Kudi Arasu — 1937, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1937-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 24
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1937-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 424
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
காங்கிரஸ் அரங்கேற்றிய நாடகம்
1937 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் முடிய 'குடி அரசு' ஏட்டில் இடம் பெற்றிருந்த பெரியார் எழுத்து பேச்சுகளைக் கொண்டுள்ள. இந்த முதல் தொகுதி 424 பக்கங்களைக் கொண்டுள்ளது. தலையங்கங்கள் உரைகளாக 117 தலைப்புகளில் பெரியாரின் சிந்தனைகள் பதிவாகியுள்ளன. 'குடிஅரசு' வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த இதே காலகட்டத்தில்
'பகுத்தறிவு' மாத இதழாகவும், 'விடுதலை' வாரம் இரு முறை இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தன.
1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்காக உருவாக்கிய அரசியல் சட்டத்தின் கீழ் காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். நீதிக்கட்சி தோல்வியை சந்தித்த காலகட்டம்; இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள பெரும்பான்மையான பெரியார் எழுத்து - பேச்சுகள் - இந்த பின்னணியில் சுழலுவதால், பிரிட்டிஷ் ஆட்சி கொண்டு வந்த புதிய அரசியல் சட்டதிருத்தம் தொடர்பான சுருக்கமான ஓர் அறிமுகத்தை முன் வைக்கிறோம்.
1919 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 1935 இல் பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக உருவாக்கிய புதிய சட்டம் வழியாக மாநிலங்களில் சட்டமன்றம், மேலவைகளையும் மத்தியில் நாடாளுமன்றம், மேலவை களையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையுடன் நிறுவிக் கொள்ள உரிமை வழங்கியது. அப்போது இந்தியாவில் 11 மாநிலங்களும், ஆணையாளரின் நேரடி அதிகாரத்துக்கு உட்பட்ட 6 பகுதிகளும், 562
சிற்றரசுகளும் இருந்தன. இதன்படி, சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 315 உறுப்பினர். களுக்கான தொகுதிகளில் 116 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாகும் தாழ்த்தப்பட்டோருக்கு 30 தொகுதிகளும், பழங்குடியினருக்கு ஒரு தொகுதியும், இசுலாமியருக்கு 28 தொகுதிகளும், ஆங்கிலோ இந்தியருக்கு 2 தொகுதிகளும், அய்ரோப்பியருக்கு 3 தொகுதிகளும், இந்திய கிறிஸ்தவர்.
களுக்கு 8 தொகுதிகளும், தொழில் வணிக நிறுவனங்களுக்கு 6
தொகுதிகளும், பெருநிலக்கிழார்களுக்கு 6 தொகுதிகளும், பெண்களுக்கு
8தொகுதிகளும் (இதில் ஒன்று கிறிஸ்தவருக்கும், ஒன்று இஸ்லாமியருக்கும்) பல்கலைக்கழகப் பிரதிநிதிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. சட்டமன்றம்
5 ஆண்டுகள் பதவியில் இருக்கும்.
மேலவையில் 56 இடங்களில் 35 இடங்கள் பொதுவானவை. பத்து இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 7 இடங்கள் இசுலாமியருக்கும் 3 இடங்கள் இந்திய கிறிஸ்தவர்களுக்கும், ஓரிடம் அய்ரோப்பியருக்கும் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 10 இடங்களில் உறுப்பினர்களை ஆளுநர். நியமனம் செய்வார். மற்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவோர். இந்த மேலவை நிலையானது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர் பதவி இழப்பார்கள். அவர்கள் இடங்கள் நிரப்பப்படும். சட்டசபை கொண்டு வரும் ஒவ்வொரு சட்ட வரைவையும் மேலவை விவாதித்து, ஒப்புதல் தந்த பிறகே சட்டமாக்க முடியும். இறுதியில் ஆளுநர் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். அதன் பிறகு வைஸ்ராய்
ஒப்புதலும் பெற வேண்டும்.
மத்தியில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 150; இதில் தமிழகப் பிரதிநிதிகள் 20 பேர். 150 இடங்களில் பொது இடங்கள் 75; எஞ்சிய 75 இடங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு 6 இடங்களும், சீக்கியருக்கு 4 இடங்களும், இசுலாமியருக்கு 49 இடங்களும், பெண்களுக்கு 6 இடங்களும் ஒதுக்கப்பட்டன. மீதியுள்ள 10 இடங்களில் உறுப்பினர்களை வைஸ்ராய் நியமனம் செய்வார். இதே போல் நாடாளுமன்றத்துக்கான 250 இடங்களில் 105 பொதுவானது தாழ்த்தப்பட்டோருக்கு 19 இடங்களும், இசுலாமியருக்கு 82 இடங்களும், தொழில் அதிபர்களுக்கு 11 இடங்களும், இந்திய கிறித்தவருக்கு 8 இடங்களும், அய்ரோப்பியருக்கு 12 இடங்களும், சீக்கியர்களுக்கு 6 இடங்களும், பெரு நிலக்கிழாருக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இரண்டு அவைகளின் காலமும் 5 ஆண்டுகள்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் 56 துறைகளும், மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் 54 துறைகளும், மய்ய, மாநில அரசுகளுக்கு பொதுவாக 36 துறைகளும் நிர்வாகப் பங்கீடு செய்யப்பட்டன.
மேற்குறிப்பிட்ட அரசியலமைப்பின் கீழ் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முன் வந்தது. 1937 பிப்ரவரியில் சென்னை மாகாணத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, நீதிக்கட்சி தோல்வி யடைந்தது. காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிட மாட்டார் என்ற உறுதிமொழி தந்தால் மட்டுமே, பதவி ஏற்க முடியும் என்று கூறி, அமைச்சரவை அமைக்க மறுத்தது காங்கிரசார் ஆட்சி அமைக்க மறுத்த நிலையில் நீதிக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். நீதிக்கட்சியினர் ஆட்சி அமைக்கக்
கூடாது என்று பெரியார் அழுத்தமாக வலியுறுத்தினார். இதனால் ஆளுநரே ஒரு அமைச்சரவையை நியமித்தார். மூன்றரை மாத காலம் தான். இந்த அமைக்சரவை நீடித்தது. காங்கிரசார் அதிகாரப் பசியைப் பொறுக்க முடியாமல், தங்களது “ஆளுநர் எதிர்ப்பு" வேடத்தைக் கலைத்துக் கொண்டு அமைச்சரவை அமைக்க மூன் வந்தனர். 1937 ஜூலையில் இராஜகோபலாச்சாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தோல்வியில் துவண்டு கிடந்த நீதிக்கட்சியினரைத் தட்டி எழுப்பியும், காங்கிரசை அம்பலப்படுத்தியும், பெரியார் ஆவேசமாகப் பேசினார். அனல் பறக்கும் தலையங்கங்களைத்
தீட்டினார். கூர்மையான வாதங்களை முன் வைக்கும் அந்த கருத்தாக்கங்கள் இத்தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன.
நீதிக்கட்சிக்காக மக்கள் ஆதரவைத் திரட்டினார் பெரியார் அதற்காக அவர் நீதிக்கட்சியின் பலவீனங்களை மறைக்கவில்லை; ஒளிவுமறைவின்றி எழுதினார்; பேசினார். பார்ப்பனரல்லாத மக்களின். சமூக, கல்வி, அரசியல் உரிமைகளுக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற மய்யப் புள்ளியிலிருந்தே அவரது தேர்தல் அணுகுமுறைகள் இருந்ததை அவரது எழுத்தும் பேச்சும் வெளிச்சப்படுத்துகின்றன. காங்கிரசின் பார்ப்பன அதிக்க அரசியலுக்கு எதிராக களமிறங்கிய பெரியார் நீதிக்கட்சியின் வெற்றியை மட்டுமே மாற்றாக மூன் வைக்கவில்லை. நீதிக்கட்சி தோல்வி அடைந்தாலும் கூட அது தனது கொள்கைக்கு மேலும் கூடுதல் பலத்தையே சேர்க்கும் என்கிறார். சென்னை கோடம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் நடத்திய பகுத்தறிவு சங்கம் ஆண்டு விழாவில் பெரியார் உரையாற்ற வந்தபோது, நீதிக்கட்சி தேர்தலில் வெற்றி பெறுமா என்று கூட்டத்தில் கேள்வி கேட்டதற்கு, பெரியார் இவ்வாறு பதிலளித்தார்
“ஜஸ்டிஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால் நான் மகிழ்ச்சி அடைவதோடு, சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக் கூடும் என்கிற தன்மையில் இயக்கப்
பிரச்சாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன்.”
தாம் ஆதரித்த கட்சி, வெற்றி பெறுவதால் மட்டுமே தமது கொள்கைகள் வெற்றி பெறும் என்று பெரியார் கருதவில்லை. கட்சி வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் கட்சிகளைக் கடந்து கொள்கைக்கு வலிமை சேர்த்திட மூடியும் என்பதே பெரியார். பார்வையாக இருந்திருக்கிறது. “இந்தத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் தோற்றால் தமக்கு கூடுதல் பலம் கிடைக்கும்; பார்ப்பனர் என் முன் முழங்கால் படியிட்டு வணங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை'' என்று கூறிய பெரியார், அதற்கான காரணத்தையும் சுட்டிக் காட்டுகிறார். “ஏன் என்றால் நமது கொள்கை அப்படிப்பட்டது. வெற்றி தோல்விக்கும்,
கொள்கைக்கும் சம்பந்தமில்லை. பார்ப்பனர்களுடன் நாம் போரிடும் கொள்கை இந்த தேசத்தை யார் ஆள்வது என்பதல்ல; இந்த தேச ஆட்சியில் நமக்கு பங்கு வேண்டும் என்பதே” - என்று தெளிவு
படுத்துகிறார். உத்தியோகத்தில் வழங்கப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசார் பதவிக்கு வந்து ஒழித்தால்கூட, அதுவும் நன்மைக்குத்தான் என்று
கூறும் பெரியார், அதற்குப் பிறகு, ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் குறைந்த எண்ணிக்கையான பிரதிநிதித்துவம் அதிகரிக்கவே செய்யும் என்று உறுதிபடக் கூறுகிறார். பார்ப்பனரல்லாதாரின் உரிமை என்ற தளத்தின் மீது தான் பெரியாரின் அரசியல் பார்வையும், தேர்தலில் அவர் பின்பற்றிய
அணுகுமுறையும் இருந்திருக்கிறதே தவிர, கட்சிகளுக்கான ஆதரவு என்ற குறுகிய எல்லைக்குள் முடங்கிடவில்லை என்பதை அவரது பேச்சும் எழுத்தும் உணர்த்துகின்றன.
இத் தொகுப்பில், தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப் பயணம்' எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரியாரின் உரை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் முரண்பாடுகளை பெரியார் எப்படிப் பார்த்தார்? இது பற்றிய அவரின் தெளிவான புரிதலை கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலிலிருந்து அறிய முடிகிறது. காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயலுகிறது என்றால், நீதிக்கட்சியோ, ஜமீன்தார்கள் கட்சியாக இருக்கிறது. இதில். நமக்கென்ன வேலை? என்ற கேள்வி, பொதுக்கூட்டம் ஒன்றில் கேட்கப் பட்டபோது பெரியார் இவ்வாறு பதில் அளித்தார்.
“நம் கொள்கை 'உண்மை சுதந்திரத்துக்கும் சுயமரியாதைக்கும் புரோகிதனும் செல்வனும் இருவரும் ஒழிய வேண்டும்' என்பது தானே? இருவரையும் ஒருங்கே எதிர்க்க நம்மால் முடியுமா? எனவே அவர்களே ஒருவருக்கொருவர் போராடிக் கொள்ளும்போது நம் கடமை என்ன? இவர்கள் இருவர்களில் யார் அதிக அபாயமானவர்களோ அவர்கள் ஆதிக்கம் ஒழிவதற்கும் மற்றவர்களுடன் சேர வேண்டியது தானே அறிவுடைமையாகும்? ஆதலால் புரோகிதக் கூட்டத்தின் ஆதிக்கத்தைப் புதைப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன காரியத்தைச் செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆன காரியமாகும்.” (குடி அரசு, 24.1.37)
- என்ற பதிலின் மூலம், மூரண்பாடுகளைக் கையாளும் முறையை முன் வைக்கிறார்.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சில முக்கிய எழுத்து, பேச்சுகளில், இராஜகோபாலாச்சாரியாரை துல்லியமாக மதிப்பீடு செய்யும் 'ஆச்சாரியார்;
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் 15 ஆண்டு சாதனைகளை படம் பிடிக்கும் “பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?';
காந்தியார் பட்டினி மிரட்டலுக்கு பணிந்துவிடக் கூடாது என்று அம்பேத்கருக்கு அய்ரோப்பிய சுற்றுப்பயணத்திலிருந்து பெரியார் தந்தி கொடுத்த வரலாற்றைப் பதிவு செய்யும் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை;
கும்பகோணத்தில் வர்ணாஸ்ரமத்தை ஆதரித்து பார்ப்பனர் நடத்திய மாநாடுகளை விளக்கி எழுதப்பட்ட 'பார்ப்பன மகா நாடுகள்:
மீண்டும் சேரன்மாதேவியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்பன. குருகுலம் புத்துயிர் பெற்றதைத் தொடர்ந்து, குருகுலப் போராட்ட வரலாற்றைப் பதிவு செய்யும் 'குருகுலம் மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே' போன்றவை ஊன்றிப் படிக்க வேண்டியவையாகும்
- பதிப்பாளர்
பொருளடக்கம்
மத வெறி மோட்சமும் நரகமும்
13
18
ஜாதிமுறை ஒன்றுக்கொன்று பொருத்தம்
22
27
ராமநாதபுரம் ஜில்லாவில் ஈ.வெ.ரா. பிரசங்கம்
31
ஜஸ்டிஸ் கட்சியாரின் எதிர்கால வேலைத் திட்டம்
36
ஏமாற்றுந் திருவிழா காந்தியின் பழைய பாடம் கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா
50
57
61
சீர்திருத்தத்தை உடைப்பது
69
காங்கிரஸ் தீர்மானங்கள்
72
காங்கிரஸ் “ஜெயித்தது
78
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!
80
புறமுதுகு கொடுத்தோடிய ஆச்சாரியார் மறுபடியும் போர் முனைக்கு வந்துவிட்டார்
82
தர்மபுரி தேர்தல் வண்டவாளம் இந்துவின் நொண்டிவாத அழுகை
83
87
காங்கிரசின் பிற்போக்கு: காங்கிரஸ் என்றால் என்ன?
92
94
தேர்தல் தொல்லை ஐயோ, பட்டாபிஷேகம் நின்றுவிடுமே!
101
106
பாஞ்சாலத்தில் “ஜஸ்டிஸ்” கட்சி பார்ப்பனர்களின் விளம்பர முறை
108
110
காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?
111
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏன் ஓட்டு செய்யவேண்டும்?
112
காங்கிரஸ் மிரட்டலுக்கு சர்க்கார் பதில்.
113
சத்தியமூர்த்தியாரின் மாயாமாலம்
116
திருவாரூரில் கேள்விகளுக்கு ஈ.வெ.ரா. பதில்
27
118
கடற்கரைக் கூப்பாடு
28
125
காந்தியார்
29
128
ஆச்சாரியார்
30
130
காங்கிரஸ்காரர்கள் காலித்தனம் யாரும் மறந்துவிடமாட்டார்கள்
31
137
காங்கிரசின் தோல்வி “அடே குட்டிச்சுவரே அரைக்கழுதை வயதாகி இன்னம் சாமி விளையாட்டா?”
32
143
33
147
தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம்
34
150
முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?'
35
155
திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா.
36
162
காங்கிரஸ் ஏன் ஏற்பட்டது?
37
164
எல்லா மாகாணங்களிலும் காங்கிரசிற்குத் தோல்வி
38
170
தோழர் சின்னயா பிள்ளை காங்கிரசிலிருந்து
39
175
ஏன் விலகினார்?
தேர்தல் கொந்தளிப்பு முடிந்து விட்டது
40
176
Dr. நடேசன் நலிந்தார் ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி நாட்டின் முன்னேற்றத்திற்கே உழைத்திருக்கிறது தோல்வி ஆனால் நன்மைக்கே
41
180
42
181
43
185
காங்கிரஸ் வாலாக்கள் திகைப்பு
44
188
45
அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!
191
வெற்றி - தோல்வி
46
197
47
202
முஸ்லீம்கள் என்ன செய்யப்போகிறார்கள்?
முஸ்லீம் ஜட்ஜி
48
205
49
வேடிக்கை அல்லாத பேச்சு சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
206
50
207
51
209
காங்கிரஸ்காரர்கள் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்
காங்கிரஸ் சாதித்தது
52
211
'காங்கிரஸ்காரர்களின் சமத்துவம்: என்ன?
53
213
54
214
காங்கிரசும் பார்ப்பனரல்லாதாரும்
55
215
விதவை கர்ப்பம் சூதகக்கட்டி ஆய்விட்டது”'
56
219
தோழர் 0.83க்கு “5 வருஷம்"
57
223
பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?
58
225
பதவியும் “நிபந்தனையும்
59
232
காங்கிரசும் வரி குறைப்பும்
60
234
உத்தியோகத் தடை
61
237
நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது
62
239
யாருக்குக் கணக்குத் தெரியவில்லை?
63
243
ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவி ஏற்கக்கூடாது
64
245
வாக்குறுதிப் பித்தலாட்டம்
65
246
கேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்
66
249
மந்திரி சபை
67
250
யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு
68
253
பிரிட்டிஷ் அதிகாரிகளின் நன்றியற்ற தன்மை
69
258
70
சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்
262
புதிய மந்திரிகள். எண்ணாக தலைவிதி
71
267
72
271
73
275
எதிர்பாராத அபாயம்
74
280
கட்சி மாறுதல்
75
282
அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம் ஆச்சாரியாருக்கு பைத்தியம்
76
285
77
289
துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம் ஈரோடு சந்தைப்பேட்டை அபாய சம்பவம் இத்தொல்லை என்று ஒழியும்?
78
292
79
294
80
298
காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை
81
302
காங்கிரஸ் பூச்சாண்டி
82
312
பார்ப்பனரல்லாதாருக்குப் பத்திரிகை இல்லை
83
317
'சுதேசமித்திர"னின் விஷமம் ஈரோடு முனிசிபல் சந்தைப்பேட்டை அபாய சம்பவம்
84
321
85
322
மும்மூர்த்திகள் கண்டனம்
86
324
மந்திரிகள் வேலைத் திட்டம்
87
326
கண்டன தீர்மானம்
88,
328
தாழ்த்தப்பட்ட மக்கள் நிலை
89
329
காங்கிரஸ்காரர்கள் அரசியல் ஞானம்
90.
332
நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்
91.
334
ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம், பள்ளிக்கூட ஆண்டு விழா, வரதராஜ முதலியார் படத் திறப்புவிழா
92
336
யார் வெள்ளைக்கார ஆட்சி கொண்டுவந்தவர்கள்?
93
339
கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்
94
348
உலகில் பெரிய வெட்கக்கேடு
95.
352
பார்ப்பன விஷமம்
96.
354
தினசரி பத்திரிகை:
97.
356
முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை
98
357
மன்னர் முடிசூட்டு விழா
99.
363
பார்ப்பன மகாநாடுகள் இப்பொழுதாவது புரிகிறதா?
100
364
101
369
நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?
102.
371
காங்கிரஸ் ஆட்சியின் பயன்
103
380
'“விடுதலை'' காலணா தினசரி
104
384
தேச விடுதலைக்கு வழி?
105
386
காங்கரஸ் கட்டுப்பாடு
106
389
காந்தியார் இறக்கம்
107
391
சேர்மாதேவி குருகுலம் ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?
108
393
109
396
110,
398
திலகர் நிதி மோசடியும் பொது மக்களும்
111
400
காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது
112
405
“குருகுலம்” மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே
113
407
114
415
காங்கரஸ் கண்ணாம்பூச்சி விளையாட்டு
காந்தியார் தலைமை ஏலத்துக்கு வந்துவிட்டது
115
418
தென்னாட்டுக் காங்கரஸ்காரர் பதவி வேட்டைக்காரரே
116.
420
அருஞ்சொல் பொருள்
117
422
மத வெறி
உலகில் மதங்கள் என்பவைகள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தியவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்கதரிசன. ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங்களாலேயே மூல புருஷர்கள். மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரச்சாரம் செய்யப்படாவிட்டால்
மதம் ஒழிந்துபோய்விடுமே என்கின்ற பயம் உலகிலுள்ள எல்லா மதஸ்தர்களிடமும் ஆதி முதல் இன்றுவரை இருந்துதான் வருகின்றது இந்த அபிப்பிராயத்திலும், காரியத்திலும் உலகில் இன்ன மதம் உயர்வு, இன்ன மதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.
சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ: கையில் வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களையோ, அல்லது இரண்டாயிரம் ஆட்களையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து அம் மிருகத்துக்குச் சில “தெய்வீகத் தன்மையைக் கற்பித்து அது பல ''அற்புதங்கள்'' செய்ததாக ஆபாசமானதும், பொருத்தமற்றதுமான கதைகளைக் கட்டி விட்டு பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக சில வருஷத்திற்குள் லக்ஷக்கணக்கான மக்களை அம்மதத்தைப் பின்பற்றுபவர்களாகச் செய்துவிடலாம். பிறகு அந்த மதத்தை எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் அவன் தண்டிக்கப்படவோ, வையப்படவோ, அடிக்கப்படவோ, அம்மதக்காரர்களால் கொலை செய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்
ஆதலால் மதங்களுக்கு ஜீவ நாடிகளாக இருந்து வருவன: பணமும், ஆள்பவர்களின் சலுகையும் பிரசாரமுமே அல்லாமல் அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த தத்துவமோ அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் பொருந்தக்கூடிய கொள்கைகளோ என்று எந்த மதத்தையும் யாரும் சொல்லிவிட முடியாது
சமீப காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை ஒரு “பேய்பிடித்துக்கொண்டது” என்று அந்தப்பெண்ணும் தலைவிரித்து ஆடத்
தொடங்கினாள். அதற்காக ஒரு பேயோட்டியைக் கூப்பிட்டு அந்தப் பேயை ஓட்டச் சொன்னதில் அந்தப் பேயோட்டி இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் யார் என்று கண்டுபிடிப்பதில் 2-நாள் செலவழித்து கடைசியாக “5, 6 வருஷத்திற்கு முன்னால் அவ்வூர் கிணற்றில் விழுந்து செத்துப்போன ஒரு மராட்டியன் அடுத்த ஜன்மத்தில் நாயாய்ப் பிறந்து இந்தப் பெண் வீட்டில் வெகு செல்லமாய் வளர்ந்து இந்தப் பெண்ணிடமும் மிக அன்பாய் இருந்து ஆறு மாதத்திற்கு முன் அதுவும் கிணற்றில் விழுந்து செத்துப்போனதால் அது பேயாகி இப்போது அந்தப்பெண்ணைப் பிடித்துக்கொண்டது'' என்று சொன்னான். இதை அந்த ஊர்க்காரர்கள் நம்பினார்கள் என்ற குறியை இந்தப் பெண் தெரிந்தவுடன் பேய் ஆடும்போது அடிக்கடி நாய்மாதிரி குலைப்பதும், சிற்சில சந்தர்ப்பங்களில் மராட்டிப் பேச்சு மாதிரி பேசுவதுமாய் இருந்தாள். அதுமாத்திரமல்லாமல் தன்னைப் பிடித்திருக்கும் பிசாசு நாய்ப் பிசாசுதான் என்பதைக் காட்டுவதற்காகச் சில சமயங்களில் மலத்தைச் சாப்பிடவும் செய்தாள். மற்றும் வேறு பல நாய்களுக்கும் தின்பண்டம் போட்டு சதா:
7, 8 நாய்களுடன் காமாதுர விளையாட்டும் விளையாடுவாள். இதைப் பார்த்த எல்லோருமே சிறிது கூடச் சந்தேகமில்லாமல் இந்தப் பெண்ணைப் பிடித்திருப்பது நாய்ப் பிசாசுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்,"
மதங்களும் இது போலவே தான் தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக்கொள்ள வேண்டுமானால் மதக் குருக்கள், அல்லது மத கர்த்தர்கள், அல்லது மதப் பிரசாரக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் என்ன சொல்லுகிறார்களோ, எப்படி நடந்தால் மத பக்தி உடையவன் என்று சொல்லுவார்களோ அந்தப்படி நடக்கத்தான் ஒவ்வொரு மதபக்தனும் ஆசைப்படுகிறான்.
மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும், சைன்சுக்கும், மதத்துக்கும் சம்மந்தம் பார்க்கக் கூடாதென்றும் பகுத்தறிவு வேறு, மதக்கோட்பாடுகள் வேறு என்றும் இந்தக்காலம் வேறு, அந்தக்காலம் வேறு என்றும் பெரியார்கள் நியமனங்களுக்குக் காரண காரியங்கள். விசாரிக்கக்கூடாது என்றும் “ரிஷிமூலம், நதி மூலம்” பார்க்கக் கூடாது என்றும் எல்லா மதக்காரர்களும் சொல்லி விடுவதால் உலகில் மதத்தின் பேரால் எந்த மூடனும் எதையும் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின் மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும்
உலகில் நிலைத்து வருகின்றன. இந்த லட்சணத்தில் உள்ள மதங்களுக்கு ஆள் பிடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தின் மீது மதமாற்றப் பிரசாரங்களும் நடந்து வருகின்றன என்றால் இது “புழுத்ததின் மீது நாய் விட்டை யிட்டது” என்கின்ற பழமொழிப்படி மனிதர்களை மேலும் மேலும் மூடர்களாக்குவதாகவே இருந்து வருகிறதே அன்றி இதில் நாணையமோ, உயர்வோ இருப்பதாகச் சொல்ல முடியாது. சாதாரணமாக:
குடி அரசு- 1937 (1) 14
இந்திய மக்களில் 100-க்கு 92-பேர்கள் தற்குறிகள், எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்கள், இவர்களிலும் 100-க்கு 90-பேர்கள் நல்ல ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் செய்யலாமென்று கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள். இப்படிப்பட்ட இவர். களிடத்தில் எது சொன்னால் ஏறாது? என்ன சொன்னாலும் நம்பும் சக்தி
எழுத்து வாசனை அறியாத மூடர்களுக்கே அதிகம். ஆதலால் இப்படிப்பட்ட ஜனங்களிடம் மதப்பிரசாரம் செய்து மத மாற்றுதல் வேட்டை ஆடுவது என்பது யாவருக்கும் சுலபமான காரியமாகும்.
இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனை அற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத் தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்த
தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றங்களும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், புத்தர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் முதலிய கடவுள் மாறுபாடுள்ளவர்களும், மதகர்த்தாக்கள் மாறுபட்டுள்ளவர்களும்,
மதக் கோட்பாடுகளின் அர்த்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்துகொண்டு வெகு காலமாகவே மதமாற்றப் பிரசாரம் செய்துகொண்டுதான் வருகிறார்கள்.
ஆனால் இந்த மதங்களில் மனித வாழ்க்கை தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றுமே காண முடியாத நிலையில் தான் இருந்து வருகின்றன.
எல்லா மதத்துக்குமே - ஒரு கடவுள் உண்டு
மேல் லோகமுண்டு. மோட்ச நரகமுண்டு.
ஆத்மா உண்டு.
செத்த பிறகு இந்த ஆத்மா என்கின்ற கொள்கைகளிலாவது, அல்லது மனிதன் அவனவன் நன்மை தீமைக்கு ஏற்றவிதம் பலன், மோட்ச நரகம் அனுபவிப்பான் என்கின்ற கொள்கைகளிலாவது கருத்து வித்தியாசமில்லாமலே இருந்து வருகின்றது.
பிரத்தியட்ச அனுபவத்திலோ எல்லா மதத்திலும் “அயோக்கியர்கள்!” “யோக்கியர்கள்!” இருந்து தான் வருகிறார்கள்.
எல்லா மதத்திலும் ஏழைகள் பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லா மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள்.
எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன. எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை, ஜபம், தபம் இருக்கின்றன. 5 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எல்லா மதக்கடவுள்களும் தொழுகை, பிரார்த்தனை, வணக்கம், பூசை ஆகியவைகளுக்குப் பலன் கொடுக்கும் என்றும், இவற்றாலேயே நாம்
செய்த எப்படிப்பட்ட பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடலாம் என்றும் நாம் கோரியதை அடைந்து விடலாம் என்றும் ஓர் நம்பிக்கை இருந்துதான்
வருகின்றது
மற்றும் எல்லா மதக் கடவுள்களும் கண்களுக்குத் தோன்றாததும்,
மனத்திற்கு படாததும், ஆதி, அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவேதான் இருக்கின்றன. எல்லா மதங்களும், “கண்களுக்கும், மனதிற்கும் தோன்றக் கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்கவேண்டும் என்றும், ஆனால் கண்களுக்கும், மனதிற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு மாத்திரம் ஒரு கர்த்தா இல்லை யென்றுமே சொல்லுகின்றன. ஒரு மதமாவது என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என் வேதமாவது தனது கோட்பாடுகள். எல்லாம், மக்கள் எல்லோரும் ஏற்று நடக்கக் கூடியதாய் இருந்து வருகின்றது, அல்லது நடக்கக்கூடியதாய் செய்ய சக்தி உள்ளதாய் இருக்கின்றது என்றோ, சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும்
பசி, தாகம், நித்திரை, புணர்ச்சி, இன்பம், துன்பம், ஆசை, அதிர்ப்தி, கவலை, போதாது என்கின்ற தரித்திர குணம் ஆகியவை ஒன்றுபோலவேதான். இருக்கின்றன. எல்லோருடைய வேதமும் கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலுந்தான் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன. என்றாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவும் பலவற்றில் நேர்மாறான கருத்துக் கொண்டதாகவும் இருந்து வருகின்றன. எல்லா. மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு வித அடையாளம் இருக்கின்றன. இந்த நிலையில் மதப்பிரசாரத்தால், மதமாற்றத்தால் மனிதர்களுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.
சாதாரணமாக இந்தியர்களில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.
1 கோடி கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சுமார் 10 கோடி வைணவர்கள் இருக்கிறார்கள். 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.
மற்றும் கலப்பு மதம் உள்ளவர்களும், மதக்குறிப்பு இல்லாதவர்களும்
ஏராளமாயிருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக்கூடுமானாலும்
இவர்களில் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார்.
1000, 2000 வருஷங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமானாலும் இவர்களின் வாழ்க்கையில் ஏதாவது விசேஷமோ, உயர்வோ உண்டா என்பதைச் சிந்தித்து நன்றாய் பார்ப்போமேயானால் ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக்காரருக்கும் இல்லை
என்றுதான் சொல்லவேண்டும்
குடி அரசு- 1937 (1) 16
அதாவது அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும், அறிவியலிலாகட்டும், சமுதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண் பெண்: தன்மையிலாகட்டும், எல்லோரும் ஒரு திட்டத்தில் இல்லாவிட்டாலும் கொள்கையில் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.
ஆகையால் மனித சமூகத்திற்கு அவரவர்கள் வாழ்க்கையில் உள்ள கவலைகள் அற்று அதிர்ப்தி ஒழிந்து சாந்தியும், சந்தோஷமும் கொண்டு வாழ்வதற்கும் பொருளியலிலும், சமுதாய இயலிலும், ஆண் பெண்: தன்மையிலும் சமதர்ம தத்துவம் கொண்ட வாழ்க்கை ஏற்பட இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா? அல்லது மதம் மாற்றுப்பிரசாரம் வேண்டுமா? என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டியது முக்கிய கடமையாகும்
மதம் மாற்றுதல் மதப் பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப
காலத்திற்கு முன்பு உலகிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவிலும் நடந்த முட்டாள்தனமான - மூர்க்கத்தனமான பலாத்காரக்கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்து வெட்டுகளும், கொலைகளும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்குச் சரித்திரங்கள், புராணங்கள். பிரத்தியட்ச அனுபவங்கள் எத்தனையோ மலிந்து கிடக்கின்றன இவைகளையெல்லாம் உத்தேசித்தாவது இனிவரும் சுயமரியாதை அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மத விஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெருவில் நின்று பேசினாலும், தெருவில் புஸ்தகங்கள் வைத்து விற்பனை செய்தாலும், பத்திரிக்கைகளில் எழுதினாலும் அவர்களெல்லாம் கடுமையானதண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடைமையற்று, தோளோடு. தோள் புனைந்து தோழர்களாக வாழமுடியும் என்பதோடு மத தத்துவங்களின் கூடாய்க் காண்கின்றோம். இன்று இந்து மதமென்று அருத்தமில்லாமல், சொல்லிக்கொண்டிருக்கிற சிவ விஷ்ணு மதங்கள் சீர்திருந்தாவிடில் மக்கள் மேன்மேலும், தீமை செய்பவர்களாகவும், வறுமை, பிணி, ஒற்றுமையின்மை முதலியவைகட்கு ஆளாகி என்றும் ஏழைகளாகவும், பலவீனர்களாகவும், மக்களுக்குள் அன்பற்றவர்களாகவும், மனிதத் தன்மையற்ற அடிமைகளாகவும் இருப்பார்களேயன்றி, இந்திய மக்கள் ஒன்று சேர்ந்து ஒருக்காலும் மற்ற நாட்டார்களைப்போல், தன் மதிப்போடு, மனிதத் தன்மையில்வாழ வியலாதென்பது எனது தாழ்மையான எண்ணமாகும்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - சனவரி 1937
7 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மோட்சமும் நரகமும்
மனிதன், உடல், உயிர், மாயை எனும் முப்பொருளாக ஆக்கப் பட்டிருக்கின்றான் என்று சைவர்களும், பிரம்மமே மாயா சம்மந்தப்பட்டு இவ்வுலகில் ஜீவர்களாய்த் தோன்றியிருக்கிறது என்று ஸ்மார்த்தர்களும் “ஆன்மா” என்றொரு பொருளை இறைவன் சிருஷ்டித்து மனித உடலுக்குள். புகுத்தியிருக்கிறான் எனச் சில மதங்களும், இவ்வாறு ஒன்றிற்கொன்று முரணாக, நாம் மூன் அதிகாரங்களில் விளக்கிக் காட்டியபடி கூறிவருகின்றன. ஆனால் எல்லா மதங்களும் “ஆன்மா” செய்த நன்மை தீமைக்குத் தகுந்தவாறு மோட்சமும் நரகமும் எய்துமென்பதை அபிப்பிராய பேதமின்றி ஒத்துக் கொள்கின்றன. ஆனால் மோட்சமும் நரகமும் எவ்வாறு இருக்கும் என்றால். ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகவே வர்ணிக்கின்றது. எந்த நாட்டான்
நரகத்தைப்பற்றி எழுதியிருந்தாலும் தத்தம் நாட்டிலுள்ள கொடிய பிராணிகளும், பயங்கர உருவங்களும், கஷ்டமான அனுபவங்களும்தான் நரகத்திலேயிருப்பதாகவும், அவ்வாறே மோட்சத்திலும் தத்தம் நாட்டிலுள்ள உயர்ந்த பிராணிகளும், மரஞ் செடி, கொடி, பழ வர்க்கம், உணவு, பெண்கள் முதலிய போக போக்கியங்களுமிருப்பதாகவே எழுதி வைத்திருக்கின்றான்.
நரகமும் மோட்சமும் பணம் பறிப்பதற்குப் புரோகிதர்களால் கட்டப்பட்ட ஓர் கற்பனை உலகம் என்றே யாம் கருதுகின்றோம். சிறு பிள்ளைகளை ஐந்து கண்ணன் வருகிறான், பூச்சாண்டி வருகிறான், அழாதே! அப்படிச் செய்யாதே, இப்படி நடவாதே என்று ஏமாற்றுவது போலவே மனிதர்களை நரகத்தைக்காட்டிப் புரோகிதர்கள் மிரட்டுவதும்,
சிறு பிள்ளைகளுக்கு மிட்டாய், சாக்லெட் முதலியவைகளைக் காட்டி தத்தம் வழிக்குத் திருப்புவதுபோல மக்களிடம் மோட்சத்தைக் காட்டி பணம் பறித்து வருகிறார்கள். மேலும் முதலாளிகள் தொழிலாளிகளையும்; அரசன். குடிகளையும் விளித்து, ஜாக்கிரதை! நீ எஜமானத் துரோகம் ராஜத்துரோகம் செய்தால் என்றும் மீளாத கொடு நரகிலே வீழ்ந்து என்றும் துன்புறுவாய் என்று மிரட்டி அவர்களுக்குத் தங்களின் நியாயமான உரிமைகளைப் பெறவேண்டும் என்ற எண்ணம் உதிக்காமலே ஏமாற்றி விடுவதற்குத் தக்க பேராயுதமாய் நரகம் விளங்கிவருகிறது பொதுவாக எம்மதத்தை உற்று நோக்கினாலும் மோட்சத்தை, பணம், சாம்பல் (விபூதி,) சிலுவை, குருபக்தி, பிரார்த்தனை முதலியவைகளினால் எளிதில் பெறவழி காணலாம்
குடி அரசு- 1937 (1) 18
மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச
- நரக பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும் பெருகி வளர்ந்து வருகிறது என்பது மறுக்க முடியா உண்மையாகும்
மோட்சமும் சுவர்க்கமும்; இன்றயை கள்ளுச் சாராயக் கடைகளைவிட,
தாசி வேசிகள் வீடுகளைவிட மோசமானது என்பதை மக்கள் உணரும்படி செய்யவேண்டும். மோட்ச நரகம் என்பது, எப்படி திருடர்கள். பிரயாணிகளை வழிப்பறி செய்வதற்கு தனி வழியில் ஆள் அடையாளம் தெரியாமல் வேஷம் போட்டுக்கொண்டு வந்து வழி மறித்து மண்டையை உடைக்க தடிக் கம்பையும், ஈட்டியையும் ஆயுதமாகக் கொண்டு பொருள். பறித்துச் செல்லுகின்றார்களோ, அது போலவே பகல் வழிப்பறிக்காரர்கள் மக்களின் வாழ்க்கைப் பிரயாணத்தில் வழிமறித்துப் பொருள் பறித்துப் போகச் செய்து கொண்ட ஆயுதங்களேயாகும். ஆகையால் அதை மனிதன் முதலில் மறந்தாகவேண்டும். இந்த உலக வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும் மக்களுக்கு உதவி செய்வதையும், தனது அளவுக்கும் தேவைக்கும் மேற்பட்டதை அடைய ஆசைப்படாமலிருக்க வேண்டியதையே மோட்சம் என்று மக்கள் கருதவேண்டும். இந்தப்படி அளவுக்கும், தேவைக்கும் மேல் மக்களை அடையச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுவதையே மக்களை மோட்சத்திற்கு அனுப்பும் வேலையென்று நாம் கருதவேண்டும். மனிதன். இந்த நாட்டில் எப்படி தனது தேவைக்கும், அளவுக்கும் தகுதிக்கும் மேல் அடைய ஆசைப்படுகின்றானோ அதற்கு ஆதரவாய் இருப்பதற்காகவே மூடர்களுக்கு மேல் உலகத்தில் அவரது தகுதிக்கும், அளவுக்கும், தேவைக்கும் மேலாக அனுபவிக்க ஆசை காட்டி இங்கு தட்டிப் பிடுங்கிக் கொள்ளு கின்றார்கள். மூடர்களும், பேராசைக்காரர்களுந்தான் மோட்சத்தை விரும்புவதை
நாம் பல உதாரணங்களால் காணலாம். மோட்சத்தையும், தேவலோகத்தையும் பற்றி பாமர மக்களுக்குக்குச் சொல்லப்படும் கருத்துக்களை சற்றுக் கவனித்துப் பாருங்கள். மனிதனுக்கு எதெதில் சாதாரணமாய் ஆசை வரக்கூடுமோ அதையேதான் மோட்சத்தில் சிருஷ்டித்து இருக்கிறார்கள்.
அதாவது இங்குள்ள மனிதனுக்குப் பொருள் வேண்டும், பெண் வேண்டும், தேவையானதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் கிடைக்கவேண்டும், நல்ல வாலிபப் பருவம் வேண்டும், சதா இடைவிடாத போக்கியம் பெறவேண்டும், சாகாமலிருக்க வேண்டும். இந்த விஷயங்கள். மனிதனுக்கு சாகும் வரையிலும், செத்த பிறகும் அனுபவிக்கக் கூடியதாய் ஆசைப்படக்கூடியதாயிருக்கிறது என்பது யாரும் அறிந்ததாகும் ஆகவே இந்தக் காரியங்களையே மேல் உலகத்தில் இருப்பதாகவும், அதை அடையக்கூடும் என்றும் ஆசையுண்டாகும்படி அதாவது மேல் உலகத்தில் எங்கு பார்த்தாலும் பொன்னும், ரத்தனங்களும் நிறைந்து கிடைக்குமென்றும், உலகமே பொன்னுலகமென்றும் அங்கு அரம்பை, ஊர்வசி முதலாகிய தேவ கன்னிகைகள் என்பவர்கள் என்றைக்கும் 9௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வாலிபமாய் நம் பக்கத்தில் இருந்துகொண்டு நமக்கு சதா போகங் கொடுத்துக்கொண்டிருப்பார்களென்றும், காமதேனு, கற்பக விருட்சங்கள். நமக்கு எது தேவையோ அதை உடனே கொண்டு வந்து கொடுக்குமென்றும், நரை, திரை, மூப்பில்லை யென்றும் நாம் சாகாமல் சிரஞ்சீவியாய் இருப்போமென்றும் சொல்லி எற்பாடு செய்துவிட்டதால், அவைகளை மனிதன் நித்தியமாய் நம்பி இந்த உலகத்தையும், இங்குள்ள போக போக்கியங்களையும் அநித்தியமாய் எண்ணி கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்களையெல்லாம் இந்த மோக்ஷத்திற்கு என்றே செலவு செய்வதுடன். நில்லாது இதற்காகவென்று பலவிதமான அக்கிரமமான வழிகளிலும் மற்ற மக்களை வஞ்சித்தும், பட்டினி போட்டும் பொருள் பறித்தும்கூட இதற்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கின்றது. உதாரணமாக ஏழை மக்கள் கஞ்சிக்கு அலையும்போது குடம் குடமாய்ப் பால் குடங்களைத் தினமும் கல்லின் தலையில் கொட்டி அவற்றை நாற வைப்பதின் கருத்து என்ன என்று பாருங்கள். குடியிருக்க நிழல் இல்லாமல் மக்கள் திரியும்போது மலைகளையும், பாறைகளையும் உடைத்துக் கோட்டைகள் போல் சந்திரகாந்த மண்டபங்கள் போல், மக்கள் கோவில்கள் கட்டுவதின் கருத்து என்னவென்று பாருங்கள். எவ்விதத் தொழிலும் செய்வதற்கு மூலதனம் இல்லாமலும், தொழிலில்லாமலும் மக்கள் வயிறு வளர்க்கக் கப்பலேறி வேற நாட்டிற்குக் கூலிகளாய்ப்போய் சொத்துப் பொத்தென்று மாண்டு மடிந்து கொண்டிருக்கும்போது, பொம்மைகளை வைத்து உற்சவம் செய்வதும், அவற்றிற்கு பத்து லக்ஷம், ஒருகோடி பத்துக்கோடிக் கணக்காக நகைகளும், பாத்திரங்களும், வாகனங்களும், துணிகளும், சொத்துகளும் சேர்த்து வைப்பதின் கருத்தென்னவென்று பாருங்கள். நாளுக்குநாள். வாழ்க்கை துன்பகரமாய் மாறி, ஏழைகள் மலிந்து வரும்போது ஆயிரக்கணக்காய் - ஏன் - லக்ஷக்கணக்காய் ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகங்கள் செய்வதின் கருத்து என்னவென்று யோசித்துப்பாருங்கள். பூமியை உழுது கஷ்டப்பட்டு பயிர் செய்யும் குடியானவர்கள் அரை வயிற்றுக்குக்கட போதுமான ஆகாரமில்லாமல் கஷ்டப்படும்போது, குளவிக் கல்லுக்கும், செம்பு, பித்தளை பொம்மைகளுக்கும் தினம் பத்து மூட்டை, இருபது மூட்டை, முப்பது மூட்டை போன்ற அரிசிகள் போட்டுப் பொங்கி நைவேத்தியம் செய்து பாடுபடாத சோம்பேறிகளுக்குக் குடும்பத்துடன் போட்டுக்கொண்டிருக்கும் கருத்து என்ன என்று எண்ணிப்பாருங்கள். மக்களில் நூற்றுக்கு 10 - பேர்களுக்குக்கூட அதாவது சராசரி படிப்பு - எழுத்து வாசனைகூட இல்லாமல் இருக்கும்போது வேத பாடசாலை, தேவாரப் பாடசாலை முதலியவைகளுக்கும், கல்லுகள், பொம்மைகள் பின்னால் நின்றுகொண்டு ஆயிரத்திற்கு ஒருவருக்குக் கூடப் புரியாத வேதபாராயணம் முதலியவைகள் செய்யப்படுவதற்கும் லட்சக்கணக்காய் செலவு செய்ததையும், செய்யப்படுவதின் நோக்கம் என்ன என்பதையும் யோசித்துப் பாருங்கள். இப்படியாக நமது நாட்டில்,
குடி அரசு- 1937 (1) 20
இதுபோலவே எவ்வளவு காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நோக்கினால் மற்ற மக்களை எவ்வளவு பாடுபடுத்தியாவது, அவர்கள். எவ்வளவு கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தாலாவது சிறிதும் லக்ஷியம் செய்யாது
- நாம் மோகூஷத்திற்குப் போகவேண்டும்; நாம் பிரபுவாய் இருக்க வேண்டும் லக்ஷுமி புத்திரராய் - ராஜாவாய் - நிரந்தர செல்வனாய் - சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்கிற பேராசையல்லாமல் வேற தத்துவம் அதில் என்ன இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி மோக்ஷம் கற்பிக்கப்பட்டு அதை அடைவதே மனிதனின் முக்கிய லக்ஷியம் என்று போதிக்கப்படுகின்ற பேராசை ஜனங்கள் மலிந்திருக்கும் இந்த நாட்டில் இந்த உணர்ச்சியை அழிக்காமல் என்ன காரியம் நம்மால் செய்ய மூடியும் என்பதையும் யோசித்துப்பாருங்கள். ஆதலால்தான் முதலில் மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்படவேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம் சகோதரர்களே இந்த மோக்ஷ உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டியதைப் போலவே நரக உணர்ச்சியும் அழிக்கப்படவேண்டும். மோக்ஷ உணர்ச்சி எப்படிப் பேராசையின் பிரதிபிம்பமோ அதுபோலவே நரக உணர்ச்சியும், அடிமைத்தனத்தினுடையவும், பயங்காளித் தனத்தினுடையவும், பிரதி பிம்பமாகும். நரகத்திற்கு பயப்படுவதாலேயே அநீதிகளுக்கு மனிதன் ஆளாகின்றான். தைரியமில்லாத கோழையாயிருக்கின்றான். இவைகளை யெல்லாம் விட மனிதன் சிறிதாவது முற்போக்கடைய வேண்டுமானால் சிறிதாவது இயற்கையின் இன்பத்தை நுகரவேண்டுமானால் எல்லாவற்றையும் விட மனிதனுக்கு விதி கர்மபலன் என்கின்றதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும். விதி கர்மபலன் என்கின்றவைகளான உணர்ச்சி இந்திய நாட்டிற்கு ஏற்பட்டிருக்கவில்லையானால் இன்றைய தினம் இந்தியா அநேக விஷயங்களில் ருஷியர்களுக்கு - ஏன் இந்த உலகத்தில் உள்ள மற்ற எந்த நாட்டு மக்களின் நிலைமைக்கும் மேலாக இருந்து அநேகமாக உலக மக்களுக்கே சமத்துவத்தையும் சம இன்பத்தையும் இயற்கை இன்ப நுகர்ச்சியையும் கொடுத்து சர்வ சுதந்திரத்துடன் வாழச் செய்திருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவேன். ஆகையால் இந்த கர்ம பலனின் உணர்ச்சி, மோட்ச நரக நம்பிக்கைகள் மனிதத்தன்மைக்கு மிகவும் கேடான. எதிரி என்பதை நீங்கள் நன்றாய் ஞாபகத்தில் வைக்கவேண்டும். நான் மேலே காட்டிய இந்தக் காரணங்கள் தான் இந்த உலகத்தில் நமது நாட்டை மாத்திரம் இந்த இழிவான நிலையிலும், மீளா அடிமைத்தனத்திலும் வைத்திருக்கின்றன. இவைகள் ஒழிந்தால் தாமாகவே இந்தியா சுயமரியாதை பெற்றுவிடும்; மனிதத் தன்மை அடைந்து விடும். ஆகையால் சகோதரர்களே நீங்கள். இந்திய நாட்டின் முற்போக்கிற்கும், விடுதலைக்கும் மனிதத் தன்மைக்கும் பாடுபடவேண்டுமானால் மேற்கண்ட காரியங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
பகுத்தறிவு (மா.இ.) - சொற்பொழிவு - சனவரி 1937 A ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஜாதிமுறை
சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே!
“குடி அரசு” தலையங்கம் ஒன்றில் “ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள்” 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்றும் சொல்லப்பட்டதோடு அந்த சாதிகள்தான் எல்லாப் பஞ்சம சாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள சாதி ஆதாரங்களை எடுத்துக்காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர் ஷெ சாதிக்கிரமத்தை அதாவது ஆதி சாதி என்பவைகளான, பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டும் தங்களை மாத்திரம் சற்சூத்திரர் என்று அழைத்துக்கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக்கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக்கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்ததென்றும் அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்பனையைக் கற்பித்துக்கொண்டு அப்படிப்பட்டவர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டுசெய்ய - அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்கள்தான் “பள்ளு பறை பதினெட்டு சாதிகள்” என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள். (இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும், வடமொழிப்படி பார்த்தாலும் சரி, தென் மொழிப்படி பார்த்தாலும்
சரி, வேளாளர் 4-வது சாதி என்பதை ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்பது மாத்திரம் இதிலிருந்து அறியக்கிடக்கின்றது.)
அந்தப்படி கூறப்படும் பள்ளு பறை பதினெண்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் “பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார்” என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல் தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்பதாகக் கொண்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டதாகும்)
குடி அரசு- 1937 (1) 22
ஆனால் இதே பதினெண் மக்களை அபிதானகோசம் என்னும் ஒரு ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறித்திருப்பதென்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர் (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்,) குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர்,
வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியார், எண்ணெய்
வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெட்டு பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அப்படிக் குறித்திருப்பதிலும்
தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கர்களை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் “கம்மவார். என்னும் கவரைகள் ஏவற் பரிசனங்களாகவும் உப்பமைப்பவர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது
இவை ஒருபுறமிருக்க வேளாளர்களிலும் பல பிரிவுகளை காட்டி அதில் உயர்வு தாழ்வுகளை கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் “சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினர், அவருள்ளே
முதலிகள் தலையாயினார், இவர்களுக்கு அடுத்தபடி வேளான் செட்டிகள், இவர்கள் சோழபுரத்தார், சித்தக்காட்டார், பஞ்சுக்காரர். முதலிய பலதிறப்பட்டவர்கள். இதற்கடுத்த படியிலுள்ளோர் கார்காத்தார். அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர், இவர்கள் சைவர்களாவார்கள். சமபந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தபடியில் உள்ளவர்கள். சோழிய, துளுவ கொடிக்கால் முதலிய பல வகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாம்ச போசனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம்படியர், அவரிற் றாழ்ந்தோர் மறவர், அவரிற் றாழ்ந்தோர் கள்ளர், அவறிற்றாழ்ந்தோர் இடையர், இவர்கட்கடுத்தபடியிலுள்ளோர் கவரைகள் கம்மவர்கள் என இந்தப்படியாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் எதிலும் பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும் தாழ்வுக்கிரமமும் சந்தேகமோ, ஆக்ஷபணையோ சொல்லுவதற்குச்
சிறிதும் இடமில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தால் ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி க்ஷத்திரியர்களிலும், வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும் ஆக்ஷேபணைகளும்
க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக்கொள்வதில் எவ்வித உயர்வு தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக் கொண்டு பொது ஜனங்களாலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒருவரை
ஒருவர் இழித்துரைத்து குறைவுபடுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியக்ஷமாய் காண்கின்றோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் ஜாதிகளைப்பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக்கொண்டாலும், கண்டு பிடித்தாலும் எந்த விதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்ப்பட்டவர்கள் தான் என்பதை நிலைநிறுத்துவதற்கு மாத்திரம் B ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ, கண்டு பிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம் எனவே இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான். ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள் அதாவது பார்ப்பனனால் தொடவும், சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும், அவனுக்கு அடிமையாகயிருக்கவும் ஒழுக்கத் தவறுதலால் அதாவது "விபசாரம்"
“கீழ் மேல் ஜாதிக் கலப்பு” என்று சொல்லும்படியான “இழி தன்மையில் பிறந்தவர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவமாயிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாதென்று உறுதி கூறுவோம்.
மற்றபடி இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக்கொள்ளக் கூடுமே தவிர ஜாதிக்கும், ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆக்ஷேபணையும் எவ்வித தத்துவார்த்தமூம் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல் பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டு தான் தீரவேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய்ச் சொல்லுவோம்.
இவை ஒருபுறமிருக்க இந்த ஜாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும், உரிமைகளையும், பார்ப்போமானால் கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒருக்காலமும் தங்கள் ஜாதிப்பேரை சொல்லிக்கொள்ள முடியாதபடியும், அதைத் கனவிலும் நினைக்க முடியாதபடியும் இருப்பதை நன்றாய் உணரலாம். அதாவது நாலாவது ஜாதியார்களாக சூத்திரர்கள் என்று சொல்லப்படும் வகுப்பாருக்கு பார்ப்பனர்கள் ஏற்படுத்தியிருக்கும் உரிமையானது எப்படியிருக்கின்றது என்று பார்த்தால் இப்போது “பாரம்பரியமாய் குற்றம் புரியும் வகுப்பார்” (அதாவது கிரிமினல் ட்ரைப்ஸ்) என்று சொல்லக்கூடியவர்களுக்கு சர்க்காரால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிர்ப்பந்தத்திற்கும், சட்ட திட்டங்களுக்கும் அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிதுகூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரியாகவே ஏற்படுத்தி இருக்கின்றார்கள். உதாரணமாக இரண்டொன்றைச் சொல்லுவோம்
அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம். ஸ்நாதமஸ்வம், கஜமத்தம், ரிஷபம் காமமோ ஹிதம் சூத்தரமக்ஷர சம்யுக்தம், தூரதப் பரிவர்ஜ்ஜையேல்.”
குடி அரசு- 1937 (1) 24
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும் - மதம் கொண்ட யானையையும் - காம விகாரம் கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக்கூடாது என்பது கருத்தாகும்.
“ஜப, ஸ்தப, தீர்த்தயாத்திர, பிரவர்ஜ்ஜய, மந்தர சாதனம், தேவதாராதனம் சசய்வ ஸ்திரீ சூத்திர பததானிஷள்''
அதாவது ஜபம், தபசு, தீர்த்த யாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும், சூத்திரர்களும் ஒருபோதும் செய்யக்கூடாது என்பது கருத்தாகும்
“நபடேல் சமஸ்கிருதம் வாணம்.”
(சூத்திரன்) சம்ஸ்கிருதம் படிக்கக்கூடாது என்பது கருத்தாகும் “நைவ சாஸ்திரம்படே நைவ கருணுயாத் வைதிகரக்ஷரம் நஸ்நாயாது தயால் பூர்வம் தபோமந்திரஞ் சுவர்ஜ்ஜயேல்”
(சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட்கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூர்ய உதயத்திற்கு மூன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய் கூடாது என்பது கருத்தாகும் இதிஹாச புராணானி நபடேச்ரோது மர்ஹசி””
இதிகாச புராணங்களும் கூட (சூத்திரர்கள்) படிக்கக் கூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்
“சாதுர்வர்னியம் மயாசிருஷ்டம் பரிசரியாத்மகம்
கர்மம் சூத்ரஸ்ஸியாயி பாவனாம்"
(கீதா ஸ்லோகம்)
நான்கு வர்ணங்களும் என்னால் சிருஷ்டிக்கப்பட்டவை. அவற்றுள். சூத்திரனுக்கு பிராம்மண சிசுருஷை தான் தர்மம் என்பது கருத்து.
இதுபோல் ஆயிரக்கணக்காக எழுதிக்கொண்டே போகலாம் இவைகள் எல்லாம் தான் நமது ஜாதிமத ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்படவேண்டியவை என்று வேதங்கள், தர்மசாஸ்திரங்கள், பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளில் சொல்லப்பட்டவைகளாகும்
எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை அனுஷ்டித்துத் தீரவேண்டியதல்லாத ஒரு ஆக்வி இந்த நாட்டுக்கு ஏற்பட்டதின் பலனால் நம்மில் சிலராவது இந்த தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால் இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும், ஜாதியையும் சொல்லி அவற்றை நிலை நிறுத்திக்கொண்டே போவோமானால் பின்னால் நமது நிலை என்ன ஆகும் என்பதை சற்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம் B ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எதோ “பொல்லாத விதிவசத்தினால்” இன்று ராம ராஜ்யத்தைக் கோரும் தோழர் காந்தியாரும் வருணாச்சிரமத்தைக் கோரும் “தேசீய தலைவர்களும் கேட்கும் சுயராஜ்யம் வந்துவிடுமேயானால் இன்று இம்மாதிரி ஜாதிகளைக் காப்பாற்றியவர்களின் கதி என்னவாகக்கூடும் என்பதையும் சற்று யோசித்துப்பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.
இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதிப்பிரிவு இருக்கும் வரை ஜாதி உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒருக்காலமும் போகவே போகாது என்பதைக் கண்டிப்பாய் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கை செய்கிறோம்.
இன்றைய தினம் தேசியவாதிகளாயிருக்கின்றவர்கள் இந்தியா சுதந்திரம் அல்லது பூரண சுயேச்சை அடையவேண்டுமென்கின்ற உண்மையான. ஆசையுடையவர்களாயிருப்பார்களானால் அவர்கள் வெள்ளைக்கார ஆகஷியிருக்கும்போதே ஜாதி வித்தியாசங்கள் எல்லாம் ஒழியும்படியான
ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டியது தான் அறிவுள்ள வேலையாகும். அதை விட்டுவிட்டு முதலில் “நீ போய்விடு நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம்" என்று சொன்னால் அது “தான் சாவதற்கு தானே மருந்து குடித்தது” போல்தான் ஆகுமே தவிர வேறொரு பயனும் தராது. ஏனெனில் இந்தியாவில் இந்துக்கள் என்பவர்களில் 1000க்கு 999 பேருக்கு குறையாமல் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு ஒவ்வொருவரும் “மேல் ஜாதி” ஆகவேண்டுமென்று ஆசைப்படுவதும் தனக்கு கீழ் பல ஜாதிகள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதுமான உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் இருக்கும் பல செளகரியங்களை ஒழித்து விட்டு வருணாச்சிரம கொள்கையும் ஜாதி ஆதிக்கத்திமிரும் உடையவர்களான மக்களிடம் ஆகஷியும், பிரதிநிதித்துவமும் வந்து விட்டால் பிறகு எந்த விதத்தில் ஜாதிக்கொடுமைகளும் அதனால் ஏற்படும் தொல்லைகளும் ஒழியக்கூடும் என்பதை யோசித்தால் அதன் கெடுதி விளங்காமல் போகாது.
இந்தியர்களுக்குள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கொடுமைகள் ஆகியவைகள் இல்லாதிருந்திருக்குமானால் இந்தியா ஒருநாளும் அன்னியர் ஆக்ஷிக்கோ, அடிமைத்தனத்திற்கோ, அடிமையாகி இருக்கவோ முடியவே முடியாது. நமக்குள் இருக்கும் இழிவுகளில் நம்மால் கூடுமானதையெல்லாம் நாம் ஒழித்து ஒற்றுமைப்படடு பின் அவலானை: வெளியில் போகச்சொல்லலாம் என்று கருதியும் நடவாததின் பயனாய் ஏற்படும் அதாவது இன்றைய தினம் உள்ள இழிவையும், கொடுமையையும், அடிமைத்தனத்தையும் அடையாமல் ஏமாற்றித் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதை மாத்திரம் கல்லின் மேல் எழுதிவைப்போம்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - சனவரி 1937
குடி அரசு- 1937 (1) 26
ஒன்றுக்கொன்று பொருத்தம்
- சித்திரபுத்திரன்
இராமன் பிறப்பும் சுப்ரமணியன் பிறப்பும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இரண்டு பேர்களும் பூமிபாரம் தீர்க்கவும் ராக்ஷதர்கள் அசுரர்கள் அக்கிரமங்களை அழிக்கவும் தோன்றினவர்கள் இராமன் பிறப்பதற்காகவும் தேவர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டார்கள். சுப்ரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டிக்கொண்டார்கள்.
இராமன் ஒரு மனிதன் விந்திலிருந்து பிறந்தான். ஆனால், சுப்ரமணியன். சிவன் விந்திலிருந்து தோன்றினான். இராமன் ராக்ஷதர்களைக் கொன்றான்; சுப்ரமணியன் அசுரர்களைக் கொன்றான். இராமன் செய்த சண்டையில்
ராக்ஷ்தர்களைக் கொல்லக் கொல்ல மூலபலம் தானாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தது
அதுபோலவே சுப்ரமணியன் அசுரர்களைக் கொல்லக் கொல்ல சும்மா தானாகவே அசுரர்கள் உற்பத்தியாகிக் கொண்டிருப்பதும் தலையை வெட்ட வெட்ட மறுபடியும் முளைத்துக்கொண்டிருப்பதுமாக இருந்தது. இன்னமும் பல விஷயங்களில் ஒற்றுமைகள் காணலாம். ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிக்காக உண்டாக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என்பது விளங்கும். மற்றும் பெரிய புராண 63 நாயன்மார்கள் கதையும்
பக்த லீலாமிர்த ஹரிபக்தர்கள் கதையும் அனேகமாக ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பெரிய புராண நாயன்மார்களில் குயவர் வகுப்பு என்பதற்காக ஒரு நாயன்மாரை திருநீலகண்ட நாயனார் என்று உற்பத்தி செய்தது போலவே பக்த லீலாமிர்தத்திலும் குயவர் வகுப்புக்காக கோராகும்பார் என்பதாக ஒரு பக்தரை கற்பித்து இருக்கின்றார்கள். பெரிய புராணத்தில் பறையர் வகுப்பு என்பதற்காக நந்தனார் என்பதாக ஒரு நாயனாரை சிருஷ்டித்து போலவே பக்த வீலாமிர்தத்திலும் பறையர் வகுப்புக்காக சொக்க மேளா என்கின்ற ஒரு பக்தரை சிருஷ்டித்து இருக்கின்றார்கள். இப்படியே மற்றும் பல நாயனார்களும், ஹரி பக்தர்களும் கற்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் சம்பந்தமான. கதைகளும் ஏறக்குறைய ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. 27... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
உதாரணமாக, திரு நிலகண்ட நாயனார் தன் பெண் ஜாதியோடு கோபித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் திரேக சம்மந்தமில்லாமலிருந்ததை
சரி செய்ய சிவபெருமான் சிவயோகியாக வந்து இருவரையும் சேர்த்து வைத்ததாக கதை உண்டாக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பக்தலீலாமிர்தத்தில்கோராகும்பாரும் தன் மனைவியுடன். கோபித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தேக சம்பந்தமில்லாமல் இருந்ததைச் சேர்த்து வைப்பதற்காகவே விஷ்ணு பெருமான் தோன்றி இருவர்களையும் சேர்த்து வைத்ததாகவே கதை கற்பிக்கப்பட்டிருக்கின்றது. அதுபோலவே பெரிய புராணத்திலும் நந்தனாருடைய கதையிலும் நந்தனாரைக் கோவிலுக்குள் விடும்படி பரமசிவன் இரவில் வேதியர் கனவில் வந்து சொன்னதாகக் கற்கப்பட்டிருக்கின்றது.
பக்த லீலாமிர்தத்தில் சொக்கமேளர் (சொக்கமாலா என்றும் சொல்வதுண்டு) என்னும் பறையர் ஒருவரை விஷ்ணு இரவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போனதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இப்படி அனேக கதைகள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் போட்டிபோட்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் பார்ப்பனர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் உயர்வுகள் கற்பிக்கப்பட்டிருப்பதிலும் ஒன்றுபோலவே கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இரண்டிலும் ஜாதி வித்தியாசத்தை உறுதிப்படுத்தி பிறகு அந்தக் குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில் மாத்திரம் மிக்க கடினமான நிபந்தனை மீது மன்னிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். ஆகவே இவைகள் சிவனும், விஷ்ணும் ஆகிய இரு கடவுள்களும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செய்தார்களா? அல்லது இரண்டு சமயத்தின் பேராலும், ஜாதிகளை நிலை நிறுத்தவும், மதப்பிரசாரத்திற்கும், வயிற்றுப்பிழைப்புக்கும் வழிதேடும் ஆசாமிகளால் கற்பிக்கப்பட்டதா என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும்.
ஏனெனில் நாம் சொன்னால் அது மிகுந்த “தோஷமாக ஏற்பட்டு, பெரிய பாவத்திற்காளாக வேண்டியதாய்ப் போய்விடும்.”
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - சனவரி 1937
குடி அரசு- 1937 (1) 28
B ௩௯ M 2௩1
ப 1111100111 1000110141 ஜொரியன் ரோகிதன் சர்க்கள்.
*figffgfifiéfgfigfiéfi SEES
ENSEE B கில்லை
Faaiad )
ககக கக்கம் ௧௨௧௧௩௨௩௧௨௨
நீ் &
ராமநாதபுரம் ஜில்லாவில் ஈ.வெ.ரா. பிரசங்கம்
தலைவர் அவர்களே! தோழர்களே!
இந்திய அரசியலில் புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரப்போகிறது அது சம்பந்தமாக இனியும் ஒன்றரை மாதத்தில் தேர்தல் நடக்கப்போகிறது. காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் போட்டி போடுவது என்று முடிவு
செய்துவிட்டார்கள். அதற்காக பொது ஜனங்களிடமிருந்து ஒரு அளவுக்கு பணமும் வசூலித்துக்கொண்டார்கள். பண ஆத்திரமும் பதவி ஆத்திரமும் அதிகார ஆத்திரமும் கொண்டவர்களாகப் புதிது புதிதாகத் தேடிப்பிடித்து தங்கள் கட்சியில் சேர்த்து எலக்ஷனுக்கு நிறுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து மற்ற ஆட்களின் தேர்தல் செலவுக்கு பணமும் வசூலித்து சேர்த்து வருகிறார்கள். இந்தப் பணங்களால். பார்ப்பனர்களை தேர்தலுக்கு நிறுத்தியும், காலிகளுக்கு கொடுத்து காங்கிரசுக்காரர்கள் அல்லாதவர்களுடைய தேர்தலுக்கு இடையூறு செய்தும் தொல்லை விளைவிக்கப் போகிறார்கள்.
நாம் வெறும் தர்ம நியாயம் பேசிக்கொண்டு வீணாய் காலத்தைப் போக்கிக்கொண்டிருக்கிறோம். நமது நேரம் மிகவும் விலை உயர்ந்த நேரமாகும். ஏற்கனவே நாட்டில் காங்கிரஸ்காரர்களால் ஏராளமான. விஷமப்பிரசாரம் நடந்தாய் விட்டது. தங்களைத் தவிர மற்றவர்கள். எல்லாம் தேசத்துரோகிகள் என்றும், சர்க்கார் அடிமைகள் என்றும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நல்ல வேளையாய் இப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்களால் நாட்டுக்கோ மக்களுக்கோ ஏற்பட்ட பலன் இன்னது என்றும் அவர்களுடைய திட்டம் இன்னது என்றும் இதுவரை அவர்கள் சொல்லவில்லை. சொல்லுவதற்கு அவர்களிடம் யாதொரு சரக்கும் இல்லை. தாங்கள் ஒரு காலத்தில் ஜெயிலுக்கு போனதையும் சட்டம் மீறினதையும் சர்க்கார் உத்திரவு மீறி அடிபட்டதையும் எடுத்துச் சொல்லி பெருமை அடைகிறார்கள். மாஜி அடிபட்டவர்கள் என்றும் மாஜி ஜெயிலுக்குப் போனவர்கள் என்றும் சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். இப்போது ஜெயிலுக்குப் போவதும் சட்டம் மீறுவதும் தங்கள் கொள்கை அல்ல என்று சொல்வதோடு 31— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அந்தப்படி காங்கிரஸ்காரர்கள் சர்க்காருக்கு எழுதியும் கொடுத்து விட்டார்கள். அவ்வளவோடு நிற்கவில்லை. எந்த சர்க்காரை சைத்தான். கவர்ன்மெண்ட் என்றும் எந்த சர்க்காரோடு ஒத்து உழைப்பது பாவம்
என்றும் பேசினார்களோ அந்த சர்க்காரிடமே - அந்த சர்க்கார் இவர்களை
உதைத்து ஜெயிலுக்கு அனுப்பி புத்தி கற்பித்த பிறகு இனி அப்படிச் சொல்வதில்லை என்று எழுதிக்கொடுத்து விடுதலையாகி வெளிவந்து இப்போது அந்த சர்க்காருக்கும் அந்த சர்க்காருக்கு தலைவராய் இருக்கும் ராஜாவுக்கும் அந்த ராஜாவின் பின் சந்ததிக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாக தங்கள் கடவுளை வேண்டி பிரமாணம் செய்து கொடுத்து அந்த சர்க்காரது சட்டத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பதாய் சத்தியம் செய்து கொடுக்க முன் வந்துவிட்டார்கள். இந்தப்படி சத்தியம் செய்து கொடுப்பதற்கு காங்கிரசை வெறுத்து காங்கிரஸ்காரர்கள் நடத்தையில் அதிருப்திப்பட்டு வெளியேறின காந்தியாரே அனுமதி கொடுத்துவிட்டார். காந்தியார் மாத்திரமல்லாமலும் “பிரிட்டிஷாரையே அடியோடு விலக்கி ஆட்சி புரிய வேண்டும் என்பது தான் பூரண சுயராஜ்யம், அதுதான் எனது கொள்கை” என்று சொல்லுகிறவரும் காங்கிரசின் “மகத்துவம்” பொருந்திய தலைவருமான தோழர் ஜவஹர்லால் நேரு அவர்களும் ராஜவிஸ்வாசப் பிரமாணத்துக்கும், சட்டத்துக்கு கீழ்படிந்து நடக்கும் பிரமாணத்துக்கும் அனுமதி கொடுத்துவிட்டதோடு அந்தக் காரியம் செய்வதற்கு ஆக சட்டசபைக்குப் போகும் ஆட்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்யவும் துணிந்து இறங்கிவிட்டார். ஆகவே இனி வேறு எந்த விதத்தில் காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும் மற்ற கட்சிக்காரர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரசுக்காரருக்கு இன்று ஏற்பட்ட இந்த புத்தி இந்த பதினைந்து வருஷத்துக்கு மூன் ஏற்பட்டிருக்குமானால் நாட்டில் எவ்வளவோ அபிவிருத்திகள் ஏற்பட்டிருக்கும். மிதவாதிகளும் ஐஸ்டிஸ்காரரும் சொன்னதை காங்கிரஸ்காரர் பரிகாசம் செய்தார்கள். அதனால் நாடு இந்த 15 வருஷமாய் பாழாகி விட்டது. அரசியல் தத்துவம் மற்ற தேசங்களில் இந்த 15 வருஷங்களில் எவ்வளவு முன்னேற்றமடைந்ததோ அவ்வளவு நம் நாட்டில் பின்னேற்றமடைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நாடு சமூகத்துறையிலோ அரசியல் துறையிலோ அதாவது ஒரு சிறிது அம்சமாவது முன்னேற்றமடைந்தது என்று சொல்லப்படுமானால் அது காங்கிரசுக்கு எதிராக இருந்து வந்த ஸ்தாபனங்களாலும் வேகத்தாலும் தான் என்று சொல்லவேண்டுமே ஒழிய காங்கிரசினால்
சிறிது கூட ஏற்பட்டது என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை.
அரசாங்கத்தார் நமக்கு அளித்த வாக்கு சுதந்திரத்தையும் எழுத்து சுதந்திரத்தையும் காங்கிரஸ்காரர் துஷ்பிரயோகம் செய்து மக்களுக்குள்
குடி அரசு- 1937 (1) 32
ஒற்றுமையற்ற தன்மையையும் கலவரத்தையும் காலித்தனத்தையும் உண்டாக்கி வருகிறார்கள். உதாரணமாக இப்போது எங்காவது ஒரு கூட்டம் நடக்க வேண்டுமானால் காலித்தனம் இல்லாமல் நடைபெறுமா என்பது சந்தேகமாய் இருக்கிறது. என் அனுபவத்தில் 100க்கு50 கூட்டம் கலவரத்தில்தான். நடக்கின்றன. காங்கிரசுக்காரர்களின் 16 வருஷத்திற்கு முந்தியதும் இன்றைக்கு உள்ளதும்தான் ஜஸ்டிஸ் கட்சியினுடையவும் கொள்கையாகும்
காங்கிரசுக்காரர்கள் கேட்கும் சுயராஜ்யம்தான் ஜஸ்டிஸ் கட்சியாரும் கேட்கின்றார்கள். காங்கிரசுக்காரர் போக விரும்பும் சட்டசபைக்குத்தான் ஜஸ்டிஸ்காரரும் போக விரும்புகிறார்கள். காங்கிரசுக்காரர் ஏற்படுத்திய சம்பளம்தான் ஜஸ்டிஸ்காரர்களும் வாங்குகிறார்கள்.
ஆனால் காங்கிரசுக்காரர் சட்டசபைக்குப் போய் மந்திரி பதவி ஏற்பதா இல்லையா என்பதை வெளியில் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் வெளிப்படையாய் பதவி ஏற்போம் என்று சொல்லுகிறார்கள். காங்கிரசுக்காரர் சீர்திருத்தம் உதவாது, அதை உடைக்கவேண்டும் என்கிறார்கள். ஜஸ்டிஸ்காரர் சீர்திருத்தம் போதாது, ஆனால் நடத்திக்காட்டி தகுதியை சொல்லி அதிகம் கொடுக்கும்படி வற்புறுத்துவோம் என்கிறார்கள். காங்கிரசுக்காரர்கள் முன்பு பல தடவைகளில் தங்கள் வாக்கை நிறைவேற்றவில்லை. ஜஸ்டிஸ்காரர்கள் தங்களால் கூடுமானதைச் சொல்லி அந்தப்படி நடந்து வருகிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் அல்லாத மற்ற எந்தக்கட்சியாருள்ளும் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்து அதனால் கூடுமான பலனை மக்களுக்குச் செய்யச் செய்வது என்பதில் அபிப்பிராய பேதமில்லை. காங்கிரசுக்காரர்களுக்குள் பலவித அபிப்பிராய பேதம் சி.ஆர். ரெட்டி, ஜவஹர்லால், சத்தியமூர்த்தி ஆகியவர்கள் பல அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி நிலையில் ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் ஏன் வெட்டிப் புதைக்க வேண்டும்? அது யாரையாவது ஏமாற்றிற்றா? வெட்டி அளப்பு அளந்து இப்போது படுத்துக்கொண்டதா? ஓட்டர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறிற்றா? அதன் முக்கியக் கொள்கை அரசாங்க பிரதிநிதித்துவம், உத்தியோகம் முதலியவைகளை அடைவதில் இந்திய மக்களில் முக்கிய வகுப்புகளுக்குள் கலகம் கூடாது; ஏமாற்றமடையக் கூடாது; எல்லோருக்கும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இருக்கவேண்டும் என்பதுதான். இது சரியா தப்பா என்பது வேறு விஷயம். இந்த கருத்தில் ஜஸ்டிஸ்காரர்கள் ஏதாவது மாறிவிட்டார்களா? ஜஸ்டிஸ்காரர்கள் தங்கள் ஆட்சியில் இதைச் செய்யவில்லையா? இந்தக் காரியங்கள் இன்று அவர்கள் அமுலுக்குக் கொண்டு வந்து சீரதிருத்தத்திலும் புகுத்திவிடவில்லையா? என்பவைகளை நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும் B ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அதுவும் ஜஸ்டிஸ்காரர்கள் தங்களுடைய இந்தக் கொள்கையை அரசாங்கத்தார் ஒப்புக்கொள்ளும்படி செய்து விட்டதோடு மாத்திரமல்லாமல் காங்கிரசுக்காரர்களையும் ஒப்புக்கொள்ளும்படியும் அதற்குக் கீழ்ப்படியும்படியும் செய்துவிட்டார்கள். இன்று அந்தத் திட்டத்தின்படியே காங்கிரசுக்காரர்களும் அடையப் புகுந்து விட்டார்கள். இன்னும் பல செய்யவேண்டுமென்கிறோம். இந்த முயற்சியால் சமுதாயத் துறையில். அரிய பெரிய புரட்சி செய்துவிட்டோம். மத ஆதிக்கமெல்லாம் பறந்தோடும்படி செய்து வருகிறோம். இவை செய்யாமல் வெறும் அரசியல் சுதந்திரம் என்ன நன்மை செய்துவிடும்? இந்தியா இன்று நேற்று அடிமை அல்ல. புராண காலம் தொட்டு சரித்திரமறிய ஆயிரக்கணக்கான வருஷமாய் அடிமை. இந்த நாட்டில் பறையனும், பள்ளனும், சூத்திரனும் எவ்வளவு காலமாய் அடிமையாய் இருந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? வெள்ளைக்காரனா இதற்கு ஜவாப்தாரி? அல்லது துருக்கனா இதற்கு ஜவாப்தாரி? ராமராஜ்யம், அரிச்சந்திர ராஜ்யம், சேர சோழ பாண்டியன், நாயக்கன், மராட்டியன் முதலிய எல்லா சுயராஜ்யத்திலும்
இருந்த கொடுமைதான் இன்றும் இருந்து வருகிறது. இவற்றை ஒழிக்கத்தான் ஜஸ்டிஸ் கட்சி முயல்கின்றது. அதை வீணாக தேசத்துரோக கட்சி என்பதில் ஏதாவது அர்த்தமுண்டா? அது தேசத்தைவிட சமூகத்தை
- மக்களை முக்கியமாய் கருதி மக்களுக்குத் தொண்டு செய்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சி இந்நாட்டு எல்லா மக்களுக்கும் சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. எல்லா மக்களும் சுயராஜ்யத்தில். பங்கு பெறும்படி செய்திருக்கிறது. அது தோன்றிய பிறகே இந்திய மக்கள் சமூகத்தில் பெரும் பெரும் எண்ணிக்கை கொண்ட முஸ்லீம், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய 10, 12 கோடி ஜனங்களுக்கு அரசியலில். சம்மந்தமும் சமூக இயலில் மனிதத்தன்மையும் ஏற்பட்டிருக்கின்றன.
கல்வியிலும் அரசியல் நிர்வாகத்திலும் மிகவும் பிற்பட்டுக் கிடந்த மக்களாகிய பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் அனேக வகுப்புகளை மூன் வரிசைக்கு கொண்டு வந்து இருக்கிறது
ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் சமூகத்துறையில் தங்கள் பெண்களை விபசாரத் தனத்திற்கு விட்டுப் பிழைத்துத் தீரவேண்டிய மக்களை இன்று மற்ற ஜாதி மக்களோடு சமமாய் வாழச் செய்திருக்கிறது. சமூகத்துறையில் தங்கள் ஜாதியின் பெயரை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மேல் ஜாதிப் பெயர்களை சொல்லிக்கொண்டு மறைமுகமாய்த் திரிந்த சமூக மக்களையெல்லாம் முக்கியமான சமூக மக்களாக ஆக்கி இருக்கிறது. தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொள்ள உரிமையற்றுக் கிடந்த மக்களை முன்னணியில் நிற்க செய்திருக்கிறது. சமூகத்தில். தீண்டக்கூடாத மக்களாய் இருந்தவர்கள் இன்று பார்ப்பனருடனும்
குடி அரசு- 1937 (1) 34
பணக்காரப் பிரபுவுடனும் சரிசமமாய் உட்காரச் செய்திருக்கிறது. இப்படியாக சமூகத் துறையில் வாழ்க்கைச் சுதந்திரம் மாத்திரம் அல்லாமல் மனிதத் தன்மை சுயமரியாதை இல்லாமல் இழிவு பட்டுக் கிடந்த மக்களை தலை நிமிர்ந்து நடந்து மற்ற மக்களுடன் தோளோடு தோள் உறைந்து நிற்கும்படி செய்துவிட்டது. எனவே இப்படிப்பட்ட கட்சியை என்ன காரணத்திற்காக ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள் என்பதை மக்கள் கவனித்துப் பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்
குறிப்பு:- 22.12.1936 இல் அறாப்புக்கோட்டை தேரடி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதைத் தொடர்ந்து சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பேசிய சொற்பொழிவின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 03.01.1937
35— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஜஸ்டிஸ் கட்சியாமின் எதிர்கால வேலைத் திட்டம்
தோழர் ஈ.வெ.ராமசாமியின்
வேலைத்திட்டம் உள்பட
(1) ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை சாதித்த வேலைகளை பொது ஜனங்கள் அறிந்தே இருக்கின்றார்கள். எல்லா சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பமளிப்பதும் தேசத்தின் பொதுவான முன்னேற்றத்திற்கு உழைப்பதுமே ஜஸ்டிஸ் கட்சியார் வேலையின் அடிப்படையான கொள்கைகளாக இருந்து வந்திருக்கின்றன.
கிராமவாசிகள் க்ஷேமாபிவிர்த்தி, ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றம்,
பொதுஜன சுகாதார அபிவிருத்தி, நீர்ப்பாசனம்,
போக்குவரத்து வசதிகள், குடித்தனச்செட்டு, கூட்டுறவு பாங்கி ஏற்பாடு,
சகல சமூக ஆண் பெண் குழந்தைகளுக்கு சம வசதியுடன் ஆரம்பக் கல்வி முன்னேற்றம்,
அறநிலையப் பாதுகாப்பு, குடியிருப்பு பாத்தியதை, குடிவாரப்
பாதுகாப்பு,
கிராம வாசிகளுக்கும் நகர வாசிகளுக்கும் அதிகப்படியான நலம்
ஏற்படும் முறையில், ஸ்தல ஸ்தாபன முனிசிபல் நிர்வாகம் நடத்துதல்.
இவை முதலியனவே ஜஸ்டிஸ் கட்சியாரின் முக்கியமான நோக்கங்களாக இருந்து வந்திருக்கின்றன. இவற்றை அனுசரித்து பல காரியங்கள் செய்யப்பட்டும் இருக்கின்றன.
மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விஷயங்களையும் பற்றி எவ்வளவோ விஸ்தாரமாக எழுதலாம். ஆனால், அவைகளை பொது ஜனங்கள் ஏற்கனவே
அறிந்திருப்பதினால் மீண்டும் விளக்கிக் கூற நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்களது எதிர்கால வேலைத்திட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகக்
கூற விரும்புகிறோம்
குடி அரசு- 1937 (1) 36
(2) எங்கள் எதிர்கால வேலைத் திட்டத்தை விளக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எங்கள் கட்சிக் கொள்கைகளைப் பற்றிக் கூறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில், எங்கள் வேலைத் திட்டங்களுக்கெல்லாம்
அந்தக் கொள்கைகளே அடிப்படையாக இருக்கின்றன.
எங்கன் கொன்கைகள் ஆவன
(எ) பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக, சட்ட வரம்புக்
குட்பட்ட நியாய முறைகளினால் சாத்தியமான மட்டும் விரைவாக
சுயராஜ்யம் பெறுவது.
(பி) எல்லாப் பொது ஸ்தாபனங்களிலும் சர்க்கார் சர்வீசிலும் எல்லா சமூகங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவமும், சந்தர்ப்பமும் அளித்து எல்லா வகுப்புகளுக்குள்ளும் நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் உண்டுபண்ணுவது, கடைசியில் எல்லா சமூகங்களும் ஒன்றுபடுவதற்கு அனுகூலமாக ஒவ்வொரு சமூகத்தையும் சீர்திருத்தி முன்னுக்குக் கொண்டுவருவது
(8) தென்னிந்தியாவிலுள்ள சகல சமூகங்களுடையவும், கல்வி, சமூக சுதந்திரம், பொருளாதார கைத்தொழில், விவசாய, அரசியல் முன்னேற்றங்களுக்காகப் பாடுபடுவது
(ட) முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி தென்னிந்திய பொதுஜன. அபிப்பிராயத்தை உருப்படுத்தி அதைத் தாராளமாக வெளியிட வசதி யுண்டுபண்ணுவது மேலே குறிப்பிட்ட லக்ஷ்யங்களை நிறைவேற்றுவதற்காக தேவையான வேலைகளை யெல்லாம் செய்வது
3. அரசியல்
கட்சிக் கொள்கைகளுக்கு அநுகுணமாகவே இதுவரை வேலைத்திட்டம் வகுக்கப்பட்டு வந்திருக்கிறது. மேற்கொண்டும் கட்சிக் கொள்கைகளுக்குப் பொருத்தமாகத் திட்டம் வகுக்கவே முயற்சி செய்யப்படும்.
சீர்திருத்தங்கள் குறைபாடுடையனவா யிருந்தாலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள்ளே குடியேற்ற நாட்டந்தஸ்துப் பெறுவதை லட்சியமாக வைத்துக் கொண்டு தேச மகாஜனங்களுக்கு சாத்தியமான நன்மைகளையெல்லாம் செய்யும் முறையில் புதிய சீர்திருத்தத்தை ஜஸ்டிஸ் கட்சியார் அமல் நடத்துவார்கள். இதற்காக சட்ட வரம்புக்குட்பட்டு அவசியமான சகல முறைகளையும் ஜஸ்டிஸ் கட்சியார் கையாளுவார்கள்.
செயலிலும், கொள்கையிலும் தனி வகுப்பு நோக்குடன் இன்றி பரந்த நோக்குடன் எல்லா மக்களுக்கும் வேலை செய்யும் கட்சி ஜஸ்டிஸ் கட்சி ஒன்றே, சர்க்கார் சர்வீசிலும், இதர இடங்களிலும் ஒரு சமூகத்தார் 37... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஏகபோக உரிமை பாராட்டி வருவது இந்நாட்டின் துரதிர்ஷ்டமாக இருந்து
வருகிறது. அதை ஒழித்து எல்லா சமூகங்களுக்கும் சம சந்தர்பங்களும் உரிமைகளும் அளிக்கும் பொருட்டு எல்லா ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்ற ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையே சமூக வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து ஒற்றுமையை உண்டுபண்ண ஏற்ற மார்க்கமாக இருந்து வருகிறது
ஒரு நாட்டிலே தேசீய உணர்ச்சி விருத்தியடைய வேண்டுமானால் சமூக ஒற்றுமை ஏற்பட்டுத் தீரவேண்டும். எனவே, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மூலமே சமூக ஒற்றுமையும், பரஸ்பர நல்லெண்ணமும்
திருப்தியும் ஏற்படுமென்பது ஜஸ்டிஸ் கட்சியாரின் திடமான நம்பிக்கை.
4. நிலவமிக் கொள்கை
விலைவாசிகள் வீழ்ச்சியினாலும், உலகப் பொருளாதார மந்தத்தினாலும், நிலவரி வருமானம் துரதிர்ஷ்டவசமாகக் குறைந்து வருகிறது. அத்துடன் நிலவரியை குறைக்கச் செய்ய வேண்டுமென்ற கூச்சலும் தொடர்ச்சியாகக் கேட்கப்பட்டு வருகிறது.
நிலவரி, கலால், வன வருமானந்தான் மிகவும் குறைவாக இருக்கிறது. வருமானம் குறையும்போது தேசோத்தாரண வேலைகள் தடைபடுகின்றன. கைத்தொழில் அபிவிர்த்திக்கும், விவசாய முன்னேற்றத் திட்டங்களுக்கும் பாதகம் ஏற்படுகிறது, இவைகளுக்கெல்லாம் பணம் தேவையாக இருக்கிறது எனவே, தேச நிருவாகத்துக்குத் தடை ஏற்படாமல் சாத்தியமான வழிகளில்
எல்லாம் வருமானத்தைப் பெருக்கத் தேவை யுண்டாகிறது
எவருக்கும் பலுவேற்படாமல் நியாயமான முறையில் நிலவரி முறையை வகுக்கத் தேவையான முயற்சிகள் செய்யப்படும்
தற்காலப் பொருளாதார மந்த காலத்தில் மறு பைசல் செய்வதை ஆதரிக்க முடியாதென்று சட்டசபையிலும், மகாநாடுகளிலும் ஜஸ்டிஸ்
கட்சியார் வற்புறுத்தியே வந்திருக்கிறார்கள். எனவே போதுமான அளவுக்கு நில வரியை குறைக்க செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் மேற்கொண்டும் முயற்சி செய்தே வருவார்கள்.
மறு பைசல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இடங்களில் விலைவாசியை முன்னிட்டு வரிகளை உயர்த்துவதில்லையென்றும் அந்தப் பொறுப்பை புது அரசியல் திட்டத்தின் படி ஏற்படும் சர்க்காருக்கு விட்டுக் கொடுப்பதென்றும் ஜஸ்டிஸ் கட்சியார் தூண்டுதலின் பேரிலே சர்க்கார் சம்மதித்திருக்கிறார்கள். மறு பைசல் ஏற்பாடுகள் யோசனைக்கு வரும்போது ரயத்துகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளப்படும்
நிலச்சுவான்தார்களும், விவசாயிகளும், பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் வேலை செய்தால்தான் விவசாயிகள் பிரச்சினை
குடி அரசு- 1937 (1) 38
திருப்திகரமாக முடியுமென்பது ஜஸ்டிஸ் கட்சியார் நம்பிக்கை. சமீபத்தில். ஜமீன் சட்டம் திருத்தப்பட்டபோது மகாநாடுகள் மூலம் நிலச்சுவான்தார் களுக்கும், விவசாயிகளுக்கும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யப்பட்டது. அம்முயற்சி வெற்றியும் பெற்றது. குடிகளுக்கு குடி இருப்பு உரிமை, மேய்ச்சல் வசதிகள், நீர்ப்பாசன உரிமை முதலியன கிடைக்கும் பொருட்டு ஜஸ்டிஸ் கட்சி நிலச்சுவான்தார் மெம்பர்கள் தூண்டுதலினாலேயே ஜமீன் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
பெரிய நிலச்சுவான்தார்களும், ஜமீன்தார்களும் இருக்க வேண்டியது அவசியமென ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொள்வதுடன் அவர்கள் க்ஷமத்துக்கு குடிகள்திருப்தியாகவும், செழிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியமெனவும் ஜஸ்டிஸ் கட்சியார் ஜமின்தார்களுக்கு எடுத்துக்காட்டி வருகிறார்கள். அகவே, குடிகளின் நியாயமான குறைபாடுகளையெல்லாம் பரிகரித்து அவர்களது நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க ஜஸ்டிஸ் கட்சியார் சதா முயற்சி செய்துகொண்டே இருப்பார்கள்.
விவசாயப் பொருள்களின் விலைவாசிகள் குறையும்போது ஜமீன் குடிகளின் வாரங்களையும் குறைக்க வேண்டுமென்று ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினையை முடிவு செய்யும்
விஷயத்தில் ஜமீன் குடிகளும், ஜமீன்தார்களும் ஜஸ்டிஸ் கட்சியாருடன் ஒத்துழைத்தே வந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட இனாம் சட்டத்தினால் இனாம் குடிகளும், இதர ஜமீன் குடிகளும் அநேகமாக சமநிலையை அடைந்திருக்கிறார்கள்
இந்தச் சட்டத்தினால் மாகாணம் முழுதுமுள்ள சுமார் 50 லக்ஷம்
இனாம் குடிகள் நன்மையடைந்திருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையில் மிகவும் பாடுபட்டு இனாம் சட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.
5. நகரசபைகளும் ஸ்தல ஸ்தாபனமும்
நகரசபைகளில் நிர்வாக வேலைக்கு நகரசபைகளுக்கும் சர்க்காருக்கும் ஜவாப்தாரிகளான கமிஷனர்களை நியமனம் செய்து சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நகரசபைத் தலைவர்களுக்கு எவ்வளவோ. ஆறுதல் ஏற்பட்டிருக்கிறது. நகரசபை, ஸ்தல ஸ்தாபன க்ஷமத்தைக் கருதி, நகரசபை, ஸ்தல ஸ்தாபன சிப்பந்திகளை இடமாற்றும் அதிகாரம் சர்க்காருக்கு இருக்கும்படி ஸ்தல ஸ்தாபனச் சட்டங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன.
இதனால் நகரசபை, ஸ்தல ஸ்தாபன உத்தியோகஸ்தர்கள் சர்க்கார் ஒழுங்கு முறைகளை மீறி நடவாமல் தடுக்கப்பட்டிருப்பதுடன் ஸ்தல
கட்சிப் பிணக்குகளினால் அவர்களுக்குத் தொல்லைகள் ஏற்படாமலிருக்கவும் வசதி செய்யப்பட்டிருக்கிறது 39௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மேலும், சந்தர்ப்பங்களுக்குத் தக்கபடி நகரசபை ஸ்தல ஸ்தாபன அபிவிருத்திக்குது தேவையான ஏற்பாடுகள் எல்லாம் அவ்வப்போது செய்யப்படும்
தாலூகா போர்டுகள் நிர்வாகச் செலவுக்குப் பணமில்லாமல் கஷ்டப்பட்டதினால் நிறுத்தப்பட்டன. தாலூகா போர்டு நிர்வாகத்தில் இருந்த இடங்கள் 1934 ஏப்ரல் முதல் ஜில்லா போர்டு நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டன. ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தைச் சீர்படுத்தும் பொருட்டு சில ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட ஜில்லா போர்டு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருதலைவரும் உபதலைவரும் ஏற்படுத்தப்பட்டனர். பொருளாதார நெருக்கடியினால் பிரிக்கவேண்டிய ஏனைய ஜில்லா போர்டுகளும் காலக்கிரமத்தில் பிரிக்கப்படும். ஜில்லா போர்டுகளைப் பிரிவினை செய்வது சம்பந்தமான வேலைகளை கவனிக்கும் பொருட்டு ஒரு ஸ்பெஷல் உத்தியோகஸ்தர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
6. பஞ்சாயத்துகள்
லோக்கல் போர்டு ஆக்டின்படி அமைக்கப்பட்ட யூனியன் போர்டுகளும் 1920 - வது வருஷத்திய சென்னை கிராமப் பஞ்சாயத்துச் சட்டப்படி அமைக்கப்பட்ட பஞ்சாயத்து போர்டுகளும் 1930-வது வருஷத்திய 3-வது சட்டப்படியுள்ள பஞ்சாயத்துகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஸ்தல நிருவாக சம்பந்தமாக அவைகளுக்கு ஏராளமான அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. குடிநீர் உற்பத்தி ஸ்தானம், மார்க்கட்டுகள், வண்டிப்பேட்டைகள், கைத்தொழில்கள், ஆலைகள், கிராம ரஸ்தாக்கள், பொது ஸ்தலங்கள் முதலியவைகளை பஞ்சாயத்துகள் மேல் பார்த்து நிர்வகித்து வருகின்றன. கிராம ஜனங்கள், நீர்ப்பாசன வேலைகள் முதலியவைகளையும் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு விட்டுக் கொடுக்கலாம். வீட்டு வரி முதலியன வசூல் செய்வதைப் பற்றி பஞ்சாயத்துகள் சர்க்காருக்கு சிபார்சு செய்யலாம். ஜில்லா போர்டு, ஸ்தல ஸ்தாபன சர்க்கார் அதிகாரங்களுக்கு சில விஷயங்களில் கட்டுப்பட்டு, பஞ்சாயத்துகளும் லோக்கல் பண்டு நிர்வாகத்தைப் பொறுத்த வரையில் சுய ஆட்சி ஸ்தாபனங்கள் ஆகிவிட்டன.
கிராம ஜனங்களின் தேவைகளை கவனித்து, சரியானபடி பூர்த்தி செய்யவசதி கிடைக்கும்படி கிராமப் பஞ்சாயத்துகளை விருத்தி செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் மேற்கொண்டும் தேவையான முயற்சிகள் எல்லாம் செய்வார்கள்.
7. கூட்டுறவு ஸ்தாபனங்கள்
கூட்டுறவு ஸ்தாபனங்கள், கிராமவாசிகள் கடன் பளுவைக் குறைக்க தேவையான முயற்சிகள் எல்லாம் செய்யப்பட்டு வருகின்றன.
குடி அரசு- 1937 (1) 40
மத்திய நில அடமான பாங்கி விடுத்துள்ள கடன் பத்திரங்களில் ஒன்றேகால் கோடி ரூபாய்க்கு சர்க்கார் உத்தரவாதம் சொல்லுவதாக ஒப்புக்கொண்டிருப்பது மூலம் நில அடமான பாங்கிகளின் நிலைமை
மிகவும் விருத்தியடைந்திருக்கிறது இந்த ஏற்பாட்டின்படி கடன் வாங்க ரயத்துகள் ஏராளமாக மூன் வருகிறார்கள். மேற்கொண்டும் அவர்கள் அதிகமாக மூன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது சம்பந்தமான தஸ்தாவேஜிகளுக்குக் கட்டணம் வாங்கப்படுவதில்லை. மற்றும், தேவையான சலுகைகள் எல்லாம் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. கூட்டுறவு நாணயச் சங்கங்களை விருத்தி செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. கரும்புச் சாகுபடி, பழ விற்பனை, நெசவுத் தொழில், குடிசைக் கைத்தொழில் முதலியவைகளையும் கூட்டுறவு முறையில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் விவசாயக்கடன் சட்டத்தில் சர்க்கார் செய்த திருத்தங்களினால், காலநிலை வேற்றுமையினால் ஏற்பட்ட கஷ்டங்களைத் தவிர இதர கஷ்டங் களுக்காகவும் கடன் வாங்க விவசாயிகளுக்கு வசதியளிக்கப்பட்டிருக்கிறது
விவசாயிகள் கடன் பளுவைக் குறைப்பதற்காக கடன் சமரச போர்டுகள் ஏற்படுத்தும் விஷயங்களிலும் ஜஸ்டிஸ் கட்சியார் எப்பொழுதும் ஆதரவளித்தே வந்திருக்கிறார்கள்.
தம்துபட் (Damdupat) சட்டப்படி முதலைவிட இரட்டிப்பான வட்டியை ஒரே முறையில் ஈடாக்க முடியாது. சென்னை மாகாணத்தில் இந்தச் சட்டம் அமலில் இல்லாமலிருந்தாலும், சென்னை கடன் சமரசச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஒரு திருத்தம் மூலம் முதலைவிட இரட்டிப்பான வட்டியை எந்தக் கடன்காரரும் வசூல் செய்யகூடாது என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது விவசாயக் கடனாளிக்கு மிகுந்த ஆறுதலளிக்கும்
நீண்ட காலக் கடன்களை சிறு சிறு தவணைகளாகச் செலுத்தவும், குறைந்த வட்டியில் அது வகைக்குக் கடன் கொடுக்கவும் ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்பாடு செய்வார்கள்.
கிராமவாசிகளின் க்ஷேமத்துக்குத் தேவையான சட்டங்கள் இயற்ற ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு பொழுதும் பின்வாங்க மாட்டார்கள். மாகாணத்திலுள்ள பலதிறப்பட்ட ஐக்கிய நாணய ஸ்தாபனங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து விவசாயிகள் கடன் பளுவைக் குறைக்கச் செளகரியம் செய்யும் பொருட்டு ஒரு தனி ஸ்தாபனம் ஏற்படுத்தவும் ஜஸ்டிஸ் கட்சியார் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
மக்கள் கடனாளிகளாவதற்கு வேலையில்லாத் திண்டாட்டமே காரணம். ஆகவே, குறைந்த வட்டிக்குத் தேவையுடையவர்களுக்குக் கடன் கொடுக்க ஏற்பாடு செய்வதுடன் ஏராளமான பேருக்கு வேலை ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கொடுப்பதற்காக பெரிய கைத்தொழிற்சாலைகள் ஸ்தாபிக்கவும் வசதிகள். செய்து கொடுக்கப்படும். விவசாயம் மூலம் கிராமவாசிகளுக்கு வேலை கிடைப்பது கஷ்டமாய் விட்டதினால் கைத்தொழில் ஸ்தாபனங்கள். மூலமே கிராம வாசிகளுக்கு வேலை கொடுக்க முடியும்
போஸ்டு ஆபீஸ் முதலிய சர்க்கார் ஸ்தாபனங்கள் மூலம் சர்க்கார்
உத்தியோகஸ்தர்கள் பெற்று வரும் இன்ஷியூரன்ஸ் வசதிகள் ஏனையோரும்
பெறும்படி ஏற்பாடுகள் செய்யப்டும்
8. கல்வி.
10 வருஷ காலத்துக்குள் எல்லாருக்கும் ஆரம்பக் கல்வியளிப்பதே ஜஸ்டிஸ் கட்சியின் லட்சியம். சில குறிப்பிட்ட இடங்களில் கட்டாய ஆரம்பக் கல்வி ஏற்பாடு அமலில் இருந்து வருகிறது. சொற்ப காலத்துக்குள். கட்டாய ஆரம்பக் கல்வி ஏற்பாடு எங்கும் அமலில் கொண்டு வரப்படும்.
ஆரம்பக்கல்விச் சட்டத்தைத் திருத்த ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. உத்தேசிக்கப்பட்டிருக்கும்படி, உயர்ந்த வகுப்பு வரைப் படியாமல் இடையில் பள்ளிப்படிப்பை நிறுத்துகிறவர்களுக்குத் தண்டனையளிக்கப்படும். இதனால் ஆரம்பக் கல்வி விஷயத்தில் ஏற்படும் வீண்செலவு தடைபடும். ஆரம்பக் கல்விப் பயிற்சிக்குத் தடையேற்படாமல் இருக்கும் பொருட்டு ஏழை மாணவர்களுக்கு மத்தியானச் சாப்பாடு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியானச் சாப்பாடு கொடுக்கும் விஷயத்தில் மேற்கொண்டும் கண்டிப்பான ஏற்பாடுகள் செய்யப்படும்
மாணவர்களுக்கு இலக்கிய கல்வியளிப்பதுடன் தொழிற்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்
தகுதியற்ற பள்ளிக்கூடங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கிராண்டை
நிறுத்தல் செய்துவிட்டு தகுதியுடைய பள்ளிக் கூடங்களுக்கு அதிகப்படியான கிராண்டுகள் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது
கிராண்டு கொடுக்கும் விஷயத்தில் இதுவரையில் அனுங்டிக்கப்பட்டு வரும் ஆள் வீத முறை நிறுத்தப்பட்டு விடும். ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த மாதவாரி கிராண்டு 12 ரூபாயிலிருந்து 13 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது
எல்லோருக்கும் எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வசதியளிக்கும் பொருட்டு ஸ்பெஷல் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்து பருவமடைந்தவர். களுக்கு கல்விபுகட்ட மாகாணம் முழுதும் ஏற்பாடுகள் செய்யப்படும். யூனிவர்சிட்டி, செக்கண்டரி, பிரைமரிக் கல்விகளுக்கு மொத்தம் 232
லக்ஷம் ரூபாய் வருஷந்தோறும் செலவாகிறது.
குடி அரசு- 1937 (1) 42
கைத்தொழில் விவசாயக் கல்விகளுக்கு சுமார் 4 லக்ஷம் ரூபாய் செலவாகும். இது மொத்தக் கல்விச்செலவில் 1.8 சதமானமாகிறது. இந்தத் தொகை சர்க்கார் கைத்தொழில் சாலைக்கும், சர்க்கார் சாங்கேதிகக் கல்விச்சாலைக்கும் செலவு செய்யப்படுகிறது. சர்க்கார் சாங்கேதிகக் கல்விச்சாலை உயர்தர எலக்டரிக்கல், மெக்கானிக்கல் கல்விப் பயிற்சியளித்து
வருகிறது. அத்துறைகளில் நிபுணர்களை உற்பத்தி செய்யவும் அது முயலுகிறது அப்பள்ளிக்கூடத்தை விருத்தி செய்ய ஜஸ்டிஸ் கட்சியார் மேலும் முயற்சி செய்வார்கள்.
கைத்தொழிற் பயிற்சியளிக்க ஒரு உருவான திட்டம் போடப்படுகிறது. ஒவ்வொரு ஜில்லாத் தலைநகரத்திலும் ஒவ்வொரு கைத்தொழில் கல்விச்சாலை ஸ்தாபிக்கவும் அந்தந்த இடத்துக்குப் பொருத்தமான கைத்தொழில்களில் மாணவர்களைப் பழக்கவும் ஏற்பாடு செய்யப்படும்
9. குடி
முன்னமே கூறியுள்ளபடி கலால் வருமானம் தற்பொழுது சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. எதிர்கால சர்க்கார் கலால் வருமானத்தில் இனி நம்பிக்கை வைப்பதில் பிரயோஜனமில்லை. இவ்வருமானத்திற்கு ஈடுசெய்ய வேறு வழிகளைக் கண்டு பிடித்தாக வேண்டும். குடி ஒழிப்புப் பிரச்சினை இதன் மூலம் தானாகவே தீர்ந்து விடும்
மேலும், குடியை ஒழிக்க வேண்டி கள், சாராயம் முதலியவற்றிற்கு காண்பிக்கப்படும் சலுகையைத் தவிர்க்கவும், திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சப்படுதலைத் தடுக்கவும் சட்டமூலம் இயன்றவற்றைச் செய்ய கட்சி தன் முழுப் பலத்தையும் கொண்டு பாடுபடும்
10. தீண்டாமை
சமூக சமத்துவம், சகோதரத்வமே கட்சியின் அடிப்படையான கொள்கைகளில் முக்கியமானதாகும். தீண்டாமையை வேருடன் களைந்தெறிய கட்சி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. பாடசாலைகள், கல்லூரிகள், குடிதண்ணீர், பொதுகாட்சிச் சாலைகள், மற்றும் பல பொது இடங்கள் முதலியவற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்களும் யாதொரு நிர்ப்பந்தமின்றி இதர ஜாதியினருடன் சமத்துவமாய் இருந்துவர, சட்டபூர்வமாகவும் கட்சி தன்னாலானவற்றைச் செய்ய பின் வாங்காது
எம் மாணவனாவது வகுப்பு வித்தியாசக் காரணத்தைக் கொண்டு எப்பாடசாலையிலும் சேர்வதற்கு அநுமதி மறுக்கப்படுமேயானால் அப்பாடசாலையை அங்கீகரிப்பதில்லை யென்றும், அப்பாடசாலைக்கு நன்கொடையளிப்பதில்லை யெனவும் சென்னை ஆரம்பக்கல்விச் சட்டத்தில் கண்டிருக்கிறது. அதைக் கண்டிப்பாக அமுலுக்குக் கொண்டு வருவதன். B ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மூலம் தாழ்த்தப்பட்ட(ஷெட்யூல் வகுப்பு) மக்களுக்குத் தற்பொழுதிருந்து வரும் தடையும் நொடிப்பொழுதில் மறைந்து விடுமென்பதில் சிறிதும் ஐயமில்லை
1933ம் வருஷத்திய திருத்தச் சட்டப்படி பஞ்சாயத்தின் மேற்பார்வையிலிருந்து வரும் கிணறுகள், குளங்கள், தண்ணீர்த் தேக்கங்கள் முதலியவற்றில் ஜாதி, மத வித்தியாசமின்றி எம்மக்களும் அனுபவிக்கலாமென்று கண்டிருக்கிறது. கிராமப் பஞ்சாயத்துக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதித்துவத்திற்கும், ஸ்தல ஸ்தாபன ஊழியங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை கண்டிப்பாய் அனுசரிக்கவும், ஸ்தல ஸ்தாபன போர்டு சட்டத்தில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது சம்பந்தமாகசட்டங்கள்மேலும் வேண்டியிருந்தால் அவைகளும் இயற்றப்படும்.
11. கிராம சுகாதாரம்
கிராம சுகாதாரமே கட்சியின் பிரதம நோக்கமா யிருந்து வருகிறது. வாழ்க்கையை இன்புறச் செய்வதற்கு சுத்தம், சுகாதாரம் என்பவை அவசியம் என்பதை விவசாயிகளுக்குப் போதிக்க வேண்டி ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும், ஒவ்வொரு சுகாதார இன்ஸ்பெக்டர்களை அளிக்க நோக்கங் கொண்டுள்ளது
சேரி அபிவிருத்தி
கிராமங்களிலும் நகரங்களிலும் சேரி அபிவிருத்திக்கான எல்லாக் காரியங்களையும் செய்ய கட்சி தன் முழுக்கவனத்தையும் செலுத்தும் சேரிகளில் நெருக்கத்தைத் தவிர்க்கவும் சுகாதார முறைப்படி புதிய வீடுகள் அமைக்கவும் தகுந்த திட்டத்தின் மீது முயற்சிகள் கையாளப்படும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்வதற்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்த 10 வருஷங்களில் மாகாணத்தின் அதிகப்படியான வருமானத்தில் இச் செலவு சேரும்
சேரிகளைத் திறம்பட நிர்வகிக்கவும், நகர மக்கள் அனுபவிக்கும் வசதிகளை சேரி மக்களும் அனுபவிக்கச் செய்யவும் வேண்டி சென்னை நகர முனிசிபல் திருத்தச் சட்டத்தில் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மற்ற ஸ்தலங்களுக்கும் காலாகாலத்தில் சட்டங்கள் அதே போன்று இயற்றப்படும்
12. போக்குவரத்துகள்
கிராம போக்குவரத்துக்களை அபிவிருத்தி செய்ய வேண்டுவதே கட்சியின் இடைவிடா நோக்கமாயிருந்து வருகிறது கிராமங்களை ஒன்றோடொன்று இணைக்கவும் தனது விளை பொருள்களை முக்கியமான சந்தைகளுக்கு கிராமவாசி கொண்டு செல்லவும், கிராமங்களில் வண்டிப் போக்குவரத்துக்கான தக்க ரோடுகளை அமைக்கவும், கடைசியில் அவற்றையெல்லாம் கிராமத்தின்
குடி அரசு- 1937 (1) 44
பெரிய ரோட்டில் கலக்கும்படி செய்யவும் நகரிலுள்ள வைத்திய வசதிகளை கிராமவாசியும், கஷ்டமின்றி அடையும்படி செய்யவும் செலவிடாத பணம் சரியான முறையில் செலவிட்டதாகாது
இது சம்பந்தமாக ரோடு அபிவிருத்தி விஷேச இஞ்சினியர் தோழர் வைப்பன் தயாரித்த திட்டம் உடனே அமுலுக்குக் கொண்டு வரப்படும். மாகாணம் முழுமைக்கும் இத்திட்டப்படி 5 கோடி ரூபாய்கள் பிடிக்குமென கணக்கிடப்பட்டிருக்கிறது. இது சம்பந்தமாக இந்தியா சர்க்காரிடமிருந்து கடன் வாங்கிக் கொள்வதெனவும், மத்திய சர்க்காரிடமிருந்து பெட்ரோல் சம்பந்தமாக வருஷா வருஷம் கிடைக்கும் 16 லக்ஷ ரூபாயிலிருந்து இக்கடனை திருப்பி அடைத்து விடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது
சென்ற பட்ஜெட் கூட்டத்தின் பொழுது இது சம்பந்தமாக சட்டசபையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது.
13. வைத்திய உதவி
வைத்திய உதவியை அதிகரிக்க மூயற்சிகள் கையாளப்படும் ஒவ்வொரு கிராமத்திற்கும், அல்லது பல கிராமங்களுக்கும் சேர்ந்தாற்போலும்,
சிசு சம்ரக்ஷணை ஸ்தலங்களும், வைத்திய நிவாரண ஸ்தலங்களும் அளிக்கப்படும். சென்னையிலுள்ள இந்திய வைத்திய பாடசாலையும், மாகாணத்தின் பல பாகங்களிலும் கிராமங்களிலுமுள்ள இந்திய வைத்தியசாலைகள் யாவும் கட்சியின் முயற்சியினால் ஏற்பட்டனவே. அவைகள் மேலும் அதிகரிக்க எதிர்காலத்தில் முயற்சிக்கப்படும்
சுகாதார நிபுணர்கள் தற்பொழுது பொறுக்கி எடுக்கப்பட்டுள்ள ஸ்தலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவை இன்னும் அதிகரிக்கப்படும்
14. பொருளாதார முண்னேற்றம்
விவசாயிக்கு ஏற்பட்டுள்ள கடன் சுமையை நிவர்த்திக்கவும் மேல் கொண்டு கடன் ஏற்படுவதினின்றும் அவனைப் பாதுகாக்கவும் சட்ட மூலமாகவும் இதர வழிகள் மூலமும் எல்லா முயற்சிகளும் கையாளப்படும்
500 ரூபாய்க்கு மேற்படாத சிறிய கடன்காரர்களை, செளகார்களின் இம்சையினின்றும் பாதுகாப்பதற்காகவே, சமீபத்தில் சட்டசபையில் கடன்காரர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது
அரிசி, நெல் மற்றும் பல தானியங்களும், கடலைக்காய், கரும்பு, புகையிலை, எள் முதலியனவும் பழ வகைகளும் தக்க விலைக்கு விற்கும்படிச் செய்ய சர்க்கார் மார்க்கெடிங் உத்தியோகஸ்தர்களை நியமனம் செய்துள்ளது. அவைகளின் உற்பத்தி அதிகரிக்கச் செய்வதும் 45 ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
புது புது சரக்குகளை உற்பத்தி செய்வதும் பயிர்களுக்கு நோய் வருவதைத் தடுக்க தக்க முயற்சிகளைக் கையாளுவதும் அவர்கள். வேலையாயிருந்து வரும்.
15. தொழிற்சாலைகள்
உள்நாட்டுத் தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதே தற்போதைய முக்கிய பிரச்சினையாயிருந்து வருகிறது. 100க்கு 75 பேர் விவசாயிகளாயிருந்தாலும் விவசாயம் மட்டும் பலன் தராது. தொழிற் சாலைகளும், நம் தேசத்தில் அதிகரிக்க வேண்டும். இறக்குமதியைக் காட்டிலும் தயார் செய்யப்பட்ட சரக்குகளின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும் தொழிற்சாலைகளின் அபிவிர்த்திக்குக் கட்சி தன்னாலானவற்றை எல்லாம் செய்யும். இத்தேசத்திலும், வெளிநாடுகளிலும், தொழிற்பயிற்சி அடையும் மாணவர்களுக்காகத் தொகை ஒதுக்கி வைக்கப்படுவது அதிகரிக்கப்படும் பயிற்சி முடிந்தவுடன் அவர்கள் அத்தொழில்களுக்கு நியமிக்கப்படுவார்.
வியாபாரக் கல்வியும், பயிற்சியும்கூட போதிக்கப்படும். வியாபாரத்தில் திறமையும், பயிற்சியும் பெறுவதற்காக அன்னிய நாடுகளுக்கு அனுப்பப்படும் மாணவர் கோஷ்டிகள் அதிகரிக்கப்படும்
குடிசைத் தொழில்கள்
குடிசைத் தொழில்களை புதுப்பிப்பது கட்சியின் பிரதம திட்டங்களில் ஒன்றாகும்
நெசவு, பிரம்பு வேலை, விளையாட்டுச் சாமான்கள், பொத்தான் உற்பத்தி, டேப், லேஸ், பின்னல் வேலை, நாருரித்தல், கயிறு பின்னுதல், சாயம் போடுதல், சோப் உற்பத்தி மற்றும் பல கைத்தொழில்களும் இத்தேசத்திலிருந்து வருகின்றன. சிறிய பண உதவி அளிக்கப்படுமாயின் இக்கைத்தொழில் வளர்ச்சியுறுவதற்கு ஏதுவாயிருக்கும். அதை அளிக்கச் செய்து அவற்றின் அபிவிர்த்திக்கான யாவற்றையும் கட்சி செய்யும்
விவசாயத்திற்கு அடுத்தபடியான நம் தேசத்தில் இருக்கும் படியான முக்கியமான தொழில் கைத்தறியே ஆகும். இத்தொழிலை அபிவிர்த்தி செய்ய வேண்டுவதே கட்சியின் இடைவிடா முயற்சியாயிருந்து வருகிறது
கையால் நெய்யப்பட்ட சரக்குகளை நல்ல விலைக்கு விற்க வசதிகளைச் செய்து கொடுப்பதற்காக சர்க்கார் ஐந்து வருஷத்திற்கு அரை லட்ச ரூபாய்க்கு மேல் திரவிய சகாயம் செய்துள்ளனர். அன்னிய நாட்டு நூற்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியிலிருந்து இத்தொகை பெறப்படுகிறது. மாகாணக் கைத்தறியாளர் கூட்டுறவுச் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பணமுடையால் கஷ்டப்படும் கைத்தறியாளர்க்கு பணவுதவி செய்வதும், ஸ்தல நெசவாலைகளிலிருந்து அவர்களுக்கு வேண்டிய நூற்களை கொடுத்து உதவுவதும், ஸ்தலத்தில் விற்பனையாவது
குடி அரசு- 1937 (1) 46
போக நெய்யப்பட்ட இதர சரக்குகளை சென்னையில் விற்பனையாக்க முயற்சிகளை எடுத்துக்கொள்வதும் அதன் பிரதம வேலையாயிருந்து வருகிறது.
கைத்தறிக்கு உதவுவது போன்று, கம்பளித் தொழிலுக்கும் 5 லக்ஷம் ரூபாய் உதவி செய்ய இந்தியா சர்க்கார் சமீபத்தில் தீர்மானித்துள்ளனர் இத்தொகை கிடைக்கப்பெற்றதும், இத்தொழிலாளர்களின் நன்மைக்காகவே உபயோகப்படும்.
பட்டு உற்பத்தி எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்க முயற்சிக்கப்படும் கொள்ளேகால், குப்பம், பால்மனார், மதனபள்ளி, பெத்தாபுரம் போன்ற. விடங்களில் மைசூரில் நடத்தி வருவதைப் போன்று பட்டு உற்பத்தித் தொழில் அதிகரிக்கச் செய்ய வசதியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வேலையில்லாதவர் களுக்கும் பட்டு உற்பத்தித் தொழில் மூலம் வேலை கிடைக்கும் இதற்காக ஒரு கட்டுப்பாடான திட்டத்தின் மீது தீவிரப் பிரசாரம் செய்ய கட்சி மேற்கொண்டு இருக்கிறது. எண்ணெய் வித்துக்கள் விஷயத்திலும் நம் மாகாணம் பெரும் பாக்கியம் அடைந்திருக்கிறது. ஆனால், அவற்றை நாம் பலன்படுத்திக் கொள்ளாமலிருக்கிறோம். மேற்குக் கடற்கரை ஜில்லாக்களிலும் கிழக்குக் கடற்கரை ஜில்லாக்களிலும் ருசிகரமான எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாகின்றன. அவற்றிலிருந்து சமையலுக்கும் மருந்து வகைகளுக்கும் எண்ணெய் எடுப்பதன் மூலம் நம்பிக்கையான வருமானம் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலையில்லாதவர்களுக்கும் வேலை கிடைக்கும் இதையும் கட்சி மேற்கொள்ளும்
16. சர்க்கார் உத்தியோகங்கன் தற்போதைய நிர்வாகம் தாங்க முடியாதபடி இருந்து வருகிறது ஆகவே, நிர்வாகத் திறமையில் சிறிதும் குறைவேற்படாத வண்ணம் நம் தேச பொருளாதார நிலைமைக்குத் தக்கபடியும் இந்திய வாழ்க்கைக்குத் தக்கபடியும் சர்க்கார் உத்தியோகங்களுக்குச் சம்பளம் தரப்பட வேண்டும்
ரயில்வேக்கள், தண்ணீர் சப்ளை, மின்சாரம், நீர்ப்பாசனம் போன்ற பொதுஜன நன்மைக்குகந்தவற்றை சர்க்காரே தங்கள் மேற்பார்வையில் நடத்த கட்சி மூயலும்
வடக்கு, தெற்கு ஜில்லாக்களிலுள்ள டெல்டா பிராந்தியங்களில் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஆரம்பித்து நடத்தப்பட்டு வருகின்றன. அது போன்றே மேற்கு மத்திய ஜில்லாக்களிலும், சீதன ஜில்லாக்களிலும் நீர்ப்பாசனத் திட்டங்கள் கூடிய சீக்கிரத்தில் ஆரம்பித்து நடத்தப்படும்
17. பெண்ணுமிமை
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கட்சி எப்பொழுதும் முயன்றுவரும். 47௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
18. மீன்
மீன் பண்ணையும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும். உணவுக்கு அருமையான, விலை மதிக்க கூடிய உயர்ந்த ரக மீன்கள் தற்பொழுது
மீன் இலாகாவின் முயற்சியினால் நதிகளில் விடப்படுவது இன்னும் தீவிரமாக நடைபெற்று வரும்
19. தொழில்
தொழிலாளர் பிரச்சினையின் அவசியத்தை கட்சி உணராமலில்லை. தொழிலாளிக்கு குடியிருக்க செளகரியமான வீடு, போதிய சம்பளம், வேலை நேர நிர்ணயம், தொழிலாளிகளின் குழந்தைகளுக்குப் படிப்பு, வயது வராத சிறுவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதைத் தடுப்பது, வாழ்க்கைக்கு வேண்டிய மற்றும் பல அத்தியாவசியமானவைகளும்
கட்சியால் கவனிக்கப்பட்டு வரும்
20. மாகாண பொருளாதார கவுன்சிலும் 10 வருஷத் திட்டமும் மாகாண பொருளாதார கவுன்சில்கள் அமைக்க சர்க்கார் தீர்மானித்துள்ளனர். சர்க்கார் இலாகாக்கள் பலவற்றுடனும் இக்கவுன்சில்கள்
ஒத்துழைத்து தேச முன்னேற்றத்துக்கான ஒரு பத்து வருஷத்திட்டத்தை வகுக்கும். அக்கவுன்சிலில் உத்தியோகஸ்தர் பாதிபேரும் உத்தியோகஸ்தர்.
அல்லாதார் பாதிபேருமிருப்பர். அதன் அமைப்பு, வேலை, நடவடிக்கை முதலியன இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆயினும் இம்மாகாண விவசாய அபிவிருத்தியைக் குறித்தும், ஆரம்பக் கல்வியைக் குறித்தும் ஆலோசிக்க இரு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விளைபொருள்கள் உற்பத்தி விஷயத்தில் பிறரை எதிர்பார்க்காத முறையில், இம்மாகாண விவசாய அபிவிருத்தியைச் செய்ய ஒரு பத்து வருஷத் திட்டத்தை வகுக்கவே முதற் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது
மேலும் பல கிராமங்களுக்கு வேண்டிய விதைகள் சேகரம் செய்வதும், எருக்களை அதிகப்படியாக உபயோகிக்க வசதிகள் ஏற்படுத்துவதும், இல்லாத இடங்களில் நீர்பாசனங்களை உண்டாக்குவதும், கால்நடைகளை அபிவிருத்தி செய்வதும் அதன் நோக்கமாயிருந்து வரும்
கிராமங்கள், நகரங்களிலுள்ள வயதுவந்த சிறுவர், சிறுமிகளுக்கெல்லாம் கல்வி கிடைக்கத் தக்கவிதமாய் ஆரம்பக்கல்வியை விஸ்தரிக்கச் செய்வதே கல்வி சப் கமிட்டியின் முக்கிய நோக்கமாய் இருந்து வரும், மேலும் விவசாய தோரணையில் இருக்கத் தக்க விதமாய் ஆரம்பக் கல்வி திருத்தி அமைக்கப்படும். விவசாயக் காட்சிகளும் அடிக்கடி தகுதியான இடங்களில் நடத்திக் காண்பிக்க முயற்சிக்கப்படும்
குடி அரசு- 1937 (1) 48
மேலும் தகுதியான விலை வரும் வரையில், தங்கள் விலை பொருள்களை விவசாயிகள் சேமித்து வைப்பதற்காக தானியக் களஞ்சியங்களைத் தக்க இடங்களில் கட்டவும் கட்சி நோக்கங்கொண்டுளது. விவசாயிகளுக்கு இலவசப் பொது மேய்ச்சல் தரை கிடைக்கும்படிச் செய்வதற்காக ஸ்தல ஸ்தாபனங்கள், மேய்ச்சலுக்குத் தகுதியான இடங்களை விலைக்கு வாங்கும்படிச் செய்யவும் ஆலோசனையிலிருந்து வருகிறது ஆகவே, கட்டாய ஆரம்பக்கல்வி, கிராமங்களில் எல்லாக் காலத்துக்கும் தக்கதான ரோடுகள் அமைப்பது, பாதுகாப்பு தண்ணீர் சப்ளை, கிராமாந்தரங்களுக்கு குறைந்த விகித மின்சாரம் முதலியனவே ஜஸ்டிஸ் கட்சியின் 10 வருஷத் திட்டமாகும். சுருங்கக் கூறுமிடத்து தேச வருமானத்தையும், வாழ்க்கையின் அந்தஸ்தையும் உயர்த்துவிப்பதுடன், தற்கால நிலைமையில் அடையக்கூடிய எல்லா வித செளகரியங்களையும் கிராமவாசியும் அடையும்படிச் செய்வதேயாகும்
21. பொது
ஜாதி, மத பேதமின்றி எம் மக்களும், இவற்றாலும், இன்னும்
பலவற்றாலும் நன்மையை அடைய வேண்டுவதே கட்சியின் அடிப்படையான. நோக்கமாய் இதுவரை இருந்து வந்தது போன்றே, இனியும் இருந்துவரும். வருங்காலத்தில் சரித்திராசிரியர்களே இது பற்றித் தீர்ப்புக் கூறவேண்டியர்களாவர்.
குடி அரசு - அறிக்கை - 03.01.1937
49௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஏமாற்றுந் திருவிழா
ஜவஹர் கதம்பம்
படித்த மக்கள் என்பவர்கள் பாமர மக்களை ஏமாற்றுந் திருவிழாவாகிய காங்கிரஸ் பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்தது. கும்பமேளா
- மகாமகம் (மாமாங்கம்) என்கின்ற திருவிழாக்களுக்கு செய்யும் விளம்பரம் போலவே விளம்பரங்கள் செய்யப்பட்டு ஏராளமான மக்களைக் கூட்டுவித்து அவர்களுக்கு புரியாத பல விஷயங்களைப் பேசி அவர்களுக்கு சம்பந்தமில்லாத பல தீர்மானங்களைச் செய்து கலைந்தாகிவிட்டது தேசியப் பத்திரிகைகளும், தேசியத் தலைவர்கள் என்று விளம்பரம் பெற்றவர்களும் இந்தப் பேச்சுக்களையும் தீர்மானங்களையும் புராணப் பிரசங்கம் போல் புகழ்ந்து பேசி காங்கிரசுக்கு போயிருக்காத பாமர மக்களையும் குழப்பி ஏமாற்றி ஆகிவிட்டது
நமது நாட்டில் உள்ள மக்களில் 100க்கு 10பேர்களே படித்தவர்கள். இந்த பத்துப் பேர்களிலும் முக்காலே அரைக்கால்வாசிப் பேர்கள் அகவிலை அறிய முடியாத பெரிய ஜாதிக்காரர்களும் அகவிலை அறிய வேண்டிய அவசியமில்லாத வக்கீல்கள், டாக்டர்கள், பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தண்டசோத்து ஆசாமிகளும் ஆகவே இருப்பார்கள்.
இந்தக் கூட்டத்தார்களே பிரதானமாய் இருந்து முக்கிய பங்கெடுத்து நடத்தும் இம்மாதிரி திருவிழாக்களில் என்ன காரியங்கள் நடக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை
இத்திருவிழாவின் தலைவரான தோழர் ஜவஹர்லால் ஒரு கூடை சங்கதி ஒரே மூச்சில் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சு சுமார் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பது ஒரு பிரச்சினையானாலும் அப்பேச்சில் உள்ள விஷயம் என்ன என்பதை யோசித்தால் அது ஒரு கதம்பம்
(அதுவும் பல நாளையத்த ஊசிப்போன காய்கறி, குழம்பு, சோறு ஆகியவைகளை பிசைந்து உருட்டிப் போட்ட உருண்டைக் கதம்பம்) என்பதல்லாமல் அதில் தற்காலத்துக்கு ஏற்றதோ அல்லது பதினாயிரக்கணக்காக பல ஊர்களிலிருந்து செலவு செய்து கொண்டு வந்த மக்களுக்கு பயன்படத்தக்கதாகவோ ஒரு வார்த்தையாவது இருந்தது என்று சொல்லத்தக்க பாகம் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை:
குடி அரசு- 1937 (1) 50
தலைமை உபன்யாசத்தின் முதல் மூச்சில் எல்லாம் வெறும் அகில உலக பிரச்சினைகளையே ஒன்றின்மேல் ஒன்றாகப் போட்டுக் குழப்பி
முழுப் பேச்சிலும் அரைப்பாகத்துக்கு மேலாகவே பூலோகப் படலமாக முடிக்கப்பட்டிருக்கிறது. இவை பாமர மக்களுக்கு எப்படிப் புரியும்? இவற்றைப் பேசியதால் ஏற்படும் பயன் என்ன? என்பவைகளைப் பற்றி யோசித்துப்பார்த்தால் அப்பேச்சின் பயனற்ற தன்மை அறிவாளிகளுக்கு தெற்றென விளங்காமல் போகாது
இந்தியாவானது 100க்கு 90 பாகம் விவசாயிகளையும் கூலிகளையும் கொண்ட நாடு. இவர்கள் தங்கள் நாட்டிலேயே அடுத்த பட்டணத்தில் என்ன நடக்கிறது என்பது தெரிய முடியாதவர்கள். கையாலான அளவுக்கு உழைத்துவிட்டு தங்களுக்கு கிடைத்ததை சாப்பிட்டுவிட்டு கிடைக்காததைக் கடவுள் செயல் என்று சொல்லிக்கொண்டு முடங்கிப் படுத்து விடியுமுன் எழுந்து உழைப்புக்கு போகிறவர்கள். இவர்கள் மூளையிலும், ரத்தத்திலும், மயிர்க்கால்களிலும் அடிமை வாழ்க்கையின். ஆனந்தமும் தலைவிதியின் ஆதிக்கமும் அல்லாமல் வேறு ஒன்றுமே காணப்படாத மக்களேயாவார்கள். ஆகவே இவர்களுக்கு பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் இவர்களைக் கரையேற்ற அவதார புருஷர்களாக வந்தோம் என்கின்றவர்கள் பூலோக புராணத்தைப் படிப்பதன் மூலம் என்ன நன்மையை உண்டாக்கி விடமுடியும்?
நம் பாமர மக்கள் சிரம் வணங்கி கைகட்டி வாய் பொத்தி தலைவர்கள் உபன்யாசங்களை கேட்பதாலேயே அவைகளை உணர்ந்து கொண்டவர்களாக ஆகிவிடுவார்களா? கோவில்களில் அர்ச்சகர்களும் சடங்குகளில் புரோகிதர்களும் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனைகளும் சுலோகங்களும் சொல்லும்போது பாமர மக்கள் மாத்திரமல்லாமல் அங்கு கூடியுள்ள பண்டிதர்களும் பெரும் செல்வந்தர்களும் கைகூப்பி கண் மூடி ஏகாக்கிரஹிகளாய் இருந்து பயபக்தியுடன் கேட்கிறார்கள் கவனிக்கிறார்கள். என்றாலும் அவற்றில் ஒரு சிறு பாகமாவது அவர்களால் அறியமுடிகிறதா என்பதை அறியாதவர்கள் யார்? ஆகவே ஜவஹர் கதம்பமானது முதல் பகுதி பாகம் வெறும் உலக புராணமாக இருந்தது என்பதோடு மக்களுக்கு தேவையில்லாததும் புரியாததுமாகவே முடிந்துவிட்டது.
மற்ற பகுதி பாகமோவெனில் அதிற் பகுதி பழங்கதையாகவே முடிந்ததேயல்லாமல் புதிதாக தற்கால நிலைக்கு எல்லா மக்களுக்கு உள்ள பொது குறைகளுக்கு பாமர மக்களுக்கு உள்ள பாரம்பரியமான கஷ்டங்களுக்கு எவ்வித பரிகாரமும் கிடைக்கும்படியான மார்க்கமோ பேச்சோ ஒருவரி கூட கண்டுபிடிக்க முடியாமலே போய்விட்டது
குறிப்பாக காங்கிரஸ் தலைவர் வறுமையைப் பற்றியும் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் பற்றியும் பேசும் போது “இன்று உலகத்தில் எங்குமே, துன்பத்தைத் தரும்படியான ஏற்றத்தாழ்வுகள், 51— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கொடுமைகள் இருந்து வருகின்றன. ஆனால் இந்தியாவைப் போல் இவ்வளவு அதிகமாக இல்லை” என்று சொல்லுகிறார். இப்படிச் சொல்லும்போது மற்ற நாட்டைவிட இங்கு அதிகமாக இருப்பதற்கு என்ன காரணம்? என்பதை ஜவஹர்லால் உணரவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் இதற்கு காரணம் ஏகாதிபத்தியமும் இந்திய அரசியலமைப்பும்தான் என்று அடிக்கடி பல்லவி பாடுகிறார். நாம் இதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏகாதிபத்தியம் இல்லாத சுதந்திர நாடுகள் என்பவைகளிலும் இந்திய அரசியலமைப்பு இல்லாத தேசத்திலும் “ஏற்றத்தாழ்வு, வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம்” என்பவைகள் இருந்துதான் வருகின்றன. ஆனால் இந்தியாவில் சற்று அதிகம்
என்பதற்கு இந்தியர்களின் மதமும் ஜாதியுமே ஒழிய ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய வறுமைக்கும் அதிக சம்பந்தம் கிடையாது. உதாரணம் வேண்டுமானால் மதத் தலைவர்களுக்கும் மதத் தர்மகர்த்தாக்களுக்கும் மேல் ஜாதிக்காரர்களுக்கும் எங்காவது வறுமையோ, வேலை இல்லாத் திண்டாட்டமோ இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும்
டில்லி நகரைப் பார்த்து ஜவஹர்லால் மனம் புழுங்குகின்றார். ஆனால் இதே ஜவஹர்லால் ஸ்ரீரங்கம், மதுரை, ராமநாதபுரம் கோவில்களையும் “சுவாமி” நகைகளையும் பூஜை போக்கியங்களையும் பார்த்து தலை வணங்கி பிரசாதம் பெற்று மனமகிழ்கின்றார். ஆகவே வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் காரணமும் மருந்தும் கண்டு பிடிப்பதில் ஜவஹர்லால் புத்தி எவ்வளவு தீக்ஷண்ணியமுள்ளது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்றோம்
மற்றும் ஜவஹர்லால் டெல்லிக்கு சில மைல் தூரத்தில் பட்டினி கிடக்கும் விவசாயிகளைப் பார்த்து மனம் பதைத்தாராம். ஆனால் மேல்கண்ட கோவில்களுக்கு பல அங்குல தூரத்திற்குள் மொண்டி, முடம், கூன், குருடு, பெரு வியாதியஸ்தர்கள் ஆகியவர்களும் கும்பல் கும்பலான பிச்சைக்காரர்களும் வயிறொட்டி உடல் மெலிந்து வறுமை! வறுமை! பட்டினி!!! பட்டினி!!! என்று கூப்பாடு போட்டு போகிறவர்கள். வருகிறவர்கள் காலைத் தொட்டு கண்ணில் ஒத்தவைத்துக்கொண்டு இரண்டு கையையும் ஏந்தி பிச்சை கேட்பதை இவர் பார்க்கவில்லையா என்று கேட்கின்றோம் ஆகவே இந்த வறுமைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஜவஹர்லால் விடும் கண்ணீர் மாய்மாலக் கண்ணீரா, வெங்காய ரசம் தடவிக்கொண்டு விடும் கண்ணீரா, அல்லது முட்டாள் தனமான சோம்பேறி அழுகைக் கண்ணீரா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். ஏழ்மை எல்லா நாட்டிலும் இருக்கிறது, தரித்திரமூம் எல்லா
நாட்டிலும் இருக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டமும் எல்லா நாட்டிலுமே இருக்கிறது. டில்லி மாளிகைகளும் கோட்டைகளும் சந்திர
குடி அரசு- 1937 (1) 32
காந்த மேடைகளும் கூட எல்லா நாட்டிலும் தான் இருக்கின்றன. ஆனால் கோபுரங்களும் கோவில்களும் “சாமிகளுக்கு தங்க வைர கோமேத மரகத ஆபரணங்களும் “சாமி”க்கு 5000, 10000 கணக்கான நஞ்சை பூமிகளும், வெள்ளி தங்க வாகனங்களும், வருஷம் 10 லட்சக்கணக்கான ரூபாய்கள் காணிக்கைகளும், பாமர தொழிலாளிகளும் ஏழை குடியானவர்களும் பாடுபட்ட பயனை பாழுங்குழியில் போடுவது போல் கோயில் குளங்களுக்கு அழுதுவிட்டு விரதமிருப்பதும் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் இல்லை என்பதையும் அதனாலேயே மற்ற நாடுகளை விட இந்தியாவில் சற்று அதிகமாக கொடுமைகள் காணப்படுகின்றன என்பதையும் ஜவஹர்லால் உணராவிட்டாலும் அல்லது அவர் வேண்டுமென்றே மறைத்தாலும் மற்ற மக்களாவது உணர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஏகாதிபத்தியம் என்பதும் நம்முடைய இந்தியாவுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதோடு அது இந்தியாவில் மாத்திரமில்லை என்றும் தெரிவிப்பதோடு இந்தியாவுக்கு ஏகாதிபத்தியம் அதுவும்
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விட கொடுமையான ஏகாதிபத்தியம் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மதத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் ஜமீன் மானியம் ஆகியவற்றின் பேராலும் இருந்து வருகின்றது என்பதையும் உணர வேண்டுமாய் விரும்புகிறோம்
மற்றும் ஜவஹர்லால் இந்திய அரசியல் திட்டத்தைப்பற்றியும் குறைகூறுகிறார். அது குறையானது என்றே வைத்துக்கொள்ளுவோம் இதற்கு பதிலாக ஜவஹர்லால் அரசியல் திட்டம் என்ன? அல்லது காந்தியாரின் அரசியல் திட்டம் என்ன? அல்லது காங்கிரசின் அரசியல் திட்டம்தான் என்ன என்று கேட்கின்றோம். பிரதிநிதித்துவ சபை கூட்டி ஒரு அரசியல் திட்டத்தை வகுக்கப் போவதாக இந்த 10, 12 வருஷ காலமாய் ஜவஹர்லால் அவர்களின் தகப்பனார் காலம் தொட்டே சொல்லப்பட்டு வருகிறது
சென்ற 16 வருஷத்துக்கு முந்திய சீர்திருத்தம் வரும்போதும் சொல்லப்பட்டது. சென்ற எம்.எல்.ஏ. (இந்திய சட்டசபை) தேர்தலிலும் சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை ஒன்றையுமே காணோம். இன்றைய சீர்திருத்தம் ஜஸ்டிஸ் கட்சியார், மிதவாதக் கட்சியார், மற்றும் காங்கிரஸ் அல்லாதார் முதலியவர்களால் குறிப்பிட்டு கொடுக்கப்பட்டவைகளின் பெரும்பாகத்தை பொறுத்ததே ஒழிய வேறில்லை. மற்றப்படி நம்முள் ஒருவருக்கொருவர் உள்ள அவ நம்பிக்கையாலும் துவேஷத்தாலும் ஒருவரை ஒருவர் வஞ்சிக்க எண்ணும் கெட்ட எண்ணத்தாலும் ஒருவர் உழைப்பில் ஒருவர் நோகாமல் சாப்பிட வேண்டும் என்ற சோம்பேறி உணர்ச்சியாலும் பிரிட்டிஷார் சில பாதுகாப்புகளும் சில சுயநல வசதிகளும் புகுத்தி இருக்கலாம். ஆனால் 33௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அதற்கு பிரிட்டிஷோ ஏகாதிபத்தியமோ காரணம் அல்ல என்பதையும் காங்கிரசும், ஜவஹர்லாலும், காந்தியாருமே முக்கிய காரணம் என்பதையும் ஆதாரத்தோடு எடுத்துக் கூறத் தயங்கோம்
ஆதலால் சிததிருத்தத்தைப் பற்றி குறைகூறுவதும் புத்திசாலித்தனமாகாது என்று கூறுவோம்
தொழிலாளிகள், விவசாயிகள் ஆகியவர்களைப் பற்றி நமது ஜவஹர் கண்ணீர் வடிக்கிறார், ஒப்பாரி வைத்து அழுகிறார். இது யார் வீட்டு சாவுக்கோ போன எவர் வீட்டுப்பெண்ணோ எதையோ நினைத்துக்கொண்டு மாரடித்துக்கொண்டு அழுவதையே ஒத்து இருக்கிறது. தோழர் ஜவஹர்லால் தொழிலாளிகளுக்கு ஆக காங்கிரசினிடம் திட்டம் இல்லை என்றும் தன்னிடமும் திட்டம் இல்லை என்றும் சென்ற 3 மாதங்களுக்கு
முன் தமிழ்நாட்டுக்கு வந்தபோது தொழிலாளியிடம் கூறி இருக்கிறார். வேலைத்திட்டமோ நிவர்த்தி மார்க்கமோ தன் கைவசம் இல்லாதவருக்கு பொய்யழுகை அழுகவாவது பாத்தியம் எப்படி உண்டாகும்? விவசாயிகள் விஷயத்தில் பழம் பாடம் படித்திருக்கிறார். பலவற்றுள். ஜஸ்டிஸ் கட்சியாரின் திட்டத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுகிறார். ஆனால் அவற்றை காரியத்தில் கொண்டுவர இவரது திட்டம் என்ன. என்பதை விளக்கவில்லை.
சென்ற பல காங்கிரஸ்களில் “விவசாயிகளின் நன்மைக்கு திட்டம் வகுக்க ஏற்படுத்தப்பட்ட கமிட்டி இதுவரை தங்களது அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை” என்று குறைகூறுகிறார். இதிலிருந்தே காங்கிரஸ்காரர்கள். விவசாயிகளிடம் கொண்டுள்ள அனுதாபம் எப்படிப்பட்டது என்பது வெளிப்படுகிறது. கிராமத்தில் காங்கிரஸ் கூட்டினதினால் கிராமவாசிகளுக்கு என்ன நன்மை ஏற்பட்டுவிடும்? இதை ஒரு பெருமையாக சொல்லுகிறார். இவைகள் எல்லாம் ஏமாற்றத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் என்பதை வாசகர்கள் உணரவேண்டுகிறோம்
விவசாயிகளின் வரியை சமரசப்படுத்தவும் அவர்களது கடன். சுமையைக் குறைக்கவும் விவசாயிகளுக்கும் பொதுஜனங்களுக்கும் மத்தியில் உள்ள தரகர்களை ஒழிக்கவும், கூட்டுறவு இயக்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படச் செய்யவும் தோழர் ஈ.வெ.ராமசாமி கொடுத்த திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக்கொண்டு சிலவற்றை அமுலுக்கு கொண்டுவந்திருப்பதோடு மற்றவைகளை வேலை முறையாகவும் ஜஸ்டிஸ் கட்சியார் கைக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆகவே சீர்திருத்தத்தை ஏற்று பயன்படுத்தவும் முடிவு செய்திருக்கிறார்கள். அதை காங்கிரஸ் தலைவர் பாடம் பண்ணி ஒப்புவித்துவிட்டார். ஆனால். அரசியல் திட்டத்தையும் மந்திரி பதவியையும் பஹிஷ்கரிக்க வேண்டுமென்கிறார். இப்படிப்பட்ட அழிவு வேலைக்காரர்களால் - அழிவு வேலையை திட்டமாகக் கொண்ட காங்கிரசினால் மேற்கண்ட
குடி அரசு- 1937 (1) 54
காரியங்கள் விவசாயிகளுக்கு அனுபவத்தில் செய்ய எப்படி சாத்தியப்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. இனி எந்த காலத்தில் சீர்திருத்தம் உடைக்கப்பட்டு, வேறு ஜனப்பிரதிநிதி சபை கூட்டப்பட்டு, திட்டம் போட்டு, வெள்ளைக்காரரை விரட்டி அடிக்கும் பூரண சுயராஜ்யம் பெற்று இவைகளை நடைமுறையில் கொண்டுவரக்கூடும் என்பதையும் வாசகர்களையே உணர்ந்து கொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.
“ஏட்டு சுரைக்காய் கறி செய்ய உதவுமா?” என்ற பழமொழிபோல் காங்கிரஸ்காரர்கள் திட்டம் காரியத்துக்கு பயன்படுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் தோழர் ஜவஹர்லால் அவர்களே தமது தலைமை உரையில்,
“இந்த லக்ஷியங்கள் எல்லாம் நமக்கு வெகு தூரத்தில் இருக்கின்றன” என்று சொல்லி அவரே ஒப்புக்கொள்ளுகிறார்.
மற்றும் “பாமர மக்களுக்கு பயன்படத்தக்க ஒரு திட்டம் (இனிமேல்
ப-ர்) வகுத்து வேலை செய்தால்தான் இவைகளுக்கு பரிகாரம் செய்ய முடியும்” என்கிறார்.
அதோடு கூடவே,
“ஏகாதிபத்தியமும் பணக்காரர்களும் இருக்கிற இடத்தில் எந்த திட்டமும் பயன்படாது” என்கிறார்.
அப்படியானால் இவர்கள் எப்போது திட்டம் போடுவது? ஏகாதிபத்தியம் எப்போது ஒழிவது? பணக்காரர் எப்போது ஒழிவது? அதுவரை இவர் திட்டம் என்ன? வேலை என்ன? என்பவற்றை கவனித்தால் ஜவஹர்லால் பேச்சு அவ்வளவும் வெத்தி வேட்டு என்பதும்
கையில் ஒரு திட்டமும் இல்லை என்பதும் சுலபத்தில் புலனாகாமல் போகாது.
கடசியாக ஓட்டு கேட்கிறார் - அதாவது சட்டசபை தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்றும் ஒப்புக்கொள்ளுகிறார்.
ஆனால் எதற்கு ஆக என்று மாத்திரம் சொல்லவில்லை. சட்டசபையில் சுயராஜ்யம் சம்பாதிக்க முடியாது என்றும் ஒப்புக்கொள்ளுகிறார்.
மந்திரி பதவி ஏற்பது அரசாங்கத்துக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுப்பதாகும் என்றும் அடிக்கடி சொல்லுகிறார். மந்திரி பதவி
ஏற்றால் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்ததாக ஆகுமே ஒழிய முட்டுக்கட்டை போட உதவவே உதவாது என்கிறார். மற்றும் “தேசத்துரோகிகள் சட்ட சபைக்கு போய் மந்திரி பதவிகளை ஏற்று நடத்துவார்கள் என்கின்ற பயம் அர்த்தமற்றது” என்றும் சொல்லுகிறார். அதாவது “நமக்கு மந்திரி பதவி ஏற்கும்படியான மெஜாரிட்டி இருந்தால் அந்த மெஜாரிட்டியைக் கொண்டே ஏன் மந்திரி சபையை கவிழ்க்கக் கூடாது” என்கிறார். இது புத்திசாலித்தனமான பேச்சுத்தான். ஆனால் இதற்கு பதவி மோக காங்கிரஸ்காரர் என்ன பதில் சொல்லுவார்களோ 50— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தெரியவில்லை. நிற்க, கடசியாக ஒரு விஷயத்தை ஜவஹர்லால் விளக்கி இருப்பதை குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம். அதாவது இன்றைய தன்னுடைய போராட்டம் அபேதவாதத்திற்கு அல்ல என்று வியக்தமாகச் சொல்லி விட்டார். அதாவது அபேதவாதத்தைப்பற்றி நினைப்பதற்கு மூன் நாம் இன்னம் வெகு தூரம் போய் ஆகவேண்டும்” என்று சொல்லிவிட்டார். ஏற்கனவே இதை பல தடவை சொல்லி இருக்கிறார். இதையே தான் நாமும் சொல்லி வருகிறோம். ஆனால் அதற்கு ஆன வேலையை அதாவது அபேதவாதத்துக்கு நெருங்கும் வேலையை நாம் செய்கையில் செய்து வருகிறோம். அதற்கேற்ற சாத்திய திட்டம் வகுத்து வருகிறோம். ஆனால் ஜவஹர்லாலோ பாம்புக்கு (அதாவது பணக்காரர்களுக்கும் மேல் ஜாதிக்காரருக்கும்) தலையையும், மீனுக்கு (பாமர மக்களுக்கு)
வாலையும் காட்டி வருகிறார். பொதுவாக ஓவ்வொரு கூட்டத்தாரையும் ஏமாற்றத்தக்க சூழ்ச்சியிலும் வஞ்சத்திலுமே காரியம் செய்து வருகிறார். சமுதாயத்தில் உள்ள குறைகளைப்பற்றியும் அவை சமுதாய அமைப்புக்கும் அரசியல் விடுதலைக்கும் பொருளாதார விடுதலைக்கும் எவ்வளவு முட்டுக் கட்டையாகவும் கெடுதி தரத்தக்கதாகவும் இருக்கிறது என்பதை மறந்தும்
கூட காங்கிரஸ் தலைமைப் பேச்சில் ஜவஹர்லால் பேசவில்லை ஆகவே பெய்ஸ்பூர் காங்கிரஸ் என்னும் ஏமாற்றுத் திரு விழாவானது பெரிதும் தங்களையே ஏமாற்றிக்கொண்ட முடிவில்தான் முடிந்தது என்று சொல்ல வேண்டி இருக்குமே தவிர அத்திருவிழாவால் மக்கள் ஏமாந்திருப்பார்கள் என்று சொல்ல தைரியம் வரவில்லை
காங்கிரஸ்தீர்மானங்களைப் பற்றிய விஷயங்கள் பின்னால் எழுதுவோம்
குடி அரசு - தலையங்கம் - 03.01.1937
குடி அரசு- 1937 (1) 56
காந்தியின் பழைய பாடம்
பெய்ஸ்பூர் காங்கிரஸ் நாடகத்தில் தோழர் ஜவஹர்லால் மூக்கிய நடிகராணாலும்காந்தியாரும் முக்கிய நடிகரில் முன்னணியில் இருப்பவரானதால் அவரது நடிப்பும் கவனிக்கத்தக்கதாகும்
அவர் வெறும் பழம் பாடங்களைப் படித்து பழய ஆசாமிகளுக்கு ஆறுதலளித்து இருக்கிறார். காங்கிரஸ் எங்கு புரட்சிகரமான காரியத்தை நினைத்துவிடுமோ என்று பயந்த பணக்காரர்களுக்கும் மேல் ஜாதிக்காரர் களுக்கும் பயம் நீங்கும்படியாயும், தைரியம் உண்டாகும்படியாகவும் தந்திரமாய் பேசி மழுப்பி இருக்கிறார்.
ஆனால் தோழர் காந்தியார் இதுவரையில் பேசிவந்த பாமரத்தனமான பேச்சுகளிலெல்லாம் இந்த காங்கிரஸ் பொருட்காட்சி திறப்பு பேச்சு பல அம்சங்களில் மிக மிக பிற்போக்கானது என்பது நமது கெட்டியான அபிப்பிராயமாகும். எப்படி எனில்,
“பருத்தி நூல் முனையிலும், ராட்டை முனையிலுமே சுயராஜ்யம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இது பழம் பாடம் என்று சொல்லி தள்ளிவிடலாம். ஆனால் சுயராஜ்பத்துக்கு “நான்கு முக்கிய அம்சம்” கூறுகிறார்.
அவையாவன:- அனைவரும் இன்புற்றிருக்க வசதி வேண்டும்
உலவ
யாரும் பசியால் வாடக்கூடாது. செளகரியமான வாழ்க்கைக்கு அவசியமான எல்லா வசதிகளும் வேண்டும்
ஸ்திரீகளும் புருஷர்களும் தங்களுக்கு இஷ்டமான ஆடம்பரமான - அலங்காரமான உடை உடுத்தி மகிழ தாராளமாய் இடம் இருக்கவேண்டும் மொத்தத்தில் அரசியல் துறை முன்னேற்றம்போலவே பொருளாதாரத் துறை முன்னேற்றமும் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். (இது 28-12-36-5 தேதி “சுதேசமித்திரனில் இருக்கிறது)
இந்த 4 அம்சங்களும் பொருளாதார முன்னேற்றமும் பருத்தி
நூல் முனையிலோ, ராட்டினத்தின் முனையிலோ உண்டாகுமா என்பதை தோழர்கள் ஜவஹர்லாலையும் சத்தியமூர்த்தியையுமே கேட்கின்றோம் இதைப் பார்க்கும்போது இவ்வளவு முயற்சியும் எவ்வளவு பயனற்றது என்பது விளங்குகிறது
37... QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மற்றும் தனது சுயராஜ்யம் மேல்நாடுகளில் எவற்றிலும் இருக்கின்றதுபோன்ற சுயராஜ்யம் அல்லவென்று சொல்லுவதோடு அதை இப்போது “நான் விளக்குவதற்கில்லை" என்று மழுப்புகிறார். பின்னும் தனது சுயராஜ்யம் ராமராஜ்யம் தான் என்கிறார். (இதுவும் 28-12-36ந் தேதி “சுதேசமித்திரன் 7-ம் பக்கம் 2-வது கலத்தில் இருக்கிறது)
சட்டசபையைப்பற்றி பேசுகையில் “சட்டசபைமூலம் நமக்கு ஒரு நன்மையும் ஏற்படாதென்றே சொல்லுகிறேன்” சட்டசபை பிரவேச மூலம் நீங்கள் என்ன சாதிக்க முடியும்?”
“ராட்டை நூற்றால் சுதந்தரம் பெறலாம்; ராட்டை நூற்காததாலேயே
சுதந்திரம் இழந்தோம். சுதந்திரத்திற்கு வேறு வழிகாட்டுங்கள்” இதுவரை சுதந்திரத்துக்கு யாரும் புதிய வழி காட்டவில்லை"
“சுதந்திரமில்லாததற்கு நாமே காரணம். நமது முட்டாள் தனத்தாலேயே
(நூல் நூற்காததாலேயேபர-ர்) சுதந்திரமிழந்தோம். பிரிட்டிஷாரே காரணம் அல்ல"
“நூல் நூற்பதே தரித்திரத்தையும் வேலை இல்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்கவல்லது.”
“நம் கதரணிபவர்களில் சிலர் மோசக்காரரும் கொலைகாரருமாவதற்கு தயங்காதவர்கள்'' என்பதாக வெல்லாம் பேசி இருக்கிறார். மற்றும்,
“எனது திட்டம் நிறைவேற்றி வைக்கப்படவில்லை” என்ற தலைப்பில். இந்து முஸ்லீம் ஒற்றுமைத் திட்டம், தீண்டாமை ஒழிப்புத் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதா? திருவாங்கூர் ராஜாதான் தீண்டாமை ஒழிப்பு பிரகடனம் செய்தார். ஆனால் ஜாதி இந்துகள் (காங்கிரஸ் ப-ர்) செய்தது என்ன?”
பகிஷ்காரத் திட்டங்களை நடத்திக் கொடுத்தீர்களா? மது அருந்துவதை நீங்கள் எத்தனை பேர் விட்டீர்கள்?” என்றெல்லாம் பச்சையாக காங்கிரசுக்காரர்களின் யோக்கியதையையும் காங்கிரசு ஒரு காரியமும் சாதிக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்திவிட்டார். (இதுவும் “சுதேசமித்திரனில் இருக்கிறது)
நான் வைசிய ஜாதி ஆனதால் அடிக்கடி எனது வியாபாரத்தை மாற்றிக்கொள்ள உரிமை உண்டு. ஆதலால் பழய திட்டம் பலிக்காததால் புதுத்திட்டம் போடுகிறேன். அதுதான் சட்ட சபை திட்டம். ஆனால் ராட்டினம் மூலம்தான் சுயராஜ்யம் கிடைக்குமே ஒழிய சட்ட சபை மூலம் கிடைக்கமாட்டாது என்று திரும்பவும் கூறுகிறேன்” என்கிறார்.
நானும் ஜவஹரும் இப்போது ஜெயிலுக்கு போகவேண்டிய அவசியமிருந்தால் அவ்வாறே செய்வோம். தூக்கு மேடைக்கும் போவோம்" என்பதிலிருந்து சிறைசெல்வது இனி பயன்படாது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டார் என்பதற்கும் இது ஒரு சாட்சியாகும்
குடி அரசு- 1937 (1) 38
மற்றும் லார்ட் லின்லித்சோவும் அவர் வகை மனிதர்களும் நாங்கள். போய்விடவா என்று கேட்டால் “வேண்டாம் வேண்டாம் இங்கேயே இருங்கள் ஆனால் இந்தியாவுக்கு ஏற்ற விதமாக (உங்கள் ஆட்சி ப-ர்) இருக்க வேண்டும்” என்று சொல்லுவாராம். இதிலிருந்து பூரண சுயேச்சை என்பதும் வெள்ளைக்காரர் அடியோடு ஆட்சியில் இருந்து விலகவேண்டும் என்பதும் வெறும் பகட்டு வார்த்தை என்பது விளங்கும் ஆகவே காந்தியார் வருணாச்சிரம ராமராஜ்ய வாதியாகவும் ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திரத்தோடு இருக்க விரும்புகிறவராகவும் தனது திட்டத்தில் தோல்வி அடைந்து பயனற்ற சட்ட சபை மோகத்தை
மக்களுக்கு அனுமதித்து இருப்பவராகவும் அதுவும் தன் திட்டத்தை மக்கள் ஏற்காததால் வீண் வேலையில் எஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துக் கொள்வதுடன் இப்போது ஜெயிலுக்குப் போகவேண்டிய எண்ணமே இல்லையென்றும் வெளிநாட்டு அரசியல் திட்டமோ அபேதவாதத் திட்டமோ இந்தியாவுக்கு வேண்டியதில்லை என்றும் ஸ்பஷ்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார். இதையும் வைத்து பண்டிதர் ஜவஹர்லால் பேச்சையும் வைத்து பார்த்தால் ஒன்றுக்கொன்று மலையும் மடுவும் போன்ற மாறுதல் உள்ளது என்பதும் இரண்டு பைத்தியக்காரர்கள் பாமர மக்களை குரங்குபோல் ஆட்டி பெருமை அடைகிறார்கள் என்பதும் அதை பெரிய ஜாதிக்காரர்களும் சமய சஞ்சீவிகளும் பயன்படுத்திக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் என்பதும் இந்த காங்கிரஸ் நாடகத்தின் கருத்தும் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயமுமாகும் என்பதே நமது அபிப்பிராயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.01.1937
39௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எண்டங்கன் தின [500 பல்பம் ஒில்மிவாவ்பு ஒன்றாய் தருளிப்பவரிகஷக்கு விலை ஆட 1—dl—i}
சரக்க கக்கு கக்க ௩ ட இர அவவ
தா தன் கை, [P o e
% ராஸ கிகம்யர்]
ம் கு நட
' #07
AN TR க a0 7017 770
கல்
கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்க ஆண்டுவிழா
தோழர்களே!
இன்று இவ்வாண்டுவிழாவில்தோழர்கள் ஊ.பு.அசெளந்திரபாண்டியன், என்.சிவராஜ், எஸ்.குருசாமி, டி.என்.ராமன், குஞ்சிதம், வித்துவான் முனிசாமி, ஆரோக்கியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் பேசினார்கள். என்னுடைய முடிவுரையுடன் ஆண்டு விழா நிகழ்ச்சி முடிவு பெற்றதென்றே கருதுகிறேன். ஆனால் நான் பேசவேண்டும் என்று கருதி இருந்தவற்றை எல்லாம் உபன்யாசகர்கள் பேசிவிட்டார்கள். ஆதலால். நான் அதிகம் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்கள் ஒற்றுமையாய் இருக்க வேண்டும். பெண்களை அதிகமாக அங்கத்தினர்கள் ஆக்க வேண்டும்.
பகுத்தறிவு உண்மையிலேயே எல்லோரும் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்க வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும். எந்த விஷயத்தையும் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும். மனதிற்குத் தோன்றியதை எல்லாம் பகுத்தறிவு என்று சொல்லிவிடக்கூடாது. புஸ்தகத்தைப் படித்து ஒப்புவிப்பது பகுத்தறிவாகிவிடாது. சாத்தியம் அசாத்தியம் இன்னதென்று அறியவேண்டும். அனுபவ பலன் இன்னதென்று தெரியவேண்டும். நமது
சக்தி எப்படிப்பட்டது? அது எவ்வளவு? என்பதை உணரவேண்டும். காலதேச வர்த்தமானங்களைக் கவனிக்க வேண்டும். நமது அறிவுக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் மேல்கண்ட அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பிரயோகிக்க பகுத்தறிவு வேண்டும்.
உங்கள் கொள்கை
இங்கு பேசிய பலர் சுயமரியாதையைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் பேசினார்கள். இச்சுங்கத்தை சேர்ந்த மக்கள் பெரிதும் தாழ்த்தப்பட்ட மக்களாகக் காணப்படுகிறபடியால் உங்களுக்கு அரசியல் அரசாங்கத்தைத் தழுவிப் போவதுதான் பயன்படத்தக்கதாகும். அரசியலில் உங்கள் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வகுப்பைத் தனியாகப் பிரிக்கப்பட்டாய் விட்டது. மற்ற வகுப்புகள். லக்ஷியத்திற்கும் நிலைக்கும் உங்கள் வகுப்பு லக்ஷியத்துக்கும் நிலைக்கும் பெரியதொரு வித்தியாசம் இருப்பதாலேயே அரசியலில் நீங்கள் தனி உரிமை கேட்க வேண்டியதாயிற்று. அந்தப்படியே அரசாங்கம் உங்களுக்குத் தனி உரிமை அளித்தும் நீங்கள் மற்ற மேல் ஜாதி மக்கள் என்பவர்களால் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள். அதனால்தான் அவர்கள். மேல் ஜாதிக்காரர்களாய் இருக்கிறார்கள். அதில்லாததினால்தான் நீங்கள்
கீழ் சாதி என்பதில் சேர்க்கப்பட்டு அதற்குண்டான பயனை அனுபவித்து வருகிறீர்கள். உங்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டதற்கே தோழர் ஆரோக்கியசாமி கோபித்துக்கொண்டார். கோபித்து என்ன செய்வது? பிரத்தியட்சத்தில் நீங்கள் தாழ்த்தப்பட்டு இருக்கிறீர்களா: இல்லையா? அந்தப்படி இல்லையானால் உங்களுக்குத் தனி உரிமையே வேண்டியதில்லை அல்லவா? சமூக வாழ்வில் உங்களுக்கு எவ்வளவு இடையூறு சட்டப்படி இருக்கிறது என்று பாருங்கள். உங்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது. தெரு, குளம், பள்ளிக்கூடம் ஆகியவைகளின் பிரவேச உரிமைகூட இப்போது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட
பிறகு உங்களுக்கு உண்டாகி இருக்கிறது. அதற்கு இன்னம் பல
இடங்களில் தடை இருந்து வருகிறது
கோவில் பிரவேசம்
திருவாங்கூர் கோவில் பிரவேச உரிமையைப் பற்றிப் பாராட்டிப் பேசினார்கள். அதனால் உங்களுக்கு என்ன லாபம்? உங்கள் தாய் நாட்டில் உங்கள் நிலை என்ன? உங்களைவிட இன்னும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது. இந்த நிலையில் உள்ள மக்கள் சிலர் சிறிது கூட மானமில்லாமல் அரசியலைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் மனித உரிமைக்கு லாயக்கற்றவர்கள் என்பதற்கு இதுவே போதிய உதாரணமாகும்
நியாயமாகப் பேசப்போனால் நீங்கள் மாத்திரம் தாழ்த்தப் பட்டவர்கள் அல்ல. சில இடங்களில் கோவில் உரிமை இல்லாதவர்கள் மாத்திரம் தாழ்த்தப்பட்டவர்கள் அல்ல. சகல கோவில்களிலும் பிரவேசிக்க உரிமை உள்ள நாங்களும் தாழ்த்தப்பட்டவர்களேயாவோம். கோவிலில் எங்களுக்கும் உரிமை இல்லாத இடம் பல உண்டு. காப்பிக்கடை, ஓட்டல் முதலிய இடங்களில் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவும் சில அறைகளுக்குள். செல்லப்படாதவர்களாகவும் தான் இருந்து வருகிறோம். உங்கள் இழிவைப்பற்றி பேசுவதால் எங்கள் இழிவும் நீங்கலாம் என்பதே எங்கள் அனுதாபத்தின் கருத்தாகும். பந்தியில் சாப்பிடும்போது தனக்கு வேண்டிய பதார்த்தத்தைப் பக்கத்து இலையில் இருக்கிறவர்களுக்கு வேண்டும்
குடி அரசு- 1937 (1) 62
என்று சொல்லிப் பரிமாறுகிறவனைக் கூப்பிட்டு பிறகு தனது இலைக்கும் வாங்கிக்கொள்ளுகிற தந்திரத்தை நீங்கள் அறிந்ததில்லையா? அது போல்தான் உங்கள் குறையோ இழிவோ நீங்கினால் கூடவே எங்கள் குறையும் இழிவும் தானாகவே நீங்கிவிடும். அதனாலேயே உங்கள் குறைகளைப்பற்றி நாங்கள் சதா பேசிக்கொண்டே வருகிறோம்
காங்கிரசில் சேருவது
நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு “அரசியல்” கூப்பாடுகளை வெறுக்கிறீர்களோ, எவ்வளவுக்கு எவ்வளவு “அரசியல்” கட்சிகளுடன் சேராமல் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுடைய குறைகள் நிவர்த்திக்கப்படலாம் என்பது எனது அபிப்பிராயம். உங்கள் தலைமேல் கால் வைத்து ஏறிப்போகிறவர்களுக்கு இடம் கொடுக்காமல்
இருப்பீர்களானால் உங்கள் கொடுமை சீக்கிரத்தில் கவனிக்கப்படும்
இல்லாவிட்டால் நீங்கள் படிக்கல்லாக விழுந்து கிடக்க வேண்டியதுதான்.
காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷகாலம் ஆகியும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டு பங்கு கேட்க ஆரம்பித்த பிறகே சமுதாயத் துறையில் பெரியதொரு மாறுதல் ஏற்பட முடிந்தது. அதன் பிறகுதான் உங்கள் நிலையும் இந்த 10 வருஷகாலத்தில் எவ்வளவோ மாறுதலை அடைய முடிந்தது. அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கே கை தூக்கி வந்திருப்பீர்களானால்.
- மேல் ஜாதிக்காரர்கள் பின்னாலேயே கோவிந்தாப் போட்டிருப்பீர்களேயானால் உங்கள் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
திருவாங்கூர் பிரகடனம்
திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விளம்பரத்தைக் கவனித்துப் பாருங்கள். அது எப்படி ஏற்பட்டது? தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யரைப்பற்றி நமக்குத் தெரியாதா? அவர் சர்க்கார் பராமரிப்பிலுள்ள சகல வீதிகளிலும் சகல பிரஜைகளும் நடக்கலாம் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் செய்த சட்டத்திற்கு மதிப்புக் கொடுக்காமல் தடுத்தவரல்லவா? அதாவது கல்பாத்தி ரோட்டில் ஈழவர்கள் நடக்கக்கூடாது என்று ஒரு பார்ப்பன மேஜிஸ்ரேட் 144 தடை உத்திரவு போட்டு தடுத்ததைப் பற்றி
சட்டசபையில் கேள்வி கேட்கப்பட்ட போது சர்.சி.பி. அய்யர் என்ன. பதில் சொன்னார்? அந்த தடை உத்திரவு சரியானதுதான் என்று ஆதரித்துப் பதில் சொன்னார். அதாவது அந்த பிரவேச சட்டத்திற்கு ஒரு புது வியாக்கியானம் செய்தார். என்னவென்றால் “ஏதாவது ஒரு வேலையின் பேரில் - அவசியத்தின் பேரில் தெருவில் நடப்பவனுக்குத்தான் அந்தச் சட்டம் இடம் கொடுக்குமே ஒழிய அனாவசியமாய் வேலை இல்லாமல் நடப்பவனுக்கு அச்சட்டம் இடம் கொடுக்காது” என்று சொல்லி குறிப்பிட்ட 144 தடை உத்திரவு வேண்டுமென்றே அவசியம் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இல்லாமல் நடந்து மேல் ஜாதிக்காரர்களின் மனத்துக்கு சங்கடமுண்டாக்குவதை தடுப்பதற்கு ஆக போடப்பட்ட உத்திரவு என்றும் அது அவசியம் தான் என்றும் சொன்னார். ஆகவே திருவாங்கூர் திவான் சர்.சி.பி.அய்யரின் தாராள நோக்கம் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அப்படி இருக்க திருவாங்கூர் கோவில் கதவு எப்படி உடைக்கப்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களும், ஈழவர்கள், நாடார்கள் உள்பட உள்ள மற்ற மக்களும், மதத்தையும், கோவிலையும் சாமியையுமே உடைக்கப் பார்த்தார்கள். இந்துமதம் புரட்டு, கோவில் புரட்டு, சாமியே புரட்டு என்று மகாநாடுகள் கூட்டி பதினாயிரக்கணக்கான பேர்கள் சேர்ந்து தீர்மானம் செய்தார்கள். பலர் முஸ்லீமாக துருக்கி தொப்பி போட்டார்கள், பலர் தாடி வளர்த்து தலைமுடி வளர்த்து கிருபான்(கத்தி) கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு சீக்கியர்கள் ஆனார்கள். சிலர் குடும்பத்தோடு கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதன் பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள சகல மேல் ஜாதிக்காரர்களும் பார்ப்பனர்கள் உள்பட திருவாங்கூர் ராஜாவை வாழ்த்தி விட்டார்கள். வெற்றி பெறும் இரகசியம் எங்கே இருக்கிறது பாருங்கள். அதுபோலவே நீங்கள் காங்கிரஸ், மதம், கோவில், சாமி ஆகியவைகளை யெல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும் சகல உரிமையும் தானாக உங்களைத் தேடிக்கொண்டுவரும்.
பட்டம் மாற்றுவதில் பயணில்லை
அப்படிக்கு இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைக் கூப்பிடுவதற்கு ஆக நீங்கள் கோபித்துக்கொள்வதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. பறையர்கள் என்கின்ற பட்டம் மாறி ஆதிதிராவிடர்கள் ஆகி இப்போது அரிஜனங்கள் என்கின்ற பட்டம் வந்ததுபோல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழிய குறையும் இழிவும் நீங்கிவிடாது. விவசாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும் தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்கு சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை அதுபோலவே பார்ப்பனரல்லாதார்களுக்கு நாயகர், முதலியார், தேவர், வேள் ஆளர், ராஜர் ராயர் என்கின்றதான பல பெயர் இருந்ததாலேயே சமூக வாழ்வில் சூத்திரன் என்கின்ற பெயர் போய்விடவில்லை: ஆதலால் பெயரைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இழிவும் குறையும் போக்க வழி பாருங்கள். அதற்கு அம்மாதிரி நம்மை குறைவுபடுத்தும்
மக்களுடன் ஒத்துழையாமை செய்வதும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கு நாம் முட்டுக்கட்டை போடுவதும் தான் சரியான மருந்தாகும்
குடி அரசு- 1937 (1) 64
கோடரிக் காம்புகள்
சில கோடாலிக் காம்புகள் அவர்களுடன் ஒத்துழைப்பதால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட இழி மக்கள், மானமற்றவர்கள் நம்மில் பலர் இருப்பதாலேயே நாம் இம்மாதிரி சங்கம் ஸ்தாபனம் பல வைத்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் சுயமரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கமோ, பார்ப்பனரல்லாதார் சங்கமோ எதற்கு ஆக இருக்க வேண்டும்? நம்மில் எத்தனையோ பேர் உதைத்த காலுக்கு முத்தமிட்டு வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் இழி தொழிலுக்கெல்லாம் நாம் பரிகாரம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். அந்தப் பரிகாரம் நம்முடைய உறுதியும் தைரியமும் கொண்ட ஒத்துழையாமையிலும் முட்டுக்கட்டையிலும்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி
சிலர் பேசியதோடு என்னையும் சில கேள்விகள் துண்டுச் சீட்டு மூலம் கேட்டிருக்கிறார்கள்.
கேன்விகள்
1. தோழர் ஜீவானந்தம் முதலியவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று ஒருவர் கேட்கிறார். இப்போது ஒரு வித்தியாசமும் இல்லை. முன்பு அவர்கள் தேர்தல் பிரசாரம் ஊசிப்போனது என்றும், நாற்றமடிக்கிறது என்றும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கிவிட்டதாகப் பத்திரிகைகளில் பார்க்கிறேன். நான் ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். மற்றபடி வித்தியாசம் இல்லை.
2. இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு தோழர் கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் ஒரு வித்தியாசமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இன்றுள்ள ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய கொள்கையாகிய வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் உத்தியோக விஷயங்களில் அனுபவத்தில் சிறிதாவது இருக்கிறது என்றால் அது ஜனநாயக கட்சியின் மூல புருஷரான தோழர் எஸ்.முத்தையா முதலியார். அவர்களின். தொண்டினால் என்றுதான் சொல்லுவேன். ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலரும், பார்ப்பனரல்லாத மக்களில் பலரும் அவருக்கு போதிய நன்றி விசுவாசம் காட்டாவிட்டாலும் நான் என்னைப் பொறுத்தவரை எப்போதும் ஒரு அளவுக்கு நன்றி யுடையவனே ஆவேன். மற்றபடி ஜனநாயகக் கட்சியார் அரசியல் நிபுணத்துவத்தை உத்தேசித்து ஜஸ்டிஸ் கட்சிக்கும் மிதவாத கட்சிக்கும் தங்கள் கட்சிக்கும் ஏதோ வித்தியாசமிருப்பதாக கூறலாம். ஆனால் அது என் சிறிய கண்ணுக்குத் தென்படவில்லை ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இந்தியாவில் ஓரே கட்சிதான்
இன்று இந்தியாவில் அரசியல் கொள்கையில் ஒரே கட்சிதான் உண்டு. அதாவது தேர்தலில் வெற்றி பெற்று மந்திரி பதவியை அடைந்து பணமும் அதிகாரமும் பெறவேண்டும் என்கின்ற கவலை கொண்ட ஒரே கட்சிதான் உண்டு. அதை அடைவதற்கு பல மார்க்கங்கள் பல தந்திரங்கள். கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத்துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கட்சிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய் சில கட்சி உண்மை பேசலாம். சில கட்சி புரியாத மாதிரி பேசலாம். சில கட்சி அடியோடு பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் பேசலாம், இதுதான் இன்று அரசியல் கட்சிகளின் நிலைமை
ஜஸ்டிஸ் கட்சி.
ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தனது கொள்கைகளில் திட்டத்தில் உண்மை பேசுகிறது. அதுவும் சாத்தியமான மட்டும்தான் நடத்திக்கொடுப்பதாய்
பச்சையாய்ச் சொல்லுகிறது. அதில் உள்ள தலைவர்களுக்குள்ளோ அங்கத்தினர்களுக்குள்ளோ கட்சி கொள்கை விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லை. தலைவர்களில் பின் பற்றுபவர்களில் ஒருவருக்கொருவர். ஒற்றுமை இல்லாதவர்களாகவும் பொது நோக்குடையவர்கள் அல்லாதவர். களாகவும் சுயநலத்துக்கு ஆக எதையும் செய்யக் கூடியவர்களாகவும்
இருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அம்மாதிரி நபர்கள். எல்லாக் கட்சியிலும் உண்டு. அவர்களால் நேரும் கெடுதிக்கு எல்லாக் கட்சியாரும் சிறிது மார்ஜன் (இடம்) விட்டுத்தான் தீரவேண்டும். மற்றபடி இன்று சமுதாயத் துறையில் பிற்பட்டு அடிமைப்பட்டு இழிவுபட்டுக் கிடக்கும் மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சிதான் “சஞ்சீவி” மருந்து என்று சொல்லுவேன்.
காங்கிரஸ் கட்சிக்கு உத்தியோகமும் பதவி ஆசையும் இருப்பதாலேயே நான் அதை குறைகூறவில்லை. ஆனால் அது பிற்படுத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டு இருக்கும் மக்களுக்கு சமஉரிமை அளிக்க மறுப்பதையும் மற்றவர்கள் அளிப்பதைக் கெடுப்பதையுமே முக்கியக் கொள்கையாய்க் கொண்டு இருக்கிறபடியால் அதை ஒழித்து ஆக வேண்டும் என்கின்றேன். அதன் தலைவர்கள் பழமை விரும்பிகளாக இருப்பதாலேயே வருணாச்சிரம தர்மிகளாக இருப்பதாலேயே அவர்களிடத்தில் எனக்கு நம்பிக்கையும் மதிப்பும் இல்லை. மற்றபடி கட்சிகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை
சுயமமியாதைப் பிரசாரம்
3. சுயமரியாதை இயக்கப் பிரசாரம் ஏன் செய்யவில்லை என்று கேட்கப்பட்டிருக்கிறது
குடி அரசு- 1937 (1) 66
நானும் எனது தோழர்களும் ஒரு அளவுக்கு செய்து கொண்டுதான் வருகிறோம். ஆனால் முக்கிய கவனம் ஜஸ்டிஸ் பிரசாரத்தில்தான் இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் நன்மையைக் கோரி அது அவசியம் என்று கருதுகிறேன். எப்படியானாலும் இன்னும் ஒன்றரை மாதங்களில் ஜஸ்டிஸ் தேர்தல் பிரசாரம் தீர்ந்துவிடும். அதற்கப்புறம் அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வி அடைந்தாலும் சரி, நானும் எனது தோழர்களும் தனி சுயமரியாதை இயக்கப் பிரசாரம் தான் செய்வோம்
தோற்குமா? ஜெயிக்குமா?
4. ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுமா? என்று கேட்கப் பட்டிருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தால், நான் மகிழ்ச்சியடைவதோடு சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கு பார்ப்பனரல்லாத மக்களால் அதிக ஆதரவு கிடைக்கக்கூடும் என்கிற தன்மையால் இயக்கப் பிரசாரம் வளமாய் நடக்கவும் இடம் ஏற்படும் என்று கருதுகிறேன். ஜஸ்டிஸ் கவி ஜெயித்தால் தலைவர்கள், பதவி பெற்றவர்கள் ஆகியவர்களினது அனாதரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏனெனில், சிதறி கிடக்கும் பார்ப்பனரல்லாத மக்கள் ஒன்று சேர்ந்து பலமாய் வேலை செய்ய தோல்வி ஒரு சாதனமாகும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சித் தோல்வியடையாது. ஏனெனில் அதற்கு எதிரான கட்சி எதுவும் கொள்கையில் பலம் பொருந்தியதாக இல்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களில் சிலர் இப்போது இருக்கும் அலக்ஷிய புத்தியும் பொறுப்பற்ற தன்மையும், சுயநல சூழ்ச்சியையும் விட இன்னும் கேவலமாய் நடந்து கொண்டாலும் அக்கட்சிக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில், அதற்கு கொள்கை பலம் உண்டு. காங்கிரசுக்கு அது அடியோடு பூஜ்யம். ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடையாது என்று கருதுகிறேன்.
சமதர்மம்
5. சமதர்மத்தைப் பற்றி ஒரு தோழர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சி சமதர்மக் கட்சி என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அது தோன்றிய பிறகுதான் இன்று பறையனும், பார்ப்பானும் ஒரு ஸ்தானத்தில் சரிசமமாய் வீற்றிருக்கிறார்கள். புலியும் பசுவும் ஒரு துறையில் தண்ணீர் குடிப்பதுதான் சமதர்ம ராஜ்யம் என்பது பழங்கால பேச்சு. ஆனால், அது இன்று சர்க்கஸ் கொட்டகைகளில் நடைபெறுகின்றது அதனாலேயே, நாம் அதை சமதர்ம ராஜ்யம் என்று சொல்லுவதில்லை. ஆனால், இன்று பறையனும், பார்ப்பானும், சாஸ்திரியும், சங்கராச்சாரியும், சக்கிலியும் ஒரு பீடத்தில் அமர்கிறார்கள்; ஒரு பதவியில் இருக்கிறார்கள். எப்படி? சவுக்கினாலா? ரிவால்வர் பயத்தினாலா? இல்லவே இல்லை. தாங்களாகவே ஆசைப்பட்டு அதுவும் பத்தாயிரம், இருபதாயிரம் செலவு ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
செய்து கொண்டு போய் அமர ஆசைப்படுகிறார்கள். பறையனை பார்ப்பான். பிரபுவே எஜமானே என்று நின்று கொண்டு கெஞ்சிப் பேசுகிறான். இதெல்லாம் எப்படி ஏற்பட்டது? ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைப் பற்றிய ஒரு வார்த்தையாவது காங்கிரஸ் கூட்டத்தில், நடவடிக்கையில், ஆதாரத்தில், திட்டத்தில், கொள்கையில் இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, ஜஸ்டிஸ் கட்சி சமதர்ம கட்சி என்பதில் உங்களுக்கு இன்னும் சந்தேகம் உண்டா என்று கேட்கின்றேன். ஆகையால் சமுதாய சமதர்ம வேலையே தான் நான் இப்போதும் இன்றும் செய்து வருகிறேன். பொருளாதார சமதர்ம வேலை செய்ய எனக்கு ஆசைதான். ஆனால், காங்கிரஸ் அதற்குப் பரமவிரோதி என்பதோடு அது ஒரு காட்டிக்கொடுக்கும் ஸ்தாபனமுமாகும். அது ஒழிந்தால்தான் பொருளாதார சமதர்மம் பேச சவுகரியப்படும் என்றாலும் சட்டத்துக்கு மாறாய் இல்லாமல், அதாவது
சர்க்கார் அடக்குமுறைக்கு ஆளாகாமல் எவ்வளவு சமதர்ம பிரசாரம் செய்யலாமோ அவ்வளவையும் செய்துதான் வருகிறேன். செய்யத்தான் போகிறேன். மற்றபடி நீங்கள் எனக்கு இவ்வளவு கெளரவம் செய்து இவ்வளவு தூரம் எனது அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 27.12.1936 ஆம் நாள் கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தை அடுத்த வரதராஜப் பேட்டையில் நடைபெற்ற கோடம்பாக்கம் பகுத்தறிவு சங்கத்தின் நான்காம் ஆண்டு விழாவில் ஆற்றிய தலைமை உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 10.01.1937
குடி அரசு- 1937 (1) 68
சீர்திருத்தத்தை உடைப்பது
சம்பாஆஷணை
- சித்திரபுத்திரன்
மணி என்ன விஷேசம்? சும்மா யோசிக்கிறாயே?
சுப்பு:-
ஒன்றும் இல்லை, இந்த தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமே என்று பார்க்கிறேன்.
மணி:-
சுப்பு:-
அதற்கு ஆக என்ன செய்யப் போகிறாய்?
நம்ம பெண்களுக்கெல்லாம் பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடலாம் என்று யோசிக்கிறேன்.
மணி:-
என்ன முட்டாளாய் இருக்கிறாயே? தேவதாசி முறையை ஒழிப்பவன்
சுப்பு:-
பொட்டுக் கட்டுவதை நிறுத்துவானா? தன் பெண்களுக்கும் பொட்டுக் கட்டுவானா? இல்லைய்யா, அப்படிச் செய்யாவிட்டால் வேறு சிலர் தங்கள் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிடுவார்கள். ஆதலால், நாம் நம் பெண்களுக்கு பொட்டுக்கட்டிவிட்டால் அவர்களது பொட்டுக் கட்டும் தொழிலும் அவர்கள் தேவதாசித் தொழில் செய்வதும் தடுக்கப்பட்டுவிடாதா?
மணி:-
அதனால் நமக்கு என்ன லாபம்? எப்படியாவது அந்தத் தொழிலை நிறுத்துவதா அதை நாம் மேற்கொள்ளுவதா?
சுப்பு:-
மணி:-
நாம் பொட்டுக்கட்டி நம்ம பெண்களை விவசாரித்தனம் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டால் அந்தத் தொழில் நின்றுவிடாதா?
இது என்ன முட்டாள்தனமான யோசனை? நம்ம பெண்களுக்கு பொட்டு கட்டுகிறோம். விவசாரித்தனம் செய்ய வேண்டாம் என்று சொல்லுகிறோம். அதனால் விவசாரித்தனம் நின்று போகுமா? அப்புறம் பொட்டுக்கட்டிய நம்ம பெண்கள் புருஷர்கள் தேடாமல் இருக்க வேண்டுமே
சுப்பு:-
ஏன்? புருஷன் வேண்டும் என்பது கட்டாயமா? விதவை ஆனவர்களே புருஷனுக்கு அவஸ்தைப்படுகிறார்கள். பொட்டுக்கட்டி அலங்காரம் செய்து கொள்ள அனுமதித்து தாராளமாய் தேர்திருவிழாக்களுக்கு கோவிலுக்கு போய் வருகிறவர்களை புருஷன்
மணி:-
சுப்பு:-
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24.
69
வேண்டும் என்பது கட்டாயமா என்று கேட்கிறாயே, உனக்கு உலக அனுபவமோ, இயற்கையின் சக்தியோ தெரிந்திருந்தால் இப்படி பேசுவாயா?
நீ என்ன அப்படிச் சொல்லுகிறாய்? புதிய சீர்திருத்தத்தை உடைக்க நமது காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் சட்டசபைக்கு போய் மந்திரி உத்தியோகம் ஏற்க வேண்டும் என்கின்றாரே மந்திரி உத்தியோகம் ஏற்பதால் சீர்திருத்தம் உடைபடும்போது பொட்டுக் கட்டுவதால் விவசாரம் ஒழியாதா? அட பைத்தியமே! அது சத்தியமூர்த்தி கோஸ்டியார் மந்திரி பதவி ஏற்காவிட்டால் ஜஸ்டிஸ் கோஸ்டியார் மந்திரி பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஆதலால் அப்பதவியில் இவர்கள் உட்கார்ந்து கொண்டால் ஜஸ்டிஸ் கோஸ்டியார் என்ன செய்வார்கள்? என்று கருதி அவர் அப்படிச் சொன்னார். அதில் என்ன தப்பு?
மணி:-
சுப்பு:-
அதுபோல் தான் நானும் சொல்லுகிறேன். நமது பெண்கள் பொட்டுக் கட்டிக்கொண்டால் தேவதாசிகள் என்ன செய்யமுடியும்? இல்லாவிட்டால் அவர்கள் பொட்டுகட்டிக் கொள்ளுகிறார்கள்.
மணி:-
பொட்டுக்கட்டிக்கொண்ட நமது பெண்கள் புருஷன்களை தேடாமல் இருக்க முடியுமா என்று முன்னமே சொன்னேனே? மந்திரி பதவி ஏற்றுக்கொண்டால் அங்கு மந்திரிகளுக்கு உள்ள பொறுப்புப்படியும் சட்டப்படியும் நடக்காமல் இருக்க முடியுமா? மந்திரி பதவி ஏற்பதற்கு முன்பே சட்டசபைக்குள் நுழையும்போது தேவதாசிகள் எப்படிப் பொட்டுக்கட்டிக்கொள்ள கோவிலுக்குள் நுழையும்போதே அந்த சாமிக்கும் சாமியின் பக்தருக்கும் அடி ஆளாய் அதாவது கீழே இருப்பவளாய் சொல்லியே கடவுளை வேண்டி பொட்டுக்கட்டிக் கொள்வதுபோல் சட்டசபை மெம்பர்கள் சட்டப்படி நடக்கிறேன் என்று சத்தியம் செய்துவிட்டுத்தானே ஏற்றுக்கொள்ளவேண்டும்? அங்கு மந்திரி ஆனவுடன் செகரட்டரி சொன்னபடிகேட்காவிட்டால் கவர்னரிடம்
சுப்பு:-
புகார் போகும். கவர்னர் செகரட்டரி சொல்கிறபடி நடக்கச் சொல்லுவார், நடக்கா விட்டால் தன்னுடைய விஷேச அதிகாரத்தையும் பாதுகாப்பு அதிகாரத்தையும் பயன்படுத்தி சொந்த முறையில் உத்தரவு போடுவார். அப்புறம் மந்திரிகள் கவர்னரை மன்னிப்பு கேட்கவேண்டும்; இல்லா விட்டால் ராஜினாமா கொடுக்க வேண்டும். ராஜினாமா கொடுத்த பிறகு என்ன செய்ய முடியும்? பேசாமல் இருக்க வேண்டியதுதான். கவர்னர் வேறு (கட்சியாருக்கு) கூட்டத்தாருக்கு மந்திரி பதவி அளித்துப் பார்ப்பார். அதற்குள் காங்கிரசிலிருந்து சிலர் பிரிந்து அந்தக் கூட்டத்தில் சேர்வார்கள். பிறகு “உளி முறிந்த சக்கிலி மாதிரி" பழய மந்திரிகள் பேந்தப் பேந்த முழிக்க வேண்டியதுதான்.
அதெப்படி காங்கிரஸ்காரர்கள் மற்ற கூட்டத்தாருடன் சேருவார்களா?
மணி:-
குடி அரசு- 1937 (1) 70
ஏன் சேரமாட்டார்கள்? வேலூர், திருச்சி, தர்மபுரி ஆகிய காங்கிரஸ்காரர்களை நினைத்துப் பாரேன். அவர்கள்தானே, அவர்களைப் போன்ற மனித வர்க்கத்தார்தானே காங்கிரஸ் சட்டசபைக்காரர்கள். உனக்கு உலக அனுபவமும் இயற்கையின் சக்தியும் தெரிந்திருந்தால் நீ இப்படிப் பேசுவாயா? அதோடு கூட சத்தியமூர்த்தியாரின் கோஷ்டியாரின் யோக்கியதையும் அவர்களது முன்பின் நடவடிக்கைகளும் நாணயமும் தெரிந்திருந்தால். இப்படிப் பேசுவாயா?
சுப்பு:-
சரி மந்திரிகள் ராஜினாமா கொடுத்துவிடுகிறார்கள். வேறு யாரும் மந்திரி பதவி ஏற்க மெஜாரிட்டி இல்லாமல் செய்துவிடுகிறார்கள், அதனால் சீர்திருத்தம் முறிந்துவிடாதா?
மணி:-
அதனால் தான் எப்படி சீர்திருத்தம் முறிந்துவிடும்? கவர்னர் சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு எலக்ஷன் போட்டுவிடுவார். அப்போது காங்கிரசின் பேரால் நின்ற பழய ஆட்கள் வேறு கடியின் பேராலோ சுதந்திரமாகவோ நிற்பார்கள். அப்புறம் தனித்தனியாகவோ, கூட்டாகவோ மந்திரிகள் வந்து யாருக்கும் பொறுப்பில்லாமல் தனக்கே, சர்க்கார் சட்டத்திற்கே, பணத்துக்கே பொறுப்பாய் இருந்து வேலை நடத்துவார்கள்.
சுப்பு:-
ஆனால் சீர்திருத்தத்தை உடைக்க முடியாதா?
மணி:-
நீதான் சொல்லே பார்ப்போம், எங்காவது எப்போதாவது இந்த சர்க்காரின் சட்டத்தை மீறி ஒரு காரியமாவது செய்யப்பட்டிருக்கிறதா?' என்று பார். அடிபட்டாய், உதைபட்டாய், சட்டம் மீறினாய், மறியல் செய்தாய், ஜெயிலுக்கு போனாய், கொடியேற்றினாய், மகாத்மா பட்டம் கொடுத்தாய், சர்தார் பட்டம் கொடுத்தாய், தேசபந்து ஆனாய், ராஷ்டிரபதி ஆனாய், ராஜாஜி ஆனாய், வெங்காயம் ஆனாய், கருப்பட்டி ஆனாய், விளக்கெண்ணெய் விளக்கெரித்தாய், குரங்கு குல்லாப் போட்டாய், செருப்பெறிந்தாய், அழுகு முட்டை போட்டாய், கடசியாக வெள்ளைக்காரர்களில் சிலபேரை சுட்டாய், முடிவில் ஆனதென்ன? ஆளுக்கொரு கல்லுப் போட்டால் வெள்ளையர்கள் செத்துப் போவார்கள், அதை நான் தடுத்தேன் என்று காந்தி சொன்னார். நான் தூக்கு மேடைக்குப் போகத் தயார் ஜவஹர்லால் தூக்கு மேடைக்குத் தயார் என்று சொன்னார். அவ்வளவோடு தீர்ந்தது பாரத யுத்தம் பிறகு செய்யப்போவது என்ன?
சுப்பு:-
குடி அரசு - உரையாடல் - 10.01.1937
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24.
71
காங்கிரஸ் தீர்மானங்கள்
பெய்ஸ்பூரில் கூடிக் கலைந்த 50 - வது காங்கிரசைப் பற்றிக் “குடி அரசில் நமது அபிப்பிராயத்தை எழுதிவிட்டு காங்கிரஸ் தீர்மானங்களின் தன்மையைப் பற்றி பின்னால் எழுதுவதாக எழுதியிருந்தோம்.
காங்கிரசின் 20 தீர்மானங்களில் ஒரே ஒரு தீர்மானம் மாத்திரம் பொதுஜனங்களின் கவனத்துக்குக் கொண்டு வரத்தக்கதாகும். மற்ற தீர்மானங்கள் சடங்குத் தீர்மானங்களேயாகும். ஆதலால் அவற்றைப் பற்றி குறிப்பிடாமல் முக்கிய தீர்மானத்தைப் பற்றியே கவனம் செலுத்துவோம்.
அதாவது, சட்டசபை தேர்தலைப் பற்றிய தீர்மானம்.
“1935-ம் வருஷத்து இந்திய கவர்ன்மெண்ட் ஆக்ட் என்னும் அரசியல் சீர்திருத்தமானது இந்தியருடைய விருப்பத்துக்கு மாறானது. ஆதலால் அதை இந்த காங்கிரஸ் நிராகரிக்கிறது அதனோடு ஒத்துழைப்பது இந்திய சுதந்திர எழுச்சிக்கு துரோகம் செய்ததாகும்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இந்தியாவின் மீது உள்ள ஆதிக்கத்தைப் பலப்படுத்துவதாகும்
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினால் ஏற்கனவே சுரண்டப்பட்டுள்ள. இந்திய மக்களை இந்த புதிய அரசியல் இன்னும் கசக்கிப்பிழிந்து வேலை வாங்கி தரித்திரர்களாக்கும் என இக்காங்கிரஸ் அபிப்பிராயப்படுகிறது
ஆகையால், இந்த புதிய அரசியலுக்கு கீழ்ப்படிவதில்லை என்றும், இதனுடன் ஒத்துழைப்பது இல்லை என்றும் இதை ஒழிப்பதற்கு சட்டசபைக்கு உள்ளும் வெளியிலும் போராடுவது என்றும் காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்து கொண்டிருப்பதை இக்காங்கிரஸ் மீண்டும் எடுத்துரைக்கின்றது” என்பது மூக்கிய தீர்மானமாகும்.
மற்ற அம்சங்களைப்பற்றிய விவரங்களில்,
இந்தியாவுக்கு அரசியல் அமைக்க பிரிட்டிஷாருக்கு உரிமை கிடையாது என்பதையும், இந்தியாவுக்குப் பூரண ஜனநாயகத்துவமே தேவை என்பதையும், சட்டசபை அபேக்ஷகர்கள் காங்கிரஸ் தேர்தல் பிரச்சினையையே பிரசாரம் செய்ய வேண்டுமென்பதையும் விளக்கிவிட்டு
குடி அரசு- 1937 (1) 72
சட்டசபையில் உள்ள காங்கிரஸ் அங்கத்தினர்கள் இந்தியாவின் அரசியலை நிர்ணயிப்பதற்கு ஜனப்பிரதிநிதி சபை கூட்டவேண்டும் என்றும், வயது வந்தவர்களுக்கு எல்லாம் வாக்குரிமை கொடுத்து அவர்களைக் கொண்டே பிரதிநிதிசபை கூட்டவேண்டும் என்று கோர வேண்டுமென்றும் கட்டளை இட்டுவிட்டு,
உத்தியோகம் ஏற்பு விஷயத்தில்,
“உத்தியோகம் ஏற்பதா கூடாதா என்பதை மாகாண அசம்பிளி தேர்தல்
முடிந்த பிறகு அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியே எவ்வளவு
சீக்கிரமாக முடிவு செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக முடிவு செய்யும்.
தேர்தலுக்குப் பிறகு பல மாகாண காங்கிரஸ் கமிட்டிகளும் தங்கள்
ஜில்லாக் கமிட்டியையும் ஸ்தல கமிட்டியையும் கலந்து ஆலோசித்து இவ்விஷயமாக தமது சிபார்சுகளை அ.இ. காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பவேண்டும். அதன் பேரில் அ.இ.கா. கமிட்டி முடிவு செய்யும்” என்பது காங்கிரஸ் தீர்மானமாகும் ஆகவே இப்போது சட்டசபை அபேக்ஷகர்கள் சட்டசபைக்குப் போய் என்ன செய்வது என்பதற்கு ஒரு திட்டம் கிடையாது.
ஆனால் பொதுஜனங்களை ஏமாற்றவும் ஓட்டர்களை ஏமாற்றவும் மிகவும் சரியான திட்டம் என்று சொல்லலாம். ஏனெனில் இன்று காங்கிரஸ்காரர்களுக்குள் இரண்டுவித அபிப்பிராயமுடையவர்கள். இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சாரார் பதவி ஏற்புக்காரர்கள். அதோடு பதவி பெற்று சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்து பயன்பெற அவா உடையவர்கள். மற்றொரு சாரார் முட்டுக்கட்டை மனோபாவமுடையவர்கள். ஆதலால் இத்தீர்மானம் இருவரையும் ஏமாற்றத் தகுந்தது. ஓட்டர்களோ 100க்கு 90 பேர் தற்குறிகள்; அரசியல் ஞானம் கற்பிக்கப்படாதவர்கள் அவர்களை இரு கூட்டத்தாரும் ஏமாற்ற இத்தீர்மானம் வசதியளிக்கிறது
இது எப்படியோ இருக்கட்டும். முடிவில் அ.இ. காங்கிரஸ் கமிட்டி சட்டசபையில் முட்டுக்கட்டை போட்டு அரசியலை உடைக்க வேண்டுமென்று தீர்மானிப்பதாகவே வைத்துக் கொள்வோம்
காங்கிரசு எதிர்ப்பு - முட்டுக்கட்டை, சீர்திருத்தத்தை உடைத்தல். ஆகிய காரியங்களில் ஈடுபடப் போவதாகவே வைத்துக்கொள்ளுவோம் அப்படியானால் புது சீர்திருத்தத்தின்படி ஏற்பட்டிருக்கும் தேச ஆட்சி நடைபெறுவது எப்படி? அதை நடத்துபவர்கள் யார்? சொத்து காவல்,
நீதி சமாதானம், பரிபாலனம் ஆகிய காரியங்கள் பார்ப்பது யார்? உத்தியோகஸ்தர்களுடைய அக்கிரமங்களை கேட்பது யார்? ஒரே வகுப்பாரே உத்தியோகங்களை எல்லாம் கொள்ளைகொண்டு போகாமல், ஒரு வகுப்பார் ஆதிக்கம் ஏற்படாமல் பார்ப்பது யார்? B ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இந்திய மக்கள் வருஷம் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் வரிகொடுத்துவிட்டு அவர்கள் பிரதிநிதிகள் சட்டசபைக்குப் போவதற்கும் கோடிக்கணக்கில் ரூபாய் செலவழித்துவிட்டு அங்கு போய் அரசியலை முட்டுக்கட்டை போடுவதற்கும் அரசியலை உடைப்பதற்கும் நாள்களை வீணாக்கினால் நம்மால் கொடுக்கப்பட்ட வரி நாசமாகிறதா இல்லையா என்று கேட்கின்றோம்
காங்கிரஸ் இந்திய ஜனப்பிரதிநிதி சபையாய் இருப்பது உண்மையாய் இருந்து, இந்திய மக்களும் காங்கிரசை ஆதரிப்பது உண்மையாய் இருந்து காங்கிரசின் கொள்கையும் அரசாங்க நடப்புக்கு முட்டுக்கட்டை போட்டு அரசியலை உடைப்பது உண்மையாயிருக்குமானால் முதலில் செய்ய வேண்டிய வேலை வரியைக் கொடுப்பதை நிறுத்துவதேயாகும். அப்படிக்கில்லாமல் வரியைக் கொடுத்துவிட்டு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்து சட்டசபைக்குப் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமும் நிகழ்ச்சிக் குறிப்பும் இல்லாமல் வீணே அரசாங்கத்தார் ஏணி என்றால் கோணி என்று சொல்லிக்கொண்டு அரசாங்கத்துக்கு தோல்வி மேல் தோல்வி, காங்கிரசுக்கு வெற்றிமேல் வெற்றி என்று பத்திரிகைகளில் எழுதிக்கொண்டு காலத்தைப் போக்கினால் மக்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றோம்.
தோழர் புலாபாய் தேசாய் அவர்கள் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் 100க்கு 50வீதம்தான் ஜெயிக்கக்கூடும் என்று வியக்தமாய்ச் சொல்லி விட்டார். தோழர் காந்தியார் காங்கிரசுக்காரர்களின் முட்டுக்கட்டை, சீர்திருத்த உடைப்பு ஆகிய வேலைகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அதாவது ஷெட்யூல் வகுப்பார்கள் சம்மதிக்க வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார். தோழர் ஜின்னாவும் மற்றும் உள்ள முஸ்லீம் சங்கத்தார்களும் காங்கிரசை வால் பிடிக்கக்கூடாது, பின்பற்றக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். கிறிஸ்தவர்களும் ஐரோப்பியர்களும் சமதர்மம் மதத்துக்கு விரோதம் என்றும் சீர்திருத்தத்தை உடைப்பது ராஜத்துரோகம் என்றும் சொல்லிவிட்டார்கள். மற்றபடி ஜமீன்தார்கள், வியாபாரிகள், நிலச்சுவான்தாரர்கள் அழிவு வேலை ஜன சமூகத்துக்கும் முற்போக்குக்கும் கேடு என்று சொல்லுகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதெங்கே? சீர்திருத்தத்தை உடைப்பது எங்கே என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
1920ம் வருஷத்திய சீர்திருத்தத்தை உடைப்பதற்கு வக்கீல்கள். வேலையைவிட்டு மாணவர்கள் பள்ளியைவிட்டு முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு தாலூக்கா போர்ட் காலியாக்கப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்கள் பொது மக்களிடம் வசூல் செய்து செலவழிக்கப்பட்டு வேலை விட்ட வக்கீல்களுக்கும் பள்ளி விட்ட மாணவர்களுக்கும் அந்தப் பணத்தில் வேலை கொடுத்து சம்பளம்- நிவேதனம் கொடுத்து
குடி அரசு- 1937 (1) 74
பதினாயிரக்கணக்காய் மக்கள் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு ஜெயிலுக்கு போனவர்கள் குடும்பத்துக்கும் அலவன்ஸ் கொடுத்து இவ்வளவும் செய்தும் ஒரு காரியமும் நடவாமல் தோழர்கள் தாஸ், நேரு, சீனிவாசய்யங்கார், லஜபதிராய், மகமதலி, ஷவ்கத்தலி போன்ற உண்மையிலேயே நாட்டில் பெருமையும் மதிப்பும் செல்வமும் அறிவும் வீரமும் உள்ள ஆட்கள் எல்லாம் தலைகீழாய்த் தொங்கிப்பார்த்தும், ஆகாத காரியத்தை காந்தியார் காங்கிரசிலிருந்து விலகி, ராஜகோபாலாச்சாரியார். ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கிற காலத்தில் மற்றும் பலர் காங்கிரசை எதிர்த்துக்கொண்டிருக்கிற காலத்தில் - ஜாதி ஜாதியாய் வகுப்பு வகுப்பாய் மதம் மதமாய் மக்கள் பிரிந்து நிற்கும் காலத்தில் சத்தியமூர்த்தியும் ஜவஹர்லாலும் தலைவர்களாகவும் சர்வாதிகாரிகளாகவும் இருக்கும் காலத்தில் - மாத சம்பளக்காரர்கள், கூலிகள், சட்டசபை பதவி முதலிய மோகக்காரர்கள் மாத்திரமே அபிமானிகளாகவும் தொண்டர்களாகவும் பிரமுகர்களாகவும் இருக்கிற இந்தக் காலத்தில் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றோம் ஜவஹர்லால் ஆசைப்படுகின்றபடியும் சத்தியமூர்த்தியார் சொல்லுகிறபடியும் ராஜகோபாலாச்சாரியார் கனவுப்படியும் காங்கிரசின் பேரால் நிறுத்தப்படும் ஆட்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம். கவர்னர் சத்தியமூர்த்தியாரைக் கூப்பிட்டு மந்திரி லிஸ்ட்டு கொடுக்கும்படி கேட்பதாகவே வைத்துக்கொள்ளுவோம் தோழர் சத்தியமூர்த்தியார் 1. சத்தியமூர்த்தி, 2. பிரகாசம், 3. யாகூப்உசேன்,
4. எம்.சி.ராஜா, 5. டாக்டர் சுப்பராயன், 6. சி.ஆர்.ரெட்டி, 7. முத்துரங்க முதலியார் அல்லது ஜார்ஜ் ஜோசப் ஆகியவர்கள் பெயரைக் கொடுப்பதாகவே வைத்துக்கொள்ளுவோம். இவர்கள் போய் உட்கார்ந்த முதல் மீட்டிங்கில், “இந்த சீர்திருத்தம் பயன்படாதது, இதை ஒழிக்க வேண்டும், சர்க்கார் ஜனப்பிரதிநிதி சபை கூட்டி இந்திய பொதுஜனங்களின். அபிப்பிராயப்படி ஒரு சீர்திருத்த திட்டம் ஏற்படுத்த வேண்டும். அதுவரை நாங்கள் இந்த சீர்திருத்த்தையோ அரசாங்கத்தையோ நடத்த மாட்டோம்”
என்ற தீர்மானம் தோழர்கள் சுப்பையாவால் பிரேரேபிக்கப்பட்டு அண்ணாமலையால் ஆமோதிக்கப்பட்டு கிருஷ்ணசாமிபாரதியால் ஆதரிக்கப்பட்டு சொக்கலிங்கம் காமராஜன் ஆகியவர்களால் பின். தாங்கப்பட்டு 115 மெம்பர்களின் ஓட்டுகளால் காந்திக்கு ஜே, வந்தே மாதரம் என்கின்ற கோஷத்துக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவே வைத்துக்கொள்ளுவோம். மேலால் என்ன நடக்கும் என்று கேட்கின்றோம். கவர்னர் லீவ் எடுத்துக்கொள்வாரா? செகரட்டரிகள் ராஜினாமா கொடுத்து விடுவார்களா? பட்டாளங்கள் வெளியாக்கப்பட்டு போர்ட் சென்சார்ஜ் கோட்டை மூடப்பட்டு காங்கிரஸ் மண்டபம் சட்டசபை மண்டபமாகி விடுமா? என்று கேட்கின்றோம் B QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அதுதான் போகட்டும், சட்டசபை காங்கிரஸ் மெம்பர்கள் செலவு பில்லாவது சட்டசபை காரியதரிசிக்கு கொடுக்க மாட்டார்களா என்று கேட்கின்றோம். என்ன காரியத்தை இத்தீர்மானமும் வெற்றியும் வந்தே மாதரமும் நிறுத்திவிடும் என்று கேட்கின்றோம்.
இந்திய சட்டசபையில் தோழர்கள் புலாபாயும் சத்தியமூர்த்தியும்
மற்றும் மெஜாரிட்டி காங்கிரஸ் மெம்பர்களும் இருந்து 2% வருஷ காலமாய் என்ன காரியம் செய்ய முடிந்ததோ அதற்கு மேல் வரப்போகும் சென்னை சட்டசபையில் என்ன செய்ய மூடியும் என்று கேட்கின்றோம்.
இப்பொழுதே காங்கிரஸ்காரர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளு
கிறார்கள். அதென்னவென்றால், இப்போதைய சீர்திருத்தத்தில் கவர்னருக்கு முன்பிருந்ததைவிட அதிகமான அதிகாரம் இருக்கிறது என்றும், சட்டசபையின் எந்தத் தீர்மானத்தையும் நிராகரித்துவிடலாம் என்றும் சொல்லுகிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களின் சீர்திருத்த மறுப்பு தீர்மானம் என்ன பலனை உண்டாக்கிவிட மூடியும் என்று கேட்கின்றோம்.
பொதுஜனங்கள் முட்டாள்கள் என்றும், ஓட்டர்கள் பெரும்பாலோர் அரசியல் ஞானமற்றவர்கள் என்றும் காங்கிரஸ்காரர்கள் கருதியிருக்கும் முழு தைரியத்தால் பேசும் புரட்டுகளே இன்று காங்கிரஸ் கொள்கையாயிருக்கின்றது என்று சொல்லக்கூடுமே யல்லாமல் மற்றபடி காங்கிரசுக்கு காரியத்துக்கு பயன்படும்படியான திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கின்றோம் உண்மையில் இன்று காங்கிரசில் சட்டசபைக்குப் போகிறவர்கள். பெரும்பாலும் யார் என்று பார்த்தால் உத்தியோகம் ஏற்று பலன் அனுபவிக்க வேண்டும் என்கின்ற கூட்டத்தார்கள் என்பது விளங்கும்.
தோழர் சத்தியமூர்த்தியாரும் அவரது அந்தரங்க நண்பர் தோழர். டாக்டர் சுப்பராயன் அவர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் விளக்கவேண்டியதில்லை.
தோழர் சுப்பராயன் அவர்கள் 1927ம் வருஷத்தில் காங்கிரசுக்காரர்களால் பிடித்து வைக்கப்பட்ட மந்திரிகளில் ஒருவராயிருந்தபொழுது சைமன் கமிஷனை பகிஷ்கரித்து மற்ற மந்திரிகள் ராஜிநாமாக் கொடுத்த காலத்தில் இவர் ராஜிநாமாக் கொடுக்காமல் ஜஸ்டிஸ் கட்சியாரின் மந்திரியாக ஆகி மேல்கொண்டு 3% வருஷ காலம் பயன் அனுபவித்தவர். அப்படிப்பட்டவர். இன்று மந்திரியானால் வேறு யார் வெளியேறினாலும் நமது டாக்டர் அவர்கள். காலாவதி ஆகி சார்ஜெண்டு வெளியில் பிடித்துத் தள்ளினாலொழிய வெளியில் வந்துவிடக்கூடுமா என்று யோசிக்க விரும்புகிறோம்.
தோழர் சத்தியமூர்த்தியாரோ செல்லுமிடங்களில் எல்லாம் நான் மந்திரி ஆனால் அதைச் செய்வேன், இதைச் செய்வேன், தண்ணீர் கொண்டுவருவேன், வரி குறைப்பேன், போலீஸ்காரனை சலாம் போட வைப்பேன் என்கின்ற மந்திரங்களையே ஜெபித்து வருகிறார். சிலர் பட்டங்களை விட்டு விட்டுக்கூட
குடி அரசு- 1937 (1) 76
மந்திரி பதவிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமையில். காங்கிரசானது சட்டசபையில் முட்டுகட்டை போடப்போகின்றது என்பதையோ மந்திரி பதவியை கிடைக்கக்கூடுமானால் மறுக்கப் போகிறது என்பதையோ யார் நம்புவார்கள்?
எப்படி ஆன போதிலும் காங்கிரசின் நிலைமை அது எவ்வளவுதான் பாமர மக்களிடத்தில் மூடபக்தி பெற்றிருந்தாலும் இப்போது அது வெகு நெருக்கடியாக ஆகிவிட்டது. அதற்கு ஜெயித்தாலும் ஆபத்து தோற்றாலும் ஆபத்து என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இருதலைக் கொள்ளிக்குள் அகப்பட்ட எறும்புபோல் ஆகிவிட்டது. வெட்டி ஆடம்பரத்துடன் அதன் வாழ்வும் முடியப்போகிறது
எப்படி எனில் ஜெயித்தால் மந்திரி பதவி ஏற்கும் போதே வகுப்புக் கலகம் ஏற்படும். பதவி ஏற்றபின் கொள்கையிலும் வேலைத் திட்டமுறையிலும் சதா தொல்லை நேரும். ஏதாவது ஒரு காரணத்தால் வெளியேற நேர்ந்தால் டாக்டர் சுப்பராயன் மந்திரிகாலம் போல் சிலர் தங்கிக்கொள்வார்கள் சிலர்தான் வெளியேறுவார்கள் என்கின்ற நிலைமை ஏற்படும்
மந்திரி பதவி ஒப்புக்கொள்ளாவிட்டாலோ சட்டசபையில் இவர்கள் வேறு என்ன செய்ய முடியும் என்பதையும் இவர்கள் ஓட்டுப் பலத்தால் தோற்கடிக்கக்கூடிய தீர்மானங்களின் கதி என்ன ஆகும் என்பதையும் நாம் விளக்க வேண்டியதில்லை. அல்லது காங்கிரஸ் அல்லாத மந்திரிகளின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாகவே வைத்துக்கொண்டாலும் அத்தீர்மானம் நிறைவேறிவிட்டாலும் அப்புறம் என்ன செய்வது? மந்திரிகள் இலாகாவை கவர்னர் ஏற்று நடத்துகிறார். என்றோ அல்லது சட்டசபை கலைக்கப்பட்டு மறுதேர்தல் ஏற்படுத்தப்படுகிறது என்றோ வைத்துக்கொள்வோம். அப்பொழுது கவர்னர் ஆட்சி செல்லுபடி யற்றதாகிவிடுமா? அல்லது மறுதேர்தலில் மறுபடியும் காங்கிரஸ் ஜெயிக்குமா? என்று பார்த்தால் வேலூர் ஜி. போ. காங்கிரஸ் மெம்பர்கள் ராஜினாமாக் கொடுத்த பின்பு என்ன பலன் ஏற்பட்டதோ அதுதான். ஏற்படுமே ஒழிய வேறு என்ன நடக்கக்கூடும்?
ஆகையால் காங்கிரசின் சட்டசபை வேட்டையானது அதன் அந்திய காலத்துக்கு சாதனமாய் முடியப்போகின்றது என்பதை இப்போதே “ஜோசியம்” கூறுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.01.1937
77... QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் “ஜெயித்தது?
காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலுக்கு இதுவரை தமிழ் நாட்டில் அபேக்ஷகர்களை நிறுத்தப்பட்டதிலிருந்தே ஒரு அளவுக்குக் காங்கிரசின் கொள்கை வெற்றி பெற்று விட்டதென்றே கூறலாம்.
என்னவெனில் இன்று தென்னாட்டில் சிறப்பாகத் தமிழ் நாட்டில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஆயுதம் என்பதும் அவ்வாதிக்கத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியால் ஏற்படப் போகும் ஆபத்திலிருந்து தப்புவதற்காகவே காங்கிரஸ் நடத்தப்படுகிறது என்பதும் அறிஞர் அறியாததல்ல. அதற்கு ஆகவே காங்கிரஸ் இன்று சட்டசபை வேட்டை ஆடுகின்றது. முடிவு எப்படி இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு வெற்றி ஏற்பட்டுவிட்ட தென்றுதான் சொல்லவேண்டும். என்ன வெற்றி என்றால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சட்டசபைக்குப் பொதுத் தொகுதி மெம்பர்கள் பெண்கள் உள்பட 64 பேர்களேயாகும். இந்த 64 ஸ்தானங்களுக்கு இதுவரை காங்கிரஸ் 62 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தி இருக்கிறது
இவற்றிலும் தோழர்கள் சுப்பையா, சொக்கலிங்கம், அண்ணாமலை, காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, ஆதிகேசவ நாயக்கர், சேலம் சுப்பிரமணியம், ராமநாதன், கிருஷ்ணசாமி பாரதி மனைவி முதலிய
சுமார் பதின்மர்களை அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்கின்ற கவலை இல்லாமல் அந்த இடங்களைப் பூர்த்தி பண்ணுவதற்காகவே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி தோழர்களை நீக்கிக் கணக்குப் பார்த்தால் காங்கிரசுக்கு தமிழ் நாட்டில் நிஜமாகவே நிறுத்தப்பட்டிருக்கும் அபேக்ஷகர்கள் மொத்தம் 50 அல்லது 52 பேர்களே யாவார்கள். இவர்களில் 18 பேர்கள் பார்ப்பனர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தோழர்கள் சென்னை 1. டி. பிரகாசம், 2. என்.எஸ். வரதாச்சாரி
3. சத்தியமூர்த்தி, 4. ருக்மணி லக்ஷிமிபதி, 5. டாக்டர் சீனிவாசய்யர்,
6. கே. பாஷ்யம், 7. சேஷாத்திரி ஆச்சாரியார், 8. சிதம்பர அய்யர்,
9. பூவராக அய்யங்கார், 10. அம்மாப்பேட்டை வெங்கிட்டராமய்யர்,
11. ஆலஸ்யம் அய்யர், 12.திண்டுக்கல் குப்புசாமி அய்யர், 13. மட்டப்பாறை
குடி அரசு- 1937 (1) 78
வெங்கிட்டராமய்யர், 14. எக்ஞேஸ்வர சர்மா, 15. சங்கரய்யர் லக்ஷிமி,
16. திண்டுக்கல் நாகராஜ அய்யர், 17. சேலம் பி.டி. வெங்கட்டாச்சாரி,
18. கோபி ட. சீனிவாசய்யர் ஆகியவர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் இன்னம் 2 ஸ்தானங்கள் பாக்கி இருக்கின்றன. ஆகவே 69க்கு ஏன் 52க்கு 18 பேர் பார்ப்பனர்களாகிவிட்டார்கள். இது மொத்தத்தில் மூன்றில் ஒரு பாகத்துக்கு மேலாகவே இருக்கிறது. சென்னை: கார்ப்பரேஷன் எலக்ஷனுக்கும் இது போலவே நிறுத்தப்பட்டார்கள். அது வெற்றி பெற்ற பின்பு இன்றும் 3ல் ஒரு பாகம் பார்ப்பனர்களுக்கு ஒதுக்கி
வைத்து விட்டார்கள் ஆகவே முறையில் காங்கிரஸ் வெற்றி பெற்று விட்டது என்று சொல்லித்தானே ஆகவேண்டும்? இனி அடுத்த தேர்தல் ஏதாவது
ஏற்பட்டால் அதற்கு 2-ல் ஒரு பாகம் அதாவது சரி பகுதிப் பேர் நிறுத்தப்படுவார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை. அப்புறம் பழையபடி “சர்வம் பார்ப்பன மயம்" என்று ஆகிவிடலாமல்லவா?' இதற்கு ஆக நாம் மாத்திரம் வருந்தி என்ன செய்ய முடியும்? நம்மவர்களின் காட்டிக்கொடுக்கும் தன்மையும், மானங்கெட்ட தன்மையும் இன்னமும்
அச்சுக் குலையாமலிருக்கும் போது நமது தலைவர்கள் என்பவர்களில் பலரே இன்னமும் அவர்களுக்கு உள் ஆளாய் இருக்கும்போது இவற்றை எதிர்பார்க்கவேண்டியதுதானே. ஆகவே ஜஸ்டிஸ் கட்சி நியாயமான கட்சி என்பதற்கும், அது இன்னும் வெகுநாளைக்கு இருக்க வேண்டி இருக்கிறது என்பதற்கும், வெற்றியோ தோல்வியோ என்ன ஏற்பட்டாலும் லட்சியம் செய்யாமல் அதற்காக இன்னமும் உழைக்க வேண்டியது உண்மை சமதர்ம வாதிகளுக்கு நீங்காக் கடமை என்பதற்கும் ஆதாரமும் அவசியமும் இதிலிருந்தாவது விளங்கவில்லையா?
குடி அரசு - கட்டுரை - 10.01.1937
M ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஜே!
வங்காளம் “தேசீயத்துக்கு படு தோல்வி
ஆனால் சமூக ஓற்றுமை ஏற்பட்டது
வங்காளத்தில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் “இருந்த வகுப்பு வாதப் பேய்” “மாண்டு மடிந்து” தீர்க்காயுள் பெற்று விட்டது. அதாவது ராஜி ஏற்பட்டு விட்டது. வகுப்புரிமைக்கு சிரஞ்சீவிப்பட்டம் கிடைத்து விட்டது. “தேசீயம்" செத்து ஒழிந்தது. இரு கட்சித் தலைவர்களும் கூடி இரு சமூகத்துக்குள்ளும் ராஜி செய்துகொண்டார்கள்.
ராஜி நிபந்தணை
1. இன்று அரசாங்கம் முஸ்லீம்களுக்கு அளித்துள்ள விகிதாச்சார வகுப்புரிமை வகுப்புத் தீர்ப்பு அதில் கண்டபடி 10 வருஷ காலத்துக்கு ஆக்ஷேபிக்கப்படக்கூடாது. இரு சமூகத்தார் சம்மதித்தால் மாத்திரம் அதைப்பற்றி மத்தியில் யோசிக்கலாம்
2. மந்திரிசபை அமைக்கப்படுவதில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகுதிக்கு தகுந்தபடி பகுதி எண்ணிக்கை கொடுக்கப்படவேண்டும்
3. சர்க்கார் உத்தியோகம் மற்ற பிரதிநிதித்துவம் ஆகியவைகளில் முஸ்லீம்களுக்கு ஜனத்தொகை விகிதப்படி பகுதி விகிதாச்சாரம் ஒதுக்கப்படவேண்டும். யோக்கியதாம்சப் பரீகைஷ குறைந்த அளவுக்கே ஏற்படுத்தப்படவேண்டும் என்பதாகும்
இந்த நிபந்தனைகள் 1933ம் வருஷத்திலேயே பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டியில் எடுத்துரைக்கப்பட்டனவாம். அப்போதே முஸ்லீம்கள் ஒப்புக்கொண்டார்களாம். ஆனால் இந்துக்கள் தான் ஆட்சேபித்தார்களாம்.
4 வருஷம் சென்று இப்போதுதான் இந்துத் தலைவர்களுக்கு புத்தி வந்திருக்கிறது. இப்போதாவது ஒப்புக்கொண்டு ஒற்றுமைப்பட்டதற்கு நாம் மகிழ்ச்சியடைகிறோம்
தென்னாட்டிலும் பார்ப்பனர்களுக்கு எப்போது இந்த மாதிரி புத்தி வந்து பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற வேற்றுமையும் பிணக்கும் ஒழிய இணங்குவார்களோ தெரியவில்லை. பார்ப்பனருக்கு இருக்கும்
குடி அரசு- 1937 (1) 80
இன்னம் கொஞ்ச நஞ்சம் யோக்கியதையும் ஒழிந்து நெருக்கடியான காலம் வந்த பிறகே அவர்கள் வழிக்கு வருவார்கள் என்று எண்ணுகிறோம்
நாளாக நாளாக நமக்கு நன்மைதான். ஏனென்றால், அவர்களைப்பற்றி அதிக பிரசாரம் செய்ய வசதி இருந்து வருகிறது. கடனுக்கு நாளாக நாளாக வட்டி ஏறுவது போலும் விவகாரம் வலுக்க வலுக்க வட்டியும் கோர்ட்டு செலவும் அதிகரிப்பது போலும் கலகமும் பிணக்கும் வளர: வளர நமக்கு விகிதாச்சாரப் பிரச்சினை பெருகிக் கொண்டே வர வசதி இருக்கிறது. தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் சத்தியமூர்த்தியாரும் செய்கின்ற ஆர்ப்பாட்டங்கள் இன்று பார்ப்பனர்களுக்கு ஏதோ பெரிய ஆதாயம் கொடுப்பதாக காணப்படலாம். பார்ப்பனரல்லாதாருக்கு பெருத்த அழிவுகாலம் ஏற்பட்டுவிட்டது போல் தோன்றலாம். ஆனால் இதன். முடிவு கடைசியில் பார்ப்பனருக்கு 100க்கு 3 விகிதத்துக்கே கொண்டு
வந்து விடப் போகிறது என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆகவே இன்றைய ''தோல்வி'' “வெற்றி” '“போர் தொடுக்க துவஜாரோகணம்'' “ஜஸ்டிஸ் கட்சிக்கு அழிவு காலம்” “ஜஸ்டிஸ் கட்சி அழிந்தே போய்விட்டது” என்கின்ற “தேசீயப் பிரசாரங்களு”க்கு நாம் மயங்கவேண்டியதில்லை; கலங்க வேண்டியதில்லை.
பார்ப்பனீயம் ஒழிக, பார்ப்பன ஆதிக்கம் அழிக என்கின்ற பல்லவியே நமது “தாரக!” மந்திரமாய் 'உபாசனாமூர்த்த"மாய் இருக்கவேண்டியது மரணமடைய நேரும் ஒவ்வொரு தமிழ் மகனும் இதையே “மரணத்தறுவாய் நாம மந்திரமாக" க்கொள்ள வேண்டியது
துரோகிகளைப்பற்றி கவலைவேண்டாம்! கோடாலிக் காம்புகளைப்
பற்றி நினைவு வேண்டாம்!! நடப்பது நடக்கட்டும்!!! வெற்றி நம்முடையதே!!!! வெற்றி நம்முடையதே!!!!] நம்முடையதே!!!!!!
குடி அரசு - கட்டுரை - 10.01.1937
ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
புறமுதுகு கொடுத்தே௱டிய ஆச்சாரியார் மறுபடியும் போர் முனைக்கு
வந்து விட்டார்
இதில் ஆச்சமியமொன்றுமில்லை
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் வட ஆற்காடு ஜில்லா போர்ட் தேர்தலிலும் திருச்சி முனிசிபல் தேர்தலிலும் காங்கிரஸ்காரர்களின் அயோக்கியத்தனம் வெளியாகி தலைவர்கள், மகா தியாகிகள், பாரத மாதாவின் அருந்தவப் புதல்வர்கள் என்கின்றவர்களின் யோக்கியதையும் வெளியாகி காங்கிரஸ் என்றால் சீ என்னும்படியான நிலைமைக்கு வந்து விட்டவுடன் (தோழர் ராஜகோபாலாச்சாரியார்) மனம் நொந்து
“இன்றிலிருந்து சென்னையிலோ (சென்னை மாகாணத்திலோ
ப-ர்) அல்லது வெளியிடங்களிலோ (வெளிமாகாணத்திலோ - என்றுதான் அப்போது காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர் களும் கருதி விசனப்பட்டிருக்கிறார்கள் ப-ர்) உள்ள எந்த காங்கிரஸ் கமிட்டி அலுவல்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.”
என்று 11-8-36ந் தேதியில் ஒரு அறிக்கைஎல்லா பத்திரிக்கைகளுக்கும் வெளியிட்டு விட்டு துறவு பூண்டுகொண்ட விஷயம் அந்த தேதி பத்திரிகை
களில் இன்றும் யாவரும் காணலாம்
நாம் அன்றைய தினமே மறுபடியும் ஆச்சாரியார் பார்ப்பன பிரசார அரசியலுக்கு வருவார் என்றும், இன்று காங்கிரசுக்கு ஏற்பட்ட நாற்றத்தை சகிக்க முடியாமல் பலவீனத்தினால் விலகிக்கொண்டதாய் காட்டிக் கொண்டார். என்றும், காங்கிரஸ் இந்த நாற்றம் ஒழிந்ததும் முன்னணிக்கு வருவாரென்றும்
எழுதி இருந்தோம். அது இன்று நிஜமாகி புறமுதுகு கொடுத்தோடியவர் மறுபடியும் போர்முனைக்கு வந்து பழயபடி வீரம் பேசுகிறார். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதையே “பல ஜன்மத்துக்கும்” தொண்டாய் கொண்டுவிட்டார். ஆனால் அக்கக்வியை ஒழிக்க முடியாது என்றும், அவரது இந்த எண்ணம் அவரது வாழ்வையே குட்டிச்சுவராக்கிவிட்டது என்றும் சொல்லி பரிதாபப்படுவதை விட அவருக்கு நாம் செய்யும் பணி வேறு ஒன்றும் இல்லாமல் போனதற்கு உண்மையிலேயே வருந்துகிறோம்
குடி அரசு - கட்டுரை - 10.01.1937
குடி அரசு- 1937 (1) 82
தர்மபுரி தேர்தல் வண்டவாளம்
அழுவதற்கு வெட்கமில்லையா?
சேலம் ஜில்லா போர்டு பிரிவினையான விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். அதில் சேலம் ஜில்லா போர்டு என்பதற்கு காங்கிரஸ்காரர் பிரசிடெண்டாக வந்துவிட்டார். அதற்கும் நாமினேஷன் கொடுத்த பிறகுதான் தேர்தல் நடந்திருக்கிறது. அது போலவே சென்னை மாகாணத்தில் மற்றும் எவ்வளவோ ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டு நாமினேஷன்கள் கொடுக்கப்பட்ட பிறகே இதுவரை பெரிதும் பிரசிடெண்ட் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இனியும் நடக்கப்போகின்றன. கோயமுத்தூர் ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. ஈரோடு ஜில்லா போர்டும் அப்படியே நடந்தது. முன் சொன்ன சேலத்திலும் அப்படியே நடந்தது அதுபோலவே தான் தருமபுரி ஜில்லா போர்டும் நடந்திருக்கிறது
இந்த நிலையில் பிரசிடெண்ட் தேர்தலில் காங்கிரஸ் அபேக்ஷகர் தோல்வி அடைந்துவிட்டதற்கு பார்ப்பன பத்திரிக்கைகள் ஜஸ்டிஸ் கட்சி
மீது ஆத்திரத்தைக் காட்டி வசவு மாலை சூட்டுகின்றன.
தர்மபுரி நடவடிக்கையைப் பார்த்தவர்களுக்கு ஜில்லா போர்டுக்கு காங்கிரசிற்கு இயற்கையிலேயே மெஜாரட்டி கிடையாது என்பது விளங்கும். ஓட்டு ஒன்றுக்கு 2000, 3000, 4000 ரூபாய் கொடுத்து சில ஓட்டுகள் விலைக்கு வாங்கிய பிறகே காங்கிரஸ்காரர்களுக்கு 14 ஓட்டுகளாவது பெற முடிந்திருக்கிறது இந்த யோக்கியதையில் தேசீயப் பத்திரிகைகள் என்பவை ஜஸ்டிஸ் கட்சியின் நாணையத்தைப்பற்றி பேச மூன்வந்திருப்பது குச்சிக்காரி வரும்படி குறைந்தவுடன் கற்பு உபதேசம் செய்யப் புறப்பட்டாள்” என்பதுபோல் இருக்கிறது
காங்கிரஸ்காரர்கள் ஓட்டர்களுக்குப் பணம் கொடுத்து மெம்பர் தேர்தல்களிலேயே வெற்றி பெற்றது ஒரு புறமிருக்க காங்கிரஸ் பிரசிடெண்ட் தேர்தலுக்குக்கூட சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரம் காட்டத் தயாராய் இருக்கிறோம் அதாவது 2, 3-ந் தேதிகளில் கத்தை கத்தையாய் கரன்சி நோட்டுகள் வைத்துக்கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து பணம் கொடுத்து மெம்பர்களைப் 8௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பிடித்துக்கொண்டு வந்து ஒவ்வொருவராக அறையில் போட்டுப் பூட்டிக் கொண்டார்கள். 4ந் தேதி தேர்தல் நடக்கும்போது மெம்பர்களைக் கைதிகள் போல் அறையைத் திறந்து வண்டியில் வைத்து ஆபீசுக்கு அழைத்துப் போகும்முன் கற்பூரம் பற்றி வைத்து ஒவ்வொருவரிடம் வெளிப்படையாய் ஓட்டுப்போட ஒப்பந்தம் பேசி சத்தியம் வாங்கிக் கொண்டு வண்டி ஏற்றினார்கள்.
பிறகு என்ன நடந்தது என்பதைக் கவனிக்க வேண்டுகிறோம். ஏனெனில் அதுதான் காங்கிரசின் யோக்கியதையைப் பட்டவர்த்தனமாய்க் காட்ட மிகவும் சரியான ஆதாரமாகும் அதென்னவென்றால் எலக்ஷன் ஸ்தலத்தில் சேலம் ஜில்லா கலைக்டர் தோழர் எஸ்.வி. ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் எலக்ஷன் நடக்கும்போது காங்கிரசுக்கு ஓட்டுப்போட்ட 14 மெம்பர்களும் பாரிஸ்டர், வக்கீல்கள், பெரிய மிராசுதாரர்கள் உள்பட எல்லோருமே கலைக்டரையே ஓட்டுச் செய்யும்படி சொல்லி வெளிப்படையாக (ஓப்பன் ஓட்டாகவே) ஓட்டுப் போட்டார்கள். இந்த சமயத்தில் கலைக்டர் ஒருவரை “நீர் பாரிஸ்டராயிற்றே, நீர் ஏன் ஓப்பன் ஓட்டுப் போடுகிறீர்?'' என்று கேட்டாராம். மற்றொருவரை “நீர் வக்கீலாயிற்றே, உமக்குக்கூடவா எழுதப்படிக்கத் தெரியவில்லை?” என்று கேட்டாராம். இப்படியே ஒவ்வொருவரையும் கலைக்டர் கேட்கும்போது ஒருவர். “மயக்கமாய் இருக்கிறது" என்றும், ஒருவர் “தலை சுற்றுகிறது" என்றும், ஒருவர் “கண் மப்பாயிருக்கிறது” என்றும், ஒருவர் “மனம் சரியாயில்லை” என்றும் இப்படியே இன்னும் பலரும் பல விதமாய் சமாதானம் சொல்ல கலைக்டர் சிரித்துக்கொண்டே ஓட்டு (மார்க்கு) செய்தாராம். ஆகவே காங்கிரஸ் மெஜாரிட்டி அதாவது பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் இந்த 14 பேர்களுடையதுதான் என்பதாய் இருந்தால் இந்த பதினான்கு பேரும் பொதுஜனப் பிரதிநிதிகளாக யோக்கியமுடையவர் களாவார்களா என்று கேட்பதோடு காங்கிரசுக்கு உண்மையிலேயே மெஜாரிட்டி இருந்திருக்கிறதா என்று கேட்கிறோம்
'மடியில் கனமில்லாதவர்கள் வழியில் ஏன் பயப்படவேண்டும்?” இவர்கள் பணத்துக்கோ அல்லது வேறு சுயநலத்துக்கோ பிரதிநிதிகளாய் இல்லாமல் பொதுஜனங்களுக்கு உண்மையான பிரதிநிதிகளாய் இருந்திருந்தால் தோழர் MG நடேச செட்டியாரைத் திருப்தி செய்யச் சத்தியமும் செய்து கொடுத்துவிட்டு ஓப்பன் ஓட்டாய் ஓட்டுப் போடக் காரணம் என்ன என்று கேட்கின்றோம்
ஜஸ்டிஸ் கட்சிக்கு “அந்திய காலம்” ஏற்பட்டிருக்கலாம். ஆனால். அந்திய காலத்துக்கு ஆரம்பகாலம் ஏற்பட்டில்லாமல் காங்கிரசுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்க முடியுமா?
குடி அரசு- 1937 (1) 84
இன்னமும் நமக்கு வந்துள்ள செய்தியில் ஆசாமிகள் பேரும் அவர்கள் ஆள் ஒன்றுக்கு இத்தனை ரூபாய் கொடுத்து வெளிப்படையாய் ஓட்டுப் போட இத்தனை ஓட்டர்களிடம் கண்டிஷன் வாங்கப்பட்டது என்ற விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவைகள் எல்லாம் உண்மையாயிருக்குமா. என்று சந்தேகப்பட்டே நாம் அதை பிரசுரிக்கவில்லை.
ஆனால் 14 ஓட்டர்களும் பாரிஸ்டர், வக்கீல்கள், மிராசுதாரர்கள் ஆகியவர்கள் சட்ட விரோதமாய் வெளிப்படையாய் ஓட்டுப் போடக் காரணம் என்ன? சட்டப்படி ரகசியமாய் ஓட்டுப் போடுவதில் இவர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியம் என்ன? என்று கேட்கின்றோம்
சில ஜில்லா போர்டு மெம்பர்களின் தேர்தல்களில் சில விஷயங்கள் நேரிலேயே நாம் பார்த்திருக்கிறோம். என்னவென்றால் ரகசிய ஓட்டுக்கு ஒரு ரூபாய், ஓப்பன் ஓட்டுக்கு இரண்டு ரூபாய் என்று பேரம் பேசப்படுவதையும், வெளிப்படையாய் ஓட்டுப் போட்டுவிட்டு பொது மனிதரிடம் பொதுக் கட்டிய பணத்தை வாங்கிப் போவதையும் பார்த்திருக்கிறோம்.
தர்மபுரி காங்கிரஸ் மெம்பர்கள் விஷயத்தில் இது பொருந்தாது என்று சொல்வதானாலும் சேலத்தில் வெகு நாளாய் ஆதி முதல் காங்கிரஸ்வாதியாயிருந்தவரான தோழர் வெங்கிட்டப்ப செட்டியார் அவர்கள் குமாரரும் சீமைக்குப் போய் பாரிஸ்டர் பாஸ் செய்து ஆங்கில நாகரீகத்தையும் நாணயத்தையும் படித்து வந்தவருமான பாரிஸ்டர் தோழர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் கூட இம்மாதிரி ஓப்பன் ஓட்டுப் போட சரியான காரணம் சொல்லாவிட்டால் அதில் காங்கிரசு, தேசாபிமானம், பொதுஜனப் பிரதிநிதித்துவம் என்பவைகள் அல்லாமல் வேறு என்னமோ ஒன்று ஒளிந்து கொண்டு இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டாமா என்று கேட்கின்றோம். தலைமை வகித்த கலைக்டர் தோழர் ராமமூர்த்தி 1.0.5. அவர்கள் இவ்விஷயங்களை அதாவது இன்ன இன்னார் இத்தனை பேர் காங்கிரஸ் பிரசிடெண்ட் அபேக்ஷகருக்கு இன்ன இன்ன காரணம் சொல்லி (ஓப்பனாய்) வெளிப்படையாய் நடேச செட்டியாருக்குத் தெரியும் படியாக ஓட்டுப் போட்டார்கள் என்று கவர்ன்மெண்டுக்கு ரிபோர்ட் செய்திருப்பார்கள் என்றே எண்ணுகின்றோம். இந்த ரிப்போர்ட்டையும் கவர்னர் பிரபு பார்ப்பார் என்றே கருதுகிறோம். இவற்றைப்பற்றி அடுத்து வரும் சட்டசபையில் இருகட்சி அங்கத்தினர்களும் கேள்வி கேட்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.
இப்படிப்பட்ட யோக்கியர்களைக் கொண்ட காங்கிரஸின் சார்பாய் நிறுத்தப்பட்ட தலைவர் - அதுவும் வெளிப்படையாய் ஓப்பன் ஓட்டு ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
போடும்படி ஏற்பாடு செய்து கொண்ட தலைவர் வெற்றி பெறவில்லை என்று காங்கிரஸ் பத்திரிக்கைகள் அழுவதற்கு வெட்கமில்லையா என்று கேட்கின்றோம். இந்த லக்ஷணத்தில் ஜஸ்டிஸ் க்ஷி மந்திரி மீது குறை கூற வெட்கமில்லையா என்றும் கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களின் ஜனநாயகத்துவமும் தேர்தலில் வெற்றி பெறும் யோக்கியதையும் அவர்களது பிரதிநிதித்துவமும் தான் சுயராஜ்யத்திற்கு பாதை என்றால் அப்பாதையை கல்லும் முள்ளும் படைக் கத்தாழையும் போட்டு மூடி விடுவதே மேல் என்று சொல்லுவோம்
குடி அரசு - கட்டுரை - 10.01.1937
குடி அரசு- 1937 (1) 86
*“இந்து??வின் நொண்டவாத அமுகை
ஸ்தல ஸ்தாபன நாமினேஷன்
அதற்குள் அழுகை முடிந்துபோகவில்லை
“இந்து பத்திரிகையானது தர்மபுரி ஜில்லாபோர்டு பிரசிடெண்டு எலக்ஷனில் காங்கிரசுக்கு தோல்வி ஏற்பட்டுப் போனதின் காரணமாய் ஜஸ்டிஸ் கக்ஷி மீது பழி சுமத்துகிறது. அதாவது தோல்விக்கு காரணம்,
1. சர்க்கார் நாமினேஷன் செய்த கெஜட் விளம்பரம் ஞாயிற்றுக்கிழமை (லீவு நாளில்) வெளியாக்கப்பட்டதாம்.
2. எலக்ஷன் நடத்தப்படுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட போர்டுக்கும் மொத்த மெம்பர்கள் எவ்வளவு என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்கின்ற சட்டத்தை அனுசரிக்கவில்லையாம்.
3. எலக்ஷன் மெஜாரிட்டியை நாமினேஷன் கெடுத்துவிட்டதாம்.
இந்த மூன்று காரணங்களும் நொண்டி வாதமான காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்
எப்படி எனில் முதலாவது காரணமான லீவு நாளில் நாமினேஷன் பெயர்கள் கெஜட் ஆனதினால் எலக்ஷனை எப்படி பாதித்து விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
இது “ஆடத் தெரியாத தேவடியாள் கூடம் போதாது" என்று சாக்குச் சொல்லுவது போல் இருக்கிறது.
சர்க்கார் காரியாலயங்களுக்கு டிசம்பர் 23ந் தேதியில் இருந்து ஜனவரி 3ந் தேதி வரையில் விடுமுறை நாளாகும். பிரசிடெண்ட் தேர்தல்களோ சேலத்துக்கு ஜனவரி மீ” நாலாந் தேதியும் தர்மபுரிக்கு 5ந்தேதியும் ஏற்கனவே கலைக்டரால் குறிப்பிடப்பட்டாய் விட்டது. ஆதலால் தேர்தலுக்கு முன்பாகவே நாமினேஷன் ஆனவர்களின் பெயர்கள் வெளியாக்க வேண்டியதின் நிமித்தம் 3ந்தேதி விசேஷ கெஜட் மூலம் வெளியாக்கப்பட வேண்டியதாயிற்று. இது அனேக தடவைகளில் சாதாரணமாக அரசாங்கத்தாரால் செய்யப்பட்டு வரும் காரியமே ஒழிய தர்மபுரிக்கு மாத்திரம் செய்யவில்லை. சேலம் போர்டு பிரசிடெண்ட் தேர்தலில் ஓட்டுச் செய்த நாமினேஷன் மெம்பர்களும் லீவு நாளில் 87... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வெளியான கெஜட்டில் பிரசுரிக்கப்பட்டவர்களேயாவார்கள். இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் லீவு நாளில் கெஜட் வெளியானதை “இந்து” பத்திரிகையோ, வேறு காங்கிரஸ்காரர்களோ குற்றம் சொல்லவோ அல்லது எடுத்துக் காட்டவோ கூட இதுவரை முன் வரவில்லை
சட்ட சம்பந்தமாக கூறப்படும் குற்றமும் ஆதாரமற்றது என்றே சொல்ல வேண்டும். அல்லது வேண்டுமென்றே குரோதக்கண்ணில் பார்த்து குரைப்பது என்றுதான் சொல்ல வேண்டும். சட்டத்தில் ஒரு போர்டுக்கு மொத்த மெம்பர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கும் பிரிவானது:-
போர்டுக்கு இவ்வளவு பேர்கள் மெம்பர்களாயிருக்கவேண்டும் என்பதை கவர்ன்மெண்டார் விளம்பரத்தின் மூலம் வெளியிடவேண்டும்” என்றுதான் சொல்லுகிறதே தவிர “இந்து” பத்திரிகை சொல்லுகிறபடி தேர்தலுக்கு வேண்டிய காரியம் துவக்குமுன்னமே வெளிப்படுத்த வேண்டும்” என்பதாக இல்லை:
போர்டு மெம்பர் தேர்தல் மெம்பர்கள் எலக்ஷன் நடந்து அதில் வராத ஒதுக்கி வைக்கப்பட்ட வகுப்பார்களை அறிந்து அவர்கள் ஜனத்தொகை வீதாச்சாரத்துக்கும் எத்தனை மெம்பர்கள் வேண்டி இருக்கும் என்பதை உணர்ந்து சட்டத்தையும் அனுசரித்து நியமனம் செய்ய வேண்டியிருப்பதால் மெம்பர்கள் தேர்தலுக்கு பின்னால் தான். மொத்த எண்ணிக்கை நிர்ணயிக்க முடிகிறது. ஆதலால் கவர்ன்மெண்டார். இவ்விஷயத்தில் சட்டத்தை மீறி சட்ட வாசகத்துக்கு விரோதமாய் ஒன்றும் செய்து விடவில்லை
கடசியாக எலக்ஷன் மெஜாரிட்டியை நாமினேஷன் கெடுத்து விட்டது என்பது
இது அடியோடு வேண்டுமென்றே சுமத்தும் பழியாகும். ஏனெனில் தர்மபுரி ஜில்லா போர்ட் அதாவது வடக்கு சேலம் ஜில்லா போர்டு மெம்பர்கள் தேர்தல் நடந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் 24 மெம்பர்களில் தங்களுக்கு 18 மெம்பர்கள் என்று அவர்களே விளம்பரப்படுத்தினார்கள். அது ஒரு புறமிருக்க மேல் குறிப்பிட்ட மொத்த மெம்பர்கள் 24 பேர்களில் தோழர் கிருஷ்ணமூர்த்தியை பிரசிடெண்டாக்குவதற்கு அதாவது “கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் போர்டில் தொண்டாற்றுகின்றோம்” என்று 14 பேர்கள் கூடி தங்களை ஒரு கமிட்டியாய் ஏற்படுத்திக் கொண்டு தாங்கள் ஜில்லா மக்களுக்கு ஆக உழைப்பதாய் சில கொள்கைகளையும் வகுத்து ஒரு அறிக்கை தயார் செய்து தங்கள் கையெழுத்துக்களையும் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வறிக்கை சர்க்கார் அதிகாரிகள் பார்வைக்கும் தென்படுத்தப்பட்டிருக்கிறது
இந்த நிலையில் காங்கிரசுக்கு 10 மெம்பர்கள் தான் உண்மையாய் இருந்திருக்க வேண்டும் என்பதை சர்வ முட்டாளும் ஒப்புக்கொள்வான்.
குடி அரசு- 1937 (1) 88
இது எப்படியோ இருக்கட்டும். காங்கிரஸ்காரர்கள் வெளியிட்டிருக்கிற படியே பார்த்தாலும் காங்கிரசின் பேரால் காங்கிரஸ் ஆதரவால் மெம்பரான 18 பேர்கள் அன்று எலக்ஷனின் போது எங்கு போய்விட்டார்கள் என்று கேட்கின்றோம்
மறுநாள் 6-ந் தேதி சேலத்தில் காங்கிரஸ்காரர் தோல்வி துக்கம் கொண்டாடிய ஒரு துக்க மீட்டிங்கில் தோழர் பாரிஸ்டர் S.V. ராமசாமி அவர்களும் அவர் தகப்பனார் வெங்கட்டப்ப செட்டியாரும் சேலம் காங்கிரஸ் காரியதரிசியும் டாக்டர் சுப்பராயன் அவர்களும் பேசியிருப்பதில்
ஒரு விஷயம் வெளியிட்டிருப்பதைக் காணலாம். (அது 7-1-37தி “சுதேசமித்திரன்'' 9ம் பக்கம் 2,3, கலங்களில் காணப்படுகிறது.)
அதாவது,
காங்கிரசின் சார்பாக வெற்றி பெற்ற மெம்பர்களான தோழர்கள் வெங்கிட்டே கவுண்டர், ஹரூர் தீர்த்தகிரி கவுண்டர், ஊத்தங்கரை சென்ன. கிருஷ்ண செட்டியார் ஆகியவர்கள் காங்கிரஸ் நிபந்தனை பத்திரத்தில் கையெழுத்து போட்டு காங்கிரசின் பேரால் வெற்றி பெற்று விட்டு பிரசிடெண்ட் தேர்தலில் காங்கிரசை மோசம் செய்துவிட்டதால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று பேசி தீர்மானங்களும் செய்திருக்கிறார்கள்.
மற்றும் ஸ்ரீமான் 8.0. வெங்கட்டப்ப செட்டியார். “ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான தர்மபுரி டாக்டர் SR. தர்மலிங்கம் அவர்கள் தர்மபுரி ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸ் பிரதிநிதியான
ஸ்ரீமான் M.G நடேசம் செட்டியாருக்கு விரோதமாக வேலை செய்ததை கண்டித்து இம்மாதிரி காங்கிரசுக்கு விரோதமாக நடந்து கொண்டதற்கு ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்கி தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை கேட்டுக் கொள்ளுகிறது” என்று ஒரு பிரேரேபணை கொண்டு வந்திருக்கிறார்.
ஸ்ரீமான் சாமண்ணா இதை ஆமோதித்திருக்கிறார். அதன் பின். ஏகமனதாக இது நிறைவேறி இருக்கிறது
மற்றும் “வேலூரில் நடந்தபடியே இங்கும் சம்பவம் நடந்துவிட்டது. வருத்தகரமான விஷயம்” என்று சேலம் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியே பேசி இருக்கிறார்.
கடசியாக டாக்டர் சுப்பராயன் அவர்கள் அக்கூட்டத்தில் பேசுகையில். “காங்கிரஸ் மெம்பரான ஸ்ரீமான் வெங்கிட்டே கவுண்டர் (பிரசிடெண்டு அபேக்ஷகரான தோழர் கிருஷ்ணமூர்த்தி கவுண்டர்) தன் ஜாதியை சேர்ந்தவர் என்கின்ற காரணத்தால் ஜஸ்டிஸ் கக்ஷியை சேர்ந்த ஒருவருக்கு
ஹூ ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தலைவராகும்படி ஓட்டுச் செய்திருப்பதால் காங்கிரசில் இம்மாதிரி
வகுப்புவாதம் இருந்து வருவது விசனப்படத் தக்கதாகும்” என்று பேசி அழுது இருக்கிறார். ஆகவே வாஸ்தவத்தில் ரிக்கார்ட்டுப்படி பார்க்கவேண்டுமானால், தர்மபுரி ஜில்லா போர்டு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் அபேக்ஷகர் காங்கிரஸ் மெம்பர்களின் நடத்தையாலும் “துரோகத்தாலும்” தோல்வி அடைந்ததே தவிர ஜஸ்டிஸ் கக்டியால் தோல்வி அடையவில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்
அன்றியும் தோழர் கிருஷ்ணமூர்த்தி கவுண்டரை ஆதரிப்பதாக வாக்களித்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்த 14 மெம்பர்களில் 5,
6 பேர்களை காங்கிரஸ்காரர் பணம் கொடுத்தும் வைஸ் பிரசிடெண்டு கொடுப்பதாகச் சொல்லியும் விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் காங்கிரஸ் மெம்பர்கள் எழுதப்படிக்க தெரிந்த பெரிய மனிதர்கள் என்பவர்களாய் இருந்தும் வெளிப்படையாய் ஓட்டுப் போட்டிருப்பதே போதுமானதாகும். விஷயம் இப்படி இருக்க, தோல்விக்கு ஆக ஜஸ்டிஸ் கக்ஷியை வைவதும் அதற்கு அந்திய காலம் வந்து விட்டது என்று சொல்லுவதும் எப்படி சமாதானமாகிவிடும்?
இதுவரை காங்கிரஸ்காரர்கள் எந்த ஊர் தேர்தலிலாவது யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்று “இந்து” பத்திரிகை ஒரு விரலையாவது விட முடியுமா என்று கேட்கின்றோம்.
திருநெல்வேலி, திருச்சி, தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருவண்ணாமலை முதலிய இடங்களில் காங்கிரசின் பேரால் வந்த மெம்பர்கள் எவ்வளவு காங்கிரசுக்கு ஓட்டுப் போட்ட ஆட்கள் எவ்வளவு என்று கணக்கு பார்த்தால் காங்கிரசின் யோக்கியதை விளங்கிவிடும். இல்லாவிட்டால் தோழர் ராஜகோபாலாச்சாரியாரைக் கேட்டாலும் அவரது துறவை கேட்டாலும் சுலபத்தில் புரிந்துவிடும்
இப்பொழுதுதான் ஆகட்டும் ஒரு ஜோசியம் கூறுகிறோம் காங்கிரசு தலைவர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு இதுபோலவே ஆட்களை நிறுத்தி இருக்கிறார்கள். (முக்கிய கருத்து தாங்கள் மந்திரிகளாக வரலாம் என்று கருதியே) இவர்கள் ஜெயித்து மெஜாரிட்டி ஆகப்போவதில்லை என்பது உறுதி. ஒரு சமயம் மெஜாரிட்டியாக வந்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்பொழுதும் இதுபோல்தான் எதிர்க்கட்சிக்கு கையெழுத்துப்போட்டு கொடுத்து காங்கிரசை வெட்கப்படும்படி தோற்கடிக்கப் போகிறார்கள் என்பதாகச் சொல்லி வைக்கிறோம்.
டாக்டர் சுப்பராயன் அவர்கள் சொன்னது போல் காங்கிரசில் பரிசுத்தமான கலப்படமில்லாத வகுப்பார்கள் எல்லாம் வகுப்பு வாதம்
குடி அரசு- 1937 (1) 9
பேசித்தான் தீருவார்கள். யோக்கியமாகப் பணம் சம்பாதிக்காத பணக்காரர்கள் இடத்திலெல்லாம் உண்மையான ஏழை மெம்பர்கள் பணம் வாங்கித்தான் தீருவார்கள்.
பணமிருந்தாலும் இல்லாவிட்டாலும் தங்களுக்கு மேல் அதிகப்பணம் வைத்திருப்பவர்களிடத்தில் எல்லாம் “சமதர்மிகள்” பணம் கேட்டுத்தான். தீருவார்கள். இன்னும் பலவும் செய்வார்கள்.
“இந்து” "சுதேசமித்திரன் “தினமணி” ஆகிய பத்திரிகைகள் எல்லாம் அப்போது ஒரு தரம் “காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டார்கள்', இனி வரப்போகும் தேர்தலிலாவது தேசத்தைப் பாராமல் யோக்கியர்களாக பார்ப்பனர்களாகவே அவர்களது உண்மையான “சூத்திரர்"களாகவே
பார்த்து நிறுத்த வேண்டும், “கலப்பட சூத்திரர்கள்” கூடாது என்று தலையங்கம் எழுதி தங்களது துக்கக் கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ளப் போகிறார்கள். இதன் மூலம் காங்கிரசின் வெற்றி மேல் வெற்றி கோவிந்தா ஆகப்போகிறது என்பதை முடிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
“இந்து''வே உன்னுடைய தோல்வி அழுகை அதற்குள் முடிந்து போகவில்லை.
“ஏன் துள்ளுகிறாய் ஆட்டுக்குட்டி? என்னிடம் இருக்கிறது சூரிக்கத்தி”
குடி அரசு - கட்டுரை - 10.01.1937
ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரசின் பிற்போக்கு
இந்திய மக்கள் கால்நடையில் இருந்து மாட்டுவண்டி பிரயாணம் ஆகி குதிரைவண்டியாகி ரயில் வண்டி ஆகி சைக்கிள் வண்டி ஆகி மோட்டார் வண்டி ஆகி ஆகாயத்தில் பறக்கும் ஏரோப்ளான் பிரயாணத்துக்கு வந்திருக்கிற காலத்தில் இன்றைய காந்தி சகாப்தத்திலும் ஜவஹர் அயனத்திலும் பழயபடி மாட்டு வண்டிப் பிரயாணம் மறுபடியும் துவக்கப்பட்டுவிட்டது அதாவது பெய்ஸ்பூர் காங்கிரசில் தலைவர் ஜவஹர்லாலை 6 காளைமாடு பூட்டிய வண்டியில் வைத்து ஊர்வலம் செய்தார்களாம். காங்கிரஸ்காரர்களின். இந்த பிற்போக்கு உணர்ச்சியில் நாம் ஆச்சரியப்படத்தக்கது ஒன்றும் இல்லை. ஏனெனில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு ராத்தல் நூல் பூச்சிக்கூடு இழைபோல் நூற்கும் யந்திரங்கள் வந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒரு வாரத்துக்கு ஒரு ராத்தல் நூல் மொந்தம் பழம் மொத்தம் நூற்கும்படியான கைராட்டினத்தை வைத்து பூஜிக்கிற தலைவரான காந்தியாரின் சிஷ்யர் மாட்டு வண்டிக்கு போவதில் எப்படி அதிசயமிருக்க முடியும்?
காந்தியார் இன்று மக்களை ஏமாற்றி மகாத்மா ஆன ரகசியமே பழய காட்டுமிராண்டித் தனத்தை - கல் ஆயுத காலத்தைப் புகழ்ந்தும் உபதேசித்தும் (பார்ப்பனர்கள் மாட்டுச் சாணியும் மூத்திரமும் கலந்து குடிப்பதே மோக்ஷம் என்று சொல்லி ஆச்சாரிகள் ஆனது போல்) அவற்றையே தேசீயமென்றும் விடுதலையென்றும் வெள்ளைக்காரனை ஓட்டும் “பிரம்மராக்ஷ*ு” என்றும் வஞ்சித்ததே ஒழிய வேறில்லை. இப்பொழுதும் காந்தியாரின் கிராம முன்னேற்ற வேலையும் கிராமப்புனருத்தாரண வேலையும் இது போலவேதான். அதாவது கொட்டைமுத்து எண்ணெய் விளக்கு எரித்தல், கருப்பட்டி இனிப்பு உபயோகித்தல், கைக்குத்து அரிசி சாப்பிடுதல், ஆடு மாடு மேய்த்து பால்,
தயிர், நெய் செய்து பட்டண வாசிகளுக்கு உதவுதல், பாலிய விதவைகள் ராட்டினத்தை கல்யாணம் செய்து கொண்டு இரவும் பகலும் அதனுடன் கொஞ்சுதல் என்கின்றது போன்ற “புதிய” முறைகளைக் கண்டுபிடித்து இந்திய மக்களை ஈடேற்ற வந்திருக்கும் மகாத்மாவின் சிஷ்யரான ஜவஹர்லால் மாட்டுவண்டி ஊர்கோலம் போவது ஏன் பொருந்தாது?
காங்கிரஸ் என்றாலே பாமர மக்களை ஏய்க்க வேண்டியது, காலிகளுக்கும் சோம்பேறிப் பிழைப்புக்காரர்களுக்கும் பாமர ஜனங்களை
குடி அரசு- 1937 (1) 92
ஏமாற்றி மிரட்டிவெரட்டி வயிறு வளர்க்க வழிகாட்டிக் கொடுக்க வேண்டியது, இந்தக் கூட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜே போட வேண்டியது என்பதைத் தவிர வேறில்லை. ஆகவே மற்றவர்கள் எப்படி பட்டினியாய் எவ்வளவு இழிவாய் எவ்வளவு கொடுமையாய் வாழ்ந்தாலென்ன?
இன்று இந்த தலைவர்கள் போலவே புரோகிதர்களும் அர்ச்சகர்களும் வாழ்க்கை நடத்துவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு புரோகிதன் வயிறும் அர்ச்சகன் வயிறும் வண்ணான் தாழிபோல் இருக்கும். அவர்கள் பெண்ஜாதிமார்களுக்கு டபிள் பிரத்தில் 3 கஜம் துணி ஒரு ரவிக்கைக்கு வேண்டிய மாதிரி உடல் பெருத்திருக்கும். இவர்களுக்கும் மோட்சத்திற்குப் போக என்று காணிக்கை அழுகின்ற ஆட்கள் பாமர மக்கள் வயிறொட்டி, கண் குழிவிழுந்து, விலாவெலும்பு வெளியில் தெரிந்து கூட்டங்களில் மிதிபட்டு நசுங்குண்டு அலைந்து திரிந்து நோயுடன் வீடு வந்து சேர்வார்கள்.
வைதீக விஷயத்தில் இந்த நிலையுள்ள மக்கள் அரசியல் விஷயத்தில் மாட்டுவண்டி கட்டி ஓட்டுவது ஏன் சரியாகாது? எப்படியோ போய் தொலைந்தாலும் இன்றைய தலைவர்கள் என்பவர்கள் நம்மை காட்டுமிராண்டி காலத்துக்குக் கொண்டு போய்விட்டு மகாத்மாவாகவும் சமதர்ம வீரர்களாகவும் ஆகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதை குறிப்பிடுகிறோம்
மற்றபடி முட்டாள்கள் கஷ்டப்பட்டு வருவதைப்பற்றி நாம் ஆத்திரப்படவில்லை. இமயமலை பனிக்கட்டியில் மூடப்பட்டு குளிரால் அவஸ்தைப்படுவதற்கு நாம் வருந்தி என்ன பயன் ஏற்படுத்த முடியும்? பித்தலாட்ட தேசியமும் வஞ்சக சுயராஜ்யமும் ஒழிந்து மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்படும்போது தான் எல்லாம் சரியாய்விடும்.
குடி அரசு - கட்டுரை - 17.01.1937
B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் என்றால் என்ன?
ஜெயிலுக்குப் போவது கல்லுவி மங்கன் வேலை
மொண்டீ பிள்ளையை வாடகைக்கு
வாங்கி காட்டி பிச்சை கேட்பதா?
தலைவரவர்களே! தோழர்களே!
இங்கு நாங்கள் வந்த சமயத்தில் எங்களுக்கு செய்த வரவேற்புக்கு மிகுதியும் நன்றி செலுத்த வேண்டியவன். ஊர்வலங்களும் வாத்தியங்களும் ஜே கோஷங்களும் வழி நெடுகச் செய்த வரவேற்பு ஆடம்பரங்களும்
இந்த ஜஸ்டிஸ் இயக்கத்தில் உங்களுக்கு உள்ள பற்றுதலையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் காட்டுகின்றன.
நமது ஊக்கமும் உற்சாகமும் இப்படி செலவழிக்கப்படுவது எனக்கு விருப்பமில்லை. காரியத்தில் மக்களுக்குள் இயக்கத் தன்மையையும் அது செய்த வேலையும் எடுத்துச் சொல்லுவதில் செலவழிக்கப்பட வேண்டும்.
ஆச்சமியமில்லை
ஜஸ்டிஸ் இயக்கம் என்றால் தீண்டாமை போல் மக்கள் பாவிக்கிறார்கள் என்று தலைவர் எடுத்துக் கூறினார்.
அதற்கு பொது ஜனங்களும் நம் எதிரிகளுமே காரணமல்ல. நாம் பொது ஜனங்களுக்கு வேலை செய்கிறோம் என்கின்ற மமதையில் இருந்து விட்டோமே ஒழிய நமது வேலையை பாமர ஜனங்கள் உணர்ந்தார்களா என்பதைப்பற்றி கவலைப்படவில்லை. நமது எதிரிகள் செய்யும் விஷமப் பிரசாரத்துக்கு அவ்வப்போது பதில் சொல்லி தப்பபிப்பிராயம் வளர்த்தப்படுவதைத் தடுக்க முயற்சிக்கவில்லை
பாமர மக்கள் 100க்கு 90 பேர் படிப்பு வாசனை அற்றவர்கள் என்பதை நாம் தெரிந்திருந்தும் அவர்களுக்காக நாம் பிரசாரம் செய்யவோ, பத்திரிகைகளின் மூலம் விஷயங்களை பரப்பவோ நாம் கவலை கொள்ளவில்லை. நமது எதிரிகள் முதலில் கோடிக்கணக்காய் பாமர மக்களிடம் பணம் வசூலித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் நம்மைப்பற்றி பேசாமல் ஏதோ ஞானம் பேசி பணம் சம்பாதித்துக் கொண்டார்கள். அதைக்கொண்டு ஆட்களை சேமித்து பத்திரிகைகளுக்கு
குடி அரசு- 1937 (1) 04
பணம் கொடுத்து நம்மீது துவேஷ பிரசாரம் செய்து அநேக பழிகளை சுமத்தி விட்டார்கள். இந்த நிலையில் பாமர மக்களுக்கு நம்மீது சலிப்பு ஏற்பட்டிருந்தால் அதில் அதிசயமில்லை
இந்தக் கூட்டம் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் கூட்டப்பட்டிருக்கிறது சமீபத்தில் வரப்போகும் புதிய அரசியல் திட்டத்தின்படி நடக்கும்
தேர்தலுக்கு ஆகவே இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது
நாண் வந்த காமியம்
நான் தேர்தலுக்கு எந்த தனிப்பட்ட நபருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சொல்ல வரவில்லை. ஏனென்றால் இங்கு தேர்தலில் நிற்கப்போகும் அபேக்ஷகர்கள் உங்களுக்கு தெரியாதவர்கள் அல்ல. அன்றியும் உங்களைவிட எனக்கு அதிகமாய் தெரிந்தவர்களும் அல்ல. ஆகையால் எந்த நபருக்கு ஓட்டுப்போடுவது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
நான் வந்த காரியம் என்னவென்றால் தனிப்பட்ட நபர்கள் பலர் தங்கள் பெயர்களை சொல்லிக்கொள்ள யோக்கியதை இல்லாதவர்களும் பொதுஜனங்களால் தகுதி உள்ளவர் என்று கருத முடியாதவர்களும் இப்போது தேர்தல்களில் நிற்க ஆரம்பித்து விட்டதாலும் தகுதி உள்ளவர்கள் கிடைக்காததினாலும் அபேக்ஷகர் பெயர் சொல்லக்கூடாமல் கட்சிகளின் பெயர்களையும் காந்தியின் பெயரையும் சொல்லி நமது எதிரிகள் ஓட்டுக் கேட்பதோடு இந்த சாக்கில் ஜஸ்டிஸ் கட்சியை கேவலமாகப் பேசி வருவதால். அதைப் பற்றி கண்டித்தும் மறுத்தும் பேசவே வந்திருக்கிறேன்.
எலக்ஷனுக்கு நிற்க ஓட்டர் லிஸ்டில் பெயர் வந்த 25 வயதுக்கு மேற்பட்ட யாருக்கும் உரிமை உண்டு. அப்படிப்பட்டவர்களில் கோவிலின். முன்னால் நின்று பிச்சை வாங்கி கஞ்சா அடித்துவிட்டு திண்ணையில் தூங்குகிறவனானாலும் தேர்தலுக்கு நிற்கலாம். அவனுக்கும் உரிமை உண்டு. எப்படி உரிமை உண்டு என்றால் அவன் கஞ்சா குடிப்பதில் சர்க்காருக்கு வரி செலுத்துகிறான்.
சீர்திருத்தம் வரப்போகும் சீர்திருத்தம் பதவியும் சம்பளமும் அதிகாரமும் கொண்டது. அவற்றை நடத்தவும் பெறவும் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும் என்கின்ற அவசியமும் இல்லை. தோழர் ஜவஹர்லால் கூறியது போல் கூன், குருடு, செவிடு, மொண்டி, முடம் ஆகிய யாராயிருந்தாலும் பரவா இல்லை என்று கூட ஆய்விட்டது. சீர்திருத்தம் என்றால் நம் இஷ்டப்படி நடப்பது என்பதல்ல. ஏற்கனவே இருந்து வரும் ராஜாவுக்கு பக்தி செலுத்தி “அவரால்” ஏற்பட்டுள்ள சட்டப்படி நடப்பதேயாகும். இதற்கு யார் இருந்தால்தான் என்ன? %5 ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அதற்கு விரோதமாய் நடப்பவர் நடப்பதாய்ச் சொல்லுபவர் யாராயிருந்தாலும் தோழர்கள் நேரு காந்தி உள்பட மற்றும் யாராய் இருந்தாலும் அவர்களுக்கு சீர்திருத்தத்தில் இடம் கிடையாது. சட்டசபையிலும் இடம் கிடையாது. இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிலைமையில் யார் போனாலென்ன? தேர்தலில் வெற்றி பெற்று
சர்க்கார் கட்டடத்துக்குள் நுழையும் போதே ராஜ பக்தி விஸ்வாசப் பிரமாணமும் - சட்டபக்தி - விஸ்வாசப் பிரமாணமும் செய்துவிட்டுத்தான். உள்ளே போக வேண்டும்.
கட்சிகள்
இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களான சத்தியமூர்த்தி முத்துரங்க முதலியார் முதலிய எல்லோருமே ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்துவிட்டுத்தான் அசம்பிளியில் இருக்கிறார்கள். ஆதலால் சட்டசபைக்கு ஆட்கள் அனுப்புவதில் வீரனையும் சூரனையும் தேடுவதில் பயனில்லை. தமிழ்நாட்டில் காங்கிரசு, ஜஸ்டிஸ், ஜனநாயகம், லிபரல், வர்ணாச்சிரம சுயராஜ்யம், முஸ்லீம் முதலிய பல கட்சிகள் இருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலும் காங்கிரஸ் ஜஸ்டிஸ் என்ற இரண்டு கட்சிகளின் பெயர் அதிகமாக அடிபடுகின்றன. இதில் காங்கிரஸ் பிரசாரம் மிக்க பலமாக இருக்கிறது. ஆனால் அதற்கு பிரசாரத்தில் தனது கொள்கையை
எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்க யோக்கியதை இல்லை. ஜஸ்டிஸ் கட்சியை வைவது, அதன் தலைவர்கள் அங்கத்தினர்களை இழிவாய்ப் பேசுவது, தேசத்துரோகிகள், சர்க்கார்தாசர்கள், உத்தியோக வேட்டைக்காரர்கள்.
என்றெல்லாம் வசை பொழிவது முதலான முறைகளில் பிரசாரம் செய்கிறார்கள். ஒன்றிலும் முடியாவிட்டால் கடைசி முயற்சியாக காலித்தனம் வரையில் செய்ய முற்பட்டு விட்டார்கள். தாராளமாகப் பொய் பேசுகிறார்கள்
இதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை கவலை எடுத்து தக்க பதில் சொல்லவே இல்லை. எலக்ஷன் நெருங்கிய பிறகே பிரசாரம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்கள்.
காங்கிரஸ் கொள்கைகள்
நீங்கள் காங்கிரஸ் என்றால் என்ன? ஜஸ்டிஸ் கட்சி என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். காங்கிரஸ் எப்போது ஏன் ஏற்பட்டது? அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? ஜஸ்டிஸ் கட்சி ஏன் எப்போது ஏற்பட்டது? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? என்பவைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்
காங்கிரஸ் உத்தியோக வேட்டைக்கும் சர்க்கார் தாசத்துவம் பாடவும், தேசத்துரோகம் செய்யவுமே ஏற்பட்டது. காங்கிரசின் முதல் கொள்கை “ராஜ விஸ்வாசமாயும், ராஜபக்தியாயும் இந்தியா
குடி அரசு- 1937 (1) 96
என்றென்றும் இருக்க வேண்டும் என்பது. இரண்டாவது கொள்கை “உத்தியோகங்கள் இந்தியர்களுக்கு கொடுக்க வேண்டும்” என்பது மூன்றாவது காரியம் “உத்தியோகங்களை ஏராளமாய் உற்பத்தி செய்து சம்பளங்களை உயர்த்தி அதற்கேற்றபடி வரியை உயர்த்திக் கொண்டு வந்தது." இந்த காரியம் தான் காங்கிரஸ் சுமார் 35 வருஷ காலம் செய்து வந்தது. இந்தக் கூட்டத்தில் யாராவது இல்லை என்று சொல்லட்டும்.
பிறகு, காங்கிரசினால் ஏற்பட்ட பலன் என்னவென்றால் காங்கிரசின். பலனாய் ஒரு கூட்டத்தாரே உத்தியோகம் பெற்று பெருஞ்சம்பளம் பெற்று வந்ததால் முஸ்லீம்கள் தங்கள் வகுப்புக்கு விகிதாச்சாரம் கேட்டார்கள், பிறகு கிறிஸ்தவர்கள் கேட்டார்கள், பிறகு பார்ப்பனரல்லாதார். கேட்டார்கள். அதற்காகவே காங்கிரசில் இருந்த முக்கியமான முஸ்லீம் தலைவர்களும், முக்கியமான கிறிஸ்தவ தலைவர்களும், பார்ப்பனரல்லாத “இந்து” தலைவர்களும் பிரிந்து வந்து தனிதனி சங்கங்கள் ஏற்படுத்திக் கொண்டு காங்கிரஸ்காரர்களைப் போலவே ராஜ விஸ்வாசத் தீர்மானம் செய்து உத்தியோகம், பதவி ஆகியவற்றில் பங்கு கேட்டார்கள். முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பங்கு கிடைத்துவிட்டது. ஆனால் பார்ப்பனரல்லாதார்களுக்கு அது இன்னமும் சரியாய்க் கிடைக்கவில்லை காங்கிரசில் பெரும்பாலும் ஏகபோகமாய் இருந்த பார்ப்பனர்களுக்கு தங்கள் ஆதிக்கமும் அனுபவித்து வந்த உத்தியோக எண்ணிக்கையும் சிறிது சிறிது குறைய ஆரம்பித்ததும் அவர்கள் (பார்ப்பனர்கள்) வேறு உபாயம் கண்டுபிடித்தார்கள்.
புது உபாயம்
அது என்னவென்றால் “ராஜபக்தி வேண்டியதில்லை; தேச பக்திதான் வேண்டும்" என்று சொல்லியும் “உத்தியோகம் பெறுவது
சர்க்கார் அடிமைத்தனம்” என்றும் பேச ஆரம்பித்தார்கள். இந்திய சரித்திரத்திலேயே ராஜபக்தி வேண்டியதில்லை என்றும் உத்தியோகம் அடிமைத்தனம் என்றும் சொன்னதானது அப்போதுதான் ஏற்பட்டது ஆனால் தோபக்தி பேசும் பார்ப்பனர்களிலும் உத்தியோகம் அடிமைத்தனம் என்று பேசும் பார்ப்பனர்களிலும்தான் அன்றைய தினமும் 100க்கு 75
பேர், 100க்கு 95 உத்தியோகங்களை அடைந்திருந்தார்கள். அதில் மீதி உள்ள சில பார்ப்பனர்கள் காங்கிரசை சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல்லாதார்களில் 100-க்கு ஒருவருக்குக் கூட உத்தியோகம் கிடைப்பதற்கு மார்க்கமில்லாமல் தொல்லைப்படுத்தி வந்தார்கள். இன்றும் அப்படியே செய்து வருகிறார்கள். இந்தத் தொல்லைதான் இன்று சுயராஜ்யமாகவும், தேசீயமாகவும், தேசபக்தியாகவும் இருந்து வருகிறது
மற்றபடி காங்கிரசுக்கும் மற்ற ஜஸ்டிஸ் கட்சி மூதலியவற்றிற்கும் இன்று கொள்கையில் என்ன வித்தியாசம்? காங்கிரசின் பேரால் பதவி
97 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வேட்டையாடுகிறவர்களை விட- அதாவது சட்டசபைக்கு போகவேண்டும் என்பவர்களை விட கொள்கையிலோ, தனிப்பட்ட முறையிலோ, முன் பின் நாணையத்திலோ மற்ற கட்சிக்காரர்கள் எதில் மோசமானவர்கள். என்று யாராவது சொல்லட்டும். வீணாக ஒரு கட்சியையும் ஒரு கட்சி தலைவர்களையும் ஒரு கட்சி கொள்கைகளையும் திரித்துக் கூறி மக்களை ஏமாற்றுவது யோக்கியமாகுமா? என்று கேட்கின்றேன்.
உருப்படியான திட்டம்?
காங்கிரசுக்கு உருப்படியான திட்டம் ஒன்றும் கிடையாது. மக்கள் ஏமாறும்படியும் குழப்பம் அடையும்படி பேசுவதை தவிர ஒரு காரியமும் செய்தது கிடையாது. யாராவது அதன் கொள்கையைப்பற்றியோ அது மக்களுக்கு செய்துள்ள வேலையைப் பற்றியோ எடுத்துச் சொல்லட்டும், அல்லது ஜஸ்டிஸ் கட்சி ரோட்டு, சுகாதாரம், ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், தீண்டாமை விலக்கு, சகல வகுப்பாருக்கும் உத்தியோக விகிதம் ஆகிய காரியங்கள் செய்ததையும், மற்றும் தேவஸ்தான நிர்வாகச் சட்டம், நாட்டுவைத்திய சட்டம், இனாம் பூமி சட்டம், குடிவாரச் சட்டம், விவசாரி ஒழிப்புச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்மக்களுக்கு ஓட்டு, தீண்டாதார் என்பவர்களுக்கு பிரதிநிதித்துவம், வரி குறைப்புக்கு வாதாடி குறைக்கச் செய்தது, சுங்கம் எடுக்கச் செய்தது முதலிய காரியங்கள் செய்ததை இல்லை என்றாவது மறுக்கட்டும் என்று கேட்கின்றேன்.
மற்றும் ஜஸ்டிஸ் க்ஷி பொது மக்களிடம் ஏதாவது பொய் சொல்லி ஓட்டு வாங்கியதாகவோ, ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீறியதாகவோ பொது ஜனங்களை தப்பு வழியில் நடத்தியதாகவோ எடுத்துக்காட்டட்டும். அக்கிரமமாக வேண்டுமென்றே பொய்யும் பித்தலாட்டமும் பேசி மக்களை ஏமாற்றி பணம் பறித்து ஓட்டுப் பறித்து விஷமப் பிரசாரம் செய்து மற்ற கக்ஷியையும் மக்களுக்கு முழு நன்மை செய்யவொட்டாமல் முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதல்லாமல் காங்கிரஸ் வேறு என்ன செய்தது என்று யாராவது சொல்லட்டும்.
காங்கிரசின் “*தியாகம்??
காங்கிரசு தான் செய்த தியாகத்தை பெரிதாகச் சொல்லி ஓட்டுக் கேட்கிறது
இது சந்தைகளில் கல்லுளி மங்கன்கள் நெற்றியை கல்லால் கிழித்து காயம் பண்ணி ரத்தம் ஒழுக்கிக் கொண்டு காசு கேட்பது போல்தான் இருக்கிறது. முதலாவதாக காங்கிரஸ் தியாகத்தால் ஆன காரியம் என்ன என்று கேட்கிறேன் ஒவ்வொரு தியாகம் என்பதையும் தப்பு, தப்பு என்று ஜஸ்டிஸ் காரர்களும் மிதவாத லிபரல் கட்சியாரும் மற்றும் பல கட்சியாரும்
குடி அரசு- 1937 (1) o8
சொல்லி மக்களுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார்கள். காங்கிரசு பணத்தாலும் பார்ப்பன பத்திரிகையின் வஞ்சக பிரசாரத்தாலும் பாமர மக்கள் ஏமாந்து காங்கிரசுக்கு கோவிந்தா போட்டே வந்தார்கள். கடசியில் காங்கிரசுக்காரருக்கே புத்தி வந்து மாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். காங்கிரசிலும் இனிமேல் சட்டம் மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை, ஒத்துழையாமை செய்வதில்லை என்று தீர்மானித்து விட்டார்கள். சர்க்காருக்கும் எழுதி கொடுத்துவிட்டார்கள். காந்தியாரும் நேற்று பெய்ஸ்பூர் காங்கிரசில் “நான் பனியா (வியாபாரி) ஆனதால் ஒரு வியாபாரத்தில் நஷ்டம் வந்தால் வேறு வியாபாரம் ஆரம்பிப்பேன்” அதலால் பழய (தியாக) வியாபாரங்களை விட்டு விட்டு இப்போது சட்டசபை வியாபாரங்களை ஆரம்பித்து இருக்கிறேன் என்பது ஆகப் பேசியிருக்கிறார். ஆகவே தியாகத்தைப் பற்றிப் பேசி ஓட்டுக் கேட்பது அவரவர்கள் முட்டாள் தனத்தைப் பற்றிப் பேசி ஓட்டுக்கேட்பது போல் இல்லையா என்று கேட்கின்றேன். அப்படித்தான் இப்போது காங்கிரசால் நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் ஜில்லா போர்டு தலைவர்களும் உங்கள் ஜில்லா போர்டு மெம்பர்களும் சட்டசபைக்கும் மேல் சபைக்கும் நிறுத்தப்பட்டிருக்கும் தோழர்கள் நாடிமுத்து பிள்ளை, பூவராக அய்யங்கார், சுப்பராய செட்டியார், மைதீன் மரைக்கார் முதலியவர்களும் என்ன தியாகம் செய்தவர்கள்? தோழர் நாடிமுத்துபிள்ளை அவர்களின் குருவும் நண்பர்களுமான தோழர்கள் டாக்டர் சுப்பராயன் ராமலிங்க செட்டியார், வெள்ளியங்கிரி கவுண்டர் முதலிய 109க்கு 75 பேர்கள் என்ன தியாகம் செய்தவர்கள்? யாரோ பெற்ற மொண்டிப் பிள்ளையை வாடகைக்கு வாங்கி வந்து காட்டி பிச்சை கேட்பது போல் யாரோ ஜெயிலுக்கு போனதைச் சொல்லி உங்களை ஓட்டுக் கேட்டால் அதற்கு ஏமாறுவதா?
ஜெயிலுக்குப் போவது கல்லுவி மங்கண் வேலை
இந்தக்காலத்தில் ஜெயிலுக்குப் போவது என்பது வாஸ்தவத்திலேயே ஒரு தியாகமா என்று கேட்கிறேன். ஜெயிலில் ஜாதியும் மதமும் பார்ப்பனர்களுக்கு நன்றாய் காப்பாற்றப்படுகிறது. ஜெயிலில் ஏ, பி, கிளாஸ் பதவிகள் இருக்கின்றன. அங்கு பச்சரிசி சாதம், பருப்பு நெய், சாம்பார்,
ராம், பால், தயிர், காப்பி, ரொட்டி வெண்ணெய், கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, மாம்சம் சாப்பிடுபவர்களுக்கு மாம்சம் மூதலிய சப்ளை உண்டு. ஏ- கிளாஸ் காரருக்கு பங்காகூட வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது சமையல் ஆள், பியூன் ஆகியவைகூட அனுமதிக்கப்படுகிறது. ஜெயில்வாசம் உண்மையிலேயே தியாகமா, பெருமையா என்று கேட்கிறேன். தொண்டர்கள் பெரும்பாலோருக்கு சம்பளம் உண்டு. ஜெயில் வாசத்தின் போது குடும்பத்தாருக்கு அலவன்சு உண்டு. இதற்கென்றே பொது மக்களிடமிருந்து அவ்வப்போது பணம் வகுலிக்கப்படுகிறது. 9 ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தோழர்கள் சத்தியமூர்த்தி மூதல் குப்புசாமி வரை உள்ள பல தேசபக்தர்கள் தேசபக்தர்களான பிறகே தியாகமூர்த்திகள் ஆன பிறகே பதினாயிரக்கணக்காக ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள். இவை தவிர வேறு என்ன தியாகம் செய்தார்கள் என்று நீங்களாவது சொல்லுங்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார்கள் பிரசாரம் இல்லாததாலேயே காங்கிரசுக்காரர்கள் மக்களை இவ்வளவு ஏய்க்க முடிந்தது
தாழ்த்தப்பட்டவருக்கு உமிமை மறுப்பது தேசீயமா?
இன்றும் நாம் காங்கிரஸ் எவ்வளவு தீவிர கொள்கை கொண்டாலும் நாமும் பின்பற்றத் தயாராய் இருக்கிறோம். ஆனால் நமக்கு சுயராஜ்யம் முழு சுயராஜ்யம் என்பது கிடைத்த பிறகு நமக்கும் சண்டையில்லாமல் இருக்க வேண்டாமா? நம்மில் பிற்பட்டு தாழ்த்தப்பட்டு அரசியலிலும், சமூக இயலிலும் பிறவி காரணத்தாலேயே ஒதுக்கப்பட்டு கிடக்கும்
வகுப்புகளுக்கு ஒரு நல்ல வார்த்தை சொல்ல வேண்டாமா? அவர்களுக்கு சரிபங்கு கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டாமா? என்று நான் கேட்கிறேன். அப்படிப் பங்கு கொடுப்பதாக வாயால் சொல்லுவதே தோத் துரோகமாகவும் தேசீயத்துக்கு மாறானதாகவும் ஆகிவிட்டால் பிறகு பங்கு கொடுப்பது மிகவும் பெரிய தேசத்துரோகமாகவல்லவா ஆகிவிடும்? ஆகவே மதத்தால் ஜாதியால் பிரிந்தது மாத்திரம் அல்லாமல் தாழ்த்தப்பட்டு கிடக்கும் மக்கள் மலிந்து இருக்கும் இந்த நாட்டில் அவர்களுக்கு பங்கு கொடுப்பது நாட்டுக்குக் கேடு என்று சொன்னால் அப்படிப்பட்ட தே£பத்தை வளவிட முடியுமா என்று யோகித்துப் பாருங்கள் ஆகவே ஜஸ்டிஸ் ககஷியானது வாயில்லாத பூச்சிகளான பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்டு கிடக்கும் மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அரசாங்கத்தினிடமும் மேல் ஜாதியாரிடமும் வாதாடி பங்கு வாங்கிக் கொடுத்து முன்னணிக்கு கொண்டு வருவதற்கு ஆகவே இருக்கிறது. அந்தக் காரியத்தை இந்த 15 வருஷமாக அனேக தொல்லைகளுக்கிடையில் செய்து வந்திருக்கிறது ஆகையால் நீங்கள் எந்த விஷயங்களையும் யார் சொல்வதையும்
தீர யோசித்து உங்கள் ஓட்டுகளை அளியுங்கள். ஏமாந்து போகாதீர்கள் உங்களுக்கு சுயபுத்தி இருக்கிறது என்று கருதித்தான் ஜஸ்டிஸ் கக்ஷியார் உங்களுக்கு ஓட்டுகள் அளிக்க சிபார்சு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை மோசம் செய்து விடாதீர்கள்.
குறிப்பு: 10.01.1937 திருவாளர் கமலாலய தெப்பக்குளத்துக் கரையிலும், 11.01.1937 திருவாரூர் கருணாநிதி திரையரங்கிலும், 11.01.1937
திருத்துறைப்பூண்டியிலும் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 17.01.1937
குடி அரசு- 1937 (1) 100
தேர்தல் தொல்லை
ஜஸ்டிஸ் இயக்கம் ஏற்பட்டு சுமார் 20 வருஷம் ஆகின்றது அக்கட்சிப்பிரமுகர்கள் பதினாறு வருஷகாலமாய் அதிகாரத்தில் இருந்து வருகிறார்கள். அதன் பயனாக அக்கட்சியின் முக்கிய கொள்கைகளான. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதிலும் அனுபவ சாத்தியமான கிளர்ச்சியால் தகுதியுள்ள அளவுக்கு அரசியல் முன்னேற்றம் பெறுவது என்பதிலும் சிறிதும் பிற்போக்கில்லாமல் கூடுமானவரை பலன் ஏற்பட்டிருக்கிறது என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை. பதினாறு வருஷகாலம் அதிகாரத்தில் இருந்து வருகிற இயக்கம் எதுவானாலும் பாமரஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்தான்.
அதுவும் மக்களின் நித்திய வாழ்க்கைத் திட்டங்களில் கலந்துள்ள அதிகாரத்துவம் எப்படிப்பட்டதானாலும் எவ்வளவு நன்மை பயப்பதானாலும் பாமரமக்களின் மகிழ்ச்சிக்குப் பாத்திரமாவது என்பது மிக மிக கஷ்டமான காரியமேயாகும். அதுவும் முக்கியமாக நம் நாட்டில் அது முடியாத காரியம் என்றே தான் சொல்லித் தீரவேண்டும். ஏனெனில் பொது மக்களில் 100க்கு 90பேர் கல்வி அறிவில்லாதவர்கள். மற்றும் பல மதம், பல ஜாதி, பல உள் வகுப்பு என்று சின்னா பின்னமாய்ச் சிதைந்து கிடப்பவர்கள். மேலும் வெகுகாலமாகவே தாழ்த்தப்பட்டு அடிமைப்பட்டு கிடந்ததோடு அதிகாரத்தின் பொறுப்பையும் நன்மையையும் அறியாதவர்கள் ஆவார்கள். ஆதலால் தான் இப்படிப்பட்ட மக்களை எவ்விதமான பொது நன்மை பயக்கும் நல்ல ஆட்சியும் திருப்தி அடையச் செய்வதென்றால் அது சிறிதும் முடியாத காரியமென்கின்றோம்.
சாதாரணமான நிலைமையிலே அதிகாரத்தில் இருப்பவர்களே மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பது கஷ்டம் என்றால் பொது ஜனங்களிடம் கூடிப் பழக முடியாதவர்களும் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாதவர்களும், பல காரணத்தால் தங்கள் சொந்த காரியத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டியவர்களும், சொந்தக் காரியங்களுக்காக பொதுஜன சேவைக்கு என்று அடைந்த பதவிகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்தித் தீரவேண்டிய அவசியமுள்ளவர்களும் தலைவர்களாகவோ, அதிகாரஸ்தர்களாகவோ இருக்க நேர்ந்து விட்டால் பிறகு அவ்வதிகார வாழ்க்கையின் ஆயுளை நாம் நிர்ணயிக்கவே தேவை இருக்காதென்றே 1... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சொல்லுவோம். ஏன் இப்படி சொல்லுகிறோம் என்றால் மேல்காட்டிய குணங்கள் இல்லாத தலைவர்கள் கிடைப்பது என்பது எந்த இயக்கத்துக்கும் சுல்பமான காரியமல்ல.
இந்த லட்சணத்தில் தலைமைத் தலைவர் போட்டிக்கு ஒருவரையொருவர் காலை வாரிவிடக் கருதி விட்டால் என்ன ஏற்படும் என்பதை ஒருவர் சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றோம். கிட்டத்தட்ட
10 வருஷகாலமாகவே ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் அதிகாரத்தில் இருந்த தலைவர்களின் நிலைமை இப்படியே இருந்து வந்திருக்கிறது என்பது பொதுமக்களில் பலர் அறியாததல்ல.
மேல் குறிப்பிட்ட காரியங்கள் எந்தக் கட்சிக்கும் இயற்கை என்றாலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு தானாகவே இயற்கையாக மாத்திரம் அல்லாமல் செயற்கையாகவும் ஏற்பட்ட அசெளகரியங்களாகும் என்பது ஒரு புறமிருக்க,
இனி எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகளையும் அவற்றை லட்சியம் செய்யாமலும் அவற்றிற்கு பரிகாரம் தேடாமலும் இருந்து வந்தால் ஏற்பட்ட அசெளகரியங்களையும் பார்த்தால் அக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) இன்று எவ்வளவு நெருக்கடியான நிலைமையில் இருக்கவேண்டும் என்பது யோசிக்காமலே விளங்கும்
நம் நாட்டில் அதாவது தமிழ் நாட்டில் மேல் ஜாதிக்காரர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் சமூகமானது மதத்தின் காரணமாகவும் சமுதாயத்தின் காரணமாகவும் அரசியல் காரணமாகவும் மிகவும் பலமும் கட்டுப்பாடும் பெற்றுள்ள சமூகமாகும். அச்சமூகத்தின் ஆதிக்கத்திலும் அடக்குமுறையிலும் இருந்து விலகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதாகும். அவ்விடுதலையானது சமூகத் துறையிலும் மதத் துறையிலும் அரசியல். துறையிலும் பெற வேண்டியிருப்பதால் மூன் குறிப்பிட்டது போல். இம்மூன்று துறைகளும் பன்னெடுங்காலமாகப் பார்ப்பனரின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்து வந்திருப்பதால் அதன் காரணமாகவே தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பார்ப்பனருக்கு அடிமைப்பட்டிருந்து வருவதால் ஜஸ்டிஸ் கட்சியின் நிலை மிகவும் எதிர் நீச்சமாகவும் தலை கீழ் ஏற்றமானதாகவும் இருந்து வருகிறது கொண்டு மேலும் மிக்க அசெளகரியமானதென்றே சொல்லலாம்.
இந்த நிலையில் பார்ப்பனர்களுடைய சர்வ வல்லமை உள்ள எதிர்ப்பிலும் தொல்லையிலும் அவர்கள் (பார்ப்பனர்கள்) காங்கிரஸ் என்னும் ஸ்தாபனத்தை ஏற்படுத்திக்கொண்டு அதை தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்துக்கொண்டு செய்த சூழ்ச்சிகளிலும் சளைக்காமல் இந்த 16 வருஷகாலமாய் ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்தில் இருந்து வந்தது ஆச்சரியமான காரணம் என்று சொல்லலாமானாலும் அதிகாரத்தில் இருந்த தலைவர்களும் இக் கட்சியினால் பட்டம், பதவி பயன் பெற்று
குடி அரசு- 1937 (1) 102.
வந்த தலைவர்களும் ஒழுங்காய் நடந்து வராத காரணத்தால் சமீபத்தில் நடக்கப்போகும் தேர்தல் அதிகமான கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாய் இருக்கிறது என்பதை மறைக்காமல் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்
இதற்கு ஆக யாரும் பயந்து விட வேண்டியதில்லை என்பதையும் கஷ்டம் எவ்வளவு இருந்த போதிலும் முடிவில் வெற்றி நமதே என்பதையும் நாம் உற்சாகத்துடனும் உறுதியுடனும் கூறுகிறோம் இன்றைய தேர்தல் என்பது விளையாட்டுக் காரியமல்ல. பொது தொகுதிகள் என்பவைச் சராசரி ஒவ்வொன்றும் 50ஆயிரம் ஓட்டர்களைக் கொண்டது என்று சொல்லலாம். இந்த ஓட்டர்களில் பெரும்பாலோருக்கு ஜஸ்டிஸ் கட்சி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வசதி இல்லை என்பதோடு தலைவர்கள் நடந்து கொண்ட அலட்சிய புத்தியால் கட்சியால் ஏற்பட்ட நன்மைகளை அறியாதவர்களாகவும் எதிரிகளின் விஷமப் பிரசாரத்தால் ஜஸ்டிஸ் கட்சியை சேர்ந்த மக்கள் தீமைபுரிந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.
இந்த பதினாறு வருஷ காலத்துக்கு கட்சிப் பத்திரிகைக்காக என்று மாதம் 4000 முதல் 5000 செலவாகி இருந்தபோதிலும் அப்பத்திரிகைகள் பாமர மக்களை உத்தேசித்து நடத்தப்படாமல் இருந்துவிட்ட காரணத்தாலும் 3, 4 வருஷகாலமாக சுதேச பாஷைப் பத்திரிகை இல்லாத காரணத்தாலும் பாமர மக்கள் உள்ளத்தில் எதிரிகளால் விஷம் பாய்ச்சப்பட்டதை பரிகரிக்க எவ்வித முயற்சியும் செய்யாமலே போய்விட்டது என்று சொல்வதில் கட்சித் தலைவர்கள் வருத்தப்படக்கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதோடு கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் மீதே பல தலைவர்களுக்கு அதிக கண் இருந்து அவர்களை (தொண்டர்களை) செல்வாக்கற்றவர்களாக ஆக்கும் வேலை
சில தலைவர்களுக்கும் மூக்கிய காரியமாய் அமைந்து விட்டதால் தொண்டர்கள் முயற்சியும் தக்க பலனளிக்க முடியாததாய் விட்டது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. சுயநலம் கோராமல் கட்சிக்கு என்று ஒத்துழைத்த பிரமுகர்கள் பலர் நடுநிலைமையும், நேர்மையும் கொண்டிருந்த காரணத்தாலேயே அவர்கள் மீது சந்தேகப்பட்டு அவர்களுக்கு போதிய ஆதரவளித்து வராத காரணத்தால் அப்படிப்பட்டவர்களது உற்சாகமும் குறைந்து கொண்டே வந்துவிட்டதுடன் புதிய மந்திரிசபை அமைப்பதில் “தனக்கு மந்திரி பதவி கிடைக்க வழியுண்டா என்று
சிலர் பார்க்கிறதைவிட கட்சி மெஜாரிட்டியாய் வரவேண்டும் என்கிற கவலை அதிகமாக இல்லாததால் கூட்டுப் பொறுப்பும் குறைந்து வருகிறது.
எதிரிகளாயிருப்பவர்கள் பொதுமக்களிடம் ஏராளமாகப் பணம் பறிக்கவும் ஒழுக்கமும் நேர்மையும் இல்லாத ஆட்களையும், ஜஸ்டிஸ்
கட்சியில் தங்களின் சுயநலம் வெற்றிபெறவில்லை என்று கருதி அக்கட்சியின் மீது நிஷ்டூரப்பட்ட ஆட்களையும் யோக்கியம்,
103 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அயோக்கியம், தராதரம் என்பவைகளைச் சிறிதும் கவனியாமல் சேர்த்துக் கொண்டு பணத்தை கண்மூடி இறைத்து பத்திரிகைகளையும் சரிகட்டிக் கொண்டு சரமாரியாய் பொய்யும் புளுகும் கலந்து பிரசாரம் செய்து வந்திருக்கிறதினாலும் ஜஸ்டிஸ் கட்சிக்குப் பாமர மக்களின் நல்லபிப்பிராயத்தைப் பெறுவது என்பது விளையாட்டான காரியமாக இருக்க முடியாது என்றுதான் சொல்லவேண்டும்.
இவ்வளவு கஷ்டம் இருந்த போதிலும் வெற்றி நம்முடையதுதான் என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை. எப்படிப்பட்ட கஷ்டமான நிலைமையிலும் எவ்வளவு அசெளகரியத்திலும் எவ்வளவு எதிர்ப்புத் தொல்லையிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம் என்பதை எடுத்துக்காட்டவே இவைகளைக் குறிப்பிடுகிறோமே ஒழிய வேறில்லை.
தேர்தலில் பணச்செலவு இருக்கிறது என்பதையும் அதற்கு ஆகப் பயந்துவிடக்கூடாது என்பதையும் முதலிலேயே ஞாபகப்படுத்துகிறோம் அந்த பணச்செலவும் பணக்காரர் என்பவர்கள் நின்றால் அதிகச் செலவும் சாதாரண மக்கள் என்பவர்கள் நின்றால் குறைந்த செலவும் என்கின்ற முறையில் எதிர் பார்க்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஜில்லாபோர்ட்மெம்பர் தேர்தல்களுக்கே ஒவ்வொன்றுக்கு 25ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய்கள் செலவாகி இருக்கின்றன. இந்த சட்டசபை
தேர்தல்களும் இந்த செலவிற்கு இளைத்தல்ல என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு செலவழித்தும் தேர்தல் நடந்த பிறகு வெற்றி தோல்விதான் பிரதானமாகி விடுகின்றனவே ஒழிய செய்யப்போகும் காரியம், கொள்கை என்பவைகள் பெரிதும் எல்லாக் கட்சிக்குமே மறக்கப்பட்டு விடுகின்றன. மற்றும் சில தேர்தல் போட்டிகள் இன்று சமூக துவேஷங்களையும் தனிப்பட்ட பொறாமை குரோதம் ஆகியவைகளையுமே அடிப்படையாகக்கொண்டுநடைபெற வேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுகின்றன. எவ்வளவோ கஷ்டப்பட்டு தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து வெற்றி பெற்ற பிறகு ஏதோ இரண்டொருவருக்கு மந்திரிவேலையும் ஏதோ இரண்டொருவருக்கு உத்தியோக சிபார்சு வெற்றியும் அல்லாமல் மற்றபடி சுதந்திரமோ, சொந்தப் புத்தியோ இல்லாமல் தலைவர்கள் என்பவர்களுக்கு கைதூக்க வேண்டியதைத் தவிர வேறுகட்சித் தொல்லைகளின் பயனாய் நல்ல பலன்கள் உண்டாக்க முடிவதில்லை என்பதும் அனுபவத்தில் கண்ட காரியமேயாகும்.
பொது ஜனங்களிடம் இருந்து வசூலித்த பணத்தை காங்கிரசு அபேட்சகர்கள் என்பவர்களுக்காக செலவழிக்கப்படுவதாலும் கட்சித் தலைவர்கள் என்பவர்களின் சொந்தப்பணம் கட்சி அபேட்சகர்கள் என்பவர்கள் பலருக்கு செலவு செய்யப்போவதாய் தெரியவருவதாலும் சொந்தப்பணம் செலவு செய்து வெற்றி பெறுகின்ற மற்றவர்களுக்கு இரு கட்சியிலும் மதிப்பிருக்குமா என்பது சந்தேகம்தான். ஆதலால்.
குடி அரசு- 1937 (1) 104
ஒரு பொது கெளரவத்துக்கு ஆசைப்படுகின்றவர்களுக்கும் தனிப்பட்ட சுயநலத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும்தான் சட்டசபை வெற்றி பெரிதும் பயன்படுமே ஒழிய கொள்கைகளுக்கு அதிகம் பயன்படுமா என்பது நமக்கு மயக்கமாகவே இருந்து வருகிறது
ஏனெனில் கொள்கை இல்லாததும் சுயநல வகுப்பு அதிக்கத்துக்குப் பாடுபடுவதுமான காங்கிரசானது தேர்தலுக்கு கொள்கை தேவை இல்லை
என்றும் அபேட்சகர்களின் தகுதி கவனிக்கப்பட வேண்டியதில்லை என்றும் பிரசாரம் செய்வதைப் பொது மக்கள் அனுமதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடக்கூடும் என்பதை இதிலிருந்தே அறியலாம்
அது போலவே ஜஸ்டிஸ் கட்சியும் தனிப்பட்ட தலைவர்கள் தங்கள் தங்கள் பலத்துக்கு என்று ஆட்கள் சேர்க்க ஆரம்பித்தால் அதனால்தான் என்ன காரியம் பலத்தோடு செய்ய முடியும் என்பதும் ஒரு யோசிக்கத்தக்க விஷயமாகும்
இத்தேர்தல்களுக்கு பெருவாரியாகப் பணம் செலவழிக்கப்படுவதானது நமக்கு இஷ்டமில்லாத காரியம் என்பதோடு பணத்தால் பெறும் வெற்றி பணத்தின் பிரதிநிதித்துவமாகத்தான் விளங்குமே ஒழிய மக்கள் பிரதிநிதித்துவமாக விளங்காது. அது போலவே காலித்தனத்தாலும், பொய் பித்தலாட்டம் ஆகியவைகளால் பெறும் வெற்றி காலித்தனத்துக்கும் பொய் பித்தலாட்டத்துக்கும் பிரதிநிதித்துவமாய் விளங்குமே தவிர மக்களுக்கும் பிரதிநிதித்துவமாய் விளங்காது. ஆகையால் பணச்செலவில்லாமலும் பொய் பித்தலாட்டம் பிரசாரமில்லாமலும் தேர்தல்கள் நடைபெற வேண்டுமென்பது
நமது ஆசை பணச்செலவும் காலித்தனமும் பொய் பித்தலாட்ட பிரசாரமும் இல்லாமல் எலக்ஷன் காரியங்களும் வெற்றி தோல்விகளும் நடக்குமா?
நடக்கும் காலம் வருமா என்பது இன்றைய எலக்ஷன் வெற்றி தோல்வியைவிட நமக்கு அதிக கவலையைக் கொடுக்கக்கூடியதாய் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இந்தச் சமயம் தங்களுக்குள்ள சகல அபிப்பிராய பேதங்களையும் சுயநலங்களையும் சொந்த விருப்பு வெறுப்புகளையும் மறந்து வஞ்சகமில்லாமல் உண்மையோடு உழைக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.01.1937
105 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஐயோ, பட்டாபிஷேகம் நின்று விடுமே!
பொம்மனுக்கும் - திம்மனுக்கும் சம்பபஷணை
- சித்திரபுத்திரன்
பொம்மன்:- ஐயோ! பட்டாபிஷேகம் நின்று விடுமே! இனி நமக்கு ராஜாவே இல்லாமல் போய் விடுமே! நாம் என்ன செய்கிறது?
திம்மன்:- ஏன் - ஏன் அப்படி அழுகிறாய்? அழாதே
பொ:- இல்லே-ஏ காங்கிரசில் பட்டாபிஷேகத்தை பகிஷ்கரிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்களே ராஜகுடும்பத்தார் இதை லட்சியம் செய்யாவிட்டாலும் பார்லிமெண்டார் இதை லட்சியம் செய்து பட்டாபிஷேகத்தை நிறுத்தி விடுவார்களே! பிறகு நமக்கு ராஜா வேண்டாமா? அதுதான் அழுகை ஆனந்தக்கண்ணீராய் வடிகிறது
தி- அட போடா மடையா! யாரோ பட்டாபிஷேகத்தை
பஹிஷ்கரித்தால் யாரோ நிறுத்திவிடுவார்களா? உனக்கு புத்தியில்லையா? இதற்காக அழுகிறாயே.
பொ:- யாரோவா? ஜவஹர்லால் என்ன, சத்தியமூர்த்தி என்ன? கமலாதேவி என்ன இப்படிப்பட்ட தேசாபிமான ரத்தினங்கள் தீர்மானித்திருக்கிறார்கள்! அதுவும் 1000000000 இன்னம் எத்தனையோ சைபர் கொண்ட ஜனங்கள் கைதூக்கி இருக்கிறார்கள்! அப்படி இருக்க பட்டாபிஷேகம் எப்படி நடக்கும்?
பொ:- நமக்கு ஆகத் தீர்மானித்திருக்கிறார்களே ஒழிய பிரிட்டிஷாருக்கு ஆக தீர்மானிக்கவில்லை. அதற்கு உதாரணமாக அரசாங்கத்தாரால் கூப்பிடப்படாதவர்கள் போகப் போவதும் இல்லை. போவதானாலும் உள்ளே விடப்படப் போவதும் இல்லை. இது விஷயத்தில் ஏன் இவ்வளவு துக்கம்?
திட தேச ஜனங்கள் பஹிஷ்கரித்து விட்டால் பெரிய அவமானமல்லவா.
சர்க்காருக்கு?
குடி அரசு- 1937 (1) 106
பொ:- என்ன அவமானம்? பட்டாபிஷேகம் நடப்பதற்கு முன்பாகவும் சீர்திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவும் இந்தியமக்களின் சரியான பிரதிநிதிகளான சட்ட சபை அங்கத்தினர்களை இந்தியாவில் ஆங்காங்குள்ள அரசாங்க மாளிகைகளுக்கு கூப்பிட்டு அரசப் பிரதிநிதிகளின் ஆட்களின் முன்னிலையில் அரசர் பட்டாபிஷேகத்தையும் அரசரையும் அரசர் உத்திரவாகிய சட்டங்களையும் பகிஸ்கரிக்கிறீர்களா?
பக்தி செலுத்துகிறீர்களா? சத்தியமாய்ச் சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அப்பொழுது நமது பிரதிநிதிகள் தலைவர்கள் உள்பட அங்குள்ளவர்கள் முடி சூட்டிக்கொள்ளும் அரசரிடம் பக்தியாய் இருக்கிறோம், அரசர் அனுமதிக்கிற சட்டங்களிடம் பக்தியாய் கட்டுப்பட்டு நடக்கிறோம், அரசரின் பின் சந்ததியார்களிடமும் பக்தியாய் இருக்கிறோம், சத்தியமாய்
- பிரமாணமாய் - எங்கள் இஷ்ட தேவதை சாட்சியாய் பக்தியாய் இருக்கிறோம் என்று சொல்லுவார்கள். அதற்கப்புறம் தான் பட்டாபிஷேகம் நடக்கும். நீ ஏன் வீணாய் அழுகிறாய்? துக்கப்படாதே! நமக்கு ராஜா உண்டு.
திட பின்னை ஏன் இப்படிச் செய்தார்கள்?
பொ:- எப்படிச் செய்தார்கள்? பட்டாபிஷேகத்தையும் சீர்திருத்த சட்டத்தையும் பகிஸ்கரித்தார்கள்.
திட அதெல்லாம் சும்மா கெப்சு கேசு, உடான் விட்டுப்பார்க்கிறது
பொ:- யாருக்காக இப்படி கப்சு கேசு, உடான் விடுகிறது?
திட உன்னைப்போல் முட்டாள்கள் நம்பி ஓட்டுப் போடுவீர்கள் என்பதற்கு ஆகத்தான். பக்கத்தில் எலக்ஷன் வருகிறதல்லவா? அதற்கு ஆகத்தான். வேறு என்ன?
பொ:- இதற்கு ஆகவா ஒரு காங்கிரசு நடத்துவது? “லட்சம்” பேர்.
கூடுகிறது. எவ்வளவு செலவு? எவ்வளவு தொல்லை? தோழர் சத்தியமூர்த்தி சொசைட்டி அங்கு குளிரில் எவ்வளவு கஷ்டம்?
திட இதுதானா பிரமாத கஷ்டம்? மாமாங்கத்துக்கு போய் இருக்கிறையா? எச்சில், மூத்திரம் கலந்த சேற்றுத் தண்ணீரை எடுத்துப்
பூசிக் கொள்ள எத்தனை கஷ்டம்? எத்தனை ஜோடி கலைந்து போய் விட்டது? எவ்வளவு நஷ்டம்? இவற்றைப் பார்த்தால் காங்கிரசு ஒரு பெரிய கூட்டமா? அதன் லட்சியம் மகா பித்தலாட்டமா?
பொ:- சரி, சரி எனக்குப் புரிந்தது. நான் வெள்ளை ஆசாமி,
கருத்ததெல்லாம் பாலு, வெளுத்ததெல்லாம் இங்கி என்று நம்பிக்கொண்டிருக்கிற சாது. அதனால் ஏமாந்து போய் விசனப்பட்டு விட்டேன். தேங்யூ!
குடி அரசு - உரையாடல் - 17.01.1937
107 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பாஞ்சாலத்தில் € spoivig.ov’’ கட்சி
*₹100க்கு 50 விகிதமாவது உத்தியோகம் அளிக்க வேண்டும்
“உருது அரசியல் பாஷையாக இருக்க வேண்டும்?
பஞ்சாப் யூனியனிஸ்ட் கக்ஷிக்குத் தலைவரான முஸ்லீம் சமூகத் தலைவர் சர். சிக்கந்தர் அயாத்கான் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது
“நாங்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிப்போம், அதிகாரத்துக்கு வந்தால் அந்தப்படியே நடப்போம், குறைந்தபக்ஷம் 100க்கு 50 வீதமாவது உத்தியோகங்கள் முஸ்லீம்களுக்கு அளிப்போம். உருது பாஷையை தான் அரசியல் பொது பாஷையாக ஏற்படுத்துவோம்” என்று கூறியிருக்கிறார்.
அதற்கு ஆக அங்குள்ள காங்கிரசுக்காரர் முஸ்லீம் க்ஷி வகுப்பு வாதக் கக்ஷி என்றோ தேசத்துரோக கக்ஷி யென்றோ கூறி முஸ்லீம் கடியை யூனியனிஸ்ட் கக்ஷியை வெட்டிப் புதைக்கவேண்டும் என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அப்படிக் கூறுகிறவர்களின் பல்லைத் தட்டிக் கையில் கொடுத்திருப்பார்கள். ஏன் வகுப்புரிமை கேட்பதையும் ஜனத்தொகைக்குத் தகுந்த உத்தியோகம் அந்தந்த வகுப்புகளுக்கு வழங்குவதையும் அரசியல் திட்டத்தை ஏற்று நடத்துவதையும் உருது பாஷை வேண்டுவதையும்
தேசத் துரோகம் என்று சொன்னால் அப்படி சொல்லுவதை மனித சமூகத் துரோகம் என்று முஸ்லீம்கள் 100க்கு 99 பேர் கருதுகிறார்கள். தென்னாட்டுப் பார்ப்பனரல்லாதாருக்குள் இருப்பது போல் அவர்களுக்குள் கூலிகளும் சமூகத் துரோகிகளும் மிக மிகக் கொஞ்சம். ஆனால் இங்கு அப்படி இல்லை. இங்கு உண்மையாகவே பார்ப்பனரல்லாத இந்துக்கள் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள் என்று பார்ப்பனர்கள் சொல்லுவதையும் எழுதி வைத்திருப்பதையும் உண்மை என்று நம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆதலாலேயே அவர்களுக்கும் ஆள் கூட்டம் சேருகிறது. வகுப்புரிமை கேட்பதை தேசத் துரோகம் என்று பார்ப்பனர்கள் சொல்லுவதற்கு பார்ப்பனரல்லாதார்கள்
பலர் ஆமாம் சாமி போடுகிறார்கள்.
குடி அரசு- 1937 (1) 108
ஆதலால்தான் நாம் பல சமயங்களில் இஸ்லாம் சமயம் சமூக விஷயத்தில் மற்ற சமயத்தை விட சுயமரியாதை உள்ளது என்று சொல்லுகிறோம். எப்படி இருந்தாலும் கூடிய சீக்கிரம் இந்தியா பூராவும் “ஜஸ்டிஸ்” கக்ஷி தாண்டவமாடப் போகிறது என்பது மாத்திரம் உறுதி
குடி அரசு - கட்டுரை - 17.01.1937
1099 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பார்ப்பனர்களின் விளம்பர முறை
தோழர் ஜவஹர்லால் காரில் போகும்போது ஒரு மாட்டு வண்டி குறுக்கே நின்றதாம். அதை அந்த வண்டிக்காரனால் விலக்க முடியவில்லையாம். தோழர் ஜவஹர்லால் கீழே இறங்கி வண்டியை மூங்கிலைப் பிடித்து ஒரு ஓரமாய் தள்ளி விட்டுவிட்டு தன் வண்டியை ஓட்டிக்கொண்டு போனாராம். மாட்டு வண்டிக்காரன் “நான் அதிர்ஷ்டசாலி” என்றானாம். இது அசோசியேட் பிரசில் வெளியாகி பார்ப்பனப் பத்திரிகைகளில் பெரிய
எழுத்தில் போடப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு பெரிய பரோபகார காரியம்? எவ்வளவு பெரிய மனிதன் ஐவஹர்லாலைப் புகழ்ந்து விட்டான் பாருங்கள். ஆகவே ஒரு ஆசாமியை பார்ப்பனர்கள் பெரிய ஆள் ஆக்க வேண்டுமானால் எவ்வளவு மானமற்ற முறையில் விளம்பரம் செய்து பாமர மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை குறிப்பிடவே இதை எழுதுகிறோம். இது போலவே “காந்தியார் பூனைக் குட்டியுடன் விளையாடினார்!”
“ஒரு பழுத்த கிழவி ஜவஹர்லாலை கும்பிட்டாள்!!!” “ஒரு பெண் பட்டேலுக்கு ஆலாத்தி எடுத்தாள்!!!”
என்பது போன்ற அற்ப பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி பிறகு அவர் அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார் அந்தப்படி கேளுங்கள் என்று சொல்லித் தாங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளுகிறார்கள்.
இம்மாதிரி காரியம் செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால்
அதில் அதிசயம் ஒன்றும் இருக்க நியாயமில்லை.
மக்களுக்கு உண்மையாய் நன்மை செய்ய விரும்புபவர்கள் இந்த மாதிரி பித்தலாட்ட மார்க்கத்தில் வெற்றியைக் கண்டு பயப்படாமல் உறுதியுடன் இருந்து இவற்றை வெளிப்படுத்துவதன் மூலம்தான் தங்கள்.
காரியத்தில் சித்தி பெறவேண்டுமே ஒழிய அற்ப காரியத்தில் பிரவேசிக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 17.01.1937
குடி அரசு- 1937 (1) 110 111
காங்கிரசுக்கு ஏன் ஓட்டு செய்யக்கூடாது?
அதற்கு கொள்கை இல்லை
அது ஒரு சமூகம் தவிர மற்ற சமூக முன்னேற்றத்தைத் தடுக்கவே வேலை செய்கிறது
வருணாச்சிரமம் சம்மந்தப்பட்ட பழைய முறைகளை புதுப்பிக்கவே வேலை செய்கிறது
அதனிடத்தில் ஒரு காலத்திலாவது நாணயம் இருந்ததில்லை.
அதில் சமய சஞ்சீவிகளும், காலிகளும், வருணாச்சிரமிகளுமே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
அதன் தலைவர்கள் சொல்லுகின்ற காரியங்கள் எதுவும் அனுபவ சாத்தியமானதல்ல.
அதனால் இதுவரை ஒரு பலனும் ஏற்பட்டதில்லை.
அது ராஜபக்தி - சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லுகிறது
ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள் தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்படப் போகிறீர்கள்.
குடி அரசு - வேண்டுகோள் - 17.01.1937
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24.
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏன் ஓட்டு செய்ய வேண்டும்?
1. அது சமூக முன்னேற்றத்தையும் மக்கள் சமத்துவத்தையும் கொள்கையாய் கொண்டு பாடுபடுகிறது
2. வருணாச்சிரம முறையை மாற்றி மக்களை சுயமரியாதையுடன் வாழ வேலை செய்து கொண்டு வருகிறது.
3. ஆரம்பகாலம் முதல் இதுவரை நாணயமாகவும் குறிப்பிட்ட கொள்கையில்
ஏமாறாமலும் வேலைசெய்து வந்திருக்கிறது.
தீண்டாமையை படிப்படியாய் ஒழித்துக் கொண்டுவருகிறது
~ o உ
சகல மக்களுக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி இருக்கிறது.
ஜனங்களை அது ஒரு நாளும் ஏமாற்றவில்லை
பொட்டுக்கட்டுவதை ஒழித்தது, கோவில் தாசி முறையை ஒழித்தது, விபசாரத்தை ஒழித்தது, கல்வியை அதிகரித்தது, கட்டாயக் கல்வி ஏற்படுத்திற்று ஆஸ்பத்திரிகளை அதிகப்படுத்தியது, தமிழ் வைத்தியத்தை பிரபலமாக்கியது, சுங்கத்தை எடுத்தது, குடியானவர்களுக்கு இனாம்
பூமி சட்டம் ஏற்படுத்திற்று, 10066 12% வரி குறைத்தது, மலையாள குடிவார மசோதா செய்தது, விவசாயிகளுக்கு கடன் உதவச் செய்தது, அதிக தூரம் ரோட்டுகள் ஏற்படுத்திற்று, பாலங்கள் ஏராளமாய்
கட்டிற்று, புதிய வரிகளைத் தடுத்து வந்திருக்கிறது, சம்பளங்களை குறைத்துக் கொண்டது
8. அது ராஜபக்தி - சர்க்கார் பக்தி பிரமாணம் செய்து ராஜாவை சர்க்காரை கவிழ்த்து விடுகிறேன் என்று பொய் சொல்லவில்லை.
9. ஓட்டு செய்துவிட்டு பின்னால் முட்டாள்தனமாக ஏமாந்து போனோமே என்று விசனப்பட மாட்டீர்கள்.
குடி அரசு - வேண்டுகோள் - 17.01.1937
குடி அரசு- 1937 (1) 112
காங்கிரஸ் மிரட்டலுக்கு
சர்க்கார் பதில்
காங்கிரசானது இதுவரை நாட்டில் பொய்ப் பிரசாரத்தாலும் காலித்தனத்தாலும் உயிர் வாழ்ந்து வந்தது என்பது அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். இப்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால் காங்கிரசின் காலித்தனத்தைப்பற்றி பொது ஜனங்களும் எதிர் அபேட்சகர் களும் அதிகமாகக் கூப்பாடு போட்டு அரசாங்கத்தாருக்கு தகவல் கொடுக்க ஆரம்பித்தார்கள். சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்று அறிக்கைகள் அனுப்பி பொதுக் கூட்டங்களில் காலித்தனம் நடக்காமல் பார்த்துக்கொள்ளும்படியும் தெரிவித்திருக்கிறார்கள். இதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் போலீசுக்காரரை மிரட்டி பலவிதமாகப் பயமுறுத்திப் பேசினார்கள்.
அதாவது, தேர்தலில் தாங்களே ஜெயிக்கப்போகிறார்கள் என்றும், போலீஸ் அதிகாரம் தங்கள் கைக்கு வரும் என்றும், அப்போது போலீசுக்காரர்கள் விஷயத்தில் கடினமான முறைகள் கையாளப்படும் என்றும், பல போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள் என்றும் பலவாறாகப் பேசினார்கள். சூசனை காட்டினார்கள். இதனால் உண்மையிலேயே சில போலீஸ்காரர்கள் பயந்து கொண்டேதோடு சில போலீசார் காங்கிரசுக்கு அனுகூலமாய் இருந்து காலித்தனத்துக்கு உதவி செய்தும் வந்ததானது அரசாங்க தகவலுக்கு எட்டியபின் அரசாங்கத்தார். 12-1-37ல் போலீசாருக்கு என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
அவ்வறிக்கையில் (சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் விஷயத்தில்)
“1935-ம் வருஷத்திய இந்திய சர்க்கார் சட்டத்தின் 240-270வது பிரிவின்படி சர்க்கார் சிப்பந்திகளின் உரிமைகள் எவ்விதமும் பாதிக்கப்படமாட்டாது. கடமைகளை உண்மையுடன் செய்து வருபவர்களை நீக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
தாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் போலீஸ் படையைச் சேர்ந்த சிலரை வேலையில் இருந்து நீக்கிவிடப் போவதாய் சில அரசியல் வாதிகள். பயம் காட்டுவதைக் கண்டு எந்த அதிகாரியும் பயப்படவேண்டியதில்லை W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நாணயமாகவும் விஸ்வாசமாகவும் நடந்துகொள்ளும் எந்த சிப்பந்தியையும் யாராலும் அசைத்துவிட முடியாது என்று சர்க்கார். தங்கள் சிப்பந்திகளுக்கு உறுதி கூறுகிறார்கள்.” என்று கண்டிருக்கிறது
இதனால் நமக்கு ஒன்றும் லாபமில்லை. ஆனால் இது தோழர்கள். பட்டேல், சத்தியமூர்த்தி ஆகியவர்களின் வாய்க்கொழுப்பு சீலையில் வடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். போலீசார் பெரிதும் பார்ப்பனர்களாய் இருந்தபடியால் சத்தியமூர்த்தியார் கோபத்திற்கு பெரும்பான்மையான போலீசார்கள் ஆளாகவில்லை. பார்ப்பனரல்லாத போலீசுக்காரர்கள் சிலர் சத்தியமூர்த்தியார் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அவர்களை மிரட்டவே தோழர் சத்தியமூர்த்தியார் தான் அதிகாரத்துக்கு வந்தவுடன் அப்படிச் செய்வேன் இப்படிச் செய்வேன் என்று அளந்து இருக்கிறார். தோழர் பட்டேலைக் கொண்டும் இம்மாதிரி கூறச் செய்து மிரட்டி இருக்கிறார். அதன் பயன் சர்க்கார் இவ்வித அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று. இதனாலேயே போலீசுக்காரர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளுகிறார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. பொதுக் கூட்டங்கள். விஷயத்தில், 100க்கு 75 போலீசார் கவலை ஈனமாகவே இருக்கிறார்கள்.
கூட்டங்கள் நடப்பது தெரிந்தும் அதற்கு ஆஜராவதில்லை. பெரிய கூட்டத்திற்கு ஒருவர் இருவர் அதுவும் கான்ஸ்டேபிள்களே வருவது, அதிகாரியாய் இருப்பவர் வந்தாலும் காலித்தனத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பதே ஒழிய ஏன் என்று கேட்பதில்லை. சில கூட்டங்களுக்கு போலீசாரையோ சின்ன அதிகாரியையோ அனுப்பும் போது போய் “பேசாமல் இருந்து பார்த்து என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டுவா” என்றும் “கலாட்டா நடக்குமானால் கூட்டத்தை நிறுத்திவிடு” என்றும் எச்சரிக்கை செய்து அனுப்புவதும், மற்றும் சில சமயங்களில் அதிகாரிகள் ஊரிலேயே இல்லாமல் போய்விடுவது இப்படி பல சூழ்ச்சிகள் வேண்டுமென்றே நடைபெறுகின்றன என்று சொல்லலாம் பொதுக் கூட்ட விஷயங்களில் கலகாஸ்பதமாகும்படி எவரையும் குறைவாய் திட்டாமலும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லவும் தங்கள்.
கட்சிக் கொள்கையை எடுத்து விளக்கவும் அரசியல் பிரசாரத்தில் இடமில்லையானால் சீர்திருத்தங்கள் எப்படி பயன்படும் என்று கேட்பதோடு உண்மையான - யோக்கியமான நாணையமான பிரதிநிதிகள் எப்படி வரமுடியும் என்றும் கேட்கின்றோம்.
இன்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மிதவாதக் கட்சித்
தலைவர்களும் மற்றும் பலரும் காங்கிரஸ் காலிகளின் காலித்தனத்துக்குப்
பயந்து கொண்டே வெளியில் பிரசாரத்துக்கு வரப் பயப்படுகிறார்கள்
என்பது நமக்கு நன்றாய்த் தெரியும்
குடி அரசு- 1937 (1) 114
மந்திரி கனம் குமாரசாமி ரெட்டியார் அவர்கள் மதுரையிலும் ராஜபாளையத்திலும் திருச்சியிலும் பேசும்போது கூச்சல் போட்டு கலகம் செய்ததும், மந்திரி கனம் பி.டி. ராஜன் அவர்கள் ஆஜராய் இருந்த சேலம் கூட்டத்திலேயே காங்கிரஸ் காலிகள் குழப்பம் செய்ததும், திருச்செங்கோட்டில் முதல் மந்திரி கனம் பொப்பிலி ராஜா அவர்கள் ஆஜராய் இருந்த கூட்டத்திலேயே சில காங்கிரஸ் காலிகள் குழப்பம் செய்ததும் ஆகிய காரியங்கள் அரசாங்கத்துக்கு தெரிந்ததேயாகும். இதிலிருந்தே போலீஸ் இலாக்கா எவ்வளவு தளர்ந்து இருந்தது என்பதும், காங்கிரஸ் காலிகளுக்கு இடம் கொடுக்கக் கூடியதாய் இருந்தது என்பதும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
போலீசுக்காரருக்கு இவ்வளவு தூரம் அவர்கள் வேலைக்கு உத்திரவாதம் கொடுத்து அறிக்கை விடுவதை விட அவர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால் கண்டிப்பான நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்படும் என்று காலாகாலத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தால். தோழர் சத்தியமூர்த்தி முதலியவர்கள் இவ்விதம் பூச்சாண்டி காட்டும் படியான நிலைமையே ஏற்பட்டிருக்காது என்று சொல்லுவோம். ராசீபுரம், மாயவரம், நாகபட்டணம், லால்குடி, நீடாமங்கலம் முதலாகிய இடங்களில் போலீசார் ஜஸ்டிஸ் க௬ஷியின் சார்பாகப் பணியாற்றிய சில. பிரபலஸ்தர்களையும் தொண்டர்களையும் எவ்வளவு கேவலமாக நடத்தினார்கள், நடத்துகிறார்கள் எவ்வளவு தைரியமாக காங்கிரசை ஆதரித்தார்கள் என்பதை போலீஸ் இலாக்கா மேல் அதிகாரிகள் கவளித்துப் பார்த்தால் விளங்கும்
சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் ஜஸ்டிஸ் க௬ுஷியார்கள் என்றாலே கொடிய பகையாளியைப் பார்ப்பது போல் பார்க்கின்றார்கள்.
பெரியஜில்லா போலீஸ் ஆபீசரும் டிப்டி சூப்ரண்டுமே பார்ப்பனரல்லாத
சப் இன்ஸ்பெக்டர்களை “நீ ஜஸ்டிஸ் ககஷியா” என்று அதட்டுகிறார்களாம். இந்த நெருக்கடியான சமயத்தில் போலீசாருக்கு இப்படி மொட்டையான
சிபார்சு அறிக்கை விடாமல் அவர்களது கடமையை வலியுறுத்தி பொதுஜன பேச்சுரிமையை காப்பாற்றும் பொறுப்பை விளக்கி அறிக்கை வெளியிட்டால் அனுகூலமாய் இருக்கும் என்று எண்ணுகிறோம். அதுவும் உடனே அறிக்கை வெளியிட்டால் நல்லது என்று சொல்லுவோம்.
இனி எங்கு ஜஸ்டிஸ் க்வி மீட்டிங்கு கூட்டப்படுவதானாலும் அங்கு எழுத்து மூலமாக போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு கூட்டுவது நலம் என்றும், அங்கு அந்தப்படி தெரிவித்து விட்டு நடத்தப்படும் கூட்டங்களில் காலித்தனம் ஏற்பட்டால் அதற்கு சர்க்காராரே பொறுப்பாளிகள். என்பதை உணர்த்தி விடலாம் என்றும் யோசனை கூறுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.01.1937 5 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சத்தியமூர்த்தியாமிண் மாயாமாலம்
தோழர் சத்தியமூர்த்தியார் நிலக்கோட்டை தாலூகாவிற்குள் பிரசாரத்துக்குப் போனபோது அங்கு ஏதோ சில காலிகளோ அல்லது பொறுப்பற்ற வேடிக்கைப் பிள்ளைகளோ ஒரு மோட்டார் கார் மீது கல் போட்டார்களாம். அதற்காக பத்திரிகைகள் தனது அடிமையாய் இருக்கின்றன. என்கின்ற ஆணவத்தால் நீண்ட அறிக்கைகளை வெளியிட்டு மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி மீது துவேஷத்தைக் கிளப்பி வருகிறார்.
அறிவுள்ள மக்கள் யாரும் இந்த விஷமும் மாய மாலமும் கொண்ட அறிக்கையை லட்சியம் செய்யமாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இந்த சின்ன காரியத்துக்காக (அதுவும் உண்மையாய் நடந்ததோ இல்லையோ) இவ்வளவு “ஆத்திரம்” காட்டி தடபுடல் செய்யும் சத்தியமூர்த்தியாற் காங்கிரஸ் காலிகள் கதர் குல்லாயுடனும் கொடியுடனும் செய்த எத்தனையோ காலித்தனங்களைப் பற்றி ஏன். ஆத்திரப்படவில்லை என்று கேட்கின்றோம்.
சேலத்தில் தான் பிரசன்னமாயிருந்த கூட்டத்திலேயே எதிர்க்கட்சிப் பிரமுகர்களை கேள்விகள் கேட்டதற்காக கதர் குல்லாயும் கொடியும் பிடித்திருந்த காங்கிரஸ் காலிகள் கடினமாய்த் தாக்கித் துன்பப்படுத்தியதற்கு தன்னைப் பொறுத்தவரை ஒரு மாதகாலம் அந்தப் பக்கம் தலைகாட்டாமல் ஒளிந்து கொண்டதல்லாமல் வேறு என்ன பரிகாரம் செய்தார்?
பள்ளத்தூரில் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசும்போது சாணி உருண்டைகளும் கல்மாரியும் விழுந்ததைப்பற்றி என்ன அறிக்கை விட்டார்?
சென்னைக் கார்ப்பரேஷன் கூட்டத்தில் ஒரு கதர் குல்லாய் போட்டிருந்த காங்கிரஸ் காலி அழுகு முட்டையையும் செருப்பையும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பெண் அம்மையார் மீது வீசியதற்காக எந்த அறிக்கையை விட்டார்?
மந்திரிகள் கனம் பொப்பிலி ராஜா, குமாரசாமி ரெட்டியார், ராஜன் ஆகியவர்கள் கூட்டத்தில் முறையே திருச்செங்கோடு, ராஜபாளையம்,
திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் குழப்பம் விளைவித்ததற்கு என்ன அறிக்கைவிட்டார்?
குடி அரசு- 1937 (1) 116
மற்றும் தோழர் 69.69. ராமசாமி தேர்தலில் தோழர் செளந்திரபாண்டியன், ஈ.வெ. ராமசாமி கூட்டங்களில் காங்கிரஸ் காலிகள் செய்த குழப்பங்கள் கல்வீச்சுள் ஆகியவைகளுக்கு என்ன அறிக்கை விட்டார்? இப்படியாக காங்கிரஸ் காலிகளுக்கு காலித்தனம் செய்ய உற்சாகத்தை மூட்டி சம்மந்தமில்லாத ஆட்களுக்கெல்லாம் காங்கிரஸ்காரர்கள்மீது ஆத்திரம் ஏற்படும்படியாகச் செய்து காலித்தனத்தை வளர்க்கவிட்டு ஒரு காரின். மீது ஏதோ கல்பட்டது என்று அதுவும் உண்மையா? யார் செய்தார்கள்? என்று இல்லாமல் இம்மாதிரியான அறிக்கை விடுவதால் யார் பயந்துகொள்ள முடியும் என்று கேட்கின்றோம்
இந்தச் சமயத்தில் இதைப்பற்றிப் பொதுஜனங்களுக்கு ஒரு விஷயத்தை எடுத்துச்சொல்ல ஆசைப்படுகிறோம்
அதாவது இம்மாதிரி தங்கள் மீது கல் விழுந்ததாகவும் தாங்கள் அடிபட்டதாகவும் எடுத்துச்சொல்லி மாயமாலமாய் அழுதால் பொதுஜனங்கள் ஏமாந்து தங்கள் ஓட்டுக்களை கொடுத்து விடுவார்கள் என்கின்ற தந்திரத்துக்காக இந்தக் கூப்பாடுகள் என்பதைத் தெரிவிக்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.01.1937
மர ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
திருவாரூரில் கேள்விகளுக்கு ஈ.வெ.ரா. பதில்
கேள்விகள்
1. சமதர்மம் விரும்பும் தாங்கள் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கேட்பது அழகா?
2. காங்கிரசு மகாசபை பிராமணர்களுக்கு மாத்திரம்தான் சொந்தமா?
3. ஜவஹர்லாலை ஏன் கண்டிக்கிறீர்கள்?
4. பணக்காரர்களை நீங்கள் ஆதரிக்கலாமா?
“ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்கிற ராமசாமியுடன் மற்றவர்கள் சேரலாமா?” என்று கேட்கப்பட்ட அச்சு நோட்டீசும் கொடுக்கப்பட்டது.
பதில்கன்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது சமதர்மக் கொள்கையைச் சேர்ந்ததேயாகும். இன்றைய சீர்திருத்தம், அரசியல், சுதந்திரம் என்பவைகள். எல்லாம் அதிகாரம், பதவி, உத்தியோகம் ஆகியவைகளாகத்தான் இருக்கின்றன. எனக்குத் தெரிய 1900 முதலே இன்று வரை அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இந்தியாவில் பல மதம் பல ஜாதியாக மக்கள் பிரிந்திருக்கிறார்கள்.
அவர்களில் பலர் பிறவியினால் இழி மக்களாகக் கருதப்பட்டு அரசியலில் உத்தியோகம், பதவி அதிகாரம் ஆகியவைகளில் 100க்கு ஒருவர் இருவர் கூட இருப்பதற்கு இல்லாமல் விலக்கப்பட்டிருக்கிறார்கள். அதன் காரணமாய் கல்வி செல்வம், நல்வாழ்வு ஆகியவைகள் அடைவதற்கில்லாமல் அநேக காலமாக மிருகங்களிலும் கேவலமாக அநேகர் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்கள் மற்ற மக்களோடு சரி சமத்துவமாக வரவேண்டுமென்றால் அவர்கள் உரிமைகளை தனிப்பட்ட முறையில் கவனிக்கவில்லையானால் வேறு வழி என்ன என்று நீங்களே சொல்லுங்கள். முன்னணியில் இருப்பவர்களுடன் அவர்கள் போட்டி போட வேண்டும்
குடி அரசு- 1937 (1) 118
என்றால் இன்று அவர்களால் (தாழ்த்தப்பட்டமக்களால்) எப்படி சாத்தியப்படும்?
அவர்கள் கை கால்கள், வாய்கள், கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
அன்றியும் நமது தேசீய சபை என்னும் காங்கிரசுக்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும் தனித்தொகுதியும் புதிதான காரியமல்ல. 1906ல்
சர்க்காரார் முஸ்லீம்களுக்கு அவர்கள் சமூக எண்ணிக்கைப்படி பிரதிநிதித்துவம் கொடுப்பதாக வாக்களித்து 1910ல் தனித்தொகுதி மூலமே கொடுக்கப்பட்டு 1916ல் காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் தீர்மானத்தின் மூலம் ஜன சமூக எண்ணிக்கைப்படி தனித்தொகுதி மூலம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு
விட்டார்கள். மகமதிய தொகுதி மகதியரல்லாதார் தொகுதி என்று பிரித்து இன்று 26 வருஷ காலமாக நடைபெற்று வருகிறது. காந்தி காங்கிரசிலும் சி.ஆர்தாசின் பாட்னா ஒப்பந்தம் மூலம் இது ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. அது போலவே கிறிஸ்தவ சமூகத்துக்கும் கொடுக்கப்பட்டாய் விட்டது ஆகவே அது முதல் இன்று 25 வருஷம் காலமாக கிறிஸ்தவர்களாலும் மகமதியர்களாலும் தேசீபத்துக்கு ஏற்பட்ட கெடுதி என்ன என்று கேட்கிறேன்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருப்பதால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் அரசாங்கத்தாருடன் ஒத்துழைக்கிறார்கள் என்று சொல்லப்படுமானால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை விரும்பாத ஆதரிக்காத மிதவாதிகள் தோழர்கள் ஸ்ரீனிவாச சாஸ்திரி, சாப்ரூ,
சிவசாமி அய்யர், சி.பி.ராமசாமி அய்யர் முதலியவர்கள் சர்க்காருடன் ஒத்துழைப்பதேன்? என்பதை யோசித்துப் பார்த்தால் வகுப்புவாரி
பிரதிநிதித்துவம் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கும் ஒத்துழையாமல்
இருப்பதற்கும் காரணமானதல்ல என்பது விளங்கும்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பொது ஜனங்களால் விரும்பப்பட வில்லையென்றாவது யாராலாவது சொல்ல முடியுமா?
முஸ்லீம் சமூகத்தில் 100க்கு 99 பேர்களும் அதை ஆதரிக்கிறார்கள்; கிறிஸ்தவர்களிலும் 100க்கு 99 பேர்கள் ஆதரிக்கிறார்கள்; தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களிலும் அது போலவே ஏன்? 100க்கு 100 பேர் ஆதரிக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை இந்திய ஜனசங்கையில் கிட்டத்தட்ட பகுதி ஆகலாம். மற்றும் இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்கள். 100க்கு 100பேரும் ஆதரித்துவிட்டார்கள். ஆதாரம் என்னவென்றால்.
1920ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவ பிரச்சினையின் மீதே தேர்தலில் நின்ற பார்ப்பனரல்லாதார்கள் பெருவாரியாக வெற்றி பெற்று விட்டார்கள். அந்தச் சமயத்தில் காங்கிரசில் இருந்த பார்ப்பனர் அல்லாதார்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கையை ஒப்புக் கொண்டார்கள். காங்கிரஸ் பார்ப்பனர்களில் பலரும் ஒப்புக் கொண்டார்கள். அந்த உணர்ச்சி ஏற்பட்ட பிறகு தான் பார்ப்பனர்கள் தேர்தல்களில் மிகக் குறைந்தவர்களாக ஆகி வருகிறார்கள். ஆதலால் அதை ஏன் இவ்வளவு பிடிவாதமாக இப்போது எதிர்க்க வேண்டும்?
19 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அன்றியும் பொது ஓட்டல்கள், கோவில்கள், குளங்கள் ஆகியவைகளில் இன்ன இன்ன வகுப்புக்கு பிரவேசம் இல்லை என்றும் இன்ன இன்ன. வகுப்புக்கு இன்ன இன்ன இடம் என்றும் போர்டு போடுவது சட்ட விரோதமில்லை என்றும் தேசீயத்திற்கும் சமதர்மத்திற்கும் விரோதமில்லை. யென்றும் ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பிரதிநிதித்துவம் மாத்திரம் எப்படி சட்ட விரோதமாகிவிடும் சமபங்கு பிரதிநிதித்துவம் தான் கேட்கின்றோமே தவிர அதிகபாகம் கேட்கின்றோமா? ஆகவே சமபாகம் கேட்பது ஒருநாளும் சமதர்மத்துக்கு விரோதமாகிவிடாது. கொடுக்க மறுப்பதுதான் சமதர்மத்துக்கு விரோதமாகும் என்று சொல்லுவேன். அதுவும் என்றென்றைக்கும் கேட்கவில்லை.
அடுத்தபடியாக காங்கிரசு பிராமணர்களுக்கு மாத்திரம் சொந்தமா? என்று கேட்கிறீர்கள்.
இன்று அப்படித்தான் இருந்து வருகிறது. அதனால்தான் நான். காங்கிரசில் இருந்து விலகினேன்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பிரசிடெண்டு முத்துரங்க முதலியார்.
என்று ஆதாரம் இருந்தாலும் அதிகாரம் செலுத்துவது சத்தியமூர்த்திதானே? அறிக்கை விடுவதும் ஆதிக்கம் செலுத்துவதும் ராஜகோபாலாச்சாரியார் தானே? வெளிநாட்டில் காந்தியாரிடமும் மற்ற காங்கிரஸ் தலைவர்களிடமும் செல்வாக்கும் இஷ்டம்போல் காரியம் சாதித்துக்கொள்ளும் சக்தியும் இருப்பது பார்ப்பனர்களுக்குத் தானே?
காங்கிரசுக்கு எதிராக எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் மதிக்கப்படுவது பார்ப்பனர்கள் தானே? மாளவியா எவ்வளவு எதிர்ப்பாய் நடந்துகொள்ளுகிறார். எந்தப் பார்ப்பனராவது காங்கிரஸ்காரராவது அவரை தேசத்துரோகி என்று அழைக்கிறார்களா? டாக்டர் ராஜன் காங்கிரசுக்கு எவ்வளவு பெரிய “துரோகம்” செய்தார். அவர் வீட்டுக்குத்தானே ஜவஹர்லால் போய்விட்டு வந்தார்? 100க்கு 3 பேர்களாக உள்ள பார்ப்பனர்கள் இன்று காங்கிரஸ் ஸ்தாபனத்திலும் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்திலும் காங்கிரசின் பேரால் நிறுத்தப்படும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் 100க்கு 25,30 வீதம் ஏன் அமர்த்தப்படுகிறார்கள்? இவைகள் எல்லாம். காங்கிரஸ் பார்ப்பன ஸ்தாபனம் என்று சொல்லுவதற்கு போதுமானதாகாதா?
வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை பார்ப்பனர் ஒப்புக் கொண்டால் வேறு ஆக்ஷபிக்கிறவர்கள் யார்? முத்துரங்க முதலியார் தலைவர் தேர்தலும் அந்தகொள்கை மீதுதான் வெற்றியடைந்தது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு
குடி அரசு- 1937 (1) 120
பார்ப்பனர்களே எதிரிகளாய் இருப்பதாலும் அவர்களே எதிர்ப்பதாலும் காங்கிரசும் அவர்கள் இஷ்டத்தையே பொறுத்து இருப்பதாலும் நான் காங்கிரசை பார்ப்பனர் ஸ்தாபனம் என்று சொல்லுகிறேன்.
ஜவஹர்லாலைக் கண்டிப்பது பற்றி கேட்கின்றீர்கள். ஜவஹர்லாலை: நான் மாத்திரம் கண்டிக்கவில்லை. “சுதேசமித்திரன்” பத்திராதிபர் கண்டித்து வைது ஜவஹர்லாலுக்கு புத்தியில்லை, யோசனை இல்லை, ஆணவக்காரர், உலக அனுபவம் போதாது, புஸ்தகப் பூச்சி, அனுபவ சாத்தியமான கொள்கையில்லாதவர், தற்பெருமைக்காரர், தலைவருக்கு தகுதி இல்லாதவர் என்றெல்லாம் “இந்துப் பத்திரிகையில் எழுதினார்.
சத்தியமூர்த்தியவர்களும் ஜவஹர்லால் கொள்கைக்கு ஆக அவருக்குத் தலைவர் ஸ்தானம் கொடுக்கவில்லை என்றும், அவரது தகப்பனார் பெருமைக்கும் அவரது தியாகத்துக்கும் கொடுக்கப்பட்டது என்றும் ஆனைமலையில் சொன்னார்.
மற்றும் அவர் நிதான புத்தியும் நேர்மைக் குணமும் இல்லாமல் சுயமரியாதைக்காரர்களை கேள்வி கேட்டதற்கு ஆக “பொய்யர்கள்” என்று சொன்னார். அவரைப்பற்றி மாளவியா முதல் பலர் கண்டித்து பேசியிருக்கிறார்கள். ஆதலால் ஜவஹர்லால் என் போன்றோர்களால் கண்டிக்கப்படுவது ஒரு அதிசயமான காரியமல்ல.
பணக்காரர்களை நான் ஆதரிப்பது சமதர்மத்துக்கு அடுக்குமா என்று கேட்கிறீர்கள்.
பணக்காரர்களை ஒழிக்கும் நிலையில் நான் இல்லை. ஏனென்றால்
கடசியாக, ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்யும் ராமசாமி நாயக்கருடன் மற்றவர்கள் சேரலாமா" என்று ஒருவர் அச்சு நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.
ஆலய நிந்தனை, விக்கிரக நிந்தனை செய்வது ஒரு குற்றமாகுமா? என்று கேட்கிறேன்.
“ஏசு கிறிஸ்து கோவில்கள் கள்ளர் குகை" என்றார். ஏசுகிறிஸ்துவை நீங்கள் பாவி என்கிறீர்களா?
முஸ்லீம்கள் அநேக விக்கிரகங்களை உடைத்திருக்கிறார்கள். கோவிலை: கொள்ளை கொண்டிருக்கிறார்கள்.
இன்றும் விக்கிரகங்களை மாத்திரம் அல்லாமல் விக்கிரக வணக்கக் காரர்களை காபர்கள் என்று இழிவாய்ப் பேசுகிறார்கள்.
தோழர் காந்தியார் “கோவில்கள் குச்சுக்காரிகள் இல்லம்” “கோவில்களில் கடவுள் இல்லை" என்றார்.
காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் பழனியிலும் மதுரையிலும் கோவிலுக்குப் போய் இருந்தாலும் கடலூரில் கோவில்களை எல்லாம் இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று சொன்னார். கோவில்களின் தர்மகர்த்தாக்களும், பூசாரித்தனம் செய்யும் பார்ப்பனர்களும் மடாதிபதிகளும் 100க்கு 99 பேர் “சாமி” சொத்துக்களை திருடுகிறார்கள். இவர்களை யெல்லாம் நீங்கள் அயோக்கியர்கள் என்று சொல்லுகிறீர்களா? இவர்கள். தலைமையில் இருந்து நீங்கள் விலகிவிட்டீர்களா? இப்படி இருக்கையில் உங்களுக்கு மாத்திரம் கோவில்களிடமும் விக்கிரகங்களிடமும் உண்மையான நம்பிக்கையோ மரியாதையோ இருக்கிறது என்று நான். எப்படி நம்பமுடியும்?
வாலிபர்கள்
தோழர்களே! உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டதாகக் கருதுகிறேன். இது உங்களை திருப்தி செய்திருக்குமா என்பது வேறு விஷயம். நீங்கள் திருப்தி அடைந்துதான் தீரவேண்டும் என்று நான். சொல்லவரவில்லை. வாலிபர்களாகிய நீங்கள் இம்மாதிரி போலி எழுச்சியில் உங்களை கெடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு காங்கிரசினிடம் பற்று இருப்பதுபற்றி நான் குறைகூறவில்லை. யோசிக்காமல் வெறும் உற்சாகத்தில் பயனற்ற வேலையில் இறங்கிவிட்டீர்களே என்றுதான். பரிதாபப்படுகிறேன். உங்களுக்கு காங்கிரசைப்பற்றி என்ன தெரியும்? அதன் சூழ்ச்சிகள், சுயநலக் கொள்கைகள் ஆகியவைகளைப்பற்றி ஏதாவது அறிந்திருக்கிறீர்களா? அல்லது அது இந்த 50 வருஷ காலமாய் நாட்டுக்கு செய்தது இன்னதென்று ஏதாவது உங்களுக்குத் தெரியுமா?
குடி அரசு- 1937 (1) 122
உங்களது பொறுப்பற்ற வாலிப பருவத்தை நல்ல காரியத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அடக்கி ஆளவும் இந்த நாட்டில் போதுமான வசதி இல்லாததால் இம்மாதிரியான விவேகமற்ற காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். நீங்கள் கூடிய சீக்கிரம் மனம் திரும்புவீர்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. உங்களிடத்தில் விவகாரம் பேசி உங்களை எல்லாம் நான் சீக்கிரத்தில் திருப்பப்போகிறேன்; உங்களைக் கொண்டே பயனுள்ள வேலை செய்யப்போகிறேன். நான் உங்களைப்போல்.
இந்த 50 காலமாக காங்கிரசினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட தீமைகளை அடுக்கடுக்காய் எடுத்துச் சொல்லுவேன். இந்தியா ஒரு:
இந்த நாட்டில் இவ்வளவு ஏராளமான சம்பளமும் உத்தியோகமும் இருப்பதற்கு காங்கிரசே காரணம்.
இந்த நாட்டில் பாடுபடாத ஒரு வகுப்பார் 100க்கு 100 பேர் படித்து, பாடுபடும் மக்கள் 100க்கு 95 பேர் தற்குறிகளாக இருப்பதற்கு காங்கிரசே காரணம்.
இந்த நாட்டில் விவசாயிகளுக்கும் கூலிக்காரர்களுக்கும் இவ்வளவு வரி உயர்வுக்கு காங்கிரசே காரணம்.
இந்த நாட்டில் தொழில்கள் முன்னேற்றம் அடையாமல் கர்னாடக நிலை பூஜிக்கப்படுவதற்கு காங்கிரசே காரணம்.
இப்படியே இன்னமும் அனேக கெடுதல்களுக்கு காங்கிரஸ் காரணம் என்று மெய்ப்பிக்க என்னால் முடியும். நீங்களல்ல, இன்னம் இந்த ஊரிலல்ல, ராஜகோபாலாச்சாரி அல்ல, இன்னும் வேறு யார் வந்து வாதாடுவதால் இருந்தாலும் இவைகளை ருஜுப்பிக்கத் தயாராய் இருக்கிறேன்.
ஆதலால் வாலிபர்கள் யாருக்காவது உண்மையில் தேசப்பற்றோ மனிதப்பற்றோ இருக்குமானால் காங்கிரசை ஒழியுங்கள். பிறகு இந்த அரசாங்க முறை தானாக மாய்ந்து ஒழிந்து ஏழை மக்களின் நன்மைக்கு ஏற்றபடி நடக்கக் கூடியதாகிவிடும். அதுவாகத் திருத்தப்பாடு அடையா விட்டாலும் 5 நிமிஷத்தில் நம்மால் செய்துவிட முடியும். இன்று இந்த அரசாங்க ஆக்ஷிக்கொடுமைகள் என்பவற்றிற் கெல்லாம் காங்கிரசே ஆதரவளிக்கிறது.
1233 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நன்மைகள் எல்லாம் நம்மாலேயே அதாவது காங்கிரஸ் அல்லாதவர்களாலேயே ஏற்பட்டு வருகின்றன. இந்த 15 - வருஷகாலமாக காங்கிரசுக்கு எதிர் ஸ்தாபனம் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்த நாட்டு குடிகளின் நிலைமை என்ன ஆயிருக்கும் என்பதற்கு
அதற்கு முந்திய அதாவது எதிர் ஸ்தாபனம் ஏற்படுவதற்கு முந்திய 20, 30 வருஷத்திய அனுபவத்தையும் புள்ளி விவரத்தையும் கூர்ந்து பாருங்கள். நான் வாய் உருட்டல் கூலியல்ல. புள்ளிவிவரத்தோடு பேசுகிறவன். ஆகையால் தோழர்களே உங்கள் உற்சாகத்தை நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் விரோதமாய் பயன்படுத்தாதீர்கள் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
குறிப்பு: 10.01.1937 இல் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது தேசீய வாலிபர்கள் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த துண்டறிக்கைக்கு அளித்த பதில்களும் சொற்பொழிவின் தொடர்ச்சியும்.
குடி அரசு - சொற்பொழிவு - 24.01.1937
குடி அரசு- 1937 (1) 124
கடற்கரைக் கூப்பாடு
தேர்தல் போர் ஆரம்பமாகிவிட்டது. அபேக்ஷகர் பெயர்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே நாம் கூறியுள்ளபடி நமது கட்சிக்கு அபேக்ஷகர் பஞ்சம் ஏற்படவில்லை; ஏற்படவும் செய்யாது. காங்கரஸ் பகட்டு வெற்றியில் மயங்கி - காங்கரஸ் ஆர்பாட்டங்களுக்கு அஞ்சி -
தன் காலில் நிற்க ஆண்மையின்றி - காங்கிரசில் சரணாகதி அடைந்து இச்சகம் பாடும் துடை நடுங்கிகள் சிலர் போனாலும், நம் கட்சிக் கொடிக் கீழ்நின்று போராடத் துணிவுகொண்டு நிற்கும் வீரர்கள் ஏராளமாக இருந்து வருவது மகிழத்தக்கதே. நமக்குப் பத்திரிகைகள் குறைவாக இருக்கலாம்; தொண்டர்கள் குறைவாக இருக்கலாம்; பிரசாரகர்கள் குறைவாக இருக்கலாம். எனினும் நாம் அஞ்சத் தேவையில்லை. ஏன்? அபிமானிகள் ஏராளமாயிருக்கிறார்கள். நமது கட்சியால் நலம் பெற்றவர்களும் ஏராளமாயிருக்கிறார்கள். நாம் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகளோ அனந்தம். நமது எதிரிகள் எதிர்பார்க்கிறபடி தமிழ்
நாட்டார் முச்சூடும் அப்பாவிகள் அல்ல. அப்பாவிகளாயிருந்தால் நமது
கட்சிப் பெயரால் அந்தஸ்துடையவர்கள் தேர்தலுக்கு முன்வரத் துணிவு கொண்டு இருக்க மாட்டார்கள். தென்னாட்டாருக்கு காங்கிரஸ் மீது இருந்துவரும் பக்திக்கு அறிகுறியாக கொஞ்சப் பேராவது போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி விரும்பினார். ஆனால் அவருடைய விருப்பம் நிறைவேறவில்லை. டாக்டர் சுப்பராயன் ஒருவரே இதுவரை போட்டியின்றி நிற்பதாகத் தெரியவருகிறது. டாக்டர் சுப்பராயனுக்கும் காங்கிரசுக்கும் உள்ள சம்பந்தம் குலாம் காதிருக்கும் கோகுலாஷ்டமிக்கும் உள்ள சம்பந்தந்தான். எனவே டாக்டர் சுப்பராயன் வெற்றி காங்கிரஸ் வெற்றியாக மாட்டாது. டாக்டர் சுப்பராயனைப் போலவே நமது தலைவர் ஒருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படப் போவதனால் காங்கிரசுக்கு மட்டும் பெருமையடித்துக்கொள்ள உரிமையே இல்லை
இருந்தாலும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியம் காங்கிரஸ்காரர் பொய்ப் பிரசாரம் செய்வதில் நிபுணர்கள். சென்னையிலே சென்ற ஞாயிற்றன்றே (17-1-37) அவர்கள் பிரசாரத் திருவிழா ஆரம்பித்துவிட்டார்கள். இனி பிரதி தினமும் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஓயாது கூப்பாடு கேட்டுக்கொண்டே இருக்கும் 125 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அம்மட்டோ! நாடெங்கணும் காங்கிரஸ் கூச்சல் மயமாகவே இருக்கும். காங்கிரஸ் கூப்பாட்டுக்கு திருவல்லிக்கேணி கடற்கரை ஞாயிற்றுக்கிழமைக் கூப்பாட்டை ஒரு “சாம்பிளாக" எடுத்துக்கொண்டால் காங்கிரஸ்காரர்.
கூச்சல் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நன்கு விளங்கும். சென்ற ஞாயிற்றன்று கடற்கரையில் பேசிய ஒருவராவது யோக்கியப் பொறுப்பான காங்கிரஸ் பிரசாரம் செய்யவில்லை. எள்ளத்தனையாவது
கூச்சமில்லாமல் பொய்ப் பிரசாரமே செய்தார்கள்.
முதன் முதலில் பேசிய தோழர் சத்தியமூர்த்தி காங்கிரசுக்குத் தான். ஒரு வேலைத் திட்டம் உண்டு என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்கு வேலைத் திட்டமே இல்லை என்றும் கூறினாராம். இதைவிட அயோக்கியத்தனமான. புளுகு வேறுண்டோ? ஜஸ்டிஸ் கட்சியார் சமீபத்தில் வெளியிட்ட புதுவேலைத் திட்டத்தைப்பற்றி தோழர் சத்தியமூர்த்தி பல கூட்டங்களில் பேசியதையும் பல பத்திரிகைகளில் எழுதியதையும் அவர் மறந்து விட்டாரா? 15-வருஷகாலம் நிர்வாகம் நடத்திய ஜஸ்டிஸ் கட்சியார் இப்பொழுது தான் ஒரு வேலைத்திட்டத்தையும் கொண்டு வெளி வந்திருக்கிறார்கள் என அவர் கேலிசெய்து வெகுநாள் ஆகவில்லையே!
புதுக் கட்சிகளுக்கு வேலைத் திட்டம் அவசியம்தான்; 15-வருஷம் அமல் நடத்திய கட்சிக்கு வேலைத்திட்டம் எதற்கு? எனக்கேட்ட தோழர் சத்தியமூர்த்தியின் நாக்கு மரத்துப் போய்விட்டதா? தோழர் மந்திரி ராஜனுடைய வாடிப்பட்டிப் பிரசங்கத்துக்கு லாகூரிலிருந்து கொண்டு தோழர் சத்தியமூர்த்தி அளித்த பதிலில் “ஜஸ்டிஸ் கட்சியார் ஒன்றும் செய்யவில்லை என நான் கூறவில்லை. அவர்கள் எண்ணியிருந்தால் அதிகப்படியாகச் செய்திருக்கலாம் என்பதே எனது வாதம்” என தோழர் சத்தியமூர்த்தி கூறவில்லையா? கடற்கரைக் கூட்டத்திலே எது வேண்டுமானாலும் பேசலாம்; யார் கேட்கப் போகிறார்கள் என்ற துணிச்சலா? நாம் கடைசி முறையாக அவருக்கு ஒன்று கூறுகிறோம்
ஒரு உருவான வேலைத் திட்டம் வகுத்துக்கொண்டே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. மாண்டுபோர்டு திட்டப்படி எவ்வளவு நன்மைகள். செய்ய முடியுமோ அவ்வளவு நன்மைகளையும் ஜஸ்டிஸ் கட்சி செய்தது. அதற்கு மெளலானா யாக்கூப் ஹாஸன் சேட் பொன்மொழிகளே அத்தாட்சி. இப்பொழுது மாகாண சுய ஆட்சி வரப்போவதினால் மந்திரி மாருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் கிடைக்கப் போகின்றன. ஆகவே, வரப்போகும் சீர்திருத்த அரசியலில் தாம் மேற்கொண்டு செய்யப்போவதை தேச மகா ஜனங்களுக்கு அறிவுறுத்தும் பொருட்டே சமீபத்தில் ஒரு புது வேலைத் திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியார் வெளியிட்டிருக்கிறார்கள். இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சியார் வேலைத் திட்டம் வெளியிட்டிருப்பதினால் இதற்கு முன் வேலைத் திட்டமே அவர்களுக்கு இருந்ததில்லையென ஏற்பட்டு விடாது
குடி அரசு- 1937 (1) 126
கண்ணிருந்தும் பாராத, காதிருந்தும் கேளாத, மூளையிருந்தும் யோசியாத தோழர் சத்தியமூர்த்தி கூட்டத்தாரே ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரை வேலைத் திட்டமின்றி வேலை செய்தார்கள் என உளறுவார்கள்.
அப்பால், காங்கரசுக்குத் தான் உருவான வேலைத்திட்டம் உண்டெனக் கூறும் தோழர் சத்தியமூர்த்தியின் பிதற்றலைக் கவனிப்போம் பூரண சுயராஜ்யம் பெறுவதுதான் காங்கரஸ் வேலைத் திட்டமாம். பூரண சுயராஜ்யம் காங்கரஸ் லக்ஷ்யமாக இருக்கலாம். லக்ஷ்யத்துக்கும் வேலைத் திட்டத்துக்கும் வேற்றுமை காண முடியாத தோழர் சத்தியமூர்த்திக்கு அரசியலைப் பற்றிப் பேசவே உரிமையில்லை. ஜஸ்டிஸ் கட்சியாரிடம்
சிறிது நாள் அரசியல் பால பாடம் கற்ற பிறகு அவர் அரசியல் விஷயங்களைப் பற்றிப் பேச முன்வந்தால் நலமாயிருக்குமென்று எண்ணுகிறோம். பூரண சுயராஜ்ய லக்ஷ்யம் நல்லது தான். ஆனால் அதை அடையும் வழி என்ன? வேலைத் திட்டம் என்ன? எந்த காங்கரஸ் வாதியாவது பூரண: சுயராஜ்யம் அடையும் மார்க்கத்தைக் குறிப்பாக எடுத்துக்காட்டியதுண்டா? பிரதிநிதித்துவ சபை, நேஷனல் கன்வென்ஷன் எனப் பலர் கிளிப்பிள்ளை: மாதிரி கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். அவை யாவும் உதவாக்கரைப் பேச்சென பிரபல ராஜ்ய தந்திரியான ஸர்.டெஜ் பகதூர் சாப்ருவே கூறியிருக்கிறார். சென்னை சட்டசபை காங்கரஸ் கட்சித் தலைவர் தோழர். ஸி.ஆர். செட்டியாரும் அவ்வாறே அபிப்பிராயப் படுகிறார். தேச மக்கள் அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பிறகே பிரதிநிதித்துவ சபைத் தீர்மானங்களுக்கு மதிப்புண்டு என “ராஷ்டிரபதி” ஜவஹர்லால் கூடக் கூறுகிறார். இந்நிலையில் பூரண சுயராஜ்யத்தைப் பற்றி தோழர் சத்தியமூர்த்தி புலம்புவதற்கு அர்த்தமுண்டா? கடற்கரைப் பிதற்றல்களினால் சுயராஜ்யம் பெற முடியுமா? அரசியலைத் தகர்ப்போம், முட்டுக்கட்டை போடுவோமென ஆர்ப்பரிப்பதினால் சுயராஜ்யம் பெற முடியுமா?
சட்டசபைக்குப் போகிறவர்கள் தாம் செய்யப் போகும் வேலைகளை வாக்காளர்களுக்குத் தெளிவாகக் கூறவேண்டும். அவ்வாறு கூறாமல் “காந்திக்கு வோட்டுப் போடு; சுயராஜ்யத்துக்கு வோட்டு போடு; விடுதலைக்கு வோட்டுப் போடு'' எனக் கூறுவோரை பகல் வேஷக்காரர். என்று தானே கூறவேண்டும்? சர்க்காரோடு போராடி பூரண சுதந்தரம் பெற முடியாதவர்களா சட்ட சபைக்குச் சென்று முட்டுக்கட்டை போட்டு சுயராஜ்யம் பெறப் போகிறார்கள்? அது காசுபெறாத ஹம்பக் பேச்சென்பதைப் பச்சைக் குழந்தைகளும் அறியுமே. எனவே, வாக்காளர்களே! ஜாக்கிரதையாக இருங்கள். பொய்யும் புளுகும் அளந்து பொது ஜனங்களை ஏமாற்றும் புரட்டர்களை நம்பாதீர்கள்! நாட்டுக்கு நன்மை செய்து மதிப்பும், அனுபவமும் பெற்ற ஜஸ்டிஸ்கட்சியாரையே ஆதரியுங்கள்.
- “விடுதலை”
குடி அரசு (மறு பிரசுரம்) - கட்டுரை - 24.01.1937
127 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காந்தியார்
இனியும் உங்களுக்கு காந்தி பைத்தியமா?
இன்று காங்கிரசின் பேரால் தேர்தலில் நிற்கும் பித்தலாட்டக்காரர்கள் காந்தி பெயரைச்சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள்.
ஆனால் நாம் இந்த 3 வருஷ காலமாகவே காந்தியாருக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி வருகிறோம். அதை பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் மறைத்து மக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்கள் - வருகிறார்கள்.
அப்படிப்பட்ட புரட்டுகளை வெளியாக்க இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். அதாவது 22.1.37ந் தேதி தோழர் காந்தியாரை சென்னையில் “சுதேசமித்திரன்” நிருபர் பேட்டி கண்டு பேசியபோது அவர் சொன்னதாவது:-
“ராஜிய விஷயத்தில் எனக்கு சிரத்தை கிடையாது.” “அவற்றைப்
பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டம் இல்லை.” “உண்மை சத்தியாக்கிரகி என்கிற முறையில் இதை சொல்லுகிறேன்.”
“வரப்போகும் தேர்தல் முடிவுகள் உத்தியோக பிரச்சினைகள் முதலிய விஷயங்களில் எனக்கு எவ்வித அபிப்பிராயமும் இல்லை” என்று பேசி இருக்கிறார்.
(இவ்வாக்கியங்கள் 22.1.37ந் தேதி “சுதேசமித்திரன் 6-வது
பக்கம் 3-வது கலம் “சென்னையில் காந்திஜி", “அரசியல் விஷயங்கள்” என்கின்ற தலைப்பில் இருக்கிறது.)
காந்திக்கு ஜே சொல்லியோ, காந்திஜி பேர் சொல்லியோ அவர் ஓட்டுக்கேட்டதாகச் சொல்லியோ ஓட்டுக் கேட்பவர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் மோசக்காரர்கள் என்பதை உணர்ந்து உங்கள் ஓட்டுகளை பயன்படுத்துங்கள் என்று என்பதை ஞாபகப்படுத்தவே இதை “சுதேசமித்திரனில் கண்டபடி எடுத்துக் காட்டுகிறோம்
மற்றும் பேசியதாவது:-
குடி அரசு- 1937 (1) 128
அரசியலுக்கு திரும்பும் உத்தேசம் தனக்கு இப்போது இல்லை என்றும், அரசியல் போராட்டத்தை சட்ட சபையிலோ வெளியிலோ நடத்தவும் சட்ட மறுப்பை மறுபடியும் ஆரம்பிக்கவும் அவருக்கு உத்தேசமுண்டா? என்று நிருபர் கேட்டதற்கு காந்தியார் நான்(தான்) 4 அணா அங்கத்தினராகக்கூட இல்லை என்றும் அதைப்பற்றிப் பேச தனக்குத்
தகுதி இல்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
இந்த தகவலும் 22.1.37ந் தேதி “சுதேசமித்திரன் 3-வது கலம் கடசி வாக்கியமாகவும், 4-வது கலம் தொடர்ச்சி வாக்கியமாகவும் காணக்கிடக்கின்றது
குடி அரசு - செய்தி விமர்சனம் - 24.01.1937.
19 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஆச்சாரியார்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் போர் முனைக்கு வந்துவிட்டார் என்ன போர் என்றால் வீரப்போர் அல்ல, மற்றென்னவெனி
ர் என்றுதான் சொல்ல வேண்டும்
ஆச்சாரியார் என்றும் இதற்குத்தான் அருகதையானவர், ஏனெனில் அவருக்கு உடல் வலிமை கிடையாது. தோல்வியைச் சலிக்கும் மனவலிமையும் கிடையாது. ஆதலால் இப்படிப்பட்டவர்கள் என்றும் சூழ்ச்சியைத்தான். நம்புவார்கள். அவர்களுக்குத்தான் சூழ்ச்சித்திறமும் ஏற்படக்கூடும் ஆச்சாரியார் வெற்றிபெற்று மந்திரி ஆசனத்தில் அமர்வாரானால் மற்ற விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு மகிழ்ச்சியடைவதில் முதல்வராக
இருக்க நாமே முயலுவோம். அம்மகிழ்ச்சி ஏதாவது ஒரு நன்மையை எதிர்பார்த்து என்று சொல்ல முடியாது. ஆனால் பரிதாபத்தால்.
ஆச்சாரியார் திடமான தியாகி, மகத்தான தியாகம் செய்தவர். அவர்
மந்திரி பதவி ஏற்றால் அவர் விஷயத்தில் யாரும் பொறாமைப்பட வேண்டியதில்லை, அவரது சூழ்ச்சிக்குப் பலர் ஆத்திரப்படக்கூடும் தான். அப்படிப்பட்ட ஆத்திரங்கள் கூட தோல்வி அல்லது சக்தியற்ற தன்மையின் எதிரொலி என்றுதான் சொல்லுவோம். ஏனெனில் அத்திரப்படுகிறவர்களும் தங்களாலான சூழ்ச்சிகள் செய்து பார்த்துத்தான் முடியாமல் போய் ஆத்திரப்படுபவர்களாய் அநேகர் இருப்பார்கள். உலகம் சூழ்ச்சிக்கும்
ஏமாற்றுதலுக்கும் அடிமை, அவ்வளவு மாத்திரமல்ல, சத்தியத்திற்கும் வீரத்துக்கும் எதிரி. அதனாலேயே காந்தி பிரசித்த புருஷராகவும் “மகா“புருஷராகவும் ஆனார்.
ஆகையால் ஆச்சாரியாரின் சூழ்ச்சிக்கு நாம் வெறுப்போ அத்திரமோ கொள்ளவில்லை. அவர் மந்திரியானாலும் நாம் பொறாமைப்படவில்லை. இந்தத் திருப்தியாவது அவருக்கு ஏற்படட்டும் என்றே ஆசி கூறுவோம்.
ஆனால் அது முடியுமா என்பது வேறு விஷயம். இவை ஒருபுறமிருக்க, தோழர் ஆச்சாரியார் 17-1-37ந் தேதி மாலை சென்னை கடற்கரையில் பேசும் போது,
“ஜஸ்டிஸ் கட்சி உத்தியோகங்களை வகுப்புவாரியாகப்
பிரித்துக் கொடுக்கவேண்டுமென்பதற்காக ஏற்பட்டது”
குடி அரசு- 1937 (1) 130
“வகுப்பு வாரியாக உத்தியோகங்களைப் பிரித்துக் கொடுத்து
ஒரு ஏற்பாடு செய்துகொள்ள காங்கிரஸ் என்றும் மறுத்ததில்லை”
“ரம்ப நாளைக்கு முன்னமேயே ஜஸ்டிஸ் கட்சியைக் கலைத்திருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.
(இது 18-1-37ந் தேதி “தினமணி” 7ம் பக்கம் 2ம் கலம் 3வது வரி முதல் 12ம் வரி வரை உள்ள வாக்கியங்களாகும்) இந்த வாக்கியங்களை நாம் வரவேற்கவேண்டியதே கிரமமாகும்
ஆனால் இது உண்மையான வாக்கியங்களா, உதட்டளவில் சொல்லும் வாக்கியங்களா என்பது கவனிக்க வேண்டாமா? ஜஸ்டிஸ் க்ஷி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு ஆகத்தான் ஏற்பட்டது என்பதை ஆச்சாரியார் இன்று ஒப்புக்கொண்டது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது இதற்கு முன்னும் ஆச்சாரியார் இப்படியே பல தடவை நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் ஒப்புக்கொண்டிருக்கிறார். நெருக்கடி தீர்ந்த உடன் வகுப்பு வாதம் பேசும் க௬்ஷியின் அதிக்கத்தை விட பிரிட்டிஷ் அதிக்கமே மேலானது என்று பேசி விடுகிறார். தோழர் சத்தியமூர்த்தியும் பல தடவை இப்படியே பேசி இருக்கிறார். உதாரணமாக 7,8 மாதங்களுக்கு மூன் தஞ்சையில்
அவர் பேசும்போது,
“ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் தானும் காங்கிரசில் சேருவதாகச் சொன்னாராம். அவர் சொன்னது மிகவும் சரியென்றே சொல்லுவேன். கூடிய சீக்கிரம் காங்கிரசின் மூலம் வகுப்பு வாரி உரிமை விஷயமாய் ஒரு அறிக்கை வெளியிடலாமென்று இருக்கிறேன் என்பதாகப் பேசினார்? அதைக் கண்டித்துக் கூட தோழர் திரு.வி.க. அவர்கள் “சத்தியமூர்த்திக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தார்கள்” என்று தனது “நவசக்தி“யில் எழுதியிருந்தார். அவ்வளவு தூரம் போவானேன்? 1919ல் ஈரோட்டில் கூட்டப்பட்ட சென்னை மாகாணச் சங்க மகாநாடு என்னும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் கூட்டத்திலும், 1920ம் வருஷம் சென்னையில் கூட்டப்பட்ட அதிதீவிர தேசியவாதிகள் மகாநாட்டிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒப்புக்கொள்ளப்பட்டு 100க்கு 50க்குக் குறையாமல் அளிப்பது என்று தீர்மானம் செய்ததோடு காங்கிரஸ் வேலைத்திட்டத்திலும் இது குறிப்பிடப்பட்டும் இருந்தது
1920ம் வருஷத்திய தேர்தல் முடிந்த உடன் வகுப்புவாதம் தேசியத்துக்கு விரோதமென்று பேசி சென்னை மாகாண சங்கத்தையும் அதிதீவிர
தேசியவாதிகள் சங்கத்தையும் முறையே ஒருவருஷ குழந்தைப் பருவத்திலும் 65 குழந்தைப் பருவத்திலும் கழுத்தைத் திருகி கொன்றாய்விட்டது
இன்னமும் இப்படி பல உதாரணங்கள் எடுத்துக்காட்டலாம் மட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எப்படி இருந்தபோதிலும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அந்தரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் பேசும்போதெல்லாம் தெரியப்படுத்தின அபிப்பிராயத்தையே தான் இப்பொழுது 17ந் தேதி சென்னை கடற்கரையில் பேசி இருக்கிறார். தனிப்பட்ட முறையிலும் அந்தரங்கத்திலும் பேசியது புரட்டாயிருக்குமானால் 17ந்தேதி கடற்கரைப்
பேச்சும் புரட்டாகவோ வஞ்சிப்பாகவோ இருக்கலாம் உண்மையாகவே பேசினார் என்றாலும் பேச்சும் செயலும் ஒன்றாக இருக்கக்கூடுமா என்பதும் யோசிக்கத் தகுந்ததாகும். ஏனெனில் சில விஷயங்கள் ஞாயம் தான் என்று பட்டாலும் செய்கையில் செய்யவேண்டிய அவசரம் வரும்போது அதனால் தங்கள் சமூகத்துக்கு நஷ்டம் ஏற்படும் என்று தோன்றினால் பிறண்டு கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு
விடுகிறது. ஆதலால் தான் இப்படியே பல தடவை ஏமாற்றி வந்திருக்கிறார்கள். இந்த ஏமாற்றங்களினால் நமக்கு ஏற்பட்டு வரும் பலன்கள் என்னவென்றால் தேர்தல்களின் பலன் என்னவானாலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியமும் நியாயமும் பலப்பட்டுக் கொண்டே வருகிறது. நாம் இன்று பதவிக்காகவே இருக்கவில்லை. நமக்கு சொந்தத்தில் அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கு சொந்தத்தில் ஒன்று இரண்டு பதவிகள் தேவையானால் அது கிடைப்பது அசாத்தியமானதல்ல. அல்லது தனிப்பட்டவர்களுடன் போட்டிக்குப் புறப்பட்டு விடுவதினாலும் பிரமாதமான வெற்றி தோல்விகள் ஏற்பட்டுவிடாது. நாம் வாதாடுவதும் உழைப்பதும் ஒரு சமூக நன்மையைக் கோரியிருப்பதாலும் அதுவும் அவசியம் செய்யவேண்டிய காரியமாயிருப்பதாலும் அது மற்றொரு சமூகத்தின் பேராசைக்கும் ஏக போக ஆதிக்கத்திற்கும் கேடாயிருப்பதாலும் இவ்வளவு தொல்லைப்பட வேண்டி இருக்கிறது
ஆனால் ஒருவிக்ஷம் என்னவென்றால் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் அந்தரங்கத்தில் பிரஸ்தாபித்தது போலவே கடற்கரைக் கூட்டத்திலும் பேசி இருப்பதால் உண்மை நிலையையும் அதனால் ஏற்பட்டுவரும் பயனையும் உணர்ந்துதான் பேசி
இருப்பார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. என்னவெனில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதியில் எதிர்த்தே தப்பு என்றும், எதிர்த்ததாலேயே காங்கிரசுக்கு விரோதமாகப் பல கட்சிகள் தோன்ற வேண்டிய அவசியமும் அவை பலப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டன.
என்றும், முன்னமேயே ஒப்புக்கொண்டிருந்தால் ஜஸ்டிஸ் கட்சி வெகு நாளைக்கு முன்னமேயே மறைந்திருக்கும் என்றும் பேசினதைத்தான் கடற்கரையிலும் பேசியிருக்கிறார்.
ஆதலால் இனியாவது உணர்ந்து அவர் பேசியபடி அதுவும், “வகுப்புவாரியாக உத்தியோகங்களைப் பிரித்துக்கொடுத்து ஒரு ஏற்பாடு
குடி அரசு- 1937 (1) 132.
செய்துகொள்ள காங்கிரஸ் என்றும் மறுத்ததில்லை” என்கிறதைக் காரியத்தில் காட்டி ஒரு ஏற்பாடு செய்து விடுவாரேயானால் வகுப்பின். பேரால் நடக்கும் கிளர்ச்சிகளுக்கு உண்மையிலேயே சாவுமணி அடிக்கப்பட்டாய் விடலாம் என்பது நமது கெட்டியான அபிப்பிராயம் ஆச்சாரியாரும் அவர் ஒரு பக்கா வகுப்புவாதி என்கின்ற பொது ஜன அபிப்பிராயத்தில் இருந்து விலக்கப்பட்டவராகக்கூடும். அப்படிக்கு இல்லாதவரை ஆச்சாரியார் வெற்றி பெற்றாலும் மந்திரி ஆகப்போவதில்லை
என்பது ஒருபுறம் இருந்தாலும் மந்திரி ஆனாலும் மானமிழந்து தற்கொலை செய்து கொண்ட நிலைமையை அடைவதைத் தவிர சர்க்காரை ஏதோ செய்து விட்டதாகவோ ஜனங்களுக்கு ஏதாவது சாதித்துவிட்டதாகவோ சிறிதும் ஆகப்போவதில்லை என்பதை இப்போதே “தீர்க்கதரிசனம்” கூறுவோம்
ஆச்சாரியாரின் 17௨ கடற்கரைப் பிரசங்கத்தை பத்திரிக்கைகளில் சிறப்பாக “தினமணியில் பார்த்த நமது நண்பர்கள் சிலர் “அப்பாகத்தைக் கத்தரித்து அனுப்பி ஆச்சாரியாருக்கும் உங்களுக்கும் ஏதாவது ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டதா?”” என்று எழுதிக் கேட்டிருக்கிறார்கள்.
மற்றும் கோவை ஜெயில்வாசத்தின் போதும் குற்றாலத்திலும் ஆச்சாரியாரை தோழர் ஈ.வெ.ரா. சந்தித்து நேர்ந்தவைகளைப் பற்றி பலர் நினைத்துக்கொண்டதையும் ஆச்சாரியாரின் இந்த பேச்சு உறுதிப்படுத்தக் கூடியதாயும் ஏற்பட்டுவிட்டது என்றாலும் நாம் இதை உண்மையான - காரியத்திற்கு செய்ய வேண்டும் என்கின்ற கருத்தில் பேசியதாக முடிவு செய்துகொள்ளவில்லை. அல்லது தோல்வி ஏற்படுமே
என்று பயந்து ஏதாவது ஒரு சந்தில் நுழைந்து கொள்ள இதை பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கருதவில்லை.
காங்கிரசோ ஆச்சாரியாரோ வெற்றி பெற்று சென்னை அரசாங்க கோட்டைக்குள் நுழைந்து மந்திரி ஆசனங்களில் அமரும் நிலை
ஏற்பட்டுவிட்டால் அதற்கு ஆக ஒரு சிறிது கூட மனங் கலங்கவோ வெட்கப்படவோ மாட்டோம். அதற்கு மாறாக “அப்பாடா நமது தலைச் சுமையை சற்று கீழே இறக்கி வைத்து இளைப்பார ஒரு சுமைதாங்கி ஏற்பட்டதே” என்றுதான் கருதுவோம். நிற்க,
“நல்ல” சமயத்தில் அதுவும் தங்களுக்கே வெற்றி, தனக்கு மந்திரி பதவி நிச்சயம் என்று கருதி தோழர் சத்தியமூர்த்தி அவர்கள்.
உயரத்திலும் அகலத்திலும் கனத்திலும் பெருகி இருக்கும் சமயத்தில் அவர் காலைவாரி விடப்பட்டு “இன்று முதல் இந்த மாகாணத்திலோ வெளியிடங்களிலோ நடக்கும் காங்கிரஸ் கமிட்டி காரியங்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை” என்று சொன்ன தோழர் ஆச்சாரியார்.
133 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அவர்கள் திடும் பிரவேசமாய் நுழைந்து உரிமையாக்கிக்கொண்டது பலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். சத்தியமூர்த்தியின் “மகத்தான. தியாகமாய்'' இருக்கலாம். ஆச்சாரியார் ஒப்புக்கொண்டதும் பொது ஜனங்களின் “பூர்வபுண்ணிய அதிர்ஷ்டவசமாய்!” இருக்கலாம். ஆனால் இப்படி ஏற்பட்டதற்கு காரணம் ஒன்று வேண்டாமா? என்று கேட்கிறோம். எவ்வளவு தான் “பலமான தலைவிதி''ப்படி ஒருவன் செத்திருந்தாலும் செத்ததற்கு ஒரு காரணம், பேதியோ, பிளேக்கோ, கொலையோ, குத்தோ, நெஞ்சடைப்போ, தண்ணீர்முரண்டலோ, சாதம் விக்கலோ என்பதைப் போன்ற ஏதாவது ஒரு காரணம் காட்டித் தான் மரண ரிஜிஸ்டரில் பதிவார்களே ஒழிய “தலைவிதி முடிந்தது” என்று எந்த ஆஸ்திகனும் பதியமாட்டான். ஆகவே மூர்த்தியார் கழிதலுக்கும் ஆச்சாரியார் புகுதலுக்கும் காரணவகை ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அது என்னவென்றால் வெள்ளைக்காரர்கள். கூட்டத்தில் சத்தியமூர்த்தியாரைப் பற்றி கேவலமாய் பேசப்பட்டு அவர். பின்னால் தாங்கள் உட்கார முடியாது என்றும் கண்டிப்பாய் சொல்லப்பட்டு விட்டது. அதோடு ஜஸ்டிஸ் கட்சியைத்தான் ஆதரிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டு விட்டது. “110 பேர்கள் காங்கிரசின் பேரால் (முடியாது) வந்தால் கூட சத்தியமூர்த்திக்கு மந்திரி பதவி கிடையாது என்று கவர்னர். சொன்னார்” என்ற வாசகம் மெய்யாகவோ பொய்யாகவோ பரவி விட்டது.
அவர் பின்னால் கூட உட்காருவது அவமானம்” என்று சில காங்கிரஸ் அங்கத்தினர்கள் கூறினதாகவும் “தலைமை மந்திரி பதவி அவருக்கு கொடுக்கக்கூடாது என்று பலர் ஆக்ஷேபித்து போட்டி போட தயார் செய்து கொண்டதாகவும் தெரிந்தது. மேலும் இவ்வளவு குளறுபடியில் “காங்கிரசுக்காரர்கள் மந்திரி ஆனாலும் ஒரு வருஷம் நிலைக்க மாட்டார்கள்” என்ற பொது ஜனவாக்கை மறுக்க சக்தியில்லாமல். காங்கிரஸ்காரர்களே “நாங்கள் மந்திரியானால் அங்கேயே ஒட்டிக்கொண்டிருக்க மாட்டோம்” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதாகவும் ஆகிவிட்டது
இந்தக் காரணங்கள் தான் சத்தியமூர்த்தியார் “மகத்தான தியாகம்" செய்ய வேண்டியதற்கும் பொது ஜனங்கள் “அதிர்ஷ்டசாலி” ஆவதற்கும் இடம் கொடுத்தது. அதாவது ''மேலே இருந்த முடவனுக்கு வெளிக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சுமந்து சென்ற எருதுக்கு அதன். திமிரால் துள்ளிக் குதிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் முடவன் கீழே விழுந்தான். விழுந்த வலியை விட வெளிக்கு போகக்கிடைத்த வசதியை முடவன் திருப்தியாக கொண்டான்" என்பது போல் நிலைமை ஏற்பட்டு விட்டது
இது இவ்வளவுடன் நிற்க தேர்தல் விஷயத்தில் ஆங்காங்கு நடக்கும் போட்டியைப் பார்த்தால் பொதுத் தொகுதிகளில் காங்கிரஸ்காரர்களுக்கு சில ஸ்தானங்கள் அதிகமாகக் கிடைக்கலாம். இது முன்னமே எதிர்பார்த்தது
குடி அரசு- 1937 (1) 134
தான். அதனாலேயே காங்கிரஸ்காரர் மொத்தத்தில் 215 ஸ்தானங்களில் மெஜாரிட்டியாக 108 ஸ்தானங்கள் அடைந்து விடுவார்கள் என்று சொல்லுவதற்கில்லை. பலமான எதிர்ப்பாளர்களாக ஆகலாம். அல்லது “தங்களுக்கும் ஒன்று இரண்டு மந்திரி ஸ்தானங்கள் கொடுத்தால் கிரமமாக நடத்திக் கொடுக்கிறோம் என்று கேட்பதன் மூலம் ஒன்று இரண்டு
மந்திரி பதவி பெறலாம். ஆனால் அதுவும் மந்திரி பதவி பெற்று அரசியலை சட்டப்படி நடத்திக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டால்தான் அவை கிடைக்கக்கூடும். அல்லது மந்திரி பதவி அடைந்து அரசியலை சட்டப்படி நடத்திக் கொடுத்தால் அவை நிலைக்கும் என்றுதான். சொல்லவேண்டுமே ஒழிய முட்டுக்கட்டை போடுவதோ அரசியலை உடைப்பதோ என்பது கடுகளவும் முடியாத காரியம் என்று சொல்லுவோம்
மொத்தத்தில் இந்தத் தேர்தல் முடிவானது இதுவரை நடந்தவைகளைப் போல் அல்லாமல் அரசாங்கத்துக்கு அதிக நிம்மதியையும் செளகரியத்தையும் கொடுக்கக்கூடியதாக ஏற்படும் என்பது நமது அபிப்பிராயம். ஏனெனில் காங்கிரஸ்வாதிகளுக்கு ஒரு மந்திரி கொடுப்பதானாலும் அடிமை முறிசீட்டு எழுதி வாங்கிக்கொண்டுதான் கொடுப்பார்கள். அதோடுகூடவே நமக்கும் (ஒரு நிம்மதியைக் கொடுக்காவிட்டாலும் இயங்குதல் அடங்கும்வரை ஒரு நாளும் கொடுக்காது என்றாலும்) அடுத்தபடிக்குச் சென்று தொண்டாற்றவாவது உதவும் என்று கருதுகிறோம்
இத்தேர்தலில் நம்மவர் சிலர் தங்கள் கவலையையும் பொறுப்பையும் கட்டிவைத்துவிட்டு அலட்சியமாய் இருக்கிறார்கள் என்பது நமக்கு
தெரிவிக்கப்படுகிறது. காரணம் என்னவென்றால், “காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குப் பாடுபடுகிறார்கள். அதற்குப் போட்டியாக ஜமீன்தாரர்களும் இரண்டொரு பெருஞ்செல்வர்களும் தங்கள் தனிப்பட்ட ஆதிக்கத்துக்குப் பாடுபடுகிறார்கள். இதில் நமக்கு என்ன வேலை? நம் செல்வமும் ஊக்கமும் நேரமும் ஏன் வீணாக வேண்டும்?” என்று கருதி இருக்கிறார்களாம்
இது உண்மையாக இருக்கலாம். அல்லது இதில் பகுதி உண்மை
இருக்கலாம். உலக போராட்டமே இதுதான். அதாவது புரோகிதர்களும் பெரும் செல்வவான்களும் உலகைக் கட்டியாள்வதற்குச் செய்யும் வெளிப்படையான காரியம்தான் மக்கள் சுதந்திரப் போராய் விளங்குகின்றது. நல்ல சம்பவமாக நம் நாட்டில் இன்று புரோகிதனுக்கும் பெருஞ்செல்வவானுக்கும் ஏற்பட்ட சண்டையானது வரவேற்கக்கூடியதாகும் ஏனெனில் அதுவே உலக பாமர மக்கள் சுதந்திரத்துக்கு மார்க்கம் செப்பனிடக்கூடியதாகும். இந்தப் போராட்டம் காரணமாகவேதான் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனிதத்தன்மை ஏற்பட மார்க்கம் ஏற்பட்டு வருகிறது. இதை விட்டு விட்டால் - புரோகிதனும் செல்வவானும் 135 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஒன்றாகிவிட்டால் பாமர மக்கள் அடிமைப்பிராயத்துக்குப் போக வேண்டியதுதான் - தாழ்த்தப்பட்ட மக்கள் மிருகப்பிராயத்துக்குப் போக வேண்டியதுதான். ஆதலால் யாருடைய தனிப்பட்ட நன்மைக்கு போராட்டம் ஏற்பட்டாலும் அதன் பயன் நமக்குக்கிடைக்க வழி இருக்கிறது. பலர் புகழும் ரஷ்யர்களுக்கு எப்படிப்பட்ட போராட்டத்தால் பயன் ஏற்பட்டது என்பதை யோசித்தால் நாம் கூறுவதில் இருக்கும் தத்துவம் விளங்காமல் போகாது. நம் கொள்கை “உண்மை சுதந்திரத்துக்கும் சுயமரியாதைக்கும் புரோகிதனும் செல்வனும் இருவரும் ஒழியவேண்டும்” என்பதுதானே? இருவரையும் ஒருங்கே எதிர்க்க நம்மால் முடியுமா? எனவே அவர்களே ஒருவருக்கொருவர் போராடிக் கொள்ளும்போது நம்கடமை என்ன? இவர்கள் இருவர்களில் யார் அதிக அபாயமானவர்களோ அவர்கள் ஆதிக்கம் ஒழிவதற்கும் மற்றவர்களுடன் சேரவேண்டியதுதானே அறிவுடைமையாகும்? ஆதலால் புரோகிதக் கூட்டத்தின் ஆதிக்கத்தைப் புதைப்பதற்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன காரியத்தைச் செய்ய வேண்டியது அவசரமும் அவசியமும் ஆன காரியமாகும்
குடி அரசு - தலையங்கம் - 24.01.1937
குடி அரசு- 1937 (1) 136
காங்கிரஸ்காரர்கன் காலித்தனம்
யாரும் மறந்துவிடமாட்டார்கள்
தலைவர் அவர்களே! தோழர்களே!
இந்தப் பக்கங்களில் நாங்கள் வருவதாகத் தெரிந்தவுடன். காங்கிரஸ்காரர்கள் வெகு தடபுடலாக அவசர அவசரமாக ஓடி எங்களைப்
பற்றி விஷமப் பிரசாரம் செய்து எங்கள் கூட்டங்களுக்கு யாரும் போகாமல். பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காலிகளுக்கு உத்திரவு செய்து கொண்டே ஓடுகிறார்களாம். அது போலவே இரண்டு ஒரு இடங்களில் எங்கள் கூட்டத்திற்கு கொஞ்ச தூரத்தில் காலிகளும் குடிகாரர்களும் நின்று கொண்டு வரும் ஆட்களைத் தடுத்து திருப்பி அனுப்பிக் கொண்டிருப்பதையும் கெட்ட வார்த்தைகள் பேசி வைவதையும் பார்த்தோம். ஒரு கூட்டத்தில் கல்லுகள் போட்டதுடன் செருப்பும் வீசி எறியப்பட்டது
அது உள்ளூர்க்காரர் மீது விழுந்து செருப்பு போட்டவனை மறுநாள். உள்ளூர்க்காரர்களே நன்றாய் செருப்பாலடித்ததாகவும் கேள்விப்பட்டேன். சென்றவாரம் நானும் தோழர் பாண்டியனும் அய்யம்பாளையத்துக்குப் போனபோதும் அங்கு சிலர் மூக்கில் கள்ளு ஒழுகக் குடித்துவிட்டு. கண்டபடி கூப்பாடு போட்டும், சிறு பையன்களைக் கொண்டு கூப்பாடு போடச் செய்தும் சுமார் 1000ம் பேர் வரை கூட்டத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தவர்கள் மீது கல்லு போட்டும் நெருப்பு சட்டி எடுத்துக் கொண்டு சாமி வந்தவர்கள் போல் ஆவேசம் காட்டி கூட்டத்தை கலைக்க முயற்சித்ததுமான காரியத்தை நேரிலேயே பார்த்தேன்.
இதைப் பார்த்த போலீஸார் எங்களை கூட்டம் நடத்தக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஆனால் மறுநாள் அந்த ஊரில் 16 காலிகளை அரஸ்ட் செய்து அந்த ஊருக்கு ஒரு அவுட் போஸ்ட் போலீஸ்டேஷனும் போட்டுவிட்டார்கள்! இந்த காலித்தனத்தின் பயனாய் அந்த ஊர்க்காரர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவைகளைப் பார்க்கும் போது காங்கிரஸ் என்பது ஒரு கொள்ளைக் கூட்டமாகவே மாறிவிட்டது என்று கருதவேண்டி இருக்கிறது. இதற்குப் பதில் செய்ய நாம் ஆரம்பித்தால் நம்மவர்கள்
தான் கஷ்டப்படுவார்கள். பார்ப்பனர்கள் சுகமாக மணிக்கு 50 மைல் 157... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
60மைல் வேகத்தில் ஊர் ஊருக்கு நெருப்பு வைப்பது போல் கிளப்பி விட்டுவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள். ஆதலால் நாம் பதில் செய்ய தயங்கவேண்டி இருக்கிறது. இவ்வளவு அயோக்கியத் தனங்களும் அற்பத்தனங்களும் செய்தும் அவர்கள் வெற்றி பெறப்போவது கிடையாது
பத்திரிகை ஆர்ப்பாட்டமும் சில்லறைக் காலித்தனமும் அல்லாமல்
ஒரு காரியமும் ஆகப் போவதில்லை.
சில இடங்களில் பார்ப்பனர்கள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்களாகவும் சர்க்கிள்களாகவும் இருப்பதாலும் சிறப்பாக மதுரை ஜில்லாவில் சில. காலிகள் மீது அவர்களுக்கு செல்வாக்கு இருப்பதாலும் அவர்கள் சுலபமாகக் காலித்தனம் செய்யச் செய்ய முடிகிறது. சின்னாளப்பட்டி என்கின்ற ஊரில் போலீஸ்காரர்கள் காலித்தனத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார்களாம். போலீஸ் மீது ரிப்போர்டு செய்யப்பட்டிருக்கிறது என்றாலும் காலித்தனத்துக்கு தோழர் பாண்டியன் பயப்படாமல் தன் ஆட்களையும் பொது ஜனங்களையும் பதிலுக்கு பதில் செய்ய விடாமல் அடக்கி 3 மணி நேரம் மீட்டிங்கை நடத்தி இருக்கிறார். பாண்டியன் ஆட்களையும் பொது ஜனங்களையும் அடக்காமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது பயங்கரமான விஷயம். அது போலவே மற்றும் பல இடங்களில் நடக்கின்றன. கிட்டத்தட்ட பாண்டிச்சேரி எலக்ஷன் போலவே நமது எலக்ஷன்களும் ஆகிவிட்டன. அடுத்த தேர்தலில் கண்டிப்பாகப் பார்ப்பனர்கள் ஊரை விட்டு ஓடிப்போகும்படியான நிலைமை ஏற்பட்டுவிடும். யார் ஜெயித்தாலும் சரி, யார் தோற்றாலும்
சரி, கண்டிப்பாக இந்த முறையை நாம் கையாள ஆரம்பித்தால் அவர்கள் அதோகதிதான். அடுத்த தேர்தல் வருவதற்குள் இன்றைய போலீசு இலாக்காவிலுள்ள பார்ப்பன ஆதிக்கம் அநேகமாகக் குறைந்துவிடும் பார்ப்பன தலைவர்களான தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தியார், மற்றும் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள் ஆகியவர்களால் ஏற்படும் பயன் இதுதான்.
இந்த அக்கிரமங்களை முடித்துவைக்காமல் யார்தான் இருப்பார்கள்?
நாம் எது எப்படியிருந்தாலும் உத்தியோகங்களை கைப்பற்றி ஆகவேண்டும்
நம் வக்கீல்களை ஆதரித்து ஆக வேண்டும். இனி மூனிசீப்புகளும் நம்மவர்களே அதிகம் வரக்கூடும்.
தோழர் மட்டப்பாரை அய்யர் நாடார்கள் கையில் குறிப்பாக பாண்டியன் கையில் திராசு கொடுத்து கருப்பட்டி நிறுக்கச் செய்வதாகச் சொன்னாராம். அதாவது நாடார்களை மரமேறி கள்ளும் பதனி (தெளிவும் இறக்கி கருப்பட்டி காய்ச்சி விற்கும்படி செய்யப்போகிறாராம் விளக்கமாக சொல்லவேண்டுமானால் அவரவர்கள் ஜாதித்தொழிலுக்கு அனுப்புகிறோம் என்பதாகும். மட்டப்பாரை அய்யர் அப்படிச் சொன்னதைப்
குடி அரசு- 1937 (1) 138
பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பொழுதாவது நாடார் ஜாதிக்கு சுயமரியாதை உணர்ச்சி ததும்பாதா என்பதுதான். மட்டப்பாரை அய்யர் பேசியது கொஞ்சம், மற்றும் பல பார்ப்பனர்கள் பேசுவதும் அந்த அதிகாரிகள் ஆணவமாய்ப் பேசி செய்யும் கொடுமைகளும் உங்களுக்கு தெரியாது. அவற்றை உணர்ந்துதான் நாங்கள் பாடுபடுகிறோமே ஒழிய, மற்றபடி எங்களுக்கு எந்த உத்தியோகம் பதவி வேண்டும்?
பார்ப்பனரல்லாத மக்களுக்கு உண்மையிலேயே சுயமரியாதை உண்டாகவேண்டும் என்பதற்கு ஆகவே பாடுபாடுகிறோம். இந்த தேர்தல்கள் பதவிகள், உத்தியோகங்கள்தான் சுயமரியாதையை கிளப்பிவிடக்கூடியதும் உண்டாக்கக் கூடியதுமாய் இருந்து வருகிறது
நமது மந்திரிகள் இரண்டொருவர் தவிர மற்றவர்கள் பார்ப்பன. ஒற்றர்களாக இருந்துவிட்டார்கள். தோழர் ராஜனுக்கு பார்ப்பனர்கள்தான். அதிக சிநேகம். அவர்களைத்தான் அவர் நம்பி ரகசியத்தில் அவர்களுக்கு அனேக நன்மைகள் செய்து வந்தார். தோழர் ரெட்டியாரோ சொல்ல வேண்டியதில்லை. அவருக்குப் பதில் வந்தவரோ உங்களுக்கே தெரியும் இப்படிப்பட்ட மந்திரிகளை உள்ள கட்சி எப்படி உருப்படி ஆகும்? நமக்கு பத்திரிகை இல்லை, பிரசாரம் இல்லை, ஆங்காங்கு ஜில்லாக்களில் உள்ள தலைவர்கள் கட்சிக்கு துரோகம் செய்வதையும் தங்கள் சுயநலத்தையுமே பிரதானமாய்க் கருதி வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் பார்ப்பனர்கள் நல்ல புத்தி கற்பித்தார்கள். நமக்கு விரோதமான பார்ப்பனர்களும் பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் நம் மந்திரிகளுக்கு அத்தியந்த நண்பர்களாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்தே பிரசாரம் நடத்தாமலும் பத்திரிகை நடத்தாமலும் இருந்தார்கள். ஆனால். அதன் பயனை இப்போது அடைகிறார்கள். நாம் என்ன செய்யலாம்? தோற்றாலும் வெற்றி பெற்றாலும் பார்ப்பனர்களுக்கு 2000ரூபாய் செலவு என்றால் மந்திரி கூட்டத்துக்கு 20000 ரூபாய் செலவும் எதிர். நீச்சமூமான வேலையாக இருக்கிறது. நமது பாமர மக்கள் விவரம் தெரியாதவர்கள் பார்ப்பனர்கள் விஷமப் பிரசாரத்தை நம்பி நமக்கு எதிர்ப்பாய் இருக்கிறார்கள். விவரம் தெரிந்தவர்கள் மந்திரிகள். நடந்துகொண்ட காரியத்துக்கு ஆக விரோதமாகப் பேசுகிறார்கள். 100க்கு
3 பேர்களாய் உள்ள பார்ப்பன சமூகம் எவ்வளவு தொல்லை விளைவிக்கிறார்கள் பாருங்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் தாங்கள் தோற்றுவிட்டால் வங்காளக்குடாக் கடலில் விழுக வேண்டும் என்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் தாங்கள் தோற்றுவிட்டால் தற்கொலை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.
நம்மவர்களுக்கு என்ன உணர்ச்சி இருக்கிறது? தோழர் பொப்பிலி ராஜா இல்லாதிருந்தால் ஜஸ்டிஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறதாக ஜனங்களுக்கு தெரியவே முடியாமல் போயிருக்கும். உங்களுக்கு
159 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ரோஷம் வேண்டும்; சுயமரியாதை உணர்ச்சி வேண்டும். எதற்காக ஜஸ்டிஸ் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் போராடுகிறது என்பதை உணர வேண்டும்
நாம் மந்திரிகளை ஆதரிக்கிறோம் என்றும் பணத்துக்காக மந்திரிகளுக்கு வேலை செய்கிறோம் என்றும் கில அயோக்கியர்கள்
பேசிக் கொண்டு பார்ப்பனர்களின் உள்ளங்காலை நக்குகிறார்கள். யார்: அவர்கள்? நாம் பணம் கொடுக்காததால் நம்மைவிட்டு ஓடிப்போன கூலிகளே ஒழிய மற்றபடி எவ்விதத்திலும் சுயமரியாதையோடு. இருந்தவர்கள் அல்ல. அவர்கள் யோக்கியதை சீக்கிரத்தில் வெளியாகப் போகிறது. நாம் மந்திரிகளை பணம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் ஏன்? பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பேரால் இருக்கும் மந்திரிகள் ஆனதால்தான். இதே தோழர் கனம் முத்தைய செட்டியாரை நாம் கண்டித்தோம்; அவர் பார்ப்பனர்களின் கையாயுதமாய் இருக்கிறார் என்று கண்டித்தோம். இது போலவே தோழர்.
டாக்டர் சுப்பராயன் அவர்களையும் மூன்பு பார்ப்பனர்களின் கையாளாய் இருக்கும்போது கண்டித்தோம்; பிறகு நம் கையாளாக ஆனபோது ஆதரித்தோம். இப்போது மறுபடியும் அவர் பார்ப்பனர் கையாளானமையால் கண்டிக்கின்றோம். நமக்கு ஆட்களின் தனிப்பட்ட முறையில் வெறுப்பு
விருப்பு இல்லை. நம் சமூகத்துக்கு எவ்வளவு அனுகூலமோ எவ்வளவு கேடில்லாதவரோ என்று பார்த்து ஆதரவு செய்யவேண்டியது நம் கடமை: தோழர் டாக்டர் சுப்பராயனை இப்போது பார்ப்பனர்கள் ஆதரிக்கவில்லையா?
மற்றும் நம்மிடம் இருந்து பார்ப்பனர்களை காங்கிரசை, காந்தியை, ஆச்சாரியாரை சின்னம் சின்னமாய்ப் பேசிக் கண்டித்த ஆட்களை பார்ப்பனர்கள் ஆதரிக்கவில்லையா? இந்த ஆட்களிடம் பணமும்
கூலியும் வாங்கிக்கொண்டா பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள்? அவர்கள். சமூகத்துக்கு தொண்டுசெய்ய ஆட்கள் கிடைத்தால் போதுமென்று கூலிகொடுத்து சோறு போட்டு ஆதரிக்கிறார்கள். ஆதலால் நாம் நம் சமூகத்துக்கு ஆதரவாகவோ வெளிப்படையான எதிரிகளாகவோ இல்லாதவர்களை நம்மால் கூடியவரை ஆதரிக்க வேண்டியது கடமை ஆகும்
பார்ப்பனக் கூட்டத்தில் சேராத ஒவ்வொருவரும் நம் ஆதரிப்புக்கு ஆளானவர்களேயாவார்கள்.
பார்ப்பனர்களோ அவர்களது கூலிகளோ புதியதாய் கூலிகளாகப் பட்டவர்களோ நம்மை வைகிறார்கள் என்று நாம் லக்ஷியம் செய்யக் கூடாது என்பதை தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். இந்தக் கூட்டத்தை நாம் நாளைக்கு மறுபடியும் கூலிக்கமர்த்திக் கொள்ளலாம். அதற்கு ஆகப் பயப்பட வேண்டியதில்லை
குடி அரசு- 1937 (1) 140
நிற்க, தோழர் மட்டப்பாரை அய்யர் அவர்கள் ஜஸ்டிஸ் மந்திரிகள் கதர்கட்டவில்லை என்றும், பார்ப்பனரல்லாதார் தான் கதர் நூற்கிறார்கள் என்றும் ஆதலால், தாங்கள் பார்ப்பனராயிருந்தும் ஆதரிப்பதாகவும் சொன்னாராம்.
பார்ப்பனரல்லாதார்கதர்நூற்பதாலேயேநாம் அதை ஆதரிக்கவேண்டுமா என்று கேட்கிறேன். அது (கதர்) ஒரு முட்டாள் தனமான காரியமாகும் மக்களை ஏமாற்றும் சாதனமாகும். அதனால் நாட்டுப்பஞ்சு ஏராளமாய் வீணாகின்றது. ஏழைகளுக்கு பணம் ஏராளமாய் வீணாகின்றது. ஒரு ஏழை தினம் 14 மணி நேரம் வேலை செய்து 12 தம்பிடி சம்பாதிப்பதற்கு மற்றொரு ஏழை ஒரு கஜம் துணி 2% அணாவுக்கு வாங்குவதற்குப் பதிலாக 12% அணாவுக்கு வாங்க வேண்டியதாகிறது. இது “பசுவைக்கொன்று செருப்புதானம் கொடுத்த பலன்” போன்ற தர்மமே தவிர, இதில் புத்திசாலித்னமோ நல்ல எண்ணமோ கிடையாது.
தாசித்தனம் பார்ப்பனரல்லாதார் தான் வெளிப்படையாகச் செய்தார்கள். ஆதலால் மந்திரிகள் பார்ப்பனரல்லாதாராயிருப்பதால் அதை ஆதரித்திருக்க வேண்டுமா? கதரை பார்ப்பனர்கள் ஆதரிப்பது போல் தான் தோழர் சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்கள் தாசிகள் பார்ப்பனரல்லாதார்தானே என்று சட்டசபையில் சொல்லி வாதாடினார்கள். நம் மந்திரிகள் அதற்குப் பயப்படாமல் தாசித்தனத்தை - பொட்டுக்கட்டுவதை ஒழித்தார்கள் அதனால் தாசிகள் அவர்கள் மக்கள் ஓட்டுகள் கிடையாமல் போகலாம் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.
மற்றும் தோழர் மட்டப்பாரை அய்யர் அவர்கள் உத்தியோகங்களுக்கு சம்பளம் அதிகமென்றும் ஜஸ்டிஸ்காரர்கள் இப்படிச் செய்துவிட்டார்கள் என்றும் பழி கூறினாராம்.
இது அக்கிரமமான வெறுக்கத்தக்க பழியாகும். இன்றுள்ள மந்திரிகள். சம்பளம் உள்பட 100க்கு 99 பங்குள்ள அதிக சம்பளமும் கொள்ளைச் சம்பளமும் காங்கிரஸ்காரர்கள் ஏற்படுத்தினது. ஜஸ்டிஸ் மந்திரிகள் பதவிக்கு வரும்முன் ஏற்படுத்திக் கொண்டவையாகும்
காரணம் பார்ப்பனர்களே உத்தியோகத்தில் இருந்தார்கள். காங்கிரசின். வேலையும் உத்தியோகம் கேட்பதும், சம்பளம் உயர்த்துவதும் ஆகிய இரண்டு காரியமே முக்கியமானதாக இருந்தன. ஆதலால் பார்ப்பனர்கள் வெள்ளைக்காரர்களுக்கு உள் ஆளாய் இருந்து தாங்கள் இருந்த எல்லா. உத்தியோகத்துக்கும் சம்பளங்களை ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் பெருக்கிக் கொண்டார்கள். உதாரணமாக ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வரும் முன்பே காங்கிரசும் சர்க்காரும் சேர்ந்து 1918ம் வருஷத்தில் 3% கோடி ரூபாயாக இருந்த சம்பளத்தை 1921ல் 6% கோடி ரூபாயாக ஆக்கிக் கொண்டார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கு அவைகளில் அனேக காரியங்கள் அதிகாரமில்லாமலே சட்டம் செய்து வைத்துவிட்டார்கள். ஆதலால் W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சம்பளக் கொள்ளைக்கும் காரணம் காங்கிரசேயாகும். ஜஸ்டிஸ் கட்சியார் பதவிக்கு வந்ததும் சம்பளக் கொள்ளையை கண்டித்து தீர்மானங்கள் செய்து அவற்றைக் குறைப்பதற்கு கமிட்டிகளும் நியமித்தார்கள். பார்ப்பனர்களும் சர்க்காரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் தங்களது சம்பளங்களில் 1000ரூபாய் வீதம் குறைத்துக் கொண்டார்கள்.
காங்கிரஸ்காரர்கள் அநேக தீர்மானங்களில் வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளங்கள் போலவே தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆகையால் வரியை உயர்த்தி ஊரைக் குட்டிச்சுவராக்கியவர்கள் காங்கிரசும் பார்ப்பனர்களுமேயாகும்
குறிப்பு: மதுரை மாவட்டத்தில் 25.01.1937 ஆம் நாள் பட்டி வீரன்பட்டியிலும், 26.01.1937ஆம் நாள் தேவதானப்பட்டியிலும், 27.01.1937 ஆம் நாள் நிலக்கோட்டையிலும் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி' தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 31.01.1937
குடி அரசு- 1937 (1) 142
காங்கிரசின் தோல்வி
காங்கிரசானது எவ்வளவுதான் பொய்ப்பிரசாரங்கள் செய்து பாமர மக்களை ஏமாற்றி வந்த போதிலும் எவ்வளவுதான் கட்டுப்பாடாக
எல்லாப் பார்ப்பனர்களும் எல்லா பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து
சூழ்ச்சி செய்து வந்திருந்த போதிலும் கடைசியாக புதிய சீர்திருத்தத் தேர்தலில் நல்ல பரிசுத்தமான தோல்வியை அடைந்து விட்டது என்பதை காங்கிரஸ்காரர்களே ஒப்புக்கொண்டு விட்டார்கள். இந்தத் தோல்வியை அறிவதற்கு யாரும் தேர்தல் வரை காத்திருந்து தேர்தல் முடிவைக்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமலே முடிவு வெளியாகிவிட்டது இந்த விபரத்தை ''தினமணி'” பத்திரிகையில் கண்டபடியே மற்றொரு
புறம் பிரசுரித்திருக்கிறோம் அதாவது இந்தியாவில் உள்ள 11 மாகாணங்களுக்கும் உள்ள சட்டசபைகளின் அசம்பளி என்னும் கீழ் ஸ்தானங்களுக்கு மொத்த ஸ்தானங்கள் 1585 ஆகும். அவற்றிற்கு காங்கிரஸ்காரர்கள் போட்டி போட முன் வந்திருப்பது 758 ஸ்தானங்களுக்கு மாத்திரமேயாகும் 758 ஸ்தானங்களிலும் வெற்றி பெற்றாலும் அது மொத்த ஸ்தானங்களில் பகுதியைவிடக் குறைந்த ஸ்தானங்களேயாகும். ஆகையால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்
மொத்தத்தில் 11 மாகாணங்களில் 5 மாகாணங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் அபேக்ஷகர்களை நிறுத்தி இருக்கும் ஸ்தானங்கள் மிக மிகக் குறைவாகும்.
வங்காளத்தில் மொத்த ஸ்தானங்கள் 250க்கு 47 ஸ்தானங்களுக்கே போட்டி போட்டு 45 ஸ்தானங்கள்தான் எதிர் பார்க்கிறார்கள். அதுபோலவே பஞ்சாப் மாகாணத்திலும் 175 மொத்த ஸ்தானங்களில் காங்கிரஸ்காரர்கள் 30 ஸ்தானங்களுக்கே அபேக்ஷகர்களை நிறுத்தி 25 ஸ்தானங்கள்தான் வெற்றி பெறலாம் என்று கருதுகிறார்கள்.
சிந்து மாகாணத்தில் 60 மொத்த ஸ்தானங்களில் 14 அபேக்ஷகர்களை நிறுத்தி 12 ஸ்தானங்கள்தான் வெற்றி பெறலாம் என்று கருதுகிறார்கள்.
அஸ்ஸாம் மாகாணத்திலும் 108 பொது ஸ்தானங்களில் 40 ஸ்தானங்களுக்கே அபேக்ஷகர்களை நிறுத்தி 37 ஸ்தானங்களே எதிர்பார்க்கிறார்கள். W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மற்ற மாகாணங்களிலும் 100க்கு 4, 5, 6 ஸ்தானங்களே தாங்கள் மெஜாரிட்டியாய் வரலாம் என்று எதிர் பார்க்கிறார்களே ஒழிய தாராளமாகக் குறிப்பிடத் தகுந்த மெஜாரிட்டி ஒரு மாகாணத்திலும் எதிர்பார்க்கவில்லை.
பீகார் ஒன்றில் மாத்திரம் ரூபாய்க்கு 10 அணா வீதம் வெற்றி கிடைக்கலாம் என்று கருதுகிறார்கள்.
நமது சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை மொத்தம் 215 ஸ்தானங்களுக்கு 140 ஸ்தானங்களுக்கே காங்கிரஸ்காரர்கள் போட்டி போட்டிருக்கிறார்கள். பாக்கி 75 ஸ்தானங்களுக்கு ஆட்களை நிறுத்தவேயில்லை. ஆகவே காங்கிரசுக்கு எதிராக இப்போதே 75 ஸ்தானங்கள் போட்டி இல்லாமல் வெற்றி பெற்றுவிட்டன. அவைகளுக்கு சிலவற்றிற்கு போட்டி இருக்கலாம் என்றாலும் அப்போட்டிகள் வகுப்புவாதத்தை ஒழிக்கவோ ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்கவோ, சீர்திருத்தத்தை உடைக்கவோ: ஏற்பட்டவை அல்ல
ஆதலால் இப்பொழுதே ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைக்கு அனுகூலமாக 75 ஸ்தானங்கள் கிடைத்துவிட்டன. பாக்கி உள்ள 140 ஸ்தானங்களிலும் காங்கிரசுக்காரர்கள் 120 ஸ்தானங்கள் தான் எதிர்பார்க்கிறார்கள். இந்த 120 ஸ்தானங்கள் அவர்கள் எதிர்பார்ப்பது போல் கிடைத்தாலும் 12% ஸ்தானங்கள்தான் மெஜாரிட்டி கிடைக்கலாம். ஆனால் இதுவாவது எதிர்பார்த்தபடி கிடைக்குமா? என்பது மிகவும் யோசிக்கத்தக்கதாகும்.
தெலுங்கு நாட்டில் அவர்கள் நிறுத்திய அபேக்ஷகர்களில் பாதிப்பேர்கள் கூட எதிர்பார்க்க முடியாது என்பதை தெலுங்கு தேசத்துக் காங்கிரஸ்வாதிகளே ஒப்புக்கொண்டுவிட்டார்கள். மலையாளத்தில் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களில் பகுதியே கிடைக்கலாம்
தமிழ்நாட்டில் 2 ஜாயிண்டு ஓட்டுகள் உள்ள இடங்களில் எல்லாம் காங்கிரசுக்கு எதிரான ஜஸ்டிஸ் கட்சிக்கோ வேறு கட்சிக்கோ ஒரு ஸ்தானம் கிடைத்துவிடும். மற்ற ஸ்தானங்களிலும் மொத்தத்தில் ஒவ்வொரு ஜில்லாக்களிலும் பகுதிக்குக் குறைவில்லாமல் காங்கிரசின்: எதிர்க்கட்சிகளுக்கு ஜெயம் கண்டிப்பாய் கிடைக்கக்கூடும் உதாரணமாக கோயமுத்தூர் ஜில்லாவை எடுத்துக்கொண்டால் ஈரோட்டில் பட்டக்காரருக்கு ஜெயம் என்று இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம். கோவையில் சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் அவர்களுக்கும் கோபியில் சுப்பிரமணிய கவுண்டர் அவர்களுக்கும் முஸ்லீம்களில் கான்சாகிப் ஷேக்தாவுது சாயபு அவர்களுக்கும் அவ்வபேக்ஷகர்கள் தூங்கிக்கொண்டிருந்தாலும் ஜெயம் கிடைக்குமென்று சொல்லலாம். இது போலவே திருநெல்வேலி முதல் சென்னை வரையில்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் பகுதிக்கு மேல் இப்போதே உறுதி சொல்லக்கூடிய நிலையில் தேர்தல் முடிவு இருந்து வருகிறது
குடி அரசு- 1937 (1) 144
போட்டியில்லாமல் வெற்றி பெற்ற ஸ்தானங்கள் என்பவைகளிலும் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கு மொத்தத்தில் எவ்வளவு ஸ்தானங்களுக்குப் போட்டி இல்லையோ அவ்வளவு ஸ்தானங்களுக்குத்தான் காங்கிரசிலும் போட்டி இல்லாமல் வெற்றி கிடைத்திருக்கிறது
காங்கிரசுக்கு இந்த தேர்தல்களில் என்ன வெற்றி என்றால் 140 ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் போட்டி போட்டதில் 40 ஸ்தானங்களுக்கு மேல் பார்ப்பனர்களை காங்கிரஸ் நிறுத்திவைத்து பெரும்பாலும் மற்றவர்கள். பணத்தில் போட்டி போட்டு பார்ப்பனர்கள் எல்லோரும் வெற்றி பெறும்படியாக முயற்சிக்கிறது. இதுதான் காங்கிரசுக்கு நல்ல வெற்றியாகும். இதைப்பற்றி முன்னமேயே சென்ற வாரத்திற்கு முன்பே குறிப்பு காட்டியிருக்கிறோம் அதாவது 100க்கு 3 வீத உரிமையுள்ள ஜனத்தொகைக்காரர்கள் 140க்கு 40 என்றால் 100க்கு 30 வீதம் நின்று இருக்கிறார்கள். வெற்றி விஷயத்திலும் பார்ப்பனர்கள் ஏறக்குறைய முக்காலே அரைக்கால் வாசிப்பேர்கள் வெற்றி பெற சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
பார்ப்பனர்கள் ஓட்டுகளே ஏராளமாய் மெஜாரிட்டியாய் உள்ள யூனிவர்சிட்டி தொகுதிக்கு தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அபேக்ஷகராய் நின்றுகொண்டு அறிக்கை விடுகிறார். அதாவது தான் ஏழை என்றும், வீடுவீடாய் வந்து ஓட்டுக் கேட்க முடியாதென்றும், தபால் கார்டு போட்டாலும் அதிகப் பணம் செலவாகும் என்றும், பத்திரிகை அறிக்கையைப் பார்த்து தனக்கு எல்லாரும் ஓட்டுப்போட வேண்டும் என்றும், காங்கிரசானது அப்பேர்ப்பட்ட மகத்தான சபை ஆனதால் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் கருத்து என்ன என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம் அதாவது தானும் பார்ப்பனர், ஓட்டர்களும் மெஜாரிட்டி பார்ப்பனர்கள், எதற்கு ஆக நேரில் சென்று ஓட்டு கேட்க வேண்டும், காங்கிரசு பார்ப்பனர்கள் சொத்துதானே என்கின்ற அஹம்பாவத்தின் பிரதிபிம்பமே அல்லாமல் இவ்வறிக்கையின் தத்துவம் வேறு என்ன? என்று கேட்கிறோம்.
இதைப்பார்த்து தோழர் சிவகாசி சொக்கலிங்கம் காப்பி அடிக்கிறார். பயன்படுமா என்பதை கடைசியில் பார்க்க இருக்கிறோம் இதே தோழர் ராஜகோபாலாச்சாரியார் தன் விஷயத்துக்கு மாத்திரம் ஏழையானால் மற்ற ஏழை அபேக்ஷகர்கள் விஷயத்தில் ஏன் அறிக்கை இட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது என்று கேட்டால் என்ன மறுமொழி சொல்லுவார்? மற்ற எத்தனை ஏழை அபேகடுகர்களுக்கு இவர் ஏன் ஊர் ஊராய்ச் சுற்றி பிரசாரம் செய்யவேண்டும்? ஆகவே “உங்கள் சொத்து எங்கள் சொத்து, எங்கள் சொத்து எங்கள் சொத்து" என்று ஒரு வைசிய பழமொழி உண்டு. அதுபோல் பார்ப்பனர்.
145 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஓட்டுகள் பார்ப்பனர்களுடையது, பார்ப்பனரல்லாதார் ஓட்டுகள் பார்ப்பனருடையது என்றுதான் நம் பார்ப்பனர்களும் கருதி இருக்கிறார்கள்.
எப்படி இருந்த போதிலும் பொது நிலைமையை நோக்கின் இன்று காங்கிரசுக்கு வெற்றி இல்லை என்பதை இப்போதே எழுதி வைத்துவிடலாம். இதை 4, 5 வாரத்துக்கு முன்பாகவே “குடியரசு” தலையங்கம் ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறோம். 110 ஸ்தானங்கள் காங்கிரசின் பேரால் பெற்று காங்கிரஸ் கொள்கைப்படி இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு அரசியலை உடைப்பதற்கு சட்டசபைக்கு போக வந்தோம்” என்று அவர்கள் எல்லோரும் சொல்லிவிட்டு “இந்த அரசாங்கத்துக்கும் அரசருக்கும் அரச சந்ததிக்கும் அரசாங்க சட்டத்துக்கும் கீழ்ப்படிந்து பக்தி விசுவாசமாய் நடக்கிறோம்'' என்று சொல்லி காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி அடைந்து சிம்மாசனத்தில் உட்காருவது என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பதை
ஒத்தது என்று எழுதியிருக்கிறோம். அதை மெய்ப்பிக்க இன்று காங்கிரஸ் பத்திரிகையே தெரிந்தோ தெரியாமலோ தங்கள் நிலைமையை குறிப்பிட்டு விட்டதானது குறிப்பிடத்தக்கதேயாகும்
இந்த நிலையில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தங்கள் கைக்கு ராஜாங்கம் இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடப் போவதாகவும் எல்லா அதிகாரங்களையும் தாங்களே கைப்பற்றிப் பார்ப்பனரல்லாத அதிகாரிகளைத் தூக்கில் போடப்போவதாகவும் சவடால் அடிக்கிறார். சொன்ன வாய் மூடுவதற்குள் தோழர் சத்தியமூர்த்தியாரைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார்.
மறைந்திருந்து அம்பு எய்து ஒழித்தே விட்டார். தோழர் முத்துரங்க முதலியாரும் காங்கிரஸ் கமிட்டித் தலைவரே ஒழிய, அவர் விலாசம்
பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் கிடைக்க முடியாததாகப் போய் விட்டது. இவ்வளவும் ஒருபுறமிருக்க எந்தக் காரணத்துக்காக ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று சத்தியமூர்த்தியாரும் ஆச்சாரியாரும் சொன்னார்களோ, அந்தக் காரணத்தை அதாவது உத்தியோகங்களையும் பதவிகளையும் சகல வகுப்புகளும் அடையும்படி செய்யவேண்டும் என்பதற்காக ஒழிக்க வேண்டும் என்றார்களோ அதை இப்பொழுது மாற்றிக்கொண்டு காங்கிரஸ் எப்போதும் இந்தக் கொள்கைக்கு அதாவது “வகுப்புவாரியாக உத்தியோகங்களைப் பிரித்துக்கொடுத்து ஒரு ஏற்பாடு செய்துகொள்ள காங்கிரஸ் என்றும் மறுத்ததில்லை” என்று ஆச்சாரியாரே சொல்ல வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது ஆகவே காங்கிரஸ் தனது கொள்கைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து கீழே இறங்கிவிட்டது என்றாலும் அப்படியாவது தேர்தலில் வெற்றி பெறுதலோ. பதவி அடைவதோ என்பது எதிர்பார்க்க முடியாததாகவே போய்விட்டது
குடி அரசு - தலையங்கம் - 31.01.1937
குடி அரசு- 1937 (1) 146
“அடே குட்டிச்சுவரே அரைக்கமுதை வயதாகி இன்னம் சாமி விளையாட்டா???
நமது சின்னஞ் சிறு குழந்தைகள் “சாமி” வைத்து விளையாடுவதைப் பார்த்திருக்கின்றோம். சிறு கற்களை இரண்டு வரிசையாக அடுக்கி அதன்
மேல் குச்சிகளைப் பரப்பி, அதற்கு மேல் துணி, இலை, காகிதம் முதலியவைகளைப் போட்டு மூடி, ஓர் அறை மாதிரியாகச் செய்வார்கள். அதன் பிறகு சிறு ஓடுகளை முக்கோணமாகத் தேய்த்தோ அல்லது பொம்மைகளையோ அவ்வறைகளுக்குள் 'சாமி”களாக வைத்து, ஒரு குழந்தை அர்ச்சகராகவும், மற்றக் குழந்தைகள் “பக்தர்"களாகவும் நடிப்பதுண்டு. இதுதான் குழந்தைகளினுடைய கோயில்கள். இவைகளுக்குத் திருவிழாக்களும் உண்டு. சிறு காய்களில் துடைப்பக் குச்சிகளைக் கோர்த்து தேர்மாதிரி செய்து அடியில் கூச்சிகளைப் பரப்பி அதன் மேல் முக்கோணமாய்த் தேய்க்கப்பட்ட ஓட்டுத்துண்டை வைத்து, இழுத்துக்கொண்டு போவது உண்டு. அந்தக் கூட்டத்தில் மிகவும் சிறு குழந்தையாய் இருப்பவர்கள் ஓட்டைத் தகரங்களை “மேள'மாக உபயோகப்படுத்துவார்கள். “இந்துக்கள்!” என்றும், “சைவர்கள்” “வைஷ்ணவர்கள்” என்றும் சொல்லிக்கொள்ளும் எல்லாருடைய வீடுகளிலும் பெரும்பாலும் குழந்தைகள் இவ்வாறு விளையாடுவது உண்டு. ஆனால் இப்போது பட்டணங்களிலுள்ள
'இந்து'க் குழந்தைகள் இவ்வாறான விளையாட்டு விளையாடுவது கிடையாது. அவர்கள் பட்டண வாழ்க்கையில் அதிகமாய்க் காணப்படும் மோட்டார், ரயில் முதலியவைகள் மாதிரி வைத்துவிளையாடுகிறார்கள். ஏனெனில் கிராமத்துக் குழந்தைகளுக்கு கடவுளின் மேலிருக்கும் அவ்வளவு 'பக்தி” பட்டணத்துக் குழந்தைகளுக்கு இருக்கச் சந்தர்ப்பம் கிடையாதல்லவா? “சாமி” வைத்து விளையாடும் குழந்தைகள், பெரியோர்களாகிய நாம் செய்வதைப் பார்த்துத்தான் செய்கின்றன. ஆனாலும் அக்குழந்தைகள் விளையாடுவதை ஓரளவுதான் நாம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்துக் கொள்ளவும் முடிகிறது உதாரணமாக, மிகவும் “செல்ல”ப்பிள்ளையாய் வளரும் ஒரு குழந்தையை 6 முதல் 8 அல்லது 10வது வயது வரை “சாமி” வைத்து விளையாடுவதைப் பொறுத்துக்கொண்டிருப்போம். சாதாரணமாக 3 W ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வயது முதல் 6 வயது வரையில்தான் இவ்வித விளையாட்டுகளுக்கு மதிப்பும் இருக்கும். அதுவும்கூட ஓர் அளவு வரையில்தான். 7 வயதுக் குழந்தை “சாமி” விளையாடுவதற்காக பள்ளிச் சம்பளத்துக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கற்பூரமும் கலர் காகிதமும் வாங்கினால், கன்னத்தில் ஒரு அறை கொடுத்துக் காதைப்பிடித்து இழுத்து அப்புறம் விடுவதைப் பார்த்திருக்கிறோம். அல்லது 13 வயதுப் பையன் “சாமி” விளையாட ஆரம்பிப்பதைக் கண்டோமானால், “அடே, குட்டிச்சுவரே அரைக்கழுதை வயதாகி இன்னம் சாமி வைத்து விளையாட வெட்கமில்லையா?” என்று கடுத்த முகத்தோடு கேட்கிறோம். அதையும்
மீறிச் செய்தால் அக்குழந்தைகள் சிறு சிறைச்சாலை வாழ்க்கையைக்
கூட அநுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இச்சிறு அனுபவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால், மேலே சொன்ன எல்லா விஷயங்களிலும் அக்குழந்தைகளே நம்மைத் திருப்பிக் கேட்குமாகில் நாம் என்ன சொல்வோம்? அவர்களை “அடே அதிகப் பிரசங்கி என்பது தவிர உண்மையான பதில் ஏதாவது நம்மால் சொல்ல முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். வருஷா வருஷம் நமது நாட்டில் நூற்றுக்கணக்காக கோயில்களும் தேர்களும் கட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான உத்ஸவங்களும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவுக்கும் லட்சக்கணக்கான ஜனங்கள் போய்க் கொண்டே இருந்தால், இன்னும் சில வருஷங்களில் இந்தியாவினுடைய செல்வமெல்லாம் குட்டிச் சுவர்களிலும், குழவிக் கற்களிலும் குடை பீதாம்பரங்களிலும் தான் இருக்குமேெயொழிய ஜனங்களுக்குப் பிரயோஜனப்படக்கூடிய முறையில் ஒரு தம்பிடி கூட இருக்காது என்பது திண்ணம்! இன்னும், மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், சீரங்கம், திருச்செந்தூர், திருவானைக்காவல் முதலிய ஊர்களில் ஜனங்களுக்கு வீடு கட்டிக் கொள்ளக் கூட இடமில்லாதபடி சரிபாதி ஊரைக் கோவில் அடைத்துக் கொண்டிருக்கிறது. உயிரில்லாச் சாமி ஒன்றுக்கும், உயிரற்ற
“சாமிகள்” தோசை, வடை, புளியோதரையை விழுங்கி விட்டு ஜட்காவண்டிக் குதிரை புரளுவது மாதிரி நெளிந்து கொண்டு ஏப்பம் விட்டு மல்லாந்து கிடப்பதற்கு மாத்திரம் ஊரில் பாதியை அடைத்துக் கோவில் கட்டினால் நமது புத்திசாலித் தனத்தைக் கண்டு மேல் நாட்டுப் பெண்மணிகள் புஸ்தகம் எழுதாமல் வேறு என்ன செய்வார்கள்?
நமக்கும் குட்டிச் சுவர் மாதிரி 5 கழுதை வயது ஆயிற்றேயொழிய,
“சாமி” விளையாட்டு மாத்திரம்போகவே இல்லை. திருப்பதி போகலாமா, திருச்செந்தூர் போகலாமா என்பதும், காசி போய்விட்டு ராமேஸ்வரம் போகலாமா, அல்லது ராமேஸ்வரம் போய் விட்டுக் காசி போகலாமா வென்பதும், அநுமார் வாகனத்திற்குத் தங்கமுலாம் பூசலாமா அல்லது
தங்கத் தகட்டினாலேயே செய்து விடலாமா என்பதும், ஜம்புகேஸ்வரருக்குப்
குடி அரசு- 1937 (1) 148
பூச்சக்கரக் குடை செய்வதற்குப் பட்டு விசேஷமா வெல்வட் விசேஷமா என்பதும், மாரியம்மனுக்கு வெள்ளியில் கண்கவசம் செய்யலாமா தங்கத்தில் செய்யலாமா, கல்யாண உற்சவம் வருஷத்துக்கு இரண்டு தடவை நடத்தலாமா என்பதுமே பெரிய ஆராய்ச்சியாயிருக்கிறதே தவிர, நமது நித்திய வாழ்க்கைக்குச் செளகரியமான ஏற்பாடுகளைச் செய்வதில் நமது யுத்தியானது சிறு பிள்ளைகளை விட ஆயிர மடங்கு கீழாகவே தான் இருக்கிறது. போன வருஷம் நடந்த கல்யாணம் என்ன ஆயிற்று? எந்த கோர்ட்டில் ரத்து ஆயிற்று? அல்லது ஓடிப்போயிற்றா? தம்பதிகளில் ஏதாவது ஒன்று செத்துப்போயிற்றா என்று யோசிப்பதில்லை.
பள்ளிக்கூடத்துச் சம்பளத்தை யெடுத்துக் கற்பூரம் வாங்கி தன்: சாமி”க்குக் கொளுத்தும் பிள்ளையாண்டானுக்கும், ஆஸ்பத்திரி, கல்விச்சாலை, சுகாதாரம் முதலியவைகளுக்குப் பணமே இல்லாமலிருக்கும் போது, பெரிய தொகையைச் செலவு செய்து, “சாமி” விளையாட்டு விளையாடும் பெரியோர்களுக்கும் புத்தி சம்பந்தப்பட்ட மட்டில், ஏதேனும் வித்தியாசமிருக்கிறதா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும்
இவ்வுலக வாழ்விற்கு அவசியமான கல்வியையும், அதன் பிறகு தெரிய வேண்டிய பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டிய வயதில் “சாமி” வைத்து விளையாடுவதும், அதுவும் வீட்டுப்பணத்தைச் செலவழிப்பதும் அறிவீனமென்றும் அதைத் தடுக்காவிட்டால் பிள்ளையாண்டான் கெட்டுப்போவதோடு குடும்பத்துக்கும் கெடுதியுண்டாகும் என்றும் பெற்றோர்கள் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அதுபோலவே, நமது உலக முன்னேற்றத்தில் ஈடுபடவும், நமது வாழ்க்கையைச் சீர்ப்படுத்திக் கொள்ளவும், அதற்கு வேண்டிய முயற்சிகளைப் பல துறைகளிலும் செய்யவும் வேண்டிய காலத்தில், நமது பெரியோர்கள் “சாமி வைத்து விளையாடுவதும் அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிப்பதும், நமது மக்களைச் சோம்பேறிகளாக்கி விடுவதோடு, நமது நாட்டையும் பாழ்படுத்தி விடும் என்ற கவலையால்தான், நாமும் நமது பெரியோர்களுக்குப் புத்தி கூற வேண்டியது கடமையாகின்றது. பெற்றோருக்கு அடங்காப்பிள்ளை “சாமி” விளையாடிக்கொண்டே இருந்து வீணாய்ப் போவதுண்டு. ஆனால் தைரியமுள்ள பெற்றோர் தமது பிள்ளையைக் கெடுக்க விரும்புவதில்லை. அறைக்குள் கட்டிப்போட்டாவது புத்தி புகட்டுவது வழக்கம். அவ்வாறே அறிவியக்கத்தார்'”களாகிய சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கும், சந்தர்ப்பமும், செளகரியமும் கிடைக்குமானால் மேல்கண்ட முறையை கையாண்டாவது நமது பக்தர்களுக்குப் புத்தி புகட்டாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் அதற்குள்ளாக, நமது “பெரியோர்களும்” “பக்தர்களும்” நல்ல பிள்ளைகளாக ஆகிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - பிப்ரவரி 1937
149 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா.
சுற்றுப்பிரயாணம்
தோழர்களே!
சமீபத்தில் நடக்கப்போகும் சென்னை சட்டசபை தேர்தல் பிரசாரம் பலமாய் நடைபெறுகிறது. இதுவரை நடந்த பிரசாரங்களைவிட இந்த
சீர்திருத்த விஷயத்தில் அதிகக் கிளர்ச்சி இருந்து வருகிறது. அதற்கேற்ப குழப்பமும் பலாத்காரமும் கூட நடைபெறுகின்றன. தோழர்கள். ஜவஹர்லால், மாளவியா, ஜின்னா கூட்டங்களில் குழப்பம், கலவரம் நடப்பதோடு மாளவியா, ஜவஹர்லால் கூட்டங்களில் செருப்புகளும்,
கற்களும், அழுகு முட்டைகளும், சாணி உருண்டைகளும் விழுந்துவிட்டன. அடிதடிகள், குத்து வெட்டுகள், கொலைகள் நடந்துவிட்டன. பணங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு வருகின்றன. வசவுகளோ. மீன்கடை, கள்ளுக்கடைகள் போல் நடைபெறுகின்றன. கூட்டங்களில் பேசப்படும் பேச்சுகளும் பொய்யும், பித்தலாட்டமும், ஈனப்பழிகளும் அபாண்டப் புரட்டுகளும் கொண்டவைகளாகவே இருக்கின்றன. மறைந்து நின்று கொன்ற புராண சூழ்ச்சி இழிதன்மை நிகழ்ச்சிக் கதைகள் போலவே “தலைவர்கள்” நடத்தைகள் இருந்து வருகின்றன. இவைகளின் பயனால் கிடைக்கும் வெற்றி தோல்விகளின் பயன்களோ மிகமிக அற்பமான பயனைக் கொடுக்கக்கூடியதும் ஒரு குறிப்பிட்ட வகுப்பு ஆதிக்கத்துக்கு அரணா அழிவா என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.
இன்று நமது நாட்டில் இவ்வளவு சாமக்கிரிகைகளோடும் சாதனைகளோடும் செய்யப்படும் தேர்தல் போர் பார்ப்பன ஆதிக்கம் இருப்பதா இறப்பதா என்பதைத் தவிர, வேறு எந்தக் காரியத்துக்கும் அல்ல.
நான் இதில் பிரவேசித்து இருப்பதும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார்,
சத்தியமூர்த்தி ஆகியவர்கள் இதில் பிரவேசித்திருப்பதும் இதைத்தவிர வேறு அல்ல. மற்றவர்கள் இரு கட்சியிலும் கூலிகள், தனது தனிப்பட்ட சுயநலக்காரர்கள், வயிற்றுப்பிழைப்புக்கு எதையாவது செய்து வயிறு வளர்க்க வேண்டியவர்கள் இருக்கலாம். அதைப்பற்றி நான் குறை கூறவில்லை. ஆனால் பார்ப்பனரல்லாத சமூகத்தைவிட பார்ப்பன சமூக ஆதிக்கத்துக்குப் பாடுபடும் கட்சி இன்று பலம் பொருந்தியது
குடி அரசு- 1937 (1) 150
பார்ப்பனர்கள் 100க்கு 3 பேரே இருந்தாலும் அக்கூட்டம் அத்தனையும் அசல் மணிகளாக இருக்கின்றன. அதில் பொக்கு இல்லை, கருக்காய் இல்லை, சோடையில்லை. நமது சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் பொக்குகள், சோடைகள், கருக்காய், பாளைகள். பார்ப்பனர்கள் இப்போரை நடத்த இராமாயணக் கதையை வழிகாட்டியாகக் கொண்டுவிட்டார்கள். அக்கதை பார்ப்பனர்களுக்கு ஒரு வழிகாட்டுவதற்காகவே ஏற்படுத்திக் கொண்டதாகும் அதைப் பின்பற்றியே நடந்து வருகிறார்கள். அதனாலேயே அவர்கள் இவ்வளவு காலம் சமாளித்து இன்னமும் சமாளிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களில் எப்படிப்பட்ட அயோக்கியனும் இழிமகனும் இருந்தாலும் எவனாவது தன் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து எதிரியோடு சேர்ந்து வயிறு வளர்க்கிறானா பெருமை அடைகிறானா என்று பாருங்கள். இன்றைய போர் உண்மையிலேயே பார்ப்பனர்களுக்கு வெற்றி கொடுத்தால் அதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? அச்சமூகத்தில் தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க எதிரிகளுடன் சேரும் ஈனப்பிறவிகள் இல்லை. நம்மிடம் ஏராளமாக இருக்கின்றன. பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறவர்.
களின் கொள்கை, நடத்தை, நாணயம் ஆகியவைகளைப் பாருங்கள்.
அதாவது காட்டிக்கொடுப்பவர்களும் அனுமார்களும் அதாவது சுயமரியாதை அற்ற மிருக (குரங்கு) பிறவிகளும் இருந்தாலும் நாம் பயப்படப்போவதில்லை. இந்தக் கூட்டங்கள் இருப்பதே நமது தொண்டின் அவசியத்திற்குக் காரணமாகும். ஆதலால் நீங்கள் யாரும் மனங்கலங்க வேண்டியதில்லை. வெகு சீக்கிரத்தில் பார்ப்பனர்கள் வழிக்கு வரப்போகிறார்கள்.
இந்தத் தடவை பார்ப்பனர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கும் படியான தோல்வி அணுகிக்கொண்டு வருகிறது. அவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடியதெல்லாம் ஒரு விஷயம் தான். அதாவது இப்பொழுது நடைபெறப்போகும் தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்கள் அளவுக்கு மேல் ஸ்தானம் பெறுவார்கள். அதாவது 100க்கு 3 வீதமாக 215 ஸ்தானங்களுக்கு 6 பேர் 7 பேர்கள் வரவேண்டிய ஸ்தானங்களுக்கு இன்று 40,50 பேர்கள் வர எதிர்பார்க்கிறார்கள். இதில் அவர்கள் 30, 35 பேர்களாவது வரக்கூடும். அதில் வெற்றி பெறக்கூடும் அவ்வளவுதானே ஒழிய வேறில்லை. அச்சமூகத்துக்கு 2 மந்திரிகள்: எதிர்பார்ப்பார்கள். அதனால் நான் பயப்படவில்லை.
ஆனால் நமக்கு இன்னமும் அவர்களைப் பார்த்து பழகிக்கொள்ள வேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது. பொறாமைப்பட்டு பயன் இல்லை. ஆனால் மட்டும் பார்ப்பனர்களால் செத்தாலும் சாவேனே ஒழிய ஒழிந்தாலும் ஒழிவேனே ஒழிய ஒரு நாளும் அவர்கள் காலுக்குள் புகமாட்டேன் என்பதை உறுதி கூறுகிறேன். இந்தத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார். ம... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தோற்றால் எனக்கு அதிக பலம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. பார்ப்பனர் என்முன் முழங்கால் படியிட்டு வணங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
ஏன் என்றால் நமது கொள்கை அப்படிப்பட்டது; வெற்றி தோல்விக்கும் கொள்கைக்கும் சம்மந்தமில்லை.
பார்ப்பனர்களுடன் நாம் போரிடும் கொள்கை இந்த தேசத்தை
யார் ஆள்வது என்பதல்ல. இந்த தேச ஆகஷியில் நமக்கு பங்கு வேண்டும் என்பதே. இப்போது உள்ள பங்குகள் பார்ப்பனர்களிடமே இருக்கிறது. இத்தனை நாளும் பார்ப்பனர்களிடமே இருந்து வந்திருக்கிறது அதனாலேயே நமது வகுப்பு தேவடியாள் வகுப்பாகவும் தாசி வகுப்பாகவும் அடிமை சூத்திர வகுப்பாகவும் இருந்து வந்திருக்கிறது அது மாதிரியே அவர்கள் வகுப்பும் ஆகவேண்டும். இன்று நம் முயற்சியால் குறிப்பாக சுயமரியாதை இயக்க முயற்சியால் பார்ப்பனப் பெண்களை சதுராட வைத்து விட்டோம், பார்ப்பனர்களை விவசாரிகளுக்குப் பின்னால் தாளம் போடச் செய்து விட்டோம். உலகில் இனி மேல் இழிதொழில்களே இல்லையென்று செய்யப்போகிறோம். இன்னும் அனேக காரியம் செய்யப்போகிறோம். ஆனால் அதற்குத் தாராளமான செளகரியம் வேண்டுமானால் அரசியலில் இருந்து எவ்வளவுக்கு எவ்வளவு பார்ப்பனர்களை மேல் ஜாதிக்காரர்களை ஒழிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அனுகூலம். அதனால்தான் நாம் இன்று தேர்தலில் அலைகின்றோம், அவதிப்படுகின்றோம். இன்னம் எத்தனை விபீஷணர்களும் அவர்கள் கூட்டங்களில் தைரியமாக ராமாயணத்தை உபமானம் கூறுகிறார்கள் - விளம்பரங்களில் அனுமார்படம் போடுகிறார்கள். நம்மவர்கள் பட்டம் பதவிக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லுபவர்களை விபீஷணர்கள் என்று சொல்லுகிறார்கள். சென்னையில் வெங்கிடுசாமி நாயுடு அவர்களை தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் விபீஷணன் என்றே அழைத்தார். தொண்டர்கள் என்பவர்களுக்கு வானரப்படை என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். நம் தலைவர்களை ராவணன், ராக்ஷதன், கும்பகர்ணன் என்றே சத்தியமூர்த்தியார் அழைக்கிறார். இவைகளை நாம் தினமும் பார்க்கின்றோம். நம்மவர்களிலும் கழிபட்டவர்கள் பெரும்பாலும் எதிரிகளிடம் - பார்ப்பனர்களிடமே போய் சேருகிறார்கள். நமது போரானது அந்தத் தன்மையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஒழிய, நாம் யாரும் கிரீடம் சூட்டிக்கொள்ளவல்ல. பார்ப்பனர்கள் நம்மில் எவ்வளவு கீழானவர்களாய் இருந்தும் நம்மால் மனிதர்கள் என்று கருதத் தகுதி அற்றவர்கள் என்றும் நினைத்து ஒதுக்கித் தள்ளுகிறோமோ அவர்களையெல்லாம் விபீஷணர்கள் ஆக்குவதும் பட்டம் பதவி கொடுத்து நம்மை வையவும் நம்மோடு போர் தொடுக்கச் சொல்லவும் செய்து வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்குத் தனித்தனியே எடுத்துச் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றேன்.
குடி அரசு- 1937 (1) 152.
பார்ப்பனர்களால் தேர்தல்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாத ஆட்களில் 100க்கு 75 பேர்களை நீங்கள் பாருங்கள். பார்ப்பனர்களால் வெறுத்துத் தள்ளி அரக்கன் என்றும், ராக்ஷதன் என்றும், ஒழிய வேண்டும்
என்றும் கூறும் ஆட்களின் யோக்கியதைகளையும் பாருங்கள் ஆகவே அவர்களுடைய சூழ்ச்சி மதத்தையும், புராணத்தையும் மூடநம்பிக்கையையும் ஆயுதமாகக் கொண்டதா அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள். நான் மூடநம்பிக்கையும் புராண ஆபாசமும் மதப்பித்தும் ஒழிய வேண்டும் என்று சொல்லுவது சரியா தப்பா? என்று இப்போது யோசித்துப் பாருங்கள். புராணப் பித்தும் மூடநம்பிக்கையும் ஒழிந்திருந்தால் நம்மை மோசம் செய்து காட்டிக் கொடுப்பவர்களை இன்று ஆச்சாரியார் விபீஷணர் என்று கூறுவாரா? நமக்குத் துரோகம் செய்து ஓடினவர்களையும் நம்மால் யோக்கியதைக்கு மேற்பட்டுப் பயனனுபவித்து விட்டு இன்று கைவிட்டு விட்டு ஓடினவர்களையும்
பற்றி ஆச்சாரியார் கவிபாடி ஓட்டு வாங்கிக் கொடுப்பார்களா என்பதையும் யோசித்துப் பாருங்கள். அவர்கள் மந்திரிகளாவதாகவே வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் கொள்கைகள் என்ன என்று பார்ப்போம்.
தோழர்களே!
இன்று சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ்காரர்கள் எதற்காகப் போகிறார்கள்? அங்கு போய் இவர்கள் என்ன செய்வதாய்ச் சொல்லுகிறார்கள்? இத்தனை நாள் இவர்கள் சட்டசபையில் செய்யமுடியாத எந்த வேலையை இவர்கள் புதிதாகச் செய்வதாய்ச் சொல்லுகிறார்கள். தோழர்கள் சி.ஆர்.தாஸ், லஜபதி, பெரிய நேரு, எஸ்.சீனிவாசய்யங்கார் முதலிய சட்ட ஞானமுள்ளவர்களும் உண்மை வீரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் சட்டசபைக்கு மெஜாரிட்டியாய்ப் போன காலத்தில் செய்ய முடியாமல் போன எந்தக் காரியங்களை தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும் சுப்பையா முதலியாரும், அண்ணாமலை பிள்ளையும் செய்து முடித்துவிட முடியும்? தோழர்கள் சத்தியமூர்த்தி, புலாபாய் தேசாய், அவனாசிலிங்கம், மூத்துரங்கம் ஆகியவர்கள் இந்திய சட்டசபையில் ஜின்னா அவர்கள் உதவியும் பெற்று செய்ய முடியாமல் போன எந்தக் காரியத்தை இவர்கள் இனி புதிதாகத் தோழர்கள் சொக்கலிங்கத்தையும் அஞ்சலை அம்மாளையும் அழைத்துப்போய் செய்ய முடியும்? வீண் ஏமாற்று வார்த்தையால் மயங்கி ஓட்டுப் போடுவீர்களானால் நீங்கள் அரசியல் சுதந்திரம் பெறத் தகுதி உடையவர்களாவீர்களா? ஜெயிலுக்குப் போனதற்கு ஓட்டுக்கொடு என்றால் ஜெயிலுக்குப் போனவர்கள் பொது மக்கள் பணத்தில் அலவன்ஸ் வாங்கவில்லையா? வக்கீல் விட்டதற்கு ஓட்டு என்றால்
வக்கீல் வேலை விட்ட காலத்தில் பொது மக்கள் பணத்தில் மாதம் 50
183 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
முதல் 250 ரூபாய் வரை அலவன்ஸ் வாங்கவில்லையா? அன்றியும் அவை இனிமேல்செய்வதில்லை என்று காங்கிரஸ் தீர்மானித்துவிடவில்லையா?
இனிமேல் சட்டம் மீறவில்லை என்று காங்கிரஸ் எழுதிக் கொடுக்கவில்லையா?
ராஜாவிடத்திலும் அவர்பின் சந்ததியிடத்திலும் அவரது சட்டத்துக்கும் பக்தி விசுவாசமாய் இருப்பதாக காங்கிரஸ்காரர் பிரமாணம் செய்து கொடுக்கவில்லையா?
சட்டப்படி நடப்பவர்கள் ராஜாங்கத்தினிடம் பக்தி விசுவாசமாய் இருப்பவர்கள் ராஜாங்கத்தை கவிழ்க்க முடியுமா? சட்டங்களை சீர்திருத்தச் சட்டங்களை உடைக்க முடியுமா?
சட்டத்தை மீறியாவது காங்கிரஸ்காரர்கள் சட்டத்தையோ அரசாங்கத்தையோ எப்படி உடைக்க முடியும்?
ராஜதுவேஷமாய் - சட்டவிரோதமாய்ப் பேசினால் சர்க்கார் சட்டப்புத்தகத்தில் தண்டனையும், ஜெயிலும், உதையும் இருக்கிறது. 1. தடவை, 2 தடவை, 3 தடவை பார்த்துவிட்டு இனிமேல் அப்படிச் செய்வதில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு சட்டத்துக்குப் பக்தியாய் நடக்கிறேன் என்று பிரமாணம் செய்துவிட்டு இனி எப்படி சட்டத்தை ஒழிக்க முடியும்? காங்கிரஸ்காரர்கள் எல்லா ஸ்தாபனமும் பெற்று 8 மந்திரிகளும் அவர்களேயானாலும் மேஜிஸ்டிரேட்டையும் பட்டாளத்தானையும் போலீசாரையும் பற்றி எவ்வித உத்தரவும் சட்டத்திற்கு விரோதமாய்ப் போட முடியாது. ஒரு காசு சம்பளம் குறைக்க முடியாது. வெட்டி ஐம்பப் பேச்சுக்கு ஏமாற்று வித்தைக்கு ஏமாறக்கூடாது. பாரதமாதா என்பது பார்ப்பனர்கள் வயிறுதான். காங்கிரஸ் என்பது பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான். தேசபக்தர்கள் என்பது பார்ப்பனர்களின் நிபந்தனை இல்லாத அடிமைகள் தான். இதை அறியாத மூட மக்களும் வயிற்றுப்பிழைப்புக்கு எதிரி கால்களுக்குள் நுழைகின்றவர்களும்தான் இன்று காங்கிரஸ் சேவையாளர்களாக இருக்கிறார்கள். உங்கள் ஓட்டு பத்திரம். மஞ்சள் பெட்டிக்குள் விழுந்து உங்கள் மானத்தை இழக்கச் செய்யப் போகிறது
குடி அரசு - சொற்பொழிவு - 07.02.1937
குடி அரசு- 1937 (1) 154
முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கயவர்களா?
முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஷெட்யூல் (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் காங்கிரஸ் இழைத்துவந்த கொடுமைகள் அச்சமூகத்தில் சுயமரியாதை உள்ள மக்கள் அறியாததல்ல. அவர்களுக்கு இன்று கிடைத்துள்ள தனித்தொகுதி உரிமைகளை ஒழிப்பதற்கு ஆக காங்கிரஸ்காரர்கள் ஆதியில் இருந்தே பட்டபாடும் செய்த சூழ்ச்சிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படியிருந்தும் அவ்வவ் சமூகங்களில் உள்ள வீரர்களான சில தலைவர்களால் அது பெறப்பட்டு காப்பாற்றப்பட்டு இன்று அச்சமூகங்கள் அரசியலிலும் அரசியல் சேவைகளிலும் பங்குபெற முடிந்தது
ஒரு நாட்டில் அரசியல் சீர்திருத்தமோ, உரிமையோ, சுதந்திரமோ எது கிடைப்பதானாலும் எவ்வளவு கிடைப்பதானாலும் அவற்றில் பங்கு பெற அந்நாட்டிலுள்ள ஒரு மதத்துக்கோ, ஜாதிக்கோ, வகுப்புக்கோ இடமில்லாமல் அவ்வகுப்பை ஒடுக்கி அழுத்தி எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் வகுப்புக்கே பெரும்பங்கும் போவதாய் இருந்தால் அச் சுதந்திரங்கள். எப்படிப்பட்டவையானாலும் எதற்குதவும் என்று கேட்கின்றோம்
இந்நாட்டில் முஸ்லீம்கள் அரசியலில் தனி உரிமை பெறுவதற்கு மூன்
இந்துக்களிடையில் தீண்டப்படாதவர்களாய் இருந்ததை எந்த மனிதனாவது
“எந்த கயவ”னல்லாதானாவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்
“துலுக்கனைத் தொட்டால் தொட்ட விரலைத் துண்டித்து விடவேண்டும்” என்கின்ற பழமொழியும் “துலுக்கன் என்றால் மிலேக்சன்" என்கின்ற அகராதியும் அதைவிட இழிவான கருத்துக்களடங்கிய ஆதாரங்களும் இன்றும் இந்துக்களிடையில் இருக்கிறதா இல்லையா? என்று கேட்கின்றோம் அதுபோலவே கிறிஸ்தவர்களுக்கும் வகுப்புரிமை கிடைப்பதற்கு முன் இந்துக்களிடையில் இருந்த மரியாதை என்ன என்பது யாரும் அறியாததா என்று கேட்கின்றோம். இன்றும் அவர்களுக்கு மற்ற இந்துக்கள் குடியிருக்கும் வீதிகளில் குடி இருக்க வீடு கிடைக்கிறதா என்று கேட்கின்றோம்
கிறிஸ்தவர்கள் என்றால் இந்துக்கள், “பறையர்”'களுக்கு சமதையாகவே கருதி வந்தார்கள். இந்துக்களில் இன்றும் தம்முள்
18$ ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஆசாரமில்லாதவர்களை “கிறிஸ்தவப் பறையனாட்டமா இருக்கிறான்" என்று சொல்லுவதே வழக்கமாக இருந்து வருகிறது. இன்றும் கூட முஸ்லீம் உபாத்தியாயரையோ, ஒரு கிறிஸ்தவ உபாத்தியாயரையோ கிராமப்பள்ளிக் கூடத்திற்கு நியமித்து விட்டால் உடனே தங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து வீட்டுக்கழைத்துக் கொள்ளுகிற வழக்கம் அமுலில் இருந்து வருகிறது. பள்ளிப்பிள்ளைகள் வீட்டுக்கு வந்தால் கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டு வேறு துணி கட்டிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் துலுக்கனைத் தொட்டிருப்பார்களாம்
இவர்கள் இரு சமூக சங்கதியே இப்படி இருக்கும் போது மற்றபடி உண்மையாகவே மிலேச்சர் என்றும் சண்டாளரென்றும் புலையரென்றும் பறையரென்றும் இந்துக்களால் அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் நிலையைப் பற்றி கேட்க வேண்டுமா என்று கேட்கின்றோம்
இந்த சமூகங்கள் தனித்தொகுதி மூலம் தனி உரிமை பெற்ற பின்பே மனிதர்களாக இந்து “பெரியோர்கள்"களால் “கயவர்'கள் அல்லாதவர்களால் மதிக்கப்படுகின்றார்கள். அப்படிக்கு இருக்க, அச்சமூகங்களின் வகுப்புரிமைகளைப் பற்றிப் பார்ப்பன அடிமைப் பத்திரிக்கைகளிலும் பார்ப்பனக் கூலிப் பத்திரிக்கைகளிலும் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் இழிமக்கள் கையாளும் பத்திரிக்கைகளிலும் தலை கிறந்து விளங்கும் “தினமணி” பத்திரிக்கையானது தனது 3.2.37ந் தேதி தலையங்கத்தில் “கிறிஸ்தவ முஸ்லீம் தொகுதிகள்" என்னும் தலைப்பின்
கீழ் (3.2.37ந் தேதி தினமணி 6 பக்கம் 3ம் கலத்தில் உள்ளபடி)
“பதவி வேட்டையே தொழிலாக உள்ள ஒரு சிலரைத் தவிர
வகுப்பு மாச்சரியங்களை கிளப்பினாலொழிய தமக்கு சமூகத்தில் எவ்வித செலாவணியுமிருக்காதென்று கருதும் கயவர்களைத் தவிர வேறு யாரும் தனித்தொகுதியை விரும்பார்கள்'”
என்று குறிப்பிட்டிருக்கிறது. இக்கயவர்கள் பட்டத்தை தனித்தொகுதியை விரும்பும் முகம்மதியர்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளுகிறார்களா? என்று அவ்விரு சமூகத்திலும் சுயமரியாதை உள்ள மக்களைக் கேட்கின்றோம்.
தனித்தொகுதியை விரும்பும் முஸ்லீம்கள் கயவர்கள் என்றால் மெளலானாக்கள் முகம்மதலி, ஷவுக்கத்தலி, ஜனாப் ஜின்னா, நவாப் அப்துல் ஹகீம் முதலிய தலைவர்களும், ஆங்காங்கு இன்று தனித்தொகுதி பேரால் நிற்கும் முஸ்லீம் கனவான்களும் ஓட்டர்களும் கயவர்களே ஆக வேண்டும். தனித்தொகுதியின் பேரால் அபேட்சகர்களை நிறுத்தி இருக்கும் முஸ்லீம் பார்லிமெண்டரி போர்ட் தலைவர் தோழர் ஜமால் முகம்மது அவர்களும் அக்கூட்டத்தில் (கயவர்கள் கூட்டத்தில்) பகுதி அளவாவது
குடி அரசு- 1937 (1) 156
சேர்க்கப்பட்டாக வேண்டும் அல்லவா? மற்றும் முஸ்லீம் லீக்கும் முஸ்லீம் புரோகரசீவ் பார்ட்டியும் தனித்தொகுதி விரும்பும் முஸ்லீம்களின் சகல சங்கங்களும் கயவர்களின் சங்கங்களாகத்தானே இருக்கவேண்டும்?
இதை முஸ்லீம் வாலிபர்களும் பெரியோர்களும் ஒப்புக்கொள்ளு கிறார்களா என்று கேட்கின்றோம்
1916 ஆம் வருஷத்தில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்போது அக்காங்கிரஸ், கயவர்கள் கூட்டமா என்று கேட்கிறோம்.
1931ல் தோழர் காந்தியார் “முஸ்லீம்களுக்கு சரித்திர சம்பந்தமான. காரணங்களை உத்தேசித்து தனி உரிமை கொடுக்க வேண்டியதுதான்" என்று சொல்லி இருக்கிறார். ஆகவே காந்தியாரையும் கயவர்கள் கூட்டத்தில் சேர்க்க வேண்டியதுதானா என்று “தினமணி” யைக் கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்கள் இன்றும் கூட தனித்தொகுதி தேர்தல்களிலும் தங்கள் அபேக்ஷகர்களை போட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றைய காங்கிரசுகாரர்களும் அவர்களால் தனித்தொகுதிக்கு நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களும் பதவி வேட்டைக்காரக் கயவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களா என்று கேட்கின்றோம்
“தனித்தொகுதி பேரால் காங்கிரஸ் இன்னும் அதிக அபேக்ஷ்கர்களை நிறுத்தவில்லையே" என்று “தினமணி” அதே வியாசத்தில் வியாகூலப்படுகிறது
அதாவது,
"இங்கும் இந்த தனித்தொகுதி முழுவதற்கும் காங்கிரஸ் அபேக்ஷகர்களை போட்டிருக்கலாம். அநாவசியமாக சந்தேகங் கொண்டு கில தொகுதிகளில் காங்கிரஸ் சார்பாக அபேச்ஷகர்களை நிறுத்தாது போய் விட்டோம்” என்று அழுகின்றது. என்ன சந்தேகம்? தாங்களும் ஏன் கயவர்கள் ஆகவேண்டும் என்கின்ற சந்தேகமா? தாங்கள் “கயவர்கள்” ஆனால் தங்களை மக்கள் உண்மையாகவே கயவர்கள் என்று கருதி சைபர் (0) ஓட்டு போட்டு விடுவார்கள் என்கின்ற சந்தேகமா? அல்லது முஸ்லீம் லீக்கின் சென்னை தலைவர் ஜனாப் ஜமால் மகமது சாயபு இடமும் நவாப் ஹகீம் சாயபு இடமும் பிச்சை கிடைக்காமல் போகுமே என்கின்ற சந்தேகமா? அல்லது இக்கயவர்களை நம்பி முஸ்லீம்கள் உண்மையான கயவர்கள் ஆகமாட்டார்களே என்கின்ற சந்தேகமா? என்று கேட்கின்றோம் ஆகவே காங்கிரஸும் “தினமணி”யும் ஏன் இந்தக் கயவர் கூட்டத்திற்கு சந்தேகத்தோடு மனுப்போட்டு தாங்களும் முதல் நெம்பர் வடிகட்டின கயவர்களாக ஆக ஆசைப்படுகிறார்கள் என்று கேட்கின்றோம் எனவே இந்திய முஸ்லீம் சமூகத்தையும் அவர்களது மாண்புமிக்க ஸ்தாபனங்களையும் அவற்றின் தலைவர்களையும் கயவர்கள் என்று
157... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பட்டம் சூட்டும் “தினமணிக்கு புத்தி கற்பிப்பார்களா? அல்லது மானமின்றி சுயமரியாதை இன்றி “தினமணி” யைப் பார்த்து மகிழ்ச்சியோடு கயவர் பட்டத்தை வரவேற்பார்களா என்பதைப் பார்க்கக் காத்துக்கொண்டு இருக்கிறோம்.
இக்கயவர் தன்மையை “தினமணி கிறிஸ்தவர்கள் மீதும் சுமத்தி இருக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தில் தனி தொகுதி விரும்பாத அதாவது “கயவர்” அல்லாதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கேட்கின்றோம். இன்று காங்கிரஸ் கூட்டத்தாரால் தனித் தொகுதிக்கு அபேக்ஷகராக நிறுத்தப்பட்டிருக்கும் தோழர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் “தினமணி” கூற்றுப்படி பதவி வேட்டைக்காரக் கயவர் அல்ல என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்கிறோம். ஒரு சமயம் தோழர் ஜோசப் அவர்கள் பதவி ஆசையால் தன்னை கயவர் அல்ல (தனித்தொகுதிக்காரன் அல்ல) என்று சொல்லிக் கொள்வதானாலும் கயவர் அல்லாதவராய் இருந்தபோது (காங்கிரசில் பொதுத் தொகுதியில் இருந்தபோது) அவருக்கு ஸ்தானம் கிடைத்ததா என்று கேட்கின்றோம். கொஞ்ச நாளைக்கு முன்தோழர் ஜோசப் அதுவும் “யங்இந்தியா” பத்திரிகை ஆசிரியராய் இருந்த தோழர் ஜோசப் அவர்கள் காங்கிரஸ் பிரமுகராய் இருந்த போதே மதுரையில் ஒரு முனிசிபல் கவுன்சிலர் ஸ்தானத்துக்கு காங்கிரஸ் சார்பாக ஒரு அபேக்ஷகராக நின்றார். அதே தொகுதிக்கு காங்கிரஸ் சார்பு அல்லாமல் ஒரு பார்ப்பனர் நின்றார். தோழர் ஜோசப்புக்கு திருச்சி தேவருக்கு ஏற்பட்ட தோல்வியைவிட மகத்தான தோல்வி ஏற்பட்டு காங்கிரஸ் அல்லாத பார்ப்பனருக்கு வெற்றி ஏற்பட்டது. அது “அக்கிராரத்” தொகுதியாய் இருந்ததால் காங்கிரஸ் பார்ப்பனர்கள் எல்லோரும் பெரிதும் ஜோசப் அவர்களுக்கு நாமம் சாத்தி கோவிந்தா போட்டுவிட்டார்கள். இதை சகிக்காமல் ஜோசப் அவர்கள் கொஞ்ச நாளையில் ஜஸ்டிஸ் ககடிக்கு வந்து தனித் தொகுதியின் மேன்மையைப் பிரசாரம் செய்தார். அது சமயம் பார்ப்பனர்கள் அவர் மனைவிக்கு பயமுறுத்தல் கடிதம் எழுதினார்கள். அது முதல் இதுவரை காங்கிரசுக்கு வெளியில் இருந்தவர். இப்பொழுது என்ன காரணத்தால் 2 மாதத்துக்கு முன் காங்கிரசில் சேர்ந்து தேர்தலுக்கு நிற்கிறார்கள் என்பதை “கயவர்” அல்லாத கூட்டத்தைச் சேர்ந்த “தினமணி கூற முடியுமா? என்று கேட்கின்றோம். முஸ்லீம் சமூகமும் கிறிஸ்தவ சமூகமும் “கயவர்”களாக ஆவதற்கு முன் எத்தனை பேருக்கு எந்தெந்த வகைகளில் பதவியும் ஸ்தானங்களும் காங்கிரஸ் அளித்து வந்தது என்று கேட்கின்றோம். இன்றும் காங்கிரசுக்கு இவ்விரு சமூகத்திலும் கயவர்கள் அல்லாத ஆட்கள் வேண்டுமானால் பெரும்பாலும் 100க்கு 90 கனவான்கள் 4ம் தரம் 5ம் தரம் தகரப்போகணி ஆட்கள் தான் கிடைக்கிறதே தவிர மற்றபடி அச்சமூக பிரமுகர்களில் உண்மை
குடி அரசு- 1937 (1) 158
சுயமரியாதை உள்ளவர்கள் கிடைக்கிறார்களா? அப்படியானால் தனித்தொகுதி பேச்சிலும் செய்கையிலும் வேண்டாம் என்று சொல்லி வெளியில் நிற்கும் பிரமுகர்களில் ஒரு 10 பெயர்களையாவது நம் நாட்டில் எடுத்துக்காட்டும்படி “தினமணி"யை அறைகூவி அழைக்கின்றோம் இன்று காங்கிரசால் நிறுத்தப்பட்ட சகல முஸ்லீம்களும் தனித் தொகுதியை விரும்பியே இருக்கிறார்கள். தனித்தொகுதிக்கு அதரவு கொடுத்திருக்கிறார்கள். ஆகையால் இம்மாதம் 16ந் தேதி முஸ்லீம் தொகுதிக்கும் கிறிஸ்தவ தொகுதிக்கும் பிறகு நடக்கும் ஷெட்யூல் வகுப்பு ஸ்தானங்களுக்கும் நடக்கப்போகும் சென்னை சட்டசபை தேர்தல்களுக்கு அச்சமூகத்தார் தங்களுடைய ஓட்டுகளை சமூக சுயமரியாதைக்கு ஓட் செய்யப்போகிறீர்களா? அல்லது இச்சமூகங்களை கயவர்கள் கூட்டமென்று சொல்லுகின்ற அயோக்கியர்களை ஆதரிக்கும் மானங்கெட்ட இழிதன்மைக்கு ஓட்டு செய்யப்போகிறீர்களா? என்று கேட்கின்றோம். காங்கிரசின் பேரால்
நிற்கும் முஸ்லீம், கிறிஸ்து, ஷெட்யூல் வகுப்புத் தோழர்களையும் ஒன்று கேட்டுக்கொள்ளுகிறோம். தோழர்களே! உங்கள் சமூகத்தையும் சமூகப் பிரமுகர்களையும் சமூக ஸ்தாபனங்களையும் கயவர்கள் என்று சொன்ன பிறகு அதுவும் நீங்கள் ஜீவாதாரம் என்று கருதும் உரிமைக்காக உங்களைக் கயவர்கள் என்று சொல்லும் போது நீங்கள் அவர்கள் சார்பாக அவர்களது கையாட்களாக இருந்து ஓட்டுப் பெற நினைப்பது உங்கள் சுயமரியாதைக்கு ஏற்றதா? என்று கேட்கின்றோம்
ஷெடியூல் வகுப்பு என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கு இதே சமயத்தில் தனியாகவும் ஒரு வார்த்தை சொல்லுகிறோம்
அதாவது, தோழர்களே! காந்தியார் சாகும் நிலையில் இருப்பதாகப் பாசாங்கு செய்து உங்கள் தலைவர்களுடைய கால்களில் தங்கள் உள்ளங்கைகளும் விரல்களும் படும்படியாக நடந்து கையெழுத்துப் பெற்று தனித்தொகுதியை ஒழித்துவிட்டு அன்று அதாவது காந்தியாரின் உயிரை மீட்கக் கையெழுத்து வாங்கிய தலைவர்களையே இன்று ஒழிக்க காங்கிரஸ் வஞ்சகம் செய்கின்றது. அதாவது காந்தியாரை உயிர்ப்பிக்க தோழர் சிவராஜ் அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்று அவரை எந்தத் தொகுதியிலும் நிற்க விடாமல் தொல்லை கொடுக்கிறார்கள். கடசியாக தோழர் ஊ.பு.அ. செளந்திரபாண்டியன் அவர்களும் தோழர் வி.வி.ராமசாமி அவர்களும் தங்கள் இருவர் ஸ்தானங்களையும் வாப்பீஸ் வாங்கிக்கொண்டு தோழர்கள் சிவராஜ் அவர்களுக்கும் அவரது வாழ்க்கைத் துணைவி மீனாம்பாள் அவர்களுக்கும் இடம் தந்து தங்கள் சொந்த செலவில் வேலை செய்கிறார்கள். அத்தம்பதிகள் வரக்கூடாது என்று அத்தொகுதிகளில் காங்கிரசுக்காரர்கள் செய்யும் சூழ்ச்சியும் தொல்லையும் கொஞ்சநஞ்சமல்ல. அதிகாரிகளும் அவர்கள் தொகுதியில் வேலை செய்யும் தொண்டர்கள் மீது ஜாமீன் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
159 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எனவே கல்வியும் அரசியல் ஞானமும் உள்ள பெரியார்களை பதவிக்கு வரவொட்டாமல் அடித்து தங்கள் அடிமைகளையும் 3-ம் தரம்
4-ந் தரம் ஆட்களையுமே கொண்டு அரசியலைக் கைப்பற்ற காங்கிரஸ்காரர்கள் - (பச்சையாய் சொல்லவேண்டுமானால்) பார்ப்பனர்கள். செய்துவரும் கொடுமை சகிக்க முடியாததாக இருந்து வருகின்றது ஆகவே ஷெட்யூல் வகுப்புக்குத் தனித்தொகுதி இருக்குமானால் பெரும்பாகம் பேர்கள் உண்மையாக அச்சமூக நலன் கோருபவர்கள்
வரக்கூடும். சமூகநலன் கோருவது ஒரு நாளும் கயவர் தன்மை ஆகவே ஆகாது. தனது தாய் தகப்பன் இன்னார் என்று உணர்ந்து, தனது சமூகம் இன்னது என்றும், மார்க்கம் இன்னது என்றும் அறிய சவுகரியமுள்ள எவனும் தனது சமூக நலனையோ, சுயமரியாதையையோ காப்பாற்ற
தனி உரிமை கேட்பதை கயமை என்று ஒருநாளும் சொல்லமாட்டான். மெளலானாக்கள் மகமத்தலி, ஷவ்கத்தலி ஆகிய தேகீப வீரர்களே ஒரு சமயத்தில் “நாங்கள் முதலில் முஸ்லீம்கள், இரண்டாவதும்
முஸ்லீம்கள், மூன்றாவதுதான் இந்தியர்கள்” என்று சொன்னார்கள். அதனால் அவர்களை யாரும் கயவர்கள் என்று சொல்லவில்லை. தோழர் ராமசாமியும் அனேக சந்தர்ப்பங்களில் “நான் முதலாவது மனிதன், இரண்டாவது சுயமரியாதைக்காரன், அப்புறம்தான் இந்தியனோ, ரஷ்யனோ, துருக்கியனோ, பிரிட்டிஷானோ எவனோ” என்று கூறுகிறார்.
தாய் தகப்பன் சமூகம் கூட மனிதத் தன்மைக்கும் சுயமரியாதைக்கும் பிறகுதான் என்கின்றார். அப்படி இருக்க, கல்லையும் மண்ணையும் கழுதை விட்டைகளையும் கொண்ட மனிதத்தன்மையும் சுயமரியாதையும் அற்ற ஜீவன்களைக் கொண்ட நாட்டைப் பிடித்துக்கொண்டு நாட்டைப்பற்றிப் பேசுவதில் பயன் என்ன என்று கேட்பதோடு இப்படி கேட்பதனால் ஒருவரோ ஒரு சமூகமோ கயவர்களாவார்களானால் அப்படிப்பட்ட கயவர்கள் அல்லாதவர்கள் வாழும் நாட்டில் கழுதைகள், பன்றிகள், நாய்கள் போன்ற ஜீவன்களைவிட மக்களுக்கு இடமில்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது
இன்று ஷெடியூல் வகுப்பார் காந்தியாரின் பட்டினிப் பாசாங்கின். பயனாய் “கழுதை விட்டையானாலும் கை நிறைய கிடைத்தால் போதும்” என்ற பழமொழிக்கு இலக்காகி விட்டார்கள். தங்கள் சமூகத்துக்கு என்பதாக அரசாங்கத்தார் கொடுத்த 18 பவுன் (பொன்)களுக்கு பதில் 30 தம்பிடிகளை பெற்றுக்கொண்டார்கள். எண்ணிக்கையைப் பார்த்து ஏமாந்து விட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் தம்பிடியைக் கொடுத்து பவுனை பிடிங்கிக் கொண்டதோடு
அந்தத் தம்பிடிகளையும் செல்லாத தம்பிடிகளாக்கப் பார்க்கிறார்கள். தம்பிடியைத் தட்டி நோட்டம் பார்த்தால் கயவர்கள் என்கிறார்கள்.
குடி அரசு- 1937 (1) 160
நிற்க, கோயமுத்தூர், சேலம், நீலகிரி தொகுதிக்கு முஸ்லீம் லீக்கின் சார்பாக நிறுத்தப்பட்ட ஈரோடு சேர்மெனும் ஜில்லா போர்டு மெம்பருமான
தோழர் கான் சாயபு கே.ஏ.ஷேக்தாவுது சாயபு அவர்களுக்கு எதிரியாக காங்கிரஸில் தோழர் ஏ.கே.அப்துல் ரஹீம் சாயபு அவர்களை ஏன் நிறுத்தினார்கள் என்பதை முஸ்லீம் தோழர்கள் யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.
ஜனாப் அப்துல் ரஹீம் அவர்கள் சமீப காலம்வரை ஜஸ்டிஸ் கட்சி ஆதரவாளராய் இருந்தவர், தனித்தொகுதி விரும்பாத “கயவர்” அல்லாதவரும் அல்ல. அத்தொகுதிக்கு ஜஸ்டிஸ் கட்சியோ, வேறு முஸ்லீம் அல்லாதவர்கள் கட்சியோ அபேக்ஷகரை நிறுத்தவும் இல்லை. அப்படி இருக்க முஸ்லீம் லீக்கையும் ஒழிக்க வேண்டும் என்று காங்கிரஸ்
ஏன் கங்கணம் கட்டுகின்றது என்று கேட்கின்றோம். ஆகவே சுயமரியாதையும் சமூக பக்தியும் உள்ள முஸ்லீம் ஓட்டர்கள் தங்கள் சமூகத்தையும் முஸ்லீம் லீக்கையும் காட்டிக் கொடுக்காமல் கான்சாஹிப் ஷேக்தாவுது அவர்கள் தேர்தலில் காங்கிரசுக்கு நல்ல புத்தி கற்பிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்வதோடு முஸ்லீம் சமூகத்தில் தனித்தொகுதி விரும்புகிறவர்களை பதவி வேட்டைக்கார கயவர்கள் என்று சொன்னதற்கும் பரிகாரம் தேடி சுயமரியாதை அடைவார்கள் என்று நம்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.02.1937
1... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
திருத்துறைப்பூண்டியில் ஈ.வெ.ரா.
சாமியப்பாவுக்கு வாழ்த்துக்கூட்டம்
நான் பிரசாரத்திற்குப் புறப்பட்டுப்போகும் வழியில் இங்குள்ள பிரசாரகர்களுக்கு ஏதோ சில திட்டங்களை வகுத்து விட்டுப் போகலா மென்றுதான் வந்தேன். இது ஒருவர் பட்டம் பெற்றதன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் ஒரு பாராட்டு விருந்துக் கூட்டம். அதிலும் சமீபத்தில் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் என்னுடைய பிரசங்கத்தைக் கேட்டுத் தங்கள் பகுத்தறிவை உபயோகிக்கக்கூடிய எளிய அறிவுடையவர்களாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தோழர்கள் இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் ஒரு நண்பரால் காண்பிக்கப்பட்ட “ஆனந்தவிகடன்” பிரதியை (7.2.37ந் தேதி) புரட்டிப் பார்த்ததில் அதில் சில விஷயங்கள் என் கண்களுக்குப் புலப்பட்டன. ஏதோ அவைகளைப் பற்றி சில வார்த்தைகள் கூறுகிறேன். “ஆனந்தவிகடன்” தனது தலையங்கக் குறிப்பில் 1920ம் வருஷத்தில் இம்மாகாணத்தில் எல்லா சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கும் சேர்ந்து சம்பளம் நாலுகோடி ரூபாய்; 1934-ம் வருஷத்தில் அதே சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் பத்தரைக்கோடி ரூபாயென்றும், குறிப்பிட்டிருப்பதோடு, இவ்வளவு சம்பள உயர்வுக்கும் காரணம் ஜஸ்டிஸ் மந்திரிகளின் நிர்வாகம் தான் என்றும் ஜஸ்டிஸ் கட்சியின்.
மீது வரி செலுத்தும் விவசாயிகள் வெறுப்புக்கொள்ளும்படியான முறையில் எழுதியிருக்கிறது. வாஸ்தவத்தில் ஜஸ்டிஸ் மந்திரிசபைக்கும், இந்த சம்பளம் உயர்வுக்கும் எள்ளளவு சம்பந்தமுமில்லை. 1920ம் வருஷத்திய ஆரம்பகாலத்தில் தோழர் காந்தியார் ஆரம்பித்த சட்ட மறுப்புப் போர் நமது மாகாணத்தில் சிறிது வியாபகமாயிற்று. பள்ளிக்கூட பகிஷ்காரம், கள்ளுக்கடை பகிஷ்காரம் முதலியவைகளைப் போல உத்தியோக பகிஷ்காரமும் செய்வது என்ற பிரச்னை காந்தியார் திட்டத்தில் இடம் பெறப்போகிறது என்பதை சர்க்கார் கண்டார்கள். அந்த உணர்ச்சி சர்க்காருக்குப் பட்டதுதான் தாமதம். சாதாரணமாக 200ரூபாய் முதல் 400ரூபாய்க்குள் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சர்க்கார் உத்தியோகஸ்தர்கட்கெல்லாம் 400, 500, 600 என்பதாகவும் 1000, 2000ரூ. சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சில உத்தியோகங்கட்கு 3000, 4000ரூ. என்பதாகவும் சம்பளத்தை உயர்த்தி விட்டார்கள். அதற்குக்
குடி அரசு- 1937 (1) 162
காரணம் என்னவென்றால் சர்க்கார் வலுவில் கழுத்தைப் பிடித்து உத்தியோகஸ்தர்களைத் தள்ளினாலும் வெளியே போகாமல் உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்திலிருந்து ஊழியம் செய்ய வேண்டுமென்கிற கட்டாய எண்ணம் சர்க்காருக்கு ஏற்பட்டதால்தான் இம்மாதிரியான சம்பள உயர்வும், நிலவரி உயர்வும் ஏற்பட்டதற்குக் காரணம். இந்த ஏற்பாட்டிற்கும், ஜஸ்டிஸ் சபைக்கும் கொஞ்சங் கூட சம்மந்தமில்லை.
இந்தச் சம்பளங்களைக் குறைக்கும் அதிகாரமும் மந்திரிகள் வசம் கிடையாது. நாளது மாதம் வரப்போகும் புதிய சீர்திருத்தத்தில் தோழர் சக்கரவர்த்தி ராஜாஜி அவர்களே தனது சிஷ்யர்களுடன் எட்டு மந்திரி பதவிகளையும் எட்டிப்பிடித்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டை உடைய உரக்கச் சத்தம் போட்டாலும், ஒருக்காலும் சம்பளக்குறைவு ஏற்படாது
சர்க்கார் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை நேரடியான நிர்வாகத்தில் வைத்து வருகிறார்கள். நிலத்தீர்வை வரிக்குறைப்பு ஏற்பாடுகளும் அப்படியே தான். மந்திரிகளால் செய்ய முடியாத விஷயம். சம்பள உயர்வுக்குக் காரணம், காங்கிரஸ்காரர்களே உயர்ந்த சம்பளத்தை வாங்கி பக்கா சர்க்கார் ராஜ விஸ்வாசியாக இருந்து, இப்பொழுது பதவி போனவுடன் காங்கரஸ் பக்தராகி சம்பளம் உயர்ந்து விட்டது என்று கூப்பாடு போடுவதும் காங்கிரஸ்காரர்களே. “ஆனந்த விகடன்” என்ற கேலிப் பத்திரிகை பாமர மக்களாகிய நம்மை அரசியல் ஞானமில்லாத முட்டாள்களாகப் பாவித்தே இம்மாதிரி தப்பு வியாக்கியானம் எழுதத் துணிந்திருக்கிறது
குறிப்பு: 07.02.1937 இல் திருத்துறைப்பூண்டியில் ராவ்பகதூர் என்.ஆர். சாமியப்ப முதலியாருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 14.02.1937
18 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் ஏன் ஏற்பட்டது?
சம்பளம் உயர்ந்ததே காங்கிரசால்தான்
சைமன் கமிஷனை பஹிஷ்கமித்தவர்கன் அவரால்
சிபார்சு செய்த சட்டசபைக்குப் போகலாமா?
தோழர்களே!
நான் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சொல்ல இங்கு வரவில்லை. வரும் தேர்தலுக்கு கஞ்சா குடிக்கிறவன் கூட ஒரு அபேட்சகராய் நின்று சட்டசபைக்குப் போக உரிமை உண்டு. புதிய சீர்திருத்தத்தில் ஏழெட்டு மந்திரிகள் உண்டு. யார் மந்திரியாய் வந்தாலும் ஒரு காரியம்தான் செய்ய
முடியும். யார் சட்டசபைக்குச் சென்றாலும், முதலில் இந்த இராஜாவுக்கும் அவர்கள் பின் சந்ததிக்கும், அவர்கள் சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசத்துடன் நடக்கிறேன் என்று சத்தியம் செய்து இராஜ விஸ்வாசப் பிரமாணம் எடுத்தக்கொள்ள வேண்டும். இன்று நடக்கப் போகிற தேர்தலில் காங்கிரசின் பேரால்நிற்கிறவர்கள் தனிப்பட்ட தங்கள் சொந்த யோக்கியதையைப் பற்றிக் கூறாமல், கட்சியின் பேரை உபயோகித்து ஓட்டுக்கேட்கிறார்கள். ஏன்? ஆசாமிகள் யோக்கியதை வெளியானால் காங்கிரஸ் புதைக்கப்பட்டு விடும். இதனால்தான் எங்கு பார்த்தாலும் கட்சியின் பேர் அடிபடுகிறது அதுவும் பொய்யும் புளுகும் கூறி பாமர மக்களை ஏமாற்றி, தங்கள் கட்சிகளுக்கு ஓட்டுப்போடும்படி தேர்தல் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.
இன்று தமிழ்நாட்டில் இந்த தேர்தலின் பேரால் இரண்டு மூன்று கட்சிகளின் பேர்கள் அடிபடுகின்றன. அதில் ஒன்று ஜஸ்டிஸ், மற்றொன்று காங்கிரஸ், மற்றொன்று ஜனநாயகம் என்றும், மற்றும் சமூகத்தின் பேரால் முஸ்லீம் லீக் கட்சி, தாழ்த்தப்பட்டோர் கட்சி, ஐரோப்பியர்கள் கட்சி, வர்ணாஸ்சிரம கட்சி என்றும் பல கட்சிகள் இருக்கின்ற. அவைகளை எல்லாம் விட்டு காங்கிரஸ் கட்சியாரால் துவேஷித்து கூறப்படுகிற கட்சி ஜஸ்டிஸ் கட்சிதான். ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பேசும்போது அது தேசத்துரோக கட்சி, சர்க்கார் கட்சி என்றெல்லாம் கூறி பாமர மக்களைத் தூண்டி விட்டு, குத்து, வெட்டு, சண்டை முதலிய வீண் குழப்பங்களை உண்டாக்கி ஜனங்களைத் தப்பான வழியில் செலுத்தி காங்கிரஸ்காரர் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாம் சில கட்சிகளின் சம்பந்தம் வைத்து
குடி அரசு- 1937 (1) 164
வருவதால், அந்த கட்சியை இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) இழித்து பழித்துக் கூறி வருவதினால் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். காங்கிரஸ் என்றால் என்னவென்று கேட்கிறேன். சுயராஜ்யம் என்றால் என்னவென்று யாராகிலும் விபரமாய் சொல்லமுடியுமா? இல்லை, காங்கிரஸ் தலைவர்கள் என்கின்றவர்களையே கேட்கிறேன், சொல்லட்டுமே பார்ப்போம். நான் அவர்கள் (காங்கிரஸ்காரர்) மாதிரி யாராகிலும் கேள்வி கேட்டால் கேள்விக்குப் பயந்து கொண்டு ஓடிப்போய்விட இங்கு வரவில்லை.
யார் கேட்டாலும் பதில் சொல்லுகிறேன். ஏன், ஜவஹர்லால் கூட தமிழ் நாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்கிறபோது அவரைக் கேள்விகள் கேட்ட போது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல், கேட்டவர்களை முட்டாள்கள் என்று தான் கூறினாரே ஒழிய, வேறு என்ன சொல்லமுடிந்தது? காங்கிரஸ் ஆரம்பம் 1885. முஸ்லீம் லீக் ஆரம்பம் 1906. ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பம் 1916
எருமை, பசு முதலியவைகள் கன்றுகள் போடும்போது முதலில் வால் முளைக்கிறது அதன் பிறகு தான் கொம்பு வெளியில் வருகிறது கொம்பைவிட வால் மூத்ததானதினாலே பலம் அதிகரித்துவிடுமா? பழசு என்றால் பெருமையா? புதுசு என்றால் தள்ளுபடியா? அந்த வாதம் அயோக்கியத்தனமானது. காங்கிரஸ் ஏற்பட்டது ஐ.சி.எஸ்.வெள்ளைக்காரரால் தானேஒழிய இந்தியர்களால் அல்ல. நாம் யார் உதை போட்டுக்கொண்டாலும், வெள்ளைக்காரர்கள் தங்களுக்குப் பாதகம் வராமல் தங்கள் சவுதரியத்திற்காகச் செய்து கொண்ட காரியமேயாகும். காங்கிரஸ் உற்பத்தியான கதை என்ன. வென்றால் 50, 60 வருடங்களுக்கு முன் வெள்ளைக்காரர் நாயக்கர்கள், முதலியார்கள், முஸ்லீம்கள் ஆகியவர்களுக்குத்தான் உத்தியோகம் கொடுத்தார்கள். பிறகு, வெள்ளைக்காரர்கள் இங்கு பள்ளிக்கூடம் வைத்ததும் அதில் சிலர் படித்து, படித்த யோக்கியதையையே வைத்துக் கொண்டு வெள்ளைக்காரர்களிடத்தில் உத்தியோகம் கேட்க ஆரம்பித்தார்கள்.
அப்பொழுது படித்தவர்களை உத்தியோகம் கேட்பதற்கு ஆக ஒரு ஸ்தாபனம் வைத்துக்கொண்டு உங்கள் சங்கதிகள் கேளுங்கள் என்றார்கள். அப்பொழுது உத்தியோகத்துக்கு ஆக ஏற்பட்டது தான் காங்கிரஸ். அதன். முதல் தீர்மானமே இராஜ விசுவாசந்தான். அதற்கு அடுத்தது உத்தியோகம் கேட்பது. டிசம்பர் 29ல் காங்கிரசு கூடினால் ஜனவரி முதல் தேதிக்குள் காங்கிரசில் தலைமை வகித்த தலைவர்களுக்கும் வாய்ப்பேச்சு வீரர்களுக்கும் உடனே உத்தியோகம் சர்க்காரில் கொடுக்கப்பட்டாய்விடும்
இதனால் 1890லேயே முஸ்லீம்களுக்கு நடுக்கம் கொடுத்துவிட்டது இவர்களும் தங்களுக்கு உத்தியோகம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். மே-த-ஆகாகான் முதலியவர்களும் இன்னும் முக்கியமானவர்களும் ஒன்று சேர்ந்து சர்க்காரை நெருக்க ஆரம்பித்தார்கள். 1900580 சர்க்கார் முஸ்லீம்களுக்கு இன்னவீதம் உத்தியோகம் கொடுப்பதாக ஒரு உத்திரவு போட்டார்கள். எலக்ஷன்களிலும் தனியே மெம்பர்கள் கேட்டார்கள். இது
18 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
1905ல் தகராறு செய்து அதற்கு ஆகவே 1906ல் முஸ்லீம் லீக் ஏற்படுத்தி முதல் தீர்மானமாக முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி கேட்டார்கள். 1909ல் மின்டோமார்லி சீர்திருத்தம் வந்தது. 1910ல் தனித்தொகுதியில். சட்டசபைக்கு வந்தார்கள். அந்த தேர்தலில் நின்று சட்டசபைக்கு வந்த முஸ்லீம் அங்கத்தினர்களில் இப்போது காங்கிரசின் பேரால் தேர்தலில் நிற்கும் முகையதீன் மரைக்காயர் அவர்களின் தகப்பனார் காலஞ்சென்ற சர்.அகமது தம்பி மரைக்காயர் அவர்களும் ஒருவர். இவைகளைக் காங்கிரஸ்காரர்கள் கண்டித்தார்கள். இது சரித்திர சம்மந்தமானது. 1916ல் பெசன்ட் தலைமையில் கூடிய காங்கிரசில் முஸ்லீம்களுக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் முஸ்லீம்கள் காங்கிரசில் சேர்ந்தார்கள். அதன்பின். காங்கிரசில் முக்கியஸ்தராயிருந்த டாக்டர் நாயரும், சர்.தியாகராஜ செட்டியாரும் எலக்ஷனில் பார்ப்பனரால் தோல்வி அடைந்தபின் பார்ப்பனரல்லாதார் நன்மையை உத்தேசித்து இந்த ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்றுவித்தார்கள். பார்ப்பனரல்லாத மற்ற சமூகத்தினர் அத்தனை பேரும்
இந்தக் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். 1885 வருஷம் முதல் 1915 வருஷம் வரையும் பள்ளிக்கூடங்களில் அதிகமாகப் படித்தவர்கள் பார்ப்பனர்கள்தான். அவர்களுக்கே தான் பெரிதும் உத்தியோகம் போய்க் கொண்டிருந்தது இல்லை என்று யாராகிலும் சொல்லட்டுமே. 1915ம் வருடத்திற்கு மூன் இப்போது எல்லா சமூகத்தினர்களும் சர்க்காரில் உத்தியோகம் பார்ப்பது போல், உத்தியோகம் பார்த்தார்களா என்று கேட்கின்றேன். இன்னும் முஸ்லீம்களில் இன்று பி.ஏ. பாஸ் செய்தவர்கள் மாதிரி, டிப்டி கலைக்டர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருக்கிற மாதிரி முன்னே இருந்தார்களா என்று கேட்கிறேன். காங்கிரஸ் ஒன்று தான் தேசீய ஸ்தாபனம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி ஜஸ்டிஸ் கட்சியைக் குறை கூறுகிறார்கள். ஆனால் அடைய நினைப்பது உத்தியோகம். சர்க்காரில் உத்தியோகம் கொடுத்தவுடன் அதற்கு
பதில் ஏழைகளுக்கு வரி போடுவதுதான். எனக்குத் தெரிய 5 தாலூக்காக்களுக்கு
ஒரு சப் கலைக்டர் இருந்து வந்தார். இப்போது 2 தாலூக்காக்களுக்கு ஒரு
சப் கலைக்டர் இருக்கிறார். இப்படியே எல்லா உத்தியோகங்களிலும் வெள்ளைக்காரனுக்கு கொடுப்பதைப் போல் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதினால்தான் முன்னே 2 மந்திரியாய் இருந்தது இதுபோது 7 மந்திரியாகிவிட்டது. 1920ல் மூன்றரையே அரைக்கால் கோடியாய் இருந்த சம்பளம், 1921ல் 6% கோடி ஆகிவிட்டது. இது உங்கள் ஜில்லாவில் இருக்கிற மகாலிங்க ஐயர் என்கின்ற ஒருவரே விபரமாய் எழுதி இருக்கிறார். இதோ பாருங்கள். இது காந்தி சர்க்காரை மிரட்டி வீண் வீம்பு பேசியதால் ஏற்பட்ட கஷ்டமாகும். அதனால்தான் மூன் 100ரூபாய் சம்பளமாய் இருந்தது. இப்போது 150 முதல் 200 வரையும் ஆகிவிட்டது
நேற்று பட்டேல் வந்து போலீஸ்காரரை மிரட்டினார். உடனே சர்க்கார் காங்கிரஸ் மந்திரிக்கும் போலீசுக்கும் சம்மந்தமில்லை என்று உத்திரவு
குடி அரசு- 1937 (1) 166
போட்டு விட்டார்கள். காங்கிரஸ்காரர் அதிகாரத்திற்கு வந்தவுடன் பிரித்த ஜில்லா போர்டை ஒன்றாக ஆக்கிவிடுவோம் என்று சொல்லுகிறார்கள். உடனே சர்க்கார் பிரிக்கமுடியாது என்று சொல்லிவிடுகிறார்கள். 1920 முதல் 1936 வரை காங்கிரஸ் சாதித்தது என்ன? காங்கிரஸ்காரர்கள் சட்ட சபைக்கு போக என்ன காரணம் சொல்லுகிறார்கள்? முன்பு அதை பஹிஷ்கரித்த போது என்ன சொன்னார்கள்? இன்று சொல்லுவது என்ன? சட்டசபைக்கு நாய், கழுதைதான் போகும் என்றார்கள். இந்த 10-16 வருடம் காங்கிரஸ்காரர்கள். செய்த கிளர்ச்சியில் ஜனங்களுக்கு சாதித்தது என்ன? நன்மை என்ன வென்று கேட்கிறேன் சொல்லட்டுமே. ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது, வெள்ளை அறிக்கையை கிழிப்பது, சீர்திருத்தத்தை உடைப்பது என்றால் என்ன? இவர்கள் இந்திய சட்டசபையில் செய்தார்களா? இவர்களுக்கு (காங்கிரஸ்காரர்) நாணயம் இருந்தால் சைமன் கமிஷனை பகிஷ்கரித்து சைமன் கமிஷன் சிபார்சு செய்த புதிய சீர்திருத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்காரர்கள். போட்டி போடலாமா என்று கேட்கின்றேன். தோழர் காந்தி காங்கிரசு
தோற்றுப் போனதிற்கு அது ஒரு வியாபாரம் என்கிறார். ஒரு வியாபாரத்தில் நஷ்டப்பட்டால் வேறு வியாபாரம் செய்வேன் என்கிறார்.
1920ம் ஆண்டில் காங்கிரசின் தீர்மானம் இந்து முஸ்லீம் ஒற்றுமை, மதுவிலக்கு, கதர், தீண்டாமை ஒழிப்பு முதலானவைகளாகும். அவைகளில் இன்று காங்கிரசில் ஏதாகிலும் ஒன்று இருக்கிறதா? இவர் சங்கதி பலிக்காமல் போகவே “சுயராஜ்யம் வந்தபிறகு இவை பார்த்துக் கொள்ளலாம்” என்கின்றார் காந்தியாரும். வட்டமேஜை மகாநாட்டில் இவர் (காந்தி) டாக்டர் அம்பேத்கார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல. முடியாமல் நீ பிரதிநிதி இல்லை என்று தான் சொன்னார். பள்ளிக்கூடங்களை விடச் சொன்னார் - ஜெயிலுக்கு 1000க் கணக்கான 10000 ஆயிரக்கணக் கானவர்களை அனுப்பினார். கடைசியில் என்ன முடிந்தது? வைசிராய் இடம் மண்டி போட்டு இனிமேல் சட்டம் மீறுவதில்லை என்று சொல்லி ராஜி செய்து கொள்ள வேண்டி இருந்தது. காங்கிரஸ்காரர்கள் வேண்டுமானால்
காந்தி இர்வின் ஒப்பந்தம் பற்றி பெருமை பேசிக்கொள்ளலாமே ஒழிய அதில் தோல்வியும் மன்னிப்பும் தான் இருக்கிறது. ஒரு உருப்படியான காரியமும் இவர்கள் இதுவரையும் செய்யவில்லை என்பதை ருசுப்பிக்க முடியும். யாராவது காங்கிரசினால் ஏற்பட்ட நன்மை இன்னது என்று சொல்லி மறுக்கட்டுமே பார்ப்போம். உப்புவரியை குறைக்க உப்பு அள்ளப்போனார்களே உப்பு வரி குறைந்ததா, என்ன நடந்தது. இனிமேல் உப்புக்காய்ச்சுவதில்லை என்று ஒப்புக் கொண்டதுதான். எலக்ஷன் காலத்தில் புதிதாய் ஒரு தந்திரமாக சட்டசபைக்கு சுயராஜ்யம் வாங்கப்போகிறோம் என்று சொல்லுகிறார்கள். காந்தியார் சட்டசபையில் சுயராஜ்யம் வராது என்று சொல்லுகிறார். ஜவஹர்லால் நேரு ஏழைகள் பட்டினி போக்க சுயராஜ்யம் வாங்கப் போவதாக கூறுகிறார். இன்று உலகில் உள்ள அமெரிக்கா,
167 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பிரஞ்சு, இங்கிலாந்து முதலிய தேசங்கள் சுயராஜ்யம் இல்லாத தேசமா? அங்கு ஏழைகள் இல்லையா? பட்டினிக்காரர்கள் இல்லையா? இது சின்ன நேருவுக்குத் தெரியாதா? இன்னும் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்குள்ளேயே சுயராஜ்யம் என்பதில் வித்தியாசமான அபிப்பிராயம் சொல்லப்படுகிறது. ஒருவர் குடி ஏற்ற நாட்டு அந்தஸ்து என்கிறார். வேறொருவர் பூர்ண சுயராஜ்யம் என்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் வெள்ளைக்காரரோடு ஒப்பந்தம் செய்து கொள்ளுவது தான் சுயராஜ்யம் என்கிறார். ஆகையால் நீங்கள் எதை நம்புகிறீர்கள். தோழர்களே இன்னும் சொல்லுகிறேன். இன்று நடக்கும் கிளர்ச்சிகள் எல்லாம் மூஸ்லீம்களுக்கும், ஆதிதிராவிடர்கள் என்பவர்களுக்கும் கிடைத்திருக்கும் வகுப்புரிமையை கெடுக்கவும் உத்தியோக வகுப்பு முறையை அழிக்கவும்தான். இந்தக் காரியங்களுக்கு ஆகத்தான் பார்ப்பனர்கள் தேசபக்தி பேசுகிறார்களே தவிர வேறொன்றும் இல்லை என்பதை உணருங்கள். ஏன் 30, 40 வருடங்களுக்கு
முன், “துலுக்கனை” தொட்டால் அந்த விரலை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். இந்துக்கள் அகராதிகளில் கூட பாருங்கள். “துலுக்கன்” என்றால் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள்? இப்போதல்லவா முஸ்லீம்கள் தங்கள் நிலைமை உணர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு தேடிக்கொண்ட பிறகு, என்ன! பாயி! - சாயபே - ஜனாப் - பகதூர் என்று தோளோடு தோள் உரசுகிறார்கள். சில சமஸ்தானங்களில் பார்ப்பான் கொலை செய்தால் தூக்குக்கிடையாது என்று சட்டம் இருக்கிறது. இன்றும் இந்து லாவில் நமது பெண்களுக்கு பார்ப்பான் பிள்ளை கொடுத்தால் அப்பிள்ளைக்கு பார்ப்பான். சொத்தில் பங்கில்லை. பார்ப்பனப் பெண்ணுக்கு நாம் பிள்ளை கொடுத்தால் அப்பிள்ளைக்கு நமது சொத்தில் பங்கு உண்டு. இந்த வித்தியாசங்கள் ஒழியவேண்டும் என்று சொல்லுகிற முஸ்லீம் லீக்கையும் ஜஸ்டிஸ் கட்சியையும் எப்படி தேசத்துரோக கட்சி என்று சொல்ல முடியும்?
தமிழ்நாட்டை பொறுத்தவரையும் தான் பார்ப்பனர் அல்லாதார். கட்சி, வடநாட்டில் இந்து - முஸ்லீம் கிளர்ச்சிதானே - இன்றும் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் கலகம் இல்லாததற்கு காரணம் ஜஸ்டிஸ் கட்சிதான்.
இன்னும் தோழர்களே உங்கள் ஜில்லா முஸ்லீம் தொகுதிக்கு நிற்கும் ஜனாப் தாஜுடீன்சாயபு அவர்கள் சட்டசபையில் வரிகுறைப்பு சம்பந்தமாய் ஏதாகிலும் செய்திருக்கிறாரா இல்லையா என்பதை சட்டசபை நடவடிக்கைப் புத்தகத்தில் பாருங்கள். 1933ம் வருடமே வரிகுறைப்பு சம்பந்தமாய் வந்த தீர்மானங்களுக்கு ஓட்டுச் செய்து வந்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அசம்பளியில் 185 தீர்மானம் கொண்டு வந்து சர்க்காரை தோற்கடித்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். அத்தீர்மானங்கள் என்ன ஆயிற்று? குப்பைத் தொட்டிக்குத் தானே போயிற்று. நிலவரியில் நமது மாகாணத்தில் இப்போது ரூ.1க்கு 3 அணா
குடி அரசு- 1937 (1) 168
வரி வஜா செய்து இருப்பது கூட ஜஸ்டிஸ் கட்சியின் முயற்சியும் ஆதரவும் இல்லாவிட்டால் எப்படி மூடியும் என்று கேட்கிறேன். காங்கிரசுக்கு மெஜாரிட்டி இருந்ததா? மேல்சபைக்கு என்.ஆர். சாமியப்ப முதலியார் நிற்கிறார். காங்கிரஸ் அல்லாத டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாரை தோழர் ஆச்ளாரியாரும் தஞ்சை காங்கிரஸ் பார்ப்பனர்களும் ஆதரிக்கிறார்கள். இது எப்படி ஒழுங்கான நியாயமாகும்? ராவ்பகதூர் பட்டத்தை விட்ட தோழர் ராமனாதம் செட்டியாருக்கு பார்ப்பனர்கள் நாமம் சாத்தப் போகிறார்கள். அவர் கண்டிப்பாய் தோற்கடிக்கப்படப்போகிறார். இது தான் காங்கிரஸ் கட்டுப்பாடு.
ராவ்பகதூர் ஏ.டி.பன்னீர்ச் செல்வம் கிறிஸ்துவ தொகுதிக்கு நிற்கிறார். அவர் என்ன குற்றம் செய்து விட்டார்? உத்தியோகம் பார்க்கிறார் என்பது தானே அவர் செய்த தப்பு. இந்த உத்தியோகங்கள் இவர்கள் பார்க்கா விட்டால் சும்மாகிடந்து விடுமா? 200 வருஷம் பொறுத்து ஒரு இந்திய கிறிஸ்தவர் மந்திரி ஆனால் இதில் ஏன் இவ்வளவு பொறாமை? இந்த பார்ப்பனக் கூட்டத்தார் உத்தியோகம் பார்த்தால் தேச பக்தி என்பதும் நாம் உத்தியோகம் ஒன்று இரண்டு நாளைக்குப் பார்த்தால் அதை தேசத்துரோகி என்பதா? என்று கேட்கிறேன். தோழர் தாஜுடீன் சாயபு மந்திரி காரியதரிசியாய் இருந்து மாதம் 500ரூ. வாங்கினதற்கு இந்துக்கள் பொறாமைப்படவில்லை. சில முஸ்லீம்கள் அதிகப் பொறாமைப்படுகிறார்கள். பார்ப்பனர்கள் 1000, 2000, 5000 வாங்கினார்கள் - வாங்குகிறார்கள் எந்தனையோபார்ப்பனவக்கீல் (5710 ஆயிரம் இருபது ஆயிரம் வாங்கினார்கள். அதை யாரும் குறிப்பிடுவதில்லை. இம்மாதிரியே பார்ப்பனரல்லாதார் சமூகம் தங்களுக்குள்ளாகவே பொறாமைப்பட்டு ஒருவரை ஒருவர் கெடுத்துக் கொள்கிறார்கள். சாயபுக்கு இவ்வளவு சாயபு எதிர்ப்பும் முதலியாருக்கு இவ்வளவு முதலியார் எதிர்ப்பும் பார்க்கிறீர்களே, ஒரு பார்ப்பானுக்கு ஒரு பார்ப்பான் எதிர்ப்பயோ பொறாமையையோ காட்டுங்கள் பார்க்கலாம் நாம் நாகரீகமடையாத மக்கள் - காட்டுமிராண்டி மக்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
காங்கிரஸ் வெற்றி பெற்றால் வகுப்பு உரிமை ஒழிந்தது. பழயபடி ஜட்கா வண்டி ரைன்சும் பங்கா கயிறும் பில்லை. சேவகமும் தான் ஏற்படும். ஆதலால் ஜாக்கிரதை! எச்சரிக்கை! பார்ப்பனர்கள் எச்சரிக்கை!!!
குறிப்பு: 12021937 இல் நாண்சியார்கோவில், ௯த்தாநல்லூர் ஆகியவிடங்களில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 14.02.1937
1ஜ ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எல்லா மாகாணங்கவிலும்
காங்கிரசிற்குத் தோல்வி
சட்டசபை எலக்ஷன் நாள் நெருங்கிவிட்டது. காங்கிரஸ்காரர்களின்.
பிரசாரம் அளவிட்டுச் சொல்ல முடியாத மாதிரியில் நடைபெறுகின்றது இன்னது தான் பேசுவது, இன்ன கொள்கையைத்தான் சொல்லுவது என்று இல்லாமல் குடிகாரர்கள் வெறிகாரர்கள் போல் வாயில் வந்ததை எல்லாம் உளறிவருகிறார்கள். எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்கின்ற கவலையால் எதை வேண்டுமானாலும் சொல்லவும் என்ன வேண்டுமானாலும் செய்யவும் காங்கிரசுக்காரர்கள் துணிந்து விட்டார்கள். தோழர்கள். சத்தியமூர்த்தியாரும் ராஜகோபால ஆச்சாரியாரும் தங்களால் கூடுமான அளவு எல்லாவித தந்திரங்களையும் கையாண்டு பார்த்து விட்டார்கள். பஞ்ச தந்திரத்தையும் கையாண்டுவிட்டார்கள். பார்ப்பனர்கள் கட்டுப்பாடாய் கூடி சகல முயற்சியும் செய்துவிட்டார்கள். இனிச் செய்ய வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை என்று சொல்லத்தக்க வண்ணம் செய்து இப்போதே ஓய்வடைந்துவிட்டார்கள் என்று கூடச் சொல்லலாம்.
இதன் பலன் மாத்திரம் சைபர் (0) என்பதை நாம் உணர்ந்து விட்டோம். அவர்களும் ஒரு அளவுக்கு உணர்ந்து தங்கள் ஸ்வரத்தை குறைத்துக்கொண்டார்கள். ஆனால் அந்த ஆத்திரத்தில் செய்வது இன்னது என்று தோன்றாமல் அலைகிறார்கள். இன்று வரை காங்கிரசுக்கு அனேக மாகாணங்களில் வெற்றிக் குறி கிடையவே கிடையாது; படுதோல்வியே ஏற்பட்டுவிட்டது அதாவது இந்தியா பூராவிலும் முக்கிய மாகாணங்களில் எல்லாம் இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு படுதோல்வி ஏற்பட்டு விட்டது. தெளிவாக விளக்க வேண்டுமானால்,
வங்காளத்தில் 250 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு 45 ஸ்தானங்களே கிடைத்திருக்கின்றன.
பாஞ்சாலத்தில் - பஞ்சாபில் 175 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு தேர்தல் முடிவில் 10 ஸ்தானங்களே கிடைத்திருக்கின்றன.
அஸ்ஸாம் மாகாணத்தில் 108 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு 35 ஸ்தானங்களே கிடைத்திருக்கின்றன.
குடி அரசு- 1937 (1) 170
சிந்து மாகாணத்தில் 60 ஸ்தானங்களில் காங்கிரசுக்கு 12 ஸ்தானங்களே கிடைத்து இருக்கின்றன. காங்கிரஸ்காரர்கள் அவ்வளவுதான் எதிர்பார்த்தார்கள்.
ஐக்கிய மாகாணத்தில் 228 ஸ்தானங்களில் காங்கிரசு தங்களுக்கு 115 கிடைக்கும் என்று தான் சொல்லுகிறார்கள். ஆகவே அதுவும் எதிர்பார்ப்பதற்கு 2 ஸ்தானம் குறைந்தாலும் தோற்றுவிட்டது என்றுதான். சொல்ல வேண்டும். ஆனால் காங்கிரஸ் பத்திரிக்கைகளே 12.2.37ந் தேதி “சுதேசமித்திரனில் ஐக்கிய மாகாண தேர்தலில் முடிவு கூறப்பட்ட 18 ஸ்தானங்களுக்கு 13 ஸ்தானங்கள் தான் காங்கிரசுக்கு கிடைத்திருப்பதாய் குறிப்பிட்டிருக்கிறது. ஆகவே மற்ற எல்லா ஸ்தானங்களும் காங்கிரஸ் ஜெயித்தாலும் காங்கிரசுக்கு தோல்வியேயாகும். ஆனாலும் மொத்தத்தில் 2285@ 100 ஸ்தானங்கள் கூட காங்கிரசுக்கு கிடைக்காது என்பது காங்கிரஸ் பத்திரிகைகளாலேயே ஜாடை காட்டப்பட்டுவிட்டது
பம்பாயில் கண்டிப்பாக தோல்வி ஏற்படப் போகிறது. ஏனெனில் 26-1-37ந்தேதி “தினமணி”யில் தங்களுக்கு வெற்றி ஏற்படக்கூடும் என்று குறிப்பிட்ட மாகாணங்களில் பம்பாய் மாகாணத்தைச் சேர்க்காமல் விட்டுவிட்டிருக்கிறது சென்னை மாகாணத்தில் 215 ஸ்தானங்களுக்கு காங்கிரசுக்காரர்கள் 120 ஸ்தானங்கள் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இன்றைய நிலைமையில் தமிழ் நாட்டைப் பொருத்தவரை காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியவர்கள் ஸ்தானங்களில் 100க்கு 25 வீதம் கூட காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சொல்லுவதற்கு இல்லாமல் இருக்கிறது அவைகளில் கண்டிப்பாகப் பகுதிக்குக் குறையாமல் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிடும் என்பதை இப்போதே எழுதி வைத்துக்கொள்ளலாம் இவற்றைத்தவிர, நிலச்சுவான் தொகுதிகளில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களிலும் 100க்கு 25 கூட கிடைக்க மார்க்கமில்லை என்பதை காங்கிரசே உணர்த்திவிட்டது.
இனி பொது தொகுதிகளில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட ஸ்தானங்களில். 100க்கு 75 வீதம் காங்கிரஸ் ஜெயிப்பதாகவே வைத்துக்கொண்டாலும் காங்கிரசுக்கு மொத்த 215 ஸ்தானங்களில் 80, 90 ஸ்தானங்கள் கிடைப்பது கூட மிக மிக கடினமாக ஆகிவிடும் என்பது குருடனும் அறியக்கூடிய சேதியாகும்.
இந்த நிலையில் தோழர் சத்தியமூர்த்தியார் செல்லுமிடங்களில் எல்லாம் தாங்களே ஆட்சிக்கு வரப்போவதாகவும் தானே கவர்னர் ஆகப்போவதாகவும் போலீசார்களை தூக்கில் போடப் போவதாகவும் அதிகாரிகள் பல்லைப் பிடுங்கப்போவதாகவும் ஜில்லாபோர்டுகள் மட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பிரிக்கப்பட்டவைகளை ஒன்று சேர்த்து விடுவதை முதல் வேலையாய் பார்க்கப்போவதாகவும் மனதார உடான் விட்டு மக்களை மிரட்டி ஏமாற்றி கொண்டு வருகிறார்.
காங்கிரஸ்காரர்கள் சில அதாவது ஒன்று இரண்டு மாகாணங்களில் வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொள்ளுவோம். மந்திரி பதவி ஏற்பார்களா இல்லையா என்பது இன்னம் முடிவு செய்யவில்லை.
மந்திரி பதவி ஏற்பதாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்பதவியின் மூலம் செய்யக்கூடிய காரியம் என்ன என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம். சர்க்கார் (கவர்னர்) இஸ்டத்துக்கு விரோதமாய் எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதை காங்கிரஸ்காரர்களே பல தடவை சொல்லி இருப்பதோடு அதன் பயனாகவே "சீர்திருத்தம் பயனில்லை” என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த நிலைமையில் காங்கிரசுக்காரர்கள். நாட்டில் இவ்வளவு பெரிய குழப்பம் உண்டாக்கியதில் என்ன பயன் ஏற்படப்போகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்
காங்கிரசு இதுவரை இந்த 50 வருஷகாலமாக நாட்டுக்கு உண்டாக்கிய நன்மை இன்னது என்று ஒரு விரல் விடக்கூடுமா என்று கேட்கின்றோம். காங்கிரஸ் மகத்தான தொண்டு செய்தது, தியாகம் செய்தது என்று தான் “சுதேசமித்திரன்” 45 தலையங்கம் தொடர்ந்து எழுதிற்றே ஒழிய ஒரு சிறு நன்மையாவது காங்கிரசு செய்ததாகவோ காங்கிரசால் ஏற்பட்டதாகவோ எடுத்துக்காட்டவில்லை. மக்களைக் கிளப்பிவிட்டு வெறும் தொல்லையை உண்டாக்கி அதிகாரிகளுக்கு அதிக அதிகாரமும் சம்பளப் பெருக்கமும் ஏற்படுத்தியதல்லாமல் ஒரு ஏழைக்கோ ஒரு குடியானவனுக்கோ ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனாவது ஏற்படும்படி செய்திருக்கிறதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
காங்கிரசின் பயனாய் வக்கீல்கள் (பார்ப்பனர்கள்) ஏராளமாய் உண்டானார்கள். அவர்கள் தாராளமாய்ப் பிழைக்கிறார்கள். அவர்கள் பிள்ளை குட்டிகளுக்கு ஏராளமாக உத்தியோகமும் சம்பளமும் கிடைத்து வந்தன என்பதல்லாமல் படித்தவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) உத்தியோகமும் பெரும் சம்பளமும் கிடைத்தது என்பதல்லாமல் வேறு என்ன பலன் ஏற்பட்டது என்று யார்தான் சொல்லமுடியும்?
1920ல் காந்தியார் வக்கீல்கள் பொது நல சேவை செய்ய அருகதை அற்றவர்கள் என்று சொல்லி அவர்களை காங்கிரசில் சேர்க்கக்கூடாது என்றும் பொது நல சேவைக்கு ஒரு வக்கீலை விட ஒரு சக்கிலி மேலானவன் என்றும் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்க, இப்போது மறுபடியும் அந்த வக்கீல் கூட்டங்களே காங்கிரசில் ஆதிக்கம்
குடி அரசு- 1937 (1) 172
செலுத்துகின்றன. ஓடி ஓடி ஓட்டு வேட்டை ஆடுகின்றன. ஓட்டு அறிக்கை வெளியிடுகின்றன. இதன் பயனாய் ஏற்படும் வெற்றி என்ன காரியத்திற்குப் பயன்படக்கூடும் என்பதை அறிவுள்ள மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டியதாகும்
இவை ஒருபுறமிருக்க இந்த தேர்தல் பிரசாரத்தில் இருந்து வரும் பார்ப்பன சூழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை மானமுள்ள பார்ப்பனரல்லாதார் உணரவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம். அதாவது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தோழர்
டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரியாருக்கு ஓட்டு வேட்டை ஆடிவருகிறார். தஞ்சை ஜில்லாவில் அவர் செல்லுமிடங்களில், எல்லாம் தோழர்
டி.ஆர்.வி. சாஸ்திரிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி வருகிறார். சாஸ்திரியார் எந்தக் கட்சியை சேர்ந்தவர்? அவர் காங்கிரசுக்காரரா?
என்று பார்த்தால் காங்கிரசுக்கு மாறுபட்ட எதிரான மிதவாதக்கட்சி என்பதும் ஒத்துழைப்புக் கட்சி என்பதும் விளங்கும். அவர் மிதவாத மகாநாட்டுக்கு இவ்வருஷம் கூட தலைமை வகித்து காங்கிரசின் கொள்கைகளைக் கண்டித்தவர். அப்படி இருக்க அவரை ஆதரிக்க வேண்டும் என்று தோழர்.
சி.ஆர். ஆச்சாரியார் பிரசாரம் செய்வதற்கு காரணம் அவர் பார்ப்பனர். என்பதற்கு அல்லாமல் வேறு என்ன காரணம் என்று கேட்கின்றோம்
மேல் சபைக்கு தஞ்சை ஜில்லாவில் 3 ஸ்தானங்களுக்கு 2 ஸ்தானங்களுக்கு மாத்திரம் காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்தி ஒரு ஸ்தானம் காலியாகிவிட்டதற்குக் காரணமே தோழர் ஆர்.வி. சாஸ்திரியாருக்கு ஒரு ஸ்தானம் ஒதுக்குவதற்கு ஆகவே என்று யாவரும் எளிதில் உணரலாம் மற்றபடி தஞ்சை ஜில்லாவில் அந்த ஸ்தானத்துக்கு தகுதியுள்ள காங்கிரஸ்காரர் இல்லை என்று சொல்லி விட முடியுமா என்று யோசித்தாலும் விளங்காமல் போகாது.
மற்றும் சில குறிப்பிட்ட பார்ப்பனரல்லாதார் அபேட்சகர்கள் விஷயத்தில் காங்கிரசின் பேரால் செய்து வரும் எதிர்ப்பிரசாரத்தின். யோக்கியதையை பார்த்தாலும் அதன் உள் கருத்து என்ன என்பது விளங்கும். உதாரணமாக தோழர் எஸ். முத்தையா முதலியார் அவர்கள். விஷயத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பலமான எதிர்ப்பிரசாரம் செய்கிறார். முதலியார் அவர்கள் உத்தியோகத்தில் வகுப்புவாரி முறை ஏற்படுத்திய காரணத்தை வெளிப்படையாக எடுத்துச் சொல்லி சகல பார்ப்பனர்களையும் விரோதமாய்க் கிளப்பி விடுகிறார். ஆனால் அதே சமயத்தில் டாக்டர் சுப்பராயன் அவர்களுடன் குலாவுகிறார்.
டாக்டர் சுப்பராயன் அவர்களும் காங்கிரஸ்காரர்களால் மந்திரி ஆகி காங்கிரஸ் முழு ஆதரவில் ஒரு வருஷம் மந்திரியாக இருந்து தோழர். முத்தையா முதலியாருடன் கூட்டு மந்திரியாய் முதல் மந்திரியாய்
173 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இருந்து வந்தவர். அவருக்கு இப்போது மறுபடியும் மந்திரிவேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து சேர்த்துக்கொண்டார்கள். அப்படி இருக்க முத்தையா முதலியார் அவர்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்க காரணம் என்ன என்று யோசித்து பார்க்க வேண்டுகிறோம். தோழர் முத்தையா முதலியாரைத் தோற்கடித்துவிட்டால் சட்ட சபையில் எப்படியாவது பாடுபட்டு பார்ப்பனர்கள் தங்கள் அடிமைகளை வைத்துக்கொண்டு வகுப்பு வாரிமுறை உத்திரவை ஒழித்துவிடலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே இவ்வளவு பாடுபடுகிறார்கள். இதை நமது பார்ப்பனரல்லாத மக்கள் உணராமல் பார்ப்பனர்கள்கூட கோவிந்தா போடுவது நமது சமூகத்தில் உள்ள இழி மக்கள் - சமூகத்துரோகிகள் - சமூகத்தை காட்டிக்கொடுத்து வாழவேண்டிய மக்கள் இத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது என்று தான் சொல்ல வேண்டும். எப்படியான போதிலும் எவ்வளவு தான் பார்ப்பனரல்லாதார்களே காட்டிக்கொடுத்து எதிரிகளுக்கு ஆயுதமாக “விபீஷணர்” போலவும் அனுமார்” போலவும் நடந்து கொண்டாலும் காங்கிரசுக்கு (போர்ப்பனர்களுக்கு) படுதோல்வியும் காங்கிரஸ் அல்லாதவர்களுக்கு போர்ப்பனரல்லாதார்க்கு) வெற்றியும் ஏற்படப்போகிறது என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. ஆனால் எப்படியோ பித்தலாட்டம்
செய்து ஜெகஜாலம் செய்து சுமார் 40, 50 பார்ப்பனர்கள் வரையில் சட்டசபைக்குள் புகுத்த சூழ்ச்சி செய்து விட்டார்கள் என்பது தான் பார்ப்பனருக்கு வெற்றியாகச் சொல்லிக்கொள்ளக் கூடியதாகும்.
குடி அரசு - தலையங்கம் - 14.02.1937
குடி அரசு- 1937 (1) 174
தோழர் சின்னயா பிள்ளை
காங்கிரசிலிருந்து
ஏன் விலகினார்?
- ஒரு நிருபர்
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் காங்கிரசின் கட்டுப்பாட்டுக்கு விரோதமாய் காங்கிரசு அல்லாதவர்களுக்கு ஓட்டுப்பிரசாரம் செய்ததால் தனக்கு காங்கிரசில் இருக்க பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிவிட்டார்.
ஆச்சாரியார் தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாருக்கு ஒரு ஓட்டுப்போடுங்கள் என்று பிரசாரம் செய்தார். காங்கிரசுக்கு மாறாக வேறு பல அபேட்சகர்கள் நிற்கும் போது காங்கிரஸ் ஓட்டு வேறு அபேட்சகரை: பலப்படுத்தினால் காங்கிரஸ் அபேட்சகர் பலவீனமடைய முடியாதா என்று கேட்டார். ஒவ்வொருவருக்கு மேல் சபைக்கு மூன்று ஓட்டுகள் இருந்தாலும் அந்த மூன்றையும் காங்கிரசு அபேட்சகரில் யார் பலவீனமானவர்களோ அவருக்கு ஒரு ஓட்டு அதிகமாய் போடும்படி செய்யாமல் அதை சாஸ்திரியாருக்கு போடும்படி சொன்னால் வேறு அபேட்சகரான தோழர். சாமியப்ப முதலியார் அவர்கள் மூன்று ஓட்டுகளும் தனக்கே போடும்படி சிலரைப் பிடித்து சரி செய்து கொண்டால் தனது சொந்த ஓட்டுக்களுடன். காங்கிரஸ் ஓட்டும் சேர்ந்து சாஸ்திரியார் வெற்றி பெறுவதுதான். நிச்சயமாகுமே தவிர மற்ற காங்கிரஸ் அபேட்சகரில் ஒருவர் தோல்வி அடைந்துதான் தீரவேண்டும். இது ஆச்சாரியாருக்கு தெரியாது என்று சொல்லிவிட முடியுமா? என்று கேட்டார். இந்நிலையில் தஞ்சை ஜில்லா குற்றாலத்தில் தோழர் ஆச்சாரியார் பேசும்போது ஒரு காங்கிரஸ் தொண்டர் ஆச்சாரியாரை இதைப் பற்றி கேள்விகேட்டார். அதற்கு ஆச்சாரியார் பதில் சொல்லாமல் தோழர் சின்னையா பிள்ளை பதில் சொல்லுவார் என்று சொல்லி விட்டு உட்கார்ந்து கொண்டார். தோழர். சின்னையா பிள்ளை அவர்கள் எழுந்து மொண்டிக் காலுக்கு தப்பை கட்டுவது போல் ஏதோ சமாதானம் சொன்னார். இது பொதுஜனங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனம் நொந்த தோழர் சின்னையா பிள்ளை அவர்கள் உடனே தனது காங்கிரஸ் மெம்பர் பதவியை ராஜிநாமா செய்து
விட்டு தோழர் முத்தையா முதலியாருக்கு அனுகூலமாக வேலைசேெய்கிறார்.
குடி அரசு - கட்டுரை - 14.02.1937 173... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தேர்தல் கொந்தவிப்பு முடிந்து விட்டது
சாகப்போகும் காயலாக்காரனுக்கு கோமாரி ஜன்னி கண்டால். பத்துப்பேர்கள் போட்டு அமிழ்த்தினாலும் திமிரிக்கொண்டு எழுந்திருக்கும் படியான பலம் ஏற்படுவதுண்டு. அதுபோல் காங்கிரஸ் கூப்பாட்டுக்கும் காலித்தனங்களுக்கும், பொய் பித்தலாட்டங்களுக்கும் போலி ஆணவங் களுக்கும் சாவுகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாளில் பிணமாகி சுட்டுக்கொளுத்தப்பட்டு சாம்பலாக்கி கரைத்து விடப்படக்கூடிய நிலை காங்கிரசுக்கு எய்திவிட்டது. காங்கிரஸ்காரர்கள் தங்களால் ஆன சகல காரியங்களையும் செய்து பார்த்து விட்டார்கள். காங்கிரஸ் தேர்தல் கொந்தளிப்பு அடங்கி முடிவு தெரிவதற்கு முன்னாலேயே காங்கிரஸ் கொள்கையும் சவடால் வீரமும் செத்து அரசாங்கத்தின் காலுக்குள். நுழைந்து “வார்த்த அளவுக்குக் கஞ்சி வாருங்கள் என்று இரு கை
நீட்டிக் கெஞ்சும் நிலையைக் கொண்டுவந்து விட்டது என்பதில் யாரும் இனிச் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை
இதை ஆரம்ப காலத்திலிருந்தே நாம் எதிர்பார்த்ததே ஒழிய இந்த நிலை நாம் திடீரென்று மகிழ்ச்சி அடையத்தக்க சேதியல்ல. பட்டம் விடுதல், பள்ளி விடுதல், பதவி விடுதல், சட்டசபை விடுதல், சீர்திருத்தத்தைத் தகர்த்தல், அரசியலை உடைத்தல், ஏகாதிபத்தியத்தை ஒழித்தல் என்கின்றதான பகட்டுப் போர்வைகள் பறந்து விட்டன. காங்கிரசின் உண்மையான யோக்கியதை நிர்வாணமாய் விளங்கி விட்டது
“மந்திரி வேலை ஏற்றால் அரசாங்கத்திற்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுத்தது போல் ஆகும், தேசத்தைக் காட்டிக் கொடுத்த தேசத்துரோகத்துக்கு ஒப்பாகும்” என்றும் “காங்கிரசுக்காரர் மந்திரி பதவிக்காக எக்கட்சியுடனாவது சமாதானம் செய்து கொள்வது என்பது காங்கிரசின் வீழ்ச்சிக்கு அறிகுறி” என்றும் 23 மாதத்திற்கு மூன் தமிழ்நாட்டில் ஏன்? இந்தியாவெங்கணும் சுற்றிச்சுற்றி “கர்ஜித்து”ப்போன. காங்கிரஸ் தலைவர் “ஒப்பற்ற வீரர்" “சமதர்ம சாஸ்திரி” “பொது உடமை கனபாடி'' பண்டிட் ஜவஹர் பார்ப்பனர் தன் மாகாணத்திலேயே இன்று மந்திரி வேலைக்குத் தன் தங்கையை நிறுத்தி காங்கிரஸ் விரோதிகளான முஸ்லீம்களிடம் அவர்களுக்கும் 2 மந்திரி வேலை கொடுப்பதாகக் கூறி உறவுகொள்ள சரண்புகுந்து சர்க்கார்முன் மண்டியிட்டு பிரார்த்திப்பதைப் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பரக்கக் காண்கின்றோம்
குடி அரசு- 1937 (1) 176
ஆகவே “ஐயோ மானங்கெட்ட காங்கிரசே! பார்ப்பனரை நம்பி பரதேசியான காங்கிரசே! உன்னிலை இப்படியா ஆகவேண்டும்! உன். ஆரவாரம் எங்கே? ஆட்ட பாட்டம் எங்கே? ஆணவமெங்கே? ஆங்கிலேயரின் அறை இடுக்கில் புகுந்து போட்டி போடுகிறாயே வெட்கமில்லையா” என்று உலகோர் பரிகசிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே காங்கிரசின் வீரம் ஏமாற்று வீரம் என்பதையும் அதன் பஹிஷ்கார கொள்கைகள் என்பவைகள் பதவிகள் கிடைக்காத காரணத்தால் போடும் போலிக் கூச்சல் என்பதையும் காங்கிரசில் சேர்ந்தால் ஒரு மனிதனாவது யோக்கியதையாகவோ நாணயமுடையவனாகவோ இருக்க முடியாது என்பதையும் நமது 1937ம் வருஷ சீர்திருத்தமும் அதன். தேர்தலும் கல்லின் மேல் எழுத்துப் போல் எழுதிக் காட்டி விட்டன.
என்றாலும் இதுவரை நடந்த 8, 9 மாகாணத் தேர்தல்களில் காங்கிரசுக்கு
5, 6 மாகாணங்களில் படுதோல்வி ஏற்பட்டு விட்டது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஐக்கிய மாகாணத்திற்கு தேர்தல் நடந்து முடிவு வெளியாகத் தொடங்கிய முதல் தினத்திலேயே "காங்கிரஸ் நிறுத்திய 120 ஸ்தானங்களில் இதுவரை 8 ஸ்தானங்களில் தோல்வி அடைந்துவிட்டது” என்று வெளியாக்கிய பார்ப்பனப் பத்திரிக்கைகள் 17ந் தேதியில் 113 ஸ்தானம் காங்கிரசுக்கு கிடைத்தது என்று “மெயில்” “ஜஸ்டிஸ்” முதலிய பத்திரிக்கைகளில் அ.பி. சேதி வந்திருக்கும்போது 116 ஸ்தானங்கள் காங்கிரசுக்கு வெற்றி என்று எழுதினால் காங்கிரசின் நாணயத்துக்கும் அக்கட்சியின் பத்திரிகைகளின் யோக்கியதைக்கும் வேறு உதாரணம் என்ன வேண்டும் என்பதை வாசகர்களே ஒருவாறு உணரலாம்.
அன்றியும் ஐக்கிய மாகாணத்தில் மொத்தம் 288 ஸ்தானத்துக்கு மேல்குறிப்பிட்டபடி காங்கிரஸ்கட்சி நிறுத்தியதே 120 ஸ்தானம் என்று “இந்து” முதல் எல்லா பத்திரிகைகளும் 26-1-37ந் தேதியில் புள்ளி விபரங்கள் காட்டியிருக்க இன்று அதற்கு மாறாக 131 ஸ்தானம் அதாவது காங்கிரசால் நிறுத்தப்பட்ட 120 ஆள்களுக்கு மேல் 11 ஸ்தானங்கள் எப்படி கிடைத்தது என்று யோசித்தால் மந்திரி வேலை ஒப்புக் கொள்ளப்போவதாகவும் வேறு கட்சியின் பேரால் நின்றவர்களுக்கும் மந்திரி வேலை கொடுக்கப் போவதாகவும் அதுவும் காங்கிரசுக்கு எதிரிகளாய் நின்ற முஸ்லீம்களுக்கு
2 மந்திரி ஸ்தானம் கொடுப்பதாகவும் அப்படிப்பட்ட மந்திரிகளை தாங்கள். ஆதரித்து கடைசிவரை காப்பாற்றிக் கொடுத்து வருவதாகவும் பேரம் பேசி சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதல்லாமல் வேறு என்ன காரணம் இருக்க முடியும் என்று கேட்கின்றோம்.
நாளைக்கு தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்கின்ற அய்யங்கார் பார்ப்பனரும் காங்கிரஸ் எண்ணிக்கை மெஜாரிட்டியாய் இல்லாமல்
177 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தோற்கடிக்கப்பட்டுப் போனால் மத்திய மாகாண வீரர் தோழர் ஜவஹர்லால் என்ற பார்ப்பனரைப் போலவே மற்ற கட்சியாரை அதாவது காங்கிரஸை எதிர்த்து நின்ற கட்சியாரை கெஞ்சி கூத்தாடி அவர்களுக்கும் மந்திரி வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஆள் சேர்த்து “காங்கிரசுக்கு ஜெயம்” என்று கணக்கு காட்ட முயற்சிக்கலாம்.
ஆனால் சென்னை கவர்னர் பிரபு அவ்வளவு சுலபத்தில் ஏமாறக்கூடிய பேர்வழியல்ல.
காங்கிரஸ்காரர் அடியோடு நிபந்தனை இல்லாத அடிமை முறிச்சீட்டு அதாவது காந்தியார் இர்வின் பிரபுவுக்கு “இனி மேல் சட்டம் மீறுவதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை, சர்க்கார் உத்திரவுகளை மீறுவதில்லை, மறியல் செய்வதில்லை, வட்டமேஜை மகாநாட்டுக்கு மரியாதையாய் போய் வருகிறேன்” என்று சரணாகதி (காந்தி - இர்வின் ஒப்பந்த) பத்திரம் எழுதிக் கொடுத்தது போல் தோழர் ராஜகோபாலாச்சாரியாரும்
தன் கைப்பட எழுதிக் கொடுத்து தலைவணங்கி கெஞ்சி பிரிட்டிஷ் அரசருக்கும் அவர் சந்ததிக்கும் அடிபணிந்து பக்தி விஸ்வாசம் செலுத்தி அவரது சட்டத்துக்கும் கட்டுபட்டு அடிமையாய் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தை சீர்திருத்த சட்டத்துக்கு அடங்கி நடத்திக் கொடுக்கிறேன் என்று பூணுலையும் கீதை உபநிஷத்தையும் தொட்டு சத்தியம் செய்து கொடுத்தாலொழிய போர்ட் சென்ஜார்ஜ் கோட்டைக்குள் விடப்படமாட்டார் என்பதை ஒவ்வொரு ஓட்டரும் சமதர்ம சூரர்களும் வயிற்றுப்பிழைப்பு வீரர்களும் உணர்ந்திருக்க வேண்டும் என்று நாம் இப்போதே முரசஷிப்போம் கொள்கையும், நாணையமும், உண்மையும் இல்லாவிட்டாலும் காங்கிரசுக்கு பிரசார பலமும், பார்ப்பனர்கள் ஒற்றுமை முயற்சியும் இருந்தால் காங்கிரஸ் எண்ணிக்கையில் வெற்றி பெற்றால் அதில். ஆச்சரியப்பட இடமில்லை.
ஜஸ்டிஸ் கட்சியோ சரியான பிரசாரமில்லாமல் பத்திரிகை இல்லாமல் தங்களில் ஒற்றுமை இல்லாமல் ஒருவரை ஒருவர் தாழ்த்தச் செய்து கொண்ட முயற்சியால் அது எண்ணிக்கையில் தோல்வி அடைந்தால் அதிலும் ஆச்சரியப்பட இடமில்லை. எப்படியானாலும் சரி, ஒரு விதத்தில் ““குந்தினாயே குரங்கே உன் கொட்டம் அடங்க” என்பதுபோல் காங்கிரஸ் காலித்தனமும் தொல்லையும் ஒழிய நல்ல வசதி ஏற்பட்டது என்பதோடு நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய நிலை சந்தேகமற
ஏற்பட்டு இருக்கிறது
நிற்க, இனி நம் காரியமென்ன என்பதை நாம் யோசிக்க வேண்டியதற்கு நாம் எதிர்பார்த்தபடியே தக்க தருணம் வந்துவிட்டது இனி அரை வினாடியும் வீண் செலவழிப்பதற்கு இல்லாத அவ்வளவு சிக்கனத்தில் நேரத்தைக் கையாள வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
குடி அரசு- 1937 (1) 178
இனி நாம் நமது சுயமரியாதைப் போர் முழக்கத்தை முன்னிலும் பன்மடங்கு அதிக வேகத்துடனும் ஊக்கத்துடனும் தொடங்க வேண்டியது தான் நாம் இனிச் செய்யவேண்டிய வேலையாகும். இனி காங்கிரசுக்கு
- பார்ப்பனருக்கு மேடையில்லாமல் எங்கும் சுயமரியாதைச் சுடர், எங்கும் மனித சமூக சமத்துவ சுதந்திரம் என்கின்ற ஓளி கொண்டு பட்டணம் தோறும் கிராமம் தோறும் தெருக்கள் தோறும் சுயமரியாதை மேடையையும் மண்டபத்தையும் ஏற்படுத்த வேண்டியதே முக்கிய காரியமாகும். கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டில் செளகரியமுள்ள இடத்தில் ஒரு ஆரம்ப முஸ்தீபு கூட்டமும் சமீப காலத்தில் ஒரு தமிழ், ஆந்திரா, மலையாளம் ஆகிய பிரதிநிதிகள் கொண்ட சென்னை மாகாண 4-வது சுயமரியாதை மகாநாடும் கூட்டப்பட்டு இந்தியா முழுமைக்கும் நம் இயக்கம் பரவி ஸ்தாபனங்கள் ஏற்படும்படியான காரியங்களையும் செய்ய வேண்டியது கடமையாகும்.
தயாராகுங்கள்!
வாலிபர்களே போருக்கு தயாராகுங்கள்!!
கூட்டுத் தோழர்களே சுயமரியாதைப் போருக்கு தயாராகுங்கள்!!!
குடி அரசு - தலையங்கம் - 21.02.1937
179 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
Dr. நடேசன் நலிந்தார்
டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற கேதி கேட்டு நம்நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்கமாட்டார்கள்: அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விஸ்வாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்கமாட்டான். தோழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமாகும்
சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப்போட்டியில் ஒரு நாளும் வெற்றிபெறமாட்டான் என்கின்ற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தொண்டிற்கும் ஆர்வத்திற்கும் உண்மையான கவலை கொண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் சொந்தத்துக்கு அடையாமல் போனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண்ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார். சென்னை வாசிகள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்கின்ற வேண்டுகோளின்
மீது ஒருவார்த்தை சொல்லுகிறோம். அதாவது நடேசன் நலிவால் சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும் கவலையும் இருந்த மக்களில் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்து விட்டார் என்று சொல்கிறோம். அது மாத்திரமா என்றால் இன்று அவருக்கடுத்த நிலையில் இரண்டாவதவர். மூன்றாவதவர் தான் யார் என்று தேடித்திரிய வேண்டிய நிலையில் தமிழ்மக்களை விட்டு மறைந்து விட்டார் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறதை நினைக்கும்போது நடேசன் நலிவால் தமிழ் மக்கள் உள்ளத்தில் துக்க தீப்பொறி குடிகொண்டு விட்டது என்றே கூறுவோம்
ஒரு தனிப்பட்ட மனிதனை நம்பிவாழும் நாடோ சமூகமோ
சுதந்திரமும் வீரமும் உள்ள நாடோ சமூகமோ ஆகாது. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நலி ஏற்படக்கூடாது என்பதே நமது அவா. ஆதலால் ஒரு நடேசன். நலிந்ததால் நாம் நலிவு கொண்டுவிடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக. நாம் ஒவ்வொருவரும் நடேசனே ஆக நாடுவோமாக
குடி அரசு - இரங்கல் கட்டுரை - 21.02.1937
குடி அரசு- 1937 (1) 150
ஆரம்பமுதல் ஜஸ்டிஸ் கட்சி நாட்டின் முன்னேற்றத்திற்கே உழைத்திருக்கிறது
ஒருநாளும் நாட்டைக் காட்டிக் கொடுத்ததில்லை
மந்திரி கனம் செட்டிநாட்டுக்
குமாரராஜா அவர்கவின் வீரமுழக்கம்
தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் வகுப்புச் சலுகை வெளியான மர்மம்
காந்தியாரையும் காங்கிரசையும் தாக்கியவருக்கு ஓட்டுக்கொடுக்கவேண்டுமாம்
காங்கிரஸ் வாக்கும் தற்கால போக்கும்
காங்கிரஸ் இதுவரை தேசத்திற்கோ அல்லது குறிப்பாக நம் மக்களுக்கோ உருப்படியான காரியம் இன்ன செய்திருக்கிறது, செய்யப்போகிறது, அதற்கு திட்டங்கள் இன்னின்னவைகள் என்று பொது மக்களுக்கு எடுத்துக்காட்டி தங்கள் கட்சி அபேட்சகர்களுக்கு ஆதரவு தேடுவதற்கு பதிலாக ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோக கட்சியென்றும், அதைச் சேர்ந்த பிரமுகர்கள் சுயநலமிகள், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லியும் வந்திருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்களில் சிலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் புதிய சீர்திருத்தத்தை தகர்த்துவிடப் போவதில்லை. சபையில் நுழைந்தவுடன். ராஜவிஸ்வாசப்பிரமாணம் செய்துகொண்டு சர்க்காரின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அடங்கி இருக்கப்போகிறார்கள். ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்? தோழர் சத்தியமூர்த்தியாரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர் இந்திய சட்ட கூபையில் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்யவில்லையா? ஏமாளிகளாகிய நம் பொது மக்களை வாயாடியான சத்தியமூர்த்தியார் சுயராஜ்யம் வந்து விட்டால் வெள்ளையர்களை விரட்டியடித்து விடுவோம் என்று சொல்லுவதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும் பண்டித மோதிலால் நேரும் இந்நாட்டுக்கு விடுதலையைக் கொண்டு வந்துவிடுவேன் என்று சட்ட சபைக்கு சென்றார். பின்னால் ஏமாற்றமடைந்ததால் கடைசியாக அதைவிட்டு ராஜிநாமா செய்து வெளியேறிவிட்டார். இந்திய மட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சட்டசபையில் மெஜாரிட்டியாக இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். இவர்களும் எத்தனையோ தீர்மானங்கள் பாஸ் செய்தார்கள். அவை என்ன கதியாயிற்று! எல்லாம் சர்க்கார் குப்பைத் தொட்டியில் போய் சேர்ந்தனவேயன்றி வேறு என்ன அவர்களால் சாதிக்க முடிந்தது? காங்கிரஸ்காரர்களால் என்ன சாதிக்க முடியும்? என்பதை நீங்களே யோசித்துப்
பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ அவர்கள் படிப்பணம் வாங்கிக்கொள்ளுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? அவர்கள் கோடி கோடியாக நிதிதிரட்டினார்கள். அவைகள் எல்லாம் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டன? தங்கள் சுயநலத்திற்கும், பிரச்சாரத்திற்குமே உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இனி சட்ட மறுப்பு போர் ஆரம்பிப்பதில்லை யென்று வாக்குறுதி செய்து கொடுத்துவிட்டு அவ்வியக்கத்தையும் நிறுத்திவிட்டார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களின். ஏருக்குமாறான செய்கைகளினாலும், தந்திரோபாயங்களினாலும் நாட்டை பாழ்படுத்தியதல்லாமல் என்ன பயனை உண்டுபண்ண முடிந்தது? ஜஸ்டிஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், உள்ள வித்தியாசம் யாதெனில் முன்னவர்கள் கட்டுப்பாடான ஒரு அரசியல் முறையைக் கொண்டு நாட்டுக்கு நன்மை புரிந்து வந்தார்கள். பின்னவர்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையான பல முறைகளைக் கையாண்டு நாட்டைக் கெடுத்து வைத்துவிட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக இருந்தார்களே; அங்கு அவர்களால் வரிகுறைக்க என்ன செய்ய முடிந்தது? காங்கிரஸ்காரர்கள் மூனிசிபாலிட்டிகளையும் ஜில்லா போர்டுகளையும் இதுவரை கைப்பற்றினார்களே, அவைகளில் எங்கெங்கே காங்கிரஸ்காரர்கள் தாங்கள் சொன்னபடி காங்கிரஸ் கொடியைப் பறக்க விட முடிந்தது? இது தவிர காங்கிரஸ்காரர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் என்று சொல்லி ரெவின்யூ ஆபீசரை 500 ரூ சம்பளத்தில் நியமித்ததை, சர்க்கார் அவ்வளவு குறைந்த சம்பளம் அந்தப் பதவிக்கு போதுமானதல்லவென்றும், ஆளும் தகுதியுடையதல்லவென்றும் நிராகரித்துவிட்டார்கள். ஆகவே எக்கட்சி எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் தாங்கள் நினைக்கிறபடி ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. சட்டங்களுக்கு உட்பட்டுத்தான் யாவும் நடைபெற மூடியும். ஏதாவது அதிக நன்மை பெறவேண்டுமானால் சர்க்காரோடு ஒத்துப்போனாலொழிய ஒன்றும் சாதிக்க முடியாது. காங்கிரஸ்காரர்களுக்கு இன்னும் சுயராஜ்யமென்றால் என்ன என்பது புரியாமல் இருந்து வருகிறது. ஏன் தோழர் விஜயராகவாச்சாரியார். கூட சுயராஜ்யத்தின் கருத்து இன்னதென்று தனக்குத் தெரியாதென்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் கிராமங்களில் சென்று பாமர மக்களிடம், சுயராஜ்யம் வந்துவிட்டால் நாட்டில் வரியிருக்காதென்றும், ரயில்வேக்களில் டிக்கட் கட்டணம் இருக்காதென்றும் கூறி வருகிறார்கள். சுயராஜ்யம் வந்துவிட்டால் நாட்டில் வறுமையும், வேலையில்லாத்
குடி அரசு- 1937 (1) 182
திண்டாட்டமும் ஒழிந்துப்போகும் என்று தோழர் ஜவஹர்லால் கூட சமீபத்தில் கூறியிருக்கிறார். ஒரு “ஐனநாயக” ஆட்சியை கொண்ட நாட்டில் இவைகளை எப்படி ஒழிக்க முடியும்? இதற்கு இவர்களிடத்தில் என்ன வழியிருக்கிறது? மேல் நாடுகளில் “ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது எந்த நாட்டிலாவது, தரித்திரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிக்கப்பட்டிருக்கின்னனவா? இன்னும் அமெரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் இன்றும் ஆயிரக்கணக்கான, லக்ஷக்கணக்கான பேர்கள் வேலை யில்லாமல் துன்பப்படுகிறார்கள். இதனால், சுயராஜ்யம் பெறுவதாலே வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கிவிட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு பெரிய பிரச்சனை. இதை சுலபமாகத் தீர்க்க முடியாது. இப் பிரச்சனை பலகாலம் நீடித்திருக்கும். இந்நாட்டிலே ஜஸ்டிஸ் கட்சி ஒன்றுதான் எல்லா வகுப்பாருக்கும் நீதியை வழங்கி வந்திருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் ஒவ்வொருவரும் இக்கட்சி தோன்றுவதற்கு மூன் என்ன நிலைமையில் இருந்து வந்தோம் என்றும் இக்கட்சி தோன்றிய பின் தங்கள் நிலை மனித சமூகத்தில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதும் யோசித்துப்பார்க்க வேண்டியதாகும்
இப்பொழுது ஜனங்களுக்கு ஓட்டுரிமை அதிகரித்திருப்பதற்கு மூல காரணம் ஜஸ்டிஸ் கட்சியேயல்லவா? இந்தியாவிலே ஏனைய மாகாணங்களில் பெண்களுக்கு கிடைத்துள்ள ஓட்டுரிமைகளுக்கும் இந்த ஜஸ்டிஸ் கட்சியே ஜவாப்தாரியல்லவா?
இச்சமயத்தில் கூட்டத்தில் யாராவது கேள்வி கேட்க விரும்பினால்
தாம் பதில் சொல்லத் தயாராயிருப்பதாகவும், காங்கிரஸ்காரர்களைப் போல் மேடையை விட்டு ஓடப்போவதில்லை யென்றும் அறை
கூவினார். ஆனால் ஒருவரும் முன்வரவில்லை.
ஜஸ்டிஸ் கட்சியின் பெரு முயற்சியில் தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்களில் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இக் கட்சியார். சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்கள் சொன்ன வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்பது பொது மக்களுக்குத் தெரியும் அதைப்பற்றி நான் விளக்கிக் கூற வேண்டியதில்லை. காங்கிரஸ்காரர்களுக்கும், ஜஸ்டிஸ்காரர்களுக்கும் அரசியல் திட்டங்களில் வித்தியாசம், வகுப்பு விகிதாச்சாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை. காங்கிரஸ்காரர்கள் வகுப்பு விகிதாச்சாரத்தை ஒப்புக்கொண்டுவிட்டால் நாம் அவர்களோடு ஒத்துப்போவதில் யாதொரு தடையுமில்லை. நமது நாட்டில் பல வகுப்பார்கள் இருந்து வருகிறார்கள். அவர்கள் யாவருக்கும் வருங்கால அதாவது இவர்கள் நினைக்கும் சுயராஜ்ய அரசியலில் சகல அரசியலுரிமையும் கிடைப்பதாக வாக்குறுதியளிப்பார்களானால் எங்களுக்கு அதில் சேர்ந்து
183 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
உழைக்கத் தடையொன்றுமில்லை. காங்கிரசையும், காந்தியாரையும் எதிர்த்துப் பேசிவந்த தோழர் வெங்கடராம சாஸ்திரியாரை தோழர் ராஜகோபாலாச்சாரியார். ஆதரித்து வருவது வகுப்புச்சலுகை எவ்வளவு தூரம் காங்கிரசில் இருந்து வருகிறது என்பதை விளக்கி காட்டிவிட்டார். கடைசியாக பார்ப்பனரல்லாத மக்கள் காங்கிரசுக்கு முழுத் தோல்வியைக் கொடுக்க ஒரு நாளும் பின் வாங்கக் கூடாது
(அடுத்து, ராமநாயக்கன் பேட்டை பஞ்சாயத்து போர்டாரும் உபசாரப் பத்திரங்கள் தலைவர்களுக்கு வாசித்து அளித்தார்கள். உபசாரப்பத்திரங்களுக்குப் பதில் சொல்லுகையில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் சொன்னதாவது)
காங்கிரஸ்காரர்கள் போடும் கூச்சலைக் கண்டோ, ஆரவாரத்தைக் கண்டோ ஒருவரும் ஏமாந்துவிடக்கூடாது. காங்கிரஸ் தோன்றி 50 வருஷங்கள் ஆனது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் நாட்டுக்கு ஏதாவது காதொடிந்த ஊசியளவாவது நன்மை உண்டாயிருக்கிறதா? இல்லை. அதற்கு பதிலாக சர்க்கார் போலீஸ் படையை அதிகரித்து, சம்பளங்களை உயர்த்தினார்கள். இது தான் நாம் இன்று கண்ட பலன். ஏதாவது நில வரியில் ரூபாய்க்கு 3 அணாவாவது வஜா செய்யப்பட்டிருக்கிறது என்றால் அது ஜஸ்டிஸ் கட்சியின் திறமையால்தான். இன்னும் இது தவிர கிராமங்களில் கிணறுகள் வெட்டுவித்தல், பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தல், கிராமங்களில் போக்குவரத்து ரஸ்தாக்கள் உண்டு பண்ணுதல் போன்ற காரியங்கள் செய்தது ஜஸ்டிஸ் கட்சியேயாகும். விவசாயிகளின் கடன் தொல்லையை நில அடமான பாங்குகளை ஏற்படுத்தி ஓர் அளவுக்கு குறைத்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியை மட்டும் பணக்காரர் கட்சி ஜமீன்தார்கள் கட்சி என்று சொல்லுவதெல்லாம் வெறும் புரட்டு வாஸ்தவத்தில் காங்கிரசில்தான் பெரிய முதலாளிகளும், ஜமின்தார்களும் நிறைந்திருக்கிறார்கள். உங்களுக்கு இன்னும் ஏதாவது நன்மை அடைய விரும்பினால் ஜஸ்டிஸ் கட்சியை சார்ந்தவர்களை ஆதரியுங்கள். இல்லையானால் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் தாங்களே தங்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளுவதாகும். காங்கிரசின் தலைநகரமாகிய வங்காளத்தில் காங்கிரஸ்காரர்களுக்கு படுதோல்வி இதையே நம் மாகாணமும் பின்பற்ற வேண்டும்.
குறிப்பு: 14.02.1937 ஆம் நாள் திருப்பத்தூரில் (வேலூர்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 21.02.1937
குடி அரசு- 1937 (1) 184
தோல்வி ஆனால் நன்மைக்கே
தேர்தல் தொல்லை ஒழிந்தது போலவே தேர்தல் மூடிவுபற்றிய கவலையும் ஒழிந்தது. எண்ணிக்கையில் காங்கிரஸ் பெருமை அடித்துக் கொள்ளத்தக்க அளவுக்கு அதிகமாக அடைந்து விட்டது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் கட்சிப் பிரசாரமில்லாமலும் எதிரிகளால் சுமத்தப்பட்ட ஈனப்பழிகளும் மனதறிந்து பொய்ப் பிரசாரங்களும் பாமரமக்கள் மனதைக் கெடுத்து விடுமே என்கின்ற கவலையே சிறிதும் இல்லாமல் அலட்சியமாயும் ஆணவமாயும் இருந்து வந்த பலனை அடைந்து விட்டார்கள் என்றாலும் நிலைமையில் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விட்டதாக யாரும் சொல்ல முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எவ்வித கெடுதியும் வந்து விட்டது என்றோ, இனிமேலாகிலும் வந்துவிடும் என்றோ யாரும் யோசிக்கவேண்டிய அவசியமில்லாத நிலைமையிலேயே இருக்கிறோம்
எப்படியெனில் ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான கொள்கை எல்லாம் அரசியலில் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவமும் சமுதாயத்துறையில் சமத்துவமும் அடையவேண்டும் என்பதேயாகும். மற்றபடி அரசியல் சுதந்திர விஷயத்தில் சாத்தியமான அளவுக்கு எவ்வளவு அதிதீவிரமான கொள்கையானாலும் அடைய ஆவலாகத்தான் இருந்து வருகிறது ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் தக்க அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது என்பதில் எவ்வித ஆக்ஷ்பணையுமில்லை. உதாரணமாக பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் எவ்வளவுதான் ஆக்ஷேபித்தும் இன்று 30 முஸ்லீம்களும் 30 தீண்டப்படாத மக்கள் என்பவர்களும் 6 கிறிஸ்தவர்களும் 6 பெண்களும் வந்துவிட்டார்கள். இந்த வகுப்பு உரிமை இல்லாவிட்டால் இந்தக் கூட்டத்தார் வரமுடியாது என்கின்ற நிலைமை இன்றும் இருக்கிறது என்பதை இன்றைய தேர்தலே பிரத்தியக்ஷத்தில் காட்டிவிட்டது. அதாவது பொதுத் தொகுதியில் நின்ற இரு பெண்களில் ஒரு பெண் தானாகவே பின் வாங்கிக் கொண்டதும் தேர்தலில் போட்டி போட்ட ஒரு பெண் தோல்வியடைந்ததும் பார்த்துவிட்டோம்
அது போலவே பொதுத் தொகுதியில் போட்டிபோட்ட ஒரு முஸ்லீம் கோடீஸ்வரரும் காங்கிரசுக்கு மிக ஆதரவாளியும் வெற்றி பெற்றாலும் காங்கிரசையே ஆதரிக்க இருந்தவருமான ஒரு பிரபு அதுவும் அவர்
எந்தத் தொகுதியில் நின்றாரோ அத்தொகுதி விஷயத்தில் நிபுணத்துவம்
185 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பொருந்தியவராயிருந்தும் ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டதானது முஸ்லீமோ, ஆதிதிராவிடரோ, பெண்களோ பொதுத் தொகுதியில் வரமுடியாது என்பதையும் தனித்தொகுதி மூலம்தான் வரமுடியும் என்பதையும் நிதரிசனப்படுத்திக் காண்பித்து விட்டது. ஆதலால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது சரி என்பதையும் கேட்டது கிடைத்தது என்பதையும் இச்சீர்திருத்தம் மெய்ப்பித்துப் பலன் கொடுத்துவிட்டது இது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு உண்மையான வெற்றியேயாகும்
இனி உத்தியோக விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சி செய்திருக்கும் ஒரு
சிறு ஏற்பாட்டைக் காங்கிரஸ் (பார்ப்பனர்கள்) அதிகாரத்துக்கு வந்தால் கெடுத்து விடும் என்கின்ற பயம் சிலருக்கு இருக்கலாம். அது அவ்வளவு சுலபமான காரியம் என்று நாம் கருதவில்லை. அப்படிக் கெடுக்கக் கூடுமானாலும் அதையும் நாம் உண்மையிலேயே வரவேற்கத் தயாராய் இருக்கிறோம். ஏனெனில் உத்தியோகத்தில் இப்போது முக்கியமாய் இரு சமூகத்தாருக்கு அளிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கை மிகவும் குறைவானது உதாரணமாக சட்டசபை எண்ணிக்கையில் முஸ்லீம்களுக்கு 29 ஸ்தானங்களும் ஆதி திராவிடர்களுக்கு 30 ஸ்தானங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் உத்தியோகங்களில் முஸ்லீம்களுக்கு நூற்றுக்கு 16 ஸ்தானங்களும் ஆதிதிராவிடர்களுக்கு 100க்கு 8 ஸ்தானங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இம்முறை ஆதிதிராவிடர்கள் விஷயத்தில் மிகுதியும் அநியாயமானதாகும் அதுபோலவே பார்ப்பனரல்லாத இந்து ஜாதியார் என்பவர்களில் மொத்தத்தில் 100க்கு 3 வீதமே உரிமையுள்ள பார்ப்பனர்கள் 100-க்கு
16 வீதமும் 100க்கு கிட்டத்தட்ட 60 வீதமுள்ள ஜாதி இந்துக்களுக்கு 44 வீதமுமாய் இருந்துவருகிறது. இவ்விரு வகுப்பினர் ஸ்தானங்களை இன்று பார்ப்பனர்கள் அனுபவித்து வருகிறார்கள். ஆதலால் இந்த விகிதாச்சாரம் மாறுதலடைய வேண்டியது மிகவும் அவசியமானதால் இதில் பார்ப்பனர்கள் கை வைத்தவுடன் காங்கிரசின் பேரால் இருந்து வரும் பார்ப்பனரல்லாதாரும் ஆதிதிராவிடர்களும் இதைக் கவனித்து
தங்கள் குறையை நிவர்த்திசெய்து கொள்ள ஒரு வசதி அளித்ததுபோலாகும் மற்றபடி முஸ்லீம்களும் காங்கிரஸ் இதில் கை வைக்க ஆரம்பித்தால் தக்க புத்தி கற்பிக்கத் தயங்க மாட்டார்கள். ஆதலால் அதைப்பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கூறுவோம்.
மற்றபடி இன்று நம் எதிரிகளான பார்ப்பனர்களுக்கு கிடைத்துள்ள வெற்றியெல்லாம் இப்போது நடந்த தேர்தலில் பார்ப்பனர்கள் 215 ஸ்தானங்களுக்கு தங்கள் இனத்தவர்களாகிய பார்ப்பனர்களில் 40, 50 பேர்களை எப்படி எப்படியோ தந்திரம் செய்து உள்ளே புகுத்தி விட்டார்கள் என்பது தவிர வேறு ஒன்றுமேயில்லை.
அதற்கு ஏற்றாற்போல் பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்ட வெற்றி என்னவென்று பார்ப்போமானால் ஆணவமும் அகம்பாவமும் பிடித்து
குடி அரசு- 1937 (1) 186
கக்ஷியையும் கக்ஷிக் கொள்கையையும் பற்றி லக்ஷியமில்லாமல் பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்து பணக்காரர்களாகவும் சமய சஞ்சீவிகளாகவும் தந்திரசாலிகளாகவும் இருக்கின்ற காரணத்தாலேயே அதிகாரமும்
பதவியும் தங்கள் காலடியில் வந்து கிடந்துவிட்டது, இனியும் அப்படியே
கடந்துவிடும் என்று கருதி இருந்த இறுமாப்பு ஒழிந்து படுதோல்வி அடையவும் தலைகளை மறைத்துக்கொள்ளவும் புறமுதுகிட்டு ஓடி ஒளியவுமான நிலை ஏற்பட்டு உண்மையான உழைப்பாளிகளும் கவலையாளர்களும் வெளிக்கிளம்பி வேலை செய்ய முன் வரும்படியான. நிலைமை ஏற்பட்டதாகும்
காங்கிரசும் பார்ப்பனரும் நல்ல நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அவர்களது கட்டுப்பாடானதும் தொடர்ச்சியானதுமான விஷமப் பிரசாரத்துக்கு எப்போதாவது ஒரு அழிவுகாலம் வரவேண்டுமானால் அது இப்போது வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் என்பது போல் பார்ப்பனர்களது
புளுகுகளும் பித்தலாட்டங்களும் புராண பிரசாரங்களும் வெட்ட வெளிச்சமாகி கொஞ்சநஞ்சம் பாக்கி இருந்த பாமர மக்களும் உணர்ந்து ஜாக்கிரதையாகிக் கொள்ளத்தகுந்த சந்தர்ப்பம் கிடைத்திருப்பதை அறிவாளிகள் வரவேற்பார்கள் என்றே கருதுகிறோம்
இனிமேல் தான் மந்திரிகளின் 500 ரூ. சம்பளம் பெறும் தியாகமும் சீர்திருத்தத்தை தகர்க்கும் வீரமும் வரிகளைக் குறைத்துவிடும் தயாள குணமும் “பாரதத்தாயின்” விலங்கை உடைத்துச் சிறையிலிருந்து வெளியாக்கும் தேசபக்தியும் நன்றாய் விளங்கப் போகின்றன.
ஆதலால் இன்றைய நிலைமை பார்ப்பனரல்லாத மக்கள் நலனுக்குச் சிறப்பாக ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு மதிப்பிடற்கரிய மகத்தான அநுகூலமான. நன்மை என்றே சொல்ல வேண்டும். மற்றபடி சென்ற வாரம் குறிப்பிட்டது போல் சுயமரியாதை இயக்கப் பிரசாரத்துக்கும் பாதை வழி திறக்கப்பட்டது போல் முன்னிலும் தீவிரமாய்ச் செய்ய வசதி ஏற்பட்டிருப்பதை வீணாக்கிவிடாமல் இயக்கத்தில் உண்மைப்பற்றுக் கொண்டவர்களும் சுயநலமற்றவர்களுமான தோழர்கள் ஒன்று சேர்ந்து கட்டுப்பாடாகவும் தொடர்ச்சியாகவும் வேலை செய்யவேண்டியது கடமையாகும். அதற்கான காரியங்கள் செய்யவும் சுயநலம் காரணமல்லாமல் திட்டத்தில் தப்பபிப்பிராயம் கொண்டு விலகி இருக்கும் தோழர்களை ஒன்று சேர்த்து வேலை துவக்கவும் தோழர்கள் செளந்திரபாண்டியன், ஈ.வெ.ராமசாமி முதலியவர்கள் முயற்சி செய்து வருவது பாராட்டத்தக்கதாகும்
குடி அரசு - தலையங்கம் - 28.02.1937
187 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கரஸ் வாலாக்கள் திகைப்பு
காங்கரஸே இந்தியா, இந்தியாவே காங்கரஸ் எனப் பொக்கம் பேசும் காங்கிரஸ் வாலாக்களுக்கு 11- மாகாணங்களில் 6- மாகாணங்களில் தான் இந்த தேர்தலில் மெஜாரட்டி கிடைக்குமாம். அந்த மெஜாரட்டியுங்கூட மாய மெஜாரட்டிதான். மந்திரி சபை அமைக்கும் தருணம் வரும்போதோ அல்லது மந்திரிசபை அமைத்துச் சில காலத்துக்குப் பிறகோ அந்த மெஜாரட்டிகள். மைனாரட்டிகளாகி விடவும் கூடும். ஏனெனில் தற்கால காங்கரஸ் ஒரு நெல்லிக்காய் மூட்டை. தேர்தலில் பேப்பர் மெஜாரட்டி காட்டி நாட்டை ஏய்க்கும் பொருட்டு காங்கிரஸ் பற்றே அணுவளவும் இல்லாதவர்களை காங்கரஸ் பிரகஸ்பதிகள் காங்கரசில் சேர்த்திருக்கிறார்கள். புதுச் சட்ட சபைகள். உருவான பிறகு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு சட்டசபை மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச்செய்யவேண்டுமென்று அகில இந்தியகாங்கரஸ்காரியக் கமிட்டியார். உத்தரவு பிறப்பித்தால் தற்காலக் காங்கரஸ் பக்தர்களாக விளங்கும் மாஜி ராவ்பகதூர்களும், மாஜி திவான்பகதூர்களும் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படி வார்களா? அவர்கள் வீணாகவா திவான்பகதூர் பட்டங்களையும், ராவ்பகதூர் பட்டங்களையும் துறந்தார்கள்? அவ்வளவுக்கு அவர்கள் பைத்தியக்காரர்கள். என நாம் நம்பவில்லை. ஆகவே காங்கரசின் தற்கால மெஜாரட்டியைப்
பார்த்து எவரும் அஞ்சவேண்டியதில்லை. அது மாய மெஜாரட்டியென எந்த மலையுச்சிமேல் நின்று கூறவும் நாம் தயாராக இருக்கிறோம்
சென்னைத் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவர வில்லையாயினும், காங்கரஸ் மந்திரிசபை ஸ்தாபனத்தைப் பற்றி ஏற்கனவே ஆலோசனை ஆரம்பமாகி விட்டது. மந்திரிமார்கள் பெயருங்கூட அநேகமாக நிச்சயமாகி விட்டனவாம். வகுப்பு வாரியாகவே மந்திரிமார் பொறுக்கி எடுக்கப்படுவார். களாம். மந்திரி சபை அக்கிரகாரமாக இருக்கும் பக்ஷத்தில் காங்கரசுக்குள் புரட்சி ஏற்படும் என்பதை காங்கரஸ் பிரகஸ்பதிகள் நன்கு உணர்ந்து விட்டார்கள்: எனவே, காங்கரஸ் மந்திரிசபை உருவானாலும் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையைத் தழுவியே உருவாகும் என்பது நிச்சயம். ஆகவே ஜஸ்டிஸ் லக்ஷ்யம் வெற்றி பெற்று விட்டது கண்கூடு. ஆனால், மாகாண மந்திரிமார் 500 ரூபாய் சம்பளம் வாங்குவது என்பது தான் பல மந்திரி பதவி மோகினிகளுக்குப் பிடிக்கவில்லையாம். எந்த உத்தியோகத்துக்கும் 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் இருக்கக்கூடாது என கராச்சியில் தீர்மானம் நிறைவேற்றியது முட்டாள். தனமென காங்கரஸ் தலைவர்களே இப்பொழுது ஒப்புக்கொள்கிறார்களாம்.
குடி அரசு- 1937 (1) 188
மந்திரிமாருக்குள்ள பூராச்சம்பளத்தையும் வாங்கி ஒரு பகுதியை தேச நிர்மாண வேலைக்கு வழங்குவதே உசிதமென்று மாஜி திவான்பகதூர்களும், ராவ்பகதூர்களும் கூறுகிறார்களாம். முடிவு எப்படியானாலும் சரி, சென்னை மாகாண காங்கரஸ் மந்திரிமார் 500 ரூபாய் சம்பளம் வாங்கமாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம். சென்னை நிலைமை இவ்வாறாக வடநாட்டு நிலைமையைக் கவனிப்போம்
வடநாட்டில் மந்திரி பதவி ஏற்பதுபற்றி பலமான அபிப்பிராயவித்தியாசம் இருந்து வருகிறது. இந்திய மாகாணங்கள் 11-ல் 6 மாகாணங்களில் காங்கரசுக்கு மெஜாரட்டி கிடைக்கப் போவதினால் அந்த ஆறு மாகாணமும் மந்திரி சபை ஸ்தாபிக்க மறுத்தால் சர்க்கார் ஸ்தம்பித்து விடும் என்று ஒரு
சாரார் அபிப்பிராயப் படுகிறார்கள். அவர்கள் அபிப்பிராயப்படி ஆறு மாகாணங்களில் மந்திரி சபை ஸ்தாபிக்க காங்கரஸ் மறுத்தால், சர்க்கார் சட்டசபைகளைக் கலைத்துவிட்டு மறு தேர்தலுக்கு உத்திரவிடுவார்கள். அப்பால் நடக்கும் தேர்தல்களில் காங்கரஸ்காரருக்கு மீண்டும் வெற்றி கிடைக்குமென்பது நிச்சபமா என வேறொரு சாரார் கேட்கிறார்கள். தேர்தல் என்பது கேவலம் பாப்பா விளையாட்டல்ல. “மோட்டாரின்றி பணமும் இன்றி தேர்தல் ஒன்று வருகுது” என காங்கரஸ்காரர் அலங்காரமாகச் சொல்லிக்கொண்டாலும் காங்கரஸ்காரரின் வெற்றிக்கு மோட்டாரும், பணமும் ஒரு காரணமென்பதை எவராலும் மறுக்க முடியாது. காங்கரஸ் அபேக்ஷகர்களில் பலர் ஏழைகள் என்று சொல்லிக் கொள்ளப்பட்டாலும்
புது காங்கரஸ் பக்தர்களான பணக்காரர் உதவி அவர்களுக்கு ஏராளமாகக் கிடைத்திருக்கத்தான் செய்கிறது. மற்றும் பல இடங்களில் பணக்காரரைப் பொறுக்கியெடுத்தே காங்கரஸ் அபேட்சகர்களாக நிறுத்தியிருக்கிறார்கள். இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் மொத்தமாகப் பார்த்தால் பல லக்ஷம் செலவாகி இருக்குமென்பது நிச்சயம். ஆகவே, மீண்டும் வெகு சீக்கிரம் ஒரு தேர்தல் வந்தால் தேர்தலுக்கு யார் தாலியை அறுப்பது என மந்திரி சபை ஆதரிப்புக் கட்சியார் கூறுகிறார்களாம். மந்திரி சபை ஸ்தாபித்து நிலவரி குறைத்தல் முதலிய பொது ஜனோபகாரமான காரியங்களை வற்புறுத்தி கவர்னர் முட்டுக்கட்டை போட்டால் அப்பொழுது காங்கரஸ் மந்திரிகளும், காங்கரஸ் மெம்பர்களும் ராஜிநாமாச் செய்து மறுதேர்தல் நடத்தும் நிலைமையை உண்டுபண்ணவேண்டுமென்றும், அக்காலத்து பொதுஜன ஆதரவு கிடைக்குமென்றும் மற்றொரு சாரார் கூறுகிறார்களாம். காங்கரஸ். சோஷியலிஸ்டுகள் மந்திரி பதவி ஏற்கவே கூடாதென்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள். மற்றும் மார்ச்சு முதல் வாரத்தில் கூடப்போகும் அகில இந்திய காங்கிரஸ் காரியக்கமிட்டியார் எவ்வாறு முடிவு செய்வார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. வரப்போகும் சீர்திருத்தத்தைக் கவிழ்ப்பதே இதுவரை காங்கிரசின் திட்டமான லக்ஷ்யமாக இருந்து வருவதினால்
மந்திரி பதவி ஒப்புக்கொள்வது தற்கொலை செய்துகொள்வதற்கு ஒப்பாகுமென விவேகிகளான காங்கரஸ் தலைவர்கள் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகிறது.
19 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இவ்வண்ணம் காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்து வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை. பாமர மக்களை ஏமாற்றி வோட்டுப்பறிக்கும் பொருட்டு அசாத்தியமான. காரியங்களையெல்லாம் சாதிக்கப் போவதாக பொறுப்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் வாய்வீச்சு வீசினார்கள். இப்பொழுது சில மாகாணங்களில். குருட்டாம்போக்கில் அவர்களுக்கு மெஜாரட்டி கிடைத்துவிட்டது அவர்களுடைய வாய்வீச்சுகளை கிரியாம்சையில் காட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது. எனவே, காங்கிரஸ்காரர் பேந்தப் பேந்த விழிக்கிறார்கள். இந்த தர்ம சங்கடத்துக்கு என்ன செய்வதென்று சஞ்சலப்படு கிறார்கள். சந்திக் கூட்டங்களில் வாய் வீச்சு வீசுவதற்கும் மந்திர பீடத்திலமர்ந்து காரியங்கள் நடத்துவதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுண்டு. மறியல் செய்வதில், உப்புக் காய்ச்சுவதில், தடியடி படுவதில் சிறை புகுவதில், பொதுப் பணங்களை ஸ்வாஹா செய்வதில், வாக்குறுதிகளைக் காற்றுவாக்கில் பறக்க விடுவதில் காங்கிரஸ் கொள்கைகளுக்குப் புதுப்புது வியாக்கியானங்கள் செய்வதில், சமயோசிதமாக. பொய்யும் புளுகும் வாரி வீசுவதில், விஷமப் பிரசாரம் செய்வதில், நாடகக்காரிகளையும், சினிமாக்காரிகளையும் காட்டி வோட்டு வேட்டையாடுவதில், தேர்தல் தினத்துக்குத் தலைநாள் உலகம் திடுக்கிடக்கூடிய புரளியுண்டுபண்ணுவதில், காங்கிரஸ்காரர்கள் வெகு சமர்த்தர்களாக இருக்கலாம். ஆனால், அரசியலில் காங்கிரஸ்காரர் பச்சைக்
குழந்தைகளிலும் கேவலமானவர்களே. அரசியல் அரிச்சுவடியை இனித்தான். அவர்கள் கற்கவேண்டும். ஆகவே, சில மாகாணங்களில் காங்கிரஸ்காரருக்கு மெஜாரட்டி கிடைத்திருப்பதைப் பார்த்து நாம் கவலைப்படவில்லை. சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் மெஜாரட்டி ஏற்பட்டாலும் நாம் வருந்தப் போவதில்லை. மாறாக காங்கிரஸ்காரர்களின் யோக்கியதையை அறிய சென்னை மாகாணத்தாருக்கு ஒரு தருணம் கிடைத்தால் அதைப்பற்றி
நாம் பெரும் மகிழ்ச்சியே அடைவோம். கடைசியாக நம்மவர்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறோம் தற்காலிக வெற்றியில் காங்கிரஸ்காரர் தலைகால் தெரியாமல் கூத்தாடுவதைப் பார்த்து நீங்கள் அஞ்சவேண்டாம். வெகு விரைவில் அதாவது சுமார் 6 மாதங்களுக்குள் காங்கிரஸ்காரர் மிரட்டல்கள் வெட்ட வெளிச்சமாகப் போகின்றன. அப்பொழுது ஒரு பிரம்மாண்டமான நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியை நம்மவர்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இப்பொழுதே
நீங்கள் முயற்சி செய்யுங்கள். உலக வாழ்வில் போலவே அரசியல் வாழ்விலும் மேடும்பள்ளமும்உண்டாகத்தான் செய்யும். எனவே எவரும் அஞ்சவேண்டாம்.
- 24-2-37 விடுதலை”
குடி அரசு (மறு பிரசுரம்) - கட்டுரை - 28.02.1937
குடி அரசு- 1937 (1) 190
அஞ்சேல்! அஞ்சேல்!! அஞ்சேல்!!!
எந்த நாட்டிலும் எந்தக் கட்சியும் யுகாந்த காலம் வரை அதிகார பதவி வகித்ததில்லை. எந்தக் கட்சிக்கும் பொதுஜன கோரிக்கைகளை யெல்லாம் எிவர நிறைவேற்றி வைக்க முடியாது. ஆகவே அதிகார பதலி வகிக்கும்
கட்சி மீது பொதுஜனங்களுக்கு சில காலத்துக்குப் பிறகு அதிருப்தி ஏற்படுதல் இயல்பே. இந்நிலைமை எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதே. பிரிட்டனிலே மிகவும் முற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் தொழிற் கட்சி தோழர் ராமஸே மாக்டோனால்டு தலைமையில் அதிகார பதவி ஏற்றது. கொஞ்ச காலம் அக்கட்சி செல்வாக்குப் பெற்றும் இருந்தது. ஆனால். அந்தச் செல்வாக்கு நெடு நாள் நிலை நிற்கவில்லை. வெகு சீக்கிரம் மறுதேர்தலை நடத்தும் நிலைமை ஏற்பட்டது. தேர்தலிலே தொழிற்கட்சியார் முறியடிக்கப்பட்டார்கள். பிற்போக்குக் கட்சி எனக் கூறப்படும் கன்சர்வேட்டிங் கட்சியார் மெஜாரட்டி பெற்று அதிகார பதவி ஏற்றார்கள். தொழிற்கட்சித் தலைவர் தோழர் ராம்ஸே மாக்டோனால்டு தமது கட்சியை நட்டாற்றில் விட்டுவிட்டு கன்சர்வேட்டிங் கட்சியாரிடம் சரணாகதியடைந்தார். இன்று தொழிற்கட்சி மைனாரிட்டி கட்சியாகி செல்வாக்கு இழந்து நிற்கிறது. வெகு சமீபத்தில் பூர்வ நிலையை அடையுமென நம்ப முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாடும் அரசியல் அனுபவமும் உடைய தொழிற்கட்சி பாடே இவ்வாறிருக்கையில் நமது கட்சிக்குத் தற்காலம் ஏற்பட்டிருக்கும் தோல்வியைப் பார்த்து மனந்தளர்வது மதியீனமாகும்
நமது நிலை
மக்கள் மனப் போக்கு கடல் அலைகளுக்கு ஒப்பானது. இன்று பொதுஜன மதிப்பைப் பெற்று நிற்கும் ஒரு கட்சி நாளை அம்மதிப்பை இழக்கவும் கூடும். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுவானதாயினும் நமது கட்சியின் விசேஷ நிலைமையை வாசகர்கள் முக்கியமாக கவனிக்க. வேண்டும். சமயங்களின் பேராலும் ஒரு சிறு சமூகத்தார் பெற்றிருக்கும் விசேஷ உரிமைகளையும் வசதிகளையும் பிரயோகம் செய்து எல்லாத் துறைகளிலும் நம்மவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் கொடுமையை ஒழிக்கவே நமது கட்சி தோன்றிற்று. சென்ற 20 வருஷ உழைப்பினால் நம் கட்சியின் நோக்கம் ஒருவாறு வெற்றி பெற்று வருகிறது. நம்மை அடக்கியாண்டு வந்த சமூகத்தார் தமது பூர்வ பலத்தை ம... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இழந்து விட்டனர். அரசியலிலும் சமூக இயலிலும் அவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் மாய்ந்து விட்டன. ஆகவே தமது பூர்வ நிலைமையை மீண்டும் அடைய அவர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். “இருப்பதா இறப்பதா?'' என்ற பிரச்சினையை முடிவு செய்ய வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நேருக்கு நேர் மார்தட்டி நின்று போராட அவர்களுக்கு சுய பலமில்லை. 100க்கு 3 கொண்ட ஒரு சமூகத்தாருக்கு 100-க்கு 97 கொண்ட சமூகத்தார் மூன் எவ்வாறு மார்தட்டி நின்று போர் தொடுக்க முடியும்? ஆகவே, காங்கரஸ் துணை கொண்டு நம்மவர்களை வீழ்த்த அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்.
காங்கரஸ்:
மிகவும் பழமையான ஸ்தாபனம். அறிவும், ஆற்றலும் மிக்க பல பெரியார்களால் தோற்றுவிக்கப்பட்டது. காங்கரசின் ஆதிகால லக்ஷ்யம் வேறு, தற்கால லக்ஷ்யம் வேறு. இந்தியர்களின் குறைபாடுகளை
பிரிட்டிஷ் சர்க்காருக்கு உணர்த்தி அரசியல் உரிமைகள் பெறுவதே காங்கரசின் ஆதிகால லக்ஷயமாக இருந்தது. பிரிட்டிஷ் தொடர்பற்ற பூரண சுயராஜ்யம் பெறுவது காங்கரசின் தற்கால லக்ஷ்யம். சுதந்தரம், விடுதலை' என்பன மிகவும் மனோகரமான வார்த்தைகள். இந்திய மக்களில் 100-க்கு 97 பேர் எழுத்து வாசனை யில்லாதவர்களாயிருந்தாலும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும், கலைஞானிகளும், உலக மதிப்புப் பெற்ற அரசியல்வாதிகளும் நமக்குள்ளே இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் வார்த்தைகளை பாமர மக்கள் தேவ வாக்காக மதிப்பது ஆச்சரியமல்ல. காந்தி, தூய வாழ்க்கையினாலும், தியாகங்களினாலும் எப்படியோ இந்தியர் மதிப்பைப் பெற்று விட்டார். இந்தியர்களில் 100-க்கு 90 பேர் காந்தியைக் கடவுளாக வணங்கும் மனப்பான்மை யுடையவர்களாகவே இருக்கிறார்கள். ஜவஹர்லால், படேல், ராஜேந்திரா முதலியோரும் தியாகிகள் என்றும், வீரர்கள் என்றும் அமிதமாக விளம்பரம் செய்யப்பட்டு, பொது மக்கள் மனத்தைக் கவர்ந்தவர்கள். ஆகவே, சுயராஜ்யம் என்றும், ராமராஜ்யம் என்றும் அவர்கள் கூறுவதைக் கேட்டு பாமர மக்கள் மதிமயங்கி யிருப்பது ஆச்சரியமல்ல. வரிப்பளுவால் வாடும் விவசாயி வரி வசூல் செய்யாத ஒரு அரசாங்கத்தை விரும்புவது இயல்பே. கடன் பளுவால் நசுங்கும் ஏழைகள் வாங்கின கடனைக் கொடு என்று சொல்லாத ஒரு நிருவாக முறையை நாடுவதும் சகஜமே. வரப்போகும் சுயராஜ்யத்திலே - ராம ராஜ்யத்தில் குடிகள் சுவர்க்க வாழ்வு வாழ்வார்கள் என்று காங்கரஸ்காரர் கூறுகிறார்கள். இந்தியாவின் தற்காலக் கஷ்டங்களுக்கெல்லாம் பிரிட்டஷாரே காரணமென்றும், பிரிட்டீஷாரை இந்தியாவிலிருந்து ஓட்டிவிட்டால் இந்தியர்கள் பாலும் சோறும் உண்டு சுபிக்ஷமாக வாழ முடியுமென்றும் காந்தி கோஷ்டியார்
குடி அரசு- 1937 (1) 192
செப்புகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் அம்மாதிரி அசாத்தியமான காரியங்களைச் செய்யப்போவதாய் கூறவில்லை. மக்களில் 100-க்கு 90
பேர் எழுத்து வாசனையில்லாதவர்கள், பரம ஏழைகள் என ஏற்கனவே கூறியிருக்கிறோம். காங்கரஸ்காரர் காங்கரஸ் தோன்றி 50 வருஷங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் முதன் முதலாக அரசியல் நடத்த முன்வந்திருக்
கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே என தேச மகாஜனங்கள் விரும்புவது சகஜம் தானே. தற்கால காங்கரஸ் வெற்றிக்கு காரணம் இதுவே. அரசியலை ஒப்புக்கொண்டு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றிவைக்க காங்கரஸ்காரர் தவறுவார்களாயின். இன்று அவர்களை மெஜாரட்டியாக அனுப்பும் தேச மகாஜனங்களே அடுத்த தேர்தலில் அவர்களை விளக்குமாறைக் காட்டி வெரட்டி ஓட்டுவார்கள் என்பது நிச்சயம். எனவே காங்கரஸ் வெற்றியைப் பார்த்து நாம் அஞ்சத் தேவையே இல்லை. மாறாக அடுத்த போருக்கு இப்பொழுதே ஆயத்தம் செய்ய வேண்டியதே நமது கடமை
எதிர்கால வேலை
சுமார் 15 வருஷகாலம் அதிகார பதவி வகித்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் அளப்பரிய நன்மைகள் நாம் செய்துள்ளோமாயினும் நமது கட்சியை வளர்க்க - உறுதிப்படுத்த - அநியாயமாகத் தவறிவிட்டோ மென்பதை நாம் மிக்க வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டியதாகவே
இருக்கிறது. 15 வருஷகாலம் அதிகார பதவி வகித்த ஒரு கட்சிக்குப் பொது நிதியில்லை; தேவையான அளவுக்குப் பத்திரிகைகள் இல்லை; பிரசாரங்கள் இல்லை என்றால் இதைவிடப் பெரிய மானக்கேடு வேறுண்டா? 1933-ல் கனம் பொப்பிலி ராஜா அவர்கள் மட்டும் கட்சித் தலைவர் பதவி ஏற்றிருக்காவிட்டால் நமது கட்சி எவ்வளவோ காலத்துக்கு முன்னமேயே தோழர் சத்தியமூர்த்தி அபீஷ்டத்தைப் பூர்த்தி செய்திருக்கும் என்பதற்கு சந்தேகமே இல்லை. மந்திரி பதவிக்குள்ள சம்பளத்தைத் தவிர தம் சொந்த பணத்தையும் லட்சக்கணக்கில் கட்சி
நலனுக்காகச் செலவு செய்யும் ஒரு தலைவரை நாம் அதிர்ஷ்டவசமாகப்
பெற்றிருந்தும் ஏனைய தலைவர்களின் அலட்சிய புத்தியினால் நமது
கட்சி இன்று வலியிழந்து நிற்பது மிகவும் வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்துக்குப் பத்திரிகையே நாக்கு. பத்திரிகையில்லாத சமூகம் பேச நாக்கில்லாத சமூகமேயாகும். வாரம் இரு முறையாவது தமிழர் சமூகம் பேசுவதற்கு வசதியளித்த பெருமையும், இங்கிலீஷ் தினசரி நடத்தும் பொறுப்பையும் சென்ற மூன்று நான்கு வருஷகாலமாகத் தாங்கி நிற்கும் நமது மாபெரும் தலைவருக்கே உரியது - ஏனைய தலைவர்கள் கட்சிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அந்தோ! மறந்தே விட்டார்கள். தமது நலனுக்காக உழைப்பது கட்சியின் கடமையே யன்றி கட்சி நலனுக்காக
193 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
உழைப்பது தமது கடமையல்லவென அவர்கள் அசட்டுத்தனமாக நம்பியிருந்ததே நமது கட்சியின் தற்கால நிலைமைக்குக் காரணம்.
ஜில்லாக்கவின் அலக்ஷயம்
நமது கட்சிக்கு ஒவ்வொரு ஜில்லாவும் ஒவ்வொரு கோட்டையாகும். ஜில்லாக் கோட்டைகள் எல்லாம் நமது கட்சியார் வசமிருந்தும் ஜில்லாக் கோட்டைகளுக்கு தளபதிகளாயிருந்தவர்களின் அலக்ஷய பாவனையினால் நாம் ஜில்லாக் கோட்டைகளை ஒவ்வொன்றாக இழந்து விட்டோம் ஜில்லா போர்டு தலைவர்கள் தாலூகாக்கள் தோறும் மகாநாடுகள் கூட்டி பாமர மக்களும் நமது தலைவர்களும் நெருங்கிப் பழகவும் நாம் செய்துள்ள வேலைகளை பாமர மக்கள் உணரவும் சந்தர்ப்பங்கள் அளித்திருந்தால் தற்கால நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதற்கு சந்தேகமே இல்லை. சென்ற டெல்லி அசம்பிளித் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய காங்கரஸ்காரர் தாலூகாக்கள் தோறும் கிராமங்கள் தோறும் மகாநாடுகள் கூட்டியும் திக் விஜயம் செய்தும் தீவிர பிரசாரம் செய்து வருவதைக் கண்டும் நமது ஜில்லாத் தலைவர்கள் தூங்கிக்கொண்டு இருந்தது மன்னிக்க முடியாத குற்றமல்லவா? மகாநாடுகள் கூட்டி நாம் செய்துள்ள வேலைகளையும், மேற்கொண்டு செய்யப்போகும் வேலைகளையும் பாமர மக்களுக்கு எடுத்துக் கூறி பாமர மக்கள் ஆதரவைக் காலாகாலத்தில் பெற்றிருந்தால், கடைசிக் காலத்து லட்சக் கணக்காகச் செலவு செய்தும் - அநாமதேயர்களால் தோற்கடிக்கப்படும் துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்குமா என்பதை ஜில்லாத் தலைவர்கள் இப்பொழுதாவது யோசித்துப் பார்ப்பார்களா? காங்கரஸ்காரர் பாடுபட்டார்கள்; கூலி பெற்றார்கள்: நாம் சோம்பியிருந்தோம்; தோல்வி யடைந்தோம்
போனதெல்லாம் போகட்டும்
சென்றன சென்றன. நிகழ்ந்து போனதை எண்ணி வருந்துவதில் பயனில்லை. பிப்ரவரி தேர்தலோடு நமது வாழ்நாள் முடிவுபெற்றுவிடவில்லை. அரசியல் வாழ்வில் இறங்கினால் வெற்றியும், தோல்வியும் உண்டாகத்தான் செய்யும். தோல்வியுறுவது மானக் கேடுமல்ல; தோல்விக்கள்சி ஓடுவதுதான் மானக்கேடு. அதிர்ஷ்டவசமாக நாம் ஒரு இணையற்ற தலைவரைப் பெற்றிருக்கிறோம். அவரது கொடிக்கீழ் நின்று நாமெல்லாம் ஒற்றுமையோடு உழைத்தால் வெகு சீக்கிரத்தில் நாம் வெற்றிக் கொடி நாட்டிவிடலாம். நமது குறைபாடுகளை கட்சித் தலைவர்கள் உள்பட எல்லாரும் அறிந்துதான் இருக்கிறார்கள். எனவே, நாம் மீண்டும் விளக்கிக்கூற விரும்பவில்லை. பணமும், தொண்டர்களும், பத்திரிகைகளும் உண்டானால் காங்கிரஸ்காரரோடு போராடி வெற்றிக் கொடி நாட்டலாமென்பது
நிச்சயம். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய தேச பாஷைத் தினசரிகள் கட்டாயம் வெளிவந்து தீர வேண்டும். மலையாளியான
குடி அரசு- 1937 (1) 194
டாக்டர் நாயர் தோற்றுவித்த இயக்கத்தை மலையாளிகள் முற்றிலும் மறந்தே விட்டார்கள். 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நூற்றுக்கணக்கான மலையாளி வாலிபர்கள் கும்பல் கும்பலாகச் சென்று மஞ்சள் பெட்டியில் வோட்டுப்போட முயல்வதை நாம் கண்ணாரக் கண்டபோது நமது இரத்தம் கொதித்தது. என்: செய்வது? மலையாளப் பத்திரிகை இல்லாத குறையினால் நாம் மலையாளிகள். ஆதரவை இழந்து விட்டோம். தெலுங்குப் பத்திரிகை இல்லாத குறையினால் ஆந்திர நாட்டு ஆதரவையும் அநேகமாக இழந்து விட்டோம். இன்னும்
6 மாதத்துக்குள் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நெருக்கடி ஏற்படுமென்ற உணர்ச்சி நமக்கு எப்படியோ இருந்து கொண்டு இருக்கிறது அதற்கு முன் நாம் நம்மவர்களை ஆயத்தம் செய்து கொள்ளவேண்டுமென்று நம்மவர்களை நாம் வணக்கமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம்.
ஒரு வார்த்தை
நாம் முன்னேற வேண்டுமானால், நமது பூர்வ நிலையை அடைய வேண்டுமானால் நம்மவர்களின் தற்கால மனப்போக்கு அடியோடு மாற வேண்டும். பத்திரிகை, பிரசாரம் என்றால் நம்மவர்களுக்கு விளக்கெண்ணெய், வேப்பங்காய் மாதிரி இருக்கிறது. அந்த மனோ நிலை மாறினாற்றான். நமக்கு எதிர்காலத்து வாழ்வுண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பாஷைகளில் நான்கு தினசரிகள் வெகு சீக்கிரம் வெளிவந்து தீரவேண்டும். தொழில் பழக்க முடையவர்கள் துணைகொண்டு வர்த்தக முறையில் பத்திரிகைகள் நடத்தினால் கை நஷ்டம் ஏற்படவே செய்யாது. ஒருகால், ஆரம்ப காலத்தில் சிறிது நஷ்ட மேற்பட்டாலும் நான்கோ, ஐந்தோ ஆயிரத்துக்குமேல் போகாது. இந்தச் சிறு நஷ்டத்தை சமாளிக்க நமக்கு சக்தியில்லையா? நமக்குள்ளே ஜமீன்தார்கள் இல்லையா! மிராசுதார்கள் இல்லையா? மிட்டாதார்கள் இல்லையா? ஆலை. முதலாளிகள் இல்லையா? பாங்கர்கள் இல்லையா? லக்ஷாதிபதிகள் இல்லையா? இவர்கள் எல்லாம் நினைத்தால் பத்திரிகைப் பிரச்சினை வெகு சுளுவில் முடிவடையாதா? தேர்தல் காலத்தில் லக்ஷக்கணக்கில் செலவு செய்கிறவர்கள் ஆதியில் கட்சியை வலுப்படுத்த சிறிது செலவு செய்தால் கடைசிக் காலத்தில் பணம் பாழ்படுவது கட்டாயம் தடைபடத்தான் செய்யும். பணத்தைச் செலவு செய்தாலும் போதாது; கால மறிந்து இடமறிந்து செலவு செய்ய வேண்டும். நமது லக்ஷ்யம் உயர்வானது; நமது கொள்கைகள் உத்தமமானவை; நாம் செய்துள்ள வேலைகளோ அபாரமானவை; மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளும் மலைபோல் இருக்கின்றன. நமது லக்ஷியம் கொள்கை, சேவை காரணமாக நாம் எக்கட்சிக்கும் தலை குனியத் தேவையில்லை. காலப்போக்குக்கு அநுகுணமான சாதனங்கள் இல்லாமையினாலேயே
நாம் தற்காலம் தலைகுனியும்படி நேர்ந்திருக்கிறது. “ஜஸ்டிஸ்” பத்திரிகை கூறுகிறபடி நாம் அபிசீனியர் நிலையிலும், நமது எதிரிகள் இத்தாலியர்.
19$ ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நிலையிலும் இருந்து வருவது உண்மையே. நியாய பலம் அபிசீனியர்
பக்கம் இருந்தாலும் பிரம்மாண்டமான படை வலியினால் இத்தாலியர் அபிசீனியரை நசுக்கி வருவதுபோல், நியாயபலம் நம் பக்கம் இருந்தும் அமோகமான பத்திரிகைகள், பிரசாரகர்கள் மூதலிய சாதனங்களின். உதவியினால் விஷமப் பிரசாரம் செய்தும், காலித்தனம் செய்தும் காங்கரஸ்காரர் நம்மை முறியடித்து வருகிறார்கள். “துஷ்டரைக் கண்டால்
தூரத் தூரே” என்ற பழமொழிப்படி நாமும் பின் மாறும்படி நேர்ந்திருக்கிறது. நமது பலத்தை நாம் உணர்கின்றோமில்லை. நமக்கு எவ்வளவு ஆற்றலுண்டென்பதை யறியவும் நமக்கு மதியில்லை. பல்லாயிர வருஷ காலமாக மதத்தின் பேராலும், சாஸ்திரங்களின் பேராலும், நம்மை யடக்கியாண்டு வந்த ஒரு சக்தி வாய்ந்த சமூகத்தை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற தியாகர், நாயர், ராயர் திருவுருவங்களை தினமொருமுறை நினைத்துப்பார்த்தாலும் நாம் ஒவ்வொருவரும் ஆண்சிங்கம் ஆகமாட்டோமா! மலையினும் பெரிய வலி பெறமாட்டோமா!! தலைவர்களே!! தொண்டர்களே!!! ஒரு நிமிஷம் யோசித்துப் பாருங்கள். தளராத வெற்றிக்கொடி நாட்டி
நிற்க ஆற்றலுடைய - வசதியுடைய நாம் நமது மதியீனத்தினாலன்றோ
ஒரு சிறுகுடி மக்கள் முன் தலை குனிய வேண்டியிருக்கிறது. நமது திராவிட வீரம் எங்கு போயிற்று? இமயத்தில் புலிக்கொடி நாட்டிய
சக்தி எங்கு போயிற்று? தற்கால நாகரிக மக்கள் வனவிலங்கனையராய் பொந்திலும், புதரிலும் வாழ்ந்த காலத்து சாம்ராஜ்யங்கள் கண்டு திரைகடலோடி திரவியம் தேடி, திராவிட நாகரிகத்தை உலக முழுதும் பரப்பிய நமது பேராற்றல் எங்கு போயிற்று? தலைவர்களே!! தொண்டர்களே!!! சகோதரர்களே! நமது பூர்வ நிலைமையை சிறிது சிந்தித்துப் பாருங்கள்! நமது முன்னோர் ஆற்றலை - வீரத்தை - ஆண்மையை - சிறிது உன்னிப்பாருங்கள்! அடுத்த போருக்கு தயாராகுங்கள்!!!
- “விடுதலை”
குடி அரசு (மறு பிரசுரம்) - கட்டுரை - 07.03.1937
குடி அரசு- 1937 (1) 196
வெற்றி - தோல்வி
சட்டகபைத்தேர்தல் நடந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. காங்கிரசுக்கு
5, 6 மாகாணங்களில் தோல்வியும் 5, 6 மாகாணங்களில் எண்ணிக்கையில்
வெற்றியும் ஏற்பட்டிருக்கிறது தோல்வி அடைந்த மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரிசபை ஏற்றுக்கொள்ளுவதில்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் காரணம் இவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) ஆசைப்பட்டாலும் முடியாது ஆகவே இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் பெரியதொரு “தியாகம்” செய்து விட்டார்கள்.
அதுமாத்திரமல்லாமல் தோல்வி அடைந்த மாகாணங்களில் ஏற்படப்போகும் மந்திரிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து மந்திரி சபை நடக்காமல் தடைமுறைகளை கையாளப் போகிறார்களாம். இதுவும் வெகுகஷ்டப்பட்டு கண்டு பிடித்த சங்கதியாகும். இல்லாவிட்டால் இவர்கள் தோல்வியுற்ற சபைகளில் வேறு என்னதான் செய்ய முடியுமோ தெரியவில்லை.
காங்கிரஸ் தடுமாற்றம்
நிற்க வெற்றி பெற்ற மாகாணங்கள் என்பவைகளில் என்ன செய்வது என்பதுபற்றி தலைவர்கள் முதல் வாலர்கள் வரை தைரியமாய் ஒன்றும் வெளியில் சொல்லமுடியாமல் ஆளுக்காள் உளறிக்கொட்டிய வண்ணமாக இருக்கிறார்கள்.
ஆனால் அந்தரங்கத்தில் அவரவர்கள் உள் எண்ணத்தில் தோழர் ஜவஹர்லால் முதல் எல்லோரும் ஆதிமுதற்கொண்டே எப்படியாவது பதவிபெற்று 5 நிமிஷமாவது அனுபவித்து விட்டுச் சாகவேண்டும் என்கின்ற தீர்மானத்தின் மீதே துணிந்து தேர்தலில் இறங்கி இருக்கிறார்கள்
ஆனால் பகுதி மாகாணங்களில் தோல்வியும் பகுதி மாகாணங்களில். மாத்திரம் வெற்றியும் ஏற்பட்டு விட்டதால் அவர்களுக்கு இன்னது செய்வது என்பது தோன்றாமல் உளறிக்கொட்ட வேண்டியதாய் நேர்ந்து விட்டது. எப்படி
இருந்தாலும் மந்திரிகளாகாமல் சாவதில் பல தலைவர்களுக்கு இஷ்டமிருக்காது. ஆதலால் கண்டிப்பாய் மந்திரிகளாவதற்கு வேண்டிய சகல தந்திரமும் செய்துதான் தீருவார்கள். இப்போது முதலே செய்துகொண்டுதான்.
வருகிறார்கள். அதில் அவர்களுடைய (காங்கிரஸ்காரர்களுடைய) முக்கிய
197 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கஷ்டம் என்னவென்றால் “தேர்தலுக்கு முன் என்னென்னமோ பொறுப்பும் முன்யோசனையும் இல்லாமல் வீம்புபேசிவிட்டோமே இன்னம் 10 நாள் கூட ஆகாமல் அவ்வீம்புகளுக்கு விரோதமாய் எப்படி நடப்பது?” என்கின்ற கவலையே இப்போது இருந்து வருகிறது. இந்தக் கஷ்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள காந்தியாரையும் இழுத்துப் போட்டுக்கொண்டார்கள்.
காந்தியார் நாணயம்.
கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி தோழர் காந்தியார் சென்னைக்கு வந்திருந்தபோது அவரை “சுதேசமித்திரன்” நிருபர் பேட்டி கண்டு பேசியதில் அவர் (காந்தியார்) “ராஜிய விஷயத்தில் எனக்குச் சிரத்தை கிடையாது. அவற்றைப் பற்றி விவாதிக்க எனக்கு இஷ்டமில்லை. உண்மை சத்தியாக்கிரகி என்கின்ற முறையில் இதைச் சொல்லுகிறேன்'”
என்றும், மற்றும் “வரப்போகும் தேர்தல் முடிவுகள் உத்தியோகப் பிரச்சினைகள் முதலிய விஷயங்களில் எனக்கு எவ்வித அபிப்பிராயமும் கிடையாது” என்றும் சொல்லிவிட்டுப் போனவர் (இது 22-1-37 “சுதேசமித்திரனில் வெளியாகி இருக்கிறது) இப்போது 35 நாள்களுக்குள் தேர்தல் முடிவில் கலந்து கொண்டு சிரத்தையும் எடுத்துக்கொண்டு அபிப்பிராயமும் கொடுத்துவிட்டார்.
அதாவது “கவர்னர் விசேஷ அதிகாரங்களை உபயோகப் படுத்துவதில்லை என்று வாக்குக் கொடுத்தால் மந்திரி பதவிகளை ஏற்றுக்கொள்ளலாம்.”
என்று வார்தாவில் அபிப்பிராயம் கொடுத்துவிட்டார்
அவ்வளவோடு நிற்காமல் “இதைப்பற்றி கலந்து பேசி வைசிராயை பேட்டிகாணப் போகிறார்” என்றும் காங்கிரஸ் பத்திரிக்கைகளில் காணப்படுகிறது ஆகவே காந்தியாருடைய நாணயமும் சத்தியாக்கிரகத்தன்மையுமே இப்படி இருக்கும்போது இனி மற்றவர்களுடைய நாணயத்தையும் வாக்குறுதிகளையும் பற்றி கவனிப்பது ஒரு மெனக்கெட்ட வேலையேயாகும்.
பதவியேற்றால்தான் உண்மை வெளியாகும்
இதுவரையில் கிடைத்துள்ள சேதிகளில் இருந்து காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க வேண்டுமென்றே “உலகம்” பூராவும் விரும்புவதாகவே காங்கிரஸ் பத்திரிக்கைகளின் அபிப்பிராயமும் காங்கிரஸ் தலைவர்கள் வாலர்கள் அபிமானிகள் என்பவர்களுடைய அபிப்பிராயமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்தப்படி அவர்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக்கொண்டால்தான் ஜஸ்டிஸ் கட்சியும் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சியும் எலக்ஷனில் தோல்வி அடைந்ததானது நாட்டிற்கு பயன்படக்கூடியதாக ஏற்படும்
குடி அரசு- 1937 (1) 198
என்பதே நமது அபிப்பிராயமாகும். ஏனெனில் 16, 17 வருஷகாலம் அரசியல் அதிகாரத்தில் இருந்த ஒரு கட்சியானது தனது ஆட்சியில் செய்து வந்த காரியம் மக்களுக்கு நன்மையானதா தீமையானதா என்று அறிய பொது ஜனங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவில்லையானால் கட்சியின் உழைப்பு எப்படி மதிக்கக்கூடியதாகும் என்று கேட்கின்றோம்
இந்திய சட்டசபையை காங்கிரஸ்காரர்கள் கைப்பற்றி 2 வருஷங்களுக்கு மேல் ஆயிற்று. இதுவரை இவர்கள் அங்கு செய்த வேலை என்ன என்பதையும் ஓட்டர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எதை எதை நிறைவேற்றினார்கள் என்பதையும், இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்கள் இருந்து செய்த காரியங்களுக்கு மேல் காங்கிரஸ்காரர்கள் என்ன அதிகமாய் செய்ய முடிந்தது - செய்து விட்டார்கள் என்பதையும் ஒரு அளவுக்காவது அறிவாளிகள் அறிய முடிந்தது
அதுபோலவே ஸ்தல ஸ்தாபனங்களில் ஜில்லா போர்டு முனிசிபாலிட்டி ஆகியவைகளில் இந்த ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் காலமாக காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சபைகளில் மற்றவர்களில் அதாவது காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்கள் இந்த 10, 15 வருஷகாலமாய் செய்து வந்த காரியங்களை விட என்ன அதிகமாய் செய்தார்கள், செய்யக்கூடியவை இருக்கின்றன என்பவைகளையும் ஒரு அளவுக்காவது அறிய முடிந்தது அதுபோலவே சட்ட சபைகளிலும் காங்கிரசுக்காரர்கள் சாதிக்கப் போவதை பொதுஜனங்கள் ஒரு தடவையாவது பார்த்தால் தான் அவர்களது
மயக்கமும் ஒழியும். ஆதலால் அதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க நாமாக இஷ்டப்படாவிட்டாலும் தானாக ஏற்பட்டதற்கு திருப்தி அடைய வேண்டியதுதான் கிரமமாகும்
என்ன செய்யப் போகிறார்கள்?
“மந்திரி பதவியை காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொண்டால் பொது ஜனங்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சில சவுகரியங்கள் ஏற்படுவதற்கு சட்ட சபையில் காங்கிரஸ்காரர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அது சாத்தியமாகுமென்று உறுதி சொல்ல முடியாது ஏனெனில் மந்திரிசபைக்கு பூரண அதிகாரம் சர்க்கார் கொடுக்கவில்லை'' என்று ஒரு காங்கிரஸ் பத்திரிக்கை (அதுவும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு அங்கத்தினரை ஆசிரியராகக் கொண்ட பத்திரிகை) எழுதி இருக்கிறது. (இந்த சமாதானம் காங்கிரஸ்காரருக்கு தான் உரிமை போலும்! ஜஸ்டிஸ் கட்சி சொல்வதானால் அது தேசத்துரோகம் போலும்) அப்படியாவது காங்கிரஸ்காரர்கள் மக்களுடைய நித்திய வாழ்க்கை காரியங்களுக்கு என்னதான் செய்ய முன் வருகிறார்கள் என்று பார்ப்போம் வார்தா கூட்டத்தில் காங்கிரஸ்கார்கள் சட்டசபையில் செய்யப் போகும்
19 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காரியங்கள் என்று 11 அய்ட்டங்கள் ஏற்படுத்திக் கொண்டவைகளில் ஏமாற்றுத் திட்டம் 3 போக பாக்கி உண்மைத் திட்டம் 8-ம் தோழர் ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சிக்கு கொடுத்து ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களாகும். அவற்றையும் செய்கிறார்களோ இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் எதோ ஒரு காரணம் சொல்லி எப்படியாவது மந்திரி பதவியை ஏற்றுக் கொள்வதில் முழுச் சம்மதம் இருப்பதாகவே இச்சையாய் விளங்கிவிட்டது ஆனால் அப்புறம் என்ன செய்வது என்பதில் எப்படி மக்களை திருப்தி செய்வது என்பதுதான் புரியாமல் உளறுகின்றார்கள். எப்படியானாலும் அதைப்பற்றி இனி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நிற்க காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்றுக் கொண்டால் மற்றவர்கள் என்ன செய்வது என்பதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டியதில்லை ஏனென்றால் அதையும் காங்கிரஸ்காரர்களே நமக்கு காட்டிக்கொடுக்கப் போகிறார்கள். எப்படி என்றால் காங்கிரஸ்காரர்கள் தோல்வியடைந்து விட்ட 5, 6 மாகாணங்களில் மந்திரிகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து, மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்கவும் அவர்களை சர்க்கார் தாசர்கள் என்று ஜனங்கள் கருதும்படி செய்யவும் வேண்டிய முயற்சிகள் செய்யப்போகிறார்களாம். ஆதலால் அதையே காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்று மக்களுக்கு செய்யப்போகும் காரியத்துக்கும் காங்கிரஸ்காரர்கள் செய்து காட்டும் முட்டுக்கட்டைக்கும் நாமும் அதாவது காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்களும் செய்து காட்டினால் போதுமானதாகும். காங்கிரஸ் மந்திரிகள் இல்லாத சட்டசபைகளில் காங்கிரஸ்காரர்கள் 100க்கு 33 வீதம் வரி குறைக்கவேண்டும் என்று தீர்மானங்கள். கொண்டுவந்தால்
காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளாய் உள்ள சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள். அல்லாதவர்கள் 100க்கு66வீதம்வரி குறைக்க தீர்மானம் கொண்டு போவார்கள். அப்போது காங்கிரஸ் மந்திரிகள் ஒட்டு கொடுப்பார்களா? ஓட்டுக் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றினால் சர்க்கார் ஏற்றுக்கொள்வார்களா? ஏற்றுக்கொள்ளாமல் தீர்மானத்தை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டால் உடனே வெளியில் வந்து கழுத்துக்கு சுருக்குப் போட்டுக் கொள்ளுவார்களா? அல்லது போகட்டும் வார்ப்பதை வாரும் என்று கையேந்தி நிற்பார்களா என்பதை பார்க்கத்தான் இருக்கிறோம்
அஞ்சவேண்டியதில்லை
அதலால் காங்கிரஸ்காரர்கள் சட்ட சபைக்குப் போய் மந்திரி பதவி ஏற்று இது வரை ஜஸ்டிஸ் சக்ஷியார் அப்பதவியில் இருந்து செய்து வந்ததற்கு மேல் செய்து காட்டினால் ஜஸ்டிஸ் கக்ஷியார்களை கையாலாகாதவர்கள் என்றோ தேசத்துரோகிகள் என்றோ ருஜுவு செய்து விடுவார்களே என்கின்ற பயம் யாரும் கொள்ள வேண்டியதில்லை என்றே சொல்லுவோம். மற்றும் அவர்கள் வேறு ஏதாவது செய்து விடுவார்களா என்று
குடி அரசு- 1937 (1) 200
சிலர் பயப்படக்கூடும். அதாவது உத்தியோகங்களிலும் பிரதிநிதித்துவங்களிலும் முன் உள்ள ஏற்பாடுகள் மாற்றப்பட்டு விடுமோ என்பதாக பயப்படக்கூடும். இதைப்பற்றி முன்பும் பல தடவை எழுதி இருக்கிறோம். அதாவது அந்தப்படி செய்வதை வரவேற்க வேண்டும் என்றே எழுதியிருக்கிறோம். ஏனெனில் நம் நாட்டு காங்கிரசின் உள் எண்ணம் என்ன என்றும் நாம்
ஏன் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம் என்றும் எழுதிவந்தது மெய்யென்றும் சரி என்றும் பாமர மக்களுக்கும் முட்டாள் தேசபக்தர்களுக்கும் விளங்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதை வரவேற்க வேண்டாமா என்று தான் கேட்கிறோம் இவை ஒருபுறமிருக்க, இனி நாம் செய்ய வேண்டிய வேலை என்ன என்பதைப்பற்றி இதற்கு முன்னும் இரண்டொரு தடவை குறிப்பிட்டிருந்தாலும் தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, செளந்திரபாண்டியன். முதலியவர்கள் ஜஸ்டிஸ் க்ஷி தலைவர்களுடன் வந்து யோசித்த பிறகு அது சம்மந்தமாக ஒரு அறிக்கை வெளியிடுவார்கள். அதில் ஜஸ்டிஸ் கட்சி வேலையைப்பற்றியும் சுயமரியாதை இயக்க வேலையைப் பற்றியும் விளக்குவார்கள் என்று எதிர்பார்த்து நிறுத்தி வைக்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 07.03.1937
201 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
முஸ்லீம்கள்
என்ன செய்யப்போகிறார்கள்?
முஸ்லீம்களுக்கு அனேகமாய் மதம் வேறு, சமூகம் வேறு, தேசம் வேறு என்கின்ற வித்தியாசம் கிடையாது. மூன்றையும் வேறு வேறாய்க் கருதும்படியான நிலை ஏற்பட்டு விட்டால் முதலில் மதத்தையும் பிறகு சமூகத்தையும் அப்புறம் தான் தேசத்தையும் கருதுவார்கள். அவர்களுக்கு மதம் ஒன்றேயாகும்; சமூகம் ஒன்றேயாகும்; தேசம் பலவாகும். துருக்கி,
ஈஜிப்ட், பர்ஷியா, ஈராக், ஆப்கானிஸ்தானம் முதலிய பல தேசங்கள் உண்டு. கடவுளும் நபியும் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகம் ஒன்றேயாகும். இஸ்லாம் சமூகத்துக்கு ஆபத்துண்டாக்கக்கூடிய அல்லது கேடுண்டாக்கக்கூடிய நிலையில் தேசத்தை இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால். சமூகத்தைக் காப்பார்களே ஒழிய தேசத்தை லஷியம் செய்யமாட்டார்கள். அவர்கள் சமூகம் முன்னேறி வருவதற்கும் அவர்கள் மதம் தலை சிறந்து விளங்குவதற்கும் அதுதான் காரணம். அப்படிப்பட்டவர்கள் இன்று இந்தியாவில் ஜன சமூகத்தில் சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்களாய் இருந்தும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் சமூகத்தை விட்டுக் கொடுக்காததாலேயே அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். சமபங்கு
- சில விஷயங்களில் இரட்டைப்பங்கு கூட அடைந்து வருகிறார்கள். இது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியதும் மற்ற சமூகத்துக்கு படிப்பினைக்கு பயன்படுத்தக் கூடியதுமான விஷயமாகும்
ஆனால் நம் தென்னாட்டு முஸ்லீம் சமூகப் பிரமுகர்களில் பிரமுகரான தோழர் ஜமால் மகமது சாயபு அவர்கள் தேசம் தான் முதலாவது, சமூகம் இரண்டாவது என்று கொஞ்சகாலமாய்க் கருதி பார்ப்பனர்கள் வலையில். பட்டு எப்படியோ ஏமாந்து வருகிறார் என்பதைக் காண நமக்கு ஆச்சரியமாகவும் பரிதாபகரமாகவும் இருந்து வருகிறது
இந்திய தேசிய காங்கிரசு ஏற்பட்ட நாள் முதல் முஸ்லீம்கள். தாங்கள் சமூக மதவிஷயங்களின் நலனுக்கு காங்கிரசினிடம் உத்திரவாதம் பெறுவதற்குப் பாடுபட்டு வந்திருக்கிறார்கள். எத்தனையோ முஸ்லீம் பிரமுகர்கள் இதற்கு மாறாக காங்கிரசை ஆதரித்து தங்கள் சமூக நலன். கோரும் ஸ்தாபனங்களுக்கு பலவீனத்தை உண்டாக்கி வந்திருந்தாலும் அச்சமூக பாமரமக்களின் உறுதியாலும் அச்சமூக கட்டுப்பாட்டினாலும் 1890ம் வருஷம் முதலே பந்தோபஸ்துகள் சம்பாதிக்கப்பட்டு வந்திருக்கிறது
குடி அரசு- 1937 (1) 202
1900-த்தில் விகிதாசாரம் நியமனமும் 1909ல் விகிதாச்சார ஸ்தானம் தேர்தலிலும் அளிக்கப்பட்டுவிட்டது. 1920-லும் 1937-லும் விகிதாசார ஸ்தாபனம் ஜனசங்கைப்படி நியமனத்திலும் தேர்தலிலும் விளக்கமாக ஏற்பட்டு விட்டது.
இவைகளை எல்லாம் அறிந்தவரும் இம்மாதிரி தனிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்ட பிறகே முஸ்லீம்களுக்கு அரசியலிலும் சமுதாயத்திலும் மற்ற வகுப்புகளுக்கு சமமாய் முன்னேற்றமடைந்திருப்பதை நேரில் அறிந்தும் இப்பிரதிநிதித்துவ முறை இல்லாத போது தாங்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் போல் சிலரால் மதிக்கப்பட்டு வந்ததையும் நேரில் அறிந்தும் என்ன காரணத்தாலோ தோழர் ஜமால் முகமது சாயபு அவர்கள் அப்பிரதிநிதித்துவ முறை தேசியத்துக்கு விரோதமென்றும் தேசியம் சமூகத்தைவிட மேலானதென்றும் வாதாடி வந்திருக்கிறார்.
அந்தக் காரணத்தாலேயே அவர் இதுவரை தனித்தொகுதியின் மூலம் எந்த தேர்தலுக்கும் நிற்காமல் பொதுத் தொகுதியிலேயே நின்று வந்திருக்கிறார்.
அப்படி நின்று வந்ததில் 1928 வாக்கில் இந்திய சட்டசபைக்கு வர்த்தகத் தொகுதிக்கு ஒரு அபேக்ஷகராக நிற்க தோழர் ஜமால் முகமது சாயபு முன்வந்த போது தனித்தொகுதி தேசீயத்துக்கு விரோதமென்று கூப்பாடு போட்டு சாயபுவை ஏமாற்றி தங்கள் வசம் செய்து கொண்ட பார்ப்பனர்களே அவருக்கு எதிரியாய் வந்து (தோழர் கோவை வெங்கிட்ட ரமணய்யங்கார்) எதிர் அபேக்ஷகராய் நின்று பார்ப்பனர் எல்லாம் “இந்து” “சுதேசமித்திரன்” கூட்ட அய்யங்கார் முழுவதும் அய்யங்காரை ஆதரிக்க முன் வந்து தொல்லை விளைவித்தார்கள். இது கண்ட தோழர் ஜமால் முகமது சாயபு அவர்கள் பேசாமல் விலகிக் கொண்டார். அதற்குப் பிறகும் அது முதல் இதுவரை இந்த 10 வருஷ காலமாய் தனித்தொகுதியை வெறுத்து வந்திருக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பார்ப்பனர்கள். பக்கமே இருந்து வந்திருக்கிறார். பார்ப்பனர்களுக்கு தாராளமாய் ஏராளமான பொருளுதவி செய்தும் வருகிறார். பார்ப்பன பத்திரிகைகள் பலவற்றிற்கும் தாராளமாய் பண உதவி செய்தும் வருகிறார். அப்படி எல்லாம் இருந்தும் இந்த தடவை தேர்தலில் தோழர் ஜமால் மகமது அவர்களை பார்ப்பனர்கள் காலை வாரிவிட்டு விட்டு விட்டார்கள். விபரம் என்னவென்றால் தோழர் ஜமால் மகமது சாயபு முஸ்லீம் தொகுதி 28 ஸ்தானங்களில் 2, 3 ஸ்தானங்களுக்கு வேண்டுமானாலும் நின்று போட்டியில்லாமல் வெற்றி பெற்றிருக்கக் கூடியவர் என்பதை அவர் எதிரிகளும் மறுக்கார்கள். அப்படி இருக்க அவைகளை விட்டு விட்டு ஏனென்றால் தனி தொகுதி வேண்டாம் என்கின்றவர்கள் தனித்தொகுதியை பயன்படுத்திக்கொள்ளுவது சுயமரியாதை அல்ல என்கின்ற கருத்தின்
மீது தனி தொகுதிக்கு நிற்காமல் பொதுத் தொகுதியிலேயே நிற்க வேண்டும்
203 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
என்று கருதி, அதிலும் தனக்கு இயற்கையிலேயே உரிமை உள்ள தென்: இந்திய வியாபாரத் தொகுதியில் ஒரு அபேக்ஷகராய் நின்றார். தென் இந்திய வியாபார சங்கத்திற்கு தோழர் ஜமால் மகமது அவர்கள் வெகுநாளாகவே
(ச். தியாகராய செட்டியார் அவர்கள் காலம் சென்ற காலம் முதலே) தலைவராய் இருந்து வருவதோடு அச்சங்கத்துக்கு எவ்வளவோ நன்மையும் செய்து வந்திருக்கிறார். மற்றும் வியாபார விஷயத்தில் நாணைய செலாவணி விஷயத்தில் நிபுணர் - பெருத்த வியாபாரி. இவ்வளவும் தவிர தனித்தொகுதியை வெறுத்து பொதுத் தொகுதிக்கு வந்தவர். இப்படிப்பட்ட ஒருவருக்கு விரோதமாய் பார்ப்பனர்கள் ஒரு அய்யங்கார் பார்ப்பனரை நிறுத்தி தோழர் கோவை சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் முதல் சென்னை பத்திரிக்கை அய்யங்கார்கள், காங்கிரஸ் அய்யங்கார்கள், மற்றும் பார்ப்பனர்கள் ஆகியவர் எல்லோரும் ஒருங்கே பாடுபட்டு தோழர் ஜமால் மகமது சாயபுவை தோற்கடித்துவிட்டார்கள்.
காரணம் என்னவென்றால் தோழர் ஜமால் மகமது அவர்கள் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு விரோதமாய் முஸ்லீம் லீக்கு அபேக்ஷகர்களை நிறுத்தினார் என்பதுதானாகும்.
முஸ்லீம் லீக்கைப் பொறுத்தவரை நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்கள் காங்கிரசைத் தழுவியே யிருப்பார்கள் என்று தெரிவித்து இருந்தும் அதைக் கவனியாமல் ஏதோ ஒரு பேர் அறிந்திருக்க முடியாத ஒரு சாதாரண: அய்யங்கார் பார்ப்பனரை அவருக்கு விரோதமாய் நிறுத்தி வைத்து சட்டசபை அசம்பிளித் தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள். இப்போது மந்திரி சபை நியமிக்கப் போவதிலும் முஸ்லீம் லீக்காரால் வெற்றி பெற்ற மெம்பர்களை லக்ஷியம் செய்யாமலும் எதிர்பார்க்காமலும் மந்திரி சபை அமைக்கப் போகிறார்கள்.
முஸ்லீம் சமூகம் பெரிதும் தென்னாடு மாத்திரமல்லாமல் இந்தியா வெங்கும் காங்கிரசுக்கு வேறாகவே இருந்து வருகிறது. அதோட மாத்திரமல்லாமல் காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்பது சீர்திருத்தத்தை உடைப்பது என்பது ஏமாற்றமாய் இருந்தாலும் வகுப்பு உரிமைகளை அழிப்பதே முக்கிய கருத்தாய் கொண்டிருக்கிறது ஆகவே முஸ்லீம் மக்கள் குறிப்பாக தோழர் ஜமால் முகமது சாயபு அவர்கள் முதல் கொண்டு தேர்தலில் முஸ்லீம் லீக்கின் பேரால் வெற்றி பெற்ற அங்கத்தினர்கள் உள்பட என்ன செய்யப்போகிறார்கள்? தங்கள் சுயமரியாதையை காக்கப் போகிறார்களா? அல்லது வகுப்பின் பேரால் முன்னுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வகுப்பைக் காட்டிக் கொடுத்து சுயநலம் பெறுவது போல் தங்கள் தனிப்பட்ட சுயநலத்தை காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்களா?
குடி அரசு - தலையங்கம் - 14.03.1937
குடி அரசு- 1937 (1) 204
முஸ்லீம் ஜட்ஜி
சென்னை ஐகோர்ட்டுக்கு ஒரு முஸ்லீம் ஜட்ஜியை நியமித்திருக் கிறார்கள். ஹைகோர்ட் மூடி திறக்கப்பட்டவுடன் உத்தியோகத்தை ஏற்றுக்கொள்ளுவார். சர். அப்துல் ரகீமுக்குப் பின் சுமார் 20-வருஷ காலமாக சென்னை ஹைகோர்ட்டுக்கு முஸ்லீம் ஜட்ஜி நியமிக்கப்படவே இல்லை. சுமார் 20-வருஷம் பொறுத்து இப்போதுதான் சர். அப்துல் ரஹிமான் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது கேட்கப்பட்ட பின்பும் குறிப்பாக முஸ்லீம்கள் முஸ்லீம் லீக் ஆரம்பித்து அதன் மூலம் தாங்கள் சமூக உரிமைகளை
வலியுறுத்த ஆரம்பித்த பிறகும் தான் நம் தமிழ்நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்தியா எங்கும் முஸ்லீம்கள் அரசியலில் உரிமை பெற்று ஹைகோர்ட் ஜட்ஜி கவர்னர் முதலிய பதவிகள் பெற்று அதன் மூலம் நாட்டுக்கும் அச்சமூகத்திற்கும் சேவை செய்யும் சந்தர்ப்பம் பெறவும் தகுதி உள்ளவர்கள் பயன்பெறவும் சவுகரியம் ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள்.
வகுப்பு உரிமை தேசீயத்துக்கு விரோதமென்றும் வகுப்பு உரிமையை ஒழித்தாலொழிய தேசீயம் உருப்படாதென்றும் பார்ப்பனர்கள் கூப்பாடு போடுகிறார்கள். காங்கிரசையும் வகுப்பு உரிமை எதிர்ப்புச் சங்கமாக ஆக்கிவிட்டார்கள்.
சிலர் அதாவது வகுப்புரிமையால் பயன்பெற முடியாத அடிவண்டல்களும், பார்ப்பன புகழ்ச்சியில் மயங்கின முடங்களும், ஆழ்ந்து அறிய முடியாதவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி வகுப்புரிமையை எதிர்த்து சொந்தத்தில் பயன் பெற்று வருகிறார்கள். என்றாலும் இவர்கள் சீக்கிரம் புத்தி கற்றுக்கொண்டு வகுப்புரிமைக்கு வாதாட வரிந்து கட்டிக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை
குடி அரசு - கட்டுரை - 14.03.1937
205 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வேடிக்கை அல்லாத பேச்சு
- சித்திரபுத்திரன்
“ராஜகோபாலாச்சாரிக்கும் ஜின்னாவுக்கும் வித்தியாசமில்லை?*யாம்
உண்மைதான், ஜின்னா முதலில் முஸ்லீம் சமூக நன்மை அப்புறம் தேசீயம் என்கிறார். ராஜகோபாலாச்சாரியும் முதலில் பார்ப்பன ஆதிக்கம், அப்புறம் தேசீயம் என்கிறார்.
இது தெரிந்துதான் ஜின்னா சொன்னார், ஆச்சாரியும் ஏற்றுக்கொண்டார்; தேசீயப் பத்திரிகைகளும் மேலொப்பம் செய்தன.
ராஜபக்தி கூடாது பறையனும் பார்ப்பானும்
கருப்பப் பறையன்:- ராஜ பக்திக்கு வருகிறாயா போகலாம்
சுப்பையர்:- போன வாரம்தான் ''ராஜாவையே விரட்டி விடுவது” என்ற பிரச்சினை மீது தேர்தல் நடந்து எலக்ஷனில் வெற்றிபெற்றுவிட்டோமே. இப்பொழுது வந்து ராஜபக்திக்குக் கூப்பிடுகிறாயே உனக்குப் புத்தி இல்லையா? க௬:- அடே பைத்தியமே! ராஜாவிடம் பக்தி காட்ட நான் கூப்பிட வில்லை. “ராஜ பக்தி" என்று நம்ம ஊரில் ஒரு சினிமா நடக்கிறது உனக்குத் தெரியாதா? அதற்குக் கூப்பிட்டேன். மகா பதிவிரதை மாதிரி பேசுகிறாயே
சுப்:- அதுகூட பார்க்கக் கூடாது. அந்தப் பேச்சே காதில் விழுகக் கூடாது தெரியுமா?
கர௬:- சரி, சரி. எனக்கு இப்போதுதான் அர்த்தமாயிற்று. அதுதான் ராஜகோபாலாச்சாரியார் சத்தியமூர்த்தி எல்லோரும் நாளைக்குச் சென்னை சட்டசபை அசம்பிளி கூடும்போது நம் பிரதிநிதிகளாய் இருந்து நம் பிரதிநிதிகள் என்கின்ற முறையில் “ராஜாவுக்கும் சந்ததிக்கும் அவர்கள். சட்ட திட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் கட்டுப்பட்டு நடக்கிறேன்” என்று சத்தியம் செய்யப்போகிறார்களாக்கும்
சுப்- அதெல்லாம் ராஜ தந்திரம், சர்க்காரை ஏமாற்றுவதற்குச் சொல்லுவது. இது தெரியாதா உனக்கு? ௧௬:- அப்படியானால் இதெல்லாம் பார்ப்பன தந்திரமாக்கும், மக்களை ஏமாற்றச் சொல்லுவதாக்கும்
சுப்:- வெளிக்கு வருகிறது அவசரமாய் போகணும், குட் நைய்ட்.
குடி அரசு - உரையாடல் - 14.03.1937
குடி அரசு- 1937 (1) 206
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
சென்னை ஹைக்கோறர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி
சென்னை ஹைக்கோர்ட்டுக்கு இந்திய சீப் ஜட்ஜி வேண்டுமென்று பார்ப்பனப் பத்திரிகைகள் கூப்பாடு போடுகின்றன. மைலாப்பூர் பார்ப்பன. வக்கீல்களும் கூப்பாடு போடுகின்றனர்.
இக்கூப்பாட்டை அரசாங்கத்தார் ஏற்றுக்கொண்டு ஒரு இந்தியரை ஹைக்கோர்ட்டுக்கு சீப் ஜட்ஜியாக்கினால் அந்தப் பதவி தோழர் ஜட்ஜி வெங்கிடசுப்பராவ் என்கின்ற பார்ப்பனரல்லாதாருக்குத்தான் கிடைக்கும் ஏனெனில் அவர்தான் இருக்கிற இந்திய ஐட்ஜிகளில் அதிக சர்விஸ் பெற்று முன்னணியில் இருப்பவர். அப்படி இருக்க பார்ப்பனர்கள் ஒரு பார்ப்பனரல்லாதார் சீப் ஜட்ஜி ஆவதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவார்களா. என்றும் அதற்குள் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு நல்ல எண்ணமும் நல்ல புத்தியும் வந்துவிட்டதா என்றும் நம்மவர் பலர் ஆச்சரியப்படலாம். “சோழியன் குடுமி சும்மா ஆடாது என்கின்ற பழமொழிக்கு ஒப்ப பார்ப்பனர்கள் நல்ல எண்ணத்தின்மீது இதற்கு பாடுபடவில்லை. அதிலும் ஒரு கெட்ட எண்ணத்தை வைத்தே இந்தத் தந்திரம் செய்திருக்கிறார்கள்.
அது என்ன கெட்ட எண்ணம் என்று அறிய பலர் ஆசைப்படக்கூடும் அதென்னவென்றால் அகில இந்திய சம்மந்தமான ஒரு பெரிய உத்தியோகத்துக்கு இப்போது அட்வகேட் ஜனரலாயிருக்கும் தோழர்
சர். அல்லாடிக்கும் ஜட்ஜி தோழர் வெங்கிட சுப்பராவுக்கும் போட்டி
இருந்து வருகிறது அதாவது இவர்களுக்குள் போட்டி இல்லாவிட்டாலும் இவர்களில் யாரைப்போடுவது என்பதில் முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்குப் போக சர். அல்லாடி முயற்சி செய்து வருகிறார். அநேகமாய் ஜஸ்டிஸ் வெங்கிடசுப்பராவுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். அப்படிக் கிடைத்து விட்டால் சர். அல்லாடி ஏமாற்றமடைய வேண்டிவரும்
ஆதலால் ஜஸ்டிஸ் வெங்கிட சுப்பராவை சீப் ஜட்ஜி ஆக்கி இங்கேயே ஆணி அடித்துவிட்டால் சர். அல்லாடிக்கு தானாகவே அப்பதவி வந்து விடும் என்கின்ற “நல்ல எண்ணம்" அதனால் ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு ஹைக்கோர்ட்டு ஜட்ஜி வேலை கிடைக்க பார்ப்பனர்கள். இவ்வளவு ஆசைப்படுகிறார்கள்:
207 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அந்த அகில இந்திய இலாகா உத்தியோகம் என்னவென்றால் பிடரல் கோர்ட்டு ஜட்ஜி அல்லது ஆலோசனை சொல்லுபவர் என்கின்ற உத்தியோகமாகும். மற்றும் ஒன்றை கருத்தில் வைத்திருக்கிறார்கள். அவைகளுக்கு 5 6000 ரூபாய்க்குக் குறையாத சம்பளமிருக்கும் அதிகாரமும் கெளரவமும் அதிகமானதாகும்
குடி அரசு - கட்டுரை - 14.03.1937
குடி அரசு- 1937 (1) 208
காங்கிரஸ்காரர்கன் பக்தி விசுவாசப் பிரமாணங்கள்
சட்ட சபைகளுக்கு வெற்றிபெற்ற காங்கிரஸ்காரர்கள் இரண்டு பிரமாணங்கள் செய்ய வேண்டியதாக ஏற்படும் போல் இருக்கிறது
அதாவது:-
1. தேசபக்திக்கும் காங்கிரஸ் கட்டுதிட்ட பக்திக்கும் ஒரு பிரமாணம் டெல்லியில் கூடப் போகும் கன்வென்ஷன் என்பதில் செய்ய வேண்டுமாம்
2. ராஜாவுக்கும் ராஜ சந்ததிக்கும் அரசாங்கத்திற்கும் அரசாங்க சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துகொள்ளுவதாக ஒரு பிரமாணம் சர்க்கார் கோட்டைக்குள் சென்று செய்யவேண்டுமாம்.
ஆகவே இந்த இரண்டு பிரமாணமும் ஒன்றுக்கொன்று முரணானதாகும். இரண்டையும் காங்கிரஸ்காரர்கள் செய்வதாய் இருந்தால் எதாவது ஒன்றை “சும்மா வெறும் சத்தியம்” - “பொய் சத்தியம்” - “மனதுக்குள் வேறு ஒன்றை நினைத்துக் கொண்டு ஏமாற்றுவதற்கு ஆக செய்யப்பட்ட சத்தியம்” என்று (சைவப் பெரியார்களில் சுந்தரமூர்த்தி செய்தது போல்) கருதி செய்யப் போகிறார்களோ என்னமோ தெரியவில்லை
எப்படி இருந்தாலும் ஒரு சத்தியம் மாத்திரம் உண்மையானதும் உறுதியானதுமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதாவது சர்க்காரையும் ஏமாற்றி காங்கிரசையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி தேசத்தையும் காட்டிக் கொடுத்து சமயம் போல்
நடந்து தங்கள் சுயநலத்தையே கண்ணும் கருத்துமாய் கவனித்து அதற்கு பக்தி விசுவாசமாய் நடந்து கொள்வது என்பதில் சந்தேகமில்லை இவர்களுக்குள் பார்ப்பனர்களாய் இருப்பவர்கள் எல்லோரையும் ஏமாற்றி தங்கள் ஜாதி உயர்வுக்கும் தங்கள் வாழ்க்கை உயர்வுக்கும் மாத்திரம் பக்தி விசுவாசமாய் நடந்து கொள்ளுவதாய் சத்தியம் செய்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி 3ம் நெம்பர்
4ம் நெம்பர் பொக்கிகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை பார்ப்பனர்களுக்கு பக்தி விசுவாசமாய் இருந்து வயிறு வளர்த்துக்கொள்ளுவது
209 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
என்று சத்தியம் செய்து கொள்ளுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை: அக்கூட்டத்தில் 100க்கு 90 பேர்கள் போல் இந்த சத்தியம்தான் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
இதற்கு வழிகாட்டியாக காங்கிரஸே நாளைக்கு ஒரு பொய்ச் சத்தியம் செய்ய உத்திரவு கொடுக்கப் போகிறது அதாவது “மனதில் பூரண சுயேச்சை என்கின்ற எண்ணம் வைத்துக்கொண்டு ராஜாவுக்கும் சந்ததிக்கும் சட்ட திட்டத்துக்கும் கட்டுப்பட்டு பக்தி விஸ்வாசமாய் நடப்பதாக பிரமாணம் செய்யலாம்” என்பதாக அனுமதி அளிக்கப்போகிறது. மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு. காரியத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாமல்லவா? அது தானே இப்போது பார்ப்பனர்கள் செய்யும் தேசபக்தி நாடகமும். அவர்கள் மனதில் பார்ப்பன பக்தி இருந்தால் போதும், வெளி வேஷத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம் என்று நடந்து கொண்டார்கள். இதற்கு ராமாயணமும் வழிகாட்டி இருக்கிறது அதாவது ராமன் கீதையை ராவணன் அனுபவித்து இருப்பான். என்று சந்தேகப்பட்டு “அந்நியன் வீட்டில் இருந்தவளை எப்படி சேர்த்துக்கொள்ளுவது" என்று கேட்டபோது சீதை “என் சரீரம் தானே ராவணன் வசப்பட்டு இருந்தது? நான் பெண் ஆனதால் சரீரத்தை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆனால் என் மனம் மாத்திரம் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தது என்று சொன்னாளாம். அது போல் காங்கிரஸ்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ள காங்கிரசும் சமயமும் சமயப் புராணங்களும் ராமாயணமும் ஜாதி புத்திகளும் இடம் கொடுக்கின்றன. ஆதலால் அதைப்பற்றி கவனிப்பது வீண்வேலையாகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.03.1937
குடி அரசு- 1937 (1) 210
காங்கிரஸ் சாதித்தது
- வம்பளப்போன்
காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போன பிறகு எவ்வளவு வரியைக் குறைத்தார்கள், என்ன காரியம் சாதித்தார்கள் என்பதை ஓட்டர்கள்.
அறிந்திருந்தால் அல்லது ஓட்டர்களுக்கு அறியும் சக்தி இருந்திருந்தால் அல்லது ஓட்டர்கள் அறியும்படி யாராவது செய்திருந்தால் சமீப தேர்தலில் பெரும்பான்மை ஓட்டர்கள் இம்மாதிரி தேசத்துக்குக் கேடு சூழத்தக்கதும் முட்டாள் தனமானதுமான காரியத்தைச் செய்திருக்கமாட்டார்கள். எப்படியோ மோசம் போய் விட்டார்கள். அயோக்கியர்களாலும், காலிகளாலும், கூலிகளாலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதில் பயனில்லை.
காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போனபின்பு வரிகள் மொத்தத்தில் பல துறைகளில் அதிகப்படுத்தப்பட்டதே தவிர காங்கிரஸ்காரர்களால் குறைவு படுத்தப்பட்டது என்று சொல்வதற்கு ஆதரவு இல்லை. சென்ற முந்தின வருஷங்களுக்கு அரிசி முதலிய உணவுப் பொருள்களுக்கு வரி போட்டது முதலிய காரியங்கள். ஒருபுறமிருக்க இப்போதும் தபால் இலாக்காவில் சில அய்ட்டங்களில் வரிகள் ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் அதிகப்படுத்தப்பட்டு விட்டது
அதாவது பர்மாவுக்கு - ரங்கன் முதலிய ஊர்களுக்கு மூன் கார்டுக்கு முக்காலணாவும் கவருக்கு ஒரு அணாவும் தந்திக்கு ஒன்பது அணாவும் இருந்து வந்தது. இப்போது காங்கிரஸ்காரர்கள் போனபிறகு அந்த ஊர்களுக்கு ஏப்ரல் முதல் தேதி முதல் கார்டுக்கு 2 அணா, கவருக்கு 2% அணா, தந்திக்கு ரூ-1-2-0 என்பதாக ஏற்பட்டு விட்டது. பார்சல்களுக்கும்
2 அணாவாக இருந்தது. இப்போது எல்லா ஊர்களுக்குமே 4 அணாவாக உயர்த்தப்பட்டு விட்டது. போன வருஷம் அரிசிக்கு வரி போட்டது தவிர இவ்வருஷம் சர்க்கரைக்கு அந்தர் ஒன்றுக்கு வரி 1-5-0 ஆக இருந்ததை இப்போது அந்தர் 1க்கு 2 ரூ. ஆக செய்யப்பட்டு
விட்டார்கள். இறக்குமதி ஆகும் வெள்ளிக்கு 2% ரூ. தூக்கத்துக்கு 2 அணாவாக இருந்ததை 3 அணாவாக செய்யப்பட்டு விட்டது ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
போன வருஷத்தைவிட இந்த வருஷம் வரியில் மொத்தம் ஒன்றரைக்கோடி ரூபாய்க்கு மேல் 2 கோடிவரை உயர்த்தப்பட்டு விட்டது. ஆகவே இனி மாகாண சட்டசபையில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்கப்போகிறீர்கள். உங்களுக்கு நன்மை 0 தான்.
குடி அரசு - கட்டுரை - 14.03.1937
குடி அரசு- 1937 (1)
ப
ப்
காங்கிரஸ்காரர்கவின் சமத்துவம்
- நேரில் கண்டோன்
ஈரோடு தாலுகாவில் சென்னை சட்டசபைக்கு காங்கிரஸ் அபேட்சகராக நின்று வெற்றி பெற்ற தோழர் கே.எஸ். பெரியசாமி அவர்களுக்கு ஈரோடு காங்கிரஸ் தலைவர் ஒரு விருந்து நடத்தினார். அவ்விருந்தில் பார்ப்பனரைக் கொண்டே சமையல் செய்யப்பட்டது
அவ்விருந்திற்கு பார்ப்பன வக்கீல்களும், சில பார்ப்பனரல்லாதார்களும் சென்றிருந்தார்கள். பார்ப்பனர்களுக்குத் தனி யிடமும், பார்ப்பனரல்லாதார். களுக்கு தனியிடமுமாக அமைத்து சாப்பாடு போடப்பட்டது இதையறிந்த சில பார்ப்பனரல்லாத மானமுள்ள வாலிபர்கள் வெறுப்புக் கொண்டு வெளியில் வர ஆரம்பித்தார்கள். பின் அவர்களை சமாதானம் செய்யப்பட்டது.
மேலும் இந்த விருந்திற்கு ஒரு முஸ்லீம் தோழரும், ஒரு பார்ப்பன தோழரும் ஜோடியாகச் சேர்ந்து சென்றார்கள். விருந்து காரியங்களை கவனித்து வந்த மற்றொரு பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைவர் அந்த பார்ப்பன தோழரை நோக்கி “நீ அங்கே போய் சாப்பிடு” “நீ இங்கே போய் சாப்பிடு” என்று தனித் தனியான இடத்தைக் காண்பித்தார். அந்த முஸ்லீம் தோழர் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினரிடம் ஷி சம்பவத்தைப்பற்றி கூறினார். அவர் கவனிப்பதாகக் கூறினார்.
இது ஈரோடு காங்கிரஸ்காரரிடம் மாத்திரமல்ல, எங்கும் எல்லா காங்கிரஸ்காரரிடமும் இப்படித்தான் நடந்து வருகிறது. பார்ப்பனரல்லாதாருக்கு என்று சுயமரியாதை வருமோ? பார்ப்பன சுயராஜ்யம் வந்தால் இன்னம் என்ன நடக்குமோ?
குடி அரசு - செய்தி கட்டுரை - 14.03.1937
213... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
என்ன?
“பார்ப்பனரல்லாதார் கட்சி தோற்று விட்டது என்று நீலிக்கண்ணீர் விடும் தோழர்களே!
தலைவர்களையும், பாடுபட்டவர்களையும் குறை கூறும் தோழர்களே!
நீங்கள் அக்கட்சி நலத்துக்கு ஆக என்று என்ன செய்தீர்கள்!!!
ஆங்கிலம் கற்று உத்தியோகத்திலிருக்கும் பார்ப்பனரல்லாதாரும் வக்கீல் பார்ப்பனரல்லாதாரும் அக்கட்சியின் பேரால் மனிதர் என்று மதிக்கப்பட்டு பயன் பெற்றவர்களும் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கு சந்தாதாரராகிப் படித்திருப்பீர்களா?
அல்லது வெட்கப்படும் தமிழ் மக்களாவது ஒவ்வொருவரும் “*குடி அரசு” “விடுதலை'' வாங்கி படித்திருப்பீர்களா?
அப்படியானால் “ஜஸ்டிஸ்” பத்திரிகைக்கும், “விடுதலை” வார: இருமுறை பத்திரிகைக்கும், “குடி அரசுக்கும் முறையே 15 2500, 1000, 250 ரூ.வீதம் நஷ்டம் ஏற்படுவானேன்?
பார்ப்பனர்களைப் பாருங்கள், அவர்கள் முயற்சியை பாருங்கள், அவர்கள் பத்திரிக்கைகளை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள், பாருங்கள். ஆகவேகட்சி ஏன்ஜெயிக்கவில்லை? யாரால்? என்பதை இப்போதாவது உணருங்கள்.
ஆத்திரப்படுவதில் பயனில்லை.
இப்படிக்கு
கட்சியால் கடுகளவும் பயன் பெறாதவன்.
குடி அரசு - வேண்டுகோள் - 14.03.1937
குடி அரசு- 1937 (1) 214
காங்கிரசும் பார்ப்பணரல்லாதாரும்
- “ஜஸ்டிஸ்” எழுதுவது
தோழர் சி.ஆர். ரெட்டி அவர்களிடம் நமக்கு அனுதாபம் இல்லை. அவரும் நமது அனுதாபத்துக்கு உரியவரல்ல. ஆனால் அவரால் வெளிப்படுத்தப்பட்ட கடிதப்போக்குவரத்தானது காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதாரின் கதியை நிச்சயிக்க மிகவும் முக்கியமான ஆதாரமாகும்
நாம் வெகு காலமாகவே அதாவது நமது கட்சி ஆரம்பித்த காலம் முதல்கொண்டே நமது நாட்டில் பார்ப்பனர்கள் “தேசீயம்” “தேசாபிமானம்” “சுதந்திரப்போர்” என்று கூப்பாடு போட்டு வந்ததெல்லாம் பார்ப்பன. சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சமூகம் மற்ற சமூகத்தை அடக்கி ஆள்வதற்கும் மற்ற வகுப்பார் சமீப காலமாக அரசியலிலும் சமூகத்துறையிலும் அடைந்து வரும் நலங்களை ஒழித்து பழய பார்ப்பனீய ஆட்சியை ஏற்படுத்தவும் தானே ஒழிய வேறில்லை என்று
கூறி வந்திருக்கிறோம்
ஜஸ்டிஸ் கட்சியானது பார்ப்பனர்களின் இவ்வெண்ணங்கள் நிறைவேறாமலிருக்கும்படியும் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமையை அழித்து அவர்களது அதிக்கத்திலிருந்து மக்கள் விடுதலை அடையும்படியும் தன்னால் ஆனதையெல்லாம் செய்து வந்திருக்கிறது என்றாலும் அதற்கு பார்ப்பனரல்லாத மக்கள் போதுமான ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து வரவில்லை. ஆகையால் தோழர் சி.ஆர்.ரெட்டி போன்ற மேதாவிகளும் நாட்டை நடத்தத் தக்க திறமைசாலிகளும் இம்மாதிரி பார்ப்பனர்களால் புறக்கணிக்கப்பட்டதும் வஞ்சிக்கப்பட்டதும் மிகவும் அவசியமானதும் தகுதியுடையதுமேயாகும்
பார்ப்பனர்கள் வகுப்பு பூராவும் சூழ்ச்சிக்கும் தந்திரத்துக்கும் மிகவும் பேர்போன கெட்டிக்காரர்கள் என்பதும் பார்ப்பனரல்லாதார். வகுப்பு பூராவும் அதை பார்த்துக்கொண்டும் பார்ப்பன சூழ்ச்சியினுடையவும் தந்திரத்தினுடையவும் வஞ்சகத்தினுடையவும் சகல கெடுதிகளையும் அனுபவித்துக்கொண்டும் இருப்பதோடு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் தொண்டுகள் எல்லாம் பார்ப்பன ஆதிக்கத்திற்கே பயன்படுகின்றன 21... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
என்பதை உணர்ந்து கொண்டும் இருக்கிறவர்களாய் இருக்கிறார்கள். மேலும் என்ன காரணத்தால் இவர்கள் காங்கிரசில் இன்னமும் இருந்து கொண்டு இருக்க வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
அது எப்படியோ போகட்டும். தோழர் சி.ஆர். ரெட்டியாரின். நிலைமையை சற்று கவனிப்போம். சென்னை காங்கிரசைப் பொறுத்தவரை தோழர் ரெட்டியாரின் அறிவுக்கும் திறமைக்கும் ஒப்பிடக்கூடியவர் வேறு ஒருவர் இருக்கிறார் என்று சொல்லமுடியாது. இது தோழர் ரெட்டியாருக்கும் தெரியும். இந்தக் காரணத்தினாலேயே மந்திரி பதவியான தகுதியையும் திறமையையும் புத்தியையும் கவனித்து தன் பாதத்தில் வந்து விழுகும் என்று கருதினார். பார்ப்பனரல்லாதாருக்கு புத்திசாலித்தனமும் கெட்டிக்காரத்தனமும் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் காங்கிரசுக்கு தகுதி அற்றவர்கள் என்று பார்ப்பனர்கள் செய்து கொண்டிருக்கும் தடைவிதி தோழர் ரெட்டியாருக்கு தெரியாமல் போய்விட்டது போலும். பார்ப்பனத் தலைவர்கள் பார்ப்பனரல்லாதார்களில் புத்தியும் திறமையும் யோக்கியதையும் உள்ளவர்களை ஏற்கமாட்டார்கள் என்பதும் ரெட்டியாருக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டது.
அப்படி இல்லையானல் தோழர் ரெட்டியாரை ஏன் காங்கிரசு தலைவர்கள் சட்டசபை தேர்தலுக்கு நிறுத்தவில்லை? தோழர் ரெட்டியார் உள்ளூர் அதாவது அந்த ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராய் இருந்திருக்கிறார், ஜஸ்டிஸ் கக்ஷியை வைவதற்கு ஆக தோழர் ரெட்டியாரின் முழு சேவையையும் காங்கிரசே உபயோகப்படுத்திக் கொண்டும் வந்திருக்கிறது
அப்படிப்பட்ட ஒருவரை அதாவது தகுதி, அறிவு, திறமை ஆகியவை கொண்டவரும், காங்கிரசுக் கமிட்டிக்குத் தலைவரும் பொதுத் தலைவர். களில் ஒருவராய் கருதப்பட்டு வந்தவரும் எதிரிகளை வைவதற்கு மிகவும் உற்சாகமாகவும் உரிமையாகவும் உபயோகப்படுத்திக்கொள்ளப்பட்டவரும் ஆன தோழர் ரெட்டியாரை ஏன் சட்டசபை ஸ்தானங்கள் ஒன்றிற்கு நிறுத்தப்பட்ட வில்லை என்பதற்குக் காரணம் வேண்டாமா என்று கேட்கின்றோம். தோழர் ரெட்டியார் விண்ணப்பம் போடவில்லை என்பது ஒரு குற்றமானால், அபேக்ஷகர்களை பொறுக்கி எடுக்கும் சபை அவரை தெரிந்தெடுக்க என்ன ஆட்சேபம் குறுக்கே இருந்தது என்பது தெரியவில்லை. அன்றியும் தோழர் சி. ராஜகோபலாச்சாரியார் விண்ணப்பம் போடாமலும் “இனிமேல் காங்கிரஸ் கமிட்டிகளில் யாதொரு சம்பந்தமும் வைத்துக் கொள்வதில்லை” என்று விளம்பரப்படுத்திவிட்டும் வெளியில் இருந்த பொழுதும் அவரைப்போய் எல்லோரும் கெஞ்சவும் அவர் ஒப்புக்கொண்டது ஒரு பெரிய தயவாகவும் கருதியவர்கள் தோழர் சி.ஆர்.ரெட்டியார் விஷயத்தில் ஏன் அவரை தெரிந்தெடுக்கவில்லை? என்பதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
குடி அரசு- 1937 (1) 216
ஒவ்வொருவரும் விண்ணப்பம் போட்டுத்தான் தெரிந்தெடுக்கப்பட வேண்டுமென்ற சட்டம் காங்கிரசில் இருந்திருக்குமானால் எல்லோர். விஷயத்திலும் அப்படியே நடந்திருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் தகுதி உடையவர்களை கேட்டுக்கொள்ளுவது என்று இருக்குமானால்
மற்ற அநேகரை கேட்டது போலவே தோழர் ரெட்டியாரையும் கேட்டு விண்ணப்பம் போடச்சொல்லியாவது இருக்க வேண்டும்
11ந் தேதி “ஹிந்து” பத்திரிகை விசாகப்பட்டினக் காங்கிரஸ் கமிட்டியில் தலைவருடைய பதிலையும் ஒரு நிருபருடைய செய்தியையும் வெளியிட்டிருக்கிறது. அவைகளைப் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் தோழர் ரெட்டியாரை அஜாக்கிரதையாகவோ அல்லது தவறுதலாகவோ இக்காரியத்தை செய்ததாக நினைப்பதற்கு இல்லை. அதற்கு மாறாக வேண்டுமென்றே காங்கிரஸ் அங்கத்தினர் லிஸ்டிலிருந்து விலக்கியதாக கருத இடமிருக்கிறது. தோழர் ரெட்டியார் தன்னை காங்கிரஸ்காரர்கள். என்னமோ பகிஸ்கரித்து விட்டார்கள் என்று நினைக்கக்கூடும். ஆனால் நன்கு பரிசீலனை செய்தால் அவரை விலக்கியது வேண்டுமென்றே கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதற்கு ஒப்பாகும். ஏன் இவ்வாறு செய்தார்கள் என்றால், தோழர் ரெட்டியார் முதன் மந்திரி ஸ்தானத்திற்கு தோழர் ஆச்சாரியாருடன் போட்டி போடுவார் என்ற ஒரே எண்ணத்தால்
தான் என்று சொல்ல வேண்டும். ஆரம்பத்திலே ஒரு சிறு தவறிழைத்தால் பின்னால் பல ஆபத்துகளுக்கு ஆளாக வேண்டுமென்று கருதியும் தங்கள் சமூகமாகிய பிராமண சமூகத்தின் நன்மையை நாடியுமே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராகிய தலைவர் ரெட்டியாரை தியாகஞ்செய்து
விட்டார்கள். ஏன்? அவர் பார்ப்பனரல்லாதாரானால் தோழர் வல்லபாய்பட்டேல் சொன்னபடி ''தந்திரமுள்ள அரசியல் வாதி! யாகிய தோழர் ராஜகோபாலாச்சாரியாரை அவருக்குப் பதிலாகத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். பிராமண முதன் மந்திரியாயிருந்தால் அவர்களுடைய (பிராமண சமூகத்தாருடைய) வாழ்க்கையானது சரியாகப் பாதுகாக்கப்படும்
எனக் கருதியே இச்சதி செய்திருக்கிறார்கள் ஆகவே சென்னையில் சர்வாதிகாரர்களாக விளங்கும் கும்பல்கள், சுயமரியாதையும், சுயபுத்தியும் கொண்ட காங்கிரஸ் பார்ப்பனரல்லாத தோழர்களாகிய சி.ஆர். ரெட்டியார், டாக்டர் பி. வரதராஜுலு போன்ற தலைவர்களை காங்கிரசிற்கு புறம்பே நிறுத்தினதோடுமட்டுமல்லாமல் அசம்பளியில் பார்ப்பனர் தொகையையும் அதிகரிக்கச் செய்து கொண்டனர். இதற்கு முன் சட்டசபையில் வீற்றிருந்த பிராமண அங்கத்தினர். தொகையையும் இப்பொழுது அச்சட்டகபைக்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அங்கங்களின் தொகையையும் பார்த்தால் வகுப்பு விகிதாச்சாரப்படி எந்த வகுப்பாரும் இவ்வளவதிகமான அங்கங்களை பெறவில்லை யென்று 207 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நன்கு விளங்கும். ஏனெனில் ச ட்ட சபைக்கு தமிழ் நாட்டில் பொதுத் தொகுதியில் 23 பிராமணர்களும் 50 பிராமணரல்லாதாரும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். ஆந்திர நாட்டில் 20 பிராமணர்களும் 28 பிராமணரல்லாதாரும் அங்கம் பெற்றிருக்கின்றனர். அதேவிதமாக மேல் சபைக்கு தமிழ்நாட்டில் 5 பிராமணர்களும் 5 பிராமணரல்லாதாரும் ஆந்திர தேசத்தில் 7 பிராமணரல்லாதாரும் 5 பிராமணர்களும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். ஆக கீழ் சபையில் செல்வாக்கு மிகுந்த 53 பிராமணர்களும் 106 பிராமணரல்லாதாரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்கள். மேல் சபையில் 12 பிராமணர்களும் 14 பிராமணரல்லாதாரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் 100-க்கு 3 வீதம் ஜனசங்கிகையுள்ள பிராமண சமூகம் அசம்பிளியில் 100-க்கு 50 வீதம் சரி பகுதி ஸ்தானங்களைப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
இந்த கணக்கு விகிதங்களை பொது மக்களுக்கு ஏன் எடுத்துக் காட்டுகிறோமென்றால் காங்கிரஸ் போர்வையை மூடிக்கொண்டு வகுப்புவாதம் எவ்வளவு தூரத்திற்கு பெரிய பாதகத்தை விளைவிக்கக் கூடியதாக நடந்து வருகிறது என்பதோடு காங்கிரசில் உள்ள பிராமணரல்லாத தோழர்கள் விழித்துக் கொண்டு மக்களின் பொது நலத்திற்கு தாங்கள். செய்ய வேண்டிய கடமையை எச்சரிப்பதற்காகவேயாகும். காங்கிரசின் பேரால் வெற்றி பெற்றவர்களில் பெரும்பான்மையோர் சுயநல யதேச்சாதிகாரிகளாக விளங்கும் கும்பல்களுக்கு கட்டுப்பட்ட அடிமைகள் என்பது நமக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் சிலர் சுத்த இரத்தமும், சுயமரியாதையும், சுயபுத்தியும், சுயேச்சைத் தன்மையும் உடையவர்கள். இல்லாமலில்லை. அத்தகையவர்கள் பிராமணர் யதேச்சாதிகாரத்தை தலையெடுக்க வொட்டாமல் அழிக்க வேண்டுமென்பதுதான் எங்களுடைய
விருப்பம். வெகு சீக்கிரத்தில் காங்கிரஸ் கட்சி மந்திரி பதவி, செக்ரட்டரி
பதவி, தலைவர் பதவி முதலானவைகளை பங்கு போடப் போகிறார்கள். தோழர் ஆச்சாரியார் தம்முடைய சமூகத்தாருக்கு எத்தனை ஸ்தானங்கள். கிடைக்க வேண்டுமோ அத்தனையும் கிடைக்க வழி செய்வதில் ஒரு நாளும் மறந்துவிட மாட்டார். இது சமயத்தில் பார்ப்பனரல்லாதார் உறுதியாக நின்று தங்கள் கடமையை ஆற்றுவார்களேயானால் உண்மையிலே அவர்கள் நாட்டிற்கு பெரிய பணி செய்தவர்களாவார்கள். நம்மைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியிலிருந்தாவது பார்ப்பனரல்லாதார்கள். முன்னேற்றமடைந்தால் அதுவே நமக்கு மிகுந்த திருப்தியளிப்பதாகும்.
குடி அரசு - கட்டுரை - 14.03.1937
குடி அரசு- 1937 (1) 218
“விதவை கர்ப்பம்
சூதகக்கட்டி ஆய்விட்டது??
காங்கிரஸ்காரர்கள் நாம் கூறி வந்தபடியே நிபந்தனையில்லாமல் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளுவது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டதோடு
5 வருஷ காலத்துக்கும் மந்திரி பதவி தங்களை விட்டுப் போகாமல் இருப்பதற்கு சர்க்காருக்கு தாங்களாகவே நிபந்தனையும் கொடுத்து விட்டார்கள். அதாவது மந்திரிகள் அரசியல் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் - நடப்போமாகவும் என்பதை காங்கிரஸ் மூலமே தீர்மானித்து சர்க்காருக்கும் தெரிவித்து விட்டார்கள்.
சட்டசபை மெம்பர் ஆகி சர்க்கார் கட்டிடத்துக்குள் பிரவேசிக்கும்போதே பிரிட்டிஷ் அரசருக்கும் அரச சந்ததிக்கும் அரச சட்டங்களுக்கும் ஆக்கினைக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடக்கிறேன் என்று (ராஜவிசுவாச) பிரமாணம் செய்து ஆகவேண்டும் என்பது ஒருபறமிருந்தாலும் அதற்கு காங்கிரஸ்காரர்கள் ஒரு மாதத்திற்கு முன் ஒரு வியாக்கியானம் செய்தது. அதாவது “மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயில் ஒரு விதமாய் பிரமாணம் செய்தால் அந்த பிரமாணம் உண்மையான பிரமாணமாகாது” என்று வியாக்கியானம் செய்ததால் சர்க்கார் எங்கு தப்பிதமாய் நினைத்துக்கொண்டு மந்திரி சபை அமைக்க தங்களை கூப்பிடாமல் விட்டுவிடுவார்களோ என்று கருதி அதாவது கூப்பிட்டு மந்திரிபதவி ஏற்கச் சொன்னாலும் கூட ஏற்றபின் சர்க்கார் ஏறுமாறாய் நடந்து சீக்கிரம் மந்திரி பதவி ஒழியும்படி ஏதாவது சர்க்கார் செய்துவிடுவார்களோ என்று பயந்து இப்போது பச்சையாய் அரசியல் சட்டத்துக்கு (சீர்திருத்த சட்டத்துக்கு) கட்டுப்பட்டு நடக்கிறோம் என்றும் அந்தப்படி நடக்கும் காலங்களில் சர்க்கார் தங்கள் எதேச்சாதிகாரத்தை நடத்தக்கூடாது என்றும் விண்ணப்பம் போடும் படியான நிலைமைக்கு வந்துவிட்டார்கள்.
இதுவரை எந்த “சர்க்கார் தாசர்” கட்சியும் “தேசத்துரோக” கட்சியும் இம்மாதிரி சிறிதும் மானமும் வெட்கமும் சுயமரியாதையும் இல்லாத ஒரு நிபந்தனையை தாங்களாகக் கொடுத்து மந்திரி பதவிப்பிச்சை கேட்டதில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
இத்தீர்மானம் அதாவது:- 219௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
“சட்டசபையில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் மந்திரிகளும் சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ளும் வரையில் சட்ட பூர்வமான நடவடிக்கைகளைப் பொறுத்த மந்திரிகளின் யோசனைகளை கவர்னர் நிராகரிக்கவோ, விசேஷ அதிகாரங்களை கவர்னர் உபயோகக்கவோ மாட்டாரென்று காங்கிரஸ் கட்சித் தலைவர் இருப்தி அடையும்படி பகிரங்கமாகக் கூறினாலன்றி (யார் கூறுவது
ப-ர்) மந்திரி பதவியை ஏற்கலாகாது'' என்பதாகும்
இந்த தீர்மானம் அ.இ. காங்கிரஸ் கமிட்டியில் வந்தபோது அதை
எதிர்த்துப் பேசிய தோழர்கள் எல்லோரும் அதாவது தோழர்கள் ஜெயப்பிரகாஸ் போன்ற சமதர்மவாதிகள், பட்டாபி போன்ற காங்கிரஸ்காரர்கள், மாளவியா போன்ற மிதவாதிகள் அத்தீர்மானத்தில் உள்ள மானங்கெட்ட தன்மையையும் புரட்டையும் ஏமாற்றுதலையும் புட்டுப் புட்டு விளக்கமாகக் காட்டி இருக்கிறார்கள். அவைகளை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதற்கு மேல் நாம் எடுத்துக்காட்டுவது என்பது
சிறிதும் முடியாத காரியமே. காங்கிரசுக்காரர்கள் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம் என்று சொன்ன பிறகும் சட்டத்துக்கு கட்டுப்பட்ட முறையில். யோசனை கூறுகிறோம் என்று சொன்ன பிறகும் எதற்கு ஆக ஒரு கவர்னர் தனது எதேச்சாதிகாரத்தை நடத்த முன் வருவார் என்பது நமக்கு விளங்கவில்லை. அதற்கு ஆக அவரை சம்மதம் கேட்பது எதற்கு என்றும் நமக்குப் புரியவில்லை.
இத்தீர்மானமானது ஒரு மனிதன் ஒரு மேஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து நான் குற்றம் செய்யாதபோது என்னைத் தண்டிப்பதில்லை என்று ஜாடை காட்டுங்கள்” என்று விண்ணப்பம் போடுவதுபோல் இருக்கிறது.
இவைகள் ஒருபுறமிருந்தாலும் “அரசியல் சீர்திருத்த சட்டத்தில் உள்ள நிபந்தனைகள் மக்களுக்கோ நாட்டுக்கோ எவ்வித நன்மையும் செய்ய முடியாதபடி இருக்கிறதால் சீர்திருத்தத்தை உடைக்கவேண்டும்” என்று கூறிய காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் சீர்திருத்தப்படி நடந்து காட்டுவதன் மூலம் அதுவும் கவர்னர் பிரபு மனங்குளிர சட்டப்படி நடந்து காட்டுவதன் மூலம் தேசத்துக்கோ மக்களுக்கோ சீர்திருத்தத்தை உடைப்பதற்கோ என்ன நன்மை செய்யக்கூடும் என்று காங்கிரஸ்காரர்கள். நினைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை
“பூமிகளுக்கும் வீடுகளுக்கும் வரி இருக்காது, ரயிலுக்கு சார்ஜ் இருக்காது, மலைகளில் காடுகளில் மாடு கன்றுகள் மேய பாஸ் (சுங்கம்) இருக்காது, மழை பெய்யெனும் போது பெய்யும், வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது, பட்டினிக் கொடுமை இருக்காது என்றெல்லாம் சொல்லி பாமர மக்களை நம்பச் செய்து ஓட்டுப் பெற்றவுடன் சீர்திருத்த
சட்டத்திற்கு அடங்கி மந்திரிகள் புதிய அரசியல் வேலை நடத்தும்போது
குடி அரசு- 1937 (1) 220
கவர்னர் எதேச்சாதிகாரம் செய்யக்கூடாது என்று கவர்னர் கேட்டுக்கொள்வது என்பது தோழர் கேல்கர் சொல்லுவதுபோல் இதுவரை யாராலும் எந்தக் கட்சியாலும் செய்திருக்காத அரசியல் அயோக்கியத்தனமேயாகும் ஆனபோதிலும் நாம் சிரிதும் இதை ஆக்ஷேபிக்கவில்லை விதவைகள் கர்ப்பம் 100க்கு 90க்கு மேல் “சூதகக்கட்டியாக” “மாறி” விடுவது உலக இயற்கையேயாகும். உங்களின் முட்டாள்தனம் காரணமாக யாராவது விதவையாக இருக்க வேண்டியதானால் இயற்கையை வெல்ல முடியாதவர்கள் கர்ப்பமாகித்தான் தீருவார்கள். அதைச் சகித்துக்கொள்ள முடியாத முட்டாள் பொது ஜனங்களின் முன்னால் விதவைகள் அந்த கர்ப்பத்தை தன் தந்திரத்தால் சூதகக் கட்டியாக்கி ஒழித்து விட்டு மனிதர்களாய் வாழவேண்டியவர்களாகிறார்கள்.
அதுபோல் ஜனங்களின் முட்டாள் தனத்தால் இப்படிப்பட்ட காங்கிரசு என்று ஒன்று இருக்க வேண்டியதாகிறது. அந்த காங்கிரஸ்காரர்கள். இயற்கையை வெல்ல முடியாதவர்களாக வேஷத்தில் ஒருவிதமும் காரியத்தில் ஒருவிதமுமாய் வாழவேண்டியவர்களாகிவிடுகிறார்கள். அதாவது வேஷத்தில் தியாகமும் காரியத்தில் சுயநலமுமாக இருக்க வேண்டியவர்களாகிறார்கள். பொதுஜனங்கள் சுய காரியத்துக்கு மதிப்புக்கொடுக்காமல் வேஷத்துக்கு மதிப்புக் கொடுப்பதால் காங்கிரஸ்காரர் (பார்ப்பனர்கள்) தங்கள் காரியத்தால் ஏற்பட்ட பலனை எப்படியாவது பித்தலாட்டத்தால் திரித்து வியாக்கியானம் கூறி காரியத்தில் ஏற்பட்ட குற்றத்திலிருந்து தப்பித்துக்கொண்டு சுயநன்மை அடைந்து விடுகிறார்கள். இதற்கு ஆக காங்கிரஸ்காரர்களை குற்றம் சொல்லுவதில் இருப்பதாக நாம் கருதவில்லை. பொது ஜனங்களில் பெரும்பாலோர் எவ்வளவு காலம் மடையர்களாகவும் மூடர்களாகவும் இருக்கிறார்களோ அதுவரை அயோக்கியர்கள், பித்தலாட்டக்காரர்கள் ஆகியவர்கள் காரியம் வெற்றி பெற்றுக்கொண்டுதான் வரும் அதைப்பற்றி கவலைப்படுவது முட்டாள்தனம் என்றுதான் கூறுவோம்
எது எப்படி இருந்தாலும் இன்று நம் நாட்டில் தேர்தலில் தோல்வியுற்ற கட்சிகள் எல்லாம் அவர்களது அரசியல் கொள்கைகளில் திட்டங்களில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதும் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் என்பவைகள் அரசியல் கொள்கைகளில் திட்டங்களில் படுதோல்வி அடைந்து விட்டார்கள் என்பதும் உறுதியாய் விட்டது இதை பொது ஜனங்களில் எவ்வளவு மூடர்களும் உணரத்தக்க காலமும் கிட்ட நெருங்கி விட்டது. மந்திரி பதவிகளையும் தேர்தல்களையும் வெகு கேவலமாகப் பேசி இழித்துரைத்த காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் குளித்து முழுகி சுத்த ஆடையுடன் - பக்தியுடன் மக்களை ஓட்டுக்கு வரச் செய்து காங்கிரஸ்காரர்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை இறுக்கமான 21— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
உடையுடன் அலங்கரித்து வந்து மக்கள் கையைப்பிடித்து ஓட்டுப்போடும் விதத்தை மக்களுக்கு விளக்கிக்காட்டி மத உணர்ச்சியான பக்தி விஸ்வாசத்துடன் ஓட்டுப்போடச் செய்ய வேண்டிய நிலைமையை அடைந்து விட்டார்கள். ஓட்டுப் போடுவதில் உள்ள மோட்சத்தையும் எடுத்துக்காட்டி விட்டார்கள். கடசியாக டில்லியில் கூடிய அ.இ.கா. கமிட்டியில் கவர்னர்களுக்கு வாக்குறுதி கொடுத்துவிடு கவர்னரிடம் கேட்காமல் ஜாடை காட்டினால் போதும் என்று அதுவும் பொது ஜனங்களுக்கு திருப்தி ஏற்படும்படியாய் இல்லாமல் கட்சித் தலைவர்களுக்கு திருப்தி ஏற்படும்படி ஜாடை காட்டினால் போதுமென்ற நிலைமைக்கு சர்க்கார் அடிபணிய ஒப்புக்கொண்டு விட்டார்கள்: பொது ஜனங்களிடம் காங்கிரஸ்காரர்கள் பேசும்போதெல்லாம் மற்ற கட்சிகளைக் குறை கூறியும் சர்க்காரை குறை கூறியும் எவ்வளவோ வீராவேசமாய்ப் பேசி மக்களை ஏய்த்தவர்கள் இப்போது தாங்கள் மற்றக் கட்சிக்காரர்கள் நிலைமைக்கு வந்த உடன் சர்க்காருக்கும் சட்டத்துக்கும் இவ்வளவு தூரம் கட்டுப்பட்டு நடப்பதாக இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லுவதென்றால் இது அவர்களது படுதோல்வியும் மகா துணிவுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்
“மயிருள்ள சீமாட்டி வாரி வீசி முடிவாள்” என்கின்ற பழமொழிக்கேற்ப பாமர மக்களைத் தங்கள் சுவாதீனப்படுத்திக்கொண்டிருக்கும் மக்கள் இதுவும் செய்வார்கள் இன்னமும் அநேகம் செய்வார்கள். அவர்கள் மீது குறை கூறுவது கையாலாகாத்தனமேயாகும்
இன்று அவர்களுக்கு (காங்கிரஸ்காரர்களுக்கு) எதிரிகள் யார்? எங்கே இருக்கிறார்கள்? எத்தனை பேர் என்றால் எல்லாம் இல்லை என்றுதான் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதை மாற்ற முயற்சிக்க வேண்டியதே இப்போது நம் கடமையாகும். அதற்கேற்ற சந்தர்ப்பம் நன்றாய்
வழி திறக்கப்பட்டு இருக்கிறது ஆதலால் காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்று அவர்கள் செய்வதைப் பார்ப்போம்
குடி அரசு - தலையங்கம் - 21.03.1937
குடி அரசு- 1937 (1)
ப ப் 3
தோழர்
0.8 க்கு 65 வருஷம்??
காங்கிரஸ்காரர்கள் என்னும் நமது பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு ஆணவம் படைத்தவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதற்கு அவர்கள் அடிக்கடி போடும் கரணங்களும் பித்தலாட்டங்களும் வஞ்சகங்களும் பாமர மக்களை ஏமாற்றும் சூழ்ச்சிகளும் ஒருபுறமிருந்தாலும் தங்களை ஒரு கொடுங்கோன்மை பழிவாங்கும் தன்மையினராக நினைத்துக்கொண்டு அடக்கு முறைத் திட்டங்களையும் கடுமையான தண்டனைகளையும் கையாளுவதாக மக்களுக்குக் காட்டி மிரட்டி வருகிறார்கள். இதனால் மற்றவர்களைக் காங்கிரசுக்குள் - தங்களுக்குள் அடங்கி சரணாகதியாய் நடக்கச் செய்ய இது ஒரு சூழ்ச்சிமார்க்கம் என்று கருதிச் செய்கிறார்கள்.
இந்த சூழ்ச்சி எந்த அளவுக்குப் போய்விட்டது என்று பார்த்தால் கோயமுத்தூர் தோழர் சி.எஸ். ரத்தினபாபதி முதலியார் அவர்களை “5 வருஷகாலத்துக்குப் பொது வாழ்வில் காங்கிரசில் எவ்வித ஸ்தானத்துக்கும் தகுதி இல்லை” என்பதாகத் தீர்மானித்து விட்டார்களாம்
இன்று காங்கிரசில் தலைவராயிருக்கும் தோழர் ராஜகோபாலாச்சரியார் அவர்கள் தோழர் சி.எஸ்.ஆர். அவர்கள் வீட்டிற்கு நடையாய் நடந்து கடிதத்தின் மேல் கடிதம் எழுதி அவரை சட்டசபை அபேக்ஷகரிலிருந்து
பின் வாங்கிக் கொள்ளும்படி கெஞ்சி அவர் வித்திட்றா செய்தவுடன் காங்கிரஸ் அபேக்ஷகர் வெற்றியும் பெற்று விட்டு அதுமாத்திரமல்லாமல் தோழர் சி.எஸ்.ஆர். அவர்களின் மேலான குணத்தைப் புகழ்ந்து சி.ரா. அவர்கள் மேடைகளிலும் பேசி அவருக்கு நன்றியும் செலுத்தி விட்டு இப்போது அவரை 5 வருஷம் தண்டித்து இருப்பதாய் தீர்ப்பு” எழுதி பகிரங்கப் படுத்துகிறார்கள் என்றால் “காரியத்துக்கு காலைக் கட்டுவதும் காரியம் தாண்டினால் காலைவாரிப் போடுவதும் பார்ப்பான் குணம்” என்கின்ற பழமொழி நிர்வாணமாய் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதா இல்லையா என்று கேட்கிறோம்
தோழர் சி.எஸ்.ஆர். அவர்களுக்கும் இது வேண்டும் என்றுதான். கூறுவோம். “மகன் செத்தாலும் சரி, மருமகள் முண்டச்சி ஆகவேண்டும்” என்பதற்கிணங்க ஜஸ்டிஸ் கட்சி மீதுள்ள அதாவது அக்கட்சி தலைவர்கள்.
223 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்கு ஆக காங்கிரசைப் பணியப் போனவருக்கு இந்த நிலை ஏற்பட்டதானது இனியும் இவரைப்போன்ற மனப்பான்மை கொண்டவருக்கு இது ஒரு படிப்பினையாகும் என்றே கூறுவோம் பொதுவாக இந்த மாகாணத்திலேயே பொது வாழ்வில் தோழர் சி.எஸ்.ஆர். அவர்களைப் போன்ற நாணயமுள்ளவர் அதாவது தனது சுயநலத்துக்கு ஆக பொதுநல வாழ்வை சிறிதும் பயன்படுத்திக் கொள்ளாதவர் ஒருவர் உண்டு என்று சொல்லுவதென்றால் அது சுலபமான காரியமாக ஆகிவிடாது. பொதுநல வாழ்வு காரியமாகவே தனது செல்வம், தனது வாலிபம், ஊக்கம் ஆகியவைகளை தாராளமாய் செலவு செய்தவர். ஒரு காலத்தில் தாலூக்கா போர்ட் நாமினேஷனுக்கு ஆக 20000 ரூ கொண்டுவந்து ஒருவர் காணிக்கை வைத்ததை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரு பெரிய விரோதத்தை சம்பாதித்துக்கொண்டு போராடியவர். தனது முக்கிய நண்பர்களைக் கூட அலட்சியம் செய்து எதிரிகளுக்கு அனுகூலமாய் இருந்தவர். சிறப்பாக பார்ப்பனர்களுக்கு அந்தரங்க விசுவாசமாக நடந்து கொண்டவர். இப்படிப்பட்டவர் அதே பார்ப்பனர்களால் காலைவாரி விடப்பட்டதும் அவர்களே துணிகரமாய் “5 வருஷ தண்டனை” கொடுத்து இருப்பதும் காங்கிரசுக்கு பிற்கால வாழ்வில் பிரதிபலிக்காமல் வீணாகப் போகக்கூடியதாய் இருக்காது என்றே கருதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.03.1937
குடி அரசு- 1937 (1) 224
பார்ப்பானுக்கு ஏன் ஆத்திரம் வராது?
சென்ற மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள்
கட்சிக்கு வெற்றி ஏற்பட வேண்டுமென்று உத்தியோகப் பார்ப்பான்.
முதல் கொண்டு எச்சில் கிண்ணம் கழுவும் பார்ப்பான் வரை பெண்டு பிள்ளை குடும்ப சமேதமாய் கட்டுப்பாடாய் அக்கரையாய் ஆத்திரமாய் அலைந்து திரிந்து வேலை செய்தார்கள் என்பதைப் புகழ்ந்து அச்சமூகத்தை மெச்சிப்பேசுவதே இன்றைய எந்தக் கூட்டத்தினுடையவும்
முதல் பேச்சாய் இருக்கிறது. அது உண்மைதான். ஆச்சரியப்படத் தக்கதுதான்.
ஆனால் அதன் காரணம் அவர்களுடைய பொது நல சேவை
என்று சொல்ல முடியுமா? அல்லது அதிகாரம், பதவி ஆகியவற்றின் ஆசை என்று சொல்லிவிட முடியுமா? என்றால் இரண்டும் அல்ல என்று தான் சொல்லுவோம். மற்றென்னவென்றால் பார்ப்பனர்களை நாம், (ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும்) அந்த நிலையில் கொண்டு வந்து வைத்து விட்டோம். அவர்களது வாழ்க்கையை சமூகத்துறையிலும் அரசியல் துறையினும் மிக்க நெருக்கடியானதாக ஆக்கிவிட்டோம். சகல தொழிலிலும் பிரவேசிக்க அவர்கள் துணிந்தும் நாம் ஒவ்வொன்றிலும்
தடுத்து கஷ்டமாக்கி விட்டோம். நாம் ஆக்காவிட்டாலும் “தானாகவேயாவது'” ஆகிக்கொண்டு வர வேண்டியதாகிவிட்டது என்றாவது சொல்லித்தீர வேண்டியதாகிவிட்டது
ஒரு சின்ன உதாரணம் கூறுவோம்
உத்தியோக முறையில் நாம் வகுப்பு உணர்ச்சியை கிளப்பி
விட்டதிலிருந்து - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்பட்டதிலிருந்து அவர்கள் ஆதிக்கமும் பெருமையும் தேயத் தலைப்பட்டு விட்டது என்பதோடு மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் என்கின்ற அபிப்பிராயத்தை செல்வாக்குப் பெறும்படி நாம் செய்துவிட்டது முதல் மதத்திலும் சமூகத்துறையிலும் அவர்களுடைய உயர்வும் மதிப்பும் தேய்ந்துவர ஆரம்பித்துவிட்டது.
அச்சமூகத்தில் 100க்கு ஐம்பது பேருக்கு மேல்பட்டவர்கள் படித்து 100 உத்தியோகங்களில் 90 உத்தியோகங்களை கைப்பற்றி வந்ததும் 25— ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அச்சமூகத்தில் உள்ள மீதி 100க்கு 50 பேருக்கு புரோகிதம், அர்ச்சகம்,
பரிசாரம், ரிஸ்டோரெண்ட், தூது ஆகிய வேலையில் ஈடுபட்டிருந்ததுமே
அச் (பார்ப்பன) சமூக ஜீவன மார்க்கமாக இருந்தது
மற்றும் வக்கீல், டாக்டர் ஆகிய வேலையும் அச்சமூகத்துக்கே ஏகபோக: உரிமையாகவும் பணம் சம்பாதித்து சேர்க்கும் மார்க்கமாகவும் இருந்தது. இந்த நிலையில் இன்று அவர்களது படிப்பு, உத்தியோகம், வக்கீல், டாக்டர் ஆகிய பிழைப்புக்கு பலமான போட்டி ஏற்பட்டுவிட்டது. அரசியல் அதிகாரம் 15 வருஷ காலமாக அவர்களிடமிருந்து சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு விட்டதால் பார்ப்பனர்களே போட்டியில் முழு வெற்றியும் பெறுவதற்கு மார்க்கமில்லாமல் போய்விட்டது. சமூக வாழ்க்கையிலும்
மதிப்பும் பெருமையும் குறைந்த உடன் அவர்களது சோம்பேறி வாழ்க்கைக்கு போதிய வருமானத்துக்கும் கூட வழி இல்லாமல் போய்விட்டது. இதன் பயனாய் பச்சை வருணாச்சிரம பார்ப்பனர் முதல் பெரிய சீர்திருத்த பார்ப்பான் - சர்க்கார் சேவக பார்ப்பான் முதல் மிதவாதப் பார்ப்பான் அதி தீவிர சத்தியாக்கிரக பார்ப்பான் முதல் தேசிய - சமதர்ம
- பொது உடமை பார்ப்பான் வரை தங்களது நிலைமைக்கு வருந்தி கூடிக்கூடி ஒருவருக்கொருவர் கட்டி அழுது தங்கள் தங்கள் துக்கத்தை ஆற்றிக்கொள்ளவும் அச்சமூகத்துக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு பரிகாரம் உடனே தேடவும் முயற்சி செய்யவும் வேண்டியதாய் போய்விட்டது
இதன் பயனாகவே தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் ஒரு கூட்டத்தில் பேசும்போது “இந்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியை ஜெயிக்க விட்டு விட்டால் நாம் (பார்ப்பனர்கள்) எல்லோரும் வங்காளக்குடாக்கடலில் விழுந்து மடிய வேண்டியதுதான்” என்று சொன்னார்.
பார்ப்பனர்களுக்கு மேல்கண்டபடியான கஷ்டங்களால் ஏற்பட்ட நஷ்டங்கள் அவ்வளவும் பார்ப்பனரல்லாதாருக்கு லாபமாய் இருந்ததால் அதை அடைந்து சுகத்தில் இருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கு கவலைப்படவேண்டிய அவசியமோ கட்டுப்பட வேண்டிய அவசியமோ
ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் வேலை செய்ய வேண்டிய அவசியமோ இல்லாமல் அவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமை, போட்டி, வேற்றுமை, துவேஷம் ஆகியவைகளையே வளர்த்துக்கொள்ள வேண்டியவர்களாகி விட்டார்கள். அதோடு ஒரே கட்சியில் ஒருவர் தோல்வி அடைய மற்றொருவர் காங்கிரசுக்கு பணம் கொடுக்க வேண்டிய
அவசியத்துக்கும் ஆளானார்கள்.
இந்தக் காரணங்களால் ஒரு கூட்டம் (சிறியதாய் இருந்தாலும்) ஒற்றுமைப்பட்டு வலுவடைந்து வரவும், மற்றொரு கூட்டம் (பெரியதாய் இருந்தாலும்) வேற்றுமைப்பட்டு பலவீனமடைந்து வரவும் வேண்டியதாய் விட்டது
குடி அரசு- 1937 (1)
ப ப் ௯
ஒரு சின்ன விஷயம் அதாவது சென்ற மாதத்தில் தென் இந்திய ரயில்வேக் கம்பெனிக்கு உத்தியோகத்திற்கு ஆட்கள் தேவையிருந்தபோது 200க்கு மேற்பட்ட ஆட்கள் தேவை என்று ரயில்வேகாரர் விளம்பரம் செய்யும்போது,
பார்ப்பனர் 6 பேர் வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாதார் 196
பேர்கள் வேண்டுமென்றும் விளம்பரம் செய்திருந்தார்கள்.
மற்றும் சென்னை ஹைக்கோர்ட்டில் இன்று முஸ்லீம் உள்பட 5 பார்ப்பனரல்லாத ஜட்ஜிகள் இருக்கவும் சென்னை மாகாணத்தில் 2 தடவை கவர்னர் ஸ்தானம் காலியானபோதும் 2 பார்ப்பனரல்லாதாரே கவர்னர் வேலைபார்க்கவும், 7 மந்திரிகளில் 5 இந்திய மந்திரிகள் ஸ்தானத்தில்
சுமார் 10 வருஷகாலமாய் 5 பேரும் பார்ப்பனரல்லாதாராகவே இருக்கவும், பார்ப்பனருக்கே பெரிதும் ஏகபோக உரிமையாய் இருந்த முனிசீப், ஜட்சி ஆகிய உத்தியோகங்களில் 100க்கு 20 வீதமாவது பார்ப்பனரல்லாதார்களாக ஆகி பார்ப்பனரல்லாதார் வக்கீல்கள் ஆங்காங்கு 100க்கு 10, 20, 30
வீதம் பெருகி பார்ப்பனர்களின் பிரபுத்தன்மைப் பிழைப்பு நாளுக்கு நாள் குறையவும், மற்றும் பொதுவாக பார்ப்பனர்கள் வீடுகள் ஒவ்வொன்றிலும்
1, 2, 3 பையன்கள் பி.ஏ., எம்.ஏ., வரை படித்து விட்டு வேலையில்லாமல்
திண்டாடவும் பார்ப்பனரல்லாதாரை சிபார்சுக்கு கெஞ்சவுமான நிலையில்: இருந்து வருவது யாரும் அறியாததல்ல
மற்றும் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் கொச்சி சமஸ்தான திவானாகப் போன பின்பு அதற்கு முன்பு அச்சமஸ்தானத்தில் 100க்கு 2 வீதம் இருந்த பார்ப்பனர்க்கு பெரும் உத்தியோகங்களில் 100-க்கு 40 வீதம் 50 வீதம் இருந்த உத்தியோக விகிதத்தை மாற்றி பார்ப்பனர்களுக்கு இனிமேல் 100க்கு 2 உத்தியோகந்தான் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு 100க்கு 98 என்றும் தீர்மானம் செய்து விட்டார். அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களாக இருந்து வந்தவர்கள் 100க்கு 40 வீதம் உத்தியோகம் பெறும்படி ஆகிவிட்டது
இது மைசூர் சமஸ்தானத்திலும் பம்பாய் மாகாணத்திலும் மத்திய மாகாணத்திலும் பரவி அங்கும் பார்ப்பன ஏகபோக ஆதிக்கம் குறையும்படியான - ஒழியும்படியான நிலைமை ஏற்பட்டு வருகிறது
என்றால் பார்ப்பான் வயிறு வேகாமலோ, ஒற்றுமைப்படாமலோ, கட்டுப்பாடாக அக்கரையும் ஆத்திரமும் படாமலோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்த நிலைமை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போகுமானால் பார்ப்பனர்கள் நிலை இன்னும் ஒரு 25 வருஷ காலத்துக்குள் தாழ்ந்த ஜாதி என்று கருதும்படியான நிலைமைக்கு வந்துவிடும் என்பதில் என்ன தடை? 27... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இப்போது சங்கீத தொழில், நாடகத் தொழில், நாட்டியத் தொழில் என்பவைகளில் கூட பார்ப்பனர்கள் தங்கள் பெண்களை தாராளமாய் இறக்கிவிட்டார்கள். இத் தொழில்களுக்கு என்னதான் மதிப்பு கற்பித்தாலும் இது வரை நம்நாட்டில் இத் தொழில்களில் ஈடுபட்டிருந்த பெண்களை பெரும்பாலும் கீழ் ஜாதியார்கள் என்றும் விவசாரிகள் என்றும் கருதி வந்திருக்கிறார்கள்.
விவசாரித்தனத்தில் பயனடையவும் பெருமை பெறவும் இத்தொழில்களே பெரிதும் பெண்களுக்கு உதவி செய்து வந்திருக்கின்றன என்றும் இதை அனுபவிக்கிற புருஷன்களும் கெட்டுப்போகிறார்கள் என்றும் கருதி பல பெரியோர்கள் அக்கூட்டங்களையே பஹிஷ்கரித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிலை பார்ப்பனப் பெண்கள் ஏகபோகமாக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?
மற்றும் இதுபோன்ற வேறுபல தொழில்களை - இழிவு என்று கருதப்பட்டவைகளை பார்ப்பனர்கள் தங்கள் வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.
நம் நிலையோ
நம் நிலையோ நம்மில் தாழ்ந்த ஜாதி என்றும், இழி ஜாதி என்றும்
கீழ் மக்கள் செய்யும் தொழிலை உடையவர்கள் என்றும் கருதப்பட்டு வந்த மக்கள் முதல் கொண்டு சகல வகுப்பு மக்களிலும் இந்த 15 வருஷகாலத்துக்குள்ளாக தாராளமாகப் படிக்கவும் பரீக்ஷையில் பாஸ் செய்து பட்டம் பெறவும் 100க்கு 5, 10 வீதமாவது பெரிய உத்தியோகங்கள் பெறவும் இவர்களால் எவ்வளவோ மதிப்பாயும் பக்தியாயும் கருதப்பட்டு வந்த பார்ப்பனர்களை சாதாரணமாக நீ, நான், வா, போ, வாடா, போடா என்கின்ற மாதிரியில் சமத்துவமாகவும் சமீபமாகவும் அழைக்கும்படியான
- மதிக்கும்படியான நிலைமைக்கு வந்துவிட்டோம்
நமக்கு உத்தியோகப் பஞ்சமென்பது தெரிவதற்கில்லாமல் தானாகவே, தான் பிறப்பதற்கு மூன்பே - படிப்பதற்கு முன்பே - பாஸ் செய்வதற்கு முன்பே உரிமை ஏற்பட்டிருப்பதாய் - காத்துக்கொண்டிருப்பதாய்க் கருதிக்கொண்டு “எனக்கு என்ன செய்தீர்கள்? எனக்கேன். அந்த உத்தியோகம் கொடுக்கவில்லை?” என்று பார்ப்பனரல்லாத பிரமுகர்களை மிரட்டி உத்தியோகம் பெறவும் சில சமயங்களில் நம்மில் சில வகுப்புகளில் உத்தியோகத்துக்கு ஆள் இருக்கிறதா என்று தேடிப்பிடிக்கவேண்டிய அவசியம் வரவும், சிலர் “எனக்கு அந்த உத்தியோகம் வேண்டாம், இந்த உத்தியோகம்தான் வேண்டும்” என்றுவாதாடவும் பாத்தியம் கொண்டாடவுமான நிலைமை சிறிதாவது ஏற்பட்டு இருக்கிறது
மற்றும் சில குடும்பங்களில் பார்ப்பனரல்லாதார் என்பதற்காக புருஷனுக்கு உத்தியோகம் கிடைத்தவுடன் பெண் ஜாதிக்கு உத்தியோகம்
குடி அரசு- 1937 (1) 228
ஏன் கொடுக்கவில்லை என்று கோபித்துக் கொள்ளவும், இருவருக்கும் உத்தியோகம் கொடுத்தால் இருவரையும் ஏன் ஒரே பக்கத்தில் போடவில்லை என்று கோபித்துக்கொண்டு வேண்டாம் எனவும், இருவருக்கும் ஒரே இடத்தில் உத்தியோகம் கிடைத்தால் மேல் உத்தியோகமும் அவசரப் பிரமோஷனும் உயர்ந்த சம்பளமும் ஏன் கொடுக்கவில்லை என்று நிஷ்ட்டூரப்படவுமான நிலைமையும் ஏற்பட்டு இருக்கிறது ஒவ்வொரு பார்ப்பனரல்லாத பெற்றோர்களும் “என் பையன் ஏன் படிக்கவில்லை” என்று வாத்தியார்களை கண்டிக்கவும் “என் பையனை மேல் கிளாஸில் தாக்கல் செய்துகொள்” என்று ஹெட்மாஸ்ட்டரை அதிகாரம் செய்யவும் மிரட்டவும் “காலர்ஷிப் கொடுக்கிறாயா இல்லையா" என்று பள்ளிக்கூட மேனேஜர்களையும் பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் அதிகாரம் செய்யவும் காலேஜுகளில் இடம் ஒதுக்கிவைக்கும்படி அதிகாரிகளுக்குத் தந்திகொடுக்கவும் வீடு வாசல் உடையவர்கள் “என் வீட்டுக்கு வரி குறைக்கிறாயா இல்லையா!” என்று சேர்மென் கவுன்சிலர்களை அதட்டவும் கவுன்சிலர் “விண்ணப்பம் எழுதிக்கொடு”' என்றால் “நீங்களே எழுதிக்கொள்ளுங்கள், நான் கையெழுத்து போடுகிறேன்” என்று சொல்லவும் இப்படியே இன்னும் பல துறைகளிலும் கஷ்டம் இன்னதென்று உணரமுடியாமல் அதிகாரத்திலும் ஆணவத்திலும் பாத்தியத்திலுமே காரியம் செய்துகொண்டு போகும்படியான சவுகரியங்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
மற்றும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் அரசியலிலும் 15 வருஷத்துக்கு
முன் தாங்கள் எப்படி இருந்தவர்கள் என்பதை சரிவர உணராத வாலிபர்களும் இன்று தாங்கள் இருக்கும் நிலை தங்களுக்கு உரிமை உள்ளதே தவிர இது யாராலும் ஏற்பட்டதல்ல என்று கருதும் வாலிபர்களுமே இன்று இருக்கிறபடியால் பழய நிலை எப்படிப்பட்டது என்று தெரியாத வாலிபர்களும் பழய நிலை மாறினதற்கு நன்றி செலுத்த வேண்டியதல்லாதவர்களும் பழய நிலைக்குப் போக நேரிட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாதவர்களுமாய் இருக்கிறார்கள். உதாரணமாக ரஷியாவை எடுத்துக்கொள்ளுவோம். ரஷியாவில். புரட்சி ஏற்பட்ட 1917ம் வருஷத்துக்கு இன்று 20 வருஷம் ஆகிறது ஆதலால் இன்று அங்கு 20 வருஷ வயதுள்ள வாலிபர்களும் புரட்சியின் போது 10, 15 வயதுடைய சிறுபிள்ளையாய் இருந்து இன்று 30, 35 வயதுவரை உள்ளவர்களுக்கும் புரட்சிக்கு முன் அந்நாட்டில் தங்களுடைய நிலைமையும் வாழ்க்கையும் சுயமரியாதையும் எப்படி இருந்தது என்பது பிரத்தியக்ஷத்தில் தெரிந்து இன்றைய நிலைமையோடு ஒத்திட்டுப் பார்த்து மகிழ்ச்சி யடையவும் இந்நிலைமைக்கு உதவியாய் இருந்து நடத்தி வருகிறவர்களுக்கு நன்றி செலுத்தவும் வேண்டிய நிர்ப்பந்தம் அந்த மக்களுக்கு இல்லாமலே போய்விட்டது
229 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இந்த காரணத்திலேயே இப்போது ரஷியாவில் புரட்சிக் கொள்கை தளர்ச்சியடைகின்றது என்றும், நாஸ்திகம் குறைகின்றது என்றும், ஜனநாயகமுறை கையாள யோசிக்கப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது. இது உண்மையாய் இருந்தால் இதில் ஆச்சரியப்பட இடமில்லை ஏனென்றால் மக்களுக்கு கவலை ஏற்பட அவசியம் இல்லாமல் போய்விட்டது.
அது போலவேதான் நம் நிலையும் என்று சொல்லுவோம்
உதாரணமாக சில வகுப்புகளை எடுத்துக் கொள்ளுவோம். 20 வருஷத்துக்கு முன் மேல் வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு 20,
30 அடி தூரத்துக்கு அப்பால் இருந்து கை கட்டி வாய் பொத்தி சாமி, எஜமானே, புத்தி என்று மரியாதைச் சொல் வைத்துப் பேசி வந்த வகுப்பார்கள் இன்று சமீபத்தில் உட்கார்ந்து தட்டிக் கூப்பிட்டு சமமான முறையில் மரியாதை வைத்து எதிர்த்தும் பேசக்கூடிய நிலைமை வந்தால் அவர்களது மக்கள் தங்கள் பூர்வ நிலையை எப்படி நினைக்க முடியும்?
மற்றும் எத்தனையோ பேர் சமூகத்துறையில் எவ்வளவு குற்றமாக கருதக்கூடியவர்களானாலும் “நாங்கள் 30 வருஷத்துக்கு மூன்பே 50 வருஷத்துக்கு முன்பே சுயமரியாதைக்காரர்கள்'” என்று கூறிக்கொண்டு மேடையில் முதல் வரிசையில் உட்காரக்கூடிய பெருமை வந்து விட்ட
பின் பழைய நிலை எப்படி ஞாபகத்துக்கு வரும்? இன்றைய இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட உழைத்தவர்களுக்கு எப்படி மரியாதையோ நன்றியோ காட்ட முடியும் என்பதை யோசித்தால் அவர்களது நடத்தையும் அலட்சிய புத்தியும் தன்னை மறந்ததும் ஞாயம் தான் என்று தோன்றும்.
ஆகையால் இன்றைய வாலிபர்கள் அல்லது இன்றைய நடுப்பிராயமுள்ள மக்கள் சமூகத்துறை முற்போக்கு முயற்சிக்கு சிறிதாவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாமல் போனது நியாயமேயாகும். அதுபோலவே கிராமக் குடித்தனக்காரர்களின் மக்கள் உதவியும் நாம் எதிர்பார்க்க முடியாது என்பதற்கும் நியாயம் உண்டு. கிராமக் குடித்தனக்காரன் முன்பு எவ்வளவு செல்வவானாய் இருந்தாலும்
பஞ்சாங்கப் பார்ப்பான், வக்கீல் பார்ப்பான், போலீசுக்காரன் ஆகியவர்களின் அடிமையாய் இருந்து வணங்கி வந்தது யாவரும் அறிந்ததேயாகும். அப்படிப்பட்டவர்களுடைய மக்கள் தன் நிலை அறிய முடியாமல் இன்று ஜில்லா, தாலூக்கா போர்டு மெம்பர்களாயும் தலைவர்களாயும் பட்டண வாசிகள் பலர் தங்களிடம் வந்து வாயில் காத்து தயவு எதிர்பார்க்கின்றவர்களாகவும் பட்டணங்களில் உள்ள வக்கீல்கள் கிராமங்களுக்கு சென்று கட்சிக்காரர்களை தேடும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கும் போதும் கிராமக்காரர்கள் சீர்த்திருத்த முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமென்ன என்று கேட்கின்றோம்.
குடி அரசு- 1937 (1) 230
ஆகவே இன்று சீர்திருத்த முயற்சி இயக்கம் வெற்றிபெறவில்லை என்றும் செல்வாக்குடன் இல்லை என்றும் சொல்லப்படுமானால் அதிலும் நாம் ஆச்சரியப்பட இடமில்லை
ஆகையால் மனித சமூக சீர்திருத்த - முன்னேற்ற வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையோடு இருக்கவேண்டும்; மனத்தளர்ச்சி அடையக்கூடாது கூடிய அளவு ஸ்தாபன நிர்மாண வேலையை நடத்திக் கொண்டு போக வேண்டும் இன்று நாட்டின் செல்வாக்கானது மனித சமூக முற்போக்கு விரோதிகளிடம் சிக்குண்டுவிட்டது. பழைய கஷ்டமறியா வாலிபர்கள் பெரிதும் அவர்களது அடிமைகளாக ஆகிவிட்டார்கள். பாமரமக்களுக்கு தங்களின் முன்னைய நிலையை தாங்கள் உணருவதற்கில்லாமல் போய் விட்டது ஆதலால் செல்வாக்கு பெற்றிருப்பவர்களும் மனித சமூக விரோதிகளும் தங்கள் சுயநலமே பிரதானமெனக் கருதுபவர்களுமான பார்ப்பனர்களின் ஆதிக்கம் நன்றாக உச்சஸ்தானத்துக்கு போகவும், பார்ப்பனரல்லாத மக்கள் தங்கள் பழய நிலைமைக்கு வரவும் வீட்டுக்கு நாலு இரண்டு உத்தியோகத்துக்கு ஆகவும் வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும் எவ்வித இழிவான வேலையும் செய்யத் தயாராகவும் சமூக துறையில் வருணாச்சிரமம் மேலும் பலப்பட்டு தலையெடுக்கவும் ஒவ்வொரு காரியத்துக்கும் பார்ப்பனரல்லாத பிரமுகர்களிடம் வந்து அதிகார தோரணையில் கேட்பது போய் பார்ப்பான் வாயலில் கோயிலுக்குச் சென்று
கல் முன் நிற்பது போல் பக்தியோடு - பணிவோடு நின்று கெஞ்சவுமான. நிலைமை சீக்கிரத்தில் ஏற்படத் தாராளமாய் இடம் கொடுத்துவிடவேண்டும். இந்த நிலை தானாகவே வரக்கூடும். ஆனாலும் அதற்கு எதிராய் நின்றால் கொஞ்சமாவது தடைப்பட்டு காலதாமதமாகி விடுமாதலால் தாராளமாய் விட்டுவிட்டால் நம்மக்கள் கூடிய சீக்கிரம் புத்திபெற்று இரட்டை ஆவேசத்துடன் புரட்சிக்கு தயாராகிவிடுவார்கள். இதில் நமக்கு
சிறிதும் சந்தேகமில்லை.
குடி அரசு - தலையங்கம் - 28.03.1937
Bl வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பதவியும் “நிபந்தணை:யும்
கவர்னர்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக அ.இ.காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்துவிட்டது ஆனால் எந்த மாதிரி வாக்குறுதி பெறுவது என்பதும் அத்தீர்மானத்திலேயே இருக்கிறது. அதாவது “காங்கிரஸ்காரர் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்தக்கூடாது” என்கின்ற வாக்குத்தத்த ஒப்பந்தம் பெற்று அரசியலை நடத்திக் கொடுப்பது
இதில் இரண்டு விஷயம் யோசிக்க வேண்யடிதாகும்
1. சட்டத்துக்கு கீழ்பட்டு அரசியல் சட்டப்படி நடந்து அரசியலை நடத்திக்கொடுக்கும்போது கவர்னர் எதேச்சா (விசேஷா) திகாரத்தை ஏன் உபயோகிப்பார் என்பது
2. ஒருசமயம் உபயோகிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லப்படுமானால் அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கவர்னருக்கு சொந்த அதிகாரம் ஏதாவது உண்டா? பொதுஜன நன்மைக்கோ பிரிட்டிஷ் அரசியல் தத்துவத்துக்கோ விரோதமில்லாமல் நடத்தவே அரசியல் சீர்திருத்தம் கட்டுப்பட்டதாகும் அம்மாதிரி காரியம் மந்திரிகள் செய்யாமல் இருக்கும் வரை கவர்னர் எதேச்சாதிகாரம் செலுத்த ஏன் முற்படுவார்?
மந்திரிகள் செய்யும் எந்தக் காரியமாவது பொதுஜன நன்மைக்கு ஏற்றதல்ல என்று கருதி அக்காரியம் அரசியல் சட்ட நிபந்தனைக்கு மீறியதல்ல என்றும் கருதுவாரானால் அப்போது கவர்னரால் எதேச்சாதிகாரம் செலுத்தாமல் இருக்க முடியுமா? அவர் இஷ்டப்பட்டாலும் எதேச்சாதிகாரம் செலுத்தாமல் இருக்க முடியுமா?
அப்படி எதேச்சாதிகாரம் செலுத்தாவிட்டால் பார்லிமெண்டு கவர்னரை சும்மா விட்டுவிடுமா? கவர்னருக்கு அந்த உரிமை அதாவது எதேச்சாதிகாரம் செலுத்துவதோ செலுத்தாமல் இருப்பதோ என்ற உரிமை பார்லிமெண்டால் கொடுக்கப்பட்டிருக்கிறதா? என்பவைகளை யோசித்தால் காங்கிரஸ் கவர்னர்களை வாக்குறுதி கேட்பதே சட்ட விரோதமும் முட்டாள் தனமானதுமான காரியமாகும்
குடி அரசு- 1937 (1) 232
ஒவ்வொரு கவர்னரும் காங்கிரஸ் தலைவர்களிடம் “நீங்கள் யோக்கியமாய் நடந்தால் நானும் ஒழுங்காய் நடக்கிறேன்” என்றுதான். சொல்லுவார்களே தவிர, “வாக்குறுதி கொடுப்பார்களே” தவிர சட்டத்துக்கு கட்டுப்பட்டு என்று நீங்கள் என்ன செய்தாலும் நான் சும்மா இருக்கிறேன். என்று சொல்லமாட்டார்.
இது ஒருபுறமிருக்க
அந்த அதாவது காங்கிரஸ் மந்திரிகள் செய்யும் செய்யப்போகும் ஒரு காரியத்தை ஒழுங்கானது என்றோ, யோக்கியமானது என்றோ முடிவு
செய்யும் அதிகாரம் இன்று சட்டப்படி அல்லது கவர்னர் வாக்குறுதிப்படி
யாரிடம் இருக்கிறது என்பது மிகவும் யோசிக்கத்தக்கதாகும் உதாரணமாக காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது யாவருக்கும்
ஞாபகமிருக்கும். அதில் காங்கிரசுக்காரர்கள் தாங்கள் இனிமேல் சட்டம் மீறுவதில்லை, சட்ட மறுப்பு செய்வதில்லை, மறியல் செய்வதில்லை,
உப்புக் காய்ச்சுவதில்லை என்று ஒப்புக்கொண்டார்கள்.
சர்க்காரார் அப்படியானால் கைதி செய்வதில்லை, போலீஸ்காரர்களை விட்டு அடிப்பதில்லை, ஜெயிலில் இருப்பவர்களை விடுதலை செய்து விடுகிறோம் என்று ஒப்புக்கொண்டார்கள்; இந்தப்படி ஒரு ஆதாரம்
ஏற்படுத்திக்கொண்டார்கள்.
பிறகு உடனே ஜவஹர்லால் பண்டிதர் தனது ஐரோப்பிய தோழர்கள். கேலி செய்வார்கள் என்று பயந்து ஒரு குட்டிக்கரணம் போட்டு இது ஒப்பந்தமல்ல இளைப்பாறும் முறை என்று சொன்னார். காந்திஜி அந்த அபிப்பிராயத்தை மாற்றி ஜவஹரைக் கூப்பிட்டனுப்பி வைசிராயிடம் தெரிவித்தார். (இதற்கு ஆக ஜவஹர்லாலையும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சங்க உபதலைவர் பதவியில் இருந்து விலக்கினார்கள். அப்படியெல்லாம் இருந்தும்) காங்கிரஸ்காரர் ஒப்பந்தத்திற்கு விரோதமாய் நடந்து விட்டதாக
சர்க்கார் சொன்னார்கள். சர்க்காரார் ஒப்பந்தத்துக்கு விரோதமாய் நடந்து விட்டதாக காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள். மறுபடியும் “போர்” தொடக்கமாயிற்று. காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ் மூலமே ஒரு சரணாகதி தீர்மானம் செய்தனுப்பிவிட்டு அதாவது இனிமேல் சட்டம் மீறுவதில்லை, ஒத்துழையாமை செய்வதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டு சட்டசபைக்குள் நுழைந்தார்கள். அதுபோலவே இப்போது “ஒப்பந்தத்தில்” தகராறு ஏற்பட்டால் யார் தீர்ப்புக் கூறுவது என்று கேட்கின்றோம் ஆகவே பொது ஜனங்களை ஏமாற்றவே இப்படிப்பட்ட தந்திரங்களை காங்கிரசுக்காரர்கள் செய்து வருகிறார்களே அல்லாமல் கவர்னர் வாக்குறுதி
என்பதில் எவ்வித அருத்தமும் இல்லை. அதற்கு ஏதாவது அருத்தம் இருக்குமானால் அது எப்படியாவது மந்திரி பதவி ஏற்பது என்பதுதான்.
குடி அரசு - கட்டுரை - 28.03.1937
233 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரசும் வரி குறைப்பும்
காங்கிரஸ்காரர்கள் சமீப தேர்தலில் வெற்றி பெற்ற உடன் சர்க்காரார் தங்களைக் கண்டு நடுங்குவதாக பித்தலாட்டப் பிரசாரம் செய்து வருகிறார்கள். எதில் நடுங்குகிறார்கள் என்று பார்ப்போம். சட்டசபையில் “ஏராளமான வெற்றி” “வெற்றிமேல் வெற்றி” “எதிர்பாராத வெற்றி” என்பதெல்லாம் பெற்ற பிறகே டில்லி சட்டசபையில் சர்க்காரார் 3 வித வரிகளை அதிகமாகப் போட்டிருக்கிறார்கள். அதாவது வெள்ளிக்கு வரி, சர்க்கரைக்கு வரி, தபாலுக்கு வரி. இந்த மூன்றில் காங்கிரஸ்காரர்கள் வெள்ளி வரியைப் பற்றி கவலைப்படவில்லை. சக்கரை, தபால் வரியைப்பற்றி கூப்பாடு போட்டார்கள். ஒன்றும் ஜபம் சாயவில்லை. பட்ஜட்டில் கைவைக்கவிட மாட்டேன்” என்று சர்க்கார் மெம்பர் சொன்னார். வைசிராய் பிரபு மேலொப்பம் போட்டுவிட்டார். உளி முறிந்த ஷுமேக்கர் மாதிரி காங்கிரஸ் மெம்பர்கள் தலை குனிந்து கொண்டு வாய்ச் சவடால் அடிக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களால் வரி குறைக்கப்படும் என்பதற்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று கேட்கிறோம். அசம்பிளியில் காங்கிரஸ் கடி தலைவர் தோழர் தேசாய் காங்கிரஸ் தீர்மானத்தை வைசிராய் குப்பைத் தொட்டியில் போட்டபோது உடனே கோபித்து எழுந்து, அசம்பளி - நடவடிக்கை என்ற மோசடியை இனி நடத்தாதீர்கள்; எங்கள் தீர்மானங்களுக்கு மதிப்பில்லையானால் அசம்பளியை கலைத்துவிடுவதே மேல்; இதுவரை சட்டசபை நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தையாவது ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?'” என்று பேசியிருக்கிறார். இதிலிருந்து இதுவரை இந்த மூன்று வருஷ காலமாய் டில்லி அசம்பிளி சட்டசபை செய்த தீர்மானங்கள் ஒன்றாவது மதிக்கப்படவில்லை; அமுலுக்கு வரவில்லை என்பது விளங்குகிறது. ஆகவே காங்கிரஸ்காரர்களுக்கு சிறிதாவது மானம், வெட்கம், சுயமரியாதை, தேசிய வீரம் இருக்குமானால் அவர்கள் செய்திருக்கவேண்டிய தென்ன?
மறுபடியும், மறுபடியும் அங்கு போய் உட்கார்ந்து வாய்வலிக்க கத்திவிட்டு தினம் 20 ரூபாய் படியும் முதல் வகுப்பு ரயில் படியும் வாங்கிக் கொண்டு தங்கள் பெயருடன் எம்.எல்.ஏ. என்று போட்டு மானங்கெட்ட பெருமையும், பிழைப்பும் பெறுவதா, அல்லது பண்டித மோதிலால் நேரு அவர்கள் சொன்னது போல் “இப்பொழுது எங்களுக்கு புத்தி வந்தது” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிடுவதா என்று கேட்கின்றோம்.
குடி அரசு- 1937 (1) 234
சர்க்காருக்கு இந்த காங்கரஸ் வீரர்கள் யோக்கியதை தெரியாதா? இவர்கள் மானமரியாதை, சொந்த நடத்தை, யோக்கியதை, பொதுவாழ்வில். உள்ள நாணையம் ஆகியவைகள் தெரியாதா என்று கேட்கின்றோம்.
அசம்பளி சட்டசபை சட்டத்திலேயே “சட்டசபை மெம்பர்கள் தீர்மானித்த தீர்மானங்களை சர்க்கார் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அவைகளை குப்பைத்தொட்டியில் போடவே வைஸ்ராய் பிரபுவிடம் அதிகாரமிருக்கிறது” என்று தெளிவாக அங்கு எழுதி இருக்கும்போதும் இதற்கு முன்னும் அநேக வருஷமாக சட்டசபை தீர்மானங்களை அவமதித்து வந்திருக்கிறபோதும் அதை மறைத்து மூன்பு சட்டசபையில் இருந்தவர்கள் மீது குறை கூறி வைது பொது ஜனங்களை ஏமாற்றி சுமை சுமையாகச் சாதித்து விடுகிறேன் என்று சொல்லி ஓட்டு வாங்கி சட்ட சபைக்கு போனது அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் இழிதனமும் ஆன காரியமா அல்லது சர்க்கார் செய்வது தப்பான காரியமா என்று கேட்கின்றேன்.
இந்திய அரசியல் முயற்சி உருப்படாமல் போனதுக்கு காரணமே யோக்கியர்களும் நாணய முள்ளவர்களும் அதிகமாய் அரசியலுக்கு வரமுடியாத நிலையில் அரசியல் இருப்பதும் கூலிக்கு மாரடிக்கும் ஆட்களையும் கூலிக்கும் வயிற்றுப்பிழைப்புக்கும் பிரசாரம் செய்யும் பத்திரிக்கைகளையும் ஆயுதமாய் கொண்டு வேலை செய்வதேயாகும்
மற்றும் அரசியலில் கலந்துள்ளவர்களில் சத்தியவான் - நாணயவான் என்று கூறும்படியானவர்கள் எத்தனை பேர்? அரசியல் பிரசார பத்திரிக்கைகளில் யோக்கியமானது -நாணயமானது- மானமுள்ளது என்று சொல்லும்படியானவை எத்தனை என்று கேட்டால் என்ன பதில் சொல்லக்கூடும்? இந்த யோக்கியதையில் காங்கிரசு இருந்து கொண்டு மக்களை முட்டாள்களாக்கி வைத்துக்கொண்டு அரசியலை நடத்தினால் எந்த சர்க்கார் தான் மதிக்கும் என்று கேட்கின்றோம்
உண்மையைக் கூறவேண்டுமானால் டில்லி அசேெம்பிளியில் காங்கரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் இல்லாமல் வேறு யோக்கியர்களும் நாணயஸ்தர்களும் இருந்திருப்பார்களானால் மனித சமூக நன்மைக்கு ஆக அனேக காரியம் செய்யப்பட்டிருக்கலாம்; பல வரிகளும் குறைக்கப்பட்டிருக்கலாம்; பல தீர்மானங்களும் மதிக்கப்பட்டிருக்கலாம் இதற்கு ஆதாரம் முந்திய 10, 20 ஹுத்திய அசம்பிளி நடவடிக்கைகளையும் தீர்மானங்களையும் பார்த்தாலே தெரியவரும்.
நிற்க, மாகாண சட்டசபைகளான அசம்பளிக்கு காங்கிரஸ்காரர்கள்
மெஜாரிட்டியாய் சென்று இருக்கிறார்களே அங்குதான் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி நலங்களுக்கு
235 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அனுகூலமான சில காரியங்களை அவசர அவசரமாகச் செய்துகொண்டு. “நாங்கள் முன்னேயே சொல்லவில்லையா இந்த சட்டசபையில் ஒன்றும் செய்ய முடியாது என்று”
என்பதாகச் சொல்லி விடப் போகிறார்கள்.
வரி குறைப்பது என்பது வரவு செலவை சரிக்கட்டுவதாகும் அதில் செலவைக் குறைத்தால் தான் வரியைக் குறைக்க மூடியும். எந்தச் செலவை குறைக்க முடியும்? கள்ளுக்கடை எடுப்பதற்கு தகுந்த அளவு செலவு குறைப்பதே லேசான காரியமல்ல என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் ஐ.சி.எஸ். சம்பளத்தில் கைவைக்க முடியாது என்பதும் ஞாபகத்தில் வைக்கவேண்டும் இப்பொழுதே சர்க்காரார் (ஜஸ்டிஸ் கக்ஷியார்) 3-அணா பூமி வரி குறைத்து விட்டார்கள் ஆகவே காங்கிரஸ்காரர்கள் இனி எந்த மாதிரியான காரியத்தால் ஜனங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்பது இனிமேல்தான் தெரியப்போகிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.03.1937
குடி அரசு- 1937 (1) 236
உத்தியோகத் தடை
“ஜஸ்டிஸ் கட்சி “தலைவர்களுக்கு” சர்க்கார் இனி பெரிய உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது என்பதாக சேலம் ஜஸ்டிஸ் - சுயமரியாதைத் தொண்டர்கள் வேலைக்கூட்டத்தில் ஒரு தோழரால் ஒரு
தீர்மானம் பிரேரிக்கப்பட்டது. அதற்கு அத்தீர்மானம் கொண்டு வந்தவர் சொன்ன காரணம் மிகவும் கவனிக்கத் தக்கதாகும்
காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களுக்கு நாட்டில் செல்வாக்கில்லையென்றும் அவர்கள் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை யென்றும் அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்கக்கூடாது என்றும்
சொல்லுகிறார்கள் என்றும், தான் அதில் ஒரு திருத்தம் செய்து அதே தீர்மானத்தையே பிரேரேபிக்கிறதாகவும் சொன்னார். அதாவது,
உத்தியோகம் கொடுக்கக் கூடாது என்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு ஆக சொல்லப்படும் காரணத்தை மாத்திரம் மாற்ற வேண்டுமென்கிறேன் என்றும் சொன்னார். காரணம் என்னவென்றால்
எந்தக் கட்சியின் பேரால் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் தலைவர்கள் என்பவர் பெரும் பெரும் பதவி பெற்றார்களோ அந்தகட்சிக்கு அவர்கள். நன்றி காட்டவில்லை. பல வழிகளில் துரோகம் செய்துவிட்டார்கள். பொது ஜனங்களையும் சர்க்காரையும் திருப்தி செய்து பணம் சம்பாதித்து மூட்டை கட்டவும் பெருமை அடைவதிலும் கவலை கொண்டார்களே ஒழிய ககஷி நன்மைக்கு ஆவது - பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு ஆவது
ஏதும் செய்தவர்கள் அல்ல. இனியும் அவர்களுக்கு உத்தியோகம் கொடுத்தால் அவர்கள் பச்சையாய் நமது சமூகத்துக்கு எதிரிகளே ஆகிவிடுவார்கள். அவர்களால் அதிக துரோகம் அடையவேண்டி வரும் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு அவர்களால் ஏற்படும் நன்மை வீணாகிவிடும். ஆதலால் அரசாங்கத்தார் கவனித்து முன் வேலை கொடுத்தவர்களுக்கும் வேலை பார்த்தவர்களுக்கும் சர்க்கார் மறுபடியும் உத்தியோகங்கள் கொடுக்கக் கூடாது என்று சொன்னார்.
கூட்டத்தில் தலைமை வகித்த தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இந்த காரணங்கள் முழுதும் தப்பு அல்லவென்றும் தீர்மானம்
237 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அவசியம்தானென்றும் இத் தீர்மானம் இல்லாமலே இனி அவர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்க கவர்ன்மெண்டார் அவ்வளவு முட்டாள்கள் அல்லவென்றும் அநாவசியமாய் நாம் ஏன் கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்றும் சொல்லி கேட்டுக்கொண்டு தீர்மானத்தை வித்திட்றா செய்து கொள்ளும்படி செய்துவிட்டார்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.03.1937
குடி அரசு- 1937 (1) 238
நல்ல சந்தர்ப்பம் வீணாக்கப்பட்டது
காங்கிரஸ்காரர்கள் மந்திரி சபையை ஏற்று சீர்திருத்த சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதின் மூலம் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யக்கூடும் என்பதையும் கவர்னர்கள் தங்கள் விசேஷாதிகாரங்களைச் செலுத்துவதில்லை என்று வாக்குறுதி கொடுத்துவிட்டதினாலேயே காங்கிரஸ்காரர்கள் என்ன செய்ய முடிந்துவிடும் என்பதையும் காங்கிரஸ்காரர்களிடம் குடிகளின் நன்மைக்கு என்று அனுபவத்தில் செய்வதற்கு ஏதாவது கொள்கைகள் இருக்கிறதா என்றும் பார்ப்பதற்கு இருந்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வீணாகிவிட்டது அதாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்காமல் தப்பித்துக்கொள்ளக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கவலை கொண்டு பார்ப்பதாயிருந்தால் காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க முடியாமல் போனது பற்றி பார்ப்பனர்களுக்கு துக்கமும் பார்ப்பனரல்லாதாருக்கு மகிழ்ச்சியுமாய்த்தான். இருக்கும். இதன் உண்மை அறிய வேண்டியவர்கள் எந்த ஊரிலாவது அக்கிராஹார வழி நடந்து பார்த்தால் ஒவ்வொரு பார்ப்பனர் முகத்திலும் அன்று தாலியறுத்த விதவைக் களை ஜொலிப்பதைப் பார்க்கலாம். அது போலவே பார்ப்பனரல்லாதார் தெருக்களைப் பார்த்தால் பண்டிகை போல் காணப்படுவதும் விளங்கும். இக்காட்சி நமக்கு முக்கியமானதல்ல
நமக்கு அனுகூலமானதுமல்ல.
பாமர மக்கள் பார்ப்பனத் தொல்லையில் இருந்தும் அவர்களது கூலிகளின் கூப்பாடுகளிலிருந்தும் விடுபடும்படியான ஒரு அரிய சந்தர்ப்பம் வீணாகி விட்டதே என்பதுதான் நமக்கு முக்கியமானதாகவும் வருத்தப்பட வேண்டியதாகவுமாகி விட்டது சென்னை மாகாண காங்கிரஸ் வாதிகள் எப்படியாவது தாங்கள் மந்திரிபதவி அடைந்து விடக்கூடும் என்று கருதியே எவ்வளவோ சிரமப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்கள். அவர்கள் சொன்ன. பொய்க்கும் செய்த சூழ்ச்சிக்கும் பார்ப்பன அதிகாரிகள் நடந்து கொண்ட ஞாயமற்ற காரியத்துக்கும் அளவே இல்லை. கடைசியாக “காத்திருந்தவன். பெண்டை நேற்று வந்தவன் அடித்துக்கொண்டு போனான்” என்பதற்கிணங்க மந்திரி பதவிகளை ஏதோ அனாமத் நபர்கள் கைப்பற்றும் படியாக
239 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஆகிவிட்டது. ஜனங்களுக்கும் பாமர மக்களுக்கும் பொறுப்பில்லாமல் சர்க்காருக்கு மாத்திரம் பொறுப்பானவர்கள் என்கின்ற நபர்களே கைப்பற்ற வேண்டியதாகி விட்டது. எப்படி எனில் இந்த மந்திரிகள் 6 பேரும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதோடு அவர்களுக்கு சுதாவில் எவ்வித திட்டமும் இல்லை என்று சொல்லத்தக்கவர்களாக இருக்கிறார்கள். இந்த மாதிரி மந்திரி சபை நீடித்திருக்குமானால் நமது போர் வளர்ந்து கொண்டே போகக்கூடியதாகி விடும். எப்படியாவது எல்லாக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து இம்மந்திரி சபையை முறித்து காங்கிரஸ்காரர்களை மந்திரி பதவி ஏற்கச் செய்து அவர்களின் யோக்கியதை இன்னது என்பதை உலகுக்கு வெளிப்படுத்தி அவர்களது தொல்லையில் இருந்து நாட்டையும் மக்களையும் பூராவாய் விடுவிக்க வேண்டியது நமது கடமையாகும். அரசாங்கத்துக்கு இருந்துவரும் பொறுப்பற்றதும் விஸ்வாசமற்றதுமான தன்மையையும் ஒழிக்க மக்கள் பாடுபடவேண்டியது அவசியமாகும். குறிப்பாகக் கூற வேண்டுமானால் நமது அரசாங்கத்துக்கு நாணையமும் நன்றியும் இல்லையென்றே சொல்ல வேண்டும். பார்ப்பனர்களைவிட மிக மோசமான குணம் படைத்தவர்கள், சமயம்போல் பார்த்துக்கொள்கிறவர்கள் என்றுதான். சொல்ல வேண்டும். ஏனெனில் சமீப தேர்தலானது அவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்திருக்கிறது. அரசாங்க அதிகாரிகளும் சிப்பந்திகளும் 100க்கு 90 பேர்கள் தேர்தல் நாணையமாய் நடப்பதற்கு உதவி செய்யாமல் பாரபகஷத்திற்கே உதவி செய்திருக்கிறார்கள்.
இம்மாதிரி பார்ப்பன அதிகாரிகளும் சிப்பந்திகளும் நடந்து கொண்ட விஷயத்தைப்பற்றி அரசாங்கம் ஏன் என்று கூட கேட்கவில்லை. அதிலும் குறிப்பாக பார்ப்பன போலீசு நடந்து கொண்ட விஷயம் மிகமிக மோசமானதாக இருந்தது.
சர்க்கார் காரியதரிசிகள் ஜஸ்டிஸ் ககஷியை பரிகாசம் செய்வதிலேயே தாங்கள் நேரப்போக்கைக் கழித்தார்கள். சர்க்காருக்கு சிறிதாவது நன்றி விசுவாசம் அல்லது பொறுப்பு இருந்திருக்குமானால் தேர்தல் முடிவு இந்த மாதிரியாக ஏற்பட்டிருக்காது என்பதோடு காங்கிரசின் பேரால் சட்டசபைக்கு வந்த ஆட்களின் பெரும்பான்மை எண்ணிக்கை உள்ளவர்கள் இவ்வளவு மோசமான ஆட்களாக வந்திருக்க முடியாது. சட்டசபை பிரதிநிதித்துவம் என்பதும் ஒரு நாட்டின் பிரதிநிதித்துவம் என்பதும் இவ்வளவு மோசமான ஆட்களைக் கொண்டது என்று ஏற்படுமானால் இதன் குற்றம் சர்க்காரைச் சேர்ந்ததாகுமே தவிர மக்களைச் சேர்ந்ததாக ஆகாது
பாமர மக்கள் ஏமாற்றுக்கும் சூழ்ச்சிக்கும் ஆளாகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டியது யோக்கியமான சர்க்கார் கடமையாகும் இதற்கு ஆக சர்க்கார் ஒரு காரியமும் செய்ததாகத் தெரியவில்லை
குடி அரசு- 1937 (1) 240
தங்களுக்கு இருக்கும் ராணுவ பலத்தையும் ஏராளமான பணத்தை சம்பளமாக அள்ளிக்கொடுப்பதின் மூலம் அமர்த்திக் கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்களின் அடிமைத் தனத்தையும் காவலாக வைத்து ஆளுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது
ஜஸ்டிஸ் கட்சியும் மற்றும் பல கட்சியும் தேர்தலில் தோல்வியுற்றதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சிகளை யெல்லாம் சர்க்கார் அடிமைக்கட்சி என்றும் சர்க்காருக்கு அனுகூலமாய் நடந்து கொள்ளுகிறார்கள் என்றும் பழிகூறி செய்த விஷமப் பிரசாரம் என்பது சர்க்காருக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியுமா என்று கேட்கிறோம். இதற்கு ஆக சர்க்கார் என்ன பரிகாரம் செய்தார்கள்.
வேடிக்கை பார்த்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் தான் இருந்தார்கள்.
ஆதலால் இந்த சர்க்காரின் சாயம் வெளுக்க வேண்டியது மிகவும் அவசியமேயாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் செய்ய வேண்டியதெல்லாம் அரசியலில் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசாங்கத்துக்கும் மந்திரி சபைக்கும் உதவி செய்யக்கூடாது என்பதோடு சட்டசபை கூட்டம் கூட சந்தர்ப்பம் ஏற்பட்டால் கண்டிப்பாய் சர்க்காருக்கு எதிர்க்கட்சியாய் உட்கார வேண்டியதேயாகும். எப்படியாவது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்கும்படி செய்ய வேண்டும். இந்த இரண்டு காரியத்தின் மூலம்தான் இனி ஜஸ்டிஸ் கட்சி தலையெடுக்க முடியும். அதில்லாவிடில் கட்சியைக் கொஞ்ச காலத்துக்கு அடைத்து வைப்பதே மேல் என்று சொல்லுவோம்
ஜஸ்டிஸ் சுயமரியாதை தோழர்கள் மந்திரிகள் வரவேற்புகளில் எங்கும் கலந்துகொள்ளக்கூடாது என்பது நமது விண்ணப்பமாகும் மந்திரிகள் வரவுக்கு காங்கிரஸ்காரர்கள் எங்காவது பஹிஷ்காரங்கள் நடத்தினால் அதை ஜஸ்டிஸ் சுயமரியாதை தோழர்கள் எந்த வகையிலும் தடுக்காமல் இருக்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
ஏனெனில் மந்திரிகள் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் அல்ல வென்பதை பொது ஜனங்கள் அறியும்படியாய்ச் செய்ய வேண்டியது நமது கடமையாகும். இல்லாதவரை அது ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலைக்கு தொல்லையாக வந்து சேரும் என்பதை எச்சரிக்கை செய்கிறோம். இதிலிருந்து காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் சுயமரியாதை கட்சிகளுக்கும் உள்ள நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டுவிட்டதாக
யாரும் கருதிவிடக்கூடாது. காங்கிரசானது இன்றைய நிலையில் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் விரோதமாகவே இருந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு காங்கிரஸ் எதிரியாகவே இருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் சமூக U வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சீர்திருத்த முறைகளுக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு முறைகளுக்கும் வர்ணாச்சிரம முறை ஒழிப்பு முறைகளுக்கும் காங்கிரஸ் நேர் விரோதமானதேயாகும். ஆதலால் இந்த முறைகளில் நாம் வெற்றி பெறும் வரையிலுமோ அல்லது காங்கிரஸ் தனது எதிர்ப்பை மாற்றிக்கொள்ளும் வரையிலுமோ காங்கிரசு நமக்கு எதிர் ஸ்தாபனமேயாகும். காங்கிரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதையும் காங்கிரசின் பித்தலாட்டங்களை வெளிப்படுத்துவதையும் நாம் எந்தக் காரணம் கொண்டும் நிறுத்திக்கொள்ள முடியாது என்பதை வாசகர்கள் உணரவேண்டுமாய் ஆசைப்படுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியானது இந்த அனாமத் மந்திரிகளை ஆதரிக்கிறது என்று ஏற்படுமானால் சுயமரியாதைக்காரர்கள் தங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள சம்மந்தத்தை திருத்தி அமைப்பதைப்பற்றி யோசிக்க வேண்டியவர்களாவார்கள்
குடி அரசு - தலையங்கம் - 04.04.1937
குடி அரசு- 1937 (1)
ட்
ய்
யாருக்குக் கணக்குத் தெமியவில்லை?
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் மந்திரி பதவி ஒப்புக்கொண்டதால் நாயுடு அவர்களுக்குக் கணக்கே தெரியவில்லை என்றும், சுயமரியாதை இல்லை என்றும் டில்லியிலிருந்து பத்திரிக்கைகளுக்குச் சேதி விட்டிருக்கிறார். காரணம் என்ன சொல்லுகிறார் என்று பார்த்தால்,
215 மெம்பர்கள் உள்ள சட்ட சபையில் 16 மெம்பர்கள் மாத்திரம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்றிருக்கிறார்களே, 16ஐ விட மீதி 199 பெரிய எண் என்று தெரிந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
இது அயோக்கியத்தனத்தின் மீது எழுந்த ஆத்திரத்தால் புத்தி மழுங்கிப்போன ஒருவர் குடி வெறியால் பேசுவது போலவே இருக்கிறதே ஒழிய இதில் உண்மையோ யோக்கியமோ ஏதும் சிறிதும் இருப்பதாகக் காணவில்லை.
ஏனெனில் முதலாவது சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டி மெம்பராகவோ “16 பேர்" தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் கட்சி சார்பாகவோ (அவர்) மந்திரி சபை அமைக்கவும் இல்லை. மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் வியக்தமாய் எடுத்து வெளியிட்டிருக்கிறார். அப்படி வெளியிட்ட பிறகும்
மந்திரி சபை அமைப்பை இப்போது ஜஸ்டிஸ் கட்சியுடன் சம்மந்தப்படுத்திப் பேசுவது பொது ஜனங்களுக்கு அக்கட்சி மீது வெறுப்பு ஏற்படட்டும் என்கின்ற எண்ணத்தின்மீது பேசப்படும் மிக, மிக, மிக அயோக்கியத்தனமும் விஷமத்தனமுமான செய்கையாகும்,
மற்றும் சர்.கே.வி. ரெட்டி நாயுடுவுக்கு கணக்குத் தெரியவில்லை என்று கூறுவதில் சர்.கே.வி.க்கு கணக்குத் தெரிகிறதோ இல்லையோ. என்பது ஒருபுறமிருந்தாலும் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்களுக்குக் கணக்குத் தெரிந்ததா? அவர் அரிவரி கணக்காவது தெரிந்ததாகக் காட்டிக்கொண்டிருக்கிறாரா? என்று பார்ப்போம்
அதென்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் பார்லிமெண்டரி கமிட்டித் தலைவர் என்கின்ற முறையில் ஜனசங்கையில் 100க்கு 3 பேர்களாக இருந்து வரும் பார்ப்பன சமூகத்தில் பிறந்திருக்கிறோம் U ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
என்பதற்கு ஆக 100க்கு 97 பேர்களாக உள்ள பார்ப்பனரல்லாத சமூகத்தின் கணக்கை எண்ணிப் பார்க்காமல் 215 சட்டசபை ஸ்தானங்களில் 45 ஸ்தானங்கள நமது தோழர் சத்தியமூர்த்தியார் பார்ப்பனர்களுக்கு வழங்கினாரே அது எப்படி கணக்குத் தெரிந்தா, அல்லது கணக்குத் தெரியாமலா? என்பதை யோசித்தால் மூர்த்தியாரின் கணக்கு ஞானம் ஒரு மூட்டாளுக்கும் புலனாகாமல் போகாது
மூர்த்தியாருக்குத்தான் ஜாதி அபிமானத்தால் கணக்குத் தெரியாமல் போயிருக்கலாம் என்று கருதினாலும் பார்ப்பன சமூகம் ஒட்டுக்குமே கணக்குத் தெரியாமல் போயா 6 பேர் புகவேண்டிய ஸ்தானத்துக்கு 45 பேர் புகுந்து கொண்டார்கள் என்பதைப் பார்த்தால் அச்சமூகம் ஒட்டுக்குமே கணக்குத் தெரியாமல்போனது மாத்திரமல்லாமல் சுயமரியாதையும் கூட அடியோடு அச்சமூகத்துக்கு இல்லாமல் போய் விட்டது என்று தான்: முடிவுகட்ட வேண்டி இருக்கிறது
இதிலிருந்தே இந்நாட்டில் மானம் போனாலும் சரி, மரியாதை போனாலும் சரி, “கற்பு” போனாலும் சரி, தங்கள் சமூக காரியம் ஆனால் போதும் என்கின்ற இழிகுணம் படைத்த சமூகம் எது என்பதை நாம் யாருக்கும் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை என்று நினைக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 04.04.1937
குடி அரசு- 1937 (1) 244
ஜஸ்டிஸ் கட்சி! மந்திமி பதவி. ஏற்கக்கூடாது
ஜஸ்டிஸ் கட்சி தவைவருக்கு ஈ.வெ.ரா. தந்தி.
ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளலாமா என்கின்ற பிரச்சினையின் மீது தோழர் ஈ.வெ. ராமசாமி கட்சித் தலைவரான பொப்பிலி ராஜா அவர்களுக்கு திருவாரூரிலிருந்து 29-ந்தேதி தந்தி மூலம் தெரிவித்த அபிப்பிராயம்
“ஜஸ்டிஸ் கட்சியானது நன்றியற்றதும் பொறுப்பை உணராததுமான. அரசாங்கத்தில் இப்போது கண்டிப்பாக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளக் கூடாது. சர்க்கார் அதிகாரிகளும் சிப்பந்திகளும் நமது கட்சிக்கு செய்த அட்டூழியங்களையும் விஸ்வாசமற்ற தன்மையையும் பற்றி சர்க்கார் சிறிது கூட கவலை எடுத்துக்கொள்ளவில்லை. பதவி ஏற்றுக்கொண்டால் நமது வேலை மிகவும் கஷ்டமாகிவிடும்.”
என்று தெரிவித்து விட்டார். அந்தப்படியே தலைவரும் ஒத்துக்கொள்ள முடியாதென்று கவர்னரிடம் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.
குடி அரசு - வேண்டுகோள் - 04.04.1937
248 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வாக்குறுதிப் பித்தலாட்டம்
காங்கிரசின் கோழைத்தனம்
காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க மறுத்தது கோழைத்தனம் என்றே சொல்லுவோம். தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) மந்திரி பதவி ஏற்கஎவ்வளவோ ஆசையாகவும் ஆத்திரமாகவும் இருந்தும் வெளி மாகாண காங்கிரஸ்காரர்களும் சில தலைவர்களும் மந்திரி பதவி ஏற்றால்வெளுத்துப்போகுமே என்று பயந்து மெல்ல முதுகு காட்டிவிட்டார்கள்.
கவர்னர்களிடம் வாக்குறுதி கேட்பது என்பது பொது ஜனங்களை ஏமாற்றக் கண்டுபிடித்த வழியே ஒழிய அதில் எவ்வித அருத்தமும் இல்லை. இதை சென்ற வாரமே எடுத்துரைத்தோம். அப்படி இருந்தும் கவர்னர்கள் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல வார்த்தையே கொடுத்திருக்கிறார்கள். அதாவது சட்டப்படி தமக்கு உள்ள நிர்ப்பந்தங்கள் தவிர மற்ற விஷயங்களில் தன்னால் கூடியவரை எல்லா வழிகளிலும் ஒத்துழைத்து உதவி செய்வதாய்க் கூறியிருக்கிறார். இதை ஆச்சாரியார் பாராட்டி நன்றி செலுத்தி ஏற்றுக்கொண்டு போனவர் பிறகு என்ன காரணத்தாலோ
மந்திரி பதவியை அமைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். இது
கவர்னர் அறிக்கையில் இருக்கிறது.
"His Excellency intimated that Mr. Rajagopalachariar could rely upon receiving all possible help, sympathy and co-operation in the event of his forming a Ministry. After a series of very amicable conversations, Mr. Rajagopalachariar has, while expressing appreciation
of his His Ecellency's assurances, finally intimated to-day that heis
unable to accept the invitation to assist in forming a Ministry."
அதாவது தோழர் ஆச்சாரியாருக்கு கவர்னர் தெரிவித்ததில் சில வாக்குறுதிகள் கொடுக்க சட்டப்படி எனக்கு அதிகாரமில்லை என்றும் தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்பிலிருந்து தான் விலகிக்கொள்ள முடியாதென்றும் சொல்லி விட்டு “மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள். தன்னை நம்பும் படியும் தன்னால் கூடிய எல்லா ஒத்துழைப்பையும் உதவியையும் ஆதரவையும் அன்பையும் அளிக்கத் தயாராய் இருப்பதாயும் சொன்னார்.
மற்றும் இருவரும் ஒரு தீர்மானத்துக்கு வரும்படியான அனேக விஷயங்களை மிகக் கருத்தோடு பேசிவிட்டு கவர்னரின் வாக்குறுதிகளைப்
குடி அரசு- 1937 (1) 246
பாராட்டிவிட்டு இன்று முடிவாக மந்திரி சபை அமைக்க உதவி செய்ய வரமுடியாது என்று தெரிவித்து விட்டார்” என்று பிரைவேட் செகரட்டரி வெளியிட்டிருக்கிறார். ஆகவே தோழர் ஆச்சாரியார் கவர்னரிடம் பேசும்போதும் அவர்: உதவி செய்வதாகவும் ஒத்துழைப்பதாகவும் வாக்குறுதி கொடுத்த போதும் அதற்குப் பின் அவரிடம் மேல் கொண்டு மற்ற காரியங்களைப் பற்றி பேசும்போதும் கவர்னர் வாக்குறுதி கொடுக்கவில்லை என்றோ அல்லது கொடுத்தது போதாது என்றோ கருதிக்கொண்டு ஆச்சாரியார் வீட்டுக்குப் போகவில்லை என்று தெரிகிறது. ஆனால் மற்ற மாகாணங்களில் இருந்து வந்த சேதிகள் தான் ஆச்சாரியாரின் ஆசையை கட்டுப்படுத்தி விட்டன. எப்படியானாலும் சரி, வாக்குறுதி எந்த விதத்தில் காங்கிரஸ்
மந்திரி பதவி ஏற்பதை தடுத்து விட்டது என்பது நமக்கு புலனாகவில்லை பார்லிமெண்டில் ஏற்பட்ட சட்டத்துக்கு கவர்னர் வாக்குறுதி எப்படி கொடுக்கமுடியும் என்பது யாரும் அறியாததல்ல. அப்படி கவர்னர்கள். ஏதாவது வாக்குறுதி கொடுக்க முடியுமானால் சென்னை கவர்னர். கொடுத்த வாக்குறுதிக்கு மேல் யாரும் கொடுக்க முடியாது. அவர். வெகுகாலமாகவே காங்கிரசுக்கு பல வழிகளிலும் உதவிசெய்து
வந்திருக்கிறார். காங்கிரசு சார்பான அதிகாரிகளிடம் மிக்க சலுகை காட்டியும் வந்திருக்கிறார். ஆகையால் சட்டத்துக்கு விரோதமில்லாமல் கவர்னர்களுடைய சொந்த அதிகாரத்தின் பலன் காங்கிரசுக்கு அனுகூலமாய் இருக்கவேண்டுமென்று கருதி காங்கிரஸ் வாக்குறுதி கேட்டிருக்குமானால் அதற்கு சென்னை கவர்னர் வாக்குறுதி தேவைக்கு மேற்பட்டதென்றே சொல்லலாம். ஆனால் காங்கிரஸ்காரர்கள் பயந்து விட்டார்கள். தாங்கள் பொது ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதி இமயமலை போன்ற பெரியதாயும் தங்கள் கவர்னர்களிடம் வாங்கும் வாக்குறுதி கடுகளவு சிறியதாயும் இருப்பதோடு சட்டம் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த நன்மையைவிட அதிகமாய் ஒன்றும் செய்ய முடியாதபடி நிர்ப்பந்தமாயும் இருந்ததால் எப்படியாவது தப்பித்துக்கொண்டு ஓடுவதுதான் புத்திசாலித்தனமென்று கருதி புறமுதுகு காட்டிவிட்டு ஓடிவிட்டார்கள்.
காங்கிரஸ்காரர்கள் ஜெயித்து விட்ட மூன்றாம்நாளே காங்கிரஸ் பத்திரிக்கைகள் இனிமேல் என்ன செய்வது என்பது புரியாமல் அழத்தொடங்கிவிட்டன. எப்படியெனில்
“காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்றால் வரி இருக்காது என்று எண்ணுவது முட்டாள்தனமென்றும், படியாத பட்டிக்காட்டு மக்கள். அப்படி எண்ணுவது மாத்திரமல்லாமல் அந்தப் படி படித்தவர்களும் எண்ணுவது ஆச்சரியமாய் இருக்கிறது” என்றும் எழுதி மஞ்சள். பெட்டிக்கு ஓட்டுப்போட்டவர்களையெல்லாம் மடையர்கள் என்று தாம் கருதியதை வெளிப்படுத்திக்கொண்டு விட்டன. U ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் தலைவர்களும் மந்திரிபதவி ஏற்றுக்கொள்ளப் போவதாகவே உறுதிகொண்டு “ஜனங்களுக்கு நன்மை செய்வது எங்கள் பிரதான நோக்கமல்ல, சீர்திருத்தத்தை உடைப்பதும் சுயராஜ்யத்தை நெருக்குவதும் தான் எங்கள் அபிப்பிராயம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆகவே மாகாண சுயாட்சி என்கின்ற பேரால் - இரட்டை ஆட்சி
ஒழிந்தது என்கின்ற பேரால் முன் ஜஸ்டிஸ் மந்திரிகள் நடத்திய சீர்திருத்த ஆட்சியை விட அதிகமான அதிகாரம் வந்தும் ஜஸ்டிஸ் கட்சியினருக்கு இருந்ததை விட அதிகமான மெஜாரிட்டி இருந்தும் பதவி ஏற்று தங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற லாயக்கில்லாமல் மூதுகுகாட்டி பேடித்தனமாய் ஓடுவது என்பது காங்கிரஸ்காரர்கள் வாய்ச் சவடால்காரர்களே தவிர காரியத்துக்கு கையாலாகாத கோழைகள் என்றல்லாமல் வேறெதைக் காட்டுகின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.
சுமார் 10, 12 வருஷகாலமாகவே காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் ஞானம் இல்லை என்றும் இன்னது செய்தால் இன்னது விளையும் என்கின்ற முன் யோசனை இல்லை என்றும் சொல்ல வந்திருக்கிறோம்.
தேர்தலில் வெற்றி பெறுவதே ஒரு வேலைத் திட்டமோ வீரத்தனமோ ஆகிவிடாது. அதிலும் இப்போதைய நிலையில் நமது பாமர மக்களுக்கு இருக்கும் அரசியல் அறிவுக்கும் அவர்கள் செய்த கட்டுப்பாடான பொய்ப் பிரசாரத்துக்கும் சென்ற தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் ஒரு டஜன். கழுதைகளையும் எருமைக்கிடாக்களையும் நிறுத்தி இருந்தால் கூட வெற்றி பெற்றிருப்பார்கள். காங்கிரஸ் பிரசாரமெல்லாம் மஞ்சள் பெட்டியை பொறுத்திருந்ததே தவிர மனுஷாளையோ அபேட்சகர்களையோ பொறுத்தில்லவே இல்லை. இம்மாதிரியான செல்வாக்கை எப்படியோ அடைந்து விட்டு அதை தாங்கமுடியாமல் பொறுப்பு வந்தவுடன் பயந்து கொண்டு ஒடி விட்டதானது பெரும் அரசியல் மோசடி என்றுதான். சொல்லவேண்டும். இவ்வளவோடு நிற்க மாட்டார்கள். இந்த பித்தலாட்டத்தை மறைக்க காங்கிரஸ்காரர்கள் இனி மறுபடியும் சண்டித்தனம் ஆரம்பிப்பார்கள் என்று எண்ண வேண்டியிருக்கிறது. மறுபடியும் மக்களை ஜெயிலுக்கு அனுப்புவார்கள். சோத்துக்கு வழியற்றவர்களும் சோம்பேறி வாழ்க்கையில் ஊறிவிட்டவர்களும் பகுத்தறிவற்றவர்களும் காங்கிரசுக்காரர்களுக்கு தாராளமாய் கிடைக்கக்கூடும். அவர்களை கைமுதலாக வைத்து ஒரு கை பார்க்கப்போகிறார்கள். இதுவரை காங்கிரஸ்காரர்கள் செய்துவந்த சகல காரியங்களும் ஒரு பயனும் தராமல் போனதை நமது மக்கள் உணர்ந்திருந்தும் பிரசார பலத்தால் காங்கிரசினிடம் ஜனங்களுக்கு ஒரு பைத்தியம் இருந்து வருகிறது. அது இனியும் இருந்து வருமா என்பதையும் எத்தனை நாளைக்கு மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றுவார்கள் என்பதையும் பார்ப்போமாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.04.1937
குடி அரசு- 1937 (1) 248
கேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்
திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இல்வாழ்க்கை
நடத்துவதேயாகும். ஆனால் இப்போது நமது இந்து மதத்தில் திருமண விஷயத்தில் நடைபெறும் கொடுமையைவிட வேறு எந்த மதத்திலும் நடைபெறுவதில்லை. திருமண விஷயத்தில் பெண்களுக்கு உரிமை கிடையாது, தாய் தந்தையர்கள் பார்த்து மொண்டியையோ, கிழவனையோ திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறோம். அதற்குக் கட்டுப்பட்டு அப்பெண்: திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விபசாரம் கற்பிக்கிறோம். மகமதிய மதத்தில் பெண்களுக்குக் கோஷா முறை இருந்தாலும் திருமண விஷயத்தில் உரிமை வழங்கி இருக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்து மதத்திலும் பெண்களுக்கு உரிமை வழங்கி வருகிறார்கள்.
குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு அடுத்த படூரில் 04.04.1937 ஆம் நாள் நடைபெற்ற தோழர் வி.டி. ஏழுமலை - தோழர் கே. இராதாபாய் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 11.04.1937
249 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மந்திரி சபை
மந்திரிசபை ஏற்பட்டு விட்டது. காங்கிரஸ்காரர்கள் அடிபட்ட சுணங்கன் குரைப்பது போல் தங்களது ஆத்திரத்தை மந்திரிகள் மீது காட்டுகிறார்கள். மந்திரிமார்களைதினமும் கழுதை, நாய் என்று வைத வண்ணமாயிருக்கிறார்கள்; தினமும் கண்டித்து தீர்மானம் போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். இந்த மந்திரிசபை நாளைக்குப் போய்விடும், இன்றைக்குப் போய்விடும் என்று அறிவில்லாமல் பொய்யையும் புளுகையும் வேண்டுமென்றே அளந்தவண்ணமாய் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் தங்கள் தவறை உணர்ந்து தங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்தை ரத்து செய்து கொண்டு வந்து அரசாங்கத்தை அடிபணிந்தாலொழிய இந்த மந்திரி சபை சீக்கிரத்தில் ஒழிந்துவிடும் என்று சட்டம் தெரிந்தவர்கள் யாரும் கருதமாட்டார்கள்.
சட்டத்தில் - சீர்திருத்த சட்டத்தில் விஷயம் தெளிவாக இருக்கிறது மெஜாரிட்டி கட்சியார் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள நிலைமை இடம் கொடுக்கவில்லையானால் கவர்னர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தன்னிஷ்டப்படி நடத்தலாம் என்பது ஸ்பஷ்டமாக இருக்கிறது. அதை கவர்னர் பின்பற்றியாக வேண்டும்
இப்போது மெஜாரிட்டி கட்சியாருக்கு (காங்கிரஸ்காரருக்கு) மந்திரி பதவி ஏற்க ஆசை இருந்தும் அவர்களது (மெஜாரிட்டி கட்சியாரது) முட்டாள் தனத்தினால் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள முடியாத நிலையைத் தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்டு தவிக்கிறார்கள் என்றும் இன்னம் அவர்களுக்கே ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப்பார்த்தால் அதற்குள் தங்கள் முட்டாள் தனத்தைத் திருத்திக் கொண்டு வந்து சேரக்கூடும் என்றும் அரசாங்கம் கருதியதால் அரசாங்கத்தார் வேண்டுமென்றே மனப்பூர்வமாய் சம்மதித்து இனியும் 6 மாத வாய்தா கொடுத்திருக்கிறார்கள். இந்த 6 மாத வாய்தாவுக்குள் காங்கிரஸ்காரர்கள் தங்கள் குற்றத்தைத் திருத்திக் கொண்டுவரட்டும் என்று தவணை கொடுத்திருக்கிறார்கள். அந்தப்படி அவர்கள் திருத்திக் கொள்ளவில்லை என்று அரசாங்கத்தாருக்குத் தெரிந்தால் கவர்னர் அவர்கள் உடனே சட்டசபையைக் கூட்டி காங்கிரஸ்காரர்களின் நிலையை மறுபடியும் நாடு அறியும்படி செய்வார். அப்போது அதாவது சட்டசபை கூட்டப்பட்டவுடன் மெஜாரிட்டி கட்சியார் வெண்ணை வெட்டி சிப்பாய்கள் மாதிரி ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்தவுடன் மந்திரிகள்.
குடி அரசு- 1937 (1) 250
மீது நம்பிக்கை இல்லை என்று ஒரு தீர்மானம் கொண்டு வருவார்கள் அப்போது, இப்போது அதிகாரத்தில் உள்ள மந்திரிகள் உடனே எழுந்து “எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நாங்கள் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளவில்லை”' என்றும், “இன்னம் 4, 5 மாதத்திலாவது உங்களுக்கு புத்தி வராதா என்று கருதி புத்தி வரும்வரை சட்டசபையை கலைக்காமல் இருப்பதற்கு ஆக இந்த பொறுப்பை ஒப்புக்கொண்டோமே தவிர வேறில்லை” என்றும் சொல்லி “இதோ எங்கள் ராஜினாமாவை நீங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் பிரேரேபிக்கும் முன்பே வாங்கிக்கொள்ளுங்கள்' என்ற ராஜினாமாவை வீசி எறிந்து விடுவார்கள். அப்போதும் ஒரு தடவை கவர்னர் அவர்கள் மெஜாரிட்டி கட்சியாரை (காங்கிரசுக்காரர்களை) இப்போதாவது உங்களுக்கு புத்தி வந்ததா, ஏதாவது உங்கள் முட்டாள்தனமான தீர்மானங்களை மாற்றிக் கொண்டீர்களா என்று கேட்பார். காங்கிரஸ்காரர்கள் ஏதாவது மாறுதல் செய்து கொண்டிருந்தால் மந்திரி பதவி கிடைக்கும். இல்லாதவரை கவர்னர். தானாகவே ஒரு பட்ஜட்டை தனது சொந்த அதிகாரத்தைக் கொண்டு
தயார் செய்து வைத்து மறுபடியும் இம்மாதிரி மந்திரிசிபையையே ஏற்படுத்தி மறுபடியும் ஒரு ஆறுமாத காலம் காங்கிரஸ்காரருக்கு புத்திவராதா என்று எதிர்பார்ப்பார். அதற்குப் பிறகும் 6 மாதத்தில் மற்றொரு சட்டசபை கூட்டம் கூட்டுவார். அதிலும் இதே கதியானால் சட்ட சபைகளை கலைத்து தேர்தல் வைப்பார். புது சட்டசபையும் இதே மாதிரி ஆனால் சபையைக் கலைத்து விட்டு சகல நிர்வாகத்தையும் தானே ஏற்றுக்கொண்டதாக விளம்பரம் செய்து விட்டு இதே மந்திரிகளையோ அல்லது வேறு ஆட்களையோ கூட்டியோ குறைத்தோ ஆலோசனைக் கர்த்தாக்களாக நியமித்துக்கொண்டு அவர்களது ஆலோசனைக்கு இணங்க 3 வருஷகாலம் ஆட்சி நடத்துவார். இதுதான் முடியாலாமே ஒழிய காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி மறுத்ததாலேயோ இனியும் நடக்கப் போகும் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களை பாமரஜனங்கள் தெரிந்தெடுத்து விட்டதினாலேயோ பிரிட்டிஷார் ஆட்சி நடத்தாமல் ஓடிப்போவார்கள் என்றோ எங்கும் அராஜகம் பெருகி கையில் வலுத்தவன், தந்திரத்தில் வலுத்தவன் தேசங்களை பங்கு போட்டுக்கொண்டு ஆச்சாரிக்கு ஒரு மாகாணம், சத்தியமூர்த்திக்கு ஒரு
மாகாணம், அண்ணாமலைக்கு ஒரு மாகாணம், சுப்பையாவுக்கு ஒரு மாகாணம் என்று பட்டாபிஷேகம் ஆகி விடுமென்றோ யாரும் கருதிவிட வேண்டியதில்லை. வேண்டுமானால் காங்கிரசுக்காரர்கள் ஒன்று செய்யலாம். அதாவது மறுபடி மறுபடி எலக்ஷன் ஏற்படச் செய்வதால் கோடிக்கணக்கான ரூபாய்கள் பாழாக்கப்படலாம்; சர்க்காருக்கும் மக்கள். வரிபணத்தில் இருந்து பணம் பாழாக்கப்படலாம். பணக்காரர்கள் பணமும் பாழாக்கப்படலாம். இதைத்தவிர வேறு ஒன்றும் நடக்க முடியாது. Bl வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மற்றப்படி கவர்ன்மெண்டார் இன்றே சட்டசபையைக் கலைக்காததற்கு காரணம் மேலே குறிப்பிட்டதுபோல் பொது ஜனங்களுக்கு அவ்வளவு 8587550 அவசரப்பட்டு தொல்லை கொடுக்கக் கூடாது என்றும் பொறுத்து பார்ப்போம் என்றும் கருதியே ஒழிய வேறில்லை. இனி அடுத்த தேர்தலில் கண்டிப்பாய் மஞ்சள் பெட்டி வராது. ஆள் பெயர் சொல்லித்தான் ஓட்டுப்போட வேண்டிவரும். இதுவரை செய்த பித்தலாட்டப் பிரசாரம் இனிப் பலிக்காது. ஆதலால் இந்த சட்டசபை கலைந்தால் இனி நடக்கும் தேர்தலில் இன்றுள்ள ஆட்களில் கிட்டத்தட்ட பகுதிப்பேருக்குக் கூட ஓட்டுகள் கிடைக்க மாட்டாது என்பதை உறுதியாய்க் கூறுவோம். ஆகவே காங்கிரஸ்காரர்கள் மந்திரி வேலை பார்க்க “அதிர்ஷ்டம் இருக்கச்” செய்ய வேண்டுமானால் மரியாதையாய் தங்களுடைய உறுதிமொழிப் பித்தலாட்டத்தை விட்டு விட்டு மக்களை ஏமாற்ற கூடுமானவரை கவர்னர்கள் ஒத்துழைப்பதாக ஜாடை காட்டினால் போதும்" என்று ஒரு தீர்மானம் செய்து கொண்டு மரியாதையாய் மந்திரிபதவியை ஏற்று தங்களின் வண்டவாளத்தை தங்களால் செய்யக்கூடியதை காட்டிவிட்டுப் போகட்டும். இல்லாதவரை இன்றைய நிலைமையை ஒரு மயிர்க்கால் அளவு கூட மாற்ற முடியாது என்பதுடன் எந்த விதத்திலும் காங்கிரசுக்கு சாவுமணி காத்துக்கொண்டிருக்கிறது என்றே உண்மையைக் கூறுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 11.04.1937
குடி அரசு- 1937 (1)
ப O ப்
யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு
காங்கிரஸ்காரர்களின் ஆசை நிராசையாக ஆகிவிட்டது. அவர்கள் ஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றி பார்ப்பன ஆதிக்கத்துக்குப்
புத்துயிர் கொடுத்து நாட்டைப் பழைய கால வருணாச்சிரம மனு ஆட்சி நாடாக ஆக்க முயற்சித்துப் பார்த்தார்கள். இதற்காக அவர்கள் செய்யக்கூடாத சூழ்ச்சிகளையும், பித்தலாட்டங்களையும் செய்து பார்த்தார்கள் கடைசியில் ஏமாற்றமடைந்து தோல்வி அடைந்தார்கள். இன்று அவிழ்த்து விட்ட குதிரைகள் போல் தலைமாடு கால்மாடு தெரியாமல் அளவு கடந்து பேசுவதும் வெறிபிடித்தவர்கள் போல் சீறிச் சீறி எதிரி மீது விழுகிறதுமாய் இருக்கிறார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் இந்த சமயத்தில் தன்னை மறந்து விட்டார். தனக்கு இந்த சந்தர்ப்பத்தில் மந்திரி பதவி கிடைத்தால்தான். உண்டு இல்லாவிட்டால் தன் ஆயுளில் மந்திரியாக முடியாது என்று முடிவு செய்து கொண்டு “சாகிறவனுக்கு சமுத்திரம் முழங்கால் தண்ணீராகத் தோன்றும்” என்பது போல் தனது வாயைத் தாராளமாய் திறந்துவிட்டு சத்தியமூர்த்தியாரைவிட மோசமாய்ப் பேச ஆரம்பித்து விட்டார்.
2-4-37ந் தேதி சென்னை மாம்பலம் காங்கிரஸ் சபையில் பேசியதாகக் காணப்படும் சேதியில் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார். பேசியதாகக் குறிப்பிட்டிருக்கும் குறிப்பில் “ஜனங்கள் கொடுத்தது குதிரை, சர்க்கார் தெரிந்தெடுத்தது கழுதை” என்று பெரும் எழுத்துத் தலைப்புக்கொடுத்து கீழே “சர்க்கார் ஜனங்கள் கொடுத்த குதிரைகளுக்கு கடிவாளம் போட யத்தனித்ததில் குதிரைகள் மறுத்ததும் அதை விட்டு விட்டு கழுதைகள் மீது சவாரி செய்யத் துணிந்து விட்டார்கள்!” என்று தோழர் ஆச்சாரியார் பேசியதாகத் “தினமணி!” 55 தேதி பத்திரிகையில்
6ம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
இந்தப்படி ஆச்சாரியார் பேசியிருப்பாரானால் இது மிகவும் அயோக்கியத்தனமானதும் பொது ஜனங்களால் தக்கபடி புத்தி கற்பிக்கப்பட வேண்டியதுமான செய்கையாகும். ஆச்சாரியார் எப்போதும் நிதானமாய் பேசக் கூடியவர். அவரது பேச்சு எவ்வளவு விஷமம் பொருந்திய பேச்சா யிருந்தாலும் அதில் மரியாதையும் மனுஷத்தன்மையும் குறையாமல்
283 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இருக்கும். அப்படியிருக்க அவர் காதலித்த மந்திரி பதவி வேறு ஒருவரை காதலித்த உடன் அவரது மதியையும் மரியாதையையும் இழந்து இப்படி உளற வேண்டியவராய் விட்டார்.
இந்தக்குணம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கே பிறவிக்குணமாய்
இருந்து வந்தது. அதற்கு உண்டான பதிலையும் மரியாதையையும் 100-க்கணக்கான தடவைகளில் மூர்த்தியார் அனுபவித்தும் வந்து இருக்கிறார். தோழர் சத்தியமூர்த்தியாரின் தோல் மொத்தமானதால் அவருக்கு கற்பிக்கப்பட்ட புத்திகள் ஒன்றுகூட பயன்படாமல் பழைய
மாதிரி சண்டிக்கழுதை போலவே நடந்து கொள்ளுகிறார். ஆனால் ஆச்சாரியார் அந்த நிலைக்கு வந்தது மிகவும் வருந்தக்கூடிய காரியமாகும்.
ஆச்சாரியாருக்கும் அவர் இனி இம்மாதிரியான இழிவான நிலைக்கு இறங்காமல் இருக்கும்படி செய்வதற்கு ஆக பொதுஜனங்கள்
புத்தி கற்பிக்க வேண்டிய அவசியம் வந்ததற்கு நாம் உண்மையிலேயே இரங்குகிறோம். தங்களைத் தவிர மற்றவர்கள் கழுதைகள் என்று பேசுவாரானால் பொது ஜனங்கள் புத்தி கற்பிக்காமல் இருப்பார்கள் என்று எந்த மடையனும் எதிர்பார்க்கமாட்டான்.
எலக்ஷனில் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் வெற்றிபெற்று விட்டதினாலேயே ராஜ்ஜியம் தங்களுடையதாகிவிட்டதென்றும் பார்ப்பன ஆட்சி ஏற்பட்டு விட்டதென்றும் “என்ன வேண்டுமானாலும்
பேசலாம், இனி நமக்கு யாரும் எதிரிகள் இல்லை, எல்லா மக்களும் பார்ப்பன அடிமைகள்தான்'' என்றும் எண்ணி பார்ப்பனர்கள் தலைக்கிறுக்கு அடைந்துவிட்டார்கள். தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் மாத்திரமல்லாமல் ஆங்காங்குள்ள பார்ப்பன அதிகாரிகள் போலீசு இலாக்கா முதற்கொண்டு
நீதி - ரிவனியூ இலாக்கா மாத்திரமல்லாமல் மற்ற அன்னக்காவடி ''அக்ஷயபாத்திர'' உபாதானப் பார்ப்பான் வரை இதே மாதிரி அயோக்கியத்தனமாகவும் அதிகப் பிரசங்கித்தனமாகவும் வீட்டிலும் தெருக்களிலும் தொழில் இடங்களிலும் மேடைகளிலும் பேசத் தொடங்கிவிட்டார்கள். காங்கிரசில் உள்ள பார்ப்பனரல்லாதார் பலர். பார்ப்பனர்கள் அங்கு பேசிக் கொள்ளப்படுவதை தங்களால் சகிக்க முடியாமல் நம்மிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்து அழுகிறார்கள்.
அதாவது இப்போது பார்ப்பனர்கள் “என்ன ஆணவம்? என்ன
திமிர்? எவ்வளவு அயோக்கியத்தனமாய் பேசுகிறார்கள்? எத்தனை தைரியம் வந்து விட்டது? என்று ஆத்திரமாய் பேசி ஆவலாதி கூறுகிறார்கள்.
நாட்டை யார் ஆள்வதானாலும் மனிதனுக்கு மானமும் மரியாதையும் முக்கியமான விஷயம் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் இன்று பார்ப்பனர்களுக்கு இதில் சிறிதும் கவலை இல்லாமல்
குடி அரசு- 1937 (1) 254
போய்விட்டது. “அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்பதுபோல் இன்னது செய்வது, இன்னது பேசுவது என்பதில்லாமல் குடிகாரன் வெறிகாரன்போல் கூத்தாடுவதை நாம்
கொஞ்சமும் சகித்துக்கொண்டிருக்க முடியாது
பாதுகாப்பு அவசியமேயாகும்
இன்று பார்ப்பனருக்கு எதிராக எந்த ஸ்தாபனமும் இல்லை என்று கருதும்படி ஆகிவிட்டதும், பார்ப்பனருக்கு எதிராகப் பேச எந்த மனிதனுக்கும் தைரியமில்லாமல் போய்விட்டது என்று கருதும்படியாகி விட்டதும் பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு பத்திரிகையும் இல்லை,
பிரசாரம் செய்ய ஒரு ஆளும் இல்லை என்று கருதும்படியாக ஆகி விட்டதுமே பார்ப்பனர்கள் இவ்வளவு தலைகொழுத்து பேச இடம் ஏற்பட்டு விட்டது
முஸ்லீம்கள் விஷயத்திலும் பார்ப்பனர்கள் எவ்வளவு ஆணவமாய் நடந்து கொண்டார்கள் என்பதற்கு சென்னை கார்ப்பரேஷன் கூட்டத்தில் மாஜி மேயரும் சட்டசபை மெம்பரும் ஆன தோழர் அமீத்கான் சாயபும் டாக்டர் நியமதுல்லா கானும் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயமே போதுமானதாகும்.
மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் பார்ப்பனர்கள். எவ்வளவு கொடுமையாக நடந்து கொண்டார்கள் என்பதற்கும் தேர்தலில் அவர்கள் நடந்துகொண்டதே போதிய ருஜுவாகும்
இன்றைய பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சியைப் பார்ப்பனர்கள் எவ்வளவாவது லட்சியம் செய்தார்களா என்பதற்கு சென்ற சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் 215 ஸ்தானங்களில் முஸ்லீம், கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், வெள்ளையர்கள் ஆகியவர்கள் ஸ்தானங்கள் 75 போக, பாக்கி இந்துக்கள் என்பவர்கள் ஸ்தானங்கள் 140-க்கு பார்ப்பனர்கள் 50 பேர்களை நிறுத்தி ஜெயித்தும் விட்டார்கள் என்றால் மூன்றில் ஒரு பாகத்துக்கு மேலாகவே அடைந்துவிட்டார்கள் என்றால் அவர்களது துணிவுக்கும் ஆணவத்துக்கும் நமது கிளர்ச்சியை அலட்சியமாய் கருதுகிறார்கள் என்பதற்கும் வேறு ஆதாரம் என்ன வேண்டும் என்று கேட்கின்றோம். பொதுஜனங்கள் தேர்தல் மூலம் நடக்கப்படவேண்டிய காரியத்திலேயே மூன்றில் ஒரு பங்குக்கு மேல் கொள்ளை அடித்து விடுகிறார்கள் என்றால் இனி இவர்கள் செய்யும் காரியத்தை யாரும் ஆட்சேபிக்கக் கூடாது என்கின்ற நிபந்தனை கொண்ட வாக்குறுதியின் மீது மந்திரி ஆட்சியில் உட்கார்ந்தார்களேயானால் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை என்ன கதிக்கு ஆளாக்குவார்கள் என்பதை விவரிக்க வேண்டுமா என்று கேட்கிறோம். என்ன காரணத்தாலேயோ
28$ ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நம்மில் சில செல்லாக் காசுகளும் காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்க வேண்டிய “விபீஷணர்களும்” “அனுமார்களும்” பார்ப்பனர்களை தஞ்சமடைந்து விட்டதாலேயே நமது சமூகத்தின் சுயமரியாதையும் மனிதத்தன்மையும் அடியோடு பறிபோய் விட்டது என்று எண்ணி சும்மா இருந்து விடுவதா
என்று கேட்கின்றோம். ஆதலால் பார்ப்பன ஆட்சியில் நமக்கு பாதுகாப்பு அவசியமேயாகும்.
ஏன் உறுதி மறுக்கப்பட்டது?
சர்க்கார் காங்கிரசுக்காரருக்கு உறுதிமொழி கொடுக்காததற்கு காரணம் கூறுகையில் இந்தியா மந்திரி அவர்கள் தெரிவித்து இருக்கும் ஒரு குறிப்பை எல்லோரும் கவனிக்க விரும்புகிறோம்
சீர்திருத்த சட்டத்தில் குறைந்த எண்ணிக்கையுள்ள சமூகத்தார் நலத்தையும் பிற்போக்காளர்களாயுள்ள சமூகத்தார் நலத்தையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு கவர்னர்கள் கையில் விடப்பட்டிருக்கிறது என்றாலும் சட்டப்படி பார்த்தால் சட்டசபைக்கும் மந்திரிகளுக்கும் இது விஷயத்தில் என்னமும் செய்து கொள்ள அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்தை வைத்து அதாவது உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி விஷயத்திலோ சமூக சுதந்திர விஷயத்திலோ அரசியல்- உத்தியோக இயல் பிரதிநிதித்துவ விஷயத்திலேயோ இருந்துவரும் பழக்கத்தையோ இனிமேல் செய்யப்படவேண்டிய அவசியமான காரியத்தையோ மந்திரிகளாவது சட்டசபையாவது மறுத்து விடுமானால் அது சட்டப்படி செல்லத்தக்கதேயாகும். அதாவது கவர்னருக்கு காங்கிரஸ்காரர் கொடுத்திருக்கும் நிபந்தனையாகிய சட்டர்திக்குக் கட்டுப்பட்டு மந்திரிகள் நடந்துகொள்ளும் முறைக்கு அடங்கினதேயாகும் அப்பேர்ப்பட்ட சமயங்களில் கவர்னர்கள் விசேஷ அதிகாரத்தை செலுத்தாமல் போனால் என்ன கதியாவது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதிலிருந்து கவர்னர்கள் விசேஷ அதிகாரங்கள் செலுத்தப்பட வில்லையானால் அச்சமூகங்கள் அதோ கதி அடைய வேண்டியது தான். என்று ஏற்படுகிறதல்லவா?
இதுபோலவே அரசியல் சட்டத்தில் ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் நசுக்கிவிட அநேக வசதிகள் இருக்கின்றன.
“பெண்கள் படிக்கக்கூடாது “சூத்திரர்கள்” படிக்கக் கூடாது, அவர்கள் நிலை மனுதர்ம சாஸ்திரத்தில் உள்ளது எதுவோ அதுதான்” என்று வருணாச்சிரம முறையை மந்திரிகள் அனுஷ்டிக்க ஆரம்பித்துவிட்டால் அவை யாவும் சட்டப்படி செல்லக் கூடியதாகவே ஆகிவிடும். அப்போது கவர்னர்களுக்கு தனி அதிகாரம் இருந்தால்தான் மற்ற சமூகத்தார் சுயமரியாதையுடனோ மனிதத்தன்மையுடனோ வாழ முடியும் என்பதாகும்
குடி அரசு- 1937 (1) 256
இதற்கு ஏற்றாற் போலவே காங்கிரசிலும் இவ்விஷயங்களில் தங்களிஷ்டப்படி நடக்கத் தகுந்த தீர்மானங்கள் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன வென்றால் “அவனவன் ஜாதி பழக்க வழக்க சாஸ்திரப்படி நடக்க வேண்டும்” என்றும் அதிகாரம் வந்தால் காங்கிரஸ்காரர்கள். அந்தப்படி நடக்கச் செய்வதாக ஜனங்களுக்கு உத்திரவாத மளிக்கிறதாகவும் தீர்மானங்கள் செய்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் காங்கிரசுக்காரர்கள் கவர்னர்களிடம் வாக்குறுதி கேட்பது என்பது தேசாபிமானத்தைப் பொருத்தோ சுதந்திரத்தைப் பொருத்தோ என்று எண்ணினால் அது முற்றிலும் பிசகேயாகும். மற்றென்ன வெனில் இன்று சிறிதாவது தலை தூக்கி இருக்கும் சிறுபான்மை சமூகங்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களும் தலைதூக்காதிருக்கவும் பழய நிலைக்கு அமிழ்த்தப்படவும் ஆன சூழ்ச்சிக்கு ஆகவே ஒழிய வேறில்லை என்பதை ஆதாரத்தோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துக்
கூறத் தயாராய் இருக்கிறோம். ஆதலால் கவர்னர்கள் வாக்குறுதி கொடுக்கவில்லை என்கின்ற சாக்கை வைத்துக்கொண்டு மற்ற கட்சிகளையும் சமூகங்களையும் இவ்வளவு அயோக்கியத்தனமாய் பேசுவதை பொதுஜனங்கள் அடக்கியே ஆகவேண்டும். அதற்கு ஏற்ற எல்லா முயற்சிகளும் உடனே கையாளப்பட்டுத்தான் தீரவேண்டும். ஏனெனில்
இது அவர்கள் வேண்டுமென்றே அத்துமீறிப் பேசும் அயோக்கியத்தனமான. பேச்சாகும் என்றே கருதுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.04.1937
257... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பிரிட்டிஷ் அதிகாரிகளின் நன்றியற்ற தண்மை
பிரிட்டிஷ் அரசாங்கம் உலகிலுள்ள மற்ற அரசாங்கத்தைவிட கட்டுப்பாடும் சட்டரீதியுமானது என்பது நமது அபிப்பிராயம். பிரிட்டிஷ் சமூகத்தாரும் மற்ற தேசத்தாரைவிட நாணையமுள்ளவர்கள் என்பதும் நமதபிப்பிராயம். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளின் முறையானது “அரசியல் என்பது நாணையமற்றது, நன்றியற்றது, விஸ்வாசமற்றது'” என்று ஒரு பெரியார் கூறியது போல் சிறிதும் நன்றி விஸ்வாசமற்றது என்று சொல்லுவோம்.
ஒரு காரியத்துக்கு நன்றி விஸ்வாசம் காட்டுவது என்றால் அது லேசானதல்ல என்பதும் தனது சுயநலத்தை விட்டுக் கொடுக்க வேண்டு மென்பதும் நன்றி விஸ்வாசம் காட்டுவது ஒரு தியாகத்துக்கு ஒப்பான
தென்பதும் நமதபிப்பிராயமானாலும் உலகில் நல்ல பெயரோ புகழோ சம்பாதிக்கவும் மற்றவர்கள் வெறுக்காதிருக்கவும் நன்றி விஸ்வாசம் காட்ட வேண்டியது மனிதத்தன்மையின் முதல் காரியமாகும். அந்தக் காரணத்தாலேயே நன்றி விஸ்வாசத்தை அவ்வளவு முக்கியமாகவும் அதில்லாத் தன்மையை அவ்வளவு தாழ்மையாகவும் குறிப்பிடுகின்றோம்
இந்தியாவில் மாத்திரமல்லாமல் மற்றும் வேறு நாடுகளிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் இந்தியா உதவி வந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அராஜகம் ஏற்பட இருந்த நிலைகளிலெல்லாம் இந்திய மக்கள் உதவி வந்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் என்பது சில சுயநலக்காரர்களும் சிறப்பாக பார்ப்பனர்களும் சேர்ந்து பாமர மக்களை ஏமாற்றி தங்கள் சமூக ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சி ஸ்தாபனம் என்பதாக எத்தனையோ முறை எடுத்துக்காட்டி இருக்கிறோம். காங்கிரசிற்கு யோக்கியமான முறையில் பின்பற்றுகிறவர்கள் இல்லையென்றும் புள்ளி விவரங்களைக் காட்டி வந்திருக்கிறோம் உதாரணமாக 11 மாகாணத்தில் வங்காளம், பஞ்சாப் உள்பட 5 மாகாணங்களில் காங்கிரசிற்கு வெளிப்படையாகவே மெஜாரிட்டி பலம் இல்லை என்பதோடு மற்ற மாகாணங்களிலும் முஸ்லீம்கள், தாழ்த்தப் பட்டவர்கள், கிறிஸ்தவர்கள் முதலாகிய சமூகத்தாரின் மெஜாரிட்டி பலம்
குடி அரசு- 1937 (1) 258
இல்லை என்பதும் இச்சமூகத்தார் சிறிதாவது காங்கிரசில் இருக்கிறார்கள் என்றால் அவர்களும் காங்கிரசின் முழுக் கொள்கைகளையும் ஆதரிக்காதவர்கள் என்றும் சர்க்காருக்கும் பொதுமக்களுக்கும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாணையமும் யோக்கியமுமற்ற தன்மையினால் விளம்பரமும் பாமர மக்கள் கவனத்தை இழுக்கும்படியான தன்மையும் அடைந்து வந்திருக்கிறது. இதை எதிர்க்கும் விஷயத்தில் அறிஞர்களும் உண்மையான பொதுநல ஊழியர்களும் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி வேலை செய்து வந்திருக்கிறார்கள் என்பது சுயபுத்தி உள்ளவர்களுக்கு சொல்லாமலே விளங்கும்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு மனிதத்தன்மையும் முன்னேற்றமும் ஏற்படுத்த என்று இந்நாட்டில் சிறப்பாக சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் ஒழிந்த மற்ற சமூகத்தார். பிரிட்டிஷ் இந்தியா ஆட்சி முறைக்கு எவ்வளவோ சாதகமாக இருந்து வந்திருப்பது பிரிட்டிஷார் அறியாததல்ல. நல்லதோ கெட்டதோ எதையுமே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) குறை கூறிவந்து அனாவசிய முட்டுக்கட்டை போட்டு தங்களைத் தவிர மற்ற மக்கள் தலையெடுக்க வொட்டாமல் சூழ்ச்சி செய்து வந்த காலத்திலெல்லாம் பார்ப்பனத் தொல்லையையும் அதனால் விளையக்கூடிய துன்பங்களையும் லக்ஷியம் செய்யாமல் ஆட்சியை நடத்தி வந்திருந்தும் அதை பிரிட்டிஷ் ஆட்சியின் பொறுப்பாளிகள் எல்லாம் உணர்ந்து பாராட்டி இருந்தும் இப்போது காங்கிரஸ் தங்களை அடிபணிய வந்துவிட்டது என்கிற தன்மை ஏற்பட்டு விட்டதாகத் தோன்றிய உடன் அல்லது பார்ப்பனர்கள் கை மேலோங்கி விட்டதாகக் காணப்பட்டதுடன் சென்னை கவர்னருக்கு மதிமயக்கம் ஏற்பட்டு உடனே பார்ப்பனர்களுக்கு தாசனாகத் துணிந்து மற்றவர்களை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார். அதாவது காங்கிரஸ்காரர்கள் கேட்கிறபடியான வாக்குறுதி கொடுப்பது சட்ட விரோதமானது என்று கண்டவுடன் கவர்னர் ஒரு பார்ப்பனரை (மகாகனம் சீனிவாச சாஸ்திரியை) கூப்பிட்டு மந்திரி சபை அமைக்கும்படி கெஞ்சியதானது இம்மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லா சமூகத்தாரையும் அவமானப்படுத்தியதாகவே ஆகிவிட்டது இது நேர்மையற்றதும் - விஸ்வாசமற்றதுமான செய்கை என்று கவர்னர் பிரபுவுக்கு தெரியாமல் இருக்குமென்று யாரும் கருதிவிட முடியாது
தோழர் சீனிவாச சாஸ்திரியார் இன்று ஒரு தனி மனிதரே ஒழிய அவருக்கு ஒரு கட்சியோ கட்சி பிரதான தன்மையோ ஒன்றும் கிடையாது எலக்ஷனிலும் தன் சார்பாகவோ ஏதாவது ஒரு கட்சி சார்பாகவோ போட்டி போட்டதாகவோ யாரையாவது நிறுத்தியதாகவோ தகவல் இல்லை. அப்படி இருக்க ஏதோ ஒரு காலத்தில் வெளி தேசங்களுக்குப் போய்
29 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பிரிட்டிஷ் ஆட்சி முறையை புகழ்ந்து பேசி பிரிட்டிஷ் பிரசாரகராய் இருந்து பிரசங்கம் செய்துவிட்டு வந்ததும் காந்தியை சிறை செய்யும்படி யோசனை சொன்னதும் சென்றமாத மலாய் நாட்டுக்கு சர்க்கார் தாசராகப் போய் அந்நாட்டு இந்திய மக்களுக்கு விரோதமாய் வெள்ளை தோட்ட முதலாளிகளுக்கு அனுகூலமாய் அறிக்கை விடுத்ததும் தவிர, நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன செய்தார், அல்லது எத்தனை மக்களை தனக்கு பின்பற்றுவோராய் உடைத்தாய் இருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்டவரை அழைத்து மந்திரிசபை அமைக்கிறாயா என்று கவர்னர் கேட்டிருக்கிறார் என்றால் கவர்னர் பிரபுவின் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதும் பார்ப்பன அதிகாரிகள் தேர்தலில் செய்த அக்கிரமங்களுக்கு அஸ்திவாரம் எங்கிருந்திருக்கிறது என்பதும் இப்போது மக்களுக்கு சுலபத்தில் புரிந்திருக்குமென்றே நம்புகிறோம். இப்படிப்பட்ட கவர்னரது ஆட்சியில் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் இனி எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என்பது நமக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாத சமூக நன்மைக்கு ஆக - தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்மைக்கு ஆக வேண்டி பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைத்ததின் பயன் பாமர மக்கள் உணர்ந்து கொள்ள முடியாமற்போய் அவர்கள் தப்பான வழியில் நடத்தப்படும்படியாக ஏற்பட்டு விட்டாலும் அரசாங்க ஏஜண்டுக்கு புத்தி வேண்டாமா என்றுதான் வருந்துகிறோம்.
இந்த எலக்ஷனில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமாய் செய்த பிரசாரத்தில் முக்கியமாக எடுத்துச் சொல்லப்பட்ட காரியம் ஜஸ்டிஸ் கட்சியார் சர்க்காருக்கு உதவியாய் இருக்கிறார்கள், சைத்தான் ஆட்சியை நடத்திக்கொடுத்தார்கள் என்று சொன்னதேயாகும்.
அப்படிக் கெட்ட பேரை வாங்கி கஷ்டப்பட்டவர்கள் இருக்க அவர்களை மறந்து என்ன காரியத்துக்கு ஆக கவர்னர் சாஸ்திரியாரைக் கூப்பிட்டு மந்திரி பதவி அமைக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் இந்த யோசனையானது தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரும் கவர்னரும் கூடிக் கலந்ததில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் இருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. அதாவது தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஆச்சாரியாரும் கவர்னரும் ஒருவரை ஒருவர் அளவளாவிக் கொண்டதோடு ஆச்சாரியாரும் தாம் மந்திரி ஆகப்போவதாகவும் இன்ன இன்னபடி நடக்கப்போவதாகவும் மனக்கோட்டை கட்டிக்கொண்டார். கவர்னர் பிரபுவும் தனக்கு இனிமேல் கவலையே இல்லையென்றும் தனது ஆட்சி இனி வாழைப்பழத்தில் ஊசி சொருகுகிற மாதிரி அவ்வளவு சுலபமாக
இருக்குமென்றும் கருதி ஆனந்தத்தில் மூழ்கி இருந்தார். எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்திற்கு பிறகு கூட இருவரும் அதே அபிப்பிராயத்துடனேயே இருந்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். எல்லா இந்திய காங்கிரஸ்கமிட்டி தீர்மானத்துக்கு தோழர் ஆச்சாரியார் சம்மதித்ததுக்கு
குடி அரசு- 1937 (1) 260
காரணமும் கவர்னர் மீது தனக்கு உள்ள நம்பிக்கையேயாகும். இந்த நிலையில் இருவரையும் அதாவது கவர்னரையும் ஆச்சாரியாரையும் ஏமாற்றுவதற்கு ஆக மடிகட்டிக் காத்துக்கொண்டிருந்த அரசியல் சட்டத்தின் கருத்தை அறியாமல் போய்விட்டதானது ஆச்சாரியாரின் சட்டஞானமும் குயுத்தி வாதமுமேயாகும். இம்மாதிரியான தர்மசங்கடம் தோன்றி கவர்னருக்கும் ஆச்சாரியாருக்கும் ஊடல் ஏற்பட்டு விடவே ஆச்சாரியார் உடனே கவர்னருக்கு அபயஸ்தம் கொடுத்து “பயப்படாதே காதலரே, நாம் இருவரும் கலவாமலே தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு ஒரு குழந்தையை உண்டாக்கி விடலாம்” என்று ஆறுதல் சொல்லி “நிர்வாகத்தை மகாகனம் சீனிவாச சாஸ்திரி கையில் ஒப்புவித்துவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் அதாவது முன் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட நிலை வந்தபோது டாக்டர் சுப்பராயனைப் பெற்றுக்கொடுத்தேன், அதுபோல் இப்போது சாஸ்திரியாரை தருகிறேன்” என்று யோசனை கூறி இருக்கவேண்டும். அதனாலேயே கவர்னர் தோழர் ராஜகோபாலாச்சாரி மாளிகையைவிட்டு வெளி வந்த உடன் சாஸ்திரி விலாசத்தைத் தேடிப்பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அப்படிக்கில்லா திருந்திருக்குமானால் கவர்னர் யோக்கியமாக செய்திருக்க வேண்டிய காரியம் காங்கிரசுக்கு மந்திரி பதவி இல்லை என்று தெரிந்த உடன் அடுத்த மெஜாரிட்டி கட்சியையோ அல்லது இதுவரை ஆட்சியில் இருந்தகட்சி தலைவரையோகப்பிட்டனுப்பியோசனை கேட்டிருக்க வேண்டும் இரண்டுமில்லாமல் “பூவிலே பூவு என்ன பூவு” என்று ஒரு குழந்தை சவால் போட்டால் மற்றொரு குழந்தை “பூளைப்பூவு” என்று பதில் சொல்லுமாம். அதுபோல் இருந்து இருந்து சாஸ்திரியை கவர்னர் கூப்பிட்டதானது எவ்வளவு நன்றியற்றதும் சிறுபிள்ளைத்தனமான காரியமுமாகும் என்பதை
நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. மந்திரி வேலை ஆசையாலோ ஜஸ்டிஸ் கட்சித் தலைவரைக் கூப்பிட்டுக்கேட்டால் அவர் ஒப்புக்கொள்ளத் தயாராய் இருந்தார் என்றோ நாம் இதைக் கூறவில்லை. கவர்னரின் மனப்பான்மை எவ்வளவு சாதாரணமானது என்பதையே எடுத்துக்காட்டுகிறோம். இதிலிருந்து என்ன கருதவேண்டியிருக்கிறது என்றால் கவர்னரின் எண்ணமும் புத்தியும் எப்படிப்பட்டது என்பதையும் இவருடைய ஆட்சி இன்னம் கொஞ்சகாலம் உள்ள மிகுதி நாள்களில் பார்ப்பனரல்லாதாருக்கு எப்படி இருக்கும் என்பதையும் முடிவு செய்யக்கூடியதாகவே இருக்கிறது.
மேலும் இந்த அரசாங்க ஆட்சி திட்டத்தில் வைகிறவனுக்கும் தொல்லை. கொடுக்கிறவனுக்கும் மிரட்டுகிறவனுக்கும் தான் சலுகை கிடைப்பதாய் இருக்கிறதே ஒழிய நியாயமாக நடக்கிறவனுக்கு நாமத்தைச் சாத்துவதாக இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே இதன் பலனை கவர்னர் சீக்கிரம் அறியும்படி செய்ய வேண்டியது சுயமரியாதையுள்ள மக்கள் கடமையாகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.04.1937 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சட்டசபை மெம்பர்களும் ஓட்டர்களும்
சட்டசபை மெம்பர்கள் அதிகப்படியான ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப் பட்டார்கள் என்பதில் யாதொரு ஆட்சேபணையுமில்லை. ஆனால் ஓட்டர்களுக்கு மெம்பர்கள் எந்த விதத்திலாவது ஜவாப்தாரியென்றோ மெம்பர்களுக்கு ஓட்டர்கள் எந்த விதத்திலாவது ஐவாப்தாரியென்றோ சொல்லிவிடமுடியாது. ஏனெனில் சட்டசபைக்கு போய் நாங்கள் இன்னது செய்கிறோம் என்று எவ்வித பொறுப்புள்ள வாக்குறுதியும் மெம்பர்கள்.
ஓட்டர்களுக்கு கொடுக்கவில்லை. ஓட்டர்களும் சட்டசபை மெம்பர்களை இன்னது செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு ஓட்டு செய்யவில்லை. ஏதோ இருவருக்கும் புரியாததும் சாதாரணத்தில் முடியாததுமான ஆகாயக்கோட்டை போன்ற பேச்சுகளையும் மத நம்பிக்கை போன்ற மூட உபதேசங்களையும் செய்து ஓட்டர்கள் தங்கள் உமையை உணராமல் கண்மூடித்தனமாய் நடந்துகொள்ளும் படியான பிரசார வலிமையினாலேயே ஓட்டுச்செய்திருக்கிறார்கள். புதிய அரசியலையோ சட்டசபை அதிகாரங்களையோ நன்றாய் உணர்ந்த ஓட்டர்கள் ஓட்டு செய்தவர்களில் 100க்கு ஒருவர் இருவர்கள்கூட இருக்கமாட்டார்கள். பொதுவாக நித்திய வாழ்வில் தற்கால வாழ்க்கை முறையின் பயனாக ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத “இயற்கை” கஷ்டங்கள் அடியோடு மாற்றப்பட்டு விடும் என்கின்ற பேராசையை ஓட்டர்களுக்கு உண்டாக்கி விட்டதின் பயனாய் ஓட்டர்கள் முன்பின் யோசியாமல் சாப்பாட்டு சாமான், துணிமணி சாமான் ஆகியவை உள்ள பண்டசாலையை திறந்து விட்டு தங்கள். தங்களுக்கு வேண்டியதை அள்ளிக்கொண்டு போகலாம் என்று எழுதிய ஒரு பலகையை பண்டசாலை முன்னால் கட்டித் தொங்க விட்டு விட்டால் ஜனங்கள் எவ்வளவு பேராசையுடனும் ஆத்திரத்துடனும் சாமான்களை அள்ளிக்கொண்டு போக வருவார்களோ அது போல் ஓட்டர்கள் மதிமயங்கி ஓட்டுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆதலால் மெம்பர்களுக்கு ஓட்டர்களுடைய கட்டளையோ வேண்டுகோளோ ஏதும் அடியோடு இல்லை என்றே சொல்லிவிடலாம். சட்டசபையினால் தங்களுக்கு இன்ன பலன் தான் கிடைக்கும் இவ்வளவு தான் எதிர்பார்க்கலாம் என்கின்ற அறிவு போதியஅளவு இல்லாத மக்களே பெரிதும் பொய்ப்பிரசாரத்தில் ஏமாந்து ஓட்டுச் செய்திருக்கிறார்கள். ஆகையால் மெம்பர்களுக்கு
குடி அரசு- 1937 (1) 26
2
பொறுப்புள்ள கடமை எதுவும் இல்லை என்றே சொல்லுவோம் மெம்பர்களும் தங்கள் பிரசாரத்தில் பூரணசுயேச்சை சுயராஜ்ஜியம், வேலையில்லாத் திண்டாட்டத்தை அடியோடு ஒழிப்பது, எல்லா மக்களுக்கும் பட்டினியே இல்லாமல் செய்து விடுவது, புதிய அரசியலை ஒழிப்பது, முட்டுக்கட்டை போடுவது, ஆகாய கங்கை தருவிப்பது, ராமராஜ்ஜியமாக்குவது என்பன போன்ற ஒன்றுக்கொன்று முரணானதும் அர்த்தமற்றதும் மக்கள் சுலபத்தில் ஏமாறக் கூடியதுமான பேச்சுகளைப் பேசி ஓட்டு கேட்டார்களேயல்லாமல் சட்டசபைக்குப் போய் மந்திரி
பதவி ஏற்பதோ அல்லது மறுப்பதோ அல்லது நிபந்தனை கேட்பதோ, கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்பதோ ஆகிய எவ்வித குறிப்பான காரியத்தைப்பற்றியும் பிரஸ்தாபிக்காமல் சட்டசபை காரியங்களையெல்லாம் தங்களுக்கே விட்டு விடும்படியும் சமயம்போல் செளகரியம் போல் தாங்கள் நடந்து கொள்ளுவதாகவும் சொல்லியே - விளக்கமாக இப்படிச் சொல்லா விட்டாலும் தங்கள் இஷ்டப்படியெல்லாம் நடப்பதற்கு இடம் வைத்துக்கொண்டே ஓட்டுவாங்கி இருக்கிறார்கள்.
பதவி ஏற்பு விஷயத்திலும் கூட ஒரு கூட்டத்தில் ஒருவர் பதவி
ஏற்கக் கூடாது என்றும் மற்றொருவர் ஒருபதவி ஏற்போம் என்றும் பேசியும், ஒரு தீர்மானம் பதவி ஏற்கக்கூடாது என்றும் மற்றொரு தீர்மானம் ஏற்கவேண்டும் என்றும் பிரரேபித்துக் கொண்டும் அந்தப்படியே பல மகாநாடுகளிலும் தீர்மானங்கள் செய்து கொண்டும் வந்தார்களே ஒழிய பதவி ஏற்பதற்கு ஏதாவது நிபந்தனை கேட்போம் என்றோ அது எப்படிப்பட்ட நிபந்தனையாய் இருக்கும் என்றோ, அந்த நிபந்தனை கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ன செய்வோம் என்றோ காங்கிரஸ்காரர்கள் யாரும் எப்போதும் எந்த ஓட்டருக்கும்
எடுத்துச் சொன்னதே இல்லை. அவ்வளவு மாத்திரம்தானா என்று பார்த்தால் இப்படிப்பட்ட விஷயத்தைப்பற்றி அதாவது நிபந்தனை உத்திரவாதம் என்பவைகளைப்பற்றி காங்கிரஸ்காரர்களே காந்தியார். சொல்லும் வரை கனவில் கூட நினைத்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினை எழுந்ததே ஓட்டர்களுக்கு மெம்பர்கள். ஜவாப்தாரிகள் என்கின்ற நிலை சிறிதுகூட இல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களில் தோழர் ஐவஹர்லாலுக்கும் ராஜகோபாலாச்சாரிக்கும் உள்ள அபிப்பிராய பேதத்தை அதாவது பதவி ஏற்கக்கூடாது என்றும் பதவி ஏற்க வேண்டும் என்றும் உள்ள வாதத்தை எப்படியாவது ராஜிப்படுத்தி காங்கிரசில் பிளவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசியத்துக்கும் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் ஜஸ்டிஸ் கட்சியால் ஆட்டம் கொடுக்கப்பட்டு விட்டதை மறுபடியும் பலப்படுத்திக் கொடுப்பதற்கு ஆகவும் தோழர் காந்தியாரால் அதுவும் 28௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
“காங்கிரஸ் நடவடிக்கைகளில் எனக்கு எவ்வித சம்மந்தமும் இல்லை; எவ்வித அபிப்பிராயமும் கொடுப்பதற்கு நான் தகுதி உடையவனல்ல; அப்படி ஏதாவது அபிப்பிராயம் கொடுப்பது சத்தியத்துக்கும் நாணையத்துக்கும் விரோதம்” என்று சொல்லியவரும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலோ பிரசாரத்திலோ வேலைத்திட்டத்திலோ ஓட்டர்களிடம் காங்கிரஸ்காரர்கள் நடந்துகொண்டதிலோ சிறிதும் சம்மந்தமில்லாதவருமான காந்தியாரால். திடீரென்று சொல்லப்பட்ட ஒரு கற்பனை நிபந்தனையாகும். இந்த நிபந்தனையை ஓட்டர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றோ, இந்த நிபந்தனைப்படி செய்யாத காரியத்தையோ, பதவி ஏற்பையோ ஓட்டர்கள் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள் என்றோ யாரும் சொல்லிவிட முடியாது ஆகையால் நிபந்தனை ஏற்றுக்கொள்ளவோ வாக்குறுதி கொடுக்கவோ சர்க்காரார் மறுத்தால் அதை ஓட்டர்களுடைய அபிப்பிராயத்தை சர்க்காரார் நிராகரித்துவிட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. சர்க்காரார் இந்திய அரசியல் சம்மந்தமாக ஒரு திட்டம் அல்லது ஒரு சட்டம் வெளிப்படுத்தி மக்களுக்கு தெரியும்படி வினியோகித்தாய் விட்டது. அந்த சட்டத்தை ஆதரவாக வைத்தே கோடிக்கணக்கான பேர் ஓட்டுக்கொடுத்தாய் விட்டது. அவ்வோட்டின் பேரிலேயே ஆயிரக்கணக்கான மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாய்
விட்டது. 11 மாகாணங்களில் ஏதோ 5, 6 மாகாணங்களில் காங்கிரஸ்காரர்கள். மெஜாராட்டியாய் வந்துவிட்டார்கள் என்பதற்கு ஆகவே குரங்கு கையில். கிடைத்த பூமாலை போலவும் தகுதி அற்றவனுக்கும் எதிர் பாராதவனுக்கும் வந்து விட்ட பவிசு போலவும் கருதிக்கொண்டு தாங்கள் வாயில் வந்ததெல்லாம் சட்டம் என்றும் அதற்கு கட்டுப்பட்டுத்தான் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்றும் தலைகொழுத்துத் திரிந்தால் அது இந்த 20வது நூற்றாண்டில் செல்லுமா? என்று கேட்கின்றோம்
மற்றும் காந்தியார் ஜெட்லெண்ட் பிரபு அறிக்கைக்கு விடுத்த பதிலில் கவர்னர்களை வாக்குறுதி கேட்பது சட்டப்படி செல்லத்தக்கதா என்பது தனக்கு தெரியாதென்றும் சில காங்கிரஸ் வக்கீல்கள் வாக்குறுதி கேட்பது சட்டப்படி செல்லுமென்று அபிப்பிராயம் சொன்னார்கள் என்றும் அதன் பேரிலேயே தான் வாக்குறுதி கேட்டதாகவும் சொல்லித் தப்பித்துக் கொள்ளுகிறார். ஆகவே இதிலிருந்து காங்கிரஸ்காரர்களுக்கும் காந்தியாருக்கும் திட்டம் இல்லை என்பதும் அரசியலை ஏற்று நடத்தும்படியான அரசியல் ஞானமும் அரசியல் சட்ட ஞானமும் இல்லை என்பதும் அவர்களுக்குள் கட்டுப்பாடோ யோக்கியப் பொறுப்போ இல்லை என்பதும் பச்சையாய் தெரிவதுடன் பாமர மக்களிடம் காந்தியாருக்கு உள்ள முட்டாள்
குடி அரசு- 1937 (1) 264
செல்வாக்கைக்கொண்டு வெறும் குழப்பமும் தொல்லையும் விளைவித்து விளம்பரம் பெறுவதைத்தான் காங்கிரஸ் திட்டமாய் கொண்டிருக்கிறார்கள் என்றும் கருத வேண்டியிருக்கிறது
காங்கிரசுக்காரர்கள் என்பவர்களின் உள் அந்தரங்க எண்ணம் என்ன என்பதைக் கண்டுபிடித்தால் இந்த மாதிரியான போக்கடாத்தனத்திற்கு காரணம் என்ன என்பது விளங்கும்
அதாவது இந்தியாவில் கொஞ்ச காலத்துக்கு முன் அரசியல். வாழ்வு, அதிகாரம், பதவி ஆதிக்கம் ஆகியவைகள் ஒரு குறிப்பிட்ட வகுப்பார் கையில் சிக்குண்டு வந்தன. அதனால் அந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பார்கள் பயனடைந்து வந்தார்கள். இப்போது சகல வகுப்பாரும்
கண் விழித்துக்கொண்டார்கள். அவர்கள் வகுப்புக்கு தனித்தனி முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட்டு அவர்கள். தனித்தனியாக முன்னேற்றமடைய முயற்சிப்பதில் அரசியல், பதவி, அதிகாரம், ஆதிக்கம் ஆகியவைகளில் பங்கு பெற்று தங்கள் சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அரசாங்கமும் தங்கள் கையில் இருக்கும் அதிகாரம்
மக்கள் கைக்கு கொடுக்கப்படுவதாய் இருந்தால் எல்லா வகுப்பாருக்கும் அது பயன்படும்படியாயும் ஒரு வகுப்பை ஒரு வகுப்பு அழுத்தி ஆதிக்கம் செலுத்தாமலும் இருக்கத்தக்க மாதிரியில் அதிகாரத்தையும் ஆட்சி ஆதிக்கத்தையும் மாற்றிக் கொடுக்க வேண்டியவர்களானதால் கூடுமானவரை சகல வகுப்பு நன்மைகளையும் கவனித்து அதிகாரத்தை மாற்றுவதாயிருப்பதால் காங்கிரசில் ஆதிக்கமிருக்கும் வகுப்பாருக்கு இப்போது அது கஷ்டமாய் இருந்து வருகிறது.
ஏனெனில் சகல வகுப்புக்கும் அதிகாரமும் ஆக்ஷியும் சம்மந்தமும் பரவி விட்டால் வருணாச்சிரம் ஒழிந்து விடும், பரம்பரை ஆதிக்க பாத்தியம் அழிந்துவிடும், பார்ப்பான் உயர்வு பறையன் மட்டம் என்பதும் இந்து மதம் சிரேஷ்டமானது, இஸ்லாம் மதம் கிறிஸ்தவ மதம் மிலேச்சத் தன்மை என்பதும் இந்திய இந்துக்களுக்கே தவிர அந்நியர்களுக்கு சம்மந்தமில்லை என்பதும் அடிமாய்ந்து போய்விடும். ஆதலால் இன்றைய காங்கிரஸ்காரர்களின் தொல்லையானதும் உண்மையிலேயே முழுவதும் ஜாதி, வகுப்பு, மதம், வருணாச்சிரம தர்மம் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அரசியல் தத்துவமோ தேசிய தத்துவமோ அதில் கடுகளவும் இல்லை என்பதை வாசகர்கள் உணர்வார்களாக,
இதற்கு ஆதாரம் வேண்டுமானால் காந்தியார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தியார் ஆகியவர்களின் பேச்சுக்களை எடுத்து புடைத்துத்
தரித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். தலைவர் பண்டிதநேரு அவர்கள் “இந்து” பத்திராதிபர், “சுதேசமித்திரன்” பத்திராதிபர் ஆகியவர்கள்
28௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எழுதியது போல் தனக்கும் புத்தியில்லை, சொல்லுகிறவர்கள் பேச்சையும் கேட்காத ஆணவம் படைத்தவர் என்பதற்கு இலக்கானவர் ஆதலால் அவர். பேச்சு கவைக்குதவாத பேச்சே தவிர மற்றொன்றும் சொல்ல முடியாததாகும்
ஆதலால் இன்று காங்கிரஸ்காரர்கள் சர்க்காரோடு சண்டை போடுவதாய்ச்சொல்லிக் கொண்டு தொல்லை கொடுப்பதும் ஜனங்களுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பதாய்ச் சொல்லிக்கொண்டு மக்களை அலைக்கழிப்பதும் துன்பத்துக்குள்ளாக்குவதும் வெறும் பித்தலாட்டமும் வகுப்பு ஆதிக்க வகுப்பு வாதமுமே அல்லாமல் வேறு ஓட்டர்கள் நலனுக்கோ நாட்டு நலனுக்கோ நன்மையானது ஒன்றும் இல்லை என்பதை உணர்வார்களாக,
குடி அரசு - தலையங்கம் - 18.04.1937
குடி அரசு- 1937 (1) 266
புதிய மந்திமிகன்
இன்று நமது சென்னை அரசாங்கத்தில் உள்ள மந்திரிகள் அறுவரும் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அல்ல என்பதை ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். இன்றும் நமது அபிப்பிராயம் அதுவேயாகும் ஆனால் அவர்களுக்கு எவ்வித பொறுப்பும் இல்லை என்றும் அவர்களால் எவ்வித காரியமும் எதிர்பார்க்க மக்களுக்கு உரிமை இல்லை என்றும் யாரும் சொல்லிவிட முடியாது. அவர்கள் நமது வரிப்பணத்தில் இருந்தே சம்பளம் பெறுகிறார்கள். சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் மக்களுக்கு எவ்வளவு பொறுப்பாளிகளோ அவர்களிடமிருந்து மக்கள் எவ்வளவு எதிர்பார்க் கிறார்களோ அவ்வளவும் இந்த மந்திரிகளிடமும் எதிர்பார்ப்பது தவறல்ல, அதனாலேயே இந்த மந்திரிகளை ஆதரிக்கவோ வரவேற்கவோ நாம் கட்டுப்பட்டவர்கள் என்று யாரும் கருதிவிடமாட்டார்கள். பொதுவாக நோக்குமிடத்து இம் மந்திரிகளை பதவியில் அமர்த்தக் காரணம் அரசியல் சட்டத்தில் கண்டுள்ள நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டும் அதன் கருத்துக்குக் கட்டுப்பட்டும் காங்கிரஸ் மந்திரிகள் நடந்து கொள்ளுவார்கள் என்கின்ற விஷயத்தில் சர்க்காருக்கு உள்ள அவநம்பிக்கையாலேயே அவர்கள் கேட்ட சட்டமற்ற வாக்குறுதியை சர்க்கார் மறுத்து இந்த மந்திரிகளை நியமித்து இருக்கிறார்கள்
இந்த மாதிரி சர்க்காரார் காங்கிரசுக்காரர்கள் மீது அவநம்பிக்கைப் பட்டதற்குக் காரணம் சிறுபான்மை வகுப்பார், பிற்படுத்தப்பட்ட வகுப்பார் ஆகியவர்கள் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ளாவிட்டால் அப்படிப்பட்ட சமயங்களில் சர்க்காருக்கு விசேஷ அதிகாரம் வேண்டுமாதலால் வாக்குறுதி கொடுக்க முடியாது என்று சொன்னார். ஆகையால் இன்றைய மந்திரிகள் சிறுபான்மை வகுப்பார் விஷயத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் விஷயத்தில் தக்க நீதி வழங்கவும் அவர்களை முன்னேறச் செய்யவுமான காரியத்தை முக்கியமாய் கருதக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
அதுமாத்திரமல்லாமல் மந்திரிகள் பெரும்பாலோரும் சிறுபான்மை வகுப்பாரும் பிற்படுத்தப்பட்ட மக்களுமான வகுப்பைச் சேர்ந்தவர்கள். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இவர்களுடைய மந்திரி பதவி ஆயுள் எந்த நிமிஷத்தில் முடிந்தாலும் முடியலாம், மூன்று வருஷத்துக்குக் குறையாமல் இருந்தாலும் இருக்கலாம். மனித ஆயுள் 100 வயது என்றாலும் கர்ப்பத்திலோ அல்லது எந்தச் சமயத்திலோ வேண்டுமானாலும் முடிவடையலாம் என்பது எப்படி இயற்கையில் பட்டு விட்டதோ அதுபோல் இன்றைய மந்திரிகள்
நிலையும் இருக்கிறது ஆதலால் இந்த “கொஞ்ச கால வாழ்விற்குள்ளாக வேனும் ஏதாவது தக்க காரியம் செய்து மக்களுக்கு பயன் உண்டாக்க சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடவில்லை.
மந்திமிகள் செய்ய வேண்டியது
இன்று தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு உள்ள பெரும் குறை வரி அதிகமும் உத்தியோகக் குறைவும் என்பது தமிழ் மக்கள் யாவரும் ஒப்புக்கொண்ட விஷயம். காங்கிரசுக்கு வரியைப்பற்றி கவலை இல்லை என்பது உண்மையான விஷயம். ஏனென்றால் நம் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியவர்கள் பார்ப்பனர்கள். அவர்களுக்கு பூமி சுடுகாட்டில் தான் உண்டே ஒழிய மற்றபடி நாட்டில் இருப்பது
மிகவும் குறைந்த அளவேயாகும். ஆதலால் அவர்கள் வரி விஷயத்தை ஓட்டுபெறுவதற்கு மாத்திரம் ஓட்டர்களிடம் பேசுவதற்கு வரி குறைக்கிறோம் என்று ஏமாற்ற பயன்படுத்திக் கொள்வார்களே தவிர குறைய வேண்டுமென்று கவலைப்பட காரணமே இல்லை. உதாரணமாக சென்னை கார்ப்பரேஷனுக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்து
6 மாத காலமாகிறது. வரி போடுவதில் கவலையாக இருக்கிறார்களே தவிர எதைப் பிரமாதமாகக் குறைத்தார்கள் என்று யாரும் சொல்ல முடியாது.
மற்றும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபை தேர்தலில் அதிக மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றவுடன் தாங்களே மந்திரிகளாகி அரசாங்கத்தை நடத்தப்போகிறார்கள் என்கின்ற உறுதி ஏற்பட்டவுடன் காங்கிரஸ் பத்திரிக்கைகள் எழுதிய தலையங்கங்களைப் பார்த்தால் காங்கிரஸ்காரர்களின் புரட்டுகள் தாராளமாய் வெளியாகிவிடும். அதாவது “காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளானவுடன் வரிகள் குறைந்துவிடும் என்றும் வரிகள் இல்லாமல் போய்விடும் என்றும் அனேகர் கருதுகிறார்கள். பாமர மக்கள் மாத்திரம் அல்லாமல். படித்தவர்களும் அப்படியே கருதுகிறார்கள்; இது அறிவீனமாகும் வரியில்லாமல் சர்க்கார் நடக்காது” என்று எழுதினார்கள்.
மற்றும் “ஆனால் ஜஸ்டிஸ் காரர்கள் செய்ததைவிட சிறிது அதிகமான நன்மையை காங்கிரஸ்காரர்கள் செய்யக் கூடும். இவ்வளவுதான் முடியுமே ஒழிய வரி கஷ்டமே ஒழிந்து விடும் என்று கருதுவது முட்டாள்.
குடி அரசு- 1937 (1) 268
தனம்” என்றும் எழுதி இருக்கிறார்கள். ஆதாரம் வேண்டுமானால் மார்ச்சு 135 தேதி அல்லது 15ந் தேதி 'ஜெயபாரதி”யும் மார்ச்சு முதல் வார “தினமணி”யும் “சுதேசமித்திர"னையும் பார்த்தால் விளங்கும். உத்தியோக விஷயத்தில் மாத்திரம் காங்கிரசுக்கு வெகு தைரியம் இருந்தது. மார்ச்சு 5 30 நாளும் சர்க்கார் அதிகாரிகள் பார்ப்பனரல்லாத வக்கீல்களிடம் நடந்து கொண்ட ஆணவத்துக்கும் பேசிய அதிகப் பிரசங்கித்தனத்துக்கும் வக்கீல்களை கேட்டுப் பார்த்தால் தெரியும். மற்றும் பார்ப்பன மேலதிகாரிகள் பார்ப்பனரல்லாத குமஸ்தாக்களிடம் நடந்து கொண்ட கொடுமையை விசாரித்தாலும் தெரியும். ஆகையால் இவ்விரண்டு விஷயங்களிலும் இன்றைய அனாமத்மந்திரிகள் பார்ப்பனர்கள் போல் நடக்காமல் நிலவரியில், 100க்கு 25 வீதமாவது எப்படியாவது குறைத்து பாமர மக்களை திருப்தி செய்து விட்டு உத்தியோக முறையில் இப்போது இருக்கும் வகுப்பு வாரி வினியோக திட்டமாகிய 12ல் பார்ப்பனருக்கு 2 என்றிருப்பதை 16ல் பார்ப்பனருக்கு 2 என்று ஆக்கி மீதியை வினியோகிப்பதில் கூடுமானவரை ஜனசங்கை கணக்குப்படி பிரித்து திட்டம் ஏற்படுத்துவதுடன். இந்த விகிதாச்சாரம் சகல உத்தியோகங்களிலும் குறிப்பிட்ட சகல வகுப்புகளுக்கும் எண்ணிக்கை விகிதம் சரியாய் வரும்வரை அதிகப்படியாய் அனுபவிக்கும் வகுப்பாருக்கு உத்தியோகம் வழங்குவதை நிறுத்தி வைப்பது என்றும் செய்வதானால் இந்த மந்திரிகள் மக்களுக்கு நீதியும் ஒழுங்கும் செய்தவர்களாவார்கள். மக்கள் பாராட்டப் படுவதற்கும் உரியவர்களேயாவார்கள். இதை அநியாயம் என்றோ அக்கிரமம் என்றோ
யார் தான் சொல்ல முடியும்? சென்ற மாதம் எஸ்.ஐ.ஆர். கம்பெனிக்காரர் 216 ஸ்தானங்கள் தேவை இருந்ததற்கு 6 ஸ்தானங்களே பார்ப்பனர்களுக்கு அளித்தார்கள். இதற்கு காரணம் என்னவெனில் ஏற்கனவே பார்ப்பனர்கள் ரயில் இலாக்காவில் ஏராளமான பேர்கள் அமர்ந்திருப்பதும் ரயிலுக்கு வருமானம் வருவதெல்லாம் 100க்கு99 பாகம் பார்ப்பனரல்லாதார்களிடமிருந்தே வருவதுமாகும். இன்னமும் பல உத்தியோகங்களுக்கு விளம்பரம் செய்கையில் ஆதிதிராவிடர்களே வேண்டுமென்றும் முஸ்லீம்களே வேண்டுமென்றும் கிறிஸ்தவர்களே வேண்டுமென்றும் விளம்பரம் செய்வதின். காரணமெல்லாம் அந்த சமூகத்தார் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அவ்வுத்தியோகங்களில் இல்லை என்பதேயாகும். மற்றும் ஐ.சி.எஸ். இந்தியர்களுக்கு கொடுப்பது என்று ஏற்பட்டவுடன் அனேகமாய் எல்லோரும் பார்ப்பனர்களாகவே வந்து விட்டார்கள். அதிலும் பிரவேசித்து பார்ப்பனர்கள் 100க்கு 3 வீதம் வரும்வரை பார்ப்பனர்களை ஐ.சி.எஸ்-க்கு எடுக்காமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு சரியாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஆகையால் இப்போதைய மந்திரிகள் தங்களை 2௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பொது பிரதிநிதிகள் என்றோ நியாயம் செய்ய அப்பதவியை ஏற்றுக் கொண்டவர்கள் என்றோ உரிமை கொண்டாடிக்கொள்ள வேண்டுமானால் இம்மாதிரியான காரியங்களை செய்வதினால் தான் ஏற்படலாமே ஒழிய வீண் ஆடம்பரத்தாலோ அறிக்கைமேல் அறிக்கைகள் வெளியிடுவதாலேயோ எவ்வித பெருமையும் ஏற்பட்டு விடாது
மற்றும் இம்மந்திரிகள் இக்காரியம் செய்யவேண்டுமென்று கருதினால் அரசாங்கமும் குறுக்கிடாதென்றே கருதுகிறோம். ஏனெனில் இம்மந்திரிகளை இந்தியா மந்திரியும் இந்தியா உதவி மந்திரியும் வைஸ்ராய் பிரபுவும் கவர்னர்களும் பாராட்டி இருப்பதோடு “நல்ல. சந்தர்ப்பத்தில் உதவி செய்ததற்கு ஆக" நன்றி செலுத்துவதாகவும் வெளிப்படையாய் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் இம்மந்திரிகளின் இம்மாதிரி செய்கைகளை அரசாங்கத்தார் ஆதரித்தே தீருவார்கள் - ஆதலால் என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பதோடு இக்காரியங்கள் செய்த பிறகே இவர்கள் பொது மக்களின் பாராட்டுதலுக்கும் இம்மந்திரிகள் அருகராவார்கள் என்பதோடு இவர்களுடைய பெயரும் என்றென்றும் விளங்கும். மற்றபடி அதுவரை இம்மந்திரிகள் எந்தக் கட்சியாரிடமிருந்தும் சிறிது கூட ஆதரவு பெற அருகதையற்றவர்கள் என்று கூறுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.04.1937
குடி அரசு- 1937 (1) 270
சுயராஜ்யமா£ பார்ப்பண ராஜ்யமா?
சென்னையில் இம்மாதம் 10ந் தேதி சனிக்கிழமை நடந்த கார்ப்பரேஷன் எலக்ஷனில் காங்கிரசால் நிறுத்தப்பட்ட அபேக்ஷகரான தோழர் ஜகநாததாஸ் தோல்வி அடைந்து விட்டார். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆரம்ப கர்த்தாவாகவும் தூணாகவும் இருந்த தோழர் நடேச முதலியார் அவர்கள் தம்பி தோழர் தாதுலிங்க முதலியார் வெற்றி பெற்று விட்டார். ஓட்டு விபரம் தாதுலிங்க முதலியாருக்கு 470 ஓட்டுகளும் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு 289 ஓட்டுகளுமாய் கிடைத்து இருக்கின்றன. ஜெயிப்பும் தோல்வியும் அபேக்ஷகர்கள் யோக்கியதையையும் ஓட்டர்கள் யோக்கியதையையும் நிச்சயிக்க சரியான கருவி ஆகிவிடும் என்று நாம் கருதுவதில்லை. வேறு அநேக தேர்தல்களில் அயோக்கியர்களும் தகுதி அற்றவர்களும் வெற்றிபெற்று விடுகிறார்கள். இப்போது எலக்ஷன் மோகம் கொண்டவர்கள் பெரிதும் எலக்ஷனில் வெற்றி பெறுவதன்.
மூலம் வயிறு வளர்க்கலாம் - வாழலாம் என்கின்ற சுயநலக்காரர்களே. அதுவும் ஓட்டர்கள் ஆவதற்கு நியாயமான யோக்கியதை இல்லாமல் குறைந்த அளவு யோக்கியதையை நாணயக்குறைவாய் பயன்படுத்தி ஓட்டர் லிஸ்டில் புகுந்து கொள்ளுகிறவர்களே பெரிதும் தேர்தல்களில் போட்டியும் கவலையும் கொண்டு முன் வருகிற காலமாக ஆகிவிட்டது
நமது நாட்டு ஜனப்பிரதிநிதிசபை என்று அடியோடு பொய் கெளரவம் பாராட்டிக் கொள்ளும் காங்கிரசின் ஆதிக்கமும் ஏறக்குறைய இந்த யோக்கியதை கொண்டவர்களையே அதிகமாய் கொண்டுவிட்டதால் இப்போதைய தேர்தல் பிரசாரம் பெரிதும் அபேக்ஷகர் யார் என்பதை மக்கள் ஓட்டர்கள் உணரக்கூடாதபடி சூழ்ச்சி செய்து வஞ்சகமாக ஓட்டுப் பெறும்படியான முறை கையாளப்பட்டு வருகிறது. இந்தக் காரணத்தாலேயே
காங்கிரஸ் தலைவரே “அபேக்ஷகர்கள் கூனோ, குருடோ, மொண்டியோ, முடமோ, அயோக்கியனோ மற்றும் எவனாகவோ இருந்தாலும் பாராமல் காங்கிரசு என்று சொன்னாலே போதும், அவர்களுக்கு ஓட்டுச் செய்யுங்கள்'' என்று உபதேசம் செய்திருக்கிறார்.
ஆதலால் இப்போது நாம் தகுதி, தகுதி இன்மை என்பதை பிரமாதப்படுத்திக் கொள்ளவில்லை. மற்றென்னவென்றால் “உலகம் காங்கிரஸ் வசமாகி விட்டது. காங்கிரசுக்கு எதிராக யார் நின்றாலும் 1 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பஸ்மீகரமாய் விடுவார்கள். காங்கிரசை எதிர்க்க யாராலும் முடியாது” என்று வீண் அகம்பாவமும் ஆணவமும் கொண்ட சவடால் பேச்சுக்களுக்கு இன்று சாவுமணி அடித்தாய் விட்டதல்லவா என்பதையே எடுத்துக்காட்டு கிறோம். சட்டசபை தேர்தல் நடந்து இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. அதுவும் சென்னை நகரத்தில் சகல காங்கிரஸ் தலைவர்களும் குடி இருக்கும் தொகுதியில் பார்ப்பன அக்கிரஹாரத்தில் சகல தலைவர்களாலும் எவ்வளவோ விஷமப்பிரசாரங்கள் நடத்தி ஜனங்களை ஏமாற்றி நடத்திய தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகர் இம்மாதிரி படுதோல்வி அடைந்து விட்டார். என்றால் இந்த முடிவைக் கொண்டு என்ன நிச்சயிப்பது என்று கேட்கின்றோம்.
காங்கிரசின் வண்டவாளம் 1 மாதத்திலேயே வெளுத்துப் போய் விட்டது என்றும் காங்கிரஸ்காரர்களின் பித்தலாட்டங்களை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் காங்கிரஸ்காரர்கள் ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் வெறும் ஏமாற்றுப் பிரசாரமே ஒழிய வேறில்லை என்று உணர்ந்துவிட்டார்கள் என்றும் காட்டுகிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.
கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் போனவுடன் வரிகளைக் குறைப்போம் என்றவர்கள் இந்த 6 மாத காலமாய் யாதொரு வரியும் குறைக்காமல் வரி குறைக்க மற்ற கட்சியார் கொண்டுவந்த தீர்மானங்களை எதிர்த்ததோடு பல விஷயங்களில் இப்போது அதிக வரியும் போட ஆரம்பித்து விட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு சாதிப்பதாய்ச் சொன்னதையெல்லாம் மறந்து அவர்கள் விஷயத்தில் வரும் தீர்மானங்களையெல்லாம் தோற்கடித்தே வருகிறார்கள். சேரியில் அவர்கள் படும் கஷ்டம் கொஞ்சமல்ல. முஸ்லீம்கள் விஷயத்தில் குரோதமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். மற்றும் உண்மையைப் பேச வேண்டுமானால் சென்னை கார்ப்பரேஷனில் 40 டிவிஷன்களுக்கு 40 ஸ்தானங்களுக்கு 11 பார்ப்பனர்கள் வெற்றி பெற்று வந்து இருக்கிறார்கள் என்பதும் ஆல்டர்மென் ஸ்தானங்கள் 5ல் அவர்களே மெஜாரிட்டி என்பதும் (இப்போது காலியான ஸ்தானம் அது எந்தக் கட்சியை சேர்ந்ததானாலும் அது ஒரு பார்ப்பனரல்லாதாருடையது என்பதும்) யாவரும் அறிந்ததாகும். அப்படி இருக்கும்போது இந்த ஒரு ஸ்தானத்துக்கும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரும் மறுபடியும் தோழர் ஜெகநாததாஸ் என்கின்ற ஒரு பார்ப்பனரை நிறுத்தி போட்டி போடுவதென்றால் இது தேசியமா பார்ப்பனீயமா - இது சுயராஜ்ஜியமா பார்ப்பன ராஜ்ஜியமா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம் பார்ப்பனர்கள் உண்மையாகவே தேசாபிமான எண்ணம் கொண்டு இந்திய நாடு விடுதலை பெறவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தின்
மீது பாடுபடுகிறவர்களாய் இருந்தால் சந்து கிடைத்த இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களையே கொண்டு வந்து துணிப்பானேன்?
குடி அரசு- 1937 (1) 272
பார்ப்பனர்களைத் தவிர மற்ற வகுப்பார்களுக்கு புத்தி இல்லை என்று கருதி இருக்கிறார்களா, அல்லது பார்ப்பனர் ஆளுவதுதான் சுயராஜ்ஜியம் என்றும் பூர்ண சுயேச்சை என்றும் மற்றவன் ஆளுவது அந்நிய ராஜ்ஜியம் என்றும் கருதி இருக்கிறார்களா? என்பது விளங்கவில்லை.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பேசும் போதெல்லாம் “வகுப்பு உணர்ச்சியை காட்டாதீர்கள். வகுப்புப் பேச்சு தேசியத்துக்கு விரோதமானது - வகுப்பு துவேஷம் கற்பிக்கிறவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள் - காங்கிரசுக்கு ஜாதி மத வகுப்பு வித்தியாசமில்லை” என்றெல்லாம் மேடையில் பேசிவிட்டு அறிக்கையில் வெளியிட்டு விட்டு சமயம் கிடைத்த போதெல்லாம் பார்ப்பனர்களை அழைத்துக் கொள்வது என்றால் இதற்கு என்ன பேர் வைப்பது என்று கேட்கிறோம் சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் முஸ்லீம்களுக்கு இரண்டே ஸ்தானங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம்கள் ஜனத்தொகை 100க்கு 25 பேர்களுக்கு மேல் உண்டு. அப்படிப்பட்ட சமூகத்துக்கு 40-க்கு 2 ஸ்தானம் கொடுத்து விட்டு நூத்துக்கு 3 வீதமுள்ள பார்ப்பனர்கள் 40-க்கு 15 ஸ்தானங்களை அடித்துக்கொண்டார்கள் என்றால் காங்கிரசிலோ பார்ப்பனர்கள் இடமோ வகுப்பு நியாயமோ மைனாரிட்டி வகுப்பாருக்கு பாதுகாப்பு அளிக்கும் தன்மையோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
சென்ற வாரம் இந்தியா மந்திரியவர்கள் விடுத்த அறிக்கையில் “மைனாரிட்டி வகுப்பார்களின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு ஆக சர்க்காருக்கு விசேஷ அதிகாரம் இருக்க வேண்டியது அவசியமாகும்” என்று சொல்லியிருக்கிறார். இந்த வாசகத்தை நமது பார்ப்பனர்கள் காரியத்தில் அவசியமாக்கி காட்டிவிட்டு வாயில் மாத்திரம் மைனாரிட்டி வகுப்பைக் காப்பாற்றும் பொறுப்பு எங்களிடமும் இருக்கிறது, நாங்களும் கவனித்துக்கொள்ளுவோம் என்று சொன்னால் அதில் அருத்தமோ நாணையமோ ஏதாவது இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்
தோழர் காந்தியாரும் (தோழர் ஜட்லண்டு பிரபு சொல்வது போல், தனது பேச்சு எப்படிப்பட்டதானாலும் மதிப்பதற்கோ, காதுகொடுப்பதற்கோ பல முட்டாள்களும் மடையர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்கின்ற ஆணவத்தால்) என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற அகம்பாவம் கொண்டு கண்டபடி உளறி வருகிறாரே ஒழிய அவருக்கு உலக ஞானமோ உண்மைக்காரியங்களில் கவலையோ சிறிதும் இருப்பதாகக் காட்டி கொள்வதே இல்லை. “மைனாரிட்டி வகுப்பாரின் உரிமைகளை மந்திரிமார்கள் கவனிக்கவில்லையானால் அவர்கள் காங்கிரசுக்கு குழிதோண்டிக் M ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கொண்டவர்களாகிவிடுவார்கள்” என்று தோழர் காந்தியார் ஜட்லண்ட் பிரபுக்கு பதில் சொல்லி இருக்கிறார். காங்கிரசு மந்திரிகளாக வரவிருந்த தோழர்கள் ஆச்சாரியாரும் சாஸ்திரியாரும் பார்ப்பனர்கள் நலம் தவிர மைனாரிட்டி வகுப்பாரின் நன்மையை எந்த சந்தர்ப்பத்தில் எந்தக் காரியத்தில் காட்டிக் கொண்டார்கள் என்று யாராலாவது காட்ட முடியுமா என்று காந்தியாரையே கேட்கின்றோம் ஆகவே நமது மக்கள் இனியும் தேசம் என்றோ, சுயராஜ்யம் என்றோ கருதிக்கொண்டு பார்ப்பன ராஜ்யம் ஏற்பட பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்துவருவதை இனியாவது விட்டுவிட்டு மானத்துடன் பிழைக்க வழி தேடி பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க முயற்சிப்பார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.04.1937
குடி அரசு- 1937 (1) 274
தலைவிதி
சாஸ்திமிகன் அழுகை
சென்னை தோழர் சி. விஸ்வநாத சாஸ்திரியார் சென்னை றெளலட் சாஸ்திரிகள் என்று உலகப் பிரசித்தப் பெயர்பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜி
சி. குமாரசாமி சாஸ்திரிகளின் சகோதரர். (இவர் கூட ஒருதரம் கொஞ்சநாள் ஹைகோர்ட் ஜட்ஜி வேலை பார்த்ததாக ஞாபகம், அது எப்படியோ போகட்டும்) இவர் 20.4.37ந் தேதி “இந்து பத்திரிகைக்கு
ஒரு சேதி அனுப்பியிருக்கிறார். அதாவது கல்வி இலாக்கா காலேஜுகளில் படிக்கும் பிள்ளைகள் 100க்கு 60 பேர் பார்ப்பனர்கள் என்றும் பிள்ளைகளைச் சேர்க்கும் கமிட்டிக்கு 4 காலேஜ் கமிட்டிகளுக்கும் பார்ப்பனர்களில் ஒருவரைக்கூட சர்க்காரார் மெம்பராகப் போடவில்லை என்றும் இரட்டை ஆட்சி காலத்திலாவது (அதாவது ஜஸ்டிஸ் மந்திரிகள் காலத்திலாவது) ஒவ்வொரு கமிட்டிக்கு ஒவ்வொரு பார்ப்பனர்கள். இருந்தார்கள் என்றும் இப்போது அதுகூட இல்லையென்றும் இப்போதுள்ள மந்திரிகள் ஜஸ்டிஸ்கட்சி மந்திரிகளாகவும் அல்லது பார்ப்பனர்களின் எதிரிகளான மந்திரிகளாகவுமே இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதன் சூசனை என்னவென்றால் பார்ப்பனர்கள் எல்லாம் இந்த மந்திரிகளுக்கு விரோதமாக இருந்து இவர்களை ஒழிக்க முயற்சிக்க வேண்டும் என்று மெள்ள ஜாடையாய் நெருப்பு வைக்கிறார். இதே மாதிரி நெருப்பையே தான் தோழர் சி.ஆர். ஆச்சாரியாரும் வைத்தார்; வைத்துக்கொண்டும் இருக்கிறார். அதிலேயே தனது உயிரைத் தியாகம் செய்யவும் துணிந்து அளவுக்கு மேல் தலை கொழுத்துத் திரிகிறார் என்றே சொல்ல வேண்டும். இது எப்படியோ போகட்டும்; அவனவன் கர்மத்தின் பயனை அவனவன் அனுபவிக்கட்டும். (“மேல் உலகத்தில்” அல்ல, இந்த உலகத்தில்) ஆனால் இந்த கடிதத்துக்கு பதிலாக நாம் ஒன்று கேட்கின்றோம்
அதாவது காலேஜ் வகுப்புகளில் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு மூன்று பேர்களாய் உள்ள பார்ப்பனர்களின் பிள்ளைகள் காலேஜ் மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 60 பிள்ளைகள் வாசிக்கக்
காரணம் என்ன? 100-க்கு 97 மக்களாய் உள்ள சமூகப் பிள்ளைகள். இவ்வளவு குறைந்து 100-க்கு 40 பேர்களாக இருக்கக் காரணம் என்ன என்பதை தோழர் சி.வி. சாஸ்திரியார் விளக்குவாரா? 25— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பார்ப்பனர்கள் என்ன அவ்வளவு பணக்காரர்களா? உழைப்பாளிகளா? அவர்களுக்கு மாத்திரமே அதிக மூளையா? என்கின்ற விஷயம் தெரிந்தால்தானே இந்த 100-க்கு 60 பிள்ளைகள் பார்ப்பனப் பிள்ளைகளாய் இருப்பதற்கு நாம் திருப்தி அடைய முடியும்? அத்திருப்தி இல்லாதவரையில். அதை மாற்றி சகல மக்களும் சரிசமமாக வருவதற்கு ஏற்ற முயற்சி செய்துதானே ஆக வேண்டும்? அம் முயற்சிக்கு பார்ப்பனர்களை காலேஜ் கமிட்டிக்கு மெம்பர்களாகப் போட்டால் காரியம் நடக்குமா? இப்போதாவது சர்க்காருக்கு புத்தி வந்ததற்கு மகிழ்ச்சியடைய வேண்டாமா?
ஆகையால் இப்போது காலேஜ் கமிட்டிக்கு பார்ப்பனர்களை நீக்கி பார்ப்பனரல்லாதாரையே போட்டது போல் இனி காலேஜ் உபாத்தியாயர்கள், பரீக்ஷாதிகாரிகள், கல்வி இலாக்கா நிர்வாக மேற்பார்வை அதிகாரிகள் ஆகியவர்களையும் பூராவுக்கும் அடியோடு பார்ப்பனர்களை விலக்கி பார்ப்பனரல்லாதார்களைப் போடாவிட்டால் இம் மந்திரிகளை மாபெரும் சமூகத் துரோகிகள் என்றுதான் கூப்பிட வேண்டும் என்போம்
பார்ப்பனர்கள் தங்கள் கையில் ஆட்சி இருக்கும் இடங்களில் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்தால் நமது பார்ப்பனரல்லாத மந்திரிகளும் உத்தியோகஸ்தர்களும் சமூகத்துரோகிகள் என்றே அழைக்கப்படத்தக்கவர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களும் காங்கிரஸ் தலைவர்கள் என்னும் பார்ப்பனர்களும் இப்போதுள்ள மந்திரிகளை அரசியல் காரணங்களுக்கு ஆக ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் நாமும் கூடவே இருந்து ஒழிப்பதற்கு முயற்சி செய்யலாம். அல்லது கவர்னர் நடந்து கொண்ட நன்றியற்ற- நியாயமற்ற - முறையற்ற காரியத்துக்கு ஆக இம்மந்திரிகளை ஒழிக்கவேண்டும் என்று சொன்னாலும் நாம்கூடச் சேர்ந்து ஒழிக்கத் தயாராய் இருக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட பொறுப்புள்ள பார்ப்பனர்கள் மந்திரிகளை பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவி புரியவில்லை என்றும் மற்ற சில மானங்கெட்ட- குலநலமற்ற- பார்ப்பனரல்லாதார்- மந்திரிகள் ஆகியவர்களைப் போல் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவில்லை என்றும் கருதி ஒழிக்க முயற்சிப்பார்களேயானால் அந்த அயோக்கியத்தனத்தை ஒழிக்க நாம் இன்றைய மந்திரிகளுடன் சேருவதுமாத்திரமல்லாமல் தோழர்கள் பிரகாசம், ராஜகோபாலாச்சாரியார் கூறுவதுபோல் அதாவது பார்ப்பனரல்லாத கட்சி மந்திரிகளைவிட வெள்ளைக்கார சர்க்கார் மந்திரிகளே மேல் என்பதுபோல் இன்னம் ஒருபடி மேலே போய், பார்ப்பனர், காங்கிரஸ், கவர்மெண்ட், ஜஸ்டிஸ் ஆகிய மந்திரிகளை விட இந்த அனாமத் மந்திரிகளே மேல் என்று சொல்ல முற்பட்டுவிடுவோம் என்பதை தைரியத்தோடும் வலிமையோடும் கூறுவோம். தோழர்கள் சர். சிவசாமி அய்யர், வெங்கிட்டராம சாஸ்திரியார், சீனிவாச சாஸ்திரியார், அல்லாடி அய்யர் ஆகிய “பிரமுகர்கள்” ஆதிக்கத்தில் உள்ள மைலாப்பூர் இந்து
குடி அரசு- 1937 (1) 276
ஹைஸ்கூல் என்பதில் தோழர் குஞ்சிதம் அம்மாள் உபாத்தியாயராய் இருந்ததை சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் பள்ளிக்கூடத்துக்கு பண்டு இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்பிவிட்டு அதைவிட அதிக செலவில் அதை பூர்த்திசெய்து கொண்டிருக்கும் போது இருக்கிற பார்ப்பனர்களை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாமல் இனி நியமிக்கப்போகும் கமிட்டிக்கும் உத்தியோகத்துக்கும் பார்ப்பனர்களைச்
சேர்க்காமல் போனதால் அது மகா பாதகமான காரியமா என்று கேட்கின்றோம். இப்போதைய மந்திரிகளுக்கும் நாம் ஒரு எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். அதாவது இந்த மந்திரிகள் உத்தியோகம் அடுத்த நொடி நேரத்தில் காலியாவதானாலும் சரி, சிவகங்கை தோழர் ராமச்சந்திரன். சேர்வை அவர்களும் ஒரு காலத்தில் திருச்சி தேவரும் சொன்னது போல் அதாவது “இந்தக் கையைக்கொண்டு ஒரு பார்ப்பனனுக்கு நான் ஓர் வேலை போடமாட்டேன்” என்று சொன்னது போல் இந்த மந்திரிகளும் நிர்ணயம் செய்து கொண்டு தங்கள் தங்கள் மந்திரி வேலையைச் செய்வார்களானால் இந்த மந்திரிகள் பனகால் மந்திரியைவிட பொப்பிலி மந்திரியைவிட 500 பங்கு 1000 பங்கு மேம்பட்டவர்களாவார்கள் என்றும் அப்பொழுதுதான் இந்த மந்திரிகள் தங்கள் பின் சந்ததியார் மாத்திரமல்லாமல் மற்ற பார்ப்பனரல்லாதவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு இந்த மந்திரிகளின் பெயர்களை வைக்கவேண்டுமென்று கருதத்தக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் கூறுவோம். இந்த கருத்தை நாம் மந்திரிகளுக்கு மாத்திரம் சொல்லவரவில்லை. நம் தமிழ் நாட்டில் ஜில்லா போர்ட், முனிசிபாலிட்டி முதலாகிய ஸ்தாபனங்களில் இருப்பவர்கள் கூட, விபீஷணர்கள் ஆகி பதவி பெற்றவர்கள் கூட தங்கள்
சரீரத்தில் கலப்படமில்லாத ரத்த ஓட்டமுடையவர்களாய் இருந்தால் அவர்களும் இதே மாதிரி சங்கற்பம் செய்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால் தோழர் முத்தையா முதலியார் அவர்களைப் போல் தங்கள் பதவிபோவதாய் இருந்தால் சிறிதும் பயப்படாமல் உத்தியோகத்தை உதறித்தள்ளிவிட்டு வெளியேறிவிடலாம். உத்தியோகம் பெரிது என்று கருதி அதற்கு ஆக பார்ப்பனர்களுக்கு பிள்ளையாய் பிறந்ததுபோல் அவர்கள் சமூகத்துக்கே உழைப்பதை விட இந்தக் காரியத்துக்கு ஆக சர்வீசிலிருந்து டிஸ்மிஸ் ஆகி வெளியேறிவந்தால் கூட மேல் என்று கூறுவோம். ஏன் என்றால் இன்று பார்ப்பனர்கள் செய்யும் கொடுமை அவ்வளவு சகிக்க முடியாததாய் இருக்கிறது. தோழர்கள் ராஜகோபாலாச்சாரி, பிரகாசம், காளேஸ்வரராவ், பாஷியம், வரதாச்சாரி, சந்தானம், சீனிவாசன் ஆகிய பார்ப்பனர்கள், தோழர்கள் ராமநாதன், முத்துரங்கம், அண்ணாமலை, சுப்பையா போன்ற ஆட்களை கூட்டிக் கொண்டு ஊர் ஊராய்ச்சென்று பேசுவதென்ன? செய்வது என்ன? தேர்தல்
காலங்களில் அவர்கள் செய்தவை என்ன என்கின்ற காரியங்களைக் 27— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கவனித்தால் இவ்வளவு எழுதுவதுபோதும் இதன்படி செய்வதும் போதுமா என்பது விளங்கும். பார்ப்பனர்கள் எவ்வளவுதான் தனிப்பட்ட முறையிலும் தொழில் முறையிலும் நம்மிடம் பயன் பெற்று நன்றி காட்டக் கடமைப்பட்டிருந்தாலும் சமயம் நேர்ந்தவுடன் கழுத்தறுத்து விடுகிறார்கள் என்பதை யாரே மறுக்க முடியும்? பொப்பிலி, பெரிய ஜமீன்தார்கள், ராஜா சர் போன்ற பிரபுக்களும் பட்டக்காரர் போன்ற காட்டு ராஜாக்களும் பார்ப்பனர்களையே சகல காரியத்துக்கும் அமர்த்தி தங்கள் தங்கள் வீட்டு கல்யாணம், கருமாந்திரம் ஆகியவைகளுக்கெல்லாம் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி எவ்வளவோ அழுது வந்தும், அந்தப் பார்ப்பனர்களின் கல்யாணம், கருமாந்திரம், கல்நாட்டு - எட்டு எழவு ஆகியவைகளுக்கெல்லாம் பைபையாக பணம் அழுதும் வக்கீல் முறையில், டாக்டர் முறையில் வருஷத்துக்கு 1000, 10000, 100000 என்பதாகக் கொட்டிக் கொடுத்தும் சமயம் வந்தபோது எல்லோரும் அந்த பணத்தில் ஊறிப்பிறந்த பிள்ளைகள் உள்பட வம்சத்தோடு ஒன்று சேர்ந்து தலையில் கல்லைப்போட்டார்கள்; போடக் காத்திருக்கிறார்கள். என்றால் இனி எதற்கு ஆக இவர்கள் பார்ப்பனர்கள் விஷயத்தில் தயவு தாட்சண்யம் காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாருக்கு சரீரத்தின் தோல் சிறிது மொத்தம் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. அவருடைய செல்வத்தைப்பற்றி நமக்கு (சமதர்மவாதி என்கின்றவன் அல்லாத முறையில்) சிறிதும் பொறாமை கிடையாது. அவர் புத்தி சக்தி ஆகியவைகளைப் பற்றி நமக்கு எவ்வளவோ பாராட்டுதல் உண்டு. அவர் தனது சுயநலத்தை பிரதானமாய் கருதுகிறார் என்கிற விஷயத்தையும் இயற்கைவாதி என்கின்ற முறையில் ஒப்புக்கொள்வோம்
ஆனால் சுயமரியாதைக்காரன் என்கின்ற முறையில் ராஜா சர். அவர்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கத் தகுந்த உருவாகத்தான் மதிக்க வேண்டி இருக்கிறது. ஏன்? இந்தப் பார்ப்பனர்கள் - அவரிடம் பிடுங்கித்தின்று கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் - இன்றும் 1000, 10000 பெறும் பார்ப்பனர்கள், அவருக்கு செய்த கொடுமைகளைக் கண்டும் அதனால் பல தொல்லைகள் அடைந்த பின்பும் அவரது யுனிவர்சிட்டி காலேஜுக்கு தோழர் சீனிவாச சாஸ்திரியார் வைஸ்சான்சலர், அவர் மூன்று மாதம் ஊரில் இல்லாவிட்டால் அந்த ஸ்தானத்துக்கு தோழர் வெங்கிட்டராம சாஸ்திரி என்கின்ற மற்றொரு பார்ப்பனர், மறுபடி கனம் சாஸ்திரி வந்துவிட்டால் உடனே அவருக்கே கொடுப்பது, அண்ணாமலை யுனிவர்சிட்டி சிப்பந்திகளில் வாசல் கூட்டுபவன், கக்கூசுக்காரன் நீங்கலாக மற்றவர்கள் 100க்கு 90 பேர் பார்ப்பனர்களும் ஆஸ்டலிலும் பள்ளியிலும் உதவித்தொகை சலுகை ஆகியவைகள் பெரிதும் பார்ப்பனப் பிள்ளைகளுக்கும் கொடுப்பதோடு உபாத்தியாயர்களும்
குடி அரசு- 1937 (1) 278
100க்கு 97 பார்ப்பனர்களுக்கும் கொடுக்கப்பட்டால் ராஜா சர். குடும்பம் நன்றாய் இருக்க வேண்டும் என்று எந்த மடையன்தான் ஆசைப்பட முடியும் என்று கேட்கின்றோம்.அதுபோலவே பொப்பிலி ராஜாவும் இன்னமும் தனது ஜமீனில் 100க்கணக்கான பார்ப்பனர்களை வைத்துக்கொண்டிருக்கிறார் என்றால் இவருக்கு மந்திரி பதவி போனதற்காக மக்கள் பிரியாணி சாப்பிடமாட்டார்களா என்று கேட்கின்றோம். பட்டக்காரரும் உதைத்த காலுக்கு முத்தமிடுவது போல் பார்ப்பன வக்கீல் வீட்டுக்கே நடப்பாரானால் இவர் தோல்வியடைந்தது ஞாயம் என்பதோடு இனியும் தோல்வி அடைய ஆசைப்படமாட்டார்களா? எது எப்படியோ போனாலும் யார் எப்படி நடந்து கொண்டாலும் இப்போதுள்ள மந்திரிகள் தோழர் விஸ்வநாதசாஸ்திரிகள் சொன்னதுபோல் தங்களை எந்தக் கட்சிபேராலும் சொல்லிக் கொள்ளாமல் பார்ப்பன எதிரி மந்திரிகள் அதாவது Ant Brahmin Ministers (ஆண்டி பிராமின் மினிஸ்டர்ஸ்) என்று தைரியமாய் சொல்லிக் கொண்டு அதன்படியே வேலை செய்வார்களானால் அதாவது இனி நியமனம் செய்யும் எல்லா உத்தியோகம் கமிட்டி ஆகியவைகளுக்கும் பார்ப்பனர் 100-க்கு 3 வீதம் வந்து சேரும் வரை அவர்களை நியமிக்காமல் விட்டு விடும்படி பப்ளிக் சர்விஸ் கமிஷனுக்கு உத்திரவு போடுவார்களானால் “எவ்வளவு பாவம் செய்தாலும் ஒரு தரம் சிவா என்றால் எல்லாம் பஸ்மீகரமாய் போய்விடும்” என்பதுபோல் வேறு வழியில் இவர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் அப்பாவங்கள் மன்னிக்கப்பட்டு மக்களின் நன்றிக்கு பாத்திரமாவது திண்ணம் என்றும் மக்களின் மகிழ்ச்சியான “மோக்ஷம்” அடைய உரிமையுடையவர்களாகி விடுவார்கள் என்றும் கூறுவோம் வெளிப்படையாகப் பார்ப்பனர்கள் போருக்கு துணிந்துவிட்ட சேதியை தோழர் பாஷ்யம் அய்யங்கார் கடலூரில் பேசிய பேச்சிலிருந்தும் அதை “இந்து” “சுதேசமித்திரன் ஆதரித்திருப்பதிலிருந்தும் உணரலாம் இது ஏப்ரல் 17ந் தேதி “ஜனநாயகத்தில் இருக்கிறது
குடி அரசு - தலையங்கம் - 25.04.1937
279 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எதிர்பாராத அபாயம்
ஈரோடு முனிசிபல் வாரச் சந்தை நடைபெறும் பேட்டையில் 10 அடி அகலத்தில் 200 அடி நீளத்தில் சில்லறை வியாபாரிகளுக்காக ஓட்டுக் கொட்டகை போடுவதற்கான வேலைகள் ஆரம்பித்து வேலை நடந்து கொண்டிருந்ததானது 21-4-37ந்தேதி தூண் நிறுத்தி வெட்டுக்கை போட்டு ரீப்பர் அடித்து ஓடுகள் மேலேற்றி மேயாமல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 22-4-37ந் தேதி சந்தை கூட வேண்டிய நாள் ஆனதால் அன்று வழக்கம் போல் சந்தை கூடியது
அன்று மாலை 5 மணிக்குப் பெரிய காற்றும் மழையும் வந்ததால் மேல் குறிப்பிட்ட சரிவர முடிவடையாத கொட்டகையின் கீழ் ஜனங்கள் போய் தங்கினார்கள். பூரா வேலை முடியாமல் ஒருபுறம் ஓடு பாரம் ஏற்றப்பட்டு மறுபுறம் பாரமில்லாமல் இருந்த கொட்டகை காற்றினால்
சாய்ந்து விட்டது. அது சமயம் அதற்குள் இருந்த ஜனங்கள் அதில் அகப்பட்டுக்கொண்டார்கள். இதன் பயனாய் சுமார் 150 பேர்களுக்கு மேல் பலத்த காயமடைய வேண்டியதாகிவிட்டது. காயமடைந்தவர்களுக்கு முனிசிபல் கமிஷனரும், பொதுஜனங்களும், இவ்வூரில் சர்க்கஸ் நடத்திவந்த சர்க்கஸ்காரர்களும், மூனிசிப்பல் சிப்பந்திகளும், போலீஸ்காரர்களும், ரெவரண்ட் எச்.எ. பாப்பிலி அவர்களும் உதவி செய்து அவர்களை கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். அங்கு காயமடைந்தவர்களுக்கு கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரி டாக்டரும், மற்றும் ஈரோட்டிலுள்ள சில சொந்த டாக்டர்களும் வேண்டிய சிகிச்சை செய்தார்கள். காயமடைந்தவர்களில் சுமார் 15 பேர்கள் இறந்து விட்டார்கள்.
இந்த சம்பவத்தை காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பத்திரிகைகளும் தப்பும் தவறுமாய் விஷமப்பிரசாரம் செய்து எலக்ஷனுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் இழிதகைமையான காரியம் செய்கிறார்கள். உதாரணமாக “சுதேசமித்திரன்” 23ந்தேதி பத்திரிகையில் நமது நிருபர் என்னும் பேரால் இழிவான பொய்கள் கூறப்பட்டிருக்கின்றன.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது:-
“200 அடி நீளத்துக்கு ஓட்டுக்கொட்டகை போட்டு ஒரு வாரம்தான் ஆகின்றது என்றும், “20 பேர்கள் அங்கேயே இறந்து விட்டார்கள்” என்றும், “கொட்டகை விழுந்ததற்கு காரணம் தெரியவில்லை" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது
குடி அரசு- 1937 (1) 280
உண்மையில் கொட்டகை வேலை முடியாமல் இருந்திருக்கிறது மழை காற்றுக்கு பயந்து மக்கள் அவசரத்தில் அதில் போய் ஒண்டி அனாமத்தாய் நிற்கும் தூண்களில் சாய்ந்ததும் கூரையின் மேல் ஒரு பக்கம் ஓடுகள் குவிக்கப்பட்டு மறு பக்கம் பாரமில்லாமல் இருந்தது காற்றுக்கு அனுகூலமாய் மக்கள் தூண்களில் சாய்ந்து இருந்ததும் சேர்த்து சுலபத்தில் கொட்டகையை சாயும்படி செய்துவிட்டதால் ஓடு குவிக்கப்பட்டிருந்த கூரைக்கு கீழ் இருந்தவர்களுக்கு பலமான அடியும் ஆபத்தும் ஏற்பட்டன. இது பரிதபிக்கத்தக்க விஷயம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆனால் கொட்டகை முடிந்தது ஒருவாரமாயிற்று என்று எழுதினால். இது பலவீனமாகும். கொட்டகையால் ஏற்பட்டது என்று கருதவும் முனிசிபல் சிப்பந்திகள், கண்டிறாக்டர்கள், நிர்வாகிகள் ஆகியவர்களை குறை கூறவும் இடம் ஏற்பட கூடியதாய் இருக்கிறதா இல்லையா என்று கேட்கிறோம். இந்த மாதிரி விஷமப் பிரசாரத்தால் பாமர மக்களை ஏய்க்கும் இழி குணமானது ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இதுவரை அடிப்படையில் ஏமாற்றமும் தோல்வியுமே கொடுத்து வந்திருப்பதை ஞாபக மூட்டி இதை முடிக்கிறோம்.
நிற்க, அடிபட்டவர்களுக்கு கமிஷனர், சேர்மென், கவுன்சிலர்கள் ஆகியவர்களோடு பொதுஜன தொண்டர்களும் டாக்டரும் மற்றும் அதிகாரிகளும் மிஷனரிகளும் தங்களால் கூடிய உதவி செய்து ஆதரித்து வருகிறார்கள். பார்ப்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் சில டாக்டர்களும் இதையே ஒரு சாக்காக வைத்து ஆஸ்பத்திரியில் போய் எலக்ஷன் பிரசாரம் செய்ததால் போலீசு அதிகாரிகளும் டாக்டர்களும் மக்களையும், காங்கிரஸ்காரர்களையும் தாராளமாய் அனுமதித்து வந்ததை நிறுத்தி கண்டிப்பு செய்து விட்டார்கள்.
முனிசிபல் கெளன்சிலர் தோழர் எஸ்.ஆர். கண்ணம்மாள் அவர்களும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அடிபட்டவர்களைப் பார்த்துவிட்டு வந்தார்.
குடி அரசு - செய்திக் கட்டுரை - 25.04.1937
Bl வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கட்சி மாறுதல்
இப்போது பலர் கட்சிவிட்டு கட்சி மாறுகிறார்கள். அதிலும் பல கட்சிகளை விட்டு காங்கிரசில் பலர் வேகமாய்ச் சேருகிறார்கள். உத்தியோகம் பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்தால்தான் கிடைக்கும் என்கின்ற எண்ணத்தை சிலருக்கு சமீபத்தில் நடந்த முட்டாள் தேர்தல் காட்டிவிட்டால் அவசரத்தில் யார் யாருக்குப் பதவிகள் வேண்டுமோ அவர்களும் பதவிகள் இல்லாவிட்டால் யார் யாருக்கு மதிப்பும் மரியாதையும் இருக்காதோ அவர்களும் வாழ்வுக்கும் வேறு யோக்கியமான வழியில்லாதவர்களும் இப்போது வேகமாகக் காங்கிரசில் சேர்ந்து வருகிறார்கள். சிலர் பட்டத்தையும் விடுகிறார்கள். தரித்திரம் வந்த பல குடும்பங்கள் தங்களது உயர்ந்த விலையுள்ள பட்டுச் சேலைகளை எவ்வளவு புதிதாயும்
நல்லதாயும் இருந்தாலும் பகுதி விலைக்கும் கால் விலைக்கும் விற்று
குடும்பம் நடத்தத் துணிவது போல் தங்கள் பட்டங்களை இப்போது அவசர: விலைக்கு விற்று வருகிறார்கள். இச்செய்கை அவரவர்களின் தரித்திர நிலைமையைக் காட்டுகிறதே தவிர இதனால் எவ்வித உயர்குணமும் ஏற்பட்டு விடவில்லை.
தோழர் கீதாராம ரெட்டியார் ராவ்பகதூர் பட்டத்தை விட்டார். எப்போது விட்டார்? போலீசார் காங்கிரஸ்காரரை அடித்த போதா? உப்புக்காய்ச்சினவர்களை புளியமாரால் விளாசி புத்தி கற்பித்த போதா? என்றால் அல்லவே அல்ல. பின்னை எப்போது என்றால் சர்க்கார் தயவில், நாமினேஷன் பலத்தில் சர்க்கார் காலில் விழுந்து சர்க்கார் இஷ்டப்படி தாளம் போட்டு ஜில்லா போர்டு தலைவராகி அஜீரணம் உண்டாகும்படி நன்றாக வயற்றை நிரப்பிக்கொண்டு, தேவஸ்தான போர்டு கமிஷனராகி மாதம் 1000 ரூபாய் வீதம் (படியும் சேர்ந்து) 5 வருஷம் கை நீட்டி வாங்கி, பிறகு மாதம் 1500 ரூபாய் வீதம் திருப்பதி தேவஸ்தான கமிஷனராக பல வருஷம் இருந்து, மறுபடியும் வேலை கொடுக்கவில்லை. என்ற பின் ஜஸ்டிஸ் கட்சி மீது கோபம் வந்து சர்க்கார்மீது “வெறுப்புத்” தோன்றி “தேச பக்தி” ஏற்பட்டு பட்டம் விட்டு காங்கிரசில் சேர்ந்தார் என்றால் இவரது கட்சி மாறுதலிலும் பட்டம் விட்டதிலும் எவ்வளவு நாணையமும் யோக்கியப் பொறுப்பும் இருந்தது - இருக்கிறது என்பதை இனியும் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம்.
குடி அரசு- 1937 (1) 28
&
மற்றொரு ரெட்டியார் அவரைவிடப் பெரியவர். ஏனென்றால் முன் சொன்னவர் ராவ்பகதூர் இவர் திவான்பகதூர் அல்லவா? அவர். யாரென்றால் தோழர் எம்.கே. ரெட்டியார் ஆவார். இவர் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து சுப்பராயன் கட்சியாகி, முழுசுயமரியாதைக்காரர் ஆகி “சாமியை பூட்ஸ் காலால் உதைப்பேன்” என்று முழக்கி மறுபடியும் ஆஸ்திகராகி என்டோமெண்டு போர்டுக்கு விண்ணப்பம் போட்டு தனக்கு சாமி நம்பிக்கை இருப்பதாக மகாநாடுகளுக்கு தந்திகொடுத்து மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் புகுந்து பிறகு '“எதிரி”யாகிய சூனாம்பேட்டையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மற்றும் என்னென்னமோ செய்து பார்த்து கடசி வரை தனக்கு ஜில்லாபோர்டு கிடையாது என்று கருதியவுடன். செங்கற்பட்டு போர்டை இரண்டாகப் பிரிக்கும்படி பொப்பிலி கோவிலுக்கு காவடிதூக்கி நடந்து ஒன்றும் முடியாமல் போனபிறகு கடைசியாக சன்யாசத்துக்கு முதல்படியான காங்கிரசில் சேர்ந்து தேசபக்தராகி பட்டத்தை விட்டு “கடவுள் இருக்குமிடம் காங்கிரசுதான்'' என்று கண்டு பிடித்துவெளிப்படுத்திவிட்டார்.
மற்றொரு ரெட்டியார் வேண்டுமானால் மந்திரி ரெட்டியாரைத் தான் சொல்லவேண்டும். அவர் இப்படி இல்லை. துறவி ஆகி விட்டார். மந்திரி ரெட்டியார் பப்ளிக் பிராசிக்யூட்டராகி ஜில்லா போர்டு பிரசிடெண்டாகி மறுபடி கிடைக்காதென்றவுடன் முழுத் துறவியாகி அஞ்ஞாத வாசத்துக்குப் போய்விட்டார். இவரது ஜில்லாவானது மிகவும் ''மேன்மைபெற்ற நன்றி விஸ்வாசமுள்ள'' ஜில்லாவாகும். அந்த ஜில்லாக்காரருக்கு ஜஸ்டிஸ் கட்சி மீது கோபம் வரவும் காங்கிரசில் சேரவும் வேண்டியது மிகவும் அவசியமேயாகும். ஏனெனில் திருநெல்வேலிக்காரருக்கு 2 மந்திரி வேலை, 2 தேவஸ்தான போர்ட் கமிஷனர் வேலை, 1 ஹைகோர்ட்டு ஜட்ஜு வேலை, பல முன்சீப்பு, பல ஜட்ஜிகள், பல டிப்டி கலெக்ட்டர்கள், பல தாசில், பல மேஜிஸ்திரேட் மாகாணமெல்லாம் திருநெல்வேலியே கண் உருத்தும்படியான அவ்வளவு உத்தியோகம், பதவி, பட்டம், பண வருவாய், சலுகை ஆகியவைகள் பெற்ற ஜில்லா இது. தான் கடமையைச் செய்ய வேண்டும் என்கிற முறையில் தளவாய் அவர்கள் காங்கிரசில் சேர்ந்தார். இனியும் சேரப்போகிறவர்கள் இதுபோன்றவர்களே சிலர் இருக்கிறார்கள் என்றாலும் தோழர் டானியல் தாமஸ் சேர்ந்து விட்டார். இவராலேயே அந்த ஜில்லா பாழடைந்தது இவருக்கு சேர்மென் ஜில்லாபோர்டு வைஸ்பிரசிடெண்ட், கல்வி கமிட்டி பிரசிடெண்ட் இவ்வளவும் கட்சி பேரால் அனுபவித்தும் இப்போது கட்சி கசந்து விட்டது. மற்ற இடங்களிலும் இந்த மோஸ்தர் சிலர் இருக்கக்கூடும் இதைப்பற்றி நாம் வருந்துவதா மகிழ்ச்சி அடைவதா என்பது ஒரு பிரச்சினைதான். நாம் மகிழ்ச்சி அடையவேண்டியதுதான் கிரமம் என்பது நமது அபிப்பிராயம். யார் யார் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்ததாலும் அவர்கள்
283 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பட்டம், பதவி பெற்று நிர்வாகம் நடத்தியதாலும் கட்சிக்கு கெட்ட பேரும் தேர்தல்களில் தோல்வியும் ஏற்படுவதற்கு காரணஸ்தர்களாய் இருந்தார்களோ அவர்களை நாம் தள்ளுவதற்கு முடியாமல் இருக்கிற காலத்தில் அவர்களாக நம்மை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால். ஜஸ்டிஸ்கட்சி சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? மற்றும் நன்மை என்பதற்கு நம்மைப் பிடித்த “பொல்லாத கிரகங்கள்” மாறி காங்கிரசைப்பற்றுகின்றன என்றால் நாம் இரண்டு விதத்தில் மகிழ்ச்சியடையக் கடமைப்பட்டிருக்கிறோம் என்னவென்றால் ஒன்று நம்மை விட்டுப்பிரிந்தது, மற்றொன்று இந்த உபத்திரவங்கள் நம் எதிரிகளைப் போய் பற்றினது. இன்னும் சிலர் நம்மைவிட்டுப் போக வேண்டியவர்கள் நமக்குள் இருக்கிறார்கள். அவர்களும் போய்விடுவார்களேயானால் ஜஸ்டிஸ் கட்சிக்கு மிகவும் நன்மை செய்தவர்களாவதோடு கட்சியின் நன்றிக்கும் பாத்திரமானவர்களாவார்கள். மற்றொரு விஷயம் என்னவென்றால் இதுவரை நாம் விசனப்படத்தக்கவர்கள் யாரும் காங்கிரசுக்கு போய்சேரவில்லை. ஆதலால் இதே சமயத்தில் காங்கிரசுக்கு ஒரு வழியில் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் அதாவது இம்மாதிரியான குடியிருந்த வீட்டுக்கு தீ வைத்துக் கொண்டிருக்கும் குணமுள்ள ஆட்களுக்கு ஒரு போக்கிடமில்லா விட்டால் சதா ஒரே வீடு வெந்து கொண்டே இருக்கும். ஆகையால் அப்படிப்பட்டவர்கள் வேறு வீட்டுக்கும் போக சவுகரியமாயிருந்தால் பழய வீடுகள் வெந்தது போக மீதியாவது வேகாமல் இருக்கும். ஆகையால் இப்படிப்பட்ட ஆட்களுக்குப் புகலிடமாய் காங்கிரஸ் இருப்பதுபற்றி இதற்கு ஆகவும் மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்த வேண்டியது கடமையாகும். எனவே இன்றைக்கு காங்கிரசில் அடிப்படி முதல் தலைப்படிவரையில் இப்படிப்பட்ட ஆட்களே கூடி இருப்பதானது மற்றக் கட்சிகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் செய்தது நன்மை என்றுதான். சொல்லவேண்டும். ஆகவே இன்னும் சிலரும் உடனே செல்வார்களாக,
குடி அரசு - கட்டுரை - 25.04.1937
குடி அரசு- 1937 (1) 284
அனாமத் மந்திரிகள் வேலைத் திட்டம்
தற்கால மந்திரி சபையை நாம் அனாமத் மந்திரி சபை என்று
ஏன் சொல்லுகிறோம் என்பது வாசகர்கள் அறிந்ததே யாகும். ஏனெனில் இவர்களுக்கு ஆயுள் இவ்வளவு என்று குறிக்கப்படவில்லை. மேலும் இவர்கள் பொது ஜனங்களின் பொது நன்மைகள் என்று பொதுவாய் சொல்லப்படுபவைகளைத் தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட எந்த கொள்கையையோ ஏற்கனவே உள்ள எந்தக் ௧௯9 சார்பையோ உடையவர்கள். அல்ல. தாங்களாகவே ஒரு நெருக்கடியை சமாளிக்க ஒப்புக்கொண்டவர்கள் என்பதைத் தவிர எவ்வித வேறு கவலைகொண்டும் நியாயம் கொண்டும் அப்பதவிகளை ஒப்புக்கொண்டவர்களும் அல்ல. அதோடு கவர்னர் பிரபு எந்த நிமிஷத்தில் 6 பேர்களையும் கூப்பிட்டு ரைட் எபவுட்டர்ன் மார்ச்
- (பின்னால் பக்கம் திரும்பி நட) என்றால் பேசாமல் வெளியில் நடக்க வேண்டியவர்களே. ஆதலால் என்ன செய்யவேண்டும் என்பதற்கு
நிர்ப்பந்தம் இல்லாமல் அனாமத்தாய் இருந்தாலும் இம்மந்திரிகளுக்கு பொது நாணையத்தை உத்தேசித்து பொறுப்பு இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இவர்கள் இஷ்டப்பட்டால் இவர்களால் நன்மையான காரியம் எதுவும் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட முடியாது. இந்த மந்திரிகள் சாமார்த்தியசாலிகளாய் இருந்தால் க்ஷி முறையில் செய்யும் காரியங்களை விட தனிப்பட்ட முறையில் பல நன்மைகளைச் செய்யவும் கூடும் என்றும் சொல்லலாம்
இன்றைய அனாமத் மந்திரிகள் அனேகர் தனிப்பட்ட முறையில் தகுதியுடையவர்களும் மிக்க கெட்டிக்காரர்களும் அனுபவமுள்ளவர்களும் ஆவார்கள் என்பதை அவர்கள் எதிரிகளும் மறுக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் தனிப்பட்ட தன்மையில் ஏற்றுக்கொண்ட நிருவாகத்தில் நல்ல காரியங்களைச் செய்து பொது மக்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்று கருதுவதும் இயற்கையேயாகும். இந்த முறையில் இந்தியா பூராவும் பல மந்திரிகள் அதாவது மெஜாரிட்டி கட்சியாரால் தாங்களாகவே மந்திரியான மந்திரிகளைப் பார்க்கிலும் சர்க்காரால் மைனாரிட்டியில் இருந்து பொறுக்கி எடுத்து தற்காலிகமாக நியமிக்கப்பட்ட மந்திரிகள் பல நல்ல காரியங்களை செய்ய திட்டம் போடுகிறார்கள், போட்டும்
288 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கொண்டார்கள். இத்திட்டங்கள் முடியுமோ முடியாதோ என்பது ஒருபுறமிருந்தாலும் தைரியமாக திட்டம்போட்டுக் கொண்டு காரியத்தில் செய்ய முன்வந்திருப்பது பாராட்டத்தக்கதேயாகும்
பம்பாய் மந்திரிகள் சாவுவரி போட்டு பணக்காரனிடம் பணம் வசூலித்து ஏழை வரிகளைக் குறைத்து பல நல்ல காரியம் செய்ய
திட்டம் போட்டு விட்டார்கள். இது நடைபெற்றால் இந்தியாவுக்கு ஒரு பெரிய நன்மை ஏற்பட்டதாகும்
சென்னை மந்திரிகள் நிலவரியில் 100-க்கு 25 வீதம் குறைக்க
தீர்மானித்துக் கொண்டார்கள்.
2. மறு பைசலில் வரி உயர்த்தப்படுவதையும் நிறுத்த முடிவு செய்து
கொண்டார்கள்.
3. கிராம விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாய் உதவி கடன் பளுவை
குறைக்கவும்,
4. மதுபான விருத்தியை தடுக்கவும் சிறு வயதுடையவர்கள் பழகாமல் தடுக்கவும் பொது சுகாதார வசதி செய்யவும்,
5. கிராமங்கள் பூராவுக்கும் கட்டாய இலவசக் கல்வி பரப்பவும்,
6. கல்வி முறையில் திருத்தம் செய்யவும்,
7. விவசாய சப் கமிட்டியார் ஏற்படுத்திய 5 ஆண்டுத் திட்டங்களை நிறைவேற்றி வைக்கவும்,
8. கால்நடை ஆஸ்பத்திரிகள் அதிகப்படுத்தி விவசாயிகளுக்கு நன்மை செய்யவும்,
9. விவசாய பொருள் உற்பத்தியை ஐக்கிய சங்கங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும்,
10. விவசாயத்துக்கு அனுகூலமான நீர்ப்பாசன வசதிகள் செய்யவும்,
11. தொழில் சாலைகள் அதிகப்படுத்தவும்,
12. மின்சார சக்தியை நாடெங்கும் பரப்பவும்,
13. கிராம சீர்திருத்தத்திற்கு இன்னும் அதிகப் பணம் ஒதுக்கி வைக்கவும்,
14. மேச்சல், விறகு செளகரியம் முதலிய காட்டு வசதிகளும் செய்வது
என்றும்,
15. உத்தியோகஸ்தர்கள் சம்பள விகிதங்களைக் குறைக்கவும்,
குடி அரசு- 1937 (1) 286
துணிந்து தீர்மானித்து திட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த மந்திரிகள் போட்ட திட்டங்களில் ஏதாவது குறைசொல்ல வேண்டுமானால் பொதுவுடமை, சமதர்மம், பூரண சுயேச்சை, ராமராஜ்யம், வெள்ளைக்காரர்களை மூட்டை கட்டிக்கொள்ளக் கூட நேரமில்லாமல் விரட்டுவது என்பன போன்ற இன்று அனுபவ சாத்தியமற்றதும் முட்டாள். தனமானதும் அர்த்தமில்லாமல் பொறுப்பில்லாமல் வேண்டுமென்றே ஏமாற்றக் கூடிய புரட்டுத்தனமானதுமான தீர்மானங்கள் எதையும் போடவில்லை என்பதாகும். அவைகளை ஜவஹூர்லாலுக்கும் காந்திக்கும்
சந்தியமூர்த்திக்கும் ஆச்சாரிக்கும் அவர் போன்ற ஜாலவித்தைக்காரர்களுக்கு விட்டுவிட்டு இன்றைய மந்திரிகள் போட்டிருப்பதையாவது இந்த மந்திரிகள் செய்கின்றார்களா என்று பார்ப்போம். முதலாவதாக இந்த திட்டங்கள் நடக்கிறதோ இல்லையோ என்பது ஒருபுறமிருந்தாலும் இவைகளை காதால் கேட்ட மாத்திரத்திலேயே காங்கிரஸ்காரர்கள் காலோடு. மலபாதைக்கு இருந்து கொண்டார்கள். எக்காரணம் கொண்டாவது இத்திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்க சகல முட்டுக் கட்டையையும் போட ஆரம்பித்து விட்டார்கள்.
காரணம் என்னவென்றால் புது மந்திரிகள் இவைகளைச் செய்துவிட்டால் தங்கள் கதி என்ன ஆவது என்கிற பயமேயாகும் இதுவரை காங்கிரஸ்காரர்கள் எந்தக் காரியமும் செய்ய விடாமல் தாங்களும் ஏதும் செய்யாமல் வெறும் குழப்பத்திலும் குறும்பிலும்
காலித்தனத்திலுமே கவனத்தை செலுத்தி மக்களுக்கு தொல்லை கொடுத்து
வந்தார்கள். அவர்கள் பேச்சுகளும் முன்னுக்குப்பின் முரணானவைகளாகவே இருந்து வந்தன. வேறு கட்சியாரை - ஜஸ்டிஸ் கட்சியார் போன்றவர்களையும் இவ்விஷயங்களை செய்வதற்கு பூரண வசதி இல்லாமல் இரட்டையாட்சி தடைப்படுத்தி வந்தது. இப்போது இரட்டை ஆட்சி ஒழிந்து பணப்பை ஒரு அளவுக்கு மந்திரிகள் கையில் கிடைத்திருக்கிறது. சட்ட புது சட்டப்படி சபை அடிக்கடி கூட்டப்படுவதன் மூலம் காங்கிரஸ்காரர்கள் தொல்லையும் காலித்தனமும் நேரத்தையும் பணத்தையும் பாழ் செய்யும் அயோக்கியத்தனமும் கொஞ்ச காலத்துக்கு ஆவது நடைபெறுவதற்கில்லாமல் இந்தியா மந்திரியால் ஒழிக்கப்பட்டு விட்டது
சர்க்காரார்களும் தங்களின் யோக்கியதையே நிலைநிறுத்தி
சீர்திருத்த சட்டத்தின் நாணயத்தை காப்பாற்ற சில விஷயங்களில் மந்திரிகளுக்கு இணங்கி ஆகவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்கிறது மந்திரிகளும் தங்கள் சுயமரியாதையை ஞாபகப்படுத்திக்கொண்டு கவர்னர்கள் தங்களுக்கு இணங்கி வராவிட்டால் ராஜினாமா கொடுத்து விடுகிறேன் என்று மிரட்டவும் கூடும். ஆகையால் இந்த நல்ல வசதியில் பல
287 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நன்மைகள் ஏற்பட இடமிருக்கிறது என்றே கருதுகிறோம். எல்லாவற்றையும் விட ஒரு நல்ல காரியம் என்னவென்றால் காங்கிரஸ்காரர்கள் தொல்லை விளைவிப்பவர்களும் காலித்தனம் செய்கின்றவர்களுமே ஒழிய யோக்கியமான - நிர்மாணமான காரியம் செய்யும் சக்தியோ ஒரு நல்ல வேலைத் திட்டமோ அரசியல் ஞானமோ உடையவர்கள் அல்ல என்பதை பட்டப்பகல் போல் வெளியாக்கப்பட்டு விட்டது என்பதேயாகும்.
ஆகையால் இது சமயம் பொதுமக்கள் ஏமாற்றமடைவதற்கு இல்லாமல் பொறுமையோடு கவனித்து வரத்தக்க சமயம் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லுவோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.04.1937
குடி அரசு- 1937 (1) 288
ஆச்சாரியாருக்கு பைத்தியம்
ஏமாற்ற மடைந்தவர்கள், சொத்தை இழந்தவர்கள் முதலியவர்களுக்கும்
புத்தி சுவாதீனமற்று பைத்தியம் பிடிப்பது வழக்கம். அதிக புத்திசாலி என்பவர்களுக்கும் கூறுகெட்டு மூளை கலங்கி பைத்தியம் பிடிப்பதும் வழக்கம் என்று உடல்கூறு வல்லவர்கள் சொல்லுவதுண்டு. நமது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அதை மெய்ப்பிக்கிறார். தான் எதிர்பார்த்து திட்டம் போட்டு வீடு முதலானவைகள் வாடகைக்கு அமர்த்தத் தெரிந்தெடுத்து “அடுத்த நடை கவர்னர் வீட்டுக்குப் போகவேண்டியதுதான். பாக்கி, வரும்போது மந்திரி தாக்கீது பெற்று வரப்போகிறோம்'” என்று மனப்பால் குடித்து ஆசையோடு - பேராசையோடு எதிர்பார்த்திருந்த மந்திரி வேலை கிடைக்கவில்லை என்று திடீரென்று ஏற்பட்டவுடன் மூளை கலங்கி கண்டபடி உளற ஆரம்பித்துவிட்டார். இந்த நிலை மாறாதிருக்குமானால் கூடிய சீக்கிரம் அவரை பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் பார்க்க நேரும் என்றே கருதுகிறோம்.
அவரது வாயும் நாக்கும் அறிஞர்கள் மிகவும் வெறுக்கத்தகுந்த தன்மைக்கு வந்து விட்டன. சத்தியமூர்த்தி, குப்புசாமி, உபயதுல்லா நிலைக்கு இறங்கிவிட்டார். இதன் காரணம் எல்லாம் ராமாயணக் கதையில் ராமனின் அயோக்கியத்தனத்தை வாலி கண்டித்ததாகக் குறிப்பிடும் சந்தர்ப்பத்தில் “உன் பெண்ஜாதியை எவனோ அடித்துக்கொண்டு போன காரணத்தால் உன் புத்தி இப்படிக் கெட்டுப் போய் விட்டதா என்ன ராமா?” என்று வாலி கேட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.
அதாவது ''ஓவியத்தெழுதவொண்ணா உருவத்தை உடைய அய்யா... தேவியைப் பிரிந்த பின்பு திகைத்தனை போலும் செய்கை” என்று ஒரு இடம் இருக்கிறது. அதுபோல் எவ்வளவோ புத்தி உள்ளவர் என்று விளம்பரம் செய்யப்பட்ட அவர் - நம் போன்றவர்களாலும் கருதப்பட்ட அவர் மந்திரி வேலை கிடைப்பதற்கில்லாமல் போனவுடன் அவரது வாயில் கழுதை, குதிரை, விளக்குமாறு என்ற அற்ப ஜெந்துக்களும் இழிந்த சாமான்களும் ஆகியவைகளையே வெளியாக்கவும் ஜெபிக்கப்படவும் ஏற்பட்டு விட்டது. எவ்வளவு இடித்து உரைத்தும் நல்ல புத்திவர முடியாமல் போய்விட்டது. இவ்விஷயத்தில் சத்தியமூர்த்தியாரையும், குப்புசாமியாரையும் மேன்மக்களாக்கிவிட்டார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது
29 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இந்த ஆத்திரம் ஏன் - வருவானேன்? காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி வகிக்கவில்லை என்று ஏற்பட்டு விட்டால் பிரிட்டிஷ் அரசாங்கம் மூட்டை கட்டிக்கொண்டு சீமைக்குக் கப்பலேறிவிடும் என்றோ, ஆச்சாரியார். காலில் சக்கரவர்த்தி விழுந்து அழுவார் என்றோ காங்கிரஸ்காரர்கள் நினைத்திருந்தால் அதுவும் ஆச்சாரியார் போன்றவர்கள் நினைத்திருந்தால்.
அதற்குயார் முட்டாள்கள் என்பதைப் பொது ஜனங்களே சிந்தித்துப் பார்க்கட்டும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய்ப் போய் இப்படி ஏன். உளறுகிறார்? தான் செய்த தப்பிதத்தை மறைக்கவும் மற்றுமொருமுறை பொது ஜனங்களை மூடர்களாக்கவும் அல்லாமல் வேறு கருத்து என்ன என்று கேட்கின்றோம்
தன் கட்சியில் இன்று இருக்கும் மூடர்கள் யாருக்காவது நல்ல
புத்தி வந்து கட்சியை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்கின்ற பயம் அல்லாமல் வேறு இல்லை. தோழர்கள் ராமலிங்கம் செட்டியார், சுப்பராயன் போன்றவர்கள் எல்லாம் ஆச்சாரியார் பேச்சைக் கேட்டு மூக்கையும் வாலையும் இழந்து விட்டார்கள். ஒவ்வொரு ஊரிலும் சிலருக்குப் பொய் நம்பிக்கை கொடுத்துத் தங்கள் கட்சியில் சேர்த்து அவர்களது பிற்கால வாழ்வையே பாழாக்கி விட்டார். இவர்கள் எல்லோருக்கும் எங்கு நல்ல புத்தி வந்து காங்கிரசில் இருந்து விலகிவிடுவார்களோ என்கின்ற பயத்தின்மீது முட்டாள்தனம் என்னும் நாடியை சரி நிறுத்த மூன்று பார்ப்பனர்களும் அதாவது ஆச்சாரியார், பிரகாசம், காளேஸ்வர ராவ் ஆகியவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்கிறார்கள். ஆங்காங்கு உள்ள பார்ப்பன வக்கீல்களைக் கையாளாக வைத்துக்கொண்டு கட்டுப்பாடு செய்து வருகிறார்கள். தங்கள் கூலிகளையும் வக்கீல் கூட்டத்தையும் ஒன்றுபடுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுஜனங்களையும் சர்க்காரையும் ஏமாற்றப்பார்க்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, பார்ப்பனர்கள் முன்னிலும் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் பணம் சேர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் வாதி பாஷியம் அய்யங்காரும் 'சுதேசமித்திரனு'ம் இந்துவும் தலையங்கம் எழுதுகிறார்கள். இது இனி தமிழ் நாட்டில் பலிக்குமா என்பது சுலபத்தில் நினைக்க முடியாத காரியம் என்றுதான் சொல்லவேண்டும்.
இனி 6 மாதத்தில் தேர்தல் வந்தால் ஒரு சமயம் மறுபடியும் கொஞ்சமாவது மெஜாரட்டி பெறக்கூடும் என்று கருதியே மறுபடியும் உடனே மறு எலக்ஷன் நடைபெறவேண்டுமென்று கேட்கின்றார். அந்தப்படி வருவது சந்தேகம். ஒரு வருஷத்தில் தேர்தல் வரலாம். அதிலும் தேசம் இன்று போலவே மடத்தனமாயிருக்கும் என்று கருதிவிட முடியாது. அப்படியே கருதினாலும் காங்கிரஸ்காரர்கள் நிலை இன்றைய நிலைமையை விட வேறு என்ன மாறுதலை எதிர்பார்க்க முடியும்?
குடி அரசு- 1937 (1) 290
வீணாக “வாய்க் கொழுப்பு சீலையில் வடிந்தது” என்பதுபோல் அனாவசியமான பொய் வீம்பு, ஏமாற்று வீம்பு பேசி ஒரு புறமும் கோழைத்தனம் ஒருபுறமும் சென்னை கவர்னரை நம்பி ஏமாந்தது ஒருபுறமுமாக ஏற்பட்டு மந்திரி பதவி வாய்க்கெட்டாமல் போனால்
எதிர் மந்திரிகளை நாய், கழுதை, துடைப்பக்கட்டை விளக்குமாறு என்று பேசுவதால் நிலமை மாறிவிடுமா என்று கேட்கின்றோம்
சென்ற வாரம் நாம் இம்மாதிரி பேச்சைக் கண்டித்து எழுதியதற்காக இவ்வாரம் கோவை பேச்சில் ஆச்சாரியார் அதற்கு சமாதானமாக தான் உதாரணம் கூற அப்படிச் சொன்னாராம். தான் எப்போதும் உதாரணம் கூறித்தான் விளக்குவாராம். அப்படியானால் காந்தியையும், அவருக்குப் பொய் நம்பிக்கை கொடுத்த கவர்னரையும் அவர்கள் செய்கையையும் அவ்வுதாரணங்கள் கொண்டு விளக்குவதுதானே என்று கேட்கின்றோம்
ஏனெனில் இவ்வளவு கேவலமாகப் பேசுவது தன் சுபாவம் என்று பேசுகிற தோழர் ராஜகோபாலாச்சாரியார் கவர்னரைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. சர்க்காரையும் கழுதை, குதிரை, துடைப்பக்கட்டை என்பவைகளுக்கு உதாரணம் காட்டி பேசுவதில்லை. ஒப்புக்கொண்ட மந்திரிகள் மீது பாய்கிறார். இந்தப் பாய்ச்சலே அந்த மந்திரிகளை மூன்று வருஷ மந்திரிகளாகவும் முடியாவிட்டால் வேறு பல பெரிய பதவிகள் பெறவும் உதவி செய்யப்போகின்றது. வீணாக ஆச்சாரியார் குழவிக் கல்லை எடுத்து இடித்துக்கொண்டு வயிற்றுவலி உண்டாக்கிக் கொள்ளப்போகிறார் என்பதல்லாமல் ஒரு சிறு தூசிப்பயன். விளையப் போவதில்லை என்பதோடு பொது ஜனங்களுக்கு பார்ப்பனர்மீது இனியும் ஆத்திரம் உண்டாகும்படியான பயன் விளைவிப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று எச்சரிக்கை செய்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 25.04.1937
201 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
துறையூரில் சுயமரியாதைப் பிரசாரம்
கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்
எந்தவிதமான கேள்விக்கும் பதில் சொல்லி பொதுமக்களை திருப்திப்படுத்தத்தான் வந்திருக்கிறோம் என்றும், காங்கிரஸ்காரர்களைப் போன்று பதில் சொல்லாது கூட்டத்தை கலைத்துவிட்டுப் போக வரவில்லை என்றும், தேசபக்தி என்பது தற்கால காங்கிரஸ் நவீன. பக்தர்களுக்கு மட்டும் சொந்தமல்லவென்றும், ராஜகோபாலாச்சாரியார்
கூட்டம் நாளைய தினம் சுயராஜ்யம் வருகிறது என்றால் நான் இன்றைய தினமே சுயராஜ்யம் வரவேண்டும் என்று சொல்லுகிறேன் என்றும், ஆனால் இன்று சுயராஜ்யம் கிடைக்குமானால் பார்ப்பனரல்லாதாரின் உரிமைக்கு யார் உத்திரவாதி என்றும், இன்று மதத்தின் பேராலும் சமூகத்தின் பேராலும் ஜாதியின் பேராலும் ஆதிக்கம் செலுத்தும் பிராமணக் கூட்டம் காங்கிரசின் பேரால் நம்மீது ஆதிக்கம் வகிக்க
சட்டசபையில் 160 ஸ்தானங்களைக் கொண்ட கட்சியில் 49 பார்ப்பனர்கள். ஆதிக்கம் வகிக்கவும் 40 ஸ்தானங்களைக் கொண்ட சென்னை கார்ப்பரேஷனில் 11-பார்ப்பனர்கள் ஆதிக்கம் வகிக்கிறார்கள் என்றும் பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்வதாக ஓட்டுப்பெற்று இப்பொழுது
உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்திகள் போன்று விழிக்கிறார்கள்.
என்றும், திரும்பவும் தேர்தல் வந்தால் மக்களை ஏய்க்க சூழ்ச்சி செய்கிறார்கள் என்றும், இப்பொழுது புதிதாய் ஏற்பட்டுள்ள மந்திரிகள்.
தங்கள் கட்சி அல்லவானாலும் ஏதோ நல்ல காரியம் செய்ய திட்டம் போட்டு கவர்னர் அங்கீகாரத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களென்றும்
மதத்தின் பேராலும் சுயராஜ்யத்தின் பேராலும் ஒரு கூட்டம் மட்டும்
ஆதிக்கம் வகிக்க இனி முடியாது என்றும் சொற்பொழிவாற்றினதோடு ஏற்கனவே கொடுக்கப்பட்ட அநாமத் கேள்விகளுக்கும் கேள்வி கேட்பவர்கள். வெட்கப்படுமாறும் குறுகிய நோக்கத்தோடு கேள்வி கேட்பவர்கள்.
திருந்தும் முறையிலும் சுமார் 3-மணி நேரம் உணர்ச்சியோடும் ஆணித்தரமாகவும் சுயமரியாதைக் கட்சியில் நன்மை இருக்கிறதா
குடி அரசு- 1937 (1) 292
என்பதை சிந்தித்துப் பார்த்து ஜஸ்டிஸ் சுயமரியாதை கொள்கைகளையும் குறிப்பாக துறையூர் சுயமரியாதை சங்கத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் பேசி முடித்தார்.
குறிப்பு: 25.04.1937 ஆம் நாள் துறையூர் சிவன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற சுயமரியாதைப் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசியதின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1937
293 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஈரோடு சந்தைப்பேட்டை அபாய சம்பவம்
உண்மை விபரம்
எதிர்பாராத அபாயம்” என்னும் தலைப்பில் சென்ற வாரம் ஈரோடு. சந்தைப்பேட்டையில் வேலை முடியாத கொட்டகையில் ஜனங்கள் புகுந்து தூண்களில் சாய்ந்ததால் கொட்டகை சாய்ந்து ஆபத்து ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய உண்மையை சரிவர விசாரித்ததில் கீழ்க்கண்ட சரியான புள்ளி விபரம் கிடைத்திருக்கிறது. அதாவது சந்தைப்பேட்டையில் கொட்டகை சாய்ந்ததில் அதற்குள் சிக்கி காயப்பட்டவர்கள் மொத்தம் 55 பேர்கள் என்றும், காங்கிரஸ்காரர் களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்த விஷமப்பிரசாரப்படி 200 பேர்கள் அல்ல என்றும், மற்றும் அந்த இடத்தில் மடிந்தவர்கள் 4 பேர்களே ஆவார்கள் என்றும், காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் பத்திரிக்கைகளும் செய்யும் குறும்புத்தனப் பிரசாரப்படி 20 பேர்கள் அல்ல என்றும், ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொண்டவர்கள் 35 பேர்கள் என்றும் மீதிபேர்கள் தாங்கள் சொந்த சிகிச்சை செய்து கொள்ளுகிறார்கள் என்றும் ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களில் 4 பேர்கள் தான் இறந்தவர்கள் என்றும், அடிபட்டு வெளியூருக்குப் போய்விட்டவர்களில் சுமார் 4 அல்லது 5 பேர்களே இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது
மொத்தம் இறந்தவர்களின் தொகை எவ்வளவு தாராளமாய் கணக்குப் பார்த்தாலும் 13 பேர் 15 பேர்களுக்கு அதிகமாக இல்லை என்பது சர்க்காருடையவும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் வெளியிட்ட அறிக்கைகளினுடையவும் கணக்காக விளங்குகிறது. இதில் ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 35 பேர்களில் 9 பேர்கள் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.
விஷயம் இப்படி இருக்க இந்த சம்பவங்களை வேண்டுமென்றே மிகைப்படுத்தி அடுத்து வரும் முனிசிபல் எலக்ஷனுக்கு நிற்க காத்துக்கொண்டிருக்கும் பார்ப்பனர்களும் டாக்டர்களும் இவர்களது பார்ப்பனரல்லாத தொண்டர்களும் தப்பும் தவறுமாகவும் மனமார விஷமத்தனமாகவும் பிரசாரம் செய்து பல மீட்டிங்குகளும் 10, 12 துண்டு நோட்டீசுகளும் போட்டு பொறுப்பற்ற முறையில் பொய்யும்
குடி அரசு- 1937 (1) 294
புளுகும் நிரப்பி சிலவற்றில் கடைசி வாக்கியமாக “முனிசிபாலிட்டியை காங்கிரஸ்காரர்கள் கைப்பற்ற வேண்டும்” என்று முடித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்:
இவற்றுள் சர்க்கார் டாக்டரைக் குறைகூறி எழுதிய துண்டு பிரசுரங்களுக்கு ஆக அதில் கையொப்பமிட்டவர் டாக்டர் மீது பொய்யாக வெளியிட்ட நோட்டீசை வாபஸ் வாங்கிக்கொள்வதாகப் பொறுப்புவாய்ந்த உத்தியோகஸ்தர்களின் முன்னிலையில் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டரிடம் மன்னிப்புக் கேட்டார். டாக்டர் தன்மீது எப்படி பொய்யான விஷயங்களை நோட்டீஸ் மூலமாக வெளியிட்டீரோ அதன்படி நோட்டீஸ்மூலம் மன்னிப்பு வெளியிடவேண்டுமென்று கூறினார். அதன்படி ஷெயார் ஒப்புக்கொண்டு சென்றார். பின் சில பார்ப்பன வக்கீல்களின் தூண்டுதலால் மன்னிப்புக் கேட்டால் காங்கிரசிற்கு மதிப்பில்லாமல் போய்விடுமென்று கருதி சும்மா இருந்துவிட்டார். அதன்பின் இதுவிஷயமாக டாக்டர் மேலதிகாரிகளுக்கு அறிவித்திருக்கிறதாகத் தெரிகிறது
மற்றும் பொய்க்கணக்குகள் பிரசுரித்த நோட்டீசுக்கு ஆக சிலரைக் கண்டித்ததின் மீது சரியான கணக்குகளை வெளிப்படுத்தி நோட்டீசு போட ஒப்புக்கொண்டு விட்டதாய் தெரிகிறது. அதன்படி சரியான புள்ளிகளுடன். நோட்டீஸ் வெளியிடப்பட்டுமாய் விட்டது. சில பத்திரிகைகளும் தவறுதலாகப் பிரசுரித்து விட்டன. இப்போது அடிபட்டவர்களுக்கு ஆக சகாய நிதி வசூலிக்க 2, 3 தொகுதியாக முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிகிறது இவை ஒருபுறம் நிற்க, இச்சம்பவத்தை கவனித்து அதிகாரிகள் பலர் வந்து விசாரித்து போகிறார்கள். கொட்டகை சர்க்கார் மாதிரி (டைப் டிசைன்) பிரகாரம் அனுசரித்து போடப்பட்டது என்பதோடு பிளான். எஸ்டிமேட்டுகள் அந்தந்த இலாக்கா நிபுணர்களின் கவனிப்பும் சம்மதமும் பெற்றே வேலை செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது அதாவது பிளானும் எஸ்டிமேட்டும் டிப்டி சேனிடரி இன்ஜினீயர் சாங்கிஷன் மீது தான் கண்டிறாக்ட் விடப்பட்டு வேலை துவக்கப்பட்டிருக்கிறது என்பதோடு யோக்கியதாம்சமுள்ள அதிகாரிகளின் நெருங்கிய மேற்பார்வையிலே கட்டிடம் நடந்திருக்கிறது. கட்டிடம் பூராவும் 3 அடி அஸ்திவாரம் பரித்து சட்டு கண்டு காங்கிரிட் போட்டு 1 அடி பேஸ்மட்டத்தின்மீது கருங்கல் போட்டு கட்டப்பட்டிருக்கிறது. இது விஷயத்தில் ஏதாவது குறை கூற வேண்டுமானால் முடிவு பெறாத கட்டிடத்திற்குள் ஜனங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பதேயாகும். ஆனால் யாரும் வேண்டுமென்று அனுமதிக்கப்படவில்லை. சாதாரண நிலையில் ஜனங்கள் அதில் அதிகமாக பிரவேசிக்கவுமில்லை. சந்தைப்பேட்டை காலி இடம் சுமார் 10, 12 ஏக்ரா இருக்கலாம். அதில் தாராளமாக இடம் இருக்கிறது என்பதோடு புது கட்டிடம் ஓடு பூராவும் மேயாமல் இருப்பதாலும்
298 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
வெய்யிலும் மழையும் உள்ளே படும்படியான நிலையில் இருந்ததாலும் ஜனங்கள் அதற்குள் போகமாட்டார்கள் என்றும் போய் உட்காருவதாலேயே கொட்டகை விழுந்துவிடுமா என்றும் சாதாரணமாய் மேல் பார்வை ஆள்கள் கருதி அபாய அறிவிப்புப் போடாமல் இருந்து இருக்கலாம்
அன்றியும் மூனிசிபல் அதிகாரிகள் அதை கவனிக்க சந்தர்ப்பம் இருக்க இடமில்லாமல் போனதற்குக் காரணம் அக்கட்டிடம் இன்னமும் கண்டிறாக்டர் வசத்தில் இருந்து வருவதாலும் கண்டிறாக்டர் தக்க ஜாக்கிரதையாய் இருப்பார் என்று கருதிவிட்டதினாலுமாக இருந்தாலும் இருக்கலாம். கட்டிடத்தின் கூரை மேல் ஓடு குவித்து நிழலாக இருந்த
பக்கம் மாத்திரம் இரண்டொரு இலை வியாபாரப் பெண்களும் மற்றும் இரண்டொருவரும் நிழலடியில் தங்கி இருந்திருப்பதாய் சொல்லப்படுகிறது இந்த ஆட்கள் சாதாரண முறையில் கட்டிடம் விழ ஆரம்பித்த பிறகுகூட வெளியேறி விடக்கூடும். ஆனால் காற்றடிக்க ஆரம்பித்து பெரு மழை பெய்யும் அவசர அறிகுறியும் தோன்றியவுடன் ஜனங்கள் பலர் பெருங்கூட்டமாக அவசர அவசரமாக தங்கள் சாமான்களை தூக்கிக்கொண்டு கொட்டகைக்கு ஓடியதில் கொட்டகைக்குப் பக்கத்தில் போனவுடன் கொட்டகைத் தூண்களைப் பிடித்துப்பிடித்து மேலே ஏறும் போதும் ஆதரவுக்காக அதன் மீது மக்கள் நெருக்கடியில் சாயும்போதும்
சரி சமமாக பாரமில்லாத கொட்டகை சுலபத்தில் தூண்கள் சரியவும் ஆட்டம் கொள்ளவும் ஏற்பட்டதால் ஓடுகள் ஏற்றிப் பாரமாகவுள்ள பக்கம் இழுத்துக்கொண்டு சாய்ந்துவிட்டதால் அதனடியில் சிக்கினவர்களே ஆபத்துக்காளாகிவிட்டார்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறது அப்படிக்கில்லாமல் கொட்டகை பூராவும் ஜனங்கள் இருந்து கொட்டகை சாய்ந்திருக்குமானால் சுமார் 200 அடி நீளமும் 10 அடி அகலமும் உள்ள கொட்டகை சாய்ந்து இருந்தால் சுமார் 50 அல்லது 60 பேர்கள்
மாத்திரம் காயமடைந்திருக்கவும் சுமார் 10, 12 பேர்கள் மாத்திரமே மரணமடைந்திருக்கவும் முடியாது. பல நூற்றுக்கணக்கான பேர்கள். அபாயத்துக்குள்ளாகியும் இறந்தும் இருப்பார்கள்.
ஆகையால் எதிர்பாராத அபாயம் என்று சொல்லவேண்டியதைத் தவிர அதிலும் கெட்ட சம்பவத்திலும் சிறிது நல்ல சம்பவம் என்று சொல்லவேண்டியதைத்தவிர இதில் வேண்டுமென்று நடந்ததாகவோ அல்லது ஆணவமான அஜாக்கிரதையாலோ கட்டிடத்தின் பலவீனத்தாலோ என்று சொல்வதற்கில்லை என்பதே நமதபிப்பிராயம்.
நிற்க, காயமடைந்தவர்களில் இப்போது ஆஸ்பத்திரியிலிருப்பவர்கள்
35 பேர்கள். இதுவரை ஆஸ்பத்திரியில் இறந்தவர்கள் 4 பேர்கள். மீதி பேர்களில் ஒரு நபர் மாத்திரம் அபாயத்திலிருப்பதாகத் தெரிகிறது பாக்கி பேர்கள் குணமடைந்து வருகிறார்கள். காயமடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரி டாக்டர் மிக்க கவனமெடுத்து அன்பாய் கவனித்து வருகிறார்.
குடி அரசு- 1937 (1) 296
குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அந்த டாக்டர் 2 நாள் பூராவும் சாப்பாடு இல்லாமலும் தூக்கமில்லாமலும் தொடர்ந்து சிகிச்சை செய்து வந்தார் என்றும் ஆரஞ்சு ரசத்தை வேறு ஒரு ஆளைக் கொண்டு
தன் வாயில் ஊற்றும்படி செய்து ஆகாரமாக்கிக்கொண்டு வேலை செய்து வந்தார் என்றும் தெரிகிறது. இரவெல்லாம் அடிக்கடி கவனித்து வருவதாகவும் தெரிகிறது
ஜில்லா டாக்டரிடம் சில காங்கிரஸ்காரர்கள் இந்த டாக்டர் மீது
புகார் கூறியதை ஜில்லா டாக்டர் கவனிக்க உடனே வந்து பார்த்ததில் சகல சங்கதிகளையும் நேரில் பார்த்துப்போய் ஸ்தல டாக்டரைப் பாராட்டி எழுதியிருக்கிறதாகத் தெரிகிறது
டாக்டர் செய்த பெரிய குற்றம் என்னவென்றால் நோயாளிகளுக்குப் பொது ஜனங்கள் செய்யும் உதவியைத் தனக்குக் காட்டிவிட்டுச் செய்யும்படி சொன்னதேயாகும். அப்படிச் சொல்ல நேரிட்டதற்குக் காரணம் டாக்டர் ஒரு நோயாளியின் தன்மைக்குத் தலைகணி வைக்கப்படாது என்று கருதி தலைகணியில்லாமல் படுக்க வைத்திருந்ததால் ஒரு காங்கிரஸ்காரர் நேரே போய் நோயாளியின் தலையை அசைத்துத் தூக்கி தலைகணி வைத்ததாகவும், ஒரு நோயாளி தூங்குவதற்காக ஆஸ்பத்திரி டாக்டர் ஒரு மருந்து கொடுத்து இருக்கையில் ஒரு வெளி டாக்டர் அந்நோயாளிக்கு காப்பி குடிக்க வைத்ததும் இன்னும் இது போன்ற நோயாளிக்குக் கெடுதி உண்டாகும்படியான பல காரியங்கள் செய்யப்பட்டதுதான் என்று தெரிய வருகிறது
ஊரில் கேட்பதற்கு எல்லாம் பணம் கொடுக்க சில வியாபாரிகளும், அடுத்தாற்போல் கவுன்சில் எலக்ஷனில் நிற்க சில நபர்களும் இருப்பதால் இந்த சம்பவத்தை முனிசிபாலிட்டி மீது துவேஷப்பிரசாரம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள செளகரியமாய் இருக்கிறதுபோலும்
இந்த விஷமப்பிரசாரம் பெரிதும் கமிஷனர், சேர்மென், முனிசிபல் கவுன்சிலர், டாக்டர் ஆகியவர்களின் மீதே செய்யப்பட்டு வருகிறது என்பதற்கு காங்கிரஸ்காரர்கள் வெளியாக்கின பல துண்டுப் பிரசுரங்களே போதிய ருஜுவாகும்.
அபாயத்தின் காரணத்தை விசாரிப்பதற்கென்று ஒரு கமிட்டி போட்டுக் கொண்டதாய் பேர் செய்து கொண்டு அதில் மூன்று வக்கீல் பார்ப்பனர்கள். தங்கள் பெயர்களை விளம்பரம் செய்து கொண்டு அடுத்த எலக்ஷனுக்கு
தயாராய் வருகிறார்கள். அது போலவே பண்டு வசூலிக்க கமிட்டி போடப்பட்டிருக்கிறது. இதில் பார்ப்பனர்கள் பெயர் இருந்தால் பணம் வசூலாகதென்றகருத்தில் வர்த்தகர்களாகவே போடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
குடி அரசு - செய்திக்கட்டுரை - 02.05.1937
297 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இத்தொல்லை என்று ஓழியும்£
இன்று இந்நாட்டில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் முதலாகிய துறைகளின் சீர்திருத்தம் முழுவதும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், இந்துக்கள் - முஸ்லீம்கள் என்கின்ற வகுப்பு சச்சரவுகளாகவும் மதக்கலவரங்களாகவும் இருந்து வருகிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - தமிழ்நாட்டு காங்கிரஸ் தத்துவம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு போரிலும் வடநாட்டு காங்கிரஸ் தத்துவம் பெரிதும் இந்து முஸ்லீம் என்கின்ற மதப்போரிலும் இருந்து வருகிறது. இரு நாடுகளிலும் காங்கிரசுக்கும் காங்கிரஸ்
எதிர்ப்புக் கடிக்கும் உள்ள பேதத்தின் காரணம் 100க்கு 90 பாகம் வகுப்புக்கும் மதத்துக்கும் பாதுகாப்புக்கும் சுதந்திரமும் சமஉரிமையும் கேட்கும் பிரச்சினையே முக்கியமாக இருக்கிறது. இவற்றை மறுப்பதே தேசியம் - தேசாபிமானம் என்று காங்கிரஸ் சொல்லுகிறதே ஒழிய வேறு கொள்கை எதையும் தேசாபிமானத்துக்கு அறிகுறியாய் சொல்லுவதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இப்பிரிவினையானது பார்ப்பனர்களை ஒன்று சேர்த்து கட்டுப்பாடாய் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை அழுத்தி வருகிறது. காங்கிரஸ் தேசாபிமானம் என்பதின் பயனாய் வர வர பார்ப்பனர்களுக்கு தைரியமும் வலுவில் தாக்கும் உணர்ச்சியும் அதிகப்பட்டு வருகிறது. பார்ப்பனரல்லாதார் பாதுகாப்புக்கு அரசாங்கத்தைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்று மக்கள் கருதும்படி பார்ப்பனர்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கொஞ்சம் தலை எடுத்தாலும் அழுத்தப் பார்க்கிறார்கள். பார்ப்பனரல்லாத தேசியவாதிகள், தேசபக்தர்கள், தேசியத் தலைவர்கள், தேசியப் பத்திரிக்கைகள், தேசிய ஸ்தாபனங்கள் என்பவைகள் தமிழ் நாட்டில் இல்லாமல் செய்து விட்டார்கள். பார்ப்பனர். சம்மந்தமோ அவர்களுக்கு பெரியதனமோ இல்லாத எந்த ஸ்தாபனமும் நாட்டில் இருப்பதற்கு இல்லாமல் தொல்லை விளைவித்து ஒழித்து வருகிறார்கள். தொழிலாளர்கள் ஸ்தாபனங்கள் பூராவும் பார்ப்பனர்கள் கைப்பற்றிவிட்டார்கள். தொழிலாளர்களுக்கு சட்ட சபையில் பிரதிநிதித்துவம் வாங்க கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் யார் என்பதைப்பற்றி நாம் இங்கு பெருமை பேசிக்கொள்ள வரவில்லை. ஆனால் கிடைத்த ஸ்தானம் 6-ல்
4 ஸ்தானத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றிவிட்டார்கள். பெண்கள்
குடி அரசு- 1937 (1) 298
ஸ்தானங்களில் தமிழ் நாட்டில் 4-ல் 2% ஸ்தானத்தை பார்ப்பனர்கள். கைப்பற்றி விட்டார்கள். இப்போது தொழிலாளர் ஸ்தாபனங்களும் பெண்கள் ஸ்தாபனங்களும் பார்ப்பனர் வசமாகிவிட்டது
பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டு மாதம் 500 ரூபாய் வரும்படி வந்துகொண்டிருந்த சட்டசபை டிப்டி பிரசிடெண்ட் பதவியை ராஜினாமா கொடுத்த முத்துலக்ஷிமி ரெட்டி அம்மையாரை தெருவில் விட்டு விட்டு திடீரென்று காங்கிரசில் புகுந்த ஒரு ருக்மணி அம்மாளை பெண்களுக்கு ஆக நிறுத்திக்கொண்டார்கள்.
இவைகள் ஒரு புறமிருக்க மற்ற சாதாரண ஸ்தானங்களில் கூட
பார்ப்பனரல்லாதார் யாராவது தலைவராகவோ பிரதான புருஷராகவோ இருந்தால் அந்த ஸ்தானத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள்.
சமீபத்தில் சென்னையில் கூடிய தபால் இலாக்கா சிப்பந்திகள் மகாநாட்டிற்கு தோழர் டி.எ.வி நாதன் (ஜஸ்டிஸ் பத்திரிக்கை ஆசிரியர்) தலைமை வகித்து காரியங்கள் நடத்தியதற்கு ஆக அந்த ஸ்தாபனத்தை
ஒழிக்க சில பார்ப்பனர்கள் அது பொது ஸ்தாபனமல்லவென்றும், அது சட்டப்படி செல்லாதென்றும் வேறு ஸ்தாபனமேற்படுத்திக் கொண்டதாகவும், பழய ஸ்தாபனத்துக்கு யாரும் சந்தா கொடுக்கக் கூடாது என்றும் விஷமப் பிரசாரம் செய்து அந்த ஸ்தாபனத்தையே கலைக்கப் பார்க்கிறார்கள் இவ்வளவுக்கும் அந்த ஸ்தாபனம் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தும் அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன மேலதிகாரிகளைக் கொண்டும் தொல்லை விளைவிக்கப்பார்க்கிறார்கள்.
ஸ்தாபன விஷயங்கள் இப்படி என்றால் பள்ளிக்கூட விஷயங்களிலும் பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் விளைவிக்கும் தொல்லையும் பிள்ளைகளுக்கு விளைவிக்கும் தொல்லையும் அங்கு ஜாதி பேதத்தை கற்பிக்கும் தன்மையும் அல்ப சொல்பம் என்று சொல்லிவிட முடியாது பள்ளிக்கூடங்கள் அநேகமாக யாரால் நிர்வகிக்கப்பட்டாலும் அதன் பண்டுகள் பெரிதும் பார்ப்பனரல்லாதார் பணமாகவே இருப்பதும் அதிகாரமும் ஆதிக்கமும் மாத்திரம் பார்ப்பனர்களுடையதாகவே இருப்பதும் எங்கும் காணலாம். பார்ப்பன ஆதிக்கப் பள்ளிக்கூடங்களில் 100க்கு 100 உபாத்தியார்கள் பார்ப்பனர்களே. உதாரணமாக ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுக்கு பணம் கொடுத்து பண்டு ஏற்படுத்தினவர்கள் பெரிதும் பார்ப்பனரல்லாதார்கள். அதாவது ராஜா
சர். அண்ணாமலை, திவான் பகதூர் சபாரத்தினம், நவாப் அப்துல் ஹக்கீம், நாடிமுத்து பிள்ளை முதலாகியவர்கள் பெருந்தொகை கொடுத்து ஆதரித்துவரும் பள்ளிக்கூடத்தில் டிராயின்ங், வீவிங், பியூன் நீங்கலாக மற்றெல்லோரும் பார்ப்பன உபாத்தியாயர்களாகவே இருக்கிறார்கள் அப்பள்ளிக்கூடத்து தலைமை உபாத்தியார் வேறு பள்ளிக் கூடத்தில்
29 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இருந்து வயதாகி ரிட்டையர் ஆனவர். 40 @ சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். பிள்ளைகளை வெளியூர்களுக்கு பாடம் கற்பிக்கக் கூட்டிக்கொண்டு போனால் சாப்பாட்டில் வித்தியாசம், இடமாத்திரமல்லாமல் நேரமும் வித்தியாசம். அதாவது பார்ப்பன பிள்ளைகள் சாப்பிட்ட பிறகு சாப்பாடு போடுவது என்கின்ற கொடுமையில் நடத்தப்படுகிறது. இந்த யோக்கியதை உள்ள உபாத்தியாயர்கள் தான் எல்லோரும் தேசபக்தர்களாகவும் அவர்கள் பெண்டு பிள்ளைகள்தான் காங்கிரசுக்கு ஓட்டுபோட ஓட்டர்களை இழுத்து வருபவர்களாகவும் விளங்குகிறார்கள். இனி பார்ப்பனரல்லாதார் பணத்தில் வயிறு வளர்க்கும் வக்கீல்களோ பிச்சை எடுத்துப் படித்து பாஸ் பண்ணி வாழ்வது மூதல் நம் பணமாய் இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு கேடு தேடுபவர்களாய் இருப்பதுடன் எவ்வளவு இழிவுபடுத்துகிறார்கள். என்பதைக் கவனித்தால் எவனுக்கும் ரத்தம் கொதிக்காமல் இருக்காது உதாரணமாக தேவகோட்டை வக்கீல்கள் அவ்வளவு பேரும் தேசபக்தர்கள். அதாவது 65 பார்ப்பன வக்கீல்களும் கையெழுத்து போட்டு ராஜா சர். மாப்பிள்ளைக்கு ஓட்டுப் போடக்கூடாது என்று நோட்டீசு போட்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் வக்கீல் ரூமில் வைத்திருக்கும் தண்ணீர்ப் பாத்திரத்தை பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தொடக் கூடாது என்று செய்து அது விஷயமாய் காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார். என்று சண்டை யேற்பட்டு தோழர் காந்திவரை இந்த சேதி போய்
ஒன்று மில்லாமலாகி இன்றும் அந்த வித்தியாசம் இருந்து வருகிறது.
இந்தி
பார்ப்பனர்களால் நடத்தப்படும் பொது ஸ்தாபனங்களில் உள்ள ஒழுக்கங்களோ சொல்லத் தேவையில்லை. உதாரணமாக இந்தி பாஷை படிப்பு என்று பார்ப்பனரல்லாதாரிடம் லக்ஷக்கணக்காய் காந்தி வசூல் செய்து கொடுக்கும் பணத்தில் பார்ப்பனர்களையே சிப்பந்திகளாய் வைத்து வேலை செய்வதும் அந்தப்படி சென்னையில் நடத்திவந்த ஒரு இந்திய ஸ்தாபனத்தில் பல பெண்கள் படிக்க வந்து கொண்டிருந்ததில். அந்த ஸ்தாபனத் தலைவர் ஒருவர் அப்பெண்ணைக் கலவி செய்து வயிற்றை நிரப்பி அது கர்ப்பவதி ஆகிவிட்டது. கடசியாக தலைவர் செய்த காரியம் என்று வெளியாகி தலைவரை நீக்கி விட்டு காந்தியார்
கண்டித்து ஒரு வியாசம் எழுதி மழுப்பிவிட்டார். கலவி நடத்திய ஒரு பெண்ணுக்கு கர்ப்பமானதினால் அது கண்டு பிடிக்கப்பட்டது. கர்ப்பமாக்காமல் இன்னம் எத்தனை பெண்களை கலவி செய்திருப்பார் என்று யோசித்துப் பார்த்தால் இவர்களது நாணயமும் இவர்கள் ஸ்தாபனத்தில் சம்மந்தம் வைத்துக் கொள்வதின் யோக்கியதையும் விளங்கும். இன்னமும் கதர் ஸ்தாபனத்தில் நடக்கும் அக்கிரமம் எவ்வளவு என்று யாராவது
குடி அரசு- 1937 (1) 300
நிர்ணயிக்க முடிகிறதா? பார்ப்பனர்கள் ஆதிக்கம் வைத்து நடத்திய காலத்தில் @ ஒன்றுக்கு 30 ஆயிரம், 40 ஆயிரம் ஆக லக்ஷக்கணக்கில் நஷ்டம் வந்திருக்கிறது. பெரும்பாகம் வேலையற்ற பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுப்பது, அவர்கள் தாறு மாறாய் நிர்வாகம் நடத்துவது,
பெரும் சம்பளம் அனுபவிப்பது ஆகிய அக்கிரமங்களேயாகும். பொது ஜனங்கள் 3 அணாகூட பெறாத துணிக்கு 9 அணா 10 அணா கொடுத்து வாங்கி நஷ்டமடைகின்றது ஒரு புறமிருக்க, கதர் கொள்முதல் முதலில் லக்ஷம் இரண்டு லக்ஷம் நஷ்டமாவது என்றால் இவர்கள் நிர்வாகத்தின். யோக்கியதையை என்னென்று சொல்லமுடியும். இந்த யோக்கியதையும் ஒழுக்கமும் நாணயமும் திறமையுமுள்ளவர்கள் பார்ப்பனரல்லாதார்களை குறை கூறுவதும் பொது வாழ்வில் இருந்து ஒழிக்கப்பார்ப்பதுமான. குறும்புகளும் விஷமங்களும் செய்து வருவது சகிக்கக் கூடியதா என்று கேட்கிறோம். இதே மாதிரியே இப்பார்ப்பனர் எந்த ஜில்லா போர்ட் முனிசிபாலிட்டி ஆகியவைகளில் இருந்தாலும் சதா நசுங்குச் சேட்டைகள். செய்து நிர்வாகத்துக்கு தொல்லை கொடுப்பதும் துன்பம் விளைவிப்பதுமாகவே செய்து வருகிறார்கள்.
உத்தியோகத்தில் மேல் பதவியில் இருந்தாலும் கீழ் பதவியில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து இம்சிக்கிறார்கள்.
தபால் - ரயில் பார்சல், கோர்ட்டு முதலிய சர்க்கார் ஸ்தாபனங்களில் உள்ள பார்ப்பனர்களும் அவர்களுக்கு திருப்தி இல்லாத காரியங்களிலும் திருப்தி இல்லாதவர்கள் விஷயத்திலும் எவ்வளவு தொல்லை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தொல்லை விளைவித்து காரியங்களை கெடுத்து வருகிறார்கள்.
இவற்றையெல்லாம் கவனிக்கும்போதுவகுப்புவாரிப்பிரதிநிதித்துவப்படி பதவிகள் இருந்தால் ஒழிய இக் கொடுமை ஒழியாதென்றே முடிவு கட்ட வேண்டியதாக இருக்கிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.05.1937
301 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் வெற்றி பெற்ற யோக்கியதை
ஏற்பதும் - மறுப்பதும் ஓன்றே
ஆச்சாரியார் ஆத்திரம்
தோழர்களே!
எலக்ஷன் முடிந்த இந்த இரண்டு மாதகாலமாய் எவ்வளவோ இடத்துக்கு நாங்கள் அழைக்கப்பட்டும் பொதுக் கூட்டங்களில் 2, 3 - மாதத்துக்கு பேசக்கூடாது என்கின்ற கருத்தின் மீது பேச மறுத்துவிட்டோம் சமுதாய விஷயமாகவே பேசினோம். இங்கு (பூவாளூரில்) இதற்கு ஆகவே எங்களை வரவழைத்து ஆடம்பர ஊர்வலங்கள் செய்து பல வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக்கொடுத்து அரசியலைப்பற்றி பேச வேண்டுமென்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள். ஏதோ எனது அபிப்பிராயத்தைக் கூறுகிறேன். நீங்கள் தயவு செய்து பொறுமையாய்க் கேட்டு நன்றாகச்
சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள். வெறுப்பாகவும் கருதி விடாதீர்கள்.
தற்கால அரசியல் நிலை
தற்கால அரசியல் என்றால் எதைப் பேசுவது? இன்று மிக்க பிரபலமான. பேச்சாய் இருக்கும் அரசியல் காங்கிரஸ் வெற்றியும் ஆணவப் பேச்சும் அவர்களது கூப்பாடுகளும் விஷமப் பிரசாரங்களுமல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை. எலக்ஷனில் தோல்வியுற்றதாகக் கருதிய ஜஸ்டிஸ் கட்சியார் இனிமேல் என்ன செய்வது என்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர்கள் அடுத்த மாதம் 9-ந் தேதி ஒரு மீங்டிங்கு போட்டிருக்கிறார்கள். அதில் ஏதாவது அடுத்த வேலைத்திட்டம் பற்றிப் பேசி ஏதாவது ஆரம்பிக்கக்கூடும். இப்போது வாய் மூடிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே சுயமரியாதைக்காரர்களும் அடுத்து கூட்டப்படும் மாகாண மகாநாட்டில் ஏதாவது தீவிர வேலைத்திட்டம் வகுத்து தொடர்ந்து வேலை செய்வது என்கின்ற கருத்து
மீது ஸ்தாபனங்களை புனருத்தாரணம் செய்து வருகிறார்கள். இந்த நிலைமையில் காங்கிரஸ்காரர்கள் தங்கள் இஷ்டப்படி தாறுமாறாய் வகை தொகை இல்லாமல் ஆணவமாய் கூத்தாடி வருகிறார்கள்.
குடி அரசு- 1937 (1) 302.
ஆச்சாரியாரின் ஆத்திரம்
எனது தோழர் ஆச்சாரியார் இவ்வளவு மோசமாக மதி இழந்து பைத்தியம் பிடித்து அலைவார் என்று நான் எப்போதும் கருதியதே இல்லை. காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டதை சகிக்க அவரால் முடியவில்லை: அன்று முதல் இன்று வரை அவரது பாதம் நிலத்தில் படுவதாக எனக்கு தெரியவில்லை. தலைகீழாக தலையில் நடப்பதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது
நாட்டைப்பற்றின பொறுப்பு அவருக்கு சிறிதும் இல்லை. மந்திரி வேலை அடைய முடியாமல் போய்விட்டதே என்கின்ற ஆத்திரம் தான் அவரைப் பிடித்து ஆட்டுகிறது
முத்துரங்கமும் மூர்த்தியும் எங்கே?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தோழர் மூத்துரங்க முதலியார் பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தென்படுவதில்லை. தோழர் சத்தியமூர்த்தியார் விஷயமும் சத்தியமூர்த்தி என்று ஒருவர் இருந்ததாகவே இப்போது மக்களுக்கு ஞாபகமில்லாத மாதிரியில் மறைந்துவிட்டார். ஆச்சாரியார் விளம்பரம் தான் பலமாக இருக்கிறது பார்ப்பனர்கள் உள்ளுக்குள் இப்போது அவரை சபித்துக்கொண்டு இருந்தாலும் வெளியில் பலமான விளம்பரம் செய்கிறார்கள் பத்திரிகைகளும் அதிகமான விளம்பரங்கள் செய்கின்றன. தோழர் கனம்
சாஸ்திரிக்கு அடுத்த விளம்பரம் இவருக்குத்தான் இருந்து வருகிறது எவ்வளவு விளம்பரம் செய்தும் வெறும் எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கிறதைக் காணோம் என்கின்ற பழமொழிப்படி தலையெடுக்க வழியில்லாத நிலைமையை ஏற்படுத்திக்கொண்டு விட்டார். திண்டுக்கல் தோழர் மத்திரன் அவர்கள் தோழர் சத்தியமூர்த்தியைப் பற்றி பாடியது போல் அதாவது “உமக்கு அடுத்துவரப் போகுதையா அரசியலில் மரணம்" என்றதுபோல் சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கும் ராஜகோபால ஆச்சாரிக்கும் அரசியல் மரணம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மோசம், நாசம், கம்பிளி வேசம் என்கின்ற மாதிரி சத்தியமூர்த்தியார் நாசமாய்விட்டார். ஆச்சாரியார் பீச்சாண்டி ஆகிவிட்டார். வெறும் வசவைத் தவிர இனி அவர் வாழ்வு உயருவது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது
ஆச்சாரியார் தவிப்பு
ஏன் இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறேன் என்றால் இரட்டை வெட்டில் மாட்டிக்கொண்டார் என்கிற கருத்தில் சொல்லுகிறேன். இருதலைக்கொள்ளி மத்தியில் சிக்கின எறும்புபோல் தவிக்கிறார். எப்படி எனில் அவர் மந்திரி வேலை ஒப்புக்கொண்டால் பார்ப்பனர்களுக்கு சில உத்தியோகங்கள் கொடுக்கலாம் என்பதை நானும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
303 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஆனால் அவர் அதன் மூலம் பொது மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன். இதுவரை அங்குபோய் இன்னது செய்யக்கூடும் என்று எங்காவது குறிப்பாய் யோக்யமாய் பேசியிருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? அனாமத் மந்திரிகள் ஒரே அடியாய் பல திட்டங்களை போட்டுக் கொண்டார்கள். சிலவற்றையாவது செய்வார்கள் என்று கருதுகிறேன். ஆகவே இந்தக் காரியங்களை அனாமத் மந்திரிகள் செய்வதற்கு மேல் ஆச்சாரியார் ஒன்றும் செய்து விட முடியாத நிலைமை
இருந்து வருகிறது. ஒரு சமயம் சத்தியமூர்த்தியார் மந்திரி ஆனாலும் கடமுடா என்று ஒரு கிளர்ச்சி உண்டாக்கவும் அதை வியாக்கியானம் செய்துகொண்டு பலர் பேசவும் ஆச்சாரியார் வெளியில் இருந்து வியாக்கியானம் செய்து கொண்டிருக்கவும் சவுகரியமேற்பட்டிருக்கும். இப்போது தளகர்த்தரையே சிறைபிடித்து விட்ட மாதிரி ஆச்சாரியார் தானே சிக்கிக்கொண்டு விழிக்கிறார். மந்திரி வேலை வேண்டாம் என்று தைரியமாய் சொல்லிவிடலாம் என்றாலோ அப்படியானால் ஒன்றா மறுபடியும் ஜெயிலுக்கு போகவேண்டும். இல்லாவிட்டால் யார் மீதாவது கோபத்தை!” உண்டாக்கிக்கொண்டு “நான் இனிமேல் காங்கிரஸ் காரியத்தில் பிரவேசிப்பதில்லை'” என்று கூறிவிட்டு பகவத்கீதைக்கு புது வியாக்கியானம் எழுதப் புகவேண்டும். இல்லாவிட்டால் உலகில் இடமே இல்லை என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆச்சாரியாருக்கு மாத்திரமல்ல. காந்தியார் நேரு ஆகிய எல்லோருக்கும் எல்லா காங்கிரஸ்காரருக்கும் இதே நிலைமையே ஏற்பட்டு விட்டது. இது ஒரு நல்ல சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது “குந்தினாயா குரங்கே உன் கொட்டமடங்க” என்பதுபோல் அடங்கிக்கிடக்க வேண்டியதாகிவிட்டது
ஏற்பதும் மறுப்பதும் இரண்டும் தொல்லையே இப்போது காங்கிரஸ்காரர்கள் - காந்தியார் மந்திரி பதவி ஒப்புக்கொள்ள தகுந்தமாதிரி மறுத்ததற்கு ஏதேதோ புது புது வியாக்கியானங்கள் சொல்லி வருகிறார்கள். நிலைமை சர்க்காருக்கு அனுகூலமாக அதாவது காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவர் மனதிலும் எப்படியாவது ஒப்புக்கொண்டு கிடைத்தவரையில் பயன் அனுபவிக்கலாம் என்கின்ற ஆசை ததும்பிக் கொண்டிருப்பதை சர்க்கார் அறிந்துவிட்டதால் எப்படியாவது காங்கிரஸ்காரர்கள் தலையில் மந்திரி பதவியைக் கட்டி வேடிக்கை பார்க்கலாம் என்று கருதுவதால் அவர்களும் தாங்கள் வாக்குறுதி மறுத்ததற்கு புது வியாக்கியானம் சொல்லி ஒருபடி இறங்குவதாய் காட்டுகிறார்கள். எப்படியானாலும் சரி, இரண்டும் அதாவது மந்திரி பதவி மறுப்பதும் ஏற்பதும் காங்கிரசுக்காரருக்கு தொல்லைவிளைவிக்கும் காரியமாகவே இருக்கிறது என்பதுமாத்திரம் உறுதி. அதுபோலவே ஏற்பதும் மறுப்பதும் இரண்டும் சர்க்காருக்கு லாபமாகவே இருக்கிறது
குடி அரசு- 1937 (1) 304
என்பதும் உண்மையே. ஏனெனில் மறுப்பதால் அனாமத் மந்திரிகளைக்கொண்டு காங்கிரஸ்காரர்கள் சொன்னதற்கு மேலாகவே செய்துகாட்டிவிடக்கூடும் ஏற்றுக்கொண்டால் அதிகார தோரணையில் காங்கிரஸ்காரர்களை அடக்கி ஆண்டு அதிக்கம் செலுத்தக்கூடும். காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் இஷ்டத்துக்கு
சிறிது விரோதமாய் நடந்தாலும் விசேஷ அதிகாரத்தைச் செலுத்தி மட்டம் தட்டி விடுவார்கள். அப்போது காங்கிரசுக்காரர்கள் வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்
ஆதலால்காங்கிரசை அடக்கஅது சர்க்காருக்கு நல்ல சந்தர்ப்பமாகிவிடும். ஆகவே இரண்டுவிதத்திலும் காங்கிரசுக்கு ஆபத்தும் சர்க்காருக்கு அனுகூலமுமான சமயமாக ஆகிவிட்டது
அனாமத் மந்திரிகள் நிலைமை அப்படியில்லை. ஏதாவது காரியம் செய்ய மந்திரிகள் துணிந்தால் சர்க்கார் இடம் கொடுத்தாக வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் வேலையைவிட்டு வெளியில் போவதாய் மிரட்டலாம். அப்போது சர்க்கார் இனி மறுபடி யாரைப்பிடிப்பதென்று கருதி வெட்கத்துடன் ஒப்புக்கொண்டாக வேண்டும். எனவே இப்படிப்பட்ட நிலைதான் இன்று தற்கால அரசியல் நிலையாக இருந்து வருகிறது இது உண்மையிலேயே ஏற்படக்கூடியதுதான். ஏனெனில் காங்கிரஸ் வெற்றி என்பது உண்மையானதாக இருந்தால் அதற்கு ஏதாவது யோக்கியதையோ பயனோ உண்டாகக்கூடும். பொய் வெற்றிக்கு எங்காவது யோக்கியதை கிடைக்குமா? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.
காங்கிரஸ் வெற்றிபெற்ற யோக்கியதை.
காங்கிரஸ் எப்படி வெற்றி அடைந்தது? காங்கிரசின் பேரால் நின்ற தனிப்பட்ட மக்களின் யோக்கியதையாலா? அல்லது காங்கிரஸ் மூன்
பின் மக்களுக்குச் செய்து காட்டிய நன்மையான காரியத்தாலா? அல்லது அது முன்பின் நடந்து கொண்ட நாணையத்தாலா? என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஓட்டர்களுக்குக் கொடுத்த அபாரமான ஆசை வார்த்தைகளால் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றேன். உதாரணமாக ஒரு இடத்தில் 3 கடைகள் இருக்கிறதாக வைத்துக் கொள்ளுங்கள். முதல் கடைக்காரன் பரம்பரையாய் வழக்கமாய் கடை வைத்துக்கொண்டிருக்கிறான். சாமான் வாங்க வருபவர்களிடம் ரூபாய் ஒன்றுக்கு 5 படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான். மற்றொருவன் 5% படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான். மற்றொருவன் ரூபாய் ஒன்றுக்கு 12 படி அரிசி போடுவதாகச் சொல்லுகிறான் என்றால் ஜனங்கள் எந்தக் கடைக்குப் போவார்கள்? அதுபோல் காங்கிரசுக்காரர்கள் ரூபாய்க்கு 12 படி அரிசி போடுகிறோம். (அதிக நன்மை செய்கிறோம்) அட்வான்சு (ஓட்டு) கொடுங்கள் என்று சொல்லி மக்களிடம் ஓட்டுப்பெற்றுக்
305 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கொண்டார்கள். பாமர மக்களும் 12 படிக்காரன் கடையில் கூட்டம் கூடி அட்வான்சு கொடுப்பது போல் கூட்டமாக தங்கள் ஓட்டுகளை கொடுத்து விட்டார்கள். இப்போது பொது ஜனங்களின் அட்வான்சை பெற்றுக் கொண்டு. ஓட்டம் பிடித்து விட்டார்கள். கடை இன்சால்வெண்டாய்விட்டதாக மஞ்சள் கடுதாசியை முன்பக்கம் ஓட்டிவிட்டு பின்புறமாய் போக்குவரத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுதான் காங்கிரசு ஜெயித்ததற்கு காரணம். 5 படி 5% படி போடுவதாகச் சொன்னவர்கள் மக்களுக்கு புத்திவந்து அவர்கள் தன் கடைக்கு மறுபடியும் வருவார்கள் என்று காத்திருக்கிறார்கள்.
காங்கிரஸால் ஓன்றும் சாதிக்க முடியாது
இந்த நிலையில் காங்கிரசு மறுபடியும் எந்த முகத்தைக்கொண்டு பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். ஏமாற்றமே வெற்றிபெறுமென்றால் வெற்றி பெற்று விட்டுப் போகட்டும் புத்தியில்லாமல் மக்கள் தங்கள் மடத்தனத்தின் பயனை அனுபவிக்கட்டும்; ஏமாற்றமும் ஒரு படிப்பினையே தவிர அது ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்று நான் கருதவில்லை. நானும் ஓட்டுப்பிரசாரம் செய்தேன். ஆனால் இன்று எந்த ஓட்டர் முன்னிலையிலும் தலை நிமிர்ந்து நடக்கிறேன். ஓட்டர்கள்தான் என்னைக்கண்டு தலை. குனிகிறார்கள். ஆனால் காங்கிரஸ்காரர்களோ அட்வான்ஸ் வாங்கி ஏமாத்தினவன் கொடுத்தவனைக் கண்டு எப்படி தலைகுனிந்து திருட்டுத்தனமாய் ஒளிந்து நடப்பானோ. அதுபோல் தலைகாட்ட யோக்கியதை இல்லாமல் மறைவாய் திரிகிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. இன்னம் 10 எலக்ஷன் நடந்தாலும்
சரி, இன்னம் 10 தடவையும் ஓட்டர்கள் காங்கிரஸ்காரர்களை ஆதரித்தாலும்
சரி, காங்கிரஸ்காரர்கள் 215 ஸ்தானங்களையும் கைப்பற்றினாலும் சரி “காசிக்குப் போனாலும் வீத்துக்கு 12 சல்லி” என்பதுபோல் காங்கிரஸ்காரர்கள் சாதிப்பது என்பது மற்றவர்கள் சாதித்தது என்பதற்குமேல் கடுகளவும் சாதிக்க முடியாது என்பது மாத்திரம் உறுதியான காரியமாகும்
நமது நாட்டில் காங்கிரஸ்காரர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த சில சட்டங்களை எடுத்துவிடலாம். அதாவது, தேவஸ்தான சட்டம், பொட்டுக்கட்டுவது ஒழிப்புச் சட்டம், இனாம் சட்டம் முதலாகியவைகளை எடுத்து விட முயற்சி செய்யலாம் அவற்றிற்கு கவர்னர், கவர்னர் ஜனரல், அரசர் ஆகியவர்கள் சம்மதம் வேண்டியிருக்கும். அவ்வளவு சுலபமாய் அவர்கள் அனுமதி அளித்துவிட மாட்டார்கள்.
மற்றபடி உத்தியோகங்களில் வகுப்புவாரி முறை உத்திரவு போன்றவைகளை காங்கிரஸ்காரர்கள் எடுத்துவிட முடியும். கவர்னர்கள் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுக்கலாம். இல்லாவிட்டால் தான் நஷ்டமென்ன?
குடி அரசு- 1937 (1) 306
பார்ப்பனர்கள் வாலைப் பிடித்துத் திரிந்துகொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கும் காங்கிரஸ் பைத்தியம் பிடித்த பார்ப்பனரல்லா தார்களுக்கும் ஒரே தடவையில் புத்திவரச் சந்தர்ப்பமேற்படும். ஆதலால் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போய் மந்திரி ஆவதால் நமக்கு ஒன்றும் பெரிய நஷ்டமாகி விடாது. அவர்கள் சாயம் தான் வெளுக்கப் போகிறது. அடுத்த தேர்தல் வந்தால் நாம் யாரும் நிற்க வேண்டியதில்லை என்றுகூட சிலர் சொல்லுகிறார்கள். அதுவும் நல்லதாகத்தான் முடியலாம்
ஆனால் நாம் மாத்திரம் காங்கிரஸ் பொதுஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்தாபனம் என்றும் நம்மால் ஆதரிக்கக்கூடியதென்றும் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.
காங்கிரஸ், பார்ப்பனர் கையாயுதம் இன்றைய நிலையில் நான் ஒருவனாய் இருந்தாலும் காங்கரசின் எதிரியாகவே சாவேன். ஏனெனில் அது ஒரு வகுப்பு ஸ்தாபனம். மற்ற வகுப்புகளை அடக்கி ஒடுக்கி அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிற சுயநல ஸ்தாபனம். தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாத சமூகத்தை தலையெடுக்கவிடாமல் நசுக்கவே அது பார்ப்பனர்கள் கை ஆயுதமாக இருந்து வருகிறது. அது பார்ப்பனரல்லாதார்களில் மானமும் குலநலமும் இருக்கும் மக்களை சேர்ப்பதே கிடையாது. அப்படிப்பட்டவர்கள் யாராய் இருந்தாலும் காங்கிரசிற்குள் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் அவர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கியே வைக்கும். தங்கள் அடிமைகளை தங்களை அல்லாமல் வேறுகதி இல்லை என்று வந்து ஒண்டும் பேடி, கோழைகளை எல்லாம் வீரர்கள் என்கின்றது. தன் காலில்
நிற்கக் கூடியவர்கள் யாரையும் மதிப்பதோ அவர்களுக்கு மரியாதை கொடுப்பதோ கண்டிப்பாய்க் கிடையாது. இன்று காங்கிரசில் இருக்கும் காங்கிரசின் பேரால், பெருமை பதவிபெற்று வாழும் மக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாய்ப் பாருங்கள். தோழர் சி.ஆர். ரெட்டியார், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் போன்றவர்கள் திறமையும் யோக்கியமும் நாணயமும் மானமும் எங்கே? என்று பாருங்கள்.
காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கு மானமும் சுதந்திர உணர்ச்சியும் வீரமும் குலப்பற்றும் இருக்குமானால் சென்னை சட்டசபைக்கு 140 பொது ஸ்தானங்களுக்கு 50 பார்ப்பனர்கள் போல் நிறுத்தி வெற்றி பெற்றிருப்பார்களா?
இந்தச் சமூகத்திற்கு உணர்ச்சி கிடையாதா?
சென்னை கார்ப்பரேஷனுக்கு 40 ஸ்தானங்கள் போல் பார்ப்பனர்களை
நிறுத்தி வெற்றி பெற்று நேற்று நடந்த தேர்தலுக்கும் ஒரு பார்ப்பனரை
307 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நிறுத்தி போட்டி போட்டிருப்பார்களா? இந்த பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதிகளுக்கு மனித உணர்ச்சி கூடவா இல்லை என்று கேட்கிறேன்.
பார்ப்பனரல்லாதார்களில் தகுதி உடையவர்கள் இல்லையா? காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு வகுப்பு உணர்ச்சி கிடையாது என்றால்
எல்லாம் பார்ப்பன மயமாவது தான் அதற்கு அறிகுறியா என்று கேட்கிறேன்.
காங்கிரஸ் காலிகள் நம்மிடம் வந்து நீ ஏன் தாடி வைத்துக் கொண்டிருக்கிறாய். உன் பேர் ஏன் ராமசாமி என்று வைத்திருக்கிறாய் என்று கேள்வி கேட்டு பார்ப்பனர்களிடம் கூலி வாங்கி வயிறு கழுவப் பார்க்கிறார்களே ஒழிய பார்ப்பனர்களைக்கண்டு இம்மாதிரி வகுப்புக்கொள்ளை. ஏன் என்று கேட்கத்தக்க நாடி உள்ளவன் எவனையும் காணோம். இம்மாதிரி மானம் கெட்ட சமூகம் எக்காலத்தில் சுதந்திரம் பெறப்போகிறது? அது என்று தான் சுதந்திரத்துக்கு லாயக்காகும் என்று யோசித்துப் பாருங்கள்
வகுப்புயிமை கேட்பதன் காரணம் நானோ எனது நண்பர்களோ சுதந்திரம் வேண்டாம் என்கிறோமா? ஜெயிலுக்குப் போகப் பயப்படுகிறோமா? பார்ப்பான் ஏமாற்றலுக்கு இணங்காத காரணம்தான் நான் காங்கிரஸ்வாதி அல்லாதவனாயிருப்பதற்கு காரணமாகும். காங்கிரஸ்காரர்களுக்கு உண்மையான தேசாபிமானமிருக்கும் பக்ஷம் அவனவன் ஜாதி மதத்துக்கு ஏற்ற உரிமை கொடுப்பதில் என்ன தவறு? காங்கிரசில் ஜாதிகளும் மதங்களும் ஒன்றாகி விட வேண்டும் என்று தீர்மானம் போட்டிருந்தால் நான் ஜாதி மத வகுப்புரிமை கேட்கவே மாட்டேன். அப்படிக்கில்லாமல் ஜாதி, மதம், வகுப்பு காப்பாற்றப்படும் என்று காங்கிரசில் ஜவஹர்லால் நேரு சம்மதத்தின்
மீது தீர்மானம் செய்து வைத்துக்கொண்டு அவைகளுக்கு ஏற்ற உரிமை மாத்திரம் மறுத்தல் எப்படி ஞாயமாகும்? அப்படி உரிமை கொடுப்பது தேசத்துக்குக் கெடுதி என்றால் பார்ப்பனர்கள் மாத்திரம் ஒன்றுக்கு 10,15 வீதம் கொள்ளை அடித்துக்கொள்ளலாமா? என்று கேட்கின்றேன்.
1% பேர் இருக்கவேண்டிய ஸ்தானத்தில் 15 பேரும் 4% பேர் இருக்கவேண்டிய ஸ்தானத்துக்கு 50 பேரும் போய் உட்கார்ந்து கொண்டால் இந்தக் கூட்டத்தாரை நம்பி எந்த மடையன் கை தூக்குவான் என்று கேட்கிறேன்.
வகுப்புகள், ஜாதிகள், மதங்கள் உள்ளவரை அவைகள் காப்பாற்றப்படும் வரை அவரவர்களுக்கு உண்டான விகிதாச்சார உரிமை கொடுக்கப்படும் என்று காங்கிரசில் ஒரு தீர்மானம் போட்டுக்கொண்டு ஜாதி மத வகுப்புப் பிரிவுகளை பேதங்களை ஒழிப்பது காங்கிரஸ் கொள்கை என்று சேர்த்துக் கொண்டு வருமானால் நான் மாத்திரமல்ல, மற்ற எல்லா இந்தியனும் காங்கிரசில் சேர வேண்டியது ஞாயமாகும்
குடி அரசு- 1937 (1) 308
அப்படி இல்லாமல் வெறும் ஏமாற்றும், காலித்தனமும், காலிக்கூட்டமும் தான் காங்கிரஸ் என்றால் அதில் சேர்ந்த உடனே சர்வாதிகாரப் பதவி கிடைப்பதானாலும் மானமுள்ளவன் செருப்புக்கு சமமாய்த்தான். மதிப்பான். இன்று காங்கிரசுக்கு எதிராக இந்தியா பூராவிலும்தான் கட்சியும் கிளர்ச்சியும் இருந்து வருகிறது. 5 மாகாணங்கள் காங்கிரசைத் தோற்கடித்து விட்டன. பம்பாயில் காங்கிரசுக்கு 88 ஸ்தானமும் காங்கிரசுக்கு எதிராய் 87 ஸ்தானமும் கிடைத்திருக்கின்றன. மற்ற மாகாணங்களிலும் கிட்டத்தட்ட சரி பகுதியாகவே பிரிந்திருக்கிறது
குலைப்பதால் கதவு திறக்குமா?
சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் 215ல் 158 கைப்பற்றி விட்டது என்று சொன்னால் வங்காள மாகாணத்தில் 250க்கு காங்கிரசுக்கு 50 ஸ்தானம்கூட கிடைக்கவில்லை. காங்கிரசுக்கு எதிர் ஸ்தாபனம் 250ல் 200 ஸ்தானத்தை கைப்பற்றி விட்டது. காங்கிரஸ் எங்கே வெற்றி அடைந்து இருக்கிறது? வெற்றியடைந்தும் கூட தோற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; ஆட்சிபெற்றவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; அதிகாரம் செலுத்துபவர்களும் காங்கிரஸ் விரோதிகள்; மக்களுக்கு நன்மை செய்ய பல அருமையானத் திட்டம் போட்டு வேலை செய்பவர்களும் காங்கிரசுக்கு விரோதிகள் என்றால் காங்கிரஸ் வெற்றியின் அருத்தம் என்ன? அது இனி செய்யப்போவது என்ன? பூட்டி இருக்கும் பூட்டைப் பார்த்துக் குலைப்பதால் கதவு திறக்கப்பட்டு விடுமா? அதுபோல் பதவியில் இருக்கும் மந்திரிகளைப் பார்த்து நாய், கழுதை, துடைப்பம் என்று கூறுவதால் வெற்றிக்குப் பயன் ஏற்பட்டு விடுமா? என்று கேட்கின்றேன்.
ஏமாற்றப்பட்ட சமூகத்துக்கு எச்சமிக்கை
நமது நாட்டில் எண்ணிக்கையில் குறைவாய் இருந்தாலும், சரி பலமுள்ள முஸ்லீம் சமூகத்தை காங்கிரஸ் மூட்டைப்பூச்சி போல். மதித்திருக்கிறது. இரண்டு மூன்று சாயபுகள் தோழர் உபயதுல்லா மாதிரி காங்கிரசில் இருந்து விட்டால் அதுவே முஸ்லீம்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகி விடுமா? தோழர்கள் ஜின்னா, மகமதலி, அப்துல் ரகீம் போன்ற திறமைசாலிகளும் வீரர்களும் கோடீஸ்வரர்களும் காங்கிரசுக்கு வெளியில் இருந்து கொண்டு தங்கள் சமூக நலன்களைக் கவனித்துக்கொண்டு காங்கிரசினிடம் நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது “முஸ்லீம்களுக்கு தேசபக்தி கிடையாது என்று சொல்லி விடுவதே அதற்குச் சமாதானமாகி விடுமா என்று கேட்கின்றேன். காங்கிரசால் ஏமாற்றப்பட்ட சமூகம் இனி சும்மா இருக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறேன்.
காங்கிரசுக்கு பாமர மக்களிடம் செல்வாக்கு இருக்கிறது. இதன் பயனாய் பார்ப்பனர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள். தேர்தலில் நல்ல
309 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நபர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். சுத்த காலிகளும் ஒருவேளை சாப்பாட்டுக்கு எதையும் செய்யத் துணிவும் அவசியமும் உள்ள ஆட்களும் தங்களுக்கு என்று அல்லாமல் காங்கிரசுக்கு என்று வெற்றி பெற்று விட்டார்கள். இதன் அருத்தம் என்ன?
இன்றைய நிலைமை
எப்படிப்பட்ட யோக்கியனும் நாணயஸ்தனும் தகுதியும் உடையவனாய் இருந்தாலும் பார்ப்பனர்கள் ஆதரவில்லாவிட்டால் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்லாமல் தொல்லையில்லாமலும் வாழ முடியாது என்றால் பார்ப்பனரல்லாத மக்கள் சரீரத்தின் நல்ல ரத்த ஓட்டத்தின் பயன் இதுதானா? என்று கேட்கின்றேன். இதை இப்படியே விட்டு விட்டால் என்ன கதி ஆவது? இப்போதே பள்ளிப்பிள்ளைகளும் தெருவில் எச்சக்கலை நக்கிக்கொண்டு தண்ணீர்த் துறையில், காசு சாமான் திருடி தலைமறைவாய்த் திரிந்த பையன்கள் வரை தைரியமாய் வெளியில் நம் வீடுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு காலித்தனம் செய்யவும் வம்புக்கு வழக்கிழுக்கவும் ஆச்சாரியார் போல் இழிதனமாய்ப் பேசவும் துணிந்துவிட்டார்கள் என்றால் நாம் இதை சகித்துக்கொண்டு கோழைப்பெருமை காட்டுவதா என்று கேட்கின்றேன். ஒரு மிராசுதார். ஒரு மாஜி மந்திரியிடம் வந்து தன் தோட்டத்தில் போட்டிருந்த பில்லுப்போரில் பகுதியை சுமை கட்டி ஒருவன் எடுத்து போனதாகவும் தோட்டத்திலுள்ள விறகுகளை அள்ளிப் போவதாகவும், கேட்டால் போக்கிரித்தனமாகப் பேசுவதாகவும் என் முன்னாலேயே குறை கூறினார். காரணம் என்னவென்றால் “இந்த காங்கிரசுக்கார பசங்கள் தான்" என்கிறார். இப்படி இன்னும் பல உதாரணம் உண்டு. நானே இது போல் பல தடவை அனுபவிக்கிறேன். இன்னும் பார்ப்பன அதிகாரிகள் தொல்லை சகிக்க முடியவில்லை. ராஜ்யம் பார்ப்பன ராஜ்யம் ஆகிவிட்டதாகவும் தன்னரசு நாடாகவும் காலிகள் நாடாக ஆகிவிட்டதாகவும் சாயல் காட்டப்படுகிறது. “காங்கிரசில் சேராவிட்டால் நாம் எப்படி வாழ்வது” என்பதாக அனேக நபர்களுக்குத் தோன்றிவிட்டது
இந்த நிலைமை மாறாவிட்டால் நாட்டில் சமாதானமோ மானமுள்ளவர்களுக்கு சாந்தியோ ஏற்படாது. என்னைப் போன்றவனுக்கு கவலை இல்லை. ஒருவர் தயவையும் ஒரு பதவியையும் ஒரு சுயநலத்தையும் கருதப் போவதில்லை. காலித்தனங்களில் நல்ல அனுபவமும் நடத்தும் திறமையும் தக்க ஆட்களும் எனக்குண்டு. எதிர்தரப்புக் காலிகளை என்பக்கம் சேர்க்கும் சக்தியும் எனக்குண்டு. ஆனால் ஏழை எளியவர்கள். சாதாரண மக்கள் நிலை என்ன ஆவது? மலையாளத்துப் பார்ப்பனர்கள் ஆதிக்கம் போல் பெண்டுபிள்ளைகளைக் கேட்டாலும் (மோக்ஷத்துக்காக) கூட்டி விடத்தயாராய் இருப்பது போன்ற நிலை ஏற்பட இடம் கொடுப்பதா. என்று கேட்கிறேன்.
குடி அரசு- 1937 (1) 310
காங்கிரசில் சேர்ந்தவர்கள் கதி.
பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும், மிராசுதார்களுக்கும் மற்றும் ஜமீன்தார் மூதலியவர்களுக்கும் புத்தி வரவேண்டிய சமயம் இதுவேயாகும். காங்கிரசில் சேருவதால் நிலைமை மாற்றமடைந்து விடும் என்று கருதுவது ஏமாற்றத்தை அளித்துவிடும். தோழர்கள் டி.ஏ. ராமலிங்க செட்டியார், சி.எஸ். ரத்தினசபாபதி முதலியார் இருவரும் காங்கிரசில் சேர்ந்தார்கள். பலவழிகளிலும் பொதுவாழ்வில் இருவரும் கெட்டார்கள். இப்படியே கவுண்டர்களுக்குள்ளும் செட்டியார்களுக்குள்ளும் நாயுடுமார்களுக்குள்ளும் போட்டி போட்டு காங்கிரசில் சேர்ந்ததல்லாமல் பயன் அடைந்தவர்கள் பார்ப்பனர்களே. தலைவர்கள் ஆனவர்கள் பார்ப்பனர்களே. பார்ப்பனர்கள் கை ஆயுதங்களாக காரியதரிசியானவர்கள். சகலத்திலும் 3-ந்தர 4-ந்தர ஆட்களே.
இன்று காங்கிரசில் தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்துப்பிள்ளை, ராமலிங்க செட்டியார் போன்ற ஆட்களுக்கு வெளியில் இருந்த யோக்கியதை காங்கிரசில் இருக்கிறதா, இவர்கள் பணமும் பட்டமும் கல்வியும் அறிவும் சமூகப் பிரதானமும் சத்தியமூர்த்தி அய்யர் வீட்டு வாயில்படியிலும் ஆச்சாரியாரது தலையசைப்பிலும் இருந்துவருகிறது. இந்த நிலையை விட பார்ப்பனரல்லாத சமூகத்தின் கீழ்நிலை - இழிநிலை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
காங்கிரஸ் பார்ப்பணரல்லாதார் செய்ய வேண்டியது மரியாதையாக காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் ராஜினாமா கொடுத்து விட்டு தன் சொந்த முறையில் நின்று வெற்றி பெற்று மந்திரி பதவி அடைந்து நாட்டு மக்களுக்கும் தங்கள் சமூக மக்களுக்கும் நன்மை செய்யும் நிலைமையை அடைவதே புத்திசாலித்தனமாகும். அதில்லாவிட்டால் கூடிய சீக்கிரம் பார்ப்பன ராஜ்யம் ஏற்பட்டு ஹிட்லர் அதிகாரம் செய்யப்போகிறது என்பது உறுதி
குறிப்பு: 25.04.1937 இல் துறையூரிலும் 26.04.1937 இல் இலால்குடி வட்டம் பூவாளாரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கற்கால அரசியல்" என்னும் பொருள் குறித்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 02.05.1937
31— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் பூச்சாண்டி
காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய மானங்கெட்ட பிகுவைக் காட்டிக்கொள்வதற்கு - அதாவது பொது ஜனங்களை ஏமாற்ற ஏனெனில் இதற்கு முன் பல தடவைகளில் சட்டசபைகள் 'கழுதைகளும் நாய்களும் போகக்கூடியவை' என்றும் சட்ட சபைகளினால் ஒரு காரியமும் செய்ய முடியாதென்றும் கூப்பாடு போட்டுக்கொண்டு திரிந்ததோடு இரண்டு ஒரு சமயங்களில் சட்டசபையில் இருந்தே காலஞ்சென்ற மோதிலால் நேரு போன்றவர்கள் “சட்டசபைக்கு வந்ததே முட்டாள்தன' மென்றும் “இப்போதுதான் புத்தி வந்தது” என்றும் சொல்லி ““வீரகர்ஜனை''
செய்துவிட்டு வெளியேறி வந்தும், சமீபகாலமாக 2 வருஷத்திற்கு மேல் இந்திய சட்டசபையில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி பலம் இருந்தும் ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய் அறிவுள்ள ஓட்டர்கள் முன் தலை குனிய நேர்ந்தும் இருப்பவைகளான பல காரணங்களால் இப்போது காங்கிரசுக்காரர்கள் சட்டசபைக்குப் போனதற்கும் மந்திரி பதவி ஏற்று சம்பளம் பெற்று அதிகாரம் செய்வதற்கும் ஆசைப்பட்ட பிறகு பொதுஜனங்களுக்கு ஏதாவது ஒரு ஏமாற்றுதலான காரியம் செய்யாவிட்டால் தங்களை பழையபடி அதாவது தாங்கள் முன் சொன்னபடி கழுதைகள், நாய்கள் என்று நினனத்துவிடுவார்களே என்கின்ற கருத்தின்மீது ஒரு
தந்திரம் செய்து பார்த்தார்கள். அதுதான் “நீ நோகாமல் அடி நாங்கள் ஓயாமல் ஊளையிடுகிறோம். ஆனால் உங்கள் காரியத்தை மாத்திரம் கிரமமாக நடத்திக்கொடுக்கிறோம்" என்ற ஒப்பந்தத்தில் உறுதி மொழி கேட்டதாகும்
ஆனால் பிரிட்டிஷ் சர்க்காரானது எந்தக் காரியத்தைக் கொண்டும்
எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று ஜம்பம் பேசி மக்களை ஏமாற்ற இடம் கொடுக்கக் கூடாது என்றும் அம்மாதிரி காங்கிரசை சர்க்கார் மதித்ததாக பாமர மக்கள் நினைக்கும்படி ஏற்பட்டுவிட்டால் அந்த நினைப்பை வைத்துக்கொண்டு அயோக்கியத் தனமாகவும் நாணயக் குறைவாகவும் நடந்து மக்களுக்கு அதிகமான தொல்லை விளைவித்து ஏழை - எளிய - பலம் குறைந்த மக்களை ஏமாற்றி கஷ்டத்துக்குள்ளாக்கி விடுவார்கள் என்று கருதியே இதுவரையில் எந்தத் துறையிலும் எந்தக் காரியத்திலும் காங்கிரஸ் தலையெடுக்கவொட்டாமலும்
ஒரு திட்டத்திலாவது வெற்றி பெற முடியாமலும் செய்து வந்திருக்கிறார்கள்.
குடி அரசு- 1937 (1) 312.
உதாரணம் வேண்டுமானால் காந்தியார் காங்கிரசில் கலந்து சாதுவேஷம் போட்டு மகாத்மாவாகி ஏமாற்ற ஆரம்பித்த காலமாகிய 1919-ம் வருஷம் பஞ்சாப் கொடுமைக்கு பரிகாரம் தேட முயற்சித்த கால முதல் நிர்மாணத் திட்டம், பஹிஷ்காரம், ஒத்துழையாமை, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு, சைமன் கமிஷன், உப்புக் காய்ச்சுதல், காந்தி
இர்வின் ஒப்பந்தம் முதலாகிய எல்லாக் காரியங்களிலும் “காந்தி தொட்டது துலங்காது'' என்பதாக ஏற்படும்படி தோல்வியும் தலைகுனிவும் மன்னிப்பு பெறுவதுமான காரியங்களாகவே முடியும்படியாக சர்க்கார் செய்து வந்திருப்பவைகளைப் பார்த்தாலே தெரிய வரும்
தோழர் காந்தியார்தான் ஆகட்டும், மற்ற காங்கிரஸ் தலைவர்கள்
தான் ஆகட்டும், தங்கள் சக்தியைக்கொண்டோ அல்லது புத்திசாலித்தனத்தையும் நாணயத்தையும் கொண்டோ அல்லது அனுபவ ஞானம், அரசியல் ஞானம் என்பவையான நிபுணத்துவத்தைக் கொண்டோ காங்கிரசை நடத்தாமல் மூட மக்களிடம் ஏமாற்றுப் பிரசாரத்தில் பணத்தை வசூலித்துக்கொண்டு காலிகளுக்கும் கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்பு பத்திரிக்கைகளுக்கும் சுயநல வகுப்பு ஆதிக்கப் பத்திரிக்கைகளுக்கும் பணமும் ஆதரவும் கொடுத்து, யோக்கியதையின் மூலம் பதவிபெற தகுதியற்ற சோம்பேறி வஞ்சகக் கூட்டத்தை ஆதரித்துக்கொண்டு அவற்றின் மூலம் மலத்தை மாப்பணியாரம் ஆக்கி மக்களை நம்பும்படி செய்து ஏமாற்றிவரும் தந்திர ஜாலத்தின் மூலமே காங்கிரஸ் நடத்தப்பட்டு வருவதாலும் அறிவுள்ள மக்கள் இதை நன்றாய் அறிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை சர்க்கார் தெரிந்திருப்பதால் காங்கிரசின் நடவடிக்கைகளையோ அதை பாமர மக்கள். கண்மூடித்தனமாய் நம்பி அடி உதை படுவதையோ கோயில் குளம் போல்
கருதி முட்டாள் பக்தி செலுத்துவதையோ சிறிதும் லக்ஷியம் செய்யாமல் நாட்டு ஆட்சியின் முழுப்பொறுப்பும் தங்கள் மீது இருப்பதாகக் கருதி - நாட்டு நலனுக்கு காங்கிரஸ் எதிரியாகக் கருதி காங்கிரஸ் வெற்றி பெறாமல் இருக்கும்படியான வேலையை வெகு கவனமாக நடத்தி வருகிறார்கள் காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டு நாட்டின் ஆட்சி காங்கிரசின் கைக்கு போனால் இன்றைய ஸ்பெயின் படும்பாடு தான் இந்தியா படும் என்பது சர்க்காருக்கு மாத்திர மல்லாமல் பல அறிஞர்களுக்கும் தெரிந்து இருப்பதாலேயே காங்கிரசுக்கு உண்மையில் ஒரு மதிப்பும் மரியாதையும் இல்லாமல் அது ஒரு
வக்கீல் சந்தையாகவும் வயிற்றுப் பிழைப்பாளர்களின் ஊட்டுப்புரையாகவும் பாமர மக்களை ஏமாற்றும் ஜால ஸ்தாபனமாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவுதான் அர்த்தமற்றதும் பயனற்றதும் சீர்திருத்த சட்டத்தை சிறிதும் அசைக்கக்கூடாததும் சர்க்கார் நலத்திற்கோ பிரிட்டிஷாரின் சுயநலத்துக்கோ சிறிதும் பாதகமோ செளகரியமோ விளைவிக்கக் கூடாததுமான “வாக்குறுதி”யை கேட்டாலும் கூட சர்க்காரார் மற்றவைகளுக்கு சொன்ன ஒரே பதிலையே அதாவது முடியாது என்பதையே சொல்லி வருகிறார்கள். 33— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இந்த விஷயம் நன்றாய் காங்கிரஸ்காரர்கள் அறிந்திருந்தும் இந்த மாதிரி இடுக்கில் மாட்டிக்கொண்டதற்கு காரணம் ஏமாந்ததனமே தவிர வேறில்லை என்றுதான் சொல்லுவோம். நாம் முன் பல தடவைகளில் குறிப்பிட்டதுபோல் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் கேட்கும் வாக்குறுதி கிடைக்குமென்று கருதியே ஆக்ஷபிக்க சிறிதும் காரணமில்லாதபடி “நிபந்தனை” அதாவது அடிமை முறிகொடுத்து வாக்குறுதி கேட்டார்கள். இதை 29.4.37ந் தேதி “சுதேசமித்திர"னும் தலையங்கத்தில் ஒப்புக்கொள்ளுகிறது
“உறுதிமொழி கேட்ட காலத்தில் கவர்னர்கள் உறுதிமொழி கொடுத்து விடுவார்கள் என்றும் மந்திரி பதவிகளை ஏற்பது சாத்தியமாகிவிடுமென்றும் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் திடீரென்று இந்தியா மந்திரி குறுக்கிட்டு கவர்னர்கள் உறுதிமொழி கொடுக்கக்கூடாது என்று தாக்கீது பிறப்பித்து விட்டார்” என்று எழுதி மாரடித்துக்கொண்டு அழுகிறது
இதன் பின் என்ன நடந்தது என்று பார்த்தால் காங்கிரஸ் கேட்ட உறுதிமொழியில் சர்க்காருக்கோ, சீர்திருத்த சட்டத்துக்கோ, கவர்னர்களுக்கோ சிறிதும் அசெளகரியம் கிடையாது என்றும் உறுதிமொழியினால் எவ்வித சங்கடமும் சர்க்காருக்கு நேராமல் பார்த்துக்கொள்ள முடிவு செய்தே உறுதி மொழி கேட்கப்பட்டது என்றும் காங்கிரஸ்காரர்களால் சொல்லப்பட்ட பிறகும் கூட சர்க்காரார் “உறுதிமொழி மாத்திரம் கொடுக்கமுடியாது ஆனால் காங்கிரசுக்காரர்கள் சொல்லுகிறபடி சட்டத்திற்கு அடங்கி கவர்ன்மெண்டிற்கு அசெளகரியமில்லாமல் நடப்பதானால் சட்டத்திலேயே உறுதிமொழி இருக்கிறது” என்றும் “அந்தக் கருத்தின் மீது தான் அச்சட்டம் செய்யப்பட்டிருக்கிறது'' என்றும் சொல்லிவிட்டார்கள்.
இந்த மத்தியில் சட்ட சம்மந்தமான பிரச்சினைக்கு இதில் இடமே இல்லை. காங்கிரசின் பொய் வெட்கம் தான் குறுக்கிடுகிறது. சட்ட சம்மந்தமான காரியத்தைப் பற்றி பேசுவதாயிருந்தாலும் காங்கிரஸ் வாக்குறுதி கேட்கும் தீர்மானம் நிறைவேற்றிய உடனே தோழர்கள் ஜயகர், சாப்ரு, சிவசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி முதலியவர்கள் உறுதிமொழி கொடுப்பது சட்டத்திற்கு விரோதமென்று சொன்ன பிறகு ஏதோ நேற்று முளைத்த காளான்களை விளம்பரப்படுத்திக்கொண்டும் லண்டனில் எதிர்க்கட்சியில் இருக்கும் வெள்ளையர்களுக்கு விளம்பரம் கொடுத்துக்கொண்டும் இதுவரை கேட்டிராத - காங்கிரஸ்காரர்களாலும் மதித்திராத ஆள்கள் பேரைச்சொல்லி அவர்கள் பேரால் சட்டத்தில் இடமிருக்கிறது என்று சொன்னால் அதில் என்ன யோக்கியப்பொறுப்பு இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ்காரர்களின் சட்டகபைப் பிரவேசத்துக்கு வெளிப்படையாய் சொல்லப்பட்ட காரணம் சீர்திருத்த சட்டத்தை ஒழிப்பது என்பதாகும்
குடி அரசு- 1937 (1) 314
அந்தப் பிரச்சினையின்மீது வெற்றி பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் இன்று சீர்திருத்த சட்டத்தை நடத்திக்கொடுக்க கவர்னர்கள். வசதி செய்து கொடுக்கும்படி கேட்கிறார்கள் என்றால் அதாவது “தீர்திருத்தத்தைக்கொண்டு மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டு மென்றால் அப்படி செய்யப்படுபவைகளில் கவர்னர் பிரவேசிப்பதில்லை என்று உறுதிமொழி கொடுக்கவேண்டுமென்றும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதாயும் சொல்ல வேண்டும்” என்றால் இதற்கு என்ன அருத்தம் என்று கேட்கின்றோம்.
இந்த உறுதிமொழி காந்தி இர்வின் ஒப்பந்தம் போலவே இருக்கிறது அதாவது “காங்கிரஸ்காரர்கள் இனிமேல் மறியல் செய்வதில்லை, சட்டமறுப்பு செய்வதில்லை, ஒத்துழையாமை செய்வதில்லை, சத்தியாக்கிரகம் செய்வதில்லை: என்று ஒப்புக்கொள்ளுவது, சர்க்காரார் (அப்படியானால்) அரஸ்டு செய்வதில்லை, அரஸ்டு செய்து ஜெயிலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்து விடுவது” என்பதாகும். இதைத்தான் காங்கிரசுக்கு ஒரு வெற்றி என்று சொன்னார்கள். அனேக மூடர்கள். அதுபோலவே இப்போதும் கேட்கிறார்கள். இந்த பொய் வீம்புக்கு சர்க்கார் இடம் கொடுக்க மறுக்கிறார்கள். இதுதான் இன்றைய “நெருக்கடி” என்பதாகும்
இந்த நிலையில் அலஹாபாத்தில் காரியக் கமிட்டி கூடி தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டது. என்னவென்று பார்ப்போமானால் அவை இவ்வளவையும் விட வெட்கக்கேடான காரியம் என்று தான். சொல்ல வேண்டியிருக்கிறது
“அதாவது லார்ட் ஜெட்லண்டும் மிஸ்டர் பட்லரும் பேசியிருப்பது காங்கிரசினிடம் அவமரியாதையைக் காட்டுவதாக இருக்கிறது என்றும்,
“கவர்னருக்கும் மந்திரிகளுக்கும் கடுமையான அபிப்பிராய பேத மேற்படும்பொழுது மந்திரிகளை நீக்கவோ, சட்டசபையை கலைக்கவோ கவர்னருக்குள்ள அதிகாரத்தை பிரயோகிக்காமலிருக்க வேண்டுமென்கின்ற
கருத்து உறுதிமொழியில் இல்லை'' என்றும் தீர்மானித்திருக்கிறது
இந்த தீர்மானமானது அனாவசியமாய் எங்களை அடித்துவிட்டீர்கள். நாங்கள் ஒன்றும் குற்றம் செய்யவில்லையே என்று அழுவதுபோல் இருக்கிறதேயல்லாமல் இதில் வேறு நாணயமோ புத்திசாலித்தனமோ வீரமோ ஒன்றுமே காணமுடியவில்லை.
ஆனால் சாராம்சத்தில் சர்க்காரிடம் காங்கிரஸ் ராஜி செய்துகொள்ள முயற்சிப்பதாகவே பேச்சுவார்த்தைகளால் காணப்படுகின்றது. இந்தியா.
மந்திரியும் உதவி மந்திரியும் காங்கிரஸ் கோரிக்கையை “அலக்ஷியம் செய்து அவமரியாதையாய்” பேசிய பிறகுகூட சர்க்காரோடு ராஜி செய்து கொள்ள காங்கிரஸ் இவ்வளவு அத்திரப்படுவானேன்? இதுதான் “தேசீய காங்கிரஸ்தான். எல்லாவற்றிலும் பெரிதும் பலம் பொருந்தியதும் சுயமரியாதை உள்ளதுமான ஸ்தாபனம்” என்று சொல்லுவதற்கு அறிகுறியா என்று கேட்கிறோம் 35, ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சர்க்காரார் இப்படி ஆத்திரமூட்டக்கூடிய மாதிரியிலும் அவமரியாதை
யாயும் பேசியதாக தீர்மானித்துக்கொண்ட பிறகுகூட சில பத்திரிக்கைகள்
சிறிதும் வெட்கம் மானமின்றி தங்களுக்கு இனியும் மந்திரி பதவி ஏற்கக்கூடும் என்ற நம்பிக்கை இருக்கிறதென்றும் காங்கிரஸ் கட்டாயம் பதவிக்கு வரப்போகிறதென்றும் இப்போதே சர்க்கார் கீழே இறங்கி வந்து விட்டதென்றும் பித்தலாட்டப் பேச்சுப்பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது அரசியல் அயோக்கியத்தனம் தவிர வேறில்லை. இதன் கருத்து மந்திரி பதவி கொடுப்பதாய் ஏமாற்றி சேர்க்கப்பட்ட ஆட்கள் காங்கிரசை விட்டு ஓடாமலிருக்கவே ஒழிய வேறல்ல. இந்தப்படி ஒரு கூட்டம் பத்திரிகைகள். பதவி ஆசை பிடித்து இதோ பதவிக்கு வரப்போகிறோம் அதோ பதவிக்கு வரப்போகிறோம் என்று கூறிக்கொண்டிருக்க, மற்ற ஒரு கூட்டம் இந்த கவர்ன்மெண்டை ஆட்டுவிக்கப் போகிறோம். காந்தியார் அபாரமான - தீவிரமான திட்டம் வகுத்து சர்க்காரை நடுங்கும்படி செய்யப்போகிறார் என்றும், காந்தியார் எல்லோருக்கும் சமாதானம் சொல்லி அடக்கிவைத்து இருக்கிறார், இல்லாவிட்டால் பிரிட்டிஷ் ஆட்சி உரலைக் கட்டிக்கொண்டு ஆகாயத்தில் பறந்துவிடும் என்றும் பலவிதமாக கூப்பாடு போட்டு பாமர மக்களை ஏமாற்றுவது மற்றொரு அயோக்கியத்தனமேயாகும். இன்றைய அரசியல் நிலை இன்னது என்பதை மக்கள் உணருவதற்கே. இல்லாமல் காங்கிரசு செய்து வருகிறது.
காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்பதில் நமக்கு சிறிதும் ஆக்ஷபணை யில்லை. அவர்கள் பதவி ஏற்றுச் செய்யப்போகும் காரியம் இன்னது என்பதையும் அவர்கள் அடையப்போகும் பஹிஷ்காரம், கருப்புக் கொடிமரியாதை, அவர்களை பஹிஷ்கரிப்பது மூலம் பலர் ஜெயிலுக்கு செல்லுதல் முதலிய கவுரவம் ஆகியவைகளைப் பார்க்கத்தான் காத்திருக்கிறோமே ஒழிய காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்கக்கூடாது என்கின்ற எண்ணம் நமக்கு சிறிதும் கிடையாது. எப்படியாவது சுடுகாடு போன பிணம் சுட்டுத்தான் தீரவேண்டும், திரும்பிக் கொண்டு வந்தால் நாற்ற மெடுத்துப்போகும் என்பது நமக்குத் தெரியும். ஆதலால் இப்போது இருக்கும் மந்திரிகளைக்கொண்டே நாடு கரை ஏறிவிடும் என்று யாரும் நம்பவேண்டியதில்லை. அவர்கள் எவ்வளவு நன்மையான காரியங்களைச் செய்வதானாலும் காங்கிரஸ் தொல்லை முதலில் ஒழிந்தாக வேண்டும். அப்படி ஒழிவதற்கு காங்கிரசு எப்படியாவது மந்திரி பதவி ஏற்கவேண்டும். பொய் வெட்கத்தையும் போலி மரியாதையையும் காட்டிக்கொண்டு இன்னமும் நாள் கடத்தாமல் “வார்ப்பதை வாரம்மா வள்ளித்தாயே” என்று மரியாதையாய் முக்காடு போட்டு பதவிக்கு வரட்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.05.1937
குடி அரசு- 1937 (1) 316
பார்ப்பனால்லாதாருக்குப் பத்தியிகை இல்லை
அறிக்கை
“ஜனநாயகம்” நின்று விட்டது. “திராவிடன்” மறைந்து 4, 5 வருஷங்கள். ஆகிவிட்டன. “தமிழ்நாடு”ம் அனேகமாய் மறைந்து விட்டது என்றே சொல்லலாம். “விடுதலை” இப்பவோ பின்னையோ என்று இருக்கிறது
மற்றும் வாரப் பத்திரிக்கைகள் பலவற்றில் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் குறி வைத்து நடத்தப்பட்டு வந்தவைகள் பல ஒழிந்துவிட்டன. இரண்டொன்று பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படுகின்றன என்றாலும் அவைகள் பார்ப்பனரல்லாதார் குறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை
வகுப்புவாதம் என்று எழுதி பார்ப்பனர்களுக்கு அடிமையாகவே ஆகி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வையும் வேலையில் ஈடுபட்டு வாழவேண்டிய நிலையில் இருக்கின்றன. மற்றபடி வேறு எங்காவது ஒன்று இரண்டு வாரப்பத்திரிக்கையோ மாதப் பத்திரிக்கையோ இருந்தால் அவைகளும் காங்கிரஸ் பத்திரிகையாகத்தான் இருந்து வருகின்றன.
“விதிவிலக்காக! “குடி அரசு”, 'நகரதூதன்”, “விடுதலை” முதலாகிய
பத்திரிகைகள் இருந்த போதிலும் அவைகள் இன்று வாரப்பத்திரிக்கைகளாக இருக்கின்றனவே ஒழிய தினப் பத்திரிகை இன்று பார்ப்பனரல்லாதார். குறைகளை நீக்கவோ நாட்டு நடவடிக்கைகளின் உண்மையை எடுத்துச் சொல்லவோ, ஒன்று கூட இல்லவே இல்லை. எல்லாம் பார்ப்பனப் பத்திரிக்கைகளாகவே இருக்கின்றன. பார்ப்பனீயத்துக்கு உழைப்பனவாகவே இருக்கின்றன. அவை (பார்ப்பன தினைரிப் பத்திரிக்கைகள்) ஒரே கட்டுப்பாடாக பார்ப்பனரல்லாதார் சமூக நலன் சம்மந்தமான சகல விஷயங்களையும் வேண்டுமென்றே மறைத்து வருவதோடு விரோதமாகவும் வேண்டுமென்றே
திரித்தும் கற்பனையாகவும் அனேக விஷயங்களை பிரசுரித்து மக்களை பார்ப்பனரல்லாத பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியவர்கள் மீது தப்பபிப்பிராயம் கொள்ளும்படி செய்து சகல காரியங்களையும் கெடுத்து வருகின்றன. எவ்வளவு நியாயமான விஷயமானாலும் அதை கிரமமாக
எடுத்துச் சொல்லுவதன் மூலம் தான் நியாயம் விளங்குமே அல்லாமல் தானாக விளங்கி விடாது. நல்ல கெட்டிக்கார வக்கீலை வைப்பதினால்
3 ய... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தப்பான - பொய்யான வழக்குகள் வெற்றிபெற்று விடுகின்றன. திறமையற்ற வக்கீலை வைப்பதினால் உண்மையான வழக்குகள் தோல்வி அடைந்து விடுகின்றன. அதுபோலத்தான் இன்றைய அரசியல், சமூக இயல் விஷயங்களில் நியாயமான விஷயங்களை மக்கள் தவறுதலாய் உணரும்படியும் தவறான காரியங்களை மக்கள் சரியானதென்று உணரும்படியாகவும் செய்து தனிப்பட்ட ஒரு கூட்டத்தாரே- பார்ப்பனர்களே உலக போக போக்கியங்களை தங்களுக்கு அனுகூலமாக ஆக்கிக்கொண்டு.
மற்ற மக்களை தங்களுக்கு அடிமையாய் இருந்தாலொழிய வாழமுடியாத நிலையில் இருத்தி வைத்திருக்கிறார்கள்.
சட்டசபை தேர்தல் நடந்து 2% மாதங்கள் ஆகிவிட்டன. பொது ஜனங்களின் ஆதரவு தங்களுக்கே இருந்து வருவதாகப் பெருமை பேசிக்கொள்ளும் பார்ப்பனர்கள் - காங்கிரசுக்காரர்கள் தவறான வழியில் வெற்றி பெற்று விட்டதால் அத்தவறை மறைத்துக்கொள்வதற்கு ஆக ஏதோ பொருத்தமற்ற காரணங்களைச் சொல்லிக்கொண்டு அரசியல் உலகைப் பாழாக்கி வருகிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் காங்கிரசுக்காரர்களது தவறுதல்களையும், முட்டாள் தனமான காரியங்களையும் அவர்கள் செய்துவரும் பித்தலாட்டங்களையும் பொதுஜனங்களுக்கு அறிவிப்பதற்கு பத்திரிகை இல்லாமல் போய்விட்டதேயாகும்.
நாளைக்கு காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டாலும் அதை ஏற்று அவர்கள் செய்யும் தவறுதல்களையும் சுயநல சூழ்ச்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டுவர பத்திரிக்கைகள் இல்லையானால் அவர்கள் - பார்ப்பனர்கள் சமூக இயலில் மற்ற சமூகங்களை அடியோடு பாதாளத்தில் தள்ளிவிட்டு பழைய காலப்படி பூதேவர்களாக ஆகிவிடுவார்கள். அரசியலிலும் பழையபடியே சகல இலாக்காவிலும் புகுந்து அக்கிரார ஆக்ஷி ஆக்கிக்கொள்வார்கள். இவற்றை பார்ப்பனரல்லாத மக்கள் சரியாக உணர்ந்து கொள்ளாமல் அலக்ஷியமாக
இருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும் இம்மாதம் 9-ந் தேதி சென்னையில் கூடும் பார்ப்பனரல்லாதார். ககடி (ஜஸ்டிஸ் கக்ஷி) நிர்வாக சபைக் கூட்டத்தில் “விடுதலையை தினசரியாக நடத்த அக்கக்ஷி பிரமுகர்கள் ஒப்புக்கொள்ளாத பக்ஷம் ஈரோட்டில் “குடி அரசு'' ஆபீசில் இருந்து ஒரு காலணா தினசரி
ஆரம்பித்து நடத்த உத்தேசித்து இருக்கிறோம். அதற்கு குறைந்தது ஒரு வருஷ காலத்துக்கு ஆவது மீ” 500ரூ. நஷ்டமேற்படலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது
அதாவது சுமார் 15 300 ரூபாய்வரை செலவை சொந்தப் பொறுப்பு ஆக்கிக்கொள்ளப்பட்டும் மீ” 500 ரூ. நட்டம் ஏற்பட்டு தீரும்போல்
குடி அரசு- 1937 (1) 318
இருக்கிறது. இதற்கு ஆக மீ' 50 ரூபாய் வீதம் ஒரு வருஷத்துக்கு உதவுபவர்கள் 5 பேரும் 15 25ரூ வீதம் ஒரு வருஷத்துக்கு உதவுபவர்கள் 10 பேரும் முன் வந்தால் கண்டிப்பாக தினசரி பத்திரிக்கை ஆரம்பித்து விடலாம் என்று உத்தேசித்து இருக்கிறோம். இதுவரை 50 ரூபாய்க்கு ஒருவரும் 25 ரூபாய்க்கு மூவரும் உதவுவதாக முன் வந்திருக்கிறார்கள். பாக்கிக்கு சில தோழர்களை சந்திக்க உத்தேசித்து இருக்கிறோம். காகித விலை அபாரமாய் ஏறிவிட்டது. பவுன்ட் 0-1-3 ஆக இருந்தது இப்போது 0-2-3 ஆக இருக்கிறது.
நாம் உத்தேசித்து இருக்கும் சைஸ்ஸாகிய குடி அரசு அளவு 8 பக்கம் 3000 பத்திரிக்கை (ஆரம்பம்) வீதம் தினம் பிரசுரிப்பதாய் இருந்தாலும் காகித விலை மாத்திரம் 15 600 ரூபாய்க்கு மேல் ஆகும். அச்சுக்கூலி, ஆசிரியர் குழாம் முதலியவைகள் மீ£ 400ரூ. ஆகலாம், ரயில் பார்சல் சார்ஜ் குறைந்தது 15 200 ஆகலாம். ஸ்டாம்புகள் 15 100ரூ. ஆகலாம். ஆக மொத்தம் குறைந்தது மீ” 1300 ரூபாய் செலவு ஏற்படலாம். இதில் குறிப்பிட்டவர்கள் பண உதவியும் சொந்தப் பொறுப்பும் பத்திரிக்கை வருமானமும் மீ” 800ரூ. எதிர்பார்த்து 15 500 ரூபாயே நட்டம் எதிர்பார்க்கப் படுகிறது. எப்படியானாலும் ஒரு வருஷத்துக்கு நடத்திவிட்டால் அடுத்த வருஷம் தன் காலில் நிற்கும் சக்தியை பத்திரிகை அடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பத்திரிகை ஈரோட்டில் நடத்தப்பட்டால் மாத்திரமே இந்த நஷ்டத்தில் நடக்க மூடியும். இல்லாதவரை 15 1000 ரூபாய் நஷ்டம் எதிர்பார்த்தாக வேண்டும். இப்பத்திரிகை காங்கிரஸ் பித்தலாட்டங்களையும் உண்மை நடப்புகளையும் வெளியாக்குவதைத் தான் முக்கிய வேலையாய்க் கொள்ளும். பிறகு செளகரியப்பட்டால் பல செளகரியமான காரியங்களும் இதனிடம் எதிர்பார்க்கலாம். ஆதலால் இந்த அளவுக்கே இப்போதே இந்த அபிப்பிராயத்தை வெளியிடுகிறோம்
ஏனெனில் இந்த 2 மாத காலத்துக்குள் தினசரி பத்திரிகையை நடத்தவேண்டுமென்று கோரி பல தீர்மானங்கள் பல இடத்திலிருந்து நிறைவேற்றி அனுப்பப்பட்டிருப்பதோடு சுமார் 40, 50 கடிதங்கள் வரை இது விஷயமாய் நம் மீது குறை கூறியும் எழுதப்பட்டிருப்பதால் நமது அபிப்பிராயத்தை இதன் மூலம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம் ஆங்காங்குள்ளவர்கள் கவனித்து மீ” 25 ரூபாய்க்கு பொறுப்புள்ளவர்களிடம் கையெழுத்து வாங்கி அனுப்பினால் சீக்கிரம் பத்திரிகை துவக்க அனுகூலப்படும் என்று கருதுகிறோம்.
மற்றபடி ஒரு ஸ்தாபனமோ ஒரு கமிட்டியோ பத்திரிகை நடத்துவ தென்றால் அது முடியாத காரியமென்றே கருதுகிறோம். இதுவரை ஜஸ்டிஸ் பத்திரிக்கைகளுக்கு ஆக 4, 5 லக்ஷ ரூபாய் செலவு செய்தும் இன்னமும் மீ 2000, 3000, 4000 ரூ. கைப்பொறுப்பில்தான் நடைபெறுகின்றன.
3 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தனிப்பட்டவர்கள் முயற்சி இல்லாமல் பொது முயற்சியாகி நடப்பதானால் நடத்தும் சிப்பந்திகளால் ஒரு ரூபாய் ஒரு அணாவாகக்கூட மதிக்கப்படுவதில்லை. “யார் சொத்தோ போனால் போகிறது, நமக்கென்ன? அனுபவித்தவரை லாபம்” என்கின்ற மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது
தனி முயற்சி இல்லாதிருக்குமானால் “குடி அரசு” கூட வெகு நாளைக்கு முன்னமே மறைந்திருக்கும். ஆதலால் தான் இம்மாதிரி முயற்சி செய்யப் படுகிறது என்பதை வாசகர்கள் உணரவேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.05.1937
குடி அரசு- 1937 (1) 320.
“சுதேசமித்திர??ணின் விஷமம்
அனாமத்து மந்திரிகள் என்னும் இடைக்கால மந்திரிகள் விஷயத்தில் பார்ப்பனர்கள் வேண்டுமென்றே அயோக்கியத்தனமாக விஷமப்பிரசாரம் செய்து வருவது பற்றியும் தோழர் ராஜ கோபாலாச்சாரியார் கோஷ்டி செய்துவரும் இழி பிரசாரங்களைப் பற்றியும் பலதடவை எழுதி இருக்கிறோம். காங்கிரஸ் பத்திரிக்கைகள் - தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும்
சிறிதும் மானம், ஈனம் என்பவை இல்லாமல் தங்கள் சுபாவங்களை காட்டி வருகின்றன. எவ்வளவு எழுதினாலும் சிறிதும் அவைகளுக்கு ரோஷம் உண்டாக்க முடிவதில்லை. எப்படியாவது ஜனங்களை முட்டாள்களாக்கி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டவேண்டும் என்பதைத் தவிர வேறு லட்சியமே இல்லாமல் நடந்து வருகின்றன. “உதாரணமாக 5-5-37ந் தேதி மித்திரனில் “இவ்வருஷம் இல்லையாம்” என்னும் தலையங்கதலைப்பின் கீழ் இடைக்கால மந்திரிகள் இவ்வருஷம் வரி குறைக்கவில்லை என்றும், அடுத்த வருஷத்துக்குத் தான் வரி குறைப்பார்களாம் என்றும், ஆகவே விவசாயிகளுக்கு கையை விரித்து விட்டார்கள் என்றும், ஏன் இந்தப் பசலியிலேயே குறைத்து இருக்கக் கூடாது என்றும் ஆகவே அவர்கள் சொல்லுவது உண்மையல்ல என்று கருதும்படி எழுதி இருக்கிறது.
இதில் எவ்வளவு அயோக்கியத்தனம் இருக்கிறது என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டுகிறோம்
இடைக்கால மந்திரிகள் பதவி ஏற்றது ஏப்ரல் முதல் தேதியில் என்பதும் அவர்கள் வரவு செலவு புள்ளிகள் தயாரித்துப்பார்க்க நேர்ந்தது ஏப்ரல் 10,
20-ந் தேதிகளுக்குப் பின்தான் செளகரியமாயிருக்கு மென்பதும் அதற்குள் வரிகள் பெரிதும் வசூலிக்கப்பட்டு இருக்கும் என்பதும் பொது ஜனங்கள் உணர்ந்ததேயாகும். 100-க்கு 25 வீதம் வரி குறைக்கும்படியான பெரிய திட்டத்தைப் போடுகிறார்கள். வசூலான பணத்தை - தாங்கள் பதவிக்கு வருமுன் வசூலிக்கப்பட்ட பணத்தை ஏன் திருப்பிக்கொடுக்கவில்லை என்று கேட்பதில் ஏதாவது யோக்கியப் பொறுப்பு இருக்க முடியுமா என்பதை வாசகர்கள்.
சிந்திக்க வேண்டுகிறோம் ஆகவே எது செய்தாலும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்கு ஆகவே குறை கூறி விஷமம் செய்வது என்பது இப்பார்ப்பனக் கூட்டத்திற்கு
என்று ஒழியுமோ?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.05.1937 21— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஈரோடு
முனிசிபல் சந்தைப்பேட்டை அபாய சம்பவம்
- விசிட்டர்
ஈரோடு முனிசிபாலிட்டியார் சென்ற வாரம் கூடிய தங்கள்.
மீட்டிங்கில் சந்தைப்பேட்டை அபாயத்துக்கு ஆளானவர்கள் சகாய நிதிக்கு ஆக 5000 ரூபாய் ஒதுக்கிவைப்பது என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.
சேர்மென் அவர்களும் கமிஷனர் அவர்களும் கவுன்சிலர்களும் இது விஷயத்தில் மிக்க அனுதாபம் காட்டிப் பேசியதோடு மிகவும் கஷ்டப்பட்டு கஷ்ட நிவாரண வேலையும் செய்தும் வருகிறார்கள். சர்க்கார் டாக்டரும்
மிக்க கவலையோடு வேலை செய்து வருகிறார். இவற்றை எல்லா மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். விஷயம் இப்படி இருக்க, தந்திரத்தில் கவுன்சிலர்களாக ஆசைப்படும் சிலர் இவற்றிற்கு மாறாக பொய் நோட்டீசுகளும் பித்தலாட்ட விளம்பரங்களும் முதலைக்கண்ணீர் அழுகைகளும் கொண்டு ஊசியை மலையாக்கிப் பேசி மக்களை மயக்கப் பார்க்கிறார்கள் என்றாலும் முடிவில் அவர்கள் நிலை பரிதாபப்படக் கூடியதாகத்தான் இருக்கும் என்று இப்போதே கூறிவிடுகிறேன்.
பொது ஜனங்கள் பேரால் பண வசூல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இதில் எனக்குப் பொறாமை இல்லை. சிலருக்கு அவசரமாய் சாப்பாட்டுக்கு வழிகள் வேண்டியிருக்கிறது. “ஆத்துத் தண்ணீரை அப்பா
குடி அய்யா குடி”. ஆனால் அபாய சம்பவ விசாரணைக் கமிட்டி வேலை என்று மற்றொரு நாடகம் நடக்கிறதே அதுதான் வேடிக்கை விஷயமாகும். இது இந்த விசாரணை கர்த்தர்களுக்கே முடிவில் தொல்லை விளைவிக்கப் போகிறது. என்னவென்றால் சந்தைப்பேட்டை கொட்டகை கட்ட கண்டிறாக்ட் எடுத்த கண்டிறாக்டர் ஒரு பார்ப்பனர். முனிசிபாலிட்டி ஓவர்சியர்கள் இருவர்களும் பார்ப்பனர்கள். ஆதலால் விசாரணைக் கமிட்டி சுற்றிச் சுற்றி என்னதான் விசாரணை செய்து தீர்ப்பு அறிக்கை விட்டாலும் முடிவில் இந்த மூன்று பார்ப்பனர்கள் தலையில் தான் கைவைக்க வேண்டி வரலாம். மற்றவர்களைப் பற்றி ஒன்றுமே செய்ய முடியாது. ஏன் என்றால் சேர்மெனெயோ கமிஷனரையோ
குடி அரசு- 1937 (1) 322.
கவுன்சிலர்களையோ இந்த இலாக்கா சம்பந்தமான சர்க்கார் அதிகாரிகளையோ பாதிக்கும்படியான அறிக்கை எழுத கமிட்டிக்கு மூளை போதாது என்பது எனக்குத் தெரியும். எழுதினால் ஆப்பசைத்த குரங்குபோல் மாட்டிக்கொள்வார்கள் என்பதும் உறுதி. ஆதலால் அவ்வளவு தைரியமோ பைத்தியக் காரத்தனமோ கமிட்டிக்கு இருப்பதும் சந்தேகம்
ஈரோடு எவ்வளவோ பார்ப்பனரல்லாதார் தன்மையைப் பற்றிய கவலையுடையவர்களை உடைய ஊராய் இருந்தும், பார்ப்பனர்கள். சொல்லுவது போல் “பார்ப்பனத் துவேஷி ராமசாமி நாயக்கன்” இருக்கிற ஊராய் இருந்தும் இரண்டு ஓவர்சியர் சிப்பந்திகளும் பார்ப்பனர்களாகவும் கண்டிறாக்டரும் பார்ப்பனராகவும் இருப்பது என்றால் இது உலகத்தில் 8வது அதிசயமல்லவா என்பது எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு. ஏதோ இப்போது அதற்கு ஒரு சமயம் கிடைத்திருக்கிறது. அதாவது இந்த மூன்று ஸ்தானத்தில் இரண்டு ஸ்தானமாவது இவ்வறிக்கையின் பயனாய் ஒழிக்கப்பட்டு பர்த்தி பண்ணப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டால். அதுவே போதும் என்று கருதுகிறேன். பொல்லாத காலத்திலும் இது
ஒரு நல்ல காலமாகத்தான் முடியலாம். ஆனால் எனக்கு ஒரு ரகசிய சேதி எட்டி இருக்கிறது. அது என்னவென்றால் இந்த விசாரணைக் கமிட்டியிலும் மூன்று பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளைப்பற்றி இப்போது முதலே சிபார்சு பறக்கிறதாகத் தெரிய வருகிறது
இந்தக் காரணம் கொண்டுதான் அபாயத்துக்கு ஆக கடை வீதியிலே பணம் வசூலிக்க பார்ப்பனரல்லாதாரும் அக்கிரகாரத்தில் விசாரித்து தீர்ப்புக் கூற பார்ப்பனர்களும் என்று ஏற்பாடு செய்து கொண்டார்களோ என்னமோ தெரியவில்லை. எப்படியானாலும் சரி, பண வசூலையும் விசாரணை முடிவையும் தெரிவதற்கு என்றே நான். காத்துக்கொண்டிருக்கிறேன்.
குடி அரசு - கட்டுரை - 09.05.1937
33— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மும்மூர்த்திகள் கண்டனம்
அகில இந்திய முஸ்லிம் தலைவர் ஜனாப் ஜின்னாவும், முஸ்லீம் மிதவாதத் தலைவர் ஸர். முகமது யாகூபும், ஆதிதிராவிடர் தலைவர் திவான். பகதூர் ஆர். ஸ்ரீநிவாஸனும் வெளியிட்டுள்ள மூன்று அறிக்கைகள் இன்றையப் பத்திரிகையில் வெளிவருகின்றன. அம்மூன்று அறிக்கைகளையும் முஸ்லீம்களும் பார்ப்பனரல்லாத ஹிந்துக்களும், ஒடுக்கப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களும் ஊன்றிப் படிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம் காங்கரஸ் - இந்திய விடுதலையின் பேரால் - இந்தியாவுக்கும் மைனாரட்டி சமூகங்களுக்கும் செய்துவரும் தீமைகளை அம்மூன்று அறிக்கைகளும் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. அரசியல் விஷயங்கள் பலவற்றில் அம்மூன்று தலைவர்களும் மாறுபட்ட அபிப்பிராய முடையவர்களா.
யிருந்தும் காங்கரஸ் விஷயத்தில் அம்மூவரும் ஒற்றுமையான அபிப்பிராய முடையவர்களாயிருப்பது முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம்
காந்தி காங்கிரசில் ஆதிக்கம் பெற்றது முதல் காங்கிரஸ் ஒரு ஹிந்து ஸ்தாபனம் ஆகிவிட்டதென்று ஸர். முகமது யாக்கூப் கூறுகிறார். தென்னாட்டைப் பொறுத்த வரையில் காங்கரஸ் ஒரு பார்ப்பன அக்கிரகாரமாக இருப்பது வெளிப்படை. பிரிட்டிஷ் சர்க்கார் தயவினால். விடுதலை பெற்ற சமூகங்களை காங்கரஸ் பேரால் பார்ப்பனர்களுக்கு அடிமைப்படுத்துவதே தற்கால காங்கரசின் நோக்கமாகும். வடநாட்டிலே ஹிந்துக்கள் காங்கரசில் ஆதிக்கம் பெற்று முஸ்லீம்களை நசுக்க முயற்சி செய்து வருவதுபோல் தென்னாட்டிலே பார்ப்பனர் காங்கிரஸில் ஆதிக்கம்பெற்று பார்ப்பனரல்லாதாரை அடிமைப்படுத்த முயல்கின்றனர். காங்கரசுக்குத் தற்காலம் இருந்துவரும் போலிச் செல்வாக்கைக் கண்டு மதிமயங்கி நம்மவர்களில் சிலரும் காங்கிரசில் சரணாகதியடைந்து வருகின்றனர். எனவே, தாம் வெற்றிக் கொடி நாட்டிவிட்டதாகப் பார்ப்பனர்கள். தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள். தென்னாடே பார்ப்பன அக்கிரகாரமாக. மாறிவிட்டதாய் அவர்கள் பாவித்துக் கொண்டிருக்கின்றனர். ஸர். முகமது யாகூப் கூறுவது போல் காங்கரசுக்கு ஏராளமான பத்திரிகைபலமிருப்பதினால் காங்கரஸ்காரர் பாமர மக்களை ஏமாற்றுவதில் வெற்றியடைந்து வருகிறார்கள். தென்னாட்டிலே காங்கரசுக்கு இரண்டு இங்கிலீஷ் தினசரிகளும், மூன்று தமிழ் தினசரிகளும் டஜன் கணக்கான வாரப்பத்திரிகைகளும் இருக்கின்றன. அவை செய்துவரும் பொய்ப்பிரசாரங்களைக் கண்டிக்க “ஜஸ்டிஸ்” தினசரி ஒன்றுதான் இருந்து வருகிறது. தமிழ் தினசரி இல்லவே இல்லை.
குடி அரசு- 1937 (1) 324
பீப்பில்ஸ் பார்ட்டி தோன்றிய நோக்கம், கொள்கை, வேலைத்திட்டம் முதலியன எவ்வாறிருப்பினும் சரி, காங்கரஸ் அட்டூழியங்களையும் அயோக்கியத்தனங்.
களையும் வெட்ட வெளிச்சமாக்க அக்கட்சி தினசரிகளான “பீப்பில்ஸ் வாய்சு"ம், “ஜனநாயக"மும் பெரிதும் உதவி புரிந்து வந்தன. ஆகவே, அப்பத்திரிகைகள் மறைந்தது காங்கரஸ்காரர் அல்லாதாருக்குப் பெரிய நஷ்டமாகும். தமிழ்ப் பத்திரிகை உலகத்திலே இனி, காங்கரஸ் பத்திரிகைகளே சர்வாதிகாரி தர்பார் நடத்தப்போகின்றன. இந்நிலமையில் மாற்றமேற்படாவிட்டால் காங்கரஸ்காரர் அல்லாதார் தலை தூக்க முடியாது
பண்டித ஜவஹர்லாலின் சர்வாதிகாரப் போக்கை ஜனாப் ஜின்னா மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். வங்காளம் பாஞ்சாலம், மத்திய மாகாணம், பீகார், எல்லைப்புற மாகாணம் முதலிய இடங்களில் முஸ்லீம் மந்திரிகள் தோன்றி தேச நிருவாகம் நடத்த முன் வந்திருப்பது வட நாட்டு ஹிந்துக்களுக்கு வயிற்றெரிச்சலை யுண்டு பண்ணியிருக்கிறது ஆகவே முஸ்லீம்களையும் காங்கிரசுக்குள் இழுத்து இந்தியா பூராவையும் ஹிந்து மயமாக்க பண்டித ஜவர்லால் துவஜாரோ கணம் செய்து விட்டார் “தினமணி” அளித்த ராஷ்டிரபதிப் பட்டத்தை அவர் இறுகப் பிடித்துக் கொண்டு இந்தியாவின் முடிசூடா மன்னரைப் போலவே நாடகமாடி வருகிறார். அவருக்கு எவருமே லக்ஷியமில்லை. ஜின்னா, முகமது யாகூப் போன்ற பிரபல முஸ்லீம் தலைவர்களை அவர் புல்லாக மதித்தே பேசி வருகிறார். அரசியல் அதிகாரம் கையில் கிடைக்கு முன்னமேயே இம்மாதிரி அட்டகாசம் செய்பவர் அரசியல் அதிகாரம் கிடைத்த பிறகு ஏனையோரை லக்ஷியம் செய்வாரா என்பதை முஸ்லீம்களும், ஏனைய மைனாரட்டி சமூகங்களும் சிந்தனை செய்து பார்க்கவேண்டும். காங்கரஸ்காரரின் பசப்பு வார்த்தை களினால் மயங்காமல் முஸ்லீம் சகோதரர்கள் ஜின்னா கொடிக்கீழ் நின்று திட சித்தத்துடன் உழைக்க வேண்டும்.
புனா ஒப்பந்தத்தினால் ஆதி திராவிடர்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகளை திவான்பகதூர் அர். ஸ்ரீநிவாஸன் தெள்ளத் தெளிய விளக்கிக் கூறியிருக்கிறார். நாம் ஏற்கெனவே கூறியுள்ளதுபோல் புனா ஒப்பந்தம் அமலில் இருக்கும்வரை ஒடுக்கப்பட்டோருக்கு விமோசனமே கிடையாது ஒடுக்கப்பட்டவர்கள் எந்நாளும் ஜாதி ஹிந்துக்களின் அடிமைகளாகவே இருக்க நேரும். ஆகவே, புனா ஒப்பந்தத்தை ஒழிக்கத் தீவிரமான கிளர்ச்சி செய்யவேண்டும். புனா ஒப்பந்தத்தை ஒழிக்க வெகு சீக்கிரம் கிளர்ச்சி தொடங்கப்படும் என திவான்பகதூர் ஆர். ஸ்ரீநிவாசன் கூறுவது நமக்குப் பெறுமகிழ்ச்சியை அளிக்கிறது. அக் கிளர்ச்சியை வெகு சீக்கிரம் தொடங்க வேண்டுமென்று நாம் திவான் பகதூர் ஸ்ரீநிவாசனைக் கேட்டுக் கொள்கிறோம்.
05.05.1937 -”விடுதலை'”
குடி அரசு (மறு பிரசுரம்) - கட்டுரை - 09.05.1937
325 ட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மந்திரிகள் வேலைத் திட்டம்
சென்னை மாகாண மந்திரிகள் தங்கள் வேலைத் திட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாகத் தெரிகிறது. அதாவது நிலவரியில் மொத்தத்தில் 100-க்கு 25 வீதம் - ரூபாய்க்கு கால் ரூ. வீதம் குறைத்து விட திட்டம் போட்டு வரவு செலவு கணக்கு சரிகட்டிக் காண்பித்து கவர்னரிடம் சம்மதம் பெற்று விட்டதாகச் சேதி வெளியாகி இருக்கிறது. இது ஒரு நல்ல காரியம்தான்.
இதன் மூலம் குடியானவர்களுக்கு அதாவது பூமி உடையவர்களுக்கு இந்த மாகாணத்தைப் பொறுத்த வரை @ 1-க்கு 75 லக்ஷ ரூபாய்
லாபம் ஏற்படலாம்
இது தவிர குடியானவர்களின் கடன்களைத் தீர்க்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைக்கத் தீர்மானித்து அதற்கும் சம்மதம் பெற்று விட்டதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு நல்ல காரியம்தான். ஏனெனில் குடியானவர்கள் வரிக்கொடுமையை விட கடன் கொடுமையிலேயே வட்டிக் கொடுமையிலேயே அதிக கஷ்டப்படுவதோடு பொது செல்வமும் பாழாகின்றது என்பதோடு கோர்ட்டுகள் நிலைக்கவும் பார்ப்பன வக்கீல்கள் பிழைக்கவும் பார்ப்பன. குமாஸ்தாக்கள் கொள்ளை அடிக்கவுமான காரியங்களுக்கு ஆக விவசாயக்காரர்கள் பாப்பர் ஆக வேண்டி ஏற்பட்டு விடுகின்றது ஆதலால் பல வழிகளிலும் இது சிறந்ததேயாகும்.
கிராமங்கள் தோறும் கட்டாய இலவசக்கல்வி கற்பிக்க திட்டம் போட்டிருக்கிறதாகவும் தெரிகிறது. இதுவும் நடைபெற்று விட்டால் இந்த மந்திரிகள் நிலையற்ற அனாமத் மந்திரிகளானாலும், என்றென்றும் மக்கள் உள்ளத்தில் நிலையாக நிலைத்திருக்கும் மந்திரிகளாக ஆகிவிடுவார்கள். என்பதில் ஐயமில்லை
இந்த வேலைத் திட்டம் வெளியான நிமிட மூதல் காங்கிரஸ்காரர் களுக்கு பேதி - வயிற்றுப்போக்கு கண்டு விட்டது. காரணம் என்னவென்றால் தாங்கள் மந்திரி பதவி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்து காட்டுவதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே என்றும், மறுபடியும் சட்டசபையில் காலித்தனம் செய்துவிட்டு சீக்கிரத்தில் வெளியேற வேண்டிய நிலைமைதான். நல்லதாக முடியுமே ஒழிய அதிகாரம் செலுத்த வழியில்லையே என்றும் கருதி வேதனையால் மடிகின்றார்கள். தோழர் ஆச்சாரியாருக்கு சீக்கிரத்தில் ஹார்ட் பெயிலியர் - மாரடைப்புகண்டு விடும்போல் காணப்படுகிறது
குடி அரசு- 1937 (1) 326
இதுவரை இரட்டை ஆட்சி இருந்த காரணத்தாலும் பணம் - பொக்கிஷ பொறுப்பும் நிர்வாகமும் மந்திரிகள் கையில் இல்லாததாலும் பெரிய திட்டங்கள். அதாவது பணத்தைப் பொருத்த திட்டங்கள் எதுவும் போட முடியாமல் பல சட்ட திட்டங்கள் நிறைவேற்றுவதிலும், சமூக சீர்திருத்தம் செய்வதிலும், கூடியவரை நன்மை செய்வதிலுமே கருத்தாய் இருந்துவந்தார்கள். இந்நிலைமையில் காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் செய்த தப்பிதங்களையும்
சர்க்கார் நன்மை செய்யாத குறைகளையும் ஜஸ்டிஸ்காரர்கள் மீது சுமத்தி மக்களை ஏமாற்றி அக்ககூடி மீது வெறுப்பு ஏற்படும்படி விஷமப் பிரசாரம் செய்து வந்தார்கள். இப்போது அக்குறைகள் நீங்கி விட்டதால் அதனால் ஏற்படும் பயனை தாங்கள் அனுபவிக்க கருதினார்கள். ஆனால் ஆணவத்தால்
- வாய்க்கொழுப்பால் அது கவிழ்ந்து விட்டது
இப்போது வேறு ஒருவருக்கு அனாமத் நபர்களுக்கு அப்பெருமை எதிர்பாராமல் விரும்பாமல் காலடியில் வந்து விழுந்து அப்பயனை - அப்பெருமையை அவர்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயேதான் காங்கிரஸ்காரர்களோ ஆச்சாரியாரோ மந்திரிகளின் நிர்வாகத்தில் எவ்வித தப்பிதமும் காணமுடியாமல் மந்திரி வேலை ஒப்புக்கொண்டதைப்பற்றிய ஆத்திரத்தையும் பொறாமையையுமே காட்டி வருகிறார்கள். இந்தப் பூச்சாண்டிக்கு அதாவது “சலசலப்புக்கு பனங்காட்டு நரி பயப்படாது” என்பது போல்- மந்திரிகள் சிறிதும் பயப்படாமலும் லக்ஷியம் செய்யாமலும் காங்கிரஸ் கூப்பாடுகளையும் வெறியர்கள் போல் உளறும் உளறுதல்களையும் கால்பூட்சு தூசிக்கு சமமாய் மதித்து திட்டத்தின்மேல் திட்டம் நன்மையின்மேல் நன்மை செய்வதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள்.
ஆனால் நாம் இவ்வித திட்டங்களினால் எல்லாம் திருப்தி அடைந்து விடவில்லை. இது இன்றைய நிலைமையில் சாதாரண வேலை என்று கூறுவோம். காங்கிரஸ்காரர்கள் வந்தாலும் இதைத்தான் செய்யக்கூடும். மற்றபடி இன்றைய மந்திரிகள் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால் உத்தியோகம் பிரதிநிதித்துவம் ஆகியவைகளில் சகல வகுப்புகளுக்கும் சம நியாயம் செய்யவேண்டும் என்பதும் இன்று 100 உத்தியோகங்களில் பார்ப்பனர்களுக்கு 16 உத்தியோகங்கள் கொடுக்கப்படுகிற அநியாயத்தை - அக்கிரமத்தை - ஒழித்து அவர்களது ஜனத்தொகைக்கு தகுந்தபடி 10066
3 வீதம் கொடுத்துவிட்டு பாக்கியை மற்ற வகுப்பாருக்கு விகிதாச்சாரம் கொடுக்கும்படியாக ஒரு திட்டம் போட்டு அமுலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதும் இந்த விகிதம் வரும்வரை பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள். கொடுக்காமல் நிறுத்தி வைக்கவேண்டும் என்பதுமே. அது செய்தால் ஒழிய இந்த அனாமத் மந்திரிகள் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சியாருடைய பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆகிவிடமாட்டார்கள் என்பதைக் கண்டிப்பாய்த் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 09.05.1937 27— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கண்டன தீர்மானம்
இப்போது காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரி வேலையை ஏற்றுக்கொள்ளக் கிடைத்த சந்தர்ப்பத்தை தங்கள் முட்டாள் தனத்தினால் தவற விட்டு விட்டு மந்திரி பதவி ஏற்றுக்கொண்டவர்கள் மீது பாய்வதும் அவர்களை வைவதுமான இழிவு வேலையில் இறங்கி இருப்பதோடு ஆங்காங்குள்ள பார்ப்பனர்களையும் அடிமைகளையும் பிடித்து புது மந்திரிகளை கண்டித்து தீர்மானம் போட்டு நிறைவேற்றப்பட்டதாக விளம்பரம் செய்து பிரசுரிக்கச் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டு அந்தப்படியே பல தீர்மானங்கள் செய்வதாக பிரசுரித்தும் வருகிறார்கள். இது ஒரு இழிவான தந்திரமேயாகும். வக்கீல்கள் பெரிதும் பார்ப்பனர்களாக. இருப்பதாலும் அவர்களுக்கும் பாமர மக்கள் மீது செல்வாக்கு இருப்பதாலும்
உள் நாட்டு விரோதத்தால் சுலபத்தில் அடிமைகள் கிடைப்பதாலும் இம்மாதிரி காரியங்கள் செய்ய நினைக்கப் பார்ப்பனர்களுக்கு செளகரியமிருக்கிறது. ஆனபோதிலும் நாம் அதற்குப் பயப்படவில்லை.
ஆனால் பொது ஜனங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்
அதாவது ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் அனுதாபிகளும் சுயமரியாதைச் சங்கக்காரர்களும், காங்கிரஸ்காரர்கள் பொய்யும் புளுகும் பேசி பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெற்று மெஜாரிட்டியாகியும் அரசியல் சட்டப்படி மந்திரி பதவி ஏற்க முட்டாள் தனமாக மறுத்துவிட்டு வீணாக நாட்டில் கலவரமும் காலித்தனமும் செய்து வருவதை பொது ஜனங்கள் கண்டிக்கிறார்கள் என்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றி பத்திரிகைகளுக்கு அனுப்பி வரவேண்டுமாய் விரும்புகிறோம். இதை அவசியம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள காங்கிரஸ் அல்லாதவர்கள் செய்ய வேண்டியது அவசியமாகும். இல்லாதவரை காங்கிரஸ் தொல்லை ஒழிவது கஷ்டமாகிவிடும் என்று கருதுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 09.05.1937
குடி அரசு- 1937 (1) 328
தாழ்த்தப்பட்ட மக்கன் நிலை
இப்போதுதான் புத்தி வருகிறது
தாழ்த்தப்பட்ட மக்களை காங்கிரஸ்காரர்கள் ஏய்த்து விட்ட விஷயமாய் நாம் பல தடவை எழுதி வந்திருக்கிறோம். தாழ்த்தப்பட்ட மக்களில் எவ்வளவோ கல்வி அறிவுள்ளவர்களும் உலக ஞானமுள்ள வர்களும் இருந்தாலும் சமயத்தில் மோசம் போகும் புத்தி அவர்களுக்கு வெகுகாலமாகவே இருந்து வருகிறது. சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுடன் வாது செய்து வெற்றி பெற்றதின் பலனாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு என்று சட்டசபையில் ஒரு அளவு ஸ்தானங்கள் தனித் தொகுதி மூலம் ஒதுக்கி வைக்கப்பட்டது. அதை காந்தியார் பட்டினி கிடப்பதாகப் பாசாங்கு செய்து அச் சமூக மக்களை ஏமாற்றி தனித் தொகுதி உரிமையை பாழாக்கி அடிமை உரிமைக்கு ஆளாகச் செய்து விட்டார். அப்பொழுதே தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பத்காருக்கு விஷயங்களை விளக்கி ஏமாந்து போகாதீர்கள் என்று அதாவது ஒரு காந்தியாரைவிட
6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும் 6 கோடி மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும் ஒன்றையும் லக்ஷியம் செய்யாமல் தங்களை சிலர் மதித்து அழைத்து கெஞ்சிப் பேசுகிறார்கள் என்கின்ற மமதையில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போட்டு தங்கள் உரிமையைப் பறிகொடுத்து விட்டார்கள். வாதாடி உரிமை வாங்கிக் கொடுப்பது ஒரு கூட்டம், அதை தட்டிவிட்டு வாயில் போட்டுக்கொண்டு போவது மற்றொரு கூட்டம் என்பதாக ஆகிவிட்டது. இதிலிருந்து இன்றுள்ள நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரத்தோடு வாழ தகுதி அற்றவர்கள் என்பதும் அவர்கள் இன்னும் இரண்டு கோடி அதிகமாய் இருந்தாலும் அரசாங்கத்தின் பாதுகாவலில் இருக்கத்தான் தகுதி உடையவர்கள் என்றும் விளங்குகிறது. அவ்வகுப்பில் புத்திசாலிகள் முன் யோசனைக்காரர்கள் ஒருவர் கூட இல்லை என்பதாக விஷயங்கள் வெளியாகிவருகிறது.
320 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாய் பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட தலைவர்கள் அத்தனை பேரும் இன்று அழ ஆரம்பித்து
விட்டார்கள். தோழர்கள் அம்பத்கார், ரெட்டைமலை சீனிவாசன், எம்.சி ராஜா, என். சிவராஜ் முதலியவர்கள் எல்லோருமே தங்கள் தவறை உணர்ந்து விட்டார்கள். சாமி சகஜாநந்தம் என்பவரும் அழுக ஆரம்பித்து
விட்டார். ஆகவே தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ்காரர்களால் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் என்பது நிதர்சனமாக ஆகிவிட்டது
தோழர் திவான்பகதூர் ரெட்டைமலை சீனிவாசன் அவர்கள் இது விஷயமாய் விடுத்த அறிக்கை மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதை வாசகர்கள் கவனமாய் படிக்க விரும்புகிறோம். அதில் காணும் முக்கிய விஷயங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்
அதாவது,
காங்கிரஸ் கேட்கும் உறுதி மொழியைக் கொடுப்பதானது 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்ற சிறுபான்மை வகுப்பாரையும் கொடுமைப்படுத்த காங்கிரஸ்காரருக்கு சர்க்கார் காட்டிக் கொடுத்ததாகும்.”
“ஷெடியூல் வகுப்பாரின் (தாழ்த்தப்பட்ட மக்களின்) கல்வியில்லாத் தன்மையையும் ஏழ்மைத் தன்மையையும் காங்கிரசார் தங்களுக்கு சாதகமாய் உபயோகித்துக் கொண்டு 30 ஸ்தானங்களில் 26 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள்.”
காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கப்படும் என்று சொல்லி மிராசுதாரர்களை சுவாதீனம் செய்துகொண்டு அவர்கள் மூலமாகவும் தொண்டர்கள் மூலமாகவும் மிரட்டி பயமுறுத்தி ஓட்டு வாங்கி விட்டார்கள்.”
“இந்த அயோக்கியத்தனங்களை போலீசு, கிராம உத்தியோகஸ்தர்கள், மற்ற அதிகாரிகள் யாரும் தடுக்கவில்லை.”
பூனா ஒப்பந்தத்தை கவுரவிப்பதற்குப் பதிலாக அதை மோசம் செய்து விட்டார்கள்”
“தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலை எடுத்துக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் பல தொல்லை விளைவித்து விட்டார்கள்.”
“தில உபாத்தியாயர்கள் வெகு தூரம் மாற்றப்பட்டார்கள். சிலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சில குடிசைகள் கொளுத்தப்பட்டன. சிலர் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்
குடி அரசு- 1937 (1) 330
பட்டனர். சிலரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதிகள் நிறுத்தப்பட்டன. மற்றும் அளவற்ற கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள்.”
“கூட்டுத் தொகுதி வேண்டியதில்லை. தனித்தொகுதி மூலம் 18 ஸ்தானமே போதுமானது.”
“பெருத்த கிளர்ச்சி செய்து சீக்கிரத்தில் கூட்டுத்தொகுதி முறையை ஒழிக்க வேண்டும்.”
காங்கிரஸ்காரர்கள் மந்திரிபதவி ஏற்காமல் செய்ததற்கு கவர்னருக்கு நன்றி செலுத்துகிறேன்” என்றும் இன்னும் இதுபோன்ற முக்கிய விஷயங்களும் தோழர் ஆர். சீனிவாசன் அவர்கள் அறிக்கையில் மலிந்து கிடக்கின்றன.
இப்போதாவது அவர்களுக்கு புத்தி வந்ததற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கு காங்கிரஸ்காரர்கள் இதுவரை யாதொரு
பதிலும் சொல்லவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட மக்களும் அவர்கள் தலைவர்களும் இனியும் ஏமாந்துவிடாமலும் ஒரு துண்டுரொட்டிக்கு மானத்தை விற்றது போல் தங்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆக மானங்கெட்டு மதிகெட்டு இழிவடைந்து காங்கிரஸ்காரர்களின் கால்களை நக்கிக்கொண்டு திரியாமலும் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.05.1937
B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ்காரர்கன் அரசியல் ஞானம்
காங்கிரஸ்காரர்களுக்கு காலித்தனம்தான் தெரியுமே ஒழிய - பொய்யும் பித்தலாட்டமும் கூறி தேர்தலில் வெற்றி பெறத்தான் தெரியுமே ஒழிய - தேர்தல்களில் தந்திரமாய் பார்ப்பனர்களை 100க்கு
40, 50 வீதம் புகுத்திக்கொள்ளத்தான் தெரியுமே ஒழிய அவர்களுக்கு அரசியல் ஞானமோ பொதுஜன நன்மை பொறுப்போ சிறிதும் கிடையாது
என்று பல தடவை எழுதி வந்திருக்கிறோம். அதற்கு உதாரணங்களும் அவ்வப்போது எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். இப்போது மற்றுமொரு உதாரணம் எடுத்துக்காட்ட ஆசைப்படுகிறோம்.
அதாவது சென்னை கார்ப்பரேஷனுக்கு தேர்தல் நடந்து கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர்கள் அமர்ந்து இன்றைக்கு 6, 7 மாத காலமாகிறது. அப்படி இருந்தும் இதுவரை காங்கிரஸ்காரர்கள் எவருக்கும் கார்ப்பரேஷன் வரவு செலவு கணக்கே இன்னதென்று தெரியவில்லை என்பதும் அவர்களில் எவரும் தெரிந்து கொள்ள இதுவரை ஆசைப்பட வில்லை என்பதும் காங்கிரஸ் பத்திரிகைகளாலேயே தெரியவருகிறது
அதாவது கார்ப்பரேஷனுக்கு 2 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் வட்டி நட்டப்படும்படியான பணம் சும்மா தூங்கிக் கொண்டிருப்பதாகவும் இந்த விஷயம் இப்போதுதான் அதாவது ஒரு காங்கிரஸ் மெம்பர் கேட்ட கேள்விக்கு கிடைத்த பதில் மூலம் தெரியவந்தது என்றும் 3-5-37ந் தேதி “தினமணி” தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதோடு அது நிற்காமல் இதற்கு பழி ஜஸ்டிஸ் கட்சி மீது சுமத்துகிறது. ஜஸ்டிஸ் கட்சிமீது
குற்றம் இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இத்தனை வருஷமாக இந்த 10, 15 வருஷமாக காங்கிரஸ்காரர்கள் பலர் கார்ப்பரேஷனில் இருந்து கொண்டு வந்தார்களே அவர்கள் ஏன் இதுவரை கவனித்திருக்கக் கூடாது என்பதோடு 100க்கு 75 மெஜாரிட்டியுடன் கார்ப்பரேஷன் நிர்வாகத்தில் ஆதிக்கம் பெற்று இருப்பதாய்ப் பெருமை பேசிக்கொண்டு இருக்கும் காங்கிரஸ்காரர்கள் இந்த 6, 7 மாதங்களாய் கார்ப்பரேஷன் பொருளாதார நிலைமையைப் பற்றிக் கவனிக்காமல் வேறு என்ன வேலை செய்துகொண்டு இருந்தார்கள்? அவர்களது கையும், வாயும், மனமும் வேறு என்ன வேலையில் ஈடுபட்டு இருந்தன என்று கேட்கின்றோம்
குடி அரசு- 1937 (1) 332.
ஒரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளுபவர்கள் எவ்வளவு முட்டாள்களாய் இருந்தாலும் அந்த ஸ்தாபனத்தின் பொருளாதார நிலை என்ன என்பதை அறிந்து கொண்டுதான் வேறு எந்தக் காரியத்தையும் கவனிக்கத் தொடங்குவார்கள். அப்படி இருக்க, இப்போது காங்கிரஸ்காரர்கள். ஆக்ஷிக்கு வந்துவருஷம் 7000 ரூ. வட்டி நட்டம் அடைந்து வரும்படியான ஒரு சேதியை இப்போது மே மீ” 2ந் தேதிதான் கண்டு பிடித்தார்கள் என்றால் அதுவும் அகஸ்மாத்தாய் வெளியானதில் இருந்து தெரிந்துகொண்டார்கள் என்றால் இந்த 7 மாதத்துக்கு 3000 ரூபாய் நட்டத்திற்கு யார் ஜவாப்தாரி என்று கேட்கிறோம். மற்றும் ஷி 2 கோடி ரூபாய் கடனில் சில தொகைக்கு 100க்கு 7 ரூ. வட்டி வீதம் வட்டி கொடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு அழுகிறார். இவற்றையெல்லாம் கவனிக்காமல் காங்கிரஸ்காரர்கள் அங்கு வேறு என்ன வேலை செய்து வருகிறார்கள் என்று கேட்கிறோம். ஓட்டு கேட்கும்போது காங்கிரசுதான். மக்களுக்கு நன்மை செய்யும் என்றும் காங்கிரசுக்கு தான் நன்மை செய்யத் தெரியும் என்றும் பெருமை அடித்து ஆப்பக்காரியையும், தோசைக்காரியையும், குடிகாரர்களையும், வெறிகாரர்களையும் ஏமாற்றி ஓட்டுப் பெறுவதும் ஓட்டுக் கிடைத்த பின்பு கலகமும் காலித்தனமும் செய்வதில் காலத்தைக் கடத்துவதும் கடைசியில் தங்களின் முட்டாள் தனத்திற்கு சமாதானம் முன் இருந்தவர்களின் மீது பழி போடுவதுமான இழிதொழில் செய்து தப்பித்துக்கொள்ளப் பார்ப்பதென்றால் காங்கிரஸ்காரர்களுக்கு அறிவோ, பொறுப்போ, அனுபவமோ, கண்ணியமோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.05.1937
33— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நீடாமங்கலத்தில் சர்க்கார் தர்பார்
“அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்” என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல் காங்கிரஸ்காரர்கள் சட்டசபையிலும் இரண்டொரு ஸ்தல ஸ்தாபனங்களிலும் வெற்றி பெற்றுவிட்டதால் அவர்களது தலையைத் திருகிவிட்டது. இன்னது செய்வது என்று தோன்றாமல் தலை விரித்தாடுகிறார்கள். மதுரையில் தெருக்கூட்டிகளுக்கு அவர்களுடைய விளக்குமாறுகளில் காங்கிரஸ் கொடி கட்டிக் கொடுத்து அதைப் பிடித்துக் கூட்டும்படி சேர்மென் உத்திரவிட்டு அந்தப்படியே விளக்குமாறு தோறும் கொடி கட்டி இருந்ததாம். மற்றும் பல இடங்களில் உற்சவங்களில் கோவில் முன் கருடஸ்தம்பம் என்பவைகளிலும் கொடி மரங்களிலும் காங்கிரஸ் கொடிகள் கட்ட முயற்சிப்பதோடு தேர்களிலும் ரதங்களிலும் கூட காங்கிரஸ் கொடி கட்டுவித்து ஊர்கோலம் நடத்தப்படுகின்றனவாம்
இதற்கு அதிகாரிகள் அனுகூலமாயிருந்து ஆக்ஷபணைகளை அடக்கி காங்கிரஸ் கொடியுடன் ஊர்வலம் நடத்த உதவி செய்கிறார்கள் என்றும் சேதிகள் வந்திருக்கின்றன. உதாரணமாக நீடாமங்கலம் ரத உற்சவத்தில் காங்கிரஸ்காரர்கள் கொடிகட்ட முயற்சித்ததும் சிலர் அதை தடுத்ததும் சர்க்கார் அதிகாரிகள் தடுப்பை நிராகரித்து கொடியை ரதத்தில் கட்டச் செய்ததையும் அதற்காக தடுக்கிறவர்களை கைதியாக்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ளப் போகும் விஷயத்தையும் சென்றவாரம் “குடி அரசிலும் “ஜனநாயக"த்திலும் கண்டிருக்கலாம். இம்மாதிரி அதிகாரிகள் ஆதரவு இருந்தால் காங்கிரஸ்காரர்கள் எப்படி காலித்தனம் செய்யாமல் இருப்பார்கள்? மத சம்மந்தமான தேர் திருவிழாக்களில். அரசியல் கொடிகளைக் கட்டுவது என்பது எப்படி ஞாயமாகும் என்று கேட்கிறோம். அரசியல் சம்மந்தப்பட்ட ஒரு கக்ஷியார் தங்கள் கொடிகளை கட்டினால் மற்ற கக்ஷியார் தங்களின் கொடிகளைக் கட்ட முன் வரமாட்டார்களா? அப்பொழுது கலகமானால் யார் பொறுப்பேற்பது? நீடாமங்கலம் சம்பவத்துக்கு அவ்வூர் சப்மேஜிஸ்டிரேட் அய்யங்கார் பார்ப்பனரும் பொறுப்பாளி என்று தெரிகிறது. அதோடு நீடாமங்கலம் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டையும் கைதியாக்கி ஜாமீனில்
விட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதிலிருந்து பிரிட்டிஷ் ஆக்ஷி ஒழிந்து
குடி அரசு- 1937 (1) 334
பார்ப்பனர் ஆக்ஷி தலைவிரித்தாடுவதாகத் தான் பாமர மக்கள் கருதுவார்கள் இதற்கு அரசாங்கத்தார் வேண்டுமென்று இடம் கொடுக்கிறார்களா அல்லது அலக்ஷ்யமாய் இருக்கிறார்களா என்பது நமக்கு விளங்கவில்லை நீடாமங்கலத்தில் காங்கிரசுக்கு விரோதமாய் இருக்கிறவர்களை இதற்கு
முன்னும் அதிகாரிகள் கைதியாக்கி நடவடிக்கை நடத்தி கடசியாக அரசாங்கத்தார் வழக்கை பின்வாங்கிக் கொள்ள உத்திரவு போட்டார்கள். இப்போது மறுபடியும் ஸ்தல அதிகாரிகள் அதே காரியம் ஆரம்பித்து
இருக்கிறார்கள். ஏதாவது ஒரு பிரமாதமான சமதான பங்கமோ அல்லது கலவரமோ ஏற்பட்ட பிறகுதான் சென்னை சர்க்காரோ மந்திரிகளோ இதில் பிரவேசிப்பார்கள் போல் தெரிகிறது. அப்படி ஏற்படும் பக்ஷம் அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பாளியாகும் என்பதை இப்போதே எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 09.05.1937
33 ய... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஜோலார்ப்பேட்டையில் மகுடாபிஷேகம், பன்விக்கூட ஆண்டு விழா,
வரதராஜ முதலியார் படத் திறப்பு விழா
தலைவரவர்களே! தோழர்களே!
உலக சரித்திரத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெறும் படியான இந்த முக்கியமான நாளில் எனது அன்பிற்குரிய தோழர் வி. பார்த்தசாரதி அவர்களது தந்தையாரும் எனது மதிப்பிற்குரிய நண்பருமான காலம் சென்ற வரதராஜ முதலியார் அவர்களது உருவப்படத்தை இந்தப் பள்ளியில் அலங்கரிக்கும் பெருமையை பெற்றதற்கு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன்.
இம்மாதிரியான உருவப்படங்களை வைப்பது என்பது பூஜைக்கு ஆகவோ பக்திக்கு ஆக நமது குற்றங்களை மன்னிக்கும்படி பிரார்த்தனை: செய்வதற்கு ஆகவோ மோக்ஷமடைய ஒரு சுருக்கமான வழியை கடைப்பிடிப்பதற்கு ஆகவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மற்றென்னவென்றால் நம்மால் பாராட்டக் கூடியதும்
நாம் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும்படியானதுமான பல அரும்பெரும் காரியங்களைச் செய்தவரும் பல அருங்குணங்கள் படைத்தவரும் என்று நாம் கருதும் திவ்விய புருஷர்களது உருவங்கள், பெயர்கள், நடத்தைகள் ஆகியவைகள் நம் முன் தோன்றும் போதெல்லாம்
நம் ஞாபகத்துக்கு வரும்போதெல்லாம் நமக்கு ஒரு படிப்பினையாகவும் வழிகாட்டியாகவும் நம்பிக்கை தரத்தக்க ஊக்க மூட்டக்கூடியதாகவும் இருக்கும் என்று கருதியே நாம் அப்படிச் செய்து வருகிறோம் ஞாபகக்குறிப்பு உருவங்களுக்கும் ஆராதனை உருவங்களுக்கும் கருத்தில் பெருவாரியான வித்தியாசமுண்டு. ஆகையால் இப்படத்திறப்பு என்பது விக்கிரக ஆராதனைக் கருத்துடையதல்ல என்பதை முதலில் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இந்த திருவுருவத்தை இப்பள்ளியில் அலங்கரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இக்காரியத்தைச் செய்ய அனுமதியளிக்கப்பட்ட நான்
குடி அரசு- 1937 (1) 336
இக்காரியத்தைச் செய்யுமுன் தோழர் வரதராஜ முதலியார் அவர்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை சொல்லித் தொண்டாற்றுவது பொருத்த மானதெனக் கருதுவதால் நீங்கள் அனுமதியளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வரதராஜ முதலியார்
தோழர் வரதராஜ முதலியார் அவர்கள் எனக்கு 10 வருஷங்களுக்கு மேல் தெரிந்தவராவார். அவர் மிக்க ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறு வயதில் கட்டிட வேலையில் தினம் அரையணா, முக்காலணா
கூலிக்கு வேலை செய்தவர். அதிலிருந்து ரயிலில் கீழ்த்தர சிப்பந்தியாய் இருந்து அதையும் விட்டு காளவாய் வைத்து கொல்லத்துக்காரராகி சிறு கண்டிறாக்டராகி கடைசியாக பல லக்ஷத்துக்கு அதிபராகி மறைந்தவர். அவரது வாழ்நாளில் ஏழைகளிடத்தில் அதிக கருணை உடையவர். சாப்பாடு போடுவதில் சலிப்படையாதவர். மிக்க மத நம்பிக்கையும் பக்தியும் புராண மரியாதையும் உடையவர். அவர் கட்டின கோவில்கள் இதோ தெரிகின்றன. அப்படி எல்லாம் இருத்தாலும் என்னிடத்தில் அவருக்கு அதிக மரியாதையும் குடி அரசு பத்திரிகை இடத்தில் அதிக விசுவாசமும் உடையவர். சுமார் 10 வருஷத்துக்கு மூன் திருப்பத்தூரில் என்னுடைய ஒரு பிரசங்கத்தை கேட்டார். அதில் அவர் மனம் மாறுதலடைந்தது எனக் கண்ட எனது நண்பர் ஒருவர் அவரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தார். உடனே தனது ஊருக்கு வரவேண்டுமென அழைத்தார். இரண்டொரு உபன்யாசம் நடத்தி வைத்தார். அடிக்கடி வந்து போக ஆசைப்பட்டார். பிறகு அவருடைய தருமங்கள் கோவில்களுக்கும் பாகவதர்களுக்கும், சன்னியாசிகளுக்குமாகப் போய்க்கொண்டிருந்ததானது மாறி இம்மாதிரி பள்ளிக்கூடங்களுக்கு பயன்படுத்தப்படுவதாயிற்று அவர் அவ்வளவு பெரிய லக்ஷாதிபதியாய் இருந்தும் தன் ஆதி நிலையே அவருக்கு சகல நடவடிக்கைகளிலும் முன்னால் நிற்குமே ஒழிய ஆடம்பரமோ மமதையோ சிறிதும் அவரிடம் காணவில்லை.
இவரது சரித்திரத்திலிருந்து பெரியோர்களும் செல்வவான்களும் அறிவாளிகளும் நல்ல உள்ளமுடையவர்களும் பிறவியில் ஏற்பட வேண்டும் என்கின்ற வருண தர்மம் அடியோடு பொய் என்று உணர முடிந்தது. சட்டத்தின் மூலமாகவும் மத சமுதாய முறைப்படியும் சில விஷயங்களில் இருந்துவரும் நிர்பந்தம் தவிர மற்றபடி இயற்கையில் மனிதனுடைய முயற்சியும் சம்பவங்களுமே மக்களை நியமிக்கின்றன. ஆதலால் வரதராஜ முதலியார் அவர்கள் உருவப்படத்தை இந்த மாதிரி பள்ளிக்கூடங்களில் வைக்க ஏற்பாடு செய்ததானது உபாத்தியாயர் களினுடையவும் ஜில்லா போர்டார்களுடையவும் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதோடு அது மிகவும் பாராட்டத்தக்கதுமாகும். ஏனெனில் அவரது உருவப்படத்தைப் பார்த்து அவரது சரித்திரத்தை ஞாபகப் படுத்திக்கொள்ளும் BT ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
மாணாக்கன் ஒவ்வொருவனுக்கும் தான் பெரிய செல்வவானாக பிறக்கவில்லையே என்கின்ற கவலையும் தனக்கு பெரிய பதவி, உத்தியோகம் கிடைக்க வேண்டுமே என்கின்ற பேராசையும் சிறிதுகூட ஏற்பட இடமிருக்காது என்பதோடு பணம், பதவி இல்லாமலே பெரியாராகலாம் என்கின்ற நம்பிக்கையும் ஊக்கமும் ஏற்படக்கூடும். ஆகையால் இந்தப் பெருமையான தொண்டை இந்த மகத்தான நாளில் ஆற்றும் பெருமையை எனக்களித்ததற்கு ஆக எனது மனமார்ந்த நன்றியை உங்கள் எல்லோருக்கும் அளித்துவிட்டு இவ்வுருவப் படத்தின் திரையை நீக்குகிறேன்.
குறிப்பு: 12.05.1937 ஆம் நாள் ஜோலார் பேட்டை வரதராஜ முதலியார் போர்டு ஹையர் எலிமெண்டரி பள்ளியில் நடைபெற்ற விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 16.05.1937
குடி அரசு- 1937 (1) 338
யார் வெள்ளைக்கார ஆட்சி கொண்டுவந்தவர்கள்?
காங்கிரஸ் சுலபத்தில் பதவிக்கு வராது
காங்கிரஸ் அல்லாதவர்கள் தேசத்துரோகிகளா?
தலைவரவர்களே! தோழர்களே!!
இந்த பக்கத்துக்கு சுமார் 10, 15 வருஷங்களுக்கு முன் இரண்டு மூன்று தடவை வந்து உபன்யாசம் செய்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் உபன்யாசம் செய்கிறேன். அப்போதுள்ள எனது நண்பர்கள் பலரை இப்போது பார்த்து மகிழ்கிறேன். அப்போது எனக்களிக்கப்பட்ட பல வரவேற்பு பத்திரங்கள் போலவே இப்போதும் பல வரவேற்புப் பத்திரங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அப்போது காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் என்னை பாராட்டிப் புகழ்ந்து பேசி வரவேற்பு வாசித்தார்கள். இப்போது பகுத்தறிவாளர்களும் சுயமரியாதைக்காரர்களும் ஆதிதிராவிட தோழர்களும் பாராட்டிப் புகழ்ந்து கூறி வரவேற்பு வாசித்தளித்திருக்கிறீர்கள்.
வரவேற்பு பத்திரங்களில் வழக்கம்போலவே என்னை வானமளாவப் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப் புகழ்ச்சிகளை நான் ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகிறேன். ஏனெனில் அவ்வளவு பெரும் புகழுக்கும் பாராட்டுதலுக்கும் நான் பொருத்தமுடையவன் அல்ல என்றே கருதுகிறேன். ஆனால் என் மீது உங்களுக்கு உள்ள அன்பும் என்னிடமிருந்து நீங்கள் பெறவிரும்பும் காரியங்களையும் தான் நீங்கள் அப்புகழ்ச்சி ரூபமாய் வெளியிட்டிருக்கிறீர்கள் என்று கருதி உங்கள் அன்புக்கு நன்றியும் உங்கள் விருப்பத்துக்கு நம்பிக்கையும் செலுத்துகிறேன். என்னாயுள் வரை என்னால் கூடிய அளவு தாங்கள் விரும்பும் தொண்டிற்கு உழைக்கிறேன்.
சமூக இயலும் அரசியலும்
இக்கூட்டத்தில் சமூக சீர்திருத்தம் என்பதுபற்றி பேசப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பல தோழர்கள் அரசியல் சீர்திருத்தம் என்பதுபற்றிப் பேசவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். தலைவர் B ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இரண்டும் பற்றிப் பேச அனுமதி அளித்திருக்கிறார். இது ஒருபுறமிருந்தாலும் சமூக சீர்திருத்தம் அரசியலைவிட்டு தனித்திருக்க முடியாது. அரசியல்
சீர்திருத்தம் சமூகத்தை விட்டு தனித்திருக்க முடியாது. மனித சமூகத்துக்கு ஆகத்தான் அரசியல் நடக்கிறது. அரசியல் காரியம் ஒவ்வொன்றும் சமூக நலனைப் பொருத்தே ஒழிய வேறில்லை. அரசியல் சட்டமும் பாதுகாவலும் சமூகத்துக்கு ஆகவும் சமூக நலனை அனுசரித்தும் செய்யப்பட்டதே தவிர வேறில்லை. இந்த நாட்டில் சமூக இயலும் அரசியலும் பிரிக்கப்பட்டிருப்பதாய் காணப்படுவதானது ஒரு சூழ்ச்சித்திறமே தவிர வேறில்லை. ஏனெனில் சமூக இயலில் இருந்துவரும் கொடுங்கோன்மையும் தனிப்பட்ட வகுப்பாரின் சுயநலமும் மக்கள் கவனியாமல் இருப்பதற்கு ஆகவே சமூக இயல் என்பதை துச்சமாய் கருதுவதாகவும் அரசியலே முக்கியமானது என்றும் பேசி மக்களை ஏமாற்றி ஒரு சிறு கூட்டத்தார் சமூக இயலிலும் அரசியலிலும் ஆதிக்கம் பெற்று பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். சமூக சம்மந்தமான இழிவுக்கும், வகுப்பு சம்மந்தமான அடிமைத்தனத்துக்கும் பாதுகாப்பளிக்கத்தான் இன்றைய அரசியல் கிளர்ச்சி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகவே இன்று இந்நாட்டில் இந்திய மக்களுக்குள்ளாகவே போர் நடந்து வருகின்றது உதாரணமாக நம் தென்நாட்டை பொருத்தவரை காங்கிரஸ் - ஜஸ்டிஸ் கிளர்ச்சிகள் என்பவை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராகவும் வடநாடுகளில் பெரிதும் காங்கிரஸ் - முஸ்லீம்லீக் என்பவை இந்து முஸ்லீம் போராகவும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த போர்கள் எல்லாம் சமூக சீர்திருத்தப் போரேயாகும். சமூகங்கள்
சீர்திருத்தம் பெற்றால் ஒழிய எப்படிப்பட்ட அரசியலும் இப்போர்களை தணிக்கமாட்டா. காங்கிரசின் அரசியல் கிளர்ச்சி சமூக இயலுக்கு விரோதமானதென்று கருதியே நாட்டின் பெரும்பான்மை மக்களான இவ்விரு சமூகமும் காங்கிரஸ் கிளர்ச்சியை ஒழிக்கப் பாடுபடுகின்றன. காங்கிரசுக்கு பல செளகரியங்களும் சூழ்ச்சித்திறமும் இருப்பதால் அது மற்ற கிளர்ச்சிகளை நசுக்கி அழுத்தி தலைதூக்கி வருகின்றது. என்றாலும் காங்கிரசானது கிளர்ச்சியில் மாத்திரம் விளம்பரம் பெற்று வருகிறதே ஒழிய காரியத்தில் ஒரு நாளும் வெற்றிபெற முடியாமலேயே இருந்து
வருகிறது. இப்பதினைந்து இருபது வருஷகாலமாய் அது மக்களை: ஏமாற்றுவதில் வெற்றி பெற்றதே ஒழிய காரியத்தில் ஒரு வெற்றியும் பெறவே இல்லை. காரணம் என்னவென்றால் காங்கிரசுக்கு புத்தி இருக்கிறதே தவிர ஒழுக்கமோ நல்ல எண்ணமோ இல்லாததுதான்.
நம்நாட்டுக்கு இன்று எவ்வித அரசியல் கிடைப்பதானாலும் அதில் சமூக சமத்துவமும் சமூக ஒற்றுமையும் உண்டாகக்கூடிய தன்மை இருக்கவேண்டும்
குடி அரசு- 1937 (1) 340
நம் காட்டுமிறாண்டித் தண்மை
நம்நாட்டு பெரும்பாக மக்களின் சமூக நிலைமையை எடுத்துக் கொண்டால் மனிதத் தன்மையின் ஆதிநிலை என்று சொல்லப்படும் காட்டு மிறாண்டித்தனமும் சாவேஜஸ் என்னும் மிருகப்பிராயத் தன்மையும் இன்னமும் இருந்துவருவதாகத்தான் நான் காண்கின்றேன். நாம் முன்னேற்றமடைந்த மக்களானால் மதச் சண்டை, ஜாதிச் சண்டை, வகுப்புச் சண்டை, உயர்வு தாழ்வு கொடுமை பத்தாயிரக்கணக்கான வருஷங்களுக்கு
முன் இருந்தமாதிரியே இன்றும் இருந்து வரமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நம் வகுப்புகள் முன்னேற்றமடைந்த வகுப்புகளாய் இருக்குமானால்.
நம் வகுப்புகளில் இன்னமும் “அனுமார்கள்” தன்மை அதாவது குரங்குத் தன்மைகள் இருக்க முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். வகுப்பு இழிவு நீங்கவும் வகுப்பு சமத்துவமும் சுயமரியாதையும் பெறவும் போரிடும்படியான இந்த நல்ல சந்தர்ப்பத்தில் நம் வகுப்பை இழிவகுப்பாய் கருதி நமது முன்னேற்ற முயற்சியை ஒழிக்க கங்கணங்கட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள் காலை நக்க நம் வகுப்பு மக்களே முன்னிற்பார்களா என்று யோசித்துப் பாருங்கள்: “ராமாயண” காலத்தில் நம் மக்கள் எவ்வளவு காட்டு மிறாண்டி களாகவும் இழிவு புத்தி உள்ளவர்களாகவும் இருந்து பார்ப்பனர்களுக்கு உதவி புரிந்தார்களோ அதே நிலையில்தான் தமிழ் மக்களில் பலர் இன்றுமிருக்கிறார்கள். இந்த இழி பிறப்பு மக்கள் அன்று இருந்த மாதிரி தான் இன்றும் இருக்கிறார்கள். பார்ப்பான் பின் திரிவதும் அவர்களை ஆதரிப்பதும் அவர்கள் சூழ்ச்சிக்கு உடந்தையாய் இருப்பதும் அவமானம் என்று கருதாத தமிழ் மக்களை சாவேஜ் (58826) பிறவி என்று சொல்வதில் குற்றமோ தவறோ இருப்பதாக நான் கருதவில்லை காட்டுமிறாண்டித் தன்மை என்பதற்கு அருத்தமே மனிதனுக்கு மானத்தில் கவலை இல்லை என்பதுதான். கடுகளவு மானம் இருந்தாலும் ஒரு தமிழ் மகன் - பார்ப்பனரல்லாதவன் பார்ப்பனன் பின் திரியமாட்டான். பார்ப்பனனின் கொள்கை என்ன? அவர்கள் யாராயிருந்தாலும் சரி சங்கராச்சாரியோ, ராஜகோபாலாச்சாரியோ, சத்தியமூர்த்தியோ, சீனிவாச
- வெங்கிடராம முதலிய சாஸ்திரியோ யாராய் இருந்தாலும் தன் ஜாதி, தன் பிறவி உயர்வு, மற்ற மக்கள் ஜாதி பிறவி தாழ்வு என்பதல்லாமல். வேறு என்ன கருத்துடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களது பூணூல் எதைக்குறிக்கிறது? அவர்களது வேதசாஸ்திர புராணங்களும் எதைக் குறிக்கின்றன? அவர்களது தர்ம சாஸ்திரங்களான மனுதர்ம சாஸ்திரமும் கீதையும் எதைக் குறிக்கின்றன? இவைகளை அறிந்திருந்தும் இவைகளைக் காப்பாற்றி வருவது தான் பூரண சுயராஜ்யத்தின் திட்டம் என்று காங்கிரசில் குறிக்கப்பட்டிருந்தும் இவற்றை அறிந்த ஒரு தமிழ் மகன் இந்தப் பார்ப்பனர்கள் பின் திரிவானானால் இப்படிப்பட்ட சுயராஜ்யத்தில் பங்கெடுத்துக்கொண்டு இதற்காதாரமான காங்கிரசில் 3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அங்கத்தினராயிருக்கின்றான் என்றால் இப்படிப்பட்டவனை ஆதிமனித சுபாவத்திலிருந்து மாற்ற மடைந்தவன் என்று யார் தான் சொல்லிக்கொள்ள முடியும்? இந்த லக்ஷணத்தில் வெள்ளைக்காரர்களைப் பற்றி பேசுவதும் ஏகாதிபத்தியத்தைப்பற்றி பேசுவதும் எவ்வளவு பித்தலாட்டமானதும் எவ்வளவு இழிவழியில் வயிறு பிழைப்பதான ஈனத்தனம் கொண்டதுமான பேச்சு என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்கள் தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் சம்மந்தமோ ரத்தக்கலப்போ உடையவர்கள் அல்ல என்பதை நான் தைரியமாய் கூறுவேன். வெள்ளைக்காரனை தமிழ் மகன்
எவனும் ஆதரிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் நான் தைரியமாய்
கூறுவேன். ஆனால்பார்ப்பனர்கள் நிலை அப்படி அல்ல, வெள்ளைக்காரர்களும்
பார்ப்பனர்களும் ஒரு குடிமக்களே யாவார்கள். இருவர் மூதாதைகளும் ஒரு சமூகமேயாகும்
யார் வென்ளைக்கார ஆட்சியைகொண்டு வந்தவர்கள்?
பார்ப்பனர்களே வெள்ளைக்கார ஆக்ஷியை கொண்டுவந்தவர்கள்.
- நிலை நிறுத்தியவர்கள் - அவர்களை நிலை நிறுத்தி அவர்கள் ஆக்ஷிக்கு தூண்களாய் இருந்து வருபவர்களாய் இருக்கிறார்கள். இதை சரித்திர உண்மையோடும் புள்ளிவிவரங்களோடும் எங்கு வேண்டுமானாலும் ருஜுசெய்ய என்னால் முடியும். இப்படி இருக்க சில அயோக்கியர்களும் பார்ப்பனர்கள் காலை நக்கிப் பிழைக்கும் இழி பிறப்பு மக்களும் நம்மை வெள்ளைக்காரர்களுக்கு அடிமை என்றும் வெள்ளையர்கள் தாசர்கள் என்றும் சொல்லுகிறார்கள் என்றால் தாங்கள் பார்ப்பனர்களுக்கு கூலியாய் இருக்கும் இழிவை நினைத்துப் பார்க்காமலும் அதனால் தாங்கள் அடையும் அவமானத்தை லக்ஷ்யம் செய்யாமலும் இருக்கும் அதி மனிதப் பிறப்புதன்மையே ஒழிய வேறில்லை என்று சொல்லுவேன். நம்மை வெள்ளைகாரர்களுக்கு அடிமை என்று சொல்லும் யோக்கியர்களை ஒன்று கேட்கின்றேன். ஸ்தல ஸ்தாபனங்களிலும் சட்ட சபைகளிலும் பார்ப்பனர்களும் காங்கரஸ் காலிகளும் அவர்களுடன் கொடி தூக்கித்திரியும் தமிழ் மக்களும் “பிரிட்டீஷ் அரசருக்கும் அவர் சந்ததிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் அவரது சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு பக்தி விசுவாசமாய் நடந்துகொள்ளுகிறேன்” என்று பிரமாணம் செய்து கொடுக்கிறார்களே இது அடிமைஅல்லவா? இவர்களது சந்ததிகள் வெள்ளைக்காரரிடம் சேவை செய்கிறார்களே, இவர்களே வெள்ளைக்காரர்கள். கோர்ட்டுகளில் நின்று பிதாவே கடவுளே சீமானே என்று இரண்டு கையேந்தி கூவுகிறார்களே இதெல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையா அல்லது அவர்கள் மேல் எஜமானத்துவம் நடத்துவதா என்று கேட்கின்றேன். ஒரு வேளைச் சோற்றுக்கு மானத்தை விற்று உயிர்
வாழும் அற்ப புத்தியில்லாத எவனாவது நம்மையோ நம் இயக்கங்களையோ வெள்ளைக்காரர்களுக்கு அடிமை என்று சொல்ல மூன் வர முடியுமா? என்று கேட்கின்றேன்
குடி அரசு- 1937 (1) 342
எது சர்க்காரை ஆதரிப்பது?
ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக் கட்சி வெள்ளைக்காரர்களை ஏகாதிபத்தியத்தை ஆதரிக்கும் கட்சி என்று கூறுகிறார்கள் சில பார்ப்பனக் கூலிகள். இதைக் கேட்டு அயோக்கியப் பார்ப்பனர்கள் சிரித்து மகிழ்ந்து அப்படிக் கூறுகிறவர்களுக்கு எலும்பு போடுகிறார்கள். எந்த விதத்தில் ஜஸ்டிஸ் கட்சி அடிமைக்கட்சி என்று சொல்ல முடியும்? அறிவற்ற பாமர மக்களை பொய்யும் புளுகும் பேசி ஏமாற்ற முடிந்ததாலேயே ஏமாற்றாதவர்கள் வெள்ளைக்கார அடிமைகள் ஆகிவிடுவார்களா? என்று கேட்கின்றேன். கள்ள நாணையத்தைக் கொடுத்து சாமான் வாங்குவதுபோல் பாமர மக்களிடம் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று கூறி வயிற்றுச்சோற்றுக்கு மார்க்கமற்ற கூலிகளை விட்டு கண்டபடி வையவும் காலித்தனம் செய்யவும் ஏவி விட்டு பார்ப்பன அதிகாரிகளை சூழ்ச்சி செய்யத் தூண்டிவிட்டு தேர்தலில் வெற்றிபெற்று விட்டதினாலே தங்கள். நிலை நியாயமானதென்றும் மேலானதென்றும் சொல்லிக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றேன். இந்திய தேர்தலில் காங்கிரசுக்கு தோல்வி என்றே சொல்லுவேன். மொத்த மாகாணங்கள் 11-ல் அசம்பளியில் 6 மாகாணங்கள் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் மேல் சபை தேர்தலில். மெஜாரிட்டி மாகாணங்களில் நல்ல தோல்வி அடைந்திருக்கிறது மொத்தத்திலும் 5-ந் தேதி பத்திரிக்கை ஆகிய இன்று வந்த சுதேசமித்திரன் பத்திரிகை கணக்குபடியே மொத்த மெம்பர்கள் 1810-ல் காங்கிரசுக்கு 761 ஸ்தானங்களும் காங்கிரசல்லாதவர்களுக்கு 1049-ஸ்தானங்களும் கிடைத்திருக்கின்றதாய் வெளியாகி இருக்கிறது. ஆகவே காங்கிரசைவிட காங்கிரஸ் எதிரிகளே 250 ஸ்தானங்கள் அதிகம் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டதாக எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?
மற்றும் காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் மக்களிடம் பொய்யும் பித்தலாட்டமும் பேசி ஏமாற்றி ஓட்டுகள் பெற்றதினாலேயே அவர் ஜெயித்த மாகாணங்களிலும் அவர்கள் பதவி வகிக்க முடியாமல் ஏற்பட்டுவிட்டது காங்கிரஸ்காரர்கள் பிரசங்கங்களை சர்க்கார் அறிந்திருக்கமாட்டார்களா? தேர்தலில் பார்ப்பன அதிகாரிகள் நடந்து கொண்ட நடத்தை சர்க்காருக்கு எட்டியிருக்காது என்று சொல்ல முடியுமா? இந்த நடத்தையில் வெற்றிபெற்றவர்கள் பதவி வகிக்க அருகர்கள் ஆகிவிட்டால் இதைவிட கையில் வலுத்தவன் பதவி வகிப்பதே மேல் என்போம். ஏனெனில் தந்திரத்தில் வலுத்தவனை விட கையில் வலுத்தவனே அதிக யோக்கியனாய் இருக்கக்கூடும். நம் நாட்டில் எவ்வளவுதான் காங்கிரசானது விளம்பரத்திலும்
தந்திரத்திலும் மேலான நிலையை அடைந்திருந்தாலும் அதைப்பற்றி நாம்
யாரும் கவலைப்படவோ கலங்கவோ வேண்டியதில்லை என்றே சொல்லுவேன். அதற்கு முடிவு காலம் நெருங்கிவிட்டது. அதனிடம்
343 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இருந்த பொய் பித்தலாட்டங்கள் எல்லாம் காலியாகிவிட்டது. இனி புதிதாக ஏமாற்ற அதனிடம் சரக்கு கிடையாது. அதிகாரத்துக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு காங்கிரசை சரணாகதி அடைந்த நமது ஆள்களுக்கும் புத்தி வந்துவிட்டது என்றே கருதுகிறேன். காங்கிரஸ்காரர்களின்- பார்ப்பனர்களின். தலைக்கொழுப்பையும் ஆணவத்தையும் கூட பார்ப்பனர்களிடம் கூலிகளாய் அமர்ந்த தோழர்கள் பலர் இப்போது உணர்ந்து வருகிறார்கள் என்றே கருதுகிறேன்.
காங்கிரஸ் சுபைத்தில் பதவிக்கு வராது
இனி சுலபத்தில் பார்ப்பனர்கள் அதிகாரத்துக்கு வந்துவிடுவார்கள் என்று கருதிவிடாதீர்கள். சர்க்காரை மன்னிப்பு கேட்டுக்கொண்டால் ஒழிய காங்கிரசுக்கு மந்திரி பதவி இல்லை என்பதை உணருங்கள். அதாவது வாக்குறுதியும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம். நாங்கள் இனி சட்டப்படி நடந்து கொள்ளுகிறோம் என்று பிரமாணம் செய்து கொடுப்பதின் மூலம் தங்கள் தவறுதலுக்குப் பரிகாரம் செய்தாலொழிய உள்ளே விட மாட்டார்கள். இந்த நிலையில் பார்ப்பனர்கள் மந்திரி பதவி ஏற்றாலும் செய்யப்போகும் காரியமும் அவ்வளவுதான். தோழர் ஜவஹர்லால் சொன்னதுபோல் “காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்பது அரசாங்கத்துக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக்கொடுப்பதாகும்'' என்கின்ற நிலைதான். ஏற்படும். இந்த 10 வருஷகாலமாய் ஜஸ்டிஸ் சுயமரியாதை கக்ஷிகளால். பார்ப்பன ஆதிக்கத்துக்கு அரசியலிலும் சமூக இயலிலும் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு ஆக காங்கிரஸ் - பார்ப்பனர்கள் தேர்தலுக்கு நின்றார்களே ஒழிய வேறில்லை. அதனால் தான் சகல பார்ப்பனரும் ஆட்டுக்கல் முண்டச்சி முதல் ஹைகோர்ட் ஜட்ஜி, ரிவனியூபோர்ட் மெம்பர் பார்ப்பனர் வரை ஒன்றுகூடி ஒரு கை பார்த்தார்கள். கடைசியில் அணாவுக்கு 12 தம்பிடியாக இருந்தது ரூபாய்க்கு 192- தம்பிடியாக ஆகி விட்டது. இப்போது எல்லோரும் பழயகாலப் புதுப்பெண்கள் போல் தலையைக் கவிழ்த்துக்கொண்டு திரிகிறார்கள். சிலர் மரியாதை ராமனைப் போல் தலையை மூடி போட்டு மறைத்துக்கொண்டு திரிகிறார்கள். இந்த வெற்றி பெற்ற வீரர்கள் - ஏப்ரல் முதல் தேதி புதிய உலகத்தை சிருஷ்டிப்பதாக கூறி ஓட்டுப்பெற்ற வீரர்கள் “அதற்கு இடம் கொடாமல்" மடக்கி அடித்த சர்க்காரைப்பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மந்திரிகளைப்பற்றி குலைப்பது என்றால் இதற்கு எதை உதாரணமாய்ச் சொல்லுவது என்பது எனக்கு விளங்கவில்லை.
காங்கிரஸ் அல்லாதவர்கள் தேசத்துரோகிகளா?
காங்கிரஸ்காரர்கள் ஏதாவது ஒரு பதவியை ஏற்றுக்கொள்ளுவதில்லை என்று சொல்லி விட்டால் மற்றவர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது சட்டமா என்று கேட்கின்றேன். காங்கிரஸ்காரர்கள் ஜெயிலுக்கு
குடி அரசு- 1937 (1) 34
போன காலத்தில் இந்தியாவில் 100-க்கு 991 பேர் போகவில்லை. இதனாலேயே எல்லா மக்களும் தேசத்துரோகிகளோ சர்க்கார் தாசர்களோ பதவிபட்டம் வாழ்க்கை ஆசைப் பிடித்தவர்களோ ஆக ஆகிவிட்டார்களா என்று கேட்கின்றேன்.
காங்கிரஸ்காரர் வெற்றி பெற்றும் சட்டப்படி பதவி ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் சட்டத்திற்குமீறியவர்கள் என்று தானே அருத்தம், ஆகவே சட்டங்களை மீறுபவர்களோ சீர்திருத்த சட்டத்தை நடக்கவொட்டாமல் செய்பவர்களோ தவிர மற்றவர்கள் மந்திரி பதவி ஏற்பதில் என்ன தடை என்று கேட்கின்றேன். தோழர் ரெட்டி நாயுடு அவர்களோ மற்ற மந்திரிகளோ ஒரு நாளும் தங்களை ஒத்துழையாமைக்காரர்கள் என்றோ சட்டம் ஒழுங்கு முறைக்கு கட்டுப்படாதவர்கள் என்றோ. சொல்லிக்கொள்ளவும் இல்லை அந்தப்படி சொல்லி ஒருவரிடமும் ஓட்டு வாங்கவும் இல்லை அல்லது காங்கிரசை ஒப்புக் கொண்டதும் இல்லை. இப்படி இருக்க தங்களுக்கு மந்திரி வேலையோ வாக்குறுதியோ கொடுக்காத சர்க்காரைப்பற்றி பேசாமல் தோழர் ரெட்டி நாயுடுவைப்பற்றியே பேசுவது எவ்வளவு பயங்காளித்தனமும் இழிவான காரியமும் ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் கவர்னரைப் பாராட்டுகிறார். கவர்னர். பிரபுராஜனேபாலாச்சாரியாரைப் பாராட்டுகிறார். தோழர் ராஜகோபாலாச்சாரியார் தனிப்பட்ட முறையில் பல தடவை கவர்னர் வீட்டுக்கு ரகசியமாய் போய் வந்திருக்கிறார்; அவரோடு கூட விருந்துண்டு இருக்கிறார். இந்த லக்ஷணத்தில் தோழர் ரெட்டியாரையும் மற்ற மந்திரிமாரையும் கள்ளுக்கடை, சாராயக் கடை, மீன்கடை, சாக்கனாக்கடை பாஷையில் வைகிறார். மற்ற பார்ப்பன கூலிகளும் குலைக்கின்றன. இதுதானா தேசியம் என்று கேட்கின்றேன். இப்படிப்பட்ட கூலிகள்தானா தேசிய வீரர்கள் - தேச பக்தர்கள் என்று
கேட்கின்றேன்.
இந்த நாட்டில் சமூக சம்மந்தமாக மத விஷயத்திலும் ஜாதி வகுப்பு விஷயத்திலும் ஒரு ஒற்றுமையும் சமரசமும் ஏற்படாத பக்ஷம் கண்டிப்பாய் ஒரு கடுகளவு காரியமும் எந்தக் கக்ஷியாராலும் பொது முறையில் செய்து கொள்ள முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.
இன்றுள்ள நிலையில் காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒற்றுமை ஆக இடமில்லை. 1000 ஜின்னாக்கள் காங்கிரசில் சேர்ந்தாலும் சரி மற்றும் 1000, 1000 படே படே முஸ்லீம் ஆசாமிகளும் மெளலானாக்களும் காங்கிரசில் சேர்ந்தாலும் சரி, ஒரு சனாதன இந்து அல்லது மகாத்மா இந்தியன் இருக்கிறவரை முஸ்லீம்
லீக்கு இருந்து கொண்டுதான் இருக்கும். அதுபோலவே ஒரு உச்சிக்குடுமி பூணூல் பார்ப்பான் இருக்கும் வரை ஜஸ்டிஸ் கக்ஷி இருந்து 45— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கொண்டுதான் இருக்கும். இன்னும் லக்ஷக்கணக்கான பார்ப்பனரல்லாத கூலிகளையும் பதவி ஆசைப் பிண்டங்களையும் காங்கிரசில் சேர்த்து “விபூஷண”னாக்கிலும் சரி, 'ராமனாக”வே ஆக்கிவிட்டாலும் சரி. ஜஸ்டிஸ் கக்ஷி ஒழிக்கப்பட்டுவிடும் என்று கருதுவது முட்டாள்தனமேயாகும். ஜஸ்டிஸ் கக்ஷி ஒழிந்துவிட்டதாக ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியும் மற்ற கூலிகளும் கூப்பாடுபோட்டார்கள். ஆனால் ஆச்சாரியாருக்கு சதா சர்வகாலம் ஜஸ்டிஸ் கக்ஷி தான் வாக்கிலும் மனதிலும் இருந்து வருகிறது. சத்தியமூர்த்தியாருக்கோ தன் நிழலே ஜஸ்டிஸ் கக்ஷியாகத் தோன்றுகிறது. தூக்கத்தில் ஜஸ்டிஸ் க்ஷி பூதமே வந்து ஆடுவதாகப் பயந்து உளறுகிறார். மற்ற கூலிகளைப்பற்றி கேட்கவே வேண்டியதில்லை. விடாமல் ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றி கண்டபடி குலைத்தாலும் மனதில் “இப்படி ஒரு கட்சி இருப்பதால் தானே இந்தப் பார்ப்பான்கள் நம்மை சேர்த்துக்கொண்டு ஏதோ கஞ்சிக்கு கொடுத்து வருகிறார்கள், இது இல்லாவிட்டால் நம்ம
கதி என்ன ஆவது?” என்றே கருதிவருகிறார்கள். ஆதலால் கட்சி போய் விட்டதே போய் விடுமே என்ற கவலை யாருக்கும் வேண்டியதில்லை: மந்திரி பதவி கொஞ்ச காலத்துக்கு பார்ப்பனர்கள் கைக்கு போகலாம் அதுவும் சுலபத்தில் முடிந்துவிடாது. மானம், வெட்கம் எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு நிர்வாணமாகப் போய் உட்கார்ந்தால் தான் உட்காரமுடியும். ஏனெனில் அவ்வளவு பொய் பித்தலாட்டம் பேசி ஜெயித்து இருக்கிறார்கள். அப்படித்தான் போய் உட்கார்ந்தாலும் நமக்கு கெடுதி ஒன்றுமில்லை. இவர்கள் யோக்கியதையை அந்தத் துறையிலும் ஜனங்கள் அறிய உதவியாயிருக்கும்
ஆதலால் இன்றைய சமூக இயலும் அரசியலும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம்
யார் வகுப்புவாதி?
தவிர இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் நம்மை வகுப்பு வாதிகள் என்று குறை கூறுகிறார்கள். யார் வகுப்புவாதிகள்? பார்ப்பனர்களா? நாமா? என்பதை யோசித்துப் பாருங்கள். வகுப்பு பேதங்கள் ஏற்பட்டதே பார்ப்பனர்களாலேயே ஓழிய நம்மாலல்ல. வகுப்பு பேதங்களால் பயன் அனுபவிப்பவர்கள் பார்ப்பனர்களே. வகுப்பு பேதத்தால் இழிவும் நட்டமும் அடைபவர்கள் நாமே ஒழிய பார்ப்பனர்கள் அல்ல. இன்று நீங்கள் கடைத் தெருவழியே போனால் “பிராமணாள் காபி கிளப்பு, “பிராமணாள் ஓட்டல்”, “பிராமணாளுக்கு மட்டும் சாப்பாடு போடப்படும்” என்றெல்லாம் நோட்டீஸ் போர்டு போட்டிருப்பதை பார்ப்பீர்கள். இது வகுப்புவாதம் அல்லவா? ஓட்டல்களிலும் காப்பி கடைகளிலும் கோவில்களிலும் குளங்களிலும் பிராமணாள் -பிராமணரல்லாதார் என்று இடம் பிரித்திருக்கிறதே அது ஏன்? அது வகுப்பு வாதமல்லவா? மைலாப்பூர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்ப்பனர்கள் வீடுகளில் பிராமின்ஸ் ஒன்லி”
குடி அரசு- 1937 (1) 346
என்று எழுதித் தொங்கவிட்டிருக்கின்றதே இது ஏன்? பஞ்சமர்கள், நாய்கள், பெருவியாதிக்காரர்கள் பிரவேசிக்கக் கூடாது என்று சென்னை ஓட்டல்களில் போர்டு பலகைகள் போடப்பட்டிருக்கின்றதே இது ஏன்?
முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடம் இல்லை என்று எழுதித் தொங்க விட்டிருக்கிறதே இது ஏன்? இவையெல்லாம் வகுப்புவாதமல்லவா? வகுப்பு பிரிவினையை காட்டவில்லையா? நம்மில் நாலு வகையற்ற கூலிகள் வயிற்றுப் பிழைப்புக்கு பார்ப்பன அடிமையாகி நம்மைக்கண்டு குலைப்பதாலேயே பார்ப்பான் செய்யும் அயோக்கியத்தனங்கள் மறைக்கப்பட்டு போய் விடுமா? எதற்கு ஆக நம்மை வைவதற்கு இந்த பார்ப்பனர்கள் கூலிகளை அமர்த்தி ஏவிவிட வேண்டும்? இந்த வசவினால் என்ன காரியம் சாதித்து விட மூடியும்? அந்தக் கூலி நாம் கொடுத்து அவர்களையே பார்ப்பனர்கள் மீது ஏவி விட வேண்டும் என்று நினைத்தால் அது முடியாத காரியமாகி விடுமா?
இம்மாதிரி வைவதாலும் குலைப்பதாலும் என்ன நன்மை ஏற்பட்டுவிடும்? வகுப்பு உரிமையை விட்டுவிடுவோமா? அல்லது வெள்ளைக்காரன்தான் ஆகட்டும் இந்த காலித்தனமான வசவுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடிவிடுவானா? ஓவ்வொரு காலித்தனமும் வெள்ளைக்காரனையும் அவனது ஆக்ஷியையும் இந்தியாவில் நிலை நிறுத்தி ஆணிவைத்து அடிப்பதாகும். ஒவ்வொரு வசவும் காலித்தனமும் வகுப்புவாதத்தை கிளப்பிவிடுவதாகுமே தவிர சிறிதும் குறைப்பதாக ஆகாது. கூலிகளை அமர்த்தி காலித்தனத்திலும் வசவிலும் வெற்றிபெறவோ வகுப்பு உரிமையை ஒழிக்கவோ முடியும் என்று பார்ப்பனர்கள் கருதுவது அவர்களை ஏமாற்றிக் கொள்வதேயாகும். இவைகளுக்காக ஒருநாளும் நாம் பயந்து கொள்ள முடியாது. வட்டியுடன் திருப்பிக் கொடுத்து விட்டுத்தான் வேறு வேலை பார்க்கச் செய்யும். இன்று இதோ பாருங்கள். (காவேரிப்பட்டணத்தில்) “திரும்பிப் போடா நாயுடு நாயே” என்று இந்த சுவரில் எழுதப்பட்டு இருக்கிறது. இதன் கருத்து என்ன? பார்ப்பானின் ஆத்திரம் இவ்வளவு இருக்கிறது, அவனது கூலியின் குலைக்கும் தன்மை அவ்வளவுதூரம் போய்விட்டது என்பதைத்தான் காட்டுகிறது
வகுப்புவாதம் இல்லாதவர்கள் நாயுடு நாயே என்று ஏன் எழுத வேண்டும்?
ஆகவே தோழர்களே நான் சொல்பவைகளை அப்படியே நம்பிவிடாமல் எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
குறிப்பு: 06.05.1937 இல் தர்மபுரி யூனியன் மைதானத்திலும் 07.05.1937 இல் காவேரிப்பட்டணம் யூனியன் சத்திரத்திலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 16.05.1937
3479 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கவர்னர் பிரபு நடத்தை கண்டனம்
9.5.37ந்தேதி சென்னையில் நடந்த ஜஸ்டிஸ்கட்சி நிர்வாக சபைக் கூட்டத்தில் சென்னை கவர்னரின் நடத்தையை கண்டித்து ஒரு தீர்மானம் போடப்பட்டிருப்பதை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள். இதன் காரணம் மந்திரிசபை அமைப்பதில் கவர்னர் நடந்து கொண்ட மாதிரியேயாகும்.
இவ்விஷயத்தைப்பற்றி சென்ற மாதத்திலேயே நாம் கண்டித்து எழுதியிருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதை கவனித்து ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபையானது கவர்னர் பிரபு நடத்தையைக் கண்டித்து தீர்மானம் செய்ததை நாம் மனப்பூர்வமாகப் பாராட்டி வரவேற்கிறோம். உண்மையிலேயே எவ்வளவோ கஷ்ட நஸ்டங்கள், கெட்ட பெயர்கள், வீண் பழிகள், எதிரிகளின் விஷமப் பிரசாரம் ஆகியவைகளுக்கு ஆளாகிக்கொண்டும் இரட்டை ஆகஷியில் சர்க்கார் மெம்பர்களின் தொல்லைகளை சமாளித்துக்கொண்டும் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல். நிர்வாகத்தை நடத்தி வந்ததற்கு வேலை முடிவில் அரசாங்க தலைமை அதிகாரியான கவர்னர் பிரபு நடந்துகொண்ட மாதிரியானது மிகவும் வருந்தக் கூடியது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
இந்தியாவில் உள்ள இதர 10 மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாகாணங்கள் 5. அவ்வைந்து மாகாணங்களிலும் உள்ள கவர்னர்களில். ஒருவராவது மந்திரிசபை அமைக்கச் செய்ததில் இம்மாதிரி நடந்து கொள்ளவேயில்லை என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம் ஒவ்வொரு கவர்னரும் எதிர்க்கட்சி தலைவரையும் அல்லது சட்டசபை தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்களையும் தான் அழைத்து மந்திரிசபை அமைக்கச் செய்திருக்கிறாரே ஒழிய தனிப்பட்ட நபரை அழைக்கவே இல்லை. ஒழுங்கு முறையாகச் சொல்லவேண்டுமானாலும் வெற்றி பெற்ற மெஜாரிட்டி கட்சியார் மந்திரி பதவி ஏற்றுக் கொள்ள
எந்தக் காரணத்தாலாவது முடியாமல் போனால் நாகரீக ஒழுங்கு முறைப்படி அடுத்த மெஜாரிட்டி கட்சியாரை அழைத்து யோசனை கேட்க வேண்டியது முறையாகும். இன்னமும் பேசப்போனால் அதிகாரத்தில் - பதவியில் இருந்து வரும் கட்சி தோல்வி அடைந்துவிட்ட போதிலும்
கூட அக்கட்சி தலைவரை முதலில் கலந்து பேசியே மேலால் மற்ற கட்சி தலைவர்களுடன் பேசவேண்டியது கிரமமான பொறுப்புடையவர்கள்
குடி அரசு- 1937 (1) 348
செய்கையாகும் என்று கூடச் சொல்லலாம். ஜஸ்டிஸ் கட்சி தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்து இருந்தாலும் ஏப்ரல் மாதம் முதல் தேதி வரை அவர் முதல் மந்திரியாய் இருந்து வந்திருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படி இருக்கும் போது காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவி ஏற்க முடியாமல் போனவுடன் 29-ந் தேதியில் கவர்னர் பிரபு முதல் மந்திரியை கலக்காமலும் ஆக்டிங் கவர்னர் வேலை பார்த்தவரும் நிர்வாகசபை வைஸ்பிரசிடெண்டுமான சர்.கே.வி. ரெட்டி நாயுடுவை கலக்காமலும் கனம் சீனிவாச சாஸ்திரியாரை அதுவும் தேர்தலில் நிற்காதவரும், தன் கட்சி பேரால் தேர்தலுக்கு ஒரு ஆளைக்கூட நிறுத்தாதவரும், தன்னை பின்பற்ற சட்ட சபையில் ஒருவர் கூட இல்லாதவருமான சீனிவாச சாஸ்திரியாரை, அதுவும் ஜஸ்டிஸ் கட்சியை சதா வைது கொண்டு இருந்தவரும், காங்கிரசை சதா ஆதரித்துக் கொண்டு இருந்தவருமான சீனிவாச சாஸ்திரியாரை கவர்னர் அழைத்தாரென்றால் இந்த நடத்தை எப்படி நியாயமானதாகும் என்பது நமக்குப் புலனாகவில்லை. ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் “ஒழுங்கு முறை நாசமாய் போனாலும் பரவாயில்லை. ஜஸ்டிஸ் கட்சியை அவமானப்படுத்த வேண்டும் அதன் தலைவரை அவமானப்படுத்த வேண்டும்” என்று கருதித்தான் அக்கட்சியின் எதிரியைத் தேடிப்பிடித்து கூப்பிட்டிருக்க வேண்டும் என்று தான் கருத வேண்டியிருக்கிறது
ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் சமூக நன்மைக்கு ஆக உழைத்து வருவதும் தோழர் சாஸ்திரியார் கட்சி (ஏதாவதிருந்திருந்தால்) அது பார்ப்பனர்களின் நன்மைக்கு ஆகவே உழைத்து வருவது என்பதும் பல உதாரணங்களால் சர்க்கார் உணர்ந்திருந்தும், பார்ப்பனர்கள் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் முதல் காங்கிரசுக்கு ஆதரவளித்து இருந்தும் ஒரு கவர்னர் பிரபு பார்ப்பனரையே கூப்பிட்டு மந்திரி சபை அமைக்கும்படி வேண்டியதானது கோஷன் பிரபு கவர்னராய் இருக்கும் போது ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தவுடன் நடந்துகொண்ட மாதிரியைப் பின்பற்றினார் என்று தான் கருத வேண்டி இருக்கிறது
அதாவது 1926-ல் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்த உடன் இப்போது எர்ஸ்கின் பிரபு தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம்
வைத்திருக்கும் அன்பு போலவே கோஷன் பிரபு சர்.சி.பி. ராமசாமி அய்யரிடம் அன்பு வைத்து ஜஸ்டிஸ் கட்சிக்கு தொல்லை உண்டாகும்படி செய்தார். அப்போதைய அரசாங்கத்தில் பார்ப்பனர்களுக்கே 100-க்கு 100 பிரைஸ் விழுந்து வந்தது. ஜஸ்டிஸ் இயக்கத் தலைவராயிருந்த
பனகால் அரசரை இதுபோலவே அலட்சியம் செய்து அகெளரவப் படுத்தினர். ஆனால் காலம் கோஷன் பிரபுவுக்கும் சர்.சி.பி.அய்யருக்கும் அனுகூலமாக இல்லாமல் போய்விட்டது. கோஷன் பிரபு மீது ஜஸ்டிஸ்
349 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின் கடைசியாக பிரபு வழிக்குவந்தார். இதே “மெயில்” பத்திரிகையும் அதுசமயம் பார்ப்பனர்களை நம்பக் கூடாது என்று தலையங்கம் எழுதிற்று. அதன். பின்புதான் பார்ப்பனர்களால் பிடித்து வைக்கப்பட்ட மந்திரிகளும் (ஜஸ்டிஸ் க்ஷி தேர்தலில் தோற்று இருந்தாலும் கூட மந்திரிகள்) ஜஸ்டிஸ் கட்சிமந்திரிகளாகவே இருந்துவந்தார்கள். ஆகவேஅதுபோன்ற சம்பவத்தையே இப்போதும் எர்ஸ்கின் பிரபுவும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று கருதி மகிழ்ச்சி அடைகின்றோம்
பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் பற்றி யார் என்ன குறை கூறிய போதிலும் அதன் பார்லிமெண்டரி முறையானது உலகின் மதிப்பிற்கு உரியது என்று எவரும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியின் நமது மாகாணத் தலைவர் இப்படி ஒழுங்கை அலட்சியம் செய்து நடந்து கொண்டதை நாம் அலட்சியமாய் கருதிவிட முடியாது. ஏனெனில் இந்த மனப்பான்மை இனியும் என்ன என்ன செய்யக்கூடுமோ என்பது பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது. அதனாலேயே இக்கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டியதாயிற்று
நிற்க, சர்க்கார் உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்கள் அத்தனை: பேரும் காங்கிரசுக்கு ஓட்டு செய்திருக்கிறார்கள் என்பதை சர்க்காரார் ஆதாரத்துடன் தெரிந்து இருந்தும் உத்தியோக நியமன விஷயத்தில் பார்ப்பனர்களுக்கு இன்னமும் சலுகை காட்டிக் கொண்டு வருகிறது என்றால் சர்க்காராரே காங்கிரஸை விரும்புகிறார்களா என்பதும் யோசிக்கத் தகுந்த விஷயமாய் இருந்து வருகிறது. பார்ப்பனர்கள் மொத்த ஜன சங்கையில் 100-க்கு 3 பேர்களே இருக்கிறார்கள். இன்று ஏறக்குறைய அநேக பெரிய உத்தியோகங்களில் 100-க்கு 50க்கு மேலாகவும் ஐ.சி.எஸ். ஜுடிஷல் ஆகியவைகளில் இன்னும் அதிகமாகவும் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்க இப்போதைய சர்க்கார் உத்திரவு பார்ப்பனர்களுக்கு 100-க்கு 16 வீதம் உத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும் என்று இருக்கிறது. இந்த உத்திரவு இனியும் இருக்கவேண்டுமா என்று கேட்கின்றோம்
நமது கவர்னர் பிரபு அவர்கள் காங்கிரசை ஆதரிக்காதவராய் இருப்பார்களேயானால் காங்கிரசை ஆதரித்த உத்தியோகஸ்தர்கள் ஜாதியான பார்ப்பனர்களுக்கு ஏன் 100-க்கு 300, 400, 500 பங்கு அதிகமாக உத்தியோகங்கள் வழங்க வேண்டும் என்று கேட்கின்றோம். வகுப்புரிமையை காப்பாற்றுவதற்கு ஆகவே உறுதி மொழி கொடுக்கவில்லை என்று இந்திய மந்திரி அவர்கள் சொன்னதின் கருத்து இதுதானா என்று கேட்கின்றோம். வகுப்புரிமையை காப்பாற்றுவதை முதல் கொள்கையாகக் கொண்ட மந்திரிகளின் தன்மையும் இதுதானா என்று கேட்கின்றோம்.
குடி அரசு- 1937 (1) 350
உத்தியோகம் ஏற்றுக்கொண்டு இன்றைக்கு ஒன்றரை மாதகாலமாகியும் இம்மந்திரிகள் இது விஷயத்தில் இன்னமும் ஒன்றும் செய்யாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க காரியமாகும். நிலவரியை 100-க்கு 75 வீதமாகக் குறைக்க இருந்த சாவகாசமும் ஊக்கமும் அவசரமும் இந்த உத்தியோகக் கொள்ளை விஷயத்தில் கவனம் வைத்து நீதி செலுத்த இடம் கொடுக்கவில்லையா என்று கேட்கின்றோம். மற்றும் இம்மந்திரிகளுக்கு ஜனங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவேண்டும் என்கின்ற கவலை கூட இல்லையா? என்றும் கேட்கின்றோம்
அதலால் கவர்னர் பிரபு அவர்களும் கனம் மந்திரிகளும் இனியாவது கவனித்து தங்களது தவறுதல்களைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பார்களாக.
குடி அரசு - தலையங்கம் - 16.05.1937
31— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
உலகில் பெரிய வெட்கக்கேடு
காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றார்கள். பெற்ற பிறகு போர்டு சென்ட் ஜார்ஜ் கோட்டை வாயில்படியில் நின்றுகொண்டு கூப்பாடு போடுகிறார்கள். திருட்டுத்தனமாக கவர்னர்கள் வீட்டுக்கு போய் ஓலமிடுகிறார்கள். கோட்டை வாசல் திறந்து கிடந்தும் உள்ளே இருக்கும் கவர்னர் பிரபு கோட்டைக்குள் வாருங்கள் வாருங்கள் என்று அழைத்தும் போக முடியாமல் அழுகிறார்கள். வெற்றி பெற்ற “வீரர்கள்” எல்லோருக்கும் தலைவர் உள்பட உள்ளே போகவும் மந்திரி பதவி ஏற்கவும் சம்பளத்தை வாங்கி மூட்டை கட்டவும் அளவு கடந்த ஆசை இருந்தும் கவர்னர். பிரபுவுக்கும் எப்படியாவது இவர்கள் தலையில் மந்திரி பதவியை கட்டி அடித்து தனது காரியத்தை கஷ்டமில்லாமல் ஆக்கிக்கொள்ளலாம் என்கின்ற கருத்தில் தாராளமாய் இடம் கொடுத்தும் போலி வெட்கமும் ஜனங்களுக்குக் கொடுத்த இமயமலை போன்ற வாக்குறுதிகளும் பின்னே
நின்று கொண்டு மின்சார சக்தி இழுப்பது போல் இழுக்கிறது. அதுவும்
ஒரு அடி முன்னே போனால் இரண்டு அடி பின்னுக்கு இழுக்கிறது. இந்த விதமாக ஒரு காட்சி இதுவரை உலகத்தில் எங்குமே நடந்திருக்காது என்றே சொல்லலாம். இதுபோன்ற பெரியதொரு வெட்கக்கேடான சம்பவமும் இதுவரை உலகில் எங்குமே நடந்திருக்காது என்றும் சொல்லலாம். “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில்” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதே மாதிரி ஒரு மாதத்தில் காங்கிரஸ்காரர்களின். புளுகு வெளியாகி காங்கிரஸ்காரர் நிலை பச்சவாதம் பிடித்த உடல் போல் அசைவின்றிக் கிடக்கும்படி செய்து விட்டது.
மந்திரிகளை வைவதோடு காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்றதின் பயன் முடியப்போகிறது.
மலையாளத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது
“சாவி என்கிட்டதானே இருக்கிறது” என்பதாகும்
இதன் கருத்து என்னவென்றால் ஒரு மலையாள நம்பூதிரி பார்ப்பான் குளத்தில் குளிக்கும்போது தன் கைப்பெட்டியை மேட்டில் வைத்து விட்டு குளித்தான். பார்ப்பான் முங்கி குளித்து உடல் தேய்த்துக் கொண்டிருக்கும் போது பெட்டியை ஒருவன் எடுத்துக்கொண்டு போய்
குடி அரசு- 1937 (1) 352.
விட்டான். பார்ப்பான் குளித்து விட்டு மேட்டுக்கு வந்து பெட்டியைப் பார்த்தான். காணக்கிடைக்கவில்லை. விசனத்தோடு சுற்றிச் சுற்றிப் பார்த்தான். இந்த சமயத்தில் பார்ப்பானுக்கு சந்தோஷகரமான விஷயம் ஒன்று தென்பட்டது. உடனே ஆனந்தம் கொண்டு பெட்டி காணாமல் போன விசனத்தை மாற்றிக்கொண்டான். என்ன தென்பட்டது என்றால் “பெட்டி போய் விட்டதால் என்ன கஷ்டம், சாவி நம்மிடம் தானே இருக்கிறது. எடுத்துக்கொண்டு போனவன் சாவி இல்லாமல் என்ன செய்துவிட முடியும்?” என்று நினைத்து மகிழ்ந்தானாம்! அதுபோல் காங்கிரஸ்காரர் மந்திரி பதவி இழந்து விட்டு தங்கள் ஏமாந்த தனத்துக்கு ஆக சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு "ஏற்பட்ட சந்தோஷக்குறி”க்கு ஆதாரமெல்லாம் வேறு யார் மந்திரி வேலைபார்த்தால் தான் அதில் என்ன பிரயோஜனம் ஏற்படப் போகிறது? மெஜாரிட்டியாய் வந்தவர்கள் நாம் தானே, வேறு மந்திரிகள் என்ன செய்து விடமுடியும் என்று கருதி திருப்தி அடைகிறார்கள்.
மந்திரி தன்மையினால் மக்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை யெல்லாம் இந்த “இடைக்கால” மந்திரிகள் செய்துவிட்டு வெறும் பெட்டியை எறிந்துவிட்டு வரப்போகிறார்கள். அப்போது மெஜாரிட்டிகாரர்கள் உள்ளே போய் “மந்திரி பதவியால் ஒன்றும் செய்ய முடியாது என்று நாங்கள் முன்னமே சொன்னதை இப்போது செய்கையில் செய்து காட்டிவிட்டோம்” என்று சொல்லிவிட்டு, மாதத்தையும் ரூபாயையும் மாத்திரம் எண்ணிக்கொண்டு காலம் கடத்தப்போகிறார்கள். ஆகவே அரசியலில் இம்மாதிரி வெட்கங்கெட்ட தன்மையும் முட்டாள் தனமான நடத்தையும் நமது காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்பட்டிருக்காதென்றே சொல்லுவோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.05.1937
33— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பார்ப்பன விஷமம்
சென்னை அரசாங்கத்தின் தற்கால மந்திரிகள் நிலவரியில் 100க்கு 25 வீதம் குறைத்து வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் பார்த்து பொறாமைப்பட்ட காங்கிரஸ் - பார்ப்பனப் பத்திரிக்கைகள் சிறப்பாக “சுதேசமித்திரன்” “இந்த வருஷத்துக்கு இல்லையாம்” என்று தலைப்புக் கொடுத்து பரிகாசம் செய்திருந்தது பற்றி அப்பொழுதே கண்டித்து எழுதினோம்.
இந்த வருஷத்துக்கு குறைத்திருந்தாலும் “சென்ற வருஷத்துக்கு இல்லையாம்” என்று விஷமத்தனமாக குறை கூறித்தான் இருக்குமே ஒழிய குறைத்தது பற்றி ஒரு நாளும் திருப்தி அடையவோ நன்றி காட்டவோ முன்வராது. ஏனெனில் அது அந்த வகுப்பின் சுபாவமேயாகும். எப்படியாவது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தை தடுப்பதையே நோக்கமாகக்கொண்டு குறை கூறி விஷமப் பிரசாரம் செய்யும் கூட்டம் ஒரு நாளும் யோக்கியமாய் நடந்துகொள்ள முடியாதல்லவா?
இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பம்பாய் மந்திரிகளைப் பற்றியும் இதே மாதிரி விஷமப் பிரசாரம் செய்ய “சுதேசமித்திரன்” முன்வந்து விட்டது. அதாவது 14-5-37ந் தேதி மித்திரன் பத்திரிக்கையில் மது விலக்கேனும் உண்டா” என்று தலைப்புக்கொடுத்து பம்பாய் மந்திரியை மது விலக்கு கூடச் செய்யவில்லை என்று குறை கூறுகிறது பம்பாய் மந்திரிசபை மதுவிலக்குக்கு ஒரு திட்டம் போட்டு பரீக்ஷார்த்தமாக சில கடைகளை மூடுவதாகத் தெரிவித்திருக்கிறது. அதைப் பார்த்து மேலால் என்ன செய்யப் போகிறது என்று பார்க்காமலும் அல்லது வேறு முறைகள் சொல்லாமலும் ''மதுவிலக்கேனும் உண்டா'' என்று பழிகூற ஆரம்பித்திருப்பது எப்படி யோக்கியமான காரியம் ஆகும் என்பது நமக்கு விளங்கவில்லை
1927ம் வருஷத்தில் சென்னை அரசாங்கத்தில் காங்கிரஸ் மந்திரியாக இருந்தவர் மது விலக்கைப்பற்றி ஜஸ்டிஸ் கட்சியார் கேட்ட கேள்விக்கு “மதுபானம் கெட்டதா நல்லதா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார்.
மற்றும் காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அவர்களை உங்களது மதுவிலக்குத் திட்டம் என்ன என்று ஜஸ்டிஸ் கக்ஷியார் கேட்ட போது “பூரண சுயராஜ்யம் கிடைத்தாலல்லாமல் மதுவிலக்கு சாத்தியமில்லை”
குடி அரசு- 1937 (1) 354
என்று பதில் சொன்னார். காங்கிரசும் மதுவிலக்கின் பேரால் எவ்வளவோ. லக்ஷக்கணக்கான பணங்களைப் பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து அரசியல் காரணங்களை மனதில் வைத்து மறியல் செய்யச் செய்தபோது தண்டனையும் அடக்கு முறையும் அதிகமானவுடன் “இனிமேல் மறியல் செய்வதில்லை” என்று அரசாங்கத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு ஓடிவிட்டு இப்போது மந்திரிகளைப் பார்த்து மதுவிலக்கேனும் உண்டா. என்றால் இதில் சிறிதாவது நாணயம் இருக்கிறதா என்று கேட்கின்றோம்
இம்மாதிரியே பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் எந்த விதத்திலும் தங்களையும் தங்கள் அடிமைகளையும் தவிர வேறு எப்படிப்பட்டவர்களும் தலையெடுக்க வொட்டாமல் அழுத்துவதையே ஜன்மக் குணமாகக்கொண்டு தொல்லை விளைவித்து வருகிறார்கள். இவ் விஷமங்களை நமது பாமர மக்கள் நம்பிக்கொண்டு கூடவே கோவிந்தா. போடுகிறார்கள்.
இப்படிப்பட்ட இழி நிலை மாறினால் ஒழிய நாட்டிற்கு நலம் உண்டாவது மிகமிக அருமை என்றே சொல்லுவோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.05.1937
3 ய... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தினசரி பத்திரிகை
பார்ப்பனரல்லாதாருக்குத் தினசரிப் பத்திரிகை இல்லை என்பதைப்பற்றி சென்றவாரம் நாம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தது வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதில் குறிப்பிடப்பட்டது போலவே சென்னையில் 9-5-37ல் கூடிய ஜஸ்டிஸ் கட்சி நிர்வாக சபை கூட்டத்தில் இதுபற்றி யோசிக்கப்பட்டு இப்போது சென்னையில் வாரம் இரு முறையாக நடக்கும் விடுதலை" பத்திரிகையை ஈரோட்டுக்கு மாற்றி ஈரோட்டிலேயே தினசரியாக நடத்துவதென்றும் அதன் நஷ்டத்திற்கு ஆக ஒரு குறிப்பிட்ட தொகையை தனிப்பட்ட முறையில் சில கனவான்கள் உதவி வருவதென்றும் மேல் கொண்டு வேண்டியிருக்கும் தொகையை மற்றும் பல கனவான்களிடமிருந்து தோழர் ஈ.வெ. ராமசாமி வசூலித்துக்கொள்ள. வேண்டியது என்றும் தீர்மானம் செய்யப்பட்டது.
அதன்படி 'விடுதலை' பத்திரிகையை தினசரியாக நடத்த ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கலக்டர் அவர்களுக்கும் அனுமதி அளிக்கும்படி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கிறது அனேகமாய் இந்த தடவை தினசரி விஷயம் வெற்றி பெறலாம் என்றே கருதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.05.1937
குடி அரசு- 1937 (1) 356
முஸ்லீம்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் முஸ்லீம்கள் சுமார் 9 கோடி ஜனசங்கை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் மத விஷயங்களிலும் சமூக வாழ்க்கை விஷயங்களிலும் இந்துக்களுடன் மாறுபட்டவர்கள். இந்துக்களும் முஸ்லீம்களை சமூக மதவிஷயங்களில் மாறுபட்டவர்களாகவே கருதி வந்திருக்கிறார்கள். இந்துக்கள் மெஜாரிட்டியாகவும் முஸ்லீம்கள் மைனாரிட்டியாகவும் இருந்து வருவதாலும் இந்து மத சம்பிரதாயங்கள் மத ஆதாரங்கள் ஆகியவற்றில் முஸ்லீம் சமூகத்தையும் மதத்தையும் இழித்துக் கூறப்பட்டிருப்பதாலும் இந்துக்களால் முஸ்லீம்கள் தாழ்மையாய்க் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள்.
இந்தியாவில் அரசியல் உத்யோக கிளர்ச்சி ஏற்பட்டு உத்தியோகங்களை: இந்திய மக்களுக்கு அரசாங்கத்தார் அளிக்க ஏற்பட்ட காலமுதல் ஒவ்வொரு மதமும் ஜாதியும் வகுப்பும் உத்தியோகங்களுக்கு போட்டி போட முன்வந்ததின். மூலம் தாழ்மையாயும் இழிவாயும் கருதப்பட்டு வந்த பெரும்பான்மையான. மதங்களும் ஜாதிகளும் ஒருவாறு கண்விழிக்கத் தொடங்கி தங்களது இழிவுகளையும் பின்நிலையையும் நிவர்த்தித்துக் கொள்ள முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றிபெற்றும் வருகின்றன. இந்த முறையினால்தான், இந்திய முஸ்லீம் சமூகமானது குறிப்பாக தென் இந்திய முஸ்லீம் சமூகமானது இந்த 10, 20 வருஷத்துக்குள் 100-க்கு 100 வீதம் என்று சொல்லும்படியான அளவுக்கு முன்னேற்றமடைந்திருக்கிறது. இதையாரும் மறுக்க முடியாது என்றே சொல்லுவோம்
இந்திய தேசிய காங்கிரசு என்பது 1885ல் ஏற்பட்டதானாலும் 1890-ஆம் வருஷத்திலேயே காங்கிரசின் பயனாய் முஸ்லீம் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய கெடுதியை தீர்க்க தரிசனம்போல் அறிந்து அக்காலத்திய முஸ்லீம் தலைவர்கள் அரசாங்கத்தோடு போராடி தங்கள் உரிமைக்கு பங்கம் வராதபடி காப்பாற்ற மூயற்சித்திருக்கிறார்கள். 1890 முதலே முஸ்லீம்களுக்கும் இந்திய தேசிய காங்கிரசுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்கின்ற கூச்சல் இருந்து கொண்டே வந்திருக்கின்றது. ஏதோ ஒன்று இரண்டு சுயநல முஸ்லீம்களை காங்கிரஸ் பல சூழ்ச்சிகளால் தம் கைவசப்படுத்தி “முஸ்லீம்கள் காங்கிரசில் இருக்கிறார்கள்” என்று வேஷம் காட்டி வந்திருந்த போதிலும் 1900-வருஷ முதலே காங்கிரசுக்கு 337 ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
விரோதமாய் முஸ்லீம்கள் முஸ்லீம் சமூக சங்கங்களை ஏற்படுத்திக்கொண்டு அவற்றின் மூலமே தங்கள் சமூக அரசியல் உரிமைகளைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். முஸ்லீம்களின் சங்கங்களின் மூலமாக வேண்டிக் கொள்ளப்பட்ட வேண்டுகோள்களின் மீதிலேதான் சர்க்கார் இதுவரை முஸ்லீம்களுக்கு என்று அளித்து வந்த உரிமைகள் எல்லாம் அளிக்கப் பட்டிருக்கின்றனவே ஒழிய ஒரு காரியமும் காங்கிரசால் முஸ்லீம்களுக்கு ஏற்படவே இல்லை.
அன்றியும் காங்கிரசானது முஸ்லீம்களுக்கு என்று தானாக இதுவரை
ஒரு நலனையும் அளிக்கவில்லை என்பதோடு ஒரு நலனைப்பற்றியும் கவனிக்கவில்லை என்பதுமல்லாமல் கூடுமானவரை அவ்வப்போது
முஸ்லீம் கோரிக்கைகளுக்கும் நலன்களுக்கும் அரசாங்கத்தாரால்
அளிக்கப்படும் செளகரியங்களுக்கெல்லாம் கூட மூட்டுக்கட்டையாய் இருந்தே வந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
அப்படி யாராவது மறுப்பதாய் இருந்தாலும் அனேக ஆதாரங்களை அதற்கு மாறாக எடுத்துக்காட்ட நம்மால் கூடும். அப்படி இருக்க இப்போது காங்கிரஸ்காரர்கள் சில முஸ்லீம்களை தம் வசப்படுத்திக்கொண்டு அவர்கள் மூலம் முஸ்லீம் சமூகத்தையே காங்கிரசில் இழுக்க முயற்சி செய்கிறார்கள். அது மாத்திரமல்லாமல் முஸ்லீம் ஸ்தாபனங்களையும் ஒழிக்கப் பார்க்கிறார்கள். அன்றியும் முஸ்லீம்களின் தலைவர்களையும் குறைகூறி பழிசுமத்தி அவர்கள் மீது முஸ்லீம் பாமர மக்களுக்கு வெறுப்பு ஏற்பட சூழ்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக தோழர் மகம்மதலி ஜின்னா அவர்களையும் மெளலானா ஷவுக்கதலி அவர்களையுமே “நீங்கள் எப்படி முஸ்லீம்களின் தலைவர்களாவீர்கள்' என்று கேட்கிறார்கள். ஒத்துழையாமை காலத்தில் இவர்களையும் இன்னும் பல சாதாரண நபர்களையும் முஸ்லீம்களின் தலைவர்கள் என்று காங்கிரஸ்காரர்களே விளம்பரம் செய்து கொண்டு அவர்களது நிழலிலேயே மறைந்துகொண்டு அவர்களைக் காட்டி மக்களை ஏமாற்றி மரியாதை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர்களும் சர்வாதிகாரிகளும் “இப்போது உங்களுக்கு யார் முஸ்லீம் சார்பாய்ப் பேச அதிகாரம் கொடுத்தது" என்று கேட்க தைரியம் பெற்றுவிட்டார்கள்.
தோழர்மகம்மதலிஜின்னா அவர்கள் இதுவரை அரசாங்கத்தினிடமிருந்து ஒரு உதவியும் அடைந்தவரல்ல. எதிர் பார்த்தவருமல்ல. எந்தச் சமயத்திலும் அரசாங்கத்துக்கு அடிமையாய் இருந்தவருமல்ல. ஒரு விஷயத்திலாவது முஸ்லீம்களின் நலனை அலக்ஷியம் செய்தவருமல்ல. அப்படிப்பட்ட ஒரு வீரரை இன்று காங்கிரஸ் பத்திரிக்கைகளும் அவர்களது கூலிப்பத்திரிகைகளும் சர்க்கார் தாசர் என்று குறை கூறி உள் எண்ணம் கற்பிக்க முயற்சிக்கின்றன. இதற்கு ஏற்றாற்போல் இரண்டொரு கூலி ஆசாமிகளும் முஸ்லீம் பத்திரிக்கைகளும் தங்கள் சுயநலங்களை
குடி அரசு- 1937 (1) 358
உத்தேசித்து கூடவே கோவிந்தாப் போடுகின்றன. இதை முஸ்லீம் பொதுஜனங்கள் உணர்ந்து அப்படிப்பட்ட கூலி முஸ்லீம்களுக்கு தக்க
புத்தி கற்பிப்பார்களாக
முஸ்லீம் தலைவர்களுக்கும் காங்கிரசுக்கும் இன்று உள்ள பிணக்குகள் அரசியலில் விகிதாச்சார பிரதிநிதித்துவமும் தங்கள் மத மேம்பாடுகள் மற்ற மதங்களுக்கு அடிமைப்படக் கூடாது - தலைசாயக்
கூடாது என்பதுமேயாகும்.
இந்த இரண்டு காரியத்துக்கு காங்கிரஸ் இணங்குகிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. முஸ்லிற்கள் அரசியலில் பிரதிநிதித்துவம் விகிதாச்சாரம் கேட்பதை காங்கிரஸ் வகுப்புவாதம் என்கின்றது. காங்கிரஸ் தலைவரான தோழர் ஜவஹர்லாலோ “வகுப்பு உரிமை விகிதாச்சாரம் கொடுப்பதைவிட சுயராஜ்யம் இல்லாமலிருப்பதே மேல்" என்கிறார். காங்கிரஸ் திட்டத்திலும் வகுப்புத் தீர்ப்பை ஒழிப்பது என்பது முதல் இடம் பெற்றிருக்கிறது ஆகவே காங்கிரசானது அத்திட்டத்தை அடியோடு எடுத்துவிட்டால் ஒழிய இன்றைய நிலையில் எந்த உண்மை முஸ்லீமுக்காவது காங்கிரசில் வேலை இருக்குமா என்று கேட்கிறோம்
மத விஷயத்தில் இந்து மகாசபை என்றும் வர்ணாச்சிரமசபை என்றும் இந்துமத ஆதாரங்களைக் காப்பாற்றி அவற்றின் கட்டளைகளை அமுலுக்கு கொண்டு வருகிற சபை என்றும் இந்தி பாஷையை இந்தியாவின் பொது பாஷையாக ஆக்கும் சபை என்றும் முஸ்லீம்களை இந்து மதத்திற்கு இழுக்கும் சபை என்றும் இந்துக்கள் பல சபைகளை வைத்துக்கொண்டு அவைகளின் பிரசார செலவிற்கு ஆக 10 லக்ஷக்கணக்கான ரூபாய்களை சேகரித்து வைத்துக்கொண்டு அவைகளின் மூலம் தங்கள் மதத்திற்கு ஆதிக்கம் தேடிக்கொள்ளக் கருதிக்கொண்டிருக்கிறவரை முஸ்லீம்கள் மதசம்பந்தமான கவலை எடுத்துக்கொள்ளுவதிலும் ஆக்ஷ்பமிருப்பதாக காங்கிரஸ்காரர்கள் சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம்
எல்லைப்புற காந்தி என்று காங்கிரஸ்காரர்களால் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் தோழர் கான் அப்துல் கபூர் கான் சாயபு அவர்கள் இன்று காங்கிரசுக்கு வக்காலத்து பேச வந்துவிட்டார். அவ்வக்காலத்தில் காங்கிரஸ்தான் “முஸ்லீம்களுக்கு நன்மை செய்திருக்கிறதே ஒழிய அரசாங்கம் இதுவரை யாதொரு நன்மையும் செய்யவில்லை! என்று சொல்லுகிற அளவுக்கு துணிந்து விட்டார். அரசாங்கம் முஸ்லீம்களுக்கு நன்மை செய்ததா இல்லையா என்பதைப் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. முஸ்லீம்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாகவோ அடிமையாகவோ இருக்க வேண்டும் என்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் காங்கிரஸ் இதுவரை முஸ்லீம் சமூகத்துக்கு கல்வி, அரசியல், பொருளாதாரம், சமுதாய இயல் ஆகிய துறைகளில் ஏதாவது ஒரு கிறு கடுகளவாவது நன்மையாகிலும் உதவியாகிலும் செய்திருக்கிறதா என்று கேட்கின்றோம்
359 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அல்லது எதிரிடையாகவாவது இல்லாமல் இருந்து வந்திருக்கிறதா என்று கேட்கின்றோம். வடநாட்டைப் பற்றிய முமு விபரமும் நமக்கு தெரியாது என்று சொல்லப்படுமானாலும் தென்னாட்டைப்பற்றி 50 வருஷ அனுபவம் நமக்கு உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது. காங்கிரசின் சிபார்சால் அநேக பார்ப்பனர்கள் ஹைகோர்ட் ஜட்ஜி நிர்வாகசபை மெம்பர் முதலிய பெரும் பதவிகள் பெற்றார்கள். அந்தப்படி இதுவரை ஒரு முஸ்லீமாவது காங்கிரசால் சிபார்சு செய்யப்பட்டோ காங்கிரஸ் செல்வாக்கினாலோ ஏதாவது பதவி, உத்தியோகம், பட்டம் முதலியவைகள். பெற்றதாகச் சொல்லமுடியுமா என்று கேட்பதோடு அவர்களது கல்விக்கு
ஆகவும் மதத்துக்கு ஆகவும் சமூக சமத்துவத்துக்கு ஆகவும் ஏதாவது ஒரு சிறு தீர்மானமாவது நிறைவேற்றப்பட்டதுண்டா வென்று கேட்கின்றோம். சென்னை கார்ப்பரேஷனில் சென்ற மாதம் நடந்த விவாதத்தின்போது முஸ்லீம்கள் பெண் கல்வி விஷயத்திலும் ஆண்: கல்வி விஷயத்திலும் காங்கிரஸ் மெம்பர்கள் நடந்து கொண்ட யோக்கியதையை நினைத்துப் பார்க்கவேண்டுகிறோம்.
காங்கிரசுடன் எல்லைப்புற முஸ்லீம்கள் சேர்ந்திருக்காவிடில் மாகாண சுதந்திரம் கூட கிடைத்திருக்காது”” என்று எல்லைப்புற காந்தியார் முஸ்லீம்களுக்கு கூறுகிறார். இதன் கூற்றை முஸ்லீம்கள் தான். உணர வேண்டும்.
எல்லைப்புறத்தை ஒரு மாகாணமாய் பிரித்ததையே இன்னமும் காங்கிரஸ்காரர்கள் ஆக்ஷேபித்து வருவதை தோழர் கான்கபூர்கான் அறியாரா என்று கேட்கின்றோம். எங்கு பார்த்தாலும் முஸ்லீம்களுக்கு
3, 4 மாகாணத்தில் மெஜாரிட்டி கிடைத்துவிட்டதே என்கின்ற பொறாமைப் பேச்சே காங்கிரஸ் கூட்டங்களில் பேசப்படுவதை முஸ்லீம் தோழர்கள் அறியமாட்டார்களா என்று கேட்கின்றோம்
மேலும் தோழர் கான் கபூர் கான் அவர்கள் “இந்தியர் நன்மையும் பிரிட்டிஷார் நன்மையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாதலால் முஸ்லீம்கள் காங்கிரசோடுதான் சேரவேண்டு'' மென்கிறார்.
அதுபற்றி பின்னால் யோசிக்கலாம். ஆனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள சம்மந்தமானது இன்றும் இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் இந்து முஸ்லீம் கலகங்களும் அடிதடிகளும் அடிக்கடி நடந்து பல உயிர்கள் இருதரப்பிலும் மாய்ந்துகொண்டு வருகின்றதைப்பற்றி கான் கபூர்கான் சாயபு அவர்கள் கவனித்தாரா என்று கேட்கின்றோம்
இந்த கலகத்துக்கு ஆஸ்பதமென்ன என்பதையாவது இந்துக்களின். லட்சியமும் முஸ்லீம்களின் க்ஷம லாபங்களும் ஒன்றாய் இருக்குமானால்
மதக் கலகமும் சமூகக் கலகமும் அடிக்கடி ஏன் ஏற்பட வேண்டும் என்பதையாவது கான் கபூர்கான் சாயபு கவனித்தாரா என்று கேட்கின்றோம்
குடி அரசு- 1937 (1) 360
இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்க மென்பதாகவோ அல்லது வேறு அரசாங்கம் என்பதாகவோ அதாவது இந்து முஸ்லீம் அல்லாத ஒரு அரசாங்கம் என்பதாக ஒரு அரசாங்க ஆட்சி இல்லா விட்டால் முஸ்லீம் சமூகம் என்ன கதிக்காளாவது என்பதை கான் கபூர்கான் சாயபு யோசித்தாரா என்றும் கேட்கின்றோம் அல்லது இந்த மாதிரி கலகங்களுக்கு அந்நிய அரசாங்கம் தான் காரணம் என்று ஏதாவது ஆதாரத்தோடு கூற முடியுமா என்றும் கேட்கின்றோம் காங்கிரசையும் காங்கிரசு தலைவர்களையும் புகழ்ந்து பேசி பெரிய பட்டமும் மரியாதையும் பெறுவது சுலபம்; ஆனால் சமூகத்தை காட்டிக் கொடுக்காமல் இருப்பது லேசான காரியமல்ல.
“காங்கிரசில் சமதர்மிகள் என்று ஒரு கூட்டம் இருப்பது போல் காங்கிரசில் முஸ்லீம்லீக் முஸ்லீம்கள் என்று ஒரு கூட்டம் தனியாக இருந்து கொண்டு முஸ்லீம் நன்மைகளை கவனித்து வரலாம்” என்கிறார் மற்றொரு முஸ்லீம் காங்கிரஸ்வாதியான தோழர் ஆசிப் அலி என்பவர். இதில் சிறிதாவது பொருள் இருப்பதாக நம்மால் கருதமுடியவில்லை காங்கிரசில் உள்ள சமதர்மிகளை அவர்கள் உண்மையான சமதர்மிகள் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் காங்கிரஸ்காரர்களால் “வகுப்புவாதிகள்” என்று சொல்லப்படுவதில்லை. அவர்கள் தீவிரவாதிகள் என்கின்ற பெயரால் காங்கிரசில் இருந்து கொண்டு காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு தங்களையும் சர்க்கார் தொல்லையில் இருந்து காப்பாற்றிக் கொண்டுவருபவர்கள். அவர்களுக்கு செயல் இல்லை; திட்டமும் இல்லை. காங்கிரசை சார்ந்திருப்பதையே கவுரவமாய் நினைப்பவர்கள். ஆனால் முஸ்லீம்கள் நிலை அப்படியா என்று கேட்கின்றோம். முஸ்லீம் சமூகம் காங்கிரசை விட்டு வெளியில் இருந்து வந்ததாலேயே இன்றைய மேல் நிலைமையை அடைந்திருக்கிறது இனியும் அச்சமூகம் கல்வியிலும் அரசியலிலும் முன்னேற வேண்டிய பாகம் எவ்வளவோ பாக்கி இருக்கிறது. கூடிய சீக்கிரத்தில் காங்கிரசானது “ஜாதிமத வகுப்பு சம்பந்தமான ஸ்தாபனங்களில் அங்கத்தினர்களாய் இருப்பவர்கள் காங்கிரசில் அங்கத்தினராயிருக்கக் கூடாது என்று உத்திரவு போடப்போகிறது. இப்போதே வகுப்புவாதம் பேசக்கூடாது என்று அடிக்கடி ஆக்கினை பிறப்புவிக்கப்படுகிறது. தங்கள் மத சமூக விஷயத்தைப்பற்றி கவலையோ உணர்ச்சியோ உண்மையில் இருப்பவர்களுக்கு (பார்ப்பனர் களைத் தவிர மற்றவர்களுக்கு) காங்கிரசில் இடமே இல்லை. சகல துறைகளிலும் மேம்பட்டவர்களே காங்கிரசில் இருக்க அருகதையுடையவர்கள் ஆவார்கள். குறை இருக்கிறவர்கள் தனித்து காங்கிரசுக்கு வெளியில் இருந்தே முற்போக்கடைய வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் எவன் ஜாதி மதத்தை பார்ப்பனர்களுக்கு காட்டிக்கொடுக்கிறானோ அவனே பெரியவனாகவும் தேசபக்தனாகவும் பார்ப்பனர்களால் - காங்கிரசால் 3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஒப்புக்கொள்ளப்படுகிறான். அப்படியிருக்க கல்வியிலும் அரசியல்
பங்கிலும், மிகவும் பின் அணியில் இருக்கிற சமூகம் காங்கிரசில் சேருவது என்பது மிகவும் முட்டாள்தனமானதும் தற்கொலைக் கொப்பானதுமான காரியம் என்றே சொல்லுவோம்
நமது தென்னாட்டு காங்கிரஸ் கிளர்ச்சியானது உண்மையிலேயே பச்சையாய் பார்ப்பனர்களுக்கும் சர்க்கார் உத்தியோகத்துக்கும் ஏற்பட்ட சண்டிப் போரேயாகும். இதில் கடுகளவு அறிவும் சுயமரியாதையும் உள்ள. பார்ப்பனரல்லாதார் எவரும் (காங்கிரசில்) இருக்க முடியாதென்றே சொல்லுவோம்.
தோழர் மாஜி மேயர் ஹமீத்கான் சாயபு போன்றவர்கள் அதுவும் 15, 17 வருஷம் காங்கிரசில் இருந்து உள் துறையிலும் வெளித்துறையிலும் உள்ள காங்கிரஸ்காரர்கள் மனப்பான்மையை நன்றாய் உணர்ந்தவர்கள். மற்றும் தோழர் ஜின்னா சாஹேப் போன்ற அறிஞர்கள் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து விட்டு காங்கிரசைப்பற்றி முஸ்லீம்கள் பேசுவதென்றால் அது புத்திசாலித்தனமான காரியமாகுமா என்று கேட்கின்றோம்.
தென்னாட்டில் முஸ்லீம் சமூகத்தில் பெரும் செல்வவான்களின். தோழர்கள் நவாப் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்களும், M. ஜமால் முகம்மது சாயபு அவர்களும் முதன்மையானவர்கள் ஆவார்கள். அவர்களில் நவாப் ஹக்கீம் சாஹிப் அவர்கள் காங்கிரசிலிருந்து விலகி விட்டார்கள். தோழர் ஜமால் மகமது சாஹிப் அவர்கள் சமீப எலக்ஷனில் ஒரு பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டு விட்டார். தோழர் ஜமால் மைதீன் சாயபு அவர்கள் வகுப்புவாதம் கூடாது என்றும் தனித்தொகுதி கூடாது என்றும் கூறி வருவதோடு அந்தக் காரணத்தாலேயே முஸ்லீம் தனித் தொகுதியில் எந்த தேர்தலுக்கும்
நிற்காமல் பொது தொகுதியில் நின்று நின்று தோல்வி அடைந்து வருபவர். அப்படி இருக்க இனியும் சுயமரியாதை உள்ள முஸ்லீம்களுக்கு
காங்கிரசில் இருக்கவோ சேரவோ இடமுண்டா என்று கேட்கின்றோம்
இப்போதும் மந்திரியான கனம் கலிபுல்லா சாயபு அவர்களை வைவதற்கு காங்கிரஸ்காரர்கள் சில முஸ்லீம்கள் என்பவர்களை கூலிக்குப் பிடிக்க அலைகிறார்கள். கனம் கலிபுல்லா சாயபு அவர்கள் தான் ஏன். காங்கிரசில் சேரவில்லை என்பதைப் பற்றியும் முஸ்லீம்கள் காங்கிரசில் ஏன்: சேரக்கூடாது என்பது பற்றியும் விளக்கமாக பல இடங்களில் பேசி இருக்கிறார். அப்பேச்சுக்கள் முஸ்லீம்களால் மிகவும் கவனிக்கப்படத்தக்கவையாகும். அவற்றுள் இந்தி பாஷை பிரசாரம் என்பது முஸ்லீம்களுக்கு எதிரான பிரசாரமாகும் என்பது மிகவும் கவனமாய் கவனிக்கவேண்டியதாகும்.
ஆகையால் முஸ்லீம்கள் காங்கிரஸ் கங்காணிகளுக்கு ஏமாந்து போகாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 23.05.1937
குடி அரசு- 1937 (1) 362.
மன்னர் முடிசூட்டு விழா
காங்கிரஸ்காரர்கள் இந்திய மக்கள் மன்னர் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வது தேனபிமானத்துக்கு விரோதமானதென்று கூறி இந்திய மக்கள் எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி
யிருந்தும் தமிழ் நாட்டில் ஏறக்குறைய ஒவ்வொரு நகரங்களிலும் முடிசூட்டு விழாக்கள் விமரிசையாகவே நடந்திருப்பதாகச் சேதிகள் கிடைத்திருக்கின்றன. பல இடங்களில் காங்கிரஸ் மெம்பர்களும் கலந்து நடத்தியிருப்பதாகவும்
சேதி வந்திருக்கிறது காங்கிரஸ்காரர்கள் மன்னரைப்பற்றி யாதொரு குறையும் கூறுவதில்லை. மன்னருக்கும் மன்னர் அரசாங்கத்திற்கும் அரசியல் சட்ட திட்டத்திற்கும் கட்டுப்பட்டு நடப்பதாக பிரமாணம் செய்வதிலும் தவறுவதில்லை. பலர் முடிசூட்டில் கலந்து கொண்டதிலும் குறைவில்லை. ஆனால் தங்களைத் தவிர மற்றவர்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப் பவர்களாம் தேச பக்தர்கள் அல்லாதவர்களாம். என்னே பித்தலாட்டம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.05.1937
33 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பார்ப்பண மகாநாடுகள்
சமீப சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்கள் தங்கள் முயற்சியை கடசி தடவையாகக் கருதி எல்லா பார்ப்பனர்களும் ஜாதி காரணமாக ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாகப் பாடுபட்டு அவர்களது ஆதிக்கத்துக்கு மாறாக உள்ள எல்லாவித முயற்சிகளையும் எல்லா கக்ஷிகளையும் அடியோடு ஒழிக்க தங்களாலானவரை பார்த்தார்கள். ஆனால் (மாயமானைக் கொன்ற கதைபோல்) மாயவெற்றியைத்தான் அவர்களால் அடைய முடிந்ததே தவிர காரியத்தில் - அவர்களது உள் எண்ணத்தில் அவர்கள்
எதிர் பார்த்ததில் ஒரு சிறிதும் இதுவரையில் வெற்றி பெற முடியாமலே போய் விட்டது
1920, 21-ம் வருஷங்களில் இதே பார்ப்பனர்கள் காந்தியாரின் நிழலில் நின்று கொண்டு “இந்த அரசாங்கம் சைத்தான் அரசாங்கம், அரசாங்கப்படிப்பு உத்தியோகம் பிரதிநிதித்துவ சபை நீதி ஸ்தலங்கள் ஆகியவை பிரதிநிதித்துவ மற்றவை, பொய் அரசாங்கம் நடைபெறுகிறது. ஆதலால் இதை அழிக்க வேண்டும். ஆதலால் இவற்றை பஹிஷ்கரிக்க வேண்டும்” என்றெல்லாம் கத்திக் கொண்டு திரிந்து காலத்தைக் கடத்தி மக்களை ஏமாற்றியதில் யாதொரு பயனும் அடையாமல் படுதோல்வி அடைந்தது போலவே இப்போதும் தாங்கள் கூப்பாட்டில் பெயருக்கு மாத்திரம் வெற்றி பெற்றதாக ஏற்பட்டும் முடிவில் - பயன் பெறுவதில் அடியோடு ஏமாற்றமடைந்து விட்டதால் இப்போதும் மூன் போலவே “பொய் மந்திரி சபை - பொறுப்பற்ற மந்திரி சபை - பிரதிநிதித்துவமற்ற மந்திரிசபை - கழுதை சபை - நாய் சபை - துடைப்பக் கட்டை சபை” என்று பழங்காலக் கீழ்த்தர பெண்களைப்போல் குலைத்து வாய்வலித்து ஓய வைப்பார் கூட இல்லாமல் தாங்களே ஓய்ந்து தீரவேண்டிய நிலைமைக்கு வந்து விட்டார்கள். அதன் பயனாய் இப்போது பார்ப்பனர்கள் அதாவது தேர்தலில் தங்கள் பெண்டு பிள்ளைகளையெல்லாம் பிரசாரத்துக்கு அனுப்பி பாடுபட்ட பார்ப்பனர்கள் இப்போது வேறு ஒரு தந்திர மெடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் இன்று எவ்வளவு தான் மெஜாரிட்டியாக காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தும் அவர்களுக்கு
சர்க்கார் கோட்டை வாசலுக்குள் நுழைய யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. எவ்வளவோ பெரிய பெரிய வாக்குறுதிகள் கொடுத்து ஓட்டர்களை ஏமாற்றி விட்டதால் ஓட்டர்கள் முகத்தில் விழிக்கவும்
குடி அரசு- 1937 (1) 364
யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. கோட்டைக்கு வெளியில் நின்று வாய் வலிக்க எவ்வளவு தான் குலைத்தாலும் அரசாங்க நிர்வாகம் முறைப்படி நடப்பதோடு நாள் ஒன்றுக்கு சராசரி 250 சர்க்கார் உத்திரவுகள் (ஜீ.ஹக்கள்) மீசையை முறுக்கிக்கொண்டு தொண்டையைக் கனைத்துக் கொண்டு வீரத்துடன் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு கூடை செங்கல்லும் பிடாரி ஆய்விட்டது” என்பது போல சகல பார்ப்பன. வக்கீல்களும் காங்கிரஸ்வாதியாகி “இந்த அரசாங்கம் அநியாய அரசாங்கம்” என்றும் “இது ஏப்ரல் முதல் தேதியில் ஒரே அடியாய் புதைக்கப்பட்டு போய்விடும் என்றும், கூப்பாடு போட்ட வக்கீல் கூட்டங்கள் அடியோடு குளித்து முழுகி பூசைசெய்து சாப்பிட்டு விட்டு காலை 11 மணிக்கு “அந்நிய அரசாங்க! கோர்ட்டுகளுக்குப் போய் மாலை 5 மணி வரை “வெள்ளையர்” பாதத்திலும் அரசாங்க சிப்பந்திகள் பாதத்திலும் யுவர் ஆனர் - தங்களுடைய கவுரவமுள்ள சமூகத்துக்கு - மை லார்ட் ஷிப் - எனது பிரபுவே என்கின்றதான மந்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்த வண்ணமாக இருக்கிறார்கள்.
காங்கிரசுக்கு ஓட்டுப்போட ரகசியமாயும் வெளிப்படையாயும் வேலை செய்த பார்ப்பன அதிகாரிகள், சர்க்கார் சிப்பந்திகள் எல்லோருமே அந்த சர்க்காருக்கு “மிகவும் கீழ்ப்படிதலுள்ள தங்கள் சேவகன்” என்று சொல்லிக்கொண்டு சேவகம் புரிந்த வண்ணமாகவே இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இனிமேல் என்ன செய்வது என்பது பார்ப்பனர்களுக்கு புரியவில்லை. பழி வாங்குகின்ற முறையில் ஆங்காங்கு முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களும் பார்ப்பனர்களை பல வழிகளிலும் பஹிஷ்கரிக்க எண்ணுவதோடு பார்ப்பனர் களின் போர்வையான காங்கிரசுக்கும் சாயம்வெளுத்துவர ஆரம்பித்துவிட்டது.
ஆதலால் மேலே குறிப்பிட்டது போல் இதற்கு பார்ப்பனர்கள் ஏதாவது ஒரு யுக்தி செய்து தப்பித்துக் கொள்ளவேண்டிய நிலைமை அவசியமாக ஏற்பட்டுவிட்டது. அதுதான் இன்று மூலைமூலைக்கு பார்ப்பனர்களின். ஜாதி மகாநாடுகள் கூட்டி “எங்களுக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை” என்று சொல்லி ஒருபுறத்திலும் அரசாங்கத்துக்கு ராஜவிஸ்வாசம் ஒரு புறத்திலும் காட்டி வேஷம் போட வேண்டியதாகிவிட்டது.
அந்த அவசியத்தாலேயே ஏப்ரல், மே ஆகிய இந்த இரண்டு மாதத்துக்குள் தென்னாட்டில் சுமார் 10 மகாநாடுகள் கூடி காங்கிரஸ் தலைவர் பார்ப்பனர்கள் உள்பட எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து பேச வேண்டியதாகி விட்டது. அவற்றுள் இம்மாதம் 24-ந் தேதி கும்பகோணத்தில் கூட்டப்பட்ட பார்ப்பனர் மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் மதுரை நடேசய்யர் அவர்கள் தலைமை உரையில் அனேக உண்மைகளை தன்னை அறியாமலே கக்கி இருக்கிறார். அவற்றைக் கூர்ந்து கவனித்தால் நாம் காங்கிரசைப்பற்றி கூறிவந்த விஷயங்கள் உண்மையா,
365 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பொய்யா என்பது விளங்கும். (27-5-37ந் தேதி “சுதேசமித்திரன்” 10ம் பக்கம் 1-வது கலத்தில் இருப்பதை அப்படியே குறிப்பிடுகிறோம்.)
அதாவது,
“சுமார் 52 வருஷங்களுக்கு முன்னதாக சனாதனிகள் காங்கிரஸ் சபையை உண்டு பண்ணி உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து அதை வளர்த்து விருத்தி செய்து வந்தார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே காங்கிரசானது பார்ப்பனர்களால் உண்டாக்கப்பட்டதென்றும் பார்ப்பனர்களால் நடத்திவரப்படுவது என்றும் பார்ப்பன ஆதிக்கம் உள்ளது என்றும் நாம் கூறி வந்தது இதிலிருந்து உண்மையாகிவிட வில்லையா என்று கேட்கின்றோம்.
மற்றும் அதற்கு கீழாகவே “இப்பொழுது மூலைக்கு மூலை கணக்கில்லாமல் பிராமண சபைகளும் பிராமணக் கூட்டங்களும் ஏற்பட்டு விருத்தி ஆகிக்கொண்டிருக்கின்றன” என்று பேசியிருக்கிறார்.
(இதுவும் "சுதேசமித்திரனில் இருக்கிறது.) ஆகவே பார்ப்பனரல்லாதாரைப் போலவே பார்ப்பனர்களும் தங்கள் வகுப்பு நலனுக்காக சபைகளும் மகாநாடுகளும் ஏற்படுத்தி
தங்கள் முன்னேற்றத்திற்கு வேலை செய்து வருகிறார்கள் என்பது இதிலிருந்தாவது விளங்குகிறதா, இல்லையா? என்று கேட்கின்றோம்
மற்றும் அதற்குக் கீழாகவே “முக்கியமாக மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி முதலான ஜில்லாக்களில் பிரதி கிராமங்களிலும் இனி ஆயிரக்கணக்கான சபைகள் ஏற்படுமென்பது நிச்சயம்.”
என்று பேசியிருக்கிறார். (இதுவும் 27ந் தேதி “சுதோமித்திர'னிலேயே
இருக்கிறது) இதன் அருத்தம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். பார்ப்பன சமூகம் பூராவும் ஒன்று சேர்ந்து கிராமங்கள் பூராவும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதுதானே? இதுவரை இரகசியமாக வேலை செய்து வந்த பார்ப்பனர்கள் இப்போது வெளிப்படையாகவே தைரியமாக வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள் என்பது புலனாக வில்லையா என்று கேட்கின்றோம்
இது இப்படியிருக்க, பார்ப்பனரல்லாதார் சமூகம் அதுவும் கல்வி, சமுதாய உரிமை முதலியவைகளில் உண்மையிலேயே கீழ்ப்படியிலும் பிற்போக்கான நிலைமையிலும் வைக்கப்பட்டிருக்கும் சமூகம் தங்கள் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் பாடுபட்டால் அது எப்படி வகுப்பு வாதம் ஆகிவிடும் என்றும், அது எப்படி தேசீயம் என்பதற்கு விரோதம் ஆகிவிடும் என்றும் பார்ப்பன கூலிகளைக் கேட்கின்றோம்.
மற்றும் தலைவர் தோழர் நடேசய்யர் பேசியிருப்பதாவது,
குடி அரசு- 1937 (1) 366
“பிராமணர்கள், பிராமணரல்லாதார்கள், பஞ்சமர்கள் (ஆகிய எல்லோரும்) பேதம் இல்லாமல் எல்லோரும் பஞ்சமர்களாக ஆகிவிடவேண்டும் என்றும் அல்லது எல்லோரும் பிராமணர்கள். ஆக ஆகிவிட வேண்டும் என்றும் ஒருவர் சொல்லுகிறார். இதை
நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா?”” என்று பேசி சபையைப் பார்த்து கேள்விகேட்கிறார். (இதுவும் “மித்திரனில்'” இருக்கிறது) ஆகவே இதிலிருந்து ஜாதி பேதம் சிறிது கூட மாற்றமடைவதற்கு பார்ப்பனர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று நாம் கூறி வந்தது உண்மையாகவில்லையா என்று கேட்கின்றோம்
மற்றும் மத சம்மந்தமாக - சமூக சம்மந்தமாக - தீண்டாமை சம்மந்தமாக எவ்வித சட்டமும் செய்யக்கூடாது என்று பேசியிருக்கிறார். இவை ஒரு புறமிருக்க அம்மகாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிலவற்றையும் இங்கு குறிப்பிடுகின்றோம்
“பிராமண சபைகளைஒவ்வொரு கரொமங்களிலும் நகரங்களிலும் ஏற்படுத்த வேண்டும்.”
“பிராமண தர்மங்களை பரப்ப வேண்டும்.” “பிராமண தர்மம் ஆரிய தர்மம் முதலாய பத்திரிக்கைகளை எல்லோரும் வாங்கிப் படிக்க வேண்டும்.
“கனாதன தர்மத்தை நிலை நிறுத்தவும், காக்கவும் கிராமங்கள் தோறும் புராண காலக்ஷேபம் நடத்தி எல்லோரும் புராணங்களைப் படிக்கும்படி செய்ய வேண்டும்."
“இருவாங்கூர் ராஜாவின் கோவில் பிரவேச உத்திரவை உடனே ரத்து செய்ய வேண்டும்."
“சாரதா சட்டத்தை உடனே ரத்துச் செய்யவேண்டும்.”
“வர்ணாச்ரெம தர்மத்துக்கும் பழய சனாதன தர்மத்துக்கும் விரோதமாக நடத்தப்படும் பத்திரிக்கைகள், புத்தகங்கள், சினிமாக்கள் ஆகயவைகளை ப௫ஷ்கரித்து அவைகளை ஒழிக்க வேண்டும்.”
“கட்சியாக வகுப்புவாரி தத்துவப்படி உத்தியோகங்கள் கொடுக்கும் முறைகொண்ட கவர்ன்மெண்டு உத்திரவுகள் உடனே ரத்து செய்யப்பட வேண்டும்.
என்பது ஆக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. (இவைகளும் 27-ந் தேதி “மித்திரன்” பத்திரிக்கையில் இருக்கின்றன) ஆகவே பார்ப்பனர்களில் ஒரு கூட்டம் நம்மோடு கூடிக்கொண்டு சமூக சீர்திருத்தம் பேசி ஏமாற்றுவதும் மற்றொரு கூட்டம் - உண்மையான
3 ய... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பிரதிநிதித்துவக் கூட்டம் பார்ப்பன மகாநாடுகள் கூட்டி பழய மனுதர்மத்தை ஆதரிக்க முயற்சியும் சூழ்ச்சியும் செய்வதும் காங்கிரசுக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்று பேசி தப்பித்துக்கொள்வதுமான முறையில் வேலை செய்து வருவதை நமது பாமரமக்கள் இப்போதாவது உணருகிறார்களா? என்று கேட்கின்றோம். உண்மையிலேயே காங்கிரசு ஆதிக்கத்துக்கு வந்தால் சமுதாயத்துறையில் நமக்கு எவ்வளவு கெடுதிகள் செய்யக்கூடும் என்பதையும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையும் இதுவரை நம்மவர்கள். கஷ்டப்பட்டு செய்திருக்கும் சாரதா சட்டம் முதலிய பல சட்டங்களும் என்ன கதி ஆகும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க விரும்புகிறோம்
இதற்கு ஏற்றாற்போலவே கராச்சிக் காங்கிரசின் தீர்மானங்கள் இருக்கின்றன என்பதையும் அதாவது வகுப்பு உரிமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும்பழைய மனு முறைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள். இருக்கின்றன என்பதையும் ஞாபகப்படுத்தி இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.05.1937
குடி அரசு- 1937 (1) 368
இப்யொழுதாவது புரிகிறதா
பார்ப்பன மகாநாட்டுக்கு அனுமார் கெயடி
தென்னாட்டு பார்ப்பனர்களால் 24-5-37-ந் தேதி கும்பகோணத்தில் கூட்டப்பட்ட பார்ப்பன ஜாதி மகாநாட்டில் அனுமார் கொடி பறக்க விட்டதாக 25-ந் தேதி “இந்து” பத்திரிகையில் மகாநாட்டு நடவடிக்கை என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள் காங்கிரஸ் தேர்தல்களிலும் காங்கிரஸ் சுவரொட்டி விளம்பரங்களிலும் காங்கிரஸ் துண்டு பிரசுரங்களிலும் அனுமார் - குரங்கு உருவத்தை எதற்கு ஆக பயன்
படுத்திக் கொண்டார்கள் என்பதும் பார்ப்பனரல்லாதார் தொண்டர்களுக்கு எதற்கு ஆக அனுமார் படையென்று பெயர் கொடுத்தார்கள் என்பதும் இப்போதாவது தெரிந்ததா என்று பார்ப்பனரல்லாதாரில் மானமும் மனிதத் தன்மையும் உள்ள தோழர்களைக் கேட்கின்றோம். இந்தக் கேள்வியானது வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்விற்கும் வழி செய்து கொள்ள காங்கிரசில்
சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாய் திரிபவர்களையும் திரியவேண்டிய அவசியத்திலுள்ளவர்களையும் நாம் கேட்கவில்லை. உண்மையில் தங்களை சுயமரியாதைக்காரர்கள் என்றும் சுயமரியாதையுள்ள மக்கள் என்றும் சுதந்தர புருஷர்கள் என்றும் கருதிக் கொண்டிருப்பவர்களையே கேட்கின்றோம்
பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எப்போதாவது போர் தொடங்கப்பட்டு விடுமானால் அப்போது பார்ப்பனரல்லாதாரை ஜெயிக்க என்ன என்ன மாதிரியாக எப்படி எப்படியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ராமாயணக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள தந்திரத்தையே வழிகாட்டியாகக்கொண்டு நடந்து வருகிறார்கள் என்று
இதற்கு முன் பல தடவை குறிப்பிட்டிருக்கிறோம் அல்லவா, அந்தக் கருத்தை இந்த மகாநாட்டு அனுமக் கொடி ருஜுப்பிக்கிறது
அந்த முறையில்தான் தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களுக்கு அனுமாராகக் கருதப்பட்டு வருகிறார். அனுமார் ராமாயணக் கதையில் சிரஞ்சீவி பதவியும் ஆழ்வார் பட்டமும் பெற்றது போலவே இன்றைய போரில் காந்தியார் சர்வாதிகாரப் பதவியும் மகாத்மா பட்டமும் பெற்று
இருக்கிறார். மற்றும் அதுபோலவே முதலில் பார்ப்பனர்களுக்கு எதிரான 3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சமூகத்திலிருந்து விட்டு பிறகு தங்கள் சுயநலத்துக்கு அதை காட்டிக்கொடுத்து பார்ப்பனர்களை தஞ்சமடைபவர்களையும் விபீஷண ஆழ்வாரென்பவருக்கு ஒப்பிட்டு பேசி பயன் படுத்திக்கொண்டு வருகிறார்கள். இவைகளை அவ்வப்போது நாம் எடுத்துக்காட்டி வருவதை சிலர். நம்பாமலும் ஒப்புக்கொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் 24-5-37-ந் தேதி கும்பகோணத்தில் நடந்த பார்ப்பனர்களின் ஜாதி மகாநாட்டுக்கு அனுமக்கொடி கட்டப்பட்டது என்பதை உணர்ந்த பிறகு இப்போதாவது புரிகிறதா? என்று கேட்கின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.05.1937
குடி அரசு- 1937 (1) 370
நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?
செருப்பு ஆண்ட நாடு இது!
காங்கிரஸ் என்பது பார்ப்பணர்கன் சொத்தே பார்ப்பனரல்லாத தியாகிகள் எங்கே
தோழர்களே!
தோழர் விஸ்வநாதம் அவர்கள் பேசியதைக் கேட்டீர்கள். அது விஷயமாகவே நானும் பேசவேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள். அரசியல், சமூக இயல், சுயமரியாதை இயல் என்பவை எல்லாம் ஒன்றே ஒழிய இவை தனித்தனியாக பிரிக்கக்கூடியதல்ல. இவை ஒன்றை விட்டு. ஒன்று தனித்து நிற்க கூடியதுமல்ல. சமூகத்துக்கு ஆகத்தான் அரசியலும் சுயமரியாதை இயலும் இருந்து வருகிறது. சமூகத்தை நீக்கி விட்டால் மற்ற இரண்டுக்கும் வேலையே இல்லை. சமூகத்தின் தேவைக்கு ஆகத்தான் அரசியல் ஏற்பட்டதே ஒழிய சமூக சம்பந்தமில்லாவிட்டால் அரசியல் என்கின்ற வார்த்தையே ஏற்பட்டிருக்காது. அரசியலையும் சமூக இயலையும் பிரித்துக்காட்டுவதானது சமூக குறைபாடுகளை - சமுதாயக் கொடுமைகளை பயன்படுத்திக் கொண்டு வாழ நினைக்கும் சுயநலக்காரர். களுடைய சூழ்ச்சியேயாகும்.
நமது நாட்டில்தான் அரசியலும் சமுதாய இயலும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத மாதிரியில் பிரிக்கப்பட்டும் பிரிவினையாகப் பேசப்பட்டும் வருகிறது. உதாரணமாக நம் நாட்டில் காங்கிரஸ்காரர்களால் சமூக சீர்திருத்த சங்கங்களும் “அரிஜன” சேவை சங்கமும், கிராமப் புனருத்தாரண வேலை சங்கமும் போன்ற தனி சங்கமும் முயற்சியும் அரசியலில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணம் என்னவென்றால் சமூக
சீர்திருத்தம் அரசியலில் கலந்திருந்தால் பழமை விரும்பிகள் அதாவது எதாப்பிரியன்மார்கள், வர்ணாச்சிரமிகள், பார்ப்பனர்கள், மதவாதிகள். சேரமாட்டார்கள். ஹரிஜனசேவை என்பதை அரசியலில் சேர்த்துக்கொண்டால் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழித்து விடுவார்கள். உண்மையான கிராமப் 37— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
புனருத்தாரண வேலை என்பதை அரசியலில் சேர்த்தால் பணக்காரர்கள். சேரமாட்டார்கள். இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் பேசாவிட்டால் பாமர மக்கள் ஏமாறமாட்டார்கள். ஆதலால் அரசியலின் பேரால் பிழைக்க
- வாழ்க்கை நடத்த - பெருமை பெற கருதும் ஒரு கூட்ட மக்கள் இம்மாதிரி இயல்களைப் பிரித்து பொது ஜனங்களை ஏமாற்றக் கண்டு பிடித்த முறையேயாகும் இது. மனித சமூகத்துக்கு விடுதலையோ “சுயராஜ்ஜிய“மோ
அளிப்பதற்கு ஆக அரசியல் இருக்கிறதாக இருந்தால் சமூக சீர்திருத்தமும் ஜாதிக் கட்டுப்பாடும் ஜாதி அடிமைத்தன்மையும் கிராமவாசிகள் கொடுமையும் விலக்கப்படத்தக்க கொள்கைகள் - திட்டங்கள் இல்லாமல் வேறு எதைச் செய்ய சுயராஜ்யம்? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தக் குறைகள் அரசியலோடு சேர்க்கப்படாமல் அரசியல் சட்டங்களின். மூலம் நிவர்த்திக்க ஒப்புக்கொள்ளாமல் பிரித்து வைத்துக் கொண்டால் எந்த வழியில் நிவர்த்தி அடையக்கூடும்? என்று கேட்கிறேன். அல்லது இந்த கொடுமைகளும் குறைகளும் நீங்கத்தான் அரசியல் திட்டம் என்று சொல்லிவிட்டால் அவற்றை ஏன் அரசியலில் சேர்த்துக்கொள்ளக்கூடாது? சேர்த்தால் அரசாங்கம் அரசியல்காரர்களை தூக்கிலிட்டுவிடுமா என்று கேட்கின்றேன்.
அரசியல் சூழ்ச்சி: இன்றைய அரசியலில் வெகு ஜாக்கிரதையாக சமூக சீர்திருத்த விஷயங்களையும் தாழ்த்தப்பட்ட “கீழ்ஜாதி” மக்கள் சமத்துவ விஷயத்தையும் விலக்கி வைத்து சூழ்ச்சி செய்திருப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அதாவது காங்கிரஸ்காரர்களின் இன்றைய அரசியல் திட்டம் என்று சொல்லப்படும் கராச்சித் திட்டத்தை எடுத்துக்கொண்டு நன்றாய் இரண்டு கண்களையும் திறந்து சுயபுத்தியோடு பார்ப்பீர்களானால் அரசியல் காங்கிரஸ்காரர்களின். புரட்டு இன்னது என்பது உங்களுக்கு நன்றாய்த் தெரியும்
என்னவெனில் கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமை திட்டம் என்பதில் ஜாதி, மதம், தொழில், ஜாதிமத உரிமை, பழய சாஸ்திரம், பழக்க வழக்கம், நடைமுறை ஆகியவைகளை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்தரவாதமளிக்கப்பட்டிருக்கிறது. இதன் அருத்தம் என்ன என்று பாருங்கள். சமூக சம்மந்தமாக உள்ள குறைபாடுகளிலும், பல மக்களுக்கு இருந்துவரும் கொடுமைகளிலும், சில மக்கள் அனுபவித்து வரும் தந்திரமான மேன்மையிலும் சிறிதும் கை வைப்பதில்லை என்பது தான் இன்றைய அரசியல் தத்துவமாகும். இந்திய ஏழை மக்களுக்கும் பாமர மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் போதிய அறிவும் சொரணையும் இல்லாததால் இன்று அரசியல் வேறாகவும் சமூக இயல் வேறாகவும் இந்நாட்டில் இருந்து வர முடிகின்றது. அதுவுமல்லாமல் இந்தக் காரியங்களை அதாவது சமூகத்தை சீர்திருத்தவும் தாழ்த்தப்பட்ட
குடி அரசு- 1937 (1) 372.
மக்களை சமத்துவப்படுத்தவும் வேறு இயக்கம் இருப்பதாகவும் தந்திரம்செய்து விட்டபடியால் சிலர் நம்பி ஏமாந்து விடுகிறார்கள். இவைகளைச் செய்ய சட்டத்தில் இடமில்லாதபோதும் இவைகள் செய்யப்படமாட்டாது என்று மேல்ஜாதியாருக்கும் செல்வவான்களுக்கும் வாக்குறுதி கொடுக்கப்பட்டுவிட்ட பின்பும் எவ்வளவுதான் சீர்திருத்தமும் “அரிஜன” சேவையும் பேசி என்ன பயன் என்று கேட்கின்றேன். உதாரணமாக ஒரு பித்தலாட்டத்தை வெளியாக்குகின்றேன் பாருங்கள்.
ஒரு பித்தலாட்டம்
எங்கேயோ ஒரு திருவாங்கூர் ராஜா கோவிலைத் திறந்துவிட்டார் என்று நமது காங்கிரஸ்காரர்கள் பாராட்டுகிறார்களே ஒழிய, எங்கேயோ
ஒரு கொச்சி ராஜா கோவிலைத் திறக்கவில்லை என்று குறைகூறிக் குரைக்கின்றார்களே ஒழிய, பிரிட்டீஷ் இந்திய ராஜா கோவிலைத் திறக்கவில்லை என்று கூறுகிறார்களா? அல்லது கோவிலைத் திறந்துவிடும்படி பிரிட்டீஷ் இந்தியா ராஜாவைக் கேட்கின்றார்களா? கேட்பதாக தீர்மானம் போட்டார்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். காந்தியார் தீண்டாமை விலக்க கோடி ரூபாய் போல் வசூல் செய்து செலவழித்தாரே அல்லாமல், திருவனந்தபுரம் ராஜாவுக்கு புத்தி சொன்னாரே அல்லாமல், பிரிட்டீஷ் அரசரையோ, இந்திய அரசாங்க சட்டசபையையோ, இந்திய காங்கிரஸ் கொள்கையையோ கடுகளவாவது கேட்டாரா அணுகினாரா தீர்மானம் கொண்டு வந்தாரா என்று தேடிப்பாருங்கள். வரியைக் குறைக்க தைரியமுள்ளவர்களுக்கு, வரியைக் குறைக்கச் சட்டம் செய்ய தைரியமுள்ளவர்களுக்கு, தாங்கள் கொண்டுபோகும் தீர்மானத்தையும் நிறைவேற்றும் தீர்மானத்தையும் பிரிட்டீஷ் அரசாங்கத்தார் குப்பைத் தொட்டியில் போடுவதானாலும் தங்கள் கடமையைச் செய்து தீருவோம் என்று வீர கர்ஜனை செய்யும் அரசியல் கிளர்ச்சி கூட்டத்தாருக்கு சமூகக் கொடுமை சம்மந்தமாக இதுவரை ஒரு சிறு தீர்மானமும் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என்றால் இவர்கள் உண்மையாக மனித சமூகத்துக்கு உழைக்கின்றவர்களா, அல்லது தங்கள் சொந்த நலனுக்கு சொந்த ஜாதி நலத்துக்கு உழைக்க அரசியல் வேஷம் போட்டுக் கொண்டவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
புரட்சி உணர்ச்சி உள்ள இந்த காலத்தில் இன்னமும் அரசியல் திட்டத்தில் ஜாதியைக் காப்பாற்ற உரிமையை பிரத்தியேகமாய் குறித்து வைத்துக்கொண்டு அரசியல் மூலம் மக்களுக்கு சுதந்திரமும் விடுதலையும் சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்கின்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருக்குமானால் - இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்றால் இந்நாட்டு மக்கள் மனிதத் தன்மை இன்னதென்று உணராத நடைப்பிணங்கள் என்று
ஏன் சொல்லக்கூடாது என்று கேட்கின்றேன்.
373 ய... QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
நான் காங்கிரசில் இருந்தால் என்ன ஆகிவிடும்?
நான் காங்கிரசில் இருந்திருக்க வேண்டும் என்றும் காங்கிரசில் இருந்தால் காங்கிரசு இந்த மாதிரி ஒரு பித்தலாட்ட ஸ்தாபனமாகவும் இவ்வளவு பார்ப்பன ஆதிக்க ஆயுதமாகவும் ஆகி இருக்காது என்றும் நீங்கள் கருதுகிறீர்கள். அப்படியே இன்னம் சிலரும் கருதுகிறார்கள். என்னிடமும் பலர் சொல்லுகிறார்கள். இப்போதும் சிலர் காங்கிரசில் இருப்பவர்களே என்னை அங்கு அழைக்கின்றார்கள். அவ்வளவு தூரம் போவானேன்? தோழர்கள் கல்யாணசுந்திர முதலியார், வரதராஜுலு நாயுடு போன்றவர்களே இந்த அபிப்பிராயம் காட்டி காங்கிரசிலிருந்து பிரிந்தும் இருக்கிறார்கள். ஆனால் என்னால் இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கு ஏதாவது ஒரு அவசியமான காரியம் செய்ய வேண்டும் என்று கருதுகிற எவனும் இன்றைய நிலையில் காங்கிரசில் இருக்க முடியாது என்பதே எனது அபிப்பிராயம். உண்மையாகவே உங்களை ஒன்று கேட்கின்றேன்.
இந்த 12 வருஷ காலமாய் தான் காங்கிரசில் இருந்திருந்தால். நீங்கள் இப்போது வாசித்துக்கொடுத்த வரவேற்புப் பத்திரத்தில் கண்ட வாக்கியங்கள் போல் ஒரு வரவேற்பு பத்திரம் எழுதிக் கொடுத்திருக்க முடியுமா? இந்த எண்ணங்களாவது உங்களுக்கு உண்டாகி இருக்க முடியுமா? அல்லது இந்த ஜனங்களாவது அதை பொறுத்துக்கொண்டிருப்பார்களா?
நம் நாட்டில் ஒரு சிறு அளவுக்காவது சமூக சீர்திருத்த வேலையும் தீண்டாமை ஒழிப்பு உணர்ச்சியும் சமூகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரு கடுகளவு புரட்சி உணர்ச்சியும் ஏற்படச் செய்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
நான் தேசத்துரோகி என்றழைக்கப்படுவதிலோ நாட்டை அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்தவன் என்று அழைக்கப்படுவதிலோ நான் கடுகளவு கூட கவலைப்படவில்லை. எப்படிப்பட்டவர்களால் அப்படி அழைக்கப்படு கிறேன் என்பது எனக்குத் தெரியும். அயோக்கியர்களாலும் சுயநலக்காரர்களாலும் ஒரு வேலைக் கஞ்சிக்கு மானத்தை விற்றுப் பிழைக்கின்ற இழிநிலையில் உள்ளவர்களாலும் மூட்டாள்களாலும் அழைக்கப்படுவதை எவனாவது
லக்ஷியம் செய்வானா? அதற்கு ஆக தன்னுடைய முயற்சியை எவனாவது மாற்றிக்கொள்வானா என்று கேட்கின்றேன்.
செருப்பு ஆண்ட நாடு இது உண்மையிலேயே இந்த நாட்டை யார் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை. ஒரு காலத்தில் ஒரு ஆரியனின் ஒரு ஜதை செருப்பு
14 வருஷ காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையை
பக்தி விஸ்வாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் ஒரு இழிவான மிருகம் நாய், கழுதை ஆண்டால் கூட அது அதிகமான
குடி அரசு- 1937 (1) 374
அவமானம் என்றோ குறை என்றோ நான் சொல்ல வரவில்லை. ஆனால் மனிதனானாலும் கழுதையானாலும் எந்த கொள்கையோடு எந்த முறையோடு ஆட்சி புரிகின்றது. அதனால் பொது மக்களுக்கு என்ன பலன் என்பதுதான். எனது கவலை.
“*அந்நிய ஆட்சி?” புரட்டு
அந்நிய ஆட்சி என்கின்ற பேச்சே யோக்கியப் பொறுப்பற்ற பேச்சு
என்று சொல்லுவேன். அல்லது அருத்தமற்ற துருப்பிடித்த பழம்பேச்சென்றே சொல்லுவேன். ஏனென்றால் இந்த நாடு எந்தக் காலத்தில் சுய ஆட்சி என்பதான. ஆட்சியில் இருந்தது என்று கேட்கின்றேன். முஸ்லீம்களும் வெள்ளைக் காரர்களும் இந்த நாட்டை 1000 மாக ஆண்டு வந்திருக்கிறார்கள்.
அதற்கு முன் இந்த நாடு 56 தேசமாய் இருந்த காலத்தில் ஒரு தேசத்தான் மற்றொரு தேசத்தை அடிக்கடி கலவரத்தின் மூலம் ஆண்டிருக்கிறான். இவை தவிர புராணங்களின்படியும் சரித்திரங்களின்
படியும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த ஆரியர்களே இந்தியர்களை குரங்காக மதித்து வர்ணாச்சிரமப்படி அரசாட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களது ஆட்சிமுறையை விட - ஆரியர் அந்நியர்களின் ஆட்சி முறையை விட முஸ்லீம்கள் - வெள்ளைக்காரர்கள் ஆகிய அந்நியர்களின் ஆட்சி முறை எந்த விதத்தில் மோசமானது என்று கேட்கின்றேன். இன்று கொஞ்சம் கூட பயமும் வெட்கமில்லாமல் ராமராஜ்யம் வேண்டுமென்றும் ராமராஜ்யத்துக்கு பாடுபடுகிறேன் என்றும் கூறும் காந்தியார் கோரும் ஆட்சியைவிட அந்நியர் ஆட்சி மோசமானதா என்று உங்களைக் கேட்கின்றேன்.
காங்கிரசு உண்மையாக நல்ல எண்ணத்தோடு மனித சமூகப் பொதுவுக்கு பாடுபடுகின்றது என்பதாக நான் உணர்ந்திருப்பேனேயானால் அதை விட்டு நான் எந்தக் காரணம் கொண்டும் வெளிவந்திருக்க மாட்டேன். அதற்கே என் பொருளையும் உயிரையும் தத்தம் செய்திருப்பேன்.
இன்றும் காங்கிரசில் சேர தயார்
இன்றும் நான் காங்கிரசில் சேர தயார். ஆனால் இன்று தானாகட்டும் காங்கிரசானது சமூக வாழ்வில் எல்லா சமூகங்களுக்கும் சட்டமூலமாக சமத்துவம் அளிக்கும் என்றும், ஜாதிப்பிரிவுகளும் கொடுமைகளும் ஒழிக்க சட்டம் செய்யப்படும் என்றும், சகல வகுப்புக்கும் அரசியலில் உத்தியோகமும், பிரதிநிதித்துவமும் விகிதாசாரத்துக்குக் குறையாமல் சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் என்றும் காங்கிரசில் தீர்மானம் போட்டு விட்டு “ஜாதி மத ஆச்சாரங்களையும் பழக்க வழக்க நடைமுறைகளையும் காப்பாற்றப்படும்” என்கிற கராச்சி காங்கிரஸ் உத்திரவாதத்தை 35— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
எடுத்துவிட வேண்டும். அப்போது இந்த நாட்டில் காங்கிரசைத் தவிர வேறு ஸ்தாபனம் இருக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் பார்ப்பனர்கள். ஸ்தாபனம் மாத்திரம்தான் இருக்க முடியும். சுயமரியாதை இயக்கத்துக்கு கூட அவசியம் இருக்காதென்று கூறுவேன்.
“சைத்தான் அரசாங்கம்:
காங்கிரஸ்காரர்கள் இந்த அரசாங்கத்தை சைத்தான் அரசாங்கமென்றும் கொடுங்கோல் அரசாங்கம் என்றும் கூறி மக்களை ஏய்த்து ஓட்டு பெற்று ஸ்தானம் அடைந்து விட்டு இன்று கொஞ்சம் கூட வெட்கமும் நாணையமும் இல்லாமல் ராஜவிஸ்வாசப் பிரமாணமும் ராஜ சந்ததி விஸ்வாசப் பிரமாணமும், அரசாங்க சட்டதிட்ட விஸ்வாசப் பிரமாணமும் செய்கிறவர்கள். நம்மை ராஜபக்தர்கள் என்றும் சர்க்கார் தாசர்கள் என்றும் சொல்லுவார் களானால் உலகில் இவர்களை விட மோசமான மக்கள் உண்டா என்று கேட்கின்றேன். நாம் மக்களுக்குச் செய்த துரோகம் இன்னது என்றாவது இந்த காங்கிரஸ்காரர்கள் இந்த 50 வருஷ காலமாய் மக்களுக்குச் செய்த நன்மை இன்னதென்றாவது யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். காங்கிரஸ் தனது கொள்கையிலோ, திட்டத்திலோ எதிலாவது இந்த 20 வருஷகாலமாய் நிலையாய் நின்றதா? அல்லது எதிலாவது வெற்றி பெற்றதா என்றும் கேட்கின்றேன். அது ஒரு பொதுஜன ஸ்தாபனம் என்று சொல்வது சுத்த முட்டாள்தனமேயாகும். அது ஒரு வருணாச்சிரம தர்ம ஸ்தாபன சபையேயாகும்
பார்ப்பன காங்கிரஸ்
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் நமது நாட்டைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க சபையேயாகும். அதாவது பொதுவாழ்வில் பார்ப்பனர்களை கைதூக்கிவிடவும் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும்படி செய்யவும் வக்கீல், டாக்டர், அர்ச்சகர், குருக்கள், புரோகிதர், காப்பிக்கடை ஐயர் முதலிய பார்ப்பனர்களுக்கு தொழில் பெருகவும், அதன்மூலம் வரும்படி பெருகவும் செய்துகொண்ட ஸ்தாபனமாகும். பார்ப்பனர்களைத் தவிர காங்கிரஸ் மூலம் இன்று வரை ஒரு பார்ப்பனரல்லாதாராவது முன்னுக்கு வந்ததாகக் கூற முடியுமா? காங்கிரசுக்கு முன் பார்ப்பனர்கள் நிலை எப்படி இருந்தது? காங்கிரசுக்குப் பின் எப்படி ஆய்விட்டது? அரசியலும் உத்தியோகமும் பார்ப்பன மயமாய்விடவில்லையா?
பார்ப்பனரல்லாத தியாகிகள் எங்கே?
தோழர்கள் ஆரியா எங்கே? சர்க்கரை எங்கே? வரதராஜுலு எங்கே? கல்யாணசுந்தரம் எங்கே? தண்டபாணி எங்கே? பவானிசிங் எங்கே?
குடி அரசு- 1937 (1) 376
தர்மலிங்கம் எங்கே? எல்லோரும் காங்கிரஸ் ஜாதிவிட்டு நீக்கப்பட்டாய் விட்டது. சிதம்பரம்பிள்ளை கதி என்ன ஆயிற்று? கள்ளு சாராயம் குடித்து கொண்டு, கஞ்சா அபினி அடித்துக்கொண்டு திரிந்த ஒரு சுப்பிரமணிய அய்யருக்கு பாரதிபட்டம் கொடுத்து இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. அவரின் ஆரிய ஆதிக்கப் பாட்டு புஸ்தகம் விளம்பரம் செய்து அவர் குடும்பத்துக்கு பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பாத்தியம் செய்து கொடுக்கப்பட்டாய்விட்டது. அவரைவிட யோக்கியமாக நாட்டுக்கு உழைத்த மற்ற குடும்பம் பல இன்று சோத்துக்கு வழியில்லாமல் திண்டாடுகின்றன. மாகாண காங்கிரஸ் தலைவர் முத்துரங்க முதலியார் விலாசம் யாருக்காவது தெரியுமா? இன்றைய காங்கிரஸ் ஆதிக்கத்தில் அவருக்கு ஏதாவது மரியாதையோ விளம்பரமோ இருக்கிறதா? எலக்ஷனுக்கு நாலு நாளைக்கு முன் தொப்பென்று குதித்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் திடீரென்று ராஜாஜியாகி இன்று மாகாணத் தலைவராக கவர்னரை அடிக்கடி பார்க்கவும், கவர்னர் அடிக்கடி கூப்பிடவுமான பதவி அடைந்து விட்டார். முதல் மந்திரி ஆக தவம் கிடக்கிறார்; ஆனாலும் ஆவார்.
தக்க அந்தஸ்தும் பொது வாழ்வில் நாணையமும் உள்ள தோழர்
சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் காங்கிரசில் சேர்ந்து எலக்ஷனில் விலகிக்கொண்டதன் பயனாய் 5 வருஷகாலம் தண்டிக்கப்பட்டு விட்டார். ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக நவாப் அப்துல் ஹக்கீம் சாயபுக்கு ஓட்டுப்போடச் சொன்னவரும் காங்கிரசுக்கு மாறான தோழர்
டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாருக்கு ஓட்டுப் பிரசாரம் செய்தவரும் காங்கிரஸ் உத்திரவு இல்லாமல் கவர்னர் வீட்டுக்கும் கவர்னருடன். விருந்துக்கும் போன ராஜாஜியாச்சாரியாரை ஏன் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. இந்த யோக்கியதையில் அவரே தலைவராகி விட்டார்.
மற்றும் காங்கிரஸ் பேரால் வெற்றிபெற்று காங்கிரசுக்கு ஓட்டுப் போடாமல் காங்கிரசுக்கு விரோதமாய் ஓட்டுச் செய்து காங்கிரஸ் அபேக்ஷகரை தோற்கடித்த திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்களை காங்கிரஸ்காரர்கள் ஏன்? என்று கூட கேட்கவில்லை. அவரால். வந்த அவமானம் சகிக்கமாட்டாமல் தான் ராஜகோபாலாச்சாரியார்கூட காங்கிரஸ் நடவடிக்கையில் இருந்து “விலகினார்.” அப்படிப்பட்ட அவருக்கு ஒரு நாள் தண்டனை கூட இல்லை; அவரை யாரும் அடங்காப்பிடாரி என்றோ காங்கிரஸ் துரோகி என்றோ கூப்பிடவுமில்லை. இந்த லக்ஷணத்தில் போதாக்குறைக்கு மாகாணத் தலைவர் ராஜகோபாலாச்சாரியும் எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவும் அவர் வீட்டுக்குப் போய் அரசியல் நேசம் பாராட்டி சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அதையும் யாரும் கேட்பார் இல்லை. 377 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
CS.R.
தோழர் சி.எஸ். இரத்தினபாபதி முதலியாரை அபேக்ஷக ஸ்தானத்தில் இருந்து விலகிக்கொள்ளும்படி அவர் வீட்டுக்கே ஆச்சாரியார் போய் கெஞ்சிக் கேட்டு விலகிக்கொள்ளச் செய்து விட்டு அதற்கு ஆக அவரைப் பாராட்டி பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு மறுநாள் அவரை
5 வருஷத்துக்கு விலக்கி வைத்திருப்பதாக உத்திரவு போட்டிருக்கின்றார்கள். என்றால் பார்ப்பன அதிக்கத்துக்கும் ஆணவத்திற்கும் சூழ்ச்சிக்கும் வேறு என்ன அத்தாக்ஷி வேண்டும்?
ராமலிங்க செட்டியார்
திவான்பகதூர் பட்டத்தை விட்ட தோழர் டி.எ. ராமலிங்கம் செட்டியார் இன்று காங்கிரசில் கீந்துவாரற்று மறைந்துவிட்டார். அவர் விலாசம் கூடமக்களுக்குமறைந்து போய்விட்டது. மகாநாடுகளுக்குதலைமைவகிக்கவோ, திறக்கவோ, கொடியேற்றவோ கூட பெயருக்கு பிரேரேபிப்பவர்களைக் கூடக் காணமுடியவில்லை. லக்ஷிமி அம்மாள், ருக்குமணி அம்மாள், பாஷ்யம் அய்யங்கார், ஆலாசியம் அய்யர் என்பதாக எங்கு பார்த்தாலும் பார்ப்பனர்கள் பெயர்கள் தான் சந்து பொந்தெல்லாம் அடிபடுகின்றன. இவ்வளவு விஷயங்கள் அறிந்தும் நம்மவர்களுக்கு புத்தியோ சொரணையோ வரவில்லை யென்றால் யார் மீது குற்றம் கூறுவது என்பது விளங்கவில்லை
ஆர்.கே. ஷண்முகம்
தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் கொச்சி திவானானபோது நமது நாட்டு தேமீயப்பத்திரிகைகள் “கொச்சி திவான் வேலைக்கு கொச்சியில் ஒரு ஆள் கிடைக்கவில்லையா? கொக்சிக்காரர்களே உங்களுக்கு மானமில்லையா" என்று எழுதி கலகம் செய்து மக்களைக் கிளப்பி விட்டன.
தோழர் சர்.கி.பி. ராமசாமி அய்யருக்கு திருவாங்கூர் திவான் வேலை ஆனவுடன் “திருவாங்கூருக்குநல்லதிவான் கிடைத்தார்" என்று திருவாங்கூரைப் பாராட்டினவேயல்லாமல் “திருவாங்கூர் திவான் வேலைக்கு திருவாங்கூரில்
ஒரு ஆள் இல்லையா” என்று கேட்கவே இல்லை.
மைகுர் சிவில் சர்வீஸ் பரீட்சையில் பெயில் ஆகி “இந்து” பத்திரிகை தயவாலும், “சுதேசமித்திரன்” பத்திரிகை தயவாலும், ரிவினியூ போர்டு மெம்பரான பார்ப்பனர் ஒருவர் உத்தியோகத்தில் இருக்கும் வரை 3000 ரூபாய் சம்பளம் வாங்கி மூட்டை கட்டிக்கொண்டு இருந்துவிட்டு உத்தியோகம் விட்டுப்போகும் போது இந்தியனுக்கு உயர்ந்த சம்பளம் மாதம் 1000 (ஆயிரம்) ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லி அடுத்த நாளே மீ* 5000 ரூபாய் சம்பளத்துக்கு காஷ்மீர் மந்திரியாகப் போய்விட்டார். ஒரு தேசீயப் பத்திரிகையாவது “காஷ்மீர் மந்திரி வேலைக்கு காஷ்மீரில் ஒரு ஆளில்லையா” என்று கேட்கவில்லை. ஒரு
குடி அரசு- 1937 (1) 378
தேசீய பத்திரிகையாவது நேற்று மாதம் ரூ.1000 போதும் என்று சொல்லிவிட்டு அவரே இன்றைக்கு 5000ரூ. சம்பளம் வாங்குகின்றாரே
இது யோக்கியமா என்று எழுதவேயில்லை.
பரோடா சமஸ்தானத்தில் தோழர் சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரி என்கிற
அய்யங்கார் பார்ப்பனர் கிட்டத்தட்ட 10 ணு காலமாய் மீ” 4000, 5000 சம்பளம் கொள்ளை அடிக்கிறார். அதைப்பற்றி கேட்பவர்களோ குறை சொல்பவர்களோ காணவில்லை. சர்.ஆர்.கே. ஷண்முகத்தைப் பற்றி பார்ப்பனர்கள் தினமும் தொல்லை விளைவிக்கிறார்கள்; ஆபாசமான கட்டுக்கதைகள் கட்டிவிட்டு தொல்லை விளைவிக்கிறார்கள். மற்றவர்கள். விஷயமாய் நிஜமாகவே நடக்கும் ஆபாசங்களைப் பற்றி பெருமை பேசிக்கொள்ளும்படி செய்கிறார்கள். எனவே நம் பார்ப்பனர்கள் நம் மக்களுக்கு செய்துவரும் தொல்லைகளையும், கொடுமைகளையும் நீங்கள் உணர்ந்து இருந்தும் பார்ப்பனர்கள் பின் வாலைப் பிடித்துக்கொண்டும், கொடியைப் பிடித்துக்கொண்டும் திரிவதென்றால் நம் நிலையைப்பற்றி என்னதான் நினைப்பது என்று கேட்கின்றேன்.
குறிப்பு: 01.06.1937 ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை மாரியம்மன் கோவில் மைதானத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 06.06.1937
379 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கிரஸ் ஆட்சியின் பயன்
காங்கிரஸ்காரர்கள் பாமர மக்களை ஆசைகள் காட்டி ஏமாற்றி வைத்திருக்கிறார்கள். அசாத்தியமான காரியங்களையெல்லாம் சாதித்து விடுவதாகக் கூறியவைகளை பாமர மக்கள் நம்பிவிட்டார்கள். பாமர மக்களுக்கு போதிய அரசியல் ஞானம் இல்லாததால் எது சாத்தியம் எது அசாத்தியம் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது. ஆனபோதிலும் காங்கிரஸ்காரர்கள் சிற்சில ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று இன்றைக்கு 2, 3 வருஷங்களாகிவிட்டன. ஒரு சிலவற்றிற்கு முழு காலாவதியும் ஆகிவிட்டன. ஆகவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்த அந்தந்த ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? மக்கள் அடைந்த நலன் என்ன? முன்பு இருந்துவந்த நிலைக்கு இப்போது ஏற்பட்ட மாறுதல் என்ன? என்று ஒரு (பாலன்ஸ் ஷீட்) வரவு செலவு ஓரட்டு டாப்பு போட்டு பார்த்தால் பாமரமக்களுக்கு இனியாவது உண்மை விளங்கும் என்று கருதி சிலவற்றை வெளியாக்குகிறோம்
தமிழ்நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களில் மிக பெரிய ஸ்தாபனம் மதுரை
முனிசிபாலிட்டியாகும். இது இந்த மூன்று வருஷகாலமாக பலமான காங்கிரஸ் மெஜாரிட்டியால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. சர்க்காரோ ஜஸ்டிஸ் கட்சியோ வேறு எவ்விதமான கட்சிப் பிரதிகட்சித் தொல்லையோ இதில் பிரவேசிக்க இடம் இல்லாமல் சாமியும், பூசாரியும் ஒரே ஆளாய் இருப்பது போல் மதுரை முனிசிபாலிட்டி காங்கிரசின். ஏகபோக ஆட்சியிலேயே இருந்து வந்திருக்கிறது
இந்த ஆட்சியில் மதுரை பொது ஜனங்களுக்கு காங்கிரஸ் குறைத்த வரி எவ்வளவு? செய்த நன்மை எவ்வளவு? என்று பார்க்கப் போனால் சென்ற இரண்டரை வருஷ காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ்காரர்கள் 29 அதிக வரி போட்டிருப்பதாய் மதுரை வரி கொடுப்போர் சங்கத்தார்கள். அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவைகளில் ஏதாவது ஒன்று இரண்டு தவறுதலாக இருந்தாலும் இருக்கலாம். ஆனபோதிலும் ஒரு சங்கத்தின்.
மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது என்கின்ற முறையில் அதை அடியோடு. அலட்சியப்படுத்தி விடுவதற்கு இல்லை. அவ்வறிக்கை வெளிவந்து ஒரு மாதமாகியும் அதற்கு மறுப்பும் காங்கிரஸ்காரர்களால் வெளியிடப்படவுமில்லை.
அவ்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அனேக வரிகள் ஒன்றுக்கு இரண்டாகவும் ஒன்றுக்கு பத்தாகவும் ஒன்றுக்கு ஐம்பதாகவும்,
குடி அரசு- 1937 (1) 350
உயர்த்தியும் சில புதிய வரிகள் போட்டும் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது ஒரு விஷயத்தில் அதாவது தெருப்பக்கம் விரியும்படி வைக்கப்பட்டிருக்கும் கதவுகளுக்கு வருஷத்துக்கு 0-4-0 அணாவாக இருந்ததை வருஷம் ஒன்றுக்கு 12-0-0 ரூபாயாக ஆக்கி இருக்கிறார்களாம்
சுடுகாட்டில் பிணம் சுடும் காவல் வெட்டியானுக்குக் கூட 8 அணாவாக இருந்த வரியை 2 ரூபாயாக ஆக்கி விட்டார்களாம்
பால் விற்கின்ற பெண்களுக்குக் கூட ஒரு ரூபாய் வரி விதிக்கப்பட்டு
இருக்கிறதாம்
பால் விற்கிற வீட்டுக்கு 3 ரூ வீதம் வரி விதிக்கப்பட்டிருக்கிறதாம்.
மற்றும் இதன் முழு விபரங்களும் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்
பட்டிருக்கிறது சென்னை கார்ப்பரேஷனிலும் இதுபோலவே காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் வந்து நிர்வாகத்தை ஏற்று நடத்தியதில் எவ்வளவு அதிக வரி போடப்பட்டது என்றும் மக்களுக்கு எவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டன. என்றும் முன்னமே பலதடவை குறிப்பிட்டிருக்கிறோம் ஆகவே காங்கிரஸ்காரர்கள் வரி குறைக்கும் விஷயத்திலும், புதிய வரி போடாமல் இருக்கும் விஷயத்திலும் மக்களுக்கு நன்மை செய்யும் விஷயத்திலும் முன்பு இருந்த நிருவாகத்தில் இருந்ததைவிட கடுகளவாவது அனுகூலமாய் - மக்களுக்கு நன்மையாய் செய்யும் விஷயத்திலும், மக்களுக்கு நன்மையாய் நடந்திருக்கிறார்கள் என்று சொல்ல இதுவரை ஏதாவது ஒரு சிறு ஆதாரமாவது ஏற்பட்டதா என்பதை யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டுகிறோம். ஒரு சமயம் காங்கிரஸ் செய்த நன்மை நமக்குத்தான் தெரியவில்லை என்று சொல்லுவதானாலும் காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்று ஆட்சிக்கு வந்த எந்த ஸ்தாபனங்களிலாவது முன் இல்லாத மாதிரியில் ஏதாவது ஒரு சிறு நன்மையாவது மக்களுக்குச் செய்ததாக - ஏற்பட்டதாக எந்த காங்கிரஸ் பத்திரிகையாவது அறிக்கை வெளியிட்டிருக்கிறதா என்றாவது கவனித்துப் பார்க்கவேண்டுகிறோம் யோக்கியமான முறையிலோ தகுதியான வழியிலோ இதுவரை நடந்து வந்த மாதிரியிலோ மக்களின் ஓட்டுகளைப் பெற அருகதையற்ற மக்கள் பாமர மக்களை ஏமாற்ற வேண்டுமென்றே அற்பத்தனமான பொய்யும் பித்தலாட்டமும் கேவலமான பழிகளும், கற்பனைக் கூற்றுகளும் சொல்லி ஏமாற்றி பதவிக்கு வர முயற்சிக்கும் இழிவான. முறையே இன்று காங்கிரஸ் பிரசாரமாய் இருந்து வெற்றி பெற்று வந்திருக்கிறதே ஒழிய யோக்கியமான முறையில் ஒரு வெற்றியும் அடையவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, தென் 8 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஆற்காடு, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம் முதலிய ஜில்லா போர்டுகளில் காங்கிரஸ் பிரசிடெண்டுகள் இருந்து தக்க மெஜாரிட்டியுடன் நிர்வாகம் நடத்துகிறார்கள். இந்த பிரசிடெண்டுகளால் இந்த போர்டுகளுக்கு இதுவரை ஏற்பட்ட புது நன்மை இன்னது என்று யாராவது சொல்ல முடிந்ததா? எந்த காங்கிரஸ் பார்ப்பன பத்திரிக்கையாவது காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு போர்டுகள் வந்த பிறகு இன்ன நன்மைகள் ஏற்பட்டன என்றாவது வெளியிட முடிந்ததா? என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
இவைகள் தான் போகட்டும், காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் இருந்து வேலை பார்த்த இந்திய சட்டசபையிலாவது இந்த 3 வருஷ
காலத்தில் ஏதாவது ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது ஓட்டர்களுக்கு உண்டாகும்படியான வேலைகள் செய்தார்களா? அவைகளால் ஏதாவது பயன் ஏற்பட்டதா என்பதையாவது யோசித்துப் பார்க்கும்படி நினைவுட்டுகின்றோம். வெறும் கூலிக்கூப்பாடும் பார்ப்பன சூழ்ச்சியும் மற்ற கட்சிகளிலிருந்து வாலும், மூக்கும் அறுபட்டுப்போய் சரணாகதி அடைந்த நன்றி விஸ்வாசமற்ற சுயநல மக்களின் துரோகமும் சேர்ந்து பாமரமக்களை சதி செய்து விட்டதாலேயே காங்கிரஸ் மனித சமூகத்துக்கு நன்மை செய்யும் ஸ்தாபனமாக ஆகிவிடுமா? மக்கள் காங்கிரசை மதித்து விட்டார்களா. என்றும் கேட்கின்றோம் இதுவரை இந்த 50 வருஷ காலமாக இந்த நாட்டுக்கு அல்லது இந்த நாட்டு மக்களுக்கு காங்கரசினால் இன்ன நன்மை ஏற்பட்டது என்று இதுவரை தோழர்கள் காந்தியார் முதல் உபயத்துல்லா குப்புசாமி வரை யாராவது எடுத்துக்கூறி இருக்கிறார்களா? இப்போதாவது கூற முடிகிறதா என்று கேட்கின்றோம்.
இவ்வளவும் ஒருபுறமிருக்க “உபயோகமற்ற இன்றைய அரசியல் சட்டத்தை தகர்த்தெரியவேண்டும்” என்றும் “ஏகாதிபத்தியத்தையே அழித்து இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியை ஒழித்து பூரண சுயேச்சை அடையவேண்டும்” என்றும் அதற்கு ஆக போர் தொடுக்க வேண்டும் என்றும் கூறி பல தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டு இப்போது மந்திரி பதவி ஏற்க வேண்டுமென்று அலைவதும் கொஞ்சம் கொஞ்சமாய் தாங்களே கீழே இறங்கி வந்துவிட்டதாகச் சொல்லி அரசாங்கத்தை கெஞ்சுவதும் சட்டப்படி நடப்பதாக வாக்குறுதியும், பிரமாணமும் சர்க்காருக்கு செய்து கொடுப்பதும் வெளிப்படையாகவே,
காங்கிரஸ்காரர்கள் மந்திரி பதவிபெற்றுக்கொள்ள வேண்டு மென்பதுதான் எனது ஆசை" என்றும், இதுவரையும் காங்கிரஸ்காரர்கள் தாங்களே இறங்க வேண்டிய அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார்கள், இனி சர்க்கார் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் பாக்கி!” என்றும்,
குடி அரசு- 1937 (1) 382.
காங்கிரஸ் கவர்னர்களை உறுதிமொழி கேட்டதின் கருத்து காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்பதை சர்க்காரார் அனுமதிக்கிறார்களா? என்பதை அறிவதற்கே ஒழிய அரசியல் சட்டத்திற்கு விரோதமாய் நடப்பதற்கு அல்ல” என்றும்,
“பிரிட்டிஷுக்கும், இந்தியாவுக்கும் எவ்வித மனக்கசப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன்"' என்றும்,
“அதற்கு ஆக உயிரையும் விடுவேன்'' என்றும்,
தோழர் காந்தியார் பிரமாண வாக்குமூலம் கொடுத்தும், அரசாங்கத்தை
கெஞ்சியும் சரணாகதியடைந்த காரியங்களை கவனித்தால் காங்கிரசினிடமோ அதன் தலைவர்கள் என்பவர்களிடமோ எந்த வகையிலாவது நாணையமோ யோக்கியப் பொறுப்போ மானமோ இருப்பதாகக் கருத முடிகிறதா என்று கேட்கின்றோம்
ஆகவே, இதுவரையில் காங்கிரசின் வண்டவாளத்தை பல வழிகளிலும் உணர்ந்த மக்கள் இனி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஊகித்தறிந்துகொள்ள வேண்டுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 06.06.1937
383 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
“விடுதலை? காலணா தினசரி
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் சார்பாக சென்னையில் வாரம் இரு முறையாக நடந்துவந்த தமிழ் “விடுதலை” பத்திரிக்கையானது ஈரோட்டில்
இருந்து தினசரி பத்திரிக்கையாக நடந்து வர சகல ஏற்பாடுகளும் தீவிரமாக
நடந்து வருகின்றன. அரசாங்க அனுமதி ஒரு வாரத்திற்குள் கிடைத்து
விடும். அனேகமாய் இம்மாதம் 3 வது வாரத்தில் பத்திரிக்கையை வெளியாக்க தீவிர முயற்சி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது
ஏஜண்டுகளாய் இருக்க விருப்பமுள்ளவர்கள் உடனே தெரிவிக்க
வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 35 பத்திரிக்கைகளுக்கு
குறைவாக ரயில்வே பார்சலில் அனுப்பப்படமாட்டாது. 3 மாதகாலத்துக்கு
கம்மி இல்லாமல் பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு பை. கமிஷன் கொடுக்கப்படும்.
தினம் 50 பத்திரிக்கைகள் வரை தருவிப்பவர்கள் 25 ரூபாய் டிப்பாசிட்
கட்ட வேண்டும்
சந்தா விபரம்:-
தபால் மூலம் தெரிவித்துக் கொள்ளுபவர்களுக்கு முன் பணமாக
மாதம் ஒன்றுக்கு சந்தா 0-11-0
6 மாதத்திற்கு 4-0-0
ஒரு வருஷத்துக்கு 7-8-0
ஏஜண்டுகள் உள்ள இடத்தில் சந்தாதாரர்களாய் சேர விரும்புகின்றவர்களுக்கு முன் பணமாக
ஒரு பத்திரிக்கை 0-0-3
ஒரு மாதத்துக்கு 0-6-6
ஒரு வருஷத்துக்கு 4-8-0
குடி அரசு- 1937 (1) 384
விடுதலை விளம்பர விகிதம்
சர்க்கார், ரயில்வே, முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, கோர்ட்டு, கம்பெனி, பாங்கி ஆகியவைகள் சம்பந்தப்பட்டவைகளுக்கு பத்தி அங்குலம் 1-க்கு ரூ. 2-0-0. ஒப்பந்தமில்லாத தனிப்பட்ட வியாபார விளம்பரங்களுக்கு அங்குலம் 1-க்கு 1-0-0. ஒப்பந்த விளம்பரங்களுக்கு
எழுதித்தெரிந்து கொள்ளலாம்
ஈ.வெ. ராமசாமி, “விடுதலை” ஆபீஸ், ஈரோடு.
குடி அரசு - அறிவிப்பு - 06.06.1937
85— ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தேச விடுதலைக்கு வழி£
லண்டன் பொதுக் கூட்டம் ஒன்றில் காலஞ்சென்ற லாலாலஜபதி
ராய் பேசியபோது, “நாங்கள் 50 வருஷகாலமாய் சுதந்தரத்துக்காகப் போராடுகிறோம். எனினும் பிரிட்டிஷார் எங்களுக்கு சுதந்தரமளிக்கவில்லை" என்று குறிப்பிட்டார். உடனே “கூட்டத்திலிருந்த ஒருவர் எழுந்து, “இந்தியாவின் ஜனத்தொகை என்ன?” என்று கேட்டார். “30 கோடி” என்றார் லாலா லஜபதி. “30 கோடிப் பேர் சுதந்தரப் போர் நடத்தியும் இன்னும் நீங்கள் ஏன் வெற்றிபெறவில்லை?” என்று அவர் கேட்டார். லஜபதிராய்க்கு பதிலளிக்க முடியவில்லை. வாஸ்தவத்தில் இந்தியர்கள் எல்லாம் ஏகோபித்து, சுதந்தரம் வேண்டும் என்றால் பிரிட்டிஷார் அன்றே கொடுத்துவிடுவார்கள். இந்தியர்களுக்குள்ளே ஒற்றுமையில்லாமலிருப்பதுதான். தற்காலக் குழப்பங்களுக்குக் காரணம். தற்காலம் நடப்பதாய்க் கூறப்படுவது சுதந்தரப்போரல்ல. பார்ப்பனரல்லாதாரையும் கையாலாகாத ஏழை எளியோரையும் எந்நாளும் அடிமைப்படுத்தி வைப்பதற்கான சூழ்ச்சிப்போரே இன்று நடைபெற்று வருகிறது. இந்தியாவிலே பல ஜாதி, பல மதங்கள் தோன்றி ஒற்றுமை இல்லாமலாய் விட்டது. ஜாதி மத பேதங்கள் ஒழிந்து இந்தியா உண்மையில் ஒரு “நேஷன்” ஆனால் தான் இந்தியா விடுதலையடையும். ஜாதிமத பேதங்கள் ஒழியாமல் அரசியல்
சுதந்தரம் பெறுவது பகற்கனவேயாகும். மாதந்தவறாமல் ஹிந்து - முஸ்லீம் கலவரங்கள் நடைபெற்ற வண்ணமாகவே இருக்கின்றன. பம்பாய் ஹிந்து முஸ்லீம் கலவரத்துக்கு நிலைக்களனாகி விட்டது. சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் இன்னும் ஒழியவில்லை. சென்ற சனிக்கிழமை வரை 2000 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எல்லைப்புறத் தொல்லை தாங்க முடியாததாயிருக்கிறது. எல்லைப்புறக் கலவரம் மாத சம்பவமாகி விட்டது. எல்லைப்புற ஆபத்தின் பேரால், இந்திய வருமானத்தில் பாதியை விழுங்கக் கூடிய ஒரு பெரிய இராணுவத்தை சாசுவதமாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது.
மற்றும் மாதம் தவறாமல் பார்ப்பன மகாநாடு, பார்ப்பனரல்லாதார் மகாநாடு, ஆதிதிராவிட மகாநாடு, கிறிஸ்தவர் மகாநாடு, முஸ்லீம்கள் மகாநாடு எனப் பல மகாநாடுகள் நடைபெற்றுக் கொண்டும் இருக்கின்றன. அம்மகாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைப் பார்த்தால்
குடி அரசு- 1937 (1) 386
ஒவ்வொரு சமூகத்தாருக்கும் பிற சமூகத்தாரிடம் நம்பிக்கையில்லையென்றே தோன்றுகிறது. தேசபக்தர்கள் என்றும் தேச விடுதலையில் பெரிய ஆர்வங்கொண்டவர்கள் என்றும் இந்தியர்களுக்கு வழிகாட்டப் பிறந்தவர்கள்
என்றும் கூறிக்கொள்ளும் பார்ப்பனர்களும் தனி மகாநாடுகள் கூட்டி பார்ப்பனர்களின் தனி உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். சனாதனிகள் என்போரும் தமது மத சுதந்தரங்களைப் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய மத சுதந்தரங்களுக்குப் பாதுகாப்பளிப்பதினால் ஏனையோருக்கு பாதகம் ஏற்படாமலிருந்தால் தாராளமாகப் பாதுகாப்பளித்துவிடலாம். ஆனால் சனாதனிகளின் மத சுதந்திரப் பாதுகாப்பு ஏனையோருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது. ஆகவே முதலில் சமூகச்
சீர்திருத்தம் ஏற்பட்டுத் தீரவேண்டும். சமூகச் சீர்திருத்தம் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள் நீங்கினாற்றான் ஏகதேச அளவிலாவது ஒற்றுமைக்கு வசதியேற்படும். சுயராஜ்யம் வந்த பிறகு எல்லாச் சீர்திருத்தமும் ஏற்பட்டுவிடுமென்று கூறுவது சுத்த “ஹம்பக்” பேச்சு. சமூக அரசியல் விடுதலைக்கு கராய்ச்சித் தீர்மானம் வழி வகுத்திருப்பதாகக் கூறப்படுவதும் ஏமாற்று வித்தையே. கராய்ச்சித் தீர்மானம் வாஸ்தவத்தில் வர்ணாச்சிரமத்துக்கு ஆதரவளிக்கக் கூடியதாகவே இருக்கிறது
ஆதியிலே வருஷந்தோறும் காங்கிரஸ் மகாநாட்டுடன் காங்கிரஸ் மகாநாட்டுப் பந்தலிலேயே சமூகச்சீர்திருத்த மகாநாடும் நடத்தப்பட்டு
வந்தது. அந்த மகாநாட்டு மூலம் சமூகச் சீர்திருத்தஉணர்ச்சியும் வலுப்பெற்று வந்தது. பின்னணியில் நிற்கும் சமூகங்கள் தமது குறைபாடுகளை உணரவும், அவைகளைப் பரிகரிக்க வழிதேடவும் வசதி ஏற்பட்டது. இது பார்ப்பனர்களுக்குப் பிடிக்கவில்லை. பாமர மக்கள் விழிப்படைந்தால். தமது வர்ணாச்சிரமக் கோட்டை தவிடு பொடியாகிவிடுமென அவர்கள் உணர்ந்து சமூகச் சீர்திருத்த மகாநாட்டையே ஒழித்துவிட்டனர். இப்பொழுது காங்கிரஸ் சமூகச் சீர்திருத்த விஷயங்களையே கவனிப்பதில்லை. ஹரிஜன. சேவா சங்கம், தீண்டாமை யொழிப்புச் சங்கம் முதலியன காங்கிரசுக்குப் புறம்பான ஸ்தாபனங்களாகவே இருந்து வருகின்றன. அந்த ஸ்தாபனங்கள் காங்கரசுக்குப் புறம்பானவைகளாயிருந்தாலும் அந்த ஸ்தாபனப் பணத்தையும் தொண்டர்களையும் காங்கரஸ் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? காங்கரஸ் தற்காலம் ஒரு பார்ப்பன ஸ்தாபனமாக இருந்து வருவதே எல்லாத் தொல்லைகளுக்கும் காரணம். ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டால்தான் சுயராஜ்யம் வரும் என்று முதலில் காந்தி சொன்னார். அப்பால் தீண்டாமை ஒழிய வேண்டும்
என்றார். ஆனால் இந்த இரண்டும் உண்டாக உருப்படியான வேலைகள். செய்யப்படவே இல்லை. தோழர் ஜின்னாவின் 14 நிபந்தனைகளையும்
387 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காங்கரஸ் ஒப்புக்கொண்டால் ஹிந்து - முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிடும் தென்னாட்டிலே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினைகளும் முடிவு பெற்றுவிடும் தீண்டாமை ஒழிவதற்கு அனுகூலமான சட்டங்கள் ஏற்படுத்தினால் தீண்டாமையும் ஒழிந்து விடும். தேச விடுதலையில் காங்கரஸ்காரருக்கு உண்மையிலே ஆவலிருந்தால் இந்த மூன்று காரியங்களையும் செய்ய காங்கிரஸ் ஏன் முன்வரக்கூடாது? வாஸ்தவத்தில் இந்த மூன்று பிரச்சினை களையும் முடிவு செய்யாமல் அரசியல் சுதந்திரம் பெறும் முயற்சி வெற்றி பெறவே செய்யாது
குடி அரசு - தலையங்கம் - 13.06.1937
குடி அரசு- 1937 (1) 388
காங்கரஸ் கட்டுப்பாடு
சென்னை மாகாணத்தில் இரண்டு நகரசபைகளிலும் ஒரு
கார்ப்பரேஷனிலும் ஏழு ஜில்லா போர்டுகளிலும் காங்கரஸ்காரர் மெஜாரிட்டி கட்சியாக இருக்கிறார்களாம். ஆனால் காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற அந்த ஸ்தல ஸ்தாபனங்கள் எல்லாம் கழுதை புரண்ட களமாகவே இருந்து வருகின்றன. தகராறு, பிளவு, சச்சரவில்லாத ஸ்தல ஸ்தாபனமே இல்லை.
வேலூர், திருச்சி, திருநெல்வேலி, தென்னாற்காடு கதை பழங்கதையாகிவிட்டது. கர்னூல் ஜில்லா போர்டில் காங்கரஸ்காரர் ஆதிக்கம் பெற்றிருந்தும் இடைக்கால மந்திரிகளைக் கண்டித்து காங்கரஸ்வாதி கொண்டுவந்ததீர்மானம்
முழுத் தோல்வியடைந்தது. காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற நெல்லூர். ஜில்லாபோர்டிலே “பட்ஜெட்” நிறைவேறும்காரியம் திண்டாட்டத்திலிருக்கிறது. திருவண்ணாமலை ஜில்லா போர்டு விஷயம் சொல்ல வேண்டியதில்லை, ஜில்லா போர்டு தலைவர் தோழர் எம். ஷண்முக முதலியார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கனவே தீர்மானித்திருந்தும் இன்னும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேயில்லை ஏன்? ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் காங்கரஸ் சாயம் வெளுத்துவிடும். இந்நிலைமையில் சென்னை சட்டசபை மெம்பரும் திருவண்ணாமலை ஜில்லா போர்டு மெம்பருமான தோழர்
சி. பெருமாள்சாமி செட்டியார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டு மென்று திருவண்ணாமலை ஜில்லா போர்டு காங்கரஸ் கட்சியார் ஒரு தீர்மானம்
நிறைவேற்றி யிருக்கிறார்களாம். ஒரு வருஷத்துக்கு முன்பு நடந்த சென்னை செனட் சபை தேர்தலில் தோழர் பெருமாள் சாமி செட்டியார் காங்கரஸ் அபேட்சகருக்கு வோட்டுக் கொடுக்கவில்லை யென்பதே அவர்.
மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு பொய்
என்றும் தன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்ற திருவண்ணாமலை ஜில்லா போர்டு காங்கரஸ் கமிட்டிக்கு அதிகாரமில்லை யென்றும் தோழர் பெருமாள்சாமி செட்டியார் ''தினமணி''யில்
எழுதியிருக்கிறார். காங்கரஸ் நாற்றத்தை விளக்க இதைவிட வேறு திருஷ்டாந்தம் வேண்டுமா? திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர் தோழர் குமாரசாமி முதலியார் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி முடிவு
3 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
செய்தது. அதன்படி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதைப் பற்றி யோசிக்கக்கூடிய திருநெல்வேலி ஜில்லாபோர்டு காங்கரஸ் கட்சிக்கூட்டத்தில் “கோரம்” இல்லாததினால் தீர்மானத்தைப்பற்றி யோசிக்கவே இல்லையாம். மன்னர் மகுடாபிஷேகக் கொண்டாட்டத்தில் காங்கரஸ்காரர் கலந்துகொள்ளக்கூடாதென்று காங்கரஸ் தீர்மானித்திருந்தும் எத்தனையோ காங்கரஸ்காரர் கலந்துதானிருக்கிறார்கள். உண்மை இப்படியிருக்கையில் காங்கரஸே இந்தியாவின் ஏகப்பிரதிநிதி ஸ்தாபனம் என்றும் காங்கரஸே ஒழுங்கான, கட்டுப்பாடான ஸ்தாபனம் என்றும் காங்கரஸ்காரர் பெருமையடித்துக் கொள்கிறார்களே!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.06.1937
குடி அரசு- 1937 (1) 300
காந்தியார் இறக்கம்
“உச்சாணிக்” கொம்பிலே ஏறி உட்கார்ந்து கொண்டிருந்த காந்தியார் படிப்படியாக இறங்கி இப்பொழுது தரை மட்டத்துக்கு வந்து விட்டார். விசேஷாதிகாரங்களை உபயோகிப்பதில்லையென்று எழுத்து மூலம் கவர்னர்கள் வாக்குறுதியளிக்க வேண்டுமென்று அவர் வகுத்த முதல் நிபந்தனை: கருவிலேயே அழிந்து போயிற்று. அப்பால் கவர்னர் விசேஷாதிகாரங்களைப் பிரயோகம் செய்யமாட்டார் என்று காங்கரஸ் கட்சித்தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் போதுமென்று காந்தி நிபந்தனை மாற்றமடைந்தது. கவர்னர்கள் அதையும் லக்ஷ்யம் செய்யவில்லை. மூன்றாவதாக வாக்குறுதிப் பிரச்சினையை பஞ்சாயத்தார் முடிவுக்கு விடவேண்டுமென்று காந்தியார் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அதையும் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உடனே அவருக்குச் சிறிது அலுப்புத் தட்டிற்று. "விசேஷ நிபந்தனை எதுவும் வேண்டாம். மந்திரிமாருக்கும் கவர்னர்களுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டால் கவர்னர்கள் மந்திரிமாரை “டிஸ்மிஸ்” செய்து விடட்டும்” என்றார். அதையும் யாரும் பொருட்படுத்தவில்லை. கடைசியாக அவர் சோர்வடைந்து “டிஸ்மிஸ் செய்யவேண்டாம் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று மந்திரிமாரைக் கேட்டுக்கொண்டால் போதும்" என தமது நிபந்தனையைக் கரைத்துக்கொண்டு விட்டார். அம்மட்டோ. பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் மனக்கசப்பு ஏற்படாமல் தடுக்க தன் உயிரைக்கூட விடத் தயாரென்றும் அவர் கூறுகிறார். “சாத்தான் சர்க்கார்”
மீது காந்தியாருக்கு இவ்வளவு காதல் ஏற்பட்டிருப்பது ஒரு பெரிய அதிசயமல்லவா? ஆனால் இவ்வளவு தூரம் அவர் கீழே இறங்கி வந்த
பிறகும் பிரிட்டிஷார் அசையவே இல்லை. காந்தியாரின் கடைசிப் பேச்சில் பார்லிமெண்டின் உத்தேசத்தை அநுசரித்த யோசனை எதுவும் காணப்படவில்லை என்று ஒரு குட்டி அதிகாரி பார்லிமெண்டிலே கண்டிப்பாகக் கூறிவிட்டார். தமிழ்நாடு காங்கரஸ் கட்சித் தலைவர். தோழர் ராஜகோபாலாச்சாரியார் சர்க்காரை குல்லாய் போட தம்மாலான ஜாலவித்தைகள் எல்லாம் செய்கிறார். “முட்டுக்கட்டை போட வாக்குறுதி கேட்கவில்லையே. சர்க்காரோடு ஒத்துழைக்கவும் நல்லெண்ணத்தைப் பெறவும் தானே வாக்குறுதி கேட்கிறோம்” என்று கூட அவர் பச்சையாகச் சொல்லிக்காட்டிவிட்டார். ஆனால் சர்க்கார் அசையவில்லை. இந்த லக்ஷணத்தில் காந்தி பேச்சும் ஆச்சாரியார் பேச்சும் காங்கரஸ்வாதிகள். 91— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பலருக்கு மிக்க அதிருப்தியைக் கொடுக்கத் தொடங்கிவிட்டன. பொறுப்பு
வாய்ந்த தலைவரான ராஜகோபாலாச்சாரியார் கவர்னர்களுக்கு ஆலோசனை:
கூறும் முறையில் பேசுவது காங்கரஸ் கொள்கைக்கு முரணானதென்று தோழர் ராபி அகமத் கித்வாய் கூறுகிறார். சீர்திருத்தத்தை எதிர்த்துத் தோற்கடிக்கும் பேச்சைக் காற்றுவாக்கில் பறக்க விட்டு விட்டு சர்க்காரோடு சமரசம் பேச காந்தியும் ஆச்சாரியாரும் துடித்துக் கொண்டு இருப்பது சரியல்லவென்றும் அவர் கூறுகிறார். தோழர் மாசானிக்கும் காந்தியார் போக்கு மிக்க ஆத்திரத்தை உண்டு பண்ணியிருக்கிறது
சீர்திருத்தத்தை நிறுத்திவைப்பது மூலம் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் மனக்கசப்பும் துவேஷமும் உண்டாவதைத் தடுக்கப் பிராணத் தியாகம் செய்யவும் தயார் என்று காந்தியார் கூறுவதைத் தோழர் மாசானி வன்மையாகக் கண்டிக்கிறார். "சீர்திருத்தத்தை ஒழிப்பதுதானே காங்கிரசின் லக்ஷ்யம். எனவே அதைத் தடுக்க காந்தியார் ஏன் பிராணத் தியாகம் செய்யவேண்டும்? எனத் தோழர் மாசானி ஆணித்தரமாகக்
கேட்கிறார். காங்கரஸ் வேண்டுவது அதிகாரமேயன்றி சர்க்காரோடு சமரசமல்ல வென்றும் அவர் கூறுகிறார். இவ்வாறாகக் காங்கரஸ்காரருக்குள்ளேயே லடாய் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இந்தக் குழப்பத்தில் தோழர் பட்டாபி கீதாராமையாவும் ஒரு கதைகட்டி விட்டிருக்கிறார். காந்தியாரின். கடைசி நிபந்தனையை சர்க்கார் ஒப்புக்கொள்ளாவிட்டால் காந்தியார் உண்ணாவிரதமிருக்கக்கூடுமென்று தோழர் பட்டாபி கூறுகிறார். தனது சம்பந்தியான ஆச்சாரியாருக்கு உதவி புரிவதற்காக காந்தியார் ஒரு
கால் பட்டினி கிடக்கவும் கூடும். ஆனால் அப்பட்டினி கிடக்கப்போவது சாத்தான் சர்க்காரைக் கவிழ்ப்பதற்காக அல்ல வென்பதையும் சாத்தான். சர்க்காரோடு சமரசம் செய்து கொள்வதற்காகவே என்பதையும் தோழர்கள் முக்கியமாக ஞாபகத்தில் வைக்க வேண்டும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.06.1937
குடி அரசு- 1937 (1) 392.
சேர்மாதேவி குருகுலம்
காலஞ்சென்ற வ.வெ.௯. அய்யரால் ஸ்தாபிக்கப்பட்ட சேரமாதேவி ஆச்சிரமம் இம்மாதம் 7-ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள பல பிரமுகர்கள் முன்னிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாம். ஆச்சிரமத்தை நடத்தும் “பெரிய” பொறுப்பை, சென்னைகோகுல ஹரிஜன காலனி ஸ்தாபகரான பத்தமடை பி.என். சங்கரநாராயணய்யர் பலர் வேண்டுகோளின்படி
ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்
ஆனால் ஆச்சிரமப் புனருத்தாரண வேலை, சபை திக்குக் குட்டும்போதே கண்ணில் குட்டிக்கொண்ட மாதிரியே ஆரம்பமாகியிருக்கிறது. 1934 முதல் நாளிதுவரை ஆசிரமத்தில் நடந்த வேலைகளைப்பற்றி யாரோ ஒரு எல்.என். கோபால்சாமி ஒரு அறிக்கையைப் படித்தாராம். அப்பால் ஆச்சிரமம் நடத்துவதைப்பற்றி ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.
தோழர்கள் சாவடி கூத்த நயினார் பிள்ளையும் தூத்துக்குடி ராமசாமியும் பேசுகையில், “வெளியில் பல பேர்களின் அபிப்பிராயத்தில் இந்த ஆச்சிரமத்தில் முன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வராவண்ணம்
தடுக்க, தனி நிலைமையில் ஒருவரிடம் ஒப்புவிப்பதைவிட சிலரைச் சேர்த்தே நிர்வாகம் நடத்தச் சொல்வது சிலாக்கிய”மென்றும் மேலும் “ஆச்சிரமத்துக்குத் தலைமை வகிக்க ஒரு பிராமணரல்லாதார் இருந்தால் நல”மென்றும் கூறினார்களாம்
ஆசிரமத்தின் பூராச் சொத்தையும் நிர்வகிக்க காந்தியாரிடம் அதிகாரம் பெற்ற திருச்சி டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் பேசுகையில் “இம்மாதிரி தேசீய ஸ்தாபனத்தைப் புனருத்தாரணம் செய்யும் விஷயத்தில் சமூக வித்தியாசங்களைப் புகுத்தியதைப்பற்றி வருந்துவதாகவும் ஆச்சிரமம் நடைபெற வழியில்லாமல் திகைக்கும் போது சென்னை சங்கரநாராயணய்யரைக் கேட்டு அவர் ஏற்றுக் கொண்டிருப்பதினால் ஒரு
வருஷத்துக்கு அவர் நடத்த எல்லோரும் இசைந்து ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் அப்படி ஒத்துழைக்க சம்மதமில்லாவிட்டால் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் ஒரு வருஷம் கழித்து மறுபடியும் இங்கேயே ஆச்சிரமத்தில் கூட்டம் கூடி, நிலைமை திருப்திகரமாயில்லாவிட்டால் வேறு ஏற்பாடு அப்பால் செய்யலாமென்றும் தெரிவித்தாராம்
393 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தோழர் கூத்தநயினார் பிள்ளை “வகுப்பு வாதத்தை”க் கிளப்பியது தினமணி” காற்றாடிக்கும் பிடிக்கவில்லை. தோழர் கூத்தநயினார். பிள்ளையைப் பற்றி காற்றாடி குத்தலாக எழுதியிருக்கிறது. “பிராமண: சமூகத்திலும் பிற்போக்காளரானதால் சாகிப்களும், ராஜா பகதூர்களும் இல்லாமலில்லை. அதனால் அந்த சமூகத்தின் பொதுக் குணத்தை சந்தேகித்துப் பேசுவது நேர்மையாகாது. ஜஸ்டிஸ் கட்சிக்காரர் வகுப்புவாதம் பேசுவதால் பிராமணரல்லாதார் சமூகமே வகுப்புவாதிகளென்று சொல்ல முடியுமா?” என்று காற்றாடி கேட்கிறது.
தேசீய ஸ்தாபன விஷயத்தில் வகுப்பு வாதத்தைப் புகுத்தக் கூடாது என்பது உண்மையானால்-ஜஸ்டிஸ் கட்சிக்காரர் வகுப்பு வாதம் பேசுவதால் பிராமணரல்லாதாரெல்லாம் வகுப்பு வாதிகள் அல்லவென்பது மெய்யானால் காங்கரஸ்காரர் அபிப்பிராயத்தில் வகுப்புவாதியல்லாத ஒரு பிராமணரல்லா. தாரிடம் சேரமாதேவி குருகுலத்தை ஒப்புவிக்கக் கூடாதா? காங்கரஸ் ஸ்தாபனங்களும், கதர், தீண்டாமை ஒழிப்பு, ஹிந்திப் பிரசார ஸ்தாபனங்களும் பிராமணர்கள் ஆதிக்கத்திலும் தலைமையிலும் இருந்து வருகையில் சேரமாதேவி ஆச்சிரமத்தையாவது ஒரு பிராமணரல்லாதார் நிர்வாகத்தில் விட்டு ஒரு பரீட்சை பார்க்கக் கூடாதா! “மகத்தான தியாகங்கள் செய்த - இன்னும் செய்யத்தயாராயிருக்கிற பிராமணர்கள் இன்று காங்கரசில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களைப் புண்படுத்தக்கூடிய முறையில் பொறுப்பு வாய்ந்த ஒருவர் பேசலாமா?” என்று காற்றாடி மீண்டும் கேட்கிறது
ஆனால் மகத்தான தியாகங்கள் செய்த - இன்றும் செய்யத் தயாராயிருக்கிற பிராமணரல்லாதார் ஒருவராவது காங்கரசில் இல்லையா? தியாகமும், காங்கரசும், தேசீயமும் பிராமணர்களுக்கு மட்டும் காபிரைட்டா? “வகுப்புவாதம் பேசாதே பேசாதே" என்று கூச்சல் போட்டுக்கொண்டே காங்கரஸ் பிராமணர்கள் எல்லா ஸ்தாபனங்களையும் பார்ப்பன ஆதிக்கத்தில் ஆக்குவது தான் தேசீயமோ?
இப்பொழுதாவது தோழர் கூத்தநயினார் பிள்ளைக்கு சுயமரியாதை யுணர்ச்சி வந்தது போற்றத்தக்கதே. இந்த சம்பவம் மூலம் பார்ப்பனர்களின். வகுப்புவாதத்தை காங்கரஸ் பார்ப்பனரல்லாதார் உணருவார்கள் என்று நம்புகிறோம்.
ஆச்சிரமம் நடைபெற வழியில்லாமல் இருக்கையில் சென்னை சங்கர நாராயணய்யரைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் பெரிய மனது வைத்து ஒப்புக்கொண்டதாகவும் டாக்டர் ராஜன் கூறுகிறார்.
சேரமாதேவி குருகுல நிர்வாகத்துக்கு ஆள் தேட சென்னைக்கு ஏன். செல்லவேண்டும்? திருநெல்வேலி ஜில்லாவில் வேறு ஆள் கிடையாதா? சென்னையிலிருக்கும் பத்தமடை பிராமணர் ஒருவர் தானா அகப்பட்டார்?
குடி அரசு- 1937 (1) 304
சேரமாதேவி குருகுலம் அரசியல் சம்மந்தமற்றதென்றும் எல்லாக் கட்சியாருடைய ஒத்துழைப்பும் அதற்கு தேவையென்றும் ஒருவர் கூறினார். அப்படியானால் பத்திரிகையில் ஏன் விளம்பரம் செய்திருக்கக்கூடாது? வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்திருக்கும் இக்காலத்திலே ஆச்சிரம நிருவாகத்தை ஏற்று நடத்த திறமையுடைய பட்டதாரிகள் கூட முன்வரக்கூடுமே
வ.வெ.. அய்யர் ஊரார் பணத்தை வசூல் செய்து ஆச்சிரமம் ஸ்தாபித்தார். அதன் நிருவாகப் பொறுப்பை மகாதேவய்யர் கத்தியார். பனியா காந்தியிடம் ஒப்படைத்தார். அவர் ஆச்சிரமச் சொத்தை நிருவாகம் செய்யும் பூரா அதிகாரத்தையும் ஸ்ரீரங்கம் அய்யங்கார் டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜனிடம் விட்டுக்கொடுத்தார். ஸ்ரீரங்கம் அய்யங்கார் இப்பொழுது பத்தமடை அய்யரை சேர்மாதேவி ஆச்சிரமத்துக்கு சர்வாதிகாரியாகி விட்டாராம்
பாருங்கள் ஊரார் பணம்படும் பாட்டை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.06.1937
395 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஈரோடு சந்தைப்பேட்டை விபத்து
விசாரணைக் கமிட்டி முடிவு எங்கே?
பார்ப்பன சூழ்ச்சியில் ஏமாந்து விடாதீர்கள்
- ஓட்டாண்டி
வந்துவிட்டது! வந்துவிட்டது! என்ன? என்ன?? அதுதான் கமிட்டியின் முடிவு! எங்கே? அதோ! இதோ!! என்ன கயிறு என்கிறீர்களா? அப்படி ஒன்றுமில்லை, எல்லாம் பச்சை உண்மை. உங்கள் மனதில் அது படாவிட்டால் நான் ஜவாப்தாரி அல்ல. கோபிக்க வேண்டாம். சமாசாரத்தைச் சொல்லி விடுகிறேன். ஈரோடு சந்தைப்பேட்டை விபத்தைப்பற்றி விசாரிக்க இரண்டு கமிட்டி இங்கே நியமிக்கப்பட்டதல்லவா? பணம் சேகரிக்கப் பார்ப்பனரல்லாதாரடங்கிய கமிட்டியும் காரணத்தை விசாரிக்கப் பார்ப்பனர் அடங்கிய கமிட்டியும் கற்பித்தார்கள் அல்லவா? எங்கே அவர்களின் முடிவு என்று கேட்கிறீர்களா? அதுதான் வந்து விட்டது. எங்கே இன்னும் வெளியில் காணோமே என்கிறீர்களா? இது பயித்தியகார உலகம்.
நீங்களும் அதில் தானே குடி இருக்கிறீர்கள். அதனாலேதான் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. எனக்கு தெரிந்ததைச் சொல்லிவிடுகிறேன்.
விபத்திற்கு ஆளானவர்களுக்கு உதவிசெய்வது என்பது இரண்டாம்
பக்ஷம். முதலாவது என்ன என்று தெரியுமா? அதுதான் அடுத்து வரும் தேர்தல் போட்டி. எப்படி என்றால் கமிட்டிகளின் முடிவை இப்பொழுதே சொல்லிவிட்டால் பொதுஜனங்கள் கேட்டுச் சீக்கிரத்தில் மறந்து விடுவார்கள். ஆறின கஞ்சி பழங்கஞ்சி, ஆகிற காரியம் நடக்காது அதற்காகத்தான் இப்படியே விஷயத்தை இழுக்கப் போட்டுத் தேர்தல் கிட்ட சொன்னால் காரியம் கைகூடும். கறுப்புக்கோழியும் வெள்ளை முட்டையேதான் இட்டுக்கொண்டிருக்கும். பொது ஜனங்கள் விஷயத்தை ஏனோ தானோ என்று மறந்து விடவும் கூடாது. அதுதான் சூழ்ச்சியென்று என்னமோ எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் உங்கள் இஷ்டம். யோசனை மதியுள்ளோர் பிழைக்கட்டும். மயங்கினவன் உறங்கட்டும்
இன்னொரு காரணங்கூட என் மனதில் பட்டது. அது என்ன தெரியுமா? பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பது. அதற்கு எது நேர்ந்தாலும் போதும். வெறும்
குடி அரசு- 1937 (1) 396
வாய்க்கு அவல் ஆப்பிட்ட மாதிரி. தும்பினாற் போதும். பொய்ப்பிரசாரந்தான். கேட்கத்தான் மண்டூகங்கள் மந்தையாய் வருமே. சேர்மன் ஒரு சாயபு, கமிஷனர். பாதத்தில் பிறந்தவர். இது போதாதா? அவர்களை ஒழித்துவிடவேண்டும் அப்புறம் நூல் எல்லாம் ஏக போகமாய் அநுபவிக்கலாமல்லவா?
கமிட்டி முடிவு கூட யானை குட்டிபோட்ட சமாச்சாரமாய்த்தான். இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்று தெரியுமா? பார்ப்பானை விட்டுக்கொடுப்பார்களா? மாட்டார்கள். ஓவர்சீயர் ஒரு பார்ப்பனர். கண்டிராக்டர் ஒரு பார்ப்பனர். அப்புறம் கேட்பானேன்? முடிவு எப்படி இருக்குமென்று
ஆகையினால் தான் வந்து விட்டது! என்றும், இதோ! அதோ! என்றும் ஊரைப் புரளி பண்ணுகிறார்கள். தர்மஞ்செய்கிறவன் எப்பொழுதும் ஓசைப்படாமல் செய்வான். நானும் இதை ரகசியமாய்ப் பகிரங்கப்படுத்திப் போட்டேன்.
குடி அரசு - கட்டுரை - 13.06.1937
397 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பதவிமோகம் காங்கிரசுக்காரருக்கா? அல்லாதாருக்கா?
சாப்ராவில் சாரான் அரசியல் தொண்டர்கள் மகாநாடு கூடியது. அதில். தோழர் அனுக்கிரகநாராயண் சின்னா தலைமை வகித்தார். ஆனால் அம்மகாநாட்டிற்கு தலைமை வகிக்க தோழர் ஜகத்நாராயணலால் ஒத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத அசெளகரியத்தால் அவர் வரமுடியவில்லை. அவர் அம்மகாநாட்டிற்கு ஒரு சேதியனுப்பியிருந்தார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் எப்பொழுதும் தயாராயிருக்கவேண்டும் என்றும் அவர்களது சேவை தேவையான போதெல்லாம் உடனே முன்வரவேண்டுமென்றும் ஏமாற்றிவிடக்கூடாது. டிமிக்கி கொடுத்து விடக்கூடாது என்றும் குறிப்பிட்டார். இதனால் காங்கிரசில் இதுவரை கலந்து வேலை செய்து வருபவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பது விளங்கவில்லையா?
இம்மகாநாட்டிற்கு தலைமைவகித்த தோழர் அனுக்கிரக நாராயண் சின்னா தனது தலைமைப் பிரசாங்கத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இச்சிறிய - அற்ப காரியத்தைக் குறித்து மனம் பூரித்து விடக்கூடாது! கர்வங்கொண்டு தலைகால் தெரியாமல் மதுவுண்டவனைப்போல இருந்து விடக்கூடாது என்றும், சுதந்திரப்போராட்டத்தின் முதற்படியாகிய எ.பி.சி என்ற அட்சரத்தைக்கூட இன்னும் சரிவர அவர்கள் அறியவில்லை என்றும் ரஷ்யாவில் சுதந்திரத்திற்காக அந்நாட்டு வீரர்கள் எத்தகைய வீரச் செயல்கள். புரிந்திருக்கிறார்கள் என்பதையும் டக்சு தேச மக்களின் சரித்திரத்தையும் நன்கு வாசித்து அறியவேண்டும் என்றும் அவைகளைப் படித்தபின் இவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டியவர்களே யாவார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ரஷ்யாவைப்பற்றி இவர் சொல்லுவதால் ரஷ்யாவில் எம்முறை கையாளப்பட்டதோ அதே முறையை இவர்களும் கையாளவேண்டும் என்றல்ல எனவும் குறிக்கப்பட்டிருக்கிறார். ஏனெனில் இந்தியாவின் கல்வி நிலைமைக்கும் பழக்க வழக்கத்திற்கும் அம்முறைகள் ஏற்றதல்ல, அஹிம்சா முறையே நமது நாட்டிற்கு ஏற்ற முறை என்று கூறியிருக்கிறார். அதன்பின் தோழர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வேலை செய்து வந்த தொண்டர்கள் பல பாகத்திலிருந்தும் அவர்கள் காங்கிரசில் சேர்ந்து செய்த தியாகங்களைக்
குடி அரசு- 1937 (1) 398
குறித்தும், பட்ட கஷ்டங்களைக் குறித்தும் இன்னும் மற்ற காரியங்களைக்
குறித்தும் நீண்டதோர் அட்டவணை - கேட்லாக் தயார் செய்யப்பட்டு தனக்கு வந்து குவிந்து கொண்டிருந்ததாகவும் அவ்வாறு எழுதிவிட்டு தங்களுக்கு கெளன்சில்களில் ஸ்தானங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இத்தகைய மனப்பான்மையோடு கூடிய காங்கிரஸ்காரர்களின் யோக்கியதையை எந்த வார்த்தையால் விளக்குவதென்று தனக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இரண்டாவதாக அவர்களுக்கு ஆஸ்தியில் உள்ள ஆசை அவர்களை விட்டு ஒழிந்தபாடில்லை என்றும், பணம் சேர்ப்பதில் அவர்களுக்கு ஆசையிருந்து வருவதாகவும், சென்ற சட்ட மறுப்பு இயக்கம் ஆரம்பித்த காலையில் அநேகர் சர்க்கார் அவர்களுடைய சொத்துக்களின் மேல் நாட்டத்தை செலுத்த ஆரம்பித்த உடன் காங்கிரசைவிட்டும் தாங்கள் செய்து வந்த சேவையினின்றும் விலகிக்கொண்டார்கள் என்றும்
குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, பதவியாசைக்காரர்களும் ஆஸ்தியாசைக்காரர்.
களும் காங்கிரஸ்காரர்களா? அல்லது காங்கிரஸ் அல்லாதவர்களா? என்பதும், சுயநலத்திற்காக வேலை செய்கிறவர்களும், கர்வம் சம்பாதிப்பதற்காக பொது சேவை புரிவர்களும் யார் என்பதும் இப்பொழுதாவது புரிகிறதா?
குடி அரசு - கட்டுரை - 13.06.1937
39 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
திலகர் நிதி மோசடியும் பொது மக்களும்
- “ஜஸ்டிஸ்” எழுதுவது
“திலகர் சுயராஜ்ய நிதி தவறாக நிர்வாகிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் அதனால் ஏற்பட்ட நஷ்டம் காங்கிரசுக்கே தவிர அந்நிதிக்கு பொருளுதவி செய்யாதவர்களுக்கு யாதொரு நஷ்டமும் இல்லை” என தோழர் சி. ராஜகோபாலாச்சாரி சொன்ன கூற்றை சற்று இங்கு ஆராய்வோம். இக்கூற்றில் மூன்று வகையாக குறிப்புகள் தொக்கி நிற்கின்றன. அதாவது ஒன்று காங்கிரஸ் திலகர் நிதியை தப்பாக நிர்வாகம் செய்ததாகச் சொல்லப் படுவது உண்மையல்ல. இரண்டு இந்நிதிக்கு பணம் கொடுத்தவர்களுக்குத்தான். அதைப்பற்றி குற்றங்குறைகள் எடுத்துரைக்க உரிமையுண்டு. மூன்று அதைப்பற்றி லாபமோ நஷ்டமோ காங்கிரசுக்கேெயொழிய வெளியிலுள்ளவர். களுக்கு ஒன்றுமில்லை என்பவைகளாகும். இவ்வாறு இவர் கூறியதைப்பார்த்தால்
சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் வெளியிட்ட அறிக்கைக்கும் ஆச்சாரியாருடைய கூற்றுக்கும் நெருங்கிய சம்பந்தமிருக்கிறது என்பது நன்கு தெரியவரும். அவ்வறிக்கையில் காங்கிரஸ் தலைவர் கூறுவதாவது,
பழமையானதும், வெகுநாட்களானதும் தணிக்கை செய்யப்பட்டதும், பழைய சாசனங்களோடு ஒதுக்கிவைக்கப்பட்டதுமான ஒரு விஷயத்தைக் குறித்து திடீரென்று புதிதாக அதைப்பற்றி கவலை எடுத்துக்கொள்ளப்படுவது என்றால், அதிலும் கண்ணியமுடையவர்களாயும், பைசாகூட அந்நிதிக்கு நன்கொடையாக அளிக்காதவர்களாலும் பெரிய ஆர்ப்பாட்டம் செய்வதென்றால் இதைக் குறித்து நகைப்பதைத்தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை. உபகாரிகள் திருப்தியோடு இருக்கிறார்கள். ஆனால்
சிறிதும் உபகாரஞ் செய்யாதவர்களின் ஆத்திரந்தான் பெரிதாக இருக்கிறது. இவர்களைத்தான் அடக்க முடியவில்லை...
திலகர் சுயராஜ்ய நிதியைக் குறித்து குறை கூறுகிறவர்கள், பண்டிதர். ஜவஹர்லால் எண்ணப்படியும், தோழர் ராஜகோபாலாச்சாரியாருடைய எண்ணப்படியும் காங்கிரசின் விரோதிகளேயாவர். இங்கு எழக் கூடிய கேள்வி காங்கிரசுக்கு உதவி செய்தவர்கள் இன்னவர்கள், அல்லாதவர்கள்.
குடி அரசு- 1937 (1) 400
இன்னவர்கள் என்று காங்கிரஸ்காரர்களில் சுட்டிக்காட்ட முடியுமா? அல்லது காங்கிரசிடம் திலகர் நிதிக்குபகாரஞ் செய்தவர்களின் பெயர் ஜாபிதாவாவது இருக்கிறதா? அத்தகைய ஜாபிதா அவர்களிடம் இல்லாமல் இருக்கவும் முடியாது. ஏனெனில் ஒரு கோடி ரூபாயும் பணம் படைத்த பெரிய முதலாளிகளிடத்திலா வசூல் செய்யப்பட்டது? இல்லை ஏழைணியவர்களிடத்திலும், ஆண்களிடத்திலும், பெண்களிடத்திலும், பள்ளிச்
சிறுவர்களிடத்திலும், சிறுமிகளிடத்திலும், கலாசாலை மாணவர்களிடத்திலும் மாணவிகளிடத்திலும் வசூல் செய்யப்பட்டது. இன்னும் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் தொண்டர்கள் வீடுவீடாய் வாயில் தோறும் சென்று உண்டிப்பெட்டி ஏந்தி நின்று வசூல் செய்த நிதி என்பதை ஒருவரும் மறந்துவிடக் கூடாது. இது தவிர பொது கூட்டங்களில் பொது ஜனங்களிடத்திலும் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் கூட்டங்களில் பேசப்படும் வேகத்தின் உணர்ச்சியாலும், உற்சாகத்தாலும் பெண்கள் தங்கள் தங்க நகைகளையும் கழற்றிக்கொடுத்திருக்கிறார்கள். இத்தனை வகையிலும் சேர்ந்த நிதியல்லவா திலகர் சுயராஜ்ய நிதி? தெளிவாகச் சொல்லவேண்டுமானால் காங்கிரஸ் 185 புத்தகத்தில்
அந்நிதிக்கு உதவிசெய்தவர்களில் அநேகருடைய பெயர்கள் பதிவு செய்யாமல் சேர்க்கப்பட்ட பொதுநிதிதான் திலகர்நிதி. காங்கிரஸ்காரர்களுக்கே அந்நிதிக்கு உதவி செய்தவர்களின் பெயர்களை இன்னார் இன்னார் என்று
விளக்கிக் காட்ட முடியாத நிலைமையிலிருக்கையில் அந்நிதியைப்பற்றி குறை கூறுபவர்கள் உபகாரஞ் செய்யாதவர்கள் என்று எவ்வாறு சொல்ல முடியும்?
திலகர் நிதி மோசடியை வெளிப்படுத்தியது, காங்கிரசின் எதிரிகள் “காங்கிரசுக்கு எதிர் பிரச்சினையாகச் செய்யப்படும் காரியம் என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் நினைத்திருக்கக்கூடும். ஆதலால் இச்சமையத்தில், இம்மோசடியைக் குறித்து வெளிப்படுத்திய மாஜி காங்கிரஸ்வாதிகளும், காங்கிரஸ் அபிமானிகளுமான தோழர்கள்
எம்.ஆர். ஜெயகர், ஜி.வி. கெத்கார், பி.வி. மஹாஜன் ஆகியவர்களின் விமர்சனம் ஒரு நாளும் காங்கிரசின் எதிரிகளால் செய்யப்பட்ட காரியமென்றோ அல்லது காங்கிரசின் மானத்தை குறைக்கச் செய்யப்பட்ட காரியமென்றோ சுலபமாகக் கருதிவிட முடியாது. இவ்வாறு திலகர் நிதியைக் குறித்து குற்றங் சொல்லுகிறவர்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பிரசாரஞ் செய்வதற்கு உபயோகப்படுத்தும் காரியங்களில் இதுவும் ஒன்று என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொன்ன குற்றச் சாட்டிற்கு, மகாராஷ்டிரா மாகாண காங்கிரஸ் கமிட்டியின் மாஜி செகரெட்டரி தோழர் பி.வி. மஹாஜன். “மராட்டா” என்ற பத்திரிகையில் பின் வருமாறு எழுதியிருக்கிறார்:-
“தோழர் எம்.ஆர். ஜயகர் சத்தாராவில் பேசினதைக் கண்டித்து
எழுதும் பொழுது ஒரு தேசீய பாஷைப் பத்திரிகை தோழர்கள் ஜயகர் கத்காரும் இன்னுமுள்ளவர்களும் ஏன்? தோழர் சி.ஆர். தாசும் தான் 401௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
இம்மோசடிக்குப் பொறுப்பாளிகளாயிருந்ததோடு மற்ற தொண்டர்களையும் கையாடச்செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டியிருந்தது. எங்களுடைய தலைவர்களை -அவர்களும் தோழர் ஆச்சாரியாரைப் போன்ற பெரிய தேசபக்தர்கள் என்று நான் நினைக்கின்றேன் - ஆதரிப்பதற்காக பொதுஜனங் களுக்கு முன் இவ்வருவருப்பான காரியமாகிய பழைய கணக்குகளை தெளிவாக உள்ளதை உள்ளவாறு ஒன்றும் ஒளி மறைவில்லாமல் வெளியிடுகிறேன். நான் இவ்வாறு இக்காரியங்களை வெளியிடுவது காங்கிரசுக்கு எதிர்ப்பிரசாரம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அல்ல, என்னுடைய சொந்தபாதுகாப்புக்காகவே செய்கிறேன். ஆகவே
திலகர் நிதியின் மோசடியைப் பற்றி விளக்கியவர் மாகாண காங்கிரஸ்
கமிட்டியின் மாஜி செகரட்டரி லோகமானிய திலகருடைய பேரப்பிள்ளை, காங்கிரஸ் ஆணையின்படி நடந்து பல தடவை சிறைசென்றவர் என்பதை மனதில் வைத்துக்கொண்டால் இக்காரியங்கள் காங்கிரசுக்கு எதிர்ப்பிரசாரமாக செய்யப்படும் காரியங்கள் என்பதற்கு யாதொரு ஆதாரமுமில்லை என்பது நன்கு தெரியவரும். இக்காரியங்கள் காங்கிரசின் நாற்றத்தை ஒழித்துவிட்டு காங்கிரசின் பழைய நிலையை அடையச் செய்வதற்காக காங்கிரசுக்காகச் செய்யப்படும் காரியங்கள் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது
திலகர் நிதியைக் குறை கூறுவதற்கு காங்கிரஸ்காரர்களுக்குத்தான் உரிமை யுண்டு என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்து வருகிறார்கள். போலும்! ஆனால் அவர்கள் காங்கிரஸ் ஒரு கட்சியல்ல, தேசமே காங்கிரஸ் என்று பறை சாற்றவில்லையா? அவர்கள் கூறியபடி தேசமே காங்கிரஸ் என்றால் ஏன் அவர்களே இப்பொழுது காங்கிரஸ்காரர். என்றும் காங்கிரஸ் அல்லாதார் என்றும் பிரிக்கவேண்டும்? மேலும் தேச விஷயத்தைப்பற்றி கேட்கும் உரிமையை காங்கிரஸ் அல்லாதாருக்கு ஏன். மறுக்க வேண்டும்? அவர்களுக்கு சாதகமான காரியங்களானால் தேசமே காங்கிரஸ் என்றும் ஒவ்வொருவரும் காங்கிரசின் அங்கத்தினர்தான் என்றும் காங்கிரஸ் இத்தேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரதிநிதியாக விளங்குகிறது என்றும் நாக் கூசாமல் கூறிவிடுவார்கள். தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமென்றோ அல்லது தங்களுக்கு சங்கடமான நிலைமை ஏற்பட்டுவிடுமென்றோ அல்லது தங்கள் மானம் கப்பல் ஏறிவிடும் என்றோ. கருதினால் உடனே தங்கள் ஸ்தாபனம், தங்களைத் தவிர மற்றவர்களுக்கு இதில் வேலை இல்லை, மற்றவர் குறைகூற அருகதையற்றவர்கள் என்றும், அவர்கள் பணத்தை எவ்விதமானாலும் உபயோகப்படுத்துவார்கள். அதனால் வரும் லாபம் நஷ்டம் அவர்களைச் சார்ந்ததைத் தவிர மற்றவர்களுக்கு அதில் ஒன்றும் பங்கு இல்லை என்றும் அதே நாவால் கூறிவிடுவார்கள்.
ஆனால், திலகர் நிதி பொது மக்களிடம் வசூல் செய்யப்பட்ட
நிதி யென்பதையும் இதைப்பற்றி ஒரு அணா பைசாவரையும் கணக்குக் கேட்க பொதுமக்களுக்கு உரிமைஉண்டு என்பதை மறுமுறையும் தோழர்.
குடி அரசு- 1937 (1) 402
ராஜகோபாலாச்சாரியாருக்கு நினைவூட்டுகிறோம். வேண்டுமானால் தோழர்கள் ஜி.வி.கத்கார், பி.வி. மஹாஜன் முதலியவர்கள் காங்கிரஸ்காரர்களும் அல்ல, அனுதாபிகளும் அல்ல என்று ஒரு வேளை தோழர் ஆச்சாரியார். கூறக்கூடும். ஆனால் அவர்கள் இந்தியர்கள் அல்ல என்று சொல்ல முடியாது. இந்தியர்கள் என்ற ஹோதாவில் தேசீய ஸ்தாபனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிற - பெருமையடித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் ஸ்தாபனத்தின் குற்றங் குறைகளை எடுத்துக்காட்டி அதன் பொது வாழ்க்கையின் ஒழுக்கத்தையும் அரசியல் ஒழுக்கத்தையும் சீர்திருத்தம் செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு. திலகர்நிதியை தாறுமாறாக நிர்வாகள் செய்ததால் வந்த நஷ்டம் காங்கிரசுக்கு மட்டுமல்ல தேசத்துக்கே பெரும் நஷ்டமாகும். ஏனெனில் தேசம் தான் அதற்கு பணம் கொடுத்தது தலைவர்களுடைய கண்ணியமான பெயர்களும் உபயோகப்படுத்தப்பட்டன. காங்கிரஸ்காரர்கள் இத்திலகர் நிதியை நிர்வகித்த திறமையிலிருந்து இந்தியர்கள் பெரு நிதியை நிர்வகிக்கும் லட்சணம் எவ்வளவாக மதிக்கப்படும்? திலகர் நிதி மோசடி இந்தியாவுக்கு அவமானமும் இந்தியர்களுக்கு நிந்தையுமல்லவா? காங்கிரசின் மோசடியாகிய செளத்
சீ பப்பிள்ஸ் (South sea Bubbles) யைப்பற்றி ஏன் மற்றவர்கள் பேசக்கூடாது? அது தங்களது சொந்த விஷயம் என்று ஏன் சொல்ல வேண்டும்? இந்நிதிக்கு உதவி செய்யாதவர்கள் குற்றங்குறை சொல்லக்கூடாது என்று தோழர் ஆச்சாரியார் சொல்வது எதைப்போல் இருக்கிறதென்றால் ஒரு பொது கொள்ளையடித்த கள்வனை - மோசக்காரனை பிடித்துக் கேட்கும்போது
“நீ அந்நிதிக்கு உதவி செய்தவனல்ல, ஆதலால் உனக்கு என்னைக் கேள்வி கேட்கவோ விவரஞ் சொல்லும்படி கேட்கவோ உனக்கு உரிமை இல்லை. இந்நிதிக்கு யார் யார் உதவி செய்தார்களோ அவர்களுக்கு
பதில் சொல்லிக் கொள்ளுவேன். ஆனால் அந்த லிஸ்டு கைவசமில்லை''
- என்று சொல்லுவது போலிருக்கிறது.
திலகம் நிதி மோசடி
திலகர் சுயராஜ்ய நிதி தப்பாக நிர்வகிக்கப்பட்டதா? என்று சந்தேகங் கொள்ளுகிற தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரைப் போன்ற தோழர்களை திலகர் நிதியை பரிசோதிக்கும்படி - ஆடிட் செய்யும்படி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் நியடனஞ் செய்யப்பட்ட ஆடிட்டர்களுடைய ரிப்போர்ட்டை ஒரு தரம் படித்துப் பார்க்க விரும்புகிறோம்
“காங்கிரஸ் டி நிதியை மோசடி செய்து விட்டது என்றும் பொதுமக்களை தப்பான வழியில் நடத்திச் செல்லுவதற்காகக் கையாளப்படும் யோக்கியப் பொறுப்பற்ற செய்கையாகும்” என்றும் காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். இவ்வாறு மோசடி நடந்ததாக நினைக்கும்படி செய்தது அந்நிதியை வைத்து நிர்வகித்த சில காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்ட பொறுத்தமற்ற - தவறான முறையேயாகும். அவர்கள்தான்.
403 ௨ ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சந்தேகத்துக்கு இடங்கொடுத்தவர்கள் கையாடினதும் சிறிய தொகையை பிரமாண்டமான தொகை!! ஆடிட்டருடைய ரிப்போர்ட்டை கூர்மையாக ஊன்றிக் கவனித்தபின் தோழர் பி.வி. மஹாஜன் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட விஷயமாகும். அகில இ. கா. கமிட்டியால் நியமனஞ் செய்யப்பட்ட ஆடிட்டர்கள் சந்தேகங்கொண்ட முரண்பாடுகளுக்கும், செய்கைகளுக்கும் நாளதுவரை எந்த காங்கிரஸ் தலைவராவது ஆதாரத்தோடு விளக்கி சந்தேகத்தை தெளிவுபடுத்தியிருக்கிறாரா? திலகர் நிதியைப்பற்றி ஜஸ்டிஸ்” சில குற்றங் குறைகள் காணப்பட்ட போது அவைகளுக்கு தான் பதில் கூறிவிட்டதாகவும், சாதாரண கணக்கு வழக்கு தெரிந்த யாரும் சமாதானப்பட்டிருப்பார் என்றும் தோழர் ஆச்சாரியார்.
கூறுகிறார். திலகர் சுயராஜ்ய நிதியை வைத்துப் பரிபாலித்தவர்களின் கணக்கு நிபுணத்தனத்தை பின்னால் சமயம் வாய்க்கும்போது ஆராய்வோம். ஆனால் இப்பொழுது, தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கமிட்டியின் வருஷாந்திர கடைசியில் இருப்புக்கும், மறுவருட ஆரம்பத்திலிருக்க வேண்டிய இருப்புக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டினால் கணக்கு வழக்குத் தெரிந்த எவனாவது விழி கண் குருடனைப்போல வாளாக இருப்பானா? என்பதை தோழர் சி. ராஜகோபாலாச்சாரியாரையே கேட்கின்றோம்
1924ம் ஆண்டின் ரிப்போர்ட்டின் 47வது பக்கத்தில் அவ்வருட கடைசி இருப்பு ரூ.169,247-14-3 எனவும் 1925ம் வருஷத்திய ரிப்போர்ட்டின்
19ம் பக்கத்தில் அவ்வருட ஆரம்பத்தில் கையிருப்பு ரூ. 165,247-14-3 எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை, இக் கணக்கில் வித்தியாசங் காண்கிற 4000 ரூபாய்க்கும் பொருத்தமான சமாதானம் கொடுக்கப் படவில்லை. கணக்கின் முடிவிலும் துவக்கத்திலும் வித்தியாசம் ரூ.4000 இருப்பதாகக் கண்டால் கணக்குத் தெரிந்த எவனாவது சமாதானமடைய முடியுமா? காங்கிரஸ்காரர்கள் திலகர் நிதியாகிய ஒரு கோடியே 25 லக்ஷ ரூபாய்க்கு மேற்பட்ட நிதியை ஸ்வாஹா செய்த வித்தையை மறைக்க அவர்கள் கையாளும். தந்திரோபாயங்கள்தான் வேடிக்கையாக
யிருக்கிறது. அதிலும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லும் உபாயம் - ஏமாற்றச் செய்யும் தந்திரம் மிக வேடிக்கையாக இருக்கிறது.
குடி அரசு - கட்டுரை - 13.06.1937
குடி அரசு- 1937 (1) 404
காங்கிரசுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது
தோழர் எம்.என்.ராய் காங்கிரசில் பிரதான புருஷர். மிகுந்த தீவிரவாதி. பதவி ஏற்கக்கூடாது என்பவர். காங்கிரஸ் பதவி ஏற்புக்காரர் சூழ்ச்சி பலிக்காமல் போனவுடன் காங்கிரசில் பிளவு ஏற்படுவது நிச்சயமென்று ஏற்பட்டவுடன் காங்கிரஸ் முதலாளி கூட்டத்தார் காங்கிரஸ் சமதர்மக்கட்சியை விலக்க முயற்சி செய்து விட்டார்கள்.
அதாவது காங்கிரஸ் சமதர்ம வாதிகளின் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான தோழர் ஜவஹர்லால் அவர்கள் ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்றும் பிரிட்டன் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவை காலிசெய்து விட்டு கப்பலேற வேண்டும் என்றும் ஒரு புறம் பல்லவி பாடிக்கொண்டு இருக்கும்போதே மற்றொரு புறம் தோழர் காந்தி பளீரென்று ஜவஹர்லால் கன்னத்தில் அறைந்து பல்லுகளை உதிர்த்தினாற்போல் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஒரு கடுகளவு மனஸ்தாபமோ அதிருப்தியோ நேருவதாய் இருந்தால் என் உயிரை விட்டு அதை தடுப்பேன் என்று சொல்லி எப்படியாவது தனது சீஷர்களுக்குப் பதவி வாங்கிக் கொடுக்கவும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் ஜெட்லெண்ட் பிரபுவை வாக்குறுதி கேட்கிறார்... ஜெட்லண்ட் பிரபுவோ இதற்கெல்லாம் கிறிது கூட மகியவில்லை. இதை அறிந்த காங்கிரசார் கடகியாக வாக்குறுதி கேட்காமலேயே “வாக்குறுதி மறுத்ததிலேயே வாக்குறுதி அளிக்கும் வாசனை இருக்கிறது" என்று சொல்லி காங்கிரஸ்காரர்கள் வாக்குறுதி இல்லாமல் மந்திரி பதவி ஏற்றுக்கொள்ளத்தயாராய் இருப்பதாகவும் சீக்கிரம் சட்டசபை கூட்டம் கூட்டும்படியும் கவர்னர்களுக்கு மானச விண்ணப்பம் போட்டுக் கொண்டிருப்பதை தோழர் எம்.என்.ராய் அவர்கள் உணர்ந்த உடன் அந்தப் பெருமை தனக்கே இருக்கட்டுமென்று மத்திய மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தீர்மானம் அனுப்பிவிட்டார். அதென்னவெனில்,
“கவர்னர்கள் அழைத்தால் காங்கிரஸ்காரர்கள் உடனே போய் மந்திரி
பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்குறுதி கேட்பதில் பயனில்லை”
“ஜெட்லண்ட் பிரபு காங்கிரஸ் கேட்ட வாக்குறுதி தரமுடியாது என்று சொல்லி விட்டார்”
405 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
“காங்கிரசுக்கு அரசியல் திட்டத்தை ரத்து செய்ய ஏற்படும் நிலையை சமாளிக்க சக்தி இல்லை”
“வாக்குறுதி மறைமுகமாகத் தரப்பட்டு விட்டது. ஆகவே உடனே
மந்திரிபதவி ஏற்று நடத்த வேண்டும்” என்று முன்னுக்கு பின் முரணாய் உளறிக்கொட்டி தீர்மானங்கள் அனுப்பி இருக்கிறார். எனவே காங்கிரஸ்காரர்கள் நடத்தையும் வீரமும் நாணயமும் எவ்வளவு ஊழலாகவும் கேவலமானதாகவும் இருந்தாலும் காங்கிரஸ்காரர் களுக்கு புத்தி வந்து சமதர்மக்கார வீரர்கள் உள்பட அடியோடு சரணாகதி அடைந்து விட்டார்கள் என்பது விளங்குகிறது இனி சர்க்கார் ஒருபடி உயருவார்கள். லார்டு வில்லிங்டன். காங்கிரசிடம் ஒத்துழையாமையும், சத்தியாக்கிரகமும், சட்ட மீறுதலும் கைவிட்டு விட்டோம் என்று வாக்குறுதி தரும்படி கேட்டு எப்படி அடக்கி ஆண்டு வெற்றிபெற்றாரோ அதே போல் இப்போதும் சீர்திருத்தத்தை உடைக்கிறேன், வெள்ளைக்காரர்களை விரட்டுகிறேன் என்கின்ற பேச்சை வாப்பீஸ் வாங்கிக்கொண்டு புத்தி வந்தது என்று சொல்லுகிறவரையில். விட மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரி ஆசையை ஆசை வெட்கமறியாது என்பது போல் அவ்வளவு இழிவான முறையில் காட்டிக்கொண்டார்கள். ஆகவே பொதுவுடமை, சமதர்மம், பூரண சுயராஜ்யம், ஏகாதிபத்தியத்தை ஒழித்தல், சீர்திருத்தத்தை உடைத்தல் ஆகிய எல்லாம் மந்திரி பதவிப் பிச்சை கேட்பதற்கு ஆகப் பாடின சண்டித்தனமான பாட்டாக முடிந்துவிட்டது.
குடி அரசு - தலையங்கம் - 20.06.1937
குடி அரசு- 1937 (1) 406
குருகுலம்?
மறுபாடியும் பார்ப்பன ஆதிக்கமே
திருநெல்வேலி ஜில்லா சேரமாதேவியில், காலஞ்சென்ற வி.வி.எஸ். அய்யரால் நடத்தப்பட்டு வந்த பரத்துவாச ஆச்சிரமம் என்றும் குருகுலம் என்றும் பெயர் வழங்கப்பட்டுவந்த ஒரு ஸ்தாபனத்தைப்பற்றிய கதைகள் பூராவும் தென் இந்திய மக்களுக்கு ஞாபகமிருக்குமென்றே கருதுகிறோம்.
இந்தக் குருகுலக் கதைதான் தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, பி. வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் பார்ப்பனர்களுடைய அதிருப்திக்காளாகவும் காங்கிரசில் இருந்து விலகவும் நேர்ந்த காரணமாகும்.
காங்கிரஸ் உதவி
இந்த குருகுலமானது “தேசபக்தர்களையும் தேசிய வீரர்களையும் உற்பத்தி செய்வதற்கு'' ஆரம்பிக்கப்படுகிறது என்று தோழர் வி.வி.எஸ். அய்யர் ஆரம்பித்தபோது சொன்ன காரணமாகும். அதற்கு ஆக மாகாண காங்கிரசை உதவித் தொகை கேட்டபோது மாகாண காங்கிரஸ் கமிட்டியானது ஒரே அடியாய் பத்து ஆயிர ரூபாய் சாங்கிஷன் செய்து விட்டது. ஏனெனில் அந்தக் காலத்தில் திலகர் நிதிப்பணம் ஓட்டாஞ் சல்லிபோல் குவிந்து கிடந்தது. யாராவது ஒரு பார்ப்பனர் விண்ணப்பம் போடவேண்டியதுதான் தாமதம். உடனே சாங்கிஷன் ஆகிவிடும் அந்தக்காலத்தில் தோழர்கள் ஈ.வெ.ராமசாமியும் ஒரு கே.எஸ்.சுப்பிரமணிய அய்யரும் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசிகளாய் இருந்தார்கள். இப்படி இருவர் கூட்டுக் காரியதரிசிகளாய் இருந்ததில் இவர்களுக்குள் காங்கிரஸ் வேலை பிரித்துக் கொள்ளப்பட்டது. அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமிக்கு பிரசாரமும் செக்கில் கையெழுத்துபோடும் வேலையும் தோழர் சுப்பிரமணிய அய்யருக்கு மற்ற கடிதப்போக்குவரத்தும் கடிதங்களுக்கு ஆதாரங்களுக்கும் கையெழுத்துப்போடும் வேலையுமாக பிரித்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வ.வெ.௬. அய்யர் குருகுலத்துக்கு காங்கிரசானது ரூபாய் பத்து ஆயிரத்துக்கு தோழர் ஈ.வெ.ராமசாமியை செக்கு கேட்டபோது தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ரூபாய் கொடுப்பதில் குருகுல விதிகள் அடங்கிய ஆதாரமும் அந்தப்படி நடத்துவதாக ஒப்புக் கொண்ட அதாரமும் கொடுத்துவிட்டு செக்கு வாங்கிக்கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டார். இதற்கு தோழர் வ.வே.சு. அய்யர் அவர்கள்.
407 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
சம்மதித்து போனவர் ராமசாமிக்கும் தெரியாமல் கூட்டுக் காரியதரிசியிடம் 5000 ரூபாய் செக்கு வாங்கிக்கொண்டு போய்விட்டார். இந்த விபரம் 4 நாள் பொறுத்து தோழர் ஈ.வெ.ராவுக்கு தெரிய வந்த உடன் ஆபீசில் கூட்டுக் காரியதரிசிகளுக்குள் அபிப்பிராய பேதம் வந்து ஒருவருக்கொருவர். பேச்சு வார்த்தை இல்லாத அளவுக்கு மனஸ்தாபம் வந்துவிட்டது (இன்னமும் இருவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. பார்)
மறு உதவி மறுத்த காரணம் ஆகவே மறு 5000 ரூபாயை ஈ.வெ.ராவைக் கேட்க முகமில்லாமல் போனதாலும் நிர்வாகக் கமிட்டியில் நியாயம் கிடைக்காதென்று கருதியதாலும் தோழர் வ.வெ.௯.அய்யர் ஒரு மாகாணக் கமிட்டி கூட்டத்தில் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் வீட்டில் “முன் தீர்மானிக்கப்பட்ட 10000 ரூபாயில் 5000 ரூ. கொடுத்தது போக பாக்கி 5000 ரூ. இன்னமும் கொடுக்கப்படவில்லை'' என்று புகார் கூறிய உடனே கொடுக்கும்படி உத்திரவு போடவேண்டுமாய் ஒரு தீர்மானத்தை ஒரு பார்ப்பனரைக் கொண்டு பிரேரேபணை செய்யும்படி செய்தார். அது சமயம் தோழர் ராமசாமி
குருகுல நிபந்தனைகளும் அந்தப்படி நடத்திவருவதாய் உத்திரவாதமும் வந்தால் ரூபாய் கொடுக்கப்படும் என்றும் முன் வாங்கிக்கொண்ட 5000 ரூபாயே தன்தகவல் இல்லாமல் முறைக்கு மாறாகக் கொடுக்கப்பட்டு விட்டதென்றும் எடுத்துக் கூறினார். அது சமயம் கூட்டத்தில் சிறிது சமாதானம் காணப்பட்டதுடன் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் மீதும் சிலருக்கு அதிருப்தி இருப்பதாய்க் காணப்பட்டது. ஏனெனில் தோழர் வ.வே.சு அய்யர் அவர்களுக்கு இப்போது அவ்வளவு செல்வாக்கு இருந்ததும் டாக்டர் ராஜன், தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள். அவரிடத்தில் அவ்வளவு மரியாதை வைத்திருந்ததும் காரணமாகும்.
காங்கிரசில் பாம்ப்பனம் பார்ப்பணரல்லாதார் உணர்ச்சி ஆரம்பம் ஆனபோதிலும் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “நிபந்தனை இல்லாமல் முன்கொடுத்ததே தவறு" என்றும் “இப்போது மறுபடியும் கொடுக்க முடியாது" என்றும் “வேண்டுமானால் முன்போலவே வேறு ஒரு காரியதரிசி கையெழுத்துக்கொண்ட செக்கு வாங்கிக் கொள்வதில் ஆக்ஷ்பணை இல்லை" யென்றும் கோபமாகச் சொல்லி உட்கார்ந்தவுடன் அந்த கூட்டத்தில். பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வாசனை அப்போது தான் முதல் முதலாய் கிளம்ப ஆரம்பித்து விட்டது
இதைப்பார்த்துக்கொண்டு இருந்த தோழர் டாக்டர் வரதராஜுலு அவர்கள் “அய்யர்வாள் குருகுலத்தில் சாப்பாட்டில் ஜாதிபேதம் பாராட்டுவதாக எனக்குப் பல கடிதங்கள் வந்திருக்கின்னன. ஆனால் நான் அவற்றை “தமிழ்நாடு” (வாரப் பதிப்பு)வில் பிரசுரிக்கவில்லை" என்று சொன்னார்.
குடி அரசு- 1937 (1) 408
மற்றொருவர் (அதாவது குருகுலத்துக்கு தன் பிள்ளையை படிப்பிக்க அனுப்பியிருப்பவர்) எழுந்து “சாப்பாட்டில் மாத்திரம் ஜாதி வித்தியாசம் இல்லை படிப்பு சொல்லிக் கொடுப்பதிலும் காட்டப்படுகின்றது” என்றார். இவர் இப்போதும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்தில் இருக்கிறார்.
மற்றொருவர் குருகுலத்தில் வாத்தியாராய் இருப்பவர். அவர் தோழர். ஈ.வெ.ராவின் சமீபத்தில் வந்து ரகசியத்தில் கடவுள் பிரார்த்தனையில் கூட ஜாதி வித்தியாசம் காட்டப்படுகிறது என்று சொன்னார். இப்புகார்களின். விளக்கங்களாவன:-
சாப்பிட்டில் ஜாதி வித்தியாசமென்பது சாப்பிடுவதில் பார்ப்பனர்களுக்கு வேறுஇடமும்பார்ப்பனரல்லாதாருக்குவேறு இடமும் பிரிக்கப்பட்டிருந்ததாகும்.
படிப்பில்ஜாதி வித்தியாகமென்பது பார்ப்பனர்களுக்கு சமஸ்கிருதத்திலும் சில பாடங்களும் பார்ப்பனரல்லாதாருக்கு தமிழில் மாத்திரம் பாடமும் பாட புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது
கடவுள் பிரார்த்தனையில் ஜாதி வித்தியாசமென்றது,
பிள்ளைகள் காலை மாலை பிரார்த்தனைகள் செய்யும்போது பார்ப்பனப் பிள்ளைகள் சமஸ்கிருதத்தில் பிரார்த்தனைப் பாட்டுகளும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தமிழில் தேவாரம் முதலிய பாட்டுக்களும் சொல்லிக்கொண்டு பிரார்த்தனை செய்யச் செய்வதாகும் இவற்றை வெளிப்படுத்தியவுடன் அய்யர் அவர்களுக்கு கோபம் வந்து மீசையும் தாடியும் படபடவென நடுங்க “இவற்றையெல்லாம் ஒரு வித்தியாசமெனச் சொல்வது துவேஷங்களை கற்பிக்கும்” என்றும் “இதனால் தான் - இந்த தொல்லையால் தான் நான் சாதம் சாப்பிடாமல் நிலக்கடலைப் பருப்பும் தேங்காயும் வெல்லமும் சாப்பிடுவ”தாகவும் “குருகுலம் வைத்துள்ள இடம் மிகவும் வைதீகர்கள் இடமானதால் இப்படிச் செய்ய வேண்டியதாயிற்று” என்றும் கோபத்தோடு சமாதானம் சொன்னார். இந்த சமாதானத்தால் இந்தப் புகார்கள் உண்மை என்று விளங்கிவிட்டவுடன் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் டாக்டர் சாஸ்திரியார். ஆகியவர்கள் அப்படியானால் அந்த இடத்தை ஏன் தெரிந்தெடுத்தீர்கள் என்று கேட்க ஆரம்பித்தார்கள். அவ்வளவு தான் தாமதம். அங்குள்ள மற்றவர்கள் - பார்ப்பனரல்லாதார்கள் அய்யர் அவர்களை சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். வேற்றுமை உணர்ச்சி பலப்பட்டவுடன் அந்தப் பிரச்சினை அதுசமயம் மெல்ல நழுவவிடப்பட்டு விட்டது. பாக்கி 5000 ரூ கொடுக்கப்படவில்லை
பின் விளைவு
அடுத்தாற்போல் திருச்சியிலேயே கூட்டப்பட்ட ஒரு மாகாண வருஷாந்தர கூட்டத்தில் நிர்வாகசபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்
409 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
படும்போது தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் காரியதரிசியாக இருந்து செய்த வேலையையும் கொஞ்ச நாள் இடைக்காலத் தலைவராக இருந்து செய்த வேலையையும் பாராட்டி தீர்மானம் செய்து பதிந்துவிட்டு புது வருஷத்துக்கு ஈ.வெ.ரா. அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இத்தேர்தல் நடந்த உடன் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீது தோழர் வ.வெ.௬. அய்யர் அவர்கள் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். சென்னை முஸ்லீம் தோழர் ஒருவர் (தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் பாதுகாப்பில் இருந்தவர்) அதை ஆதரித்தார்.
திரு.வி.க. முதலியார் உடனே தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கு கோபம் வந்து எழுந்து மிக்க படபடப்போடு அய்யர் அவர்களிடத்தில் தனக்கு அதிக மரியாதை உண்டென்றும் ஆனால் இச்செய்கையை வெறுப்பதாகவும் கூறி, ஒரு உபந்யாசம் செய்தார். அதாவது, பாழும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அய்யர் கொண்டு வந்து இன்று புகுத்தி விட்டார் என்றும், காங்கிரஸ் ஏற்பட்டு இத்தனை காலத்துக்கு இன்றுதான் ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவரானார் என்றும் அவரது நடத்தையைப் புகழ்ந்து பாராட்டி தீர்மானம் செய்து 10 நிமிஷ காலத்துக்குள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதற்கு அன்பர் ராமசாமியார் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதுதான் காரணமே ஒழிய வேறு ஒன்றும் இல்லை என்றும் அவர் போன்றவர் கதியே இப்படி ஆனால் இனி, தம் போன்றவர் கதி என்ன ஆகுமோ என்று பயப்பட வேண்டி இருக்கிறதென்றும் கூறி கூட்டத்திற்கு எச்சரிக்கை செய்தார். பிறகு அத் தீர்மானம் 100-க்கு எதிராக 10 என்கின்ற அளவில் தோல்வி அடைந்தது. அந்த 10 வீதமும் தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் சிப்பந்திகளேயாகும்.
அய்யரின் பணவசூல்
இது இப்படியே ஒரு புறம் புகைந்து கொண்டு இருக்க, ஆச்சிரமத்துக்கும் கெட்டபேர் வளர்ந்து வருகிற நிலையில் இருக்க, அய்யர் அவர்கள் சென்னை மாகாணத்தைவிட்டு வெளி இடங்களில் பணம்
வசூலிக்கச் சென்றார். அதுசமயம் பத்திரிகைகளும் அய்யர் அவர்களை வானமளாவப் புகழ்ந்து பேசி வசூலுக்கு பெருங்கொடை கொடுக்க சிபார்சு செய்தன. தினம்தோறும் 1000, 2000 ரூபாய்கள் வசூலாவதாக பத்திரிகைகளில் சேதி வந்தன.
குறிப்பாக “தமிழ் நாடு” (வாரப்பதிப்பு) பத்திரிகையும் “நவ சக்தி” பத்திரிகையும் அய்யர்வாளை அதிமாகப் புகழ்ந்து பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி சிபார்சு செய்து எழுதி வந்தன. இந்த சமயத்தில்
குடி அரசு- 1937 (1) 410
தோழர் ஈ.வெ. ராமசாமி ஷி இரு பத்திரிகைக்கும் இறுதிக் கடிதம் எழுதி வசூலுக்கு சிபார்சு செய்யாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டும் பயன் எற்படாமல் போனதால் தோழர் ஈ.வெ.ரா. இரண்டொரு இடங்களிலும் பேசும்போது டாக்டர் நாயுடு அவர்களைக் கண்டித்து பேசியதில் டாக்டர் நாயுடு அவர்கள் உடனே தோழர் தண்டபாணி பிள்ளை அவர்களை ஈ.வெ.ராவிடம் அனுப்பி காரணம் கேட்டு சமதானம் செய்துவரச் சொன்னார்.
டாக்டர் நாயுடு, திரு.வி.க. ஈ.வெ.ரா. ஓப்பந்தம்
அந்த சமயம் தோழர் ஈ.வெ.ராவும் தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களும் மாயவரம் தோழர் சின்னையா பிள்ளை அவர்கள் கேசுக்காகவோ அல்லது அவர் விடுதலைக்கு ஆகவோ மாயவரம் சென்று இருந்த போது தோழர் தண்டபாணி அவர்கள் அங்கு வந்து
சேர்ந்து இம்மாதிரி சில பொதுக் கூட்டங்களிலும் சில பேச்சுக்களிலும் டாக்டர் நாயுடு அவர்களை கண்டித்துப் பேசியது நியாயமா?” என்று கேட்டார். அதற்கு தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் “தோழர் வ.வே.சு அய்யர் அவர்கள் குருகுலம் என்கின்ற பெயரில் ஒரு ஸ்தாபனம் வைத்து காங்கிரசிடமும் பார்ப்பனரல்லாத பெருமக்களிடமும் பெருவாரியாக பணம் வசூலித்து வருணாச்சிரம போதனை செய்து வருவதை நாயுடு அவர்கள் தெரிந்து இருந்தும் எச்சரிக்கை செய்யப்பட்டும் அய்யரை அதரிப்பது நியாயமா?” என்று கேட்டார். அதற்கு தோழர் தண்டபாணி அவர்கள் “முதலியார்வாள் ஆதரிப்பதால் நாயுடுவாளும் ஆதரிக்கிறார்” என்றார். உடனே அருகிலிருந்த தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் “டாக்டர் நாயுடு ஆதரிப்பதால்தான் நான் ஆதரித்தேன்"' என்று கூறி திருச்சியில் ஈ.வெ.ரா. பேரில் அய்யரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தான் நடந்துகொண்டதை ஞாபகப்படுத்தினார்.
உடனே அங்கு ஒரு ஒப்பந்தம் நடந்தது. அதாவது இனி யாரும் குருகுல வசூலை ஆதரிக்கக்கூடாது என்றும் வசூல் செய்வதை கண்டித்து எழுத வேண்டும் என்றும் ஒப்பந்தம் நடந்தது
குருகுலத்துக்கு பணம் கொடுப்பது தேசீய பாவம்
அந்தப்படியே வஞ்சனையில்லாமல் டாக்டர் நாயுடு அவர்கள் உடனே குருகுல விஷயமாய் தனக்கு வந்திருந்த இரண்டு மூன்று இந்திய கடிதங்களையும் இரண்டொரு மலேயா நாட்டு கடிதங்களையும் குறிப்பிட்டு “தமிழ்நாடு” (வாரப்பதிப்பு) பத்திரிகையில் ஒரு தலையங்கம் எழுதி “குருகுலத்திற்கு பணம் உதவுவது தேசீய பாவம்” என்று எழுதிவிட்டார். அதை பார்த்த பின் தோழர் முதலியார் அவர்கள் “நவசக்தி"யில் வழக்கம்போல் அதாவது முதல் இரண்டு எழுத்தை இரண்டுதரம் சேர்த்துச்சொல்லுவது போல் ஒரு தலையங்கம் எழுதினார். ம... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
ஆனால் அதன் கருத்து அய்யரின் குருகுலத்தில் ஜாதி வித்தியாசம் இருக்கிறது என்றும் இவ்வித்தியாசம் ஒழிக்கப்படாமல் அய்யர்வாள் பணம் வசூல் செய்வது ஆதரிக்கத்தக்கதல்லவென்றும் விளங்கக் கூடியதாகும். இவ்வளவுதான் நடந்தது. உடனே “தமிழ்நாடு” ஆபீசுக்கும் “நவசக்தி” ஆபீசுக்கும் பார்ப்பனக் கூட்டம் போவதும் வருவதும் மிரட்டுவதும் கெஞ்சுவதுமாய் இருந்தது. தோழர் திருவிக. முதலியார்வாள் பயந்துவிட்டார். நல்லதுமில்லாமல். கெட்டதுமில்லாமல் நாயுடு அவர்களைப் போர் முகத்தில் தள்ளிவிட்டு ஜாடையாய் ஒதுங்கிக்கொண்டார்.
நாயுடு வெற்றி.
டாக்டர் நாயுடுவாளுடைய இத்தலையங்கத்தைப் பார்த்தபின் அவருக்கு அனேக பாராட்டு கடிதங்கள் வந்து குவிந்த வண்ணமாய் இருந்தன. தோழர்கள் தண்டபாணி பிள்ளை அவர்களும் பவானி சிங்கு அவர்களும் நன்றாய் சாவி கொடுத்தார்கள். டாக்டர் நாயுடுவும் தமிழ்நாடு முழுவதும் சரியானபடி இரவு பகலாய் அலைந்து திரிந்து ஒரு பெரும் புரட்சியை உண்டுபண்ணினார். இதனால் குருகுலத்துக்கு என்று மலாய் நாட்டில் வசூலித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 30000 ரூபாய் வரையில். அய்யருக்குக் கொடுபடாமல் நின்று விட்டது.
நாயுடு - “நாயக்கர்?” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்
“டாக்டர் நாயுடு அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராயும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயும் இருந்து கொண்டு இம்மாதிரி கிளர்ச்சி செய்வது தவறு” என்று பார்ப்பனர்கள் இவர்கள் மீது கமிட்டியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சித்தார்கள். முதலில். நாயுடுகார் மீது கொண்டு வந்தார்கள். டாக்டர் ராஜன் அவர்களும் தோழர் சி.ஆர். ஆச்சாரியாரும் அத்தீர்மானத்தின் மீது பேசினார்கள். அது தோழர் ஈ.வெ.ராவால் எதிர்க்கப்பட்டு தோல்வி அடைந்தது. அதன்
பின் டாக்டர் நாயுடு மீது நம்பிக்கை இருப்பதாய் ஒரு தீர்மானம் அக்கூட்டத்திலேயே ஈ.வெ.ராவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது இவ்விரு தீர்மானங்களிலும் பெரிதும் பார்ப்பனர் ஒருபுறமும் பார்ப்பனரல்லாதார் ஒருபுறமுமாக ஓட்டுக்கொடுத்தார்கள்.
டாக்டர் ராஜன் ராஜகோபாலாச்சாரி ராஜிநாமா
மற்றும் குருகுல நடத்தையைக் கண்டித்தும் தீண்டாமை ஒழிய வேண்டியதுடன் ஜாதி பேதமும் ஒழிய வேண்டுமென்றும் குருகுலத்தில் காட்டப்படும் ஜாதி வித்தியாசத்தை உடனே நிறுத்திவிட வேண்டுமென்று அய்யரைக் கேட்டுக்கொள்வதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடி அரசு- 1937 (1) 412
அந்த நிமிஷத்திலேயே தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரியார், கே. சந்தானம், என்.எஸ். வரதாச்சாரியார் முதலிய 10 பார்ப்பனர்கள் ராஜிநாமா கொடுத்து விட்டார்கள்.
அதன் பின் அய்யர் அவர்கள் எதிர்பாராத விதமாக கால் தவறி பாபனாசம் மடுவில் வீழ்ந்து தன் மகளுடன் இறந்துபோனார். பிறகு குருகுல. விஷயமாய் பார்ப்பனரல்லாதார் கமிட்டி ஒன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நியமித்து விசாரித்து குருகுலத்தைக் கைப்பற்ற ஏற்பாடு செய்தது. அது பலிக்கவில்லை. அக்கமிட்டியில், ஈ.வெ.ரா., டாக்டர் நாயுடு,
எஸ். ராமநாதன், டாக்டர் ஆரியா, ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, வைசு. ஷண்முகம், தியாகராஜா முதலியவர்கள் வேலை செய்தார்கள். அக்கமிட்டி தோழர் தூத்துக்குடி மகாதேவையருடன் போர் நடத்தி காந்தியார் வரை இவ்விஷயம் போய் அவர்களும் வழவழ என்று சமாதானம் சொல்லிவிட்டார். அதாவது ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்று கேட்பதும் தீர்மானம் செய்வதும் குற்றமல்லவென்றும் அவரவர். இஷ்டமென்றும் பொருள்படும்படி சொல்லிவிட்டார்.
அன்று முதல் நாயுடுகார் மீது பார்ப்பனர்கள் பாடாகப் போர் தொடுத்து அவர் தலையில் கையை வைத்துவிட்டார்கள். தோழர் ஈ.வெ.ராவிடம் செல்ல முடியவில்லை. அவரும் காங்கிரசைவிட்டு வெளிப்படையாய் வெளியில் வந்துவிட்டார். டாக்டர் நாயுடு வெளிவர முடியாமல் தேசியம் பேசிக்கொண்டு அவர்களுக்குள்ளாக இருந்ததால் பார்ப்பனர்கள்
சுலபத்தில் அவருக்கு தொல்லை கொடுக்க முடிந்தது. அவரை தேர்தலிலும் பலமாகத் தோற்கடித்தார்கள். அவரது பத்திரிக்கைகளையும் நிறுத்தும்படி செய்து விட்டார்கள். பாவம்! முதலியார் அவர்களோ டாக்டர் நாயுடு அவர்கள் நிலையை படிப்பினையாகக் கொண்டு வெகு ஜாக்கிரதையாகப் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக இருந்து வருகிறார்.
மறுபடியும் பார்ப்பன ஆட்சி.
இந்த மாதிரி நிலையில் குருகுலம் நிறுத்தப்பட்டதோடு அதன்: சொத்துக்கள் தோழர் காந்தியார்வசம் ஒப்புவிக்கப்பட்டு விட்டது. தோழர். காந்தியார் மறுபடியும் ஆச்சிரமத்தையும் சொத்துக்களையும் டாக்டர். ராஜன் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஆதிக்கத்திலேயே விட்டுவிட்டார். டாக்டர் ராஜன் அதை இப்பொழுது மற்றொரு சென்னை பார்ப்பனரின் சர்வாதிகாரத்தில் விட்டு இருக்கிறார். அதைப் பொறுக்கமாட்டாத ஒரு காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் அதாவது தோழர் சாவடி கூத்தநயினார். பிள்ளை குருகுலத்தின் நன்மையை உத்தேசித்து குருகுலத்தின் பழைய கதைகளை ஞாபகமூட்டி இப்போதாவது பார்ப்பனரல்லாதார் இடமாவது அல்லது பார்ப்பனரல்லாதாரும் கலந்த கமிட்டி இடமாவது குருகுலத்தை ஒப்புவிக்க கூடாதா? இவ்வளவு கலகம் நடந்தும் இனியும் 43... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
பார்ப்பனரிடம்தானா ஒப்புவிக்க வேண்டும்” என்று கேட்டு விட்டார். தோழர் திருநெல்வேலி கூத்தநயினார்பிள்ளை உண்மை காங்கிரஸ்வாதி வயிற்றுப்பிழைப்புக்கோ பதவி மோகத்துக்கோ காங்கிரசுக்கு வந்தவர். அல்ல. தன் காலில் நிற்கக்கூடிய செளகரியம் உடையவர். அப்படியிருந்தும் அவரை இப்போது காங்கிரஸ் பார்ப்பனர்கள் உடனே வகுப்புவாதி என்று கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அதற்குச் சமாதானம் சொல்லித் தப்பித்துக் கொள்ள வேண்டிய நிலைமை தோழர் சாவடி கூத்தநயினார்பிள்ளைக்கு
வந்துவிட்டது. அந்த சமாதானத்தில் அவர் சொல்லுவதாவது:-
குருகுலத்தின் பழய சரித்திரத்தை முன்னிட்டு இந்த ஆச்சிரமத்திற்கு ஒரு பார்ப்பனரல்லாதாரை நியமிப்பது நல்லது என்று பொதுவாகக் கருதப்படுகிறது என்று நான் கூறினேன்." இதனால் நான் வகுப்புவாதி ஆய்விட்டேனா? என்று அழுகிறார்.
அது எப்படியோ போகட்டும். நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் 100க்கு 97 பாகம் பார்ப்பனரல்லாதார் இடம் வசூலித்த பணத்தில் ஏற்படுத்தப்பட்ட குருகுலம் பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற பேதத்தாலே தமிழ்நாட்டில் ஒரு பெருத்த புரட்சியை உண்டாக்கிவிட்டு அதனாலேயே அழிபட்ட ஒரு குருகுலத்தை மறுபடியும் புனருத்தாரணம் செய்ய முயற்சிக்கும்போது மறுபடியும் ஒரு பார்ப்பனரே சர்வாதிகாரியாக நியமிக்கப்படுவதென்றால் பார்ப்பனர்களின் தைரியம் எப்படிப்பட்டது என்பதை பொது ஜனங்கள் யோசித்துப்பார்க்க வேண்டுமென்று விரும்பியே பழய கதைகளுடன் இவ்விஷயத்தை வெளிப்படுத்துகிறோம். ஆகவே எப்படிப்பட்ட சுயமரியாதையும் வீரமும் உள்ள பார்ப்பனரல்லாதாரானாலும் வயிறு வளர்த்துக் கொள்ளவும் பதவி பெறவும் மாத்திரம்தான் காங்கிரசில்
இருக்க முடியுமே ஒழிய கலப்படமில்லாத ரத்த ஓட்டமிருந்தால் அரை வினாடி கூட காங்கிரசில் இருக்க முடியாது என்பதை இச்சம்பவம் ரஜுப்பிக்கிறது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.06.1937
குடி அரசு- 1937 (1) 414
காங்கரஸ் கண்ணாம்பூச்சி விளையாட்டு
“புதுச் சீர்திருத்தத்தை இந்தியா மறுத்துவிட்டது. பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியல் திட்டத்தை வகுக்க வேண்டும். அதுவே காங்கரஸ் நோக்கம். அதற்காகவே காங்கரஸ் பாடுபடப்போகிறது” என காங்கரஸ்வாதிகள் கூறுகிறார்கள்
“இந்த அரசியல் சட்டமே இப்போது இந்நாட்டில் அமலில் இருக்கும்
சட்டம். அதைப் பற்றி யார் எவ்வளவு குறை கூறினாலும் அது ஒன்றுதான். இப்போது தேசத்தின் முன் இருக்கும் பூரணமான அரசியல் சீர்திருத்தச்
சட்டம். அதைவிட முற்போக்கான சட்டம் அமைப்பதற்கு அதை ஏற்று நடத்துவதே சிறந்த வழி. இதைவிட அதிவிரைவில் இந்திய லக்ஷ்யத்தை அடையக்கூடிய பாதை வேறு இல்லவே இல்லை” என வைஸ்ராய் சென்ற
22-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் சந்தேகத்துக்கு இடமின்றிக் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் காங்கரஸ் செய்யப்போகிறது என்ன? ஒன்றில் தன் லக்ஷ்யத்தை மாற்றிக்கொண்டு புதுச்சீர்திருத்தத்தை ஏற்று நடத்த காங்கரஸ் முன் வரவேண்டும்; அல்லது சட்டசபைப் பதவிகளை ராஜிநாமாச்செய்து விட்டு பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை அமைக்கும் வேலையில் காங்கரஸ்காரர் ஈடுபட வேண்டும். இந்த வழிகளைத்தவிர
காங்கரசுக்கு மூன்றாவது ஒரு வழி இல்லவே இல்லை. இரண்டில் ஒன்றைப் பின்பற்றாமல் வாக்குறுதிப் புரளியைக் கிளப்பிப் பாமர மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவது வடிகட்டின அரசியல் மோசடியாகும். காங்கரஸ் தலைவர் ஜவஹர்லால் “பூரண சுதந்திரமே காங்கரசின் லக்ஷ்யம். அதை மாற்ற முடியாது. புதிய சீர்திருத்தத்தை ஒழிப்பதே காங்கரசின் நோக்கம்” என வாய்ப்பறை சாற்றுகிறார். காங்கரஸ் சர்வாதிகாரியாக மதிக்கப்படும் காந்தி - நாலணா காங்கரஸ் மெம்பராக இல்லாதிருந்தும் காங்கரஸ் கமிட்டிக் கூட்டங்களில் கலந்துகொண்டு கமிட்டி முடிவுகளை உருப்படுத்தும் காந்தி
- “புதிய சீர்திருத்தம்” நிறுத்தி வைக்கப்பட்டு அதனால் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும், ஏற்படக்கூடிய துவேஷத்தையும் மனக்கசப்பையும் போக்க என் உயிரை விடவும் தயாராயிருக்கிறேன்' என பகிரங்கமாகக்
கூறுகிறார். இந்த இரண்டு தலைவர்களில் யார் கூறுவதை காங்கரஸ்காரர் பின்பற்றப் போகிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. நொண்டிச்சமாதானங்கள் கூறி நாட்டை ஏய்க்கும் 45— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காலம் போய்விட்டது. வீண் விவாதத்தினால் மூன்று மாதகாலம் பாழாகி விட்டது. புதுச்சீர்திருத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாதென்பது காங்கரசின். கடைசி முடிவானால் அதை முடிவாகக் கூறிவிடட்டும்
தற்கால நிலைமை
தற்கால காங்கரஸிலே இரண்டுவித மனப்பான்மை கொண்ட தலைவர்கள் இருந்து வருகிறார்கள். ஒரு சாரார் வெறும் லக்ஷயவாதிகள். அவர்களுக்குத் தற்கால பலனைப் பற்றிக் கவலையில்லை. ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி சம்பவங்களே அவர்கள் கண்கள் மூன் நிற்கின்றன. ஏகாதிபத்தியம், டாக்டர் சி.ஆர். ரெட்டி கூறுவது போல் அவர்களுக்கு ஒரு பெரும் பூதம். அவர்கள் பார்க்குமிடங்களெல்லாம் அந்த பூதமே அவர்களுக்கு காட்சியளிக்கிறது. புரட்சி மூலம் - ஒருகால் அது கத்தி ரத்தமில்லாத புரட்சியாக இருக்கலாம் - இந்திய சுதந்திரத்தை நிலைநாட்டுவதே அவர்கள் நோக்கம். ஹிட்லர், மூஸோலினி மாதிரி சர்வாதிகாரிகளாக வேண்டுமென்பதே அவர்களில் சிலரின் அந்தரங்க எண்ணம். அவர்கள். துணிச்சலுடையவர்களாயிருப்பதினால் பாமர மக்களுக்கு அவர்களிடம்
ஒரு மாதிரி மதிப்பு இருந்து வருகிறது இரண்டாவது சாரார் காங்கரஸ் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு. பதவி பேற்று சுயலாபத்தை விருத்தி செய்யவிரும்புகிறவர்கள். அவர்களுக்கு திடமான அரசியல் லக்ஷ்யம் கிடையாது. காங்கரஸ் லக்ஷ்யம் பூரண சுயராஜ்யமாயிருந்தாலும் சுயராஜ்ஜியத்தின் சாராம்சமோ, குடியேற்ற நாட்டந்தஸ்தோ கிடைத்தால் திருப்திதான் என்பார்கள். காந்தி, ஆச்சாரியார் அக்கோஷ்டியைச் சேர்ந்தவர்களே. ஒரு காலத்தில் சாத்தான் சர்க்காரை அடியோடு வெறுத்த காந்தி, இப்பொழுது சாத்தான் சர்க்கார். கவிழ்வதைத் தடுப்பதற்கு பிராணத் தியாகம் செய்யத் தயாராயிருப்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். சென்ற மூன்று மாத விவாதங்களினால் எவ்வளவோ அரசியல் சந்தேகங்கள் நீங்கிவிட்டதாகவும், அது காங்கரசுக்கு ஒரு பெரிய வெற்றியென்றும் காங்கரஸ் அபிமானிகள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? சென்ற மூன்று மாத விவாதங்களினால் காங்கரஸ்காரரில் பெரும்பாலார் மிதவாதிகள். ஆகிவிட்டார்கள். இதை மறைக்க காங்கரஸ்காரர் பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாலும் அது வெகு சீக்கிரம் பகிரங்கமாகிவிடும். ஜூலை 5-ந் தேதி நடக்கும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு கால் அது பகிரங்கமானாலும் ஆகலாம். எது எப்படியானாலும் காங்கரஸ் மிரட்டல்களால் பிரிட்டீஸ் சர்க்கார் அஞ்சப்போவதில்லையென்பது வைஸ்ராய் அறிக்கையினால் தெளிவு படுத்தப்பட்டுவிட்டது. வாழைப் பழத்தில் ஊசி இறக்கும் சம்பிரதாயத்தைப் பின்பற்றி மிக லளிதமான. பாஷையில் ஸரஸமான முறையில் வைஸ்ராய் பிரிட்டீஷ் சர்க்கார்
குடி அரசு- 1937 (1) 416
உறுதியைத் தெரிவித்துவிட்டார். காங்கரஸ் பெருமை குன்றாதிருக்க வேண்டுமானால் வாக்குறுதிப் பேச்சை மூலையில் மூட்டை கட்டி வைத்து விட்டு பதவியேற்க காங்கரஸ் கட்சித் தலைவர்கள் மூன் வரவேண்டும் காங்கரஸ்காரர் அபிப்பிராயப்படி பெயரளவிலாவது மாகாணங்களுக்குச் சுய ஆட்சி கிடைத்திருக்கும்போது, மாகாண காங்கரஸ் கமிட்டிகள், காங்கரஸ் காரியக் கமிட்டி அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய வேண்டியிருப்பது அசம்பாவிதமான நிலையாகும். சென்ற மூன்று மாத விவாதங்களினால் காங்கரஸ்காரருக்கு இருந்து வந்த அநேக சந்தேகங்கள் நீங்கி விட்டதாகவும் அது பெரிய இலாபம் என்றும் காங்கரஸ் பத்திரிகைகளே
ஒப்புக் கொள்ளுகின்றன. அப்படியானால் மேலும் தயங்கிக்கொண்டிராமல் பதவி ஏற்க வேண்டியதுதானே நியாயம். ஆனால் பதவி யேற்க மூன் வரும்போது காங்கரசிலே பிளவு உண்டாகலாம். அந்தப் பிளவுக்கு பதவி ஏற்க விரும்புவோர் அஞ்சக்கூடாது. எந்நாளாவது ஒரு நாள் பிளவு ஏற்பட்டே
தீரும்; ஏற்படத்தான் போகிறது. ஜவஹர் கோஷ்டியாரும், காந்தி கோஷ்டியாரும் எத்தனை நாளைக்கு ஒத்துழைக்க முடியும்? பாமர மக்களை ஏமாற்றும் பொருட்டு லக்ஷ்ய வாதியான ஜவஹர்லாலை காங்கிரஸ் தலைவராக்கிய “பாபத்துக்கு” எந்நாளாவது ஒரு நாள் “பரிகாரம்” செய்து கொள்ள வேண்டியதாகத்தானே ஏற்படும். அந்தப் பரிகாரம் செய்து கொள்ள ஜவஹர் கட்சி - காந்தி கட்சி பிளவினால் ஏற்படக்கூடிய பலனை: வெகு சுளுவில் சமாளித்துக்கொள்ள இதுதான் ஏற்ற தருணம். எப்படியோ காங்கிரஸ்காரருக்கு 6 மாகாணங்களில் மெஜாரட்டி கிடைத்து விட்டது எனவே பதவி ஏற்று சாத்தியமான வரை தேச மகா ஜனங்களுக்கு நன்மை செய்தால் - ஜவஹர் கட்சியார் ஆதரவை இழந்தாலும் பொதுஜன ஆதரவைப் பெற காங்கரசுக்கு ஓரளவு வசதி ஏற்படும். இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கரஸை பலப்படுத்த காரியக்கமிட்டியார் மறந்துவிடக்கூடாதென சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தோழர் சத்தியமூர்த்தி கூறியிருப்பதின். உட்கருத்தும் இதுவேயாகும். ஆகவே ஜூலை 5-ந் தேதி கூட்டத்தில் பதவி ஏற்பதை ஆதரிக்கும் தலைவர்கள் உறுதியாக நடந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். அன்றும் காங்கரஸ் தலைவர்கள் வழவழா பல்லவிப் பாடினால் காங்கரசுக்கு சாவுமணி அடித்தாய் விடுமென்றும் எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.06.1937
47— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
காந்தியார் தலைமை
ஏலத்துக்கு வந்து விட்டது
அபேதவாதிகள் அதிருப்தி:
உலகப் பெரியாரான காந்தியாரின் தலைமைப்பதவி ஏலங்கூற வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது. நந்தியாலில் நடைபெற்ற ஆந்திர மாகாண மகாநாட்டு நடவடிக்கைகளைப் பார்ப்பவர்களுக்கு ஆந்திர தேசத்திலே காந்தியின் மதிப்புக் குறைந்து வரும் உண்மை புலனாகும்
காந்தியின் தலைமையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுவோர் அதற்கு ஆதாரமாகச் சொல்லும் காரணம் மிகவும் விநோதமாக இருக்கிறது.
காங்கரஸ் மிதவாதிகளுக்கும் அமிதவாதிகளுக்கும் பிளவை உண்டுபண்ண எதிரிகள் முயற்சி செய்கிறார்களாம். எதிரிகள் முயற்சி
பலிக்கக்கூடாதாம். அதற்காக யாராவது ஒரு தலைவரின் கீழ் நின்றுகொண்டு. ஒற்றுமையாக உழைக்க வேண்டுமாம். காந்திதான் இந்தியாவின்
ஏகபிரதிநிதியாம்; இந்திய அபிலாகைஷகளின் பிரதி புருஷனாம். ஆகவே அவரைத் தலைவராகக்கொண்டு தீர வேண்டுமாம்.
இவ்வாறு கூறுவோரின் உட்கருத்தென்ன? எதிரிகளை ஏய்ப்பதற்காக
காந்தியாரை இந்தியர்கள் தலைவராக ஒப்புக்கொண்டு தீர வேண்டுமென்பது
தான் கருத்து. உலகப் பழிப்புக்கு பயந்து, விபசாரிகளான மனைவிமாரைப்
பல கணவன்மார்கள் பத்தினிகளாகப் பாவிப்பதற்கும் இந்தக் கருத்துக்கும்
எத்தகைய வித்தியாசமுமில்லை. நந்தியால் மகாநாட்டில் காந்தியை எதிர்த்துப்
பேசியோர் வார்த்தைகளில் சிலவற்றை மாதிரிக்காக கீழே தருகின்றோம்.
ஸி. ஜகந்நாதன்
“லார்டு வில்லிங்டனைப் பேட்டி காண காந்தி விரும்பியபோது “நான் முழங்காற்படியிட்டுமன்றாடுகிறேன். எனக்கு பேட்டி கொடும்” என்று கெஞ்சினார். ஆனால் பிரிட்டிஷார் மசியவில்லை. மிதவாதிகளான காங்கரஸ்காரர் போக்கும் காந்தியாரின் விட்டுக் கொடுப்பும் காங்கரஸ் லக்ஷ்யத்தையே கீழ் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது.
குடி அரசு- 1937 (1) 418
ஆஞ்சநேயலு “காந்தியைத் தலைமைப்பதவியிலிருந்து நீக்க அபேதவாதிகள் விரும்பவில்லை. அபேதவாதிகளுக்கு காந்தியிடம் நம்பிக்கை இல்லாமலு மில்லை. அவ்வாறு கூறுவது தப்பாகும். சமீபத்தில் காந்தியார் வெளியிட்ட அபிப்பிராயங்களினால் காங்கரஸ் நிபந்தனைத் தீர்மானம் கரைந்துபோய் விட்டது. இதை பட்டாபியே ஒப்புக்கொண்டிருக்கிறார். பெஸ்ய்பூர் தீர்மானம் மாற்றமடையாதிருக்கும்வரை காங்கரசுக்கு ஜலுகை காட்ட முடியாதென்று லார்டு ஜெட்லண்டே கூறியிருக்கிறார். ஆகவே டெல்லித் தீர்மானத்தை முறுகப்பிடித்துக்கொண்டிருப்பதே மேல்"
வி.வி. சிவய்யா
“காந்திக்கு காங்கரசிலே சர்வாதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது ஆனால் "நான் ஒரு நாலணா மெம்பர் கூட இல்லை” என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அவர் ஒரு காங்கரஸ் மெம்பராக இல்லாதிருந்தும் காரியக்
கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறார். மந்திரி பதவிவேட்டைக்காரர்கள். காந்தியின் பேரால் வியாபாரம் செய்யப் பார்க்கிறார்கள்.”
அன்னபூர்ணய்யா
“காந்தி எப்பொழுதும் பணிந்துகொடுத்துக்கொண்டே இருக்கிறார். அவர் ஒருபொழுதும் வெற்றியடையவில்லை (இல்லை இல்லை என்ற கூச்சல்.) நான் இந்தக் கூச்சலால் பயப்படப்போவதில்லை. நான். சொன்னதையே திருப்பிச் சொல்லுகிறேன். பிரியும் உரிமையுடன் குடியேற்ற நாட்டந்தஸ்து இந்தியாவுக்குக் கிடைத்தால் போதுமென்று அவர் போலக்குக்கு எழுதவில்லையா? எதிரியை அன்பால் வெல்லும் காந்தி உபதேசத்தை நான் ஆதரிக்கவில்லை. நாங்கள் காங்கரசுக்குக் கட்டுப்பட்டு நடப்போம். காந்தி காங்கரஸை விட பெரியவரல்ல.."
கடைசியில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வோட்டுக்கு விடப்பட்ட போது 40 பேர் ஆதரவாகவும் 90 பேர் எதிராகவும் வோட்டுக் கொடுத்ததினால் தோல்வியடைந்ததாம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.06.1937
49... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
தென்னாட்டுக் காங்கரஸ்காரர்
பதவி வேட்டைக்காரரே
தோழர் நாரிமன் பேச்சு
வைஸ்ராய் அறிக்கையைப்பற்றி தோழர் நாரிமன் தனது அபிப்பிராயத்தைக் கூறுகையில் “தென்னாட்டிலிருக்கும் சமாதானப் பிரியர்களான (சென்னை மாகாண) காங்கிரஸ்காரர்களுக்குங் கூட வைஸ்ராயின் பிரசங்கம் சுறுக்கென்று தைக்குமென்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். பிரபல காங்கிரஸ்வாதியாகிய தோழர் நாரிமன்: கூறிய இக்கூற்றிலிருந்து தென்னாட்டு காங்கிரஸ்காரர்கள் பதவி மோகக்காரர்களென்பதும் அவர்கள் லக்ஷயமெல்லாம் உத்தியோகங்கள். பெறுவதுதானென்பதும் தேசவிடுதலையிலோ பொது மக்கள் க்ஷமத்திலோ, சுயமரியாதையிலோ ஒரு சிறிதும் கவலையில்லாதவர்களென்பதும் தெளிவாக விளங்கவில்லையா? காங்கிரஸ்காரர் பதவி மோகக்காரர்களென்று வேறு யாராவது கூறியிருந்தாலும் அந்தக் கூற்றைப் பற்றி தென்னாட்டு காங்கிரஸ்காரர்களும் பத்திரிகைகளும் வசைபாடலாம். பிரபல காங்கிரஸ்வாதியும் காங்கிரஸ் நடவடிக்கைகளில் கலந்து கொள்பவரும் பிரசித்தி பெற்ற வட நாட்டுத் தலைவர்களில் ஒருவருமாகிய தோழர் நாரிமன் கூறியவைகளை யார்தான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்?
தோழர் நாரிமன் கூறிய இவ்வுண்மை மொழிகளைக் கண்டு பொறாத ஒரு தமிழ் தினசரி பத்திரிகை வட நாட்டாரைக் குறைகூறி தென்னாட்டாரை உயர்த்திக் கூறி சமாதானம் செய்வதோடு தமிழ்நாட்டில் 215 ஸ்தானங்களுக்கு 150 ஸ்தானங்கள் காங்கிரஸ் பெற்றிருக்கிறதென்றும் நாரிமனைப் போல் வீரர்களும் சூரர்களும் நிறைந்த பம்பாய் மாகாணத்தில் 175 ஸ்தானங்களுக்கு 88 ஸ்தானங்கள்தான் காங்கிரஸ் பெற்றிருக்கிறதென்றும் இக்குறையை நிவர்த்திக்க தோழர் நாரிமன் என்ன நடவடிக்கை எடுத்துக் கொண்டாரென்றும் சவால் விடுக்கின்றது. மேலும்
“தன் வீட்டைக் காக்க முடியாதவர்கள் பிறர் வீட்டைப் பற்றிக் குறை கூற முன் வருவது வீரமுமல்ல; புத்திசாலித்தனமுமல்ல'' என்று நியாயமும் கூறுகிறதே தவிர தென்னாட்டார் பதவி வேட்டைக்காரர்கள் அல்ல என்பதற்கு ஒரு காரணமும் சொல்லவில்லை.
குடி அரசு- 1937 (1) 420
தென்னாட்டார் 159 ஸ்தானங்கள் பெற்றதற்கு காரணம் தென்னாட்டு பாமர மக்களை ஏமாற்றி வஞ்சிக்க என்றே வண்டி வண்டியாய் பொய்யும்
புளுகும் அளந்து ஏமாற்றிய காரணமே ஒழிய அரசியல் ஞானமோ தேசபக்தியோ காரணமென்று யாராவது சொல்லமுடியுமா? ஆகவே தென்னாட்டு காங்கிரஸ்காரர்கள் யோக்கியதை உலகமறிந்திருப்பது போலவே தோழர் நாரிமனும் அறிந்திருப்பதில் அதிசயமொன்றுமில்லை. காலித்தனமாக வைவதற்குத் துணிந்து விட்டதாலேயே உண்மை மறைபட்டு விடாது
காங்கிரசுக்கு நாணையமோ தைரியமோ இருந்தால் வைசிராய் அறிக்கையைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் யாரும் அபிப்பிராயம் கூறக்கூடாது என்று அடக்குமுறை உத்திரவு போட்டிருக்க முடியுமா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.06.1937
21— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24
அருஞ்சொல் பொருள்
தவச விலை
அகவிலை
மிகவும்
அத்தியந்த
ஏற்ப உள்ளது அறவே ஒழிந்து
அநுகுணம்
அடிமாய்ந்து
நீர் ஒதுக்கிவிட்ட மண்
அடி வண்டல்
அபயஸ்தம்
அடைக்கலம்
மிகு விருப்பம்
அபீஷ்டம்
அமிதமாக
அளவில்லாமல்
அயனம்
பிறப்பு, வரலாறு
நெடுங்கணக்கு (அரிச்சுவடி)
அரிவரி கணக்கு
பயனற்றது, எல்லையில்லாதது உதவியின்மை
அனந்தம்
அனாதரவு ஆக்கினை ஆவலாதி ஆஸ்பதம்
கட்டளை
அவதூறு, குறை கூறுதல் இடம், பற்றுக்கோடு
இச்சகம்
நேரில் புகழ்தல்
உபாதானம்
அரிசிப் பிச்சை
சிர்படுத்தி
உருப்படுத்தி
உணவளிக்கும் சாலை
ஊட்டுப்புரை ஏகாக்கிரஹிகள்
ஒன்றிலே மனம் ஊன்றியவர்கள்.
கலகத்துக்கு இடம்
கலகாஸ்பதம்
மறையுரை வல்லான்
கனபாடி
இஸ்லாமியர்கள் பிற மதத்தினரை இழித்து கூறும் சொல்,
காபர்
குடி அரசு- 1937 (1)
காலதேசவர்த்தமானம்
கால இடங்களின் நிலைமை
கிரியாம்சை
செய்கை
குச்சிக்காரி
விலைமகளிர்
சங்கற்பம்
மனக் கற்பனை
சம்ரச்ஷணை:
காப்பாற்றுகை.
சாங்கேதிகக் கல்விச் சாலை
கட்டுப்பாட்டில் உள்ள கல்விச்சாலை
சாமக்கிரிகை
துணைக் கருவி
சுணங்கன்
நாய்
சுதாவில். சூசனை
தன்னளவில், நேரில்
குறிப்பு, திட்டம் பணப் பேரத்தன்
செளகார் தகரப்போகணி
தகர நீர்க்கலம் (தகர பாண்டம்)
தம்பிடி தாரதம்மியம்
ஒரு காசு (757 அணா)
ஏற்றத் தாழ்வு
திரவிய சகாயம்
பொருள் உதவி
எடுத்துக் காட்டு
திருஷ்டாந்தம் துறவை துவஜாரோகணம் தேசோத்தாரண
இரகசியத்தை
கொடியேற்றம், தொடக்கம்
நாட்டு வளர்ச்சி
நசுங்குச் சேட்டை
தொடர்ந்து குறும்பு செய்தல்
நிவேதனம்
படையலமுது
கொடுமை
நிஷ்டூரம் பங்கா
பட விசிறி
பச்சவாதம்
ஒரு சார்பாக
கி.பி. 591 முதல் தொடங்கப்பட்டதும் பேரரசர் அக்பரால் நடைமுறைப்படுத்தப் பட்டதுமான அலுவலாண்டு
பசலி
பர்த்தி
இணை, ஒப்பு, படி
பரிகரித்து
நீக்கி
ஏவல் தொழில், சமையல் தொழில்
பரிசாரம்
423
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 24.
சாம்பல்
பஸ்மீகரம்
வெற்றிப்பூ, இலவமரப் பூ பொய், வஞ்சகம், குற்றம்
பூளைப் பூவு பொக்கம்
பொக்கிகள்
தறுதலைகள் பொருக்கு (தானிய நொறுங்கு) தவளை, மடயன் இன்பமான, இனிப்பான
பொக்கு
மண்டூகம் மனோகரமான
உழவர்கள், குடியானவர்கள். இனிமை, எளிமை
ரயத்துகள்
லளிதம்
வாயிலில் வெளிப்படையாக
வாயலில்
வியக்தமாக
வியாபகம்
எங்கும் நிறைந்த தன்மை தெளிவாக
ஸ்பஷ்டம்
ஸ்வரம்
உயிரெழுத்து பரிகாசம், இனிமை, காம விளையாட்டு
ஸரஸம்
க்ஷமாபிவிர்த்தி
நல மேம்பாடு
ஜபம்
மந்திரம், வழிபாடு
424
குடி அரசு- 1937 (1)