்கார். அதிகாரிகளையும் உபாத்தியாயினி பெண்களையும் பற்றி அவர்கள். ஓட்டர்களுக்கு லாயக்கில்லை என்று விண்ணப்பம் போடும் போது “இவர்கள். “குடி அரசு" ஆபீசில் பியூன்கள்" என்றும் எழுதிக் கொடுத்தார்கள். அதற்கு
சாட்சி கேட்கும் போதும் இதே மாதிரிதான் விண்ணப்பதாரனை சந்தியில் விட்டுவிட்டு ஓடிப்போய்விட்டார்கள். அதாவது நாளை கொண்டு வருகிறோம் என்று சொல்லி மறுநாள் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டார்கள். இப்பொழுது ஈரோடு ஓட்டர் லிஸ்டில் ஒழுங்கீனமாய் இருக்கிறது என்று மஞ்சள் பெட்டி ஓட்டர்களை ஓட்டராக்கப் போகிறார்களாம். இன்னமும் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யட்டும். ஈ.வெ.ரா., ஈ.வெ.கி., செல்வம், மதிப்பு எது வேண்டுமானாலும் பாழாகட்டும். ஆனால் இவர்களது உயிருள்ள. வரை பார்ப்பனீயத்தை வெட்டிப்புதைக்கத் தொண்டு செய்வதை எப்படித் தடுக்க முடியும். மந்திரி வேலை கொடுத்து ஏமாற்றலாம் என்று முயற்சித்த தலைவர் எண்ணத்திலேயே இடி விழுந்து விட்டதென்றால் வேறு எந்த காரியத்தால்தான் இவர்கள் எண்ணம் ஈடேற முடியும்? ஆகவே பொதுமக்கள் இவர்களது யோக்கியதையை உணர்ந்து ஜாக்கிரதையாய் இருக்கட்டும் என்றே இவற்றை இன்று குறிப்பிடுகிறோம். மற்றபடி எந்த தனிப்பட்ட நபரிடமும் வகுப்பிடமும் உண்மையிலேயே குரோதமில்லை. என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 12.09.1937
குடி அரசு- 1937 (2) 148
வரி குறைப்பு எங்கே?
புரோகிதக் கூட்டத்தார் தேசாபிமானம் என்னும் போர்வையைப் போர்த்துக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றி பதவியடைவதற்குச் செய்த
சூழ்ச்சிகளில் பெரியது சகல துறைகளிலும் வரிகளைக் குறைத்து விடுவதாகக் கூப்பாடு போட்டு மக்களை ஏமாற்றினதாகும். இந்தக் கூப்பாடுகள் நடக்கும் போதே இவை முழுப் புரட்டென்றும் மொத்தத்தில் ஒரு தம்பிடி வரிகூடக் குறைக்க இவர்களால் முடியாதென்றும் இவர்கள் மேலும் மேலும் வரிபோடத் தான் போகிறார்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்லிவந்தோம். அதுபோலவே இன்றைக்கு புரோகித ஆட்சி ஏற்பட்டு இந்த 2, 3 மாத இடையில் எவ்வளவோ காரியம் செய்துவிட்டதாகப் பறை அடித்தும் அவசரப்பட்டுச் செய்வதாக யாரும் ஆத்திரப் படக்கூடாது என்று பொது மக்களுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டு இஷ்டப்படிக்கெல்லாம் ஆடிக் குதித்துக்கொண்டும் அகங்காரமாகவும் ஆணவமாகவும் பேசிக் கொண்டும் திரிகிற இந்தப் புரோகிதக் கூட்ட ஆட்சியானது வரி விஷயத்தில் ஏதாவது காரியம் செய்திருக்கிறதாவென்று பார்த்தால் அந்த விஷயத்தில் ஒரு காசுகூடக் குறைக்கவில்லை என்பதோடு இன்னமும் எந்தெந்தத் துறையில் புது வரி போடலாம் என்றே ஆலோசனை செய்து வருகிறது.
ஸ்தல ஸ்தாபனங்களிலும் இதே மாதிரி பித்தலாட்டம் பேசிப் பதவி பெற்ற இந்த புரோகிதக் கூட்டம் மதராசிலும் மதுரையிலும் மற்றும் இரண்டொரு இடத்திலும் முனிசிபாலிட்டிகளில் புது வரிகள் போட்ட விஷயங்களையும் ஈரோடு முதலான சில மூனிசிபாலிட்டிகள் வரி குறைத்து வரவு செலவுத் திட்டத்தை சரிப்படுத்திக் கொடுத்தும் அதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது மான காரியங்களைக் கவனித்தால் வரி
குறைப்புப் பித்தலாட்டத்தை ஒருவாறு உணரலாம்.
ஆனால் தேசத் துரோகிகள் என்று இந்தப் புரோகிதக் கூட்டத்தார். களாலும் அவர்களது கூலிபெற்ற அடிமைகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியார் தைரியமாய் தோல்கேட்டுச் சுங்கங்களை எடுத்துவிட்டதோடு பூமிவரிகளிலும் 100க்கு 12% வீதம் குறைத்து விட்டார்கள். அதற்குப்
பின் பதவிக்கு வந்த “மகா மகா தேசத் துரோகிகள் கழுதைகள் நாய்கள்" என்றெல்லாம் இந்தப் புரோகிதக் கூட்டத்தாரால் வசவு சொல்லப்பட்ட இடைக்கால மந்திரிகள் 2 மாத காலத்தில் பூமி வரியில் மேலும் 100க்கு
149 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
12% வீதம் குறைத்து மொத்தத்தில் 100க்கு 25 வீதம் நிரந்தரமாய் குறைத்து வரவுசெலவுதிட்டத்தையும்சரிக்கட்டிக் கொடுத்துவிட்டு விலகிக் கொண்டார்கள்.
இவ்வளவுக்கும் இந்த மேல்படி இருதிறத்து மந்திரிகளும் பதவிக்கு வரும் போதும் தேர்தலுக்கு நிற்கும்போதும் வரி குறைக்கிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டவர்கள் அல்ல என்பது யாவருக்கும் தெரியும். பதவிக்கு வந்தால் தங்களால் கூடியதைச் செய்வோம் என்று மாத்திரம் சொன்னார்கள்.
ஆனால் இன்றைய புரோகித சரணாகதி மந்திரிகளோ அப்படிக்கு இல்லாமல் சகல துறைகளிலும் அதாவது காடுகளில் மாடு மேய்க்க வரி இல்லை, ரயில் சவாரி செய்ய வரி இல்லை, பூமிக்கு தண்ணீர் பாய்ச்ச வரி இல்லை, கல்விக்கு சம்பளமில்லை என்றும் இன்னும் இம்மாதிரி எவ்வளவோ அளப்புகள் வாய்க்கு வந்தபடி எல்லாம் அளந்தும் பேசி மக்களை ஏய்த்து பதவிக்கு வந்தவர்கள் இன்று மூலை முடுக்குகளில் இருட்டறைகளில் உட்கார்ந்து கொண்டு புது வரிகள் போட யோசனை செய்கிறார்கள். ஒரு புது வரியும் போட்டாய் விட்டது
அதாவது ஜவுளிக்கடைக்காரர்களுக்கு (மில் ஜவுளி துணி விற்பவர்.
களுக்கு) வரி போட்டாய் விட்டது. இனி புகையிலை வரி போட புள்ளி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு மாத்திரமல்லாமல் பூமிவரியையும் வேறுவகையில் அதிகப்படுத்தப் போகிறார்கள். தஞ்சாவூர் ஜில்லா மிராசுதாரர்கள் இது
தெரிந்து இப்போதே அழுக ஆரம்பித்து விட்டார்கள். வரி அதிகமென்றும் தாங்க முடியாதென்றும் கூப்பாடு அதிகமாய்ப் போட்டவர்கள் அந்த ஜில்லாக்காரர்களே ஆகும்
ஜஸ்டிஸ் மந்திரிகள் மீதும் இடைக்கால மந்திரிகள் மீதும் வரி குறைக்க வில்லை என்று அதிகக் குறை கூறினவர்களும் அந்த (தஞ்சை) ஜில்லாக்
காரர்களேயாகும். இன்று அந்த ஜில்லாக்காரர்களே முதல் முதலில் அழ ஆரம்பித்திருப்பதைப் பார்த்து உண்மையிலேயே நாம் சிரிப்போமே தவிர சிறிதும் சங்கடப்படப் போவதில்லை.
புரோகித மந்திரிகள் புதிதாகப் போடக் கருதி இருக்கும் பூமி வரி என்ன என்றால் பூமி வைத்திருக்கின்றவர்களுக்கு வெள்ளாமையின் மீது அதாவது விளைந்த பலனின் பொருமானத்தின் மீது வருமானவரி மாதிரி புது வரி விதிப்பது என்பதாகும். இந்த வரித் தொகையைக் கொண்டு சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு செய்ததால் சர்க்காருக்கு குறைந்துபோன 25 லக்ஷ ரூபாய் வருமானத்துக்கு பிரதி செய்ய இந்த வரி போடப்படுகிறதாம். இன்னும் இதுபோல் பல வரிகள் போட்டுத் தான் இனிமேலும் “மது விலக்கு" செய்யும் நஷ்டத்து வரவு செலவை சரிக்கட்ட வேண்டிய யோக்கியதையில் இன்றைய புரோகித மந்திரிகள் நிலை இருக்கிறது
குடி அரசு- 1937 (2) 150
எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த மந்திரிகளால் வரிச்சுமை ஒரு காசு அளவுகூட குறையாது என்பதை நாம் பந்தயங்கட்டிக் கூறுவோம்
சம்பளக் குறைப்பு புரட்டு
சம்பள வகையிலும் ஏதோ குறைக்கப் போவதாகச் சொன்னதும் இப்போது பெரிய பித்தலாட்டமாகி விட்டது
இன்று கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் புரோகிதக் கூட்ட உத்தியோகஸ்தர்கள் சம்பளங்களை கண்டிப்பாய் இந்த புரோகித மந்திரிகள் குறைக்கமாட்டார்கள். ஏனெனில் பெரிய உத்தியோகம் பார்ப்பவர்கள்
பெரிதும் புரோகித வர்க்கத்தாரே ஆவார்கள். ஒரு சமயம் இனி புதிதாக வேலைக்கு வரும் உத்தியோகஸ்தர்கள் சம்பளம் ஏதாவது குறைக்க திட்டம் போடலாம். ஏனெனில் ஜாதி விகிதப்படி உத்தியோகம் வினியோகிக்க வேண்டியிருப்பதால் இனி புரோகிதரல்லாதார் கூட்டமும் உத்தியோகத்துக்கு வரலாம். அவர்களுக்கு சரி சம்பளம் கொடுக்க புரோகிதர்களுக்கு மனம் தாளாது. ஆகையால் அதில் ஏதாவது கை வைக்கக்கூடும். “மயிரைச் சுட்டால்
கரி ஆகுமா! என்ற பழமொழிப்படி அப்படி செய்தாலும் பிரமாத மீதி எதுவும் ஏற்பட்டு விடப் போவதில்லை
மந்திரிகள் “சம்பளம் குறைத்துக்கொண்ட" சூழ்ச்சியும் மூன் இருந்த இடைக்கால மந்திரிகள் ஆட்சி மந்திரிசபை செலவைவிட ஜஸ்டிஸ் கட்சி
மந்திரி சபை செலவைவிட அதிகமாகத்தான் ஆகிவிட்டதே தவிர அதிலும்
சிறிதும் பலன் ஏற்பட்டு விடவில்லை. ஒரு ஜில்லாவுக்கு இரண்டு ஜில்லா போர்டு இருப்பது செலவு அதிகம் என்று சொல்லி ஒன்றுபடுத்த போகிறவர்கள்.
மந்திரி சபையை ஆதியில் 2 மந்திரிகள் இருந்ததை 7 ஆக்கி அப்புறம்
6 ஆக்கி இப்போது 10 ஆக்கி அந்த பத்து பேருக்கும் 10 காரியதரிசிகள் ஏற்படுத்தி அவர்களுக்கும் சம்பளம், படி, மோட்டார்கள் பிரபாணச் செலவுகள் ஆதிய தாம் தூம் செலவுகள் ஏற்படுத்திவிட்டதோடு சட்டசபை மெம்பர்களுக்கு சம்பளம் ஏற்படுத்தவும் ஆன காரியங்கள் செய்த பிறகு எப்படி சிக்கனமும் பண மீதியும் ஆகிவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை. இன்றைய புரோகித கூட்ட மந்திரிகள் நினைப்பெல்லாம் எப்படி இப்பதவிகளில் மானமற்று மரியாதை அற்று அட்டைபோல் ஓட்டிக் கொண்டிருந்து புரோகித ஆதிக்கத்துக்கு நிலையான ஆட்சியை பலப்படுத்திக் கொள்ளலாமென்று கருதிக் கொண்டு இருக்கின்றார்களே ஒழிய ஜனங்களைப் பற்றியோ நாட்டு முற்போக்கைப் பற்றியோ சிறிதும் கவலை இருப்பதாக ஒரு விதத்திலும் காட்டிக்கொள்ளவே இல்லை.
அதிகாரத்துக்கு வந்து வராததற்கு முன் ஹிந்தியை கட்டாயமாகப் படித்து பார்ப்பானுக்கு பிறவி அடிமையாய் வைப்பாட்டி மகனாய் ம... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இருக்கும் மனப்பான்மையைப் பெறு என்றுதான் ஆக்கினை பிறப்பிக்க முயற்சி நடக்கின்றதே தவிர பாமர மக்களுக்கு என்ன நன்மை செய்வது என்பதில் சிறிதும் கவலையைக் காணோம் இதை அறிந்தேதான் பார்ப்பான் ஆட்சி எப்போதும் கூடவே கூடாதென்று ஆதியிலேயே வெகுகாலத்துக்கு முன்னமேயே ஒளவை பிராட்டியார் பாடி இருக்கிறார். அதாவது நாட்டை ஆட்சி புரிய எந்தக் கூட்டத்தார் தகுதியுடையவர்கள் என்று ஒரு அரசர் கேட்ட கேள்விக்கு ஒளவையார் “நூல் எனிலோ கோல் சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம் கோல் எனிலோ குடி அனைத்தும் கொள்ளை போம். நாலாவான், மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான். அந்த அரசே அரசு'' என்று பாடி இருக்கிறார். ஆகவே நூல் என்னும் பூணூல்காரர்களாகிய புரோகிதர்கள் ஆட்சி நீதியாய் இருக்காதென்றும் பாரபக்ஷமாகவே தங்கள் ஆதிக்கத்துக்கு ஏற்றதாகவே இருக்குமென்றும் நன்றாகச் சொல்லியிருக்கிறார். இதை உத்தேசித்து 3, 4 வருஷங்களுக்கு முன்னமேயே நாம் புரோகித ஆட்சி கொடுங்கோன்மையாக இருக்குமென்றும், நம் அபிப்பிராயத்தைச் சொல்லக்கூட வசதி அளிக்கச் சம்மதிக்காத அவ்வளவு தன்னிச்சையான
கடும் ஆட்சியாக இருக்குமென்றும் இந்த ஆட்சியைவிட கடும் புலி வாழும் காடே மேன்மையாய் இருக்கும் என்று கூறியும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்போது இந்தக் கடுமையான புரோகிதக் கூட்டத்தோடு அதை விட கடுமையான வியாபாரக் கொள்ளைக் கூட்டத்தாரும் சேர்ந்துவிடப் போகிறார்கள். ஏனெனில் பார்ப்பானுக்கு அடுத்தாப்போல் வியாபாரிக்குத் தான் சிறிது தந்திர புத்தி உண்டு. அவன் ஏராளமாக புரோகிதனுக்கு லஞ்ச லாவணம் கொடுத்து தானும் நன்றாய் கொள்ளை அடிப்பதற்கு அனுகூலம் செய்து கொள்வானே தவிர நாட்டையோ மக்களையோ கவனிக்க மாட்டான். அதணலேயே மில் முதலாளி, பெரிய லேவாதேவிக்காரன், பெருத்த வியாபாரி அதியவர்கள் இந்த புரோகித ஆட்சிக்கு அடிமையாய் இருக்கிறார்கள். ஆகவே இவ்வாட்சியினால் கஷ்டப்படப் போகிறவர்கள் பூமியை உடையவர்களும் சிறு குடியானவர்களும் மத்திய தொழிலாளர்
கூட்டமும் ஏழைகளுமேயாகும். இவர்களுக்கு அனுகூலமான ஒரு காரியமும் இந்த மந்திரிகளால் நடக்கப் போவதில்லை. இன்னமும் தெளிவாகச் சொல்லப் போனால்சர்வாதிகார வெள்ளைக்காரர்கள் ஆட்சியே இதைவிட மேலான ஆட்சி என்கின்ற உணர்ச்சி தான் அறிவுள்ள மக்களுக்கு கூடிய சீக்கிரம் தோன்றி விடும் என்றே கருதுகிறோம். ஆகையால் எப்படியாவது இப்புரோகித ஆட்சியை கவிழ்க்க வேண்டியது உண்மையான மனிதாபிமானமும் ஜீவகாருண்யமும் உடைய ஒவ்வொரு அறிவாளியினுடையவும் கடமையாகும்
இவ்வாட்சி எப்படியும் சீக்கிரத்தில் கவிழ்ந்துவிடும் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் பொது ஜனங்களுக்கு புத்தியில்லாவிட்டாலும் சர்க்காருக்காவது புத்தி வந்து தனது பிரஜைகளை
குடி அரசு - 1937 (2) 152
இக்கொடுங்கோன்மை ஆட்சிக்கு உட்படுத்தக்கூடாது என்று கருதி
சீக்கிரத்தில் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிவிடுவார்கள் என்றே கருதுகிறோம். ஆதலால் பொது மக்கள் இப்புரோகித ஆட்சிக்கு கீழ்படியாமலும்
இது நிலைத்திருக்க உதவி செய்யாமலும் இதை ஒழிக்க ஒவ்வொருவரும் தயாராகி நமது அதிருப்தியையும் இவ்வாட்சியால் நாம் அடையும் சங்கடத்தையும் பிரிட்டிஷ் சர்க்கார் அறியும்படி செய்யவேண்டியது
மிகவும் அவசியமாகும்
நமது முஸ்லீம் தோழர்களும் இப்புரோகித ஆட்சி தங்களுக்கு வேண்டாம் என்றும் இவர் செய்யும் கொடுமை சர்க்காரார் இடம் கொடுக்கக் கூடாதென்றும் வெளிப்படையாய் தெரிவிக்க வேண்டுகிறோம். மற்றும்
கதர் பிரசாரமும் ஹிந்தி கட்டாயமும் மிகமிக கண்டிப்பாய் வன்மையாய் எதிர்க்கப்பட வேண்டியவையாகும். அவற்றுள் அவ்வளவு கொடுமையும் விஷமும் புகுந்திருக்கிறதை மக்கள் உணர வேண்டும்
குடி அரசு - தலையங்கம் - 19.09.1937
183 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆராய்ச்சி விளக்கம்
ஏழை என்பவன் யார்?
தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக் கூட்டத்தார் களுக்குதான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.
முதலாவிகன் என்பவர்கள் யார்?
சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.
கீழ் ஜாதியார்கள் யார்?
ஏவலாள்கள் அதாவது எவ்வித கூலியோ சம்பளமோ பேசாமல் இட்டவேலையை செய்துவிட்டு கொடுத்த கூலியைப் பெற்றுக்கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.
மேல் ஜாதியார் என்பவர்கள் யார்?
தொழில்களில் கீழான தொழில், மேலான தொழில் என்று கற்பித்து மேலான தொழில்கள், மத்திய தொழில்கள் என்பவைகளை மாத்திரம் செய்து கொண்டு கூடுமானவரை சரீரத்தால் செய்யும் கடினமான வேலைகளை செய்யாது தப்பித்துக் கொள்பவர்கள்.
குடியானவர்கள் என்பவர்கள் யார்
பூமியை தானே உழுது தானே பயிர்செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.
மிராகதாரர்கள் என்பவர்கன் யார்? தாங்களே நேரில் விவசாய தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும் மற்றவர்களுக்கு குத்தகைக்கோ வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.
குடி அரசு - 1937 (2) 154
பிராமணர்கள் என்பவர்கள் யார்?
எக்காரணம் கொண்டும் சரீரம் பிரயாசைப்படாமலும் எவ்விதத்திலும் நஷ்டமோ கவலையோ அடைய வேண்டிய அவசியமில்லாமலும் இருக்கத்தக்க நிலையில் இருந்துகொண்டு தங்கள் சமூகத்தைத் தவிர மற்றெல்லா மக்களுடையவும் உழைப்பால் திருப்தியான உயிர் வாழ்க்கை வாழ்பவர்கள்.
பிச்சைக்காரன் எண்பவன் யார்?
பாடுபட சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு ஏமாற்றுவதாலும் சண்டித் தனத்தாலும் கெஞ்சிப் புகழ்ந்து வாழ்பவர்கள்:
செல்வவான்கன் என்பவர்கள் யார்?
தன் வாழ்க்கைத் திட்டத்திற்கு மேல் பணம் வைத்துக் கொண்டிருப்
பவர்கள்.
தமித்திர்கன் என்பவர்கள் யார்?
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக்கொண்டு. துன்பப்படுபவர்கள் - நாணையமாய் வாழ முடியாமல் நாட்டுக்கு தொல்லை விளைவிப்பவர்கள்: தங்கள் வரவுக்கும் தகுதிக்கும் மேல் வாழ்க்கை திட்டம் வகுத்துக்கொண்டு வாழ்பவர்கள்.
- ஈ.வெ.ரா.
குடி அரசு - வினா விடை - 19.09.1937
18$ ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ்
கமிட்டிக் கூட்டம்
பாரிஸ்டர் ராமசாமியை கவிழ்க்கச் சூழ்ச்சி
தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சி மெம்பரான பாரிஸ்டர். தோழர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் தற்கால அக்ரகார மந்திரி சபையைக் கண்டித்து “விடுதலை” பத்திரிகையில் எழுதியதற்காகத் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டியார் தோழர் ராமசாமி அவர்கள் காங்கரசின் பேரால்
3 வருடங்களுக்கு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்று உத்திரவிட்டார்கள். அதை ஒட்டித் தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர்கள் தோழர் ராமசாமிக்கு அழைப்பு அனுப்பாமலேயே சென்ற 31-8-37ந் தேதி ஒரு கூட்டம் கூடி தோழர் ராமசாமி அவர்களை ஜில்லா போர்டு அங்கத்தினர் பதவியை ராஜிநாமா செய்யும்படி கேட்டுக்கொள்வதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதைக்கண்ட தோழர் ராமசாமி அவர்கள் தனக்கு அழைப்பு அனுப்பாமலேயே கூட்டம் கூடி தன்னை ஜில்லா போர்டு மெம்பர் பதவியை ராஜிநாமா செய்யும் படி கேட்பது ஞாயமல்லவென்று ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சி கமிட்டித் தலைவரிடம் கூறினார்.
ஷெ கமிட்டித் தலைவர் மீண்டும் 125 தேதி ஒரு கூட்டம் கூட்டு வதாகக் கூறி ஷி தேதியில் ஒரு கூட்டம் கூட்டினார். அதில் தோழர் ராமசாமி அவர்கள் ஜில்லா போர்டு மெம்பராக இருக்க வேண்டுமென்று தீர்மானித்
தார்கள். தோழர் ராமசாமியை எப்படியாவது ஜில்லா போர்டிலிருந்து நீக்கிவிட வேண்டுமென்று பார்ப்பனர்களனைவரும் ஒருமுகமாக கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தார்கள். ஆனால் பார்ப்பனரல்லாத மெம்பர்கள் அனைவரும் ஒற்றுமையாகவிருந்து பார்ப்பன சூழ்ச்சியை விரட்டியடித்து விட்டார்கள்.
தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி என்ன செய்யப் போகிறது? தர்மபுரி ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போகிறதா? பார்ப்பனரல்லாதார்களே! இனியாவது உங்களுக்கு பார்ப்பன சூழ்ச்சி விளங்குமா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.09.1937
குடி அரசு - 1937 (2) 156
இந்தியா ஒரு நேஷனா?
இந்தியாவுக்குப் பொதுபாஷை இருந்ததா?
ஹிந்தி புகுத்தல் அரசியல் சூழ்ச்சியே இந்தியா பல மதம் பல வகுப்புடைய நாடு
தலைவரவர்களே! தோழர்களே!
ஹிந்தியை நம் நாட்டில் பொது பாஷை ஆக்கப்பட வேண்டுமென் பவர்கள் அதற்கு ஆதாரமாக சொல்லி வரும் காரணங்கள் என்ன என்பதை
நான் முதலில் குறிப்பிட்டு விட்டு அவற்றிற்கு சமாதானம் சொல்லி பிறகு அதன் கர்த்தாக்களின் உள் எண்ணத்தையும் அதனால் நமக்கு நேரக்கூடிய கெடுதியையும் எனக்குப் பட்டவரை எடுத்துச் சொல்லுகிறேன்.
ஹிந்தி பொது பாஷையாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பாடமாகவும் வைக்கப்பட வேண்டியது அவசியம் என்று இப்போது எனக்கு முன் பேசிய இருவர்களுக்கு உள்ள சுதந்தரம் எனக்கும் உண்டு என்கின்ற முறையிலேயே நான் பேசுகிறேன். முதலில் பேசிய தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் “ஹிந்தி அரசியலில் பட்டதல்ல வென்றும் அரசியல் பேச்சு இந்த விவாதத்தில் கலக்க வேண்டியதில்லை” என்றும் பேசிவிட்டு உடனேயே,
“நமக்கு சுயராஜ்யம் வேண்டும், அதற்கு ஒரு பொது பாஷை அவசியம். நம் தாய்நாடு இந்தியா, இந்தியாவுக்கு தாய்மொழி ஹிந்தி, இந்தியா ஒரு நேஷன், நேஷனல் பாஷை ஹிந்தி, நேஷனல் என்பதே அதன் மதம் பாஷை ஆகியவற்றைப் பொறுத்தது. வகுப்பு மத உணர்ச்சி கூடாது. அது மிக அற்ப விஷயம். இங்கிலீஷா தமிழோ பொதுப் பாஷையாக ஆக முடியாது. மதராஸ் மாத்திரம் தனித்திருக்க முடியாது மதராஸ் ஒரு நேஷன் அல்ல. இங்கிலீஷை புறக்கணிக்கவும் இப்பொழுது முடியாது. இந்தியாவை ரஷ்யாவாக்க முடியாது” என்றெல்லாம் சொன்னார்.
மற்றும் சில விஷயங்களும் சொல்லி கடைசியாக ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறினார்கள்.
நான் அவற்றிற்கு தனி தனியாக சமாதானம் கூறிவிட்டு கடைசியாக என் அபிப்பிராயம் கூறுகிறேன்.
இந்த விஷயத்தில் தோழர் கே.பி. பிள்ளை அரசியல் இல்லை என்றும் அரசியலை இதில் கலக்கக் கூடாது என்றும் சொல்லி விட்டு 157... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
உடனே நாம் சுயராஜ்யத்துக்கு பாடு படுகிறோம் ஆகையால் அதற்கு ஒரு பொது பாஷை வேண்டாமா என்றார். ஆகவே அவருடைய முதல் காரணமே அரசியலுக்கு ஆகவே ஹிந்தி வேண்டும் என்பதாகிறது
சுயராஜ்யம் என்றால் என்ன?
சுயராஜ்யத்துக்கு ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பதைப்
பற்றிப் பின்னால் பேசிக் கொள்ளலாம். தோழர் கே.பி. பிள்ளை தயவு செய்து சுயராஜ்யம் என்றால் என்ன என்றுவிளக்குவாரா? புரோகிதன் வயிற்றுப் பிழைப்புக்கு மோக்ஷம் என்று அவனுக்கும் புரியாமல் நமக்கும் புறியாமல் வேண்டுமென்றே அர்த்தமும் கருத்தும் அற்ற சொல்லைக் கற்பித்து நம்மை ஏய்த்து வருவது போலவே புரோகிதத்தால் பிழைக்க வகை இழந்த மற்றொரு கூட்டத்தார் சுயராஜ்யம் என்கின்ற சொல்லைக் கற்பித்து மக்களை. ஏய்க்கிறார்கள். மதத்தால் மடையர்களாக்கப்பட்ட ஒரு கூட்ட நம் பாமர மக்கள் அதை நம்பி ஏமாறுவதும் மற்றொரு வயிற்றுப் பிழைப்புக்கு வேறு நல்ல வகையற்ற ஒரு கூட்ட நம் மக்கள் அதைப் பிரசாரம் செய்து வயிறு வளர்ப்பதுமல்லாமல் சுயராஜ்யத்துக்கு அருத்தமென்னவென்று இப்போது கேட்கிறேன். பெரியதொரு அரசியல் ஞானியென்று இந்தியா முழுவதும் பெயரெடுத்த தோழர் விஜயராகவாச்சாரியார் சமீபத்தில்தான் இதே கேள்வி கேட்டிருக்கிறார். அதுவும் காந்தியோ நேருவோ அவங்கப் பனோ யாருமே இக்கேள்விக்கு இதுவரை பதில் சொல்ல வில்லை” என்று சொல்லியிருக்கிறார்.
ஜவஹர் தகிடுதத்தம்
காங்கிரஸ் பிரசிடெண்டு தோழர் ஜவஹர்லால் கூட சுயராஜ்யத்துக்கு ஒரு குறிப்பிட்ட அருத்தம் சொல்லவே இல்லை. ஆனால் அவர் சுயராஜ்யம் என்றால் ஒரு சமயத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பார். மற்றொரு சமயம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பது என்பார். மற்றொரு சமயம் இந்தியாவை அந்நியர் ஆளப்படாது என்பார். மற்றொரு சமயம் ஜனநாயகம் என்பார். மற்றொரு சமயம் தொழிலாளர் ஆட்சி என்பார். மற்றொரு சமயம் குடியானவர் ஆட்சி என்பார். மற்றொரு சமயம் சமதர்மம் என்பார். மற்றொரு சமயம் பூரண சுயேச்சை என்பார். மற்றொரு சமயம் பட்டினியும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிவதே என்பார் மற்றொரு சமயம் உலகப் பொது உடமை என்பார். இப்படி இன்னமும் எவ்வளவோ விதமாக வாயில் வந்தபடி சமயத்துக்குத் தக்கபடி பேசுவார்.
காந்தி பாஷ்யம்
தோழர் காந்தியாரோ சுயராஜ்யத்துக்கு அருத்தம் ஒரு சமயத்தில் ராமராஜ்யம் என்பார். மற்றொரு சமயம் வருணாச்சிரம முறையை சரிவர அமைப்பதே என்பார். மற்றொரு சமயம் என் சுயராஜ்யத்தில்
குடி அரசு- 1937 (2) 158
ராஜாக்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் இடம் உண்டு என்பார். மற்றொரு சமயம் அவரவர் சுதர்மத் தொழிலைச் செய்யச் செய்வதே என்பார். மற்றொரு சமயம் ராட்டினமே சுயராஜ்யம் என்பார். மற்றொரு சமயம் எல்லோரும்
கதர் கட்டுவதே சுயராஜ்யம் என்பார். கடைசியாக சென்ற மாதத்தில் “பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் கடுகளவு மனக்கசப்பு ஏற்பட்டாலும் என் உயிரைக் கொடுத்தாவது அம்மனக்கசப்பை ஒழிப்பேன்” என்றார்
இன்னமும் என்ன என்னமோ இந்த 20 வருஷ காலமாக பேசி வந்திருக்கிறார். மற்றபடியான “நமதருமை பாரதமாதாவின் புதல்வர்கள்” ஆன தேசபக்தர்களும் தேசிய வீரர்களும் “சுயராஜ்யத்துக்கு ஆக உடல் பொருள் ஆவியை தத்தம் செய்த"வர்களுமான குட்டித் தலைவர்களும் தொண்டர்களும் போன மாதத்தில் தான் இந்திய சக்கரவர்த்தியான பிரிட்டிஷ் அரசர்க்கும் அவரது சந்ததிக்கும் அவரது ஆக்கினைக்கும் ஆட்சிக்கும் சட்டதிட்டங்களுக்கும் பக்தியாயும் விசுவாசமாயும் இருந்து கீழ்ப்படிந்து நடப்பதாக சத்தியம் செய்துகொடுத்து சர்க்கஸ் வளையத்துக்குள் ஆட்டம் போடும் சிங்கங்கள் போல் இருந்து கொண்டு அந்நிய ஆட்சி ஏஜன்டுக்கு அடங்கி நடந்து வருகிறார்கள் ஆகவே சுயராஜ்யம் என்றால் என்ன என்று தோழர் கேபி.பிள்ளை இப்பொழுதாவது சொல்லட்டும் என்று கேட்கின்றேன். அன்றியும் அடுத்த படியாக பிரிட்டிஷ் ஆட்சியையே ஒழித்துவிடுவதாலேயே சுயராஜ்யம் ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியுமா? பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவில் ஒரு பாகம் ஆளுகிறார்கள். போர்த்துகேசியர்கள் ஒரு பாகம்
ஆளுகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு தனி தேசங்களும் இருக்கின்றன. இத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஒரு கை பார்க்காமல் ராட்டின ஆயுதத்தைக்
கண்டு பயந்து கொண்டு இந்தியாவை விட்டுவிட்டு ஓடிவிடுவார்களா?'
உலகப் போக்கைப் பாருங்கள்
இப்போது புகைந்து கொண்டு இருக்கும் யுத்தம் கிளம்பி மூன் நடந்த உலக யுத்தமாக நடக்குமேயானால் நாம் (இந்தியா) யார் கைக்கு போவோம் என்றோ நம்மை (இந்தியாவை) எத்தனை பங்காகப்போட்டு யார் யார் எந்த எந்த மாகாணத்தை பங்குபோட்டு எடுத்து கொள்வார்கள். என்றோ சொல்லிவிடமுடியுமா? இன்று ஸ்பெயின், சைனா படும் பாட்டையும், அபிசீனியா பட்ட பாட்டையும் துருக்கி, ஈஜிபட்டு முதலியவை மகா
யுத்தத்திற்குப் பிறகு பட்ட பாட்டையும் பார்க்கும்போது இந்தியா ஒரு தேசமாகுமா அதற்கு சுயராஜ்யம் வருமா? என்பது விளங்கும்
யொது பாஷை அவசியமா?
தவிர சுயராஜ்யத்துக்கு பொது பாஷை ஒன்று வேண்டும் என்கின்ற அவசியம் என்ன?
159 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ரஷ்யா பொதுவுடமைத் தேசம். அங்கு இன்னும் பொது பாஷை இல்லை. நம் நாடு என்பது அதாவது இந்தியாவானது அந்நிய ஆட்சிக்கு முன் ராமர் ஆட்சி என்று சொன்ன காலத்திலும் 56 தேசத்துக்கும் ஒரே சக்கரவர்த்தி இருந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் பொது பாஷை
என்று ஒன்று இருந்ததாக ஆதாரமோ சரித்திரமோ ஒன்றும் காணவில்லை.
தாய் நாடு எது
அதற்கடுத்தாப்போல் இந்தியா நம் தாய் நாடு என்று சொல்வதற்குத்தான் ஆதாரம் என்ன இருக்கிறது? இந்தியா என்கின்ற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா போன வருஷம் பிரிந்துவிட்டது. அதற்கு மூன் லங்கை பிரிந்து விட்டது. அதற்கு முன் மலேயா பிரிந்துவிட்டது. அதற்கு மூன் நேப்பாளம் புத்தான். பிரிந்து விட்டது. அதற்குமுன் காந்தாரம் காபூல் (ஆப்கானிஸ்தானம்) பிரிந்து விட்டது. அதற்கு மூன் பர்ஷியா ரஷ்யா பிரிந்துவிட்டது. இப்படியே எவ்வளவோ பிரிந்து எவ்வளவோ சேர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராணகாலத்தில் 56 நாடுகள் இருந்ததே, அப்போது ஒரு நாட்டுக்காரன் ஒரு நாட்டை தாய் நாடு என்று கருதினானா?
இப்போதும் நேற்று சட்டசபையில் ஆந்திரர்கள் தங்களை தமிழ் நாட்டிலிருந்து பிரித்து தனி மாகாணமாக்க வேண்டுமென்கிறார்கள். மாகாண சுதந்தரம் கொடுத்து மாகாணத்திற்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன் தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு ஐரோப்பா தேசத்தைப் போல் பாஷை வாரியாக தனித்தனி நாடாகப் பிரிந்து கொண்டால். இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய் நாடாகும்? நேபால் நம் ஒரு ஜில்லா போல் உள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவை தாய் நாடென்பார்களா? சையாமில் பெரிதும் இந்த மதம் தான். அவர்கள் இந்தியாவைத் தாய் நாடென்பார்களா?
ஐரோப்பா நிலைமை என்ன?
ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க்கு, ஹாலண்ட், பெல்ஜியம், போர்த்துக்கல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டைத் தாய் நாடு என்பார்களே ஒழிய ஐரோப்பாவை தாய் நாடென்பார்களா? ஆகவே தமிழ் நாட்டவர்கள் திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவை தாய் நாடென்று கூற வேண்டுமென்பதும் எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை. முதலாவது பாரத நாடு என்பதையும், நாம் எல்லாம் பாரதர்கள் என்பதையும் கூட நான் ஒப்புக்கொள்ளமுடியாது
குடி அரசு- 1937 (2) 160
அடுத்தாற்போல் தோழர் பிள்ளை இந்தியாவுக்கு தாய் மொழி ஹிந்திதான் வெகுகாலமாக இருந்து வந்தது என்கிறார்.
இந்தியாவுக்கு பொது பாஷை இருந்ததா?
ஹிந்தி பாஷை தமிழ் நாட்டில் எப்போது இருந்தது? பம்பாயில் எப்போது இருந்தது? வங்காளத்தில் எப்போது இருந்தது? இந்தியா 56 தேசமாய் இருந்தபோது 56 பாஷையின் பேரால்தானே தேசமாய் இருந்தது? அப்போதும் மொத்தத்தில் 56 பாஷைகள் இருந்திருக்கும். நாளாக நாளாக
ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போதும் ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தும்போதும் தான் அந்நிய பாஷை புகுத்தப்பட்டு விடுகிறது. அந்த முறையிலேயே இன்று ஹிந்தியை தமிழ்நாட்டில் புகுத்தப்பார்ப்பது தமிழனல்லாத அந்நிய வகுப்பான் இன்று தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்டதினாலேயே ஒழிய வேறில்லை.
தோழர் பிள்ளை இந்தியா ஒரு நேஷன் என்கிறார். நேஷன் என்று ஒரு தேசத்தையோ தேச மக்களையோ சேர்த்துச் சொல்வது அதன்
மதம் பாஷை ஆகியவற்றைப் பொறுத்தது என்றும் சொல்லுகிறார்.
இந்தியா நேஷனா?
அப்படியானால் இந்தியா ஒரு நேஷனா? அதற்கு பாஷை எது?
மதம் எது? இந்தியாவில் எத்தனை மதம்? எத்தனை எத்தனை ஆச்சார அனுஷ்டானம்? முதலாவது இந்து மதம் என்பதை தமிழர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? தோழர் கே.பி.பிள்ளை தன்னை இந்து என்று சொல்லுவாரானால் இந்து மத ஆதாரமாகிய வேதத்தையும் மனு தர்ம சாஸ்திரத்தையும் கீதையையும் ஒப்புக்கொள்ளுகிறாரா? அதன்படி நடக்க இன்று சம்மதிக்கிறாரா? மற்றவன் நடக்கவாவது இவர் அனுமதிக்கிறாரா?
இந்து மதத்தில் கே.பி. பிள்ளையின் இடம் எது? இந்து மதத்தால்தான் இந்தியா நேஷன் ஆயிற்று என்றால் அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் பெளத்தருக்கும் பார்சிகளுக்கும்
இந்தியா நேஷனாகுமா? எதைக்கொண்டு அவர்கள் இந்தியாவை நேஷன்: என்பது? பாஷையைக் கொண்டு நேஷன் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கைந்து நேஷன் ஆகிவிடாதா?
தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் பொது விஷயங்களில் வகுப்பு மத விஷயங்கள் புகுத்தக்கூடாது என்கிறார். அன்றியும் அது மிகவும் அற்பமான விஷயம் என்கிறார். யாருக்கு அற்பம் என்று கேட்கிறேன். நாஸ்திகனுக்கு அல்லவா மதம் வகுப்பு அற்பமாகும், அது கூடாததுமாகும்
1... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தவைவர்கள் கூற்று
இந்திய தலைவர் தோழர் காந்தியார் “இந்துமதத்துக்கு ஆக உயிர். வாழ்கிறேன், எனது மூச்சுகளே இந்து மதம், நானே இந்து மதமாய் இருக்கிறேன்” என்றார். முஸ்லீம் தலைவர்கள் தோழர்கள் மகமதலி ஷவ்கத்தலி ஜின்னா ஆகியவர்கள் “நாங்கள் முதலில் முஸ்லீம் இரண்டாவது முஸ்லீம் மூன்றாவது முஸ்லீம் அப்புறம் தான் இந்தியன்” என்கிறார்கள். தோழர் ஜவஹர்லால் மதத்தையும் மத ஆதாரங்களையும் மத பழக்க வழக்கங் களையும் காப்பாற்றிக்கொடுப்பதாக உத்தரவாதம் செய்து தலைவர் பதவி பெற்று இருக்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் “நான் ஜெயிலுக்குப் போனாலும் போவேனே ஒழிய நரகத்துக்கு (இந்து மதத்துக்கு விரோதமாக) போக மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார்.
மிகவும் அநித்தியமான இந்த அற்ப இக (உலக) வாழ்வு என்பதற்கு ஆக நித்தியமான பர (மேல்லோக) வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு வகுப்பும் மதமும் அற்பமானது என்று எந்த யோக்கியமான ஆஸ்திகன் தான் சொல்ல முடியும். மதம் வகுப்பு அற்பம் என்று கருதி இருந்தால் ஜின்னாவுக்கும் ஜவஹர்லாலுக்கும் காந்திக்கும் ஷவ்கதலிக்கும் ராஜ கோபாலாக்சாரிக்கும் நமக்கும் தகராறு ஏன்? இவர்கள் அயோக்கியர்களா? சுயநலக்காரர்களா? பொது வாழ்க்கையில் வயிறு வளர்ப்பவர்களா? வேறு வகையில் யோக்கியதை அற்றவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
ராமாநந்த சட்டர்ஜி சாட்சியம்
தவிர தோழர் பிள்ளை பொது பாஷை ஹிந்திதான் இருக்க வேண்டும் என்கிறார். அதுதான் அதிகம் மக்களால் பேசப்படுகிறது என்கிறார். மாடர்ன் ரிவியூ எடிட்டர் ராமானந்த சட்டர்ஜி அவர்கள் காட்டி இருக்கும் கணக்குப்படி ஹிந்தி பாஷை மெஜாரட்டி ஜனங்களாலோ அல்லது மற்ற பாஷை பேசுகிற தனித்தனி மக்களை விட அதிகமான மக்களாலோ பேசுகிறதில்லை என்று நன்றாய் விளங்குகிறது. அந்த பாஷையைப்
பற்றியும் நல்ல அபிப்பிராயம் வட நாட்டாரே பலர் சொல்லுவதில்லை. அவை எப்படியோ இருக்கட்டும்.
ஒரு பொது பாஷை தெரிந்தெடுக்க மெஜாரிட்டி பலமே போது மானதாகுமா? பாஷை எதற்கு ஆக வேண்டும்? பேசுவதற்கு மாத்திரம்தானா? புதிதாக ஒரு பாஷையை தெரிந்தெடுப்பதினால் அந்த பாஷை பழையது என்றோ வெகுபேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லி தெரிந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த பாஷையால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சிக்கு பயன்படுமா? முற்போக்குக்கும் நாகரிகத்துக்கும் பயன்படுமா? சிரதிருத்தத்திற்கு ஏற்றதா? என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? இவர்கள் சொல்லும் ஹிந்தி எதற்காக பயன்படும் தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் அதாவது
குடி அரசு - 1937 (2) 162
ஹிந்தியை பொது பாஷை ஆக்கவேண்டும் என்று சொல்லுகிறவரும் அவரது சகாக்களும் “ஹிந்தி துளசிதாஸ் ராமாயணம் படிக்கலாம், சமஸ்கிருதம் சுலபத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்துமதசாஸ்திரம் உணரலாம்" என்றெல்லாம்
சொல்லுகிறார். ஆகவே ஹிந்தி மூலம் மோட்சத்துக்கு போவதற்கு அனுகூலமாக ஆத்மார்த்த விஷயங்கள் என்பதற்கு அனுகூலமாக காரணம் சொல்லு கிறார்களே ஒழிய இந்த உலக வழிக்கு ஆன காரியம் எதுவும் ஹிந்தியில் இருப்பதாக சொல்லவே இல்லை. ராமாயணத்திலும் பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால் அது மந்திர சக்தியில் ஓடி இருக்கிறது இங்கிலீஷில் ஆகாய விமானம் இருக்கிறது. அது யந்திர சக்தியில் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா யந்திர சக்தியா?
இங்கிலீஷ் செய்த நண்மைகள்
இங்கிலீஷ் நம்மில் சராசரி 100க்கு ஒருவர் இருவரே படித்திருக்
கலாம் என்றாலும் அது 35 கோடி மக்களையும் நடத்துகிறது. இந்நாட்டு. மனிதன் இன்று அடைந்துள்ள மேல் நிலைக்கு இங்கிலீஷே காரணம். தோழர் கே.பி.பிள்ளை பேசிய நேஷன், தாய்நாடு, சுயராஜ்யம், பொது பாஷை என்கின்ற உணர்ச்சியை - எண்ணத்தை இங்கிலீஷ் பாஷையே கொடுத்தது. அரசனுக்கு குடிகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அரசனே கடவுள்
என்றும் கருதி இருந்த ஹிந்தி இந்தியனை அரசன் குடிகளுக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்றும் அரசன் குடிகளின் சேவகன் என்றும் இங்கிலீஷ் இந்தியாதான் கற்றுக் கொடுத்தது இன்று உலகப் பொது பாஷையாக இங்கிலீஷ் தான் கருதப்படுகிறது. அது பகுஜனங்களால் பேசப்படுகின்றது
இந்தியா சுதந்திரம் பெற்று விட்டாலும் உலக சம்மந்தம் இல்லாமல். இந்தியா வாழ்ந்து விட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்கு தேசம் நாட்டுக்கு நாடு இப்போது உள்ள தூரத்தில் இருக்காது, கூப்பிடு தூரத்தில்
இருக்கப் போகிறது. ஹிந்திக்கு ஆகட்டும் வேறு இந்திய பாஷைக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும் கூட வேலை இருக்காது.
தொழிலாளிக்கும் தொழில் கருவியும் யந்திரமும் இங்கிலீஷ் பாஷையில்தான் இருக்கப் போகிறது. விவசாயிக்கும் அதுபோலவே வியாபாரிகளுக்கும் அதுபோலவே. அரசியல் காரனுக்கும் அதுபோலவே
தான். மோக்ஷம் போகத்துக்கு மாத்திரம் தான் ஹிந்தி உதவக்கூடும். ஆனால் மோக்ஷமும் வெகு சீக்கிரத்தில் மறைந்து விடப் போகிறது
மற்றும் தோழர் கே.பி. பிள்ளை என்னை பொது உடைமைக்காரன் என்கின்ற முறையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு இந்தியாவை ரஷ்யா என்று எண்ணிக் கொண்டு பேசக்கூடாது என்று குத்தலாகப் பேசினார். இந்தியா ஏன் ரஷ்யாவாகக் கூடாது? இந்தியா ராம ராஜ்யமாக ஆகும் என்று தோழர் கே.பி. பிள்ளை கருதுகிறபோது இந்தியா ரஷ்யா ஆகும் என்று
18 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஏன் நான் கருதக் கூடாது? ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் அதிகத் தூரமில்லை.
250 மைல்தான். வகுப்பும் மதமும் வெகு அற்பமானவை என்று உண்மை யிலேயே இந்தியர்கள் கருதக்கூடிய நாள் வந்தால் அன்றே இந்தியா ரஷ்யா
ஆகிவிடும். அது கூடாது என்பதற்கு ஆக செய்யப்படும் சூழச்சிகளில்
ஒன்று தான் ஹிந்தி முயற்சி என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.
மதராஸ் ஓரு நேஷனா?
மதராஸ் ஒரு நேஷன் அல்லவென்றும் அது தனித்து இருக்க முடியாது என்றும் தோழர் கே.பி.பிள்ளை சொன்னார். மதராஸ் ஒரு தனி
நேஷனாய் இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் திராவிடம். அதனுடைய நாகரிகம் ஆச்சார அனுஷ்டானம் வேறு. வங்காளம் பம்பாய் வேறு. இங்கிலீஷ் ஆட்சியால் இங்கிலீஷ் பாஷையால் தான் ஒன்றுக்கொன்று நேச பாவமான அறிமுகமாவது ஆகி இருக்கிறது. இங்கிலீஷ் ஆட்சியும் பாஷையும் ஒழிந்து ஹிந்தி ஆட்சியும் பாஷையும் வந்தால் அன்றே மதராசானது ஐர்மனி, இட்டாலி, பிரஞ்சு முதலிய ஏதோ ஒரு நேஷனுடன் கலந்துவிடும் தோழர்களே! இதுவரை நான் கே.பி. பிள்ளை பேசியதற்குச் சமாதானம் சொன்னேன். இவற்றிற்கு தோழர் கே.பி. பிள்ளை தமது மறுமொழியில் சமாதானம் கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
இனி பொதுவாக சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.
இந்தியா பல மதம், பல வகுப்பு, பல தனிப்பட்ட லட்சியம் கொண்ட கோரிக்கைகள் உள்ள நாடு. இது உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல் மதம், அரசியல், சமூக வாழ்க்கை முதலியவைகளில் ஒரே மாதிரி லட்சியமுடையதல்ல. கண்டிப்பாய் இந்து முஸ்லீம் லட்சியமும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் லட்சியமும் கீழ் ஜாதி மேல் ஜாதியார். லட்சியமும் வேறு வேறாகவே இருந்து வருகிறது. செல்வாக்கில்லாத லட்சியமுடையவர்களை செல்வாக்குள்ள லட்சிய மூடையவர்கள் இழித்தும் பழித்தும் கூறி கேவலப்படுத்துவதாலோ கட்டுப்பாடாக உண்மையை மறைத்து பிரசாரம் செய்வதாலோ கூலிகளை ஏவிவிட்டு காலித்தனமாக
நடக்கச் செய்வதாலோ எல்லோருடைய லட்சியமும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது உதாரணமாக இன்று பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்துக்கு என்று அனுபவித்து வரும் எந்த உரிமை - லட்சியத்தை விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள்?
அதுபோலவே முஸ்லீம்களும் தங்கள் சமூகத்துக்கு அல்லது மார்க்கத்துக்கு என்று அனுபவித்துவரும் எந்த உரிமை உணர்ச்சியை விட்டுக் கொடுக்க தயாராய் இருக்கிறார்கள்? அதுபோலவே பார்ப்பனரல்லாதாரோ
குடி அரசு- 1937 (2) 164
அல்லது கீழ் ஜாதியார் என்பவர்களோ அனுபவித்து வரும் இழிவுகளையும் கொடுமைகளையும் நீக்க எந்த அளவுக்கு பார்ப்பனர்களும் மேல் ஜாதியாரும் சம்மதிக்கிறார்கள்?
மேல்நாட்டு நிலைமை
மேல் நாட்டில் இம்மாதிரியான சமூக, வகுப்பு, மார்க்கத் தொல்லை கிடையாது. குறிப்பாக நம் தென்னாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற தொல்லை பல 1000க்கணக்கான வருஷங்களாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் சுமார் 20 வருஷகாலமாய் பச்சையாய் வெளிப்படையாய் அரசியலிலும் உத்தியோக இயலிலும் சமுதாய இயலிலும் தலைவிரித்து ஆடி வருகிறது. ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் இன்றைய தினம் நாம் இங்கு வாதம் செய்யும் ஹிந்தி அதில் பட்டதினாலேயாகும். ஹிந்தி பாஷையும் அதன் கலைகளும் தமிழ் நாட்டு மக்களுக்குக் குறிப்பாகப் பார்ப்பனரல்லாத ஏனைய மக்களுக்கு
நேர் மாறானதாக இருக்கின்றன. இதை நான் இன்று சொல்லவில்லை.
சுயமரியாதையுடையவன் ஹிந்தியை ஆதமியான்
1921ம் வருஷம் நான் பெரிய தேசபத்தனாய், தேசீய வீரனாய் இருந்து சிறை சென்று வந்த உடனே திருப்பூரில் கூட்டப்பட்ட தமிழ் மாகாண மகாநாட்டில் நான் சொல்லி இருக்கிறேன். அதாவது இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் புகுத்தி ஆக வேண்டும் என்றும் பலாத்காரம் செய்யும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்ன காரணத்துக்காக ஆக தமிழ் மக்கள் ஹிந்தி படிக்க வேண்டுமென்று சொன்னாரோ அந்தக் காரணமாகிய ராமாயணத்தைப் படிப்பதையும் மனுதர்மத்தை உணர்வதையும் குற்றம் என்று சொன்னதோடு அவைகளை நெருப்பில் போட்டு பொசுக்க வேண்டும்
என்றும் சொல்லி இருக்கிறேன். அன்று சொன்னதைப் பற்றி கவலை இல்லை. இன்று சொல்லுகிறேன். துளிசிதாஸ் ராமாயணமானாலும் சரி, வால்மீகி ராமாயணமானாலும் சரி, கம்பராமாயணமானாலும் சரி ஏதாவது ஒரு ராமாயணத்தை தோழர் கே.பி. பிள்ளை ஒப்புக்கொள்ளுகிறாரா? அதில். உள்ள தனது நிலையை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறாரா? அல்லது இங்குள்ள யாராவது ராமாயணத்திலும் மனுதர்மத்திலும் மற்றும் ஹிந்தி புராண சாஸ்திரங்களிலும் உங்களுக்கு உள்ள நிலையை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்கின்றேன். நான் அந்த தனிப்பட்ட புஸ்தகங்களில் உள்ள விஷயங்களைப் பற்றிக் கூட இப்பொழுது கேட்க வில்லை. இந்து மதம் என்பதில் இங்கு கூடியுள்ள உங்களுக்கு உள்ள நிலையை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? அப்படி இருக்க ராமாயணமும் புராணங்களும் இந்து மத சாஸ்திரங்களும் படிக்க ஹிந்தி உதவும் என்றால். சுயமரியாதை உள்ள எவனாவது ஹிந்தி படிப்பதை ஒப்புக்கொள்ள முடியுமா?
18 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வடநாட்டுத் தென்னாட்டு விஷயம் ஓன்றா?
மற்றும் வடநாடும் தென்னாடும் ஒரே லட்சியமுடையதாகுமா என்று உங்களைக் கேட்கின்றேன்.
வடநாட்டாரால் இதுவரை தென்னாட்டாருக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்று யாராவது விரல்விட்டுச் சொல்லட்டும். நம் மக்கள் ஏமாற்றப்பட நமக்கு யோக்கியதை தெரியாத வடநாட்டாரைப் பிடித்து வந்து காட்டி வஞ்சித்த தல்லாமல் தென்னாட்டுச் சமூக சமய பொருளாதார அரசியல் முதலிய விஷயங்களுக்கு வடநாடு எதில் பயன்பட்டது? நம் நாட்டுக்கு அழைத்து வரும்போது வட நாட்டவர்களை இந்திரன், சந்திரன், வீரன், சூரன், தியாகி, சத்தியவான், மகான் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி அந்த உள்ளூர்காரர்களைக் கேட்டால் அவர்களுக்கு மிஞ்சிய மோசமான. வர்கள் எந்நாட்டிலுமில்லை என்கிறார்கள்.
வடநாட்டுச் சம்பந்தம் வேண்டாம் ஆகவே நாம் ஏமாறுவதற்குத் தான் வட நாடு உபயோகப்படுகிறது. இன்றைய அரசியலைப் பார்க்கின்ற போது எக்காரணம் கொண்டாவது எப்பாடு பட்டாவது நம் நாட்டை வடநாட்டுச் சம்பந்தத்திலிருந்து தனியாய்
பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு விடுலையோ மானமோ ஏற்படப் போவதில்லை. இன்று சிறிதாவது நமக்கு சுயமரியாதை உணர்ச்சியும்
சுதந்தர உணர்ச்சியும் இருக்கிறதென்றால் அது நமது தனிப்பட்ட தமிழ் நிலை உணர்ச்சியாலேயும் ஹிந்தி படிக்காததாலேயும் தான் என்று வலிமையாய்க் கூறுவேன். நமது ரத்தத்தில் அடிமை உணர்ச்சியைப் பாய்ச்சவே இன்று பார்ப்பன ஆதிக்கம் நம்மூள் பலாத்காரமாய் ஹிந்தியைப் புகுத்துவதாகும். ஹிந்தியில் அரசியல் சுதந்தர ஞானம் கிடையாது. ஹிந்தியில் பொருளதார ஞானம் கிடையாது. ஹிந்தியில் சமுதாய சமத்துவம் இருப்பதாய்ச் சொல்லப்படுமானால் அவை இவையேயாகும். அதாவது:-
“ஒரு நாட்டு மக்களை ஆள வேண்டுமானால் அவர்களுக்கு கல்வி வாசனையும் அறிவுச் சுதந்தரமும் இல்லாமல் மடையர்களாக வைத்திரு”
ஒரு நாட்டு மக்களை என்றும் அடக்கி ஆளவேண்டுமானால் அவர்களுக்குப் பொருளாதார உரிமை இல்லாமல் சாமி, பூதம், பிசாசு என்கின்றதான மூட நம்பிக்கையைப் புகுத்தி பயப்படுத்தி அவர்களது பொருள்களை கொள்ளையடி”
“ஒரு நாட்டு மக்களை அடக்கி மிருகங்களிலும் கேவலமாய் என்றென்றும் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் அந்நாட்டு மக்களை ஆயிரம் சமூகமாக ஆக்கி ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்துச் சின்னா பின்னப்படுத்தி வை”
குடி அரசு- 1937 (2) 166
என்பதல்லாமல் வேறு என்ன இருக்கிறது? நான் சாணக்கிய அரசியல். தந்திரம் முதல் ஹிந்தியில் உள்ள பல அரசியல் நீதி சாஸ்திரங்களைப் பற்றியே தான் தெரிந்த வரை பேசுகிறேன். ஊரார் உழைப்பில் ஒரு சிறு சமூகம் உண்டு வாழ்வதற்கு உரியதே ஹிந்தி கலைகளாகும்.
ஹிந்தி தமிழருக்கு விஷம்
மற்றும் பாருங்கள். நம் நாட்டில் மொத்தத்தில் இன்று 100க்கு 9 பேர்களே படித்தவர்கள். இவர்களில் பார்ப்பனர்கள் 100க்கு 3 பேராய் இருந்தாலும் அவர்கள் சமூகம் பூராவும் 100க்கு 100 பேர் படித்திருக்
கிறார்கள். ஆங்கிலம் கற்றவர்கள் அவர்களில் 100க்கு 50 பேர் இருக்கலாம். நம்மில் தமிழ் படித்தவர்களே 100க்கு 5, 6 பேர்தான் இருப்பார்கள். அதிலும் கிராம வாசிகளில் 100க்கு 2, 3 பேர்கள் தான் இருப்பார்கள். சில சமூகங்களில் ஒருவர் இருவரே இருப்பார்கள். பார்ப்பனர்களுக்கோ ஹிந்தி வெகு சுலபமான பாஷை. ஏனெனில் பாரம்பரிய பாஷை. நமக்கு அது சுலபத்தில் நுழையாத பாஷை. பார்ப்பனர் 100க்கு 77 பேர் ஹிந்தியில் பாஸ் செய்தால் நம்மில் 100க்கு 15 பேர்கள் கூட பாஸ் செய்ய முடியாது. உத்தியோகத்துக்கு ஹிந்தி ஒரு யோக்கியதையாய் வைத்து விட்டால் நம்மவர்களுக்குப் பழையபடி பங்கா இழுப்பதும் பில்லை போட்டுக் கொள்ளுவதுமான சேவக வேலைதான் கிடைக்கும். உதாரணமாக அரசியலில் பார்ப்பனல்லாதார். இயக்கம் ஏற்படும் முன்பு சில படிப்புகளுக்கு டாக்டர் முதலிய பரீகைஷக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டுமென்று பார்ப்பனர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு இருந்தது. அதனாலேயே பார்ப்பனரும் மலையாளிகளுமே பெரும்பான்மையாய் டாக்டர்களானார்கள். ஜஸ்டிஸ் கட்சி வந்த பிறகு பனகாலரசர் காலத்தில் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை எடுக்கப்பட்டு விட்டது. அதற்கப்புறமே பார்ப்பனரல்லாத தமிழ்
மக்கள் பலர் டாக்டர்களாக முடிந்தது. அதுபோல் தான் ஹிந்தி உத்தியோக யோக்கிதையாகவும் வைத்துவிட்டால் பழையபடி நாம் கல்வியில் இன்னும் அதிகமான பிற்பட்ட வகுப்புக்காரர்களாக ஆகிவிடுவோம். கல்வி இலாகாவில் தமிழ் எவ்வளவு கேவலமாய் மதிக்கப்படுகிறது. என்று பாருங்கள் சமஸ்கிருதம் எவ்வளவு உயர்வாய் மதிக்கப்படுகிறது என்று பாருங்கள்.
தற்கால தமிழ் நிலை மாகாண கல்லூரியில் சமஸ்கிருத போதகருக்கு மீ 350 மூதல் 500 தமிழ் போதகருக்கு அதில் பகுதி கூட இல்லை
தமிழைத் தமிழ் நாட்டில் இதுவரை கட்டாய பாடமாக்க வில்லை ஹிந்தி பிறக்கும் போதே கட்டாய பாடமாக்க பலாத்காரம் செய்யப்படுகிறது. “அதிகாரி வீட்டுக் கோழி முட்டை அம்மிக் கல்லை உடைக்கும்” என்று ஒருவர் சொன்னார். அதுபோல் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் பாஷை ஆனதால் ஹிந்தி தமிழை ஒழிக்க கட்டாய பாடமாக்கப் போகிறார்கள். ஒரு சமயம்
167 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“10 ரூபாய் கேட்டால் 5 ரூபாயாவது வராதா?” என்கின்றது போல் எண்ணிக்கொண்டு தோழர் ஆச்சாரியார் கட்டாய பாடமென்றால் “இஷ்ட பாடமாகவாவது வைத்துத் தொலையுங்கள்” என்று தமிழ் மண்டுகள் சொல்லாதா என்றே இந்த யுக்தி செய்திருந்தாலும் செய்திருக்கலாம். எந்த பாடமாகவும் ஹிந்தி நமக்கு எதற்கு? அதற்கு ஆக செலவிடும் நேரம் பணம், ஊக்கம் எல்லாம் தேசிய நஷ்டமல்லவா என்று கேட்கின்றேன். இந்த நாட்டில் ஹிந்தி பாடமாக வைக்கப்பட்டால் தமிழர்கள் ஒழிந்தார்கள்- சுயமரியாதைக்கு குழி தோண்டப்பட்டது என்று தான் அர்த்தம். ஜஸ்டிஸ்
கட்சி தலைவர்களுக்கு இதைப்பற்றி அதிக கவலை இல்லை. அவர்களில்
பலர் ராமாயணத்தை பூஜிப்பவர்கள். அதைப்பற்றி நாம் இப்போது கவலைப் பட வேண்டாம். நம் தமிழ் மக்கள் இதை நன்றாய் உணரவேண்டும். அதாவது இது ஒரு நெருக்கடியான சமயம். இதில் ஏமாந்து விட்டோமேயானால் தமிழன் தாசி மகனாக தானே ஆகிவிடுவான். இப்பொழுதாவது அதற்கு
என்று ஒரு ஜாதியும் ஒரு நாடும் மாத்திரமிருக்கிறது. ஹிந்தி புகுந்து விட்டால் தமிழர்கள் பூராவும் பெண்கள் தாசிகளாகவும் ஆண்கள் தாசி மக்களாகவும் தாசர்களாகவும் ஆகிவிட வேண்டியதுதான். அந்த நிலை ஏற்பட்ட பிறகு நாம் இருப்பதை விட இறப்பதே மேல்.
கட்சி உணர்ச்சி வேண்டாம்
கட்சி உணர்ச்சியை இதில் விட்டு விடுங்கள். மனித சமூக சுதந்தரத் தையும் சுயமரியாதையையும் கவனியுங்கள். பார்ப்பனரல்லாத பத்திராதிபர்கள். பலர் இந்தச் சமயத்தில் தான் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாகவும் ஹிந்தி பிரசாரம் செய்யவும் சமூக சீர்திருத்தம் என்னும் பேரால் பணம் சம்பாதிக்கவும் அலைகிறார்கள். இந்த மானங்கெட்ட மக்களை உடைய நாடு எப்படி சுதந்திரமோ சுயமரியாதையோ அடைய முடியும். இவர்களை பார்ப்பனர்கள் தேவடியாள் மக்கள் என்று ஏன் சொல்ல மாட்டார்கள்?
தோழர்களே!
இன்று என் அபிப்பிராயத்தை நான் தெரிவித்தேன். அடுத்தாப் போல் பேசப் போகும் தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் இவற்றிற்கு சமாதானம் சொல்லுவார். பொறுமையாய் இருந்து கேட்போமாக.
கே.பி. பிள்ளை சமாதானம்
இவற்றிற்கு சமாதானம் சொல்ல வந்த தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் எழுந்து தனிப்பட்ட எந்த விஷயத்திற்கும் பதில் சொல்லாமல் தோழர் வெ.ரா, ஏற்கும் எதிர் பேசும் சுபாவமுடையவராக இருக்கிறார் என்றும் அதுகூடாது என்றும் மதத்திலும் கடவுளிடத்திலும் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இம்மாதிரி தொட்டதையெல்லாம் எதிர்த்து பேசும் புத்தியும் சுபாவமும் இருக்காது என்றும் நாம் சுயராஜ்யம்
குடி அரசு- 1937 (2) 168
அடைய வேண்டியதுதான் முக்கிய காரியமே ஒழிய மற்றவைகளை: கவனிக்கக் கூடாது என்றும் ஆதலால் ஹிந்தி அத்தியாவசியமென்றும் பேசி உட்கார்ந்துவிட்டார்.
தலைவர் முடிவுரை கடைசியாக தலைவர் தோழர் எ. ரத்தின சபாபதி அவர்கள். முடிவுரையாகப் பேசும் போது தோழர் ஈ.வெ.ரா பேசியவற்றிற்கு பதில் சொல்லுவதைக் கேட்க தான் வெகு ஆவலாய் இருந்ததாகவும் பதிலளிக்க எழுந்தவர் ஒன்றுக்கு கூட பதில் சொல்லாமல் ஆஸ்திக நாஸ்திகம் பேசி மழுப்பி விட்டதாகவும் இந்த இடத்தில் ஆஸ்திக நாஸ்திக பேச்சே கிளம்ப இடமில்லையென்றும் ஹிந்தியை ஆஸ்இகத் தோடு பொருத்திப் பேசுவது அதன் பலவீனத்தைத்தான் காட்டிற்றே ஒழிய வேறில்லை என்றும் தமிழர்கள் ஹிந்திக்கு பயப்படும் காரணம் சரி என்பதை இந்த ஆஸ்திக வாதம் நிரூபித்து விட்டது என்றும் ஹிந்தியில் ஆரியர் தமிழர் என்னன்ற போரும் ஆரிய மதம் தமிழ் மதும் என்னின்ற போரும் தான் புகுந்திருக்கின்றதே தவிர பொது நோக்கு ஒன்றும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டதென்றும் பேசினார்.
குறிப்பு: 19.09.1937 இல் கொல்லம்பாளையம் சாலை ஆச்சி விலாஸ்” கட்டடத்தில் தோழர் ஏ. இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் இந்தியை தமிழ்நாட்டில் கட்டாய பாடமாக புகுத்துவது குறித்து நடைபெற்ற தர்க்க கூட்டத்தில் ஆற்றிய உரை
குடி அரசு - சொற்பொழிவு - 26.09.1937
1ஜ ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காங்கரஸ் மத ஆதிக்கத்துக்கா?
அரசியல் ஆதிக்கத்துக்கா?
அந்நியர்களை இந்தியாவிலிருந்து விரட்டி அடித்து விடுகிறோம் என்று வீரம் பேசி மக்களை ஏய்த்து அதிகாரப் பதவி பெற்ற மற்றொரு அந்நியராகிய பார்ப்பனர் அரசியல் ஆதிக்கம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்கு சரணாகதி அடைந்து பார்ப்பன மத ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளுவது தான் என்பதை கொஞ்சமும் நெஞ்சும் குடலும் அஞ்சாமல் தைரியமாய் காட்டிக்கொண்டு வருகிறார்கள்.
எவ்வித அதிருப்தியையும் எதிர்ப்பையும் லக்ஷ்யம் செய்யாமல் பொது ஜன அபிப்பிராயத்தை சிறிதும் மதிக்காமல் மாகாண கவர்னரும் சர்க்கார் பெரிய அதிகாரிகளும் பெரிதும் முறையே தம் கைவசத்திலும் தம் இனத்தார் களாகவும் இருக்கிறார்கள் என்கின்ற ஆணவத்தில் “அப்படித்தான் செய்வேன்" “என் இஷ்டம்" “பேசாதே” “உட்கார்” என்கின்ற இராணுவ அதிகார ஆணவத்தில் காரியத்தை நடத்துகிறார்கள்.
இன்று நம் சட்டசபையில் இருக்கும் பார்ப்பனரல்லாத அங்கத்தினர்கள். சொரணை இழந்து சுதந்தரமிழந்து மானம் கெட்டு “வார்த்ததை வாரம்மா: வள்ளித்தாயே” என்று சிறிதும் உயிரற்ற நடைப்பிணம் போல் இருந்து கொண்டு ஆரிய ஆட்சிச் சூழ்ச்சிக்கு ஆதரவாய் இருந்து வருகிறார்.
குறிப்பாக சரியான பொருத்தமாக சொல்ல வேண்டுமானால் இன்றைய பார்ப்பன ஆட்சி ஒரு பெரும் ஏதேச்சாதிகார அடக்கு முறை ஆட்சி போலவேதான் காணப்படுகிறது. தப்பாகவோ, சரியாகவோ ஒரு தடவை ஏதாவது ஒரு அபிப்பிராயம் ஆச்சாரியார் அவர்கள் வாயிலிருந்து வந்து விட்டால் அது எப்படிப்பட்ட அக்கிரமமானதும், கேடானதுமாக இருந்தாலும் சற்றும் புனராலோசனை செய்ய முடியாது என்ற ஆணவத்துடனே காரியங்கள் நடத்துகிறார்.
இதைப் பார்க்கின்றபோது பார்ப்பனர் ஆட்சி அவ்வளவு அக்கிரமமும் ஆணவமுமாக நடத்தக் கூடிய பலமுடையதா? அல்லது பார்ப்பனரல்லாத நம் தமிழ் மக்கள் அவ்வளவு கோழைத்தனமும் இழிதன்மையுமுடைய பூச்சித்தன்மை மக்களா? என்றுதான் குழப்பமடைய வேண்டியதாயிருக்கின்றது
குடி அரசு- 1937 (2) 170
ஏன் என்றால் காங்கரசின் பேரால் இன்று கனம் ஆச்சாரியாருக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் உண்மைத் தமிழர்கள் என்றும் பரிசுத்த தமிழ் மக்கள் என்றும் பரம்பரை வீரக்குலத்தில் பிறந்தவர்கள் என்றும் வீரமும் பெருமையும் பேசிக் கொண்டிருக்கும் தோழர்கள் TA. ராமலிங்கம் செட்டியார், TR தேவர், நாடிமுத்து பிள்ளை, கனம் சுப்பராயன் முதலிய “குல நலமும்” செல்வமும் சிறப்பும் பெற்ற தமிழ் மக்கள் இந்த சர்வாதிகார இராணுவ ஆட்சியை எப்படிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கேட்க வேண்டி யிருக்கிறது. இவர்களுக்கு சொந்த புத்தி இல்லையா? மான உணர்ச்சி இல்லையா? இந்த சட்டபை மெம்பர் பதவி இவர்களுக்கு 5 வருஷகாலம் இருப்பதற்குள் இவர்கள் பின் சந்ததிக்கும் வழி வழி வம்சத்திற்கும் பேரவமானமான கெட்ட பெயரும் மாசும் நிலைத்துவிடுமே என்கின்ற அறிவு சிறிதாவது இல்லையா? மாதம் 75 ரூபாய்க் காசு இல்லாமல் பிழைக்க முடியாத கூட்டத்தில் இவர்களும் சேர்ந்தவர்களா? என்று கேட்க வேண்டி இருக்கிறது. ஆச்சாரியார் கொடுங்கோன்மை ஆட்சி செய்கிறார் என்றால் ஆச்சாரியாருக்கு பின்னால் இருந்து தாங்கிக்கொண்டிருக்கும் இந்த அம்மாஞ்சிகள் என்ன செய்கிறார்கள் என்று யாரும் கேட்கமாட்டார்களா?
பொப்பிலி ராஜா அவர்களை ஆணவக்காரர் என்றும் மக்களை மதியாதவரென்றும் கிள்ளுக்கீரை மாதிரி பேசிய இந்த வீரர்களும் சூரர்களும் அவருக்கு மேல் சாதித்து விடுவதாக வாயளந்தவர்களும் வம்பளந்த வர்களும் இன்று நீலக்கண் பூதத்துக்கு தொங்குசலாம் போடுகிறார்களே மானமில்லையா என்றும் கேட்க வேண்டி இருக்கிறது. இவர்களை கனம் ஆச்சாரியார் மதிக்கிறாரா மனிதர்கள் என்றாவது கருதி இருக்கிறாரா என்றும் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது அய்யகோ! சாணியை மிதிக்க அசூயைப் பட்டு எட்டிக் குதித்து மலக்குழியில் விழுந்து அபிக்ஷேகம் செய்து கொண்ட பரிசுத்தவான்௧ளே! தமிழ்மக்கள் வீரத்துக்கும் சுதந்தர உணர்ச்சிக்கும் உங்களை உதாரணம் சொல்லு வதானால் பார்ப்பனர்கள் தமிழர்களை அனுமார் என்றும் சூத்திரர் என்றும் சண்டையில் முதுகுகொடுத்தோடிய சிறைப்படுத்திய அடிமை என்றும் தாசி மகன் என்றும் வைப்பாட்டி மக்கள் என்றும் வேதத்திலும் மனுதர்ம சாஸ்திரத்திலும் கல்லின்மேல் எழுத்துப்போல் எழுதிவைத்துக் கொண்டதை எப்படி ஒழிக்க முடியும்?
தோழர்களே! தேசத்தின் பேரால் தேசமக்களின் பிரதிநிதித்துவத்தின். பேரால் உங்களுடைய தலைவர் என்னும் பேரால் இந்த தன்னரசு ஆட்சியை நடத்துவதை நீங்கள் சம்மதிக்கிறீர்களா என்று அவர்களைக் கேட்க வேண்டி இருக்கிறது. தமிழுக்கு அத்தாரிட்டி நான் தான் என்றும் தமிழைக் காப்பவன் நான் என்றும் தமிழ்ச் சங்கங்களில் உரிமை கொண்ட தமிழறிஞரே! தோழர் TA. ராமலிங்கம் செட்டியார் அவர்களே! ஹிந்தி தமிழ் மக்களுக்கு கட்டாய மட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பாடமாக்க வேண்டும் என்று ஒரு பார்ப்பனர் சொல்லும் போதும் முரசடிக்கும் போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது
உம் அருமை வாழ்க்கைத் துணைவியை இழந்தீர். உம் அருமைச் செல்வமான மகனை இழந்தீர். ஹிந்தி சட்ட சபை மெம்பர் பதவியை துச்சமாய்க் கருதி உமது கருத்தை வெளியிட உமக்கு தைரியமில்லையல்லவா? ஹிந்தி கட்டாயமாகக் கூடாது என்று சொன்னால் உமக்கு என்ன ஆபத்து வந்து விடும்? என்றும் அப்படியே தேவரே! பொப்பிலி அரசரை வைவதற்கு உமது நாக்கு எவ்வளவு சுலபமாகச் சுழன்றது? அதைப் பார்த்த பார்ப்பனர் உமது வீரத்தை எவ்வளவு மெச்சி உமது குறுகக் கத்தரித்த குடுமிக்கு பூச் சுத்தினார்கள்? இன்று உம்மை பாதாளத்தில் அழுத்திவிட்டு உம்மீது போட பாராங்கல்லையும் தூக்கிக்கொண்டு இருக்கின்ற போதும் உமக்கு மான உணர்ச்சியும் சுதந்தர உணர்ச்சியும் வரவில்லையானால் இனி எப்போது தான் அதைப் பார்க்கும் பேறு நமக்கு கிடைக்கப் போகிறது? தோழர்களே! இது என்ன ஊரா, பாழா? கேள்வி கேப்பாடு இல்லாத கத்தரிக்காய்ப் பட்டணமா என்று கூட உங்களால் யோசிக்க முடியவில்லையா? கனம் ஆச்சாரியார் செய்வது, நாளைக்கு பிறகு நீங்கள் யார் முகத்தில் விழிக்கப் போகிறீர்கள்? என்றும் கேட்க வேண்டியிருக்கிறது.
இந்த மந்திரிகள் பதவி இனி எத்தனை நாளைக்கு நிற்கப் போகிறது? ஒரு மயிர்க்கால் அளவுதான் ஒட்டிக்கொண்டிருக்கிறது. எந்த வினாடியில்.
அறுந்து விழுகப்போகிறதோ தெரியவில்லை. இந்த அற்ப ஆயுளுக்கு இவ்வளவு பெரிய மானத்தை விற்பதா என்று யோசித்துப்பாருங்கள் என்றும் அழுகினதின் மேல் நாய் மலம் இட்டதுபோல் ஹிந்தியை புகுத்தித் தான் தீருவேன் என்றது மாத்திரமல்லாமல் தேசிய கீதம் என்று வந்தே மாதர பாட்டைச் சொல்லி அரசியல் கூட்டத்தில் பிரார்த்தனை செய்வது யோக்கியமா என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? என்றும் அவர்களை கேட்க மனம் துடிக்கிறது
வந்தேமாதரப் பாட்டு
நிற்க, வந்தேமாதரப் பாட்டு ஆரியர் மதத்தைக் காப்பதாக கூறும் கருத்தடங்கியதே தவிர பொதுவாக தேச ஆட்சியையோ சுதந்தரத்தையோ சமத்துவத்தையோ பொறுத்தது என்று யாராவது சொல்ல முடியுமா?
அப்பாட்டு ஏற்பட்ட சந்தர்ப்பம் எது என்றால் வங்காளத்தில் முஸ்லீம்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கிளர்ச்சி செய்த போது அதை ஒழிக்க முஸ்லீம்களை நசுக்க மக்களுக்கு முஸ்லீம்கள் மீது விரோதமான உணர்ச்சி ஏற்படும்படியாகப் பாடின பாட்டாகும்
அதாவது அப்பாட்டு ஆநந்த மடம் என்கின்ற ஒரு நாவலில் வருகிறது. இதைப்பற்றி 4-9-37 “விடுதலை” தலையங்கத்தில் விவரமாய்
எழுதப்பட்டிருக்கிறது
குடி அரசு - 1937 (2) 172
அப்படி இருக்க அப்பாடலை சட்ட கபை கூடும்போதெல்லாம் தினம் தினம் பாடுவது என்றால் அதன் கருத்து என்ன? இந்நாட்டில் பார்ப் பனரல்லாதார் தங்கள் சமூகத்தைக் காப்பாற்றிக் கொள்ள உரிமை கேட்பதற்காக அக்சமூகமே என்றென்றும் மானமும் சுதந்தரமும் இல்லாமல் அடிமைப்பட்டுக் கிடக்க இன்று பார்ப்பனர் சூழ்ச்சி செய்வது போலவே முஸ்லீம்களையும்
ஒழிக்கச் செய்யும் சூழ்ச்சி தானே அப்பாட்டை அரசியல் மன்றத்தில் பாட வேண்டும் என்று ஏற்பாடு செய்வது? அப்படி இல்லை என்று யாராவது சொல்லுவதானால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் அப்பாட்டு பாடக்கூடாது என்று கட்டுப்பாடாய் சொல்லும்போதும் காங்கரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் முஸ்லீம்கள் விழித்துக்கொண்டதை அறிந்து அப்பாட்டை தேசீயப் பாட்டாகக் கொள்ளக் கூடாது என்று சொன்ன பிறகும் அப்பாட்டை அரசியல் மன்றத்தில் பாடுவதென்றால் இன்றைய அரசியல் மன்றம் அரசியல் மன்றமா? ஆரிய இயல் ஆதிக்க மன்றமா? என்று கேட்கின்றோம்
23.9.37ந் தேதி சென்னை அரசியல் மன்றமாகிய சட்ட சபையில் சபை ஆரம்பமான உடன் அந்த வந்தே மாதரப் பாட்டைப் பாடும்போது முஸ்லீமான தோழர் லால்ஜான் சாயபு அவர்கள் இப்பாட்டு தேசியப் பாட்டாகுமா என்று ஒரு ஒழுங்குப் பிரச்சினை கிளப்பியதற்கு ஆக அவருடைய கதி மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டிய அளவுக்கு வந்து விட்டது. கடசியாக தோழர் மாஜி மேயர் அமீத்கான் சாயபு அவர்கள் உதவிக்கு வந்த உடன் தோழர் ராஜகோபாலாச்சாரியார் தந்திரமாய் அடக்கி “மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை. ஒழுங்குப்பிரச்சினையை வாபீஸ் வாங்கிக் கொண்டால் போதும்” என்று சொல்ல, கடசியாக தோழர். லால்ஜான் சாயபு பாடு “உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்” என்ற நிலைக்கு வந்து அப்பிரச்சினையை வாபீஸ் வாங்கிக் கொண்டு “நான். தப்பித்தேன் எங்கள் அப்பன் தப்பித்தார்” என்று ஓடி விட்டார். ஆகவே பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகின்றது என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்? வந்தேமாதரப் பாட்டை தமிழர்கள் கேட்பதும் அது பாடும் போது எழுந்து நிற்பதும் ஒரு பெரிய மானக்கேடான காரியமாகும் சட்ட சபையில் உள்ள தமிழர்தான் ஒரு சமயம் மனுதர்மத்துக்கு இசையக் கூடிய யோக்கியதையை அடைந்து விட்டார்களோ என்றாலும் முஸ்லீம் வீரர்களும் கிறிஸ்தவ சூரர்களும் எப்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்பதும் அப்பாட்டு பாடும்போது எப்படி எழுந்து நிற்கிறார்கள் என்பதும் நமக்கு சிறிதும் விளங்கவில்லை. சிற்சில சமயங்களில் “குடி அரசு" மதக் கொள்கை பற்றியும் தெய்வக்கொள்கை பற்றியும் எழுதும்போதும் சுயமரியாதை இயக்கத்தில் பேசும் போதும் சில மூஸ்லீம்களுக்கும் சில கிறிஸ்தவர் களுக்கும் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது மத அபிமானம்.
இன்று பார்ப்பனர்கள் இவர்களது மத அஸ்திவாரத்தில் கையை வைத்து ஆட்டி “எழுந்து நில்” “தலை வணங்கு” “இல்லாவிட்டால்
173 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வெளியில் போனதற்கு மன்னிப்புக் கேள்” என்று உதைக்கும் போது எங்கும் எதுவும் பொத்துக்கொள்ளாத மாதிரியில் அவர்களது தோல் அவ்வளவு மந்தமாகி விடுகிறது. மதத்துக்கு ஆக உயிர் விடுவதும் மதமே பிரதானம் என்பதும் இச்சமயத்தில் இக்கூட்டத்தாருக்கு எங்கு போய்விடுகிறது? உண்மையிலேயே இந்த நாட்டை மாத்திரமல்லாமல் இந்த உலகத்தையே இப்படிப் பிரித்து வைத்து மனிதனுக்கு மனிதனை வைரியாக்கி மக்களை என்றும் திருப்தியில்லாமலும் கவலையுடனும் தொல்லை யடையச் செய்வதற்குக் காரணம் இவ்வளவு மதங்கள் இருப்பது தான் என்பது
நமது அபிப்பிராயம்
இவை - இவ்வளவு மதங்களும் ஒன்று பட்டு பகுத்தறிவுக்கு ஏற்றதாயும் சிறிதும் மூட நம்பிக்கைக்கு இடம் கொடாததாயும் மக்களை அன்பு நிலையில் அந்நியோன்யமாய் சகல துறையிலும் சமத்துவமாகவும் மானத்துடனும் நடத்துவதாகவும் உள்ள ஒரு மதமோ கொள்கையோ ஒன்று இருந்தால் அதை நாம் ஆக்ஷேபிக்கப் போவதில்லை. அதில் கடவுள் இருந்தாலும் சரி, கல் இருந்தாலும் சரி, அப்படி இல்லாத வரை அதற்கு மாறான சகல மதங்களையும் கொள்கைகளையும் ஒழிக்க வேண்டுமென்பது தான் நமதபிப்பிராயம். ஆனால் கொஞ்சமாவது சுதந்தர உணர்ச்சியோ சமத்துவ உணர்ச்சியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இருப்பதாய்ச் சொல்லிக் கொள்ளும் மதங்களைக்கூட சிறிதும் தலையெடுக்க விடாமல் அழுத்தி அடியோடு முட்டாள்தனமானதும் சூழ்ச்சி நிரம்பியதும் சிறிதும் சம நோக்குக்கு இடமில்லாததுமான ஒரு மதம் ஆதிக்கம் செலுத்த ஆட்டம் போடுமானால் மற்ற மக்களுக்கு வீரமோ மானமோ இருக்கின்றதா என்று தான் கேட்க வேண்டி இருக்கிறது பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சமீபத்தில் இந்துக்களாய் இருந்து காரியத்துக்கு கிறிஸ்தவர்கள் ஆனதால் அவர்களுக்கு மதம் வேஷத்துக்கும் உத்தியோகம் கேட்பதற்கும் ஆகிய காரியத்துக்குத்தான் அதிகம் வேண்டி
யிருக்கும். அப்படிப்பட்டவர்கள் சமயம் நேர்ந்த போது மதத்தைவிட தேசம் பெரிது என்று சொல்லி தப்பித்துக்கொள்வார்கள். ஓட்டு வேண்டியபோது தேசத்தைவிட மதம் பெரிது என்று அடக்குமுறைக்கு விண்ணப்பம் போடுவார்கள். ஆனால் முஸ்லீம்கள் மதத்துக்காக வாழ்கின்றோம் என்றும் தங்கள் மதமே உண்மையான பகுத்தறிவு மதம் என்றும் கூப்பாடு போடு கிறவர்கள். விக்கிரக வணக்கப் பாட்டுக்கு - முஸ்லீம் சமூக உணர்ச்சிக்கும் சமூக வாழ்வுக்கும் விரோதமான பாட்டுக்கு எப்படி எழுந்து நின்று காது கொடுத்து தலை வணங்குகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகவே பொது ஜனங்கள் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் ஹிந்தி எதிர்ப்புக்கும் வந்தேமாதரப் பாட்டு பிரார்த்தனை பஹிஷ்காரத்துக்கும் தொண்டாற்றி துணை புரிந்து வெற்றி பெற முயல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
குடி அரசு - 1937 (2) 174
அப்படிச் செய்ய நமக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில் ஆரியக்கடவுள்கள் கோவில்களில் தமிழர் களின் பிரார்த்தனையை தமிழ் பாட்டுகளில் சொல்லும்போது அதாவது தேவாரம் முதலியவை பாடும்போது பார்ப்பனர்கள் அதன் கருத்தைக்கூட கவனியாமல் சூத்திர பாஷையை காதில் கேட்பதே பாவம் என்று கருதி அவற்றைத் தடுக்க கோர்ட்டுகளுக்குப் போய் நியாயம் பெற ஆசைப்படும் போது தங்களது பாஷையை மற்றவர்களுக்கு கட்டாயமாக புகுத்தவும் மற்றவர்கள் பாஷை, மற்றவர்கள் மத ஆதிக்கப் பாட்டு ஆகிய பிரார்த்தனைக்கு எழுந்து நின்று தலை வணங்கவும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மற்றவர்களுக்குள்ள மான உணர்ச்சியை காட்டிக்கொள்ளுவதில் ஒன்றும் பாவம் இல்லை.
குடி அரசு - தலையங்கம் - 26.09.1937
73... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சட்டசபை நாடகம்
சரணாகதி மந்திரிகளின் சட்டசபை நாடகம் ஒன்று முடிந்து விட்டது நடந்தது என்ன என்று பார்ப்போமானால், தேசியக் கொடி சட்டசபை மண்டபத்தில் பறக்க விடப்படவில்லை.
காங்கரஸ் கொடியை தேசியக் கொடி என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவர்னர் நிராகரித்து விட்டதைப்பற்றி காங்கரஸ்காரர்கள் மூச்சுப் பேச்சு காட்டவில்லை. ஆனால் வேறு என்ன காரியம் செய்தார்கள் என்றால் சட்ட சபையில் வந்தேமாதரப் பாட்டு பாடினார்கள். ஏன் சர்க்காரிடம் காங்கரஸ் ஜபம் சாயவில்லை? சரணாகதி அடைந்து ஏற்ற மந்திரி பதவி ஆனதால்
சர்க்கார் சம்மந்தமான காரியங்களில் வால்தனம் காட்டினால் பிரிட்டிஷ் கத்தரிக் கோல் வாலைக் கத்திரித்துவிடும் ஆதலால் சர்க்காரிடம் வாலை அடக்கிக் கொண்டு மற்ற “சகோதர” மக்களிடம் மாத்திரம் வாலைக் காட்ட முடிந்தது.
வந்தேமாதரம்
வந்தேமாதரப் பாட்டானது வகுப்பு துவேஷமும் வகுப்புக் குரோதமும் வகுப்புப் போருமான பிரார்த்தனைப்பாட்டு. உதாரணமாக ஆரியர் வேதம் எப்படி “கருப்பர்களைக்” கொல்லவேண்டும், “கருப்பர்களை” அழிக்கவேண்டும், “கருப்பர்களை” பட்டினி போட்டு வதைக்க வேண்டும், “கருப்பர்களை” எங்களுக்கு அடிமையாக்கித் தரவேண்டும், “கருப்பர்கள்” நெய்விட்டு சாப்பிடுகிறார்களே, “கருப்பர்கள்” எங்களை மதிப்பதில்லையே, “கருப்பர்கள்” மீது இடி விழும்படி செய்ய மாட்டாயா? என்பது ஆக ஆரியக் கடவுள்களை பிரார்த்திப்பதை முக்கிய பாகமாக கொண்டிருக்கிறதோ அது போலவே தான் இந்துக்கள் வங்காளத்தில் முஸ்லீம்களை அழிப்பதற்காக பிரார்த்தனை செய்யும் பாட்டாகும்
இந்தப் பாட்டானது, தென்னாட்டில் பார்ப்பனரல்லாதார் வகுப்பு வாரி உரிமை கேட்டவுடன் பார்ப்பனர்கள் எப்படி பார்ப்பனரல்லாதாரை அசுரர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் ராக்ஷதர்கள் என்றும் வைது விஷமப்பிரசாரம் செய்து பார்ப்பனரல்லாத மக்கள் மீது பாமர மக்களுக்கு துவேஷமும் குரோதமும் உண்டாகும்படி “தேசிய!” பிரார்த்தனை செய்து தொல்லைப் படுத்துகிறார்களோ அது போல் வங்காள முஸ்லீம்கள் தங்கள் சமூகத்துக்கு வகுப்புவாரி உரிமை கேட்ட காலத்தில் வங்காள பாமர மக்களை முஸ்லீம்களுக்கு விரோதமாக்கி தொல்லையும் துன்பமும்
குடி அரசு- 1937 (2) 176
விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட பிரார்த்தனைப் பாட்டு என்பது பல ஆதாரங் களாலும் அப்பாட்டின் பிறப்பு வளர்ப்பினாலும் கருத்தினாலும் நன்றாய் விளங்கும். இந்த முடிவை இதுவரை எந்தக் காங்கரஸ் வாதியும், காங்கரஸ் தலைவரும் மறுக்கவே இல்லை. தற்கால எல்லா இந்திய காங்கரஸ்: தலைவரான ஜவஹர்லால் அவர்களும் வந்தேமாதரப் பாட்டானது தேசீயப் பாட்டாகாது என்று சொல்லிவிட்டார்.
இப்பாட்டை சட்ட சபையில் அரசியல் மன்றங்களில் பாடுவதினால் முஸ்லீம்களுக்கு ஆத்திரமும், மனவேதனையும் உண்டாவதில் நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் அங்குள்ள பார்ப்பனரல்லாத உண்மைத் தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வராததுதான் நமக்கு ஆச்சரியமாய் இருந்தது
யொய் விளம்பரம்
இந்நிலையில் சட்டசபையில் ஒரு முஸ்லீம் அப்பாட்டின் கருத்தை விளக்கி அது தமது சுயமரியாதைக்கும் மார்க்கத் தத்துவத்துக்கும் விரோதமாய் இருக்கிறது என்று சொன்ன பாவத்துக்குக் காங்கரஸ் பார்ப்பனர்கள்
அம்முஸ்லீம் 14.1.&.யை மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டளை யிட்டுவிட்டார்கள். கடைசியாகக் காரியம் மிஞ்சிவிடுமென்று தெரிந்தபிறகே மன்னிப்பைக் கட்டாயப்படுத்தாமல் தன் குறையைத் தெரிவித்துக் கொண்டதை வாப்பஸ் வாங்கிக் கொள்ள கட்டாயப்படுத்தி விட்டு பத்திரிக்கைகளில் அந்த முஸ்லீம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக விளம்பரப்படுத்தி விட்டார்கள். இதைப்பற்றி சென்றவாரமும் குறிப்பிட்டிருந்தோம் இவ்வளவு ஏற்பட்டபிறகும் மறுபடியும் சட்ட சபையில் அப்பாட்டுப் பாடப்பட்டிருக்கிறது. இது முஸ்லீம்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதையும் முஸ்லீம்கள் மார்க்கத்துக்கு ஆக உயிர் வாழுகின்றோம் என்று சொல்லுவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதையும் ஒருபுறம் காட்டினாலும் பார்ப்பனர்களின் அஹம்பாவமும், ஆணவமும் எவ்வளவு என்பதையும் காட்டுவதாகும்.
ஸ்தல ஸ்தாபன சட்டம்
இனி அடுத்தாப்போல் அவர்களது நாடகம் ஸ்தல ஸ்தாபன சட்ட
திட்டங்களில் கைவைக்கப்பட்டதாகும்
முனிசிபாலிட்டிகளின் தேர்தல்கள் இம்மாதத்திற்குள் நடந்திருக்க வேண்டியவைகளை நிறுத்திக் கொண்டார்கள். அதன் காரணம் காங்கரஸ் காரர்கள் மந்திரி பதவி வகித்த 30 நாள்களில் அவர்களது யோக்கியதை இன்னது என்று மக்களுக்கு விளங்கி பொது மக்கள் அவர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டதால் இப்போது தேர்தல் நடந்தால் காங்கரசுக்கு வெற்றி கிடைக்கமாட்டாது என்று கருதி தங்கள் வெற்றிக்கு வேண்டிய சவுகரியம் செய்து கொள்ளும் பொருட்டு தங்கள் இஷ்டப்படி ஓட்டர்களை
177 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
உண்டாக்கிக் கொள்ள தந்திரம் செய்யவே தேர்தலை ஒத்திப்போட்டுக் கொண்டார்கள். மற்றும் ஜில்லா போர்டு விஷயங்களிலும் தங்களுக்கு அனுகூலமில்லாத ஜில்லா போர்டுகளை அழித்துவிடவும் அழிக்க முடியாத ஜில்லா போர்டு ஏதாவது இருந்தால் அதில் எதிரிக்குள்ள மெஜாரிட்டி பலத்தை குறைக்க நாமிநேஷன்களை எடுத்துவிடவுமான சூழ்ச்சி செய்திருக்
கிறார்கள். ஜில்லா போர்டுகளையும் முனிசிபாலிட்டிகளையும் அடியோடு. எடுத்துவிட்டு சர்க்காரார் நேர் நிர்வாகத்தில் வைத்துக் கொள்ளுவதில் நமக்கு சிறிதும் ஆக்ஷ்பணை இல்லை. ஏனெனில் நம் பாமர மக்களுக்கு அரசியல் ஞானம் சரியானபடி புகுத்தப்படவில்லை.
நாம் ஜனநாயகம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று நாயகமாகவும் பித்தலாட்ட நாயகமாகவும் இருந்து வருகிறது. ஆதலால் ஜில்லாபோர்டு முனிசிபாலிட்டி என்பவைகளின் நிர்வாகம், நடத்தை, தேர்தல் என்பவைகள். மனிதன் அயோக்கியத்தனமும், சுயநலமும், பொய்யும், பித்தலாட்டமும், திருட்டும், பழிவாங்கும் தன்மையும் கற்றுக்கொள்ளும் இடம் என்றும் ஏன்? கட்டாய பாடமாகக் கற்றுக்கொடுக்கும் இடம் என்றும் வன்மையாய் அழுத்திக் கூறுவோம். அப்படிப்பட்ட ஸ்தாபனங்களை எடுத்து விடுவதில் நமக்கு கவலையில்லை என்பதோடு மகிழ்ச்சியும் அடைவோம் அந்தப்படிக்கு எடுத்துவிடாமல் அந்த ஸ்தாபனங்களை ஒரு கட்சியாரிடம் இருப்பதைப் பிடுங்கி மற்றொரு கட்சியாரிடம் ஒப்புவிப்பதற்கு என்று இம்மாதிரியான இழிவான காரியம் செய்வது எப்படி யோக்கியப் பொறுப்பான காரியமாகும்?
ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் கட்சி நலத்துக்கு செய்யும் அக்கிரமமான காரியம் என்றும் கூப்பாடு போட்ட இப்பார்ப்பனர்கள் தாங்கள் பதவி அடைந்த உடன் இம்மாதிரியான காரியம் செய்ய வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியார் கட்சி பலத்துக்கு ஆக என்று அனாவசியமாக எவ்வித நாமினேஷனும் செய்யவில்லை. தாலூகாபோர்டுகளை எடுக்கும் போதே ஜில்லா போர்டுகளைப் பிரிப்பதன் மூலம் நிர்வாகம் சுலபமாக்கிக் கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஜில்லாபோர்டு சட்டம் செய்யும்பொழுதே சிறுபான்மை - பிற்பட்ட முதலாகிய சகல வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்
அப்படிக் கொடுபடுவதற்கும் ஒரு விகிதம் குறித்திருக்கிறார்கள். அதனாலேயே தான் ஜஸ்டிஸ் கட்சியார் ஜில்லாபோர்டுகளைப் பிரித்ததும் பிரித்த போர்டுகளில். பிரதிநிதித்துவமில்லாத வகுப்புகளுக்கு மாத்திரம் நாமினேஷன் (நியமனங்கள்) கொடுக்கப்பட்டதுமாகும். அந்தப்படி பிரித்ததிலும், நாமி னேஷன்கள் கொடுக்கப்பட்டதிலும் குறிப்பிட்ட கொள்கைகளுக்கு விரோதமாக. காரியங்கள் ஏதாவது இருந்தால் அவற்றைக் குஷாலாக மாற்றலாம். அம்மாற்றத்தை குறை கூற நாம் முன்வரவில்லை. அப்படிக்கில்லாமல்.
குடி அரசு- 1937 (2) 178
ஜஸ்டிஸ் கட்சியார் செய்ததை மாற்றவேண்டும் என்றும் அக்கட்சியார் வசம் இருக்கும் ஸ்தாபனங்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்றும் அவர்கள் கொடுத்த நியமனங்களை அழித்துவிட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கருதி இம்மாதிரி மூர்க்கத்தனமும் மூரட்டுத் தனமுமான காரியங்களைச் செய்வதென்றால் அது கொடுங்கோல் ஆட்சி யாகாதா என்று கேள்க்கின்றோம்
ஸ்தல ஸ்தாபன சுயாட்சி சுயராஜ்ஜியத்தின் முதல் படி என்று சொல்லப் படுகிற நிலையில் ஏற்பட்டதாகும். சுயராஜ்யத்தின் முதல் படியையே தாங்களே. பொது ஜனப்பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கரஸ்காரர்கள் நடத்தும் யோக்கியதை இவ்வண்ணமிருக்குமானால் இனி இதே காங்கரஸ் காரர்கள் பூரண சுயராஜ்ஜியமடைந்து நிர்வகிப்பார்களேயானால் அது எப்படி இருக்கும் என்பதை சற்று உருவகப்படுத்திப் பார்க்கும்படி பொது ஜனங்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம்
மதுவிலக்கு
அடுத்தாற் போல் மதுவிலக்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம்
ஒரு ஜில்லாவில் பூரண மது விலக்கு பரீட்சை செய்யப்படுகிறது
மதுபானக்கெடுதல் ஒழிய வேண்டும் என்பதில் நாம் யாரையும் விட சிறிதும் பிற்பட்டிருக்கவில்லை. அதற்கு ஆக எவ்விதத் தியாகம் செய்யவும் பயப்படவில்லை. ஆனால் மதுபானக் கெடுதல்களை ஒழிக்கும் முயற்கி நாணையமானதாக - யோக்கியமானதாக - உண்மையானதாக இருக்க வேண்டும்.
இன்று காங்கரஸ்காரர்கள் செய்யும் மதுவிலக்கு முயற்சியில் நாணையமோ யோக்கியமோ உண்மையோ சிறிதும் கிடையாது என்பதோடு இது வெற்றி பெறுவதும் அசாத்தியமேயாகும் என்கிறோம்
காங்கரஸ்காரர்களே மதுபானத்தை ஒரு நாளில் ஒழிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இப்போது சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு ஒரே நாளில் அதாவது செப்டம்பர் “ஒண்ணாந் தேதியில் ஒழிக்கப்பட்டிருக்கிறது'. இது எப்படி அனுபவத்திற்கு ஏற்ற காரியம் என்பது நமக்கு விளங்கவில்லை. நாம் இப்பொழுது ஒன்று கூறுகின்றோம். ஒவ்வொருவரும் அதை முடிந்து வைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
அதாவது சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள், குடிப் பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையில் உள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள் அல்லது அந்த ஜில்லா எல்லைக்கு குடி வந்து விடுகிறார்கள். இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் “புண்ணிய
கேஷத்திரங்களுக்கு” அடிக்கடி யாத்திரைப் புறப்பட்டு பொருளாதாரத்தில் நசித்துப் போவார்கள்.
179 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மனிதர்களுடைய மனோதத்துவம் (Psychology) உணர்ந்தவர்கள் யாரும் இம்மாதிரி முட்டாள்தனமான காரியத்தைச் செய்யத் துணியவே
மாட்டார்கள்.
பணக்காரக் குடிகாரனானாலும் சரி, தொழிலாளி குடிகாரனானாலும் சரி குடிப்பது என்பது சரியாகவோ, தப்பாகவோ மதத்திலும், சமூகத்திலும், தொழிலிலும் அனுமதிக்கப்பட்டுத் தாராளமாய் இடம் கொடுக்கப்பட்டு நித்தியனுபவத்தில் பழகி அனுபவித்து வரும் காரியமாகிவிட்டது அதுகளை கவனியாமல் நாம் இன்று அதைத் திடீரென்று தடுக்கின்றோம்.
குடி தடுக்கப்பட வேண்டியது என்பது குடியை வெறுப்பவர்களுடைய இன்றைய உணர்ச்சி. இவ்வுணர்ச்சி ஞாயமாகவும் இருக்கலாம் அல்லது
அது சம்மந்தமான அனுபவ ஞானமில்லாமலும் இருக்கலாம்
குடி மனிதனுக்குள் ஒரு இன்பத்தையும், சாந்தியையும், ஒரு விதமான கெளரவத்தையும் குறிக்கொண்டு புகுத்தப்பட்ட காரியமாகும். இதற்கு பார்ப்பன மத ஆதாரங்களே போதிய ருஜுவாகும்
கடவுள்கள், ரிஷிகள், முனிவர்கள், மகான்கள், பெண்கள், பதிவிரதா. பெண்கள், சாதாரண பெண்கள், ராமன், கிருஷ்ணன் முதலிய தெய்வீக அவதாரங்கள் கற்பிக்கப்பட்டவர்கள் வரை மதுவருந்தி இருக்கிறார்கள். பிதுர்க்களை திருப்திப்படுத்தவும்- மகிழ்விக்கவும் கூட மது அவசியமாக்கப் பட்டிருக்கிறது. இவைகள் தப்பிதம் என்று சொல்லப்பட்டாலும், அல்லது
பொய் என்று சொல்லப்பட்டாலும் பொதுவாக மது அருந்துவதையே
குற்றம் என்று சொல்லி விட முடியாது. கெடுதி உண்டாகும் படியானதும் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் கேடுவிளைவிக்கும் படியானதுமான. மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை.
மதுபான விஷயமாய் வெள்ளையர்களுக்கு அளிக்கும் சலுகை இந்தியர்
களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது
மதுபானத்தால் பொருளாதாரக்கேடு ஏற்படுவதும் அறிவுக்கேடு ஏற்படு
வதும் செயற்கையாலேயே ஒழிய இயற்கையால் அல்ல என்று சொல்லுவோம்.
அதாவது ஒரு சின்னப் படி கள்ளு கால் அணாவிற்கு கிடைக்கும் படியானதை சர்க்கார் அதன் அவசியத்தையும் மக்களின் அறிவீனத்தையும் உணர்ந்து அதன் மூலம் பெரும் பொருள் தேடுவதற்கு ஆக தாங்களே அந்த வியாபாரத்தை நடத்தி விருத்தி செய்து அந்த கால் அணா கள்ளை 4 அணாவுக்கு விற்கும்படி செய்துவிட்டார்கள். அதனால் தான் கள்ளினால். பொருளாதாரக் கேடு ஏற்பட்டது என்பதுடன், அதற்கு ஏற்பட்ட சர்க்கார். ஏஜண்டுகள் தங்கள் அதிக விற்பனையையும் அதிக லாபத்தையும் உத்தேசித்து
குடி அரசு- 1937 (2) 150
கள்ளினால் மக்களுக்கு அறிவு கெடும்படியும், அவ்வறிவுக்கேட்டினால் பலவித கஷ்டநஷ்டமடையும் படியும் செய்து விட்டார்கள்.
இதற்கு குடி காரணமென்று சொல்லிவிட முடியாது என்பதோடு அதைத் தங்களுக்குள்ளாகவே ஏகபோகமாய் நிர்வாகத்தில் வைத்துக் கொண்ட அரசாங்கமே காரணம் என்றும் சொல்லலாம். இதன் உண்மையை உணரவேண்டுமானால் மது வியாபார விஷயமாய் சர்க்காரின் 50, 60 வருஷத்துக் கணக்கைப் புரட்டிப் பார்த்தால் விளங்கும்
இன்று தொழில்களில் இரு வகை தொழில் இருந்து வருகிறது. அதாவது சரீர பலத்தைக் கொண்டு செய்யும் கஷ்டமானதும் இடை விடாமல் செய்வதுமான தொழில் ஒன்று
சரீர பலம் உபயோகிக்காமலும் கஷ்டம் இல்லாமலும் செய்யும் தொழில் மற்றொன்று
காந்தி வாக்கு
சரீர பலத்தை சதா உபயோகித்துக் கஷ்டமான தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக 100க்கு 90 பேர்கள் கள் குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். இதற்கு தோழர் காந்தியார் வாக்கே ஆதாரமாகும். அதாவது
1931-ம் வருஷம் ஜுன் மாதம் 12ந் தேதி தோழர்கள் காந்தியார்,
பட்டேல், முஸ்லீம் காந்தியாகிய அப்துல் கபூர்கான் ஆகியவர்கள் பரோடா:
சமஸ்தானத்துக்குச் சென்றிருக்கையில் மதுவிலக்கு விஷயமாய் அவர்களது வரவேற்பில் எழுந்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் போது
காந்தியார் கூறியதாவது:-
'கதரில்லாமல் வெறும் மதுவிலக்கு ஒரு நாளும் வெற்றி பெறாது
கள்ளு, சாராயக் கடைகளை மூடிவிடுவது நம்முடைய வேலையல்ல.
கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், இப்பொழுது இருப்பது போலவே திருட்டுத்தனமாய் கட்குடியும்
சாராயக் குடியும் நடந்து கொண்டுதானிருக்கும்
குடி வழக்கம் நிற்கவேண்டுமென்றால் குடிகாரர்களுக்கு இலகுவான கைத் தொழில் கற்றுக்கொடுத்தால்தான் நிறுத்த
முடியும். இல்லையாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை
ஒரு நாளும் விடமாட்டார்கள்.
பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர் களுக்குத் தங்களது களைப்பையும், ஆயாசத்தையும் தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாயிருக்கிறது மட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நான் தென்னாப்பிரிக்காவிலிருந்த பொழுதும், வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கு வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக்கொடுத்து வந்திருக்கிறேன்.
அங்கு (தென்னாப்பிரிக்காவில்) என்னுடன் இருந்த கூலி களுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக்குப் போய் சாராய வகைகளை வாங்கிவந்து பிரியமாகக் கொடுத்திருக்கிறேன்.
மிருகங்களைப் போல் வேலைசெய்யும் உழைப்பாளி களுக்கு மதுபானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது.
என்று கூறியிருக்கிறார். இந்தவிதமான நிர்பந்தத்தையும் அவசியத்தையும் பெற்ற சாதனமான மதுவை ஒரு உத்தரவில் ஒரு நாளில் நிறுத்தி விடுகிறேன். என்பது எப்படி அறிவுடமையும் அனுபவ ஞான முடமையுமாகும் என்று கேட்கின்றோம்.
“பிச்சைக்காரன் கைக்கு ராஜ்ஜியம் போனால் மச்சானுக்கு மந்திரி வேலை கொடுப்பான்” என்பது போல் முன்பின் நிர்வாக அனுபவ மில்லாமலும், கட்டுப்பாட்டிலும் ஒழுங்கிலும் நாணையத்திலும் ஒரு
சிறிதும் அனுபவம் பெறாமலும், திடீரென்று பட்டத்துக்கு வந்தவுடன் நிர்வாகம் நடத்துவது என்றால் இம்மாதிரி முட்டாள் தனமான காரியங்கள் தான் முன்னால் நிற்குமே ஒழிய புத்திசாலித்தனமானதும் காரிய சாத்தியமானதுமான காரியங்கள் மறைந்து தான் போகும். கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லா கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டு மென்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்துக்குக் காரணமாகும்.
வரவுசெலவு திட்டம்
காங்கரஸ் மதுவிலக்கு திட்டத்தினால் ஒரு ஜில்லாவுக்கு 25 லக்ஷம்
வீதம் 24 ஜில்லாவுக்கு சுமார் 6 கோடி ரூபாய் நஷ்ட மேற்படும். இதற்கு எவ்வித முன் யோசனையும் பரிகாரமும் செய்ய மார்க்கமும் இல்லாமல் திடீரென்று செய்து விட்டால் நல்ல நிர்வாகம் எப்படி நடத்த மூடியும்? பொறுப்பில்லாமல் “ராணுவச் செலவைக் குறைப்பது'' என்பது சுத்தப் பயித்தியக்காரத்தனமான பேச்சாகும். இன்று உலகமே ராணுவச்செலவை அதிகப்படுத்திக் கொண்டு போகின்றதை பார்க்கிறோம். யுத்த கோஷங்கள் காது செவிடு படுகின்றது. காரண காரியமில்லாமல் கை வலுத்தவன் இளைத்தவனை அழுத்துகிறான். 4 கோடி ஜன சமூகமுள்ள ஜப்பான் 40 கோடி ஜன சமூகமுள்ள சீனாவை ஆட்டி வைக்கிறது. சீனாவுக்குள்ள யோக்கியதை கூட இந்தியாவுக்கு இல்லை. சென்னை துறைமுகத்துக்கு ஒரு எம்டன் கப்பல் வந்து ஒரு வெடிகுண்டு வீசினால் தோழர்கள். காந்தியும், ஜவஹர்லாலும், ராஜகோபாலாச்சாரியும், சத்தியமூர்த்தியும் ஆளுக்கொரு ராட்டினத்தை தோளில் வைத்துக்கொண்டு எதிரில் போய்
குடி அரசு - 1937 (2) 182
நின்று வந்தே மாதரப் பாட்டு பாடினால் குண்டு சமுத்திரத்தில் விழுந்து விடுமா? அல்லது குண்டு சரணாகதி அடைந்து விடுமா? கப்பல் எறிந்து விடுமா? என்று கேட்கிறோம். காந்தியாருக்கு பட்டினி கிடக்கத் தெரியும் துளசிதாஸ் இராமாயணத்துக்கும் கீதைக்கும் தத்துவார்த்தம் தெரியும் சத்தியாக்கிரகத்துக்கு பாஷ்யம் செய்வதை தனக்கே ரிஜிஸ்டர் செய்து கொண்டு புது புது பாஷியம் செய்யக்கூடும். அவ்வளவு தானே ஒழிய அரசியல் காரியத்தில் அவர் எப்படி அனுபோகமுடையவராவார்? அது போலவே தோழர் ஆச்சாரியாருக்கு வக்கீல் தொழில் நன்றாகத் தெரியும் ஜட்ஜுக்களை ஏமாற்ற சக்தி உண்டு. பார்ப்பனீயத்தை நிலை நிறுத்த
சூழ்ச்சி செய்யத் தெரியும். இவ்வளவு தானே ஒழிய இவருக்கு அரசியல் ஞானமேது? இவர்கள் சாதித்ததென்ன? உதாரணமாக இவர்கள் அரசியல் கிளர்ச்சியில் எடுத்துக்கொண்ட காரியங்கள் ஏதாவது இதுவரை அனுபவ சாத்தியமாயிற்றென்றோ வெற்றி பெற்ற தென்றோ யாராவது சொல்ல முடியுமா? வர்ணாச்சிரம தர்மத்தில் நம்பிக்கையுள்ள இவர் அரசியலுக்கு ஏற்ற வர்ணத்திலோ அரசியல் நடத்திய சந்ததியிலோ பிறந்தவராவாரா? எனவே இவர்கள் எப்படியோ அரசியலைக் கைப்பற்றிக் கொண்டு பாழாக்குகிறார்கள் என்பதல்லாமல் மக்களுக்கு நன்மையான எந்தக் காரியமும் செய்வார்கள் என்று யாரும் எதிர்ப்பார்க்க முடியவில்லை.
வரி விஷயத்திலும் இனியும் புதுப்புது வரிகள் போடுவது தான் இவர்களது நோக்கமாக இருக்கப் போகிறதே தவிர என்ன நன்மை செய்யலாம் என்பது இவர்களுக்குத் தோன்றப் போவதில்லை.
தாங்களாகவே சீக்கிரம் விட்டு விட்டு ஓடிப்போக வேண்டும் என்கின்ற நிலை சமீபத்தில் இவர்களுக்கு ஏற்படப்போவது திண்ணம்
அதற்குள் செய்யும் ஒரு ஜில்லா மதுவிலக்காவது தங்களுக்கு என்றென்றும் சொல்லிக் கொள்ள உதவும் என்று கருதுகிறவர்கள் போல நடந்து கொள்ளுகிறார்கள். மந்திரத்தில் மாங்காய் விழப்போவதில்லை.
விஷயம் நீண்டு விட்டதால் மற்றொரு முறை விளக்கப்படும்
குடி அரசு - தலையங்கம் - 03.10.1937
183 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வகுப்பு வாதமும் ஆனந்த விகடனும்
எங்கும் வகுப்பு வாதம்
ஒரு ஆட்டு இடையனை அவன் எஜமான் தனது ஆடுகள் பட்டியை விட்டு வெளியே போவதை எண்ணி விட்டு எண்ணின கணக்கை வந்து சொல்லும்படி உத்திரவு செய்தான். அந்த இடையன் அதேமாதிரி பட்டியின் கடவைத் திறந்து ஆடுகளை வெளியில் விரட்டி ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினான். எண்ணுகையில் “முதல் முதலில் ஒன்று, அப்புறம்
ஒன்று, மறுபடியும் ஒன்று, அதற்குள் குறுக்கே பாய்ந்து ஒன்று, தாண்டிக் குதித்து ஒன்று, மத்தியில் முட்டிக்கொண்டு போனது ஒன்று, அப்புறம் எல்லாம் புலுபுலு” என்று எஜமானிடம் வந்து கணக்கு சொன்னான். அதுபோல் “ஜாதி மத வகுப்புபேதமில்லாமல் பரிசுத்த வருணாச்சிரமதர்ம ராமராஜ்ய ஆட்சி” நடந்துவந்த இந்தியாவில் இமயமலை முதல் கன்னியாகுமரி வரை தெற்கு வடக்காகவும் பம்பாய் சிந்து முதல் வங்காளம் பர்மா வரை கிழக்கு
மேற்காகவும் இந்தியா முழுவதிலும் இன்று புலு புலு என்று வகுப்பு வாதம் தாண்டவமாடுகின்றது
உரிமை கேட்பது வகுப்பு வாதமா?
நாமறிய முதல் முதலில் 1900-த்தில் வங்காளத்தில் முஸ்லீம்கள். தங்கள் உரிமையை கேட்க ஆரம்பித்த உடன் அதற்கு வகுப்புவாதம் என்று பெயரிட்டு அதை ஒழிப்பதற்கு வங்காளிகள் உள்ளுக்குள்ளாக எவ்வளவோ சூழ்ச்சி செய்து பார்த்தும் அடக்கமுடியாமல் போனதால் அரசியலில் கிளர்ச்சி செய்து ஆதிக்கம் பெற்று முஸ்லீம்களை அடக்கி விடலாம் எனக் கருதி அந்தரங்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும் வெளி வேஷத்தில் ஆங்கில அரசாங்கத்துக்கு எதிராகவும் கிளர்ச்சிசெய்து ஒரு அளவு வெற்றிபெற்றார்கள். என்றாலும் அது முஸ்லீம்கள் கோரியதை (வகுப்புவாதத்தை) ஒரு அளவாவது அடையும்படி செய்துவிட்டது
அந்தக் கிளர்ச்சியின் வேகம் பஞ்சாப்பில் சீக்கியர், முஸ்லீம் என்கின்ற வகுப்புவாதத்தை உண்டாக்கிக் குறைவு உள்ள சமூகத்துக்கு ஒரு பரிகாரம் தேடிக்கொடுத்து அதன் பிறகு தென்கோடியில் சென்னை: மாகாணத்திலும் மேல் கோடியில் பம்பாய் மாகாணத்திலும் பார்ப்பனர்
குடி அரசு- 1937 (2) 184
பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு வாதம் கிளம்பி ஒரு அளவு பரிகாரம் அமுலுழுக்கு வந்தேவிட்டது. அதன் பிறகு கிழக்குக் கோடியில் பர்மா மாகாணத்தில் பர்மியர் அந்நியர் என்கின்ற வகுப்புவாதம் ஏற்பட்டு பர்மாகாரருக்கு நிரந்தரப் பரிகாரம் ஏற்பட்டு விட்டது. (இன்று சிலோனிலும் இந்தியன், லங்கையன் என்கின்ற வகுப்பு வாதம் நடக்கிறது. வெளிநாட்டிலும் கருப்பன், வெள்ளையன், ஜர்மனியன் என்கின்ற வகுப்பு வாதம் நடக்கின்றது) ஆகவே இந்தியாவின் நாலு புறத்திலும் மாத்திரம் அல்லாமல் நடுவில் மத்திய மாகாணம் ஐக்கிய மாகாணம் முதலியவைகளிலும் வகுப்புகளின் பேரால் வாதப் பிரதிவாதங்கள் நடந்த வண்ணமாகவே இருந்துவருகின்றன.
இந்த வகுப்பு வாதங்கள் கண்டிப்பாக சமுதாயம், கல்வி, பொருள், அரசு ஆகிய துறையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கும், மற்ற வகுப்புகளைத் தலையெடுக்க வொட்டாமல் செய்து அடக்கி ஒடுக்கி முன் கூறப்பட்ட துறைகளில் முன்னணியில் நின்று உயர் நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கும் மக்களுக்குமே நடந்து வருகின்றதே ஒழிய சம நிலையில் நிற்கும் இரு வகுப்புகளுக்குள் இம்மாதிரி வகுப்புவாதம் தோன்றுவதே இல்லை
இப்படிப்பட்ட வகுப்பு வாதம் தோன்றின பொழுதெல்லாம் வகுப்பு வாதத்துக்கு காரணம் மேலே கூறிய சமூகம், கல்வி, பொருள், அரசு முதலியவைகளில் பிற்பட்டு தாழ்ந்து கிடக்கும் சமூகங்களிலிருந்தே முதலில் குறையாகக் கிளம்பி அப்புறம் கூப்பாடாக மாறி கிளர்ச்சிகள் நடக்கும்போது மேல் நிலையில் உள்ளவர்கள் அதற்கு பதில் சொல்ல முடியாமல் திகைக்க வேண்டி ஏற்பட்டு விட்டதாலும் இதற்கு ஏதாவது பரிகாரம் செய்யவேண்டி ஏற்பட்டால் அது பெரிதும் ஏன்? முழுவதும் மேல். நிலையில் முற்போக்கில் போய்க்கொண்டிருப்பவர்களையே பாதிக்கிறதா யிருப்பதாலும் அதற்குத் தகுந்த பரிகாரம் செய்ய மனமற்றவர்களாகி திண்டாடித் தெருவில் நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதால் வேறு சமாதானம் இல்லாமல் தேச பக்தி என்கின்ற அயோக்கியத்தனமான - அற்பத்தனமான - இழிவான போக்கிரித்தனமான தந்திரத்தைக் கையாட
வேண்டியதாய் விட்டது. இத்தந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்தவர்கள் வங்காளத்துக்காரர்களேயாகும்.
காங்கரஸ் ஏற்பட்டதால்தான் வகுப்பு வாதம் உண்டாயிற்று
உத்தியோக வேட்டைக்காக வென்று வெளிப்படையாக காங்கரஸ் என்பதாக ஒன்று ஏற்பட்ட பிறகே உத்தியோகத்தில் பங்கு என்கின்ற வகுப்பு வாதம் உத்தியோகம் அடைய முடியாமல் செய்யப்பட்டவர்களால். ஏற்பட வேண்டியதாயிற்று. அம்மாதிரி வகுப்புவாத மேற்பட்ட பிறகே அப்பங்கு கொடுக்க இஷ்டமில்லாமல் மோசம் செய்யக் கருதிய அயோக்கியர்களால் தேசபக்தி அரசியல் என்பதான இழிகுணமான
185 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சூழ்ச்சிகள் செய்யவேண்டியதாயிற்று என்பதை அனுபவ வாயிலாகவே காங்கரஸ் சரித்திரத்திலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்
காங்கரஸ் ஆரம்பத்தில் தேசம் என்கின்ற பேச்சோ தேசாபிமானம் என்கின்ற பேச்சோ சுயராஜ்யம் என்பதான புரோகிதப் பித்தலாட்டப் பேச்சோ சிறிதும் கிடையாது.
உத்தியோக வேட்டைக்கும் ராஜபக்திக்கும்தாண் காங்கரஸ்
ஏற்பட்டது
காங்கரஸ் ராஜபக்திக்கும் அதுவும் பிரிட்டிஷ் ஆட்சி ராஜபக்திக்கும் ஆகவே ஏற்பட்டது. பிறகு அதன் கூலியாகிய உத்தியோகத்தை கெஞ்சிக்
கேட்கும் வேலையை செய்து வந்தது. அதுவும் ஒரு கூட்டத்தாருக்கே, ஒரு வகுப்பாருக்கே கிடைக்கும்படியான காரியத்தைச் செய்து வந்ததால் முஸ்லீம்கள் தங்களுக்குள்ள பங்கு கிடைக்கவேண்டுமென்று கேட்க வேண்டியவர்களானார்கள். ஆகவே முஸ்லீம்கள் அதற்கு ஆக முயற்சி செய்யும்வரை தேசபக்தி, தேசாபிமானம், வந்தே மாதரம், சுயராஜ்யம் என்கின்றதான ஏதாவது ஒரு வார்த்தை இருந்ததா என்பதாக யோசித்துப் பார்த்தால் இத்தேசபக்தி புரட்டுகள் ஏற்பட்டதற்கு காரணம் விளங்கி விடும் உண்மையிலேயே ஆரம்பத்தில் தேசம் என்றால் பிரிட்டிஷ் தேசம் என்பது தான் காங்கரசில் இருந்து வந்தது. இந்தியாவைப்பற்றி அதில் பேச்சில்லையா என்று யாராவது கேட்பதாயிருந்தால் ஆம் இருந்தது என்று சொல்வதோடு. எப்படி இருந்தது என்று சொல்லுகிறோம் என்றால் “இங்கிலாந்து தேசத்தின் பாதுகாப்பில் - ஆதரவில் என்றென்றும் உலகம் உள்ள அளவும் இந்தியா இருக்க வேண்டியது” என்கின்ற பிரார்த்தனையில் இருந்தது ராஜாவைப்பற்றி ஏதாவது பேச்சு இருந்ததா என்றால் இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட பேச்சு இருந்தது என்றால் “பிரிட்டிஷ் அரசர் இந்தியாவுக்கு சக்கரவர்த்தி என்றும்” “அவர் வம்சமே பாரம்பரியமாய் இந்தியாவை எப்போதும் ஆண்டு கொண்டிருக்க வேண்டும் என்றும்" “அவர்கடவுள் அம்சம்" என்றும் “குறிப்பாக விஷ்ணுவின் அவதாரம்” என்றும் அர்ச்சிக்கப்பட்டு வந்தது
ஆதியில் சுயராஜ்ய பேச்சு கிடையாது
சுயராஜ்யம் என்கின்ற பேச்சு ஏதாவது இருந்ததா என்றால் அக்காலத்தில் இப்படி ஒரு வார்த்தையே பழக்கத்தில் இருந்தது கிடையாது என்பதோடு எந்த அகராதியிலாவது இருந்ததாகக்கூட நாம் அறிந்ததில்லை. அறிந்தவர்களையும் கண்டதில்லை. ஆனால் அதற்கு பதிலாக காங்கரசில் ராஜ்ய பாரம் சம்மந்தமாக வேறு என்ன இருந்தது என்று கேட்கப்படு
மானால் ஒன்று இருந்தது நமது ஞாபகத்துக்கு உறுதியாய் தெரிகிறது அது என்னவென்றால்
குடி அரசு- 1937 (2) 186
“இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி கடவுளால் அனுப்பப்பட்டது” என்றும் “இந்தியர்களுக்கு தர்மகர்த்தாக்களாக இருக்கும்படி இந்தியாவை கடவுள் இங்கிலீஷ்காரர் வசம் ஒப்புவித்திருக்கிறது என்பது உண்மையான விஷயம்” என்றும், 'இங்கிலீஷ்காரர் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னும் அதற்கு வெகு காலத்துக்கு முன்னும் இருந்த வந்த கொடுங்கோலாட்சி (ராமராஜ்ய ஆட்சி ப-ர்) யை ஒழித்து சுதந்திர சமத்துவ உணர்ச்சியை உண்டாக்கவே பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்திருக்கிறதாகும்'” என்றும் “காங்கரசின் அஸ்திவாரமே ராஜபக்தி” என்றும் “காங்கரசின் கொள்கையே ராஜவிசுவாசம்” என்றும் “அது இந்தியா என்றென்றும் பிரிட்டிஷார் ஆதிக்கம்
விட்டுப் போகாமல் இருப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட பத்திரமான ஸ்தாபனம் என்பதை பிரிட்டிஷார் உணர வேண்டும்” என்றும் “பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப் போகக்கூடாது” என்றும் காங்கரஸ் மகாசபையின் அவ்வப்போதைய தலைவர்களான காலம் சென்ற பானர்ஜி, நெளரோஜி, சங்கர் நாயர், ஆர்.சி.டட் முதலியவர்களும் இன்றுள்ள பண்டிதர் மாளவியா விஜயராக வாச்சாரியார் முதலியவர்களும் முறையே சொன்ன வார்த்தைகள் தான். (இவை காங்கரஸ் சரித்திரம் என்னும் புஸ்தகத்தில் உள்ள படி காங்கரசில் ஆட்சியைப்பற்றி குறிப்பிட்ட வார்த்தைகளாகும்.)
காங்கரஸ் சமூகத்துக்கே தவிர தேசத்துக்கு அல்ல.
இந்த நிலையில் உள்ள காங்கரசுக்கு பெயர் ஆதியில் இவற்றை உத்தேசித்தே இந்திய சமூக சம்மந்தமான கூட்டம் என்று தான் பெயரிடப் பட்டதே தவிர காங்கரஸ் ஏற்பட்ட காலத்தில் தேசத்தைபற்றிய உணர்ச்சியே யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. அன்றியும் உத்தியோக கோரிக் கையைப் பற்றித்தான் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர ஆட்சி சுதந்திரத்தைப் பற்றியோ, அதிகார சுதந்தரத்தைப் பற்றியோ வெள்ளைக் காரர் ஆட்சியைப் பற்றியோ குறிப்பிட்டு எப்போதும் பேசப்பட்டிருக்கவே இல்லை.
இன்று காங்கரஸ்காரர்கள் தங்கள் (காங்கரஸ்) கொள்கை அரசியல் சம்பந்தமானதே ஒழிய - தேசபக்தி சம்மந்தமானதே ஒழிய உத்தியோக சம்மந்தமானதோ ராஜபக்தி சம்மந்தமானதோ அல்ல என்று யாராவது சொல்ல வருவார்களானால் அவர்கள் அரசியல் என்பது அயோக்கியத்தனம்
என்றும் தேசபக்தி என்பது அயோக்கியர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு கடைசி மார்க்கம் என்றும் பொருள் சொன்ன தீர்க்கதரிசிகளின் வாக்கைக் காப்பாற்றி மெய்ப்பித்தவர்கள் ஆவார்கள்.
இங்கிலீஷ் ஆட்சியால்தான் ஓற்றுமை
இந்தியாவில் வேறெங்குமில்லாத பல மதம், பல வகுப்பு ஒன்றுக் கொன்று மாறான பலவித லட்சியமுள்ள பல சமூகங்கள் இருக்கின்றன.
187 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அதனாலேயே இங்கிலீஷ் ஆட்சிக்கு முன் இந்தியா ஆரம்பமுதலே 56
தேசங்களாகப் பிரிக்கப்பட்டு சதா கலகமும் கொள்ளையும், சமூக
அட்டூழியங்களும் இருந்து வந்திருக்கின்றன. ஆகவே அப்படிப்பட்ட நாடு “இன்று இங்கிலீஷ்காரரால் ஒன்று சேர்க்கப் பட்டு சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டு மக்களுக்கு சமத்துவமும், சுதந்திரமும் உண்டாகும்படி ஆட்சி புரியப்படுகிறது.”
இது நமது வாக்கல்ல, காங்கரஸ் தலைவர்களின் தலைமைப் பிரசங்கத்தில் உள்ள வாக்கு என்றும் கூறுவோம்.
**விகடன்*? குறும்பு உண்மை இப்படியிருக்க, சுயநலக்காரராகவும் பாடுபட்டு உழைக்க சோம்பேறித்தனம் கொண்ட மடையர்களாகவும் நெஞ்சில் சிறிதும் ஈவிரக்கமின்றி மக்களைப் பிரித்து சின்னாபின்னப்படுத்தி ஊரார் உழைப்பில் உயர் பதவியில் இருந்து வாழ ஆசைப்பட்ட கொடியர்களான பார்ப்பனர்களால் பழைய தங்கள் சுயநலத்துக்காக கொடுங்கோன்மையான. பழைய நிலைக்குக் கொண்டு போகும் ராமராஜ்யத்துக்கு ஆளாக்க முயற்சிக்கும் முயற்சியை எவனாவது தடுத்தால் அவன் இன்று வகுப்பு வாதியாகவும் தேசத் துரோகியாகவும ஆக்கப்பட்டுவிடுகிறான்.
அதாவது இவ்வாரத்து, “ஆனந்தவிகடன்” என்னும் ஒரு பார்ப்பனியப் பிரசாரப் பத்திரிகை தங்கள் சூழ்ச்சிகளையும் அயோக்கியத்தனங்களையும் இழிதன்மையான வஞ்சகங்களையும்வெளிப்படுத்துகிறவர்களை பொறாமைக்
காரர்கள் என்றும் சோம்பேறிகள் என்றும் முட்டாள்கள் என்றும் பொருத்தி ஒரு கதை எழுதி உவமானப்படுத்தி கடைசியாக யோக்கியதையும் தகுதியு மற்றவர்களே வகுப்புவாதம் பேசுவார்கள் என்று கண்டித்து இருக்கிறது
“விகடனுக்கு பதில்
அதற்கு பதில் எழுதவே இச்சமாதானம் எழுதத் துணிந்தோம். “ஆனந்த விகடன்” எழுதும் முறையிலேயே நாமும் எழுதுகிறோம்
உச்சிக் குடுமியும் பூணூலும் வகுப்புவாதமல்லவா?
தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு தகுதியும் யோக்கியதையும் நேரான கண் பார்வையும் இருந்தால் உச்சிக் குடுமியும் பூணூலும் கருப்பு கண்ணாடியும் எதற்கு? மூன்றும் அவருடைய பித்தலாட்டத்தையும் வஞ்சகத் தையும் குரோதபுத்தியையும் தானே காட்டுகின்றன. இதுபோலவே ஒவ்வொரு “தேசியத் தலைவர்கள்" யோக்கியதையையும் எடுத்துக்கொள்ளட்டும். வகுப்பு வாதம் காட்டி அதனால் மக்களை ஏமாற்றி மூன்னுக்கு வராத ஒரு யோக்கியமான தலைவனை “ஆனந்தவிகடன்” காட்டட்டுமே பார்க்கலாம்
குடி அரசு- 1937 (2) 188
“ஆனந்தவிகட”னின் அயோக்கியத்தனத்தையும் பழங்கால நிலைக்கு ஆசைப்படும் அற்ப பெண்கள் போல் ஜாடைபேசும் இழிகுணத்தையும் மக்களுக்கு எப்பொழுது தான் எடுத்துக் காட்டுவது? “ஆனந்த விகடனின். அயோக்கியத்தனமான கதையை கீழே எழுதி பிறகு அதிலுள்ள அற்பத்தனத்தை விளக்குவோம். இது மூஸ்லீஸ்களுக்கு மாத்திரம் அன்று பொதுவாக உரிமைக் கேட்கும் எல்லோரையும் மனதில் வைத்து கோழைத்தனமாக ஜாடை காட்டி எழுதப்பட்டது என்று கருதியே அதை விளக்குகிறோம்
“விகடன்? கதை
குப்பன் என்று ஒருவன் இருந்தானாம். அவன் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொண்டு வாங்கிய சாமானை மூட்டை கட்டி தலையில் எடுத்துக் கொண்டு நடந்தானாம். அவனுடன் கூட நடந்து வந்த சுப்பன் என்பவன் சோம்பேறியானதால் வெறுங் கையுடன் நடந்து வந்தானாம். அப்போது அனாவசியமாக குப்பன் மீது கோபித்துக் கொண்டு குறை கூறினானாம் அது போல் இருக்கிறதாம் முஸ்லீம்கள் நடந்துகொள்வது என்று சொல்லிவிட்டு,
வகுப்புவாதம் பேசுகிறவர்கள் சுயநலக்காரர்கள் என்றும் காங்கரசுக்கு விரோதமாக பேசுவதற்கு காரணமில்லாதவர்கள் வகுப்பு பேச்சை கிளப்பி விடுகிறார்கள் என்றும் சென்னை சட்டசபையில் உள்ள அநேக முஸ்லீம்கள் இப்படிப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது. இதை யாராவது எந்த முஸ்லீமாவது எந்த பார்ப்பனரல்லாதவராவது ஒப்புக்கொள்ள கூடுமா என்று கேட்கிறோம்
குப்பன் கதை போலவா?
குப்பன் பாடுபட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கிய சாமான் மூட்டைபோலா இன்றுள்ள மந்திரிகள் தலையில் உள்ள பதவி மூட்டை? என்று கேட்கிறோம். மக்களை ஏமாற்றி வஞ்சித்து விஷமப் பிரசாரமும், குரோதப் பிரசாரமும் செய்து உள்ளொன்று வைத்து புறம் பொன்று பேசி தாங்கள் எப்படியோ கைக்கொண்டு விட்டு வகுப்பு ஆதிக்கத்தால் மக்களை மயக்கி அயோக்கியத்தனமான பொய்யான கற்பனையான புராணக் கதைகளையும் முட்டாள் நம்பிக்கைகளையும் மக்களுக்குள் புகுத்தி முட்டாள்களாக்கி - அவர்களிடம் இருந்து ஏமாற்றி வாங்கின மூட்டையா அல்லது யோக்கியமாய் பாடுபட்டு சம்பாதித்த மூட்டையா என்று கேட்கிறோம். அப்படியில்லையானால் யார் யார் எந்த வகையில் பாடுபட்டு உழைத்தார்கள் என்பதையாவது ஆண்மையும் யோக்கியமும் இருக்குமானால் “ஆனந்தவிகடன் எடுத்து காட்டட்டுமே என்கிறோம்.
வந்தேமாதரப் பாட்டு
தமிழனுக்கு பிறந்த - தமிழ் பாஷை அறிந்த - தமிழ் மக்கள் உள்ள தமிழர்கள் சட்ட சபையில் வங்காள பாஷையில் 100க்கு 93% பேருக்கு
19 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
புரியாத ஒரு பாட்டை தேசீயப்பாட்டு என்றும் தாய் நாட்டு வணக்கப் பாட்டு என்றும் யாரோ பார்ப்பனப்பெண் பாடுவதும் அதை மற்ற தமிழ்
மக்களும் முஸ்லீம்களும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் எழுந்து நின்று தலைவணங்கி செவி சாய்த்து பிரார்த்தனை வேஷத்தில் நிற்க வேண்டும் என்றும் ஒரு மனிதன் சொல்லுவானானால் அவன் மனிதத்தன்மை புத்தியில் சொல்லுகிறானா அல்லது ஆயுதமும் கூட்ட பலமும் இல்லாத பிரயாணி களை இருட்டில் வழிமறித்து வழிப்பறிக் கொள்ளையடிக்கும் கொள்ளைக் காரனது கொடும் புத்தியைக் கொண்டு சொல்லுகிறானா என்று இப்போதும்
நாம் 'ஆனந்தவிகட'னைக் கேட்கின்றோம். அந்த வந்தேமாதரப் பாட்டு எந்த பாஷைப்பாட்டு? என்றும் என்ன அருத்தம் என்றும் இப்பொழுதாவது எத்தனை சட்டசபை மெம்பர்களுக்குத் தெரியும்? என்று கேட்கிறோம்.
ஆளுக்கு மாதம் 75 ரூபாய் கொடுத்து மெஜாரிட்டியாக ஆட்களை
சேர்த்து வைத்துக் கொண்டதினாலேயே அம்மெஜாரிட்டியார் மற்றவர்களுக்கு தர்மகர்த்தாவாக ஆகிவிடுவார்களா என்று கேட்கின்றோம். அப்படியானால். இவர்களை விட கூளாங்காலன் கூட்ட- ஜம்புலிங்கம் கூட்ட ஆட்சி இன்றைய மெஜாரிட்டி பல ஆட்சியைவிட யோக்கியமான ஆட்சி செய்யக்கூடியது என்று சொல்லுவோம்.
பார்ப்பனரின் பல கடவுள்கள் பெயர்கள் பலதடவை அப்பாடலில் வருகின்றன. முஸ்லீம்கள் ஒரே கடவுளை வணங்குவதாக சொல்லிக் கொள்ளுபவர்கள் பார்ப்பனக் கடவுள்களை பின்னப்படுத்தினால் மோட்சம் என்று கூட சிலர் கருதுபவர்கள். அப்படியே சிலர் செய்தவர்கள். அது தெரிந்தும் முஸ்லீம்களும் கூட இருந்து இந்திய கடவுள்களுக்கு பிரார்த்தனை செய்துதான் ஆகவேண்டுமென்பது ஆணவமா அல்லவா என்று கேட்கின்றோம்
கிலாபத்துக்கு கூலியா?
மேலும் “விகடன்” கிலாபத்து கிளர்ச்சியின் போது இப்பாடல்களுக்கு தலை வணங்கின முஸ்லீம்களுக்கு இப்பொழுது மாத்திரம் ஆத்திரம் வரக் காரணமென்ன என்பது ஆக கிண்டல் செய்கின்றது
அந்தக் காலத்தில் இந்துக்களும் அல்லா அல்லா என்று கூப்பாடு போட்டார்கள். அவை தெருக்களில் சட்டப்படி கட்டுப்பட்டிராத இடங்களில் நடந்தனவாகும்.
சட்டசபை சட்டப்படி கட்டுப்பட்ட பொது இடமாகும். ஆகவே அந்த இடத்தில் நடந்த காரியங்களை “ஆனந்தவிகட"னே இந்த இடத்தில் நடக்க சம்மதிக்குமா? என்று கேட்கின்றோம். அப்படித்தான் இருந்தாலும் கிலாபத்துக்குக் கூலி இந்துக் கடவுள்களை வணங்கவேண்டியதா என்று கேட்கின்றோம்.
குடி அரசு- 1937 (2) 190
இந்துக்களுக்கு பன்றியும் பன்றி மாமிசமும் மதத்திலே ஒப்புக் கொள்ளப்பட்டவை. “சுவாமிக்கும்” “பிதுர்களுக்கும்” படைக்கக்கூடியது "கடவுளே" அந்த ரூபமாய் வந்திருக்கிறது. அதை நாம் ஊணில் ஒரு மூஸ்லீம் வீட்டுக்கு பக்கத்தில் இருந்து கொண்டு வளர்த்தலாம்; சாப்பிடலாம்
ஆனால் சட்டசபையில் விருந்து வைத்துக்கொண்டால் முஸ்லீம்கள் ஒப்பவேண்டுமா? ஒப்பாவிட்டால் ஊருக்குள் உன் வீட்டுக்கு பக்கத்தில் கட்டி இருந்தேனே, சாப்பிட்டேனே என்று சொல்லலாமா என்று “ஆனந்த விகட"னைக் கேட்கின்றோம். இதுபோலவே முஸ்லீம்கள் நம் வீட்டுக்கு பக்கத்தில் செய்யும் காரியங்களை எல்லாம் சட்ட சபையில் செய்ய “ஆனந்த விகடன்" சம்மதிக்குமா? என்று கேட்கின்றோம்
விகடன் தலைக்கொறுப்புக்கு காரணம்
தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன் என்பது போல் “ஆனந்தவிகடானுக்கு தலைக் கொழுப்பு ஏறிவிட்டதால் இப்படியே அதன் ஆணவம் வழிந்தோடுகின்றது. மானங்கெட்ட சொரணையற்ற தமிழர்
பலர் அதற்கு ஈனத்தனமாய் அடிமைப்பட்டு கிடப்பதும் அதை ஆதரிப்பதும் அயோக்கியத்தனமான பணத்தாசையால் அதை வாங்கி சூதாட நினைப்பதுமே “ஆனந்தவிகட”னின் ஆணவத்துக்கு அஸ்திவாரமாய்
இருந்து வருகிறது
காங்கரசை எதிர்க்க ஆதாரமில்லையா?
காங்கரசுக்கு எதிர்ப்பாய் பேச ஆதாரமில்லாதவர்களே வகுப்பு வாதம் பேசுகிறார்கள் என்பதாக கிண்டல் செய்கிறது.
காங்கரசின் எந்த நடவடிக்கைக்கு எதிர்த்துப் பேச காரணமில்லை என்று “ஆனந்தவிகடன் கருதுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை:
கள் விருந்தில் கலந்துகொண்டு கள்ளுக்கடை எடுத்துக்கொண்டு. கள்ளும் குடித்துக் கொண்டு இருக்கிறவர்களைக் கொண்ட காங்கரசின் மதுவிலக்கை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? நாமினேஷனில் மந்திரியாகி நாமினேஷனை வெறுத்துத் தள்ளிய காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? “எனக்கும் காங்கரசுக்கும் சம்மந்தமில்லை; நான். நாலணா மெம்பர்கூட இல்லை" என்கிறவரை சர்வாதிகாரியாய்க் கொண்ட காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா?
“காங்கரஸ் நடவடிக்கைக்கும் எனக்கும் இனிமேல் சம்மந்தமில்லை” என்று சொல்லி ஓடிப்போய் யாரும் அழைக்காமல் வந்து புகுந்து அதிகாரம் செய்யும் ஆசாமி தலைமையில் மந்திரிசபை இருக்கும் காங்கரசை எதிர்த்துப் பேச அதாரமில்லையா? “காங்கரசு ஒழிந்தாலொழிய, கதர் ஒழிந்தாலொழிய,
காந்தி ஒழிந்தாலொழிய நாட்டுக்கு விடுதலை இல்லை” என்றவரை மந்திரியாகக் கொண்ட காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா? ம... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காங்கரசின் பேரால் மந்திரியாகி காங்கரசின் எதிர் ஸ்தாபனத்தை தஞ்சமடைந்து
காங்கரசுக்கு விரோதம் செய்தவரை சரணாகதி அடைந்து மந்திரியாக்கிய காங்கரசை எதிர்த்துப் பேச ஆதாரமில்லையா?
மற்றும் காங்கரசின் எந்த கொள்கையை எதிர்த்துப் பேச ஆதாரமில்லை என்று கேட்கின்றோம். ஆண்மை இருந்தால் “ஆனந்த விகட"னல்ல, அவர்கள் பாட்டன் குரங்கு மூஞ்சியும், உச்சிக்குடுமியும் கொண்ட “விகடன்” தான் சொல்லட்டுமே பார்ப்போம். அரசியலை உடைக்கிறார்களே அந்த யோக்கியர்களைக் கொண்ட காங்கரசையா? அல்லது உறுதி மொழி வெளிப்படையாய் தராத பக்ஷம் பதவி ஏற்பதில்லை என்று சொன்ன யோக்கியர்களைக் கொண்ட காங்கரசையா? “பதவி ஏற்றால் பிரிட்டிஷுக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்ததாகும்” என்றும் “என் உயிருள்ள வரை பதவி ஏற்பதை எதிர்த்துத்தான் தீருவேன்" என்றும் சொல்லிவிட்டு சமயம் வந்த உடன் தங்கைக்கு மந்திரிபதவி சம்பாதித்துக்கொண்டு “மந்திரிகள். நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அவர்களை யாரும் குறை கூறக்கூடாது! என்று ஸ்ரீ முகம் விடும் நாணையமானவரை தலைவராகக் கொண்ட காங்கரசையா?
“சி.ஐ.டி யை ஒழிப்பேன். அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பேன், பேச்சு சுதந்தரம் எழுத்து சுதந்தரம் கொடுப்பேன்" என்று ஓட்டுவாங்கி அதற்கு நேர்விரோதமாய் நடக்காவிட்டால் அரசாங்கம் நடக்காது என்ற சொல்லு பவரை மந்திரியாகக் கொண்ட காங்கரசையா? எந்த காங்கரசை எதிர்த்துப் பேச நமக்கு வாயில்லை என்று “ஆனந்த விகட'னைக் கடாவுகிறோம்.
தவிர தியாகிகள் கொண்ட சட்டசபை என்கிறது 'விகடன்.'' இன்று சட்ட சபையில் மந்திரி சபையில் ஒரு தியாகியை “ஆனந்த விகடன்”
பேர் சொல்லுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கிறோம் பொய்சொல்லி பித்தலாட்டம் பேசி ஏமாற்றி அதிகாரம் பெறுகிறவன் ஒருவன் ஒரு கண்ணைகொடுத்து பதவி பெற்றிருந்தாலும் அவன் தியாகியாவானா வியாபாரி ஆவானா என்று கேட்கின்றோம். இப்படி இல்லாத ஆள் ஒருவரை இந்தியா பூராவிலும் உள்ள மந்திரிகளில் ஒருவரை யாராவது காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம். நாம் வேண்டுமானால் அதிலுள்ள நாணையமற்றவர்களை அயோக்கியர்களை வஞ்சகர்களை வண்டி வண்டியாய் காட்டுகிறோம். சொந்த நடவடிக்கையைக் குறிக்கொண்டல்ல. காங்கரசு முறையிலேயே காட்டுகிறோம். (அதுவும் வேண்டுமானால் வாக்கின் வாக்கினாய் காட்டுவோம். ஆனால் அது இங்கு பேச்சல்ல; சரியல்ல)
சுயநலத்துக்காக வகுப்பு வாதம் என்கின்றது “விகடன்”. என்ன. சுயநலம் என்று எடுத்துச்சொல்ல ஆண்மையுண்டா? என்று கேட்கிறோம். சுயநலம் இருந்தால் இன்று கட்டாயம் வகுப்பு வாதத்தில் தலைசிறந்தவர்கள்.
சிலர் மந்திரியாய் இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்களது டிரைவர்களைக் கூட மந்திரியாக்கி இருக்கக்கூடும்
குடி அரசு - 1937 (2) 192
ஆகவே விஷமக் கதையாலும் பொருத்தமற்ற வகுப்புவாதம் என்கின்ற பூச்சாண்டியாலும் தேசத்துக்கு துரோகம் என்கின்ற பூச்சாண்டியாலும் சுயநலம் என்கின்ற பூச்சாண்டியாலும் வகுப்பு உணர்ச்சியை அடக்கி விட முயற்சிப்பதாலும் ஜாடை பேசுவதாலும் புராணப் பிரசாரப் பித்தலாட்டம் செய்வதாலும் ஒரு நாளும் வகுப்பு உணர்ச்சியை ஒழித்துவிடவோ அதன்: வெற்றியை தடைப்படுத்தவோ அல்லது காங்கரஸ் சீக்கிரம் கவிழ்ந்து விடப் போவதை நிறுத்துவிடவோ கண்டிப்பாய் முடியாது என்று எச்சரிக்கை செய்கிறோம்
மற்றும் “விகடன்” “அரசியலில் வகுப்பு வாதத்துக்கே இடமில்லாமல் ராஜாஜி செய்து விட்டதால் வகுப்புவாதிகளுக்கு இடமில்லாமல் போய் விட்டது என்று போக்கிரித்தனமான கேலிக்கூத்து அடிக்கிறது. பைத்தியம் பிடித்து நிர்வாணமாகத் திரிந்த மனிதன் உலக்கையை எடுத்து கோவணமாய் கட்டிக்கொள்ள முன்வந்து விட்டதால் அம்மனிதனுக்கு பைத்தியம் தெளிந்து போய் விட்டதல்லவா என்று சொல்லுகிற சிகாமணியைப் போல் இருக்கிறது “விகடனின்” இந்தக் கூற்று. ஏன் என்றால் பெரிதும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் வேலை கிடைக்கவும் எப்போதும் பார்ப்பான். சாமியாகவும் பூதேவனாகவும் இருக்கவும் புராணங்களை ஹிந்தியில் குழந்தைகள் படித்தாக வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டதால் இனி “ராஜாஜியை” யார்தான் வகுப்புவாதி என்று சொல்லமுடியும்? பார்ப்பனவாதி என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். “விகடன்” அகராதிப்படி பார்ப்பன வகுப்பு நலம் மாத்திரம் கோரி எப்படிப்பட்ட அக்கிரமமான கொலை பாதகமான காரியம் செய்தாலும் அவர்கள் வகுப்புவாதி அல்ல வென்றும் எல்லா வகுப்புக்கும் சரிசமமான, நீதி வழங்க வேண்டுமென்று
மாத்திரம் சொல்லுகிறவர்கள் பச்சை வகுப்பு வாதிகள் என்றும் இருக்கிறதாகத் தெரிகிறது. ஆகவே “விகட'”னே இனி உன் பித்தலாட்டத்துக்கும் புனை சுருட்டுக்கும் புராண பிரசார ஏமாற்றலுக்கும் இடமில்லாமல் செய்கிறோம்
என்று சொல்லுவதைத் தவிர வேறு பதில் சொல்ல வேண்டியதில்லை சொன்னாலும் உனக்கு மானம் வராது
குடி அரசு - தலையங்கம் - 10.10.1937
193 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சமஷ்டி (அல்லது) பிடரேஷன்
மாகாண அரசியலுக்கு என்று புதிய சீர்திருத்தச் சட்டம் ஏற்பட்டது போலவே இந்தியாவொட்டுக்கும் சேர்ந்த பொது நிர்வாக விஷயங்கள் சில என்று பிரித்து அவைகளுக்காக சமஷ்டி என்று சொல்லப்படும் பிடரல் கவர்ன்மெண்டுக்கு அரசியல் சீர்திருத்தச் சட்டம் ஒன்று சீக்கிரத்தில் வெளியாகப் போகிறது என்பது உறுதி அந்த பிடரல் கவர்ன்மெண்ட் சீர்திருத்த சட்டத்தை இந்தியாவின் நாணையமான அரசியல்வாதிகள் ஆக்ஷபிப் பதில்லை. ஏதோ சில திருத்தங்கள் மாத்திரம் சொல்வதாகத் தெரிகிறது
ஆனால் நமது பித்தலாட்ட அரசியல்வாதிகளான காங்கரஸ்காரர்கள் இருக்கிறார்களே அவர்கள் மாத்திரம் தங்கள் வழக்கப்படி “சமஷ்டியை நசுக்கி அழித்து ஒழித்து விடுவோம்'” என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏனென்றால் காங்கரஸ்காரர்களுக்கும் நாணையத்துக்கும் யோக்கியப் பொறுப்புக்கும் வெகு தூரமல்லவா? ஏனெனில் அவர்கள் அறிவாளிகளைப் பார்த்தோ அறிவாளிகளை மனதில் வைத்தோ பேசுகிறவர்கள் அல்ல மந்திரத்தினால் புதையல் எடுத்துக் கொடுக்கிறவனைப் போல் முட்டாள் ஜனங்களையும் மடையர்களையும் எப்படி ஏய்க்கலாம் என்பதிலும் காசு கொடுத்து காலிகளை நியமித்து எப்படி அறிவற்ற ஜனங்களை ஏமாற்றலாம் என்பதையுமே கருத்தாய் கொண்டவர்களானதால் இவர்கள் அறிவாளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அவர்களுக்கு ஏற்றாற்போல் இந்த நாட்டில் 100க்கு 92 பேர்கள் தற்குறிகள், தற்குறிகள் பெரும்பாலும் மடையர்களாயிருப்பதில் ஆச்சரிய மென்ன? அவர்கள் தவிர படித்தவர்கள் என்கின்ற 100க்கு 8 பேர்களிலும் 100க்கு 3 பேர்களாய் உள்ள பார்ப்பனர்கள் 100க்கு 100 பேர் படித்தவர்கள். ஆகவே மீதி நம்மவர்களில் படித்தவர்கள் 100க்கு 5 பேர்கள் தான் உண்டு. இதில் கூலிக்கும் சுயநலத்துக்குமாக பகுதிப் பேர் பார்ப்பனர்களுக்கு சிஷ்யர் களாய் விடுகிறார்கள். ஆகவே மீதி உள்ள ஒரு சிலருக்கு பயந்து கொண்டு காங்கரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) யோக்கியமாய் நடக்கவேண்டுமென்று எப்படி ஆசைப்பட முடியும்?
ஆதலால் காங்கரஸ்காரர்கள் எவ்வளவு பொய்யையும் சொல்ல இடமிருக்கிறது. அதனால் அவர்கள் சமஷ்டியை பகிஷ்கரிப்பதாக இன்று வாயில் சொல்லலாம். அரசியல் சட்டம் வெளியான உடன் அதை உடைப்
குடி அரசு- 1937 (2) 194
பதாகச் சொல்லி ஓட்டுக் கேட்கலாம். முட்டாள்களின் ஓட்டுகளைப் பெரு வாரியாகப் பெற்றவுடன் “சமஷ்டியை உடைத்து நொறுக்கி இந்து சமுத்திரத்தில் கொட்டுவதற்காக சமஷ்டியை ஏற்று நடத்தப் போகிறோம்” என்று சொல்லிக் கொண்டு அவசர அவசரமாக உச்சிக் குடுமியைத் தட்டி முடிந்து கொண்டு பஞ்சகச்சம் இறுக்கிக்கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்துக் கொண்டு நம்மவர்களில் விசுவாசப் பிராணிகளைப் போன்ற 10 பேரை கூட அழைத்துக்கொண்டு கோட்டைக்குள் புகுந்து ராஜ விசுவாசப் பிரமாணம் செய்துவிட்டு பங்கா அடியில் உட்கார்ந்து பேனாவைக் கையிலெடுத்து பார்ப்பானுக்கு உத்யோகம் போட டில்லியில் ஒரு பெரிய சமஸ்கிருத வேத புராண பாடசாலை வைத்து கட்டாயப் பரீகைஷ நடத்தினால் தட்டிக்கேட்கிறவர்கள் யார் என்றுதான் கேட்கின்றோம். யாராவது சட்ட சபை மெம்பர் மூக்கு விட்டால் 75 ரூ. சம்பளத்தை 150 ரூ. ஆக்கி விட்டால் என்னமோ செய்தது போல் கைதூக்கி விடுவார்கள் என்கின்ற தைரியம் சமஷ்டியை “உடைத்து நொறுக்குகிறவர்களுக்கு” உண்டு என்பது நமக்குத் தெரியும்.
ஏகாதிபத்தியத்தை ஒழிக்கும் ராஷ்டிரபதியே போடு தோப்புக் காரணம் என்றால் எண்ணிக்கொள் என்கிறார். (ஏன் அப்படி இல்லாமலா ராஜவிசுவாசப் பிரமாணம் செய்ய மெம்பர்களுக்கு உத்திரவு கொடுத்திருப்பார்) ஆகவே அடுத்த தேர்தல் வருவதற்குள் காங்கரஸ்காரருக்கு சமஸ்டி ஒழிக்கும் பிரச்சினையே தேர்தல் பிரச்சினையாக வரப்போகிறது என்பது நமதபிப்பிராயம்
எப்படி இருந்தாலும் பிரிட்டிஸ் சர்க்காரின் யோக்கியதை இந்த கொஞ்ச கால காங்கரஸ் ஆட்சிக்குள் உலகமே சிரிக்கும்படி ஆகிவிட்டதால் தாங்களாகவே யாதொரு காரணமும் சொல்லாமல் காங்கரஸ்காரர்களுக்குந்தான் கொடுத்து தள்ளப்போகிறார்கள். அதன் மூலம் தான் நாட்டுக்கு விமோசன மேற்படலாம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.10.1937
19$ ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தமிழர்கட்கு “அறிவிலிகள்? பட்டம்
**“ஆனந்த விகடன்? ஆசிமியர் நற்சாட்சிப் பத்திரம்
- ஊர் வம்பு
சேலம் ஜில்லாவில் மதுவிலக்குப் பிரசாரம் செய்ய பிரதம மந்திரி ஆச்சாரியாருடன் “ஆனந்த விகடன்” ஆசிரியர் தோழர் ரா.கிருஷ்ணமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தாராம். ஓமலூர் பொதுக்கூட்டத்தில் பிரதம மந்திரி ஆச்சாரியார் ஹிந்தியை எதிர்ப்பவர்கட்குப் புத்தியில்லை. அவர்கள் எல்லோரும் அறிவிலிகள் என்று பேசினாராம். அதே கூட்டத்தில் பிரதம மந்திரி ஆச்சாரியார் பேசிய பிறகு 'ஆனந்த விகடன்' ஆசிரியர் தோழர். ரா.கிருஷ்ணமூர்த்தியும் காங்கரஸ் மந்திரிகளின் ஆட்சி முறையைப் புகழ்ந்து புகழ்மாலை பாடிவிட்டு ஹிந்தியைப்பற்றி பேச ஆரம்பித்து, தமிழர். கட்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கின்றார். பிரதம மந்திரி ஆச்சாரியாரின் ஆணவமும் அகம்பாவமும் நிறைந்த சர்வாதிகாரப் பேச்சைப் பின்பற்றியே “ஆனந்தவிகடன்” ஆசிரியரும் வாய்க்கொழுப்பாகப் பேசத் துணிந்துவிட்டார். தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதரையே கடிக்கத் தொடங்கிய கதையை மெய்ப்பிக்கின்றார் “ஆனந்த விகடன்” ஆசிரியர். “தினமணி” அக்டோபர் 6-ந் தேதி பத்திரிகையில் 4-ம் பக்கத்தில் 4-வது கலத்தில் “ஹிந்தி வந்தே தீரும்” என்ற தலைப்பில் 'ஆனந்த விகடன்' ஆசிரியர் தோழர்
ரா. கிருஷ்ணமூர்த்தி பேசியதாக வெளிவந்திருக்கும் செய்தியாவது:-
ஹிந்தியைக் கட்டாய பாடமாக்குவதால் தமிழுக்கு ஆபத்து வந்து விடுமென்று சிலர் (தமிழர்கள்) கூக்குரல் போடுவதைப்பற்றி பிரதம மந்திரி இக்கூட்டத்தில் பிரஸ்தாபித்தார்" இது வரையில் (தமிழர்களுக்கு) இவர்களுக்கு கொஞ்சம் அறிவு இருக்கிறதென்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அறிவிலிகள் என்பது இப்பொழுது நன்றாகத் தெரிகிறது"
அவர்கள் பத்திரிகைகளில் எவ்வளவு எழுதினாலும், எத்தனை தந்திகள் அனுப்பினாலும் ஹிந்தி கட்டாயபாடமாக ஏற்பட்டுத்தான் தீரும் அதைப்பற்றி சந்தேகமே இல்லை" என்று சொல்லியிருக்கிறார்.
இது ஹிந்தியைக் கட்டாய பாடமாக வைக்கக்கூடாது என்று எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் தமிழர்கட்கு “ஆனந்த விகடன்" ஆசிரியர்
குடி அரசு- 1937 (2) 196
வழங்கும் நற்சாட்சிப் பத்திரம். பிரதம மந்திரி ஆச்சாரியார் பேச்சுக்கு பக்க பலமளிப்பதாக எண்ணம்போலும். தமிழ் நாட்டில் வந்து குடிபுகுந்த ஆரியக் கூட்டத்தார் அன்று தமிழர்களை சூத்திரர்கள் என்று சாஸ்திரம் எழுதிவைத் தார்களோ அன்று “வேசி மகன்! என்றும் “அடிமை” என்றும் ஆணவமாக அதற்குப் பொருளும் எழுதிவைத்தார்கள். இன்று, தேசியத்தின் பெயராலும்
காந்தி, கதர், காங்கரஸ் பெயராலும் பொது மக்களை வஞ்சிக்கும் இந்த ஆரியக் கூட்டம் தமிழர்களை அறிவிலிகள் என்று அதேபோல் வாய்க்கொழுப்பாக பேசுவதற்கு துணிந்து விட்டது. ஆச்சாரியார் பிரதம மந்திரியார் என்ற மமதையில் பேசுகின்றார். தோழர் ரா. கிருஷ்ணமூர்த்தி “ஆனந்த
விகடன்'' ஆசிரியர் என்ற அகம்பாவத்தில் பேசுகின்றார்.
ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) வாழ்க்கையை உயர்த்தவும் ஆரியர்கள். நாகரிகத்தைப் புகட்டவும் பாடுபடுகின்றார்கள். ஆரியர்கள் ஆதிக்கம் சமூகம், அரசியல், பொருளாதாரம். நாடகம், சினிமா, பரத நாட்டியம், சங்கீதம் ஆகிய எல்லாத் துறைகளிலும் உயர்த்துவதற்கு உழைக்கின்றார்கள். தமிழர்கள் வாழ்க்கையைச் சிதைக்கவும் தமிழர்களை அடக்கி ஓடுக்கி ஆதிக்கம் செலுத்திவரவும் அன்று முதல் இன்று வரை முயன்று வருகிறார்கள். அரியர்கள் சூழ்ச்சி நிறைந்த காங்கரசையும் அவர்களால் நடத்தப்படும் “ஆனந்த விகடன்” போன்ற ஆரியப் பத்திரிகைகளையும் தமிழர்கள் ஆதரித்து உதவி புரிந்ததற்குப் பிரதிபலன் “ஹிந்தியை எதிர்ப்பவர்கள் - தமிழர்கள் அறிவிலிகள்” என்று ஆனந்த விகடன் ஆசிரியர் இன்று அகம்பாவமாகவும் வாய்க்கொழுப்பாகவும் பேசுகிறார்.
ஆரியர்களின் சூழ்ச்சியும் நயவஞ்சகமும் உண்ட வீட்டிற்கே தீங்கு பயக்கும் துரோகச் செயலும், தான் உழையாமல் பிறர் உழைப்பைத் திருடி ஆடம்பரமாக வாழும் பித்தலாட்டச் செயல்களையும் தமிழர்கள் வீணாக நம்பிக் கெட்டுப்போனார்கள். இன்று தமிழர்கள் அறிவிலிகள் என்று “ஆனந்த விகடன்" ஆசிரியர் கூறும் நிலைக்கு ஆளானார்கள். தமிழர்கட்கு உண்மை
வீரம் ஆண்மையிருந்தால் இந்த “ஆனந்த விகடன்" ஆசிரியர் பேசிய அகம்பாவப் பேச்சை வன்மையாகக் கண்டித்து மன்னிப்புக் கேட்கச் செய்ய வேண்டும். இவர்களைத் தூண்டிவிட்டு தமிழர்களை வாய்க் கொழுப்பாகப் பேசும்படி செய்யும் பிரதம மந்திரி ஆச்சாரியார் பதவியும் ஆதிக்கமும் வீழ்த்தப்பட வேண்டும். ஆச்சாரியார் ஆரியர்கள் அதிக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றார். இவைகட்காகவேதான் “ஆனந்த விகடன்” “தினமணி” “மித்திரன்” “ஹிந்து” பத்திரிகைகள் உயிர் வாழ்கின்றன. பொது மக்களின் பொருள்களை போட்டிப் பரிசுகள் என்ற பெயரால் கொள்ளை.
யடிக்கும் தேசீய விகடப் பத்திரிகைகள் முதலில் தங்களை சீர்திருத்திக் கொள்ளுவதில்லை. உயர்ந்த மதுபானங்களை அருந்தும் கதர் வேட பக்தர்களும், குதிரைப் பந்தயங்களிலும், சூதாட்டங்களிலும் பொது மக்களை ஏமாற்றி வஞ்சித்த பொருளை இழப்பதிலும் தாசிகள் மையலில் தடுமாறி
197 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அலைவதிலும் தேர்ச்சி பெற்ற தேசபக்தர்களும் காந்தியின் பெயரைக் கூறிக் கொண்டு பொது மக்களை ஏமாற்றவும் தமிழர்களை இழிவுபடுத்திக் கூறவும் துணிந்து விட்டார்கள்.
தமிழர்களை அறிவிலிகள் என்று கூறும் “ஆனந்த விகடன்" ஆசிரியருக்குத் தமிழர்கள் நல்ல புத்தி புகட்ட வேண்டும். இனி (ஆரியர்கள் ஆதிக்கத்திற்காகப் பாடுபடும்) “ஆனந்த விகடன்" பத்திரிகையைப் படித்து அறிவிலிகளான தமிழர்கள் இனிமேலும் படித்து அறிவிலிகள் ஆகப் போகிறார்களா? அல்லது அதை பஹிஷ்கரித்து அறிவாளிகள் ஆகப் போகிறார்களா? என்பதுதான் இப்பொழுது அறிவாளிகளான தமிழர்கள் முன்றிற்கும் பிரச்சினை. “ஆனந்த விகடன்" பத்திரிகையை ஆதரிப்பதும் அவர்கள் போட்டிப் பரிசுகளில் பொருள் இழப்பதும் இனி தமிழர்கள் அழிவுக்கே காரணமாகும் என்பதை இனியாவது உணருவார்களா? தமிழர்கள் “ஆனந்த விகடன்” படிப்பது தற்கொலை செய்து கொள்வதற் கொப்பாகி விட்டது என்பது இப்போது ருஜுவாயிற்று
குடி அரசு - கட்டுரை - 10.10.1937
குடி அரசு- 1937 (2) 198
காங்கரஸ்வாதிகள் மதுபானம் செய்வதுண்டா?
- ஓர் சந்தேகி
நமது சென்னை மாகாணத்தில் காங்கரஸ் மந்திரிகள், இவர்கள் காரியதரிசிகள், சட்டசபை (மேல்சபை கீழ்சபை) மெம்பர்கள், தலைவர்கள், உபதலைவர்கள், காங்கரஸ்கமிட்டித் தலைவர்கள், உபதலைவர்கள், காரியதரிசிகள், மெம்பர்கள், கதர் போர்டு நிர்வாகஸ்தர்கள், ஊழியர்கள், சாய நெசவு நூல் நூற்கும் வேலைக்காரர்கள், மது விலக்குப் பிரசாரகர்கள்,
கதர் பிரசாரகர்கள், ஹிந்தி பிரசாரகர்கள், ஹரிஜன ஊழியர்கள், நாலணா காங்கரஸ் மெம்பர்கள், மற்றும் பிரபல வட நாட்டு - தென்னாட்டுத் தலைவர்கள், தேரீயப் பத்திரிகை ஆசிரியர்கள் ஆகிய இவர்களில் உள்நாட்டுக் கள், சாராயம், வெளிநாட்டு பிராந்தி, பீர், உஸ்கி மதுவகைகள் உபயோகப்படுத்தாமல் பதிவிரதைகளாயிருப்பவர்கள் எத்தனை பேர்கள்? மதுபான வகைகள் அவசியம் உபயோகிக்காமலிருக்க முடியாது. அதுதான் என் உயிர். அதில்லாமல் நான் உயிர்வாழ முடியாது என்று மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குடிப்பவர்கள் - மது வகைகளை உபயோகப் படுத்துகிறவர்கள் எத்தனை பேர்கள்? இவைகளை புள்ளி விபரங்களுடன் பிரதம மந்திரி கனம் ஆச்சாரியார் தெரிந்து வெளியிடுவாரா?
குடி அரசு - கட்டுரை - 10.10.1937
19 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சோற்றுக்கில்லாதார் பிரசாரம்
காங்கரஸ் பிரசாரகர்கள் - தொண்டர்கள் - ஜெயிலுக்குப்போன தியாகிகள் - பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்ற கூட்டத்தில். பெரும்பான்மையோர் தங்கள் வாழ்கைக்கு வேறு வழியில்லாமலும் வயிற்றுப்பிழைப்புக்குக்கட யோக்கியமான பிழைப்பு இல்லாமலும் திருட்டு, பித்தலாட்டம், கூட்டிவிடும் தொழில் முதலியவைகளைவிட தேசீய வாழ்க்கை சுலபமானதென்று கருதி சிலரும் அவைகளையும் செய்து பார்த்துவிட்டு அதைவிட தேசீயம் சுலபமென்று கருதிய சிலரும் ஆக பலரும் தேசீயத்தில் வந்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்று இதற்கு முன் பல தடவை ஆதார பூர்வமாக எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம்.
நாளது வரை இது முழுதும் தவறு என்று யாராலும் ஆக்ஷேபிக்கப் படவில்லை. ஆனால் சிலர் இக்கூற்று தங்களை மாத்திரமே நேராய் குறிப்பிடுவதாய் இருக்கிறதே என்று கருதிக்கொண்டு நம் மீது பாய்ந்திருக்கிறார்கள். சிலர் காலிகளை நம்மீது உசுப்படுத்தி விடுவதற்கு ஆக இதை ஒரு சாதனமாய்க் கொண்டு “உத்தமமான தேச பக்தர்களை, தேசிய வீரர்களை, உண்மைத் தியாகிகளை “குடி அரசு” வயிற்றுச் சோற்றுக்கு மார்க்கமற்றவர்கள் என்று எழுதிவிட்டது" என்று மாயக்கூப்பாடு போட்டு வந்திருப்பது நாம் அறிவோம். என்றாலும் 100க்கு 90 தேசபக்தர்கள் - தேசீயத் தியாகிகள் - பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்ற கூட்டத்தாரின் கொடிவழிப்பட்டியும் அவர்களது “முன் ஜன்மம்” முதல் ஜாதகமும் நம்மிடம் வினாடி பலனோடு இருந்து வருவதால் அவர்கள் நம்மைப் பார்த்து நேரில் குலைப்பதற்கில்லாமல் காணாத இடங்களிலேயே கத்திவிட்டுக் கூப்பாடு போடும்படியாக இருந்து வருகிறது
நாம் பெரும்பாலும் சொந்த முறையில் உள்ள தவறுதலையோ ஒழுக்கக் கேடுகளையோ இம்மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கும் வெளி யாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்குப் பின்தங்கியே வந்திருக்கிறோம். பொது வாழ்வில் உள்ள விஷயங்களையும் அப்படிப்பட்டவர்கள் பொது வாழ்வில் நடந்து கொண்டநடத்தைகளையும் பேசிய பேச்சுக்களையும் அடைந்த கூலியையும் பற்றிய விஷயங்களையே பெரிதும் கையாண்டு வருகிறோம். உண்மையிலேயே நமக்கு எப்படிப்பட்ட மனிதனானாலும் சரி, அவன். எவ்வளவு பெரிய தீர்க்கதரிசியானாலும் சரி, சொந்தத்தில் சாப்பாட்டுக்கு
குடி அரசு - 1937 (2) 200
வகையின்றியோ அல்லது பொது வாழ்வல்லாமல் வேறு வழியில் வயிறு வளர்க்க மார்க்கமோ செளகரியமோ இன்றியோ உள்ள எவரிடத்தும் நமக்கு மரியாதையோ அவர்களது அபிப்பிராயத்தில் நமக்கு மதிப்போ கிடையாது என்பதை பல தடவை எடுத்துக்காட்டியிருக்கிறோம்
ஏனெனில் நாம் இப்படிப் பேசுவது ஒரு பொது உடமை உலகத்தில் இருந்து கொண்டல்ல. அந்த மாதிரி பொது உடமை உலகில் இருந்து இப்படிப் பேசினால் அது தப்பாகலாம். ஆனாலும் அங்கும் எப்படிப் பட்டவனும் ஒரு கட்டுப்பாட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கும் பொறுப்பேற்று இருக்க வேண்டுமே ஒழிய வெறும் தேசபக்தி வேஷமும் பொதுநல வேஷமும் போட்டுக்கொண்டு வயிறு வளர்க்கமுடியாது
நம் உலகம் அப்படிக்கூட இல்லை. இது ஒரு பக்கா தனி உடமை உலகம். தகப்பனுக்கும் மகனுக்கும் புருஷனுக்கும் பெண்ஜாதிக்கும் உள்ள சம்மந்தமே தனி உடமைக் குறிக்கொண்ட போட்டி வாழ்வே அல்லாமல் வேறு அன்பையும் காதலையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இதற்கு உதாரணம் வேண்டுமானால் பாகம் பிரிந்து கொண்ட பிறகும், ஜீவனாம்சம் பெற்றுக்கொண்ட பிறகும் இவர்களது நடவடிக்கைகளை கவனித்தால் விளங்கும். தனி உடமை வாழ்க்கை என்பதற்கே போட்டி என்று தான் அருத்தம். அதுவும் கட்டுப்பாடு, கொள்கை, சட்டம், விதி எதுவுமில்லாத கைவலுத்த தன்னிச்சைப் போட்டியாகும். சுருக்கமாய், விளக்கமாய் சொல்ல வேண்டு மானால் தனக்கு எவ்வளவு இருந்தாலும் அந்நியர் அறியாமல் எதுவும் செய்து அந்நியனுடையதை அனுபவித்து வாழ்க்கை நடத்தலாம், செல்வம் பெருக்கலாம், போகம் அனுபவிக்கலாம் என்கின்ற போட்டியேயாகும்
இந்த நிலையில் வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கமும் வாழ்க்கைக்கு வசதியும் தாராளமாய் இருப்பதாய்க் கருதப்படுகிற மக்களே யோக்கியமாய் நாணையமாய் நடந்துகொள்ள முடியாமலும் அவசியம் இல்லாமலும் இருக்கும்போது, உண்மையிலேயே அன்னக்காவடியாய் பிச்சை எடுத்தா லொழிய, திருடினாலொழிய, மற்றவர்களை ஏமாற்றி மோசம் செய்து நம்பிக்கைத் துரோகம் செய்தாலொழிய வாழ்வுக்கு வேறு வகையில்லை என்கின்ற நிலையில் உள்ளவர்கள் எப்படி யோக்கியமாய் நாணயமாய் சுதந்தரமாய் நடந்து கொள்ள மூடியும்? அல்லது நாம் தான் எப்படி எதிர்பார்க்க முடியும்? அதிலும் சொந்தத்தில் கஞ்சிக்கு உப்பில்லையானாலும் தனது சொந்த உழைப்பில் கெட்டி ஆகாரம் சாப்பிட வழிஇல்லை ஆனாலும் தேசபக்தி வாழ்வென்றால் பாலுக்கு சர்க்கரையும் பலகாரத்துக்கு நெய்யும் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகிறது. சொந்தத்தில் மூட்டை சுமந்தாலும், வயிறு நிரம்ப சாப்பிட முடியாவிட்டாலும் தேசீய வாழ்வென்றால்
தன் உடுப்பைச் சுமக்கக்கூட ஆள்தேவையாகி விடுகின்றதுடன் “பிரபுக்களும்” வெட்கப்படும்படியான ஆகாரத்தையே மனசு வேண்டுகிறது. இல்லா. விட்டால் நாக்கு சத்தியாக்கிரகம் செய்கிறது 201௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சொந்த வாழ்வில் தன்னுடைய யோக்கியதையால் கிட்ட நெருங்க யோக்கியதை அற்று கைகட்டி வாய் பொத்தி எட்டிநின்று பேச வேண்டிய இழிநிலையில் இருந்தாலும் தேசீய வாழ்வில் மற்றவர்களைப் பள்ளிப் பிள்ளைகளாய் மதித்து அகம்பாவமாய் யாரையும் திரணமாய்க்கருதி பேசத்தக்க யோக்கியதையை அடைய வேண்டியதாகிவிடுகிறது. இப்படியெல்லாம் இருக்கும்போது வயிற்றுப்பிழைப்புக்கு வழியற்றவர்களும் வாழ்க்கைக்கு மார்க்கமற்றவர்களும் ஒழுக்க மற்றவர்களும் இழிமக்களும் 'தேசீயத்தில் பிரவேசிப்பதிலோ' 'தேசபக்தர்களாவதிலோ' உத்தமத் தியாகிகளாவதிலோ' 'பாரதமாதாவின் அருந்தவப் புதல்வர்களாக ஆகிவிடுவதிலோ' என்ன அதிசயம் இருக்க முடியும்?
முதலில் வெவியாக்கியவர்கள்
இதை முதல் முதல் தைரியமாய் எடுத்துச் சொன்னவர் அதாவது வயிற்றுச் சோற்றுக்கு மார்க்கமற்ற இழி மக்கள் பலர் வயிற்றுப் பிழைப்புக்கு ஆக தேசியத்தில் பிரவேசித்திருக்கிறார்கள் என்று வீரத்துடன் பேசி வெளியாக்கியவர் சர்.பி. தியாகராயச் செட்டியாரும் பிறகு தோழர் தேசபந்து சித்தரஞ்சன் தாசுமாகும்.
அடுத்தாற்போல் “குடி அரசு” ஆசிரியரும் பின் தோழர் மோதிலால். நேருவும் ஆகும். மற்றும் எத்தனையோ பேர் இருந்தாலும் இவர்களைப் பின்பற்றி சென்ற வாரத்தில் தைரியமாய் எடுத்துச் சொன்னவர் தோழர்
சி. ராஜகோபாலாச்சாரியாராகும். அவர் சொன்னதாக “நவசக்தி"யில் காணும் வாக்கியத்தை அப்படியே கீழே தருகிறோம்.
“வங்காள வீரர் தேசபந்து தாஸ் கத்தியாக்கிரகிகளை கோற்றுக்கில்லாதார் எனக் கூறினார். அக்காலத்தில் அவரைக் காய்ந்த சி.ஆர். ஆச்சாரியார். (கனம் ராஜகோபாலாச்சாரியார் ப-ர்) .....சோற்றுக்கில்லா வாலிபர்கள். மக்களிடையே பிரசாரம் செய்கிறார்கள் எனக் கூறுகிறார். சி.ஆர். தாசரைவிட சி.ஆர். ஆச்சாரியார் மிஞ்சி விட்டார்போலும்” என்று 15.10.37 நவசக்தி எழுதி இருக்கிறது.
இப்படி கனம் ஆச்சாரியார் பேசியதை “ஏகாதிபத்திய யந்திரத்தில் ஆச்சாரியார் அகப்பட்டு இங்ஙனம் பேசி இருக்கிறார்” என்று “நவசக்தி” குறை கூறுகிறது
நாம் அப்படிக் கூறுவதில்லை. இதுவரை அவ்வயிற்றுக்கில்லாத வாலிபர்களின் செய்கை ஆச்சாரியாரை மந்திரியாக்குவதற்கு உதவியாய் இருந்ததால் அப்படிப்பட்ட வயிற்றுக்கில்லாத பல வாலிபர்களை ஆச்சாரியார்.
தம் தலைவர் என்று கூட கூறியிருப்பது நமக்குத் தெரியும். இன்று அவ்வயிற்றுக்கில்லாத வாலிபரின் வயிற்றுச் சோற்று தேசபக்தி தமக்கு தேவை இல்லை என்பதோடு தம் இனத்தாரிலேயே தமக்கு வேண்டிய பலத்தை சேகரித்துக் கொண்டார். பலரை 5 வருஷ காலத்துக்கும் சேர்த்து
குடி அரசு - 1937 (2) 202
ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆகவே இனி அவருக்கு அன்றாடக் கூலி தேசபக்தர் தேவை இல்லை. அதனால் அத்தேசபக்தர்கள் வேறு இடத்திற்கு கூலிக்குப்போகக்கூடும். அப்படிப்போகும்போது அது தம் வியாபாரத்திற்கு போட்டியாக ஆகிவிடலாம். ஆதலால் இப்போதே “அந்தச் சரக்கு மட்டம்” என்பதுபோல் அவர்கள் அதாவது வேறு இடத்துக்கு கூலிக்குப் போய் வேலை செய்கிறவர்களை வயிற்றுக்கு இல்லாத ஆட்கள் என்று சொல்லி விட்டால் அப்படிப்பட்ட ஆட்களின் தொல்லையை ஒருவாறு சமாளிக்கலாம் என்பதே இப்போது அவர்களைத் தைரியமாய் வெளியாக்குவதன் கருத்தாகும்
ஆனாலும் தோழர் ஆச்சாரியார் பேசியதில் தவறோ, பொய்யோ இல்லை என்று நாம் ஆதாரத்தோடு சொல்லுவோம்.
யொதுவுடமை வாதிகள் அதாவது ஆச்சாரியார் மனதில் குறிவைத்துப் பேசும் பொது உடமை வாதிகளையே முதலில் எடுத்துக்கொள்ளுவோம். அவர்களுக்கு காங்கரசில் சாப்பாட்டைத்தவிர வேறு என்ன வேலை அங்கு இருக்க முடியும்? ஒருவர், இருவர், பொது உடமை வாதிகள் முட்டாள் தனமாக காங்கரசில் சேர்ந்திருக்கலாம் என்று வைத்துக் கொண்டாலும் கதரையும், காந்தியாரையும், கடவுளையும், மதத்தையும், பார்ப்பனர்களையும், முதலாளிகளையும் கண்டித்து, வைது, பேசி விளக்கிய பொது உடமைவாதிகள் காங்கரசில் சேர்ந்து “மகாத்மா காந்திக்கு ஜே" என்று காங்கரஸ் கொடியைப் பிடித்துக் கொண்டு கதர் குல்லாயுடன் மஞ்சள் வர்ணத்தின் மங்களகரத்தைப் பிரசாரம் செய்து கொண்டு ஆச்சாரியார் பின் திரிகிறார்கள் என்றால் இதற்கு காரணம் கனம் சி.ஆர். ஆச்சாரியார் சொன்னதல்லாமல் வேறு என்னமாயிருக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை என்றாலும் வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்கட்டும்
தோழர் ஆச்சாரியார் ஒரு சமயம் ஏகாதிபத்திய யந்திரத்தில் அகப்பட்டு இப்படி பேசி இருக்கலாம். ஆனால் சி.ஆர். தாஸ் கூட அப்படித்தானா? மோதிலால்நேருகூட அப்படித்தானா? “குடி அரசு" அசிரியரும் அப்படித்தாண? என்பதோடு இதை “நவசக்தி” உண்மையாய் எழுதுகிறதா வேஷத்துக்கு எழுதுகிறதா என்று கேட்கின்றோம்.
முதலாவது ''நவசக்தியே” உண்மையில் தொழிலாளர்களுக்கு உழைப்பதானால் உண்மையில் ஏழைகளிடத்தில் பற்று இருக்குமானால் பொது உடமையை விரும்புமானால் நாணயத்தில் சிறிதாவது கவலை இருக்குமானால் ஏகாதிபத்தியத்தை வெறுக்குமானால் “நவசக்தி” க்கு காங்கரசினிடத்தில் என்ன வேலை என்று கேட்கின்றோம். அன்றியும் “நவசக்தி“யிடம் கனம் ஆச்சாரியார் போன்றவர்களுக்குக் கூட அவர். கூறினதைத்தவிர வேறு என்ன மதிப்பு இருக்கும் என்று கேட்கின்றோம்
203 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எனவே தனி உடமை உலகில் சோற்றுக்கு வழி இருக்கிறவனே 100க்கு 100 பேர் யோக்கியமாய் நடந்து கொள்ள முடியவில்லையானால் சோற்றுக்கு வகையில்லாதவர்களில் 100க்கு எத்தனை பேர் யோக்கியமாய் நடந்து கொள்ளமுடியும்? ஆதலால் அப்படிப்பட்டவர்களுக்கு ஆக “நவசக்தி” சிபார்சு பேசுவதை உண்மையான சிபார்சு என்று நம்மால் கருத முடியவில்லை.
ஆச்சாரியார் ஞாபகப்படுத்திப் பார்க்கட்டும்
அது எப்படியோ இருக்கட்டும். மந்திரிகளில் சோற்றுக்கு வகை யில்லாதவர்கள் எத்தனைபேர் என்பதையும் பிழைப்புக்கு உண்மையிலேயே வேறு மார்க்கமில்லாதவர்கள் எத்தனை பேர்கள் என்பதையும் தனக்கு பின்னால் வால் பிடித்துத் திரிபவர்களில் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் எத்தனைபேர் என்பதையும் கனம் ஆச்சாரியார் சற்று ஞாபகப்படுத்தி பார்த்திருப்பாரேயானால் தனக்கு எதிராய் இருப்பவர்களில் காணப்படும் சோற்றுக்கு வழியில்லாதவர்களைப் பற்றி மாத்திரம் குறிப்பிட்டு வருத்தம் காட்டி இருக்கமாட்டார்.
ஏழைகள் இயக்கம் என்பதும், தரித்திரர்கள் இயக்கம் என்பதும், சோற்றுக்கு வகையில்லாதார் இயக்கம் என்றுதானே அருத்தம்? அதில் சோற்றுக்கு இருக்கிறவர்களும் மேலும் மேலும் சம்பாதிக்க ஆசை யுள்ளவர்களும் தலைவர்களாக இருந்தால் அவ்வியக்கக் கொள்கைகள். பொய்யாகவும், நிஜமாகவும் சோற்றுக்கு வகையில்லாதாருக்கு சுவுகரியமாகவும் அசெளகரியமாகவும் தானே இருக்க முடியும்? என்றாலும் அதில் பெரிதும் அப்படிப்பட்ட சோற்றுக்கு வழியில்லாத ஆட்களுக்குத் தானே இடமிருக்க முடியும்? அதை எடுத்துக்காட்டுவதில் என்ன பிரயோஜனம் இருக்க முடியும் என்று சிலர் கேட்கலாம். அதுவும் சரிதான். ஆனாலும் அப்படிப்பட்ட இயக்கத்திலோ அல்லது அப்படிப்பட்ட ஆட்களாலோ. பிரதிகூலபலன் அடைகிறவர்கள் அதை எடுத்துக்காட்டாமலிருக்க வேண்டு மென்பது மாத்திரம் நியாயமாயிருக்க முடியுமா? என்பதுதான் அக்கேள்விக்கு நமது பதிலாகும்
மூர்த்தியார்
நிற்க, தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் தேசபக்தி பிரசாரத்துக்கு ஆரம்பித்தபோது அவருக்கு சாப்பாட்டுக்கு மார்க்கம் என்றைய தினம் இருந்தது? அவர் அந்நிலையில் போட்ட கூப்பாடு கொஞ்சமா? இதே கனம் ஆச்சாரியார் ஊர் ஊராய் பணமுடிப்பு கொடுக்கச் செய்து அவரை சாப்பாட்டுக்கு இல்லாத நிலையிலேயே பெரிய தேசபக்தராக ஆக்கவில்லையா? இன்றும் தோழர் சத்திய மூர்த்தியார் வேறு எவ்வித சொந்த தொழில் வருவாய் இல்லாமலே பெரிய தேசபக்தராகவே இருக்கிறார். கனம் ஆச்சாரியார் வாயாலும் தேசபக்தர் என்றும் தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார். காரணம் என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தி அய்யரின் வயிற்றுப் பிழைப்பு
குடி அரசு- 1937 (2) 204
கூப்பாடு கனம் ஆச்சாரியாரை முதல் மந்திரியாக்கிற்று; ஹிட்லர் ஆக்கிற்று. இனியும் அப்பதவி நிலைக்கும் படியாகவே இன்றும் தோழர் சத்தியமூர்த்தியார்
கூப்பாடு இருந்து வருகிறது. அதாவது:-
சமஷ்டி பித்தலாட்டம்
“சமஷ்டி ஏற்படப்போவது உறுதி. அது நம் எதிர்ப்புகளை லக்ஷ்யம் செய்யாமல் நம்மீது சுமத்தப்படுகிறது என்றாலும் நாம் அதை தள்ளி விடக்கூடாது. அதையும் ஏற்று நடத்துவோம்” என்று சொல்லுகிறார் மூர்த்தியார்.
இப்படிச் சொல்லுவது கனம் ஆச்சாரியாரின் மந்திரி பதவியை நிலைக்க வைக்குமாதலால் ஆச்சாரியார் கண்ணுக்கு மூர்த்தியார் இன்னும் பெரிய தேசபக்தராய் காணப்படுகிறார். அவர் போன்ற மற்றவர்கள் அதற்கு எதிராய் கூப்பாடு போடுவது ஆச்சாரியாருக்கு தலைமாட்டுக் கொள்ளியாய் இருப்பதால் “வயிற்றுக்கு இல்லாதவர்கள் கூப்பாடு" என்கிறார்.
“நவசக்தி” தானாகட்டும் ஆச்சாரியார் பதவிக்கு ஆபத்து வரும் படியாக பேசவோ எழுதவோ மூன்வரட்டும். உடனே ஆச்சாரியாருக்கு “நவசக்தி"யைப்பற்றி இருக்கும் உண்மையான எண்ணம் வெளியாய் விடும்
ஆச்சாரியார் தேசபக்திதானாகட்டும் எப்படிப்பட்ட தென்று பார்ப்போ. மானால் தமக்கு மந்திரி வேலை கிடைக்கும்படியான நிலைமைக்கு சர்க்கார் இடம் கொடுத்துவருவதால்தான் “நானே சர்க்கார் ஆகிவிட்டேன், ஆதலால் சர்க்காரை யாரும் கண்டிக்கக் கூடாது” என்கிறார்.
எப்படிப்பட்ட அரசாங்கத்துக்கும் 6.1.2. இருந்துதானாக வேண்டும்” என்கிறார்.
“வெள்ளைக்காரர்கள் எல்லாம் மேலான பிறவி (அதாவது அவர்கள் சட்டியில் வைத்திருக்கும் குரோட்டன் (பூச்செடி மாதிரி) என்று சொல்லி அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டும்” என்கிறார்.
“நீதி இலாக்காவையும் நிர்வாக இலாகாவையும் பிரிக்கக் கூடாது” என்கிறார்.
“கவர்னர் துரை மகா உத்தமர்" என்று சொல்லி கைகூப்பி கும்பிடுகிறார்.
தனக்கு மந்திரி பதவி கிடைக்காதிருக்குமானால்.
“சர்க்காரை ஒழிக்க வேண்டும்.”
“வெள்ளையர்கள் சுரண்டுகிறவர்கள்.”
“ஐ.சி.எஸ். வர்க்க ஆட்சி கொடுமையானது.”
“சம்பளக் கொள்ளையை ஒழிக்க வேண்டும்.”
“சி.ஐ.டியை அழித்தே விட வேண்டும்.”
205 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
“பிரிட்டிஷ் ஆட்சியில் இருப்பது அவமானம்.”
“நீதி, நிருவாகம் இரண்டும் ஒரு கையில் இருப்பது கொடுங்கோன்மை.”
கவர்னருக்கு மூளை கிடையாது! என்றெல்லாம் கூப்பாடு போடுவார்; போட்டுமிருக்கிறார். ஆகவே தனக்கு அனுகூலமாய் இருக்கும் போது ஒரு மாதிரியும் பிரதிகூலமாய் இருக்கும்போது ஒரு மாதிரியுமா? எப்படியாவது ஒரு சமயத்திலாவது உண்மை பேசுவதைப் பாராட்ட வேண்டியதே தவிர ஆச்சாரியார் பேசுவதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?
குடி அரசு - தலையங்கம் - 17.10.1937
குடி அரசு - 1937 (2) 206
விகடன்? விஷமம்
17.10.37ந் தேதி “விகடனின் தலையங்கத்தில் “வாழிய
செந்தமிழ்” என்னும் தலைப்பில் ஒரு வியாசம் காணப்படுகிறது
அதில் ஹிந்தியை முதல், இரண்டாவது, மூன்றாவது பாரம் வரைக்கும் வைக்கப் போகிறபடியால் அதற்கு மேல் சமஸ்கிருதம் இஷ்டபாடமாக வைக்கலாம் என்றும்,
இங்கிலீஷைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும்,
கீறிவாச சாஸ்திரியார் ஒருவரேதான் இங்கிலீஷ்காரரைப் போல பேசத் தெரிந்தவர் என்றும்,
ஆதலால் இங்கிலீஷ் அப்படி பேசத்தெரிய முயற்சி செய்வது பயன்படாது என்றும்,
இங்கிலீஷையும் தமிழிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும்,
தமிழ் கற்றுக்கொடுக்க தோழர் உ.வே. சாமிநாதய்யர்தான் தகுதியானவரென்றும் அவர்தான் தற்கால கொள்கையை தமிழில் புகுத்தாமல் நூலிலுள்ள இன்பத்தை மாத்திரம் நுகரும்படி செய்வார் என்றும்,
சமஸ்கிருதமே உலகத்து நாகரீகத்துக்கு எல்லாம் அடிப்படையான. பாஷை என்றும், அதை படிக்க பள்ளிக்கூடங்களில் வசதியும் தூண்டுதலும் வேண்டுமென்றும்,
டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருந்து இதை உணர்ந்து
இருப்பது பாக்கியம் என்றும் மற்றும் பல விஷயங்களும் “வாழிய
செந்தமிழ்'' என்னும் தலைப்பில் இருக்கின்றன.
இந்த தலையங்கத்தை கசக்கிப்பிழிந்தால் இங்கிலீஷுக்கு சாஸ்திரியாரே கெட்டிக்காரர், தமிழுக்கு சாமிநாதய்யரே கெட்டிக்காரர், பாஷைகளில் சமஸ்கிருதமே சிறந்தது என்பதும் ஹிந்தி கட்டாயம் 3-ம் பாரம் வரை படித்தாக வேண்டும்; பிறகு சமஸ்கிருதம் சுலபமாய் வந்து
விடும்; தமிழ் கற்றுக்கொடுக்கும்போது தமிழர்களின் நிலை, கொள்கை ஆகியவைகளைப் புகுத்தக்கூடாது; இங்கிலீஷ் பிரதானமல்ல; அது படித்ததால்
207 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பல கேடுகள் வந்து விட்டன என்பதும் இந்த அபிப்பிராயத்துக்கு மரியாதை கொடுத்து தக்கது செய்ய டாக்டர் சுப்பராயன் கல்வி மந்திரியாய் இருக்க ஒப்புக்கொண்டது தமிழ் நாட்டின் பாக்கியம் என்பதுந்தான் சாரமாகும்.
இதற்கு பெயர்தான் வாழிய செந்தமிழாம். இந்த விஷயங்களை எழுதுகிறவர்கள் புத்திசாலிகளா அல்லது இதையும் படிக்க இருக்கும் மக்கள் மடையர்களா என்பதுதான் தமிழர்கள் கவனிக்க வேண்டிய பிரச்சினையாகும்
டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி வேலை கொடுத்து விட்டு அவரிடம் என்ன வேலை வேண்டுமானாலும் வாங்கலாம், அவர். எதற்கும் தமது கையெழுத்தைக்கூட யார் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளவும் அனுமதித்துவிடுவார்.
சாஸ்திரியாருக்கு இவ்வளவு விளம்பரம் கொடுத்திருப்பது எதற்கு? பத்திரிக்கைகள் தோழர் சாஸ்திரியார் பிரிட்டிஷாரின் கூலிப் பிரசாரகராய் உலகம் சுற்றி பிரிட்டிஷை புகழ்ந்து பி
ரசாரம் செய்து பட்டம் பணம் சம்பாதித்துக் கொண்டதல்லாமல். இதுவரை இந்தியாவுக்கு அவரால் ஏற்பட்ட நன்மை இன்னது என்று யாராவது சொல்லமுடியுமா? அல்லது எந்த பார்ப்பனப் பத்திரிகையாவது ருஜு செய்ய முடியுமா?
தோழர் உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் தமிழ் பழைய ஏட்டுப் பிரதிகளைக் கைப்பற்றி தமிழ் உணர்ச்சி இல்லாமல் வடமொழி கருத்துக் களையும் ஆரியர் கொள்கைகளையும் உட்புகுத்தி புத்தக ரூபமாக்கி புத்தகம் அச்சுப்போட தமிழர்களிடம் பணம் பெற்று புத்தகம் விற்ற பணத்தை தனது முதலாக்கி பணக்காரராகி பட்டம் பரிவட்டம் பெற்றதல்லாமல். தமிழுக்கு அவரால் ஏற்படுத்தப்பட்ட இலக்கியம் இன்னது, இலக்கணம் இன்னது அல்லது வெளிப்படையாய்க் கட்டிய சொந்த கருத்து அமைந்த
நூல் இன்னது என்று ஏதாவது எடுத்துக் காட்ட முடியுமா?
மற்றும் சமஸ்கிருதம் இவ்வளவு உயர்ந்தது என்று சொல்லுகிற இப்பார்ப்பனர்கள் அப்பாஷை இலக்கிய இலக்கணங்களால் காட்டு
மிராண்டித்தன காலத்திய (Fairy tales) கற்பனைக் கதைகளும் பார்ப்பனர்களே கடவுள் - கடவுளே பார்ப்பனர்கள் என்கின்ற வஞ்சக விஷம உணர்ச்சிகளும் மக்கள் அறிவை அடக்கி காட்டு மிராண்டித்தனத்துக்கு கொண்டு போகும் அடிமைப் புத்தி கற்பிப்பும் அல்லாமல், சமஸ்கிருதத்தில் அரசியல், சமூக இயல், பொருளியல், கல்வி இயல், அறிவியல், ஒழுக்க இயல் ஆகியவற்றிற்கு யோக்கியமான - நாகரிகமான கருத்துக்களோ பயன்படக்கூடிய பொருள்களோ ஏதாவது இருக்கிறது
குடி அரசு - 1937 (2) 208
என்பதாக யாராவது சொல்ல முடியுமா?
ஆகவே இவ்வளவு மோசமாயும் நம் சமூகத்துக்கே கேடாகவும் இருக்கும் விஷயத்தை எடுத்துக் கொண்டு “விகடன்” கையாளும் மாதிரியைப் பார்த்தால் பார்ப்பன பிரசார சூழ்ச்சி அதில் எவ்வளவு இருக்கிறது என்பது நன்றாய் மக்களுக்கு விளங்கிடும்
கடைசியாக பார்ப்பனரின் கருத்து மக்கள் இங்கிலீஷ் படித்தே சுதந்தரமும் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெறும் உணர்ச்சி பெற்று
விடுவதால், அதை ஒழித்துவிட்டு ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்தி தமிழுக்கும் தாங்களே வாத்தியார்களாகி விட்டால் தமிழர்களை பழையபடி சூத்திரர்களாக்கி தாசி மக்களாக்கி விடலாம் என்கின்ற எண்ணமும் சூழ்ச்சியும் அல்லாமல் வேறு இல்லை என்பதும் விளங்கிவிடும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.10.1937
209 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பாரதி ஆராய்ச்சி அறிவாளியா? இயற்கைவாத கவியா?
அவர் ஒரு புராண பண்டிதரே
நம் தமிழ் நாட்டில் சமீபத்தில் பாரதியின் தினத்தைப் பல இடங்களில் கொண்டாடினார்கள். அப்பொழுது அவரை ஒரு தெய்வமாகப் பாவித்து அவருடைய படத்துக்கு மாலை போட்டுத் தூபதீப நைவேத்தியங்
கூடச் சிலர் செய்தார்கள். இப்படியெல்லாம் செய்வதற்குப் பார்ப்பனரின் சூழ்ச்சி பிரசாரமும் பொதுமக்களின் குருட்டுத்தனமான முட்டாள். நம்பிக்கையுமே காரணமென்றும் மற்றபடி இவர்கள் பாரதியைப் பற்றியோ அல்லது அவருடைய பாடல்களைப் பற்றியோ அறிந்து கொண்டாடப்பட்டதல்லவென்றும் எடுத்துக் காட்டவே இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம். ஆகையால் வாசகர்கள் இதைப் படித்த பின்பாவது தாங்கள் அக்கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதின் அறியாமையை உணர்ந்து அதற்குத் தக்கபடி நடந்து கொள்ளுவார்களாக.
பாரதிக்குக் கவி இயற்றவல்ல அறிவு சிறிது உண்டு என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யும்படியான மேதாவித்தன்மை எதுவும் அவரிடம் இருந்ததென்றோ, அவர் உயர்ந்த ஞானமும் ஒழுக்கமு முள்ளவரென்றோ, இன்னும் சிலர் விளம்பரஞ் செய்கிறபடி எந்த விதத்திலும், சமீப காலத்தில் தோன்றி மறைந்து போன தமிழ்ப் புலவர்களைப் போல ஆற்றல் படைத்தவரென்றோ யாரும் சொல்ல முடியாது. அப்படியிருந்தும் ஏன் அவரைப்பற்றி இவ்வளவு
கூச்சல் போட வேண்டும் என்றும் கேட்கலாம். அதைத்தான் இங்கு ஆராய விரும்புகிறோம்
முக்கிய காரணம் அவர் ஒரு பார்ப்பனர் என்பதேயாகும் எப்படியென்றால் ஒரு பார்ப்பான் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், ஒழுக்கங் கெட்டவனாயிருந்தாலும், துர்ப் பழக்கமுடையவனாயிருந்
தாலும், பேடியாயிருந்தாலும், பித்துக்கொள்ளியாயிருந்தாலும் அவனைப்பற்றி அவனுடைய குற்றங்களையெல்லாம் மறைத்து “இந்திரன்” என்றும் “சந்திரன்” என்றும் உயர்த்திப் பேசி, எழுதி, அதன் மூலம் தங்கள் இனப்பிழைப்புக்கு வழி தேடிக்கொள்கிறார்கள். இந்த அடாத காரியத்துக்குத் தகுந்த வசதிகள் அவர்களுக்கு தாராளமாய் இருக்கின்றன.
குடி அரசு - 1937 (2) 210
பாரதியின் அறிவு
பாரதி, ஏதாவது அறிவுக்குப் பொருந்திய பாடல் எழுதியிருக் கிறாரா என்று பார்த்தால் அதுவும் இல்லையென்று நன்கு விளங்கும் 'எல்லோரும் ஓர் இனம்: என்றும் 'காக்கை குருவி எங்கள் ஜாதி' என்றும் என்னவோ வாய்க்கு வந்ததை அளந்து தள்ளியிருக்கிறார்; நடை முறைக்கும், அனுபவத்துக்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லியிருக்கிறார். அவரைப் பாமரமக்கள் புகழ்வதற்குக் காரணம் அவர்களுடைய மூடப்பழக்க வழக்கங்களை வளர்க்கத் தக்கதாகவும் மனு நீதியை உயிர்ப்பித்து நிலைநாட்டக்கூடியதாகவும் அவருடைய பாடல் இருப்பதே ஆகும். எப்படி யென்றால் இதிகாசம், புராணம், வேதம், சாஸ்திரம் முதலியவைகளை அப்படியே தழுவி அவைகளில் அடங்கியிருக்கும் விஷயங்களை, இக்காலத்து தேவைகளை அதில் கலக்கி அதற்குத் தகுந்தாற்போல வேஷம் மாற்றிக்காட்டி அவர் பாடல் செய்திருப்பதேயாகும். மனு ஆட்சி எப்படியாவது ஏற்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் இரவும் பகலும் கனவு கண்டுகொண்டிருக்கும் பொழுது அதற்கு உதவியாக எழுதப்பட்டிருக்கும் பாடல்களைப் பார்ப்பனர்கள் கைநழுவ விடுவார்களா?
பாரதி அநேக பாடல்களைக் குடி வெறியில் பாடியிருக்கிறாரே தவிர நிதான புத்தியோடு பாடவில்லை என்று சுலபத்தில் அறிந்து கொள்ளலாம் பெண்களைப்பற்றி வானமளாவப் புகழ்ந்து பல பாடல்கள் செய்திருக்கிறார். ஆனால் பெண்களைப் பற்றி அவருடைய அந்தரங்க சுத்தியான அபிப்பிராயம் மிகக் கேவலமானது என்பது அவரது கிளிக்கண்ணியில் 'பெண்களின் கூட்டமடி' என்று தன்னை மறந்து உண்மையைக் கக்கியிருப்பதிலிருந்து தெரிகிறது
பார்ப்பனரைப் பற்றி பாரதியின் உண்மையான அபிப்பிராயம் என்னவென்றால் பார்ப்பனரே உயர்ந்த வகுப்பினரென்றும் இந்தியா.
அவர்களுக்குச் சொந்த சொத்து என்றும், அவர்களுடைய ஆரிய பாஷையே உயர்ந்ததென்றும் கருதியே வந்திருக்கிறார். என்பதுதான். பார்ப்பனரின் நிலைமை உயர வேண்டுமென்பதே அவருடைய நோக்கமென்றும் தெரிகிறது. இதற்கு மாறாக யாராவது அவரைப் பற்றி நினைத்துக்கொள்ள 'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே;' 'தமிழ் மொழி போல் எங்கும் காணோம்' என்று சொல்லப்படுமானால், இப்பாட்டுகள் போல் எங்கோ அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்துக் காட்ட முடியுமே தவிர, அதிகமில்லை யென்றும், அப்படி இரண்டொன்று பாடியிருப்பதும் கூடக் குடிவெறி யென்றும்தான் சொல்ல வேண்டும்
ஏனென்றால் அவர் அபின், கஞ்சா, சாராயம் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாகவே உபயோகப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பார்ப்பானுடைய சுகமே லக்ஷ்யமென்பதாகத் தெரிகிறது என்பதற்கு ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆதாரமான சொற்களை அவர் தேசீயப் பாடல்களிலிருந்து மட்டும் இச்சந்தர்ப்பத்தில் எடுத்துக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றோம்.
பாட்டின் தலைப்பும் அதில் வரும் அடியும் கீழே தருகின்றோம்.
வந்தேமாதரம் - ஆரிய பூமியில்.
பாரத நாடு - யாகத்திலே தவ வேகத்திலே.
நாட்டு வணக்கம் - துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்.
சூழ்ந்தது மிந்நாடே பாரததேசம் - மந்திரங் கற்போம், வினைத் தந்திரங் கற்போம் (குட்டிக் காந்தியின் வினைத் தந்திரம். வி.க.)
தொழில் - பிரம்மதேவன் கலையிங்கு நீரே விண்ணினின்று எமை
வானவர் காப்பார்.
எங்கள் நாடு - என்னரு முபநிட நூல்கள் எங்கள் நூலே உன்னத ஆரிய நாடெங்கள் நாடே.
வந்தேமாதர மொழிபெயர்ப்பு - காலமெல்லிதழ்களிற் களித்திடுங் காலை நீ.
எங்கள் தாய் - நாவினில் வேதமுடையவள், வெண்மை வளரிமையாசலந் தந்த விறன் மகளாமெங்கள் தாய்
பாரதமாதா - முன்னையிலங்கை அரக்கர் அழிய, ஆரிய ராணியின்: சொல், ஆரிய தேவியின் தோள், போர்க்களத்தே பரஞானமெய்க் கீதை
திருப்பள்ளியெழுச்சி - தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன.
தசாங்கம் - ஆரிய நாடென்றே யறி.
நவரத்தினமாலை - ஆணிமுத்துப் போன்ற மணி மொழிகளாலே (சமஸ்கிருதம்)
மகாத்மாவின் துவஜம்:- ஆரியக் காட்சி ஓர் ஆனந்தமன்றோ, செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்தீக்கண், மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின் சேவடிக்கேயணி செய்திடு துளுவர். (ஆரியருக்கு அடிமைகள்)
லஜபதிராய் - ஆதிமறை தோன்றிய நல்லாரிய நாடெந்நாளும்
நீதி மறைவின்றி நிலைத்த திருநாடு, ஆரியர் தம் தர்மநிலை ஆதரிப்பான், ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த
திலகர்:- அன்போடோதும் பெயருடை யாரியன்.
கிருஷ்ணன் துதி:- எண்ணரும் புகழ்க் கீதையெனச் சொலும், எங்களாரிய பூமியெனும்,
குடி அரசு- 1937 (2) 21
ப்
கிருஷ்ணன் ஸ்தோத்திரம்:- ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே, ஆரிய நீயுநின் துறமறந்தாயோ, வெஞ்செய லரக்கரை வீட்டிுடுவோனே வீரசிகாமணி, ஆரியர்கோனே.
ஆங்கிலப் பயிற்சி:- அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை ஆரியர்க்கிங் கருவருப்பாவதை, இயல்புணர்த்திய சங்கரனேற்றமும், பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள், நாட்டுக்கல்வி - மந்திர வேதத்தின் பேரொலி,
தமிழ்த்தாய்:- உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் (சமஸ்கிருதமே உலகில் சிறந்த பாஷை என்பது கருத்து)
புதுவருஷம்:- ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
என்று இவ்வாறாக ஆரிய மேன்மையையே - பார்ப்பனீயத்தின் மேன்மையையே அவரது நோக்கமாக எழுதியிருக்கிறார். ஆகவே பாரதிக்கும் கனம் ஆச்சாரியாருக்கும் தோழர் சத்தியமூர்த்தியாருக்கும் பார்ப்பன சூழ்ச்சி, பார்ப்பன ஆதிக்கப் புத்தி ஆகியவைகளில் எவ்வித வித்தியாசமும் காண முடியவில்லை. மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரது குணங்களைப் பற்றியும் மற்றும் அவரது சரித்திரத்தைப் பற்றியும் கவிபாடுவதில் அவருக்குள்ள கற்பனை அலங்காரம், பகுத்தறிவுக்கு ஏற்ற இயற்கை வருணணை அற்றதன்மை ஆகியவைகளைப் பற்றியும் பிறிதொரு சமயம் விவரிப்பேன் அவசரப்படுபவர்கள் “நவமணி” வருஷ மலரில் கண்டு கொள்ளலாம்
குடி அரசு - கட்டுரை - 17.10.1937
213... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
முஸ்லீம் லீக்கும் முஸ்லீம்களும்
தலைவரவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதையும் இதில் பேச சந்தர்ப்பம் பெற்றதையும் உண்மையிலேயே ஒரு பெருமையாய் கருதுகிறேன்.
முஸ்லீம்லீக்கும் முஸ்லீம்களும் என்னும் விஷயமாய் பேசுவேன் என்று தலைவரவர்கள் சொன்னார்.
உங்களுக்குத் தெரியாத விஷயம் நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. ஆனாலும் என் அபிப்பிராயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
முஸ்லீம்லீக் என்பது முஸ்லீம் சமூக நன்மைக்கு மாத்திரம் ஏற்பட்டது என்று நான் கருதுவதில்லை. முஸ்லீம் லீக்கானது இந்திய மக்களில் அரசியல், கல்வி முதலிய துறைகளில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் எல்லாவற்றினுடையவும் நன்மைக்கு ஏற்பட்டதென்றே நான் கருதுகிறேன்.
முஸ்லீம்களுக்குள் கொஞ்சமாவது கட்டுப்பாடும் ஒற்றுமையும் சுயமரியாதை உணர்ச்சியும் இருப்பதால்தான் முஸ்லீம்கள் லீக் என்கின்ற
ஒரு ஸ்தாபனம் இதுவரை உயிருடன் இருந்து வருகிறது. மற்றபடி தென்னாட்டில் உள்ள பார்ப்பனரல்லாத சமூகம் போல் கட்டுப்பாடும்
சமூக கவலையும் சுயமரியாதையும் இல்லாமல் சுயநலத்துக்கு எதுவும் செய்து எதிரியை தஞ்சமடைந்து வயிறு வளர்த்து காலம் கழித்து வரும் சமூகமாய் இருந்தால் முஸ்லீம்களின் கதி அதோ கதியாக ஆகியிருக்கும் உண்மையைச் சொல்லவேண்டுமானால் ஆதியில் காங்கரசு பெரிதும் முஸ்லீம்களுக்கு எதிராகவே ஆரம்பிக்கப் பட்டதாகும். இந்து மதம் என்றால் எப்படி முஸ்லீம்களுக்கு எதிரானது என்று சொல்லப்படுகிறதோ அதேபோல் காங்கரசும் என்பதை உணரவேண்டும்.
காங்கரசுக்குப் பிறகே இந்தியாவில் முஸ்லீம்களின் நிலைமை தாழ்வடைந்தது என்று சொல்லலாம். முஸ்லீம் தலைவர்கள் நல்ல சமயத்தில் காங்கரசின் இரகசியம் தெரிந்து தங்கள் சமூகத்துக்கு என்று உழைக்காதிருந் திருப்பார்களேயானால் - லீக்கை ஏற்படுத்தாமல் இருந்திருப்பார்களேயானால் இன்று முஸ்லீம்கள் இந்தியாவில் வெளிப்படையாய் தீண்டப்படாதவர்களாகவே ஆகி இருப்பார்கள். முஸ்லீம்களைப் பற்றி ஹிந்து மதம் கொண்டுள்ள அபிப்பிராயம் உங்களில் பலருக்கு இப்போது தெரியாது.
குடி அரசு- 1937 (2) 214
இந்தியாவில் இன்று முஸ்லீம்கள் தீண்டத்தக்க சமூகமாய் கருதப்படுவதற்கு முஸ்லீம்லீக்கே காரணமென்பதை நீங்கள் ஒவ்வொரு
வரும் மனதில் இருத்த வேண்டும். முஸ்லிம்லீக்கு செய்த வேலையே
இன்று ஜனாப்கள் யாகூப்ஹாசன் சேட்டும் தாவுத்ஷாவும் உபயதுல்லாவும்
தேசபக்தர்களாக முடிந்தது. இல்லாவிட்டால் தேசபக்திக்கும் முஸ்லீம்
களுக்கும் வெகுதூரமாய் இருந்திருக்கும்.
ஆனந்தமடம் என்கின்ற கதையை படித்துப் பார்த்தீர்களேயானால் இந்து முஸ்லீம் சம்மந்தமோ ஒற்றுமையோ எப்படிப்பட்டது என்பது விளங்கும்
இந்து வேதம் என்பதில் எப்படி அதன் ஒவ்வொரு வாக்கியமும் பார்ப்பனரல்லாதார்களை அழிக்க, அவர்களை அடிமைகொள்ள பார்ப்பனர்கள் கடவுள் ஸ்தோத்திரம் பண்ணும் பொருள் கொண்டதாய் இருக்குமோ அதுபோல் தான் தேசபக்தி குறிப்பாக வங்காளம் பஞ்சாப் தேசியமும் வந்தேமாதரமும் அவற்றின் ஒவ்வொரு வாக்கியமும் மூஸ்லீம் களை எப்படி ஒழிப்பது, எப்படி அடிமை கொள்ளுவது என்கின்ற கருத்தைக் கொண்டதாகவே இருக்கும். இது விஷயங்களை உங்கள். வடநாட்டு பத்திரிகைகள் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டி விட்டன. வங்காளப் பிரிவினை கிளர்ச்சியின் ரகசியமென்ன என்பதையும் சுதேசி கலகம் என்பதையும் பற்றிய ஆரம்ப உண்மைகளை கவனித்தீர் களேயானால் நான் சொல்வதின் உண்மையை அறிவீர்கள். அரசாங்கத்தார் கூடுமானவரை உங்கள் விஷயத்தில் நல்லெண்ணமும் கவலையும் கொண்டே வறந்திருக்கிறார்கள். காங்கரசின் சூழ்ச்சியின் போதெல்லாம் அரசாங்கத்தார் உங்களைக் கைவிடாமல் ஆதரித்து வந்திருக்கிறார்கள். இந்த சமயம் அதிலும் நம் தென்னாட்டில் அரசாங்கத்தார் கவலையற்று காங்கரஸ்காரர்களுக்கு அதிக இடம் கொடுத்து மற்ற சமூகத்தை அழுத்த இடம் கொடுப்பதாய் தெரியவருகிறது. அதற்குக் காரணம் முஸ்லீம்களில் இன்று தக்க தலைவர்கள் இல்லை என்பதுதான். வடநாட்டில் காங்கரஸ்காரர்கள் ஜபம் முஸ்லீம்களிடம் செல்லுவதில்லை. தோழர்கள் ஜவஹர்லால் முதல் சகல காங்கரசு தலைவர்களும் முஸ்லீம் லீக்கை
ஒழிக்க வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தும் அது கொஞ்சமும் பயன்படவில்லை. ஜனாப் ஜின்னா அவர்கள் மீது காங்கரஸ்காரர்களுக்கு வெகு ஆத்திரம் இருந்து வருகிறது. ஏனெனில் அவர் காங்கரஸ் எலும்பு துண்டுகளை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
காங்கிரசின் தேசீய மாயமானை ஜின்னா சிறிதும் மதிப்பதில்லை. அவர் உண்மையில் உத்தியோகத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் ஒரு கவர்னராகி இன்று ரிட்டையராகி இருப்பார். அல்லது மாதம் 5 ஆயிரம் 6 ஆயிரம் ரூபா சம்பள உத்தியோகம் பார்த்து கழித்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு சுயநலமற்ற பெரியாரை இன்று காங்கரஸ் கூலிப் பத்திரிகைகளும் 21... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சாக்கடை எச்சிலைப் பத்திரிகைகளும் காங்கரஸ் கூலிகளும் வெகு கேவலமாய் எழுதுகின்றன; பேசுகின்றன. இவர்கள் ஜின்னாவின் கால் தூசிக்கு கூட இணையாகமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும் தென்ணாட்டாருக்கு அரசியல் ஏ.பி.சி.டி. தெரியாததற்கு முன்னமே ஜின்னா அவர்கள் பம்பாயில் வில்லிங்டன் துரையை பஹிஷ்கரித்தவர். அந்நியர் ஆதிக்கத்துக்கு சிறிதுகூட இடம் கொடாதவர். ஆதலால்தான் இன்று காங்கரஸ் தலைவர்கள் ஜின்னாவைக் கண்டு இவ்வளவு பயப்படுகிறார்கள். அவர் லீக்குக்கு தலைவராயிருப்பது லீக்குக்கு பெரிய பாக்கியமாகும். இந்த சமயத்தில் தான் முஸ்லீம்கள் கண் விழித்திருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் முஸ்லீம்லீகுக்கு தக்க மதிப்பு இல்லை. இதற்குக் காரணம் இன்னும் அதிக தகுந்த தலைவர்கள் இல்லை என்பதுதான். சட்டசபை எலக்ஷனில் லீக்கு சரியானபடி வெற்றிபெறவில்லை. நம் தலைவர் ஜனாப் கே.ஏ. ஷேக்தாவுத் சாயபு லீக்கு பேரால் நின்று வெற்றி யடைந்ததினாலேயே அவர் வெற்றிக்கு லீக்குதான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அவர் தனியாய் நின்றிருந்தாலும் லீக்குக்கு விரோதமாய் நின்று இருந்தாலும் கட்டாயம் வெற்றி பெற்றிருப்பார். அதாவது அவரது சொந்தப் பெருமையாலும் செல்வாக்காலும் முஸ்லீம் பொது ஜனங்களுக்கு அவரிடம் இருக்கும் மதிப்பினாலுமே வெற்றியடைந்தார்.
அடுத்தாற்போல் தேர்தல்கள் பல வரலாம். காங்கரஸ் மந்திரிகள். வெகு சீக்கிரத்தில் வெளியில் தள்ளப்படலாம். அதற்கு பல காரணங்கள். இருக்கின்றன. சர்க்கார் இவர்களை வெளியே தள்ளச் சமயம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதற்குள் காங்கரசின் கேவல நிலை உலகம் அறிந்துவிட்டது. ஆகையால் பதவி மோகம் பிடித்து சமூகத்தை காட்டிக் கொடுத்து காங்கரசுக்கு அடிமைப்பட்ட முஸ்லீம்கள் மாத்திரமல்ல, இந்துக்கள் என்போர்களும்
சீக்கிரத்தில் தங்கள் முட்டாள் தனத்துக்கு வருந்தி வெட்கத்துடன் வெளிவரப் போகிறார்கள் என்பதும் உறுதி. ஆகவே முஸ்லீம்கள் லீக்கை பலப்படுத்தி ஏராளமான மெம்பர்களைச் சேர்த்து தற்காப்புக்குத் தயாராயிருக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும்
பார்ப்பன ஆதிக்கத்துக்கு சூழ்ச்சி செய்யும் காங்கரஸ் தலைவர்கள் என்போர்களும் அவர்கள் கூலிகளும் இதை வகுப்புவாதம் என்று கூட கூறுவார்கள். இதற்கு யாரும் பயப்படக்கூடாது. இப்படித்தான் சில நாளைக்கு முன் நம்மைத் தொட்டால் பாவம் என்று சொன்னார்கள் இதே பார்ப்பன அயோக்கியர்கள். தக்கபடி அவர்களுக்கு புத்தி கற்பிக்கப்
குடி அரசு - 1937 (2) 216
பட்ட பின்பு இப்போது நம்மை சகோதரர் என்று சொல்லி தழுவி வருகிறார்கள். இது அன்பாலல்ல, புத்தி கற்பித்ததால்தான். ஆகவே
நாம் இரு சமூகமும் வகுப்புவாதம் என்கின்ற பூச்சாண்டிக்கு பயப்படாமல்: ஒற்றுமையாய், உறுதியாய் நின்று காங்கரஸ் ஆபத்திலிருந்தும் பார்ப்பன.
சூழ்ச்சியிலிருந்தும் சமாளிக்க முயற்சிப்போமாக.
குறிப்பு: 22.10.1937 ஆம் நாள் ஈரோடு முஸ்லீம் லீக் கட்டடத்தில் நடைபெற்ற முஸ்லீம் லீக் ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 24.10.1937
207 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காந்தி புத்தி
முஸ்லீம்கள் மைனாரட்டியாய் இருந்தாலும் காங்கரசில் சேர்ந்து மெஜாரட்டியாகி காங்கரசைக் கைப்பற்றி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளலாமல்லவா'' என்று தோழர் காந்தியார் ஜனாப் சையத் பஷீர் அகம்மது கடிதத்துக்கு பதில் எழுதி இருக்கிறார்.
தோழர் காந்தியாருக்கு பகுத்தறிவு இருக்குமானால் அல்லது நேர்மையாய் எழுதும் குணத்தைக் கைக்கொண்டிருப்பாரானால் இப்படி எழுதி இருக்க மாட்டார்.
ஏனெனில், மைனாரட்டி சமூகமாய் இருக்கும் முஸ்லீம்கள் காங்கரசில் எப்படி மெஜாரிட்டியாகக் கூடும்? ஏராளமாக முஸ்லீம்கள் காங்கரசில் சேர்ந்தால் மெஜாரிட்டி ஆகிவிடும் என்று சொல்லப்படுமானால் எல்லா இந்துக்களும் அந்த சமயத்தில் களைபிடுங்கவா போய் விடுவார்கள்? முஸ்லீம்கள் ஏராளமாய் காங்கரசில் சேர நினைக்கும்போதே இந்துக்கள் ஏராளமாக காங்கரசில் சேர எண்ணிவிட்டால் முஸ்லீம்கள் கதி என்ன ஆவது?
சட்டசபையில் இந்துக்கள் அதிகமாய் இருக்கும் காரணத்தினால். முஸ்லீம் மதத்துக்கு விரோதம் என்று சொல்லி காரணம் காட்ட எழுந்ததற்கே ஒரு முஸ்லீமின் கதி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. இத்தனைக்கும் முஸ்லீம் ஒருவர் மந்திரியாயும் மற்றொருவர். காரியதரிசியாயும் மற்றும் பல பேர் காங்கரஸ் கட்சி சட்டசபை மெம்பராகவும் இருக்கும் போதே- மார்க்கத்தைப் பற்றிய பிரச்சினையிலேயே
- வெள்ளைக்காரனுக்கு இன்னமும் சட்டசபை நடவடிக்கைகளில் கொஞ்சம் அதிகாரம் இருக்கும்போதே இப்படி ஆகதிவிடுமானால் பூரண சதந்தரமுள்ள காங்கரசில் ஒரு பக்கம் ஜவஹர்லால், ஒரு பக்கம் காந்திஜி, ஒரு பக்கம் பாய்பரமானந்தர், ஒரு பக்கம் படேல், இவர்களுக்கு நடுவில் சென்னை சூழ்ச்சிப்பட்டர் ஆகியவர்கள் ஆதிக்கமாகிய சர்வாதிகார நாயகத்தில் ஏழை முஸ்லீம்கள் எவ்வளவு பேர்தான் காங்கரசிலிருந் தாலும் என்ன செய்ய முடியும்?
ஜனாப்கள் அப்துல் கலாம்களும் யாகூப் ஹாசன்களும் தாவுத் ஷாக்களும் உபயதுல்லாக்களுமே கழுத்தைப் பிடித்து கல்த்தாக்கொடுத்து தள்ளிவிடமாட்டார்களா?
குடி அரசு - 1937 (2) 218
காங்கரசில் ஒரு முஸ்லீம் வாயை திறக்க முடியுமா? முஸ்லீம்களே, இவைகள் காந்தியாருக்கு தெரியாமல் எழுதியிருப்பார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் மாத்திரம் மடையர்களல்ல, காந்தியாரையும் முட்டாள் என்று நீங்கள் கருதிய குற்றத்துக்கும் ஆளாவீர்கள்.
ஊரார்கள் கண்ணில் மண்ணைப் போட அவர் இப்படி எழுதினாரே ஒழிய முஸ்லீம்களை ஏய்க்கக்கூட அல்ல
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.10.1937
219௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எழுத்துச் சுதந்தரம் பேச்சுச் சுதந்தரம் இதுதானா?
“காங்கரஸ் ஆட்சியில் எழுத்துச் சுதந்தரமும் பேச்சுச் சுதந்தரமும் தாராளமாக அளிக்கப்படும்” என்றும் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் அவை அளிக்கப்படவில்லை என்றும் அதற்கு மாறாக அடக்கு முறைகள் கையாளப்பட்டனவென்றும் தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்களே பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்
அதற்கு அனுசரணையாக காங்கரஸ்காரர் பிரிட்டிஷ் அரசாங்கத்
தினிடம் சரணாகதி அடைந்து ஆச்சாரியார் பதவிக்கு வந்தவுடன் ஏற்கனவே ராஜத்துவேஷப் பேச்சுக்கும் சட்டம் மீறியதற்கும் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்த சில அரசியல் கைதிகள் விடுதலையாக்கபட்டார்கள். ஜாமீன் வாங்கப்பட்டிருந்த சில பத்திரிகைகளுக்கு ஜாமீன் வாப்பீஸ் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த சில புத்தகங்கள் திருப்பிக்கொடுக்கப் பட்டதுடன் அப்புத்தகங்கள் பொது ஜனங்களுக்குள் பரவவும் அனுமதிக்கப்பட்டன.
ஆனால் இப்போது இவைகள் அவ்வளவும் வெறும் வேஷம் என்றும் பாமர மக்களை ஏமாற்ற தற்கால சாந்தியாக செய்யப்பட்ட
சூழ்ச்சிகள் என்றும் தங்கள் இனத்தாருக்கும் தங்கள் கூலிகளுக்கும் மாத்திரம் சலுகைகாட்டி லாபம் சம்பாதித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பாரபக்ஷ செய்கை என்றும் நன்றாக விளங்கிவிட்டன.
எப்படி எனில் பத்திரிகைகளுக்கு சர்க்கார் ஜாமீன் வாங்கப் பட்டதில் “தினமணி” முதலிய பத்திரிகைகளின் ஜாமீன் மாத்திரம் வாப்பீஸ் செய்யப்பட்டனவேஒழிய “குடிஅரசு” முதலிய பத்திரிகைகளுக்கு வாங்கப்பட்ட ஜாமீன்கள் இன்னும் வாப்பீஸ் செய்யப்படவில்லை. காங்கரஸ் பார்ப்பனர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பொறுத்த வரையில்தான் பறிமுதல் செய்த ஆர்டர்கள் கேன்சில் செய்யப்பட்டனவே ஒழிய “குடி
அரசு” பதிப்பகத்திலிருந்தும் பகுத்தறிவு புத்தக பதிப்பகத்தில் இருந்தும் பதிப்பிக்கப்பட்ட 4, 5 புத்தகங்கள் பறிமுதல் செய்யப் பட்டவை கேன்சில் செய்யப்படவில்லை என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டுகிறோம்.
குடி அரசு - 1937 (2)
ப ப் S
காங்கரஸ் மந்திரிகள் சில புத்தகங்களின் பறிமுதல் உத்திரவுகளை
கேன்சில் செய்த பிறகு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்திலிருந்து வெளியான “குடிஅரசு கலம்பகம்'' என்னும் புத்தகத்தை பறிமுதல் செய்த உத்திரவை கேன்சில் செய்து பறிமுதல் செய்து கைப்பற்றிய புத்தகங்களை வாபீஸ் கொடுக்க வேண்டும் என்று கழக பிரசிடெண்டினால் கேட்டுக் கொண்டதற்கு முடியாது என்று சர்க்காரார் உத்திரவு வந்து விட்டதாகத் தெரிகிறது
குடி அரசு கலம்பகம் என்னும் புத்தகம் எந்த ஒரு தனிநபராலும் எழுதப்பட்டதோ அல்லது ஒரு தனி விஷயத்தைப் பற்றியதோ அல்லது
சர்க்கார் மீது துவேஷத்தைக் கற்பிக்க கூடியதோ அல்ல என்பதை வாசகர்கள் முதலில் அறிய வேண்டியே அப்புத்தகத்தைப் பற்றி சில விஷயங்கள் கூறுகிறோம்.
அதாவது, குடி அரசு கலம்பகம் என்னும் புத்தகம் “குடி அரசு”
பத்திரிகையில் வந்த சில தலையங்கங்களும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சில சொற்பொழிவுகளுமேயாகும். இந்த சொற்பொழிவுகளும் அவ்வப்போது பத்திரிகைகளில் வந்த சேதிகளேயாகும். அவைகளின். தலைப்புகளாவன.
1. சுதேச சமஸ்தானங்கள். (இது 3.8.33 குடி அரசு தலையங்கம்)
2. ஜமீன்களும் ஜமீன் குடிகளும். (இது 19.8.33-ல் சேலம் ஜில்லா ஜமீன்தார்கள் அல்லாதார் மகாநாட்டில் ஈ.வெ.ரா.பேசியது)
3. சுதேசி வர்த்தகம். (இது ஈரோடு சுதேச வர்த்தக சங்கத்தில் சர்.ஆர்.கே.ஷண்முகம் தலைமையில் ஈ.வெ.ரா.பேசியது)
4. நமது லக்ஷ்யம். (இது திருப்பத்தூர் வட ஆற்காடு ஜில்லா ௯.ம மகாநாட்டில் ஈ.வெ.ரா. பேசியது)
5. தொழிலாளர் நிலை. (இது 1933 மே 5,10,15 தேதிகளில் கொச்சி, திருவாங்கூர், திருநெல்வேலி தொழிலாளர் மகாநாடுகளில் தலைமை வகித்து ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுகள்)
6. கூட்டுறவு வாழ்க்கை. (இது 4.11.33-ல் அகில கூட்டுறவாளர்.
தினத்தில் ஈ.வெ.ரா. பேசியது)
7. பொது உடமை. (இது 10.9.33 குடி அரசு தலையங்கம்)
8. கதர். (இது 16.7.33 குடி அரசு தலையங்கம்)
9. யந்திரத்தின் பெருமை. (இது 13.8.33 குடி அரசு தலையங்கம்)
10. மதக்கிறுக்கு. (இது 8.1.33 குடி அரசு தலையங்கம்)
என்கின்றதான விஷயங்கள். ஆகவே இவைகள் எல்லாம், 1933-ம் வருஷத்தில் “குடி அரசில்” வந்தவைகளாகும். அக்காலங்களில்
“குடி அரசுக்கு ஆசிரியராய் இருந்தவரும் தோழர் ஈ.வெ.ராமசாமியேயாகும் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எனவே தோழர் ராமசாமியால் எழுதப்பட்ட, பேசப்பட்ட விஷயங்களை காங்கரஸ்காரர்கள் ராஜத் துவேஷமானது என்றோ, சர்க்காருக்கு எதிரானதென்றோ, பணக்காரர்களுக்கும் ஜமீன்தாரர்களுக்கும் விரோதமானதென்றோ எப்படிச் சொல்லமுடியும்?
ஏனெனில் “தோழர் ராமசாமி சர்க்கார்தாசர்” என்றும் “ஜமீன்தார் பின்னால் திரிபவ” ரென்றும் “பணக்காரருக்கு வக்கீல்” என்றும் “சர்க்காரையும் மந்திரிகளையும் ஆதரித்து வருகின்றவ" ரென்றும் இதுவரை காங்கரஸ் காரர்கள் சொல்லிவந்து இப்போது மாத்திரம் அவர் அக்காலத்தில் எழுதியதும், பேசியதும் சர்க்காருக்கும் பணக்காரருக்கும் ஜமீன்தாரர்களுக்கும் விரோத மானதென்று எப்படிச் சொல்லமுடியும்? ஆகவே காங்கரஸ்காரர்கள் பதவிக்கு வந்ததும் சர்க்காரையும், பணக்காரரையும், ஜமீன்தாரர்களையும் காப்பாற்ற முனைந்து நிற்பதோடு அந்த சாக்கைச் சொல்லிக் கொண்டு தங்களுக்கு விரோதமானவர்கள் மீது பழிவாங்கும் கொடுமையைச் செய்கிறார்கள் என்பதில் ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்கிறோம். “குடி அரசு” சர்க்காருக்கு அனுகூலமாய் மந்திரிகளுக்கு வாழ்த்துக்கூறிக் கொண்டிருக்கிற சேவை செய்கிறது என்று சொன்ன காங்கரஸ்காரர்கள். இப்போது பதவிக்கு வந்தவுடன் “குடி அரசி”னிடம் ஜாமீன் வாங்கி வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கிறோம்
தவிர 124-ஏ பிரிவு சட்டப்புத்தகத்திலேயே இருக்கக் கூடாது என்று பேசிய காங்கரஸ்காரர் இன்று தோழர் பாட்லிவாலா அவர்களை ராஜத்துவேஷப் பேச்சுக்காக அரஸ்ட்டு செய்திருப்பதோடு அவரை ஜாமீனில் விடக்கூட காங்கரஸ் அரசாங்கம் மறுத்துவிட்டது
கனம் தோழர் ராஜகோபாலாச்சாரியாருடன் ஒரு 010. போனதற்கு சகல பத்திரிக்கைகளும் கூப்பாடு போட்டன. இது கனம் ஆச்சாரியார். மந்திரியாவதற்கு 10 நாள்களுக்கு முன் நடந்த சம்பவம். தோழர் ஆச்சாரியாரும் இதை வெகு பலமாகக் கண்டித்து பேசி விளம்பரம் பெற்றார். அப்படி இருக்க, இப்போது தோழர் ஈ.வெ.ராவுக்கும் மற்றும் சிலருக்கும் மறுபடியும் CID. சுருக்கெழுத்து தொல்லை எதற்காக ஏற்படுத்த வேண்டும்? அவர்கள். பேசுவதும் செய்வதும் தெரியவேண்டுமானால் பத்திரிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாமல்லவா?
மற்றும் தொழிலாளிகள் வேலை நிறுத்தங்களிலும் தொண்டர்கள் ஊர்வலங்களிலும் பழயபடியே போலீஸ் தடியடி ராஜ்யத்திற்கு ஆளாவானேன்? சென்ற வாரம் கள்ளிக் கோட்டையில் ஒரு மந்திரி முன்பாகவே இக்காரியம் நடைபெற்றிருக்கிறதாம்.
மேலும் மதராஸில் கர்னாட்டிக் மில் ஸ்ட்ரைக்கின் போது போலீசார் தொழிலாளிகளை தடிகொண்டு தாக்கி இருக்கிறார்களாம்.
குடி அரசு - 1937 (2)
ப ப் 3
ஆகவே காங்கரஸ் ராஜ்யம் எந்த வகையில் மாறுதலடைந்திருக் கிறது என்று கேட்கிறோம். காங்கரஸ்காரர் பதவி வகிப்பதற்கு முன்பு மேற்கூறப்பட்ட இலாகாக்கள் அவ்வளவும் இரட்டையாட்சி முறையில் சர்க்காரின் நேர் பார்வையில் இருந்ததேயொழிய ஜஸ்டிஸ் மந்திரிகள் கையில் இருக்கவில்லை. அப்படியிருந்தும் காங்கரஸ்காரர்கள் கூலிகளையும், காலிகளையும் எச்சிலைப் பத்திரிகைகளையும் ஏவி விட்டு இவைகளுக்கு ஜஸ்டிஸ்காரர்கள் மீது பழிபோடச் சொன்னார்கள்.
ஆனால் இவ்வளவு காரியங்களையும் இப்போது காங்கரஸ் மந்திரிகள் கைப்படவே செய்யும்போது இக்காலிகளும் கூலிகளும் எச்சிலைப் பத்திரிகைகளும் அவர்களைப் புகழ்கின்றன. ஆகவே காங்கரசின் இழிதன்மைக்கும் அவர்களை ஆதரிக்கும் ஆட்கள் பத்திரிகைகள் ஆகியவற்றின் மானங்கெட்ட யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம். ஆகையால் பொது ஜனங்கள் இனியாவது எக்காரியத்தையும் சுயபுத்தியோடு கூடிய பகுத்தறிவுடன் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.10.1937
223 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மது விலக்கின் சூழ்ச்சி
காங்கரஸ் மந்திரிகள் மது விலக்கில் முனைந்துவிட்டார்கள் என்றும் சேலம் ஜில்லாவை விட்டு அறவே “கள்ளரக்கன்” விரட்டப் பட்டு விட்டான் என்றும் பாமர மக்கள் நம்பும்படி மாயப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதைப் பாமர மக்களும் சில அறிவாளிகள் என்பவர்களும் நம்பி வருகிறார்கள்:
கள் ஒரு நாளும் இந்தியாவை விட்டு அதிலும் தென்னாட்டை விட்டு ஒழியப் போவதில்லையென்பதை கல்லின்மேல் எழுதி வைத்துக் கொள்ளும்படி வாசகர்களுக்குத் “தீர்க்க தரிசனம்” கூறுவோம்
ஆனால் கள் ஒழிக்கும் சாக்கை வைத்துக்கொண்டு பார்ப்பன. ராஜ்யமானது பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியில் மண்ணைப்போட்டு அவர்களைப் பழையபடி காட்டுமிராண்டிகளாகவும் பார்ப்பாரின் வைப்பாட்டி மக்களாகவும் ஆக்கப் போகிறது என்பதை இப்போதே பார்ப்பனரல்லாத மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
நம்மைப் பொறுத்தவரையில் கள், சாராயம் மூதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டதுகூடக் கிடையாது. மலம் சாப்பிடுவதை விட மதுவருந்துவதை கேவலமாய்க் கருதி வருகிறோம். ராமரசம், பூரணாதி, மன்மத சிந்தாமணி முதலிய போதை தரும் லேகியம்கூட கையில் தொட்டது கிடையாது. நம் ஜாதியும் நம் “கடவுளும்” மதுவை அனுமதித்து மதுவைப் படைத்து அருந்தி வந்திருந்தாலும் கூட என்ன காரணமோ. மது நம்மால் வேறு எதையும்விட அதிகமாக வெறுக்கப்பட்டுவிட்டது.
மதுபானக்கெடுதி ஒழிவது நல்லது என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதமில்லை. மதுபானத்தில் ஏற்படும் கேட்டை நன்றாய் உணர்ந்துதான் இருக்கிறோம்
ஆனால் மதுவிலக்கு என்னும் சாக்கில் பார்ப்பன ஆட்சி செய்யும் படு மோசத்தை நம்மால் சகிக்க முடியவில்லை: ஏனெனில் மதுவின் பேரால் அரசாங்கத்துக்கு 5, 6 கோடி ரூபாய் வருமானம் ஏற்படுத்தப்பட்டாய் விட்டது. அவ்வருமானமே கல்விக்கு பயன் படுத்தப்பட்டு வருகிறது. இப்போது மதுவால் கிடைத்து வந்த வருமானம் நின்றவுடன் கல்வி கற்பிப்பதை குறைக்க மந்திரிகள் துணிந்துவிட்டதோடு
மக்கள் நலனுக்கு அவசியமான பல காரியங்களையும் நிறுத்திவிட வேண்டிய அவசியத்துக்கு வந்து விட்டார்கள்.
குடி அரசு- 1937 (2) 224
உதாரணமாக தோழர் கனம் ஆச்சாரியாரும் கனம் ராமன் மேனனும் மலையாள சுற்றுப் பிரயாணத்துக்கு போயிருந்தபோது மலையாள ஜனங்கள் தங்கள் ஜில்லாவுக்கும் மது விலக்கு ஏற்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அளித்த பதிலில் மந்திரிகள் அறியாமல் அவர்களது விஷத்தை கக்கிவிட்டார்கள்.
அதாவது “உங்கள் ஜில்லாவுக்கு மதுவிலக்கு ஏற்படுத்தினால் சர்க்காருக்கு 40 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படும். இந்த நஷ்டத்தை
ஈடு செய்ய பாலக்காடு விக்டோரியா காலேஜ் மூடப்பட வேண்டிய தோடு ரோட்டுகள் செப்பனிடுவதும் பாலங் கட்டுவதும் நிறுத்தப் படவேண்டிவரும்” என்று தைரியமாய் பேசி இருக்கிறார்கள்.
(இது 20-ந் தேதி மதராஸ் மெயில் பத்திரிகை 5-வது பக்கம் 7-வது கலத்தில் மொத்த எழுத்தில் போடப்பட்டிருக்கிறது) ஆகவே இப்போது சேலத்தில் நடந்த மதுவிலக்கினால் சர்க்காருக்கு ஏற்பட்ட 25 லக்ஷ ரூபாய் நஸ்டத்திற்கு தகுந்த மாதிரி பல பள்ளிக்கூடங்கள் மூடப்படப்போவதும் பல போக்குவரத்து சாதனங்கள் செளகரியப்படுவது நிறுத்தப்படப் போகிறது என்பதும் உறுதியாய் விளக்கப்படுகிறது.
இன்று கல்வியில் பார்ப்பனர்கள் 100க்கு 100 பேரும் படித்திருக்கிறார்கள். இன்னமும் 10, 20 வருஷத்துக்கு உத்தியோகத்துக்கு ஆள் கிடைக்கும்படி அவ்வளவு பேர் படித்து விட்டு காத்துக் கொண்டு மிருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்களில் முக்கியமாக தாழ்த்தப்பட்ட மக்களில் 100க்கு 2 பேர் 3 பேர்கூட படிக்காமல் இருக்கிறார்கள் அவர்களில் 100க்கு 1, 2 பேர்கூட பட்டதாரிகள் இல்லாமல் இருக்கிறார்கள். ஆகவே பள்ளிக்கூடங்களும் காலேஜ்களும் மூடப்பட்டால் மற்ற சமூகத்தில் படித்தவர்கள் என்பவர்களே இல்லாமல் போய்விடுவார்கள். பார்ப்பனர்கள் திருவாங்கூருக்கோ, மைசூருக்கோ, காசிக்கோ, காஷ்மீருக்கோ போய் அங்கு சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு சம்பளமில்லாமல் படித்து விட்டு கொஞ்சம் பணமும் சம்பாதித்துக்கொண்டு பட்டத்துடன் இங்கு வந்துவிடுவார்கள்: பிறகு படித்தவர்கள் என்றால் பார்ப்பனர்கள் - பார்ப்பனர்கள். என்றால் படித்தவர்கள் என்று அகராதியிலேயே வியாக்கியானம் வந்துவிடப் போகிறது என்பது உறுதி. இப்பொழுதே தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் சர்க்கார் உத்தியோகம் பெறுகிறவர்களுக்கு காசி, கல்கத்தா, பம்பாய், கராச்சி, பஞ்சாப் சென்று வந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று யோக்கியதாம்சம் வகுத்துவிட்டார். இனி பள்ளிக்கூடங்கள். காலேஜுகள் மூடப்பட்டுவிட்டால் நம் கதி என்ன ஆவது என்பதை சுணையும் புத்தியும் உள்ள பார்ப்பனரல்லாதார் யோசித்து பார்க்க வேண்டுமென்று விரும்புகிறோம் 25— ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மற்றும் சேலம் ஜில்லா மது விலக்குக்காக மாகாணம் பூராவிலும் உள்ள எக்சைஸ் (மது இலாக்கா) டிப்பார்ட்டுமெண்டில் 3 வருஷத்துக்கு கீழ்ப்பட்ட சர்வீஸில் உள்ள சிப்பந்திகளை எடுத்துவிட திட்டம் போட்டிருக்கின்றார்களாம். இந்த மூன்று வருஷங்களுக்குள்ளாகத்தான். பார்ப்பனரல்லாத மக்கள் பலர் கம்யூனல் ஜீ.ஓ.படி 100-க்கு 84 வீதம் அந்த இலாக்காவில் உத்தியோகம் பெற்று இருப்பார்கள். இவர்கள் இத்தனைபேர் தலையிலும் கை வைக்கப்பட்டுவிடும். பார்ப்பனர்களோ 100-க்கு 16 வீதம்தான் உத்தியோகம் பெற்று இருப்பார்கள். இவர்களுக்கு ஹிந்தி உபாத்தியாயர் வேலை கிடைத்து விடும்; அல்லது பள்ளிக் கூடங்கள் இல்லாத அளவுக்கு இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பிரைவேட் உபாத்தியாயர்களாய் அல்லது முன்னோடும் பிள்ளையாய் பதவி அடைந்து விடுவார்கள். ஆகவே பார்ப்பனரல்லாத மக்கள் கதி படிப்பிலோ, உத்தியோகத்திலோ என்ன ஆவது என்பதை யோசித்துப்பாருங்கள்.
பொறுப்பற்ற அயோக்கியர்கள் வஞ்சக சூழ்ச்சிக்காரர்கள் ஜப்பான்
- சைனா, அபிசீனியா - இட்டாலி சண்டைக்குக் கூட பார்ப்பன சூழ்ச்சிதான். காரணமா என்று கிண்டல் செய்யலாம். மானமில்லாத ஜாதிக்கு அவ்வப் போது வாயில் வந்ததை உளறிவிட்டு மரியாதை கெடுவது ஆச்சரியமல்ல. ஆனால் நாம் சொல்வதும் கருதுவதும் சரியா, தப்பா? அல்லது கூலிக்கோ சுயநலத்துக்கோ இப்படி எழுதுகிறோமா? அல்லது ஆதாரமில்லாமல் அநுபவமில்லாமல் இப்படிச் சொல்லுகின்றோமா என்பதை பொதுஜனங்கள் - அறிவாளிகள் யோசிக்க வேண்டுமென்பது தான் நமது ஆகை. மற்றபடி மற்றவர்கள் குலைப்பதைப் பற்றி நமக்கு கவலை இல்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.10.1937
குடி அரசு - 1937 (2)
ப ப் ௯
யொழுது போக்கு
இன்று காங்கரஸ் மந்திரி பதவி வகிப்பதானது காங்கரசுக்கு வெற்றி என்றால் இது ராட்டினத்தால் கிடைத்த வெற்றியா? காந்தியின் சரணா கதியினால் கிடைத்த “வெற்றியா”?
க்க
காங்கரஸ் மந்திரி பதவி ஏற்பது பிரிட்டிஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுத்ததற்கு ஒப்பாகும் என்று சொன்ன ஜவஹர்லால் மந்திரிகளைக் குறை கூறாதீர்கள் என்று சொல்வது அடிமை முறிச்சீட்டுக்கு மேலொப்பம் போட்ட அடிமையாக ஆகி விட்டதாக அர்த்தமாகவில்லையா?
க்க
கனம் ஆச்சாரியார் தான் ஒரு ஜனநாயகவாதி என்கிறார், ஆனால் அவர் சொல்வதை யாராவது ஆக்பித்தால் “உங்களுக்கு ஒன்றும் தெரியாது வேண்டுமானால் அடுத்த தடவை எனக்கு ஓட்டு கொடுக்காதீர்கள்” என்று
சொல்லுகிறார். ஆகவே ஜனநாயகத்துக்கு அருத்தம் ஆச்சாரியாரை
கேட்டு அகராதியை திருத்திக்கொள்ள வேண்டியது தான்.
க்க
“அப்துல் கலாம் அசாத்தின் நடவடிக்கை சரியோ தப்போ அது வேறு விஷயம். இந்துக்கள் காங்கரசில் முஸ்லிம் சம்மந்தமான விஷயங் களில் ஒரு முஸ்லீமுக்கு சர்வாதிகாரம் கொடுத்திருப்பதைப்பற்றி பெருமை அடைய வேண்டும்'' என்று காந்தியார் ஜனாப் சையத் பஷீர் அகம்மது அவர்களுக்கு எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆனால் ஒரு இந்திய முஸ்லீமூக்கு அவர் செய்யும் காரியம் சரியோ தப்போ அதுவேறு விஷயம் பிரிட்டிஷார் இந்திய ஆட்சியைப் பொறுத்தவரை கவர்னர் வேலை கொடுத்ததற்கு இந்தியர் என்று சொல்லிக்கொள்ளும் காங்கரஸ்காரர் பெருமை அடையாமல் இந்திய முஸ்லீம் கவர்னரை தேசத்துரோகி என்று சொன்னது யோக்கியமா? அயோக்கியமா?
க்க 27... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தோழர் கே.வி. ரெட்டி நாயுடு கவர்னர் ஆனபோது இந்தியருக்கு இந்தியர் மரியாதை செய்வது அநாவசியமென்று சொல்லி வரவேற்புப் பத்திரமளிக்க மறுத்த காங்கரஸ்காரர்கள் தோழர் கனம் ஆச்சாரியார். முதலியவர்கள் மந்திரியானதற்கு ஓடி ஓடி வரவேற்புப் பத்திரம் கொடுத் திருப்பதும் மற்றவர்களையும் கொடுக்கும்படி வேட்டையாடுவதும் எதற்கு? ஒரு சமயம் ஆச்சாரியார் இந்தியர் அல்ல என்கின்ற எண்ணமா?
- ஈ.வெ.ரா.
குடி அரசு - துணுக்குகள் - 24.10.1937
குடி அரசு - 1937 (2)
ப ப் 8
காங்கரஸ் செய்யும் பரிசுத்தம்
ஸ்தல ஸ்தாபனங்களாகிய ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி முதலியவை களிலும் ஐக்கிய நாணய சங்கங்கள் முதலியவைகளிலும் அரசியல் கட்சி வேற்றுமையோ, மற்றும் வேறு கட்சி வேற்றுமையோ தலைகாட்டும்படி செய்யக்கூடாது என்றும் கட்சி விஷயங்கள் புகுந்தால் நிர்வாகம் நடு நிலை நீதியற்றும் நாணயமற்றும் நடக்க வேண்டியதாக ஆதிவிடும் என்றும்
சுமார் 20 வருஷ காலமாகவே எடுத்துச் சொல்லி வருகிறோம். நாம் சொல்லி வருவதை மெய்ப்பிக்க அடிக்கடி ஏராளமான ஆதாரங்கள் ஏற்பட்டு வந்தும் காங்கரஸ் கட்சி தலைவர்கள் என்பவர்கள் சிறிதும் யோக்கியப் பொறுப் பில்லாமல் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களிலும் நிர்வாகங்களிலும் கட்சியைப் புகுத்தி நிர்வாகத்தின் நேர்மையையும் நாணயத்தையும் பாழ்படுத்தி விட்டார்கள். என்றைய தினம் காங்கரஸ்காரர்கள் காலிகளுடைய உதவி யையும் கூலிகளுடைய உதவியையும் அக்கிரமம், அயோக்கியத்தனம் ஆகியவற்றின் தன்மையையும் கை முதலாகக் கொண்டு ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதலே எவ்வளவு தான் யோக்கியமும், நாணயமும் உள்ளவர்கள் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் நுழைந்தாலும் 100க்கு 90 பேர்கள் அயோக்கியர். களாகும் படியும் அயோக்கியத்தனங்களை கற்றுக் கொள்ளும்படியும் நேரிட்டு வந்திருக்கிறது. அதிலும் வயிற்றுச் சோற்றுக்கும் வாழ்க்கைக்கும் யோக்கியமான மார்க்கமில்லாத தத்தாரி ஆட்கள் பிரவேசித்து நிர்வாகத்தில் பங்கு கொள்ளச் செய்த பிறகு சற்றேறக்குறைய அம்மாதிரி ஆட்கள் 100க்கு 99 பேரும் அந்த ஸ்தானங்களின் நாணயத்தை விற்றே வயிறு கழுவவும் பணம் சம்பாதிக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டு விட்டார்கள்.
நடுநிலைமையில் இருந்து நாமே யோசிப்போமானால் வீட்டில்
வாய்க்கரிசிக்கு வகையில்லாத நபர் முனிசிபாலிட்டியிலும், ஜில்லா போர்டிலும் ஸ்தானம் பெற்றால் சோற்றுக்கு என்ன செய்வான் என்றுதான் படும்.
பணக்காரன், ஏன்? யோக்கியன் கூட ஸ்தானம் பெற்றாலே 100க்கு 90 பேர்கள் சவுகரியப்பட்டால், இடமிருந்தால் எலக்ஷன் செலவு கணக்கை நேர் செய்து சரிகட்ட, சாப்பிடாததைச் சாப்பிடக் கூட ஆரம்பித்து விடுகிறான். வரப்போகும் எலக்ஷன் செலவுக்கு என்று வெளிப்படையாய் பண்டு சேர்க்கிறான். இப்படி இருக்க ஷி ஆட்களைப் பற்றி கேட்க வேண்டுமா? என்று கேட்கிறோம்
229 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இது இப்படி இருக்க, இது விஷயமாய் காங்கரஸ்காரர்களின் யோக்கிய தையையும் அவர்களது வண்டவாளங்களைப் பற்றியும் பேச வேண்டுமானால்
அது ஒரு கசுமாலத்தைக் கழுவிவிடுவது போலவே தான் இருக்கிறது. எப்படி யெனில் காங்கரஸ்காரர்களுக்கு ஸ்தல ஸ்தாபன தேர்தல் விஷயமாய் எவ்வித நிர்வாகக் கொள்கையும் இல்லாமல் தேர்தலில் போட்டி போட வேண்டிய வர்களாகி விட்டதால் அவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சினையாக “ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்ச ராஜ்யத்தை ஒழிப்பது எங்கள் கொள்கை” என்று சொல்லிக் கொண்டு தேர்தல் வேட்டை ஆடினார்கள். ஆனால் அந்த வேட்டை ஆடுவதற்கு காங்கரஸ்காரர்கள் பிடித்த ஆட்களில் பலர் கஞ்சிக்கு யோக்கியமான வகையில்லாதவர்களும் லஞ்சத்திற் பிறந்து லஞ்சத்தில் ஊறி லஞ்சத்தில் வளர்ந்து லஞ்சத்திலேயே ஆழ்ந்துகிடக்கும் ஆட்களுமாவர்.
மற்றும் தேர்தலுக்கு 10 - நாளைக்கு முன்வரை “லஞ்சம் வாங்கினார்” “லஞ்சம் வாங்கினார்" “லஞ்ச ராஜ்யம் தாண்டவமாடுகிறது" என்று யாரைப்
பார்த்து வாய்வலிக்க நுரை ததும்பக் குலைத்து வைது வந்தார்களோ அந்த ஆட்களிடமே லஞ்சம் (கூலி) வாங்கிக்கொண்டு அவர் காங்கரஸ் மெம்பர் ஆய்விட்டதாகச் சொல்லி அப்படிப்பட்டவரிடம் பார்லிமெண்ட் போர்டு தலைவர்களும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தேர்தலுக்கு நிறுத்தி வெற்றிமாலை சூட்டினார்கள். காங்கரஸ்காரரின் இந்நடவடிக்கையை நாம் அப்போதே ஆகேஷ்பித்து எச்சரிக்கை செய்து வந்தோம்.
அதற்கு கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சிறு உதாரணத் தோடு சமாதானம் சொன்னார். அது என்ன உதாரணமெனில்,
ஒருவன் எவ்வளவு அயோக்கியனாகவும் கொலைகாரனாகவும் இழி மகனாகவும் கொள்ளைக்காரனாகவும் மாதுரு மணாளனாகவும்
இருந்தாலும் ஒரு சிட்டிகை விபூதி பூசிய உடனோ அல்லது ஒரு தடவை ராமா என்ற உடனோ அல்லது தன்னை அறியாமலே அரிசி என்றும் படவா என்றும் உச்சரித்து விட்டால் அவ்வார்த்தைகளின் கடசி எழுத்துக்கள். இரண்டும் சேர்ந்து சிவா என்கின்ற வார்த்தை ஆகிவிடுகிறதினால் அதணாலோ அவனுடைய சர்வ பாபமும் ஒழிந்து மோக்ஷலோகத்துக்கு அருகதை உடையவனாகிவிடுகிறது போல் ஒருவன் எவ்வளவு அயோக்கியனாகவும் இருந்தாலும் 4 அணா தக்ஷணை கொடுத்து காங்கரசில் சேர்ந்து கதர் குல்லாய் போட்டுக் கொண்டால் அல்லது காங்கரஸ் மெம்பர் பாரத்தில் கையெழுத்துப் போட்டு விட்டால் பரம பாகவதனாக விபீஷணாழ்வாராக மகா மகா குட்டி ஆத்மாவாக ஆகிவிடுகிறான் என்று சொல்லி நமது வாயை அடக்கினார். ஆனால் உபமான உபமேயங்கள் சொல்லி மக்களை ஏய்த்து வஞ்சகத் தன்மையான ஆகைகாட்டி சுவாதீனம் செய்து பதவியேற்ற காங்கரஸ்காரர் பதவி பெற்றபின்பு “லஞ்ச ராஜ்யம்” என்ன ஆயிற்று என்று பார்த்தால் காங்கரஸ் தலைவர்கள் என்பவர்களே மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய
குடி அரசு - 1937 (2) 230
அளவுக்கு நாற்றம் நாற ஆரம்பித்து விட்டது. “லஞ்ச ராஜ்ய" தாண்டவத்தை சலிக்கமாட்டாமல் காங்கரஸ் தலைவர்கள் ராஜிநாமா கொடுக்க ஆரம்பித்து
விட்டார்கள் இன்ன இன்ன கமிட்டியில் இன்ன இன்னார் இவ்வளவு இவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள் என்று பெயர், விலாசம், குலம் கோத்திரம், கொண்ட இடம், கொடுத்த இடம் எல்லாம் வெளியாக்கப்பட்டு விட்டன. எதில் என்று வாசகர்கள் கேட்கக்கூடும். “தினமணி யிலும் “மெயிலி'லுமேதான். “தினமணி எப்படி இருந்தாலும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயரை உடைய ஆசிரியரால் நடத்தப்படுவதால் அது சதாகாலமும் ஜாக்கிரதையாய் இல்லாமல் ஏதோ ஏமாந்த சமயத்தில் உண்மையை கக்கிவிடுகிறது “மெயி“லும் அப்படியே இருப்பதால் சில சமயங்களில் நடுநிலைமை வகித்து விடுகிறது. அதன் காரணத்தால் எண்ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பதுபோல் சென்னை மாகாணத்துக்கு மதராஸ் பிரதான பட்டண மென்பதோடு மாகாண ஸ்தல ஸ்தாபன சபைகளுக்கெல்லாம் சென்னை கார்ப்பரேஷனே தலைச் சபையாயுமிருக்கிறது என்பது யாரும் அறிந்ததேயாகும். அச்சபையின் தேசீயத்துக்கு அறிகுறி வேண்டுமானால் மாகாண கவர்னருக்கே “அவர் ஒரு இந்தியராய் இருப்பதால் அவருக்கு வரவேற்பு பத்திரம் கொடுக்கக்கூடாது” என்று தீர்மானம் செய்த “பாரத மாதாவின் அருமைப் புத்திரர்களை”க் கொண்டதே போதுமானது
அப்படிப்பட்ட சபையில் லஞ்சமோ ஒ ஒ லஞ்சம் என்று விலை கூறப்படுகிறது இதை “தினமணி” பத்திரிகை மாத்திரம் எடுத்துக் காட்டவில்லை தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் முத்துரங்க முதலியாரும், கார்ப்பரேஷன் டிப்டி மேயரும் காங்கரஸ் கமிட்டி காரியதரிசியுமான தோழர். பக்தவச்சலம் எம்.எல்.எ. அவர்களும் காங்கரஸ் எம்.எல்.எ. ஆன தோழர். சொக்கலிங்கம் அவர்களும் ஆகிய மூன்று பிரதான பாரத புத்திரர்கள் கூறுகின்றார்கள் என்றால் இனி இது விஷயத்தில் அறிவும் நாணயமும் உள்ள எவருக்காவது சந்தேகமிருக்க முடியுமா என்று கேட்கிறோம் ஆனால் இதற்கு சமாதானமாக “தினமணி” பத்திரிக்கை ஒரு அயோக்கியத்தனமான காரணம் காட்டுகிறது. அது என்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள ஆட்களை காங்கரசில் சேர்த்ததால் அவர்கள். காங்கரசுக்கு வந்தும் தங்கள் வழக்கப்படி லஞ்சம் வாங்கிவிட்டார்கள்'' என்று எழுதுகிறது. அப்பத்திரிகைக்குச் சிறிதாவது மானமோ, வெட்கமோ, புத்தியோ இருந்தால் இப்படி எழுதி இருக்காது. ஏனெனில் தோழர் கனம் ஆச்சாரியார் “எப்படிப்பட்ட அயோக்கியரானாலும் காங்கரசில் சேர்ந்து விட்டால் யோக்கியனாய்விடுவான்" என்றதற்கு இதுவா “தினமணியின்”
பதில் என்று கேட்கிறோம். அப்படிப்பட்டவர்களைக் காங்கரசில் காங்கரஸ். தலைவர்கள் ஏன் சேர்த்தார்கள்? அந்தக்காலத்தில் அவர்கள் புத்தி என்ன Bl வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சாப்பிடப் போயிருந்தது? என்று கேட்டால் இவர்கள் என்ன பதில் சொல்லக் கூடும்? நிற்க, இன்று காங்கரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரில் “தினமணி” ஆசிரியர் உள்பட எத்தனை பேர் “ஜஸ்டிஸ்” கட்சியில் ரகசியமாகவோ, வெளிப் படையாகவோ எச்சிலை பொறுக்காதவர் இருக்கக்கூடும்?
அப்படிப்பட்டவர்கள் பூராவும் இன்று ஜஸ்டிஸ் கட்சியை விட்டு காங்கரசுக்கு போய்விட்டதால் லஞ்ச ராஜ்யத்தை ஒழிக்க வேண்டியது காங்கரசின் உண்மையான கடமையாக இருக்குமானால் காங்கரசின் பேரால் ஸ்தல ஸ்தாபனத்தில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் அத்தனை பேரும் மரியாதையாய் விலகிக்கொண்டு வேறு ஒருவருக்கு இடம் கொடுப்பது தானே யோக்கியமாய் இருக்கும். ஆகவே இன்று காங்கரசில் லஞ்ச ராஜ்யம் நடப்பதும் லஞ்சப்பேய் தாண்டவமாடுவதும் காங்கரஸ் தலைவர்கள் மூலம் ஒப்புக்கொண்டாய் விட்டது. ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து காங்கரசுக்குப்போன தேசியவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். “தினமணி!” ஆசிரியரின் காலை நக்கி “இனிமேல் எங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொல்லப்போகிறார்களா? அல்லது புத்தி கற்பிக்கப் போகிறார்களா?
குடி அரசு - தலையங்கம் - 31.10.1937
குடி அரசு - 1937 (2)
ப 1 ப்
காந்தீயத்தின் தந்திரம்
ஒரு காரியம் ஆகவேண்டுமானால் எத்தகைய இழிவான செய்கை யையும் செய்ய ஆரியர்கள் புராணத்தில் இடம் கொடுத்து இருப்பது புராணமதக்காரர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமேயாகும்.
எவ்வளவு பித்தலாட்டம் வேண்டுமானாலும் செய்ய இடங்கொடுக்கும் அம்மதத்தில். உதாரணமாக பெண்களைவிட்டு மயக்கியும், பொய் சொல்லியும் பொய் வேஷங்கள் மாய் மாலங்கள் செய்தும், நீலிக்கண்ணீர். விட்டும்மக்களை ஏமாற்றி இருப்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் இருக்கின்றன. என்றாலும் இன்று அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கும் இம்மாதிரியான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றம், வஞ்சகம் ஆகியவைகளுக்கு புராணங்களை விட இன்று காந்தீயமே பிறப்பிடமாக ஆகிவிட்டது.
காந்தியார் சாதாரண முறையில் - நாணையத்தில் நியாயவாதத்தில் வெற்றி பெற முடியாத- சாதித்துக் கொள்ள முடியாத காரியங்களுக்கெல்லாம் சிறிதும் யோக்கியப் பொறுப்பை லக்ஷ்யம் செய்யாமல் வெறும் தந்திரத்திலேயே காரியங்களை சாதித்துக் கொண்டு வருகிறார்.
உதாரணமாக ஒரு தரம் காந்தியாரின் ஆசிரமத்திலேயே சில ஒழுக்க ஈனமான காரியங்கள் நடந்துவிட்டதை மறைக்க “6 நாள் பட்டினி விரதம்” என்னும் பேரால் பட்டினி கிடந்து மக்களை ஏமாற்றினார். மற்றொரு தரம் சிறையில் இருந்து வெளியாவதற்கு ஆக “ஹரிஜன சேவை செய்யத் தனக்குப் பூரண சவுகரியம் கொடுத்து யாரும் எப்போதும் வந்து சிறையில் தன்னைக் கண்டு பேச சவுகரியம் கொடுக்கா விட்டால் சாகும் வரை பட்டினி கிடப்பேன்” என்று சண்டித்தனம் செய்து வெளியாகிவிட்டார்.
மற்றொருதரம் ஆதிதிராவிட மக்களுக்கு சர்க்காரால் வழங்கப்
பட்ட தனித்தொகுதி சுதந்தரத்தைப் பாழக்குவதற்காக ''தனித் தொகுதி முறையைச் சர்க்கார் மாற்றினாலொழிய சாப்பிட மாட்டேன்” என்று பட்டினி கிடந்து ஆதிதிராவிடர்களை ஏமாற்றி வஞ்சித்து விட்டார்.
பின்னும் ஒரு தரம் குருவாயூர் கோவில் பிரவேசத்துக்கு பாமர மக்களிடம் கையெழுத்து வாங்கி காட்டுவதாக ஒப்புக்கொண்டு ஆட்களை விட்டும் தனது மனைவியாரை விட்டும் கோவில் பிரவேசத்துக்கு
233 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆதாரமான காரணம் சொல்லாமல் “கையெழுத்துப் போடாவிட்டால் காந்தியார் பட்டினி கிடந்து செத்துப் போவார்” என்று சொல்லியும் காந்தியார். மனைவியாரை தன் முன்தானையை விரித்துக் கொண்டு “மாங்கலிய பிச்சை கொடுங்கள்'' என்று கெஞ்சியும் அழுதும் கையெழுத்துப் பெறச் செய்தார்.
(இதையே சத்தியமூர்த்தியார் மனைவியாரும் காப்பியடித்து தேர்தலில் புருஷனுக்கு வெற்றியுண்டாக்கி வைத்தார்)
சமீபத்தில் கூட சென்னையில் ஹிந்திபிரசார சபையில் அதன் தலைவர் ஒரு பார்ப்பனர் சில பெண்களை கற்பழித்து கர்ப்பமாக்கி விட்டதற்கு ஆக காந்தியார் பட்டினி கிடப்பதாக சொல்லி அதையும் மறைத்தார்.
கடசியாக இப்போது பம்பாய் நரிமன் விஷயத்தில் பட்டேல் ஜி நடந்துகொண்ட விஷயம் நாற்றமாய் நாறி இந்தியா பூராவும் காங்கரசின் யோக்கியதை வெளியாய்விட்டதற்கு மெள்ள தந்திரமாக ஒரு கமிட்டி ஏற்படுத்தி அதில் சரியான விசாரணை ஒன்றும் இல்லாமல் தன் இஷ்டப்படி ஒரு தீர்ப்பும் நரிமனிடம் மன்னிப்பு வாங்க ஒரு மன்னிப்புக் கடிதமும் எழுதி காந்தியார் காயலாவாய் இருக்கிறார். இந்தத் தீர்ப்பை ஒப்புக் கொண்டு இந்த மன்னிப்புக் கடிதத்தில் கையெழுத்துப் போடாவிட்டால் காந்தியார் செத்துப் போவார் என்பதாக நரிமனுக்கு பேதிக்கு கொடுத்து மிரட்டி அவரிடம் கையெழுத்து வாங்கியாய் விட்டது.
நரிமன் சங்கதி புராணக்கதையில் உள்ள பத்மாசூரன் கதைபோல் ஆகிவிட்டது. ஆகவே காந்தீயத்தின் இம்மாதிரி பித்தலாட்டம் இனியும் என்ன என்ன செய்யப்போகிறதோ எத்தனை பேர் தலையில் கையை வைக்கப்போகிறதோ தெரியவில்லை. இதற்குத்தான் சத்தியமும், நீதியும் கொண்ட இயக்கம் என்று பேராம்! இவருக்குத்தான் சாந்தமூர்த்தி, சத்தியமூர்த்தி என்றும் பேராம்! எந்த சத்தியமூர்த்தியோ?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.10.1937
குடி அரசு- 1937 (2) 234
தமிழர்களும் தீபாவளியும்
தீபாவளி பண்டிகை என்பது ஆரியர்களின் புராணக் கதைகளில்
வரும் ஒரு குட்டிக் கதை. அக்கதையின் கருத்து “தேவர்கள் அசுரனைக்'' கொன்றதாகவும் அக்கொலையானது உலகத்துக்கு நன்மை பயக்கும் கொலையென்பதும் அதற்கு ஆக மக்கள் அந்த கொலை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்பதுமாகும். சாதாரணமாக தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது வரிசையாக விளக்குகள் வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயருள்ள பண்டிகையில் செய்யப்பட்டு வருகிறது. வட நாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப் படுகிறது. தீபாவளி பண்டிகை தினத்தை நரக சதுர்த்தசி என்றும் சொல்லு வதுண்டு. இதற்கு காரணம் நரகாசூரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்ட நாள் என்பதாகும். இந்தக் கதை விளக்கம் என்ன. வென்றால் அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழி நிலைக்கும் தமிழர்களின் முட்டாள் தனத்துக்கும் ஆதாரத்துக்கு ஆக அதையும் ஆரியர் புராணப்படியே சற்று சுருக்கமாக விளக்குவோம் அதாவது இரண்யாக்ஷன் என்னும் ராக்ஷஸன் ஒருவன் பூமியை பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனை சமுத்திரத்தில் இருந்து வெளியாக்கிப் பூமியை பிடுங்குவதற்கு ஆக பன்றி உருவமெடுத்து போய் ராக்ஷனைப் பிடித்து பாய்போல் சுருட்டப்பட்டிருந்த பூமியைப் பிடுங்கி விரித்து விட்டு விட்டாராம்
அந்த சமயத்தில் அந்த பன்றியை பூமாதேவி கலவி செய்ய விரும்பி கலந்தாளாம்.
அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான். நரகாசூரன் என்று பெயராம் இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம்
மற்றும் இவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம் தேவர்கள் விஷ்ணுவிடத்தில் முறையிட்டார்களாம்
விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் நரகாசூரனைக் கொன்றாராம்
235 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நரகாசூரன் விஷ்ணுவை தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டானாம். அதற்கு ஆக விஷ்ணு அந்த தினத்தை உலகம் கொண்டாடும்படி செய்தாராம்
இதுதான் தீபாவளியாம்.
தோழர்களே! ஆரியரின் கதை ஜோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக்கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில்
பூமியை ஒரு ராக்ஷதன் பாயாக சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான்.
சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது
சமுத்திரம் எதின்மேல் இருந்திருக்கும்?
கடவுளுக்கு சக்தி இருந்தால் பூமியையும் நரகாசூரனையும் “வா' என்று அழைத்தவுடன் வந்திருக்காதா?
அப்படித் தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவ உருவெடுக்காமல் மலம் சாப்பிடும் ஜீவ உர எடுப்பானேன்?
அந்த அழகை பார்த்து பூமி தேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாளென்றால் பூமி தேவியாகிய பாரதத்தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது. “நம்” பாரதத்தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லிக் கொள்ளுவது? அவளுடைய புத்திரர்கள். பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர் களாய் இருந்திருக்க வேண்டும்? பூமாதேவியும் சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின பாரததேவியும் அரபிக்கடலும் வங்காளக் குடாக்கடலும் தானா? இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இப்படி கொலை செய்யப்பட்ட நரகாசூரன் என்பவன் நமது தோழர்கள். முத்துரங்கம் ராமநாதன் முதலியவர்கள் போன்றார்களாய் இருந்திருந்தால் தானே கொலை செய்யப்பட்ட அவமானத்தை உலகம் கொண்டாட வேண்டு மென்று கேட்டுக் கொண்டிருப்பான்? இவற்றையெல்லாம் தமிழர்கள். பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளி பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள் தமிழர்களை, தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், சண்டையில் சிறைபிடித்த கைதிகள், அடிமைகள் என்றெல்லாம் இன்னம் என்ன என்னமோ சொல்லுவதில் உண்மை இருக்கிறது என்று தானே அருத்தமாகும்? அப்படித் தானே? அந்நிய மக்கள் நினைப்பார்கள். ஆகவே பாமர மக்களுக்கு புத்தி இல்லாவிட்டாலும் பார்ப்பன அடிமைகளான பல பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களுக்கு சுரணை
குடி அரசு - 1937 (2) 236
இல்லாவிட்டாலும் மற்ற தமிழ்ப் பண்டிதர்களும் தங்களை உண்மைத்
தமிழ் மக்கள் என்று கருதிக்கொண்டு இருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய் கவனித்துப்பார்த்து பண்டிகை கொண்டாடாமல் இருந்து மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா என்று கேட்கின்றோம்
ஹிந்தி ஆரிய பாஷை என்றும், ஆரியப் புராணங்களை தமிழர்களுக்கு படிப்பித்து ஆரிய கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டவே ஹிந்தியை கட்டாயமாய் ஆரியர்கள் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்ளுவது உண்மையானால் - அதற்கு ஆக தமிழ் மக்கள் அதிருப்தியும் மன வேதனையும் படுவது உண்மையானால் - தமிழ் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடுவார்களா?
- விடுதலை
குடி அரசு - மறுபிரசுரம் - 31.10.1937.
237 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பெரியசாமி பெரும்பிரிவு
தூத்துக்குடி தோழர் கெ.கெ.ஏ. பெரியசாமி அவர்களின் திடீர் மரணத்தைக் கேட்டு திடுக்குற்றோம். காலஞ் சென்ற தோழர் பெரியசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு எண்ணற்ற தொண்டு புரிந்தவர்; உண்மை உழைப்பாளி; ஏழைகளின் நண்பன்; சமதர்ம உணர்ச்சியுடையவர்; சமூகசிதிருத்தத்தில் அளவுகடந்த பற்றுடையவர். இத்தகைய உயர் குணங்களும் ஓயா உழைப்பும், தேயா ஊக்கமும் உடைய தோழர் பெரியசாமி அவர்கள் அகால மரணத்தைக் குறித்து மிகவும் வருந்துவதோடு அன்னார் குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்
குடி அரசு - இரங்கல் செய்தி - 31.10.1937
குடி அரசு - 1937 (2) 238
ஜவஹர்லாலும் சமஷ்டியும்
கல்கத்தாவில் வெத்திவேட்டு வீரரான தோழர் பண்டித ஜவஹர்லால் தலைமையில் கூடிய காங்கரஸ் காரியக் கமிட்டியில் 'சமஷ்டித் திட்டத்தை சாத்தியமான எல்லா வழிகளிலும் எதிர்ப்பதென்றும், தேசம் தனது அபிப்
பிராயத்தை அறிவித்திருந்தும் இத்திட்டத்தை ஆரம்பிக்க முயல்வது இந்திய மகாஜனங்களை அறை கூவியழைப்பதாக இருக்கிறதென்றும் எனவே அதைத் தடுக்க வேண்டிய மாகாண ஸ்தல காங்கரஸ் கமிட்டிகளும், மாகாண மந்திரிகளும் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் மற்றொரு காங்கரஸ் தலைவரான தோழர் சத்தியமூர்த்தியாரோ
“சமஷ்டித் திட்டமானது எந்தவிதமான கெடுதியுடையதானாலும் அதை ஏற்று நடத்தவேண்டும்”
என்று கூறுகிறார். இதில் யாருடைய வார்த்தை நிறைவேறுமென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் வார்த்தை தான் நிறைவேறும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் முன்பு பதவி ஏற்புப் பிரச்சினை வந்தபோது தோழர் ஜவஹர்லால் அவர்கள் “என் உயிர் போகும்வரை பதவி ஏற்பதை எதிர்த்தே தீர்வேன்” என்றார்.
ஆனால் தோழர் சத்தியமூர்த்தியாரோ
“என் உயிர் போகும் வரை பதவி ஏற்க வேண்டும் என்று வாதாடியே தீர்வேன்" என்று கூறினார். அதன்படியே பதவி ஏற்றுமாகிவிட்டது. ஆனால் தோழர் ஜவஹர்லால் உயிர் இன்னும் இருந்து கொண்டுதானிருக்கிறது
அதுபோலவே இந்த சமஷ்டி விஷயத்திலும் தோழர் சத்திய மூர்த்தியாரே வெற்றி பெறுவார் என்பது நிச்சயம்
ஆனால் தோழர் ஜவஹர்லாலோ எதையும் சிறுபிள்ளைதனமாக உளறிவிட்டு தோல்வியடைவார் என்பது உலகறிந்த விஷயம்.
குடி அரசு - கட்டுரை - 31.10.1937
239 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கார்ப்பரேஷனில் பார்ப்பனத் தொல்லை
பார்ப்பனர்கள் சென்னை கார்ப்பரேஷனைக் கைப்பற்றி அதை ஒரு முழு அக்கிரகாரமாக்குவதற்கு ஆகவென்றே காங்கரசின் பேரால் “லஞ்ச ராஜ்யத்தையும் கண்ட்றாக்ட் ராஜ்யத்தையும் வகுப்புவாதத்தையும் ஒழிக்க வேண்டும்” என்றும் ஜஸ்டிஸ் கட்சி அடியோடு இம் மூன்றிலும் மூழ்கிக்கிடக் கின்றதென்றும் ஜஸ்டிஸ் கட்சியை ஆயிரம் கெஜ ஆழத்தில் புதைத்து விட்டு ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்றிவிட்டால் தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்கப் பட்டுவிடும் என்றும் பேசி பார்ப்பனரல்லாத கூலிகளை விட்டே பிரசாரமும் செய்து ஒரு பெரிய அளவுக்கு ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்றினார்கள். என்பதும் மற்றும் அரசியல் ஆதிக்கத்தையும் அதே முறையில் கைப்பற்றினார்கள் என்பதும் யாவரும் அறிந்ததாகும்
பிறகு நடந்தது என்ன என்று பார்ப்போமானால் ஜஸ்டிஸ் கட்சியில் கூட இல்லாத அளவுக்கு வகுப்புவாதம் ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியல் ஸ்தானங்களிலும் தாண்டவமாட ஆரம்பித்துவிட்டதுடன் லஞ்சப் பேயும், கண்ட்றாக்டு ராஜ்யமும், காங்கரஸ்காரர்கள் 100-க்கு 90 - பங்கு ஆதிக்கமுடைய ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியலிலும் தாண்டவமாட ஆரம்பித்து விட்டதாக காங்கரஸ்காரர்களே ஒப்பாரி இட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். இவற்றிற்கு அதாவது லஞ்சப் பேய்க்கும், வகுப்பு
வாதத்திற்கும் தமிழ்நாட்டில் தலை சிறந்து விளங்கும் இரண்டு நகர ஸ்தல ஸ்தாபனங்களின் நடத்தையைப் பார்த்தாலே நன்றாய் விளங்கும். அவை எவை எனில் சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் சபையும்,
திருச்சி ஜில்லா போர்டு சபையும் ஆகும்
கார்ப்பரேஷனில் வகுப்புவாதம்
சென்னை கார்ப்பரேஷனில் வகுப்புவாதமானது காங்கரஸ்காரர்களே ஒருவருக்கொருவர் “உதை'' போட்டுக்கொள்ளும் படியான அளவுக்கு முற்றிவிட்டது. அவ்வகுப்புவாதமேதான் இப்போது காங்கரசின் லஞ்ச ராஜ்யத்தையும், கண்டிராக்டு ராஜ்ஜியத்தையும் புட்டுப்புட்டு காண்பித்து வருகிறது. கார்ப்பரேஷனில் காங்கரசு லஞ்ச ராஜ்ஜியமும், கண்டிராக்டு ராஜ்யமும் வகுப்புவாதமும் நடக்கிறது என்பதை காங்கரஸ் தலைவர்களே ஒப்புக்கொண்டு அவற்றை விசாரிக்க கமிட்டியும் ஏற்படுத்தி சபதங்களும் கூறப்பட்டு விட்டதால் அவற்றை ருஜுப்பிக்க நாம் முயற்சிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது.
குடி அரசு- 1937 (2) 240
ஆனால் அதில் இருக்கும் தகராறு என்னவென்றால் லஞ்சமும், கண்டிராக்டும் வகுப்பு வாதமும் காங்கரஸ் பார்ப்பனர்களாலா? அல்லது காங்கரஸ் பார்ப்பனரல்லாதார்களாலா? என்பதுதான். இப்பொழுது காங்கரஸ் தலைவர்களான பார்ப்பனர்களும் காங்கரஸ் பத்திரிகைகளான பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அவர்களது கூலிப்பத்திரிக்கைகளும் “காங்கரசைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதார்களாலேயே இந்த மோசங்கள் நடக்கின்றன - நடந்திருக்கின்றன'' என்று கூறி இனி நடக்காமல் இருக்கத்தக்க ஏற்பாடு செய்ய கமிட்டி நியமித்து இருக்கிறார்கள். அக்கமிட்டி விசாரணை மிக மிக ரகசியமாய் நடக்குமாம். ஆதலால் யார் வேண்டுமானாலும் வந்து
யார் யார் லஞ்சம் வாங்கினார்கள் என்று தாராளமாய்ச் சொல்லலாம் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்
ரகசிய விசாரணை ஏன்?
கார்ப்பரேஷன் மெம்பர்கள் லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றமாகும். அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டால் அவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் அது தவறு என்று வழக்குத் தொடர பாத்தியமுண்டு. அப்படியில்லாமல் ஏதோ நான்கு பேரை சாட்சி கேட்டு ரகசிய வாக்குமூலம் வாங்கி காங்கரஸ் கட்சி ஸ்தாபனம் மூலம் நடவடிக்கை
நடத்தி முடிவு செய்து விடமுடியும் என்றால் வேறு ஏதாவது ஒரு பொதுநல சங்கத்தார் மந்திரிகளையும், காரியதரிசிகளையும் கூட இதே மாதிரி
குற்றம் சாட்டி அவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டும் அல்லது லஞ்சத்துக்கு சமானமான பிரதி பிரயோஜனத்தை அடைந்து கொண்டும் மற்ற மந்திரி களையும், காரியதரிசிகளையும் நியமித்தார்கள் என்றும் தனித்தனியாக சில மந்திரிகள் இன்ன காரியங்களில் லஞ்சமும் சுயநல பிரதிப் பிரயோஜனமும் பெற்றார்கள் என்றும் ஒரு காலியை விட்டு கூப்பாடு போடச் செய்தும் ஒரு கூலிப்பத்திரிகையை விட்டு எழுதச்செய்தும் அதன் மீது ஒரு கமிட்டியை நியமித்து ரகசிய விசாரணை செய்து லஞ்சம் வாங்கியது ருஜுவாய் விட்டதென்றும் இம்மந்திரிகளும், காரியதரிசிகளும் ராஜிநாமாச் செய்து விட வேண்டியது என்றும் முடிவு கூறினால் அது குற்றமாகுமா? என்று கேட்கின்றோம்.
குற்றமாகாதென்றால் இன்றைய முதல் மந்திரி முதல் கடைசி மந்திரிவரை அவர்களது காரியதரிசிகள்வரை அனைவர் பேரிலும் இம்மாதிரி
குற்றம் சாட்டி வண்டி வண்டியாய் தீர்ப்புக் கூறிவிடலாம். கட்டுப்பாடு,
ரகசியம், நியாய விசாரணை என்பவைகளுக்கு ஒரு எல்லையுண்டு. தங்கள் சுயநலத்துக்கும் சூழ்ச்சிக்கும் குரோத புத்திக்கும் வஞ்சகத் தன்மைக்கும் இம்மாதிரியாக கட்டுப்பாடும் ரகசிய நியாய விசாரணையும் உபயோகப்படுத்தப்படுமானால் இதைக் கொடுங்கோன்மை அல்லது கையில் வலுத்தவனது சர்வாதிகாரத்தன்மை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? U வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
முச்சூடும் லஞ்சமா?
கார்ப்பரேஷன், டெண்டர் கமிட்டியும், புஸ்தகக் கமிட்டியும்
மற்றும் பல சப்கமிட்டியும் லஞ்சம் வாங்கியிருக்கிறது என்று காங்கரஸ் தலைவர்களாலும் காங்கரஸ் பத்திரிகைகளாலும் ஒரு முகமாகக் கூறப்படுகின்றன. இந்த லஞ்சங்களைப் பற்றி எப்போது விசாரணை செய்வது? மெம்பர்களின் காலாவதி ஆன பின்பா அல்லது லஞ்சம் தெரிந்த உடனேயா? தவிரவும் தலைமை நிர்வாகத்திலேயே வகுப்புவாதம் வெளிப்படையாய் ஏற்பட்டபின்பு விசாரணைக் கமிட்டி மூலமோ அல்லது மேல்சர்க்கார் மூலமோ நியாயம் கிடைக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
இவை இங்ஙனமிருக்க உத்தியோக நியமன விஷயங்களிலும் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கிடைத்துவிட்டது என்ற சமயங்களில் இம்மாதிரியான கூச்சல்களைப் போட்டு உத்தியோக நியமனத்துக்கும் லஞ்சத்துக்கும் சம்மந்தமேற்படுத்துவது யோக்கியமான காரியமாகுமா? என்பதோடு இப்படிச் செய்வதை விட வகுப்புவாதத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்றும் கேட்கிறோம். இப்படி ஏன் சொல்லுகிறோம் என்றால்,
கல்வியதிகாமி நியமனம்
சமீபத்தில் கார்ப்பரேஷனில் நடந்த உத்தியோக தேர்தலானது அதாவது கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி நியமன தேர்தலானது வகுப்புவாதத்தை வெட்ட வெளிச்சமாக காட்டும்படியாக நடந்திருக்கிறது.
எப்படிஎனில் அவ்வுத்தியோகத்துக்கு எலக்ஷனில் ஒரு பார்ப் பனருடைய பெயரும் ஒரு பார்ப்பனரல்லாதாருடைய பெயருமே முடிவாக யோசனைக்கு வந்திருக்கிறது. அதில் பார்ப்பனக் கவுன்சிலர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கும் பார்ப்பன அல்லாத கவுன்சிலர்கள் அநேகமாக எல்லோரும் பார்ப்பனரல்லாதாருக்குமே ஓட்டு செய்திருக்கிறார்கள். என்றுதான் சொல்லவேண்டும். அதாவது கார்ப்பரேஷன் மெம்பர்கள் 65
பேர்களில் சுமார் 13 அல்லது 14 பேர்களே பார்ப்பனர்கள். அவற்றுள். பார்ப்பன அபேக்ஷகராகிய தோழர் ராஜகோபாலய்யர் என்பவருக்கு 13 ஓட்டுகள் கிடைத்திருக்கின்றன. இதில் ஏதாவது ஒன்று இரண்டு தோழர்கள் தாவுத்ஷா, பக்தவத்சலம் போன்ற பார்ப்பனரல்லாதார்.
ஓட்டுகள் இருந்தாலும் இருக்கலாமென்றாலும் எல்லா பார்ப்பனர்களும் ஷி பார்ப்பன அய்யருக்கே ஓட்டு செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமிருக்காது. தோழர் சிவசைலம் பிள்ளை என்கின்ற பார்ப்பனரல்லாருக்கு கிடைத்த 30 ஓட்டும் கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதார்களுடைய ஓட்டுக்களே. என்பதிலும் கடுகளவு சந்தேகம் கூட இருப்பதற்கு இடமில்லை.
குடி அரசு- 1937 (2) 24
ட்
ஆகவே கார்ப்பரேஷனில் வகுப்பு வாதம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ௬ஜு வேண்டும்? அன்றியும் தோழர் கே.பாஷ்யம் அய்யங்கார் என்பவர் கார்ப்பரேஷனில் காங்கரஸ் கட்சிக்குத் தலைவர். காங்கரஸ் கட்சியில் தோழர் சிவசைலம் பிள்ளைக்கு ஆதரவு கிடைத்துவிட்டது என்று தெரிந்த உடன் கார்ப்பரேஷன் மீட்டிங்கில் வந்து முறைப்படி தோழர் பிள்ளையை பிரேரேபிக்க வேண்டிய விதியில் இருந்து தப்பித்துக் கொள்ளவே கார்ப்பரேஷன் மீட்டிங்கு அன்று மறைந்து கொண்டிருக்கிறார். இதுவும் மேல் கண்ட வகுப்புவாதத்தை உறுதிப்படுத்துகிறது.
இவ்வளவும் அல்லாமல் தோழர் பிள்ளை அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டவுடன் லஞ்சக் கூப்பாடும் ராஜிநாமா நாடகங்களும் நடிக்கப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது இதை வகுப்புவாத பார்ப்பன சூழ்ச்சி என்று அல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.
பாஷ்யம் ஓஸ்தியா?
உண்மையில் சென்னை கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சிக்கு யோக்கியமாகவும் நாணயமாகவும் பார்த்தால் தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியாரே தலைவராக இருந்திருக்க வேண்டியது கிரமமாகும். ஏன் எனில் அவர் மேயராக இருந்த அனுபவமும் கவுரவமும் உடையவர். மற்றும் தோழர் பாஷ்யம் அய்யங்காருக்கு முன் இருந்தே காங்கரஸ் கட்சி பிரமுகராக கார்ப்பரேஷனில் இருந்து வந்திருப்பவர்.
காங்கரஸ் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாத கார்ப்பரேஷன் மெம்பர்களுக்கு சிறிது அளவு சுயமரியாதை உணர்ச்சி இருந்திருந்தாலும் தோழர் சாமி வெங்கடாசலத்தையே தலைவராக்கியிருப்பார்கள். ஆனால் பார்ப்பனர்கள் காங்கரசின் பேரால் எந்த ஸ்தானங்களுக்கு பார்ப்பனரல்லாதாரை தெரிந்தெடுப்பதற்கு வைத்திருக்கும் குறைந்த பக்ஷ யோக்கியதையே அடியோடு மானம், ஈனம், சுதந்தரம், சொந்தப்புத்தி முதலியவைகளை முற்றும் துறந்தவர்களையே தெரிந்தெடுப்பது என்று கண்டிப்பாக வைத்திருப்பதால் இந்த யோக்கியதாம்சமில்லாத பார்ப்பனரல்லாத மெம்பர்களுக்கு காங்கரசின் பேரால் பதவிக்கு இடமோ காங்கரசில் ஓட்டுள்ள 4 அணா மெம்பருக்கு இடமோ அறவே இல்லாமல் போகின்றது. அதனாலேயே சாமி வெங்கிடாசலம் போன்றவர்களும் மின்சாரக் கைபோல் பட்டன் அழுத்தினவுடன் கை தூக்க மாத்திரம் பயன்படுத்தப் படுகிறார்கள். அவ்வளவு மாத்திரமா என்றால் பார்ப்பனர்கள், தங்கள் இஷ்டப்படி கை தூக்கப்படவில்லை என்று தெரிந்தவுடன் அவர் எப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார் ஆனாலும் உடனே லஞ்சம் வாங்கினார், கட்டுப்பாட்டை மீறினார், கக9ிக்கு துரோகம் செய்தார் என்கின்றதான குற்றச்சாட்டுக்கு ஆளாகி இரகசிய விசாரணைக் கமிட்டிக்கு
முன்னால் நிற்கவோ அல்லது அதுகூட இல்லாமல் நாடு கடத்தும் அடக்கு U ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
முறைக்கு ஆளாகவோ வேண்டியவராக ஆகிவிடுகிறார்கள். இன்று கார்ப்பரேஷனில் பார்ப்பனரல்லாத மெம்பர்கள் 50 பேர் இருந்தும் ஒரு
அய்யங்கார் பார்ப்பனர் தலைவராகவும் மற்றொரு அய்யங்கார் பார்ப்பனர்: காரியதரிசியாகவும் இருக்கிறார்கள் என்றால் பார்ப்பனரல்லா தாருக்கு தன்மானமோசமூக உணர்ச்சியோ இருக்கின்றது என்று எப்படி சொல்லமுடியும்?
அல்லாதரெல்லாம் அவிசாமிகளா?
ஒரு உத்தியோக தேர்தலில் 13 ஓட்டுக்கு எதிராக ஒருவருக்கு 30 ஓட்டு கிடைத்தது. பதின்மூன்று ஓட்டு பெரிதும் பார்ப்பனருடையது என்றும் 30 ஓட்டும் முழுதும் பார்ப்பனரல்லாதாருடையது என்றும் பட்டாங்கமாய் பட்டப் பகல் போல் தெரிந்த பிறகும் 100க்கு 75 விகிதம் ஓட்டுப் பெற்றவரை அவர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்கு ஆக “லஞ்சம் கொடுத்துத் தெரிந்தெடுக்கப்பட்டார்" என்றும் 100க்கு 75 பங்கு மெஜாரிட்டி கட்சியை லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுச் செய்த கட்சி என்றும் பார்ப்பனர்கள் சொல்லத் துணிவார்களானால் இனி யாருடைய பெண்டு பிள்ளைகளுக்குத்தான் என்ன பந்தோபஸ்து என்று கேட்கிறோம். தனக்கு இணங்காத பெண்களைப் பார்த்து அவர்கள் எப்படிப் பட்டவர்களானாலும் யாருடைய மனைவி மக்களானாலும், தாங்கள் தங்கள் இஷ்டப்படி சொல்லி விசாரிக்க ரகசிய விசாரணைக் கமிட்டி கூட நியமித்துவிட பயப்படுவார்களா என்று கருதவேண்டி இருக்கிறது
பார்ப்பனரல்லாதார் மீது பார்ப்பனர் லஞ்சக் குற்றம் சாட்டுவதைப்
பற்றி நமக்கு அதிக கவலை இல்லை. ஆனால் ஒரு தகுதியுள்ள, யோக்கியமான
- எதிரிகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு கண்ணியவானின் தேர்தல் நடந்த உடன் அவர் பார்ப்பனரல்லாதார் என்பதற்கு ஆக குறிப்பாய் அத்தேர்தலை மாத்திரமல்லாமல் அக்கண்ணியவானின் நடத்தையையும் பிற்கால வாழ்க்கையையும் பாதிக்கும்படியான ஒரு பெரிய அபாண்டத்தைக் கொண்டு வந்து போடுவதானால் இதை எப்படி மக்கள் சகித்துக்கொண்டு இருக்க முடியும் என்பதே நமது முக்கிய கவலையாகும். தோழர் சிவசைலம் பிள்ளை கறுப்பா சிவப்பா என்று நாம் நேரில் பார்த்தது கிடையாது. பார்ப்பனப் பத்திரிகைகளும் காங்கரஸ் பிரமுகர்களும் அவரது தகுதியைப் பற்றி அனுகூலமாயச் சொல்லுவதைக்கொண்டே அவரைபற்றி குறிப்பிடுகிறோம். ஆனால் அவர் தோழர் சி.டி. நாயகம் அவர்களது மாப்பிள்ளையாம். இதையும் பத்திரிகைகள் மூலமேதான் பார்த்தோம். இந்தக் காரணத்தைக் கொண்டே அதாவது தோழர் சி.டி.நாயகம் அவர்களது மாப்பிள்ளை என்பதற்கு ஆகவே பார்ப்பனர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் லஞ்சப் புரளி கிளப்பினார்கள் என்றும் பச்சையாய் பொருள் பட பார்ப்பனப் பத்திரிகையாகிய “ஆனந்த விகட”னே எழுதுகிறது. ஆகவே பார்ப்பனர்களின் வகுப்பு வாதத்துக்கும் சமயம் நேர்ந்தால் எதையும் செய்யத் துணிவார்கள் என்பதற்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும்
குடி அரசு- 1937 (2) 244
என்று கேட்பதோடு தோழர் சிவசைலம் பிள்ளைக்கு கல்வி அதிகாரி வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி லக்ஷ்யம் செய்யாமல் கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாத மெம்பர்கள். தங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை காட்டிக் கொள்ள கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சி தலைவர் பதவி தோழர் பாஷ்யத்துக்கு இருப்பதை ஒழித்து கிரமமாக தலைவர் ஆகவேண்டியவராகிய தோழர் சாமி வெங்கடாசலத்தை தலைவராக்க மூன் வருவார்களா என்று கேட்கிறோம்.
திருச்சி போர்டு
ந்த மோசம் இப்ப க்க இனி ச்சி ஜில்லா போர்டில் நத டி இரு O 3 டி காங்கரஸ் கட்சி பார்ப்பனர்கள் நடந்து கொண்ட யோக்கியதையை பார்ப்போம். தோழர் தேவருக்கு வீரம் உண்டு என்பதில் நாம் தகராறுக்கு வரவில்லை. அதனாலேயே ஒருவருக்கு புத்தி வேண்டியதில்லை என்று சொல்லிவிட முடியாது. திருச்சியில் காங்கரஸ் கூப்பாடு வெளியில் தெரிவதற்கு தோழர் தேவரே காரணஸ்தராவார். தோழர்கள் டாக்டர்கள் டி.எஸ்.எஸ்.ராஜனோ, சாஸ்திரியோ, எப்.ஜி.நடேசய்யரோ, ஆலாசியமோ மற்றும் எந்த அய்யரோ தெருவில் நின்று ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பேச நாக்கை சன்னை போட்டு
தூக்கிக் கொடுத்தவர் தேவரேயாகும். இந்தக்கூட்டமே இன்று தேவருக்கு 500085 ஆழக்குழி தோண்டிவிட்டது. 'வாய்த்தவிடும் போய் அடுப்பு நெருப்பும் அணைந்து போய் பட்டினி கிடக்க வேண்டியதாயிற்று” என்று ஒரு பழமொழி உண்டு. அது போல் தேவருக்கு ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனரல்லாத சமூகத்தில் மதிப்புக் குறைந்து விட்டதுடன் பார்ப் பனர்களும் அவரைக் குழியில் தள்ளிவிட்டு இனி மேலே மண்ணைப் போட்டு மூட வேண்டியதை மாத்திரம் பாக்கி வைத்திருக்கிறார்கள். முனிசிபல்
தேர்தலில் தேவர் மனதார அக்கிரமமாக வேண்டுமென்றே ஒரு தனிப்பட்ட பார்ப்பனரின் சொந்த குரோதத்துக்கு ஆக பார்ப்பனர்களால் தோல்வி
அடையச் செய்யப்பட்டார்.
தேவர் கதி.
பிறகு தேவருக்கு மந்திரி வேலையிலும் காரியதரிசி வேலையிலும் நாமம் சாத்திவிட்டதோடு நில்லாமல் மேலும் தேவரை கடுமையான அவமானப்படுத்தும் பொருட்டே தேவருக்கு துரோகம் செய்தவருக்கு மந்திரி வேலை கொடுக்கப்பட்டது. இவ்வளவோடாவது அவரை விட்டு விடாமல் திருச்சி ஜில்லா போர்டுகளை தேவரை ஒழிக்கும் பொருட்டே ஒன்று சேர்க்க நினைத்து தேவருடைய போர்டு வேறு போர்டுடன் சேர்க்கப் பட யோசனை செய்யப்பட்டது. பிறகு எப்படியும் தேவருக்கு சான்சில்லாமல் செய்து விட்டு 2 போர்டும் ஒன்றாக்கப்பட்டது என்று பெயர் கொடுத்து தேவரை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி காங்கரசில் இல்லாதவருக்கு பார்ப்பனர் சதியாலோசனையாலே பிரசிடெண்டு பதவி அளிக்கப்பட்டு
248 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
விட்டது. உண்மையில் திருச்சி ஜில்லாபோர்டுக்கு பார்ப்பனர்கள் வகுப்புவாத உணர்ச்சியில்லாமல் ஒரு காங்கரஸ் பிரசிடெண்டை கொண்டு வர முயற்சி செய்திருந்தால் கண்டிப்பாக எதிர்ப்பில்லாமலே காங்கரஸ் பிரசி பெண்டு வந்திருக்கலாம். திருச்சி பார்ப்பன மெம்பர்களும் பார்ப்பன மந்திரியும் தங்களுடைய ஒரு கண்ணைக்குத்திக் கொண்டாவது எதிரியின் இரண்டு கண்களையும் தொலைத்துவிட வேண்டுமென்று கருதியே “காங்கரசுக்கு தோல்வி ஏற்பட்டாலும் சரி, தேவர்மாத்திரம் பதவிக்கு வரக்கூடாது” என்ற நினைப்பில் தேவரை ஒழித்துவிட்டார்கள். ஆகவே இப்போது திருச்சியானது கோயமுத்தூருக்கு அண்ணன் ஆகிவிட்டது
பார்ப்பனர் தந்திரம்
ஆனால் தோழர்கள் தேவரையும் ராமலிங்க செட்டியாரையும் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு வையவேண்டுமோ அவ்வளவுக்கு மேலாகவே வையும்படி செய்து பார்ப்பனர்கள் தங்கள் காரியத்தை
சாதித்துக் கொண்டார்கள். பதவிகள் வரும்போதெல்லாம் தகுதியை அடியோடு. மறந்து பார்ப்பனர்கள் தங்கள் அடிமைகளையே ஆதரிப்பதோடு தகுதி உடையவர்களை குழியில் தள்ளவும் துணிந்துவிடுகிறார்கள். இவ்விஷயங் களில் கோவை திருச்சி மாத்திரமல்லாமல் சேலமும் இக்கதிக்கே ஆளாகி விட்டது. ஏன்? சேலத்தை இதைவிட மோசம் என்றே சொல்லலாம். தோழர் தேவரிடமாவது நல்ல நடத்தைக்கு ஜாமீன் வாங்கி வைத்திருக்கிறார்கள். தோழர் ராமலிங்க செட்டியாரையாவது நம்பிக்கையற்றவர் என்று கண்டனம் செய்து வைத்து இருக்கிறார்கள். சேலம் தோழர் வெங்கட்டப்ப செட்டியார் விஷயத்திலோ அவரது மகனை டிஸ்மிஸ் செய்துவிட்டு அவரை சர்வீஸஸ். டிஸ்பென்ஸ்டுவித் அதாவது வேலைக்கு வேண்டியதில்லை என்று முடிவு கட்டிவிட்டார்கள்.
மற்ற ஜில்லாக்களைப் பொறுத்தவரையிலும் ஏறக்குறைய இப்படியே செய்துவிட்டார்கள். உதாரணமாக திருநெல்வேலியில் இன்று இரண்டு கிறிஸ்தவர்கள் விஷமில்லாத தண்ணீர் பாம்பு மாதிரி ஆக்கப்பட்டு விட்டார்கள். ஒரு முஸ்லீமையும் பைத்தியக்காரராக்கி விட்டார்கள். மேடை முதலியார்கள் இனி மேடையிலேயே இருக்க வேண்டியதுதான். ராமநாதபுரம், மதுரை இரண்டும் அழுவாரற்ற பிணமாய் இருந்து வருகிறது. என்ன செய்தாலும் ஏன் என்று கேட்க ஆட்கள் இல்லை
பல்போன பாம்பு
தஞ்சைக்கு தோழர் நாடிமுத்து தான் ஜில்லா தலைவர். அவர் கீறக்கூடிய பாம்பு என்று சொல்லிக்கொண்டாலும் பல்லுகள் பூராவும் பிடுங்கப்பட்டு விட்டால் என்னதான் சீறிச்சீறி பார்த்தாலும் யார் லக்ஷ்யம் செய்வார்கள். தென் ஆற்காட்டில் ஒரு ரெட்டியார் தலைவர் பட்டம்
குடி அரசு- 1937 (2) 246
விட்டதோடு சரி. வடஆற்காடு அனாமதேய ஜில்லாவாக ஆகிவிட்டது திருவண்ணாமலை ஜில்லாபோர்டு காங்கரஸ் பிரசிடெண்டும் தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால் தண்டனை சரியான படி நிறைவேற்றப் படவில்லை: செங்கல்பட்டாரோ போட்டி போட்டுக்கொண்டு பார்ப்பனர்கள் காலடியில் விழவேண்டிய தலைவர்களாக ஆகிவிட்டார்கள். சென்னையின் கதியை ஆதியிலேயே விளக்கிவிட்டோம். ஆகவே காங்கரசில் வகுப்புவாதம் இருக்கிறது என்பதற்கும் காங்கரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் சுதந்தரத்தோடும் சுயமரியாதை யோடும் நடத்தப்படவில்லை என்பதற்கும் உத்தியோக விஷயங்களில் பார்ப்பனர்கள் யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை என்பதற்கும் இவற்றைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம்
காங்கரசிலுள்ள பார்ப்பனரல்லாதாரைப் பார்த்து நாம் ஒன்று கேட்கிறோம். அதாவது தோழர்களே! நீங்கள் பார்ப்பனரல்லாதார். சமூகத்துக்கு ஏதும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சியுங்கள் என்பதுதான்.
காங்கரஸ் மெஜாரிட்டியைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்பதாக
தெரிகிறது. மெஜாரிட்டியென்றால் அவர்கள் யார் அவர்களது யோக்கியதை என்ன அவர்களது பெருமையும் லக்ஷ்யமும் ஆகியவை என்ன? இவற்றை யோசித்துப் பாருங்கள்.
வெளியூருக்காரன் ஒருவன் வந்து தோழர் கனம் ஆச்சாரியாரைப் பார்த்து “உங்கள் காங்கரசில் பார்ப்பனரல்லாதாரோ முஸ்லீம்களோ இருக்கிறார்களா?” என்று கேட்டால் ஆச்சாரியார் ஆம் என்று யாரை சொல்லுவார்? தேவர், ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர், நாடிமுத்துபிள்ளை, வெங்கிடாசலஞ் செட்டியார், டாக்டர் சுப்பராயன், சாமி வெங்கடாசலம், ஜமால் முகமது... என்று இந்த பெயர்களை சொல்லுவாரா? அல்லது தோழர்கள் அண்ணாமலை, குப்புசாமி, உபயதுல்லா, சுப்பையா, முத்துசாமி கந்தசாமி, சுப்பரமணியம் என்றுஇவர்கள் பெயர்களை சொல்லுவாரா? ஆகவே உங்களுக்கு தன்மதிப்பு இருக்குமானால் காங்கரசை விட்டு விலகி அவசியமானால் உங்கள் பதவிகளை ராஜிநாமா செய்து ஒரு 6 மாத காலத்துக்கு மெளனமாக இருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 07.11.1937
U ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எது பொய்?
*நவசக்தி?*க்கு மாணம் போகிறதாம்
நவம்பர் 5ந் தேதி “நவசக்தி” பத்திரிகை “மானம் போகிறதே''
என்று தலைப்புக் கொடுத்து ஒரு உப தலையங்கம் எழுதி இருக்கிறது.
அதில் “இந்து” பத்திரிகையில் அர்கோவிந்து என்பவர் எழுதிய கட்டுரையின்
ஒரு பகுதியை எடுத்துப் போட்டு அழுகின்றது.
அந்தக் கட்டுரைப் பகுதியில் கிறிஸ்தவப் பாதிரியான லாண்டே என்பவர் தென் இந்தியாவுக்கு வந்துபோன பிறகு “பரிசுத்த இந்தியா” என்ற பெயர் கொடுத்து ஒரு புத்தகம் எழுதி இருப்பதாயும் பின்னர். அப்புத்தக விஷயங்கள் சினிமாப்படமாக எடுக்கப்பட்டு அப்படம் இன்று ஐரோப்பாவில் பிரான்ஸ் முதலிய இடங்களில் காட்டப்படுவதாகவும் இனி அது அமெரிக்காவுக்கும் போகுமென்றும் எழுதப்பட்டிருக்கிறதாம்.
அப்புத்தகத்தில் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் விஷயம் இந்தியாவில் வகுப்புவாத பூசல் தாண்டவமாடுகிறது. இந்தியர்களில் ஆதிதிராவிடர் என்கின்ற வகுப்பார் மிருகங்களிலும் கேவலமாக மதிக்கப் படுகிறார்கள். ஒரு பக்கிரி (பிச்சைக்காரன்) அரை நிர்வாணத்தோடு
தெருவில் விழுந்து புரளுகிறான். மற்றொருவன் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து ஆடுகிறான்.
ஒரு இளம் பெண் காஷ்டத்தில் கிடத்தப்பட்டு இருக்கிறாள்.
பக்கத்தில் எருமுட்டைகளும் விறகும் கிடக்கின்றன. அதன் அருகில்
காகம் கழுகு வட்டமிட்டுத் திரிகின்றன". கும்பகோணம் மகாமகக் காட்சி, இது 144 வருடங்களுக்கு ஒரு முறை நடப்பதாகவும் அது சமயம் இந்துக்கள் தங்கள் பாவம் தொலைவதற்கு ஆக சேற்றுக்குட்டையில். மூழ்குகின்றதாகவும் இருக்கின்றன. இதையும் இது போன்றவைகளையும் சினிமா படத்தில் காட்டுகிறார்களாம். இதற்காக நவசக்திக்கு மானம் போகிறதாம். இதில் எது பொய் என்று நாம் கேட்கின்றோம் இந்தியாவில் வகுப்பு பூசல்கள் என்று நவசக்தி தலைப்புக் கொடுத்து வண்டி வண்டியாய் எழுதிவரவில்லையா? சரணாகதி மந்திரி ஆட்சியில் இன்று எங்கும் நடப்பதென்ன? “இந்தியத் தாயின் அருந்தவப் புதல்வர் களை விலங்கினும் கடையராய் மதிப்பது கொடியது கொடியது'' என்று
குடி அரசு - 1937 (2) 248
நவசக்தியிலே பல்லாயிரம் தடவை எழுதி வரவில்லையா? அலகு குத்தி காவடி எடுத்தாடக் கூடாதென்று தென் இந்தியாவில் அரசாங்கத்தார். 144 போட்டுத் தடுக்கவில்லையா? தடுத்தும் இனியும் அலகு “பிரார்த்தனை” நடைபெற்று வரவில்லையா?
பெண்ணானாலும் ஆணானாலும் இறந்து போனால் இந்தியாவில் காஷ்டத்தில் வைப்பதில்லையா? கழுகு பருந்து வட்டமிடுவதில்லையா? உயிருடனும் கொளுத்தப்பட்டதாக ருஜுவில்லையா? அடிக்கடி “உடன்கட்டை” “உடன்கட்டை” என்று இந்திய பத்திரிகைகளில் சேதி வருவதில்லையா? கும்பகோணம் மாமாங்க விஷயமாய் நவசக்தி ஆசிரியரே புராணப்பிரசங்கம் செய்ததில்லையா? மாமாங்க குளத்தில் மக்கள் குளிப்பதில்லையா? அது வடிகட்டின தண்ணீரா?
முனிசிபல் அதிகாரிகள் அக்குளத்தில் தண்ணீர் பூராவையும் இறைத்துவிட்டு சேற்றில் குளித்துத் தொலையுங்கள் என்று விட்டு விடுவதில்லையா? இதனால் பார்ப்பானும் ரயிலானும் பிழைப்பதைத்
தவிர அழுக்கும் சேற்று நாற்றமும் பெருகுவதைத் தவிர அக்குளத்தில் குளிப்பதால் உண்மையில் மக்கள் பரிசுத்தப்படுகிறார்களா? என்று “நவசக்தி”யைக் கடாவுகிறோம்.
“நவசக்தி”க்கு உண்மையில் மானம் போவதாயிருந்தால் இதை மாற்றிக்கொள்ளும்படி இந்திய மக்களுக்கு படும்படி எழுதவேண்டும் மானம் போகும்படி எழுதப்பட்டு இருக்கும் புராணங்களையும் சாஸ்திரங் களையும் தீ இட்டுக் கொளுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு இதை “ஒரு பொய்ப்பிரசாரம்” என்றும் “இந்தியாவின் உயர்ந்த கலையையும், நாகரீகத்தையும் பாதிரிகள் பார்க்காமல் சாக்கடைகளை மாத்திரம் பார்க்கிறார்கள்” என்றும் மேல் நாட்டில் “நாற்பது வயதில் ஒரு பெண் நாற்பது கணவர்களை மணந்துவிட்டு பின்னும் தன்னை ஒரு கன்னி என்று சொல்லிக்கொள்வது இந்தியாவில் வழக்கமில்லை” என்றும் எழுதி மேல் நாட்டுப் பெண்கள் வழக்கங்களை இழித்துக் கூறி இருக்கிறார்.
இது “நவசக்தி” உண்மை உணர்வோடு எழுதிற்றா? அல்லது பார்ப்பனப் பிரசார உள்ளத்தோடு எழுதிற்றா? என்று சந்தேகப்பட வேண்டியிருக்
கிறது. இந்தியாவின் கலையும் நாகரீகமும் என்ன என்று இப்போது நாம் நவசக்தியைக் கேட்கிறோம். கந்தப் புராணமா? பெரியபுராணமா? திருவிளையாடல் புராணமா? பக்த விஜயமா? பாகவதமா? ராமாயணமா? பாரதமா? எது இந்தியாவின் கலை? அல்லது மனுதர்மமா? பராசர ஸ்மிருதியா? இவற்றுள் இல்லாத ஆபாசம் காட்டு மிறாண்டித்தனம், கூடாஒழுக்கம், சிற்றின நடப்பு, அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு,
விபசாரம், குடி, சூது, வஞ்சகம், சுயநலம் முதலியவை வேறு எதிலாவது காணமுடியுமா? பைபீளையும் குர்ஆனையும் ஓர் கையில் வைத்துக்
249 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கொண்டு இந்து சாஸ்திரங்களையும் சைவ வைணவ வேதங்களானவை களையும் ஒரு கையில் வைத்துக்கொண்டு “நவசக்தி” நாணயக் கண்ணுடன் பார்க்கட்டும். அப்போது எதில் சாக்கடை எதில் உயர்கலை இருக்கிறது என்பதை உணரக்கூடும் என்று சொல்லுகிறோம்.
முதலாவது இந்தியர்களுக்கு ஒரு யோக்கியமான ஒழுக்கமான: “கடவுள்” உண்டா என்று “நவசக்தி தேடிப்பார்க்கட்டும். கடவுள், இந்தியர்கள்
தங்கள் கடவுளை கற்பித்துக்கொண்டு இருக்கும் தன்மை ஆகியவையே இந்தியாவில் கலை, நாகரீகம், ஒழுக்கம் ஆகியவைகளுக்கு பிரதிபிம்பம்
என்று சொல்லலாம்.
இந்தியர்க்கு கடவுள்களில் விபசாரம், இடி கொலை, கொள்ளை, வஞ்சகம், குரோதம், மூர்க்கம் முதலிய “அரும்” குணங்களை அணியாகக் கொண்ட கடவுள்கள் எத்தனை என்று கேட்கிறோம்
இந்தியாவின் நாகரீகம்தான் என்ன என்று “நவசக்தி” சொல்லட்டுமே பார்க்கலாம்
இந்தியாவின் நாகரீகத்துக்கு இந்தியாவின் பழைய கோபுரங் களையும் சித்திரங்களையும் பார்க்கட்டும்
உண்மையைச் சொல்லுகிறோம். ஒரு கழுதை ஒரு பெண்ணுடன் கலவி செய்வதாக கோபுரங்களிலும் தேர்களிலும் சித்திரிக்கப்படுகின்றன.
இன்று முழு நிர்வாண உருவமும் கலவிக் காட்சியும் நம் புண்ணிய கஷத்திரங்களில் புகழ்பெற்ற 'சன்னிதானங்களில்” பரக்கக்காணலாம். இந்தியர்களின் அன்பு என்னும் நாகரிகத்துக்கு எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் வில்லு, அம்பு, வேல், கத்தி, கோடாலி, மழு, கதாயுதம், சக்கிராயுதம் முதலியவைகளையே கையில் சதா வைத்துக் கொண்டிருக் கின்றன. பழைய நாகரிகத்தைப் புதுப்பிக்கும் இன்றைய காங்கரஸ் ஆட்சியும் இந்திய “தலைவரும் கொண்டுள்ள நாகரிகம்தான் என்ன?
காந்தியாரே அரை நிர்வாணத்துடன் பெண்கள் முன்றிற்கிறார். மற்றவர்களுக்கும் மேல் வேஷ்டி கூட அவசியமில்லை என்கின்ற உணர்ச்சி பெருக்குகிறார். மூரட்டுத்துணியை அணியச் சொல்லுகிறார். ராட்டினம் சுற்றச் சொல்லுகிறார். நெல்லுக் குத்தச் சொல்லுகிறார். காங்கிரசோ அவரவர் இஷ்டம் போல் உடுத்திக்கொள்ளச் சொல்லுகிறது. மாட்டு வண்டியும் பனை ஓலையும் பிரமாத நாகரிகமாய் கருதப்படுகிறது. இந்தப் பிரமாதத்தில் அஹிம்சையும் ஜீவகாருண்யமும் பறந்தோடி விட்டது இந்த லட்சணத்தில் நவசக்தி மேல் நாட்டை பரிகசிக்கிறது. 40 வயதில்.
40 பேரைமணந்துவிட்டு தன்னை கன்னி என்று சொல்லிக் கொள்ளுகிறாளாம். துரெளபதை எத்தனை பேரை ஏககாலத்தில் கணவர்களாய் கொண்டு. மணந்துவிட்டு சிறப்புள்ள ஸ்திரீகள் வரிசையில் வந்தாள். அதுதான்.
குடி அரசு - 1937 (2) 250
போகட்டும் இன்று பிரக்தியட்சத்தில் 30 வயதில் 3000 பேரை காசுக்காகவே கலந்த பெண்ணை தேவதாசியாய் தெய்வ கன்னிகையாய் இருத்தி கன்னி என்று கூட இந்தியாவில் அழைப்பதில்லையா என்று நவசக்தியை கேட்கிறோம். ஒரு பெண் 40 பேரை மணந்து கொண்டதால் அது பெரிய அனாகரீகமாய் விடுமா? அல்லது விபசாரமாகி விடுமா என்று கேட்கிறோம் எனவே நவசக்திக்கு மானம் போவது உண்மையாய் இருக்குமானால், உண்மை குறைகூறுவர்களுக்கு உற்றதுணையாய் இருந்து மானம் போவதற்குக் காரணமாய் இருக்கும் ஊழல்கள் எதுவானாலும் அதை அழிக்க முன்வர வேண்டுமே ஒழிய ஊழல்களை மறைத்து வைக்க முயற்சிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். மறைத்து வைத்த ஊழல்கள் நாற்றமெடுத்து நோய் உண்டாக்க காரணபூதமாகி விடும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.11.1937
21... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கடன் வாய்தா மசோதா
சென்னை மாகாணத்தைப் பொன்னுலகமாக்கப் போகும் சரணாகதி
முதன் மந்திரி ராஜகோபாலாச்சாரியார் சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு செய்துவிட்டார். அதற்கு எத்தனையோ பேர் எத்தனையோவித ஆட்சேபனைகள் கூறியும் ஒப்புக்கொள்ள முடியாதென்று ஆச்சாரியார் பிடிவாதமாக மறுத்தார். அடுத்தாப்போல் விவசாயிகள் கடன் வாய்தா மசோதா வரப்போவதாக பெரிய விளம்பரம் செய்யப்பட்டது. மசோதா: நகலும் சர்க்கார் கஜெட்டில் பிரசுமாயிற்று
அது ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்யாதென்றும் பணக்கார மிராசுதார்களுக்கே உதவி செய்யுமென்றும் கடன் வாயிதா மசோதா: சட்டமாகிறதாயிருந்தால் எல்லாருக்கும் உதவி செய்யக் கூடியதாயிருக்க வேண்டுமென்றும் நாம் எழுதியிருந்தோம். ஆனால் தென்னாட்டிலுள்ள பார்ப்பன வக்கீல்கள் எல்லாம் கடன் வாய்தா மசோதாவை எதிர்க்கிறார்கள். அந்த மசோதா சட்டமானால் வழக்குகள் ஒழிந்துவிடுமாம். கோர்ட்டுகள் மூடப்பட்டுவிடுமாம். கோர்ட்கள் மூடப்பட்டால் வக்கீல்களுக்கு பிழைப்பேது? வக்கீல்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்கள் காங்கரஸ் பக்தர்கள். தேர்தல் காலங்களில் காங்கரஸ் சார்பாக பிரசாரம் செய்யக்கூடியவர்கள்; சீர்திருத்தங்களுக்கெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறவர்கள். ஆகவே அவர்களுடைய எதிர்ப்பை ஆச்சாரியார் லக்ஷ்யம் செய்யும்படி நேர்ந்து கடன் வாய்தா மசோதாவை ஒத்திப் போடுவதாக ஆச்சாரியார் அசம்பிளியிலே தெரிவித்தார். ஒத்திப்போடுவது எவ்வளவு காலத்துக்கு என்ற கேள்வி பிறந்தபோது மாதக் கணக்கில் இல்லை, வாரக்கணக்கில்தான் என்று ஆச்சாரியார் வாக்குறுதியுமளித்தார். அந்த வாக்குறுதிப்படி இம்மாதம் 19-ந் தேதி அசம்பிளி கூடப் போவதாகவும் கடன் வாய்தா மசோதா அந்தக் கூட்டத்தில் சட்டமாகப் போகிறதாகவும் பத்திரிக்கைகளில் முன் ஒரு செய்தி வெளிவந்தது இம்மாதம் அசம்பிளி கூடப்போவதில்லையென்று இப்பொழுது ஒரு
செய்தி வெளி வந்திருக்கிறது. அது இன்றுவரை மறுக்கப்படவுமில்லை. ஆகவே இம்மாதம் அசம்பிளி கூடாதென்றும் கடன் வாய்தா மசோதா: சட்டமாகாதென்றும் ஊகிக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையில் ஏழைக் கடனாளிகளைக் கடன் கொடுத்தவர்கள் கிட்டிபோட்டு நெருக்குகிறார்கள்.
குடி அரசு- 1937 (2) 25
ப்
கடன் வாய்தா சட்டமாகு முன்னமேயே கடன்களை வசூல்செய்துவிட கடன் கொடுத்தவர்கள் கட்டுப்பாடான முயற்சிகள் செய்கிறார்கள். வக்கீல்களுக்குப் புத்தி கிடையாது என்று ஆச்சாரியார் ஒரு பக்கம் திட்டிக்கொண்டே கடன் வாய்தா மசோதாவைக் கைநழுவ விட்டு விடுவாரோ என்று பாமர ஜனங்கள் சந்தேகப்படுகிறார்கள். எது எப்படியானாலும் சரி, அக்ரகார மந்திரி சபை காலத்திலே பார்ப்பனர்களுக்கு இடையூறு செய்யக்கூடிய காரியங்கள் நடைபெறாதென்பதுதான் நமது கருத்து
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.11.1937
283 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அய்யர் அய்யங்கார் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
ராமானுஜம் அய்யங்கார் டேய் சுப்பராயா! ஏண்டா ஆச்சாரியாரை சும்மா எப்போது பார்த்தாலும் வைத வண்ணமாய் இருக்கிறாய்?
சுப்பராய அய்யர்:- அடபோடா ராமானுஜம்! ஆச்சாரியார் மந்திரியாய் வந்தால் என்னமோ சாதித்துப்போடுவார் என்று கருதி நாங்கள்
எல்லாம் என்னபாடு பட்டோம். எங்கள் பொம்மனாட்டிகளை எல்லாம் கூட எலக்ஷன் பிரசாரத்துக்கும் போலிங்டேஷனுக்கும் அழைச்சுண்டு போனோம். கடசியா எல்லாம் குட்டிச்சுவராக்கி விட்டாரே
ரா:- என்னடா குட்டிச்சுவரு?'
௯- என்ன குட்டிச்சுவரா? வந்து வராததுக்கு முன்னே இந்த ஆச்சாரியாரை என்ன அவசரம் கொண்டுபோரது. “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி" என்ற மாதிரி ஹிந்தி எழவைக் கொண்டுவந்து குறுக்கே போட்டு நாட்டைப் பாழ்படுத்திவிட்டாரே! எங்கே பார்த்தாலும் பழையபடியே “பார்ப்பான் சூழ்ச்சி, பார்ப்பான் சூழ்ச்சி” என்ற
சப்தம் காதைத் தொளைக்கிறதே.
ரா:- போடா, அதற்கெல்லாமா பயப்படுவது? சமயம் கிடைத்த போது நன்னா அழுந்த சாதிச்சிட வேண்டாமா? ஹிந்தி என்றால் கிள்ளுக் கீரைன்னா நினைச்சூட்டே? அதை ஒருவன் 3 வருஷம் படிச்சுட்டா அப்புறம் தூக்கு மேடைக்குப் போனாலும் பிராமணாளை துவேஷிக்கவே மாட்டான் தெரியுமா? ஹிந்தின்னா பிராமண பக்தி
- பிராமண விஸ்வாசம் என்றல்லவா அருத்தம்?
௯- இன்னம் மூன்று வருஷம் பொறுத்து பிராமண பக்தியும் விஸ்வாசமும் வர்ரத்துக்கு முன்னே இப்போ பிராமணாளைக் கண்டா பழயபடி வெறுப்பாயிட்டதாடா. எத்தனை பாடுபட்டு எத்தனை கொடி தூக்கி எத்தனை வந்தேமாதரக் கூப்பாடு போட்டு பிராமண துவேஷத்தை மறக்கடித்தோம்
ரா:- அதைப்பற்றி கவலைப்படாதே. அதெல்லாம் ஆச்சாரியார். பார்த்துக்குவார்.
குடி அரசு- 1937 (2) 254
௯- பார்த்து நாசமாச்சிது; வேறே காரியம் செய்ய வேண்டியதெல்லாம் கெட்டுப்போச்சுதே இதனாலே.
ரா:- என்னடா கெட்டுப் போச்சுது? மகா வேறே காரியம்?
௯:- என்னடா தெரியாத மாதிரி கேக்கறே?
ரா:- என்ன சொல்லேன்?
௯- இந்த நாசமாய்ப்போன கம்யூனல் ஜீஓவை எடுத்துத் தொலச் சுடுவான்னல்லவா நம்பினோம். அதை ஒன்றும் தொடுவதில்லை என்று சொல்லிட்டாரே?
ரா- அட போடா அசடே அசடே. ஆச்சாரியார் சங்கதி உனக்கென்னடா தெரியும்? அவர் காலால் போட்ட முடிச்சை நீ கையாலும் வாயாலும் கூட அவிழ்க்க முடியாது?
௬:- அப்படீன்னா?
ரா:- அப்படீன்னாவா சொல்லரேன் கேள். கம்யுனல் ஜீஓவை கையில் தொடமாட்டார். ஆனால் அதை யாரும் தொடாமலே சாகும்படி செய்வார். தெரியுமா?
௬:- எப்படி செய்வார்?
ரா- எப்படியா? கள்ளை நிறுத்தரேன்னு சொல்லி எக்சைஸ் டிபார்ட்மெண்டில் இருக்கிற நான் பிராமின்களையெல்லாம் துலச்சூடுவார். ஹிந்தி என்று சொல்லி எல்லா பிராமினுக்கும் வேலை குடுத்தூடுவார். இனி சுலபத்தில் நான்பிராமின் படிக்கிறாப்பலே செய்ய மாட்டார். வாயிலே நுழையாத ஹிந்தியை உருப்போட்டுண்டு வாயும் விரலுமா சூத்திரப் பய்யன்கள் திண்டாட வேண்டியதுதான்; ஜில்லா போர்ட் முனிசிபாலிட்டிகளை கையைத் திமிரி பிடுங்குற
மாதிரி அந்தப் பயல்களிடமிருந்து பிடுங்கி நம்மவன் இடமோ அல்லது நம்மிட உண்மையான சிஷ்யர்களிடமோ ஒப்புவித்து விடுவார். அப்போ நாம் அடித்த கொட்டம்தான். கூடுமானவரை பிராமண ஐ.சி.எஸ்.களையும் பிராமண ஜில்லா அதிகாரிகளையும்
ரப்பீடுவார். அப்பரம் என்னடா செய்ய செய்யணும்?
௯- இதெல்லாம் செய்துடலாம் தான், ஆனால் பப்ளிக்சர்வீஸ் கமிஷன் இருக்கே அதை வெச்சிண்டிட்டு என்னடா முடியும்?
ரா:- அதற்கும் பிராம்மணர்களையே போட்டூடுவார் அல்லது சிதம்பரநாத முதலி, முத்துரங்க முதலி போன்ற ஆள்களைப் போட்டு தன் சம்பள. பில்லுக்குகூட ஆச்சாரியாரை கேட்டு கையெழுத்து போடற மாதிரியும் போட்டபிறகும் ஆச்சாரியாரைக் கேட்டு பணத்தை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிற மாதிரியுமான ஆள்களை வச்சூடுவார்.
28$ ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எந்த மாதிரி ஆளை வச்சாலும் கணக்குபடிதானே உத்தியோகம் கொடுப்பா?
ச:-
அதெல்லாம் உனக்கென்னடா தெரியும்? வடமன்புத்தி வட்டத்திலே மாதிரி. அதிலுள்ள ரகசியம் உனக்கு என்ன தெரியும்? உத்தியோகத்துக்கு யோக்கியதை தீர்மானிக்கும் போது நான் பிராமின் 100க்கு 10 பேர் கூட தகுதியான ஆள் கிடைக்காமல் செய்துடுவார்?
ரா:-
எப்படி செய்வார்? அட கேனமே அதுதான் ஹிந்தீங்கிறது. தெரியுமா? ஹிந்தி படித்தவன்தான் உத்தியோகத்துக்கு லாயக்கு தெரியுமா? அது மாத்திரம் படித்தாலும் போதாது; காசி, காஷ்மீரம், பஞ்சாப், பங்காளம் போய் பார்த்துவிட்டு வரவேணும்ண்ணும் சொல்லி இருக்காரே உனக்கு அது புரியவில்லையா?
ரா:-
புரிஞ்சது; நம்மடவாமாத்திரம் காசிக்கும் காஷ்மீருக்கும் போய்ட்டு வரமுடியுமா?
ஏன் போக முடியாது? நமக்குத்தான் ரயிலில் டிக்கட் இல்லையே; சென்னை மாகாணம் தாண்டறவரை பிராம்மணாள் தான் ரயிலில் வேலையில் இருக்கா. அதற்கு அப்புறம் “அம் பம்மன் ஹே” (நான் ஒரு பிராமணர்) என்று சொல்லிவிட்டால் “நமஸ்கார் மகராஜ்” என்று சொல்லி விட்டுடுவான். நான்பிராமின்களுக்கு பணமும் கிடையாது, புத்தியும் கிடையாது. பழயபடி அவன்கள் வேலையை அவன்கள் பார்க்க வேண்டியதுதான்.
ரா:-
என்ன இருந்தாலும் இந்த ஹிந்தி, மதுவிலக்கு அது இரண்டும் நமக்கு இப்பொழுது தொல்லை தாண்டா.
மதுவிலக்கில் என்னடா தொல்லை?
சூத்திரா தானே குடிக்கின்றான்கள். நமக்கென்ன கவலை?
ட உனக்கிருக்கிற புத்தி ஆச்சாரியாருக்கில்லை யாக்கும். குடியினால் சில சூத்திரா கெட்டுப்போனாலும் எத்தனை சூத்திரன்கள் படித்து விடுகிறான்௧ள் அது தெரியுமா? “படித்த சூத்திரனால் பிராமணனுக்கு ஆபத்து ஆனதினால் சூத்திரனை படிக்க விடக்கூடாது ண்ணு மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகிறதே அது உனக்கு தெரியாதா?
அதற்கும் குடி நிறுத்துவதற்கு என்னப்பா சம்மந்தம்? சொல்ரேன் கேள்; சவமே கேள். நம்மிடவாள் அரசாங்கத்தில் ஆதிக்கம் வைத்திருந்தபோது பிராமனாள் மாத்திரம், படிக்கும் படியும் மற்றவர்கள் படிக்க முடியாதபடியும் எவ்வளவோ தந்திரம் செய்து வச்சிருந்தா. இந்த பாழாய்ப் போன ஜஸ்டிஸ் கட்சி வந்த உடன் படிப்பு விஷயத்தில்
ரா:-
அரசு - 1937 (2) 256
குடி
2 பங்கு 3 பங்கு ஜனங்கள் படிக்கும்படி ஆக்கீட்டா; அத்தனைக்கும் செலவுக்கு பணம் இந்த கள்ளு இலாக்கா தான் கொடுத்திண்டு வந்திட்டது இப்போ படிப்பைக் குறைக்க வேணுமானா பணவருவாயைக் குறைத்தால். படிப்பு தானாகவே குறைந்துவிடும். அதற்காகத்தான் படிப்புக்கு உண்டான பண வருவாயில் கைவச்சுட்டார் நம்ம ஆச்சாரியார். கள்ளு வேணு மானாலும் தெரியாமல் திருட்டுத்தனமா குடிச்சுடுவார்கள். படிப்புக்கு இனிமேல் சீரங்கத்துக்கு போக வேண்டியதுதான். தெரிஞ்சதா? இந்த இரண்டும் தான் முதல் முதல் நம்மிடவாள் செய்ய வேண்டிய காரியம். அதைதான் ஆரம்பிச்சுட்டார் ஆச்சாரியார். என்னமோப்பா? சொல்லரே. கள்ளுநிறுத்துற தந்திரமாவது எனக்கு புரியாது. ஹிந்தி தொல்லை நான்பிராமின்களை மறுபடியும் ஒன்று சேர்த்திவிடும்போல் இருக்கிறது. எத்தனையோ பாடுபட்டு இந்த நிலைக்கு வந்தோம். மறுபடியும் கஷ்டம் வருமென்னு தோன்றது.
ஒன்னும் பயப்படாதே; நான்பிராமின்கள் ஒன்று சேர மாட்டான்கள். அதிலும் “பண்டிதர்கள் புத்தி பவனவாயில்" என்கின்ற மாதிரி அவர்கள் தொட்டது தொலங்காது. எதிலாவது சண்டை போட்டுக்கொண்டு மறுபடியும் அவனவன் வேலை பார்க்கப் போய்விடுவான்கள். இப்போதே பல பண்டிதர்கள் வெளியில ஹிந்தி மறுப்புக்கூட்டத்தில் பிரசங்கம் பண்ணிவிட்டு வீட்டில் ஹிந்தி படிக்கிறான்
-
பண்டிதர்கள் மாத்திரமல்ல, பணக்காரர்களும் கொஞ்சம் கொஞ்சம் உறுமாரன்களே உனக்கு தெரியலையா?
உறுமி என்னத்தெச் செய்துடுவான்கள்? அவன்களுக்கு போக்கிடம் சொல்லு பார்ப்போம். ராமலிங்க செட்டி என்னனமோ முறுக்கினார். ஆச்சாரியார் கோயமுத்தூர் போனதும் ஆஞ்சனேயராயிட்டார். சுப்பராயன் தலை எழுத்து ஆச்சாரியார் கையில், தேவரும் ஆச்சாரியாரை தொங்கிக் கொண்டிருக்கிறார். ஜில்லா போர்டு சங்கதி தெரியாதா? இப்படித்தான் ஒவ்வொருவருடைய விஷயமுமாகும். நீ அவசரப் பட்டு அசட்டுத்தனமாக ஒன்றையும் பேசாதே நான் போறேன்.
-
குடி அரசு - உரையாடல் - 07.11.1937
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நரிமன் கதி.
பம்பாய் வீரர் தோழர் நரிமனை படேல் - காந்தி கம்பெனியார் உயிரோடு சமாதி வைத்து விட்டார்கள். எதற்காக? 1934 வருட எலக்ஷனில். அவர் காங்கரசுக்கு துரோகம் செய்ததாய் சாட்டப்பட்ட ஒரு குற்றத்துக்காக, ஆனால் 1934 தேர்தலில் காங்கரசுக்கு துரோகம் செய்த நரிமன் அதே வருஷத்தில் பம்பாயில் நடைபெற்ற காங்கரஸ் மகாநாட்டுக்கு வரவேற்புக் கழகத் தலைவராக இருந்திருக்கிறார். அப்பால் பம்பாய் மாகாண காங்கரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும், பார்லிமெண்டரி கமிட்டிக்குத் தலைவராகவும், பம்பாய் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சென்ற வருஷம் நடைபெற்ற மாகாண அசம்பிளித் தேர்தலில் பம்பாய் நகரத் தொகுதிக்கு காங்கரஸ் அபேட்சகராக நிறுத்தப்பெற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். 1934 தேர்தல் துரோகம் இந்தப் பதவிகளையெல்லாம் தோழர் நரிமன் பெறுவதற்குக் குறுக்கே நிற்கவில்லை.
1937-ல் காங்கரஸ் கட்சித் தலைவராகி பம்பாய் மாகாண மந்திரி ஆக தோழர் நரிமனுக்குத் தருணம் கிடைத்த போதுதான் அவரது 1934
- வருஷ துரோகம் அகில இந்திய பார்லிமெண்டரி போர்டு தலைவர் சர்தார் படேலுக்கு ஞாபகம் வந்ததாம்! இதைவிட ஆச்சரியம் வேறுண்டா! நரிமன் ஒழிக்கப்படுவதற்கு உண்மைக்காரணம் என்ன? அவர் சுதந்தர புருஷர். படேலுக்கு ஆமாம் சாமி போட விரும்பாதவர். ஆகவே அவரை மூலையில் உட்கார்த்தி விட்டார்கள் சுதந்தரர்களுக்குபம்பாயில் மட்டுமல்ல; சென்னையிலும் இடமில்லை. தோழர் சேலம் பாரிஸ்டர் ராமசாமி தண்டனையடையக் காரணம் என்ன? அவரது சுதந்தர புத்திதானே காரணம். அதனால்தான் பலர் ஆச்சாரியார் கூறுவதற் கெல்லாம் ததாஸ்து கூறிக்கொண்டும் காங்கரஸ் ஊழல்களையெல்லாம் சகித்துக்கொண்டும், பார்த்துக்கொண்டும் பொம்மைமாதிரி இருக்கிறார்கள்.
குடி அரசு - கட்டுரை - 07.11.1937
குடி அரசு - 1937 (2) 258
சென்னையில் வகுப்பு வாதம்
சென்னை கார்ப்பரேஷனில் காங்கரஸ் மெம்பர்களுக்குள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு வாதம் முற்றிவிட்டது. தோழர் சிவசைலம் பிள்ளையை கல்வி அதிகாரி நியமனத்தின் பயனாய் காங்கரஸ் பத்திரிகைகளில் தினமும் இச் சேதிகள் வருகின்றன.
தோழர் சிவசைலம் பிள்ளை நியமனத்தை சர்க்காரார் நிராகரித்து விடவேண்டுமென்று ஒரு கட்சியும் அதை அங்கீகரிக்க வேண்டுமென்று ஒரு கட்சியும் விண்ணப்பம் அனுப்பி இருப்பதாய்த் தெரிகிறது
நிராகரிக்க முயற்சிப்பவர்கள் பெரிதும் பார்ப்பனர்களாகவும் அங்கீகரிக்க முயற்சிப்பவர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதாராகவும் இருந்து வருகிறார்களாம்.
தோழர்கள் சாமி வெங்கடாசலம், ஆதிகேசவ நாயக்கர், வினாயக முதலியார் முதலிய பார்ப்பனரல்லாத காங்கரஸ் வாதிகள் நியமனத்தை ஆதரித்து மந்திரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்
குடி அரசு - செய்தி விமர்சனம் - 07.11.1937.
29 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஜஸ்டிஸ் கொன்கையை அசைக்க
முடியாது
காங்கிரஸ் ஆட்சி மைனர் திருவிளையாடல்
பேச்சொன்று செய்கை யொன்றா?
தலைவரவர்களே! தோழர்களே!
இன்று நீங்கள் ஒரு அதிசயத்தைப் பார்க்கிறீர்கள். என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியாராலும், கனம் ராஜகோபாலாச்சாரியாராலும் அவர்களது கூலிகளாலும் ஐநூறு கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டு விட்ட தாகச் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியானது கிறிஸ்து நாதர் உயிர்த் தெழுந்த கதைபோல் உயிர்த்தெழுந்து இன்று உங்கள் முன்னால் நிற்கிறது நிற்கிறது மாத்திரமல்லாமல் அக்கட்சி புதைக்கப்பட்டதாகச் சொல்லப் பட்டபின் புதைக்குழியிலிருந்து கொண்டே செய்த அற்புதங்களைப் பற்றியும் பேசப்போகிறது.
எனது சொந்தக் கட்சி சுயமரிய/தையே அதாவது நான் தோல்வி அடைந்து முறியடிக்கப்பட்ட ஒரு கட்சி என்பதைச் சேர்ந்தவன் என்றும் கொன்று புதைக்கப்பட்டு அடியோடு ஒழிக்கப் பட்டுவிட்டது என்று சொல்லப்படுகிற கட்சியை சேர்ந்தவன் என்றும் சொல்லிக்கொள்ள சிறிதும் வெட்கப்படவில்லை. எனக்கு சொந்தக் கட்சி சுயமரியாதைக் கட்சியேயாகும். சு.ம. இயக்கத்தின் நன்மைக்காக என்று ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்திருக்கிறவன் என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின் நன்மை “தீமை” என்பனவற்றின் எவ்வித பொறுப்புகளிலிருந்தும் நான் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை.
தோழர் காந்தியார் காங்கிரசுக்கு ஏக தலைவர் மாத்திரமல்லாமல் சர்வாதிகாரி என்றும் சொல்லப்படுகிறவர். காங்கிரஸ்காரர்களும் காந்திக்கு பூசை செய்துவிட்டுத்தான் தங்கள் காரியத்தை துவக்குகிறார்கள். ஆணாலும் காங்கரசு நடவடிக்கையின் தன்மையும் காங்கரசில் உள்ள ஆட்களின் யோக்கியதையும் ஆகிய பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள காந்தியார் தன்னை காங்கரஸ்காரன் அல்லவென்றும் தான் அதில் ஒரு நாலணா மெம்பராகக்கூட இல்லை என்றும் அடிக்கடி சொல்லிக்கொள்ளுகிறார்
குடி அரசு - 1937 (2) 260
சுயமரியாதையும் ஜஸ்டிஸும்
தோழர் ஆச்சாரியார் அவர்களும் தாங்கமுடியாததும் பதில் சொல்ல முடியாததுமான அவமானமும், இழிவும் ஏற்படும் போது தனக்கும் காங்கிரஸ் நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு பயனடைய சந்தர்ப்பங் கிடைத்தபோது மாத்திரமே, தானாகவே வந்து நுழைந்து கொள்கிறார். ஆனால் நாங்கள் சுயமரியாதைக் காரர்கள் எந்த சமயத்திலும் தப்பித்துக்கொண்டு ஓட ஆசைப்படுவதில்லை. எங்கள் கொள்கை வெற்றி பெறும் வரை ஒரு அளவுக்காவது நாங்களும் ஜஸ்டிஸ் கட்சியார்தான் என்று சொல்லிக்கொள்ள சிறிதும் அஞ்சமாட்டோம். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்பவர்கள் “புறமுதுகிட்டு ஓடிவிட்டார்கள்” என்றாலும் நாங்கள் ஓடமாட்டோம். சுயமரியாதைக்காரர்களுக்கும்
ஜஸ்டிஸ் காரர்களுக்கு வேறு பல உள் திட்டங்களில் சில பேதமிருக்கலாம். ஆனால் பார்ப்பனீயத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் விரோதிகள் என்பதிலோ அவைகளை ஒழிப்பதிலோ மற்றும் பார்ப்பனியமும் பார்ப்பன ஆதிக்கமும் தமது கட்சிக்கு ஆயுதமாகக் கொண்டிருக்கும் காங்கிரசை அழிப்பது - ஒழிப்பது என்பதிலோ ஒரே திட்டத்தைக் கொண்டவர்களாவோம்.
சுயமரியாதைக் கட்சிக்கு அரசியல் பிரதாணமல்ல
சுயமரியாதை இயக்கத்திற்கு அரசியல் பிரதானமல்ல என்பது
நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை நலத்துக்கும் திட்டங்களின் வெற்றிக்கும் கேடு செய்யவே
காங்கரஸ் மூலம் பார்ப்பனர்கள் தேசியப் போர்வையைப் போட்டுக் கொண்டு
சூழ்ச்சி செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறவரை அக்காங்கரசை ஒழிக்கும் அளவுக்கு சுயமரியாதை இயக்கம் அரசியலைப் பற்றிப் பேசவும் அரசியலைப் பிரதானமாய் கொண்ட ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவளிக்கவும் கடமைப் பட்டிருக்கிறது. ஆதலால்தான் இன்று நாங்கள் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கவலையற்றோ - தைரியமற்றோ எதிரிக்கு ஆளாகியோ அயர்ந்து போயோ கட்சிக்கு துரோகம் செய்து கொண்டோ இருக்கிறார்கள் என்றாலும்
நாங்கள் அதை லக்ஷ்யம் செய்யாமல் அக்கட்சிக்கு உழைக்கின்றோம். அக்கட்சி மறுபடியும் வெகு சீக்கிரத்தில் தனது உச்சஸ்தான நிலைக்கு வரப்போகிறது
என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டே உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஜஸ்டிஸ் திட்டத்தை அசைக்க முடியாது உண்மையிலேயே நான் உங்கள் எல்லோரையும் சிறிது யோசித்துப் பார்க்கும்படி கில விஷயத்தைப்பற்றி பேசுகிறேன். அதாவது தோழர் காந்தியும், கனம் ஆச்சாரியும், சத்தியமூர்த்தியும் ஜஸ்டிஸ் கட்சியை கொன்று நசுக்கிவிட்டதாகத் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளையோ திட்டத்தையோ நாட்டில் செலாவணி ஆகாமல் இருக்கக் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கூடிய அளவுக்கு ஒரு சிறிது கூட அசைத்துவிட முடியாது. இதுவரை யாரும் அசைத்துவிடவும் இல்லை. ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையும், திட்டமும் மந்திரிவேலை பெறுவதும் சம்பளம் பெறுவதும் மாத்திரந்தான் என்று காங்கிரஸ்காரர்கள் கருதி அக்கட்சியோடு மந்திரி பதவிக்கும் சம்பளத்துக்குமே போராடவோ அல்லது அவர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டு விரட்டி அடிக்கவோ முயற்சி செய்திருந்தால் அம்முயற்சி வெற்றி பெற்றது என்றும் அந்த காரியத்தில் ஜஸ்டிஸ் தோல்வியுற்றதும் என்றும் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஏன்? நானும் கூட அப்படித்தான். அதாவது பார்ப்பனர்களும், காங்கிரசும் பதவிக்கும், சம்பளத்துக்கும் தான் பாடுபட்டு
ஒரு அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லியே வருகிறேன்.
ஜஸ்டிஸ் கொள்கையைக் குறைகூற முடியுமா?
ஆனால் பொது ஜனங்கள் அந்தப்படி நினைப்பதற்கில்லாமல் பார்ப்பனர்கள் செய்திருக்கிறார்கள். மற்றென்னவென்றால் “ஐஸ்டிஸ்காரர்கள். பொது ஜன நன்மைக்கு விரோதமாக சர்க்காருக்கு அனுகூலமாக தேசத்தைக் காட்டிக் கொடுத்து பதவி பெற்று மக்களுக்கு கெடுதி செய்து வருகிறார்கள்” என்றும் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லவென்றும் தங்கள் கொள்கைக்கும், ஜஸ்டிஸ் கொள்கைக்கும் மலையும் மடுவும் போல மாறுபட்ட வித்தியாசமென்றும் சொல்லி ஜஸ்டிஸ் கட்சி மீது குற்றங்கூறி மக்களை ஏய்த்து வருகிறார்கள். இந்த பித்தலாட்டத்தை வெளியாக்கவே இப்போது நான் ஒரு ஜஸ்டிஸ் கட்சிக்காரன் என்று சொல்லிக்கொண்டு உங்கள் முன் பேச நிற்கிறேன்.
யார் சர்க்கார் அடிமைகள்?
ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கும் காங்கிரஸ் கொள்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று உங்களை கேட்கிறேன். காங்கரஸ் கொள்கையானது பொய், பித்தலாட்டம், நாணையக்குறைவு, நம்பிக்கைத் துரோகம், காலித்தனம் என்கின்ற சில குணங்கள் கொண்டதாய் இருப்பதைத்தவிர வேறு ஜஸ்டிசுக்கு மாறுபட்ட கொள்கை என்ன? ஜஸ்டிஸ் கட்சிக்கு அப்படிப்பட்ட கொள்கை இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் அக்கொள்கையைக் கைக்கொண்டால் அவைகளை இரணிக்கச் செய்ய அவர்களால் சாத்தியப்படாது ஆகவே இந்தக் குறைபாட்டைத் தவிர மற்றபடி ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளை பற்றிய குறை இன்னது என்று சொல்ல யாராவது மூன்வரட்டும் என்று அறைகூவியழைக்கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியை காங்கரசுக்காரர்கள் ராஜவிசுவாசக் கட்சி என்றும் சர்க்காரோடு ஒத்துழைக்கும் கட்சி என்றும் சொன்னார்கள். இதானது காங்கரசுக்காரர்களுக்கு அரசியலில் மதிப்பும் பதவிகளும் போய் பொதுஜனங்களால் புறக்கணிக்கப்பட்ட பிறகு “சீ இந்தப்பழம்
குடி அரசு - 1937 (2) 262
புளிக்கும்” என்ற முறையில் இந்தப்படி சொல்லி மக்களை ஏமாற்றி வந்தார்கள். மக்கள் ஏமாந்ததால் காங்கரசுக்காரர்களுக்கு இடம் கிடைத்தவுடன் பதவி பெற்று இப்போது என்றுமில்லாத ராஜவிசுவாசமும் சரணாகதி துதியும் பாடி இரண்டு கையிலும் கும்பிடுபோடுகிறார்கள். நல்ல நடவடிக்கைக்கு ஜாமீன் (வாக்குறுதி) கொடுத்து பதவி பெற்று அடிமை வாழ்க்கை வாழுகிறார்கள்.
“சர்க்காரே நாங்கள்; நாங்களே சர்க்கார், சர்க்காரை யாரும் குறைகூறாதீர்கள்” என்று சர்க்காருக்கு வாயில் காப்போராய் இருக்கிறார்கள். கவர்னர்களுக்கு கட்டியம் கூறுகிறார்கள். “சர்க்காரை வையாதீர்கள் சட்டத்தை மீறாதீர்கள்” என்று சர்க்காருக்கு ஆக சிபார்சு பேசுகிறார்கள். “வெள்ளைக்கார அதிகாரிகளை நமக்கு சமமாய் கருதாதீர்கள், அவர்கள் நமக்கு மேம்பட்டவர்கள்” என்று பூஜிக்கிறார்கள். “கவர்னர்கள் மகா நல்லவர்கள்” என்கிறார்கள். இவையும் இவை போன்றனவும் காங்கரஸ்காரர்களால் வெளிப்படையாய் சொல்லப்படுபவை. இனி ரகசியத்தில் இன்னமும் எவ்வளவு தூரம் காரியங்கள் நடக்கின்றன என்பது பேசவே வாய்கூசக்கூடிய சேதிகளாகும்
காங்கரஸ் ஆட்சி மைனர் திருவிளையாடலே
நமது காங்கரஸ்காரர்கள் ஆட்சி செலுத்தும் யோக்கியதையே அது ஒரு மைனர் திருவிளையாடல் போலவே இருக்கிறது. அதாவது பதவிக்கு வந்து வராததற்கு முன்பே நாட்டை அடகு வைத்து பலகோடி ரூபாய்கள் கடன் வாங்கிவிட்டார்கள். வரி விஷயங்களில் புதிய வரி போடுவதில் கவலை கொண்டு தேடித்திரிகிறார்களே அல்லாமல் வரி குறைக்க நினைக்கவே முடியவில்லை. ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் என்பவர்கள் குறைத்து வைத்து வரவு செலவு சரிக் கட்டிவிட்டுப் போன வரியைக்கூட அமலுக்கு கொண்டுவர வகை தெரியாமல் விழிக்கின்றார்கள். சர்க்கார் நிர்வாகச் செலவைக் குறைக்கும் விஷயத்தில் என்றாலோ அது “குருட்டுக் கோமுட்டி கடைத்திருட்டு" என்பது போல் டெஜன் கணக்காய் மந்திரிகளும் டெஜன் கணக்காய் காரியதரிசிகளும் டெஜன் கணக்காய் கார்களும் குரோஸ் கணக்கான சம்பள மெம்பர்களும் சம்பளங்களும் மாதம் 1க்கு மந்திரி ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பிரயாணப் படிகளும் மற்றும்
வீட்டு வாடகைகளும் கார் அலவன்சுகளும் புதிய உத்தியோகங்களும் மழை காலத்தில் ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் பறப்பது போல் பொது ஜனங்களின் வரிப்பணங்கள் பொக்கிஷத்திலிருந்து பறக்கின்றன.
பெயருக்குத்தான் காங்கரஸ் மந்திரிகள் சம்பளம் குறைத்துக் கொண்டார்கள் என்று சொல்லுகிறார்களே தவிர காரியத்தில் மந்திரிகள் சம்பளத்திலும் நிர்வாக செலவுகளிலும் மூன் ரூபாய்க்கு பதினாறு அணாவாக இருந்தது 192 காசாக மாறிவிட்டது 28௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மதுவிலக்குப் புரவி.
வரிகுறைப்பும் செலவு குறைப்பும் இந்த லக்ஷணத்தில் இருக்கிறது மாத்திரமல்லாமல் காங்கரஸ் மந்திரிகளின் நிர்வாக லக்ஷணமோ சொல்லவே வேண்டியதில்லை. கிறிதும் மூன்யோசனையும் அரசியல் ஞானமும் இல்லாமல் மதுவிலக்கென்று ஆத்திரப்பட்டு ஒரு ஜில்லாவில். அமலுக்கு கொண்டு வந்து மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள். மற்ற ஜில்லாக்களின் கதி என்ன என்பது பற்றியும் அவற்றின் வரவு செலவை எப்படி சரிக்கட்டுவது என்பது பற்றியும் யோசிக்காமல் தான் தோன்றித்தனமாய் காரியம் செய்கிறார்கள். இந்தக் காரியங்களினால் காங்கரஸ் ஆட்சி ஒன்று சீக்கிரத்தில் இன்சால் வெண்டாகப் போகிறது அல்லது ஆட்சியைவிட்டு ஓடிப்போய் தலைமறைவாய் மறைந்து கொள்ளப்போகிறது என்பது உறுதி
சம்பளக் குறைப்பும் ஹிந்திப் புரவியும்
தவிரவும் சம்பளம் குறைப்பதற்கு மந்திரிகள் முதல் முதல் கிராமாதிகாரிகள் தலையில் கையை வைக்கப் போகிறார்களாம். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல் இருந்திருந்து கிராமாதிகாரிகள் தலையில் கையை வைக்கப் போகிறார்கள். மாதம் 1000, 2000, 3000 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கும் வெள்ளைக்காரர்களிடம் வால்காட்ட இவர்களுக்கு சக்தி இல்லை. அவர்களை மெல்லிய புஷ்பச் செடி என்று சொல்லிவிட்டு 15ரூ. சம்பளத்துக்கு எவ்வளவோ பொறுப்பாளியாகவும், அஸ்திவாரமாகவும் இருக்கும் ஆசாமிகள் தலையில் கை வைத்தால் அது யோக்கியமான காரியமாகுமா? இந்த காரியமானது ஊர் குடியானவர்களை சூறையாட சில நபர்களுக்கு லைசென்சு கொடுத்ததுபோல்தான் முடியும்
மற்றும் கல்வி விஷயத்தில் பிள்ளைகள் ஹிந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று செய்யப்போகிறார்களாம். இதுவும் ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டது போலவே முடியப்போகிறது
பேச்சொன்று செய்கையொன்றா?
ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் விளையாட்டுப் பிள்ளைகள் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் ஜில்லா போர்டுகளைப் பிரித்ததானது நிர்வாக சவுகரியத்துக்கு ஆக என்பது யாவரும் அறிந்ததேயாகும். தாலூகா போர்டுகளை எடுக்கும் போதே அவர்கள் இதைச் சொல்லி இருந்தார்கள். அப்படி இருந்தும் “ஜஸ்டிஸ் மந்திரிகள் கட்சி நலத்துக்கு ஆக ஜில்லா போர்டுகளைப் பிரிக்கிறார்கள்” என்று காங்கரஸ்காரர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போது காங்கரஸ்காரர்கள். தங்கள் கட்சி நலத்துக்கு ஆகவே ஒன்று சேர்க்கும் வேலையை
குடி அரசு- 1937 (2) 264
வெளிப்படையாய் செய்கிறார்கள். ஒன்று சேர்ப்பதில் காங்கரஸ் மந்திரிகள். அனுசரிக்கும் கொள்கை என்ன என்று யாராவது சொல்லக்கூடுமா? நாமினேஷன் கூடாது என்று சொன்னவர்கள் மந்திரி பதவிக்கே நாமினேஷன்காரர்களை நியமிக்கிறார்கள். பதவிகளுக்கு தகுதி என்பது பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பது தான் யோக்கியதாம்சமாய் போய்விட்டது. ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற காங்கரஸ்காரர்கள் மற்றவர்கள் ஆட்சியை லஞ்ச ஆட்சி என்றும் கண்டிராக்ட் ஆட்சி என்றும் சொன்னார்கள். ஆனால் காங்கரஸ்காரர்களின் ஒரு வருஷ ஆட்சிக்குள் காங்கரஸ் மெம்பர்கள் லஞ்சம் வாங்கினதும் காண்டிராக்டில் சம்பாதித்ததும் வெட்டவெளிச்சமாய் காங்கரஸ்காரர்கணலேயே ஒப்புத்கொள்ளப்பட்டுவிட்டது
ஜஸ்டிஸ்கட்சியைவகுப்புவாதக்கட்சி என்று சொன்ன காங்கரசுக்காரர்கள் தங்கள் வாயாலேயே “காங்கரசில் வகுப்பு வாதம் வகுப்புவாதம்” என்று கூப்பாடு போட்டு அழுகின்றார்கள்.
காங்கரஸ் நாணயம் சந்தி சிமிக்கிறதே!
காங்கரஸ் கட்டுப்பாடும் ஒழுக்கமும் சந்தி சிரிக்கிறது. மந்திரிகளுக்குள் ஏகோபித்த அபிப்பிராயமில்லாமல் ஆளுக்காள் முரணாகப் பேசுவதும் அடிக்கடி அவற்றிற்குத் தத்துவார்த்தங்களும் வியாக்கியானங்களும் செய்வதுமான யோக்கியதை ஏற்பட்டுவிட்டது
வாக்கு சுதந்தரம் எழுத்துச் சுதந்தரம் என்பது வெறும் ஹம்பக்காய் விட்டது. மூடப்பழக்கவழக்கங்களைப் பற்றி எழுதுகிற “பகுத்தறிவு” என்ற மாதப் பத்திரிக்கைக்குக் கூட 1000 ரூ. ஜாமீன் வாங்கியதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் அச்சாபீசுக்கும் 1000ரூ. ஜாமீன் வாங்கியதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டங்களில் பேசுவதையும் காங்கரஸ்காரர். காலிகள் வந்து காலித்தனம் செய்கிறார்கள்.
காந்திக்கு விரோதமான கூட்டங்களிலும் காந்தி செய்கையை கண்டிக்கிற கூட்டங்களிலும் காந்திக்கு ஜே என்று கூப்பாடு போட்டு விஷயங்களை மற்றவர்கள் அறிவதற்கில்லாமல் காலித்தனம் செய்வதென்றால் காங்கரசுக்கு யோக்கியமோ, மானமோ, அறிவோ இருக்கிறது என்று யாராவது சொல்லமுடியுமா? இதுதானா காங்கரசின் பேச்சு சுதந்தரம் என்ற கேட்கிறேன்
பேச்சு சுதந்தரம் இல்லாத ஆட்சி என்று காங்கரஸ்காரர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டிராந்த ஜஸ்டிஸ் ஆட்சி காலத்தில் கனம் ஆச்சாரியார் போன்ற பொறுப்புள்ள ஆள்கள் கூட மந்திரிகளையும் மாஜி கவர்னர்களையும் கழுதைக்கு சமானமானவர்கள் என்றும் துடப்பக்கட்டை விளக்குமாறு, செருப்பு என்றும் குடிகாரன் வெறிகாரன் போல உளறவும் கூப்பாடு போடவும் இடமளிக்கப்பட்டிருந்தது. ஆனால் 28௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பேச்சு சுதந்தரம் பெற்று விட்டதாக சர்க்காருக்கே துதி பாடும் இந்தக்காலத்தில் காங்கரஸ் காலிகளின் அயோக்கியத் தனத்தை நீங்கள் நேரிலேயே பார்க்கிறீர்கள் அல்லவா?
சூது, வஞ்சகம், சுயநலம் தாண்டவம்
தோழர் கனம் ஆச்சாரியாரும் மூர்த்தியும் சொன்னதை பல வகையில் தக்க ஆதாரத்தோடு வட்டியுடன் திருப்பிக்கொடுக்க எங்களால்
முடியும். ஆனால் எங்களுக்கு மானமும், மரியாதையும் குறுக்கிடுகின்றது. கனம் ஆச்சாரியார் ஜாதிக்கோ அதில்லை. அனாவசியமாய் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களை ஒத்திப் போட்டுவிட்டார்கள். இது கட்சி நலத்துக்கும் பார்ப்பன ஜாதிக்கு அதிக ஓட்டு செய்து கொள்ளுவதற்கும் செய்யப்பட்ட சூழ்ச்சியேயாகும். இன்று பார்ப்பனருக்கு மாத்திரம் அடல்ட் பிரான்சைஸ் என்று சொல்லத்தக்க சர்வஜன ஓட்டுரிமை செய்து கொண்டார்கள்.
மற்றவர்களுக்கு அந்தப்படி ஆகும்படி சிறிதும் கவலைப் படவில்லை. எப்படி எனில் படித்தவர்களுக்கு ஓட்டு என்றதில் எல்லாப் பார்ப்பனரும் பார்ப்பனப் பெண்களும் ஓட்டர்களாகிவிட்டார்கள். மற்ற ஜாதியில் 100க்கு 10, 15 கூட ஓட்டராக முடியவில்லை. இந்த சூழ்ச்சியை என்ன என்று சொல்லுவது? எனவே பார்ப்பன ஆட்சி தொட்டதெல்லாம் சூதும் வஞ்சகமும் சுயநலமுமாகவே இருக்கிறது
நம்மவர்கள் கதி அதோ கதிதான்
மதுவிலக்கு சூழ்ச்சியும் ஹிந்திக் கொடுமையும் நம் மக்கள். கல்வியை நாசமாக்கி விடப்போகிறது. மதுவிலக்கு வெற்றி பெற வேண்டுமென்பதே நமது ஆசை. ஆனால் அது வெறும் சூழ்ச்சித் திறமானதால் அது வெற்றி பெறுவது குதிரைக் கொம்புதான். அதுவெற்றி
பெற்றாலும் பெறாவிட்டாலும் அதனால் பண வருவாய் குறையும் என்பது நிச்சயம், அந்தக் குறைவு கல்வியையும் போக்குவரவு ரோட்டு பாலம் முதலிய சாதனங்களையும் தான் பாதிக்கும். ஏனெனில் மற்ற விஷயங்களில் செலவைக் குறைக்க கைவைக்க முடியாது. இப்பொழுதே பார்ப்பனர் மாத்திரம் 100க்கு 100 பேரும் படித்திருக்கின்றனர். மற்ற வகுப்பார் 100க்கு 2,3,5,6 பேர்கள்தான் படித்திருக்கிறார்கள். இந்த லக்ஷணத்தில் படிப்புக்கு செலவுக்குப் பணம் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் செய்யும் தொழிலில் இருந்து சம்பாதித்து சரிகட்ட வேண்டுமாம். ஆகவே பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படிப்பதா? உபாத்தியார்கள் பிழைக்க சம்பளத்தையும் கொடுத்துவிட்டு தொழில் செய்வதா என்று பாருங்கள். பார்ப்பனர்கள் எப்படியும் படித்துவிடுவார்கள்; படித்தும் விட்டார்கள். நமது சதிதான் அதோகதி
குடி அரசு - 1937 (2) 266
இன்றைய அரசியல் நிலை
மற்றும் இப்படிப்பட்ட மதுவிலக்காவது எல்லா ஜில்லாக்களிலும் அனுஷ்டிக்கப்படுமா? என்று பாருங்கள். வருஷம் ஒரு ஜில்லா வீதம் பார்த்தாலே எல்லா ஜில்லாவும் முடிய இன்னம் 25 வருஷம் பிடிக்கும் இதற்கு சரிக்கட்ட 6 கோடி ரூபாய்க்கு வேறு புதிய வரிபோடவேண்டும் இந்த சந்தர்ப்பத்தில் பட்டாளத்தில் ஒரு காசு குறைக்க முடியாது குறைத்தோமேயானால் நமது சுயராஜ்யம் இட்டாலி ஆட்சியோ, ஜர்மன் ஆட்சியோ என்பதாகத்தான் ஆகிவிடும். முசோலினியாவது, ஹிட்லராவது நமது சக்கரவர்த்தியாகி விடுவார்கள். அல்லது புதுச்சேரி, கோவா போல் ஐரோப்பிய அரசர்கள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நாடாக ஆனாலும் ஆகிவிடும். மற்றும் இன்றைய ஞானமற்ற சூழ்ச்சி மதுவிலக்குக்கு ஆக அனாவசியமாய் மதுவிலக்கு இல்லாத ஜில்லா வாசிகள் பணம் மதுவிலக்கு ஜில்லாவுக்கு வீணில் செலவழிக்க வேண்டியதுதான் கண்டபலன். கள்ளை நிறுத்த என்று ஜஸ்டிஸ் கட்சியார் செய்த முயற்சியை பாழாக்கிவிட்டார்கள். அது நடந்திருந்தால், இப்போது ஒரு அளவுக்கு மதுவிலக்கு யோக்கியமான. முறையில் காரியத்தில் அமலுக்கு வந்திருக்கும். வீணாய் பொறுப்பற்ற காலி ஆட்களைச் சேர்த்துக்கொண்டு பார்ப்பனர்கள் அரசியல் மூலம்
நம் மக்களுக்கு தொல்லை கொடுப்பதுதான் இன்றைய அரசியல் நிலை தற்கால நிலை என்று சொல்லவேண்டும்.
குறிப்பு: 07.11.1937 ஆம் நாள் சேலம் சென்டரல் திரையரங்கில் சேலம் மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாடு, 08.11.1937 ஆம் நாள் இராசீபுரத்தில் நடைபெற்ற இராசீபுரம் வட்ட மூன்றாவது: சுயமரியாதை மாநாடு மற்றும் பொன்னம்மாபேட்டை, நாமக்கல் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்கள் இவைகளில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 14.11.1937
ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காங்கரசின் ராணுவ ஆட்சி
காங்கரஸ் என்பது பார்ப்பனர்களின் ஸ்தாபனம் என்றும், அதில் உள்ள பார்ப்பனரல்லாதார் சுதந்தரமற்ற அடிமைகள் என்றும், பார்ப்பனர். காங்கரசில் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சி நடத்துகிறார்கள். என்றும் சுயமரியாதையும், சுதந்தர புத்தியும் உள்ளவனுக்கு காங்கரசில் இடமில்லையென்றும் அதனாலேயே நாம் காங்கரசை விட்டு வெளியேறி காங்கரசின் சூழ்ச்சிகளையும், கேடுகளையும் வெளியாக்கி வருகிறோம்
என்றும் பலதடவை எழுதிவந்திருக்கிறோம். பேசியும் வந்திருக்கிறோம். இதை நமதருமை பார்ப்பனரல்லாத தோழர்கள் சிலர் நம்பாமலும் சிலர் அறிந்தும், தங்கள் சுயநலப் பதவிக்கும், வயிறு வளர்ப்புக்கும் ஆக அறியாதவர்கள் போல் நடந்து கொண்டும் இருப்பதல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமைகளாகவும், கையாள்களாகவும் இருந்துகொண்டு பார்ப்பனரல்லாதார். முன்னேற்றத்துக்கு தொல்லை விளைவித்து வருகிறார்கள்.
பாடிப்பிணை
ஆனால் காலப்போக்கில் நாளாக நாளாக நாம் சொல்லுவது வெட்ட வெளிச்சம் போல நிஜமாகி பல காங்கரஸ் பார்ப்பனரல்லாதார்
புத்தி பெற்று வருகிறார்கள். இந்த புத்தி கற்பிப்பானது மற்றும் கில அறியாத பார்ப்பனரல்லாதாருக்கும் சுயநலத்துக்கு ஆக சமூகத்தை காட்டிக்கொடுத்தாவது வயிறு வளர்க்கலாம், பதவி பெறலாம் என்கின்ற பைத்தியகார பேராசைக்காரருக்கும் ஒரு படிப்பினையாகட்டும் என்றே பார்ப்பனரை நம்பிய பல பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் பட்ட அவமானத்தையும், கெட்ட பெயரையும் பற்றி இன்று குறிப்பிடுகிறோம்.
பார்ப்பனர் தொல்லை சென்னை கார்ப்பரேஷனில் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் சுமார் 20 வருட காலமாய் தொல்லை கொடுத்து வந்தது யாரும் அறிந்ததேயாகும். ஒவ்வொரு வருட கார்ப்பரேஷன் தேர்தலிலும் தோழர் எஸ். சீநிவாசய்யங்காரின் பணம் ஏராளமாகச் செலவழிக்கப்பட்டு கூலிகள் வேட்டையாடப்பட்டாலும், சென்ற வருஷம் வரை காங்கரசுக்கு மெஜாரிட்டி வெற்றி இல்லாமலே இருந்து வந்தது. தோழர் சாமி
குடி அரசு - 1937 (2) 268
வெங்கிடாசலம், ஜனாப் அமீத்கான் முதலியவர்கள் சமீபத்தில்தான் காங்கரஸ் மேயராக ஆகி இருந்தாலும் ஜஸ்டிஸ் கட்சியாரின் தயவினாலேயே அப்பதவி பெற அவர்களால் முடிந்ததே ஒழிய காங்கரஸ்காரர் சுதாவில் மேயராக முடியவில்லை.
சென்ற வருஷமும் இவ்வருஷமும் மாத்திரம் காங்கரஸ் மேயர்கள் வேறு கட்சி தயவில்லாமல் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இவ்வருஷங்கூட சென்னையில் பொதுத்தேர்தல் ஆகி இருந்தால் காங்கரசுக்கு கோவிந்தா. ஆகியிருந்தாலும் ஆகியிருக்கும். எப்படியானாலும் இவ்வருஷம் மேயர் தேர்தலில் காங்கரஸ் வெற்றி பெற்றதால் நாம் எவ்வித அதிருப்தியும் அடையவில்லை. ஏனெனில் ஒரு ஆதிதிராவிடர் மேயரானது உலக
சரித்திரத்தில் இதுவே முதல் தடவை. அதுவும் ஜஸ்டிஸ் கட்சி ஆதிதிராவிடர்
- ஜஸ்டிஸ் கொள்கை ஆதிதிராவிடர் - ஜஸ்டிஸ் கட்சியால் பாலூற்றி வளர்க்கப்பட்ட ஒரு ஆதிதிராவிடர் 4 அணா செலவில் மேயராவதற்கு மாத்திரம் காங்கரஸ் பெயரைச் சொல்லிக்கொண்டு மேயரானது நமக்கு உண்மையிலேயே மனதார திருப்தியான விஷயமாகும்
சிவஷண்முகம் காங்கரஸ் மேயரா?
ஆதிதிராவிடர்கள் விஷயத்தில் காங்கிரசு கொள்கையைப் பற்றி அதிகக் கட்டுப்பாடு செய்வதில்லை என்கிற காரணத்தாலும் இந்தத்தடவை கண்டிப்பாக மேயர் பதவி ஒரு ஆதிதிராவிடருக்கே கொடுத்தாக வேண்டும் என்று ஐஸ்டிஸ்காரர்கள் ஒரு ஏற்பாடு ஆதியிலேயே செய்து வைத்து விட்டதினாலும் காங்கரசில் பெயருக்குக்கூட தகுதியான ஒரு ஆதிதிராவிடர் இல்லாததினாலும் தோழர் சிவஷண்முகம் அவர்களாவது கிடைத்தால் போதுமென்று காங்கரசுக்காரர்கள் கருதி மேயர் வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து கையெழுத்து வாங்கி மேயராக்கி பெயருக்கு காங்கரஸ் மேயர் என்ற பெயர் மாத்திரம் பெற்றுக்கொண்டார்கள்
வகுப்புவாத வெற்றி.
எப்படி ஆனாலும் சரி, நம் காலத்தில் இரண்டு ஆதிதிராவிடர்களை மந்திரிகளாகவும் ஒரு ஆதிதிராவிடரை மேயராகவும் பதவியில் பார்த்துவிட்டோம். இவைகளை தகுதியின் காரணம் மாத்திரமே என்றல்லாமல் நாம் செய்து வந்த வகுப்புவாதத்தினாலேயே காங்கரசும் காந்தியும் ஜவஹர்லாலும் பார்ப்பனர்களும் தோழர் சத்தியமூர்த்தியும் கனம் ஆச்சாரியாரும் “நாங்கள் பட்டினி கிடந்தோ தூக்குப்போட்டுக்கொண்டோ வங்காளக்குடாக்கடலில் விழுந்தோ செத்தாலும் சாவோமே ஒழிய- வெள்ளைக்கார ஆட்சியில் இருந்தாலும் இருப்போமே ஒழிய வகுப்புவாதத்தை மாத்திரம் ஒப்புக்கொள்ளமாட்டோம்” என்று சபதம்
கூறி இந்தியா பூராவும் சகல விதத்திலும் எதிர்த்து வந்த- வருகிற வகுப்புவாதத்தினாலேயே பார்த்துவிட்டோம். 2௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நஷ்டம் இல்லை ஆகவே ஜஸ்டிஸ் கட்சி 500 கெஜமல்ல, இனி 5000 கெஜ ஆழத்தில் 'புதைக்கப்பட்டுவிட்டது'' என்றாலும் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என்றும் அதனால் கெட்டுப்போகும் படியான காரியம் ஒன்றும் இல்லை என்றும் சொல்லுவோம். ஆனால் இதற்கு நன்றி விசுவாசமாக தோழர் சிவஷண்முகமும் கனம் முனிசாமியும் நடந்துகொள்வார்களா. என்று சிலர் ஐயுறலாம். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. நன்றி
விசுவாசம் என்பது பலனடைந்தவர்களுடைய கடமையே ஒழிய உதவி செய்தவர்கள் எதிர் பார்க்கக்கூடிய காரியமல்ல. எதிர்பார்ப்பதும் சிறுமைக் குணமேயாகும். இரண்டாவது தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு நாம் ஆரம்பம் முதலே சொல்லி வந்திருப்பது என்னவென்றால் நன்றி விசுவாசம்
காட்டக்கூடிய சவுகரியமான நிலையில் அவர்கள் இல்லையென்றும் எப்படியாவது தங்களுக்கு காரியமானால் போதும் என்கின்ற கொள்கையே இன்னும் கொஞ்ச நாளைக்கு இருக்க வேண்டும் என்றும் சொல்லி வந்திருக்கிறோம். இப்போது நடைமுறையில் சொல்லப்படும் நன்றி விசுவாசம் என்பதும் ஒரு முதலாளித்தன்மையேயாகும். விவகாரம் வரும்போது அவற்றைப் பற்றி விவகரிப்போம். ஆகவே காணாதன - எண்ணாதன - காணவும் எண்ணவும் முடியாதன கண்டோம் என்று மகிழ்ச்சி அடைந்து ஆசி கூறுகிறோம்.
மனு ஆட்சி.
மற்றபடி கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாதார்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள் நடந்துகொள்ளும் மனு ஆட்சியானது மனம் பதறக்கூடியதாகவே இருந்து வருகிறது கார்ப்பரேஷனில் உள்ள பார்ப்பனரல்லாதார் பார்ப்பனக் கொடுமையையும் பார்ப்பன சூழ்ச்சியையும் பார்ப்பன வகுப்புவாதத்தையும் கண்டு மனந்தாளாமல் தங்களுக்குள் முன்பின் இருந்த பல மனத்தாங்கல் களையும் அபிப்பிராய பேதங்களையும் ஒத்தி வைத்துக்கொண்டு இப்போது ஒன்று சேர ஆரம்பித்த உடனே பார்ப்பனர்கள் இவர்களை எப்படி பிரிப்பது அல்லது அழிப்பது என்று சதியாலோசனை செய்து வெற்றியும் பெற்று விட்டார்கள்.
விவரம் என்னவென்றால் கார்ப்பரேஷனில் காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் 40 பேர்கள், அதில் பார்ப்பனர்கள் 12 பேர்கள், பார்ப்பனரல்லாதார்.
28 பேர்கள். இப்படி இருந்தும் பார்ப்பனரல்லாதாருக்குள் ஒற்றுமையும் கட்டுப்பாடும் இல்லாததால் ஒரு அய்யங்கார் பார்ப்பனர் கார்ப்பரேஷன் காங்கரஸ் கட்சிக்கு தலைவராக சூழ்ச்சி செய்துகொண்டார். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களின் நலத்துக்கு தக்கபடி இந்தப்
குடி அரசு - 1937 (2) 270
பார்ப்பனரல்லாதார்களை மேலும் பயன்படுத்திக்கொண்டு வந்ததோடு பார்ப்பனர்கள் இவர்களை குரங்கு போல் ஆட்டியும் வந்திருக்கிறார்கள்
சூழ்ச்சி
கார்ப்பரேஷனில் உத்தியோகஸ்தர்கள் நியமிக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் பார்ப்பனர்களையே நியமிக்க செய்யப்படும் சூழ்ச்சிகளிலும் பார்ப்பனர்கள் இவர்களைக் கொண்டு வெற்றி பெற்றும் வந்தார்கள். கடைசியாக பார்ப்பனரல்லாதார் மெம்பர்களில் சிலருக்கு எப்படியோ சுயமரியாதை உணர்ச்சிவந்து பார்ப்பன சூழ்ச்சியையும் பார்ப்பன ஆதிக்க சர்வாதிகாரக் கொடுமையையும் உணர ஆரம்பித்த உடனே பார்ப்பனர்கள் அதை மட்டம் தட்டிவிட ஆரம்பித்துவிட்டார்கள். இது விஷயங்களைப் பற்றி சென்ற வாரம் “குடி அரசி”ல் எழுதி இருந்தபடி கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி நியமன தேர்தலில் பார்ப்பனரல்லாதார். ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்று பார்ப்பனர்கள் கண்டுகொண்டதோடல்லாமல்
நாம் குறிப்பிட்டபடியே பார்ப்பனரல்லாதார் கார்ப்பரேஷன் காங்கரஸ். கட்சித்தலைவர் விஷயத்திலும் தோழர் பாஷ்யம் அய்யங்கார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை விலக்கிவிட்டு தோழர் சாமி வெங்கிடாசலத்தையோ அல்லது தோழர் விநாயக முதலியாரையோ தலைவராக்கக் கூடும் என்று கருதி திடீரென்று அடக்கு முறையை கையாண்டு பல மெம்பர்களை காங்கரசில் இருந்து விலக்கியும் பலரை கீழ்ப்படிந்து சொன்னபடி நடக்கும்படி செய்தும் அடக்கிவிட்டார்கள்.
இராணுவ ஆட்சி அதாவது காங்கரஸ் மெம்பர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று கலாட்டா செய்து லஞ்சத்தை விசாரிக்க என்று கமிட்டி நியமித்து அதுவும் ரகசியத்தில் விசாரணை என்று ஏதோ விசாரணை செய்ததாக பேர் செய்து கடைசியில் லஞ்சம் வாங்கினார்கள் என்று சொன்னால் கிரிமினல் கேசு ஆகிவிடும் என்று பயந்து ஏதேதோ முட்டாள்தனமாக காரணங்களைக்காட்டி அதாவது பதவியைத் தன் சொந்த நலனுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் பதவியை துஷ்பிரயோஜனப்படுத்திக் கொண்டார்கள் என்றும் மற்றும் புரியாத காரணங்களையும் காட்டி தண்டித்துவிட்டதாகச் சொல்லி சின்னாபின்னப் படுத்தி விட்டார்கள். இந்த நடத்தைக்கும் விசாரணைக்கும் தண்டனைக்கும் பெயர் சொல்ல வேண்டுமானால் இதை ஒரு ராணுவ ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும்
இப்போது கட்டுப்பாடு எங்கு போயிற்று?
இனி எப்படியானாலும் தோழர் சாமிவெங்கிடாசலம் தலைவராக வரமுடியாது. அதோடு அவரும் ஏதாவது மூச்சு விட்டால் அவரையும் காங்கரஸ் கட்சியில் இருந்து தள்ளவோ ராஜிநாமா செய்யும்படி கேட்கவோ: 21— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தண்டிக்கவோ தகுந்த குற்றத்தை சாட்டிவிடுவார்கள் என்கின்ற பயத்தில் அவரும் (சாமியும்) அடங்கிவிடுவார் போலவே தெரிகிறது. இது எப்படியோ ஆகி தொலையட்டும். நமக்கும் இதைப்பற்றி கவலை இல்லை காங்கரஸ் மெம்பர்கள் கார்ப்பரேஷனில் கண்டிராக்ட்டு எடுத்து இருக்கிறார் என்றும் தோழர் சாமி அவர்கள் சிமிட்டுக் கண்டிராக்ட் எடுத்திருக்கிறார் என்றும் ஆதாரத்தோடு நாம் எடுத்துக்காட்டி காலத்தில் இந்த காங்கிரஸ் கட்டுப்பாடு எங்கு போயிற்று? அப்போது இந்தப் பார்ப்பனர்கள் வேண்டுமென்றே விட்டுக்கொடுத்துவிட்டு அவரை சர்.ஆர்.கே. ஷண்முகத்துக்கு விரோதமாய் பயன்படுத்திக்கொண்டு இப்போது அவர் ஒரு பார்ப்பனருக்கு எதிராய் பதவிக்கு ஆசைப்படுவார் என்று தெரிந்தவுடன் அவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கைப் பூச்சாண்டி காட்டப்படுகிறது.
சத்தியமூர்த்தி கதை என்ன?
மற்றும் தோழர் சத்தியமூர்த்தியார் விஷயத்தில் புள்ளி விவரங்களுடன் பல ஒழுங்கீனமான புகார்கள் சொல்லப்படுகின்றன. வெகு நாளாகவே சொல்லப்பட்டும் வருகின்றன. அதற்கு ஆதாரமாக தோழர் சத்தியமூர்த்தியார் வீடு வாசல், நகை, மோட்டார் கார், பாங்கியில் இருக்கும் பணம் முதலியவைகளும் தக்க ருஜுவாக இருக்கின்றன. இவற்றை விசாரிக்க யாதொரு விதமான கமிட்டியும் போடப்படவில்லை. எவ்விதமான ரகசிய விசாரணையோ ஊழல்கள் ஒழிக்கும் காரியமோ செய்யப்படவும் இல்லை என்றால் லஞ்சம், ஒழுக்க ஈனம், கட்சிக்கு கெட்ட பெயர் என்பனவெல்லாம் பார்ப்பனரல்லாதாரை தனிப்பட்ட ஆளை குரோத புத்தியுடன் சூழ்ச்சித் தன்மையுடன் ஒழிப்பதற்கு செய்யப்படும் காரியமாய் இருக்கிறதே தவிர ஒழுக்கத்துக்கென்றோ நாணையத்துக்கு என்றோ பொது ஜன நன்மைக்கு என்றோ செய்யப்படும் காரியமாய் இல்லை என்பதற்கு ஆக்ஷ்பணையே இல்லை.
துரோகிகளுக்குப் பமிசா? இதுவரை செய்யப்பட்ட எவ்வளவோ அடக்கு முறைகளிலும் எவ்வளவோ அடங்காப்பிடாரி லிஸ்டில். சேர்க்கப்பட்டவர்களிலும் பார்ப்பனரல்லாதார் பெயர்கள் மாத்திரம் அடிபட்டிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் காங்கரசுக்கு விரோதமாய் வெளிப்படையாய் கட்டுப்பாட்டை மீறி காங்கரசுக்கு துரோகமும் கெட்ட பெயரும் செய்து காங்கரஸ் பதவியை தன் சுயநலத்துக்கு ஆக துஷ்பிரயோகம் செய்தார்கள் என்றவர்களுக்கெல்லாம் பார்ப்பனர் என்கின்ற காரணத்துக்கு ஆக சட்டசபை நியமனமும் மந்திரி வேலையும் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஆனால் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்கு ஆக பலர் மீது கெட்டபெயர் சுமத்தி வெளியிலனுப்பப்பட்டு வருகிறது
குடி அரசு- 1937 (2) 27:
ய்
இப்போது சென்னை கார்ப்பரேஷனில் நடத்தப்பட்ட அடக்குமுறையால் இனி தோழர் பாஷ்யம் அய்யங்கார் தலைமைப் பதவியானது எவ்வித அபத்தும் இல்லாமல் செய்து கொள்ளப்பட்டு விட்டது. சாமியும் வால்காட்ட முடியாமல் செய்யப்பட்டுவிட்டார். தோழர் சிவசைலம் பிள்ளை கல்வி அதிகாரியாக ஆக்கப்பட்ட விஷயமும் கவிழ்க்கப்பட்ட ஒரு பார்ப்பனர் அப்பதவிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டாலும் செய்யப்படலாம்
வேறு உதாரணம் வேண்டுமா?
ஆகவே பார்ப்பன ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இனி என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம். ஜஸ்டிஸ் கட்சி
ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பார்ப்பனர்களால் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள் தோழர்கள் வரதராஜலு
நாயுடு, கல்யாணசுந்தர முதலியார், சக்கரை செட்டியார், சிங்காரவேலு
செட்டியார், ஆரியா, சிதம்பரம்பிள்ளை, ஆதிநாராயண செட்டியார்,
ராமசாமி முதலியவர்கள் ஆவார்கள் என்பது வயது வந்த பெரிய ஆட்களுக்கு எல்லாம் நன்கு தெரியும். சிதம்பரம் பிள்ளை ஆதிநாராயண:
செட்டியார் வெறும் ஆட்களாய் செத்தார்கள். சமீபத்தில் செத்த ஆதிநாராயண செட்டியாருக்கு அனுதாபத் தீர்மானங்கள் கூட சரியாய்
இல்லை. சிதம்பரம் பிள்ளை குடும்பத்தின் கதி சொல்லவே தேவை இல்லை. வரதராஜுலு அழிக்கப்பட்டார், சக்கரை ஒழிக்கப்பட்டார், கல்யாணசுந்தரம் நடைபிணமானார். சிங்காரவேலு சீந்துவாரற்றவராக்கப்பட்டார். ஆரியா விலாசம் தெரியவில்லை. ராமசாமி வெறும் கூப்பாடுடன் சரி என்கின்ற நிலைமையில்தான் ஆக்கப்பட்டுவிட்டார். அதுபோலவே அவர்களுக்கு
பின்னும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக்கொள்ளும் ஆட்களும் அதே கதியைத்தான் அடைந்து வருகிறார்கள். இதில் அதிசயமென்ன இருக்கக்கூடும்?
நமது கேள்வி. ஆகவே சமூகத்தைக் காட்டிக்கொடுத்து சொந்த இனத்துக்கு துரோகம் செய்து எதிரிகளை தஞ்சமடைந்து வயிறு வளர்த்தவர்களோ, பதவி பெற்றவர்களோ, வாழ நினைத்தவர்களோ இது மாத்திரமல்லாமல் இன்னும் எவ்வளவு இழிநிலைக்குப் போனாலும் அதைப்பற்றி கவலைப்படுவது முட்டாள்தனம் என்பதோடு இனியாவது மற்றவர்களுக்கு புத்திவர இந்த சம்பவங்கள் பயன்படுமா என்பதே நமது கேள்வி
குடி அரசு - தலையங்கம் - 14.11.1937
3 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
என்ன செய்யப் போகிறீர்கள்?
பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் இடையறாது பாடுபட்டு வரும் 'விடுதலை! தினசரியை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
தேசத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பார்ப்பனர் செய்து வரும் சூழ்ச்சியையும், அக்கிரமங்களையும் அச்சமின்றி வெளியாக்கி வரும் “விடுதலையை ஆதரிக்கப்போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப்போகிறீர்கள்?
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு முஸ்லீம்களை அடிமையாக்கச் செய்யும் காங்கரஸ்காரர்களின். சூழ்ச்சிகளை வெட்ட வெளிச்சமாக்கி வரும் “விடுதலையை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? தீண்டாமையை ஒழிக்கப் போகிறோம் என்று கூறி தீண்டாதார். முன்னேற்றத்தை தடுக்க செய்யும் அக்கிரமங்களை அஞ்சாது வெளியாக்கும் “விடுதலையை ஆதரிக்கப் போகிறீர்களா? விட்டுவிடப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்?
பார்ப்பனரல்லாத முஸ்லீம், ஆதிதிராவிட தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் மற்றவர்களைப் போல் அரசியலில். முன்னேற்றமடைய வேண்டுமானால் உங்களுக்காகப் பாடுபடும் “விடுதலையை ஒவ்வொருவரும் வாங்கிப் படியுங்கள். அதற்கு உங்களாலான உதவியைச் செய்யுங்கள். “விடுதலை” வீழ்ச்சியுறுமானால் நீங்கள் வீழ்ச்சியுறுவீர்கள். ஆகையால் உடனே "விடுதலைக்கு சந்தாதாரராகச் சேருங்கள்.
சந்தா விகிதம்
தபால் மூலம் முன் பணமாக மாதம் ஒன்றுக்கு 0-11-0
6 மாதத்திற்கு 4-0-0 ஒரு வருடத்திற்கு 7-8-0
விலாசம்:- மானேஜர், விடுதலை ஈரோடு
குடி அரசு - வேண்டுகோள் - 14.11.1937
குடி அரசு- 1937 (2) 274
ஈரோடு அர்பன் பாங்கு
1937-38-வது வருஷத்திய முதல் மகாநாடு:
ஈரோடு அர்பன் பாங்கியின் 1937-38-வது வருஷத்திய முதல் மகாநாடு சென்ற அக்டோபர் மாதம் 30-ந் தேதி சனிக்கிழமை காலை
சுமார் 9-30 மணிக்கு ஷி பாங்கு மாடியில் பாங்கியின் அக்கிராசனாதிபதி தோழர் எம். சிக்கய்யா அவர்கள் தலைமையில் கூடிற்று. அநேக மெம்பர்கள் விஜயம் செய்திருந்தார்கள். ஷி கூட்டத்தில் போர்டாரால் தயாரிக்கப்பட்ட 37-38 வருஷத்திய ஆடிட் ரிப்போர்ட்டும் நிர்வாக அறிக்கையும் படித்து ரிக்கார்டு செய்யப்பட்டதுடன் ஷி வருஷத்திய நிகரலாபம் ரூ. 7150ம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது
நமது ஜில்லாவிலுள்ள எல்லா ஐக்கிய பாங்குகளைப் போலவே இந்தப் பாங்கியும் மெம்பர்களுக்கு 6% வீதம் டிவிடெண்டு பட்வாடா செய்திருக்கின்றது. இப்பாங்கானது ஆரம்பித்து சுமார் 27 வருடங்கள். ஆகின்றது. டி பாங்கியின் வெள்ளி விழாவும் கூடிய சீக்கிரம் நடக்கப்போவதாக அறிகிறோம்.
இந்த பாங்கியின் நிலைமையானது சில வருடங்களுக்கு முன்: இருந்ததைவிட தற்போது மிகவும் வளர்ச்சி பெற்றும், மேம்பட்டும் இருக்கிறதென்பதற்கு டி பாங்கியின் இவ்வருஷத்திய நிர்வாக அறிக்கையே போதிய சான்றாகும். இன்று இந்த பாங்கானது 1566 மெம்பர்களுடனும் ரூ. 77734 செல்லான பங்குத் தொகையுடனும் ரூ.351691 டிபாசிட்டுத் தொகையுடனும், ரூ.247432 மெம்பர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் தொகையுடனும், ரூ.42936 க்ஷேம நிதியுடனும்
இருந்து வருகிறதென்பது யாவருமறிந்ததே. ஷெ பாங்கியின் நிர்வாகமானது இந்த ஜில்லாவிலுள்ள பாங்கிகளுக்கெல்லாம் முதன்மையாக விளங்குவதுடன் மாகாண பாங்கியில் குறிப்பிடப்பட்டுள்ள உயர். ஸ்தானமும் பெற்றிருக்கிறது
டிபாசிட் தொகைகளுக்கு வட்டி விகிதம் ரூ. 1-முதல் 3-வரை குறைக்கப்பட்டிருந்தும் சுமார் 3% லக்ஷம் ரூபாய்க்கு மேல் பொது ஜனங்களுடையதும், மெம்பர்களுடையதும் டிபாசிட் தொகை இருந்து வருகிறதென்றால் ஷி பாங்கின்பேரில் பொது ஜனங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையும், மதிப்பும் இருந்து வருகிறதென்பது, நாம் சொல்லாமலே 25— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
விளங்குகின்றது. தவணை தவறிய கடன் தொகையானது சுமார் ரூ.62
ஆயிரத்திலிருந்து தற்போது சுமார் ரூ. 30 ஆயிரத்திற்கு (பாதிக்குமேல்) குறைந்திருப்பதற்கு காரணம் ஷி பாங்கி நிர்வாகஸ்தர்களின் உழைப்பும் அக்கரையுமேயாகும். தவணை தவறிய கடன்தொகையின் விகிதத்தை கவனித்தால் நிலுவை நின்ற கடன் தொகையில் 100-க்கு 12-விகிதமே (12%)
ஆகிறது. இவ்விஷயத்திலும் இந்த பாங்கானது நமது ஜில்லாவிலுள்ள இதர ஐக்கிய பாங்குகளுக்கெல்லாம் முதன்மை பெற்றிருக்கிறதென்றே சொல்லலாம்.
மெம்பர்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அநேக சவுகரியங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. உதாரணமாக மெம்பரல்லாதவர்களும் நகைக்கடன் வங்கும் நோக்கத்துடன் "B" வகுப்பு பங்குதாரர்களென ஒரு வகுப்பு ஏற்படுத்தி அதற்காக (குறைந்த கட்டணமாக) 0-4-0 பங்குத்தொகை செலுத்தியவுடன் கடன் பெறலாம். ட செலுத்திய பங்குத்தொகையும் கடன் தீர்ந்த உடன் வாபீஸ் செய்து விடுகிறார்கள். தங்கத்தைப் பொறுத்த மட்டில் மதிப்பிடப்படும் தொகையில்.
ரூ. 100-க்கு 60 வரைதான் கடன் கொடுக்கலாமென்றிருந்ததை தற்போதைய நிர்வாகஸ்தர்களின் முயற்சியினால் ரூ.100-க்கு 80 வரை கொடுக்கலாமென்று ஏற்பாடாயிருப்பதானது மெம்பர்களுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடியதே. நமது ஊரிலுள்ள இதர எந்த பாங்கியிலும் நகைக்கடன் விஷயமாய் இவ்வளவு சவுகரியங்கள் இல்லையென்றே நிச்சயமாய்ச் சொல்லலாம். தவிர மெம்பர்களுக்கு கேஷ் கிரடிட் கணக்கு ஏற்படுத்தி நபர் ஜாமீன் பேரிலோ ஸ்தாவர சொத்து ஆதாரத்தின் பேரிலோ ரூ.500 வரை கடன் கொடுக்கப்பட்டு வந்ததை தற்போது ரூ.1000-ம் ஆக உயர்த்தப்பட்டிருப்பதானது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் இதனால் அநேக வியாபாரிகளுக்கு அதிக பயனளிக்குமென்பதில் சந்தேகமில்லை. எவ்வகைக் கடனுக்கும் அபராத வட்டி என்பதை அறவே நீக்கப்பட்டிருக்கிறது. அடமானக் கடன்களுக்கு முன்பு இருந்த 5 வருஷக் கெடுவை இப்போது 7 வருஷமாக உயர்த்தப்பட்டிருப்பதானது அடமானத்தின் பேரில் கடன் வாங்குபவர்களுக்கு திருப்பிச்செலுத்தும் சக்தி எவ்வளவு சவுகரியமாயிருக்கிறதென்பது அனுபவத்தில் கண்டவர்களுக்கே தெரியும் முன்பு ரூ.100-க்கு வருஷம் 1-க்கு ரூ 10-15-0 வீதம் வட்டி வாங்கப்பட்டு வந்ததை நிறுத்தி தற்போது அடமானம், டிபாசிட் கடன்களின் பேரில் வட்டி ரூ.100-க்கு வருஷம் 1-க்கு ரூ 7-13-0 (மாதம் 1-க்கு 0-10-5 ஆகவும் ஜாமீன் கடன்களின் பேரில் வட்டி ரூ.100-க்கு வருஷம் 1-க்கு
ரூ. 8-12-0 (மாதம் 1-க்கு 100-க்கு 0-11-8) ஆகவும் குறைக்கப் பட்டிருக்கிறதாக தெரிகிறது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதின் காரணமே முன் வருஷங்களில் கொடுத்து வந்த டிவிடெண்டுகளைக் காட்டிலும், தற்போது சற்று குறைத்துக்கொடுக்க காரணமேற்பட்டிருக்கலாம் ஐக்கியமுறைக் கொள்கைப்படி ஐக்கிய சங்கங்களில் கடன் பெறும் சவுகரியத்திற்காகவே முக்கியமாக மெம்பர்கள் சேர்க்கப்படுகிறார்களாதலால்.
குடி அரசு - 1937 (2) 276
மெஜாரிட்டியான கடன் வாங்கும் ஏழை மெம்பர்களிடமிருந்து குறைந்த வட்டி வசூலித்து சற்று குறைந்த டிவிடெண்டு கொடுப்பதானது கடன்: பெற்றுள்ள ஒவ்வொரு மெம்பருக்கும் மிகவும் லாபகரமானதே என்பது ஐக்கிய முறை அறிந்த நேயர்களுக்கு நன்றாய்த் தெரியும். டிவிடெண்டு குறைவானது கடன் ஒன்றும் பெறாமல் டிவிடெண்டு தொகையை மட்டும் எதிர்பார்த்து பங்குத் தொகை செலுத்தியிருக்கும் ஒரு சில மெம்பர்களுக்கே
சிறிது அதிருப்தியை அளிக்கக்கூடும். ஆனால் அது ஐக்கியக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானதே
நிற்க, மெம்பரல்லாத டிபாசிட்டுதாரர்கள் அவர்கள் செலுத்தியிருக்கும் டிபாசிட்டுத் தொகைகளின் பேரில் கடன் வாங்க முடியாமலிருந்த குறையை நீக்கி தற்போது மெம்பரல்லாத டிபாசிட்டுதார்களும் அவர்கள் டிபாசிட்டுகளின் செக்யூரிட்டியின் பேரில் ரூ. 100-க்கு 90 வரை கடன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சரக்குகளின்பேரில் கடன் கொடுக்க வேண்டிய முயற்சிகள் செய்து வருவதாயும் தெரிகிறது
இந்த பாங்கியில் இவ்வளவு சவுகரியங்கள் இதுவரை ஏற்பட்டதே இல்லையென்பதை ஒருவரும் மறுக்க முடியாது. தற்போதைய நிர்வாகஸ்தர்கள் மெம்பர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் கூடுமான வரையில் எல்லா விதத்திலும் மிகுந்த சவுகரியங்கள் செய்து வைக்க வேண்டுமென்ற கொள்கையின் பேரிலேயே உழைத்து வருவதுடன், பொது ஸ்தாபனமாகிய இந்த பாங்கியில் எவ்விதக் கட்சி பேதமோ, சுயநலமோ இன்றி நிர்வாக விஷயத்தில் மிகுந்த கவலையுடன், தொடர்ந்து வேலை செய்து வருகிறார்களென்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்குகிறது?
தோழர் எம். சிக்கய்யா அவர்கள் அக்கிராசனாதிபதியும், தோழர் வி.வி.கி.வி. பெரியசாமி முதலியாரவர்கள் உப அக்கிராசனாதிபதியும், ஒரு பெண் டைரக்டர் உள்பட மற்றும் 9 டைரக்டர்களும் ஷி பாங்கியின். நிர்வாகஸ்தர்களாவார்கள். இந்த மாகாண கோஆப்பரேடிவ் இலாகாவிற்கே ஈரோடு அர்பன் பாங்கியில்தான் ஒரு பெண் டைரக்டர் முதன் முதலில் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிற தென்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 14.11.1937
27— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆபத்து! ஆபத்து!! கல்விக்கு ஆபத்து!!!
காங்கரசின் சுயராஜ்யமென்பதற்கோ பூரண விடுதலை என்பதற்கோ அருத்தம் ராமராஜ்யம் என்றும் சுயராஜ்யம் கிடைத்துவிட்டது என்றால் ராமராஜ்யக் கொள்கைப்படியே ஆட்சி நடைபெறும்படி செய்வதுதான். என்றும் காங்கரசில் நாலணா மெம்பராகக்கூட இல்லாத காங்கரஸ் சர்வாதிகாரியான காந்தியார் முதல் காங்கரசின் பேரால் ஏதேச்சாதிகாரம் செலுத்தும் கனம் சி.ஆர். ஆச்சாரியார் முதலிய ௪௯௯ பார்ப்பனர்களும் சொல்லி வருவது யாவருமே அறிந்ததாகும். அந்த ராமராஜ்யக் கொள்கையினிடத்தில் மக்களுக்கு மரியாதையும் பெருமையும் ஆசையும் வருவதற்கு ஆக ராமாயணத்தை ஆரிய முறைப்படி படிப்பதற்கு ஆக ஹிந்தியை படிக்கும்படி குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதை ஆக்ஷேபித்து தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து வருவதும் வாசகர்கள் உணர்ந்ததேயாகும். பொதுவாக ராமராஜ்யம் என்றால் மனுதர்ம ஆட்சி என்பதும், மனுதர்ம ஆட்சி என்பது வருணாச்சிரம ஆட்சி என்பதும், நாம் சொல்லாமலே வாசகர்கள் அறிந்த விஷயமாகும்
தோழர் காந்தியார் அவர்களும் அநேக தடவைகளில் தான் ஒரு பரிசுத்த வருணாச்சிரமவாதி என்றும் வருணாச்சிரம ஆட்சியை ஏற்படுத்தவே சுயராஜ்யம் கோருகிறேன் என்றும் பல தடவை வடநாட்டுப் பிரசங்கங்களில் வெளிப்படையாகச் சொல்லி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் காங்கரசானது எப்படியோ சூழ்ச்சிகளும் புரட்டு பித்தலாட்டங்களும் செய்து ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய உடன். இப்போது மேலே நாம் கூறியது போலவே வர்ணாச்சிரம ஆட்சியை ஏற்படுத்தவும் வர்ணாச்சிரம முறையை நிலைநிறுத்தவும் காந்தியாரும் பார்ப்பனரும் பச்சையாகவே பாடுபட்டுவருகிறார்கள். இக்கொடுமைக்கு தமிழ்நாட்டில் சில பார்ப்பனரல்லாதார் அதிலும் மனு ஆட்சி முறைப்படி எந்தக் கூட்டத்தார் சூத்திரர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் வேசி மக்கள், விவசாரி மக்கள் என்றும் இதுவரை அழைக்கப்பட்டு வந்ததோடு இனியும் அழைக்கப்பட ஆளாகப் போகிறார்களோ அந்த மக்களில் சிலரே இப்போது உதவி புரிந்தும் காட்டிக்கொடுத்தும் வயிறு வளர்க்கிறார்கள் - பதவி அடைகிறார்கள் என்பனவற்றை எடுத்துக்காட்டவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - 1937 (2) 278
மனு ஆட்சியில் பார்ப்பனரல்லாதார்கள் (சூத்திரர்கள்) படிக்கக்கூடாது என்பது முக்கிய தத்துவமாகும். “படித்த சூத்திரனையும் குளித்த குதிரையையும் பக்கத்தில் வைத்திருப்பது ஆபத்து” என்பது மனு முதலிய சாஸ்திர வாக்கியம்.
ட “சூத்திர”னிடத்தில் பணம் இருக்க இடம் கொடுத்தால் அது பிராமணனுக்கு ஆபத்து'' என்பது மனுதர்மம்.
“ சூத்திரனுக்கு” கல்வி கற்றுக்கொடுத்த பிராமணன் நரகத்துக்கு போவான் '' என்பதும் மனு வாக்கியம்
“சூத்திரன்” ஆட்சி புரிகின்ற நாட்டில் “பிராமணன்” குடி இருக்கக்கூடாது" என்பதும் சாஸ்திர வாக்கியம் எனவே இந்தக் காரணத்தினாலேதான் அந்நிய நாட்டினரிடம் “இந்து சாஸ்திரங்களுக்கு விரோதமாய் நடப்பதில்லை - அவற்றில் கை வைப்பதில்லை! என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு அடிக்கடி அந்நிய ஆட்சியை பார்ப்பனர்கள் அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதற்கும் சரித்திர ஆதாரமும் பிரத்தியக்ஷ நடவடிக்கை அனுபவமும்
இருந்து வருகிறது இப்போதைய ஆங்கிலேய ஆட்சியானது முஸ்லீம்கள் ஆட்சியைவிட வெகு தூரத்துக்கு வருணாச்சிரமம் கெடும்படி செய்து வந்திருக்கிறது என்பதை யாரும் ஒப்புக்கொள்ளுவார்கள்.
சண்டாளர்கள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சூத்திரர் வேசி மக்கள் என்னும் பார்ப்பனரல்லாத இந்திய மக்களையும் முஸ்லீம்கள் மதம் மாற்றப்படுவதன் மூலமே மனிதத்தன்மை உண்டாக்கிவந்தார்கள் அதனாலேயே இன்று இந்தியாவில் 8 கோடி மக்கள் சமுதாய சுயமரியாதையுடன் வாழச்செய்ய முடிந்தது ஆங்கிலேய ஆட்சியோ மதம் மாறவேண்டிய அவசியமில்லாமலே
ஒரு அளவுக்கு சமுதாய சுயமரியாதை உண்டாகும்படி செய்து வந்திருக்கிறது. இதனாலேயே வருணாச்சிரம காந்தியாரும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாத கூலிகளைக் கொண்டே சிறிது காலமாய் ஆங்கிலேயருக்கு தொல்லை கொடுத்து வந்தார்கள். எப்படியோ இப்போது ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தத்தக்க யோக்கியதையை இந்த வருணாச்சிரமிகள் அடைந்து பழையபடியே ஆங்கிலேயருக்கு தாசத்துவம் பாடவும் ஆங்கில அதிகாரிகளுக்கும் தலைவர்களுக்கும் அடிபணிந்து புகழ்பாடி அவர்கள் நிலைக்க சிபார்சு பேசவுமான யோக்கியதைக்கு வந்து விட்டார்கள். அரசியலின் பேரால் செய்யப்படும் ஒவ்வொரு காரியத்தையும் ஆங்கில அதிகாரிகளைக் கலந்து ஆங்கில ஆட்சிக்கும் ஆங்கில அதிகாரிகளுக்கும் இதனால் யாதொரு கெடுதியும் குறைவும் இல்லை என்று மெய்ப்பித்துக் காட்டிய பிறகே செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த முறையிலேயே
279 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஹிந்தியை நம் மக்களுக்குள் புகுத்த வேண்டுமென்று தொல்லை கொடுப்பதுடன் இப்போது பொதுக் கல்வி விஷயத்திலும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்குக் கொடுமை செய்யத் துணிந்துவிட்டார்கள்.
அதாவது இந்தியாவில் பார்ப்பனரல்லாத ஏனைய மக்கள் அறிவுக் கல்வி பெறாமல் இருக்கத்தக்க சூழ்ச்சி இப்போது காந்தியாரால் செய்யப்படுகிறது
அவை என்னவென்றால்,
1. “பிள்ளைகளுக்கு 7 வயது முதல் 14 வயது வரை இலவச கட்டாயப் படிப்புப் படிப்பிக்க வேண்டும்
2. இந்த 7 வருஷமும் தாய் பாஷையிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்
3. பாடங்கள் என்பது ஏதேனும் ஒரு கைத்தொழிலை அனுசரித்ததாகவே இருக்கவேண்டும்
4. அந்தக் கைத்தொழிலைப் பழகுவதன் மூலமே வரும்படி ஏற்படும்படி செய்து அந்த வரும்படியிலேயே பள்ளிக்கூடம் நடைபெற வேண்டும்.
5. இந்த மாதிரி பள்ளிக்கூடம் பூராவும் சர்க்காரே நடத்த வேண்டும்.”
என்று காந்தியார் கல்வித்திட்டம் வகுத்து இருக்கிறார். காந்தியாரின். கல்வித் திட்டம் என்றால் காங்கரஸ் கல்வித் திட்டம் என்று பெயர். காங்கரஸ் கல்வித் திட்டம் என்றால் இந்திய அரசாங்கத்தின் கல்வித் திட்டம் என்று பெயர். ஆகவே இனி நமது மக்களின் கல்வித் திட்டம் மேல் குறிப்பிட்டது என்று ஏற்பட்டு விட்டது.
காந்தியார் வாயிலிருந்து வந்து விட்டதால் இனி இதை எந்த காங்கரஸ்
வாதியும் குறைகூற மாட்டான். குறைகூறினால் தேசத்துரோகியாகிவிடுவான். அதுமாத்திரமல்லாமல் குறைகூறுபவன் மந்திரியாய் இருந்தால் மாதம் 800 ரூபாய் சம்பள வரும்படிவாயிலும் பிரயாணத்திட்டத்தில் மாதம் 300
ரூபாய்க்கு குறையாத பிரயாண வரும்படி வாயிலும் ஒரு கூடை மண்ணு
விழுந்துவிடும். சட்ட சபை காரியதரிசியாய் இருந்து குறைகூறினாலோ கிட்டத்தட்ட இதில் பகுதித்தொகை அளவு கிடைக்கும் வரும்படி வாயிலும் மந்திரிகளுக்கு யாருக்காவது ஏதாவது காரியம் சிபார்சு செய்வதால் கிடைக்கும் வரும்படி வாயிலும் மண்ணு விழுந்துவிடும்
சட்டசபை மெம்பராக இருந்து குறைகூறி விட்டாலோ அவர்களுக்கும் மாதம் 75 ரூபாய் வரும்படி வாயிலும் மாதம் சுமார் 100 ரூபாய்க்குக் குறையாத பிரயாணப்படி வரும்படி வாயிலும் சிபார்சு செய்வதில் ஏதாவது கிடைக்கக்கூடிய வரும்படி வாயிலும் மண்ணு விழுந்துவிடுவதோடு பலருக்கு
குடி அரசு - 1937 (2) 280
சாப்பாட்டுக்கே ஆபத்து ஆகிவிடும். இவர்கள் சங்கதியே இப்படி இருந்தால் இனி காங்கரஸ் பக்தர்கள், தொண்டர்கள் ஆன பிரசாரகர்கள் சங்கதி கேட்க வேண்டுமா, அல்லது நாம்தான் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஆகவே இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துவிடலாம் என்று தான் காந்தியாரும், கனம் ஆச்சாரியார், தோழர் சத்தியமூர்த்தியார் ஆகியவர்கள் கோஷ்டியாரும் உறுதியுடன் இருப்பார்கள். கவர்னர், கவர்னர் ஜனரல் ஆகிய பிரபுக்களும் நாம் எவ்வளவுதான் கூப்பாடு போட்டாலும் 1000 கணக்காய் ஜெயிலுக்குப் போகவும் 100 கணக்காய் கவர்னர்கள் மோட்டார் வண்டிகளின் சக்கரத்தில் சிக்கி உயிர்விடும் படியாகவும் போலீஸ் அடிபடும்படியாகவும் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் “புதிய அரசியல் திட்டத்தில் இதுவிஷயம் மந்திரிகளைச் சேர்த்து விட்டதாலும் மந்திரிகள் இதனால் கல்வி கெட்டுப் போகாது என்று உறுதி கூறி இருப்பதாலும் இந்த விஷயத்தில் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை என்று மேன்மை தங்கிய வைஸ்ராய் பிரபுவும், அதற்கடுத்தாப்போல் மேன்மைதங்கிய கவர்னர் பிரபுவும் அபிப்பிராயப்படுகின்றனர்'' என்று
பதில் அனுப்பிவிடுவார்கள். இதற்கு மேல் நாம் சீமைக்கு எட்டும்படி கூப்பாடு போட்டாலும் இந்தியா மந்திரி வைஸ்ராய் பிரபுவை டெலிபோனில் கேட்கும்போது வைஸ்ராய் பிரபு “காங்கரஸ்காரரின் இந்தக்
கல்வித் திட்டத்தினால் கண்டிப்பாய் நமக்கு ஒன்றும் கெடுதி வராது; அவர்கள். எப்படியோ உதைத்துக் கொள்ளட்டும்; இது சமயம் காங்கரஸ்காரர்கள் நமக்கு நிபந்தனை இல்லாத அடிமைகளாய் இருக்க பிரமாண வாக்கு கொடுத்து
விட்டார்கள். ஆதலால் இதைப்பற்றி நாம் கவனிக்கவேண்டியதில்லை” என்று சொல்லிவிடுவார். அதைக்கேட்டுக்கொண்ட பின் “இந்த விஷயத்தில் இந்தியா மந்திரி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லி விடுவார்.
பிறகு நமக்கு இந்த வருணாச்சிரம கொடுங்கோன்மை ராஜ்ஜிய பாரத்தை ஒழிக்கவும், ஆங்கிலேய ஆட்சி முறையின் பொறுப்பற்ற தன்மையை ஒழிக்கவும் முஸ்லீம்களானால் ஒழிய வேறு வழி இல்லை என்கின்ற நிலைதான் ஏற்படக்கூடும்.
இனி இந்த காங்கரஸ் கல்வி திட்டத்தின் சூழ்ச்சியை சற்று கவனித்து
பார்ப்போம்
இந்த கல்வி திட்டத்தைப்பற்றி பொதுவாக அபிப்பிராயம் சொல்ல வேண்டுமானால் இது மக்களை அறிவுக்கல்வி படிக்க வொட்டாமல் செய்து விடும். இதனை மக்களுக்கு கைத்தொழில் சொல்லிக்கொடுக்கும் ஒரு தொழிற்சாலை என்று தான் சொல்லவேண்டும். தொழில் பள்ளிக்கூடம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் இந்த தொழில் மூலம் (வாத்தியாருக்கு சம்பளம் முதலிய) வரும்படியும் எதிர்பார்ப்பதால் இதை
ஒரு அரை குறையான தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும் Bl வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
திட்ட ஆராய்ச்சி.
பிள்ளைகள் 7 வயது மூதல் 14 வரை கட்டாயமாக படிப்பிக்க வேண்டுமென்றால் 7 வயது வரை பையன்களுக்கு வேலை என்ன? பார்ப்பனப் பிள்ளைகள் நாலரை வயது 5 வயதிலேயே பிரைவேட்டாகப்படிக்க வைத்து 7 - வது வயதில் முதல் அல்லது 2-வது பாரத்தில் சேர்க்கப்பட்டு
விடுகிறார்கள். அதனாலேயே அவர்கள் 14 அல்லது 15 - வது வயதில் எஸ்.எஸ்.எல்.சி. அல்லது மெட்ரிக்குலேஷன் படிக்கவோ பாஸ் செய்யவோ முடிகின்றது. நம்முடைய பிள்ளைகளுக்கு 6, 7 - வது வயதில் “எழுத்தாணிப்பால்" கொடுத்து “சரஸ்வதி பூஜை” செய்து “அக்ஷராப்பியாசம்” ஆரம்பித்தால்.
முதல்பாரத்துக்கு வர 5 வருஷமும் முதல் பாரத்தில் இருந்து மெட்றிக்குலேஷன். பரீட்சைக்குபோக அறு வருஷமும் ஆக 11 வருஷமும் அதிறது. பரீட்சைகளில் ஏதாவது ஒன்று இரண்டுவருஷம் தவறிவிட நேர்ந்தால் மெட்றிக்குலேஷனுக்கு போவதற்குள் கையில் ஒன்று இரண்டு குழந்தைகளோ அல்லது உடம்பில் வியாதியோ ஏற்பட்டு மைனர் விளையாட்டில் திரும்பி விடுகிறான். ஏற்கனவே நமது பிள்ளைகள் படிப்பு இதனாலேயே கெட்டு மொத்த எண்ணிக்கையில் விகிதாச்சாரம் குறைந்து இருக்கிறது. இந்த நிலைமையில் இனி “7 முதல் 14 - வயது வரை தொழிலின் மூலம் பள்ளிக்கூட நிர்வாகத்துக்கும், வாத்தியார் சம்பளத்துக்கும் போதிய வரும்படி கிடைக்கும்படியான கல்வி” தாய் பாஷையில் கற்பது என்றால் பையனுக்கு உலகஞானமோ வாழ்க்கை அறிவோ அடைய வேண்டியகாலம் எது? அதற்கு ஏற்ற கல்வி எங்கே? என்று கேட்கிறோம்.
அப்புறம் 1, 2, 3- வது பாரங்களில் ஹிந்தி கட்டாய பாடமாக்குவது என்பது எந்தப் பிள்ளைகளுக்கு? எந்த வயதில்? என்றும் கேட்கவேண்டி யிருக்கிறது. மற்றும் இந்தத்திட்டப்படி 14 வயது ஆனபிறகு அப்புறம் பையனுக்கு வேலை என்ன? என்பது விளங்கவில்லை. இனி இங்கிலீஷ் படிப்பது எப்போது?
பிள்ளைகள் பூராவுக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் கைத்தொழில் அவர்களது வாழ்க்கைக்கு பயன்படுமா? இந்தியாவில் இம்மாதிரி கைத்தொழிலுக்கு இனியும் எத்தனை காலத்துக்கு அவசியம் இருந்து வரமுடியும்? இருந்துவர இடம் கொடுப்பது? உலகத்தில் கைநெசவு என்பதுகூட இந்தியாவில் தான் இருக்கிறது. மற்ற நாடுகள் எல்லாம் யந்திரத்தில்தான் துணிகளை நெய்கின்றன.
விவசாயமும் யந்திரத்தால் உழுது யந்திரத்தால் விதைத்து யந்திரத்தால் நீர் பாய்ச்சி யந்திரத்தால் அறுப்பு அறுத்து பண்டமாக்கி யந்திரமூலமே இடையாக்கி யந்திரமூலமே பணம் வருகின்றன விவசாயமும் நெசவுமே யந்திரத்தின் மூலம் என்று ஆகிவிட்டால் மற்றபடி கையில் செய்யும் கைத்தொழில் என்ன இருக்கிறது? நெல் குத்துவதும்
குடி அரசு - 1937 (2) 282.
கருப்பட்டி காய்ச்சுவதும் பால் கறந்து வெண்ணெய் எடுப்பதா? சோப்பு,
சீப்பு, கண்ணாடி, வாசனை எண்ணெய் செய்வதா? அல்லது மேஜை நாற்காலி, தட்டுமுட்டு சாமான் பாத்திரம் பண்டம் செய்வதா? கட்டை வண்டி, மோட்டார் சைக்கிள், ரயில், ஆகாய விமானம் செய்வதா? அல்லது கல் உடைத்து ரோட்டுப்போடுவதா? பாலம் கட்டுவதா? காடுவெட்டித்திருத்துவதா? வாய்க்கால் வெட்டித் தண்ணீர் விடுவதா? இவை எல்லாமுமே யந்திரங்களினால் செய்யப்படுகின்றன. கக்கூசு எடுக்கும் வேலையும் (Flushout) தானாய் கழுவிக்கொண்டு போகும் முறை வரப்போவதால் ஆளுக்கு வேலையில்லாமல் போகப்போகின்றது. தச்சு வேலை, கொல்லு வேலை, கொல்லத்து வேலை ஆகியவைகளும் பெரிதும் இனி மனிதன்.
தன் கைப்பட செய்ய வேண்டிய அவசியமில்லாத முறையில் நடைபெறப் போகின்றன. கொல்லத்துக்காரனுக்கு வேலை இல்லாத மாதிரி கற்கள், பலகைகள், சிமிட் அட்டைகள் யந்திரங்களில் செய்யப்பட்டு ஒரு நாளில்
5 வீடு 10 வீடு கட்டும் படியான வேலைத் திறங்கள் யந்திரங்களில் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் இருக்கின்ற உலகத்தில் இன்று காந்தியாரின் கல்வித்
திட்டம் என்று சொல்லப்படும் காங்கரஸ் கல்வித்திட்டம் இந்தியாவில் ஏற்படுத்தப்படுமானால் மேலே கூறப்பட்ட யந்திர சம்மந்தமான. காரியங்கள் எதுவும் இந்தியாவுக்குள் நடைபெறக்கூடாது என்றும் மீறி நடத்தப்பட்டால் அதை ராஜதுவேஷமாகக் கொள்ளப்படும் என்றும்
சட்டம் போட்டு அக்காரியங்கள் தடுக்கப்பட்டுவிட்டால் மாத்திரமேதான்.
இது பயனுள்ளதாக ஆகலாம். அல்லாதவரை பார்ப்பனர்களே உயர்ந்த ஜாதியாராகவும் அரசியல், மத இயல், பொருளாதார இயல், சமூக இயல் ஆகியவைகளில் ஆதிக்கம் செலுத்தி பாடுபடாமல் வயிறு வளர்க்கவும் மற்ற சமூகம் அவர்களது வைப்பாட்டி பிள்ளைகளாய், அடிமைகளாய் வாழவும் தான் இக்கல்வித்திட்டம் பயன்படும் என்று கண்டிப்பாய்க்கூற
வேண்டி இருக்கிறது. தவிர பிள்ளைகள் கற்றுக்கொள்ளும் முறையில் செய்யப்படும் தொழில்கள் மூலம் ஏற்பட்ட சாமான்களை பொது ஜனங்களும் சர்க்காராரும் வாங்குவதன் மூலம் பள்ளிக்கூட நடப்புக்கு பணம் சம்பாதித்துக்கொள்ள. வேண்டுமென்றால் இதன் முடிவும் துணி விஷயத்தில் எப்படி கதர். துணிக்கு ஒன்றுக்கு மூன்றாய் நான்காய் கிரையம் போட்டு ஆபாச வலுவற்ற மூரட்டுத் துணியை வாங்கி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியவர்களானார்களோ அதுபோல் தான் மற்ற சாமான்கள் வகையிலும் ஒன்றுக்கு மூன்றாய் விலை கொடுத்து ஆபாச - பலமற்ற கெட்ட அல்லது
முரட்டுக் கதர் சாமான்களை வாங்கி பயன்படுத்தித் தீர வேண்டிய நிலைமை ஏற்படும். ஏனெனில் இந்த மாதிரி குழந்தைகளால் வேலை
283 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பழகுவதற்கென்று செய்யப்படும் சாமான்களின் யோக்கியதை மற்றபடி வேறு எப்படி இருக்க முடியும்? வேண்டுமானால் விவசாயம் பழகுவதில் செய்யும் காரியத்தால் ஒரு சமயம் கத்திரிக்காய் புடலங்காய் நல்லதாக கிடைக்கலாம். அது எவ்வளவு பேருக்கு கிடைக்கும்? அதில் எவ்வளவு வரும்படி வர முடியும். அப்படி இருந்தாலும் அந்த வேலையை 7 முதல்
14 வயது வரை எல்லாப் பிள்ளைகளும் படிப்பது என்று வைத்துவிட்டால் அது அறிவுக்கு பயன்படுமா? மற்ற சமயத்தில் இது படிக்க முடியாதா? ஆகவே காந்தியார் கல்வித்திட்டம் என்பது மனுதர்மத்தில் “சூத்திரனு”க்கு ஏற்பட்ட வேலைத் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு ஆக செய்யப்படும்
சூழ்ச்சியே ஒழிய மற்றபடி அது ஒரு நாளும் யோக்கியமான நாணையமான கல்வித் திட்டமாகாது என்பது நமதபிப்பிராயம். ஆகவே இதை பொதுமக்கள். உணர்ந்து இந்த சூழ்ச்சியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்
குடி அரசு - தலையங்கம் - 21.11.1937
குடி அரசு- 1937 (2) 284
இஸ்லாத்தில் உயர்வு தாழ்வில்லை
வகுப்பு நீதிக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லீம்களே
முஸ்லீமும் ஜஸ்டிஸ் ௯.ம.வும் ஒன்றுபட வேண்டும்
ஹிந்திக்கு என்ன அவசியம்?
அன்புள்ள தோழர்களே! வடஆற்காடு ஜில்லா 2 வது சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் என்னை அன்புடன் வரவழைத்து தங்கள் லீக்கின் சார்பாக வரவேற்புப் பத்திரமளித்து கவுரவித்ததிற்கு மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இதுவரை என்னுடைய இந்த 20 வருஷ பொதுவாழ்வில் காங்கரஸ், சுயமரியாதை, பொதுஉடமை, சமதர்மம், ஜஸ்டிஸ், முதலிய இயக்கங்களாலும் மற்றும் பலவித சீர்திருத்த சங்கங்களாலும், முஸ்லீம்கள் சங்கங்களாலும் இந்தியா, கொளும்பு, மலாய், ஐரோப்பா, ரஷ்யா முதலிய தேசங்களிலுள்ள பலவித சங்கங்களாலும் சுமார் ஆயிரக்கணக்கான. வரவேற்புப்பத்திரங்கள் பெற்றிருந்தாலும் இந்திய முஸ்லீம் லீக்கில் பெறும் உபசாரப்பத்திர மென்பதில் இதுவே முதலாவதாகும் உண்மையிலேயே இவ்வரவேற்புப் பத்திரத்தினால் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இவ்வரவேற்புப் பத்திரத்தில் என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கும் புகழ்ச்சிகள் முழுவதையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்றாலும் இதிலிருந்து நான் முஸ்லீம் சமூக நம்பிக்கைக்கு பாத்திரமாயிருக்கிறேன் என்பதை உணர்ந்து பெருமை கொள்ளுகிறேன்.
முஸ்லீம்களுக்கு ஆக என்று தாங்கள் புகழ்ந்திருக்கிற அளவுக்கு நான் அவ்வளவு காரியம் செய்து விடவில்லை.
இஸ்லாத்தில் பிறவி உயர்வு தாழ்வில்லை
சமூகசம்மந்தமாக முஸ்லீம்கள் அனுசரித்து வரும் சில கொள்கைகளை நான் அதரிக்கிறேன். முக்கியமாக உங்கள் மார்க்கத்தில் மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்பதும் மக்களுக்குள் ஜாதிபேதப் பிரிவு இல்லை என்பதும் சமூக காரியங்களில் உள்ள ஒற்றுமையும் மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயமாகும்
288 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இந்து மதத்தின் யோக்கியதையும் கிறிஸ்து மதத்தின் யோக்கியதையும் முறையே ஆதாரத்திலும் அனுபவத்திலும் அப்படி இல்லை. இதை நான் அடிக்கடி மக்களுக்கு எடுத்துக்காட்டி வந்திருக்கிறேன். மற்ற மதக்காரர்கள் இதற்காக பொறாமையும் கோபமும் அடைகிறார்களே தவிர தங்களைத்
திருத்திக் கொள்ள யாரும் எந்த மாந்தரும் மூன் வருவதில்லை.
தவிர அரசியல் விஷயத்திலும் நான் பெரிதும் முஸ்லிம்களுடைய ஆதரவை எதிர்பார்த்தவனாய் இருக்கிறேன்.
ஏனெனில் கல்வியிலும் சமூகத்துறையிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டு கிடந்த மக்கள் முன்னேற்றமடைய முயற்சிக்க வழி காட்டியவர்கள் முதல் முதல் முஸ்லீம் களேயாகும். எனது தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் சுயமரியாதை இயக்கத்துக்கு 1500 வருஷத்துக்கு முன்பே வழிகாட்டியது இஸ்லாம் மார்க்கமே என்றார். ஆனால் நான் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு கூட 35
வருஷத்துக்கு முன்னமேயே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லீம்களேயாகும் அதாவது முஸ்லீம்லீக்கேயாகும் என்று சொல்லுவேன்.
முஸ்லீமும் ஜஸ்டிஸ், ச.ஃம.வும் ஒன்றுபடவேண்டும்
ஏனெனில் முஸ்லீம்கள் தான் முதன் முதல் காங்கரசின் கூழ்ச்சியை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மூற்போக்கடைய வகுப்பு நீதி, வகுப்பு உரிமை, வகுப்பு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்று வாதாடி 1910லேயே தனித்தொகுதி மூலம் உரிமைபெற்று 1916-ல் காங்கரசையும் ஒப்புக்கொள்ளும்படி செய்தவர்கள் ஆவார்கள். ஆதலால் இன்று வகுப்பு நீதியையும் வகுப்புநிமையையும் மக்களுக்கு முதல் முதல் இவ்வளவு ஞாபகப்படுத்திக் கொடுத்தவர்களே முஸ்லீம்கள் என்கிறேன். அந்த ஒரு காரணத்தாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் சுயமரியாதைக்காரரும் முஸ்லீம்களை ஆதரித்தும் அண்டியும் நின்று தொண்டாற்ற வேண்டுமென்று மக்களுக்கு போதித்துவருகிறேன்.
சில தேசீயப் புலிகள் என்னும் காங்கரஸ் “வீரர்கள்” நான் இம்மாதிரி பேசுவதுபற்றி மனதில் சங்கடப்படலாம். என்னையும் கேவலமாக எண்ணலாம். நான் இதை கொஞ்சமும் லக்ஷ்யம் செய்வதில்லை. மேலும் அதை ஒரு கவுரவமாகவே மதிக்கிறேன். ஆனால் பார்ப்பனர்கள் வால்பிடித்துக்கொண்டு பார்ப்பனர்களைப் புகழ்ந்துகொண்டு பார்ப்பனருக்கு இடம் கொடுத்து தமது சமூகத்தைக் காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் ஈனர்களைக் கண்டுதான் நான் வெட்கமடைகிறேன்.
நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன சம்மந்தம்? பிச்சைக்கு வந்தவன். பெண்டுக்கு மாப்பிள்ளையானான் என்பதுபோல எந்த நாட்டிலிருந்தோ
குடி அரசு - 1937 (2) 286
இந்த நாட்டுக்கு பிழைக்க வந்தவன் மத ஆதிக்கம், ஜாதி மேன்மை, பொருளாதார ஆதிக்கம் “மோக்ஷ” ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் ஆகியவைகளை பெற்றுக்கொண்டு தங்களை கடவுள்கள் என்றும் நம்மை அவர்களது அடிமைகள் வைப்பாட்டி மக்கள் என்றும் ஆதாரப்பூர்வமாய் சொல்லி அனுபவபூர்வமாய் அடக்கி ஆண்டு வருபவனை மானமில்லாமல் சாமி என்று கும்பிட்டுக்கொண்டு அவர்கள் கால் அலம்பிய தண்ணீரை மோக்ஷசாதனம் என்று குடித்துக்கொண்டு அதைவிட நம்மை சகோதரர்களாய் தங்களுக்கு சமமான மனிதர்களாய் கருதும் முஸ்லீம்களிடம் சமத்துவமாய்
அளவளாவுவதில் இருக்கும் குற்றம் என்ன என்று அவர்களை கேட்கிறேன்.
பழைய நிலையை நினைத்து பாருங்கள்
இந்த நாட்டிலுள்ள முஸ்லீம்கள் 100க்கு 95 பேர்கள் நமது ரத்த கலப்பு உள்ளவர்களேயாவார்கள். எப்படி எனில் ஆரியக் கொடுமைக்கு முன் அவர்களும் நாமும் இந்நாட்டு பழங்குடி மக்களேயாவோம் ஆரியக் கொடுமை தாங்கமாட்டாமல் அவர்களது சுயமரியாதையைக் காப்பாற்றி கொள்ள இஸ்லாமானவர்கள் அநேகர் உண்டு. ஆனால் ஆரியர்கள் அப்படி இல்லை. நம்மையும் இழிஜாதியாக்கிவிட்டு நமது பெண்களையும் பெண்டாள வேத சாஸ்திரங்களை எழுதிவைத்துக் கொண்டவர்கள். மலையாளத்தைப்பார்த்து அதிலிருந்து ஜஸ்டிஸ் சுயமரியாதை இயக்கங்களுக்கு முன்பு தமிழர்கள் நிலை எப்படி
இருந்திருக்கும் என்று நினைத்து அதிலிருந்தும் உணர்ந்து பாருங்கள். 50, 60 வயது வந்த தமிழர்களை கேட்டுப் பாருங்கள்.
ஆகவே ஒரு உண்மைத் தமிழ் மகன் பார்ப்பான் பின் திரிவதைவிட
ஒரு முஸ்லீம் பின் திரிபவன் எவ்வளவோ பெரிய சுயமரியாதைக்காரன்தான்
என்பது எனது அபிப்பிராயம். இதை ஏன் சொல்லுகிறேனென்றால் எனக்கு
பலபேர் மொட்டைக் கடிதங்கள் எழுதுகிறார்கள். வெளிப்படையாக குறை கூறுகிறார்கள். அதற்காகவே இதை சொல்லுகிறேன்.
இன்று பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் இருந்தும்
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தும் விடுபட வேண்டுமானால் அதிலும் இன்று பார்ப்பன சரணாகதி மந்திரிகளின் கொடுங்கோன்மை அட்சி முறையிலிருந்தும் அவர்களது ஒற்றரான காந்தியாரின் விஷமத்தனமான கெடுதிகளிலிருந்தும் தப்பவேண்டுமானால் நமக்குக் கண்டிப்பாக முஸ்லீம்களின் உதவி தேவை இருக்கிறது. முஸ்லீம்களும் இன்று நம் நிலையில் தான் இருந்து கொண்டு பல சங்கடங்களை அனுபவித்துக்கொண்டு நம் ஒத்துழைப்பை நாடுகிறார்கள். பார்ப்பன மந்திரி ஆட்சியானது முஸ்லீம் சமூகத்துக்கும் நம் சமூகத்துக்கும் சேர்ந்தேதான் ஒரே குழி வெட்டுகிறது.
287 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஹிந்திக்கு என்ன அவசியம்
அப்படிக்கில்லாமலா 100க்கு 92 பேர்கள் அவரவர்கள் தாய் பாஷையைக்கூட எழுதப்படிக்கத் தெரியாமலும் கையொப்பமிடவும், கணக்குப் போடவும் தெரியாமலும் இருக்கும்போது ஆயிரத்து ஐநூறு மைலுக்கு அப்பால் இருக்கிற ஹிந்தி பாஷையை அதுவும் கட்டாயப் பாடமாக அதுவும் நம் மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே படித்தாக வேண்டும் என்றும் அது படித்தால்தான் மேல் வகுப்புக்கு அனுப்ப முடியும், உத்தியோகம் கொடுக்க முடியும் என்று சொல்ல தைரியமும் துணிவும் ஏற்பட்டிருக்க முடியுமா?
ஒரு ஆரியப் பார்ப்பனர் தமிழ் மக்களை வந்து நீ ஹிந்தி படிக்கிறாயா இல்லையா? கட்டாயம் படித்துதான் ஆகவேண்டும் என்று ஆக்கினை இடுவது என்றால் அவர் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மானமும் வீரமும் கடுகளவாவது இருக்கக் கூடும் என்று கருதி இருப்பாரானால் அப்படி ஆக்கினை அவர் வாயிலிருந்து புறப்பட்டிருக்குமா என்று கேட்கின்றேன்.
தமிழனுக்கு எண்ண மீதி இருக்கிறது?
தமிழன் அறிவு மதத்தால் சுரண்டப்பட்டு விட்டது. தமிழனின் செல்வம் மோக்ஷத்தின் பேராலும், பாவமன்னிப்பின் பேராலும், புண்ணியத்தின் பேராலும் சுரண்டப்பட்டு விட்டது. இவற்றை சமாளித்து கொஞ்சம் நஞ்சம் பணமும் புத்தியும் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பனக் கோர்ட்டாலும் பார்ப்பன உத்தியோகத்தாலும் பார்ப்பன வக்கீலாலும் பார்ப்பன புரோகிதத்தாலும் வேறு பல இழிவான காரியங்களாலும் சுரண்டப்பட்டாய்விட்டது.
இனி தமிழனுக்கு என்ன மீதி இருக்கிறது என்று கேட்கின்றேன். ஜஸ்டிஸ்காரர்களும் சுயமரியாதைக்காரர்களும் எவ்வளவோ பாடுபட்டு பார்ப்பனீயத்தை அடக்கினார்கள். இப்போது குலத்தை கெடுக்கும் கோடாலிக் காம்புகள்போல் மானமற்ற சுரணையற்ற வாழ்க்கைக்கு வேறு வகையற்ற சில தமிழர்களும் பேராசை பிடித்த சமூகத் துரோகிகளும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அனுமாராகி தங்கள் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து பார்ப்பன ஆதிக்கம் மறுபடியும் துளிரும்படி செய்து வருகிறார்கள். வெட்கம்! வெட்கம்! என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது
ஒரு பெரிய ஆச்சரியம்
மொத்தத்தில் நம் மக்கள் 100க்கு 95 தற்குறி எனலாம். இப்படிப்பட்ட பாமரக்கூட்டம் 100க்கு 100 படித்த மக்களால் ஏமாற்றப்படாமலோ, அடிமை கொள்ளப்படாமலோ இருப்பது எப்படி சாத்தியமாகும்? ஆகவே
சில தமிழர் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி சமூகத்தைக் காட்டிக் கொடுத்து
குடி அரசு - 1937 (2) 288
வாழும் ஆச்சரியத்தை விட, பல தமிழ் மக்கள் எப்படி இன்னமும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகாமல் எதிர்த்து நிற்கிறார் என்பதே இப்போதைய ஒரு பெரும் ஆச்சரியமாகும்
முஸ்லிம்கள் நிலைமையும் நம் நிலையைப் போன்றதே ஆனதினால்தான் இப்போது முஸ்லீமானவர்களுக்கும் தமிழாதிகளுக்கும்
ஒரு இயற்கை உறவு ஏற்படுகிறது இன்று பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எமனாய் இருப்பது தென்னாட்டில் சுயமரியாதை இயக்கமும் வடநாட்டில் முஸ்லிம் லீக்குமே ஆகும். இந்த இரண்டையும் எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்பது பார்ப்பனர் விரதமெடுத்துக் கொண்டிருக்கும் காரியமாகும். “ஜின்னாவுக்கு
தாடி இல்லாததினால் அவர் முஸ்லிம் அல்ல என்று ஒரு முஸ்லீமை விட்டே சொல்லச் சொல்லுகிறார்கள். அது போலவே கடவுள்கள் புரட்டையும் கோவில் குளங்களின் பேரால் நடக்கும் கொள்ளையையும் எடுத்துச் சொல்லுவதால் நான் நாஸ்திகன் என்றும் தமிழன் அல்ல என்றும் சில அன்னக்காவடிகளை விட்டு சொல்லும்படி செய்துவருகிறார்கள் இவற்றைக்கண்டு அறிவுள்ள மனிதன் எவனும் மலைத்துவிட மாட்டான். ஆனாலும் முஸ்லீம்களில்கூட சிலர் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம் என்று புலப்படுவதாக தெரிகிறது. அப்படிப்பட்டவர்களில் பலர் தங்களுக்கு ஒன்றும் பயமில்லாவிட்டாலும் மற்றவர்கள் தங்களை ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து பந்தோபஸ்துக்கு ஆக இந்த அணையைக் கட்டிக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தை ஆதரிக்கவோ தழுவவோ வரும் மூஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இயக்கத்தின் பேரால் நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது, சுயமரியாதை இயக்கத்துக்கு என்று வகுத்திருக்கும் கொள்கைகளில் நாஸ்திகம் ஒரு கொள்கை யாகவோ நிபந்தனையாகவோ குறிப்பிட்டிருக்கவில்லை என்பதேயாகும்
சுயமரியாதைக் கொள்கைகள்
சுயமரியாதை இயக்கத்தில் சகல மதக்காரருக்கும் சகல அபிப்பிராயக் காருக்கும் இடமுண்டு. அதன் கொள்கை இவ்வளவதான் “மனித சமூகத்தில் உள்ள குருட்டுப் பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும், விளக்க மறியாச் சடங்குகளையும், அவற்றிற்காகச் செய்யப்படும் செலவுகளையும் ஒழித்தல்.
ஜாதி, மதம், வகுப்பு ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டுள்ள பேதங்களையும் சமூகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் இருந்துவரும் உயர்வு தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாகவும் சகோதரத்துவமாகவும் சமமாகவும் வாழும்படி செய்தல்
பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படி மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்குதல்” (என்று
29 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சுயமரியாதை இயக்க அங்கத்தினர் சேர்க்கும் ரகீதின் பின்புறமுள்ளதை படித்துக்காட்டப்பட்டது) இதை நடத்திவைக்க வேண்டிய காரியத்துக்கும் ஆஸ்திக நாஸ்திகத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? ஆஸ்திக நாஸ்திகம் அவரவருடைய அபிப்பிராயமும் ஆராய்ச்சித் திறமுமாகும்.
இன்று முஸ்லீமும் தமிழனும் ஒத்துழைத்து சாதிக்க வேண்டிய காரியத்துக்கும் ஆஸ்திக நாஸ்திக பிரச்சினைக்கும் எவ்வித சம்மந்தமும் தொடர்பும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஆதலால் இந்த நெருக்கடியான சமயத்தில் நம் இரு சமூகமும் தோளோடு தோள்புனைந்து வேலை செய்ய வேண்டும். தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் வெகு நாளாகவே சுயமரியாதை இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வந்திருக்கிறார். அவர் இந்த மகாநாட்டுக்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டதானது இயக்கத்துக்கே ஒரு பெரிய ஆஸ்தி சேகரித்தது போல் ஆகும். அவர் ௯.ம. இயக்கத்தைப் பற்றி பேசிய பல புகழ் வார்த்தைகளுக்கும் மற்றும் முஸ்லீம் தோழர்கள் புகழ்ந்து கூறியதற்கும் இயக்க சார்பாக நான் நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 28.11.1937 இல் ஆம்பூர் அகில இந்திய முஸ்லீம்லிக் கிளையின்.
சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரத்திரத்திற்கு பதில் அளித்து பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 05.12.1937
குடி அரசு - 1937 (2) 290
காங்கரசின் நாசகாலம்
கொஞ்ச நேரத்தில் சாகப்போகும் காயலா பிரயாணிக்கு ஒருவித ஜன்னிவந்தால் 10 பேர்பிடித்து அமுக்கினாலும் திமிறிக்கொண்டு கை, கால்களை உதறும்படியான பலம் ஏற்படுவதை நாம் பிரத்தியக்ஷத்தில் காணுகிறோம். அந்தப் பலம் என்பது வியாதியின் கூறும் சாவுகுறியுமே ஆகுமே அல்லாமல் அப்பலத்தினால் அப்பிணியாளிக்கு உயிர் வாழ சவுகரியமோ வேறு யாதொரு காரியமும் செய்ய சாத்தியமோ ஏற்பட்டு விடாது என்பதும் நாமெல்லோரும் அறிந்ததேயாகும்
அது போலவே காங்கரசுக்கு இன்று சாவுக்குறி ஜன்னி ஏற்பட்டு விட்டது. அந்த ஜன்னிக்கு யாருடைய பேச்சும் அபிப்பிராயமும் மறுப்பும்
சிறிதும் லக்ஷ்யம் இல்லாமல் இருக்கிறது இயற்கைதானே. அதற்குக் காரணம் அது பார்ப்பன ஆதிக்கத்தில் பட்டுவிட்டதாலும் பார்ப்பனரல்லாதார்களில் நிபந்தனை அற்ற அடிமைகளாகப் பார்த்து தனக்கு சகாவாக தெரிந்தெடுத்துக் கொண்டதாலும் இப்பொழுது சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் ஆழம் என்பது போல் காணப்படுகிறது. தமிழ் மக்கள் இதற்காக பயந்துவிட வேண்டிய அவசியமில்லை. வெகு சீக்கிரத்தில் பார்ப்பன ஆதிக்கமும் காங்கரசும் மணல் வீடு சரிவதுபோல் சரிந்து தரை மட்டமாகி விடப்போகிறது என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை உதாரணமாக காங்கரஸ் ஹிந்தி வாரம் கொண்டாடிய கொண்டாட்டக்
கூட்டங்களே அதற்குத் தகுந்த ௬ுஜுவாகும்.
ஹிந்தி வாரம் கொண்டாடப்பட்ட கூட்டங்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்ட கூட்டங்களில் காங்கரஸ்காரர்களுக்குள்ளாகவே கலவரங்கள். நடந்திருப்பதோடு பல கூட்டங்கள் ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களாக மாறிவிட்டதும் ஹிந்தியை மறுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதும் போதுமான ருஜுவாகும்
இவைகள் போதாது என்று யாராவது கருதுவார்களானால் பிரதம மந்திரி முதல் 10 மந்திரிகளும், அவர்களது 10 காரியதரிசிகளும் செல்லுமிடங்களில் பஹிஷ்கரிக்கப்படும் யோக்கியதைகளும் அவர்கள். பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடி தெருவில் நின்று பின்புறம் ஓட்டம் பிடிக்கும் தன்மைகளும் நடுநிலைமையில் இருந்து ஊன்றிப்பார்த்தால் நன்றாய் விளங்கும் 2௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஆனால் பொதுப் பத்திரிகைகள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன பத்திரிகைகளும் அவர்களது கால்களை நக்கிப் பிழைக்கும்
“குலாம்” பத்திரிகைகளும் உண்மையை சரியாக எழுதுவதில்லை என்பதோடு அப்பத்திரிகைகள் பலவற்றிற்கும் பார்ப்பனர்களே நிருபர்களாய் இருப்பதால் விஷயங்களை திரித்தும் பொய் விஷயங்களை கற்பனை செய்தும் உண்மைகளை வேண்டுமென்றே மறைத்தும் சேதிகள். வெளியாக்கப்படுவதால் பொது ஜனங்கள் உண்மையை அறிய சற்று காலதாமத மேற்பட்டு விடுகிறது உதாரணமாக 2 வாரங்களுக்கு முன் ஆம்பூருக்கு ஒரு மந்திரியார். சென்றிருந்த காலத்தில் மந்திரியை வரவேற்க 50 பேர்கள் வந்திருக்கிறார்கள். என்றால் 5000 பேர்கள் மந்திரியை பகிஷ்கரிப்பதாகக் கூறிக்கொண்டு
கறுப்புக் கொடியுடன் வந்து எதிரில் நின்று தங்கள் மறுப்பை காட்டி இருக்கிறார். இவ்வைபவத்தை ஜில்லா கலெக்டர் அவர்களும் நேரில் இருந்து பார்த்து சர்க்காருக்கும் கவர்னர் பிரபுவுக்கும் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு பத்திரிகையாவது இதை வெளிப்படுத்தவே இல்லை.
அதற்கு அடுத்த வாரம் அதே ஆம்பூருக்கு சுயமரியாதை மகா நாட்டின் பேரால் சென்ற “காங்கரஸ் எதிர்ப்பாளர்களுக்கு'' 2-மைல். ஊர்வலமும் 5000க்கணக்கான மக்களின் வரவேற்பும் பூமாலைகளும் ஜே கோஷமும் ஆரவாரமும், மந்திரி சபை ஒழிய, பார்ப்பன சூழ்ச்சி ஒழிய முதலிய சப்தங்கள் வானத்தை இடிக்கவுமான காரியங்களும் நடந்ததை பொதுப் பத்திரிகைகள் என்பவைகள் அடியோடு மறைத்து இருக்கின்றன. இவை பூனை கண்ணை மூக்கொண்டு பால் குடிப்பது போன்ற முட்டாள்தனமான காரியம் என்றுதான் சொல்லப்படுமே தவிர மற்றபடி நடந்த காரியம் உலகம் அறியாமல் போகவோ அதனால் ஏற்படும் பயனை மறைத்து விடவோ ஒருவராலும் முடியப்போவதில்லை. ஆனால் மெயில் பத்திரிகையில் மாத்திரம் (பார்ப்பன சூழ்ச்சியுடன் செய்திகளை வெளியிடப்பட்டிருந்தாலும்) 2 நாள் மகாநாட்டு நிகழ்ச்சிகள். குறிப்பிடப்பட்டிருக்கிறது ஆகவே பார்ப்பன பத்திரிகைகள் செய்திகளை மறைத்து விடுவதாலேயே காங்கரஸ் நிலைமையையும் பார்ப்பன ஆதிக்க கொடுமைகளையும் மக்கள் அறியாமல் செய்து விடலாம் என்று கருதுவது முட்டாள்தனம் என்பதற்கு ஆக இதை எடுத்துக்காட்டுகிறோம்.
மற்றும் ஆம்பூர் சுயமரியாதை மகாநாட்டில் முஸ்லீம்களுடைய ஒத்துழைப்பு மிகவும் பாராட்டக்கூடிய அளவில் இருந்திருக்கிறது
மாஜி மந்திரி கான்பகதூர் கலிபுல்லா சாயபு எம்.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ. அவர்கள் மகாநாட்டுக்கு தலைமை வகித்து ஆற்றிய சொற்பொழிவில் முஸ்லீம்கள் சு.ம. இயக்கத்தில் சேர்ந்து தொண்டாற்ற வேண்டிய அவசியத்தை தெள்ளத் தெளிய குறிப்பிட்டிருப்பதோடு.
குடி அரசு - 1937 (2) 292.
முஸ்லீம்களுக்கு இந்த காங்கரசும் சிறப்பாக இந்த மந்திரிசபையும் மிகமிக ஆபத்தானது என்பதையும் முடிவுரையில் எடுத்துக்காட்டி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ஆம்பூர் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் முக்கியமானவை 3 ஆகும். அவை ஹிந்தி மறுப்பு தீர்மானமும் காந்தி கல்வித்திட்ட மறுப்பு தீர்மானமும் வந்தேமாதரப் பாட்டு மறுப்பு தீர்மானமுமாகும். இம்மூன்றிலுமே காங்கரஸ் கண்டிப்பாய் தோல்வி அடையப்போவது நிச்சயம் என்பது நமதபிப்பிராயம். இம்மூன்று முயற்சிகளுமே காங்கரசையும் நாசமாக்கப் போகிறது என்பதும் நமது உறுதி,
காங்கரஸ்காரர்களும் பார்ப்பன மந்திரிகளும் தமிழர்களை நாசமாக்கவும் முஸ்லிம்களை ஒழித்துவிடவும் வருணாச்சிரம ஆட்சியை புனருத்தாரணம் செய்யவும் இந்த சூழ்ச்சியும் நாசகரமுமான திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம் என்றாலும் இம்மூன்று தீர்மானங்களும் அவர்களுக்கே கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வது போன்ற கேடான காரியம் என்பதை மாத்திரம் மறுமுறையும் எச்சரிக்கையோடு வலியுறுத்தி வைக்கிறோம்
பார்ப்பன சூழ்ச்சி இதுவரை ஒன்றுகூட தவறாமல் வெற்றியடைந்து வந்திருக்கிறதென்றும் எதிர்த்தவர்கள் ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை என்றும் சில பார்ப்பனரும் அவர்களது கூலிகளும் “ஆனந்த விகடன்” போன்ற பத்திரிகைகளும் கூவித் திரிகிறதை நாம் அறிவோம். ஆனாலும் பார்ப்பன சூழ்ச்சிகள் இதுவரை ஒன்று கூட வெற்றியடையவில்லை என்பதை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க நம்மால் மூடியும். உதாரணமாக பார்ப்பன சூழ்ச்சிகளையும் கொடுமைகளையும் வெட்டவெளிச்சமாய் வெளிப்படுத்தி அறிவுரைக் கொத்து என்னும் புத்தகத்தை பள்ளிப்பாடத்தில் இருந்து எடுத்துவிட பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்சநஞ்சமல்ல. அது அவ்வளவும் கடைசியில் ஒரு சிறிதும் பயன்படாமல் செய்யப்பட்டு விட்டது.
மற்றும் தமிழ் பாஷையின் மீது ஆதிக்கம் செலுத்தவும் தமிழ் பாட புத்தகம் மூதல் தமிழ் கலைகள் வரை எல்லாவற்றையும் தங்கள் வசப்படுத்திக் கொள்ளவும் செய்யப்பட்ட மாபெரும் சூழ்ச்சியாகிய தமிழ் அன்பர்கள் மகாநாடு என்னும் ஒரு பார்ப்பன அன்பர் - ஆரிய அன்பர்
- பார்ப்பன அடிமைகளால் கூட்டப்பட்ட ஒரு மகாநாடு, அதற்கு பார்ப்பன அடிமை மந்திரி ஆதரவும், பார்ப்பன அடிமை ராஜா சர். உதவியும், பார்ப்பன தலைவர் மகாகனம் அனுசரணையும் மற்றும் சர்க்கார் தலைவர்கள் கவர்னர்கள் முதல் ஆசீர்வாதமும் இருந்தும் அந்த சூழ்ச்சியானது கர்ப்பத்திலேயே செத்து சத்திர சிகிச்சை (ஆப்ரேஷன்) செய்து வெளியாக்கப்பட வேண்டியிருந்ததும் யார்தான் அறியாதார்?
293 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மற்றும் சமீப காலம் வரை காங்கரஸ் பார்ப்பனர்கள் கனம் ஆச்சாரியார். முதல் தோழர் சத்தியமூர்த்தியார் வரையில் “ஐஸ்டிஸ் கட்சியை வெட்டி 5000 கஜ ஆழத்தில் புதைத்தாய் விட்டது” என்று கூறி பொய் மகிழ்ச்சி
காட்டி மக்களை ஏமாற்றி வந்தாலும் King 15 dead 0௦4 save the King என்பது போல அதாவது ராஜா செத்துப் போனார் கடவுள் ராஜாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகம் போல் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டு விட்டது ஜஸ்டிஸ் கட்சியின் தொல்லை நம்மால் பொறுக்க முடியவில்லை என்று ஆச்சாரியாரும், மூர்த்தியாரும், மற்ற பார்ப்பன கூலிகளும், அவர்களது பத்திரிகைகளும் ஓலமிட்டு ஒப்பாரி அளந்து அழுவதைப் பார்க்கின்ற ஒவ்வொருவருமே ஜஸ்டிஸ் கட்சி செத்துவிட்டதா என்பதை உணரலாம்
ஒரு கவனிக்கத்தக்க சமாச்சாரம் என்னவெனில் தோழர் சத்திய
மூர்த்தியும் கனம் ஆச்சாரியாரும் பொப்பிலி அரசரையோ, சர் உஸ்மானையோ, குமார ராஜா முத்தய்ய செட்டியாரையோ மற்றும் இவர்கள் போன்றவர். களையோ தங்களது ஆரிய புராண சூழ்ச்சி முறையை கையாடிக் கொன்று 5000 கஜ ஆழத்தில் புதைத்து இருக்கலாம் அல்லது அவர்களை வேறு வகையில் வசப்படுத்தி செத்துப் போனவர்கள் போல் வேஷம் போட்டு மற்றவர்களை ஏய்ப்பதற்கு ஆக பிணம் மாதிரி பேச்சு மூக்சில்லாமல் படுகிடையாய் படுத்திருக்கும்படியான சூழ்ச்சி செய்திருக்கலாம். ஆனால் இதனால் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டதாக ஆகிவிடுமா?
மற்றும் தோழர் ராமனாதன் போன்றவர்களுக்கு மந்திரி உத்தியோகம் முதலானவைகள் கொடுத்து வசப்படுத்தி தங்கள் வாய் உதடுகளாக்கி
தங்கள் இஷ்டப்படி ஆடச் செய்வதினாலேயே சுயமரியாதை இயக்கம்
ஒழிந்து போய்விட்டதாகச் சொல்லிவிட முடியுமா? மற்றும் தோழர்
தாவுத் ஷா, கனம் யாகூப்ஹாசன் சாயபு, உபயத்துல்லா ஆகியவர்களை
வசப்படுத்தி முஸ்லீம்களையே வைய்யச் சொல்வதால் முஸ்லீம் லீக்கு அழிக்கப்பட்டதாக ஆகிவிட முடியுமா? ஆகவே இதுவரை பார்ப்பனர்கள் தான் தாங்கள் கையாண்ட எந்த குழ்ச்சிகளிலும் வெற்றி பெறவில்லையே ஒழிய நம்மைப் பொறுத்தவரை நாம் எடுத்துக்கொண்ட எந்த முயற்சியிலும் இதுவரை தோல்வி அடையவில்லை என்பதை கல்லின் மேல் எழுத்துப் போல் காட்டத் தயாராய் இருக்கிறோம்
ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும் மூஸ்லீம் லீக்கும் சில தனிப்பட்ட ஆட்களுடையது என்று கருதிக்கொண்டே பார்ப்பனர்கள் தனிப்பட்ட ஆட்களின் மீது பாய்ந்து விஷமப் பிரசாரங்கள் செய்து அந்த ஆட்களுக்கு தொல்லையும் ஹிம்சையும் கொடுப்பதில் பார்ப்பனர்கள் காலத்தைச் செலவழித்து செலவழித்து ஏமாற்றமடைந்து வருகிறார்கள். இது அவர்களது வடிகட்டிய முட்டாள்தனமே யாகும். இம்மூன்று
குடி அரசு- 1937 (2) 294
இயக்கங்களும் சில கொள்கைகளை குறைபாடுகளை மனித பொது சமூக முன்னேற்றத்துக்கு ஆன பல சீர்திருத்த முறைகளைக் கொண்டிருப்பவை களாகுமே ஒழிய எந்த தனிப்பட்ட சமூகத்துக்கோ, தனி நபருக்கோ ஆக இருப்பவை அல்ல. இவைகள் வெற்றி பெற்று திருத்தப்பாடு ஆகும்வரை ஆயிரம் பொப்பிலியைக் கொன்றாலும், இரண்டாயிரம் ராமசாமியைக் கொன்றாலும், ஐயாயிரம் ஜின்னாக்களைக் கொன்றாலும் தானாக செத்துத் தீரவேண்டிய இந்த ஆட்கள் ஒரு 10 நாளைக்கு முன் சாகடிக்கப்படலாமே ஒழிய மற்றபடி அக்கொள்கைகளின் அவசியத்தை கொன்றுவிட முடியுமா? என்று கனம் ஆச்சாரியாரை கேட்கின்றோம்
இன்று காங்கரசும் பார்ப்பனர்களும் தங்களுடைய நாசத்துக்கு மேல் அதிகமான கேடுவிளைவிக்கத் தகுந்த எதிரிகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். அந்த எதிரிகளும் எதிர்க்க எதிர்க்க எதிர்ப்பவர்கள் பலமும் தனக்கே வந்து சேரும்படியான தன்மையுள்ளவர்களாக இருந்து வருகிறார்கள். ஆகவே பார்ப்பனர்கள் இனி செத்தை அரித்துக்கொண்டு தான் இருக்க வேண்டுமே ஒழிய குளிர் காய சற்றும் அவர்களுக்கு இடம் கிடைக்கப் போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. எத்தனைதான் மானங்கெட்ட கூலி ஆட்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டு நம் மீது ஏவி விட்டாலும் இந்த வேலை ஒழிந்த உடனோ அல்லது தங்களால் இந்த வேலை செய்ய இனி சாத்தியப்படாது என்று தெரிந்த உடனோ அவர்கள் பார்ப்பனர்கள் மீதுதான் பாயக்கூடும். அதாவது பார்ப்பனர்களுக்கு தங்களின் கூலிக்கூட்டத்திலிருந்தே எதிரிகள் பெருகப் போகிறார்கள் என்பதும் உறுதி. ஆகவே மற்ற தோழர் சத்தியமூர்த்தி போன்றார்களைப் பற்றி நாம் கவலைப்பட வில்லையானாலும் தோழர் கனம் ஆச்சாரியார் போன்றவர்களைப் பற்றி உண்மையிலேயே நாம் கவலைப்படுகிறோம். சூழ்ச்சியில் உள்ள நம்பிக்கையை அவர் இனியாவது விட்டுவிடும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்
சூழ்ச்சியில் அடைந்த வெற்றி மனிதனை சதா சூழ்ச்சியிலேயே இருக்கச் சொல்லுமே ஒழிய வெற்றியை அனுபவிக்கக் கூட நேரமளிக்காது. (அதாவது வெற்றியும் பயன்படாது) அதாவது சூதாடி சம்பாதிக்கும் பணம் சூதுக்கு அழுகவே சரியாய் இருக்கும் அல்லது சாகும்வரை சூதே ஆடச்சொல்லும்
மனிதன் பிறந்தான், சூழ்ச்சியில் வல்லவனானான், உலகத்தையே ஏமாற்றும் சக்தி பெற்றான், அப்புறம் என்ன? சூழ்ச்சி விருத்தி உணர்ச்சியிலேயே செத்தான் என்ற முடிவு ஏற்பட்டால் அதுவே மனிதனுக்கு போதுமா?
கனம் ஆச்சாரியார் இனியும் 100 வயது இருந்து சாவதானாலும் சாகும் போது என்ன நிலையில் சாகப்போகிறார். “ஆச்சாரியார் மகா: கெட்டிக்காரர், மகா தந்திரசாலி, கவர்னரையும ஏய்க்கும் படியான திறமை வாய்ந்தவர் செத்துப்போய் விட்டார்” என்று தான் மக்கள் சொல்லப் போகிறார்களே ஒழிய வேறு என்ன விதமாய் ஆச்சாரியாரைப் பற்றி மக்கள் பேசும்படி ஆச்சாரியார் இதுவரை நடந்துகொண்டிருக்கிறார் என்று
298 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கேட்கிறோம். அல்லது மக்கள் நலனுக்கு இதுவரை என்ன செய்தார் - சொன்னார் என்று கேட்கிறோம். இவ்வளவு புகழத் தக்க புத்தி - அறிவு எதற்குப் பயன்படுத்தப்படுகிறது? அய்யோ பாவம்! அதைப்பற்றிப் பேசுவது பயனற்றதும் “சோம்பேறி வேதாந்தமு”மாகும் என்றே விட்டுவிடுகிறோம்
ராஜாளிக்கு - கழுகுக்கு கண் சிறிது என்றாலும் அதற்கு ஒருமைல் தூரத்தில் இருந்து கூட நிலத்தில் என்ன சாமான் கிடக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க மூடியும். இவ்வளவு சக்தியுள்ள கண்ணைக்கொண்ட அவை என்ன செய்யுமென்றால் கெட்டுப்போன வஸ்து, அழுகின மாம்ஸம், மலம், சக்தியற்ற ஜீவன்களான சிறு உயிர்ப்பிராணி ஆகியவைகளைத்தான். கண்டு பிடித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் கண் சக்தி வேறு திரேகக் கூறான அறிவுச் சக்தி வேறு. இது இயற்கையின் மாண்பு. ஆகையால் இவைகளைப் பற்றியும் பேசுவது மெனக் கேடும் “கோழைத்தன”முமாகும் என்றுதான் முடிவு செய்ய வேண்டும் என்பதுடன் விட்டுவிட்டு பொது மக்களுக்கு நாம் ஒன்று கூறி இதை ஒழிக்க முயற்சிக்கிறோம்
அதாவது “தினமணி” பத்திரிகையில் முதல் தேதி தலையங்கத்தில் மக்களை பலாத்காரத்திற்கு தூண்டிவிட்டு உசுப்படுத்தி இருக்கிறது என்னவென்றால் “சில சுயமரியாதைக்காரர்கள் காங்கரஸ் கூட்டங்களில் கலாட்டா செய்ய முயற்சிக்கிறார்களாம். சுயமரியாதைக்காரர்கள். இம்மாதிரி கலாட்டா செய்தால் பொது ஜனங்களுக்கு கோபம் வந்தால் அப்புறம் மோசமான நிலைமை ஏற்பட்டு விடும்” என்று மிரட்டுவதுடன் பலாத்காரத்துக்கு தயாராகும்படி மக்களை தூண்டுகிறது. அப்படிப்பட்ட பலாத்காரம் ஏற்பட்டால் நாம் சிறிது கூட பயப்பட இடமில்லை என்பதோடு இன்னும் அதிகமான வெற்றி மாலையும் சூட்டப்படபோவோம் என்பதில்
சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் அப்படிப்பட்ட கோபம் “பொது ஜனங்களுக்கு வரும்போது “தினமணி” ஆசிரியர் அடுப்பாங்கரைக்கும் அவருக்கு கூலி கொடுத்து இப்படி எழுதச் செய்கிறவர்களான பார்ப்பனர்கள் கக்கூஸ் குழிக்குள்ளும் போய் ஒளிந்து கொள்ளுவார்கள். அவர்களுக்கு ஒரு ஆபத்தும் வந்து விடாது. ஆனால் தமிழ்மக்களே ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாவார்கள். இதை உத்தேசித்தே வந்த கூட்டத்திலும் காங்கரஸ் கூலிகள் எவ்வளவு தொல்லையும், காலித்தனமும் செய்தாலும் பலாத்காரம் ஏற்பட இடமில்லாமல் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றே இந்த 15 வருஷ காலமாக கூறியும், எழுதியும் வருகிறோம் எப்போதாவது மீறி பலாத்காரம் ஏற்பட்டு விடுமேயானால் அதனால் பார்ப்பன கூலிகளுக்கு ஏதாவது ஹிம்சை ஏற்பட்டுவிடுமானால். அதற்குக் காரணம் “தினமணி! போன்ற பொறுப்பற்ற பத்திரிகையின் விஷமச் செய்கையே ஒழிய மற்றபடி எதிர்ப்புக்காரர்களோ, ஜஸ்டிஸ்காரரோ, சுயமரியாதைக்காரரோ முஸ்லீம்களோ அல்ல என்பதை கவர்னர்.
குடி அரசு - 1937 (2) 296
பிரபுவுக்கும் மற்ற பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். சுயமரியாதைக்காரர்கள் பலாத்காரர்கள் அல்ல என்பதற்கு அனேக உதாரணம் காட்டுவோம்
தோழர்கள் கனம் ஆச்சாரியார் சத்தியமூர்த்தியார் போன்றவர்கள் பார்ப்பனத் தலைவர்களை நாய்கள், கழுதைகள், துடப்பக்கட்டைகள் ராக்ஷதர்கள், அசுரர்கள் என்று பேசும் போதெல்லாம் கூட &.10. காரர்கள் பொறுமையுடன் இருந்து வந்திருக்கிறார்கள். இப்போதும் அதை ௯ூம.காரர்கள் திருப்பிச்சொல்லுவதும் கிடையாது. ஆகவே ஒரு சமூகக் கல்விக்கும் அறிவுக்கும் சுயமரியாதை உணர்ச்சிக்கும் மாறாக ஹிந்தியும் கல்வித்திட்டமும் போட்டுக்கொண்டு இதை மறுக்கக் கூடாது என்றும் மறுப்பின் அறிகுறி கூட காட்டக்கூடாது என்று தடுப்பதும் மற்றவர்கள் மீது பலாத்காரத்துக்கு மக்களை ஏவி விடுவதென்றால் இது ரஷ்ய சார் கொடுமையை விட மோசமான தென்றும் இதனால் யாருடைய முயற்சியும் இல்லாமலும் யாருடைய தடுப்பையும் லக்ஷ்யம் செய்யாமலும் சரணாகதியே அடையவேண்டி வந்துவிடும் என்றும் உண்மையாகவே பயப்படுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.12.1937
297 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காந்தியின் விரோதி ஒருவர்
66 ஓழிந் தார்? 2
காந்தியின் விரோதி ஒருவர் “ஒழிந்தார். அவர்யார் என்றால் மகான் ஜகதீசசந்திரபோஸ். விஞ்ஞானமே மக்களின்விரோதி என்றும் அது மாத்திரமல்ல கடவுளின் விரோதி என்றும் கருதுவதும் சொல்லுவதும் காந்தியார் மாத்திரமல்ல உண்மையில் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் வேத நம்பிக்கைக்காரர்கள் என்பவர்களுக்கு தர்மகர்த்தாக்களான பலரது அபிப்பிராயமாகும். 19, 20வது நூற்றாண்டில்தான் விஞ்ஞான நிபுணர்கள் உயிருடன் இருக்க கடவுளும் மதமும் கடவுள் மதபக்தர்களும் இடம் கொடுப்பவர்கள் ஆனார்கள். இதற்கு முன்பெல்லாம் கொளுத்தப்படுவார்கள் - சித்திரவதை செய்யப்படுவார்கள். இது இப்படி இருக்க, விஞ்ஞான நிபுணர்கள் இந்தியர்களில் ஒருவர்கூட சமீபகாலம் வரை இல்லை என்கின்ற பெயர் ஏற்பட உதவி செய்தவர்களும் இந்த இந்திய கடவுள் மதவாதிகளே யாவார்கள். ஏனெனில் விஞ்ஞான சக்தியை மக்கள் மதித்தால் அதில் நிபுணர்கள் தோன்ற மூன் வருவார்கள். அப்படிக்கில்லாமல் அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் படும் பாடுபடும்படி ஏற்பட்டால் யார் தான் முன்வரக்கூடும்? ஏதோ மேல்நாட்டின் சகவாசத்தாலும், ஐரோப்பிய ஆட்சி நன்மையாலும் விஞ்ஞானம் ஒரு அளவுக்கு ஆவது இந்தியாவில் மதிக்கும்படியான நிலை ஏற்பட்டு கைராட்டினம், பனை ஓலை, கருப்பட்டிப்பானை, கட்டை வண்டி, உரல், உலக்கை முதலாகிய காந்தியாரின் விஞ்ஞான ஆயுதங்களை சமாளித்துக் கொண்டு எப்படியோ ஒரு விஞ்ஞான நிபுணர் அதுவும் உலகம் மெச்சக்கூடிய விஞ்ஞான நிபுணர் ஜகதீச சந்திரபோஸ் இந்தியாவில் தோன்றி “இந்திய மண்ணுக்கும், இந்திய தண்ணீருக்கும் கூட அறிவுச் செடி பகுத்தறிவுச் செடி முளைக்கிறதுண்டு'' என்பதை நிலைநிறுத்திவிட்டு போய்விட்டார்.
இந்தியாவில் உலகம் மதிக்கத்தகுந்த ஒரு பணக்காரன் உலகம் மதிக்கத்தகுந்த ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளன் உலகம் மதிக்கத்தகுந்த ஒரு முட்டாள் ஆகிய இந்த 3 காரியம்தான் இதுவரை இந்தியாவைப் பற்றி உலகம் மதிப்பிட முடிந்திருக்கிறது. அதில் ஒருவர் போய்விட்டார் என்பது இந்திய பெருமைக்குப் பங்கம் என்பதோடு உலக விஞ்ஞான முற்போக்கு - அல்லது இந்தியாவின் முற்போக்குக்கு துரதிஷ்டம் என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.12.1937
குடி அரசு - 1937 (2) 298
காங்கரஸ் தலைவர்கள் திண்டாட்டம்
நாகூர், பட்டுக்கோட்டை, துறையூர், திருவாரூர் முதலிய இடங்களில் காங்கரஸ் தலைவர்கள் பட்டபாட்டை வேறிடத்து வெளிவரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பொதுக் கூட்டங்களில் பேச முன் வருபவர்கள், யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயாராகவே இருக்க வேண்டும். கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோரின் கடமையாகும் மேலும் காங்கரஸே இந்தியாவின் ஏகபிரதிநிதி ஸ்தாபனம் எனப் பெருமையடித்துக்கொள்ளும் காங்கரஸ்வாலாக்கள் காங்கரஸ்காரர். கேள்விகளுக்குத் தான் பதில் சொல்வோம், ஏனையோர் கேள்விகளை லக்ஷ்யம் செய்ய மாட்டோம் எனக் கூறுவது பேடித்தன மட்டுமல்ல போக்கிரித்தனமுமாகும். தோழர் ஈ.வெ.ராமசாமி செல்லுமிடங்களில் எல்லாம் “யார் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். பதில் சொல்ல
தயார்” என முதலில் பீடிகை போட்டுக் கொண்டே பேசுகிறார். கேள்வி கேட்பவர்களுக்கு - அவர்கள் எக்கட்சியார் என கவனிக்காமல் - ஆணித்தரமாக பதிலளிக்கிறார். கேள்விகளுக்கு பதிலளிக்க அஞ்சுவதுமில்லை. கேள்விகள் கேட்கப்படுமோ எனத் துடைநடுங்குவதுமில்லை. துறையூர்,
கரூர், திருச்சி முதலிய இடங்களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கூட்டங்களில் தோழர்கள் கே.எ.பி. விசுவநாதம், சோமசுந்தர பாரதியார். போன்ற நமது வீரர்களும் “யார் என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல தயார்” எனக் கூறிக்கொண்டே பிரசங்கம் செய்து வந்திருக்கிறார்கள். இந்த ஆண்மையான - நேர்மையான - யோக்கியமான - பொறுப்பான முறையை காங்கரஸ் வாலாக்கள் ஏன் பின்பற்றக்கூடாது? காங்கரஸ்காரர் பிதற்றுவதை யெல்லாம் வேதவாக்கென ஒப்புக்கொள்ள வேண்டும்; எவரும் மறுக்கக் கூடாது என்பதுதான் காங்கரஸ் வாலாக்கள் கருத்தா? அப்படியானால் அது ஹிட்லரிசமல்லவா? பாசிசமல்லவா? அதனாலன்றோ காங்கரசிலே பாசிசமும் ஹிட்லரிசமும் வளர்ந்து வருவதாக மஹாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார், ஸர்.கெ.வி. ரெட்டி போன்ற அறிவாளிகள் கூறுகிறார்கள். காந்தி காங்கரஸில் கால் வைத்தது முதல் ஜனநாயகக் கொள்கை ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என முதுகெலும்புடைய காங்கரஸ்காரர். கூறவில்லையா? மேலும் தோழர் சத்தியமூர்த்தியிடம் கேட்ட கேள்விகள். எல்லாம் “காங்கரஸ்” “தினமணி"யில் காங்கரஸ்காரர் கேட்ட கேள்விகள்தான்.
29 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தோழர் சொக்கலிங்கம் நேர்மையும் பொறுப்புணர்ச்சியுமுடைய ஒரு பத்திரிகாசிரியராயிருந்தால் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கட்டாயம் பதிலளித்திருக்க வேண்டும். கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க ஆற்றலோ ஆண்மையோ இல்லாதவர் பொது மேடையில் பேச முன்வரலாமா? சாத்தனும் சடையனும் தொம்மனும் திம்மனும் உளறிக் கொட்டுவதை யெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கவா தென்னாட்டார் ஜென்மமெடுத்திருக்கிறார்கள். பத்திரிகையில் பொய்யும் புளுகும் அளந்து பாமரமக்களை ஏமாற்றிக் காசு பறிப்பதுபோல் பொதுமேடைகளிலும் உளறி ஏய்க்க வந்தால் தேச மகாஜனங்கள் பாடம் கற்பிக்க முயலத்தான். செய்வார்கள்; முயலத்தான் வேண்டும். இன்றேல் பொதுவாழ்வே சீரழிந்து
விடும். பொய்யர்கள் - வேஷதாரிகள் - பேனாமிகள் கை வலுத்துவிடும். காங்கரஸ்காரர் மிரட்டு இனித் தென்னாட்டில் பலிக்காது. காங்கரஸ்காரர். பொய்ப்பிரசாரங்களும் பித்தலாட்டங்களும் அயோக்கியத் தனங்களும் லஞ்ச லாவணங்களும் தேச மகா ஜனங்களைத் தட்டி எழுப்பி விட்டன. காங்கரஸ்காரர் கைப்பற்றிய ஸ்தல ஸ்தாபனங்களில் எல்லாம் லஞ்சம் தாண்டவமாடுவதாக ஒரு அசம்பிளி மெம்பரும் காங்கரஸ் தலைவரெனச் சொல்லிக் கொள்பவருமான தோழர் மட்டப்பாறை வெங்கடராமய்யரே ஒப்புக்கொள்ளும்போது - லஞ்சத்தை ஒழிக்க காங்கரஸ் “தினமணி'”யே பகிரங்கமாகக் கிளர்ச்சி செய்யும்போது - தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டிக்
காரியதரிசியும் டில்லி அசம்பிளி சென்னைப் பிரதிநிதியுமான தோழர் சத்தியமூர்த்திமீது காங்கரஸ் 'தினமணி”யே கெளரவமான குற்றங்களை வெளிப்படையாகச் சாட்டும் போது தென்னாட்டார் விழிப்படைந்திருப்பது ஆச்சரியமாகுமா? சேலம் “ஹிந்தி ஆதரிப்பு”க் கூட்டத்திலே “ஹிந்தி”க்கு இருந்து வரும் எதிர்ப்பை நேரில் கண்ட பார்லிமெண்டரி காரியதரிசி தோழர் என்.எஸ். வரதாச்சாரியார் ஹிந்திக்கு இருந்து வரும் எதிர்ப்பை கனம் முதன் மந்திரியிடம் தெரிவிப்பதாகச் சொன்னாராம். துறையூரில் “தினமணி சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஹிந்தி ஆதரிப்புக் கூட்டத்தில் பொதுஜனங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டு திக்குமுக்காடும்படி செய்யவே தோழர் சொக்கலிங்கம் பேந்தப் பேந்த விழித்தாராம் ஜனங்களின் ஆத்திரத்தையும் அதிருப்தியையும் உணர்ந்த காங்கரஸ்வாதியான தோழர் வெங்கடாசலம்பிள்ளை ஹிந்தியை கட்டாயபாடமாக்கக் கூடாதென்று முதன்மந்திரியைக் கேட்டுத் தாமே கிளர்ச்சி செய்யப்போவதாகத் தெரிவித்தாராம். எங்கு பார்த்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. காங்கரஸ் எம்.எல்.ஏக்கள் பெரும்பாலார் ஹிந்தி கட்டாய பாடத்தை ஆதரிக்கவில்லை. எனினும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு பயந்தும் மாதச் சம்பளம் 75 ரூபாயில் மண் விழுந்து விடுமோ என அஞ்சியும் - பகிரங்கமாக எதிர்த்தால் காங்கரஸ் மானம் பறிபோய் விடுமே - மேற்கொண்டு காங்கரஸ் பேரைச் சொல்லிக் கொண்டு வெளியில் தலைநீட்ட முடியாதே
குடி அரசு- 1937 (2) 300
என்று வெட்கப்பட்டும் மெளனமாக இருந்து வருகிறார்கள். ஆனால் துறையூர் கூட்டத்திலே வாய் திறக்க அஞ்சிய தோழர் சொக்கலிங்கத்தின் “தினமணி பத்திரிகை “ஹிந்திக்கு ஆதரவு என்ற தலைப்புக் கொடுத்து
நேற்று புதன் கிழமை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி யிருக்கிறது. பொது ஜனங்களின் அபிப்பிராயத்தை மறைத்து இம்மாதிரி தலையங்கங்களின். மூலம் பொய்ப்பிரசாரம் செய்வது யோக்கியப் பொறுப்பாகுமா? ஹிந்தி
எதிர்ப்புக்காரர்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர் என்று கூறிவிட்டால் ஹிந்தி எதிர்ப்பின் சக்தி குறைந்து விடுமென்பது “தினமணி”யின் நினைப்பா? சோமசுந்தர பாரதி, சாமி வேதாசலம், உமாமஹேசுவரம் பிள்ளை, தென்னாடு முழுதுமுள்ள சைவ சித்தாந்த சங்கத்தார், மஹாமஹோபாத்தியாய சுவாமிநாதய்யர், டி.ஆர். வெங்கடராமசாஸ்திரியார், டாக்டர் ஸி.ஆர். ரெட்டியார், ஸர்.எம். கிருஷ்ணன் நாயர், கா. சுப்பிரமணியம்பிள்ளை, தென்னாட்டுத் தமிழ்ப் பண்டிதர்கள், ஆரிய சமாசத்தார் நாடிமுத்துப்பிள்ளை,
டி.எ. ராமலிங்க செட்டியார், டாக்டர் அருண்டேல் முதலியவர்கள் சுயமரியாதைக்காரர்களா? அல்லது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா? அவர்கள் எல்லாம் சுயமரியாதைக் கட்சிக்கு எதிரிகளல்லவா? இரண்டொருவரைத் தவிர ஜஸ்டிஸ் கட்சியை எதிர்ப்பவர்களல்லவா? இந்நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காரர்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர், ஜஸ்டிஸ் கட்சிக்காரர் எனக் கூறுவது வடிகட்டின போக்கிரித்தனமல்லவா? மேலும் ஹிந்தியை
எந்தத் தமிழ்ப்பண்டிதர்களாவது ஆதரிக்கிறார்களா? பாஷை விஷயத்தில் அபிப்பிராயங்கூற அவர்களை விடவேறு யாருக்குத்தான் அதிக உரிமையுண்டு?
மற்றும் “காங்கரஸ் மந்திரிகள் மீது சில சுயநலமுள்ளவர்களுக்குக் கோபமிருந்தால் அதற்காக அகில இந்திய பாஷை கூடாதென்று சொல்வது தமிழருக்கே அவமானத்தை உண்டு பண்ணுகிறது” என “தினமணி” கூறுகிறது. அவமதிப்பை உண்டுபண்ணுவது எந்தத் தமிழருக்கு? ஹிந்திக்காரருக்குப் பிறந்த தமிழருக்கா? தமிழ்ப்பெற்றோருக்குப் பிறந்த தமிழருக்கா?
தமிழ்ப் பெற்றோர் பெற்ற தமிழர்கள் எல்லாம் ஹிந்தியை எதிர்க்கத்தான். செய்கிறார்கள். ஹிந்திப் பெற்றோர் பெற்ற தமிழருக்கு அவமானத்தை உண்டுபண்ணுகிறதானால் அந்த இருசாதிப் பேர்வழிகள் உணர்ச்சியை தமிழர் லக்ஷ்யம் செய்ய மாட்டார்கள்; லக்ஷ்யம் செய்யவும் தேவையில்லை.
மேலும் ஹிந்தி எதிர்ப்புக் கோஷ்டியார் நியாயவரம்பை மீறிக்கூட பிரசாரத்தில் இறங்கி யிருப்பதாயும் அவர்கள் போகும் இடங்களில் உங்களுக்கு கொஞ்சமாவது ரோஷமிருந்தால் ஹிந்தியை ஆதரிக்கும் கூட்டம் ஒன்று கூட உங்கள் ஊரில் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுவதாகவும் அதைக் கேட்டுக்கொண்டு சில சுயமரியாதைக்காரர் காங்கரஸ் கூட்டங்களில் கலாட்டா செய்ய முயற்சிப்பதாகவும் இப்படிச் செய்வது பேச்சுச் சுதந்தரத்தை பலாத்காரமாய்ப் பறிப்பதாகுமென்றும் சுயமரியாதைக்காரர் இம்மாதிரி கலாட்டாவிற்கு இறங்கினால் பொது
301 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
ஜனங்களுக்குக் கோபம் வந்து அப்புறம் மோசமான நிலைமை ஏற்படும் என்றும் “தினமணி” வெளுத்து வாங்கியிருக்கிறது. “தினமணி” கூறுவது உண்மையெனவே வைத்துக்கொண்டாலும் அது எப்படித் தவறாகும்? காங்கரஸ்காரர் ரோஷமுடையவர்களாயிருந்தால் இந்த கட்சியைப் பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்று காங்கரஸ்காரர் பிரசாரம் செய்யவில்லையா?
தாய் நாட்டு விடுதலை விரோதிகளை தயவு தாட்சண்யமின்றித் தாக்க வேண்டுமென்று காங்கரஸ்காரர் கூறவில்லையா? தாய்நாட்டு விடுதலைக்காக சர்வ தியாகங்களும் செய்ய தேச மகா ஜனங்கள் தயாராக இருக்க வேண்டுமென்று காங்கரஸ்காரர் கூறியதுபோல தமிழ்த் தாயைக் காப்பாற்ற சர்வ தியாகங்களும் செய்ய தமிழர்கள் தயாராக இருக்க வேண்டுமென்று உண்மைத் தமிழர்கள் கூறுவது எவ்வாறு குற்றமாகும்?
மற்றும் பொது ஜனங்களுக்கு கோபம் வந்து மோசமான நிலைமை ஏற்படுவது பற்றியும் “தினமணி” யும் “தினமணி” கோஷ்டியாரும் கவலைப்படத் தேவையில்லை. “தினமணி” குறிப்பிடும் “மோசமான நிலைமை” ஏற்பட வேண்டுமென்பது தான் தமிழர்கள் ஆசை. 100க்கு
3 கொண்ட பார்ப்பனர்களும் அவர்கள் வால்பிடிக்கும் சில பேனாமிகளும் தென்னாட்டுப் பொது ஜனங்கள் ஆகமாட்டார்கள். ஆகவே மோசமான நிலைமை ஏற்படுமே என “தினமணி” நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம். மோசமான நிலைமை ஏற்பட்டால்தான் பார்ப்பனத் திமிரும் பேனாமிகள். கபட நாடகமும் சுயநலமும் ஒழியும். அவைகளை ஒழிக்கத் தமிழர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு விட்டார்கள். 28ந் தேதி ஹிந்தி தினக் கொண்டாட்டத்தைப் பற்றி மற்றப் பத்திரிகைகள் எழுதாமலிருக்கையில் “தினமணி” மட்டும் பொய்த்தலையங்கம் எழுதக் காரணம் என்ன? பொதுப் பணத்திலிருந்து மாதம் தோறும் 75 ரூபாய் தண்டம் பெறும் பாபத்துக்காக “தினமணி” ஆசிரியர் இம்மாதிரி மனச்சாட்சியை விற்கலாமா?
இந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறோம். ஹிந்திக்கு இருந்து வரும் எதிர்ப்பை மந்திரிகள் உட்பட சகல காங்கரஸ்வாதிகளும் உணர்ந்து விட்டார்கள். மேலே எடுத்துக் காட்டியுள்ளபடி மஹாகனம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார், ஸர்.எம். கிருஷ்ணன் நாயர், டி.ஆர். வெங்கடராம சாஸ்திரியார், சாரநாத அய்யங்கார், டாக்டர் ஸி.ஆர். ரெட்டி, டாக்டர் அருண்டேல் முதலிய அறிவாளிகள் அபிப்பிராயம் நற்பயன் பயக்கத்தவறா எனவும் காங்கரஸ்காரர் தெரிந்து கொண்டு விட்டனர். ஆகவே பொய்ப் பிரசாரம் செய்து தேச மகாஜனங்களை மயக்க
- ஏய்க்க மும்முரமான வேலைகளை அவர்கள் இனிமேல் செய்யத்தான். செய்வார்கள். எனவே நம்மவர்கள் இனி சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதுவரையில் அரும்பாடுபட்டுத் தமிழர்கள் உள்ளத்து அரும்புவித்த ஹிந்தி எதிர்ப்புணர்ச்சி மழுங்கிப் போகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் லீக், ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக்
குடி அரசு - 1937 (2) 302.
கட்சி அன்பர்கள் நாள் தவறாமல் பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகக்
கிளர்ச்சி செய்ய வேண்டும். காங்கரஸ் பொய்ப்பிரசாரத்தினால் தமிழர்கள் ஏமாந்து பேகாமல் தடுக்க வேண்டும். ஹிந்திக்கு இருந்து வரும் எதிர்ப்பை முதன் மந்திரியிடம் தெரிவிப்பதாகவும் கிளர்ச்சி செய்வதாகவும் இரண்டு காங்கரஸ்காரர் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது நமது வெற்றியின் முதற்படி. இன்னும் தீவிரமாக வேலை செய்தால் பூரண வெற்றி கிடைப்பது நிச்சயம். ஆகவே தோழர்களே! சகோதரர்களே! முன் வைத்த காலைப் பின் வாங்காமல் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் மேலும் மேலும் கிளர்ச்சி செய்ய வரிந்துகட்டிக்கொண்டு முன் வருவீர்களாக!
வெற்றி நமதே! நிச்சயம்! வாழ்க தமிழ்! வீழ்க ஹிந்தி! ஒழிக பார்ப்பனத்
திமிர்! அழிக ஆரியர் கூலிகள்.
- “விடுதலை”
குடி அரசு - மறுபிரசுரம் - 05.12.1937.
303 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மந்திமிகன் செயலும் செல்வாக்கும்
“நவசக்தி” டிசம்பர் 10-ந் தேதி தலையங்கத்தில் மந்திரிமாருக்கு சிபார்சு பேசும் தோரணையில் வழக்கம் போல் வெண்டைக்காய் சட்டினி மாதிரி வழவழ வென்று தனக்கும் புரியாமல் பிறருக்கும் புரியாமல் 2 கலம் எழுதி கடைசியில் மந்திரிகளுக்கு தேசபக்தர்கள் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறது
அவ்வேண்டுகோளில் மந்திரிமார் பதவி ஏற்ற காலம் முன் போல் அல்ல வென்றும் இப்போது ஒருவித மாகாண சுய ஆட்சி கிடைத்துள்ளது
என்றும், அதை திறம்பட நடத்தி பூரண சுயாட்சி பெற முயலுதல் வேண்டும்” என்றும் எழுதி இருக்கிறது
மற்றும் மந்திரிகள் பதவி ஏற்று ஆட்சியை வயப்படுத்தி “அரையாண்டுகளுக்குள் பலவித திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்கள்"' என்று எழுதிவிட்டு அங்ஙனம் நிகழ்த்திய திருவிளையாடல்களை குறிப்பிடும் முறையில்,
1. அரசியல் கைதிகள் விடுதலை.
2. தொழிலாளர்கள் குறை களைதல்.
3. கள்ளரக்கனை வீழ்த்தல்.
4. கதருக்கு ஆக்கந்தேடல்.
5. நீலன் சிலையகற்றல். முதலியன நிகழ்த்தி உள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறது.
மற்றும் குறைகளை எடுத்துச்சொல்லும் முறையில் (இதை காங்கரசார் குறை எழுதியதாக கருதாமல் இருக்க வேண்டும் என்கின்ற பயங்காளித்தனத்தின் மீது) “இப்போது விவசாயிகள் கடன் மசோதா பற்றி எங்கு பார்த்தாலும் ஒரு பெருங் கூக்குரல் கிளம்பி இருக்கிறது வெளி வந்துள்ள மசோதாவில் சில குறைபாடுகள் இருக்கலாம். அம்மசோதாவை இன்னும் சிறிது உரமாக செப்பம் செய்திருக்கலாம். என்னமோ ஒரு வழியில் செப்பம் செய்யப்பட்டிருக்கிறது. கடன் மசோதாவின் பொது நோக்கம் என்ன? ஏழைமக்களின் துயர் தீர வேண்டுமென்பது மசோதாவில் ஏழை மக்களின் பெருந்துயர் தீரப்போவதில்லை” என்று பச்சையாக எழுதி இருக்கிறது
குடி அரசு- 1937 (2) 304
ஆகவே இதிலிருந்தாவது கடன் மசோதாவை குறைகூறுகிறவர்கள் எல்லாம் பார்ப்பன விரோதிகள் என்றோ காங்கரஸ் விரோதிகள் என்றோ. மந்திரிகள் விரோதிகள் என்றோ சொல்லிவிட முடியாது என்பது ஒருபுறமிருக்க முதலியார் அவர்கள் காங்கரஸ் மந்திரிகள் சாதித்ததாக சொல்லும் காங்கரஸ் மந்திரிகள் “திருவிளையாடல்”களின் யோக்கியதையை
சற்று கவனிப்போம்
1. அரசியல் கைதிகள் விடுதலை மந்திரிமாருக்கு பெருமை அளிக்க இடமில்லை. ஏனெனில் அரசியல் கைதிகள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாலோ அல்லது “இனிமேல் அப்படி (அரசாங்கத்துக்கு விரோதமான எதையும்) செய்வதில்லை'' என்றாலோ கைதிகளுக்கு தானாக விடுதலை கிடைத்துவிடும். அப்படித்தான் முன்பும் காந்தியார் நிபந்தனை கொடுத்து பல அரசியல் கைதிகளை விடுவித்திருக்கிறார். ஆகவே அதில் யாரும்
கிப்பாத்து எடுத்துக்கொள்ள முடியாது.
2. தொழிலாளர் குறைகள் ஒன்றும் களையப்பட்டு விடவில்லை தொழிலாளருக்கு போலீஸ் அடி கிடைத்தது பற்றி தோழர் முதலியார் அவர்களே ஓலமிட்டிருக்கிறார். தொழிலாளர் மத்தியஸ்தம் பயன்படவில்லை என்பதுபற்றி தொழிலாளர்களே தினமும் கூக்குரலிடுகிறார்கள்.
3. கள் “அரக்கனும்” வீழ்ந்து விடவில்லை. கேலத்தில் இருந்து கோயமுத்தூருக்கும் வடஆற்காடு தென்னாற்காட்டுக்கும் அனுப்பப்பட்டிருக் கிறான். அங்கு கள்ளரக்கன் முன்னைய விட பதின்மடங்கு கொட்டம் அடிக்கிறான். கள்ளரக்கனால் இந்த ஜில்லாக்கள் துன்பப்படுகின்றன. சேலம் கள்ளரக்கனை கோயமுத்தூருக்கு அழைத்துக்கொண்டதால் கோயமுத்தூர் வரிப்பணம் சேலத்தில் செலவாகிறது. தினமும் சேலத்தில் பல கேசுகள் கண்டுபிடிக்கப்படுகின்னன. ஆகவே “அரக்கன்” மாய்ந்து விடவில்லை. இந்த கள்ளரக்கனை ஒழித்த நாடகம் ஒரு அரசியல் பித்தலாட்டம் ஆகுமே ஒழிய பலனளித்ததாகாது. அன்றியும் மற்ற ஜில்லாக்களில் கள்ளரக்கனை ஓட்ட முடியாது என்று பிரதம மந்திரியும் ஜெயில் மந்திரியும் பல இடங்களில் விளக்கி விட்டார்கள்
சேலத்துக் கள்ளரக்கன் கோயமுத்தூருக்கு ஓடும் போது கல்வி “தேவியை” அடித்துக்கொண்டும் சுகாதார “தேவியை” இழுத்துக்கொண்டும் ஓடிவிட்டான் - இது பட்ஜெட்டில் தெரியப்போகிறது
4. கதருக்கு தேடிய ஆக்கம் பொதுமக்கள் பணம் ஒன்றுக்கு மூன்றாக துணி வாங்குவதில் செலவாவதல்லாமல் ஒன்றுக்கு 3 பங்கு பஞ்சும் பாழாகி பொது ஜனங்கள் வரிப்பணத்தில் வருஷம் 1-க்கு 200000 கதர் நஷ்டத்துக்குக் கொடுக்கப்பட்டு பாழாக்கப்படுகிறது
இந்த இரண்டு லக்ஷ ரூபாயை இப்படி பாழாக்குவதற்கு பதில் இத்தொகையில் வருஷம் ஒரு மில் வைத்தால் 10 வருஷத்தில் தினம் 10000
305 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
பேருக்கு தினம் 4 அணா 8 அணா 12 அணா கூலி கொடுத்து லாபமும் 100-க்கு 12 ரூபாய் வீதம் வட்டி பெறக்கூடிய நிலைமை அடையலாம் ஆகவே கதரின் பேரால் செலவிடும் மூலப்பொருள் ஊக்கம் , அறிவு, அழகு, நயமும், நாணையமும் எல்லாம் பாழாகிறது. கதருக்கு ஆக பாடுபடும் பெண்களுக்கு தினம் ஒரு அணா வரும்படிக்கு கூட மார்க்கம் இல்லாமல் இருக்கிறது
5. இனி நீலன் சிலை அகற்றிய யோக்கியதையை பார்ப்போம்
நீலன் சிலை போக்குவரத்து ஜனங்கள், வண்டிகள், வாகனங்கள் ஆகியவற்றிக்கு இடையூறாய் இருப்பதாய் சென்னை கார்ப்பரேஷன் தீர்மானித்ததே ஒழிய நீலன் சிலை இந்தியர்களின் சுயமரியாதைக்கு கேடு என்று சொல்லவில்லை. சர்க்காரார் இதை ஏற்று போக்குவரத்து சவுகரியத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைக்க அனுமதித்திருக்
கிறார்கள். இதை பிரதம மந்திரியாரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அதாவது அவரது விசாகபட்டணம் பேச்சில்
"I will keep it with all respect and honour"
“நான் நீலன் சிலையை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் காப்பாற்றி வைப்பேன்”
என்று சொல்லி இருக்கிறார். ஆகவே இந்த நிலையில் நீலன் சிலையை அகற்றியதில் சிப்பாய்தன. மென்ன இருக்கிறது?
நிற்க காங்கரஸ்காரர்கள் நாணயமாகவோ அயோக்கியத்தனமாகவோ
“புது அரசியல் சட்டம் பயனற்றது. ஆதலால் அதை உடைப்பதற்கு ஆக பதவி ஏற்றோம்" என்று சொல்லுகிறார்கள்.
ஆனால் நமது தோழர் வழ வழா முதலியார் இன்று “ஒரு வித மாகாண சுயாட்சி கிடைத்துள்ளது அதை திறம்பட நடத்தி பூரண சுயாட்சி பெற முயலுதல் வேண்டும். அக்குறிகொண்டே மந்திரிமார் கடனாற்றி வருகிறார்கள்" என்று எழுதுகிறார். (இவை யாவும் 10.12.37 நவசக்தி தலையங்கத்தில் உள்ளவையாகும்) ஆகவே காங்கரசுக்காரரின் நாணயமும் அவர்கள் காரியத்தை மக்கள் ஆதரிப்பதும் அவர்களுக்குள் இருந்து வரும் ஒற்றுமையும் எப்படிப்பட்டது என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்ப்பார்களாக!
குடி அரசு - தலையங்கம் - 12.12.1937
குடி அரசு- 1937 (2) 306
புதுநகரம் முஸ்லீம் லீக் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
தற்கால அரசியல் நிலை விளக்கம்
அல்லாதார் முன்னேற்றத்திற்கு யோசனை
தலைவரவர்களே! தோழர்களே!!
இன்று கூட்டியிருக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் இந்த நடு ஜாமம் 11-மணி நேரத்தில் நடைபெறுவதை நான் மேல் நாட்டில் பார்த்திருப்பதை தவிர கீழ் நாடுகளில் பார்த்ததில்லை. ஆனால் காங்கரஸ், சும.மகாநாடுகளிலும் உற்சவங்களிலும் நாடகம், சினிமா தெருக்கூத்து ஆகியவைகளிலும் அதிலும் அபூர்வமாகவே பார்த்திருப்பேன். அதுவும் சமீபத்தில் 4, 5 வருஷங்களில் கண்டதாக ஞாபகமில்லை. இப்போது கொஞ்சகாலமாக அதுவும் காங்கரஸ் மக்களை ஏமாற்றுவதில் வெற்றி பெற்று அரசாங்கத்தினிடம் சரணாகதிஅடைந்து அரசியல் பதவிகளை அடைந்தது முதல் நாட்டில் இந்தியா முழுவதிலும் மூஸ்லீம்களது விழிப்பு அதிகமாகக் காணப்படுவதுடன் எங்கும் ஒரு வித கிளர்ச்சி நடந்து கொண்டு வருகிறது
காங்கரஸ் பேயாட்டம்
ஏனெனில் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்றுவிட்டபின் தங்கள் வெற்றியின் காரணத்தை உணர்ந்து வெட்கப்படாமலும், சரணாகதி அடைந்ததைப்பற்றி அவமானப்பட்டு தலையை மறைத்துக் கொள்ளாமலும் வெற்றி போதையில் முஸ்லீம் லீக்கையும், ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதை இயக்கத்தையும் கொன்று 5000கஜ ஆழத்தில் புதைத்து விட்டதாக பேயாட்டம் ஆடி வருகிறார்கள். இதற்கு அவர்களுக்கு ஆக்கமளிப்பது இன்று சர்க்காரிடம் சரணாகதி அடைந்து மந்திரி பதவி பெற்று அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதேயாகும். இன்றைய மந்திரிகள் எல்லோரும் காங்கரசின் பேரால் பதவியிலிருப்பவர்கள், முஸ்லீம்லீக்குக்காரரோ ஜஸ்டிஸ் கட்சியாரோ சுயமரியாதைக்காரரோ யாரும் மந்திரியாய் இல்லை. மந்திரி பதவிகளில் முஸ்லீம்களும், பார்ப்பனரல்லாதாரும், சுயமரியாதைக்காரரும் மந்திரிகளாய் இருப்பதாய் நமக்குத் தெரிந்தாலும் அவர்கள் ஒரு காலத்தில் அந்தப்படி இருந்து இப்போது அந்தந்த கட்சி
307 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
நலன்களை காட்டிக்கொடுத்து பதவி பெற்றதோடு அக்கட்சிகளை ஒழிப்பதற்கும் பார்ப்பனர்களுக்கு கையாளாய் இருந்து வர ஒப்புக் கொண்டிருப்பதாலேயே அவர்களுக்கு அப்பதவி கிடைத்திருக்கிறது ஆகவே நமக்கு காங்கிரஸ் மாத்திரமோ, பார்ப்பனர்கள் மாத்திரமோ
எதிரிகள் அல்ல.
நம்மவர்களும் எதியிகளே
மற்ற நம் இயக்கங்களை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் எதிரிகளாய் இருக்கிறார்கள். நம் இயக்கங்களையும், நமது முற்போக்குகளையும் கொன்று தடைப்படுத்தவே இன்று காங்கரஸ் அரசாங்கம் இருந்து வருகிறது. அதன். எதிரொலிதான் முஸ்லீம் லீக்கும், பார்ப்பனரல்லாதார் கட்சியும், ௬ம. இயக்கமும் புதைக்கப்பட்டு விட்டது என்று கூறி பார்ப்பனர்கள் கூத்தாடுவதாகும்
இந்தக் காரணமேதான் இன்று முஸ்லீம்களையும் பார்ப்பனரல்லாதார். களையும் சுயமரியாதைக்காரர்களையும் ஒன்று சேர்த்து இருக்கிறது. இந்த உணர்ச்சி தான் இன்று இந்த நடு இரவு 12 மணி ஜாமத்தில் 3000, 4000 பேர்களை இந்தக் குளிரிலும் பனியிலும் கூடி இருக்கும்படி செய்திருக்கிறது.
நம் மூவருக்கும் காங்கரஸ் ஒரே மாதிரியான விரோதி. நம் மூவருக்கும் ஜீவநாடியான அவசியமான ஒரு காரியத்தில் காங்கரஸ் விரோத பாவங்கொண்டு அடியோடு அழிக்க முயற்சித்து வருகிறது. அது என்னவென்றால் அதுதான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நாம் நமது எண்ணிக்கைக்கும் தகுதிக்கும் உரிமைக்கும் மேலாக சிறிதுகூட கேட்கவில்லை. நம் விகிதாச்சாரம் உரிமையுள்ள அளவே விரும்புகிறோம். ஏனெனில் நாம்
இவ் விஷயத்தில் ஆதிமுதல் கவலையற்று இருந்ததால் இந்நாட்டு ராஜ வம்சங்கள் சக்ரவர்த்தி வம்சங்கள் என்ற மக்களும் இந்நாட்டு பழங்குடி மக்கள் என்ற மக்களும் இந்நாட்டு செல்வங்களும் உழைப்பாளியும் வரி கொடுப்பவனுமான சமூக மக்களும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் சமூகவாழ்விலும் கீழ் மக்களாய் இழி மக்களாய் கருதப்பட்டு சராசரி வாழ்வுக்குக் கூட இடமின்றி ஈன மக்கள் என்று கருதும்படி இருந்து வருகிறோம்
பிச்சைக்கார ஜாதி.
ஆனால் இதற்கு மாறான மற்றொரு ஜாதியார் அதாவது பிச்சை எடுப்பதை பிறவி உரிமையாகக்கொண்ட ஒரு வகுப்பு இன்றும் மூன்பும் எப்போதுமே சிறிதும் பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே சகல போக போக்கியமும் பெற்று சமூகத்தில் ஜாதியில் பெரிய ஜாதி ஆகி
குடி அரசு- 1937 (2) 308
செல்வத்தில் பாடுபடாமல் ராஜபோகமனுபவித்துக்கொண்டு அரசியலில் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதை நாம் இன்று இந்த 20, 30 வருஷகாலமாகவே உணர்ந்து நமது பங்கை - நம் உரிமையை மற்றவர்கள் கொள்ளை அடிக்காமல் பார்த்து வருகிறோம். ஆனால் நாம் அதற்காக செய்ய வேண்டிய முயற்சி சரியாய் கவலையுடன் செய்யாததாலும் நம்மக்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சி சரியாய் இல்லாததாலும் யோக்கியமும் நாணையமும் உள்ள தலைவர்கள் போதிய அளவு இல்லாததாலும் நாம் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டே வந்திருக்கிறோம். அத்தோல்வியின் கடைசி எல்லைதான் நாம் இன்று இருக்கும் நிலை. அதனால் தான் நம்மை 5000கஜ ஆழத்தில் வெட்டி புதைத்து விட்டதாக பார்ப்பனர்கள் அதாவது கனம் ராஜகோபாலாச்சாரியார், தோழர் சத்தியமூர்த்தியார் முதலியவர்கள் கூறுகிறார்கள்.
தோல்வியும் நண்மைக்கே
என்றாலும் நாம் இன்றைய நிலையை தோல்வி என்று கருதிவிட வேண்டியதில்லை. இதிலிருந்து நாம் வெற்றியை நாடிச்செல்லும்
நிலைக்கு வந்திருக்கிறோம் என்றுதான் எண்ணவேண்டும். சட்டசபை
தேர்தல் தோல்வியும் மந்திரி சபையில் நம் பிரதிநிதிகள் இல்லாத தோல்வியும் ஒரு சமூகத்துக்கு ஒரு இயக்கத்து தோல்வி ஆகிவிடாது பலமான - சுலபத்தில் அசைக்க முடியாததான ஒரு வெற்றியை லட்சியத்தை அடையவே அடைந்து தீரவே நமக்கு இன்று இத்தோல்வியில் வழிகாட்டப்பட்டிருக்கிறது. இதைத்தவிர இனி நமக்கு இது போன்ற சந்தர்ப்பம் கிடைக்காது
நாம் மூவரும் காங்கரஸ் ஸ்தாபனத்தை நமக்கு பரம விரோத ஸ்தாபனமாய் கருதவேண்டியவர்களாவோம்
காங்கரஸ் தோற்றத்திற்கு சர்க்காரே காரணம்
காங்கரஸ் ஆரம்பிக்கப்பட்டதே அக்கருத்து மீதுதான். ஏனெனில் அரசாங்கத்தாரே காங்கரஸ் ஆரம்பிக்கப்பட யோசனை சொன்னவர்களாகும்.
சர்க்கார் காங்கரஸ் ஏற்படுமுன் முஸ்லீம்களையும், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களாய் இருந்தவர்களிடத்திலும் மிக்க பயபக்தியாய் இருந்து வந்தது. அவர்கள் சர்க்காருக்கு தாளம்போட இஷ்டமில்லாதவர்களாய் சர்க்காரையும் தங்கள் இஷ்டப்படி ஆட்டி வந்தார்கள். அதற்கு விரோதமாய் சாதாரண கீழ்த்தர மக்களைத் தூண்டி விடவே சர்க்கார் காங்கரசை ஏற்படுத்தச் செய்தார்கள். அது முதல் தான் சாதாரண மக்கள் அதாவது பாடும் பொறுப்பும் இல்லாத மக்கள் நாட்டுச் செல்வத்தையும் உழைப்பையும் பாடுபடாமல் பொறுப்பு ஏற்காமல் வயிறு வளர்க்கும் சோமாரி மக்கள்
309 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அரசாங்கத்துக்கு வலக்கையாய் இருக்கும்படி தந்திரங்கள் செய்ய
முடிந்தது. அதனாலேயே சர்க்காரும் மக்களுக்கு இவ்வளவு கொடுமையான. வரிகளைப் போடவும் போட்ட வரிகள் பயன்படாமல் ஒரு ஜாதியாரே உத்தியோக மேற்று பகல் கொள்ளை போல் சம்பளமாகப் பெறுவதற்கே
பயன்படவும் முடிந்தது
காங்கரசுக்கு முன்
உதாரணம் சொல்ல வேண்டுமானால் காங்கரசுக்கு முன் இவ்வளவு பார்ப்பனர்கள் இவ்வளவு பெரிய உத்தியோகங்களில் இருந்ததில்லை காங்கரசுக்கு பிறகே பார்ப்பனர்கள் அதுவும் நாட்டு நலத்தில் முற்போக்கில் மனித சமூக மனிதத்தன்மையில் இருந்தும் பொறுப்பு இருக்க இடமும் அவசியமும் இல்லாதவர்களே இன்று பெரும் பொறுப்புள்ள உத்தியோகத்தில் 100க்கு 90-க்கு மேல் கைப்பற்ற முடிந்தது. அந்த சமூகமே ஏழையென்று இல்லாமலும், கல்வி இல்லாதவர்கள் என்று இல்லாமலும், வேலை இல்லாதவர்கள் என்று இல்லாமலும் மனித சமூகத்தில் எந்தக் காரணத்தாலும் கீழ்பட்ட மக்கள் என்று இல்லாமலும் சராசரிக்கு வெகுபங்கு மேலாக வாழ முடிந்தது என்பதுடன் அதற்கு நேர்மாறாய் பாடுபடும் மக்களும் பொறுப்புள்ள மக்களும் அரசாங்க பொக்கிஷத்தை சதா நம்பும்படியாக வரிசெலுத்தும் மக்களும் கீழ்மக்களாக, அடிமைகளாக அரசாங்கம் என்றால்
நடுங்கிச் சாகும்படியாக அவ்வளவு இழிவான அறிவற்ற நிலையில் வாழ நேர்ந்தது.
முஸ்லீம்லீக் தோற்றம் இதை முதல் முதலில் மூஸ்லீம்கள்தான் கண்டு பிடித்துக் காங்கரஸ் மனித சமூகத்துக்கு விரோதமான ஸ்தாபனம் என்பதை சகல வழிகளிலும் உணர்ந்து கிளர்ச்சி செய்தவர்களாகும்
1885ல் காங்கரசு வந்தது என்றாலும், 1890 லேயே முஸ்லீம்கள். காங்கரசை எதிர்க்கத் துணிந்து விட்டார்கள். 1900ல் முஸ்லீம்கள் தனி உரிமை - தனிபிரதிநிதித்துவம் பெற ஆரம்பித்து விட்டார்கள். காங்கரசைப் போலவே ஒரு ஸ்தாபனத்தையும் அதாவது முஸ்லீம் லீக்கையும் 1906ல் ஆரம்பித்து 1909 அதாவது ஆரம்பித்த 3 வருஷத்தில் முஸ்லீம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தனித் தொகுதி மூலம் பெற்று விட்டார்கள்
1906-ல் முஸ்லிம் லீக்கு ஏற்படுத்தி கிளர்ச்சி செய்த காரணத்தால்தான் அது பயன்பெறாமல் செய்வதற்கு பங்காளத்தில் வெள்ளைக்காரர்கள் பஹிஷ்காரம், சுதேசி கிளர்ச்சி முதலிய சூழ்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இந்துக்களுக்கு ஏற்பட்டது.
குடி அரசு- 1937 (2) 310
முஸ்லீம்கள் காட்டிய வழி
கடசியாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இந்துக்கள் செய்த தேசாபிமான சூழ்ச்சி தோல்வியுற்று 1909ல் சீர்திருத்த சட்ட மூலமாகவே முஸ்லீம்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டார்கள் - இதைப்பார்த்த
பிறகுதான் நம் மாகாணத்திலும் மற்றும் பல மாகாணங்களிலும் இந்துக்களும் தங்களுக்குள்ளாக ஒரு சமூகத்தை ஒரு சமூகம் ஏமாற்றி வஞ்சித்து கொள்ளை கொள்ளும் கொடுமையை ஒழிக்க கிளர்ச்சி செய்தார்கள். அதன். பலன்தான் நம் மாகாணத்தில் 1916ல் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி தோன்ற வேண்டியதாயிற்று. இந்த உணர்ச்சியை ஒழிக்க வேண்டி முஸ்லீம்களை பார்ப்பனர்கள் தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆக பார்ப்பனத் தலைவியாய் இருந்துவந்த பெசண்டம்மை முஸ்லிம்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொள்வதாகவும் முஸ்லிம்கள். மற்ற வகுப்பார்களின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு விரோதமாய் இருந்து காங்கரசுக்கு உதவிசெய்ய வேண்டுமென்றும் ஒப்பந்தம் பேசிக்கொண்டு லக்னோ காங்கரசில் ஒரு பேக்ட் ராஜி உடன்படிக்கை செய்து கொண்டார் என்றாலும் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு கிளர்ச்சி செய்து மக்களுக்கு தங்கள் மான உணர்ச்சி வரும்படி 1916 முதலே உழைத்து வருகிறார்கள். ஒரு அளவுக்கு பயனும் அடைந்தார்கள் என்பதோடு இனி வரும்காலமும் சகல வகுப்புக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும் என்கின்ற உணர்ச்சியும் மக்கள் உள்ளத்தில் வேரூன்ற ஆரம்பித்து விட்டது.
காந்தியார் தந்திரம் இதைப்பார்த்த பார்ப்பனர்கள் “ஒன்றில் இது ஒழிய வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும்” என்கின்ற கருத்தைக் கொண்டு விட்டார்கள். அதன் பயன் தான் இன்று காந்தியார் பட்டினி, சண்டித்தனம் செய்ததும் கனம் ஆச்சாரியாரும் தோழர் சத்தியமூர்த்தியும் வங்காளக் குடாக்கடலில் விழுந்து உயிர் விட வேண்டியது என்று சபதம் கூறிக்கொண்டதுமாகும். காங்கரசின் தேசாபிமானமும் பூரண சுயேச்சை செய்யும் சிலர் பேசும் சமதர்மமும் அந்நிய ஆட்சியை ஒழிக்கும் தன்மையும்
எல்லாம் இன்றுள்ள வகுப்புவாரி உரிமையை ஒழிப்பதும் அது மறுபடி எப்போதும் தலை எடுக்கவொட்டாமல் அழிப்பதும் தான் என்பது எனது உறுதியான அபிப்பிராயம்.
காங்கரசுக்கு இனி இந்து முஸ்லீம் ஒற்றுமையைப்பற்றிக் கவலை இல்லை.
இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் கேட்கமாட்டேன் என்றும் வந்தாலும் பெற மாட்டேன் என்றும் கூறிய காந்தியார் இன்று சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் இவை செய்வேன். என்று சொல்லி விட்டார். 31— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
தீண்டாதார் நசுக்கப்பட்டனர் தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி தீண்டப்படாதார் என்பவர்களை நசுக்கிஆய்விட்டது.சிலகூலிகளை வசப்படுத்திக் கொண்டதோடு தீண்டாமை விலக்கு தீர்ந்து போய் விட்டதாக செய்து கொண்டார்கள்.
தோழர்கள் என். சிவராஜ், ஆர். சீனிவாசன், அம்பத்கார் முதலிய தீண்டாமை வகுப்பு தலைவர்கள் இன்று தேசத்துரோகிகள் என்றும் சமூகத்துரோகிகள் என்றும் பிரசாரம் செய்யத் துணிந்து விட்டார்கள். ஆகவே மக்கள் இந்த மாதிரி சபையைப் பார்த்து மலைக்க வேண்டியதில்லை. முஸ்லிம்களும் அதை லட்சியம் செய்ய வேண்டியதில்லை. காங்கரஸ் மந்திரிசபையைப் பற்றி இன்னும் சிறிது நாட்களுக்குள் “விடுதலை” யில் நாள் எண்ணிக்கை போட்டு கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்ட போதிலும் குற்றமில்லை என்கின்ற எண்ணத்துடன் இன்னும் கொஞ்சகாலத்துக்கு இந்த மந்திரி சபை இருந்தால்தான் அது வேறு யாரும் கொல்லாமல் தானாகவே தற்கொலை செய்துகொள்ளக்கூடிய அவசியம் வரும் என்று கருதுகிறேன்.
ஆச்சாரியார் சாதித்ததென்ன?
அது இந்த மந்திரிசபை பதவியேற்று 5 மாத காலத்தில் அவர்களது முட்டாள்தனத்தையும், சூழ்ச்சி உணர்ச்சியையும், தங்களுக்குள் ஒற்றுமையில்லாத நிலையையும் அரசியல் ஞானமற்ற தன்மையையும் காட்டிக்கொள்ளத்தான் முடிந்ததே தவிர நாட்டுக்கோ, தங்களுக்கோ கூட ஒன்றும் செய்து கொள்ள முடியவில்லை. உண்மையில் எனது தோழர் கனம் ஆச்சாரியார். நிலை ஆப்பைப் பிடுங்கிவிட்ட குரங்கு போல்தான் இருந்து வருகிறது
மற்ற மந்திரிகளைப்பற்றி பேசுவது மெனக்கேடே யாகும். ஏனெனில் அவர்களுக்கு சம்பளமும் படியும் கார் சவாரி பந்தாவும் தான் சொந்தமே ஒழிய மந்திரிவேலையில் ஏதும் சொந்தமில்லை. தலைவர் சொன்ன படி பிரதம மந்திரி சொன்னபடி இல்லாவிட்டால் காரியக் கமிட்டி அல்லது காந்தியார் சொல்படி நடக்க வேண்டிய ஒப்பந்தத்தில் சம்பளம் பெறுகிறவர்கள். அவர்களுக்கு சொந்த புத்தி இருந்தாலும் பிரயோகிக்க இடமில்லை அப்படி பிரயோகிப்பதாய் இருந்தாலும் நாகப்பட்டணம் மரைக்காயர் போல் அம்மா அக்கா என்று வைவதற்கு மாத்திரம் தான் சுதந்தரம் உண்டே ஒழிய யாரையும் புகழவும் முடியாது. சட்டசபை மெம்பர்களே பார்ப்பனர்களுக்குத்தான் ஏதாவது சொல்லவோ, செய்து கொள்ளவோ உரிமை உண்டு. மற்றவர்களுக்கு மீ' ரூ.75 சம்பளமும் பிரயாணப்படியும் பெறுவது தவிர வேறு ஒன்றுக்கும் உரிமை இல்லை. இவர்களில் யாருக்காவது சுயமரியாதை இருந்தால் மாதச் சம்பளம் வாங்குவது அவமானம் என்று கருதி வாங்காமல் விட்டுவிடலாமே தவிர மற்றப்படி
குடி அரசு - 1937 (2) 312.
பேச்சுமூச்சு காட்டமுடியாது. காட்டினால் 20 ஆயிரம் 30 ஆயிரம் ரூ செலவு செய்து பெற்ற மெம்பர் வேலையை ராஜிநாமா கொடுக்க வேண்டும். எனவே இப்படி ஒரு ஜனநாயகம் - சுயராஜ்யம் கொண்ட ஆட்சி இன்று இந்தியாவில் நம் தலைமேல் இருக்கிறது. இது காங்கரஸ்காரருக்கு அவமானம் என்று சொல்லுவதை விட நமக்கு நாம் இதில் பிரஜையாய் இருப்பது பேரவமானம்தான். ஆனால் அதற்கு முடிவு காலம் வருகிற சந்தர்ப்பமாய் இது இருப்பதால் தைரியமாய் பொறுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆகவே தோழர்களே நம்முள் உள்ள சில்லறை அபிப்பிராய பேதத்தை மறந்து விடுங்கள்.
இந்து என்றும் முஸ்லீம் என்றும் அடையாளத்தால் கண்டு பிடிக்க பிரியப்பட முடியாதபடி சமூக வாழ்வில் ஒன்று சேருங்கள். நம் வேஷப் பிரிவினையே பார்ப்பனர் இம்மாதிரி மக்களை நிரந்தரமாய் பிரித்துவைக்க இடமேற்பட்டது
மதம் வேஷத்தில் வேண்டாம்
மதமும் கடவுளும் அவனவன் மனத்தில் நடத்தையில் இருக்கட்டும், வேஷத்தில் வேண்டாம் என்பதே நமது கருத்து. ஆதலால் நமக்குள் இந்து என்றும் முஸ்லீம் என்றும் தீண்டப்படாதவர்கள் என்றும் மேல்ஜாதி என்றும் கீழ்ஜாதி என்றும் கருதுகிற உணர்ச்சி கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். கொடுப்பனை கொள்வனை உண்பன தின்பன ஆகியவைகள் அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்ததாய் இருக்கட்டும், அதற்கு மேல்கண்டவைகள் தடையாய் இருக்க வேண்டாம். மேல்நாடுகளில் முஸ்லீம் நாடு உள்பட எல்லா நாடும் இப்படித்தான் இருப்பதைப் பார்த்தேன். அதனால் அந்த நாடுகளில் உள் ஜாதிச்சண்டை இல்லை; முன்னேற்றமடையவும் வசதி இருக்கிறது.
குறிப்பு: 06.12.1937 ஆம் நாள் பாலக்காட்டை அடுத்த புதுநகரம் முஸ்லீம் லீக் ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 12.12.1937
33— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மிப்பன் மண்டபத்து மகான்கள்
சென்னை கார்ப்பரேஷன் மாளிகைக்கு ரிப்பன் மண்டபம் என்று பெயர்! நல்ல பிரம்மாண்டமான அழகிய வெள்ளைக் கட்டிடம்! அதிலே 'கவுன்சிலர்களாக' இருக்கும் மகான்களில் மூக்கால் வாசிப்பேர் காங்கரஸ்காரர்கள். அந்த மகான்களுக்குத் தலைவர் சத்தியமூர்த்தி அவருடைய கீர்த்தி கண்டோர் கைகொட்டி நகைக்கும்படி இருக்கிறது “தினமணி”க்கு ஸ்பெஷல் வேலை, மூர்த்தியின் கீர்த்தியை நாடறியச் செய்வதுதான். இந்த மகான்களில் 3 பேருக்கு 'ஊழல்' மெடல் கொடுத்தாகி விட்டது. திரிசங்கு சுவர்க்கத்திலே' பாபம் திண்டாடுகிறார்கள். ஒரு அம்மையார், ஓடோடிப் போய்விட்டார்! நாணமோ, பயமோ, கஷ்டமோ, கசப்போ யாரறிவார்! மற்றொரு மகான் தோழர் பக்தவத்சலமோ. முடுக்கிக்கொண்டு போய்விட்டார். மற்றொரு மகான் தோழர் சக்கரை செட்டியார், காங்கரசின் 'தாக்கீதை' சட்டை செய்யாது ஜம்மென்று வாழ்ந்து வருகிறார். கட்சித் தலைவரோ, பந்து மித்திரர்களுக்கு வேலைவாங்கிக் கொடுப்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறார். இந்த மகான்களின் நிர்வாகத்தையோ, “இந்து பத்திரிகையும் கேலி செய்கிறது. அவ்வளவு மோசம்
1. உத்தியோக நியமனத்தில் பார்ப்பனீயம் தாண்டவமாடுகிறது
சலூன்காரர்களுக்கு புதிய வரி போட்டாகி விட்டது.
தல
ஆதிதிராவிட சேரிகள் அழிக்கப்பட்டு ஏழைகள் வீடின்றி தவிக்கின்றனர்.
சர்க்காரிடமிருந்து வாங்கிய கடனை வகையாகச் செலவழிக்கவில்லை.
புதிய கடனுக்கு மனுபோட்டு இருக்கிறது. இதை 'தினமணி' ஆட்சேபிக்கிறது. இவ்வளவு மோசமான ஆட்சி நடத்தும் மகான்கள்,
ரிப்பன் மண்டபத்திலே இருக்கின்றனர். அவர்களை உள்ளே அனுப்பிய “பாபத்தை! எப்படிப் போக்குவது? சமீபத்தில் வரப்போகும் தேர்தலில் இத்தகைய “மகான்கள்! ரிப்பன் மண்டபத்தினுள்ளே நுழைய முடியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், கார்ப்பரேஷன் மானம் காப்பாற்றப்படும். தமிழ் நாடு பூராவும், இன்றைய “மகான்கள்” ஆட்சியைக்கண்டு, கேலிசெய்து சிரிக்கிறது சென்னை நகரவாசிகள் என்ன செய்யப்போகிறார்கள்?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.12.1937
குடி அரசு- 1937 (2) 314
மனுதர்ம ஆட்சி தாண்டவம்
கன் ஒழிப்பு சூழ்ச்சி கல்வி நாசத்துக்கே
காங்கரஸ் அரசியல் சுதந்தரத்துக்கு ஆக பாடுபடுகிறது என்று பேர் வைத்துக்கொண்டு பார்ப்பன ஆதிக்க மனு ஆட்சியை புதுப்பிக்க பாடுபடுகின்றது என்பதை பல பிரத்தியக்ஷ அனுபவ ஆதாரங்களுடன் எத்தனையோ தடவை வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். அப்படி
இருந்தும் பார்ப்பனரல்லாத மக்களில் சிலர் தெரிந்தோ தெரியாமலோ காங்கரசை அரசியல் சபை என்றும் அது அரசியல் விடுதலைக்கு பாடுபடுகிறது என்றும் பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பாமர மக்களில் பலரும் அதை நம்பி ஏமாந்து போகிறார்கள். காங்கரசின். சூழ்ச்சியைப்பற்றி இந்தியா முழுவதிலும் கிளர்ச்சி நடந்து வருகிற இந்தக்காலத்திலேயே காங்கரசின் பேரால் எவ்வளவு தைரியமாக மேலும் மேலும் சூழ்ச்சிகள் நடத்தப்படுகின்னன என்பதை பொது ஜனங்கள் அறிய வேண்டும் என்பதற்கு ஆகவே மேலும் சில புதிய சூழ்ச்சிக்கொடுமைகளை எடுத்துக் காட்டுகின்றோம்
காங்கரஸ் பார்ப்பன சூழ்ச்சியின் முக்கிய கருத்து நாம் மேலே குறிப்பிட்டது போல் வருணாச்சிரம மனு ஆட்சியை ஏற்படுத்த வேண்டும்
என்பதும் அதற்கு - முக்கியமாக செய்யப்பட வேண்டிய அஸ்திவாரமான காரியம் பார்ப்பனரல்லா மக்களுக்கு கல்வி இல்லாமலும் கையில் பணம் சேருவதற்கு மார்க்கமில்லாமல் நிரந்தர ஏழைகளாய் இருக்கும்படி செய்து விடுவது என்பதும் தான் மனுகூறி இருக்கும் யோசனைகளில் எல்லாம் அதாவது தர்ம சாஸ்திர விதிகளில் எல்லாம் முக்கியமான விதியாகும் அதாவது சூத்திரன் படிக்கக்கூடாது என்னும் விதியும் சூத்திரனுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது என்னும் விதியும் சூத்திரனிடம் பணம் இருக்கக் கூடாது என்னும் விதியும் மனுதர்மத்தில் உள்ளது என்பது யாவரும் அறிந்ததேயாகும்
அதற்கு ஏற்கனவே காந்தியார் தன்னால் கூடிய அளவு ராட்டினப் பிரசாரம் செய்து பார்த்து விட்டார். ராட்டினத்தை அந்நிய நாட்டுக்கு பணம் போவதைத் தடுக்கும் சாக்கிலும் வெள்ளையர் ஆட்சியை விரட்டும் சாக்கிலும் குடிசைத்தொழிலை ஆதரிக்கும் சாக்கிலும் தனக்கு வேண்டியதை தானே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற சாக்கிலும் விதவைகளுக்கு விமோசனம் என்னும் சாக்கிலும் புருஷனால் கொடுமைப் படுத்தப்பட்டு துரத்தி விடப்பட்ட பெண்ணுக்கு புருஷன் ஞாபகம் 35, ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வந்தால் அதை தீர்த்துக்கொள்ளும் சாக்கிலும் மனதுக்கு சாந்தியளிக்கும் சாக்கிலும் மற்றும் காங்கரசுக்கு கட்டுப்பட்டு தனக்கு சதா ஜே போடுவதற்கு சில நிரந்தரக் கூலிகளை கையில் வைத்துக்கொண்டிருக்கும் எண்ணத்திலும் காங்கரசுக்குள் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ளவன் இருக்கக் கூடாது என்கின்ற எண்ணத்திலும் மற்றும் எவ்வளவோ சூழ்ச்சிகளையும் சாக்குகளையும் சுயநலங்களையும் மனதில் வைத்து எத்தனையோ லக்ஷ ரூபாயையும் பாழாக்கி இதுவரை கதர் பிரசாரம் செய்து வந்தும் இன்று வரை கதர் கழுதை தேய்ந்து கட்டெறும்பாயிற்று என்னும் பழமொழிக்கு இலக்காகவே இருந்து வருகிறது. வேஷத்துக்கு
அல்லாமல் உண்மைக்கு அணிய வேண்டிய ஆடை அல்லாததாகவே இருந்து வருகிறது. ஓட்டு வேட்டைக்கும் காங்கரஸ் ஓட்டு பிரசாரத்துக்கும் தவிர வேறு
காரியத்துக்கு தேவையில்லாத சாதனமாகவே கதர் ஆகிவிட்டது. மற்றபடி கதரினால் இந்திய மக்களை பார்ப்பனரல்லாதாரை என்றும் தரித்திரர்களாக வைத்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தின் வாயிலும், கதரினால் யந்திரங்களை அடியோடு அழித்து மக்களை மிருகங்களாக வைத்து என்றென்றும் பார்ப்பனருக்கு அடிமையாக வைத்திருக்கலாம் என்கின்ற சூழ்ச்சியின் வாயிலும் நன்றாக ஒரு படி நொய்மண் கொட்டி கூறு குத்தியாகிவிட்டது.
கதரின் யோக்கியதை இப்படி இருக்க மனு ஆட்சியின் மற்றொரு ஐட்டமாகிய பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியின் வாயில் மண்ணைக் கொட்டும் சூழ்ச்சி வேலை துவக்கப்பட்டு விட்டது. அதை ஒருவாறு காங்கரஸ் தீவிரமாய் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால்
முடிவில் இதிலும் தோழர் காந்தியாருடையவும் அவருடைய துர்மந்திரி தோழர் கனம் ஆச்சாரியாருடையவும் சூழ்ச்சியின் வாயில் தான் மண்: விழப்போகிறதே ஒழிய அவர்களது எண்ணம் பலிக்கப்போவதில்லை என்பதில்
நமக்குசிறிதும் சந்தேகமில்லை.ஆனால் பலவித தொல்லைகளுக்கு நமது மக்கள் ஆளாக வேண்டிவரும் என்றாலும் முடிவில் வெற்றி பார்ப்பனரல்லாதாருடைய தாகவே இருக்கப் போகிறது என்பதோடு இவ்விஷயத்தில் கனம் ஆச்சாரியாரும், காந்தியாரும் வெற்றியடையப் போவதில்லை என்பது உறுதி
கல்வி விஷயத்தில் காந்தியாரும், காங்கரசும் செய்யும் சூழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் கவனிப்போம்
1. மதுவிலக்கு சாக்கு
2. ஹிந்தி நுழைப்பு
3. கல்வித் திட்டம்.
4. இப்போதுஅமுலில் இருந்துவரும்இலவசகட்டாயக் கல்வி முறை ஒழிப்பு,
இந்த 4 காரியங்களால் பார்ப்பனரல்லாத மக்களின் கல்வியை ஒழிக்க திட்டம் போட்டிருக்கிறார்கள். அவைகளை கீழே விளக்குகிறோம்.
மதுவிலக்கு சாக்கு என்பது என்னவெனில்,
குடி அரசு- 1937 (2) 316
“நாட்டில் பூரண மதுவிலக்கு அமுலில் கொண்டுவர முயற்சிப்பதால் அதனால் இப்போது வந்து கொண்டிருந்த வரும்படி குறைந்து விட்டதால் வரவு செலவை சரிக்கட்ட, கல்விச் செலவை குறைக்க வேண்டியதாய் விட்டது" என்று மந்திரிகள் இப்போது செல்லுமிடங்களிலெல்லாம் சொல்லி வருகிறார்கள். இதைப்பற்றி மந்திரிகள் வாக்கு மூலங்களை அப்படியே எடுத்து போட்டு “குடி அரசு” “விடுதலை” பத்திரிகைகளில் ஏற்கனவே விளக்கி இருக்கிறோம்
அடுத்த சூழ்ச்சியான ஹிந்தி கட்டாயமாக புகுத்தும் விஷயத்தைப் பற்றியும் தென்னாடு முழுவதும் தமிழ் மக்கள் காங்கிரசில் உள்ள 100-க்கு 99 பாகம் மக்கள் உள்பட ஹிந்தியை எதிர்த்தும் அது தமிழைக் கொலை செய்வதென்றும் மக்கள் கல்வி அறிவை பாழ்படுத்துவது என்றும் மக்களை படிக்க முடியாமல் செய்வதென்றும் அது வருணாச்சிரம மனு ஆட்சியை கட்டாயத்தில் புகுத்துவது என்றும் எவ்வளவோ பெரிய கிளர்ச்சி செய்யப்பட்டுவந்தும் இவைகள் அத்தனையையும் லட்சியம் செய்யாமல் திருட்டுத்தனமாக நுழைக்க முயற்சிப்பதையும் இந்த 2, 3 மாதகாலமாக மக்கள் தாமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
மூன்றாவது சூழ்ச்சியான காந்தியாரின் கல்வித்திட்டம் என்பதைப்
பற்றியும் “விடுதலை” “குடி அரசு" பத்திரிகைகளில் விளக்கப்பட்டிருப்பதோடு பார்ப்பனர்கள் பலரே இந்த சூழ்ச்சி தங்களையும் பாதித்து விடுமோ
என்று பயந்து கண்டித்து இருப்பது “இந்து “சுதேசமித்திரன்” பத்திரிகை மூலமாக காணலாம்
நான்காவது சூழ்ச்சியாக இப்போது கட்டாய இலவசக் கல்வி கூடாது என்பதும் இதற்கு காரணம் இப்போது பொருளாதார நிலை
சரியாய் இல்லை என்று சொல்லுவதுமாகும்
கட்டாய இலவசக் கல்வியானது ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்தில் பனகாலரசர் ஆட்சியில் சர். பாத்ரோ அவர்களால் திட்டம் ஏற்பாடு செய்து கொண்டு வரப்பட்டதாகும். இதற்கென்று புதியவரிகளும் விதித்து வசூலிக்கப்பட்டு நடந்துவரும் காரியமாகும். இந்த கட்டாய ஆரம்பக்கல்வி திட்டம் ஜஸ்டிஸ் மந்திரிகள் ஏற்பாடு செய்யும்போதே பார்ப்பனர்கள் ஒரு மூச்சு ஒன்று சேர்ந்து தங்களால் கூடுமான அளவெல்லாம் தொல்லை கொடுத்துப் பார்த்துவிட்டார்கள். அப்போது ஏற்பட்ட பார்ப்பனத் தடைகளையும் அவர்களது தொல்லைகளையும் லக்ஷ்யம் செய்யாமலேயே கட்டாய இலவசக் கல்வி முறை பார்ப்பனரல்லாத மந்திரிகளால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டது. அதன் பயனாக இந்தப் பதினைந்து வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதாரின் கல்வி நிலையானது அன்று முதல் இன்று வரை விருத்தியாகிக் கொண்டே வந்திருக்கிறது. ஏறக்குறைய பார்ப்பனரல்லாதாருள் அநேக வகுப்புகளில் 100க்கு 50 வீதம் பிள்ளைகள் இப்போது அதிகமாகப் படித்திருக்கிறார்கள்.
3 ய... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
மேல் வகுப்புகளில் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் மொத்தத்தில் முன் இருந்ததைவிட 100க்கு 100 வீதமும் சில வகுப்புகளில் 200 வீதமும் உயர்தர கல்வி பெற்று இருக்கிறார்கள். அதனால் உத்தியோகம், வக்கீல்,
டாக்டர் மற்ற தனிப்பட்ட விஷய நிபுணத்துவம் ஆகிய காரியங்களில் முன். எடுத்துக்காட்டியது போல் 100க்கு 100, 200 சில விஷயங்களில் 100-க்கு 300 வீதம் மக்கள் பொதுக்கல்வி விர்த்தியடைந்து பார்ப்பனரல்லாதார். பல உத்தியோகங்களிலும் பல தொழில்களிலும் அமர்ந்திருக்கிறார்கள்.
பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் இவ்வித விருத்திகளும் இத்தனை அதிக எண்ணிக்கை விகிதங்களும் நேரே பார்ப்பன சமூகத்தையே தாக்கி அவர்கள் நிலையை சற்று தாழச்செய்து விட்டது. இதற்குக் காரணம் சகல துறையிலும் பார்ப்பனரல்லாதார் படிக்கவும் போட்டி போடவும்
படிக்க முடியாத ஏழை ஜனங்களுக்கும், படிப்பில் கவலையில்லாத பாமர ஜனங்களுக்கும் கட்டாய இலவசக்கல்வி முறையால் படித்துத் தீர வேண்டிய நிலை ஏற்படுத்தப்பட்டதேயாகும் என்பதை பார்ப்பனரல்லாதார் சமூகத்தை காட்டிக் கொடுத்து அதற்கு துரோகம் செய்துவிட்டு இன்று பார்ப்பனர்களுக்குப் பின்னால் கொடி தூக்கி கோவிந்தா போடும் காங்கரஸ் பார்ப்பனரல்லாதாரே ஒப்புக்கொள்ளுவார்கள்.
ஆதலால் இன்று பார்ப்பனர் முன் போல் பாடுபடாமல் அரசியல், பொருளாதாரம், மத இயல், சமூக இயல் ஆகியவைகளில் ஆதிக்கம் பெற்று மக்களை சுரண்டி கொள்ளையடித்து போக போக்கியமனுபவிக்க வேண்டுமானால் மற்ற மக்களை தற்குறிகளாக வைத்திருந்தாலொழிய முடியாது என்கின்ற மனு வாக்கியத்தை உணர்ந்தே இன்று ஏற்கனவே இருந்து வந்த கட்டாயக் கல்வி முறையை ஒழித்து விட்டு ஒவ்வொரு பார்ப்பனரல்லாதானும் என்றென்றும் கைத்தொழில் செய்தே ஜீவனம் செய்யும் மார்க்கத்தை கல்வித் திட்டமாகச் செய்து அதையும் கட்டாயமாய் செய்தே தீரவேண்டுமென்று செய்யப்போகிறார்கள். இதற்கு பெயர் கட்டாய அடிமைத் தொழில் கற்பிப்பது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் ஒரு விஷயம் பொது ஜனங்கள் கவனத்துக்கு கொண்டு வரவேண்டியதாகும் அதாவது தருமபுரி ஜில்லா போர்டார் தங்கள் எல்லைக்குள் இருக்கும் கிராமாந்திர ஜனங்களுக்கு கட்டாயக் கல்வி புகட்ட வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு அதற்காக தங்கள் கையிருப்பு பணத்தில் 13500 ஒதுக்கி வைத்து வேலைசெய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதை நமது கனம் தோழர் ராஜகோபாலாச்சாரியின் அரசாங்கம் கூடாது என்று தடுத்து விட்டது. தருமபுரி ஜில்லா போர்டார் சர்க்காருக்கு கல்விச் செலவுக்கு 13500 ரூ. ஒதுக்கிவைத்து வரவு செலவு பட்ஜட்டும் சரிகட்டிக் காட்டி இருக்கிறார்கள். அப்படி இருக்க தோழர் ஆச்சாரியார் சர்க்கார்,
குடி அரசு- 1937 (2) 315
“தற்கால செல்வ நிலையில் கட்டாய இலவசக்கல்வி தேவை இல்லை”” என்று உத்திரவு பிறப்பிக்க காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி ஜனங்களை வேண்டுகிறோம். கல்விக்கு இல்லாத செல்வம் வேறு எதற்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கேட்கிறோம்
சேலம் ஜில்லா அதாவது ஒரு ஜில்லாவில் ஆரம்பித்த மதுவிலக்கு நாடகத்தாலேயே இந்தக் கதி ஏற்படுமானால் மற்ற ஜில்லாவிலும் இந்நாடகம் ஆரம்பித்து விட்டால் கற்ற கல்வியையும் மறந்துவிடவேண்டும் என்று உத்திரவு போடுவார்களா? மாட்டார்களா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். உலகில் கண்ணைக்குத்திக் கொண்டு எந்த அறிவிலியாவது சித்திரம் வாங்குவானா? என்று கேட்கிறோம்
ஆனால் நமது அய்யங்கார் ஜாதி ஆச்சாரியார் - கனம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் கல்வியை ஒழித்து விட்டு கள்ளை “நிறுத்தப் பார்க்கிறார் கள்ளை நிறுத்துகிற சிப்பாய்கள் கல்விக்கு - மக்கள் அறிவுக்கு கேடில்லாதபடி திட்டமும் வரவு செலவு சரி கட்டுதலும் ஏற்பாடு செய்துகொண்டு இந்த நாடகமாடுவார்களானால் தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். அப்படிக்கில்லாமல் கல்வியை ஒழிப்பதற்கு சாதனமாக - சூழ்ச்சி ஆயுதமாக கள் “நிறுத்த” நாடகம் ஆடுவதை யார் தான் சகிக்கக்கூடும்? எனவே இன்றைய காங்கரஸ் ஆதிக்கம் பார்ப்பன ஆதிக்கத்துக்கு என்றும் முக்கியமாக வர்ணாச்சிரம புனருத்தாரணத்துக்கு என்றும் வருணாச்சிரம தத்துவப்படி பார்ப்பனரல்லாத மக்கள் கல்வியை பாழாக்க மக்களை குருடர்களாகவும் மிருகங்களாகவும் செய்யப்படும் சூழ்ச்சி ஆட்சி என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 19.12.1937
3 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சுயமமியாதை இயக்கத் தத்துவம்
கடவுள் மத ஆபாசங்கன்
தோழர்களே!
இந்த நாமக்கல் கொஞ்சகாலமாகவே காங்கரஸ் கோட்டை என்று சொல்லப்படுவதாகும். எனினும் நமது சுயமரியாதை இயக்கத் தோழர்கள்.
சிலர் இங்கு எப்படியோ ஒரு மகாநாடு கூட்டிவிட்டார்கள். நாங்கள் வரும் போது உண்மையிலேயே சற்று பயத்துடனேயே வந்தோம். சும. மகாநாடு அவ்வளவு திருப்திகரமாய் நடக்காது என்றும், காங்கரசின் காலித்தனத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்றும் உள்ளூர் பொது ஜனங்கள் ஆதரவு சரியாய் இருக்காதென்றும் கருதினோம். ஆனால் இங்கு வந்த பிறகு எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுக்கும்படியான நிலையில் இம்மகாநாடு நடந்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அளித்த ஆடம்பரமான வரவேற்பும் காட்டிய உற்சாகமும், அன்பும் உண்மையிலேயே எங்களை நாங்களே பாராட்டிக் கொள்ளும் மாதிரியாக ஏற்படுத்தி விட்டது
கண்டறியா அருங்குணம்
தவிரவும் எனது பொது வாழ்வில் காங்கரசுகாரரிடம் இவ்வளவு நாளும் கண்டறியாத ஒரு அருங்குணத்தைப் பார்த்ததில் நிஜமாகவே நான் மெய்மறக்கும்படி மயக்கம் ஏற்பட்டு விட்டது. என்னவெனில் எங்கள் கூட்டங்களுக்கு காங்கரஸ்காரர்கள் போகக் கூடாது என்றும், போனாலும் எவ்வித கேள்வி கேட்பதோ, கலவரம் ஏற்படும்படி செய்வதோ ஆகிய காரியம் கண்டிப்பாய் நடத்தக் கூடாது என்றும் புத்தி புகட்டப்பட்ட ஒரு துண்டு நோட்டீஸ் காங்கரஸ்காரர்களால் வினியோகிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். இந்தப்புத்தி காங்கரசுக்காரர்களுக்கு எப்படி வந்தது, ஏன் வந்தது என்கின்ற காரியம் எனக்கு ஒரு யுக்திகணக்கு போட்டி பரிசு மாதிரியாகவே இருக்கிறது. சென்ற வருஷம் வந்தபோது கழுதை கழுத்தில் அட்டை கட்டி அதில் எங்களைப் பற்றி கேவலமாய் எழுதி விரட்டி விட்டார்கள். போன மாதத்தில் வந்த போதும் கூட்டத்தில் காலித்தனம் செய்தார்கள். அவற்றையெல்லாம் நாங்கள் ஒரு வழியில் சமாளித்தோம் என்றாலும் இப்போது இந்த புத்தி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அரசியலிலோ சமுதாயத்திலோ எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் நான் யாருக்கும்
குடி அரசு - 1937 (2) 320.
விரோதியில்லை, யாரிடமும் துவேஷமில்லை. மனிதர்கள் எல்லோரும் ஒரே அபிப்பிராயம் கொள்ள முடியாது. சரியாகவோ தப்பாகவோ அபிப்பிராய பேதம் ஏற்படுவது மனிதனுக்கு இயற்கையேயாகும் ஒருவருக்கொருவர் அபிப்பிராயத்தை மதிக்காவிட்டாலும் ஏற்காவிட்டாலும் வெளியிலெடுத்துச் சொல்ல இடம் கொடுக்க வேண்டியதானது
மானத்திலும் மனிதத் தன்மையிலும் கவலையுடையவனின் கடமையாகும் உதாரணமாக ஈரோட்டில் எங்கள் எதிரிகள் யாராவது எப்படிக் கத்தினாலும் நாங்கள் கீச்சு மூச்சு சத்தம் ஏற்படக்கூட இடம் கொடுப்பதில்லை.
எனினும் ஒரு விஷமம்
ஆனால் காங்கரஸ்காரர்களுக்கு அந்தப் புத்தி இருந்ததை நான் இதுவரை ஒரு ஊரில் கூடப் பார்த்ததில்லை. இன்று இந்த ஊரில் பார்க்கிறேன் என்றாலும் இதிலும் ஒரு விஷமத்தை காண்கின்றேன். என்னவெனில் இன்று இங்கு சு.ம. மகாநாடு நடப்பதும் இந்த பொதுக்கூட்டம் இன்று ஏற்பாடு செய்திருப்பதும் 15 நாட்களுக்கு முன்பிருந்தே தெரிந்திருந்தும் இந்த ஊர் காங்கரஸ்காரர்கள் இன்றைய தினத்திலேயே வேறு ஒரு மீட்டிங்கு ஏற்பாடு செய்து அதில் “அநேக காங்கரஸ் தலைவர்கள் வருகிறார்கள்” என்று நோட்டீசு ஏராளமாய் வினியோகிக்கப் பட்டிருக்கிறது. நாளைக்கு அந்த கூட்டம் போட்டால் என்ன முழுகிப் போகும். உண்மையிலேயே நோட்டீசில் வெளியிட்ட அத்தனை “தலைவர்களும் வரப்போகிறார்களா? வேண்டுமென்றே விஷமத்துக்கு அதாவது இந்த கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் இருக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணம் தவிர இதுவேறு எதுவாய் இருக்க முடியும்? அப்படி இருந்தும் நீங்கள் இவ்வளவு பேர் - 3000 பேர் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. மேலும் காங்கரஸ்காரர்கள் இங்கு வினியோகித்த துண்டு நோட்டீசில் “காங்கரசு ஒன்றுதான் மக்களுக்கு சுதந்தரமும் விடுதலையும் அளிக்கும்” என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதை இவர்கள் நாங்கள் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு சொன்னால் என்ன? இன்றைக்கே சொல்லுவானேன்? இருந்த போதிலும் நாளைக்கும் அவர்கள் கூட்டம் ஒன்று உண்டு என்றும் தெரிகிறது. சுவர் விளம்பரமும் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆதலால் இன்று நீங்கள் நான் சொல்வதையும் கேட்டு விட்டு நாளைக்கு அவர்கள் சொல்லுவதையும் கவலையுடனும் பொறுமையுடனும் கேளுங்கள். பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்.
பொதுக்கூட்டம் ஒரு சர்வகலாசாலை:
அதிலும் எவ்வித குழப்பமும் மீட்டிங்கு ஒழுக்கத்துக்கு விரோதமான காரியமும் செய்யாதீர்கள். இன்று உலகம் உள்ள நிலைமையில் நாட்டுக்கு இப்படிப்பட்ட கூட்டங்கள் மாறி மாறி நடக்க வேண்டியதும் நீங்கள் 21— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கேட்க வேண்டியதும் மிக்க அவசியமாகும். உங்களுக்கு இக்கூட்டங்கள்
ஒரு சர்வகலாசாலை போன்றதாகும். உலக நடப்பையும் மக்கள்: யோக்கியதையையும் கண்டறிய ஒரு பரீக்ஷ கருவியாகும். பள்ளிக் கூ இவைகளைப் படித்து விட முடியாது. பெரிய கலாசாலை பட்டம் பெற்று விடுவதினாலும் இந்தப் படிப்பு வந்து விடாது. உலக கல்வி வேறு, பகுத்தறிவு வேறு, பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான், ஆனால் அவனும்மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான். பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி பருப்பு காய்கறி செருப்பு அனுப்புவான். ஒருவன் பெரிய உடற்கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான், அவனும் தன் மனைவியையும் மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடிவைத்து விட்டு உள்ளே தாழ் போட்டுத் தூங்குவான். ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும் உலக
கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமூமே போதுமானதாகிவிடாது
நீங்கள் நான் சொல்லுவதைக் கேளுங்கள். ஆனால் உடனே நம்பி விடாதீர்கள். நாளை நமது எதிர் அபிப்பிராயக்காரர்கள் வருவார்கள். அவர்கள் சொல்வதையும் கேளுங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள். இதுதான் எங்கள் ஆரம்பப் பிரார்த்தனை - எங்கள் முதல் வேண்டுகோள்.
சுயமரியாதை இயக்கம்
இன்று சுயமரியாதை இயக்கம் பற்றியும் காங்கரஸ் பற்றியும் பேசுகிறேன். முதலில் நாங்கள் யார்? வயிற்றுப் பிழைப்பு பிரசாரகரல்ல. சுய நலத்துக்கு பதவி மோகத்தால் பிரசாரம் பண்ணுகிறவர்கள் அல்ல: என்னைப் பொறுத்தவரை எனக்கு பிரசாரத்தில் வயிறுவளர்க்க வேண்டிய அவசியமில்லை. பட்டம் பதவி எனக்கு மிகவும் தூரமானதல்ல. நான் ஒரு வியாபாரியாய் இருந்தவன். கெளரவ பதவிகளில் முனிசிபல் சேர்மெனாய் ஜி.போ, தா.போ. மெம்பராய் மற்றும் பல பதவியிலிருந்து ஒரே கடுதாசியில்
5, 6 பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட்டு காங்கரசில் சேர்ந்தவன். நானும் கனம் ராஜகோபாலாச்சாரியாரும் 18 வருஷங்களுக்கு மூன். ஒருவருக்கொருவர் பேசியே இருவரும் சேர்மென் பதவிகளை ஏக காலத்தில் ராஜிநாமாச் செய்தோம். அப்பொழுது எனக்கு 27 கெளரவ பதவிகள் இருந்தன. அந்தக்காலத்தில் சேர்மென் வேலைக்கு இருந்த மதிப்பும் கெளரவமும் இந்தக் காலத்தில் மந்திரி வேலைக்குக் கூட இல்லை. இப்போது எவ்வளவு சாதாரண மனிதனும் மந்திரியாகலாம். மந்திரிவேலைக்கு நாணயமோ, செல்வாக்கோ எதுவும் வேண்டியதில்லை என்பதை நீங்கள் பிரத்தியட்சத்திலேயே பார்க்கிறீர்கள். ஆதலால் நான் பதவி வேண்டுமானால் அதற்காக இவ்வளவு பாடுபட வேண்டியதில்லை. நிற்க, நானும் காங்கரசில் கொஞ்ச காலம் இருந்து தேச பக்த - தேசீயவீர பரிகைஷையில் முதல் வகுப்பில் தேறியவன்தான். நான் காங்கரசை விட்டு
குடி அரசு - 1937 (2) 322
வரும்போது காங்கரசில் மாகாண காரியதரிசி, தலைவர்ஆகிய பெருமையுள்ள பதவியில் இருந்து வந்தவன். பலபேர் என்னை வருந்தி வருந்தி கூப்பிடக் கூப்பிட திமிறிக்கொண்டு காங்கரசை விட்டு வெளி வந்தவன். இன்றைய தோழர் கனம் ராமநாதனும் மற்றும் பலரும் என் பின் என்னைத் தொடர்ந்து வெளியில் வந்து கொண்டிருக்கிற நிலையில் வெளியானவர்.
திருப்பூர் காதிவஸ்திராலயத்தையும், புதுப்பாளையம் காந்தி ஆஸ்ரமத்தையும், இதே நாமக்கல் கதர்க்கடையையும் இந்தக் கையாலேயே திறந்து வைத்தவன் நான் தான். நான் காங்கரசை விட்டு வெளிவரும்போது “உங்கள் காங்கரஸ் புரட்டுகளை உணர்ந்தே நான் வெளியில் போகிறேன். வெளியில் போய் உங்கள் வண்டவாளங்களை வெளியாக்குகிறேன்'' என்று சொல்லிவிட்டே வெளியில் வந்தவன். நான் இந்தப்படி சொல்லி வெளியில் வந்து விட்டபிறகும் என்னை மாகாணக் காங்கரஸ் கமிட்டி நிர்வாக சபையில் தெரிந்தெடுத்தார்கள். கதர் சங்கங்களுக்கும் பயன்படுத்திக் கொண்டார்கள். சட்ட சபைக்கு காங்கரஸ் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் நிற்கும்படி கனம் ஆச்சாரியாரே வந்து பலதடவை கூப்பிட்டு இருக்கிறார். கனம் ராமநாதன் அவர்கள்தான் என்னை தடுத்து மறுபடியும் காங்கரசுக்கு போகக்கூடாது என்று சொன்னவர். இவை எல்லாம் மாஜி பதிவிரதை கதையல்ல அல்லது மாஜி விவசாரிகளாய் குச்சுக்காரிகளாய் இருந்து கிழடு பாய்ந்து இப்போது கிராக்கி வராது என்று கருதி பதிவிரதை ஆன கதையும் அல்ல நான் யாரை பதிவிரதைகள் என்று நம்பினேனோ அவர்கள் தாம்பிர நாணய குர்சுக்காரிகள் என்று கண்டு விலகி வந்து பிறகு இங்கு வந்து நின்று பேசும் கதையாகும். இவற்றை தோழர்கள் ராஜ கோபாலாச்சாரியார், கல்யாணசுந்தர முதலியார், எஸ். சீநிவாசய்யங்கார் ஆகியவர்களைக் கேட்டுப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவற்றை ஏன் சொல்லுகிறேன் என்றால் காங்கரஸ் எச்சிலைகளுக்கு நியாயமாகப் பேசி நான் சொல்லும் விஷயங்களை மறுக்க யோக்கியதை இல்லாமல் அயோக்கியதனமாய் தன்னைப் பெற்ற தாயாருக்கு பண வரும் படிக்கு மாப்பிள்ளை தேட முச்சந்தியில் நிற்கும் மாஜி குத்சிக்காரிகள்பிள்ளைகள் போல் கன்னா பின்னா என்று நம்மை வசைபாடுவதன். மூலம் உங்களை ஏய்க்கப் பார்ப்பார்கள். நான் காங்கரசால் தள்ளப்பட்டேன். என்றும் பணம் எடுத்துக் கொண்டேன் என்றும் அதனால் காங்கரசை குறை கூறுகிறேன் என்றும் மாஜி பதிவிரதை என்றும் இப்படி பேசுவார்கள்.
அந்தப் படியே இதே மேடையில் சிலர் பேசினார்களாம். அதற்கு ஆகவே இதை சொல்லுகிறேன். இவையெல்லாம் ஒருபுறமிருக்கட்டும் இனி சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? காங்கரசு என்றால் என்ன? என்பதை பற்றி தலைவர் கட்டளைப்படி சிறிது பேசுகிறேன்.
சுயமரியாதை இயக்கம்
நான் ஆரம்பத்தில் கூறியபடி முதலில் சுயமரியாதை இயக்கம் என்றால். என்ன? அது ஏன்? என்பதைப்பற்றி பேசிவிட்டு பிறகு காங்கரஸ் என்பதைப் பற்றிப் பேசுகிறேன். 33— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
சுயமரியாதை இயக்கம் இந்நாட்டு மக்களுக்கு முதலில் மான உணர்ச்சி ஏற்படவும் எல்லா மக்களையும் சமூகம் பொருளாதாரம் ஆகியவற்றில் சமப்படுத்தி ஒன்று சேர்க்கவும் ஏற்பட்டதாகும். மற்றும் பல கொள்கைகளை அது கொண்டிருந்தாலும் மற்றபடி அது நம் எதிரிகள் சொல்லுவது போல் மதங்களையும் கடவுள்களையும் எதிர்ப்பதற்கு என்றே ஏற்பட்டதல்ல.
நமது நாட்டு மக்களுக்கு மான உணர்ச்சி இல்லாமல் போனதற்கும் ஒற்றுமையும் சமத்துவமும் இல்லாமல் போனதற்கும் ஏற்பட்டுள்ள. தடைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுவதிலும் அவைகளை ஒழிக்க முயற்சிப்பதிலும் உண்மையிலேயே சு.ம. இயக்கம்
சிறிதும் ஒளிமறைவில்லாமல் பாடுபடுகிறது
இந்தக் காரியங்கள் செய்வதில் கடவுள்களோ, மதங்களோ வேறு எவைகளானாலும் சரி, அத்தொண்டிற்குத் தடையாயிருந்தால் அவற்றையும் ஒழிப்பதில் ௬ு.ம. இயக்கம் சிறிதும் பின் வாங்காது. இதைப்பற்றிப் பேசும்போது முதலில் மதம் என்று சொல்லப்படுவது எது? கடவுள்கள். என்று சொல்லப்படுபவை எவை என்று தெரிந்து கொள்ள வேண்டும்
மதம் என்பது என்ன?
மதம் என்பது மனிதனின் கூட்டு வாழ்க்கைக்கும், அதற்கேற்ற ஒழுக்கத்துக்கும் ஏற்றவிதிகளைக் கொண்டதேயாகும்” என்று சொல்லப் படுமானால் அம்மாதிரி மதங்களைப் பற்றி ௯.ம. இயக்கம் அதிக கவலைப்படுவது கிடையாது. அதற்கு சுயமரியாதை இயக்கம் அவசியமானால் உதவியும் செய்யும். மற்றும் “மனிதனின் ஆத்மா என்பது கடவுள் என்பதை அடைவதற்கு ஆக மதம் ஏற்பட்டது” என்றால் அதைப் பற்றியும் ௯.ம. இயக்கம் கவலைப்படுவதில்லை. அப்படிப்பட்ட அபிப்பிராயக்காரனும் அவனுடைய மதமும் இப்போது எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடும். ஏனெனில் அது தனிப்பட்ட மனிதனைப் பொறுத்த காரியம். அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால் மனித சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும் தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யவும் மக்களைப் பிரித்து வைத்து உயர்வு தாழ்வு கற்பித்து மனித சமூக ஒற்றுமையைக் கெடுத்து பொது முன்னேற்றத்தையும் சுதந்தரத்தையும் தடுக்கும்படியான மதம் எதுவானாலும் அதை ஒழிக்க சுயமரியாதை இயக்கம் பாடுபட்டுத்தான் வந்திருக்கிறது. இன்று அனுபவத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான பல மதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுள் அந்நிய மதம் அந்நியர்கள் மதம் என்பதைப்பற்றி நாம் இப்பொழுது பேச வேண்டாம். “நம்முடைய மதம்” என்று இந்துக்கள் என்பவர்களால் சொல்லப்படுகிற இந்து மதம் என்பதையே எடுத்துக் கொள்வோம்
குடி அரசு - 1937 (2) 324
இந்து மதம் இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினர்களாக இருப்பதற்கு இந்த இந்து மதமல்லாமல் வேறு எது காரணம்? பொதுவாக இந்துக்கள் இத்தனை ஜாதியாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக பார்ப்பான் பறையன் என்பதாக பிரிவுபடுத்தப்பட்டிருப்பதற்கும் இந்து மதமல்லாமல் வேறு என்ன காரணம்? இந்த 20-வது நூற்றாண்டில் - நேற்று சென்னையில் மகா மேதாவிகளான பி.ஏ.பி.எல் . சாஸ்திரிகள், மகா பண்டித சாஸ்திரிகள் ஒன்று கூடிக்கொண்டு “கீழ் ஜாதியானை மேல் ஜாதியான் தொடுவது என்பது அதாவது தீண்டாமை ஒழிவது என்பது செத்தால் தான் போகுமே ஒழிய இந்த ஜன்மத்தில் ஜாதி பேதம் போக்கடிக்கப்பட முடியாது என்று பேசியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரம் இந்து மத சாஸ்திரமும், வேதமும் தான் என்று பேசி இருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில் இம்மாதிரி மதம், சாஸ்திரம், வேதம் என்பவைகள் ஒழிக்கப்படாமல் தீண்டாமையும் ஜாதி பேதமும் போக்கடிக்கப்பட முடியுமா? இதுவரையும் இந்து மதம் விட்டு வேறு மதம் முக்கியமாக முஸ்லீம் ஆகாத எந்த பார்ப்பனரல்லாதாருக்காவது தங்களது சமூகத்தில் தீண்டாமை போயிருக்கிறதா என்று யோசித்து பாருங்கள். மற்றும் பார்ப்பனருக்குள்ள சவுகரியமும் சுதந்தரமும் சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மற்ற வகுப்பாருக்கு இருந்து வருகிறதா என்றும் யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட மதம் ஒழிக்கப்பட வேண்டியது தான் என்பதற்கு இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்? மதம் என்ற உடன் ஒருவித வெறி ஏற்பட்டு விடுகிறதாய் இருக்கிறதே ஒழிய மதம் மக்களுக்கு செய்துவரும் நன்மை என்ன? அதனால் மக்கள். அடையும் பயன் என்ன? என்பதை மதவெறியர்கள் சிந்திப்பதேயில்லை. கள்ளினால் உண்டாகும் வெறியைவிட இம்மாதிரி மதங்களால் ஏற்படும் வெறி அதிகமான கேட்டைத் தருகிறது. கள்ளு குடித்தவனை கெடுக்கிறது, மதம் மனதில் நினைத்தவனையே கெடுக்கிறது
சோம்பேறி வாழ்வுக்கு மதந்தானே காரணம்?
சமுதாய வாழ்வில் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது மாத்திரமல்லாமல் மதம் பொருளாதாரத்தில் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. உண்மையில் நீங்கள் யோசித்துப்பாருங்கள் உடல் வலிக்கப் பாடுபட ஒரு ஜாதியும் நோகாமல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட ஒரு ஜாதியும் மதம் சிருஷ்டிக்க வில்லையா? உலக செல்வமும் போக போக்கியமும் சரீரப் பாடுபடும் மக்களுக்கு இல்லாமல் போகவும் சோம்பேறி வாழ்க்கை யாருக்கும் சரீரப்பாடுபடாதவர்களுக்கும் போய்ச் சேரவும் காரணம் மதக் கொள்கை அல்லாமல் வேறு என்ன? பாட்டாளிகள் தரித்திரர்களாகவும் வயிற்றுச் சோற்று அடிமையாகவும் கீழ் ஜாதியாராகவும்
325 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
கீழ் மக்களாகவும் இருக்கவும் பாடுபடுவதும் சரீர உழைப்பு உழைப்பதும் தோஷம் என்று ஏற்படுத்திக் கொண்டவர்கள் கவலையற்ற வாழ்வு வாழவும் செல்வம் பெருக்கிக்கொள்ளவும் மற்றவர்களை அடக்கி ஆளவும் மதம் அல்லாமல் வேறு காரணம் என்ன?
பகுத்தறிவற்ற பக்ஷி மிருகம் பூச்சி புழுக்கள் தங்களுக்குள் ஜாதி பேதம், மேல் கீழ் நிலை, அடிமைப்படுத்தும் உணர்ச்சி ஆகியவை இல்லாமல் இருக்கும்போது பகுத்தறிவுள்ள மனிதனுக்குள் ஜாதி பேதம், உயர்வு தாழ்வு எஜமான் அடிமை உணர்ச்சி ஏற்படக் காரணம் என்ன?
மிருகங்களுக்கு ஜாதி வித்தியாச முண்டா?
கழுதையில், நாயில், குரங்கில், எருமையில் பறக் கழுதை, பற நாய்,
பறக் குரங்கு, பற எருமை என்றும் பார்ப்பாரக் கழுதை, பார்ப்பார நாய், பார்ப்பாரக் குரங்கு, பார்ப்பார எருமை என்றும் இருக்கிறதா? மனிதனில் மாத்திரம் இப்படி இருப்பதற்குக் காரணம் மதம் அல்லாமல் வேறு என்ன? இந்த மதம் ஏற்பட்டு எத்தனை காலம் ஆயிற்று? இதுவரை மனித சமூகத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன? கடவுள் அவதாரமான ராமனது ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்த கீழ் ஜாதியும் சத்தியகீர்த்தி அரிச்சந்திரன் ராஜ்யம் என்னும் காலத்தில் இருந்து வந்த சுடுகாட்டுப் பறையனும் பெண்ஜாதி விற்பனையும் பதினாயிரக் கணக்கான வருஷங்கள் ஆகியும் இன்னமும் ஒழியவில்லை என்றால் மதத்தினால் மக்கள் முன்னேறுகிறார்கள் என்று எப்படிச் சொல்ல மூடியும்?
மதம் கற்பிக்கும் முட்டான் தனம்
மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள். செத்துப் பொசுக்கப்பட்டு அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்கு பசி தீரவும் சுமடையவும் அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்துக்கு அனுப்பிக் கொடுப்பதென்றால்.
மனிதனுக்கு சிறிதாவது பகுத்தறிவு இருக்கிறது. என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? பெற்றோர்களை - இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காக பார்ப்பானுக்கு ஏன் அழுக வேண்டும்? அவன் காலில் ஏன் விழவேண்டும்? அவன் கால் கழுவின தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலக்கி ஏன் குடிக்கவேண்டும்? இது மதக்கட்டளை, மத தத்துவம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
கல்யாணம் கருமாதி கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழுகவே கற்பிக்கப்பட்டிருக்கின்னவே ஒழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?
குடி அரசு - 1937 (2) 326
வீழ்ச்சிக்குக் காரணம் என்னூ
மற்ற மதக்காரரும் உலகில் உள்ள மற்ற நாட்டு மக்களும் இப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்? நமக்குப் புத்தியும் இல்லை வெட்கமும் இல்லை என்றால் கண்ணும் இல்லை காதும் இல்லை என்று தானே அர்த்தம்? இதற்குப் பேர் மாம்சபிண்டம் என்று தானே சொல்ல வேண்டும்? எங்கள்
மீது கோபித்து என்ன பிரயோஜனம்? எங்களை மதவிரோதிகள் என்று வைவதில்என்னபிரயோஜனம்? மனிதனுக்குஇன்று இருக்கும் கேவல நிலைக்கு காரணம் மதமா? அரசாங்கமா? என்று சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே இதை சொல்லுகிறேன்.
மதத்தால் மக்களைச் சுரண்டிக்கொள்ளை அடித்து நோகாமல் வயிறு வளர்த்து போக போக்கிய மனுபவிக்கும் சோம்பேறி அயோக்கியக் கூட்டம் நம்மை மதத்தை பற்றி சிந்தித்து திருத்துப்பாடு செய்து கொள்ளுவதற்குக் கூட இடம் கொடாமல் நம் ஈன நிலைமைக்கு அரசாங்கத்தை - வெள்ளையரைக் கைகாட்டி விட்டு தப்பித்துக்கொள்ளுகிறது. இது சாமர்த்தியமுள்ள திருடன் திருடிவிட்டு அதோ திருடன் ஓடுகிறான் என்று வேறு ஒருவனைக் கைகாட்டி தப்பித்துக்கொள்ளுவது போலவே இருக்கிறது. நான் சொல்லுவது உங்களில் சிலருக்கு புதிதாய் இருக்கலாம். நீங்கள் இதற்குமுன் இவ்விஷயங்களைப் பற்றி சரியாய் சிந்தித்து இருக்கமாட்டீர்கள் என்றே இவ்வளவு பேசினேன். ஆகவே நாங்கள் ஏன் மதத்தைப் பற்றி பேசுகிறோம்? எந்த மதத்தைப்பற்றி பேசுகிறோம் என்பதை சிந்தித்துப் பார்த்து உங்கள் இஷ்டப்படி நடவுங்கள்
இனி நமது கடவுள்கள் என்பதைப்பற்றியும் சிறிது பேசிவிட்டு அரசியலைப்பற்றிப் பேசுகிறேன்.
நமது கடவுள்கள்
இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது
கடவுன் தண்மை
கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் 27— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந்திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலியவைகளும்
மற்றும் பலஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில். ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வளவோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி தாசி விபசாரித்தனம் ஆகாரம் உறக்கம் புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.
திருவிழா ஆபாசம்
கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவதாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20-வது நூற்றாண்டில் செய்யக்கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க
குடி அரசு - 1937 (2) 328
வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால். போனவருஷம்செய்தகல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு மொழக்கு ஆடம்பரம் பணச்செலவு ஏன்? சாமிகல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம்? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத்திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒருமனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லுகிறோம் இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?
படையல் யார் வயிற்றில் போகிறது
ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள்? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப்படுவதென்றால் யோக்கியன் எப்படி சஷித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் கடைக்கும் திருச்சந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு உடல் கேடு ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள்களால் மக்களுக்கு நன்மையா தீமையா என்று கேட்கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை. கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித்தன்மையும் அந்நிய நாட்டார்
3299 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
வியாபாரத்தின் பேரால் சுரண்டுதலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டங்கள் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள். பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.
மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக்கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக்கொள்ளுவதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?
கோவில்கள் எதற்கு?
மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு?
தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை ஐ.சி.எஸ், ஹைகோர்ட் ஜட்ஜி திவான்களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே. யோகித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? கிறிஸ்தவர்கள். ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று கேட்கிறேன்.
உண்மை பேசுகிறவன் நாஸ்திகணா?
இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக்கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா அஸ்திகம்? இல்லாவிட்டால்
குடி அரசு - 1937 (2) 330
நாஸ்திகரா? அப்படியானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப்பற்றி எங்களுக்கு
சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம் ஏதோ எங்களுக்கு தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம்நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப்பித்துக்கொள்ளுகிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை.
(தொடர்ச்சி 26.12.1937 குடி அரசு 'காங்கரசும் அரசியலும்)
குறிப்பு: 12.12.1937 ஆம் நாள் நாமக்கல் திரையரங்கில் நடைபெற்ற நாமக்கல் வட்ட சுயமரியாதை மாநாட்டிலும் அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 19.12.1937
B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காங்கரசும் - அரசியலும்
தோழர்களே! நான் இது வரை சுயமரியாதை இயக்கம் என்றால். என்ன? அது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? மதம் கடவுள் சமூகம் சம்பந்தமாக அதன் கருத்து என்ன? என்பது பற்றியும் அதைப்பற்றி எதிரிகள் செய்யும் விஷமப்பிரசாரத்துக்கு சமாதானமும் சொன்னேன். இனி காங்கரசின் அரசியல் தன்மையைப்பற்றி சிறிது பேசுகிறேன்.
காங்கரசின் அரசியல் கொள்கைப்படி சுயமரியாதைக்காரர்கள் தேசத் துரோகிகள் என்றும் தேசத்தை அந்நியருக்குக் காட்டிக் கொடுக்கும் நபர்கள் என்றும் மற்றும் பலவாறாக காங்கரஸ் கூலிகளும், காலிகளும் கூப்பாடு போடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வண்டவாளம் வெளிப்படுத்த வேண்டியதாகிறது
காங்கரஸ் வண்டவாளம்
ஆனால் சில காங்கரஸ்காரர்கள் என்பவர்கள் சுயமரியாதைக்காரர்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால் சுயராஜ்யம் பெற்ற பிறகே சுயமரியாதை அடைய முடியும் என்கிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் காங்கரசைப்பற்றி சொல்லுவது என்னவென்றால் அது ஒரு பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்றும் சமுதாயத்துறையில் மதிப்பும் செல்வாக்கும் இழந்த பார்ப்பனர்கள் அரசியல் வேஷம் போட்டு பாமர மக்களை ஏய்க்க ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதனால் மக்களுக்கு பல கெடுதிகள் ஏற்பட்டதல்லாமல் யாதொரு நன்மையும் ஏற்பட்டதில்லை என்றும், நாட்டுக்கோ மனித சமூகத்துக்கோ ஏதாவது நன்மை ஏற்பட வேண்டுமானால் இந்த பார்ப்பன ஆதிக்க சபை ஒழிய வேண்டும் என்றும் சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது. காங்கரஸ்காரருக்குத் தேசம் என்பது பார்ப்பன சமூகமேயாகும். சுயராஜ்யம் என்பது பார்ப்பன ஆதிக்கம் ஏற்படுத்துவதேயாகும். இதைத் தவிர காங்கரசுக்கும் சுயராஜ்யத்துக்கும் வேறு கருத்து கிடையாது. இதை நான் அனுபவத்தின் மீதே கூறுகிறேன்.
பார்ப்பனரல்லாதாருக்கு காங்கரசில் மதிப்புண்டா?
உதாரணமாக இன்று காங்கரசில் பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு யாராவது உண்மையான தலைவர்களாகவும், அதிகாரக்காரர்களாகவும்
குடி அரசு - 1937 (2) 332.
இருக்கிறார்களா என்பதைப்பற்றி சற்று நடுநிலையில் இருந்து சிந்தித்துப்பாருங்கள். தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அதியவர்களேஇந்த பத்து வருஷகாலமாக காங்கரஸ் ஸ்தாபனத் தலைவர்களாக
இருந்து வந்திருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதார் இப்பார்ப்பனர்களது தலைமை பதவிக்கு ஆசி கூறிக்கொண்டும் அடிமைத்துவ பாட்டு பாடிக்கொண்டும் இருந்து சிலர். வயிறு வளர்க்கிறார்கள். சிலர் அவர்கள் கொடுக்கும் ஏதாவது பதவி எலும்பைக் கவ்விக்கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்லாமல் சதந்தரத்தோடு சொந்த புத்தியோடு தன் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லி வலியுறுத்தத் தக்க மனிதத்தன்மையுடன் பார்ப்பனரல்லாதார்களில் யாராவது காங்கரசில் இருக்கிறார்களா? என்று யோசித்துப் பாருங்கள்:
முத்துரங்கம் நிலைமை
தோழர் முத்துரங்க முதலியார் காங்கரஸ்கமிட்டி தலைவரல்லவா என்று கேட்கலாம். ஆம், அவர் காங்கரஸ் கமிட்டித் தலைவர்தான். ஆனால் அவருக்கு உள்ள அதிகாரமும் அந்தஸ்தும் என்ன என்று பாருங்கள் மந்திரிகளில், கனம் தோழர் ராமநாதனுக்கு எப்படி விளம்பர மந்திரி பதவியோ அப்படி காங்கரஸ் தலைவர்களில் தோழர் முத்துரங்க முதலியார் விளம்பர தலைவர் பதவி தான் வகிக்கிறார். அதாவது பார்ப்பனத் தலைவர்கள் செய்யும் காரியத்தை - போடும் உத்திரவை விளம்பரம் செய்பவர். காங்கரஸ் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமமான காரியங்களுக்கும் சூழ்ச்சியான காரியங்களுக்கும் பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர்கள்
மீது 'கல்"விழாமல் தடுக்கும் கவசங்களாக இருப்பவர். இவையல்லாமல். மற்றபடிதோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் இந்த 10 15 வருஷ காலமாக தன் சுதாவாக எடுத்துச் சொன்ன காரியமோ செய்த காரியமோ கொண்டு வந்த தீர்மானமோ அல்லது பார்ப்பனத் தலைவர்கள் அபிப்பிராயங்களை தட்டிச்சொன்ன காரியமோ ஏதாவது ஒன்றை எடுத்துக்காட்டுங்கள். தோழர் எஸ். ஸ்ரீ நிவாசய்யங்கார் காங்கரஸ் தலைவராயிருக்கும்வரை அவருக்கு பிரதம சிஷ்யராய் இருந்தார். அவர் மாறி கனம் ராஜகோபாலாச்சாரியார் தலைவராக வந்தது முதல் அவருக்கு ஆஞ்சநேயராக இருந்து வருகிறார். இனி யாரைப்பற்றி சொல்லப் போகிறீர்கள்? தோழர்கள் உபயதுல்லா, குப்புசாமி, அண்ணாமலை, சுப்பையா கம்பெனியைப் பற்றி சொல்லுகிறீர்களா? அல்லது வேறு தோழர்கள் தேவர், ராமலிங்கள் செட்டியார், நாடிமுத்துப்
பிள்ளை, டாக்டர் சுப்பராயன், வெள்ளியங்கிரி கவுண்டர் போன்றவர்களைப் பற்றி சொல்லுகிறீர்களா? இவர்களின் சொந்த யோக்கியதை எவ்வளவு பெரிதாயிருந்தாலும் காங்கரசில் இவர்களுக்கு உள்ள மதிப்பும், செல்வாக்கும் யாருக்குத் தெரியாது? அரசியல் உலகில் இவர்களை யார் சட்டை செய்கிறார்கள் 33— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
என் அநுபவம்
இவர்கள் சொந்தப் புத்தியை நம்மை வைவதற்கும் ஜஸ்டிஸ் கட்சியை வைவதற்கும்உபயோகப்படுத்துவதல்லாமல்பார்ப்பனிடமோகாங்கரசினிடமோ. உள்ள அபிப்பிராய பேதத்தை தெரிவிப்பதற்கு உபயோகப்படுத்தா விட்டாலும் அது விஷயத்தில் சொந்தப்புத்தி இருப்பதாகவாவது எப்போதாவது காட்டிக் கொண்டிருக்கிறார்களா? இதை நான் இன்று நேற்று சொல்லவில்லை: இந்த 10, 15 வருஷ காலமாகவே சொல்லி வருகிறேன். நான் காங்கரசில்.
இருந்து பலதடவை ஜெயிலுக்குப் போய் பல தலைமைப்பதவி வகித்து “சர்வாதிகாரி” பதவியில் இருந்து வந்த அனுபவத்தையே எடுத்துச் சொல்லிவருகிறேன். இது ஒரு புறமிருக்கட்டும்.
வரிகள் பெருகியதற்கு காங்கரசே காரணம்
காங்கரசுக்கு இன்று வயது 50 வருஷத்துக்கு மேலாகிறது. இந்த ஐம்பது வருஷ வாழ்வில் காங்கரஸ் 2-வித பருவத்தன்மை அடைந்திருக்கிறது அதாவது முதல் முப்பது வருஷகாலம் சர்க்காருக்கு ராஜபக்தி, ராஜவிசுவாசம்
காட்டி அதற்கு கூலியாக தங்களது தேவைகளுக்கு விண்ணப்பம் போடுவது ஒன்று. இந்த பருவத்தில் தான் உத்தியோகங்கள் பெருகினதும், சம்பளங்கள். பெருகினதுமாகும். வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனர்கள். அரசியலில் உத்தியோகங்களில் பெரும் பெரும் பகற்கொள்ளை போன்ற பதவிகளில் 100க்கு 100 பேராய் கைப்பற்றி பூரண ஆதிக்கத்திற்கு வந்த காலமாகும்.அதணால்தான்நமது வரிகளும் அதாவது காங்கரஸ் ஆரம்பிப்பதற்கு
முன் இருந்ததை விட இரட்டிப்பு மூன்று பங்கு ஆக பெருக வேண்டியதாயிற்று. சம்பளமும் உத்தியோகமும் எவ்வளவுக்கெவ்வளவு காங்கரசினால் பெருக்கமடைந்ததோ அதுபோலவே வரியும் பெருகிற்று
சட்டமறுப்புச் சூழ்ச்சி
இந்த உத்தியோகங்களிலும் சம்பளக் கொள்ளையிலும் தங்களுக்கும் ஒருபங்கு வேண்டுமென்று கேட்பதற்கு ஆகத்தான் முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கமும் ஏற்பட்டதாகும். இதைக் கொடுக்காமல் ஏமாற்றவே காங்கரஸ் ஒரு பல்டி அடித்தது. அந்தப் பல்டிதான் இந்த 20 வருஷகாலமாக நடந்து வரும் இரண்டாவது பருவத்தன்மை. அதாவது சர்க்காரோடு போராடுவதாகவும் அதற்காக சர்க்காரோடு ஒத்துழைக்கக் கூடாதென்றும் உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவை அற்பமென்றும் அது தேசத்துரோகமென்றும் அந்நிய ஆட்சியே கூடாதென்றும் பேசி சட்டம்
மீறி ஜெயிலுக்குப் போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளிவந்து சரணாகதி அடைந்து பதவி பெற்ற தன்மை. இதில் சிறிதும் நாணயமில்லை என்பதே எனது அபிப்பிராயம். இது பார்ப்பனர்களுடைய வஞ்சகப் புத்தியே ஒழிய இப்பேச்சுகளில் செய்கையில் கொஞ்சமும் உண்மை கிடையாது. மற்றென்ன இருக்கிறது என்றால் தங்கள் கைக்கு பதவிகள்
குடி அரசு- 1937 (2) 334
வரக்கூடிய சமயம் ஏற்படும்வரை இப்படியே சொல்லிக்கொண்டு இருந்து சந்தர்ப்பம் கிடைத்த உடன் திடீரென்று நுழைந்து கொள்ளலாம் என்கின்ற
தந்திர புத்தியேயாகும். அதற்கு இணங்கவே தான் பொதுமக்கள். ஏமாறுந்தன்மை அடையும் வரை ஒத்துழையாமை - பஹிஷ்காரம் - சட்ட
மறுப்பு முதலியவை பேசிக்கொண்டு இருந்து பதவி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன் சட்டப்படி நடப்பதாக வாக்குறுதி கொடுத்து ராஜவிசுவாசப் பிரமாணமும் ராஜபக்தி பிரமாணமும் சட்டத்தை ஒழுங்காய் கட்டுப்பட்டு நடத்திக் கொடுக்கும் பிரமாணமும் ஒரே மூச்சில் செய்து இன்று பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.
பதவி அடைந்த 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே அதாவது சென்னையில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் போலவே 6, 7 மாகாணங்களிலும் பார்ப்பனர்களே தலைவர்களாய் இருந்து மந்திரி சபை நடத்துகிறார்கள். பம்பாயில் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை இருந்ததையும் அதாவது நரிமனை திடீரென்று கவிழ்த்து விட்டு அங்கும் ஒரு பார்ப்பனரையே தலைவராக ஏற்படுத்திக்கொண்டார்கள். அதாவது எவ்வளவு மானம் கெட்ட பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் ஏதாவது ஒரு சமயத்தில் மோசம் செய்து விடுவான் என்று பார்ப்பனர்கள். சந்தேகப்பட்டும் ஒரு மாகாணத்தில் ஒருவன் ஏதாவது சொந்த புத்தியோடு காரியம் செய்தால் அது மற்ற மந்திரிகளையும் கவிழ்த்துவிட நேருமோ என்று பயந்தும் ஒருவன் சொல்லுகிறபடியே எல்லா மாகாண மந்திரிகளும் ஆடத்தகுந்த மாதிரி எல்லா மாகாணத் தலைவர்களையும் முதல் மந்திரிகளையும் பார்ப்பனர்களாகவே வைத்துக் கொண்டார்கள். உதாரணமாக தீண்டாமை விலக்க வேண்டும் என்று ஒரு மந்திரி ஒரு மாகாணத்தில் சட்டம் செய்து விட்டால் மற்ற மந்திரிகளும் செய்ய வேண்டி வந்துவிடும். பிறகு அது பார்ப்பன சமூகத்தின் ஆதிக்கத்தையும் உயர்வையும் அடியோடு ஒழித்து விடும். ஆதலால் தீண்டாமை ஒழிக்கிறோம், ஒழிக்கிறோம் என்று தீண்டாமை ஒழிக்கப்படாத முறையிலேயே பேசி ஒழியாத மாதிரியிலேயே காரியம் செய்யவேண்டும். இதற்கு பார்ப்பனரல்லாதார் ஒருவராவது கடைசிவரை உள் ஆளாய் இருப்பாரா என்பது பார்ப்பனர்களுக்கு சந்தேகம். ஆதலால்தான் எந்த மாகாணத்திலும் பார்ப்பனரல்லாதார்களை அவர்கள் நம்புவதில்லை. ஆகவே காங்கரஸ் பார்ப்பன அதிக்கமுள்ளது என்பதற்கும் பார்ப்பன. ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொள்ளவே ஏற்பட்டதென்பதற்கும் அதற்கு அனுகூலமாக காரியங்கள் பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதையும் எடுத்துச் சொன்னேன். இனி காங்கரஸ் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து பதவிக்கு வந்து சர்வாதிகாரம் செய்யக்கூடிய பலத்துடன் பதவி ஏற்று இன்று கணக்குக்கு கிட்டத்தட்ட 6 மாதம் ஆகப்போகிறது. இந்த 6 மாத கணக்கை சற்று ஆராய்ந்து பார்ப்போம்
33 ய... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காங்கரசுக்காரர் பதவி ஏற்று இன்றைக்கு கிட்டத்தட்ட 6 மாத காலமாகப் போகின்றது. இந்த ஆறு மாதத்திய வரவு செலவு கணக்கு என்ன என்று பார்ப்போம். காங்கரசின் வேலைத்திட்டம் என்னவென்றால் அவர்கள் தேர்தல் காலங்களில் ஓட்டர்களுக்குச் சொன்னவைகளும் கராச்சித் திட்டமுமேயாகும். இந்தக் காரியங்களில் அவர்கள் எதை செய்திருக்கிறார்கள்? எதைச் செய்ய முயற்சிக்கிறார்கள்? என்பதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் காங்கரசுக்காரர்கள் காங்கரசால். மக்களை ஏமாற்றி எலக்ஷன்களில் வெற்றி பெறுவது என்பதல்லாமல் அவர்கள் இந்த 15, 20 வருஷகாலமாகவே அவர்களது சகல திட்டங்களிலும் சகல
வாக்குத்தத்தங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள். அதாவது காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்காமல் வெளியில் இருந்துகொண்டு ஒத்துழையாமை, சட்டமறுப்பு, நிர்மாணத்திட்டம் ஆகிய காரியங்களிலும் தோல்வியே அடைந்து வந்திருக்கிறார்கள்.
எல்லாம் தோல்வி. அவர்களது பஹிஸ்காரத் திட்டங்கள் எல்லாவற்றிலுமே தோல்வி அடைந்தார்கள். தோல்வி அடைந்தது மாத்திரமல்லாமல் பஹிஷ்காரத் திட்டத்தை மீறி காங்கரஸ் கட்டளைக்கு விரோதமாய் தேர்தல் முதலியவை களில் மாறு வேஷத்துடன் பிரவேசித்து அதிலும் ஒன்றும் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தார்கள்
சட்ட சபைகளில் இருந்து வெளியேறும் நாடகம் நடத்தி அவற்றிலும் படுதோல்வி அடைந்து மறுபடியும் உள்ளே போனார்கள்.
சட்டபைகளைஸ்தம்பிக்கச் செய்ய, முட்டுக்கட்டைபோட சட்டசபைக்குப் போனார்கள். அங்கு போய் பதவி ஏற்றார்கள், சம்பளம் பெற்றார்கள்.
சைமன் கமிஷன் பஹிஸ்காரம் செய்தவர்கள் சைமன் கமிட்டிக்கு நேரு திட்டம் சமர்ப்பித்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்தார்கள் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்கள்; அதிலும்தோல்வி அடைந்தார்கள். வட்டமேஜை மகாநாடு பஹிஷ்காரம் செய்தார்கள்; அதிலும் தோல்வி அடைந்து வட்ட மேஜைக்கு வாரண்டு வந்து பிடித்துக் கொண்டு போனது போல் போய்ச் சேர்ந்தார்கள். வட்ட மேஜைக்குப் போயும் அங்கும் தோல்வி அடைந்து திரும்பி வந்தார்கள்.
திரும்பி வந்ததும் சட்ட மறுப்பு, மறியல் முதலியவைகள் செய்தார்கள். அவற்றில் அடியோடு மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று இவ்வளவு தோல்விகள் அடைந்த பின் ஒத்துழையாமை, சட்ட மறுப்பு, பகிஷ்காரம் ஆகியவைகள் கைவிடப்பட்டன என்று காங்கரசிலேயே
குடி அரசு- 1937 (2) 336
தீர்மானம் போட்டதுடன் இனி சட்டங்களை மீறுவதில்லை, மறியல்கள் செய்வதில்லை என்று சர்க்காருக்கு காந்தியார் எழுதிக்கொடுத்து ஜெயிலில் இருந்து வெளிவந்து தேர்தல் பிரசாரம் நடத்தினார்கள்.
இந்திய சட்டசபை
இந்திய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அங்கு போய் காங்கரசுக்கு மெஜாரிட்டி இருந்தும் காங்கரசுக்காரர்கள் போக்குவரத்துப் பிரயாணப்படி வாங்கியதைத் தவிர சர்க்கார் தீர்மானங்கள் சிலவற்றை தோற்கடிக்கும் நாடகம் நடத்தியதைத்தவிர இவர்களால் சர்க்காரின் ஒரு சிறு திட்டத்தையோ தீர்மானத்தையோ நடைபெறாமல் நிறுத்திவிடவில்லை.
மற்றும் தற்கால சாந்தியாய் ஏற்பட்ட அடக்கு முறை சட்டங்கள்
முதலியவற்றிற்கு பூரண ஆயுள் கொடுத்தார்கள்.
வரிகள் உயர்த்தப்பட்டனவே ஒழிய ஸ்டாம்பு முதலிய எந்த விஷயத்திலும் ஒரு சின்ன காசு அளவு குறைக்கப்படவில்லை
சட்டசபை ஓட்டு கேட்கும் போது தங்கள் காரியங்கள் நடைபெற வில்லையானால் ராஜிநாமா செய்து விட்டு வெளியில் வந்துவிடுவோம்
என்று சொன்னவர்கள் ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்று
தெரிந்தும் இன்னமும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அங்கு தொழிலாளிகள் சம்மந்தமாக வந்த சட்டங்களில் தொழிலாளர் களுக்கு துரோகம் செய்தார்கள். மற்றும் வேறு பல கம்பனிச்சட்டங்கள், இன்ஷுரன்ஸ் சட்டங்கள், ரயில்வே சம்மந்தமான விஷயங்கள் முதலியவைகள் வந்த காலத்தில் முதலாளிகளுக்கு அனுகூலமாகவே இருந்தார்கள். இவற்றில் பலவற்றில் பெருந்தொகையாக பிரதிப்பிரயோஜனம் கூட உண்டு என்கின்ற பழிப்புக்கு இடம் செய்து கொண்டார்கள்.
சென்னை சட்டசபை
சில தனிப்பட்டவர்களின் இன்றைய நிலைமையைப் பார்த்தால் இந்த மாதிரி காரியத்தால் அல்லாமல் வேறு வகையில் இவர்களுக்கு இவ்வளவு பணம் ஏது? என்று சந்தேகப்படும்படியாகவே இருக்கிறது
இது நிற்க, சென்னை சட்டசபை நிலைமை என்ன என்று பார்ப்போம் இன்று சென்னை சட்டசபையில் காங்கரசுக்கு பெருமித மெஜாரிட்டி இருந்து வருகிறது. எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லாம் பலவித சூழ்ச்சியால் விலைக்கு வாங்கப்பட்டு எதிர்ப்பே இல்லாமல் செய்து கொள்ளப்பட்டாய் விட்டது
மேல் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சர். உஸ்மான் அவர்கள் ஆச்சாரியாரைப் பற்றி புகழ்மாலை சாற்றிய வண்ணமாய் இருக்கிறார்.
கீழ்ச் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குமாரராஜா அவர்கள் ஆச்சாரியாருக்கு பூமாலை சூட்டிய வண்ணமாய் இருக்கிறார். இனி BT ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
காங்கரஸ்காரர் இஷ்டத்திற்கு மாறு பேசுகிறவர்கள் யாருமே இல்லை: இருந்தாலும் அவை காரியத்துக்கு உதவாதவைகள் தான். ஆகவே காங்கரஸ்காரர்கள் இந்த தனி அரசு காலத்தில் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். காங்கரஸ் திட்டத்தில் எதை நடத்தி வைத்தார்கள் என்று பாருங்கள்.
காங்கரஸ் திட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தீண்டாமை விலக்கும் முக்கியமானவை. இவைகளில் என்ன செய்திருக்கிறார்கள்? காங்கரஸ் தனி அரசு ஆட்சியில் இந்து முஸ்லீம் வேற்றுமை அதிகப்பட்டுவிட்டது தீண்டாமைவிலக்குக்கு சட்டம் செய்வது கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு தீண்டாமையை சட்ட மூலம் ஒழித்த வேறு அரசாங்கங்களை பாராட்டுவதுடன். நின்றுவிட்டது. தேசீயக் கல்வித்திட்டம் ஹிந்தி கட்டாயப்பாடமாகவும் பழங்கால கைத்தொழில் பயில்வதே கல்வித் திட்டமாகவும் ஆகிவிட்டது
காங்கரசில் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளதான பாஷாவாரியாக மாகாணங்களை அரசியலிலும் பிரிப்பது என்பதைச் செய்ய இஷ்டமில்லாமல் சூழ்ச்சிகள் செய்து அம்முயற்சி அடக்கப் பட்டு வருகிறது
மதுவிலக்குப் புரவி.
மதுவிலக்கு சட்ட ரீதியாகவோ திட்ட ரீதியாகவோ இல்லாமல் விளையாட்டுப் பிள்ளை மண் கொழிக்கும் மாதிரி விளம்பரத்தில் செய்து கொண்டுக்கம் பக்கத்தில் போய் குடிப்பதற்குசெளகரியமும் வைத்துக்கொண்டு. தினமும் சில்லறை சிப்பந்திகள் மடி நிறையும்படி கேசு செய்து எண்ணிக்கை காட்டுவதே மது விலக்கு முயற்சியாய் இருக்கிறது. மதுவிலக்கு பண: நஷ்டத்திற்கு யாதொரு பரிகாரமும் தேடாமல் கல்வி, சுகாதாரம், வைத்தியம் ஆகியவைகள் தலையில் தைரியமாய் கை வைக்கப்பட்டு வருகிறது
கதர் விஷயம் பயன்படாது என்று தெரிந்தும் கதரை ஆதரிக்க “கதர் காட்டுமிராண்டித் திட்டம்” என்ற தோழர் ராமநாதனை விலைக்கு வாங்கி அவரைக் கொண்டு கதரின் பேரால் சில ஆட்களை கட்சிப் பிரசாரத்துக்கு வைத்திருப்பதற்கு ஆக பொது மக்கள் வரிப்பணத்தில் 2 லக்ஷ ரூபாய் கிராண்டு கொடுத்து விட்டு அதைச் சரிக்கட்ட ஜவுளி வியாபாரிகளுக்குப்
புது வரி போடப்பட்டாய் விட்டது
தேசீயக் கடனை ஏன் ஓழிக்கவில்லை
தேசியக்கடன்களை கேன்சில் செய்வதாக காங்கரசில் செய்த தீர்மானங்கள் வண்டி வண்டியாய் இருக்க அவைகளை காற்றில் பறக்கவிட்டு, பழைய கடனை ஒப்புக்கொண்டு - அதரிக்கச் செய்தும் பயன்படாமல், புதுக்கடனும் வாங்கியாய் விட்டது. மாகாண சட்டசபைகளில் செய்யக்கூடிய அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைச் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டியதற்கு பதிலாக
குடி அரசு- 1937 (2) 338
அடக்குமுறைச் சட்டப்படி காங்கரஸ்காரர்கள் மீதே நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட்டு வருகிறது. முன்பு இல்லாத மாதிரியில் பத்திரிகைகளுக்கு ஜாமீன் கேட்கப்படுகிறது. நீதி நிர்வாக இலாகாக்களை பிரிவினை செய்யவேண்டும் என்னும் கோரிக்கையானது காங்கரசின் 30, 40 வருஷ திட்டமாயும் கோரிக்கையாயும் இருந்துகூட இப்போது காங்கரஸ் பதவிக்கு வந்தவுடன் கவர்னருக்கு சரணாகதி அடைந்து நீதி நிர்வாக இலாகா பிரிக்க முடியாதது என்று தீர்மானிக்கப்படக்கூடியதாக ஆகிவிட்டது.
வரிகுறைப்பு எங்கே?
பொதுவாக வரி குறைப்பது என்பது புதுவரி போடும் வேலையில் கவலை செலுத்தப்படுகிறது. சம்பளங்கள் குறைப்பு என்பதும் சம்பளம் தவிர வீட்டு வாடகை, சர்க்கார் செலவில் மோட்டார் கார் வாங்கிக் கொடுத்தல், மோட்டார் கார் அலவன்சு கொடுத்தல் ஆகியவைகளில் புதுப்புது செலவினங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அரசியல் உத்தியோகத்தில் வெள்ளையர்- இந்தியர் வித்தியாசங்களை ஒழிப்பது என்பதும் இப்போது வெளிப்படையாய் வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களுக்கு தனி மரியாதை இருக்க வேண்டியது தான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. காங்கரஸ்காரர்களிடம் உள்ள ஜனநாயகம் என்பது பொது ஜனங்களைப் பார்த்து “நான் அப்படித்தான் செய்வேன், வேண்டுமானால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்” என்கின்ற எதேச்சாதிகாரமாக மாறி விட்டது
ஸ்தல ஸ்தாபன வெற்றியானது சூழ்ச்சியால் வெற்றி அடையப்பார்க்க வேண்டியதாய் விட்டதே ஒழிய நேர் வழியில் முயற்சித்த இடங்களில் எல்லாம் தோல்வியே கிடைத்திருக்கிறது
பிரித்த ஜில்லா போர்டுகளை ஒன்று சேர்த்தல் என்பது கட்சி நலனுக்கு கவனிக்கப்பட்டு நபருக்கு தகுந்தாற்போல் தனித்தனி முறை கையாளப்பட்டு
வருகிறது ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சமும் கண்டிறாக்ட்டு ராஜ்யமும் ஒழிக்கப் போவதாக கூறி ஓட்டுப் பெற்றவர்கள் காங்கரஸ் மெம்பர்களே லஞ்சம் வாங்கி வருவதையும் கண்டிறாக்ட்டுபெற்று வருவதையும் பெயர் விபரம் புள்ளிவிபரம் ஆகியவையுடன் காங்கரஸ் பத்திரிகைகளே எடுத்துக்காட்டி வருகின்றன.
ஜில்லா போர்டுகளை இணைக்காததேன்?
ஜில்லா போர்டுகளை எடுத்து விடுவதாய்ச் சொன்னதையும் ஜில்லா போர்டுகளுக்கு ஸ்பெஷல் ஆபீஸர்கள் அல்லது நிர்வாக ஆபீஸர்கள் போடுவதாய்ச் சொன்னதையும் இப்போது காற்றில் பறக்கவிட்டு அவை செய்யாமல் இருப்பதற்கு மெம்பர்களிடம் தலைவர்களிடம் வியாபாரம் பேசப்படுகிறது. சில பேர்களில் காங்கரசுக்கும் காங்கரசில் செல்வாக்கு B ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
உள்ளவர்களுக்கும் பணம் கொடுத்து பிரிவினையை ஒன்று சேர்க்காமல்
தப்பித்துக் கொள்ளவும், நிர்வாக அதிகாரி போடாமல் பார்த்துக்கொள்ளவும்
முயற்சி நடந்து வருகிறது
கடன் வாய்தா மசோதா ஓழிந்ததேன்?
காங்கரஸ் கொண்டு வருவதாய் சொன்ன சட்டங்கள் கொண்டு வரப்படாமல் நிறுத்திக் கொள்ள வேண்டியதாய் விட்டன. கொண்டு வந்த சட்டங்களும் தலைமேலடிக்கப்படுகின்றன. சட்டங்கள் செய்யும் விஷயத்தில் காங்கரசுக்கு புத்தியும் இல்லை; அனுபவமும் இல்லை; நாணையமும் இல்லை; உறுதியும் இல்லை; வெட்கமும் இல்லை என்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. அவசரப்பட்டு இன்ன சட்டம் செய்வதாகச் சொல்லுவதும் முதலாளிமார்களோ பார்ப்பனர்களோ தங்கள் சுயநலத்துக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூப்பாடு போட்டால் அல்லது காங்கரஸ் தலைவர்களை சரிப்படுத்திக் கொண்டால் அதைத் தந்திரமாக கைநழுவ விட்டுவிட்டு உப்பு சப்பற்ற-வெறும் வேஷத்துக்கும் ஏய்ப்பதற்கும் மாத்திரம் பயன்பட்ட போலிச் சட்டங்களைவிளம்பரப்படுத்திக்கொண்டு தங்களுக்குள்ளாகவே நாலுபேர்களை வெளிவேஷத்துக்கு எதிர்க்கும்படி செய்து ஏதோ வெகு பிரயாசையின் மீது மகா பிரமாதமான சட்டத்தை செய்து விட்டதாக கூலிப் பத்திரிகைகளை விட்டு விளம்பரம் செய்யச் செய்வதுமான தந்திரத்தில் முடிவடைந்து விடுகிறது.
சமதர்ம விஷயமும் சமதர்மக்காரர்களால் ஓட்டுப் பிரசாரம் செய்து கொண்டதல்லாமல் இன்று காங்கரசுக்கு ஓட்டுப்பிச்சை வாங்கிக் கொடுத்த சமதர்மக்காரர்கள் முக்காடு போட்டுக் கொண்டு திரியும்படியான வெட்கங்கெட்ட நிலையில் வைக்கப்பட்டு விட்டார்கள்.
மந்திமிகளுக்குள் ஒற்றுமையுண்டா?
மந்திரிகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆளுக்கு ஒருவிதம் பேசுவதும் காங்கரஸ்காரர்களே மந்திரிகளை குறை கூறுவதும் தோழர் சத்தியமூர்த்தி அவர்களே காங்கரஸ் மந்திரிகள் செய்வது ஒழுங்கில்லை என்று சொல்லுவதுமான நிலையில் இருப்பதோடு உள்ளுக்குள் கட்சிப்பிளவுகளும் மனஸ்தாபங்களும் வலுத்து வருகின்றன.
காங்கரஸ் கட்டுப்பாடும் ஒழுங்கு நடவடிக்கையும் பத்திரிகையில். எழுதுவதுடன் சரியே ஒழிய காரியத்தில் யாரும் கட்டுப்படுவதில்லை:
ஒழுங்கு நடவடிக்கைப் பலன்
ஒழுங்கு நடவடிக்கையின் பேரால் தண்டிக்கப்பட்ட ஆட்கள் 100க்கு 90 பேர்கள் விஷயத்தில் எவரும் கீழ்ப்படியவே இல்லை. தண்டனை நிறைவேற்றப் படவேயில்லை. ஆகவே வெறும் வேஷத்தில் பலமற்ற அப்பாவிகளை மிரட்டி பணம் வாங்கவே ஒழுங்கும் கட்டுப் பாடும் நடவடிக்கையும் இருந்து வருகின்றன.
குடி அரசு- 1937 (2) 340
காங்கரசில் சேர்ந்த முஸ்லீம்களுக்கு முஸ்லீம்களிடமும் நாட்டுப் பொது மக்களிடமும் செல்வாக்கோ நம்பிக்கையோ கிடையாது என்பதோடு. முஸ்லீம்கள் மந்திரி, காரியதரிசி தவிர மற்ற யாவரும் காங்கரசுக்கு விரோதமாகவே இருந்து வருகிறார்கள்.
ஆதிதிராவிடர்களும் காங்கரசை எதிர்க்கிறார்கள். ஆதிதிராவிட
மந்திரிக்கு ஆதிதிராவிட சமூகத்திலேயே செல்வாக்கும் நம்பிக்கையும் இல்லை. ஆகவே இன்று காங்கரஸ் வெறும் பத்திரிகை பிரசாரத்திலும் பொதுஜனங்கள் வரிப்பணத்தில் மந்திரி கோஷ்டியும் காரியதரிசி கோஷ்டியும் ஊர் ஊராய் சென்று ஏமாற்றுப் பிரசாரம் செய்து ஏய்ப்பதிலும் உயிர். வைத்திருக்கிறதே ஒழிய உண்மையில் காங்கரஸ் தனது கொள்கையில் வெற்றியோ அல்லது மக்களுக்கு அதனால் பலனோ ஏற்பட்டதென்று எவரும் சொல்ல முடியாது வேலையற்ற - வயிறு வளர்ப்புக்கு வேறு வகையற்ற - பதவிக்கு வீங்கிய கூட்டம் காங்கரசை நடத்திக்கொண்டிருப்பதாலேயே அது பொதுஜனங்களுக்கு பயனளிக்கத்தக்கதாயிருக்கிறது என்று யாரும் எண்ணிவிட முடியாது.
காங்கரஸ்காரர் யோக்கியதை.
உண்மையில் காங்கரசுத் தலைவர்கள் என்பவர்கள் வெளியில் இருந்து பொறுப்பில்லாமல் அனுபவ ஞானமில்லாமல் பாமர மக்கள் மகிழும்படி ஏமாறும்படி பேசிப் பழக்கமும் ஞானமும் உள்ளவர்களே ஒழிய அவர்களுக்கு நிர்வாக அனுபவமும் அரசியல் ஞானமும் இல்லை என்கிற யோக்கிதையும், பார்ப்பன சமூக நன்மையே அரசியல் திட்டம் என்கின்ற கொள்கையும் உடையவர்களாயிருப்பதால் அவர்களிடம் இதற்கு மேல் வேறு எதுவும்
எதிர்பார்க்கவும் முடியாது. இதிலிருந்தாவது மக்கள் அறிவு பெற்று இனி
புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ளுவார்கள் என்று கருதுகிறேன். தோழர்களே! காங்கரஸ் என்பது பற்றியும் அவர்களது கொள்கை திட்டம், இந்த ஆறுமாத காலவேலை, அதனால் ஏற்பட்ட பலன் என்பதைப் பற்றி எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்து விட்டேன். இதை நீங்கள் தயவு செய்து நிதானமாய் யோசித்து பார்த்தும் நாளைக்கு இங்கு வரும் காங்கரஸ் தலைவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுமையோடு கேட்டும் பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.
(19.12.1937 குடி அரசு - நாமக்கல் சுயமரியாதை மாநாட்டு சொற்பொழிவு சுயமரியாதை இயக்கத் தத்துவம்” தொடர்ச்சி)
குடி அரசு - சொற்பொழிவு - 26.12.1937 3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இன்னுமா சந்தேகம்?
காங்கரசுக்காரர்கன் மக்கன் கல்விக்கு குழிதோண்டி விட்டார்கள்
காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்றது முதல் கொண்டு பாமர மக்களின் கல்வியில் கெட்ட எண்ணம் வைத்து அதை ஒழிப்பதில் மிக்க கவனமாய் வேலை செய்து வருகிறார்கள் என்பது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வருகிறது. ஒரு நாட்டு மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டுமானாலும் அவர்கள் நாகரிகம் பெற்று உயர்ந்த நல்வாழ்க்கை நடத்த வேண்டுமானாலும் அரசியல், பொருளியல், தொழிலியல் ஆகிய துறைகளில் தகுந்த ஞானம் பெற வேண்டுமானாலும் அந்நாட்டு மக்களுக்கு முதலில் கல்வி ஏற்பட வேண்டியதே முக்கியமாகும். இந்தியாவானது இன்று அரசியல், சமூக இயல், சுயமரியாதை லட்சியம், சுதந்தர உணர்ச்சி முதலிய துறைகளில். கொண்டிருக்கும் ஆர்வத்திற்கும் அடைந்திருக்கும் நிலைமைக்கும் அது இதுவரைபெற்றிருக்கும் கல்வியே முக்கிய காரணமாகும். அதிலும் பிரிட்டிஷார் ஆட்சி ஏற்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்துவந்த கல்வியைப்பற்றி
யார் எவ்வளவு குறை சொன்னாலும் இந்திய மக்கள் யாவரும் தங்களை தாங்களே மக்கள் என்று கருதும் படிப்பாகவும் சுயமரியாதையும் சுதந்தரமும் மனிதனுடைய சரீரமும் ஜீவனும் என்று சிறிதாவது கருதும் படியாகவும் செய்தது பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்து வந்த கல்வியே யாகும்
ராமராஜ்யத்தில் மக்கன் நிலை
இதன் உண்மை தெரியவேண்டுமானால் இன்று காங்கரஸ்காரர்கள், காந்தியார் பார்ப்பனர்கள் ஆகியவர்கள் எதிர்பார்க்கும் ராமராஜ்யம் அல்லது இந்து மன்னர்கள் ராஜ்யம் நடைபெற்ற காலத்தில் மக்களுக்கு இந்நாட்டில் எவ்வளவு கல்வியும் கற்கும் சுதந்தரமும் இருந்தது என்பதும் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்திய மக்களுக்கு கல்வியில் எவ்வளவு சுதந்தரமும் கல்வி அறிவும் இருக்கிறது என்பதும் அறிவும் நடுநிலைமையும் உள்ள மனிதன் சிறிது கவளித்துப்பார்த்தாலே கண்ணாடிபோல் விளங்கும். இப்படி
நாம் கூறினால் சூழ்ச்சிக்காரர்களும், பார்ப்பனக் கூலிகளும், பாமர மக்களுக்கு ஏற்பட்ட இம்மாதிரி கல்வி, அறிவு, சுதந்தரத்தினால் தங்கள் ஆதிக்கத்தை இழக்க நேரிட்ட பார்ப்பனர்களும் நம்மை தேசத்துரோகி என்றும் அன்னிய
குடி அரசு- 1937 (2) 342
ஆட்சியை புகழ்கின்ற அடிமை மனப்பான்மைக்காரர் என்றும் பழித்துக் கூறுவதன் மூலம் பாமர மக்களை ஏமாற்ற முயற்சிக்கட்டும். அதைப்பற்றி
நாம் சிறிதும் கவலை கொள்ளவில்லை. ஏனென்றால் மக்கள் உண்மையை அறியும் அறிவு பெற்றுவிட்டால் இக்கூட்டத்தார்களை வட்டி முதலுடன் தண்டிக்கப் போகிறார்கள் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. என்றாலும் நாம்மேலேகூறியநமது அபிப்பிராயத்துக்குஆதாரமாகபெரியபெரிய காங்கரஸ் தலைவர்களுடைய அபிப்பிராயத்தை எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.
தாதாபாய் அபிப்பிராயம்
காங்கரசுக்கு தந்தை என்றும் சுயராஜ்யம் என்கின்ற வார்த்தயையே புதிதாக உற்பத்தி செய்தவர் என்றும் இன்றும் நாளையும் அதிதீவிர காங்கரஸ் பக்தர்கள் வீடுகளில் பூஜிக்கப்படும் மூர்த்தியாய் இருக்க வேண்டியவர். என்றும் சொல்லப்படும் பெரியாராகிய தாதாபாய் நெளரோஜி அவர்கள் ஒரு காங்கரஸ் மகாநாட்டின் தலைமைப் பேருரையில் கூறியிருப்பதை அப்படியே எடுத்துக் கூறுகிறோம். அதாவது
“நமக்கு இன்று ஒரு புதிய ஞான ஒளியை அளித்து இருப்பதும், அந்தகாரத்திலிருந்து நம்மை வெளியாக்கியிருப்பதும், மக்களுக்காக மன்னனே ஒழிய மன்னனுக்காக மக்கள் இல்லை என்கின்ற சுதந்தர உணர்ச்சியை ஊட்டினதும், கீழ்நாட்டு கொடுங்கோன்மையான ஆட்சியிலிருந்து நம்மை காப்பாற்றி நமக்கு மனித உணர்ச்சி கொடுத்ததும்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இதுவரை நமக்கு அளிக்கப்பட்டு வந்திருக்கும் கல்வியேயாகும்'' என்றும் “இதற்காக நாம் என்றென்றும் ராஜ விஸ்வாசிகளாகவும், ராஜபக்தர்களாகவும் இருக்க வேண்டியது நமது கடமையேயாகும்”' என்றும் கூறியிருக்கிறார்.
மற்றொரு காங்கரஸ் மகாநாட்டு தலைவரான பண்டிட் கிஷன். நாராயணதாஸ் அவர்கள் தமது தலைமை உரையில்
“பிரிட்டிஷ் சர்க்கார் நமக்கு அளித்த கல்விமுறை இந்தியர்களுக்குக் கிடைத்த மகத்தான ஒரு பாக்கியமே யாகும்” என்று கூறி இருக்கிறார்.
சுரேந்திரநாத் கருத்து மற்றொரு காங்கரஸ் மகாநாட்டின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் தமது தலைமை உரையில்,
“இந்தியாவுக்கு பிரிட்டனால் மிகச்சிறந்த ஒரு பெரிய நன்மை
ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்த நன்மை அவர்கள் நமக்கு அளித்துவந்த உயர்தர கல்வியேயாகும். அக்கல்வியே நம்முடைய முற்போக்குகளுக் கெல்லாம் ஆணிவேராக இருந்து வருகிறது. அக்கல்வியே இந்திய மக்களின் பிரதான அபிவிருத்திகளின் பீடமாயிருக்கிறது. அது இந்தியர்களின்
343 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
அபிலாஷைகளை வளர்க்கும் இயல்புடையது. அக்கல்வி நமது எல்லாவித க்ஷம அபிவிருத்திக்கான மூல சக்தியை வளர்க்கும் தன்மையுடையது. பிரிட்டிஷ் சர்க்காரினால் நமக்குக் கிடைத்திருக்கும் பிரதான நன்மைகளில் அவர்கள் அளித்த உயர்தரக் கல்விமுறையே முதன்மையானதாகும்.”
ஸர். சங்கரநாயர் வாக்கு
அதிதீவிர தேசிய வாதிகளில் ஒருவராய் இருந்த மற்றொரு காங்கரஸ், மகாநாட்டு தலைவரான சர். சங்கரநாயர் தமது தலைமை உரையில்,
“பிரிட்டிஷ் சர்க்கார் நமது க்ஷம அபிவிருத்திக்கான வழிகளைத் திறந்து விட்டிருப்பது இங்கிலீஷ் கல்வியால்தான். அத்தகைய கல்வி நமது பழங்காலதீமைகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள விழிப்புண்டாக்கவும், சமூக அரசியல், மதச் சீர்திருத்தங்களைப் புனருத்தாரணம் செய்யவும், அவசியமானதாக இருக்கிறது. அத்தகைய சீர்திருத்தங்கள் நமது நாட்டுக்குத் தேவையாயிருப்பதால், இங்கிலீஷ் கல்வி நமக்கு அத்யாவசியமாகிறது.
மாளவியா சாட்சியம்
மற்றும் 3, 4 காங்கரஸ் மகாநாட்டு தலைமை வகித்தவரும் இன்றும் சுயராஜ்யத்தை கண்ணால் பார்த்துவிட்டு சாவதற்காக காந்திருப்பவரும், காந்தியார் முதல், சத்தியமூர்த்தி ஈறாக, தேசாபிமானி என்றும் பரிசுத்த தேச பக்தர் என்றும் அழைக்கப்படுகிறவருமான பண்டித மாளவியா அவர்கள் தமது தலைமை உரையில்,
**பிரிட்டிஷ் சர்க்கார் கல்வி சம்மந்தமாக இந்தியாவுக்குச் செய்திருக்கும் நன்மைகளையெல்லாம் நாம் நன்றியறிதலோடு அங்கீகரித்துக் கொள்ளுகிறோம். பிரதமக் கல்வி, நடுத்தரக் கல்வி, சர்வகலா சங்கக் கல்வி ஆகிய அனைத்தும் நமது பாராட்டுதலுக்கும் நன்றியறிதலுக்கும் உரியவையேயாகும்.
(இந்த வாக்கியங்களைப் பிரத்தியக்ஷத்தில் ஆங்கிலத்தில் பார்க்க ஆசைப்படுகிறவர்கள் தோழர் ஜி.ஏ. நடேசன் (இன்றைய சென்னை ஷெரிப்) அவர்களால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் “காங்கரஸ் மகாநாட்டுத் தலைவர்கள் பிரசங்கம்" என்கின்ற புஸ்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்துத் தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்ளுவார்களாக)
கதையை வளர்ப்பானேன்?
இதைப்பற்றி நாம் இப்போது ஒன்றும் பேச வரவில்லை. ஏனெனில் காங்கரஸ்காரர்களே இந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்துக்கு மாத்திரமல்லாமல். அவர்களது சந்ததிக்கும் ராஜவிஸ்வாசிகளாய் இருப்பதாகப் பிரமாணம் செய்து சர்க்கார் ஏற்படுத்தியிருக்கும் பிச்சையை அல்லது ராஜபக்திப்
குடி அரசு- 1937 (2) 34
பிரமாணத்துக்கு கூலியான உத்தியோகங்களையும், பதவிகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறபோது அதை நாம் ஒரு தரம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் தாதாபாய் நெளரோஜியார் முதல் மாளவியா பண்டிதர் ஈறாக உள்ள பெரியார்கள் குறிப்பிட்ட அப்படிப்பட்ட ஒரு கல்வியானது அந்தக் காலத்தில் ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் சொந்தமாக இருந்ததும் ராஜவிசுவாசம், ராஜ பக்திகாட்டுவதில் கிடைக்கும் கூலியான உத்தியோகம், பதவி, பட்டம் முதலியவைகளும் ஒரு கூட்டத்தாருக்கே சொந்தமாகவும் ஏக போக உரிமையாகவும் இருந்ததும் போய் இன்று அவை எல்லா ஜாதிக்கும், எல்லா வகுப்புக்கும் புரியும்படியான நிலைமை ஏற்பட்டவுடன் ஏகபோக உரிமை கொண்டாடும் பார்ப்பனீய சுயநல கூட்டத்தார் இன்று அதைக் குற்றம் சொல்லவந்துவிட்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் அதை அடியோடு ஒழித்து பழங்கால காட்டு மிராண்டித்தன ஆட்சிக்கு மக்களைக் கொண்டுபோவதற்கு வேண்டிய சூழ்ச்சிகள் செய்யவும் அதற்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை துணைப்படுத்திக் கொள்ளுவதற்காக ராஜ விசுவாசமும் ராஜபக்தியும் பாடி சரணாகதி அடையவும் முனைந்து விட்டார்கள்.
முஸ்லீம் லீக், அல்லாதார் சங்கம் தோன்றியதேன்?
காங்கரசில் அக்காலத்தில் இருந்துவந்த இப்படிப்பட்ட பார்ப்பனீய ஏகபோக உரிமையைக் குலைக்கவே, காங்கரஸ் ஏற்பட்ட சிறிது நாள்களுக்குள்ளாக முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் சங்கமும் ஏற்பட்டன. இவை ஏற்பட்ட பிறகே மேற்கண்ட காங்கரஸ் ஸ்தாபனங்களும், காங்கரஸ் தலைவர்களும் புகழ்ந்து பாராட்டிக்கூறிய கல்வியை முஸ்லீம்களும் பார்ப்பனரல்லாதார்களும் அனுபவிக்கத்தக்க முயற்சிகள் செய்யப்பட்டன. அம்முயற்சிகளுக்குப் பிறகே, இன்று முஸ்லிம்களுக்குள்னாம், பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளும், இவ்வளவு அளவுக்காவது கல்வி, அறிவு “ஞான உதயம்” “அந்தகார நீக்கம்” ஆகியவை ஏற்பட்டு எல்லா வகுப்பிலும் மந்திரிகள், கவர்னர்கள், நிர்வாக சபை அங்கத்தினர்கள், ஹைகோர்ட் ஜட்ஜுகன், கலெக்டர்கள் மற்ற நிர்வாக சிப்பந்திகள் கொஞ்சம் விகிதாச்சாரமாவது ஏற்பட முடிந்தது. இதற்காக முஸ்லீம் தலைவர்களும், பார்ப்பனரல்லாத தலைவர்களும் பட்டபாடுகளை அறிந்தவர்கள் அச்சமூகங்களில் கலப்படமில்லாமல் பிறந்தவர்கள் - நன்றி செலுத்த கடமைப்பட்டவராவார்கள்.
பழைய நிலைமை
விவரமாக விளக்க வேண்டுமானால் பார்ப்பனரல்லாதார் அரசியல் நிர்வாகத்தை லட்சியம் செய்யாமல் எதற்கும் பார்ப்பனர்களையே நம்பி மெளடீகத்தனமாக இருந்து விட்டகாலத்தில் கல்வி என்பது பார்ப்பனர்களுக்குள். மாத்திரமே 100-க்கு - 100 ஆகவும் மற்ற சமூகங்களில் 100-க்கு 2, 3, 45— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
5 வீதங்களுக்குள்ளாகவும் சில வகுப்புகளுக்கு அடியோடு இல்லாமலும் இருந்துவந்தது என்பது அக்கால புள்ளி விவரங்களில் இருந்தே அறியலாம் அதற்கு காரணம் சர்க்கார் கல்விக்கு போதிய பணம் ஒதுக்காமையும், கல்வி இலாகாவில் எல்லோருக்கும் இடம் இல்லாமையும் மனு ஆட்சி தத்துவமான. முறைக்கு கல்வி திட்டம் ஒப்படைக்கப்படடு “சூத்திரன் படிக்கக்கூடாது! என்பதும் “சூத்திரனுக்கு கல்வி கற்பிக்கக் கூடாது” என்பதுமான கொள்கை மிக்க செல்வாக்கில் உச்சம் பெற்று இருந்ததினாலும் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர், சண்டாளர், மிலேச்சர் என்கின்ற கருத்து கேட்பாரற்று அனுபவத்தில் இருந்து வந்ததுமேயாகும்
ஜஸ்டிஸ் கட்சி தோன்றிய பின்
ஆனால் மூஸ்லிம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்தர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டபிறகு அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதல் முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920-ம் வருஷத்துக்கு மூன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் 1க்கு (1,40,00,000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி யென்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரிபதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பிறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருஷம் 1-க்கு (225,00,000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கிவைத்து அதற்கேற்றாற்போல் பள்ளிக்கூடங்களையும்கலாசாலைகளையும் சர்வ கலாசாலைகளையும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்தி “சண்டாளர்” கள் “மிலேச்சர்"கள் “கூத்திரர்"கள் ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டுவந்து விட்டுவிட்டார்கள். இதோடு மேற்படி 225,00,000 ரூ. கல்வி மான்யந் தவிர ஸ்தல ஸ்தாபனங்களிலும் கல்விக்காக சுமார் 50 லட்ச ரூபாய் போல் வரிகளும் போடச்செய்து இருக்கிறார்கள். இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்தர உணர்ச்சியும் சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.
புரோகித ஆட்சியின் நோக்கம்
இன்று எப்படியோ அரசியல் ஆதிக்கத்துக்கு வந்து விட்ட புரோகித
- சரணாகதி பார்ப்பனீய - மனு ஆட்சியானது பட்டத்துக்கு வந்தவுடன் இந்த - இப்படிப்பட்ட கல்வியில் மண்ணைப்போட்டு மக்களின் சுதந்திர
- சுயமரியாதை உணர்ச்சியை நசுக்கவே முயற்சி செய்யப்படுகின்றது காந்தியார் - சத்தியமூர்த்தியார் - ஆச்சாரியார் கூட்டம் ஆகியவர்களின்
குடி அரசு- 1937 (2) 346
ஆசைப்படி இந்தியாவில் பழைய மனு ராமராஜ்யம் ஏற்படுத்தப்பட வேண்டுமானால் முதலாவதாகச் செய்ய வேண்டிய காரியம் பிரிட்டிஷார் ஆட்சியில் முஸ்லீம்லீக்பார்ப்பனரல்லாதார் இயக்க முயற்சியினால் மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் தாதாபாய் - மாளவியா முதலிய பெரியார்களால் புகுத்தப்பட்டு இருக்கும் கல்வி அறிவை பாழ்படுத்திவிட வேண்டும் என்பதே. அதை அனுசரித்தே இன்று இந்த புரோகித ஆட்சி மந்திரிகள் காரியங்கள் செய்து வருகிறார்கள். இவற்றைப் பற்றி நாம் பல தடவை எடுத்து காட்டி வந்திருக்கிறோம். சென்ற வாரத்திலும் “நம் நாட்டுக்கு கட்டாய இலவசக்கல்வி வேண்டியதில்லை'' என்று சில ஜில்லா போர்டுகளுக்கு நம் புரோகித மந்திரி உத்திரவு போட்டு விட்டதைப் பற்றி தெரிவித்து இருந்தோம்
அழிவு வேலை ஆரம்பம்
இவ்வாரம் சில சர்வகலாசாலைகளை மூடும்படியும் சில மத்தியதரப் பாடசாலைகளை எடுத்துவிடும்படியும் போடப்பட்டிருக்கும் உத்திரவுகளைப்
பற்றியும் சில உயர்தரப் பாடசாலைகளை ஒழிக்க செய்யப்பட்டு வரும் சூழ்ச்சிகளைப் பற்றியும் பொது மக்களுக்கு விளக்கிக்காட்ட ஆசைப்படுகிறோம். அதாவது கோயமுத்தூர் பாரெஸ்டு காலேஜ் (வன பரிபாலன கல்வி சர்வகாலசாலையை) மூடிவிடுவது என்று உத்திரவு போட்டாய்விட்டது
மற்றும் கிராமாந்திரங்களில் இருந்து வரும் மத்தியதர ஆங்கில பாடசாலை களையும் உயர்தர ஆங்கில பாடசாலைகளையும் அதாவது செகண்டரி
ஸ்கூல் என்பவைகளையும் எடுத்துவிடத்தக்க தன்மையில் 60 பிள்ளைகளுக்கு குறைந்த மத்திய தர ஆங்கில பள்ளிக்கூடங்களும் “60 பிள்ளைகளுக்கு குறைந்த உயர்தர ஆங்கில பள்ளிக்கூடங்களும் எடுக்கப்பட்டு விடவேண்டும்” என்று உத்திரவுகள் போடப்பட்டாய்விட்டது. அதோடு கூடவே சர்க்கார். அனுமதி பெற்று பொதுஜனங்கள் நிர்வாகத்தில் நடக்கும் பள்ளிக் கூடங்களையும் ஒழிப்பதற்கும் கால் நட்டாய் விட்டது. அதாவது “சரியானபடி நிர்வாகம் நடைபெறாத ஹைஸ்கூல்கள் எடுக்கப்பட்டு விடும்'' என்று உத்திரவு போட்டாய் விட்டது. இனி ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்களுக்கு கொடுக்கப்பட்டு
வரும் கிராண்டுகளை ஒழிப்பதற்கும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது
முனிசிபல் பன்விகளுக்கு ஆபத்து
அதாவது கட்டாய இலவசக்கல்வி அமுலில் இருக்கும் முனிசிபாலிட்டி
களில் கல்வி வரி என்று ஒரு வரி போட்டு அதன் மூலம் வசூலாகும் தொகைக்கு சமமாக சர்க்காரில் கிராண்டு கொடுக்கப்பட்டு வந்து அத்தொகைகளின் உதவியினால் முனிசிபாலிட்டிகளில் கட்டாய இலவசக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த கல்வி வரியை சரி பகுதி போல்குறைத்துவிடசில முனிசிபாலிட்டிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. அந்தப்படி பொதுஜன வரி ஒரு முனிசிபாலிட்டியில் வருஷம் 10,000 ரூ. குறைக்கப்பட்டால் சர்க்கார் கிராண்டு 10000 ரூ
3479 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
குறைத்துக்கொள்ள சர்க்காருக்கு செளகரிய மேற்பட்டுவிடும். அதனால் குறைந்த பக்ஷம் பகுதி அளவு விகிதாச்சாரம் கல்வியை குறைத்து விடமுடியும். உதாரணமாக ஈரோடு முனிசிபாலிட்டியார் தங்களுடைய வரும்படியைக் கருதி வீட்டு வரியில் 100க்கு 2 ரூபாய் வீதம் குறைத்துக்கொள்ள வரவு செலவு கணக்குகளை சரிக்கட்டிக்கொடுத்து சர்க்காரை அனுமதி கேட்டார்கள். அதற்கு பதிலாக சர்க்கார் சொத்து வரியை குறைக்க முடியாதென்றும் கல்வி வரியை குறைத்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். இந்தப்படி குறைத்தால் ஈரோடு முனிசிபாலிட்டிக்கு சர்க்கார் கிராண்டு உள்பட 12,500 ரூபாய் கல்விக்கு செலவழிக்கப் பணம் இல்லாமல் செய்யப்பட்டுவிடும். அதனால் எவ்வளவு கல்வி குறைந்து விடும் என்பதை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
தர்மபுரிக் கதை
மற்றும் தர்மபுரி ஜில்லா போர்டில் 13,500 ரூபாய் போர்டு ஒதுக்கிவைத்துக் கொண்டு இலவசக் கல்விக்கு அனுமதி கேட்டும் புரோகித சர்க்கார் மறுத்து விட்டதுடன் இப்போது காங்கரஸ்காரர்களால் அதன் தலைவர் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு விட்டது. ஆகவே இன்றைய புரோகித ஆட்சியில் நம்மக்கள் கல்வி அழிபடுவதற்கு வேண்டிய காரியங்கள் வெகு கவனத்துடன் செய்யப்படு கின்றன என்பதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?
இக்கொடுமைக்கு சமாதானம் கேட்டால் “சேலத்தில் கள்ளு நிறுத்தும் முயற்சியால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய இம்மாதிரி செய்ய வேண்டி யிருக்கிறது” என்று பதில் சொல்லப்படுகிறது
இது ஒரு புறமிருக்க மற்றொருபுறம் அதாவது கல்வியின் அளவும், செலவும் குறைக்கப்படுவது மாத்திரமல்லாமல் கல்விதிட்டத்தையும் தலை. கீழாகமாற்றி பிள்ளைகளுக்கு விஷய ஞானப்படிப்பு சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக தங்கள் தங்கள் கையினால் தொழில் செய்து வெறும் ஜீவனம் மாத்திரம் நடத்தி விட்டு மிருகங்கள், பூச்சி, புழுக்கள் போல் செத்து மடியும் படியான மிருகத்தன்மை தொழில் முறை கற்றுக்கொடுப்பதையே பள்ளிக்கூட படிப்பாகச் செய்யத்தக்க திட்டம் போடப்பட்டு வருகிறது இது அமலுக்கு வருகிறது. காலதாமதமாகுமானால் அதற்குள் புராண உணர்ச்சியை மக்களுக்குள் புகுத்த ஹிந்தி கட்டாய பாடமாக ஆக்குவதற்கு
திட்டமும் பலாத்கார முயற்சியும் வெகு வேகமாக நடைபெறுகிறது
பார்ப்பன ஆசிமியர்கள் போக்கு
சமீபத்தில் சென்னையில் நடந்த தலைமை அசிரியர்கள் மகாநாட்டில் இக்கல்வி சூழ்ச்சிகள் சம்மந்தமாய் நடந்த காரியங்கள் பார்ப்பன பத்திரிகைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. மொத்தத்தில் இன்றைய ஆங்கில பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் 100க்கு 90 பேர் பார்ப்பனர்கள்
குடி அரசு- 1937 (2) 348
அவர்களிலும் தலைமை உபாத்தியாயர்கள் 100க்கு 99 பேர் பார்ப்பனர்கள். அவர்களிலும் 100க்கு 9918 தொண்ணூற்று ஒன்பதே முக்காலே மூன்று வீசம் பேர்கள் வைதீகப் பார்ப்பனர்கள். (மனுதர்ம வர்ணாச்சிரமிகள்) ஆகவே இப்படிப்பட்ட இவர்கள் இம்மாதிரியான மனுதர்ம கல்வித் திட்டத்துக்கு வரவேற்பளிப்பார் என்பதில் ஆக்ஷபணை என்ன இருக்க முடியும்? இவர்களது மகாநாட்டில் வரவேற்புத்தலைவரான தோழர் பி.ஏ. சுப்பிரமணியம் அய்யர் என்பவர் காந்தியார் கல்வித்திட்டத்தின் “பெருமை” யைப்பற்றி பேசும்போது காந்தியார் திட்டப்படி “ஏழு வருஷகாலம் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து விட்டுப் போனால் கிராம வாழ்க்கையில் பிரியமும் எளியவாழ்க்கை ஆவலும் கைகால்களைக் கொண்டு உழைப்பதில் ஆசையும் பாரம்பரிய பெருமைக்கு (பழமைக்கு) வணக்கமும் நமது (சாஸ்திர புராணங்களாகிய) பழைய கலைகளை வளர்ப்பதற்கு ஆர்வமும் ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கியமான. கருத்து" என்று நன்றாக பச்சையாக காந்தியார் கல்வித்திட்டம் வருணாச்சிரம புனருத்தாரணம் தான் என்று சொல்லிவிட்டார். இதை” மித்திரன்" முதலிய பார்ப்பன பத்திரிகைகள் ஆதரித்தும் தலையங்கங்கள் எழுதி விட்டன.
கல்வி மந்திமி முரண்:
ஆனால் மகாநாட்டைத் திறந்த கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் தனது திறப்புரைப் பேச்சில் அதை சிறிது கண்டித்து பேசி இருக்கிறார். அதாவது “தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்கின்ற (காந்தியாரின்) கல்வி திட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று பேசி இருக்கிறார். இதற்காக வேறு ஏதோ சாக்குக்காட்டிக் கொண்டு “சுதேசமித்திரன்” இவரைக் கண்டித்து இருக்கிறது. மகாநாட்டுக்கு தலைமை வகித்த தோழர் வர்க்கி அவர்கள் தமது தலைமை உரையில் “மேல்நாட்டுக் கல்வி முறையில் உள்ள சிறந்த அம்சங்களையும் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்பதாகவும்.
“விடுதலை, சமத்துவம் முதலிய உணர்ச்சியை எல்லாம் நமக்கு மேனாட்டு தத்துவம் மூலமாக ஏற்பட்டதாகும்” என்றும் பேசி இருக்கிறார். இவற்றைப் பார்க்கும்போது கல்வி விஷயத்தில் பார்ப்பன உணர்ச்சிவருணாச்சிரமத்துக்கு போவதும் மற்றவர்கள் உணர்ச்சி சமத்துவத்துக்கு போவதும் நன்றாய் விளங்குகிறது ஆகவே இன்றைய புரோகித ஆட்சி மற்ற மக்கள் கல்வியை குலைப்பதற்காகச் செய்யப்பட்டு வரும் சூழ்ச்சி பட்டவர்த்தனமாய் வெளியாகிவிட்டதால் இதை இனி அரை நிமிஷமும் மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பது பெரிய ஆபத்துக்கு இடமாகும் என்பதோடு அளப்பரிய முட்டாள்தனமுமாகும். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களும், முஸ்லீம்களும் உடனே தகுந்த கிளர்ச்சி செய்ய முன்வரவேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும்
349 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
இது ஒருபுறமிருக்க இப்புரோகிதக் கொடுமை ஆட்சியில் பிரிட்டிஷ் சர்க்காரின் கடமை என்ன என்று அறிய ஆசைப்படுகிறோம்
கவர்னர் மெனனமாயிருப்பதேன்?'
கல்வி விஷயத்தில் அதாவது புரோகிதக் கூட்டத்தின் பிரதிநிதியும் தலைவருமான தோழர் கனம் ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாகப்
புகுத்தப் போகிறேன் என்று சபதமிட்டு முன் வந்த காலம் முதல் இதுவரை பட்டணங்கள் நகரங்கள் கிராமங்கள் சந்து பொந்துகள் எல்லாம் ஆண், பெண் அடங்கலும் “ஹிந்தி கூடாது” என்று ஒரே கூப்பாடும் அழுகையும் முறையீடுகளும் செய்த வண்ணமாயிருக்க, பிரிட்டிஷ் சர்க்காரின் மாகாணப் பிரதிநிதியான மேன்மை தங்கிய கவர்னர்பிரபு அவர்கள் வாய் மூடி மவுனமாய் இருப்பதற்கு என்ன காரணம் என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர்களால் நாம் நசுங்கும்படியாவதை பொறுத்துக்கொண்டு இருந்து விட்டால் இவர்களைக் கொண்டு தங்களுக்கு ஆகவேண்டிய காரியங்களில் எள்ளத்தனை குறைவில்லாமல் காரியம் நடத்திக்கொள்ளலாம் என்று கருதுகிறாரா, அல்லது சமீபகாலத்துக்குள் உலக யுத்தம் ஒன்று ஏற்படும்போலிருக்கிறதே அந்த யுத்த முடிவில், இந்தியா ஐப்பானுக்கோ, ஜர்மனிக்கோ, இத்தாலிக்கோ போய்விடுமோ அல்லது ராஜி கீஜி ஏற்பட்டால் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு ஆளுக்கொரு துறைமுகம் மாகாணம் வீதமோ போய்விடக்கூடிய நிலை ஏற்பட்டால் அப்போது சென்னை யார் பங்குக்கு போக நேரிடுமோ என்று கருதி நமக்கு ஏன் இந்தத் தொல்லை என்று சும்மா இருக்கிறாரா என்பது விளங்கவில்லை. ஜஸ்டிஸ் ஆட்சியின் போது பார்ப்பன வக்கீல்கள் அல்லது அவர்களது ஒரு கூலிப்பத்திரிகை போட்ட கூப்பாடுகளுக்கெல்லாம் அவ்வப்போது சமாதானம் சொல்லி அறிக்கைகள் வெளியிட்டு அவர்களுக்கு ஆதரவளித்து வந்த சென்னை கவர்னர் அவர்கள் இவ்வளவு பெரிய கூப்பாடுகளுக்கு - முறையீடுகளுக்கு இவ்வளவு அலட்சியமாய் அல்லது பாராமுகமாய் இருக்கக் காரணம் என்ன என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது. ஆகவே சீக்கிரத்தில் கவர்னர் பிரபு இந்த புரோகித ஆட்சி தன்னரசுக் கொடுங்கோன்மையில் பிரவேசித்து ஏதாவது தக்கது செய்து மக்களின் கல்விக்கு ஆபத்து இல்லாமல் ஒரு காப்பு ஏற்படுத்தாத வரை நாட்டில் பெரும் கிளர்ச்சியும் சமாதானக் குறைவும் கவர்னர் பிரபுவுக்கு சாந்தியற்ற தன்மையும் ஏற்படவேண்டி நேரிடுமோவென்று நாம் உண்மையிலேயே பயப்படுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 26.12.1937
குடி அரசு- 1937 (2) 350
அருஞ்சொல் பொருள்
அந்தகாரம்
இருள், அறியாமை
அநித்தியம்
நிலையாமை, நிலையற்றது, பொய்
ஆதரித்தது
அபிமானித்தது
அக்ஷராப்பியாசம் ஆக்கினை
எழுத்துப் பயிற்சி
கட்டளை, ஆணை
ஆயுள் பரியந்தம் ஆவலாதி
ஆயுள்வரை, ஆயுள் முழுதும்
குறை கூறுகை, அவதூறு புகழ்மொழி
கட்டியம் கடவை
வழி, வாயில்
சிதை நெருப்பில்
காஷ்டத்தில்
கிப்பாத்து
ஊதியம்
கிராமாதிகாரிகள்
ஊர்த் தலைவர்கள்
கிரியாம்சை
செய்கை
கிரேயசு
கடவுள் புண்ணியம், அருட்கொடை
குச்சிக்காரி
விலை மகளிர்
குமரி இருட்டு
விடியலுக்கு முன் உள்ள இருட்டு
கூளாங்காலன், ஜம்புலிங்கம்
அந்த நாளைய பிரபலமான கொள்ளைக்காரர்கள்
கொடிவழிப்பட்டி
மரபுவழி, பரம்பரை
சம்பத்து
செல்வம், பொன், பேறு
சரீரப்பிரயாசை சன்னை
உடலுழைப்பு
சமிக்கை, எள்ளுதற் சொல்
சித்திரான்னம்
புளி, எள், சர்க்கரை முதலியன கலந்து செய்யப்பெற்ற கூட்டு சோறு
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 25
351
சின்னபின்னம்
கண்டதுண்டம்
சீஷன்கள்.
மாணாக்கர்கள்.
சுண்டாங்கி
சிக்கனமாய் வாழ்பவர்.
சுதர்மம்
இயல்பு, நல்லறம் தன்னளவில்
சுதாவில்
சுதினம்
நல்ல நாள்
சுணை
சுரணை, அறிவு
சூசனை தகரப்போகணி
குறிப்பு தகர நீர்க்கலம்
கண்டபடி திரிவோர்
தத்தாரி
அவ்வண்ணமே ஆகுக
ததாஸ்து தாம்பிர நாணயம்
செப்பு நாணயம்
திரணமாய் தேஜோமயமாய்
அற்பமாய், துரும்பாய்
எழில் மயமாய்
நிரைச்சல்.
ஓலை முதலியவற்றால் இடும் அடைப்பு
பயன் கருதாத செயல்
நிஷ்காமிய கர்மம்
படவிசிறி
பங்கா
பாதுகாத்தல், அருளுதல்
பரிபாலித்தல்
பயன்
பலிதம்
பாஷாணம்
நஞ்சு
பிரதிக்கினை, பிரதிக்ஞை
சூளுரை, உறுதிமொழி
பின்னப்படுத்தினால்
சிதைத்தால்
மந்திர நீர் தெளிப்பு
புரோக்ஷணம்
மீண்டும் நிலை நிறுத்துகை பணியாரம்
புனருத்தாரணம் பேணி
‘Wagon, தொடர்வண்டியில் பொருளேற்றிச் செல்ல பயன்படுத்தப்படும் பெட்டி
வாக்கின்
வியக்தமாய்
வெளிப்படையாய்
குடி அரசு - 1937 (2)