Kudi Arasu — 1936, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1936-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 23
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1936-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 512
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
தாயார் மரணத்தை வரவேற்ற பெரியார்
இந்த காலகட்டத்தில்தான் சென்னை மாநகராட்சிக்கும், ஜில்லா போர்டுகளுக்கும் தேர்தல் நடந்தன. அடுத்து சட்டசபைக்கான தேர்தலும் வர இருந்தது. காங்கிரஸ் கட்சி, இத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கிய நிலையில் காங்கிரசுக்கு எதிரான தலையங்கங்களும் பெரியாரின். சொற்பொழிவுகளும் இத் தொகுதியில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. நீதிக்கட்சியைச் சார்ந்த பார்ப்பனரல்லாதார், உள்ளாட்சி தேர்தல்களில்
கட்சி சார்பாக போட்டியிடவில்லை. உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள். சார்பில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தையே பெரியார்
வலியுறுத்துகிறார். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் சூழலில் அகில இந்திய காங்கிரசின் முக்கிய தலைவர்களான ஜவகர்லால் நேருவும், பட்டேலும் தமிழகம் வருவதன் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது ‘Gl அரசு; காங்கிரசின் பார்ப்பன கொள்கைகளை நியாயப்படுத்த வந்த நேருவுக்கு எதிராக பார்ப்பனரல்லாதார், சுயமரியாதை இயக்கத்தினர், கருப்புக்கொடி புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தினர். நேரு பட்டேல் வருகையை வைத்து, பெருமளவில் நிதி திரட்டும் பணிகளை காங்கிரஸ் முடுக்கி விட்டது. இந்த சூழ்நிலையில் சுமார் ஒரு மாத காலம் தீவிர சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசின் பார்ப்பன கொள்கைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினார். பெரியார். பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றிய பிறகு பல்வேறு துறைகளில் பார்ப்பனரல்லாதார் முன்னேறியிருப்பதை சுட்டிக் காட்டும் பெரியார், காங்கிரசாரின் சூழ்ச்சிகள் எந்த ஒரு துறையிலும் பலிக்காமல் தடுத்து, ராமராஜ்யம்” பேசிய காந்தியாரை மூலையில் உட்கார வைத்தது இந்த இயக்கமே என்று தமது சொற்பொழிவுகளில் பார்ப்பனரல்லாதார். இயக்கத்தின் சாதனைகளை மதிப்பிடுகிறார். காங்கிரசுக்கே தேர்தல்களில் வெற்றி மேல் வெற்றி ஏற்பட்டாலும்கூட, அவ்வெற்றிகளை எல்லாம் பார்ப்பனரல்லாதாருக்கான உரிமைகளுக்கு உரமாக்கியது, நமது ஓயாத உழைப்புதான் - என்று பெரியார் கூறுவது ஆழமான சிந்தனைக்குரியது காங்கிரசின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தமது கொள்கையை வெற்றியை நோக்கி நகர்த்தும் பெரியாரின் ஆற்றலை உணர முடிகிறது
பெரியாரின் தாயார் சின்னத்தாயம்மாள் “முடிவுக்கு பெரியார் எழுதிய இரங்கல் தலையங்கம் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது
அதில் தமது வாழ்க்கை வரலாற்றையே சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.
“மூடநம்பிக்கைகளுக்கும் குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் விளங்கியவர் எனது தாயார்” என்று ஒளிவு மறைவின்றி குறிப்பிடும் பெரியார், “எனக்கு அவர் முடிவெய்தியைப் பற்றி உண்மையிலேயே
மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கல்யாணம் செய்து விட்டுச் சாக வேண்டுமென்பதே. எனது கோரிக்கை. எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திட வேண்டுமென்பதே. என் இஷ்டம் நிறைவேறிற்று. மகிழ்ச்சி! மகிழ்ச்சி! பூரண மகிழ்ச்சி” என்று, அந்த இரங்கல் உரை இலக்கியம் முடிவடைகிறது
கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி. மறைவுக்கு - 'சிதம்பரம் சிதைவு' என்று 'குடி அரசு' தலையங்கம் தீட்டியது. வ.உ.சி. “சூத்திரர்! என்பதால் புறக்கணிக்கப்பட்ட அவலத்தைப் பதிவு செய்கிறது அத் தலையங்கம்
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கக் கோரியும், “தீண்டப்படாத'
மக்களுக்கு சமூகத்தில் சம சுதந்திரத்தை வலியுறுத்தியும், இந்திய சட்டசபையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த எம்.சி. ராசா இரண்டு மசோதாக்களைக் கொண்டு வந்தபோது அதை உடனடியாக ஏற்காமல் அது குறித்து - ஆட்சி, பொதுமக்கள் கருத்து கேட்க முடிவு செய்ததை குடி அரசு' வன்மையாக கண்டிக்கிறது. விருதுநகரில் - நீதிக்கட்சி கூட்டத்தில் பெரியாரின் சொற்பொழிவு -வட்டமேசை மாநாடுகளில் காந்தியின் அலங்கோலத்தை விரிவாக எடுத்துரைக்கிறது.
1924 இல் வைக்கத்தில் பொது வீதியில் தீண்டப்படாத மக்கள் நடக்க உரிமை கோரி பெரியார் போராடினார். அதே திருவாங்கூர் சமஸ்தானம்
12 ஆண்டுகளுக்குப் பிறகு சமஸ்தானத்துக்குட்பட்ட அனைத்துக் கோயில் களிலும் தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைவரும் நுழையும் உரிமையை வழங்கியது. இது பற்றி “திருவாங்கூர் பிரகடனம்” எனும் தலைப்பில் வெளிவந்துள்ள தலையங்கம், திருவாங்கூரில் நிலவிய பார்ப்பனர்களின் ஆதிக்கம் பற்றிய அதிர்ச்சியான தகவல்களை முன் வைக்கிறது. வைக்கம் போராட்ட வெற்றியின் தொடர்ச்சி தான் - திருவாங்கூர் பிரகடனம் என்று பெரியாரை பாராட்டும் கூட்டம் ஒன்று நடக்கிறது. அந்தப் பாராட்டுக் கூட்டத்திலேயே பேசிய பெரியார், “நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும், வைக்கம் சத்தியாகிரகம் மூலம் என்பதை ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறுகிறார், தீண்டாமைக்கு எதிராக, தீண்டப்படாத மக்கள் மதம் மாறத் தொடங்கியதும், அப்படி மதம் மாறக் கோரி வலியுறுத்தி, கடவுள், மதத்துக்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரம் தந்த நெருக்கடியுமே, இதற்குக் காரணம் என்று கூறுகிறார்.
கிராம வாழ்க்கையும் ஆசிரியர் கடமையும்” என்ற மற்றொரு சிந்தனையைத் தூண்டும் தலையங்கம் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவரும், 'குடி அரசு' இதழ்களில் பெருமைக்குரியவராக தொடர்ந்து பாராட்டப் பெறுபவருமான சர்.ஆர்.கே. சண்முகம், கொச்சியில் திவானாக பணியாற்றிய காலகட்டம் இது. வகுப்புவாரி உரிமையை மக்கள் தொகைக்கேற்ப நாயர், ஈழவர், புலையர், இதர சாதி இந்துக்கள், சாதி இந்துக்கள் அல்லாதவர், ரோமோ
- ரசியர், இலத்தீன் கத்தோலிக்கர், இதர கிறிஸ்தவர், முஸ்லீம், ஆங்கிலோ இந்தியர் என்று தனிப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை அவர் அமுல் படுத்தியதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற 'குடி அரசு' அவருக்கு கொச்சி அரசாங்கமும், கொச்சி குடிமக்களும் தனித்தனியாக இரண்டு சிலைகளை நிறுவ வேண்டும் என்று பாராட்டுகிறது
காங்கிரசில் நாலணா உறுப்பினர் கூட இல்லை என்று கூறி காந்தியார் விலகிக் கொள்கிறார். அதே போல் காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து ராஜகோபாலாச்சாரியும் விலகுவதாக அறிவிக்கிறார். இருவரின் கபட நாடகங்களையும் ‘Gl அரசு' அம்பலப்படுத்துகிறது.
தன்னுடைய கொள்கை எதிரிகளை கண்டித்து எழுதும்போதுகூட அவர்களின் பெருமைகளையும் மறைக்காமல் எழுதும் உயர்ந்த பண்பு பெரியாரிடம் இருந்ததை அவரது தலையங்கங்களிலும் சொற்பொழிவுகளிலும் காண முடிகிறது. தனது கொள்கை எதிரியான இராஜகோபாலாச்சாரியாரின் தியாகத்தை வெகுவாகப் பாராட்டும் பெரியார், 'அவ்வளவு பெரிய தியாகத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் முற்போக்குக்குப் பயன்படுத்தி இருந்தால், ஆச்சாரியார் புத்தரின் ஸ்தானத்தை அடைந்திருக்கக் கூடும்! என்று குறிப்பிடுகிறார்.
பெரியாரின் உற்ற நண்பர் வரதராஜுலு நாயுடு நடத்தி வந்த 'தமிழ்நாடு' பத்திரிகையை அவர் காங்கிரசில் சேர்ந்த சில நாட்களிலேயே
நிறுத்தப் போவதாக அறிவித்ததற்கு மிகவும் வருந்தி பெரியார் எழுதிய தலையங்கம் - பார்ப்பனரல்லாதார் பத்திரிகை நடத்துவதில் தோல்வியைத் தழுவிவிட்டனர் என்று வேதனையோடு குறிப்பிடுகிறது. பார்ப்பனரல்லாதார். பத்திரிகைகளின் இன்னல்களை பட்டியலிடுகிறது. “எத்தனை நாளைக்கு இந்த நன்றி கெட்ட சுரணை அற்ற மக்களுடன் போராடிக் கொண்டிருப்பதோடு, எத்தனை துரோகிகளின் சதிகளை சகித்துக் கொண்டிருப்பது என்கிற சலிப்பில் உயிர்வாழ வேண்டியதாய் இருக்கிறது என்று வேதனையோடு எழுதுகிறார் பெரியார்.
நீதிக்கட்சி தலைவர்கள் சிலர் சமதர்மத்துக்கு எதிராக பேசியதை
சுட்டிக் காட்டி, திரு.வி.க. பெரியாருக்கு எதிராக 'நவசக்தி'யில் எழுதிய தலையங்கத்துக்கு 'குடி அரசு' தந்த விளக்கமும், பார்ப்பனரல்லாதார். இயக்கத்தை கடும் சொற்களால் கேலி, கிண்டல் பேசிய காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி அய்யருக்கு பதிலடி தரும் தலையங்கங்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
சுயமரியாதை திருமணத்தின் அடிப்படையான நோக்கம் நாஸ்திகமா? பெண்ணுரிமையா? என்ற கேள்விக்கு, வேலூர், திருப்பூரில் நிகழ்த்திய சொற்பொழிவில் பெரியார் விளக்கமளித்துள்ளார்
தமது எழுத்து - பேச்சுகளில் எல்லாவற்றிலும் “வகுப்புவாதம்! என்ற சொல்லை பெரியார் எதிர்மறைக் கண்ணோட்டத்தில் குறிப்பிடவில்லை. வகுப்புரிமை என்ற சமூகநீதிக்கான குறியீடாகவே அச்சொல்லைப் பயன்படுத்துவதை குறிப்பிட வேண்டும்
இரங்கல் தலையங்கங்களில் “மறைந்தார் என்ற சொல்லை 'குடி அரசு' பயன்படுத்தாமல் முடிவெய்தினார். சாய்ந்தார், நலிந்தார் என்ற சொற்களையே பயன்படுத்துகிறது. 'மறைந்தார்' என்ற சொல்லில் 'பூத உடல் மறைந்து ஆன்மா வாழ்கிறது என்ற மதச் சிந்தனை அடங்கி இருப்பதால், அது தவிர்க்கப்பட்டுள்ளது.
126 தலைப்புகளில் - பெரியாரின் சிந்தனைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது இத்தொகுதி. 'குடிஅரசு' 12 ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காலமும் இதுதான்.
- பதிப்பாளர்
பொருளடக்கம்
பார்ப்பனர் யோக்கியதை
15
“தினமணிக்கு சவால்
16
பாண்டியன் - ராமசாமி பிரசாரக்கமிட்டி
20
பார்ப்பனரல்லாதார் இயக்கம்
21
தஞ்சையில் சத்தியமூர்த்தியார்.
31
“இரணியன் அல்லது இணையற்ற வீரன்!” பாண்டியன் - ராமசாமி வேண்டுகோள். எனது திட்டம்
41
43
44
டாக்டர் சுப்பராயனும் C.R. ஆச்சாரியாரும்
50
வெளிநாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்
56
காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்
57
காங்கிரசும் முஸ்லீம்களும்
65
இரு மசோதாக்கள் மருதையா பிள்ளைக்கும் மார்க்க சகாய இீக்ஷதருக்கும் சம்பாஷணை
69
73
கற்பொழுக்கம்
77
யந்திரங்கள் வேண்டாமா?
84
கிராம வாழ்க்கையும் - ஆசிரியர் கடமையும்
91
98
சபாஷ் ஷண்முகம்!
ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. ராமசாமி
103
தாயார் தாயம்மாள் முடிவு
விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம் ஸ்ரீனிவாச சாஸ்திரியார்
108
115
காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல் உடைப்பதா அனுபவிப்பதா?
118
124
தீண்டாமையும் இஸ்லாமும் பன்னிரண்டாவது ஆண்டு ராஜிநாமா நாடகம்
24
25
26
திருச்சி நீதி சாரதா சட்டத் திருத்த மசோதா.
27
28
141
காங்கிரசும் பார்ப்பனீயமும்
29
1926 - @ நாடகமே இப்போதும்
30
151
காங்கிரஸ் கட்டுப்பாடு
31
பொள்ளாச்சி, கோவை சுற்றுப் பிரயாணம்
32
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
33
161
கழுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?
34
167
சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி
35
மத நம்பிக்கைக்கு சாவுமணி
36
170
காங்கிரசும் வகுப்புவாதமும்.
37
174
38
காங்கரஸ் நாடகம்
39
184
காங்கரஸ் ஆர்ப்பாட்டம்
40
காங்கரஸ் அனுபவம்
188
41
189
காலித்தனம்
42
192
இரண்டும் உண்மையே
“ஏழைப் பங்காளர்” சத்தியமூர்த்தி!
43
194
44
மறுபடியும் வெளியேறும் நாடகம்
195
45
196
காங்கரஸ்காரர் பித்தலாட்டம்
46
தேசீயப் பத்திரிகைகளின் போக்கு
208
47
211
சுதேச சமஸ்தானமும் வகுப்புவாதமும்
48
பிரஜா பிரதிநிதித்துவ சபை
கூட்டுவதின் கருத்து வரப்போகிறார்களாமே!
221
49
222
பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்களின் உதவி
50
224
51
226
தற்கால அரசியல் ஜவஹர்லால் வருகை பார்ப்பனர் சூழ்ச்சி
52
235
கலகக்காரர்களுக்கு காங்கிரசில் வெற்றி
53
239
தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு
54
242
ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சரிக்கை!!
55
257
மறுபடியும் தொல்லை ஆதாரமற்ற நம்பிக்கைகள்
56
262
57
264
நாம் எதை நம்பலாம்? எக் காரணத்தால்?
58
269
காங்கிரஸ் ஏற்பட்டது பிரிட்டீசாரை வாழ்த்தவே ணு இன்னுமா சந்தேகம்?
59
273
60
279
61
284
காலித்தனத்தின் வளர்ச்சி
62
286
வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கும் சம்பந்தமென்ன?
63
288
ஜவஹர்லால் நாடகம்: பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?
64
293
65
303
கருப்புக்கொடி
66
310
கோபியில் நடந்தது என்ன?
67
317
சிவில் ஜெயில் இல்லை
68
318
69
ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்களில் வரவேற்பில்லை.
319
பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டிக்கு கோலாலம்பூர் விஸ்வலிங்கம் உதவி
70
321
பண்டிதர் கேள்விக்கு பதில்
71
322
327
72
அறிக்கை
73
328
ஜவஹர்லால் வரவு செலவு
காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக் கொள்ளுபவருக்கும் சுயமரியாதை ஜஸ்டிஸ்காரருக்கும் நடந்த சம்பாஷணை சம்பாஷணை
74
334
75
340
தீபாவளிப் பண்டிகை
76
343
சாஸ்திரியாரே இதற்கு சர்வாதிகாரியாக வேண்டியதில்லை
77
349
78
பட்டேல் வருகிறார் பணப்பை ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
351
கார்ப்பரேஷன் தேர்தலில் பார்ப்பனர் வெற்றி
79.
355
கதர்த் தத்துவம்: கணக்குத் தெரியவேண்டுமா?
80.
359
81.
366
முஸ்லீம்களும் காங்கிரசும் ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்ளிஷிங் சொசைட்டி (லிமிடெட்)
82
367
83
369
கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை
84
370
மகன் செத்தாலும் மருமகள் “முண்டை” ஆகவேண்டும் தண்ணி மயக்கமா? ஆணவ மயக்கமா?
85
374
86.
376
நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்
87.
380
பட்டம் துறந்த பதி விரதைகள். கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை
88,
383
89
385
பட்டேல் வருகிறாராம்! பத்து லக்ஷம் வேண்டுமாம்!!
90
யார் வீட்டு சொத்து!!! எதற்காக!!!
390
91.
392
தளவாய் குமாரசாமி முதலியாரும் காங்கிரசும்
பொப்பிலியும் நேருவும்
92
394
சமதர்மமும் முதலியாரும் திருவாங்கூர் பிரகடனம்
93
397
94.
405
சிதம்பரம் சிதைவு
95.
412
கிராம சீர்திருத்தம் என்பது புரட்டு
96.
414
ஐவர் அறிக்கை வெறும் புரட்டு
97.
422
செட்டி நாட்டில் சமதர்மம்
98
424
காலித்தனம்
99.
426
கட்சித் துரோகம்
100
428
சமதர்மம்:
101
429
102
435
பட்டேல் பொப்பிலியில் என்ன நடந்தது?
103
436
சம்பளக் குறைப்பு
104
437
கவர்னர் வரவேற்பும் திருநெல்வேலி ஜில்லா போர்டும் அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
105
438
106
444
தர்மம் என்றால் என்ன?
107
445
108
நில அடமான பாங்கியும் நிர்வாகமும்
448
திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை
109
451
சுயமரியாதை இயக்கம்
110
455
பட்டேல் ஜாக்கிரதை!
111
459
சர்க்காரின் ஞானோதயம்
112
462
காங்கிரஸ் தலைமைப் பதவி
113
464
கோவில் பிரவேசம்
114
466
சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும்
115.
467
பட்டேல் வருகிறாராம் எதற்கு?
116
472
அடுத்த மந்திரி சபை நிலை
117
475
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்
118
481
பள்ளத்தூர், கோட்டையூரில் பிரசங்கம்
119
484
சமூக சீர்திருத்தமும் அரசியலும்
120
487
காங்கிரஸ் சுயராஜ்யம்
121
493
பட்டேல் சுற்றுப்பிரயாணமும் பணம் வசூலும்
122
497
123
499
சட்டசபை வேட்டை
தேசீயப் பத்திரிகைகளின் யோக்கியம் சட்டசபை உடைப்பது மெய்யா?
124
506
125
507
கல்யாண விடுதலை அருஞ்சொல் பொருள்
126
508
127
511
கன் தாடுவருட சத்தா ஆ. ok ar G z R No. M. 2041 “KUDLARASU” தனிப்பட விலை ஒரு ஆண குடிஅரசு
1924-4 ஸ்தாரிக்கப் டது. எப்பொருள் வாம் யார் ஊாய்க்கேட்பி, ் எப்போருளெ ந்தவ s s T i வெளிவரப். அப் வெய்பபொருள் அணைதழிவு வெல்ப்பொருள் காண்பி, ஷு o
e ரோடு e அணியி சேடி (571988 மச்ச.
1
கிளிக்கண்ணி.
[ம்நுவைங்கள் பாளையம் நர் கட்டி கண்ண கண்ட்
னி g ம aies |
அகத் செல்க கனி க
& Seisesns கோட சொ wmdiari டி L அ்பற்தம் வடி கில sz gy னிய ஆறும் சோத சென்ட்
e
கத்தல் —
D ] e செல்வா.
ட i சென்று
ப்ட் —oa2, O ] L -y க்ரில் கல்வியே
அஸ்ல் செல் கெள
பார்ப்பனர் யோக்கியதை
ஒடுக்கப்பட்டமக்களின்சிவில் உரிமைசம்பந்தமான சில குறைபாடுகளை
நீக்கும் பொருட்டு தோழர் எம்.ஸி. ராஜா இந்தியச் சட்ட சபையில் ஒருமசோதா கொண்டு வந்திருக்கிறார். அது மிகவும் மிதமான ஒரு மசோதா. பொதுஜன. அபிப்பிராயம் அறியும் பொருட்டு அது பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது
ஜில்லா கலைக்டர்களும் தமது ஜில்லாக்களிலுள்ள பொது ஸ்தாபனங்களுக்கு அந்த மசோதாவை அனுப்பி அபிப்பிராயமறிய மூயன்று வருகிறார்கள். திருநெல்வேலி, மதுரை வக்கீல் சங்கத்தார் அந்த மசோதாவை ஆதரிக்க முடியாதென்று அபிப்பிராயம் கூறிவிட்டதாகத் தெரிகிறது. தென்னாட்டு
வக்கீல் சங்கங்களில் பார்ப்பனர் ஆதிக்கம் பெற்றிருப்பது உலகப்பிரசித்தமான. விஷயம். தேவகோட்டை வக்கீல் சங்கத்தில் பார்ப்பன வக்கீல்களுக்கென. தனியாகத் தண்ணீர்ப் பானை வைத்திருப்பதையும், அந்தப் பானையில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று தடையேற்படுத்தி யிருப்பதையும் நாம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறோம். தேசீயக் கொடியேற்றுவதைப் பற்றியோ பள்ளிக்கூடங்களில் ஹிந்தி போதனை செய்வதைப்பற்றியோ தீர்மானங்கள் வந்திருந்தால் இந்தப் பார்ப்பன வக்கீல்கள். ஆதரித்துத் தமது “தேசபக்தியை'க் காட்டிக்கொள்ள தயங்க மாட்டார்கள்.
ஒடுக்கப்பட்டவர்கள் குறைகளை நீக்கும் மசோதாவை ஆதரிப்பது தான் இந்தப்பார்ப்பன தேச பக்தர்களுக்கு முடியாத காரியமாயிருக்கிறது இப்பேர்ப்பட்ட பார்ப்பனர்களின் ஆதிக்கம் மிகுந்த காங்கிரசையும் ஒடுக்கப்பட்டவர்களில் ஒரு சாரார் நம்பிக்கொண்டு இருக்கிறார்களே! "தினமணி'' “சுதேசமித்திரன்” போன்ற தேசீயப் பத்திரிகைகளும் இந்த வக்கீல் பார்ப்பனர் செயலைக் கண்டிக்க முன்வரக் காணோமே
குடி அரசு - தலையங்கம் - 05.07.1936
““தினமணி??க்கு சவால்
தென்னாட்டுப் பத்திரிகை யுலகத்தில் மழலைப்பருவங் கடவாதிருக்கும் “தினமணி” மூத்த பத்திரிகைகளைக் கிழடு தட்டிய பத்திரிகைகள் என்றும் விளக்கெண்ணெய், வெண்டைக்காய்ப் பத்திரிகைகள் என்றும் கேலிசெய்து தன்னைத்தானே விளம்பரப்படுத்தி வருவதைத் தென்னாட்டார் அறிந்திருக்கக்
கூடும். மழலை உளறலை லக்ஷ்யம் செய்யலாமா எனப் பொறுப்புடையவர்கள். அடங்கியிருப்பதினால் “தினமணி”யின் திமிர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகத்துக்குத் தானே சக்கரவர்த்தி என பாவித்துக்கொண்டு தலைகால் தெரியாமல் குதிக்கிறது. வசைபுராணம் பாடுவதில் தோழர் சத்தியமூர்த்தியையும் வென்றுவிடப் போட்டி போடுகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்குக் கருமம்செய்யத் தனக்கு இருந்து வரும் ஆவலையும் அடிக்கடி காட்டிக்கொள்கிறது. ஜுலை 2-ந் தேதி வெளிவந்த “தினமணி"யில் “நாயக்கரின் பாவனை" என்ற தலைப்புடன் எழுதப்பட்டிருக்கும் உபதலையங்கத்தில் ''தினமணி'”யின் ஆணவமும் அற்பத்தனமும் அறியாமையும் ஒருங்கே மிளிர்கின்றன. ஜுலை 1-ந் தேதி மாலை சென்னைப் பச்சையப்பன் கலாசாலை மைதானத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி நிகழ்த்திய பிரசங்கத்தைக் கண்டித்து உப தலையங்கம் எழுதப் புறப்பட்ட தினமணி!” தோழர் நாயக்கரின் பிரசங்கத்தைப் பிரசுரம் செய்யவே இல்லை. அவரது பிரசங்கத்தைப் பிரசுரம் செய்து கண்டனத்தையும் வெளியிட்டிருந்தால் இரண்டையும் சீர்தூக்கி முடிவு காண பொது ஜனங்களுக்கு வசதி வாய்த்திருக்கும். அவ்வாறு செய்யவேண்டியதே பொறுப்பும் கண்ணியமும் வாய்ந்த பத்திரிகைகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் நாக்கில் நரம்பில்லை யென்றும், பைத்தியக்காரப் பேச்சென்றும் வசை புராணம் பாடுவது “தினமணி"யின் சின்னப்புத்தியையே காட்டுகிறது. “தினமணி பத்திரிகாசிரிய மண்டலத்தார் அநாமதேயப் பேர்வழிகளாயிருந்த காலத்திலேயே, தோழர் ஈ.வெ.ராமசாமி, ''இந்தியாவில் காங்கிரசுக்கு நிபந்தனை விதிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவர் ஒருவர் உண்டென்றால் அவரே “மகாத்மாகாந்தி” என “தினமணி” ஒப்புக்கொள்ளும் பெரியாரால், நன்கு மதிக்கப்பட்டவர் என்பதை “தினமணி'' உணர்ந்திருந்தால் இவ்வளவு அற்பத்தனமாக எழுதியிருக்காது. கூட்டத்தில் யார் என்னென்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்க வேண்டியதே பொதுக்கூட்டத்தில் பேச முன்வருவோரின் நீங்காக்கடமை. பொதுக்கூட்டங்களில் நாலு வார்த்தை
குடி அரசு - 1936 (2), 16
பேசியறியாத “Hawafl” ஆசிரியருக்கு இந்தச் சாதாரண விஷயம் தெரியாதிருந்தால் அதற்கு ஏனையோர் ஜவாப்தாரிகளல்ல. “காங்கிரஸ்காரர்.
கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதிலளிப்பேன்; ஏனையோர் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்'' எனக் கூறுவதும் மேடை மீது வந்து கேள்வி கேட்டால் பதிலளிக்கலாமென்று கூறி கேள்வி கேட்பவர்களை மேடைக்கு அழைத்து அடிப்பதும் தோழர் சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் வீரர்களின் வழக்கம். பச்சையப்பன் மைதானக் கூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலாக தோழர் ஈ.வெ.ராமசாமி தமது கருத்தைத் தெரிவித்தார். இதனால் அவர் காங்கிரசில் சேரத் தவித்துக் கொண்டிருப்பதாகவோ, அல்லது காங்கிரசில் சேரத்தான் வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் வலியவந்து அழைக்க வேண்டுமென்று விரும்புவதாகவோ ஏற்படவே செய்யாது
காங்கிரசிலே, “தினமணி'' ஆசிரியர் தவங்கிடந்தாலும் பெற முடியாத ஒரு கண்ணியமான ஸ்தானம் வகித்திருந்த - காங்கிரஸ் சர்வாதிகாரியான. காந்தியாரின் நன்மதிப்புக்குப் பாத்திரராயிருந்த - தோழர் ஈ.வெ.ராமசாமி,
தாம் காங்கிரசிலிருந்து பிரிவதற்குள்ள காரணங்களை அப்பொழுதே விளக்கி கூறியிருக்கிறார். தம்மைப் போன்றவர்கள் சம்மந்தம் வைத்துக்கொள்ள. முடியாதவாறு தற்கால காங்கிரஸ் அவ்வளவு சீரழிந்து கிடப்பதையும் அவர். பலமுறை விரித்துக்கூறியிருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு எந்தக் காங்கிரஸ் வாதியும் இதுவரை விடையளிக்க முன்வரவில்லை. குற்றச்சாட்டு களுக்குத் தக்க ஆதாரங்களுடன் விடையளிக்க முன்வராமல், சம்மந்தமற்ற விஷயங்களைக் கிளப்பி வசை புராணம் பாடுவதே அற்பமனம் படைத்த காங்கிரஸ் கூலிகளின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த முறையை “தினமணி"யும் பின்பற்றத் தொடங்கியிருப்பதைப்பற்றி நாம் ஆச்சரியப்பட வில்லை. காங்கிரஸ் புரட்டர்கள் புகழ்பாடி உயிர்வாழ வேண்டியிருக்கும் ஒரு பத்திரிகையிடம் யோக்கியப் பொறுப்பையோ, நேர்மையையோ எதிர்பார்க்க முடியாது. “தினமணி” யின் ஒன்றரைப் பத்தி கொண்ட உபதலையங்கத்தில் சிதறிக்கிடக்கும் வசைமொழிகளுக்கெல்லாம் விடையளித்து நமது பத்திரிகைப் பத்தியையும் அசுத்தப்படுத்த நாம் விரும்பவில்லை அறியாமையினால் “தினமணி'' கூறும் ஒரு மடத்தனமான விஷயத்தைப்பற்றி மட்டும் சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம். தோழர் ஈ.வெ.ரா. திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியால் ஒப்புக் கொண்டபோதே தோழர் ராஜகோபாலாச்சாரியார். “அது கராச்சித் திட்டத்தின் காபி” எனக் குற்றம் சாட்டினார். அதற்கு “யார் திட்டத்தை யார் திருடியது” என மகுடமிட்டு “குடி அரசு” 1935 டிசம்பர் 1-ந் தேதி விடையளித்து விட்டது. தினசரிப் பத்திரிகை ஆசிரியர்களாயிருப்பவர்கள் முக்கியமான விஷயங்களைப்பற்றி மாகாண பத்திரிகைகளில் வெளிவரும் விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். சர்வஞானி ஆகி விட்டோம் என்ற அகம்பாவத்தினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சகோதரப் பத்திரிகைகளின் அபிப்பிராயங்களை உணராமல் கன்னா பின்னா கத்துவது விவேகமுடைய பத்திரிகாசிரியர்களின் செயலல்ல.
17 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு அன்று “குடி அரசு'' அளித்த விடையை 9 ஆம் பக்கத்தில் தருகிறோம். அதைப்படித்துப் பார்த்து விடையளிக்க “தினமணி” க்கு ஆண்மை யுண்டா? விடையளிக்க “தினமணி” முன்வந்தால் திருடியது யார்? ஈ.வெ.ராவா காங்கிரசா என்பது “தினமணி"யின் மரமண்டையிலும்கூட ஒருகால் நுழையக்கூடும். காங்கிரசில் சேர தோழர் ஈ.வெ.ரா. வகுத்த நிபந்தனைகளின் மர்மமும் விளங்கக்கூடும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.07.1936
குடி அரசு - 1936 (2), 18
_குடி ௮௬ e தளிமியட கலகல மறதுடத ல L P RERRE தி எற தற பதத TR பகுத்தறிவு
H £ £ H இரண்டாம் அண்டு பிறற்து விட்டத. |
வருட சந்தா ரூ. 1—0—0 உடனே சற்தாதாரராகச் சேருங்கள். பின்னால் சேர்த்தால் நடத்திய இதழ்கன் கிடைப்பது கஷ்டமாஇவிடும். குடிஅரசு ஏஜண்கெனிடமும், ஹெக்கின்பாதம் புக்ஸ்டால்களினும் கடைக்கும், குடி அரசும், பகுத்தறிவும் சேர்த்து ரூ, 3-0.
"
i
£] மானேஜர், “பகுத்தறிவு” அபீஸ், ந் ட ஈரோடு. §
கக்கா கக்ககககக் ககக ககக சக பககக RS லக் இசாமாயண ஆராய்ச்சி 4-காண்டங்கள் சேர்த்து ஒன்றாய் தருவிப்பவர்களுக்கு விலை ரூ. 1—0—0 மக்கக்க்க்கக் கர கக்கககக்க க்கட க்க்ககக்க்க்கக்க்கக்கக்க்கக்கக் ௧௧௧௧௧ “கர்ப்ப ஆட்சி” என்னும் புத்தகம் வெளிவத்து விட்டத!
ஆடவ மககமடமககரகளுட!
விலை அணா 060 தப: பை ல்ல கதவின் 3
H
i
(அரிலலிளக்க்] L ராரணங்கள், (ke geiin) இதன் விலை அணா 8,110 அனா i e 42 iy v
g : H
ஷ்யாவின் yu s ) L B ரஷ் ய ர, படுலாலிய்செல்லதிலை) ஐத்நாண்டுத் இட்டத்நின் கறை,
இதன் விளை அணை,
10 அணா ஸ்டாம்பு அளுப்புகோருக்கு S e மேல்கண்ட ன்னும் சேர்த்து ஒன் றாய் வால்குவெறவர்களுக்கு @100 சபால் செலவு வே. விலாசம்:-- குழு அரசு புத்தகாலயம், ஈரோடு. தத்தக்க b b
- - 1 1 [1 - - € e
Eéitad Trivtad snd Peblich e + V. பங்களா ot 6௯ Uniual Vilkhaw Pros, Brade.
பாண்டியன் — ராமசாமி பிரசாரக்கமிட்டி
சேலத்தில் கூட்டம்
பிரசாரக்கமிட்டி நியமனம்
“சென்றமுறை நாங்கள் இங்கு வந்தபோது பிரசாரத்துக்குப் பொருளுதவி செய்வதாக தலைவர்கள் வாக்குறுதியளித்தார்கள். எங்கள் முயற்சி வெற்றிபெறுமென்று நம்புகிறேன். சுற்று பிரபாண காலத்தில் நான். கண்ணுற்ற முக்கியமான காட்சி என்னவெனில் காங்கிரஸ் கூட்டங்களுக்குச் செல்வதைக் காட்டிலும் ஜஸ்டிஸ் கட்சி கூட்டங்களுக்கு ஜனங்கள் ஏராளமாக வருவதாகும். இதனால் பொதுஜன ஆதரவு நமக்கு அதிகமாக இருந்து வருவது புலனாகிறது. பிரசாரமில்லாததினாலேயே நமது கட்சி அயர்ச்சி யுற்றிருக்கிறது. தீவிரமாக பிரசாரம் செய்தால் ஜனங்கள் நமது கட்சி விஷயங்களில் சிந்தனை செலுத்துவது நிச்சயம். நமது தோல்விக்கு நமது பலவீனமே காரணம்; எதிரிகளின் வலிமையல்ல. எனவே நமது குறைபாடு களை யுணர்ந்து ஊக்கமாக உழைக்க எல்லோரும் முன்வரவேண்டும்”
குறிப்பு: 27.06.1936 ஆம் நாள் சேலம் போல்க்ஸ் பங்களாவில் நடைபெற்ற தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் பிரசார மையக் குழு உறுப்பினர்கள்
கூட்டத்தில் குழு உறுப்பினர் தோழர் ஈ.வெ.ரா. பேசியது.
குடி அரசு - வேண்டுகோள் - 12.07.1936
குடி அரசு - 1936 (2), 20
பார்ப்பனரல்லாதார் இயக்கம்
சுற்றுப்பிரயாணத்தில் செய்த உபண்யாசங்கவின் சாரம்
தலைவர் அவர்களே! தோழர்களே!!
நாங்கள் ஒரு மாத காலத்துக்கு மேலாகவே தமிழ்நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறோம். சென்னை நகரத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் எங்களுக்கு போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து எங்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
சென்னை
சென்னையில் தான் இயக்கப் பிரமுகர்கள் என்பவர்கள் எங்களை சிறிதும் சட்டை செய்யவில்லை. அவர்களுக்கு பயம் என்றே கருதுகிறோம் ஏனெனில் பிரசாரம் ஏற்பட்டால் பிறகு தங்களுக்கு மரியாதை இல்லாமல் போகுமே என்கின்ற பயமேயாகும். காலமெல்லாம் பட்டம், பதவி, பணம்பெற்று சுகமாக தூங்கிக் கொண்டு இருந்துவிட்டு சமயம் வரும்போது எப்படியோ தந்திரம் செய்து பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று வாயளந்து பதவிபெறும் வழக்கம் பட்டணத்தில் தான். இருந்து வருகிறது. ஆனால் இனி அது பலிக்காது என்று கருதுகிறேன்.
ஜனங்களிடத்தில் வந்து தாங்கள் செய்ததை சொல்லி எதிரிகளின் விஷமங் களை மறுத்துக் கூறினாலல்லது இனி தேர்தல்களில் வெற்றிபெற முடியாது
மதராஸ் எந்த இயக்கத்திலுமே மோசமான தன்மையுடையது
நான் காங்கிரசிலிருக்கும் போது கூட எங்கள் முதல்வேலை மாகாண காங்கிரஸ் ஸ்தாபனத்தை சென்னையை விட்டுக் கடத்திக்கொண்டு போனதோடு அவர்கள் தலைமைப் பதவிகளையும் பறித்துக் கொண்டதே யாகும். கிட்டத்தட்ட இரண்டு வருஷகாலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஸ்தாபனம் என் வீட்டின் தாழ்வாரத்திலேயே இருந்தது. அந்தக் காலம்தான். தமிழ்நாடு காங்கிரஸ் வேலை இந்தியாவுக்கே வழிகாட்டியாய் இருந்தது.
ஸ்தாபனத்தை சென்னையில் இருந்து மாற்ற வேண்டும்
அதுபோல் தென்னிந்திய நல உரிமை ஸ்தாபனம் இச்சென்னையை விட்டு வெளியூருக்கு கொண்டு போகப் பட்டால்தான் அது ஏதாவது உருப்படி ஆகமுடியும். நாங்கள் சென்னைக்கு வந்து இங்குள்ள நிலையைப்
21 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பார்த்தவரை ஒருவருக்கொருவர் குழி தோண்டும் வேலையில் ஈடுபட்டிருப் பதைத்தான் பார்க்க முடிந்தது. காரியம் செய்வதற்கு யாரையும் காணோம் சென்னை பிரமுகர்களுக்குப் பொது ஜனங்களிடம் நம்பிக்கை கிடையாது
ஆனபோதிலும் நாங்கள் இவர்களுக்கு ஆக எதையும் எதிர்பார்க்க வில்லை. இயக்கத்தை இந்த மாகாணத்து பார்ப்பனரல்லாதார் மக்கள். எல்லோருக்கும் பொதுவானது என்று கருதுகிறோம். யாரோ சிலர் மாத்திரம் தங்கள் சொந்தத்துக்கு சுயநலம் அனுபவித்துக் கொள்ளுவதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. யாரோ சிலர் கட்சியின் நன்மையில் கவலை யில்லாமல் நன்றி விஸ்வாசமற்றவர்களாய் நடந்து கொள்வதில் ஒன்றும்
முழுகிப் போய்விடாது
காங்கிரசை ஆதரித்தவர்கள் வருந்துகிறார்கன் வரப்போகிற தேர்தலில் மதராஸ்காரர்களால் எவ்வளவு முட்டுக் கட்டை ஏற்பட்டாலும் நாம் வெற்றி பெறப்போகிறோம் என்பதில் எங்களுக்கு தைரியம் இருக்கிறது. பொது ஜனங்கள் உண்மை உணரக்கூடிய காலம் சமீபத்தில் வந்துவிட்டது. இப்போதே அவர்கள் காங்கிரசை இரண்டொரு தேர்தலில் ஆதரித்த குற்றத்தை உணர்ந்து விசனப்படுவதைப் பார்த்து வருகிறோம். இந்தச் சென்னையிலும் கூட சில நபர்கள் தோல்வி அடைய நேரிட்டாலும் அவசியம் பார்ப்பனரல்லாதாருக்கு தான் பெரும்
வெற்றி ஏற்படும். இந்திய சட்டசபை தேர்தல்களிலும் ஜில்லா போர்டு தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டது என்று சொன்னாலும் அது நம் பிரசாரமில்லாக் குறையாலும் நம்மவர்களே ஒருவருக்கொருவர்துரோகம் செய்த தன்மையாலும், சிலர்சமயோசிதவாதிகளாய் விட்டகாரணத்தாலுமே தவிர பார்ப்பனரல்லாதார். இயக்கத்தின் மீது ஏற்பட்ட குறைகளாலல்ல.
பார்ப்பன “வெற்றிக்குக் காரணம் அதுபோலவே காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டது என்று சொன்னாலும் பார்ப்பனர்களுடைய விடாமுயற்சியும், கட்டுப்பாடும், பத்திரிகை பிரசாரமும், சமூக அபிமானமும், துரோகம் செய்யாத குணமும், கூலிகளின் வேலையும் எல்லாம் சேர்ந்தே தவிர அவர்களது கொள்கைக்கு ஆக ஏற்பட்ட வெற்றி அல்ல என்பதே என் அபிப்பிராயம். இந்தக் காரணத்தால்தான் தலைவர்கள் இயக்க பிரமுகர்கள் என்பவர்களின் செய்கையில் ஏற்பட்ட தோல்விகளை மாற்றி வெற்றி பெறச் செய்யலாம் என்று முன் வந்திருக்கிறோம்.
நம் கொள்கைகள்
நம்முடைய கொள்கைகள் மிக மேலானவை. மனித சமூகத்துக்கு இன்றியமையாதவை. வெறும் பொது நோக்கையே கொண்டவை
குடி அரசு - 1936 (2), 22
அதனாலேயே இந்த இருபது வருஷ காலமாக அவை நிலைத்து இருப்பதுடன் நாளுக்கு நாள் பரவி வந்திருக்கிறது. நாம் எவ்வித ஆடம்பரமும் மக்கள் ஏமாறும்படியான போலிக்கிளர்ச்சிகளும் செய்யாமலேயே
நம் இயக்கமும் கொள்கைகளும் வலிவு பெற்றுவருகின்றன.
நிலை குலைந்த காங்கிரஸ்
ஆனால் காங்கிரஸ் ஆரம்பித்த காலம் முதல் சிறப்பாக ஒத்துழையாமை
ஆரம்பித்த 1921-ம் வருஷம் முதல் வருஷத்துக்கு வருஷம் கொள்கை
மாறுதல், ஒவ்வொன்றிலும் தோல்விகள், ஒருவருக்கொருவர் அபிப்பிராய
பேதங்கள், கொள்கைகளில் உள் கலகங்கள் முதலியவை நடந்த வண்ணமாகவே
இருந்து வருகின்றன. 1921ாத்திய ஒத்துழையாமை திட்டங்களை சென்னைப் பார்ப்பனர்கள். அப்போது ஒப்புக்கொள்ளவே இல்லை. இதே தோழர்கள் சத்தியமூர்த்தியார் உள்பட இந்து, மித்திரன் பத்திரிகை உள்பட தோழர் சீனிவாசய்யங்கார் முதலிய பல பிரமுகர்கள் வரை எல்லோரும் அதை எதிர்த்து தொல்லை விளைவித்தே வந்தார்கள். அத்தொல்லைகள் பெற்ற குழந்தைதான் சுயராஜ்யக்கட்சி என்பதாகும். அதனால் காங்கிரஸ் ஒத்துழையாமைத் திட்டமும் நிர்மாணத்திட்டமும் பாழ்பட்டு நசுங்குண்டன. பிறகு காந்தியார் காங்கிரசிலிருந்து ஓய்வெடுத்தார்.
சைமன் பஹிஷ்காரம்
ஒத்துழையாமையும் நிர்மாணத்திட்டமும் ஒழிந்தது என்று தெரிந்த உடன் மறுபடியும் சென்னை பார்ப்பனர்கள் முன்வந்து காந்தியாரை திரும்பவும் பயன்படுத்திக்கொண்டு சைமன் கமிஷனை பஹிஷ்கரிப்பது என்ற நாடகத்தை நடத்தினார்கள்.
மற்றொருபுறத்தில் நேரு முதலிய தலைவர்கள் ஆளுக்கொரு அரசியல் திட்டம் ஏற்படுத்தி காங்கிரசில் அரங்கேற்றி பார்லிமெண்டுக்கு சமர்ப்பித்தார்கள். அவைகள் குப்பைத் தொட்டிக்குப் போனவுடன் உப்பு சத்தியாக்கிரக நாடகத்தை நடத்தினார்கள். அது பொஸ்ஸென்று போனவுடன் இர்வின் காந்தி ஒப்பந்த நாடகத்தை நடத்தி கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு ஜெயிலில் இருந்து விடுதலை பெற்று வெளியானார்கள். அதன் பயனாய் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டுக்கு போய் காங்கிரசின் யோக்கியதையும் காந்தியாரின் யோக்கியதையும் இந்தியாவின் யோக்கியதையும் உலகமே அறிந்து சிரிக்குற்படியான நிலைமையை எய்தி மானங்கெட்டுத்திரும்பினார்கள். அதற்குப் பிறகும் “நாங்கள் பயந்து ஓடவில்லை ஒண்ணுக்குப் போக மறைந்தோம்'' என்று சொல்லி தோழர் ஜவஹர்லால் வீரத்தைக் காட்டுவதற்கு ஆக மறுபடியும் ஒரு சட்டமறுப்பு ஆரம்பித்தார்கள்.
23 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சட்டமறுப்பு நிறுத்தப்பட்டது
இதன் பயனே “காங்கிரஸ் சட்டமறுப்பைக் கைவிட்டுவிட்டது என்று காங்கிரஸ் பச்சையாய் வெளிப்படையாய் தீர்மானம் செய்ய வேண்டி வந்தது. அந்தப்படி ஒரு தீர்மானமும் செய்தார்கள். அதனால் ஏற்பட்ட அவமானத்தையும் தோல்வியையும் மறைத்துக்காட்டி பாமர மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடிபோட காந்தியார் வில்லிங்டன் பிரபுவை காண பல தடவை முயற்சித்தார்; பலர் தூது நடந்தார்கள். வில்லிங்டன் பிரபு ஒரே அடியாய் காந்தியாருக்கு பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். இவ்வளவு சிக்ஷைகள் ஏற்பட்ட பிறகே தோழர் காந்தியார். “காங்கிரசின் நன்மைக்கு ஆகவே நான் காங்கிரசை விட்டு விலகுகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து காங்கிரசுக்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்றும் “காங்கிரசில் நான் ஒரு நாலணா மெம்பராகக்கூட இல்லாமல் விலகிவிட்டேன்' என்றும் உலகத்துக்கு வெளிப்படுத்தினார்.
சட்டசபை பிரவேசம் ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்
இப்பொழுது “பொதுவுடமை வீரர்” ஜவஹர்லால் அவர்களை கதா நாயகனாக வைத்து சட்டசபை பிரவேசமும் மந்திரி பதவி ஏற்றலும் என்கின்ற நாடகம் நடக்கின்றது
சட்டசபை பிரவேசத்துக்கோ மந்திரி பதவி ஏற்றலுக்கோ என்ன அவசியம்? அங்கு போய் என்ன செய்வது? என்கின்ற விபரங்களைச் சொல்லி பொது ஜனங்களிடம் ஓட்டுக் கேட்க இவர்களிடம் ஏதாவது சரக்கு இருக்கின்றது என்று யாராவது சொல்லமுடியுமா என்று பாருங்கள்
சட்டசபைக்கு போவதைப்பற்றியும் போய் என்ன செய்வது என்பதைப்பற்றியுமே காங்கிரஸ் தலைவர்களுக்குள் அபிப்பிராய பேதம்
பலமாக இருக்கிறது அதுபோலவே மந்திரி பதவிகளை ஏற்பதைப்பற்றியும் ஏற்றபின். என்ன செய்வது என்பதைப் பற்றியும் பலமான அபிப்பிராய பேதம் இருந்து
வருகின்றது எல்லா இந்திய காங்கிரஸ் தலைவருக்கும் மாகாண காங்கிரஸ் தலைவருக்கும் சுயராஜ்ஜியம் என்பதிலேயே அபிப்பிராய பேதம் இருந்து
வருகின்றது
மாகாணத்துக்கு மாகாணம் தலைவர்களுக்குள்ளாகவும் அபிப்பிராய பேதம் என்பது மாத்திரமல்லாமல் ஒரே மாகாணத்தில் மகாநாட்டுக்கு மகாநாடு அபிப்பிராய பேதமான தீர்மானங்கள் நடைபெற்று வருகின்றன.
குடி அரசு - 1936 (2), 24
இவர்கவிடம் அதிகாரம் கொடுக்கலாமா?
இப்படிப்பட்ட கூட்டத்தார் இடம் புதிய சீர்திருத்தங்களையும் அதன் அமுல்களையும் கொடுத்தால் நாடு என்ன கதி ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். குரங்கு கையில் சிக்கின பூமாலையின் கதிதானேயாகும்.
“எலக்ஷன் நடந்த பிறகு நாம் என்ன செய்வது என்பதை யோசித்துக் கொள்ளலாம்'' என்று வேலைக் கமிட்டியிலும் காங்கிரஸ் கமிட்டியிலும் தீர்மானம் போட்டு காங்கிரஸ்காரர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
தங்களுக்கே இன்னது செய்வது என்று தெரியாதவர்களை வெளியில் சொல்ல தைரியமில்லாதவர்களை சட்டசபைக்கு அறிவுள்ள மனிதர்கள் அனுப்பலாமா என்று யோசித்துப்பாருங்கள்.
சொன்னபடி நடக்காதவர்கன்
ஒரு காரியம் மாத்திரம் நான் உறுதியாய் சொல்லுவேன். அதாவது காங்கிரஸ்காரர்கள் சொன்னபடி நடந்து கொள்ள முடியாதவர்கள். இதுவரை அவர்கள் இந்த 15 வருஷ காலமாக ஒரு திட்டத்திலாவது ஒரு தேர்தலிலாவது அவர்களால் சொன்னபடி நடந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களுடைய வேலைத்திட்டமும் கவலையும் எப்படி பொது ஜனங்களை ஏமாற்றுவது என்பதும் எதைச் சொன்னால் தேர்தலில் வெற்றிபெறலாம் என்பதுமேயல்லாமல் காரியத்திலும் அனுபவத்திலும் சாத்தியமான கொள்கைகளோ திட்டங்களோ அவர்களுக்கு கிடையாது. இதனாலேயே அவர்கள் ஒரு திட்டத்தை ஒரு வருஷத்துக்குக்கூட வைத்திருக்க முடியாமலும் ஒரு விதத்திலாவது சொன்னபடி நடந்துகொள்ள முடியாமலும் இருந்து வருகிறார்கள். இது காங்கிரஸ் தலைவர்களுடைய குற்றமென்று நான். சொல்ல வரவில்லை. மற்றென்னவென்றால் காங்கிரஸ் ஸ்தாபனம் என்னும் அந்த யந்திரத்தின் தன்மையேயாகும். அதற்கு ஏற்றாப்போல் நம் பொதுஜனங்களின் அறியாமையையும் கல்வி அற்ற தன்மையையும் பயன்படுத்திக் கொள்ள மத உணர்ச்சிபோல் காங்கிரஸ் உணர்ச்சியை ஊட்டிவிட்டதால் அவர்கள் இவ் விஷயத்தில் பகுத்தறிவை பயன்படுத்த இடமே இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலைமை காங்கிரஸ் யந்திரத்துக்கு மிக அனுகூலமாய் போய்விட்டதின் காரணமே அது ஒரு நிலையாகவும் நாணயமாகவும் அனுபவ சாத்தியமாகவும் இருக்க முடியவில்லை.
ஜஸ்டிஸ் கட்சி.
ஜஸ்டிஸ் கட்சி என்னும் தென் இந்திய நல உரிமைச் சங்கமாகிய பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கொள்கையில் திட்டத்தில் ஏதாவது ஒரு பிசகு நடந்ததாக எடுத்துக்
25 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காட்டுங்கள் பார்க்கலாம். இந்த 20 @ காலமாக அவர்கள் கொள்கையில் என்ன மாறுதல் காண முடிந்தது. எதில் அவர்கள் தோல்வி அடைந்தார்கள்?
எதில் அவர்கள் பின்னால் சென்றுவிட்டார்கள்? பொது ஜனங்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்கில் எதில் தவறினார்கள்? என்பவைகளை நன்றாய் யோசித்துக் கூறுங்கள். அதிகாரத்தில் பதவியில் இருப்பவர்கள் மீது பாமர மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவது சகஜம்தான்.
அதிலும் ஒரு கட்சியானது 15 @ காலம் அதிகாரத்தில் இருந்தால் எவ்வளவு எவ்வளவு பேர்களுடைய விரோதத்தையும் நிஷ்டூரத்தையும் அதிருப்தியையும் பெற்றிருக்கும் என்பதை நான் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
ஆதலால் பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் மக்களை ஏமாற்றியும் கூலிகளை விட்டு வையச்சொல்லி இருப்பதையும் பற்றி யாரும் ஏமாந்து விடாதீர்கள். ஜஸ்டிசார் அதிகாரத்தில் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு அனுகூலம் செய்யவில்லை என்றும் சர்க்காரோடு ஒத்துழைத்தார்கள் என்றும் குற்றம் கூறப்படுகிறது. குறிப்பிட்டு அது என்ன குற்றம் செய்தது என்று இதுவரை ஒருவருக்காவது எடுத்துச் சொல்ல ஆதாரம் இல்லை. பார்ப்பனர்களில் காங்கிரசுக்கு எவ்வளவு விரோதியானாலும் அவர்களை பார்ப்பனர்கள். சேர்த்துக்கொள்ளுகிறார்கள். தோழர் கனம் சீனிவாச சாஸ்திரியார் என்கின்ற பார்ப்பனர் காந்தியை ராஜத்துரோகி என்று சொல்லி கைதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு தைரியமும் உதவியும் செய்தவர். இன்று அவர் பார்ப்பனர்கள் வாயிலும் பத்திரிகைகளிலும் மகாகனம் சாஸ்திரிவாளாய் விளங்குகிறார் அவர் கெட்ட கேட்டுக்கு ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப்புதைக்க வேண்டும் என்கிறார். சத்தியமூர்த்தியாரும் இவரும் இரட்டைப்பிள்ளை சகோதரர். போல் நடந்துகொள்ளுகிறார். இதுமாத்திரமா? தோழர் காந்தி வந்தாலும் சாஸ்திரியாரைப் போய் பேட்டி கண்டுவிட்டு அவர் வாயால் மகாத்மா
காந்தி என்று சொல்லச் செய்துவிட்டு வருகிறார்.
பார்ப்பனர் - அல்லாதார் போர் ஆகையால் பார்ப்பனர்களில் ஒருவர் காந்தி துரோகியாகவும் காங்கிரஸ் துரோகியாகவும் தேசத் துரோகியாகவும் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பட்டம் பதவி பெற்றவராகவும் இருந்தால் அவரைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளோ பார்ப்பனக் கூலிகளோ ஒன்றும் சொல்வதில்லை சமூகத்திலும் அப்படிப்பட்டவரை பஹிஷ்கரிப்பதும் இல்லை. அதற்குப் பதிலாக பஹுமானப்படுத்துகிறார்கள்.
பார்ப்பனரல்லாதார்களில் யாராவது இம்மாதிரி செய்திருந்தால் எவ்வளவு இழிவுபடுத்தி இருப்பார்கள் என்பதை யோகித்துப்பாருங்கள்
குடி அரசு - 1936 (2), 26
எதற்காக இவைகளைப்பற்றி பேசுகிறேன் என்றால் காங்கிரஸ்-ஜஸ்டிஸ் கிளர்ச்சிகள் என்பது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போரே தவிர தேசாபிமானம், தேசத்துரோகம் என்பது அல்ல என்பதற்காகவே பேசுகிறேன்.
காங்கிரஸ் திட்டங்கன்
காங்கிரசுக்காரர்கள் கூறும் பூரண சுயேச்சைக்கு என்ன அருத்தம் என்று பாருங்கள். தோழர் சத்தியமூர்த்தியார் ஆனைமலை பிரசங்கத்தில் பூரண சுயேச்சை என்பதற்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்து என்று பொருள் கூறவில்லையா? பிரிட்டிஷாருடன் சமாதானம் செய்துகொள்வதுதான். பூரண சுயேச்சையின் தத்துவம் என்று கூறவில்லையா?
சட்டசபைக்கு போவது மந்திரி பதவி ஏற்பதற்கு என்று சத்திய மூர்த்தியார் கூறவில்லையா? மந்திரி பதவி ஏற்றது சேலத்திற்கு தண்ணீர். கொண்டு வருவதற்காக என்று மூர்த்தியார் கூறவில்லையா?
மந்திரி பதவி ஏற்பது என்றால் அது பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதாகுமே ஒழிய பூரண சுயேச்சைக்கு மார்க்கமாகாது என்று காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் கூறவில்லையா?
ஆகவே சுயராஜ்யம் என்பதிலும் சுயேச்சை என்பதிலுமே எப்படிப்பட்ட சுயராஜ்யம், எப்படிப்பட்ட சுயேச்சை என்பதிலுமே இன்னமும் காங்கிரஸ் தலைவருக்கும் மாகாண காங்கிரஸ் தலைவருக்கும் நேர்மாறான அபிப்பிராய பேதத்தில் இருக்கும்போது ஜஸ்டிஸ்கட்சி சர்க்காருடன் ஒத்து உழைக்கின்றது என்றால் என்ன அருத்தம் என்று கேட்கின்றேன்.
கராச்சி திட்டம்
கராச்சி திட்டத்திலாவது நியாயம் இருக்கிறதா என்று பாருங்கள். அதில் ஜாதி பாகுபாடுகளைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் இருக்கிறது என்று பந்தயங்கட்டி கூறுகிறேன். இதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றேன். இந்த நிலையில் எனது திட்டங்களை சில அறிவிலிகள் கராச்சி திட்டம் என்று கூறுகிறார்களே, இது யோக்கியமா? என்று கேட்கின்றேன்.
அந்தப்படி எனது திட்டம் கராச்சி திட்டத்தில் இருந்து திருடியதாய் இருந்திருந்தால் அதைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் “ராமசாமி திட்டம் பொது உடமை திட்டம்” என்று சர்க்காருக்கு எடுத்துக்காட்டி இருப்பாரா என்று கேட்கின்றேன்.
ஜஸ்டிஸ் திட்டம்
ஜஸ்டிஸ் கட்சியாரின் திட்டம் சட்டப்படி கிளர்ச்சி செய்வதும் சுயராஜ்யம் பெறுவதும் அரசியலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
27 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வழங்குவதும் என்று 20 வருஷங்களுக்கு முன்னையே வகுத்து இருக்கிறார்கள். இந்தக் கொள்கைக்குக் கட்டுப்பட்ட எவரும் அங்கத்தினராகலாம் என்று ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை ஒரு பார்ப்பனராவது
வந்து சேரவில்லை.
சட்டத்திற்கு அடங்கிக் கிளர்ச்சி செய்து சுயராஜ்யம் பெறுவதே கொள்கையாகக் கொண்ட மிதவாதிகள் என்பவர்களில் கூட ஒருவரும் மெம்பராகவில்லை. இதனால்தான் ஜஸ்டிஸ்கட்சி என்பது பார்ப்பனரல்லாதார். இயக்கம் என்றும் மிதவாத பார்ப்பனரும் காங்கிரசை ஆதரிப்பதால் காங்கிரசை பார்ப்பனர்கள் இயக்கம் என்றும் சொல்லுகிறேன்.
ஜஸ்டிஸ் இயக்கம் ஏற்பட்ட பிறகு
ஆனால் இந்தப் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்ட பிறகுதான். நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் நிலை அரசியலிலும், சமூக இயலிலும், பொருளாதார இயலிலும் சிறிதாவது முற்போக்கடைந்திருக்கிறது. இதற்கு புள்ளி விவரங்களை வேண்டுமானாலும் நான் காட்டக்கூடும். 1920-க்கு முன் உள்ள உத்தியோகம், படித்தவர்கள் எண்ணிக்கை, ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகிகள், வக்கீல்கள், பட்டதாரிகள், நீதி நிருவாக உத்தியோகஸ்தர்கள், ஹைகோர்ட்டு, கவர்னர் ஆலோசனைசபை முதலியவைகளின் அங்கத்தினர்கள். ஆகிய லிஸ்டைப் பாருங்கள். இப்போது உள்ளவர்களின் லிஸ்டைப் பாருங்கள், அப்பொழுது பார்ப்பனரல்லாதார் எத்தனை பேர்? இப்போது பார்ப்பனர் அல்லாதார் எத்தனை பேர்? என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். சும்மா பொறுப்பில்லாமல் பார்ப்பனரல்லாதார்இயக்கம் தேசத்துரோக இயக்கம் என்று சொல்லிவிட்டால் போதுமா என்று கேட்கின்றேன்.
இது எப்படியோ இருக்கட்டும் என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்த பார்ப்பனரல்லாத இயக்கம் ஏற்பட்ட பின்பு பொது மக்களுக்கு அல்லது தேசத்துக்கு அதற்கு முன் இல்லாத எந்த கெடுதி புதிதாய் ஏற்பட்டது என்று யாராவது ஒரு விரலை விட முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
அல்லது பார்ப்பனரல்லாதார் இயக்கம் இல்லாத எந்த மாகாணத்தை விடவாவது நமது மாகாணம் எதிலாவது பிற்போக்கடைந்திருக்கிறது என்றாவது யாராவது சொல்லமுடியுமா என்று பந்தயம் கூறிக்கேட்கின்றேன்.
நமது மாகாணமே மேலானது
பல விஷயங்களில் மற்ற மாகாணத்தைவிட நமது மாகாணம் பார்ப்பனரல்லாதார் ஆட்சியால் முன்னணியில் இருக்கிறது என்று நான் புள்ளி விவரங்களை காட்டக்கூடும். ஆகையால் பார்ப்பனர்கள் சிலருக்கு முன் போல ஏகபோக உரிமை இல்லை என்பதற்காக பார்ப்பனரல்லாதார். இயக்கத்தை குறை கூறுவதால் பயன் என்ன என்று கேட்கிறேன்.
குடி அரசு - 1936 (2), 28
காங்கிரசின் கதி
எங்களால் காங்கிரசை ஒன்றும்செய்ய முடியாது என்று காங்கிரஸ்கரரர்கள் மனப்பால் குடிப்பதை மறந்துவிடும்படி எச்சரிக்கை செய்கிறேன்.
காங்கிரசைப் பொறுத்தவரை எங்களால் செய்யப்பட்ட காரியங்கள் என்னவென்றால் இந்த 10, 15 வருஷ காலமாக காங்கிரசின் சூழ்ச்சிகள் ஒரு துறையிலும் பலிதமாகாமல் செய்திருக்கிறோம். இன்றைய தினமும் சொல்லுகிறேன், காங்கிரசின் இன்றைய கதி என்ன என்று யோசித்துப் பாருங்கள். உபயதுல்லா, குப்புசாமி போன்றவர்கள் இஷ்டப்படி தரகுவியாபாரம் நடத்தத்தக்கதாய் காங்கிரஸ் இருந்து வரச் செய்துவிட்டோம். மேலும் அதன் கை கால்களைக் கட்டிப் போட்டு ஒரு மூலையில் உட்காரவைத்துவிட்டோம். அதாவது அதற்கு ஒரு கொள்கையும் இல்லாமல் செய்துவிட்டோம். எந்தக் கொள்கையையும் சொல்லிக்கொண்டு வெளிவருவதற்கு யோக்கியதையில்லாத மாதிரியில் அதன் வண்டவாளங்களை வெளிப்படுத்தி விட்டோம் நாளைக்கு வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கு காங்கிரஸ் எந்தப் பிரச்சினையைச் சொல்லி ஓட்டு கேட்கக்கூடும் என்று யோசித்துப்பாருங்கள். இப்பொழுதே கொள்கை விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் திக்கு முக்காடுகிறார்கள் மக்களுடைய முட்டாள்தனமும் கூலிகளுடைய காலித்தனமும் அல்லாமல் காங்கிரசுக்கு வேறு என்ன ஆதரவு இருக்கிறது என்று கேட்கிறேன்.
காங்கிரசின் ஓட்டுப் பிரச்சினை என்ன?
ஒரு ஓட்டர் ஒரு காங்கிரஸ் அபேட்சகரைப் பார்த்து நீங்கள் ஓட்டுப் பெற்று வெற்றியடைந்தால் அங்கு சென்று என்ன செய்வீர்கள் என்று கேட்டால் ஜவஹர்லால் தானாகட்டும், சர்தார் தான் ஆகட்டும், ராஜாஜி தானாகட்டும் என்ன பதில் சொல்லுவார்கள்.
காந்திக்கு ஓட்டுப்போடுங்கள் என்பார்கள். காந்தியார் காங்கிரசில் இல்லையே என்றால் காங்கிரஸ் கட்டளைப்படி நடப்போம் என்பார்கள். காங்கிரஸ் கட்டளை என்ன என்றால் மகாத்மா உத்திரவுப்படி என்பார்கள். மகாத்மா எங்கே என்றால் பூத கண்ணாடி தேடுவார்கள்.
இந்த பரிதாபகரமான நிலையில் இன்று காங்கிரசை வைத்தது அதன் பித்தலாட்டங்களை தைரியமாய் வெளியாக்கும் நாங்கள் தான் என்று பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளுகிறோம்
ஜஸ்டிஸ் இயக்கம் இல்லாதிருந்தால்
ஜஸ்டிஸ் இல்லாவிட்டால் இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை மெத்தைப் படிக்கட்டுக்கு படிக்கல்லாய் மதித்து எங்கள் தலையில் கால்
29 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வைத்து நடந்து கொண்டிருப்பார்கள். ஆதலால் நாங்கள் என்ன செய்தோம்
எதில் வெற்றி பெற்றோம் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் காட்டவேண்டும் என்று கேட்கிறேன். நாங்கள் இல்லாதிருந்தால் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆயிருக்கும் என்பதற்கு பழைய சரித்திரத்தைப் படித்துப்பாருங்கள். தோழர் காந்தியார் மெல்ல மெல்ல வந்து கடசியாக வருணாச்சிரம தர்மத்தை காப்பாற்றவும் ராமராஜ்யத்தை ஏற்படுத்தவும்தான்
நான் சுயராஜ்யம் கேட்கிறேன் என்று சொல்லி ராமாயண காலக்ஷேபமே மேடைப்பிரசங்கமாக இருக்கும்படி செய்துவிட வில்லையா என்று பாருங்கள். அப்படிப்பட்டவர் இன்று மூலையில் உட்கார்ந்திருக்க வேண்டிய நிலைமை யாரால் ஏற்பட்டது? நமது ஓயா-உண்மையான உழைப்பால் அல்லவா?
“காங்கிரசுக்கே வெற்றிமேல் வெற்றி” ஏற்பட்டாலும் அவ்வெற்றிகள் எல்லாம் பார்ப்பனரல்லாதாருக்கே எப்படி வந்து சேர்ந்தது, நமது ஓயா உழைப்பாலல்லவா?'
இப்படிப்பட்ட நாம் இந்தசந்தர்ப்பத்தில் ஓய்ந்து இருந்துவிட்டோமானால். நமது இவ்வளவு நாளைய வேலையும் கெட்டுப்போகும் என்று பயந்தே நாங்கள் வந்திருக்கிறோம்
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் இதை கவனத்தில் வைத்து எங்கள் ஆசைகளை ஈடேற்றி வைக்க வேண்டுகிறோம்.
குறிப்பு கோவை, தஞ்சை, திருச்சி, சேலம், ராசிபுரம், மதராஸ், வேலூர், நாட்டறம்பள்ளி அம்பலூர் ஆகிய இடங்களில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றி ஜூன் 22 முதல் ஜூலை 4 வரை ஆற்றிய சொற்பொழிவுகளின் சருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 12.07.1936
குடி அரசு - 1936 (2), 30
தஞ்சையில் சத்தியமூர்த்தியார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் என்னுடைய தஞ்சை உபன்யாசத்துக்கு பதில் என்னும் தலைப்பில். அடியில் கண்டபடி பேசி இருப்பதாக சுதேசமித்திரன் பத்திரிகையில். பார்த்தேன். ஆனால் அதேவிஷயம் மற்றும் வேறு சிலசென்னை பத்திரிகைகளில் சிறிது விஷமத்தனமாகவும் அதாவது ராவணன், விபீஷணன் கதைகளை ஒப்பிட்டு பேசி இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் எதை உண்மையாய் வைத்துக் கொள்வதானாலும் சரி. இப்போதைக்கு எனது அபிப்பிராயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சுதேசமித்திரனில் காணப்படுவதாவது5-
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
“ஸ்ரீமான் நாயக்கர் தன் பிரசங்கத்தில் காங்கிரஸ் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒப்புக்கொண்டால் அவர் காங்கிரசில் சேரத் தயாராக இருப்பதாக கூறினாராம்... ஸ்ரீமான் நாயக்கர் அபிப்பிராயத்தை நான் முழுமனதுடன் வரவேற்கிறேன். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக காங்கிரஸ் எப்போதும் தேசமக்கள் யாராய் இருந்தாலும் யாவரும் சமஉரிமை அடைய வேண்டும் என்ற நோக்கத்தையே கொண்டுள்ளது. ஒரு சிறுபான்மை ஜாதியினரே உத்தியோகங்களை வகிப்பதை காங்கிரஸ் எப்போதும் ஆதரிக்காது. இவ்விஷயம் காங்கிரசால் யோசிக்கப்பட்டு இது சம்மந்தமாய் சீக்கிரத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்படும்" என்று சொல்லி இருப்பதாயும்,
சமூக சீர்திருத்த விஷயத்தில் “மூக சீர்திருத்த விஷயமாய் முதல் முதலில் திட்டத்தை காங்கிரஸ்தான். ஆரம்பித்தது” என்று சொல்லிவிட்டு “இந்திய சட்டசபைத் தேர்தலில் சமூக சீர்திருத்தவாதியாகிய திருச்சி டாக்டர் ராஜன் அவர்களுக்கு விரோதமாக பரம வைதீக ராஜாபகதூர் கிருஷ்ணமாச்சாரியாரை ஆதரித்த ஜஸ்டிஸ் கட்சியின் சமூக சீர்திருத்தமென்ன'' என்று கேட்டதாகவும் காணப்படுகிறது
நான் காங்கிரசை கேட்டுக் கொண்டதற்கு உண்டு - இல்லை என்று இரண்டிலொரு அபிப்பிராயம் சொல்லாமல் “ஜஸ்டிஸ் கட்சி ஏன் அப்படிச் செய்தது” என்று கேட்பது எப்படி ஒழுங்கான சமாதானமாகும் என்று எனக்கு விளங்கவில்லை. இருந்தாலும் இதற்கும் முடிவில் பதில் சொல்லுகிறேன்.
31 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கெடுக்கக்கூடாதூ
பிறகு “ஜஸ்டிஸ் கட்சி இதுவரை இவைகள் விஷயமாய் செய்த காரியங்களை அழிக்காமல் இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டதற்கு பதிலாக,
“15 வருஷமாக ஜஸ்டிஸ்கட்சி அதிகாரத்தில் இருந்தபோது என்ன முக்கியமான காரியத்தைச் செய்தது. பொது ஜனங்களுக்கு விரோதமாக
சர்க்காருக்கு அனுகூலமாக தாளம் போட்டது, நிலவரி விஷயமாக சர்க்காருக்கு சாதகமாய் இருந்தது, சத்தியாக்கிரக காலத்தில் தொண்டர்கள், அடிக்கப்பட்ட கொள்கையை ஜஸ்டிஸ் கட்சி ஆதரித்தது. இதையா அழிக்கக்கூடாது என்று நாயக்கர் பிரியப்படுகிறாரா என்பது சந்தேகமாய் இருக்கிறது. காங்கிரஸ் அதிகாரம் வைத்தவுடன் ஜஸ்டிஸ் கட்சியார் செய்த ஊழல்களை ஒழிப்பதே அதன் காரியம்! என்று பேசி இருக்கிறார்.
இவைகளுக்கு நம் சமாதானம்
தோழர் சத்தியமூர்த்தியார் நமது முதல் பிரச்சினையையாவது ஒப்புக் கொள்வதைப்பற்றி நாம் மிகவும் மகிழ்ச்சியே யடைகிறோம். ஆனால் இந்த
20 வருஷ காலமாக காங்கிரஸ் இவ்விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ விஷயமாக ஏன் கவலை செலுத்தவில்லை?
நாட்டில் இந்தியாவெங்கும் லாகூர் முதல் கன்னியாகுமரி வரை
சீக்கியர், இந்துக்கள், முகமதியர், கிறிஸ்துவர் ஆகியவர்களும் இந்துக்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத ஜாதியார்கள், தீண்டப்படாதவர் என்கின்ற பிரிவார்களும் சதா சர்வ காலமும் வகுப்புப் பிரச்சினை-வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றே கூப்பாடு போட்டு வந்ததுடன் அதனால் அனேக பொது லட்சியங்களும் எவ்வளவோ பாதிக்கப்பட்டு காங்கிரசின்மீது பல வகுப்பு மக்களுக்கும் இதுகாரணமாகவே அவநம்பிக்கையும் வெறுப்பும் ஏற்பட நேர்ந்ததுடன் என்னைப் பொறுத்தவரையிலும் கூட பெரிதும் இதுகாரணமாகவே காங்கிரசிலிருந்து நான் விலகவும் நேர்ந்தது என்பதை
யார் மறுக்கக்கூடும்? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு முதல் தேவை என்பதை இனி யாராலாவது அல்லது வேறு எவ்வித தந்திரத்தாலாவது அழித்துவிடமுடியும் என்று கருதுவதற்கும் இடமில்லை. அன்றியும்,
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று கூப்பாடு போடப்பட்ட பின்புதான் முஸ்லீம்கள், பார்ப்பனரல்லாதவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களில் ஒரு அளவுக்காவது அரசியலிலும் நிர்வாக பதவிகளிலும் மேல்தர கீழ்த்தர உத்தியோகங்களிலும் இடம்பெற ஏற்பட்டது என்பதையும் அச்சமூகத்தார்களும் சிறிதாவது மனிதத்தன்மையுடன் வாழ்கிறார்கள் என்பதையும் எவராலாவது மறுக்க முடியுமா?
குடி அரசு - 1936 (2), 32
மனித இயற்கையை எடுத்துக்கொண்டபோதிலும் எந்தக்காரணத்தை முன்னிட்டானாலும் சரி, ஒரு வகுப்பார் மேல்நிலையிலும் ஒரு வகுப்பார் கீழ்நிலையிலும் இருப்பதை ஒப்புக்கொள்ளவோ பொறுத்துக்கொண்டிருக்கவோ. முடியாது என்றுதான் சொல்லுவேன்.
ஆகையால் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அபிப்பிராயத்தை தோழர் சத்தியமூர்த்தியார் வரவேற்பதாகவும் ஒப்புக்கொண்டதாகவும் கூறியதானது ஒரு அளவுக்காவதுநமக்கு மகிழ்ச்சியையும் பழய தோழர்களுடன்.
கலந்து ஒத்துழைக்க காலம் வரலாம் என்ற நம்பிக்கையும் தருகிறது ஆனாலும் அதை காரியத்தில் செய்ய சம்மதிக்கிறார்களா என்பதை வெகு ஆசையோடும் கவலையோடும் எதிர்பார்க்க வேண்டியவனாய் இருக்கிறேன். இதை எவ்வளவு சீக்கிரத்தில் காங்கிரஸ்காரர்கள் இந்துக்களுக்கும் முஸ்லீம்
களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் போலவோ அல்லது மூர்த்தியார் சொல்வதுபோல பொது அறிக்கையினால் சரிப்படுத்துவது போலவோ காரியத்தை முடித்து வைக்கிறார்களோ அவ்வளவுக்கு நான் நன்றியறிதலுள்ளவனாக இருப்பேன்.
இதுவிஷயமாகவே இதற்கு முன்னும் ஒரு தடவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராய் இருந்த பெரியார் ஒருவர் என்னிடம் எழுத்து மூலமாக எழுதி வாங்கிக் கொண்டுபோய் காந்தியாருடையவும் காங்கிரசினுடையவும் சம்மதம் பெற்று அறிக்கை வெளியிடுவதாக மனமுவந்து கருணை அளித்தார். இதுவரையில் ஒன்றும் முடிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
காங்கிரசின் மனப்பான்மை
நான் மற்றொரு விஷயத்தையும் தெரிவிக்க வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது காங்கிரஸ் இதை ஏற்றுக்கொள்ளுமா என்பதில். காங்கிரசின் மனப்பான்மைக்கு ஒரு உதாரணம் கூறாமல் இருக்க முடியவில்லை. அதாவது 1927-ல் சென்னையில் நடந்த எல்லா இந்திய காங்கிரஸ் மகாசபையின் போது தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் மூலமாக அவர் பேராலேயே ஒரு தீர்மானம் அனுப்பி இருந்தோம் அத்தீர்மானத்தின் வாசகம் என்னவென்றால் “இந்தியா சுயராஜ்யம் அடைவதற்கு ஜாதி பேதம் ஒழிய வேண்டியது அவசியம் என்பதை காங்கிரஸ் கொள்கைகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவேண்டும்'' என்பது ஆக ஒரு தீர்மானம் அனுப்பப்பட்டது. அது வரவேற்புக் கமிட்டிக்கு காலத்திலேயே அனுப்பப்பட்டது. மற்றும் காங்கிரசின்போது தோழர்கள் டாக்டர் அன்சாரி, சரோஜினி அம்மாள் முதலியவர்கள் காஸ்மாபாலிட்டன். கிளப்புக்குவந்து தோழர்கள் பனகால் ராஜாவையும், ஆர்.கே.ஷண்முகத்தையும்,
௭. ராமசாமி முதலியாரையும், என்னையும் சந்தித்துபேசி காங்கிரஸ் கூட்டத்துக்கு வரவேண்டும் என்றும் காங்கிரசில் சேரவேண்டும் என்றும் அழைத்தபோது இதே நிபந்தனைகளைச் சொன்னோம். அப்போது
33 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அவர்கள், இதை மிக சாதாரண விஷயமாகக் கருதி “இது விஷயத்தில் காங்கிரசுக்கு எவ்வித ஆட்சேபணையுமிருக்க நியாயமில்லை. ஆகையால் நீங்கள் காங்கிரசுக்கு வர தயாராய் இருக்க வேண்டியது. நான் மற்றவர்களுடன் ராத்திரிக்கு பேசி காலை பதில் சொல்லுகிறேன்” என்று சொன்னார்கள். அப்போது நான் அவர்களிடம் “உங்கள் முயற்சி பலிக்காது. கண்டிப்பாய் பலிக்காது” என்று சொன்னதோடு முதல் தவணையாக தோழர் ஆர்.கே. ஷண்முகம் அனுப்பியிருக்கிற தீர்மானத்தையாவது ஒப்புக் கொள்ளச் சொல்லுங்கள். நாங்கள் காலையில் காங்கிரஸ் கூட்டத்துக்கு வருகிறோம் என்று சொன்னேன். தோழர் சரோஜினியம்மாள் குதியாட்டம் போட்டுக்கொண்டு “இத்தீர்மானம் காங்கிரசில் நிறைவேறவில்லையானால் பார்ப்பனர்களைப் பற்றி நீங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையாகிவிடும் நானும் ஒரு கை பார்க்கிறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார். கடைசியாக என்ன நடந்தது என்றால் தோழர் ஷண்முகம் தீர்மானம் காஞ்சீபுரம் தீர்மானம் போலவே விஷயாலோசனைக் கமிட்டியிலேயே கொலை செய்யப்பட்டுவிட்டது என்பதைத்தான் உணர நேர்ந்தது. ஆகவே காங்கிரசுக்கு இந்த பார்ப்பனர்களிடம் எவ்வளவு சுதந்தரம் இருக்கிறது என்பது இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆனபோதிலும் என்னைப் பொறுத்தவரை என்னுடைய கூட்டு வேலைத் தோழர்கள் பலரைப் பொறுத்தவரை இவ் விஷயத்தில் நாங்கள் வாக்குத் தவறுவதில்லை என்று உறுதி கூறுகிறேன்.
இரண்டாவதாக
சமூக சீர்திருத்த விஷயத்தில் மூர்த்தியார் தஞ்சை பேச்சில் வழவழ என்று பேசி இருப்பதாகத்தான் கருதுகிறேன். சமுக சீர்திருத்த விஷயத்தில் காங்கிரஸ் சட்டபூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள். அதற்கு பதில் சொல்லாமல் கிருஷ்ணமாச்சாரியாரை ஜஸ்டிஸ் கட்சி ஏன் ஆதரித்தது என்று கேட்கிறார். இதற்கு சமாதானம் சொல்லுவதில் ஒரு கஷ்டமான நிலையில் என்னை தோழர் சத்தியமூர்த்தியார் கொண்டுவந்து விடுகிறார் என்று சொல்ல வேண்டி
இருக்கிறது. ஆனாலும் எனது கடமையை நான் செய்கிறேன்.
ஹம்பக் சீர்திருத்தவாதி: அதாவது தோழர் திருச்சி ராஜனைவிட ராஜாபகதூர் கிருஷ்ணமாக்சாரியார் இந்திய சட்ட சபைக்கு போவது மேலான காரியம் என்பது உண்மை சமூக சீர்திருத்தவாதிகளுடைய கருத்தாய் இருந்ததினால்தான் அதுசமயம் ஏதோ ஒரு சிலர் கிருஷ்ணமாச்சாரியாரை ஆதரித்தார்கள். எப்படி எனில் திருச்சி தோழர் ராஜன் சமூக சீர்திருத்தப் போர்வையைப் போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறவர். சமூக சீர்திருத்த சட்டம் செய்வதை ஆகேஷபிப்பவர். தன்னை பொறுத்தவரை
குடி அரசு - 1936 (2), 34
வாய்க்கு ருசியான உணவு எங்கு கிடைத்தாலும் எதாயிருந்தாலும் புசிப்பதைத்தவிர அவரிடம் எவ்வித சீர்திருத்தமும் நான் காணவில்லை பல கூட்டங்களில் சமூக சீரதிருத்தத்திற்கு சட்டம் செய்வது கூடாதென்றும், மக்களை கட்டாயப்படுத்தி எவ்வித சீர்திருத்தமும் செய்யக் கூடாது என்றும் பேசி வருணாச்சிரம தர்மிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து உறுதி கொடுத்து ஓட்டுக்கேட்டவர். இவரால் மக்கள் சுலபத்தில் ஏமாற்றப்பட்டு விடுவார்கள். மக்களின் முயற்சியும் கெட்டுவிடும். தோழர் டாக்டர் ராஜனை: சீர்திருத்தவாதி என்று ஒப்புக்கொண்டால் நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டவர்களாகி விடுவோம்
தோழர் ராஜாபகதூர் ஆச்சாரியார் உண்மை பேசுகிறவர், பரம வைதீகி, பழய அழுக்கு மூட்டை. அவர் சட்டசபைக்கு போனால் அவரின் நிலை இன்னதென அறிந்து அவரை எதிரியாகவே கருதி அதற்கு வேண்டிய எதிர்ப்பு முறை கையாளலாம். பொது ஜனங்களை அவர் ஏமாற்ற முடியாது. அவரால் பொது ஜனங்களும் ஏமாந்து போகமாட்டார்கள். மற்றும் விழிப் பெய்துவார்கள். ஆதலால் அவர் சட்டசபைக்கு போவது ராஜன் போவதைவிட குறைவான கெடுதியைதான் உண்டாக்கும் என்று கருதி அப்படிச் செய்தார்கள். எனக்கும் கூட ஹம்பக்கான சினேகிதனை விட நேர்மையான எதிரிமேல் என்பதுதான். கொள்கையாக இருக்கிறது. ஆகையால் டாக்டர் ராஜனை ஆதரிக்காததிலிருந்தே ஒரு கூட்டத்தாரின் கொள்கையை பரிக்ஷித்தால் தோழர் சத்தியமூர்த்தி நியாயம் கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றப் பட்டுவிடுவார்.
சமூக சம்மந்தமாக பார்ப்பனரல்லாதாரால் கொண்டு வரப்படும் தீர்மானங்களை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகிறதா? என்பதுதான் எனது விண்ணப்பம். மற்றபடி காங்கிரசின் சமூக சீர்திருத்த தீர்மானம் என்ன என்பது நான் அறியாததல்ல. காங்கிரஸ் சமூக சீர்திருத்த விஷயமாக இந்த 50 வருஷமாக என்று தீர்மானம் எந்த சட்டசபைக்கு கொண்டு வந்து நிறைவேறிற்று? எந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தது? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை நான் வணக்கமாய் கேட்கின்றேன். இன்னமும் பேசப் போனால் 1920ம் வருஷம் முதல் ஆச்சார சீர்திருத்த மகாநாடு என்று வெகு காலமாக காங்கிரசின் போது கூட்டப்பட்டு வந்த மகாநாடும் நின்றுவிட்டது. தீண்டாமை ஒழிந்தபின்பே சுயராஜ்யம் என்னும் கொள்கையும் எடுபட்டு விட்டது. ஆலயப்பிரவேச முயற்சியும் பின்வாங்கிக் கொள்ளப்பட்டது. இறுதியாக சமூக சீர்திருத்த விஷயமாய் பொதுமக்கள் சம்மதமில்லாமல்படி தீர்மானங்கள் கொண்டு வருவதும்
சட்டம் செய்வதும் கூடாது என்றும் தலைவர்களாலேயே சொல்லப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சமூக சீர்திருத்த விஷயமாய் என்ன ஆதாரத்தைக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காங்கிரசை ஆதரித்துப் பேசினார் என்பது எனக்கு விளங்கவில்லை.
35 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மூன்றாவதாக ஜஸ்டிஸ் கட்சி செய்த காரியத்தை அழிக்கக் கூடாது என்பது
ஜஸ்டிஸ் கட்சியார் இந்த 15 - @ காலமாக செய்த காரியத்தை காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு வந்தால் அழிக்கக்கூடாது என்று நான் கேட்டுக் கொண்டதை தோழர் மூர்த்தியார் ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது என்று பரிகாசம் செய்திருக்கிறார். ஆனாலும் பாதகம் இல்லை. ஜஸ்டிஸ் கட்சி செய்த ஒரு சிலவற்றை சொல்லுகிறேன். அவற்றை கெடுக்காமல் இருக்கிறார்களா என்று தோழர் மூர்த்தியார் சொன்னால் போதும்
முதலாவது உத்தியோகங்களில் எல்லா ஜாதி மத வகுப்பாருக்கும் பிரதிநிதித்துவமும் அரசியல் பிரதிநிதித்துவங்களிலும் விகிதாச்சார
பிரதிநிதித்துவமும் ஏற்படுத்தி இருக்கிறது பொது ஸ்தலங்களில் ஜாதிமத பேதம் காட்டக்கூடாது என்ற சட்டம் செய்தது
தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் இன்று ஸ்தல ஸ்தாபனம் முதல் அரசியல் நிர்வாகம் உத்தியோகம் ஆகியவைகள் வரை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஏற்படுத்தியது.
உள்நாட்டு வைத்தியத்துக்கு ஆதரவு அளித்து கல்லூரி ஏற்படுத்தியது பிள்ளைகளுக்கு கட்டாய இலவசக் கல்விமுறை ஏற்படுத்தியது.
பள்ளிக்கூடத்தில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது என்கின்ற
உத்திரவு செய்தது ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களில் எல்லா வகுப்புக்கும் பிரதிநிதித்துவம் அளித்தது
தேவதாசி முறையை ஒழித்தது. விபசாரக்குச்சுகளை ஒழித்தது.
விவசாயிகளின் கடன் பளுவை குறைத்தது தேவஸ்தான நிர்வாகமும் சொத்துக்கள் பரிபாலனமும் சரிவர நடக்கும்படியாக மேற்பார்வை பார்க்க அரசாங்கத்துக்கு உரிமை ஏற்படுத்தியது
மேல்தர படிப்பு, குறிப்பிட்ட விஷயங்களுக்கு ஆக படிக்கும் படிப்பு ஆகியவைகளில் படிக்க ஆசையுள்ள சகல வகுப்பு மக்களுக்கும் இடம் கிடைக்கும்படி செய்தது
பெண்மக்கள் படிக்க அதிகமான சவுகரியம் செய்தது
பெண்மக்களுக்கு ஓட்டுரிமை, அரசியலில் பங்கு பெற வசதி ஆகியவை செய்தது
குடிவார சட்டம், இனாம் பூமி சட்டம் முதலிய காரியங்கள் செய்தது
குடி அரசு - 1936 (2), 36
இவைகள் எல்லாம் எல்லா பார்ப்பனர்களுடையவும் அதுவும் சிலவற்றுள் இன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகிய தங்களுடையவும் எதிர்ப்பின் மீது செய்யப்பட்ட காரியங்களாகும். இவைகளில் பல இந்துமத சம்பிரதாயத்துக்கு எதிரானவை என்றும் மகாராணி வாக்குத்தத்தத்துக்கு விரோதமானது என்றும் கூட சொல்லப் பட்டவையாகும். ஆகவே இந்தக் காரியங்களை காங்கிரசுக்காரர் அதிகாரத்துக்கு வந்தால் கெடுக்காமல் இருப்பார்களா என்று கேட்டால் அதற்கு சமாதானம் சொல்ல மூர்த்தியார் கடமைப்பட்டவரல்லவா என்று கேட்கின்றேன். அதைவிட்டு நம்மை பரிகாசம் செய்வதால் பயன் என்ன? இந்த நிபந்தனைகளை நாம் பயத்தின் மீது கேட்கின்றோமே ஓழிய இவை அனாவசியமாய் கேட்கும்படியான கேள்விகள் அல்ல என்று மனப்பூர்வமாய் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆகவே தஞ்சை பதிலில் தோழர் மூர்த்தியார் இவைகளுக்கு உண்டு இல்லை என்று ஒரு முடிவான விளக்கமான பதில் சொல்லாமல் ஜஸ்டிஸ்காரர். வரி குறைக்கவில்லையே அதையா என்றும், போலீசார் தொண்டர்களை அடித்ததை பார்த்துக் கொண்டிருந்தார்களே அதையா அழிக்கக் கூடாது என்றும் கேட்பது சரியான நாணயமான பதிலாகுமா என்று யோகித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.
வரி குறைக்கும் வேலை, மந்திரிகளுடைய அதிகாரத்தில் இல்லை என்றும் அது சர்க்கார் பொதுஜனப் பிரதிநிதிகளுக்கு கொடுக்காமல் தங்கள் கைவசம் வைத்துக் கொண்ட அதிகாரம் என்றும் அதாவது ரிசர்வ்ட் - ட்ரான்ஸ்பர்ட் அல்லது ஒதுக்கப்பட்டது, மாற்றப்பட்டது என்று இருக்கும் இரு பாகத்தில் ரிசர்வ்ட்- ஒதுக்கப்பட்ட இலாகாவுக்கு சம்பந்தப்பட்ட தென்று பலமுறை சொல்லி வந்திருக்கிறேன். சட்டம் தெரியாத முட்டாள்களும் பொறுப்பில்லாத கூலிகளும், காலிகளும் இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சி
மீது குறை கூறினால் அதை யெவரும் லட்சியம் செய்யமாட்டார்கள் ஆனால் அரசியல் ஞானம் பெற்றவரும் காங்கிரசில் பொறுப்புள்ள பதவி வகிப்பவரும் இனி மந்திரி ஆக வேண்டும் என்பவரும் ஒரு மாகாண காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தலைமை வகிப்பவருமான பெரியார் ஒருவர். இம்மாதிரி பேசினால் அதற்கு என்ன சொல்வது. சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடவோ சட்டங்களையும் ஒழுங்குகளையும் மதிக்காமல் நடந்து கொள்ளவோ ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்கவில்லை, அந்தப்படி சொல்லி பொது ஜனங்களிடம் அவர்கள் ஓட்டுப்பெறவும் இல்லை. ஆகையால் அவர்கள் மீது நிலவரி விஷயமாய் குறை கூறுவது நீதியும் வீரமுமான: காரியமாகாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது
போலீசார் சட்டம் மீறியவர்களை தங்கள் உத்திரவை உதாசீனம் செய்தவர்களை அடித்தால் அதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் என்ன செய்வார்கள்? எல்லா மாகாணங்களிலும் அடித்தார்கள் அடிபட்ட பின்புதான் மக்களும் சட்டம் மீறுவது பயன்படாது என்பதை உணர முற்பட்டு அடியோடு நிறுத்தி
37 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சட்டத்திற்கு அடங்கி நடக்க ஆரம்பித்தார்கள் என்றாலும் அடிப்பதும் தண்டிப்பதும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் கையிலா இருந்தது? அதுவும் சர்க்கார் தங்களுக்கு என்று ஒதுக்கி வைத்துக் கொண்ட இலக்காவைச் சேர்ந்ததாகும். ஜஸ்டிஸ் மந்திரிகள் தங்களால் கூடியதை சர்க்காருக்கு சொல்லிப் பார்ப்பார்கள், பிறகு அந்த இலாக்காத் தலைவர் செய்த முடிவுப்படிதான் காரியங்கள் நடந்து தீரும். சர்க்காரும் இன்ன காரியம் செய்தால் இன்ன தண்டனை என்று விளம்பரப்படுத்தி அல்லது உதாரணம் காட்டி விட்டுத்தான் அவர்கள் காரியங்களில் பிரவேசித்தார்களே ஒழிய நோட்டீசில்லாமல் வந்து புகுந்து அடித்து ஜெயிலுக்குள் போடவில்லை. அடிபட்டவர்களும் தாம் செய்யப்போகும் காரியத்துக்கு இன்னவிதமான அடியும் இப்படிப்பட்ட தண்டனையும் பலனும் கிடைக்கும் என்றும் அது எவ்வளவு வலிக்கும் எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்றும் தெரிந்துதான்
அதில் இறங்கினார்களே ஒழிய வேறில்லை. இப்படிப்பட்ட நிலையில் துணிந்து வேண்டுமென்றே செய்த காரியத்துக்கு அதில் அதிகாரமும் சம்மந்தமும் இல்லாத ஜஸ்டிஸ் மந்திரிகள் உதவி செய்யவில்லை என்று பழி கூறுவது ஆண்மையா? நாணயமா? சுயமரியாதைக்கு ஏற்றதா? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை பணிவோடு கேட்கின்றேன். ஆகவே தோழர் சத்தியமூர்த்தியார் வெள்ளையாய் விளக்கமாய் மேலே நான் குறிப்பிட்ட காரியங்களைப் பொறுத்தவரை தங்கள் அபிப்பிராயம் சொல்லி அதை காங்கிரசு மூலம் ஒப்புக் கொள்ளச் செய்தால் அவர் தமிழ் மக்களுக்கு பெருத்த மகத்தான உதவி செய்தவராவார்; தன்னுடைய உண்மையான தேச பக்திக்கும் ஒரு ஞாபகஸ்தம்பம் நாட்டியவராவார்.
சில காலிகளும் எச்சிலைப் பத்திரிக்கைகளும் “காங்கிரசை நிபந்தனை கேட்க இவன் யார்?” என்று என்னை ஏளனம் செய்வதைப் பார்த்து வருகிறேன். மக்கள் எல்லோரும் காங்கிரசில் சேர வேண்டும் என்று கோரினவர்கள் - கோருபவர்கள் எல்லாம் மனிதர்களாய் இருந்திருப்பார் களானால் அவர்களில் எவருக்கும் இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட மனிதனைப் பார்த்து காங்கிரசின் கொள்கையைப்பற்றி பேசவோ நிபந்தனையைப் பற்றி பேசவோ நீ யார் என்று கேட்க புத்தியே தோன்றி இருக்காது
அதைவிட்டு ஞானமில்லாமல் பொறுப்பு இல்லாமல் மானமில்லாமல் எப்படியாவது எதை விற்றாவது வயிறு கழுவலாம் என்ற ஈன மக்களுக்கு இதைவிட வேறு கேள்வி கேட்க புத்தியோ விஷயமோ கிடைக்கமாட்டாது என்பதைத் தான் அவர்களுக்கு நான் பதில் சொல்லக்கூடும்
இப்படிப்பட்ட மூடர்களுக்கும் இழிமக்களுக்கும் என்னை காங்கிரசுக்கு வரும்படி அழைத்து எனது நிபந்தனை என்ன என்று கேட்டவர்கள் பெயரைச் சொல்லுவதன் மூலம் மற்றொரு பதிலும் சொல்லுகிறேன்.
குடி அரசு - 1936 (2), 38
தோழர் காந்தியார் ஒரு விஷயத்தில் என்னைக் கூப்பிட்டு உனக்கு காங்கிரசினிடம் என்ன குறை?நீ தலைமை வகித்து நடத்துவதில் என்ன. அசெளகரியம் என்று கேட்டார். அது சமயம் இப்படிக் கேட்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது என்று இப்போது கேட்பவர்களில் ஒருவரே பக்கத்தில் இருந்தார் என்று கூடச் சொல்லுகிறேன்.
மற்றும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒருதரமல்ல பல தரம் நமது அபிப்பிராய பேதங்களை கூடுமானவரை ஒருவருக்கொருவர் சரிப்படுத்திக் கொண்டு ஒத்துழைக்க மார்க்கமில்லையா என்று மனம் கசிந்து கண்ணீர். விட்டுக் கேட்டார் என்று சொல்லுகிறேன். இப்போது இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பல பிரசங்கங்களில் நாயக்கருக்கும் எனக்கும் அனேக விஷயங்களில் அபிப்பிராயப் பேதமில்லை. ஒன்று இரண்டு இருந்தால் அதை காங்கிரசில் வந்து வலியுறுத்தட்டும் என்று சொல்லியிருக்கிறார். இனியார் என்னைக்கூப்பிட வேண்டும் என்று இந்தக்கூலிகள் நினைக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட குட்டிகள் குலைப்பதெல்லாம்
முடிவில் தாய் தலையில் விடிகின்றன.
மற்றும் ஒரு காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸிற்கே சர்வாதிகாரியாயிருந்த தோழர் சி.பி.சுப்பையா அவர்கள் “உங்கள் கொள்கை பூராவையும் ஒப்புக்கொள்ளுகிறோம். நீங்கள் காங்கிரசை வந்து நடத்திக் கொடுங்கள்” என்று வருந்திப் பல தடவை கூப்பிட்டார் என்று சொல்லுகிறேன்.
மற்றும் சென்ற வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசியாய் இருந்த தோழர் வெங்கிடாசல ரெட்டியார் வீட்டுக்கு வந்து வருந்தி அழைத்தார் என்றும் சொல்லுகிறேன்.
மற்றும் தோழர் திரு.வி.க. அவர்களும் பொறுப்புள்ள அதிகாரமில்லாத வேறு பல முக்கியஸ்தர்களும் வந்து அழைத்ததை நான் எழுத வரவில்லை. என்னை மாத்திரமல்லாமல் என்னைப்போல் இன்னமும் ஆயிரக் கணக்கான. பேர்களையும் அவர்கள் கூப்பிட்டிருக்கலாம். அவைகள் அவர்களது காங்கிரஸ் பக்தியைக் காட்டுகிறதே ஒழிய அவற்றால் எனக்கு ஒரு புதிய பெருமை அளிக்கவில்லை என்பதோடு நான் பெருமை பாராட்டிக் கொள்ளவுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆகவே தேசத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு காங்கிரசின் பேரைச் சொல்லிக் கொண்டு வயிறு கழுவும் காலிகள் பொறுப்பும் மானமும் இல்லாமல் இம்மாதிரி அதிகப் பிரசங்கித்தனமாய் பேசுவதும் எழுதுவதும் கூடாது என்பதற்கு ஆகவே இவற்றை எழுதினேன். சற்று அதிகமாய் எழுதினதாகக் காணப்படலாம். வியாதிக்குத் தகுந்த சூடுபோட வேண்டிய அவசியத்துக்கு ஆகவே எழுதினேன்.
முடிவாக தோழர் மூர்த்தியாருக்கு ஒன்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.
39 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தமிழ்நாட்டுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து விடுவது பாதகமில்லை என்று உண்மையாய் உணருவீர்களானால் சமூக சீர்திருத்தம் அவசியம்தான் என்று கருதுவார்களானால் எவ்வளவு சீக்கிரத்தில் அந்த காரியம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் அதைச் செய்யுங்கள்.
இல்லாவிட்டால் இந்த 16 வருஷமாக காங்கிரஸ் பட்ட கஷ்டங் களையும் - அடைந்த தோல்விகளையும் விட அதிகமாகத்தான் அடைய வேண்டியிருக்குமே தவிர சிறிது கூட குறைவுபடாது என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - தலையங்கம் - 12.07.1936
குடி அரசு - 1936 (2), 40
“இரணியன் அல்லது இணையற்ற வீரன்”?
இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன். நாடகங்கள் எல்லாம் குறைந்தது 2-மணி நேரத்தில் முடிவு பெறவேண்டும். மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்துபோகிறது; உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டுவிதமுண்டு. ஒன்று பாட்டாக நடத்திக் காண்பிப்பது; மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக் காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப்பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். பல உபந்யாசங்கள் செய்வதைவிட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தி @it கவர்ச்சியை உண்டாக்குகிறது. நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோகப் படுத்திக்கொண்டார்கள். பழைய நாடகங்களை நாம் சீர்திருத்திப் புதிய முறையில் நடத்திக் காண்பிக்க வேண்டும். நாடகங்களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த பழைய நாடகங்கள் மக்களை மூடர்களாயும், அர்த்தமற்ற கொள்கையுடை யவர்களாயும் செய்து இருக்கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கிறது. நல்லதங்காள் கதை உலகம் அறிந்தது. நல்லதங்காள். மிகவும் கற்புடையவள் என்று கூறப்படுகிறது. வாழைப்பட்டையை விறகாய் வைத்து எரித்ததாகவும், மணலை அரிசியாகச் சமைத்ததாகவும், உயரத்தில் இருந்த மாங்கனியை கைக்கு கீழே தருவித்துக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பதிவிரதைத் தன்மை வாய்ந்த ஒருவர் வாழ்ந்த நாட்டிலே 12 வருடகாலம் தொடர்ச்சியாய் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டதென்றால் அவருடைய பதிவிரதத் தன்மை எவ்வளவு
ஒழுக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். (கூட்டத்தில் ஒரே சிரிப்பு; ஆரவாரம்) அதே போன்று குசேலர் சரித்திரம் பிரமாதமாய் நடத்திக் காண்பிக்கப்படுகிறது பார்ப்பனர்கள் தாங்கள் பிச்சை ஏற்பதற்குச் சாதகமாய் அதை தெய்வீக கதையாய் சிருஷ்டித்துவிட்டு பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்துங்கூட அவன் தரித்திரனாய் இருந்தான் என்றால், பகுத்தறிவு உள்ளவன் எவனாவது நம்பமுடியுமா? வருடத்திற்கு ஒரு
41 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
குழந்தை பெற்றால்கூட முதல் குழந்தைக்கு 27 வருடமாகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 6-7 இருக்கலாம். (கூட்டத்தில் ஒருவர் ஒரு
முறைக்கு 4 குழந்தை பெற்று இருக்கலாம்) அப்படி இருந்தாலும் வயது வந்த பிள்ளைகள் கூலி ஜீவனம் செய்தாவது மேற்படி குடும்பத்தை ரக்ஷித்து இருக்காதா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் ஏதாவது பொருள் இருக்கிறதா? இப்படியாக ஒவ்வொரு கதையும் பாமர மக்களின் அறிவை மழுங்கச் செய்வதாய் இருக்கின்றது
ஆகையால், நாடகங்களை புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய நாடகாசிரியர்கள் முன்வரவேண்டும். வெறும் சங்கீதமும், பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும். இந்த நாடகம் சென்னையில் இரண்டுமுறை காண்பிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இதுவே மூன்றாம் முறை. இனி இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால் மக்கள் உணர்ச்சி பெற்று மூட நம்பிக்கைகளையும், அர்த்தமற்ற கொள்கைகளையும் உடைத்தெரிவார்கள். தோழர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நாடகத்தை நான் பாராட்டுகிறேன்.
குறிப்பு வாணியம்பாடியை அடுத்த அம்பலூரில் 04.07.1936 இரவு பாரதி சபையாரால் நடத்தப்பெற்ற “இரணியன் அல்லது இணையற்ற
வீரன்! நாடகத்துக்கு தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 19.07.1936
குடி அரசு - 1936 (2), 42
பாண்டியன் — ராமசாமி! வேண்டுகோள்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஜில்லாவிலும், தாலூகாவிலும் பார்ப்பனரல்லாதார் மகாநாடுகள் கூட்ட ஆங்காங்குள்ள இயக்கத் தோழர்கள் முயற்சி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்ளுகிறோம்
WP.A. செளந்திரபாண்டியன்
ஈ.வெ. ராமசாமி
குடி அரசு - அறிவிப்பு - 19.07.1936
43 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
எனது திட்டம்
தலைவரவர்களே! தோழர்களே!
ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத்திட்டம் என்று இப்போது என்னால் ஆமோதிக்கப்படும் வேலை தீர்மானமானது சுமார் 2 வருஷத்துக்கு முன்னமேயே என்னால் அக்கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டமாகும்
இத்திட்டத்திற்கு பல சரித்திரங்கள் உண்டு. இத்திட்டம் முதல் முதலில் எப்படி ஏற்பட்டது என்றால் தோழர்கள் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியார். அவர்களும் நானும் ஒத்துழைக்க ஏதாவது சந்தர்ப்பம் ஏற்படக்கூடாதா என்ற பிரச்னை எழுந்த காலத்தில் என்னால் யோசித்து எழுதப்பட்டு ஷெயார்களில் ஒருவர் ஆமோதிப்பும் பெற்று காந்தியாருக்கு அனுப்பிக் கொடுக்கப்பட்ட திட்டங்களின் தத்துவமாகும். அவை ஏற்றுக் கொண்டதாக தோழர் காந்தியாரிடமிருந்து குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் வராததாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு சமர்ப்பித்தேன். அவர்கள் அவற்றை சில வார்த்தைத் திருத்தங்களுடன் ஒப்புக்கொண்டார்கள். அதன்பின் தான் இதே திட்டங்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் இவை பொது உடமைத் தீர்மானங்கள் என்றும் ராமசாமியை தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளுவதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியார் கொடுத்த விலை என்றும் சொல்லப்பட்டதாகும்
மற்றும் பார்ப்பன தேசீயப் பத்திரிக்கைகளாலும் பார்ப்பனக் கூலிகளாலும் கராச்சி தீர்மானத்தில் இருந்து திருடிய தீர்மானங்கள் என்றும் சொல்லப்பட்டதுமாகும் இவை பொதுஉடைமைத் தீர்மானமானாலும் சரி, கராச்சித்
திட்டத்தில் இருந்து திருடியது என்றாலும் சரி, அவற்றால் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை லாபமேதான். ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் நமக்கு திட்டமில்லை என்றோ அல்லது நமது திட்டங்கள் பிற்போக்கானவை என்றோ சொல்ல முடியாதல்லவா? கராச்சி திட்டத்தை நாம் திருடிக்கொண்டோம் என்றால் அதன் அருத்தம் என்ன? அதாவது கராச்சி திட்டத்தை நாம் நமது திட்டமாகக் கொண்டுவிட்டோம் என்பதுதானே அருத்தம். அப்படி இருக்கும்போது காங்கிரஸ்காரர்கள் திட்டமும் நம்முடைய திட்டமும் ஒன்று என்றாவதோடு அரசியலில் காங்கிரஸ் திட்டம் என்பதற்கும் ஜஸ்டிஸ் கட்சி திட்டம் என்பதற்கும் வித்தியாசமில்லை என்பதை காங்கிரஸ்காரர்களே
ஒப்புக்கொள்ளுகிறார்கள் என்று ஆகிவிடவில்லையா.
குடி அரசு - 1936 (2), 44
ஆனால் உண்மையிலேயே நமது திட்டங்களுக்கும் காங்கிரசு திட்டம் என்பதற்கும் உள்ள வித்தியாசம் 2 முக்கியமான வித்தியாசமாகும் காங்கிரஸ் திட்டத்தில் பழய புராணங்களையும் ஜாதி, மத வித்தியாசங்களையும் காப்பாற்றவும், அவரவர் ஜாதி ஆச்சாரங்களை அமுலில் நடத்திக் கொள்ள உரிமையும் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதமளித்திருக்கிறது இவற்றை நாம் ஒப்புக்கொள்ள முடியாது. ஒப்புக்கொள்வதானால் நாம் சூத்திரர் களாகவும் தீண்டாத ஜாதியாராகவும் இருக்க நாமே சம்மதித்துக் கொண்டவர். களாவோம். அன்றியும் வருணாச்சிரமத்தையும் பறையன் பிராமணன் என்கின்ற உயர்வு தாழ்வையும் ஒப்புக்கொள்ள வேண்டியவர்களாவோம், இன்றைய காங்கிரசின்கிளர்ச்சியெல்லாம் ஷி பிராமணத்தன்மையையும் பறத்தன்மையையும் காப்பாற்ற இருந்துவருகிறதே ஒழிய பொதுவாக மனித சமூகத்திற்கு எவ்வித நன்மைக்கு ஆகவும் இல்லை என்று நான் 15 @ காலமாக சொல்லி வருவதற்கு கராச்சி தீர்மானத்திலுள்ள இந்த தத்துவமே தான் காரணம். ஆகவே இவ்வளவு பெரிய வித்தியாசம் நமது திட்டத்துக்கும் கராச்சி திட்டத்திற்கும் இருக்கும்போது கராச்சி திட்டமும் நமது திட்டமும் ஒன்று என்று எந்தப் பைத்தியக்காரனாவது சொல்ல முடியமா?
அன்றியும் நமது திட்டத்தில் உள்ள விஷயங்கள் கராச்சி திட்டத்தில் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? நமது திட்டத்தில் “அரசியல் உத்தியோகங்கள் பிரதிநிதித்துவங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார்களுக்கும் (அதாவது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாத இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய வகுப்பார்களுக்கு) அவர்கள் ஜனத்தொகை பெருக்கத்துக்குத் தக்கபடி கிடைக்கும்படியாகச் செய்யவேண்டும்” என்பது ஆக உள்ள திட்டம் காங்கிரஸ்காரர்களின் கராச்சி திட்டத்தில் இருக்கிறதா? என்று கேட்கின்றேன். ஆகவே காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாச மெல்லாம் ஜாதி பேதங்கள் ஒழிக்கப்பட வேண்டியதும் அதுவரையில் வகுப்புகளின் அளவுக்குத் தகுந்தபடிதான் உத்தியோகமும் பிரதிநிதித்துவமும் இருந்து வரவேண்டும் என்பதுமேயாகும்
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு விஷயம் விளக்கவேண்டியவனாக இருக்கிறேன். அதாவது 'ஜாதிபேதம் ஜாதிப்பிரிவு ஆகியவை ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பது ஜாதியை காப்பாற்றுவது ஆகாதா'' என்று பார்ப்பன தேசீயப் பத்திரிக்கைகள். என்பனவும் அவர்களது கூலிப்பத்திரிக்கைகளும் கூலிகளும் எழுதவும் கேட்கவும் செய்கின்றார்கள். இவர்களுக்குள் சிலர் தெரிந்தே விஷமத்துக்கு ஆக கேட்பவர்களும் சிலர் விஷயம் புரியாமல் பார்ப்பனர்கள் சொல்வதை நம்பி கேட்பவர்களும் உண்டு.
45 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆனால் அதை விளக்கிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். என்ன. வென்றால் இன்று கராச்சித் திட்டமோ, காந்தியாரோ அல்லது காங்கிரசின் கொள்கையோ ஆகியவைகளில் அமுலில் இருக்கும் எந்தக் கொள்கையிலும் திட்டத்திலும் ஜாதி பிரிவுகளையும் பேதங்களையும் அடியோடு ஒழித்து விடுவது என்கின்ற விஷயம் இல்லவே இல்லை.
பூரண சுயேச்சை பெற்ற இந்தியாவில் பறையனும் பிராமணனும் இருக்கமாட்டார்கள் என்றோ உண்பனை தின்பனைக்கும் கொடுப்பனை கொள்வினைக்கும் அருகதையற்ற ஜாதிமத பேதங்கள் இருக்காது என்றோ ஒரு வாசகம் இருந்திருக்குமானால் மாத்திரம் எதற்கு ஆக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் வகுப்புவாதமும் பேசவேண்டும் என்று கேட்க காங்கிரஸ்காரர்களுக்கு உரிமை உண்டு. ஜாதிமதத்தில் நடுநிலைமை வகித்து பழைய சாஸ்திர புராண தர்மங்களை காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதமளிக்கும் காங்கிரசினிடம் எங்கள் பங்கு என்ன? எங்கள் உரிமை என்ன? என்று ஒருவர் கேட்டால் அவர் எப்படி வகுப்புவாதியாகவோ தேசத்துரோகி ஆகவோ ஆகிவிடக்கூடும் என்பதை யோசித்துப்பாருங்கள். பார்ப்பனர்கள் வெகு ஜாக்கிரதையாக தங்கள் உயர்வைக் காப்பாற்றிக் கொள்வதற்கு காங்கிரசினிடம் உத்திரவாதம் பெற்றுக்கொண்டு நம்மிடம் வந்து நமது தாழ்வையும் இழிவையும் நாம் காப்பாற்றிக் கொள்வதாய் உத்திரவாதம் கொடு என்று நம்மை கேட்டால் நாம் அத்தனை பேரும் முட்டாள்களா? அல்லது வகுப்பு நலத்தை விற்று வயிறு வளர்க்கும் குச்சிக்காரி பிள்ளைகளா? அல்லது பார்ப்பனக் கூலிகளா? என்று யோசித்துப் பாருங்கள்.
நான் இந்த காங்கிரசினுடையவும் பார்ப்பனர்களுடையவும் யோக்கியதைகளை தெரியாமல்படிக்கு பேசுவதாக நீங்கள் யாரும் கருதிவிடாதீர்கள்.
காங்கிரசின் யோக்கியதைக்கு சென்னை காங்கிரசுக்கு தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் அனுப்பிய ஜாதி வித்தியாசம் ஒழிப்பு தீர்மானம் என்ன கதி ஆயிற்று என்பதையும் பார்ப்பனர்கள் யோக்கியதைக்கு தோழர் டாக்டர் வரதராஜுலுவால் கிளர்ச்சி செய்யப்பட்ட குருகுல சமபந்தி போஜன தீர்மானம் என்ன ஆயிற்று என்றும் யோசித்துப் பாருங்கள்.
இந்த இரண்டு காரியங்களும் போதுமான ஆதாரமல்லவா என்று கேட்கின்றேன்.
இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத மக்களுக்கு இன்று முதலில் ஜாதி ஒழிப்பதும் சமமாய் நடத்தப்படுவது மல்லாத வேறு சுயராஜ்யம் என்ன வேண்டி இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அவற்றை ஒப்புக்கொள்ளாத காங்கிரசை ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதரிக்கிறார்கள் என்றால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை
குடி அரசு - 1936 (2), 46
சூத்திரன் என்றும் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றும் பார்ப்பனர். களின் அடிமை என்றும் சொல்லுவதைமெய்யென்று ஒப்புக்கொண்டதாகத்தானே அருத்தமாகிறதா அல்லவா என்றும் யோசித்துப்பாருங்கள்.
ஆகையால் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவ்விதத்திலும் முரணான காரியம் ஆகாது என்பதுடன் அதிலும் காங்கிரசை கேட்பது எப்படியும் எந்த விதத்திலும் தவறாகாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாதிபேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமே ஒழிய பொதுஜன சம்மதத்தில் என்றால் ஒரு நாளும் முடியவே முடியாது.
ஏனெனில் ஜாதி காரணமாக பாடுபடாமல் கடவுளையும் மோக்ஷத்தையும் காட்டி ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும்படியான செளகரியம் இருக்கும்போது பலாத்காரத்துக்கோ அல்லது தண்டனைக்கோ அல்லாமல் எவனாவது ஜாதி ஒழிய சம்மதிப்பானா என்று கேட்கிறேன். ஆகவே சட்டத்தின் மூலம் ஜாதிகள் ஒழிகின்றபோது சட்டத்தின்
மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எடுத்துவிடுவது சிறிதும் சிரமமான காரியம் அல்ல என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்றியும், காங்கிரஸ்காரர்கள் முயற்சிப்பதாலோ அல்லது சட்டத்தினாலோ வகுப்புகள் இல்லாமல் போகுமானால் பிறகு யாருக்கு நாம் பிரதிநிதித்துவம் கொடுக்கப்போகிறோம்? ஆகவே அது தானாகவே மறைந்துவிடும். ஆதலால் ஜாதி வகுப்புகள் உள்ளவரை வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் கேட்பதும் அதுவும் ஜாதியை காப்பாற்றுகின்ற காங்கிரசினிடம் கேட்பதும் குற்றமாகவோ, ஜாதியை காப்பாற்றியதாகவோ ஆகாது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிற்க, நமது தீர்மானங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் காங்கிரசுக் காரர்களால் எவ்வளவு குறை சொல்லக்கூடியதாய் இருந்தாலும் நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் இன்று நமது பாமர மக்களுக்கு அவை தேவையானதும் போதுமானதும் தானா அல்லவா என்பதை யோசித்துப்பாருங்கள்.
நமது திட்டங்களால் விவசாயிகளின் நிலைமை காப்பாற்றப்படுகிறது.
லேவாதேவிக்காரர்களால் ஏற்படும் கொடுமை ஒழிக்கப்படுகிறது.
வக்கீல்களின் தொல்லையும், விவகாரங்களின் தொல்லையும் ஒழிக்கப்படுகின்றது
வியாபாரிகள், தரகர்கள் கொள்ளையும் ஒழிக்கப்படுகின்றது
யந்திர முதலாளிகளின் கொடுமைகளும், தொழிலாளர்களின் கஷ்டங்களும் ஒழியப்படுகின்றன.
47 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மற்றபடி கல்வி குறைவு, மதுபானக் கெடுதி, தீண்டாமை இழிவு ஆகியவைகள் நீங்குவதுடன் சகல ஜாதிமத வகுப்பு மக்களுக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் விகிதாச்சார உரிமை கிடைப்பதன் மூலம் சமநிலை ஏற்பட வசதி அளிக்கிறது.
வரிவிதிப்பு, நிர்வாகம், ஜன சமூகத்துக்கு அனுகூலமான கூட்டுறவு ஸ்தல ஸ்தாபன நிர்வாகம், சம்பளக் கொள்ளை ஆகியவைகளும் ஒழுங்காக மக்களுக்கு அனுகூலமான வழியில் நடைபெறத்தக்க வண்ணம்
அமைந்திருக்கிறது.
இவைகள் அனுபவ சாத்தியமான முறையிலேயே கைகூடும் மாதிரியாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே நமது திட்டங்கள் எவ்வளவு தீவிர சமதர்ம வாதியும் ஒப்புக் கொள்ளக்கூடியதும் இதற்கு மேல் எந்த சமதர்மவாதியாலும் வகுக்கக் கூடாததுமான அவ்வளவு மேன்மையானதாகும்.
இவைகள் செவ்வனே வெற்றிபெறவேண்டுமானால் நமக்குள். ஒற்றுமையும் கட்டுப்பாடும் இருக்கவேண்டும். பார்ப்பனரல்லாத மக்களுக்குள். காங்கிரசின் விஷமும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் பரவாதிருக்குமானால் இந்த பதினைந்து வருஷ காலத்துக்குள்ளாக இன்னும் எவ்வளவோ பயனுள்ள காரியங்களைச் செய்திருக்கலாம். ஆனாலும் குற்றமில்லை இனியாவது ஒற்றுமையாய் இருப்போமானால் வரப்போகும் சீர்திருத்தத்தைப்
பயன்படுத்தி நல்ல வேலை செய்யலாம் என்றே கருதுகிறேன். நாம்பணக்காரர்களுக்கு அடிமை என்று காங்கிரஸ்காரர் சொல்லுகிறார்கள். எப்படிப்பட்ட காங்கிரசுக்காரர்கள் என்றால் தங்கள் வயிறு வளர்ப்புக்கு காங்கிரசுக்காரர்களிடமும் பார்ப்பனர்களிடமும் கூலிபெற்று நம்மைக் குரைக்கும் கூட்டத்தார்கள் தான் சொல்லுகிறார்களே ஒழிய தங்கள். வயிற்றுப் பிழைப்புக்கு நாணயமான ஒரு மார்க்கத்தை வைத்துக்கொண்டு நம்மை அடிமை என்று சொல்லுகிறவர்கள் யாருமே இல்லை. ஆதலால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை
பணக்காரர்களாய் இல்லாவிட்டால் எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது. தேர்தல்களுக்கு ஆயிரம் பதினாயிரம் கணக்கில் செலவு செய்ய வேண்டும்; மோட்டார் வேண்டும்; ஏஜண்டுகள் வேண்டும்; பிரசாரம் வேண்டும். இவை பணக்காரர்களால்தான் முடியும். ஆதலால் பணக்காரர்களைப் பற்றி
காங்கிரசார் பேசுவது முட்டாள்தனமும் அயோக்கியத்தனமுமான காரியமாகும்.
நாம் சர்க்காருக்கு உடந்தையாய் இருக்கிறோம் என்பதை நம்மீது காங்கிரஸ்காரர்கள் மற்றொரு குறை கூறுகிறார்கள். இதுவேண்டுமென்றே கூறப்படும் குறும்பான பழியாகும்
குடி அரசு - 1936 (2), 48
சர்க்காருடன் சண்டைபோடும்படியான திட்டம் காங்கிரஸ்காரர் களிடமாவது ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். காங்கிரஸ்காரர்கள் காந்தி-இர்வின் ஒப்பந்தத்திலேயே சர்க்காருக்கு எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை என்றும், வட்டமேஜை மகாநாட்டுக்குப் போவதாகவும் ஒப்புக் கொண்டதோடு இப்போதும் முனிசிபாலிட்டி ஜில்லாபோர்டு ஆகியவைகளுக்குச் சென்று ராஜவிஸ்வாசப் பிரமாணமும், ராஜபக்திப் பிரமாணமும், சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்கும் பிரமாணமும் செய்த பிறகு இனி எந்த விதத்தில் இவர்களைவிட மற்றவர்கள் சர்க்காருக்கு உதவியாயிருக்கிறார்கள் என்று கேட்கின்றேன். காங்கிரஸ்காரர்கள் மந்திரி வேலைபெற்று நிர்வாகம் நடத்துவது என்றால் அது சர்க்காருக்கு உதவி அல்லவா என்று கேட்கிறேன். நாம் வேறு எந்த வழியில் உதவி செய்துவிட்டோம்? ஆகையால் நம்மைப்பற்றி வேண்டுமென்றே காங்கிரஸ்காரர்கள் அறும் விஷமக் கூற்றுகளுக்குச் செவிசாய்க்காது நமது இயக்க நன்மைக்கு ஆன வேலைகளைக் கவனிக்க வேண்டியது நமது கடமையாகும்
குறிப்பு: வாடிப்பட்டியில் நடந்த மதுரை ஜில்லா ஜஸ்டிஸ் மாநாட்டில் 12.07.1936 இல் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 19.07.1936
49 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
டாக்டர் சுப்பராயனும்
CR. ஆச்சாரியாரும்
சென்னை காங்கிரஸ் கட்டிடத்தில் ஜஸ்டிஸ் கட்சியை வரப்போகிற தேர்தலில் முறி அடிப்பதற்கு தீவிரப் பிரசாரம் செய்யவேண்டும் என்று யோசனை செய்து காங்கிரஸ்காரர்கள் 11-7-36ந் தேதி தோழர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். அதற்கு முக்கிய பேச்சாளராக டாக்டர் சுப்பராயன் அவர்களும் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பேசி இருக்கிறார்கள்.
தோழர்கள் சுப்பராயனும் ஆச்சாரியாரும் பிரிந்து பிரிந்து ஒன்றுகூடி
இருப்பது இது ஒரு பத்தாவது தடவை ஆக இருக்கலாம். இருவரும் தலைக்கு ஒரு லட்சியத்தை பிடிவாதமாகக் கொண்டவர்கள். அந்த லட்சியங்கள் தான் அடிக்கடி அவர்களை பிரிக்கவும் கூட்டவும் செய்து வருகிறது அதென்ன வென்றால் தோழர் சுப்பராயனின் லட்சியமெல்லாம் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்பதேயாகும். தோழர் ஆச்சாரியார் லட்சியமோ எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தை நிலை
நிறுத்த பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதேயாகும்.
ஆகவே அரசியல் என்பது யோக்கியமற்றதும் நாணயமற்றதுமாகும் என மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதை மெய்ப்பிக்க இவ்விரு தோழர்களின் சேர்க்கையும் பிரிகையும் அவர்களது அரசியல் வாழ்க்கைகளுமே போதுமான ருஜுவாகும் தோழர்சுப்பராயன் அவர்கள் அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கும்போது தோழர் ராஜகோபாலாச்சாரியரால் அக்ஷராப்பியாசம் செய்யப்பட்டவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சிக்கு பதவி கிடைக்கக்கூடும் என்று தெரிந்ததும் அதில் தாவி சட்டசபை புகுந்து ஜஸ்டிஸ் மந்திரிக்கு காரியதரிசியாய் இருந்தவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போகலாம் என்றும் வெற்றி பெற்றாலும் தனக்கு பெரும் பதவி கிடைக்காதென்றும் தோன்றிய உடன் அதிலிருந்து வெளிவந்து காங்கிரசை ஆதரித்தவர்.
1926-ல் ஜஸ்டிஸ் கட்சிக்கு மந்திரி பதவி ஏற்க போதிய பலமில்லாதபோதும் காங்கிரசில் மந்திரி பதவி ஏற்க தங்களுக்குள் கட்டுப்பாடில்லாமல் கலகம்விளைந்தபோதும் காங்கிரசின் தயவால் தோழர்கள்.
குடி அரசு - 1936 (2), 50
சி. விஜயராகவாச்சாரியார், சி. ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களால் மந்திரி ஆக்கப்பட்ட மூவரில் முதல்வராய் இருந்து கொண்டவர். பிறகு அந்த மந்திரி ஸ்தானங்களுக்கு பலம் குறைந்து சர்க்காரால் தாங்கள் வெளியாக்கப்படக் கூடும் என்று தெரிந்த உடன் சர்க்காருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் நல்ல பிள்ளையாய் நடந்துகொள்ளுகிறேன் என்று உறுதி கொடுத்து காங்கிரசை வைது கொண்டும் சர்க்காரை ஆதரித்துக் கொண்டும் ஜஸ்டிஸ் கட்சிக்கு தாசராகவும் இருந்து முதல் மந்திரி பதவியை கடைசிவரை அனுபவித்து வந்தவர். இச்சமயத்தில் அவரால் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு ஏற்பட்ட நன்மைகளை நாம் மறக்கவில்லை. அதற்கு ஆக அவருக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் அக்காலத்தில் பார்ப்பனர்களின் எதிர்ப்பும் தொல்லையும் அவருக்கு அதிகமாய் இருந்தது என்றாலும் துணிந்து அநேக நன்மையான காரியங்களைச் செய்திருக்கிறார். ஆனால் அவை அவ்வளவும் கொள்கைக்கு ஆகச் செய்ததாக இல்லாமல் கூலிக்கு ஆகச் செய்ததாகவே பின்னால் காட்டிக் கொண்டதானது மிகவும் வருந்தத்தக்க காரியமாகும். அதன் பயனாகவே அடுத்ததேர்தலில் பலவிதகஷ்டம் ஏற்பட்டு மந்திரி பதவிகிடைப்பதற்கில்லாமல். போனவுடன் மறுபடியும் பார்ப்பனர்கள் தயவைப் பெற அன்று முதல் இன்றுவரை பாடுபட்டு பழயபடி மறுபடியும் தோழர் ஆச்சாரியாரின் ஜோதியில் கலந்து கொண்டார். அதனால் முன்பு தான் ஜஸ்டிஸ் கட்சியின் தாசராய் இருக்கும்போது என்ன என்ன செய்தாரோ என்ன என்ன பேசினாரோ அதற்கு விரோதமாய் இப்போது பேச மூன் வந்துவிட்டார்.
ஆச்சாரியார் தனக்கு ஆழம் பார்த்து சொல்வதற்கு தோழர் சுப்பராயனை பயன்படுத்திக் கொள்ளத்தக்க நிலைமைக்கு சுப்பராயன் அவர்கள் துணிந்து இறங்கிவிட்டார்.
ஆச்சாரியாரும் தோழர் சுப்பராயனை முன்னோடும் பிள்ளையாக ஏற்றுக்கொண்டுவிட்டார். இந்த நிலையில் இருவரும் ஒன்றுகூடி காங்கிரஸ்
கூட்டத்தில் பேசி இருப்பது மிகவும் பரிகாசமான காரியமாகும்
தோழர் சுப்பராயன் பேசியிருப்பது என்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு உணர்ச்சி முறையில் வேலை செய்யும் அமைப்பை மாற்றிக் கொண்டது என்றாலும் வகுப்பு முறையிலிலேயே தான் வேலை செய்து வருகிறது. ஜனநாயக வளர்ச்சியை உத்தேசித்து வகுப்பு உணர்ச்சிகளை விட்டுவிட வேண்டும்”
காங்கிரஸ் தேசத்துக்கு சேவை செய்திருக்கிறது என்றாலும் காங்கிரஸ் ஸ்தாபனங்களிலும் வகுப்பு உணர்ச்சி ஆரம்பித்திருக்கிறது சயேச்சைக்குஆக20வருஷகாலமாகப் போராடிவந்திருக்கும் காங்கிரஸ்காரர்கள். இந்த வகுப்புப் புண் பரவவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்" என்று
பேசியிருக்கிறார். மற்றும்,
51 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
“தேசத்திற்கு தியாகம் செய்தவர் வரப்போகும் தேர்தலில் சலுகை பெறவேண்டியது நியாயமே. ஆனபோதிலும் காங்கிரசில் சேரவிரும்பும் தேசீயவாதிகளையும்காங்கிரஸ் வரவேற்குமென்று நம்புகிறேன்.அவர்களுக்கும் தேச சேவை செய்ய சமயம் அளிக்க வேண்டும்"
"மந்திரி பதவி ஏற்பதே நலம். மந்திரி பதவி ஏற்றாலொழிய நிர்மாணத் திட்டத்தை நடத்தி வைக்க முடியாது. புதிய சட்டசபையில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும். உத்தியோகமேற்காவிட்டால் நம் கட்சியில் இருந்து சிலர் மாறிவிடுவார்கள். அதிகாரத்துக்கு வரும் கட்சி இவர்களில் சிலரை இழுத்துக்கொண்டு பலந்தேடிக்கொள்ளுவார்கள். ஆகவே காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்கவேண்டியது அவசியம்" என்று பேசியிருக்கிறார்.
அவருக்குப் பின் பேசிய தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தனது பேச்சின் ஆரம்பத்தில் தோழர் சுப்பராயனை தட்டிக் கொடுக்கிறார். ஆனாலும் அவரை தேசபக்தர் என்று சொல்ல ஆச்சாரியாருக்கு நாவெழ வில்லை. இதுவிஷயத்தில் ஜாக்கிரதையாகவே பேசி தட்டிக்கொடுத்திருக்
கிறார். அதாவது,
சுப்பராயன் இப்போதுதான் முதல் தடவையாக அசல் காங்கிரஸ் மேடையில் பேசுகிறார். அவர் காங்கிரஸ் அபிமானியாகவும் காங்கிரஸ் மெம்பராகவும் இருந்திருந்தாலும் இப்போதுதான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கிறார்"
“அவர் தன்னைப்பற்றிப் பேசியதாக சிலருக்கு தோன்றி இருக்கலாம். (அதாவது தனக்கு ஒரு மந்திரி வேலை கொடுக்கவேண்டும் என்று ப-ர்) ஆனாலும் அதையும் உறுதியாகவும் நியாயமாகவும் பேசி இருக்கிறார். ஆகவே இனி அவர் உறுதியான காங்கிரஸ்காரரென்று சொல்லலாம். மந்திரி பதவிக்கு ஆக சுப்பராயன் காங்கிரசில் சேர்ந்ததாக நினைக்காதீர்கள்.”
“ஜஸ்டிஸ், காங்கிரஸ் ஆகியஇரண்டுகட்சிகளேதான் இருக்க வேண்டும். மூன்றாவது கட்சி வேண்டியதில்லை. மூன்றாவது கட்சித் தலைவர் தோழர்.
எஸ். முத்தையா முதலியார் தேசபக்தரேயாவார். அவர் ஆரம்பித்த மூன்றாவது கட்சிக்கு பதவி ஏற்க சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை. இது எப்படியாவது ஒரு கட்சியுடன் கலந்துதான் தீரும்” என்று சொல்வதன் மூலம் தோழர் முத்தையா முதலியாரையும் காங்கிரசுக்கு கூப்பிடுகிறார்.
மேலும் பேசும்போது
“ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து ஆகவேண்டும். அக்கட்சி மீது கோபமுள்ளவர்கள் எல்லோரும் காங்கிரசில் சேருங்கள். காங்கிரசில் வகுப்புவாதம் நுழையக் கூடாதுதான். ஆனபோதிலும் காங்கிரசு கங்கா நதி போன்றதாகையால் எவ்வளவு வகுப்புவாதம் வந்தாலும் அதை சரிப்படுத்தி விடும் - வகுப்புவாதம் இந்தியா எங்கும் இருக்கிறது. காங்கிரஸ் மந்திரி பதவி ஏற்றாலும் சில வாரங்களுக்குமேல் நீடிக்காது” என்று பேசி இருக்கிறார்.
குடி அரசு - 1936 (2), 52
ஆகவே இவர்கள் இருவரும் மற்றும் பலரும் பேசியிருப்பவைகளில் முக்கியமாய் காணப்படுவதெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும், அதற்கு ஆக யாரை வேண்டுமானாலும் எப்படிப்பட்ட வகுப்பு வாதியையும் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதும், காரணம் என்ன வென்றால் ஜஸ்டிஸ் கட்சிக்கு வகுப்புவாதக் கட்சி என்பதும், அது அனுபவிக்கும் மந்திரி பதவிகளை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்பதுமல்லாமல் வேறொன்றும் காணப்படவில்லை.
ஆச்சாரியார் “வகுப்பு வாதம் இந்தியா முழுவதிலும் தான் இருக்கிறது” என்று ஒப்புக்கொள்ளுகிறார். டாக்டர் சுப்பராயன் அவர்களும் மற்றும் இரண்டொருவரும் வகுப்புவாதம் காங்கிரசிலுமிருக்கிறது என்று பச்சையாகச்சொல்லிவிட்டார்கள். தோழர் ஆச்சாரியாரோ காங்கிரசிலிருக்கும் வகுப்பு வாதம் ஒன்றும் கெடுதி செய்யாது என்கிறாரே ஒழிய வகுப்புவாதம் காங்கிரசில் இல்லையென்று சொல்ல அவருக்கே தைரியம் இல்லை.
இவை ஒருபுறமிருக்கட்டும். ஜஸ்டிஸ்கட்சியைப் பற்றி இவ்வளவு ஆத்திரமும், துவேஷமும் உள்ள இவர்களுடைய பேச்சுக்களை எவ்வளவுதான் நாம் துருவித் துருவிப் பார்த்தாலும் ஜஸ்டிஸ்கட்சியினால் தேசத்துக்கு ஏற்பட்ட கெடுதி இன்னது என்று ஒருவராவது ஒரு காரியத்தையாவது எடுத்துச் சொல்லவில்லை என்பது மிகவும் குறிப்பாய் கவனிக்க வேண்டிய விஷயமாகும். அன்றியும் வகுப்புணர்ச்சி என்பதன் தத்துவமும் வகுப்புவாதம் என்பதின் தத்துவமும் என்ன என்று பார்த்தால் பார்ப்பனர்களுடைய ஏகபோக ஆதிக்கம்குறைவுபடுகின்றதே என்பதல்லாமல் மற்றபடி அதனால் தேசீபமோ தேசாபிமானமோ எப்படிப் பாதிக்கப்படும் என்பதும் விளங்காத காரியமாகும் அதைக்கூட யாரும் இதுவரை விளக்கவுமில்லை:
இந்நிலையில் தோழர்சுப்பராயன் அவர்களின் தேசியவாதமெல்லாம் தனக்கு ஒரு மந்திரி உறுதி என்று சொல்லிவிட்டால் நாளையத் தினமே அவர் ஜஸ்டிஸ் கட்சியில் சேருவதில் ஆட்சேபணை சிறிதுகூட இருக்கவே இருக்காது. அதுமாத்திரமல்லாமல் சர்க்காரில் ஏதாவது 2, 3 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு குறைவில்லாத ஒரு உத்தியோகம் கொடுக்கப்படுவதா யிருந்தால் கூட 5 நிமிஷத்துக்குள் சர்க்காரின் மீது முன்பு கனம் சீனிவாச சாஸ்திரிகள் போன்றவர்கள் கவிபாடினது போல் கவிபாடுவதற்கும் ஆட்சேபணை இருக்காது. இவைகளை எல்லாம் தோழர் சுப்பராயன் அவர்களின் பழய ஜாதகங்களைப் பார்த்துச் சொல்லுகிறோமே ஒழிய கற்பனையாலோ ஆருடத்தாலோ சொல்லுவதல்ல. அதற்கு இணங்கவே தோழர் சுப்பராயன் அவர்கள் பிரசங்கத்திலும் தொனிப்பதை பார்க்கலாம் அதாவது “'காங்கிரசுக்காக தியாகம் செய்தவர்களுக்கே காங்கிரஸ் தேர்தலிலும் பதவிகளிலும் பயன் அனுபவிக்க உரிமை உண்டு என்றாலும் காங்கிரசில் சேர விரும்பும் (தன்னைப் போன்ற பலர்) தேசீயவாதிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார். ஆச்சாரியாரும்
53 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இதை சுப்பராயன் அவர்கள் தனக்காக பேசிக் கொண்டது என்றாலும் ஜாக்கிரதையாக பேசி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார். இதிலிருந்து டாக்டர் சுப்பராயன் கொள்கையும் அவருடைய தெய்வமும் மந்திரி ஆவது என்பது ஒன்றைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பது நன்றாய் விளங்கும். இப்படிப்பட்டவர் ஜஸ்டிஸ் கட்சியை அதுவும் ஜஸ்டிஸ் கட்சிக்கு 2, 3 தடவை தாசானுதாசராக இருந்து பயன் அனுபவித்தவர் இன்று ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாதம் என்று குறை கூறுவதும் பார்ப்பனர்களுடன் கூடிக்கொண்டு தனது சமூகத்தை காட்டி கொடுப்பதும் என்றால் இதைப்பற்றி
நாம் என்ன எழுதக்கூடும்? அவரது பழைய புராணங்களை புரட்டவேண்டியது
தவிர வேறு ஒன்றும் இல்லை.
தோழர் ஆச்சாரியார் வகுப்பு வாதத்துக்கு பரிகாரம் இன்னது என்று சொல்லாமல் காங்கிரசுக்குள் வந்து சேர்ந்துவிட்டால் வகுப்புவாதம் பறந்து
ஓடிப்போகும் என்று சொன்னால் அதன்அருத்தம் என்ன? என்று கேட்கின்றோம்.
காங்கிரசில் தாங்களே தலைவர்கள் என்பதும் காங்கிரசுக்குள் ஒருவன் வகுப்புவாதம் பேசினால் அவனைத் தேசத் துரோகி என்று வைது அடக்கி விடலாம் என்பதுமல்லாமல் வேறு என்ன அருத்தம் என்று யோசித்துப் பாருங்கள்.
காங்கிரசில் ஆதியில் இருந்த எத்தனையோ பேர் இன்று ஏன். வகுப்புவாதிகளாய் இருக்கிறார்கள்? காங்கிரசில் இருந்த சி.ஆர். ரெட்டியார். ஏன் ஒரு உத்தியோகம் கிடைத்தவுடன் அடிக்கடி காங்கிரசை விட்டுவிட்டு வகுப்புவாதக் கட்சிக்கு போய்விடுகிறார்? காங்கிரசில் இருந்த தோழர். முத்தய்ய முதலியார் ஏன் வகுப்புத் தீர்ப்பு எழுதினார்? மற்றும் காங்கிரசில் அதி தீவிர காங்கிரஸ் வாதிகளாய் இருந்த ஆர்.கே. ஷண்முகம், வரதராஜுலு, ஈ.வெ. ராமசாமி முதலியவர்கள் எல்லாம் ஏன் வகுப்புவாதிகள் ஆனார்கள்? ஆகவே காங்கிரசுக்குள் ஒருவன் வகுப்புவாதியானால் அவன் வீரனாகவும் சுயமரியாதைக்காரனாகவும் இருந்தால் தைரியமாய் வெளியில் வந்து தன் காலில் நிற்க முயற்சிப்பதும் வீரமும், மானமும் இல்லாத மக்களுக்கு வகுப்புணர்ச்சி ஏற்பட்டாலும் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து அவர்கள் பின் கவிபாடிவயிறு வளர்க்க வேண்டியதும் தான் இதுவரை அனுபவமாய் இருந்து வருகிறது. அந்தக் காரணத்தாலேயே பதவி வேட்டைக்கோ வயிறு வளர்ப்புக்கோ காங்கிரசில் வந்து சேருகிறவன் எவ்வளவு வகுப்பு வாதியாய் இருந்தாலும் நமக்கு அடங்கித்தான் கிடக்க வேண்டும் என்கின்ற தைரியத்தின் மீதே தோழர் ஆச்சாரியார் எப்படிப்பட்ட வகுப்புவாதியும் காங்கிரசுக்கு வந்தால் அடங்கிவிடுவான் என்று பந்தயம்
கட்டி கூறியிருக்கிறார்.
பொதுவாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் இடமாவது வகுப்புவாதம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா என்ற யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1936 (2), 54
அவர் ஒரு “பிராமணர் அவர் வாழ்க்கை, வேஷம், மனோபாவம் எல்லாம் அதை அனுசரித்தே இருக்கிறதா இல்லையா? என்று பாருங்கள் அவரைப் பொறுத்தவரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் “பிராமண”த் தன்மையை விட்டுவிட்டேன் என்று சொல்வதானாலும் இந்த நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்கள் வகுப்புணர்ச்சியை விட்டிருக்கிறார்கள்? பார்ப்பனரல்லாதார்களிலும் எத்தனை பேர் தங்கள் ஜாதி உணர்ச்சியை, ஜாதி தர்மம் என்பதை விட்டிருப்பார்கள்? அதுபோலவே தீண்டப்படாத மக்கள் என்போர்களை எத்தனை பார்ப்பனரும், எத்தனை பார்ப்பனரல்லாதாரும் வகுப்புணர்ச்சி இல்லாமல் நடத்துகிறார்கள்? என்று சொல்லக்கூடும் ஆகவே வெகு காலமாக வெகு பிரயத்தனமாக இருந்து வரும் வகுப்புணர்ச்சித் தொல்லையை ஒழிக்க வகுப்பு சமத்துவம் அரசியலிலாவது கொடுங்கள் என்று கேட்டால் அப்படி கேட்பதுவே வகுப்புணர்ச்சி ஆகி விட்டால் மற்று வேறு எந்த வழியில் தான் வகுப்புக் கொடுமைகளும் வகுப்பு இழிவுகளும் தீர்க்கப்படுவது என்று ஆச்சாரியார் அவர்களைக் கேட்கின்றோம்.
அல்லது காங்கிரசுதானாகட்டும் இந்த 50 வருஷகாலமாக இந்த வகுப்பு பேத உயர்வு தாழ்வு தொல்லையையும் கொடுமையையும் ஒழிக்க ஏதாவது ஒரு முயற்சி செய்ததா என்றும் வணக்கமாய் கேட்கின்றோம் வகுப்பினால் பெருமையும் லாபமும் அடையும் மக்கள் வகுப்பினால் சிறுமையும் இழிவும் நட்டமும் அடையும் மக்களைப் பார்த்து வகுப்பு உணர்ச்சி வேண்டாம் என்றால் அதில் சிறிதாவது நாணயமோ யோக்கியமோ இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே தோழர் ஆச்சாரியார் ஆகட்டும், வேறு யார் தானாகட்டும் வேறு எந்தப் பிரச்சினையின் மீதாவது ஜஸ்டிஸ் கட்சியை குறை கூறுவதானால் அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று ஆராயப் புகலாம். அப்படிக்கு இன்றி வெறும் வகுப்புணர்ச்சி தான் ஜஸ்டிஸ் கட்சி மீது உள்ள குற்றம் என்றால். எப்பாடுபட்டாவது தமிழ் மக்கள் அந்தக் காரணத்துக்கு ஆகவே அதாவது ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு நீதி கொண்டிருப்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சியை அதரித்து அது வெற்றி பெறும்படிசெய்யவேண்டியதுகடமை என்று கூறுவோம் கடசியாக இன்றைய வகுப்புணர்ச்சி என்பது எந்த தேசீயத்தையும்
தடைப்படுத்தி விடாது. எந்த சுயராஜ்யத்தையும் நிறுத்திவிடாது. தேசத்துக்கு பெரும் கேடாய் உளமாந்தை போன்று இருந்து வரும் பார்ப்பனீய ஆதிக்கத்தைத்தான் சமன்படுத்தும். ஆகையால் ஜாதியால் வகுப்பால். இழிநிலையில் தாழ்ந்த வகுப்பில் என்று இருக்கும் மக்கள் சுத்த ரத்த ஓட்டமும் மான உணர்ச்சியும் இருக்குமானால் பார்ப்பனீயத்தை தகர்த்தெரிய ஜஸ்டிஸ் கட்சியை ஆதரியுங்கள் என்று கூறி முடிக்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 19.07.1936
55 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வெவிநாட்டிலுள்ள பார்ப்பணரல்லாத தோழர்களுக்கு வேண்டுகோள்
தோழர்களே!
பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரம் செய்வதற்காக “தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்தியக் கமிட்டி” என்ற பெயரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி அப்பிரசாரத்திற்கு ஜில்லாக்கள் தோறும் நிதி வசூலித்து வருகிறோம். வசூல் செய்து முடிந்ததும் ஜில்லாக்கள் தோறும் பிரசாரம் செய்ய போகிறோம். ஒரு சிறு தமிழ் தினசரி பத்திரிகையும் துவக்க எண்ணியுள்ளோம்.
ஆதலால் கொளும்பு, பர்மா, சிங்கப்பூர், பினாங், ஜாவா, சுமத்திரா, கொச்சின், சைனா, டர்பன் ஆகிய வெளிநாடுகளிலுள்ள பார்ப்பனரல்லாத தோழர்கள் எங்கள் பிரசாரக் கமிட்டிக்கு உதவி செய்ய வேண்டுகிறோம். முக்கியஸ்தர்களாய் உள்ளவர்கள் முயற்சி எடுத்து பணம் வசூலித்து அனுப்ப விரும்புகிறோம். அந்தப்படி வசூலித்து அனுப்பப்படும் ஒவ்வொரு காசும் பார்ப்பனரல்லாதார் சமூகம் சுயமரியாதை பெறவும் பார்ப்பனீயம் அழிக்கப்படவும் பயன்படுத்தப்படும். அவ்விதம் உதவி செய்பவர்கள் ஷி கமிட்டி பொக்கிஷதார் விருதுநகர் (சேர்மன்) தோழர் வி.வி. இராமசாமி அவர்கள் பெயருக்கு செக்கு எழுதி “குடி அரசு” ஆபீஸ் மூலம் அனுப்பும்படி வேண்டுகிறோம். மூவார் தோழர்கள் இக்காரியத்துக்கு வழிகாட்டியிருப்பதை சென்றவாரக் குடி அரசில் பிரசுரித்திருக்கிறோம்.
தங்கள் ஆதரவுகளை எதிர்பார்க்கும்
ஊ.பு.அ. செளந்திரபாண்டியன்,
ஈ.வெ. ராமசாமி.
குடி அரசு - அறிவிப்பு - 26.07.1936
குடி அரசு - 1936 (2), 56
காங்கிரஸ் சூழ்ச்சி விளக்கம்
தோழர்களே! சமீபத்தில் வரும் அரசியல் சீர்திருத்தமானது எவ்வளவு தான் பயனற்றது என்றும் அதை உடைத்து எரியவேண்டும் என்றும் காங்கிரஸ்காரர்களாலும் மற்றும் பல தேசீயவாதிகள் என்பவர்களாலும் வாயினால் சொல்லப்பட்டாலும் காரியாம்சத்தில் எப்படியாவது சீரதிருத்தத்தின். கீழ்வரும் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்று ராஜவிஸ்வாசம், ராஜபக்தி, ராஜிய சட்டத்துக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு கட்டுப்படுதல் என்கின்ற காரியங்களுக்கு சர்க்காருக்கு சத்தியம் செய்து கொடுத்து மந்திரி பதவிகளை ஏற்று அதை அமுல் நடத்துவதென்றே சொல்லிக்கொண்டு இப்பொழுதிருந்தே எல்லா அரசியல் கட்சியாருள்ளும் போட்டிப் பிரசாரங்கள் நடந்துவருகின்றன.
இந்த லட்சணத்தில் இந்த கொள்கை உடைய காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சி ராஜவிஸ்வாச கட்சியென்றும், அதை 500 கெஐ ஆழத்தில் வெட்டிப் புதைக்க வேண்டும் என்றும் சட்டசபைத் தேர்தல்களில் தங்களுக்கே ஓட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அதிதீவிரமாய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இது “அவன் கெடக்கிறான் குடிகாரன் எனக்கு இரண்டு சொப்பு கள்ளு ஊத்து'' என்று வெறிகாரன் சொல்லுவதுபோல் இருக்கிறது காங்கிரஸ்காரர் என்பவர்களுக்கு இன்று மானம், வெட்கம், நாணயம், ஒழுக்கம், யோக்கியதை ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. “வெட்கம் கெட்டவன் சொந்தக்காரன்” என்பது போல எதை விற்றாவது சட்டசபைக்குப் போகவேண்டும், என்ன செய்தாவது மந்திரி ஆகவேண்டும் என்கின்ற ஒரு ஆசையே அவர்களுடைய மானம், வெட்கம், நாணயம் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு திரியும்படி செய்கிறது. சட்டசபைகள் மட்ட சபைகள் என்றும், கழுதைகளும் நாய்களும் தான் சட்டசபைக்கு போகும் என்று சொன்ன காங்கிரசுக்காரர்கள் இன்று சட்டசபைக்கு போகவேண்டும் என்று சொல்வதனால் ஒன்றா சட்ட சபை மட்டசபை அல்லாமல் இன்று உயர்ந்த யோக்கியதை உள்ள சபையாக ஆகி இருக்கவேண்டும், இல்லாவிட்டால் இவர்கள் மற்றவர்களைச் சொன்ன கழுதைகள், நாய்கள் என்கின்ற நிலையை அடைந்திருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் இவர்கள் எதற்கு ஆக சட்டசபைப் பித்துப்பிடித்து ஆடுகிறார்கள்? மந்திரி பதவிக்கு முள்ளின்
மீது நின்று தவம் செய்கிறார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள்
57 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அன்னியர்களை காங்கிரஸ்காரர்கள் நாய் கழுதைகள் என்று சொன்னதை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட்டு அந்தப்பதவிகளுக்கு தாங்கள் போகவேண்டும் என்று ஆசைப்படுவதின் அருத்தம் என்ன? என்று பாருங்கள்.
அந்தக்காலத்தில் இவர்கள் சட்டசபைக்கு போவதற்கு யோக்கியதை இல்லாததினால், சீஅந்தப் பழம் புளிக்கும் என்றும், அதைச் சாப்பிடுகிறவன் நாய், கழுதை என்றும் சொல்லவேண்டி வந்தது. இப்போது பாமர மக்களுக்கு தாராளமாய் ஓட்டுகள் ஏற்பட்டிருப்பதால் அவர்களின். அறியாமையை ஆதாரமாய்க்கொண்டு அவர்களை ஏமாற்றி ஸ்தானங்களைக் கைப்பற்றி விடலாம் என்கின்ற தைரியத்தில் ஆசைவெட்கமறியாது என்பதுபோல் மற்றவர்களை தாங்கள் முன் சொன்ன “கழுதை, நாய்கள்" நிலைமைக்கு தாங்களே போக தைரியம் கொண்டுவிட்டார்கள்.
இந்த லட்சணத்தில் “மந்திரி பதவிகளையும் அடைந்து ஆகவேண்டும் இல்லாவிட்டால் வங்காளக் குடாக் கடலில் விழுந்து சாகவேண்டும்” என்கின்ற சபதம் எடுத்துக்கொள்ளக்கூடிய ஆத்திரத்தை காட்டுகிறார்கள். மந்திரி பதவி எதற்காக ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். மந்திரி பதவிகளை ஏற்பதன் மூலம் மந்திரி பதவிகளை இல்லாமல் செய்துவிடுவதற்கு ஆகவாம். அதாவது மந்திரி பதவி ஏற்று சீர்திருத்தத்தை உடைத்தெரிவதாம். இதை எந்த மடையராவது நம்பமுடியுமா? “கேழ்வரகைப் பிழிந்தால் நெய்
ஒழுகும்! என்றால் சொல்லுபவன் எவ்வளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனாக இருக்க வேண்டும் என்பதைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்.
தாசித் தொழில்களை அடியோடு ஒழிக்கவேண்டும் என்றால் ஊரில் உள்ள தாசிகளை எல்லாம் நாமே வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒரு விவசாரக்காரன் சொல்லுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கின்றேன். தாசிகளை ஒழிப்பவன் உள்ள தாசிகளையெல்லாம் தானே. உபயோகப்படுத்திக்கொண்டு மற்றவர்களுக்கு இல்லாமல் செய்துவிடுவதன்
மூலம் தாசிகள் எப்படி ஒழிந்து விடமுடியும்? அவர்களுக்கு சாப்பாட்டுக்கு கொடுத்துத்தானே ஆகவேண்டும்? இதனால் தாசிகளால் ஏற்படும் கெடுதி எப்படி ஒழிக்கப்பட முடியும்? அதை அனுசரித்துத்தான் காங்கிரஸ் தலைவர். தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் மந்திரி பதவி ஏற்று சீர்திருத்தத்தை உடைப்பது என்பது முட்டாள்தனமான காரியம் என்றும் மந்திரி பதவி ஏற்றால் சீர்திருத்தத்தையும் அரசாங்கத்தையும் நடத்திக் கொடுத்ததுபோல் ஆகும் என்றும் பந்தயம் கட்டி கூறிவருகிறார். அதற்கு சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது அடிமைகளும் கூலிகளும் ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவி ஏற்றால் அது தேசத்துரோகம் என்றும், தாங்கள் மந்திரி பதவி ஏற்றால் அது தேசாபிமானம்
குடி அரசு - 1936 (2), 58
என்றும் உளறித் திரிகிறார்கள். இதன் கருத்து என்ன என்று யோசித்துப் பாருங்கள். பொது ஜனங்கள் முட்டாள்கள், மடையர்கள், பகுத்தறிவில்லாத களிமண் தலையர்கள் என்று கருதிக்கொண்டிருக்கிற அகம்பாவமல்லாமல் வேறு எந்த வகையில் அந்த வார்த்தைகள் யோக்கியமான வார்த்தைகளாகும் என்று நான் கேட்கின்றேன்.
காங்கிரஸ்காரர்களுக்கு இன்று அரசியல் திட்டம் என்ன என்று யோசித்துப் பாருங்கள். அதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ஞானம் இருக்கிறதா என்று யோசித்துப்பாருங்கள். இந்தியர்களுடைய சிறப்பாக இந்துக்களுடைய மதசம்பந்தமான குருட்டு நம்பிக்கைகளையும் மூடபக்தி களையும் தங்களுக்கு ஆதரவாய்க் கொண்டு மதபோதக்காரர்களுடைய பித்தலாட்ட முறைகளைப் பின்பற்றி மக்களை ஏமாற்றுகிறார்கள் உதாரணமாக அவர்கள் தேர்தலுக்கு நின்றால் காந்தியாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதும் காந்தியாரே கைகூப்பி கும்பிட்டு ஓட்டு கேட்பது மாதிரிப் பொம்மைப் படம் போட்டு ஊர்கோலம் விடுவதுமான பித்தலாட்டமே செய்கிறார்கள். நல்ல பொறுப்புள்ள அரசாங்கம் இருந்தால் எலக்ஷன் சட்டத்தின் கீழாகவே இந்த மாதிரியான காங்கிரஸ்காரர்களை ஜெயிலுக்கு அனுப்பி இனி தேர்தலுக்கு நிற்க இவர்கள் யோக்கியதையுடை யவர்கள் அல்ல என்று உத்திரவு போடுவார்கள்.
ஏனெனில் காந்தியாருக்கும் தேர்தலுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா என்றும், காந்தியாருக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தம் இருக்கிறதா என்றும் யோசித்துப்பாருங்கள். காந்தி பெயர் சொல்லியோ காந்தியாருக்கு ஓட்டு என்று சொல்லியோ ஓட்டுப்பெற்று வெற்றியடைந்தவர்களை காந்தியார் நடத்தி அவர்களிடம் வேலை வாங்குவாரா என்று யோசித்துப்பாருங்கள். ஆகவே தேர்தல் காலங்களில் தேர்தல் கூட்டங்களில் காந்திக்கு ஜே என்ற கூப்பாடு போடுவதேஅயோக்கியத்தனமல்லவா? இழிமக்கள் செய்கை அல்லவா என்று யோசித்துப்பாருங்கள். இப்படிப்பட்ட ஒழுக்கமற்ற, நாணயமற்ற கூட்டத்தை இனியும் எத்தனை நாளைக்கு பொதுமக்களை ஏமாற்றவிட்டுக்கொண்டிருப்பது என்று யோசித்துப்பாருங்கள். பொது ஜனங்கள். கவலையற்றுஇருப்பதாலேயே நாட்டில் அயோக்கியத்தனங்களுக்கு செல்வாக்கு ஏற்பட்டுவிடுகின்றது இந்த நாட்டில் காங்கிரஸ் ஆதிக்கத்துக்கு செல்வாக்கு உண்டாக பொது மக்கள் இடம் கொடுத்ததாலேயே அரசியல் வாழ்க்கை என்பது பச்சை கொள்ளைக்கூட்ட வாழ்க்கையாக ஆனதோடு மனித சமூகத்தில் நாணயக் குறைவும் மானமற்ற தன்மையும் வளர்ந்துவிட்டன. அனேக இளம் வாலிபர்கள் அயோக்கியத்தனத்தாலும் இழிதன்மையாலுமே வாழ்க்கை நடத்தும்படி ஆகிவிட்டனர்.
59 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகள் என்றாலும் இந்த நிலைமைகளுக்கு அவர்கள் தான் ஜவாப்தாரிகள் என்பதிலிருந்து சிறிதுகூட தப்பித்துக்கொள்ள முடியாது. மனித சமூக வாழ்க்கை கடுகளவாவது பரிசுத்தப்பட வேண்டுமானால் அல்லது இன்றைய இழிதன்மையில் இருந்து சிறிதாவது மாற்றமடைய வேண்டுமானால் இந்த காங்கிரஸ் கிளர்ச்சி என்பதை 1000 - கஜ ஆழத்தில் புதைத்து அதன் தலைவர்கள் என்பவர்களை பச்சையாக வெளிப்படுத்தி ஆகவேண்டும்
பண வசூல்
இவர்களால் பொதுமக்கள் பணம் கோடிக்கணக்காய் பாழாக்கப்பட்டு இருக்கிறது. நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இல்லாமல் வசூல் செய்யப்பட்டும் நாணயமும் யோக்கியப் பொறுப்பும் இல்லாமல் கையாடப்பட்டும் வந்திருக்கிறது. பண விஷயத்தில் உள்ள ஒழுக்கக்குறைவே காங்கிரஸ் விஷம் இவ்வளவு தூரம் மக்களுக்குள் ஒழுக்கக்குறைவு பரவ செளகரியம் ஏற்படச் செய்துவிட்டது.
இதற்குக் காங்கிரஸ்காரர்கள் கோர்ட்டுக்கு போய் மான நஷ்ட வழக்கு தொடர்வதாகவும், காங்கிரசுக்கு பணம் கொடுக்காதவர்கள், காங்கிரசுக்காரர்கள். காங்கிரஸ் பணத்தைக் கையாடியதைப்பற்றியே பேசக்கூடாது என்றும் சமாதானம் சொல்லுகிறார்கள்.
ஆகவே இன்றையத்தினம் காங்கிரஸ்காரர்களின் நிலைமை பிரிட்டிஷ் சட்டக் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் யோக்கியர்களாகப் பார்ப்பதும் தங்களுக்கு கட்டுப்பட்ட தங்கள் அயோக்கியத்தனத்தால் ஏமாற்றப்பட்ட மூடர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் நாணயங்களைப் பற்றி பேசக்கூடாது என்கின்ற பேடித்தனமான வாதத்தினாலே தப்பித்துக்கொள்ள பார்ப்பது மல்லாமல் நாணயத்தாலோ நேர்மையாலோ ஒழுக்கத்தாலோ தப்பித்துக் கொள்ள முடியாத நிலைமையை அடைந்துவிட்டார்கள். காங்கிரஸ் பணத்தை அனுபவித்த - அனுபவிக்கிற ஒருவரே காங்கிரசுக்கு ஒரு காசு கூட கொடுக்காத போக்கிரிகளுக்கு காங்கிரஸ் பண நிர்வாகத்தைப்பற்றி கேட்க என்ன யோக்கியதை" என்று கேட்பதோடு அப்படி கேட்பவர்கள். போக்கிரி என்றும் அயோக்கியர் என்றும் அவர்களுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்றும் பத்திரிகையில் வைது எழுதுகிறார்.
அப்படியானால் இவர்களை நாம் ஒன்று கேட்கலாமா? அதாவது
ஜஸ்டிஸ் கட்சியில் மெம்பராக ஒரு கையெழுத்தாவது போடாத ஒரு அயோக்கியன் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பேச என்ன யோக்கியதை உண்டு? இவனை செய்யக்கூடாத சிக்ஷ செய்து இவன் போன்ற இழி பிறப்பு மக்களுக்கு தக்க புத்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது நியாயமாகாதா? என்று ஏன் கேட்கக்கூடாது? சர்க்காருக்கு ஒரு காசு கூட
குடி அரசு - 1936 (2), 60
கந்தாயம் கொடுக்காத ஒருவன் சர்க்கார் வரிப்பணத்தைப் பற்றி கேட்பது யோக்கியமா என்று ஏன் கேட்கக்கூடாது? அது மாத்திரமல்லாமல் புதிய சீர்திருத்தம் வருவதற்கு ஒரு சிறிதுகூட அனுகூலஸ்தனாய் இல்லாத ஒருவன் - புதிய சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ஒருவன் புதிய சீர்திருத்தத்தின் கீழ் சட்டசபை மெம்பராகவும், மந்திரியாகவும் வருவதற்கு ஆசைப்பட வெட்கமில்லையா, மானமில்லையா, உடம்பில் சுத்தமான ரத்த ஓட்டமில்லையா என்று கேட்பது நியாயமாகாதா? என்று கேட்கின்றேன்.
காங்கிரசில் நான் காரியதரிசியாய் இருக்கும்போது தோழர் வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராய் இருந்தபோது எனக்கு ஒரு கடிதம்
எழுதியிருக்கிறார் அதை இப்போது எனக்கு ஞாபகத்துக்கு வந்த அளவுக்கு
நான் வெளியிடுகிறேன். அதாவது,
''அன்புள்ள நாயுடுகாரு அவர்களுக்கு வரதராஜுலு நமஸ்காரம். இவ்விடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் இருக்கிற சிப்பந்திகள் பணம் கையாடிய விஷயத்தில் கைப்பிடியாய் சிக்கிக் கொண்டார்கள். காலில் விழுந்து கெஞ்சுகிறார்கள். அவர்கள் மேலால் வால் காட்டாமல் இருக்கட்டும் என்பதற்கு ஆக இப்பொழுது ஒன்றும் செய்யாமல் விட்டுவைத்திருக்கிறேன். இதை தாங்கள் அங்கீகரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்'' என்று எழுதியிருக்கிறார்.
அதுமாத்திரமல்ல, என்னைப் பொறுத்தவரை என் வீட்டார்கள். காங்கிரசுக்கு ஒன்றும் கொடுக்காதவன் என்று சொல்லிவிடமுடியாது எங்கள் சக்தி அனுசாரம் பணம் கொடுத்தவர்களேயாகும். அதுவும் 100, 100 ரூபாய் நோட்டுகளாகத் வெள்ளித் தட்டில் வைத்து வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வைத்து தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், தேவதாஸ் காந்தி ஆகியவர்கள் எங்களது வீட்டுக்கு வந்து பணம் கேட்டபோது அவர். காலடியில் தட்டத்தை வைத்து கும்பிட்டு கொடுத்தவர்களாவோம். மற்றும் காங்கிரசுக்கு பணம் பெரும் தொகையாய் வசூலித்துக் கொடுத்தவனுமாவேன். மற்றும் காங்கிரஸ் பத்திரிகைக்கு ஆக என்று ஆயிரக்கணக்கான ரூபாயில். பங்கு எடுத்துக்கொண்டவனுமாவேன். இவைகளுக்கு இன்னமும் ஆதாரங்கள் என்னிடமிருக்கின்றன. ஆகவே என்போன்றவர்கள் காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ் பணத்தைக் கையாடியதைப் பற்றி கேட்பது போக்கிரித்தனமும், அயோக்கியத்தனமும் ஆனால் அதைக் கையாடியவர்களின் நடத்தை அதை நியாயத் தவறுதலாய் பயன்படுத்தியவர்கள் நடத்தை என்ன ஆகும் என்று கேட்கின்றேன்.
எதற்கு ஆக காங்கிரஸ் பணத்தை ஆயிரம் பத்தாயிரமாய் பத்திரிக்கை காரர்களுக்கு அள்ளிக்கொடுப்பது என்று இப்போதும் கேட்கின்றேன்.
செலவுக்கு கணக்கு இருப்பதாலாயே விஷயம் முடிந்து விடுமா? அந்தசெலவுசரியா தப்பாஎன்று யாரும் கேட்கக்கூடாதா? என்று கேட்கின்றேன்.
61 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காணாமல் போனது 10 ஆயிரம், ஆபீசில் திருடிக்கொண்டது 10 ஆயிரம், அதை மறைக்க பத்திரிக்கைகாரருக்கு லஞ்சம் 15000 என்று கணக்கு இருந்தால் கூட அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானா. என்று கேட்கிறேன்.
இவைகள் எல்லாம் குட்டிகள் குலைப்பதாலேயே தாய்கள் தலையில் விழும்படி வெளியாக்க வேண்டி இருக்கிறது. பொது ஜனங்கள் ஏமாற்றப்படாமல் பார்த்துக்கொள்ள ஏமாந்தவர் களுக்கும் முட்டாள்களுக்கும் மாத்திரம் தானா உரிமை உண்டு என்று
கேட்கின்றேன்.
எது வகுப்புக் கட்சி.
நிற்க, பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புக் கட்சி என்று பேசுகிறார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் தோழர் சத்தியமூர்த்தியாரும் 11-ந் தேதி பேசிய காங்கிரஸ் மண்டபப் பேச்சில் ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு உணர்ச்சிக்கட்சியென்று பேசி இருக்கிறார்கள். இது வேதாளம் மறுபடியும் முருங்க மரத்தில் ஏறிக்கொண்டது என்கின்ற கதையாகத்தான் இருக்கிறது
தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தஞ்சையில் பேசியபோது வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை கேட்கும் ராமசாமியை நான் வரவேற் கிறேன் என்றும், வகுப்பு வாத விஷயமாய் சீக்கிரத்தில் காங்கிரசிலிருந்து ஒரு அறிக்கை விடுவதன் மூலமாக அதை சரிப்படுத்துகிறேன் என்றும் சொல்லி விட்டு மறுபடியும் நாலு நாளையில் வகுப்புவாதம் பேசுவது விஷம் என்று சொன்னால் அது எப்படி யோக்கியமான பேச்சாகும்
வகுப்புவாதம் யார் ஆரம்பித்தது? வகுப்புரிமை அளவுக்கும் தகுதிக்கும் மேல் யார் அனுபவிப்பது? வகுப்பு வாதம் பேச வேண்டிய அவசியம் யாரால் ஏற்பட்டது?
இந்தியாவில் வகுப்பு வாதம் பேசாத வகுப்பார் யார்? ஜாதியார் யார்? என்று சுட்டிக்காட்ட முடியுமா? சீக்கியர் பேசுகிறார்கள், பார்சிகள் பேசுகிறார்கள், நாட்டுக் கோட்டையார் பேசுகிறார்கள், பார்ப்பனர்கள் பேசுகிறார்கள், முஸ்லீம்கள் பேசுகிறார்கள், கிறிஸ்தவர்கள் பேசுகிறார்கள், மற்ற இந்தியர்களும் பேசுகிறார்கள். இன்னும் பேசப்போனால் காங்கிரசுக்காரர்களும் பேசுகிறார்கள். என்று கூட சொல்லுவேன். ராணுவம் இந்திய மயமாக வேண்டு மென்றால் அது வகுப்பு வாதமல்லவா? உத்தியோகங்கள் இந்திய மயமாக வேண்டு மென்றால் அது வகுப்பு வாதமல்லவா என்று கேட்கின்றேன்.
அவை இந்திய மயமாகும் போது எல்லாம் பார்ப்பன மயமாவதை பார்ப்பனரல்லாதார்கள் சம்மதிப்பார்களா?
இந்திய மயமாகும் போதும் எல்லாம் இந்துக்கள் மயமாவதை முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா?
குடி அரசு - 1936 (2), 62
எல்லாம் இந்திய மயமாகும் போது எல்லாம் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் மயமேஆவதைகீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் சம்மதிப்பார்களா?
அப்படி ஒன்றும் ஆகாமல் இருப்பதற்கு காங்கிரஸ் ஒரு மார்க்கம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடுமா?
வங்காள வகுப்புவாதம்
காங்கிரசில் வகுப்பு வாதம் இல்லை என்பது உண்மையானால் மற்றெல்லா மாகாணத்திலும் வகுப்புத் தீர்ப்பை விட்டுவிட்டு ஆதிதிராவிடர்கள் வகுப்புத் தீர்ப்பை ஒரு ராஜியின் மீது ஒப்புக்கொண்டு வங்காள இந்து முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் மாத்திரம் தோழர்கள் ஜவார்லால்,
ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்கள் எல்லாம் இப்போது இவ்வளவு ஆத்திரம்
காட்டுவது எதற்கு ஆக?
முஸ்லீம்கள் கை வலுத்துவிடுமே என்கின்ற பொறாமைதானே ஒழிய வேறு காரணம் என்ன?
வங்காள காங்கிரசுக்காரருக்கு சுயராஜ்யத்தை விட இந்து முஸ்லீம்
வகுப்புத் தீர்ப்பை ஒழிப்பதுதான் முக்கியம் என்று இப்போது ஏன் அவர்கள் சொல்ல வேண்டும்? தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட ஆதிதிராவிடர்கள் சம்மந்தமான வகுப்புத் தீர்ப்புக்குகையொப்பமிட்டுவிட்டு பார்ப்பனரல்லாதார் வகுப்பு உரிமையைக் கேட்பதைப் பொறுத்து மாத்திரம் “வகுப்பு உணர்ச்சி விஷம்” என்று சொல்லுவானேன்?
பார்ப்பனவகுப்பு ஆதிக்கம் குறைந்துவிடுமே என்கின்ற ஆத்திரம்தானே அல்லாமல் அதில் தேசியம் என்ன இருக்கிறது என்று கேட்கின்றேன்
“ஜாதிமத வகுப்புகளை ஒழித்து இந்தியர் எல்லோரையும் ஒரே சமூகமாக்குவது'' என்கின்ற கொள்கையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறதா என்று கேட்கிறேன். அப்படியானால் மாத்திரம் காங்கிரஸ் வகுப்புத் தீர்ப்பை தனது கொள்கைக்கு முட்டுக்கட்டையானது என்று சொல்லலாம் அப்படிக்கில்லாமல் ஜாதிமத வகுப்பு விஷயத்தில் நடுநிலைமை வகித்து அவனவன் வகுப்பு, மதம், கொள்கையை பின்பற்றி நடக்க சுதந்திரம் கொடுப்பதாக உத்திரவாதமளித்திருக்கிறபோது அவனவன் வகுப்புக்கு உள்ள அரசியல் உரிமை அளிப்பதில் ஏன் சூழ்ச்சி செய்ய வேண்டும்?
ஆதலால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வகுப்பு உணர்ச்சி இயக்க
மென்றும் தேசியத்துக்குவிரோதமான இயக்கம் என்றும் சொல்லுவது யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றே சொல்லுவேன்.
63 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சம்பனப் பொறாமை
தனிப்பட்டவர்களின் சம்பளங்களைப் பற்றி பொறாமைப்படுவதில் பயன் இல்லை. சம்பள விஷயம் அடியோடு மாற்றப்படவேண்டும். அது விஷயத்தில் பொது ஜனங்களுக்கு உரிமையில்லாத மாதிரியில் அரசியல்
தத்துவம் இருக்கிறது. அது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பலவற்றிற்கு காங்கிரசே காரணமாய் இருந்திருக்கிறது. அதை மாற்ற வேண்டுமானால் நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
நமது நாட்டில் உள்ள அரசியல் உத்தியோக சம்பளத்தில் பெரும்பாகம் கொள்ளை கொள்வது பார்ப்பனர்களேயாகும். உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்கள் சம்மதிப்பார்களே யானால் மற்றவர்கள் விஷயம் மிக அற்பமானதென்றும் சுலபத்தில் குறைத்துக்கொள்ளக்கூடியது என்றும் சொல்லுவேன்.
ஜஸ்டிஸ் நிர்வாகம்
மற்றபடி ஜஸ்டிஸ் நிர்வாகத்தைக் குறைகூறுவதிலும் நாணயம் இல்லை என்றே சொல்லுவேன். சீர்திருத்தங்களின் கீழ் மற்ற மாகாணங்களில் இரட்டையாட்சியில் மந்திரிகள் செய்த வேலைகளுக்கு மேலாகவே ஜஸ்டிஸ் மந்திரிகள் செய்திருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரம் இருக்கின்றன.
ஆகையால் கை பலம், வாய் பலம், பிரசார பலம் ஆகியவைகளாலேயே ஒரு பெரிய சமூக இயக்கத்தை ஒழிக்கப் பார்ப்பது மற்றவனைக் கொல்வதற்கு ஆக வைத்திருக்கும் விஷத்தை தானே சாப்பிட்டுவிட்டது போல்தான் முடியப் போகிறது ஆதலால் பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்களோ பொதுநல சேவைக்காரர்களோ இம்மாதிரி கோணல் வழியில் வெற்றிபெறலாம் என்கின்ற குறுகிய புத்தியை விட்டுவிட்டு யோக்கியமான முறையில் ஒற்றுமைப்பட்டு விடுதலையும் சுதந்தரமும் அடைய பாடுபடவேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். வெற்றி தோல்வியின் மூலம் வகுப்புணர்ச்சியை அடக்கி விடலாம் என்று நினைப்பது ஆகாயக் கோட்டையாகவே முடியும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.
குறிப்பு மதுரை ஜில்லாவில் 17.07.1936 உத்தமபாளையம் பொதுக் கூட்டத்திலும் 18.07.1936 பழனி தேவஸ்தானத்தின் முன்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 26.07.1936
குடி அரசு - 1936 (2), 64
காங்கிரசும் முஸ்லீம்களும்
காங்கிரசில் சில முஸ்லீம்கள் தீவிர உணர்ச்சி காட்டுவதாக காங்கிரஸ் பத்திரிக்கைகள் என்பனவற்றில் அடிக்கடி பிரஸ்தாபப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே முஸ்லீம்கள் எப்படி இப்படிப்பட்ட காங்கிரசில் இருக்க முடியும் என்பது நமக்குவிளங்கவில்லை. பதவிமோகம் உள்ளவர்களும் காங்கிரசை தன் சொந்த சுயநல வாழ்க்கைக்கு ஆதார ஸ்தாபனமாய் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கருதுபவர்களும் காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதில் ஆச்சரியமில்லை. காங்கிரஸ் பக்தராய் நடிப்பதில் ஆட்சே பணை இல்லை.
ஆனால், தன் காலில் நிற்கக்கூடிய சுதந்திர வாதிகளும் நடுநிலை வகிப்பவர்களும் தங்களது மதத்தையும் சமூகத்தையும் முதன்மையாய்க் கருதுபவர்களும் எப்படி காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதுதான் நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது இணையில்லாத தேசீய வீரர்கள் என்று போற்றப்பட்ட தோழர்கள். மெளலானாக்கள், மகமதலி, ஷவ்கத்தலி ஆகிய இரு பெரியார்கள் “நாங்கள். முதலில் முஸ்லீம் இரண்டாவதும் முஸ்லீம் மூன்றாவது தேசீய வாதிகள்” என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படியிருக்க இன்று காங்கிரசின் முக்கிய சூழ்ச்சியானது முஸ்லீம்களின் ஆதிக்கத்தை எப்படியாவது தாழ்த்துவது என்றே குறிக்கொண்டிருக்கும்போது அதை எந்த முஸ்லீம்தான் மறக்க முடியும் இன்றைய அரசியல் பிரச்சினையின் உள் அந்தரங்கத்தை துருவிப் பார்த்தோமானால் இந்திய சுதந்தரத்தில் முஸ்லீம் ஆதிக்கமிருப்பதா இந்து ஆதிக்கமிருப்பதா என்பதே தலை சிறந்து விளங்குகின்றதைக் காணலாம்.
ஜனாப் ஜின்னா முதலிய முஸ்லீம் சமூகப் பிரமுகர்களும் முஸ்லீம் சமூக ஸ்தாபனமாகிய முஸ்லீம் லீக்கு பிரமுகர்களும் காங்கிரசினிடம் சம்மந்தம் வைத்துக்கொள்ள சில நிபந்தனை வைத்திருக்கிறார்கள். அந்த நிபந்தனைகளை காங்கிரசுக்காரர்கள் அலட்சியம் செய்துவிட்டார்கள். அதுமாத்திரமல்லாமல் வட்டமேஜை மகாநாட்டில் தோழர் ஜின்னா அவர்களின் நிபந்தனைகளை அலக்ஷ்யம் செய்த காந்தியார் பிரிட்டிஷாரிடம் “எங்களுக்கு முதலில் சுயராஜ்யம் கொடுங்கள். அப்புறம் முஸ்லீம்களின் நிலையை நான் பார்த்துக்கொள்ளுகிறேன்' என்று துணிவுடன் கூறினார்.
65 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அதன் பிறகே காங்கிரஸ் சம்மந்தமில்லாமல் முஸ்லீம் சமூக நன்மைக்குச் சில ஏற்பாடுகள் அரசாங்கத்தினிடம் செய்து கொண்டார்கள்.
காங்கிரஸ்காரர்களின் இன்றைய முக்கிய லட்சிய மெல்லாம் அந்த ஏற்பாடுகளை குலைப்பது என்றே வெளிப்படையாய்ச் சொல்லுகிறார்கள். உதாரணமாக காங்கிரஸ் வகுப்புத் தீர்ப்பை ஒப்புக்கொள்ளுவ தில்லை என்று தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. எந்த வகுப்புத் தீர்ப்பை என்றால் முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பு என்பதைத்தான் என்று பிரத்தியக்ஷமாய் சொல்லி இருக்கிறது
சட்டசபையில் தங்களுக்கு பலமில்லாததால் வகுப்புத் தீர்ப்பை உடைக்க முடியாது என்கின்ற கருத்தின்மீது அந்தப் பேச்சை தற்காலீகமாக ஒத்திவைத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு சர்க்காரை வகுப்புத் தீர்ப்பை மாற்றும்படி செய்ய நிர்பந்திப்பதற்காக முஸ்லீம்களின் சகாயத்தையே வேறு வழியாய் கோருகிறது. ஆனபோதிலும் காங்கிரஸ்காரர்களில் ஒரு பாகத்தாரே தோழர்கள் மாளவியா, ஆனே, மூஞ்சே, பாய் பரமானந்தம் போன்றவர்கள். இன்னமும் காங்கிரஸ்காரர்களாய் இருந்துகொண்டே முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை குலைக்க வெளிப்படையாய் வேலை செய்கிறார்கள். அவ்வளவோடு இல்லாமல் இன்று வங்காளத்தில் முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை ஒழிப்பதையே குறிப்பாகக் கொண்டு பெரியதொரு கிளர்ச்சி
ஆரம்பித்திருக்கிறார்கள். அதை எல்லா இந்திய கிளர்ச்சி ஆக்கப் போகிறார்கள். காந்தியாரும் அதற்கு ஆசிகூறிவிட்டார். சில நாளைக்கு முன்பு கூட கல்கத்தா கார்ப்பரேஷனில் வகுப்பு உணச்சி காரணமாகவே எல்லா முஸ்லீம்களும் ராஜிநாமா செய்து வெளியேறியது யாரும் அறியாததல்ல
இந்தப்படியாக மற்ற மாகாணங்களிலும் இந்து முஸ்லீம் வகுப்புச் சச்சரவுகள் இன்று மூண்டு எரிகின்றபோது தென் இந்திய முஸ்லீம்கள். மாத்திரம் தங்களுக்கே குழிதோண்டிக்கொள்ளும் மாதிரியில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களோடு சேர்ந்து கொண்டு குதிப்பது என்றால் அது அறிவுடைமை யாகுமா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
16-7-36 - ந் தேதியில் கல்கத்தாவில் ஆல்பர்ட் ஹாலில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தோழர்கள் ராமானந்த சட்டர்ஜி, கோஸ்வாமி, சரத்சந்திர சட்டர்ஜி, டாக்டர் மூஞ்சே முதலியவர்கள் இருந்து, வகுப்பு தீர்ப்பு அக்கிரமம் என்றும் அதை ஒழிக்க வேண்டும் என்றும் மெஜாரிட்டி சமூகமாகிய முஸ்லீம் சமூகத்துக்கு மெஜாரட்டி ஸ்தானம் கிடைக்கும்படி சட்டம் செய்தது அக்கிரமம் என்றும் பேசியிருக்கிறார்கள்.
சரத்சந்திர சட்டர்ஜீ அவர்கள் வகுப்பு தீர்ப்பில் தங்கள் இலக்கியமும் கலைகளும் கெட்டுப்போகும், அதாவது மதத்துக்கு ஆபத்து ஆதலால் அதை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
குடி அரசு - 1936 (2), 66
மற்றும் 14-7-36 -ல் கவி ரவீந்திரநாத் டாக்கூர் அவர்களே தலைமை வகித்து பிரமாண்டமான கூட்டம் கூட்டி அதில் அரசாங்கத்தையும் முஸ்லீம் சமூகத்தையும் மிரட்டி இருக்கிறார்கள்
ஆனால், அதே கூட்டத்தில் வங்காளத்தில் முஸ்லீம் சமூகமே எண்ணிக்கையில் அதிகமென்பதை ஒப்புக்கொண்டு அவர்களுக்கு மெஜாரிட்டி ஸ்தானம் இருக்கும்படி வகுப்பு தீர்ப்பளித்தது மாத்திரம்தான். தப்பு என்று கருதுவதாகக் காட்டிக்கொண்டதுதான் ஆச்சரியமாகும்
கவி ரவீந்தரர் மிரட்டுவதாவது, நமது சகோதர வகுப்பினருக்கு (முஸ்லீம்களுக்கு) திடீரென்று வந்துவிட்ட அதிர்ஷ்டத்தைப் பற்றி எனக்குப் பொறாமை இல்லை. ஆனால் சர்க்கார் சலுகை நின்றுவிட்ட பின்னால் என்ன விளையும் என்பதைப் பற்றித்தான் எனக்கு கவலையாக இருக்கிறது'' என்று பேசி இருக்கிறார். அதோடு மாத்திரமல்லாமல் இந்தப் போராட்டமே அதாவது முஸ்லீம்களின் வகுப்பு உரிமைப் போராட்டமே இப்போது சுயராஜ்ய போராட்டத்தைவிட முக்கியமானது என்று பலர் பேசியிருக்கிறார்கள். பழய வங்காளப் பிரிவினைப் போராட்டமாக ஆக்க வேண்டுமென்று ஆசைப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஆகவே போராடப்போவதாகவும் உறுதிகாட்டி இருக்கிறார்கள். தேசீயப் பத்திரிகைக்காரர்களும் இதை ஆதரிக்கிறார்கள்
இந்த சமயத்தில் ஒரு காரியத்தை யோசிக்க வேண்டுமாய் பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். அதாவது இந்த வகுப்புத் தீர்ப்புத் தத்துவத்தைப் பற்றி இப்போது காங்கிரஸ்காரர்களுக்கு கவலை இல்லை என்பதை அவர்கள் பலவகைகளில் காட்டிக்கொண்டிருந்தும் பின்னை ஏன். இதை எதிர்க்கிறார்கள் என்றால் இந்துக்களைவிட முஸ்லீம்களுக்கு அதிக ஸ்தானம் வழங்கப்பட்டிருப்பதைப் பற்றியே என்பது ஒவ்வொருவரும் பேசியிருக்கும் பேச்சிலிருந்தே அறிகிறோம். அதிக எண்ணிக்கை உள்ளவர்கள் அதிகஸ்தானம்அடையவேண்டுமென்றுகேட்பது தேசீயத்துக்குவிரோதமானால் 35 கோடி இந்துக்களை 4% கோடி இங்கிலீஷ்காரர் ஆளுவதை எப்படிதப்பு என்று சொல்ல முடியும் என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம்
அதிகமாய் உள்ள முஸ்லீம்களுக்கு குறைந்த ஸ்தானங்களை கொடுத்து கொஞ்சமாய் உள்ள இந்துக்களுக்கு அதிக ஸ்தானங்கள். கொடுத்தால் முஸ்லீம்களை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பதுதானே. அதன் அருத்தம் என்று கூறுகிறோம்
அவரவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்த ஸ்தானங்கள் பங்கு இல்லா விட்டால் இந்தியாவை வேறு யார் ஆண்டால்தான் என்ன என்று கேட்கின்றோம்.
வகுப்பு தீர்ப்பு இல்லாவிட்டால் என்ன கதி ஆவது என்பதை இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரும் முஸ்லீம்களும் வெகுகாலமாக அனுபவத்தில் பார்த்துத்தானே வந்திருக்கிறோம்
67 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
குறைந்த சமூகமாகிய பார்ப்பனர்கள் அதாவது 100க்கு மூன்று பேர்களாக உள்ளவர்கள் 100-க்கு 97க்கு மேல் உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் கைப்பற்றி இருக்காவிட்டால் மதத்திலும், சமூகத்திலும் இவ்வளவு உயர்வுகள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க முடியுமா என்பதை யோசித்தால் ஸ்தாபனங்கள் சுதந்திரத்துக்கும் உண்மையான சமத்துவ தேசீயத்துக்கும் அவசியமா இல்லையா என்பது விளங்கும்.
எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஸ்தானங்கள் வழங்கி வரப்பட்டு இருக்குமானால் இன்றைய 6 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் நிலை இவ்வளவு கேடாக இருந்திருக்குமா என்பதை யோசித்துப் பார்த்தாலும் விளங்காமல் போகாது. இவ்வளவு தூரம் போவானேன். இந்த நாட்டில் இந்த 20 வருஷ காலமாக பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாகவோ அல்லது பார்ப்பனர்கள் சொல்லுவது போல் ''தேசத்துரோக''க் கட்சி என்பதாகவோ ஒரு கட்சி ஏற்படாதிருந்திருக்குமானால் இன்று தென் இந்தியாவில் முஸ்லீம்களுடைய நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்தாலும் உண்மை விளங்காமல் போகாது.
ஆகவே இந்திய முஸ்லீம்கள் தாங்கள் சமூகநலத்துக்கு அனுகூலமா யிருப்பதும் தங்கள் சமூகத்தை மேல் நிலைக்கு கொண்டுவந்து அவர்களுடைய உண்மையான சக்தியையும் மேன்மையையும் காட்டக்கூடிய நிலைக்கு கொண்டு வந்ததுமான வகுப்பு உரிமையை ஒழித்து பழயபடி தாழ்த்தக்கூடிய நிலைமைக்கு கொண்டுபோகக்கூடிய போலித் தேசீயத்துக்காக விட்டுக்கொடுக்க சம்மதிக்கிறார்களா என்று கேட்கின்றோம். வகுப்புரிமை கேட்பதாலேயே ஒரு சமூகம் தேசத்துரோக சமூகமானால் அந்த தேசத் துரோகமே வகுப்புரிமையை மறுக்கும் தேசியத்தை விட மேல் என்பதுதான் நமது அபிப்பிராயமாகும். ஏனெனில் வகுப்புரிமை இல்லாதபோது இன்றைய நிலைக்குமேல் நாம் எவ்விதத்திலும் மேலான புத்தியிலோ, பதவியிலோ, சுயமரியாதை உணர்ச்சியிலோ நாம் இருந்துவிடவில்லை.
இன்று காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும் இரண்டு முஸ்லீமாவது இருந்தால்தான் முஸ்லீம் சமூகத்தை ஏமாற்ற முடியும் என்று தோழர் உபயதுல்லா முதலியவர்களையெல்லாம் கூட தேசபக்த கூட்டத்தில் விளம்பரம் செய்யக் காரணம் இந்தியாவில் ஏற்பட்ட வகுப்புணர்ச்சி அல்லவா என்று கேட்கின்றோம் ஆகையால் முஸ்லீம் தோழர்கள் அதுவும் ஜீவனோபாயத்துக்கும் பதவி வேட்டைக்கும் அல்லாமல் உண்மையான பொதுநல நோக்கோடு இருக்கும் முஸ்லீம் தோழர்கள் வகுப்புரிமை இயக்கத்தில் சேரவேண்டுமா வகுப்புரிமையை மறுக்கும் இயக்கத்தில் சேரவேண்டுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 26.07.1936
குடி அரசு - 1936 (2), 68
இரு மசோதாக்கள்
யார் வகுப்புவாதிகள்?
முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை!
பார்ப்பனியத்தின் விளைவு
இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம்
அதாவது ஒன்று £ பெண் மக்கள். இரண்டு 5~ தீண்டப்படாத மக்கள் என்பவர்கள்: இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது ஏனெனில் சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும் சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்தான் இருக்கும். அதுபோலவே தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள் அவர்கள் பிறவித் தொழிலாளிகள், செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த
ஜனத் தலைவர்களும் பொது நல ஸ்தாபனங்களும் கவனிக்கவே இல்லை.
சமூகப் புரட்சி ஸ்தாபனமாகிய ஜஸ்டிஸ் கட்சி அதாவது பார்ப்பன ரல்லாதார் இயக்கம் ஒன்று தோன்றி அதன் கிளர்ச்சியின் பயனாகவும் அது பார்ப்பனர்களுக்கும் காங்கிரசுக்கும் எதிராக அரசியலிலும் சமூக இயலிலும் சிறிது ஆதிக்கம் பெற்றதின் பயனாகவுமே இந்த இரு கூட்டத்தாருக்கும் இப்போது சிறிது காலமாய் பல நன்மைகள் ஏற்பட வசதி ஏற்பட்டிருக்கிறது அதாவது பெண்கள் அரசியலில் பங்கு பெறவும் ஓட்டர்களாகவும் ஸ்தானம் பெறவும் நிர்பந்தமாய் சில இடங்களில் படிக்கவும் செளகரியம்
ஏற்பட்டிருக்கிறது
69 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தீண்டப்படாதவர்கள் என்பவர்களும் அரசியலில் கலந்து கொள்ளவும் ஓட்டர்களாகவும், கண்டிப்பாய் சிலராவது உத்தியோகம் பெறவும் தெருவில் நடக்கவும், கிணறு, குளம், சாவடி ஆகியவைகளை பயன்படுத்திக்கொள்ளவும், பள்ளியில் சேர்ந்து படிக்கவுமான முதலிய செளகரியங்களை சட்ட பூர்வமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் இவை பெரிதும் சென்னை மாகாணத்தில் மாத்திரமே அதுவும்
ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்தில் இருந்த காரணத்தினாலேயே என்று சொல்லுவோம்.
இந்த செளகரியங்களும் மற்ற மாகாணங்களில் சரியாக இல்லை என்பதோடு இனியும் அனேக செளகரியங்கள் அவர்களுக்காகச் செய்ய வேண்டியிருக்கிறது
இப்படியிருக்க இது விஷயத்தில் காங்கிரசுக்காரர்கள், தேசியவாதிகள், சுதந்தரவாதிகள் என்பவர்களில் ஒருவராவது சட்டபூர்வமாய் எதுவும் செய்வதற்கு இதுவரை முயற்சிக்கவே இல்லை என்பதோடு அவர்களுக்கு சந்தர்ப்பமும் செளகரியமும் இருந்தபோதெல்லாம் அலட்சியமாய் இருந்தது மாத்திரமல்லாமல் கூடுமானவரை எதிர்த்து முட்டுக் கட்டையாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஏதோ ஒரு சிறு அளவுக்கு பெண்கள் விஷயமாயும் தீண்டப்படாதார்கள் என்பவர்கள் விஷயமாயும் சில செளகரியங்களுக்கு
மாத்திரம் அதாவது பெண்களுக்குளொத்துரிமைஇருக்கவும்தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு சமூக வாழ்க்கையில் சம சுதந்தரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதற்கு ஆகவும் இரு சட்டங்கள் செய்ய முறையே தோழர்கள் தசமுக் அவர்களாலும் எம்.சி.ராஜா அவர்களாலும் இந்திய சட்ட சபைக்கு இரு மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்தார். இவற்றைப்பற்றி பொதுஜன அபிப்பிராயம் கேட்டுவிட்டு இருக்கிறார்கள்.
இப்படிக் கேட்டு இருப்பதை நாம் தவறு என்றே சொல்லுவோம். ஏனெனில் ஒரு பிரஜையினுடைய சுதந்தரத்துக்கு ஆக மற்றொரு பிரஜையின்.
அதுவும் அப்பிரஜையுடைய பிறவி எதிரிகளின் சம்மதம் கேட்பதானது போகாத ஊருக்குத் தடம் கேட்பது போலவேயாகும். ஒருவருடைய செல்வத்தில் மற்றவர்களுக்குசுதந்தரம் உண்டாக்கிக் கொடுக்க வேண்டுமானால் அப்பொழுது மற்றவர்களை கேட்கலாம். அப்படிக்கில்லாமல் ஒரு மனிதனுக்கு மனிதத்தன்மை அளிப்பதைப்பற்றி மற்ற மனிதனை அனுமதி கேட்பது நல்ல எண்ணமென்றோ நல்ல அரசாட்சியின் தன்மை என்றோ நாம்
ஒருநாளும் சொல்லமாட்டோம். தனி உடமை உலகில் மக்கள் யாவரும் ஆணானாலும் பெண்ணானாலும் செல்வம் சொத்து வைத்திருக்கவும் பெறவும் அருகதையுடையவர்களேயாவார்கள். இது இன்றைய உலகில் எல்லா நாட்டிலும் இருந்து வரும் முறையேயாகும். அப்படி இருக்க
குடி அரசு - 1936 (2), 70
இந்தியாவில் மாத்திரம் இப்பொழுதுதான் இந்த விதி கவனிக்கப்படுகிறது இந்த கால தாமதத்துக்கு பார்ப்பனீயமே காரணமாகும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.
தீண்டப்படாதார் என்பவர்களின் குறைகளும் 1000 வருஷத்துக்கு முன்பே அதாவது இந்து ஆட்சி - மனுதர்ம ஆட்சி ஒழிக்கப்பட்டு முஸ்லீம் ஆட்சி இந்த நாட்டுக்கு வந்த உடனே தீர்ந்திருக்க வேண்டிய விஷயமாகும் அப்படி இருந்தும் முஸ்லீம் ஆட்சியில் தங்கள் மதத்தைப் பெருக்கப் பாடுபட்டார்களே ஒழிய மனிதத் தன்மை இல்லாத மக்களுக்கு மனிதத் தன்மை சுதந்தரம் அளிக்க அவர்கள் சரியானபடி முயற்சித்திருப்பதாகச் சொல்லுவதற்கில்லை. ஆனால் தங்கள் மதத்தைப் பெருக்கும் விஷயத்தில் கவலை எடுத்ததின் மூலமாவது ஒரு அளவுக்கு பல கோடிக்கணக்கான மக்களின் இழிவும் அசெளகரியமும் ஒழிக்கப்பட்டது பற்றி பாராட்டாமல். இருக்க முடியவில்லை.
அதன்பின் இங்கிலீஷ் ஆட்சி வந்து 200 வருடங்கள் ஆகியும் இது வரையும் அவர்கள் இவ்விஷயத்தில் கவலை இல்லாமல் இருந்ததையும்
நாம் அலட்சியப் புத்தியால் என்றோ நல்ல எண்ணத்தால் என்றோ ஒருநாளும் சொல்ல முடியாது. மதத்தைப் பெருக்கும் விஷயத்திலும் சரியானபடி நடந்துகொண்டார்கள் என்றும் சொல்லமுடியாது. ஏனெனில் 200 வருஷ காலத்துக்கு 50, 60 லட்சம் மக்களே இந்தியாவில் கிறிஸ்தவர்களாகி இருக்கிறார்கள். அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆதலால்
பிரிட்டிஷ் ஆட்சி தீண்டாமை ஒழிப்பதில் மத விஷயத்திலோ மனிதத்தன்மை விஷயத்திலோ இந்தியாவுக்கு செய்த நன்மை மிகமிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்
இப்படிப்பட்ட நிலையில் மேல்கண்ட இரு தோழர்களும் கொண்டு வந்திருக்கும், மசோதாக்கள் இரண்டும் இந்திய மக்களால் பொன்னேபோல் போற்றி ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனுடையவும் கடமையாகும். அப்படி இருக்க வழக்கம்போல் பார்ப்பனர்கள் இவ்விஷயத்தில் தங்கள் ஜாதிப்புத்தியைக் காட்ட முன்வந்துவிட்டார்கள். அதாவது ஊர்கள் தோறும் கூட்டம் கூட்டி எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து இவ்விரு மசோதாக்களையும் கண்டித்துத் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்துக்கு அனுப்புகிறார்கள். இது நியாயமா என்று கேட்கின்றோம்
பார்ப்பனர்கள் தாங்கள்தான் இந்தியாவுக்கு தர்மகர்த்தாக்கள்
என்றும், பார்ப்பனர்கள் எல்லோருமே காங்கிரஸ்காரர்கள் தேசபக்தர்கள். என்றும், பார்ப்பனர்கள் தான் மனித சுதந்தரத்துக்கும் தேச விடுதலைக்கும் அன்னிய ஆட்சி ஒழிப்புக்கும் பாடுபடுபவர்கள் என்றும், வகுப்பு உணர்ச்சி இல்லாதவர்கள் என்றும், பார்ப்பனரல்லாத மக்கள் தேசத் துரோகிகள் வகுப்புவாதிகள் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஏழைமக்களுக்கும்
71 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பார்ப்பனரல்லாதார்களே விரோதிகள் என்றும் இதுவரை சொல்லிக்கொண்டு வந்த பார்ப்பனர்கள் இப்பொழுது வெட்கமில்லாமல் தைரியமாய் இம்மாதிரி தோழர்கள் தசமுக் பெண்கள் சொத்துரிமை மசோதாவையும், எம்.சி. ராஜாவின் தீண்டாமை விலக்கு மசோதாவையும் எதிர்த்து கண்டிக்கிறார்கள் என்றால். இதைக் கவனிக்கும்படி பொது ஜனங்களை வேண்டுகிறோம்
இந்த மசோதாக்களை ஆதரித்தோ பார்ப்பனர்களின் இவ்விஷமங்களை கண்டித்தோ இதுவரை ஒரு தேசிய பத்திரிகையாவது, ஒரு காங்கிரஸ் வாதியாவது பேச்சு மூச்சு கூட காட்டவில்லை.
இந்த சிறியசீர்திருத்தத்துக்கு உடன்படாமல் எதிர்க்கும் இப்பார்ப்பனர் களும் மறைமுகமாய் இவர்களை ஆதரிக்கும் தேசீய பத்திரிகைகளும், காங்கிரஸ்காரர்களும் நாளை இந்தியாவுக்கு “பூரண சுயேச்சை''யோ ராம ராஜ்யமோ வந்து விட்டால் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம். இத்தனை பார்ப்பனர்கள் மீட்டிங்கு கூடி அந்த மசோதாக்களை கண்டிப்பதை காங்கிரஸ்காரர்கள் பார்த்துக்கொண்டு இருந்தும் சிறிதாவது வாய்திறக்கிறார்களா என்பதை நினைக்கும்போது காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆயுதம் என்பதும் காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார் அப்பார்ப்பனர்களின் குலாம்கள் என்பதும் கல்லின்மேல் எழுத்துப்போல் விளங்கவில்லையா.
என்று கேட்கிறோம்
ஆகவே சுயநல வகுப்பார்களும் வகுப்புவாதிகளும் யார் என்று காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதாரைக் கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1936
குடி அரசு - 1936 (2), 72
மருதையா பின்னைக்கும் மார்க்க சகாய
தீக்ஷ்தருக்கும் சம்பாஷணை
- கோமாளி யெழுதுவது
மருதையாபிள்ளை:- வாங்கய்யா தீக்ஷதரே! செளக்கியமா? ரொம்பநாளாக காணமே
மார்க்க சகாய தீக்ஷதர்:- ஆமாம், என்ன செய்கிறது? பிழைக்கிறவழி பார்க்கவேண்டாமா?'
மருதையா:- நீங்கள் என்ன பாடுபடவா போகிறீர்கள், யாரோ சம்பாதிக்கிறான், எப்படியோ உங்கள் காரியம் நோகாமல் நடந்து விடுமே, என்ன குறை?
மார்க்க: பூர்வீகம் போல் எண்ணிக்கொண்டு ஒன்றுந் தெரியாதவர் போல் பேசறீர்களே.
மருதையா:- பூர்வீகமென்ன? நவீனமென்ன? எப்போதும் போலவேதான் உதயம் அஸ்தமனம் ஆகிக்கொண்டே வருகிறது. உமக்கு மாத்திரம் என்ன வித்யாசப்பட்டு காண்கிறதோ? எனக்கு ஒன்றும் தோணவே இல்லையே
மார்க்க:- ஆமாம், உமக்கென்ன தெரியவேண்டி இருக்கிறது? எங்களைப்போல தூங்கி விழித்ததும் எங்கு கல்யாணம், எங்கு கருமாதி என்று வீடுவீடாக அலைந்தாலல்லவோ தெரியும். அப்படித்தான் அலைந்தாலும் மூன் போல ஏதாவது மரியாதையுண்டா? இல்லாவிட்டாலும் த௲௲ணையாவது அணாக்கணக்கில் உண்டா? எல்லாம் வர வரக் கெட்டுப் போய்விட்டது. அந்த வயித்தெரிச்சலைக் கிளப்பாதேயும். வேறு ஏதாவது பேச்சிருந்தால் பேசுங்கோ
மருதையா:- என்ன தீக்ஷதரே, மிக வருத்தமாகவும் சலிப்பாகவும் பேசுகிறீர்கள். ஏதாவது உங்களுக்கு வரவேண்டிய கடனை இல்லை என்று
மறுத்து விடுகிறார்களா? அல்லது யாசிப்பது தவறு என்று அறிந்துகொள்ளுமாறு செய்கிறார்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மார்க்க:- கடனாவது இழவாவது - ஏதோ சுபா சுபங்களில் பிராமணனாயிற்றே என்று கொஞ்சமும் தற்கால ஜனங்கள் கவனிக்கிறதே
73 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இல்லை. தர்ம மில்லை; தக்ஷணை இல்லை; தாம்பூலமில்லை. வர வர மிகவும் கேவலமாகி விட்டது. என்னமோ விருதா செலவாக நினைத்து வருகிறார்களே ஒழிய இதற்கெல்லாம் பலாபலன் கிடைக்கு மென்பது தோணுகிறதே இல்லை. மகா மோசம். அதைக் கேட்க வேண்டாம்.
மருதையா:- அவனவன் வீட்டு நல்ல காரியம் கெட்ட காரியங்களில் உமக்கென்ன பங்கு? யார் முதலை யாருக்கு இல்லை என்கிறார்கள்? இதில் வரும் பலா பலனென்ன? மிகவும் வருத்தப்படுகிறீர்களே விபரம் விளங்கும்படிதான் சொல்லுங்களேன்.
மார்க்க:- அவர் காரியங்களில் பங்கில்லா விட்டாலும் என்னய்யா. தான தர்மமில்லையா, புண்ய பாபமில்லையா? அவர் முதலானாலும் ப்ராம்மணா - சூத்ராள் இல்லையா, மேல் கீழில்லையா? பெண் பிள்ளைகள் கூட கேவலமாக துச்சமாக நினைத்து பேசற காலம் வந்துட்டதே! உமக்கொன்றும் தெரியாது போல் பேசரேளே, வயித்தெரிச்சலைக் கிளப்பரேளே.
மருதையா:- இன்னொருவனுடைய பாப புண்யத்தில் உமக்கென்ன. கவலை, நீர் பிராமணனானால் மற்றவர்களுக்கென்ன, அவர் சூத்திரனானால் உமக்கென்ன? மனித வர்க்கத்தில் மேல் கீழ் என்ன? “பெண் பிள்ளை கூட" என சொல்கிறீர்களே, பெண்ணென்றால் கேவலமாக நினைத்துக் கொண்டீரா? இவ்வளவு வயித்தெரிச்சலை நீரே ஏன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்? உம்ம அலுவலை நீர் கவனித்துக்கொண்டு போனால் உமக்கேன் இவ்வளவு வருத்தம் வருகிறது? இதற்கெல்லாம் காரணமே புலப்படவில்லை.
மார்க்க:- நீர் வயசானவராகவிருந்தும் நவீன ஜனங்களைப்போல பேசரேளே ஒழிய கொஞ்சமும் சாஸ்திர ஞானத்தோடு பேசறதில்லையே.
மருதையா:- எனக்கு சாஸ்திரக் கியானமுமில்லை; அதை நான். நம்புகிறதுமில்லை. உமக்கு எதாவது ஷி ஞானம் இருந்தால் விபரமாகவும் பகுத்தறிவுக்குப் பொருந்துமாறும் சொன்னால் நான் தெரிந்து கொள்ளுகிறேன்.
மார்க்க:- அப்படியானால் விபரமாக சொல்வதைக் கேளும் பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரரென்கிற நான்கு வருணங்களுண்டு.
அதில் பிராமணனுக்கு ஆறு தொழில் உண்டு. அவைகளாவன:- வேதம் வாசித்தல், வாசிப்பித்தல், யாகம் செய்தல், செய்வித்து வைத்தல், தானம் கொடுக்கல், யாசித்தல் என்கிறவைகளாகும். ஆகையால் அவர்களுக்கு யாரிடமாவது சென்று யாசிக்க நேரும் சமயங்களில் மற்றவர்கள் அப்பிராமணர்களுக்கு உபசாரத்துடன் அவர்களுக்கு வேண்டியவைகளை உதவ வேண்டும். பெண்கள் முதலிய துச்சமானவர்களை விட்டு பதில் சொல்லும்படி செய்யக்கூடாது
மருதையா:- ஓஹோ! யாசிப்பவர்க்கு மரியாதையோடு உபசரிக்க வேண்டுமா? சரி சரி பெண்களை தாழ்மையாக நினைக்க வேண்டுமா பேஷ்! நன்றாக இருக்கிறது
குடி அரசு - 1936 (2), 74
மார்க்க:- உமக்கிதெல்லாம் கேலியாக் காணலாம், அப்படி நினையாதேயும். சாஸ்திரத்தில் அதிதிகளை தெய்வமாக பாவித்துபசரிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களை மிகவும் கேவலமாகச் சொல்லி யிருப்பதாகச் சொன்னால் நம்பமாட்டீர். அதை வேணுமானால் அப்படியே சொல்லி விடுகிறேன் கேளும்
“நண்ணருங் கடுவெங் கூற்றரு கரகேழ்
பிறப் பிறப்புறு புலி நாகம் திண்கரியரி மாவலகை திண்குறளி தீவளி கோடி வெந்தேட்கள் விண்ணிடியேறுகழு புழு குளவி வேதை செய்வன வெலாந் திரண்டு பெண்ணுருவெடுத்த.....'” என்றும்,
ஆயிரநான்கு நூறொரு நான்கு பத்தொரு நான்(கு) எட்டாவறையும் நோய் கொளவரினுமமையுமந்தோவோர் நுண் ணிடைப் பெண்ணலம் வேண்டேம்”'
என்றும் இன்னும் இதைப்பற்றி பலவாறாகச் சொல்லி இருப்பதை யெல்லாம் அறியாதவராகப் பேசறளே; என்ன சொல்கிறது.
மருதையா:- இவைகளெல்லாம் தன்னலக்காரரால் எழுதிவைத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி வருவதற்கு உபயோகப்படுத்தி வருகிற வழக்க மென்று எனக்குத் தெரிந்தது தான். இம்மாதிரி எல்லாம் இனி சொல்லாது ஒழுக்கமுள்ளவைகளைக் கைப்பற்றி அவைகளிலுள்ளதை மனதில்
வைத்து நடந்து வாரும்
மார்க்க:- ஆனால் ஒழுக்கமுள்ளதையும் பொதுநலக்காரர் அனுஷ்டிப் பதையும் நீர் தான் சொல்லுமே பார்ப்போம்
மருதையா:- ஆனால் சொல்லுகிறேன் கேளும். அதாவது அழையாமல் கண்ட இடங்களுக்குச் செல்லக்கூடாது... அப்படிப்போனால் *'திறந்து கிடக்கும் வாசல்தோறும் நுழைந்து திரியும் பதார்த்த"மாக பாவிக்கப்படுவீர். யாரிடமும் ஒன்றும் யாசிக்கக்கூடாது. அப்படி செய்வீர்களானால் உம்மை திருடனுக்குச் சமானமாக பாவிப்பார்கள். எப்படி எனில் திருடனும் தனக்குப் பாத்தியமில்லாத மற்றொருவன் முதலை தான் பெற இச்சிக்கிறான். யாசகனும் தனக்கு பாத்தியப்படாத மற்றொருவன் முதலை அடைய இச்சிக்கிறான். இதில் இன்னொருவன் முதலை இச்சிப்பதில் இருவருக்கும் பேதமென்ன விருக்கிறது? நீர் சொன்ன பெண்ணைப்பற்றி இழி சொற்களுக்கும் ஒரு பதில் சொல்லி விடுகிறேன்.
* திறந்து கிடந்த வாசல்தோறும் நுழைந்து திரியும் பதார்த்தம் - நாய்
75 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
“கண்டு கேட்டுண்டுயிர்த்து ற்றறியுமைம் புலனும் ஒண்டொடி கண்ணே யுள”
“உலகின் வாழ்க்கை செவ்வனே நடைபெறுதற்குத் தாயகமான பெண்கள். என்பவர்கள் இன்றியமையாதவர்கள்” என்னும் சீரிய பொன்னுரைகளைக்
கேட்டிலர் போலும்
ஆகையால் இன்று முதல் ஏதாவது ஒரு நல்ல தொழிலைக் கடைப்
பிடித்துச் ஜீவித்து வாரும். இந்தப் பழய சோம்பேறி வாழ்க்கைகளை இனி கனவிலும் நினையாதீர். உம்முடன் பழகின தோஷத்திற்கு இவைதான். நான் உமக்குச் சொல்லக்கூடும். நான் போய்வருகிறேன் நேரமாகிவிட்டது.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - சூலை 1936
குடி அரசு - 1936 (2), 76
கற்பொழுக்கம்
நமது முன்னோர்கள் வாழ்ந்ததைவிடச் சிறப்பாக வாழக் கற்றுக் கொள்வதே நாம் நமது முன்னோர்களுக்குச் செய்யக் கூடிய மரியாதை என ஒரு பெரியார் கூறியிருக்கிறார். சமூக முன்னேற்றத்தைப் பற்றிய கருத்துக்கள் பலதிறப்பட்டனவாயிருக்கின்றன. முன்னோர்கள் முன்னேற்றத்தைப்
பற்றிச் சிந்திக்கவே இல்லை. மேனாட்டாரைப் போலவே கீழ்நாட்டாரும் முன்னேற்ற விஷயத்தில் அலட்சியமாகவே இருந்து வந்தனர். உண்பது உடுப்பது போன்ற புறத் தேவைகளிலே அவர்கள் அதிக கவனம் செலுத்தி வந்தனர். சீர்திருத்த உணர்ச்சியும் முன்னேற்ற உணர்ச்சியும் மிகச் சமீப காலத்திலே தோன்றின.
இப்பொழுதும் மிக்க ஆர்வமுடைய சீர்திருத்தவாதிகளும் கூட சில. குறிப்பிட்ட துறைகளிலே சீர்திருத்தம் செய்ய விரும்புகின்றனர். சர்வ வியாபகமான சீர்திருத்தங்களை விரும்புவோர் மிகச் சிலரே.
உலகமுழுதும்பொதுவாக இருந்துவரும் சமூக லட்சியம் என்னவெனில் நமது முன்னோர்களைப்போல வாழ்க்கை நடத்துவதே.
ஆனால் சமூக ஸ்தாபனங்கள் எல்லாம் குறைபாடுடையனவாகவே இருக்கின்றன. சீர்திருத்தம் தேவையில்லாத ஸ்தாபனங்களே இவ்வுலகத்தில் இல்லையென்று ஒப்புக்கொள்வதே உயர்வான லட்சியம். ஒழுக்கம் மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்பதை இப்பொழுது அநேகமாக எல்லாரும்
ஒப்புக் கொள்கிறார்கள். பழமை விரும்பிகள் எப்பொழுதும் சீர்திருத்தத்தை
எதிர்த்தே வருகிறார்கள். கற்பு அல்லது ஆண் பெண் ஒழுக்க விஷயமாகத் தற்காலம் இருந்து வரும் ஏற்பாடுகளே சரியானவை என்றும், அவைகளை மாற்றினால் சமூகமே அழிந்து விடுமென்றும் அவர்கள் வாதிக்கிறார்கள். எனவே, தற்காலம் அமலில் இருந்து வரும் ஆண் பெண் ஒழுக்க சம்பந்தமான ஏற்பாடுகளைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம்
பலதிறப்பட்ட ஓழுக்கங்கள்
ஆனால் கற்புணர்ச்சி உலக முழுவதும் ஒரே சீராக இருக்கவில்லை. ஒரு தேசத்தில் நல்லொழுக்கமென மதிக்கப்படுவது வேறொரு தேசத்து கூடா வொழுக்கமாக எண்ணப்படுகிறது. எனவே முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு ஒரு சிறிது ஆராய்வோம். பொதுவாக பெண் புருஷனின்.
77 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அடிமை என்றும், போகப்பொருள் என்றும், அவளைப் புருஷன் என்ன. வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் உலக மக்கள் எல்லாம், ஒரு காலத்து நம்பியே வந்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிலே பெண்கள் அடிமைகளிலும் கடையராகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். புருஷர்கள் பெண்களை மிகக் கொடுமையாக நடத்தினார்கள்; மிருகத்தனமாக ஹிம்சித்தார்கள். பெண்கள் சுந்தரிகளாக
இருந்து விட்டாலோ அவர்கள் பாடு அதோ கதிதான்.
ஆப்பிரிக்கப் பெண்கள் நிலைமையும் மிக்க பயங்கரமாகவே இருந்து வந்திருக்கின்றது. பெண் புருஷன் சொத்தாகவே இருந்து வந்திருக்கிறாள். தன்னிஷ்டப்படி அவளை உபயோகித்துக்கொள்ள புருஷனுக்குப் பூரண
சுதந்தரம் இருந்து வந்திருக்கிறது ஹிமாலயப் பிரதேசத்திலுள்ள ஒரு ஜாதியார் திபெத்தியர் வழக்கத்தைப் பின்பற்றி வருகிறார்கள். பண்டங்களை விற்பது போல் அவர்கள் பெண்களை விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு ஏக காலத்துப் பல புருஷர்கள் கணவன்மாராயிருந்து வருகிறார்கள். தகப்பன் புத்திரிகளை தாராளமாக விற்கிறான். அம்மட்டோ அவர்கள், தங்கள் மனைவிகளை யாருக்கு வேண்டுமானாலும் வாடகைக்கும் விடுகிறார்கள்.
நியூஜீலந்து வழக்கம் கொடியதாயிருப்பதுடன் விநோதமாகவும் இருக்கிறது. தந்தை தன் மகளையும், சகோதரன் தன் சகோதரியையும் வேறொருவனுக்கு விவாகம் செய்து கொடுக்கும்போது “அவள் உனக்கு
திருப்தியளிக்க வில்லையானால் அவளை நீ விற்றுவிடு, அல்லது கொன்றுவிடு, அல்லது தின்றுவிடு, நீயே அவளுக்கு எஜமான், அவளை உன் இஷ்டப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம்” என்று கூறுவார்களாம்.
காட்டாள ஜாதியார் பழக்க வழக்கங்கள் இவ்வாறாக, நாகரிக மக்கள் நிலைமை எவ்வாறு இருந்திருக்கிறதெனப் பார்ப்போம்
ரோமாபுரியில் ஆதி காலத்திலே பெண் கணவன் குடும்பத்தின் பொதுச்சொத்தாக, பொது அடிமையாக மதிக்கப்பட்டுவந்தாள். காட்டோ என்ற நல்லொழுக்கமுடைய பெரியார் தன் மனைவி மரேஷியாவைத் தன் நண்பன் ஹார்ட்டன்சியக்கு இரவலாகக் கொடுத்து அவன் இறந்த பின்பு அவளைத் திரும்பப் பெற்றுக்கொண்டாராம். ரோமர் கலியாண முறை ஒரு அடிமை ஒப்பந்தமாகவே இருந்து வந்தது. பெண் தன் ஆயுட்காலம் முழுதும் கணவனது அடிமையாகவே மதிக்கப்பட்டு வந்தாள். ஆங்கிலப்பெண்கள் நிலைமையும் ஆதியில் மிக மோசமாகவே இருந்து வந்தது. புருஷன் தன் மனைவியை மனங்கொண்ட மட்டும் அடிக்கலாம்; ஆனால் பெருவிரலைவிடப் பருமனான தடியால் அடிக்கக் கூடாது. இந்தப் புராதன கொடிய வழக்கம் சில இடங்களில் இப்பொழுதும் வெகு அபூர்வமாக இருந்தே வருகிறது. பெண்களின் துயரத்தைக்
குடி அரசு - 1936 (2), 78
குறைக்கும் சட்டங்கள் தோன்றிய போதெல்லாம் பழமைவிரும்பிகள் மிக வன்மையாக எதிர்த்தே வந்தனர். அத்தகைய எதிர்ப்பு நெடுங்காலம் மிக வன்மையாக இருந்து வந்ததாயினும் காலஞ் செல்லச் செல்ல மாற்றங்கள் எற்பட்டே வந்தன.
தகப்பன் மகளைத் தீண்டுவதும் சகோதரன் சகோதரியைத் தொடுவதும் பயங்கர அநாசாரமான பாபச் செயலாக இப்பொழுது மதிக்கப்பட்டு வருகிறது
ஆனால் கி.மு.66ல் அராபியாவிலே சகோதரர் சகோதரிகளையும்,
புத்திரர் தாய்மாரையும் பெண்டாண்டு வந்ததாக ஸ்ட்ராபோ என்பார் கூறுகிறார். வமிச விருத்திக்காக முறை கேடான புணர்ச்சி உலக முழுதும் அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது
பிரம்மா தன் புத்திரியான சரஸ்வதியை மணஞ்செய்துகொண்டானாம். எகிப்திய தேவனான அம்மன் தன் தாயை மனைவியாக்கிக் கொண்டானாம். ஒடின் என்ற தேவன் தன் புத்திரி பிரிக்காவை மனைவியாக்கி கொண்டானாம் ஜனு பிட்டர் தன் சகோதரி ஜஐூனோவை விவாகம் செய்து கொண்டான். இந்தியாவிலும் சில ஜாதியாருக்குள் சகோதரர் சகோதரிகளை மணந்து கொள்ளும் வழக்கம் இப்பொழுதும் இருந்தே வருகிறது
ஒரு காலத்திலே ஆணும் பெண்ணும் தம் இஷ்டப்படி கண்டபடி புணர்ந்தே வந்தார்கள். “ஒரு புருஷன் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவளைச் சேர எல்லாப் புருஷர்களுக்கும் உரிமையுண்டு” என ஹாரடாட்டஸ் கூறியிருக்கிறார். லீசியார், எட்ரூஸ்
காளர், சீரிட்டர், அத்தீனியர், லெஸ்பெயின்கள், எகிப்தியர் முதலியவருக்குள். பண்டு ஆண்களும் பெண்களும் தத்தம் இஷ்டப்படி வரையறையின்றிப் புணரும் வழக்கம் இருந்து வந்தது என பாச்சோபின் என்பார் தக்க ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டியிருக்கிறார். பெண்கள் பருவமடைந்த
பிறகு ஏதேனும் ஒரு ஆலயத்துக்குச் சென்று ஏதேனும் ஒரு இளைஞனைத் தேடிப்பிடித்துக் கூடி கன்னிகழித்துக் கொள்ள வேண்டியது பாபிலோன். நகரத்திலே ஒரு புனிதமான மதச்சடங்காக மதிக்கப்பட்டு வந்தது. மெம்பிஸ், அர்மீனியா, டயர், சிடொன் முதலிய பிரதேசங்களிலும் இந்த அநாச்சாரம் இருந்து வந்திருக்கிறது. லிபியன் கன்னிப்பெண்கள் தனக்கு இஷ்டமானவரைக் கூடி கீதனத்துக்கு வேண்டிய பணத்தைச் சம்பாதித்தார்கள். விவாகத்துக்கு முன் அவர்களுக்கு புணர்ச்சி சுதந்தரம் இருந்து வந்தது. எனவே பல பேரைக் கூடி அதிக பணம் சம்பாதித்தவளையே எல்லோரும் மணக்க விரும்பினர். தாரசிய ஜாதியாருக்குள்ளும் இவ்வழக்கு இருந்து வந்ததாக ஹெராடாட்டஸ் கூறுகிறார். எகிப்திய ராஜகுமாரி ஒருத்தி விபசாரம் செய்து பணம் சம்பாதித்துத் தனக்கென ஒரு கோபுரம் 729 மயலி கட்டிக் கொண்டதாகவும் தெரியவருகிறது.
மார்குஸாஸ், பிலிப்பையன், பொலினீஷியத் தீவுகளிலுள்ள சில
பிரதேசங்களிலும் ஆபிரிக்காவில் சில ஜாதியாருக்குள்ளும் பெண்களுக்கு
79 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இப்பொழுதும் புணர்ச்சிச் சுதந்தரம் இருந்தே வருகிறது. கலியாண தினத்தன்று பெண்ணின் பந்துக்களான புருஷர்கள் எல்லாம் அப்பெண்ணைக் கூடும் வழக்கம் பாலியரித் தீவுகளில் மிகச் சமீப காலம் வரை இருந்து
வந்தது. சில ஜாதியார், எல்லாப் புருஷர்களுக்கும் ஒரு பெண்ணைச் சேர உரிமையுண்டென்பதற்கு அறிகுறியாக எல்லாருக்கும் பொதுவான ஜாதித்தலைவனோ குல குருவோ அப்பெண்ணைக் கூட அனுமதிக்கிறார்கள். மலையாளத்திலே ஒரு ஜாதியார் தம் மனைவிமாரின் கன்னி கழிக்க மத குருமாரை ஏற்படுத்துகிறார்கள். இந்தியாவின் அநேக பிரதேசங்களிலும்
பெசிபிக் மகா சமுத்திரத்திலுள்ள சில தீவுகளிலும் இவ்வழக்கம் இப்பொழுதும் அநுஷ்டானத்திலிருந்து வருகிறது. செனிகாப்பியாவிலே ஜாதித் தலைவன் அந்தப் புண்ணிய கருமத்தை நடத்தி வருகிறான். சில பிரதேசங்களிலே கன்னி கழிக்க விக்கிரகங்களை உபயோகப்படுத்து கிறார்கள். இவ்வழக்கங்களைப் பின்பற்றியே, ஐரோப்பாவிலும் மத்திய காலம் வரை முதலில் புணரும் உரிமை குறிப்பிட்ட சிலருக்கு இருந்து வந்தது.
ஆண், பெண் ஒழுக்க ஏற்பாடுகளை நாம் நுட்பமாக ஆராய்ந்து
பார்த்தால் அவை யாவும் ஏதேனும் ஒருமுறையில் ஒரு மதக் கொள்கையைத் தழுவி நிற்பதைக் காணலாம். எனவே ஆண் பெண் ஒழுக்கக் கொள்கை: களையும் ஆசாரங்களையும் நாம் பரிசீலனை செய்யும்போது அந்த விஷயம் மிகவும் சிக்கலான தென்பதையும் விசாலமான தென்பதையும்
நாம் முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; நம்முடைய ஒழுக்க முறையே மேலானதென்று கண்ணை மூடிக்கொண்டு முடிவு கட்டி விடலாகாது. மற்றக்கால ஆசாரங்களை நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் தான் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய முறை புலனாகும்
பழைய ஏற்பாட்டு ஒழுக்கங்கள்
தற்காலக் கிறிஸ்தவ கற்பொழுக்கத் திட்டங்களுக்கு புதிய ஏற்பாட்டைத் தழுவிய பழைய ஏற்பாட்டு ஒழுக்க முறைகளும் அவைகளின் பாஷ்யங்களுமே ஆதாரமாகும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை பழைய ஏற்பாடு ஆதரிக்கிறது. “புருஷன் தனிமையாக இருப்பது நல்லதல்ல. நான் அவனுக்கு ஒரு வாழ்க்கைத் துணையை உண்டு பண்ணுவேன்” என்று சொல்லி ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து கடவுள் ஜோடி சேர்த்ததாகப் பழைய ஏற்பாடு கூறுகிறது. மற்றும் ஆணையும் பெண்ணையும் கடவுள் ஆசீர்வதித்து “நீங்கள் பெற்றுப் பெருகி உலகத்தை நிரப்புங்கள்” என்று கட்டளையிட்டானாம். கிறிஸ்தவ ஒழுக்கங்களை வகுத்த ஆதிக்கிறிஸ்தவ ஞானிகள் பிரம்மச்சாரியத்தைப் பாராட்டிப் பேசியிருந்தாலும் கிறிஸ்து மதத்துக்கு ஆதாரமான ஹிப்ரு மதம் பிரம்மச்சரியத்தை ஆதரிக்கவில்லை. ஒருபுருஷன் பல பெண்களை மனைவியாகக் கொள்வதை பழைய ஏற்பாடு ஆதரிக்கிறது. ஆதாமின் ஏழாம் தலைமுறையானான. லாமெத்து இரண்டு பெண்களை மணந்திருக்கிறான். தலைமைப் பூசாரி
குடி அரசு - 1936 (2), 80
ஒரே பெண்ணைத்தான் மணக்க வேண்டுமென்று பழைய ஏற்பாடு வற்புறுத்தியிருக்கிறது. அரசன் பல பெண்களை மணத்தல் கூடாதென்றும் கட்டளையிட்டிருக்கிறது. எனினும் பல அரசர்கள் அதை மதிக்கவில்லை. தாவீது அரசன் பல பெண்களை மணந்தான். சாலோமன் அரசனுக்கு 700 மனைவிமாரும் 300 வைப்பாட்டிகளும் இருந்தார்கள். ஆபிரகாம் தன்: சிற்றப்பன் மகளை கலியாணம் செய்து கொண்டான். ஒருவன் இறந்தால் அவனது விதவையை அவன் தம்பி கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்று லெவியட் சட்டம் வற்புறுத்துகிறது. ஆபிரகாம் தன் மனைவியின். வேலைக்காரியைக் கூடிப் பிள்ளை பெற்றான். ஜேக்கப் இரண்டு சகோதரிகளை மணந்து கொண்டதுடன் அவர்களுடைய வேலைக்காரிகளையும் வைப்பாட்டியாக வைத்துக்கொண்டான்.
பெண்கள் நிலைமை
ஹிப்ரு சட்டப்படி மனைவி கணவனுக்கு அடிமையாகவே இருந்தாள். கணவன் மனைவியை ஹிம்சித்தால் சட்டப்படி அவளுக்குப் பரிகாரமில்லை. கணவனுக்கு மட்டும் விவாக விடுதலை உரிமையளிக்கப் பட்டிருந்தது. புருஷனுக்குப் பிடிக்காத பெண்ணை அவன் வீட்டை விட்டு விரட்டலாம். அவள் அப்பால் விருப்பமுள்ளவனைக் கூடி வாழலாம் கணவன் மனைவியை நீக்கும்போது தன் கைப்பட ஒரு அறிக்கை எழுதிவெளியிட வேண்டும்
தந்தைக்குத் தன் குழந்தைகள் மீது பூரண அதிகாரம் இருந்து வந்தது. குழந்தைகளைக் கொல்லவும் கூட அவனுக்கு உரிமை இருந்தது
புத்திரிகள் மீதும் பூரண சுதந்தரம் இருந்து வந்தது. அவன் புத்திரிகளை விற்பனை செய்யலாம். விபசாரம் செய்யக்கூடாதென்று பத்துக் கற்பனையில் ஒரு விதி இருக்கிறது. மனைவி கணவன் சொத்தாகையினால் அவளைப்
பிறர் உபயோகப்படுத்தக் கூடா தென்பதே அத்தடையின் கருத்து. “ஒரு மனிதன் தன் அயலான் மனைவியோடாவது பிறன் மனைவியோடாவது விபசாரம் செய்தால் விபசாரம் செய்த ஆணுக்கும், பெண்ணுக்கும் மரண: தண்டனை விதிக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு கன்னிப்பெண் வேறொரு பெண்ணின் கணவனோடு சேர்ந்தால் அவளுக்கு தண்டனை வழங்குவதைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. விபசாரம் ஒரு குற்றமென பழைய ஏற்பாடு விதித்திருந்தாலும் அக்காலத்து விபசாரம் தாராளமாக நடைபெற்றே வந்திருக்கிறது.
லாட் என்பான் வீட்டுக்கு இரண்டு விருந்தாளிகள் வந்தனர். அவர்களை வரவேற்று அவன் உபசாரம் செய்தான். ஆனால் அவ்விருந்தாளிகளை வெளியேற்ற வேண்டுமென்று ஊரார் கேட்டுக் கொண்டார்கள். எனினும்
லாட் இணங்கவில்லை. அதிதிகளை விரட்டுவது மகா பாபமென எண்ணினான். எனவே அதிதிகளை ஊரார் தொந்தரவு செய்யாதிருந்தால் தன் இரண்டு புத்திரிகளையும் ஊராருக்கு வழங்கி விடுவதாக லாட்
81 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கூறினான். தன் புத்திரிகளின் கற்பை விட அதிதி சத்காரமே அவனுக்குப் பெரிதாகத் தோன்றிற்று. இதனால் அக்காலத்துப் பெண்களின் நிலைமை எவ்வளவு இழிவாக இருந்ததென்று விளங்கவில்லையா?
புதிய ஏற்பாட்டு ஒழுக்க முறைகள்
கிறிஸ்துவின் உபதேசங்களைக் கேட்டால் நாம் கனவுலகத்தில் இருப்பது போலவே தோன்றும். “ஒரு பெண்ணை காமக் கண்ணால் நோக்குபவன் மனத்தினால் வியபிசாரம் செய்கிறான்” என்று கிறிஸ்து
கூறுகிறார். ஆனால் இது அனுபவசாத்தியமான உபதேசமல்ல. மனத்தினால் விபசாரம் செய்கிறவர்களுக்கெல்லாம் சர்க்கார் தண்டனையளித்தால் உலக. மக்கள் எல்லாம் சிறையில் அடைபடவேண்டியதுதான். விவாக விடுதலையைப் பற்றி கிறிஸ்துவின் உபதேசம் மிகவும் கண்டிப்பானதுதான். “விபசார தோஷத்துக்கு ஆளாகாத பெண்களை விவாக விடுதலை செய்பவன் அவள் விபசாரம் செய்யும்படி தூண்டுகிறான். விவாக விடுதலைபெற்ற பெண்களை விவாகம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாகிறான்”' எனக் கிறிஸ்து கூறுகிறார். இது உயர்வான லட்சியந்தான். ஆனால் அக்கால மக்களுக்கு அது பொருத்தமானதல்ல. இன்றும் ஆண்களும் பெண்களும் அதைப் பின்பற்ற முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். மணவினைகள். சுவர்க்கத்தில் நடைபெற்றால் அவைகளை ரத்து செய்ய நமது நீதிஸ்தலங் களுக்கு ஒருகால் அதிகாரமில்லாது இருக்கலாம். ஆனால் மண்ணுலகத்தில் நடைபெறும் கலியாணங்களை ரத்து செய்ய நமது நீதி ஸ்தலங்களுக்கு அதிகாரமிருந்தான் ஆகவேண்டும்
மேலும் கிறிஸ்துவின் போதனை பழைய ஏற்பாடு முதல் ஆகமத்துக்கு முரணானதாகவே இருக்கிறது. இல்லறத்தை கிறிஸ்து பாராட்டவில்லை. எல்லாரும் இல்லற வாழ்க்கை நடத்த வேண்டுமென்று அவர் கூறவில்லை. பிரமச்சரியத்தையே அவர் ஆதரிக்கிறார். கிறிஸ்து உபதேசப்படி எல்லாரும் பிரமச்சாரிகளாயிருந்தால் வெகு சீக்கிரத்தில் உலகம் காலியாகிவிடுமென்று நாம் கூறவும் வேண்டுமா?
அது ஒரு பயங்காளித்தனமான போதனை. எனினும் அது உலகம்
முழுதும் பரவியிருக்கிறது; அது பெண்ணுலகத்தை அவமதிக்கிறது; காதலைக் கேவலப்படுத்துகிறது. மனோ கற்பிதமான சுவர்க்கத்தையடையும் பொருட்டு ஆண்கள் எல்லாம் ஆண்மையை இழந்துவிட வேண்டுமென்று வற்புறுத்துகிறது. பெண்கள் எல்லாம் தேவாலயத்தில் மெளனமாக இருக்க வேண்டுமென்றும், புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டுமென்றும் கணவன்மார் கட்டளைகளை மீறக்கூடா தென்றும் பால் கூறுகிறார். ஏனெனில் கிறிஸ்து ஆத்மாவின் ரக்ஷகனாயிருப்பது போல கணவன். மனைவியின் உடலின் ரக்ஷகனாயிருக்கிறானாம். ஆகவே, ஆதிக் கிறிஸ்தவர்கள். பெண்ணுலகத்தை அவமதித்தே வந்தார்கள். பிரம்மசரியத்தையே மேலானதாக மதித்தார்கள். இல்லறம் இரண்டாம் பக்ஷமாகவே மதிக்கப்பட்டது
குடி அரசு - 1936 (2), 82
மற்றும், பெண் அசுத்தமானவள் என்றும், ஆண்களைத் தப்பு வழியில் செலுத்துகிறவள் என்றும், மக்கள் வீழ்ச்சிக்குக் காரணமானவள் என்றும் பழைய ஏற்பாடு கூறுகிறது. “பெண்ணே! நீ நரகத்தின் வாயாய் இருக்கிறாய்” என டெர்ட்டுலியன் கூறியிருக்கிறார். கலியாணம் ஒரு சாபத்தீட்டு என. வேறொரு ஞானி கூறிகிறார். பெண் விரைவாக வளரும் ஒரு களையென்றும் அசுத்தமானவள் என்றும் 13-வது நூற்றாண்டில் வாழ்ந்த வேறொரு கிறிஸ்தவ ஞானி கூறியிருக்கிறார். பெண்ணுலகத்தை கிறிஸ்து மதம் மட்டும் இழிவாகக் கூறவில்லை “பெண்கள் அவமானத்துக்கு, இருப்பிடமானவர்கள் அவர்களைப் பார்க்கவும் கூடாது என ஹிந்துக்களின் மனுதர்மம் கூறுகிறது
தத்துவமுறையில் பார்த்தால் தற்கால கிறிஸ்தவ ஒழுக்கத் திட்டங்கள்.
மிகவும் உயர்வானவை தான். ஆனால் அது அனுபவசாத்தியமானதல்ல. சுவர்க்க போகத்துக்காக ஆண் தன்மையை இழந்தவனே கிறிஸ்து மதக் கொள்கைப்படி மேலானவனாகக் கருதப்படுகிறான். இல்லறம் இரண்டாம் பக்ஷமாகவே கருதப்படுகிறது. விபசாரதோஷம் ஏற்பட்டால் தான் விவாக விடுதலையுண்டு. விபசாரத்துக்கு கிறிஸ்து மதத்திட்டத்தில் இடமே இல்லை.
சுமார் 19 நூற்றாண்டுகாலம் இந்த ஒழுக்கத்திட்டம் அமலில் இருந்தே வருகிறது. ஆனால் அந்தத் திட்டத்தினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதையே
நாம் இப்பொழுது முக்கியமாக கவனிக்க வேண்டும். சரியாக வேலை செய்யும் திட்டங்கள் எல்லாம் உத்தமமானவை என்று கூறப்படுவதுண்டு. கிறிஸ்தவ ஒழுக்கத்திட்டப்படி நடக்க கிறிஸ்தவர்கள் ஒரு சிறிதாவது முயன்றிருந்தால் அந்த திட்டத்துக்கு ஒருவாறு மதிப்புக்கொடுக்க வேண்டியது தான். ஆனால் அந்த லக்ஷ்யத்தையடைய நாம் முயலவே செய்யாது இருந்தால் அந்த லக்ஷ்யத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று தான் முடிவு கட்டவேண்டும்
அந்த லக்ஷ்யத்தை உயர்ந்த அறிவாளிகள் எல்லாம் எதிர்க்கிறார்கள். இந்திரிய நிக்கிரகம் அவ்வளவு உயர்வான சீலமல்லவெனக் கூறுகிறார்கள். ஏக பத்னி விரதம் விபசாரத்துக்கும் மற்றும் எண்ணற்ற முறைகேடான. புணர்ச்சிக்கும் இடமளிக்கிறது. கிரியாம்சையில் அதனால் என்ன பலன் ஏற்பட்டிருக்கிறதென இனி ஆராய்ந்து பார்ப்போம்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - சூலை 1936
83 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
யந்திரங்கள் வேண்டாமா?
“மனிதவர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி” என்று நாம் கருதி இருந்த காலமும் அந்தப்படியே யந்திரங்களை எல்லாம் “பிசாசு” என்று பிரசாரம் செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற்போக்கினுடையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும் தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும், மக்களின்.
சரீர கஷ்டத்தை உணர்ந்து அதைக் குறைக்க வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்டிருக்கும் போதும் எந்த மனிதனும் யந்திரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் கண்டுபிடித்தும் வரவேற்றுமே ஆகவேண்டும்
ஏன் என்றால் மனித அறிவின் சுவாப அனுபவத்தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டு பிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் ஜீவன் சரீரப் பிரயாசையை குறைத்துக்கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும் ஆகவே அறிவும், ஆராய்ச்சியும் இல்லாத இடங்களில் தான் யந்திரங்கள் அருமையாய் இருப்பதும், அலட்சியமாய்க் கருதுவதுமாய் இருக்குமே தவிர, மற்ற இடங்களில் அதாவது பகுத்தறிவு, ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத்தாண்டவமே அதிகமாயிருக்கும்
வியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய “மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி" யந்திரங்கள் “பிசாசு” என்று நாம் கருதியதாகக் குறிப்பிட்டதானது அறிவும், ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ, இயற்கையோடு போராடவேண்டுமென்றோ, அல்லது மனிதன் சரீரத்தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுத்தான் ஆகவேண்டுமென்றோ கருதியல்ல. ஆனால் மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் “யந்திரங்கள் பல பேர் பல நாள் செய்யும் காரியத்தை வெகுசில
பேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத்திற்கு - கூலிக்கு மார்க்கம் எங்கே? அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு என்ன சமாதானம்?” என்று சொன்னவர்களின் வார்த்தைகளை நம்பினதாலேயே தவிர வேறில்லை
இந்தப்படியே இன்றும் இன்னும் அனேகர் நினைத்துக்கொண்டும், நம்பிக்கொண்டும் யந்திரங்களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக்கொண்டு
குடி அரசு - 1936 (2), 84
மிருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருப்பதை நாம் அந்தக்காலத்திலும், இந்தப்படி இப்போது எண்ணிக்கொண்டிருக்கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை தங்கள் தங்கள் காரியத்திற்கு மனித சரீர வேலையை விட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோகித்தே தான் வந்தோம், மற்றும் வந்தார்கள், வருகிறார்கள். உதாரணமாக கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க (கட்டை
வண்டியும் இயந்திரம்தான். இருந்தாலும்) யந்திரத்தின் மூலமாய்த்தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திரத்தின் மூலமாய்த்தான் மோட்டாரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்த்தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவே ஆகாயக் கப்பலில் பிரயாணம் செய்தோம். அதையே இன்றும் எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்கவும் ஆசைப்படுகின்றோம்; மற்றவர்களும் ஆசைப்படு கின்றார்கள். ஆகவே இவற்றையெல்லாம் மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் அநேக ஆயிரக்கணக்கான பேரைப் பட்டினி போடக் காரணமான அக்கிரம காரியமென்றும் யாரும் சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் இவைகளை ஒழிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும். ஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கையோடும் முற்போக்கோடும் அறிவு வளர்ச்சியோடும் பேராடும் ஒரு அறிவீனமான - பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது. உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்குபேர் இழுத்துக்கொண்டும் பின்னே நான்கு பேர் தள்ளிக்கொண்டும் உடல் வெயர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக்கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டைகளை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை மாத்திரம்
பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு,
ஜீவகாருண்யத்திற்கு- மனித சமூகத்திற்கு - முற்போக்கிற்கு- மற்ற ஜீவன்களை விட மனிதனுக்கு பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற “உயர்” குணத்திற்கு - எது ஏற்றது என்று கேட்கின்றோம்.
மற்றும் பாஷைகள் ஆதியில் எழுத்துக்கள் கூட இல்லாமல் சப்த ரூபமாய் இருந்ததும், பிறகு எழுத்துக்கள் ஏற்படுத்தப்பட்டதும், அவை கூரிய ஆணிகளால் ஏடுகளில் எழுத்தப்பட்டதும், பிறகு காகிதம் ஏற்பட்டதும், அதில் நாணலில் எழுதினதும், உருக்குத் தகடுகளில் எழுதினதும், பிறகு பெளண்டன் பேனாவில் எழுதினதும், டைப்பில் அடிப்பதும், அச்சடிப்பதும்,
85 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அந்த அச்சும் மணிக்கு 100 பிரதிகளாக இருந்து இப்போது 10000 பிரதிகள் வீதம் அச்சு அடிக்கும்படியானதும் அதுவும் 12 X 8க்குமாயிருந்த அகல காகிதத்தில் மாத்திரம் அடிக்கும்படியாயிருந்து இப்போது 60340க்குமாக உள்ள பெரிய காகிதத்தில் அச்சடிக்கக் கூடியதானதுமான காரியங்கள் படிப்படியாய் விருத்தி ஆகியிருக்கின்றதை பார்த்துக் கொண்டும், அதன். பலன்களை அனுபவித்து கொண்டும், ஏதாவது ஒருவகையில் ஒவ்வொருவரும் அதைச் செய்து கொண்டும் இருக்கின்றோம். இவையெல்லாம் யந்திர பலன்கள் அல்லவா? என்றும், இவற்றில் எது தள்ளுவதற்குரியது? என்றும், இவை இல்லாதிருந்தால் அவ்வளவு பேருக்கு எவ்வளவு நாளைக்கு வேலையிருக்கும் என்றும் கேட்கின்றோம்
இது தவிர மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். சங்கராச்சாரி மடாதிபதி என்று சொல்லப்படும் ஆட்கள் ரயிலில் ஏறுவது நீசத்தனமென்றும், மாட்டு வண்டி, குதிரை வண்டி ஆகியவைகளில் ஏறுவது ஜீவ இம்சை யென்றும், கருதிக்கொண்டு மரக்கட்டையில் பல்லக்கு செய்து அதற்குத்
தந்தம், வெள்ளி, தங்கம் முதலிய தகடுகள் போட்டு அதன் மீதுதான் ஏறி உட்கார்ந்து கொண்டு தண்டு 1க்கு 4 பேர் வீதம் 4 தண்டுக்கு 16 பேர் ம்கு ம்கு என்று முக்கிக் கொண்டு மணிக்கு 4 மைல் வீதம் தூக்கி ஓடுவதைப் பார்க்கின்றோம். இது யந்திர சம்மந்தமில்லாதது என்று வைத்துக்கொண்டாலும் (கண்டிப்பாய் பார்த்தோமானால் பல்லக்கு என்பதும் ஒரு யந்திரமேயாகும்) இந்த வாழ்வு காட்டுமிராண்டி உலக வாழ்வா? அல்லது நாகரிக உலக வாழ்வா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் தூக்குவதை விட்டு மாடோ, கழுதையோ, குதிரையோ, ஒட்டகமோ, யானையோ சுமப்பதாக வைத்துக் கொண்டாலும், அதுவும் அதற்கு சற்று அடுத்த காட்டு மிராண்டி வாழ்வா அல்லது நாகரீக - ஜீவகாருண்ய - வாழ்வா என்றும் கேட்கின்றோம்.
ஆகவே இவைகளிலிருந்து யந்திரம் மனிதனுக்கு அவசியமென்றும், செளகரியமான தென்றும், ஜீவகாருண்யமுடையதென்றும், முற்போக்குக்கும் நாகரீகத்திற்கும் ஏற்றதென்றும், இயற்கை உணர்ச்சியில் பட்டதென்றும், அறிவு ஆராய்ச்சியின் பயனென்றும் ஒப்புக்கொண்டுதானாகவேண்டும்.
ஆனால்
ஆனால் முன் சொல்லப்பட்ட அதாவது “யந்திரங்கள் பெருகுவதால் தொழிலாளிகளுக்கு வேலையில்லாமல் போய் ஜீவனத்திற்குக் கஷ்டப்பட வேண்டியதாகுமே?" என்பதற்குச் சமாதானம் சொல்லியாகவேண்டும். இதற்கு பதிலாக நாம் அவர்களைக் கேட்பதென்னவென்றால், தொழிலாளிஎன்று ஒருகூட்டம் ஏன்இருக்கவேண்டும்? முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்? இது யாருடைய கட்டளை? என்ன அவசியத்தைப் பொறுத்தது? என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்
குடி அரசு - 1936 (2), 86
பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப்படுபவன், சுகப்படுபவன், வேலை செய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறுகிறவன், ஏமாற்றுகிறவன் என்பன போன்ற பிரிவுகள் மனித சமூகவாழ்க்கையில் இருக்கும்படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவதுஅவசியம்ஆதாரமுமுண்டாஎன்பதுநமது இரண்டாவதுகேள்வியாகும்.
மனிதன் தொழில் செய்வது என்பது மனித வாழ்க்கையின் செளகரியம் அல்லது தேவையின் அவசியம் என்பதிற்காகவா? அல்லது முதலாளி மிராசுதாரன், சோம்பேறி ஆகியவர்கள் வேலை செய்யாமல் சம்பாதிக்கவோ, பணம் சேர்க்கவோ வேண்டிய அவசியத்திற்காகவா என்பது மூன்றாவது கேள்வியாகும்
இம்மூன்று கேள்விகளுக்கும் பதில் அறிந்தோமானால் வேலை
என்பதும், வேலை இல்லாத் திண்டாட்டம் என்பதும் ஒருவனை ஒருவன்: கொடுமைப்படுத்துவதுதான் இந்த முறைகள் என்பதும் விளங்கிவிடும்
இவை ஒருபுறமிருக்க, வேலைகளின் கூலிகளை உயர்த்தி வேலை
நேரத்தை குறைத்து, முதலாளிகளின் லாபத்தையும் குறைத்து, ஒருவரையறை ஏற்படுத்தி, உள்ள நேரத்தையும் கூலியையும் எல்லா வேலைக்காரர் களுக்கும் பங்கு வரும்படியான ஒரு திட்டம் போடுவோமேயானால் அதாவது மோட்டார் பஸ்காரர்கள் யூனியன் வைத்து வருகின்ற பிரயாணிகள் சந்தத்தை உயர்த்தி கிடைத்த வாடகையை எல்லோரும் பங்கிட்டுக்கொள்வது போலச் செய்தால் வேலையில்லாத் திண்டாட்டம் தானாகவே ஒருவாறு ஒழிக்கப்பட்டு விடுமா இல்லையா என்று கேட்கின்றோம்.
நிற்க இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே பிறருக்கு அடிமையாய் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறானே யொழிய சுகப்படுவதற்கில்லை என்றும் ஆதலால் அவன் வேலை செய்வதற்காக ஒரு தொழில் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்றும்தான் ஏற்படுகின்றது. இதுவும் தன் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழு நேரத்தையும் செலவு செய்து பாடுபடவேண்டும் என்பதாகக் காணப்படுகிறது. இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வை விட மிக மோசமான வாழ்வே யாகும். எப்படி எனில் அவற்றிற்காவது உத்திரவாதம் (ஒரு காரண்டி) இருக்கின்றது. அதாவது அதன் எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கிறான். மனித வேலைக்காரனுக்கோ உத்திரவாதமே கிடையாது. இன்னும் பட்சிகள், காட்டுமிருகங்கள் ஆகியவைகளில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் செளகரியமிருக்கின்றது
இப்படியிருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன். 100க்கு 90 பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும், அதுவும் காரண்டி இல்லாத அடிமையாயிருந்து வேலை செய்வது என்பதும்,
87 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயற்கைக்கு மாறுபட்ட ஒருபெரிய அக்கிரமமாகும். ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரதவிக்க ஆரம்பித்தால்தான். “தங்களுக்கு பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள் தனமாய் பாடுபடுவதும் தங்களைப்போன்ற பிறரால் ஏய்க்கப்படுவதும் ஏன்? என்கின்ற காரணத்தை உணர முடியும். உணர்ந்து சமநிலையை அடைய முயற்சிக்கவும் மூடியும்
அதைவிட்டு விட்டு “முதலாளி, தொழிலாளி நிலைமையும், மிராஸ்தாரர், உழவன் நிலைமையும் உலக வாழ்க்கையின் செளகரியத்திற்கு அவசியம்” என்பதாகச் சொல்லி அதுவும் “கடவுள் செயலால் முன்ஜன்மத்தின் கர்ம பயனால், தலை விதியால் ஏற்பட்டது" என்று சொல்லிக்கொண்டு அவற்றை நிலை நிறுத்திக்கொண்டே எவ்வளவு கூலி வாங்கிக்கொடுத்தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மையானவர்களின் கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது. எப்படியெனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ, அதுபோலவே முதலாளி தொழிலாளி முதலிய பாகுபாடு களை வைத்துக்கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுந்தரமும் பயன்படாமலே போய்விடுவதோடு கீழ்நிலை மேல் நிலை என்பதும் மாற்றவே முடியாததாகிவிடும். ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராஸ்தாரன் என்பவைகளும் ஒருவித வருணாச்சிரம தர்மமே தவிர வேறல்ல. ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் - நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.
நமது நாட்டில் பிறவியிலேயே பல படிகள் இருப்பதாலும், அதனாலேயே நாம் சதா கஷ்டப்படுவதாலும் தொழில் வாழ்க்கையில் உள்ள படிகளை நாம் கவனிக்கவே நேரமும் ஞாபகமும் இல்லாதவர்களாய் இருக்கின்றோம். மனிதன் உண்மையான சமத்துவமடைய வேண்டுமானால் பிறவிப்படிகளையும் தொழில்படிகளையும் கடந்தவனாகத்தான் இருக்க வேண்டும். அவ்விரண்டு படிகளையும் ஒழித்த - அவ்விரண்டு படிகளும்
ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலை என்று சொல்லப்படுவதாகும்
நிற்க, இவற்றிற்கெல்லாம் முக்கியமாக இன்னொரு விஷயம் உண்டு. அதைச் சரியாக உணர்ந்து கவனித்தோமானால் மேல் கண்ட கஷ்டங் களைப்பற்றிய கவலைகள் கூட நாம் அதிகம்படவேண்டிய அவசியமிராது. அதென்னவெனில், யோசனையில்லாமல் கண்ட கண்டபடி ஜனத்தொகையை விர்த்தி செய்வதாகும். பிள்ளைகளைப் பெறுவதாகும். 2 ஏக்கர் பூமியுள்ளவன் 100 மாடுகளை வாங்கி வளர்ப்பானேயானால் எப்படி அவனால் அந்த மாடுகள் போதிய தீனி கிடைத்து ரக்ஷிக்கப்பட முடியாதோ அதுபோலவே மனித சமூகமும் தேவைக்கும் தன்னால் தாங்குவதற்கும், அதாவது காப்பாற்றக் கூடியதற்கும் அதிகமாகவும், தேசத்தின் கால நிலைமைக்கு மேலாகவும் பிள்ளைகளைப் பெற்று கஷ்டப்பட்டு தனது ஆகாரத்தில்
குடி அரசு - 1936 (2), 88
பங்கு கொடுத்து கடைசியில் இருவருக்கும் போதுமான ஆகாரமில்லாமலும், போதுமான ஆதரிப்பு இல்லாமலும் கஷ்டப் பட்டுக்கொண்டு இருப்பதை ஒழிக்காமல் வீணாய் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் என்ன பயன் என்பது முக்கியமாய் கவனிக்கத் தக்கதாகும்
இந்திய நாட்டு நிலைமை நமக்குத் தெரிய சுமார் 40, 50 வருஷ காலமாகவே மக்களுக்கு “வேலையில்லாமல்'' வெளிநாடுகளுக்குக் கூலியாகச் செல்வதே வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இது மாத்திரமல்லாமல் அடிக்கடி பஞ்சமும் கொள்ளை நோயும் வந்திருக்கின்றன. இது இந்த நாட்டு சுயமரியாதைக்கே மிகவும் கேடானதாகும். அளவுக்கும் சக்திக்கும் மீறி பிள்ளைகளைப் பெறுவதால் யாருக்கு என்ன லாபம்? என்று யோசிக்க வேண்டும்.
“உலகம் விருத்தியாக வேண்டாமா” என்கின்ற சொல் சுத்த முட்டாள். தனமானதும் சிறிதும் பொருளற்றதுமான சொல்லே ஒழிய அது ஒரு கவனிக்கத்தகுந்த சொல் அல்ல வென்பதே நமது அபிப்பிராயம் சம்போக விஷயங்களில் கவலையற்றும் முறட்டுத்தனமாயும் அளவுக்கு மீறியும் நடந்து கொள்வதால் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளைப் போலவேதான், குழந்தைகள் ஏற்படுவதும் என்பதே தவிர அதற்கும் இதற்கும்
சிறிதும் வித்தியாசமேயில்லை. சம்போக உணர்ச்சி இந்த உலகத்தில் உள்ள
ஜீவ ஐந்துக்களில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவனுக்கும் குழந்தை பெறுவதற்காக என்கின்ற எண்ணத்தின் மீது தோன்றுவதே கிடையாது மனிதன் பகுத்தறிவுக்காரன் என்கின்ற ஆணவத்தால் அவனுக்கு ஏற்படும் அனேக முட்டாள் தனமான செய்கைகளைப்போல் குழந்தைபெற வேண்டும்
என்கின்ற முட்டாள்தனமும் ஏற்பட்டு அது ஒரு ஆசையாகி பிறகு அது ஒரு சொத்தாகி பிறகு “மோக்ஷத்திற்கு' உதவும் காரியமாகவுமாகி கடசியாய் வீண் கஷ்டமும் தொந்திரவும் பட்டு மற்றவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதைத் தவிர வேறு ஒரு பயனும் இல்லாததாய் முடிந்து விடுகிறது.
மேலும் பிள்ளை பெறுவதினாலேயே மொத்த ஜன சங்கியையில் பகுதியான பெண்கள் சமூகம் அடிமையாகி அனேக ஆபத்துக்களுக்கும் வியாதிக்கும் உள்ளாகி அற்ப ஆயுளுடன் கஷ்டமும் படவேண்டியதாகி அவர்களது வாழ்வே மிக்க பரிதபிக்கத்தக்க வாழ்வாக முடிகின்றது. பெண் அடிமைக்கு காரணமே அவர்கள் பிள்ளை பெறுவதும், அதிலும் அதிகமான பிள்ளைகளைப் பெறுவதும், அதனால் உடல் நலிந்து பலவீனமுடையவர்கள் ஆவதும், பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தங்களுக்கே என்று கருதுவதால் சுதந்தரமும் வீரமும் இன்றி அடிமையாவதுமான காரியங்களுக்கு ஆளாக வேண்டியவர்களுமாகிறார்கள். பெண்கள் விஷயம் இப்படி இருப்பதோடு பொதுவில் வேலையில்லா கஷ்டத்தை
நீக்கவும், மக்கள் கவலையும் தொல்லையும் கஷ்டமும் இல்லாமல் இருக்கவும் பிள்ளைப் பேற்றைக் குறைப்பது என்பது ஒரு தக்க வழியாகும்.
89 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஒரு சமயம் இவையெல்லாம் யாருக்காவது பிடித்த மற்றதாகுமே யானால் வேறு இன்னம் ஒரே ஒரு வழிதான் உண்டு என்று சொல்லுவோம் அதென்ன வெனில் எவணொருவன் தன் தேவைக்கு மேல் சொத்தும் ஸ்திதியும் வைத்திருக்கின்றுனோ அவனைக் குற்றவாளியாக்கி திருடனுக்கு உண்டான தண்டனையைக் கொடுப்பது என்கின்ற ஆட்சியை ஏற்படுத்துவதுதான்.
இந்த ஆட்சி ஏற்பட்டு விட்டால் பிறகு யாருக்கு வேலை இருந்தாலும் யாருக்கு வேலை இல்லாவிட்டாலும் ஜீவனம் சரியாகும். இதற்காக அதிக கவலையும் பட வேண்டியதில்லை. இந்தப்படிக்கெல்லாம் இல்லாமல் நாட்டுச் செல்வத்தையெல்லாம் ஒருவன் தன்னிடமே வந்து சேரும்படியான முறையை மனித வாழ்க்கைக் கொள்கைகளாக வைத்துக் கொண்டு பல பேர்கள் பட்டினி இருந்து கொண்டு இருப்பதும் ஏன் பட்டினியாய் இருக்கிறார்கள் என்று கேட்டால் வேலைகள் கிடைக்காததால் பட்டினியாய் இருக்கின்றார்கள். ஆதலால் யந்திரங்களையெல்லாம் ஒழித்து விட்டு கடப்பாறையும் சம்மட்டியும் வாங்கிக் கொடுத்து வேலை வாங்கவேண்டுமென்றும் சொல்வதானால் இது எவ்வளவு அக்கிரமமானதும் அயோக்கியத்தனமானதும், திருட்டுத்தனமானது மான காரியம் என்பது யோசித்தால் விளங்காமல் போகாது. ஆகையால் நாட்டுக்கும் முற்போக்குக்கும் மனித சமூக நாகரிக வளர்ச்சிக்கும் யந்திரங்கள் மிகவும் முக்கியமானது என்று சொல்வதோடு அவற்றின் மூலம் மக்கள் சரீரப்பிரயாசையில் இருந்து விடுதலையாக நினைப்பதுவும் இயற்கையும் அவசியமும் ஆனதென்றும் சொல்லுவதோடு எஜமான், வேலைக்காரன், முதலாளி, தொழிலாளி, ஜமீன்தாரன், குடியானவன் என்பவைகளான படிகள் நிலைத்திருக்க வேண்டுமானால் மாத்திரம்தான் ஒரு நாட்டுக்கு யந்திரம் எதிரியே ஒழிய மற்றபடி சமதர்மம் விரும்பும் நாட்டுக்கு யந்திரமே சரியான அவிழ்தமாகும் என்றும் தைரியமாய்ச் சொல்லுவோம்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - சூலை 1936
குடி அரசு - 1936 (2), 90
கிராம வாழ்க்கையும் - ஆசிமியர் கடமையும்
கிராம சீர்திருத்தம் என்பது ஏமாற்று வார்த்தை
தோழர்களே! இன்று கொடுக்கப்பட்டிருக்கும் விஷயம் மிகவும் முக்கியமான விஷயம். இதைப்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் தங்களபிப் பிராயங்களைச் சொன்னார்கள். நான் தலைவர் என்கின்ற முறையில் முடிவுரையாக என் அபிப்பிராயத்தை கூறுகிறேன்.
நான் ஒரு எதிர் நீச்சக்காரன். என்ன காரணத்தாலோ நம் நாட்டு மக்களின் பெரும்பான்மையான அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டவனாக இருந்து வருகிறேன். பழமையைப் பாராட்டுவது நமது மக்களுக்கு ஒரு பெருமையாய்க் காணப்படுகிறது. நானோ பழமைப்பித்தை வெறுக்கிறவனாக.
இருக்கிறேன். அதனாலேயே நான் வெகு பேர்களால் வெறுக்கப்படுகிறேன். ஆனாலும் அறிவாளிகள் சீக்கிரம் என் பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது
கிராமமும் ஆசிரியரும் என்கின்ற பொருள் இன்றைய கூட்ட விஷயமாகும். அதைப்பற்றி மூவர் பேசினார்கள். அது சம்பந்தமாய் என்: அபிப்பிராயத்தை தலைவர் முடிவுரை என்கின்ற முறையில் நான்
பேசுகிறேன். ஆசிரியர்களை முதலில் எடுத்துக்கொள்ளுவோம்
இன்றைய ஆசிரியர்களைப் பற்றி எனக்கு அதிக மதிப்புக் கிடையாது. அவர்கள் அறிவுக்கு முட்டுக்கட்டை ஆனவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். இந்த நாட்டில் யாருக்காவது கல்வி அவசியம் என்றால் அது ஆசிரியர்களுக்கே ஆகும். பயன் இல்லாததும் பொறுப்பில்லாததுமான பதவி ஒன்று இருக்கின்றது என்றால் அது ஆசிரியர் பதவியே ஆகும். எனது தோழர்களிலும் சிலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அறிவு உண்டு என்று நான் நினைத்திருக்கிறேன். ஆனால் அந்த அறிவை அவர்கள் ஆசிரியத் தன்மையில் பயன்படுத்த முடிவதில்லை. ஏனெனில் அவர்கள்
படிப்புக்குப் பொறுப்பாளிகளும் அல்ல; பிள்ளைகளின் அறிவுக்குப் பொறுப்பாளிகளும் அல்ல. அவர்கள் கவலையும் பொறுப்பும் தங்கள் எஜமானர்களை திருப்தி செய்து வாழ்க்கை நடத்த வேண்டியது என்கின்ற
91 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஒன்றேயாகும். “பாப்பாத்தியம்மா மாடு வந்ததா பிடித்து கட்டிக்கொள்” என்பதோடு மேய்ப்பவன் பொறுப்பு தீர்ந்துவிடுகிறது. அதுபோல்தான் இன்றைய உபாத்தியாயர்கள் பொறுப்பு. அவர்கள் மீது எனக்குள்ள வெறுப்பினால் நான் இப்படிச் சொல்லவில்லை. அவர்களை அந்த அளவுக்கே நிர்பந்தப்படுத்தி வைத்திருக்கும் ஆசிரியர் தன்மையையே நான். சொல்லுகிறேன். பரீக்ஷையில் பிள்ளைகள் தேரும் கணக்கைப் பாருங்கள். பிறகு அந்தப்படிப்பு எதற்கு பயன்படுகிறது என்கின்ற அனுபவத்தைப் பாருங்கள். அதற்கு ஏதாவது கேள்விமுறை இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிப்பட்ட பலனுக்கு காரணஸ்தர்களாய் இருக்கிற ஆசிரியர்களை எந்த அளவுக்கு நாம் மதிக்கக்கூடும். இங்கிலீஷ் ஆட்சி ஏற்பட்டு 200 வருஷமாகின்றது. இதுவரை 100க்கு 8 பேரே படிக்க முடிந்திருக்கிறது. அதிலும் பட்டணங்களை தள்ளிவிட்டு கிராமங்களை எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் படித்திருக்க முடியும். அதிலும் மேல்ஜாதிக்காரர்கள் பிரபுக்கள் என்கின்ற கூட்டத்தார்களை தள்ளிவிட்டால். கிராம பாமர மக்களில் 100க்கு 2 பேராவது படித்து இருக்க முடியுமா? படிப்பின் செலவு எவ்வளவு என்று பாருங்கள். இந்நாட்டில் ஒரு மனிதனுடைய சராசரி வரும்படிக்கு மேல் ஒரு மாணாக்கனுடைய படிப்புக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது கல்வி நிலையைவிட ஆசிரியத் தன்மை நிலை மோசமாக இருக்கிறது.
கல்விக்கு எப்படி உத்தேசமே இல்லாமல் படிப்பதும், படிப்பிப்பதும் பிறகு படித்த கல்வியும் மனிதனுக்கு பெரும்பான்மையோருக்கு சஞ்சலத்துக்கும் துக்கத்துக்கும் பயன்படுகின்றதோ, அதுபோல் தான் ஆசிரியர் நிலையும் உத்தேசமே இல்லாமல் ஏற்பட்டு வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவே ஒரு வியாபாரம் போலவும் ஒரு ஜவனோபாய தொழில் முறை போலவுமே பயன்படுத்தப்பட்டு வருவதாகும். வியாபாரமும், தொழில் முறையும் என்றால் நாணயத்தை பிரதானமாக எண்ணாமல் லாபத்தையே பிரதானமாய் எண்ணும் காரியங்களாகும். ஆகவே இவர்கள் எப்படி மக்களுக்கு அல்லது அறிவுக்கு பொறுப்பாளியாவார்கள்? இவர்களிடம் எப்படி குழந்தைகளை ஒப்புவித்து பிற்கால வாழ்வின் கதியை நிர்ணயிக்க முடியும்?
எதற்கு ஆககல்வி-படிப்பு என்கின்றோமோ, அதற்கு ஏற்ற ஆசிரியர்கள் மிகமிக அருமையாய் இருக்கிறது. ஆசிரியர்கள் என்கின்ற மனிதர்களைப் பற்றி நான் குறைகூறவில்லை. ஆசிரியத்தன்மை என்பதற்கு உள்ள யோக்கியதையைப் பற்றியே நான் சொல்லுகிறேன்.
நான் ஆசிரியரானாலும் சரி, மற்றும் வேறு ஆசிரியர்கள் ஆனாலும்
சரி இவ்வளவுதான் முடியும். ஏனென்றால் ஆசிரியர்கள் தயார் செய்யும் நிலை அப்படிப்பட்டது. ஆசிரியர் தனக்கு ஏற்பட்ட உத்திரவுப்படிதான் கல்வி கற்பிக்க வேண்டியவர்களே ஒழிய, தங்களுக்குள்ள அறிவுப்படியோ
குடி அரசு - 1936 (2), 92
சக்திப்படியோ கற்பிக்கக் கூடாதவர்களாயிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிர்பந்தத்தில் பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆசிரியர் பரீக்ஷையென்பதே நிர்பந்தங்கள் பரிக்ஷையென்று சொல்லவேண்டுமே ஒழிய அறிவை உண்டாக்கும் கல்வியை போதிப்பதற்கு தகுதியாக்கும் பரீக்ஷ என்று சொல்லுவதற்கு இல்லை.
இந்த லக்ஷணத்தில் ஒரு ஆசிரியர் பழமைப் பித்தனாகவோ, ஜாதி மத வெறியனாகவோ இருந்துவிட்டால், பிள்ளைகளின் கதி அதோகதிதான். குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்ட மாதிரி புத்தி படிக்கப்போய் முட்டாள் தனத்தை ஏற்றுமதி செய்துகொண்டு வந்தது போலவே முடியும்
ஆதலால் ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாகயிருக்க வேண்டு மானால் அவர்கள் ஒரு அளவுக்காவது சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும் பகுத்தறிவுக்கு சிறிதாவது மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் படிக்கும் பிள்ளைகளே பரீக்ஷ பாஸ் செய்யாவிட்டாலும் அறிவுடையவர்களாகவாவது ஆகலாம்
ஆதலால் நான் முதல் ஆசிரியர்களையே கேட்டுக் கொள்ளுகிறேன். சுதந்தர புத்தியுடையவர்களாக இருங்கள். பகுத்தறிவை நேசியுங்கள். அதை கனம் பண்ணுங்கள். இரட்டை மனப்பான்மையை ஒழியுங்கள். அதாவது உங்கள் சொந்த அபிப்பிராயம் ஒன்று, உங்கள் மதத்துக்கு ஆகவோ, ஜாதிக்காகவோ பின்பற்றி நடப்பது வேறொன்று, பிள்ளைகளுக்கு போதிப்பது மற்றொன்று என்கின்ற மாதிரியான இரட்டை மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்.
இப்படிச் செய்வதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். ஒரு அளவுக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்கவும் தயாராய் இருக்க வேண்டும்
கிராம சீர்திருத்தம்
இனி கிராமம் என்பது பற்றி சில பேசுகிறேன்.
கிராமம் என்பது மிக பரிதாபகரமான காகஷியாகும். கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் செளகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும் கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான். பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன். பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் வேறு என்ன நன்மை
93 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கிராமக்காரனுக்கு இருக்கிறது? கால்நடைவளர்ப்பைப்பற்றி கிராமவாசிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று ஒருவர் சொன்னார், கால்நடைகள் வளர்க்கப்பட்டால் கிராமத்துக்குஎன்னலாபம்? பட்டணத்தில் இருப்பவன்தான்
பால், தயிர், மோர், நெய் நன்றாக சாப்பிடுவான். கிராமத்தான் சாதத் தண்ணீர்
விட்டுத்தான் சாப்பிடுவான். அதுதான் உடலுக்கு பலம் தருமென்று அவன். கற்பிக்கப்பட்டிருக்கிறான். ஒரு கிராமத்தான் குழந்தை தனக்கு கொஞ்சம் நெய்விடும்படி கேட்டால் அவன் தாய்க்கு உடனே கோபம் வந்துவிடும். “உனக்கு நெய்யை ஊற்றிவிட்டால் நாளைக்கு நெய்க்கார மாப்பிள்ளைக்கு என்ன ஊற்றுவது" என்று கேட்பாள். (நெய்க்கார மாப்பிள்ளை என்றால் கிராமங்களில் சுற்றி நெய் வாங்கிக்கொண்டு போய் பட்டணங்களில் விற்கும் நெய் வியாபாரி) இவ்வளவு சிக்கனமாக கிராமத்தார்கள். பிழைத்தும் பயன் என்ன? மீத்து வைத்த பணங்களை வக்கீல்களும், போலீஸ்களும், ரிவினியு கிரிமினல் அதிகாரிகளும் கொள்ளை அடித்துக் கொண்டு போதாக்குறைக்கு அவர்களிடம் பாண்டு எழுதிக் கொள்ளுகிறார்கள்.
கிராமவாசிகளின் செளகரியத்தைப் பாருங்கள். அவர்களுக்கு நல்ல தண்ணீர் கிடையாது, வெளிச்சம் கிடையாது, சுகாதாரம் கிடையாது, நாடகம் கிடையாது, சினிமா கிடையாது, பார்க்கு, சிங்காரத் தோட்டம் கிடையாது. அதிகாலையில் இருட்டில் போகவேண்டும், அந்தியில் இருட்டின பிறகு வீட்டுக்கு வரவேண்டும். அவனால் அரசன், வியாபாரி, லேவாதேவிக்காரன், மற்ற உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் பிழைக்கிறார்கள். அப்படிப்பட்டவனுக்கு பட்டணத்தில் வசிக்கும் ஒரு கக்கூசுக்காரன், தெருக் கூட்டி, மேஸ்திரி ஆகியவர்களுக்கு இருக்கும் செளகரியமும் இல்லை. ஜாதிமுறையில் பறையன் என்றொரு ஜாதி வருணாச்சிரம முறையில் வகுத்திருப்பது போலவே கிராமம் கிராமத்தான் என்கின்ற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ்ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருக்கின்றன.
கிராமம் என்பதாக ஒன்று ஏன் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. பட்டணத்தான் செளகரியத்துக்கு என்பதல்லாமல் மற்றபடி கிராமம் எதற்கு என்பது எனக்கு விளங்கவில்லை. இப்படிப்பட்ட கிராமங்களை எல்லாம் அழித்துவிடவேண்டும், எல்லோரையும் பட்டணங்களுக்கு போகும்படி செய்யவேண்டும். அதுதான் கிராம சீர்திருத்தம் என்பேன். “கிராமங்களுக்குப் போ” என்பது இப்போது ஜன தலைவர்கள் என்பவர்கள் உபதேசமாக இருக்கிறது. இதில் ஏதாவது நாணயம் இருக்க முடியுமா? ஐயும், MA Wb கிராமத்துக்குப் போய் மக்களுக்கு என்ன செய்யமுடியும்? கூடவே காப்பி, கோக்கோ, சிகரட்டு, பீடி, கிராமபோன், ரேடியோ கொண்டுபோனால் ஒழிய அங்கு அரை நிமிஷம் 2.ஃ.,10.&.க்காரன் தங்க முடியுமா? இல்லா விட்டால் தலைவலி, உடல் வலி, தூக்கம் பிடியாமை, மூளை வேலை ஓடாமை என்கின்ற வியாதி வந்துவிடாதா? B.A., MA.
குடி அரசு - 1936 (2), 94
படிப்புக்கும் கிராம முன்னேற்ற வேலைக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா. இவர்கள் கிராமத்துக்குப் போவதால் கிராமக்காரனுக்கு அதிக தொல்லையே அல்லாமல் இவனால் நல்லது என்ன ஆகக்கூடும்?
விவசாய விஷயத்தில் இ.., ரீ.&.க்கு என்ன தெரியும்? கால்நடை விஷயத்தில் என்ன தெரியும்? சுகாதார விஷயத்தில் என்ன தெரியும்? இவன் சொன்னால் கிராமத்தான் கேட்க வேண்டாமா? அவன் புத்தி பழமையில் ஒட்டிக்கொண்டிருக்கும் போது 8.4, MA. யாருக்குச் சொல்லுவான்? சொன்னபடி கிராமத்தான் கேட்பதாயிருந்தாலும், அந்தப்படி செய்ய இருவருக்கும் பணம் முதலிய சாதன செளகரியங்கள் எங்கே என்று பாருங்கள். கிராமங்களுக்கு போ என்பது ஒரு பித்தலாட்டமான சொல், அல்லது அர்த்தமற்ற சொல். கிராமத்தானுக்கு இருக்கும் பழமைப்பித்தும், மூடநம்பிக்கையும் ஒழிய வேண்டும்
இன்றைய BA, MAWb மூடநம்பிக்கைக்காரனாகவே இருக்கிறான். பழமை பித்தனாகவே இருக்கிறான். பழமைப் பித்துதான் இன்று தேசியமாய் இருக்கிறது. அதை போதிப்பதிலேயே எல்லோரும் ஜனத்தலைவர்களாகி விடுகிறார்கள். இன்று கிராமப்புனருத்தாரண வேலையில் முதல் திட்டம் எல்லோரும் பனங்கருப்பட்டியும் கைக்குத்து அரிசியும் சாப்பிடவேண்டும் என்பதாகும். இதற்கு யார் ஒப்புவார்கள்? இத்தனை பேருக்கும் கைக்குத்து அரிசிக்கு எத்தனை பேர் குத்தவேண்டும்? ஆண் பிள்ளைகள் நெல் குத்துவார்களா? பெண்கள்தான் இனி நெல் குத்துவார்களா? பட்டணங் களிலுள்ள பெண்கள் முறத்தகலம் பட்டுக்கரை சீலையும், வைர நகைகளையும் பூட்டிக்கொண்டு ஆர்மோனியம், வீணை, சதுர்ப்பாட்டு, கதை காலக்ஷேபம் பழகிக்கொண்டு உல்லாசமாய் கேளிக்கையில் இருக்கும்போது கிராமத்து பெண்களை நெல்லுக்குத்தவும், கருப்பட்டி காய்ச்சவும் சொன்னால் அவர்கள் எப்படிக் கேட்பார்கள்? சில மூடங்கள் கேட்பதாகவே வைத்துக்கொண்டாலும் நாம் சொல்வது தான் யோக்கியமாகுமா?
கிராமத்தில் பிறந்ததற்கு ஆக நெல் குத்த வேண்டியதா என்று கேட்கின்றேன்.
ஒரு தோழர் கிராமக் கைத்தொழிலைப் பற்றி பேசினார். கிராமக் கைத் தொழில் என்று ஒன்று ஏன் இருக்க வேண்டும்? பட்டணத்துக்காரனுக்கு எந்திரத் தொழிலும், கிராமத்தானுக்கு கைத்தொழிலும் என்று யார் சிருஷ்டித்தார்கள்? ஏன் அப்படி சிருஷ்டிக்கவேண்டும்? ராட்டினம் சுற்றுவதும், தொடையில் கயிறுதிரிப்பதும், மண்வெட்டியிலும், கோடாலியிலும், சத்தியிலும், மண்வெட்டி, மரம் பிளந்து கல் உடைப்பதும்தான் கிராமத்தானுக்கு சொந்தமா இது தான் கிராம முன்னேற்றமா என்று கேட்கின்றேன். எவ்வித முன்னேற்ற முயற்சியும் இல்லாமல் பட்டணத்தான் எவ்வளவு கொள்ளை
95 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அடிக்கிறான். வியாபாரி, லேவாதேவிக்காரன், வக்கீல், வைத்தியன், அதிகாரி, உத்தியோகஸ்தன் ஆகியவர்களின் கொள்ளையை பாருங்கள். இதை ஒழிப்பதல்லவா கிராம முன்னேற்றமாகும். இந்தக் கூட்டத்தாரல்லவா கிராமங்களை கசக்கிப் பிழிகின்றவர்கள். இதைவிட்டுவிட்டு இந்த சாதாரண வாத்தியார்கள் அதிலும் கஞ்சிக்குப் போதாத ஏழை வாத்தியார்கள் மாதம்
15 ரூபாய்க்கு தாளம் போடும் இந்த வாத்தியார்கள் கிராமத்திற்குப் போய் என்ன செய்ய முடியும் என்று கேட்கின்றேன்.
ஏதாவது நீங்கள் கிராமத்துக்குப்போய் செய்ய வேண்டுமானால் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழியுங்கள் - மூடநம்பிக்கையை அகற்றுங்கள். அவர்களை பட்டணவாசிகள் எப்படி எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி கண்விழிக்கச் செய்யுங்கள். தலைவிதியை மறக்கடித்து பகுத்தறிவை உண்டாக்குங்கள், அவர்களையெல்லாம் பட்டணங்களுக்கு குடிபோக விரட்டுங்கள். இவ்வளவு நீங்கள் செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன
செய்தாலும் அது பயன்படாது. உங்களுக்கும் அதற்கு மேல் சக்தி இருக்காது. செளகரியமும் சாதனமும் கிடையாது உதாரணமாக இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு கிராமத்துக்குப் போயிருந்தேன். அங்கு மீட்டிங்குக்கு 400 பேர்கள் வந்திருந்தார்கள். அவர். களின் 375 பேர்களுக்கு நரம்புச் சிலந்தி நோய் இருந்தது. அந்த ஊர்க்கிணறு, கிணற்று தண்ணீர் மேலே வருவதைவிட மேலேயிருக்கும் தண்ணீர் கிணற்றுக்குள் சுலபத்தில் போகத் தகுந்த மாதிரியான மேயோ கிணறாகும். அதன் தண்ணீரை பரிசுத்தம் செய்ய யாருக்கும் புத்தி கிடையாது. உபாத்தியாயர் ஒருவர் இருந்தார். அவரும் காலில் கட்டுப்போட்டுக் கொண்டுதான் இருந்தார். நான் கேட்டதற்கு அவர் கவனிக்கிறதற்கு ஒருவருமில்லை நான் என்ன செய்ய முடியுமென்று பதில் சொன்னார். இவைகள் எல்லாம் அரசாங்கத்தை பொறுத்த வேலையே ஒழிய பொது ஜன சேவையால் ஆகக்கூடிய காரியமோ, ஒரு திண்ணைப் பள்ளிக்கூட வாத்தியாரால் ஆகக்கூடிய காரியமோ அல்ல. அரசாங்கத்தின் கையில் இருந்த பொறுப்பை ஜனத் தலைவர்கள் என்பவர்கள் பிடுங்கிக்கொண்டு தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள்.
இவைகள் மாற்றமடைய வேண்டுமானால் பகுத்தறிவை மக்களுக்கு போதியுங்கள் என்பதுதான் எனது ஆசை. பகுத்தறிவு விஷயத்திலும் நீங்கள். அடிமைப்பட்டிருக்கிறீர்கள். அது விஷயத்தில் உங்கள் அறிவுப்படி நீங்கள் போதிக்க முடியாது. உங்கள் அறிவுப்படி நீங்கள் நடக்கவும் முடியாது என்கின்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு உபாத்தியாருக்கு மூன்று
புத்தி இருக்கின்றன.
குடி அரசு - 1936 (2), 96
அதாவது அவருக்கு சரியென்று தோன்றும் ஆராய்ச்சி புத்தி ஒன்று பிள்ளைகளுக்கு இன்னபடிதான் கற்பிக்கவேண்டும் என்று படிப்பித்த
நிர்பந்த புத்தி இரண்டு. தனக்கு தோன்றுகிறபடியும் தான் படிப்பிக்கிறபடியும் நடக்க முடியாத பழமைப்பித்தும் கட்டுப்பாட்டு நிபந்தனையும் கொண்ட கோழைப் புத்தி மூன்று. இந்த மூன்று புத்திகளுடன் நீங்கள் கிராமங்களை புனருத்தாரணமோ சீர்திருத்தமோ செய்வதென்றால் அது பயப்படக்கூடிய காரியம் தான். ஆனாலும் பகுத்தறிவை பயன்படுத்த தைரியம் கொண்டு விட்டால் இந்த கஷ்டங்கள் சுலபத்தில் ஒழிந்துபோகும் என்றே நினைக்கிறேன்.
குறிப்பு 23.07.1936 இல் லண்டன் மிஷன்காம்பெளண்ட் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற ஈரோடு லண்டன் மிஷன் போதனா முறை பாடசாலை லிட்டரரி சொசைட்டியின் கூட்டத்தில் ஆற்றிய தலைமை உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1936
97 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சபாஷ் ஷண்முகம்!
தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்களை தெரியாத மக்கள் தமிழ் நாட்டில் அருமையாகவே இருப்பார்கள். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால்
சர். ஷண்முகம் அவர்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் எல்லோரிலும் முதன்மை பெற்று அதாவது அறிவு, ஆற்றல், செல்வம், பதவி, அதிகாரம், பட்டம், புகழ் யாவற்றிலுமே முதன்மை பெற்று விளங்குகிறார்.
இவரது வாலிப பருவத்திலிருந்தே இந்நிலைக்கு இவர் வருவாரென்று பொதுஜனங்கள் கருதி எதிர்பார்த்து வந்தார்கள். இவரது அறிவும் ஆற்றலும், மேன்மையும் பிரகாசிக்கப் படாமலும், வெற்றிபெறாமலும் இருக்க வேண்டு மென்று பலர் சிறப்பாக பார்ப்பனர் எல்லோரும், பார்ப்பனர்களைப் பற்றியே “மோட்சம்” புக இருந்த பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகளும் இவ்விரு கூட்டத்தினரது கூலிகளும் தங்களாலான சகலவித பிரயத்தனமும் செய்து பார்த்தார்கள். சர். ஷண்முகம் அவர்கள் இவர்கள் இத்தனை பேர்களது முட்டுக்கட்டைகளையும் தூசியத்திரமாக மதித்து வந்ததால், அடிக்கும் பந்து அடியின் பலத்துக்கு தகுந்தபடி உயர எழும்புவதுபோல் முட்டுக்கட்டை அதிகரிக்க அதிகரிக்க அவருக்கு செல்வமும் புகழும், பதவியும் பெருகிக் கொண்டே வந்திருக்கிறது
இன்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் வயிற்றில் அணைக்க முடியாத பொறாமை நெருப்பு ஒன்று சிந்த வண்ணமாய் இருந்து வருகிறது. அது தோழர் ஷண்முகத்தின் புகழும் பதவியும் பற்றிய பொறாமைத் தீயேயாகும் பாஷாணத்தில் புழுத்த புழு எப்படி அந்தப் பாஷாணத்தையேதான் தின்றே வளர்ந்து பெருகுமோ அதுபோல் பார்ப்பனர்களின் விஷத்தை ஆகாரமாகக் கொண்டே தோழர் ஷண்முகம் மேன்மேலும் மேன்மை பெற்று வந்திருக்கிறார்.
சமீபத்தில் தோழர் மகாகனம் சீனிவாச சாஸ்திரி என்பவர் ஒரு எழவு வீட்டில் துக்கப்பேச்சு பேசும்போது “பாழும் பார்ப்பனரல்லாத இயக்கம் இல்லாதிருந்திருந்தால் காலஞ்சென்ற ராமச்சந்திரராவ் பெரியதொரு பதவிக்கு வந்து மக்களுக்கு பேருபகாரம் செய்திருப்பார்" என்று கூறினார். அதை நமது சர். ஷண்முகம் விஷயத்தில் நன்றாய் திருப்பிச் சொல்லலாம் அதாவது நமது பாழும் பார்ப்பனிய விஷமம் க்ஷயக்கிருமி போல் தமிழ்நாட்டில் தோன்றி தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரவில்லை
குடி அரசு - 1936 (2), 98
யானால்சர். ஷண்முகத்தின் அறிவினாலும், ஆற்றலினாலும் ஏற்படும் பயனை
நம் தென்னிந்திய மக்கள் நன்றாய் இன்னும் எவ்வளவோ அனுபவித்து எவ்வளவோ மேன்மை பெற்று இருக்கலாம் என்று சொல்லலாம்.
ஆனால் அப்படி நாம்தான் அனுபவிக்கமுடியாமல் போய்விட்டதே தவிர ராமச்சந்திரராவ் ஏமாற்றமடைந்தது போல் சர். ஷண்முகம் சிறிதும் ஏமாற்றமடையவில்லை. நாம் அனுபவித்திருந்தால் எவ்வளவு அனுபவித் திருப்போமோ அதுபோலவே மற்ற நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
தோழர் ஷண்முகம் இந்திய சட்டசபைக்கு போகக்கூடாது என்று பார்ப்பனர்கள் எல்லோருமே சேர்ந்து முட்டுக்கட்டை போட்டார்கள். ஒரு அளவில் பார்ப்பனர் அது சமயம் மனம் குளிர திருப்தியடையும்படி முட்டுக்கட்டை வெற்றிபெற்றது. ஆனால் அந்த முட்டுக்கட்டை என்றும் அணையாத நெருப்பை பார்ப்பனர்கள் வயிற்றில் கொஞ்ச நாளையிலேயே பற்ற வைத்துவிட்டது. அதாவது பார்ப்பனத் தொல்லையில் சூழ்ச்சியில் அவர் இந்திய சட்டசபைக்குத் தலைவராய் சிறிதுகாலம் இருப்பதுதான் கெட்டதே தவிர மக்களுக்கு அதைவிட அதிக நன்மை செய்யக்கூடியதான கொச்சி சட்டசபைத் தலைவர் பதவியோடு ஒரு சமஸ்தான ஆட்சித் தலைமையும் பெற்று மக்களுக்கும் மற்றவர்களால் சுலபத்தில் செய்ய முடியாத நன்மைகளும் வசதிகளும் ஏற்பட்டன.
சர். ஷண்முகம் கொச்சிக்கு போயிருக்க சந்தர்ப்ப மேற்பட்டிருக்க வில்லையானால் அவரது ராஜதந்திர பெருமையும் (துறைமுக விஷயத்தில் கொச்சிக்கு செய்த பேருபகாரம்) கொச்சி சமஸ்தானத்தின் பிரஜைகளில் ஒரு கூட்டத்தாரின் இழிவை நீக்கிய (வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஏற்படுத்திய) பெருமையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது.
ஆதலால் எப்பொழுதுமே நம் பார்ப்பனர்களின் முட்டுக்கட்டையும் தொல்லையும் பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையே பயந்து வருகின்றதோடு அவர்களால் சுலபத்தில் இனி நமக்கு கெடுதி செய்ய முடியாமலே இருக்கும்படிஆகிவிடுகிறது என்பதற்கு ஆகவே இதைஎடுத்துக்காட்டினோம். இதுபோலவே தோழர் ஏ. ராமசாமி முதலியார் அவர்களுக்கும் மற்றும் சிலருக்கு பார்ப்பனர்கள் ஒவ்வொரு படியிலும் தங்களாலான முட்டுக்கட்டை போட்டே வந்தார்கள். அதுவும் அப்படியே முதலியாரையும் மற்றவர்களையும் மேன்மைப்படுத்தியே வந்திருக்கின்றது. பார்ப்பனர்கள் முட்டுக்கட்டை காரணமாகவே முதலியார் பெருமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள். ஏற்பட்டுக்கொண்டே வருகின்றன.
மற்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்னும் விஷயத்திற்கும், பார்ப்பனர்களின் முட்டுக்கட்டைக்கு எல்லையே இல்லாதிருந்தது.
இது விஷயத்தில் பார்ப்பனர்கள் ஒழுக்கம். நாணயம், நாணம், மனிதத் தனம் ஒன்றுமே இல்லாமல் நடந்துகொண்டு வருகிறார்கள். நம்
99 ————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சமூகத்திலுள்ள கோடாலிக்காம்புகளைப் பிடித்தும் எவ்வளவோவிஷமங்களும் செய்து வருகிறார்கள். இவ்வளவும் என்ன பயனைக் கொடுத்தது என்று பார்த்தால் அவையும் அடிக்கும் பந்து மேலே கிளம்புவதுபோல் ஒவ்வொரு இலாக்காவிலும் ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு தேசத்திலும் சண்டமாருதமும் காட்டுப்பிரவாகமும் நுழைவது போல் வகுப்புவாரி
பிரதிநிதித்துவம் நுழைந்து வருகின்றது
இன்றும் இந்தியாவிலேயே பல முக்கிய மாகாணங்களில் வகுப்புவாரி
பிரதிநிதித்துவம் நெருப்பு பற்றி எரிகிறது சுதேச சமஸ்தானங்களிலும் சுமார் 6, 7 வருஷத்துக்கு முதலிலேயே மைசூரில் ஏற்பட்டுவிட்டது
இப்போதுசர். ஷண்முகம் தலைவராய் இருக்கும் கொச்சி சமஸ்தானத்து அரசாங்கத்தில் ஏற்பட்டுவிட்டது.
கூடிய சீக்கிரம் திருவாங்கூரிலும் ஏற்படப் போகிறது.
இந்த சீர்திருத்த எலக்ஷன் தீர்ந்தவுடன் மற்ற மாகாணங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ நெருப்புப்பற்றி எரியப் போகிறது என்பது உறுதி. ஆயிரம் கோடாலிக்காம்புகளாலும் இது இனி அசைக்கப்படப்போவதில்லை.
கொச்சி அரசாங்கமானது திருவாங்கூரைப் போலவே பார்ப்பனக் கோட்டையாக இருந்த அரசாங்கமாகும். அங்கு தான் ஒரு காலத்தில் நாயர் பெண்கள் கூட (அதாவது மேல் ஜாதிக்காரப் பெண்கள் கூட) தங்கள் ஸ்தன்னியங்களை மறைத்துக்கொள்ளக் கூடாமலும் துணி போட்டு மூடக்கூடாமலும் இருக்கும்படி சட்டம் இருந்து வந்த தேசமாகும்.
கொச்சி தான் பார்ப்பனக் காளைகள் மேய வேலி இல்லாத தீவன. (பெண்கள்) வனம் போல் இருந்து வர செளகரியம் பெற்றிருந்த சமஸ்தானமுமாகும்.
மற்றும் அது மனித சமூகத்தில் அந்த சமஸ்தான இந்துக்களில் மெஜாரிட்டி பாகமான மக்களை தீண்டப்படாதவர்களாக்கி அவர்கள் தெருவில் நடக்கும்போது மற்றவர்கள் மீது தங்கள் நிழல் படக்கூடாது என்று தாங்களாகவே ஓன்று கூவிக்கொண்டு நடக்கவேண்டும் என்கின்ற கொடுமை இருந்து வந்த சமஸ்தானமாகும். அப்படிப்பட்ட கொடுமையுள்ள நாட்டுக்கு
சர். ஷண்முகத்தின் சேவை எவ்வளவு அவசியமாய் இருந்திருக்க வேண்டும் என்பதைக் கருதித்தான் பார்ப்பனர்கள் அவரை இந்திய சட்டசபைக்குப் போகாமல் தடுத்து அது பயனற்ற ஸ்தானமானதால் அதற்கு ஒரு பயனற்ற மனிதர் போனால் போதுமென்று கருதி சாமி வெங்கிடாசலத்தை அங்கு அனுப்பிவிட்டு கொச்சிக்கு தோழர் ஷண்முகம் போகும்படி செய்தார்களோ என்னமோ என்று நாம் கருதாவிட்டாலும் சர். ஷண்முகத்தை தடுத்ததற்கு ஆக நாம் பார்ப்பனர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்
குடி அரசு - 1936 (2), 100
தோழர் ஷண்முகம் கொச்சி திவானாவதற்கு முன் கொச்சியில் அரசாங்க உத்தியோகம் இருந்த நிலைமை கீழே குறிப்பிடுகிறோம்
உயர்ந்த உத்தியோகங்கள்
வகுப்பு பெயர் | ஜனத்தொகை [வகுப்புவாரி வீதம் | வருட சம்பள மொத்தம்
நிரந்தர ஆக்டிங் | நிரந்தர ஆக்டிங்
கிறிஸ்தவர்கள் 3,34,870 132 60 1,62,306 74,436
தீயர்கள். 2,76,649 16 18 15,360 9,768
நாயர்கள் 1,42,637 305 88 3,24,228 98,338
தமிழ் பார்ப்பனர் | 21,754 336 76 367,218 62,290
அம்பலவாசிகள் 9,211 55 18 67,226 22,662
க்ஷத்திரியர் 2,122 11 3 17,280 2,280
இப்போது சர். ஷண்முகம் கொச்சி அரசாங்கத்தில் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிலைமை
மொத்த உத்தியோகங்களில்
பார்ப்பனர்களுக்கு 100க்கு 4
நாயர்களுக்கு = 16
ஈழவர்களுக்கு " 20
புலையர்களுக்கு 4
இதர ஜாதி இந்துக்களுக்கு 10
இதரஜாதி இந்துக்களல்லாதவர்களுக்கு 14 ரோமோ-ரசியர்களுக்கு " 12
லத்தீன்.
கத்தோலிக்கர்களுக்கு = 6
இதர கிறிஸ்துவர்களுக்கு 6 முஸ்லீம்களுக்கு " 6
யூதர்,ஆங்கிலோ-இந்தியர்
முதலியவர்களுக்கு 2
என்கின்ற கணக்கு வீதம் நமது மாகாண பிரிவு போலவே சட்ட மூலம் ஏற்படுத்திவிட்டார்.
191 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆகவே கொச்சிஅரசாங்கஉத்தியோகத்தில் சர். ஷண்முகம் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை ஏற்படுத்திவிட்டார். எனவே அவருக்கு கொச்சி அரசாங்கமும், கொச்சி பிரஜைகளும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஆதலால் அவருக்கு இந்த இரு கூட்டத்தவரும் இரண்டு சிலைகள் செய்து அரசாங்க சிலையைத் துறைமுகத்திலும், பிரஜைகளது சிலையை பட்டணத்தின் நடுவிலும் அல்லது சட்டசபைக்கு முன் பக்கமுள்ள மைதானத்திலும் வைத்து நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இவற்றை விட கொச்சி அரசாங்கமும் பிரஜைகளும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கு சிறப்பாக ராஜாஜி (ராஜகோபாலாச்சாரி) யாருக்கு நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவரது முயற்சி யாலேயேதான் சர். ஷண்முகம் கொச்சி திவானாக நேர்ந்தது. இல்லாதவரை
இந்திய சட்ட சபைக்குத்தான் போயிருக்கக்கூடும்.
இனி பார்ப்பனர்கள் அவரை ஒழிக்க சகல முயற்சியும் செய்யப் போகிறார்கள் என்பது உறுதி. ஆனால் கடுகளவும் வெற்றிபெறமாட்டார்கள்.
என்பது அதைவிட உறுதி
சபாஷ் ஷண்முகம்!
சர். ஷண்முகத்துக்கு ஜே! பார்ப்பன விஷமத்துக்கும் ஜே! ஜே!!
குடி அரசு - தலையங்கம் - 02.08.1936
குடி அரசு - 1936 (2), 102.
ஈ.வெ.கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி
தாயார் தாயம்மான் முடிவு
95 வயதுகாலம் சுகமே வாழ்ந்து, சுகமே இருந்து வந்த எனதருமைத் தாயார் சின்னத்தாயம்மாள் 28-7-36ந் தேதி செவ்வாய் நள்ளிரவு 12 மணிக்கு முடிவெய்தினார். அம்மையார் இந்திய மக்களின் சராசரி வாழ்வுக்கு 4 பங்கு காலம் அதிகமாகவே வாழ்ந்துவிட்டார். தானாக நடக்க இருக்க, மலஜலம் கழிக்க செளகரியமுள்ள காலம் அவ்வளவும் வாழ்க்கை நடத்திவிட்டு செளகரியம் குறைந்த 2 மணி நேரத்தில் முடிவெய்திவிட்டார்.
28ந் தேதி இரவு 9-30 மணிக்கு அம்மையிடம் அனுமதி பெற்றே ஜோலார்பேட்டை பிரசாரத்துக்குச் சென்றேன். 12 மணிக்கு ஆவி போக்கு வரவு நின்றுவிட்டது. காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தேன்.
சின்னத்தாயம்மாள் சேலம் டவுனுக்கு 3 மைலில் உள்ள தாதம்பட்டி என்கின்ற கிராமத்தில் ஒரு பிரபல செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். மிக்க செல்வமாய் வளர்க்கப்பட்டவர். உதாரணமாக தனது கிராமத்தில் புஷ்பவதி ஆனதற்கு சேலம் டவுனில் ஊர்வலம் விடத்தக்க தடபுடல் வாழ்க்கையில் இருந்தவர் ஈரோட்டில் ஏழைக் குடும்பத்தில் குழந்தைப் பருவத்திலேயே தகப்பனார் காணாமல் போன பிறகு ஒரு மிக ஏழ்மை வாழ்க்கை நடத்திய தாயாரால் காப்பாற்றப்பட்டவரும் பள்ளிக்கூடமே இன்னதென்று அறியாதவரும் 6 வயதிலேயே கூலி வேலை செய்யவும் 18 வயதில் கல் உடைப்பு வேலை செய்யவுமாய் இருந்து வந்தவரும் 25 வயதில் வண்டி வைத்து வாடகைக்கு ஓட்டப்போகிறவருமான வெங்கிட்ட நாயக்கருக்கு நெருங்கிய பந்து உறவு காரணமாக வாழ்க்கைப்படுத்தப்பட்டவர். அம்மை செல்வக்குடும்பத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்தவராய் இருந்தாலும், வெங்கிட்ட நாயக்கரை மணந்த பிறகு வெங்கிட்ட நாயக்கர் தரித்திர வாழ்வு அம்மையாரையும் பீடித்து அம்மையார் செங்கல், ஓடு முதலியவைகளை காளவாயிலிருந்து ஊருக்குள் கட்டிடம் கட்டுபவர் களுக்குக் கூலிக்குக் கூடைகளில் சுமந்து போட்டு தினம் 8 பைசா கூலி வாங்கி பிழைத்து வந்தவர். புருஷனுக்கு தினம் 2 அணா கூலியும் பெண்: ஜாதிக்கு தினம் 0-0-8 பை கூலியுமாக சம்பாதித்து வந்தவர்.
103 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பிறகு புருஷனுக்குக் கல் சித்திர வேலையில் தினம் பகலில் 8 அணாவும் இரவில் 0-12-0 அணாவும் பெறக்கூடிய யோக்கியதையும் வேலைத் திறமையும் ஏற்பட்டபோது, அம்மையார் வெளிவேலைக்கு போகாமல் இருக்க நேர்ந்தது. ஆனபோதிலும் பின்னால் புருஷன் வண்டி ஓட்டிக் கொண்டு வெளியூர்களுக்குப் போவதைச் சகிக்காத அம்மையாரின் தகப்பனார் ஒரு சிறு தட்டுக்கடை வைத்துக் கொடுத்தார். அந்தக் கடை ஒரு வண்டிப் பேட்டையில் வைத்தால் தன்னுடன் தோழர்களாய் இருந்த வண்டிக்காரர்கள் தன்னிடம் சாமான் வாங்குவார்கள் என்று கருதி சட்டி பானை, அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய்ப் பொடி, விறகு முதலிய ௪௧ சாமக்கிரியை சாமானும் ஒருங்கே வைத்து வியாபாரம் செய்தார்கள். இந்த கடைக்கு வேண்டிய சகல சாமானும் அம்மையாரும் அம்மையாரின் மாமியாரான கெம்பு அம்மாளும் வீட்டில் தயார் செய்து கொடுத்து வருவார்கள். இந்த சமயம் 2, 3 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. இந்த நிலையில் அந்தக் கடையில் நல்ல லாபம் கிடைத்ததாலும் பிறகு போட்டி ஏற்பட்டதாலும் அதை விடுத்து அந்தக் கடையை அப்படியே மற்றொருவனுக்கு விற்று விட்டு லாபப் பணத்தையும், கைமுதல் பணத்தையும் சேர்த்து ஈரோடு பஜார் ரோட்டில் ஒரு மளிகைக் கடை வைத்தார். அம்மையை கைப்பிடித்த சம்பவத்தால் கல்தச்சு வெங்கிட்டன் என்ற பெயர் மாறி, வண்டிக்கார வெங்கிட்டநாயக்கனாகி, அதுவும் மாறி தட்டுக்கடை வெங்கிட்ட நாயக்கனாகி பிறகு அதுவும் மாறி மளிகைக்கடை வெங்கிட்ட நாயக்கரானார். அதில் 3 வருஷத்திலேயே மற்றவர்கள் பொறாமைப்படும்படியான லாபமடைந்தார்.
ஒரு சிறு குச்சு அதாவது கதவு இல்லாமல் தட்டி வைத்து இரவு முழுவதும் நாயை விரட்டிக் கொண்டிருக்க வேண்டிய குடிசை மாறி ஓட்டுவில்லை கட்டிடவீடும் 2 ஏக்ரா விஸ்தீரணமுள்ள நல்ல வயல் நிலமும் உடையவரானார். இது சமயம் தான் அம்மையாருக்கு மூன் பிறந்த மூன்று குழந்தைகளும் இறந்துபோய் “ஸ்தல யாத்திரைகள்”, “தவங்கள் செய்து” “வரடி'' கல் சுற்றி, நிலத்தை வழித்து அதில் சாப்பாடு போட்டு பிசைந்து சாப்பிட்டு, சன்யாசிகளின் எச்சில் சாப்பிட்டு வரம் பெற்று ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், ஈ.வெராமசாமியையும் பெற்று எடுத்த காலம் என்றாலும், அம்மையாருக்குள்ள பிள்ளை ஆசையால் மூத்த பிள்ளை ஒன்றே தனக்கு போதுமென்று கருதி அதற்கே தனது முலைப்பால் முழுவதும் கொடுக்க ஆசைப்பட்டு இளைய பிள்ளையாகிய ராமனை மற்றொரு குழந்தையில்லாத அம்மையாருக்கு அதாவது தன் புருஷனின் சிறிய தகப்பனார் மனைவியாகிய ஒரு விதவைக்கு ஒரு சிறு வீடும் சிறிது நிலமும் இருந்த காரணத்துக்கு ஆக அவர்களையே வளர்த்துக்கொள்ளும்படி இனாமாய்க் கொடுத்துவிட்டார்கள். அந்தக் காரணத்தாலேயே ராமன் (ஈ.வெ.ராமசாமி) பள்ளிக்கு அனுப்பாமல் தெருத்தெருவாய் சுற்றவும் கேள்வி கேப்பாடு இல்லாமல் அலையவும் “கம்மநாட்டி வளர்ப்பது கழுதைக் கட்டிதான்” என்ற பெயருக்கு ஏற்ப ஒரு உருவாரமாய் இருந்து வரவும் மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியை மிக
குடி அரசு - 1936 (2), 104
அருமையாய் செல்லமாயும் வளர்க்கவும் ஆன நிலையேற்பட்டது. ஆனால்
இந்த சமயம்தான் அதாவது இந்த இரு குழந்தைகளும் பிறந்த சமயம் தான் வெங்கிட்ட நாயக்கருக்கு பெரிய செல்வம் பெருக சந்தர்ப்பமும் பெருகி வந்த காலமாகும். அதாவது கடசியில் சொன்ன மளிகை கடை வியாபாரமானது வலுத்துவிட்டது. வீடு, வயல், தங்க நகைகள் கேட்போர் மனமும், பார்ப்போர் கண்களும் திடுக்கிடும்படியான தோற்றமுமாய் இருந்ததால் எப்படியாவது அந்த மளிகைக்கடை நடக்கும் கட்டிடத்தை பிடுங்கிக் கொண்டால் தங்களுக்கு அந்த லாபம் கிடைக்குமென்று கருதி சிலர் அந்தக் கடையை கட்டடக்காரனிடம் அதிக வாடகைவைத்து கேட்க ஆரம்பித்தார்கள். அம்மையாரும் - புருஷனும் யோசித்து கடையை சகல சாமானுடனும் பாக்கியுடனும் ஒப்புக்கொள்ளுபவர்களுக்கு கொடுத்து விடுவதாய் விலை கூறினார்கள். அதற்கு ஏற்பட்ட போட்டியில் நல்ல விலை கிடைத்தது அந்தப் பணத்தைக் கொண்டு உடனே ஒரு மண்டிக் கடைஅதாவது மொத்த வியாபாரக் கடை (மூட்டைக் கணக்காய் விற்பது) வைக்க யோசித்தார்கள். உடனே நல்லதொரு கடை அமைந்தது. அங்கு மண்டிக்கடை வைத்தார். புருஷன் உடனே மண்டி வெங்கிட்ட நாயக்கரானார். சின்னத்தாயம்மைக்கும் மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் ஊரில் பணக்காரர் கூட்டத்தில் சேர்க்கத்தக்க பெயர் ஏற்பட்டதோடு எப்படியோ நாணயமும் ஏற்பட்டு விட்டது. தான் மிகவும் நாணயசாலி என்று காட்டிக்கொள்வதில் இருவர்களும் சமர்த்தர்கள். அந்த காலங்களில் பணம் படைத்தவர்களுக்கு பணம் போட்டு வைக்க பாங்கி இல்லாததால் நாணையத்தில் பேர்பெற்ற சின்னத்தாயம்மாளும் வெங்கிட்ட நாயக்கரும் ஒரு சேவிங் பாங்கி ஆகி விட்டார்கள். பணம் ஏராளமாய் தங்களிடம் டிபாசிட் வர ஆரம்பித்ததும் தங்கள் வியாபாரத்தை மிகவும் பெருக்கி விட்டார்கள். மண்டிவெங்கிட்ட நாயக்கர் தன் கடையில் வியாபாரம் செய்தால் சின்னத்தாயம்மாள் வீட்டில் நெல் குத்தும் கொட்டணம், துவரை உளுந்து உடைக்கும் வேலை, விளக்கெண்ணெய் காய்ச்சி ஊத்தும் வேலை முதலியவைகளில் வீட்டில் எப்போதும் 20, 30 பேர் வேலைசெய்யும்படியான தொழில் செய்து புருஷனைப் போலவே
தானும் வருஷம் வருஷம் சிறிதாவது பணம் சம்பாதித்து புருஷனுக்கு கொடுத்தே வருவார்கள். பணம் சேர்ந்தவுடன் மத பக்தி, மதசின்னம், விரதம், நோன்பு, திதி முதலியவைகள் தானாகவே தேடி வருவது வழக்கமல்லவா? அதுபோல் அம்மையார் மிகவும் பக்தி உடையவரானார். விரதங்கள் அதிகமாய் அனுஷ்டிக்கத் தொடங்கினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கும் நாமம் பலமாக பட்டை பட்டையாய்த் திகழ்ந்தது. இந்த மத்தியில் வீட்டில் செல்லமாய் வளர்க்கப்பட்ட மூத்த பிள்ளை கிருஷ்ணசாமியும் பாகவதராக ஆகிவிட்டார். இந்த சந்தர்ப்பத்தில் அதாவது மண்டி வைத்து மண்டிக்கடை நன்றாய் நடக்க ஆரம்பித்து சிறிது எதிர்பார்த்ததற்கு மேல். லாபம் வர ஆரம்பித்தவுடன் சின்னத்தாயம்மாள் சின்னப் பிள்ளை ராமனை (ஈ.வெ.ராமசாமியை) ஒரு சிறு சண்டை காரணமாக இனாமாக (தத்து)
105 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கொடுத்த அம்மாளிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள். ராமனை வளர்த்த அம்மாள் ஊர் பஞ்சாயத்து கூட்டினார். மண்டி வெங்கிட்ட நாயக்கருக்கு ஒன்றும் தட்டிச் சொல்ல முடியவில்லை. சின்னத்தாயம்மாள் “2 கண்ணு தான் எனக்கு இருக்கிறது. இதில் ஒன்றைக் கொடுக்க முடியுமா? முடியாது போ'' என்று சொல்லிவிட்டார்கள். முடிவில் ராமனை சுமார் 9 வயதில் கைப்பற்றினாலும் அவன் விதவை வளர்த்த பிள்ளையாய் ஊர்சுத்தியாய் லோலாயாய் திரிந்ததால் படிப்பு இல்லை. அது மாத்திரமா இனிமேல் படிக்கவும் லாயக்கில்லாத சோதாவாய் ஆகிவிட்டான். இருந்த போதிலும் பள்ளியில் வைத்து வீட்டு வாத்தியார் வைத்துப் பார்த்தார்கள். வாத்தியாருடன். சண்டை, பிள்ளைகளுடன் பலாத்காரம், அடிதடி, கடசியாய் “உபாத்தியாயரை வைவதில்லை'' “பிள்ளைகளை அடிப்பதில்லை” என்கின்ற வாசகம் ஆயிரம் தடவை ஐயாயிரம் தடவை ''தண்டக் காப்பி” எழுதுவதே வேலையாய் இருந்ததால் ராமனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டு, மண்டிக்கடையில் அதாவது தரகு வியாபார இலாகாவில் மஞ்சள், மிளகாய் ஏலம் கூறும் வேலையில் போட்டார்கள். இருந்தாலும் ராமன் எங்கு வளர்த்த தாயிடம் போய்விடுவானோ என்று சின்னத்தாயம்மாள் சின்ன மகனுக்கு
சிறிது சலுகை காட்டி பொய் அன்பாவது காட்டியே வருவார்கள்.
எப்படியோ பணம் சேர்ந்துகொண்டே வரும் இந்த சந்தர்ப்பம்தான் வெங்கிட்டநாயக்கர் என்ற பெயர் மாறி நாயக்கரானதும் சின்னத்தாயம்மாள். என்கிற பெயர் மாறி நாயக்கர் அம்மாள் என்கின்ற பெயர் ஏற்பட்டதுமாகும். அம்மையாருக்கு தெய்வ பக்தி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது நாயக்கரும் அம்மாள் சொன்னபடி ஆடியாகவேண்டும்
பணத்தை அள்ளி இறைக்க ஆரம்பித்துவிட்டார்கள், கண்டவிடமெல்லாம் காடுமேடெல்லாம் கோவில், சத்திரம், சாவடி கட்ட ஆரம்பித்தார்கள். பார்ப்பனர்களின் புகழுக்கு அடிமைப்பட்டு பல குருமார்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு கல்யாணத்தின் போது “தருமக் கல்யாணங்கள்” செய்வார்கள். நன்றாய் இருக்கும் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் செய்வார்கள். நாயக்கர் (புருஷன்) ஏதாவது தட்டிச் சொன்னால் “நீங்கள் பணம்கொடுக்க வேண்டியதில்லை. என் பணத்தில் செய்யுங்கள்” என்று எடுத்தெறிந்தாற்போல் பேசிவிடுவார்கள். வீட்டில் வாரம் ஒரு காலக்ஷேபம் ராமாயண பாரத வாசகம், எங்கு திரியும் சந்நியாசிகளுக்கும் பாகவதர்களுக்கும் சதா சர்வகாலம் உலையில் நீர் கொதித்த வண்ணமாய் இருக்கும்படியான தண்டச் சோத்து சத்திரம் போல் வீட்டை நடத்தி வந்தார்கள்.
இந்த நிலையில் ஒரு விஷயம் குறிப்பிடத்தகுந்தது. இளைய மகன் ராமனிடம் எவ்வளவுஅன்புகாட்டினாலும் அம்மையார் ராமன் தொட்ட சொம்பு, டம்ளர் ஆகியவைகளைகழுவியே வைப்பார்கள். ராமனை சமையல் வீட்டிற்குள் விடமாட்டார்கள். அப்பொழுதே அவன் ஜாதி கெட்ட பயலாய் விளங்கினான்.
குடி அரசு - 1936 (2), 106
ராமனுக்கு ஆகவே சமையல் வீட்டுக்குள் வேறு யாரும் நுழையக் கூடாது என்பார்கள். இந்த லக்ஷணத்தில் அம்மையார் மாமிசம் சாப்பிடமாட்டார். ராமனுக்கு தினமும் வேண்டும். ஆதலால் ராமனுக்குக் கல்யாணம் ஆன உடன் அவனுடைய ''அனாச்சாரத்துக்கு'' ஆகவே அம்மையார் ராமனை வேறு வைத்துவிட்டார்கள்.
சதா சர்வ காலம் தன் வயிற்றில் இப்படிப்பட்ட பிள்ளை ராமன் பிறந்ததற்கு துக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
பொதுவில் சொல்லவேண்டுமானால், அம்மையார் பணத்தாசை இல்லாதவர்கள். நன்றாய் சம்பாதித்து நன்றாய் செலவு செய்தவர்கள். பார்ப்பனர்களுக்கு ஏராளமாய் அழுதவர்கள். அளவுக்குமீறிய ஆச்சாரங்களை அருத்தமில்லாமல் பின்பற்றி வந்தார்கள். எத்தனையோ பேரைத் திருத்திய ராமனால் அம்மையாரிடம் தன் கொள்கையை சொல்லுவதற்குக் கூட தைரியம் ஏற்படும்படியாய் அம்மையார் இடம் கொடுக்கவில்லை.
கடைசி வயதில்கூட அம்மையாரைப் பார்க்கவந்தவர்களிடம் “என்மகன் ராமனை சிறிது பார்த்துக்கொள்ளுங்கள். இளங்கன்று பயமறியாது என்பது
போல் கண்டபடி திரிகிறான்” என்று ஆவலாதி சொல்லியே வருவார்கள்.
ஒருகாலத்தில் மெளலானாக்கள் ஷவ்கத்தலி, மகமதலி அம்மையாரின் கையில் தங்கள் தலையை ஒட்ட வைத்து வாழ்த்தும்படி கேட்டபோது தன்னை அவர்கள் தொட்டுவிட்டதற்காக முகத்தைச் சுளித்துக்கொண்டார். இதை நான் வெளிப்படையாய் எடுத்துக்காட்டி கேலி செய்து அம்மையாரை
மன்னிப்பு சொல்லும்படி செய்தேன். அதனால் அரசியல் தலைவர்கள் காந்தி முதல் யார்வீட்டுக்குவந்தாலும் அவர்கள் எங்குதன்னை தொட்டுவிடுவார்களோ.
என்று பயந்து ஒடுங்கி ஒரு மூலையிலேயே நின்றுதான் அவர்களுடன்: பேசுவார்கள். மூடநம்பிக்கைகளுக்கும், குருட்டு அனாச்சாரங்களுக்கும் தாயகமாய் இருந்தாலும் 95 - வயது வாழ்ந்து முடிவெய்தி விட்டார்.
எனக்கு அவர் முடிவெய்தியது பற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது. அந்த அம்மாளுடைய கோரிக்கை எனக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்துவிட்டுச் சாகவேண்டுமென்பதே. எனது கோரிக்கை எனக்கு முன்னதாகவே அம்மையார் முடிவெய்திடவேண்டுமென்பதே. என்
இஷ்டம் நிறைவேறிற்று
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! பூரண மகிழ்ச்சி!!!
ஈ.வெ.ரா.
குடி அரசு - இரங்கலுரை - 02.08.1936
1097 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
விருதுநகரில் ஜஸ்டிஸ் கட்சிப் பொதுக்கூட்டம்
அரசியல் பித்தலாட்டம்
ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி,
பிரதிகட்சி இருக்க வேண்டியதும், அவை ஒன்றுடன் ஒன்று போராட வேண்டியதும் நியாயமும் இயற்கையுமேயாகும். ஆனால் அவ்வித போராட்டமானது நியாயமான முறையிலும் ஒருவரை ஒருவர் துஷ்பிரசாரம் செய்யாமலும் இருப்பதே வரவேற்கத்தக்க விஷயமாகும். ஒரு கட்சியை மற்றொரு கட்சி தாக்குவதும் துஷ்டப் பிரசாரம் செய்வதும் ஒரு நிமிஷமும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாத காரியமாகும். நமது மாகாணத்தைப் பொறுத்த வரையில் காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. சென்ற இந்திய சட்டசபை தேர்தலுக்குப் பின் ஜஸ்டிஸ் கட்சி அழிக்கப்பட்டு விட்டதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஒன்றுதான். இருப்பதாகவும் உண்மைக்கு மாறாக தோழர் சத்தியமூர்த்தி முதல் சாதாரணத் தொண்டர் வரை தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால், புதியதாக ஜனக்கட்சி ஆரம்பிக்கப்பட்டவுடன் தமிழ்நாட்டில் ஜஸ்டிஸ் காங்கிரஸ் என்ற இரண்டு கட்சிகள் இருப்பதாகவும், இந்நிலையில் மூன்றாவது கட்சிக்கு அவசியமில்லை என்று ஜஸ்டிஸ்கட்சியை ஒப்புக்கொண்டும் ஜனக்கட்சியை எதிர்த்தும் பேசுகிறார்கள். 500 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி இன்று எப்படித் தோன்றிற்று? இதைத்தான் காங்கிரசின் அரசியல் பித்தலாட்டம் என்று கூறுகிறேன்.
காங்கிரஸ் மந்தியி சபை நிலைக்குமா?
ஜஸ்டிஸ் கட்சியார் சென்ற 14 வருஷகாலமாக நிர்வாக பதவிகளை ஏற்று அரசியல் பொறுப்புதாரிகளாக இருந்து வருகிறார்கள். அரசாங்கத்தை ஏற்று நடத்தும் எந்தக் கட்சியாருக்கும். மற்றக் கட்சிகளை விட பொறுப்பு அதிகம். அவர்கள் பேசுவதும் செய்வதும் மிகவும் ஜாக்கிரதையுடன் செய்யவேண்டும். அவர்கள் கூறும் வாக்குறுதி எல்லாம் கூடுமான வரை அவர்களால் நிறைவேற்ற முடிந்தவைகளாக யிருக்கவேண்டும். அப்படி யில்லாமல் ஜனங்களைக் கவர்ச்சி செய்வதற்காக வேண்டி வானத்தை
குடி அரசு - 1936 (2), 108
வில்லாய் வளைப்போம், மணலைக் கயிறாய்த் திரிப்போம் என்று கூறினால் நாளடைவில் அக்கட்சியின் நிலைமைக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் ஆகையால், நிர்வாகத்தை நமது மாகாணத்தில் நடத்த வந்த ஜஸ்டிஸ் கட்சியும் தன்னால் கூடிய வரையில் சாதிக்கக் கூடிய திட்டங்களைக் கூறி நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறது. ஆனால் புதிதாக தேர்தல் பிரசாரம் நடத்திவரும் காங்கிரசானது தான் போகுமிடங்களில் எல்லாம் ஸ்தலத்தில் உள்ள குறைபாடுகளுக்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிதான் காரணம் என்று கூறுகிறது. காலரா உள்ள ஊருக்குப் போனால் காலராவுக்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்றும், தண்ணீர்க் கஷ்டம் இருந்தால் அதற்கும் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்றும் கூறுகிறார்கள். இயற்கையாக ஏற்படும் காலராவுக்கும் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லாவிட்டாலும், இரண்டையும் பிணைத்துத் திரித்துக் கூறுவதில் காங்கிரஸ் பின் வாங்குவதில்லை. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் மானா மதுரையில் பிரசங்கம் செய்யும்போது காங்கிரசுக்கு ஓட்டுச் செய்தால். வானத்திலிருந்து மழையை வருவித்து விடலாம் என்றும், சேலத்தில் பேசும்போது, காங்கிரசுக்கு ஓட்டுச் செய்தால் மேட்டூர் தண்ணீரைக் கொண்டு வந்து விடுவோம் என்றும் பேசுகிறார். இது சாத்தியமா? மேட்டூரை விட சேலம் உயர்ந்திருக்கும் போது மேட்டூரிலிருந்து எவ்வாறு கொண்டு வருவது? இது போல் பல சாத்தியமில்லாத வாக்குறுதிகளை பாமர ஜனங்களிடம் காங்கிரஸ்காரர் கூறிவருகிறார்கள். ஜஸ்டிஸ் மந்திரிகள் இதே விஷயங்களைப் பற்றி பேசுவதாயிருந்தால், பணமிருந்தால் வாய்க்கால் வெட்டி மானாமதுரைக்கு ஜலம் கொண்டு வருவோமென்று சொல்லுவார்கள். இதுதான் சாத்தியமாயிருந்தாலும், காங்கிரசின் வாக்குறுதியைப் போல் அவ்வளவு கவர்ச்சியுடையதாகத் தோன்றாது ஆகவே, மக்களின் ஆதரவு ஒரு வேளை காங்கிரசுக்கு அதிகமாகி, அவர்கள் சட்டசபைகளில் மெஜாரிட்டிகட்சியினராக வந்தாலும் அவர்களுடைய மந்திரி பை அல்லது அவர்களுடைய ஆதரவைப் பெறும் எந்த மந்திரி சபையும் ஆறுமாத காலத்திற்கு மேல் நிலைத்திருக்க முடியாது என்று உறுதியாய்க் கூறுகிறேன். அவர்கள் அதிகாரத்திற்கு வந்த சில நாட்களிலெல்லாம் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பது நிதர்சனமாகிவிடும் அவர்கள் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை அவர்களே உணர்வார்கள். ஆகவே ஜனங்களின் ஆதரவை இழந்து மந்திரிசபையும் கவிழ்க்கப்படவேண்டிய நிலைமை வந்துவிடும். இப்பொழுதே அவர்கள் வெற்றி பெற்றுள்ள ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் அழுகல் நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டதே இதற்குப் போதிய சாட்சி
அவர்கவின் திட்டம் என்ன?
1920 முதல் 1936 வரை காங்கிரஸ் அனுசரித்து வந்த கொள்கை: என்ன? ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை என்ன என்பதை நீங்கள் ஆராய்ச்சி
199 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
செய்து பார்த்தால் இந்தப் பதினாறு வருடங்களில் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளையே காங்கிரஸ் காப்பியடித்துக் கொண்டு வருவது புலனாகும். இந்தக் காலவரைக்குள் எந்தக் கட்சி கொள்கைகளை சமயோசிதம் போல். மாற்றிக் கொண்டே வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் செம்ஸ்போற்டு சீர்திருத்தம் அமுலுக்கு வந்த காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வீதாச்சாரப்படி உரிமை வழங்க அரசாங்கத்தாருடன் போராடுவதே தங்கள் பிரதம கொள்கை என பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றியும் பெற்று மந்திரிசபையும் அமைத்தார்கள். அதன் மூலமாக ஜஸ்டிஸ்கட்சிக்கு ஓடுக்கப்பட்டவர்களின் உதவியும் முஸ்லீம்களின் உதவியும் கிடைக்க காங்கிரஸ்வாதிகள், தீண்டாமை ஒழிப்பும், இந்து முஸ்லீம் ஒற்றுமையும் தங்கள் திட்டங்களில் சேர்த்துக்கொண்டனர். அதற்கு மேலும் ஜஸ்டிஸ் கட்சிக்கு மக்களின் உதவி பெருகிக்கொண்டு பிராமணரல்லாதார் எல்லாத் துறையிலும் முன்னேறி வருவதைச் சகிக்க முடியாமல் காங்கிரஸ் பிராமணர்கள் பகிஷ்கார இயக்கத்தைத் தங்கள். திட்டத்தில் சேர்த்துக் கொண்டனர். பள்ளி பகிஷ்காரம், கோர்ட் பகிஷ்காரம், சட்டசபை பகிஷ்காரம் என்றனர். இதன் மூலம் பிராமணரல்லாதாரின் முற்போக்கைத் தடைப்படுத்தலாமென்று எண்ணி அதில் சிறிது வெற்றியும் பெற்றார்கள். அதை நம்பி ஜனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டினர். தங்கள் தொழில்களையும், படிப்பையும் விட்டுவிட்டனர். என் சொந்த அனுபவத்தில் தெரிந்த வரை பலர் தங்கள் வாழ்க்கையையே பாழாக்கிவிட்டார்கள். முடிவு என்ன? காங்கிரஸ் நாளடைவில் தன். கொள்கையைத் தளர்த்திவிட்டது. 1923-ல் நடந்த தேர்தலில் எங்களுக்கு ஓட்டுக்கொடுங்கள் என்று கழுதையில் எழுதித் தொங்கவிட்டார்கள். அரசாங்கத்தார். இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுக்காவிட்டால், அவர்களுடன் ஒத்துழைக்க முடியாது என்று டம்பமாய் பிரசாரம் செய்தனர். இதைக் கண்டு அரசியல் ஞானமுள்ள ஜஸ்டிஸ் கட்சியினர் இவைகள் எல்லாம் சாத்தியமில்லாதவை என்று அப்பொழுதே கூறிக்கொண்டே வந்தனர். இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சியார் கூறியவை உண்மை என்று வெளிப்பட்டுவிட்டது. புதிய சீர்திருத்தம் அமுலுக்கு வரவிருக்கும் இப்பொழுது காங்கிரசார், சட்டமறுப்பைக் கைவிட்டுவிட்டோம் என்றும் அரசாங்கத்தாரை எதிர்ப்பதில்லை என்றும், சட்டசபைகளைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்றும், அதிலும் மந்திரிசபையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வரவேண்டியதாயிற்று. இந்த நிலைமையில் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை பதவி வேட்டைக்காரர் என்றும் சர்க்கார் தாசர்கள் என்றும் கூறுவதில் அர்த்தம் என்ன?
வட்டமேஜை மாநாட்டு அலங்கோலம்
முதலாவது வட்டமேஜை மகாநாடு நடந்துவந்தபோது அதைக் குலாம்கள் மகாநாடு என்று கூறி, அதற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து
குடி அரசு - 1936 (2), 110
ஜெயிலுக்கும் போனார்கள். அப்பேற்பட்டவர்கள் இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் தோழர் காந்தியே ஜெயிலுக்குப் போனவர்களை விடுவித்தால், தான் வட்டமேஜை மகாநாட்டுக்கு வரத் தயாராயிருப்பதாயும் ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தார். அந்த ஒப்பந்தத்தில் இனி காங்கிரஸ்வாதிகள் சட்ட மறுப்பு செய்வதில்லை என்றும், மறியலும் செய்வதில்லை என்றும், வட்டமேஜை மகாநாட்டில் இதுவரை செய்ததைப்
பற்றிப் பேசுவதில்லை என்றும் தோழர் காந்தி கை எழுத்திட்டார். இதையும் காங்கிரஸ்வாதிகள் தோல்வியென்று ஒப்புக்கொள்ளாமல் வெற்றி என்றே பிரமாதப்படுத்தி வந்தனர். இவ்வித இழிவான ஒப்பந்தத்தை ஜஸ்டிஸ் கட்சியார் செய்திருந்தால் காங்கிரஸ்வாதிகள் அரசியல் உலகத்தையே ஒரு
கலக்கு கலக்கிவிடுவார்கள்.
அம்பேத்காமிடம் சரணாகதி. வட்டமேஜைமகாநாட்டிற்கு முன் பொறுப்பற்ற அரசியல் கிளர்ச்சியை தோழர் காந்தி நடத்தி வந்த காலத்தில், தீண்டாமை ஒழிந்த பின்னும், இந்து முஸ்லீம் ஒற்றுமையேற்பட்ட பின்பும் வரும் சுயராஜ்யம்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னார். ஆனால் வட்டமேஜை மகாநாட்டில் அம்பேத்கார் சார்பாக தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் ஜின்னா மூலமாக முஸ்லீம்கள் பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள முடியாத காந்தியார், தீண்டாமை, இந்து முஸ்லீம் வேற்றுமை முதலியவைகள் குடும்ப விவகாரங்கள் என்றும், சுயராஜ்யம் முதலில் வந்துவிட்டால் இவைகளை எளிதில் தீர்த்துவிடலாம் என்றும் கூறி இந்தியாவிற்கு வெறுங் கையுடன் திரும்பினார் வட்டமேஜை மகாநாட்டில் அம்பேத்காரை தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள மறுத்த காந்தியார், இந்தியா வந்தவுடன் அவரிடம் சரணாகதியடைந்து, அவருடன் பூனாவில் ஒப்பந்தமும் செய்துகொள்ள நேரிட்டது. முஸ்லீம்கள் சார்பாக ஜின்னாவின் சார்பான. கோரிக்கைகளை காங்கிரஸ் எதிர்க்க சக்தி அற்று வகுப்புத்தீர்ப்பு விஷயத்தில் சுவரின் மேல் பூனைபோல் இருந்து கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் என்றால் காங்கிரசுக்குப் பயம். மூஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்களும் தங்கள் உரிமையைப் பாதுகாக்கக் கோரியது போலவே பிராமணரல்லாதார் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று தோழர் பாத்ரோவும் தோழர் ராமசாமி முதலியாரும் வட்டமேஜை மகாநாட்டில் விரும்பினர். இதில் என்ன குற்றமிருக்கிறது? பிராமணரல்லாதார் விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் வழவழாவாயிருப்பதற்குக் காரணம் என்ன?
உத்தியோக மேற்பு
காங்கிரஸ்காரர்கள் தங்கள் லட்சியம் பூரண சுயராஜ்யம் என்கிறார்கள். ஜஸ்டிஸ்கட்சியார் குடியேற்ற நாட்டந்தஸ்து என்று சொல்லுகிறார்கள். பூரண
நம ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சுயராஜ்யம் என்றால் குடியேற்ற நாட்டந்தஸ்தைப் போன்றது தான் என்று சமிபத்தில் தோழர்சத்தியமூர்த்திதமது ஆனைமலைப் பிரசங்கத்தில் கூறிவிட்டார். ஆகவே காங்கிரஸின் சுயராஜ்யத்திற்கும் ஜஸ்டிஸின் சுயராஜ்யத்திற்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?
உத்தியோகம் ஏற்கும் விஷயத்தில் நமக்கும் அவருக்கும் வித்தியாச மில்லை. ஆனால் காங்கிரஸ் உத்தியோகம் ஏற்பது என்றால் சீர்திருத்தத்தை உடைத்தெரி வதற்கு என்றும் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பது சீர்திருத்தத்தை நடத்துவதற்கு என்றும் கூறுகிறார்கள். இது முற்றிலும் ஏமாற்று. உத்தியோகம் ஏற்றுக் கொண்டுவிட்டால் சீர்திருத்தத்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. தோழர் சத்தியமூர்த்திக்கும் இது தெரியும். மந்திரி ராஜனின் வாடிப்பட்டிப் பிரசங்கத்திற்கு சிம்லாவிலிருந்து அவர் அனுப்பியிருக்கும் பதிலை, சீர்திருத்தத்தின் மூலமாக கூடுமானவரை ஜனங்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே நாங்கள் உத்தியோகம் ஏற்கவேண்டும் என்று கூறுகின்றோம் என்று கூறுவதிலிருந்து, அவர் சீர்திருத்தத்தை நடத்தத் தயாராகவிருப்பது புலனாகும். ஆகவே முட்டுக்கட்டை என்பதெல்லாம் ஹம்பக் என்பதுடன், உத்தியோக ஏற்பிற்கு காங்கிரசின் அனுமதியைப் பெறச் செய்யும் சூழ்ச்சியே யாகும்
ஜஸ்டிஸ் கட்சிக்குத் திட்டமில்லையா?
ஜஸ்டிஸ் கட்சிக்கு எந்தவிதமான வேலைத்திட்டமும் இல்லை என்றும், அது உத்தியோக வேட்டையாளர்களின் மண்டலம் என்றும் துஷ்டப்பிரசாரம் செய்யப்படுகிறது. அதே சமயத்தில் என்னுடைய திட்டத்தை விருதுநகர் மாநாட்டில் ஜஸ்டிஸ்கட்சியார் ஒப்புக்கொண்ட உடன். அவர்கள் காங்கிரசின் கராச்சித் திட்டத்தை திருடிவிட்டார்கள் என்று தோழர் ராஜகோபாலாச்சாரி புகார் கூறினார். உண்மையில் நாங்கள் எதையும் திருடவில்லையானாலும், திருடிக் கொண்டதாக வைத்துக்கொண்டால், அவர்களுடைய திட்டமும் எங்களுடைய திட்டமும் ஒன்று என்றும், எங்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கிறது என்றும் தானே அருத்தமாகிறது. அப்படியிருக்கையில் ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கானது என்றும், அதற்கு எவ்வித திட்டமும் இல்லை என்றும் எப்படிக் கூறுவது?
கட்சிக் கட்டுப்பாடு.
காங்கிரஸில் கட்டுப்பாடு இருப்பதாகவும், வேறு கட்சிகளில் அவ்விதம் இல்லை என்றும் கூறப்படுகிறது, புதிய சீர்திருத்த விஷயத்தில் மாகாணங்கள் தோறும் காங்கிரசில் அபிப்பிராய பேதங்கள் இருப்பதும் ஒவ்வொரு மாகாணத்திலும் தலைவர்களிடத்தில் அபிப்பிராய பேதமிருந்து வருவதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பண்டித ஜவஹர்லால் நேரு சமதர்மப் பிரசாரம் செய்கிறார். அவரைத்தவிர மற்றவர்களெல்லாம் அதை
குடி அரசு - 1936 (2), 112
எதிர்க்கிறார்கள். நமது மாகாணத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் ஜவஹர்லாலின் தியாகத்தை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. பண்டித மோதிலால் நேருவின் தியாகத்திற்காகவே தோழர் ஜவஹரை காங்கிரஸ் தலைவராக்கினதாகக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலைமையில் தோழர் ஜவஹர்லால் நேருவை காங்கிரசின் தலைவராக தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஒப்புக் கொள்ளுகிறாரா?
திலகர் நிதி.
திலகர் நிதி திருட்டைப்பற்றி விபரம் கேட்டால், தோழர் ஜவஹர்லால். நேரு, தேர்தலில் காங்கிரசை முறியடிப்பதற்காகவே இவ்வித துஷ்டப் பிரசாரம் செய்யப்படுவதாகவும். ஆகையால் திலகர் நிதிக்கு உதவி செய்யாதவர்கள் இதைப்பற்றி புகார் செய்ய உரிமையில்லை என்றும், அவ்விதம் செய்தால் கோர்ட்டுக்கு போக நேரிடுமென்றும் பயமுறுத்துகிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே வீழ்த்திவிடவேண்டும் என்று கூறும் வீரர், இவ்விதம் பயமுறுத்துவதானது அவர்களுடைய பலஹீனத்தையே காட்டுகிறது திலகர் நிதிக்கு உதவி செய்யாதவர்கள் அதன் நிர்வாகத்தைப் பற்றி கேட்பதற்கு அருகதையற்றவர்கள் என்றால், அரசாங்கத்திற்கு ஒரு பைசா கந்தாயமும் செலுத்தாதவன், அரசாங்கத்தின் தீமையை எடுத்துச் சொல்ல எந்த வகையில் அருகதையாவான்? அதேபோல், ஜஸ்டிஸ் கட்சியைச் சேராத காங்கிரஸ்காரன், ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறித் திரிவது நியாயமா?
இவ்வாறு காங்கிரஸின் சரித்திரமானது முன்னுக்குப் பின் முரணான திட்டங்களையுடையதாகவும், அரசியல் நிர்வாக அனுபவமில்லாத அழிப்பு வேலையைக் கைகொண்டத் தலைவர்களை உடையதாகவும் இருக்கிறது ஆனால் ஜஸ்டிஸ் கட்சியானது, தான் செய்த எல்லா வேலையிலும் காங்கிரஸின் தீவிர எதிர்ப்புகளுக்கிடையே பல நன்மைகளைச் செய்திருக் கிறது. காங்கிரஸ்வாதிகள் சட்டசபையில் தங்களுடைய வேலைத்திட்டம் என்ன என்பதை இன்னும் அறிவிக்க முடியாமல் தவிக்கின்றனர். பொதுஜனங்களின் மூலதார விஷயத்தில் சுதந்தரமளிப்பதற்கு ஏதுவாய் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உள்பட சகலஜாதி மதத்தினருக்கும் ஸ்தல. ஸ்தாபனத்திற்குச் சொந்தமான ரோடு, கிணறு, பள்ளிக்கூடங்களில் சம அந்தஸ்தளிக்கும் அரசாங்க உத்தரவைப் போன்ற சீர்திருத்தங்களை, சட்டசபைகளில் செய்ய காங்கிரசுக்கு தைரியம் உண்டா? உத்தியோக ஏற்பு விஷயத்திற்கு அனுகூலமாக, கிராம மகாநாடுகளில் எல்லாம், பிரதானமாய் தீர்மானம் செய்யும் காங்கிரஸ், இந்திய சட்டசபையில் வரவிருக்கும் எம்.ஸி ராஜா, தேஷ்முக் இவர்களின் சீர்திருத்த மசோதா விஷயங்களில் தங்கள். அபிப்பிராயத்தைத் தெரிவிக்காமல் இருப்பதின் மர்மம் என்ன?
காங்கிரஸின் புரட்டுகளைப் பற்றியும், ஜஸ்டிஸ் கட்சியின் ஆக்க வேலைகளைப் பற்றியும் பிரசாரம் செய்வது எங்கள் கடமையென உணர்ந்து
1 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
எங்கள் வேலையை நடத்தி வருகிறோம். இதை உணராமல் ஜனங்கள் இன்னும் காங்கிரசை நம்பி, காங்கிரஸ்வாதிகளைச்சட்டசபைக்கு அனுப்பினால், அதன் பலா பலன்களையும் ஜனங்களே அனுபவிக்க நேரிடும். வேலூர் ஜில்லா போர்டு தேர்தலில் நடந்த விபத்து, சட்டசபைத் தேர்தலிலும் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பொது ஜனங்கள் கடமையாகும்.
விடுதலை”
குறிப்பு- 26.07.1936 ஆம் நாள் விருதுநகர் தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் ஆதரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 09.08.1936
குடி அரசு - 1936 (2), 114
ஸ்ரீனிவாச சாஸ்திரியார்
தி ரைட் ஹானரபிள் சாஸ்திரியார் என்று பெயர் வழங்கப்பெறும் தோழர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இப்போது காங்கிரஸ்காரர்களுடன் வெளிப்படையாய் சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிற்போக்கானதென்றும், அதை அடுத்தத் தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்கச் செய்யவேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு நாட்டில் இடம் கொடுத்தால் பார்ப்பனர்கள் நிலை மிக மோசமாகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தாலேயே பல பார்ப்பனர்கள் பெரிய பதவிக்கும் அந்தஸ்துக்கும் போக முடியாமல் போய்விட்டதென்றும் கூறி பார்ப்பனர்களை நமக்கு எதிரியாக கிளப்பிவருகிறார்.
மற்றும் காங்கிரஸ் கொள்கைகளைப் பற்றி தனக்கு ஆட்சேபனை இல்லையென்றும், வேலைத்திட்ட நிபந்தனைகளில் மாத்திரம் சிறிது தளர்த்தி தன் போன்றவர் அதில் வந்து சேரும்படி செய்யவேண்டும் என்றும் காங்கிரசுக்கு விண்ணப்பம் போடுகிறார்.
இப்படிப்பட்ட சாஸ்திரியார் யார்? அவரது பூர்வோத்தரமென்ன? அவரது கொள்கை என்ன என்பவை முதலியவைகளை பொது ஜனங்கள் உணரவேண்டுமென்பது நமது ஆசை
சாஸ்திரியார் ஒரு சாதாரண உபாத்தியாயராய் தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர், ஆங்கிலம் பேசுவதில் நல்ல உச்சரிப்பை உச்சரிக்கக்கூடியவர், பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளுவதில் மூந்துபவர், பார்ப்பன. பத்திரிகைகளின் விளம்பரங்களால் பிரபலப்படுத்தப்பட்டவர். இந்த நிலையில் வடநாட்டு பிரபலஸ்தரும் அரசாங்கத்தாராலும், மக்களாலும் நன்கு மதிக்கப்பட்டவருமான கோகலே அவர்கள் தென்னாட்டுக்கு வந்த சமயத்தில் அவருடைய அறிமுகத்தை சம்பாதித்து அவரை வசப்படுத்தி, அவரது செல்வாக்கில் மதிப்புப் பெற்று, கடைசியாக அவரது மடமாகிய இந்திய ஊழியச் சங்க மடத்துக்கு தம்பிரானாகி சர்க்காருக்கு பிரதம சிஷ்யனாகி பிரிட்டிஷ் சர்க்காரின் சமஸ்தான கவிராயராகி உலகத்தின் மற்ற பாகங்களுக்கும் பிரிட்டிஷ் பிரசாரகராய்ச் சென்று மகாகனமாகி பல பதவிகள் அடைந்து, பணமும் ஒரு அளவுக்கு சம்பாதிக்கப் பெற்று அவற்றையெல்லாம் ஆதாரமாய்க் கொண்டு இன்று பச்சையாகப் பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடல்லாமல் பார்ப்பனரல்லாதார் 15— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இயக்கத்தையும் குறைகூறி வெள்ளைக்காரர்கள் உள்ளத்திலும் பார்ப்பனரல்லாதார். மீதுதுவேசம் ஏற்படும்படிவிஷமப் பிரசாரமும் செய்து வருகிறவர். காங்கிரஸ் பார்ப்பனர்கள் இவரது பிரசாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்குப் பெரியதொரு விளம்பரம் கொடுத்து பெருமைப்படுத்தி வருகிறார்கள். இவருடைய அரசியல் கொள்கை என்பது பெயருக்கு மிதவாதம் என்று சொல்லப்படும் என்றாலும், நல்லதொரு சமயத்தில் காந்தியாரை தேசத்துரோகியென்பதாகச் சொல்லி அவரைகைதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு யோசனை சொல்லி அரசாங்கம் காந்தியாரை கைதி செய்தது சரி என்று பொதுஜனங்களுக்கு படும்படி பிரசாரமும் செய்தார்.
அதற்குப் பிறகே அரசாங்கத்தார் அவருக்கு தென்னாப்பிரிக்கா ஏஜண்டு வேலை கொடுத்து மாதம் பல ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுத்து வந்தார்கள். அது மாத்திரமல்லாமல் இவருக்கு மகாகனம் பட்டம் வருவதற்கே இந்த காரியங்கள் போன்றதே பெரிதும் உதவி அளித்தன.
மற்றும் இவருடைய யோக்கியதையைப் பற்றி தோழர் ஜவஹர்லால் அவர்கள் நன்றாய் விவரிக்கிறார். எப்படியெனில்,
“தோழர் ஸ்ரீனிவாச சாஸ்திரியார் அடிமைப்புத்தியை கற்பிப்பதிலும் கோள்மூட்டச் செய்வதிலும் சிறந்தவராவார்.”
1917-ல் சாஸ்திரியார் பல வீரப்பேச்சுகள் பேசினார். பெசண்ட் அம்மையாரை சிறைப்படுத்திய உடன் ஆசாமி இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிட்டார். இவர் காரியம் செய்யவேண்டிய சமயத்தில் நழுவி விடுவார். நெருக்கடியான சமயத்தில் அவரை நம்பவே கூடாது.”
“சாஸ்திரியார் ஐரோப்பாவில் காங்கிரசை இழிவாகவும் பிரிட்டிஷ் அரசாங்கத்தை மதிப்பாகவும் பேசி பிரசாரம் செய்தார். வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற சாஸ்திரியார், காங்கிரஸ் சார்பாக ஜெயிலுக்குச் சென்றவர்களையும் கஷ்டப்பட்டவர்களையும் வெகு கேவலமாகக் கண்டித்துப் பேசினார். இதற்கு ஆக நான் அவரை சந்தித்தபோது கேட்டதற்கு பிறகு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இப்படி பேசியதற்கு காரணம் கூறும்போது தன்னை மறந்து அப்படிப் பேசிவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார்.”
“எல்லா கட்சியாராலும் கண்டிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையை கிடைத்ததை பெற்று உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்று கல்கத்தா மிதவாத மாநாட்டில் தலைமை வகித்து பேசினார்.”
“இதனால் சர்க்கார் காங்கிரஸ்காரர்கள் சொல்வதை மதிக்க முடியாமல் போய்விட்டது.
“அதன் பிறகும் பூனாவில் ஒரு முக்கியக் கூட்டத்தில் பேசும்போது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுப்போய்விட்டால், இந்தியாவில் பெருத்த
குடி அரசு - 1936 (2), 116
கலகமும் தொல்லையும் நிகழும். ஆதலால் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார். இப்படிப்பட்ட லட்சணத்தில், சாஸ்திரியாரும் மிதவாதிகள் எல்லாம் மிகத்தீவிரவாதிகள். என்று கருதப்படுகிறாராம். ஆகவே மிதவாதமென்பது எப்படிப்பட்டது என்பது பற்றி நாம் சொல்லவேண்டியதில்லை" என்று எழுதியிருக்கிறார். (இவை ஜவஹர்லால் எழுதிய தன் சுயசரிதத்தில் காணலாம்.)
இந்த யோக்கியதை உள்ள சாஸ்திரியாரைப்பற்றி இன்று தேசீயப் பார்ப்பனர்கள் என்பவர்களும் தேசீயப் பத்திரிகை என்பவைகளும் இன்று ஆகாயமளாவப் புகழ்கின்றன. விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் இதே தேசீய பத்திரிகைகளும் தேசீயவாதிகளும் இதில் 100-ல் ஒருபங்கு கெடுதியும் கெட்ட குணமுமில்லாத பார்ப்பனரல்லாத பிரமுகர்களை பழிக்கின்றன, தூற்றுகின்றன. சாதாரண ஒரு பொதுமனிதன் நடுநிலையுள்ள மனிதன் தோழர் ஏ. ராமசாமி முதலியாரையும் கனம் சீனிவாசசாஸ்திரியையும் கண்டால் அரசியல் விஷயம், பொதுவாழ்வு ஆகியவைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு.
யார் யோக்கியர், யார் நாணயஸ்தர், யார் விஷய ஞான முள்ளவர்கள் என்பதாகச் சொல்லும்படி கேட்டால் அவர் என்ன சொல்லக் கூடும். யாரால் நாட்டிற்கு அதிக கெடுதி இல்லை என்று கேட்டால் என்ன சொல்லக்கூடும்
இன்று தோழர் கனம் சாஸ்திரியார் ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாரின். ஆதரவில் இருந்து கொண்டு, அவருக்கு வெள்ளைக்காரரிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு தரகராய் இருந்துகொண்டு அண்ணாமலை யுனிவர்சிட்டி வைஸ்சான்சலர் பதவியைக் கைப்பற்றி அதை அக்கிரகாரமாக ஆக்கி அங்கு பார்ப்பன விஷத்தைக் கக்கி அந்த யுனிவர்சிட்டியால் பார்ப்பனரல்லாதாருக்கு தக்க நன்மையில்லாமல் செய்து வருகிறார் அங்குள்ள பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் உத்தியோகஸ்தர் ஆகியவர்களின் நிலைமையை கஷ்டமாக்கி வருகிறார். இவருடைய தேச
பக்திக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?
குடி அரசு - கட்டுரை - 09.08.1936
117 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரஸ் நிர்வாகம் எங்கும் ஊழல்
இப்போதுதான் புத்தி வருகிறது
காங்கிரஸ் 1920-ம் வருஷம் வரை அதாவது சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டு நடந்து சீர்திருத்தம் பெறுவது என்கிற கொள்கையின் மீது கிளர்ச்சி செய்து பதவி அதிகாரம் முதலியவை பெறுவது என்கின்ற திட்டத்தில் வேலை செய்து வந்தவரை நிர்வாகம் அதிகமான ஊழல் இல்லாமல் நடந்துவரத் தக்கதாய் இருந்தது. ஆனால் அந்த நிருவாகம் பார்ப்பனரல்லாதார் இயக்க மூலம் பார்ப்பனரல்லாதார் கைக்கு மாறிய உடன் இனி சட்டப்படி ஒழுங்குக்குகட்டுப்பாட்டு யோக்கியமான முறையில் கிளர்ச்சி செய்தால் தங்கள் கைக்கு நிர்வாகம் வரமுடியாது என்றும் தங்கள் வகுப்பார்களே ஏகபோகமாய் அனுபவிக்க முடியாது என்றும் கருதிய பார்ப்பனர்கள் காங்கிரசுக்கு புதிய கொள்கை ஏற்படுத்தி அதாவது சட்டம் மீறுவது, சட்டம் மறுப்பது, சர்க்கார் உத்திரவுகளை அலட்சியம் செய்வது முதலிய கொள்கைகளை ஆதரவாய் கொண்டு ஒழுங்கு விரோதமான முறைகளைக் கையாண்டு கிளர்ச்சி செய்வது என்பதற்கு ஏற்ற திட்டத்தில் கிளர்ச்சி செய்து வந்ததின் பயனாய் காங்கிரசில் கட்டுப்பாடு நாணயம் என்பன அடியோடு பறந்து விட்டதுடன் சூழ்ச்சியும், தந்திரமும், பொய்யும், ஏமாற்றுமே ஆட்சி புரியத் தொடங்கிவிட்டன. இதன் பயனாகவே காங்கிரசுக்கு யோக்கியமான. மனிதர்களோ தொண்டர்களோ கிடைப்பதே அரிதாய்விட்டது.
காங்கிரசின் கீழ் நேரான கணக்கு வைக்கவோ, காங்கிரசுக்கு ஆக வசூல் செய்யப்பட்ட தொகைகள் நாணயமாய் கையாளப்படவோ முடியாமல் போனது ஒருபுறமிருந்தாலும், காங்கிரஸ் ஸ்தாபனத்தின் நிர்வாகமும் சிறிதும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாமல் தலைவிரி கோலமாய் ஆளுக்காள் தலைவர்களாய் தடியெடுத்தவன் தண்டக்காரன் என்கின்ற முறையில் நடந்து வந்து பொதுஜனங்களின் ஒழுக்கத்தையும் நாணயத்தையும் கூட பாதிக்கும்படியான கேவல நிலைக்கு வந்துவிட்டது இவை ஒருபுறமிருந்தாலும் மத உணர்ச்சிபோல் புகுத்தப்பட்ட தேசிய உணர்ச்சி என்பதானது பாமர மக்களுடையவும், படித்த மக்களுடையவும் பகுத்தறிவைப் பாழ்படுத்தி பொதுத்தேர்தல்கள் சிலவற்றில் ஞானமில்லாமல் நடந்துகொள்ள வேண்டியதாய் ஏற்பட்டதின் பயனால் சில பொதுத் தேர்தல்களில் காங்கிரசுக்குவெற்றி ஏற்பட்டு சில பதவிகளும் ஸ்தாபனங்களும் அவர்கள் கைக்கு போக நேர்ந்து விட்டது என்பது யாவரும் அறிந்ததாகும்.
குடி அரசு - 1936 (2), 118
அப்படிஅவர்கள் கைப்பற்றிய ஸ்தாபனங்களும் ஸ்தானங்களும் அனேகமாய் ஒன்றுகூட பாக்கியில்லாமல் எல்லாமுமே ஊழலாகவும் கட்டுப்பாடும்
ஒழுங்கும் இல்லாமலும், ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் லட்சியம் செய்யப்படாமலும் தலைவிரி கோலமாய் நடந்து ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தைப் பாழாக்குவதோடு ஸ்தல ஸ்தாபன உரிமைகளையும் பாழாக்கி வருகிறது
தவிரவும் காங்கிரஸ்காரர்கள் இந்த 10, 16 வருஷகாலமாய் பஹிஷ்கார முறையிலும் அழிவு முறையிலும் சட்டமறுப்பு முறையிலுமே வேலை செய்துவந்தவர்களானதால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவர்களிடமிருப்பதற்கு ஞாயமில்லை என்பது ஒரு புறமிருக்க, காங்கிரசின் கொள்கையானது தகுதியான நபர்கள் அதில் இருக்க இடமில்லாமல் செய்துவிட்டதால், எப்படியோ நிர்வாகம் காங்கிரசார் கைக்கு வருவதாய் இருந்தாலும்,
தகுதியும், அனுபோகமுமுடையவர்கள் அவர்களுக்கு கிடைப்பதற்கு இல்லாமலேயே போய்விட்டது. இவற்றைப்பற்றியெல்லாம் நாம் அந்தந்த சமயங்களில் விரிவாய் எடுத்துச் சொல்லி எச்சரிக்கை செய்து வந்திருந்தும், காங்கிரஸ் தலைவர்கள் அவற்றைச் சிறிதும் இட்சியம் செய்யாமல் “எப்படியாவது காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று ஆனால் போதும்” என்று கருதி ஆங்காங்கு நடை பெற்ற தேர்தல்களில் காலிகளையும், கூலிகளையும் மான வெட்கத்துக்கு கட்டுப்பட்டு நடக்க தகுதியும் அனுபவமும் அவசியமும் இல்லாத ஆட்களையும் அந்த ஸ்தாபனங்களில் பங்கா இழுப்பதற்குக் கூட அமர்த்த தகுதியில்லாத ஆட்களையும் பிடித்து தேர்தலில் (ஏனென்றால் யோக்கியமும் தகுதியும் உடையவர்கள் அவர்களில் கிடைக்காததாலும் தகுதியும் அனுபவம் உள்ளவர்கள் காங்கிரசில் சேர மறுத்ததாலும்) நிறுத்தி தேர்தலில் அனேகவிதமான மனதறிந்தபொய்ப்பிரசாரமும், விஷமப்பிரசாரமும் செய்து ஓரளவுக்கு வெற்றிபெற்றார்கள் என்றாலும் இப்போது அவற்றின். பயனை அனுபவிக்கிறார்கள்.
இதன் பயனாய் காங்கிரசுக்காரர்களுக்கு யாதொரு கெடுதியும் இல்லை யென்றாலும் சில கூலிகளுக்கும் காலிகளுக்கும் அவர்கள் எதிர்பார்த்த பதவியும் பயனும் ஏற்பட்டது என்றாலும், அவற்றின் நிர்வாகம் பாழானதுடன் நாணயம் ஒழுக்கம் இல்லாமல் நடப்பதின் பயனாய் பொது மக்களுக்கும் எவ்வளவோ அசெளகரியங்களும் நஷ்டங்களும் ஏற்படுகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்திய சட்டசபை தேர்தலும் ஜில்லாபோர்டு முனிசிபாலிட்டி தேர்தலும் வந்த காலத்திலெல்லாம் நாம் சட்டசபைக்கு யோக்கியர்களாய் பார்த்து நிறுத்த வேண்டும் என்றும் ஸ்தலஸ்தாபனங்களில் கட்சி வேற்றுமை
பாராட்டாமல் தகுதியும் அனுபவ ஞானமும் ஒழுக்கமும் உள்ளவர்களையே பார்த்து நிறுத்த வேண்டும் என்றும் தலையால் அடித்துக்கொண்டோம் அப்பொழுது மிகவும் பொறுப்பும் அபாரஞானமும் வாய்ந்த தோழர்
19 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கூட சிறிதும் யோசனையும் பொறுப்பும் இன்றி ஒரே வார்த்தையில் அவற்றிற்கு சமாதானம் சொல்லிவிட்டார்.
அதாவது மதவிஷயத்தில் “எப்படிப்பட்ட அயோக்கியனாகவும், பாதகனாகவும், சண்டாளனாகவும் இருந்தாலும் ஒரு தடவை ராமா என்று சொன்னவுடன் எப்படி அவ்வளவு இழிவும், பாதகமும், பாவமும் தொலைந்து அவன் மோட்சத்துக்கு அதிகாரியாய் விடுவானோ, அதுபோல் காங்கிரசிலும் ஒருவன் எவ்வளவு அயோக்கியனாகவும் மடையனவாகவும், காலியாகவும், கூலிக்காகவும், சுயநலத்துக்காக எதையும் விற்று வாழ்பவனாயும் இருந்தாலும் காங்கிரசுக்கு நாலணா கொடுத்து கையெழுத்துப் போட்டுவிட்டால். யோக்கியனாகி விடுவான், மேதாவி ஆகி விடுவான்'' என்று சொல்லி கடைந்தெடுத்த அயோக்கியர்களையும், காலிகளையும் கூட சேர்த்து எலக்ஷன் போர் நடத்தி ஒரு அளவுக்கு வெற்றிபெற்றார்.
அப்படிப்பட்ட அந்த வெற்றியின் முரசு ஒருவாரமே ஒலித்தது ஆனால் அதன் ஊழல் நாற்றம் இந்த ஒன்றரை வருஷகாலமாக இந்தியா பூராவையும் சூழ்ந்து ஒவ்வொரு காங்கிரசுக்காரனும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்க வேண்டியிருப்பது மாத்திரமல்லாமல் கண்களையும் மூடிக் கொண்டு தலைக்கு முக்காடிட்டு முகத்தையும் மூடிக்கொண்டு நடக்க வேண்டியதாக ஆகிவிட்டது.
இப்பொழுதுதான் “ஹிந்து”, “சுதேசமித்திரன்”, “தமிழ்நாடு போன்ற தேசீயப் பத்திரிகைகளுக்கும் கூட புத்திவந்து “வெற்றி கொஞ்சமாக இருந்தாலும் அதன் பயன் யோக்கியமானதாகவும் நாணயமானதாகவும் இருந்தால் போதும் என்றும் கட்சியையே பிரதானமாய் எண்ணாமல் யோக்கியதையையும், நாணயத்தையும் பிரதானமாய் கருதவேண்டும்”
என்றும் உபதேசம் செய்யப் புறப்பட்டுவிட்டன.
கட்சித் தலைவர்களான தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்களும் கூட தாங்கள் அனுபவமில்லாமல் அவசரமாய் செய்துவிட்ட காரியங்களால் இவ்வித ஊழல்கள் நேர்ந்ததென்றும் இனி இந்த அனுபவத்தைக் கொண்டு ஜாக்கிரதையாய் நடந்துகொள்ள வேண்டும் என்றும் வெளிப்படையாகத் தெரிவித்துத் தங்கள் தவறுதல்களை ஒப்புக்கொண்டதோடு சமீபத்தில் நடக்கப்போகும் வேலூர் ஜில்லாபோர்டு மெம்பர்கள் தேர்தலுக்குக் காங்கிரசின் பேரால் யாரும் போட்டிபோடக் கூடாது என்று அதிகார தோரணையில் கட்டளை இட்டு விட்டார்கள்.
ஆனாலும் அந்தத் தேர்தல்களின் மூலம் வாழ்க்கை நடத்தும் காலிகளுக்கும், போலிகளுக்கும் இது தங்கள் ஜீவனோபாயத்தைத் தடுக்கும் கட்டளையாய் இருப்பதால் காங்கிரசின் பெயரைச் சொல்லி தேர்தல் நடத்தி வயிறு கழுவ வேண்டிய நிமித்தம் மறுபடியும் தேர்தலில் காங்கிரசின் பெயரை உபயோகிக்கப் பார்க்கிறார்கள். இதன் காரணம் என்னவென்றால் காங்கிரசுக்கு
குடி அரசு - 1936 (2), 120
மானமும் கட்டுப்பாடும் உடைய ஆட்கள் கிடைக்காமல் ஒரு வேளைக் கஞ்சிக்கு எதையும் விற்கும் காலிகளே அதிகமாய் கிடைக்கக்கூடியதாய் இருப்பதால் காங்கிரசில் ஒழுக்கமும் மானமும் காண்பது அரிதாய்விட்டது
இதற்கு யார் என்ன செய்ய முடியும்? தோழர் ராஜகோபாலாச்சாரியார் ''தலை''விதியை அவர் செய்த கர்மத்தின் பயனை அனுபவிக்கிறார். என்றுதான் சொல்லவேண்டும். தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் அபார மூளை சக்தி எப்படியும் “வெற்றியை உண்டாக்கிவிடலாம். ஏனென்றால் அவர் “வெற்றி”யில் கண்ணுள்ளவர்; அதற்கேற்ற மூளையுள்ளவர். ஆனால் அவ்வெற்றியின் பயன் தோல்வியைவிட கேடானதாகவும், ஊழலானதாகவும் முடிகின்றதே தவிர வேறில்லை. இதுவரை அப்படியே ஆகி வந்திருக்கிறது
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பின்பே காங்கிரசின் யோக்கியதை என்ன? என்பதும் காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபைக்குப் போய் சாதிக்கக் கூடியது என்ன? என்பதும் பொதுமக்களுக்கு விளங்கியதோடு மறுதேர்தலுக்கு முகத்தைக் காட்டமுடியாதபடி சிலர் தேர்தல் மேடையிலிருந்து ஒழிந்து கொள்ள வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது
ஜில்லா போர்டு தேர்தல்களைப் பற்றியோவென்றால் காங்கிரஸ் வெற்றி பெற்ற எல்லா ஜில்லா போர்டு ஸ்தாபனங்களுக்கும் கமிட்டிநியமித்து அதன் ஊழல்களையும் கட்டுப்பாடற்ற தன்மைகளையும் விசாரித்து நீதி செலுத்த வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டியதாகிவிட்டன.
இந்த காரியங்கள் எல்லாம் காங்கிரசுக்காரர்களின் அனுபவமற்ற தன்மையையும் ஞானமற்ற தன்மையையும் ஒழுக்கமற்ற தன்மையையும் காட்டவில்லையா என்று கேட்கின்றோம்.
ஆனால் ஒரு விஷயத்தில் நமக்கு மகிழ்ச்சியே. அதாவது தோழர். சி.ராஜகோபாலாச்சாரியார் முதல் யோக்கியமான தென்று காட்டிக்கொள்ளும் தேசீயப்பத்திரிகைகள் வரையில் இந்தத் தவறுதல்களை ஒப்புக்கொண்ட விஷயத்தைப் பற்றியேயாகும்
என்றாலும் இதிலும் நமக்கு ஒரு சந்தேகம். அதென்னவென்றால் இந்த தலைவர்களும், பத்திரிகைகளும் தங்களுக்கு உண்மையாகவே புத்தி வந்து இந்த தப்பிதங்களை ஒப்புக்கொண்டார்களா, அல்லது இப்பொழுது நேர்ந்து விட்ட ஊழல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக்கொள்ள. மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி தற்கால சாந்தியாக “தவறிவிட்டோம். இனிமேல் எங்களுக்கு புத்திவந்து விட்டது" என்று சொல்லுகிறார்களா என்பது நமக்கு விளங்கவில்லை.
சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல் சம்பந்தமாக ஆட்களை சென்னைக் காங்கிரஸ் கமிட்டி பார்லிமெண்ட் போர்டார் என்பவர்கள் தெரிந் தெடுத்த விஷயம் இப்போது சென்னை மாகாணம் பூராவுமே சிரிப்பாய் சிரிக்கிறது
121 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இதிலிருந்தே தோழர் ஆச்சாரியாரும் பத்திரிகைகளும் தங்களுக்கு
புத்தி வந்தது என்று வார்த்தையில் காட்டிக்கொண்டார்களே தவிர காரியத்தில் காட்டிக்கொண்டவர்களாக இல்லவே இல்லை என்பது தெரிகிறது.
பொதுவாக சென்னையில் இருந்தும் வேறு சில இடங்களில்
இருந்தும் வந்த தகவல்களின்படி பார்த்தால் பார்லிமெண்டு போர்டு. மெம்பருக்கோஅல்லதுஅவர்களிடம் செல்வாக்கு இருக்கும் அங்கத்தினருக்கோ
பணம் கொடுத்தால் எப்படிப் பட்டவர்களும் போர்டாரால் தெரிந்தெடுக்கப்பட்டு விடலாம் என்பதாக நினைக்க வேண்டி இருக்கிறது
இதுபோலவே வேலூர் முதலிய இடங்களிலும் நடந்திருப்பதாகத் தெரிகிறது
இதுபோன்ற காரியங்களில் பயனை அனுபவித்த பிறகும் இந்த மாதிரியான காரியங்கள் திரும்பத் திரும்ப நடப்பதானால் இவர்களுக்குப் புத்திவந்ததாக யார்தான் சொல்லக்கூடும்
இதைப்பற்றி நாம் எழுதும்போது காங்கிரஸ் ஊழலாகிவிட்டதே என்கின்ற கவலை மீது நாம் எழுதவில்லை. அது ஊழலாகிவிட்டது என்று 10,12 வருஷங்களுக்கு முன்னமேயே உணர்ந்து கொண்டோம்
பின்னை ஏன் அதைப்பற்றி எழுதுகிறோம் என்று சொன்னால் அந்த ஊழலின் தீங்கு பொதுவாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பதையும் அதனால் பொது ஜனங்களுக்கு அரசாங்கத்தால் ஏற்பட வேண்டிய காரியங்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கு ஆகவே ஒழிய வேறில்லை.
ஆகையால் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் மற்றும் உண்மையில் கவலைகொண்ட பொதுநல சேவைத் தோழர்கள் யாராவது காங்கிரசில் இருந்தால் அவர்களும் சேர்ந்து மற்ற தேர்தல்கள் நெருங்குவதற்கு முன்பாகவே கலந்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து இம்மாதிரி ஊழல்களும் காரியக் கெடுதிகளும் இனிமேல் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு தக்கது செய்ய முன்வருவார்களா என்று கேட்கின்றோம்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஜஸ்டிஸ் கட்சியையோ, பீபிள்ஸ் பார்ட்டியையோ அடுத்த தேர்தல்களில் தோற்கடித்துவிட (முடியாது)
முடியும் என்றே வைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு என்ன செய்வது என்பதும் அதன்பிறகு என்ன ஏற்படும் என்பதும் அவ்வளவு சுலபத்தில்
முடிவு செய்யக்கூடிய காரியமல்ல. மறுபடியும் வழுக்கி விழுகவேண்டியதுதான். ஒரு மைல் ஏறவும் 3 மைல் சறுக்கி கீழே வரவுமாய் இருந்தால் எப்பொழுது லட்சியத்தை அடைய முடியும். தேர்தல் வெற்றியேதான் நமது லட்சியமா?
வெற்றியில் பயனென்ன என்று கருதவேண்டாமா?
குடி அரசு - 1936 (2), 122.
இனி ஆச்சாரியார் பொதுஜனங்களிடம் முன்போல் பணம் பறிக்க முடியாது. பணக்காரன் தான் எலக்ஷனில் நிற்கமுடியும். ஏழைகள் ஸ்தாபனமென்று காங்கிரசை சொல்லிக்கொண்டு கோடிக்கணக்காய் பணம் வசூலித்து பாழாக்கப்பட்டுவிட்டது. அவ்வளவு பணத்திலும் ஒரு காசு கூட நாளை எலக்ஷனுக்கு பயன்படாமல் அடுத்த தேர்தலுக்கு காங்கிரசு சார்பாய் பணக்காரர்களையும், தந்திரக்கார பார்ப்பனர்களையும் தான் நிறுத்த வேண்டியதாய் இருக்கிறது. தந்திரக்காரப் பார்ப்பனன் காங்கிரசில் இருந்தால் என்ன? ஜஸ்டிஸிலோ, பீபிள்ஸ் பார்ட்டியிலோ இருந்தால். என்ன? எல்லாம் ஒன்று தானே. அதுபோல் பணக்காரனும் எதில் இருந்தால் என்ன, கால் ரூபாய் கொடுத்துக் கையெழுத்துப் போட்டதால் கருப்பு நாய் வெள்ளை நாய் ஆகிவிடுமா? சாயம் பூசி வைப்பதால் சாயம் எவ்வளவு நேரம்
நிற்கும், அழிந்தாலும் மறைந்துவிடும்; உதிர்ந்தாலும் வேறு முளைத்துவிடும். ஆகையால் உண்மையான ஆட்கள் 100-க்கு 10 பேர் இருந்தாலும் அவர்களைக் கொண்டு உள்ளும் புறமும் நாணயமான போர்செய்தால் கட்டாயம் ஏழை மக்களுக்கு நன்மை உண்டாகலாம். ஆதலால் இனியாவது ஆச்சாரியார் கவனிப்பார் என்று கருதுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 09.08.1936
123 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
உடைப்பதா அனுபவிப்பதா?
1937 ஏப்ரலில் அனுபவத்துக்கு வரப்போகும் சீர்திருத்தத்தை உடைப்பது என்பது காங்கிரஸ்காரர்களின் கொள்கை என்று சொல்லி மக்களை இதுவரை காங்கிரஸ்காரர்கள் ஏமாற்றி வந்தார்கள். அந்தப் பிரச்சினையை முக்கியமாய் வைத்தே காங்கிரஸ்காரர் இந்திய சட்டசபைக்கும் போனார்கள். ஆனால் அங்குசென்று அது விஷயமாய்யாதொருகாரியத்தையும் செய்யாமல் தாங்கள் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள் என்று காட்டிக் கொள்வதற்கு ஆகவே அவர்களது முழுநேரமும் செலவிட வேண்டியதாய் விட்டது. அதே தன்மையின் மீது ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சென்றார்கள். அங்கும் அவர்கள் இல்லாதிருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்று காட்டிக் கொண்டார்களே தவிர ஒரு காரியமும் புதியதாய் செய்யவில்லை அன்றியும் ஒருவரோடொருவர் போரிட்டவண்ணமாய் இருக்கிறார்கள். இனிவரப் போகும் சட்டசபைக்கும் நிற்கப்போகிறார்கள். ஆனால் நல்ல. வேளையாய் அதற்கு என்ன கொள்கை? என்ன பிரச்சினையின் மீது நிற்பது? பொது ஜனங்களுக்கு என்ன வாக்குறுதி கொடுப்பது? அங்கு போய் என்ன செய்வது? என்கின்ற விஷயங்களில் இதுவரை யாதொரு முடிவும் இல்லாமல் “பலசரக்கு கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்தது" போல் (அதாவது ஒரு சாமானை எடுத்து மற்றொன்றில் கொட்டுவதும் அதை மற்றவர்கள் பிரித்து வைப்பதும் மறுபடியும் கொட்டிக் கலக்குவதுமான. வேலை) கண்டபடி உளறிக் கொண்டிருப்பதே வேலையாய் இருந்து
வருகிறார்கள். இப்போது காங்கிரசானது சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் இனி உபயத்துல்லா, குப்புசாமி, கல்யாணராமய்யர். கம்பினியாரால் முடியாத காரியமாகிவிட்டது. இந்தக் கம்பினியின் யோக்கியதையை சிறு தேர்தலிலேயே கண்டுவிட்டார்கள். ஆதலால் இனி சுப்பராயன், நாடிமுத்து, ராமலிங்கம் போன்ற மந்திரி பதவி கொள்கை: கம்பினியை பிடித்துதான் ஆகவேண்டும். அந்தக் கம்பினிக்கும் முட்டுக்கட்டை தகர்த்தெறிவது பதவி மறுப்பு ஆகிய விஷயங்களுக்கும் வெகுதூரம் ஏனெனில் அது தங்களுக்கு சிறிதாவது மானமிருப்பதாய் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் கம்பினியாதலால் அது சுலபத்தில் சத்தியமூர்த்திக்கு ஜ போடுவதென்பது முடியாத காரியம்.
இந்தக் காரணங்களால் சென்னை மாகாண காங்கிரஸ் படிப்படியாய் முட்டுக்கட்டை, தகர்த்தெறிதல், பதவிமறுப்பு ஆகிய தந்திரங்களை சிறுகச்
குடி அரசு - 1936 (2), 124
சிறுக கைவிட்டே வந்து கடசியாக விதவை கர்ப்பம் “கரைந்து'' ஒரே நாளில் சூதகக்கட்டியாய் மறைந்துவிட்டது போல் இப்போது தோழர் சத்திய மூர்த்தியார் அவர்கள் சிம்லாவில் இருந்து மந்திரி கனம் ராஜன் அவர்களின். பெரியகுளம் பேச்சுக்கு பதிலளிக்கும் முறையில் எழுதியனுப்பப்பட்ட சேதியில் உண்மையை கக்கிவிட்டார். அதாவது
(அது 25-7-36-ந் தேதி தினமணி என்கின்ற பத்திரிகையில் பக்கம்
5-ல் கலம் 3-ல் பிரசுரித்திருக்கிறபடி)
1. “நாங்கள் மாகாண சட்டசபையில் மெஜாரிட்டியாக இருந்தால் இந்த அரசியலமைப்புக்கு பதிலாக யாவரும் ஒப்புக்கொள்ளும்படியான ஒரு அரசியலமைப்பைப் பெறுவதற்கும் (யாவரும் ஒப்புக்கொள்ளும்
படியாய் ஒரு நாளும் முடியப்போவதில்லை - ப-ர்) அதற்கிடையில் (அது பெறும் வரை -பார்)
2. இந்த சீர்திருத்தத்தின் கீழ் முடிந்த அளவுக்கு ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கும்,
3. ஜஸ்டிஸ் கட்சி போன்ற பிற்போக்கானதும் வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்டதுமான கட்சிகளின் விஷமங்களை தடுப்பதற்கும் நாங்கள் பதவியேற்றுக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்படுகிறோம்”
என்று பதில் சொல்லியிருக்கிறார். ஆகவே இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சீர்திருத்தத்தை ஏற்று நடத்துவதென்றும், அதனால் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்யக்கூடுமோ அவ்வளவு செய்ய பயன்படுத்திக் கொள்வது என்றும் பச்சையாய் ஒப்புக்கொண்டு மந்திரி ஆசை உள்ளவர்கள் எல்லாம் காங்கிரசில் சேரவேண்டும் என்றும் ஜஸ்டிஸ் கட்சிக்கோபீபிள்ஸ்பார்டிக்கோபோகக்கூடாது என்றும் முரசுஅடித்துவிட்டார்கள். என்பதேயாகும்.
மற்றும் இந்த பேச்சுப்படி பார்த்தால் சீர்திருத்தத்தை என்ன செய்கின்றது என்கின்ற வரையில் ஜஸ்டிஸ் கட்சிக்கோ, பீபிள்ஸ் பார்டிக்கோ காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித வித்தியாசமாவது இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் ஒரு வித்தியாசம் மாத்திரம் இருக்கிறது. அது என்ன வென்றால் வகுப்புவாதத்தை ஒழிக்கப்போகிறோம், தடுக்கப்போகிறோம் என்பதேயாகும்.
இந்தஒருவிஷயத்தைக் கவனித்தால் உண்மைப் பார்ப்பனல்லாதாராயும், முஸ்லீமாயும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராயுமிருக்கும் ஒவ்வொருசிசுவும் காங்கிரசை அது பதவியேற்க முடியாமல் முறி அடித்துத் துரத்தியே ஆகவேண்டியிருக்கிறது
ஏனெனில் இந்த மூன்று வகுப்பாரும் வகுப்புவாதம் பேசியே
வகுப்புத் தீர்ப்பு பெற்று அனுபவித்து வருகிறார்கள். மத... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அதாவது முஸ்லீம்களுக்கும் தீண்டப்படாத வகுப்பு என்பாருக்கும்
சீர்திருத்தத்திலேயே வகுப்பு உரிமை புகுத்தப்பட்டு இருந்து வருகிறது பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற கூட்டத்தாருக்கு மாகாண அரசாங்கத்தில் சில முறைகளின் மூலம் ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்துக்கும் உத்தியோகப் பிரதிநிதித்துவக்கும் வகுப்பு உரிமை இருந்து வருகிறது. காங்கிரஸ்காரர்கள். பதவியேற்பது இதை ஒழிப்பதற்காகவே என்று சொன்னால் இதை உண்மையான சுத்த ரத்த ஓட்டமுள்ள மக்கள் யார்தான் சகித்துக்கொண்டு தங்கள் வகுப்புக்கும், சமூகத்துக்கும் துரோகம் செய்துவிட்டு பார்ப்பனர்கள் காலைக் கழுவ ஓடக்கூடும் என்று கேட்கின்றோம்
வகுப்புவாதத்துக்கு இந்த முறை தவறு என்று சொல்வதானால் இவர்களாவது (காங்கிரஸ்காரர்களாவது) வேறு வழி காட்டட்டும் அதில்லாமல் அடியோடு வகுப்புரிமையை ஒழிப்பது என்றால் காங்கிரஸ்
ஒழிவதுதான் நிச்சயமே ஒழிய வகுப்புரிமை வாதம் ஒரு நாளும் இந்தியாவில் ஒழியப் போவதில்லை. ஏனெனில் வகுப்புப் பிரிவையும், வகுப்புபேதத்தையும் ஒழிக்கக் காங்கிரசே சம்மதிப்பதில்லை
நிற்க, ஜஸ்டிஸ் கட்சி இதுவரை என்ன நன்மை செய்தது என்கின்ற விஷயத்தில் கனம் மந்திரி ராஜன் எடுத்துக்காட்டியிருக்கும் விஷயங்களை எல்லாம் தோழர் மூர்த்தியார் அப்படியே ஒப்புக்கொண்டுவிட்டார்.
அதாவது அதே 25-7-36-ந் தேதி தினமணியில் பக்கம் 5ல், கலம்
4ல் உள்ள மூர்த்தியார் பதிலில் “எவ்வளவு பெரிய ஜாப்தா'' என்கின்ற தலைப்பில் கனம் மந்திரி ராஜன் கூறிய எல்லாவற்றையும் எடுத்துப்போட்டு ஒப்புக் கொண்டு 5வது கலத்தில் (அரசியல் சட்டத்தில் - பர்)
எவ்வளவு கட்டுப்பாடு இருந்த போதிலும் அவர்கள் (ஜஸ்டிஸ் கட்சியார்கள்) இன்னமும் அதிகமாய் செய்திருக்க முடியும்?” என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் அதிகமாய் என்ன செய்து இருக்க முடியும் என்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு வரியாவது மூர்த்தியார் சொல்லவே இல்லை. ஆகவே சீர்திருத்தத்தை ஏற்று நடத்துவது, தன்னால் கூடியவரை: மக்களுக்கு நன்மை செய்வது என்பதிலும், இதுவரையில் செய்திருக்கும் காரியங்கள் என்பவைகளை மூர்த்தியாரே ஒப்புக்கொண்டதிலிருந்தும் காங்கிரஸ் கட்சியானது ஜஸ்டிஸ் கட்சிக்கு மாறானதாக இல்லை என்பது வெளிப்படை.
இப்படி இருக்க எந்த வகையில் ஜஸ்டிஸ்கட்சியை பிற்போக்கான. கட்சி என்று மூர்த்தியாரோ அல்லது காங்கிரஸ் கூலிகளோ சொல்லுகிறார்கள். என்பது நமக்குப் புரியவில்லை
குடி அரசு - 1936 (2), 126
மற்றும் காங்கிரசின் மூலாதாரக் கொள்கைகளின் விஷயத்திலும் பூரண சுயேச்சை என்பது குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் என்றும், வெள்ளையருடன் ஒரு ராஜித்திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டே இந்த நாட்டில் சுயராஜ்யம் பெறுவது என்றும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் தோழர் மூர்த்தியார் ஆனைமலையில் வெள்ளைக் காரர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் தன் கையிலேயே எழுதிப் பத்திரிக்கைகளுக்கு சேதி அனுப்பியிருக்கும் அறிக்கையும் இருக்கும்போது, “ஜஸ்டிஸார்வெள்ளையர்களுடன் கூட்டாளிகளாக இருக்க விரும்புகிறார்கள்" என்று ஜஸ்டிஸ் கட்சியை சிம்லா பேச்சில் குறை கூறுவது யோக்கியமா? என்று கேட்கின்றோம் ஆகவே இந்த நிலைமையில் காங்கிரசுக்காரர்கள் சீர்திருத்தத்தை உடைக்கப் போகிறார்களா அல்லது ஏற்று நடத்தப்போகிறார்களா? என்பதையும், ஏற்று நடத்துவதில் ஜஸ்டிஸ்காரர்களை விட எந்த அம்சத்தில்
முற் போக்காளர்களாய் இருக்கக்கூடும் என்பதையும், அவர்களது முக்கிய நோக்கம் எப்படியாவது மந்திரி பதவிகளைக் கைப்பற்றி இப்போது இருந்து வரும் வகுப்பு உரிமைகளை ஒழித்து ஒரே வகுப்பு அதாவது பார்ப்பன ஆட்சி ஆக்க வேண்டுமென்பதல்லாமல் வேறேதாவது உண்டா என்பதையும் பொதுமக்கள் உணர்ந்து பார்க்க வேண்டுமாய் விரும்புகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.08.1936
127 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தீண்டாமையும் இஸ்லாமும்
இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம்
மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத்
திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்
இந்த நிலைமையில் தீண்டாதார் என்று இழிவாய் கருதப்படும் மக்கள் ஜாதிபேதத்தையும் தீண்டாமையையும் முக்கியத்துவமாய்க் கொண்ட இந்து மதத்தைவிட்டு அதில்லாத மதத்துக்குப் போவதால் என்ன கெடுதியென்று கேட்கின்றோம்
முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்
பெண்கொடுப்பது வாங்குவது கர்னாடகக் காலம் ஆகப்போகிறது. புதிய உலகில் அவனவனுக்குப் பிடித்தது தானாகவே ஜோடி சேரப்போகிறது அப்படியே சில இடங்களில் சேர்ந்தும் வருகிறது
குடி அரசு - 1936 (2), 128
ஆனால் ஒருதீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒருகூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே
ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம் இஸ்லாம் மதத்தில் பெண்கள் மூடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அது மத சம்பிரதாயமல்ல. ஏனெனில் இந்து சமூகத்திலும் சிறிது பணமோ வலிமையோ சந்தேகமோ இருந்தால், பெண்கள் மூடித்தான் வைக்கப்படுகிறார்கள். இது பெண் அடிமையைப் பொறுத்ததாகும் தீண்டாமை, அதாவது ஆண் அடிமைதீர்ந்த உடன் பெண் அடிமை தீரப்போகிறது அதற்காகப் போர் நடக்கப் போகிறது. அந்தக் காலம் வெகுதூரத்தில்இல்லை. ஆதலால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் வைப்பது தகுந்த நியாயம் சொல்ல முடியாத பயங்காளித்தனமே ஆகும்.
ஆதலால் இதுவரை தீண்டாமை விலக்குக்காக சமூக சீர்திருத்தக்காரர் களும், அரசியல் கிளர்ச்சிக்காரரும் செய்த சகலவித முயற்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் தோல்வியே அடைந்துவிட்டார்கள்.
அம்பேத்கார் உபதேசமே இப்போது தீண்டாமை ஒழிவதற்கு உண்மையான சாதனமாய் இருக்கிறது. சுமார் 6,7 கோடி பேர்கள் ஏற்கனவே அனுபவித்துப் பார்த்துவிட்டார்கள்.
தீண்டாதவர்கள் இஸ்லாமாகி-முஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம். இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரிதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.08.1936
129 ௨. ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பன்னிரண்டாவது ஆண்டு
“குடி அரசு” பத்திரிகைக்கு பதினோரு ஆண்டு நிரம்பி பன்னிரண்டாவது ஆண்டின் - பன்னிரண்டாவது மலரின் முதல் இதழாக இவ்வாரப் பத்திரிகை பிரசுரமாகின்றது
“குடி அரசு” இதுவரை அதாவது இந்த பதினொரு வருஷ காலமாக என்ன காரியம் செய்திருக்கிறது என்று கேட்கப்படுமானால் முதலில் ஒரு பதில் தைரியமாகச் சொல்லுவோம்
சரியானாலும் தப்பானாலும் தனக்கு சரியென்று தோன்றியதை தயவு, தாக்ஷண்ணியம், பயம், பாரபட்சம் இல்லாமல் தைரியமாய் வெளிப்படுத்தி
வந்திருக்கிறது மற்றொரு காரியம் என்ன வென்றால் பத்திரிகையில் வாசிப்பவர்களைப் பின்பற்றாமல் பத்திரிகையில் உள்ளதைப் பின்பற்றும்படி வாசகர்களை
செய்து வந்திருக்கிறது
உலகில் பத்திரிகைகள் இரண்டு விதம். அவை தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால் மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று
மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்ப வேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று
முதலாவது தரம். பத்திரிகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை: இருக்க முடியாது. தயவு, தாக்ஷண்ணியம், பயம், பாரபட்சம் ஆகியவை இல்லாதத் தன்மையில் இருக்க முடியாது என்பதோடு சமயத்துக்குத் தகுந்தபடி சரிப்படுத்திக் கொள்வதன் மூலம் அவைகளுக்கு எவ்வித கஷ்டமும், தொல்லையும், நஷ்டமும் இருக்க முடியாது
ஆனால் இரண்டாவதாகக்குறிப்பிட்டதான அதாவது கொள்கைகளுக்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு பல தொல்லையும், கஷ்டமும் நஷ்டமும் ஏற்படுவதோடு வெகு சுலபத்தில் எதிரிகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இம்மாதிரி பத்திரிகைகள் பொதுஜன செல்வாக்குக்கு விரோதமாகவும் வேலை செய்யவேண்டி ஏற்பட்டு விடுவதால் பொதுஜனங்கள். ஆதரவும் இல்லாமல் இருக்க வேண்டியும் வரும். ஆதலால்.
குடி அரசு - 1936 (2), 130
உலகத்தார் உண்டென்பது இல் என்பான் - வையத்து அலகையா வைக்கப் படும்
என்னும் மூதுரைக் கேற்ப நமது “குடி அரசு” பத்திரிகையானது உலக மக்களின் சமுதாயத் துறையில், பழக்க வழக்கத்தில் பலஆயிரக்கணக்கான. வருஷங்களாய் இருந்து வந்த நம்பிக்கைகளையும், எண்ணங்களையும், காரியங்களையும் மூரட்டுத் தனமாய் எதிர்த்தும், மறுத்தும், கண்டித்தும், வைதும் எழுதி வந்ததில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி இருக்க வேண்டும் என்பதைவாககர்களேசிறிது சிந்தித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.
ஆரம்பத்தில் “குடிஅரசு தென்னாட்டில் செல்வாக்கும் ஒற்றுமையும், பலவிதத்தும் தந்திரமும் சூழ்ச்சித் திறமும்கொண்ட வகுப்பாராகிய பார்ப்பனர்களின் தொல்லையில் இருந்து மற்ற பார்ப்பனரல்லாத பொது மக்களை விடுதலை பெறச் செய்ய வேண்டும் என்னும் கொள்கைக்காகவே உழைத்தது. அதன் பயனாய் அப்பார்ப்பனர்களின் ஆயுதமாகிய வைதீக மென்னும் துறையில் புராணம், சாஸ்திரம், மதம், கடவுள் என்பனவாகி யவைகளின் புரட்டுகளை வெளியாக்கவேண்டிய காரியத்துக்கு உழைத்தது அதோடு கூடவே பார்ப்பனர்களது லெளகீகம் என்னும் துறையில் காங்கிரஸ் தேசீயம் சுயராஜ்யம் என்னும் ஆயுதங்களின் புரட்டுகளையும் வெளியாக்க மிகவும் பாடுபட்டுவந்தது. இவ்விருவகைத்தொண்டின்பயனாய் “குடிஅரசு"க்கு பாமர மக்களாலும் படித்தவர்கள் என்பவர்களில் சுயநலவாதிகளாலும் சமயோசிதவாதிகளாலும் பெரிய கஷ்டமும் நஷ்டமும் தொல்லையும் தாங்க முடியாத நிலையில் அனுபவிக்க வேண்டி வந்தது. எப்படி எப்படியோ மகத்தான எதிர்ப்புக்களுக்கிடையும் சொல்ல முடியாத கஷ்ட நஷ்டங்களிடையும் 11 வருஷ காலம் “குடி அரசு” வாழ்ந்து வந்து 12 வது
வயதில் புகுந்துவிட்டது இந்த 11 வருஷ வாழ்வில் “குடி அரசு” சமூகத்துறையில் இதுவரை யாரும் தைரியமாய் வாயால் கூட சொல்லப் பயப்படும்படியான காரியங்கள் பல காரியத்தில் நடைபெறும்படியாகவும் மனப்பான்மையில் ஒருபெரும் புரட்சி உணர்ச்சி உண்டாகும்படியாகவும் செய்து வந்திருக்கிறது. அரசியல் துறையிலும் காங்கிரசின் புரட்டை வெளியாக்க “குடி அரசு” செய்து வந்த வேலையானது கன்யாகுமரி முதல் இமயமலைவரை காங்கிரஸ்காரர்களை திக்குமுக்காடச் செய்து வந்திருப்பதுடன் காங்கிரசார். மக்களை ஏமாற்ற செய்து வந்த சூழ்ச்சிகள், தந்திரங்கள் ஒவ்வொன்றிலும் பக்கா தோல்வியே அடையும்படியாகச் செய்து தோழர் காந்தியார், ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் கூட நிலைமையை சமாளிக்க முடியாமல் “ராஜிநாமா” செய்யும் படியும் “ஓய்வு” எடுத்துக் கொள்ளும்படியும் செய்து வந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அகில இந்திய காங்கிரஸ் கொள்கைகளையும் திட்டங்களையும் கூட நிர்ணயிக்கும்
131 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
விஷயத்தில் பயப்படும் படியான நிலைமையை “குடி அரசு" உண்டாக்கி வந்திருக்கிறது என்று சொல்லலாம். இன்றைய காங்கிரசின் பரிதாபகரமான நிலைக்கு காரணம் “குடி அரசின் சளையா உழைப்பும் பின்வாங்கா முயற்சியுமேயாகும்.
அதுவும் “குடிஅரசு” வின் கொள்கைக்கு “குடி அரசு "வைவிட வேறு உதவிப் பத்திரிகை இல்லை என்கின்ற நிலையில் தன்னந்தனியாக இருந்தே இவ்வளவு காரியமும் செய்து வந்திருக்கிறது. இவ்வளவு காரியத்துக்கும் “குடி அரசு" ஆனது இந்த 11 வருஷ காலமாய் எவ்வளவோ கஷ்டமும், பொருளாதார நஷ்டமும் அடைந்து வந்திருந்தாலும், ஒரு ஒத்தைச் சல்லியாவது பொது ஜனங்களிடமிருந்து வரியோ, உதவித்தொகையோ கேட்காமலும் எதிர்பாராமலும் இருந்துகொண்டே இந்தக் காரியங்களை செய்து வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
இவ்வளவு பெரிய காரியங்கள் “குடி அரசு" பத்திரிகை செய்வதற்கும் அதன் கொள்கைகளைப் பரப்ப பிரசாரத்துக்கும் உதவி செய்துவந்த தோழர்கள் சிலர் உண்டு என்பதோடு அதனை ஆதரித்து வந்த வாசகர்களையும்
நாம் மறந்துவிடவில்லை. அவர்களுக்கு ''குடி அரசு'' நன்றி செலுத்த கடமைப்பட்டதேயாகும்
குடி அரசு - தலையங்கம் - 16.08.1936
குடி அரசு - 1936 (2), 132.
ராஜிநாமா நாடகம்
வேறு என்ன செய்தால் வண்டவாளம் மறையும்?
தோழர்சி. ராஜகோபாலாச்சாரியாரவர்கள் காங்கிரஸ் கமிட்டிகளிலிருந்து ராஜிநாமா கொடுத்துவிட்டதாக 11-8-36௨ ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அவ்வறிக்கையில்
“இன்றிலிருந்து சென்னையிலோ அல்லது வெளியிடங்களிலோ உள்ள எந்தக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என என் நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதிலிருந்து ஆச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் சம்மந்தத்திலிருந்தே விலகிக் கொண்டதாக அர்த்தமாவதில்லை. நிர்வாக பதவிகளிலிருந்து மாத்திரம் விலகிக் கொண்டதாக அர்த்தமாகிறது.
ஆனால் தோழர்காந்தியாரோ இரண்டு வருஷத்துக்கு முன்னதாகவே காங்கிரஸ் நிர்வாக சம்மந்தத்திலிருந்து விலகிக் கொண்டது மாத்திரமல்லாமல் காங்கிரசில் ஒரு நாலணா மெம்பராகக்கூட இருக்க இஷ்டமில்லை என்று விலகிக்கொண்டதாக விளம்பரப்படுத்தினார். அது சமயமும் அவரால் ராஜிநாமாவுக்கு காரணங்கள் காட்டப்பட்டதில் “காங்கிரசிலுள்ள சிலர் நடந்து கொள்ளும் காரியம் தனக்குப் பிடிக்கவில்லை” என்பதையும் ஒரு காரணமாய் காட்டினார் என்றாலும் காங்கிரஸ் பக்தர்கள் என்பவர்களுக்கும் காந்தியாருக்கும் நடந்த “பிரிவு” கட்டமானது நாடகங்களில் காட்டப்படும் பிரிவுக்காட்சிகள் போலவே நடந்ததுடன் அவற்றிற்கு ஏற்பட்ட விளம்பரங்கள். ராஜிநாமா விளம்பரத்தை விட அதிகமாகவே இருந்தது
என்றாலும் அதன் முடிவும் நாடகத்தில் பிரிவினையைக் காட்டும் போது ஒருவருக்கொருவர் சோகரசம் காட்டுவதில் போட்டிபோட்டு விட்டு நாடகம் கலைந்து வெளியில் வந்த பிறகு நாடக பாத்திரங்கள் ஒரே வீட்டில் கூட்டுத் தோழர்கள் போலவும் ஆண் பெண்ணாயிருந்தால் காதலி காதலன். போலவும், எப்படி வாழ்கிறார்களோ அப்படியே காந்தியாரை காங்கிரசில் சம்மந்தப்படுத்துவதும் காந்தியார் காங்கிரசில் சம்பந்தம் வைத்துக் கொள்ளுவதுமாயிருப்பதோடு அவற்றுள் நன்மை ஏற்பட்டால் காந்தியார் முக்கிய பங்கெடுத்துக் கொள்ளுவதும் தீமை ஏற்பட்டால் பொறுப்பில்
133 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இருந்து தப்பித்துக் கொள்ளுவதும் ஆகிய தந்திரங்களுக்கே அந்த காந்தியார் பிரிவு நாடகத்தின் பலன் பயன்பட்டு வருகிறது
ஆனால் தோழர் காந்தியார் தனது பிரிவுக்கும் ராஜிநாமாவுக்கும் என்னதான் காரணம் சொல்லியிருந்தாலும் அவருக்கும் காங்கிரசுக்கும் இருந்து வந்த கொள்கையானது காந்தியார் விலகிக்கொண்டதாய்க் காட்டிக் கொள்வதன் மூலம் கொஞ்சமாவது காந்தியாரின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடியதாய் இருந்தது. ஏனெனில் அவர் மதக் கொள்கைபோல் மதித்திருப்பதாகக் கூறிவந்த ஒத்துழையாமை, சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம் ஆகியவை அரசியலில் தோல்வி அடைந்த பிறகும் அக்கொள்கைகளை காங்கிரஸ் கொள்கையில் இருந்து எடுத்துவிட்ட பிறகும் தோழர் காந்தியார் எந்த முகத்தைக் கொண்டு காங்கிரசிலிருப்பார்? அல்லது தன்னை ஒரு காங்கிரஸ்காரன் என்று எப்படிச் சொல்லிக் கொள்வார்? என்பதை சுயமரியாதை உணர்ச்சியுடன் யோசித்துப் பார்த்தால் எப்படிப் பட்டவர்களுக்கும் அவர் ராஜிநாமா கொடுத்துவிட்டு விலகிக் கொண்டதாய் விளம்பரம் செய்ததும் அதற்கு ஆக காங்கிரஸ் பக்தர்கள் பிரிவு சோகம் காட்டி நடித்ததும் மிகமிக சரியான காரியம் என்றும் மிகவும் சாமர்த்தியமான காரியம் என்றும் தோன்றும் அதே நிலைதான் இன்று தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கும் நேர்ந்து விட்டது. ஆச்சாரியார் அடியோடு காங்கிரஸ் சம்மந்தத்தில் இருந்து விலகிக் கொண்டதாய்க் குறிப்பிடவில்லை என்றாலும் அசம்பிளி தேர்தலில். வெற்றிபெற்ற தோழர் சாமி வெங்கிடாசல செட்டியாரின் கார்ப்பரேஷன் கண்டிராக்ட் சம்மந்தமும் அவர் அசம்பளியில் மோடி திருத்தத்துக்கு ஓட்டு செய்ததன் மூலம் தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்த தன்மையும் மற்ற மெம்பர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாத் தன்மையும் ஆகியவைகள் சேர்ந்து ஆச்சாரியாரை அப்போதே தலைகுனியும்படி செய்துவிட்டன.
ஏனென்றால் ஆச்சாரியாருக்கு அதுசமயம் ஏற்பட்ட கிப்பாத்தெல்லாம் சர்.ஷண்முகத்தைத் தோற்கடித்து சாமி வெங்கிடாசலத்துக்கு வெற்றி உண்டாக்கிய தந்திரத்தாலேயாகும்
அதன் பிறகும் ஜில்லா போர்டு தேர்தல்களிலும், முனிசிபாலிட்டி தேர்தல்களிலும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து அலட்சியம் செய்யப்பட்டவர்களும் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டவர்களுமாகப் பார்த்தே காங்கிரசில் சேர்த்து ஜஸ்டிஸ் கட்சியை தோற்கடிப்பதற்கு அவர்களை ஒரு ஆயுதமாகக் கொண்டு தேர்தல் போர் நடத்தி போலி வெற்றிக் கட்டிடம் கட்டிக்கொண்டே இருந்ததால் அப்போலிக் கட்டிடம் மணல் வீடு சரிவதுபோல் சரிய வேண்டிய தாய்விட்டது. இவை மாத்திரமல்லாமல் அப்படிப்பட்ட தகுதியும் நாணயமும் அற்ற ஆட்களை காங்கிரசில் சேர்த்தபோது நம் போன்றவர்கள் அவர்களின்.
குடி அரசு - 1936 (2), 134
யோக்கியதையை எடுத்துக் காட்டியதற்கு சமாதானமாக “எப்படிபட்ட அயோக்கியனும் காங்கிரசுக்கு நாலணா கொடுத்தால் யோக்கியனாய் விடுவான்" என்றும், காங்கிரசிலும் வகுப்புவாதமில்லையா என்று கேட்டதற்கு “இருந்தாலும் காங்கிரசுக்குள் ஒருவன் வந்து விட்டால் அவனது வகுப்பு வாதம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அதற்கு பலமிருக்கா" தென்றும் ஒரு புதியதீர்க்கதரிசனம் வெளியிட்டு எல்லோருடைய வாயையும் அடக்கினார். ஆகவேஅசம்பளி தேர்தல் “வெற்றியும் ஜில்லாபோற்டு முனிசிபாலிட்டி “வெற்றியும் அதன் எதிரொலியைக் காட்ட வேண்டியதாயிற்று.
அது மாத்திரமல்லாமல் அர்ச்சகர், புரோகிதர் ஆகியவர்கள் ஸ்தல புராணம் சொல்லுவது போல் ஆச்சாரியர் காங்கிரசைப் பற்றிக் கூறி வந்த காங்கிரஸ் பெருமைப் புராணம் அவ்வளவும் பொய்த்துப் போகும்படியாகத் தோழர்கள் டாக்டர் ராஜன், டாக்டர் சாஸ்திரியார் போன்ற பல “அருமைத் தேச பக்தர்கள்”, “மகா தியாகிகள்” என்று விளம்பரப்படுத்தப்பட்ட பார்ப்பனர்கள் அனேகர் ஆரம்ப முதல் ஒவ்வொரு தேர்தல்களிலும் நடந்து கொண்ட நடவடிக்கைகளின் பயனாய் ஆச்சாரியார் மேலும் மேலும் தலையைக் கவிழ்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதோடு நாளைக்கு பொது மக்களுக்கும் வெளி மாகாணங்களில் உள்ள தோழர்களுக்கும் என்ன பதில் சொல்லுவது? எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது? என்கின்ற கஷ்டமான நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் இப்போது ராஜிநாமா கொடுத்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் அவர் இத்தனை நாளாக ராஜிநாமா கொடுக்காமல் காலம் தாட்டி சகித்துக் கொண்டு வந்தது தான் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதாகும் என்பதோடு உண்மையில் ஆச்சாரியாரோ காந்தியாரோ காங்கிரசை விட்டு விலகி விடவும் இல்லை; இவர்கள் விலகினார்கள் என்பதற்கு ஆக காங்கிரசின் எந்தச் சூழ்ச்சியும் தடைப் பட்டுவிடப் போவதுமில்லை. ஆனால் இவர்கள் காங்கிரசில் இருந்தால் பொது மக்கள் இவர்களை சுயமரியாதை அற்றவர்கள் என்று கூறி பரிகாசம் செய்வார்கள். அப்போது இப்படிப்பட்ட சுயமரியாதை அற்றவர்களால் நடத்தப்படும் காங்கிரசுக்கு ஒரு சொண்டு ஏற்படும்.
அன்றியும் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் இதுவரை காங்கிரஸ் கூட்டத்தில் நடந்து வந்த ஊழல்களோடு திருச்சி முனிசிபல் தலைவர் தேர்தல் ஊழல் மிகவும் நாறிப்போய் சகிக்க முடியாத நாற்றமெடுத்து விட்டதால் அதை மறைக்கவும் மக்கள் கவனத்தை அதிலிருந்து வேறு பக்கம் திருப்பவும் ஏதாவது தந்திரம் செய்ய வேண்டியதும் ஆச்சாரியாருக்கு மிகவும் அவசியமாகிவிட்டதானது ராஜிநாமாவுக்கு மற்றொரு காரணமாகும் ஆகவே தோழர் ஆச்சாரியார் தனது தந்திரங்களில் தோற்றுப்போனதை மறைக்கவும் திருச்சி தேர்தல் நாற்றத்தை மாற்றவும் ஏதாவது ஒரு காரியம்
135 ————————————— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
செய்யவேண்டிய அவசியத்துக்காக இந்த ராஜிநாமா நாடகம் அவசியம் நடித்துக் காட்ட வேண்டியதாகவே ஏற்பட்டுவிட்டது. எனவே ஆச்சாரியார் இதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். அதற்கு ஆக நாம் அவரைப் பாராட்ட வேண்டியதே.
எப்படியெனில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் காங்கிரஸ்காரர்களின் புரட்டுகளையும், அயோக்கியத்தனங்களையும்விட, ஐயோ ராஜாஜி ராஜிநாமா செய்துவிட்டாரே என்கின்ற ராஜிநாமா நாடகப் பேச்சு வலுத்து பித்தலாட்ட நாற்றத்தை அடக்கிவிட்டது. அதோடு பத்திரிகைக்காரர்களுக்கும் ஊழல்களுக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாமல் “ஆச்சாரியார் ராஜிநாமாச் செய்துவிட்டாரே அவர் ராஜிநாமாச் செய்யவேண்டியதில்லையே தயவு செய்து புனராலோசனை செய்யும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்'' என்று எழுதிவருவதின் மூலம் பாமர மக்கள் கண்களில் மண்ணைப் போடவும் செளகரியமாகி விட்டது
ஆதலால் காங்கிரசுக்கு குறைவு ஏற்படாமல் இருப்பதற்கு ஆக காங்கிரஸ். நன்மையைக் கோரி இவர்கள் ராஜிநாமா செய்யவேண்டியது அவசியமும் கிரமமுமாய் விட்டது என்று சொல்லுவதில் அருத்தமில்லாமல் இல்லை
தோழர் காந்தியார் விஷயத்தில் அவருடைய உண்மை என்பவை களிலும் பொறுப்பிலும் நமக்கு சந்தேகம் உண்டு. ஆனால் தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் உண்மையிலும் அவருடைய பொறுப்பிலும் கவலை கொண்ட ஊக்கத்திலும் நமக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் அவை நமக்கு அனுகூலமானதா பிரதிகூலமானதா என்பது வேறு விஷயம். அது ஒரு கூட்டத்தாருக்கு அனுகூலமாகவும் மற்றொரு கூட்டத்தாருக்கு பிரதி கூலமாகவும் இருக்கலாம். அதாவது அவரது பொறுப்பு, உண்மை, கவலை கொண்ட ஊக்கம் ஆகியவை நமக்கு அனுகூலமாகக் காட்டி இருந்தால் நாம் அவரை எவ்வளவு தூரம் மெச்சி இருப்போமோ அவ்வளவு தூரம் மெச்சியே நம் எதிரிகளுக்கு காட்டப்பட்டதையும் கருதி நாம் அவரை நிர்ணயிக்க வேண்டும். மக்களை நிர்ணயிப்பவர்களுக்கு ஒரு குணம் வேண்டும். அதாவது தாங்கள் யாரை நிர்ணயிக்கிறார்களோ அவர்களது எண்ணம் நடவடிக்கை ஆகியவைகள் சுயநலத்துக்கு பயன்படத்தக்கதா. அல்லது பிற நலத்துக்கு பயன்படத்தக்கதாயிருக்கிறா என்பதை நடுநிலைமையில் இருந்து பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்போமானால் நமது ஆச்சாரியார் பொதுநலத்துக்கு ஆகவே தனது வாழ்வை ஒப்படைத்தவர். உண்மையான தியாகம் செய்து உண்மையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர். தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் அல்லது காங்கிரஸ் ஊழியர்கள் என்று சொல்லப்படுபவர்களில் தோழர் ஆச்சாரியாரே தனது மேன்மையையும் பணம் வரும்படியையும் விட்டுக் கொடுத்துநஷ்டமும் கஷ்டமும் அனுபவித்தவர்களில் முதன்மையானவராவார்.
மற்றும் பெரும்பாலான விஷயங்களில் ஒரு கூட்டத்தாருடைய நன்மைக்கு
குடி அரசு - 1936 (2), 136
என்று தனது மனச்சாட்சியையும் நேர்மையையும் சிறிதும் லட்சியம் இல்லாமல் தியாகம் செய்தவர். எல்லா தியாகத்தை விட இது மிகவும் பெரிய தியாகமாகும் என்பது நமது அபிப்பிராயம். இது இருக்க-
மற்றபடி நமதுநாட்டில் காங்கிரசிலுள்ளவர்கள் என்பவர்களில் 100-க்கு 99 பேர்கள் காங்கிரசின் பேரால் யோக்கியதையும் பெருமையும் வாழ்க்கையில் நலன் பெற்றவர்களும் அனுபவித்தவர்களுமேயாவார்கள். இன்று காங்கிரசிலுள்ள தோழர்கள் சத்தியமூர்த்தியார் முதல் உபயதுல்லா குப்புசாமி கம்பெனியுள்பட மத்தியில் உள்ள எந்த மனிதரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் வாழ்க்கை காங்கிரசில் சேர்வதற்கு முன் எப்படி யிருந்தது? இப்போது எப்படியிருக்கிறது? என்பதை சிறிது யோசித்தாலும் விளங்காமல் போகாது.
டாக்டர் ராஜன் அவர்கள் வாழ்க்கையும் காங்கிரசின் சம்மந்தத்தின். பயனாகவே ஒன்றுக்கு மூன்று நான்காய் பெருகி இருக்கிறது என்று புள்ளி விவரங்களோடு காட்டுவோம் என்றால் மற்றவர்களைப் பற்றி யோசிப்பானேன்?
அதுபோல் தோழர் ஆச்சாரியார் நிலையை யோசித்தால் அவரது தியாகம் சுலபத்தில் விளங்கிவிடும். ஆனால் அப்படிப்பட்ட - ஒரு பெரிய நற்பயனை விளைவிக்க பயன்படுத்தவேண்டிய தியாகத்தை மிகக் குறுகின காரியத்துக்கு அதாவது ஒருசோம்பேறி வாழ்க்கைக் கூட்டத்தாருக்கு (பார்ப்பனர்களுக்கு) அனுகூலமாகப் பயன்படுத்தியதை புத்திசாலித்தனம் என்று யாரும் சொல்லமாட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல் அவ்வளவு பெரிய தியாகத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் முற்போக்குக்குப் பயன்படுத்தி இருந்தால் ஆச்சாரியார் புத்தரின் ஸ்தானத்தை அடைந்திருக்கக்
கூடும். அப்படிக்கில்லாமல் ஏற்கனவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் முற்போக்குக்கு தடை ஏற்படும்படியாக உபயோகப்படுத்தப் பட்டதானது புத்திசாலித்தனம் என்று யாரும் கூறிவிடமாட்டார்கள். ஆகவே ஆச்சாரியாரின் உண்மை உழைப்பையும் தியாகத்தையும் பிரயோகம் செய்த முறை தவறிவிட்டதே ஒழிய அவைகளின் உண்மையில் யாதொரும் குறையும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம்
வகுப்புவாதம் பிடிக்கவில்லை என்று ஆச்சாரியார் அடிக்கடி கூறிவருவார். அது பார்ப்பனர்கள் மீதுள்ள அன்பினாலேயே ஒழிய உண்மையில் அல்ல என்பது நமது அபிப்பிராயம். அன்றியும் இந்த நாட்டில் மாத்திரம் அல்ல இந்தியாவிலேயே இயற்கையின் வளர்ச்சியால் ஏற்பட்ட வகுப்புவாதமானது தோழர் ஆச்சாரியார் போன்றவர்களின் அறிவும் ஆற்றலும் காந்தியார் போன்றவர்களின் சூழ்ச்சித் திறனும் தப்பான வழியில் செலுத்தப்பட்டதாலேயே அது நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே தவிர
137 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
உண்மையில் வகுப்புவாதத்துக்கு இவ்வளவு பிரக்யாதியும் முக்கியஸ்தமும் ஏற்பட்டு இருக்க நியாயம் இல்லை. மேலும் வகுப்பு வாதத்தை ஒழிப்பதற்கு என்று இவர்களால் கையாளப்பட்ட எல்லா மார்க்கங்களும் கோணல் வழியாகவே இருந்ததினாலும், நாணயத்தை முக்கியமாய் கருதாத முறையிலும் பொது ஜனங்களை முட்டாள்கள் என்று கருதிய முறையிலும் முயற்சிகள் செய்ததாலும் வகுப்புவாதம் மேலும் மேலும் தாண்டவமாட இடமேற்பட்டு வரவேண்டியதாயிற்று, சரியாகவோ தப்பாகவோ அரசியல் பெருக்கத்திற்கு தக்கபடி வகுப்புவாதம் பெருகி வருகிறது. எப்படியோ அது (வகுப்புவாதம்) காங்கிரசிலேயே இன்று தாண்டவமாடுகின்றது. இனி அரசியலில் இடம் பெறாமல் இருக்கப்போவதில்லை. அது மாத்திரமில்லாமல் அது தடுக்கப்படுவதால் பொது வாழ்வில் நன்மையை விட தீமையே அதிகம் ஏற்படவும் போகிறது என்பது நமது உறுதி ஆகையால் தோழர் ஆச்சாரியார் வகுப்புவாதத்தை தடுக்காமல் அது மறைவதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் கண்டுபிடித்தாரானால் இம்மாதிரி ராஜிநாமா கொடுப்பதும் ஓய்வும் எடுக்க வேண்டியதுமான நாடக வாழ்க்கையின் அவசியம் ஒரு நாளும் ஏற்படாது என்பதோடு தேவர், டாக்டர்ராஜன், சாஸ்திரி போன்றவர்களும்இவ்வளவு மதிப்பிடக்கூடியவர்களாக ஆகவும் முடியாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். இல்லையானால் அவர் திரும்பவும் அரசியலுக்கு வந்தே தீர்வார், மறுபடியும் இம்மாதிரி ராஜிநாமா நாடகம் நடத்த வேண்டிய அவசியம் வந்தே தீரும் என்பதை தீர்க்கதரிசனம் போலவே சொல்லுவோம்.
இந்த சமயத்தில் தோழர் ஸ்ரீனீவாசய்யங்காரை தலைவராக்க அவரது சிஷ்யர்கள் முயற்சிப்பதாய் தெரிகிறது. ஸ்ரீனிவாசய்யங்கார் வருவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. அழைக்கும் சிஷ்யர்கள் சுயநலத்தில் பயன்.
ஒன்றும் பெறலாம்; சிலருக்கு நல்ல வேட்டைதான். ஆனால் பொதுவுக்கு பயன் ஏற்படப்போவதில்லை, இல்லை, இல்லை. காங்கிரசின் யோக்கியதை இன்றைய நிலைமையைவிட அதிக நாற்றத்துக்குத்தான் இடம்தரும், தரும்,
தரும். ஆள்வலுவில் நடக்கும் எந்த ஸ்தாபனத்துக்கும் இதுதான் கதி ஆதலால் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்பு உணர்ச்சியை மறைக்க ஏதாவது மார்க்கம் செய்ய தைரியமும் சக்தியும் உடைய தலைவர் ஒருவர் வந்தாலொழிய அல்லது ஆச்சாரியார் அதற்கு மனப்பூர்வமாக நாணயமான வழியில் பாடுபட்டால் ஒழிய தமிழ்நாட்டில் எந்தக் காரியமும் நடைபெறப்போவதில்லை என்பதோடு இருதரப்பிலும் அயோக்கியர்களும், காலிகளும் தேசத்தின் பேரால் வகுப்பு மக்களின் பேரால் பயன் அனுபவித்துக் கொண்டு பொதுநலனைப் பாழாக்கி வரும் நிலைமை ஒரு நாளும் மாறப்போவதில்லை. என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.08.1936
குடி அரசு - 1936 (2), 138
திருச்சி நீதி
டாக்டர் ராஜன் திருச்சி காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராய் முனிசிபல் தேர்தலுக்கு நின்றவர். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஆக தனக்கு இஷ்டமில்லாத நிலையில் தன் மனச்சாட்சிக்கு விரோதமாய் காங்கிரசில் போலிக் கையெழுத்துப்போட்டு முனிசிபல் கவுன்சிலரானவர். இப்படிப்பட்ட இவருக்கு காங்கிரஸ் காரியக்கமிட்டியைப் பற்றி பேச என்ன நியாயம் உண்டு என்பது நமக்கு விளங்கவில்லை
நிற்க, டாக்டர் ராஜனுக்கும் தோழர் தேவருக்கும் ஏற்கனவே சொந்த மனஸ்தாபம் இருப்பதாய் சேர்மென் தோழர் பொன்னய்யா. அவர்களே தனது பேச்சில் சொல்லியிருக்கிறார். எனவே டாக்டர் ராஜன் தேவரிடம் உள்ள தனது சொந்த விரோதத்துக்கு ஆக பழி தீர்த்துக்கொள்ள காங்கிரசுக்குள் தேர்தலின்போது கையெழுத்துப் போட்டு வந்து புகுந்ததுமல்லாமல் மூஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் உள்ள வகுப்பு மாச்சரியத்தை (அதுவும் கொஞ்ச காலமாக மறைந்து போயிருந்ததை) கிளப்பிவிட்டு கிறிஸ்தவர்களையும் கிளப்பிவிட்டு
பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து முனிசிபல் தேர்தலில் தேவரை
பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்துக்கு ஆகவோ ஒருவரை கெடுப்பதற்காகவோ எப்படிப்பட்ட கூடாத காரியத்தையும் செய்வார்கள். என்பதற்கு “தேசபக்தர் என்னும் டாக்டர் ராஜன் காரியமே போதுமான
அத்தாட்சியாகும்
டாக்டர் ராஜனை விட காலம் சென்ற வ.வே.சு. அய்யர் மிகவும் தேசியவாதி என்று விளம்பரப் படுத்தப்பட்டவர். அவர் யோக்கியதை குருகுலத் தகராறின் போது டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் வெளியாக்கப் பட்டுவிட்டது
டாக்டர் ராஜனின் தேசபக்த தன்மை திருச்சி தேர்தலில் வெளியாயிற்று
இனி டாக்டர் சாஸ்திரி என்பவரின் யோக்கியதையோ “தனக்கு இல்லையானால் யாருக்கும் வேண்டாம்” என்பதை பின்பற்றிவிட்டார். அதாவது இரண்டு பேருக்கு ஓட்டுச் செய்வதும் காங்கிரசுக்கு விரோதமாம் (தனக்கு ஓட்டு செய்வது தான் காங்கிரசுக்கு நன்மை என்பதுதான்
139 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பார்ப்பனர் அபிப்பிராயம்) என்பதை டாக்டர் சாஸ்திரியார் காட்டிக்கொண்டார். இப்படிப்பட்ட யோக்கியர்கள் இந்தியாவின் 35 கோடி மக்களுக்கு சிறப்பாக சென்னை மாகாணத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 2% கோடி மக்களுக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பவர்களாம்
இதைவிட ஒரு அதிசயமும் அவமானமுமான காரியம் என்னவென்றால் இவர்களை தலைவர்கள் என்றும், தியாகிகள் என்றும், தேசபக்தர்கள் என்றும், தேசியவாதிகள் என்றும் கூறி வாழவேண்டிய அவசியம் சில பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்பட்டிருக்கிறதே அதுதான் குறிப்பிடத்தக்கதாகும்
இந்த லட்சணத்தில் தோழர் கீனிவாசய்யங்காரை தலைவராகக் கொண்டு வரவேண்டுமாம். இதுவும் சில தமிழ்மக்கள் தமிழ் ரத்த ஓட்டமுள்ள மக்கள் என்பவர்களுடைய தவமாய் இருக்கிறது என்றால் நமது மக்கள் சுயராஜ்யம் என்பதில் எவ்வளவு ஈனத்தனத்தைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி தேவை இல்லை.
ஆகவே ஒரு சிறு தேர்தலுக்கு ஆக திருச்சியில் மறுபடியும் இந்து முஸ்லீம் கலகத்தையும் இந்து கிறிஸ்தவர் என்கின்ற பிரிவையும் உண்டாக்கி வெற்றி பெற்றவர்களும் இந்த நெருக்கடியில் ஸ்ரீனிவாசய்யங்காரை கொண்டுவந்து புகுத்த பாடுபடுபவர்களும் இனி எந்தக் காரியந்தான். செய்யப் பாடுபடமாட்டார்கள் என்பதை ஒவ்வொரு தமிழ் மகனும் யோசிக்க வேண்டுமாய் விரும்புகிறோம். எனவே பார்ப்பன அகராதிப்படியும் காங்கிரஸ் கூலிகள் அகராதிப்படியும் காங்கிரஸ் கட்டுப்பாடு, தேசியம், தியாகம் என்பவைகளுக்கு தங்கள் சுயநலமும், பழிவாங்குதலும், வயிற்றுப்பிழைப்பு மார்க்கமும் அல்லாமல் வேறில்லை என்பதை திருச்சி நீதி நமக்கு விளக்கிவிட்டது
குடி அரசு - கட்டுரை - 16.08.1936
குடி அரசு - 1936 (2), 140
சாரதா சட்டத் திருத்த மசோதா
லண்டனில் ஆதரவு
பிரபலஸ்தர்கன் அறிக்கை
லண்டன், ஆகஸ்டு க.
இந்திய சட்ட சபையில் கொண்டு வரப்பட்டிருக்கும் சாரதா சட்டத் இருத்த மசோதாவை ஆதரித்து, பிரிட்டிஷ் காமண்வெல்த்து
லீக் சார்பாக லார்டு லோதியன், வைகொண்டஸ் ஆஸ்டர் உள்ளிட்ட
9 பிரபலஸ்தர்கள் "லண்டன் டைம்ஸ்' பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த திருத்த மசோதா மிகவும் அவசியமான தென்றும் தற்கால சாரதா சட்டத்தினால் அது விரும்பிய பலன் ஏற்படவில்லையென்றும் இந்தியச் சட்டசபை அந்த மசோதாவை கட்டாயம் நிறைவேற்றி வைக்க வேண்டுமென்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்நெது.
குறிப்பு :
லண்டனில் இருக்கும் பிரபலஸ்தர்கள் சாரதா சட்ட திருத்த மசோதா விஷயத்தில் மிக்க சிரத்தை காட்டுகிறார்கள். ஆனால் இந்தியாவின் ஏக
பிரதிநிதி ஸ்தாபனம் என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸோ, பிரஸ்தாப மசோதா விஷயமாக மெளனஞ் சாதித்தே வருகிறது. இப்பொழுது இந்திய சட்ட சபையில் ராவ் பகதூர் எம்.ஸி. ராஜாவின் ஒடுக்கப்பட்டோர் சிவில் உரிமைப் பாதுகாப்பு மசோதாவும், டாக்டர் தசமுகரின் மாதர் வார்சுரிமை மசோதாவும், பிரஸ்தாப சாரதா சட்டத் திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றும் சமூகச் சீர்திருத்த மசோதாக்கள். தென்னாட்டிலே மாதந் தவறாமல் காங்கிரஸ் மகாநாடுகளும் நாள் தவறாமல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் ஷி மசோதாக்களை ஆதரித்து ஒரு தீர்மானமாவது நிறைவேற்றப்படவில்லை. பத்திரிகைகளில் அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் தோழர் சத்தியமூர்த்தி கூட ஷி மசோதாக்களை ஆதரித்து ஒரு வரி கூட
பத்திரிகைகளுக்கு எழுதவில்லை. ராவ்பகதூர் எம்.சி. ராஜாவின் மசோதாவை
Ul ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆதரிக்கிறீரா அல்லது எதிர்க்கிறீரா என ஒரு ஒடுக்கப்பட்ட சகோதரர் தோழர் சத்தியமூர்த்திக்கு எழுதிய ஒரு பகிரங்கக் கடிதத்துக்கும் தோழர் சத்தியமூர்த்தி இந்நிமிஷம் வரைப் பதிலளிக்கவில்லை. இத்தியாதி காரணங்களினால் காங்கிரஸ் வைதீகர் ஸ்தாபனம் - பார்ப்பனக் கோட்டை என்பது விளங்கவில்லையா?
- ஆசிரியர்
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 16.08.1936
குடி அரசு - 1936 (2), 142
காங்கிரசும் பார்ப்பனீயமும்
அகில இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் கை. ஆயுதமென்று நாம் இந்த பத்து பன்னிரண்டு வருஷகாலமாக கூறி வந்திருக்கிறோம்
காங்கிரசில் மிக்க பக்தியுடனும் உண்மையான கவலையுடனும் ஊக்கத்துடனும் உழைத்து வந்த தோழர் ஈ.வெ.ராமசாமி போன்றவர்கள். இதை- அதாவது காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்பதை - உண்மையாய், சந்தேகமற உணர்ந்ததினாலேயே காங்கிரசை விட்டு வெளியில் வந்து காங்கிரசின் மூலம், பார்ப்பனர்கள். ஆதிக்கம் பெறாமல் இருப்பதற்குத் தங்களாலான முயற்சிகள் எல்லாம் செய்து காங்கிரசையும் பார்ப்பனச் சூழ்ச்சிகளையும் தோற்கடித்தே வந்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களும் காங்கிரசின் பேரால் பிழைக்கிறவர்களும் காங்கிரசின் சார்பில் நடக்கும் பத்திரிகைகளும் பூனையானது கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் உலகோர் கண்களும் மூடப்பட்டிருக்குமென்று கருதிக் கொள்ளும் பாவனை போல் இன்று பார்ப்பனர்கள் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றுவிட்டது, வெற்றிபெற்றுவிட்டது, வெள்ளைக்காரர்கள் கையிலிருந்து ராஜ்யம் பிடுங்கப்பட்டாய் விட்டது, அதோ சுயராஜ்ய தேவி தோன்றி விட்டாள், இதோ பாரதத் தேவி கைவிலங்கு உடைபட்டுவிட்டது என்பன. போன்று புரோகித பாஷையில் மக்களை எவ்வளவுதான் ஏமாற்றி வந்தாலும் கடைசியாக அதனுடைய உண்மையான யோக்கியதை நாம் எதிர்பார்த்த அளவுக்கு மேலாகவே வெளியாகி வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இன்று காங்கிரஸ் யோக்கியதை
இன்று காங்கிரசின் யோக்கியதை இந்த பத்து வருஷத்துக்கு முன். இருந்தது போலவே மிகமிக இழிவான நிலைக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே
“நீ துரோகம் செய்து விட்டாய்"
“நீ காட்டிக் கொடுத்து விட்டாய்"
“நீ கட்டுப்பாட்டை மீறி விட்டாய்"
“நீ யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை"
என்று ஆளுக்காள் கேட்டுக்கொள்ளுவதும் தொண்டர் கூட்டங்களில்
143 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
“நீ திருடி விட்டாய்”
நீ திருடி விட்டாய்”
“நீ என்னைத் தேர்ந்தெடுக்காதது அக்கிரமம்"
நீ சூழ்ச்சி செய்து பதவி பெற்றாய்"
என்பது போன்ற சண்டையும் நிர்வாகக் கமிட்டிக்கும் பொது அங்கத்தினர்களுக்கும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும்,
ஒரு “தலைவரை” வீழ்த்தி மற்றொரு "தலைவருக்கு! முடிசூட்ட சூழ்ச்சிகள் என்பனவாகிய போராட்டங்கள் ஒருபுறமும்,
சர்வாதிகாரியாக இருந்தவருக்கும் (காந்தியாருக்கும்) சர்வாதிகாரி ஆகப் போவதாய் கருதி இருந்தவருக்கும் (பண்டிட் ஜவஹருக்கும்) அவர் அபிப்பிராயம் இவருக்கு பிடிக்காமலும், இவர் அபிப்பிராயம் அவருக்கு
பிடிக்காமலும், ஒருவரை ஒருவர் பழங்கால பெண்மக்கள் போல் ஜாடை பேசி வைது கொள்வதும் ஆன நிலையில் இன்று காங்கிரஸ் இருந்து வருகிறது. இதில் எதை யாரால் மறுக்கக் கூடும் என்று கேட்கிறோம்
இன்று காங்கிரஸ் கொள்கைகள் இவை ஒருபுறம் இருக்க கொள்கைகளிலும் தோழர் காந்தியார். கொள்கைக்கும், தோழர்கள் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியவர்கள் கொள்கைக்கும், பண்டிட் ஜவஹர் கொள்கைக்கும் போட்டியும் வசவும் ஒருபுறமும், தோழர் சத்தியமூர்த்தி கொள்கைக்கும் வேலைக் கமிட்டி கொள்கைக்கும் அபிப்பிராய பேதமும், மூர்த்தியாருக்கும் பண்டித நேருவுக்கும் அடியோடு தலைகீழான அபிப்பிராய பேதமும் இருப்பதோடு அடுத்த சட்டசபை தேர்தலில் மந்திரி பதவி ஏற்பதா மறுப்பதா என்கின்ற சண்டையும், ஏற்றால் அரசியலை நடத்துவதா உடைப்பதா என்ற சண்டையும், உடைக்க முடியுமா என்று ஒருவர் கேட்பதும், நடத்த முடியுமா என்று மற்றவர் கேட்பதும், உடைப்பதானால் சட்டசபைக்கே போக வேண்டியதில்லை (ஏனென்றால் உடைக்க முடியாது) என்று ஒருவர் சொல்வதும், நடத்துவதானால் மந்திரி பதவி ஏற்கவே கூடாது, ஏனென்றால் அது தேசத் துரோகமும், சுயராஜ்யத்துக்கு முட்டுக்கட்டையும், அதிகார வர்க்கத்துக்கு அடிமைபட வேண்டியதுமாகும் என்று ஒருவர் கூறுவதும் இப்படியாக இன்னும் பல விதமாய் பலசரக்குக் கடைக்காரனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் நடந்து கொள்கிறார்கள்.
10 வருஷத்துக்கு முன்னும் இப்படியே
உண்மையிலேயே இதைவிட மோசமான நிலையில் காங்கிரஸ் 27, 28 வருஷங்களில் இருந்தபோது அந்த நிலையை சமாளிக்க சைமன் பகிஷ்கார நாடகமும் உப்பு சத்தியாக்கிரக நாடகமும் நடத்தியதின் மூலம்
குடி அரசு - 1936 (2), 144
S அளவுக்கு பாமர மக்களை ஏமாற்ற முடிந்த தென்றாலும் அவ்விரண்டிலும் பெரும் தோல்வி அடைந்ததின் பயணய் சட்டமறுப்பை நிறுத்திக் கொள்ளவும் சர்க்காருக்கு எழுதிக் கொடுக்கவும், பகிஷ்காரம் செய்த கமிஷனான சைமன் கமிஷன்ரிப்போர்ட்டின் பரிகலைனைக் கூடமாகியவட்டமேஜை நடவடிக்கைக்குப் போய் கலந்து கொள்ளவும், அதிலும் தோல்விபெற்று வந்து காங்கிரசானது சட்ட மறுப்பையும் சட்ட மீறுதலையும் நிறுத்திக் கொண்டது என்று தீர்மானம் செய்ததுமான காரியங்கள் ஏற்பட்டதோடு இந்த அவமானத்தைத் தாங்க சக்தி இல்லாததால் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிக் கொண்டதாக
நடித்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு தோல்வி ஏற்பட்டு விட்டது
திட்டங்கள் தோல்வி.
இவைகள் எல்லாவற்றையும் விட காந்தியாரின் முதல் திட்டங்களின் தீண்டாமை விலக்கும், இந்து முஸ்லீம் ஒற்றுமையும் காலங் குறிப்பிடாமல் தள்ளிப் போடவும், அதுவும் தீண்டாமை விலக்கும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் ஏற்படாமல் சுயராஜ்யம் வராது என்று சொன்ன காந்தியாரின். திருவாக்கே சுயராஜ்யம் கிடைத்த பிறகுதான் தீண்டாமையை ஒழிக்கவும் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படுத்தவும் முடியும் என்று சொல்லவுமான நிலைமையும் ஏற்பட்டுவிட்டது.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
இவற்றை எல்லாவற்றையும் விட முக்கியமானவிஷயம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேசீபத்துக்கு விரோதம் என்றும் அது ஒருநாளும் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் சொன்ன காங்கிரசும் காந்தியாரும் வட்டமேஜை மகாநாட்டிலேயே “சரித்திர சம்பந்தமான காரணங்கொண்டு முஸ்லீம்களுக்கு மாத்திரம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கலாம்” என்று ஒப்புக் கொண்டதும்,
தீண்டாப்படாதார் என்பவர்கள் விஷயத்தில் கண்டிப்பாய் வகுப்பு பிரதிநிதித்துவம் கொடுக்கக்கூடாது என்றும், ஸ்தானம் ஒதுக்கி வைப்பதைக் கூடச்சம்மதிக்க முடியாது என்றும், அப்படி மீறி ஏதாவது கொடுக்கப்படுமானால்.
“நான் செத்துப்போவேன்" என்றும் சொன்ன காந்தியாரே தீண்டப்படாதாரின் வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொண்டு முறைகளை மாத்திரம் மாற்றி கிட்டத்தட்ட, ஒன்றுக்கு இரண்டு பங்காக ஸ்தானங்கள் கொடுத்து யாரை தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அல்ல என்று காந்தியார் சொன்னாரோ அவர்களையே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக வலியக் கூப்பிட்டு ஏற்றுக்கொண்டு ராஜி செய்து கொள்ளவேண்டிய நிலையும் ஏற்பட்டுவிட்டது.
16 வருஷ நடவடிக்கை
இனி காங்கிரசுக்காரர்கள் அவர்களுடைய பதினாறு வருஷ ஆட்சியில்.
3 கோடி ரூபாய் செலவில் 3 லட்சம் பேர் அடிபட்டும் சிறை சென்றதும்
145 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கஷ்டப்பட்டார்கள் என்று சொல்லப்படும் தியாகத்தாலும் எந்த காரியத்தில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார்கள் என்று பார்த்தால் தாங்கள் முயற்சித்த எல்லாக் காரியங்களிலும் 100க்கு 99க்கு குறைவில்லாமல் தோல்வியும் அவமானமும் அடையவில்லை என்று சொல்ல முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்
இப்படிப்பட்ட காங்கிரஸ் ஸ்தாபனமும், அதன் தலைவர்கள், தொண்டர்கள் என்பவர்களும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களையும் சுயமரியாதைக் காரர்களையும் வேண்டுமென்றே மான வெட்கமில்லாத கூலிகளையும், வாழ்வுக்கு யோக்கியமான வழியில்லாத காலிகளையும் விட்டு கேவலமாகப் பேசச் செய்வதின் மூலமும் கூலிப் பத்திரிகைக்கு பிச்சை கொடுத்து அற்பத்தனமாக வைது எழுதச் செய்வதின் மூலமும் காங்கிரசின் பேரால். தங்கள் சுயநலத்துக்கு பயன் அடைந்து விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டு அவ்வேலையில் இப்போது தீவிரமாக இறங்கிவிட்டார்கள்.
மாய வெற்றி!
இந்தக் காரியத்திலும் மற்றும் எந்தக் கொள்கையிலும் வெற்றி பெறாமல் தோல்வியும் அவமானமும் இதுவரை காங்கிரசானது அடைந்து வந்திருந்தும் கடைசி மூச்சாக மனதறிந்த பொய்யையும் யாவரும் வெறுக்கும் இழிகுணங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசம்பளி தேர்தலையும் ஸ்தல ஸ்தாபன தேர்தலையும் நடத்தி தற்கால வெற்றி என்னும் மாய வெற்றியை அடைந்தார்கள். அந்த மாய வெற்றியானது இன்று காங்கிரசை நாற வைத்து இந்தியா பூராவும் காங்கிரசையும் பல பிரமுகர்களையும் பற்றி காறி உமிழும்படியான நிலைமையை உண்டாக்கிவிட்டது எங்கும் சிரிப்பாய் சிரிக்கப்படுகிறது. இதைக் கண்டு ஆச்சாரியார் ஒரு புறம், அய்யர் ஒரு புறம், அய்யங்கார் ஒரு புறம், அம்மங்கார் ஒரு புறம், சாஸ்திரி ஒரு புறம், சர்மா ஒரு புறம் என்பதாக பார்ப்பனக் கூட்டம் ராஜிநாமா ராஜிநாமா என்னும் நெருப்பைக் கக்கிக் கொண்டு பிசாசுகள் போல் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகின்றன. காங்கிரஸ் பத்திரிகைகள் துரோகம் செய்பவர்களை கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டுமென்கின்கின்றன. கட்டுப்பாட்டுக்கு மீறியவர்களை கடுந்தண்டனை விதித்து புத்தி கற்பிக்க வேண்டும் என்கின்றன.
தவைவர்கள்
தலைவர்கள் என்பவர்களோ “அனுபோகமில்லாமலும் ஆராய்ச்சி இல்லாமலும் அவசரப்பட்டு செய்து விட்ட காரியங்களுக்காக நாம் வருந்துவதில் பிரயோஜனம் இல்லை. இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று சொல்லிக் கொள்ள வேண்டியதாயிற்று. இதன் பயனாய் இனி வரப்போகும் தேர்தலுக்கு சில இடங்களில் காங்கிரசு போட்டி போடக்கூடாது என்று தலைவர்கள் சொல்லியிருந்தாலும் தேர்தல் கூலிகளாய் இருந்து காலித்தனம் செய்து வயிறு வளர்க்க வேண்டிய ஆட்கள் போட்டி
குடி அரசு - 1936 (2), 146
போடாவிட்டால் சோற்றுக்கு வழி என்ன என்று சொல்லிக் கொண்டு “காங்கிரசு தேர்தலில் போட்டிபோட வேண்டும்” என்று தீர்மானித்து பணம் வாங்கிக் கொண்டு ஆட்களை நிறுத்தி கூலிப்பிரசாரம் செய்யத் தொடங்குகின்றனர்.
சில இடங்களில் உள்ள குட்டித் தலைவர்கள் “நிலைமை சரியாக இல்லாததால் போட்டி போடுவதில்லை'' என்று தீர்மானிக்கின்றனர். சில இடங்களில் உங்களுக்கு இவ்வளவு ஸ்தானம் எடுத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு இவ்வளவு ஸ்தானம் கொடுங்கள் என்று ராஜிப் பிச்சைக்கு புறப்பட்டு விட்டனர். ஆகவே காங்கிரஸ் ஸ்தல ஸ்தாபனக் கொள்கையும் அது வெற்றி பெற்ற யோக்கியதையும் விளங்கிவிட்டன.
மற்றபடி காங்கிரசின் யோக்கியதை விளங்கவும் அதிலுள்ள ஆட்களின் நாணயம், நல்லெண்ணம் விளங்கவும் இனி என்ன பரீகை்ஷ வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
ஜஸ்டிஸ் சுயமரியாதை கட்சிகளை வைவது
இந்த நிலையில் ஜஸ்டிஸ் சுயமரியாதை இயக்கங்களைப் பற்றி காலிகளும் கூலிகளும் குரைப்பதின் கருத்து என்ன? இவர்கள் குரைப்புக்கு அதாரம் என்ன என்பதைப் பற்றி சிறிது யோசிக்க விரும்புகிறோம்
சென்ற வாரத்தில் அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு அரசியல் மகாநாடு என்பதில் அதன் தலைவர்கள் என்பவர்களில் ஒருவர் தனது உரையை வாசிக்கையில் ஜஸ்டிஸ் கட்சியை தேசத்துரோகக் கட்சி என்று ஆரம்பித்து அது செய்த துரோகம் என்று ஒவ்வொன்றாக சொல்லி வருகையில் ஜஸ்டிஸ் கட்சியார்.
1. “தீக்குச்சி வரி போட்டார்கள்:
2. வருமான வரி 2000 ரூபாய்க்கு இருந்ததை மாற்றி 1000க்கு வரிபோடும்படி செய்தார்கள்
3
புகையிலைக்கு வரி போட்டார்கள்.
கந்தாயம் குறைக்கவில்லை.
4
5. தாலூகா போர்டை கலைத்து ஜில்லா போர்டை இரண்டாக்குகிறார்கள்.
6. பூமி வரி குறைக்கவில்லை
7. சாமி இல்லை என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு போகிறார்கள்” என்றெல்லாம் எழுதி படித்திருக்கிறார்கள்
(இது 17-8-36-ந் தேதி தினமணி 4 வது பக்கம் 2வது கலத்தில் காணப்படுகிறது.)
147 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மற்றும் பல மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் இதுபோலவே முட்டாள்தனமாக பேசிவருகிறார்கள். இவற்றை பாமர மக்களும் சிலராவது நம்பிவிடுகிறார்கள்.
காங்கிரஸ்காரர்களுக்கு அரசியல் ஞானம் இல்லை
காங்கிரசுக்காரருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பதற்கும், யோக்கியப் பொறுப்பும் நாணயமும் இல்லை என்பதற்கும் இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.
தீக்குச்சி வரியும் வருமான வரியும் இந்தியா கவர்மெண்டைச் சேர்ந்தது, அங்கு “மெஜாரிட்டியாய்” இருப்பவர்கள் காங்கிரஸ்காரர்கள் ஆதலால் அதற்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் சம்மந்தமில்லை. இன்று அவர்கள் அசெம்பளியிலும் இல்லை. ஏதாவது ஒரு காலத்தில் இருந்திருந்தாலும் அவர்கள் மெஜாரிட்டியாய் இருந்ததும் இல்லை.
புகையிலைக்கு வரி போடவே இல்லை. சுங்கத்தை எடுத்ததால் சர்க்காருக்கு ஏற்பட்ட வரி நஷ்டத்தை வஜா செய்ய மக்களுக்கு தேவை
யில்லாததும் கெடுதி தரத்தக்கதுமான புகையிலையை ஒழிப்பதற்கு அதை விரும்புகிறவர்களிடம் தண்டம் வசூலிப்பது போல் அதற்கு வரிபோட சென்னை சர்க்கார் சென்ற வருஷம் விரும்பினார்கள்.
அது ஒதுக்கப்பட்ட இலாக்காச் சம்மந்தமானது; ஜஸ்டிஸ் மந்திரிகளுக்கு இதன் மீது ஆதிக்கமில்லை; அப்படி இருந்தும் சர்க்காருக்கு தற்காலம் அந்த வரி போட வேண்டிய அவசியமில்லை என்பதை எடுத்துக் காட்டிபுகையிலை வரியை நிறுத்திவிட்டார்கள்.
தாலுக்கா போர்ட்டை எடுத்ததற்கும் ஜில்லா போர்டை பிரித்ததற்கும் அதிகாரங்கள் சில குறைத்ததற்கும் ஜஸ்டிஸ் கட்சி மீது குறை கூறுகிறார்.
“தாலுக்கா போர்டு மாத்திரமல்ல, ஜில்லா போர்டு முனிசிபாலிட்டி எல்லாவற்றையுமே எடுத்து அதன் அதிகாரங்கள் பூராவையும் கலக்டர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும்” என்று தோழர் ராஜகோபாலாச்சாரியாரே போன மாதம் சொல்லிவிட்டார். அப்போது வாலை அடக்கிக் கொண்டு. இருந்த இந்த ஸ்தல ஸ்தாபன சுயராஜ்யவாதிகள் இப்போது ஜஸ்டிஸ் கட்சியைக் குரைப்பதின் கருத்து என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
பணம் இல்லாததால் தாலூக்கா போர்டுகள் எடுக்கப்பட்டன என்பது யாவருக்கும் தெரியும். அப்போதே ஜில்லா போர்டுகளும் பிரிக்கப்படும் என்று சொல்லியே கலைக்கப்பட்டது. இப்போதும் பண செளகரியம் பார்த்தே ஜில்லா போர்டுகள் பிரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் தப்பு எங்கே இருக்கிறது என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1936 (2), 148
ஜஸ்டிஸ் கட்சி பூமி வரி குறைத்தது
பூமிவரி(கந்தாயம்) குறைக்கவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? 100க்கு 25 வீதம் குறைக்க வேண்டும் என்றே ஜஸ்டிஸ்காரர்கள் ஆசைப் பட்டார்கள். சர்க்காரார் வரவு செலவு சரிக்கட்டாது என்கின்ற காரணத்தால். அடியோடு குறைக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கணக்குகள் பார்த்து சர்க்கரைவெகுதூரம் ஒப்பச் செய்து ராஜி முறையில் 12% வீதமாவது குறைக்க சர்க்காரை ஒப்புக்கொள்ளும்படி செய்திருக்கிறார்கள். அதுவும் தங்களுக்கு அதிகாரமில்லாத இனத்தில் பிரவேசித்து இவ்வளவு செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ்காரர்கள் இவ்வளவாவது செய்தார்கள். ஆனால் காங்கிரசுக்காரர்கள் அசம்பிளியில் ஒருசிறு தூசி அளவு பயன்படும்படியான. வரி குறைப்புக் காரியத்தைச் செய்தார்களா என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களால் எந்த வரி குறைக்கப்பட்டது? எந்த சட்டம் மாறுதலையடைந்தது? என்ன சட்டம் செய்யப்பட்டது? வீணாக அறிவும் அரசியல் ஞானமும் இல்லாமல் குரைப்பதில் பயன் என்ன என்பதை காங்கிரஸ் தலைவர்களும் உணராமல் அவர்களது கூலிகளையும் அடக்காமல், இம்மாதிரி அற்பத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பேசும்படி செய்வதில் என்ன பயன் என்று கேட்கின்றோம். தேசீய பத்திரிகைகள் என்பவை கூட ஒன்று தவறாமல் இவ்வித தொழிலில் முக்கிய பங்கெடுப்பதும் நமக்குப் புரியவில்லை.
இவற்றிற்கு காரணம் எல்லாம் சுயராஜ்யத்துக்கு ஆக செய்வது என்று இருந்தால் இந்த முட்டாள்தனத்தையும், அற்பத்தனத்தையும் மன்னிக்கலாம். ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு என்று சொன்னால் இவைகள் எப்படி மன்னிக்கப்படும்
இது பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்பு பேதம் காரணமாக பார்பனர்கள் செய்யும் இழிவான காரியம் என்றே சொல்லுவோம்; முக்காலும் சொல்லுவோம். உதாரணங்களோடு புள்ளிவிவர ஆதாரங்களோடு சொல்லுவோம். அவையாவன 3-
1. அசம்பிளி தேர்தலில் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும் சத்தியமூர்த்தியாரும் ஓட்டுப் பிரசாரம் செய்யும்போது “இந்த தேர்தல்களில் காங்கிரசு ஓட்டுக்கேட்பதானது சர்க்காரோடு சண்டை பிடிக்கவே ஒழிய ஜஸ்டிஸ் கட்சியோடு போட்டி போடுவதற்கு அல்ல!" என்று ஓட்டுக்கேட்டு வாங்கிக்கொண்டு வகுப்பு வித்தியாசம் பாராமல் அனேகர் ஓட்டுச் செய்த பிறகு வெற்றிபெற்றவுடன் ஜஸ்டிஸ் கட்சியை 1000 கெஜ ஆழத்தில் வெட்டி புதைக்கவேண்டும் என்றால் இது பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் தகராறுக்கு காங்கிரசையும் சர்க்காரை ஒழிப்பது என்பதையும் பயன்படுத்திக்கொள்ளும் சூழ்ச்சியா அல்லவா. என்று கேட்கின்றோம்
1499 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
2. வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளுகிற பார்ப்பனர்களையும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படும் என்று ஜஸ்டிஸ் கட்சி தீர்மானித்த பிறகும் அதை வகுப்புத் துவேஷக் கட்சி என்று சொல்லுவது பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற கருத்தில் சதிசெய்யும் சூழ்ச்சியா அல்லவா என்று கேட்கின்றோம்
3. தமிழ்நாடு காங்கிரசு தலைவர் ஆனைமலை வெள்ளைக்காரரிடம் சுயராஜ்யம் என்பதற்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்துதான் என்றும், பூரண சுயராஜ்யம் என்றாலும் வெள்ளைக்காரருடன் ராஜி செய்து கொண்டு நிர்வாகம் நடத்துவது தான் என்றும் ஆனைமலையில் தோட்டக்கார முதலாளிகளிடம் வாக்கு கொடுத்த பிறகும் அதே கொள்கையைக் கொண்டிருக்கிற ஜஸ்டிஸ் கட்சியை தேசத்துரோகக் கட்சியென்றும், பிற்போக்கான கட்சி என்றும் பார்ப்பனர்கள் சொல்லுவதனால் இது காங்கிரசுக்கு ஆகவா, பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆகவா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
4. காந்தியார் அராஜகர் என்றும், நாட்டுக்கு கேடு செய்பவர் என்றும் சொல்லும் தோழர் மகாகனம் சீனிவாசசாஸ்திரியையும், அவர் கட்சியாகிய குடியேற்ற நாட்டந்தஸ்து கேட்கும் மிதவாதக் கட்சியையும், டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரியார் ராஜவிஸ்வாச கொள்கையும் ஒத்துழைப்புக் கொள்கையும் கொண்ட மிதவாதக் கட்சியையும் பற்றி ஒன்றும் பேசாமல் அவர்களோடு ராஜி செய்து கொள்ளவும் முயற்சித்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் பிற்போக்குக் கட்சி, ராஜ விஸ்வாசக் கட்சி, சர்க்கார் தாசர் கட்சி என்றால் இதில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்புத் துவேஷம் இல்லாமல் தேசியமோ, தேசாபிமானமோ வேறு ஏதாவதோ இருக்கிறதா என்று கேட்கின்றோம்.
5. காங்கிரசுக்காரர்களும் சட்டசபைக்குப் போவதும் அங்கு போய் ராஜ விஸ்வாசம், ராஜபக்தி, சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடத்தல் ஆகியவைகளுக்குப் பிரமாணம் செய்து விட்டுத் தாங்கள் மாத்திரம் தேசிய வீரர்கள் என்றும் ஜஸ்டிஸ்காரர்கள் (அதுபோல் செய்யும் பார்ப்பனரல்லாதார் கட்சியாரை) ராஜ பக்தர்கள் என்றும் பார்ப்பனர்கள் கூறுவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணம் அல்லாமல் மற்றபடி தேசபக்தியாலா, பாரதமாதா புத்திரர் என்ற சகோதர வாஞ்சையாலா என்று கேட்கின்றோம்
இப்படி ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லிக்கொண்டேபோகலாம். ஆதலால் காங்கிரசானது பார்ப்பன ஆதிக்கத்துக்கு இருக்கும் ஸ்தாபனமே ஒழிய தேச நலத்துக்கோ, அரசியல் உரிமைக்கோ இல்லை என்பதை பொதுமக்கள் உணர வேண்டுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 23.08.1936
குடி அரசு - 1936 (2), 150
1926 - ஹூ நாடகமே இப்போதும்
*“வெவியேறிய நேருவின் வீரமொழி**
1924-ம் வருஷம் காங்கிரசுக்காரர்கள் இன்றையப் பித்தலாட்டம் போலவே பித்தலாட்டம் செய்து இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு ஒரு வேலையும் செய்ய முடியாமல் 3வருஷ காலம் இருந்துவிட்டு சட்டசபை காலாவதி முடிய ஒரு வாரம் இருக்கும் போது 'சட்டசபைகளை விட்டு வெளியேறுகிறோம்'' என்று சொல்லிக்கொண்டு “வெளியில் வந்து” விட்டார்கள் என்பது யாவரும் அறிந்திருக்கலாம்
ஆனால் அந்தவெளியேறுகிற காலம் வரையில் சட்டசபை கமிட்டிகளில் அங்கம் பெற்றார்கள், பெரும் சம்பளம் பெற்றார்கள், சட்டசபை நடவடிக்கை களுக்கு விகிதாச்சார பங்கும் பெற்றார்கள். இவ்வளவும் பெற்று 3 வருஷம் வாழ்ந்துவிட்டு கடைசியாக போலி வெளியேற்றம் செய்தபோது தோழர் பண்டிட் மோதிலால் நேரு அவர்கள் என்ன சொன்னார் என்பதை சற்று யோகித்துப்பார்க்கும்படி இப்போது வெளியிடுகிறோம்
வெவலியேறிய நேருவின் வீரமொழி
சர்க்காரை நாங்கள் பயமுறுத்தவில்லை.
1
சர்க்காருக்கு மகத்தான சக்தியும் அதிகாரங்களும் உண்டு
2
சர்க்காரை எதிர்க்கும் பலம் எங்களுக்கில்லை:
3
4. தேசத்தில் உள்ள சமூக வேற்றுமையால் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை.
5. ஆதலால் சட்ட மறுப்புச் செய்ய எங்களால் ஆகாது
6. இந்த நிலைமையில் சட்டசபைக்குப் போவது பயனற்ற காரியம்
7 இவ்வளவு பலமுள்ள பெரிய சர்க்காரை வெளியேறுவதாலும் ஒழித்துவிட நாங்கள் முயற்சிக்கவில்லை.
8. நாங்கள் ஆசைப்பட்டாலும் நடக்கிற காரியமல்ல.
9. வெகுநாளைக்கு முன்னமே நாங்கள் வெளியேறி இருக்க வேண்டும்.
10. நாங்கள் சர்க்கார் தந்திரத்தால் ஏமாந்து உள்ளே வந்தோம்
11. இனி நாங்கள் இங்கு இருப்பதில் சிறிதும் பிரயோஜனமில்லை.
151 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
12. இந்த பொம்மை சபைகளில் எங்களுக்கு வேலை இல்லை.
13. தேசத்தின் மானத்தைக் காப்பாற்றவே வெளியில் போகிறோம்"
என்று சொல்லி இருக்கிறார். இவை 21-3-26-ந் தேதி “குடி அரசிலும் அந்த வார இதர தினசரி பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட இவர்கள் இப்போது சட்டசபைக்கு போகிறேன். என்பதிலும், அங்குபோய் சர்க்காருக்கு முட்டுக்கட்டை போடுவோம் என்பதிலும் அர்த்தமுண்டா என்று கேட்கின்றோம். சமதர்மத்தையும் பொதுஉடமையையும் பேசும் குட்டி நேரு அவர்கள் சட்டசபைக்குப் போய் சர்க்காரை சாதித்து விடலாம் என்பாரானால் இவருக்கு ராஜீயஞானம் இருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்? இவருக்கு ராஜீய ஞானம் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் இவர் தந்தை பெரிய நேருவுக்கு ராஜீய ஞானம் இல்லை என்று தானே அர்த்தமாகும். ஆகவே இன்று காங்கிரசுக்காரர்கள் அரசியல். தத்துவத்தையோ தேச நலத்தையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் எப்படியாவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அரசியல் சம்மந்தத்தில் இருந்து துரத்தி அடித்து பார்ப்பனர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்பதல்லாமல் வேறு குறிப்பு ஒன்றுமே இல்லை என்று உறுதி கூறுவோம்.
ஸ்தல ஸ்தாபனங்கள்
காங்கிரசுக்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசிப்பது கூடாது என்று பலநாள் பேசிவிட்டு பார்ப்பனரல்லாதாருக்குள் சில்லறை மனஸ்தாபம்
ஏற்பட்டஉடன் இதுதான் சமயம் என்று அவர்களுக்குள் கட்சிகளை ஏற்படுத்தி ஒரு கூட்டத்தாரை சுவாதீனம் செய்து, அவர்களை காங்கிரசில் சேர்த்து, அவர்களுக்கு ஸ்தானங்கள் சம்பாதித்துக்கொடுத்து கலகம் உண்டாக்கியதன். பயனை இன்று காங்கிரசார் அனுபவிக்கிறார்கள். இப்பொழுது தான் காங்கிரசுக்காரர்களுக்கு ஞானம் உதித்ததுபோல் வேஷம் போட்டு, “இனிஸ்தலஸ்தாபனங்களில் காங்கிரசுக்காரர்கள் பிரவேசிக்கக் கூடாது" என்று பேசுகிறார்கள். இது முன்பு 1924ல் சுயராஜ்யக் கட்சி சட்டசபைக்குப்போய். அங்கு ஏமாற்றமடைந்த பின் வெளியேறினதாக நாடகம் நடித்தது போலவே முடிந்து இருக்கிறது. பண்டித மோதிலால் நேரு அவர்கள் 1926ல் “வெளியேறிய போது சர்க்கார் இருந்த நிலைமையை விட, சிரதிருத்தம் இருந்த நிலைமையைவிட, மக்கள் சமூகம் இருந்த நிலைமையை விட, காங்கிரஸ் இருந்த நிலைமையைவிட இப்போது எந்த அம்சத்தில் எந்த நிலைமை மாற்றமடைந்திருக்கிறது என்று யோசித்தால் பார்ப்பனர்கள் எப்படியாவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தாரின் முன்னேற்றத்தை அடக்கி ஒழித்து ராமராஜ்யம் அல்லது இந்திய அரசர் காலத்திய நீதியையும் ஆதிக்கத்தையும் நிலை நாட்டி மேன்மைபெற முயற்சிக்கிறார்கள் என்பது யாருக்கும் விளங்காமல் போகாது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.08.1936
குடி அரசு - 1936 (2), 152.
காங்கிரஸ் கட்டுப்பாடு
காங்கிரஸ் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று புலம்பிக் கொண்டு காங்கிரஸ்காரர் வெகு கட்டுப்பாட்டுக்காரர்கள் போல் பறை அடித்துக் கொள்ளுகிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் எதில் கட்டுப்பாடாக இருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் உணரவேண்டுகிறோம்.
காங்கிரஸ் மெம்பர் முறையில் கட்டுப்பாடுண்டா?
கதரில் கட்டுப்பாடுண்டா?
மெம்பர்கள் சேர்ப்பதில் கட்டுப்பாடுண்டா?
அன்று; அன்று. அவசரத்துக்கு ஆள் பிடிப்பதுபோல் யாரையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.
மெம்பர்கள் நாணயத்தில் கட்டுப்பாடு இல்லை.
அதைப்பற்றி விசாரிப்பதில், கவலை கொள்ளுவதில் கட்டுப்பாடு
இல்லை.
தோழர் டாக்டர் ராஜன் காங்கிரஸ் கட்டளையை மீறி நடந்துவிட்டு காங்கிரஸ் நன்மைக்கு ஆகவே மீறினேன் என்றார். டாக்டர் டி.எஸ்.எஸ்.சாஸ்திரியும் காங்கிரஸ் கட்டளையை மீறிவிட்டு காங்கிரஸ் நன்மையை உத்தேசித்தே அப்படி செய்தேன் என்கிறார்.
ஸ்தல காங்கிரஸ் கமிட்டி தலைவர், மேற்படி இருவரும் காங்கிரஸ் கட்டுப்பாட்டை மீறிவிட்டார்கள் என்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வைஸ் பிரசிடெண்டும்காரியதரிசியும்டாக்டர் ராஜன்செய்தது அக்கிரமம் என்கிறார்கள்.
பத்திரிகைகள் எல்லாம் ஒரே அபிப்பிராயமாக டாக்டர்கள் ராஜனையும் சாஸ்திரியையும் குற்றம் சாட்டுகின்றன. அப்படி எல்லாம் இருந்தும் டாக்டர்கள் ராஜனும் சாஸ்திரியும் கட்டுப்பாட்டுப்படி நடந்ததாகவும் காங்கிரசின் நன்மைக்கு ஏற்ற காரியமே செய்ததாகவும் சொல்லுகிறார்கள்.
இதையெல்லாம் விட ஒரு அதிசயம் என்னவென்றால் காங்கிரஸ் கட்டளையை மீறி சேர்மென் ஸ்தானத்துக்கு அபேக்ஷகராய் நின்று வெற்றிபெற்ற தோழர் பொன்னையாவும் தான் கட்டுப்பாட்டுக்கு உடன்பட்டு
153 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கட்டுப்பாட்டின்படி நடந்ததாகவே சொல்லுகிறார். ஆகவே டாக்டர்கள்.
கட்டுப்பாட்டுக்கென்றே, சிறப்பாக பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டிற்கென்றே வேறு அகராதி இருப்பதாகத் தெரிகின்றது
இனி என்ன செய்தால்தான் கட்டுப்பாட்டை மீறியதாகும் என்பது
நமக்கு விளங்கவில்லை.
மனுதர்ம சாஸ்திரத்தில் எப்படி பார்ப்பனன் எவ்வளவு அயோக்கிய னாகவும், ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மீறியவனாகவும் இருந்தாலும் அக்காரணத்தால் அவன் பார்ப்பனத் தன்மையில் இருந்து விலகினவனாக மாட்டான் என்று கூறப்பட்டிருக்கிறதோ, அதேபோல் பார்ப்பனர் காங்கிரசில் எவ்வளவுதான் அக்கிரமமாக, அயோக்கியமாக, துரோகமாக நடந்து கொண்டாலும் காங்கிரஸ்காரராகவே, காங்கிரசுக்கு ஆக உயிர் வாழ்பவராகவே மதிக்கப்படுவார்கள் என்கின்ற தர்மம் இன்று காங்கிரசிலும் இருந்து வருகின்றது.
பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதையும் மானமும் அறிவும் ஏற்படும் வரை மதத்திலும் அரசியலிலும் மனுதர்மம்தான் தாண்டவமாடும் என்பதற்கு இது ஒரு பெரிய அத்தாட்சியாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23 .08.1936
குடி அரசு - 1936 (2), 154
யொனள்ளாச்சி, கோவை
சுற்றுப் பிரயாணம்
தலைவர் அவர்களே! தோழர்களே!
அடுத்த வருஷ ஆரம்பத்தில் அமுலுக்கு வரப்போகும் சீர்திருத்தத்தில் பல பதவிகளும், அதிகாரங்களும் கொழுத்த சம்பளங்களும் கிடைக்கப் போகின்றன என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை.
அவற்றை யார் அனுபவிப்பது என்பது பார்ப்பனர்கள் மாத்திரமா அல்லது எல்லா மத வகுப்பாரும் விகிதாச்சாரமா என்பதுதான் இப்போது அரசியல் கிளர்ச்சியாக இருந்து வருகிறது. அதிலும் இத்தனை நாள் மகா தியாகிகள் போல் நடித்து வந்த காங்கிரஸ்காரர்கள் இப்போது புது அரசியல்
சீர்திருத்தம் வெளியானவுடன் எப்படியாவது அந்தப் பதவிகளைப் பெற்று அதிகாரம் செய்து சம்பளங்களை அடையவேண்டும் என்கின்ற ஆத்திரத்தில் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள்.
என்ன செய்தாவது எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றியாவது பதவி பெறவேண்டியது இன்று காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கையாக இருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் பதவி மோகத்தில் தங்களுடைய கொள்கை, நாணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டு “பிசாசு"கள்
போல் பதவி ஆசைபிடித்து அலைகிறார்கள்.
உத்தியோகத்துக்கும் பதவிக்கும் சம்பளத்துக்கும் ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் நாணயத்துடன் ஆசைப்படவேண்டாமா என்றுதான் கேட்கிறேன். மத விகிதாச்சாரம், வகுப்பு விகிதாச்சாரம் பிரித்து அனுபவிப்பது என்று காங்கிரசுக்காரர்கள் ஒரு வார்த்தையில் ஒப்புக்கொள்ளுவதானால் காங்கிரசே இந்த நாட்டு அரசியல் கிளர்ச்சிக்கு தலைமை வகித்து நடத்துவதில் எனக்கு ஆக்ஷேபணை கிடையாது
அல்லது மத பிரிவும் வகுப்பு பிரிவும் இந்தியாவில் இல்லாமல் போகும்படி சட்டம் செய்வோம் என்று காங்கிரஸ் ஒப்புகொள்வதா யிருந்தாலும் காங்கிரசே இந்திய மக்களுக்கு பிரதிநிதித்துவ சபையாய் இருப்பதில் எனக்குஆகூஷபணை இல்லை. அந்தப்படி இரண்டும் இல்லாமல் பல மதங்களையும் பல வகுப்புகளையும் காப்பாற்றுவதாய் வாக்கு
155 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அளித்துவிட்டு அவற்றில் மதம் காரணமாகவும் வகுப்பு காரணமாகவும் இருந்துவரும் உயர்வு தாழ்வுகளைப் போக்க சட்டம் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறிவிட்டு மதஉரிமை கூடாது, வகுப்பு உரிமை கூடாது என்றால் அது எப்படி யோக்கியமான காரியம் ஆகும்? என்று கேட்கிறேன். “இது தேசீயத்துக்கு விரோதம்! “அது சுயராஜ்யத்துக்கு விரோதம்'” என்று சொல்லுவதாலேயே ஒவ்வொரு மதக்காரனும் வகுப்புக்காரனும் அரசியல் ஆதிக்கத்தையும் அதனால் வரும் பயனையும் அந்நிய மதக்காரனுக்கும் அந்நிய வகுப்புக்காரனுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டு ஏமாளியாய் இருப்பானா என்று கேட்கின்றேன். ஒரு நாட்டின் தேசீயத்துக்கு பல மதங்களும் பல வகுப்புகளும் பிரிவுகளும் இருப்பது விரோதமில்லை என்றால் பல மதங்களுக்கும் பல வகுப்புகளுக்கும் உரிமை இருப்பது மாத்திரம் எப்படி கெடுதியாய் விடும் என்று கேட்கின்றேன்.
தேசீயம் என்றால் உத்தியோகமும் பதவியும்தானா என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் தெரிந்து கேட்கிறார்களோ, தெரியாமல் கேட்கிறார்களோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இதுவரை நடந்துவந்த தேசீய கிளர்ச்சியில் உத்தியோகம், பதவி, சம்பளம் என்பவை அல்லாமல் வேறு என்ன இருந்தது? அல்லது வேறு என்ன கிடைத்தது? அல்லது வேறு எதற்கு ஆக தேசியக்கிளர்ச்சி பாடுபட்டது? பாடுபடப்பட்டது? என்று கேட்கின்றேன். காங்கிரசுக்கு வயது 50 ஆனாலும் எனக்கு காங்கிரசின் யோக்கியதை 30, 40 வருஷங்களாகவே தெரியும்.
காங்கிரசின் கோரிக்கையே உத்தியோகப் பிச்சையாகவும் சம்பளத்துக்கு கெஞ்சுவதாகவும் தான் இருந்துவந்தது. அதற்கு ஆக ராஜபக்தியும் ராஜவிஸ்வாசமும் இருப்பதாகவும் காட்டுவதாகவும் தீர்மானம் செய்வதுதான். காங்கிரசின் முக்கிய வேலையாய் இருந்துவந்தது. இன்றும் ஒவ்வொரு உத்தியோகத்திலும் ஒவ்வொரு பிரதிநிதித்துவத்திலும் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்தே தீரவேண்டி இருக்கிறது. இந்த யோக்கியதையில் இருந்துவந்த காங்கிரசுக்காரர்கள் இன்று மகா தியாகிகள்போல் நடிப்பதைக் கண்டு யார் ஏமாறக்கூடும்? இது தகப்பன் வீட்டுப் பெருமையை தமயனிடம் சொல்லும் முட்டாள் தனம் போன்றதேயாகும்
உத்தியோகங்களிலும் பதவிகளிலும் நாம் - பார்ப்பனரல்லாதார் பங்கு கேட்க ஆரம்பித்த பிறகுதான் காங்கிரசுக்காரர் அது தேசீயத்துக்கு விரோத மென்றும் தேசத்துரோகம் என்றும் சொல்லி நம்மை ஏய்க்கப் பார்த்து அது முடியாமல் போனபின்பு இப்போது சிறிது காலமாய் பெரிய தியாகிகள்போல் நடித்து ஒத்துழையாமை என்றும், பஹிஷ்காரம் என்றும் பொதுஜனங்களை ஏமாற்றினார்கள். காங்கிரசுக்காரர்கள் எங்கே ஒத்துழையாமை செய்தார்கள்? எதை பஹிஷ்கரித்தார்கள்? என்பதை யோசித்துப்பாருங்கள்.
1922ல் ஒத்துழையாமை என்றார்கள். அப்போது பொது ஜனங்கள் செய்த தியாகம் என்பதைக்கொண்டு சிலர் சட்டசபை போகவும் மந்திரி
குடி அரசு - 1936 (2), 156
பதவி பெறவும் ஆசைப்பட்டார்கள். தேசத்தில் அவர்களுக்கு ஆதரவு இல்லாததால் காங்கிரசு பெயரால் அல்லாமல் சுயராஜ்யக்கட்சி என்று ஒரு கட்சி ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் மூயற்சித்தார்கள். அதிலும் தோல்வி அடைந்த பிறகு சற்று அடங்கிக்கிடந்து மறு தேர்தல் வரும் சமயம் மறுபடியும் அதேபோல் சட்டமறுப்பு, சத்தியாக்கிரக வேஷம் போட்டார்கள். அதுவும் பயன்படாமல் போய்விட்டது. ஆகவே 1922 முதல் இதுவரை காங்கிரசின் பேராலும் “அது செய்த தியாகத்தின் பேராலும் அவர்களுக்கு
எதிலும் வெற்றி இல்லாமற் போனதோடு பொதுஜன ஆதரவும் இல்லாமலே போய்விட்டது. இப்போது பொதுஜன ஆதரவு இருக்கும் என்று கருதி சட்டமறுப்பு, சத்தியாக்கிரகம், பஹிஷ்காரம், எதிர்ப்பு, முட்டுக்கட்டை எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு நாங்கள் ஒரு காலத்தில் தியாகம் செய்தோமென்று சொல்லிக்கொண்டு மாஜி தியாகிகள் பேரால் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்து பதவி அடைய பார்க்கிறார்கள். இதற்கு
நாம் ஏமாந்து விடக்கூடாது. ஏய்ப்பவர்களுக்கு இடம் கொடுப்பது என்பது
சிறிதும் ஒப்புக் கொள்ளக்கூடாத காரியமாகும்
ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி ஆகிய தேர்தல்களில் சிலர் பணச் செலவுக்கு பயந்தும் காங்கிரஸ் தொல்லையில் இருந்து தப்பித்துக்கொள்ள. முயற்சித்தும் காங்கிரசின் பேரால் நின்று வெற்றிபெற்றதாலேயே காங்கிரசுக்கு தலைசுற்றும்படியான அகம்பாவமும் ஆணவமும் ஏற்பட்டுவிட்டது. அந்த அகம்பாவமும் மூன்றேநாளில் ஒடுங்கிவிட்டது இன்று ஸ்தல ஸ்தாபன “வெற்றியின் பயனாய் காங்கிரஸ்காரர்களின்
காரியம் இந்தியா பூராவும் சிரிப்பாய்ச் சிரிக்கிறது
இப்படிப்பட்ட காங்கிரசார் நம்மை குறைகூறுகிறார்கள் உண்மையிலேயே நம்மீது எவ்வித தப்பிதமும் சொல்ல இவர்களுக்கு வழி இல்லை. ஆனாலும் பாமரமக்களிடம் முட்டாள் தனமாக உளறுகிறார்கள். இதன் மூலம் காங்கிரசுக்காரருக்கு அரசியல் ஞானம் இல்லை என்பதை
காட்டிக் கொள்ளத்தான் முடிந்ததே ஒழிய மற்றப்படி நம்மை சிறிதாவது அசைக்கக்கூட முடியாமல் போய்விட்டது
காங்கிரசுக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட பதவியையும் உத்தியோகத் தையும் சம்பளத்தையும் தான் ஜஸ்டிஸ் கட்சியார் பெறுகிறார்களே ஒழிய ஜஸ்டிஸ்கட்சியார் தாங்களாக தங்கள் சுயநலத்துக்கு என்று எதையும்
உண்டாக்கிக் கொள்ளவில்லை.
காங்கிரசுக்காரர் உண்மையாகவோ (அல்லது தாங்கள் ஆசைப்பட்டாலும் தங்களுக்குக் கிடைக்கமாட்டாது என்று கருதி) பொய்யாகவோ தங்களால் நடத்த முடியாது என்றும், தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் சொன்ன சீர்திருத்தத்தை ஏற்று தங்களால் கூடுமானவரை 15 வருஷ காலம் பொறுப்பேற்று நடத்தி இருக்கிறார்கள்.
157 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஜஸ்டிஸ்கட்சியார் அந்த சீர்திருத்தத்தை ஏற்க மாட்டேன் என்று சொல்லி இருந்தால் என்ன ஆயிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அப்பொழுதே மிதவாதிகள் என்கின்ற ஒரு கூட்டம் காங்கிரசில் சேராமலும் பஹிஷ்காரத்தை ஆதரிக்காமலும் சர்க்காருக்கு உதவி செய்து வந்ததோடு காந்தியாரையும் கைதி செய்து கடினமான அடக்குமுறை கொண்டு காங்கிரசை அடக்கும்படி சர்க்காருக்கு யோசனை சொல்லிவந்திருக்கிறார்கள். மற்ற மாகாணங்களிலும் ஜஸ்டிஸ்கட்சி இல்லாதிருந்தும் அங்கு மிதவாதிகள் சீர்திருத்தத்தை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோலவே சென்னை மாகாணத்திலும் ஜஸ்டிஸ்கட்சியார் மந்திரிபதவி ஏற்காதிருந்தால் மிதவாதிகள் என்னும் பேரால் பார்ப்பனர்களே மந்திரிகளாகி இருப்பார்கள். இந்த பதினைந்து வருஷ காலத்தில் சர்வம் பார்ப்பன மயம் ஜகத் என்பதாக எல்லா உத்தியோகம், பதவி, பட்டம் சகலமும் பார்ப்பனர்களுக்கே போய் பார்ப்பனரல்லாதார், முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் நிலை அதோகதி ஆகி இருக்குமே ஒழிய சுயராஜ்யம் வந்திருக்குமென்பதோ, வெள்ளைக்காரர்கள் இந்தியாவைக் காலிசெய்துவிட்டு ஓடி இருப்பார்கள் என்பதோ அடியோடு அயோக்கியத்தனமான பேச்சேயாகும்
சென்ற காரியம் எப்படியோ இருக்கட்டும் என்றாலும் இனி செல்லப் போகும் காரியங்களில் காங்கிரசு சாதிக்கப்போவது என்ன என்று கேட்கின்றேன்.
காங்கிரசுக்காரர்கள் வரப்போகும் சீர்திருத்த தேர்தலில் சட்டசபைக்கு போகவேண்டும் என்று மாத்திரம் தீர்மானித்துக் கொண்டார்களே தவிர அங்குபோய் என்ன செய்வது என்பதைக் கூற அவர்களுக்கு யோக்கியதை இல்லாமல் போய்விட்டது. ஏன், இவர்கள் நாணயஸ்தர்களானால் உள்ளது சொல்லலாமல்லவா? மூடிவைப்பானேன்? சட்டசபையில் போய் இன்னது செய்கிறோம் என்று சொல்லாமல் ஓட்டுக்கேட்பதென்றால் ஓட்டர்களை இவர்கள். எவ்வளவு கேவலமாய் மதித்து இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லையா? சட்டசபையில் காங்கிரசுக்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூடத் தெரியாமல் ஓட்டர்கள் ஓட்டுச் செய்வார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு மூடர்களாகவும், சுயமரியாதை அற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கருதியிருக்க வேண்டும் என்று கேட்கிறேன்.
காங்கிரசுக்காரர்களின் நாணயத்திலும் அரசியல் ஞானத்திலும் நம்பிக்கை வைத்து ஓட்டுச் செய்யலாம் என்றால் இந்த பதினைந்து வருஷ காலமாக காங்கிரஸ்காரர்கள் எந்த கொள்கையிலாவது திட்டத்திலாவது புத்திசாலித்தனமாகவோ நாணயமாகவோ நடந்தார்கள் என்று யாராவது சொல்லக் கூடுமா என்று பந்தயங்கட்டி கேட்கிறேன்.
ஆதி முதல் இவர்கள் கொள்கை என்ன ஆயிற்று? திட்டங்கள் என்ன. ஆயிற்று? பொது ஜனங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? தேர்தல் காலங்களிலும் ஒவ்வொரு தேர்தலிலும் கொடுத்த வாக்குறுதி என்ன
குடி அரசு - 1936 (2), 158
ஆயிற்று? காங்கிரஸ் ஸ்தாபன விதிகள் என்னவாயிற்று? ஒரு வருஷத்தில் சுயராஜ்யம், பூரண சுயேச்சை, முட்டுக்கட்டை, பகிஷ்காரம் முதலிய பெரிய பெரிய வார்த்தைகள் சொல்லி மக்களை ஏய்த்து பணம் பிடுங்கினதுடன். மக்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? அதனால் பொது மக்கள் பணம் எவ்வளவு நாசமாயிற்று? இவர்களுக்கு புத்திகற்பிக்க என்று அரசாங்கத்தில் நம் வரிப்பணம் எவ்வளவு வீணாயிற்று? இவைகளை யோசித்துப் பார்த்தால் காங்கிரசுக்காரர்களின் ஞானமற்ற தன்மையும், மக்களை ஏமாற்றும் தன்மையும் வெட்டவெளிச்சம் போல் விளங்கும் இப்படிப்பட்டவர்கள் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வது என்பது எவ்வளவு துணிகரமான காரியம் என்று பாருங்கள். அவர்களுடைய சகல ஆயுதங்களும் ஓய்ந்து போன பிறகு கூட்டத்தில் கலகம் செய்வதன் மூலம் தங்கள் வண்டவாளங்களை வெளியார் அறியாமல் செய்யப் பார்க்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை நான் இந்த காலித்தனத்துக்கு பயப்படு கிறவனல்ல. காங்கிரஸ்காரர்களில் ஒவ்வொரு காலியின் யோக்கியதையும், கூலியின் யோக்கியதையும் எனக்கு நன்றாய்த் தெரியும். நானும் ஒரு காலத்தில் கூலிகொடுத்துப் பார்த்தவன்தான். இதற்கு பயந்து ஓடுவது என்பது இதுவரை எங்கும் நடக்கவே இல்லை. அவர்கள் காலித்தனம் செய்த இடங்களில் எல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். காலிகளின் செய்கையின் பலனை அவர்களின் தலைவர்கள் என்பவர்கள் தான். அனுபவித்து வருகிறார்களே ஒழிய அவர்கள் மிஞ்சிவிட்டதாகவோ கெடுதி ஏற்பட்டதாகவோ சொல்லமுடியாது.
இங்கு இன்று கனம் மந்திரியார் விஜயம் செய்து தலைமை வகித்தும் இங்கு விஷமம் நடப்பதை போலீசார் அனுமதித்து வருகிறார்கள் பார்ப்பனர்கள் போலீஸ் ஆபீசர்களாய் இருக்கும் ஊர்களில் எல்லாம் அனேகமாய் இப்படித்தான் நடக்கின்றது. அதிலும் இன்று போலீசார் எவ்வளவு அலட்சியமாய் நடக்கிறார்கள் பாருங்கள். இனி பார்ப்பன ராஜ்யமாகிவிட்டால் நாம் இந்த நாட்டில் இருக்க முடியுமா? நமது வரிப்பணம் தான் அவர்களது சம்பளம். 2000, 3000 பேர் கூடியிருக்கும் இந்த கூட்டத்திற்கு ஒரு அதிகாரி கூட வராமல் அதுவும் அரசாங்க மந்திரியார் வந்திருக்கும் கூட்டத்துக்கு ஒருவர் கூட வரவில்லையானால். அவர்கள் மற்ற காரியங்களில் தங்கள் பொறுப்புகளை கவனிப்பார்களா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். 2, 3 கோடி ரூபாய் பொதுமக்கள். பணம் பாழாக்கப்பட்டு 15 வருஷமாய் நடந்த அரசியல் கிளர்ச்சியின் பயனாய் காங்கிரஸ்காரர்கள் கற்றுக்கொண்ட பாடம் இக்காலித்தனம் தான். என்பதல்லாமல் வேறு ஒரு காரியமும் இல்லை.
இன்றும் கூட நான் சொல்லுகிறேன். காங்கிரஸ்காரர்கள் யாரானாலும்
சரி, மேடையில் ஏறி பொதுஜனங்கள் முன்னால் காங்கிரசினால் இந்த 15 வருஷகாலமாக அரசியல் துறையிலாகட்டும், சமுதாயத் துறையிலாகட்டும்,
159 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பொருளாதாரத்துறையிலாகட்டும் இன்ன நன்மை ஏற்பட்டது என்று சொல்ல
ஒருவருக்கும் யோக்கியதை இல்லை என்றே சொல்லுவேன். யாராவது சொல்லக்கூடியவர்கள் இருந்தால் வரட்டும் என்றே அறைகூவி அழைக்
கிறேன். யாதொரு அரசியல் ஞானமும் இல்லாத வெறும் ஆட்கள் கூலியை வாங்கிக்கொண்டு மேடைஏறுவது, புராணம் படிப்பதுபோல் காந்தி எம்பெருமாள், முழங்கால் வேஷ்டிக்காரர், உலகம் போற்றும் உத்தமர், ஒண்ணுக்கு இருந்தால் பன்னீர் வாசம், ஐயிலில் அடைத்தால் வெளியில் வந்து விடுகிறார், டெல்லியில் மோட்டாரில் போனார், வைஸ்ராய் கை குவிக்கிறார், பட்டினி விரதம் இருந்தார் என்பன போன்ற வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏய்ப்பதல்லாமல் அவரால் விளைந்த காரியம் இன்னது, அவர் புத்திசாலித்தனத்தால் கிடைத்த வெற்றி இன்னது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். பதில் சொல்ல யோக்கியதை யற்றவர்கள் காலிகளைத் தூண்டிவிட்டு “நீ ஏன் தாடி வைத்திருக்கிறாய்" என்று கேள்வி கேட்கச் சொல்லுவது, பிறகு அவன் மாட்டிக்கொள்வதானால் விட்டுவிட்டு ஓடிப்போவது ஆகிய இவைதான் காங்கிரஸ் பிரசாரமாய் இருக்கின்றதே ஒழிய நாணயமாய் யோக்கியமாய் பேசி பிரசாரம் செய்வதே. காங்கிரஸ்காரரிடம் அருமையாகவே இருக்கிறது ஆகவே பொது மக்கள் எந்தக் கட்சியை ஆதரிப்பதானாலும் தங்கள். பகுத்தறிவை பயன்படுத்தி நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்
குறிப்பு: 21.08.1936 இல் பொள்ளாச்சியிலும் 22.08.1936 இல் கோவையிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 30.08.1936
குடி அரசு - 1936 (2), 160
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
வருகிறது, வருகிறது, வரப்போகிறது, வரப்போகிறது என காங்கிரஸ் காரர்களால் பிரமாதமாக விளம்பரம் செய்யப்பட்ட தேர்தல் அறிக்கை கடைசியாக வந்தேவிட்டது. பெரிய தேச பக்தர்களும் அரசியல் ஞானிகளும் பாஷ்யகாரர்களும் வெகுநாள் மூளைக்குவேலை கொடுத்து அவ்வறிக்கையைத் தயார் செய்தார்களாம். அவ்வாறு வருந்தி உருவாக்கப்பெற்ற அறிக்கையோ இன்னந் தெரியமுடியாத விகார ரூபமுடையதாயிருக்கிறது. அதன் திணை பால் முதலியவைகளை நிர்ணயம் செய்வது வெகு கஷ்டமாக இருக்கிறது ஜஸ்டிஸ்” திட்டத்தின் சாயல் ஒருபக்கம் சாடையாகத் தெரிகிறது சோஷியலிஸ்டு மணமும் ஒருபக்கம் வீசுகிறது. எல்லா கட்சியாரையும்
திருப்திப்படுத்தும் இந்திரஜால வித்தையும் அறிக்கை முழுதும் நேர்முகமாயும் மறைமுகமாகவும் தாண்டவமாடுகிறது
சென்ற புதன்கிழமையன்று சென்னை காங்கிரஸ் மண்டபத்தில் கூடிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தோழர் சத்தியமூர்த்தி பேசியபோது “அதிதீவிர அபேதவாதியான பண்டித ஜவஹர்லால் முதல், பதவியேற்பதை ஆதரிக்கும் நான் வரையில் எல்லாரும் இந்த தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்கள்” எனப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ்காரர் தற்பொழுது ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி இருந்துவருகின்றனர். தற்கால காங்கிரஸ்வாதிகளை (1) அபேதவாதிகள், அபேதவாதத்தை எதிர்ப்போர், வெளிப்பார்வைக்கு அபேதவாதிகள் போல் நடிப்போர் (2) பூரண: சுயேச்சை வாதிகள், குடியேற்ற நாட்டு அந்தஸ்துவாதிகள், (3) வரப்போகும் சீர்திருத்தத்தை எதிர்ப்போர், ஆதரிப்போர் (4) வகுப்புத் தீர்ப்பை ஆதரிப்போர், எதிர்ப்போர், (5) பதவி ஏற்பதை ஆதரிப்போர், எதிர்ப்போர்
எனப் பல தினுசுகளாக பிரிந்து விடலாம். காங்கிரசுக்குள் பிளவில்லை யென்பதைக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் எல்லாம் இப்பொழுது ஒற்றுமையுடையவர்கள் போல் பாவனை செய்துகொண்டாலும், செயலில் இறங்கத் தருணம் வரும் போது அவர்கள் எல்லாம் ஒத்துழைப்பார்கள் என்று நம்பமுடியுமா? தென்னாட்டு காங்கிரஸ் போக்கை அறிந்தவர்களுக்கு அந்தக் கூட்டத்தார் ஒத்துழைப்பது அசாத்தியமென்று விளங்காமல் போகுமா? எனினும் ஒரு மாரீச அறிக்கையை காங்கிரஸ் பிரகஸ்பதிகள் தயார் செய்திருக்கிறார்கள்.
11 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்திய மக்களை ஏய்ப்பதற்கு இதைவிட ஆடம்பரமான ஒரு அறிக்கையை எவருக்கும் தயார் செய்யவே முடியாது. இத்தகைய ஏமாற்று அறிக்கை தயார் செய்வதில் காங்கிரஸ் பிரகஸ்பதிகளே நிபுணர்கள் என்பதை அவர்களது எதிரிகளும்கூட ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அறிக்கையை ஒருமுறை மேற்பரப்பாகப் பார்ப்பவர்களுக்குக்கூட அதைத் தயாரித்தவர்களுக்கு கடுகத்தனையாவது அனுபவஞானம் இல்லை யென்பது நன்கு விளங்கும் வெளியாட்களால் சுமத்தப்படுவதும், இந்திய மக்களின் பரிபூரண: சுதந்திரத்தைக் குறைப்பதும், இந்தியாவின் அரசியல், பொருளாதார விவகாரங்களை கவனிக்கும் உரிமை முற்றிலும் இந்தியருடையதே என்பதை அங்கீகரிக்காததுமான எந்த அரசியலமைப்பையும் ஒப்புக்கொள்ள முடியாது''
என்று காங்கிரஸ் மகாசபை ஏற்கனவே தீர்மானித்திருக்கிறதாம் இதை உலகம் அறிந்துதான் இருக்கிறது; வரப்போகும் சீர்திருத்த அரசியலை வகுத்த பிரிட்டிஷாரும் அறிந்துதான் இருக்கிறார்கள். வரப்போகும்
சீர்திருத்தத் திட்டம் காங்கிரஸ் லக்ஷ்யத்துக்குப் பொருத்தமற்றதானால் அவர்கள் செய்ய வேண்டியதென்ன?
அவர்களது லக்ஷ்யத்துக்குப் பொருத்தமான ஒரு திட்டத்தை தயார். செய்ய வேண்டியதே அவர்களது வேலை
அந்த வேலையைச்சட்டசபைக்குள் சென்று செய்ய முடியாது. மந்திரி பதவிகளைக் கைப்பற்றினாலும் செய்ய முடியாது. ஏன்? வரப்போகும் அரசியல் திட்டம் கண்டிப்பான பாதுகாப்புகள் நிறைந்த சிக்கலான திட்டம் என காங்கிரஸ்காரர்களே கூறுகின்றார்கள்.
காங்கிரஸ் லட்சியத்தை நிறைவேற்றி வைக்கச் சக்தியில்லாத காங்கிரஸ் வாலாக்கள், தேச க்ஷேமத்துக்கு அநுகுணமாக உழைக்க முன் வருகிறவர்களை - ஏற்கனவே தேசத்துக்குப் பல நன்மைகள் செய்து அனுபவம் பெற்றவர்களை - அரசியல் வேலை செய்யும்படி விட்டு, மரியாதையாக ஒதுங்கிக் கொள்வதே யோக்கியப் பொறுப்பாகும்.
அப்படிச்செய்தால் மானம் போய்விடுமே - காங்கிரஸ் மாண்டுவிடுமே- உலகம் சிரிக்குமே - காந்தி பெயர் கெட்டுவிடுமே என்ற பொய்யான - அசட்டு அபிமானத்தினால் சுயராஜ்யம் கிடைத்த பிறகு செய்யப் போகிற வேலைகளை கிளிப்பிள்ளை மாதிரி பாமர மக்களுக்கு எடுத்துக் கூறி ஏமாற்ற முயல்வது யோக்கியப் பொறுப்பாகுமா!
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பாதான். ஆனால் மீசை முளைக்க வேண்டுமே!
குடி அரசு - 1936 (2), 162.
சுயராஜ்யம் கிடைத்த பிறகு காங்கிரஸ்காரர் கூறும் வேலைகள் மட்டுமல்ல, அவைகளைவிட இரட்டிப்புப் பங்கு வேலைகளையும் செய்துவிடலாம். சுயராஜ்யம் பெற வழி என்ன என்பதுதான் கேள்வி
சட்டசபைகள் மூலம் சுயராஜ்யம் பெற முடியாதென்று காங்கிரஸ்காரர் கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். எனவே, சுயராஜ்யம் பெற அவர்கள் வேறு வழி தேடவேண்டும் அது சாத்தியமில்லையானால் காங்கிரஸ் கடையை மூடிவிட்டு அவரவர்கள் பாட்டைப்பார்க்க வேண்டும். அனுபவ சாத்தியமில்லாத வேலைகளை செய்யப் போவதாய்க் கூறி பாமரமக்களை ஏமாற்றி நாட்டைக் குட்டிச் சுவராக்குவது மகா பாதகச் செயலாகும்; தேசத்துரோகம் மட்டுமல்ல ஜனத் துரோகமுமாகும். சுயராஜ்யம் கிடைத்தபிறகு அவர்கள் செய்யப்போவதாகக்
கூறும் வேலைகளை ஜஸ்டிஸ் கட்சியார் வரப்போகும் சீர்திருத்தத்தை கொண்டே சாத்தியமான வரை செய்யக்கூடுமென்று கூறுகிறார்கள் காங்கிரஸ் திட்டத்தையும் ஜஸ்டிஸ் திட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் உண்மை விளங்கும்
உண்மையில் இரண்டு திட்டங்களுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை. வித்தியாசம் வகுப்பு விஷயம் ஒன்றில்தான்.
காங்கிரஸ்காரர் வகுப்புத் தீர்ப்பை எதிர்க்கிறார்கள். வேறொரு திருப்திகரமான திட்டம் ஏற்படும் வரை வகுப்புத் தீர்ப்பை ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரிக்கிறார்கள். மற்றபடி இரண்டு திட்டங்களுக்கும் பாராட்டக்கூடிய வித்தியாசங்களே இல்லை.
வித்தியாசம் ஏதாவது உண்டானால் அது பாஷை நடையிற்றான். காங்கிரஸ்காரர் பொதுமக்களை ஏய்க்கும் படாடோப நடையில் தமது திட்டத்தைத் தயார் செய்திருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார் காரியவாதிகளானதினால், பகட்டில்லாத- பொருளமைதியுடைய எளிய நடையில் தமது திட்டத்தை தயார் செய்திருக்கிறார்கள்.
சுயராஜ்யம் வந்தபிறகு காங்கிரஸ்காரர் செய்யப் போவதாக கூறும் காரியங்களை ஜஸ்டிஸ் கட்சியார் இப்பொழுதே செய்ய முடியுமென்று கூறுகிறார்களே அது சாத்தியமா? அவர்களை நம்பலாமா? எனச் சிலர் கேட்கக்கூடும். ஆம், அது ஆணித்தரமான கேள்விதான். அவர்களை நம்பலாமா? நம்பக்கூடாதா? அவர்கள் கூறுவது சாத்தியமா? என்பதை அவர்கள் இதுகாறும் செய்துள்ள வேலைகளைப் பரிசீலனை செய்து பார்த்து முடிவு செய்துவிடலாம்
163 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அவர்கள் செய்த வேலைகள் சர்க்கார் ரிக்கார்டுகளில் இருக்கின்றன. அவைகளை எவருக்கும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அவைகளை அறிய ஜோசியர்கள், பாஷ்யகாரர் உதவியும் தேவையில்லை.
சென்ற 15 வருஷ காலமாக அவர்கள் வாக்காளர்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிவைக்க தவறியதே இல்லை. தற்கால அரசியல் அமைப்புப்படி செய்யமுடியாத காரியங்களைச் செய்வதாக அவர்கள் பொது மக்களிடத்தில் வீண் நம்பிக்கை உண்டு பண்ணவும் இல்லை. ஏமாற்ற வுமில்லை.
சுயராஜ்யம் நடத்த, நாட்டையும் மக்களையும் படிப்படியாகப் பக்குவம் செய்தால் பக்குவதசை யடையும் போது, சுயராஜ்யம் அழையாமலே வந்துவிடும் என்பது ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கை.
அந்தக் கொள்கைப்படியே அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அவ்வாறு வேலை செய்ததினாலேயே மாகாண இரட்டையாட்சிக்கு பதிலாக மாகாண ஆட்சி கிடைத்திருக்கிறது
அதில் பல பாதுகாப்புகள் இருப்பது மெய்யே. வரப்போகும் மாகாண சுய ஆட்சியை புத்திசாலிகளான ஜஸ்டிஸ் கட்சியார் நடத்தினால் “பாதுகாப்புகள்'' தேய்ந்து மாய்ந்து போவது நிச்சயம்
அப்பால் கலப்பற்ற மாகாண ஆட்சி வருவதும் உறுதி
காங்கிரஸ்காரர் விரும்பும் சுரராஜ்யத்தை கொண்டுவர, ஆற்றலும் அரசியல் ஞானமும் உடைய அரசியல் கட்சி இந்தியாவில் ஒன்றுண்டானால், அது ஜஸ்டிஸ் கட்சியே என எந்த கோபுரத்தின் மீது நின்றும் நாம் உறுதிகூற தயாராயிருக்கிறோம்.
கத்தியின்றி, இரத்தமின்றி, கிளர்ச்சியின்றி, புரட்சியின்றி இந்தியர்கள். மனத்து ஜனநாயக உணர்ச்சியையும் சுதந்தர சுயமரியாதை யுணர்ச்சிகளையும் தோற்றுவித்த பிரிட்டிஷாரின் ஆதரவை இழக்காமலே ''சுயராஜ்யம்'” கொண்டுவர ஜஸ்டிஸ் கட்சியாருக்குத்தான் ஆற்றலுண்டென உறுதி கூறவும் தயாராயிருக்கிறோம்.
இந்தியாவில் தோன்றிய அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி போன்ற மோசமான கட்சி இல்லவே இல்லை. காங்கிரஸ் தோன்றிய நாள் முதல் நாளிதுவரை கிளர்ச்சி செய்வதே அதன் வேலையாக இருந்து வந்திருக்கிறது.
காந்தியார் அரசியலில் புகும்வரை காங்கிரஸ், சட்டவரம்புக்கு வுட்பட்டுக் கிளர்ச்சி செய்து வந்தது. காந்தியார் பிரவேசித்தது முதல் சட்டவரம்பை மீறிக் கிளர்ச்சி செய்யத் தொடங்கிற்று
காந்தி பிரவேசத்துக்கு முன் “பெட்டிஷனிங் பாடி" (மனுச் செய்யும் கூட்டம்) ஆகவிருந்த காங்கிரசாவது தன் கிளர்ச்சியின் பயனால் பார்ப்பனர்.
களுக்குச் சில பெரிய உத்தியோகங்களைத் தேடி கொடுத்தது
குடி அரசு - 1936 (2), 164
காந்தி கைப்பற்றிய காங்கிரஸ் பல “தியாகங்கள்” செய்திருந்தாலும் அடைந்த பலன் பூச்சியமே. காந்தீய காங்கிரசைப்போல் முழுத் தோல்வி யடைந்த அரசியல் ஸ்தாபனம் உலகத்திலேயே இல்லை
காந்தி காங்கிரசில் கால் வைத்தது முதல், போடப்பட்ட காங்கிரஸ்
திட்டங்களில் ஒன்றாவது நிறைவேறவில்லை.
ஒரு கோடிரூபாய் அளித்தால் சுயராஜ்யம் தருவதாக பனியா காந்தி பேரம் பேசினார். அவர் கேட்டபடியே கொடுத்தோம். அவர் தந்தது என்ன? ஒத்துழையாமை என்ன வாயிற்று? சட்டமறுப்பு என்ன வாயிற்று? சத்தியாக்கிரகம் என்ன வாயிற்று? பகிஷ்காரக் கதை என்ன வாயிற்று? உப்புப் போர் என்ன வாயிற்று? தீண்டாமையொழிப்பு என்னவாயிற்று?
கிராமப் புனருத்தாரணம் என்ன வாயிற்று?
எல்லாம் முழுத் தோல்வி; சாமானியத் தோல்வியா? மானங்கெட்ட தோல்வி. ஆகவே அரசியலையே “காந்தி” தலைமுழுகிவிட்டார்; ஒரு நாலணாக் காங்கிரஸ்வாலாக இருக்கக்கூட அவர் விரும்பவில்லை அவ்வளவுக்கு வீழ்ச்சியடைந்துவிட்டது. காங்கிரஸ் அரசியல் வேலை கண்ணாம்பூச்சி விளையாட்டல்ல; அரசியல் ஞானம் வேண்டும்; அனுபவம் வேண்டும்; பழக்கம் வேண்டும்; சகிப்புத்தன்மை வேண்டும்; நிதான புத்தி வேண்டும். ஆனால் இந்தச்சரக்குகள்தான் காங்கிரஸ்காரரிடமில்லை எனவே அரசியல் வேலை செய்ய - முக்கியமாக ஆக்க வேலைகள் செய்ய அவர்களுக்கு லாயக்கில்லை. அதற்கு அவர்களது பூர்வ சரித்திரமே அத்தாட்சி. எனவே அவர்களது தேர்தல் அறிக்கையும் பயனற்றது அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கும் திட்டங்களை அவர்களால் நிறைவேற்றி வைக்கவும் முடியாது
“காந்தி ஒரு லக்ஷயவாதி; பகற்கனவு காண்பவர்; மதக் கிறுக்கர் அதனாற்றான் காங்கிரஸ் வேலை குட்டிச்சுவராயிற்று. இப்பொழுது அவர் காங்கிரசில் இல்லை. தற்காலத் தலைவர்கள் அனுபவசாலிகள்; காரியவாதிகள்; சொன்னபடி நடத்த ஆற்றலுடையவர்கள். ஆகவே தேர்தல் அறிக்கையை
நம்பலாம்'' எனச் சிலர் சொல்லக்கூடும்
ஆனால் ஆழ்ந்து நோக்கினால் தற்காலத்தவர்கள் காந்தியை விட மோசமானவர்கள் - செல்லாக் காசுகள் என்பது நன்கு விளங்கும்
காந்தியார் குட்டு வெளிப்பட 15 வருஷத்துக்கு மேல் பிடித்தது தற்காலத் தலைவர்கள் குட்டோ எட்டு மாதத்துக்குள் வெளிப்பட்டு விட்டது ஸ்வராஜ்யம் பெறுவதற்கு ஸ்தல ஸதாபனங்களைக் கைப்பற்றுவது முதல் வேலை என்று தற்கால காங்கிரஸ் தலைவர்கள் திட்டம் போட்டார்கள். சில ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றவும் செய்தார்கள். முடிவு என்னவாயிற்று “அப்பாடா! போதும் போதும்” என்று ஆகிவிட்டது. மேற்கொண்டு ஸ்தல
168 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஸ்தாபனங்களைக் கைப்பற்ற வேண்டுமா? வேண்டாமா? என்று கூட ஆலோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. வேலூர் உபதேர்தலில் காங்கிரஸ்காரர் போட்டி போட வேண்டாமென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக் கமிட்டியார் தீர்மானிக்கும் படியும் ஆகிவிட்டது. கோவை காங்கிரஸ் கமிட்டியார் ஜில்லா போர்டு தேர்தலில் கலந்துகொள்ளத் தேவையில்லை யென்றும் முடிவுகட்டி விட்டார்கள்.
கேவலம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நடத்த யோக்கியதை யில்லாத தற்காலத் தலைவர்களா-சுயராஜ்யம்-அதுவும் கலப்படமற்ற பூரண சுயராஜ்யம் கொண்டு வரப்போகிறார்கள்?
கூரையேறிக் கோழி பிடிக்காத குருக்கள், வானம் கீறி வைகுண்டம் காட்டுவாரா! தென்னாட்டு மக்களே யோசித்துப் பாருங்கள்!
குடி அரசு - தலையங்கம் - 30.08.1936
குடி அரசு - 1936 (2), 166
கமுவுக்கேற்ற கோமுட்டி நியாயமா?
காங்கிரஸ்பேரால் திருச்சி நகரசபைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்பட்ட தோழர் ரத்னவேலுத் தேவரை ஆதரியாத காங்கிரஸ் மெம்பர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் காரியக்கமிட்டியார் தீர்ப்புக்கூறி யிருக்கிறார்கள். ஆனால் நகரசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தோழர் பொன்னய்யா பிள்ளை, திருச்சி ஜனங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தாம் மெம்பர் பதவியையோ, தலைவர் பதவியையோ ராஜிநாமாச் செய்யப் போவதில்லையென்றும் வேண்டுமானால் காங்கிரசிலிருந்து விலகிவிட தயார் என்றும் மார் தட்டிக் கூறுகிறார். இதற்காக ஒரு காங்கிரஸ் தினி ஜஸ்டிஸ் கட்சி மீது பழி சுமத்துகிறது. “ஸ்தல ஸ்தாபனங்களில் 15 வருஷங்களாக ஜஸ்டிஸ்கட்சி இருந்திருந்தும் ஸ்தல ஸ்தாபன ராஜீய வாழ்க்கை இவ்வளவு மோசமாயிருப்பது ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையைக் காட்டுகிறது” என அப்பத்திரிகை குருட்டுத்தனமாக எழுதியிருக்கிறது. ஸ்தல ஸ்தாபன. விஷயங்களில் அரசியலைப் புகுத்தக் கூடாதென்பது ஜஸ்டிஸ் கட்சியார் கொள்கை. இதுவரை ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களில் ஜஸ்டிஸ்கட்சி பேரால் அபேட்சகர்கள் நிறுத்தப்படவுமில்லை. “ஜஸ்டிஸ்” கொள்கையை ஆதரிப்பவர்கள் தம் சொந்த ஹோதாவிலேயே நின்று வந்திருக்கிறார்கள். தவிரவும் திருச்சி திருவிளையாடல்களுக்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் “ஜஸ்டிஸ்” கட்சியாரல்ல காங்கிரஸ் பக்தர்களே. எனவே திருச்சி பழிக்குஜஸ்டிஸ் கட்சியைக் குறை கூறுவது கழுவுக்கேற்ற கோமுட்டிநியாயமாகவே இருக்கிறது.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.08.1936
167 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி
தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியின். தேசியம், அவரது மூளை போலவே விசித்திரமானது; கோணல்மாணலானது. இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கில கவர்னர்களுக்குப் பல்லாண்டு பாடலாம்; உபசாரப் பத்திரமளிக்கலாம்; ஆனால் ஒரு இந்திய கவர்னரைப் பாராட்டவோ, உபசரிக்கவோ கூடாதென்று அவர் சென்னைக் கார்ப்பரேஷனில் வெளுத்து வாங்கியதை இந்தியர்கள் மறந்திருக்கமாட்டார்கள். ஜஸ்டிஸ்கட்சி மீதுள்ள வெறுப்பினால் ஒருகால் அவர் அவ்வாறு உளறிக்கொட்டியிருக்கக் கூடும்; அதனால் அவருடைய தேரீயக் கற்புக்கு பங்கம் ஏற்பட்டுவிடாது எனப் பலர் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவரது பம்பாய்ப் பேச்சு அவரது உண்மைச் சுயரூபத்தை சந்தேகத்துக்கு இடமின்றி விளக்கிக் காட்டிவிட்டது. கடுகத்தனை இந்திய பற்றாவது அந்த ஆசாமிக்கு இல்லை யென்பதை அவரது பம்பாய்ப் பேச்சு நன்கு விளக்கிக் காட்டியிருக்கிறது. “குடியாட்சியும் - தடியாட்சியும்" என்னும் பொருள் பற்றி தோழர் சத்தியமூர்த்தி பம்பாயில் நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தின்போது அவர் வாந்தியெடுத்த சில அபிப்பிராயங் களைப் பார்த்து சுயமரியாதையுடைய இந்தியர்கள் கலக்கம் கொள்ளாமலும் கண்ணீர் வடிக்காமலும் இருக்கமாட்டார்கள். “கடைசி பிரிட்டிஷ் சோல்ஜர் இந்தியாவிலிருந்து லண்டனுக்குக் கப்பலேறிய பிறகு, இந்திய ஊழல்களை ஒழிக்க 50 வருஷ காலம் பிடிக்கும்” என தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் திருவாய் மலர்ந்தருளினாராம். இவ்வளவு மோசமான வார்த்தைகள் எந்த தேரீயவாதி வாயிலிருந்தாவது வெளிவருமா?
மற்றும் “இந்தியா முழுதும் - ஒவ்வொரு சமூகத்திலும் - ஒவ்வொரு துறையிலும் - ஊழல் நிறைந்தே இருக்கிறது. அதை மறைப்பதினால் இந்தியாவுக்கு நலனேற்படாது”' என்றும் அவர் செப்பினாராம். இந்தியர் அந்தஸ்து, பெருமை, சுயமரியாதை - சுத்தம், சுதந்தர தாகத்தைப்பற்றி கடற்கரைக் கூட்டங்களில் பிரசங்க மாரி பொழியும் சத்தியமூர்த்தியார் இவ்வாறு கூறுவது? கடைசியாக ஜனநாயக ஆட்சிக்குள்ள நிலைமை இந்தியாவில் இல்லவே இல்லையென்றும் கண்டிப்பாகக் கூறிவிட்டாராம்.
ஜனநாயகத்துக்குத் தேவையான நிலைமை இந்தியாவில் இல்லை யானால் “பூரண சுயராஜ்யந்தான் இந்தியர் லக்ஷ்யம்; அதற்குக் குறைந்த எந்த அரசியலமைப்டையும் இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என தோழர் சத்தியமூர்த்தியும் அவரது கோஷ்டியாரும் கூப்பாடு போடுவது “ஹம்பக்” தானே.
குடி அரசு - 1936 (2), 168
வாடிப்பட்டி ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டை கனம் மந்திரி ராஜன் திறந்து வைத்தபோது “இரட்டையாட்சியை நாங்கள் வெற்றிகரமாக நடத்திவைத்து சுயராஜ்யம் நடத்த இந்தியர்களுக்கு ஆற்றலுண்டு என்பதை பிரத்தியட்சமாகக்
காட்டியிருக்கிறோம். வரப்போகும் மாகாண ஆட்சியைத் திறம்பட நடத்தினால்
மற்றும் அதிகப்படியான அதிகாரங்களை பிரிட்டிஷ் சர்க்கார் வழங்குவார்கள்” எனப் பொருள்பட பேசினார். அது தோழர் சத்தியமூர்த்திக்குப் பிடிக்க வில்லை. கனம் மந்திரி ராஜன் இந்தியர்களை அவமதித்து விட்டதாகக்
கூச்சல் போட்டார். இந்தியர்கள் என்ன பள்ளிப் பையன்களா பிரிட்டிஷாரிடம் சுயராஜ்பத் திறமையை காட்டுவதற்கு? சுயராஜ்யப் பரீட்சை நடத்த பிரிட்டிஷார்.
யார்? நம் நாட்டை ஆள நமக்கு உரிமையில்லையா? அந்நியரிடமிருந்தா. நற்சாட்சிப் பத்திரம் பெறவேண்டும்? சீச்சி மந்திரி ராஜன் இந்தியர்களை ரொம்ப அவமதித்துவிட்டார்” என்றெல்லாம் சென்னை காங்கிரஸ் மண்டபக் கூட்டத்தில் வெளுத்து வாங்கினார். சென்னையில் அவ்வாறு புலம்பிய சத்தியமூர்த்தி பம்பாயிலே “இந்தியர்கள் கழிபட்டவர்கள்; ஆகாவழிகள்; ஜனநாயகம் நடத்த யோக்கியதையற்றவர்கள்” என்றெல்லாம் பிதற்றி
யிருக்கிறார். இப்படிப் புலம்பும் மூர்த்தியார் தாம் பெரிய தேசீயவாதி யென்றும் - பூரண சுயேச்சைவாலா என்றும் சொல்லிக்கொள்ளத் தயங்குவதுமில்லை. வாஸ்தவத்தில் தோழர் சத்தியமூர்த்தியைப் போன்ற உளறுவாயர்கள் சிலர் இந்தியாவில் இருப்பதினாலேயே “சுயராஜ்யம் பெற இந்தியர்களுக்கு லாயக்கில்லை” என்று சர்ச்சில் கோஷ்டியார் கூறுகிறார்கள். காமாலைக் கண்ணனுக்கு உலகம் முழுதும் மஞ்சள் மயமாகத் தோன்றுமாம்.
திலகர் நிதி, தீண்டாமை நிதி போன்ற பொது நிதிகளை ஸ்வாஹா” செய்து வயிறு வளர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்த தோழர் சத்தியமூர்த்தி “இந்தியாவிலே - எல்லா சமூகங்களிலும் - எல்லாத் துறைகளிலும்” - ஊழல்களையும், குப்பைமேடுகளையும் காண்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்குண்டா? ஆனால் தமது சொந்த அனுபவத்தை ஆதாரமாக வைத்துக்கொண்டு “இந்தியா முழுதும் ஊழல் மயம். ஜனநாயகத்துக்கு இந்தியா லாயக்கில்லை” என்று புலம்புவது மூடத்தனம், விஷமத்தனம், தேசத்துரோகம் என்று கூறினால். அதை மறுக்க தோழர் சத்தியமூர்த்தியாருக்கு நாக்குண்டா!
இந்தியர் ஒழுக்கத்தைக் கண்டித்து கன்னி மேயோ எழுதியபோது இந்திய தேசப்பக்தர்கள் கொதித்தெழுந்தார்கள்; தேசீயப் பத்திரிகைகள் எல்லாம் கண்டித்தன; கூப்பாடு போட்டன. இப்பொழுது மேயோவைவிடக் கேவலமாக தோழர் சத்தியமூர்த்தி பேசியிருக்கிறார். ஆகவே குப்பைக்காரி, சாக்கடை இன்ஸ்பெக்டர் போன்ற பட்டப்பெயர்களை மேயோவுக்குச் சூட்டிய தேசபக்தர் களும் தேசீயப் பத்திரிகைகளும் குப்பைக்காரன் சத்தியமூர்த்தி, சாக்கடை இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி என அவருக்குப் பெயர் சூட்ட தயார்தானா.
குடி அரசு - கட்டுரை - 30.08.1936
19 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மத நம்பிக்கைக்கு சாவுமணி
உலகத்திலே எத்தனையோ, இயக்கங்களும் ஸ்தாபனங்களும் தோன்றி மறைந்துள்ளன; மறைந்து வருகின்றன. சில இயக்கங்களுக்கும் ஸ்தாபனங்
களுக்கும் ஒரு காலத்துத் தேவை ஏற்பட்டிருக்கலாம். அத் தேவை மறையும் போது அவை மறைவது இயல்பே. இந்தப் பொதுவிதிக்குக் கட்டுப்படாத இயக்கங்களோ ஸ்தாபனங்களோ உலகத்தில் இல்லவே இல்லை.
தற்பொழுது உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்து வருகிறது. ருஷியாவிலே மதம் அழிந்துவிட்டது; ஆலயங்கள் மறைந்துவிட்டன; புரோகிதர், பூசாரிகளும் ஒழிந்துவிட்டனர். அமெரிக்காவில் ஆலயங்கள் இருந்தாலும் ஆலய வழிபாடு செய்வோர் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன. பாதிரிமார் செல்வாக்குக் குறைந்துவிட்டதாம். அறிவியக்கம் நாளுக்கு நாள் காட்டுத் தீப்போல் பரவி வருகிறதாம்.
துருக்கியிலும் மத ஆதிக்கம் ஒழிந்துவிட்டது. ராஜாங்கத்துக்கும் மதத்துக்கும் இருந்த தொடர்பு அறுபட்டு விட்டது. மதத்தின் ஸ்தானத்தைப் பகுத்தறிவு கைப்பற்றி விட்டது. இவ் வண்ணம் உலகம் முழுதும் மத நம்பிக்கை குறைந்துவரக் காரணமென்ன? காரணங்கள் இரண்டு; ஒன்று தேசீய சம்பந்தமானது; மற்றொன்று சதாசாரச் சார்புடையது
மதக்கொள்கைகளும் நம்பிக்கைகளும் விஞ்ஞான சாஸ்திர உண்மைகளுக்கு முரண்பட்டவைகளாக இருக்கின்றன. எனவே விஞ்ஞான சாஸ்திரம் வளர வளர மத நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது விஞ்ஞானத் துறையில் முன்னேற்றமடைந்த தேசங்களில் மத நம்பிக்கை
முற்றிலும் கலகலத்துப்போய்விட்டது. இதை எவராலும் மறுக்கவே முடியாது. விஞ்ஞான உண்மைகளை எதிர்த்து நிற்க மத நம்பிக்கைகளுக்கு சக்தியில்லை. ருசுப்படுத்தப்படாத விஷயங்களை நம்ப மக்கள் தயங்குகின்றனர் - மறுக்கின்றனர். பிரபஞ்சத்தில் பல துறைகளில் பிரதி தினமும் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் எல்லாம் மத நம்பிக்கைகளை வேரறுக்கக் கூடியவை களாகவே இருக்கின்றன. கிறிஸ்துமதச் செல்வாக்கு உச்சஸ்தானத்திலிருந்த காலத்திலே கிறிஸ்தமத எதிரிகள் தமது அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சினர். இன்றோ கிறிஸ்துமதம் பகிரங்கமாகத் தாக்கப்படுகிறது கிறிஸ்து மதக்கொள்கைகள் சதாசாரத்துக்கு முரணானவை யென்று பகிரங்கமாகத் தாக்கப்படுகின்றன. ஏனைய மதங்களுக்கும் இக்கதியே
குடி அரசு - 1936 (2), 170
ஏற்பட்டிருக்கிறது. உண்மையில், ஒரு காலத்திலே வானமண்டலத்தில் பறந்துகொண்டிருந்த மதக்கொடி அற்று வீழ்ந்துவிட்டது எனினும் பழமை விரும்பிகள் - மதவெறியர்கள் லக்ஷ்யம் செய்ய வில்லை. “ஆமாம்! ஆமாம்! மதத்தையும் கடவுளையும் எத்தனையோ பேர்.
எதிர்த்துப் பார்த்தார்கள். ஒன்றும் சாயவில்லை. நாஸ்திகம் புதியதல்ல: ஆஸ்திகம் தோன்றிய அன்றே நாஸ்திகமும் தோன்றியுள்ளது. கடைசியில். நாஸ்திகமே தோல்வியுற்றது. எனவே தற்கால மத எதிர்ப்பைப் பார்த்து எவரும் அஞ்சவேண்டியதில்லை. ஆஸ்திகத்தை நாஸ்திகம் வெல்லவே செய்யாது. ஆஸ்திகம் அழிவில்லாதது” என அவர்கள் கூறித் திருப்தி அடைகிறார்கள்.
ஆனால் இவர்கள் உண்மை நிலையை அறிந்தவர்கள் அல்ல. பழங்கால நாஸ்திகத்துக்கும் தற்கால நாஸ்திகத்துக்கும் பெருத்த வித்தியாசமுண்டு. லோகாயதம் தோன்றிய காலத்திலே விஞ்ஞான சாஸ்திர உணர்ச்சியே தோன்றவில்லை. “சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது. இராகு கேதுக்கள் சூரிய சந்திரர்களைச் சில குறிப்பிட்ட காலத்தில் விழுங்கிக் கக்குகின்றன. இரும்பைப் பொன்னாக்கலாம்; கல்பமுண்டு சிரஞ்சீவியாகலாம்” என்பன போன்ற நம்பிக்கைகள் தாண்டவமாடிய காலத்திலே லோகாயதம் தோன்றியது. அத்தகைய லோகாயதத்தை - நாஸ்திகத்தை ஆஸ்திகர் வெகு சுளுவில் தோற்கடித்திருக்கக் கூடும். அக்கால நாஸ்திகர்களுக்கு விஞ்ஞான உண்மைகள் துணை நிற்கவில்லை. நுண்ணிய ஆராய்ச்சி முன்.
எதிர் நிற்காத யுத்தி வாதங்களினாலேயே அக்கால நாஸ்திகர் ஆஸ்திகரைத் தாக்கிவந்தனர். எனவே நாஸ்திகர் தோல்வியுற்றிருக்கலாம்
நாஸ்திகரைத் தோற்கடித்த ஆஸ்திகர் எல்லாம் வஞ்சகர் என்றோ. மோசக்காரர் என்றோ மூடர்கள் என்றோ நான் கூறவில்லை. அவர்கள். நம்பியபடி அவர்கள் நடந்துகொண்டார்கள். தெய்வ நம்பிக்கையின்றிப் பிரபஞ்சமே நசித்துவிடுமென்று அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே அவர்கள் அக்காலத்துப் பெற்றிருந்த அறிவின் துணைகொண்டு ஆஸ்திகத்தை நிலைநாட்ட முயன்றனர். ஒரு பிரச்சினையை முடிவு செய்வதற்குத் தேவையான சாதனங்கள் எவையோ, அவை இல்லாதிருந்த காலத்திலேயே அவர்கள் அப்பிரச்சினையை முடிவு செய்தனர். பகுத்தறிவுப்படியும் சரித்திரீகமாகவும் முயன்றனர். ஆனால் அவர்களது விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான சரித்திர ஞானமோ விஞ்ஞானமோ அவர்களிடம் இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு முன் நிற்க முடியாத யுக்தி வாதங்களையும் கூடார்த்தச் சொற்றொடர்களையும் பகட்டு வாதங்களையும் காட்டி மதத்தை ஆதரிக்கத் துணிந்தனர். அவர்களாலானது அவ்வளவே, அதற்குமேல் நாம் அவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது?
ஆனால் ஊகத்துக்கு நில்லாத முன்னோர் வாதங்களைக் காட்டி இக்கால ஆஸ்திகர்கள் உலகத்தை ஏமாற்றப் பார்ப்பதுதான் வெகு ஆச்சரியமாக
171 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இருக்கிறது. மதவிரோதிகளுக்கு உதவியான சாதனங்களை “சப்ளை” செய்வது விஞ்ஞான சாஸ்திரங்களின் நோக்கமல்ல; எனினும் மத விரோதிகளுக்குத் தேவையான தகவல்களை யளிப்பதே விஞ்ஞான சாஸ்திரிகளின் வேலையாக இருந்து வருவதாய்ப் பலர் நம்புகிறார்கள். விஞ்ஞான சாஸ்திரங்களின் உண்மையான நோக்கம் அறிவை வளர்ப்பதே; ருசுப்படுத்தக் கூடிய உண்மைகளை பகிரங்கப்படுத்துவதே; ஆனால் விஞ்ஞான உண்மைகள் பல மத உண்மைகளுக்கு முரண்படலாம்; ஆனால் இது இரண்டாம் பக்ஷமான பலன். விஞ்ஞானிகள் இதை லக்ஷ்யம் செய்வதில்லை. நேரடியான பலனே அவர்களுக்கு முக்கியம்; மறைமுகப் பலன்களை அவர்கள் மதிப்பதில்லை; அல்லது பிரமாதப்படுத்துவதில்லை. சாதாரண விஞ்ஞான உண்மைகளும் கூட மதத்துக்கு முரணாகவே இருக்கின்றன. எனவே மதத்தை யொழிக்கவே விஞ்ஞானிகள் முயல்வதாக. சாமானியர் முடிவு கட்டி விடுகின்றனர். விஞ்ஞான சாஸ்திரிகள் கடும் உழைப்பாளிகள்; கருமமே கண்ணாயினர். காலத்தின் அருமையை அவர்கள். நன்கறிவார்கள் தம் கடமைகளையும் அவர்கள் நன்குணர்வார்கள். அவர்களது ஆராய்ச்சியில் மதவிரோதமான பல உண்மைகள் வெளியா கின்றன; ஆனால் அவைகளை அவர்கள் லக்ஷ்யம் செய்வதில்லை; ஏனையோரே லக்ஷ்யம் செய்கிறார்கள்; பீதியடைகிறார்கள்; கடவுளருளிய வேதங்களில் நம்பிக்கை வைத்தோர் நடு நடுங்குகிறார்கள். இயற்கையை நடுக்கத்துடன் ஆராய்ச்சி செய்ய விஞ்ஞான சாஸ்திரிகள் முயன்றபோதே எல்லாம் தலைகீழாக மாறத் தொடங்கியது. அக்காலத்திலே மதமே பிரபஞ்சத்திலே அரசு செலுத்தி வந்தது. பெரிய எதிர்ப்புகளுக்கிடையே
- தடைகளுக்கிடையே - ஆராய்ச்சி வேலைகள் நடைபெற்று வந்தன.
இப்பொழுதோ பழைய ராஜா அடிமையாகி விட்டான். மதம் அறிவுக்கு அடிமைப்பட்டு விட்டது உண்மையாயினும் மதவாதிகள் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில்லை. அறிவியக்கவாதிகளை மதவாதிகள் இப்பொழுது எதிர்ப்பதில்லை; ஹிம்சிப்பதில்லை. எனினும் விஞ்ஞான: உண்மைகள் மத உண்மைகளுக்கு முரணல்லவெனப் பாசாங்கு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களின் ஆதியாகமம் பூகர்ப்ப சாஸ்திரத்துக்கு முற்றிலும் மூரணானது. ஆனால் கிறிஸ்தவப் பாதிரிமார். சொல்வதென்ன? “ஆதியாகமம் பூதர்ப்ப சாஸ்திரத்துக்குப் பொருத்தமானதே. பூகர்ப்ப சாஸ்திர உண்மைகளைத்தான் ஆதியாகமம் தெளிவாக விளக்கிக் கூறுகின்றன'' என பாதிரிமார் மழுப்புகிறார்கள். இவ்வளவாவது அவர்கள் ஒப்புக்கொள்ள மூன் வந்தது அறிவியக்கத்துக்கு ஒரு பெரிய வெற்றியாகும். பூகர்ப்ப சாஸ்திரத்தையே ஒரு காலத்து எதிர்த்தவர்கள். இப்பொழுது இவ்வளவாவது ஒப்புக்கொள்வது பெரிய காரியமல்லவா! இதனால் விஞ்ஞான சாஸ்திரங்களை மதவாதிகள் ஒப்புக்கொள்வதாகவே ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.
குடி அரசு - 1936 (2), 172
தீராப்பொறியாகவே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் கூறுவது போல். கிறிஸ்தவ ஆகமம் பூதர்ப்ப சாஸ்திர உண்மைகளுக்கு அனு குணமாயில்லை. அனுகுணமாக இருப்பதாகக் கூறி, செத்து வரும் மத உணர்ச்சிக்கு - மத நம்பிக்கைக்கு - புத்துயிரளிக்கவே அவர்கள் முயல்கிறார்கள். விஞ்ஞான சாஸ்திர அறிவு பரவப்பரவ மத நம்பிக்கை ஒழிவது திண்ணம். ஒழியத் தொடங்கி விட்டது. ஏன்? ஒளியின் மூன் இருள் நில்லாது. விஞ்ஞானம்
ஒளி: மதம் இருள்.
பகுத்தறிவு மா.இ.) - கட்டுரை - ஆகஸ்ட் 1936
1793 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரசும் வகுப்புவாதமும்
இந்தியாவில் காங்கிரஸ் என்பதாக ஒரு இயக்கம் ஏற்பட்ட பிறகே இந்தியாவில் வகுப்புவாதம் என்பதாக ஒரு உணர்ச்சி பல்வேறு மதஸ்தர்களுக்குள்ளும் பல்வேறு வகுப்பாருக்குள்ளும் ஏற்பட்டு அது
நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது ஆதியில் காங்கிரசானது ஒரு ஐரோப்பிய ஐ. சி. எஸ். கனவானின் முயற்சியாலேயே ஏற்படுத்தப்பட்டது. அவர் பெயர் A.O. ஹியூம் என்பார்கள்.
அப்படிப்பட்ட காங்கிரசின் கொன்கை
பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஒன்றுபடுத்துதல்,
சமூக கட்டுப்பாட்டிலும் அறிவிலும் ஒழுக்கத்திலும் அரசியலிலும் இந்திய மக்களின் வாழ்கையை புதுப்பித்தல்,
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் என்றும் பிரிக்க முடியாத
ஐக்கியத்தை ஏற்படுத்துதல் என்பனவாகும்
1892 லேயே வகுப்புவாதம் இந்தக்கொள்கைகளோடு ஏற்படுத்தப்பட்ட காங்கிரசில் அதுஏற்பட்ட 6,7 வருஷத்துக்குள் வகுப்பு உணர்ச்சிகள் ஏற்பட்டு அதாவது 1892-ம் (னுத்திலேயே 1892-ம்ணாத்து இந்திய கவுன்சில் ஆக்ட் என்னும் பேரால் ஒவ்வொரு வகுப்பாருக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் பல ஸ்தாபனங்களுக்கும் சர்க்காரே நாமினேஷன் செய்ய அதிகாரம் வைத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அரசாங்கத்தார் ஒரு சட்டம்
செய்ய வேண்டிவந்தது
191660 விகிதாச்சார வாதம்
இந்த சட்டம் ஏற்பட்டும் இந்துக்களிடம் முஸ்லீம்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனதோடு காங்கிரகினால் ஏற்பட்ட பதவிகள் முஸ்லீம்களுக்கு சிறிதும் கிடைக்காமல் போனதால் 1906-ம் வருஷத்தில் முஸ்லீம்கள் தங்களுக்கு தங்கள் ஜன விகிதாச்சாரம் தனிப்பட்ட பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்க வேண்டியவர்களானார்கள். சர்க்காரார் அவ்வேண்டுகோளை ஒப்புக்கொண்டு முஸ்லீம்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் தனித் தொகுதியின் மூலம் (அதாவது முஸ்லீம்கள் மாத்திரமே ஓட்டு செய்யும்படியான நிபந்தனையின் மீது) ஏற்படுத்தினார்கள்.
குடி அரசு - 1936 (2), 174
இவற்றின் பயனால் 1909 லேயே முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி மூலம் தனிப் பிரதிநிதித்துவம் கிடைத்தது விளங்கும்
அப்படிக்கிடைத்ததும் போதுமானபடியாகவும் எல்லாத்துறைகளிலும் கிடைக்கக்கூடியதாயும் இல்லாததால், மறுபடியும் அதாவது 1916-ம் வருஷத்தில் முஸ்லீம்கள் காங்கிரசுடன் போராடி கிளர்ச்சி செய்ததின் பயனாய் அசம்பளி எலக்ஷனில் மொத்த அங்கத்தினர்களில் 3ல் ஒரு பாகம் முஸ்லீம்கள் தனித்தொகுதி மூலம் தேர்ந்தெடுக்கப்படவும், மாகாண சட்டசபைகளிலும் முஸ்லீம்களின் ஜனத் தொகைக்குத் தகுந்தபடி தனித் தொகுதி மூலம் மெம்பர்கள் தெரிந்தெடுக்கப்படவும் காங்கிரசே ஒப்புக் கொண்டு அந்த ஒப்பந்தத்தை சர்க்காருக்கு தெரியப்படுத்தி அந்தப்படியே 1919 -ம் வருஷத்திய சீர்திருத்த சட்டத்திலும் விதி ஏற்படுத்தி இப்போது
அமுலில் இருந்து வருகிறது. (இதற்குப் பெயர் லக்னோ பாக்ட் ஒப்பந்தம்)
பார்ப்பனர் பார்ப்பணரல்லாதார் இதை அனுசரித்துத்தான் பார்ப்பனரல்லாத இந்துக்களும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களும் அந்த 1916-ம் வருஷம் முதல் கிளர்ச்சி செய்து வந்திருக்கிறார்கள். காரணம் காங்கிரசின் மூலம் வந்த பதவிகளும் பிரதிநிதித்துவங்களும் பெரிதும் பார்ப்பனர்களுக்கே கிடைக்கும்படியாகவும் மற்ற பெருங்குடி மக்களாகிய பார்ப்பனரல்லாதாருக்கு சிறிது கிடைப்பதும் மிகவும் கஷ்டமாய் விட்டதாலும் கிளர்ச்சி செய்யவேண்டியதாயிற்று இப்படி யெல்லாம் இருக்க அதாவது சர்க்காரும் காங்கிரசும் முஸ்லீம்கள் விஷயத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஒப்புக்கொண்டு அதுவும் தனித்தொகுதி மூலம் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஒப்புக்கொண்டு
சுமார் 25 ணு காலமாக அது அமுலிலும் இருந்து வரும்போது இன்று மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது எப்படி வகுப்புவாதம் ஆகும் என்றும் அது எப்படி தேசீயத்துக்கு விரோதமானதாகும் என்றும்
நமக்கு புரியவில்லை.
அப்பொழுதே ஏன் தடுக்கவில்லை? உண்மையிலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசியத்துக்கு விரோதமாக இருந்திருக்குமானால் இந்திய தேசீய காங்கிரசானது 1916-ம் வருஷத்தில் லக்னோவில் ஒப்புக் கொண்டிருக்குமா என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம். மேலும் 1909 -ல் மிண்டோ மார்லி சீர்திருத்தத்திலேயே வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் சேர்க்கப்பட்டிருக்கையில் அதைப்பற்றி காங்கிரஸ் அப்போது குறை கூறாதிருக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கின்றோம். ஆகவே காங்கிரசானது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் வகுப்புவாதம் என்றும், தேசியத்துக்கு விரோதம் என்றும் சொல்லத் தொடங்கி இருக்கிறதே தவிர வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்
175 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
1919 -லும் காங்கிரஸ் ஓப்புக்கொண்டது
அப்படி இருந்தும் 1919-ல் காங்கிரஸ் பார்ப்பனருக்கும் பார்ப்பன. ரல்லாதாருக்கும் உத்தியோகங்களிலும் பிரதிநிதித்துவங்களிலும் 100க்கு 50க்கு குறையாமல் கொடுப்பதாக காங்கிரஸ் திட்ட விளம்பரத்தில் வெளியிட்டிருக்கிறதுடன் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் சங்கமாகிய சென்னை மாகாணச் சங்கம் என்பதிலும் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவ தீர்மானங்கள் செய்யப்பட்டு அதை காங்கிரஸ் தலைவர்கள் தோழர்கள் விஜயராகவாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்
தேசீயவாதிகள் சங்கமும் ஓப்புக்கொண்டது
அது மாத்திரமா என்றால் சென்னை மாகாணத்தில் தேசீயவாதிகள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் 1920ம் வருஷத்தில் செளந்திரிய மகாலில் கூட்டப்பட்ட காலத்தில் அங்கும் 100 க்கு 50க்கு கம்மி இல்லாமல் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஸ்தானம் கொடுப்பது என்றும் தீர்மானித்து தேசிய சங்க வேலைத் திட்டத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறது.
இப்படிஎல்லாம் இருக்கும் போது இன்று மாத்திரம் காங்கிரஸ்காரர்கள் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் என்றால் இவ்வளவு வேஷ அழுகை அழுவானேன் என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்தியாவில் வகுப்புவாதம்
இந்தியாவில் ஜாதி மத வகுப்பு காரணமாக பிரிவு பட்ட மக்கள் பிணக்குப்பட்ட மக்கள் 1885 -ம் வருஷம் காங்கிரசு ஏற்படுத்தப்பட்ட காலத்திலேயே இருந்து இருக்கிறார்கள் என்பதற்கு அப்போதே ஏற்படுத்தப் பட்ட காங்கிரஸ் திட்டத்திலிருந்தே அறியலாம். அன்று முதல் இன்று வரை காங்கிரஸ்காரர்கள் அந்த பிரிவையும் பிணக்கையும் நீக்க எவ்வித சிறு முயற்சியும் எடுத்துக்கொண்டவர்கள் அல்ல. அதற்கு பதிலாக அநேக புதிய பிரிவினைகளை உண்டாக்கவே இடம் கொடுத்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு புள்ளி விவரங்கள் காட்டலாம்
பஞ்சாபில் சீக்கியர் முஸ்லீம் தகராறு, வங்காளம் பம்பாய் ஐக்கிய மாகாணங்களில் இந்து முஸ்லீம் தகராறுகள், சென்னை பம்பாய் மத்திய மாகாணம் ஆகியவற்றில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகராறுகள், மலையாளம், திருவாங்கூர், கொச்சி தேசங்களில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் - நாயர், ஈழவர் தகராறுகள் - மாப்பிள்ளைமார், நாயர்கள் என்பன போன்ற தகராறுகள் இருந்து வருகின்றன. இவை மாத்திரமா என்று பார்த்தால் ஆந்திரர், திராவிடர், மலையாளிகள், கர்னாடகர்கள் என்பன போன்ற தேசத் தகராறுகள் இருப்பதுடன் இன்னமும் பல உள் தகராறுகளும் இருப்பது நாம் அறியாததல்ல.
குடி அரசு - 1936 (2), 176
காந்தியும் ஜவஹரும் இவற்றை சரிப்படுத்த காங்கிரஸ் எடுத்துக்கொண்ட முயற்சி இன்னது என்று யாராவது ஒருவிரல்விட்டு எடுத்துக்காட்ட முடியுமாஎன்று கேட்கின்றோம்.
தோழர்கள் காந்தியாரும் ஜவஹர்லாலும் ''அந்நிய ஆட்சி இருப்பதால்தான் இம்மாதிரி வகுப்புவாதம் ஏற்படுகிறது என்றும் இது ஒழிந்துபோனால் வகுப்புவாதம் போகும்" என்றும் இப்போது கூறுகிறார்கள். இவர்கள் இருவர் அபிப்பிராயங்களை மாத்திரம் ஏன் எடுத்துக்காட்டுகிறோம் என்றால் அரசியலில் இப்போது இவ்விருவர் பெயரே அதிகமாக விளம்பரப் படுத்தப் படுவதால் இவர்களைப்பற்றி கூறவேண்டியிருக்கிறது
முன்னையவர் தோழர் காந்தியார் அரசியல்ஞானமும் முன்யோசனையும் இல்லாதவர். பின்னையவரான தோழர் ஜவஹர்லால் நேருவோ அனுபவ ஞானமில்லாத புஸ்தகப் பூச்சியே ஆவார்.
தோழர் காந்தியார் 1920-ல் “இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமல் சுயராஜ்யம் கிடைக்காது, கிடைத்தாலும் பெறமாட்டேன்" என்று சொன்னவர். இன்று “சுயராஜ்யம் வந்த பின்தான் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படும்” என்று சொல்லுகிறார்.
அன்றியும் ஒற்றுமைக்காக என்று அவர் கொண்ட பட்டினி வேஷம் முதல் ஒவ்வொரு காரியங்களிலும் தோல்வியே அடைந்தார். தோழர் ஜவஹர்லாலும் வாயில் சில சமயம் சமதர்மம் பேசினாலும் காந்தியார் கூடவே பின் தாளம் போட்டவர்.
வகுப்புவாதத்துக்கு உத்திரவாதம் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பிணக்கு வரவும் ஒற்றுமை ஏற்படாமல் இருக்கவும் காரணம் என்ன என்பதை தோழர்கள் காந்தி, நேரு இருவருமே கண்டு பிடிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கண்டு பிடித்திருந்தால் அவரவர் மதத்தையும் பழக்க வழக்கத்தையும் அனுபவ உரிமையையும் இவைகள் சம்பந்தமான சாஸ்திர ஆதாரங்களையும் சுயராஜ்ய சர்க்காரில் காப்பாற்றிக் கொடுக்கப்படும் என்று உத்திரவாதம்
ஏற்றுக் கொண்டிருப்பார்களா? என்று யோசித்துப்பார்க்க விரும்புகிறோம்
இவ்வளவு மாத்திரமா?
1931 ம் வருஷத்திய காங்கரஸ் வேலைக் கமிட்டியானது பிரஜா உரிமை திட்டம் என்பவற்றில் ஒன்றாக
“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வகுப்பார்கள் சம்பந்தப்பட்ட வரையில் அவரவர்களுடைய கலை, பாஷை எழுத்து, கல்வி, தொழில், மத ஆச்சாரம், மததர்மம் ஆகியவைகள் காப்பாற்றிக் கொடுக்கப்படும்"
என்கின்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது
177 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மற்றும் ஒவ்வொரு சமூகத்துக்கும் உள்ள தனிப்பட்ட உரிமைகளையும் காப்பாற்றப்படும். ஒவ்வொரு சிறுபான்மை சமூகத்துக்கும் அரசியல் உரிமை காப்பாற்றப்படும் என்றும் உத்திரவாத மேற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் இங்கிலீஷ் வாசகத்தை அப்படியே கீழே குறிப்பிடுகிறோம். (இது காங்கரஸ் ஆதாரங்களில் இன்றும் இருக்கிறது)
1. 10௦ article in the constitution relating to Fundamental Rights, shall
include a guarantee to the communities concerned of protection of
their culture, languages, scripts, education, profession, practice, religion
and religious endowments.
2. Personal laws shall be protected by specific provision to be embodied
in the constitution.
3. Protectionof political and other rights of minority communities in various provinces shall be the concern, and be within the jurisdiction of the
Federal Government.
இவை அந்நிய அரசாங்கத்தாரால் ஏற்பட்ட பிரிவினை காப்புத் திட்டமா என்று தோழர் ஜவஹர்லாலை கேட்கின்றோம். அவரது “சிஷ்யர்"களையும் கேட்கின்றோம்.
பழய சுயராஜ்ய காலம்
இது எப்படியோ இருந்தபோதிலும் இந்தியாவில் அந்நிய அரசாங்கம் இல்லாமல் சுயராஜ்ய அரசாங்கம் இருந்த காலத்தில் தானே. இந்தியா 56 தேசமாகவும், பாஷைவாரி தேசவாரியான ராஜாங்கமும், ஜாதிக்கு ஜாதி சதா குத்து வெட்டும் பாஷைக்கு பாஷை சதா கொள்ளையும் கொலையும், தேசத்துக்கு தேசம் சதா படையெடுப்பும் கலாபமும் நடந்த வண்ணமாய் இருந்தன என்பதை தோழர்கள் காந்தியாரோ நேருவோ ஆட்சேபிக்க முடியுமா என்று கேட்கின்றோம்
புரோகித பித்தலாட்டம்
குழந்தைக்கு தலைவலி என்றால் கிரகதோஷம் என்று புரோகிதனும், சாமி தோஷம் என்று அர்ச்சகனும் சொல்லி கொள்ளையடித்து குழந்தையை கொல்வதுபோல் இந்தியாவில் வகுப்புச்சச்சரவு வகுப்பு கொடுமை இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லு என்றால் சுயராஜ்ய மில்லாததால் என்று காந்தியாரும் அந்நிய அரசரால் என்று நேருவும் சொல்லி மக்களை ஏமாற்றி தலைவர் பட்டம் பெற்று தேசத்தைப் பாழாக்குவதென்றால் இதை அறிவுள்ள யார்தான் பொறுத்திருக்க முடியும்? என்று கேட்கின்றோம் மற்றும்இவ்வளவு ஜாக்கிரதையாக ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவரவர்கள் மதம், பழக்க வழக்கம், ஆச்சார அனுஷ்டானம், தொழில் ஆகியவைகளைக்
குடி அரசு - 1936 (2), 178
காப்பாற்ற உத்திரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் அந்தந்த வகுப்பாருக்கு
பிரதிநிதித்துவம் கொடுப்பதில் மாத்திரம் என்ன மாட்டிக்கொண்டது என்பது
நமக்கு விளங்கவில்லை.
இதை கேட்பதாலேயே நாம் வகுப்புவாதி, தேசத்துரோகி ஆகி விடுவதாய் இருந்தால் இதை எதிர்க்கும் இந்த நாட்டின் தேசீயவாதி களுக்கும் தேசாபிமானிகளுக்கும் என்ன பெயர் இட்டு அழைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் சுயநலவாதி என்றோ சமூகத் துரோகி என்றோ தான் அழைப்பது பொருத்தமாக இருக்கலாம்
நாயுடு, ஜோசப்பு
சமிபத்தில் தோழர்கள் வரதராஜுலு நாயுடுகாரும் ஜார்ஜ் ஜோசப்பு அவர்களும் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்கள் என்றும் தோழர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் முன்னமே சேர்ந்துவிட்டார்கள் என்றும் ஆதலால் ஈ வெ. ராமசாமியும் உடனே வந்து சேரவேண்டும் என்றும் சில தோழர்கள் விரும்புவதாக பத்திரிகையில் பார்த்தோம். இரண்டொரு பத்திரிகைகள் உபதலையங்கத்திலும் குறிப்பிட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளையும் எல்லா காங்கிரஸ் அபிமானிகளையும் ஒன்று கேட்கின்றோம்
ஏன் போனார்கள்? ஏன் வந்தார்கள்? அதாவது மேல்கண்ட மூவரும் எதற்காக காங்கிரசை விட்டுப் போனார்கள்? எதற்காக காங்கிரசில் வந்து சேர்ந்தார்கள் என்பதற்கு விடையளிக்க முடியுமா என்பது தான்
இதற்கு மற்றும் வேறு யாராவது விடையளிக்கக்கூடுமா என்றும் கேட்கின்றோம்
தோழர் முதலியார்
தோழர் முதலியார் அவர்கள் பழைய காலத்து சோடா பாட்டல்
மாதிரி ஒருநாளும் ஒரு குறிப்பிட்ட கொள்கையின் மீது நின்று அறியாதவர். கொஞ்ச நாளைக்கு முன்பு காஞ்சீபுரத்தில் பார்ப்பனரல்லாதார் காங்கிரசு கூட்ட முயற்சித்தார். மறுபடியும் 4 நாளையில் யாரோ ராஜிநாமா கொடுத்து விட்டதால் பார்ப்பனரல்லாதார் காங்கிரசு கூட்ட வேண்டியதில்லை என்றார்
மறுபடியும் 4 நாள் பொறுத்து தோழர் சத்தியமூர்த்தியார் தஞ்சைப் பேச்சில் “தோழர் ராமசாமி கேட்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நியாயமான தென்றும் அதுவிஷயமாய் எல்லா இந்திய காங்கரஸ் கமிட்டி மூலம் ஒரு அறிக்கை வெளியிடுவதாகவும்" கூறியதைப் பார்த்து தோழர் முதலியார் தனது பத்திரிகையில் தோழர் மூர்த்தியார் மீது கோபித்து
19 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வசவுமாலை சூட்டினார். “நான் கூடாது என்கின்ற போது நீர் எப்படி அதை
ஏற்றுக் கொள்ளலாம்'' என்கின்ற அகம்பாவ தொனியே அம்மாலையில் புஷ்பங்களாக பிணைக்கப்பட்டிருந்தது
மற்றபடி நாயுடுகாரை பற்றியும் ஜோசப்புகாரைப்பற்றியும் நாம் என்ன சொல்ல முடியும்? அவர்கள் அரசியல் வாதிகள். தோழர் ராமசாமியோ சமூகவாதி. தோழர் ராமசாமிக்கு ராமாயணக் கதையில் இந்தியாவை 14 வருஷ காலம் செருப்பு அரசாட்சி செய்தது என்று காணப்படுவது போல் இந்தியாவை ஒரு “கழுதை” அரசாட்சி புரிந்தாலும் அவருக்குக் கவலை: இல்லை. ஆனால் சர்வ சமூகமும் சமத்துவத்துடன் ஆளப்படவேண்டும் என்கின்ற கொள்கை வாதியாவார்.
அரசியல்வாதிகளான மேல்கண்ட கனவான்களோ இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டு மென்பார்கள், அல்லது இந்தியர் இஷ்டப்படி ஆளவேண்டு மென்பார்கள் அவ்வளவுதான். கொள்கைகளைப்பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது, இருக்குமானால் கராச்சித் திட்டத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? அல்லது சகல வகுப்பாருடைய வகுப்பு பழக்க வழக்க உரிமையை ஒப்புக் கொண்டிருப்பார்களா? இரண்டையும் அவர்களுக்குக் கவனிக்க வேண்டிய அவசியமில்லாமல்
செய்து விட்டது அவர்களுடைய அரசியல் வாதமே யாகும்.
ஜோசப் கற்ற பாடம்
தோழர் ஜோசப்பு அவர்கள் ஒரு காலத்தில் மதுரை முனிசிபல் கவுன்சிலுக்கு காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்டிருந்தார். மற்றொரு பார்ப்பனர் காங்கிரசு அல்லாதவராய் நின்று அவருடன் போட்டி போட்டார். காங்கிரஸ் பார்ப்பனர்கள் எல்லோரும் சேர்ந்து வேலை செய்து காங்கிரஸ் ஜோசப்பை தோற்கடித்து, காங்கிரஸ் அல்லாத பார்ப்பனரை ஜெயிக்க வைத்தார்கள். இது போன்ற இன்னும் பல அனுபவங்களும் அவருக்கு
உண்டு. அப்படியே,
நாயுடு கற்ற பாடம்
தோழர் வரதராஜுலு நாயுடுகாருக்கும் பல அனுபவங்கள் உள்ளதில். ஒரு சின்ன உதாரணம் கூறுவோம். 500ரூ செலவு செய்து சேலம் காங்கிரஸ் கமிட்டியை கைப்பற்றினார். அந்த கமிட்டியை பார்ப்பனர்கள் செல்லுபடியற்ற தாக்கி விட்டு தோழர் கே.வி. சுப்பராவ் கமிட்டியை ஒப்புக் கொள்ளப்பட்டது.
1000 ரூ போல் செலவிட்டு சேலத்தில் ஒரு காங்கிரஸ் கான்பரன்ஸ். பிரபல தேச பக்தர் தோழர் வி.ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் தலைமையில் கூட்டப்பட்டது. அதையும் பார்ப்பனர்கள் காங்கிரஸ் மகாநாடு அல்லவென்று தீர்மானித்து விட்டார்கள்.
குடி அரசு - 1936 (2), 180
இவை மாத்திரமல்லாமல் கோவை ஜஸ்டிஸ் மகாநாட்டில் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் (ஜஸ்டிஸ் உள்பட) காங்கிரசில் சேருவது என்று தீர்மானம் செய்தபடி எல்லோரும் காங்கிரசில் சேரப் போனார்கள். அந்தக் காலத்தில் மெம்பர் சேர்க்கும் பாரங்கள் எல்லாம் பார்ப்பனர்கள் கைக்குப் போய் மெம்பராக சேருகிறவர்கள் விண்ணப்பம் போட வேண்டும் என்றும், விண்ணப்பம் தமிழ்நாடு கமிட்டி தலைவரால் அனுமதிக்கப்பட்ட பின்பு மெம்பர் பாரத்தில் கையெழுத்து வாங்கப்படும் என்றும் எழுதாத சட்டம் தாண்டவமாடிற்று. அதை மீறிச் செய்த காரியம் எல்லாம் தமிழ்நாடு காரியக் கமிட்டியில் அங்கீகரிக்கப்படாமல் போய்விட்டது. அதில் சில தான் தோழர் நாயுடுகார் கமிட்டிகளும் மகாநாடும் ஆகும்
ஈ.வெ. ராமசாமி.
இன்றைய தினமும் காங்கிரசின் சூழ்ச்சிகளைப் பற்றியும் பார்ப்பனர் களின் தொல்லையைப் பற்றியும் தோழர் ஈ.வெ. ராமசாமி பயப்படவில்லை
ஆனால் காங்கிரசின் கொள்கை இன்னது என்றும், காங்கிரஸ் ஆட்சியில் பல வகுப்பு மக்களின் நிலை இன்னது, அவர்களின் பிரதிநிதித்துவ உரிமை இன்னது என்றும் தெரிய வேண்டாமா என்பதுதான் அவரது கவலை.
மந்தியி மோகம்
வரப்போகும் சீர்திருத்தத்தில் 7 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.
அவற்றுள் ஒன்று சாயபு, ஒன்றுதீண்டப்படாதார், ஒன்று கிறிஸ்தவருக்கும் கொடுத்தாக வேண்டும். தமிழ் நாட்டு பார்ப்பனருக்கு (தோழர் மூர்த்திக்கு) ஒன்று, ஆந்திர நாட்டுப் பார்ப்பனருக்கு (தோழர் பிரகாசத்துக்கு) ஒன்று மீதி
2 அல்லது அதிகமானால் மூன்று மந்திரி ஸ்தானங்கள் மீதி இருக்கும். இதில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களாகிய 100க்கு 60 க்கு மேற்பட்ட மக்களுக்கு எப்படிப் பங்கிட முடியும் என்று யோசித்தால் அந்த சமயம் காங்கிரசுக்காரர்
களுக்குள் ஒரு பிளவு ஏற்பட்டு பழையபடி ஜஸ்டிஸ் அல்லது ஜனநாயகம் அல்லது கூட்டுக்கட்சி என்பன போன்றவைகள்தான் மந்திரிசபை அமைக்கக் கூடிய நிலைமைக்கு வரலாம். அந்த சமயம் இப்போது காங்கிரசில் சேரும் தோழர் சுப்பராயன் முதல்கொண்டு புதிய காங்கிரஸ்வாதிகள் நிலைமை என்ன ஆகும் என்பது கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது என்பதை புதிதாய் போய் சேரும் காங்கிரஸ்காரர்களுக்கு ஞாபகப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஈ.வெ. ராவும் தயார்
இது எப்படியோ இருந்தாலும் தோழர்கள் நாயுடுகாரும் ஜோசப்பு காரும் கராச்சி பிரஜா உரிமைத் திட்டத்தையும் காங்கிரஸ் வேலைக்கமிட்டித் திட்டத்தையும் தெரிந்து அதைஒப்புக்கொண்டுதான் காங்கிரசில் சேர்ந்தார்களா?
18l ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அல்லது எதுவோ எப்படியோ போகட்டும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து தொலைய வேண்டுமே என்று கருதி சலிப்புடன் சேர்ந்தார்களா? என்பது நமக்கு புரியவில்லை. எப்படியானாலும் சரி இப்போது தோழர் ஈ.வெ. ராமசாமி காங்கிரசில் சேரத் தயார் தான். ஆனால் காங்கிரசு முஸ்லீம்களுக்கும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் மற்றும் சீக்கியர்கள் நாட்டுக் கோட்டையார் அவர்களுக்கும் சீர்திருத்தத்தில் அளித்திருக்கும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவப்படியும் உத்தியோகத்திலும் அந்தப்படியும் நமக்கும் ஒப்புக்கொண்டு ஜாதி மதவகுப்பு பேதங்களையும் வித்தியாசங்கள் முதலிய சமூகக் கொடுமைகளையும் ஒழிக்க சட்டம் செய்வதாகவும் ஒப்புக் கொள்வதானால் தான் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்
தோழர்கள் நாயுடுகாரும் ஜோசப்புகாரும் மற்றும் ராமசாமியை காங்கிரசுக்கு அழைப்பவரும் இது விஷயத்தில் சிறிது சிரமம் எடுத்து, கைகூடும்படி செய்து விட்டால் பெரிய உபகாரமான காரியமாகும் அப்படிக்கில்லாமல் ஏதோ ஒரு கூட்டத்தார் மாத்திரம்தான் அவர்கள் எப்படிப்பட்ட எண்ணக்காரர்களானாலும் தேச பக்தர்கள் போலவும் மற்றவர்கள் எப்படிப்பட்ட உண்மையானவர்களானாலும் தேசத் துரோகிகள் என்றும் சொல்லுவதானால் அந்த தேச பக்தர்கள் தேவதாசி என்கின்ற சொல்லுக்கு இன்று என்ன அர்த்தமோ அந்த அர்த்தத்துக்கு தான்: உரிமையுடையவர்களாவார்கள்.
இந்த நாட்டில் சமுதாயத் துறையிலும் மதத்திலும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்கும் இருக்கும் வித்தியாசமானது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமோ அல்லது இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமோ
இருக்கும் வித்தியாசத்தைவிட குறைந்ததல்ல ஆதலால் ஒரு கூட்டத்தாரின் பிரிவுக்கு ஒப்புக்கொண்ட வகுப்பு உரிமை மற்றக் கூட்டத்தாருக்கு ஒப்புக் கொள்வதில் என்ன ஆக்ஷ்பணை என்பது நமக்கு விளங்கவில்லை
தோழர் ஈ.வெ.ராமசாமி மந்திரி பதவியோ மற்ற ஏதாவது உத்தியோக பதவியோ எதிர்பார்த்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாய் யாரும் கருதிவிடக்கூடாது. தான் அவற்றிற்குத் தகுதியல்ல வென்றும், தனக்கு அவை தேவை இல்லை என்றும், அடைவதில்லை என்றும் எழுதிக் கொடுக்க எப்பவும் தயார். ஆதலால் அந்தக் கருத்தைக் கொண்டு இவற்றை கவனிக்காமல் பொது தேச சமூக நலத்தைக் கொண்டு கவனித்துப் பார்க்கும்படி தேச பக்தர்கள் - காங்கிரஸ்காரர்கள் என்பவர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 06.09.1936
குடி அரசு - 1936 (2), 182
காங்கரஸ் நாடகம்
போலி கட்டுப்பாடு:
சென்னை சட்டசபையில் இனாம் மசோதா ஆலோசனைக்கு வந்தபோது அதை ஒத்திவைக்க வேண்டுமென்று வந்த தீர்மானத்தைப் பல காங்கரஸ் மெம்பர்கள் எதிர்த்தார்கள். தோழர் சுப்பராயன் (காங்கரஸ் மெம்பர்) அத்தீர்மானத்தை ஆமோதித்தார். ஆனாலும் காங்கரஸ் சபைதான். கட்டுப்பாடுள்ளதாம்.
தடி அடி வாழ்த்து காங்கரஸ் தொண்டர்கள் தடியடிபட்ட காலத்தில் போலீஸ் தலைமை உத்தியோகஸ்தரைப் பாராட்டிப் பேசிய தோழர் சுப்பராயன் இன்று காங்கரசுக்கு நண்பர், காங்கரஸ் தலைவர் ஆகிவிட்டார்.
ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை இந்த காரணத்துக்காக காங்கரஸ்காரர்கள்
வைகிறார்கள். ஆனாலும் காங்கரஸ்காரர்களுக்குத்தான் நியாய புத்தி
இருக்கிறதாம்
காங்கரஸ் அரசியல் ஞானம்
சீர்திருத்தத்தின்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் புகுந்து சீர்திருத்தத்தை உடைத்து அது நடைபெறவொட்டாமல் செய்ய வேண்டும் என்கின்ற காங்கரஸ்வாதிகள் எந்த யோக்கியதையைக் கொண்டு இனாம் மசோதாவை சீர்திருத்தப்படி ஏற்படப்போகும் புதிய சட்டசபையில் நிறை வேற்றலாம் என்று சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஆனாலும் காங்கரஸ்காரர்களின் அரசியல் ஞானம் இதுதானாம்
என்ன செய்யப் போகிறார்கள்?
இந்நிலைமையில் கட்டுப்பாட்டுக்கு விரோதமாய் நடந்த தோழர் சுப்பராயன் அவர்களை காங்கரசு என்ன செய்யப்போகிறது? ஆனாலும் காங்கரசில்தான் கட்டுப்பாடு இருக்கிறதாம்.
குடி அரசு - கட்டுரை - 06.09.1936
183 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கரஸ் ஆர்ப்பாட்டம்
வீண் ஆர்ப்பாட்டம் செய்வதில் பெயர் பெற்றவர்கள் காங்கரஸ்காரர். ஆனால் அந்த ஆர்ப்பாட்டம் கண்ணியமும் பொறுப்பும் வாய்ந்த பதவி வகிப்பவர்களுக்கு அவமதிப்பையுண்டு பண்ணக்கூடியதாயிருந்தால் அதை அறிவாளிகள் ஆதரிக்கவே மாட்டார்கள். இம்மாதம் 2-ந் தேதி இந்தியச் சட்டசபையில் காங்கரஸ்காரர் ஆடிய வெளியேற்ற நாடகமானது தலைவரை அவமதிக்கத்தக்கதாயும் அறிவாளிகள் வெறுக்கக் கூடியதாயும் இருக்கிறது.
பிரிட்டிஷ் ஐவுளியின் இறங்குமதி வரியைச் சட்டசபையைக் கலக்காது குறைத்துவிட்டது சம்பந்தமாக சர்க்கார் நடத்தையைப் பற்றி ஆலோசிப்பதற் காகச் சட்ட சபையின் இதர நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டுமென்று கோவை மெம்பர் தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் ஒரு அவசரப் பிரேரணை கொண்டுவந்தார். தோழர் செட்டியார் பேசியபிறகு எக்கட்சியிலும் சேராத ஸர். கஜ்னாவியும், ஐரோப்பிய மெம்பர் தோழர் ராம்ஸே ஸ்காட்டும் அவருக்குப் பிறகு எக்கட்சியிலும் சேராத ஸர்.ஆர்.எஸ். சர்மாவும் பிரேரணையை எதிர்த்துப் பேசினார்கள். அப்பால் தோழர் கிருஷ்ண காந்த மாளவியாவும்டாக்டர் ஜியாவதீனும், காங்கரஸ் மெம்பர் பந்தும் பிரேரணையை ஆதரித்துப் பேசினார்கள். தோழர் பந்துவின் பேச்சுக்கு ஐரோப்பிய மெம்பர் தோழர் இ.எப். ஜேம்ஸ் பதிலளித்தார். அப்பால் தொழிலாளர் பிரதிநிதியான
எஸ்.எம். ஜோஷி பேசினார். உடனே விவாதத்தை முடிக்கவேண்டுமெனப் பலர் கூறினர். அப்பால் சர்க்கார் மெம்பர்கள் யாராவது பேச விரும்புகிறார்களா என்று தலைவர் கேட்டு அவர்கள் பேசுவதற்கு அதுதான் தருணம் என்றும் குறிப்பிட்டார். அதன்பேரில் வர்த்தக மந்திரி ஸர். ஜாபருல்லாகான் எழுந்து விவாதத்தில் சொன்ன விஷயங்களுக்கு பதிலளித்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் காங்கரஸ் பிரதம கொறடாவான ஜனாப் அஸாப்அலி தலைவரிடம் சென்று மேற்கொண்டு காங்கரஸ் மெம்பர்கள் பேச விரும்பவில்லை யென்றும் பிரேணையைவோட்டுக்கு விட்டுவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வோட்டுக்கு விடும் விஷயம் விவாதப் போக்கைப் பொறுத்திருக்குமென்று தலைவர் தெரிவித்தார்.
ஸர்.ஜாபருல்லா பேசி முடிந்ததும் தோழர் சத்தியமூர்த்தி தலைவரிடம் சென்று விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டு மென்றும் பிரேரணையை வோட்டுக்கு விடாமல் தடுக்கச் சர்க்கார் பொக்கிஷ மந்திரியைப் பேசும்படி கேட்கப்போவதாகவும் தெரிவித்தார்.
குடி அரசு - 1936 (2), 184
அப்பிரேரணையினால் பொக்கிஷ மந்திரியின் இலாகாவும் பாதித்திருப்பதினால் அவர் பேச விரும்பினால் அவருக்கும் சந்தர்ப்பமளிக்க வேண்டியிருக்குமென்று தலைவர் தோழர் சத்தியமூர்த்தியிடம் தெரிவித்தார். கடைசியில் விவாதத்துக்கு பதிலளிக்க பொக்கிஷ மந்திரி ஸர். ஜேம்ஸ் கிரிக் எழுந்தார். அப்பொழுது மணி 5.45. காங்கரஸ்கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேனாய் எழுந்து பிரேணையைப் பேசித் தீர்த்து விட இது ஒரு கூழ்ச்சியென்றும், ஸர்.ஜேம்ஸ் கிரிக் பேச விரும்பினால் முன்னாடியே பேசியிருக்க வேண்டு மென்றும் கூறி வெட்கம் வெட்கம் என்ற கோஷத்துடன் அசம்பிளியை விட்டு வெளியேறினார். ஏனைய மெம்பர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். தோழர். தேசாய் சொன்னது சரிதானென்றும் ஆனால் பொக்கிஷ மாதிரி பேச விரும்பு வதினால் அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கவேண்டியது அவசியமென்றும் தலைவர்கூற பொக்கிஷ மந்திரி பேசத்தொடங்கி 6 மணியானவுடன் பிரேரணை பேசி முடிக்கப்பட்டது. இதுதான் காங்கரஸ் வெளியேற்ற நாடகத்தின் மர்மம்
காங்கரஸ் மெம்பர்கள் சபையை விட்டு வெளியேறி தலைவரை அவமதித்ததோடு நில்லாமல் சில காங்கரஸ் கட்சி மெம்பர்கள் 3 அவமரியாதையான கடிதங்களையும் தலைவருக்கு அனுப்பினார்களாம் ஆகவே பிரஸ்தாப சம்பவத்தைப்பற்றி அசம்பிளித் தலைவர் கனம்
ஸர். அப்துர் ரஹிம் அசம்பிளியில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “சபையோருக்குத் தலைவரிடம் நம்பிக்கை இல்லாவிட்டால் அதனை வற்புறுத்த வேறு முறையுண்டு. அம்முறையை அனுசரிக்காதவரை தலைவர் தீர்ப்பை அசம்பிளி சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டால் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யாமலாவது கீழ்ப்படிய வேண்டும். இது பற்றிய விவாதத்தை நான் விரும்பவில்லை. மெம்பர்கள் இந்நிலையைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். அவர்களது அபிப்பிராபங்களைத் தெரிவிக்க அவர்களுக்குக் கூடிய சீக்கிரம் சந்தர்ப்பம் அளிக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
மறுநாள், நிலைமையை அமைதியாகச் சிந்தித்துப் பார்த்து காங்கரஸ் கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் “அசெம்பிளியில் அன்று நாங்கள் வெளியேறியது ஒரு தவறை ஏக காலத்தில் கண்டிக்கும் பொருட்டேயாகும். தலைவர்மீது நம்பிக்கையில்லாததினால் நாங்கள் வெளியேறவில்லை. ஆனால் மொத்தத்தில் சம்பவத்தைக் கண்டிக்கும் மூலமாகவும் அதிலும் விசேஷமாக சர்க்காரின் நடத்தையைக் கண்டிக்கவும் தலைவர் தீர்ப்பினால் அடைந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தவுமே வெளியேறினோம் என அசம்பிளியில் சமாதானம் கூறி காங்கரஸ்
கூத்தை முடித்தாராம் “தலைவர் தீர்ப்பினால் அடைந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்து வதற்காக, மெம்பர்கள் அசம்பிளியை விட்டுக் கும்பலாக வெளியேறியது” தலைவரை அவமதித்ததாகுமா ஆகாதா என்பதை நிர்ணயம் செய்யும் பொறுப்பை சட்ட நிபுணர்களுக்கு விட்டுவிடுகிறோம்
185 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பிரேரணையைப் பேசி முடித்து விடலாமென்று எண்ணிக்கொண்டு. கடைசி நேரத்தில் பொக்கிஷ மந்திரி பேச எழுந்திருந்ததாகவே வைத்துக் கொண்டாலும் அது எப்படித் தவறாகும்? சட்ட நிபுணரான தோழர் புலாபாய்
தேசாய் கோபித்துக்கொண்டது எவ்வாறு நியாயமாகும்? எனக் கேட்கிறோம்.
இந்தியச் சட்டசபைக்குச் சென்ற காங்கரஸ் மெம்பர்கள் ஆக்க வேலை செய்யும் நோக்கத்துடன் செல்லவில்லையென்பது உலகப் பிரசித்தமான விஷயம் பகிஷ்காரங்கள், சட்ட மறுப்புகள், உப்புப்போர், மறியல் முதலியன. வெல்லாம் தோல்வியடைந்து காங்கரஸ்காரர்களுக்கு வெளியில் தலை நீட்ட முடியாமலானபோது சட்டமறுப்பை நிறுத்திவிட்டு சட்டசபைகளில். புகுந்து முட்டுக்கட்டை போட்டு சர்க்காரிடம் பழிக்குப்பழி வாங்கிவிடலா மென்று தீர்மானித்தார்கள். காங்கரஸ்காரர் அசம்பிளியில் சென்ற நாள் முதல் இதுவரை அந்தப்பழிக்குப்பழிவாங்கும்வேலையே நடந்து வருகிறது. உருவான வேலை ஒன்றையாவது அவர்கள் செய்ய வில்லை. சர்க்காருக்குத் தோல்வி மேல் தோல்வி என விளம்பரம்செய்துதமது கையாலாகாத்தனத்தையும் அரசியல் முட்டாள் தனத்தையும் மறைக்கும் பொருட்டு “தோல்விக்குமேல் தோல்வி" உண்டாக்கினார்கள். அத்தோல்விகள் எல்லாம் வெறும் காகிதத் தோல்விகளே. அந்த தோல்விகளினால் சர்க்காரின் சுள்ளாணிகூட அசையவில்லை. சர்க்கார்
தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அசம்பிளி கூடும் போதெல்லாம்
சர்க்கார் தோற்கடிக்க வழி யென்னவென்றால் காங்கிரஸ்காரர் சூழ்ச்சி செய்தும், அச்சூழ்ச்சி களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள சர்க்கார் மெம்பர்கள் முயல்வதும் ஒரு வாடிக்கையாகப் போய்விட்டது
சர்க்கார் செயல்களில் குற்றம் காண்பதே காங்கரஸ்காரர் தொழிலாகப் போய்விட்டது. சர்க்கார் மெம்பர்களும் காங்கரஸ் மெம்பர்களைப்போல மனிதர்கள் தான், காங்கரஸ் மெம்பர்கள் குறும்புக்கு பதில் குறும்பு செய்ய
சர்க்கார் மெம்பர்கள் முயன்று அது மன்னிக்கக்கூடிய ஒரு அரசியல் குற்றமே. ஆனால் அந்த குறும்புக்கு சட்ட ஆதரவுண்டு என்பதை மட்டுமே நான் கவனிக்கவேண்டும். தர்ம நியாயங்களை கவனிக்கத் தேவையே இல்லை. அரசியல் சதுரங்கத்தில் தர்ம நியாயங்களுக்கு இடமே இல்லை. சட்ட நியாயங்களுக்குத்தான் இடமுண்டு. அசம்பிளித் தீர்மானங்களை வைஸ்ராய் நிராகரிப்பது தர்ம நியாயப்படி தப்பாக இருக்கலாம்; சட்ட நியாயப்படி தவறல்ல; ஏன்? சந்தர்ப்பத்துக்குதக்கபடிபிரயோகம் செய்து சர்க்காரைக் காப்பாற்ற தேவையான விசேஷ அதிகாரங்களை யெல்லாம் சட்டம் வைஸ்ராய்க்கு அளித்திருக்கிறது. அதுபோலவே முக்கியமான பிரேரணைகளை வோட்டுக்கு விடவொட்டாமல் பேசித்தீர்த்துவிடுவது தர்ம நியாயப்படி தவறாக இருக்கலாம்; ஆனால் சட்ட நியாயப்படி தவறல்ல, ஏன்? சட்டம் அதற்கு இடம் கொடுக்கிறது பூரண சுயேச்சை நாட்டு பார்லிமெண்டுகளிலும் அந்தப் பேசித் தீர்க்கும் திருவிளையாடல் தாராளமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரித் திருவிளையாடல்களுக்கு இடம் கொடுக்கும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்ட அசம்பிளியில் புகுந்து, வீண் ஆர்ப்பாட்டம் செய்வது
குடி அரசு - 1936 (2), 186
காங்கரஸ்காரரின் அரசியல் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. தற்கால நிலைமையில் சர்க்காரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாதென்று கருதியே பழைய அசம்பிளி மெம்பர்கள், எதிர்க்க வேண்டிய காலத்து எதிர்த்தும் ஆதரிக்கவேண்டிய காலத்து ஆதரித்தும் விட்டுக்கொடுக்க வேண்டிய காலத்து விட்டுக் கொடுத்தும் ஜனங்களுக்குச் சொற்ப நன்மையாவது செய்து வந்தார்கள். சர்க்காரோடு போராடச் சென்ற காங்கரஸ் வீரர்கள் இதுவரை சாதித்ததென்ன? தபாற்கார்டு விலையில் ஒரு பைசாவையாவது குறைக்க முடிந்ததா? சட்டசபை ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால் சர்க்காருக்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டிருப்பதைக் காணலாமே யொழிய ஜனங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளைப்பற்றி ஒரு வரியாவது காணமுடியாது. நாளை, சர்க்கார் மெம்பர்கள் வீற்றிருக்கும் ஸ்தானத்தில் புலாபாய் தேனயும் சத்தியமூர்த்தியும் ரெங்காவும் அவனாசிலிங்கமும் வீற்றிருக்கும்படி நேர்ந்தாலும் பிரேரணைகளைப் பேசித்தீர்க்கும் நாடகங்கள் நடைபெறத்தான். செய்யும்.ஏன்? சட்டசபை நடவடிக்கைகளில் அதுவும் ஒரு முக்கியமான அமிசம். சோகரஸமும் ஹாஸ்யரசமும் இல்லாமல் ஒரு நாடகம் எப்படி ஸ்வாரஸ்யமாக இராதோஅப்படியே பேசித்தீர்க்கும்சீன் இல்லாவிட்டால் சட்டசபை நடவடிக்கை களும் ஸ்வாரஸ்யமாக இருக்கமாட்டா. எனவே, “ஐயோ பேசித் தீர்த்துவிடப் போகிறார்களே!” என வாயிலும் வயிற்றிலும் அறைந்து கொள்கிறவர்கள் சட்டசபை ஐதீகங்களை அறியாத அடிமுட்டாள்கள் என்றே சொல்லவேண்டும்.
மேலும் பார்லிமெண்டரி முறைகளையும் கண்டனத் தீர்மானங்களையும் ஒத்திவைப்புத் தீர்மானங்களையும் பேசித் தீர்க்கும் திருவிளையாடல்களையும் நமக்குக் கற்பித்தவர்கள் ஸர். ஜேம்ஸ் கிரிக்கின் வமிசத்தாரே. நமது நாட்டு முணீவரர்களும், தர்ம சாஸ்திரகாரரும், கனபாடிகளும், தீக்ஷதர்களும், சாஸ்திரி
களும் அல்ல. எனவேதாய் மாமனிடம் குலமும்கோத்திரமும் கேட்ட கதைபோல, நமக்குப் பாடம் கற்பித்தவர்களுக்கே நாம் டிமிக்கி காட்ட விரும்பினால் அவர்கள் இலேசில் விடுவார்களா? கொல்லத்தெருவில் ஊசி விற்கவா போகிறது?
காங்கரஸ்காரர் விரும்பும் பூரண ஸ்வராஜ்யம் வந்தாலும் இந்த நாடகம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஏன்? ஸ்வராஜ்ய சர்க்காரிலும் எதிர்க்கட்சி இருக்கத்தான் செய்யும். கட்சிப் பிரதிகட்சிகள் உள்ள இடத்தில்
தந்திரங்களும் சூழ்ச்சிகளும் இருந்துதான் வரும் தோழர் அவிணசிலிங்கம் பிரேரணையை 3 மெஜாரட்டி வோட்டினால் நிறைவேற்ற காங்கரசுக்கு பலமிருந்ததாம். எனினும் நமது பருப்பு வேகவில்லையே யென காங்கிரஸ்காரர் வருந்தலாம். என்ன செய்வது? இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எதிரிகளைத் தோற்கடிக்க சட்டசபைச் சட்டங்களில் பொடி வைத்திருக்கும் சட்ட நிபுணர்களைத்தான் அதற்காக நோகவேண்டும். ஸர். ஜேம்ஸ் கிரிக்கின் மீதும், சட்டசபைத் தலைவர் மீதும் முட்டிப் பயன் என்ன?
குடி அரசு - கட்டுரை - 06.09.1936
187 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கரஸ் அனுபவம்
தொட்டது துலங்காது
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களை ஏற்று நடத்திய காலத்தில் அவைகளின் நிர்வாகங்கள் ஒழுங்காகவும் குழப்ப மில்லாமலும் இருந்தமையால் அப்போது அவைகள் கலைக்கப்பட வேண்டும் என்று ஒருவரும் கூறியது கிடையாது. அப்படிச் சொல்வதற்கு அவசியமும் ஏற்பட இல்லை
காங்கிரஸ்காரர்கள் ஜில்லா போர்டு நிர்வாகங்களைக் கைப்பற்றி நடத்திய சில காலத்துக்குள்ளாகவே அவர்கள் நிருவாகம் ஒழுங்காகச் செய்ய முடியாமையால் ஜில்லா போர்டுகளைக் கலைத்து விடவேண்டும் என்று தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியும், திரு. வி. கலியாணசுந்தர முதலியாரும் காங்கரஸ் சார்பாகவே சொல்ல முன்வந்து விட்டார்கள். ஆகவே, இதிலிருந்து காங்கரஸ்காரர்களின் நிர்வாகத் திறமையைப் பொது மக்கள் நன்குணர்ந்து கொள்வார்கள். காங்கரஸ்காரர்கள் எந்தப் பதவியைக் கைப்பற்றினாலும் நிர்வாகம் ஒழுங்காக நடைபெறாதென்பதற்கும், அவர்களுக்கு ஒழுங்காக நிர்வகிக்கத் திறமையில்லை யென்பதற்கும், காரணம் அவர்களுக்குள் கட்டுப்பாடு இல்லாததுதான் என்பதற்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
குடி அரசு - கட்டுரை - 06.09.1936
குடி அரசு - 1936 (2), 188
காலித்தனம்
காங்கிரஸ் “'காப்பிரைட்டா???
“கோடீசுர” சோஷியலிஸ்டும் அகில இந்திய காங்கரஸ் தலைவருமான: பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியர்களின் சிவில் உரிமைகளைப் காப்பாற்ற ஒரு சங்கம் கண்டிருக்கிறார். அதற்கு ஆள் சேர்க்கும் பொருட்டு இந்தியா முழுதுமுள்ள பல திறப்பட்ட அபிப்பிராயமுடைய தலைவர்களுக்கெல்லாம் - அரசியல் வாதிகட்கெல்லாம் அவர் விண்ணப்பங்கள் அனுப்பினார். மகாகனம்
ஸர். டெஜ்பகதூர் சாப்ரு, பம்பாய் ஸர். கவாஸ்ஜி ஜிஹாங்கீர், சென்னை
ஸர். பி. சிவசாமி அய்யர் போன்ற பிரபலஸ்தர்கள் சோஷியலிஸ்டு பண்டிதரின்.
சிவில் உரிமைப் பாதுகாப்பு சங்கத்தில் சேர முடியாதென்று தக்க காரணங் களுடன் கண்டிப்பாக விடையளித்து விட்டார்கள்.
சட்டமறுப்புக் காலத்தில் மக்களின் சிவில் உரிமைகளுக்கு முட்டுக்கட்டை போட்ட காங்கரஸ் கூட்டத்தின் தலைவராயிருக்கும் பண்டித ஜவஹர்லால் சிவில் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் ஏற்படுத்தியிருப்பது பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அந்தச் சங்கத்தை ஸ்தாபித்த பண்டித ஜவஹர்லாலின் போக்கோ அவரது சங்க நோக்கத்துக்கு முரணானதாகவே இருக்கிறது. லக்ஷ்மணபுரியில் பாய்பரமானந்தர் ஒரு பிரசங்கம் செய்தபோது சட்ட மறுப்புக் காலத்தில் காங்கரஸ்காரர் ஒழுக்கங்கெட்ட பெண்களை அரசியல் போரில் ஈடுபடுத்தியதாகக் கூறினாராம். அவ்வளவுதான், அதற்கப்புறம் அவரால் பேசமுடியவில்லை. காங்கிரஸ்காரர்: கலாட்டாச் செய்து கூட்டத்தைக் கலைத்துவிட்டார்கள்.
அப்பால் அவர் சில இடங்களில் பேச முயன்றபோதும் பல காங்கரஸ்வாலாக்கள் அநாவசியமான கேள்விகள் கேட்டுத் தொல்லை விளைத்தார்களாம். பாய்பரமானந்தர் கூறிய அவமதிப்பான மொழிகளை வாபீஸ் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். பாய்பரமானந்தர் இணங்கவில்லை. தாம் அபாண்டமாக எதையும் சொல்லவில்லையென்றும் தாம் சொன்னதை நிரூபிக்கத் தயாராயிருப்பதாயும் அவர் மார்தட்டிக் கூறினாராம். கூட்டத்தைக் கலைப்பதிலும் கலாட்டாச் செய்வதிலும் சமத்தர்களான காங்கரஸ்வாலாக்கள் இப்பொழுதும் பாய்பரமானந்தருக்குத் தொல்லை விளைவித்துக்கொண்டுதானிருக் கிறார்களாம். இவ்விஷயத்தை பண்டித ஜவஹர்லால் பார்வைக்கு
19 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கொண்டு வந்தபோது கூட்டத்தில் கேள்விகள் கேட்கவும் தமது அதிருப்தியைத் தெரிவிக்கும் யாவருக்கும் உரிமையுண்டென்று “சிவில் உரிமை பக்தர்” ஆன பண்டித ஜவஹர்லால் கூறிவிட்டாராம்
சென்ற மாதம் 28-ந்தேதி புனாவில் லிபரல் கட்சியாரின் தேர்தல் பிரசாரம் ஆரம்பமாயிற்று. அப்பிரசார விழா ஆரம்பத்துக்காக பம்பாய் தலைவர் ஸர். கவரஸ்ஜி ஜிஹாங்கீரும் சென்றிருந்தார். கூட்டத்தை ஆரம்பித்து வைக்கும்போது காங்கரஸ் தேர்தல் பிரசார அறிக்கையைக் கண்டித்துப்பேசி, பண்டித ஜவஹர்லால் காங்கரசால் கெட்டுப்போன பிள்ளை என்று குறிப்பிட்டாராம். உடனே அழுகல் முட்டைகள் வீசப்பட்டனவாம். காகிதப்பந்துகள் எறியப்பட்டனவாம். யாரோ மின்சார விளக்குகளையும் அவித்து விட்டார்களாம். கடைசியில் கூட்டம் குழப்பத்தில் முடிந்ததாம். கூட்டத்தில் பேச நினைத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
இச்செய்திகளை காங்கரஸ் பத்திரிகைகள் மிகப் பாராட்டி கொட்டை எழுத்துக்களில் பிரமாதமாகப் பிரசுரம் செய்திருக்கின்றன. தென்னிந்தியாவிலும் இம்மாதிரிக் கலாட்டாக்கள் நடப்பதுண்டு. தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டித்தலைவர் தோழர் சத்தியமூர்த்தி பிரசன்னமாயிருந்த சேலம் காங்கரஸ் கூட்டத்தில் சுயமரியாதைத் தொண்டர் தோழர் சித்தையன் தாக்கப்பட்டதை தென்னாட்டார் அறிந்திருப்பார்கள். நாமக்கல் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டின்போது காங்கரஸ்காரர்கள் ஒரு கழுதையை அலங்கரித்து ஊர்வலம் நடத்தியதையும் அப்பால் காங்கரஸ்காரர்களில் சிலர் மகாநாட்டு நிர்வாகிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கழுதையை மீட்டுக் கொண்டு போனதையும் நமது வாசகர்கள் அறிந்திருக்கக்கூடும்
காங்கரஸ் கூட்டங்களில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைப் பற்றி அவமரியாதையாகப் பேசுவதும் அவன் இவன் என ஒருமைப் பதங்களைப் பிரயோகம் செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜஸ்டிஸ்
கட்சிக் கூட்டங்களில் காங்கரஸ்காரர் கல்லெறிவதும் கலாட்டாச் செய்வதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இவ்விஷயங்களை கவனித்தால் காங்கரஸ்காரர்களுக்குத்தான் பொதுக் கூட்டங்களில் பேசவும் பிரசாரம் செய்யவும் உரிமை யுண்டென்றும் ஏனைய கட்சியாருக்கு பேசவோ பிரசாரம் செய்யவோ உரிமையில்லை யென்றும் காங்கரஸ்காரர் எண்ணிக்கொண்டு இருப்பதுபோல் தோற்றுகிறது
புனாக் கூட்டத்தில் பேசிய சர். கவாஸ்ஜி ஜிஹாங்கீர் ஒரு மிதவாதி. அரசியல் அனுபவம் உடைய ஒரு பழைய தலைவர். சோஷியலிஸ்டுக் கொள்கைகள் அவருக்குப் பிடிக்காதிருக்கலாம். எனவே சோஷியலிஸ்டு பிரசாரம் செய்யும் பண்டித ஜவஹர்லாலைக் கண்டித்து பேசினார். மிதவாதிகளைக் கண்டிக்க காங்கரஸ்காரருக்கு உரிமையுண்டானால் அபேதவாதிகளையோ காங்கிரஸ்காரர்களையோ கண்டிக்க மிதவாதிகளுக்கு உரிமையில்லையா! ஜவஹர்லாலைக் கண்டித்துப் பேசிய சர். கவாஸ்ஜி
குடி அரசு - 1936 (2), 190
ஜிஹாங்கீர் சபா யோக்கியமல்லாத வாக்கியங்களையும் பிரயோகம் செய்யவில்லை. ஜவஹர்லால் காங்கரசால் கெட்டுப்போன பிள்ளை என்றாராம். இது ஒரு ஏச்சாகுமா? ஆட்சேபகரமான பதமாகுமா?
மிதவாதிகள் கூட்டத்தில் காங்கரஸ்காரருக்குப் பல்லாண்டு பாட வேண்டுமென்பது காங்கரஸ்காரர் விருப்பமா? தம்தம் கட்சி நோக்கங்களை விளக்கவும் எதிர்க்கட்சியார் திட்டங்களிலுள்ள ஊழல்களை எடுத்துக் காட்டவுமே ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிரசாரக் கூட்டம் கூட்டுகிறது. எனவே ஒரு கட்சி கூட்டும் பிரசாரக் கூட்டத்தை ஏனைய கட்சிகள் கலைப்பது மரியாதையாகுமா? யோக்கியப் பொறுப்பாகுமா?
இந்தியர்களுடைய பேச்சு சுதந்தரம், கூட்டச் சுதந்தரம் முதலிய சர்வ சுதந்தரங்களுக்குமாகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ்காரர் இவ்வாறு அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளலாமா? காங்கரஸ் பெரிய ஸ்தாபனம், பழைய ஸ்தாபனம் என்று கூறப்படுவதினால் காலித்தனம் செய்ய காங்கரசுக்குத்தான் உரிமையுண்டென்பது காங்கரஸ்காரர். கருத்தா? இந்த அயோக்கியத்தனங்களைத் தடுக்க தேச மகாஜனங்களும் சர்க்காரும் தேவையான ஏற்பாடுகள் செய்யாவிட்டால் அரசியல் வாழ்வே - சுவையற்றதாகிவிடும் - பயனற்றதாகிவிடும். காலிகள் - கூலிகள் கை வலுத்துவிடும்
குடி அரசு - கட்டுரை - 06.09.1936
19] ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இரண்டும் உண்மையே
2.9.36-ந் தேதி “எது உண்மை?” என்னும் தலைப்பில் “ஜனநாயகம்” பத்திரிகையில் ஒரு உபதலையங்கம் எழுதப்பட்டு அதில் தோழர் பாண்டியன். அவர்களும், தோழர் மந்திரி ராஜன் அவர்களும் கோவை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் பேசிய பேச்சின் சுருக்கத்தை தனித்தனி எடுத்துப் போட்டு இவற்றுள் எது உண்மை என்று தெரிய ஆசைப்பட்டிருக்கிறது.
அதைக் காணும் பொதுமக்களில் சிலராவது மயக்கங்கொள்ளக் கூடுமாதலால் இரண்டும் உண்மையே என்று விளக்க ஆசைப்படுகிறோம்.
அதாவது தோழர் பாண்டியன் அவர்கள் கோவை மகாநாட்டுக் கூட்டத்தில் ஜில்லா ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களைப் பற்றி பேசுகையில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் “ஜில்லாக்களில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் (Some) சிலர் நாங்கள் போனபோது எங்களைப்பற்றி லட்சியம் செய்யவில்லை.
சிறப்பாக சென்னையில் நாங்கள் போனபோது ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிறிதுகூட உதவி செய்யவில்லை, நாங்களே நோட்டீசு போட வேண்டியிருந்தது, நாங்களே பெஞ்சு நாற்காலி போடவேண்டியிருந்தது, நாங்களே விளக்குக்கு பணம் கொடுக்க வேண்டி வந்தது என்று பேசினார்.
இது சில இடங்களில் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிலரின் அற்ப புத்தியைக் காட்டிற்று என்று ஆகுமேயல்லாமல் பொதுஜனங்கள் ஆதரவு இல்லை என்று ஆகுமா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்.
இதற்கு விளக்கம் ஏற்கனவே தோழர் ஈ.வெ.ரா. சேலம் பேச்சில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் பட்டம், பதவி, பணம் சம்பாதித்துவரும் சிலருக்கு பிரசாரத்தில் நம்பிக்கை இல்லை என்றும், அவர்கள் சமயத்துக்குத் தகுந்தபடி நடித்து தங்கள் சுயநலத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதிலே கருத்துடையவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அதே மாதிரி சென்னையில் - பிரசாரக் கமிட்டி சென்றபோது ஒரு ஜஸ்டிஸ் பிரமுகர் என்பவர் சிறிதும் கவலையில்லாமல் இருந்ததோடு பொப்பிலி ராஜா அவர்கள் பிரசாரத்துக்காக கொடுத்த பணத்தையும் ஒழுங்காக செலவழிக்காமல் பாழாக்கிவிட்டு பிரசாரக் கமிட்டி பிரசாரத்தை
குடி அரசு - 1936 (2), 192.
குறை கூறியும் பேசினவருக்கு உடனே பெரியதொரு உத்தியோகம் கிடைத்துவிட்டது. அப்படிப்பட்ட சிலருக்கு இன்னமும் சில உத்தியோகங்கள். காத்துக்கொண்டுமிருக்கின்றன.
ஆகையால் தோழர் பாண்டியன் அவர்கள் குறிப்பிட்டது கட்சியின். பேரால் பயனடைந்து நன்றியறிதல் இல்லாதவர்களைக் குறிவைத்தே ஒழிய பொதுஜன ஆதரவைப்பற்றி அல்ல என்பது அவரது பேச்சிலேயே விளங்கும். தோழர் மந்திரி ராஜன் அவர்கள் கூறியதும் உண்மையே யாகும், அதாவது தோழர் ராஜன் அவர்கள் தனியாகவும் பிரசாரக் கமிட்டியாருடனும் சென்ற இடங்களில் எல்லாம் பொதுஜன ஆரவாரமும் ஆதரவும் ஏராளமாக இருந்தது என்பதோடு தோழர் மந்திரி குமாரசாமி செட்டியார் அவர்கள் சென்ற எல்லா இடங்களிலும் திருநாள்கள் போல் வரவேற்பும் ஆதரவும் இருந்தது என்பது எதிரிகளாகிய பார்ப்பனர்கள். பத்திரிக்கைகளைப் பார்த்தாலும் விளங்கும். ஆதலால் இரண்டும் உண்மையே என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1936
193 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
“ஏழைப் பங்காளர்”?
சத்தியமூர்த்தி!
தீண்டாமையொழிப்பு காங்கரஸ் வாலாக்களுக்குக் கட்டிக் கரும்பாம். எளியோர் விடுதலை பால் சோறாம். கிரியாம்சையில் இவையாவும் வாய்ப்பந்தலாகவே இருக்கிறது
700 மைல் தூரம் கால்நடையாக நடந்து பட்டினிப்பட்டாளம் கள்ளிக்கோட்டையிலிருந்து சென்னைக்குச்சென்றது. சட்டசபையில் நமது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டுமென்பது அந்தப் பட்டாளத்தின் நோக்கம். “எதற்காக 700 மைல் தூரம் நடத்துவர வேண்டும்! ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்! சட்டசபை மெம்பர்கள் மூலம் சமர்ப்பித்தால் போதுமே" என்றெல்லாம் சர்க்கார் காரணம் கூறிக்கொண்டார்களாம். சட்டசபை செல்ல. பட்டாளம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஏழைகளுக்காகப் பாடுபடும் காங்கரஸ் பிரதிநிதி - அதிலும் தமிழ் மாகாண காங்கரஸ் கமிட்டித்தலைவர் - தோழர் சத்தியமூர்த்தி என்ன செய்தார் தெரியுமா? உதவி வேண்டிய பட்டாளத்தின் வார்த்தைகளைத் தம் காதில் கூடப் போட்டுக்கொள்ள வில்லையாம். “உங்கள் கொள்கை எங்கள் கொள்கைக்கு மாறானது. காங்கரஸ். பேரால் உதவி செய்ய முடியாது. வேண்டுமானால் தர்மத்துக்காக ஒரு நாளைக்குச் சோறுபோடலாம். காங்கரஸ் மண்டபத்தில் தங்க இடம் தரலாம். சலாம் போய் வாருங்கள்" என ரத்னச் சுருக்கமாகப் பேசி முடித்துவிட்டாராம். பட்டினிப் பட்டாளத்தின் கொள்கை மாகாண காங்கரஸ் தலைவருக்கே பிடிக்கவில்லையானால் சென்னை சர்க்காருக்குப் பிடிக்கவா போகிறது? ஆனாலும் தோட்டி முதல் தொண்டமான் வரை இந்தியர் அனைவருக்கும் காங்கரஸே ஏக பிரதிநிதி ஸ்தாபனம் என்று சொல்லிக்கொள்ளப்படுகிறது. ஏழைகள் உதவி நாடிச் சென்றால் தமிழ் மாகாண காங்கரஸ் தலைவர். கையை விரிக்கிறார். அதைப்பார்த்து அழுவதா? சிரிப்பதா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1936
குடி அரசு - 1936 (2), 194.
மறுபடியும் வெளியேறும் நாடகம்
இனிப் பலிக்காது!
காங்கரஸ்காரர்கள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காக புது எலக்ஷன் வரும்போதெல்லாம் அதாவது சட்டசபை காலம் காலாவதி ஆகும் போதெல்லாம் தாங்கள் சட்டசபை ஸ்தானத்தை லட்சியம் செய்யாதவர்கள். என்று காட்டிக்கொள்ளுவதற்காக சட்ட சபையைவிட்டு வெளியேறிவிட்டதாக வேஷம் போட்டு நாடகம் நடிப்பது வழக்கம். இந்த நாடகத்தை தோழர்கள் பெரிய மோதிலால் நேரு முதல் அநேகர் நடித்துப் பார்த்தாய் விட்டது? அப்படி இருந்தும் இப்போது வேறு வழியில் அதே நாடகத்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இதனாலெல்லாம் பொதுமக்கள் இனி ஏமாந்துவிடமாட்டார்கள்.
இனி காங்கரசுக்காரர் பொது ஜனங்களை ஓட்டுக் கேட்கப்போனால் இதுவரை நீங்கள் சட்டசபையில் சாதித்ததென்ன என்றும், எந்த தடவையாவது, எதிலாவது நீங்கள் வாக்கு கொடுத்தபடி நாணயமாய் நடந்தீர்களா என்றும் கேட்டு முகத்தில் கரியைத் தடவி அனுப்பப் போகிறார்கள் என்பது உறுதி
குடி அரசு - கட்டுரை - 06.09.1936
195 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கரஸ்காரர் பித்தலாட்டம்
ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை
காங்கரஸ் பேரால் அயோக்கியர் யோக்கியராகிவிடமாட்டார்கள்
ஆவின் யோக்கியதையைக் கவனித்து வோட்டுக் கொடுங்கள்
தலைவரவர்களே தோழர்களே!
இன்று தேர்தலும் ஓட்டர்கள் கடமையும் என்பதாக பேச இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி நான் முன்னமேயே அநேக தடவை பேசியிருக்கிறேன்.
தேர்தல்கள் வரும்போதெல்லாம் இந்த விஷயத்தைப்பற்றி பேசுவது சகஜமேயாகும். அதுபோலவே சென்னையில் இப்போது கார்ப்பரேஷன் எலக்ஷன் நடக்கப்போவதால் அதைப்பற்றி பேச ஏற்பாடு செய்திருப்பதாகத்
தெரிகிறது
தேர்தல்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை
நான் எப்போதும் அதாவது காங்கிரசில் இருக்கும்போது முதலே தேர்தலைப்பற்றிப் பேசுவதாய் இருந்தால் குறிப்பாக ஸ்தல ஸ்தாபன தேர்தல்களைப் பற்றி பேசுவதாய் இருந்தால் கட்சிகளைப் பற்றிக் கவனிக்க வேண்டாம் என்றும் ஆட்களின் தராதரங்களைக் கண்டு ஓட்டு செய்யுங்கள் என்றும் ஓட்டர்களை கேட்டுக் கொள்ளுவது வழக்கம்.
இம்மாதிரியாக கேட்டுக்கொள்ளும் கூட்டங்களில் கட்சிகளைப்பற்றியும் நான் எப்போதாவது பேசியிருப்பேனேயானால் அது காங்கிரசுக்காரர்கள் கட்சிகளைப் பிரதானப்படுத்தி தங்கள் கட்சியே யோக்கியமான கட்சி என்றும், மற்ற கட்சிகள் குறிப்பாக ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகமான கட்சி யென்றும், கட்டுப்பாடற்ற கட்சியென்றும் கூறி அக்கட்சியிருப்பதாலேயே அக் கட்சியின் பேரால் நிற்பவர்களை இழிவுபடுத்தி பழி சுமத்திக் கூறி மக்களை ஏமாற்றச் செய்துவரும் சூழ்ச்சிக்கும் இழி தன்மைக்கும் பதிலளிக்கும் பொருட்டுத்தான் கட்சிகளைப் பற்றியும் நான் சில சமயங்களில் பேசி யிருப்பேனே ஒழிய வேறில்லை.
குடி அரசு - 1936 (2), 196
இன்று தேர்தல்களில் கட்சி தகராறுக்கும் கட்சித் தொல்லைக்கும் அதிகமாக இடம் ஏற்படுத்தினவர்கள் காங்கிரசுக்காரர்களேயாவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தங்கள் கட்சியின் பேரால் தேர்தல்களுக்கு நிறுத்தவும் கட்சியில் சேர்க்கவும் பெரிதும் யோக்கியமானவர்களும் தகுதியானவர்களும் வேண்டிய அளவு கிடைக்காததாலும், வெகு சாதாரண அதாவது பொது ஜனங்கள் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமில்லாத ஆட்களையே காங்கிரஸ் பேரால் நிறுத்த வேண்டியிருக்கிறதாலும், காங்கிரஸ்காரர்களுக்கு தங்கள் கட்சி பேரால் நிற்கும் ஆட்களின். பெயர்களையும், யோக்கியதைகளையும், நாணயங்களையும், தகுதிகளையும் சொல்லி ஓட்டுக் கேட்க யோக்கியதை இல்லாததால் கட்சி பெயரையும் சொல்ல வேண்டியிருக்கிறது
காந்திக்கு ஓட்டுக் கேட்பது
மற்றும் காந்தியார் பெயரையும் வேறு யார் யாரோ எதற்காகவோ ஜெயிலுக்குப் போனதையும் சொல்லி ஓட்டு வாங்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.
நமக்கு அப்படிப்பட்ட அவசியம் இல்லை. பெரிதும் தனிப்பட்ட நபர்களின் பெயர்களைச் சொல்லியே நாம் ஓட்டுக் கேட்கின்றோம் கட்சியின் பேர் சொல்ல வேண்டுமானாலும் நாம் தயாராகவே இருக்கிறோம். மற்ற எந்த கட்சிகளையும்விட நம்கட்சி இளைத்த கட்சி அல்ல என்றே சொல்லுவேன். நமது கொள்கை இன்றைய அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகியவற்றில் காங்கிரசுக்கோ அல்லது மற்ற எந்த கட்சிக்கோ சிறிதும் பின்னடைந்ததல்ல.
ஆதலால் நாம் அவசியமானால் கட்சிப் பேர் சொல்வதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
காங்கிரஸ்காரர்கள் தேர்தல்களில் காந்தியார் பெயர் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள். இது சிறிதுகூட யோக்கியப் பொறுப்பான காரியமாகாது என்றே சொல்லுவேன்.
ஏனெனில் காந்தியார் இன்று காங்கிரசில் ஒரு 4அணாமெம்பராகக்கூட இல்லை. இந்த விஷயம் காங்கிரசுக்காரருக்கும் தெரியும். காந்தியாருக்கும் ஸ்தல ஸ்தாபன நடவடிக்கைக்கும் நிர்வாகங்களுக்கும் சிறிதும் சம்மந்தமில்லை. ஏனெனில் ஸ்தல ஸ்தாபன மெம்பர்களுக்குதலைமை வகித்து அவர் ஸ்தல ஸ்தாபன காரியங்களை நடத்தப் போகிறதுமில்லை:
ஸ்தலஸ்தாபனசம்மந்தமாய் காந்தியாரிடம்எவ்வித கொள்கையுமில்லை ஆகவேஅப்படிப்பட்டவர் பெயரைச்சொல்லி எப்படிப்பட்டஅயோக்கியருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுத்து ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நடத்தப்படுவது
197 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
என்றால் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொன்னது போல் ஸ்தல ஸ்தாபனங்களை கலைத்துவிட்டு அதன் நிர்வாகத்தை சர்க்கார் வசம்
ஒப்புவித்து விடுவதே மேலான காரியமாகும்.
சர்க்கார் யோக்கியமாயிருந்தால்
உண்மையிலேயே சர்க்கார் நியாயமான சர்க்காராய் இருந்தால். இம்மாதிரி பித்தலாட்டம் செய்து ஓட்டர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கின. மெம்பர்களை வெற்றி பெற்றதாக ஒப்புக் கொள்ளாமல் அப்படிப்பட்டவர்களின் தேர்தல்களை ரத்து செய்து விடுவதோடு அப்படி ஏமாற்றி ஓட்டு வாங்கியவர்களின் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தி அவர்களை இனி என்றென்றும் தேர்தலுக்கு நிற்க லாயக்கில்லாதவர்களாக செய்து இருப்பார்கள். அது மாத்திரமல்லாமல் அப்படிப்பட்டவர்க்கு பித்தலாட்டப் பிரசாரம் செய்து ஓட்டு வாங்கிக் கொடுத்த பொலிட்டிகல் டவுட் என்னும் கூலித் தரகர்களிடமும் நல்ல நடவடிக்கைக்கு ஜாமீன் வாங்கி என்றென்றும் மேடை ஏற மார்க்கமில்லாமலும் செய்திருப்பார்கள்.
சர்க்கார் அப்படிக்கு இல்லாமல் இந்த மாதிரி ஆட்களை வைத்தே தங்கள் காரியம் சாதித்துக் கொண்டு போகிறவர்களாய் இருப்பதால் சரியான. கவலை எடுத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள் என்று சொல்ல
வேண்டி இருக்கிறது
ஜெயிலுக்கு போனைற்கு ஓட்டுக் கேட்பது
ஜெயிலுக்கு போனதற்காக ஓட்டுப் போட வேண்டுமென்று காங்கிரசுக்காரர்கள் பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். அதுவும் யாரோ எப்பொழுதோ எதற்கோ ஜெயிலுக்கு போனதற்காக வேறு யாருக்கோ எதற்காகவோ ஓட்டு போட வேண்டுமென்கிறார்கள். இதுவும் ஒரு பித்தலாட்டமான காரியமேயாகும். ஜெயிலுக்கு போனவர்களில் பெரும் பான்மையோர்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். வடநாட்டிலும் வெகுபேருக்கு தெரிந்து கஞ்சிக்கு இல்லாதவர்களும் காலிகளுமே பெரிதும் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்கள் என்று வட நாட்டுத் தலைவர்கள் பலர் சொல்லி இருக்கிறார்கள். இன்றும் கஞ்சிக்கு மார்க்க மில்லாமலும் சோம்பேறியாய் இருந்தும் திரிகின்ற பிள்ளைகளைப் பார்த்தால் “இங்கு ஏண்டா வீணாய் திரிகின்றாய், அநாவசியமாய் பொது ஜனங்களுக்கு ஏன் தொந்திரவு கொடுக்கின்றாய்? காங்கிரசுப் பேரைச் சொல்லி ஜெயிலுக்குப் போய் செளக்கியமாய் காலம் தாட்டுவது தானே" என்று பொது ஜனங்கள்
பலர் சொல்லுவது சகஜமாய் இருக்கிறது
ஆதலால் ஜெயிலுக்கு போனவர்கள் எல்லோரும் மகா யோக்கியர்கள் என்றோ, தியாகிகள் என்றோ ஸ்தலஸ்தாபன நிர்வாகத்துக்குத் தகுதியானவர்கள் என்றோ அரசியல் ஞானம் உடையவர்கள் என்றோ சொல்லி விட
குடி அரசு - 1936 (2), 198
முடியுமா? அல்லது அங்கு அதிகக் கஷ்டப்பட்டார்கள் என்று கருதியாவது அதற்கு கூலியாக கார்ப்பரேஷன், ஜில்லாபோர்டு, சட்டசபை, அசம்பிளி வேலை மெம்பர்கள் கொடுத்து விட முடியுமா? நானும் காங்கிரசில் தலைவனாகவும், காரியதரிசியாகவும், நிர்வாக சபையில் முக்கிய பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறேன். அந்த காலத்தில் ஜெயிலுக்கு போனவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரசு பணத்தில் மாத மாதம் செக்கு கொடுத்திருக்கிறேன். போய்விட்டு வந்தவர்களுக்கும் அந்தச் சலுகையில் சம்பள உத்தியோகமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்றும் பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். இதனால் எப்படி அவர்கள் எல்லோரும் பெரிய தியாகி களாகவோ அரசியல் ஞானிகளாகவோ ஆகிவிடுவார்கள்?
அன்றியும் அவர்களை தியாகிகள் என்றே வைத்துக் கொண்டாலும் அந்தப் பெயரைச் சொல்லி கார்ப்பரேஷனுக்கு ஓட்டுக் கேட்பது என்றால். இது ஒரு வியாபாரமா என்று கேட்கின்றேன்.
அதாவது ஜெயிலுக்கு போனதற்கு கூலியா?
நிறுத்தப்பட்ட ஆட்கவின் யோக்கியதை
இன்று காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்டிருக்கும் நபர்களின் யோக்கியதைகளைப் பற்றி நானே எல்லாம் தெரிந்ததாக சொல்ல வரவில்லை.ஆணால் காங்கிரஸ் தோழர்களேசொன்னதையும் செல்லுவதையும் சுதேசமித்திரன்! 'தினமணி), 'இந்து' முதலிய பார்ப்பனப் பத்திரிகைகளிலும்
காங்கிரஸ் பத்திரிகைகளிலும் வந்திருக்கும் விஷயங்களையே பார்த்துக்
கொள்ளுங்கள்.
அதிலும் திருப்தி இல்லையானால் குமரி முதல் வேங்கடம் வரை தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் நடந்த ஸ்தல ஸ்தாபன தேர்தல்களில் காங்கிரஸ் சார்பாய் வெற்றி பெற்ற ஆட்களில் 100க்கு 75 பேர்களுடைய யோக்கியதைகள் பற்றி காங்கிரஸ் பத்திரிகைகளிலேயே காணும் யோக்கியதையைக் கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த லட்சணத்தில் ஸ்தல ஸ்தாபனத்துக்கும் காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம் என்று இன்றும் உங்களை கேட்கின்றேன்.
காங்கிரஸ் கொடி நாட்டுவது
“ஸ்தல ஸ்தாபனத் தேர்தலில் வெற்றி பெற்றால் கார்ப்பரேஷன்ரிப்பன். பில்டிங்கில் காங்கிரஸ் கொடி பறக்கவிடுவோம்” என்று சொல்லுகிறார்கள் அக்கட்டடத்தின் மீது எந்த எழவு கொடி பறந்தால் தான் ஓட்டருக்கு என்ன லாபம்? காங்கிரஸ் கொடி பறப்பதினால் யூனியன் ஜாக் கொடி ஒழிந்து விட்டது என்று அர்த்தமா? பிரிட்டிஷார் சட்டமும் அவர்கள் ஆதிக்கமும் ஸ்தல ஸ்தாபனத்தின் மீது இல்லாமல் போய் விடும் என்று அர்த்தமா?
19 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கேவலம் ஒரு துணிக்கொடி பறப்பதால் என்ன காரியம் ஆகிவிடும்? இதை பாமர மக்களுக்குள் ஒரு மூடநம்பிக்கையைப் பரப்பும் யோக்கியப் பொறுப்பற்ற சூழ்ச்சி என்றுதான் சொல்லுவேன். உண்மையில் காங்கிரஸ் கொடியை பறக்க விடுவதானால் யூனியன் ஜாக் கொடி இந்தியாவில் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் காங்கிரசுக்கொடி பறக்க விடுவேன் என்பது காங்கிரஸ்காரருக்கு அரசியல் ஞானமில்லாததையும் ஏமாற்று வித்தையில் பித்தலாட்டம் பேசுகிறார்கள் என்பதையும் தான் காட்டும்.
வாஸ்தவத்திலேயே காங்கிரசுக்காரருக்கு அரசியல் ஞானமில்லாததாலும் நிர்வாக அனுபோக மில்லாததாலும் இன்று அவர்கள் வெற்றி பெற்ற ஸ்தல ஸ்தாபன மெல்லாம் குச்சுக்காரிகள் வீடுகள் போலவே ஆகிவருகின்றன.
எதில் பார்த்தாலும் கள்ளுக்கடைசண்டை போலவே நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இவற்றை காங்கிரஸ் ரிப்போர்ட்களிலிருந்தே பார்க்கலாம். போதாக் குறைக்கு தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் “ஸ்தல ஸ்தாபனங்களை கலைத்துவிட்டுச் சர்க்காரின் நேரடி ஆட்சிக்கு விட்டுவிட வேண்டும்” என்று சொன்னதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் அவர் அதற்கு முன்னதாகவே அந்த அபிப்பிராயம் தான் கொண்டு இருப்பார் என்று கருதுவதாணாலும், தோழர்சத்தியமூர்த்தியார் பம்பாயில் பேசியதிலிருந்து
பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது “இந்தியர்களுக்கு நிர்வாகத்திறமை போதாது, கட்டுப்பாடு இல்லை, நாணயமில்லை”' என்று சொல்லி இருப்பவைகளிலிருந்தே தெரிந்து கொள்ளுங்கள். மற்றும் இந்தியர்கள் நிர்வாகத்தில் லஞ்ச மயம் என்றும் சொல்லி இருக்கிறார். இவருக்கு இந்த அனுபவ ஞானம் எப்பொழுது எப்படி வந்தது? என்று யோசித்துப் பாருங்கள். இந்த ஒருவருஷ காலமாய் காங்கிரசுக்காரர் கைக்கு சில நிருவாகங்கள் போன பின்பு அவர்கள்
நடத்தையில் இருந்து அறிந்து கொண்டதேயாகும். இந்த இருபது வருஷ காலமாக ஏன் இவர்கள் இப்படிச் சொல்லவில்லை? அப்பொழுது அவைகளின் ஆதிக்கம் ஜஸ்டிஸ்காரர்கள் கையில் இருந்ததால் இப்படிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது
கண்டிறாக்ட் ராஜ்யம்
ஆனால் ஜஸ்டிஸ் கட்சியாரைப் பற்றி காங்கிரசுக்காரர்கள் சொன்ன.
குற்றம் எல்லாம் ஸ்தல ஸ்தாபனங்கள் கண்டிறாக்ட் ராஜ்யமாய் இருக்கிறது என்று மாத்திரம் சொல்லி வந்தார்களே ஒழிய அவர்களுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்று சொல்லவில்லை.
இப்பொழுது காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகாவது ஸ்தல ஸ்தாபனங்களில் கண்டிறாக்டர்ராஜ்யம் ஒழிந்து எல்லா வேலைகளும்டிபார்ட்டுமெண்டாராலேயே நடந்து வருகிறதா? என்று கேட்கிறேன்.
குடி அரசு - 1936 (2), 200.
இன்றும் காங்கிரசுக்காரர் ஆதிக்கத்தில் உள்ள ஜில்லா போர்டுகள் சிலவற்றில் பிரசிடெண்ட் மெம்பர்கள் ஆகியவர்கள் சொந்தக்காரர்கள், குடும்பக்காரர்கள் பேரால் கண்டிறாக்ட் நடைபெறுகின்றது. அதுவும் எஸ்ட்டுமேட்டுக்கு 100க்கு 15, 20, 30 - பர்செண்டு குறைத்துக் கேட்ட கண்டிறாக்ட்டுகளை விட்டு விட்டு தங்கள் குடும்பத்துக்கும் சொந்தக்காரர் களுக்கும் உயர்ந்த தொகைக்கு கேட்டவர்களுக்கும் கண்டிநாக்ட் அனுபவ மில்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சர்க்காருக்கு இது விஷயமாய் புகார்கள் போயும் இருக்கின்றன. புகார்காரர்கள் மீது காங்கிரஸ் பிரசிடெண்டுகள் ஒரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாமல் புகார் கூறியவர்களுக்கும் கொஞ்சம் கண்டிறாக்ட் கொடுத்து சரிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கார்ப்பரேஷனிலும் காங்கிரஸ் கண்டிறாக்ட் ராஜ்யம் அவ்வளவு தூரம் போவானேன்? இச்சென்னையையே எடுத்துக் கொள்ளுங்கள். கார்ப்பரேஷனில் காங்கிரஸ் கவுன்சிலருக்கு கண்டிறாக்ட் இருக்கிறதா இல்லையா? என்று கேட்கின்றேன். ஆதாரத்தோடு வெளியிட்ட விஷயங்களுக்கு - ஒன்றரை லக்ஷம் துண்டு பிரசுரம் மூலம் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு தோழர் சத்தியமூர்த்தியார், ராஜகோபாலாச்சாரியார், சாமி வெங்கிடாசலம் செட்டியார் முதல் யாராவது இதுவரை ஏதாவது பதில் சொல்லி இருக்கிறார்களா? தோழர் காந்தியாருக்கும் நகல் அனுப்பப்பட்டது. யாரும் இதுவரை மூச்சுக்கூடக் காட்டவே இல்லை. அதன் பயன் அந்த கண்டிறாக்ட் கவுன்சிலர் மேடையேறுவதற்குத்தான் யோக்கியதை இல்லாமல் செய்ததே தவிர அவர் இன்னமும் காங்கிரசு சார்பாக கார்ப்பரேஷனிலும் அசம்பளியிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார். அவரை காங்கிரசிலிருந்து நீக்கவில்லை.
காங்கிரஸ் மெம்பர்களே எத்தனை பேர் “யோக்கியர்களுக்கு காங்கிரசில் இடமில்லை” என்று சொல்லிக் கண்டித்தும் வெளியேறியும் இருக்கிறார்கள்? என்பதை 'இந்து' 'மித்திரன்' பத்திரிகையை பாருங்கள்:
புதிய ஆன் பிடிப்பது இவைகளை எல்லாம் பார்த்தும் மற்றொரு கட்சியில் இருப்பதால். தங்கள் ஜபம் செல்லவில்லை; தங்கள் காரியம் ஆகவில்லை; தாங்கள் மதிக்கப்படவில்லை என்ற காரணத்தால் அக்கட்சிகளில் இருந்து வெளிவந்த ஆட்களை காங்கிரசில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு பதவிகள் அளிப்பதும், அவர்களை விட்டு நம்மை வையச் சொல்லுவதுமான. கேவல செய்கை செய்தால் நாட்டில் எப்படி பொதுநலக் கட்சிகளும் ஸ்தாபனங்களும் யோக்கியதை அடைய முடியும் என்று கேட்கிறேன். இந்தியாவில் நாணயமான அரசியல் கட்சி இல்லை என்று தோழர்
201 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சத்தியமூர்த்தியாரே சொல்லுகிறார். காங்கிரசு கூட யோக்கியமான கட்சி அல்ல என்று அவரே ஒப்புக் கொள்ளுகிறார். இப்படி நடந்து கொண்ட
காங்கிரசு எப்படி யோக்கியமான கட்சி ஆக முடியும்? பெரிதும் காங்கிரசுக்கு தேர்தல்களில் நிறுத்த புதிய ஆட்களே அதிலும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வெளிவர வேண்டிய வெளியாக்கப்பட்ட ஆட்களே தான் கிடைக்கிறார்கள். என்றால் (50 வருஷத்திய காங்கிரசுக்கு) தகுதி உள்ள ஆட்கள் காங்கிரசில் இல்லை என்றுதானே அருத்தமாகும்
இப்படிப்பட்டவர்கள் ஏன் பொது ஸ்தாபனங்களுக்கு காங்கிரஸ் பேரால் போட்டி போட வேண்டும்? மற்ற கட்சிகளை ஏன் வைய வேண்டும்?
என்று கேட்கிறேன்.
பொது ஜனங்களின் வரிப்பணத்தை நல்ல வழியில் பயன்படுத்த வேண்டிய ஸ்தாபனங்களை - சுயராஜ்யத்துக்கு நம்மை தகுதியாக்க கொடுத்திருக்கும் பரீட்சை ஸ்தாபனத்தை இம்மாதிரி பொறுப்பில்லாமல் இவ்வளவு பணம் காசு செலவு செய்து போட்டி போட்டு அங்கு போய் உட்கார்ந்து கொண்டு சங்கராச்சாரிக்கு வரவேற்பு அளிக்கலாமா? கவர்னருக்கு வரவேற்பு நிராகரிக்கலாமா என்கின்ற அற்ப விஷயங்களுக்காகச் சண்டை போடுவதில் நேரத்தை பாழாக்கி இதையே வெற்றி தோல்விக்கு அளவு கருவியாக்குவது என்றால் பொதுக் காரியம் எவ்வளவு தூரம் சின்னப் பிள்ளைகள் காரியமாக நடைபெறுகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்.
ஒரு மாகாண கவர்னருக்கு அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு ஸ்தாபனத்தில் வரவேற்பு அதுவும் மரியாதை சம்பிரதாயத்துக்கு நடந்து வரும் வரவேற்புக் கூட செய்வதில்லை என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் காலடியில் போய் “மேன்மை தங்கிய கவர்னர் பிரபுவே" என்று சொல்லுவதும் மேன்மை தங்கிய கவர்னர் அவர்கள் என்று அதே ஸ்தாபன ரிக்கார்டுகளில் எழுதுவதும் என்றால் இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்பதையும் எவ்வளவு அறிவற்றவர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
இந்த அற்பத்தனமான காரியங்களுக்கு கவர்னர் தக்க பதிலளிக்கக் கருதினால் அது இந்த ஆட்களை சிறிதும் பாதிக்கப் போவதில்லை. ஆனால் அது பொது ஜனங்களை - வரி கொடுக்கும் ஏழைகளை பாதிக்கக்கூடும். அதனால்தான் காங்கிரசுக்காரர்கள் பொறுப்பற்றவர்கள் என்று நான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்கள் பேச்சைக் கேட்ட வெள்ளைக்காரர்கள். கவர்னரை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்களாம். அன்றைய கூட்டத்தில் இருந்த வெள்ளைக்காரர்களும் மற்ற வெள்ளைக்காரர்களால் கண்டிக்கப்பட்டார்களாம்.
ஆனால் காங்கிரசுக்காரர்களுக்கு சாதாரண மரியாதை புத்திகூட
வரவில்லை. அதற்கு ஆக இவர்களை எந்த தலைவர்களும் கண்டிக்கவுமில்லை.
குடி அரசு - 1936 (2), 202.
இதே போல காங்கிரஸ்காரர்களில் ஒரு அம்மாள் கவர்னர் சபைக்கு வந்த போது மற்றவர்கள் - மற்ற காங்கிரஸ்காரர்கள் செய்த மரியாதை கூட செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தார்களாம். இதே மாதிரி அசெம்பிளியிலும் அகெளரவமான பலகாரியம் செய்தார்களாம். செய்து விட்டு பொய் சமாதானங்களைச் சொல்லி தப்பித்துக் கொள்ளவும்
பார்க்கிறார்கள். இதனால் காங்கிரசுக்காரருக்கு யோக்கியமில்லை என்று விளங்கு வதோடு ஆண்மையும் இல்லை என்பதும் விளங்கவில்லையா? என்று கேட்கின்றேன்.
நேற்றுக்கூட இந்திய சட்டசபையில் கவர்னர் ஜனரல் பிரபுவின் ஒரு உத்திரவு வாசிக்கப்படும் போது காங்கிரசுக்காரர்கள் பூனை போல் கத்தினார்களாம். இவை எல்லாம் பெரிதும் அசோசியேட் பிரஸ் செய்திகளே தவிர எனது கற்பனை அல்ல. ஆகவே எவ்வளவு அற்ப புத்தி படைத்தவர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்று பாருங்கள். நான் வெள்ளைக்காரரையோ சர்க்காரையோ கும்பிடும்படி சொல்லவில்லை. மனுஷத் தன்மையும் மரியாதையும் ஒழுங்கும் வேண்டாமா என்றுதான் கேட்கின்றேன்.
காங்கிரசின் சிக்கனம்
மற்றும் காங்கிரசுக்காரர் மிகவும் மிகவும் சிக்கனக்காரர்களாம்.
ஜஸ்டிஸ்காரர்கள் மிக்க ஊதாரிகள் என்றும் காங்கிரசுகாரர்கள் சிக்கனக்காரர்கள் என்றும் மேடையில் பேசுகிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் பாருங்கள். நேற்று தோழர் சத்தியமூர்த்தியார் சிம்லாவில் ஒலிபரப்பும் கருவி மூலம் பேசிய பேச்சில் மாகாண கவுன்சிலர்களுக்கு ஆளுக்கு 5 1 - க்கு 300 ரூபாயும் 200 - போல் படிச்செலவும் கொடுக்க வேண்டும் என்றும் இந்திய சட்டசபை (அசம்பளி) மெம்பருக்கு 15 500 ரூ சம்பளமும் முன்னூறு ரூபாய் செலவும் கொடுக்க வேண்டும் என்றும் அதாவது வருஷ மெல்லாம் பெண்ஜாதியுடன் முதல்வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்யும்படியும், படி வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இந்த யோக்கியர்கள்தான் மந்திரியானால் மீ” 500
ரூ சம்பளத்துக்கு மேல் வாங்க மாட்டார்களாம். இதை யோசித்துப் பாருங்கள். தோழர் சி.ஆர்.ரெட்டியார் அவர்கள் காங்கிரசுக்காரர் என்ற ஹோதாவில் பெற்ற யூனிவர்சிட்டி வைஸ் சான்ஸ்லர் வேலைக்கு இன்றும் மாதம் 2000 ரூ சம்பளமும் 500 போல் படியும் பெற்று வருகிறார். அவரும் இதுவரை காங்கிரசில் ராஜிநாமாக் கொடுக்கவில்லை. காங்கிரசுக்காரர்களும் அவரை நீக்கவில்லை. இவ்வளவோடு மாத்திரமா? இதற்கு அவரிடத்தில் அதாவது இந்த மாதிரி காங்கிரசுக் கொள்கைக்கு விரோதமான காரியம் செய்ய அவரைஅனுமதித்து அவரிடம் லஞ்சம் வாங்கிக் கொள்கிறார்களாம்.
203 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தோழர் சத்தியமூர்த்தியார் சொல்லுகிறபடி நடப்பதானால் நமது மாகாணத்திற்கு ஏற்பட்ட 250 மாகாண சட்டசபை மெம்பர்களும் ஆள். ஒன்றுக்கு மீ” 300 ரூ சம்பளமும் 200 ரூ படியும் என்றால் மீ 1 க்கு 125000 ரூபாயாகிறது. வருஷம் 15 லக்ஷம் ரூ. ஆகவில்லையா என்று கேட்கின்றேன். அதுபோலவே இந்திய சட்டசபை மெம்பர்களுக்கும் ஆள் 1க்கு மீ 500 ரூ. சம்பளமும் 300 ரூ. படியும் என்றால் சுமார் 350 மெம்பர்களுக்கு மீ சுமார் 300000 ரூபாய் வீதம் வருஷம் 35 லட்சம் ஆகவில்லையா என்று கேட்கின்றேன். இது பொது ஜனங்கள் பணம் பாழாகின்ற ஊதாரி முறையா அல்லது சிக்கன முறையா என்று யோசித்துப் பாருங்கள். இந்தப்படி கொள்ளை அடிப்பவர்கள் தான் காங்கிரசு அகராதிப்படி தேச பக்தர்களும் தியாகிகளும் ஆவார்கள் என்று அர்த்தம் சொல்லப்படுகிறது.
ஜஸ்டிஸ்காரர்கள் இந்தப்படியெல்லாம் இதுவரை செய்யவே
இல்லை. அவர்கள் நிர்வாகத்தில் இம்மாதிரியான ஆபாசமும் கொள்ளையும்
அக்கிரமமும் இல்லவே இல்லை.
ஓட்டுகளுக்காகப் பேசவில்லை
உங்களுடைய ஓட்டுகளுக்காக நான் இவற்றை எடுத்துச் சொல்ல இங்கு வரவில்லை. ஜஸ்டிஸ்கட்சியைப்பற்றி காங்கிரசார் குறை கூறுவதற்கும் அக்கட்சித்தலைவர்களை இழித்துக் கூறுவதற்கும் சமாதானம் சொல்லுவதற்கு ஆகவே இவற்றை எடுத்துச் சொல்லுகிறேன்.
காங்கிரஸ்காரர்கள் நான் போய் பேசிவிட்டு வந்த ஊர்களுக்குப் போய் ஐஸ்டிஸ்கட்சியாரைப் பற்றியும் என்னைப் பற்றியும் பேசியவற்றை
நான் கேள்விப்பட்டேன். நான் சொன்னவற்றில் எதையும் மறுக்கஅவர்களுக்கு யோக்கியதையில்லாமல் இழிதன்மையாய் பொய்யும் பழியும் சுமத்தி பேசி இழித்துக் கூறியிருக்கிறார்கள். அவற்றை காங்கிரஸ் தலைவர்கள் கண்டிப்பதே யில்லை.
அநேக அற்பர்கள் ஈனப்பிறவிகள் நான் காங்கிரசில் பணம் எடுத்துக் கொண்டதாக பேசியிருக்கிறார்கள். இந்த மாதிரியான அயோக்கியர்களை வைத்து கட்சிப் பிரசாரம் நடத்தினால் அக்கூட்டத்துக்கும் அக்கட்சிக்கும் அக்கட்சி தலைவர்களுக்கும் எப்படி மரியாதை ஏற்பட முடியும்? கூட்டத்தை கலைக்க பார்க்கிறார்கள், நம்ம கூட்டங்களில் வந்து அயோக்கியத்தனமாய் காந்திக்கு ஜே போடுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாமா?
வெள்ளைக்காரர்கள் இடம் சில பார்ப்பனர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சென்று நாம் அவர்களை கூட்டங்களில் வைவதாக கண்ணீர் வடித்தார்களாம். இது மாய அழுகை என்றே சொல்லுவேன்.
குடி அரசு - 1936 (2), 204
இவர்கள் நம்மை தேசத்துரோகிகள், வெள்ளையர்கள் தாசர்கள், தேசத்தை காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொன்னால் நாம் இவர்களை சமூகத்துரோகிகள், மனித சமூக விரோதிகள், வெள்ளையர்கள் சந்ததிகள், தேசத்தை கூட்டிக் கொடுப்பவர்கள் என்று சொல்லி இனி அவர்கள் அப்படிச் செய்யாமல் ஏன் தடுக்கக்கூடாது என்று கேட்கின்றேன். அவர்கள் நம் சமூகத்தை, நம் கொள்கைகளை, நம் நாணயத்தை, நம் சுயமரியாதையை எல்லாவற்றையுமே வைகிறார்கள். கூலிகளுக்குக் காசு கொடுத்து வையச் சொல்லுகிறார்கள். அப்படி இருக்கும் போது அதை எப்படி நிறுத்துவது என்று கேட்கின்றேன்.
ஆதலால் காங்கிரசுகாரர்கள் ரோஷமுடையவர்களானால் மற்றவர்கள் ரோஷத்துக்கு பங்கம் வரும்படி எந்தக் கூலியும் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
அது இல்லாமல் கூலிகளுக்குக் கூலி கொடுத்து வையச் சொல்லிவிட்டு நாம் சமாதானம் சொன்னால் வெள்ளையர்களிடம் போய் வைகிறானே, வைகிறானே என்று அழுவதில் என்ன நாணயம் என்று கேட்கிறேன்.
ஒரு சீட்டு - தொழிலாளர் பிரச்ணை
கடசியாக ஒரு தோழர் தலைவர் மூலம் ஒரு சீட்டு அனுப்பி இருக்கிறார். அதில் பெயர் ஒன்றும் இல்லை. ஆன போதிலும் அச்சீட்டில் கண்ட விஷயங்களுக்கு பதில் சொல்லுகிறேன்.
“ஜஸ்டிஸ் கட்சி இதுவரை தொழிலாளிகளுக்கு செய்தது என்ன? இனிச்செய்யப்போவது என்ன?” என்று அச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொழிலாளர் யார்?
நமது நாட்டில் தொழிலாளர்கள் நன்மை என்றால் என்ன? தொழிலாளர்கள் என்றால் யார்? என்பது மிகவும் சிக்கலான பிரச்சினையாகும். இப்போது இங்கு யந்திர சாலைகளில் வேலை செய்பவர்கள் தான் தொழிலாளர்கள் என்ற உரிமையைப் பாராட்டிக் கொள்ளுகிறார்கள்.
அவர்களுடைய சம்பள உயர்வு, வேலை நேரம் கம்மி ஆகியவற்றையே தொழிலாளர் நன்மை என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு
சட்ட சபையிலோ, ஸ்தல ஸ்தாபனங்களிலோ சில ஸ்தானங்கள் கொடுத்து விட்டால் தொழிலாளர்கள் உரிமை நிறைவேறிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே விடுதலை அளித்துவிடாது. இன்னும் அனேக காரியம் ஆக வேண்டியிருக்கிறது.
யந்திர சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்தியா பூராகிலும் உள்ள உண்மையான தொழிலாளர்களில் வீசம் பங்கு கூட ஆகமாட்டார்கள் என்பது எனது அபிப்பிராயம்
205 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்தியாவில் உண்மையான தொழிலாளர்கள் என்பவர்கள் மண்:
வெட்டியிலும் கலப்பையிலும் வேலை செய்யும் விவசாயக் கூலிகளும், மூட்டை முடிச்சு சுமப்பவர்களும், வண்டி இழுப்பவர்களும், கட்டடம்
கட்டும் வேலைக்காரர்களும், மற்றும் வெளுத்தல், சிரைத்தல், கூடை முறம் பின்னல், சட்டி பானை செய்தல், மரம் இரும்பு வேலை செய்பவர்கள் போன்ற சரீர வேலைக் கூலிக்காரர்கள் முக்கிய தொழிலாளிகள் ஆவார்கள்.
என்றாலும் அதைவிட முக்கிய தொழிலாளிகள் யார் என்றால் ஜாதியினால் - பிறவியில் மற்ற மக்களுக்கு அடிமை வேலை செய்பவர் என்று
பிரித்து ஒதுக்கி, தாழ்த்தியும், இழிவு படுத்தியும் வைத்திருக்கும் தீண்டப்படாத மக்கள் என்பவர்களே இன்று உண்மையான தொழிலாளிகளாவார்கள் அதற்கடுத்தாற் போல் அடிமை என்றும் சூத்திரன் என்றும் கூறப்படும் பார்ப்பனரல்லாத சமூகமே தொழிலாளி வர்க்கமாக கருதப்பட்டு வருகிறது
இந்த இரு சமூகத்தின் மேன்மையும் முன்னேற்றமும் தான் முதலாவதான தொழிலாளர் நன்மையான காரியமாகும். பிறகு நான் முதலில் கூறின விவசாயக் கூலி முதலிய சமூதாய மக்கள் வாழ்வுக்கு ஆக வேலை செய்யும் மற்ற கூட்டம் தான் இரண்டாவது தொழிலாளர்கள் கூட்டமாகும். அப்புறம் மூன்றாவது தான் யந்திர சாலைகளில் கூலியையும் நேரத்தையும் ஒப்பந்தம் பேசிக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளிகள் ஆகும்.
இன்று இந்த தொழிலாளிகளின் நிலைமை முன் கூறப்பட்ட முதலாவது இரண்டாவதான தொழிலாளிகளின் 100-க்கு 90 பேர்கள். நிலையைவிட மேலான நிலையேயாகும்.
இன்று அவர்களைப்பற்றி நினைப்பதற்கு ஜஸ்டிஸ் கட்சியை விட இந்தியாவிலேயே வேறு கட்சி இல்லை என்றே சொல்லலாம்.
தொழிலாளர் விடுதலையே “ஜஸ்டிஸ்? கட்சி லக்ஷ்யம்
ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பமே பிறவியில் தொழிலாளியாகவும் இழி மக்களாகவும் கருதப்பட்டு தாழ்த்தி அழுத்தி வைத்திருக்கும் மக்களின். விடுதலைக்காக ஏற்படுத்தப்பட்டதே ஆகும். அந்த துறையில் அக்கட்சி இந்தியாவில் யாரும் செய்திராத அரும்பெரும் காரியத்தை செய்து இருக்கிறது
இயந்திர சாலைத் தொழிலாளிக்கு ஆக செய்யப்படும் காரியத்தால் பொதுத் தொழிலாளர்களான 100க்கு 90 தொழிலாளிகளின் குறைகள். நீக்கப்பட்டுவிடமாட்டாது
யந்திர சாலைத் தொழிலாளிகளின் நலம் என்பது அரசியல் காரியம் போல் தந்திரமானதாகத்தான் இருக்கிறது. இவர்கள் பெயரைச் சொல்லி இரண்டொரு ஆள் சட்டசபைக்குப் போகலாம்; இரண்டொரு ஆள் சோம்பேறியாய் வயிறு வளர்க்கலாம்; அல்லது 2 அணா 1 அணா கூலி
குடி அரசு - 1936 (2), 206
உயர்த்தலாம்; கால்மணி அரைமணி நேரம் குறைக்கலாம். இதனால்
சரீரத்தால் சதா பாடுபடும் நேரமும் கூலியும் நிஷ்கரிசையில்லாத மிருகங்கள். போன்ற உயிர்ப்பிணங்களுக்கு என்ன மார்க்கம் என்று கேட்கின்றேன்.
தொழிலாளிக்காகவேலை செய்பவன்முதலில் பிறவித்தொழிலாளிகளை விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மனப்பான்மையில் இருக்கும் நாம் கீழானவர்கள் தொழில் செய்ய பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பது மாற்றப்பட வேண்டும். அதில்லாமல் தொழிலாளிகள் நன்மையை பேசுவது முதலாளிகளின் கூலித் தன்மையேயாகும்
பொது உடமை கொள்கையின் கீழும் முதல் முதல் சரீர பிரயாசைத் தொழிலாளிகள் நன்மைதான் கவனிக்கப்படும். அதற்கு உதாரணமும் சோவியத் தேசத்தின் தேசியக் கொடி உருவம், கப்பரக் கத்தியும் சம்மட்டியுமாகும். ஆதலால் அப்படிப்பட்ட மக்களாகிய பார்ப்பனரல்லாதார். சமூகத்தைப் பற்றியும் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தைப் பற்றியும் ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ நன்மை செய்து வருகிறார்கள். அதற்கு ஆகவே அந்த கட்சியும் இருந்து வருகிறது. மற்ற தொழிலாளிகளுக்கும் அதாவது யந்திர சாலைத் தொழிலாளிகளுக்கும் காங்கிரஸ்காரர்கள் அதாவது தோழர் சத்தியமூர்த்தியாரும் சாமி வெங்கிடாசல செட்டியாரும் செய்து வரும் நன்மையை விட எத்தனையோ மடங்கு அதிகமாகவே செய்து வருகிறார்கள்.
ஆதலால் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவியாய் இருந்து பலம்
சேர்த்துக் கொடுப்பார்களானால் இன்னும் அதிகமான காரியம் செய்வார்கள்.
குறிப்பு- 08.09.1936ஆம் நாள் சென்னை நேப்பியர் பார்க்கில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் "தேர்தலும் ஓட்டர்கள் கடமையும்” என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 13.09.1936
207 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தேசீயப் பத்தியிகைகவின் போக்கு
ஸர்.ஸி.பி. ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவானாக நியமிக்கப்பட்டு
விட்டாராம். தேசீயப் பத்திரிகைகளும் செமி-தேசீயப் பத்திரிகைகளும் பத்தி பத்தியாய் அவரைப் பற்றி எழுதுகின்றன. சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேசீயம் என்றால் பிராமணியம் என்றுதான் பொருள். எனவே ஒரு பார்ப்பனர் திவான் ஆனதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளும் செமி - பார்ப்பனப் பத்திரிகைகளும் ஆனந்தக் கூத்தாடுவதைப்
பார்த்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான். ஆனதைப்பற்றி நாம் பொறாமைப்படவுமில்லை. ஏன்? அதைப்பார்த்துப் பொறாமைப் படக்கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை. திவான் பதவியை விட பதின்மடங்கு பொறுப்பும் பெருமையும் வாய்ந்த பதவிகளை நம்மவர்கள் வகித்து வருகையில் - மேலும் வகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்
மிகுந்து வருகையில் - எவ்வளவு உயரிய பதவிகளை வகிக்கவும் நம்மவர்களுக்கு லாயக்குண்டு என்ற உண்மை வெளியாகி உறுதி பெற்று வருகையில், ஸர்.ஸி.பி. திருவிதாங்கூர் திவான் ஆனதைப்பற்றி நாம் பொறாமைப் படக் காரணமில்லை. மேலும் ஜில்லா கலக்டராயிருந்த பார்ப்பனர்கள் பரோடா போன்ற சமஸ்தானங்களில் திவான் உத்தியோகம் பெற்றிருக்கையில், சென்னை மாகாணச் சட்ட மந்திரியாகவும், இந்திய
சர்க்கார் ஆக்டிங் சட்ட மந்திரியாகவும், ஆக்டிங் வர்த்தக மந்திரியாகவும் இருந்தவரும், வட்டமேஜை மகாநாட்டு ஆலோசனைக்கமிட்டி மெம்பராகவும் வெள்ளைக் காகிதஅறிக்கையைப் பரிசீலனைச் செய்ய மன்னர் மண்டலத்தார். நியமனம் செய்த கமிட்டித் தலைவராகவும் இருந்தவரும் மற்றும் பொதுவாழ்வில் முக்கிய ஸ்தானம் வகித்தவருமான ஸர்.ஸி.பி.க்கு
திருவிதாங்கூர் திவான் பதவி அவ்வளவு பெரிய பதவி யென்று நாம் கருதவுமில்லை. மற்றும் அப் பதவியைப் பெற அவர் எவ்வளவோ காலம் தவம் கிடந்திருக்கையில் கொஞ்ச காலத்துக்கு முன்னாடியே அவருக்குக் கிடைக்கவில்லையே என்பது தான் நமது கவலை.
ஆனால் ஸர். ஷண்முகம் கொச்சி திவானாக நியமனம் பெற்ற பொழுது, திவான் பதவிக்கு லாயக்குடைய கொச்சிப்பிரஜைகளின் உரிமை அலக்ஷ்யம் செய்யப்பட்டு விட்டதென்று சென்னை “ஹிந்து” பத்திரிகை கிண்டலாக எழுதியது. ஆனால் ஸர்.சி.பி. விஷயத்தில் “ஹிந்து” பத்திரிகை
குடி அரசு - 1936 (2), 208
அந்த நியாயத்தை ஏன் மறந்து விட்டதோ தெரியவில்லை. “திருவிதாங்கூர் திருவிதாங்கூர் வாசிகளுக்கே" என்ற கிளர்ச்சி இப்பொழுதும் திருவிதாங் கூரில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. திருவிதாங்கூர் ஹைக் கோர்ட்டு பிரதம நீதிபதி பதவிக்கு கொச்சி சமஸ்தானத்திலிருந்து ஒரு பார்ப்பன நீதிபதியை திருவிதாங்கூர் சர்க்கார் நியமித்ததைக் கண்டித்து திரு விதாங்கூர் சட்டசபையில் ஒரு கண்டனத் தீர்மானங்கூடக் கொண்டு வரப்பட்டது. அந்த நியமனம் மகாராஜா இஷ்டத்தைப் பொறுத்ததாகையால் அதைப் பற்றிச் சட்டசபையில் விவாதிக்கக்கூடாதென்று திவான்-பிரசிடெண்டு அந்தக் கண்டனத் தீர்மானத்தை நிராகரித்து விட்டார்! சாத்ிதியமானவரை எல்லா உத்தியோகங்களையும் லாயக்குடைய திருவிதாங்கூர் பிரஜைகளுக்கே கொடுக்க வேண்டும் என்ற கிளர்ச்சி சுமார் 60 வருஷகாலமாக திருவிதாங்கூரில் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது
அந்தக் கிளர்ச்சி தாங்கமுடியாத எல்லையை அடைந்ததினால் தான் எம்.இ.வாட்ஸ் (இவர் திருவிதாங்கூரில் பிறந்து வளர்ந்து கடைசியில் ஆங்கிலேயராகிலண்டனில் பாரிஸ்டர் தொழில் நடத்தியவர்) என்ற ஆங்கிலோ இந்தியரையும் திவான் பகதூர் வி.எஸ். சுப்பிரமணியய்யரையும் ரீஜண்டு மகாராணியார் சேது லக்ஷ்மிபாய் திவான்களாக நியமித்தனர். இப்பொழுதும் திவான் பதவிக்குத் தகுதியுடையவர்கள் திருவிதாங்கூரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். திருவிதாங்கூர் ஹஜூர் சீப்சிக்ரிட்டரியாக இருக்கும் டாக்டர் குஞ்ஞன் பிள்ளை சமஸ்தானத்தில் பல உத்தியோகங்கள் வகித்து அனுபவம் பெற்ற திருவிதாங்கூர் சுதேசி. இங்கிலாந்தில் உயர்தரக் கல்வி கற்று பல பட்டங்கள் பெற்றவர். பிரிட்டிஷ் இந்திய சர்க்கார் ஆதரவில் நடைபெறும் பல டிபார்டுமெண்டுக் கூட்டங்களில் பங்கு கொண்டு அனுபவம் பெற்றவர். மற்றும் அகில இந்தியப் புகழ்பெற்ற சர்தார் கெ.எம்.பணிக்கரும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. அவர் இப்பொழுது மன்னர் மண்டலக் காரியதரிசி என்ற பொறுப்பான பதவியில் இருக்கிறார். மற்றும் ஜினீவா சர்வதேச சங்கத்தில் ஒரு பொறுப்பான பதவி வகிக்கும் டாக்டர் பத்மநாப பிள்ளையும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. மைசூர் நிர்வாக சபை மெம்பராக இருந்து பென்ஷன் பெற்று இப்பொழுது திருவிதாங்கூர் சமஸ்தானம் கோட்டயத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் தோழர் மாத்தனும் திருவிதாங்கூர் பிரஜையே. மாஜி சென்னை நீதிபதியும் இப்பொழுது திருவிதாங்கூரில் தமது குடும்ப வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பவருமான டாக்டர் கிருஷ்ணர் பண்டாலையும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. தோழர்கள் மாத்தனும் பண்டாலையும் பென்ஷன் பெற்றவர் களானாலும் கிடுகிடு கிழவர்களாகிவிட வில்லை. தற்காலத் திவான் ஸர். ஹாபிஜல்லாவைப் போல் சக்தியுடையவர்களே. சென்னை சர்வகலா சங்க பொருளாதார புரபசரும் நிபுணருமான டாக்டர் மத்தாயியும் ஒரு திருவிதாங்கூர் பிரஜையே. இம்மாதிரியே யோக்கியதையுடைய
209 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
திருவிதாங்கூர் பிரஜைகள் திருவிதாங்கூரிலும் பிரிட்டிஷிந்தியாவிலும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். “திருவிதாங்கூர் திருவிதாங்கூர் வாசிகளுக்கே" என்ற கிளர்ச்சி வலுப்பெற்றிருக்கும் இக்காலத்திலே, திவான் பதவிக்கு யோக்கியதையுடைய எத்தனையோ திருவிதாங்கூர் பிரஜைகள். இருக்கையில், ஸர். ஸி.பி. யை திவானாக்கியது ஒழுங்கா என சென்னை ஹிந்து” வைக் கேட்கிறோம். ஸர். ஷண்முகத்தையோ, திவான்பகதூர். ராமசாமி முதலியாரையோ, டாக்டர் சுப்பராயனையோ திவானாக நியமித்திருந்தால் “திருவிதாங்கூர் திருவிதாங்கூர் பிரஜைகளுக்கே'” என்ற நியாயத்தை “ஹிந்து வற்புறுத்தாதிருக்குமா என்றும் கேட்கிறோம்
குடி அரசு - கட்டுரை - 13.09.1936
குடி அரசு - 1936 (2), 210
சுதேச சமஸ்தானமும் வகுப்புவாதமும்
வகுப்பு வாதமும் காங்கிரசும் என்பது பற்றிச் சென்ற வாரம் “குடி அரசில்” தலையங்கம் எழுதி இருந்தோம். அதன் முக்கிய கருத்தெல்லாம் பல மதம், பல ஜாதி, பல வகுப்பு என்பதாக பிரிவினையுள்ள மக்கள். அடங்கிய நாடு எந்த நாடாய் இருந்தாலும் அங்கெல்லாம் வகுப்புணர்ச்சிகளும், வகுப்பு வாதங்களும் இல்லாமல் இருக்காது என்பதும் வகுப்புணர்ச்சியை
மதித்து ஏதாவது ஒரு வழியில் அதை சமாதானப்படுத்தி அடக்க முடியாமல் அதோடு போர் தொடுக்கும் வரையிலும் எரிகிற நெருப்பை பெட்றோல் எண்ணெய் ஊற்றி அவிக்கக் கருதும் மூடன் செய்கை போல் வகுப்பு வாதம் வளர்ந்து கொண்டே தான் வரும் என்பதுமேயாகும் அதோடு கூடவே வகுப்பு வாதம் இந்தியாவில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னதாகவே வேறு பல பெயர்களால் இந்திய மக்களுக்குள்ளாகவே இருந்து வந்திருக்கிறது என்றும் அதன் காரணமாகவே மக்கள் சமூகத்துக்கு அடிக்கடி தொல்லையும், துன்பமும் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தோம்
வகுப்புவாதம் புதியதல்ல
இப்பொழுதும் இன்னும் சற்று விளக்கமாய் தெரியவேண்டுமானால் வேதகாலம் என்பதில் ஏற்பட்டிருந்த கருப்பர்கள், வெள்ளையர்கள் சண்டையும், சாஸ்திரங்களில் இருந்து வந்த பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்கின்றதாகிய வருணாச்சிரம தர்மமும், புராண காலங்களில் இருந்து வந்த தேவ அசுர யுத்தங்களும், தேவர்கள் - ராக்ஷதர்கள் யுத்தங்களும், சரித்திர காலத்தில் இருந்து வந்த ஆரியர் - திராவிடர் சண்டைகளும், முஸ்லீம்கள் படையெடுப்பும் மூதலிய காரியங்கள் போதுமான ஆதாரம் என்றே சொல்லுவோம் இவைகள் மாத்திரமல்லாமல் சுமார் இந்தியாவின் 1000வருஷ ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் அரசியல் காரணம் அல்லாமல் வகுப்பு காரணமாகவே அரசியல் ஏற்பட்டும் நடைபெற்றும் வந்திருப்பதும் விளங்கும்.
ஒரு காலத்திலாவது வகுப்பு காரணமில்லாமல் கொள்கை காரணமாக கிளர்ச்சிகள் நடந்ததாகச் சொல்லுவதற்கு உண்மைச் சரித்திர ஆதாரம் எதுவுமே காண முடியாமல் இருக்கிறது. 2... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்தியாவுக்கு இன்று மாத்திரம் ஒரு
கூட்டத்தார் அதுவும் தாங்கள் அரசியலிலும் சமூக இயலிலும், பொருளாதார இயலிலும் உச்சஸ்தானத்தில் இருக்கின்றோம் என்ற காரணத்துக்காகவும், மற்றவர்களும் அந்த ஸ்தானத்துக்குப் போட்டி போட ஆரம்பித்து விட்டார்களே என்பதற்கு ஆகவும், அறிவும் உணர்ச்சியும் பெற்ற மற்றக் கூட்டத்தாரை அழுத்தவும் தலை எடுக்கவொட்டாமல் தடுக்கவும் கருதி, முன்னேற்றமடைய வேண்டும் என்று கருதுபவர்களையெல்லாம் வகுப்பு வாதம் வகுப்புவாதம், தேசத்துரோகம் தேசத்துரோகம் என்று குறைகூறுவதால் அடக்கி விடவோ தடுத்து விடவோ கூடுமா என்று கேட்கின்றோம்
50 வருஷ காலமாய் இந்திய மக்களுக்கு காங்கிரசானது தேசிய ஞானம் போதித்து வந்தும்” இன்று “இந்த 50 வருஷ காலமாய் இல்லாத
வகுப்பு வாதம் தலைவிரித்து ஆடுகிறது'' என்றால் அது மக்களுக்கு தேசிய ஞானம் இல்லாத குறையா, அல்லது தவிர்க்க முடியாததும் தடுக்க முடியாததுமான வகுப்புவாதத்தின் இயற்கை வலிமையா என்று கேட்கின்றோம்.
முந்திய கட்டுரையில் “சர்க்காருடைய தூண்டுதல்” அல்லாமலேயே 1916ம் வருஷத்தில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு தனித்தொகுதி மூலம் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதித்து அரசாங்கத்தினிடம் ஒப்புக்கொண்டது என்கின்ற விஷயத்தை எடுத்துக்காட்டி இருக்கிறோம்
காந்தி ஆதரித்த வகுப்பு வாதம் அப்படி 1916ம் வருஷம் ஒப்புக்கொண்ட காங்கிரஸ் இன்று அதே முஸ்லீம்களுக்கு அதே சர்க்காரால் கொடுக்கப்பட்ட வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி குறை கூறுவதும் சர்க்கார் மக்களைப் பிரித்தாள வேண்டி இம்மாதிரி வகுப்புத் தீர்ப்பு கொடுத்தார்கள் என்று குறைகூறுவதும் முரணான சங்கதியா அல்லவா என்று கேட்பதோடு காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் “சரித்திர சம்மந்தமான காரணங்களைக் கொண்டு முஸ்லீம்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியதுதான்" என்று ஒப்புக் கொள்வதும் இப்பொழுது காங்கிரஸ் வகுப்பு தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுவ தில்லை என்று சொல்லுவதும் இந்த மத்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காங்கிரசும் தாழ்த்தப்பட்ட மக்களும் ராஜி பேசி வகுப்புவாரி உரிமை ஏற்படுத்திக் கொடுப்பதும், முஸ்லீம் வகுப்பு தீர்ப்பை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை, ஆனாலும் அதற்கு எதிர் பிரசாரம் செய்யக்கூடாது என்று காங்கிரஸ் வேலைத்திட்டத்தில் காட்டிக் கொள்வதும், வகுப்புத் தீர்ப்புக் குறையைப் பற்றி அந்நிய அரசாங்கத்துக்கு விண்ணப்பம் போடுவது இழிவு என்றும் சுயராஜ்யம் வந்தால் வகுப்புத் தீர்ப்பு தானே ஒழிந்து விடும் என்றும் காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் சொல்லுவதும், முஸ்லீம் வகுப்புத் தீர்ப்பை மாற்ற முடியுமா என்று அரசாங்கத்தாரைக் கேட்டால் அதற்கு இரு சமூகத்தாரும் ராஜியாகி ஒரு முடிவுக்கு வந்தால் அந்தக் காலத்தில் தான்.
குடி அரசு - 1936 (2), 212.
அதை மாற்ற முடியுமே தவிர மற்றபடி எந்தக் காரணத்தாலும் மாற்ற முடியாது என்று அரசாங்கத்தார் பதில் சொல்லுவதும், புதிய சீர்திருத்தம் வகுப்புத் தீர்ப்பை அடிப்படையாய்க் கொண்டிருப்பதால் சீர்திருத்தத்தை
ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று இந்திய சட்டசபையில் தோழர் ஆனே தீர்மானம் கொண்டு வருவதும் இப்படியாக பல திருவிளையாடல்கள் வகுப்பு வாதத்தால் தினமும் நடந்தவண்ணமாயிருக்கின்றன.
அப்படி இருக்கும் போது சரித்திர காரணமாகவும் மதம், சாஸ்திரம் காரணமாகவும் வகுப்புக்கு வகுப்பு கீழ் மேல் என்றும், தீண்டவும், உண்ணவும், கொள்ளவும், கொடுக்கவும், அதீதப்பட்டது என்றும் சொல்லும்படியானதுமான. வகுப்புகளுக்கு ஏன் வகுப்புரிமைகள் வழங்கக்கூடாது என்று தான் கேட்கின்றோம்
அரசியல் சம்மந்தமான காங்கிரஸ் கிளர்ச்சிகளைப் பொறுத்த வரை வகுப்புரிமை கேட்கும் வகுப்பார்களுக்கு அதன் திட்டங்களில் ஏதாவது அபிப்பிராய பேதம் இருக்கலாமே ஒழிய அடிப்படையான கொள்கைகளில் காங்கிரசோடு மற்ற வகுப்புகளுக்கு எவ்வித பெரிய வித்தியாசமும் இருப்பதாக நமக்கு விளங்கவில்லை.
வகுப்புவாதிகள் லக்ஷ்யம் வெள்ளைக்காரர்களுடைய ஆதிக்கமே இந்தியாவில் இருக்கிறதைப் பற்றியோ, நாளைய தினமே போய் விடுவதைப்பற்றியோ வகுப்புரிமை கேட்கும் மக்களுக்கு அதிக விசாரமில்லை. அவர்கள் இருந்தாலும் போவதானாலும் நாம் பல வகுப்பாரும் இந்தியாவில் எப்படி வாழ்வது என்பதில்தான் முக்கியமாகக் கவலைப்பட வேண்டி இருக்கிறது
ஏனெனில் காங்கிரசு இந்த நாட்டில் ஏற்பட்ட இந்த 50 வருஷ காலமாக ஒரே ஒரு வகுப்புதான் அதாவது பார்ப்பன வகுப்புதான் மேலும் மேலும் முன்னேற்றமடைந்து விருத்தி அடைந்திருக்கிறதே ஒழிய மற்ற சகல வகுப்பும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கூச்சலாலேயே சிறிதாவது முன்னேறவும் முன்னேறா விட்டாலும் தன் நிலையில் இருந்து கீழே போகாமலும் இருந்து வரவும் மூடிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது யார்தான் வகுப்பு உரிமையை கேட்காமல் இருக்க முடியும் என்று கேட்கின்றோம் ஆகையால் இந்த நாட்டுக்கு அரசியல் முன்னேற்றமோ சமூக இயல் முன்னேற்றமோ பொருளாதார இயல் முன்னேற்றமோ வேண்டியவர்கள் முதலில் இந்தந்த வகுப்பாருடைய வகுப்புரிமை ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்து அதை சிரதிருத்திக் கொள்ள வேண்டியதே முக்கிய காரியமாகும்
எந்த தேசத்தில் வகுப்புரிமைக்கு மற்றொரு வகுப்பாரால் தடையும் தொல்லையும் இருந்து வருகிறதோ, அந்த நாட்டில் உள்நாட்டுக் கலகம் வளர்க்கப்பட்டு வருகிறது என்பதும் வகுப்புரிமையை தடைப்படுத்தும்
213 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மக்களே தான் நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஒற்றுமைக்கும் விரோதிகளாக
முட்டுக் கட்டையாளர்களாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வகுப்புரிமையினால் எந்த நாடும் அழியவில்லை
வகுப்புரிமை அளித்த காரணத்தால் இதுவரை எந்த நாடும் கெட்டுப் போனதாக சொல்ல முடியாது
சுதேச சமஸ்தானங்களும் வகுப்புமிமையும் உதாரணமாக இந்தியாவிலேயே நமது மாகாணத்துக்கு சம்பந்தப்பட்ட பல சுதேச சமஸ்தானங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பல வருஷங்களாகவே கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது
மைசூரிலும், திருவாங்கூரிலும் மற்றும் ஒவ்வொரு வகையில் இதர சமஸ்தானங்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டு ஆய்விட்டது
கொச்சியில்
சமீப காலத்தில் கொச்சியிலும் கொடுக்கப்பட்டாய் விட்டது. அதைப் பற்றி கொஞ்ச நாளைக்கு முன்பாக “குடியரசில் தலையங்கமே எழுதப் பட்டிருந்ததை நேயர்கள் பார்த்திருக்கலாம். இப்போது அதற்கு வேலைத் திட்டமும் போட்டாய் விட்டது. அதாவது கொச்சி அரசாங்கத்தில் 50 உத்தி யோகங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவதாய் இருந்தால் அவற்றை வினியோகிக்கும் முறையில் சர்க்கார் இன்ன முறையைக் கையாள வேண்டும் என்று ஒரு வரிசைக் கிரமத்தை சமஸ்தான கெஜட்டு மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொச்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தியோக வினியோகத்துக்கு ஆக கொச்சி பிரஜைகளை 1. பார்ப்பனர்,
2. நாயர், 3. ஈழவர், 4. புலையர், 5. இதர ஜாதி இந்துக்கள், 6. இதர ஜாதி இந்துக்களில் பிற்பட்ட வகுப்பார், 7. கிறிஸ்தவர்கள், 8. முஸ்லீம்கள், 9. யூதர் ஆங்கிலேயர் என்கின்றபடி 9 வகுப்புகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் அவற்றுள்ளும் முக்கிய வகுப்புகளைப் பிரித்து எந்த வரிசைக்கிரமத்தில் உத்தியோகம் கொடுத்து வருவது என்று திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது
உத்தியோக வமிசைக் கிரமம்
1. ஈழவர்
2. ரோமோசிரியன் கிறிஸ்தவர்
3. நாயர்
4. முஸ்லீம்
குடி அரசு - 1936 (2), 214
இதர ஜாதி இந்து
ஈழவர்
பார்ப்பனர்
இதர இந்து பிற்பட்ட வகுப்பு
நாயர்
லேட்டின் கத்தோலிக்கர்
ஈழவர்
இதர இந்து
புலையர்
ரோமோகிரியன் கிறிஸ்தவர்.
நாயர்
ஈழவர்
இதர ஹிந்து
இதர கிறிஸ்தவர்
ஜுஸ், ஆங்கிலோ இந்தியர்
ரோமன் சிரியன் கிறிஸ்தவர்.
ஈழவர்
நாயர்
இந்து பிற்பட்ட வகுப்பு
லேட்டின் கத்தோலிக்கர்
இந்து பிற்பட்ட வகுப்பு
ஈழவர்
ரோமன் சிரியன் கிறிஸ்தவர்.
நாயர்
முஸ்லீம்
இதர இந்து
ஈழவர்
தமிழ் பார்ப்பனர்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
33. இந்து பிற்பட்ட வகுப்பு
34. நாயர்
35. இதர கிறிஸ்தவர்
36. ஈழவர்
37. இதர இந்து
38. புலையர்
39. ரோமோசிரியன் கிறிஸ்தவர்
40. நாயர்
41. ஈழவர்
42. லேட்டின் கத்தோலிக்க கிறிஸ்தவர்
43. இதர இந்து பிற்பட்ட வகுப்பு
44. முஸ்லீம்
45. ரோமன் சிரியன் கிறிஸ்தவர்.
46. இதர இந்து பிற்பட்ட வகுப்பு
47. நாயர்
48. ஈழவர்
49. இதர கிறிஸ்தவர்
50. இதர இந்து பிற்பட்ட வகுப்பு என்பதாக பிரித்து உத்திரவு இட்டு விட்டார்கள்
அதாவது, மொத்தத்தில் 100-ல் இந்துக்களுக்கு 68 வீதமும் கிறிஸ்தவர்களுக்கு 24 வீதமும், முஸ்லீம்களுக்கு 6 வீதமும், ஜுஸுக்கும் ஆங்கிலோ இந்தியருக்கும் 2 வீதமும் கொடுத்து இவற்றுள் உட்பிரிவுகளாகவும்
12 வகுப்புகளைப் பிரித்து அவைகளில் இந்துக்களுக்குள் 100-ல்.
பார்ப்பனருக்கு 4 வீதமும்,
நாயர்களுக்கு 16 வீதமும்,
ஈழவர்களுக்கு 20 வீதமும்,
இதர ஜாதி இந்துக்களுக்கு 10 வீதமும்,
பிற்பட்ட வகுப்பு இந்துக்களுக்கு 14 வீதமும்,
புலையர்களுக்கு 4 வீதமும்,
குடி அரசு - 1936 (2), 216
ஆக 68 வீதமும்,
கிறிஸ்தவர்களில்.
ரோமன் சிரியன் கிறிஸ்தவருக்கு 12 வீதமும்,
லேட்டின் கத்தலிக்கு கிறிஸ்தவருக்கு 6 வீதமும்,
மற்ற மூன்று வகுப்பு கிறிஸ்தவருக்கும் 6 வீதமும்,
உள்வகுப்பும் பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது ஆகவே கொச்சி சமஸ்தானத்தில் உள்ள முக்கியமான சகல வகுப்பும் உட்பிரிவு வகுப்பும் ஜன சங்கை விகிதாச்சார உத்தியோகங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டதால் இனி சுலபத்தில் அந்த சமஸ்தானத்தில் வகுப்புச் சச்சரவு வரவோ வகுப்பு நலத்துக்காக இழிவான காரியம் செய்யவோ தேச, சமூக பொது நலனுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பார் விரோதமாய் இருக்கவோ அரசியலின் பேராலோ, சமுதாயத்தின் பேராலோ, எந்த வகுப்பாரும் பொது மக்களை ஏமாற்றவோ இடமில்லாமல் போய்விட்டது
நாம் கேட்பது
இதைத்தான் நாமும் அரசியலில் உத்தியோகத்திலும் பிரதிநிதித் துவத்திலும் விரும்புகிறோம்
இந்தியாவில் பிரதிநிதித்துவத்தில் முஸ்லீம் சமூகத்தார் கிளர்ச்சியினால் ஒரு அளவு ஏற்பட்டு விட்டது என்றாலும் இந்துக்களில் மேல்ஜாதி உரிமை பாராட்டும் பார்ப்பனர்களுக்கும் கீழ் ஜாதியார் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் அவ்வித பேதம் சமுதாயத்தில் ஒழிக்கப்படும் வரை பிரதிநிதித்துவம் வகுக்கப்படவேண்டும் என்கின்றோம்
அது போலவே உத்தியோகத்திலும் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி காரணமாக மாஜி மந்திரி கனம் முத்தய்ய முதலியார் அவர்கள் முயற்சியால் முக்கிய மத, வகுப்புகளுக்கு பிரிவுவாரி உரிமை வகுக்கப்பட்டிருந்தாலும் அந்த வினியோக எண்ணிக்கை அநியாயத்தைப் போக்கவும் அக்கொள்கை நிலைத்திருக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.
இந்தப்படி செய்வதில் தேசீயத்துக்கோ தேச நலத்துக்கோ என்ன கெடுதி இருக்கின்றது என்பது நமக்கு விளங்கவில்லை.
நிரந்தரமாய் அல்ல.
அன்றியும் நாம் கேட்பதும் என்றும் நிரந்தரமாய் இருக்க வேண்டுமென்று கேட்கவில்லை. எதுவரை ஜாதிமத வகுப்புப் பிரிவும் வித்தியாசமும் இருக்கின்றதோ அதுவரை தான் பிரதிநிதித்துவ முறை அனுமதிக்க வேண்டு மென்றும் கேட்கின்றோம் 217... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இதைப் பார்ப்பனர்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்பதற்கு காரணம் உண்டு. ஏனெனில் இந்த முறை ஏற்பட்டால் பார்ப்பன ஆதிக்க வாயில் மண் விழுந்துவிடும்.
எப்படியெனில் கொச்சியில் தோழர் கனம் திவான் சர். ஷண்முகம் அவர்கள் வகுப்புவாரி உரிமைத் திட்டம் ஏற்படுத்துவதற்கு முன்பு 21754 பேர்கள் ஜனத்தொகை கொண்ட பார்ப்பனர்கள் 412 உத்தியோகத்தில் வருஷம் 430000 நாலு லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாயும் அதாவது மொத்த ஜனத்தொகையில் 50 பேருக்கு ஒரு உத்தியோகமும், மொத்த ஜனத் தொகையில் ஆள் ஒன்றுக்கு 20 ரூபாய் வீதமும், 276500 பேர்கள் ஜனத் தொகை கொண்ட ஈழவர் சமூகத்துக்கு 34 உத்தியோகமும் அதுவும் 16 காயம் உத்தியோகமும் 18 ஆக்டிங் உத்தியோகமாகவும் அவற்றிற்கு வருஷ சம்பளம் 26128 ரூபாயும் அதாவது மொத்த ஜனத்தொகையில் 810
பேருக்கு ஒரு உத்தியோகமும் ஆள் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு ஒரு அணா ஆறு (0-1-6) பைசா வீதமும் பெறும்படியான வித்தியாசம் ஒழிந்து பார்ப்பனர்களுக்கு அவர்கள் ஜனத்தொகை விகிதாச்சாரம் 100க்கு 2 வீதமும் ஈழவருக்கு அவர்கள் ஜனத்தொகை விகிதாச்சாரம் 100க்கு 20 வீதமும் உத்தியோகம் கிடைக்கும்படி செய்தால் பார்ப்பனர்கள் கதி என்ன ஆகும் என்று பாருங்கள். ஆகவே பார்ப்பனர்கள் இதை எதிர்க்கவேண்டியது தான். ஆனால் பார்ப்பனர்களுடன் எவ்வித சரீர சம்மந்தமோ, சமுதாய சம்மந்தமோ இல்லாத பார்ப்பனரல்லாத மக்கள் இதை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதுதான் நமக்கு விளங்கவில்லை
சர். ஷண்முகம்
கொச்சியில் திவான் கனம் சர். ஷண்முகம் இந்த ஏற்பாடு செய்யும்போது அந்த சமஸ்தானத்தில் ஒரு பிரஜை கூட இதை ஆக்ஷேபித்துப் பேசவே யில்லையாம். இதனால் கொச்சியிலுள்ள பிரஜைகளாகிய 12 லக்ஷம் மக்களும் தேசத்துரோகி என்றோ உத்தியோகத்துக்காக எதையும் விட்டுக் கொடுப்பவர்கள் என்றோ இந்திய தேசீயவாதிகள் என்பவர்களில் சில அயோக்கிய அற்ப ஈன ஜெந்துக்கள் குரைக்கின்ற மாதிரியே எவரும் கூறிவிட முடியாது.
தோழர் சர். ஷண்முகத்தை வகுப்புவாதி என்பதற்காக அவர் மீது பழி சுமத்தி காட்டிக் கொடுக்கும் வேலை செய்து சிலர் அவர்களைத் தோற்கடித்து
ஒரு கார்ப்பரேஷன் கண்டிறாக்டருக்கும், தொழிலாளிகளை முதலாளிகளுக்குக்
காட்டிக் கொடுத்து வாழும் ஒரு காங்கிரசுக்காரருக்கும் வெற்றி சம்பாதித்துக் கொடுத்தார்கள். அதனால் சர்.ஷண்முகம் யோக்கியதை சிறிதும் மங்கவில்லை. குன்றின்மீது இட்ட எலக்டிரிக் 100000 கேண்டில் பவர் விளக்கு போல்
குடி அரசு - 1936 (2), 218
ஜ்வலிக்கின்றது. ஆனால் அவரை தோற்கடிக்கச் செய்தவர் கைக்கு வளையலும், நெஞ்சுக்கு ரவிக்கையும் போட்டு முக்காடிட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆகவே வகுப்பு வாதத்தின் பெருமையை என்ன என்று சொல்லுவது
பார்ப்பனருக்கு ஒரு வார்த்தை
இந்த சமயத்தில் பார்ப்பனர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறோம் எங்களில் சில அன்னக்காவடிகளையும் எச்சிக்கலைகளையும் சுவாதீனம் செய்து கொண்டு எங்களை வையச் செய்யாதீர்கள். தேச ஸ்தாபனங்களை தேசமக்கள் வரிப்பணத்தால் ஒழுக்கமாகக் கட்டுப்பாடாக - நாணயமாக நடத்தப் படவேண்டிய நிர்வாகங்களை அற்ப காரியங்களுக்கு ஆக அற்பர்களுக்கு கிடைக்கும்படி செய்து நல்ல அரசியல் நிர்வாகத்தையும் சமாதான வாழ்க்கையையும் பாழாக்காதீர்கள்.
பொது உடமை தேசமானாலும் கட்டுப்பாடும் நாணயமும் வேண்டும். அக்கட்டுப்பாடும் நாணயமும் என்பதற்கு என்ன தான் தாராள நோக்கத்துடன் வியாக்கியானம் செய்தாலும் பொதுஉடமைக் கொள்கை உறுதியுடன் நடக்கத்தக்க கட்டுப்பாடும் நாணயமும் என்று தான் சொல்லலாமே தவிர அந்நியன் சட்டைப்பையில் இருக்கும் பணத்தை திருடுவதும் கூலிக்கு குரைக்கும் கொள்கையும் பாமரப் பெண்களைச் குறையாடி விற்கும் தன்மை போன்றதுமான காரியங்கள் கட்டுப்பாடும் ஒழுங்குமாகாது.
ஆதலால் பார்ப்பனர்களே, மண்குதிரையை நம்பி “வாழ்க்கைப்படுவதும் கெட்டு, தேடித் தின்பதும் போய்" வீணாய் சந்தியில் அலையும்படியான நிலைமையை அடையாதீர்கள் என்று எச்சரிக்கை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.
இன்று காங்கிரசில் உள்ள எந்த நபர் நாளைக்கு ஜஸ்டிஸ் கட்சிக்கு கூப்பிட்டால் வரமாட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்களை சட்டை செய்பவர்கள் யார்?
ஆதலால் வீணாக ஒற்றுமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு மனித சமூக நலத்தை - முற்போக்கை - சாந்தியை - நாணயத்தை ஒழுக்கத்தை பாழாக்காதீர்கள். வைவதும் காலித்தனம் செய்வதும் உங்கள் கூலிகளுக்கே சொந்தமென்று எண்ணி ஏமாந்து போகாதீர்கள்.
ஆனாலும் வருந்துகிறோம்
நாய் கடித்தால் நாயைக் கடிக்க மாட்டார்கள்; ஆனால் நாய் வளர்ப்பவர்களை தண்டிக்காமல் விடமாட்டார்கள். அன்றியும் மல்லாந்து படுத்து எச்சில் உமிழ்ந்தால் மார்மேல்தான் விழும் என்பார்களே, அதுபோல்
219 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மற்றும் சிலர் விஷயத்தில் நம்மவர்கள் தானே நம்மை வைபவர்களாக இருக்கிறார்களே, அவர்களை திரும்ப வைவது நமக்கு மன வேதனை கொடுக்காதா என்று ஒரு அளவுக்கு பயப்படுகின்றோம் ஆன போதிலும் காங்கிரசுக்காலிகள் ஆங்காங்கு பல மகாநாடுகளிலும் கூட்டங்களிலும் பேசுவதும் வைவதும் கேள்விப்பட்ட வரையில் பத்திரிகைகளில் பார்த்த வரையில் அந்த பயத்தையும் அடியோடு விட்டுவிட வேண்டியது தான் என்கிற நிலைமைக்கு வர வேண்டியிருக்கிறதே என்று சிறிது வருந்துகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 13.09.1936
குடி அரசு - 1936 (2)
ப ப் S
பிரஜா பிரதிநிதித்துவ சபை கூட்டுவதின் கருத்து
எச்சரிக்கை! எச்சமிக்கை!!
காங்கிரசுக்காரர்கள் பொதுஜனப் பிரதிகள் கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்று சர்க்காரை கேட்டுக் கொள்ளுவதாக ஒரு தீர்மானம் இந்தியா சட்டசபைக்கு கொண்டு வரப்போவதாக நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்களாம்.
அந்த தீர்மானத்தின் வாசகம் எப்படிப்பட்டது என்றால், சீர்திருத்தத்தில் உண்மையான அதிகாரம் இல்லையென்றும், வகுப்புத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என்றும் ஆதலால் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது
அரசியலில் வகுப்புகளைக் காப்பாற்றிக் கொடுப்பதாக பல வகுப்பு மக்களுக்கும் உத்தரவாத மேற்றுக் கொண்ட காங்கிரசானது அரசியலில் வகுப்புத்திட்டம் கூடாது என்று சொன்னால் அதில் ஏதாவது நாணயமிருக்க முடியுமா என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். இன்றைய காங்கிரசின் கிளர்ச்சியெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருடைய ஆதிக்கம் அரசியலிலும் தலைசிறந்து விளங்கவேண்டும் என்ற பார்ப்பனீயக் கிளர்ச்சியே ஒழிய யோக்கியமான அரசியல் கிளர்ச்சி அல்ல என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம். ஆதலால் இப்படிப்பட்ட பொதுஜனங்கள் பிரதிநிதித்துவக் கூட்டம் ஒன்று கூட்டப்படுவதானால் இந்தியாவில் உள்ள சகல வகுப்பாருக்கும் சகல கட்சி ஸ்தாபனங்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் அதுவும் ஜனத்தொகைக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் கொடுத்துத் தான் கூட்டவேண்டும் என்றும், அதற்கு முன்னதாக அப்படிப்பட்ட சபை ஒன்று கூட்ட ஏற்பாடு செய்யும் முன் காங்கிரசுக்காரர்கள் அபிப்பிராயம் தான் மற்ற சபை யாருடையவும் வகுப்பாருடையவும் அபிப்பிராயமா என்றும் கேட்டுவிட்டே கூட்ட வேண்டும் என்று சர்க்காருக்கு எச்சரிக்கை செய்வதோடு, இந்த மாதிரியான சூழ்ச்சித் தந்திரத்தால் எல்லாம் இந்தியாவில் சமுதாயத்திலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் அரசியல் சுதந்திரத்திலும் பிற்படுத்தப் பட்டிருக்கிற மக்களின் கண்களில் மிளகு பொடி போட்டு வாயில் மண்ணைப்போட்டு விட முடியாது என்று காங்கிரசுக்காரருக்கும் எச்சரிக்கை செய்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1936
21 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வரப்போகிறார்கணாமே!
தென்னாட்டில் காங்கிரசுக்குச் செல்வாக்கும் மதிப்பும் குறையும்போது வடநாட்டுத் தலைவர்களை அழைத்துக்கொண்டு ஊரூராய்ச் சுற்றி நிதி
சேர்ப்பதும் காங்கரஸ் பிரசாரம் செய்வதும் தென்னாட்டுப் பார்ப்பனர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.
இன்று தென்னாட்டு காங்கரஸ் குடைசாய்ந்து கிடக்கிறது. தமிழ் மாகாண காங்கரஸ் காரியக்கமிட்டியார் ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று காங்கரஸ்காரர்களே கிளர்ச்சி செய்கிறார்கள். தலைவரை வீழ்த்தவேண்டும் என்றும் ஒரு கிளர்ச்சி நடை பெற்று வருகிறது
காங்கரஸ் ஆதிக்கம் பெற்ற ஜில்லா போர்டுகளில் எல்லாம் ஊழல்கள் நிறைந்து விட்டன. ஜில்லா போர்டுகளில் காங்கரஸ் கட்சிக்குள் பிளவு
ஏற்பட்டிருக்கிறது காங்கரஸ்காரர்களின் ஜில்லா போர்டு நிர்வாகத்தைப் பரிசீலனை செய்ய நியமிக்கப்பட்டிருந்த கமிட்டியார் “நிர்வாகம் ரொம்ப ரொம்ப
ஒழுங்கு” என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். எனினும் அவ்வறிக்கையை காங்கரஸ்காரர்களே எதிர்க்கிறார்கள்.
வேலூர் ஜில்லாபோர்டு இடைத்தேர்தலில் காங்கரஸ் பேரால் அபேட்சகர்களாய் நிற்கக் கூட ஆட்கள் முன் வரவில்லை.
சென்னை நகரசபைத் தேர்தல் சம்பந்தமான ஊழல்களைக் கண்டிக்க ஒரு விசேஷ காங்கரஸ் கமிட்டியார் முயற்சி செய்து வருகிறார்கள். காங்கிரஸ் அபேட்சகர்களுக்கு எதிரிடையாக காங்கிரஸ்காரர்களே பிரசாரம் செய்து வருகிறார்கள்.
காங்கரஸ் சீரழிந்து மானங்கெட்டு மதிப்பிழந்து கிடப்பதற்கு இவ்வளவும் போதாவா!
இந்த நிலை மேலும் இப்படியே இருந்து கொண்டிருக்குமானால் வரப் போகும் பொதுத் தேர்தலில் காங்கரசுக்குச் சாவுமணி அடிக்கப் போவது உறுதி. ஆகவே தென்னாட்டு காங்கரஸ் பிராமணர்கள் பண்டித ஜவஹர்லால்,
பாபு ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல் முதலியவர்களை தென்னாட்டுக்கு
குடி அரசு - 1936 (2),
ப ப் 3
வரவழைத்து பாமர மக்களை ஏமாற்ற ஏற்பாடு செய்து விட்டார்கள். இம்மாத இறுதியில் ராஜேந்திரரும் படேலும் வரப்போகிறார்களாம்
அக்டோபர் முதல் வாரத்தில் பண்டித ஜவஹர்லால் வரப்போகிறாராம்
இவர்கள் வருவதைப்பற்றியும் பிரசாரம் செய்வதைப் பற்றியும் நாம் கவலைப்படவில்லை. ஏன்? தென்னாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்யவும் பிரசாரம் செய்யவும் எல்லாருக்கும் உரிமை யுண்டு
ஆனால் அவர்களது பொய்ப் பிரசாரத்தினால் தென்னாட்டார் ஏமாந்து விடக் கூடாதென்று இப்பொழுதே எச்சரிக்கை செய்வதுடன் காங்கரஸ்காரர். அட்டூழியங்களை ஜவஹர்லால் கம்பெனியார் பார்வைக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகள் செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு காங்கரஸ் காரியக்கமிட்டியார் அட்டூழியங்களையும் அயோக்கியத்தனங்களையும் சென்னை காங்கரஸ்காரர் சிலர் பண்டித ஜவஹர்லாலுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். தோழர் ஜவஹர்லால் சென்னைக்கு வரும்போது அவரைப் பேட்டி கண்டு தென்னாட்டுக் காங்கரஸ்காரர் அயோக்கியத்தனங்களைத் தெரிவிக்க காங்கரஸ்காரர் சிலர் முயற்சி செய்வதாயும் தெரியவருகிறது. ஜவஹர் கம்பெனியார் சுற்றுப்பிரயாணம் செய்வதைப் பற்றியோ பிரசாரம் செய்வதைப் பற்றியோ நாம் அஞ்சவில்லை. ஆனால் சத்தியமூர்த்தி கம்பெனியாரின் வார்த்தைகளை ஜவஹர் கம்பெனியார் நம்பி உண்மை நிலையை உணராமல் ஏமாந்து போகும்படி தென்னாட்டார் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதென்றே நாம் எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1936
223 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பார்ப்பனல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டிக்கு அன்னோய் தமிழர்கவின் உதவி
ரூபாய் 117-11-8-க்கு “செக்கு?
- அன்னோய் 12.9.36
தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கட்கு,
அன்பார்ந்த எமது தலைவரே! வணக்கம்.
“தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசார மத்திய கமிட்டியின் சார்பாக விடுத்துள்ள நுங்கள் வேண்டுகோளுக்கிணங்க இவண் வதியும் தமிழர்களாகய நாங்கள் தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் பெயருக்கு ரூபாய், 177-77-சக்கு “செக்” ஒன்று இத்துடன் அனுப்புவித்துள்ளோம்; எங்களின் இச்சிறு பொருளுதவியை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகின்றோம். நிற்க,
தமிழ் நன்மக்களின் நலங்கருதி முனைந்து நின்று அருந் தொண்டாற்றும் தங்கட்கும் தங்களின் கூட்டுத் தோழர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியறிதலையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடுகூட தங்களின் புனிதமான நன் முயற்சி பெற்றி பெற வேண்டுமாயும் மிக ஆசைப்படுகிறோம்.
“செக்! கிடைக்கப் பெற்றமையை ''குடி அரசு'' வாயிலாகத் தெரிவிப்பீர்களென நம்புகின்றோம்.
இங்ஙனம், தங்கள் பால் அன்பும் மதிப்பும்மிக்குடைய அன்னோய் தமிழர்கள்.
குறிப்பு: பிராஞ்சிலாகாவைச் சேர்ந்த அன்னோய் தமிழ் தோழர்களுக்கு நமது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய வெளிநாட்டுத் தோழர்களுக்கு வழிகாட்டியாக முன்வந்த ஷி தமிழர்களின் உதவித்தொகையின் ஒவ்வொரு காசும்
குடி அரசு - 1936 (2), 224
பார்ப்பனரல்லாதார்நன்மையின் பொருட்டுச்செலவழிக்கப்படுவதால் அவர்கள் தம் உதவி என்றும் மறக்க மூடியாததென்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். செக்கை விருதுநகர் தோழர் வி.வி.ராமசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
(பத்திராதிபர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 20.09.1936
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தற்கால அரசியல்
தஞ்சை ஜில்லா சுற்றுப்பிரயாண பிரசங்கம்
Dr. சுப்பராயன் கம்பெனிக்கு பதில்
தோழர்களே!
இந்தப் பக்கத்துக்கு சுமார் 3,4 மாதத்துக்கு முன் ஒரு தடவை வந்து பேசி இருக்கிறேன். இப்போது பட்டுக்கோட்டை தோழர் சிவராமகிருஷ்ணன் -
ராஜலக்ஷ்மி திருமணத்திற்கு வந்த சந்தர்ப்பத்தில் இந்த ஜில்லா சுற்றுப் பிரயாணத்தில் சில பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்து இதில் தற்கால அரசியல் என்பது பற்றிப் பேசும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
பதவியும் சம்பளமுமே இன்றைய அரசியல்
தற்கால அரசியல் என்பதைப்பற்றிப் பேசுவது என்றால் அது நாம் அதாவது இந்தியர்களாகிய நாமும் (இந்தியர்களாகிய) நம்மில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பாரும் ஒருவரை ஒருவர் வைது கொள்வது தான் தற்கால அரசியலாக இருக்கிறது என்று சொல்ல வருத்தப்படுகிறேன். நம்மில் ஒருவரை ஒருவர் வைதுகொள்வதைத் தவிர மற்றபடி அரசியல் என்பதின் காரணமாய் கொள்கைகள் திட்டங்கள் என்பவற்றில் இந்தியர்களுக்குள் ஏதும் முக்கியமான வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. மேல் குறிப்பிட்டபடி வைது கொள்ளுகின்ற நம்மவர்களுக்குள்ளாகவே எத்தனை பேருக்கு அரசியல் ஞானமும், அரசியல் கொள்கையும், அரசியல் திட்டமும் தெரியும் என்றால் 100க்கு 5 பேருக்குக்கூட தெரியாதென்றே கருதுகிறேன்.
சாதாரணமாக இன்று ஒருவரை ஒருவர் வையத் தெரிவதும், வையத் துணிவு கொள்ளுவதும் தான் அரசியல் ஞானமாக இருந்து வருகிறது
அரசியல் என்பதே இன்று உத்தியோகம், பதவி, பெருத்த சம்பளம் என்கின்ற மூன்றுக்குள்ளாகவே அடங்கிவிட்டது. அதைப்பெறுவதே அரசியல் முயற்சியாகவும் ஆகிவிட்டது. அதற்கு ஆகவே இந்த நாட்டில் பல திறப்பட்ட அரசியல் கட்சிகளும் சமூக வகுப்புக் கட்சிகளும் ஏற்பட்டு இருந்து வருகின்றன. இக்கட்சிகளுக்கு இருந்துவரும் பிரதானத்தன்மை யெல்லாம் எந்தக்கட்சியில் சேர்ந்தால் யாரை வைதால் உத்தியோகம் பதவி
குடி அரசு - 1936 (2), 226
சம்பளம் கிடைக்கும் என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது. இதைத்தவிர அரசியலைப் பற்றி என்ன சொல்ல இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.
தேசியத்தின் யோக்கியதை
தேசியம் என்பதின் லக்ஷணமும் இந்த யோக்கியதையைக் கொண்டது தான். அரசியல் என்பது உத்தியோகம், பதவி, சம்பளம் ஆகியவைகளைப் பொறுத்ததாய் இருந்தால் தேசியம் தேசபக்தி என்பது பெரிதும் வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்துகொண்டு பதவி உத்தியோகம் பெற ஆசைப்படுவர்களிடம் கூலி பெற்றுக்கொண்டு குலைப்பதே மகாபெரிய தேசியமாய் விளங்குகிறது. இந்த மாதிரி அரசியலும் தேசியமும் ஏழைப் பாட்டாளி மக்கள் தலையில் கையை வைத்து அவர்களது ரத்தம் வேர்வையாய்ச் சிந்த உழைக்கும் உழைப்பை கொள்ளை கொண்டு சோம்பேறிகளும் அயோக்கியர்களும் பொறுப்பற்ற காலிகளும் பிழைக்கத்தான். மார்க்கமாய் இருந்து வருகிறது
தேசியமும் அரசியலும் வலுக்க வலுக்க ஏழைப் பாட்டாளி மக்களுக் குத்தான் கஷ்டமும் தொல்லையும் வளர்ந்து கொண்டே வருகிறது பார்ப்பனர்களும் படித்த மக்கள் என்பவர்களுமாகிய சோம்பேறிக் கூட்டத்தார்களாலேயே இம்மாதிரி கஷ்ட நிலைமை இந்த நாட்டுக்கு ஏற்பட்டதே ஒழிய வேறு யாராலும் இல்லை.
இந்தமாதிரி சோம்பேறிக் கூட்டத்தாருக்கு எலும்பு போட்டு அவர்களை அடக்கி சுவாதீனம் செய்து கொண்டால் அரசியல் நிர்வாகம் இடையூறு இல்லாமல் நடத்த சர்க்காருக்கு அனுகூலமாக இருக்குமானதாலும் சர்க்காரின் உண்மையான கடமையைச் செய்யும்படி தூண்டவும் தொந்தரவு கொடுக்கவும் ஆளில்லாமல் போகுமாதலாலும் அரசாங்கத்தார் இவ்வித அரசியலுக்கும் தேசியத்துக்கும் உதவி செய்து உத்தியோகப் போட்டிக்கும், பதவிப் போட்டிக்கும் இடம் கொடுத்து சுகமாய் ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
ஏழைப்பாட்டாளி பாமரமக்களுக்கு இந்த சூழ்ச்சி விளங்குவதில்லை யாதலால் அவர்களும் ஏமாந்து போய் இந்தப் புரட்டும் ஏமாற்றமுமான
கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுகிறார்கள்
சீர்திருத்தம்
சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்தம் என்பதில் ஜனங்களுக்கு அதாவது ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களுக்கு பெருத்த சம்பளமும், அதிகாரமும் உள்ள பல பதவிகள் கிடைக்கப்போகின்றன. அதற்காக இன்று அவற்றை அடைய ஆசைப்படுவர்களுக்குள் பெருத்த போட்டிக் கிளர்ச்சிகள் நடக்கின்றன. அப்போட்டிக் கிளர்ச்சிகள் சிறப்பாக நம் நாட்டில் இரண்டு கட்சிகளின் பேரால் நடக்கின்றன. அதாவது ஒன்று ஜஸ்டிஸ் மற்றொன்று காங்கிரஸ் என்பதாகும்.
227 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 23
ஜஸ்டிஸ் கட்சி இந்த 16 வருஷ காலமாய் இந்த நாட்டில் பதவியில். இருந்து வந்த கட்சியாகும். காங்கிரஸ் கட்சியானது தங்களுக்கு அப்பதவிகள் கிடைக்காது என்று கருதி, சீ அந்தப்பழம் புளிக்கும் என்று நரி சொன்ன கதைப்போல் “எங்களுக்கு யாதொரு பதவியும் வேண்டியதில்லை" என்றும் பதவிகளில் யாதொரு பிரயோஜனமும் இல்லை” என்றும் மக்களிடம் வெளிப்படையாய்ப் பேசிக்கொண்டே தந்திரத்தால் தங்களுக்கு ஏதாவது கிடைக்காதா என்று சூழ்ச்சி செய்து கொண்டே வந்த கட்சியாகும் காங்கிரஸ்காரர்களது ரகசிய சூழ்ச்சி இதுவரை பலிக்காததால் இப்போது வெட்கம் கிக்கத்தையெல்லாம் தூர மூட்டை கட்டி வைத்து விட்டு வெளிப்படையாகவே தங்களுக்கு பதவியும் உத்தியோகமும் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டார்கள். இதன் பயனாய் காங்கிரஸ்காரர்கள் யாரை எதை பதவி வேட்டைக்காரர் என்றும் உத்தியோக மோகம் என்றும் சொல்லி வந்தார்களோ அந்த வேலைக்கு இப்போது தாங்களே ஆளாகி பதவிகளைக் கைப்பற்றுவதே தங்களுடைய வேலைத்திட்டம் என்று கூட வெளிப்படையாய் சொல்லிக்கொண்டு வெளிவந்துவிட்டார்கள்.
சைத்தான் அரசாங்கமென்றும் இதிலுள்ள பதவியும் உத்தியோகமும் அடிமைத்தனம் என்றும் சுயமரியாதைக்கு விரோதமானதென்றும் சொல்லி தெய்வோபதேசம் செய்துவந்த தோழர் காந்தியாரே அதே சைத்தான் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் கைப்பற்ற ஆசி கூறி திரைமறைவில் இருந்து கொண்டு மார்க்கம் சொல்லிக் கொடுத்து வருகிறார்.
அரசாங்கம் பணக்கார ஆட்சி என்றும் இதில் பதவிபெறுவதும் உத்தியோகம் பார்ப்பதும் தேசத்துரோகம் என்றும் பணக்காரர்களுக்கு கூலிப்பணி செய்ததாகுமென்றும் ஏழை மக்களுக்கு பயனற்றதும் கெடுதி செய்யக் கூடியதென்றும் வெள்ளைக்காரரை அடியோடு இந்தியாவை விட்டு விரட்டிப் பொது உடமை ஆட்சியை ஏற்படுத்துவது தான் உண்மையான தேச சேவை என்றும் பேசி மக்களை மயக்கி விளம்பரம் பெற்ற வீரர் ஜவஹர்லால் பண்டிதரும் பதவிகளைக் கைப்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொல்லி அதற்கு ஆக பதவி வேட்டைப் பிரசாரம் செய்து வருகிறார்.
இன்னம் 10 நாளில் நம்நாட்டிற்கும் வந்து பதவி வேட்டை ஆடப் போகிறார்.
புது காங்கிரஸ் பக்தர்கன்
இந்த நிலைமை, அதாவது பதவி ஏற்கும் நிலைமை இன்று ஏற்பட்டவுடன் (காங்கிரசும் காந்தியாரும் பண்டிதரும் முன் பதவி பஹிஷ்காரம் பேசும்போது) அப்போது காங்கிரசைவிட்டு ஓடிப்போனவர்களும் காங்கிரசை வேப்பங்காயைப்போல மதித்தவர்களுமான அனேக ஆசாமிகள் அதாவது தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்து பிள்ளை போன்றவர்கள்
குடி அரசு - 1936 (2), 228
எல்லாம் திடீரென்று தேசபக்த ஜன்மம் எடுத்து காங்கிரசில் சேர்ந்து கொண்டு இன்று நாக்கில் தண்ணீர் சொட்ட பதவி ஆத்திரம் பிடித்து அலைவதுடன் வெட்கத்தை துறந்து தைரியமாய் இன்று நம்மை அதாவது தாங்கள் குடி இருந்த வீட்டையே குற்றம் சொல்லி வைய வெளியில் புறப்பட்டுவிட்டார்கள். அவர்களைத் திருப்பி வைவதற்காக நாம் இன்று இந்தக் கூட்டங்கள் கூட்ட வில்லையானாலும் அவர்கள் நம்மை வைவதற்கு சமாதானம் சொல்லித்தீர
நாம் இங்கு பேசவேண்டி இருக்கிறது
சிறிதும் நாணயமும் யோக்கியப்பொறுப்பும் இல்லாமல் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள் நேற்று பேராணரணி மகாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகக்கட்சி என்றும், அக்கட்சியில் உள்ளவர்கள் அயோக்கியர்கள். என்றும் ஜஸ்டிஸ் கட்சியை அடியோடு ஒழித்து ஆகவேண்டும் என்றும் கூறினாராம். கூலிக்காக குலைத்து விட்டுப்போகின்ற காலிகளுடையவும் அன்னக்காவடிகளுடையவும் எச்சில் பொறுக்க அலைகின்றவர்களுடையவும் கூச்சலைப்பற்றி நான் இன்று கவலைகொள்ளவில்லை. ஆனால் நாடிமுத்துபிள்ளை, சுப்பராயன் போன்ற பொறுப்புள்ள பதவியை வகிக்கும் ஆசாமிகள் இம்மாதிரி பேசினால் அதை எப்படி அனுமதித்துக்கொண்டிருக்க
முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். (இச்சமயத்தில் பட்டுக்கோட்டையில் ஒருவர் “யாரை வேண்டுமானாலும் பேசுங்கள், நாடிமுத்து பிள்ளையைப் பற்றி மாத்திரம் பேசாதீர்கள்" என்றார்) நாடிமுத்து பிள்ளையை வைவதற்கு ஆக நாங்கள் இங்கு வரவில்லை. எங்களுக்கு வேறு பயனுள்ள வேலை எவ்வளவோ இருக்கிறது. ஆனால் நாடிமுத்துபிள்ளை பேராஊரணியில் பேசிய பேச்சுக்கு சமாதானம் சொல்ல இங்கு வந்திருக்கிறோம். இதைக்கூட சொல்லக்கூடாது என்று யாராவது தடுப்பதாய் இருந்தால் அது நாளைக்கு மற்றவர்களை வெளியில் தலைகாட்ட முடியாத மாதிரி செய்துவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஆண்மையுள்ளவர்கள் தாங்கள் பேசியதற்கு பதில் சொல்ல மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால்தான் இந்த நாட்டில் சமாதானமாக பிரசாரங்கள் செய்யமுடியும். அதில்லையானால் ஒருவருக் கொருவர் தலைகாட்டாமல் வாழவேண்டிய நிலைமை தான் ஏற்படும்
நேற்று தோழர் நாடிமுத்து அவர்கள் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் அயோக்கியர் என்று பேசியிருக்கிறார். வந்து ௬ுஜுவு செய்யட்டும் என்று அறைகூவி அழைக்கிறேன். யார் யார் அயோக்கியர் என்று சொல்லட்டும் அதன் தலைவர்கள் தியாகராய செட்டியார், நாயர் முதல் இன்று தலைவராய் உள்ள பொப்பிலிராஜா வரை எந்த தலைவர் என்ன அயோக்கியத்தனம் செய்தார்கள் என்று சொல்லட்டும். என்னால் முடிந்தால் நான் பதில் சொல்லுகிறேன் அல்லது நாடிமுத்து பிள்ளையுடன் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். அதை விட்டு விட்டு பாமரமக்களைக் கூட்டி வைத்து
வாயில் வந்தபடி உளருவது என்றால் அது ஒரு நாளும் யோக்கியமான காரியமாகாது என்று சொல்லுவதோடு அப்படிச் சொல்லுவது தங்களைத்தான் அயோக்கியர்களாக்கிவிடும் என்றும் கூறுகிறேன்.
229 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஜஸ்டிஸ் கட்சி தேசத் துரோக கட்சி என்று சொல்லியிருக்கிறார். இதோ பாருங்கள் அது பத்திரிகையில் இருக்கிறது. ஜஸ்டிஸ் கட்சி என்ன துரோகம் செய்தது எடுத்துச் சொல்ல வேண்டாமா? அதில்லாமல் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்ததை கிளிப்பிள்ளை போல் சொல்லுவது என்றால் பெரிய மனிதன் என்று கருதிக் கொண்டிருப்பவருக்கு பொறுப்பு இருக்க வேண்டாமா என்று கேட்கின்றேன்.
இந்த16வருஷஆட்சியில் ஜஸ்டிஸ்கட்சி செய்ததேசத்துரோகம் இன்னது என்றுயாராவதுயோக்கியமாக சொல்லட்டும் என்று அறை கூவி அழைக்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்திருந்தால் தோழர் நாடிமுத்து ஜில்லா போர்டு பிரசிடெண்டாயிருக்க முடியுமா என்று அவரையே கேட்கின்றேன்.
பார்ப்பனர்கள் பின்னால் தானே மூட்டை தூக்கிக்கொண்டு சாமி சாமி என்று அலைய வேண்டி வந்திருக்கும். இன்றையத் தினமும் நாடிமுத்து பிள்ளை அவர்களை பார்ப்பனர் சேர்த்துக் கொண்டதின் ரகசியம் என்ன? ஜஸ்டிஸ் கட்சியை வைய ஒரு ஆள் வேண்டும் என்பதற்கல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியால் அவர் அடைந்த யோக்கியதையை தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதல்லாமல், மற்றபடி இவருடைய அரசியல் ஞானத்தையும்
புத்தி விசேஷத்தையும் தேசாபிமானத்தையும் மதித்தா என்று கேட்கின்றேன்.
தோழர் நாடிமுத்துப் பிள்ளை அவர்கள் ஜஸ்டிஸ் கட்சி பூமிவரி குறைக்கவில்லை என்று பேசியிருக்கிறார். அரசியல் ஞானமுள்ளவர்கள் பூமிவரி குறைக்கவில்லை என்பதை ஜஸ்டிஸ் கட்சி மீது குறையாய் சொல்லமாட்டார்கள். ஆனால் வேண்டுமென்றே பழி சுமத்தத்தான் இப்படிப் பேசுவார்கள். வரி விஷயம் இந்தியாவில் எந்த மாகாணத்திலும் மந்திரிகளுக்கு சம்மந்தமில்லை. போலீஸ், நீதி இலாக்காக்களைப் போல் சர்க்காருடைய சொந்த பொறுப்பில் இருக்கும் விஷயம். நிலவரி இன்று எந்த மாகாணங்களிலாவது குறைத்தார்கள் என்றோ குறைக்க முடிந்தது என்றோ யாராவது சொல்லட்டும். அதை விட்டு விட்டு பைத்தியக்காரத்தனமாய் உளறுவதில் என்ன பிரயோஜனம் என்று கேட்கின்றேன்.
கேட்பவர்கள் பாமர மக்களாய் இருப்பதால் என்ன வேண்டுமானாலும்
பேசலாம் என்கின்ற பேடிகள் தைரியமே ஒழிய இதில் வீரத் தைரியம்
ஒன்றும் இல்லை.
சமய சஞ்சீவிகள்
ஏழைக் குடியானவர்களிடம் மிகவும் பரிதாபம் கொண்டவர்போல் பேசும் தோழர் நாடிமுத்து பிள்ளை அவர்கள் தனது குடிகளுக்கு எவ்வளவு விகிதாச்சாரம் தள்ளிக் கொடுத்தார் என்று சொல்லமுடியுமா?
குடி அரசு - 1936 (2), 230
சமய சஞ்சீவிகளை நம்பாதீர்
இவருக்குத்தான் அதிக பூமி இருக்கிறதா? ஜஸ்டிஸ் கட்சியாருக்கு பூமி இல்லையா? யாரோ இரண்டு மூன்று பேர் சம்பளம் வாங்க ஜஸ்டிஸ் கட்சி மிராசுதார்கள் எல்லோரும் வரிகுறைக்க சம்மதிக்காமல் உயர்த்திக் கொள்ளுவார்களா? அல்லது சர்க்கார் குறைப்பதை வேண்டாமென்று சொல்லிவிடுவார்களா? கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு மதி வேண்டாமா? தோழர் சுப்பராயன் மந்திரியாய் இருக்கும்போது எவ்வளவு வரி குறைத்தார் என்று கருதி இப்போது நாடிமுத்து பிள்ளைஅவருடன் குலாவுகிறார்? தோழர்களே! இந்தமாதிரி சமய சஞ்சீவிகள் பேச்சைக் கேட்காதீர்கள். உங்கள் புத்தியைக் கொண்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
நாடிமுத்து பின்ளை தேசபக்தி.
எப்படியாவது தனக்கு ஜில்லா போர்டுக்கும் சட்டசபைக்கும் ஓட்டு வேண்டும் என்பதுதான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் தேசபக்தியின் அரசியல் கொள்கையாகுமே ஒழிய மற்றபடி தேசபக்தி என்றால் ரூபாய்க்கு எத்தனை படி என்றுதான் கேட்பார். தகுதி உடையவர் என்று கருதினால் நீங்கள் குஷாலாய் அவருக்கு ஓட்டு செய்யுங்கள். கட்சிக்காக என்று ஏமாந்து போகாதீர்கள். ஜஸ்டிஸ் கட்சியை வைவதென்றால் அதற்காக ஓட்டு செய்யாதீர்கள். இவர் சாதித்தது என்ன, சாதிக்கப்போவது என்ன என்று தெரிந்து ஓட்டு செய்யுங்கள். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை.
நாடிமுத்து ராஜ்யம் எந்த ராஜ்யம்? ஜஸ்டிஸ் கட்சி கண்டிறாக்ட் ராஜ்யமென்று கூலிகள் கூப்பாடு போட்டார்கள். தோழர் நாடிமுத்து பிள்ளையின் சொந்த ராஜ்யம் (அதாவது அவரது ஜில்லா போர்டு) யாருடைய ராஜ்யமாய் இருக்கிறது? எல்லா வேலைகளையும் டிபார்டுமெண்டில் செய்கிறாரா? இவர் கொடுக்கும் கண்டிறாக்டுதாரர்கள் பூராவும் பரம்பரை கண்டிறாக்டரும் இவருக்கும் இவருக்குப் பின்னால் கைதூக்கும் மெம்பர்களுக்கும் சொந்தக்காரரும் கூட்டாளிகளும் சிப்பந்திகளும் இல்லாத கண்டிறாக்டு அனுபவசாலிகளா? ஆகவே நாடிமுத்து பிள்ளை நடப்புக்கு மோசமில்லாமலும் அனேக ஜில்லாக்களில் அவரைவிட மேன்மையாயும் தான் ஜஸ்டிஸ் கட்சி ராஜ்யம் நடத்தப்படுகிறது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
டாக்டர் சுப்பராயன்
டாக்டர் சுப்பராயன் அவர்கள் இப்போது ஒரு பெரிய தேச பக்தராய்
நடிக்கிறார். நடிக்கட்டும் அவர் மந்திரியானால் எனக்கு மிகவும்சந்தோஷம்தான். அதில் எனக்கும் ஏதாவது பங்கு கிடைக்கலாம்
231 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆனால் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் வையவேண்டும்? மந்திரிகள் ஏதாவது நாணயத் தவறுதலாய் நடந்தார்களா? கொள்கை மாற்றிக் கொண்டார்களா? இருந்தால் ஒரு விஷயமாவது எடுத்துச் சொல்லலாமல்லவா? டாக்டர் சுப்பராயன் மந்திரியாய் இருக்கும்போது ஜஸ்டிஸ் கட்சி தலைவருக்கு
கீழ் படிந்து தான் ஆட்சி நடத்தினார். காங்கிரஸ்காரர்களுக்கு நாமத்தை சாத்தி விட்டு வந்து சைமன் கமிஷனை வரவேற்றார். சீர்திருத்தங்களுக்கு உதவி செய்தார். இவர் இப்போது சீர்திருத்தத்தை உடைப்பது என்கின்ற தந்திரக் காரருடன் சேருவதும் வகுப்புவாதம் கூடாது என்று சொல்லுவதும் யோக்கியமாகுமா?
டாக்டர் சுப்பராயன் மந்திரியாய் இருந்தபோதுதான் வகுப்பு வாதம்
வீறு கொண்டிருந்தது. அவர்தான் தேர்தலில் தனித்தனி ஜாதிகளுக்கு இடம்வைத்து சட்டம் செய்தவர். அவர் காலத்தில் தான் உத்தியோகங்களும் தனி தனி ஜாதிக்கு விகிதாச்சாரம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காகத்தான் நான் இன்னமும் அவரிடம் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.
பார்ப்பன சூழ்ச்சி
1930 ல் பார்ப்பனர்கள் டாக்டர் சுப்பராயன் மந்திரி சபையை கவிழ்க்க சூழ்ச்சி செய்து ஜஸ்டிஸ் கட்சிக்கு உதவி செய்தார்கள்.
“இந்து”, “சுதேசமித்திரன் ' பத்திரிகைகள் 1930ல் புதிய மந்திரி சபை ஏற்படும்போது சுப்பராயன் கட்சிக்கு கொடுக்கக்கூடாது என்றும் ஜஸ்டிஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஜஸ்டிஸ் கட்சிதான் சட்டப்படி ஒழுங்கான சபை என்றும் எழுதின.
அப்படிப்பட்ட இருகூட்டமும்இன்று வெட்கமில்லாமல் குலாவுகின்றன. காங்கிரசுக்கோ பார்ப்பனர்களுக்கோ சிறிதும் யோக்கியமோ, நாணயமோ, வெட்கமோ கூட கிடையாது. எப்படியாவது பாடுபட்டுப் பார்ப்பனரல்லாதாரை தலை எடுக்கவொட்டாமல் அடித்து மனு காலப்படி பார்ப்பனரல்லாத ஆண்களையும் பெண்களையும் தங்களுக்கு அடிமையாகவும், தாசியாகவும் வைக்கவே அவர்களது முயற்சி காங்கிரஸ் என்கின்ற ஆயுதத்தைத் தங்கள் கைவசப்படுத்திக்கொண்டு தங்கள் இஷ்டப்படி எல்லாம் செய்கிறார்கள்.
காங்கிரஸ்:
காங்கரசானது ஆரம்பித்து சுமார் 30 வருஷம் வரை ஏராளமான உத்தியோகங்களை உற்பத்தி செய்து தாராளமாக சம்பளத்தை உயர்த்தி, வரிகளை உயர்த்தி அவற்றை பகல் கொள்ளைபோல் பார்ப்பனர்களே அனுபவிக்க இடம் கொடுத்து வந்தது. இந்த நாட்டில் இன்றுள்ள சம்பளக் கொள்ளைக்கும் உத்தியோக குவியலுக்கும் காங்கிரசே தான் காரணம் பார்ப்பனரல்லாதார் அதில் பங்கு கேட்டதற்கு ஆகத்தான் பார்ப்பனர்கள் திடீரென்று ஒரே நாளில் தேச பக்தர்களானார்கள். அதுவரை ராஜபக்தி,
குடி அரசு - 1936 (2), 232.
ராஜவிஸ்வாசம், ராஜ சேவகம் ஆகியவைகள் தான் பார்ப்பனர்களின் வேதக் கட்டளையாக இருந்து வந்தது உத்தியோகம் புருஷலக்ஷணம் என்பதே அவர்களது பல்லவி
வகுப்பு உமிமை
முஸ்லீம்கள் 1895 மூதல் தங்களுக்கு உத்தியோகம் விகிதாசாரம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுவந்திருக்கிறார்கள். 1895ல் ஒருதரம் 1905ல் ஒருதரம் 1915ல் ஒருதரம் இந்தப்படி காந்தி காங்கிரசுக்கு முன்னாலேயே 35 வருஷ காலம் முஸ்லீம்கள் வகுப்பு வாதம் பேசி வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவம் கேட்டு அனுபவித்து வந்திருக்கிறார்கள். காங்கிரசே முஸ்லீம்களுக்கு ஜனசங்கைப்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தனித் தொகுதியின் மூலம் கொடுக்க ஒப்புக்கொண்டு கொடுத்து வந்திருக்கிறது
நாம் கேட்ட உடனேதான் பார்ப்பனர்கள் காந்தியாரைப்பிடித்து வந்து நம்மை ஏய்த்து ஒடுக்கப் பார்த்தார்கள். நல்ல வேளையாய் காந்தியாரின்
ஜம்பம் இந்த 16 வருஷகாலமாக ஒன்றிலும் வெற்றி பெறவில்லை அவருக்கு தோல்விமேல் தோல்வியே ஏற்பட்டது. ஏன் என்றால் அவருடைய சுயராஜ்யம் எல்லாம் பார்ப்பனரல்லாதார் தலையில் கையை வைக்க செய்த சூழ்ச்சியே ஒழிய சரக்கு ஒன்றுமே கிடையாது. இதை சர்க்கார் உணர்ந்து கொண்டு அவரை மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள்.
காந்தி தோல்வி
1924 லேயே அவரது பகிஷ்காரமும் ஒத்துழையாமையும் அவராலேயே நிறுத்தப்பட்டு விட்டது யாவரும் அறிந்ததேயாகும். மறுபடியும் சைமன் கமிஷனை எதிர்க்க சில தந்திரம் செய்தார். அதுவும் படுதோல்வி அடைந்து சர்க்காருக்கு இனிமேல் இப்படி செய்வதில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். இவருடைய சபதங்கள் எல்லாம் தோல்வி அடைந்து ஒரு நிபந்தனையு மில்லாமல் யாரோ சிலர் விடுதலை செய்யப்படுவதற்கு ஆக வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போவதாய் ஒப்புக் கொண்டார்.
(இந்த சமயத்தில் ஒருவர் தஞ்சையில் “உப்பு வாரிக் கொள்ள சர்க்கார் அனுமதி கொடுக்கவில்லையா" என்று கேட்டார்) ஆம் அனுமதி கிடைத்தது. எத்தனை பேர் எத்தனை டன் வாரினீர்கள்? அதனால் யார் பயனடைகிறார்கள் என்று கேட்கிறேன். ஆகாயத்தில் கோட்டை கட்டிக்கொள்ள சர்க்கார் 4-மனை இடம் கொடுத்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறேன். தோழர் காந்தியார் வேண்டுமென்றே பாமர மக்களை ஏமாற்ற
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பழமொழிபோல் செய்து கொண்ட பயனற்ற நிபந்தனையே ஒழிய அதனால் என்ன நன்மை விளைந்தது? என்று கேட்கிறேன்.
233 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்த காங்கிரசு கலைக்கப்பட்டாலொழிய அல்லது பார்ப்பன சூழ்ச்சி ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய ஏழை மக்களுக்கு பயன் இல்லை என்று உறுதியாகச் சொல்லுவேன். தற்கால சாந்தியாக சிலர் பணமில்லாமல் பதவி பெறலாம் என்றும், மந்திரி ஆகலாம் என்றும் காங்கிரசுக்காரராகவும் தேச பக்தர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆதலால் அவர்கள் பேச்சைநம்பி ஏமாந்து போகாதீர்கள். அவர்களது கூலிகள் பேச்சையும் நம்பி மோசம் போகாதீர்கள்.
உங்கள் பகுத்தறிவைக்கொண்டு உண்மை அறிந்து அதன்படி நடவுங்கள்.
குறிப்பு: தஞ்சை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது 11.09.1936இல் பட்டுக்கோட்டையிலும் 12.09.1936 இல் மாயவரத்திலும் 13.09.1936 இல் குற்றாலத்திலும் 14.09.1936 இல் பொறையாற்றிலும். 15.09.1936 இல் தஞ்சையிலும் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 20.09.1936
குடி அரசு - 1936 (2), 234
ஜவஹர்லால் வருகை பார்ப்பனர் சூழ்ச்சி
தோழர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் அடுத்த மாதம் 5ந் தேதி தமிழ்நாட்டுக்கு நமது பார்ப்பனர்களால் அழைத்து வரப்படப் போகிறார். தமிழ்நாட்டில் 15 நாள் சுற்றுப்பிரயாணமும் செய்யப் போகிறார் ஏன்? எதற்காக? என்பதை நமது வாசகர்கள் அறியவேண்டியது முக்கிய விஷயமாகும்
தோழர்ராஜேந்திரப்பிரசாத் அவர்கள் எதற்காக அழைத்து வரப்பட்டாரோ அதற்காகவே தான் தோழர் ஜவஹர்லாலும் அழைத்து வரப்படுகிறார். அதாவது ராஜேந்திர பிரசாத் அவர்கள் அழைத்து வரப்பட்டது நமது நாட்டில் அப்போது நடக்கஇருந்தஜில்லா போர்டு தேர்தல்களுக்கு மறைமுகமான பிரசாரம் செய்யவே என்பதை நாம் அப்போதே விளக்கி இருந்தோம்.
அதுபோலவே இன்று தோழர் ஜவஹர்லாலை அழைத்து வருவதும் அடுத்த மாதம் நடக்கப்போகும் சென்னை முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கு மறைமுகப் பிரசாரம் செய்வதற்கேயாகும் சென்னை கார்ப்பரேஷன் தேர்தலுக்கு நாமினேஷன் கொடுக்கப்பட வேண்டிய தேதி 2-10-36 ஆகும் சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷன் 23-10-36 தேதி ஆகும்.
தோழர் நேரு அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் தேதி 5-10-36 ஆகும்
5-10-36 முதல் 23-10-36 வரை 15 நாள்களுக்கு தமிழ் நாட்டில் இருப்பதற்கு சுற்றுப் பிரயாணத்திட்டம் போடப்பட்டிருக்கிறது
ஆகவே தோழர் ஜவஹர்லால் நேரு எலக்ஷன் பிரசாரத்துக்கு
வருகிறார் என்பதற்கு ஏதாவது சம்சயமுண்டா என்று கேட்கிறோம்
பண்டித நேரு தனது காங்கிரஸ் தலைவர் ஹோதாவில் சுற்றுப்பிரயாணம் வருகிறார் என்றால் அது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் சாவகாசமுள்ள காலத்தில் வந்து காங்கிரஸ் பிரசாரம் செய்துவிட்டுப்போக வரலாம். ஆனால் இப்போது தலைவர்களும் தொண்டர்களும், மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களும் தேர்தலில் ஈடுபட்டு வெளியிடங்களில் உள்ள பிரசாரகர்கள் கூட சென்னைக்கு வந்திருக்கும் இந்த நெருக்கடியான சமயத்தில் நேரு அவர்களை சென்னைக்குக் கூட்டி வந்து தடபுடல் நாடகம் நடத்துவது என்றால் இதை தேர்தல் பிரசாரத்துக்கு என்று அல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்
235 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் வரவை தமிழ் மக்கள் இதே காரணம் சொல்லி பகிஷ்கரித்த காலத்தில் தோழர் பிரசாத் அவர்கள்
'“எனக்கு இங்கு எலக்ஷன் பிரசாரம் நடப்பது தெரியவே தெரியாது
இங்கு வந்த பிறகுதான் தெரிய வந்தது, எலக்ஷன் காலமாய் இருந்தால் நான்:
வந்திருக்கவே மாட்டேன்''
என்று சொன்னார். அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் பெரிதும் சென்னை
முதல் அவர் சென்ற இடங்களில் எல்லாம் “ராஜேந்திரபிரசாத் திரும்பிப்போ”
என்கின்ற கோஷத்துடன் 1000 க்கணக்கானமக்களால் பகிஷ்கரிக்கப்பட்டு
அதுசமயம் பிரசாத் அவர்கள்
இந்த பகிஷ்காரத்தின் காரணம் எனக்கு ஒன்றும் தெரியவில்லையே
நான் எங்கே போவது? நான் பார்ப்பனன் அல்லவே” என்று அழுது கண்ணீர் உதிர்த்துவிட்டே போனார். தோழர் பிரசாத் அவர்கள் திரும்பி தனது ஊருக்கு வண்டி ஏறும் போதுகூட “சீக்கிரம் போங்கள்” என்கின்ற வளைவுகளும்
தட்டிகளும் ரயில்வே மேடை வரை துரத்திக்கொண்டே சென்றன.
அப்படியிருக்க நம் பார்ப்பனர்கள் இப்போதும் அதுபோலவே சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனுக்குப் பண்டிதரை அழைத்து வந்து நமக்கு துன்பத்தையும் தொல்லையையும் விளைவிக்கப் போகிறார்கள். இப்போதே சில இடங்களில் கலகம் ஆரம்பமாகிவிட்டது. இன்றைய பத்திரிகைகளில் திருச்சி முனிசிபாலிடியில் பண்டிதர் வரவேற்பு விஷயமான
தீர்மானத்தில் தகராறு ஏற்பட்டு அது இந்து முஸ்லீம் தகராறாக பரிணமித்ததோடு. தலைவர் பக்கம் பாதரட்சை பறந்ததாகவும் காணப்படுகின்றது. இது அவமானத்துக்கானகாரியம் தான்; அடாத காரியம்தான்; வருந்தத்தக்கது தான்.
ஆனால் வேலியில் போகும் ஓணானை காதுக்குள் விட்டுக்கொண்டு குடையுது குடையுது என்று சொன்னால் அதற்கு யார் என்ன செய்யக்கூடும் என்று கேட்கின்றோம்
பண்டிதர் ஜவஹர்லால் தனிமையில் பொதுநல சேவைக்காரர்கள். கூட்டத்தில் சேர்க்கப்பட வேண்டியவர்தான். சில காரியங்களில் அவர் பார்ப் பனரேயாயினும் இன்றுள்ள சராசரி நாணயத்தில் - அவர் மேம்பட்டவரே யாவார். அப்படிப்பட்ட அவரின் வரவை பஹிஷ்கரித்து காட்ட வேண்டிய அவசியமில்லைதான்.
ஆனால் அவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கையாளாக - தமிழ்நாட்டில் நடக்கும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போருக்கு பார்ப்பனர் பக்கத் தளகர்த்தராய் கொண்டு வரப்படுகிறார் என்றால் இவரை: வரவேற்பது என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வது போலல்லவா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1936 (2), 236
தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் நாமறிய இந்த 15,20 வருட காலமாகவே தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு அவமதிப்பு ஏற்பட்ட காலத்திலும், அவர்கள் சூழ்ச்சியும் நாணயமற்ற காரியங்களும் பலிதப்படாமல் வெளிப்பட்ட காலத்திலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு காரியம் மக்களது முட்டாள் தனத்தினால் ஆகவேண்டி இருக்கும் காலத்திலும் வடநாட்டில் ஏதாவது ஒரு ஆளைப்பிடித்து அவரை ஆகாயத்துக்கு தூக்கிவைத்து பிறகு அவரைக் கூட்டி வந்து ஆடம்பரம் செய்து காரியம் சாதித்துக்கொள்வதோடு அவர் பேரால் பணமும் வசூலித்துக்கொண்டு திருப்பி அனுப்பி விடுவது வழக்கம். இது மறுக்கமுடியாத உண்மை என்பதற்கு ஒரு உதாரணம் கூறுவோம்.
அதாவது தமிழ்நாட்டில் இருந்து எப்போதும் எந்த ஒரு தமிழ் நாட்டவரையும் வேறு எந்த மாகாணத்துக்கும் இந்தமாதிரி விளம்பரத்துக்கோ, அல்லதுஏதாவது ஒருபிரசாரத்துக்கோஅழைத்துப்போனது என்பது அரிதாகவே இருக்கும் என்பதேயாகும். தோழர்கள் விஜயராகவாச்சாரியாரையோ, ராஜகோபாலாச்சாரியாரையோ, ஸ்ரீனிவாசய்யங்காரையோ, அதாவது சத்தியமூர்த்தியாரையோ, வேறு யாரையுமோ எங்கும் அழைத்துப் போனதாகவே நமக்கு ஞாபகமில்லை
இது விஷயமாய் தோழர் சத்தியமூர்த்தியார் கூட ஒரு சமயத்தில் பேசி இருப்பது நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அதாவது ''வெளி மாகாணங்களில் இருந்து யார் யாரையோ நம் மாகாணத்துக்குக் கூட்டி வந்து பிரமாத ஆடம்பரங்களும் மரியாதைகளும் செய்து மிகப் பெரிய மனிதர்களாக்கி விடுகிறோம். ஆனால் நம் மாகாணத்தவர்களை வெளி மாகாணத்தார் யாரும் லட்சியம் செய்வதே இல்லை'' என்று பேசி
இருக்கிறார். அதற்கு அந்தக் காலத்திலேயே நாம் தமிழ்நாட்டில் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய அவசியம் நம் பார்ப்பனருக்கு இருப்பது போல் பிற மாகாணத்தாருக்கு இல்லை என்று பதில் கூறி இருக்கிறோம் ஆகவே இதுசமயம் தமிழ்நாட்டுக்குப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை அழைத்து வருவது உண்மையிலேயே தமிழ் மக்களை ஏமாற்றவும் அவர்கள் கண்களில் மிளகாய் பொடி போட்டு பார்ப்பனரல்லாதார். பணத்தை பதினாயிரக்கணக்கில் வசூலித்து அப்பணத்தைக் கொண்டு தேர்தல்களில் பார்ப்பனரல்லாதாரை தோற்கடித்து பார்ப்பனர்களும் பார்ப்பனப் பெண்மணிகளும் பார்ப்பனக் கூலிகளும் வெற்றி பெறச்
செய்யும் சூழ்ச்சியே அல்லாமல் இதில் வேறு எவ்வித நாணயமும் உண்மையும் இல்லை என்று நிச்சயமாய்ச் சொல்லுவோம்
இப்படிப்பட்ட சமயத்தில் யாரானாலும் பார்ப்பனரல்லாதாராகிய
நாம் நமது வெறுப்பைக் காட்டிக்கொள்வதற்கு ஆகவும் பார்ப்பனரல்லாத
மக்கள் ஏமாந்து பணத்தை அள்ளிக் கொடுக்காமல் இருப்பதற்கு ஆகவும் அவரை பஹிஷ்கரிக்க வேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும்
237 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
என்பதே நமதபிப்பிராயமாகும். அந்த அபிப்பிராயத்தை பார்ப்பன பக்தர்களாகிய பார்ப்பனரல்லாத தோழர்களில் சிலர் சரியல்ல என்றும் கண்டித்தும் பேசியும், எழுதியும் பார்ப்பனர்களின் புன்சிரிப்புக்கும் முக விலாசத்துக்கும் ஆளாக முயற்சிப்பார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை யில்லை. அப்படியாவது அவர்கள் பிழைத்தாலும் நமக்கு சந்தோஷமே. ஆனால் அதுதான் கிடையாது. இந்தக் கூட்ட பார்ப்பனரல்லாதார்களுக்கு நம்மை வைது பழியை மூட்டைக் கட்டிக் கொள்ளுகிறார்களே அதுதான் மிச்சம் மற்றப்படி பார்ப்பனர்களால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதோடு அவர்கள் முன்வர முயற்சிக்கும் போது பெரிய கல்லைத் தூக்கிப்போட்டு ஒழித்து விடவே முயற்சிப்பார்கள். இதுவரை நாம் பார்ப்பனர்களிடம் கண்ட அனுபவத்தைக் கொண்டே இதை எழுதுகிறோம்
உதாரணம் வேண்டுமானால் நாளை மாதம் சென்னையில் நடக்கப் போகும் கார்ப்பரேஷன் எலக்ஷன்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஆசாமிகள்.
யார் யார் என்று பார்த்தாலே இந்த உண்மை விளங்கிவிடும்
ஆதலால் பண்டித ஜவஹர்லால் அவர்கள் இந்த சமயத்தில் தமிழ் நாட்டிற்கு அழைத்து வரப்படுவதானது பார்ப்பனர்களின் பக்கா சூழ்ச்சியே ஒழிய தேச பக்திக்கோ, “சுயராஜ்யத்துக்கோ'' அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 20.09.1936
குடி அரசு - 1936 (2), 238
கலகக்காரர்களுக்கு காங்கரசில் வெற்றி
சென்னை நகர சபைத் தேர்தலுக்கு அட்ஹாக் கமிட்டியார் காங்கரசில் அபேக்ஷகர்களைப் பொறுக்கி யெடுத்த தோரணையைக் கண்டித்து சென்னை காங்கரஸ்வாதிகள் கொஞ்ச நாளாகக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள். சட்ட மறுப்புக் காலத்தில் ஸ்பெஷல் காண்ஸ்டபிலாயிருந்தவர்களையும் வெகு சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்களையும் பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு உபசாரப் பத்திரம் அளிக்கவேண்டுமென்று சென்னை நகர சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிரிடையாக வோட்டுக் கொடுத்தவர்களையும் அட்ஹாக் கமிட்டியார். அபேக்ஷகராக நிறுத்தியிருப்பதாய்க் கலகக்காரர்கள் கண்டித்து வருகிறார்கள். சென்ற இரண்டு மூன்று வாரங்களாகக் கண்டனக் கூட்டங்கள் சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன. அட்ஹாக் கமிட்டியார் பொறுக்கி யெடுத்த அபேட்சகர்களை ஆதரிப்பதற்காகக் கூடிய பிரசாரக் கூட்டங்களில்
பலர் கேள்விமேல் கேள்விகள் கேட்க பிரசங்கிகளுக்குப் பதிலளிக்க முடியாமல். பல கூட்டங்கள் குழப்பத்தில் முடிந்தன. “அயோக்கியர்கள்! கையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் தமிழ் மாகாண காங்கிரசை மீட்பதற்காகச் சென்னையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் காங்கரஸ் அவசரக்கமிட்டியார், அட்ஹாக் கமிட்டி நியமனங்களைக் கண்டித்தும் தமிழ்நாடு காங்கரஸ் காரியக் கமிட்டி ராஜிநாமா செய்யவேண்டுமென்று வற்புறுத்தியும் இப்பொழுதும் பிரசாரம் செய்துகொண்டு தான் வருகிறார்கள். ஆனால் “ஒரு பெரிய ஆந்திர நாட்டுத் தலைவர் அவரது முழுச் செல்வாக்கையும் உபயோகித்து கலகக்காரர்களுக்கும் அட்ஹாக் கமிட்டியாருக்கும் ராஜி செய்துவைக்க!” முயன்றதின்பயனாய்கலகக்காரர்களில் இரண்டுபேர் வெற்றி பெற்று விட்டதாகத்
தெரிகிறது. அதாவது தோழர்கள் ஷாபி முகமதுவும் எ.ஆர்.ஸி. ஆச்சாரும் காங்கிரஸ் அபேக்ஷகர்களாக அட்ஹாக் கமிட்டியாரால் ஒப்புக்கொள்ளப்பட்டு
விட்டனர். இது கலகக்காரர்களுக்கு ஒரு வெற்றி என்பதற்கு சந்தேகமில்லை யானாலும் இந்த முடிவினால் ஏனைய கலகக்காரர்கள் திருப்தியடைவார்களா என்பதை எதிர் நிகழ்ச்சிகளிலிருந்துதான் அறிய வேண்டியதாக இருக்கிறது. அட்ஹாக் கமிட்டியாருக்கு இது ஒரு நல்ல சவுக்கடி என்பதற்கும் சந்தேக மில்லை. இதனால் சென்னைக் காங்கரஸ்காரர் பலரின் நம்பிக்கையை அட்ஹாக் கமிட்டியார் பெறவில்லை யென்பதும் புலனாகிறது. கட்டுப்பாடும்
2399 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஒழுங்கும் மிகுந்த காங்கரசில் இத்தகைய தகிடுதத்தங்கள் நடப்பது காங்கிரசுக்குப் பெருமையா சிறுமையா என்பதையும் காங்கிரஸ் பக்தர்களே நிதானம் செய்துகொள்ளட்டும்.
ஆனால் தோழர் சாது ஜனாப் தாவுத்ஷாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைப் பார்க்கும்போது நமக்கு மிக்க வயிற்றெரிச்சலாகவே இருக்கிறது. அகில இந்திய காங்கரஸ் கமிட்டிக்கு மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் தோழர் தாவுத்ஷா ஏமாற்றப்பட்டார். தோழர் சத்தியமூர்த்தியின் வாக்குறுதியை நம்பி அகில இந்திய காங்கரஸ் கமிட்டிக்குத் தம்மை மெம்பராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தோழர் தாவுத்ஷா மனப்பால் குடித்தார். ஆனால் உபயதுல்லா போட்டிபோட முன் வந்தபோது “இந்த தகராறை தாவுத்ஷாவும் உபயதுல்லாவும் தான் முடிவு செய்துகொள்ள வேண்டும், என்னால் இதில் தலையிட முடியாது” எனத் தோழர் சத்தியமூர்த்தி கைவிரிக்கவே, தோழர் தாவுத்ஷா வேறு வழியின்றி தோழர் உபயதுல்லாவுக்கு விட்டுக்கொடுக்கும்படி நேர்ந்தது. இப்பொழுது தோழர் ஷாபி முகமதுவுக்கு விட்டுக்கொடுத்து இரண்டாம் முறையில் தோழர் தாவுத்ஷா ஏமாற்றமடைந்திருக்கிறார். மூன்றாவது ஏமாறவும் ஒரு கால் தேர்தலுக்குப் பின் மந்திரி பதவிகளுக்கு ஆட்களைப் பொறுக்கும்போது உண்டாகக் கூடுமோ என்னமோ.
பிரஸ்தாப தகராறைப்பற்றி தாவுத்ஷாவின் பத்திரிகையில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரையில் பல ருசிகரமான விஷயங்கள் வெளிவந்திருக்கின்றன.
அட்ஹாக் கமிட்டியாரால் பெரிய மேட்டு சூளை டிவிஷனுக்கு அபேட்சகராக நிறுத்தப்பட்டிருந்த தோழர் தாவுத்ஷாவுக்கு அந்த டிவிஷனில். பேராதரவு இருந்ததாம். கலகக்காரர் கிளர்ச்சியின் பயனாக அட்ஹாக் கமிட்டியார் மீண்டும் கூடி யாலோசித்து ஒரு பெரிய ஆந்திர நாட்டுத் தலைவர் தமது முழுச் செல்வாக்கையும் உபயோகித்து அட்ஹாக் கமிட்டியாருக்கும் தோழர் ஷாபி முகமதுவுக்கு ராஜி ஏற்படுத்த முயன்றாராம் இதற்கிடையே அந்திர மாகாண காங்கரஸ் கமிட்டியார் சில ஆலோசனை களைக் கூறி அட்ஹாக் கமிட்டியார் முடிவாக அபேக்ஷகர் ஜாபிதாவை வெளியிடு முன் காங்கரஸ் உறுதி மொழியில் கையொப்பமிட்டுக் கொடுத்த தற்கால கார்ப்பரேஷன் அங்கத்தினர்களை அவர்களது டிவிஷன்களுக்கே நிறுத்தவேண்டுமென்றும் வற்புறுத்தினார்களாம்.
பிறகு தோழர் சத்தியமூர்த்தி 25.8.36ல் சென்னைக்கு வந்ததும் “சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தோழர் ஷாபி முகமது அவர்களைப் பெரிய மேட்டு டிவிஷனுக்கு நிறுத்தி, தோழர் தாவத்ஷா அவர்களை பெத்துநாயக்கன் பேட்டை டிவிஷனுக்கு மாற்றுவதென்றும்” ஒப்புக்கொள்ளப்பட்டதாம்
தோழர்கள் சத்தியமூர்த்தி, பிரகாசம் முதலியோர் வேண்டுகோளுக்கு இணங்கி பெத்துநாயக்கன் பேட்டையில் நிற்கவும் சம்மதித்தாராம் ஆனால் அவ்வாறு ஒப்புக்கொள்ளப்பட்ட 26.8.36ந் தேதி இரவு தோழர்
குடி அரசு - 1936 (2), 240
ஷாபி முகமது அட்ஹாக் கமிட்டியின் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வில்லையென்றும் எனவே காங்கரஸ் அபேக்ஷகராக ஏற்றுக்கொள்வதில்லை யென்றும் தோழர் தாவுத்ஷாவை பெரிய மேட்டு டிவிஷனுக்கு நிறுத்தி அதை ஊர்ஜிதம் செய்வதென்றும் 27.8.36-ந் தேதி காலையில் முடிவு செய்து விட்டு தோழர் சத்தியமூர்த்தி சிம்லாவுக்குச் சென்றாராம்
ஆனால் அட்ஹாக் கமிட்டியாருக்கும் தோழர் ஷாபி முகமது அவர்களுக்கும் மறுபடியும் ராஜிப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாயினவாம்
அது சம்பந்தமான எல்லா விவரங்களையும் வெளியிடுவது உசிதமாகாதாம்.
இந் நிலையில் தோழர் தாவுத்ஷா 2.9.36ல் பட்டுக்கோட்டை மகாநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாராம். 8-ந் தேதி திரும்பி வந்தாராம் ஆனால் 4.9.36ல் அட்ஹாக் கமிட்டியார் தோழர் தாவுத்ஷாவுக்கு எழுத்து
மூலமும் டெலிபோன் மூலமும் அழைப்பு அனுப்ப, அவருடைய பிரதிநிதிகள் காங்கரஸ் மண்டபத்துக்குச் சென்று தேர்தல் சம்பந்தமாக நடைபெறும் தகராறுகள் தோழர் தாவுத்ஷாவுக்குப் பிடிக்கவில்லை யென்றும் எனவே பெத்துநாயக்கன் பேட்டை டிவிஷனுக்கு நிற்க அவர் விரும்பவில்லை யென்றும் தெரிவித்தார்களாம். இதுதான் தோழர் தாவத்ஷாவின் இரண்டாவது ஏமாற்றக் கதையின் சாரம்,
சாது தாவுத்ஷா தேர்தலில் கலந்து கொள்ள ஆதி முதலே சம்மதிக்க வில்லையாம். நண்பர்கள் வற்புறுத்தவே “போனால் போகிறது" என்று
தேர்தலுக்கு நிற்க முன்வந்தாராம். எனவே அவரது காலை இப்படி வாருவது அட்ஹாக் கமிட்டியாருக்கு அடுத்த செயலா எனக் கேட்கிறோம்.
ஒரு ஏழை கத்திரத் திண்ணையில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தானாம் அர்த்த ராத்திரி 12 மணிக்கு சத்திர மானேஜர் அவனைத் தட்டியெழுப்பி “அப்பா உனக்குச் சாப்பாடு இல்லை'' என்று தெரிவித்து விட்டுப் போணாராம் தூங்கிக்கிடந்தவனைத் தட்டியெழுப்பிச் சாப்பாடு இல்லையென்றால் அவனுக்கு எவ்வளவு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கக்கூடும்? தோழர் தாவுத்ஷா பாடும் அந்தக் கதை மாதிரிதான் இருக்கிறது. என்ன செய்வது! அரசியல் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று. “சேரிடம் அறிந்து சேர்” என்று சொன்னாளே, அந்தக் கிழவி முழுப் பைத்தியகாரியல்ல. ஆனாலும் இவ்விஷயத்தில் தோழர் தாவுத்ஷா அவ்வளவு சங்கடப்படவும் தேவையில்லை. ஏன்? அவர் புது காங்கரஸ் பக்தர்தானே. சென்னை நகரத்திலே தோழர் ஷாபி முகமதுதான் மிகமிக மூத்த முஸ்லீம் காங்கரஸ்வாதியாம். அப்படியானால் தலையிருக்கும்போது வாலாடுவது நியாயமாயிருக்காதல்லவா?
குடி அரசு - கட்டுரை - 20.09.1936
24 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தென் ஜில்லாக்கள் ஜஸ்டிஸ் மகாநாடு
திண்டுக்கல்
தோழர்களே!
தமிழ்நாட்டின் தென் ஜில்லாக்கள் சார்பாய்க் கூடும் இம்மகாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பெருமையை எனக்கு அளித்ததற்காக வரவேற்புக் கழகத்தாருக்கு நான் எனது நன்றியறிதலை தெரிவித்துக்கொள்ளக் கடமைப்
பட்டிருக்கிறேன்.
நமது சங்கம்
நமது தென் இந்திய நல உரிமைச் சங்கம் தோன்றி இன்றைக்கு கிட்டத்தட்ட 20 வருஷ காலமாகிறது. இதன் முக்கியக் கொள்கைச-
1. சட்ட ஒழுங்கு முறைகளுக்குக் கட்டுப்பட்டு கிளர்ச்சி செய்து அரசியல் விடுதலை (அதாவது சுயராஜ்யம் என்பது) பெறுவதும்,
2. அரசியல் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் நம் நாட்டிலுள்ள எல்லா மதக்காரருக்கும் ஜாதிக்காரருக்கும் விகிதாச்சாரம் உரிமை வழங்குவதுமாகும். அதாவது சகல சமூகங்களுக்கும் சம சந்தர்ப்பம்
அளிப்பதாகும்.
இந்தக் கொள்கையில் இருந்து இதுவரை நாம் சிறிதும் பிறழாமல் கொள்கைக்கு ஏற்ப நம்மால் கூடியதை சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறோம்.
நமது சங்க ஆரம்பத்தில் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகங்களிலும் ஏகபோக உரிமைகள் அனுபவித்துக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் நீங்க, மற்ற எல்லா சமூகத்தார்களும் நமது சங்கத்தில் அங்கத்தினர்களாகலாம் என்கின்ற நிபந்தனை ஏற்படுத்திக் கொண்டிருந்தோம்
ஏனெனில் பார்ப்பனர்களாகிய ஒரு கூட்டத்தார் நம்மை எத்துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் தாழ்த்தி வந்ததாலேயேயும் அவர்களின் நடவடிக்கைகளாலேயே நாம் இச்சங்கம் துவக்க வேண்டியவர்களா யிருந்தாலும் நமது சங்கத்தில் அவர்களை நீக்கி வைக்க வேண்டியதாயிற்று
குடி அரசு - 1936 (2), 242
ஆனால் இப்போது அரசியல் சம்மந்தப்பட்ட வரையில் அந்தத் தடையை நீக்கிவிட்டோம். மேல் கண்ட நமது கொள்கையை ஒப்புக் கொள்ளுகிற யாரும் இச்சங்கத்தில் அங்கத்தினராகலாம் என்ற விதிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்
என்றாலும் இன்றுவரை ஒரு பார்ப்பனராவது நமது சங்கத்தில் அங்கத்தினராகவே இல்லை. பார்ப்பனரல்லாதாரே தான் நமது சங்கத்து அங்கத்தினர்களாயிருக்கிறார்கள். இதனால் நமது சங்கம் ஆரம்பத்தில் எப்படி பார்ப்பனரல்லாதார் சங்கமாக இருந்ததோ அதேபோல்தான் இன்றும் பார்ப்பனரல்லாதார் சங்கமாகவே இருந்து வருகிறது
நமது சங்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 20 வருஷம் ஆயிருந்தாலும் சென்னை மாகாண அரசியலில் 15 வருஷ காலம் அதாவது மாண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் அமுலுக்கு வந்த காலம் முதல்கொண்டு அத்திட்டத்தின்படி ஜனப்பிரதிநிதிகளான மந்திரிகளுக்கு மாற்றப்பட்ட இலாகா என்பவைகளில் நாம் ஆதிக்கம் பெற்று அரசியல் நடத்தி வந்திருந்தாலும் நமது கொள்கைகளில் முழு வெற்றியும் அடைவதற்கில்லாமல்
நாம் பல சங்கடங்களுக்கும் இடையூறுகளுக்கும் ஆளாகி வந்திருக்கிறோம்
காரணம் என்னவென்றால் இரட்டை ஆட்சி என்பதில் நமக்கேற்பட்டுள்ள
சங்கடம் ஒன்று, நாம் பல மதக்காரர்களுக்கும், பல ஜாதிக்காரர்களுக்கும் விகிதாச்சார உரிமை வழங்குவது என்ற கொள்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் இக்கொள்கையால் தங்கள் ஏகபோக உரிமையையும் அனுபவத்தையும் இழந்து மற்றவர்களைப் போலவே விகிதாச்சாரம் பெற வேண்டிவர்களான பார்ப்பனர்கள் தங்களால் கூடிய எல்லாத் தடைகளையும் தொல்லைகளையும் விளைவித்து நமது உத்தேசம் நிறைவேறாமல் தடுக்க வேண்டியவர்களாகிவிட்டதால் அவர்களுடைய தொல்லைக்கும் முட்டுக் கட்டைகளுக்கும் நாம் ஆளாக வேண்டியிருந்தது மற்றொன்று ஏற்கனவே பார்ப்பனர்கள் அதிகாரத்திலும் உத்தியோகத்திலும் தாராளமாய் அமர்ந்து இருந்த காரணத்தாலும் சமூகத்துறையிலும் அவர்கள் மேல் நிலை பெற்றிருந்தாலும் வாழ்க்கையிலும் அவர்களே நமக்கு வழி காட்டிகளாக அமர்ந்திருந்ததினாலும் அவர்களுடைய (பார்ப்பனர்களுடைய) எதிர்ப்பும் தொல்லையும் திடீரென்று பதவிக்கு வந்த நம்மால் சுலபத்தில் சமாளிக்க முடியாததாய் இருந்தது என்றால் இதில் யாதொன்றும் ஆச்சரியம் இருக்க இடமில்லையல்லவா?
அதோடு கூட நமது மக்களும் அதாவது பார்ப்பனர் ஒழிந்த மற்ற மக்களும் பார்ப்பனீயத்தின் பயனாய் போதிய கல்வியும் உலக ஞானமும் இல்லாமல் பெரும்பாலோர் சமூகத்துறையில் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்தது போலவே வாழ்க்கைத்துறையிலும் அவர்களுக்கு அடிமையாய் இருந்ததாலும் பார்ப்பனர்களை எதிர்ப்பது என்பதை ஒரு
243 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மதக் கட்டளையை மீறுவதுபோல் மதிப்பவர்களாய் இருந்ததாலும் சிக்கலான அரசியலில் இருந்து கொண்டிருக்கிற நமது கஷ்டம் இன்னும் அதிகமாய் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
இந்த நிலையில் நாம் இந்த பதினைந்து வருஷ காலத்தில் அரசியல் பதவிகளை அடைந்து அதன்மூலம் நம்மால் கூடியதையெல்லாம் வெற்றிகரமாகவே செய்து வந்திருக்கிறோம் என்று சொன்னால் இதைக் கேட்பவர்கள் யாரும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது
நமது நிலை இன்னம் 5, 6 மாத காலத்துக்குள் புதிய சீர்திருத்தம் ஒன்று அமுலுக்கு வரப்போகிறது. அதற்கு ஆகவேண்டிய தேர்தல்கள் சீக்கிரத்தில் ஏற்படப் போகிறது. அதுபற்றிய பிரசாரங்கள் தனிப்பட்ட முறையிலும்கட்சி முறையிலும் இப்போது முதலே துவக்கமாய் விட்டன. கட்சி முறையில் இரண்டு முக்கிய கட்சிகள் பெரிதும் இப்பிரசாரத்தில் முன்னணியில் இருக்கின்றன. அவைகளில் ஒன்று காங்கிரசு என்னும் ஸ்தாபனத்தின் பேரால் பார்ப்பனர்கள் க்ஷி, மற்றொன்று நம் க்ஷி அதாவது தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அல்லது ஜஸ்டிஸ் கட்சி என்னும் பேரால் பார்ப்பனரல்லாதாராகிய நாம், ஆகவே பச்சையாய் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனரும் பார்ப்பனரல்லாதாராகிய நாமும் இன்று போட்டிப் பிரசாரம் செய்பவர்களாய் இருக்கிறோம் இப்போட்டி பிரசாரங்களில் பார்ப்பனர்கள் இதுவரை தாங்கள் நாட்டுக்கு செய்தகாரியங்கள் இன்னதென்றோ தங்கள் கொள்கைகள் இன்னதென்றோ மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாமல் இருப்பதால் நம்மைப்பற்றி எவ்வளவோ பொய்யும் புழுகும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்து வருவதை நாம் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம். நாமோ அவ்வளவுக்கும் சமாதானம் சொல்லி மீள வேண்டியவர்களாக இருக்கிறோம். தேர்தலோ மிகவும் சமீபித்துக் கொண்டிருக்கிறது. ஆதலால் இந்த சமயம் நமக்கு மிகவும் நெருக்கடியான சமயம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த சமயத்தில் நமக்குள் அதிகமான ஒற்றுமையும், தளரா ஊக்கமும், தாராளமான பணச்செலவும் வேண்டியதாக இருக்கிறது. இந்தக் காரியங்களுக்கு ஆகவே இன்று இந்த மகாநாடு அதாவது தென் ஜில்லாக்களின் மகாநாடு கூட்டப்பட்டதென்றே நான் கருதுகிறேன். இம்மகாநாட்டின் பயனாய் இத் தென்ஜில்லாக்களில் தீவிரமான பிரசாரங்கள் செய்யப்பட வசதி ஏற்படுமென்றே நினைக்கிறேன்.
நாம் பதவி ஏற்றது முதல் பொது ஜன நன்மைக்கு ஆக எவ்வளவோ காரியங்கள் செய்து வந்திருக்கிறோம். அதன் பயனாக நமது பார்ப்பனரல்லாத சமூகம் இந்த 20 வருஷ காலத்தில் எவ்வளவோ மேம்பாடு அடைந்து வந்திருக்கிறது. பார்ப்பனரல்லாதார்களில் பெரிய ஜமீன்தார்கள் முதல்.
குடி அரசு - 1936 (2), 244
சாதாரண ஏழைக் குடியானவர்கள், கூலிக்காரர்கள், தீண்டப்படாத வகுப்பார் என்பவர்கள் வரை எவ்வளவோ முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.
அரசியல் துறையிலும் சமூக துறையிலும் மற்றும் மனிதத்தன்மைத் துறையிலும் பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் இந்த 15, 20 வருஷத்தில். அடைந்திருக்கும் முற்போக்கையும் அதற்கு மூன் சுமார் ஒரு ஐம்பது வருஷம் அல்லது நூறு வருஷத்தில் அடைந்திருந்த முற்போக்கையும் ஆதாரத்தோடு கவனித்து பார்த்தால் நமது கட்சியின் பயனாய் நாம் எவ்வளவு வேகமாய் முற்போக்கடைந்திருக்கிறோம் என்பது விளங்கும்
குறிப்பாக காங்கிரசு என்ற ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டதில் இருந்து அதாவது நமது கட்சி ஏற்படுவதற்கு 30 வருஷங்களுக்கு முன் இருந்து பார்ப்பனரல்லாதார் சமூகம் தானாக ஏதோ கொஞ்ச நஞ்சம் முன்னேற்ற மடைந்து வந்ததும் தடைப்பட்டு வெறும் பார்ப்பனர்களே எதிலும் பயனடையும் படியாகவும் அரசியல் அடியோடு பார்ப்பனர்கள் வசமே ஆகி விடவும் சமூக இயலிலும் பழய மனு ஆட்சியே சிறிது சிறிதாக தலை தூக்கவும் சட்டங்களிலும் நியாயஸ்தலங்களிலும் மநுதர்மம் தலை சிறந்து விளங்கவுமான நிலைமையே ஏற்பட்டு வந்தது. இந்த ஆபத்தானதொரு சந்தர்ப்பத்தில் தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு பார்ப்பன ஆதிக்கத்தை தடுத்ததோடல்லாமல் இவ்வளவு தூரம் நம் சமூகம் முன்னேற்றமடையவுமான காரியங்கள் செய்திருக்கிறது
பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் நம் நாட்டில் தோன்றி இருக்கவில்லையானால் இப்போது முதல் இதுவரை நமது நிலைமை என்னமாய் இருந்திருக்கும் என்பதை சிறிது உங்கள் மனதில் சிந்தித்துப் பாருங்கள். நமது நிலை எப்படி இருந்திருக்கும் என்பதைப்பற்றி யோசிக்கு முன் இன்று நம்மவர்களில் சிலர் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு நம்மை வைகின்றார்களே அவர்களுடையநிலைமை என்னமாய் இருந்திருக்கும் என்பதையே முதலில் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன். சாதாரணமாக இன்று பார்ப்பனர் கூட்டங்களிலேயே அடிபடும் பார்ப்பனரல்லாதார் பெயர்களாகிய தோழர்கள் சுப்பராயன், நாடிமுத்து பிள்ளை முதல் காமராஜ நாடார், கிருஷ்ணசாமி பாரதி, உபயதுல்லா சாயபு என்று சொல்லப்படுபவர்கள் வரை இவர்களுடைய நிலைமை எவ்வளவு இருந்திருக்கும் என்பதை அவர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறேன்.
நம்மீது பழி.
சுலபத்தில் நமது இயக்கத்தை பார்த்து தேசத்துரோக இயக்கம் என்றும் உத்தியோக வேட்டை இயக்கம் என்றும், வகுப்புவாத இயக்கம் என்றும் நம்
எதிரிகளும் அவர்களது ஆட்களும் கூறுகிறார்கள்.
249 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆனால் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பார் சுயநலத்துக்கோ அல்லது எந்த ஒரு தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ இவ்வியக்கம் இருந்து வருகிறது என்று யாராவது இதுவரை சொல்ல முடிந்ததா? அல்லது இந்த இயக்கக் கொள்கையின் பயனாகவோ நடத்தையின் பயனாகவோ நாட்டுக்கோ அல்லது பொது மக்களுக்கோ எந்த ஒரு நன்மையாவது தடைப்பட்டு விட்டதா? என்று தைரியமாய் கேட்கின்றேன்.
ஏதாவது ஒரு காரியம் தடைப்பட்டு இருக்குமானால் அது நமது எதிரிகளாகிய பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை சிறிது தடைப்பட்டிருக்கலாம். அதுவும் இது வரை இந்தப் பதினைந்து வருஷமாக நாம் எவ்வளவோ பாடுபட்டும் கிரமமான விகிதாச்சார நிலைமைக்கு வரவே இல்லை இப்படிப்பட்ட இந்தக் கிளர்ச்சி காலத்திலும் கூட பார்ப்பனர்கள் உத்தியோகத்தில். 100க்கு 300 பங்கு 400 பங்கு அதிகமாகவே அடைந்து வருகிறார்கள். நம் இயக்கம் ஆரம்பித்த காலத்தில் அனேக இனங்களில் அவர்கள் 100க்கு 1000 பங்கு அதிகமாகவே அனுபவித்து வந்தவர்கள் இன்று நம் இயக்கத்தின் பயனாய் இந்த அளவுக்கு இறங்கி இருக்கிறார்கள் அதைத்தவிர மற்றபடி பார்ப்பனரல்லாதார் மக்களாகிய எல்லா வகுப்பாரும் தாராளமாய் ஏதோ சிறிது விகிதமாவது பெறுவதன் மூலம் பயனடைந்து வந்திருக்கிறார்கள் என்பதோடு சிறுபான்மை வகுப்புகள் என்கின்ற
பிரிவுகள் சில தங்கள் விகிதாசாரத்துக்கு மேலாகக்கூட சில விஷயங்களில் பயன் அனுபவித்து வந்திருக்கின்றன என்று சொல்லலாம்
ஆதலால் நமது இயக்கமானது எந்த துறையிலும் எவ்வித பொது நலத்தையும் கெடுத்துவிடவில்லை என்பதோடு பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு பல நன்மைகளைச்செய்திருக்கிறது என்றும் கூசாமல் சொல்லுவேன்.
உத்தியோக வேட்டை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று நம்மை பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள். அவர்களால் (பார்ப்பனர்களால்) உத்தியோக வேட்டை ஆடலாம் என்று கருதுகிற சில பார்ப்பனரல்லாதாரும் நம்மை அப்படியே சொல்லுகிறார்கள். உத்தியோக வேட்டை ஆடுவதில் என்ன தப்பு இருக்கிறது என்பது எனக்கு விளங்கவில்லை. உத்தியோகம் என்பது நமது நாட்டு அரசியல் நிர்வாகத்துக்கு ஆக என்று ஏற்படுத்தப்பட்டவைகளாகும். அதற்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு பெரிதானாலும் சிறிதானாலும் நமது மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கப்படும் சம்பளமேயாகும் உத்தியோகம் பெறுவதே அரசியல் கிளர்ச்சியின் கருத்தாய் சமீப காலம் வரை இருந்தும் வந்திருக்கிறது பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்படும் வரை அரசியல் கிளர்ச்சிக் காரர்களான காங்கிரஸ்காரர்களும் மற்ற அரசியல் கட்சிக்காரர்களும்
குடி அரசு - 1936 (2), 246
எல்லோருமே உத்தியோகம் அடைந்து வந்திருக்கிறார்கள். “உத்தியோகம் புருஷ லக்ஷணம்" என்பது காங்கிரசின் சுலோகமாகி இருந்து வந்திருக்கிறது ஆகவே அரசியல் உத்தியோகங்களை அடைய ஒவ்வொரு தனி மனிதனும் ஆசைப்படுவதில் யார் என்ன தப்புச் சொல்ல மூடியும்? ஒரு தனிப்பட்ட வகுப்பார் ஏகபோகமாய் உத்தியோகங்களை அடைந்து வந்ததாலும் அதற்கு கொழுத்த சம்பளங்கள் இருந்ததாலும் உத்தியோகத்துக்கு அதிகாரமும் பெருமையும் இருந்ததாலும் கிளர்ச்சி செய்வதன் மூலமே அவைகள் ஏற்படுபவைகளாகவும் அவை கிடைக்கக்கூடியதாகவும் இருந்ததாலும் அதற்காக நமது சமூகமும் கிளர்ச்சி செய்ய ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. கிளர்ச்சி இல்லாவிட்டாலும் அது எல்லாவகுப்பாருக்கும் கிடைக்கும் என்கின்ற நிலை இருந்திருந்தால் உத்தியோகங்கள் அடைவதையும் ஒரு கொள்கையாக நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கவே மாட்டோம்
மற்றவர்களைப் போலவே அதாவது காங்கிரஸ்காரர்களைப் போலவே இன்னமும் அதிக உத்தியோகத்துக்கும் அதிகம் சம்பளத்துக்குமே பார்ப்பனர்களோடு சேர்ந்து “தேசியக்கிளர்ச்சி” செய்திருப்போம்.
வகுப்புவாதம்
இப்போது நாம் “எங்களுக்கும் உத்தியோகம் வேண்டாமா,
நாங்களும் வரிகொடுக்கவில்லையா, நாங்களும் படிக்கவில்லையா'' என்று கேட்க ஆரம்பித்த பிறகுதான் உடனே பார்ப்பனர்கள் நம்மை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லுவது மாத்திரமல்லாமல் வகுப்புவாதிகள். என்றும் சொல்லுகிறார்கள். அதுவரையில் நமக்கு சந்தோஷமே. ஏனென்றால் அவர்கள் நம்மை எந்தத் தனிப்பட்ட வகுப்புவாதிகள் என்று சொல்ல முடியும். அவர்களை நாம் தனிப்பட்ட வகுப்புவாதிகள் என்கின்றோம் அதாவது பார்ப்பன நலத்துக்கு ஆகவே பாடுபடும் பார்ப்பன வகுப்புவாதிகள் என்கின்றோம். நாம் பல வகுப்புக்காரர்களாய் இருக்கிறோம். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தீண்டப்படாத மக்கள், பார்ப்பனர் அல்லாத “இந்து”க்கள். என்பதாக பல வகுப்புக்காரர்களாகவும் இருந்துகொண்டு எல்லா வகுப்புக்கும் சேர்த்து உத்தியோகங்களையும் பிரதிநிதித்துவங்களையும் அதுவும் விகிதாசாரம் மாத்திரம் கேட்கின்றவர்களாகவும் இருக்கின்றோம் ஆகவே நம்மையாரும் எந்த ஒரு தனிப்பட்ட சுயநல வகுப்புவாதிகள் என்று சொல்ல முடியாத நிலைமையில் இருக்கின்றோம். ஆதலால் நம்மை ஒருவர்: வகுப்புவாதி என்பதற்குஆக நாம் பயபப்படவோ மறுக்கவோ வேண்டியதில்லை. பார்ப்பனர்கள் வகுப்புப் போல் மற்ற வகுப்புகளும் ஆகும்வரை நாம் வகுப்புவாதிகளாய் இல்லாவிட்டால் வகுப்பு துரோகிகளே யாவோம் வகுப்பு வாதம் பேசினால் தேசத்துரோகிகள் என்று கூப்பிடுவார்களே என்று
நாம் சிறிதும் பயப்படக்கூடாது என்றே வேண்டிக்கொள்ளுகிறேன்.
247 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்தியர்கள் ஐரோப்பியர்கள் என்ற வகுப்புவாத அஸ்திவாரத்தின். மீதுதான் தேசியசபை என்னும் காங்கிரஸ் சபை ஏற்பட்டது. இந்துக்கள் முஸ்லீம்கள் என்கின்ற வகுப்புவாதத்தின் மீதுதான் இந்து முஸ்லீம்
ஒற்றுமை ஏற்பட்டது
காங்கிரஸ் ஏற்பட்டது முதல் ஒவ்வொரு பத்து வருஷத்திலும் வகுப்புவாதம் ஏற்பட்டே வந்திருக்கிறது. 1885-ம் வருஷத்தில் காங்கிரசு ஏற்பட்டது என்று சொன்னாலும் 1895-ம் வருஷத்திலேயே முஸ்லீம்கள் சர்க்காரை வகுப்பு உரிமை கேட்டு பெற்றிருக்கிறார்கள்.
1906 லும் முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து தனித்தொகுதி மூலம் தனிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1915 லும் முஸ்லீம்கள் கிளர்ச்சி செய்து காங்கிரஸ் தீர்மானம் மூலமே வகுப்பு பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலம் பெற்றிருக்கிறார்கள்.
அதுதான் லக்னோ பேக்ட் என்பது.
அதுதவிர 1924 லும் கூட தோழர் சி.ஆர்.தாஸ் அவர்களாலேயே பங்காள பேக்ட் என்னும் இந்து முஸ்லீம் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது 1932லும் இந்துக்களில் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் காங்கிரசின் மூலமே வகுப்புரிமையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் ஏற்பாடு செய்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும்படி அரசாங்கத்துக்கும் விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் தனித்தொகுதி மூலம் கிடைக்க வேண்டும் என்கின்ற கிளர்ச்சி அந்த
வகுப்பாருக்குள் இன்றும் இருந்து வருகின்றது இப்படி எல்லாம் இருக்க நம்மை மாத்திரம் பார்ப்பனர்களும், அவர்கள் ஆசாமிகளும் வகுப்புவாதிகள் என்று சொல்லுவதென்றால் அதில் உண்மை இருக்கிறதா என்று கேட்கின்றேன். ஆதலால் நாம் நமது லக்ஷ்யத்தை அடையுமட்டும் இம்மாதிரி உத்தியோக வேட்டை வகுப்புவாதம் என்கின்ற பூச்சாண்டிகளுக்குப் பயப்படக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசத்துரோகம்
நம்மை காங்கிரசுக்காரர்கள் தேசத்துரோகிகள் என்பதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்று பாருங்கள்
தேசியசபை, தேசாபிமான சபை என்பதான காங்கிரசின் யோக்கியதை என்ன என்று சற்று அறிந்து பாருங்கள்.
காங்கிரஸ்சபை ஒரு1.0.8. வெள்ளைக்காரர் முயற்சியால் ஏற்படுத்தப் பட்டதாகும். அவர் பெயர் &.0. ஹியூம் ஆகும். அவர் இந்தியர்களுக்கு உத்தியோகம் வேண்டுமானால் ஒரு ஸ்தாபனத்தின் மூலம் கேளுங்கள்
குடி அரசு - 1936 (2), 248
என்றுமுதலில் யோசனைகூறினார். அதற்காகவே அதாவது வெள்ளைக்காரர்கள் போல் உத்தியோகமும் சம்பளமும் பெறுவதற்காகவே காங்கிரஸ்
ஏற்படுத்தப்பட்டது
காங்கிரசின் கொள்கைகளோ,
1. பல வகுப்பு இந்திய மக்களையும் ஒன்று சேர்ப்பது
2. எல்லாருடைய நன்மைக்காகவும் அரசியலிலும் சமூக இயலிலும் பாடுபடுவது
3. இந்தியாவும் இங்கிலாந்தும் என்றென்றும் பிரியாமல் இருக்கும்படி
சேர்த்துக்கட்டி பிணைப்பது
இந்த ஸ்தாபனம்தான் தனிப்பெரும் தேசிய ஸ்தாபனமாம். இதே முதல் இரண்டு கொள்கையுடைய நமது ஸ்தாபனம் தேசத்துரோக ஸ்தாபனமாம். காங்கிரஸின் அப்பொழுதைய கொள்கையை விட்டு விடலாம்
இன்று தானாகட்டும் காங்கிரசின் கொள்கை என்ன? நமது கொள்கை என்ன என்று பாருங்கள்.
காங்கிரசுக்காரர்கள் சட்டங்களை மீறாமல் கிளர்ச்சி செய்து ஸ்தல ஸ்தாபனங்களையும் சட்டசபைகளையும், மந்திரி பதவிகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிறார்கள். நாமும் அதே முறையில் தான் அவைகளை கைப்பற்ற வேண்டும் என்கின்றோம். அவர்களும் ஒவ்வொரு பதவியும் ஸ்தானமும் அடைந்தவுடன் சட்டத்திற்கு அடங்கி நடப்பதாகவும் ராஜ விஸ்வாசமாய் இருப்பதாகவும் ராஜாவுக்கும் அவர்பின் சந்ததிக்கும் பக்தி காட்டுவதாகவும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட சட்ட திட்டங்களுக்கு கீழ்ப் படிவதாகவும் பிரமாணம் செய்கிறார்கள். நாமும் அப்படியே செய்கிறோம்
மந்திரி பதவி ஏற்று மக்களுக்கு நன்மை செய்வதாக கூறுகிறார்கள். நாமும் அப்படியேதான் செய்வதாக கூறுகிறோம்.
ஆனால் அவர்கள் மேல்கொண்டு சொல்லுவதெல்லாம் நம் கட்சியை அடியோடு ஒழிக்கப் போவதாய் கூறுகிறார்கள். நாமோ அது முடியாதென்றும் அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றும் சொல்லுகிறோம்
இதைத்தவிர காங்கிரசுக்கும் நமக்கும் அரசியல் கொள்கையில் என்ன வித்தியாசம் என்று பாருங்கள்.
காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லால் நேரு அவர்கள் சட்ட சபைக்குப்போய் முட்டுக்கட்டை போட வேண்டும் என்றும் மந்திரிபதவி ஏற்கக் கூடாதென்றும் மற்றும் சிலர் மந்திரி பதவி ஏற்று சீர்திருத்தத்தை உடைக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
249 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இப்படிக் கூறுவது அசட்டுப் பேச்சு என்றும் சட்ட சபைக்குப் போவதன் மூலமோ மந்திரி முதலிய பதவிகள் ஏற்பதன் மூலமோ சர்க்காரை அசைக்க முடியாது என்று தோழர் மோதிலால் நேரு அவர்களே சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறார். ஆகவே சீர்த்திருத்தத்தை உடைப்பதோ, முட்டுக்கட்டை போடுவதோ. ஏமாற்று வித்தையே ஒழிய நாணயமானதோ புத்திசாலித்தனமானதோ ஆகாது என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.
அதிதீவிரப் பேச்சு
1920 ல் காங்கிரசானது நமது இயக்கத்தை ஒழிப்பதற்கு என்று என்ன என்னமோ சூழ்ச்சிகள் செய்தது
அதுமுதல் இதுவரை காங்கிரஸ் ஒன்றிலும் வெற்றி பெறவில்லை. அதி தீவிரமாக பேசுவதன் மூலம் பொதுமக்களை அவ்வப்போது ஏமாற்றுவதையே தனது லக்ஷ்யமாகக் கொண்டிருந்ததேயல்லாமல் ஞானத்தோடோ அல்லது பொறுப்போடோ ஒரு காரியமும் அதனால் செய்ய முடியவில்லை.
பார்ப்பனரல்லாதார் இயக்க கொள்கைகளையே காப்பியடித்து இந்து முஸ்லீம் ஒற்றுமை என்றும், தீண்டாமை விலக்கு என்றும், மதுவிலக்கு என்றும் மற்றும் சைமன் கமிஷன் பகிஷ்காரமென்றும் ஆர்ப்பாட்டம் செய்த தெல்லாம் தானே வெட்கமடையும்படியான நிலைமையில் இப்போது அவற்றைக் கைவிட வேண்டி வந்தது
இந்து முஸ்லீம் ஒற்றுமை இன்று காங்கிரசிலும் நாட்டிலும் இந்து முஸ்லீம் போராகவே இருந்து வருகிறது தீண்டாமை விலக்கு தீண்டாதாருக்கும் காங்கிரசுக்கும் போர்.
ஏற்பட்டு தீண்டாதார் இந்துமதத்தில் இருந்தே பிரிந்து போவதை நிறுத்த தீண்டாதாருடன் ராஜி செய்து கொள்ள வேண்டியதாய் முடிந்தது.
மதுவிலக்கு விஷயமோ இனி மறியல் செய்வதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக்கொடுக்க வேண்டியதாயிற்று. சைமன் கமிஷன் பகிஷ்காரமோ வட்டமேஜை மகாநாட்டுக்குப்போய் சைமன் ரிபோர்ட்டை விட மோசமான திட்டத்தின் மீது விவாதித்துத் தீரவேண்டியதாயிற்று
மற்றும் இவற்றையெல்லாம் விடப் பரிதாபகரமான விஷயம் என்ன வென்றால் இன்று காங்கிரசுக்காரர்கள் சட்டசபைக்குப்போய் இன்னது செய்கிறோம் என்று சொல்லி வோட்டுக் கேட்க ஒரு திட்டம் தயாரிக்கவோ, அல்லது தங்கள் தீர்மானத்தில் உள்ளதை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லவோ முடியாத நிலைமையை அடைந்திருப்பதேயாகும். இந்த நிலையில் இருப்பவர்கள் நமக்கு கொள்கை இல்லை யென்றும் திட்டங்கள் இல்லை என்றும் பேசுவது என்பது எவ்வளவு தைரியமான நடத்தையாக இருக்க வேண்டும் என்று பாருங்கள்.
குடி அரசு - 1936 (2), 250
நாம் செய்த வேலை
நாம் இந்த பதினாறு வருஷகாலத்தில் எவ்வித பகிஷ்காரப் பேச்சும், போலி வீரப்பேச்சும் பேசாமல் கண்ணியமாய் உண்மையைப் பேசி காங்கிரசுக்காரர்களால் நடத்த முடியாது என்றும் அடைய முடியாது என்றும் இருந்த அரசியலை ஏற்று அடைந்து மற்ற மாகாணக்காரர்கள் யாரும் செய்திருக்காத மாதிரி நன்றாக நடத்தி மக்களுக்கு நம்மால் கூடிய எவ்வளவோ நன்மை செய்திருக்கிறோம்
நமது வேலைகள் பெரிதும் கிராமங்களிலேயே கிராமவாசிகளுக் காகவே செய்யப்பட்டிருக்கின்றன.
கிராம சீர்திருத்தம், கிராம போக்குவரவு வசதி, கல்வி வசதி, தண்ணீர் வசதி, கூட்டுறவு இயக்க விரிவு, நில அடமான பாங்கி, கிராமவாசிகள் கடன்கள் குறைத்தல் முதலிய காரியங்கள் செய்யப்பட்டிருப்பதோடு பட்டணங்களுக்கும் தண்ணீர் வசதி, மின்சார வசதி முதலியவைகளும் முன். 50 - வருஷங்களில் கூட நடத்தப்பட்டிருக்காத அவ்வளவு அதிகம் இந்த 15 - வருஷ காலத்தில் செய்யப்பட்டிருக்கிறது
மற்றும் கிராம சீர்திருத்தத்திற்காக எவ்வளவோ அனுபவ சாத்திய மானதும் முன்னேற்றமானதுமான திட்டங்கள் போட்டு வைத்திருக்கிறோம் ஒவ்வொரு கிராமத்துக்கும் குழாய் தண்ணீரும். மின்சார வசதியும், நாடக சினிமாக் கொட்டகையும், நந்தவனமும், சுகாதாரமும் இன்னும் மேலான பள்ளிக்கூடமும், மோட்டார் பஸ் போக்குவரவும் இருக்கும்படி செய்ய வேண்டும் என்பது நமது கொள்கையாகவும், திட்டமாகவும் இருந்து வருகிறது.
ஆனால் கிராமமுன்னேற்ற விஷயமாய் காங்கிரசுக்காரர்களின் அல்லது காந்திஜியின் திட்டம் என்ன என்று பாருங்கள்.
கைக்குத்து அரிசி சாப்பிடுதல், கருப்பட்டி உபயோகித்தல், விளக்கெண்ணெய் விளக்கு எரித்தல், கதர்நூல் நூற்றலால் கைத்தொழில் செய்தல் போன்ற காரியங்கள் செய்தல் என்கிறார்கள். இதற்காகப் பொது ஜனங்களிடமிருந்து இன்னம் பணம் வசூலிக்கப் போகிறார்களாம் அவர்கள் அதிகாரத்துக்கு வந்தால் பொது ஜனங்கள் வரிப்பணத்தில் இருந்தும் இந்த வேலைகள் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்யப் போகிறார்களாம்
ஆகவே இது ஒரு வருணாச்சிரமக் கொள்கையா இல்லையா என்று பாருங்கள்.
ஜஸ்டிஸ் கட்சி என்பவர்களாகிய நாம் கிராமங்களை பட்டணங்கள் போலவும் கிராம ஜனங்களை பட்டண ஜனங்கள் போலவுமே ஆக்கப் பாடுபடுகின்றோம். அதற்காக நமது மந்திரிகளும் நாமும் திட்டம் போட்டு வைத்திருக்கிறோம். ஏனென்றால் கிராமம் என்பதாகவே ஒன்று இருக்கக் கூடாது என்றும் எல்லா கிராமங்களும் சிறுசிறு பட்டணம் போலவே இருந்து 2... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பட்டணத்தில் உள்ள மக்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவமும் கிராம மக்களுக்கும் இருக்கும்படி செய்யவேண்டும் என்றும், கிராம மக்களின் சரீர உழைப்பையும், அவர்கள் உழைப்பை பட்டண வாசிகள் உறிஞ்சுவதையும் எவ்வளவு தூரம் குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைக்க வேண்டும் என்றும் கருதுகிறோம்.
காங்கிரசுக்காரர்கள் கிராமவாசிகளை பழைய கருப்பர்களாகவே வைத்து அவர்கள் பாடுபட்டு வெள்ளாண்மை செய்து பட்டணவாசிகளுக்கு அழுதுவிட்டு இருட்டு வீட்டில் கருப்பட்டித் தண்ணீர் குடித்துக்கொண்டு ராட்டினத்தைச் சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதும், பட்டணவாசிகள் கிராம வாசிகளுடைய பாட்டையும் வெள்ளாண்மையையும் அனுபவித்துக்கொண்டு. ஆகாயக்கப்பலில் சஞ்சரித்துக் கொண்டிருக்க வேண்டியதும் என்றால் இது பிராமணன், சூத்திரன், பறையன் என்பதுபோல் இதுவும் ஒரு மாதிரி வருணாச்சிரம தர்மமா அல்லவா? என்று யோசித்துப்பாருங்கள். இது நிற்க, சமூகத்துறையிலும் நமது கட்சி செய்திருக்கும் முக்கிய வேலைகளைக் கவனித்துப்பாருங்கள். தேவஸ்தான நிருவாகத்திற்கு சட்டம் செய்திருக்கிறது. இதை நமது பார்ப்பனர்களும் அவர்களது ஆசாமிகளும் எவ்வளவுதான் பழித்துக்கூறி எதிர்த்து வந்தாலும் இதன் நலத்தை அறிந்து மற்ற மாகாணக்காரர்களும் இப்போது இதைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
சாமிக்காக என்று பார்ப்பனரல்லாத வகுப்புகளின் சில வகுப்பு பெண்களை பொட்டுக்கட்டி விவசாரத்திற்கு விடும் தீய வழக்கத்தை சட்டம்
செய்து அடியோடு ஒழித்தது
வயிற்றுப் பிழைப்புக்கு ஆக விவசாரித்தனத்திற்கென்று பெண்கள் தனித்து வாழும் வாழ்க்கையையும் விவசார வியாபாரத்தையும் சட்டம் செய்து ஒழிக்கப்படுகிறது
நாட்டு வைத்தியத்தை தற்கால முறையில் புனருத்தாரணம் செய்து அதன் மூலம் மக்களுக்கு அதிக செளகரியம் ஏற்படும்படி செய்தது பொது வாழ்வில் பொது இடங்களில் தீண்டாமை பாராட்டக்கூடாது என்று சட்டங்களும், நிருவாக உத்திரவுகளும் செய்து தீண்டப்படாத மக்களுக்கு இருந்து வந்த பல அசெளகரியங்களையும், இழிவுகளையும் ஒழித்தது
கல்வியில் பின்னடைந்த மக்களுக்கும், சிறப்பாகப் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாராளமாய் கல்வி வசதி கிடைக்கும்படி செய்து அவர்களின் எண்ணிக்கையை 100க்கு 200, 300 மடங்குக்கு மேல்
உயர்த்தி இருக்கிறது விவசாயிகள் விஷயத்திலும் ஒரு குறிப்பிட்ட பெருந்தொகை விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும்படியாகவும், உழுது பயிர் செய்யாத
குடி அரசு - 1936 (2), 252
மிராசுதார்களில் ஒரு கூட்டத்தார் விவசாயிகளின் மீது வீண் ஆதிக்கம்
செலுத்தாமல் இருப்பதற்கு ஆகவும் இனாம் நில மசோதா என்று ஒரு மசோதாவுக்கு அஸ்திவாரமாய் இருந்து நிறைவேற்றி வைத்திருக்கிறது
இன்னும் இதுபோன்ற எவ்வளவோ நன்மைகள் எவ்வளவோ எதிர்ப்பிற்கிடையில் ஜஸ்டிஸ் கட்சி செய்திருந்தும் அதுவும் காங்கிரஸ்காரர்கள். தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அதனால் யாதொரு காரியமும் செய்யமுடியாதென்றும் தள்ளிவிட்ட சீர்திருத்தத்தை ஏற்று நாம் இவ்வளவு காரியம் செய்திருக்க, நம் கட்சி தனது அதிகாரத்தில் இல்லாததும் அதற்கு
சிறிதும் சம்பந்தமில்லாததுமான காரியங்களைச் சொல்லி அதன் மீது வீண்:
பழி சுமத்தி பார்ப்பனர்களும் அவர்களுடைய ஆட்களும் காங்கிரசின் பேரால்: ஜஸ்டிஸ் கட்சியை வைது பழிகூறி விஷமப்பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நிலவயிப் பழி.
இப்பொழுது காங்கிரசுக்காரர்கள் தஞ்சை ஜில்லாவிலும் மற்றும் இரண்டொரு நஞ்சை பூமி மிகுந்த ஜில்லாவிலும் ஜஸ்டிஸ் கட்சியார் நிலவரி குறைக்கவில்லை என்று பழி கூறித் திரிகிறார்கள். இது மிகவும் வெறுக்கத் தகுந்த விஷமப் பிரசாரமாகும். ஏனெனில் பூமி வரி விதிப்பதோ,
குறைப்பதோ, கூட்டுவதோ ஆகிய விஷயங்கள் மந்திரிகளுடைய இலாக்காக்கள். அல்ல என்றும் அவைகள் சர்க்காரார் ஒதுக்கி வைத்துக்கொண்ட இலாக்காக்கள்'
என்றும் காங்கிரசுக்காரருக்கு தெரிந்திருந்தும் நாமும் அநேக தடவை
எடுத்துச் சொல்லி இருந்தும் அவர்கள் இன்னும் இம்மாதிரி வீண் விஷமப்
பிரசாரம் செய்கிறார்கள் என்றால் அவர்களது நாணயம் எப்படிப்பட்டது
என்பதைப் பற்றி பொது ஜனங்களே தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
காங்கிரஸ் சாதித்தது எண்ன?
இவைகள் ஒருபுறமிருக்கட்டும்
இந்த 50-வருஷ காலமாகவாவது அல்லது உலகப் பெரியார் என்னும் காந்தியார் காங்கிரஸ் சர்வாதிகாரம் வைத்து நடத்திய இந்த 16 வருஷ காலத்திலாவது காங்கிரஸ் சாதித்தது என்ன என்று யாராவது ஒரு விரலை நீட்ட முடியுமா என்று பாருங்கள்.
நமது மாகாணத்தில் தான் நாமாகிய ''தேசத்துரோக'” கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி இருந்து காங்கிரஸ்காரர்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தோம் என்று அவர்கள் சொல்லக்கூடுமானாலும் ஜஸ்டிஸ் கட்சி இல்லாததும் காங்கிரஸ்காரர்களே ஆதிக்கம்பெற்று இருந்ததுமான மற்ற மாகாணங்களிலாகிலும் காங்கிரஸ்காரர்கள் மக்களுக்காகவோ நாட்டுக்காகவோ என்ன செய்தார்கள்?
283 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரஸ்காரர்கள் நம்மை பொது ஜனங்களிடமிருந்து வசூலித்த வரிப்பணத்தை நாம் சரியாகச் செலவு செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதற்கு பதில் மேலே சொல்லியிருக்கிறேன்.
ஆனால் காங்கிரஸ்காரர்கள் இந்த பதினைந்து வருஷங்களாக பொது ஜனங்களிடமிருந்து திலகர் நிதி, சத்தியாக்கிரக நிதி, கதர் நிதி, ஹரிஜன நிதி போன்ற பல நிதிகள் கோடிக்கணக்கில் வசூலித்தார்களே அந்த நிதிகளால் ஏற்பட்ட நன்மை என்ன? காங்கிரசுக்காரர்களுக்குள்ளாகவே அந்நிதி கையாளப்பட்ட நாணயத்தைப் பற்றிய புகார்களே இன்னமும் ஓயவில்லை.
நிதிகள் தான் தொலைந்து போகட்டும். கொள்கை மேல் கொள்கை, திட்டங்கள் மேல் திட்டமாக காங்கிரஸ் நாள் ஒரு கொள்கையும் பொழுதொரு திட்டமும் வகுத்து இடியைப் போல் கர்ஜித்து மின்னலைப்போல் மாற்றி மாற்றி அமைத்து பேசிய வீரப் பேச்சுகள் நடத்திய பஹிஷ்காரங்கள், சட்ட மறுப்புகள், மறியல்கள், சத்தியாக்கிரகங்கள், பட்டினிகள் ஆகியவைகள் எல்லாம் என்ன ஆயிற்று? காங்கிரஸ் பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்த நாணயமோஷழுக்கமோ தான் என்ன? அதனிடத்தில் இருக்கும் கட்டுப்பாடும் தலைவர்களின் ஒற்றுமையும் தான் என்ன? இவைகளில் எதைப்பற்றியாவது இன்று காங்கிரஸ் இன்னது செய்தது, அதனால் இன்ன பலன் கிடைத்தது என்றாவது சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்: ஒவ்வொரு தேர்தல்கள் வரும் சமயத்திலும் காங்கிரஸ் ஒவ்வொரு புதிய தந்திரத்தைக் கையாண்டு வெற்றிமேல் வெற்றி காங்கிரசுக்கே வெற்றி என்றும் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டது என்றும் 1000 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டது என்றும் கொட்டை எழுத்துப் பிரசாரம் செய்து வந்ததெல்லாம் என்ன ஆயிற்று? எந்த வெற்றியால் என்ன சட்டம் செய்தது? அல்லது எந்த வெற்றியில் எவ்வளவு வரி குறைக்க முடிந்தது? அல்லது சர்க்காரையோ சர்க்கார் நடத்தையையோ எந்த அளவுக்கு அசைக்க முடிந்தது? அல்லது மக்களுக்கு இன்ன நன்மைகள் ஏற்பட்டன என்று அவைகளில் எதையாவது சொல்ல அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறதா என்று பாருங்கள்.
சென்ற அசம்பளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வெற்றி பெற்றார்கள், அவர்களால் என்ன செய்ய முடிந்தது? “153 வெற்றி பெற்ற' தீர்மானங்கள்” குப்பைத் தொட்டிக்கு போகச் செய்ய முடிந்தது அடக்கு முறை சட்டங்கள் என்ன ஆயிற்று? வீறுகொண்டு எழ முடிந்தது
நமது தமிழ்நாட்டில் பல ஸ்தல ஸ்தாபனங்களில் சிறப்பாக ஜில்லா. போர்டுகளில் காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற்று பிரசிடெண்ட் பதவி பெற்று ஆதிக்கம் கொண்டார்கள். இதனால் என்ன செய்ய முடிந்தது? எங்கும் ஊழல், எங்கும் நாற்றம், எங்கும் அசுத்தம் என்று காங்கிரஸ்காரர்களே ஒருவருக்கொருவர் கூறிக்கொள்வதல்லாமல் எங்கு என்ன மாறுதல் நடந்தது என்று சொல்ல மூடியும்? என்று கேட்கின்றேன்.
குடி அரசு - 1936 (2), 254
காங்கிரஸ் கட்டுப்பாடான சபை கட்டுப்பாடான சபை என்று தோழர் ஜவஹர்லால் முதல் ஒரே மூச்சாகக் கத்துகிறார்கள். எதில் கட்டுப்பாடு? மக்களை ஏமாற்றுவதில் கட்டுப்பாடான பொய் அல்லாமல் எந்தக் காரியத்தில் கட்டுப்பாடு என்று சொல்லமுடியும்? தேர்தல்களின் யோக்கியதையும் அதில் காங்கிரஸ்காரர் நடந்து கொண்டதும் பார்த்தாலே கட்டுப்பாடு விளங்கிவிடும்
இப்படிப்பட்ட இவர்கள் இனியும் தேர்தலுக்கு நிற்கும் காரணம் என்ன என்பதும் இனியும் நம்மீது பழிகூறி நம்முடன் போட்டிபோடுவதின். காரணம் என்ன என்பதும் நமக்கு விளங்கவில்லை. இந்த லட்சணத்தில் வரப்போகும் சட்டசபை தேர்தலுக்குப் போட்டி போடவும் நம்மை அடியோடு முறியடிக்கவும் இப்போதே பார்ப்பனர்கள் யுத்த முஸ்தீபுகள் தயார் செய்கின்றார்கள். இவர்கள் வெற்றி பெறப்போவதாகவே வைத்துக் கொள்ளுவோம். இவர்கள் அங்கு செய்யப்போவது என்ன என்று யாருக்காவது தெரியுமா? அல்லது அவர்களாவது ஏதாவது விளங்கும்படியாய் சொல்லுகிறார்களா? ஒன்றுமே இல்லாமல் சட்டசபையைக் கைப்பற்ற வேண்டும், ஜஸ்டிஸ் கட்சியை முறியடிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் திட்டமாக இருக்கிறதே ஒழிய தாங்கள் அங்கு போய் செய்வது என்ன என்பதுபற்றி இன்றுவரை காங்கிரசுக்கு திட்டமே இல்லாமல் இருந்து வருகிறது.
காங்கிரஸ்காரர்களின் வெற்றியின் யோக்கியதையையும் வெற்றி பெற்ற பின் அவர்களால் செய்யப்பட்டதையும் அவர்கள் நடந்துகொண்டதையும் நேரில் பார்த்த நாம் இன்னமும் அவர்கள் ஒரு ஸ்தானமாவது கைப்பற்ற இடம் தரலாமா என்பது பற்றி நீங்களே யோசித்துப் பாருங்கள்.
இந்த மாதிரி காங்கிரஸ் வெற்றிபெற விடலாமா?
இந்தநிலையில் காங்கிரஸ் ஒருசமயம் வெற்றி பெற்றுவிடுமேயானால் நமது நாடும் நமது சமூகமும் அரசியலிலும் சமுதாய இயலிலும் குறைந்த பக்ஷம் ஒரு நூற்றாண்டு நிலையாவது பின் தள்ளிப் போகவேண்டியதாய்
விடும். பார்ப்பனர்களின் சுயராஜ்யம் என்பதில் கருத்தோ மக்களை பழய காலநிலைக்குக் கொண்டுபோய் பழமை முறைகள் காப்பாற்றப்பட்டுப் பார்ப்பனீய ஆதிக்கத்தை எல்லாத் துறைகளிலும் நிலை நிறுத்த வேண்டும் என்பதேயாகும். ஆதலால் தோழர்களே! நாம் மிக்க கவலையுடனும் ஜாக்கிரதையுடனும் வேலை செய்யவேண்டியவர்களாய் இருக்கிறோம் நமக்குள் எவ்வித பிளவும் இல்லாமல் ஒற்றுமையுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
நம் தலைவர்
நமது தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் மிக நெருக்கடியான சமயமாகிய இந்த 3, 4 வருஷ காலமாக வெகு அரசியல் ஞானத்துடனும், தைரியத்துடனும், வீரத்துடனும் நமது இயக்கத்தை ஏராளமான பணச்
255 ————————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
செலவுடன் நடத்தி வந்திருக்கிறாரா என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை. அவரே நமது தலைவராயில்லாதிருக்கும் பக்ஷம் நம் கட்சி மிகவும் கஷ்டப்பட்டிருக்கும் என்று உண்மையாகச் சொல்லுகிறேன்.
மற்ற மந்திரிமார்களும் தங்களால் கூடுமானவரை கட்சி நன்மைக்கு ஆக எவ்வளவோ அசெளகரியங்களுக்கிடையில் பிரசார விஷயமாய் உழைத்து வந்திருக்கிறார்கள் என்பதையும் மிகைப்படுத்தாமல் கூறுகிறேன். பார்ப்பனரல்லாதார் பிரசாரக் கமிட்டியாரும் தக்கதொரு சமயத்தில் வெளி வந்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்து பிரசாரம் செய்திருக்கிறார்கள். மற்ற ஜில்லாக்களிலும் உள்ள பிரமுகர்கள் கூடியவரை கட்சிக்கு ஆதரவளித்து வந்திருக்கிறார்கள் என்றாலும் செய்திருக்க வேண்டிய அளவு பிரசாரம் நாம் செய்யவில்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். நமது பாமர மக்கள் வெகு சுலபத்தில் பார்ப்பனர்கள் விஷமப் பிரசாரத்தாலும் அவர்களது பத்திரிகைகளாலும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். உதாரணம் வேண்டுமென்றால் இந்த இரண்டு வருஷ காலமாய் நடந்து வந்த தேர்தல்களே போதிய சாட்சியாகும். ஆதலால் தலைவர் அவர்களும் மற்றும் கனம் மந்திரிமார்களும் தயவு செய்து கவனித்து மாகாணமெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்து ஆங்காங்குள்ள பிரமுகர்களுக்குள் இருக்கும் அபிப்பிராய பேதங்களை மாற்றி நட்பு முறை உண்டாக்கவேண்டும். தகுந்த பிரசாரகர்கள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் உண்மை நிலைமை விளங்கும்படி செய்யவேண்டும். குறைந்த விலையில் தாய் பாஷை தினசரிப் பத்திரிகைகள் ஏற்பாடு செய்து கிராமங்கள் எல்லாம் பரவச் செய்யவேண்டும். இந்தக் காரியங்கள் செய்யப்பட்டால் கண்டிப்பாக வெற்றி நம்முடையதேயாகும்
ஆங்காங்குள்ள மற்ற தோழர்களும் கட்சி நலத்தை உத்தேசித்து தங்களால் கூடுமான உதவி செய்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். கடைசியாக திண்டுக்கல் பிரமுகர்களும் சிறப்பாக வரவேற்பு கமிட்டி அக்கிராசனர் தோழர் சோலை நாடார் அவர்களும் மனமுவந்து முன்வந்து தென் ஜில்லாக்கள் சார்பாக இப்பெரிய மகாநாடு கூட்டி மக்களுக்கு இவ்வளவு பெரிய உற்சாகத்தை மூட்டி உதவி செய்ததற்கும் என் மனப்பூர்வமான நன்றியறிதலை மறுமுறையும் தெரிவித்துக் கொள்வதோடு எனது முன்னுரையை முடித்துக் கொண்டு மகாநாட்டின் காரியத்தை துவக்குகிறேன்.
குறிப்பு ¢~ திண்டுக்கல்லில் 27.09.1936 ஆம்.நாள் நடைபெற்ற தென்மாவட்ட ஜஸ்டிஸ் மாநாட்டில் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 27.09.1936
குடி அரசு - 1936 (2), 256
ஜவஹர்லாலுக்கு உபசாரம் எச்சரிக்கை! எச்சமிக்கை!!
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தோழர் ஜவஹர்லாலுக்கு கராச்சி முனிசிபாலிட்டி உபசாரப்பத்திரம் கொடுக்க மறுத்துவிட்டது. பம்பாய் முனிசிபாலிட்டியும் உபசாரப் பத்திரம் கொடுக்க மறுத்து விட்டது கடைசியாக மதராசும் மறுத்து விட்டது. அவ்வளவுதானா என்று பார்த்தால்
திருச்சியும் மறுத்தது
தானாகக் கனியாத பழத்தை தடியாலடித்து கனியவைப்பது போல் காங்கிரஸ்காரர்கள் இப்போது மறுபடியும் அந்த முனிசிபாலிட்டிகளில் உபசாரப் பத்திரம் படிக்கச் செய்வதற்கு வாசல் வைத்த வீடு தோறும் அலைந்து திரிந்து 32 பற்களையும் காட்டி “வரவேற்பு செலவை நாங்களே பொறுத்துக் கொள்ளுகிறோம்" என்று கெஞ்சுகிறார்கள்.
ஜவஹர்லாலுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்காத முனிசிபாலிட்டிகள் ஒரு நல்ல பெருமையை இழந்து விட்டதாக பரிதாபக் கண்ணீர் வடிக்கிறார்கள்
பார்ப்பனர்கள் மத விஷயங்களிலும் இப்படியே பார்ப்பானுக்கு பணங் கொடுக்காத கை உலக்கை என்றும், பார்ப்பான் உபதேசம் கேட்காத காது நிலைக்காது என்றும், பார்ப்பானைப் புகழாத வாய் நாவாய் என்றும் பிரசாரம் சேர்த்துப் பேசுவது வழக்கம். அதுபோலவே ஜவஹருக்கு வரவேற்பு கொடுக்காத ஊரையும் முனிசிபாலிட்டி ஜில்லா போர்டுகளையும் கேவலமாகப் பேசுகிறார்கள். ஆனால் அதே ஸ்தாபன மெம்பர்களை
திரும்பத் திரும்ப கெஞ்சி உபசாரம் பெறப் பாடுபடுகிறார்கள்.
எதற்காக இவ்வளவு ஆத்திரம் என்பது தான் விளங்கவில்லை. மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பது சாதாரண 3ந்தர 4ந்தர மானமுள்ளவர்கள் பழமொழி. நமது காங்கிரசுக்காரருக்குப் 10ந்தர மானம் கூட கிடையாதாகையால் எப்படியாவது எதை விற்றாவது தங்கள் சுயநலம் பெறுவதையே கொள்கையாதலால் ஒருபக்கம் வீடுவீடாய், ஊர் ஊராய் அலைந்து கெஞ்சிக் கொண்டு மற்றொரு பக்கம் கண்டபடி மக்களைக் குலைத்து வருகிறார்கள்.
257... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தேர்தல் காலங்களில் இந்நாட்டு பாமரமக்கள் கண்களில் மண்
தூவுவதற்கு ஆக யாரையாவது பிடித்து இந்திரன் சந்திரன் என்று கூறி, விளம்பரம் செய்து இந்நாட்டுக்கு அழைத்து வருவதென்றால் இதை யார்தான் சகித்துக் கொண்டு அதற்காக வருபவர்களுக்கெல்லாம் உபசாரப் பத்திரமும் பணமும் கொடுத்துக்கொண்டிருக்க முடியும்?
நமது ஸ்தல ஸ்தாபனங்கள் பொறுப்பற்ற முறையில் நடைபெற இடம் கொடுக்கின்றது என்பதற்கு இது போன்ற காரியங்களே சரியான. உதாரணங்களாகும்.
இனி தமிழ் நாட்டுக்குள் அனேகமாக மற்றும் பல இடங்களிலும் இந்த நிலைமைதான் ஏற்படும் என்பதையும் பஹிஷ்காரமும் முன்போலவே
ஏன், அவற்றை விட அதாவது காந்தியார், பட்டேல், ராஜேந்திரபாபு முதலியவர்களுக்கு நடந்ததை விட மேலாகவே நடக்கும் என்பதையும் நமது பார்ப்பனர்கள் உணர்ந்து அதற்கேற்றபடி புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள எதிர்ப்பார்க்கிறோம்.
தோழர் ஜவஹர்லால் தமிழ்நாட்டிற்கு எலக்ஷன் பிரசாரத்துக்கு வருகிறார் என்பது மாத்திரமல்லாமல் மேல்கொண்டு பண வசூலுக்கு ஆகவும் வருகிறார் என்பதை பொது மக்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுவதுடன் இதுவரை காங்கிரசுக்காரர்கள் இம்மாதிரி எத்தனை தடவை பணம் வசூலித்து இருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
ஒவ்வொரு தடவையிலும் லட்சக் கணக்காய் வசூலித்த பணங்கள் என்ன ஆயிற்று என்று பணம் கொடுத்தவர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? பணத்தை வசூல் செய்வதும் வாயாடிகளுக்கும் காலாடிகளுக்கும் கொடுப்பதும் கள்ளுக்கடை மீன்கடை பாஷையில் பார்ப்பனரல்லாத மக்களையும் அவர்களது தலைவர்களையும் அற்பத்தனமாய் பேசச் சொல்லுவதுமல்லாமல் அப்பணங்களால் என்ன நன்மை ஏற்பட்டது?
இப்பொழுதும் தோழர்கள் ஆலச்யமய்யரும், கல்யாணராமய்யரும் போல் சட்டசபை மெம்பரும்ஜில்லாபோர்டுமெம்பருமாகஆகவேண்டுமானால் இந்த வசூல் பணங்களில் செலவு செய்வதும் தோழர்கள் அவினாசி லிங்கமும் சேஷாசல செட்டியாரும் போல் அசம்பளி மெம்பரும் ஜில்லா போர்டு மெம்பரும் ஆக வேண்டுமானால் அவரவர்கள் சொந்தப்பணம் முறையே 25 ஆயிரம் 15 ஆயிரம் செலவாவதுமாகத்தான் இருந்து வருகிறது. எப்படியோ இரண்டு பார்ப்பனர்கள் அதுவும் டிபாசிட்டு கட்டக்கூட சவுகரியமில்லாதவர்கள் சட்டசபைக்கும் போர்டுக்கும் புகுந்து விடுகிறார்கள்.
குடி அரசு - 1936 (2), 258
சில பார்ப்பனர்கள் எலக்ஷனில் நின்று தன் காசு செலவில்லாமல் வெற்றி பெறுவதோடு பணமும் மிச்சம் பிடித்துக் கொள்ளுகிறார்கள். இதுதான் தேசிய நிதி வசூலிப்பதின் தன்மையாக இருக்கிறது
திலகர் நிதி கணக்கு கேட்டதற்கு இதுவரை காங்கிரசுக்காரர்களால் என்ன பதில் சொல்ல முடிந்தது?
மற்றும் சதுர் பாட்டுக் கச்சேரிகள் முதலிய கண் - காது - மெய் - காக்ஷி சாலைகள் வைத்து கொள்ளை அடித்த பணங்களுக்கு என்ன கணக்கு சொன்னார்கள் என்பதைப் பற்றி யெல்லாம் பாமர மக்கள் கவனிக்காமல் கண்மூடித்தனமாய் நடந்து கொண்டதின் பயனே மத இயலில் பார்ப்பனரல்லாத
மக்கள் பாடுபடுவதும் பார்ப்பனர்களுக்கு அழுவதுமாய் வாழ்க்கை நடத்தப் படுகிறது போலவே பார்ப்பனரல்லாதார் பணங்கொடுப்பதும் உஞ்சவிருத்தி பார்ப்பான் தேர்தலில் வருவதுமாய் இருந்து வருகிறது
என்னதான் சமதர்மமும் பொது உடமையும் பேசினாலும் ஜவஹர்லால் பார்ப்பனர் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது
அவர் பூசையும் குங்குமப் பொட்டும் கங்கா ஸ்நானமும் பார்ப்பன கருமமும் திதியும் திவசமும் ஒவ்வொன்றிலும் எந்த பார்ப்பனருக்கும் விட்டவர் அல்ல என்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்
தோழர் ராஜேந்திரப் பிரசாத் அவர்களை பார்ப்பனரல்லாத மக்கள் பஹிஷ்கரித்த போது அவர் “எனக்கு எலக்ஷன் நடப்பது தெரியாது, நானும் பார்ப்பனரல்லாதார்தானே, என்னை ஏன் திரும்பிப்போ என்று சொல்லுகிறீர்கள்.
நான் எங்கே போவது?” என்று கேட்டார். ஆனால் தோழர் ஜவஹர்லாலை தமிழ்நாட்டு மக்கள் திரும்பிப் போ என்று சொல்லும் போது அவர் என்ன சொல்லப் போகிறாரோ தெரியவில்லை.
இவை ஒரு புறமிருக்க, திருச்சி முனிசிபாலிட்டி முதலில் வரவேற்பு தீர்மானத்தை யோசிக்கவே மறுத்துவிட்டு மறுபடியும் சில காங்கிரஸ்காரர் களுடைய “பிரம்ம”ப் பிரயத்தனத்தால் அதுவும் வரவேற்புச் செலவை தாங்களே சொந்தத்தில் ஏற்றுக் கொள்ளுவதாகச் சொல்லி வரவேற்பு
தீர்மானம் நிறைவேற்ற முயற்சிக்கப்பட்டு வெற்றி பெற்று விட்டதாகத் தெரிகிறது.
ஆனால் அதை யார் படிக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை சேர்மென் தோழர் பொன்னையா பிள்ளை அவர்களும், வைஸ் சேர்மென் கோபாலராவ் அவர்களும் காங்கிரஸ் கட்டளையை இரண்டு தடவை மீறினவர்கள். காங்கிரஸ் கட்டளையை மீறியே அந்த ஸ்தானங்களைப் பெற்ற தோடல்லாமல் காங்கிரஸ்காரர்கள் ராஜிநாமா கொடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டும் அவ்வுத்திரவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு விண்ணென்று நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் “காங்கிரஸ்
259 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
துரோகிகள்” ஆவார்கள். அப்படிப்பட்ட “துரோகிகள்” இடம் காங்கிரஸ் தலைவர் உபசாரம் பெற்றுக் கொள்ளப்போகிறாரா அல்லது காங்கிரசின் கட்டுப்பாட்டையும் கவுரவத்தையும் உத்தேசித்து திருச்சி முனிசிபல் வரவேற்பு வேண்டியதில்லை என்று சொல்லிவிடப் போகிறாரா, அல்லது “சாம்பாரில் மலம் கலந்து விட்டது மேலாக இறுத்தாப் போல் வடிகட்டி விடு” என்று ஆச்சாரக்காரர்கள் சொல்லுவது போல் சேர்மென், வைஸ்சேர்மென் நீங்கலாக வேறு யாரையாவது அதாவது தோழர் தேவர் போன்றவர்களைக் கொண்டு வரவேற்பு வாசிக்கச் சொல்லப் போகிறாரா, அல்லது இந்த எழவே வேண்டாம் “நான் திருச்சிக்கே வரவில்லை! என்று சொல்லிவிடப் போகிறாரா என்பது ஒரு போட்டிப் பரிசு போன்ற விஷயமாக இருக்கிறது.
எப்படி இருந்த போதிலும் நமக்கு ஒரு விஷயத்தில் திருப்தி ஏற்பட்டிருப்பதை மறைப்பதற்கு இல்லை. அதாவது ஏதோ ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரால் குருவாகக் கருதப்படுகின்ற ஒரு பார்ப்பனரை சங்கராச்சாரி ஆக்கி அவருக்கு உலக குரு என்று பெயர் வைத்து விளம்பரம் பண்ணி பல்லக்கில் சுமந்து பணம் பறிப்பது போல், ஏதோ ஒரு ஸ்தாபனத்துக்குத் தலைவர் என்பவரை இந்திய தலைவர் என்று கூப்பிட்டு விளம்பரம் செய்து ஊர்கோலம் செய்து பணம் வகுலிக்கப்போகும் ஒரு ஆசாமிக்கு வரவேற்பளிக்க மறுக்கும்படியானவர்களோ பகிஷ்கரிப்பவர்களோ ஆன “தேசத்துரோகிகள்”, “அபாக்கியவான்கள்'' இந்த இந்திய நாட்டில் சென்னை மாகாணத்தில் மாத்திரம் இல்லாமல் பம்பாய் மாகாணத்திலும்,
சிந்து மாகாணத்திலும் கூட இருக்கிறார்கள் என்றால் மற்றும் காங்கிரஸ்காரர்களே மெஜாரிட்டியாய் வெற்றி பெற்ற முனிசிபாலிட்டிகளிலுமே இருக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு அளவுக்காவது நமக்கு கிடைக்கும் “தேசத்துரோகப் பட்டத்தில்” பங்கு கொள்ள வேறு மாகாணங்களும் காங்கிரஸ்காரர்களும் கிடைத்தனவே என்பதுதான் நமக்கு ஏற்பட்ட திருப்தியாகும்
தோழர் ஜவஹர்லாலை பஹிஷ்கரிப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகி என்றும், பார்ப்பனர்களும் அவர்கள் பத்திரிகைகளும் கூலிகளும் கூவக்கூவ இந்தியாவில் கூடிய சீக்கிரம் “தேசத்துரோகிகள்" தான் 100க்கு 95 வீதம் பேர்களுக்கும் அதிகமாகப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களே தமிழ்நாடு தலைவர் என்ற முறையில் ஆனைமலையில் வெள்ளைக்காரரிடம் தோழர் “ஜவஹர்லால். கொள்கையை நாங்கள் ஒப்புக் கொள்வதில்லை” என்றும் “அவருடைய கொள்கைக்காக அவரை காங்கிரஸ் தலைவராக்கவில்லை'' என்றும் கல்லில் எழுதிய எழுத்துப்போல் பேசிவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப் பட்ட சத்தியமூர்த்தியார் இன்றும் தேச பக்தராகவும் பாரதமாதாவின் அருந் தவப் புத்திரராகவுமே விளங்குவதோடு ஜவஹர்லாலையும் கூட்டி ஆட்டம் காட்டி பணமும் வசூலிக்கப் போகிறார்களே ஒழிய மற்றபடி அவர் எந்த
குடி அரசு - 1936 (2), 260
தேச பக்தர்களாலும் தேசீயப் பத்திரிக்கைகளாலும் தேசீயப் பிழைப்புக்காரர்.
களாலும் தேசத்துரோகியாகவோ அபாக்கியவானாகவோ அழைக்கப்படவில்லை. ஆகவே தேசத் துரோகம் என்றால் என்ன என்பதை இதிலிருந்தே நன்றாய்
தெரிந்து கொள்ளலாம்.
வடநாட்டுப் பார்ப்பனர் ஒருவரும் தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவரும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு பார்ப்பனரல்லாதார் மக்களின். மானங்கெட்ட - அறிவு மழுங்கிய ஒரு கூட்டத்தாரின் உதவியைக் கொண்டு மூட மக்களை குரங்கு போல் ஆட்டப் போகிறார்கள்; ஏய்த்துப் பணம்
பிடுங்கப் போகிறார்கள்; இதுதான் அகில இந்தியத் தலைவர் வரவேற்பு நாடகம் என்பதின் கருத்து ஆகவே தோழர்கள் இது விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமாய் எச்சரிக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.09.1936
2] ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மறுபடியும் தொல்லை
தூது கோஷ்டிப் புரவி.
இனாம்தார் மசோதா இரண்டாம் முறையும் சென்னைச்சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. வைஸ்ராய் அனுமதி பெறவேண்டியதுதான் பாக்கி. வைஸ்ராய் அனுமதியளித்து விட்டால் ஐம்பது லக்ஷம் இனாம் குடிகளின் கஷ்டம் தீரும். நிர்ப்பயமாக உயிர்வாழ்வார்கள். ஆனால் இனாம்தார்கள் இனாம் குடிகளின் தலையில் கைவைக்க மேலும் என்ன வழியென்று பார்க்கப்போவதாகத் தெரிகிறது. இனாம்தார்களுடைய பிரதிநிதி கோஷ்டியார் கவர்னர் அவர்களைப் பேட்டி கண்டு முறையிட முயற்சி செய்தார்களாம். இனாம் மசோதா விஷயம் வெகுகாலமாகப் பொது
ஜனங்கள் முன் இருந்து வந்திருப்பதினாலும் இந்த விஷயத்தை ஏற்கனவே நன்றாகச் சர்ச்சை செய்யப்பட்டிருப்பதினாலும் புதிதாக எந்த விஷயத்தையும் தெரிவிப்பதற்கில்லை யெனக் காரணங்கூறி கவர்னர் தூது கோஷ்டிக்கு அனுமதியளிக்க மறுத்து விட்டதுடன் இதர கோஷ்டிகளுக்கும் அனுமதியளிப்பதில்லை யென்று தெரிவித்துவிட்டாராம். இது இரண்டு பார்ப்பனப் பத்திரிகைகளுக்குப் பிடிக்கவில்லை. அவ்விரண்டு பத்திரிகைகளும் தேசீயப் பத்திரிகைகள்தான். ஏழை எளியோர் விடுதலையை தமது லக்ஷ்யமென தேசீய வாதிகளும் தேசீயப் பத்திரிகைகளும் கூறிக்கொண்டாலும் இனாம் குடிகள் மசோதா விஷயத்தில் மட்டும் தேசீயமும் மாயமாக மறைந்து போய்விட்டதாகவே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன? இனாம் குடிகள் எல்லாம் பார்ப்பனரல்லாதாராயிருப்பதும் இனாம்தார்களில் பெரும்பாலார் பார்ப்பனர்களாயிருப்பதுவுமே காரணம். இந்த இனாம் மசோதாவைக் கவிழ்க்கப் பார்ப்பனர்கள் எவ்வளவோ கிளர்ச்சி செய்தார்கள்; பலிக்கவில்லை. கடைசியில் சட்டமாகப்போவதும் உறுதி. இந்த மசோதா சட்டமானதற்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாரே. ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏழை மக்களுக்கு நன்மையுண்டானதாக ஒரு புகழ் தோன்றுவதை பார்ப்பனர்கள் எவ்வாறு சகித்துக் கொண்டிருப்பார்கள். ஆகவே மசோதா பொதுவுடமைத் தன்மை வாய்ந்ததென்று பூச்சாண்டி காட்டினார்கள். அந்தப் பூச்சாண்டியும் பலிக்கவில்லை. இப்பொழுது கவர்னரைப் பேட்டி கண்டு புரளி செய்ய முயன்றார்கள். மசோதா நன்கு விவாதிக்கப்பட்டிருப்பதினாலும் புதியதாக அறிய வேண்டியது எதுவும் இல்லாமலிருப்பதினாலும் பேட்டியளிக்க கவர்னர் விரும்பவில்லை
குடி அரசு - 1936 (2) 26:
2
இதனால் இனாம்தார்களுக்கு கவர்னர் ஏதோ அநீதி செய்து விட்டதாக சென்னைப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூறுகின்றன. இது தானா இந்திய கவர்னரை நாம் பெற்ற பலன் எனவும் ஒரு பத்திரிகை கிண்டலாக எழுதுகிறது.
தற்கால கவர்னர் இந்தியரானதினால் இனாம் மசோதா விஷயத்தை நன்கறிந்திருக்கிறார். எனவே அவரை ஏய்க்க முடியாது. இனாம்தார்கள் குறும்பையும் அவர் நன்கறிந்திருக்கிறார். ஆகவே அனுமதி மறுத்ததில் தப்பு எதுவும் இல்லை. கவர்னர் இந்தியராயிருப்பதினால் இந்தியர்களின் வம்பளப்பு களை யெல்லாம் அவர் காதில் வாங்க வேண்டுமென்ற கட்டாய மில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.09.1936
263 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆதாரமற்ற நம்பிக்கைகள்
ஒரு விஷயத்தை ஒருவன் கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உடனே நாம் என்ன செய்கிறோம் அது உனக்கு எப்படித்தெரியும்? அது உண்மையென்று நாங்கள் ஏன் நம்பவேண்டும்? அது உண்மை என்று நம்ப ஆதாரமென்ன?” எனப் பொதுவாக மூன்று கேள்விகளைக் கேட்கிறோம்.
பிரதி தினமும் நாம் எத்தனையோ விஷயங்களை அறிகிறோம். அவைகளில் பலவற்றை நாம் கண்ணைமூடிக்கொண்டு நம்பிவிடுகிறோம். “அது உண்மையா? உண்மை யென்பதற்கு ஆதாரமென்ன?” என்பன. போன்ற விஷயங்களை நாம் கவனிப்பதே இல்லை.
நமது நம்பிக்கைகளில் பலவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவற்றிற்கு ஆதாரமே இல்லையெனத் தோன்றா நிற்கும். ஒரு காலத்திலே ஒரு விஷயம் உண்மையென்று யாரோ ஒருவர் சொன்னார். அல்லது ஆராய்ந்து பாராமலே அதை நாம் உண்மையென நம்பிக்கொண்டோம். அல்லது அது உண்மையாகத்தான் இருக்குமென்று சுளுவில் நம்பிக்கொண்டோம் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நாம் முதலிலே கூறிய மூன்று கேள்விகளையும் கேட்டால் எந்த விஷயத்தின் உண்மையையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
உண்மையாராய்ச்சியில் தோல்வியடைந்த பிறகும் ஒரு விஷயத்தை
நாம் உண்மையென நம்புவோமானால் அந்த நம்பிக்கை பகுத்தறிவுக்குப் பொருந்தாததென்றே ஏற்படும்
யாரேனும் ஒருவரது இலேசான தூண்டுதலின் பேரில் முதலில் ஒரு விஷயத்தை உண்மையென நம்புகிறோம். அந்த நம்பிக்கை காலக்
கிரமத்தில் வலுப்பெற்று விடுகிறது. இப்பொழுது அது நமது சர்வ சாதாரண நம்பிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. யாரோ ஒருவர், ஏதோ ஒரு இடத்தில், எப்போழுதோ ஒரு காலத்து ஒரு விஷயத்தை நம்மிடம் சொன்னார். அதை ஆராய்ந்து பாராமலே நாம் ஒப்புக்கொண்டு நம்பிவிட்டோம். நம்மிடம் கூறப்படுகிறவைகளைப் பற்றிக் கேள்வி கேட்கும் சக்தி நமக்குண்டாகாதிருந்த இளம் பருவத்திலேயே அந்த விஷயத்தை நாம் கேட்டிருக்கலாம். நமது உறுதியான நம்பிக்கைகளில் பல அப்பொழுது ஏற்பட்டவைகளாகும்.
குடி அரசு - 1936 (2), 264
நாம் பக்குவ தசையடைந்திருக்கும் இப்பொழுது அது உண்மையா அல்லவா என்று கேட்கக்கூட நாம் துணிவு கொள்வதில்லை. அது தெளிவான உண்மை யென்றே நமக்குத் தோன்றுகிறது. எனவே அதைப்பற்றிக் கேள்வி கேட்பதே பைத்தியக்காரத்தனம் என நாம் உணருகிறோம்
ஒரு தீவிர வைஷ்ணவனையும், ஒரு தீவிர சைவனையும் இள வயதிலேயே இடம் மாற்றி வளர்த்தால் - அதாவது தீவிர வைஷ்ணவனை தீவிர சைவப் பெற்றோரும், தீவிர சைவனை தீவிரவைஷ்ணவப் பெற்றோரும் இளமை முதற்கொண்டே வளர்க்கும் படி செய்தால் அவர்களது பழக்க வழக்க நம்பிக்கைகள் எல்லாம் நேர்மாறாகவே அமையும். அவர்களில் ஒவ்வொருவனும் தனது நம்பிக்கையே - பழக்க வழக்கமே மெய்யென்று நம்புவான். சமயத் துறையில் மட்டுமன்றி இதர துறைகளிலும் இதே நிலைமையே ஏற்படும். பலதார மணம், சிசுஹத்தி, நரபலி, மாட்டுச் சண்டை,
குத்துச் சண்டை, கோழிப் போர் முதலியவைகள் அமலில் இருக்கும் குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குஅவைதீயவைஎன்றே தோன்றா, சர்வ சாதாரணப் பழக்க வழக்கமாகவே தோன்றும். அவை அசாதாரணமான பழக்கங்கள் என்றோ ஒழுக்கத்துக்கு முரணான பழக்கங்கள் என்றோ தோன்றமாட்டா.
குற்றபரம்பரையினர் வாழும் நகரத்தின் ஒரு பகுதியிலே குற்ற பரம்பரையினர்க்கு இடையிலே, ஒருவர் வளர்ந்துவந்தால் அவருடைய பழக்க வழக்கங்கள் ஏனையோர் பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டனவாகவே
இருக்கும். ஒரு ஆங்கிலப் பெண்ணை ஒரு ரஷ்ய மாது ஸ்வீகாரம் செய்து ரஷ்ய குடும்பத்தில் ரஷ்ய பழக்க வழக்கப்படி வளர்த்தால், அவளுடைய பழக்க வழக்கங்களும் உணர்ச்சியும் ரஷ்ய போக்காக இருக்குமே ஒழிய, ஆங்கிலப் போக்காக இராது. இது போலவே நமது அநேக அதிதீவிர நம்பிக்கைகளுக்குக் கூட நமது வளர்ப்பு முறையே காரணமாகும்
இளமைப்பருவம் கடப்பதுடன் புதுக்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் குணமும் உண்மையில் நின்று விடுவதில்லை. நம்மையறியாமலே நமது வாழ்நாள் முழுதும் புதுப்புதுக்கருத்துக்களை பிரதிதினம் ஏற்றுக்கொண்டே இருக்கிறோம். இதற்கு பத்திரிகைகளும் விளம்பரங்களுமே காரணம் பொதுவாக அநேக விஷயங்களைப்பற்றி நுட்பமாகச் சிந்தனை செய்வதே இல்லை. நாம் பெரிதும் கிளிகள் மாதிரியே நடந்து வருகிறோம். பிறர் சொல்வதை நம்புகிறோம்; செய்வதைப் பின்பற்றுகிறோம். இளமைப்பருவம் கடந்தபிறகும் நாம் ஏற்கனவே பெற்றிருக்கும் கருத்துகளுக்குப் பொருத்தமான. கருத்துகளைத்தான் ஒப்புக்கொள்ளுகிறோம்; மற்றவைகளை நிராகரிக்கிறோம்.
“எல்லோரும் அப்படியே சொல்கிறார்கள், அதனால் நம்புகிறோம்” என்ற ரகத்தைச் சேர்ந்தவைகளுக்கு ஒரு தனியிடம் வகுக்கவேண்டியதுதான். அவை தெளிவான உண்மைகள் ஆகமாட்டா. அப்பேர்ப்பட்ட விஷயங்கள் 28... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஒரு குறிப்பிட்ட தனிமனிதன் கூறியவைகளாயிருக்கமாட்டா. அவை யாரோ ஒருவராலோபலராலோ கூறப்பட்டு பரம்பரையாய் நம்பப்பட்டு வந்தவைகளாக இருக்கலாம். அல்லது மக்களின் ஐதீக நம்பிக்கைகளாகவும் இருக்கலாம் அப்படியானால் அவை வார்சரிமைப்படி நாம் பெற்ற சமூக (சொத்து) நம்பிக்கை
களாகும். எனவே ஒரு நம்பிக்கை மிகவும் பழமையானது என்ற ஒரே காரணத்தினால் மட்டும் அது ஆதாரமுடைய உண்மையாகி விடமாட்டாது.
சந்தேகத்துக்கு இடமில்லாதபடி, வெளிப்பார்வைக்கு உண்மையாகத் தோன்றுபவைகள் விஷயத்தில் நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
“ஏதேனும் ஒரு விஷயத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்வதே ஆபாசமானது, அநாவசியமானது - துரோகமானது என்ற உணர்ச்சி
மக்களுக்கு இருக்குமானால் அந்த விஷயம் பகுத்தறிவுக்கு முரணானது என்று தான் ஏற்படும்”
டிராட்டர்.
“அது தெளிவான பொது உண்மை. அதைப்பற்றி சந்தேகம் கொள்வதோ ஆராய்ச்சி செய்வதோ அநாவசியம்” என ஏற்படுமானால், மக்கள் அறிவு வளர்ச்சியின் சரிதம் முழுவதிலும் அப்பேர்ப்பட்ட தெளிவான பொது உண்மைகளே நிறைந்திருக்கின்றன. ஆராய்ச்சியில் அவை ஆதாரமற்றவை என்றும் வெளியாகியிருக்கின்றன. உதாரணமாக அடிமை வர்த்தகம் இயற்கையானது, நியாயமானது, இன்றியமையாதது என்றே வெகுகாலமாக நம்பப்பட்டு வந்தது. மக்களில் பல வகுப்பார் இயல்பாக அடிமைகளாகவே இருந்து வருகின்றனர். அடிமை வாழ்க்கையையே பெரிதும் விரும்புகின்றனர். அதைப்பற்றி சந்தேகங்கொள்ளவே இடமில்லை.
மற்றும் வட்டமாக அன்றி இதர முறைகளில் கிரகங்கள் சுற்றுகின்றன என்று நம்புவது வெகுகாலமாக அசாத்தியமாகவே இருந்து வந்தது வட்டவடிவம் அல்லது மண்டலம் மேற்பார்வைக்கு ஒரு புரணமான உருவம்; எனவே கிரகங்கள் எல்லாம் வட்டமாகச் சுற்றுகின்றன என நம்புவதே இயற்கையானது; சாத்தியமானது. ஆனால் இந்த நம்பிக்கையை ஒழிக்க அநாதிகாலமாக நடந்து வந்திருக்கும் போராட்டம் சரித்திரத்திலேயே மிகவும் அற்புதமானதாகும்.
உணர்ச்சிக்கு ஹிருதபமே ஆதாரமென்றும் மூளை அல்லவென்றும் முன்னோர் நம்பி வந்தனர். இன்றோ பெரும்பாலார் மூளையின் உதவியினால் நாம் சிந்தனை செய்வதாகவே நம்புகிறார்கள். மூளையின் உதவியின்றி மனிதனுக்கு சிந்திக்கவே முடியாதென்றே தற்காலத்தவர்களில் பெரும்பாலார் கூறுகிறார்கள். எனினும் முன்னோர்கள் மாறாகவே நம்பினார்கள்
பூமி பரப்பான தென்பது தெளிவான உண்மையாகத் தோன்றியதினால். வேறு விதமாக அபிப்பிராயப்படுகிறவர்கள் கேலி செய்யப்பட்டார்கள் - தூற்றப்பட்டார்கள்.
குடி அரசு - 1936 (2), 266
பளுவான பொருள்கள் இலேசான பொருள்களை விட விரைவாக விழுமென இரண்டாயிர வருஷகாலம் தடையின்றி நம்பப்பட்டு வந்தது அதற்கு அரிஸ்டாட்டல் அபிப்பிராயமும் மேற்கோளாகக் காட்டப்பட்டது உண்மை வேறு விதமானதென்று கலிலியோ நிரூபித்துக்காட்டும் வரை மக்கள் அவ்வாறே நம்பி வந்தனர். ஆராய்ந்து பாராமல் கண் மூடித்தனமாக நம்பப்படுபவைகள் எல்லாம் ஆதாரமுடைய உண்மைகளாகிவிட மாட்டா. அத்தகைய தப்பு நம்பிக்கைகளை உடைத்தெறிவதினாலேயே அறிவு வளர்ச்சி யடைகிறது
சுயநலப்பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்காலமனோ தத்துவ சாஸ்திரப்படி பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமா யிருப்பதின்லேயே அவைகளை நாம் நம்பி வருகிறோம். பொதுஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல விஷயங்களை நம்புகிறோம்; அல்லது நம்புவதாக பாவனை செய்கிறோம். ஆனால் அரசியல் அபிப்பிராயங்கள். உட்பட சகல அபிப்பிராயங்களும் சுயநலம் பற்றியவை என்றும் கூறிவிட முடியாது, எனினும் நம்பிக்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் சுயநலமும் ஒரு காரணம் என்பதை ஒருவராலும் மறுக்க முடியாது.
“சுயநலம்” என்பது பொதுவாக, மக்களது ஜீவனோபாயத்துக்குரிய வழிகள், பணம் தேடுதல் முதலியவைகளையே குறிக்கும். ஆனால் சமூக வாழ்வில் ஒருவனுக்கு ஏற்படும் நலத்தையும் நாம் சுயநலத்தோடு சேர்க்கலாம். பொதுஜன மதிப்பைப் பெறும் பொருட்டும் நாம் பல விஷயங்களை நம்புவதாக அல்லது பாவனை காட்டுவதாக ஏற்கனவே கூறியிருக்கிறோம்.
இதுவும் சுயநலம் பற்றியதாகும். ஒருவனது வாழ்நாளின் வெற்றியே பொதுஜன.
மதிப்பைப் பொறுத்திருக்கிறது. சில ஸ்தாபனங்களையோ இயக்கங்களையோ ஆதரிப்பதினாலோ நடத்துவதினாலோ சிலருக்கு பொதுஜன மதிப்பும் வாழ்க்கை வெற்றியும் ஏற்படுகிறது. சமூக வாழ்வில் தாம் பெற்றிருக்கும் ஸ்தானம் அல்லது பதவிகள் காரணமாக சிலர் அனேக விஷயங்களை நம்ப வேண்டியதாக ஏற்படுகிறது. அவ்வாறு நம்பவில்லையானால் அவர்களுடைய மதிப்பும் ஒழிந்துபோகும்; வாழ்வும் கஷ்டமாகிவிடும்
தனது இயல்பான குணத்துக்கு ஆதாரம் தேடும் பொருட்டும், தனது நிலைமையைக் காப்பாற்றும் பொருட்டும், தனது நடக்கை நியாயமென நிரூபிக்கும் பொருட்டும் சிலர் வேண்டுமென்றே சில விஷயங்களை அல்லது கொள்கைகளை நம்புகிறார்கள், அல்லது நம்பும்படி ஏற்படுகிறது. சோம்பேறி களும்பித்தலாட்டக்காரரும் கூடதமக்கு ஆதரவாக சில அபிப்பிராயங்களையோ. கொள்கைகளையோ காட்டக்கூடும். நமது உபதேசிகளிலும் பிரசாரகர்களிலும் பெரும்பாலார் வாலிழந்த நரிக்கு ஒப்பானவர்களே.
வீண் அபிமானம் காரணமாகவும் பலர், ஆதாரமற்றவைகளை உண்மையெனநம்புவதுண்டு.ஆளையோ, சம்பவத்தையோ, ஸ்தாபனத்தையோ.
2679 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பற்றிய அபிமானத்தினாலும் துவேஷத்தினாலும் ஆதாரமற்றவைகளைப்
பலர் மெய்யென நம்புவதுண்டு. சிறுவயதில் பெற்றோருக்கு அடங்கி நடக்காத பிள்ளைகள் பெற்றோர் அபிப்பிராயங்களுக்கு அல்லது நம்பிக்கைகளுக்கு முரணாகவே நடந்து வருகிறார்கள். அதுபோலவே பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகள் அவர்களது தப்பபிப்பிராயங்களையும் ஆதரிக்கின்றன, நம்புகின்றன.
வயதுவந்த பிறகு கொடிய பிணக்கினால் சிலருடைய அபிப்பிராயங்கள். மாறுபடுவதுண்டு. ஒருவன்பேரிலுள்ள பகை அவனது அபிப்பிராயங்களையும்
பாதிக்கிறது. நம் எதிரிகளின் அபிப்பிராயங்களைத் தகர்த்தெறிவதில் நாம் பெரிய மகிழ்ச்சி கொள்வதில்லையா? அதுபோலவே ஒருவன் மீதுள்ள நட்பினாலும் அவனது அபிப்பிராயங்களை ஆதரிப்பதில் நாம் பெரிய மகிழ்ச்சியடைகிறோம்
சிலர் காலப்போக்கையொட்டி சில அபிப்பிராயங்களையும் நம்பிக்கை களையும் ஆதரிப்பதுண்டு. ஆனால் காலப்போக்கு மாறுந்தோறும் நாம் அபிப்பிராயங்களை பொதுவாக மாற்றிக்கொள்வதில்லை. வெகு
சீக்கிரத்தில் நமது மனோ நிலை உறுதியடைந்து விடுகிறது
ஒரு அபிப்பிராயத்தை ஒப்புக்கொண்டு விட்டால் அது அப்படியே
நிலைத்து வருவதே சகஜமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட முறையில் சிந்தனை செய்வதினால் அம்மாதிரி செய்வதே சுளுவாகத் தோற்றுகிறது
சிலர் கதை சொல்வதில் நிபுணர்களாயிருக்கிறார்கள். சிலர் ஒரு குறிப்பிட்ட அபிப்பிராயங்களை அல்லது வாதங்களை விளக்குவதில் சமர்த்தர் களாயிருக்கிறார்கள். “கிராமபோன்” மாதிரி வேலைசெய்யும் பல புருஷர்களும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பழங்கதைகளைத்
திருப்பித் திருப்பிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு விஷயத்தைக் கிளப்பி விட்டால் போதுமானது. அவர்கள் அதைப்பற்றி மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்.
பொதுவாக எல்லா நம்பிக்கைளும் அபிப்பிராயங்களும் அப்பேர்ப்பட்டவைகளே. சில காலங்களுக்குப் பிறகு அவை நமது உள்ளத்து உறைத்துவிடுகின்றன. இளமையாயிருக்கும் போது பழைய கருத்துகளை மாற்றிப் புதுப்புதுக் கருத்துகளை சம்பாதித்துக்கொள்: கிறோம். வயது முதிர முதிர புதுக்கருத்துகளை நாம் அவ்வளவாக நாடுவதில்லை. நாம் பழமைக் களஞ்சியமாகி விடுகிறோம்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - செப்டம்பர் 1936
குடி அரசு - 1936 (2), 268
நாம் எதை நம்பலாம்?
எக் காரணத்தால்
தெளிவாகச் சிந்தனை செய்து பழகவேண்டியவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. அதாவது
“நீ அதை உண்மையென நம்பக் காரணமென்ன?
அல்லது
நான் அதை உண்மையென நம்புவதற்கு ஆதாரமென்ன?”” என்பதே.
பெரும்பாலார் கொண்டிருக்கும் பெரும்பான்மையான அபிப்பிராயங் களுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதை நாம் முக்கியமாக உணரவேண்டும். அவர்கள் அவைகளை ஏன் நம்புகிறார்கள் என்பதற்குக் காரணமே இல்லை; அவர்களுடைய அபிப்பிராயங்கள் சரியென நிரூபிக்க அவர்களுக்கு ஆதாரமும் காட்ட முடியாது. “நீங்கள் அவ்வாறு ஏன் எண்ணுகிறீர்கள், அல்லது அவைகளை நம்புவதற்குக் காரணம் என்ன?” எனக்கேட்டால் அவர்களுக்கு விடையளிக்க முடியாது. அவ்வாறு கேட்டால் அவர்கள் திகைப்படைவார்கள். அம்மட்டோ? அம்மாதிரிக் கேள்விகள் கேட்பதைப் பெரிய தொந்தரவாகவும் எண்ணுவார்கள். அல்லது மிகப் பிரயாசைப்பட்டு ஏதாவது ஒரு மாதிரிக் காரணங்களைக் கூறுவார்கள் ஆனால் அவை பகுத்தறிவுக்கு முரணானவை என்பதை நீங்கள் வெகு சுளுவில் அறிந்துகொள்வீர்கள்.
ஆதாரமில்லாமலும் ஆராய்ந்து பாராமலும் மக்கள் பல விஷயங் களைச் சுளுவாக நம்பி விடுவதைப்பற்றி ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். ஆராய்ச்சி யுணர்ச்சியில்லாதவர்களும் சோம்பேறிகளும் சுயமாக ஒரு பொழுதும் சிந்தனை செய்யாதவர்களும் - ஏற்கனவே தாம் கொண்டுள்ள அபிப்பிராயங்களுக்கு முரணாக இல்லாதிருப்பின் - பிறர் கூறுவனவற்றை யெல்லாம் அப்படியே நம்பி விடுவார்கள்.
ஆனால் நுட்ப புத்தியும் ஆராய்ச்சியுணர்ச்சியும் சுயமாகச் சிந்தனை செய்யும் பழக்கமும் உடையவர்கள் தமது நம்பிக்கைகளுக்கும் அபிப்பிராயங்களுக்கும் பகுத்தறிவுக்கும் பொருத்தமான ஆதாரமுண்டா எனப் பாராதிருக்கமாட்டார்கள். பகுத்தறிவுக்குப் பொருந்தாத அபிப்பிராயங் களை யெல்லாம் - விஷயங்களை எல்லாம் - அவர்கள் நிராகரித்து
29 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
விடுவார்கள். பகுத்தறிவுக்குப் பொருத்தமானவைகளையெல்லாம் அவர்கள் நம்புவார்கள். அவ்வாறு நம்புவதினால் தமது பழைய அபிப்பிராயங்களையும் நம்பிக்கைகளையும் நிராகரிக்க வேண்டியதாக ஏற்பட்டாலும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.
“நீ எப்படியறிந்தாய்? அதை உனக்கு நிரூபிக்க முடியுமா? ஆதாரங்கள் எவை? நம்புவதற்குள்ள காரணங்களை நன்கு பரிசீலனை: செய்து பார்த்தாயா?”
என்பன போன்ற கேள்விகளை இடையறாது கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களிடம் இக்கேள்விகளை வெகு சாதுரியமாகக் கேட்கவேண்டும். மற்றும் இக்கேள்விகளைப் பிறரிடம் கேட்பதற்குமுன் ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்டுக்கொள்ளவும் வேண்டும்
மற்றும் ஒரு விஷயம். ஒரு விஷயம் சரியானதென்று நமக்குத் திருப்தி ஏற்பட்டால் அதை எவ்வாறு விளக்குவது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
கருத்துகள், அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள் முதலியவை எவ்வெக்காரணங்களால் நம்பவேண்டும் என்பது பின்னர் விளக்கிக் கூறப்படும். தம் பார்வைக்கு வரும் விஷயங்களை எவ்வாறு பரிசீலனை செய்து உண்மை காணவேண்டும் என்பதை வாசகர்களுக்கு ஒருவாறு விளக்குவதே நமது தற்கால நோக்கம்
1. பிறர் முடிபினாலும்
2. நமது சொந்த முடிபினாலும்
அபிப்பிராயங்களும் நம்பிக்கைகளும் ஆதாரமுடையவை எனக் கொள்ளலாம். தாமாக ஆராய்ச்சி செய்து முடிபுக்கு வராமல், ஆராய்ச்சி செய்து ஒரு முடிபுக்கு வந்துள்ள பிறர் அபிப்பிராயங்களை நம்புவதற்குள்ள நிபந்தனைகளை கீழே விளக்கிக் கூறுவோம் அவைகளை விளக்கிக் கூறிய பிறகு சுயமாகச் சிந்தனை செய்வதையும் ஒரு முடிபுக்கு வருவதையும் பற்றி விளக்குவோம்
பிறர் முடிபை ஓப்புக்கொள்ளுதல்
பிறர் முடிபுகளை நாமாக ஆராய்ந்து பாராமல் ஒப்புக்கொள்வது பகுத்தறிவுப்படி நியாயமாகுமா! நாம் அவ்வாறு ஒப்புக்கொள்ளலாமா!
ஆம்! தாராளமாக ஒப்புக்கொள்ளலாம்; பிறர் ஆராய்ச்சியையும் முடியையும் தமது ஆராய்ச்சியாகவும் முடிபாகவும் ஒப்புக்கொள்ளலாம்.
அறியப்பட்ட விஷயங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவைதான், அல்லது அறிய முயலுகிறவர்களுக்கெல்லாம் விளங்கக் கூடியவைகள். தான் என்று நம்பிய காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தக்காலம் மலையேறி விட்டது. இன்று அறியப்பட்டுள்ள விஷயங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை
குடி அரசு - 1936 (2), 270
அல்லது லக்ஷத்தில் ஒரு பகுதியைக் கூட ஒருவன் அறிந்துகொள்வது சாத்தியமல்ல. எனவே நாம் சொந்தமாக ஆராய்ந்து ஒரு முடிபுக்கு வரமுடியாத விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஏனெனில் அவ்விஷயங்களைப் பற்றி நாம் எதுவுமே அறியோம்
ஏதேனும் ஒரு துறையில் இதுகாறும் வெளிவந்துள்ள உண்மைகளை நாமாகவே ஆராய்ந்து பார்த்து ஒப்புக்கொள்ள வேண்டுமானால் நாம் வாழ்நாள் முழுதும் செலவு செய்தாலும் முடியாது. பிரபஞ்ச அமைப்பைப்பற்றி வானசாஸ்திரிகளும் கணித சாஸ்திரிகளும் கூறியுள்ள உண்மைகளை யெல்லாம் நாமும் ஆராய்ந்து பார்த்து முடிபுகட்ட வேண்டுமானால் நம் வாழ்நாள் முழுதும் அம்முயற்சியில் ஈடுபடவேண்டியதாகவே ஏற்படும் மேலும் அத்தகைய ஆராய்ச்சியில் நாம் ஈடுபட்டாலும் பல விஷயங்களில் நாம் பிறர் முடிபுகளைத்தான் ஒப்புக்கொள்ளவேண்டியதாக வரும் பூகர்ப்ப சாஸ்திரிகள் - பிரகிருதி நூல் வல்லார் - உயிர் நூல் வல்லார் - மநோதத்துவ ஆராய்ச்சியாளர் - மனிதவர்க்க ஆராய்ச்சியாளர் - பிறமொழி நூல் மொழிபெயர்ப்பாளர் - பிறநாட்டு அரசியல் விஷய நிபுணர்கள் - இஸ்லாம் மத ஆராய்ச்சியாளர் - ஜப்பானிய சரித்திராசிரியர்கள் - சுகாதார நிபுணர்கள் - கஷயரோக நிபுணர்கள் - முதலியோர் கண்ட உண்மைகளை யெல்லாம் நாமும் ஆராய்ந்து முடிபுகாண எண்ணுவது சாத்தியமாகுமா! அவைகளை அப்படியே நம்புவதைத் தவிர வேறு வழியுண்டா! ஆகவே இத்தகைய விஷயங்களில் பிறர் முடிபுகளை ஒப்புக்கொள்வது தவறாகாது.
ஒரு துறையில் தற்காலம் வெளிவந்துள்ள அறிவுகளை - அல்லது உண்மைகளை யெல்லாம் அறியாத ஒருவன் - அவ்வுண்மைகளைக் காணப் பிறர் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கிறார்கள் என அறியாத ஒருவன் - இதுகாறும் அறியப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உண்மைகளில் சிலவற்றைத் தான் அறிந்துள்ளதாக பாவித்துக்கொண்டு, இதுகாறும் அறியப்பட்டுள்ள உண்மைகளையெல்லாம் அவனும் ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது எவ்வளவு மதியீனம்? ஒரு பிரச்சினையைப் பற்றிய தகவல்கள் எவ்வளவுக்கெவ்வளவு சுருக்கமாக அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்தப் பிரச்சினை சுளுவான தென்று அவர்கள் நம்பிவிடுகிறார்கள். ஏதேனும் 10 விஷயங்களை நாம் அறிந்திருந்தால். அவைகளுக்குப் பொருத்தமான ஒரு கொள்கையை நிர்ணயம் செய்வது அவ்வளவு கஷ்டமானதல்ல. ஆனால் நமக்குத் தெரியாதவைகளும் - பிறர் அறிந்துள்ளவைகளுமான 5 லக்ஷம் விஷயங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் நாம் கண்ட கொள்கைகள் என்னவாகும் 10 விஷயங்களுக்குப் பொருத்தமான கொள்கை 10 ஆயிரம் விஷயங்களுக்குப் பொருத்தமாக இருக்குமா?
மற்றும் விஷயாராய்ச்சி செய்ய, விஞ்ஞான முறையில் பழக்கம் பெற்ற மனம் முக்கியமான தேவையாகும்; அந்த மனம் காரண காரிய ஆராய்ச்சியில் வெகு காலம் பழகி அனுபவம் பெற்றிருக்கவேண்டும் ந... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அம்மாதிரி விஷயங்களில் பிறர் முடிவுகளை நாம் ஒப்புக்கொள்ளக் கூடாதுதான். பிறர் சித்தாந்தங்களை ஒப்புக் கொள்வதும் உசிதமல்ல
நமக்கு வேண்டுவது பகுத்தறிவுக்குப் பொருத்தமான முடிபே ஏனெனில் பகுத்தறிவுக்கொத்த முறையில் ஆராய்ச்சி செய்து கண்ட முடிபுகளை நமக்கு நிராகரிக்க முடியாது இதனாலேயே, ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நாமாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியமில்லையென்றும் பிறர் முடிபுகளை ஒப்புக் கொண்டால் போதுமென்றும் ஏற்படுகிறது
நம்பத்தக்க பிறர் முடிபுகளை ஒப்புக்கொள்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதே. அவர்களது முடிவுகளுக்கு ஆதாரமாக உள்ளவைகளை நாம் ஆராயத் தேவையில்லை. எனினும் ஒரு ஆராய்ச்சி வேண்டியதுதான். எனவே அவர்களுடைய முடிபை நாம் ஆராயத் தேவையில்லை. முடிபு செய்தவர் களைப் பற்றி நாம் ஆராயவேண்டும். நமது ஆராய்ச்சியில் அவர்கள் சரியானவர்கள் எனத் திருப்தி ஏற்பட்டால் அவர்கள் முடிபுகளை தாராளமாக ஒப்புக் கொள்ளலாம். பிறர் முடிபுகள் நமக்குத் திருப்தியளிக்கா விட்டால் ஒன்றில் நாமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்; அல்லது எத்தகைய முடிபையும் ஒப்புக் கொள்ளாமல் திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - செம்டம்பர் 1936
குடி அரசு - 1936 (2),
ப பி
காங்கிரஸ் ஏற்பட்டது பிமிட்டீசாரை வாழ்த்தவே
காங்கிரஸ் வருணாச்சிரமம் கோருகிறது
ஜஸ்டிஸ் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கோருகிறது
தோழர்களே!
இன்று நமது மாகாணத்தில் காங்கிரஸ்காரர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்றும் இரண்டு கூட்டத்தார்கள் பிரமாதமாகவும் மிகவும் வேகமாகவும் பிரசார வேலைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்குள் பெரும்பாலும் எதைப்பற்றி சண்டை என்று நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
சீக்கிரம் நம் தேசத்தில் புதிய சீர்திருத்தங்கள் ஏற்படப் போகிறபடியால். அதற்காக சமீபத்தில் நடக்க விருக்கிற எலெக்ஷன்களில்தான் தான் வெற்றி பெறுவதற்காக ஒரு கட்சியானது மற்ற கட்சியின் மேல் குறைகூறுவது உண்மையென்று உங்களுக்கு அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
நம் தேசத்தில் ஒரு கட்சி மேல் மற்றொரு கட்சி துவேஷப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றது. துவேஷப் பிரசாரம் செய்வது என்ற கருத்து எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. நான் துவேஷப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று உங்கள் முன் வரவில்லை.
நானும் காங்கிரஸில் இருந்தவன் தான். காங்கிரஸ் பார்ப்பனர்களுடன்.
நான் ஒத்துழைத்திருக்கிறேன். ஆகையால் இப்பொழுதும்கூடகாங்கிரஸ்காரரைத் தாக்கிப் பேசுவதென்றால், என் மனதிற்கு மிகவும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் மீது குறைகூறவோ, பழிசுமத்தவோ நான் இங்கு வரவில்லை. ஆனால் அவர்கள் செய்யும் பொய்ப் பிரசாரத்திற்கும், சொல்லுகிற பழிகளுக்கும் பதில் சொல்லவேண்டும் என்கிற தன்மையிலேயே
நான் இங்கு வந்திருக்கிறேன்.
இந்தத் திண்டுக்கல்லில் இந்தப் பார்ப்பனர்கள் எத்தனையோ கூட்டங்கள் கூட்டி எங்களை ஓயாமல் வைதுகொண்டு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் வைதாலும் நாங்கள் அவர்களை பதிலுக்கு 23— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வைவது என்பது இல்லாமல் அவர்களுக்கு பதில் சொல்லுவது என்கிற ஒரு வேலையோடு நின்று விடுகிறோம். அவர்கள் 10, 20 பேப்பர்களை வைத்துக் கொண்டு எங்களை தமக்குத் தோன்றுகிறபடியெல்லாம் திட்டுகிறார்கள்; பழி சுமத்துகிறார்கள். நாம் இதற்கெல்லாம் சரியான முறையில் பதில் சொல்லாமல் இருந்து விட்டால் பாமர ஜனங்கள் ஏமாந்து போகமாட்டார்களா?
நமக்குள் உண்மையான குற்றம் ஒன்றுமே இல்லை. நாம் கேட்கிற கேள்விகள் ஒன்றுக்குமே அவர்கள் ஒழுங்காய்ப் பதில் சொல்லமுடியாது. நாக்கில் நரம்பு இல்லாமல் கள்ளுக்கடையில் இருந்துகொண்டு வைவது போல் வைவது தான் அவர்கள் பிரசாரமா யிருந்து வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரும் இதை ஆதரிப்பதுடன் தலையை ஆட்டி அங்கீகாரம் செய்கிறார்கள். இது மானங்கெட்ட முறை என்றும் பதிலுக்கு பதில் வருமென்றும் அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. நம் தலைவர்கள் ஊர்வலத்தில் இன்று அவர்கள் கழுதைகளின் கழுத்தில் அட்டைகளைக் கட்டி அந்த அட்டைகளில் பொப்பிலி என்று எழுதி விரட்டி விட்டார்கள்.
நாமக்கல்லிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். நாம் அவைகளைப் பிடித்துக்கொண்டு வந்து கட்டினோம். அவைகளைக் கட்டிவைத்து “கேளு கழுதையே கேள்; கேளு கழுதையே கேள்'' என்று பதில் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதற்குள் போலீஸ்காரர்களின் உதவியினாலும், மற்றவர்களது உதவியினாலும் காங்கிரஸ்காரர்கள் தங்கள். கழுதைகளை அவிழ்த்துக் கொண்டு போய் விட்டார்கள்.
அவர்கள் நம் தலைவர்களை தேசத்துரோகிகள் என்றும், உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் சொல்லித் திட்டுகிறார்கள். நாம் இப்படிப்பட்ட துவேஷப் பிரசாரத்திற்கு எவ்வளவு காலம் இடம் கொடுப்பது? எவ்வளவு காலம் பொறுத்துக் கொண்டிருப்பது?
அவர்கள் கழுதைகளின் கழுத்தில் பொப்பிலி என்று எழுதிக்கட்டினால் நமக்குக் கழுதைகள் அகப்படாதா? சத்தியமூர்த்தி என்று எழுதிக்கட்ட 10 கழுதைகள் அகப்படாதா? ஜவகர்லால் என்று எழுத 15 கழுதைகள் அகப்படாதா? காந்தி என்று எழுதிக்கட்ட 20 கழுதைகள் அகப்படாதா? அவர்களுடைய காலித்தனத்திற்கெல்லாம் வட்டிக்கு வட்டி போட்டு அடிக்கு அடியும் உதைக்கு உதையும் வசவுக்கு வசவும் கொடுக்க நமக்கு முடியாதா?
நாம் இப்படிச் செய்தால் அவர்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்?
ஆனால் நாம் அப்படி செய்ய ஆரம்பித்துவிட்டால் ஐயோ ஜஸ்டிஸ்
கட்சிக்காரர்கள் எங்களை வைகிறார்கள் என்று பெரிய கூச்சல் போடுவார்கள். வெள்ளைக்காரர்கள் வீட்டின் பின்புற வாசலில் நுழைந்து நம் மீது சாடி சொல்லுகிறார்கள்.
காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கும் பெரிய பதவிகள் வேண்டு மென்றும், பெரிய அதிகாரம் வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்கள்.
குடி அரசு - 1936 (2), 274
அவர்களுக்கு அவைகள் வேண்டுமென்றால் நாம் அதை மறுக்கவில்லை. அவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் அப்படி அதை பாமர மக்களிடம் எடுத்துச் சொல்லட்டுமே. இதை விட்டு விட்டு “ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் உத்தியோக வேட்டைக்காரர்கள்; தேசத்துரோகிகள்; நாங்கள் எல்லாம், தேசபக்தர்கள் தேசாபிமானிகள்'” என்றால் இதையெல்லாம் எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்? இன்றைக்கு ஜஸ்டிஸ் கட்சியானது காங்கிரசை விட எதில் மோசமாய் போய்விட்டது? அவர்கள் தலைவர்கள் யோக்கியதையை விட நம் தலைவர்கள் யோக்கியதை எதில் குறைவு? அவர்கள் கொள்கையை விட நம் கொள்கை எதில் குறைந்து
இருக்கிறது? இந்த இரு கட்சிகளுக்குள்ளும் எதில் வேற்றுமை இருக்கிறது என்று நீங்கள் ஆராய வேண்டும்
நாம் சட்டசபைக்குப் போக வேண்டும், மந்திரி பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும், மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்கிறோம். அப்படியே காங்கிரஸ்காரர்களும் சட்டசபைக்குப் போகவேண்டும், மந்திரி பதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், மக்களுக்கு நன்மைசெய்யவேண்டும் என்கிறார்கள். ஆனால் எதில் இவர்களுக்குள் வித்தியாசம்?
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் எல்லா சமூகத்தார்க்கும் அவரவர்கள் ஜனத் தொகைக்குத் தக்கபடி அதிகாரம் பதவி இவைகளில் விகிதாச்சாரம் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் காங்கிரஸ்காரர்கள் தேசத்துரோகம் என்கிறார்களே தவிர மற்றபடி வெள்ளைக்காரர்களிடம் நடந்து கொள்வதில் அவர்கள் இரகசியத்தில் கும்பிடு போடுகிறார்கள். நாம் வெளிப்படையாய் அவசியத்துக்கு ஏற்ற அளவு ஒத்து உழைக்கிறோம்
மற்றும் காங்கிரஸ்காரர் தங்கள் கொள்கையில் அடிக்கடி மாறி மாறியும் பொய் சொல்லியும் ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் ஜஸ்டிஸ்காரர் ஆதியில் என்ன என்ன தங்கள் கொள்கைகள் என்று வெளியிட்டார்களோ அதையே சொல்லிக் கொண்டும், அதையேதான் செய்துகொண்டும் இருக்கிறார்கள். காங்கிரஸ்காரரின் அடிக்கடி மாற்றப்படும் கொள்கைகளிலும் தோழர்கள் சுப்பராயன் அவர்களுக்கு ஒரு கொள்கை; ராஜகோபாலாச்சாரியாருக்கு மற்றொரு கொள்கை; சத்தியமூர்த்திக்கு ஒரு கொள்கை; ஜவகர்லாலுக்கு ஒரு கொள்கை; காந்திக்கு மற்றொரு கொள்கை,
ஜவகர்லால் காந்தியை ஒப்புக் கொள்வதில்லை, காந்திக்கும் ஜவஹர்லாலுக்கும் சத்தியமூர்த்திக்கும் கொள்கையில் வேற்றுமை. இவர்களெல்லாம் எதில் ஒற்றுமை என்றால் மற்ற எல்லாச் சமூகத்தாரையும் ஏமாற்றுவதில் மட்டும் தான்.
மற்ற கட்சியாரெல்லாம் தேசத்துரோகிகள் என்றும் அவர்களுக்கு வோட்டுகளைப் போடாமல் காங்கிரஸ்காரருக்கே வோட்டுப் போடுங்கள் என்றும் அவர்கள் சொல்லுகிறார்கள். மற்றும் நாம் வகுப்பு வாதிகளாம்; ராஜபக்தர்களாம். இவர்கள் வகுப்பு வாதிகள் அல்லவா? ராஜபக்தர்கள் அல்லவா? பத... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
1885-ல் காங்கிரஸ் ஸ்தாபனமானது ஏற்பட்டது. அப்பொழுது முதல், அது ராஜபக்தி காட்டி வந்ததோடு தேசத்தின் நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு உத்தியோகம் வேண்டுமென்றும், அதிகாரத்தில் பங்கு பதவி வேண்டு மென்றும் வெள்ளைக்காரர்கள் பார்க்கும் உத்தியோகமும் வாங்குகிற சம்பளமுமே இந்தியர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வெள்ளைக்காரரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு வந்ததும் அவர்கள். அப்படியே அடைந்து அனுபவித்துக்கொண்டு வந்ததும் வெள்ளைக்காரர்களே இந்த நாட்டில் இருந்து என்றென்றும் அரசு புரியவேண்டும் என்று சொன்னதும் நமக்குத் தெரியாதா? இந்தப்படி பெற்று இவர்கள் அனுபவித்தால் அது தேசபக்தி! தேசாபிமானம்! நாம் அனுபவித்தால் தேசத்துரோகமா? எ.ஓ. ஹியூம் என்ற வெள்ளைக்காரர் இந்தக் காங்கிரஸை ஏற்படுத்தி இந்த மாதிரியாக வெள்ளைக்காரரைக் கேட்டுக்கொள்ளும்படி தீர்மானம் செய்ய யோசனை கொடுத்ததையேற்றுக் கொண்டார்கள். காங்கிரசானது எந்தெந்தக் காலத்தும் பிரிட்டனும் இந்தியாவும் ஒன்றாய்ப் பிணைத்துக் கட்டினதுபோல் இருந்துகொள்ள வேண்டி விரும்புவதாகவும் முதல் கொள்கை ஏற்படுத்தினார்கள். அந்தப்படியே ஒவ்வொரு காங்கிரசிலும் ராஜவிஸ்வாசப் பிரமாணமும் காங்கிரஸ்காரர்கள் செய்து கொடுத்துக்கொண்டு வந்தார்கள். இதை யர் புக் என்ற புஸ்தகத்திலும் காங்கிரஸ் சரித்திரம் என்ற புஸ்தகத்திலும் நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம், 1914-ம் @ சென்னையில் கூடிய காங்கிரசிற்கு நானும் 10 ரூபாய் கொடுத்து டெலிகேட்டாகப் போயிருந்தேன். அதுசமயம் சென்னை கவர்னராக இருந்த பெண்ட் பிரபு அவர்களும் காங்கிரசுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் அவரும் இடையில் வந்தார். அப்பொழுது சுரேந்திரநாத பானர்ஜியானவர் நடவடிக்கைகளை யெல்லாம் அப்படியே நிறுத்திவிட்டு ஏற்கெனவே பாஸ் செய்திருந்த ராஜவிஸ்வாசப் பிரமாணம் நிற்க, அதிகப்படியாக இருக்கவென்று, திரும்பவும் ராஜ விஸ்வாசத்தை தெரியப்படுத்துகிறதாக தீர்மானம் கொண்டுவந்து பிரமாதமான ஒரு பிரசங்கம் செய்தார். இப்பவும் கூட காங்கிரஸ்காரர்கள் சட்டசபைகளிலும் லோக்கல் போர்டுகளிலும் மெம்பர்களாக நுழைந்து அங்கம் வகிக்கிற பொழுது, தாம் இந்த அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் சட்டசபையின் சட்ட முறைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதாகவும், இந்த ராஜாவுக்கும் இந்த ராஜாவின் பின் வரும் சந்ததிகளுக்கும் - அதாவது பார்க்காமல் கொள்ளாமல் இனிமேல் பிறக்கப்போவதாக இருக்கிறவர்களுக்கும் ராஜவிஸ்வாசமாக இருப்பதாகப் பிர்ம முடிச்சைப் பிடித்துக் கொண்டு பிரமாணம் செய்து கொடுத்து விட்டுத்தானே உட்காருகிறார்கள். இந்தப்படி இவர்கள் பிரமாணம் செய்து சதா திட்டம் செய்து கொடுத்து பெரிய சம்பளங்கள், பதவிகள், அதிகாரங்கள் இவற்றை அனுபவித்தால் அது தேச பக்தி! தேசாபிமானம்! மற்றவர்கள் செய்தால் அது தேசத்துரோகமா? நமக்குப் பொய்ச் சத்தியம் பண்ணத் தெரியாது, அவர்கள் அப்படி சத்தியம் செய்தால் சுவர்க்கமும் மற்றவர்கள் செய்தால் அவர்களுக்கு நரகமும் வந்துவிடுமா?
குடி அரசு - 1936 (2), 276
ஜஸ்டிஸ் கட்சியின் மேல் வீண் துவேஷப் பிரசாரம் செய்கிறார்கள்; தூற்றுகிறார்கள். மந்திரிகள் 4000 ரூ. சம்பளம் வாங்கி எடுத்துக் கொள்ளுவதாகச் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு தான் இந்த சம்பளம் ஏற்பட்டதா அல்லது அதற்கு முன்னாலேயே இருந்ததா என்று யோசித்துப் பாருங்கள். காங்கிரஸ்காரர்கள் 1885-ம் வருஷம் முதல் 1910 அல்லது 1918 வரையில் கூட இந்தப்படி கேட்கவில்லையா? இந்த மாதிரி கேட்டுத்தானே. கிருஷ்ணசாமி ஐயர், சி.பி. ராமசாமி ஐயர், சிவசாமி ஐயர், பி ராஜகோபாலாச்சாரியார், ஸ்ரீனிவாச ஐயங்கார், வெங்கட்டராம சாஸ்திரியார் இவர்களெல்லாம் அனுபவித்தார்கள். இவர்கள் வேலை பார்த்தால் நாட்டை பவெள்ளைக்காரருக்கு காட்டிக்கொடுக்கவில்லை. தேசாபிமானிகள்'' ஆனால், நாம் பார்க்கிறபோதுதான் தேசத்தைக் காட்டிக்கொடுத்துவிட்டோமாம்; தேசத் துரோகிகள் ஆய்விட்டோமாம். வெள்ளைக்காரருக்கு அடிமைகளாக ஆய்விட்டோமாம். இதென்ன அக்கிரமம் என்கிறேன். இவ்வளவுதானா?
இவர்கள் இப்படிப்பட்ட பெரிய பதவிகளை அடைந்து பெரிய சம்பளங்களை அனுபவித்ததால் அதற்காக இவர்களை தேசாபிமானிகள் என்று சொல்லி இவர்களுக்கு சிலைகள் கூட பீச்சில் வைக்கப்பட்டிருக்கின்றன. பட்டணம் பீச்சில் கிருஷ்ணசாமி ஐயர் சிலையைப் பாருங்களே! இந்தப் பார்ப்பனர்கள் தாங்கள் பெற்ற மகா பெரிய சம்பளங்களைக் கொண்டு தாங்களே வீடு வாசல் கட்டி சுகமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். மைலாப்பூர் அரண்மனைகள் தேசபக்தியால் ஏற்பட்டனவா? ஆனால் நம்முடைய மந்திரிகளின் செலவுகளைப் பாருங்கள்! உள்ள திட்டத்திற்கு 1000 ரூபாயை ஒவ்வொருவரும் குறைத்துக் கொண்டார்கள். ஒவ்வொருவரும் கட்சியின் பத்திரிகைக்கு தலைக்கு 1000 ரூபாய், 1200 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. பிரசார வேலைக்கு தலைக்கு 500 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. வருமான வரி மாதம் 400, 500 செலுத்த வேண்டியிருக்
கிறது. மிச்சம் இருப்பதை எலெக்ஷனில் செலவு செய்துவிட்டு வேலை போன பின்பு வீட்டில் குந்திக்கொண்டு வக்கீல் வேலை செய்துதான் சாப்பிட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்கள் சொந்த சொத்தில் சாப்பிடுவார்கள். காங்கிரஸ்காரர்கள் உத்தியோகங்கள் செய்து ஏகமாய் அனுபவித்து வருகிற பணத்தில் தேசபக்தி என்று முத்திரை போடப்பட்டு இருக்கிறதா? பொப்பிலி ராஜாஅவர் வாங்குகிற 3300 ரூபாய் சம்பளத்தையும் ஜஸ்டிஸ் பேப்பருக்குக் கொடுத்துவிட்டு போதாமல் கையிலிருந்து இன்னம் 4000 ரூபாய் கட்சிக்காக செலவு செய்யவேண்டியதாக இருக்கிறது
மந்திரியாக இருந்த சிவஞானம்பிள்ளை தான் ஏற்கெனவே வேலை பார்த்து வாங்கிக்கொண்டிருந்த பென்ஷனைக் கொண்டுதான், சாகும் அளவும் காலம் கழித்தார். முத்தைய முதலியார் எல்லாவற்றையும் எலெக்ஷனில் தொலைத்துவிட்டு வக்கீல் வேலை செய்து பிழைக்கிறார். முனிசாமி நாயுடு செத்துப்போனதும், பண முடிப்பு வசூல் பண்ணிக்கொடுத்து
277 ய... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அவரது குடும்பத்தை பிழைப்பிக்க வேண்டி யிருந்தது. மந்திரியாக இருந்த கனம் சேதுரத்னம் ஐயர் வேலையைவிட்டதும் செலவுக்குப்பணம் போதாமல் கிரிமினல் கேஸில் மாட்டிக்கொண்டு எல்லாவற்றையும் தொலைத்துவிட்டார். காங்கிரஸ் பார்ப்பனர்களோ லட்சக்கணக்கில் அனுபவித்து பணம் சேர்த்து பத்திரமாய் வைத்துக்கொண்டு சுகமாக காலம் கழிக்கிறார்கள். இவர்களுடன். நாமும் சேர்ந்துகொண்டு, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் உத்தியோக வேட்டைக் காரர்கள், தேசத்துரோகிகள் என்று கூச்சல் போட்டால் நம்மிலும் முட்டாள்கள்.
யார் இருக்க முடியும்?
காங்கிரஸ் ஏற்பட்டதே பிரிட்டிஷ்காரரை வாழ்த்துவதற்குத்தான். அதனுடைய முதல் திட்டமே “நாங்கள் வெள்ளைக்கார ராஜாவிடத்திலும் அவருடைய குடும்பத்தாரிடத்திலும் பக்தியாகவும் விஸ்வாசமாகவும் நடந்து கொள்வோம்” என்பதே. ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அவ்விதம் செய்தால் அதற்காக வெள்ளைக்காரர்களை வெறுக்கிறதுபோல் காங்கிரஸ்காரர்கள் பாசாங்கு செய்கிறார்கள். தாம் பெரிய ராஜத்துரோகிகள் போல் காட்டிக்கொண்டு பேசுகிறார்கள். பிறகு வெள்ளைக்காரர்கள் வீட்டுக்கும் கவர்னர் வீட்டுக்கும் போய், “நாங்கள், அனுமார் ராமனிடம் எப்படி பக்தியாயும் அடிமையாயும் இருந்தாரோ அதைவிட 100 பங்கு அதிக பக்தியாயும் அடிமையாயும் நடந்துகொள்வோம்” என்று சொல்லிக் கெஞ்சகிறார்கள். நாம் இதற்கெல்லாம் எப்படி ஏமாந்து கொண்டிருக்க முடியும்?
இவர்களுடைய லெக்சர்களும் தீர்மானங்களும் கவர்ண்மெண்டை அசைக்க முடியாது. மோதிலால் நேருவானவர் சட்டசபையில் பிரமாதமாகப் பேசினார்; மேஜையைத் தட்டினார்; புஸ்தகத்தைத் தூக்கி எறிந்தார்; கடைசியாக அவர், “நாம் இந்த கவர்ண்மெண்டை அசைக்க முடியாது. நமக்கு
சட்ட சபைக்குள் வேலையே இல்லை. நம் வேலையெல்லாம் பொது ஜனங்கள் முன்புதான்” என்று அரை மணிநேரம் பேசிவிட்டு வெளியேறினார்.
சீர்திருத்தச் சட்டங்களில் அப்படி பாதுகாப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. காங்கிரஸ்காரரான அவினாசிலிங்கம் செட்டியாரே காங்கிரசுக்குப் பயந்துதான் அப்படிப்பட்ட பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன"' என்று சொல்லி யிருக்கிறார். இவ்வளவு பாதுகாப்புகளை வைத்துக்கொண்டு நாம் கவர்ன்மெண்டை என்ன செய்துவிடமுடியும்? காங்கிரசின் எந்த ஒரு தீர்மானம் எங்கேஅமுலுக்குவந்தது? காங்கிரஸ்காரர்கள்வீணில் கத்திக்கொண்டிருப்பதைத் தவிர ஜனங்களுக்கு என்ன சாதித்ததாகச் சொல்ல முடியும்? (தொடர்ச்சி 11.10.1936 குடி அரசு)
குறிப்பு: 27091936 gy நாள் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கட்டத்தில்
ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 04.10.1936
குடி அரசு - 1936 (2), 278
“தமிழ் நாடு?
“தமிழ்நாடு” பத்திரிகையை தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள். நிறுத்திவிடப்போவதாய் 26-9-36ந் தேதி தமிழ்நாடு பத்திரிகையில் தலையங்கம் எழுதி தன் கையெழுத்தையும் போட்டுவிட்டார். இது உண்மையாக இருக்குமோ அல்லது அவரது அரசியல் தந்திரங்களில் இதுவும் ஒன்றோ என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை
எப்படியானாலும்சரி “தமிழ்நாடு'' பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமானால் தமிழ் மக்கள் தோல்விக்கும் பார்ப்பனர்கள் வெற்றிக்கும் இது ஒரு இமயமலை போன்ற பெரியதும் சூரிய வெளிச்சம் போன்ற நிச்சபமானதுமான உதாரணமாகும்.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் முயற்சிக்கும், அவர்கள் இதுவரை பாடுபட்டுச் செய்து வந்த வேலைக்கும் சிறிதாவது பயன் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க வேண்டுமானால் அது பார்ப்பனப் பத்திரிகைகளின் செல்வாக்கும் செலவாணியும் எவ்வளவு குறைந்து இருக்கிறது என்பதைக் கொண்டுதான் அளவுக் கணக்கு எடுக்க முடியும்
அந்தப்படி பார்த்தால் பார்ப்பனரல்லாதார்களால் நடத்தப்படும் பத்திரிகைகள் எவ்வளவு முதல் வைத்து நடத்தப்படுபவைகளானாலும் வருஷா வருஷம் மலேயா, கொளும்பு, ரங்கூன் முதலிய இடங்களுக்குச் சென்று எவ்வளவுதான் பணங்கள் அரித்துக் கொண்டு வந்து நடத்துவதானாலும் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தான் அடிமைப்பட்டு நடத்தினாலும் குருடர்களை செந்தாமரை கண்ணன் என்றும் மூடர்களை மகாபுத்திமான்களே. என்றும், அயோக்கியர்களை உலகம் போற்றும் உத்தம சிகாமணிகளே என்றும், கோழைகளை பரிசுத்த வீரர்களே என்றும், சுய நல உருவங்களை மகாத் தியாகியே என்றும் கூறியும் எழுதியும் போற்றுதல் தொழிலுக்கும்
புகழ்தல் தொழிலுக்கும் அடிமையாக பலவித ஒழுக்க ஈனமான ஆதரவுகள் பெற்றும் நடத்துவதாய் இருந்தாலும் நித்திய கண்டம் நிமிஷ கண்டம் என்கின்ற நிலையில்தான் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகள் நடத்த
முடிகிறது. ஒவ்வொரு வினாடியும் அவைகளுக்கு மங்களம் பாடவேண்டிய அவசியத்தில் தான் இருந்து வருகின்றன.
பார்ப்பனப் பத்திரிகைகளோ ஒன்றும் அஸ்திவாரமே இல்லாமலும் எவ்வித ஆதாரமும் இல்லாமலும் யாரோ ஒரு அனாமதேய அன்னக்காவடி
279 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பார்ப்பனர்களால் ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அது ஒரு அதாரபிரதிநிதித்துவ பத்திரிகை போலவும் அடுத்த நிமிஷத்துக்கு வேண்டிய சாதனங்கள் இல்லாவிட்டாலும் எவ்வித கவலையோ அதிருப்தியோ இல்லாத நிலையிலும் நடந்து வருகின்றவைகளாகவும் இருந்து வருகின்றதைக் காணலாம். அதை
மீறி ஏதாவது பத்திரிக்கை கொஞ்ச நாளைக்காவது நிறுத்தப்பட வேண்டியதாய் இருந்தாலும் தக்க லாபத்துடன் தான் பணம் மீதி செய்து கொண்டு நிறுத்தி நடத்தக்கூடியதாய் இருக்கக்கூடியதாய் இருக்குமே தவிர கை முதலோ, பெருமையோ, நாணயமோ கொள்கையற்று திண்டாடியோ நட்டமடைந்தோ நிறுத்தப்பட வேண்டியதாக ஏற்படுவதே இல்லை. உதாரணமாக இந்த 15 @ காலத்தில் “ஜஸ்டிஸ்” பத்திரிக்கைக்கு
சுமார் 3, 4 லக்ஷ ரூபாய் கைப்பொறுப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றாலும்
இன்றும் பொப்பிலி ராஜா பொக்கிஷத்தில் கைவைக்காவிட்டால் பத்திரிகை: ஆபீசு மூடப்பட வேண்டிய நிலையில் தான் இருந்து வருகிறது
1933-ம் வருஷத்தில் “ஜஸ்டிஸ்” பத்திரிகை தீவாளி ஆசி நிறுத்தப்பட்டு ஐ.பி.க்கு வந்து கடன் கொடுத்தவர்களுக்கு 60, 70 ஆயிரம் ரூபாய் நட்டமேற்பட்டு மறுபடியும் பொப்பிலி ராஜாவால் பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டு ஈ.வெ.ராமசாமியால் ஆதியில் தனது அச்சு மிஷின் இலவசமாய் உதவப்பட்டு “நியுடைம்ஸ்” என்ற பத்திரிகையாக “ஜஸ்டிஸ்” மறுபிறவி எடுத்து இப்போதும் எதோ மந்திரிகள் உதவியால் வெள்ளைக்காரர்களுக்கு மாத்திரம் விஷயம் விளங்கினால் போதும் என்கின்ற நிலையில் தான் இருந்து வருகிறது
பார்ப்பனரல்லாதார் இயக்க மற்றொரு பத்திரிக்கையாகிய “திராவிடன்” பத்திரிகையோ அதுவும் லக்ஷக்கணக்கான முதலை சாப்பிட்டுவிட்டு ஈ.வெ ராமசாமி தலையிலும் பத்து இருபது ஆயிரம் ரூபாய்க்கு கையை வைத்துவிட்டு ரிசீவர் கைக்குப் போகவேண்டியதாகி நாட்டுக் கோட்டை செட்டியாரால் ஏலத்தில் எடுக்கப்பட்டு காங்கிரசிலும் பார்ப்பனரல்லாதார். இயக்கத்திலும் மந்திரி வேலைக்கு வியாபாரம் பேசிக்கொண்டு பெயர் போர்டு பலகையும் ஒடிந்த மிஷினும் உருக்கவேண்டிய ஈயமுமாய் தியாகராய ஞாபகக் கட்டடத்தில் சிறைப்பட்டுக் கிடக்கின்றது. மற்றும் எதைப்பற்றிச் சொல்லவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
10, 12 வருஷ காலமாய் நடந்துவந்த “குடி அரசும் டாக்டர்கள் கை விட்டுவிட்ட காயலாக்காரன் போலவே காலந்தாட்ட வேண்டி இருக்கிறது என்று தைரியமாய் சொல்லக்கூடிய நிலையில் இருக்கிறது. தாங்க முடியாத நஷ்டம் வந்து விடவும் இல்லை; நஷ்டம் அனுபவிக்க வேண்டிய நிலையிலும் இல்லை; அதனால் ஒரு நன்மையும் ஏற்பட்டு விடவில்லையே என்று ஏமாற்றமடைய வேண்டிய நிலையிலும் இல்லை. ஆனால் எத்தனை நாளைக்கு இந்த நன்றி கெட்ட, சுரணை அற்ற மக்களுடன் போராடிக்
குடி அரசு - 1936 (2), 280
கொண்டிருப்பதோடு எத்தனைதுரோகிகளின் சதிகளை சகித்துக்கொண்டிருப்பது என்கின்ற சலிப்பில் உயிர்வாழவேண்டியதாய் இருக்கும் காரணமே ஆகும் ஆகவே மொத்தத்தில் பத்திரிக்கைகளின் நிலையைக் கொண்டு பார்த்தால் பார்ப்பனரல்லாத மக்களின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதோடு “தமிழ்நாடு” நிறுத்தப்படுவதாலேயே தோல்விக் குறியும் தோன்றுகின்றது என்று நினைக்கவேண்டி இருக்கிறது என்பதைக் காட்டவே இவ்வளவு எழுதினோம்.
“தமிழ்நாடு” பத்திரிகை விஷயத்தில் அது எப்படி நடத்தப்பட்டு வந்திருந்தாலும் ஆதியில் நம்மை எவ்வளவு வைதிருந்தாலும் நாம் அதனிடம் எவ்வளவு அதிருப்தி கொண்டிருந்தாலும் இந்த 6, 7 வருஷ காலமாக அதன் வளர்ச்சியிலும் வாழ்விலும் கவலைகொண்டே இருந்தோம். பார்ப்பனர் போலவே தங்களுக்குள் உள்ள வேறுவித அபிப்பிராயங்களை லட்சியம் செய்யாமல் இருப்பதுபோல் இருந்து பத்திரிக்கை வளர்ச்சிக்கு அதிக நன்மை செய்யாவிட்டாலும் அதன் மேன்மையில் ஆசைகொண்டே வந்தோம்
பல சந்தர்ப்பங்களிலும் நமது காரியாலயத்தில் இருந்து ஒரு காலணா தினசரி வெளியாக்க வேண்டும் என்று ஏற்பட்ட சந்தர்ப்பங்களையும் செளகரியங்களையும் ஏற்கனவே ஏற்பட்டு இருந்ததையும் எல்லாம் தடுத்தே வந்தோம். என்ன செய்தும் “தமிழ்நாடு” நிறுத்தப்படவேண்டிய நிலைமையை எய்துகின்றது என்றால் அது தோழர் வரதராஜுலு நாயுடு தோல்வி மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் தலை தூக்குவதை தாழ்த்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும் என்று மறுபடியும் சொல்லுகிறோம் அதோடு கூட பார்ப்பனருக்கு விரோதமாய் இந்த நாட்டில் பத்திரிக்கை நடத்த முடியாது என்பதையும் கல்லில் எழுதுவதுபோல் ஆகிறது என்றும் சொல்ல
வேண்டி இருக்கிறது தோழர் கல்யாணசுந்தர முதலியார் பார்ப்பனருக்கு பின் தாளம் போடுகிறார் என்றால் காற்றில்லாமல் வாழ்ந்தாலும் வாழலாம் பார்ப்பனர். தயவில்லாமல் அவர்களது முகவிலாச புன்சிரிப்பு இல்லாமல் வாழ முடியாது என்கின்ற நிலைமை அடைந்ததால் தான் என்று சொல்லவேண்டி இருக்கிறது. தேச பக்தன்” தோழர் கல்யாணசுந்தர முதலியாரால் நடத்தப்படுகிற காலத்தில் அவர் பார்ப்பனரல்லாத பெரியார்களை வைகின்றதற்கே அவரது பேனாவை காலத்திலும் அகாலத்திலும் சந்தர்ப்பத்திலும் அசந்தர்ப்பத்திலும் பயன்படுத்திய காரணத்தால் முதல் முதல் தமிழ் நாட்டுக் காந்தி என்ற
பட்டம் பெற்றவர் அவரேயானார். பிறகு சிறிது அதனால் “சுதேசமித்திர"னுக்கு அசெளகரியம் ஏற்பட்டது என்று தெரிந்த உடனே அவரைக் களரியைப்
பிடித்து உந்தி விட்டார்கள்.
இப்படி இன்னம் எவ்வளவோ உதாரணம் எடுத்துக் காட்டலாம்
தமிழ்நாடு” நிற்பதானாலும் சரி, நடப்பதானாலும் சரி, அது கொள்கைகளுக்கு சதா திண்டாடிக் கொண்டே வந்தது என்றாலும் சரி,
28] ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அதன் உண்மையான உழைப்பு ஒன்றை நாம் மறுப்பதற்கு இல்லை என்பதோடு அதற்குநன்றிகாட்டாமல் இருக்கமுடியாது என்றும் சொல்லுவோம். அதாவது பார்ப்பனரல்லாதார் சமூகக் குறைகளை நன்றாய் அறிந்திருந்தது, கோபம் வரும்போதெல்லாம் தயவு தாக்ஷண்யமில்லாமல் பார்ப்பனர்களை வெளியாக்கிற்று, மக்களுக்கு சிற்சில சமயங்களில் தைரியமூட்டி வந்தது, பார்ப்பனீயம் ஒழியவேண்டும் என்பதில் மாத்திரம் கொள்கை மாறாமல் கடைசி வரை இருந்து வந்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்கு கூடுமானவரை தாராள நோக்கத்துடன் விளம்பரம் கொடுத்து வந்தது. சுயமரியாதை இயக்கத்தை ஆதியில் எதிர்த்தபோதிலும் 5, 6 வருஷகாலமாக அது செய்ய வேண்டியதற்கு மேலாகவும் எதிர்பார்த்ததற்கு மேலாகவும் உதவிபுரிந்து வந்தது. இவற்றை நாம் மறக்கவே மாட்டோம். “தமிழ்நாடு” உண்மையாகவே நிறுத்தப்பட்டு போகுமானால் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு சரியான நட்டமே யாகும் என்பது நமது உண்மையான அபிப்பிராயமாகும்
தோழர் நாயுடுகார் டிசம்பர் மாத ஆரம்பத்தில் “தமிழ்நாடு” நிறுத்தப்பட்டு விடும் என்று கூறுகிறார். 5, 6 வருஷகாலம் காங்கிரசைக் கண்டித்து வந்து கடைசி காலத்தில் காங்கிரசில் சேர்ந்த மூன்றாம்நாள். “தமிழ்நாடு” பத்திரிகையை நிறுத்திவிடப் போகிறேன் என்ற சன்மானத்தைப் பெற வேண்டியவரானார் என்றால் இவர் காங்கிரசில் சேர்ந்ததைப் பொது மக்கள் எவ்வளவு ஆதரிக்கிறார்கள் அல்லது இவரைக் காங்கிரஸ்காரர்கள் எவ்வளவு நம்புகிறார்கள் என்பதுதான் அதிலிருந்து கண்டு பிடிக்கத்தக்கதாகும். எல்லாவற்றையும் உத்தேசித்து நாம் ஒரு யோசனை கூறுகிறோம். அதாவது டிசம்பரில் நிறுத்தப்போகும் பத்திரிகையை (உண்மையாய் இருந்தால்) பிப்ரவரி 15-ந்தேதி வரையில் நடத்தி அப்புறம் அவசியமானால்
நிறுத்துவதற்கு முடிவு செய்யும் படி வேண்டுகிறோம் ஏனெனில் பிப்ரவரி முதல் வாரத்தில் சட்டசபை எலக்ஷன் நடக்கிறது பிப்ரவரி 15-ந் தேதி வாக்கில் முடிவு தெரிந்துவிடும். அப்போது பார்ப்பனரல்லாதார் கட்சி ஜெயித்தால் கண்டிப்பாக தமிழ்நாடு” நிறுத்த வேண்டிய அவசியம் வராது. தோற்று விட்டாலோ தமிழ்நாடு” பத்திரிகைக்கு வெகுகிராக்கியான தேவை இருக்கும்படியான நிலைமை ஏற்படும். அந்தச் சமயம் தமிழ்நாடானது ஒரு புரட்சி நடக்கும் நாடு போல் உற்சாகமும், உணர்ச்சியும், வேகமும் உள்ள நாடாய் இருக்கும். தோற்றவுடன் இப்போது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைக்காரர்களாக இருப்பவர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சியில் பிரமுகர்களாகவும் தலைவர் களாகவும் இருக்கும் நிலை ஒழிந்து அக்கட்சியை நம் போன்றவர்களும் தோழர் வரதராஜுலு போன்றவர்களும் நடத்தும்படியான நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். வெற்றி ஏற்பட்டால் தான் நம் போன்றவர்களுக்கு
மதிப்பும் வேலையும் நன்மையும் எழுச்சியும் இல்லாமல் போனாலும் போகலாமே ஒழிய தோல்வி (ஏற்படாது) ஏற்பட்டு விட்டாலோ ஒரு 5
குடி அரசு - 1936 (2) 28
&
வருஷ காலத்துக்குள் சென்ற 10 வருஷ கால முன்னேற்றம் ஏற்படும்படிகாலச்
சக்கரத்தை உருட்டிவிட முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்
ஆதலால் கூட இரண்டே மாதம் பொறுத்துப் பார்த்து பிறகு அவரது முடிவை அமுல் நடத்தும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.
ஜஸ்டிஸ் கட்சியார் தினசரி நடத்தப் போகிறார்களா என்பதை 100-க்கு 50 வீதம் நம்பிக்கையைத்தான் வைக்கக்கூடியதாயிருக்கிறதே தவிர எந்த முடிவுக்கும் 51 வீதம் நம்பிக்கை வைக்க தைரியமில்லை.
தோழர் நாயுடுகாரு அவர்கள் 2 மாத காலம் வைத்தது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சி 3 பை பத்திரிகையும் வந்துவிட்டால் “தமிழ்நாடு” நிலைமை கஷ்டமாகி விடுமோ என்று நினைக்கிறாரோ என்பது சிலரின் ஹேஷ்யமாயிருக்கிறது
அப்படியே ஏற்பட்டாலும் ஜஸ்டிஸ் கட்சி தோற்றால் மறுபடியும் பணம் போட்டு பத்திரிகை நடத்துபவர்கள் யார் என்பது போட்டிப் பரிசு போன்ற விஷயமே. ஆதலால் எவ்வளவோ கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவைகளுக்கு இடையில் இந்த 10 வருஷ காலம் நடந்துவந்த “தமிழ்நாடு'' இனியும் ஒரு 4 மாதம் அதுவும் அவராகவே நடத்த ஏற்றுக் கொண்ட இரண்டு மாதம் தவிர மேற்கொண்டு 2 மாதகாலம் நடத்திப்
பார்த்து அப்புறம் ஒரு முடிவுக்கு வரவேண்டுகிறோம் அதுவரை பார்ப்பனரல்லாதார்களில் யாரை வைதாலும் சரி, அந்தக் கட்சியை எப்படி வைதாலும் சரி. அதற்கெல்லாம் பூரா (லைசென்ஸ்) அனுமதிச் சீட்டுக் கொடுக்கிறோம். அதைப்பற்றி யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்றும் உறுதி கூறுகிறோம் - நிறுத்தி விடுவது தமிழ் மக்களுக்கு நஷ்டமேயாகும்
குடி அரசு - தலையங்கம் - 04.10.1936
283 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இன்னுமா சந்தேகம்?
தோழர் ஜவஹர்லால் அவர்கள் தேர்தலுக்கும் பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்குக் கொடுக்கவும் வருகிறார் என்று சென்ற இரண்டு வாரமாக எழுதி வந்தோம். அதைப்பார்த்த ஒரு தோழர் நமக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். சென்னை கார்ப்பரேஷன் தேர்தல் இருக்கும்போதும் சில ஜில்லா போர்டு தேர்தல் இருக்கும் போதும் இந்த மாதிரி ஜவஹர்லால் அவர்களை பகிஷ்காரம் செய்வது வரவேற்புபத்திரம் மறுப்பது போன்ற காரியங்கள் நடக்குமானால் தேர்தல் பாதிக்கப்பட்டு விடாதா என்று கேட்கிறார்.
பிரசாரத்திற்கு தாராளமாய் அனுமதித்து பணம் வசூலுக்கும் இடந்தந்து ஒவ்வொரு முனிசிபாலிடியும் ஜில்லாபோர்டும் வரவேற்பளிக்கும் காரியத்துக்கு உதவி செய்து வந்தால் தேர்தலில் என்ன பலன் கிடைக்குமோ அதைவிடமோசமான பலன் ஒன்றுமே நமக்கு ஏற்பட்டு விடாது என்பதுதான்
நமது பதிலாகும்.
நாம் முன் குறிப்பிட்டது போலவே தோழர் ஜவஹர்லால் எங்கேயோ இருந்துகொண்டு இங்கு தேர்தலில் நிற்கும் ஆட்களின் யோக்கியதைகளையும் தராதரங்களையும் உணராமலே காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்கே ஓட்டுப்போடுங்கள் என்று “ஸ்ரீ முகம்” அனுப்பி இருக்கிறார் என்றால் அவர் பார்ப்பனர் கையாளாய் பார்ப்பனப் பிரசாரத்துக்கு வருகிறார். என்பதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம்
காங்கிரசின் பேரால் ஒருவர் நிறுத்தப்பட்டு விட்டால் அவர் பெரிய நாணயஸ்தரும் ஒழுக்கமுடையவரும் மேதாவியும் பொது ஜன சேவைக்கு தகுந்தவர்கள் ஆய்விட்டார்கள் என்று அர்த்தமா? காங்கிரசில் சேராததாலேயே எப்படிப்பட்டவரும் பொதுநல சேவைக்கு அருகதை அற்ற அயோக்கியர்கள் என்று அர்த்தமா என்று கேட்கின்றோம்
இன்றுகாங்கிரஸ்பேரால் அபேசுடிகர்களாக்குபவர்களுக்கு என்ன பரீட்சை
காங்கிரசில் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
தோழர்கள் உபயதுல்லா, கிருஷ்ணசாமி பாரதி, குப்புசாமி அண்டு கம்பெனியை கைக்குள் போட்டுக்கொண்டால், அவர்களை விலைக்கு வாங்கிக்கொண்டால் எப்படிப்பட்ட சாதாரண மனிதனும் காங்கிரஸ்காரனாகி ஜவஹர்லால் அவர்களால் அனுக்கிரகமும் ஆசியும் ஆதரவும் பெற்று விடக்கூடிய நிலையில் இல்லையா என்று கேட்கின்றோம். இதுவரை தமிழ்
குடி அரசு - 1936 (2), 284
நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரியார்களில் 100-க்கு சில இடங்களில் 50 பேர்களுடைய யோக்கியதைகள் எப்படியாக இருந்து வருகின்றன என்று கேட்கின்றோம்
காங்கிரஸ்காரர்களே அவர்களுக்கு எப்படிப்பட்ட நற்சாக்ஷிப் பத்திரங்கள் அளித்து வந்தார்கள் என்பது நாம் அறியாததா? அதிக தூரம் போக வேண்டியதில்லை. பெரிய தியாகிகள், தேச பக்தர்கள், தேசியவாதிகள் என்று அமிர்தாஞ்சனம் போல் விளம்பரம் பெற்றவர்களும் தனிப்பெருந் தலைவர் பட்டமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றவர்களுமான தோழர்கள் திருச்சி டாக்டர்கள் ராஜன், சாஸ்திரி கம்பினிகளின் கதி என்ன ஆயிற்று என்று கேட்கின்றோம். டாக்டர் ராஜன் காங்கிரஸ் கட்டளையை மீறினார்; துரோகப் பட்டம்பெற்றார்; காங்கிரஸ் பிரிவு கவுன்சிலான வேலை கமிட்டியாராலும் காங்கிரஸ் தலைவராலும் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார். அவருடைய நடத்தைக்கு ஆகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் கோவித்துக்கொண்டு காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகி அஞ்ஞாத வாசம் செய்கிறார். அப்படிப்பட்ட டாக்டர் ராஜன் மறுபடியும் திருச்சி முனிசிபல் அதே கவுன்சில் ஸ்தானத்துக்கு நின்றால் அவருக்கு போட்டியாக காங்கிரசுக்காரர்கள் ஆள் நிறுத்தக்கூடாது என்று தீர்மானம் செய்தார்கள் என்றால் காங்கிரசின் பேரால் ஆட்கள் நிறுத்துவதில் காங்கிரசுக்காரர்கள். எப்படிப்பட்ட ஒழுக்கத்தையும் நாணயத்தையும் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஏதாவது வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றோம்
சென்னையில் இவர்கள் எப்படிப்பட்ட ஆட்களை நிறுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தால் காலித்தனத்தில் தீரர்களுக்கு முதல் பிரைசும், பார்ப்பனர் களுக்கு இரண்டாவது பிரைசும், பணம் கொடுத்தவர்களுக்கு மூன்றாவது பிரைசுமாக கிடைத்து வந்திருக்கிறது. இந்த மகாத்மாக்கள்தான் திருநெல்வேலி முதல் திருவேங்கடம் வரை ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நிறுத்தப்பட்ட வர்களாம். அவர்களுக்கே ஓட்டு செய்யவேண்டுமாம்! புழுத்ததின் மீது மலங் கழித்த மாதிரி இந்த மகாத்மாக்கள் தேர்தலுக்கு நேரில் வந்து பிரசாரம் செய்யப் போவதோடு இதற்கு பணம் வேறு வசூலித்துக் கொடுக்க வருகிறார்களாம்
இந்தமாதிரி காரியத்துக்கு வருபவரை வரவேற்று உபசரிப்பது பணம் கொடுப்பது என்றால் இவர்களுக்கு பெயர்தான் சுயமரியாதையுள்ள மக்கள் என்பதா என்று கேட்கின்றோம்
வசவுக்கு பயந்து சிலர் பணம் கொடுக்கிறார்கள். மற்றும் சில காரியத்துக்கு சிலர் பணம் கொடுக்கிறார்கள்; கொடுக்கட்டும். ஆனால் அந்தப் பணம் எப்படிசெலவழிக்கப்படுகிறது? என்ன ஆகிறது? அதனால் தொல்லை படுகிறவர்கள் யார்? என்றுகூட கவனிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.10.1936
28 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காலித்தனத்தின் வளர்ச்சி
காங்கிரஸ் காலித்தனத்துக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது
தோலைக் கடித்து துருத்தியைக் கடித்து வேட்டை நாய் ஆகிவிட்டது என்பது போல் கூட்டங்களில் செருப்பும் முட்டையும் போட்டு வெளி முனிசிபாலிட்டிகளில் (திருச்சியில்) செருப்பும் முட்டையும் போட்டு இப்போது சென்னைகார்ப்பரேஷனிலேயே செருப்புகளும், முட்டைகளும் வந்து விழுக ஆரம்பித்து விட்டன. ஆகவே இனி சென்னையைப் பொறுத்தவரை சட்டசபை மண்டபத்தில்
வந்து விழுகவேண்டியதுதான் பாக்கி என்று சொல்ல வேண்டிய நிலைமையை எய்தி விட்டது
காங்கிரசுக்காரர்கள் மகாத்மா என்பவர் தலைமையில் 3, 4 கோடிரூபாய் செலவில் 40, 50 ஆயிரம் பேர் ஆண் பெண் அடங்க “அடி உதைபட்டு சிறை சென்று தியாகம் செய்த" தியாக புத்தியில் காங்கிரசால் படிப்பிக்கப்பட்ட படிப்பு கார்ப்பரேஷனில் மீட்டிங்கில் செருப்புகளும் அழுகல் முட்டைகளும் வந்து விழுந்த பெருமைதான்.
காங்கிரசுக்காரர்கள் இந்த இடங்களில் மாத்திரமல்லாமல் மற்றும் அநேக இடங்களிலும் மந்திரிகள் கூட்டங்களில் இப்படியே நடந்து
வருகிறார்கள். நாமக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை கட்டி ஓட்டினதும்
திண்டுக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை கட்டி ஓட்டினதும் சில இடங்களில் மந்திரிகளை அவமானப்படுத்தி கூட்டங்களில் செய்ததும் பொள்ளாச்சி திண்டுக்கல் கூட்டங்களில் தோழர்கள் அழகிரிசாமி பொன்னம்பலம் முதலியவர்கள் பேசும்போது முட்டைகள் எறிந்ததுமான காரியங்கள் காங்கரசு யோக்கியமான முறையில் வாழ முடியாது என்றும் வெற்றி பெற முடியாது என்றும் கருதும்படியான நிலையை அடைந்து விட்டதைத்தான் காட்டுகிறது. இவ்வளவுதானா என்றால் இதற்குமேல் போய் விட்டார்கள் என்பதற்கும் உதாரணங்கள் காட்டலாம்
என்னவென்றால் பொள்ளாச்சிக்கு தோழர் ஈ.வெ. ராமசாமி, பொன்னம்பலம், டி.ஜி. வெங்கிடாசலம் ஆகியவர்கள் போனபோது கூட்டத்துக்குதலைமைவகிக்கஒத்துக்கொண்டிருந்தமுனிசிபல் வைஸ்சேர்மென் அவர்களுக்கு ஒரு வசவும் பயமுறுத்தலும் கொண்ட கடிதம் எழுதி தபாலில்
குடி அரசு - 1936 (2), 286
அனுப்பினார்கள். அவர் அதை போலீசில் ஒப்படைத்து விட்டார். தோழர் ஈ.வெ. ராமசாமி 2 - ந் தேதி பொள்ளாச்சிக்குச் சென்ற உடன் ஒரு கடிதம் போஸ்டுமேன் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தக்கடிதம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது
இந்தப் படியும் ஆரம்பித்து விட்டார்கள். 1927, 28, 29 ஆகிய
வருஷங்களில் இப்படிப்பட்டகடிதங்கள் தினம்தோறும் வந்து கொண்டிருந்தன.
அதுபோலவே இப்போதும் ஆரம்பமாகி இருக்கிறது. இவற்றைக் கண்டு ஒரு வகையில் நாம் திருப்தி அடைகின்றோம். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தங்கள் நிலை மோசமானதென்றும் இம்மாதிரியான அயோக்கியத்தனங்களாலும் இழிதன்மைகளாலும் அல்லாமல் தாங்கள் வாழமுடியாது என்றும் உள்ள நிலைமையை அடைந்து தாங்கள் அடையப் போகும் தோல்வியையும் தெரிந்து விட்டார்கள் என்பதேயாகும்.
குத்துவது, சுடுவது, செருப்பால் அடிப்பது என்பனபோன்ற காரியங் களால் பயமுறுத்தினால் அதற்கு ஆக யார்தான் பயந்து கொள்வார்கள். ஜெயிலுக்குப் போனவனும் போலீசாரால் அடிபட்டவனும் பெரிய தியாகியாகி பாக்கட்டில் இருந்த பணத்தை திருடியவனானாலும் தேசபக்தனாகி ஓட்டுகளை பெறும்போது செருப்பில் அடிபடுகின்றவர்கள் இனி எவ்வளவு பெரிய தியாகிகளாகவும் தேசபக்தர்களாகவுமாகி ஓட்டுப் பெறமாட்டார்கள். என்று கேட்கின்றோம்.
அதிகம் தடவை ஜெயிலுக்குப் போனவன் அதிக தேச பக்தர் ஆவது போல் அதிகம் தடவை செருப்பால் அடிபடுகிறவனும் அரும் பெரும் தேசபக்தராகிற காலம் வந்துவிட்டது போல் இருக்கிறது. தலைவர். ஸ்தானங்களுக்கும் தேசபக்த ஸ்தானங்களுக்கும் செருப்படி படுவதும் ஒரு யோக்கியதாபக்ஷமாகிவிடும் என்றுதான் எதிர்பார்க்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது நமது காங்கிரசின் திட்டங்கள்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.10.1936
287 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வரி குறைப்புக்கும் ஜஸ்டிஸ் மந்திமிகளுக்கும் சம்பந்தமென்ன?
இந்த மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி இருந்ததினால் தாங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை யென்றால் மற்ற மாகாணங்களில் இவர்கள் சாதித்தது என்ன? இவர்கள் என்னதான் தாக்கிப் பேசினாலும், முட்டுக்கட்டை போட்டாலும் மெஜாரிட்டி பாஸ் செய்தாலும் கவர்ன்மெண்டை ஒன்றும் அசைக்க முடியாது
1923-24-ல் காங்கிரஸ் சட்டசபை பஹிஷ்காரப் போராட்டம் நடத்திய காலத்தில் கழுதைகள்தான் சட்டசபைக்குப் போகும் என்று அட்டையில். எழுதி கழுதை கழுத்தில் கட்டி ஜனக்கூட்டங்களின் முன் விரட்டினார்கள்.
நாய் கழுத்திலும் அப்படியே எழுதிக் கட்டி வாலில் டின்களையும் கட்டி விரட்டினார்கள். சட்டசபைகளையெல்லாம் கள்ளுக்கடை என்று சொன்னார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் படம் எழுதி சட்டசபைகளைக் கள்ளுக்கடை போலவும், அப்பால் ஒரு கோவிலைக் காங்கிரஸ் போலவும் காட்டினார். இப்பொழுது அந்தக் கள்ளுக்கடை யெல்லாம் கோவிலாக ஆய்விட்டதா? அல்லது அவர்களே இந்தக் கழுதைகள் ஆய்விட்டார்களா?
(சிரிப்பும் கரகோஷமும்)
நீங்கள் ஞாயமாகப் பேச விரும்புங்கள்; நானும் ஞாயமாகப் பேச விரும்புகிறேன். நமக்குள் ஏன் சண்டை என்றுதான் நான் சொல்லுகிறேன். நீங்களும் ஒத்துழைக்க வாருங்கள் நானும் ஒத்துழைக்கத் தயாராக வருகிறேன். அதை விட்டு விட்டு எடுத்ததற்கெல்லாம் தேசத்துரோகம் என்றால் நாம் இவர்களுடன் எப்படி ஒத்து வேலை செய்யமுடியும்?
1926-ல் ஜஸ்டிஸ் கட்சியானது தோற்றுப் போய்விட்ட காலத்தில் இவர்கள் Dr. சுப்பராயனையும் ரங்கனாத முதலியாரையும் ஆரோக்கியசாமி முதலியாரையும் பொய்க்கால் குதிரையாக்கி பொய்க்கால் கொடுத்து மந்திரிகளாக நிற்க வைத்து ஆதரவு செய்தார்கள். சைமன் கமிஷன் பஹிஷ்காரம் வந்தது. அந்த மந்திரிகளுக்குள் சண்டை ஏற்பட்டது. சுப்பராயன் சைமன் கமிஷனுக்கு ஆதரவு செய்தார். ரங்கனாத முதலியாரும் ஆரோக்கியசாமி முதலியாரும் வெளியேற வேண்டியதாயிற்று. அப்போது முத்தையா
குடி அரசு - 1936 (2), 288
முதலியாரானவர் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை ஆதரித்த செய்தியையும் தாலுக்கா போர்டு ஜில்லா போர்ட்டில் ஸ்தானங்கள் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் மந்திரிகளின் வீட்டு வாசலில் கெஞ்சிக்கொண்டு நின்றதையும் கண்டித்து எழுதி அவர்கள் இதற்கு என்ன ஜவாப் சொல்லப் போகிறார்கள் என்றும் கேட்டார். அப்போது காங்கிரஸ்காரர்கள் “நாம் இந்த மந்திரி சபையை ஆதரிக்கா விட்டால் ஜஸ்டிஸ் கட்சியானது ஆட்சிக்கு வந்துவிடும்” என்று பதில் சொன்னார்கள். டாக்டர் சுப்பராயன் தனக்கு ஆதரவு தரும்படியாக ஜஸ்டிஸ் கட்சியின் காலில் விழுந்தார். நாம் முத்தையா முதலியாரையும் சேதுரத்னம் ஐயரையும் மந்திரிகளாக்கி அவர்களை நம் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிவைத்து வேலை வாங்கினோம். சட்டசபையில் தமக்கு ஒரு காரியமும் நடக்காது என்று தாங்களே சொல்லிவிட்ட பிற்பாடு, காங்கிரஸ்காரர்கள் “நாம் போகாவிடில் ஜஸ்டிஸ் கட்சியார் வந்து நுழைந்து விடுவார்கள்” என்று சொல்லிவிட்டு நம்மை அயோக்கியர்கள் என்றால் நாம் இவர்களை அயோக்கியர்கள் என்று சொல்வதில் என்ன தப்பு? நாம் ஏன் இவர்களை அப்படி சொல்லக்கூடாது?
எலெக்ஷன்களில், ஜஸ்டிஸ் கட்சிக்காரரை வரி குறைக்கவில்லை என்றும், கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை யென்றும் சொல்லிக் கூச்சல் போடுகிறார்கள். இதெல்லாம் சண்டித்தனம். டயார்க்கி கவர்ண்மெண்டில் இந்த இலாக்காக்களெல்லாம் கவர்ண்மெண்டார் கையிலேயே இருக்கின்றன.
ஜஸ்டிஸ் கட்சியாரை தாலி அறுத்தார்கள் என்றும் சொல்லுகிறார்கள். அது ஞாயமா? மங்களூரில் ஒரு வெள்ளைக்கார மேஜிஸ்ட்ரேட் ஒரு பெண்ணுக்கு அபராதம் போட்டார், அவள் கொடுக்க பணமில்லை என்ற போது அவளுடைய கழுத்தில் தாலியைப் பார்த்ததும், அதை விற்று அபராதப் பணம் கட்டச் சொன்னார். அதற்காக ஜஸ்டிஸ் கட்சிக்காரரே
கண்டித்து அரசாங்கத்தினிடம் தெரிவித்த போது அந்த மேஜிஸ்ட்ரேட், தான் அதை ஒரு நகை என்று எண்ணிக்கொண்டிருந்ததாகவும் அதனாலே தான் தெரியாமல் சொல்லிவிட்டதாகவும்தெரிவித்து மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்.
ஜஸ்டிஸ் கட்சியார் வரியைக் குறைக்கவில்லை யென்றால் அது யோக்கியமான வார்த்தையா? ஏனென்றால் ஜஸ்டிஸ் கட்சியிலும் பல
மிராசுதார்களும் லேண்ட் லார்ட்களும் இருக்கிறார்கள். ஆகவே தங்களுக்கே நஷ்டம் ஏற்படக்கூடிய விஷயங்களை இவர்கள் ஆதரிப்பார்களா என்ன? 2,
3 பேர் இந்த மந்திரி பதவியில் இருக்கவும் சம்பளம் வாங்கவும் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும்படி இவர்களை எல்லா மிராசுதார்களும் ஆதரிப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பாருக்குப்
புத்தி எங்கே போச்சு? இதை எந்த பைத்தியக்காரன் நம்புவான்.
திருவல்லிக்கேணியில் சத்தியமூர்த்தியாரின் மனைவியார் தெருவில் வீடுவீடாய்ப் போய் முந்தானையைக் கையில் பிடித்துக்கொண்டு, நீங்கள்.
289 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
என் புருஷனுக்கே வோட் போடுங்கள். நீங்கள் என் புருஷனுக்கு வோட் போடாவிட்டால் அவர் இறந்து விடுவார். நான் அமங்கிலி ஆகிவிடுவேன். என்று சொல்லி கஸ்தூரிபாய் அம்மையார் குருவாயூரில் ஓட்டு வாங்கின
மாதிரி கெஞ்சி ஓட்டு வாங்கினாராம். தேர்தலில் ராமசாமி முதலியார். தோற்றார். அவருக்கு என்ன முழுகிப் போய்விட்டது? அவர் இன்னும் பெரிய பதவிக்குத்தான் போய்ச் சேர்ந்தார். ஷண்முகம் செட்டியார் தோற்றார். அவருக்குஎன்னகுறை ஏற்பட்டுப்போயிற்று? அவர் ஒரு சுதேச ராஜாங்கத்திற்குத் திவானாகப்போய் அதனால் அந்த ராஜ்யத்திலுள்ள பார்ப்பனரல்லாதாருக் கெல்லாம் ஏராளமான நன்மைகள் செய்யும்படிதான் ஏற்பட்டது சத்தியமூர்த்தியார் ஜெயித்து என்ன சாதித்தார்? சாமி வெங்கிடாசலம் செட்டியார் காங்கிரஸ் பேரால் நின்று வெற்றி பெற்று தன் கண்ட்ராக்ட்டை காப்பாற்றிக் கொண்டார். முதலாளிகளுக்கு துணை நிற்கிறார். இப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்களின் வெற்றியினால் எங்களுக்கு என்ன கெடுதி வந்து விட்டது? மற்றவர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விட்டது? அவர்கள் யோக்கியதை தான் வெளியாயிற்று
1926ல் காங்கிரஸ்காரர்களால் கொண்டு வரப்பட்டு ஆதரவு செய்யப்பட்ட மந்திரிகளை நாம் எப்படி நம்முடைய நன்மைக்கு உபயோகப்படுத்திக் கொண்டோமோ அப்படியேதான் நாம், இனியும் காங்கிரஸ்காரர் வந்தால் செய்வோம். அவர்களை நாங்கள் எங்களுக்குப் பணிய வைத்து வேலை செய்யச்சொல்லுவோம். மேலும் இனி டாக்டர் சுப்பராயன் முதல் மந்திரியாக (வரமாட்டார்) வந்தாலும் அவரை முன்போலவே பணிய வைக்க எங்களுக்கு முடியும். காங்கிரஸ்காரர்கள். சட்டசபையை விட்டு வெளியே போய் விடுவோம் என்றால் 20000 ரூபாய் 30000 ரூபாய் செலவு செய்துவிட்டு அங்கே போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறவர் உடனேயே இவர்களோடு வெளியே ஓடி வந்து விடுவாரா என்ன? அப்படி எந்த முட்டாளுமே செய்ய மாட்டான்.
இன்றைக்கு காங்கிரஸ் பத்திரிகைகள் எல்லாம் ஜில்லா போர்டுகளிலும் காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற்று வந்துவிட்டதாக எழுதுகின்றன. திருநெல்வேலி ஜில்லாபோர்டில் 32 காங்கிரஸ்காரர்களில் 26 பேர் ஓட் செய்தார்கள், பாக்கி 6 பேர்கள் எங்கே? வட ஆற்காட்டில் 26 பேருக்கு 13 பேரோ 14 பேரோ வோட் செய்தார்கள். பாக்கி காங்கிரஸ் மெம்பர்கள். எங்கே? தென் ஆற்காட்டில் பகுதி மெம்பர்கள் விலகிவிட்டார்கள். திருச்சினாப்பள்ளி செய்தி உலகம் சிரிக்கவில்லையா? இவற்றாலெல்லாம் காங்கிரஸ்காரர்கள் யோக்கியதை இன்னதென்று வெளியாய்விட்டது ஜவஹர்லால் காங்கிரஸ் பேரால் யார் நின்றாலும் வோட் போடுங்கள்
என்கிறார். அவர்களது அடையாளமும் தெரியாது; ஒன்றும் தெரியாது அவர்கள் யோக்கியர்களா அயோக்கியர்களா என்றும் நினைக்க வேண்டாமாம் காங்கிரஸ் பேரைச் சொன்னாலே வோட் போட வேண்டுமாம். இப்படி
குடி அரசு - 1936 (2), 290.
யெல்லாம் ஏழை மக்களை ஏமாற்றுகிறார்கள்! உலகம் உள்ள பரியந்தம் இப்படி ஏமாற்றுகிறவர்களுக்கும் நமக்கும் கலகம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். இந்தமாதிரி ஏமாற்றுதல்களால் இவர்கள். ஏழைகளுக்கு ஒன்றும் நன்மை செய்ய முடியாது. ஜவஹர்லாலால்கூட காந்தியால்கூட இந்த ஏமாற்று வித்தையால் ஏழைகளுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாது. தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்வதை அவர்கள் உணருவதில்லை. கீழேயிருக்கிறவர்கள் கீழே தான் இருப்பார்கள்; மேலே இருக்கிறவர்கள் மேலேதான் இருப்பார்கள். காந்தியானவர். ஏழைகளுக்கு உண்மையிலேயே நன்மையாக இருக்கக்கூடிய ஒரு திட்டத்தைத் தயார்செய்து அதன்படிசெய்வதாகச்சொல்லட்டும்.நாம்நம்முடைய வேலையை அவரிடத்திலேயே ஒப்பித்து விடுவோம். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைவிட அவர் என்ன சாதித்து விட முடியும்? அவர் ஆட்டுப்பாலும் ஆரஞ்சு பழமும் சாப்பிட்டுக்கொண்டு குஷனில் படுத்துக் கொண்டு தூங்குகிறார். அவர். ஏழைகள் குடிக்கும் கஞ்சி குடிக்கிறாரா? ஏழைகள் வசிக்கும் குடிசையில் வசிக்கிறாரா? வாயால் ஏழைமை பேசுவது; அனுபவத்தில் ராஜபோகம் அனுபவிப்பது! அவர் ஏழைகளுக்காக எதைத் தியாகம் செய்தார்? ஏழைகள் பேரால் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்!
ஜவஹர்லால் சங்கதி நமக்குத் தெரியாதா? அவர் பம்பாய் வியாபாரிகள் முன்பு பேசுகையில் அவர்களுடைய நன்மைகளையெல்லாம் காப்பாற்றுவதாக ஒப்புக்கொண்டுவிட்டார். “நான் சமதர்மம் என்றால் என்ன என்று தெரியாத ஜனங்களுக்குத் தெரியும்படியாக எடுத்துச் சொன்னதே யொழிய அதற்கேற்ற வேலைத் திட்டம் எங்களிடம் இல்லை” என்று சொல்லி அவர்களிடம் சமாதானம் சொல்லிக் கொண்டார். காந்தியானவர் அரசாங்கத்தையும் ஜமீன்தார்களையும் காப்பாற்றுவதுதான் தன் வேலை என்று சொன்னார்.
சத்தியமூர்த்தி ஐயர் ஐரோப்பியர்கள் சங்கத்தில் பேசப் புகுமுன் பத்திரிகை ரிபோர்ட்டர்களையெல்லாம் வெளியில் போகச்சொல்லிவிட்டார். தான் வெள்ளைக்காரரிடம் பேசக்கூடிய அந்தரங்க வார்த்தைகள் எங்கே வெளியே பொது ஜனங்களுக்குத் தெரிந்து விடுமோ என்று பயந்து கதவுகளையெல்லாம் தாழ்ப்பாள் போடச் சொல்லிவிட்டு அவர் “சுயராஜ்யம் என்றால் வெள்ளைக்காரர்களின் கீழ் அடங்கி வாழ்வதே அர்த்தம்” “பூரண சுயராஜ்யம் என்றால் குடியேற்ற நாட்டு அந்தஸ்தே அர்த்தம்” “ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களின் கொள்கைதான் எங்களுக்கு ஆகாது. அவர்கள் சமதர்மவாதிகள்'” என்று பதில் சொன்னார். இவை “சுதேசமித்திரன்” “தினமணி'' ஆகிய பத்திரிகைகளில் வந்த வாக்கியங்கள். இவ்வளவு தகிடுதத்தத்திற்கும் பிறகு நம்மை தேசத் துரோகிகள் என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
பிரபல பார்ப்பனராகிய விஜயராகவாச்சாரியார் வெளிநாட்டிற்குப் போயிருந்தபோது அரசர் விஷ்ணு அம்சம் என்று சொன்னார். ரங்காச்சாரியார், சீனிவாச சாஸ்திரியார், சி.பி. ராமசாமி ஐயர் இவர்களெல்லாம் வெளிநாடுகளில் ஹு... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சென்று வெள்ளைக்கார அரசர் விஷ்ணு அம்சம் என்று சொன்னார்கள். அதனால் ரங்காச்சாரியார் மகன் மூன்றாவது பாரம் படித்து டிக்கட் கலக்டர் வேலையிலிருந்தவர் திடீரென்று போஸ்டல் சூபெரெண் டெண்டெண்ட் வேலைக்குப் போனார். சீனிவாச சாஸ்திரியார் ரைட் ஆனரபில் ஆனார். அவர் மகனுக்கும் பெரிய வேலை வாங்கிக்கொடுத்தார். அவர்களெல்லாம்
நம் தேசத்தைக் காட்டிக்கொடுத்ததை விட யார் அதிகமாக தேசத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள்?
முன்காந்தி பகிஷ்காரப் போராட்டம் நடத்திய போது வைஸ்ராயானவர். இவரை என்ன செய்வதென்று மயங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீனிவாச சாஸ்திரிதான் அவரைப் பிடித்து ஜெயிலில் போடவேண்டு மென்று வைஸ்ராய்க்குப் புத்தி சொன்னார். இதெல்லாம் எனக்குத் தெரியாதா? ஏன் பித்தலாட்டமாகப் பேசுவது என்று கேட்கிறேன். (தொடர்ச்சி 18.10.1936 குடி அரசு)
குறிப்பு: 27.09.1936 ஆம்நாள்திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை. (04.10.1936 குடி அரசு தொடர்ச்சி)
குடி அரசு - சொற்பொழிவு - 11.10.1936
குடி அரசு - 1936 (2),
ப பி
ஜவஹர்லால் நாடகம்
சபாஷ் சென்னை!
தோழர் ஜவஹர்லால் சென்னை விஜயமானது தற்போது நடக்க இருக்கும் முனிசிபல் கார்ப்பரேஷன் எலக்ஷன் பிரசாரத்துக்கும் இனியும் ஒரு மாதத்துக்குள் நடக்கும் சில ஜில்லா போர்டு எலக்ஷன் பிரசாரத்துக்கும் பிப்ரவரி முதலில் நடக்கப் போகும் சென்னை சட்டசபை எலக்ஷன் பிரசாரத்துக்கும் ஆக பயன்படுத்திக் கொள்ளவும் மற்றும் அப்பிரசாரங்களுக்கு ஆக பொதுஜனங்கள் இடம் இருந்து பணம் திரட்டிக்கொள்ளவுமே அல்லாமல் வேறொன்றுக்குமாக அல்ல என்று எழுதி இருந்தோம்
இதற்கு முன்னும் இதுபோலவே சென்ற வருஷத்திலும் ஜில்லாபோர்டு தேர்தல்கள் மும்முரமாய் நடந்துகொண்டிருந்த காலத்தில் தோழர் ராஜேந்திர பிரளத் அவர்களை அழைத்து வந்து நமது பார்ப்பனர்கள் தங்கள் பிரசாரத்துக்கு அனுகூலம் செய்துகொண்டதோடு பணமும் ஏராளமாக வசூலித்துக் கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததேயாகும். அதுபோலவே இந்திய சட்டசபைத் தேர்தல் இருந்த காலத்திலும் நமது பார்ப்பனர்கள் தோழர் காந்தியாரை அழைத்து வந்து பிரசாரத்துக்கு அனுகூலம் செய்து கொண்டார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.
ஆனால் தோழர் காந்தியார் வந்தபோது எலக்ஷனைப்பற்றி தனக்குக் கவலையே இல்லை என்றும் ஹரிஜனங்களுக்கு ஆக வந்தேன் என்றும் சொல்லி ஏமாற்றி விட்டுப் போனார். தோழர் ராஜேந்திரபிரசாத் அவர்களோ தனக்கு இங்கு எலக்ஷன் நடப்பதே தெரியாது என்றும், தான் காங்கிரஸ் கொள்கைப் பிரசாரத்துக்கு வந்தேன் என்றும் சொல்லி ஏமாற்றிவிட்டுப் போனார்.
இந்த சமயம் அந்த ஏமாற்றுதல்களுக்கு இடமில்லாமல் போனதால் மக்கள் இனி ஏமாற மாட்டார்கள் என்று தெரிந்து விட்டதால் தான் வந்த காரியத்தின் இரகசியத்தை ஜவஹர்லால் வெளிப்படையாய் ஒப்புக்கொள்ள வேண்டியதாகி விட்டது அதாவது நாம் சென்ற வாரம் எழுதியது போலவே இங்கு தான் எலக்ஷன் பிரசாரத்துக்கு ஆகவே வந்ததாகவும், ஆதலால் தோழர்கள் சத்தியமூர்த்தி, அண்ணாமலை, குப்புசாமி கம்பினியார் எப்படிப்பட்ட
293 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அயோக்கியர்களை நிறுத்தினாலும் நிறுத்தப்படுபவர்கள் “குருடனானாலும் மொண்டி ஆனாலும்கூட ஆளைப்பார்க்காமல் ஓட்டு செய்யவேண்டும்” என்றும் சொல்லுகிறார்.
இதற்குமுன் சகல தேர்தல்களிலும் காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட ஆட்களில் 100க்கு 75 பேர்கள் போல் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்படாதவர் களாகவும் துரோகம் செய்தவர்களாகவும் ஆகி நாணயத் தவறுதலாகவும் அயோக்கியத்தனமாகவும் நடந்துகொண்டதின் காரணமாகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் ராஜிநாமா கொடுத்தும் “சுதேசமித்திரன்”, “இந்து, “தமிழ்நாடு முதலிய பத்திரிகைகள் கட்சிகளை பார்க்கக் கூடாது என்றும் ஆட்களின் யோக்கியதையைப் பார்க்கவேண்டும் என்றும் எழுதிய பிறகும், தோழர் ராஜகோபாலாச்சாரி போன்றவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ் போட்டி போடுவது சரி ஆகாது என்று யோசனை சொல்லியும்
மற்றும் பல காங்கிரசுகாரர்களே ஸ்தல ஸ்தாபன வேலைகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் திட்டத்திற்கு வேலை இல்லை என்று சொல்லியும் தங்கள் தோல்விக்கு பரிகாரம் தேடிக்கொண்டு இருக்க, இப்போது மறுபடியும் காங்கிரசின்பேரால் முன் நிறுத்தப்பட்ட ஆட்களைவிட மோசமான ஆட்களை நிறுத்தி வைத்துக் கொண்டு இப்போது காங்கிரசின்பேரால் மொண்டியை நிறுத்தினாலும் குருடனை நிறுத்தினாலும் அலியை நிறுத்தினாலும் ஓட்டுப்போடவேண்டியது தான் என்று சொன்னால் இப்படிப்பட்ட தலைவர். என்பவருக்கு பொறுப்போ, ஞானமோ இருக்கிறதாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
இந்த லட்சணத்தில் இப்படிப்பட்ட நபர்களை நிறுத்தி காங்கிரஸ்காரர். போட்டி போடும் எலக்ஷனுக்கு பொது ஜனங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார் என்றால் பொது ஜனங்களை இந்தத் தலைவர் என்பவர் எவ்வளவு தூரம் அடிமுட்டாள் என்று கருதி இருக்கிறார் என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம் இவற்றையெல்லாம் நன்றாய் ஆலோசித்தே நாம் ஜவஹர்லால் பண்டிதரைப் பஹிஷ்கரிக்க வேண்டியது அவசியம் என்று சொன்னோம்.
பகிஷ்காரம் அதற்கிணங்கவே சென்னைவாசிகள் ஜவஹர்லால் வந்திறங்கிய உடன் ஜவஹர்லால் திரும்பிப்போ” “பார்ப்பன கங்காணியே திரும்பிப் போ" என்ற கோஷத்துடன் கறுப்புக் கொடி பிடித்து பஹிஷ்கரித்தது சபாஷ் சென்னை என்று சொல்லி பாராட்டக்கூடிய காரியமாகும்
பார்ப்பன பத்தியிகை கட்டுப்பாடு:
கறுப்புக்கொடி பிடித்ததையும் திரும்பிப் போ என்ற கோஷத்தையும் சென்னை பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அவர்களுடைய அடிமைப்
குடி அரசு - 1936 (2), 294.
பத்திரிக்கைகளும் வெகு கட்டுப்பாடாக மறைக்க முயற்சித்தன என்றாலும், சில பத்திரிக்கைகள் தன்னையும் அறியாமல் உண்மைகளை வெளிப்படுத்தி விட்டன. அதாவது “சுதேசமித்திரன்'' 6ந்தேதி பத்திரிக்கை 7-வது பக்கம் 2-வது கலம் போலீஸ் தடியடி என்னும் தலைப்பின் கீழ் “மூர்மார்க்கட்டுக்கு
எதிரில் ஒருதொண்டரைபோலீசார் தடியடி அடிக்கவே” என்று எழுதி இருக்கிறது.
செருப்பு பறப்பு
மறுபடியும் அதே பாராவில் கூட்டத்தில் சிலர் கோபமடைந்து கற்களையும் செருப்புகளையும் எறிந்தனர். போலீசார் தடியாலடித்ததில் பலர் காயம்பட்டனர். ஒருவர் ஜனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது என்றும் எழுதி இருக்கிறது. மற்ற பத்திரிக்கைகளிலும் “மெயில்” பத்திரிக்கை
“சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எதிரில் சிலர் கறுப்புக்கொடி பிடித்து கூட்டமாக வந்தார்கள். கூட்டத்தில் பலர் அதை பிடுங்க முயற்சித்தார்கள்”'
என்று எழுதி இருக்கிறது. மற்றும் இந்து" பத்திரிக்கையிலும் கறுப்புக் கொடி ஊர்வலம் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ஜஸ்டிஸ்” “விடுதலை”, “ஜனநாயகம்” ஆகிய பத்திரிக்கைகளில் விபரமாய் குறிப்பிடப் பட்டிருக்கின்றது. அதை மற்றொரு பக்கம் காணலாம்.
மற்றும் “ஊழியனி”லும் “ஒரு சிலர் துக்கக் குறியை காண்பிக்கும் நன்னோக்கத்துடன் கறுப்புக்கொடி பிடித்து மூர்மார்க்கட்டுக்கு கிழக்கே வந்தார்கள்" என்றும் '“நவசக்தி"யில்
“பண்டிதர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் கறுப்புக்கொடி காணப்பட்டது” என்றும் எழுதி இருக்கின்றன.
“தமிழ்நாடு” மாத்திரம் கறுப்புகொடி பற்றி அடியோடு ஒன்றுமே குறிப்பிடவில்லை
இந்த பத்திரிக்கைகள் இவ்வளவு கட்டுப்பாடாய் உண்மையாக நடந்த விஷயத்தை சரியாய் வெளியிடாமலும் சில அடியோடு மறைத்தும் திரித்தும் விட்டதின் கருத்து இந்த விஷயம் வெளியானால் மற்ற ஊர்களிலும் இதுபோலவே நடந்துவிடுமே என்று கருதி எல்லோரும் கூடிப்பேசி மறைத்துக் கொண்டார்கள் என்றாலும் நடக்க வேண்டியது நடந்து விட்டது என்பதோடு இனியும் நடப்பதும் இதனால் குந்தகப்படப் போவதில்லை என்றே சொல்லலாம். ஏனெனில்,
மற்ற சம்பவங்களையும் கல் விழுந்ததையும் செருப்பு விழுந்ததையும் கள்ளுக்குடம் உடைக்கப்பட்டதையும் குறிப்பிடும்போது பகிஷ்காரம் தானாக வெளியாகித் தீரவேண்டியதாய் விட்டது. ஆகவே பூனை கண் மூடி
பால் குடித்த கதைபோல்தான் மறைத்த விஷயம் முடிவு பெற்று விட்டது
2 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சுமார் 200 கறுப்புக்கொடிகளுக்கு மேலாகவே பிடிக்கப்பட்ட ஒரு பெரும் கூட்டம் ஊர்வலம் என்பதற்கு எதிரில் நின்று சென்ட்ரல் ஸ்டேஷனிலே. இருந்தே “ஜவஹர்லால் திரும்பிப்போ" “பார்ப்பன கங்காணியேதிரும்பிப்போ'' என்ற கோஷத்துடன் பஹிஷ்கரித்திருந்தாலும் அக் கூட்டத்தை ஜவஹர்லால் தகவலுக்கு தெரியாமல் செய்ய பார்ப்பன வாலிபர்கள் பலர் பலாத்காரத்தில் இறங்கி கற்களை வீசி கொடிகளை பிடுங்க முயற்சித்தும் ஒன்றும் முடியாமல். பதிலுக்கு பதில் கற்களும் செருப்புகளும் பாணங்கள் போல் பறந்திருப்பதாகத் தெரிகின்றது. சில காங்கிரஸ் தொண்டர்களுக்கு தடிஅடியும்சில பார்ப்பனருக்கும் தொண்டர்களுக்கும் கல் அடியும் நடந்து ஜெனரல் ஆஸ்பத்திரிக்கும் சிலர் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் காணப்படுகின்றது. வழியில் சென்ற
கள்ளுக் குடங்களும் உடைபட்டு பல தொண்டர்களுக்கு அபிஷேகமும் ஆனதாகத் தெரிகிறது. இந்த கலாட்டாவுக்கு காரணம் கறுப்புக்கொடியை பார்ப்பனர்கள் பிடுங்கி எறிய முயற்சித்ததே தவிர மற்றபடி காங்கிரஸ்காரர் அல்லாதவர்கள் நடத்தை அல்ல. எப்படி இருந்தாலும் இந்த விஷயத்தையே அடியோடு மறைப்பதற்காக “கேட் மூடியிருந்ததால் குழப்பமும் கலகமும் ஏற்பட்டது” என்று மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல்சில பத்திரிகைகள். எழுதி பொது ஜனங்கள் கண்களில் மண் போடப் பார்த்தன. ஆனாலும் மூர்மார்க்கட்டுக்கு எதிரில் கலவரம் நடந்தது என்று “சுதேச மித்திரன்” பத்திரிகை எழுதி இருப்பதால் மூர்மார்க்கட்டுக்கு பக்கத்தில் கேட்டுகள் அடைபட இல்லாததால் அதன் புரட்டை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம்.”
மற்றும் கறுப்புக்கொடியை காங்கிரஸ் தொண்டர்கள் பிடுங்கினதையும் அதனால் ஏற்பட்ட கலவரத்தால் போலீசார் சமாதானம் சொல்லி கேட்காததால். தடியடி பிரயோகம் ஆரம்பித்ததையும் அதைக்கண்டு பண்டிதர் ஜவஹர்லால் இறங்கி நடக்க ஆரம்பித்ததையும் அதற்குள் பார்ப்பனர் சமாதானம் சொல்லி கெஞ்சி மறுபடியும் அவரை வண்டியில் உட்கார வைத்ததையும் கொண்ட அனேக சம்பவங்கள் பார்ப்பனர்கள் தலையை தொங்க விட்டுக்கொள்ள வேண்டியதாகிவிட்டன.
ஜவஹர் வண்டவாளம்
இவை ஒரு புறமிருக்க ஜவஹர்லாலின் யோக்கியதையை சற்று ஆராய்வோம்.
ஜவஹர்லால் சென்னைக்கு வந்ததால் அவர் வண்டவாளம் இன்னது என்று வெளுத்துப் போய்விட்டது.
“மெயில்!” பத்திரிகை எழுதியபடி அவரை மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததற்கு நேர்மாறாகவே காணப்பட்டார் என்பது முழுதும் உண்மையாகிவிட்டது. பொதுவாக ஜவஹர் ஒரு அனுபவஞானமற்றவர் என்பதை நன்றாய் காட்டிக்கொண்டார் என்பதாக மற்ற “நவசக்தி”, “தமிழ்நாடு”
முதலிய பத்திரிக்கைகளும் எழுதிவிட்டன.
குடி அரசு - 1936 (2), 296
வக்கீல் தொழிலில் கொள்ளை அடித்த பணத்தால் - அவரது பெற்றோர்களின் பணத் திமிர் பிடித்த மனப்பான்மையால் செல்லப்பிள்ளையாக.
வளர்க்கப்பட்டவர்.
அதோடு கூடவே காந்தியாரின் சலுகையால் அளவு கடந்த விளம்பரப்
படுத்தப்பட்டு வெறும் கம்பீரச் சனியனுக்கிடையே ஆணவத்துடன் வளர்ந்தவர்.
புஸ்தகப் படிப்பு அல்லாமல் அனுபவ அரசியல் ஞானம் சுட்டுப் போட்டாலும் புரிந்துகொள்ள முடியாதவர். சென்னையில் அவரது பேச்சுக்கள் முழுவதும் ஆணவமும் முட்டாள்தனமான உளறலும் நிறைந்து கிடந்தது என்பதைத்தவிர அனுபவ பூர்வமாக - பயன்படத்தக்கதாக - தற்காலப் போக்கில் செய்யக்கூடிய ஒரு வேலைத் திட்டமாக - அல்லது விளங்கக்கூடிய
ஒரு கொள்கையாக ஒரு வார்த்தையாவது தேடி எடுக்க அருகதை அற்றதாகவே இருந்தது. தன்னைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பதே அவர் பேச்சிலும் மூச்சிலும் நிறைந்து வழிந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதை “மெயில்” பத்திரிகை தனது உபதலையங்கத்தில் நன்றாக
விளக்கி விட்டது
ஆத்திர வசவு முதலாவது அவர் கண்ட கறுப்புக்கொடியின் ஆத்திரத்தைக்காட்ட பொதுக்கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சியை வைதிருக்கிறார். அதுவும் அறிவோடு வைய முடியாமல் போய்விட்டது. அதாவது “இங்கு ஜஸ்டிஸ்கட்சி என்று ஒரு கட்சி இருந்ததாய் வெகுநாளைக்கு முன் கேள்விப்பட்டேன். இப்போது இருக்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது” என்றார்.
மறுபடியும் “அடுத்தாப்போல் மறைகின்ற கட்சிகள் அதிகமாகச்
சத்தம் போடும்" என்கிறார்.
அப்படிப்பட்ட கட்சி எது என்று கருதிச் சொன்னார் என்று பார்த்தால். ஜஸ்டிஸ் கட்சி இருக்கிறதோ இல்லையோ என்று கருதிச் சொன்னாரா? அல்லது அதன் பஹிஸ்காரத்தை நேரில் பார்த்ததைக் கொண்டு ஆத்திர மடைந்து சொன்னாரா என்பது வெளிப்படும். நிற்க,
சமதர்மப் பல்லவி சமதர்மமே சிறந்தது, அதுவே எல்லாவற்றிற்கும் மருந்து என்ற பல்லவியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாடிக் கொண்டே இருந்தார் அதற்குத் தன்னிடத்தில் இப்போது யாதொரு திட்டமும் இல்லை என்றும் ஒப்புக் கொள்கிறார். மறுபடியும் சமதர்மப்பேச்சு நாடு சுயராஜ்யம் அடைந்த பின்புதான் பேசமுடியும் என்கிறார். மறுபடியும் ஏழ்மைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் மருந்து சுயராஜ்யம் என்கிறார். 297... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
* சுயராஜ்யம்? தீண்டாமை சுயராஜ்யம் கிடைத்தால்தான் ஒழியும் என்கிறார்
இப்படியாக உளறிக் கொட்டி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
சுயராஜ்ய நாடுகளிலும் ஏழ்மையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருப்பதை இவர் அறியாதது இவன் ஞான சூன்யத்தையே காட்டுகிறது என்றுதான் சொல்லவேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்
சுயராஜ்யம் இருந்த காலத்தில் ஏற்பட்ட தீண்டாமையைத்தான் பிற ராஜ்யம் ஏற்பட்ட காலத்தில் சிறிது சிறிதாய் அழித்துவரப்படுகிறதே ஒழிய சுயராஜ்யம் இல்லாததால் தீண்டாமை ஏற்பட்டு விடவில்லை என்பதை பண்டிதர் உணரவில்லையோஅல்லது உணர்ந்தே பார்ப்பனக் கூலியாய் இருந்து
மக்கள் கண்களில் மண்ணைப் போடப் பேசுகிறாரோ என்பது புரியவில்லை.
ஏழைகள்துயர்களையசமதர்மமே வழி என்று சொல்லிவிட்டு சுயராஜ்யம் பெற்றால்தான் சமதர்மம் வரும் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளுகிறார்.
இப்போது உலகத்தில் சுயராஜ்யம், ஜனநாயகம், குடி அரசு என்பவைகள்
உள்ள நாட்டில் எல்லாம் சமதர்மம் ஏற்பட்டு விட்டதா என்று கேட்கின்றோம்.
சுயராஜ்யம் இன்மையே சமதர்மத்துக்கு முட்டுக்கட்டையானால் சுயராஜ்யமுள்ள
நாடுகளால் ஏன் சமதர்மம் ஏற்படவில்லை? என்று கேட்கின்றோம்
ஆகவே சமதர்ம விஷயத்தில் தனக்கே புரியாத விஷயங்களைத்
தட்டிப்பேச ஆளில்லாத இடத்தில் சண்டப்பிரசண்டமாய்க் கொட்டி குளறு கின்றார் என்றுதான் சொல்லவேண்டி யிருக்கிறது
காங்கிரசைப் பலப்படுத்துங்கள் என்கிறார்.
காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷம் ஆயிற்று. ஜவஹரும் காந்தியாரும் காங்கிரசை 16 வருடங்கள் நடத்தியாய் விட்டது. 2, 3 கோடி ரூபாய் செலவாகி விட்டது. 10 ஆயிரக்கணக்கான வாலிபர்களைக் காலிப் பசங்களாக ஆக்கி ஆய்விட்டது. இவ்வளவு செய்தும்,
இன்றைய வரையில் காங்கிரசுக்கு கேவலம் தேர்தல்களுக்குக்கூட யோக்கியமான சுயமரியாதையுள்ள ஆட்கள் கிடைக்கவில்லை என்றால், கிடைத்த ஆட்களில் எல்லாம் 100க்கு 90 அயோக்கியர்களாக கிடைத்தார்கள். என்றால் காங்கிரசைப் பலப்படுத்தும் யோக்கியதை காந்தியாருக்கோ, ஜவஹருக்கோ, சத்தியமூர்த்தியாருக்கோ அல்லது அந்த ஸ்தாபனத்துக்கோ இருக்கிறதா என்று கேட்கிறோம்.
அந்நிய ராஜ்யத்தை - வெள்ளைக்கார ஆட்சியை ஒரு கடுகளவாவது அசைக்கவாகிலும் காங்கிரசினிடமோ, காந்தியாரிடமோ, ஜவஹர்லாலிடமோ ஏதாவது ஒரு கொள்கை இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா
குடி அரசு - 1936 (2), 298
என்று கேட்கின்றோம். சுயராஜ்யம் என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று ஜவஹர்லால் படத்திறப்பு விழாவாற்றப்பட்ட சி. விஜயராகவாச்சாரியார். அவர்களே சொல்லிவிட்டார். இதுவரை யாரும் அதற்கு பதில் சொல்லவில்லை.
இப்படி இருக்க இனியும் சுயராஜ்யம் சுயராஜ்யம் என்று மக்களை ஏமாற்றுவது யோக்கியமா?
சீர்திருத்தம் உடைப்பது
சீர்திருத்தத்தை உடைக்க வேண்டியது தங்கள் கடமை என்று பேசுகிறார். உடைக்க முடியுமா? அதற்கு திட்டம் என்ன என்பதை ஜவஹர்லால் எங்காவது சொல்லி இருக்கிறாரா என்று பாருங்கள்.
சட்டசபைகளைக் கைப்பற்றினால் சீர்திருத்தம் எப்படி உடைக்கப்பட முடியும் என்று கேட்கிறோம். சட்டசபைக்கு உள்ள அதிகாரம் தெரிந்திருந்து தான் ஜவஹர் இப்படிப் பேசுகிறாரா அல்லது மக்களை ஏய்த்து தன்னை தலைவர் என்று அழைத்து ஊர்வலம் நடத்துகிற ஆட்களுக்கு ஓட்டு வாங்கி கொடுக்க இப்படி பேசுகிறாரா என்பதை பொது ஜனங்களே உணரட்டும் என்று விட்டுவிடுகிறோம்
சட்டசபைக்கு போவது அடிமைத்தனம் என்று இவரே சொன்னார். இப்போது சட்டசபைக்குச் செல்லலாம், மந்திரி பதவி ஏற்கக்கூடாது என்கிறார்.
மந்திரி பதவி ஏற்பதானது ஒத்துழைப்பது, சர்க்காருக்கு அடிமை ஆவது என்கிறார்.
ஆனால் இவர் கூடவே நிழல் போல் திரிந்து மக்களை ஏமாற்றி வரும் மூர்த்தியார் “பதவி ஏற்கவேண்டும். இதை மாற்றிக்கொள்ள என்னால்
முடியாது'' என்று உடனுக்குடன் சொல்லி விடுகிறார். இவருக்கு பதில் சொல்ல ஜவஹர்லாலுக்கு தைரியம் இல்லை
காங்கிரஸ் கட்டுப்பாடு
இந்த லக்ஷணத்தில் காங்கிரசில் பலமான கட்டுப்பாடு இருக்கிறதாம்
இன்னும் பலமான கட்டுப்பாடு வேண்டுமாம். இது ஒரு மானங்கெட்ட பல்லவியாகும். டாக்டர் சுப்பராயன் காங்கிரசுக்கு “துரோகம்” செய்தவர் என்று தீர்ப்பளிக்கப் பட்டவர். இப்போது சமீபத்தில் அவர் காங்கிரசில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது மாத்திரமல்லாமல் அவருக்கு மந்திரி வேலை கொடுப்பதாகவும் வாக்களிக்கப்பட்டாய் விட்டது. அடுத்த காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் அவரே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராகவும் ஆக்கப்படப் போகிறார். அதற்காக இப்பொழுதிருந்தே ஏஜண்டுகள் வேலை செய்கிறார்கள்.
29 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
எனவே காங்கிரசுக்கு கட்டுப்பாடு உண்டா? கட்டுப்பாடாவது ஒரு
பக்கம் தொலைந்து போகட்டும், காங்கிரசுக்கு மானமாவது உண்டா என்று
தான் கேட்கின்றோம்.
புகார்கன்
தோழர் ஜவஹர்லால் பெரிய தலைவர் என்று கருதி காங்கிரஸ் தொண்டர்கள் 500 பேர் கையொப்பமிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யோக்கியதையைப் பற்றியும் தலைவர் சத்தியமூர்த்தி யோக்கியதையைப் பற்றியும் அவருக்குள்ள கட்டுப்பாடும் ஒழுக்கமும் நாணையமும் அற்ற தன்மையைப் பற்றியும் புகார் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். அதை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்.
காங்கிரசுக்கு தன் மனச்சாட்சிக்கும், கொள்கைக்கும், சமூகத்துக்கும் துரோகமாய் நின்று தொண்டாற்றின தோழர் தாவுத்சா சாயபு அவர்களை நட்டாற்றில் விட்டு விட்டு அவரிடமே தங்கள் சூழ்ச்சியைக் காட்டி உனக்கும் பெப்பெப்பே என்று கையை விரித்து விட்டார் தோழர் சத்தியமூர்த்தி அதைப்பற்றி அவரும் ஒரு முழு நீளம் பிராது கொடுத்திருக்கிறார். திருச்சி முனிசிபாலிட்டியில் காங்கிரசுக்கு “துரோகம்!” செய்த தலைவருக்கு காங்கிரஸ் மெம்பர்கள் உதவி செய்துகொண்டு இருக்கிறார்கள். இவைகள்
எல்லாம் காங்கிரசுக்குக் கட்டுப்பாடாம். எனவே சிறு குழந்தைகள் பெரிய ஆள்களுக்குப் பூச்சாண்டி காட்டுவது போல் ஜவகர் தமிழ் நாட்டில் பூச்சாண்டி காட்டுகிறார். இதைப் பார்க்கிறபோது தோழர் மாளவியாவை மலையாளத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஞாபகத்தில் வருகிறது.
அதாவது ஒரு கூட்டத்தில் மாளவியாஜி ராமாயண சுலோகம் எடுத்துச் சொல்ல ஆரம்பித்தபோது கேரள தொண்டர்கள் “மாளவியாஜி! நாங்கள் ராமாயணத்தில் B.A., படித்திருக்கிறோம். எங்களிடத்தில் தாங்கள் AB.CD. கற்றுக்கொடுக்க நினைப்பது, உங்களுக்கு ரயில் சார்ஜுக்கு கொடுத்த பணம் வீணாவதல்லால் நேரக்கேடுமாகின்றது'' என்று சொன்னார்கள். அதுபோல ஜவஹர்லால் அவர்கள் தமிழ்நாட்டில் வந்து தமிழ் மக்களிடம் காங்கிரஸ் பெருமையையும் காங்கிரசு கொள்கையையும் காங்கிரசு கட்டுப்பாடும் பேசுகிறார் என்றால் இது அண்ணனிடம் தங்கை தகப்பன் வீட்டுப் பெருமை பேசுவதுபோல் இருக்கிறது என்றுதான் சொல்ல
வேண்டி இருக்கிறது
காங்கிரசுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் ஏமாற்றுப் பிரசாரமும் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழ் நாட்டவர்கள். அவர்கள் பித்தலாட்டத்தாலேயே காந்தியும் ஜவஹரும் மாளவியாவும் பட்டேலும் ஆகிய கம்பெனியார்கள் தலைவர்களாக முடிந்தது.
குடி அரசு - 1936 (2), 300
அப்படி இருக்க இங்கு வந்து தமிழரையே ஏமாற்றப் பார்த்தால் என்ன நடக்கும் என்பது ஜவஹருக்கு அனுபவ ஞானம் இல்லாமையால் விளங்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
நேற்று ஆனைமலை பிரசங்கத்தில் தோழர் சத்தியமூர்த்தியார் ஜவஹர்லாலைப் பற்றி சொன்னதை மக்கள் அதற்குள் மறந்திருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
ஜவஹர்லால் கொள்கைக்காக அவருக்கு தலைமை ஸ்தானம் கொடுக்கவில்லை. அவர் குடும்ப தியாகத்துக்காக கொடுக்கப்பட்டது” என்றார். மற்றும் “ஐவஹர் கொள்கையை நான் ஒப்புக் கொள்ள வில்லை” என்றார். ஆகவே தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர், ஜவஹர்லாலை எப்படி மதிக்கிறார் என்னமாய் நடத்துகிறார் என்பது இதிலிருந்து விளங்கும் காங்கிரசுக்கு (பார்ப்பனர்களுக்கு) யாராயிருந்தாலும் சரி, தங்கள். அடிமைகளாய் இருந்தால், தங்களுக்கு பயன்படுபவர்களாய் இருந்தால் அதுவரை தலைவர் என்றும் தேசபக்தர் என்றும் அழைக்கப்படுவதும் சமயம்
தீர்ந்த உடனே காலை வாரி அடிப்பதும் பரம்பரை வழக்கம். ஆகவே ஜவஹர்லாலை ஆகட்டும், அல்லது குப்புசாமி கிருஷ்ணசாமி பாரதி கம்பெனியாரை ஆகட்டும் பார்ப்பனர்கள் விளம்பரப் படுத்துவதில் நமக்கு அதிசயமொன்று மில்லை
கொள்கை முரண்:
தவிர இன்று இவ்வளவு பதினாயிரக்கணக்கான மக்களுக்கு ஞானோபதேசம் செய்கிற இதே ஜவஹர்லால் அவர்கள் காந்தி இர்வின் ஒப்பந்தத்தை ஏன் அதரித்தார் என்பதற்கு ஏதாவது சமாதானம் சொன்னாரா? அப்படி ஆதரித்தது நேர்மைதான் என்று சொல்ல வருவாரானால் இண்டர் நேஷனல் ஆண்டி இம்பீரியலிஸ்ட் அசோசியேஷனில் இருந்து அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு உலக சங்கத்தில் இருந்து இவரை ஏன் விலக்கினார்கள் என்பதற்கு காரணம் சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
நமது மக்களில் பெரும்பான்மையோருக்கு தங்கள் புத்தியைக் கொண்டு ஆலோசிக்கும் சக்தியை வளர விடாமல் செய்து விட்டதாலும் பார்ப்பனர் விளம்பரமே நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று விட்டதாலும் ஜவஹர்லால் போன்ற பொக்கு சரக்கெல்லாம் இவ்வளவு கிராக்கியாய் செலாவணியாக இடம் ஏற்பட்டுவிட்டது. ஜவஹர்லால் தனது சமதர்மத்துக்கு ஆளும் வகுப்பு என்று ஒன்றும் ஆளப்படும் வகுப்பு என்று ஒன்றும் இருக்கக்கூடாது என்பதுதான் அருத்தம் என்று சொல்லுகிறார். இதை ஒழித்துவிடுவது சுலபத்தில் முடியக்கூடியக் காரியமல்ல; அப்படி ஒழித்து விட்டாலும் உலகக் கஷ்டம் ஒழிந்துவிடாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம். மேல்நாடுகளில் இப்படி இரண்டு வகுப்பு இல்லை. அப்படி இருந்தும் மனித சமூகத்தின் கஷ்டம், ஏழ்மை விலகி விடவில்லை.
31 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆதலால் நாம் சொல்லும் சமதர்மம் அதுவல்ல. பாடுபடும் வகுப்பு என்று ஒன்றும் அந்தப்பாட்டின் பயனை அனுபவிக்கும் வகுப்பு என்று ஒன்றும் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறோம். அப்போதுதான் மனித சமூக ஏழ்மையும் குறையும் நீங்கும் என்கிறோம்
அப்படியானால் முதலில் பார்ப்பனீயம் ஒழியவேண்டும், தீண்டாமையும் ஒழிய வேண்டும். இதற்கு ஜவஹர்லால் ஒப்புக்கொள்ளுகிறாரா? ஒப்புக் கொண்டால் இவரது தலைமை ஸ்தானமும், தியாகப் பெருமையும் அரை நிமிஷம் பார்ப்பனர்கள் இடம் நிற்குமா என்று யோசித்துப் பாருங்கள்.
பாஷை பரிகாசம்
மற்றும் பாஷை விஷயத்தில் தமிழ் பாஷையை பரிகசித்து தோழர் ஜவஹர் பேசினாராம். உண்மையில் கலப்பற்ற தமிழ் ரத்தம் தங்கள் உடலில் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்த பல தமிழ் மக்களும் பார்ப்பனர்கள் கூட சேர்ந்து சிரித்தார்களாம். அவர்களைப்பற்றி நாம் ஆச்சரியப்படவில்லை.
வேறு எந்த எந்த அருமையான இன்றியமையாத குணங்களையும் விற்றுவிட்டு பார்ப்பனர்கள் பின்னால் வாலைத் தூக்கி பிடித்துக்கொண்டு
திரியும் கூலித்தமிழ் மக்களுக்கு தமிழ் பாஷையை குறைகூறினதற்கு ரோஷம், சொரணை வரும் என்று எந்த மூடன் தான் எதிர்பார்க்க முடியும்?
இதுவும் ஒரு நன்மைக்கே ஆகவே, மொத்தத்தில் ஜவஹர்லால் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டுப் போவது நமக்கு ஒரு நன்மையான காரியம் என்றே கூறுவோம். எப்படி யெனில் தோழர் சத்தியமூர்த்தியார் எப்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராயிருப்பது நமக்கு அனுகூலமோ, அதுபோல் ஜவஹர்லால் அவர்கள் காங்கிரஸ் தலைவராய் இருப்பதோடு வந்துவிட்டுப் போனது அனுகூலமானதேயாகும்
ஒரு விஷயம், தோழர் சத்தியமூர்த்தி தனது வகுப்புநலத்தை எப்படிப் பட்ட முட்டாள்தனமான செய்கையிலும் பித்தலாட்டமான செய்கையிலும் கவனித்துகொள்ளுவார். நமது பண்டிதரோ தனது விளம்பரத்தைத்தவிர, ஆணவத்தைதவிர வேறெதையும் கவனிக்க அறியாதார். இதுதான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். மற்றவைகளில் இரண்டும் சரியான ஜோடியேயாகும்
குடி அரசு - தலையங்கம் - 11.10.1936
குடி அரசு - 1936 (2), 302
பார்ப்பனருக்கு சர்க்கார் உத்தியோகம் வேண்டுமா?
வென்னையயிடம் பார்ப்பனர் சரணாகதி.
முஸ்லீம்கள் தீண்டாதவர்கள் பிரச்சினை
முதலில் ஜஸ்டிஸ் கட்சியார்தான் முகம்மதியர்களுக்கும், ஏழைகளுக்கும், தீண்டாதார்களுக்கும் வேலை செய்தார்கள். அதன் பிறகுதான் காந்தியும் அவர்களைப்போல் வேலை செய்ய ஆரம்பித்தார். காந்தியானவர் மகாத்மா ஆனபின் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்யம் வரமுடியாது என்றார். அப்படியே தீண்டாதாரிடம் தீண்டாமை ஒழிந்தால்தான் சுயராஜ்யம் வரும் என்றும், தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்யம் வராது என்றும் வந்தாலும் அது வேண்டாம் என்றும் சொன்னார். பிறகு வட்டமேஜை மகாநாட்டுக்குப் போனதும் சுயராஜ்யம் வந்தாலொழிய ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாதென்றார். இந்த வார்த்தையைக் கேட்டதும் ஜனாப் ஜின்னாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் “சுயராஜ்ய கவர்ண்மெண்டில் எங்களுடைய நிலை இன்னது என்று சொல்லிவிட வேண்டு” மென்று கேட்டார். ஏனென்றால் காந்தியின் ராமராஜ்யமானது ஹிந்து ராஜ்யமாகத்தான். இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். காந்தியார் எல்லாரையும் ஏமாற்றி விட முடியாதல்லவா? இவர்கள் ஒரு முடிவுக்கும் வராதது கண்டு இங்கிலீஷ் அரசாங்கத்தார் அந்தந்த சமூகத்திற்கும் ஞாயம் வழங்கினார்கள்.
அடுத்தபடியாக காந்தி தீண்டாதார் தலையில் கைவைக்கப் பட்டினி கிடந்தார். உடனே அம்பத்காரானவர், பயந்து போய் “நாம் எவ்வளவோ பாவம் செய்து இப்படி தீண்டா வகுப்பில் பிறந்து விட்டோம். நமக்கு இன்னும் என்ன பாவம் வருமோ” என்று காந்தியிடம் ஓடி “பூனா பேக்ட்"-ல் கையெழுத்துப் போட்டார்.
இவர்கள் தீண்டாமையை விலக்குவதற்காக என்ன செய்துவிட்டார்கள்? அவர்களுக்கு எண்ணெயும் சோப்பும் கடலையும் பொரியும் பெப் பெர்மிண்ட்டும் கொடுத்து வருகிறார்கள். இதுதான் ஹரிஜன சேவையா? இதற்கு வாரம் ஒரு ரூபாய் செலவு. ஆனால் இதைக் கொடுக்கிறவருக்கு மாதம் 36 ரூபாய் சம்பளம்!
303 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வகுப்பு வாதம்
எந்த எலக்ஷனில் இவர்கள் வகுப்பு வாதத்தை நினைக்காமல் இருக்கிறார்கள்? இவர்கள் எந்தத் திட்டத்தில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர் களுக்கும் சீக்கியர்களுக்கும் வீதாசாரப் பிரதிநிதித்துவம் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளவில்லை? இவர்கள் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் மட்டும் ஏன் கொடுக்க முடியாது என்று சொல்ல வேண்டும்? முஸ்லீல்கிறிஸ்தவர். நீங்கினால் மற்ற வகுப்பு பார்ப்பன வகுப்பு என்றே கருதுகிறார்கள் மற்றவர்களைப்பற்றி காங்கிரசுக்கு ஞாபகமே இல்லை. கூலி வேலைக்கும் காலி வேலைக்கும்தான் பார்ப்பனரல்லாதாரை சேர்த்துக் கொள்ளுகிறார்கள்
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களாகிய நாம் பார்ப்பனர்களுக்கும் முஸ்லீம் களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் வீதாசாரப்படி பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறோம். அத்துடன் ஸ்திரீகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறோம்
காங்கிரஸ் பார்ப்பனர்கள் வெள்ளைக்காரனிடம் “நீயும் நானும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தோம். நாமெல்லாம் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இங்கே இப்படி கங்கை சமவெளிக்கு வந்து குடி ஏறிவிட்டோம். நீங்கள் யூரல்மலை வழியாய் போய் மேற்கே குடியேறி விட்டீர்கள். இவ்வளவு தானே யொழிய மற்றப்படியாக நீங்களும் நாமும் தாயாதிகள் தான் ஆகையால் நாம் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று சொல்லுகிறார்கள். இவர்கள் வெள்ளைக்காரரிடம் இப்படிப் பேசி விட்டுப் பொது ஜனங்கள் முன்னிலையில் தாங்கள் வெள்ளைக்காரரிடம் சுயராஜ்யம் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். இவர்கள் நாளைக்கு சுயராஜ்யம் வேண்டும் என்றால் நாம் இன்றைக்கே சுயராஜ்யம் வேண்டும் என்று சொல்லுகிறோம். ஆனால் எல்லாப் போராட்டமும் முடிந்த பின்பு சுயராஜ்யத்தில் எங்கள் நிலை என்ன என்று கேட்டால் அவர்கள் அது தேசத்துரோகம் என்கிறார்கள். அவர்கள் வெள்ளைக்காரனிடம் ஓடிப்போய் “நாங்கள் தானே உங்களுக்கு ஆதி முதல் உதவி செய்து உங்களை இந்தத்தேசத்தில் நிலைநிறுத்தி வைத்திருக்கிறோம் ஆகையால் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொல்லுகிறார்கள்.
உத்தியோக வேட்டை
நாம் நம் வரும்படியைச் செலவு செய்து - நமது வீட்டை விற்று - நம் சொத்தை விற்று - நம் மக்களைப் படிக்க வைக்கிறோம். ஆகையால் சர்க்கார் உத்தியோகங்களில் எங்களுக்கும் பங்கு தா என்றால், அது தேசத் துரோகமா? மாடு மேய்க்கிறவனுக்கும் பஞ்சாங்கம் பார்க்கிறவனுக்கும் நாம் உத்தியோகம் கொடு என்று கேட்கிறோமா? பரீக்ஷ என்ற தெர்மா மீட்டரின்படி எங்களில் யாருக்குக் கொடுக்கலாமோ அவர்களுக்கு கொடு என்று சொல்லுகிறோம்
குடி அரசு - 1936 (2), 304
எங்கும் இவர்கள் நிலைமை எப்படி இருக்கிறது? இவர்களே எங்கும்
சப் இன்ஸ்பெக்டர்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள்; இவர்களே மேஜிஸ்ட்ரேட்டுகள்; இவர்களே தாசில்தார்கள்; முனிசீப்புகள்; கலெக்டர்கள்; 100க்கு 75 பேர் எல்லாம் இவர்களே இருக்கிறார்கள்! இதனால் தங்கள் வகுப்பை மேன்மைப்படுத்திக் கொள்ளுகிறார்கள். இவர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு சதா கூட்டங்களை நடத்திக் கொடுக்க உதவி செய்கிறார்கள். பார்ப்பன சப் இன்ஸ்பெக்டர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு சகல உதவியும் செய்து கொடுக்கிறார்கள். இவர்களுடைய சுயராஜ்யத்தில் நாம் கஷ்டங் களைத்தான் அனுபவிக்க முடியும். இவர்களுக்குத் தவிர வேறு ஒருவருக்கும் உத்தியோகமே கிடைக்காது. எல்லாம் அவர்களே அனுபவிப்பார்கள்!
பார்ப்பனருக்கு உத்தியோகம் வேண்டியதில்லை.
பார்ப்பனரல்லாத சிறுவர்களில் எவ்வளவோ பேர் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் செய்துவிட்டு வேலைகள் அகப்படாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு பங்கா இழுத்துக் கொண்டும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதாக வேலை கேட்டுக் கொண்டும் அவஸ்தைப்படுகிறார்கள். ஆனால் அதுபோல் பார்ப்பனர்களுக்கு வேலை கிடைப்பதில் இவ்வளவு கஷ்டம் இருக்கிறதா. என்று பாருங்கள். அவர்களுக்கு ஏற்கனவே ஜாதி காரணமாய் தாராளமாய் வேலை இருக்கிறது. கோவில்களில் இவர்களே இருக்கும்படி அமைத்துக் கொண்டார்கள். மோக்ஷ வாசலுக்கு டிக்கட் கொடுக்கும் வேலையும் இவர்களுடையதே, புரோகிதமும் இவர்களுடையதே, தர்மம் வாங்க யோக்கியதையும் இவர்களுக்கே, காப்பி ஹோட்டல்களெல்லாம் இவர்களுடைய தாகவே ஆய்விட்டன. பார்ப்பான் படிக்கு 40 இட்லி போட்டாலும் அங்குதான் போய் ¥ அணாக் கொடுத்து வாங்குகிறோம் தமிழன் படிக்கு 8 இட்லி போட்டாலும் ஒருவனும் போய் s அணாவுக்குக்கூட வாங்குவதில்லை. வாங்கித் தின்னமாட்டேன் என்கிறான்! இது சூத்திரன் கடை இட்லி என்று நம்மவனே சொல்லுகிறான்!
பார்ப்பனர்களில் உண்மையில் ஏழைகள் இல்லை. பஞ்சாங்கக்காரன் வீட்டில் போய்ப் பாருங்கள். அவன் வீட்டு ஸ்திரீகள் கழுத்தில் வைர நகைகள் அணிந்து கொண்டிருக்கிறார்கள்! அவன் வீட்டோடு ஒரு பெரிய குடியானவன் வீட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விதம் பார்க்க முடியுமா?
நாம் எத்தனை தலைமுறைக்கு இப்படி ஒருவழியுமில்லாமல் ஏமாந்து கிடப்பது? இப்போது அவர்கள் நம்மை உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொல்லுகிறார்களே என்று பயந்து ஓடுவதா? நமக்கு அறிவு இருந்தால் நாம் இந்தப் பார்ப்பனருடன் சேர்வதைவிட வெள்ளைக்காரருடன் தான் சேர்வோம்
நம்மவன் பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் காப்பி கடை கதவண்டை போய் வெளியே நின்று கொண்டு சாமி! சாமி! என்று கையை
305 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஏந்திக் கொண்டு ஆருத்திரா தரிசனத்தில் விபூதி வாங்குவதுபோல் கத்துகிறான்! இந்த முதலாளியின் ஆளாக இருக்கக் கூடிய மோட்டார் ட்ரைவர் நேராக உள்ளே போய் சூடாக இட்லி தின்றுவிட்டு ராஜா மாதிரி வெளியே போகிறான்! எப்பொழுது நம்முடைய நிலை உயர்வது? எப்போது நம் சுயமரியாதை காப்பாற்றப்படுவது? அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் உண்டா? ஆகவே பார்ப்பன சுயராஜ்யமும் நம் சுயராஜ்யமும் ஒன்றாய் இருக்க முடியுமா?
ஜெயில் புரட்டு
இவர்கள் ஜெயிலுக்குப் போனோம் என்கிறார்கள். ஜெயிலுக்குப் போனால் என்ன கஷ்டம்? நான் ஜெயிலுக்குப்போன அந்த நாளில் மூத்திரச் சட்டியில்தான் தண்ணீர் குடிக்கவேண்டும். அந்த நாளில் நம்மவர்களுக்கு ஏ கிளாஸ் கிடையாது. நான் 6, 7 தடவை ஜெயிலுக்குப் போனவன்தான். இப்போது ஜெயில் வெகு சகம். நான் இன்று ஜெயிலுக்குப் போனால் அதிக சுகமாக இருப்பேன். நான் இப்படி கஷ்டப்படுவதால் முன் இரண்டு தடவை
கீக்கு ஆகிவிட்டேன். டாக்டர்கள் சும்மா இருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளும் படி சொன்னார்கள். நான் இப்பொழுது ஜெயிலுக்குப்போனால் ஓய்வு எடுத்துக் கொண்டு சுகமாகத்தான் இருப்பேன்.
சத்தியமூர்த்தி ஜெயிலுக்குப்போய் வந்த கதை உங்களுக்குத் தெரியாதா? போனவருஷம் சில பார்ப்பனர்களுடன் நான் ஜெயிலில் இருந்தேன். அங்கே அக்காரவடிசில் புளியோதரையெல்லாம் நாங்கள் தினமும் செய்து சாப்பிட்டோம். ஜெயிலில் என்ன கஷ்டம் என்கிறேன். காங்கிரஸ் காரர்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லாவிட்டால் ஒரு கொடியைக் கையில் பிடித்துக் கொள்ள வேண்டியது; காந்திக்கு ஜே என்று கூச்சல் போட வேண்டியது; ஜெயிலுக்குப் போக வேண்டியது; போய் நன்றாய் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியது என்கின்ற சவுகரியம் இருந்தது
காங்கிரஸ் யோக்கியதை.
காங்கிரசானது 1885 முதல் 1936 வரையில் உண்மையாகவே ஏழை களுக்கு என்ன நன்மை செய்தது? யாராவது சொல்லட்டுமே. எல்லாம் நஷ்டமும் கஷ்டமும் தான். ஆனால் நான் ஜஸ்டிஸ் கட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று சொல்லுகிறேன். அதனால் தேசத்தில் பார்ப்பனரல்லாத மக்களிடையில் அதிகம்பேர் படித்திருக்கிறார்கள் எத்தனையோ பேர்கள் உத்தியோகம் பெற்று அதனால் எத்தனையோ வகுப்புகள் முன்னுக்கு வந்திருக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் பெண்களும்கூட படித்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இப்பொழுது எவ்வளவோ பார்ப்பனரல்லாதார் வக்கீல்களாக இருக்கிறார்கள். பி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரிகளாக
குடி அரசு - 1936 (2), 306
வருவதற்கு முன்பெல்லாம் பார்ப்பன இளைஞர்களே படிக்கவும் இப்படிப்பட்ட பட்டங்கள் பெறவும் வசதி இருந்தது. அதனால் அவர்களே 100க்கு 100 பேர் படித்தவர்கள் ஆனார்கள். இதையெல்லாம் நீங்களே ஆராய்ச்சி செய்து பார்த்துக் கொள்ளலாம்.
போக்கியித்தனம்
காங்கிரஸ்காரர்கள் காலிகளுக்குப் பணம்கொடுத்தும் கூலிகளை ஏவி விட்டும் என்னை காங்கிரசிலிருந்து பணம் எடுத்துக் கொண்டதாகச் சொல்லிக் கூச்சல் போடச் சொல்லுகிறார்கள். தட்டிப் பேச ஆள் இல்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பது போல் இவர்கள் செய்கை இருக்கிறது.
நீ காங்கிரசிலிருந்து 5000 ரூ. எடுத்துக் கொண்டாய் என்கிறார்கள் நான் 5000 ரூ. எடுத்துக் கொண்டிருந்தால் அப்பொழுது சத்தியமூர்த்தி 10000 ரூபாயும் ராஜகோபாலாச்சாரி 20000 ரூபாயும் திருடி இருப்பார்கள். அதனால் தான் அவர்கள் அப்போதும் என்னை சும்மா விட்டு விட்டு இப்போதும் காங்கிரசுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லவேண்டும் பின் ஏன் அவர்கள் அந்த நாளிலேயே என்னைக் கேட்கவில்லை? நான் காங்கிரஸ் பணத்தை எடுத்துக் கொண்டால் அதை வட்டியோடு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னிடம் வசூல் பண்ணிக் கொள்ள முடியாதா? என்னால் கொடுக்க வழியில்லாவிட்டால் இப்பவே சோலை நாடாரையும், செளந்திர பாண்டியனையும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லுகிறேன். எப்பொழுது-எதில் என்று எந்தக்கழுதையாவது சொல்லட்டும்
நான் காங்கிரஸ் பணத்தை எடுத்துக்கொண்டால் ராஜகோபாலாச்சாரி யாரும் காங்கிரஸ் பக்தர்களும் என்னை ஏன் காங்கிரசில் சேரும்படி இன்றும் கூப்பிடுகிறார்கள்? இதோ சத்தியமூர்த்தி மூதலியவர்கள் பேசியதும், பத்திரிகையில் எழுதியதும், எனக்குக் கடிதம் எழுதினதும் பத்திரிகைகளைப் பாருங்கள். (கடிதம் பத்திரிகை படிக்கப்பட்டது) “வரதராஜுலு நாயுடு காங்கிரசில் சேர்ந்து விட்டார்; கல்யாணசுந்தர முதலியார் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; ஜியார்ஜ் ஜோசப் காங்கிரசில் சேர்ந்து விட்டார்; இனி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் பாக்கி” என்று சொல்லிக்கொண்டு அவர்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள். ஏன்? நான் இன்னும் ரூபாய் திருடி இவர்களுக்குப் பங்கு கொடுக்கவா?
காலித்தனம்
எங்கள் கூட்டத்தில் இவர்கள் ஏன் காந்திக்கு ஜே என்று கூச்சல் போட வேண்டும்? இவர்கள் யோக்கியமும் நாணயமும் இல்லாமல் இருக்கிற பொழுது மற்றவர்கள் இவர்களிடத்தில் எப்படி யோக்கியமாயும் நாணயமாயும் நடந்து கொள்ள முடியும்? “பொப்பிலிக்குக் கண் பெரியது; ஈ.வெ. ராமசாமி தாடி வைத்துக் கொண்டிருக்கிறான்; ராமசாமி முதலியார் தேசத் துரோகி:
3097 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஷண்முகம் செட்டி தேசத்துரோகி” என்று இப்படி அவர்கள் நாணயமில்லாமல் பேசுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் இன்ன குற்றம் இருக்கிறது என்று உண்மையாக எடுத்துச் சொன்னால் அது ஆண்மையாகும்.
டாக்டர் சுப்பராயனைவிட, தோழர் சத்தியமூர்த்தியைவிட, மோசமான ஆள் ஜஸ்டிஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள் சொல்லட்டும். பிறகு வேண்டுமானால் தோழர்கள் உபயதுல்லாவுக்கும் கிருஷ்ணசாமி பாரதிக்கும் மோசமானவர்கள் யார் என்று கேட்கலாம்
கழுதை கழுத்தில் அட்டை எழுதிக் கட்டி நம் கூட்டத்தின் நடுவில் ஓட்டி விடுதல் கெளரவமுடையதா? கொஞ்சமும் யோக்கியம் இல்லை: அவர்கள் நம் கூட்டங்களில் கல்லையும் முட்டையையும் செருப்பையும் வீசினால் என்ன பிரயோஜனம்? நாம் கோழைகளா? அடிக்கு அடியும் உதைக்கு உதையும் கொடுக்க நம்மால் முடியாதா?
செருப்படித் திருநான்
சேலத்தில் ஒருவருக்கொருவர் இப்படி செருப்பால் அடித்துக் கொண்டதால் அது வழக்கத்துக்கு வந்து இப்பொழுது அங்கு செருப்படித்
திருநாள் என்று திருவிழா நடக்கிறது. அதில் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக்கொள்ளுகிறார்கள். அதுபோல் இனி அரசியலிலும் நேருக்கு நேர். செருப்படித் திருநாள் ஏற்பட்டு விடும்
காங்கிரசுக்கு வரத் தயார்
இன்றைக்கு உண்மையில் ஏழைகளின் கஷ்டங்களைச் சொல்லி
முடியாது. அவர்களுடைய நலங்களை யாரும் கவனிப்பதில்லை. ஏழை மக்களை மேல் ஜாதியார் துன்புறுத்துவது சொல்ல முடியாததாக இருக்கிறது
நாம் இதையெல்லாம் கவனித்தே காங்கிரசையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் யோக்கியன் காங்கிரசுக்கு வராதபடி செய்து கொண்டார்கள். பார்ப்பனன் அடிமையைத் தவிர மற்றவனுக்கு அங்கு இடமில்லை. ஆனால் ஒரு கேள்வி. தேர்தல்களில் வெற்றிபெற்றால் எல்லாப் பதவிகளிலும் எல்லோருக்கும் வீதாச்சாரம் சமசந்தர்ப்பம் தருகிறோம் என்று அவர்கள். சொல்லட்டும். இது தேசத்துரோகம் என்று மிரட்டினால், என்ன முடியும்? எங்களை மிரட்டுவது போல் சாகிபை மிரட்டு; பெங்கால் முஸ்லீம்களைப் போய்மிரட்டு. உடனே பல்லை உடைத்துக் கையில் கொடுப்பார். அதனால் தான் அவருக்கு வீதாச்சாரம் கொடுக்க சரித்திர சம்மந்தமான காரணம் இருக்கிறதென்று காந்தியார் சொல்லுகிறார். நமக்குக் காரணம் இல்லையா? சாகிபைவிட எங்களுக்குத்தான் அதிக காரணம் இருக்கிறது. சாகிப்புக் கொடுக்க சரித்திர சம்பந்தமான காரணம் (Historical reason) இருக்கிற தென்றால் எங்களுக்கும் இருக்கிறது. சாகிப்பு வந்து 1000 வருஷம் ஆகிறதென்றால் நீ எங்களை 4000 வருஷமாய் சூத்திரன் (தாசிமகன்
குடி அரசு - 1936 (2), 308
வேசிமகன்) என்று சொல்லி ஒதுக்கி வைத்து விட்டாயே! சீக்கியர்க்கும் தாழ்த்தப்பட்டவர்க்கும்கூட வீதாச்சாரம் ஏற்படுத்தி ஆய்விட்டது எங்களுக்கு மட்டும் ஏன் ஏற்படுத்த கூடாது? இது என்ன பித்தலாட்டம்! நாம் எத்தனை நாளைக்கு மூடர்களாக இருந்து கொண்டு இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்போம்! நாம் 100க்கு 97 பேர் இருந்தும் இன்னும் வீதாச்சாரம் பெறவில்லை யென்றால் அது தேசத்துரோகம் தான்.
ஒரு குடும்பத்தில் 2 பேர் பங்காளிகள் இருந்துகொண்டு ஒருவன். மற்றவனுக்கு வீதாச்சாரம் கொடுக்கவில்லை யென்றால் வக்கீலாயிருக்கிறவன். எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டுப்போய் விடுகிறான். இந்த 2 பேரும் சண்டைபோட்டுக்கொண்டு அழிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. வீதாச்சாரம் கேட்பதற்காகக் காங்கிரஸ்காரர்கள் முட்டையையும் கல்லையும் செருப்பையும் எறிந்தால் அவர்கள் வட்டியுடன் அதற்கு பதில் பெற்றுத்தான். தீர்வார்கள். சைமன் கமிஷன் வந்த காலத்தில் எங்களை தேசத்துரோகிகள் என்று கூப்பாடு போட்டவர்களெல்லாம் திருவல்லிக்கேணியை விட்டு ஓட்டமெடுத்தார்கள். அப்படிக் கூப்பாடு போடுகிறவர்களை இனிமேலும் அப்படித்தான் அனுப்புவார்கள். எல்லா வகுப்பாருக்கும் இடம் தராமல் எல்லா வகுப்பாருக்கும் அவரவர்க்கும் உள்ள உரிமைகளைக் கொடுக்காமல்
- தடங்கலெல்லாம் செய்து கொண்டு "நாங்களும் நீயும் ஒரு தாய் வயிற்று மக்களானதால் எல்லாவற்றையும் நாங்கள் அனுபவித்தால் என்ன நீ அனுபவித்தால் என்ன” என்று பேசி மக்களை ஏமாற்றாமல், ஒருவரோடொருவர். சமாதானமாயும் சமரசமாயும் வாழ உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு நான் இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். (கரகோஷம்)
குறிப்பு: 27.09.1936ஆம்நாள்திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை. (04.10.1936, 11.10.1936 குடி அரசு தொடர்ச்சி)
குடி அரசு - சொற்பொழிவு - 18.10.1936
399 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கருப்புக்கொடி
சென்னை சுற்றுப் பிரயாணத்தில் பண்டிதர் ஜவஹர்லால் அவர்களுக்கு சென்ற இடங்களில் எல்லாம் பஹிஷ்கார பிரசுரங்கள் வினியோகங்களும் பல இடங்களில் கருப்புக் கொடிகள் பிடித்தலும் பல இடங்களில் “பார்ப்பன. கங்காணியே திரும்பிப்போ'' என்கின்ற கோஷமும் மற்றும் இதுபோன்ற பஹிஷ்காரக் குறிப்பும், அதிருப்திக் குறிகளும் நடந்த வண்ணமாகவே இருந்திருக்கின்றன. இவற்றைப் பார்ப்பனப் பத்திரிகைகள் மறைத்தும் திரித்தும் கூறி வந்திருந்தாலும், எப்படியோ விஷயங்கள் வெளியாகி எல்லாப்பத்திரிகைகளும் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ, இஷ்டப்பட்டோ இஷ்டப் படாமலோ வெளிப்படுத்தி அவற்றின் மீது தங்களது அபிப்பிராயக் குறிப்புகளும் வெளியாக்கி விட்டன.
கருப்புக்கொடியானது, தமிழ் நாட்டில் பண்டிதர் ஜவஹர்லாலுக்கு மாத்திரம் பிடிக்கப்பட வில்லை. தோழர்கள் காந்தியார், ராஜேந்திரபிரசாத் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்கெல்லாம் பிடிக்கப்பட்டன. அவற்றின் காரணமும் அவ்வப்போதே சொல்லப்பட்டிருக்கின்றன. அதாவது காங்கிரஸ் தலைவர்கள் இங்கு காங்கிரசின் பேரால் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக பிரசாரம் செய்யவும், பணம் வசூலித்து பார்ப்பனர்களுக்கு கொடுத்து அவர்களின் விஷமப் பிரசாரத்துக்கு ஆக்கமளிக்கவும் வருகிறார்கள். ஆதலால் அவற்றிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தக் காரணங்கொண்டே சற்றேறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள எல்லா சுயமரியாதைக்காரர்களும் பஹிஷ்கரித்து வந்திருக்கிறார்கள். அது போலவே இப்போது தோழர் ஜவஹர்லாலும் பார்ப்பனர் கையாளாகவே தமிழ்நாட்டுக்கு வந்தார். ஜஸ்டிஸ் கட்சியை வைதார். வழக்கம் போலவே அவரும் பஹிஷ்கரிக்கப்பட்டார். இதில் புதுமை காண யாருக்கும் இடமில்லை. ஆனால் தங்களை புதுமையாக்கிக் கொண்டவர்களுக்கு இவ்விஷயம் புதுமையாகக் காணப்படுவதில் ஆச்சரியமிருக்க நியாயமில்லை என்பதோடு அப்படிப்பட்ட புதுமைகளை அவர்களைத் தவிர மற்ற யாவரும் லக்ஷியமாய்
கருதப் போவதுமில்லை.
நிற்க, கருப்புக் கொடியும் பகிஷ்காரமும் என்பது காங்கிரசுக்காரர்கள். கண்டுபிடித்ததென்றும் அதைப்பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கிறார்கள்.
குடி அரசு - 1936 (2), 310
என்றும் எழுதி சிலர் பெருமையும் திருப்தியும் கொள்ளுகிறார்கள். அது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் கருப்புக்கொடியும் பஹிஷ்காரமும் அவர்களுக்கென்றே ரிஜிஸ்டர் செய்யப்பட்டு விடவில்லை.
இஷ்டப்படாதவர்கள் எவரும் தங்களுக்கு இஷ்டப்படாத எவரையும் பஹிஷ்கரிக்க பிரிட்டிஷ் ஆட்சி சட்டம் குறுக்கிடவில்லை.
ஆதலால் அதை யார் மறுத்தாலும் பஹிஷ்காரம் செய்ய காங்கிரசுக் காரர்களுக்கு இருப்பது போன்ற உரிமை எவருக்கும் இருந்து வருகிறது
இந்தியரை பஹிஷ்கரிப்பது ஒழுங்கல்ல என்பது சிலரது வாதமாய் காணப்படுகிறது. இந்தியர்களை பகிஷ்கரிக்கும் வேலையும், “காங்கிரசுக்காரர்கள். தான் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்" என்பதே அவர்களுக்கு நாம் அளிக்கும் பதிலாகும்.
சமதர்ம வீரரை பஹிஷ்கரிக்கக் கூடாது என்பது வேறு சிலரின் வாதம் இந்த வாதம் சமதர்மக்காரன் என்று தன்னை சொல்லிக் கொள்பவர்களும் சொல்லுகிறார்கள் என்பதோடு சமதர்மம் வந்தால் தங்கள் நிலைக்கே ஆபத்து என்று கூறுகிறவர்களும் சொல்லுகிறார்கள். பண்டிதரின் சமதர்மம் வெண்டைக்காய் சமதர்மமாகும். “சமதர்மம் தான் எல்லாவற்றிற்கும் வழி” என்று சொல்லுவதுடன் அவரது சமதர்மம் முடிந்து விடுகிறதே தவிர அதற்கு அவரது திட்டம் என்ன என்பதைப்பற்றி இதுவரை ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அன்றியும் தன்னிடம் சமதர்மத்துக்கு யாதொரு திட்டமும் இல்லை என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு விட்டார். அதோடு பணக்கார வியாபாரிகளுக்கும், பூமிக்கார ஜமீன்தாரர்களுக்கும் “நான். சமதர்ம விஷயமாய் எவ்வித காரியமும் செய்யப் போவதில்லை” என்று வாக்கும் கொடுத்து விட்டார். இந்நிலையில் அவரை எந்தவாயைக் கொண்டு சமதர்மவாதி என்று அழைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
பகூத்தறிவுவாதியை பஹிஷ்கரிக்கலாமா என்பது மற்றும் சிலரின் வாதம். பண்டிதரின் பகுத்தறிவுக்கு அவர் எலும்பை கங்கையில் போட்டு செத்துப் போனவர்களுக்கு மோட்சம் கொடுத்ததே சாட்சி போதாதா என்கிறோம்
நமது நாட்டுக்கு வந்த ஒரு விருந்தாளியை பஹிஷ்கரிக்கலாமா என்பது இனி ஒரு சிலரின் ஆவலாதியாய் இருந்து வருகிறது. ஜவஹர் எந்த முறையில் யாருக்கு விருந்தாளி? நமக்கா? பார்ப்பனர்களுக்கா? விருந்து உண்டு போக வந்தாரா? தமிழ் மக்களை வைது விட்டுப்போக வந்தாரா? என்ன. உத்தேசத்தில் என்ன காரியத்துக்காக வந்து திரிகிறார்? என்பவைகளை யோசித்துப் பார்த்தால் அவர் நமக்கு விருந்தாளியா பகையாளியா என்பது நன்றாய் விளங்கும் ஆகவே தோழர் ஜவஹர்லாலை தமிழ் மக்கள் பஹிஷ்கரித்தது மிகவும்
சரி என்பதை யாவரும் உணரலாம். 3... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆனால் காங்கிரசுக்காரர்கள் பஹிஷ்கரிக்கும் முறையில் நாம் பஹிஷ்கரிக்கவில்லை. காங்கிரஸ்காரர் பகிஷ்காரமானது பழஞ் செருப்பு வீசுவது, முட்டை எறிவது, கழுதை கழுத்தில் அட்டை கட்டி விரட்டுவது ஆகிய முறைகளைக் கொண்டதாகும். இந்த மூன்று காரியமும் இப்பொழுது சுயமரியாதைக்காரர் பஹிஷ்கரித்த முறையைவிட மிகவும் செளகரியமும் சுலபமுமானகாரியமேயாகும். ஆணாலும் மனிதத்தன்மையையும் வீரத்தையும் உத்தேசித்து சு.ம. காரர்கள் அக்காரியங்கள் கண்டிப்பாகக் கூடாது என்று நிர்ப்பந்தமாய் நிறுத்திவிட்டார்கள்.
அவர்கள் அப்படிச் செய்ய வேண்டுமென்று கருதியிருந்தால் காங்கிரஸ்காரர்களுக்கு கிடைக்கும் கழுதைகள், செருப்புகள், முட்டைகள். ஆகியவற்றைவிட அதிகமாகவே கிடைத்திருக்கும். ஆனால் சு.ம காரர்களுக்கு பொறுப்பும், மனிதத் தன்மையும், மானமும் இருப்பதால் காணாமல் செய்து விட்டு கோழைப் பட்டம் சம்பாதித்துக்கொள்ள அவர்களுக்கு இஷ்டமில்லை. ஆகையால் பகிஷ்காரத்தை நேர்மையாகவும் ஆண்மையாகவும், சாந்தத்துடனும் நடத்தினார்கள். கலகமேற்பட்டால் சர்க்காரார் பஹிஷ் காரத்தை நிறுத்தி விடுவார்கள் எனக் கருதி மிகவும் சாந்தத்துடனும் பொறுமையுடனும் நடத்தினார்கள். பார்ப்பனக் கூலிகளும் அடிமைகளும் தங்களாலான அளவுக்கு கலகமும் செய்தார்கள், மறைக்கவும் செய்தார்கள். ஆனாலும் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் பார்ப்பனரல்லாதார்: என்று தங்களை கருதிக்கொள்ளும் சிலர் பஹிஷ்காரத்தை கண்டித்துப் பார்ப்பனரிடம் கூலி பெறுகிறார்களே இதைக் காணத்தான் நமக்கு பரிகாசமாய் இருக்கின்றது
சமீப காலத்தில் சேலத்தில் ச.ம. தொண்டர்களை காங்கிரஸ் காலிகள்
அடித்தார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் செல்லுமிடங்களில் காங்கிரஸ் காலிகள் கூட்டங்களில் குழப்பம் செய்தார்கள். கழுதைகள் கழுத்தில் அட்டை கட்டி விட்டார்கள். கூட்டத்தில் முட்டைகளையும் செருப்புகளையும் வீசினார்கள். சென்னை கார்ப்பரேஷன் மீட்டிங்கில் தோழர் அலமேலு மங்கைத் தாயாரம்மாள்.
மீது முட்டை எறிந்து அந்தம்மாள் அவர்களின் உயர்ந்த சேலைகளை அசிங்கப்படுத்தினார்கள். அந்தம்மாள் பக்கம் செருப்பை எறிந்தார்கள்.
இதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகளோ அவர்களது அடிமைப் பத்திரிக்கைகளோ வாய்திறக்கவில்லை. தங்களை ச.ம. வீரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சமய சஞ்சீவிகளும் வாய் திறக்க வில்லை. அந்த அம்மாள் அவர்களே செருப்பையும் முட்டையையும் வீசிய காந்திக் குல்லாய் அயோக்கியனை கைப்பிடியாய் பிடித்துக்கொடுத்தும் நன்றியும் நாணயமுமற்ற மேயர் கவனியாமல் அயோக்கியனுக்கு உதவியாய் இருந்தார்.
குடி அரசு - 1936 (2), 312
ஆகவே இம்மாதிரி காரியங்கள் பதிலுக்கு பதில் செய்து கொண்டே போய் கையில் வலுத்தவன் ஜெயம் பெற்ற பிறகுதான் அடக்கப்பட முடியுமே அல்லாமல் வெறும் போலி வேதாந்தம் பேசுவதால் ஒழிந்துவிடும் என்று நாம் கருதவில்லை
நிற்க இதுவரை பஹிஷ்கரித்தவர்களை யெல்லாம் விடஜவஹர்லாலை. பகிஷ்கரித்தது மிகவும் சரியான காரியம் என்பதை ஜவஹர்லாலே
தெளிவாய் காட்டிக்கொண்டார்.
பண்டிதர்ஜவஹர்லால் தமிழ் நாட்டிற்கு வந்தது தேர்தல் பிரசாரத்துக்கும் பணம் வசூலிப்புக்கும் என்பதை நன்றாய் ஒப்புக் கொண்டார்.
அற்பத்தனமான முறையில் மற்ற கக்விகளைப் பற்றி பேசினார்.
முன் வரிக்கு பின் வரி மனதறிந்த பொய் பேசி வருகிறார்.
கீழ்த்தர மக்கள் முறையில் பேசி வருகிறாரே ஒழிய கவுரவமுள்ள
மக்கள் வாயில் வரும் பேச்சு பேசுவதில்லை.
சத்தியமூர்த்தியார், உபயதுல்லா சாயபு, குப்புசாமி முதலியார் பேச்சுகளுக்கும் ஜவஹர்லாலார் பேச்சுக்கும் ஏதும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.
பதில் சொல்ல முடியாத சமயத்தில் இழிமக்கள் போலவே வைது
விட்டுத் தப்பித்துக் கொள்வது என்கின்ற இழி முயற்சியை கையாடி
இருக்கிறார். இவை மாத்திரம் அல்லாமல் ஜவஹர்லால் விஜயத்தால் பொதுவாக ஏற்பட்டநன்மைஎன்னஎன்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
வீர வசந்த ராயர்
வீரவசந்த ராயர் என்று ஒருவர் வரப்போகிறார் என்று சொன்னவுடன் தமிழ் மக்கள் நகரத்திலும் கிராமத்திலும் தங்கள் தங்கள் வீட்டு கதவுகளுக்கு நாமம் போட்டுவிட்டு கூட்டம் கூட்டமாய் தெருவில் நின்று ஓடிஅலைந்தது கொஞ்சகாலத்துக்கு முன் தமிழ்நாட்டில் நடந்த சம்பவமாகும்.
ஆதலால் தமிழ்நாட்டு மக்களின் மூடத்தனத்தைக் கொண்டுதான் ஒரு மனிதனின் பெருமையை விளக்கவேண்டி இருக்குமானால் அம்மனிதனின் உண்மையான யோக்கியதை எவ்வளவாயிருக்கும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை. கணித சாஸ்திரத்தில் புஜ்ஜியத்துக்கு மதிப்பில்லை என்பது ஒரு விதி அந்த விதியை பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன நிருபர்களும் கையாண்டு விட்டார்கள். அதாவது எந்த ஊருக்கு ஜவஹர்லால் போனாலும் அங்கு 10000, 50000, 100000 பேர்கள் வந்திருந்தார்கள் என்று பெரிய 313. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
எழுத்துகளில் போட்டு விட்டார்கள். உண்மை 10-6 ஒரு பங்கு கூட இல்லை என்பது அந்தந்த ஊர் சேதி பத்திரிகையில் வந்திருப்பதை அந்தந்த ஊர்க்காரர்கள் பார்த்தால் விளங்கிவிடும்.
முதலாவது கருப்புக்கொடிக்குப் பயந்து ஒவ்வொரு ஊரிலும் ஜவஹர்லால் வரும் நேரத்தை குறிப்பாக குறிப்பிடாமலே வைத்துக் கொண்டார்கள். இரண்டாவது அவர் வரும் தடம் இன்னது என்பதில் ஒன்றைக்காட்டி மற்றொரு வழியில் அழைத்து வந்திருக்கிறார்கள். அந்தந்த ஊரில் 1 நிமிஷம், 2 நிமிஷம் கூட நிற்காமல் ஓட்டம் ஓட்டமாய் ஓடி இருக்கிறார்கள். தினம் 200 மைல் 300 மைல் என்று ஆகாயக்கப்பல்
வேகத்தில் நடத்தி இருக்கிறார்கள். இந்த குறிப்பு இல்லா நேரத்தில் இந்த அவசரத்தில் இந்த வழி மாறி மாறி மக்களை ஏமாற்றி ஓடும் நிலையில் என்ன. பேசி இருப்பார் என்ன நடந்திருக்கும் என்பது நாம் சொல்லாமலே விளங்கும்.
மொத்தத்தில் பார்க்கப் போனால் இவைகள் எல்லாம் பார்ப்பனர்கள் ஜவஹர்லாலுக்கு தமிழ் நாட்டின் நிலைமை அறியச் செய்யாமல் இருக்கச்
செய்த சூழ்ச்சியே ஒழிய வேறில்லை. இவை ஒருபுறமிருக்க, ஜவஹர்லாலுக்கு ஏற்கனவே அறிவுக் கண் கிடையாது. அதோடு பார்ப்பனர்கள் செய்த அவசரக்கோலம் ஜவஹரின் காதையும் செவிடாக்கி விட்டது. ஜவஹர்லால் தமிழ்நாட்டின் உண்மை தெரிந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பெரிய நன்மை
ஒன்றும் வந்துவிடப்போவதில்லை. தெரியாததினால் முழுகிப் போவதும் ஒன்றுமில்லை அது உலகறிந்த விஷயமாகும். ஆதலால் இது ஒத்தைக் காசைக்கொண்டு சூரியனை மறைக்கச்செய்த முட்டாள் தனம் போல்தான் முடிந்ததே தவிர பார்ப்பனர்களுக்கு எவ்வித வெற்றியும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. இதனால் பார்ப்பனர்களின் முயற்சி வீணாயிற்று என்பதோடு ஜவஹர்லாலின் யோக்கியதையும் வெளியாயிற்று என்றுதான் சொல்லவேண்டும் உதாரணமாக செட்டிநாட்டில் பிரதானப் பட்டணமாகிய தேவக்கோட்டையில் தோழர்கள் ஈபன், டாக்டர் மூர்த்தி நாயுடு முதலிய வக்கீல்,
டாக்டர் ஆகியவர்களே கருப்புக்கொடி ஏந்தி ஐவஹர்லாலை பஹிஷ்கரித்ததும், அதைப் பார்ப்பன போலீஸ் இன்ஸ்பெக்டரும், பார்ப்பன சப் மேஜிஸ்ட்ரேட்டும் தடுத்து கொடி பிடித்தவர்களை அரஸ்டு செய்யச் சொன்னதுமான பார்ப்பன ஆதிக்கக் காரியங்கள் மற்றொரு பக்கத்தில் காணலாம்
மற்றும் தொழிலாளர்களும் சிறப்பாக பொன்மலை தொழிலாளர்கள் காங்கிரசை முதலாளிகள் ஆதிக்க ஸ்தாபனம் என்றும், காங்கிரஸ் இதுவரை தொழிலாளிகளுக்கு பல கெடுதிகள் செய்து வந்திருக்கிறதேயல்லாமல் நன்மை ஒன்றும் செய்யவில்லை என்றும் ஆதாரங்கள் காட்டி (ஜவஹர் லாலை) பகிஷ்கரித்திருப்பதையும் மற்றொரு பக்கம் காணலாம்
குடி அரசு - 1936 (2), 314
இவ்வளவு பகிஷ்காரத்துக்கும் எதிர்ப்புக்கும் ஜவஹர்லாலின் பதில். ஒரே பல்லவியாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அதாவது, “நீங்கள் ஜமீன்தார் பிரதிநிதிகளா? சர்க்கார் பிரதிநிதியா?"” என்பதேயாகும். இது ஒரு கோழைச் சமாதானமே தவிர ஆண்மைச் சமாதானமாக ஆகாது. ஏனெனில் எதிரிகளது காரியத்துக்கு சமாதானம் சொல்லி விட்டு பிறகு இப்படிச் சொன்னால் அது ஆண்மையாகலாம்.
இப்போதும் நாம் சொல்லுகிறோம். அதாவது ஜவஹர்லால் தமிழ் நாட்டில் இறங்கின நிமிஷம் முதல் தமிழ் நாட்டை விட்டு ரயிலேறும்
நிமிஷம் வரை ஒரே மாதிரி பேச்சாக எல்லா ஊரிலும் ஒரு எழுத்துக் கூட மாற்றமில்லாமல் பேசியதையே பேசிவரும் அவரது பேச்சில் மூக்கிய பல்லவியாகிய வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை ஆகியவற்றைப் போக்க வந்திருப்பதாகச் சொல்லுவதை மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கச் சொல்லும் சூழ்ச்சிப் பேச்சென்றே சொல்லுகிறோம்
ஏனெனில் இவரிடம் அக்காரியங்களுக்கு திட்டம் என்ன இருக்கிறது என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் ஏழ்மைக்கும் மருந்து சமதர்மம் தான் என்கிறார். சமதர்மத்துக்கு இப்போது தன்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்று ஒரு இடத்திலும், சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகுதான். சமதர்மப் பேச்சு என்று மற்றொரு இடத்திலும், உலகப் புரட்சி வரும் போதுதான் சமதர்மம் ஏற்படலாம் என்று இன்னொரு இடத்திலும் இப்படியாக குளறிக் கொட்டி வருகிறார்.
வாஸ்தவத்தில் ஜவஹர்லால் உண்மை சமதர்மக்காரராய் இருந்தால் நமது பார்ப்பனர்கள் இத்தனை பேரும் அவரை சங்கராச்சாரி ஆக்கி இருப் பார்களா என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
ஜவஹர்லால் அவர்களுக்கு அரசியல் ஞானமாவது இருக்கிறதா. என்பதை அவரது சென்னை பேச்சு முதல் கடசி தென்னாற்காடு பேச்சு வரை அலசிப் பார்த்தால் மடையனுக்கும் விளங்கும்
தான் ஒரு சாமியாடி போலும் மற்றவர்களை வாக்கு கேட்கும் அடி மண்டுகள் போலும் கருதிக்கொண்டு அறைத்த மாவை அறைப்பதுபோல் ஒரேமாதிரி எழுதிப் படிப்பவர் போல் படித்துக் கொண்டே போகிறார்.
ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லத்தெரியாமல் போன ஊர்களில் எல்லாம் கேள்வித்தாள்களை பார்த்துவிட்டு கசக்கி கீழே போட்டுவிட்டு
வாய் குளறி இருக்கிறார். சில இடங்களில் கேள்விக்காரர்களை வைது அடக்கி விரட்டி இருக்கிறார்.
318... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அருப்புக்கோட்டை தோழர்கள் கேள்வியை பார்த்து விட்டு திடீரெனக் கோபித்து சு.ம. காரர்கள் பொய்யர்கள் என்று வைது பதில் சொல்லாமல் தப்பித்துக்கொண்டிருக்கிறார்.
சு.ம. இயக்கம் இருப்பதே தனக்கு தெரியாது என்று சொல்லுகிறார். கொளும்பிலும், திருநெல்வேலியிலும், நாகர்கோவிலிலும்2 வருஷத்துக்குமுன். வந்திருந்தபோது அதைப் பாராட்டி பேசி இருக்கிறார். இவர் மாத்திரமல்லாமல் காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை ராஜகோபாலாச்சாரியார் உள்பட சு.ம இயக்கத்தைப் பாராட்டி காங்கிரசோடு சேரும்படி கூப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் இருக்க சிறிதும் முன் பின் யோசனை இல்லாமல் காலிப் பிரசாரகர் போல் நடந்து கொண்டு காங்கிரசின் தலைமை ஸ்தாபனத்தின் மதிப்பை அடியோடு ஒழித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது
இம்மாதிரி போலி சமதர்மம் பேசி முட்டாள்கள் வாயால் சமதர்ம
வீரப் பட்டம் பெறுவதைப் பார்க்கிலும், அயோக்கியர்களுக்கு போலி சமாதானத்துக்கு இடம் கொடுப்பதைப் பார்க்கிலும் நாணயமாக உண்மையையும் சாத்தியா சாத்திய சவுகரியத்தையும் சொல்லி யோக்கியமாய் நடந்து கொள்ளுவது உண்மையான வீரனின் செய்கை என்றே சொல்லுவோம்.
இவர் கூறும் சுயராஜ்யத்துக்கு ஆவது இவரிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
சட்ட சபைக்குப் போவதால் சுயராஜ்யம் கிடைத்து விடுமா?
இவர் தகப்பனாரே “சட்டசபை மெனக்கெட்ட வேலை சபை'' என்று சொன்னாரே அதை மறந்து விட்டாரா? சுயராஜ்யம் என்றால் என்ன என்றாவது எங்காவது கூறி இருக்கிறாரா? ஒன்றும் இல்லாமல் தமிழ்
நாட்டில் ஒரு பறவை பறந்துவிட்டுப் போய் விட்டார்.
குடி அரசு - தலையங்கம் - 18.10.1936
குடி அரசு - 1936 (2), 316
கோபியில் நடந்தது என்ன?
தோழர் ஜவஹர்லாலுக்கு கோபியில் கருப்புக்கொடி பிடித்து பஹிஷ்கரித்ததைப் பற்றி காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவை அயோக்கியத் தனமாகத் திரித்துக் கூறி இருக்கின்றன.
பத்திரிகை நிருபர்கள் பெரிதும் பார்ப்பனர்கள் என்பதும் அவர்கள். இம்மாதிரி விஷயங்களில் 100க்கு 99-ல் அற்பத்தனமாகவே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும் எவ்வளவு தான் கண்டித்தாலும் அவர்களுக்கு ரோஷம் என்பது மருந்துக்குக் கூட ஏற்படுவதில்லை என்பதும் நாம் இதற்கு முன் அனேக தடவை வெளியிட்ட காரியமாகும். ஆகவே கோபியில் நடந்த விஷயத்தில் சில பத்திரிகை நிருபர்கள் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டதில் அதிசயமில்லை. ஆனால் “மெயில்” பத்திரிகை நிருபர் அடியோடு அது போல் நடந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் “மெயில்” பத்திரிகை சொந்தக்காரர் முழுப்பார்ப்பனர் அல்ல. ஆதலால் கேள்விக்கு பதில் சொல்லவேண்டி வருமே என்று பயந்து கொஞ்சமாவது உண்மை எழுதவேண்டியதாகி விட்டது அதாவது கோபியில் கருப்புக் கொடிபிடித்தவர்களை தோழர் ஜவஹர்லால் கூப்பிட்டதாகவும் கருப்புக்கொடி பிடித்தவர்கள் பயந்து கொண்டு நழுவி விட்டதாகவும் பல காங்கிரஸ் பத்திரிக்கைகள் என்பவைகள் எழுதி இருக்கின்றன. நிருபரில்லாத சில பத்திரிக்கைகள் அவற்றைப் பார்த்து காப்பி அடித்திருக்கின்றன.
ஆனால் “மெயில்' பத்திரிகை நிருபர் கருப்பு கொடி பிடித்தவர்களை பண்டிதர் ஜவஹர் கூப்பிட்டார். கருப்புக்கொடிக்காரர் வந்தார்; ஜவஹர். கேட்ட கேள்விக்கு பதிலளித்தார்" என்று எழுதி இருக்கின்றார். (கோபியில் இருந்து வந்த சேதியையும் மற்றொருபுறம் பிரசுரித்திருக்கிறோம்.) ஆகவே இம்மாதிரி விஷயங்களில் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அவற்றின் நிருபர்களும் எவ்வளவு யோக்கியமாய் நடந்துகொள்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமாய் விரும்புகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.10.1936
37... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சிவில் ஜெயில் இல்லை
கடன் பட்டவர்களுக்கு ஜெயில் வாசம் விதிக்க இருக்கும் சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று நாம் வெகுகாலமாக எழுதி வந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்
அதற்காக என்றே சிலர் சிவில் ஜெயிலுக்கு போனதும் வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்
இப்போதுதான் அந்த கிளர்ச்சிக்கு வெற்றி ஏற்பட்டது. அதாவது சென்ற வாரத்தில் இந்திய சட்டசபையில் கடன்காரர்களை ஜெயிலுக்கு பிடிக்கக்கூடாது என்று ஒரு சட்டம் செய்யப்பட்டு விட்டது
ஆனால் அதில் பணம் வைத்துக்கொண்டு கொடுக்க மாட்டேன் என்றால் அப்படிப்பட்டவனுக்கு இந்த சட்டம் பயன்படாது என்று ஒரு நிபந்தனை
கண்டிருக்கிறது அப்படிப்பட்டவர்கள் கடன்காரர்கள் என்பவர்களில் 100 -க்கு 10 பேர்கள்தான் இருக்கக்கூடும். அந்த 100 -க்கு 10 பேர்களிலும் ஒருவர் இருவர்தான் பணம் வைத்துக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்கப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்
ஆதலால் அந்த நிபந்தனையில் அந்த சட்டம் பாதிக்கப்பட்டு விட மாட்டாது என்பது நமதபிப்பிராயமாகும்
இந்த சட்டம் தப்பாக கையாளப்பட்டாலும் கூட பிரமாத குற்றமில்லை என்று கருதுகிறோம். ஏனெனில் வட்டிக்கு ஆசைப்பட்டு கண்டபடி கடன் கொடுத்து மக்களின் நாணயத்தையும் தகுதியையும் பாழாக்கும் லேவாதேவிக் காரர்களின் அட்டூழியம் ஒரு அளவுக்காவது ஒழியும் என்றே கருதி மகிழ்ச்சி அடைகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.10.1936
குடி அரசு - 1936 (2), 318
ஜவஹருக்கு பல ஸ்தல ஸ்தாபனங்கவில் வரவேற்பில்லை
பண்டிதஜவஹர்லாலுக்கு தென்னாட்டிலுள்ள பல ஸ்தல ஸ்தாபனங்களில்:
வரவேற்பில்லை.
சென்னை கார்ப்பரேஷனில் முதலில் வரவேற்பளிப்பதில்லை யென்று தீர்மானிக்கப்பட்டது. பின் கோழி முட்டையும், செருப்புகளும் வீசி காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத்தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது
திருச்சியிலும் முதலில் வரவேற்பளிப்பதில்லையெனமுனிசிபாலிட்டியில்
தீர்மானிக்கப்பட்டது. பின் அங்கும் காங்கிரஸ் காலிகள் செருப்புகளும்
அழுகல் முட்டைகளும் எறிந்து காலித்தனம் செய்து வரவேற்பளிப்பதெனத்
தீர்மானம் செய்துகொள்ளப்பட்டது
மதுரை ஜில்லாபோர்டிலும் வரவேற்பளிப்பதில்லை யெனத் தீர்மானித்து விட்டது
கிருஷ்ணகிரி யூனியன் போர்டில் வரவேற்புக் கொடுப்பதற்கு
முயற்சித்தார்கள். ஆனால் அங்கு கொடுப்பதில்லை யென தீர்மானிக்கப்பட்டது
ஈரோட்டிலும் வரவேற்பளிக்க முயற்சித்தார்கள். இங்கு அவர்களுக்கு பலமில்லை யென்று தெரிந்ததும் அந்த முயற்சியை நிறுத்திவிட்டார்கள்.
திண்டுக்கல்லிலும் வரவேற்பளிக்க மூயற்சித்தார்கள். அங்கும் அவர்களுக்கு பலமில்லாததால் அம்மூயற்சியும் நிறுத்தப்பட்டது.
விருதுநகர் முனிசிபாலிட்டியிலும் வரவேற்பில்லை. இதுபோல்
இன்னும் பலவிடங்களில் வரவேற்பில்லை.
இம்மாதிரி வடநாட்டிலிருந்து வந்த எந்தத் தலைவருக்கும் நடக்கவில்லை. ஜவஹருக்கு மட்டும் ஏன் இப்படி நடந்ததென்றால் அவரது முட்டாள்தனமான நடத்தையாலே தான். இதுமட்டுமல்ல, இவர் சென்று விட்டுவந்த விடங்களிலெல்லாம் இவர் நடந்துகொண்டதைப் பற்றி பொது ஜனங்கள் மிகவும் வெறுப்பாகவும், இழிவாகவும் பேசுகிறார்கள். இவர் இப்போது தென்னாட்டிற்கு வந்து போவது ஒரு வகைக்கு நலமென்றே
39 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கருதுகிறோம். ஏனெனில் இவரைப் பற்றி “இந்திரன், சந்திரன்” என்று பார்ப்பனர்கள் புகழ்ந்து பாமர ஜனங்களை ஏமாற்றி வந்ததை தெரிந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதே யாகும்
ஆகையால் இனிமேலாவது பொதுஜனங்கள் காங்கிரஸ் பெயரால் பார்ப்பனர்கள் ஏமாற்றி வருவதைக் கண்டு ஏமாறாமலிருக்க வேண்டுமென்று எச்சரிக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.10.1936
குடி அரசு - 1936 (2), 320
பார்ப்பணரல்லாதார் பிரசாரக் கமிட்டிக்கு கோலாலம்பூர் விஸ்வலிங்கம் உதவி
பார்ப்பனரல்லாதார் மத்திய பிரசாரக் கமிட்டிக்கு நன்கொடையாக கோலாலம்பூர் தோழர் விஸ்வலிங்கம் அவர்கள் அனுப்பிய 10 ரூபாயும் வரப்பெற்றோம். ஷி தோழர் விஸ்வலிங்கம் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னவரின் கட்சியபிமானத்தையும் பாராட்டுகிறோம். ஷி தொகையை மத்தியக் கமிட்டி பொக்கிஷதார் தோழர் வி.வி. ராமசாமி அவர்களுக்கு அனுப்பப்பட்டது
(ப-ர்)
குடி அரசு - பெட்டிச் செய்தி - 25.10.1936
31... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பண்டிதர் கேள்விக்கு பதில்
பண்டிட் ஜவஹர்லால் சுற்றுப்பிரயாணத்தில் சுயமரியாதைக்காரர்கள். பல இடங்களில் கருப்புக்கொடி பிடித்தும் பஹிஷ்காரம் செய்தும் நடத்தின. ஆடம்பர ஊர்வலங்களில் முதலில் சில இடங்களில் அலட்சியமாய் கருதி துச்சமாய்ப்பேசினார் என்றாலும் அனேகமாக ஒவ்வொரு இடங்களிலும் அவர் கருப்புக்கொடியும் பஹிஷ்காரக் கோஷமும் நேரில் கண்டதால் நாகப்பட்டணத்தில் அதன் விபரத்தை “நடு நிலையில்” நின்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்திற்குள்ளானார். அது சமயம் கருப்புக்கொடி பிடிக்கப்படுவதினுடையவும் பகிஷ்காரத்தினுடையவும் காரணங்கள் கண்டறிந்து பண்டிதர் ஆதியில் தனது அறியாமையால் இரண்டொரு இடங்களில் துச்சமாய்ப் பேசினதற்கு ஆக மன்னிப்பும் கேட்டுக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தலைவர்கள் தனக்கு விளக்கவேண்டும் என்று 6 கேள்விகள் கேட்டிருக்கிறார். அக்கேள்விகள் “மெயில்” “சுதேசமித்திரன்” முதலிய ஆங்கிலம் தமிழ் பத்திரிக்கைகளில் காணப்படுகிறபடி,
1. இந்த பஹிஷ்காரம் சுயமரியாதைக்காரர்கள் முன்னமே ஏற்பாடு செய்துகொண்டு செய்கிறார்களா?
2. இது சுயமரியாதைக்காரர்களின் பொது முறையா?
காங்கிரசைப்பற்றி சுயமரியாதைக்காரர்களின் நடைமுறை என்ன?
ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி சுயமரியாதைக்காரர்களுடைய நடைமுறை என்ன?
5. சுதந்திரத்தைப் பற்றி சுயமரியாதைக்காரர்களின் அபிப்பிராயம் என்ன?
6. கருப்புக்கொடி பற்றியும் மரியாதை காட்டுவதுபற்றியும் சுய மரியாதைக்காரர்களின் நடைமுறை என்ன?
என்று கேட்டு இருக்கிறார் அவைகளுக்கு நாம் விடையளிக்க வேண்டியது நமது கடமை என்றே கருதுகிறோம்
ஆனால் பண்டிட் ஜவஹர்லால் அவர்களை அருப்புக் கோட்டையில் சுயமரியாதைக்காரர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல்
குடி அரசு - 1936 (2), 322
சுயமரியாதைக்காரர்களை பொய்யர்கள் என்று வைதார். பண்டிதர் சுய மரியாதைக்காரர்களுடைய எந்த கேள்விக்கு ஆக அப்படி யோக்கியப் பொறுப்பற்ற தன்மையில் வைதார் என்பதை வைத வார்த்தையை மாத்திரம் கொட்டை எழுத்தில் விளம்பரம் செய்த பத்திரிகைகாரர்கள் அந்தக் கேள்விகளையும் சின்ன எழுத்திலாவது போட்டு காட்டி இருப்பார்களானால் அப்பத்திரிகைகாரர்களுக்கு நேர்மையும் நாணயமும் இருக்கிறது என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல்லாமல் வைத வார்த்தையை மாத்திரம் விளம்பரப்படுத்தினர்.
பார்ப்பனர்களிடமும் பார்ப்பன அடிமைகளிடமும் நாம் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? இவர்களிடம் நேர்மையோ, மானமோ. இருக்குமானால் அவர்கள் பார்ப்பனர்களாகவும் பார்ப்பன அடிமைகளாகவும் இருக்க ஒரு நிமிஷம் கூட சம்மதிக்க மாட்டார்கள். ஆதலால் அதை விட்டு விட்டு மற்ற விஷயங்களைப் பற்றி கவனிப்போம். அருப்புக்கோட்டை சு.ம காரர்களுடைய கேள்விகள் ஆங்கிலத்தில் அச்சிட்டு பண்டிதரிடம் கொடுத்தபடி அப்படியே மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதற்கு
தமிழ் மொழிபெயர்ப்பும் அதன் கீழே கொடுத்திருக்கிறோம். பண்டிதர் பதில் சொல்ல முடியாவிட்டாலும் பண்டிதரை ஆதரிக்கும் பத்திரிகைகளோ. ஆசாமிகளோ யாராவது இப்பொழுதாவது பதில் சொன்னாலும் சரி என்றே அறைகூவி கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாத பத்திரிக்கைகளாகிய “தமிழ்நாடு'' “நவசக்தி” “ஊழியன்” முதலிய பார்ப்பன சிபார்சு பத்திரிக்கைகள் பதில் சொன்னாலும்
சரி என்றே விரும்புகிறோம். சரியோ தப்போ தாங்கள் போட்டுக்கொண்ட வேஷத்துக்காக தங்களது சுதந்திர அறிவையும் % அணாவுக்கும், 1% அணாவுக்கும், 1% அணாவுக்கும் விற்று விட்டு நடப்பதானால் அதில் நாம் குறுக்கிட ஆசைப்படவில்லை. ஆனால் தங்கள் நிலையை மறந்தாவது சில சமயங்களில் நேர்மையைப் பற்றியும் மானத்தைப்பற்றியும் இவர்கள் பேச வருவதினால் இவற்றை பிரஸ்தாபிக்க வேண்டி இருக்கின்றது
நிற்க, பண்டிதமின் முதல் கேள்விக்கு பதில் ௨
பஹிஷ்கார விஷயம் பண்டிதர் தென்னாட்டுக்கு பார்ப்பன கங்காணியாக ஓட்டுப் பிரசாரத்துக்கு வரவழைக்கப்படுகிறார் என்று தெரிந்த உடனேயே பண்டிதரை பஹிஷ்கரிக்க வேண்டியது தங்கள் கடமை என்று சுயமரியாதைக்காரர்கள் முடிவு செய்து கொண்டார்கள். ஆதலால் முன்னேற்பாடு என்று இல்லாவிட்டாலும் பண்டிதர் வருவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும்
இந்த பஹிஷ்காரம் பண்டிதருக்கு மட்டும் இல்லாமல் காந்தியாருக்கும்
ராஜேந்திரருக்கும் சென்ற வருஷத்திலும் அதற்கு முந்தின வருஷத்திலும் செய்ததேயாகும். பகிஷ்கார முறையை காந்தியார் மெச்சி வடநாட்டுச்
393 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சுற்றுப் பிரயாணத்தில் புகழ்ந்து கூறி இருக்கிறார். எதற்காக இதைக் காட்டுகிறோம் என்றால் அவ்வளவு ஒழுங்காகவும் கண்ணியமாகவும் பஹிஷ்காரமும் கருப்புக்கொடியும் நடத்தப்பட்டன என்பதற்காகவும் அவர்கள் பண்டிதரைப் போல் கேவலமாகவும் இழிவாகவும் கருப்புக்காரரிடம் நடந்து கொள்ளவில்லை என்பதற்கு ஆகவும் காட்டப்படுகிறது.
ராஜேந்திரரும் கண்ணியமாகவே நடந்துகொண்டதோடு “நான் ஒரு பார்ப்பனரல்லாதார் ஆச்சே, என்னை ஏன் பகிஷ்கரிக்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு பதிலாக, ராஜேந்திரரே தாங்கள் பார்ப்பனரல்லாதார் ஆனாலும் பார்ப்பனர் ஆயுதமாக பார்ப்பனர் தேர்தலுக்கு ஓட்டுப்பிரசாரம் செய்ய வந்திருக்கிறீர் என்று சு.ம. காரர்கள் பதில் சொன்னார்கள். அதற்கு ராஜேந்திரர். “எனக்கு இங்கு எலக்ஷன் நடப்பதே தெரியாது” என்று பதில் சொன்னார்.
ஆனால் ஜவஹர்லாலோ “நான் எலக்ஷன் பிரசாரத்துக்கே வந்திருக் கிறேன், காங்கிரசுக்கே ஓட்டுக்கொடுங்கள். நிற்கும் ஆள் மொண்டியானாலும் குருடனானாலும் ஓட்டுக் கொடுங்கள்'' என்றார். ஆகையால் பஹிஷ்காரம் செய்யவேண்டியது கடமை என்றும் முறை என்றும் சும. காரர்கள் கருதினார்கள்.
இரண்டாவது கேள்விக்கு பதில் ௨
இப்படிப்பட்டஆசாமிகள் விஷயத்தில் பகிஷ்காரம் செய்ய வேண்டியது பொதுவான முறை என்று தான் சு.ம. காரர்கள் கருதுகிறார்கள்.
மூன்றாவது கேள்விக்கு பதில் ௨
காங்கிரசானது மேல் ஜாதிக்காரர், படித்தவர்கள், பணக்காரர்கள் ஆகியவர்களுக்கு நலனும் பாதுகாப்புமளிக்கும் சாதனம் என்றும், வருணாச் சிரமத்தை ஆதரிக்கும் ஸ்தாபனம் என்றும், பிற்பட்ட மக்களுக்கும் தீண்டப்படாத மக்களுக்கும் நன்மை செய்ய யாதொரு திட்டமும் இல்லாத ஸ்தாபனம் என்றும் (காங்கிரசைப் பற்றி) & .. காரர்கள் கருதுகிறார்கள்
நான்காவது கேள்விக்கு பதில் ௨
ஜஸ்டிஸ் கட்சியானது அரசியலில் பிரதிநிதித்துவத்திலும் உத்தியோகத்திலும் சகல மத வகுப்புகளுக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் அளிக்கக்கூடியது என்றும், சமூக இயலில் மதம், பழக்கவழக்கம் சாஸ்திரம் என்பவைகளை லக்ஷியம் செய்யாமல் சமூக வாழ்வில் சகல வகுப்புகளும் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்றும், கொள்கையையும் வேலை முறையையும் சமத்துவத்தையும் உடைய கட்சி ஆதலால் அதை அவ் வேலை முறைகளின் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் கெடுத்து விடாமல் இருக்க வேண்டுமென்று கருதி சு.ம. காரர்கள் தங்களால் கூடுமான அளவு ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கின்ற கொள்கை உடையவர்கள்.
குடி அரசு - 1936 (2), 324
ஐந்தாவது கேள்விக்கு பதில் உ
சுதந்திரம் என்கின்ற வார்த்தைக்கு பண்டிதர் என்ன அர்த்தம் கொண்டு அவ்வார்த்தையை உபயோகித்து வருகிறார் என்பது விளங்கவில்லை.
வெள்ளைக்காரர்களின் அரசியல் ஆதிக்கம் இந்நாட்டை விட்டு ஒழிக்கப்படுவது தான் சுதந்திரமே ஒழிய அதற்கப்புறம் என்ன நடக்கும் என்பதைப் பற்றி மூடு மந்திரமாகவோ, அல்லது கராச்சி தீர்மானப்படி பழய பழக்க வழக்கம் அதாவது பார்ப்பன பழக்கவழக்க உரிமையும் பறையன் பழக்க வழக்க உரிமையும் நிலைநிறுத்தப்படுவதாகிய வருணாச்சிரம முறை காப்பாற்றப்படும் என்கின்ற உத்திரவாதம் கொண்ட சுதந்திரமாகவோ இருக்குமானால் அப்படிப்பட்ட சுதந்திரத்தை தடுக்க சு.ம.க்காரர்கள் தங்களால் ஆனவரையும் பாடுபடுவார்கள். அப்படிக்கில்லாமல் பண்டிதர் கூறும் சுதந்திரத்தில் பார்ப்பான் என்று ஒரு ஜாதி முறையும் பறையன் என்று ஒரு ஜாதி முறையும் மற்றும் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கின்ற பதங்களும் அரசியல் ஆதாரங்களிலோசட்டத்திலோ அமுலிலோ காணப்படாத தத்துவம் கொண்ட சுதந்திரமாகவும் இருக்குமானால் அந்த
சுதந்திரத்துக்கு ஆக பண்டிதரை விட ஒரு அடி முன்னணியில் இருக்க ௯ூ.ம.காரர்கள் தயாராய் இருக்கிறார்கள்.
ஆறாவது கேள்விக்குப் பதில் உ
கருப்புக்கொடி பஹிஷ்காரமானது வந்திருக்கும் நபரை பிரதானமாய்க் கருதி அல்ல, அந்த நபரின் வருகையின் காரியம், காரணம், அவசியம் எது? என்ன? ஏன்? என்பவைகளைப்பற்றியதேயாகும்
அதாவது இந்த நாட்டில் பார்ப்பனர்கள் காங்கிரசில் ஆதிக்கம் பெற்று இருக்கிறார்கள். வடநாட்டு பிரமுகர்களும் தலைவர்களும் இந்த நாட்டு பார்ப்பனர்களைத்தான் அறிந்திருக்கிறார்களே ஒழிய பார்ப்பனரல்லாதாரைப் பற்றி அறியா விட்டாலும் கெட்ட அபிப்பிராயம் கொண்டு இருக்கிறார்கள் எந்தவடநாட்டுத்தலைவரும் சுதந்திரமாக இங்கு வருவதில்லை. (வடநாட்டுப் பெரியார்களில் இந்த நாட்டுக்கு வந்தவர்களில் விவேகாநந்தரும் லாலா
லஜபதியும் தான் சுதந்திர புத்தியோடு வந்து சுதந்திர புத்தியோடு அபிப்பிராயம் தெரிவித்துவிட்டுப் போனவர்கள்.) தவிரவும் காங்கிரசானது தன்னைத் தவிர மற்ற ஸ்தாபனங்களை தேசத்துரோக ஸ்தாபனம் என்றும் காங்கிரஸ் காரர்களும் தங்களை தவிர மற்றவர்களை தேசத்துரோகிகள் என்று கருதுகிறார்கள்
இந்த நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் சிலர் செல்வவான் களாகவும் அதிகாரம் வகிப்பவர்களாகவும் இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமானது அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலையில் வைத்து
395 QURwaRdT எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
விடுகிறது. மற்றும் அப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார் பார்ப்பனரல்லாதார். இயக்கத்தால் எவ்வளவுதான் நன்மை அடைந்தாலும் அதற்கு தகுந்த நன்றியும் விஸ்வாசமும் காட்ட முடியாமலும் செய்துவிடுகிறதோடு பலரை துரோகிகளாகவும் செய்து விடுகிறது. பார்ப்பனர்கள் செல்வாக்கானது பார்ப்பனரல்லாதாரில் பொதுவாழ்வில் ஈடுபடுகிறவனையும் பல தொல்லைகளுக்கும் பழிப்புகளுக்கும் ஆளாகும்படி செய்து அடக்கி ஒடுக்கி விடுகிறது. பத்திரிக்கைகள் நடத்துவது என்பதிலும் பார்ப்பனர்களுக்கு கூலியாகவோ அடிமையாகவோ இல்லாத பத்திரிக்கைகள் பெரிதும் நடைபெற முடியாதவைகளாகவும் ஆக்கிவிடப்படுகிறது. இந்தக் காரணங்களால். பாமர மக்களும் சுலபத்தில் ஏமாந்துபோய் தவறுதலாக அதாவது பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கு துணையாக இருக்கும்படியாக நடந்துவிடக் கூடுமாதலால் பார்ப்பனர்கள் பொதுமக்களை ஏய்க்க இம்மாதிரி வெளியிடங்களில் இருந்து ஆள்களைக் கூட்டி வந்து பிரசாரம் செய்யும் போதெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் கருப்புக்கொடி போன்ற பல காரியங்களால் பாமர மக்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை உணரும்படி செய்யவேண்டியது என்பது முதலியவை கருப்புக் கொடியின் தத்துவமும்
அதனின் அவசியமும் ஆகும்
ஆனால் இதுவரை வடநாட்டில் இருந்துவந்த பிரமுகர்கள் தலைவர்கள். என்பவர் யாரும் பார்ப்பனரல்லாத தலைவர்களையோ பிரமுகர்களையோ. அல்லது குறிப்பிட்ட ஏதாவது நபர்களையோ கூப்பிட்டனுப்பியாவது உங்கள் குறை என்ன" என்று கேட்டவர்களே அல்ல. அதற்கு மாறாக அவர்களைக் குறை கூறி குற்றம் சாட்டி வைதுவிட்டே போயிருக்கிறார்கள். இந்த லக்ஷணத்தில் இந்நாட்டுப் பார்ப்பனரல்லாதாருக்கும் தாங்களே தலைவர்கள் என்றும் பிரதிநிதிகள் என்றும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதிலும் ஒரு ஆச்சரியமென்னவென்றால் பார்ப்பனர்களே
முன் வந்து இப்படிச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். மரியாதை விஷயத்திலும் சுயமரியாதைக்காரர்களைப் பற்றி
காந்தியாரே நற்சாக்ஷி பத்திரமளிக்கிறார்.
ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் தேச சுதந்திரத்தைவிட மக்கள். சமூக சுதந்திரம் பெரிதென்று கருதி அதற்கு விரோதியானவர்கள் அல்லது அதை அலக்ஷியமாய் கருதுபவர்கள் யாராயிருந்தாலும் பஹிஷ்கரிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களுடைய ஆயுதங்களும் கையாள்களுமாய் வரவழைக்கப்படுகிறவர்களும் பஹிஷ்கரிக்கப்பட வேண்டியவர்கள் தான் என்றும் கொண்ட தத்துவம் கருப்புக் கொடியில் அடங்கி இருக்கிறது என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 25.10.1936
குடி அரசு - 1936 (2), 326
அறிக்கை
சுயமரியாதைக்காரர்களில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்று ஒரு பிரிவு இருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகிறது
தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் என்று 10, 12 வருஷ காலமாய் இருந்துவரும் இயக்கத்தில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர்கள் என்கின்ற சிலரோ, ஒருவரோ இல்லை; இருப்பதற்கு இதுவரை சுயமரியாதை இயக்கம் இடம் கொடுக்கவுமில்லை சுயமரியாதை இயக்கமானது காங்கிரசில் ஆதிக்கம் வகிக்கும் பார்ப்பனர்களுக்கு எதிராகவும் அவர்களது அரசியல், மத இயல், சமூக இயல் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் ஏற்பட்டதாகும் அதனாலேயே சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்திலிருந்தே காங்கிரசை எதிர்த்து அதன் ஆதிக்கத்தைத் தமிழ் நாட்டில் தலையெடுக்கச் செய்யாமல் இருப்பதற்காகப் போராடி வந்திருப்பதுடன் அதே கொள்கைகளைக் கொண்ட
ஜஸ்டிஸ் கட்சியுடன் கூடிஒத்துழைத்து வந்திருக்கிறது; ஒத்துழைத்தும் வருகிறது. அன்றியும் அவ்வியக்கம் (சம. இயக்கம்) இக்கொள்கைகளை ஒப்புக் கொண்டு அதற்கு ஆதரவளிக்கக் கூடியவர்களையே தன்னோடு சேர்த்துக் கொண்டும் அதற்கு மாறாக இருப்பவர்களையும் மாறான அபிப்பிராயம் கொண்டவர்களையும் நழுவ விட்டுக்கொண்டுமே வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் ஆதி முதல் இதுவரை சு.ம. இயக்க நடவடிக்கைகளைக் கவனித்தால் விளங்கும் ஆதலால் சுயமரியாதை இயக்கத்தில் காங்கிரஸ் சுயமரியாதைக்காரர் என்பதாக ஒரு கூட்டம் இல்லை என்றும் இருக்க இடமில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இன்றைய காங்கிரசானது சுயமரியாதை இயக்கத்துக்கு நேர் எதிரிடையான இயக்கமேயாகும் ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு இந்த காங்கிரசை ஆதரிப்பது என்பது சுயமரியாதை இயக்கத்தை எதிர்ப்பதேயாகும் என்பது எங்களுடைய தாழ்மையான அபிப்பிராயம். 2 உ செளந்திரபாண்டியன்,
ஈ.வெ. ராமசாமி.
குடி அரசு - அறிக்கை - 25.10.1936 397... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஜவஹர்லால் வரவு செலவு
ஜவஹர்லால் தேர்தலுக்கு நிற்காதது ஏன்
*காங்கிரஸ்காரர்கன்தான் மூளையில்லாதவர்கள்??
காங்கிரஸ் தலைவர் “வந்தார்? “பேணார்?
உள்ளதும் போச்சு
காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லாலினது வரவால் ஜனங்களுக்கு
ஒன்றும் பலனேற்படா விட்டாலும் ஜனங்களினுடைய நல்லபிப்பிராயத்தை யாவது இவர் பெற்றிருக்கலாம். அப்படியும் ஒன்றும் இல்லாமற் போனதோடு, ஜனங்கள் இவரைப் பற்றி இவர் வருவதற்கு முன் என்ன மதிப்பு வைத்துக் கொண்டிருந்தார்களோ அந்த மதிப்பும் இல்லாமல் போகும்படி நடந்துகொண்டார். அரசியல் சம்பந்தமாகவோ கட்சி சம்பந்தமாகவோ அவருடைய அபிப்பிராயங்கள் எப்படியிருந்தபோதிலும் ஜவஹர்லால் என்பதற்காக ஜனங்கள் கொஞ்சம் மரியாதை வைக்கும்படியான விளம்பரம் பெற்றிருந்தார். எப்படி என்றால் (தோழர் சத்தியமூர்த்தி சொன்னது போல்) இவருடைய தகப்பணாரை உத்தேசித்தேயாகும். அதனாலேயே இவரை முக்கிய புருஷர்களில் ஒருவராகவும் கருதி இருந்தார்கள். இவருக்கு இந்தியாவைத் தவிர மற்ற உலக அனுபவங்கள் இருக்குமென்றும் கருதியிருந்தார்கள். மற்றும் இவர் ஒரு உண்மையான உழைப்பாளியென்பதை இவருடைய எதிரிகள் கூட ஆட்சேபிக்கப் பயந்து வந்தார்கள். இவருடைய சமதர்ம அபிப்பிராயங்களைப் பார்த்தவர்கள் பொதுஜனங்களிடத்தில் இவருக்கு உண்மையான கவலை யிருக்கிறதென்றே கருதியிருந்தார்கள். அதனாலேயே மற்ற தலைவர்களை விட இவரைக் கொஞ்சம் விசேஷமாக மதித்தார்கள். ஆனால் இவருடைய தென்னிந்திய சுற்றுப் பிரயாணமானது மேல்கண்ட மதிப்புகளை அடியோடு மாற்றிக்கொள்ளும்படி செய்து விட்டதால் உள்ள மதிப்பும் போய்விட்டது
பண்டிதர் சமதர்மம்
அவருடைய சுற்றுப்பிராயணமே ஒரு கெட்ட எடுப்பில் ஆரம்பிக்கப்பட்டது
குடி அரசு - 1936 (2), 328
அதாவது ஒரு சமதர்மவீரர் வரும்போதே ஊரார் முதலில் ஒரு தனி ஸ்பெஷல் டிரெயினில் வந்ததும் உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் மோட்டாரில் பிரயாணம் செய்ததுமான தன்மையில் அவரது பிரயாணம் துவக்கப்பட்டதி லிருந்தே அவரது சமதர்மம் இன்னதென்பது விளங்கக்கூடியதாய் விட்டது.
தொண்டர்களுக்கும் பொதுஜனங்களுக்கும் அவமதிப்பு அவருடைய சுற்றுப் பிரயாணம் வளர வளர காங்கிரஸ் தொண்டர் களுக்கு அவமதிப்பை அதிகரிக்கச்செய்து கொண்டே வந்தது. ஏனென்றால் இவர் செல்லும் ஒவ்வொரு ஊரிலும் தொண்டர்களை வைவதே இவரின் முதல் வேலையாகி விட்டது. இவரைப் பார்க்க வேண்டுமென்று வந்த பொது ஜனங்களை “ஆட்டுமந்தை"களென்றும் “புத்தியில்லாத ஜனங்க" ளென்றும் வைவது இரண்டாவது வேலையாக இருந்தது. சுயமரியாதைக்காரரையும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரையும் வைவது மூன்றாவது வேலையாக இருந்தது இவர் தங்கியிருந்த இடத்தில் இவரைப் பார்க்க வந்த வாலிபர்களையும் இவர் மதித்து இவரது ஞாபகார்த்தமாகக் கையெழுத்துக் கேட்ட மாணவர்களையும் பரிகாசமாகவும் இழிவாகவும் பேசுவது நான்காவது வேலையாயிருந்தது. கடைசியில் பார்ப்பனரல்லாதார் சமூகத்தையே வைதார். மொத்தத்தில் இவர் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரையும் பாக்கி விடவில்லை.
நாட்டு ஞானம் இல்லை
இது எதைக் காட்டுகிறதென்றால் இந்திய ஜனங்களைப் பற்றி ஜவஹர்லால் தெரிந்து கொண்ட யோக்கியதை எவ்வளவென்பதையும் தென்னிந்தியாவிலுள்ள அரசியல், சமுதாய இயல், சமூக நிலை ஆகியவை களைப்பற்றி இவருக்குள்ள அறிவு எவ்வளவு என்பதையும் தெளிவாய்க் காட்டிவிட்டது. முதல் கோணல் முற்றுங்கோணல் என்பதற்கிணங்க, இவரது பிரயாணம் எந்த லக்ஷணத்தில் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த லக்ஷணத்திலேயே
முடிவு பெற்றது
தொழிலாளர் விஷயம்
திருச்சியில் தொழிலாளருடைய கூட்டத்தில் பேசுகிற பொழுது சமதர்ம வீரராகிய காங்கிரஸ் தலைவர் கொஞ்சங்கூட முன்பின் யோசனையில்லாமல், “காங்கிரஸ் தொழிலாளருக்காக என்ன செய்யப் போகிறதென்பது எனக்குத் தெரியாது; ஆனதினால் உங்களுக்குச் சொல்லுவதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார். மற்றும் இவர் பேசினதாக சென்ற சனிக்கிழமை “இந்து”ப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் ஒரு சேதியில் காணப்படுவதாவது:-
“நீங்கள் என்னைத் தொழிலாளர்கட்குக் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறதென்று கேட்கிறீர்கள். நான் காங்கிரஸல்ல; நான் எப்படி அதற்குப் பதில் சொல்ல முடியும்? ஒரு தனிப்பட்ட மனிதன் காங்கிரஸ் ஆக மாட்டான்.
329 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரஸ் ஒரு பெரிய ஜனநாயக ஸ்தாபனம். அதில் எல்லா வகையான
மக்களும் எல்லா விதமான அபிப்பிராயக் காரர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் இந்தியா விடுதலைபெற வேண்டும் என்பதில் மாத்திரம் ஒருமுகப்பட்ட அபிப்பிராயமுடையவர்களா யிருக்கிறார்கள். ஆனதினால் தொழிலாளர்கட்கு காங்கிரஸ் என்ன செய்யவேண்டுமென்று முடிவு செய்யுமென்பதை என்னால் இப்பொழுது சொல்ல முடியாது"
என்று சொல்லி இருக்கிறார். ஆகவே காங்கிரஸ் பிரசிடெண்டு வார்த்தை
யிலிருந்தே காங்கிரஸ் தொழிலாளர்கட்கு என்ன செய்யக் கூடும் என்பதை தொழிலாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.
“நான் காங்கிரசல்ல;) எண்ணைக் கேட்காதீர்கள்?
மற்றும் காங்கிரஸானது தொழிலாளர்களின் நிலைமையை விருத்தி செய்வதற்காகவும் அவர்களுடைய தினசரி வாழ்க்கையை உயர்ந்த திட்டத்துக்குக் கொண்டுவருவதற்காகவும் என்ன முறைகளை அனுசரிக்கப் போகிறது என்பதான கேள்விக்குப் பண்டித ஜவஹர்லால் என்ன சொல்லு கிறாரென்றால் “அதைப்பற்றி என்னை யொன்றும் கேட்கக் கூடாது. நான் காங்கிரஸ் ஸ்தாபனமல்ல. ஆகையால் காங்கிரஸானது என்ன செய்யுமென்று நான் சொல்ல முடியாது. காங்கிரஸில் எவ்வளவோ பேர்களிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நீங்கள் போய் காங்கிரஸ் தொழிலாளர்கட்கு என்ன நன்மையைச் செய்யுமென்று கேளுங்கள். அவ்விதம் கேட்ட பிற்பாடு, காங்கிரஸ் உங்களுக்கு இன்னதுதான் செய்யுமென்று நீங்களே உங்கள் சொந்த முடிவுக்கு வாருங்கள். நான் காங்கிரஸ் தலைவர் என்ற ஹோதாவில் என்ன சொல்லக் கூடுமென்றால் காங்கிரஸ் இன்னதுதான் உங்களுக்குச் சொல்ல முடியுமென்பது எனக்கு ஏதும் திட்டமாகச் சொல்லத் தெரியாது" என்பதே.
இங்கிலிஷ்காரர் ஏனறிபத்தியத்தை அடியோடு அழித்து இந்தியர்களுக்கு நன்மை உண்டு பண்ணுவதற்கு ஏற்பட்டிருக்கிற இந்திய நேஷனல் காங்கிரஸின் தலைவரென்பவரே இந்த மாதிரி தொழிலாளிகளுக்கு காங்கிரஸ் இன்னது செய்யுமென்பதில் தனக்கொன்றும் தெரியாதென்று ஒத்துக்கொண்டிருக்கிற தன்மையைக் கவனிக்கும்போது அது ஒரு பெரிய விபரீதமாகத்தானிருக்கிறது! காங்கிரஸானது தொழிலாளிகட்கு இன்ன அளவுக்குத்தான் நன்மை செய்ய வல்லமையுடையதென்றோ, இன்னதைத்தான் செய்யுமென்றோ கூட அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் பண்டிதரின் தொழிலாளர் அனுதாபம் எப்படிப்பட்டது என்று தொழிலாளர்கள் தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்
சட்டசபை
மற்றும் புத்தூர் மைதானத்தில் பண்டிதர் பேசும் போது “காங்கிரஸ் அபேட்சகர்கள் சட்டசபை மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை அடித்து வீழ்த்தி
குடி அரசு - 1936 (2), 330
விடுவதற்காக சட்ட சபைக்குப் போவதால் வரப்போகும் சட்டசபைத் தேர்தலில் அவர்களையே ஆதரிக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் தன்னைப் பொறுத்தவரையில் அவர் சட்டசபை தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை என்று சொல்லுகிறார். சட்டசபைக்கு போவதன் மூலம் பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை ஒழித்துவிடக்கூடும் என்பதாகவோ, அல்லது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஒழிக்க சட்ட சபைக்குப்போக வேண்டியது அவசியமென்றோ பண்டிதர் உண்மையாகவே நம்பி இருப்பாரேயானால் தான் ஏன் சட்டசபைக்கு போக இஷ்டப்படவில்லை என்கிறார் என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரஸ் பிரசிடெண்டு என்கின்ற முறையில் காங்கிரஸ் படைக்கு இவரே வழிகாட்டியாய் இருக்க வேண்டி இருக்க சட்டசபையில் மெம்பர்கள் செய்யும் போருக்கு இவர் முன்னணியில் இருக்க வேண்டி இருக்க, இவர் மறைந்துகொண்டு மற்றவர்களைப் பிடித்து தள்ளி முன்னால் விட்டு வேடிக்கை பார்ப்பது என்றால் இவர் எப்படி உண்மையான தலைவராகவோ வழிகாட்டியாகவோ இருக்க முடியும் என்பதை யோகித்துப் பார்த்தால், ஒன்றா, இவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தகர்க்க சட்டசபையே தான் சரியான ஸ்தாபனம் என்று கருதாமல் இருக்க வேண்டும், அல்லது சட்டசபை பிரவேசத்தில் அவருக்கு நாணயமான நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது
பார்ப்பனரல்லாதாரைப்பற்றி.
தஞ்சாவூரில் தோழர் ஜவஹர்லால் பேசும்போது பார்ப்பனரல்லாதார் களைச் சமூகம் முழுவதையுமே சேர்த்து மிகவும் கேவலமாக இழிவுபடுத்திப் பேசி இருக்கிறார். பேசியது ஒரு சாதாரண அநாமதேய ஆளாகவோ அல்லது காலி கூலி என்று பேர் வாங்கினவராகவோ இருந்து பேசி இருந்தால் நாம் அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் சபைத் தலைவர் என்கின்ற முறையில் வந்த ஒருவர் - அதுவும் ஒரு பார்ப்பனர் ஒரு சமூகத்தையே இப்படி கேவலமாக பேசினால் அதை எப்படி நாம் கவனிக்காமல் விட முடியும்? “மெயில்” பத்திரிக்கையில் கண்டுள்ளபடி அவர் பேசியதாவது:- “இந்த மாகாணத்தில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பேத பிரச்சினை வெகு அற்பமானது; பரிகாசத்திற்கிடமானது. அப்படி இருக்க ஜனங்கள் இந்த விஷயத்துக்காக வெறிபிடித்து ஒருவருக்கொருவர் மண்டையுடைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படிப்பட்ட வெறும் தலையர்கள் (“மூடர்கள்”) மண்டை உடைபடுவதில். நான் அனுகூலமாகவே இருப்பேன். ஏனெனில் இப்படிப்பட்டவர்கள் ஒழிந்து போவதே நாட்டுக்கு நன்மையாகும்” என்று பேசி இருக்கிறார்
இதற்கு நமது பதில் இதற்கு நாம் என்ன பதில் சொல்லுகிறோம் என்றால், “அய்யா பண்டிதரே!
331... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிணக்கு இருப்பது வாஸ்தவம்தான். அது நீர் சொல்லுகிறபடி அற்ப விஷயமாகவோ மண்டை உடைத்துக்கொள்வதினால் ஒழிந்து போகத் தக்கதாகவோ இங்கு இல்லை. அது அனேக காலமாக இந்த நாட்டில் இருந்து கொண்டு மதத்திலும் சமூக வாழ்விலும் அரசியல் துறையிலும் அதிக்கம் செலுத்தி மக்கள் உழைப்பைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் வேலையில் முனைந்து நின்று அதற்கு (பார்ப்பனிபத்துக்கு) சாவுமணி அடிக்கும் நிலையை உண்டாக்கி விட்டது. இப்போது அதை சமாளித்துகொள்ளவும் அதற்கு உயிர்ப்பிச்சை அளிப்பதற்கும் ஆகவே உம்மை (பண்டிதரை) பார்ப்பனர்கள் இங்கு அழைத்து வந்து விஷமப் பிரசாரக் காரியம் நடத்து கிறார்கள் இதைநீங்கள் உணரவில்லையோ அல்லது உணர்ந்தே பார்ப்பனருடன் பார்ப்பணாய் ஆடுகிறீரோ தெரியவில்லை. அது எப்படி இருந்த போதிலும் இப்போது நீர் உம்முடைய கொள்கை என்று எதை எதை சொல்லுகிறீரோ அதைவிட ஒருபடி முற்போக்கானதும் முக்கியமானதுமான கொள்கையே பார்ப்பனரல்லாதார் இயக்கக் கொள்கையாய் இருந்து வருகிறது என்று உணருங்கள்" என்பதேயாகும்.
பண்டிதர் சுயராஜ்யம்
ஆனால், பண்டிதரே! நீர் கோரும் சுயராஜ்யம் வெள்ளையர் ஆட்சியை ஒழித்து கபில நிற ஆட்சி அதாவது பூணூல் ஆட்சி (பார்ப்பன ஆட்சி) ஆக்கப் பார்ப்பதே தவிர வேறில்லை என்பதை நன்றாய் உணரும் எங்களுக்கு உண்மையான சுயராஜ்யம் வேண்டும். அந்த விஷயத்தில் நாங்கள் இந்நாட்டில் உள்ள எல்லோரையும் விட ஆவலுள்ளவர்களாகவும் அதற்கு ஆக தகுதியான எந்த காரியத்தையும் செய்ய முன்னணியில் இருப்பவர்களாகவும் இருக்கிறோம்
எங்களுக்கு வேண்டிய சுயராஜ்யம் இந்நாட்டில் உள்ள எல்லா வகுப்பாருக்கும் விடுதலை ஏற்பட்டு சகலரும் சம உரிமையையும் சம சந்தர்ப்பத்தையும் அடையத்தக்க சுயராஜ்யமே யாகும்.
இதற்கு விரோதமானவர்கள் ஒழியட்டும் என்று நீர் பிரசாரம் செய்வீரானால் அது உங்கள் சமூகமாகிய பார்ப்பன சமூகம் ஒழியச் செய்யும் பிரசாரமேயாகும். அதாவது தற்கொலைப்பிரசாரம் செய்கிறீர் என்றுதான் அருத்தம். அதைச் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை.
ஜெயிலில் சுதந்திரம்
காங்கிரஸ்காரர்கள் சுதந்திரம் பெற ஜெயிலுக்கு போனார்கள் என்கிறீர்கள். அவர்கள் ஜெயிலுக்கு போனது வாஸ்தவம்தான். ஆனால் அவர்கள் ஜெயிலுக்குப் போனதில் “இனிமேல் ஜெயிலுக்கு வருவதில்லை” என்று சொல்லி விட்டுத் தான் ஜெயிலில் இருந்து விடுதலை பெற்று
குடி அரசு - 1936 (2), 332
வெளிவந்தார்களே ஒழிய, இதுவரை யாருக்கும் எவ்வித விடுதலையும் வாங்கிக் கொண்டு வெளிவந்தவர்கள் அல்ல. அப்படி இருக்க இப்போதுதான் அவர்களுக்கு ஒரு புது புத்தி தோன்றி, சுதந்திரம் பெற ஜெயிலுக்கு போவதில் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்து, சட்டசபைக்கு போக வேண்டுமென் கிறார்கள். நீரும் அதை ஆதரித்து பிரசாரம் செய்கிறீர்கள். இதைத்தான். பார்ப்பனரல்லாதாரும் ஆதி முதல் சொல்லிவருகிறார்கள். ஆனால் நீர் மாத்திரம் சட்ட சபைக்குப் போகப் போவதில்லை என்கிறீர். இதன் ரகசியம் “சிதம்பர ரகசியமாய்” இருக்கிறது. இது எப்படியோ ஆகட்டும். ஒன்றை மாத்திரம் உமக்கு ஞாபகப்படுத்தி விட்டு இதை முடிக்கிறோம்
பண்டிதமின் அப்பன்
அதாவது இதற்கு முன்பும் உம்மைவிட பெரியவர்களான உமது தகப்பனாரும் பெரியார் சி.ஆர். தாசும் மற்றும் பலரும் உம்மைப் போலவே சுதந்திரத்துக்கு ஆக ஜெயிலுக்குப் போய் ஜெயில் மூலம் சுதந்திரம் கிடைக்கமாட்டாது என்பதை உணர்ந்து வெளியில் வந்து, சட்டசபையில் முட்டுக்கட்டை போடுவது மூலம் சுதந்திரம் பெறலாமென்று கருதி சட்ட சபைக்கு போய் தங்களால் ஆனதை எல்லாம் செய்து பார்த்துவிட்டு தங்கள்
முறைப்படி அங்கும் சுதந்திரம் பெற முடியாது என்று கருதி நடுத்தூக்கில் அதாவது காலாவதி வரையில் கூட இருந்து பார்க்க முடியாமல் வெளியில் வந்து விட்டார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
இப்படி இருக்க, இப்போதும் நீர் சுதந்திரத்துக்குச் சட்ட சபைக்குப் போகிறேன். அங்கு போய் சீர்திருத்தத்தை உடைக்கிறேன் என்றும் பார்ப்பனரல்லாதார்கள் வெறும் தலையர்கள் என்றும் அவர்கள் ஒழிந்து போவதே மேல் என்றும் கூறுகிறீர்கள்.
யார் வெறுந் தலையர்? ஆகவே இதிலிருந்து ஒரு விஷயத்தை நன்றாய் யோசித்துப் பாரும் அதாவது உமது பெற்றோர்கள் வெறுந்தலையர்களா? நீர் வெறுந்தலையரா? அல்லது பார்ப்பனரல்லாதார் வெருந்தலையர்களா என்பதே
குடி அரசு - கட்டுரை - 25.10.1936
333 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரஸ் சயமமியாதைக்காரர் என்று சொல்லிக்கொள்ளுபவருக்கும் சுயமரியாதை ஜஐஸ்டிஸ்காரருக்கும் நடந்த சம்பாஷணை
- அனாமதேயம் எழுதுவது
சு.ம. காங்கிரஸ்வாதி:- தோழர் ஜவஹர்லால் ஒரு சமதர்ம வீரர் அவரை சு.ம.காரர் பஹிஷ்கரிக்கலாமா?
சம. ஜஸ்டிஸ்வாதி:- ஜவஹர்லால் சமதர்ம வீரர் என்பதை உனக்காக வேண்டியே ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் அவர் தோழர் ஈ.வெ.ராவைப் போலவே இப்போது நான் சமதர்மப் பிரசாரம் செய்ய வரவில்லை; காங்கிரஸ் பிரசாரம்தான் செய்ய வந்தேன் - செய்கிறேன் என்று சொன்னாரா இல்லையா?
சு.ம.கா:- அவர் எங்கே அப்படிச் சொன்னார்?
சு.ம.ஜ:- காங்கரஸ் தலைமைப் பிரசங்கம் முதல் சென்னை பிரசங்கம் வரை படித்திருந்தால் எங்கே சொன்னார் என்று கேட்டிருக்கமாட்டாய்.
சரி அப்படி சொல்லவில்லை என்றும் வைத்துக்கொள்ளுவோம். ஆனால் சமதர்மத்துக்கு என்னிடம் திட்டம் ஒன்றும் இல்லை என்றும் உலகப் புரட்சியோ. மகா யுத்தமோ ஒன்று ஏற்பட்டால் தான் சமதர்ம சம்பந்தமாய் ஏதாவது செய்யலாமே ஒழிய மற்றப்படி இப்போது அதற்காக ஒன்றும் செய்வதற்கில்லை. என்றும் சொல்லியிருப்பதையாவது ஒப்புக்கொள்ளுகிறாயா இல்லையா?
சு.ம.கா:- ஆம், அப்படிச்சொன்னால் சமதர்மம் வேண்டாம் என்று அருத்தமா?
சம.ஜ:- அப்படியானால் சமதர்மம் வேண்டும் என்று இந்தியாவில் ஜவஹர்லால் மாத்திரம் தானா சொல்லுகிறார்? தோழர்கள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சர்.சி.பி. ராமசாமி அய்யர் முதல்கொண்டு சொல்லி இருக்கிறார்கள். லார்ட் வில்லிங்டன் கூட ஒரு சமயம் சமதர்மம் நல்லதுதான் என்று சொல்லி இருக்கிறார். யேசுவும், மகமது நபியுங் கீதையும் சமதர்மத்தை போதிப்பதாக மதக்காரர்கள் சொல்லுகிறார்கள். இவர்கள் எல்லாம் சமதர்ம வீரர்கள்தானா? இந்த மதங்களை யெல்லாம் வரவேற்க வேண்டியதுதானா?
சு.ம.கா:- ஆனால் ஜவஹர்லால் இப்படிப்பட்ட சமதர்மி என்றா சொல்லுகிறாய்?
குடி அரசு - 1936 (2), 334
சம.ஜ:- அதற்கும்மேல்ஒருடிக்கிரி அல்லது பத்து டிக்கிரி அதிகமாகவே வைத்துக்கொள். அதைப்பற்றி இப்போது நமக்கு வாதம் வேண்டாம் ஜவஹர்லால் தமிழ்நாட்டுக்கு எதற்காக வந்தார்? காந்தியாரும் ராஜேந்திர
பிரசாதும் வந்த வேலை அல்லாமல் ஜவஹர்லால் வேறு என்ன காரியத்துக்கு வந்தார்? மக்களை என்ன செய்யும்படி சொல்லிப் போனார்? இதைச் சொல்ல மற்றப்படி ஜவஹர்லால் யாராய் இருந்தால்தான் என்ன?
சு.ம.கா:- அப்படியானால் மனிதனைப்பற்றி கவலை இல்லை என்கிறாயா?
சும.ஜ- நீதான் ஆகட்டுமே ஏதோ ஒரு மனிதனைக் கருதி அவனுடைய செய்கையை அலட்சியம் செய்துவிடுவாயா?
சு.ம.கா:- என்ன இருந்தாலும் ஜவஹர்லால் மற்ற தலைவர்களைப் போல் அல்ல; அவர் ஒரு உண்மையான வீரர்.
சும.ஜ:- சரி, வீரர் என்றே வைத்துக்கொள். ஒரு வீரர் உங்கள் வீட்டின்
மீது கல்லுப்போட்டாலோ அல்லது வீரர்கள் உன்னை வைதாலோ நீ விட்டு விடுவாயா?
சு.ம.கா:- அப்படி ஜவஹர்லால் என்ன செய்ய வந்தார்?
சு.ம.ஜ:- ஜவஹர்லால் எலக்ஷன் பிரசாரத்துக்கு வந்தார். காங்கிரஸ் பிரசாரத்துக்கு வந்தார். காங்கிரசின் பேரால் எப்படிப்பட்ட மனிதன் நிறுத்தப்பட்டாலும் அவனுடைய யோக்கியதா யோக்கியதையை கவனிக்காமல் அவன் மொண்டியானாலும், குருடனானாலும் செவிடனானாலும் அவனுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொல்ல வந்தார். காங்கிரசின் பேரால் நிற்பவன் தவிர மற்ற அபேட்சகர்கள் எல்லாம் தேசத்துரோகிகள், சர்க்கார் தாசர்கள் என்று தோழர்கள் சத்தியமூர்த்தி குப்புசாமி உபயதுல்லா அண்கோ சொல்லுவது போலவே சொல்ல வந்தார்.
மற்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் போலவும் அவர்களது கூலிகள் போலவும் ஜஸ்டிஸ் கட்சியும் மற்ற காங்கிரஸ் அல்லாத கட்சிகளும்
சர்க்கார் தாசர்கள், சர்க்கார் ஏஜண்டுகள் என்று சொல்லி வம்புச்சண்டை இழுக்க வந்தார். அப்படியே சொல்லியும் போட்டார். மற்றபடி எந்த விதத்தில் மற்றவர்களையெல்லாம் விட ஜவஹர்லால் வீரர், சூரர், மகா
யோக்கியர் என்று சொல்லே பார்க்கலாம்.
௯ம.கா:- ஜவஹர்லால் எவ்வளவு தியாகம் பண்ணினவர் என்பதை சிறிதுகூட நினைத்துப் பார்க்காமல் இப்படிப் பேசுகிறாயே இது நியாயமா?
௯ம.ஜு- நான் கேட்பதைவிட்டு விட்டு என்ன என்னமோ உளறுகிறாய். ஜவஹர்லால் தியாகம் பண்ணினவர் என்றே வைத்துக் கொள். காந்தி தியாகம் செய்யவில்லையா? ராஜேந்திர பிரசாத் தியாகம் செய்யவில்லையா? இவர்களையெல்லாம் விட அதிகமாக ராஜகோபாலாச்சாரியார் தியாகம் செய்ய
335 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வில்லையா? அவர்களை யெல்லாம் நாம் வரவேற்றோமா? ஜவஹர்லாலுக்கு மாத்திரம் என்ன இவ்வளவு சிபார்சு என்பது எனக்கு விளங்கவில்லையே?
சு.ம.கா:- ஜவஹர்லால் சுயமரியாதைக்காரர்கள் கோரும் அறிவு இயக்கவாதி என்பது கூட தெரியாதா? காந்தியும், ராஜேந்திரரும் வருணாச்சிரம வாதிகள், மூடநம்பிக்கைக்காரர்கள். ஜவஹர்லால் பகுத்தறிவுவாதி இதையாவது சு.ம.காரர்கள் கவனித்து இருக்க வேண்டும். கொஞ்சம் கூட
யோசிக்காமல் பகிஷ்காரம் செய்துவிட்டீர்கள்.
சூம.ஜ:- அறிவு இயக்கவாதி என்றதினாலேயே எலக்ஷன் பிரசாரம் செய்து குருடனுக்கும், செவிடனுக்கும், மொண்டிக்கும், முடவனுக்கும் ஓட்டுப்போடும்படி சொல்லவந்தால் விட்டுவிடவேண்டியதுதானா? அப்படித்தான் ஜவஹர்லால் எந்த விதத்தில் பகுத்தறிவுவாதி?
தகப்பன் எலும்பையும் பெண்ஜாதி எலும்பையும் சுமந்து கொண்டுபோய் ஆற்றில் விட்டாரே அதனாலா?
புண்ணியஸ்தல யாத்திரை செய்கிறாரே அதனாலா?
மதுரை மீனாக்ஷி அம்மனுக்கு சமீபத்தில் போய் கும்பிட்டுவிட்டு வந்தாரே அதனாலா? பழனி பஞ்சாமிர்தம் வாங்கி மூட்டைகட்டிக் கொண்டாரே அதனாலா?
கதரை ஆதரிக்கிறாரே அதனாலா? காந்தியை ஆதரிக்கிறாரே அதனாலா? சட்ட சபைக்குப்போய் சீர்திருத்தத்தை உடைக்கிறேன் என்கிறாரே அதனாலா?
எதில் அவர் பகுத்தறிவுவாதி? ஏதோ வாயில் மதத்தையும் ஜாதியையும் பற்றி கண்டித்து நாலு வார்த்தை பேசிவிட்டால் புஸ்த்தகத்தில் எழுதிவிட்டால் அதனாலேயே அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் பகுத்தறிவு வாதிகளாய் விடுவார்களா? பகுத்தறிவு சமதர்மம் என்பதெல்லாம் உங்கள் வீட்டு புறகடையில் முளைத்து இருக்கும் கிள்ளுக்கீரை என்றா நினைத்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியானால் உலகத்தில் இருக்கிறவன் எல்லோரும் பகுத்தறிவு வாதிகள்தான். ஒவ்வொருவரும் அரிசி பருப்புத்தேடி பக்குவமாய் சமையல் செய்து இலையில் போட்டு பிசைந்து உருட்டி வாயில் போட்டு மென்று தின்கின்றார்களே ஒழிய ஆண்டவன் இருக்கிறான், அல்லா இருக்கிறான். என்று கருதி அவனே நம் வயிற்றை நிரப்பி விடுவான் என்று ஒருவரும் நம்பி மூட நம்பிக்கைக்காரர்களாக இருப்பதில்லை. ஆதலால் ஜவஹர்லால் மாத்திரம் பகுத்தறிவுகாரர் என்று சொல்லிவிட முடியாது. செய்கையில்
காந்திக்கும் மற்ற தலைவர்கள் என்பவர்களுக்கும் மாறாக ஜவஹர்லாலிடம் என்ன பகுத்தறிவு காரியம் இருக்கிறது? அதைச் சொல்லே பார்ப்போம்.
சு.ம.கா:- இப்படிப் பார்த்தால் உலகில் ஒரு மனிதன் கூட பகுத்தறிவுவாதியாய் காணப்படமாட்டான்.
குடி அரசு - 1936 (2), 336
சு.ம.ஜ:- காணப்படாவிட்டால் போகட்டுமே, யாராவது காணப்பட வேண்டுமே என்று எவரையாவது ஒப்புக்கொள்ள வேண்டியது சடங்கா? சாஸ்திரமா? அதற்குஆக ஜவஹர்லாலை பகுத்தறிவுவாதி என்று ஒப்புக்கொள்ள வேண்டுமா? சாதாரண அறிவே அவருக்கு எவ்வளவு இருந்தது என்று அவரது சுற்றுப்பிரயாண பேச்சை அலசிப்பாரே! எங்கே போனாலும் பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் என்கின்ற பல்லவி. இதை ஒழிக்க சுயராஜ்யம்
சதந்திரம் வேண்டும் என்பது அனுபல்லவி. அதற்கு ஆக காங்கிரசுக்காரருக்கு ஓட்டுப்போடுங்கள் என்கிறது சரணம். இவை ஒன்றுக்கு ஒன்று பொருத்தமானதா?
சு.ம.கா:- ஏன் இவை நியாயமான பேச்சல்லவா?'
சும.ஜ:- எப்படி நியாயமாகும்? முதலாவது யாருக்கு வேலையில்லை?
யார் பட்டினி?
பார்ப்பனர்கள் யாருக்காவது வேலை யில்லையா? பெரிய பெரிய சம்பளமுள்ள வேலைகள்தான் அவர்களில் 100க்கு (90 பேருக்கும் இருந்தும்) 100 பேருக்கும் இல்லையே என்கிறார்களே ஒழிய இன்றைக்கும் சகல. பார்ப்பனருக்கும் மாதம் 15 ரூபாய்க்கு குறையாத சமையல் வேலை, காப்பிகடை வேலை, கோயில் பூசாரி வேலை, புரோகித வேலை மூதல் எத்தனையோ வேலை காத்துக்கொண்டிருக்கின்றன. மற்றும் வியாபாரிகள்,
மில் முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், வக்கீல்கள், டாக்டர்கள், ஆச்சாரி, குருமார்கள், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள். ஆகியவர்களுக்கு எங்கே பட்டினி? எங்கே வேலை இல்லாத் திண்டாட்டம்? ஒரு ஆளைக் காட்டே பார்ப்போம். இவர்களில் ஒவ்வொருவனும் அவனவன் யோக்கியதைக்கு மேலும் இருப்பதற்கு மேலும் சம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறான். அவ்வளவுதானே ஒழிய, யார் பட்டினி?
யாருக்கு வேலையில்லை?
படிக்காத மனிதன், கீழ் ஜாதிக்காரன், கைத்தொழிலாளி சரிரப்பாட்டாளி ஆகிய இந்தக் கூட்டத்தார்தான் பெரிதும் இன்று வேலையில்லாமலும் ஜீவனத்துக்கு போதுமானது இல்லாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இது இந்த நாட்டில் மாத்திரமல்ல. எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கிறது. (ரஷ்யாவில் மாத்திரம் இல்லை) அதற்காக ஜவஹர்லாலின் திட்டம் என்ன? சுயராஜ்யம் வந்தால் பட்டினி போய்விடுமா? வெளி தேசத்தார் ஆதிக்கம் போய்விடும்படியான சுதந்திரமே வந்தாலும் எல்லோருக்கும் வேலை கிடைத்து விடுமா?
இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜர்மனி இவை சுயராஜ்ய நாடல்லவா? சுதந்திர நாடல்லவா? அங்கு என்ன நடக்கின்றது? சுயராஜ்ய நாடான அபீசினியாவைப் பார், சுதந்திர நாடான ஸ்பெயினைப் பார், குடி அரசு நாடான சைனாவைப் பார். கண் மூடிக்கொண்டு புஸ்தகத்தை ஒப்புவிக்காதே. பிற்பட்ட வகுப்புக்கும் படிக்காதவனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக்கும் 337... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஜவஹர்லாலோ, காந்தியோ, காங்கிரசோ பிரதிநிதியா அல்லது ஜின்னாவோ, ஜஸ்டிஸ் கட்சியோ, அம்பேத்காரோ பிரதிநிதியா எண்ணிப்பாரே. இதுவரை காங்கிரசினால் நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்கள் யோக்கியதையையும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் யோக்கியதையையும் நீ அறியாததா? இவைகளை மாற்ற ஜவஹர்லால் என்ன மருந்து கொண்டு வந்தார்.
ஜமீன்தார் பிரதிநிதியா என்ற ௯.ம.காரர்களைக் கேட்டார். தர்மபுரி ஜமீன்தார் நடேச செட்டியார் வீட்டில் விருந்தினராய் இருந்து சாப்பிட்டு
வந்தார். ஜஸ்டிஸ்காரர்களை காங்கிரஸ் விரோதி என்றார். காங்கிரஸ் “துரோகி” டாக்டர் ராஜன் வீட்டுக்குப் போய் பேசிவிட்டு வந்தார். குமாரமங்கலம் ஜமீன்தார் காங்கிரஸ் மெம்பர் லக்ஷப் பிரபு நாடிமுத்துபிள்ளை காங்கிரஸ் மெம்பர், திருநெல்வேலி ஜமீன்தார்குமாரசாமி முதலியார் காங்கிரஸ் மெம்பர்கள். கோவை ராமலிங்கம் செட்டியார், ரத்தினசபாபதி முதலியார், ஆர்.கே. வெங்கடாசலம் செட்டியார், ஆவலப்பட்டி ஜமீன், அவனாசிலிங்கம் செட்டியார் இவர்கள் எல்லாம் காங்கிரஸ் மெம்பர்கள்.
போதாக்குறைக்கு புழுத்ததின் மீது மலம் விழுந்த மாதிரி சத்தியமூர்த்தி முதலிய வருணாச்சிரம தர்மிகளும் காங்கிரஸ் மெம்பர்கள்.
இப்படிப்பட்டவர்கள் தவிர மற்ற சில சம்பளக்காரர்கள்தான் ஏழை காங்கிரஸ் மெம்பர்கள். ஆகவே தலைவர் சர்வாதிகாரி ஆகியவர்களாக மேற்கண்ட கூட்டத்தார்கள் காங்கிரசுக்குப் போனால் எப்படி பட்டினி ஒழியும்? எப்படி வேலையில்லாக் கஸ்டம் ஒழியும்? நீதான் சொல்லே பார்ப்போம்
இதிலிருந்தே ஜவஹர்லாலுக்கு பகுத்தறிவு இருந்தால் காங்கிரசுக்கு ஓட்டுக் கொடு ஆள்கள் யோக்கியதையை பார்க்காதே என்று சொல்லி இருப்பாரா? இந்த மாதிரி யோக்கியதை உள்ள காங்கிரசுக்கு ஓட்டுப் பிரச்சாரம் செய்யாதே! என்று சொன்னதில் உனக்கு என்ன வந்து மாட்டிக் கொண்டது என்பது எனக்குவிளங்கவில்லை. கேள்வி கேட்டால் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் ௯ூம. காரர்கள் பொய்யர்கள் என்று கேவலமாய் பேசிவிட்டார்.
இப்பவும் சொல்லுகிறேன். ஜஸ்டிஸ்காரர்கள் சமதர்ம வீரர்கள் என்கிறேன். தைரியமாய் வருணாச்சிமத்துக்கு விரோதமாய் வேதம் சாஸ்திரத்துக்கு விரோதமாய் சட்டம் செய்தார்கள். சொத்துரிமையை பிடுங்கிக்கொள்ளலாம் என்று சட்டம் செய்து சோம்பேறிகளுடைய சொத்தைப் பிடுங்கி பாடுபடுகிறவர்களுக்கு சொந்தமாக்கி விட்டார்கள். கொஞ்ச அளவுக்காவது இம்மாதிரியான காரியம் துணிச்சலாக செய்து வழிகாட்டி விட்டார்களா இல்லையா?
இதைச் சொல்லியே காங்கிரசுக்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைகிறார்கள், விஷமப்பிரசாரம் செய்கிறார்கள்.
குடி அரசு - 1936 (2), 338
வெங்கிட்டராம சாஸ்திரியார் காங்கிரசை ஆதரிக்கிறார். அவர் ஜஸ்டிஸ் கட்சி பொதுவுடமை கட்சி என்று இந்த வாரமும் “இந்து”வில் “மெயிலில்” எழுதினார். யார் சமதர்மவாதிகள் காரியத்தில் சொல்லே பார்ப்போம். உழுபவனுக்குத்தான் பூமி சொந்தமே தவிர பட்டாக்காரனுக்கு சொந்தமில்லை என்று ஒரு சட்டம் செய்வது என்றால் லேசான காரியமா?
அதுவும் யாதொரு பிரதிப்பிரயோஜனமும் இல்லாமல் பறி முதல் செய்து விடலாம் என்று சொன்னார்களே அதற்கு என்ன சொல்லுகிறாய்?
௯ம.கா- சரி, மற்றொரு சமயம் பேசலாம். எனக்கு அஜீரணம் போல் வயிற்றைப் பிரட்டுகிறது. வெளியே போய்விட்டு வருகிறேன்.
சு.ம.ஜ:- மகாராஜனாய் போய்விட்டு வா. எலக்ஷன் பிரசாரத்துக்கு
வந்த ஜவஹர்லாலை பகிஷ்காரம் செய்ததற்கு எலக்ஷனை அலட்சியமாய்
கருதி எலக்ஷனை வெறுக்கும் வீரனான நீ கோவித்துக்கொள்கிறாயே, அதுவும் காந்திக்கும் ராஜேந்திரப் பிரசாத்துக்கும் கருப்புக் கொடியைத்
தூக்கித் திரிந்துவிட்டு, அந்த வீரம்தான் எனக்கு சிரிப்பை உண்டாக்குகிறது. போய் விட்டுவா:
குடி அரசு - உரையாடல் - 25.10.1936
3399 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சம்பாஷணை
- நாரதர்
ஓர் பார்ப்பனருக்கும் பார்ப்பனல்லாதாருக்கும் ரெயிலில் போகும் போது நடந்த சம்பாஷணை:
(பார்ப்பனர் சாஸ்திரியார், பார்ப்பனரல்லாதார் கந்தையா)
சாஸ்திரியார்:- கந்தையா எங்கு போகிறீர்.
கந்தையா:- அது யார் சாஸ்திரியா?
சாஸ்திரி:- ஆம், ஆசீர்வாதம் (மார்பிற்கு நேரே உள்ளங்கையை வளைத்துக்கொண்டு)
கந்தையா:- நான் உம்மை ஆசீர்வாதம் கேட்கவில்லை. அது உமக்கே இருக்கட்டும், எது வரைக்கும் பிரயாணம்?
சாஸ்திரி:- என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்? பிராமணாள் ஆதீர்வாதம் இலகுவில் எல்லோருக்கும் கிடைக்குமா?
கந்தையா:- எனக்குப் பிராமணனென்றும், மற்றவர்களென்றும், ஆசீர்வாதமென்றும், சாபமென்றும் இருப்பதாகவும், அதன் பெயருக்குத் தக்கபடியான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும் நம்பிக்கையில்லை. அப்படியிருப்பதெனச் சொல்லுபவர்களையும், நம்புபவர்களையும் நான். பொருட்படுத்துவதுமில்லை
சாஸ்திரி:- அப்படியானால் இதுவெல்லாம் உலகத்தில் எப்படி தொன்று தொட்டு நடந்து வருகிறது கந்தையா:- உலகம் என்று எதைச் சொல்லுகிறீர்? நீர் வசிக்கும் இடத்தையா? மற்றுமுள்ள 5 கண்டங்களின் நிலப்பரப்புகளையும் சேர்த்தா?
சாஸ்திரி:- மற்ற விஷயமெல்லா மெதற்கு? முதலில் நாம் வசிக்கு மிடத்தின் நடப்பைக் குறித்தே சொல்லும் பார்ப்போம்
கந்தையா:- உலகமே இன்னதென்று அறியாத உமக்குப் பிராமணா ளென்றும், ஆசீர்வாத மென்றும் வீண் ஆராவாரமெதற்கு?
சாஸ்திரி:- நான் என்ன ஒன்றும் அறியாதவனென்று நினைத்துக் கொண்டீரோ?
குடி அரசு - 1936 (2), 340
கந்தையா:- உலகமே அக்கிரகாரத்துக்குள்ளிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிற உம்மோடு ஏன் வீண் வாதம்.
சாஸ்திரி:- என்ன நீர் நம்மை நிரக்ஷரகுஷி என்று நினைத்து விட்டீர் போலிருக்கிறது. நான் இந்த 20, 25 வருஷங்களாக எவ்வளவோ சிரமப்பட்டு வீடு வாசல், தாய் தகப்பன் முதலியவர்களை எல்லாம் விட்டு விட்டு தன்னந்தனியாக இருந்து காவிய நாடக அலங்காரம், வியாகரணம்,
தர்க்கம், மீமாம்சம், வேதாந்தம் முதலிய சாஸ்திரங்களை சாங்கோபாங்கமாக ஓதிபரீக்ஷயில் முதற்றரமாகத் தேரி பரிசுகளும் கூட பெற்று வித்வ சிகாமணி என்ற பட்டமும் பெற்றிருக்க இப்படி நினைத்து விட்டீரே.
கந்தையா:- உங்கள் வாசிப்பில் உலகத்துக்கு ஏதாவது இலக்கணம் சொல்லப்பட்டிருக்கின்றதா? அது விளங்கும்படி யாராவது கற்பித்திருக்கிறார்களா?
சாஸ்திரி:- உலகம் உலகம் உலகத்தையே கட்டியழுகிறீர் உலகத்தைப்பற்றி பூகோள ககோள சாஸ்திரங்களில் விசதமாகச் சொல்லி யிருக்கிறது. அதைப்பார்த்தால் எல்லாம் தெரிந்துவிடும். அதென்ன ஒரு காவியம் வாசிக்கும் சிறுவன் பார்த்தாலும் தெரிந்துவிடும். நீர் அதை
ஒரு பிரமாதமாக நினைத்துக்கொண்டு வாதிக்கிறீரே.
கந்தையா:- நான் உமக்குத் தெரியுமா என்றுதானே கேட்டேன். எதிலிருக்கிறது, யாருக்கெல்லாம் தெரியும் என்று கேட்வில்லையே. நீர் தர்க்க சாத்திரமும், மற்ற சாத்திரமும், சாங்கோபாங்கமாக வாசித்த வித்வசிகாமணியாயிற்றே. இப்படித்தான் உம்ம சங்கதிகளிருக்கும் எதற்காக வீண் வாதம்? போதும் சும்மாயிரும்
சாஸ்திரி:- என்னைய்யா இருக்க இருக்க மிகவும் கேவலமாக எண்ணி விட்டீர். தர்க்க சாஸ்திரத்தைப்பற்றி உமக்கென்ன தெரியும்? எல்லாவற்றையும் அலட்சியமாக நினைத்து விட்டீரே.
கந்தையா: உம்முடைய தர்க்கமும், வியாக்யானமும், வேதாந்தமும், காவிய நாடகாலங்காரமும் எனக்கு வேண்டாம். அதையும், அதை வாசித்த உம்மையும் நீரே பெருமை பாராட்டிக்கொள்ளும். எனக்கு அவை ஒன்றும் வேண்டாம்
சாஸ்திரி:- ஆனால் எதுதான் உமக்கு வேண்டியது?
கந்தையா:- மக்களுக்குள் ஏற்றத்தாழ்வை யுண்டாக்கி அவற்றால்
சில சோம்பேறிக் கூட்டத்தார் வயிறு வளர்த்து வருவது முதலில் ஒழிந்து, எல்லோரும் ஒரு குடி மக்களென்ற உணர்ச்சியும் ஒற்றுமையும் வளர்ந்து வாழவேண்டும்
சாஸ்திரி:- ஜாதி பேதமே கூடாதென்கின்றீரா?
கந்தையா:- ஆமாம் (அழுத்தம் திருத்தமாக) 3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சாஸ்திரி:- ஓ, ஓ! நீர் தற்காலம் கலியின் மகிமையைக் காட்டி மெய்ப்பிக்க பிறந்த பாஷாண்ட மதத்தினரோ! சரி, சரி. உம்மோடு பேசியதற்கும், பார்த்ததற்கும் பிராயச்சித்தம் செய்து கொள்ளச் சொல்லியிருக்கிறது?
கந்தையா:- எதற்காக?
சாஸ்திரி: நீங்கள் எல்லோரும் பூர்வ ஜென்மத்தில் சண்டாளர்களாக இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் ஒரு பார்ப்பனனைப் பார்த்து அவனையும், அவன் கஷ்டப்பட்டு வாசித்தவைகளையும் கேவலமாக நினைப்பீர்களா?
கந்தையா: நீர் என்னை முன்ஜென்மத்தில் சண்டாளனென்று சொல்லும் சமயத்தில் எனக்குச் சுயமரியாதையும், பலமும், வீரமும் இருக்கும்போது அத்தகைய சொல்லையும் கேட்டு உம்முடைய விஷயத்தில் எனக்குக் கோபம்வராமல் பரிதாபமுண்டாகிறதே, இதற்கென்ன காரணம் எனயோசித்தால் அந்தக்காலத்தில் நீர் எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கலாம். புத்திர வாத்சல்யம் உம்முடைய விஷயத்தில் அனுதாபம் காட்டவேண்டி வருகிறது.
சாஸ்திரி:- என்னடா சூத்திரப்பயலே! என்னைச் சண்டாளனுக்கு மகனென்று சொல்லி விட்டதோடல்லாமல் என் விஷயத்தில் வாத்சல்யமாம், பரிதாபமாம், அநுதாபமாம். நீயா எனக்குத் தகப்பன்?
கந்தையா:- நான் தகப்பனானால் நானிறந்தால் என் சொத்தெல்லாம் உமக்குத்தானே சேரும். நீர் கலியாண மாகாமலிருந்தாலும், காயலானாலும், பட்டினி கிடந்தாலும் அவைகளைப்பற்றி எனக்குத்தானே அதிக கவலை? இப்படியிருக்கிற என் மீது உமக்கேன் இவ்வளவு வருத்தம்? என்னைச் சொன்னது போல் உம்மைச் சண்டாளனென்றும் சூத்திரனென்றும் இழிவையுண்டாக்கும் சொற்களையாவது பேத புத்தியையுண்டாக்கும் பதங்களையாவது சொன்னேனா? எதற்காகப் பொங்கி வழிகிறீர்?
(சாஸ்திரியார் பிறகு தன் குற்றத்தை யுணர்ந்து வருந்துவதாகச் சொல்லி தன்னிருப்பிடம் போய்ச் சேர்ந்தார்.)
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - அக்டோபர் 1936
குடி அரசு - 1936 (2), 342
தீபாவவிப் பண்டிகை
இவ் வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது பார்ப்பனரல்லாதமக்களே! என்னசெய்யப்போகின்றீர்கள்? “அப்பண்டிகைக்கும் எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி விடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப்போகின்றீர்களா? என்பது தான் “நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்” என்று கேட்பதின். தத்துவமாகும். நண்பர்களே! கிறிதும் யோசனை இன்றி யோக்கியப் பொறுப்பின்றி உண்மைத் தத்துவமின்றி சுயமரியாதை உணர்ச்சி இன்றி சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல் மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரசாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர்களே யல்லாமல் மேலும் உங்கள்
வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான “பழய வழக்கம்” “பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம்” என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப்போடப்பட்ட கைதிகளைப்போல் துடிக்கின்றீர்களே யல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்தரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்பன ரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றியகவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.
புராண கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன். ஊழலை எடுத்துச்சொன்னால் காதுகளைப் பொத்திக்கொள்ளுகின்றீர்கள். “எல்லாருக்கும் தெரிந்தது தானே; அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா?” என்று கேட்கின்றீர்கள்.
343 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆனால் காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர். களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச்செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப்புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச்சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? “நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்” என்றால் அதற்கு “நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்” என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?
அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப்பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணிவாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள். வாங்குவது என்பது இரண்டு; அர்த்த மற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்மந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடு வீடாய் கூட்டங்கூட்டமாய்ச் சென்று பல்லைக்காட்டிக் கெஞ்சி பணம்வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு: இவற்றிற்காக பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது ஐந்து; அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச்செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும் வீணாக்குவதும் ஆறு;
இந்தச் செலவுகளுக்காகக் கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருக்கின்றது என்பதும் பட்டாசு வெடி மருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும்
குடி அரசு - 1936 (2), 344
தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில் அது எப்படிப்பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம் இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய் யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது. அப்படி இருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக்கணக்கான. சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் தீபாவளிப்பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண்சாதியாகியசத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது அல்லது இவர்கள் சம்மந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்தமாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக்கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும் கலைகளிலும் ஞானங்களிலும் நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தட்டிப்பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்டமாய்ப் பேசி
விட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளை மாடு கன்றுப் போட்டிருக்கின்றது” என்றால் உடனே “கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா” என்று பாத்திரம் எடுத்துக்கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர்களுக்குள்ளும் பாமர
மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய காளைமாடு எப்படி கன்றுப் போடும்'' என்று கேட்கின்ற மக்களைக் காண்பது அரிதாகவே இருக்கின்றது. மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங்களிலும் கிராமாந்தரங்களில் இருப்பவர்களை விட பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத்தனமாகவும் பட்டணங்களில் இருப்பவர்களை விட சென்னை முதலான பிரதான பட்டணங்களில் இருப்பவர்கள் பெரிதும்
348 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மூடசிகாமணிகளாகவும் இருந்து வருவதை பார்க்கின்றோம். உதாரணமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, தசரா, பிள்ளையார் சதுர்த்தி, பதினெட்டு, கிர்த்திகை முதலிய பண்டிகைகள் எல்லாம் கிராமாந்திரங்களை விட நகரங்களில் அதிகமாகவும் மற்ற நகரங்களைவிட சென்னையில் அதிகமாகவும் கொண்டாடுவதைப் பார்க்கின்றோம். இப்படிக் கொண்டாடும் ஜனங்களில் பெரும்பான்மையோர் எதற்காக, ஏன் கொண்டாடுகின்றோம் என்பதே தெரியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். சாதாரணமாக மூட பக்தியாலும், குருட்டுப் பழக்கத்தினாலும் கண்மூடி வழக்கங்களைப் பின்பற்றி நடக்கும் மோசமான இடம் தமிழ் நாட்டில் சென்னையைப் போல் வேறு எங்குமே இல்லை என்று சொல்லி விடலாம். ஏனெனில் இன்றைய தினம் சென்னையில் எங்கு போய் பார்த்தாலும் ஒவ்வொரு வீட்டுத்திண்ணையிலும் சரீரமில்லாத ஒருதலை உருவத்தை மாத்திரம் வைத்து அதற்கு நகைகள் போட்டு பூசைகள் செய்து வருவதும், வீடுகள் தோறும் இரவு நேரங்களில் பாரத இராமாயணக் காலக்ஷேபங்களும், பெரிய புராண திருவிளையாடல் புராணக் காலக்ஷேபங்களும் பொது ஸ்தாபனங்கள் தோறும் சதா காலக்ஷேபங்களும் நடை பெறுவதையும் இவற்றில் தமிழ் படித்த பண்டிதர்கள், ஆங்கிலம் படித்த பட்டதாரிகள், கெளரவப் பட்டம் பெற்ற பெரிய மனிதர்கள், பிரபலப்பட்ட பெரிய உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரபுக்கள், டாக்டர்கள், சைன்ஸ் நிபுணர்கள், புரபசர்கள் முதலியவர்கள் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். பார்ப்பனரல்லாதார்களில் இந்தக் கூட்டத்தார்கள் தான் “ஆரியர் வேறு தமிழர் வேறு'' என்பாரும் “புராணங் களுக்கும் திராவிடர்களுக்கும் சம்மந்தமில்லை” என்பாரும் தீபாவளி வைணவப் பண்டிகை ஆனதால் சைவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்பாரும் பார்ப்பனரல்லாத சமூகத்தாருக்கு நாங்கள் தான் பிரதிநிதிகள்” என்பாரும் மற்றும் “திராவிடர்களின் பழைய நாகரிகத்திற்கு மக்களை அழைத்துச் செல்லவேண்டு” மென்பாரும் பெருவாரியாக இருப்பார்கள். ஆகவே இது போன்ற 'படித்த'' கூட்டத்தாரிடம் அறிவு, ஆராய்ச்சி சம்மந்தமான காரியங்களை எதிர்பார்ப்பதைவிட, உலக அறிவுடைய சாதாரண மக்களிடம் எதிர்பார்ப்பதும், பிரசாரம் செய்வதும் பயன் தரத்தக்கதாகும் உதாரணமாக, ராமேஸ்வர தேவஸ்தானக் கமிட்டியாரின் ஒரு ரிபோர்ட் டில் மக்கள் ராமேஸ்வரத்திற்கு முந்திய வழக்கம் போல் இப்போது யாத்திரைக்கு வருவதில்லை என்றும் அதனால் வரும்படி குறைந்து விட்ட தென்றும், அதுபோலவே திருப்பதி மகந்து அவர்களின் ஒரு வருஷாந்திர ரிப்போர்ட்டில் அவ்வருஷம் திருப்பதிக்கு யாத்திரைக்காரர்கள் மிகக் குறைந்து போய் அதனால் கோவிலுக்கு முந்திய வருஷங்களைவிட பகுதி வரும்படிகூட எதிர்பார்க்க முடியாததாய் இருப்பதாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதனாலும், சங்கராச்சாரியார், ஜீயர் முதலிய மடாதிபதிகள் செல்லுகின்ற பக்கங்களில் எல்லாம் முன்போல் வரவேற்பு ஆடம்பரங்களும்
குடி அரசு - 1936 (2), 346
வரும்படியும் இல்லாமல் சீக்கிரம் சீக்கிரமாக சஞ்சாரத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்புவதிலிருந்தும் பிராமண மகாநாடுகளும் சமயப் பத்திரிகைகளும் மூட்டை கட்டப்படுவதிலிருந்தும் ஒரு விதத்தில் பாமர மக்களிடை உண்மை உணர்ச்சி பரவி இருக்கின்றதென்பதை உணர முடிந்தாலும், வழிகாட்டிகளென்றும் தலைவர்களென்றும் பொது ஜனங்களின். தர்மகர்த்தாக்களென்றும் படிப்பாளிகள் என்றும் தங்களை சொல்லிக் கொள்ளுபவர்களுள் அநேகமாக சிறிது உணர்ச்சிகூடக் காணாமலிருப்பதால் அவர்களைப்பற்றி நாம் வருந்தாமல் இருக்க முடியவில்லை.
எப்படியானாலும் இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன்.
அன்றியும் இத்தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இடமா: யிருக்கிறதென்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.
தீபாவளியின் கதைச் சுருக்கம்
ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன். வராக அவதாரத் திருமாலுக்கும் பூமிக்கும் பிறந்தவனாம்
அவன் தேவர்களை யெல்லாம் பலவாறு தூவித்து இம்சித்து வந்தானாம்
தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட்டார்களாம். உடனே திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம் அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும் பூமி தேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத்துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட்டார்களாம்.
நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார். கொண்டாடவேண்டுமென்று கேட்டுக் கொண்டானாம்
கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம்
அதற்காகவேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்து விட்டாராம்
ஆதலால் நாம் கொண்டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டுமாம்
இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.
முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்கமுடியுமா? 347... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
“எல்லா உலகங்களையும் உண்டாக்கிய நான்முகனைப் பெற்றவரும், உலகங்களையெல்லாம் காத்து வருபவரும் தேவர்கள் தலைவருமாகிய திருமாலு”க்கும் பூமி 'தேவி'க்கும் (எப்படி குழந்தை பிறக்கும்? பூமி 'தேவி'
என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்தவன்) அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம்பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய்தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்லவேண்டுமோ? மேற்படி நரகாசுரனைக் கொன்றபோது அவன் தாயாகிய பூமிதேவியும் சத்திய பாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தை யெல்லாம் காப்பாற்றுகிறாளாம்! உலக மக்கள் செய்யும் பாவங்களை யெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின்றாளாம்! “பொறுமையில் பூமிதேவிபோல்' என்று உதாரணத்திற்குக் கூட பண்டிதரும் பாமரரும் இந்த “அம்மையாரை” உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமி தேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்கவேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே
தாயின் கருணை!!
தமிழர்களாகிய நம்மையே அசுரர்களென்றும் ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவ-அசுரப் போராட்டத்தோடு சம்மந்தப்பட்டிருக்கிற இந்தக்கதையைத்
தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாகக் கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக்கதையை உண்மையென நம்பி நாமே கொண்டாடி வீண் செலவு செய்வதென்றால் நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்னென்று சொல்லுவது?
புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக்கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?
சென்றது போக, இனிமேல் கொண்டாவது தீபாவளியை - அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை - நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக்கொள்ளும் செயலைக்குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிஷ நேரமாவது செலவு செய்ய வேண்டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
- ஈ.வெ.ரா.
குடி அரசு - கட்டுரை - 01.11.1936
குடி அரசு - 1936 (2), 348
சாஸ்திமியாரே இதற்கு சர்வாதிகாமியாக வேண்டியதில்லை
சுயராஜ்யம் வந்தாலே போதும்
மகா கனம் சாஸ்திரியார் பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள். விழுப்புரம் பேச்சில் நான் சர்வாதிகாரி ஆனால் இன்ன இன்னது செய்வேன். என்று விளக்கியதில் சத்தியத்தைச் சொல்லிவிட்டார். அதற்கு ஆக அவரை நாம் பாராட்டவேண்டும். தோழர்கள் ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய பார்ப்பனர்களை விட கனம் சாஸ்திரியார் 1000 மடங்கு யோக்கியர்
என்று சொல்லலாம்.
எப்படி யெனில் அவர் சர்வாதிகாரியானால் இந்தியாவில் ஒரே மதத்தை ஸ்தாபித்து விடுவேன், வகுப்புரிமையை எடுத்துவிடுவேன், தீண்டப்படாத மக்களுக்கு தனிக்கோவிலும், தனிப் பள்ளிக்கூடமும் கட்டி வைப்பேன், பெண்களுக்கு சம சொத்துரிமை அளிக்கமாட்டேன், ஹிந்தி பாஷையை இந்திய பாஷை ஆக்கி விடுவேன், சமூக சீர்திருத்த சம்மந்தமான காரியம் ஜனங்கள் சம்மதமில்லாமல் செய்யவிடமாட்டேன் என்று கூறி இருக்கின்றார். ஆனால் இதை இப்படியே நிர்வாணமாய்ச் சொல்லாமல் அதற்கு மூடிபோட்டு கழுத்தை மூடிக்குள் வைத்து பேசியிருக்கிறார்.
இந்தக் காரியங்கள் மாத்திரம் செய்ய வேண்டியதானால் சாஸ்திரியார். சர்வாதிகாரியாக ஆக வேண்டிய அவசியமில்லை என்பதே நமதபிப்பிராயம். தோழர்கள் காந்தியாரும் ஜவஹர்லாலும் கோரும் சுயராஜ்யம் வந்தாலே போதுமானது. எப்படியெனில் இந்தக் காரியங்களுக்காகத்தான் சுயராஜ்யம் கேட்கின்றோம் என்று இருவரும் வெளிப்படையாகவே சொல்லுகிறார்கள்.
வகுப்புத் தீர்ப்பையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தேசத்துரோகம் என்று காங்கிரஸ் தலைவரும் மாஜி தலைவரும் சொல்லும் காரணமுமே இதற்கு ஆகத்தான். இதைத்தவிர வேறு எதற்காக என்று கேட்கின்றோம்
தோழர் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் பேசும்போது “சுயராஜ்யம் கொடுத்தால் வகுப்புவாதத்தை நான் அடக்கிவிடுகிறேன்'' என்று சொன்னார். அதுவும் முஸ்லீம்கள் கேட்கும் வகுப்புரிமையை ஒடுக்கி விடுவேன் என்றார்.
349 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தோழர் ஜவஹர்லால் கராச்சியில் “சுயராஜ்யம் வந்தால் அவரவர்கள் ஜாதிபழக்கவழக்கங்கள் காப்பாற்றி கொடுக்கப்படும்” என்று சொன்னார்.
சமூக சீர்திருத்த சட்டங்கள் சட்டசபையில் செய்யக்கூடாது என்று
காந்தியார் வெகுநாளைக்கு முன்பே சொல்லி சில மசோதா வாபீஸ் பெற்றாய் விட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை 500 கஜ ஆழத்தில் புதைக்கவே சுயராஜ்யம் கேட்கின்றேன் என்று தோழர் சத்தியமூர்த்தியும்
சிம்லா ரேடியோ முதல் அனேகம் பேச்சில் சொல்லி இருக்கிறார்.
சுயராஜ்யம் வருவதற்குமுன்பே ஹிந்தியை இந்திய பாஷை ஆக்க வேண்டும் என்றும் எல்லா சுயராஜ்யவாதிகளும் சுயராஜ்ய தமிழ்ப் பண்டிதர்களும் சொல்லுகிறார்கள்.
தீண்டப்படாதவர்களுக்கு தனிக்கோவில் தனிப் பள்ளிக்கூடம் கட்டும் வேலையை காந்தியாரும் அரிஜனசேவைக்காரரும் ஏற்று அதற்குஆக பொது ஜனங்களிடம் பல லக்ஷ ரூபாய் வசூலித்து வேலை செய்தும் வருகிறார்கள். சிதம்பரத்தில் ஒரு தீண்டப்படாதாரைப்பிடித்தே கோயில் கட்டச் செய்து அதற்கு அஸ்திவாரமும் காந்தியாரே போட்டுவிட்டுப் போயிருக்கிறார். ஆகவே இந்தக்காரியங்களுக்கு ஆக சாஸ்திரியார் சர்வாதிகாரி ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவருடைய அறியாமை என்றுதான் சொல்லுவோம். அதில்லாமலே இப்போதே சில நடந்து வருகின்றன. சில நடந்தாகி விட்டன. சில சுயராஜ்ய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுமிருக்கின்றன. இதிலிருந்து பார்ப்பனர் என்றால் தோழர் மாளவியா ஒரு மாதிரி, ஜவஹர்லால் வேறு மாதிரி, ராஜகோபாலாச்சாரியார் மற்றொரு மாதிரி, சாஸ்திரியார் இன்னொரு மாதிரி, சத்தியமூர்த்தி இனியொருமாதிரி இருப்பார்கள் என்று நினைத்தால் நாம் தான் முட்டாள்களாகுவோமே தவிர அவர்களில் யாரும் குற்றவாளியாகமாட்டார்கள்.சம்மந்தரும் மாணிக்கவாசகரும் பிறந்த ஜாதியாகிய பார்ப்பன ஜாதி ஆளுக்கொரு விதமாய் இருக்குமென்று அறிவாளி எவன்தான் கருதுவான்? “நரியைப் பரியாக்கி” ராஜாங்கத்தை ஒழித்தவர் மாணிக்கவாசகர். “துண்டுச் சீட்டை எதிர் நீந்தச் செய்து” 8000 சமணர்களை கழுவேற்றியவர் சம்மந்தர். அந்த ஜாதியில் பிறந்த ஜவஹர், ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியவர்கள். சுயராஜ்யமும் சுதந்திரமும் சம்பாதித்து பார்ப்பனரல்லாதார்களில் தங்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் இல்லாத கோடிக்கணக்கான மக்களை ஒழித்துவிடப் போவதிலும் சாகும்வரை பார்ப்பனரல்லாதார் கூட்டத்தாருக்கு எதிரியாய் இருக்கப் போவதிலும் ஆச்சரியமோ சந்தேகமோ இருக்க முடியுமா? ஆதலால் இவர்கள் எல்லாம் இந்த - பார்ப்பனர்கள் எல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் அதாவது மகாத்மாவைவிட ஒருபடி மேலான ஆத்மாக்கள் என்று சொல்லப்படுவதில் “பிழை” என்ன இருக்கிறது?
குடி அரசு - கட்டுரை - 01.11.1936
குடி அரசு - 1936 (2), 350
பட்டேல் வருகிறார் பணப்பை ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!
பார்ப்பனர் - உஷார்!
தென்னாட்டு மக்களிடம் காங்கிரஸ் பேரால் பணம் வசூலித்து பார்ப்பனப்பிரசாரம்செய்ய அப்பணத்தை பார்ப்பனர்களிடம் ஒப்புவித்து விட்டுப் போக இம்மாதத்தில் தோழர் பட்டேல் வரப்போகிறாராம் இதுவரை கொடுத்தது போதாமல் இன்னமும் பணம் கொடுத்து ஏமாந்த சோணகிரிகளாகப் போகின்றீர்களா? அல்லது உஷாராய் இருக்கப்போகிறீர்களா? என்று தமிழ்நாடு பார்ப்பனரல்லாத மக்களைக் கேட்கின்றோம் இதுவரை பார்ப்பனர்கள் பல ஆசாமிகளைக் கூட்டிவந்து எத்தனை தடவை எவ்வளவு லக்ஷ ரூபாய் தமிழ்நாட்டில் வசூலித்து இருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப்பாருங்கள். கல்யாணம், கருமாதி, கோவில், குளம், பண்டிகை, உற்சவம், பூணூல், கர்ப்பாதான முகூர்த்தம், வளகாப்பு, சஷ்டி
பூர்த்தி முதலியவைகளுக்கு ஆக என்று அவர்கள் வசூலித்ததைப் பற்றியோ நீங்கள் வலியக் கொடுத்ததைப்பற்றியோ நாம் இங்கு இப்போது பிரஸ்தாபிக்கவில்லை. அந்த வகையில் தென்னாட்டில் மாத்திரம் 2 கோடி தமிழ்மக்கள் பல 2% கோடி ரூபாய்களை பாழாக்கி அவற்றில் பல 2% கோடிகளுக்கு மேல் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும்படி செய்கிறார்கள். அது ஒரு புறமிருக்க இப்போது ஒரு புது “சனியன் காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம், சமதர்மம், சுதந்திரம் என்கின்ற பெயர்களில் வருஷா வருஷம் பல
லக்ஷம் ரூபாய்கள் பாழாகின்றனவே அதைப்பற்றியே சொல்லுகின்றோம்
திலகர் நிதி வசூல் செலவு வகைகள் எவ்வளவு தவறுதலான முறையில் நடந்திருந்தாலும் அவைகளை லட்சியம் செய்யாமல் போனாலும் கூட அந்தப் பணங்களுக்கு என்ன பலன் ஏற்பட்டது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அக்ஷய பாத்திரமெடுத்துக் கொண்டு அலையவேண்டிய பார்ப்பனர்கள் இன்று ஐ.சி.எஸ். ஆனார்கள் என்பதைத் தவிர வேறு என்ன நடந்தது என்று யோசித்துப்பாருங்கள்.
கதருக்கு வசூலித்த பல லக்ஷ ரூபாய்கள் என்ன கதி அடைந்தது? அதனால் கதர் வேஷத்தால் ஊருக்கு நாலு இரண்டு பார்ப்பனர்கள் 351... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
முனிசிபாலிட்டிக்கும் ஜில்லாபோர்டுக்கும் மெம்பராகிறார்கள். வேலையில்லாக் கஷ்ட காலத்தில் பல பார்ப்பனர்கள் கதரின் பேரால் வயிறுவளர்த்தார்கள் - வளர்க்கிறார்கள். இதைத் தவிர வேறு என்ன நடந்தது? கதருக்கு பணம்
வசூலிப்பதற்கு முன் நமது நாட்டில் கதர் உற்பத்தி ஆசி கதர் பரவி இருந்த அளவில் பகுதியில் பகுதியாவது இன்று கதர் உற்பத்தி ஆயிற்று என்றோ, பரவி இருக்கிறது என்றோ சொல்ல முடியுமா என்று நீங்களே உங்கள் மனதில் கையை வைத்துப்பாருங்கள்.
பிறகு தீண்டாமை விலக்குக்கு பல லக்ஷ ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்த பணம் என்ன ஆயிற்று? எலக்ஷன் செலவுக்கும் எலக்ஷனில் பார்ப்பனர் வெற்றி பெறவும் பயன்படுத்தப்பட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா? உதாரணம் வேண்டுமானால் சொல்லுகிறோம்.
வடஆற்காட்டில் தோழர் கல்யாணராம அய்யர் என்கின்ற ஒரு பார்ப்பனர் சிறு வாத்தியார் வேலையில் இருந்து நீங்க வேண்டியவரானவர். அவருக்கு தீண்டாமை கமிட்டியில் அதைவிட அதிகச் சம்பளம்கொடுத்து நியமித்தார்கள். அவர் வட ஆற்காடு ஜில்லா போர்டுக்கு மெம்பராகவும், மற்ற மெம்பர்களுக்கு பிரசாரம் செய்யவும் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றும் எத்தனையோ பேர்கள் தேர்தல் பிரசாரம் தீண்டாமை கமிட்டி சம்பளத்தில் செய்தார்கள். இந்த மாதிரி தமிழ்நாட்டிலும் ஆந்திர நாட்டிலும் மலையாள நாட்டிலும் தீண்டாமைக்கமிட்டி சம்பளக்காரர்கள் எத்தனை பேர் எலக்ஷனில் வேலை செய்யாதவர்கள், எலக்ஷனில் நிற்காதவர்கள், வெற்றி பெறாதவர்கள் என்று காங்கிரஸ் கணக்குக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.
தோழர் ராஜன் தீண்டாமை கமிட்டி பிரசிடெண்டு என்கின்ற ஹோதாவின் தனது செல்வாக்கை எலக்ஷன்களுக்கு பயன்படுத்தி தீண்டாமை விலக்கு கமிட்டி சிப்பந்திகள் எலக்ஷன்களில் பிரசாரம் செய்து பல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெற்றார். அவர் காங்கிரசுக்கு “துரோகம்” செய்த காரணத்தால் விலக வேண்டி வந்தாலும் கூட அந்த தலைமை ஸ்தானத்துக்கு மறுபடியும் அவரையே அழைத்தார்கள். அது பயன்படவில்லை. பிறகு மற்றொரு பார்ப்பனர் தான் தோழர் மதுரை வயித்தியநாதய்யர் தலைவராக ஆக்கப்பட வேண்டி இருந்ததே தவிர ஒருபார்ப்பனரல்லாதாரோ தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவரோ வர முடியவில்லை. ஏன்? தீண்டாமை விலக்குக்குக் காந்தியார் வசூலித்த பணம் பார்ப்பனருடையது என்கின்ற எண்ணமா அல்லது 10-ல் ஒரு பாகமாவது பார்ப்பனர் பணம் அதில் இருக்கிறது என்கின்ற எண்ணமா என்று யோசித்துப் பாருங்கள்.
விஷயம் தீண்டாமை விலக்குதல்
தீண்டாமைக்கு காரணஸ்தர்கள் பார்ப்பனர்கள்.
தீண்டாமையால் கஷ்டப்படுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்கள்.
குடி அரசு - 1936 (2), 352
பணமும் பார்ப்பனரல்லாதாருடையது
அந்த கமிட்டிக்கு தலைவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள்.
அந்த வேலை செய்யும் சம்பள சிப்பந்திகள் பெரிதும் பார்ப்பனர்கள்.
இந்த உண்மை அறிந்தபிறகு கூட தீண்டாமை விலக்குப் பணம் நாணயமான தத்துவத்தின்மீது யோக்கியமான முறையில் செலவழிக்கப் படுகின்றது என்று எந்த மூடன்தான் ஒப்புக்கொள்ள முடியும்? இது ஒரு புறமிருக்கட்டும்
1920-ம் வருஷம் முதல் 1936-ம் வருஷம் வரை காங்கிரசும் அரிஜன கமிட்டியும் 30, 40-லக்ஷம் ரூபாய்களும் தீண்டாமை விலக்குக்காக செய்த வேலையின் பலனாக சில பார்ப்பனர்கள் அரசியலில் விளம்பரமும் ஸ்தாபனங்களில் ஸ்தானங்களும் பெற்றதல்லாமல் தீண்டாமை விலக்குக்கு என்ன நன்மை ஏற்பட்டது என்று கேட்கின்றோம். கிறிஸ்தவனாகவும் முஸ்லீமாகவும் ஆனவர்களில் சிலருக்கு தீண்டாமை விலகிற்று என்பதல்லாமல், ஜஸ்டிஸ் கட்சி அரசியல் ஆதிக்கத்தின் பயனாய் சட்ட மூலமாய் சில கொடுமைகள் நீங்கப்பட்டது என்பது அல்லாமல் மற்றபடி ஏற்பட்ட நன்மை என்ன என்று பார்ப்பனர்களையும் அவர்களது கூலிகளையும் கேட்கின்றோம்.
இனி இப்போதும் தேர்தலுக்கு ஆக பணம் வசூலிப்பதென்றால் என்ன செய்வதற்கு ஆக? பார்ப்பனரல்லாத மக்களிடம் தேர்தலுக்கு பணம் வசூல் செய்து பார்ப்பனர்களை அவர்கள் உரிமைக்கு மேல் 100-க்கு 400, 500 பங்கு அதிகமான பார்ப்பனர்களை நிறுத்தி சட்டசபை, ஸ்தல ஸ்தாபன. சபை ஆகியவைகளை பார்ப்பன சபை, பார்ப்பன ஆதிக்க சபை என்று ஆக்குவதற்கு அல்லாமல் வேறு எதற்கு ஆக பணம் பயன்படுத்தப் போகிறது என்று கேட்கின்றோம். உதாரணமாக சென்னை கார்ப்பரேஷனுக்கு பார்ப்பன ஜன சமூக எண்ணிக்கைப்படி, 2 கவுன்சிலர்கள்தான் பார்ப்பனர்கள் வரலாம். பொதுப் பணத்தை கார்ப்பரேஷன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதின் பயனாய் தீண்டாமை விலக்குக் கமிட்டி மெம்பர்களும் சிப்பந்திகளும் வந்து பிரசாரம் செய்ததின் பயனாய் 40 ஸ்தானங்களில் 11 ஸ்தானங்கள் பார்ப்பனர்கள் அடைந்து விட்டார்கள்.
இந்தப் பார்ப்பனர்களில் பலர் எப்படி ஓட்டர் லிஸ்ட்டுக்கு வந்தார்கள் என்பதே கண்டுபிடிக்கமுடியாத காரியம். அப்படிப்பட்ட யோக்கியதை உடையவர்கள் வந்து விட்டார்கள். ஊர் ஆட்சி செய்ய என்பது ஒருபுற மிருந்தாலும் போதாக்குறைக்கு ஆல்டர் மென் என்று தேர்ந்தெடுக்கப்படும் 5ஸ்தானங்களுக்கும் 2% பார்ப்பனர்கள் தெரிந்தெடுக்கப்படப் போகிறார்களாம். அதாவது தோழர்கள் சத்திய மூர்த்தி அய்யர், பிரகாசம் பந்துலு, முத்துலக்ஷிமி
353... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ரெட்டியார், மற்றவர்கள் யாகூப் ஹாசன் சாயபு, மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய இருவர்கள் தானாம். ஆகவே கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பார்ப்பனர் ஏகபோகமாகவும் அதிகமாகவும் ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளுவதல்லாமல் வேறு எதற்குப் பயன்படுத்தப் படுகிறது என்று பாருங்கள். இந்த நிலையில் மறுபடியும் பணம் வசூல் செய்யவும் அதை தேர்தலுக்கு பயன்படுத்த பார்ப்பான் வசம் ஒப்படைக்கவும் தோழர் பட்டேல் அவர்கள் வருகிறார் என்றால் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! என்று எச்சரிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 01.11.1936
குடி அரசு - 1936 (2), 354
கார்ப்பரேஷன் தேர்தலில்
பார்ப்பனர் வெற்றி
சென்னைக் கார்ப்பரேஷன் தேர்தல் நடந்து முடிவும் வெளியாகிவிட்டது காங்கிரசுக்கு 27 ஸ்தானமாம். அப்படியானால் மீதி எல்லாம் ஜஸ்டிஸ்கட்சிக்கே என்று வைத்துக்கொண்டாலும் ஜஸ்டிஸ் கட்சி கார்ப்பரேஷன் பொதுத் தேர்தலில் தோல்வியடைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் காங்கிரஸின் வெற்றி உண்மையான வெற்றியா அல்லது மற்ற வெற்றிகளைப் போல் வெறும்கொட்டை எழுத்துச்சேதி வெற்றியா என்பது ஒரு புறமிருந்தாலும் பார்ப்பனர்களுக்கு நல்ல வெற்றி என்பதை யாரும் மறுக்கமுடியாது
எழவானாலும் கல்யாணமானாலும் புரோகிதனுக்கு பலன் (வரும்படி) ஒரே மாதிரிதான் என்பது போல் பொய் வெற்றியானாலும் மெய் வெற்றி யானாலும் பார்ப்பனர்களுக்கு 11 ஸ்தானம் கிடைத்து விட்டது. ஆதலால் அவர்களுக்கு தேர்தலின் அரசியல் பின் விளைவு எப்படியானாலும் கவலைப்படத்தக்க காரியம் ஒன்றுமில்லை.
பார்ப்பன சமூகம் 100-க்கு 3 பேர் வீதம் ஜனத்தொகை கொண்டது ஆதலால் அவர்கள் 40 ஸ்தானங்களில் 1% ஒண்ணரை ஸ்தானத்துக்கே அருகதையுடையவர்கள். ஆனால் காங்கிரசு, தேசீயம், சுயராஜ்யம் என்ற கூப்பாடுகளின் பயனாய் 11 ஸ்தானங்களுக்கு குறையாமல் பெற்றுவிட்டார்கள். இந்த எண்ணிக்கை 100-க்கு 25 வீதத்துக்குமேல் ஆகின்றது. இனி நடக்கப்போகும் ஆல்டர் மென் தேர்தலிலும் 5-க்கு 3 வந்தே தீருவார்கள். எனவே பார்ப்பனர்கள் கூண்டோடு காங்கிரஸ், தேசியம், சுயராஜ்யம் என்று கத்துகிறார்கள் என்றால் பலனில்லாமல் வீணாகக் கத்தவில்லை. நல்ல
அதுவும் அவர்களுடைய சமூக லாபத்தையே எதிர்பார்த்துத் தான். கத்துகிறார்கள் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம் ஆகையால் அவர்களை நாம் முட்டாள்கள் என்று சொல்லிவிட முடியாது. பார்ப்பனரல்லாதார் அவர்களுடன் சேர்ந்துபின் தாளம் போடு கின்றார்களே அந்த முட்டாள்தனத்தைப் பார்த்துதான் நாம் கவலைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். பார்ப்பனரல்லாதார்களில் பார்ப்பனர்களுக்கு ஓட்டுச் செய்பவர்கள் ஒரு சமயம் மூடர்களாக இருந்தாலும் இருக்கலாம் ஆனால் பார்ப்பனர்கள் வெற்றிபெற பிரசாரம் செய்தவர்களிலும் பத்திரிகையில் எழுதினவர்களிலும் பார்ப்பனரல்லாதாராக இருந்தவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது
358 _ QURwaRdT எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனக் கூலிகளாகவும் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து வயிறு வளர்த்துத் தீரவேண்டிய ஈன நிலையில் இருந்தவர்களாகவும்தான் இருந்திருக்க வேண்டுமே ஒழிய மூடர்கள் அல்ல. மற்றபடிஇவர்கள் கூலிகள் அல்லாமல் சுதந்திரவாதிகளாகவோ உண்மையான. தேசீய வாதிகளாகவே இருந்திருப்பார்களேயானால் தேர்தலுக்குஅபேட்சகர்களை தெரிந்தெடுத்து ஆட்களை நிறுத்தும்போதே இவர்கள் “ஏன் இத்தனை பார்ப்பனரல்லாதாரைப் போடவில்லை?” என்றோ, “ஏன் இத்தனை பார்ப்பனர்களைப் போடுகிறீர்கள்?'' என்றோ ஏன் கேட்டிருக்கக் கூடாது?
இந்த பிரசாரப் பார்ப்பனரல்லாதாருக்கும் பத்திரிகைப் பார்ப்பன ரல்லாதாருக்கும் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி என்பதே இல்லாத அவ்வளவு பெரிய “தேசீயவாதிகள்'' என்று யாராவது சொல்ல முடியுமா? அவரவர்கள் இஷ்டம் போல் ஏதாவது ஒரு காரியம் ஆகாத காலங்களில் அவரவர்களுக்கு வேண்டியவர்களுக்கு ஸ்தானங்கள் மரியாதைகள் கிடையாமல் போன காலங்களில் இவர்கள் பார்ப்பனர்-
பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி கொண்டும் உணர்ச்சியைக் கிளப்பி விட்டும் எழுதி கிளர்ச்சி செய்யவில்லையா? என்று கேட்கின்றோம் ஆகவே கூழுக்கு கவி பாடுகிற முறையில் தங்கள் சமூக உணர்ச்சியை விற்று இருக்கிறார்கள் என்பதல்லாமல் வேறு தகுந்த பார்ப்பனரல்லாதார். கிடைக்கவில்லை என்கின்ற காரணமா என்று வாசகர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
இதைப்பற்றி நாம் அதிகமாக கவலைப்பட இடமில்லை ஏனெனில் நம் நாட்டின் வாழ்க்கை நிலை இவ்வளவு தூரம் எட்டிவிட்டது. வாழ்க்கையின் சூத்திரக்கயிறு பார்ப்பனர்களிடம் சிக்கிவிட்டது.
ஆனால் இவற்றை உணர்ந்த சென்னை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களில் சிலரின் யோக்கியதை இதைவிட மோசமாய் இருந்ததே இந்தத் தேர்தலின். முடிவுக்கு ஒரு முக்கிய காரணமாகும் சென்னை ஜஸ்டிஸ் கட்சித் தோழர்களுக்கு சகல உத்தியோகமும் வேண்டும், கட்சிக்காக பொதுவில் ஒரு காசும் செலவழிக்க மாட்டார்கள். அவ்வளவோடு அல்லாமல் முதல்தர கோழைகளாகவும் இருப்பார்கள். பிரசாரம் செய்வது என்றால் அவர்களுக்கு வேப்பங்காயைப்போல் தோன்றும். காந்தியைப்பற்றியோ காங்கிரசைப்பற்றியோ வேறு யாராவது குறைகூறிப் பேசினாலும் தங்களுக்கு ஓட்டு கிடைக்கமாட்டாதே, “பாவம்” வந்துவிடுமே என்று பயப்படும் வீரர்கள். இப்படிப்பட்ட கட்சி “பிரமுகர்கள்'” வெற்றி பெறுவது என்றால் வெற்றி பெற்றால்தான். ஆச்சரியப்படவேண்டி யிருக்குமே ஒழிய தோல்வி பெறுவதில் ஆச்சரியமிருக்க. இடமேது என்று கேட்கின்றோம்
தமிழ்நாடு மத்திய பிரசாரக்கமிட்டியார் எவ்வளவோஅசெளகரியத்துடன் ஊர் ஊராய்ச் சுற்றி பிரசாரம் செய்துவிட்டு சென்னை நகர பிரசாரத்துக்கு
குடி அரசு - 1936 (2), 356
வந்திருந்த காலத்தில் அவர்களை ஏன் என்று கேட்க சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் மீ' 500, 1000, 5000 சம்பளம் பெற்ற, பெற்று வருகிற
“தியாகிகள்' ஒருவராவது தங்கள் தலையைக் காட்டிக் கொள்ளக் கூட இஷ்டப்படவில்லை. சென்னை பொது பாமர மக்களுக்கிருந்த கவலையும்
ஆத்திரமும் இந்த பிரமுகர்களுக்கு சிறிது கூட இல்லாமல் போய்விட்டது
இதை நாம் எழுதுவது பிரசாரக்கமிட்டியை மரியாதை செய்யவில்லை. என்பதற்கு ஆக அல்ல. ஆனால் பிரசாரத்தில் சென்னை ஜஸ்டிஸ் பிரமுகர்களுக்கு அதாவது சட்ட சபை மெம்பராகவும் கார்ப்பரேஷன் மெம்பராகவும் மந்திரிகள் காரியதரிசிகள் ஆகவும் இருந்து பயன் அனுபவித்தும் அனுபவிக்கவேண்டும் என்கின்ற ஆசையைக் கொண்டும் இருக்கும் பெரியார்களின் தன்மை எப்படிப்பட்டது என்பதையும் இப்படிப்பட்டவர்கள் எப்படி வெற்றி பெறக் கூடும் என்பதையும் இவர்கள் சம்மந்தம் வைத்துக் கொண்டு இருக்கும்கட்சி எப்படி உறுப்படி ஆகும் என்பதையும் பொது ஜனங்கள் அறியும் பொருட்டே எழுதுகிறோம். கட்சி தலைவர் மீது குற்றம் இல்லை தான். அவர் எலக்ஷன் செலவுக்கும் சுமார் (10000) பத்து ஆயிரம் ரூபாய்வரை செலவுக்கு கொடுத்தும் இருக்கலாம் ஆனால் எலக்ஷன் சமயத்தில் பணத்தை செலவு செய்து கொண்டு ஏதோ 2,
4 கூட்டம் போட்டு பேசுவதால் பணத்துக்கு கணக்கு காட்டுவதால் எலக்ஷன். காரியம் நடந்து விடுமா என்று கேட்கின்றோம். வீடு நெருப்புப் பிடித்துக்கொண்டு எரியும் போது கிணறு வெட்ட ஆரம்பித்தால் என்ன பயன் ஏற்படுமோ அதுபோல் தான் எலக்ஷன்போது பிரசாரம் செய்ய ஆரம்பிக்கும் காரியமாகும். சட்டசபை எலக்ஷன் தினத்து அன்றுதான் தினசரியும் வெளிவரலாம் போல் இருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்று உள்ள பலம், செல்வாக்கு, அதன் பலன் அறியும் தன்மையுள்ள மக்கள் முதலியவை எல்லாம் சென்னை தவிர மற்ற வெளியிடங்களில் உள்ள நிலையை அனுசரித்துத்தானே ஒழிய மற்றப்படி சென்னையைப் பொறுத்த வரை அங்குள்ள ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் பார்ப்பனர்களை யோக்கியர்களாக்கிவிடக் கூடியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம். ஏனெனில் பார்ப்பனர்கள். சகலத்தையும் விற்று தங்கள் ஜாதிக்குப் பாடுபடுகிறார்கள் என்றால் சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் பலர் குலத்தையும் விற்று தங்கள் குடும்பங்களுக்கு மாத்திரம் பாடுபடுபவர்கள் என்று சொல்ல வெட்கப்படுகிறோம் இவைகளையெல்லாம் யோசிக்கும்போது சென்னைக் கார்ப்பரேஷன். தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வி அடைந்தது என்கின்ற முடிவு அனுபவத்தில் உண்மையாய் இருக்குமானால்நாம்சந்தோஷப்படவேண்டியதேதவிரதுக்கப்பட இடமில்லை. ஏனெனில் சென்னைத் தோழர்களுக்கு சட்டசபை தேர்தலுக்காவது
இது ஒரு நல்ல பாடம் ஆகலாம் என்கிற ஆசை காரணமாகவேதான்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.11.1936 357... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
R. No. M. 2041 யய தனி விலை ஒரு அணா:
19243 வ்தாயிக்கப்பட்டது.
s Tp s வெளிவது
கதர்த் தத்துவம்
நம் நாட்டு விடுதலை ஸ்தாபனம் என்று சொல்லப்படும் காங்கிரசானது
1920-ல் ஒரு புதிய மாறுதலை அடைந்தது.
அதாவது காங்கிரஸ் ஆரம்பம் முதல் 1920 வருஷம் வரை பிரிட்டிஷாரிடம் ராஜபக்தி ராஜ விசுவாசம் ஆகியவை காண்பித்து வெளி வியாபாரம், யந்திரத்தொழில் முறை முதலியவைகள் மூலமே பொருளாதாரமும், தொழில் விருத்தியும் தனது கொள்கையாய் கொண்டிருந்ததோடு அரசியல் முன்னேற்றம், சுதந்திரம் என்பவைகளுக்கு சர்க்கார் உத்தியோகங்கள் பெறுவதும் சர்க்கார் நியமனங்களை விரிவாக்கச் செய்வதும் ஆகிய இரண்டையே முக்கிய வேண்டுகோளாகவும் விண்ணப்பமாகவும்
கொண்டிருந்தது.
முஸ்லீம்கள் இயக்கமும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும் தோன்றி காங்கிரஸ் பலனில் பங்குகேட்க ஆரம்பித்த பிறகே அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஆதாரங்களுக்கும் பொருத்தமற்ற சில கொள்கைகளை வைத்து அறிவுள்ள மக்களும் அனுபவ சாத்தியத்திற்கு உட்பட்டும் மற்ற இடங்களில் நடக்கும் நடப்புகளை கவனித்தும் செய்கையில் இறங்கும் மக்களும் காங்கிரசின் கிட்ட நெருங்குவதற்கு இல்லாத மாதிரியாகவும் உண்மையான. பொதுநல கவலையுள்ள மக்களை விரட்டி அடிப்பதற்கு ஆகவுமான முறையில் கொள்கைகளை வகுத்து அவற்றையே தீவிர கொள்கையென்றும் அதி தீவிரகொள்கையென்றும் பெயர் சொல்லி பார்ப்பனர்கள் காரியத்தில் இறங்கினார்கள்.
இவற்றிற்கு காந்தியாரும் அவருடைய மந்த புத்தியும் காரணம் என்று ஒரு அளவு சொல்லப்பட்டாலும் நம் நாட்டுப் பார்ப்பனர்களே
பெரிதும் அவற்றிற்கு ஆதார பூதமாய் இருந்து அந்த சூதுகளும் அவர்களது சுய நலங்களும் மக்களுக்கு விளங்காமல் இருக்கும்படி செய்தார்கள். இதனால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன என்று கேட்கலாம்
பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட பயன் எல்லாம் முன் கூறப்பட்ட முஸ்லீம் இயக்கமும் பார்ப்பனரல்லாதார் இயக்கமும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு ஒரு நல்ல சாதனமாக ஏற்பட்டதேயாகும்
359 ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
எப்படியெனில் மேலே குறிப்பிட்ட அதாவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் மூன் பின் நடப்புக்கும் சரிப்படாததான கொள்கைகளையோ திட்டங்களையோ காங்கிரசின் திட்டமாய் கொண்டதால் மேல்படி இரு சமூகத்தில் இருந்தும் தங்கள் சமூத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் யோக்கியமும் உண்மை உழைப்பும் உள்ள மக்கள் காங்கிரசில் சேர முடியாமல் போய்விட்டதுடன் அந்தக் காரணத்தால் அவ்விரு ஸ்தாபனத்தையும் ஸ்தாபனத் தலைவர்களையும் அவர்களது கொள்கைகளையும் குறை கூறி அழிக்கவோ தடுக்கவோ விஷமப் பிரசாரம் செய்யவோ பார்ப்பனருக்கு அனுகூலம் ஏற்பட்டது.
கதர் ஆகவே அப்படிப்பட்ட கொள்கைகளில் - திட்டங்களில் ஒன்றாகத்தான் இன்று கதர் இருந்து வருகிறது. ''கதர்-சுயராஜ்யத்திற்கு வழி, தேச பக்தர்களுக்கு அறிகுறி, ஏழைகளுக்கு ஆதரவளிப்பது, இந்திய பொருளா
காரத்துக்கு ஆஸ்பதமானது, குடிசைத் தொழிலில் சிறந்தது, இந்தியர்களுக்கு வரப்பிரசாதமான பொக்கிஷம்” என்பது முதலிய பல காரணங்கள் கதருக்கு சொல்லப்பட்டு வந்திருக்கிறது இவை தவிர அதில் ஆத்மீக சம்மந்தமான பல கருத்துக்கள். இருப்பதாகவும் காந்தியாரால் சொல்லப்பட்டும் வந்திருக்கிறது. என்னவெனில். மன சாந்திக்கும் ஆத்மா மோக்ஷமடையவும் சத்தியத்தில் நம்பிக்கை ஏற்படவும்” என்பவை போல் அனேக தத்துவார்த்தங்களும் கதருக்கும் ராட்டினத்துக்கும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது
1920-ம் முதல் 1936-ம் வருஷம் வரை இந்த 16 வருஷ காலமாக கதருக்கு செய்யப்பட்ட பிரசாரமும் அதற்காகச் செலவழிக்கப்பட்ட பணமும் நிர்ப்பந்தமாக மக்களுக்குள் கதரை புகுத்துவதற்கு செய்யப்பட்ட காங்கிரஸ் சட்டதிட்டங்களும் எவ்வளவு என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
காங்கிரஸ்காரருக்கு கதர் முக்கிய சின்னமென்றும் கதர் கட்டாதவர்கள் ஏழைகளின் நண்பர்கள் அல்லவென்றும், கதர் கட்டினவர்கள்தான் தேச பக்தர்கள் என்றும் மற்றவர்கள் தேசத்துரோகி என்றும் சொன்னது மட்டும் போதாமல் காங்கிரஸ் தேர்தலுக்கு நிற்கவும் காங்கிரஸ் தேர்தலுக்கு ஓட்டுக் கொடுக்கவும் கதர் கட்டினால்தான் அருகதை உண்டு என்றெல்லாம் கூட நிபந்தனைகளும் ஏற்படுத்தப்பட்டன.
இவ்வளவும் நடந்தும் இன்று கதரின் நிலை என்ன என்பதுதான் இப்போது யோசிக்கத்தக்கதாகும்.
1920 முதல் 1936-ம் @ வரை இந்த 16 வருஷ காலத்தில் மேல் கண்ட இவ்வளவு முயற்சிகள் செய்த பின்பும் இன்று கதரின் தத்துவத்தில்
குடி அரசு - 1936 (2), 360
காங்கிரசுக்காரர்களுக்குள் ஒரே அபிப்பிராயம் இருப்பதாகச் சொல்லு
வதற்கில்லை. காங்கிரசுக்காரர்களுக்குள் ஒரே அபிப்பிராயம் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தலைவர் என்பவர்களுக்குள்ளாகவே ஒருமனப்பட்ட அபிப்பிராயம் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களுக்குள் இல்லாவிட்டாலும் ஒரு உயிர் மூன்று சரீரமாய் விளங்குவதாகக் கருதப்படும் தோழர்கள் காந்தியார், ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய மூன்று பேருக்குமே கதரைப் பற்றியும் கதரின் முக்கிய தத்துவத்தைப்பற்றியும் ஒரு மனப்பட்ட அபிப்பிராயம் இல்லை என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
காந்தியார் அபிப்பிராயத்துக்கும் பண்டிதர் ஜவஹர்லால் அபிப்பி ராயத்துக்கும் கதரைப் பற்றி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கருத்துக்கள்
இருந்து வருகின்றன. பண்டிதர் “கதர் பொருளாதார பிரச்சினையை
தீர்த்துவிடாது, ஏழ்மையை ஒழித்து விடாது” என்று சொல்லுவதோடு யந்திரங்களை பஹிஷ்கரிக்க முடியாது என்று ஸ்பஷ்டமாக சொல்லி வருகிறார். ஆனால் தற்காலம் ஏழைகளுக்கு பயன்படலாம் என்று சந்தேக பாஷையில் ஒரு வார்த்தை சொல்லி காந்திக்கு நல்ல பிள்ளை ஆகிறார். ஆச்சாரியார் அவர்களோ காந்தியாருக்கும் ஜவஹர்லாலுக்கும் நடுவில்.
நிற்கிறார். அதாவது கதரே ஏழைகள்கஷ்டத்தைபோக்கவோபொருளாதாரத்துறை கஷ்டத்தை நீக்கவோ முடியாது என்கிறார். அதோடு மாத்திரமல்லாமல் புதுப்பாளையம் ஆச்சிரம கதர் தொண்டுக்கு வேறு ஆள் வைத்து கைநழுவ விட்டு விட்டு சென்னைக்கு போய்விட்டார்.
இவர்கள் மூவர் நிலையோ மற்ற காங்கிரஸ் தலைவர்கள் நிலையோ, மற்றும் காங்கிரஸ்காரர்கள் நிலையோ எப்படியோ இருக்கட்டும். அந்தக் காரணத்தைக் கொண்டே நாம் கதரை மறுக்கவில்லை. பொதுப்பட பொருளாதாரத்தையும் தேசத்தையும் உத்தேசித்தே கதரின் யோக்கியதை என்ன என்பதைப்பற்றி சற்று விவரிப்போம்.
இந்தப் பத்து பதினாறு வருஷத்துக்கு முன் இருந்ததைவிட இன்று விலையிலோ துணியின் நயத்திலோ அல்லது அதன் வாளிப்பிலோ எதிலாவது கதர் முன்னேற்றமடைந்திருக்கிறதா? அல்லது அதை ஆதரிக்கிற மக்களோ பாவிக்கிற மக்களோ அதிகமானார்களா? அதன் உற்பத்தியாவது செலவாவது அதிகரித்ததா? என்று பார்ப்போமானால் ஒவ்வொரு
துறையிலும் முன்னேறவில்லை என்பதோடு அது முன் இருந்த நிலையில் கூட இல்லாமல் பின்னடைந்து விட்டது - பின்னடைந்து வருகிறது என்று கூட சொல்லலாம். அப்படி இருக்க இப்போது இவ்வளவு அனுபவத்துக்குப் பின்னும் இந்தப் பொருளாதார நெருக்கடியான காலத்தில் இவ்வளவு முன்னேற்றமான விஞ்ஞான வேகத்தில் இன்றும் மக்களை கதர் வாங்கி கட்ட வேண்டும் என்று பிரசாரம் செய்வதின் கருத்து என்ன என்று கேட்கின்றோம் 3... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தோழர் சத்தியமூர்த்தி அய்யர். அவர்கள் பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில். “கொஞ்சமாவது கதர் வாங்கி நாட்டு ஏழை மக்களுக்கு அன்னமளியுங்கள்”
மகாத்மாஜி தேசத்துக்கு அளித்த நிகரற்ற பொக்கிஷம் கதர்.”
“கதர் தான் காங்கிரஸ் ஒற்றுமைக்கு அறிகுறி.”
என்று குறிப்பிட்டிருக்கிறார். கொஞ்சமாவது கதர் வாங்குங்கள்” என்று சொல்லுவதிலிருந்து கதர் வாங்குவது இப்போது எவ்வளவு தூரம் நிறுத்தப்பட்டுப் போயிற்று என்பது
ஒரு அளவுக்கு விளங்கும்.
மற்றப்படி “கதர் தேசத்துக்கு நிகரற்ற பொக்கிஷம்!” என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பது விளங்கவில்லை.
அர்த்தசாஸ்திரப்படி பொருளாதாரப்படி கணக்கு பார்த்தால் கதரால் எவ்வளவு பொருள் நஷ்டம் என்பது விளங்கும் முதலாவது பஞ்சு விஷயத்தில் பார்ப்போமானால் கதர்த்துணி எத்தனை கெஜம் உற்பத்தி ஆகிறதோ அத்தனை கெஜ எடைக்கும் சரிபகுதி பஞ்சு வீணாகிறது என்பதை காங்கிரஸ் பக்தர்களோ காங்கிரஸ் பொருளாதார நிபுணர்களோ சிறிதும் கவனிப்பதில்லை
சர்க்காருக்காவது யோக்கியப் பொறுப்பு இருக்கும் பட்சம் கதர் உற்பத்திக்கு 144 போட்டோ அல்லது கிரிமினல் கோடில் ஒரு விதி விதித்தோ
கதர் உற்பத்தியை அடக்கி மூலப்பொருள் நாசமாவதை நிறுத்தி இருப்பார்கள்.
நமது சர்க்காரார் நீதியைக் கொண்டு ஆட்சி புரிவதைவிட மக்களின். முட்டாள்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் அனுமதித்துக் கொண்டு நடத்துவதே சுலபம் என்று கருதுவதாக இருப்பதால் இம்மாதிரி நாட்டு மூலப்பொருள் பாழாவதை அனுமதித்து வருகிறார்கள். பருத்திச்செடி பிடுங்குவதற்கு சிறிது நாள் தாமதப்பட்டு விட்டால் அதற்கு தண்டனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஏனெனில் பருத்தியில் பூச்சி விழுந்து மற்ற பயிர்களைக் கெடுத்து பஞ்சின் உயர்வைக் கெடுத்து விடுகிறது என்கின்ற காரணம் சொல்லுகிறார்கள்.
ஆனால் கதர்க்காரர்கள் கதர் உற்பத்திசெய்வதால் சாதாரண காடாத் துணிக்கு 10 கஜத்துக்கு முக்கால் ராத்தல் அல்லது ஒரு ராத்தல் பஞ்சு
பிடிப்பதாய் இருந்தால் கதர்த்துணிக்கு 10 கஜெத்துக்கு மூன்று ராத்தல் முதல் 4 ராத்தல் பஞ்சு பிடிக்கின்றது. இதனால் ஒன்றுக்கு இரண்டு பங்கான பஞ்சு கதருக்கு தேவை இருப்பதால் இப்போது காங்கிரசுக்காரரால் உற்பத்தி செய்யப்படும் கதரின் மூலம் எவ்வளவு ராத்தல் பஞ்சு நாசமாகின்றது என்பதையோசித்துப் பார்க்கும்படிபொது மக்களைக்கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - 1936 (2), 362
ஒரு 5 முழ நீளமும் மூன்று முழ அகலமும் உள்ள கதர்வேஷ்டி 1 ராத்தல் இடை இருக்குமானால் காடா வேஷ்டியானால் % ராத்தலுக்கு உள்ளாகவே இடை இருக்கும். ஆதலால் ஒவ்வொரு வேஷ்டிக்கும் s ராத்தல்
பஞ்சு நாசமாவதன் மூலம் பஞ்சு நாசமல்லாமல் வாங்குபவருக்கு விலை ஒரு
கெஜத்துக்கு 4 அணாவுக்கு மேலாகவே நஷ்டமாகிறது
துணியின் யோக்கியதையோ காடா 6 மாதத்துக்கு வந்தால் கதர் 3
மாதத்துக்குத்தான் வரமுடிகிறது.
விலையின் தன்மையோ காடா கெஜம் 3 அணா. ஆனால் கதர் கெஜம்
8 அணா 9 அணா ஆகிறது
வேலையின் சுளுவோ மில் நூல் கெஜம் 0-0-6 பைசாவுக்கு நெய்யப்பட்டால் கதர் நெய்ய கெஜத்துக்கு 2 அணாவுக்கு மேல் கொடுக்க வேண்டி வருகிறது. அப்படிக் கொடுத்தாலும் நெய்பவனுக்கு வேலை கஷ்டம் கூலி குறைவுதான் ஏற்படுகிறது.
இத்தியாதி கஷ்ட நஷ்டங்களுடன் கதர் நெய்வதிலும் வாங்கிக் கட்டுவதிலும் பயன் என்ன என்பதை யாராவது விளக்கி இருக்கிறார்களா?
கிராமத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு தினம் முக்காலணா கூலி கிடைக்கிறதாம். கிராமத்தில் வேலையில்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு தினம் 9 பைசா கூலி கிடைக்க எத்தனை டன் பஞ்சை நாசமாக்குவது என்பதையும் 3 அணா துணிக்கு 9 அணா விலை கொடுத்து வாங்குவதன் மூலம் வாங்குபவர்கள் எத்தனை லக்ஷ ரூபாய் நஷ்டப்படுவது என்பதையும் சிறிதாவது யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
கதர் வரப்பிரசாத பொக்கிஷம் என்றால் என்ன அர்த்தம்? யாருக்கு பொக்கிஷம்? என்று யோசித்தால் சில ஆசாமிகள் அதாவது தேச பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் சோம்பேறி வகுப்பாருக்கு கதரின் பேரால் ஆளுக்கு 20, 30, 40, 50, 100 என்பதாக மாதச் சம்பளமும் பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க அடிமைச்சிப்பந்திகளும் தாராளமாய் கிடைக்கும்படியான பொக்கிஷமே அல்லாமல் மற்றபடி பொது மக்களுக்கோ வாங்குபவருக்கோ, நெய்பவருக்கோ, தேசத்துக்கோ, பொருளாதாரத்துக்கோ, மூலப் பொருளுக்கோ என்ன பொக்கிஷம் என்று கேட்கின்றோம் இதுவரை கதருக்கு செலவழித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு 5, 5 லக்ஷ ரூபாய் சுமாரில் 20 மில்கள் கட்டி இருக்கலாம் அவைகளில் இன்று கதர் நூற்பவருக்கு தினம் 0-0-9 ஒன்பது பை கொடுக்கும் 10000 ஆட்களுக்கோ அல்லது 20000 ஆட்களுக்கோ நூற்கும் வேலை கொடுப்பதை விட தினம் 4 அணா முதல் 12 அணா வரை கூலி கொடுக்கும் படியான சுமார் 20 ஆயிரம் ஆட்களை நியமித்து அவர்கள்.
38 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மூலம் குடும்பத்துக்கு 5 ஜீவன் வீதம் ஒரு லக்ஷம் பேருக்கு வேலையும் தினம் முக்காலணா ஒரு அணா வீதம் கூலி கிடைக்கும்படியும் கொடுத்து ஒரு கோடி ரூபாய்க்கு சராசரி 100-க்கு 7Y வீதம் வருஷம் (750000) ஏழு லக்ஷத்து ஐம்பதினாயிரம் ரூபாய் லாபமும் சம்பாதித்து வருஷம் ஒரு புதிய
மில் வைத்து வருஷம் 1500 குடும்பம் வீதம் பிழைக்கும் மாதிரியான. நிலையை உயர்த்திக் கொண்டே போகலாம்
இதனால் அதாவது இயந்திரத்தினால் ஒரு சமயம் கை நெசவுக்காரர். களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமே என்று கருதினால் கை நெசவாளிகள் அதிகமாய் இருக்கிற இடங்களிலேயே இந்த மில்லுகளை வைத்து அவர்களுக்கே இந்த வேலைகளைக் கொடுத்து ஒரு ஆள் தினம் 10 மணி நேரம் வேலை செய்வதற்கு பதிலாக ஒரு ஆள் தினம் 3 மணி நேரமே (காங்கிரஸ் மில்லுகளில்) வேலை செய்யவேண்டும் என்று திட்டம் ஏற்படுத்தி லாபத்தைக் குறைத்து கூலியை உயர்த்தி அதை மூன்றாகப்
பிரித்து 3 பேருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தால் நூற்பவர்களுக்கு இன்று கிடைக்கும் முக்காலணாவுக்கு பதிலாக 2 அணா கிடைக்கக் கூடும் என்றும் நெய்பவருக்கு அடியோடு வேலை இல்லாமல் பட்டினி கிடப்பதற்கு பதிலாக தினம் 4 அணா கிடைக்கக்கூடும் என்றும் சொல்லலாம்
ஊரா? பாழா?
இந்த மாதிரியான பொருளாதார கணக்கை கவனியாமலும், கவனித்து இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமலும் தடபுடலாக ஜால வித்தைக்காரன் போல் “இதோ இந்த கீரிப்பிள்ளை தோலுக்கும் பாம்பின் தோலுக்கும் உயிர் கொடுத்து இரண்டையும் சண்டை செய்யச் சொல்லுகிறேன்" என்றும் “இதோ இந்த மாங்கொட்டையை முளைக்க வைத்து இப்போதே
மரமாக்கி பழம் தருகிறேன்” என்றும் “இதோ இந்த கல்லை ரூபாயாக்குகிறேன்'' என்றும் சொல்லுவதுபோல் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து இந்தப்படி இந்த பதினாறு வருஷமாய் பாழாக்கி விட்டு இன்றும்
கதர் வரப்பிரசாத பொக்கிஷம் என்றால் இதென்ன ஊரா, பாழா என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறதுடன் இந்த அக்கிரமத்துக்கும் அயோக்கியத் தனத்துக்கும் கேள்வி கேப்பாடு இல்லையா என்றும் தான் கேட்க வேண்டி இருக்கிறது. மற்றபடி கதரில் என்ன ஒற்றுமை இருக்கிறது? கதர் கட்டி தேர்தலுக்கு நின்ற யோக்கியர்கள் நடந்துகொண்ட மாதிரியைப் பார்த்தாலே ஒற்றுமை யோக்கியதை விளங்கிவிடும் ஆகவே இனியாவது பொது ஜனங்கள் இந்த ஏமாற்றத்துக்கு கட்டுப்படாமல் விழித்து எழுந்து உங்கள் பணத்தைக்காப்பாற்றிக்கொள்ளுங்கள். காங்கிரஸ் வேஷதாரிகளுக்குத்தான் கதர் வேண்டி இருக்கிறது. அதுவும் இன்று எல்லா வேஷதாரிகளும் 100-க்கு 99 பேர் ஓட்டுக்கு ஆகவும் தங்களுக்கு ஆகாதவர்களை வைவதற்காகவும் ஓட்டு பிரசாரத்தின் மூலம்
குடி அரசு - 1936 (2), 364
வயிறு வளர்ப்பதற்கு ஆகவும் அல்லாமல் வேறு எதற்கு ஆவது கதர் கட்டி இருக்கிறார்களா என்று யோசித்துப்பாருங்கள். அப்படி அல்ல என்று யாராவது சொல்ல வருவார்களானால் அப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் கதர் வாலாக்களுடைய மனைவி, மக்கள், சகோதரர், பெற்றோர்கள் முதலிய இவர்கள் வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்களுக்கும் இவர்கள் ஆதிக்கத்தில் காப்பில் இருப்பவர்களுக்கும் கதர் வாங்கிக் கொடுத்து இருக்கிறார்களா அல்லது அவர்களாவது கட்டி இருக்கிறார்களா என்று பாருங்கள். ஆகவே அடியோடு முட்டாள்தனமானதும் சூழ்ச்சியானதுமான கதர் விஷயத்தில் இந்த வருஷமாவது எல்லோரும் விழிப்பாய் இருங்கள்.
செம்மறிஆடு போல் தலைகுனிந்து பார்ப்பனசூழ்ச்சிக்கு ஆளாகாதீர்கள்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!! எச்சரிக்கை!!!
குடி அரசு - தலையங்கம் - 08.11.1936
38... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கணக்குத் தெரியவேண்டுமா?
நம் நாட்டில் மூடர்களோ அல்லது பித்தலாட்டக்காரர்களோ மன
தறிந்து மக்களை ஏமாற்றுபவர்களோ எத்தனை பேர் இருக்கிறார்கள்.
என்று தெரிய வேண்டுமானால் கதர் கட்டியிருப்பவர்களை சென்செஸ் எடுத்தால் விளங்கிவிடும்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 08.11.1936
குடி அரசு - 1936 (2), 366
முஸ்லீம்களும் காங்கிரசும்
தோழர் தாவுத்ஷா சாயபு அவர்கள் முஸ்லீம்கள் பிரதிநிதியாக காங்கிரசில் இருப்பவர். அவர் மற்ற முஸ்லீம்களையும் காங்கிரசுக்கு வரும்படி அழைக்கிறவர். தோழர் சத்தியமூர்த்தியாரை அரசியல் குருவாகவும் தலைவராகவும் கொண்டு ஒழுகுகிறவர். எலக்ஷன் நடக்கும் ஊர்கள் தோறும் அழைப்பில்லாமலே சென்று காங்கிரஸ் அபேட்சகர்களை ஆதரிப்பவர். இவ்வளவு மாத்திரமில்லாமல் ராமாயண பாரத காலக்ஷேபம் செய்வதில் பார்ப்பன சாஸ்திரிகளை விட ஒருபடி முன்னணியில் இருப்பவர்.
இப்படி எல்லாம் நடந்தும் பார்ப்பனர் தங்கள் பரம்பரை வழக்கம்போல். தோழர் தாவுத்ஷாவை சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் கொடை கவிழ்த்தி விட்டார்கள். அவ்வளவோடு இல்லாமல் உலகம் அறிய பெரியதொரு அவமானத்தையும் உண்டாக்கி வைத்துவிட்டார்கள்.
கார்ப்பரேஷனுக்கு முஸ்லீம் பிரதிநிதியாக தோழர் தாவுத்ஷாவை ஒரு அபேட்சகராக ஏற்று அவரது பெயரை வெளியிட்டு உலகம் அறியச் செய்துவிட்டு கடசியாக மற்றொரு முஸ்லீமின் வசவுக்கும் கலகத்துக்கும் பயந்து தோழர் தாவுத்ஷாவை வெளியில் நெட்டித் தள்ளி விட்டு தோழர் ஷாபி மகமது சாயபு அவர்களை போட்டுவிட்டார்கள்.
தோழர் தாவுத்ஷா சாயபு தன்னை விலக்கி விட்டதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணமாவது சொல்லி பொது ஜனங்கள் முன்னிலையில் தனக்கு அவமானமில்லாமல் காப்பாற்றச் சொல்லிப் பார்த்தார். காங்கிரசுத் தலைவர் (பார்ப்பன மூர்த்தியார்) ஷாபி சாயப்புக்கு பயந்து கொண்டு அதுகூட செய்ய மறுத்து விட்டார். கடசியாக தாவுத்ஷா சாயபு எல்லா இந்திய காங்கிரஸ் தலைவருக்கு அப்பீல் செய்து இருக்கிறார். அப்பீல் நீதிபதி யார் என்பது சாயபுக்கு தெரியாதுபோல் இருக்கிறது. அவரும் ஒரு பூணூல் என்பதை மறந்தார் போலும். முடிவு என்ன? அசல் அநியாயம், அப்பீல் அதுவே காயம் என்று தான் ஆகப்போகிறது. ஆகவே கலகமும் கலாட்டாவும் செய்யத் தகுதியற்ற முஸ்லீம்களுக்கு காங்கிரசில் இடமில்லை என்பதை இனியாவது தோழர் தாவுத்ஷா சாயபு அறிந்து கொள்வாராக இந்த சமயத்தில் மற்றொரு முஸ்லீம் தலைவர் இப்பார்ப்பனர்களால் எப்படி நடத்தப்பட்டார் என்பதையும் குறிப்பிடுகிறோம் 37... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தோழர் எம். ஜமால் மகம்மது சாயபு ஒரு கோடீஸ்வரர். பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு பதினாயிரக்கணக்காக பணம் அழுதவர். பார்ப்பனர் பக்கமே சதா எதற்கும் கை தூக்குபவர். இன்றும் கூட தன்னைக் காட்டித்தான். ஒன்று இரண்டு முஸ்லீம்களையாவது காங்கிரசில் இழுக்க இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறவர்.
இப்படிப்பட்ட இவர் ஒரு சமயம் இந்திய சட்டசபைக்கு MLASES) ஒரு அபேக்ஷகராய் அதுவும் வியாபாரிகள் ஸ்தானத்துக்கு வியாபாரிகளின் பிரதிநிதியாக நிற்க முன்வந்தார். அது சமயம் ஒரு கோயமுத்தூர் பார்ப்பனரை “இந்து”, சுதேசமித்திரன்" கூட்டம் தூக்கிவிட்டு அதாவது தோழர் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரை தூக்கிவிட்டு தோழர் ஜமால் மகம்மது அவர்களுக்கு விரோதமாய் போட்டி போட ஏற்பாடு செய்து விட்டார்கள். ஜமால் மகம்மது அவர்களுக்கு கண்விழி பிதுங்கும்படி செய்து விட்டார்கள். ராஜா சர். அண்ணாமலை செட்டியாருமே பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டார். அந்த சமயத்தில் ஏற்பட்ட மனக்கசப்புதான் இன்னமும் அவர்களுக்குள் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் தகராறு சற்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த பிறகு ஒரு வழியில் பார்ப்பனர்கள் அடங்கினார்கள். அப்போது தோழர் ஜமால் மகம்மதுக்கு பார்ப்பனர் - அல்லாதார் என்கின்ற உணர்ச்சிதான் சிறிது உதவி அளித்தது. அதனாலேயே அந்த சந்தர்ப்பம் தோழர் ஜமால் முகம்மது சாயபு அவர்களே பார்ப்பனர்களை எப்பவும் நம்பக்கூடாது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டது. பிறகு சமய சந்தர்ப்பங்களை அனுசரித்து அதை மறக்க வேண்டியதாயிற்று. அதுபோலவே தோழர் தாவுத்ஷா அவர்களும் சமய சந்தர்ப்பங்களை அனுசரித்து மறக்க வேண்டியவராவார் என்பதில்
நமக்குச் சந்தேகமில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1936
குடி அரசு - 1936 (2), 368
ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்விஷிங் சொசைட்டி (லிமிடெட்)
ஈரோடு ரேஷனல் புக்ஸ் பப்ளிஷிங் சொசைட்டி லிமிடெட்டின். ஜனரல்பாடி மீட்டிங்கு டிசம்பர் மாதம் முதல் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு சொசைட்டி ஆபிசில் கூடும். அப்போது சொசைட்டியின் நிலையைப்பற்றியும் மேல் நடப்பைப்பற்றியும் யோசித்து முடிவு செய்யப்படும். மெம்பர்கள் வரவேண்டுமாய்க் கோரப்படுகிறார்கள்.
ஈ.வெ.ராமசாமி
பிரசிடெண்ட்
ஈரோடு
5.11.36
குடி அரசு - அறிவிப்பு - 08.11.1936
3... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
கருப்பு காங்கிரஸ்வாதி௪- என்னப்பா முதலியார் பட்டத்தை விட வில்லையாமே?
வெள்ளை காங்கிரஸ்வாதி?₹- விடாவிட்டால் உனக்கென்ன இத்தனை ஆத்திரம்?
க.கா.வா: - இல்லை தேசாபிமானம் வேண்டாமா?
வெ.கா.வா?- என்ன தேசாபிமானம்? பட்டத்தைவிட்டால்தானா தேசாபிமானம்? பட்டத்தை விடவேண்டியது தேசாபிமான சின்னமா? இன்று காங்கிரசில் பட்டதாரிகள் யாருமில்லையா? சென்னைபட்டணத்தில் ராவ்பகதூர் பட்டம்விட்ட தோழர் ஓ. கந்தசாமி செட்டியார் இருக்கிறாரே அது போதாதா? C.LE. பட்டம் விட்ட தோழர் 8. சீனிவாசய்யங்கார் இருக்கிறாரே அது போதாதா? இவர்கள் தேசாபிமானத்துக்கு இன்று எவ்வளவு மதிப்பு இருக்கிறது பார்! இது உனக்கு தெரியாதா?
க.கா.வா£- சரி, பழய கதை பேசாதே, முதலியார் டைடிலை விட்டுவிடுகிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு இப்போது விடவில்லையே அதற்காகத்தான் சொன்னேன்.
வெ.கா.வா?- எதற்காக முதலியார் டைடில் விடுகிறேன் என்று சொன்னார்? தேசாபிமானத்துக்காகவா? 4 அணா மெம்பர் பிளெஜ்ஜில் டைடிலை விடவேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா?
க.கா.வா₹- 4 அணா பாரத்தில் இல்லாவிட்டால் என்ன? சட்ட சபைக்கு நிற்கிறவர்கள் டைடிலை விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்திருக்கிறதல்லவா?
வெ.கா.வஈு- ஆம், சட்டசபைக்கு நின்றால்தானே! அதுவும் காங்கிரஸ். கேண்டிடேட்டாய் நின்றால் தானே!! “நான் சேற்றில் இறங்கவுமில்லை
குடி அரசு - 1936 (2), 370
செருப்பைக் கழட்டவும் இல்லை” என்று ஒருவன் சொன்னால் அவன். தேசத்துரோகியா? முதலியார் காங்கிரஸ் சார்பாய் சட்டசபைக்கு நிற்கா விட்டால் பட்டம் எதற்காக விடவேண்டும்? அவர்தான் “என்னை காங்கிரஸ் சார்பாய் நிறுத்தாதீர்கள்'' என்று காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் எழுதி விட்டாரே? பிறகு ஏன் அதைப்பற்றி பேசுகிறாய்?
க.கா.வா3- இல்லையப்பா, அவர் பட்டம் விட்டால் தமிழ்நாடு. காங்கிரஸ் கமிட்டிக்கு எவ்வளவு கெளரவம் ஏற்படும் பார்.
வெ.கா.வா?- உங்கள் கெளரவம் போதுமே, ஓஒ. கந்தசாமி செட்டியார் விட்டதில் எவ்வளவு கெளரவம் வந்தது? இப்பொழுது அவர் எங்கிருக்கிறார், அவர் விலாசம் என்ன உனக்கு தெரியுமா? அப்படிமீறி வருகிற கெளரவம் ராமலிங்கம் செட்டியாரால் கமிட்டிக்கு வரட்டுமே. ஒரு ஜில்லாவில் இரண்டு
பேர் பட்டம் விட்டு விட்டு ஒரு மந்திரி வேலைக்கு சண்டை பிடித்துக் கொள்ளுவானேன்?
க.கா.வா- மந்திரி வேலைக்கா பட்டம் விடுவது?
வெ.கா.வா?- பின்னை எதற்கப்பா? சட்டசபை மெம்பர் வேலைக்கென்றே வைத்துக்கொள்ளேன்.
க.கா.வா?- என்னப்பா அப்படி சொல்லரே?
வெ.கா.வா௪ பின்னை எதற்கு அப்பா? தேசாபிமானத்துக்கு பட்டம் விட வேண்டும் என்று இருந்தால் 4 அணா பாரத்திலேயே அந்த நிபந்தனை இருக்கும், இல்லாவிட்டாலும் காங்கிரஸ் தீர்மானத்திலாவது இருக்கும், அப்படி இல்லாமல் சட்டசபை அபேட்சகர்கள் பாரத்தில் மாத்திரம் அதுவும் நுழை வரியாய் எழுதி வாங்குகிறார்களே அது ஏன் உனக்குத் தெரியாதா?
க.கா.வா?- என்ன இருந்தாலும்.
வெ.கா.வா?- என்ன இருந்தாலும் என்கின்றது ஏனப்பா? ஒருத்தர். ஏமாறமாட்டேன் என்றால் அதற்குஆக கோபமா? இத்தனை ஆத்திரமா? காங்கிரஸ்காரர்கள் முதலியாருக்கு தொகுதி இன்னது என்றும் சொல்ல முடியாது; நேமிக்கிறார்களா இல்லையா என்றும் சொல்ல முடியாது. இந்த நிலையில் முதலியார் அனாவசியமாய் பட்டத்தை மாத்திரம் விட்டுப்போட்டு வாலறுந்தநரிமாதிரி நிரந்தரமான மூளி சின்னத்தோடு இருக்க வேணுமாக்கும். அதைப்பார்த்து நீங்கள் சிரிக்கவேணுமாக்கும். வேண்டாம் வேண்டாம் உங்களையே பார்த்து நீங்கள் சிரித்துக்கொள்ளுங்கள். சிரிப்பு வரவில்லை யானால் அழுது கொள்ளுங்கள். அவர் தலையில் கை வைக்காதீர்கள்.
க.கா.வாஎ- அதே நிபந்தனையில் ராமலிங்கம் செட்டியார் பட்டங்கள் விடவில்லையா? 371... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
Qeu.smeum- ராமலிங்கம் செட்டியார் சங்கதி நமக்குத்தெரியாதா? அவர் எதையும் விடுவார் சந்தையும் அவருடையது, கொள்ளையும் அவருடையது. கேட்கிறவர்கள் யார்?
க.கா.வா£- அப்படி சொன்னால் எனக்கு விளங்கவில்லையே!
வெ.கா.வா௪- காங்கிரஸ் என்றால் என்ன? யார்? அவனாசிலிங்கம்
செட்டியார் தான் கோயமுத்தூருக்கு காங்கிரசு தலைவர்: அவர் ராமலிங்கம் செட்டியாருக்கு தம்பி. இருவரும் முதலியாருக்கு ஜென்மவிரோதிகள்; முதலியாரை “முண்டச்சி" ஆக்கவே பட்டம் சங்கதி உற்பத்தி பண்ணப்பட்டது; ஆதலால் செட்டியாருக்கு எப்படியும் ஒரு ஸ்தானம் ஒதுக்குவது உறுதி அதுவும் அவர் எது கேட்கிறாறோ அது ஒதுக்கப்படும்; (ஆனால் கிடைக்குமோ இல்லையோ அது வேறு சங்கதி.)
முதலியார் விஷயத்தில் அப்படி இல்லையே? எதுகொடுத்தாலும் முதலியாருக்கு கிடைத்துவிடலாம். அதனாலே காங்கிரசில் ஒதுக்குவதையே அல்லவா நாமம் போடப்பார்த்தார்கள். நல்லவேளையாய்தப்பித்துக்கொண்டார். அவர்சட்டசபை மெம்பர்ஆனாலும் சரி ஆகாவிட்டாலும் சரி, சாகும் வரைக்கும் சொட்டு இருக்கும்படியான ஏமாற்றத்தில் இருந்து தப்பி கொண்டார்.
க.கா.வஈ- அப்படியா சங்கதி நல்ல வேளை எந்த சாமி புண்ணியமோ தப்பித்துக்கொண்டார். போகட்டும் போ. எனக்கு இந்தச் சூது தெரியாது
வெ.கா.வா£- எந்த சாமி புண்ணியம், எல்லாம் நம்ப சாமி புண்ணியம் தான்.
மற்ற சங்கதி ஒன்றும் கேட்க வேண்டாம். எல்லாம் தானாக வெளி வரும்; கொஞ்சம்பொறு. முதலியார் தப்பித்துக்கொண்டாரே என்கின்ற
ஆத்திரத்தில் கண்டபடி உளறப்போகிறார்கள். அதிலிருந்து அநேக சங்கதி தெரிந்து கொள்ளலாம்
அரசியல் பிழைப்பில் நாணயம் பேச யாருக்கு உரிமை உண்டு? தோழர் சுப்பராயனை சேர்த்துக்கொள்ளவில்லையா? அரசியல்வாத நாணயம், வக்கீல் வாத நாணயம், வியாபாரி வாத நாணயம், தாசிவாத நாணயம் இவைகளுக்கு விலக்குவிதி உண்டு உனக்குத் தெரியாதா?
அப்படியும் முதலியார் விஷயத்தில் விலக்கு விதி ஒன்றும் வேண்டியதில்லை; அவர் பொது வாழ்வில் பொதுநல காரியம் பார்த்ததில் எவ்வளவோ பணம் நட்டப்பட்டு கடன்பட்டு தனது சொத்தை விற்று கடன்
கட்டினார். ஜில்லா போர்டு பிரசிடெண்டு வேலை போனபிறகே கடன். இல்லாமல் சாப்பிடுகிறார். ஏதோ லக்ஷம் ஐம்பது ஆயிரம் சம்பாதித்தார்
காந்தியை கைது செய்யச் செய்த சீனிவாச சாஸ்திரி இன்னம் பெரிய மனிதராக இல்லையா? காந்தியை முட்டாள் என்ற சத்தியமூர்த்தி அதாவது
குடி அரசு - 1936 (2), 372
ஆனைமலை பேச்சுக்காரர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இல்லையா? முதலியார் என்ன துரோகம் பண்ணினார்? டாக்டர் ராஜனாட்டவா? சாஸ்திரியாட்டவா வேலூர் காங்கிரஸ்காரராட்டவா தென் ஆற்காடு காங்கிரஸ்காரராட்டவா? அல்லது திருநெல்வேலிகாரராட்டவா? இன்னும் பேசப்போனால் காந்தி முதல் சத்தியமூர்த்தி வரையிலுமாட்டவா என்றுகூட கேட்பேன்.
காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் இருக்கிறார். நீ என்னை சட்ட சபைக்கு நியமிக்க வேண்டாம் நான் பட்டம் விடவில்லை என்றார். இதில் என்ன ஓட்டை சொல்லே பார்ப்போம்.
குடி அரசு - உரையாடல் - 15.11.1936
33— ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
மகன் செத்தாலும் மருமகன் “முண்டை? ஆக வேண்டும்
ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர்களிடம் பொறாமைப்பட்ட பெரியார்கள் சிலரின் வீரப்பிரதாபம் இன்று காங்கிரசின் சாதாரண ஆட்களின் வாலைப்
பிடித்துக் கெஞ்சிக்கொண்டு திரியும்படியான நிலைமை ஏற்பட்டது பற்றி
நாம் சந்தோஷப்படுவதா வெட்கப்படுவதா என்பது தெரியவில்லை. ஒரு காலத்தில் கோவை ஜில்லா பிரமுகர்கள் என்று சொல்லி முன்னணியில்
இருந்து அரசியல் பூஜையில் முதல் தீர்த்தப்பிரசாதம் பெற்று வந்த பெரியார்கள் இன்று காங்கிரசில் பக்தர்கள் ஆன காரணத்தால் தோழர் சத்தியமூர்த்தியாரையும் அவனாசிலிங்கனாரையும் சுப்பய்யா முதலியாரையும் “எனக்கு இன்ன தாலூகா கொடு!” “எனக்கு இன்ன பிர்க்கா கொடு'' என்று கெஞ்சவும் அவனாசிலிங்கம் போன்றவர்கள் எல்லாம் “அதுதான் கொடுப்பேன் வாங்கினால் வாங்கிக்கொள் இல்லாவிட்டால் போ'' என்று சொல்லவும் “இதற்குத் தானா நான் காங்கிரசுக்கு வந்தேன்? என் யோக்கியதை என்ன? அந்தஸ்து என்ன” என்று இந்தபக்தர்கள் கேட்கவும் அதற்கு அவனாசிலிங்கம் அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து தனது மார்பைப்பார்த்துக் கொண்டு “உம்மை யாரய்யா வரச்சொன்னார்? போமே இப்பொழுது வேண்டுமானாலும்” என்று சொல்லவும் இதைக் கேட்ட பக்தர்கள் “உம்மைச் சொல்லி என்ன செய்வது நம்ம புத்தியைச் சொல்ல வேண்டும்” என்று தன்னைத்தானே நொந்துகொண்டு புதிய ஞானம் உண்டாக்கி கொள்வதுமாக உள்ள ஒரு சீன் இனி எப்போதுமே பார்க்கக் கிடைக்காத அவ்வளவு அற்புதமான சீன் என்று சொல்லலாம். இவ்வளவுக்கும் இந்த கனவான்களுக்கு திருப்தி எல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷி ஒழியப்போகுதே அதுவே போதும் என்பதல்லாமல் வேறு
ஒன்றும் இருப்பதற்கில்லை.
இது எப்படியோ இருந்துபோகட்டும், இதைப்பார்த்து நாமும் வேண்டுமானாலும் சிறிது சிரிக்கலாம். ஆனால் இந்தமாதிரி தோழர்கள் அவினாசிலிங்கம் சுப்பையா கோயமுத்தூருக்கும், தோழர் குப்புச்சாமி முதலியார், அண்ணாமலை முதலியார், சீனிவாசராவ், உபயத்துல்லா வட ஆற்காடுக்கும் தோழர் கிருஷ்ணசாமி பாரதி மதுரைக்கும் என்பதுபோல்
குடி அரசு - 1936 (2), 374
ஸ்தாபனங்கள் பிச்சை கொடுக்கின்ற பிரபுக்களாக அமைகிறது என்றால் இது சுயராஜ்ய தேசமா, சமதர்ம ராஜ்ய தேசமா, அல்லாவிட்டால் தன்னரசு சுதேச ராஜ்யமா என்பதுதான் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது
பகுடைநிழல் இருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந்தோர் நண்ணினும் நண்ணுவர்"
“ஆறிடு மேடும் மடுவும் போலாம் செல்வம் மாறிடும் ஏறிடும்”
என்பதெல்லாம் பச்சையாய் பூதக் கண்ணாடியில் தெரிவதுபோல் தெரிகின்றது. இந்த லக்ஷணத்தில் தேசத்தின் அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்லும் பத்திராதிபர்கள் யோக்கியதையோ அப்பப்பா நினைக்கவே நடுங்குகிறது மனம். இதெல்லாம் நாம் சொல்வது சம்பந்தப்பட்ட எந்த ஆளையும் பார்த்தல்ல, அவர்களது பொறுப்பைப் பார்த்தேயாகும். ஆகவே
இது ஒரு 'புரக்ஷி'' காலம் தான் என்பதில் சந்தேகமில்லை.
குடி அரசு - கட்டுரை - 15.11.1936
375 URwaRdT எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தண்ணி மயக்கமா ஆணவ மயக்கமா?
தோழர் சத்தியமூர்த்திக்கு தலை கிறு கிறுத்து விட்டது. இடுப்பில் வேஷ்டி இருக்கிறதா இல்லையா - மகளா மனைவியா என்பவைகளை உணரக் கூடாத அளவு போதை ஏறிவிட்டது. இது தண்ணி போதையா?
அல்லது சென்னை கார்ப்பரேஷன் எலக்ஷனில் 10, 15 பார்ப்பனர்கள் வெற்றிபெற்று விட்ட ஆணவ போதையா என்பது நமக்கு விளங்கவில்லை. அசம்பிளி தேர்தலில் பல பார்ப்பனர்கள் வெற்றி பெற்றவுடன் இதுபோன்ற போதை வெறி ஒரு 2, 3 மாத காலம் தலைவிரி கோலமாய் பீச்சாண்டி மாதிரி
திரியும்படி செய்தது. பிறகு ஜில்லா போர்டுகளும் முனிசிபாலிட்டிகளும் நல்ல பாடம் கற்பித்து வெறியை இறக்கிவிட்டன. இப்போதும் அதுபோலவே தலைகால் தெரியவில்லை. தெரியவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப்டோட்டு அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஏமாற்றுவதற்கு ஆக அதிக போதை ஏற்றிக்கொண்டு கண்டபடி உளறுகிறார்.
அவரது ஜாதிப்புத்தி போகவில்லை; போக்கிரித்தனமாக ராக்ஷதன்,
சூரன், அசுரன் என்று ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை இழித்துக்கூறும் அற்பத்தனம் ஓய்ந்தபாடில்லை. அதாவது இவர் சேலத்தில் 6ந்தேதி ஒரு கூட்டத்தில் பேசும்போது தென்னாற்காடு கும்பகர்ணனையும் திரு நெல்வேலி ராவணனையும் ஒழித்துவிட்டோம், இனி சேலம் நரகாசூரனை. ஒழிக்கப்போகிறோம். ஜஸ்டிஸ் கட்சி தலையில் கல்லைப்போடவேண்டும். அதை ஒழிக்காவிட்டால் நான் உயிர் வாழ மாட்டேன், எனது ஜன்மம் சாபல்யமாகாது" என்று பேசி இருக்கிறார். இந்தமாதிரியாக பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாதாரை இழிவு படுத்தும் அயோக்கியத்தனத்தை அடியோடு ஒழிக்கவே ஜஸ்டிஸ்கட்சி போராடி வருகிறது. இந்தப் போராட்டத்தின்
நடுவில் பதவியோ அதிகாரமோ கிடைத்தால் அதையும் பெற்று இந்த பார்ப்பன அயோக்கியத்தனத்தை ஒழிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு ஆகத்தான் பதவிகளைப் பற்றி கவலை கொள்வதே ஒழிய மற்றபடி மந்திரி பதவியோ அரசாங்க அதிகாரமோ பெறுவதற்கு ஆகவே ஜஸ்டிஸ் க௯டி இன்று இருந்து வரவில்லை என்பதை யாவரும் அறிவார்கள்.
ஒரு சமயம் அதற்கும் ஆசைப்பட்டது என்று சொல்லுவதானாலும் அதையும் மறுக்க நாம் வரவில்லை. ஆசைப்படுவதாகவே வைத்துக் கொள்வோம். அதனால் கெடுதிஎன்ன? தேசத்துக்குத்தான் என்ன கெடுதி?
குடி அரசு - 1936 (2), 376
சமூகத்துக்குத்தான் என்ன கெடுதி? பதவிகளையும் அதிகாரங்களையும் ஆசைப்படாமலும் லக்ஷியம் செய்யாமலும் பார்ப்பனரல்லாதார் சமூகம் ஏமாந்த சோணகிரிகளாய் இதுவரை இருந்ததாலேயே மதத்தில் பார்ப்பனன் சங்கராச்சாரியாகி குருவாகி பார்ப்பனரல்லாதார் தோளில் சவாரி செய்வதுபோல் அரசியலில் சத்தியமூர்த்திபோன்றவர்கள் குருவாகி இன்று பார்ப்பனரல்லாதார் தோளிலேயே சவாரி செய்து "திக்கு விஜயம்'' செய்கிறேன் என்கிறார்.
செல்லுமிடங்களில் எல்லாம் '“ஜஸ்டிஸ்கக்ஷி செத்து விட்டது, நிஜமாகவும் செத்து விட்டது” என்கிறார் உடனே அதே நிமிஷத்தில் 'ஜஸ்டிஸ்கட்சியை கொல்லாமல், ஒழிக்காமல் இருக்க மாட்டேன்; ஜஸ்டிஸ்கட்சியை ஒழிக்காவிட்டால் நான். செத்துப்போவேன்” “எனது ஜன்மம் சாபல்யமடையாது” என்கிறார். இவருடைய போதைவெறிக்கு இதுவே ஒரு பெரிய உதாரணமாகும். செத்துப்போன ஜஸ்டிஸ்கட்சியை கொல்லுவதற்கு இத்தனை பார்ப்பனர்களும் இத்தனை விபீஷணர்களும் இத்தனை அனுமார்களும் எதற்காக தோழர்சத்தியமூர்த்திக்குத் துணை வேண்டியிருக்கிறது என்று கேட்கின்றோம். அவர்சொல்லுவதில் ஒருவிஷயம் மாத்திரம் உண்மையும்நிச்சயமுமான காரியமாகும்
அதென்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சி கொல்லப்படாவிட்டால் சத்தியமூர்த்தியார் சாக வேண்டியதுதான். தோழர் ராஜகோபாலாச்சாரியும் ஸ்ரீனிவாச சாஸ்திரியும் சொல்லுவது போல் ஜஸ்டிஸ் கட்சி ஒழிக்கப்படா விட்டால் அவர்கள் வங்காளக்குடாக் கடலில் விழுந்து சாகவேண்டியதுதான். அதனாலேயேதான் அவர்கள் (பார்ப்பனர்கள்) போராடுகிறார்கள். ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது மந்திரி பதவிக்கும் அதிகாரத்துக்கும் சம்பளத்துக்கு மாத்திரமானால் பார்ப்பனர்கள் சந்தோஷமாக ஒவ்வொரு அதிகாரத்துடனும் ஒவ்வொரு பதவியுடனும் ஒவ்வொரு மங்கைப் பருவமுள்ள பெண்ணையும் வைத்து கன்னிகாதானமாக தாரை வார்த்து கொடுத்து விடுவார்கள்.
அடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி “அரசாங்கத்தை தாங்குகின்றதே'' என்ற கவலையும் அவர்களுக்கில்லை. ஏனெனில் அரசாங்கத்தை தாங்குவதற்கு எவரும் வேண்டியதில்லை என்பதும் ஜஸ்டிஸ் கட்சி தாங்குவதன் மூலமாகத்தான் அரசாங்கம் நிலைக்கக்கூடிய அவ்வளவு பலமற்ற அரசாங்கமல்ல பிரிட்டிஷ் அரசாங்கம் என்பதும் சத்தியமூர்த்திகளுக்கும் ராஜகோபால ஆச்சாரிகளுக்கும் ஸ்ரீனிவாசசாஸ்திரிகளுக்கும் நன்றாய்த்தெரியும்.
பிரிட்டிஷ் அரசாங்கமானது இன்று இந்த பார்ப்பனர்களையும் மற்றும் இவர்கள் போன்ற எத்தனையோ பேர்களையும் தாங்கிக்கொண்டிருக்கிறது
377... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
என்பதை இந்தக் கூட்டத்தார் அறியாததல்ல. மற்றபடி ஏன் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்கவேண்டும் இல்லாவிட்டால் சாகவேண்டும் என்று சொல்லுகிறார்கள் என்றால் ஜஸ்டிஸ் கட்சி இந்த பார்ப்பனர்களை சித்திரத்தில் எழுத ஒரு மாதிரி ஆசாமி கூட கிடைப்பதற்கு இடமில்லாமல் போன பின்பு தான் ஓய்வெடுப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறது. அதனாலேயே பார்ப்பனர்கள் தங்களை ஒழிக்க எண்ணினவர்களையும் தங்கள் பெண்டுபிள்ளைகளைசிறை வைத்தவர்களையும் அழைக்கும் - அழைப்பு முறையில் ராக்ஷதன், சூரன் அசுரன் என்கின்ற வாக்கியங்களால் அழைக்கிறார்கள்.
தோழர் சத்தியமூர்த்தியார் ராவணன் என்று நம்மை அழைப்பதில் நமக்கு கோபம் இல்லை; மகிழ்ச்சி தான். ஆனால் ராவணன் பார்ப்பனர்களை கருவறுக்கும் வேலையில் முனைந்திருந்தான் என்பதோடு மாத்திரம் கதை இருந்தால் நாம் அந்தப் பெயரை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம். ஆனால் ராவணன் மீது வேறு ஒருவிதமான பழி சுமத்தப்பட்டிருக்கிறது. அது உண்மையானாலும் பொய்யானாலும் இப்பொழுது பார்ப்பனர்களை கருவறுக்க வேண்டுமென்று எண்ணங் கொள்ளுகிற யாரும் அம்மாதிரி யாருடைய மனைவியையும் கவர்ந்து செல்லவில்லையே? கவர்ந்து செல்லக் கருதவு மில்லையே? இப்படி இருக்கும் போது அப்படிச் சொல்லுவது அயோக்கியத்தனம் அல்லவா என்றுதான் கேட்கின்றோம். உதாரணமாக “திருநெல்வேலி ராவணனான" ஈஸ்வரம் பிள்ளை எந்தப் பார்ப்பனன் அல்லது ஆரியர் வீட்டில் ராவணன் வேலை செய்தார்? அதை ருஜுப்பித்தல்லவா பிறகு ஒருவரை ராவணன் என்று அழைக்க வேண்டும்?
பார்ப்பனர்களை கருவறுக்க வேண்டுமென்றால் பார்ப்பனர் என்று பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் மக்களே இல்லாமல் போகும்படி செய்வது அல்ல என்பதை நன்றாய் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அந்தப்படி செய்ய முடியாது. முடியுமானாலும் அப்படிச் செய்யும் உத்தேசம் ஜஸ்டிஸ் கட்சிக்கு இல்லை. மற்றென்னவென்றால் பார்ப்பனர் என்று சொல்லிக் கொண்டு அடையும் உயர்வையும் அதற்குரிய சின்னங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டுமென்பது தான்.
அந்தக்காரியத்தை ஜஸ்டிஸ்கட்சி விட்டுவிடும் என்றோ அப்படிச் செய்வதிலிருந்து ஜஸ்டிஸ்கட்சியை சத்தியமூர்த்திகளாலோ மற்றும் அவர்கள் கூட்டங்களாலோ தடுப்பது என்பதோ ஒருநாளும் முடியாத காரியம் என்பதை நாம் தூக்குமேடையில் இருந்து கூறுவோம்
மற்றும் ஜஸ்டிஸ்கட்சி செய்யப்போகும் இந்தக் காரியத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை. அதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சி பிரிட்டிஷ் அரசாங்கத்தை தாங்கவேண்டிய அவசியமும் இல்லை. இருப்பதாகச் சொல்லப்படுமானாலும் இந்த பார்ப்பனீயமும்
குடி அரசு - 1936 (2), 378
ஒழிவதற்கு ஆகத்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கட்டும் என்று சொல்லக் கூடியதாக ஏற்படலாம். இந்த முயற்சிக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எதிர்ப்பாய் இருந்தால் அது இருப்பதைவிட போவது மேல் என்று குஷாலாய் ஜஸ்டிஸ் கட்சி சொல்லும் ஆகவே ஜஸ்டிஸ்கட்சி சாகப்போவதில்லை; மந்திரி பதவி போய் விட்டாலும் கூட அது செத்துப்போகவும் போவதில்லை. இன்னமும் சொல்ல வேண்டுமானால் மந்திரிபதவி இக்கட்சிக்கு விலக்கமுடியாத சனியன் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறதே தவிர விலக்கக் கூடுமானால் ஜஸ்டிஸ் கட்சியின் உண்மைக் கொள்கை முயற்சிக்கு அனுகூலம் என்றே சொல்வோம். ஆனால் சுலபத்தில் ஜஸ்டிஸ் கட்சியை விட்டு மந்திரி பதவிகள் போய்விடும் என்று கருதி விடுவதற்கு ஒரு காரணமும் ஏற்பட்டு விடவில்லை.
அது எப்படி ஆனாலும் இன்று ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் இவ்வளவு கேவலமாகவும் இழி தன்மையாகவும் பேசுவது யோக்கியமா என்றும் இம்மாதிரி “ஜஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விட்டது, ஜஸ்டிஸ்கட்சியை ஒழிப்பது எனது முதல் வேலை, ஜஸ்டிஸ் கட்சி ஒழியாவிட்டால் செத்துப் போவேன், ஜஸ்டிஸ் கட்சியை விட வெள்ளைக்காரரே மேல்” என்பதாக வெல்லாம் குடிகாரன் வெறிகாரன் மாதிரி யுளரலாமா என்றும்தான் கேட்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.11.1936
379 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
நாயக்கர்மார்கள் நாமஞ்சாத்தப்பட்டார்கள்
கோயமுத்தூர் ஜில்லாவில் கொங்கு வேளாளர்களுக்கு அடுத்த சமூகம் ஜனப் பெருக்கத்திலும் விவசாயத்திலும் இரண்டாவதாக விளங்கக்கூடியவர்கள். ஆந்திர நாயக்கர்மார் அதாவது கம்மநாயக்கர்மார் சமூகமாகும். இவர்கள் செல்வத்திலும் வியாபாரத்திலும் வேளாளர்களைவிட சிறிது குறைந்தவர்கள். அல்ல என்றே சொல்லலாம். பொள்ளாச்சி, உடுமல்பேட்டை, திருப்பூர், அவனாசி ஆகிய தாலூக்காக்களில் இவர்கள் குறிப்பிடத்தகுந்த ஜன சமூகமுள்ளவர்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் கூப்பாட்டிலும் கதர் வேஷத்திலும் ஜெயிலுக்கு போனதிலும் அடிபட்டதிலும் பிழைப்பு இருப்பு முதலியவைகளை லக்ஷியம் செய்யாமல் காங்கிரஸ் காங்கிரஸ் என்று அலைந்ததிலும் இவர்கள் மற்ற எந்த சமூகத்தாரையும் விட குறைந்தவர்கள் அல்ல என்பது மாத்திரமல்லாமல் வேறு பல சமூகங்களை
யெல்லாம் விட மேம்பட்டவர்கள் என்றும் சொல்லலாம்.
அப்படிப்பட்ட சமூகத்தார் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கமிட்டியாரால் நாமம் சாத்தப்பட்டு விட்டார்கள். கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்.
இன்று பெரியநூல் மில் வைத்து நடத்துபவர்களில் சுமார் 10 மில்லுகள். வரை நாயக்கர்மார்கள் நடத்துகிறார்கள். தோழர் P.S.G கங்கா நாயக்கர் முதலிய மில் முதலாளிகள் பலர் காங்கிரசில் வெகு காலமாய் இருந்து கொண்டு காங்கிரசுக்கு தாராளமாய் மற்றவர்களுக்கு அதாவது தோழர்கள். ராமலிங்கம் செட்டியார், வெள்ளியங்கிரி கவுண்டர், அவனாசிலிங்கம் செட்டியார் ஆகியவர்களுக்குச் சிறிதும் குறையாமலும் பின் வாங்காமலும் பணம், ஆள் முதலிய உதவி செய்து வந்தவர்கள். தோழர் வேலப்ப நாயக்கர் முதலியவர்கள் தங்கள் தொழிலை (மணியத்தை) பண்ணையத்தை விட்டு வந்து ஜெயிலுக்கு பல தடவை சென்றவர்கள். நாயக்கர்மார் சமூகத்தில் காங்கிரசை ஆதரிப்பவர்கள் அத்தனை பேரும் பெரிதும் இவர்களுக்காகவே காங்கிரசை ஆதரிப்பவர்களாவார்கள். இப்படி இருக்க, கோவை ஜில்லாவில் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஒரு இந்திய 111... தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு மாகாண 1.1.&., தோழர் வெள்ளியங்கிரி கவுண்டருக்கு ஒரு அப்பர் சேம்பர் ML.C., அவர் தம்பி
குடி அரசு - 1936 (2), 380
தோழர் பழனிச்சாமி கவுண்டருக்கு ஒரு ஜில்லா போர்டு பிரசிடெண்டு, மற்றும் அவருக்கே ஒரு மாகாண 1.1..&., என்று இப்படி இரண்டு குடும்பமே உள்ளதையெல்லாம் பங்கிட்டுக் கொள்வதென்றால் இவர்கள் தேசாபிமானமும், தியாகமும் - சமதர்ம தீவிரமும் இந்த ஜில்லாவில் அவ்வளவு பெரியதா என்று கேட்கின்றோம். போன தடவை ஜில்லாபோர்டு பிரசிடெண்டு அண்ணன் என்றால் இந்தத் தடவை தம்பிதான் பிரசிடெண்டாக இருக்கவேண்டுமா? ஜில்லா போர்டு மெம்பர் வேலைக்கும் அண்ணனுக்கு ஒன்று தம்பிக்கு ஒன்று மாப்பிள்ளைக்கு ஒன்று மருமகனுக்கு ஒன்று என்று நான்கைந்தும் ஒரு வீட்டுக்கே போகவேண்டுமா? மற்ற வேளாளர்கள் அல்லது மற்ற ஜாதிக்காரர்கள் இருந்தால் போர்டு பாப்பராய்ப் போய்விடுமா? என்று கேட்கின்றோம்
கொங்கு வேளாளர் ஜில்லா ஆனதால் இந்த ஜில்லாவில் கிடைக்கக் கூடிய ஸ்தானம் எல்லாம் வேளாளருக்கே வரவேண்டும் என்றாலும் அந்த ஒரு குடும்பம் தான் வேளாளக் குடும்பமா? மற்ற குடும்பங்கள் ஏதாவது குற்றம்பட்ட வேளாள குடும்பமா என்று கேட்கின்றோம்.
வகுப்பு உணர்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட வகுப்பு உணர்ச்சியில்தான் ஒவ்வொரு வகுப்பும் முன்னுக்கு வரமுடியும் என்பது தான் நமது அபிப்பிராயம்
ஆனால் வகுப்பு உணர்ச்சி கூடாது என்று காங்கிரசில் பார்ப்பனர்களுக்கு ஆயுதங்களாய் இருந்து கூப்பாடு போட்டுக் கொண்டு இரகசியத்தில் வகுப்புவாதம் பேசி கிடைப்பதையெல்லாம் தங்கள் இரு குடும்பத்துக்கே பங்குபோட்டுக்கொள்வது என்றால் இது என்ன தேசீபம்? இது என்ன காங்கிரசு என்று தான் கேட்கின்றோம். இவர்கள் இருவரும் அதாவது தோழர்கள் வெள்ளியங்கிரி கவுண்டரும் ராமலிங்கம் செட்டியாரும் மற்றவர்களை எப்படி வகுப்பு வாதம் கூடாது என்று சொல்லலாம் என்று கேட்கின்றோம்
இந்த ஜில்லாவில் வேளாளர்கள் பெருந்தொகையாளர்கள் என்றும் அவர்கள் இந்த ஸ்தானங்களைப் பெற வேண்டும் என்றும் முதல் முதல். கிளர்ச்சி செய்து சிறிது கூட நினைத்தே இராதகனம் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் அவர்களை சட்டசபை மெம்பராக ஆகச்செய்வதில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டவர்களில் நாம் முதன்மையாக நின்றது யாரும் அறியாததல்ல. அதற்குப் பிறகே சட்டசபை ஸ்தானங்களை வேளாள கவுண்டர்மார்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கக்கூடிய நிலையை அடைந்தார்கள் என்றுசொல்லலாம். அதாவது அந்தஉணர்ச்சி ஏற்பட அவ்வளவு பாடுபட்டோம். ஆனால் அதற்குப் பலன் இதுதானா? எல்லாம் ஒரே குடும்பம், அதுவும் அண்ணனுக்கும் தம்பிக்கும் மாப்பிள்ளைக்கும் மருமகனுக்கும் மாத்திரம் தானா? மற்ற வேளாளர்களுக்குப் பங்குஇல்லையா? என்று கேட்க வேண்டியிருக்கிறது. 3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பங்கு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அது மற்ற வேளாளர்கள்.
பார்த்துக் கொள்ளட்டும்
ஆனால் நாயக்கர்மார்கள் “தலைஎழுத்து” இவ்வளவுதானா என்று கேட்கின்றோம். அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன். நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம்
தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா? அவர் தமையனார் கனம் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் அப்பர் சேம்பர் பார்ப்பதுகொண்டே தோழர் பழனிச் சாமிக்கவுண்டர்திருப்தி அடையக்கூடாதா என்று மறுபடியும் கேட்கின்றோம்.
காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டுதான் இந்த விஷயத்தில் என்ன யோக்கியமாக நடந்துவிட்டது என்று கேட்கின்றோம்
வகுப்பு உரிமை கூச்சல் இவ்வளவு பலமாகக் கூப்பாடு போடுகின்ற காலத்திலேயே இப்படி ஏமாந்தவன் தொடையில் கயிறு திரித்துக்கொண்டு அதுவும் ஜனத்தொகையும் பிரபலமும் செல்வமும் அரசியல் ஞானமும் ஊக்கமும் கொண்ட நாயக்கர்மார்களுக்கே பட்டை நாமம் சாத்திவிட்டுப் போவதென்றால் மற்றபடி இந்தப் பார்ப்பனர்களுக்கு பயந்தோ அவர் வலையில் சிக்கியோ நாம் இந்த வகுப்பு உணர்ச்சியை மறக்க விட்டுவிட்டால் பின்னால் என்ன கதி ஆவது என்பதைப் பொது ஜனங்களே நினைத்துப்
பார்க்கட்டும்
ஆனால் நாயக்கர்மார்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் காங்கிரஸ் என்று மனதறிந்து பொய் வேஷம் போட்டுக் கொண்ட தோழர் வரதராஜுலு, நாயக்கருக்கு மோசம் செய்து விட்டு ஒரு செட்டியார் அதுவும் நேற்று வந்து காங்கிரஸ்வேஷம் போட்ட அரசியலில் பல்லுமுளைக்காத தவரத் தெரியாத ஒரு குழந்தைக்கு ஓட்டுப் போட்டு அவமானப்படுத்தி வேடிக்கை பார்த்த கூட்டம், தங்கள் சமூகம் பூராவுமே அவமானமேற்படும்படி செய்து கொண்டதில் அதிசயமொன்றுமில்லை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றாலும் இனியாவது
புத்தி வந்துஉடனே ஒரு மகாநாடு கூட்டி காங்கிரஸ் கொடுமையை கண்டித்து கிளர்ச்சி செய்து தாங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்று நினைக்கின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.11.1936
குடி அரசு - 1936 (2), 382
பட்டம் துறந்த பதி விரதைகன்
காங்கிரசின் பேரால் சட்டசபை தேர்தலுக்கு நிற்பவர்கள் தங்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட பட்டங்களை துறந்துவிடவேண்டும்
என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது எந்த அளவுக்கு நாணயமானது என்பது நமக்கு இன்னமும் விளங்கவில்லை. இந்த நிபந்தனை சென்னை மாகாணத்துக்கு மாத்திரமா அல்லது இந்தியா பூராவுக்குமா அல்லது தோழர் ராமலிங்க செட்டியார், ரத்தினசபாபதி முதலியார் ஆகிய இருவர்களுக்கு மாத்திரமா என்பது விளங்கவில்லை
தோழர் சுப்பராயன் அவர்கள் இன்னமும் அரசாங்க நியமனம் சில வகித்து வருகிறார். ஏதேதோ கமிட்டிகளுக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். காங்கிரசைச் சேர்ந்த வேறு சில அங்கத்தினர்களுக்கும் சில நியமனங்கள் இன்னும் இருக்கின்றன.
அதிக தூரம் போவானேன் திவான் பகதூர் பட்டம் துறந்த தோழர் மாஜி திவான்பகதூர் ராமலிங்க செட்டியார் அவர்களுக்கு சென்னை அரசாங்கத்தாரில் அதுவும் மந்திரிமார்களால் நியமனம் செய்த சில பதவிகள் இருக்கின்றன.
தோழர் சி.எஸ். ரத்தினைபாபதி முதலியார் அவர்களுக்கும் மந்திரிகளால். நியமனம் பெற்ற சில பதவிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ராஜினாமா செய்யாமல் அந்த உத்திரவுகளை திருப்பி அனுப்பாமல் பட்டங்களை மாத்திரம் விட்டுவிட்டோம் என்றால் இதற்கு அர்த்தம் என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
நாளைக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்றும் மந்திரி பதவி கேட்பதற்கு இதனால் ஒரு “சட்ட பூர்வமான” உரிமை ஏற்பட்டு விடும் என்றும் மனப்பால் குடித்துக்கொண்டு ஒரு இரவு கூத்துக்கு மீசையை சிறைத்துக் கொண்டது போல் பட்டங்களை துறந்துவிட்டேன் என்று சொல்லுவது சுத்த பைத்தியக்காரத்தனம் என்றே சொல்லலாம்.
இவ்விருவர்களும் சட்டசபை ஸ்தானங்களை எதிர்பார்த்து பட்டங்களை விடவில்லை என்பதை நாம் உண்மையாகவே ஒப்புக் கொள்ளுகிறோம். எப்படி எனில் இவ்விரு தோழர்களுக்கும் எப்படியாணலும் சட்டசபை ஸ்தானம் ஆளுக்கு ஒன்று கோவை ஜில்லாவில் தாராளமாய் கிடைக்கலாம். ஒரு சமயம் செட்டியார் பாடு சிறிது தகராறாய் இருக்கும் என்று சொன்னாலும் முதலியாருக்கு மூன்று இடங்களில் நிச்சயமாய் எதிர்பார்க்கலாம்.
388 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆதலால் இவர்கள் பட்டம் துறந்ததின் லக்ஷியம் மந்திரி வேலைக்கு ஆசைப்பட்டேதான் இருக்கவேண்டும் என்று கருதவேண்டி இருக்கிறது. இது அரசனைநம்பி புருஷனைக் கைவிட்டு அரசனும் புருஷனும் அதோடு போய் விட்டார்கள் என்கின்ற பழங்காலப் பெண்மக்கள் பழமொழிக்கே ஒப்பாகும்.
இது எப்படியோ ஆனாலும் இவர்கள் செய்கை புத்திசாலித்தனமான தென்றோ நாணையமானதென்றோ சொல்லமுடியாமைக்கு வருந்துகிறோம்.
ஏன் எனில் இப்பொழுது எதற்காக சர்க்கார் அளித்த பட்டத்தை வாபீஸ் செய்யவேண்டும்? நாளைக்கு இந்த சர்க்கார் முகத்தில் விழிக்க வேண்டாமா? அல்லது விழிப்பதில்லை என்கிற தீர்மானமா? அப்படியானால் சீர்திருத்தத்தை உடைக்க இவர்கள் சட்டசபைக்கு போகிறார்களா? மந்திரி பதவி கிடைத்தால் அதை இவர்கள் சர்க்காரை முறியடிக்க அதைப் பயன் படுத்துவார்களா? அல்லது காங்கிரஸ் நாளை சீர்திருத்தத்தை ஏற்று அதனால் கூடியவரை மக்களுக்கு நன்மை செய்வது என்கின்ற சத்தியமூர்த்தியார். கொள்கை நிறைவேறினால் இவர்கள் பட்டம் துறந்தது என்ன ஆவது?
தவிர, சர்க்காரிடம் இவர்கள் பட்டம் வாங்கிக் கொண்டதின் கருத்து என்ன? அதற்கு விரோதமாக இப்போது நாட்டில் என்ன ஏற்பட்டு விட்டது?
சர்க்கார் அப்போது செய்யாத கொடுமை என்ன இப்போது செய்தார்கள்? அல்லது இப்போது புதிதாக சர்க்கார் நடத்தையில் ஏற்பட்ட தாங்கமுடியாத கெடுதி என்ன? என்பவைகளை கவனிக்க வேண்டாமா? அல்லது உலகில் வேறு புத்திசாலிகள் எவரும் இதை கவனிக்க மாட்டார்களா? என்று கேட்கின்றோம்? ஒரு சிறு சந்தர்ப்பத்தை சமாளிக்க முடியாமல் பலவீனப்பட்டு இம்மாதிரி மூளை குழம்பி நடந்துகொள்கிற இவர்கள் எப்படி ஒரு ஜனசமூகத்துக்கு பிரதிநிதியாக யோக்கிய முடையவர்களாவார்கள் என்பதை பொது ஜனங்கள் யோசிக்கவேண்டியது மிகவும் முக்கியமான காரியமாகும்.
சர்க்காரை ஏமாற்றின இவர்கள் சர்க்காருக்கும் இவர்களுக்கும் இருந்து வந்த நிலையை இவ்வளவு சீக்கிரத்தில் முடித்துக் கொண்டவர்கள் இனி காங்கிரசில் தான் இவர்கள் யோக்கியமாய் இருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன? அல்லது பொது ஜனங்களிடமும் ஒரு நிர்ணயமாய் நடந்து கொள்வார்கள் என்பதற்குஇடம் தான் எங்கேஎன்றும் கேட்கவேண்டியிருக்கிறது.
இந்த இரண்டு பைத்தியக்காரர்கள் மாதிரி எந்தப் பார்ப்பனராவது நடந்து இருக்கிறார்களா என்பதைப் பொது ஜனங்கள் சிந்தித்து பார்க்க வேண்டுமாய் வேண்டுகிறோம்.
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் புத்திசாலியாய் இருந்தால் இதே சமயத்தில் இவ்விரு பைத்தியக்காரர்கள் வகிக்கும் சர்க்கார் நாமினேஷன் பதவிகளையும் பார்சல் செய்து அனுப்பும்படி கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.11.1936
குடி அரசு - 1936 (2), 384
கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை
போடுங்கள் விடலாம் :: ::
:: :: விடுங்கள் போடலாம்
காங்கிரசின் பேரால் அபேக்ஷகர்களை நிறுத்துவதற்கு நிறுத்தப்படும் அபேக்ஷகர்கள் பட்டதாரிகளாய் இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ஒரு தீர்மானம் ஒரு வாரத்துக்கு முன் தான் செய்து கொண்டார்கள்.
இப்படி இவர்கள் செய்து கொண்டதானது மொத்தத்தில் இந்திய மாகாணங்கள் பூராவுக்கும் ஏற்பட்டதல்ல
அன்றியும் இது அகில இந்திய காங்கிரஸ் செய்துகொண்ட தீர்மானமும் அல்ல. இன்றைய காங்கிரசின் பொது கொள்கையுமல்ல.
காங்கிரசினிடத்தில் இன்றைய தினம் எந்தவிதமான ஒத்துழையாமை முறையோ சட்ட மறுப்பு முறையோ பகிஷ்கார முறையோ எதுவும் இல்லை. அவைகளையெல்லாம் நிறுத்திவிட்டு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதாக பாட்னா காங்கிரசில் தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது.
மற்ற தேர்தல்கள் விஷயத்திலும் காங்கிரசானது இதுவரை பட்டம் பதவி முதலியவைகளை விட வேண்டும் என்கின்ற எந்த விதமான கொள்கையையும் அனுசரிக்க இல்லை.
கள்ளு சாராயக்கடை வியாபாரிகளையும் கண்டிறாக்டர்களையும் உற்பத்தி செய்வதற்கு உடந்தைக்காரர்களையும் உற்பத்தி செய்யும் சொந்தக்காரர்களையும் பல காங்கிரஸ் தேர்தலுக்கு தெரிந்தெடுத்து எலக்ஷனில் வெற்றிபெற உதவி செய்திருக்கிறார்கள்.
கதருக்கு விரோதமாய் சீமை ஜவுளி வியாபாரிகளையும் சுதேசியத்துக்கு விரோதமாய் அயல்நாட்டு சாமான் வியாபாரிகளையும் காங்கிரசில் நிறுத்தி வெற்றி வாங்கிக் கொடுத்தும் இருக்கிறார்கள்.
இதுபோல் இன்னமும் எவ்வளவோ காரியங்கள் காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கை என்பவைகளுக்கே விரோதமாக உள்ள காரியங்கள் செய்தவர்கள் - செய்து கொண்டு இருக்கிறவர்கள் ஆகியவர்களை எல்லாம்
388 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரசில் சேர்த்து அவர்களுக்கு காங்கிரசின் பேரால் பதவிகள் கிடைக்கும்படி செய்துவிட்டு இப்பொழுது திடீரென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு மாத்திரம் இந்த பட்ட பஹிஷ்கார கவலை எப்படி உண்டாயிற்று? ஏன்: உண்டாயிற்று என்பது மிகவும் கூர்மையாய் யோசிக்க வேண்டிய காரியமாகும்.
அதுவும் கோயமுத்தூர் ஜில்லாவில் தமிழ்நாடு பார்லிமெண்டரி போர்டு கூடுகிற வரையில் அதாவது 4.11.36-ந் தேதி வரையில் இந்த விஷயத்தைப் பற்றி யாதொரு உத்தேசமும் முடிவும் இல்லாமல் அன்றைய தினமும் திடீரென்று பட்டதாரிகளிடம் “அப்படி ஒன்றும் நேராது என்றும் தேசத்துக்காக எவ்வளவு பெரிய தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்று சொல்லிவிட்டால் பாமர ஜனங்களுக்கு காங்கிரசினிடம் ஒரு மயக்கம் ஏற்பட வசதி இருக்கும் என்றும் பட்டதாரி களுக்குச் சொல்லி “பட்டம் விட வேண்டுமென்றாலும் விடத் தயாராய் இருக்கின்றோம்'' என்று எலக்ஷன் அபேக்ஷகர்கள் விண்ணப்ப அச்சு பாரத்தில் ஒரு வரி எழுதி கையெழுத்து போடும்படி செய்து பிறகு பட்டம் விட்ட பிறகுதான் உங்களை தெரிந்தெடுப்பதோ இல்லை என்று சொல்லுவதோ இரண்டில் ஒன்று முடிவு செய்யப்படும் என்று சொல்லி பட்டதாரிகளுக்கு உத்திரவு அனுப்புவது என்றால் காங்கிரசின் கட்டுப்பாடான கொள்கையும் நாணயப் பொறுப்பும் எவ்வளவு என்பதை பொதுஜனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். நிற்க,
இம்மாதிரியான நிலையில் கோயமுத்தூர் காங்கிரஸ் கமிட்டியின் யோக்கியதையைப் பற்றியும் சிறிது தெரிந்து கொண்டால் பின்னால் வரும் விஷயம் முழுவதும் விளக்க செளகரியமாய் இருக்கும் என்று கருதி
சிறிது கூறுவோம்.
கோயமுத்தூரில் காங்கிரசுக்கு தோழர்கள் கே. சுப்பிரி, சி.பி. சுப்பய்யா ஆகியவர்களே பிரமுகர்கள். சமீபத்தில் தோழர் அவனசிலிங்கம் செட்டியார் காங்கிரசில் சேர்ந்து ஒரு தடவை ஐயிலுக்கும் போய்விட்டு வந்தவர். அதற்கு கூலியாக தனது ஆச்சிரமத்துக்கு பல ஆயிரம் பணமும் இந்திய சட்டசபை பதவியும் சம்பாதித்துக்கொண்டவர். ஆகவே அவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் வரவு செலவு நேர் என்றே சொல்லிவிடலாம்.
தோழர் சி.பி.சுப்பையா அவர்களோ சகல துறையிலும் காங்கிரசுக்கு
வருவதற்கு முன் இருந்ததைவிட அவர் எந்த சந்தர்ப்பத்திலும் நினைத்திருக்க முடியாத மேல் அந்தஸ்து அடைந்துவிட்டார். ஆகவே அவர்தான் காங்கிரசுக்கு இன்னமும் பாக்கியாய் இருக்கலாமே தவிர அவருக்கு காங்கிரசால் ஒன்றும் பாக்கிவர வேண்டியதிருக்காது
இனி தோழர் சுப்பரியோ காங்கிரசிலிருந்து அவர் ஒன்றும் லாபம் அடையவில்லை. காங்கிரசில் இருந்து அவருக்கு பாக்கி வரவேண்டியது உண்டு என்றே வைத்துக்கொண்டாலும் அவர் பார்ப்பனர் ஆதலால்
குடி அரசு - 1936 (2), 386
அவர்கள் காங்கிரசுக்கு உழைக்க கடன் பட்டவர்கள். ஏனெனில் காங்கிரஸ் பார்ப்பனர் ஆட்சிக்கே உழைப்பது ஆனதால் கடமையை செய்தார், இன்னும் செய்யக் காத்திருக்கிறார். ஆகவே கோயமுத்தூர் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள். இப்படிப்பட்டவர்கள் என்பது ஒருபுறம் இருக்க, கோயமுத்தூர் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் பார்லிமெண்டரி கமிட்டி போர்டு மெம்பரும் ஆன. தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் குடும்பத்துக்கும் தோழர் சி.எஸ். ரத்தினசபாபதி முதலியாருக்கும் உள்ள சம்மந்தம் இந்து முஸ்லீம் மதங்களுக்கு உள்ள சம்மந்தம் போன்றது
அதாவது முஸ்லீம் மதம் இந்துக்கள் கடவுள்களை உடைத்தால் புண்ணியம் என்றும் இந்துக்கள் கடவுள்களாக வழங்கும் பசுக்களை சாப்பிடுவது ஆகாரம் என்றும் கருதுவதாகும்.
இந்து மதமோ முஸ்லீம்களை மிலேச்சர்களாகக் கருதுவதாகும்.
அதுபோல் எப்படியாவது கோயமுத்தூர் ஜில்லாவில் தோழர் ரத்தினபாபதி முதலியாரை ஒழித்தால் ஒழிய தோழர் ராமலிங்கம் செட்டியார். தலையெடுக்க முடியாது. அதாவது மந்திரியாக முடியாது என்று கருதும் குடும்பமாகும். அதுபோலவே தோழர் ரத்திசைபாபதி முதலியாரும் அவர்கள். சினேகிதர்களும் எப்படியாவது ராமலிங்கம் செட்டியார் மந்திரியாகக்கூடாது என்று கருதுவதோடு தோழர் ராமலிங்கம் செட்டியார் கோயமுத்தூர். ஜில்லாவுக்கே ஒரு சாபக்கேடு என்று எதுபோல் என்றால் இந்துமதத்துக்கு தீண்டாமைக் கொள்கை எப்படி ஒரு சாபக்கேடோ அதுபோல் என்று கருதிக்கொண்டிருக்கிறவர்கள்.
இந்த இரு கூட்டத்தின் ஜன்மத் துவேஷத்தின் காரணமாக தோழர் முதலியார் காங்கிரசில் அடைக்கலம் புகுந்தார்.
தோழர் செட்டியார் அதை பின்பற்றினார்.
செட்டியார் தம்பி தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் ஏற்கனவே காங்கிரசில் தலைவர் குழாத்தில் இருக்கிறதால் அவர் சலுகை தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு இயற்கையாகவே கிடைத்தது. இந்த சலுகையின் ஆதரவு கொண்டு செட்டியார் முதலியாரை மூலை சேர்த்துவிடலாம் என்று நினைக்க சுலபத்தில் இடமேற்பட்டு விட்டது. இந்த நினைப்பு பெற்ற பிள்ளைதான் பட்டதாரிகள் பட்டம் விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோ அல்லது தமிழ்நாடு பார்லிமெண்டு போர்டோ. தீர்மானித்த தீர்மானமாகும்
எப்படி எனில் பட்டம் விட வேண்டுமென்றால் முதலியார் காங்கிரசை விட்டு ஓடிப்போவார் என்று கருதியது ஒன்று
387 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஒருசமயம் அப்படி ஓடிப்போகாவிட்டாலும் பட்டம் விட்ட பிறகு காங்கிரசில் அவரை சட்டசபைக்கு நியமனம் செய்யாமல் விட்டு விடுவதன் மூலமோ அல்லது அவருக்கு கிடைக்க முடியாத ஒரு தொகுதியில் தள்ளி
விடுவதன் மூலமோ அவரை ஒழித்துவிடலாம் என்று முடிவு செய்து கொண்ட “சகுனி” யாலோசனை இரண்டு
இந்த இரண்டு யோசனையில் முதல் யோசனையில் முதலியார் உறைத்து நின்றார். அதாவது “காங்கிரஸ் பட்டம் விட வேண்டுமென்று தீர்மானித்தால் நான் விட்டு விடுகிறேன் எனக்கு ஒரு தொகுதி கொடுங்கள்"
என்று எழுதிக் கொடுத்துவிட்டார்.
இதன்மேல் காங்கிரஸ்காரர்கள் யோக்கியர்களாய் இருந்தால் “உம்மை இன்ன தொகுதிக்கு நிறுத்த நியமனம் செய்யப்பட்டு இருக்கிறது ஆதலால் நீர் அந்த தொகுதி ஏற்றுக் கொண்டு நிற்கப் பிரியப்படுவதாய் இருந்தால் உம்முடைய பட்டத்தை விட்டு விட்டு நிற்க வேண்டியது" என்றும் அல்லது அவருக்கு கொஞ்சமாவது தயவு காட்டுவதானால் “இதற்கு உம்முடைய இஷ்டத்தை தெரிவிக்க வேண்டியது” என்றும் தாக்கீது அனுப்பி இருக்கலாம்.
அப்படிக்கு ஒன்றும் இல்லாமல் “உம்மை காங்கிரசின் சார்பாக நிறுத்தலாமா வேண்டாமா என்று நாங்கள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளுவதற்கு முன்னமேயே நீர் இது கிடைத்த 2 நாளைக்குள். உம்முடைய பட்டத்தை விட்டு விட்டு உமக்கு சர்க்கார் அளித்த சன்னதை வைசிராய்க்கு வாபீஸ் செய்துவிட்டு தெரிவிக்க வேண்டும்” என்றும் அந்த வாபீஸ் கடிதம் இன்ன மாதிரி இருக்க வேண்டும் என்றும் வாசகம் டிக்டேட் செய்து நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.
இந்த நோட்டீசைப் பார்த்ததும் முதலியாருக்கு கொஞ்சம் சந்தேகம் தோன்றி பட்டணத்துக்கு ஓடி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களை “என்னை எந்தத் தொகுதிக்கு போடுகிறீர்கள்? தயவு செய்து சொல்லுங்கள்” என்று கேட்டார். சத்தியமூர்த்தியார் “அதெல்லாம் சொல்ல முடியாது, நீர் முதலில் பட்டத்தை விட்டு விட்டு வந்த என்னை பாரும்” என்று உத்திரவு போட்டார். தோழர் முதலியார் உடனே ஒரு ஓய்வெடுத்துக்கொண்ட தலைவரிடம் போய் வாக்குப்பெறக் கருதினார். அவர் காங்கிரசுக்கும் பட்டங்களுக்கும் சம்மந்தமில்லை என்றாலும் தமிழ்நாடு தலைவர்கள் அபிப்பிராயத்தில் நான் பிரவேசிப்பதற்கில்லை. அவர்களை நம்பித்தான் நடக்க வேண்டும் என்ற சொல்லி விட்டார் போலும்.
இதற்குள் தகுந்த நம்பிக்கை உள்ள இடத்தில் இருந்து எப்படியோ ஒரு இரகசிய சேதி வெளியில் முட்டி விட்டது அதாவது முதலியாரிடம் பட்டம் வாப்பீஸ் ஆதாரம் பெற்றுக்கொண்டு அவரை நிறுத்த முடியவில்லை என்றோ அல்லது காங்கிரசில் சேராத
குடி அரசு - 1936 (2), 388
பட்டக்காரர்கள் எல்லையில் எங்காவது போட்டு அவருக்கு ஸ்தானம் இல்லாமல் செய்து விடலாம் என்றோ தோழர்கள் ராமலிங்க செட்டியார் அவனாசிலிங்கம் செட்டியார் ஆகியவர்கள் கருதி இருப்பதாயும் இதை டாக்டர் சுப்பராயன் ஆட்சேபித்துக் கொண்டிருப்பதாயும் தெரிகிறது என்ற கேதி அதற்கேற்றாப்போல் தோழர் ராமலிங்கஞ் செட்டியாரைப் பொறுத்தவரை அவருக்கு அவருடைய தாலூக்காவையே கொடுத்து அதில் வேலை செய்ய அனுமதியும் வாயில் கொடுத்து விட்டு கோயமுத்தூர் டவுனையும் தோழர்கள் சுப்ரி அல்லது சுப்பய்யா ஆகிய இருவர்களில் ஒருவருக்கு என்றும் சொல்லி விட்டு அந்த டவுன் எலக்ஷனுக்கும் செலவுக்கு பணம் ஒரு பகுதி முதலியார் மூன் பணம் கொடுக்கவேண்டும் என்றும் சொன்னதால் தோழர் செட்டியாருக்கு ஆனந்தம். பழம் நழுகிப் பாலில் விழுந்ததாய் கருதிக்கொண்டு முதலியாருக்கு ஸ்தானம் இல்லாவிட்டால் (செட்டியார்) தான் மந்திரியாக வந்து ஆய்விட்டது என்று கருதி, உடனே தனது பட்டத்தையும் துறந்து விட்டதாக வைசிராய் பிரபுக்கும் சத்தியமூர்த்தி பிரபுக்கும் எழுதிவிட்டார்.
இந்த நிலையில் முதலியாரின் தோழர்கள் பலர் மூதலியாரைப் பிடித்து உங்களுக்கு காங்கிரசின் பேரால் ஸ்தானம் இல்லாமல் போனலும் போகட்டும், பட்டத்தை விட்டு பயித்தியக்காரராகி விடாதீர் என்று அவருடைய குமாரர் முதல் கொண்டு மடக்கிக்கொண்டார்கள். முதலியார் பாடு திண்டாட்டமாகி விட்டது. இருதலைக்கொள்ளியில் அகப்பட்ட எறும்பு போல்
துடித்து விட்டார். கடசியாக காங்கிரசுக்கு “தயவு செய்து என்னை
நியமிக்காதீர்கள், அபேட்ச விண்ணப்பத்தை வாபீஸ் பெற்றுக்கொள்ளு கிறேன்” என்று கடிதமும் எழுதி விட்டார். இதனால் முதலியாரை அடியோடு ஒழித்து மூலையில் தள்ளிவிட்டோம் என்று நிர்வாணமாய் குதித்தவர்கள். தலைக்கும் மூடி போட்டுக்கொள்ளவேண்டியதாய்விட்டது ஆகவே கோயமுத்தூர் காங்கிரஸ் நாடகத்தை சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லவேண்டுமானால் முதலியாரை பட்டத்தையும் விடும்படி செய்து சட்டசபை மெம்பரும் இல்லாமல் செய்துவிட சிலர் எண்ணினார்கள். முதலியாரோ தனக்கு “தொகுதி இன்னது என்று தீர்மானித்து தன்னை அபேட்சகராக நியமித்த பின்தான் பட்டத்தை விடுவேன்" என்று சொன்னார். இதற்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை. “அப்படியானால் நான் காங்கிரஸ் அபேட்சகராய் நிற்க ஆசைப்படவில்லை" என்று முதலியார் சொல்லி விட்டார். ஆகவே “கள்ளனை குள்ளன் ஏமாற்ற முடியவில்லை.”
குடி அரசு - கட்டுரை - 15.11.1936
39 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பட்டேல் வருகிறாராம்!
பத்து லக்ஷம் வேண்டுமாம்!!
யார் வீட்டு சொத்து!!! எதற்காக!!!!
தோழர் பட்டேல் தமிழ் நாட்டுக்கு வருவதாகவும் அவருக்கு 10 லட்சம் ரூபாயாவது வசூலித்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதை அவர். தமிழ் நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்கே கொடுத்து விட்டுப் போவார் என்றும் அந்தப் பணங்கள் சட்டசபை தேர்தலுக்கு செலவிடப்படுமென்றும் காங்கிரஸ் அறிக்கை கூறுகிறது
சட்டசபை தேர்தலுக்கு 10 லட்சமோ அல்லது 5 லட்சம் தானாகட்டும் எதற்கு ஆகவேண்டும்? பணக்காரர்கள் கூடாது என்று காங்கிரஸ்காரர்கள் கூப்பாடு போடுவது எதற்கு? குமாரராஜா பணக்காரர் என்றும் பொப்பிலி ராஜா ஜமீன்தார் என்றும் ஆத்திரப்படுவது எதற்கு? பணத்தால் காரியம் சாதித்துக் கொள்ளுகிறார்கள் என்றும் ஒழுக்கத்தால் கொள்கையால் ஜெயிப்பதில்லை என்றும் சொல்லுவதால்தானே அப்படிச்சொல்லப்படுகிறது.
அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் 10 லக்ஷ ரூபாய் வாங்கினால் என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு லக்ஷத்துக்கு 100 ஆயிரம் ரூபாய். 10 லக்ஷத்துக்கு ஆயிரம் ஆயிரம் ரூபாய் ஆகிறது. சென்னை மாகாண சட்டசபைக்கு 250 மெம்பர்கள் இருப்பார்கள். இவர்களில் 126 மெம்பர்கள் ஜெயித்தால் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கருதப்படும். ஆகவே இந்த 126 பேர்களின் தேர்தலுக்கு பத்து லக்ஷ ரூபாய் பங்கிட்டால் தேர்தல் ஒன்றுக்கு
8 ஆயிரம் ரூபாய் செலவாகும். இவற்றுள் சிலர் போட்டி இல்லாமல் வரலாம். சிலர் தங்கள் சொந்த பணச் செலவில் வரலாம். பாக்கி சுமார் 70 பேர்களுக்காவது பணம் செலவிட வேண்டி வந்தால் ஆள் ஒன்றுக்கு 10000, 20000 செலவழிக்க வேண்டும் என்பதும் இந்த பணத்தைக் கொண்டு பார்ப்பனர்களை கொண்டு வந்து நிரப்பிக்கொள்ளலாம் என்பதும் அல்லாமல் பணம் கேட்பதின் அருத்தம் என்ன? மற்றொருபுறம் ஜஸ்டிஸ் பணக்காரனைப்பற்றி ஆத்திரப்படுவதின் கருத்து என்ன என்று கேட்கிறோம். தேர்தலில் தேர்தல் ஒன்றுக்கு 10, 20 ஆயிரம் ரூபாய் செலவழித்து வெற்றிபெற நினைத்தால் அவ்வெற்றி பணத்துக்கு சொந்தமானதா காங்கிரசுக்கும் கொள்கைக்கும் சொந்தமானதா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1936 (2), 390
தோழர் ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் பட்டம் விட்டு காங்கிரஸ் பேரால் நிற்பதற்கு பயப்பட்டதற்கு காரணமே பட்டம் விட்டு விட்டு தன் செலவை தானே போட்டுக்கொண்டு மற்றொரு பார்ப்பனர். தேர்தலுக்கு 2500 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள். கேட்டதேயாகும். தோழர் ராமலிங்கம் செட்டியாருக்கு சொந்தத்தில் நல்ல பெயர் இல்லாததினாலும் நண்பர்கள் இல்லாததாலும் தனக்கே நம்பிக்கை இல்லாததாலும் பட்டம் விட்டு 10000 ரூ. வேண்டுமானாலும் கொடுத்து
தன் செலவையும் போட்டுக் கொள்ள துணிந்தார்.
இந்நிலையில் காங்கிரசுக்காரர் லஞ்சம் ஒழிக, பணத் திமிர் ஒழிக, பணத்தினால் காரியம் சாதிக்கலாம் என்கின்ற ஆணவம் ஒழிக என்று
கூவுவதில் நாணயமோ ஒழுக்கமோ இருக்கிறதா என்று கேட்கின்றோம்
நம்மக்கள் - பார்ப்பனரல்லாத மக்கள் எலக்ஷன் செலவுக்கென்று எதற்காக பட்டேல் பைக்கு பணம்கொடுப்பது என்பது விளங்கவில்லை. பார்ப்பனரல்லாதார்களில் பணக்காரர்கள் தான் நிற்கக்கூடும். நின்றால். அவர்கள் எக்கட்சியானாலும் தங்கள் சொந்த பணம்தான் செலவு செய்து தீர்வார்கள். அவர்களுக்கு பொதுப் பணம் பயன்படப் போவதில்லை வசூலுக்கோ பார்ப்பனர் பணம் கொடுக்கப்போவதும் இல்லை. ஆகையால் பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதாரிடம் பட்டேலைக் காட்டி பணம் வசூலித்து நிறைய பார்ப்பனர்களை அதுவும் உண்மையாகவே உபாதானப் பார்ப்பனர்களை சட்டசபைக்கு நிறுத்தி இந்தப் பணத்தை செலவுசெய்து வெற்றிபெற்று 30, 40 (பேர்களையாவது) ஸ்தானங்களாவது பார்ப்பனர்களாக வருவதற்கே இந்த பட்டேல் பண வசூல் சூழ்ச்சியாகும். அதையும் தோழர். சத்தியமூர்த்தியார் பச்சையாய் சொல்லிவிட்டார்.
“தேர்தலில் தேசபக்தர்களை நிறுத்தி ஜஸ்டிஸ்காரரோடு போட்டி போட தேர்தல் செலவுக்கு 10 லக்ஷ ரூ. வேண்டும்” என்று சொல்லி விட்டார். பார்ப்பனரல்லாதார் எந்தக் கட்சியாய் இருந்தாலும் சரி. இந்த அறிக்கைக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? மூட்டைக் கட்டிக் கொடுத்து பார்ப்பனர் பின். வாலைப் பிடித்து அன்னக்காவடிகளுக்கும், உஞ்சவிருத்தி உபாதானத்துக்கும் ஜே போடப் போகிறீர்களா? அல்லது உங்கள் மானத்தை காப்பாற்றப் போகிறீர்களா? தோழர்கள் சுப்பராயனையும், ராமலிங்கம் செட்டியாரையும் பின்பற்றாதீர்கள். அவர்களுக்கு சட்டசபையும் மந்திரி பதவியும்தான் தெய்வமும், மதமும், மோட்சமும் ஆகும். அவர்கள் எதையும் செய்வார்கள். சத்தியமூர்த்திக்கு பாத பூஜை செய்து தீர்த்தப் பிரசாதம் பெறுவார்கள். மற்றவர்களுக்கு என்ன முட்டு என்று கேட்கிறோம்
பணம் கேட்டால் யார் தேடிக்கொடுத்தது? யார் அப்பன் வீட்டு சொத்து? எனத்துக்கு கேட்கிறாய் என்று கேளுங்கள்.
குடி அரசு - கட்டுரை - 22.11.1936 39... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தளவாய் குமாரசாமி முதலியாரும்
காங்கிரசும்
தளவாய் குமாரசாமி முதலியார் கவர்னருக்கு உபசாரப்பத்திரம் வாசித்துக் கொடுத்ததற்கு ஆக அவரை காங்கிரஸ்காரர்கள் விலக்கப் போகிறார்களாம், தேசத்துரோகி என்று கூப்பிடுகிறார்களாம், அவரை ராஜினாமா கொடு என்கிறாராம் சத்தியமூர்த்தியார். கவர்னர் இந்த மாகாணத்துக்கு ராஜப்பிரதிநிதி. அவர் ஆதிக்கத்தில் ஸ்தல ஸ்தாபனங்கள் இருக்கின்றன. அவருடைய ஆட்சிக்கு - அரசருக்கு - அரசர் சட்டத்திற்கு உட்பட்டதே ஸ்தல ஸ்தாபனங்களாகும். இந்த நிலையில் கவர்னர் பிரபு ஒரு ஸ்தலத்துக்கு வந்தால் அவருக்கு மரியாதை செய்யக் கூடாது என்பது போக்கிரித்தனமே ஒழிய வேறில்லை. ஸ்தல ஸ்தாபனம் அங்கத்தினர் ஒவ்வொருவரும் ஸ்தல ஸ்தாபனத்திற்குள் கால் வைக்கும் போதே பிரம்ம முடியைப் பிடித்துக் கொண்டு ராஜாவுக்கும், சட்டத்துக்கும், ராஜா பரம்பரைக்கும் பக்தியாய் விஸ்வாசமாய் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று பிரமாணம் செய்துவிட்டுத்தான் உள்ளே போகிறார்கள். இந்த நிலையில் ஒரு ராஜப் பிரதிநிதிக்கு மரியாதை செய்வதில்லை என்றால் எப்படிநியாயமாகும்?
அப்படியாவது காங்கிரஸ் கொள்கையில் இது ஒரு திட்டமாக இருக்கிறதா? அநாவசியமாய் திருச்சி, மதுரை முதலிய முனிசிபாலிட்டிகளை
கவிழ்த்ததுபோல் வீண் தொல்லைகளை விளைவித்துக் கொள்ளவே இந்த
மாதிரி குறும்பு செய்கிறார்கள். இவர்களது குறும்பே இன்று முனிசிப்பாலிட்டி
களுக்கு கமிஷனர்களை கொண்டு வந்தது, நாளைக்கு ஜில்லா போர்டுக்கும்
வரச் செய்யப் போகிறது
தினம் “மேன்மைபொருந்திய கவர்னர் பிரபு அவர்கள் ஆலோசனை. சபை மெம்பர்களுக்கு'' என்று கடிதப்போக்குவரத்திலும் அவர்களது கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதிலும், அவர்களுக்கு விண்ணப்பம் போடுவதிலும் குறைவில்லை.
இந்நிலையில் பகிஷ்கரிப்பது என்றால் எதை என்று கேட்கின்றோம்.
யோக்கியம், நாணயம், மரியாதை ஆகியவைகளை பகிஷ்கரிப்ப தல்லாமல் இதில் வேறு என்ன பகிஷ்காரம் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1936 (2), 392
எப்படியாவது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத மக்களில் தகுதியும் யோக்கியதையும் உள்ள மக்களை மூலையில் உட்கார வைக்க கட்டுப்பாடாய்
செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறில்லை. ஆதலால் தளவாய் குமாரசாமி முதலியார் இப்பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாறாமல் தப்பிக்கொண்டதற்குப் பாராட்டுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 22.11.1936
393 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பொப்பிலியும் நேருவும்
தோழர் நேரு அவர்கள் பொப்பிலிக்குச் சென்றபோது, பொப்பிலியில் வரவேற்பு இல்லையென்றும், பொப்பிலி ராஜாவின் இடத்தில் நேருவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை என்றும் இவர் யாருடைய தனி வீட்டிலேயோ இருந்து பேசும் போது பொப்பிலி ராஜாவின் சின்னங்கள் அப்பேச்சுகள் மற்றவர்கள் காதில் விழாமல் செய்து விட்டன என்றும் பார்ப்பனப் பத்திரிகைகள் ஓலமிடுகின்றன. அதற்கு ஆக பொப்பிலி ராஜாவைக் குறைகூறுகின்றன. இச்சம்பவங்கள் மிகைபடுத்திக் கூறப்பட்டவை என்று தக்க இடத்தில் இருந்து தகவல் கிடைத்திருக்கிறது என்றாலும் நாம் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவில்லை.
பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்களது கூலிகளும் கூறுவது அவ்வளவும் உண்மை என்றே வைத்துக்கொள்ளுவோம். காங்கிரஸ் நடத்தைக்கும் ஜவஹர்லால் யோக்கியதைக்கும் இச்சம்பவங்களில் எது
தகுதி அற்றது என்று உசாவுகிறோம்.
காங்கிரசுக்காரர்கள் இதற்கும் தகுதி ஆனவர்கள், இன்னும் அதிகமான காரியத்துக்கும் தகுதியானவர்கள் என்று நெருப்பின் மீது” நின்று மெய்ப்பிப்போம். மாட்டுச்சாமிக்கு புல்லும், பருத்திக்கொட்டையும் வைத்து ஆராதனை செய்வார்கள். நாய்ச்சாமிக்கு மலமும், கசுமலமும் வைத்து ஆராதிப்பார்கள். நல்ல குதிரையை சவுக்கு வீசி ஓட்டுவார்கள். எருமைக் கடாவை லத்தி தடி கொண்டு மொத்தி ஓட்டுவார்கள். இவற்றில் காங்கிரசுக்காரர்கள் எதற்குத் தகுதி என்று தங்கள் மனதில் கைவைத்துப் பார்க்கட்டும். கார்ப்பரேஷன் கவுன்சில் மீட்டிங்கில் ஒரு காங்கிரஸ்காரர் அதுவும் காந்தி குல்லாய் போட்ட காங்கிரஸ்காரர் ஒரு ஜஸ்டிஸ் கட்சி மாது (அலமேலு மங்கைத் தாயாரம்மாள் அவர்கள்) மீது பழய செருப்பையும், அழுகல் முட்டையையும் வீசி எறிந்தார். சேலத்தில் சித்தையன் முதலிய சுயமரியாதைக்காரர்களை சத்தியமூர்த்தியார் முன்னிலையில் காங்கிரஸ்காரர். நன்றாய் உயிர்போகும்படி அடித்தார்கள். தோழர் ஈ.வெ. ராமசாமி பொள்ளாச்சியில் பேசும்போது காங்கிரசுக்காரர்கள் முட்டைவீசினார்கள். செருப்பாலடிப்பதாயும் கத்தியால் குத்துவதாயும் கடிதம் எழுதினார்கள்.
மற்ற இடங்களிலும் அவர்கள் செய்த அயோக்கியத்தனங்களும், இன்னமும் ஜஸ்டிஸ் சுயமரியாதைக் கூட்டங்களில் காங்கிரசுக்காரர்
குடி அரசு - 1936 (2), 394
செய்யும், அற்பத்தனமும் இழி பிறப்புத்தனமும் ஏட்டிலடங்காது, நேற்று விருதுநகரில் தோழர் ஈ.வெ. ராமசாமி பேசும்போது சிறு பையன்கள் வசம் கொடிகள் கொடுத்து கூட்டத்தை சுற்றிச் சுற்றி கூப்பாடு போடச் சொன்னார்கள்: பக்கத்தில் ஒரு கூட்டத்தை போட்டுக்கொண்டு தங்கள் கூட்டத்தில் கூட்டமில்லா விட்டாலுங் காலிப்பசங்களை அதிகமாய்ச் சேர்த்து கைதட்டும்படி செய்தார்கள். மறுநாள் காங்கிரஸ் கூட்டத்திற்கு தோழர் ஜோசப் அவர்கள் வருகிறார் என்று தெரிந்ததால் அவர்கள் கூட்டத்துக்கு இடையூறு சிறிது கூட இருக்கக்கூடாது என்று அன்று ஜஸ்டிஸ்காரர்கள் கூட்டம் போடவே இல்லை. அடுத்த நாள் தோழர் ஈ.வெ. ராமசாமிக்காக ஜஸ்டிஸ்காரர்கள் கூட்டம் போட்டிருக்க, அன்று திடீரென்று பக்கத்தில் ஒரு கூட்டம் போட்டு ஒரு 10, 15 பேர்கள் மாத்திரம் அவர்கள் கூட்டத்தில் இருந்தும் சதா கைத்தட்டி தொல்லை விளைவித்தார்கள். சில்லறைப் பசங்கள் கொடிபிடித்து வி.வி. ராமசாமி வீழ்க, ஜஸ்டிஸ் கட்சி வீழ்க என்று கத்தினார்கள். அந்த சமயத்தில் உதைபிடித்திருந்தால் அந்த பசங்கள் பஜ்ஜி ஆகி இருப்பார்கள். ஏனென்றால், ஜஸ்டிஸ் கூட்டத்தில் அவ்வளவு பிரமாண்டமான கூட்டம் இருந்தது. ஆனால் தோழர் ஈ.வெ. ராமசாமி அந்தக் காலிப்பசங்கள் கூட்டம் பக்கத்தில் வந்தபோதெல்லாம் தன் பிரசங்கத்தை நிறுத்தி நிறுத்தி அவர்கள் போன பின்பே அவர் பேசி வந்தார். மக்களையும் சமாதானப்படுத்தி வந்தார். சாதாரண நிலையில் இச்செய்கை அடிதடி கலகத்தை உண்டாக்காமல் இருக்காது. இவை போலீசுக்கும் தெரியும். அவர்களும் வேடிக்கை பார்த்தார்கள். இவைகளுக்கு பதில் கொடுக்க ஜஸ்டிஸ்கட்சிக்கு சக்தி இல்லை என்று சொல்லிவிட முடியுமா? பணமும், காலிகளும் அவர்களுக்கு கிடைக்கமாட்டாவா? இப்படிப்பட்ட யோக்கியர்களுக்கும் அவர்கள் தலைவர்களுக்கும் பொப்பிலியில் இவ்வளவுடன் போனதற்கு
அவர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.
பண்டிதர் யோக்கியதையையே எடுத்துக்கொள்ளுவோம். அவர். தமிழ் நாட்டில் எப்படி நடந்துகொண்டார்? சுயமரியாதைக்காரர்கள் பொய்யர்கள் என்று சொன்னார். இதைப் பார்ப்பனக் கூலிகள் கொட்டை எழுத்தில் போட்டு மகிழ்ந்தார்கள். ஏன் என்றால் திரும்பச் சொல்லுவதால் அவர்களுக்கு அவமானமில்லாத அவ்வளவு கீழ்ஜாதிகளாக, கீழ் மக்களாக அமைந்து விட்டார்கள்
யார் பொய்யர்கள்? பண்டிதர் ஜவஹர்லால், அவங்கப்பன் மற்றும் பலர் பொய்யர்கள் என்று சொல்ல ஆதாரம் கிடைக்காது என்று யாரும் கருதிவிடக் கூடாது. மரியாதைக்கு ஆக திருப்பிச் சொல்லவில்லை. மற்றும் பண்டிதர் ஜஸ்டிஸ்கட்சியைப்பற்றி என்ன சொன்னார்? தமிழ்நாட்டு கீழ் ஜாதி காலிப் பசங்கள் கூலிக்கு குலைக்கும் வார்த்தைகளை அதாவது ஜஸ்டிஸ்கட்சி தேசத்துரோகக் கட்சி, சர்க்கார் தாசர் கட்சி, நக்கிப்பொறுக்கும் கட்சி, காட்டிக் கொடுக்கும்கட்சி என்பது போல் பண்டிதரும் கேவலமாகப்
398 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பேசினார். எந்தயோக்கியதை கொண்டு பண்டிதர் எதிர்க்கட்சியாரிடம் மரியாதை எதிர்பார்க்கிறார் என்பதும் எந்த யோக்கியதை கொண்டு பார்ப்பனப் பத்திரிகையும், அவர்களது கூலி பத்திரிகையும், பண்டிதருக்கு மரியாதை செய்யவில்லை என்று சொல்லுகின்றன என்பதும் நமக்கு விளங்கவில்லை.
திண்டுக்கல்லில் கழுதை கழுத்தில் அட்டை கட்டி பொப்பிலி என்று எழுதின யோக்கியர்களுக்கு பதில் சொல்ல வேண்டுமானால் பொப்பிலியில் ஜவஹருக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்பதை சத்தியமூர்த்தியாரையும் அவரது கூலிகளையும், கூலிப் பத்திரிகைகளையும் வினவுகிறோம்.
ஜவஹர்லால் அவர்களை பொப்பிலியில் பேசவிட்டிருந்தால் என்ன பேசியிருப்பார்?
பொப்பிலியை அயோக்கியத்தனமாக வைது இருப்பார். அவர் தலைமை வகித்து நடத்தும் கட்சியை கேவலமாகப் பேசியிருப்பார். இப்படிப்பட்ட யோக்கியருக்கு பொப்பிலியில் பண்டிதருக்கு ஆலாத்தி எடுக்கவில்லை என்று எதிர்பார்க்கவும் எழுதவும் வெட்கமில்லையா? என்று கேட்கிறோம்.
மூக்கரையா மூக்கரையா ஒரு கரும்பு கொடு'' என்று ஒரு கரும்புக் கடைக்காரனைக் கேட்டால் அவன் கரும்புக் கட்டோடு கொடுப்பானா. அல்லது ஒரு கரும்பை உருவி ஓட ஓட, ஒடிய ஒடிய இருத்துவானா என்று யோசித்துப்பாருங்கள். புதுக்கோட்டையில் பண்டிதரை உள்ளே கால் வைக்கக் கூடாது என்றார்களே அவர்களை இந்த வீரர்கள் என்னசெய்து விட்டார்கள்?
பாண்டிச்சேரியில் பண்டிதரைப் பார்க்க முடியாது என்று சொல்லி விட்டார்களே இந்த சூரர்கள் என்ன செய்துவிட்டார்?
உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு சங்கத்தில் சங்கக் கொள்கைக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பண்டிதரை அச்சங்கத்தார் சங்கத்திலிருந்தே
நீக்கி விட்டார்களே அதற்கு இந்த வீராதி வீரர்கள் என்ன செய்துவிட்டார்கள்?
மரியாதை கொடுத்து மரியாதை வாங்கத் தெரியாதவர் செல்லுமிடங்களில்
எல்லாம் அவமரியாதை அடையவேண்டியது விஞ்ஞான விதியாகும்.
அதற்கு ஆக பொப்பிலி ஊரைப்பற்றியோ பொப்பிலி ராஜாவைப் பற்றியோ குறை கூறுவது கோழைத்தனமே ஒழிய வேறில்லை.
உண்மையில் அப்படி ஒன்றும் அவமரியாதையாக பொப்பிலியில் நடக்கவும் இல்லையாம்.
குடி அரசு - கட்டுரை - 22.11.1936
குடி அரசு - 1936 (2), 396
சமதர்மமும் முதலியாரும்
தோழர் கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் 13-11-36ந் தேதி “நவ சக்தியில் நாயக்கர் என்ற தலைப்பில் ஈ.வெ. ராமசாமியை சில கேள்விகள் கேட்டு சில புத்திமதி கூறியிருக்கிறார். அதற்காக முதலியாருக்கு நன்றி செலுத்தி விடையளிப்போம்
தோழர் முதலியார் அவர்கள் சர்.கே.வி. ரெட்டி நாயுடும், சர். மகம்மது உஸ்மானும், குமாரராஜா முத்தைய செட்டியாரும் செட்டிநாட்டில் சமதர்மத்தைத்
தாக்கிப் பேசி இருக்கிறார்கள் என்றும் இம்மூவர் பேச்சைப் பார்த்த பின்பு ராமசாமியாரேநீர்ஜஸ்டிஸ்கட்சியிலேயே இருக்கப்போகிறீரா? அப்படியானால் உம்மை நம்பிய இளைஞர் நிலை என்ன? என்றும் கேட்டிருக்கிறார். ஆகவே இந்த மூன்று விஷயம் பதிலளிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது
அதற்கு நாம் மகிழ்ச்சியோடு விடை பகருகிறோம். இக்கேள்விகள் கேட்டதை நல்லதொரு சமயத்தில் நமக்கு செய்யாமல் செய்த உதவி போல் கருதி விடை பகருகிறோம்
இந்த இடத்தில் தோழர் முதலியார் அவர்கள் பிரயோகித்திருக்கும் சமதர்மம் என்பதற்கு பொருளென்ன? கடவுள், மோட்சம், ஆத்மா என்கின்ற. விஞ்ஞானத்துக்கு அதீதப்பட்ட வார்த்தைகள் போன்ற வார்த்தையாய் சமதர்மம் என்ற வார்த்தையையும் கருதி பிரயோகித்திருக்கிறாரா? அல்லது
நம் போன்ற எளிய அறிவுள்ளவர்களுக்கும் புரியும்படியான வார்த்தை என்று கருதி பிரயோகித்திருக்கிறாரா? என்பது எனது முதல் விடையாகும் இதை முதலியார் கருணை இருந்தால் அதை அடுத்த முதல் சந்தர்ப்பத்தில் விளக்கித் தர விழைகின்றோம். அது நிற்க
விவகார முறையில் விடை பகருகிறோம்
சமதர்மம் வேண்டாம் என்கின்ற ரெட்டியாரும், செட்டியாரும், சாயபும் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதால் உண்மை சமதர்மிகள் என்பவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடமில்லாமல் போகவேண்டியதுதான் என்பது முதலியார் அவர்களின் முடிந்த முடிவானால் காங்கிரசில் தோழர்கள் காந்தியார், படேல், ராஜேந்திரர், சத்தியமூர்த்தியார், ஆச்சாரியார், ஜார்ஜ் ஜோசப், ஜமால் மகம்மது, தாவுத்ஷா முதலியவர்கள் சமதர்மத்தைப்பற்றிப்
397 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பேசுவதும் தோழர் நேரு சமதர்மத்தைப் பற்றிப் பேசுவதும், தோழர்கள். மாசானி, ரங்கா, பிரகாஸ் முதலியவர்கள் சமதர்மத்தைப்பற்றிப் பேசுவதும் ஆன கருத்துக்களின்படி இவர்கள் எல்லோரும் காங்கிரசில் இருக்க இடமுண்டா என்று அறிய ஆசைப்படுகிறோம். அதையும் முதல் அவசர
சந்தர்ப்பத்தில் முதலியார் அவர்கள் விளக்குவார் என்று நம்புகிறோம்
சத்தியமூர்த்தியார்
சத்தியமூர்த்தியார் என்றால் திருமயம் பஞ்சாங்க புரோகிதப் பார்ப்பனர் வம்ச சத்தியமூர்த்தியார் என்று நாம் இப்பொழுது பிரஸ்தாபிக்க வில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் தொண்டர்களும் பிரமுகர்களும் கைகட்டி வாய்பொத்தி தலை குனிந்து வணங்கும் தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆனைமலையில் காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் வெள்ளைக்கார முதலாளிமார்கள் மூன் சமதர்மத்தைப் பற்றியும், காங்கிரஸ்கொள்கையைப்பற்றியும், பேசின பேச்சுக்களை நமது மதிப்பிற்குரிய தோழர் முதலியார் அவர்கள் கண்டும் கேட்டும் காய்ந்தும் தீய்ந்தும் உள்ளாரே, அங்ஙனமிருக்க, அந்த முதலியாருக்கு இன்னமும் காங்கிரசில் இருக்க இடம் இருந்தால் எப்படி இருந்தது என்பதை உகந்தருளினால் தோழர் ராமசாமியாரைக் கடாவும் கடாவுக்கு விடை கிடைக்கலாம் என்று விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்
அன்றியும், முதலியார்வாள் தமது எந்தக் கொள்கையை சிறிதாவது விட்டுக்கொடுக்காமல் காங்கிரசில் இருந்து காங்கிரஸ் தலைவர்களை ஆதரித்து வருகிறார் என்பதை அறிய விழைகின்றோம்.
காங்கிரசில் காந்தியார் கொள்கைகளில் எது இன்று காங்கிரஸ் கொள்கையாக இருந்துவருகிறது என்பதையும் காந்தியார் காங்கிரசில் தாம்
இருப்பது தகுதி அல்ல என்று கருதி நாலணா மெம்பராகக்கூட இல்லாமல் வெளிப் போந்திருக்க, காந்தியடிகளை வழிகாட்டியாக - உபதேசமூர்த்தியாகக் கொண்ட முதலியார்வாள் எந்த விதமான ஆதாரத்தின் மீது காங்கிரசில்
இருந்து கொண்டு காந்தியைப் புகழ்ந்து ஏற்றிப்போற்றி ஆதரித்துக்கொண்டு இருக்கிறார் என்பது விளக்கப்பட்டால் ராமசாமியார் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதற்கு இடம் உண்டா இல்லையா என்பது விளங்காதா? என்று கருதுகிறோம்.
காந்தியார் அவர்களை சத்தியமூர்த்தி அவர்களும் போற்றுகிறார், நேரு அவர்களும் போற்றுகிறார், இர்வின் பிரபும் போற்றினார் மற்றும்
சிலரும் போற்றுகிறார்கள். அவர்களைப் பற்றி வேண்டியதில்லை. ஆனால் முதல் மூவர் போற்றுவது போல்தான் முதலியார் அவர்களும் காந்தியாரைப் போற்றுகிறாரா அல்லது வேறு காரணங்களுக்காகவா, அல்லது ஒவ்வொருவர் போற்றுதல் காரணங்களிலும் சிறிது சிறிது எடுத்துச் சேர்த்தா என்பதை
குடி அரசு - 1936 (2), 398
முதலியார் அவர்கள் உண்மையாய் நினைவிருத்திக்கொண்டால் ராமசாமியாருக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடம் உண்டா இல்லையா என்பது தெளியலாம் என்று கருதுகிறோம்.
இப்படி இன்னம் அனேக விஷயங்கள் முதலியாரின் தெளிவுக்கு உதவியாக எடுத்துக் காட்டலாம்.
எனினும் விவகார முறையை விடுத்து அதாவது கனல் வாதம் புனல் வாதம் விடுத்து உண்மைவிளக்கம் முறையில்சிறிது தெளிவிக்கவிரும்புதிறோம்.
ராமசாமியார் சமதர்மத்தில் கருத்துக் கொண்டவர். ஆர்வங் கொண்டவர். அதுவே இன்று காணும் மனித சமூகக் குறைகள் பெரும்பாலான வற்றிற்கும் மருந்து என்பதை முடிந்த முடிவாகக் கொண்டவர். ஆனால் சமதர்மம் பொருளாதார சமதர்மம் என்றாலும், அரசியல் சமதர்மம் என்றாலும், சமுதாய சமதர்மம் என்றாலும், தேசீய சமதர்மம் என்றாலும் வார்த்தை வேறுபாடுகள், திட்ட வேறுபாடுகள், செய்முறை வரிசைக்கிரமவேறுபாடுகள். ஆகிய பல சமதர்மம் என்பதோடு சதா போரிட்டுவருகின்றன என்பதை முதலியார் அவர்கள் ஒப்புக்கொள்வார் என்றே கருதுகிறோம். அதை “நவ
சக்தி” தலையங்க குறிப்புகளிலும் காண்கிறோம்
ராமசாமியின் சமதர்மம், காந்தியாரின் சமதர்மம், நேருவின் சமதர்மம், ரஷ்யாவின் சமதர்மம், ஜர்மனியின் சமதர்மம், ஸ்பெயினின். சமதர்மம், இந்தியாவின் பழய சமதர்மம் என்பன போன்ற பல சமதர்மம்
நபர், இடம், காலம் ஆகியவைகளையும் கொண்டு சமதர்மம் விவாதப் போரிட்டு வருகின்றது என்பதும் முதலியார் அவர்கள் ஒப்புக்கொள்ளுவார்கள். என்றே கருதுகிறோம் இவைகள் தவிர எந்த இயல் சமதர்மமானாலும் எந்த நபர் சமதர்மமானாலும் எந்த தேச எந்த கால சமதர்மமானாலும் இடம், பொருள், ஏவல் ஆகியவைகளை பொறுத்துத்தான் கையாட வேண்டியதாகுமே தவிர எல்லாவிடத்தும் எந்நேரமும், எந்நிலையிலும் ஒரே மாதிரிகையாளுவதென்பது அறிஞர் கடன் அல்ல என்பதையும் முதலியார் அவர்கள் அனுமதிப்பார்கள் என்றே கருதுகிறோம் ஆகவே தயவு செய்து முதலியார் அவர்கள் ராமசாமியார் சமதர்மத்தை விட்டுவிட்டார் என்றோ, ராமசாமியார் சமதர்மத்துக்கு ஜஸ்டிஸ் ககஷியில் இடமில்லை என்றோ கருதாமல் இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
ராமசாமியார் சமதர்மக்காரர்தான். ஆனால் அவரது சமதர்மம் காரல் மார்க்சைப் பார்த்தோ, ஏஞ்சல்ஸைப் பார்த்தோ, ரஷியாவைப் பார்த்தோ, லெனினைப் பார்த்தோ ஏற்பட்டதல்ல என்பதையும் அல்லது அவர்களிடம் இருந்துகற்றுக்கொண்டவை அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
39 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அன்றியும் ராமசாமியின் சமதர்மம் வயிற்றுப்பிழைப்புக்கோ மேடைப் பிரசாரத்துக்கோ, தலைமைப் பதவிக்கோ ஊர்மெப்புதலுக்கோ ஏற்பட்டதல்ல என்பதையும் முதலியார் அவர்கள் உணர வேண்டுகிறோம்.
அன்றியும் ராமசாமியாரின் சமதர்மமானது ஜஸ்டிஸ் கக்ஷியையோ காங்கிரசையோ இளைஞர்களையோ முதியோர்களையோ செல்வ ராஜாக்களையோ காவடிகளையோ லட்சியம் செய்தோ நம்பியோ பிரசாரம் செய்யவோ அமுலுக்குக் கொண்டுவரச் செய்யவோ வேண்டியதுமல்ல.
அன்றியும் இன்று ராமசாமியார் தனது சமதர்மத்தை நடத்துவது சமதர்ம பூமியில் இருந்தோ பொதுஉடைமை ஆக்ஷியிலிருந்தோ நடத்துவதாகக் கருதிக் கொண்டிருக்கும் நபரும் அல்ல. மற்றும் ராமசாமி தனது சமதர்மத்துக்கு எந்த நபருடைய நற்சாக்ஷி பத்திரத்தையோ ஆமோதிப்பையோ எதிர்பார்த்து நடத்தவேண்டியவரும் அல்ல
அதற்கு ஆக சங்கமோ ஸ்தாபனமோ குறிப்பிட வேண்டும் என்கின்ற கவலை கொண்டவரும் அல்ல.
மற்றென்னவென்றால் தன் புத்தியையே தன் வலிமையையே தன் பொறுப்பையே நம்பி தன் காலில் நிற்கக்கூடிய தன்மையிலேயே நடக்கிறவர்.
அதற்கு அவருக்கு துணைவர்கள் யாராவது உண்டு அல்லது வேண்டும் என்று ஏற்பட்டால் “குணம் குடி கொடி கொண்டால் உயிருக்கு உயிர்தான், இல்லாவிட்டால் என்னமோ" என்கின்ற மாதிரி தன்னை நம்பி தன்னை அடைந்து தனது கொள்கையை கமா, புள்ளி மாறுதல் இல்லாமல்
ஒப்புக் கொள்ளுகிறவர் எவரோ அவரே துணைவர், அவரே நண்பர், அவரே தோழர். மற்றவர் யாரானாலும் உலக சுபாவத்துக்கு நண்பனே கூட்டாளியே அல்லாமல் உண்மைக்கோ சமதர்ம முயற்சிக்கோ அல்ல என்பது அவர் கருத்து
வாலிபர் தேவையானால் ஈசல் புற்றில் இருந்து வருவது போல் வேண்டும்போது உண்டாக்கிக் கொள்ள அவருக்குத் தெரியும். அவர் எந்த வாலிபருக்கும் எவ்வித வாக்குத்தத்தமூம் கொள்கை உறுதியும் கொடுத்து எப்போதும் யாரையும் அழைத்ததில்லை. சேர்த்ததுமில்லை. வாலிபர். வருவதும் போவதும் சர்வ சாதாரணமான காரியமே தவிர ஒரு “ஆத்ம” சக்தியாலோ ''மகாத்மா'' சக்தியாலோ என்று அவர் கருதுவதில்லை.
வாலிபர்கள் என்றால் யார்? அவர்கள் பொறுப்பு என்ன? எதுவரை வாலிபப் பருவமோ வாலிபப் புத்தியோ நிற்கும்? அவர்களால் எந்த நிலையில் காரியம் செய்து கொள்ளலாம்? எந்த நிலையில் வாலிபர்களால். காரியம் கெட்டுவிடும்? என்பது ராமசாமி தனது வாலிப பருவத்தில்
இருந்தே தனது வாலிப அனுபவத்திலிருந்தே அறிந்ததேயாகும்
குடி அரசு - 1936 (2), 400
ராமசாமி செல்வப்பிள்ளை - காலிப் பிள்ளை - பிரபுப்பிள்ளை - பொது நல சேவைப்பிள்ளை - தேசபக்த வீரப்பிள்ளை, தேசத் துரோகப்பிள்ளை - வாலிபர்கள் துரோகப்பிள்ளை என்பதான பல நிலைகளிலும் இன்று இருக்கிற தன்மையில் - பதவியில் நிலையில் இருந்துதான் வந்திருக்கிறாரே ஒழிய நிலைமாறிய போது பதவி மாறியோ பதவி மாறிய போது நிலைமை மாறியோ போவதான நிலையை அவர் ஒரு போதும் அடைந்ததேயில்லை. ஆகையால் ராமசாமியாருக்கு கட்சியோ உலகோர் என்ன
சொல்வார்கள் என்கிற கவலையோ வாலிபர்கள் என்ன நினைப்பார்கள். என்கின்ற லட்சியமோ சிறிதும் இல்லை. தலைமை ஸ்தானம் வேண்டுமானால் தான் உண்டாக்கிக் கொள்வாரே தவிர தன்னை இன்னொருவன் தலைவனாக்கும்படி ஒரு நாளும் செய்து கொள்ளமாட்டார். அத்தலைமையின் கீழ் அரை நிமிஷமும் இருக்கவு மாட்டார். உலகோர் என்ன சொல்வார்கள் என்பதில் உலகோர் இன்ன விதம் சொல்லவேண்டும் என்று உலக அபிப்பிராயத்தை தான் உண்டாக்க முயற்சிப்பாரே ஒழிய உலக அபிப்பிராயம் இப்படி இருக்கிறதே என்று
சிறிதும் கருத மாட்டார்.
மனிதன் கொஞ்சநாள் வாழ்வதானாலும் தன்னை நம்பி தன் காலில்
நின்று தன் இஷ்டம் போல் இருந்து சாவதே சுயமரியாதை என்று கருதி இருக்கும் அவர் “உமக்கு கட்சியில் இடம் எங்கே?" “உம்மை நம்பினவர்கள்
கதி என்ன?'' என்பதற்காக கவலைப்படுவாரா? ஏங்குவாரா? என்பதை முதலியார் அவர்கள் சாவதானமாய் இருந்து சிந்திக்க கெஞ்சுகிறோம்.
இன்று உண்மையிலேயே ஜஸ்டிஸ் கட்சியில் சமதர்மத்துக்கு இடம் இல்லாமல் போய் விட்டதினால் ராமசாமியின் சமதர்மத்துக்கோ பொது சமதர்மத்துக்கோ என்ன கெடுதி என்பது விளங்கவில்லை
இனி ஒரு 2, 3 மாதத்தில் ஜஸ்டிஸ் கட்சி நிலை இன்னது என்று தெரிந்துவிடப் போகிறது. அதுபதவிக்கு வரும். வராவிட்டாலும் சரி, அதற்குப்பிறகு சமதர்மத்தை பிரசாரம் செய்வதில் தடை என்ன இருக்கிறது?
என்றும், அப்புறம் வாலிபர்கள் உண்டாகமாட்டார்களா என்றும் கேட்கின்றோம்
எந்த வாலிபனிடமும் எந்த கூட்டு வேலைக்காரனிடமும் ராமசாமி தனது சமதர்மத்துக்கு ஒப்பந்தம் பேசி ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் பெற்றுக் கொள்ளவில்லை. ராமசாமி எத்தனையோ பல சமதர்ம வாலிபருக்கு சோறு, உடை, செலவுக்கு காசு அவர்கள் குடும்பச் செலவுக்கு
25, 50, 100, 500, 1000 பணம் கொடுத்து மாதக்கணக்காய் வருடக்கணக்காய் சாப்பாடு போட்டு வளர்த்தி இருக்கலாமே தவிர ஒரு வாலிபரிடமாவது கூட்டுத் தோழர்களிடமாவது ராமசாமிக்கு என்று ஒரு சிறு உதவியும் பெற்று இருக்கமாட்டார். ஆதலால் ஒரு வாலிபரையும் அவர். மோசம் செய்யவில்லை
4] ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இரண்டு காரியம் இல்லாதவன் உலகில் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதை முதலியாருக்கு சமர்ப்பிக்கிறோம்
1. தன் வாழ்வுக்கு எந்த நிலையிலும் மற்றொருவனை எதிர்பார்க்கக் கூடாது
2. தன் சுயநலத்துக்காக என்று எந்தக் காரியத்தையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது - எதிர்பார்க்கக் கூடாது
இப்படிப்பட்டவன் எந்த கொள்கைக்கும் எந்த கட்சிக்கும் எந்த வாலிபனுக்கும் பயப்பட வேண்டியதில்லை
இப்படிப்பட்டவன் நிமிஷத்துக்கு ஒரு கொள்கை சொல்லலாம், நிமிஷத்துக்கு ஒரு கட்சியையும் ஆதரிக்கலாம், எதிர்க்கலாம், யாரையும் வெளியே போ, உள்ளே வா என்று கூப்பிடலாம். ஆனதால் ராமசாமி சமதர்மம் யாரை எதிர்பார்த்தும் இருக்காது; அவர் உள்ளவரை மறையாது. உண்மையாகவே உள் சிரத்தையுடன் மனம் கனிந்து முதலியாரை ஒன்று கேட்கிறோம். அதாவது தமிழ் நாட்டில் உண்மையான சமதர்மவாதி
யார்? சமதர்ம வாலிபர் யார்? அவர்களின் சொந்த அந்தஸ்து, நடவடிக்கை, நாணையம், உறுதி ஆகியவைகள் என்ன? அனுபவம் என்ன? அவற்றில். எதில் ராமசாமியார் குறைந்திருக்கிறார் என்பதுதான்.
நமக்கு அனேக சமதர்மவாதிகள் தெரியும். நாடகத்தில் குச்சிக்காரிகள் சந்திரமதி, சீதை வேஷம் போட்டு நடிப்பது போலவும், நாடகத்தில் குடிகாரர்களும், காலிகளும், சாதுக்கள், முனிவர்கள், தர்மராஜாக்கள் முதலியோர் வேஷம் போட்டு நடிப்பது போலவும் மேடையில் ஒருவிதமாகவும் மற்றவர்களிடம் ஒருவிதமாகவும் தனி சொந்த நடத்தையில் ஒருவிதமாகவும் நடிப்பது சமதர்மம் என்றால் அதை ராமசாமியார் எவ்வளவு மதிப்பார் என்பதை முதலியாரே அறிந்து கொள்ள வேண்டும். மேடையில் பணக்காரனை ஐமீன்தாரனை வையலாம். மேடை விட்டிறங்கியவுடன் அவர்களுக்கு விரோதமான பணக்காரனை செலவுக்கு பணம் கேட்கலாம். சாப்பாட்டு நேரம் வரை அப்பணக்காரன் வாயிலில் காவல் காத்திருக்கலாம். இவர்கள் தான் சமதர்மவாதிகள் என்றால் அச்சமதர்மம் வாழ வேண்டுமா? அவர்கள் கூட்டுறவை ராமசாமியார் லட்சியம் செய்ய வேண்டுமா? என்று கேட்கின்றோம். இந்திய தேசம் இன்று தனி உடமை தேசம். உடமைக்கு இருக்கும் மதிப்பு ஓடிப்போகவில்லை. எந்த விதத்திலோ ஏதோ ஒரு பணக்காரனின் வெளிப்படையான தயவில்லாமல் பெரும்பான்மையான சமதர்மிகள் இன்று வாழ முடியவில்லை. சமதர்மிகளுக்குள் இன்று வரும் சண்டையும் சமதர்மிகள் மற்றவர்களை வையும் காரியமும் பெரிதும் பணம் காரணமாகவே என்பதை உள்ளூர்ந்து பார்த்தால் முதலியார் அவர்கள் நன்றாய் அறியலாம்.
குடி அரசு - 1936 (2), 402
ஆகையால் இன்று சமதர்மத்துக்கு ஏற்பட்டிருக்கும் இழிவை ஒழிப்பதற்கு ஆகவாவது இன்று ராமசாமி போன்றார் கொஞ்ச நாளைக்கு அந்தப் பேச்சை விட்டு வைத்திருப்பதே மேல். நிற்க,
பொருளாதார விஷயமாய் இல்லாவிட்டாலும், சமுதாயத் துறையில் ஜஸ்டிஸ்கட்சி ஏதாவது சமதர்ம வேலை செய்யவில்லையா என்பதையும், அதுவும் காங்கிரஸ் 50 வருஷமாய் செய்யாத வேலையும் 35 வருஷமாய் நினைக்காத வேலையையும் செய்திருக்கிறதா இல்லையா? என்று கேட்கின்றோம்
ஜஸ்டிஸ்கட்சி என்றால் முதலியார் அவர்கள் தோழர் பொப்பிலி ராஜாவையும், முத்தைய செட்டியாரையும், ராஜனையும், உஸ்மானையும் பார்த்து காயக்கூடாது என்பதை முதலியார் உணரும் நாளே ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையையும் அதன் பயனையும் உணரும் நாளாகும்.
அவர்கள் வருவார்கள் போவார்கள், தோல்வி அடைவார்கள் வெற்றி பெறுவார்கள், மறிப்பார்கள். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி அதாவது அக்கொள்கை ஒருநாளும் மறையாது. அதன் அடிப்படை கொள்கை ராமசாமியின் சமதர்மத்தின் முக்கிய பாகமாகும்
அக்கொள்கையை ராமசாமி ஒரு நாளும் விடமாட்டார். ஜஸ்டிஸ்
கட்சியில் இருந்து ராமசாமி விலகலாம், விலகக்கூடிய காலம் சீக்கிரம் அதுவும் வெகு சீக்கிரம் வரலாம், காங்கிரசில் புகுதலாம். இந்த காரியங்கள்வேறு, ராமசாமியின் கொள்கைவேறு. அதுதான் ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தவர்களின் கொள்கை. அதை நடத்துவதே சமுதாய சமதர்மம் அதுவே பொருளாதார சமதர்மம் கொண்டுவந்து விடும். அதற்கு இந்த வாலிபர்கள் அதாவது முதலியார் கருதி இருக்கும் வாலிபர்கள் போதாது
காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதே சமதர்மத்துக்கு அடையாளம் என்கிறார் முதலியார். இன்னம் யாராவது இப்படிச் சொல்லலாம். குப்புசாமி, உபயதுல்லா, கிருஷ்ணசாமி பாரதி கூட்டம்
சொல்லலாம். முதலியார் அவர்கள் இன்னமும் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருப்பது விசனப்படக் கூடியதேயாகும். இனி நாடு பட்டம், பதவி, பணம் முதலியவற்றில் கவனம் செலுத்தாது என்கிறார். இதிலிருந்து முதலியார் எந்த உலகத்தில் இருந்து எழுதுகிறார் என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது.
தோழர் சத்தியமூர்த்தியார், டாக்டர் சுப்பராயன், தேவர் ஆகியவர்கள் முழங்காலுக்கு மேல் வேஷ்டி கட்டி ஆரஞ்சிப் பழரசமும் ஆட்டுப் பாலும் குடித்துக்கொண்டு ராட்டினம் சுற்றவா காங்கிரசில் இருக்கிறார்கள்? அல்லது சமதர்மம் கொண்டு வரவா காங்கிரசில் இருக்கிறார்கள்? என்று வணக்கமாய்க்
கேட்கிறோம்.
403 ௨. பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்த நாட்டில் பார்ப்பனன் வாழ்வு குலையாமல் பணக்காரன் வாழ்வு குலைவது சுலபமல்ல. பணத்தினாலேயே அதுவும் பணத்தை லக்ஷம் பத்து லக்ஷம் கோடி என்று வசூலித்து கூலி கொடுப்பதாலேயே காங்கிரசு நடக்கிறது என்பதை முதலியார் உணராமல் இருப்பார் என்று எந்த மூடனும் நம்ப மாட்டான். முதலியார் ஒரு சமயம் அறியாமலிருப்பாரானால் பட்டேல் வருகிறார் பத்து லக்ஷம் வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கையைப் பார்க்கட்டும்
பணம் காரணமாகவே தோழர்கள் குமாரசாமி முதலியார், டாக்டர் சுப்பராயன், நாடிமுத்து பிள்ளை, ராமலிங்கம் செட்டியார் முதலியவர்கள்
காங்கிரசில் இருக்கிறார்களே ஒழிய கொள்கையிலோ ஒழுக்கத்திலோ தேச பக்தியிலோ என்று அவர் உரை எழுதின திருவிளையாடல் புராணத்தின்
மீது ஆணையாக சொல்லுவாரா என்று கேட்கிறோம்
ஆகையால் ராமசாமிக்கு சமதர்மம் தெரியும். எப்போது பிரசாரம் செய்வது, எப்படி செய்வது என்பதும் அவருக்குத் தெரியும். முதலியாரே பார்த்து பயந்து, தோழரே நாயக்கரே வேண்டாம், இவ்வளவு வேண்டாம் என்று அன்பால் கெஞ்சி கருணையால் தாடையை பிடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
சமதர்மத்தின் பிறவி எதிரிகளான பார்ப்பனர்க்கு கையாளாய் கூலியாய் இருந்து சமதர்ம சித்திக்கு அதிக தூரம் ஏற்படுத்துவதை விட கூடியவரை சமீபமாக நிலைமையை நாட்டை மக்களை செய்யலாம் என்பதே இன்றைய ராமசாமி தொண்டு. ஆகவே முதலியார் பொறுத்தருள்வாராக.
குடி அரசு - கட்டுரை - 22.11.1936
குடி அரசு - 1936 (2), 404
திருவாங்கூர் பிரகடனம்
திருவிதாங்கூர் அரசாங்கமானது தனது ஆதிக்கத்துக்கு உட்பட்ட கோவில்களை தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட சகல வகுப்பு இந்துக்கள். என்பவர்களும் சென்று வணங்கலாம் என்று அனுமதி அளித்து அரச
பிரகடனம் பிறப்புவித்துவிட்டது
அந்த ராஜ்யமானது வைதீகப் பித்தும் வருணாச்சிரமக் குறும்பும் கொண்ட ராஜ்யமாகும். விவேகாநந்தர் அந் நாட்டை ஒரு பைத்தியக்காரர்கள். ஆஸ்பத்திரி என்று சொன்னார். தோழர்கள் லஜபதிராய் அவர்களும், காந்தியாரும், பண்டித ஜவஹரும் அந்நாட்டிற்குச் சென்றிருந்த காலையில் அவர்கள் கோவிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை.
அந் நாட்டின் தீட்டின் தன்மையானது மனிதனை மனிதன் கண்ணால் பார்ப்பதினாலும், நிழல் மேலே படுவதினாலும், பேசுவதினாலும் ஒட்டிக் கொள்ளக்கூடிய அவ்வளவு கொடுமையான தன்மையது என்று சொல்லலாம். அதோடு இன்ன இன்ன ஜாதி இவ்வளவு இவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்ற தூர வித்தியாசமும் உண்டு. கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு எப்படி இவ்வளவு இழிவும் கொடுமையும் உண்டோ அதேபோல் அந்நாட்டில் மேல் ஜாதியார் என்பவர்களுக்கும் உயர்வும் செளகரியங்களும் போக போக்கியங்களும் உண்டு. அதாவது,
ஒருவன் பார்ப்பான் என்று சொல்லிக்கொள்ளுவானானால் அவனுக்கு ஆயுள் உள்ள அளவும் அரசாங்க சத்திரங்களில் அப்பளம், வடை பாயாசத்துடன் சாப்பாடு கிடைக்கும். சாப்பாடு மாத்திரமல்லாமல் பெண்கள் விஷயத்திலும் பார்ப்பனன் என்பவர்களுக்குக் குறையே இருக்காது பார்ப்பானுக்குப் பெண் விஷயத்தில் உள்ள செளகரியத்திற்கு இரண்டொரு உதாரணம் கூறலாம். அதாவது ஒரு மலையாளியைப் பார்த்து ஒரு நம்பூதிரிப் பார்ப்பான் “அடே சுகுமார உன் பாரியை மிகுந்த சவுந்திரவதி என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?” என்றால், “அவடத்திய கடாக்ஷத்தால் ஆமாம் சுவாமிகளே என்று பதில் சொல்லுவதும் அதற்கு
அந்தப் பார்ப்பனன்,
“அப்படியானால் நாம் அவாளை அனுபவித்துப் பார்க்க வேண்டாமா” என்றால் “பாக்கியம் பாக்கியம் என்று கூறிக்கொண்டு ஆனந்தக் கடலில் மூழ்கி குதியாட்டம் போட்டுக்கொண்டு ஓடோடிப் போய் பாரியாளை
405 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அழைத்து வந்து பார்ப்பானிடம் ஒப்புவித்து “அவடத்திய சவுகரியம் போல் அனுப்பிக் கொடுக்கலாம்" என்று சொல்லிவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல். போவதும், மற்றும் பெரிய வீடு பாரம்பரியமாய் பெருமை உள்ள குடும்பம் என்பவைகளில் உள்ள பெண்கள் தங்கள் பார்ப்பனர்களை கணவனாகக் கொள்வதிலும் சொல்லிக்கொள்வதிலும் பெருமை அடைவதும் அப்பார்ப்பனர்கள் தங்களுக்கு புருஷனாய் இருப்பதற்காக 5 சம்பளம் 100, 200 என்பதாக ராயல் குடும்பம் என்பது வரையில் கொடுப்பதும் வழக்கமாகவும் பெருமையாகவும் இருந்து வந்த நாடாகும். இப்போது மற்ற
எல்லாத் துறைகள் போலவே இதிலும் சில மாறுதல் இருக்கலாம்
மற்றும் பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளை அரசாங்கம் கண்டிராக்ட் விடுவதும் கண்டிராக்டில் எடுத்தவர் இலை ஒன்றுக்கு காலணாவுக்கு குறையாமல் அரையணா ஒரு அணாவுக்கு விற்பதுமான ராஜ்யமாகவும் இருந்தது. அப்படிப்பட்ட சுயமரியாதையும் மனிதத்
தன்மையும் பகுத்தறிவும் குறைந்திருந்த அந்த நாடானது அந்நாட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட சுயமரியாதை உணர்ச்சியின் காரணமாக இப்போது ஒரு பெரும் புரட்சிகரமான சேதியையும் செய்கையையும் கேட்கவும் பார்க்கவுமான தன்மை ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இந்த திருவாங்கூர் அரச பிரகடனத்தைக் கண்ட பலர் இப்பிரகடனம் ஏற்படக் காரணமாய் இருந்தது வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதாகக் கருதுகின்றனர் - எழுதுகின்றனர் - பேசுகின்றனர். அதோடு கூடவே சிலர் தோழர் ஈ.வெ. ராமசாமியையும் பாராட்டி பேசியும் எழுதியும்
நேரில் கடிதங்களும் எழுதுகிறார்கள்.
மற்றும் ஒரு சிலர் இதற்கு காங்கிரசுதான் காரணம் என்றும் காந்தியார் அனுமதி அளித்ததென்றும் பலவிதமாக எழுதி மக்களை மயக்குகின்றார்கள். திருவாங்கூர் பிரகடனத்துக்கு காங்கிரசோ, காந்தியாரோ, வைக்கம் சத்தியாக்கிரகமோ சிறிதும் சம்மந்தமில்லை என்பதை முதலில் மக்கள். உணர வேண்டுகிறோம். இப்பிரகடனம் மனித சமூகத்துக்கோ நாட்டுக்கோ. நன்மையா தீமையா என்பது ஒரு பெரிய கேள்வி என்பதாய் இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை இப்பிரகடனம் மனித சமூகத்துக்கு - இந்திய நாட்டுக்கு சிறப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஒரு விதத்தில். கேட்டை விளைவிக்கக்கூடியது என்பதே நமது அபிப்பிராயம். இது ஒரு புறமிருக்கட்டும். இப்போது மக்கள் இப்பிரகடனத்தை ஒரு நன்மையாகவும் பெருமையாகவும் கருதுவதாலேயே அரசியல் வாழ்வுக்காரர்களும் அரசியல் பத்திரிகைகளும் இதை காங்கிரசினாலும் காந்தியாலும் ஏற்பட்ட பயன் என்று சொல்லி பொய்ப் பெருமையை காங்கிரசுக்கு சம்பாதித்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள்.
குடி அரசு - 1936 (2), 406
முதலாவது வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கும் காந்தியாருக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மக்கள் உணர ஆசைப்படுகிறோம். வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டதானது தோழர்கள் டி.கே. மாதவன்,
கே. அய்யப்பன் முதலிய ஈழவ சமூக சீர்திருத்தத் தலைவர்களால்
திடீரென்று துவக்கப்பட்டதாகும். அதில் தோழர்கள் கே.பி. கேசவமேனன்,
ஜார்ஜ் ஜோசப்பு முதலிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டார்கள். திருவாங்கூர் சர்க்கார் ஒரே அடியாக எல்லா பிரமுகர்களையும் ஆரம்பித்த உடனே கைதிசெய்து விட்டார்கள். சத்தியாக்கிரகத்தை நடத்த ஆளில்லாமல் போய்விட்டது. தோழர்கள் ஜார்ஜ் ஜோசப்பும், கே.பி. கேசவமேனன் அவர்களும் “நிலைமை மோசமாகி விட்டதால் நீங்கள் உடனே வந்து சத்தியாக்கிரக தலைமையை ஏற்று நடத்தாவிட்டால் பெருத்த அவமானத்துக்கு இடம் ஏற்படும்” என்று தந்தியும் கடிதமும் ஆளும் தோழர் ஈ.வெ ராமசாமிக்கு அனுப்பினார்கள். தோழர் ஈ.வெ.ரா. தன் சொந்த முறையிலேயே உடனே சென்றார். அதன்பிறகு காந்தியார் ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் அதற்கு பூரண அனுமதி அளிக்காமல் சில ஆக்ஷேபணைகள் கிளப்பினார்கள். கடசியாக ஈ.வெ.ரா. பிடிவாதத்தின் மீதும் சத்தியாக்கிரகம் எல்லா இந்திய விஷயமாகிவிட்ட பிறகும் சத்தியாக்கிரகத்தில் தாங்களும் கலந்திருப்பதாக காட்டிக் கொண்டார்கள். வைக்கம் சத்தியாக்கிரகம் கூடாது என்று ஆச்சாரியாரும் காந்தியாரும் எழுதிய கடிதங்கள் தமிழ்நாடு பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றும்,
தோழர் காந்தியார், தோழர் ஜார்ஜ் ஜோசப்பை மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வெளியேறும்படி சொன்னதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. சத்தியாக்கிரகத்துக்கு பண உதவி செய்து நடத்த வந்த சீக்கியர்களை வெளியேறும்படி சொன்னதற்கும் ஆதாரங்கள் உண்டு. இம்மாதிரி இன்னும் பலவித தொல்லை கொடுத்து வந்தார்கள். இது விஷயங்களை எல்லாம் அப்போதைய “தமிழ்நாடு” வாரப் பத்திரிகையில் நன்றாய்க் காணலாம்
இந்த நிலை ஒருபுறமிருக்க வைக்கம் சத்தியாக்கிரகம் நடக்கும் ரோட்டைப் பொறுத்ததே தவிர கோவிலைப் பொருத்ததல்ல என்று காந்தியார் அப்போது 100 தடவை வெளிப்படுத்தி அப்பொழுது “அரசாங்கத்தாருக்கு வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கும் கோவில் பிரவேசத்திற்கும் சம்மந்தமில்லை” என்று வியக்தமாகச் சொல்லப்பட்டு வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. இந்தியா பூராவிலுமே வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றுதான் அதுவும் சுதேச மன்னர் ராஜ்யத்தில் ஜெயித்தது என்றாலும் அது எந்த விதத்திலும் இந்த கோயில் பிரவேச பிரகடனத்திற்கு சம்பந்தம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாய் கூறுவோம். அதிலும் காந்தியாருக்கும் கோவில் பிரவேச கூட்டத்திற்கும் சிறிது கூட சம்மந்தமில்லை என்பதற்கும் ஆதாரங்கள் பல கூறலாம்
40/7 ௨. பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தோழர் காந்தியார் எந்த சீர்திருத்தமும் அதுவும் கோவில் நுழைவு
“தீர்திருத்தம்" சட்டத்தின் மூலம் செய்யக் கூடவே கூடாது என்று சொன்னவர்.
சமீபத்தில் இந்திய சட்டசபையில் இந்த ரங்கய்யர் கோவில் நுழைவு மசோதாவை கொலை செய்தவர். மற்ற இந்திய சட்டசபை மெம்பர்களுக்கும் அப்படிப்பட்ட மசோதாவோ வேறு எந்த சமூக சீர்திருத்த சம்பந்தமான மசோதாவோ சட்டசபைக்குக் கொண்டுவரக்கூடாது என்றும் சொன்னவர். காங்கிரஸ்காரர்களும் தோழர் ஆச்சாரியார், சத்தியமூர்த்தியார், டாக்டர் ராஜன். ஆகியவர்களும் சீர்திருத்தத்திற்கு எவ்வித சட்டமும் கூடாது என்றவர்கள்.
சீர்திருத்த காரியங்களுக்கு சத்தியாக்கிரகம் செய்யக்கூடாது என்றும் சொன்னவர்கள்.
இப்படிப்பட்ட நிலையில் உள்ள காந்தியாரும் காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் வைக்கம் சத்தியாக்கிரகமும் திருவாங்கூர் கோவில் நுழைவு பிரகடனத்துக்கு காரணம் என்றோ, சம்மந்தம் உண்டு என்றோ சொல்ல யாராவது வருவார்களானால் அவர்கள் இழி தன்மைக்கும் அல்லது அறிவீனத்துக்கும் வருந்தவேண்டியதேஅல்லாமல் வேறில்லை. இதுவிஷயமாய் “தலைவர்கள்” நடத்தை பற்றி இன்னும் அனேக ரகசியங்கள் உண்டு. அதை இப்போதும் வெளியிட நாம் விரும்பில்லை
ஆனால் “இந்தப்பிரகடனத்துக்கு ஒன்றுமே காரணம் இல்லையா?
திடீரென்று அரசருக்கோ திவானுக்கோ தோன்றிய ஞானோதயமா?'' என்று
சிலர் கேட்கலாம். காரணம் உண்டு என்பதாகவே பதில் கூறுவோம். அந்த
பதில் என்னவென்றால் இப்பிரகடனத்துக்கு ஆக மகாராஜாவை வாழ்த்தி பாராட்டி வரும் விஷயங்களைப் பார்த்தால் அக்காரணம் என்ன என்பது விளங்கிவிடும் என்பது ஒன்று
அதாவது அனேகமாக பெரும்பாலும் ஒவ்வொரு வாழ்த்துதலிலும் பாராட்டுதலிலும் “இந்துமதத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சமயத்தில் மகாராஜா இந்த பிரகடனத்தின் மூலம் உதவி செய்து இந்து மதத்தைக் காப்பாற்றினார்” என்பது மிளிர்கின்றதைப் பார்க்கலாம்.
ஆகவே, இந்து மதத்திற்கு இன்று ஏற்பட்ட நெருக்கடி என்ன? இத்தனைநாள் இல்லாத நெருக்கடி இப்போது என்ன வந்துவிட்டது? என்பவைகளை யோசித்துப்பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். “புத்தர், சமணர், முஸ்லீம்கள் ஆகியவர்கள் காலத்தில் நால்வர், ராமானுஜர். செய்தது போல்'' என்று பலர் பாராட்டுதல்களில் குறிப்பிட்டிருக்கிறார்களே இதன் இரகசியமென்ன? இவற்றிற்கு காரணங்கள் கண்டு பிடித்தால் அந்தக் காரணங்கள்தான் இந்த பிரகடனத்துக்கு காரணம் என்று சொல்லுவோம். களிமண்ணு மாளவியா பண்டிதர் இப்போது ஏன் பேசவில்லை? சனாதனப் புலிகளின் வாய் ஏன் புளிஇட்டு அடைக்கப்பட்டு விட்டது? மகாகனம் சாஸ்திரியின் சர்வாதிகாரக் கனவுகள் எங்கே போயின? “சோஷியல்
குடி அரசு - 1936 (2), 408
ரிபார்மர்" பத்திராதிபர் தோழர்கே. நடராஜன் போன்றவர்களின் சூழ்ச்சி உபாயம் இப்போது எங்கே தூங்குகிறது? ஆகவே இந்தப் பதில்களில் தான் திருவாங்கூர் பிரகடனத்தின் பிறப்பு - அஸ்திவாரம் - கர்ப்பதானம் இருக்கிறது என்போம் அதென்ன வென்றால் அதுதான் “இந்து மதம் ஒழிய வேண்டும், கோவில்கள் இடிபட வேண்டும், எல்லோரும் முஸ்லீம்களாக வேண்டும், நாஸ்திகமே பரவவேண்டும்'' என்ற பிரசாரமும் அனேக மகாநாட்டுத் தீர்மானங்களும் ஈழவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களது மகாநாட்டு தீர்மானமும் இவர்களில் பலர் முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர் களாகவும், சீக்கியர்களாகவும், மதம் மாறினதும் அம்பேத்கார் வெடிகுண்டும் சுயமரியாதைக்காரர்களின் டம் டம் குண்டும் இதற்கு முன்னின்றவர்கள்
பிரசாரங்களும் முதலாகியவைகளே யாகும்
அன்றியும் உண்மையிலேயே கோயில், இந்துமதம் முதலியவை ஒழியவேண்டும் என்பவர்களுக்கு இந்த பிரகடனம் விரோதமானது தான். அதனால்தான் மகாராஜாவை பாராட்டினவர்கள் பெரும்பாலோர் “நல்ல. சமயத்தில் இந்து மதத்தைக் காப்பாற்றினீர்கள்'' என்று பாராட்டினார்கள். என்ன நல்ல சமயம் என்றால் இந்துமதம் ஒழியப்போகிற சமயத்தில் என்பது தவிர வேறு என்னமாய் இருக்கும்? கிலர் பொறுப்பில்லாமலோ வீண் ஜம்பமாகவே பெருமை பேசிக்கொள்ளலாம். “இந்து மதத்தை அழிக்க யாராலும் ஆகாது” என்று பேசலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதையில் வெகு சங்கதி ஆடிப்போய்விட்டது
கோவில் பிரவேசம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டுமென்று 1928ல் தோழர் ஈ.வெ. ராமசாமி தேவஸ்தான கமிட்டி பிரசிடெண்டாய் இருந்த காலத்திலேயே அவர் போர்டில் தீர்மானிக்கப்பட்டது. அதனால் பிறகு கோயில் பிரவேசம் செய்தவர்கள் சர்க்காரால் தண்டிக்கப்பட்டதும் ஹைகோர்ட்டில் விடுதலையானதும் பிறகுசட்டம் ஏற்பட்ட பிறகுதான் அது செய்யப்பட வேண்டுமென்று கருதி சட்டம் செய்ய முயற்சித்ததும் காந்தியார் சத்தியமூர்த்தியார் போன்றவர்கள் சட்டம் கூடாது என்று தடுத்ததும் சாரதா சட்டம் போன்றதற்கே காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தி “என் மகளுக்கு சாரதா சட்டத்தை மீறி சிறுவயதில் கல்யாணம் செய்து நான் ஜெயிலுக்கு போகப்போகிறேன்'' என்று சொல்லி பொது ஜனங்களை கிளப்பி விட்டதுமான காரியங்களுக்கு பிறகுதான் கோவில்கள் இடிக்கப்படவேண்டும் - இந்துமதம் அழிக்கப்படவேண்டும் - முஸ்லீம் மார்க்கத்தில் சேரவேண்டும் என்பவையான பிரசாரம் பலமாய் தொடங்கப் பட்டது என்பதும் யாவரும் உணர்ந்ததேயாகும் அவைகளை தொடங்கினவர்கள் பொதுஜனங்களால், தங்கள் கூட்டத்தாரால், தங்களை பின்பற்றுபவர்களால் எவ்வளவுதான் மதத்துரோகி,
4099 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தேசத்துரோகி, அரசாங்க அடிமை பயங்காளி கீழ் நோக்குக்காரர் என்றெல்லாம் வையப்பட்ட போதிலும் பாமர ஜனங்களிடம் செல்வாக்கு இழந்த போதிலும் அதன் பலன்கள் மாத்திரம் இன்று திருவிதாங்கூர் கோவில் கதவு திறக்கப்படக்கூடிய நிலைக்கும் மற்றும் பல பழக்கவழக்கங்கள். பிடிவாதங்கள் ஒழியக்கூடிய நிலைக்கும் கொண்டு வந்து விட்டன.
இப் பிரகடனத்தில் பலவித சூழ்ச்சிகள் இருந்தாலும் இருக்கலாம். எப்படியோ ஆகட்டும், சூழ்ச்சி வெற்றி பெறட்டும். அதையும் அனுகூலமாய் பயன்படுத்திக்கொள்ள நாம் அதைரியப்படவில்லை. என்றாலும் 5, 6 வருஷத்துக்கு முன் இந்து சாஸ்திரங்கள் ஸ்மிருதிகள் என்பவைகளுக்கு விரோதமாய் எப்படி பெண்களுக்கு புஷ்பவதியான பிறகு தான் கல்யாணம் செய்யவேண்டுமென்று சட்டம் செய்யப்பட்டதோ அதேபோல் இப்போது துருப்பிடித்த செல்லரித்த ஆகமங்களுக்கு விரோதமாய் எல்லா (தாழ்த்தப்பட்ட) வகுப்பாருக்கும் கோவில் நுழைவு உண்டு என்று பிரகடனம் போட்டதும் அதை சத்தியமூர்த்தி உள்பட அதாவது தன் மகளை புஷ்பவதி ஆகு முன் கல்யாணம் செய்து ஜெயிலுக்குப் போய் சாரதா சட்டத்தை ஒழிப்பதற்கு உயிரை விடுவேன்" என்று செளரியம் கூறிய சத்தியமூர்த்தி உள்பட ராஜாவையும் (மந்திரியை) திவானையும் பாராட்டுவதுமான காரியம் ஏற்பட்டு விட்டது பெரிய காரியம் என்றும் இது ஒரு புரக்ஷி காரணமானது என்றும் மக்களுக்கு இனி எவ்வித புரக்ஷியும் செய்யலாம் - செய்தால் முடியும் என்று கருதும்படியானதுமான காரியம் என்றும் கூறுவோம். அன்றியும் இப்போது கோவில் பிரவேசத்தைப் பற்றி நாம் ஆச்சரியமோ மகிழ்ச்சியோ அடையவில்லை. ஆனாலும் இந்துமத ஆதாரங்களில் தீ வைக்கப்பட்டதற்கும் அத்தீய்க்கு பார்ப்பனர்களே இன்று ஆகுதி செய்வதற்கும் நாம் மகிழ்ச்சியும் தைரியமும் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யர் சீர்திருத்தத்திற்கு சட்டம் செய்ய ஒருப்படாதவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும். இதை அவர்தான் இந்திய சட்டசபை தேர்தலுக்கு நிற்கும்போது கும்பகோணத்து வருணாச்சிரமி களுக்கு சொன்ன பதிலில் விளக்கியிருக்கிறார். அவர்பார்த்து இப் பிரகடனத்தை நிறுத்தி இருந்தால் நிறுத்தி இருக்கக் கூடுமானாலும் அவருடைய போட்டி நண்பர் தோழர் சர். ஷண்முகம் செட்டியார் ஓடுகிற ஓட்டத்தில் பஞ்சாமிர்தம் சாப்பிடுவது போல் கொச்சி ராஜ்யத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ பிரகடனம் செய்யச் செய்துவிட்டார். அதனால் 100க்கு 45, 50, 75 வீதம் உத்தியோகம் பெற்றுவந்த பார்ப்பனர்கள் 100க்கு 2 வீதமே பெறும்படியாகவும் 100க்கு 2 வீதம் கூட பெறக்கூடாமல் இருந்த ஈழவர்கள் 100க்கு 22 பெறும்படியாகவும் செய்து ஒரே அடியாய் நல்ல பேர் வாங்கிவிட்டார். இதை எந்தப் பார்ப்பானும் தேசியவாதியும் பாராட்டவில்லை. ஆனாலும் உள்ளூர 10 லக்ஷக்கணக்கான மக்களின் உள்ளத்தில் அன்பு
குடி அரசு - 1936 (2), 410
உருவமாய் ஊசலாடிக்கொண்டு இருக்கும் பேற்றை அடைந்துவிட்டார். இதை உண்மையில் கண்ட தோழர் ராமசாமி அய்யர்தான் ஏதாவது செய்து ஒரு நல்ல பெயரை வாங்கவேண்டாமா என்பது முள்ளு முனையில் இருந்து தவம் செய்யவேண்டிய தேவை போல் இருந்துவந்தது மற்றொரு காரணமாகும். இவற்றையெல்லாம்விட மற்றொரு காரணம் அதுவும் சரியான காரணம் என்னவென்றால் திருவாங்கூர் ராஜ்யம் சுமார் 45 லக்ஷம் ஜனத் தொகை கொண்டது. இதில் கிட்டத்தட்ட 20 லக்ஷம் கிறிஸ்தவரும், 4, 5 லக்ஷம், முஸ்லீம்களுமாக இப்போதே தோட்ட விஸ்தீரணத்தில் பகுதிக்குமேல் கிணறு என்பது போல் திருவாங்கூர் (இந்து மகாராஜா) பிரஜைகளில் பகுதிக்கு மேல் வேறு மதக்காரர்களாக இருக்கிறார்கள். மீதி உள்ள இந்துக்கள் என்பவர்களும் சுற்று (பாம்பேரி) கட்டிடம் இல்லாத கிணறு நாளுக்கு நாள் ஓரம் இடிந்து சரிந்து கிணறே தோட்டமெல்லாம் விழுந்துவிடுவதுபோல் மக்கள் நாளுக்கு நாள் வேறு மதத்தில் சேர ஆரம்பித்து விட்டார்கள். வேறு மதத்தில் சேர இஷ்டமில்லாதவர்கள் இந்து மதத்தையே அடியோடு விட்டுவிட தீர்மானித்து விட்டார்கள். சகல மதக்காரர்களும் லக்ஷம் இரண்டு லக்ஷம் ரூபாயுடன் மதமாற்ற வியாபாரம் அங்கு ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலை இப்படியே இருந்தால் நாளைக்கு மகாராஜாவின் பாடே அவர் எந்தமதம் என்பது திண்டாட்டமாய்விடும்நிலைமை ஏற்படலாம். ராஜ்யம் கிறிஸ்து அல்லது முஸ்லீம் ராஜ்யமாகக்கூட ஆகிவிடலாம். ஆகவே தனது பிரஜைகள் பகுதியாவது இந்துக்களாய் இருக்கட்டுமே என்கின்ற ஆசையே இந்தப் பிரகடனத்துக்கு கல்லுப் போன்ற உறுதியான காரணமாகும்.
ஆகையால் இப்படிப்பட்ட பிரகடனத்தை அதற்கு எதிரிகளாய் இருந்த காந்தியாராலும் காங்கிரசாலும் பார்ப்பன தலைவர்களாலும் ஏற்பட்டது என்று சொல்லுவது அறிவீனம் என்றே சொல்லுவோம் தங்களுக்கு இது விஷயத்தில் போதிய அறிவு இருக்கிறது, நன்றாய் ஆராய்ந்து பார்த்துத்தான் சொன்னோம் என்று யாராவது சொல்வாரானால் மற்றபடி அதை மாற்றி வடிகட்டின அயோக்கியத்தனம் என்று சொல்ல மடிகட்டி நிற்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.11.1936
4... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சிதம்பரம் சிதைவு
தோழர் வி.ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்தி விட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி ஆடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரியென்று தோன்றிய வழிகளில் உழைத்துவிட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையே யாகும்.
மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்மந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்மந்தமானது என்றும், எப்படி எனில், கூனோ குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ, ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும்,
பின் தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின். கற்புக்கு குறியென்றும் அக்கூட்டு தெய்வீக சம்மந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வது போல் அரசன் எப்படிப்பட்டவனாய் இருந்தாலும் ஆக்ஷி எப்படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய்க் கருதி ஆக்ஷியை வேதக் கோட்பாடாகக் கருதி வாழவேண்டும் என்று இருந்த பார்ப்பனீய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானகரமாகவும், மகா இழிவாகவும், மகா கொடுமையாகவும் துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து துச்சமாய் கருதி தண்டனையை அடைந்து சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும் அவராலேயே அனேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது
தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோகமானியர், மூனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பர நாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப்படம் இருக்கும் படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை அதுவும் சைவப் பிள்ளையானாலும் “சூத்திரப் பிள்ளை”
குடி அரசு - 1936 (2), 412
ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப்பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.
சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பன ரல்லாதாரும் அறியட்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்
அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால் ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப்பற்றி ஆறுதல் அடைகிறோம். எப்படியெனில், பார்ப்பனரல்லாத தேசபக்தர்களை பார்ப்பனர் ஒரு அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத்தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்ப்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.
ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஒரு உதாரணமாகக் கொண்டு மற்ற தேசபக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.11.1936
413... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கிராம சீர்திருத்தம் என்பது புரட்டு
கிராமங்கள் அழியவேண்டும்
முன்னுரை தோழர்களே!
கிராம உத்தியோகஸ்தர்கள் ஸ்பெஷல் டெக்ஸ்ட் பயிற்சி சாலையின். 6-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை வகிக்கும்படியான கெளரவத்தை எனக்கு அளித்ததற்கு நான் இதன் முக்கியஸ்தர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
நீங்கள் முதலில் எதிர்பார்த்தபடி இவ்வாண்டு விழாவிற்கு ஒரு ரெவின்யூ அதிகாரி தலைமை வகித்திருந்தால் மிகவும் பொருத்தமாய்
இருந்திருக்கும். ஏதோ எதிர்பாராத காரணத்தால் அவர்கள் வர முடியாமல் போனதால் எதிர்பாராத நிலைமையில் என்னைத் திடீரென்று பிரேரேபித்து
விட்டீர்கள். உங்கள் ஆண்டுவிழாவில் பேசுவதற்கு எனக்கு மிகவும் ஆகைதான். நான் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் கருதுகிறேன். ஆனால் ஒரு உபன்யாசகராய் இருந்தால் எவ்வளவு சுதந்திரமாய்ப் பேசுவேனோ: அவ்வளவு தலைவன் என்கின்ற முறைமையில் பேசுவதற்கு முடியாது ஏனெனில் தலைமை வகிப்பவருக்கு சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளையும் அபிப்பிராயங்களையும் தலைவர் மறுக்கவோ கண்டிக்கவோ செய்வது தர்மமாகாது
ஏனெனில் தலைவர் முடிவுரை கூறியபின் உபன்யாசகர்களுக்கு சமாதானம் சொல்ல சந்தர்ப்பமில்லை அல்லவா?
அன்றியும் நீங்களும் சில நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டவர் களாவீர்கள். ஆகையால் நான் இப்போது பேசப்போகும் உபன்யாசகர்களின் அபிப்பிராயங்களைத் தழுவி சில வார்த்தைகள் பேசி விட்டு என் அபிப்பிராயமாக சில வார்த்தை முடிவுரையில் சொல்லிவிட்டு இவ்விழாவை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.
முடிவுரை
தோழர்கள் கரூர் கே. வேலாயுதம் அவர்கள் “கிராம முன்னேற்றத்துக்கு ஆன வழி" என்பது பற்றிப் பேசினார்.
குடி அரசு - 1936 (2), 414
பிறகு இந்த ரேஞ்சு டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல் தோழர் துரைசாமி பிள்ளை அவர்கள் “கிராமக் கல்வி” என்பது பற்றிப் பேசினார். இருவர் பேசியதும் ஏறக்குறைய எல்லாம் என் அபிப்பிராயத்தை தழுவுவதேயாகும். அவர்கள் இரண்டு முக்கிய விஷயங்களைப் பற்றியும் நன்றாய் கையாண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து நானும் பல விஷயங் களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது
கிராமாதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் என்பது பற்றி நான் சில வார்த்தைகள் சொல்லவேண்டும் என்றும் என்னை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.
ஆனால் நான் தலைவன் என்கின்ற முறையில் உபன்யாசகர்களை அறிமுகப்படுத்தி விட்டு உபன்யாசகர்களை எடுத்துக்கொண்ட விஷயத்துக் குள்ளும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் பேசும்படி பார்த்துக்கொள்ளுவதே தலைவரின் நியாயமான கடமையாகும்
ஆகையால் எல்லாவற்றையும் கவனித்து, நான் பேசவேண்டுமென்று
நீங்கள் எதிர்பார்ப்பதையும் சேர்த்து முடிவுரையாக சில வார்த்தை பேசுகிறேன். அவற்றை நீங்கள் ஒருவருடைய அபிப்பிராயமாகக் கொள்ளவேண்டுமே ஒழிய ஒரு உபதேசமாகக் கொள்ளாதீர்கள் என்று உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.
தோழர்களே!
கிராமாதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் ஆகிய இரு கூட்டத்தார்கள் அவர்களது தொழிலின் காரணமாக அடிமைகளேயாவார்கள். ஏனெனில் இருவர்களும் அரசியல் முறைப்படி இரு இலாக்காவின் கடசி தர அடிமைகள்.
விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் கிராமாதிகாரிகள் தலைவிதி”
தாசீல்தார், ரிவின்யூ டிவிஷன் ஆபீசர் முதலியவர்களுடைய பேனா முனையில் அடங்கி உள்ளதாகும். இந்த கிராமாதிகாரிகளுடையது மாத்திரமல்லாமல் இவர்களது பின் சந்ததிகளுடைய “தலைவிதியும் அது போன்றதேயாகும். கிராமாதிகாரிகள் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு முறிச் சீட்டு எழுதிக்கொடுத்த அடிமை என்று சொன்னால் மறுப்பதற்கு போதிய காரணங்கள். கிடையாது. அது போலவே ஆரம்ப ஆசிரியர்கள் தலையெழுத்தும்
இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல், ஜில்லா போர்ட் பிரசிடெண்ட், சேர்மென்: ஆகியவர்கள் கை பேனா முனையில் தான் இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். இவர்களுக்கு அளிக்கப்படும் நற்சாட்சிப் பத்திரங்கள் எல்லாம் நல்ல நிபந்தனை இல்லாத அடிமைகளா என்பதைப் பொருத்ததே தவிர இவர்களின் நடத்தையையோ சாமார்த்தியத்தையோ பொருத்தது என்று அடியோடு சொல்லிவிட முடியாது
ஆனால் இவர்கள் மேல் அதிகாரிகளால் யோக்கியமாய் கையாளப் படுவார்களேயானால் இவர்களும் நல்ல யோக்கியர்களாகவும் கெட்டிக்காரர் 45... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
களாகவும் அமைவார்களானால் இவர்களால் ஜன சமூகத்துக்கு எவ்வளவோ நன்மை செய்ய வசதி இருக்கிறது. இவர்களது நிலைமை அடிமைத் தன்மையானது என்றாலும் இவர்களது பதவி நல்ல பொறுப்பும் பயனும் உள்ளது என்பதை நான் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லுவேன் - இவர்கள் புது உலகத்தை சிருஷ்டிக்கலாம். கிராமாதிகாரி என்பவர் கிராம மக்களுக்கு தகப்பனார் ஆவார். சிட்டி பாதர் City Father என்பது போல் இவர்கள் Village Fathers வில்லேஜ் பாதர்ஸ் ஆவார்கள். அதுபோலவே ஆரம்ப ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு வெளிச்சத்தை கொடுத்து அந்த வெளிச்சத்திலேயே வாழ்நாள் முழுதும் நடக்கும்படி செய்யக் கூடிய ஒரு உயர்ந்த தச்சன் ஆவார்கள். இவர்கள் இருவர்களும் இன்றைய உலக வாழ்வில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவர்களாவார்கள்.
தோழர் வேலாயுதம் அவர்கள் இவ்விருவரும் கிராமத்தை எந்த எந்த வழியில் முன்னுக்குக் கொண்டு வரலாம் என்பதைப்பற்றி பலவழிகள். சொன்னார்கள் என்றாலும் நானும் ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஒரே வழியின் மூலம் தான் கிராமங்களை முன்னுக்கு கொண்டுவரலாமே ஒழிய மற்ற எந்த வழிகளாலும் கிராமங்களை முன்னுக்குக் கொண்டு வர முடியாது என்பது என் அபிப்பிராயம்.
கிராம முண்னேற்றம்
அந்த வழி என்ன வென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான். ஏனெனில் கிராமம் என்பது ஒரு வித வருணாச்சிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்கு சமமாய் இருப்பது. மேல் ஜாதியானுக்கு உழைத்துப்போட வேண்டியது எப்படி கீழ் ஜாதியானின் கடமையாக இருந்து வருகின்றதோ அதாவது கீழ்ஜாதியான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ஜாதி முறையில் கட்டுப்பட்டு இருப்பதின் காரணமாகவே எப்படி கீழ் ஜாதியான் என்பவன் உழைப்பவனாகவும் மேல் ஜாதியான் என்பவன் அவ்வுழைப்பை அனுபவிப்பவனாகவும் தானாகவே இருந்துவர முடிகின்றதோ அது போலவே பட்டணங்கள் மேல் ஜாதியாகவும் கிராமங்கள் கீழ்ஜாதியாகவும் இருந்து வருகின்றன. எப்படி
கீழ் ஜாதிக்காக எவ்வளவு தான் பாடுபட்டு அவர்கள் முன்னேற்றத்துக்கு ஆக நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்கள் அடியோடு ஜாதிமதத்தை விட்டு விட்டு வேறு மதத்திற்கு போய்விட்டால் ஒழிய அவர்களது கீழ்ஜாதித் தன்மை ஒழிவதில்லையோ அதுபோல் மேல்ஜாதித்தன்மையும் ஒழிவதில்லையோ அது போலவேதான் கிராமங்கள் அடியோடு ஒழிந்து கிராமவாசி என்கின்ற மதம் மாறி பட்டணவாசி நகர வாசி என்கின்ற
மதக்காரன் ஆனால் ஒழிய கிராமவாசி கஷ்டம் ஒழியப்போவதில்லை.
ஆதலால் கிராம அதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் கிராம முன்னேற்றம் என்னும்துறையில்ஏதாவது உழைக்க வேண்டும் என்கின்ற ஆசை
குடி அரசு - 1936 (2), 416
இருந்தால் அவர்கள் கிராம ஜனங்களையெல்லாம் நயத்திலோ பயத்திலோ பட்டணங்கள் நகரங்கள் ஆகியவைகளுக்குத் துரத்திவிடுவதேயாகும்.
கிராம முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய முன்னேற்றம் என்பதேயாகும்
கிராம ஜனங்கள் முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய சவுக்கியமேயாகும்.
கிராம ஜனங்களுடைய சவுக்கியம் என்றால் என்ன? கிராம ஜனங்கள் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் அடைகின்ற செளகரியங்களையும் சுகங்களையும் அடையவேண்டும் என்பதாகவே ஆக வேண்டும் அல்லவா?
அப்படிக்கில்லாமல் கிராமத்துக்கு இட்டேரி போட்டு ஒரு கிணறு வெட்டிக்கொடுத்து ஒரு பள்ளிக்கூடம் கட்டிவைத்து கம்பு இப்படி விதைக்கிறது, சோளம் இப்படி அறுக்கிறது, விறகு இப்படி உடைக்கிறது, ஆடுமாடு இப்படி மேய்க்கிறது, பால் வெண்ணெய் இப்படி எடுத்து நகரத்துக்காரனுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு போவது, சாணி இப்படி சேகரம் செய்வது, எருமுட்டை இப்படித் தட்டுவது, ஏர் இப்படி உழுவது, களை இப்படி எடுப்பது, தண்ணீர் இப்படிப் பாய்ச்சுவது, இப்படி அறுப்பது, அறுத்து பட்டணத்தானுக்கு இப்படிக் கொண்டுவந்து சேர்ப்பது என்பன முதலியவைகளை கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதுமா?
அதுபோலவே கைத்தொழில் விஷயத்திலும் இப்படிப் பஞ்சு அரைப்பது, இப்படிப் பஞ்சு கொட்டுவது, இப்படி ராட்டினத்தில் நூல் நூற்பது, இப்படி நூல் கொண்டுவந்து பட்டணத்தில் விற்றுவிட்டு உப்பு, மிளகாய், கடுகு, மிளகு, சீரகம் வாங்கிக்கொண்டு போவது என்பன போன்றவை சொல்லிக் கொடுத்தால் போதுமா?
இவற்றால் எல்லாம் கிராமவாசி சினிமா பார்க்க முடியுமா? நல்ல துணிமணி மேல்சட்டை போட முடியுமா? பார்க்கில் உலாவ முடியுமா? அவன் பெண்டு பிள்ளை S.S.L.C. இல்லாவிட்டாலும் தாய் பாஷையில். கையெழுத்துப் போடவாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது கிராமவாசிகளுக்கு இந்த உரிமை, மனுவோ “கடவுளோ” பிறவியிலேயே கொடுக்கவில்லையா? சூத்திரன், முதல் மூன்று வருணத்தானுக்கு உழைக்கவே பிறந்தான், சூத்திரன் பணம் வைத்துக்கொண்டிருந்தால் பலாத்காரமாய் மேல்ஜாதிக்காரன் பிடுங்கிக் கொள்ளலாம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரம் போல் கிராமவாசி பட்டணவாசிக்கு உழைத்துப் போடவே பிறந்தான், கிராமவாசி பணம் வைத்துக் கொண்டிருந்தால் வக்கீலும் வியாபாரியும் லேவாதேவிக்காரனும் 'கழுத்தைத்திருகி'' பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏதாவது, கினு சாஸ்திரம் இருக்கிறதா? கிராமவாசியை மனிதன் என்று இன்று யாராவது மதிக்கிறார்களா? அவர்களின் வாழ்க்கை மிருக வாழ்க்கையை விட வேறு வழியில் மாற்றம் இருக்கிறதா? 417... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இன்று இந்தியாவில் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்கள் என்றால். அந்த 8 பேர் யார்? கிராமவாசிகளுள்படவா விகிதாச்சாரம்? அவர்களிலும் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்கள்? மேல் ஜாதிக்காரர்கள் 100க்கு 100பேர், பட்டண வாசிகள் 100க்கு 50 அல்லது 60 பேர் ஆக இந்தக் கூட்டத்தாரின் எண்ணிக்கைப் பெருக்கத்தால்தான் எல்லா மக்களுக்கும் இந்தியாவில், 100க்கு 8 வீதம் கணக்கு ஆகிறதே தவிர கிராம வாசிகள் 100க்கு 2, 3 பேர் கூட படித்து இருக்கவில்லை.
ஒரு கிராமம் என்றால் ஒரு பணக்காரன் ஆதிக்கமும், மற்ற மக்களை அவன் அடக்கி ஆளுவதும் அந்த பணக்காரன் பட்டணத்தான்களுக்கு அடிமையாகி மற்ற கிராம ஜனங்களை அரித்துக் கொண்டு வந்து கொடுப்பதும் என்பதல்லாமல் வேறு என்ன நிலையில் கிராமம் இருக்கிறது என்று பாருங்கள்.
கிராமநிலை குப்பை மேடு, கக்கூஸ் ஜலதாரைநாற்றம், தரித்திரக்குர்சுகள் நோய் உருவங்கள், முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் தாண்டவம் என்பவை போன்றவை அல்லாமல் வேறு என்ன காணமுடிகின்றது என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். நமது நாட்டு வரிகள் முழுவதும் கிராமவாசிகள் உழைப்பையே அஸ்திவாரமாய்க் கொண்டதாகும். அவர்களை நாம் மனுஷ வர்க்கத்தில் சேர்ப்பதில்லை. ஆனால் அவர்களுக்காகவே பாடுபடுகிறோம் என்று வேஷம் போட்டு நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிறோம் நமது சுயராஜ்யத்தாலோ, நமது பூரண சுயேச்சையாலோ, சமூக முன்னேற்றத்தாலோ, ராமராஜ்யத்தாலோ கிராமவாசிகளுக்கு ஏற்படும் நன்மை என்ன? இதுவரை ஏற்பட்டதென்ன என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்திய காங்கிரஸ் சர்வாதிகாரியான அல்லது சூஸ்தரதாரியான. தோழர் காந்தியாரின் கிராம முன்னேற்ற திட்டம் என்ன என்று பாருங்கள்.
“கிராமவாசிகள் பெட்டிகளில் வெள்ளி நாணையம் இருக்கக்கூடாது” என்று காந்தியார் பல தடவை சொல்லிஇருக்கிறார். நெல்லுக் குத்த வேண்டும், கருப்பட்டி காய்ச்ச வேண்டும், ராட்டினம் நூற்க வேண்டும் என்பது போன்ற திட்டங்கள் மூலம் 1000 வருஷத்துக்கு முன்னால் இருந்த உலகத்துக்கு போகச் சொல்லுகிறார். இதனால் கிராமம்தான் ஆகட்டும் கிராமவாசிதான் ஆகட்டும் எப்படி முன்னுக்கு வரமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப்
பாருங்கள். நகரத்தில் பட்டணத்தில் இருக்கிற ஒரு தொழிலாளிக்கோ வீதி கூட்டுபவனுக்கோ உள்ள சவுகரியம் அனுபவம் கிராமாந்தர மிராசுதாரனுக்கு இல்லை என்றால் நீங்கள் நம்பவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
யந்திரசாலைத் தொழிலாளிகளைப்பற்றி பிரமாதமாகப் பேசுகிறோம்; அவர்கள் நன்மையே உலக நன்மை என்று பிரசாரம் செய்கிறோம். அவர் களாலேயே உலகம் இருக்கிறது என்று சொல்லுகின்றோம். யந்திரசாலைத் தொழிலாளிகளின் உழைப்பைவிட கிராமவாசிகள் உழைப்பு கொஞ்சமானதா? அல்லது யந்திரசாலைத் தொழிலாளிகளால் நாட்டுக்கு ஏற்படுகின்ற
குடி அரசு - 1936 (2), 418
நன்மையைவிட கிராமவாசிகளால் ஏற்படும் நன்மை குறைந்ததா? என்று யோசித்துப்பாருங்கள். ஆனால் அவர்கள் நிலைமையையும் கிராமவாசிகளின். நிலைமையையும் சிறிது ஒத்திட்டுப் பாருங்கள், கிராம வாசிகள் நிலை எவ்வளவு பரிதாபகரமானது என்று பாருங்கள்.
என்றாலும் ஒரு விஷயத்தில் நான் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னுடைய ஆசை தானாகவே நிறைவேறி வருகிறது அதாவது கிராமங்கள் தானாகவே அழிந்து வருகின்றன. கிராம ஜனங்கள் பட்டணங்களுக்குத் தானாகவே குடி ஏறி வருகிறார்கள். இந்த 25 வருஷத்தில் பழைய கிராமங்கள் ஒன்றுக்கு பகுதி ஆகிவிட்டன. பட்டணங்கள் ஒன்றுக்கு ஒன்றரை இரண்டு பங்குகூட ஜனப்பெருக்கம் ஆகி பெருத்துவிட்டன. உதாரணமாக இந்த ஈரோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 1910ல் (16000) பதினாறு ஆயிரம் ஜனங்கள் ஈரோட்டில் இருந்தார்கள். 1920ல் 22 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1930ல் 34 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1936ல் இப்போது கிட்டத்தட்ட (40000) நாற்பது ஆயிரம் ஜனங்கள் ஆகி இருப்பார்கள். இதுபோலவே நமது ஜில்லாவிலேயே கோயமுத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி முதலிய நகரங்கள் இரட்டிப்பு ஆகிவருகின்றன. இந்த ஜனங்கள் எங்கிருந்து உற்பத்தி ஆனார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம் கிராமங்கள் காலி ஆகிவருகின்றன. கிராம ஜனங்களுக்கு பட்டண வாசத்தில் மையல் ஏற்பட்டுவிட்டது. இனி அதைத் தடுக்க யாராலும் ஆகாது என்பதை மனதில் வையுங்கள்.
ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த சமூகத்தில் எப்படி கீழ் ஜாதி ஈன ஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக் கூடாதோ அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து நாடெல்லாமே நகரங்களாய் இருக்க வேண்டும். சூரியன், சந்திரன், தென்றல் எப்படி எல்லோருக்கும் பொதுவோ அப்படியே பொதுவாழ்க்கை போக்கியங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும்; “பட்டணத்தில் இருப்பதால் மாத்திரம் தான் அனுபவிக்க முடிகின்றது, கிராமத்தில் இருப்பதால் அனுபவிக்க முடிகிறதில்லை'” என்கின்ற நிபந்தனை இருக்கக்கூடாது
சமதர்மம் ஓங்கும் நாடுகளில் கிராமம் என்பதாக ஒன்று இல்லை. வேண்டுமானால் ஒரு நகரத்தில் 25 லக்ஷம் பேர் இருக்கலாம், மற்றொரு நகரத்தில் 250 பேர் இருக்கலாம். பாடும் அனுபவமும் இருவருக்கும் ஒரே மாதிரி தான். இந்த செளகரியம் செய்ய பொது உடமையோ, சமதர்மமோ, சட்ட மறுப்போ, ஒத்துழையாமையோ, பூரண சுயேச்சையோ தேவை இல்லை; ஜனப்பிரதிநிதிகள் ஜனத்தலைவர்கள் யோக்கியர்களாக இருந்தால் போதும். அவர் அப்படி இல்லாவிட்டாலும் ஆரம்ப ஆசிரியர்களும்
49 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கிராம அதிகாரிகளுமாவது இந்த வேலை செய்தால் போதும். நீங்கள் ஒருவரும் செய்யாவிட்டாலும் இயற்கை செய்யப்போகிறது; செய்து கொண்டு இருக்கிறது. அதை தடுக்காமல் இருந்தாலும் போதும்
கல்வி.
கல்வியைப்பற்றி தோழர் துரைசாமி பிள்ளை அவர்கள் பேசினதைக்
கேட்டீர்கள்.
நமது நாட்டு கல்விக்கு லட்சியமே இல்லை. நமது வாழ்வுக்கே லட்சியமில்லை என்பதோடு சுயநலப் போட்டியும் பேராசையுமே ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் அடிமைப் படுத்திக்கொண்டிருக்கிறது என்றால் கல்விக்கு என்ன லட்சியம் இருக்கப் போகிறது? என்ன படிப்பது? என்பதை எத்தனை பண்டிதர்கள் கல்வியில் பெரிய பட்டம் பெற்ற மேதாவிகள் உணர்ந்திருக்கிறார்கள்?
ஏதோ படிப்பது, என்னமோ வாய்ப்பது, வாய்த்ததை பிடித்துக்கொண்டு
சப்புச் சப்பென்று சப்பி அதன் உயிரை வாங்கி கடைசியில் “ஓய்வு” எடுத்து சாவது என்பதல்லாமல் இன்றைய கல்விக்கு என்ன லட்சியமோ மரியாதையோ பயனோ இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.
எல்லா மக்களுக்கும் கல்வி பரவுவது நம் நாட்டில் பொது உடமைக் கொள்கை பரப்புவது போன்ற அவ்வளவு கஷ்டமான காரியமாய் இருக்கிறது
“எல்லோருக்கும் உள்ள சொத்துக்களை சரியாய் பங்குபோட்டுவிட்டால் அப்புறம் பணக்காரன் ஏழை இருக்கமாட்டானே, உலகம் ஒழுங்காய் நடவாதே” என்று சொல்லிகின்ற வாதம் தான் இன்று கல்விக்கும் ரகசியத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனென்றால் “எல்லாரும் படித்துவிட்டால் பிறகு முட்டாள் யார், புத்திசாலி யார் என்கின்ற பேதமே இல்லாமல் போய்விடுமே, படித்தால் பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் சவுகரியம் போய்விடுமே” என்று கருதியே கல்வியை இந்த நாட்டில் இவ்வளவு மோசமாக்கிவிட்டார்கள். மேல் நாடுகளில் கல்விக்கு இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் கிடையாது; யாவருக்கும் ஒரு அளவு கல்வி சுதந்திரமாய் நிர்ப்பந்தமாய் வினியோகிக்கப்படுகிறது?
மற்றும் இங்கு கல்வி பிழைப்பிற்கு வழியே தவிர அறிவுக்கு வழியல்ல என்கின்ற தன்மையில் வந்தவிட்டதால் கல்வி இவ்வளவு பூஜ்ஜியமாகப் போய்விட்டது. ஆதலால் எல்லா மக்களுக்கும் கல்வி பரவ வேண்டுமானால் கிராமங்களை ஒழித்தாலே போதுமானது. பட்டண வாழ்க்கையே ஒருவிதமான கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒரு விதமான மெளடீக ஸ்தாபனம் என்றும் சொல்லலாம்.
பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும், நோயையும் கூட போக்கும் என்று சொல்லலாம்.
குடி அரசு - 1936 (2), 420
ஆகவே மக்களின் இன்றைய பெருவாரியான குறைகளுக்கு கிராம
வாசம் ஒரு காரணமாகும் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். தோழர்களே! முடிக்கப்போகிறேன். கிராமாதிகாரிகளுக்குப் பரீகைஷு என்று இம்மாதிரி ஒரு ஸ்தாபனம் வைத்து பயிற்சி கொடுத்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதும் பயன்படத்தக்கதுமான காரியம். இதைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கிராமாதிகாரிகளும் உபாத்தியாயர்களும் அரசியலில் சம்மந்தப் படாதீர்கள். உங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. உங்களுக்குக் கஷ்டம் வந்தால் சர்க்கார்தான் காப்பாற்றவேண்டும். அவர்கள் தபவிலேயே இருக்க வேண்டியவர்களாலீர்கள். நீங்கள் ஒரு அளவுக்கு சர்க்கார் உத்தியோகஸ்தர்களே ஆவீர்கள். சில கிராமாதிகாரிகள் என் பேச்சைக் கேட்டு அரசியலில் தலையிட்டு வேலை போய் உள்ளூரில் போட்டி ஏற்பட்டு 4000, 5000 செலவு செய்து நியூ ஜெண்ட்கிராண்ட் வைத்து மன்னிப்பு எழுதிக் கொடுத்து தப்பவேண்டியதாயிற்று. உங்களுக்கு கோர்ட்டோ விசாரணையோ ஒன்றும் கிடையாது. மேல் அதிகாரிகளின் இஷ்டம்தான். ஆகையால் நீங்கள் கிராமாதிகாரிகளாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கும் வரை உங்கள் வேலைகளைக் காப்பாற்றிக்கொள்ளுவதில் கவலையாயிருங்கள். உங்கள் ஒப்பந்தம் எஜமானுக்கு கீழ்ப்படிந்திருப்பதுதான். அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக்கொள்ளுவதில் உங்கள் உத்தியோகத்தின். பெரும் பகுதியை செலுத்துங்கள்.
ஒரு போலீசுக்காரனுக்கு ஒரு சூப்பிரண்டு ஒருவனை தடியால் அடிக்கும்படி உத்திரவு செய்தால் அந்த போலீசுக்காரன் அடிப்பது நியாயமா அநியாயமா அது “தே&பமா' “பரதேகீபமா” என்று யோசிக்கலாமா? யோசித்தால் நாணையத்தையும் கடமையையும் செய்ததாகுமா? ஒப்பந்தப்படி நடக்க வேண்டாமா? அதுபோல் தான் உங்கள் நிலையும் என்பதை எப்போதும் மனதிலிருத்துங்கள்.
மற்றுமொருமுறை என்னை நீங்கள் தலைவராகத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி செலுத்திவிட்டு நான் சொன்னவைகள் என்னுடைய அபிப்பிராயம் என்றும் அதை நீங்கள் நன்றாக ஆலோசித்துப் பார்த்து தள்ளுவதை தைரியமாய் தள்ளி, கொள்ளுவது உண்டானால் உங்கள் செளகரியம், சந்தர்ப்பம் ஆகியவைகளை கவனித்து கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டு எனது முடிவுரையை முடித்துக்கொள்ளுகிறேன்.
குறிப்பு: 31.10.1936 ஆம் நாள் ஈரோடு கிராம உத்தியோகஸ்தர்கள்
பயிற்சி சாலையின் 6-ஆவது ஆண்டு விழாவில் தலைமையேற்று “கிராம அதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும்'' என்ற பொருள்பற்றி ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 22.11.1936 4]... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஐவர் அறிக்கை வெறும் புரட்டு
தோழர்கள் ஜவஹர்லால், பட்டேல், ராஜேந்திர பிரசாத், அப்துல் கபூர்கான், ஐம்நாலால் பஜாஜ் ஆகிய ஐவர்கள் காங்கிரசுக்கு அபேட்சகர்கள். நிறுத்தும் விஷயத்தில் யோசனை கூறுகிறார்கள். அதாவது
இதற்கு முன் காங்கிரசுக்கு விரோதமாயிருந்தவர்கள் வரப்போகும் மாகாண அசெம்பளிக்கு அபேட்சகர்களாக சில காங்கிரஸ் கமிட்டி தெரிந்
தெடுத்திருக்கிறது''
என்று குறிப்பிட்டு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டு இனி அப்படிப்பட்டவர்களை தெரிந்தெடுக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இந்த எச்சரிக்கை மாகாண அசெம்பளிக்கு மாத்திரமாய் இருக்கும் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. ஏனெனில் அந்தப்படி குறிப்பிட்டிருக்
கிறார்கள். அப்படியே வைத்துக்கொண்ட போதிலும் டாக்டர் சுப்பராயன் போன்றவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் அசெம்பளிக்கு நிறுத்துவது இந்த அறிக்கைப்படி யோக்கியமாகுமா என்று கேட்க ஆசைப்படுகிறோம்.
ஏனெனில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் காங்கிரசுக்கு விரோதமாய் வேலை செய்தவர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர் என்பது மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் என்று காங்கிரஸ்காரர்கள். சமீப காலம் வரை கூப்பாடு போட்டு வைது கொண்டிருந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது அவரை காங்கிரசு சார்பாக நிறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்திருந்தால் அதை இந்த தலைவர்களும் ஒப்புக் கொள்வதானால் இந்த அறிக்கை யோக்கியமான அறிக்கை என்று சொல்லுவதா அல்லது பொதுஜனங்களை ஏமாற்றுவதற்காக அதாவது பொதுஜனங்கள் முன்னிலையில் தாங்கள் யோக்கியர்கள் என்று காட்டிக் கொள்ளுவதற்கு ஆக செய்யப்பட்ட பித்தலாட்ட அறிக்கை என்று சொல்லுவதா என்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் இதுவரை ஸ்தல ஸ்தாபனங்களுக்கு காங்கிரஸ் சார்பாய் நிறுத்தப்பட்ட அபேட்சகர்களில் 100-க்கு 90 பேர்கள் இந்த மாதிரி அதாவது காங்கிரசை வைதுகொண்டும்
குடி அரசு - 1936 (2), 422
அதற்கு நேர் விரோதமாய் வேலை செய்து கொண்டும் இருந்தவர்களே ஒழிய மற்றபடி காங்கிரசுக்கு உழைத்தவர்களோ காங்கிரஸ் கொள்கையில் இருந்தவர்களோ என்று யாரும் சொல்ல முடியாது
ஆகவே இதுவரை காங்கிரஸ் ஜெயித்தது என்று சொல்லப்பட்டு வந்த தெல்லாம் பொது ஜனங்களுக்கு கணக்கு காட்டவே ஒழிய மற்றபடி காங்கிரசின். உண்மையான பலத்தை காட்டுவதற்கு அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.
இனியும் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டுமானால் இந்த மாதிரி காரியத்தால் தான் காட்ட முடியுமே ஒழிய மற்றபடி உண்மையான காங்கிரஸ்
கொள்கைக்காரர்கள் என்பவர்களோ, காங்கிரஸ்காரர்கள் என்பவர்களோ 100க்கு 10 வீதம் கூட வெற்றிபெற முடியாது என்று சபதம் கூறுவோம்
குடி அரசு - கட்டுரை - 29.11.1936
423 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
செட்டி நாட்டில் சமதர்மம்
செட்டிநாட்டு வாலிபர்களுக்கு இன்று ஒரு புதிய ஞானம் உதயமாகி இருக்கிறது. அதாவது “பணக்காரர்கள் ஆணவம் அடக்கப்பட வேண்டும்” என்பது. இவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். என்னவென்றால்,
இன்று செட்டிநாட்டில் 96 கிராமத்தில் உள்ள செட்டியார் பிள்ளைகளுக்கும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை பணக்காரர்கள் என்பதல்லாமல் வேறு வகையில் யோக்கியதை உள்ள வாலிபர்கள் எத்தனை பேர்? ஏழை மக்களுக்கு அனுகூலமாய் இருந்து வாழ்க்கை நடத்துகிறவர்கள் எத்தனை பேர்? இவர்கள் இத்தனை பேரும் இன்று வாழ்வதும், உடமை வைத்திருப்பதும் எதனால்? எந்த மாதிரியான திருப்பணியில் என்பதேயாகும். பணக்காரர்களை வையும் பத்திரிகைக்காரர்களும் பணக்காரர்கள் வாயல் கடந்து பல்லைக் காட்டிப் பெற்றுவந்த பணங்களாலும் பிடித்துவந்த சந்தாதாரர்களாலும் நடைபெறும் பத்திராதிபர்களேயல்லாமல் தங்களது கொள்கை பலத்தால்-தாங்கள் எழுதுந் திறந்தால் செல்வாக்குப் பெற்று தன்
காலில் நிற்கும் தகுதியில் இருப்பவர்களா? என்று கேட்கின்றோம்
ராஜா சர். அண்ணாமலைக்கு பத்து கார் இருந்தால் தனக்கு ஒரு கார் இருப்பவர்களும் மற்றவருக்கு 10 லக்ஷமிருந்தால் தங்களுக்கு இரண்டு
லக்ஷம் ஒரு லக்ஷம் 50 ஆயிரம் இருப்பவர்களும் மேலவனைப் பார்த்து பொறாமைப்படும் கீழவனும் என்று சொல்லத் தக்கவர்கள் அல்லாமல் ஏழை எளியவர்கள் என்கின்ற கூட்டத்தில் சேர்ந்தவர்கள் யார்? எளிய வாழ்க்கையில் வாழ்பவர்கள் யார் என்று கேட்கின்றோம்
பணக்காரர்கள் ஒழிக்கப்பட வேண்டியது என்பதிலும் அவர்கள் ஒரு
காலத்தில் ஒழியத்தான் போகிறார்கள் என்பதிலும் நமக்கு மலைப்பு இல்லை. ஆனாலும் செட்டியார் பிள்ளைகள் “பணக் கொழுப்பு", “பணத்திமிர்” என்று பேசுவது தன்னை அறியாத்தனம் என்றுதான் சொல்ல ஆசைப்படுகிறோம். எப்படியோ ஒரு வழியில் தங்கள் தங்களையே கேவலப்படுத்திக்கொள்ளதக்கஒரு புது உணர்ச்சி அச்சமூகத்தில் தோன்றியதற்கு
நாம் மகிழ்ச்சியடைய வேண்டியதேயாகும்
குடி அரசு - 1936 (2), 424
ஆனால் இந்த உணர்ச்சி இனியும் எத்தனை நாள் பொறுத்து செட்டியார் பிள்ளைகளை மண்வெட்டி எடுக்கவும் கோடாலி எடுக்கவுமான.
சரீரப் பிரயாசை வேலை அதாவது உண்மை உழைப்பாளி நிலைக்கு கொண்டு வந்து விடுமோ, அல்லது எவரும் பொறாமை அதாவது பெரிய பணக்காரனைப் பார்த்து சின்னப் பணக்காரன் காய்ந்து தீய்ந்து விழுகும்
உணர்ச்சியாகி மங்கிவிடுமோ என்று பார்ப்போம்
குடி அரசு - கட்டுரை - 29.11.1936
4... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காலித்தனம்
காங்கிரசுக்கு கொள்கையற்று நாணையமற்று செலவுக்கு பணமும் அற்றுப்போன பின்பு அது தனது உயிர் வாழ்வுக்கு காலித்தனத்தையே குறையா பொக்கிஷமாய்க் கருதி இருக்கிறது என்பதை சமீப தேர்தல்களில் அவர்கள் நடந்துகொண்ட மாதிரிகளால் நன்றாய் உணர்ந்து கொண்டோம்.
இது விஷயமாய் சர்க்காருக்கும் முன்பு பல தடவைகளில் வலியுறுத்தி பத்திரிகைகளில் எழுதி இருக்கிறோம். சர்க்கார் சிறிதும் கவனித்ததாக தெரியவில்லை.
சமீபத்தில் மந்திரிகள் சென்ற இடங்களிலும் தேர்தல் கூட்டங்கள் நடந்த இடங்களிலும் தேர்தல்கள் நடந்த இடங்களிலும் காங்கிரசுக்காரர்கள் நடந்துகொண்ட காலித்தனங்கள் சர்க்காரார் அறிந்திருக்கமாட்டார்கள் என்று யாராலும் சொல்லி விட முடியாது
அதிகாரிகள் பெரும்பாலோர்கள் பார்ப்பனர்கள் ஆனதினாலும் குறிப்பாக போலீஸ் இலாக்கா பார்ப்பன ஆதிக்கமாய் இருந்து வருவதாலும் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமானதினாலும் காங்கிரசுக்காரருக்கு காலித்தனம் செய்ய வசதியும் தைரியமும் அதிகமாக இருந்து வருகிறது
என்று கருதவேண்டி இருக்கிறது ராமநாதபுரம் ஜில்லாவில் விருதுநகர் தேர்தலிலும் தேர்தல் கூட்டங்களிலும் காலிகள் செய்த அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்பதோடு எல்லாப் பொறுமைகளும் தீர்ந்து போக வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது
சிறுபையன்களைப் பிடித்துகொடிகளை கொடுத்து எதிர் அபேட்சகர்களை வையச் சொன்ன காட்சி மிகவும் சகிக்கக் கூடாதாகவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது
கூட்டங்களில் அவர்களைக் கொண்டு தொல்லையும் கலவரமும் செய்த காட்சியும் கடுமையான பொறுமை காட்டாமல் இருந்திருந்தால் கொலைகளே நடந்திருக்கும்படியான நிலையை உண்டாக்கின. இவற்றை சர்க்காரார் கவனியாமலிருப்பதன் இரகசியம் இன்னது என்று நமக்கு இன்னும் விளங்கவில்லை
குடி அரசு - 1936 (2), 426
ஆகையால் இனியாவது அரசாங்கம் சற்று கவலை கொண்டு கூட்டங்களிலும் தேர்தல்களிலும் காலித்தனம் நடைபெறாமல் இருப்பதற்கு ஏதாவது முயற்சி செய்வார்கள் என்று எண்ணுகின்றோம்
குடி அரசு - கட்டுரை - 29.11.1936
427 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கட்சித் துரோகம்
ஜஸ்டிஸ்கட்சியின் உப்பைத் தின்றவர்களில் பெரும்பாலோருக்கு நன்றி விசுவாசம் அறியும் இயந்திரம் அழிந்து போவதாகத் தெரிகிறது
கடலூர் ஜில்லாபோர்ட் பிரசிடெண்டாய் இருந்த தோழர் கீதாராம ரெட்டியார் அவர்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் ஜஸ்டிஸ் உப்பைத் தின்றே ஊறியதாகும். அவர் தனது தகுதிக்கு பலபாகம் மேற்பட்ட பயன்களை அக்கட்சி மூலம் அடைந்தார். கடசியாக மீ' ஆயிரக்கணக்கான சம்பளமுள்ள உத்தியோகமும் 4, 5 ங்களாக ஏன்? 6, 7 வருஷங்களாக அனுபவித்து வந்தார். அப்படிப்பட்டவர் உத்தியோகம் வாய்தா தீர்ந்த எட்டாம் நாளே ஜஸ்டிஸ்கட்சிக்கு எதிர்க்கட்சியில் சேர்ந்து பார்ப்பனர்களுக்கு அடிமையாகி பட்டத்தையும் விட துணிந்து ஜஸ்டிஸ்கட்சியை ஒழிக்க முயற்சித்து மடிகட்டி நிற்கிறார். காங்கிரசில் காங்கிரசுக்கு விரோதமாய் இருந்தவர்களை சேர்க்கக் கூடாது, அபேட்சகர்களாய் நிறுத்தக்கூடாது என்று “ஐவர்” அறிக்கை இருந்தும் நேற்றுவரை காங்கிரசை வைதுகொண்டு அதன் எதிர்க்கட்சியில் இருந்து வந்த ஒரு உத்தமரை - அதுவும் தான் உப்புத் தின்று வளர்ந்து வந்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு வந்த ஒரு “பெரியாரை” எப்படிச் சேர்த்துக்கொண்டார்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் யோக்கியதையும் மாஜி ராவ்பகதூர் ஜஸ்டிஸ் தூண்கள் யோக்கியதையும் விளங்கும்
குடி அரசு - கட்டுரை - 29.11.1936
குடி அரசு - 1936 (2), 428
சமதர்மம்
சமதர்மிகளுக்கு ஜஸ்டிஸ் கட்சியில் இடமுண்டா? என்பது தோன்ற தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் தமது 'நவசக்தி'” தலையங்கத்தில் குறிந்திருந்ததற்கு விடையாய் சென்றவாரக் “குடி அரசி”ல் “சமதர்மமும் முதலியாரும்'' என்னும் தலைப்பில் சில குறிப்புகள் எழுதி இருந்ததை வாசகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
இவ்வார “நவசக்தி'யில் தோழர் திரு.வி.க. முதலியார் அவர்கள் "சமதர்மிகளுக்கு ஒரு விண்ணப்பம்” என்னும் தலைப்பில் நீண்ட குறிப்புகள் பல தலையங்கமாகவே குறிப்பிட்டிருக்கிறார். அவற்றை வாசகர்களின். தெளிவுக்காக மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம்
அவற்றில் பல விஷயம் சமதர்மக்காரர்கள் என்பவர்கள் ஞாபகத்திலிருத்த வேண்டியவை உள்ளன எனினும் அவற்றில் தலையாயவை ₹-
“சமதர்மிகள் என்று தங்களைக் கருதிக்கொள்ளுவோர் சிலர் கனவு உலகில் வசிப்பவராகக் காணப்படுகிறார். பல்வேறு காலங்களில் பலவேறு காரணம் பற்றி பலவாறு எழுதிய நூலை மட்டும் படித்து இந்தியாவின். இயற்கை நிலை, மக்கள் நிலை முதலியவற்றை யோராது மனம் போனவாறு
சிலர் பேசுவதாலும், எழுதுவதாலும் இந்தியாவுக்கு எவ்வழியிலும் நல்ல பயன் விளையாது. இவர்கள் எழுத்தும் பேச்சும் உண்மை சமதர்மிகளுக்கு இடருஞ் செய்யும். புத்தக உலகம் வேறு; இயற்கை உலகம் வேறு இவ்வுண்மையை இளஞ் சமதர்மிகள் உணர்ந்து நடப்பது ஒழுங்கு"
“நமது நாட்டுக்குரிய சமதர்மம். ஜாதி, மதம், நிறம், மொழி, நாடு முதலிய வேற்றுமைகளைக் களைவது. பொருளாதார
சமதர்மத்தை அறிவுறுத்துவது “இளஞ் சமதர்மிகள் கால தேச வர்த்தமான நிலையைக் கருதிச் சேவை செய்வார்களாக'"'
என்பவைகளாகும். மற்றும் பலவும் கவனிக்கத் தக்கவைகளே.
இந்தியாவில் உழைப்பாளி சுக போகி என்கின்ற இரண்டு வகுப்புகள் இருக்கின்றன. அவையே பெரிதும் ஏழை பணக்காரன் என்பதாகப் பரிணமிக்கச் செய்கின்றன.
4299 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
உண்மையான சமதர்மத்துக்கு ஒருவன் உழைப்பதானால் அவன் முதலில் உழைக்கும் வகுப்பு ஒன்று, (உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு) சுக போகியாய் இருக்கும் வகுப்பு ஒன்று என்று இருப்பதை ஒழிக்க வேண்டியதேயாகும். அடியோடு கல்லி எறிய வேண்டியதேயாகும். இதைச் செய்யும் வரையில் எவ்வித பொருளாதார சமதர்மத் திட்டமும் அரை வினாடி அளவும் நிலைக்காது என்பதை சமதர்மம் பேசுவோர் - நினைப்போர்- ஆசைப்படுவோர் மனதிலிருத்த வேண்டும்
பணக்காரனை மாத்திரம் குறைகூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும்.
ஏன் அப்படிச் சொல்லுகிறோம் என்றால் இந்திய சமூக அமைப்பானது பிறவியின் காரணமாகவே ஏழையையும் பணக்காரனையும் அல்லது உழைப்பாளியையும் சகபோகியையும் உண்டாக்கி இருக்கிறது
உதாரணமாக இன்றைய கக்போகிகள் எல்லாம் மேல் ஜாதிக்காரர்களாகவும் பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் எல்லாம் கீழ் ஜாதிக் காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.
அதுபோலவே பணக்காரர்களும் பெரிதும் மேல் ஜாதிக்காரர்களாகவும், ஏழைகள் பெரிதும் கீழ் ஜாதிக்காரர்களாகவும் ஜன சங்கைப் பொதுவில் இருப்பதைக் காணலாம்.
இந்தப்படியாக இருப்பதற்கு முக்கிய காரணமாய் இருக்கும் பிறவி ஜாதிப் பாகுப்பாட்டை உடைத்து நொறுக்காமல் எப்படி சமதர்மத்தை - பொருளாதார சமதர்மத்தைத்தான் ஆகட்டும் ஏற்படுத்தவோ நிலைக்கச் செய்யவோ முடியும் என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்
இன்றைய தினம் ஏதோ ஒரு அரசன் மூலமோ அல்லது ஒரு சர்வாதிகாரியின் மூலமோ இந்தியாவில் பொருளாதார சமதர்மப் பிரகடனம் ஏற்பட்டு விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அந்தப்படியே கணக்குப் பார்த்து இந்திய மக்கள் எல்லோருக்கும் இந்தியப் பொருள்களை
பங்கிட்டுக் கொடுத்து விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம்
பிறகு நடப்பதென்ன?
என்பதை யோசித்தால் என்ன விளங்கும்? மறுபடியும் பழய நிலையே ஏற்படுவதற்கு ஆன காரியங்கள் நிகழ்ந்து கொண்டே போய் ஒரு சில வருடங்களுக்குள் பொருளாதார உயர்வு தாழ்வுகள் தானாகவே பழயபடி ஏற்பட்டு விடும் என்பதில் சிறிதும் ஆக்ஷபணை இருக்காது
ஏனெனில் பிரகடனத்தால் பொருளாதார சமதர்மம் தான் செய்யப்படுமே ஒழிய அதுவும் தற்கால சாந்தியாய் அல்லாமல் சமூக சமுதாய சமதர்மம்
குடி அரசு - 1936 (2), 430
ஏற்பட இடமில்லை. அது பிறவியின் பேராலேயே தளுங்கிவிடும். அது தனது காரியத்தை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மத்திலும் செய்து கொண்டுதான் இருக்கும்
அதுவும் மதத்துக்கும் ஜாதிக்கும் பெயர்போன இந்திய மக்களுக்குள் - கல்வி அறிவற்று மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய பாமர மக்களுக்குள் பிறவி பேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கிவிடாது. உதாரணமாக நாட்டுக் கோட்டையார்கள் 10 லக்ஷக்கணக்கான பணம் சேகரித்தும் அவர்களது சேகரம் பெரிதும் கோவில் கட்டவும் சடங்கு செய்யவும் “மேல்” ஜாதியாகக் காட்டிக் கொள்வதிலுமே பெரும் பாகம் பாழாகி கூடிய சீக்கிரம் சாதாரண நிலைக்கு வரத்தக்க வண்ணம் சரிந்து கொண்டிருக்கிறதைப் பார்க்கிறோம்
மற்றும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் பலர் கீழ் ஜாதிக்காரர்கள். என்பவர்கள் எவ்வளவு செல்வம் தேடியபோதிலும் ஜாதிமத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சருக்கி விழுந்துகொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் சமூகத்தில் தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள். செல்வவான்களாய் கோடீஸ்வரர்களாய் இருந்தும் கீழ்ஜாதிக்காரர்களாய்தான் இருந்து வருகிறார்கள்.
சமதர்ம வாசனையே சிறிது கூட இல்லாதவர்களும் சமதர்மத்துக்கு பிறவி எதிரிகளாய் இருப்பவர்களுமான பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும், எவ்வளவு பாப்பர்களாகவும், எவ்வளவுசோம்பேறிகளாகவும், உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையை விட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர்களாகவும்
இருந்து வருகிறார்கள். இதனாலேயே பார்ப்பனர்கள் சமுதாய சமதர்மக்காரரைக் கண்டால். காய்ந்து விழுவதும் சமூதாய சமதர்ம இயக்கங்களை ஒழிக்க சூழ்ச்சி செய்வதுமாய் இருப்பதோடு பொருளாதார சமதர்மக்காரர்கள் என்பவர்களை வரவேற்பது போலவும் பொருளாதார சமதர்ம ஸ்தாபனங்களை ஆதரிப்பவர்கள் போலவும் காட்டிக் கொள்ளுகிறார்கள்.
ஏனெனில் வெறும் பொருளாதார சமதர்மம் பார்ப்பனனை ஒன்றும் செய்து விடாது; மேலும் பார்ப்பானுக்கு பொருளாதார சமதர்மம் அனுகூல மானதேயாகும். எப்படியெனில் இப்போது அவனால் பிச்சை வாங்கப்படும் நபர்கள் ஒரு பங்காய் இருந்தால் பொருளாதார சமதர்மத்தில் பார்ப்பானுக்கு பிச்சை கொடுக்கும் நபர்கள் 10 பங்காக ஆகிவிடுவார்கள். அப்போது அவனுக்கு (பார்ப்பானுக்கு) சமதர்மத்தில் பிரித்துக் கொடுக்கும் சொத்துக்கள் தவிர மற்றும் ஜாதி மத சடங்குகள் காரணமாக அதிகப் பிச்சையும் சேர்ந்து 43... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஒவ்வொரு பார்ப்பனனும் ஒவ்வொருசங்கராச்சாரி, மடாதிபதி ஆக சுலபத்தில் மார்க்கம் ஏற்பட்டு விடும். இந்த நிலை மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலை அதாவது இன்றைய நிலையை உண்டாக்கி விடும்.
இதனால் தான் தோழர் முதலியார் அவர்களும் “நமது நாட்டுக்குரிய சமதர்மம், ஜாதி மதம் வேற்றுமைகளைக் களைவது" என்று குறித்திருக்கிறார்
என்று கருதுகிறோம்
இந்தியாவில் ஜாதியும் மதமும் சிறப்பாக ஜாதி ஒரு கடுகளவு மீத்தப்பட்டாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
இரண்டையும் ஏககாலத்தில் ஏன் செய்யக் கூடாது? என்பது சிலருக்கு வினாவாய் இருக்கலாம். இரண்டையும் ஏககாலத்தில் செய்வது என்றால்
நாடும் தகுதி இல்லை, அரசியலும் தகுதி இல்லை என்பதோடு அவை இரண்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டால் எதிர்ப்புக்கு பலம் அதிகமாகிவிடும் என்பதோடு செய்பவர்களுக்கும் சக்தி குறைந்துவிடும் என்று கூறுவோம். நமது அரசியல் ஜாதி மதத்தையே பெரிதும் ஆதாரமாய்க் கொண்டிருக்கிறது பொருள் இரண்டாவதேயாகும்
மற்றும் சமுதாய சமதர்மத்துக்கு அதாவது ஜாதிகளை ஒழிப்பதற்கு
என்றால் பணக்காரன் சேருவான். ஏனெனில் எவ்வளவு பணக்காரனாய் இருந்தாலும் 100க்கு 99 பேர் "கீழ் ஜாதிக்காரர் களாகவே இன்று இருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் சேருவார்கள். பணக்காரனை ஒழிக்க பார்ப்பான் சேர மாட்டான். சேருவதாய் இருந்தாலும் ஜாதி இருப்பதன் பலனாக மறுபடியும் பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான்.
ஆதலால் உண்மையான நாணையமான சமதர்மக்காரர்கள் இன்று பணக்காரனுடன் போராடிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, பார்ப்பானை ஒழிக்கும் காரியத்தில் ஈடுபட்டு பார்ப்பனீயம் ஒழிக்கப்பட முயற்சிக்க வேண்டியது முதற் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்
மற்றபடி தோழர் ஜவஹர்லால் பேரால் நடைபெறும் சமதர்மமாகிய அதாவது ''சமதர்மத்துக்கு ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும், அதற்கு இந்திய ஆட்சியில் இருந்து இங்கிலீஷ்காரர் விரட்டி அடிக்கப்பட வேண்டும்” என்று கூறுவதாகிய சமதர்மம் வெறும் வாய்ப்பேச்சு சமதர்மம்
என்றுதான் கூறுவோம். ஏனெனில் இன்றைய நிலையில் அது ஒரு நாளும் முடியாத காரியமாகும். அதிலும் இன்றைய காங்கிரஸ்காரர்களால் அந்நிய ஆட்சி இந்தியாவில் இருந்து ஒழிக்கப்படும் என்பது எப்போதும் முடியவே முடியாத காரியம். இதை ஸ்தம்பத்தில் எழுதி நாட்டி வைக்காலம்
குடி அரசு - 1936 (2), 432.
அந்நிய ஆட்சி ஒழிந்த நாடுகள் நிலையை அறிவதற்கு அபிசீனியா, ஸ்பெயின் முதலிய நாடுகளின் சம்பவங்களே போதுமானது. நமது நாடு 1008 ஜாதி கொண்டது. நமது சேனா பலத்துக்கோ 100 க்கணக்கான சமையல் அறைகள் வேண்டும். வீம்பு பேசலாம், போலி வீரம் பேசலாம், காரியத்தில் சாத்தியம் பேசுவதே அறிவுடைமையாகும். ஐரோப்பா நாடுகள் சுதந்திர நாடுகள், சுயராஜ்ய நாடுகள், குடி அரசு நாடுகள் ஆகியவைகளாய் இருந்தும் ஒவ்வொரு நிமிஷமும் திகீர் திகீர் என்று அந்நிய ராஜ்ய படையெடுப்புக்கு
பயந்து நடுங்குகின்றன. இந்தியாவோ பிறவி அடிமை நாடு; 100-க்கு 97 மக்களை அடிமை யாகவும் கீழ் மக்களாகவும் பிறவியில் கொண்ட நாடு; இந்து முஸ்லீம் போருக்கு சதா சர்வகாலம் நெருப்பும் - பஞ்சும் போல் ஜாக்கிரதையாயிருக்க வேண்டிய நாடு. ஐரோப்பியர்கள் இந்தியாவை விட்டு விலகுவதாய்
இருந்தால் இந்தியா முஸ்லீம் நாடு ஆவதற்கோ இந்துக்கள் நாடு ஆவதற்கோ எல்லோரும் சம்மதிக்க வேண்டும். அப்படி இல்லையானால் இரண்டு சமூகத்திய பாமர மக்களும் அவர்களது பெண்களும் சின்னாபின்னப் படுவதற்கு தயாராய் இருக்கவேண்டும். பம்பாயைப் பார்க்கலாம், லாகூரைப் பார்க்கலாம், மலையாளத்தைப் பார்க்கலாம், இன்னம் பல ஊர்களைப் பார்க்கலாம். இதற்கு என்ன காப்பு காங்கிரஸ் செய்திருக்கிறது?
ஒரு உபயத்துல்லா சாயபும், ஒரு ஷாபி முகமது சாயபும், ஒரு தாவுத்ஷா சாயபும் முஸ்லீம்களுக்கு பிரதிநிதியாய் உறுதி கொடுத்தால் போதுமா? ஒரு குப்புசாமியும், ஒரு கிருஷ்ணசாமி பாரதியும் ஒரு சுப்பையாவும் இந்துக்களுக்கு உறுதி கொடுத்தால் போதுமா? நமது அஹிம்சை “மகாத்மாக்கள்” காந்தியும் கபூர்கான் சாயபும் கத்தி முன்னிலையிலும் குண்டர்கள் முன்னிலையிலும் எவ்வளவு நேரம் இருப்பார்கள்? ரத்தம் சிந்துவதை காண சகிக்காமல் தபசுக்கு போய்விட மாட்டார்களா? போகவிட்டால்தான் என்ன? இவர்கள் பேச்சை எவ்வளவு பேர்கள் கேட்பார்கள்? சத்தியமூர்த்தியாரும், ஜவஹர்லாலும் எவ்வளவு செல்வாக் குடையவர்கள் என்பது நாம் அறியாததா? அல்லது எவ்வளவு வீரர்கள் என்பது நாம் அறியாததா? பண்டிதரின் தென்னாட்டு சுற்றுப்பிரயாண: நிகழ்ச்சிக் குறிப்பை நேராக தைரியமாக வெளியிட முடியாமல் திருட்டுத்தனமாய் அதுவும் ஜாமம் ஜாமமாய் சுற்றிவிட்டு வந்தவர்கள் என்பது நாம் அறியாததா? கலவரம் ஏற்பட்டால் தாழ்ந்த ஜாதியார் என்பவர்களை மேல் ஜாதியார் என்பவர்கள் கள்ளு போதையேற்றி பலி கொடுத்துப் பார்ப்பார்கள்; காரியம் முடியாவிட்டால் காட்டிக்கொடுத்து விட்டு எதிரிகளின் காலுக்குள் நுழைந்து விடுவார்கள். இவைகள் தானே நமது இந்தியாவின் பண்டைப் பெருமையாய் விளங்குகின்றன.
இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு நன்மை வேண்டுமென்று கருதுகிறவன் இந்தியன் என்கின்ற நிலையில் இந்திய நிலை என்பதை
433 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்கவேண்டுமே ஒழிய மேல்நாட்டைப் பற்றி படித்து விட்டு புஸ்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையேயாகும் மேல்நாட்டு சமுதாய நிலைபோல் நம்நாட்டு சமுதாய நிலை ஆகும்போது மேல்நாட்டு முறைகளை கையாளுவது பொருத்தமுடையதாகும் அப்படிக்கில்லாமல் “குருடன் ராஜ விழி விழிக்கப் பார்ப்பது” என்பதுபோல நாம் இந்திய பறையன், சக்கிலி, பிராமணன் சூத்திரன் என்கின்றவர்கள் உள்ள ஊரில் பொருளாதார சமதர்மம், மார்க்கிசம், லெனினிசம் என்று பேசுவது வெறும் வேஷமும் நேரக்கேடுமேயாகும் என்று கூறுவோம்
ஆதலால் இன்று சமதர்ம வாலிபர்கள் தயவுசெய்து கொஞ்ச நாளைக்காவது பணக்காரனை வைவதை மறந்துவிட்டு ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டு சமுதாய சமதர்மத்தை உண்டாக்கவும் சமுதாயப் புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக. எதிர்பாராத சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம் பொருளாதாரத்தைப் பற்றியும் யோசிப்போமாக
குடி அரசு - தலையங்கம் - 29.11.1936
குடி அரசு - 1936 (2), 434
பட்டேல்
தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) தோழர் பட்டேல் அவர்களை அழைத்து வந்து அவர் பேரால் பணம் வசூலித்து அதைத் தாங்கள் கைப்பற்றி காலிகளுக்கும் கூலிகளுக்கும் கொடுத்து காலித்தனம் செய்வதின் மூலம் தேர்தலில் வெற்றி பெறவே தோழர் பட்டேலை அழைத்து வரப் போகிறார்கள்.
தமிழ் மக்கள் இக்காரியம் கைகூடாதபடி செய்யக் கடமைப் பட்டவர்களாவார்கள்.
ஆதலால் ஊர்கள் தோறும் பட்டேல் பகிஷ்காரக் கமிட்டி ஏற்படுத்தி அதன்மூலம் அவரது வரவை தமிழ் மக்கள் பஹிஷ்கரிக்கிறார்கள் என்று காட்டவேண்டியதுடன் மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்காமலும் இருக்கும்படி
பார்த்துக் கொள்ள வேண்டியதும் நியாயமாகும்.
கமிட்டி விபரம் தெரிந்தவுடன் துண்டுப் பிரசுரங்கள் முதலியன அனுப்பிக் கொடுக்கப்படும்
குடி அரசு - வேண்டுகோள் - 29.11.1936
439... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பொப்பிலியில் என்ன நடந்தது?
பொப்பிலியில் தோழர் ஜவஹர்லால் வந்தபோது அங்கு பொப்பிலி அரசரின் ஆட்களால் கலவரம் நடந்ததாக பார்ப்பனப் பதர்கள் கட்டுக் கட்டிவிட்டு நாடு எங்கும்பரப்பி விட்டார்கள். அதை மறுத்து வந்த செய்திகளுக்கு சரியான இடம் கொடுக்காமல் அற்பத்தனமாயும் அயோக்கியத்தனமாயும் சில பத்திரிக்கைகாரர்கள் நடந்து கொண்டார்கள் என்றாலும் நாம் சென்ற வாரம் கூறியது போல் அங்கு காங்கிரஸ்காரர்தான் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது பின்வந்த சேதியால் விளங்கி விட்டது.
அதாவது பொப்பிலியில் அன்று ஏதோ ஒரு விசேஷநாள் ஆனதால் வழக்கம்போல் உற்சவம் நடைபெற்று விக்கிரக ஊர்வலம் நடந்திருக்கிறது. அதற்கு ஆகவே யானை, கொடி, தப்பட்டை முதலிய ஊர்வலச் சின்னங்கள் விக்கிரகத்துடன் ஊர்வலம் வந்திருக்கின்றன.
அது சமயத்தில் பண்டிதர் கூட்டமும் இருந்ததால் - அதுவும் ஊர்வலம் வரும் வழியில் இருந்ததால் பண்டிதரின் பிரசங்கத்துக்காக எவ்வளவோ நேரம் ஊர்வலம் காத்திருந்தும் அதை காங்கிரஸ்காரர்கள். கண்ணியம் செய்யாமல் போக்கிரித்தனமாக நடந்து கொண்டதோடு பத்திரிக்கைகளும் கூலிகளும் தங்களுக்கு அனுகூலமாய் இருக்கிறார்கள். என்கின்ற மமதையால் கண்டபடி பொய்யாகவும் அயோக்கியத்தனமாகவும் கதை கட்டி விட்டார்கள்.
இதிலிருந்தாவது காங்கிரசின் யோக்கியதையையும் அவர்கள் பத்திரிக்கைகளின் யோக்கியதைகளையும் பொது மக்கள் உணர்ந்து கொள்வார்களாக
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.11.1936
குடி அரசு - 1936 (2), 436
சம்பளக் குறைப்பு
சென்னைக் கார்ப்பரேஷனில் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்க திட்டம் கொண்டுவந்து காங்கிரஸ்காரர்கள் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிய வருகிறது
அவர்கள் சம்பளம் குறைக்க கருதி இருக்கும் உத்தியோகங்கள் ஐந்திலும் இப்பொழுது பார்ப்பனரல்லாதாரே இருந்து வருகிறார்கள். சம்பளம் குறைந்தால் பார்ப்பனரல்லாதார் தானே பாதிக்கப்படுவார்கள் என்கின்ற தைரியத்தின் மீதே காங்கிரஸ்காரர்கள் சம்பளம் குறைத்திருக்கிறார்கள் என்றாலும் எந்தக் காரணத்தை முன்னிட்டானாலும் அரசாங்கத்தார் அந்தச் சம்பளக் குறைப்பை ஏற்று காங்கிரஸ்காரர் குறிப்பிட்டதுபோல் குறைத்து விடுவதே புத்திசாலித்தனமானது என்று கூறுவோம்
இந்தியாவின் இன்றைய வறுமைப் பிணி, கல்வியில்லாக் குறைப்பிணி, மற்றும் பல பிணிகள் என்பவற்றிற்கு மூலகாரணம் பார்ப்பனீயமே என்றாலும் இந்த சம்பளக் கொள்ளையும் அதற்குச் சமமானதென்றே கூறுவோம்
சம்பளம் குறைந்தால் ஒழுக்கமும் நீதியும் சம நிலையும் ஏற்பட வசதி உண்டு என்பது நமது அபிப்பிராயம்.
அன்றியும் இன்றைய சம்பள முறை கூட்டுக் கொள்ளை. அதுவும் சட்டபூர்வமான கூட்டுக் கொள்ளை என்று கூறுவோம்.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர், தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் திட்டத்தை ஏற்றுக்கொண்டதற்கு அறிகுறியாக இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் சம்பளங்களைக் குறைக்க சம்மதங் கொடுக்கும்படி வேண்டுகிறோம். கவர்னர் பிரபு அதை அனுமதிக்க மறுத்தால் அதையும் வெளியிட்டு விட விரும்புகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.11.1936
437 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கவர்னர் வரவேற்பும்
திருநெல்வேலி ஜில்லா போர்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தடபுடல்
மூர்த்திக்கு ஓர் சட்டம் - தனவாய்க்கோர் சட்டமா?
காங்கிரசிலும் மனுநீதியா?
சிதம்பரப் பார்ப்பான் செய்தால் கப்சிப் திருநெல்லை முதலியார் செய்தால் கடபடாவா?
இந்த ஏமாற்று இன்னும் எத்தனை நாளைக்கு?
திருநெல்லைக்கு கவர்னர் இம்மாதம் 16-ந் தேதி வந்தார். திருநெல்வேலி ஜில்லா போர்டு, கவர்னருக்கு வரவேற்பு பத்திரம் வாசிக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தது. போர்டின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றி வைப்பது போல இத்தீர்மானத்தையும் நிறைவேற்றி வைக்க வேணடியது பொறுப்புள்ள தலைவரின் கடமை. அதில் அறிவுள்ளவருக்குள், சதி ஆலோசனை யில்லாதாருக்குள் அபிப்பிராய பேதமிருக்க முடியாது.
அதுவே சரியான வழியென்று நமது மாபெருந் தலைவரும், பாரத மாதாவின் வீர புத்திரரும், சுயநலமின்மைக்கு ஓர் அறிகுறியாய் வாழ்க்கை நடத்தியவரும், சுதந்திர போராட்டத்திலே உயிரிழந்தவரும், சத்தியமூர்த்தி அய்யர் ஜெயில் வாழ்விற்குப் பயந்து திருவல்லிக்கேணியில் ஒளிந்து
கிடந்த காலையில் சிறைச்சாலை சென்றவருமாகிய காலஞ்சென்ற தோழர்
வி. ஜே. பட்டேலே காண்பித்திருக்கிறார். அவர் அசம்பிளிக்கு காங்கிரசின். பேரால் தெரிந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு உபதலைவராகவும் இருந்தார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவாலேயே, சர்க்கார் போட்டிக்கும் எதிராய் அசம்பிளி தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலானவுடன் அவர் என்ன சொன்னார்? நான் இனிமேல் ஓர் கட்சியையும் சார்ந்தவனல்லேன். எக்கட்சி கட்டுப்பாட்டுக்கும் அடங்கியவனல்லேன் என்றார். சொன்னதோடு நின்றாரில்லை; செய்கையிலும் காட்டினார். அசம்பிளியில் வைசிராய் பேச வரும்பொழுது காங்கிரசார் வெளியேற வேண்டும் என்பது காங்கிரஸ்
விதி. அப்படியே மோதிலால் நேரும் மற்றவர்களும் வெளியேறுவார்கள். ஆனால் பட்டேல் அசம்பளியில் இருந்து வைசிராயை மரியாதையாய்
குடி அரசு - 1936 (2), 438
வரவேற்பார். அம்மட்டோ! சில வருடங்களுக்குப் பின் காங்கிரஸ், சட்டசபைகளில் யாதொரு பயனுமில்லை, காங்கிரஸார் எல்லோரும் வெளியேறவேண்டும் என்று தீர்மானித்தது. எல்லாரும் வெளியேறினார்கள். சட்ட சபையிலிருப்பது வீணென்று தீர்மானித்த பிறகும் பட்டேல் அசம்பிளி தலைவராகவேயிருந்தார். ஏன்? அதுதான் தலைவர் பதவியேற்ற எவரும் நடக்கவேண்டிய முறை. அதைச் சரியென்று மகாத்மா காந்தி, நேரு போன்ற மாபெரும் தலைவர்களும் ஒப்புக்கொண்டார்கள். பட்டேலாவது, நேருவாவது நமது அய்யரை விட தேசபக்தியிலும், காங்கிரஸ் பக்தியிலும் குறைந்தவர்களா? இல்லையே!
ஆனால், மகா மேதாவியென்று தன்னைத்தானே மதித்த சத்தியமூர்த்தி அய்யரைத் தலைவராகக் கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஜில்லா போர்டு தலைவர் வரவேற்பு பத்திரம் வாசித்துக்கொடுத்தல் கூடாது என்று ஒரு பெரிய உத்திரவு போட்டுவிட்டது; அதற்கு கடுமையான தண்டனையும் விதித்து விட்டது. என்ன? “பொது வாழ்வில் மூக்கறுபட்டுப்போமாம்" மூக்கறுக்கும் தொழிலில் வேலையில்லா மூர்த்தி யிறங்கிவிட்டார். அதற்குத் “தினமணி” பத்திராதிபரும் கத்திப் பெட்டி தூக்கி பின் தொடர்ந்து விட்டார். “நண்பர்களே மூக்கு ஜாக்கிரதை ஜாக்கிரதை போனால் தலை முடியுடனாவது நிற்கட்டும்
இப்படிச் செய்வதற்கு அய்யரும் அவரது கூலிகளும், தோழர் பட்டேலை விட, மகாத்மா காந்தியை விட, பண்டித மோதிலால் நேருவை விட எதில் உயர்ந்தவர்கள்? தேபக்தியிலா, தேசத் தொண்டிலா, தேசத்திற்காக பட்ட கஷ்டத்திலா, ராஜீய ஞானத்திலா, யோக்கியதையிலா, எதில்? ஒன்றிலு மில்லையே? அல்லது இவர்கள் சொல்வது தான் காங்கிரஸ் விதியா? அந்த விதிதான் இதுவரை கைப்பற்றப்பட்டு வந்திருக்கிறதா? காங்கிரஸ் விதிகளை மீறினவர்களுக்கெல்லாம் மூக்கறுத்தாய்விட்டதா? எத்தனை பேருக்கு இன்று மூக்கில்லை? இவைகளைக் கவனிப்போம்.
இதுவரையும் "தாலி அறுத்த மூர்த்தியா"யிராந்து இன்று மூக்கறுக்கும் மூர்த்தியாய் மாறின சத்தியமூர்த்தி அய்யரின் யோக்கியதை தான் என்ன? காங்கிரசின் விதிகளை விட காங்கிரசின் கொள்கை தான் முக்கியமென்று
ராஜீயக் குழந்தைகளும் அறியும், காங்கிரசின் கொள்கை (Creed) பூர்ண
சுதந்திரம் பெறுதல் என்பது காங்கிரசில் நாலு அணாக் கொடுத்து கையெழுத்துப் போட்ட ஒவ்வொருவருக்கும் தெரியும். விதிகள் என்று சொல்லப்படுகிறவைகளை மீறுகிறவர்களுக்கு மூக்கறுபட வேண்டுமானால், கொள்கையையே இல்லையென்று சொல்லுகிறவர்களுக்கு பொது வாழ்வில் மரண தண்டனை யல்லவோ இடவேண்டும்? அதைத்தானே செய்தார் சத்தியமூர்த்தி ஆனைமலையில். ஆனைமலை ஐரோப்பிய சங்கத்தில் காங்கிரசின் நோக்கம் குடியேற்ற அந்தஸ்துதான், பூரண சுதந்திரமில்லை யென்று முக்காலும் மூன்று முறை ஆணையிட்டுக்கொடுத்தாரே, இதை விட
4399 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரசுக்கு என்ன துரோகம் வேண்டும்? கொள்கையை ஒப்புக்கொள்ளாத ஒருவன் காங்கிரசில் நாலணா மெம்பருக்கும் லாயக்கு இல்லையே? காட்டிக்கொடுக்கும் இவருக்கு இன்னும் தலைவர் பதவியா? இவர் மூக்கு அறுபடவில்லையே! மூக்கில் கண்ணாடியும் துலங்குகிறதே!
கவர்னருக்கு, ஜில்லா போர்டின் தீர்மானத்தை மதித்து வரவேற்பு வாசிப்பது காங்கிரசுக்கு கேவலமானால், கவர்னர் வரும்போது சட்ட சபையிலிருப்பது கேவலமானால், சுயநலத்திற்காக, மந்திரி பதவி கிடைக்காதாவென்ற ஏக்கத்திற்காக, ஒரு காங்கிரஸ் வாதி அதுவும் ஓர் மாகாணத் தலைவர் பல்லெல்லாம் தெரியக்காட்டி மிகப் பணிவுடன் வேண்டி அதே கவர்னரை பேட்டிக் காணப்போவது காங்கிரசிற்கு கேவலமல்லவா? கவர்னரைப் பேட்டி காணும் விதம் தெரியுமா? அவருடைய காரியதரிசிக்கு “ஐயா தயைகூர்ந்து எனக்கு கவர்னரிடம் உத்திரவு வாங்கிக்கொடுங்கள்” என்று எழுத வேண்டும். இந்த நாள் இத்தனை மணிக்கு பேட்டி கொடுக்க கவர்னர் இசைந்துள்ளார் என்று காரியதரிசியிடமிருந்து பதில் வரும், அன்று அந்நேரத்திற்கு முன்பாகவே கவர்னர் மாளிகையில் காத்து நிற்க வேண்டும். இது காங்கிரசுக்கும், தலைவருக்கும் மரியாதைபோலும்! ஆனால் அது சுயநலத்திற்கு அல்லவா? அதுவும் பார்ப்பனரின் சுயநலத்திற்கல்லவா? ஆகையால் காங்கிரஸ் மனுநீதியின்படி சரியாகத்தான் இருக்க வேண்டும் போலும்! இத்தோடு நின்றாரா? “மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்" என்ற பொன்மொழியையும் மறந்து காங்கிரசின் எதிரியாகிய பொப்பிலி ராஜாவையும் பேட்டி கண்டாராமே! அதை அவரே சொல்லிக்கொள்ளுகிறாரே!
மூர்த்தி, யாரையும் பேட்டி காணலாம்; எதுவும் செய்யலாம். தளவாய் மாத்திரம் வரவேற்பு பத்திரம் வாசிக்கக்கூடாதா?
சத்தியமூர்த்தி அய்யர் சிம்லாவிலும் டெல்லியிலும் காலை சந்தியா வந்தனம் செய்ததும் கவர்ண்மெண்டு மெம்பர்களை தரிசிக்கப்போவது தானே வழக்கமாம்; எல்லாரும் சொல்லுகிறார்களே! ஆனால் அவர் இல்லை என்று சொல்லலாம்; நாம் நம்பத் தயாரில்லை. ஏனெனில் இவருக்கு அசத்தியமூர்த்தி அய்யர் என்ற பட்டம் கிடைத்துவிட்டது. "சத்தியமூர்த்தி பொய்யன் இல்லையென்று கோர்ட்டில் நடவடிக்கை எடுக்கட்டும்” என்று “ஜஸ்டிஸ்” பத்திரிகை அறைகூவி அழைத்ததே, இதுவரை ஒன்றும் செய்யவில்லையே! அது காணாதென்று சுதந்திரத்தாகம் ததும்பும் பத்திரிகையாகிய “சுதந்தரசங்கி”ன் பத்திராபதிபரும் தேசிய வீரருமாகிய சங்கு கணேசன் அவர்கள் நாலுநாட்களுக்கு முன்பாக “இச் சிறு சங்கதிக்கும் பொய்யா" என்று கேட்டார்களே! பதிலில்லையே! ஆகையால் இல்லை யென்று ரூபிக்க வேண்டுமானால் ஒரு கவர்ன்மெண்ட் மெம்பராவது சர்டிபிக்கட் கொடுக்கவேண்டும்
சரி, யோக்கியதை நேர்மை என்பதே தெரியாத தலைவர் தான் போகட்டும், மற்றவர்களும், மற்ற விதிகளும் என்னாயிற்று?
குடி அரசு - 1936 (2), 440
காரைக்குடியில் பட்டதாரிகளுக்கு காங்கிரசில் இடமில்லை என்று தீர்மானித்த பிறகு, திவான் பகதூர் ரத்திசைபாபதி முதலியாருக்கும், ராவ்சாகிப் கச்சாபகேச முதலியாருக்கும் காங்கிரசில் என்ன வேலை? சத்தியமூர்த்தி அய்யருக்கு மந்திரி பதவிக்கு ஓட்டுக்கொடுப்பதற்காகவா?
சித்தூர் ஜில்லா போர்டிற்கு காங்கிரஸ்காரர் ஓட்டு காணாமல் கடவுளும் ஓட்டுக்கொடுத்து தலைவரான சி.ஆர். ரெட்டியார், அதற்கு அடுத்த வாரம், மகாத்மா படமொன்று போர்டில் காங்கிரஸ் மெம்பர்கள் சொந்தச் செலவில் வைப்பது என்று கொண்டுவந்த தீர்மானத்தை அனுமதிக்க மாட்டேனென்றாரே. ஆக்டிங் கவர்னருக்கு ஏகோப உபசாரம் செய்தாரே என்ன ஆயிற்று? அவர். சற்று அறிவுள்ளோர் அடங்கிய ஆந்திர காங்கிரசைச் சார்ந்தவர், போகட்டும்.
தமிழ்நாட்டில் மூக்கறுபட்டோர் கணக்கென்ன? சென்னை கார்ப்பரேஷன் மேயர் ஹமீத்கான், ரயில்வே ஸ்டேஷன்களில் போலீஸ் கமிஷனருக்கு முன்னதாகவே போய் நின்று கவர்னர்களை வரவேற்பதுவும் ரயிலில் ஏற்றுவதுமாயிருந்தாரே என்ன ஆயிற்று? காங்கிரசின் பேரால் காங்கிரசின் வெற்றி என்ற முழக்கத்துடன் கவுன்சிலரானது தான் கைமேல் கிடைத்த பலன்.
தென்னாற்காடு ஜில்லாபோர்டு தலைவர் சீமான் ரெட்டியார், “ஜில்லா போர்டு நிர்வாகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் தலையிடுவது அதிகப் பிரசங்கித்தனம் என்றாரே” அவர் மூக்கு இருக்கிறதா, போய்விட்டதா?
சிதம்பரத்திலே திருச்சபையிலே நடராஜப்பெருமான் முன் தவமிருந்து சத்தியமூர்த்தி அய்யர், அவருடைய பார்ப்பன சகோதரர் ஜடா வல்லபரை காங்கிரசின் பேரால் முனிசிபல் சேர்மனாக்கினாரே அவர் சென்ற மாதம் அழகான டுவீட்டு சூட்டுடன் கவர்னருக்கு வரவேற்பு அளித்து கைகுலுக்கி குலாவினாரே அதற்கேன் கேள்வியில்லை? கூச்சலில்லை? மூக்கறுக்க கத்தி தீட்ட வில்லை? அன்று “தினமணி” செத்துக்கிடந்ததா? மூர்த்தி மந்திரி பதவி மோகத்தில் மதிமயங்கிக் கிடந்தாரா? ஆனைமலையில் ஐரோப்பியர். முன் பூர்ண சுதந்திரம் வேண்டாமென்று சொன்னது பார்ப்பன சூழ்ச்சியோடு சேர்ந்த சூழ்ச்சிதானே. சிதம்பரம் பார்ப்பான் செய்தால் கப்சிப், திருநெல்வேலி முதலியார் செய்தால் கடபடாவா? அதுவும் போகட்டும் நமது ஜில்லாவில்தான் என்ன ஒழுங்கு?
ஜில்லாபோர்டு தலைவர் பதவிக்காக காங்கிரசில் கையெழுத்திட்டு எலக்ஷன் இல்லாமல் மெம்பரான தோழர் சின்னக்கண்ணுப்பிள்ளையவர்களும், மற்றும் ஐவர்களும் எலக்ஷன் முடிந்து பத்து நாட்களுக்குள் கட்சி மாறினார்களே என்ன ஆயிற்று? அன்னவர்களின் ஆப்த நண்பர் ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்ன செய்தார்? எத்தனை கூட்டத்தில் கண்டனம் செய்தார்?
இந்த கவர்னர் வரவேற்புத் தீர்மானம் வரும்பொழுது போர்டு காங்கிரஸ் கட்சித்தலைவர் தோழர் குப்புசாமி அய்யர் என்ன செய்தார்?
M4l பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
எதிர்த்தாரா? இல்லையே! சள சள என்று பேசும் நாவடக்கமேயில்லாத அவர் அன்று நாவடக்கியிருந்ததின் மர்மமென்ன? கதர் குல்லாயும் சட்டையும் போட்டு அலங்காரமாய் முதல் சீட்டில் இருந்த அவர், கவர்னர் வரவேற்புக்கு
எதிர் எத்தனை பேர் என்று பிரசிடெண்டு கேட்கும்போது அவரது கை, வீரத்துடன் கதர் குல்லாவிற்கு மேல் வரவேண்டியிருக்க, சட்டைப்பைக்குள். போய் ஒழிந்ததேன்? இவரை என்ன செய்தார்கள்? வேறொன்றுமில்லா
விட்டாலும் தலைவர் பதவியை விட்டாவது நீக்கினார்களா? அன்று வரவேற்பு இல்லை என்று காங்கிரஸ் முறைப்படி செய்யாமல் சும்மாயிருந்த அய்யர் தலைவரை விட்டு விட்டு ஒழுங்குப்படி நியாயப்படி வரவேற்பு வாசிக்கப்போகும் முதலியாரின் பேரில் ஏன் இக்கோபம்? அய்யரின். குற்றத்தை மறைப்பதற்குத்தானே!
சங்கரன் கோவில் மெம்பர் தோழர் அம்பலவாணபிள்ளை காங்கிரஸ் கட்டளையை மீறனாரென்றும், ஜஸ்டிஸ் கட்சியுடனேயே ஓட்டுச் செய்கிறாரென்றும், உட்காருவது கூட எதிரிகளுடன் உட்காருகிறாரென்றும் குற்றஞ்சாட்டியதின் மேல் தமிழ்நாடு கமிட்டியாரே அவரை ஜில்லாபோர்டு மெம்பர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி கட்டளையிட்டார்களே! இன்றைக்கும் அவர் மெம்பர் தானே? தமிழ்நாட்டுக் கமிட்டியை நிராகரித்து “போடா பொட்டைக்கண்ணா” என்றுசொல்லித்திரிகிறவருக்கு கைமேல் என்ன பலன் தெரியுமா? ஜில்லா கமிட்டித் தலைவரின் பேருதவியால், வேசிப்பூர் காங்கிரசுக்கு பிரதிநிதியாகவும் தமிழ்நாடு கமிட்டியில் மூர்த்தி அய்யருடன் சம மெம்பராகவும் ஆய்விட்டார். இனம் இனத்தோடு சேரவேண்டியதுதானே!
நமது டவுன் காங்கிரஸ் பிரபலர் மிட்டாய்க்கடை லாலா தெரியுமல்லவா, சினிமா ஒன்றும் நடத்தினாரே! மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் இறந்ததற்காக சினிமாவை அடைத்து தனது ராஜவிசுவாசத்தை காட்டிக்கொண்டார், அதில் தப்பிதமென்ன? அவருடைய குருக்கள் தலைவர்கள் அண்ணாக்களெல்லாம்
கதர் குல்லா தலையில் தாங்கி ராஜ விசுவாசப் பிரமாணம் செய்வதற்கு இது அடுத்தபடி தானே? ஆனால் கமலா நேரு, டாக்டர் அன்சாரி போன்ற பெரியோர் பிரிவாற்றாமையை எவ்வாறு காட்டினார்? சினிமாவை நடத்தியா? அடைத்தா? என்று யோசித்துப்பாருங்கள். அம்மட்டா, இம்மாதம் மற்ற சினிமாக்களைப் போல இதற்கும் லைசன்ஸ் தகராறு வந்தவுடனே. என்ன நடந்தது தெரியுமா? கதர் கொடியைக் காணோம். தேசீயக்கொடி திடீரென்று மறைந்து வந்ததையா பிரிட்டீஸ் ஏகாதிபத்தியக்கொடி (Union
Jack) முதல் வகுப்பு நாற்காலிகளுக்கு மேலும் இரண்டாவது வகுப்பு நாற்காலிகளுக்கு மேலும். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. லைசென்ஸ் ரத்தாயிற்று. கெட்டுப்போனதென்ன? காங்கிரஸ் கொடுத்தது கைமேலே பலன். அவர்தான் நமது நகருக்கு புது அசம்பிளி தேர்தலில் காங்கிரஸ் அபேட்சகராம். ஒரு சந்தேகம், தேர்தல் போது நமது லாலா தேசீயக்கொடி பிடிப்பாரா, யூனியன் ஜாக் பிடிப்பாரா?
குடி அரசு - 1936 (2), 442
எல்லாம் தொலையட்டும், லாலாவும், அம்பலவாணரும் எப்படியும் போகட்டும். நமது ஜில்லா காங்கிரஸ் தலைவரும், மாஜி சர்வாதிகாரியுமான தோழர் கூத்தர் நமக்கு நடந்து காட்டும் நல்வழியென்ன? சில நாட்களுக்கு முன் முனிசிபாலிட்டி தண்ணீர் தீர்வை பிரச்சினையில் எவ்வாறு நடந்துகொண்டார்? ஜில்லா காங்கிரஸ் கமிட்டியும் அவர் இல்லத்திலே, அது தான் சாவடி ஹாலிலே அன்னாரின் தலைமையிலே கூடி இந்த தண்ணீர் தீர்வை பிரச்சினையில் காங்கிரஸ் கலந்துகொள்ளக் கூடாதென்று தீர்மானித்ததே! '“தினமணியும்'” கொட்டை எழுத்தில் பிரசுரித்ததே அதற்கு இவர் செய்த மரியாதை என்ன? காங்கிரசின் பேரைச்சொல்லி, காங்கிரஸ் தொண்டர்களை உபயோகித்து கலாட்டா செய்தாரே! மற்றும் இரு தலைவர்களே அதற்கு எதிரிடையாய் நின்றார்களே! என்னாயிற்று? இவரின் மூக்கை இவரே அறுத்துக்கொண்டாரா? மூக்கும் நீளம் தானே கொஞ்சமாவது அறுத்துக்கொள்ளக்கூடாதா? இவரை தலைவர் பதவியை
விட்டு விலக்க வேண்டாமா? அவசரப்படேல்; அவரே விலகப்போகிறார் என்று ஒரு சிட்டுக்குருவி சொல்கிறது. நன்னாளும் நற்சமயமும் தான். பார்க்கிறாராம். ஏனென்று கேட்டதாம் நமது குருவி. சொன்னாராம் பிள்ளை அவர்கள். “பெருமையும் புகழும் நாடி வந்தேன், காங்கிரசிற்கு அவை கிடைத்தது; சர்வாதிகாரியானேன். இந்த ஜில்லா மட்டுமல்ல, மற்ற ஜில்லாவிலும் காங்கிரஸ் பிளசர் காரில் சுற்றினேன், காந்தியும் நேருவும் வந்தார் என் வீட்டிற்கு. ஜில்லா போர்டிற்கு வந்த காங்கிரஸ் மெம்பர்கள் எல்லாம் என் தயவால் தான் வந்தார்கள் என்ற ஜம்பமும் அடித்தாய்விட்டது ஆனால் காலம் மாறுகிறது, பெருமையும் புகழும் போய் சிறுமையும் சிரமும் வரும்போல் தெரிகிறது. செக்ஷன் 144-ஆம், ஜாமீனாம் என்னமோ பேசுகிறார்கள். பக்கத்து ஜில்லாவில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் சமயம் தெரியவில்லை. கவர்னர் வரும்போது தலைவர் வீட்டிலாவது கருப்புக்கொடி வேண்டாமா என்கிறார்கள். சீக்கிரம் நழுவ வேண்டியது தான்.” சிட்டுக்குருவி சொல்வதின் உண்மை சீக்கிரம் விளங்கிவிடும்
கவனித்தீர்களா! சகோதரர்களே! எத்தனை அய்யர்கள், தலைவர்கள் மூக்கு போன பின் முதலியார் மூக்குக்கு ஆபத்து வரவேண்டும். முதலியார். அவர்கள் பயப்பட வேண்டாம். தங்கள் மூக்குப் போகுமுன், தங்கள் தலைவர். அசத்தியமூர்த்தியின் சிரசே போய் ஆகவேண்டும். ஆனால் எத்தனை நாளைக்கு இந்த ஏமாற்றம்? பார்ப்பனரல்லாத மக்களே விழியுங்கள்!
குடி அரசு - கட்டுரை - 29.11.1936
M43 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசீய”
'ஹிந்து'வுக்கு இருந்துவரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான “இந்தியன் எக்ஸ்பிரசு"க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப் படுகிறோம் சென்னை கோக்கலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக் மகாநாட்டில் பேசிய பம்பாய்த் தலைவர் ஸர். பிரோஸ் சேத்னா, அம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்த ஸர். கே.வி. ரெட்டி நாயுடுகாரு அவர்களைப் பாராட்டிப் பேசுகையில் சென்னை ஆக்டிங் கவர்னர் பதவியை அவர் வெகு திறமையாக நிர்வகித்து அகில இந்தியப் புகழ்பெற்று விட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இந்த விஷயத்தை வழக்கப்படி “தேசீய” தினரியான “ஹிந்து”வும் அபேதவாத தினசரியான “இந்தியன் எக்ஸ்பிரசு"ம் பிரசுரம் செய்யவே இல்லை. யோக்கியப் பொறுப்புள்ள எந்தப் பத்திரிக்கையும் இம்மாதிரி செய்திகளை மறைக்கவே செய்யாது. கட்சி வித்தியாசம் பாராட்டாமல் சகல கட்சிச் செய்திகளையும் பிரசுரம் செய்யவேண்டியதே பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகளின் கடமையென, பண்டித ஜவஹர்லால் சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்திருந்தபோது ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பிரஸ்தாப விஷயம் கட்சி சம்பந்தமானதுமல்ல. ஒரு பெறுப்பு வாய்ந்த தலைவர் மற்றொரு இந்தியப் பிரமுகரைப் புகழ்ந்து பேசிய பேச்சை அந்த இரண்டு பத்திரிகைகளும் அமுக்கி விட்டது மிகவும் கேவலமான செயலாகும். தேசியமும், சமதர்மமும் பேசும் அப்பத்திரிகைகள் உண்மையில் வகுப்புவாதப் பத்திரிகைகளாக இருப்பதை தேச மக்கள் இப்பொழுதாவது உணர்வார்களாக!
“விடுதலை”
குடி அரசு - கட்டுரை (மறு பிரசுரம்) - 29.11.1936
குடி அரசு - 1936 (2), 444
தர்மம் என்றால் என்ன?
மனித வாழ்க்கையில் தர்மம் என்கின்ற வார்த்தை பெரிதும் உபயோகப் படுத்தப்படுகிறது. ஆனால் அதற்குப் பொருள் பலர் பலவிதமாக சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். ஆனால் சாதாரணமாக தர்மம் என்பதற்குப் பொருள். கூறும்போது தர்மம் என்பது ஒரு மனிதனின் கடமைக்கும், மனிதனின். இயற்கைத் தன்மைக்கும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் செய்யவேண்டிய உதவிக்கும், மற்றும் ஒரு மனிதன் ஆத்மார்த்த சாதனம் என்னும் நலமடைவதற்கு செய்ய வேண்டிய கடமை என்பதற்கும், பொதுவாக இயற்கையென்பதற்கும் உபயோகப்பட்டு வருவதோடு பெரும்பாலும் பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும் ஏமாற்றுக்காரர்களும் பிழைப்பதற்கும் ஒரு சாதனமாக உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது எது எப்படியிருந்த போதிலும் நான் அதை நீங்கள் எந்த வழியில் உபயோகப் படுத்துகிறீர்கள் என்று கருதுகிறேனோ அதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுகிறேன்.
அதாவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு செய்கிற உதவியை தர்மம் என்று கருதி அதையே உங்கள் கடமையாகவுங்கொண்டு நடந்து வருகிறீர்கள் என்பதாகவே நினைத்து அதைப்பற்றியே சில வார்த்தைகள் சொல்லுகிறேன். ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் செய்யும் உபகாரம் -கடமை என்பது காலதேச வர்த்தமானத்துக்கேற்றவாறு அவ்வப்போது மாறுதலடையக்கூடிய ஒரு தன்மையுடையதேயல்லாமல். மற்றபடி தர்மம் என்பது ஏதோ ஒரு காலத்தில் யாராலோ யாருக்கோ குறிப்பிடப்பட்டு அதேபடிக்கு நடந்து கொண்டிருக்கவேண்டியது அல்ல வென்பதை உணர்ந்து கொண்டால் தான் நாம் உண்மையான தர்மம் செய்தவர்கள் ஆவோம் என்பதோடு நமது தர்மமும் மக்களுக்கும் நாட்டிற்கும் பயன்படக் கூடியதாகும். அப்படிக்கில்லாமல் நமது பெரியோர்கள் செய்து வந்தார்கள், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள், அவதாரங்களும் ஆச்சாரிகளும் எழுதிவைத்தார்கள், வெகு காலமாக நடந்து வருகிறது, அநேகம் பேர்களும் செய்து வருகிறார்கள் என்கின்றதான காரணங்களை வைத்துக்கொண்டு கண்மூடித் தனமாக அதன் பலா பலன்களைக் கவனியாமல் செய்து கொண்டிருப்பது வீண் வேலையாகும்
ஏனெனில் ஒரு காலத்தில் தருமம் என்று சொல்லப்படுவது மற்றொரு காலத்தில் முட்டாள்தனமாகத் தோன்றப்படுவதை நேரில் 449... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பார்க்கிறோம். உதாரணமாக ஒரு மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சேகரித்து அவற்றைப் பார்ப்பனர்கட்கு அள்ளிக்கொடுத்து ஆசீர்வாதம் பெறுவது மனிதனுடைய கடமையான தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் அவை இன்றைய தினம் சுத்த மூடத்தனம் என்றும் ஏமாந்த தனம் என்றும் தோன்றி விட்டது. அதுபோலவே ஏழைகளை ஏமாற்றிக் கொடுமைப்படுத்திச் சம்பாதித்த பணத்தைக்கொண்டு கோயில் கட்டுவது, மோட்சத்தில் இடம் சம்பாதித்துக்கொள்வதற்காகச் செய்யப்படும் தர்மம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதை முட்டாள்தனமென்றும், தேசத்திற்கு கெடுதியை விளைவிக்கத்தக்கதான தேசத்துரோகமென்றும் தோன்றி அநேகர்களுக்கு பள்ளிக்கூடம், தொழிற்சாலை, வைத்தியசாலை முதலியவைகட்கு உபயோகப்படுத்த வேண்டியது முக்கியமான தர்மம் என்று தோன்றி விட்டது. ஒரு காலத்தில் மூன்று வேளை குளித்து நான்கு வேளை சாப்பிட்டு விட்டு சாம்பலையும் மண்ணையும் பூசிக்கொண்டு உத்திராட்சத்தையும் துளசி மணியையும் உருட்டுவது தர்மமென்று நினைக்கப்பட்டது. ஆனால் இப்போது அது திருடர்களுடையவும் சோம்பேறிகளுடையவும் வேலையென்று நினைத்து அப்படிப்பட்ட மனிதர்களிடம் வெறுப்பு ஏற்பட்டு இரண்டு வேளையும் உடலை வருத்திக் கஷ்டப்பட்டு சாப்பிடுகிறவர்களிடம் இரக்கமும், அன்பும், நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டது. ஒரு காலத்தில் கள்ளையும் சாராயத்தையும் குடிக்கக்கூடியதாகவும், ஆட்டையும் எருமையையும் பலியாக சாப்பிடக் கூடியதாகவும் உள்ள குணங்கள் கற்பிக்கப்பட்ட சாமி என்பதை கும்பிட்டுக்கொண்டு அவைகளை அதற்கு வைத்துப் படைத்துக்கொண்டு தாங்களும் சாப்பிடுவது கடவுள் வணக்கத் தருமமென்று கருதப்பட்டு வந்தது. இப்பொழுது அவைகள் காட்டுமிராண்டித்தன மென்று உணர்ந்து
மக்களுக்கு உணர்த்தப்பட்டு வருகிறது. மற்றும் ஒரு கூட்டத்தாருக்கு ஆடும் பன்றியும் தின்பது தருமமாகயிருக்கிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு மாடு தின்பது தருமமாக இருக்கிறது; பன்றி தின்பது அதர்மமாக இருக்கின்றது. வேறொரு கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையும் சாப்பிடுவது தருமமாக யிருக்கிறது. பிறிதொரு கூட்டத்தாருக்கு எந்த ஜெந்துவையாணலும் சாப்பிடுவது அதர்மமாயிருக்கிறது
ஒரு மதக்காரருக்கே மதக் கொள்கைப்படி கள்ளு சாராயம் குடிப்பது தர்மமாயிருக்கிறது. வேறொரு மதக்காரருக்கு அவைகளைத் தொடுவது அதர்மமாயிருக்கிறது. ஒரு கூட்டத்தாருக்கு மனிதனை மனிதன் தொடுவது தீட்டாகக் கருதப்படுகிறது. இன்னொரு கூட்டத்தாருக்கு யாரைத் தொட்டாலும் தீட்டில்லை என்று சொல்லப்படுகிறது. அதுபோலவே விவாக சம்பந்தமுறையிலும் ஒரு கூட்டத்தார் அத்தை பெண்ணை மணக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் சித்தப்பன் பெரியப்பன் பெண்ணை மணக்கிறார்கள். பிறிதொரு கூட்டத்தார் சிறிய தாயார் பெண்ணை மணக்கிறார்கள். இனியொரு கூட்டத்தார் மாமன் பெண்ணை
குடி அரசு - 1936 (2), 446
மணக்கிறார்கள். ஒரு வகுப்பார் தங்கையை மணக்கிறார்கள். வேறொரு கூட்டத்தார் யாரையும் மணந்து கொள்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் விபசாரத் தனத்தை வெறுக்கிறார்கள். இன்னொரு கூட்டத்தார் விபசாரத்தனத்தை தங்கள் குல தருமமாகக் கொள்ளுகிறார்கள். வேறொரு கூட்டத்தார் பார்ப்பனர்களை யோக்கியமற்றவர்களென்று வெறுக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தார் பார்ப்பனர்களைப் புணருவது மோட்ச சாதனம் என்று கருதுகிறார்கள். இப்படி எத்தனையோ விதமாக ஒன்றுக்கொன்று விபரீதமான முறைகள் தருமமாகக் காணப்படுகிறது. மேலும் இதுபோலவே சாஸ்திர விஷயங்களிலும் ஒரு காலத்தில் மனித சமூகத்திற்கு கடவுளால் அளிக்கப்பட்ட தருமமென்று சொல்லுகிற மனுதர்ம சாஸ்திரம் வெகு பக்தி சிரத்தையோடு பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அது சுயநலக்காரர்களின், சூழ்ச்சிக்காரர்களின் அயோக்கியத்தனமான செய்கையென்று நெருப்பு வைத்துக்கொளுத்தப்படுகிறது. இது போலவே காலத்திற்கும் தேசத்திற்கும் அறிவிற்கும் தகுந்தபடி தருமங்கள் மாறுவது சகஜமாகயிருக்கிறது ஆகையினால் தருமமென்கிற விஷயத்தில் மிக அறிவைச் செலுத்தி உலகத்தை யெல்லாம் நன்றாய் ஆராய்ந்தறிந்து மிக்க அவசியமென்றும் பயன்: படத்தக்கது எதுவென்றும் தெரிந்து செய்வது தான் உண்மையான தருமமாகும்
- ஈ.வெ.ரா.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - நவம்பர் 1936
M பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
நில அடமான பாங்கியும் நிர்வாகமும்
நில அடமான கடன்களுக்கென்று சர்க்கார் பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து பணம் எடுத்து நில அடமான பாங்கிக்கு முதலாகக் கொடுத்து நிலச் சொந்தக்காரர்களுக்குக் கடன் கொடுத்து குடியானவர்களை அதிக வட்டிக்கடன் தொல்லையிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்திருப்பது யாவரும் அறிந்ததேயாகும்
அதன்மூலம் உண்மையாகவே சில குடியானவர்களுக்கு செளகரியமும் ஏற்பட்டு வருவதை யாரும் அறிந்திருக்கலாம்.
ஜஸ்டிஸ் கட்சியாருடைய பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமியால் ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டம் என்று சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் “விவசாயிகளுடைய கடன்களைக் குறைப்பதும் இனி கடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுமான காரியங்கள். செய்யப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது
அத்திட்டங்களில் சில அமுலுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும் இந்த விவசாயிகள் கடன் மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது
அதற்காக ஏற்கனவே ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இப்போது மறுபடியும் (2500000) இருபத்தைந்து லக்ஷ ரூபாய் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சி மந்திரி கனம் ராஜன் அவர்கள் முயற்சித்து இவ்வார சட்டசபையில் அரசாங்கத்தில் இருந்து பணமும் ஒதுக்கப்பட்டாய் விட்டது. இப்பணம் ஒதுக்குவதற்கு நடந்த வாக்குவாதங்கள். மிகவும் கவனிக்கத்தக்கதாகும். என்னவெனில்,
நில அடமான பாங்கு இலாகா பார்ப்பனமயமாயிருக்கிறதென்றும், அதிலுள்ள பார்ப்பனரல்லாதார்கள் பெயரளவில் பார்ப்பனரல்லாதார்கள் ஆனாலும் காரியத்தில் பார்ப்பன பக்தர்களேயாகும் என்றும், அதற்கு ஒதுக்கப்படும் பணம் பார்ப்பன ஆதிக்கத்துக்கே பெரிதும் பயன்படும் என்றும், கடன்கொடுக்கும் காரியத்தை அரசியல் கட்சி நலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறதென்றும் குறைகூறி அப் பணத்தை நிபந்தனை இல்லாமல் கொடுக்கக் கூடாது என்று ஜஸ்டிஸ்கட்சி அங்கத்தினர்கள் வலியுறுத்தினார்கள்.
அதன் பயனாய் மந்திரி கனம் ராஜன் அவர்கள் நில அடமான. பாங்கி காரியதரிசி பதவிக்கு ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தரை (டிப்டி
குடி அரசு - 1936 (2), 448
கலைக்கட்டரை) நியமித்துக்கொள்ள நில அடமான பாங்குகாரர்கள் சம்மதித்தால் மாத்திரமே இந்தப் பணம் கொடுக்கப்படும் என்று வாக்களித்து கிராண்டை பாசாக்கிக்கொண்டார்.
தோழர் ஈ.வெ. ராமசாமியார் ஜஸ்டிஸ் கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அதாவது “கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுத்து அவற்றின் நிர்வாகத்திற்கு பொறுப்பாளியாக சர்க்கார் உத்தியோகஸ்தர்களை நியமிக்க வேண்டும்” என்பதாகும்.
கூட்டுறவு ஸ்தாபனங்கள் எவ்வளவு நன்மை பயக்கும் படியான தன்மையைக் கொண்டவையானாலும் அதைக் கைப்பற்றுகிறவர்கள் பெரிதும் அரசியல் கட்சி நலத்துக்கு பயன்படுத்தி பக்ஷபாதம் முதலியவை செய்து ஸ்தாபனங்களின் கருத்து முழுவதும் நிறைவேறாமல் செய்துவிடு கிறார்கள். அனேக பட்டணங்களில் கூட்டுறவு ஸ்தாபனங்கள் பார்ப்பனர்களால் கைப்பற்றப்பட்டு மானிய சொத்துப்போல் ஒரு வகுப்பாரே ஏகபோகமாய் பயன் அனுபவிக்கும்படியாயும் ஸ்தல ஸ்தாபனம் முதலிய தேர்தல்களுக்கு தங்களுக்கு அனுகூலமாய் இருக்கும்படியும் செய்து கொள்ளுகிறார்கள். உதாரணமாக சென்ற அசெம்பிளி தேர்தல்களில் இரண்டொரு ஸ்தாபனங்கள் கோவாப்ரேட்டிவ் ஸ்தானம் தங்கள் ஆதிக்கத்தில் இருந்த காரணமாகவே வேறு யாதொரு தகுதியும் இல்லாதவர்கள் வெற்றி பெற
முடிந்தது. தேர்தல்களுக்கு இந்த இயந்திரத்தை தயவு தாக்ஷண்ணியம் இல்லாமல் பயன்படுத்திக்கொள்ளப்பட்டதானது மிகவும் வெளிப்படையான காரியமாகும். இதைப்பற்றி “குடி அரசி”ல் முன்னமேயே பல தடவை குறிப்பிட்டிருக்கிறோம். ஆதலால் கோவாப்ரேட்டிவ் ஸ்தாபனங்களின். டைரெக்டர்கள் பொதுஜன பிரதிநிதிகள் என்பவர்களாய் இருந்தபோதிலும் காரியதரிசிகள் கண்டிப்பாய் சர்க்கார் அதிகாரிகளாகவே இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அதை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொண்டதுபோல் காரியத்திலும் செய்ய மூன் வந்ததிற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம்
கோவாப்ரேட்டிவ் இலாக்கா மந்திரி கனம் ராஜன் அவர்கள் இந்த முறை ஒரு சமயம் ஜனநாயகத்துக்கு விரோதமோ என்று மயங்கினார் என்றாலும் முனிசிபாலிட்டிகளுக்கு கமிஷனர் போட்டிருப்பதுபோலவும், பஞ்சாயத்து ஆபீசர்கள் ஹெல்த் ஆபீசர்கள் முதலியவர்கள் சர்க்காரால். நியமிக்கப்பட்டு சர்க்காருக்கு பொறுப்பாளிகளாய் இருப்பதால் எப்படி ஜனநாயத்தன்மை கெட்டுப்போகவில்லையோ அதுபோலவும் கூட்டுறவு இலாக்காவுக்கு சர்க்கார் நிர்வாக அதிகாரிகளை நியமிப்பதால் ஜனநாயகத்தன்மை கெட்டுவிடாதென்று தோழர் சி.டி. நாயகம், எம்.எல்.சி அவர்கள் எடுத்துக்காட்டியதுடன் ஏற்கனவே ஜஸ்டிஸ்கட்சியார் தோழர் ஈ.வெ. ராமசாமி திட்டத்தை ஏற்றுக்கொண்டிருப்பதையும் ஞாபகமூட்டி மந்திரியாரை திருப்தி செய்தார்.
449 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இக்காரியங்கள் சில தேசபக்தர்களுக்கு பிற்போக்கான முறையாய் காணப்படலாம். ஆனால் தேசபக்தர்கள் என்கின்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். பலர் கூட்டுறவு இலாக்காவில் நடந்துகொண்ட யோக்கியதைகளை உத்தேசித்தே இம்மாதிரி செய்யவேண்டியேற்பட்டதே ஒழிய பிற்போக்கான காரியம் செய்ய வேண்டியதற்காகவல்ல என்பதை பொதுஜனங்கள் உணர்வார்களாக
கூட்டுறவு, நில அடமானம், வீடு கட்டுதல், நிலம் திருத்துதல், யந்திரசாலை வைத்தல் முதலிய காரியங்களுக்குப் பணம் கடன் கொடுத்தல் ஆகியவைகளுக்கு இலாக்காக்கள் ஏற்படுத்தி அவற்றை சர்க்காராரே தங்கள் சிப்பந்திகள் மூலம் நேரிட நிர்வாகம் செய்து வருவார்களானால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஏழ்மைத் தன்மையையும் ஒரு அளவுக்கு நீக்க தாராளமாய் வசதி ஏற்படலாம். ஆனால் இப்பொழுதோ கூட்டுறவு முதலிய இலாக்காக்கள் நிர்வாகத்தைக் கைப்பற்றுபவர்களின் பெருமைக்கும் அவர்களது அரசியல் பிரதிநிதித்துவ காரியங்களின் வெற்றிக்குமே பயன்படுத்தப்படுகின்றன.
ஆதலால் இந்தக் குறை ஒருவாறு நீங்க இப்போதாவது ஜஸ்டிஸ் கட்சியார் தைரியமாய் நில அடமான பாங்கி நிர்வாகத்துக்கு சர்க்கார் உத்தியோகஸ்தரை காரியதரிசியாய் போடத் துணிந்ததற்குப் பாராட்டுகிறோம் மற்ற பாங்கிகளுக்கும் இது போல் ஏற்படுத்த சட்டம் கொண்டு வருவார்களாக.
குடி அரசு - கட்டுரை - 06.12.1936
குடி அரசு - 1936 (2), 450
திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை
தலைவரவர்களே! தோழர்களே!
திருவாங்கூர் மகாராஜா அவர்கள் தனது சகல இந்து பிரஜைகளுக்கும் ஜாதி வித்தியாசமில்லாமல் இந்து பொதுக்கோவில்கள் எல்லாவற்றிலும் பிரவேசிக்க அனுமதி அளித்ததைப் பாராட்ட இக்கூட்டம் கூட்டப்பட்டது என்றாலும் எனக்கு முன் பேசியவர்கள் பலர் இந்த மாதிரி உத்திரவு இப்போது திருவாங்கூரில் வெளியாவதற்கு 12வருஷங்களுக்கு முன் நானும் எனது மனைவியாரும் இருந்து வைக்கத்தில் நடத்தி வெற்றிபெற்ற சத்தியாக்கிரகமே முக்கிய காரணமென்று சொன்னார்கள். பல பத்திரிகைகளும்
அந்தப்படி எழுதி இருக்கின்றன.
ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும் வைக்கம் சத்தியாக்கிரகம் மூலம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சத்தியாக்கிரகம் காரணம் அல்ல வென்றால் மற்ற எந்த விதத்தில் நானும் காரணமாய் இருக்கலாம் என்று கூறுகிறேன் என்பதாக நீங்கள் கேட்கலாம்
சத்தியாக்கிரகத்துக்கு உலகில் மதிப்பில்லை, அதை சண்டித்தனம் என்றுதான் நானே கருதிவிட்டேன். சத்தியாக்கிரகம் நடத்தப்பட்ட விஷயங்களில் 100-க்கு 5 கூட வெற்றி பெறவில்லை. ஏதாவது பெற்று இருந்தால் நம் எதிரிகள் சண்டித்தனமும் தொல்லையும் பொறுக்கமாட்டாமல் இசைந்து வந்ததாயிருக்கலாம்.
ஆதலால் திருவாங்கூர் மகாராஜா இந்த உத்திரவு போட கருணை கூர்ந்ததற்கு காரணம் தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான. நிலையேயாகும்
என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.
எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள்
ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அதனாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 15-20 4... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட % மணி Y மணி காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளியேறாமல் காத்திருக்கும். அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது
சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப்பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.
ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா?
நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன். என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார். தகப்பனார் பெயர் போட்டிருக்கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.
கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் - என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சில் செய்ய வேண்டியதாகவும் ஏற்பட்டுவிட்டது. அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன். காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந்தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது. திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி
குடி அரசு - 1936 (2), 452
திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய்தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் கீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள். திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர்களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடை செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள்.
இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிகமாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடை என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத்தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகாராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது. நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத்தையும் தனது செல்வாக்கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதுவும் இப்படிப்பட்ட புரட்சி ஏற்பட்டும் சாஸ்திரிகளும் ஆச்சாரிகளும் வர்ணாச்சிரமக்காரர்களும் இந்த புரட்சியை வாய் வார்த்தையிலாவது கூட்டோடு ஆதரிக்க வெளிவரவும் முடியாது
ஆதலால் இந்த உத்திரவுக்கு காரணம் வைக்கம் சத்தியாக்கிரகம் அல்லவென்றும் கடவுளையும் கோவிலையும் மதத்தையும் ஒழிக்கப் புறப்பட்ட சிலருடைய முயற்சியும் திருவாங்கூர் மகாராஜாவினுடைய ஒப்பற்ற விவேகமும் சாமர்த்தியமும் என்றுதான் சொல்லுவேன். இந்த உத்திரவினால் சாமி தரிசனம் செய்ய கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு இடம் கிடைத்து விட்டது என்பதல்ல எனது திருப்திக்கு காரணம். மேல் ஜாதி கீழ் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஒரு அளவுக்கு ஆதரவாக சாமியும் கோவிலும்
ஒரு தூணாய் இருந்தது திருவாங்கூரைப் பொறுத்த வரையிலாவது இடிந்து விட்டதல்லவா என்கின்ற திருப்தி தான்.
மதம் என்கின்ற தூணும் இடிந்து விழுந்தாலொழிய தீண்டாமையும் மேல் ஜாதி கீழ் ஜாதியும் நம் நாட்டில் ஒழியவே ஒழியாது என்பது தான் எனது அபிப்பிராயம். அதற்கு ஆகவே கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்களை முஸ்லீம் மதத்தில் சேருங்கள் என்று சொல்லிவருகிறேன். அதனால் இந்து மதத்துக்கு கேடு என்று கருதினால் இந்துமத தர்மகர்த்தாக்கள் ஜாதியை ஒழிக்கட்டுமே. மகாராஜா உத்திரவுபோல் ஒரு உத்திரவு போடட்டுமே. ஒரு சட்டம் கொண்டு வரட்டுமே. யார் வேண்டாம் என்கிறார்கள்?
453 _ QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். பொது ஓட்டலில் ரயிலில் இருக்கிற வித்தியாசம்கூட ஒழியப்படாது என்று சொல்லிக்கொண்டும் ஒழிக்க சட்டம் கொண்டு வராமலும் இருந்து கொண்டும் மதம் கெட்டுப்போகிறது என்றால்
இதில் நாணயமேது? ஜாதி ஒழிவதற்கு ஆக தீண்டாமை ஒழிவதற்கு ஆக ஒருவன் வேறு மதத்துக்கு போனால் மதம் வேண்டாம் என்பவர்களுக்குத் தான் ஏன் ஆத்திரம் வரவேண்டும்? இவர்கள் ஆத்திரத்தால் என்ன காரியம் நடக்கும்? ஒன்றுமே நடவாது. இந்தியா கூடிய சீக்கிரத்தில் முஸ்லீம் ஆதிக்கத்துக்கு வரப்போகிறது. பார்ப்பன ஆதிக்கத்துக்கு அதாவது இந்து ஆதிக்கத்துக்கு குழி தோண்டி ஆய்விட்டது. முஸ்லீம் ராஜ்யம் இந்தியாவில் விரிவு அடையப் போகிறது.
அரசியலிலும் முஸ்லீம்கள் ஆதிக்கம் விரிவடைந்து வருகிறது பொருளாதாரத்திலும் அவர்களே மேன்மை அடைந்து வருகிறார்கள். இந்த ஊரை எடுத்துக் கொள்ளுங்கள் 10, 20 வருஷத்துக்குள் முஸ்லீம்கள் எவ்வளவு முன்னுக்கு வந்து விட்டார்கள். எங்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு மேல் பதவி வகிக்கிறார்கள். இதெல்லாம் எதனால்? அச்சமூக ஒற்றுமையினால். அவர்கள் தங்கள் சமூகத்துக்குள் ஒருவரை
ஒருவர் அழுத்த நினைப்பதில்லை. ஒருவருக்கு வரும் கஷ்டத்தை - இழிவை தங்கள் சமூகத்துக்கே வந்ததாய் கருதுகிறார்கள். இதை அவர்கள் மதம் போதிக்கிறது. மற்றபடி சாமியைப்பற்றி மோக்ஷத்தைப்பற்றி நாம் கவலைப்படாதவர்களானாலும் இந்த அருமையான ஒற்றுமை குணத்திற்கு அவர்கள் பாராட்டப்பட வேண்டாமா? அதன் பயனை அவர்கள் அடைய வேண்டாமா?
ஆதலால் இந்தியா ஒற்றுமையடைய - இந்தியா சுயமரியாதை அடைய ஜாதி பிரிவு பார்ப்பனீயம் ஒழிய வேண்டும்; அல்லது முஸ்லீம் ஆதிக்கம் ஏற்பட வேண்டும். இரண்டும் இல்லாவிட்டால் நம் கதி அதோ கதிதான். ஆதலால் இந்த பிரகடனத்துக்கு மகாராஜாவையும் ஜாதிமத ஒழிப்புக்கு முயற்சித்தவர்களையும் பாராட்ட வேண்டியது நமது கடமையாகும்.
குறிப்பு: 15.11.1936 ஆம் நாள் ஈரோடு காரை வாய்க்கால் மைதானத்தில் ஈரோடு பார்ப்பனரல்லாத வாலிப சங்கத்தாரால் நடத்தப் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 06.12.1936
குடி அரசு - 1936 (2), 454
swfliuneng இயக்கம்
சுயமரியாதை இயக்கம் என்ன காரணத்துக்கு ஆக ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அக் காரணத்தை இதுவரை சு.ம. இயக்கம் ஆதரித்து வந்திருக்கிறதா. அல்லது மாறிவிட்டதா என்பதும் வாசகர்கள் அறிந்ததேயாகும். ஆனாலும் அதைப்பற்றி சிறிது மறுபடியும் எடுத்துக்கூறுவது மிகையாகாது என்றே கருதுகிறோம்
பார்ப்பனரல்லாத மக்கள் சமூகத்துறையிலும் அரசியல் துறையிலும் பார்ப்பனர்களால் ஏய்த்து அடிமைப்படுத்தப்பட்டு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் தாழ்ந்து கிடப்பதை மாற்றி அவர்களை எப்படியாவது பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுபடச் செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தை முக்கியமாய்க் கொண்டே ஆரம்பிக்கப்பட்டதாகும். மற்றும் பல நோக்கங்களும் இருக்கலாம்
இந்த நோக்கத்தில் ஈடுபட்டு உழைத்ததில் ஆரம்ப முதல் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஏற்றே நடந்து வந்திருப்பதுடன் அரசாங்கத்தின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கூட அவசியம் நேர்ந்த போதெல்லாம் ஏற்று நடந்து வந்திருக்கிறது.
இவற்றால் ஏற்பட்ட பயன்கள் என்ன என்பதைப்பற்றி இந்த வியாசத்தில் நாம் விவரிக்க முன் வரவில்லை
சுயமரியாதை இயக்கம் ஆரம்பகாலம் முதல் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு துறையிலும் காங்கிரசை எதிர்த்தும் பார்ப்பன ஆதிக்கத்தை வெறுத்தும் வந்திருப்பதுடன் சு.ம. இயக்கத்தில் பார்ப்பனர்கள் அங்கத்தினராவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. கம. இயக்கத்தின் முக்கியமெல்லாம் சமூகத்துறையில் பார்ப்பனீபத்தை அழிப்பதை எப்படி ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு வந்ததோ அதேபோல் அரசியலிலும் காங்கிரசைத் தாக்கி அதன் ஆதிக்கத்தை ஒழிக்க ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு மூச்சும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பது சு.ம.காரர்கள் மாத்திரமல்லாமல் மற்றும் எவரும் உணர்ந்ததேயாகும்
சைமன் கமிஷனை வரவேற்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பெண்மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும், வகுப்புவாரி பிரதிநிதித்துவ 4... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
முறை அனுசரிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது முதல் சென்ற மாதம் பண்டிட் ஜவஹர்லாலை பகிஷ்கரித்தது வரை காங்கிரசின் ஒவ்வொரு நிலையையும் எதிர்த்தே வந்திருக்கிறது. இதனால் சு.ம.காரர்கள். நாஸ்திகர்கள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் அழைக்கப்பட்டார்கள். காங்கிரசும் தன்னால் கூடுமானவரை சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதமாகவே அதன் சகல ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்திருக்கிறது.
இந்த நிலையை பூரணமாய் உணர்ந்தே காங்கிரசிலிருந்த பலர் சு.ம. இயக்கத்துக்கு வந்து சேர்ந்ததும் சு.ம. இயக்கத்தில் இருந்த பலர் காங்கிரசில். போய்ச் சேர்ந்ததுமான காரியங்கள் நடந்திருக்கின்றன. ஆகவே இவற்றை பொது மக்கள் அறியாததல்ல என்பதே நமது நம்பிக்கை
இந்நிலையில் இன்றும் சில ச௬.ம. காரர்கள் காங்கிரசில் சேர்ந்தும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசுக்கு ஆதரவாய் பிரசாரம் செய்தும் அப்பிரசாரங்களில் ஜஸ்டிஸ் கட்சியையும் சம. இயக்கத்தையும் இகழ்ந்து கூறியும் வருவதுடன் காங்கிரஸ் சார்பாய் சில தேர்தல் ஸ்தானங்களுக்கு அபேட்சகர்களாய் இருக்க முயற்சிப்பதாயும் சேதிகள் வருகின்றன.
இவற்றைப்பற்றி நாம் ஆச்சரியப்படவில்லை. இப்படிப்பட்ட நிலை இன்று நேற்று அல்லாமல் இயக்க ஆரம்ப காலம் முதல் கொண்டே நடந்து வந்திருக்கிறது. இது நமது இயக்கத்துக்கு மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதுபோலவே இந்த 15 வருஷ காலமாகவே நடந்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கும் நடந்து வந்திருக்கிறது. ஆதலால் அரசியலை வாழ்வுக்குஆதாரமாய்க் கொண்டவர்கள் உள்ளவரையில் இக்காரியங்களுக்கு அனுமதி அளித்துத்தான் தீர வேண்டும். இப்படிப்பட்டவர்களால் பொது ஜனங்கள் ஏமாந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தான் தவிர்க்க முடியாத நமது கடமையாகும். அதென்னவென்றால் இன்று பல பத்திரிகைகளில் “சு.ம.காரர்கள் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்கள்'” என்றும் “ச.ம. இயக்கத் தலைவர் நடத்தை பிடிக்காமல் சிலர் காங்கிரசுக்கு வந்து விட்டார்கள்" என்றும்எழுதுவதுடன் ௯.ம. இயக்கமே காங்கிரசில் கலந்துவிட்டது போலவும் கருதும்படி விஷமத்தனமாகவும் சில பத்திரிகைகளில் எழுதி பாமர மக்களை ஏய்க்கிறார்கள். அதனால் சிற்சில சமயங்களில் இயக்க முயற்சிக்கு கெடுதி உண்டாக இடமேற்படுகிறது. ஆதலால் அதைப்பற்றி எழுத வேண்டியிருக்கிறது.
சு.ம. இயக்கத்துக்கும் காங்கிரசுக்கும் உள்ள முரண்களில் முக்கிய முரண் சு.ம. இயக்கம் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க வேண்டும் என்றும் அரசியல் பிரதிநிதித்துவம் உத்தியோகம் ஆகியவைகளில் ஜாதி மதம் உள்ள வரை ஜாதி மதவகுப்பு எண்ணிக்கைக்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
குடி அரசு - 1936 (2), 456
இந்தக் காரியங்களுக்கு மாறாகவே இன்று காங்கிரஸ் வேலை செய்து வருகிறது. காங்கிரசின் உயிர் வாழ்வுக்கு அவசியம் வகுப்புகளை காப்பாற்றவும் வகுப்பு உரிமைகளை ஒழிக்கவுமான காரியமே ஆகையால்
அந் நிலையில் இருந்து காங்கிரஸ் மாறுகிறவரை அல்லது தனது நிலையில் இருந்து சு.ம. இயக்கம் மாறுகிறவரை காங்கிரசும் சு.ம. இயக்கமும் இரண்டு நேர்கோடுகளே யாகும். ஒன்றுக்கொண்டு சம்மந்தம் ஏற்பட இடமே இருக்க நியாயமில்லை. இந்த இரு லட்சியங்களையும் ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக்கொண்டு அதற்கு ஆகத் தன்னாலான காரியத்தை செய்து வந்ததாலும் செய்து வருவதாலும் ஜஸ்டிஸ் கட்சியினிடம் சும. இயக்கம் சம்மந்தம் வைத்திருக்கிறது.
இந்த இரண்டு காரியமும் தங்களுடைய லட்சியம் அல்ல என்று கருதுகின்ற எவருக்கும் சு.ம. இயக்கத்தில் இடமில்லை. இடம் ஏற்பட்டால் அது நாணயக் குறைவான முறையின் சம்பாத்தியமூம் வினியோகமுமேயாகும்
இந்த இரண்டு காரியத்துக்கு ஆக சு.ம. இயக்கம் ஏகாதிபத்தியமோ அந்நிய ஆட்சியோ அல்லது வேறு எதுவோ ஆனாலும் அவற்றுடன் அவசியம் ஏற்படும் போதெல்லாம் ஒத்துழைத்தும் ஆதரித்தும் தான் தீரும் இந்த இரண்டு காரியமும் வெற்றிபெறாமல் ச.ம. இயக்கம் அரசாங்கத்தாரோடு. போரிடவோ அல்லது அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒருநாளும் சம்மதியாது. மற்றும் இந்த இரண்டு காரியங்களுக்கு விரோதமாய் இருக்கும் எந்த ஸ்தாபனமும் சு.ம. இயக்கத்துக்கு விரோதமானதே என்பது நமது தாழ்மையான அபிப்பிராயம்
மற்றொரு விஷயம் கூட சொல்லுவோம். அதாவது தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னது போலவே நாமும் சொல்லுவோம்
சத்தியமூர்த்தியார் என்ன சொன்னார் என்றால் “அபேதவாதிகள் என்பவர்கள் எனது விரோதியே யாவார்கள், காங்கிரசின் விரோதியே ஆவார்கள்” என்பதாகக் கூறினார். அதுபோல் தான் நாமும் மற்றொரு விஷயத்தில் கூறுவோம். அதாவது ஜாதிப் பிரிவு ஒழிப்பதற்கும் அது உள்ளவரை வகுப்பு வாத பிரதிநிதித்துவத்துக்கும் எவன் விரோதியோ அவனெல்லாம் சு.ம. இயக்கத்துக்கும் விரோதி என்றே சொல்லுவோம்
இதற்கு மாறாக ஏதாவது சு.ம. இயக்கத்தில் ஏற்படுமானால் அது எது அதிக கெடுதி? எது குறைந்த கெடுதி என்கின்றதைப் பொறுத்துத்தான் இருக்குமே ஒழிய விட்டுக்கொடுப்பதற்கு ஆக ஒரு நாளும் ஏற்பட்டுவிடாது.
சு.ம. இயக்கம் தனிப்பட்ட ஒரு சமதர்ம இயக்கத்தில் சேரக்கூடாதா என்று சிலர்கேட்கலாம். சேரலாம் என்றே பதில் கூறுவோம். ஆனால் வகுப்புகள்
ஒழியும் வரை வகுப்புவாரி சம உரிமைகளுக்கு இணங்கிவரக்கூடிய சமதர்ம இயக்கமாய் இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களே தங்களை .10, சமதர்ம வாதிகள் என்று அழைத்துக் கொள்ளக்கூட உரிமையுடையவர் களாவார்கள். அதில்லாமல் 5.10. சமதர்மவாதிகள், சு.ம. காங்கிரஸ்காரர்கள், 457... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சு.ம. தேசீய வாதிகள் என்று சொல்லிக்கொள்வதெல்லாம் ஏமாற்று வித்தை அல்லது நாணையக் குறைவான காரியம் அல்லது அறியாத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதைஏன் எழுதுகிறோம் என்றால்இந்தமாதிரியானபெயர்களைக்கண்டு. பொது ஜனங்கள் ஏமாந்து போகக்கூடாது என்பதற்கு ஆகவே எழுதுகிறோம்.
சு.ம. இயக்கம் ஒரு குறிப்பிட்ட கொள்கையையே அடிப்படையாகக் கொண்டது. அதற்கு ஆக வேண்டி “ஒரு குண்டு” இருக்கிறவரையிலும் அது போராடியே தீரும். மற்றும் அது தனக்கு போதிய ஆதரவு இருக்கிறது, எதிரிகளின் தொல்லை நமது முயற்சியைக் கெடுக்காது, நம்மைக் காட்டிக் கொடுப்பதற்கு ஆள் இல்லை, அதனால் நமக்கு இடையூறு உண்டாகிவிடாது என்றெல்லாம் விளங்கும்வரை அரசாங்கத்தாரோடு முரண்பாடு செய்துகொள்ள முயற்சிக்காது என்பதையும் பட்டவர்த்தனமாகத் தெரிவித்துவிடுகிறோம்
இதன் மத்தியில் அவசியம் நேர்ந்தால் அது தனிப்பட்ட முறையில் தனிநபர்கள் காரியமாய் இருக்க நேருமே அல்லாமல் இயக்கத்தின் கொள்கையாக இருக்க இன்றைய நிலையில் முடியவே முடியாது
தோழர்கள் டி.என். ராமன்அவர்களும், டி.எஸ்.எஸ். மணியம் அவர்களும் “விடுதலையில் (குடி அரசில் மற்றொரு பக்கம் பிரசுரித் திருக்கிறது) எழுதி இருப்பதுபோல் தங்கள் தங்கள் சொந்த தனிப்பட்ட சுயநலங் காரணமாகவும் வெறுப்பு விருப்பு காரணமாகவும் பல மாஜி சுயமரியாதை தோழர்கள் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் அதன் உழைப்பாளிகளைப் பற்றியும் செய்துவரும் விஷமப் பிரசாரங்களுக்கு மக்கள் இடம் கொடுக்காமல் எவ் விஷயத்தையும் ஆர அமர பொறுமையாய் யோசித்து ஒரு துறையில் இறங்கி பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு தங்கள் தங்களால் ஆன தொண்டை ஆற்ற வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.12.1936
குடி அரசு - 1936 (2), 458
பட்டேல் ஜாக்கிரதை! BEWARE OF PATEL!
நமது பார்ப்பனர்கள் தோழர் பட்டேல் அவர்களை கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்
எப்படியாவது பணம் சம்பாதித்துத் தீரவேண்டும் என்பதும் அதை செலவு செய்து எப்படியாவது பார்ப்பனர்களை சட்ட சபைக்கு வரும்படி செய்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை தடுத்து ஒழித்து பழயபடி “சூத்திரன்” ஆக்கி பார்ப்பன ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதுமே நமது பார்ப்பனர்களுக்கு முக்கிய தவமாக ஆகிவிட்டது.
பார்ப்பனரல்லாதார்களில் யாரையாவது காங்கிரசில் சேர்த்து காங்கிரஸ் மூலம் எந்த தேர்தலுக்கு நிறுத்துவதானாலும் காங்கிரசுக்கு முதலில் இவ்வளவு என்று பணம் கொடுத்து விட்டு தங்களது செலவும் தாங்களே போட்டுக்கொண்டு காங்கிரசால் நிறுத்தப்படும் பார்ப்பனரின். தேர்தல் செலவுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.
பார்ப்பனர் யாராவது தேர்தலில் நிறுத்தப்படுவதாய் இருந்தால் அந்தப் பார்ப்பனருக்கு இந்த நிபந்தனைகள் ஒன்றும் கிடையாது. அவருடைய
தேர்தல் செலவுக்கு ஒதுக்கி வைத்த (என்று மற்றவர்களுடைய) பணத்தில் - கொடுக்கப்பட்ட பணத்தில் மீதி செய்து தனித்த முறையில் அந்த அபேட்சக பார்ப்பனர் சொத்து சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது
மற்றும் பல இடங்களில் தேர்தலுக்கு நிறுத்தி வைப்பதற்கென்று நிற்பவர்களிடம் காங்கிரஸ் விதிப்படி வாங்கும் பணம் தவிர அதிகப்படியாக தயவு பயன்படுத்த என்றும், தனிப்பட்டவர்கள் நன்மைக்காக என்றும் பணம் வசூலித்துக்கொள்ளப்படுகின்றது. இதற்கு ஆதாரம் வேண்டுமானால்
“காங்கிரஸ் தொண்டில்” இறங்கி ஜில்லா பிரமுகர்களாகவும் ஜில்லா தலைவர், காரியதரிசிகளாகவும் ஆன அனேகம் பேர்களுக்கு “காங்கிரஸ் சேவையின் பயனாய் ஏராளமாகப் பணம் சேர்ந்திருப்பதை பார்க்கலாம்.
தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் நிலையையே சற்று யோசிப்போம். அவர் வக்கீலாக இந்த 16 வருஷத்தில் எத்தனை வழக்குகளுக்கு போயிருக்கக் கூடும்? இதற்கு எத்தனை ரூபாய் பீசு வரும்படி வந்திருக்கும்?
பீசு வரும்படிக்கு எத்தனை ரூபாய் வருமான வரி கொடுத்திருக்கக்கூடும்?
49 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இன்று அவருக்கு சொத்து எவ்வளவு இருக்கும்? அவரது 2-வது வகுப்பு பிரயாணத்துக்கு எந்த வகையில் பண வருவாய்? என்பவைகளை ஊடுருவிப் பார்த்தால் காங்கிரசு பக்தர்களும் அவர்களது பணநிலை எப்படி சேர்ந்தது என்பதும் நன்றாய் விளங்கும்
மற்றும் தெரியவேண்டுமானால் மற்ற ஜில்லாக்களையும் எடுத்துக் கொள்ளுவோம். தோழர் குப்புசாமி முதலியார் காங்கிரசுக்கு வரும்போது அவரது நிலை என்ன? அதன் பிறகு அவர் என்ன வியாபாரம் செய்தார்? இப்போது அவருக்கு இருக்கும் பண நிலை எவ்வளவு? இது எப்படிச் சேர்ந்தது? இதற்கு ஆதாரமோ கணக்கு வழக்கோ உண்டா? என்பவைகளை மேல்வாரியாகக் கவனித்தாலும் காங்கிரஸ் பக்தர்களும் பண நிலையும் என்கின்ற விபரம் நன்றாய் விளங்கும். இன்னும் எத்தனை ஜில்லாக்களை வெளிப்படுத்த வேண்டுமானாலும் தயாராய் இருக்கிறோம். ஆனால் வாசகர்கள் மூளைக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்கு ஆகவே சிலவற்றை அவர்களையே சிந்தித்துப் பார்க்கும்படி விட்டு விடுகிறோம்
இந்த மகா உத்தமர்கள் மூலம் “தேசீயப்பணியாற்றவும்'' “பாரதமாதாவின் விலங்கை உடைத்தெறியவும்” என்னும் பித்தலாட்டத்தின். பேரால் தென்னாட்டில் இன்னமும் லக்ஷக்கணக்காக பணம் வசூலித்து கொடுத்து விட்டுப்போக பட்டேல் வருகிறார் என்றால் அவரை வரவேற்பதா பஹிஷ்கரிப்பதாஎன்பதை பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் யோசித்துப் பார்க்கும்படி தமிழ் மக்களை வேண்டிக்கொள்ளுகிறோம்
எங்காவது பார்ப்பனன் சத்திரங்கட்டி அன்னதானம் செய்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறோமா? பார்ப்பான் கோவிலோ, குளமோ, மண்டபமோ, சாவடியோ கட்டி பொதுஜனங்களுக்கு விட்டதாக யாராவது பார்த்திருக் கிறோமா? எங்காவது பார்ப்பான் பள்ளிக்கூடம் கட்டியோ பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவி செய்தோ பொதுமக்களைப் படிப்பித்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறோமா? வேண்டுமானால் பார்ப்பனர்கள் நன்மைக்கு ஆக மாத்திரம் என்று எங்காவது மற்றவர்கள் இடம் மிக்க பொருள்பறித்து ஏற்பாடு செய்து தன் பெயரை எழுதிக் கொள்ளுவான். தன் பெயரை விளம்பரப்படுத்திக்கொள்ளுவான். உதாரணமாக தோழர்கள்
வி. கிருஷ்ணசாமி அய்யர், சர்.பி.எஸ். சிவசாமி அய்யர் முதலிய படித்த - தலைவர்''களான (பார்ப்பனரல்லாதாராலேயே) பெரும்பொருள் சம்பாதித்த கனவான்கள் செய்த தருமங்கள் என்பவைகள் கூட பார்ப்பனர்கள். என்பவர்களுக்கு மாத்திரமே பயன்படக்கூடியதாயும் பார்ப்பனர் என்பவர்களுக்கு மாத்திரமே உத்தியோகம் இருக்கக்கூடியதாகவும் இருக்கிறது என்றால் மற்ற பார்ப்பனர்களைப்பற்றி யோசிக்க நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்
இப்படிப்பட்ட சமூகத்தார் நடத்தும் காங்கிரசுக்கு அதாவது அவர்களது ஆதிக்கத்தை உயர்த்தி மற்றவர்கள் ஆதிக்கத்துக்கு உலை வைக்கும்
குடி அரசு - 1936 (2), 460
முயற்சி ஸ்தாபனத்துக்குப் பார்ப்பனரல்லாதார் பணம் உதவுவது என்றால் இதில் மானமோ அறிவோ எப்படி இருக்க முடியும் என்றுதான் கேட்கின்றோம்.
தோழர் பட்டேல் பகற்கொள்ளை அடிப்பதற்கே வருகிறார். கொள்ளை அடித்த பொருளை பார்ப்பனருக்கு அழுகவும் பார்ப்பன தாசர்கள் சொத்து சேர்க்கவும் பயன்படுத்த உதவவே வருகிறார்
தோழர்களே பட்டேல் ஜாக்கிரதை!
Beware of Patel!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.12.1936
4... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சர்க்காரின் ஞானோதயம்
பிரசாரக் கூட்டங்களில் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சியார்களை அற்பத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசுவதைப்பற்றியும்,
காங்கிரஸ்காரர்கள் அல்லாத மற்றவர்கள் கூட்டங்களில் காங்கிரஸ் காலிகளும், பல கஞ்சித் தொட்டிக் கூலிகளும் கல்லெறிதல், செருப்பு வீசுதல், அழுகல் முட்டைகள், அசிங்கப் பண்டங்கள் வீசுதல், அனாவசியமாய் மற்றவர்கள். கூட்டங்களில் “காந்திக்கு ஜே” 'சத்தியமூர்த்திக்கு ஜே” என்பது போன்ற முட்டாள்தனமான மொழிகளைக் கூவி தொல்லைப்படுத்துதல், பள்ளிக்கூடத்து பிள்ளைகள் கையிலேயும், தெருவில் பிச்சையெடுக்கும் எச்சிலைப் பையன்கள் கையிலேயும் கொடிகளைக் கொடுத்து பிரசங்கங்கள். நடக்கும்போது கூட்டத்தைச் சுற்றியும், கூட்டத்து நடுவிலும் கூச்சல். போடும்படி செய்தல் ஆகிய பல காரியங்கள் தொடர்ச்சியாய், கட்டுப்பாடாய் நடந்து வந்ததை “குடி அரசு” மூலம் புள்ளி விபரங்களோடு பல தடவைகளில்
எடுத்துக் கூறி வந்திருக்கிறோம். அதை ஆதரித்தே காங்கிரஸ் பத்திரிகைகளும் தங்களது இம்மாதிரியான காலித்தனங்களில் தங்கள் வெற்றியைக் காண்பிப்பதின் மூலம் தெரிந்தோ தெரியாமலோ “ராமசாமி கூட்டத்தில் குழப்பம்” “ஜஸ்டிஸ் கட்சி கூட்டம் கலவரத்தில் முடிந்தது” “விளக்குகள் உடைபட்டன'' “கல்லுகளும் செருப்புகளும் எறியப்பட்டன" “அழுகல் முட்டைகள் வீசப்பட்டன" “ராமசாமிக்கு அடி" “செளந்திரபாண்டியனுக்கு அடி என்றெல்லாம் கொட்டை யெழுத்துக்களில் எழுதி மகிழ்ந்து காலித்தனங்கள் நடந்ததை மெய்பித்துக்கொண்டே வந்தன.
மற்றும் அதிகாரிகளும் சிற்சில இடங்களில் பார்ப்பனர்களாக உள்ளவர்கள் காங்கிரசுக்கு ஆதரவு காட்டி வந்ததையும், காங்கிரசுக்கு விரோதமானவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்ததையும் மேல் அதிகாரிகளுக்கு விண்ணப்பம் மூலமாகவும் நேரிலும் தெரிவிக்கப்பட்டு வந்தன. இவ்வளவு நடந்தும் இதுவரையிலும் அரசாங்கம் எவ்வித பயன் தரத்தக்க நடவடிக்கையும் கையாளாமல் இருந்ததுபற்றி நாம் அரசாங்கத்தை சலித்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே சென்றவாரத்துக்கு முந்தினவாரம் இது சம்மந்தமாய் அரசாங்கத்துக்குக் கண்டித்து எழுதி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
நேரிலும் தகவல் கொடுத்தோம். அவை இப்பொழுதாவது ஒரு அளவுக்கு அரசாங்கத்தாரால் கவனிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஒரு அளவுக்கு ஆறுதல் அடைகிறோம்
குடி அரசு - 1936 (2), 462
நிற்க, காலித்தனத்தின் மூலம் எலெக்ஷன் வெற்றி தோல்விகளைப் பார்த்துக்கொள்ளலாம் என்று வெளிப்படையாய் ஏற்பட்டுவிடுமானால் இன்றுள்ள ஸ்தானங்களெல்லாம் எந்த தேர்தலிலானாலும் போட்டியில்லாமல் ஜெயித்துவிட முடியுமென்று எவ்வித உறுதியும் கூற நம்மால் மூடியும் ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் கூலியும் பதவியும் கொடுத்து ஆள்களைச் சேர்த்து காலித்தனம் செய்யச் செய்ய வேண்டும். மற்ற கட்சிக்கு அவ்வித நிர்ப்பந்தம் எதுவுமில்லை. தடை செய்யாமலிருந்தாலே காங்கிரஸ் காலித்தனத்தைவிட நூறு மடங்கு செய்யச் செய்வதற்கான செளகரியங்களுண்டு. இதை உத்தேசித்தேதான் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் திருச்செங்கோடு ஜஸ்டிஸ் மகாநாட்டின் திறப்புவிழா ஆற்றிய சொற்பொழிவில் வியக்தமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதாவது “காங்கிரஸ்காரர்கள் காலித்தனத்தையே தங்கள் வெற்றி பெறும் ஆயுதமாகக் கருதி இருக்கிறார்கள். நாங்களும் அப்படியே கருத ஆரம்பித்தோமானால் காங்கிரஸ்காரர்களைவிட நூறு மடங்கு மேன்மையாகவும் பயன் தரத்தக்கதாகவும் செய்யச் செய்ய முடியும்” என்பதை விளங்கப் பேசி இருக்கிறார். அதன் பிறகு செட்டி நாட்டு ராஜா சர் அண்ணாமலை அவர்கள் கூட்டத்தில் சிலர் செய்த காலித்தனமும் தோழர் செளந்திர பாண்டியன் அவர்கள் கூட்டத்தில் நடந்த காலித்தனமும் படம் பிடித்தாற்போல் அதிகாரிகளுக்கு விளக்கப்பட்டு விட்டது இவ்வளவு ஆன பிறகே சர்க்காருக்குக் கொஞ்சமாவது தோன்றி அதற்கான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள முன் வந்தது ஒரு அளவுக்காவது புத்திசாலித்தனமானதாகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.12.1936
463] ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காங்கிரஸ் தலைமைப் பதவி
இந்திய தேரீப காங்கிரசின் தலைமைப்பதவிக்கு தோழர் ஜவஹர்லாலின் மோகமானதுமான அவமானத்தைக்கூட கவனிக்க முடியாமல் செய்துவிட்டது.
சமதர்மத்தை பிரசாரம் செய்வதில்லை என்றும், பதவி ஏற்பு மறுப்பை பிரசாரம் செய்வதில்லை என்றும் வாக்குகொடுத்து தலைவர் பதவியை கேட்க வேண்டிய அளவுக்கு துணிந்துவிட்டார்.
என்னை தலைவனாக தேர்ந்தெடுத்தால் எனது கொள்கையை
நீங்கள் ஒப்புக்கொண்டதாக அர்த்தமல்ல, சமதர்மத்தை அனுமதித்ததாக அர்த்தமல்ல, பதவி மறுப்பை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல” என்று தானாகவே அறிக்கை விட்டிருக்கிறார்.
சென்னை பார்ப்பனர்கள் தோழர் ஜவஹர்லால் தலைவராகக் கூடாது என்று எவ்வளவோ தந்திரங்கள் செய்தார்கள். ஜவஹர்லாலின் யோக்கியதையற்ற தன்மையை தயவு தாக்ஷண்ணியமில்லாமல் வெளிப்படுத்தினார்கள். அவருக்கு தலைமைப்பதவி தகாது என்றும் இது சமயம் அவர் கூடாது என்றும் எவ்வளவோ எழுதினார்கள். கடசியாக காந்தியார் எங்கு ஜவஹர்லால் விறைத்துக்கொண்டால் தன்னைத் தூக்கி கீழே போட்டுவிடுவாரோ என்று பயந்து மற்ற இரு அபேக்ஷகர்களையும்
பின் வாங்கிக்கொள்ளும்படி செய்துவிட்டார். அதனால் பண்டிதருக்குதான். தலைமைப்பதவி கிடைக்கலாம் என்று கருதும்படியான நிலைமை இன்று
ஏற்பட்டிருக்கிறது
2, 3 வருஷங்களுக்கு முன்பாகவே தோழர் சி.ஆர். ஆச்சாரியாருக்குக் கிடைத்திருக்க வேண்டிய இந்தப் பதவி இப்பொழுது கூட கிடைக்காமல் மூன்றாந் தடவையாக ஒரு வெத்தி வேட்டுக்கு போய் சேருகிறது. அதுவும் அரசியல் உலகில் செல்வாக்கில்லாத நபருக்கு போய்ச் சேரப்போகிறது. இவையெல்லாம் காங்கிரசின் பொறுப்பற்ற தன்மையைத்தான் காட்டுகிறதே ஒழிய அதன் பொறுப்பையோ புத்திசாலித்தனத்தையோ காட்டவில்லை.
பண்டிதர் தேர்தலில் இருந்து வடநாட்டுப் பார்ப்பனர் தென்னாட்டுப் பார்ப்பனர் என்கின்ற பிரிவு உணர்ச்சி ஒன்று புதிதாக உற்பத்தியாக இடமேற்பட்டும் விட்டது.
குடி அரசு - 1936 (2), 464
பொதுவாக சொல்லவேண்டுமானால் காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஆசைப்பட்டு பாடுபட்டவர்களில் தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் கூட 2வது மூன்றாவதாக ஆகத்தக்க வண்ணம் தோழர் ஜவஹர்லால் பிரயத்தனப்பட்டு அறிக்கை மேல் அறிக்கை வேண்டுகோள் மேல் வேண்டுகோள் விட்டு நயம் காட்டி பயம் காட்டி கொள்கைகள் என்பவற்றை விட்டுக்கொடுக்க இசைந்து பதவி பெற்றுவிட்டார். “பதவி மோகமற்ற'' ஸ்தாபனத்தின் தலைவர் யோக்கியதையைப் பாருங்கள்.
குடி அரசு - கட்டுரை - 06.12.1936
48... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கோவில் பிரவேசம்
திருவாங்கூர் கோவில் பிரவேச பிரகடனம் தோழர் சி. ராஜகோபாலாச் சாரியார் அவர்களால் பரீட்சை பார்க்கப்பட்டாய் விட்டது. அதாவது தோழர். ஆச்சாரியார் சுமார் 40 புலையர்களுடன் திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி ஆலயம் என்பதற்குள் பிரவேசித்து உள் பிரகாரம் முதலியவற்றிற்குள் நுழைந்து விக்கிரகத்தைத் தொட்டுப்பார்த்துவிட்டு வந்துவிட்டதாகவும் யாரும் எவ்வித தடையும் செய்யவில்லை என்றும் பத்திரிகைகளுக்கு
சேதி விடுத்திருக்கிறார்.
இது இவ்வளவும் உண்மையாய் இருக்குமா என்பது சுலபத்தில் ஒப்புக் கொள்ளக் கூடிய காரியமல்ல என்றாலும் தோழர் ஆச்சாரியார் கூறுவதினால். அவை உண்மையாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
அப்படியே உண்மையாய் இருக்குமானால் தோழர் ஆச்சாரியார். கூறுகிறபடி இது ஒரு புரட்சியான மாறுதல் என்பதில் ஆட்சேபணை இல்லை.
இதனால் தோழர் ஆச்சாரியார் கூறுவது போல் ரத்தக்களரி இல்லாமல் பெரும் புரட்சிகரமான காரியங்கள் நடைபெறலாம் என்பதற்கும் அதிக நம்பிக்கை வைக்க இடமுண்டாய்விட்டது
ஆனால் இந்தக் கோவில் பிரவேசத்தால் ஆதிதிராவிட மக்களுக்கு - கீழ்ப்படுத்தி வைத்திருந்த மக்களுக்கு ஏற்பட்ட காரியமான லாபம் என்ன என்பதை யோசித்தால் அவர்களது முன்னேற்றத்துக்கு ஆன முயற்சிகள் அடைக்கப்பட்டு போய்விட்டன என்பது தான். எப்படி எனில் இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் சமுதாயத்துறையில் அடிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கி கொடுமையாய் வைக்கப்பட்டிருந்த காரணம் பொருளாதாரத் துறையில் தாங்கள் கீழ் நிலையில் இருப்பதால்தான் என்று கருதி பொருளாதார விடுதலைக்கு நேரே பாடுபட்டு வந்தார்கள். ஆனால் இந்த காரியத்தால் அவர்களது சமூகக் கொடுமை ஒரு அளவுக்கு நீங்கி விட்டதாக அவர்கள் உணர நேரும் போது தங்களது பொருளாதாரக் கொடுமைக்கு காரணம் இன்னது என்பதை உணரமுடியாமல் கடவுள் பேரிலும் தலைவிதி பேரிலும் பழியைப் போட்டு விட்டு உறங்கிக் கிடக்க நேரிட்டு விடுமே என்பதுதான்.
குடி அரசு - கட்டுரை - 06.12.1936
குடி அரசு - 1936 (2), 466
சுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும்
புரோகிதத்திண் லக்ஷணம் என்ன?
தோழர்களே!
இன்று இங்கு நடந்த திருமண ஒப்பந்தத்தை கேட்டதோடு அதன் வினைமுறைகளையும் பார்த்தீர்கள். இதைத்தான் இன்று பலர் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் சீர்திருத்த திருமணம் என்றும் சொல்லுகிறார்கள். இரண்டும் ஒன்றுதான். எப்படிச் சொன்னாலும் சரி, வயது வந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு ஆக தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒப்பந்த வினையைத்தான் இன்று நாம் திருமணம் என்கிறோம்
அந்த வினைகள் பல விதமாக செய்யப்பட்டு வருகின்றன. அத்தனை விதங்களுக்கும் ஆதாரமோ அவசியமோ என்ன என்பதற்கு யாராலும் காரணம் சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ பழக்க வழக்கம் என்று சொல்லிக் கொண்டு தங்கள் கெளரவங்களையும் நினைத்துக்கொண்டு என்ன என்னமோ செய்து வருகிறார்கள்.
உலகில் மக்கள் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் மாற்றம் ஏற்பட்டு வருவதுபோல் இத்திருமணம் என்கின்ற முறையிலும் காலதேசவர்த்தமானத்தை உத்தேசித்து பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
மற்றும் பல துறைகளிலும் அனாதியான பழக்க வழக்கம் என்பவைகளிலும் கூட அறிவு விசாலத்தை முன்னிட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
மற்றும் பல துறைகளில் வெறும் மாறுதலை விரும்பியே பல பல மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இவை உலக இயற்கையே யாகும் ஏதோ ஒரு விதத்தில் மாறுதல்கள் ஏற்படுவது தள்ள முடியாத காரியமாகும் இந்த உண்மையை நமது வாழ்க்கையையும் அனுபவத்தையையும் ஞாபகப்
படுத்திப் பார்த்தால் அதன் விபரம் பூராவும் நமக்கு நன்றாய்விளங்கும்
நாம் மாறுதல்களுக்கு கட்டுப்பட்டவர்களும் அடிமைப்பட்டவர்களும் ஆசைப்பட்டவர்களும் ஆவோம்.
499... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஆதலால் அந்த மாறுதலேதான் அதுவும் அறிவு ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டுதான் இந்தத் திருமணமுறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும் திருமணங்களை இப்போது பெரும்பாலும் ஒரு நாளில் முடித்து விடுவது என்பது பெரும்பாக மக்களுக்குள் அதுவும் அறிவாளிகளான மக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஒப்புக்கொண்ட விஷயமாகி விட்டது அதோடு சடங்கு முதலியவைகளும் கூட பெரிதும் சவுகரியத்திற்கு ஏற்றபடி நழுவவிட்டும் மாற்றியும் அமைத்துக்கொண்டாகி விட்டது. நகை உடை ஆகியவைகளும் முன்புசமயத்துடனும் சடங்குடனும் பிணைத்திருந்ததெல்லாம் இப்போது விடுவிக்கப்பட்டு செளகரியம்போல் அமைத்துக் கொள்ளப்பட்டு. விட்டது. பெரிதும் பாமரத்தன்மை உள்ள வகுப்புகளில்தான் ஏதோ பல பிடிவாதங்களை காண்கின்றோமே அல்லாமல் மற்றபடி அனேக விஷயங்கள் திருத்தி அமைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றதை காண்கின்றோம் எப்படியோ மக்கள் மாறுதல்களை விரும்பவும் சகிக்கவும் வந்து விட்டார்கள். ஆனால் அவை வெறும் மாறுதல்களுக்கு ஆகவே இல்லாமல் அறிவுக்கும் அனுபவ சவுகரியத்திற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. அது தான் இன்று நமது தொண்டும் ஆகும். இந்தத் திருமணத்தில் நாம் காணும் மாறுதல்கள் அதை அனுசரித்தன என்று தான் உங்களிடம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.
இத்திருமணத்தில் நீங்கள் என்ன மாறுதல் காண்கிறீர்கள்?
புரோகிதன் இல்லை; அது ஒரு முக்கிய மாறுதல். ஆனால் புரோகிதன்.
எதற்கு? புரோகிதன் என்றால் என்ன? என்பது முதலில் யோசிக்கத்தக்கதாகும்.
இன்று புரோகிதன் என்பவனுக்கு உள்ள லட்சணம் எல்லாம் முதலில் அவன். பெரிய ஜாதிக்காரனாக இருக்கவேண்டும். அவனுடைய நடத்தை தன்மை முதலியவைகளைப்பற்றி நமக்கு கவலையில்லை. பெரிதும் நமக்கு தெரியாத பாஷையில் அவசியம் புரியாத சடங்குகளைச் செய்யச் சொல்லி பணம் வசூலித்துக்கொண்டு போகிறவனையேதான் இன்று புரோகிதன்
என்கின்றோம். மற்றும் அவன் காலில் நாமும் மணமக்களும் விழுந்து கும்பிடுகிறோம்; அவனை சாமி என்று அழைக்கிறோம். இவற்றைத் தவிர புரோகிதனுக்கு வேறு லக்ஷணம் சொல்லுங்கள் பார்க்கலாம். அல்லது வேறு பயனையாவது சொல்லுங்கள் பார்க்கலாம். இந்தப் புரோகிதன் நமக்கு எதற்கு என்று உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? அவன் நமது தமிழ் மக்கள் திருமணங்களில் எந்தக் காலத்தில் வந்து கலந்து கொண்டான் என்று உங்களுக்குள் யாருக்காவது தெரியுமா? அவனால் வகுக்கப்பட்ட சடங்குகள் மந்திரங்கள் முதலியவை எதற்கு ஆக எப்போது என்ன அவசியத்தின் மீது ஏற்பட்டதென்று உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? உங்கள் பழய இலக்கியங்கள் பழய ஆதாரங்கள் என்று சொல்லப்படுபவைகளில் இந்த புரோகிதனுக்கும் சொற்களுக்கும் அவன் சடங்குகளுக்கும் ஏதாவது
குடி அரசு - 1936 (2), 468
ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஆகவே புரோகிதம் என்பது ஏதோ உங்கள்
பழக்கம் அல்லது முன்னோர்கள் நடந்த வழி என்பது அல்லாமல் வேறு எந்த அவசியத்தைக் கொண்டது என்று யோசித்துப் பாருங்கள். ஆதலால் இங்கு புரோகிதன் இல்லாத ஒரு மாறுதலானது ஒன்றும் பிரமாத மாறுதல் அல்ல என்பதோடு அவனில்லாததால் எவ்வித குறையும் ஏற்பட்டு விடவில்லை என்பதையும் உணருகிறீர்கள்.
மற்றொரு மாறுதல் மணமக்களின் ஒப்பந்தம் என்பதில் நிகழ்ந்ததாகும். அதாவது பழய முறைப்படி செய்யப்படும் மண ஒப்பந்தத்தில் எஜமான் அடிமை ஒப்பந்த வாசகம் இருக்கும். அதாவது ஆணுக்கு பெண் அடிமை, பெண்ணுக்கு ஆண் எஜமான் என்பதும், பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதும், அதற்கெல்லாம் பெண் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதுமான அடிமை முச்சலிக்காவே
ஒப்பந்தத்தில் மிளிரும்
ஆனால் இந்த திருமண ஒப்பந்தத்தில் இருவரும் சமம் என்றும் வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவபாவம் மிளிரும். இந்த மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக்கொண்டே யோசிக்காதீர்கள் உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளையும் அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப்பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளா யிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ் ஜாதியார் என்பவர்களுக்கு சம சுதந்தரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழவேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள். விஷயத்திலும் நமது பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா? நமது வாழ்க்கைத் துணைகளிடத்திலும் கவனிக்கப்பட வேண்டாமா? அந்தப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களானால் அதற்கு இந்த சந்தர்ப்பத்தைவிட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன். இத்திருமணத்தை சீர்திருத்த மணம் என்றும் வைதீக மணம் என்றும் சொல்லாமல் இது ஒரு சுயமரியாதை மணம் என்றும் நாஸ்திக மணம் என்றும் சொல்லப்படுவதற்கு அந்த இரண்டு காரியங்களில் ஏற்பட்ட மாறுதல்கள் தான். அதாவது புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும் பெண்ணுக்கு சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படி சொல்லப்படுவதற்கு ஆக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம்அவரவர்கள் உணர்ச்சி - ஆராய்ச்சிதிறன் ஆகியவைகளைக்
49 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கொண்டதே தவிர அது ஒரு குணமல்ல - ஒரு கக்ஷி அல்ல; ஒரு மத மல்ல. ஆகையால் இத்திருமணமுறை மாறுதல்களில் நாஸ்திகத்திற்கு இடமில்லை. கடவுள் நம்பிக்கைகாரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த திருமணம் கடவுள் சித்தமில்லாமல் நடைபெற்றது என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படிசொல்லுவதானாலும் எந்தகடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகத்தை புகுத்துவது சரியல்ல. புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அனேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அருத்தம் ஆதலால் அதையும் நாம் லக்ஷியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால் நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவமாய் பாவிக்கப்பட்டு சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால் தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்கவேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள். “திருமணம்” இல்லாமல் தனித்து வாழ்வதே மேல் என்று சொல்லுவேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்படா விட்டால் என்ன செய்யமுடியும்? அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்கு பாத்திய முண்டு? ஆகையால் வேறு எந்த காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கை சுதந்திரத்தில் சமசுதந்திரம் என்பது ஏற்பட்டுத்தான் ஆகவேண்டும். சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள - ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும்
மற்றபடி இத்திருமணத்தில் உள்ள மாறுதல் செலவு சுருக்கம் என்பது. இதையெல்லோரும் ஒப்புக்கொள்ளுவீர்கள் என்றே நினைக்கிறேன். இந்தியாவின் பொருளாதார நிலையைப்பற்றி கண்ணீர் வடிக்காத அரசியல்வாதிகள் கிடையாது. அதை நம்பி கோவிந்தா போடாத பாமர
மக்களும் கிடையாது. அது உண்மையாய் இருக்குமானால் இந்த மாதிரி ஒரு
5 நிமிஷ காரியத்துக்கு ஆக - 4 வரி ஒப்பந்த வார்த்தைக்கு ஆக ஆயிரக்கணக்காகவும் பதினாயிரக்கணக்காகவும் செலவழிக்க அனுமதிக்கப் படலாமா என்று கேட்கிறேன். இப்படி செலவு செய்வது கிரிமினல் குற்றமாகாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அணா வரும்படி என்கிறார்கள். அப்படியானால் தினம் நான்கு அணாவே வரும்படி உள்ள ஒரு ஜோடிக்கு - இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்திற்கு எவ்வளவு ரூபாய் செலவழிப்பது குறைந்தது 250 ரூபாய் செலவானாலும் 1000 நாளைய வரும்படி செலவழிக்கப்படுகிறதா இல்லையா என்று பாருங்கள். இந்த வழக்கம் இது வரை அனுமதிக்கப்பட்டிருப்பதிலிருந்தே இந்த நாட்டில் பொறுப்புள்ள சீர்திருத்தக்காரரோ, பொருளாதார துணைவர்களோ, நல்ல அரசியல்
குடி அரசு - 1936 (2), 470
தலைவர்களோ, ஜீவகாருண்யமுடையவர்களோ, தேசீயவாதிகளோ இல்லை என்று அருத்தமாகவில்லையா? நான் ஒரு நிமிஷம் அரசனாய் இருந்தாலும் முதல் முதல் இம்மாதிரியான பொருள் விரையத்தை தடுக்கவே தூக்கு தண்டனை நிபந்தனையுடன் சட்டம் செய்வேன். இம்மாதிரியான பொருள் நஷ்டம் தான் இன்று இந்தியாவுக்கு பிடித்த பெரும்பிணி என்று சொல்லுவேன். சம்பாதனை மார்க்கங்கள், பொருள் உற்பத்தி மார்க்கங்கள் நாளுக்கு நாள் அருகிக்கொண்டு போகின்றன. செலவு மார்க்கங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகின்றன. நமது மக்கள் வாழ்க்கைக்கு பொருளாதார கணக்கு வரவு செலவுத் திட்டமே கிடையாது. அப்படிப்பட்ட நாடு எந்தக் காலத்திலும் எந்த ஆட்சியினும் பொருளாதார சவுக்கியத்தை உண்டாக்கவே முடியாது. நமது திருமணங்கள் மாத்திரமல்லாமல் நமது தெய்வங்களின் திருமணங்கள் நமக்கு பெரியதொரு கழுத்தறுப்பாகும். மற்றவை நம் வாழ்க்கை சடங்கு முறைகள், ஜாதி ஆச்சார முறைகள் ஆகியவைகளில் உள்ள பொருளாதாரக் கொடுமையாகும். இவைதவிர பாடுபட ஒருவன், பயன் அடைய ஒருவன், உட்கார்ந்து சாப்பிட ஒருவன் என்கின்ற முறை நமது பொருளாதாரத்தை எவ்வளவு பாதிக்கிறது என்பதை நாம் உணருவதில்லை. ஆகையால் இம்மாதிரி திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியில் ஒரு 10 நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது. மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும். இதை இன்று வைதீக ஜாதியான பார்ப்பனர் முதல் ஒப்புக்கொண்டு விட் டார்கள். ஆதலால் அந்த மாறுதல் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதே யாகும்.
இன்னும் பல மாறுதல் செய்ய வேண்டியதும் உண்டு. அவை தம்பதிகள் தங்களில் தெரிந்தெடுத்துக்கொள்ள வேண்டியதும், தக்க பொருத்தம் இருக்க வேண்டியதும் தக்க வயதும் தொழிலும் ஏற்பட்ட பின் மணத்தில் இறங்க வேண்டியதும் மற்றும் பல காரியங்களும் உண்டு.
குறிப்பு: 06.12.1936ஆம்நாள்திருப்பூரில் நடைபெற்ற எஸ்.ஆர் சுப்பிரமணியம்
- சென்னியம்மாள் திருமணத்திலும் 09.12.1936 ஆம் நாள் நடைபெற்ற துரைசாமி - லட்சுமிபாய் அம்மாள் திருமணத்திலும் தலைமைவகித்து ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 13.12.1936
4... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பட்டேல் வருகிறாராம் எதற்கு?
தோழர் பட்டேல் அவர்கள் தமிழ்நாட்டுக்கு பணம் வசூலுக்கு ஆக அடுத்தவாரம் வரப்போகிறார் என்றும், அவருக்கு தாராளமாய் பணம் உதவ வேண்டும் என்றும் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கோடு கட்டிய அறிக்கை வெளியிட்டு வருகிறார். சென்ற வாரம் தலைவரான தோழர் முத்துரங்க முதலியாரும் அறிக்கை வெளியிட்டு விட்டார்.
பட்டேல் அவர்களுக்கு பணம் எதற்காக வேண்டும்? வசூலித்த பணத்தை அவர் என்ன செய்யப்போகிறார்? இதுவரை தமிழ்நாட்டில் தோழர்கள். காந்தியார் முதல் பல பேர் வந்து பல தடவைகளில் பொது ஜனங்களிடமிருந்து வசூலித்த பணங்கள் என்ன ஆயிற்று? மற்றும் 1920-ம் வருஷம் தமிழ்நாட்டில் திலகர் சுயராஜ்ய நிதி என்னும் பேரால் வசூலிக்கப்பட்ட ஒரு கோடி என்னும் பெரு நிதி என்ன ஆயிற்று? என்பன போன்ற விஷயங்கள் ஒன்றையும் யோசிக்காமல் காங்கிரஸ்காரர்கள் கேட்கும்போதெல்லாம் பணம் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருப்பது என்றால் நமது மக்களுக்கு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருக்கின்றது என்று யாராவது சொல்லமுடியுமா? திலகர் சுயராஜ்ய நிதியைப்பற்றி பெரியதொரு ஆவலாதி வட நாட்டுப் பத்திரிகைகளில் எழுந்து அவற்றிற்கு சரியான. பரிகாரம் சொல்ல காங்கிரசுக்காரர்களுக்கு யோக்கியதை இல்லாமல் போய் கடசியாக “கணக்கு கேட்கின்றவர்கள் மீது கேசு போடவேண்டும்” என்று காங்கிரஸ் தலைவரும் “திலகர் சுயராஜ்ய நிதிக்கு பணம் கொடுக்காதவர்கள் அதைப்பற்றிய கணக்கு கேட்க யோக்கியதை கிடையாது'' என்று காங்கிரசிடம் கூலி பெற்ற பத்திரிக்கைகாரர்களும் எழுதிவிட்டார்கள். அது சம்மந்தமான விவகாரம் இன்னமும் திலகருடைய மருமகப்பிள்ளைக்கும் காங்கிரசுக்கும் நடந்து கொண்டே இருக்கின்றன.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை திலகர் சுயராஜ்யநிதி எப்படி கையாளப்பட்டது, அதில் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கொள்ளை கிடைத்தது என்பது பற்றி “குடி அரசி”ல் புள்ளி விவரங்களோடு சில குறிப்புகள் அப்போதே வெளியிடப்பட்டிருக்கின்றன.
அவற்றில் முக்கியமான அய்ட்டங்கள் பத்திராதிபர்களுக்கு ஆயிரம் பதினாயிரமாக அதாவது 'சுயராஜ்யா' வுக்கு 10000-மும் “தேச பந்துக்கு 2000-மும் “ஜெயபாரதி”க்கு பல ஆயிரமும் என்று கொடுக்கப்பட்ட பணங்களைப்பற்றியும் கதர் வேலைக்கு ஆக என்று பல பார்ப்பனர்களுக்கு
குடி அரசு - 1936 (2), 472.
கொடுக்கப்பட்ட பணங்கள் வசூல் செய்யாமல் செலவு எழுதி தள்ளிவிட்ட விபரமும் முன்னமேயே வெளிப்படுத்தப்பட்டாய் விட்டன.
மற்றபடி கதர் நிதி என்று தோழர் காந்தியாரே நேரில் வந்து வசூல் செய்து இங்குள்ள பார்ப்பனர்களிடம் ஒப்படைத்துவிட்டுப்போன பல லக்ஷ்க்கணக்கான ரூபாய்களும் ஹரிஜன இலாக்கா என்று ஒன்று ஆரம்பித்து அதற்கு பார்ப்பனர்களையே முக்கிய நிர்வாகஸ்தர்களாக ஆக்கி வேலை இல்லாத பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் கொடுத்து அதன் மூலமே அப்பணம் பெரிதும் செலவழிக்கப்பட்டதோடு அந்த ஆசாமிகள் தேர்தல் பிரசாரம் செய்யவும் அந்த ஆசாமிகள் தேர்தலுக்கு நிற்கவுமான காரியத்துக்கு பயன்படுத்தவுமான வேலைக்கு செலவாக்கப்பட்டதும்
தோழர் காந்தியாரே சென்ற மாதத்தில் “ஹரிஜன்'' பத்திரிக்கையில் ஹரிஜன இலாக்கா சிப்பந்திகள் யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை என்று கண்டித்தும் இனிமேல் அதற்கு ஆக பொது ஜனங்களை தான் கேட்கப் போவதில்லை என்றும் எழுதியதும் அதை பல காங்கிரஸ் பத்திரிக்கைகள் வெளியிட்டதும் யாரும் அறியாததல்ல
அதுபோலவே கதர்நிதியும் கதர் இலாக்கா நிர்வாகத்தில் பார்ப்பனர் களுக்கு வேலையும் ஆளுக்கு 100, 200 என்பதாக சம்பளமும் கொடுத்து வந்ததின் மூலமும் அப்பணங்கள் பெரிதும் செலவழிக்கப்பட்டதோடு கதர் அபிவிருத்தி என்பது நாளுக்கு நாள் கதர் செலவாவது குறைவாகவும் விலை அதிகமாகவும் ஆக நேர்ந்ததும் அதனால் வேறு யாரும் கதர் உற்பத்தி செய்யக்கூடாதபடி நிபந்தனை போட்டு ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதும் அதன் முக்கிய சிப்பந்திகளாய் இருந்தவர்கள் அந்த செல்வாக்கில் சட்ட சபைக்கும் மூனிசிபாலிட்டிக்கும் ஜில்லா போர்டுகளுக்கும் மெம்பர்களாக முயற்சித்து வெற்றி பெறுவதும் அல்லாமல் வேறு கண்ட பயன் என்ன என்பது எவரும் அறியாததல்ல. இப்படி ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் என்றும், ஏழைகளுக்கு உணவு என்றும் தீண்டாமை ஒழிப்பதற்கு என்றும் வசூலித்த பணங்கள் பார்ப்பனர்கள் பிழைக்கவும் அவர்கள் பதவி பெறவுமான. காரியங்களுக்கு பயன்பட்டன என்பதல்லாமல் வேறு பயன் ஏற்படவில்லை என்பது நாம் சொல்லாமலே யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் காங்கிரசின் பேரால் தாசிகளைக் கொண்டும், விவசாரிகளைக் கொண்டும்
சதிர்க் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாடகம், கண்காட்சி என்பன போன்ற பல வேடிக்கைகள் வைத்து அவை மூலமும் லட்சக்கணக்கான ரூபாய்கள் பொது ஜனங்களிடம் வசூலித்து அவைகளையும் பார்ப்பனர்களுக்கே போய்ச் சேரும்படியாக பாழாக்கி அனேக விஷயங்களில் வரவு செலவு கணக்கு கூட வெளியில் காட்டாமல் தங்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் கலகம் செய்து கொண்டு சந்தி சிரிக்கும்படி நடந்துகொண்டதும் யாரும் அறியாத தல்ல
இந்தப்படியும் பல தடவை பலவழிகளில் பல லட்சக்கணக்கான. பணம் வசூலித்ததோடு காங்கிரஸ் கான்பரன்ஸ் முதலிய மகாநாடுகள் 43— பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
நடத்தியதன் மூலமும் ஏராளமான பணம் மீதியானதையும் ஒரு சமூகத்தாரே தின்று ஏப்பம் விட்டு விட்டு பல விஷயங்களில் திருப்தி அற்ற தப்பு கணக்கும் வெளியிட்டு விட்டு இனியும் பணம் வசூல் பண்ணப்போகிறோம், எல்லோரும் பணத்தை கொடுங்கள் என்றால் இது எவ்வளவு தைரியமான பகல் கொள்ளைக் காரியம் என்று கேட்கின்றோம்.
இந்த விஷயங்கள் எப்படியோ போகட்டும். இப்போது பட்டேலின். பேரால் வசூல் செய்யப்படும் பணம் எதற்கு ஆக என்று யோசித்து பாருங்கள். தேர்தல் செலவுக்காம். யாருடைய தேர்தல் செலவு என்று சொல்லுகிறார்கள் என்றால் தேச பக்தர்கள் தேர்தல் செலவுக்காம். தேசபக்தர்கள் என்பவர்கள்
யார் என்பதை இதுவரை காங்கிரசுக்காரர்கள் தேர்தலுக்கு நிறுத்திய தேச பக்தர்கள் என்பவர்களைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய 100க்கு 90 பேர் பார்ப்பனர்களையே நிறுத்தி இருக்கிறார்கள். சென்னை கார்ப்பரேஷனில் காங்கிரஸ்காரர் நிறுத்திய பார்ப்பனரல்லாத தேச பக்தர்கள் என்பவர்கள் தங்கள் கைப்பணத்தில் இருந்து செலவுக்கு போட்டுக் கொண்டார்கள். பார்ப்பன தேச பக்தர்களுக்கு ஏறக்குறைய ஒருவர் இருவர் தவிர மற்ற எல்லா பார்ப்பன தேசபக்தர்களுக்கும் பொதுப்பணமே செலவழிக்கப் பட்டிருக்கின்றன. இதிலும் பல பார்ப்பன அபேக்ஷகர் மீதம் செய்து கொண்டார்கள். இதுபோலவே தான் இனியும் தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடம் வசூலிக்கப்படும் பணங்கள் பார்ப்பனர்களின் எலக்ஷன் செலவுக்கு ஆகவே செலவழிக்கப்படப் போகின்றன. அதை வெளிப்படையாகவே தோழர் சத்தியமூர்த்தியார் சொல்லியே தான் இப்போது பணம் கேட்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் இப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குதலைவராக இல்லாவிட்டாலும் செகரட்டரி என்கின்ற முறையிலும் பார்லிமெண்டரி போர்ட் தலைவர் என்ற முறையிலும் அவரே அப்பணத்திற்கு எஜமானராய் இருக்கப்போகிறார். எப்படி எனில் பட்டேல் அவர்கள் வசூலித்த பணத்தை இங்கேயே கொடுத்துவிட்டுப் போகப் போகிறாரே ஒழிய ஒரு காசு கூட கொண்டு போகப்போவதில்லை. ஆகையால் நமது கையைக்கொண்டே நமது கண்ணைக் குத்திக் கொள்வதுபோல் முட்டாள்தனமாகப் பணத்தைக் கொடுத்துவிட்டு பிறகு அது நமக்கு இந்தக் கெடுதி செய்தது, அந்தக் கெடுதி செய்தது என்று வருத்தப்படுவது பெரிதும் முட்டாள் தனமே யாகும். அப்படித்தான் ஆகட்டும், தேர்தலுக்கு ஏதாவது லட்சியமுண்டாஎன்று யோசித்துப்பார்க்கவிரும்புகிறோம். தேர்தல் லட்சியமெல்லாம் மூர்த்தியின் ஆனைமலைப் பேச்சில் இருக்கிறது.
மற்றும் ஜஸ்டிஸ் கட்சியை 500 கெஜ ஆழத்தில் புதைக்க வேண்டும் என்பது
ஆகவே சுத்த ரத்த ஓட்டமுள்ள பார்ப்பனரல்லாதார் இதற்கு ஒரு காசாவது கொடுக்கலாமா?
குடி அரசு - கட்டுரை - 13.12.1936
குடி அரசு - 1936 (2), 474
அடுத்த மந்திரி சபை நிலை
“பந்தியில் உட்காரவே அனுமதி இல்லாமல் இருக்கும்போது இலை ஓட்டையாய் இருப்பதைப்பற்றி சொல்லுவதில் பயன் என்ன?'' என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள் என்னவென்றால் ஒரு மனிதன் ஒரு சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு தகுதி உடையவனல்ல என்று கருதி வெளியில் தள்ளப்படும்போது இலை ஓட்டையாய் இருக்கிறது என்று ஆவலாதி சொல்வதில் ஏதாவது புத்திசாலித்தனம் இருக்க முடியுமா என்பதே யாகும் அதுபோலவே நமது காங்கிரஸ்காரர்கள் இன்று மந்திரி பதவி ஏற்க வேண்டும் என்று ஒரு கூட்டமும், ஏற்கக்கூடாது என்று ஒரு கூட்டமும், ஏற்றால் ஒரு முட்டுக்கட்டை போடவேண்டும் என்று ஒரு கூட்டமும், ஏற்றால் சீர்திருத்தத்தை உடைக்கவேண்டும் என்று ஒரு கூட்டமும், உடைக்க முடியாது என்று ஒரு கூட்டமும், மரியாதையாய் ஏற்று உத்தியோகங்களையும் பதவிகளையும் ஒப்புக்கொண்டு தங்களால் கூடியதை ஜன சமூகத்துக்குச் செய்யவேண்டும் என்று ஒரு கூட்டமும் ஆக இப்படியாக பலவித அபிப்பிராயங்களைச் சொல்லி சண்டை போட்டுக்கொண்டும் மகாநாடுகளில் தீர்மானங்கள் கொண்டுவந்து வாதப் பிரதிவாதம் செய்து நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.
இது முன் சொன்ன பழமொழிபோல் தான் இருக்கிறது. எப்படி யெனில் காங்கிரசுக்காரர்கள் மெஜாரிட்டியாய் சட்டசபை ஸ்தானங்களை கைப்பற்றுவார்களா? கைப்பற்ற முடியுமா? என்பது ஒரு புறமும், கைப்பற்றினாலும் மந்திரி பதவி கிடைக்கும்படியான அளவுக்கு இவர்களுக்கு பலம் ஏற்படுமா என்பது ஒரு புறமும், அதுவும் சீர்திருத்தத்தை உடைக்கும் மனப்பான்மை உள்ளவர்கள் காங்கிரசில் மெஜாரிட்டியாய் இருப்பார்களா என்பது ஒரு புறமும் சந்தேகமாகவும் சில விஷயங்களில் முடியாது என்பது சந்தேகமறவும் இருக்கும்போது இப்போது மந்திரி பதவியை ஆசை காட்டி தாங்கள் அதிகாரம் வகிக்கப்போவதைச் சொல்லி மக்களை மயக்க வீண் மெனக்கெட்ட வேலை செய்வது புத்திசாலித்தனமான காரியமாகுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்
இன்றுள்ள நிலையில் எந்தக் காரணம் கொண்டும் காங்கிரஸ்காரர்கள் மந்திரிசபை அமைக்கும்படியான மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் 479... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சட்டசபைக்கு வரமாட்டார்கள் என்பது அனேகமாய் உறுதி என்றே சொல்லி விடலாம். எப்படி யெனில் சட்டசபை அமைப்பு அப்படிப்பட்டது. சட்ட சபைக்கு மொத்தம் 215 மெம்பர்கள் என்றாலும் அவர்களில் 116 பேர்கள் தவிர மற்ற 99 மெம்பர்கள் தனித்தொகுதிக்காரர்களே யாவார்கள். அதாவது:-
தாழ்த்தப்பட்டவர்களில் 30, முஸ்லீம்களில் ஒரு பெண் உள்பட 29, கிறிஸ்தவர்களில் ஒரு பெண் உள்பட 9, இந்தியப் பெண்கள் 6, ஐரோப்பியர்கள், ஆங்கிலோ இந்திய தோட்டக்காரர், ஐரோப்பிய வியாபாரிகள் 9, ஜமீன்தார்கள் 6, தொழிலாளிகள் 6, இந்திய வியாபாரிகள் நகரத்தார் உள்பட
2, மலைவாசி 1, கலாசாலை தொகுதிக்கு 1 ஆக 99 ஸ்தானங்கள். இந்த 99 ஸ்தானங்களில் ஒரு 10 அல்லது 15 கூட காங்கிரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்பதோடு கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள் ஆகியவர்கள் சங்கங்கள் காங்கிரசின் பேரால் நிற்கக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியே பத்தோ பதினைந்தோ பெறுவதாய் இருந்தாலும் இவற்றுள் கண்டிப்பாய் 80 ஸ்தானங்கள் காங்கிரசுக்கு கிடையாது என்று இப்போதே சொல்லி விடலாம். 215க்கு 108 ஸ்தானங்கள் பெற்றால் தான் மொத்தத்தில் காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்ததாக கருதப்படுமே யல்லாமல் மற்ற தனித்தனிக் கக்ஷிகளைவிட 1, 2 அதிகமாய் தாங்கள் பெற்றுவிடுவதால் காங்கிரஸ் மெஜாரிட்டி என்று ஆகிவிடாது. ஏனெனில் மொத்த 215 ஸ்தானங்களில் காங்கிரஸ்காரர்கள் எத்தனைபேர், காங்கிரஸ் அல்லாதவர்கள் எத்தனைபேர் என்று தான் கணக்குப் பார்ப்பார்களே ஒழிய எந்தக்கட்சி அதிகம் என்று பார்க்க மாட்டார்கள். அப்போது 108 பேர்கள் காங்கிரஸ்காரர்கள் இருக்கவேண்டும். ஆதலால் தனித்தொகுதிகளில் காங்கிரசில் சேராதவர்கள் எண்ணிக்கை 80 போய்விட்டால் பாக்கி இருக்கும் 135 - ஸ்தானங்களில் காங்கிரஸ் 108-ஸ்தானங்கள் கைப்பற்றி ஆகவேண்டும். அதாவது 5ல் 4 பாகம் கைப்பற்றியாக வேண்டும். இது சுலபத்தில் முடியக் கூடிய காரியமல்ல. இப்போதே காங்கிரசுக்காரர்களுக்கு ஜில்லா தோறும் பொது தொகுதிகளில் பகுதிக்குக்கூட ஆள்கள் கிடைப்பது கஷ்டமாய் இருக்கிறது. உதாரணமாக கோயமுத்தூர் ஜில்லாவை எடுத்துக் கொண்டால் தோழர் டி.எ.ராமலிங்கம் செட்டியாருக்கு ஒரு ஸ்தானம் ஒதுக்கி இருக்கிறார்கள். மற்றவை இன்னமும் நிஷ்கரிஷை செய்ய முடியவில்லை. செட்டியார் அவர்கள் ஸ்தானமும் ஜெயிப்பார்களா என்பது 100-க்கு 75 பாகம் சந்தேகம் தான். ஏனெனில் எதிர்ப்போட்டிக்காரர் 40ஆயிரம் 50ஆயிரம் செலவழிக்கதுணிந்து விட்டார். ஜாதி அபிமானம் வேறு தாண்டவமாடுகின்றது அவருடைய தொகுதியில் கொங்குவேளாளருக்கும் கம்ம நாயக்கர்மார். களுக்கும் தான் போட்டி நடக்கும். மற்ற ஜாதிக்காரர்கள் வந்தால் இருவரும் ஒன்று சேர்ந்து கொள்ளுவார்கள். ஆகையால் செட்டியார் ஜெயிப்பது சந்தேகம்.
குடி அரசு - 1936 (2), 476
இது தவிர மற்ற திருச்சி ஜில்லாவை எடுத்துக்கொண்டால் அங்கும் தோழர் தேவரைத்தவிர வேறு ஆள் கிடைப்பது கஷ்டமான காரியமாய் இருக்கிறது. தேவருடன் போட்டி போடும் ஆளும் சுமார் 10, 15 ஆயிரம் ரூபாய் செலவழிக்கத் துணிந்து நிற்கிறார். அங்கும் டவுனில் காங்கிரசுக்கு எவ்வளவு மதிப்பு என்பது நாம் எழுதி தெரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் யாரும் இல்லை.
சேலத்தில் தோழர் சுப்பராயன் அவர்களைத் தவிர வேறு ஆள்கள் அந்த ஜில்லாவில் சட்டசபைக்கு நிற்கக்கூடியவர்கள் காங்கிரசுக்கு கிடையாது. தோழர்சுப்பராயன் அவர்களுக்கும் அவர்கள் சொந்த ஜனங்களுக்குள்ளகவே போட்டியும் அதிருப்தியும் பலமாக இருக்கிறது
வடஅற்காடு ஜில்லாவில் தோழர்கள்அண்ணாமலை குப்புசாமிகள்தான் இதுவரை அபேட்சகர்களாகக் கிடைத்திருக்கிறார்கள். தோழர் வி.எம்.ராமசாமி முதலியார் அவர்கள் பயந்து கொண்டிருக்கிறார். வட ஆற்காடு ஜில்லாவில்
ஒரு ஐயாயிரம் ஆறு ஆயிரம் ரூபாய் செலவு செய்ய ஒரு அபேட்சகர் முன்: வந்து விட்டால் அவரை எதிர்க்க காங்கிரசில் அபேட்சகர் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஜில்லாக்களும் இது போல்தான் இருக்கின்றன. மதுரைக்கு மாத்திரம் இதுவரை சுமார் 4% பார்ப்பனர்களை அபேட்சர்களாக காங்கிரஸ்காரர்கள் பிரஸ்தாபித்து இருக்கிறார்கள். அங்கு பார்ப்பனரல்லாதார் அபேட்சகர்களாக வரக்கூடியவர்கள்
நூற்றுக் கணக்காக இருந்தும் காங்கிரசுக்கு ஒருவர் கூடக் கிடைக்கவில்லை. வலைபோட்டுத் தேடி ஓய்ந்தாய்விட்டது
ராமநாதபுரத்தில் தோழர் குமார ராஜா பேர் அடிபடுகின்றது அவருடைய இந்திய சட்டசபை ஸ்தானம் ராஜினாமா ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகுதான் அபேட்சகராய் நிற்க முடியும். அதுவும் 5000 அல்லது 10000 ரூபாயுடன் ஒருவர்போட்டிபோட்டால் தோழர் ராஜாநிற்பாராஎன்பதேசந்தேகம்.
திருநெல்வேலி ஜில்லாவுக்கு இன்னமும் யார் பேரும் பிரஸ்தாபிக்க முடியவில்லை. தளவாய் அவர்கள் இப்பொழுதே காங்கிரசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டார். தோழர்கள் எக்கினேஸ்வர சர்மாவும் கூத்த நயினார். பிள்ளை அவர்களும் வண்டி வாடகை கொடுத்தால்தான் ஓட்டுப்போடவே வெளியேறுவார்கள். ஆகவே அந்த ஜில்லாவுக்கு ஆள்களை இனிமேல் குயவன் சூளையில் உற்பத்தி செய்ய வேண்டியதாய் இருக்கிறது.
தஞ்சை ஜில்லாவில் தோழர் நாடிமுத்துபிள்ளை ஒரு ஸ்தானத்துக்கு துணிந்து நிற்பார். அதுவும் மந்திரி வேலைக்கு வாக்களித்திருப்பதினால்தான். மற்ற ஸ்தானங்களுக்கோ அய்யர்மார்களைத் தான் பிடிக்க வேண்டும்.
477... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தென் ஆற்காட்டில் ஜஸ்டிஸ் கட்சியால் தின்று கொழுத்து உருவமான ஒரு முந்திரிக் கொட்டை ரெட்டியார் பட்டம் விட்டு விட்டு தலையை நீட்டிக் கொண்டிருக்கிறார். அவரை ஒரு ஸ்தானத்துக்கு வைத்துக்கொள்ளலாம். மற்ற ஸ்தானத்துக்கு காங்கிரசின் பேரால் நிற்க ஆள் கிடைப்பது கஷ்டம். ஜில்லா போர்டில் வெற்றி பெற்ற ரெட்டியார்களும் படையாச்சிகளும் டிமிக்கி கொடுத்து விட்டார்கள்
செங்கல்பட்டுக்கு நமது தோழர் முத்துரங்க முதலியார் நிற்பார். என்பது உறுதி. மற்ற ஸ்தானங்களுக்கு ஆள் கிடையாது
இவ்வளவுக்கும் கிடைப்பதானாலும் இனியும் ஒன்று இரண்டு ஆள்கள் கிடைப்பதாகவே வைத்துக்கொள்ளலாம். என்றாலும் இவைகள் மெஜாரிட்டி ஆகிவிடுமா என்பதோடு ஆந்திர தேச நிலவரம் என்ன என்று பார்த்தால் “வேட்டை ஆடினதில் 3 வெடி போட்டதில் 2 குண்டு குறிதவறி
விட்டது. ஒன்று வெடிக்கவே இல்லை'' என்பது போல் அவ்விடத்திய நிலையும் மிகவும் மோசம் என்று தான் சொல்லவேண்டி இருக்கிறது கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தபூர் ஜில்லாக்களுக்கு காங்கிரஸ்காரர்களுக்கு சும்மா கவுரவத்துக்கு நிறுத்துவதற்குக் கூட அபேக்ஷகர்கள் பெயர் கிடைக்கவில்லை.
விசாகப்பட்டணமோ 'பொப்பிலி ராஜ்யம்” என்று ஏற்கெனவே
காங்கிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள்.
கோதாவரி, கிருஷ்ணா, நெல்லூர் ஆகிய ஜில்லாக்களில் பார்ப்பனர்கள் கம்மா - ரெட்டி முதலிய தகராறுகளில் காங்கிரஸ் பேரால் நிற்க பார்ப்பனர்கள் தவிர பார்ப்பனரல்லாதார்களில் அபேட்சகர்கள் கிடைப்பது
அரிதாய் விட்டது
தமிழ்நாட்டிலாவது காங்கிரசுக்கு ஏதோ சில ஆள்கள் பார்ப்பன ரல்லாதாரில் இருக்கிறார்கள் என்றாலும் ஆந்திராவில் அது கூடக்கிடையாது
சுற்றிச்சுற்றி தோழர்கள் பட்டாபி, பிரகாசம், நாகேஸ்வரராவ், காளேஸ்வரராவ்,
புலுசு சாம்பமூர்த்தி என்கின்ற பந்துலுகள், அய்யர்கள் கூட்டங்களே தவிர மற்றபடி வேறு ஆள்கள் மிகவும் அபூர்வமாய்ப் போய்விட்டது. சில ரெட்டியார்கள் காங்கிரஸ் பேரால் குதியாட்டம் போட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களும் இப்போது முக்கியமானவர்கள் காங்கிரசை
விட்டு விட்டார்கள்: ஆகவே சென்னை மாகாணத்தின் நிலை காங்கிரசுக்காரர்கள் ஒரு 50, 60 ஸ்தானம் கைப்பற்றுவது என்பது கூட மிகவும் கஷ்டமான காரியமாகத் தான் இருக்கும்; அதுவும் பதவி ஏற்றுக்கொள்வதில்லை என்று சொல்லி விட்டால் ஒரு 10 ஸ்தானம் கிடைப்பது கூட காங்கிரசுக்கு அருமையாகத்தான் போய்விடும். வெறும் பார்ப்பனரும் குப்புசாமி கம்பெனியும்தான் மீதியிருக்கும்.
குடி அரசு - 1936 (2), 478
ஆகவே எந்த விதத்திலும் காங்கிரஸ்காரர்கள் மொத்தத்தில் 110 ஸ்தானங்கள் சம்பாதித்து மெஜாரிட்டி ஆகி மந்திரி சபை நியமிக்கும் அந்தஸ்துக்கு வருவார்கள் என்று நினைப்பது அமாவாசையன்றைக்குப் பூரண சந்திரோதயம் ஏற்படும் என்பது போல் தான் முடியும். இதற்குள்
பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிளவு காங்கிரசில் காட்டுத் தீபோல் பரவிக்கொண்டிருக்கிறது. மந்திரி சண்டைக்கு இப்போது இருந்தே ஆயுதங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. யாருக்கு மந்திரி வேலை கிடைத்துவிட்டாலும் தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு மாத்திரம் மந்திரி வேலை இல்லை என்பதை இப்போதே காங்கிரஸ் பக்தர்கள் கல்லில் எழுதி வைத்துக்கொண்டார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் துறவும் தவமும் இனியும் நீண்டு அவை அஞ்ஞாத வாசத்தில் முடியும் போலிருக்கிறது
ஆதலால் காங்கிரஸ் முயற்சி முடிவில் ஊரை ஏமாற்றி பணம் வசூலித்ததும், வாலிபர்களை ஏமாற்றி காலித்தனத்துக்கு உசுப்படுத்திவிட்டதும் பெண்களை ஏமாற்றி மக்களை மயக்கச்சொன்னதும், ஏமாந்த சோணகிரிகளை ஏமாற்றி பட்டம் பரிவட்டம் விடச்சொன்னதும் தான் மீதி ஆகப்போகிறதே தவிர முடிவில் காரியம் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்று இப்போதே
எழுதி வைத்துக்கொள்ளலாம்
எலக்ஷன் முடிந்த உடன் கவர்னர் காங்கிரசுக்கு எத்தனை பேர் வந்தார்கள்? காங்கிரசு அல்லாதவர்களில் எத்தனை பேர் வந்தார்கள்? என்று தான் கேட்கப் போகிறாரே ஒழிய சத்தியமூர்த்தியாரே எத்தனை பேர் உங்கள்
ஆட்களும் அடிமைகளும் என்று கேட்கப்போவதில்லை
அப்போது எப்படியோகாங்கிரஸ் அல்லாதவர்கள்தான் மெஜாரிட்டியாய் இருக்கப்போகிறார்கள். கவர்னர் பிரபு அவர்கள் (காங்கிரஸ் அல்லாதவர்களை) எல்லாம் ஒன்று சேர்த்து ஐரோப்பியருக்கு ஒரு மந்திரி, தாழ்த்தப்பட்டவருக்கு ஒரு மந்திரி, முஸ்லீம்களுக்கு ஒரு மந்திரி ஆக மூன்று மந்திரி போக மீதி நான்கோ ஐந்தோ நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுகிறீர்களா நான் தீர்மானிக்கட்டுமா என்று கேட்கப்போகிறார். அதிலும் எப்படியாவது பொப்பிலி ராஜாவுக்கு ஒரு மந்திரி பதவியும் செட்டி நாட்டு குமாரராஜாவுக்கு ஒரு மந்திரி பதவியும் கண்டிப்பாய் கிடைத்துவிடும். ஆகவே மூன்றும் இரண்டும் கூடி ஐந்து போக பாக்கி மூன்று ஸ்தானங்கள் மீதிகட்சி பலத்துக்கோ அல்லது ஜாதி பலத்துக்கோ ஆள் பலத்துக்கோ கொடுக்கப் பட்டுவிடும் இந்த 8 மந்திரிகள் எப்படியும் சட்டசபையில் எப்போதும் மெஜாரிட்டியாகவே இருந்துவரத் தக்கவர்களாக ஆகி விடுவார்கள்.
இந்த நிலை தெரிந்த உடன் காங்கிரசுக்காரர்கள் சீ அந்தப்பழம்
புளிக்கும் என்கின்ற மாதிரியில் பதவி மறுப்பு, சீர்திருத்த உடைப்பு, முட்டுக் கட்டை ஆகிய நாமாவளி சொல்லிக்கொண்டு வெளியில் நின்று பஜனை 499... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பாடி மறுபடியும் பிச்சைக்கு வரப் போகிறார்கள். இதற்குள் காங்கிரஸ்காரர்களில்
சிலர் ஏதோ ஒரு நொண்டிச் சாக்கை சொல்லிக்கொண்டு ஒவ்வொருவராய் காங்கிரசில் இருந்து விலகி சுயேச்சைவாதியாகி மற்ற கட்சிகளின் அனுதாபிகளாகி ஆதரவாளர்களாகி வெட்கம் எல்லாம் தீர்ந்த உடன் ஜஸ்டிஸ்கட்சி ஜோதியில் இரண்டறக் கலந்துவிடப் போகிறார்கள். இதுதான் நடக்கக்கூடுமே தவிர காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டி வந்து கோட்டைக்குள் புகுந்து காங்கிரஸ் கொடியை பறக்கவிட்டு காரியதரிசிகளையும் கவர்னரையும் கதர்கட்டச்சொல்லப் போகிறோம் என்பதும் போலீஸ்காரர்களை தலை வணங்கச் சொல்லப்போகிறோம் என்பதும் பட்டாளத்தை திருப்பிச் சுடச் சொல்லப் போகிறோம் என்பதும் வெட்டிஅளப்பும் ஏதோ சில பார்ப்பனர்களையாவது சட்ட சபைக்குள் நுழையச் செய்யும் சூழ்ச்சியுமேயாகும்
ஆதலால் ஆங்காங்குள்ள சொந்த செல்வாக்குள்ளவர்களும் சொந்த பணவசதி யுள்ளவர்களுமான பார்ப்பனரல்லாதார்கள் இந்த தோழர் சத்தியமூர்த்தி கூட்டத்தாரின் பித்தலாட்டங்களுக்கு ஆளாகி மானங்கெடாமல் சுயமரியாதை இழக்காமல் ஜாக்கிரதையாய் இருந்து தங்கள் சொந்தத்தில் சுயேச்சையில் நின்று வெற்றிபெற வேண்டுமாய் யோசனை கூறுவதுடன் பின்னால் ஏமாந்துவிட்டோமே இனி எப்படி கட்சி மாறி அவமானமடைவது என்று வருத்தப்படாமல் இருக்க எச்சரிக்கை செய்கிறோம்
மற்றும் வீணாக நமது பணத்தை 10000, 150000, 200000 என்று செலவு செய்து நாம் ஆலாய்ப் பறந்து அவதிப்பட்டு ஓட்டு சம்பாதித்து ஸ்தானம் பெற்று “திருப்பதிக்குப் போயும் பறத்தாசன் காலில் தானா விழுக வேண்டும்?” என்கின்ற வைதீக பழமொழிப்படி இந்தப் பார்ப்பனர்கள் பின்னாலும் அவர்களுடைய கூலிகள் பின்னாலும் கபாத்து பழக வேண்டுமா என்பதையும் நிதானமாய் சொந்த புத்திகொண்டு ஆராய்ந்து பார்க்கும்படி வேண்டுகிறோம்
குடிஅரசு - தலையங்கம் - 13.12.1936
குடி அரசு - 1936 (2), 480
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள்
தோழர் சத்தியமூர்த்திக்கு தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது பாமர மக்களுக்குத் தெரியாது. பார்ப்பனர்களும் பார்ப்பன
பத்திரிக்கைகளும் சத்தியமூர்த்தி அவர்களை வேண்டுமென்றே தூக்கி வைத்து அவரது இழிகுணங்களை மறைத்து விளம்பரம் செய்கின்றதினால் அவர் அரசியல் உலகில் லக்ஷியம் செய்ய வேண்டியவராய் இருக்கிறார். சத்தியமூர்த்தியாருக்கு வடநாட்டில் எங்கும் செல்வாக்குக் கிடையாது
ஆந்திராவிலும் மலையாளத்திலும் இவரை லக்ஷியம் செய்கிறவர்களே கிடையாது. அரசாங்கத்தாரும் இவர் விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயத்துக்கு உதாரணம் வேண்டுமானால் அசம்பளி நடிவடிக்கையின் போது அரசாங்க மெம்பருக்கும் சத்தியமூர்த்தியாருக்கும் நடந்த ஒரு விவாதத்தில் “என்னைப்பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா?” என்று அரசாங்க மெம்பரை மூர்த்தியார் கேட்டபோது “உம்மைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவ்வளவு முக்கியமான மனிதர் நீர் என்று
நான் கருதவில்லை” என்று அரசாங்க மெம்பர் பதில் சொன்னார். இதை அப்போதே “குடி அரசிலும் குறிப்பிட்டிருந்தோம். மற்றபடி தமிழ்நாட்டில் மூர்த்தியாருக்கு எவ்வளவு மரியாதையும் செல்வாக்கும் இருந்து வந்தது என்பதற்கு அவர் சென்ற இடங்களில் எல்லாம் நடந்த மரியாதையைக் கொண்டே தெரிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட மரியாதை, கவுரவம் “உள்ள” ஒருவர்தான் தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராயிருந்தார். அதுவும் தோழர் ராஜகோபாலாச்சாரி அவர்களால் பட்டம் சூட்டப்பட்டு ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறார்.
காங்கிரசின் எதிர்க்கட்சியாருக்கெல்லாம் தோழர் சத்தியமூர்த்தி
காங்கிரஸ் கமிட்டி தலைவராய் இருப்பதே ஒரு தைரியமாயும் ஆறுதலாயும் தங்களுடைய வெற்றிக் குறிப்பாயும் இருந்தது. ஏனெனில் அவர் தைரியமாக உண்மையை வெளியிட்டு விடுவார். காங்கிரசின் பித்தலாட்டத்தையும் போலித்தனத்தையும் தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டு விடுவார். அன்றியும்காங்கிரசுஒரு கூட்ட சுயநலக்காரர்களுடைய ஸ்தாபனம் என்பதையும்
அதற்கு ஆதாரமெல்லாம் முட்டாள்களுடைய பணமும் முரடர்களுடைய காலித்தனமும்தான் என்பதையும் அடிக்கடி வெளிப்படுத்தி விடுவார். இந்தக்
481 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
காரணங்களால் காங்கிரசின் எதிரிகளுக்கும் காங்கிரசை வெளியாக்க வேண்டியவர்களுக்கும் இவரால் அதிக சவுகரியம் ஏற்பட்டு இருந்தது
உதாரணமாக அவர் ஆனைமலை ஐரோப்பியர்களிடம் பேசின. பேச்சு எவ்வளவோ உண்மைகளைக் கக்கி விட்டது. அதாவது, “பூரண: சுயராஜ்யம் என்பது வெள்ளைக்காரர்களோடு ராஜி செய்துகொண்டு வாழ்வது" என்றும், “சீர்திருத்தத்தை ஏற்று நடத்திக்கொடுப்பதே தங்கள். கொள்கை” என்றும், “தோழர் ஜவஹர்லால் அபிப்பிராயத்துக்கும் காங்கிரசுக்கும் சம்பந்தமில்லை” என்றும், “அவரது தகப்பனார் பெருமைக்கும் தியாகத்துக்கும் ஆகவே அவர் தலைவராக்கப்பட்டார்" என்றும் விளக்கமாகச் சொல்லிவிட்டார். இந்தப்படி மற்றும் பல சந்தர்ப்பங்களிலும் உண்மை பேசிவிடுகிறார். இந்தக் காரணங்களால் அவர் பல காங்கிரஸ் வாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பது ஒரு புறமும் மற்றும் அவர் பல சமயங்களில் அற்பத்தனமாய் நடந்துகொள்ளுவதும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு இரகசியமாகக்கூட இல்லாமல் வெளிப்படையாய் பலம் சேர்ப்பதும் இவைகளை யெல்லாம் விட அவர் பணம் சம்பாதித்துக்கொண்ட முறையைப் பார்த்து வெறுப்பும் பொறாமையும் கொண்டதுமான பல காரியங்கள் அவரை கவிழ்த்துவிட்டன.
சென்றவாரம் வேலூரில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சபையில். முதலாவதாக அவரது தலைமைப் பட்டத்தை பிடுங்கிக்கொண்டார்கள். அதுவும் எதிர் அபேக்ஷகருக்கு இரண்டு பங்கு ஓட்டும் இவருக்கு ஒரு பங்கு ஓட்டும்தான் கிடைத்திருக்கின்றன. பெரிதும் பார்ப்பனர்கள் எல்லாம் மூர்த்தியாருக்கும் பார்ப்பனரல்லாதார் எல்லாம் முத்துரங்கனாருக்கும் ஓட்டுப் போட்டிருப்பதாய் தெரிகிறது
அடுத்தாற்போல் காரியதரிசி பதவிக்கும் போட்டி பலமாக ஏற்பட்டதால் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற கருதி பயந்து ஓடும்போது அங்குள்ளவர்கள் ஏதோ தயவுக்காக பரிதாபப்பட்டு அவருக்கு ஒரு ஸ்தானம் போட்டியில்லாமல் அதுவும் சென்னை விஷயத்தைப் பொறுத்தமட்டில் என்று கூட்டுக் காரியதரிசி ஆக்கினார்கள். இதை கீழ் நோக்கிய பதவி என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு ஸ்தாபனத்திற்கு தலைவராய் இருந்தவர் அதே ஸ்தாபனத்திற்கு பெருமித ஓட்டுகளால். தோல்வி அடைந்து அதற்குக் கீழ்ப்பட்ட காரியதரிசியாய் வரவே பாடுபட்டு தயவில் பெறுவது என்றால் அது கீழ் நோக்கிய பதவி என்று அல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது?
நிற்க, தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் இருந்திருந்தால் தோழர் சத்தியமூர்த்திக்கு இந்த மாதிரியான பரிதாபகரமான நிலை. வந்தேயிராமல் தடுத்து ஆட்கொண்டிருப்பார். இவரை ஆதரிக்கப்போக அவர் நிலையும் மிக்க மோசமாய் போய்விட்டதால் அவர் விலாசம் தெரிவிக்காமல் மறைந்து கொண்டார்.
குடி அரசு - 1936 (2), 482.
பார்ப்பனர் - பார்ப்பணரல்லாதார்
இது ஒரு புறமிருக்க, காங்கிரஸ் நிர்வாகசபை தேர்தலிலும் தமிழ்நாடு காரியக் கமிட்டியில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வாதம் தலைசிறந்து கடசியாக 20 ஸ்தானத்திற்கு பார்ப்பனர்கள் 4, 5 பேரே தெரிந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
மற்றும் பல ஸ்தானங்களின் தேர்தல்களிலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி தாண்டவம் ஆடிக்கொண்டே இருந்திருக்கிறது. அவ்வளவு ஸ்தானங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு கொடுக்கப்பட்டும் பெரிதும் எப்படிபட்ட ஆட்கள்தான் அவர்களுக்கு கிடைக்க முடிந்தது என்பது அந்தப் பெயர்களைப் பார்த்தாலே விளங்கிவிடும்.
இந்த நாட்டில் காங்கிரசுக்கு உள்ள செல்வாக்கை அதை ஆதரிக்கும் மக்களின் தரத்தை அறிய ஒரு அளவு கருவி வேண்டுமானால் இந்த பெயர்களையும் நபர்களையும் கவனித்து தெரிந்துகொள்வதன் மூலம் நன்றாய் தெரிந்துகொள்ளலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் வேலூரில் மகாநாடு நடந்து மாகாண நிர்வாக சபை முதலிய ஸ்தாபனங் களுக்கு தேர்தல் நடந்தும் வேலூர் ஜில்லா சர்வாதிகாரிகளான தோழர்கள் குப்புசாமி உபயதுல்லா முதலிய பண பக்தர்கள் எந்த ஸ்தானத்துக்கும் தெரிந்தெடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கிறார்கள். ஒரு சமயம்இப்பொழுதுதான் இவர் போன்றவர்களின் யோக்கியதையை காங்கிரஸ் பக்தர்கள் தெரிந்து கொண்டதாய் காட்டிக்கொள்ள சமயம் ஏற்பட்டதோ என சந்தேகிக்கின்றோம்
ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது என்று காங்கிரசிலுள்ள சில பார்ப்பனரல்லாத தோழர்களுக்கு விபரம் விளங்க வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்திருக்குமானால் ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் போனால் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக சபையிலும் மற்றும் பல ஸ்தானங்களிலும் இந்த பேர்வழிகள் அங்கம் பெற்றிருக்க முடியுமா என்பதையும் ஜஸ்டிஸ் கட்சி இல்லாத காலத்தில் இவர்களது நிலை எப்படி இருந்தது என்பதையும் கொண்டு உணர்ந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1936
48$ ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
uettonggit, Gam_omt_pfleo
பிரசங்கம்
தோழர்களே!
நான் இங்கு உங்கள் மூன் ஜில்லாபோர்டு தேர்தல் என்பது பற்றி பேசுவேன் என்பதாக நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னுடையபேச்சு ஜில்லா போர்டு தேர்தலுக்கு பயன்படுமா என்பது எனக்கே சந்தேகம். நான் இங்கு ஜில்லாபோர்டு தேர்தலைப்பற்றி பேசுவதில் அபேக்ஷகர்களைப் பற்றிப்பேசி யாருக்காவது ஓட்டுப்போடுங்கள் என்று சொல்லப்போவதில்லை.
ஜில்லா போர்டு பிரஸ்தாப அபேக்ஷகர்களில் ஒருவரைத்தான்
எனக்குத் தெரியும். அதாவது தோழர் சி.வி.சி.டி. வெங்கிடாசலம் செட்டியார் அவர்களைத் தெரியும். மற்றொரு அபேக்ஷகரை எனக்குத் தெரியாது. பார்த்ததும் இல்லை. அவரைப்பற்றிய குணங்களும் எனக்குத் தெரியாது. இந்த நிலையில் நான் அபேக்ஷகர்களின் தகுதியைப்பற்றி எப்படிப்பேச முடியும்?
மற்றும் இருவரும் கிட்டத்தட்ட சரிசமானமான பணக்காரர்களாம். ஆகையால் பணக்காரர்கள் ஒழிய வேண்டும் என்று பேசுவதற்கும் இதில் இடமில்லை
அன்றியும் இருவரும் லேவாதேவியில் பணம் சம்பாதிக்கிறவர்கள். தானாம். ஆதலால் லேவாதேவிக்காரர்கள் ஒழியவேண்டுமென்று பேசுவதற்கும்
இதில் இடமில்லை.லஞ்சம் ஒழியவும் இதில் இடமில்லை. வெளிப்படையாகவே லஞ்சங்கள் தாண்டவமாடுகின்றன. ஒரு கட்சிப் பணம் சிறிது ஓட்டர்களுக்கு அதிகமாகப் போகலாம். மற்றொரு கட்சிப்பணம் சிறிது காலிகளுக்கும் பிரசார ஜீவனக்காரர்களுக்கும் காலித்தனமாய் பேசுகிறவர்களுக்கும் அதிகமாய்ப் போகலாம். இரண்டில் எது நல்லது என்றால் காலிகளுக்கும் வசவுக்காரர்களுக்கும் பணம் போவதைவிட ஓட்டர்களுக்குப் போவது நல்லது. ஜில்லா போர்டு பணம் ஓட்டர்களுடையது. மெம்பர்களுக்கு நிற்பவர்களுடைய பணமும் பெரிதும் ஏழை ஓட்டர்களது பணம் தான். ஆகவே ஓட்டர்களை மோசம் செய்து காலிகள் அடித்துக்கொண்டு போவதை தடுத்தாக வேண்டும் பணத்துக்காகத் தடுக்காவிட்டாலும் இம்மாதிரி வாழ்வில் காலித்தனம், வசவு, கூலிப் பிரசாரம், பொய், பழி, பித்தலாட்டம், ஏமாற்றம் ஆகிய பிரசாரங்கள். ஒழிக்கப்படவேண்டும். என்னுடைய முக்கிய ஆசை சுயராஜ்யம் சமதர்மம் என்கின்ற பித்தலாட்டங்கள் ஒழிக்கப்படுவதற்கு முன் அவை நிஜமாக இருந்தாலும்கூட அவை ஏற்படுவதற்கு மூன் காலித்தனம் ஒழிக்கப்பட
குடி அரசு - 1936 (2), 484
வேண்டும். காலித்தனத்துக்கு இடமுள்ள நாட்டில் சுயராஜ்யமும் நடக்காது சமதர்மமும் நடக்காது. சிலர் சமதர்மம் என்றாலே காலித்தனமும் கூலி வசவும் தான் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இது நாட்டுக்கு - மனித சமூகத்துக்கு பெருங் கெடுதி. இந்த காலித்தனத்தைப் பார்த்தபின் ராணுவச் சட்ட ஆகி மக்களுக்கு மேல் என்று எனக்குப் படுகிறது
பொது உடமைத் தேசமாகிய ரஷியாவில் காலித்தனம் தலைகாட்ட முடியாது. பச்சை தேசிய நாடாகிய ஹிட்லர் ஆக்ஷியில் காலித்தனம் கிடையாது. எப்பேர்ப்பட்ட நாடானாலும் கட்டுப்பாடும் அமைதியும்
ஒழுங்கும் வேண்டும். அதில்லாத நாட்டை அழித்துவிட வேண்டியதுதான்.
ஜர்மனியில் ஹிட்லரைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னால் உடனே சுட்டுவிடுகிறார்கள். ரஷியாவில் அரசாங்கத்தைப்பற்றி ஒருவார்த்தை சொன்னால் உடனே தண்டனை. அந்த சுதந்திர - தேசிய பொதுவுடமை தேசங்களில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் அவ்வளவு தாண்டவமாடும் போது இந்த “அடிமை” நாட்டில் கட்டுப்பாடு வேண்டியதில்லை, காலித்தனத்தில் வாழவேண்டும் என்றால் அரை நிமிஷமும் நான் சம்மதிக்க முடியாது
சில செட்டிப்பிள்ளைகள் காந்திக் குல்லாய் போட்டுக்கொண்டு பணக்காரன் ஒழிய, ராஜா சர் ஒழிய என்று கூப்பாடு போட்டதைப்
பார்த்தேன். கூலிகொடுத்து கூப்பாடு போடச் சொல்லுவதையும் பார்த்தேன். இதனால் பணக்காரர்கள் ஒழிந்து போகமாட்டார்கள். மிகவும் பத்திரமாய் விடுவார்கள். கூப்பாடு போடுகிற செட்டிப்பிள்ளைகள் அன்னக்காவடிகள் அல்ல; இன்சால் வெண்டுகள் அல்ல; மண்வெட்டியாலும் கோடாலியாலும் பிழைக்கிறவர்கள் அல்ல. அவரவர்கள் வீடு வாசல் பெண்டு பிள்ளை நகை, வாழ்க்கைத் திமிர் எல்லாம் எனக்குத் தெரியும். ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கின்ற ஒரு வருணாச்சிரமக்காரர்கள் தான். ராஜா சர்க்கு 50 லக்ஷம் இருந்தால் கூப்பாடு போடுகின்ற பலருக்கு பல லக்ஷம் இருக்கின்றன. இன்று ராஜா சர் செட்டியார் மீது ஏவி விடப்பட்ட ஆட்களே நாளைகூட 2 அணா அதிகமாகக் கொடுத்தால் உங்கள் வீட்டின் முன்புறம் நின்றுகொண்டு உங்களை பெண்டு பிள்ளைகளுடன் ஒழிய என்று கூப்பாடுபோடுவார்கள். நீங்கள் சாணி எடுத்துப்போடச் செய்தால் நாளை உங்கள் மீது மலம் எடுத்துப்போடச் செய்யச்செய்ய முடியும். இனி நான்கு தடவை இப்படி நடந்தால் உங்கள் பெண்டு பிள்ளைகளுக்கு பந்தோபஸ்து கிடைக்கமாட்டாது; ஜாக்கிரதை. உங்களால் நாளை உழைத்து சாப்பிடமுடியாது. வேடிக்கையாய் இந்த காரியத்தில் இறங்கிவிட்டீர்கள். வயிற்று வளர்ப்புப் பத்திரிகையை பார்த்து ஏமாந்து போகாதீர்கள், வயிற்றுப்பிழைப்பு கூலிகளின் பிரசங்கத்தில். மயங்கி விடாதீர்கள். நான் சொல்வதெல்லாம் நடந்து கொண்டே வந்திருக்கின்றன.
ராஜா சர் இல்லாதிருந்தால் உங்கள் சமூகம் என்ன கதி அடைந்திருக்கும்? உங்களுக்கு உள்ள பெருமை யாரால்? நீங்கள் என்போல் வெறும் ஆளாய்
488... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
திரிய தைரியங்கொண்டால் ராஜா சர் ஒழிக என்று கூவுங்கள். ராஜா சர்கள் ஒழிந்தால் உண்மையில் நான் அதிக சந்தோஷப்படுவேன். அவர்களை எப்படி ஒழிப்பது என்பதில் என் கவலையும் முயற்சியும் யோசனையும் இன்னமும் நீங்கவில்லை. ஆனால் நாகப்பசெட்டியார் உயருவதற்கு ராஜா
சர் ஒழிக என்றால் இது கூலிக்கூப்பாடு என்பது விளங்கவில்லையா? ராஜா சர்களும், நாகப்பர்களும், குட்டி ராஜா சர்களும், குட்டி நாகப்பர்களும் எல்லாம் ஒழிந்தால்தானே பணக்காரர்கள் ஒழிய முடியும்? இந்த ஒரு பணக்காரர் ஒழிந்தால் மற்றொரு உஞ்சவிர்த்திகாரர் பணக்காரர் ஆகிவருகிறாரே அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? தோழர் சத்தியமூர்த்தியாருக்கு ஏது இவ்வளவு பணம்? தோழர் குப்புசாமிக்கு ஏது இவ்வளவு பணம்? மற்றும் சில “பணக்காரர் ஒழிப்புக்காரர்' களுக்கு ஏது நெய்யும் பிரியாணியும் சாப்பாடும் என்பவைகளை யோசியுங்கள்.
பணக்காரர் ஒழிக, ராஜா சர்கள் ஒழிய என்கின்ற கொள்கை ஒருவேளை சோத்துக்கும் 4 ரூ. கூலிக்கும் விற்கப்பட்டு மற்றொரு பணக்காரன் ஜெயிக்க வேண்டுமென்று கூப்பாடு போடுவதானால் அந்தக் கூப்பாட்டுக்கு இடம் கொடுக்கலாமா என்று யோசித்துப்பாருங்கள். இரண்டு பணக்காரர் பணத்திமிரினாலோ அல்லது பணம் சம்பாதித்து பெருமை அடையவோ சண்டை போட்டுக்கொண்டால் இங்கு காந்திக்கும் கதருக்கும் காங்கிரசுக்கும் சமதர்மத்துக்கும் காலிகளுக்கும் கூலிகளுக்கும் என்ன வேலை என்று கேட்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சி ஒழிய வேண்டும் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றேன்.
காங்கிரசின்பேரால் பணக்காரரை ஏன்நிறுத்த வேண்டும்? அதுதெரிந்தும் பணக்காரன் ஒழிய என்று ஏன் கூப்பாடு போடவேண்டும்?
ஜில்லா போர்டு வேலைக்கு யாரும் ஆசைப்படலாம். யாருக்கும் பாத்தியமுண்டு. யாருடைய எந்த கட்சியாருடைய தாய் தகப்பனாரோ, பெண்டு பிள்ளையோ பாடுபட்டுச் சம்பாதித்த பொருள் அல்ல. ஆற்றிலே ஜலம் போகிற மாதிரி எல்லோருக்கும் பங்கு உண்டு. இதில் காங்கிரசுக் காரனுக்கு மாத்திரம் என்ன சொந்தம்? காந்திக்கு மாத்திரம் என்ன சொந்தம்? ஜஸ்டிஸ்காரனுக்கு ஏன் பாத்தியமில்லை? ஜஸ்டிஸ் கட்சிக்காரன் வரிப்பணம் ஜில்லாபோர்டு பண்டில் இல்லையா? ஜஸ்டிஸ் கட்சிக்காரன் சட்டமும் உழைப்பும் ஜில்லாபோர்டு ஸ்தாபன உற்பத்தியில் இல்லையா? ஜில்லா போர்டு சட்டத்தில் காங்கிரஸ்காரன் மாத்திரம் செய்யக்கூடியதாகவோ நாகப்ப செட்டியார் மாத்திரம் செய்யக்கூடியதாகவோ என்னகாரியம் இருக்கிறது?
குறிப்பு: 12.12.1936.இல் பள்ளத்தூரிலும் கோட்டையூரிலும் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 20.12.1936
குடி அரசு - 1936 (2), 486
சமூக சீர்திருத்தமும் அரசியலும்
காங்கிரஸ் என்றால் என்ன?
தோழர்களே!
சமூக சீர்திருத்தமும் அரசியலும் இரண்டும் ஒன்றேயாகும். நமது நாட்டில் சமூக உயர்வால் ஒரு கூட்டம் மக்கள் பாடுபடாமல் வயிறு
வளர்க்கத் தக்கபடி சமூகம் அமைக்கப்பட்டதாலும் அரசியலை அந்த சமூக உயர்வுக்காரர்களே கைவசப்படுத்திக்கொண்டதாலும் சமூக சீர்திருத்தத்தை அடியோடு விட்டுவிட்டு சமூக சீரதிருத்தத்துக்கு சம்பந்தப்படாத அரசியலைப் பற்றி பேசிக் காலம் கழித்து வருகிறார்கள். சமூக சீர்திருத்தமில்லாத அரசியல் சிலரின் சுயநலத்துக்குத்தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயன்படாது. இந்த நாடு சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முந்தியே சமூக சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அந்தப்படி செய்யப் பட்டிருக்குமானால் இன்று இந்தியா, உலகில் ஒரு நாகரீகமுள்ள மக்கள் அடங்கிய நாடாக ஆகி இருக்கும். இந்தியாவில் இன்று உள்ள கீழ் ஜாதி மேல் ஜாதி கொடுமை இருந்திருக்காது. அந்நிய ஆட்சியும் இந்தியாவுக்கு அரை நிமிஷம்கூட வேண்டி இருக்காது
ஆனால் இன்று இந்தியா ஒரு காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறது இங்கு கூடியுள்ள மக்கள் ஆளுக்கு ஒரு வேஷம் கொண்டு இருக்கிறார்கள்; ஆளுக்கு ஒரு ஜாதிப்பேரும் கொண்டு இருக்கிறார்கள். உடையில் பேதம், அணியில் பேதம், குறியில் பேதம், மதத்தில் பேதம், உண்பன தின்பன கிடையாது; கொடுப்பன கொள்வன கிடையாது. ஒவ்வொருவனும் அவனவன்பழமையைப் பேசி பெருமையடைகிறான். வீணாக சமயத்துக்கும் ஜாதிக்கும் சண்டை போடுகிறான். தன்னை அந்நியன் கீழ் ஜாதி என்று கூப்பிடுவதை சகித்துக்கொண்டு மற்றவனை கீழ் ஜாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும் பெருமையும் அடைகிறான். இதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளமாகும். தன்னை வேறு ஜாதியான் என்று பிரித்து காட்டுவதில் ஒவ்வொரு
வனுக்கும் ஆசை இருக்கிறது. தேச ஒற்றுமையும். சமத்துவமும் விடுதலையும் பேசுகிறவன் கூட குடுமி ஒரு மாதிரி வைத்துக்கொள்ளுகிறான்; வேஷ்டி சேலை ஒரு மாதிரி கட்டிக்கொள்ளுகிறான்; பூணூல் ஒரு மாதிரி போட்டுக் கொள்ளுகிறான்; பொட்டு ஒருமாதிரி வைத்துக் கொள்ளுகிறான். இவர்களை எல்லாம் எந்தக்கணக்கில் சேர்த்துகிறீர்கள்?
487 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்தக்கூட்டத்தார் இந்தியர்களுக்கு விடுதலையும் சுதந்திரமும் தேடிக் கொடுப்பார்கள் என்று அநேக முட்டாள்கள் நம்புகிறார்கள். அனேக: மடையர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.
ஜாதி என்பதற்கு ஆணும் பெண்ணும் தகுதி அற்ற ஜோடியாய் வாழ்கின்றனர். வாழ்க்கை லட்சியம் ஜாதி மதத்தைக் காப்பாற்றுவது என்றே கருதுகிறார்கள். இதுவரை இந்தியாவில் தோன்றிய பெரியார்கள் என்பவர்களில் அனேகர் ஜாதி மதத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டார்களே ஒழிய மக்களை ஒன்றுபடுத்த முயற்சிக்கவில்லை. காந்தியாரை மகாத்மா என்கிறார்கள்; அவர் ஜாதியை ஒன்றாக்கச் சம்மதிக்கிறாரா? மதத்தை ஒன்றாக்க சம்மதிக்கிறாரா? அவருடைய எந்த திட்டத்திலாவது ஒன்றாக்கும் வாசனை இருக்கிறதா? இந்திய மக்களுக்கு தங்களையே பிரதிநிதிகள் தர்மகர்த்தாக்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்களாவது ஜாதி மதப் பிரிவுக்கு ஏதாவது வகை செய்கிறார்களா?
நேற்று திருவாங்கூர் ராஜா கோவிலை திறந்து விட்டுவிட்டதற்குஆக காந்தியார் முதல் “உயர்ந்த பார்ப்பனர் வரை பாராட்டினார்கள். அப்படி பாராட்டினவர்கள் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் என்ன செய்ய முயற்சித்தார்கள்? அரசியலை உடைக்கிறோம், சீர்திருத்தத்தை உடைக்கிறோம், பிரிட்டிஷ் சர்க்காரை விரட்டுகிறோம் என்று சொல்லுகிறவர்கள் ஜாதியை உடைக்கட்டுமே, மதத்தை அழிக்கட்டுமே, கோவில் கதவுகளை உடைக்கட்டுமே பார்க்கலாம். வாயாலாவது பேசட்டுமே பார்க்கலாம். இதற்கு வெள்ளைக் காரனுடைய தயவோ அரசியல் உதவியோ வேண்டியதில்லையே. அப்படி இருக்க அதை மூடி வைத்து விட்டு காந்தி முதல் ஒவ்வொருவரும் ஜாதி மத வேஷம் போட்டு மக்களைப் பிரித்து மேல் கீழ் ஆக்கி வைத்து விட்டு சுயராஜ்யம் பெறுகிறேன் என்பது புரட்டா நாணையமா என்று பாருங்கள். நமக்கு சர்க்காரால் என்ன தொல்லை இருக்கிறது? வரி வாங்குகிறான்; சம்பளம் கொடுக்கிறான்: தன்னுடைய வியாபாரத்தை நடத்திக் கொள்கிறான்; அதை தடுக்க நம்மால் ஆகவே ஆகாது. நாம் ஜாதிச்சண்டை போட்டுக்கொண்டு ஜாதிப் பிரிவை வைத்துக்கொண்டு என்ன காரியம் செய்யமுடியும்? வெள்ளைக்காரனிடம் துப்பாக்கி பிரங்கி இருக்கின்றன. நம்மிடம் ஜாதிச் சண்டை இருக்கிறது. வியாபாரமோ ராட்டின யந்திரம் வைத்து வெள்ளைக்காரன் வியாபாரத்தை நிறுத்தப் பார்க்கிறோம் இதெல்லாம் வீண் மைனாப் பிடிக்கும் வித்தையே ஒழிய யோக்கியமான. பயனுள்ள காரியம் ஆகாது. ஜாதி ஒழிக்கப்பட்டு பறையன் பார்ப்பான் என்கின்ற பிரிவு அழிக்கப்பட்டால் ஒழிய இந்தியர்கள் மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள உரிமையற்றவர்களே என்பது என் கருத்து, பணக்காரர்களை ஒழித்து, ஏழை பணக்காரர்களை ஒன்று படுத்துகிறேன் என்று சில வீணர்கள் கூப்பாடு போடுகிறார்கள். மூடமக்கள் அதை நம்பி கூடவே கோவிந்தா
குடி அரசு - 1936 (2), 488
போடுகிறார்கள். ஒரு காசு பெறாத பார்ப்பான், பறையன் என்பதையும், நாயுடு, முதலி, தேவர், மறவர், நாடார் என்பதையும் ஒன்றுபடுத்த முடியாத தைரியமில்லாத, இஷ்டமில்லாத ஆட்கள் பணத்தை சொத்தை எப்படி ஒன்று படுத்தி சமத்துவப்படுத்த முடியும் என்பதை யோசித்துபாருங்கள்.
மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப்பார்க்கிறான். இவனை மக்கள் இகழ்வதில்லை; ஜாதியை விட்டு தள்ளுவதில்லை. ஆனால் ஜாதிவிட்டு ஜாதி சாப்பிட்டால், கல்யாணம் செய்தால் ஜாதியை விட்டு தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களில் ஒழுக்கம், நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
ஆதலால் சமூக சீர்திருத்தத்தின் முக்கியம் நாம் உணருகிறவரை நமது மக்கள் சுதந்திரத்தின் முக்கியமோ சுயமரியாதையின் முக்கியமோ தெரியாதவர்கள் கவலையற்றவர்கள் என்று தான் அருத்தம்.
அரசியல்
நிற்க, அரசியலைப் பற்றி சிறிது பேசும்படி கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறேன். இந்த ஊர்க்காரர்கள் பெரிதும் காங்கிரசுக்காரர்கள் என்று தெரிகிறது. அநேகம் பேர் கதர்கட்டி இருக்கிறார்கள். அதுவே ஒரு வைராக்கியத்தைக் காட்டக்கூடிய அறிகுறியாகிவிட்டது. அப்படிப்பட்டவர்கள்.
முன் அரசியலைப்பற்றி பேசுவது என்றால் எனக்கு பயம்தான். ஆனால் ஒன்று சொல்லுகிறேன். நான் சொல்வதைக் கேட்டு ஆத்திரப்படக் கூடாது
முதல் முதல் இங்கு வந்திருக்கிறேன், பொறுமையாய்க் கேளுங்கள்; உங்கள் கேள்விகளை எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள். பதில் சொல்லி விட்டே இங்கிருந்து அசைகிறேன். முரட்டுத்தனம் செய்தால் நான் நிறுத்திக் கொள்ளுகிறேன். உங்கள் தேசாபிமானமும் காங்கிரசும் எப்படிப்பட்டது என்று அளந்து கொள்ளுகிறேன். உங்கள் அபிப்பிராயத்துக்கு மாறுபட்டவன். பேசக்கூடக்கூடாது என்றால் உங்கள் சுதந்திரத்தின் யோக்கியதையும் தெரிந்து கொள்ளுகிறேன். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் வெள்ளைக்காரனை கண்டிக்க இடம் கொடுத்து இருக்கிறார்கள்
இந்தியர்கள் பெறப்போகும் ஆட்சியில் அதன் யோக்கியதையைப்
பற்றிக் கூட பேசக்கூடாது என்றால் இந்தியர்கள் சுயராஜ்யத்தை விட ஆயிரம் பங்கு வெள்ளைக்காரரின் ஆட்சியே மேல் என்பது எனது அபிப்பிராயம் நான் செல்லுமிடங்களில் சுயராஜ்யக்காரர்கள் காங்கிரசுக்காரர்கள் - காந்தியாட்கள் இவர்களின் யோக்கியதையை உணர்ந்துதான் வருகிறேன்.
இந்தக் கூட்டத்தார் ஒழிவதே இந்தியாவுக்கு பூரண விடுதலை என்பது எனது அபிப்பிராயம். இந்த அபிப்பிராயம் எனக்கு பலப்பட்டு வரும்படியாகத்தான் காங்கிரசுக்காரர்களும் காந்தி சிஷ்யர்களும்
49 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கதர்க்காரர்களும் நடந்து வருகிறார்கள். பள்ளத்தூரில் நன்றாகப் பார்த்தேன்; விருதுநகரில் பார்த்தேன். நான் வெறும் காலிகள் நடத்தையைப் பார்த்து சொல்லவில்லை.
ஜவஹர்லால், சத்தியமூர்த்தி முதலியவர்கள் நடத்தையையும் பேச்சையும் கொண்டே சொல்லுகிறேன்.
ஆகையால் நீங்கள் விஷயம் உணர வேண்டுமானால் பொறுமையாய் கேளுங்கள்; மனதில் ஞாபகமாய் இருத்துங்கள். உங்கள் தலைவர்கள் - வீரர்கள் வரும்போது அவைகளுக்கு சமாதானம் கேளுங்கள். மறுபடியும் நீங்கள் கூப்பிடுகிறபோது நான் வருகிறேன், நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்; அதற்கு சமாதானம் சொல்லுகிறேன். இல்லாவிட்டால் உங்களுடன் சேர்ந்து கொள்ளுகிறேன். காலித்தனத்தை மாத்திரம் அனுமதிக்கமாட்டேன். ஆகவே, தோழர்களே! காங்கிரஸ் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன? சுயராஜ்யம் என்றால் என்ன? பொருள் தெரியாமல் வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரஸ் என்றால் கூட்டம் என்று பெயர். இது உத்தியோகம் பெறுவதற்கு ஆக சுமார் 50 வருஷத்துக்கு முன்பு படித்தவர்கள் ஏற்படுத்தினது. படித்தவர்கள் சர்க்காரிடத்தில் உத்தியோகம் பெறவும் அதற்குப் பதிலாக பாமர மக்களுக்கு இவர்கள் ராஜ பக்தி கற்றுக்கொடுத்து ராஜ விஸ்வாசம் உண்டாக்கவும் ஏற்படுத்தப்பட்டதாகும். அதுவும் வெள்ளைக்காரன் சொல்லிக்கொடுத்த உபாயமாகும்.
ஏனெனில் வெள்ளைக்காரன் 50, 60 வருஷங்களுக்கு முன் உத்தியோகங்களை படிப்பு காரணமில்லாமல் பெரிய குடும்பம் பெரிய வம்சம் என்று பொறுக்கி எடுத்து கொடுத்து வந்தான். சம்பளமும் அதிகாரமும் இருந்ததால் சில மேல் ஜாதிக்காரர்கள் படித்தவர்கள் ஆசைப்பட்டு போட்டி போட்டார்கள். அதற்கு ஆக ஒரு வெள்ளைக்கார ஐ.சி.எஸ். உத்தியோகஸ்தர் இந்த தோது சொல்லிக்கொடுத்தார். அதாவது இந்தியர்கள் அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டியது, இந்தியாவும் பிரிட்டிஷும் என்றென்றும் இணைபிரியாமல் இரண்டறக் கலந்துகொள்ள வேண்டியது”. இதுதான் காங்கிரசின் கொள்கை இதற்கு இணங்க காங்கிரஸ் ராஜ விஸ்வாச தீர்மானத்தை செய்து அதை பள்ளிக்கூடம், கோவில், சடங்கு ஆகியவைகளில் கலக்கி மக்களுக்கு கற்பித்து வந்தது. அவற்றில் ஒன்றுதான் அரசன் விஷ்ணு அம்சம் என்று வேதத்தில் இருப்பதாக பார்ப்பனர்கள் போதித்து வந்ததாகும். அதன்படியே ராஜ விஸ்வாசம் பெருகினதோடு உத்தியோகமும் சம்பளமும் பெருகி அதற்கு ஏற்றபடி வரியும் பெருகி வந்தது. இதைக்கண்டு முஸ்லீம்கள் ஆசைப்பட்டு முஸ்லீம் சங்கமேற்படுத்தி தங்கள் ஜனத்தொகைக்கு தக்க விகிதாச்சாரம் பெற்று விட்டார்கள்; கிறிஸ்துவர்களும் அதுபோலவே
குடி அரசு - 1936 (2), 490
பெற்று விட்டார்கள். இந்துக்கள் பங்கை பார்ப்பனர்களே அடைந்து வந்தார்கள். காங்கிரசில் பாடுபட்ட நாயர், தியாகராயர் முதலியவர்கள் பலதடவை பார்ப்பனர்களால் தோல்வியுற்ற பிறகு முஸ்லீம்களைப்போல் பார்ப்பனரல்லாதார் சங்கம் ஏற்படுத்தி தங்கள் விகிதாச்சாரம் பங்குகேட்க ஆரம்பித்தார்கள். அதனால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமை குறைவாயிற்று அதைக் காப்பாற்றவே பார்ப்பனரல்லாதாரில் காந்தியை பிடித்து மகாத்மாவாக்கி அவர் பெயரைப் பிரபலப்படுத்தி நம்மை ஏமாற்றுகிறார்கள். நமக்கு கஷ்டம் வரும்படியான கொள்கைகளை வாயளவில் ஏட்டளவில் காங்கிரசில் போட்டுக்கொண்டு நமது வாலிபர்களையும் சில கூலிகளையும் பிடித்து நம்மைத் தொல்லைப் படுத்துகிறார்கள். இதுதான் அரசியல். உங்களுக்கு அரசியல் எ.பி.சி.டி. தான் சொன்னேன். இது சரியா தப்பா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பிறகு இன்னமும் பாக்கி சொல்லுகிறேன்.
சுயராஜ்யம் என்பதில் ஒன்றும் இல்லை. வெறும் வார்த்தைதான்.
சுயராஜ்யம் இதுவரை ஒரு தேசத்திலும் பட்டினியையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஓழிக்கவில்லை. நான் பந்தயம் கூறுகிறேன். ஜவஹர்லால் பார்ப்பனர் என்பதை மறந்து விடாதீர்கள். எந்த ஊரிலாவது சுயராஜ்யம் பட்டினியை நீக்கி இருந்தால் நான் எல்லோருக்கும் முன்பாக சுயராஜ்யத்தில் கையெழுத்து போடுகிறேன்.
அது வெற்று வேட்டு. ஏமாந்து விடாதீர்கள். வெள்ளைக்காரனை விரட்டி விடுவது சுயராஜ்யமானால் கதரால் காந்தியால் வந்தே மாதர கூப்பாட்டால் முடியுமா? பட்டாளத்துக்கும் குண்டுக்கும் பதில் சொல்ல முடியுமா? நாம் ஒருவரை ஒருவர் நம்புகிறோமா? காங்கிரசில் உள்ள ஜாதிச் சண்டை உங்களுக்குத் தெரியாதா? நம்மை சரிசமமாய் கருதாதவனுடன் நான் கலந்து வேலை செய்ய முடியுமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.
ஸ்தல ஸ்தாபனம்
ஸ்தல ஸ்தாபனத்தைப்பற்றி கேட்கிறீர்கள். இது மற்றொரு பித்தலாட்டம். நமக்கு அதில் உள்ள சுதந்திரம்,
1. மக்கள் 1000, 10000 செலவு செய்து பதவிபெற வேண்டியது, பிறகு அந்தப்பணத்தை வட்டியுடன் சம்பாதித்துக் கொள்ளவேண்டியது.
2. பெருமை அடைய வேண்டியது
3. கண்டவர்கள் பொறுக்கித் தின்ன விட்டு வேடிக்கை பார்க்க வேண்டியது. இதுதான் என் அனுபவம் இன்றைய ஸ்தல ஸ்தாபனங்கள் சர்க்காரால் நிர்வகிக்கப்பட்டால். அரை வரிசை செலவு மீதியாகும். அதற்கு நான் ஜவாப்தாரி, நான் அங்கம் வகிக்கும் ஈரோடு முனிசிபாலிட்டியில் கவுன்சிலர்கள் கண்ணியமுள்ளவர்கள். 4... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
அதிலேயே 100 க்கு 50 ரூ. பாழாகின்றது. கவலை இல்லை; பொறுப்பு இல்லை. சிங்கங்களும், புலிகளும், நரிகளும், நாய்களும் தின்கின்றன. மற்றதை சொல்லுவானேன்?' இதை தோழர் ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தியாரும்
ஒப்புக் கொண்டு விட்டார்கள். உடனே கலைக்க வேண்டியது ஜில்லா போர்டுகள் என்று பம்பாயில்
சத்தியமூர்த்தியார் பேசினார். நான் 20 வருஷமாக பேசிவருகிறேன்.
ஸ்தல ஸ்தாபனம் மக்களுக்குள் கட்சி, பேராசை, ஒழுக்க ஈனம் முதலிய கெட்ட குணங்களை கற்பிக்கிறது. ஆனால் இன்று ஜனங்களுக்கு
அதில் மோகம் இருக்கிறது. பணம் சம்பாதிக்கலாம், பதவி பெறலாம், அதிகாரம் செய்யலாம், கவுரவம் அடையலாம். இன்னும் பலவும் உண்டு. இதை யார்தான் வேண்டாம் என்பார்கள்? ஆகவே தோழர்களே மறுமுறை வரும்போது இன்னும் விளக்கமாகப் பேசுகிறேன்.
குறிப்பு: 14.12.1936 ஆம் நாள் கழுகுமலை குருவிகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 20.12.1936
குடி அரசு - 1936 (2), 492
காங்கிரஸ் சுயராஜ்யம்
காலித்தனத்தில் முடிந்தது
காங்கிரஸ்காரர்கள் இந்திய அரசியலில் தங்கள் கொள்கைகளை யெல்லாம் கைவிட்டு விட்டார்கள், பஹிஷ்காரங்களை வாக்குறுதிகளை பிரமாணங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டார்கள். புது புது - புரியாத கொள்கைகளையெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். பாமர மக்களை ஏமாற்ற விஞ்ஞான சாஸ்திர முறைப்படி எத்தனையோ தந்திரங்கள் செய்து
பார்த்தார்கள். பழங்கால ராம ராஜ்யம் முதல் தற்கால நாகரீக பொது உடமை ராஜ்யம் என்பதுவரை பேசித் தீர்த்தார்கள். வருணாச்சிரமத்தை ஆதரிப்பது
- புனருத்தாரணம் செய்வது என்பது முதல் சகல சமூக சீர்திருத்தம் ஆச்சார
சீர்திருத்தம் எல்லாம் பேசினார்கள். கதர் என்றும் அரிசன சேவை என்றும், கிராமப் புனருத்தாரணம் என்றும் எவ்வளவோ கிளை இயக்கங்கள் கண்டு அவைகள் மூலம் பணம் பறித்தார்கள். சட்டத்தை மீறுவது, அரசாங்கத்தை ஒழிப்பது, அந்நியர்களை விரட்டி அடிக்கும் சுயராஜ்யம் சம்பாதிப்பது என்று சொல்லி கும்பல் கும்பலாக ஐயிலுக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
கடசியாக சட்டம் மீறுவதில்லை, உத்திரவுகளை அலட்சியம் செய்வதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக்கொடுத்தார்கள். இவைகள். ஒன்றும் பலியாமல் போகவே ராஜவிஸ்வாச பிரமாணமும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக சத்தியமும் செய்து சட்டசபைகளுக்குள்ளும் நுழைந்து பார்த்தார்கள். அவர்களால் ஆனதெல்லாம் செய்தார்கள் உலகத்தில் மற்ற நாடுகளில் நடந்த - நடக்கும் முறைகளையும் கடன் வாங்கி காப்பி அடித்துப் பார்த்தார்கள். என்னசெய்தும் “எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கப் போவதில்லை'' என்கின்ற பழமொழிப்படி
இந்தப் பதினாறு வருஷ காலமாய் ஒரு காரியமும் செய்ய முடியாமல் ஒரு பயனும் ஏற்படாமல் போனதால் இப்போது கடைசியாக காலித்தனத்தை இறுதி ஆயுதமாகக் கையாண்டு பார்த்து விடுவது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இத்தனை பித்தலாட்டங்களை வெளிப்படுத்தி அடக்கிய சர்க்காருக்கு அதுவும் “அஹிம்சை” யையும் 'சத்தியாக்கிரகத்தை' யும் அடக்கி மன்னிப்பு வாங்கிய சர்க்காருக்கு காலித்தனத்தை அடக்க முடியாது என்று யாருமே நினைக்கமாட்டார்கள். ஆனால் கலவரங்கள் ஏற்படுவதால் தங்கள் தோல்வி மறக்கப்பட்டு விடும் என்று கருதியோ அல்லது தாங்கள்
49] ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
சீக்கிரத்தில் முதுகு காட்டி ஓடப்போவதற்கு இப்போதே ஒரு சாக்கு தேடி வைத்துக்கொண்டால் தங்கள் மானம் தங்குவதற்கு செளகரியம் ஏற்படும் என்று கருதியோ காங்கிரஸ்காரர்கள் பொது ஜனங்களிடை இருந்து வசூலித்த பணத்தையும் பெரிதும் காலிகளுக்கே கொடுத்து காலித்தனத்தை வளர்த்து இன்று அதையே சுயராஜ்யமாகச் செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் விருதுநகரிலும், செட்டிநாட்டிலும் நடந்த காலித்தனங்கள் காங்கிரஸ் பத்திரிகைகள் மூலமே உணர்ந்திருக்கலாம். போலீஸ்காரர்கள். சாதாரண தன்மையில் நிலைமையை சமாளிக்க தங்களால் கூடுமான முயற்சியெல்லாம் செய்துபார்த்தார்கள். சில்லறை விஷமக்காரர்களையும் சில காலிகளையும் மாத்திரம் அதட்டி பார்த்தார்கள். பயனில்லாமல் போகவே சிலரை போலீஸ் காவலில் வைத்துப்பார்த்தார்கள். அதுவும் பயனில்லாமல் போயிற்று. காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொன்றுக்கு சட்டம் கேட்கவும் காலிகளுக்கு போதையேற்றி உசுப்படுத்தி விடவுமான காரியம் செய்ததால் அவர்களுக்கு பயம் விட்டு போலீசாரையே கண்டபடி பேசவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் நூற்றுக்கணக்கான பேர் நின்று கூப்பாடு போடவும் போலீசு சூப்பிரண்டு முதலிய அதிகாரிகளை நேரிலேயே அலட்சியமாய் கேலி பரிகாசமாய் பேசவுமான நிலைமையும் ஏற்படும்படி செய்து விட்டார்கள். இவ்வளவு அக்கிரமங்களையும்போலீசார்பொறுமையோடு பொறுத்து இருந்ததுடன் செட்டிநாட்டு ராஜா அவர்களும் போலீசாரையும் மற்றும் தனது வகையாரையும் கெஞ்சிக்கெஞ்சி பலாத்காரம் சிறிதும் உபயோகப்படுத்தாமலேயே நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் வந்திருக்கிறார் என்றாலும் கடசியாக ரிசர்வ் போலீசு பட்டாளம் தருவிக்காமலும் தடி அடிப் பிரயோகம் செய்து காட்டாமலும் நிலைமையை சமாளிக்க முடியாமலே காங்கிரசு தலைவர்கள் என்பவர்கள் செய்து விட்டார்கள்.
சிறு பையன்களையும் அநாதி பிள்ளைகளையும் வீடுகளில் பெற்றோர். வார்த்தைக்கு அடங்காமல் 10 ரூபாய் வாங்கி 100 ரூபாய்க்கு நோட்டு எழுதிக் கொடுத்து வாங்கிக்கொண்டு குடி கூத்தியில் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொண்டு திரிகின்றவர்கள் வரை கதர் வேஷ்டி, கதர் குல்லாய், கொடி ஆகியவைகளுடன் கூட்டம் கூட்டமாக தெருவில் நடந்துகொண்டு அதுவும் செட்டிநாட்டு ராஜா வீட்டுக்கு முன்புறம் நின்றுகொண்டு ராஜா சர் ஒழிக, பணக்காரர் ஒழிக, சர்க்கார் அடிமை ஒழிக, ஜஸ்டிஸ் கட்சி ஒழிக என்கின்ற நாமாவளியை சொல்லிக்கொண்டு கூப்பாடு போடுவதுமான காட்சி கண்கொண்டு பார்க்க முடியாததாகவே இருந்தது. மற்றும் கூட்டங்களில் பேசும்போதும் தோழர் சத்தியமூர்த்தி முதல் ஒவ்வொரு காங்கிரசுக்காரரும் காலிகளுக்கு உற்சாகம் உண்டாக்கும் விதமாகவே பேசுவதும் எதிர்க் கூட்டங்களின் பக்கத்தில் கூட்டம்போட்டு கூச்சல் போடுவதும் கூட்டத்தில் இருக்கும் ஆட்களை ஒவ்வொருவராக ஆள்விட்டு இழுத்துக்கொண்டு
குடி அரசு - 1936 (2), 494.
போவதும் கூட்டத்துக்கு ஆட்கள் வராமல் தூரத்தில் நின்று கொண்டு வருகிறவர்களை தடுத்து திருப்பி அனுப்புவதும் சாணி உருண்டைகளை வீசுவதும் கற்களையும் சேறுகளையும் வீசுவதுமாக துணிந்து இன்னது செய்வது என்று அறியாதவர்களாகி கண்டபடி ஆடித் தீர்த்துவிட்டார்கள்.
பள்ளத்தூர் சர்க்கிளில் அபேட்சகர்கள் இருவரும் பணக்காரர்களே ஒழிய ஒருவர் மாத்திரம் பணக்காரர் மற்றவர் ஏழை என்று சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு அதாவது ராஜா சர் மாப்பிள்ளை தோழர் சி.வி.சி.டி வெங்கிடாசலம் செட்டியார் சொத்துக்கு பெரிதும் விட்டவர் என்று சொல்லிவிட முடியாத நிலையில் தான் எதிர் அபேக்ஷகர் தோழர் நாகப்ப
செட்டியார் நிலையையும் சொல்லலாம். அவருக்கு பிரசாரகர்களாக தோழர்கள் ஜீவானந்தம், நீலாவதி அம்மையார் - ராமசுப்பிரமணியம், ராய சொக்கலிங்கம் முதலிய “பணக்காரர்களின் விரோதிகள்'' என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் கூட அங்கு வந்து ஆசை தீர பணக்காரர்களை வைவது என்னும் பேரால் ராஜா சர் அவர்களை வைதுவிட்டு போயிருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் தோழர் திருவண்ணாமலை அண்ணாமலை கம்பெனியார் எவ்வளவு பேசி இருப்பார்கள் என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இன்னும் சரியான விபரங்களை “மெயில்” பத்திரிகையிலும் “இந்து “தினமணி” பத்திரிகையிலும் பார்க்கலாம்
12-ந் தேதி இரவு பள்ளத்தூர் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசிக்கொண்டிருக்கும்போது சாணி உருண்டைகள் மார்புக்கு நேராகவே வந்து விழுந்து சால்வையில் மொத்தையாய் ஒட்டிக்கொண்டன. அவற்றை யெடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும்போது தோளிலும் வயிற்றிலும்
இடுப்பிலும் ஒன்றின்பின் ஒன்றாய் வந்து கல்லுகள் விழுந்தன. ஒரு பெண்ணின் காதில் ஒரு கல் விழுந்தது. தோழர் எஸ். ரங்கநாதன் அவர்கள்.
தலையில் பொறிக்கு பக்கமாக ஒரு கல் விழுந்து உடனே புடைத்து விட்டது
ஒரு சிறு பையன் தலையில் ஒரு கல் விழுந்து ரத்தம் வடிந்தது, அவன்: கூவென்று கத்தினான். இவ்வளவு அனுபவித்துக்கொண்டு கலங்காமல் தோழர் ஈ.வெ. ராமசாமி பேசிக்கொண்டும் மற்ற ஆள்களை சமாதானப் படுத்திக்கொண்டும் இருக்கும்போது கற்கள் மழைபோல் பொழிய ஆரம்பித்து விட்டன. உடனே கூட்டத்தை முடிக்கும்படி தோழர் ராமசாமியை ராஜா சர் ஆட்கள் கட்டாயப் படுத்தியதோடல்லாமல் இழுத்துப்போய் மோட்டார்காரில் உட்கார வைத்து ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். இதில் உள்ள ஒருமுக்கிய விசேஷம் என்னவென்றால் நான்கேபோலீஸ்காரர்கள் தான் அங்கு இருந்தார்கள். அவர்கள் தங்கள் மீது கல் விழுகாமல் பார்த்துக்கொள்வதில் அதிக கவனமாய் இருந்ததுதான். பிறகு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீஸ்காரரும் டிப்டி சூப்பரண்டும் வந்து நேரில் கற்கள் விழுவதை பார்த்தபிறகே கூட்டத்தை தடிகொண்டு கலைக்க
உத்திரவிட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது 49... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இதையறிந்த ராஜா சர் செட்டியார் மறுநாள் கூட்டம் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். காங்கிரஸ்காரர்கள் கூட்டமும் ஊர்வலமும் வசவு பஜனையும் வழக்கம் போல் நடந்திருக்கின்றன. 13-ந் தேதி தந்தி கொடுத்து மதுரையில் இருந்து ரிசர்வ் போலீசுகாரர்கள் 40, 50 பேர்கள் தருவிக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜா சர் செட்டியார் வசமும் அது சமயம் சுமார் 100 பேர்கள் வரை இருந்தும் கண்டிப்பான உத்திரவின் பயனாய் அவர்களால் ஒரு பயனும் ஏற்பட முடியாமல் போய்விட்டது
14-ந் தேதி தேர்தலில் ஓட்டுகள் ஒழுங்காக பதிவு செய்ய ஏற்பாடு செய்த பிறகே ஓட்டர்கள் தாராளமாய் வெளியில் வரவும் இஷ்டப்படி ஓட்டுப் போடவும் முடிந்ததே ஒழிய மற்றபடி பந்தோபஸ்து இல்லையானால்
ஓட்டிங் இடத்திலும் சில கொலைகள் நடத்திருக்கக்கூடும்
இம்மாதிரி ஆன நிலையில் ஜனநாயகம், சுயராஜ்யம், பணக்காரர். ஒழிப்பு என்கின்ற காரியத்துக்கு ஏதாவது இடம் உண்டா என்று யோசித்து பார்க்க விரும்புகிறோம். இந்த ராமநாதபுரம் ஜில்லா தேர்தலில் இந்த சென்ற
15 நாளில் இருகட்சிக்கும் எல்லாம் சேர்ந்து (200000) இரண்டு லக்ஷ ரூபாய் செலவாகி இருக்கலாம். யாரோ வீம்பு பேசி இரண்டு செட்டியாருக்கும் மாட்டி விட்டுவிட்டார்கள். செலவுகள் தாராளமாய் செய்யப்பட்டன. காலித்தனங்கள் தாராளமாய் நடத்தப்பட்டன. கடசியாக ஏதோ ஒரு கட்சி ஜெயித்தது. அவ்வளவுதானே ஒழிய, இதில் காந்தியோ காங்கிரசோ கொள்கையோ ஜெயித்தது என்றோ, இனியும் எப்போதாவது ஜெயிக்க முடியும் என்றோ சொல்ல முடியுமாஎன்பதை யோசித்துப்பார்க்கும்படி வேண்டுகிறோம்.
வைது கூப்பாடு போட்டவர்களில் 100 க்கு 70 பேர் ராஜா சர் மாப்பிள்ளை ஜெயித்தார் என்ற உடன் அவர் வீட்டிற்கு உடனே வந்து வெற்றிலை பாக்கு சந்தனம் வாங்கிக்கொண்டு க்ஷ சமாச்சாரம் விசாரித்து “காங்கிரசு என்றால் என்ன காலித்தனம் தானே'' என்று சொல்லுபவர்களும் நாமினேஷன் சிபார்சுக்கு பல்லைக் கெஞ்சினவர்களுமாகத்தான் இருந்தார்களே ஒழிய மானத்தையோ கொள்கையையோ கவனித்தவர்கள். ஒருவரைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆகவேஇந்தமுறையை இனியும் விட்டுக்கொண்டே இருந்தோமானால் நாட்டுக்கோ, பட்டினி கஷ்டம் ஓழியவோ, பணக்காரன் ஒழியவோ, சுயராஜ்யம் பெறவோ பொது உடமை ஏற்படவோ முடியுமா என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.12.1936
குடி அரசு - 1936 (2), 496
பட்டேல் சுற்றுப்பிரயாணமும் பணம் வசூலும்
தோழர் பட்டேல் பணம் வசூலித்துப் பார்ப்பனர்களின் தேர்தல் சிலவுக்காக ஒப்படைத்து விட்டுப் போகவே தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அதனாலேயே அவருக்குப் பணம் கொடுக்கக்கூடாது என்றும்,
மக்கள் உஷாராய் இருக்க வேண்டும் என்றும் எழுதினோம். ஆனால் அவரை பகிஷ்கரிக்க வேண்டுமென்று நாம் வற்புறுத்தவில்லை. அப்படியிருந்தும் பல இடங்களில் பகிஷ்கரித்ததாகவும், கருப்புக்கொடி பிடித்துத் தங்கள் அதிருப்தியைக் காட்டிக்கொண்டதாகவும் தோழர் பட்டேல் அவர்களே பேசியிருப்பதாகப் பார்ப்பனப் பத்திரிகைகளில் பார்த்தோம்.
என்றாலும் அதைப்பற்றி நாம் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் அவர் நடந்து கொண்ட மாதிரியையும், பேசிய மாதிரியையும் கவனித்தால் தோழர் பட்டேல் பகிஷ்காரம் செய்யப்பட்டிருக்க வேண்டியவரேயாவார் என்பது நன்றாய் விளங்கும்
அது ஒருபுறமிருக்க தென்னாட்டு மக்கள் பணம் கொடுக்கும் விஷயத்தில் இந்தத்தடவை மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்திருக்கிறார்கள். சென்னையில் மாத்திரம் சுமார் ரூ.5000 போல் வசூலாகி இருப்பதாகவும், மற்ற எல்லா இடங்களிலும் 6, 7 ஆயிரத்துக்குள்ளாகவேதான் வசூலாகி இருப்பதாகவும் பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமே தெரிய வருகின்றது
அதுவும் சென்னையில் குஜராத்திக்காரர்களும், பார்ப்பனர்களும்தான் மொத்தமாய் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது
மற்ற ஊர்களிலும் நாம் கொடுக்கவேண்டாம் என்று சொன்னதற்காக நம்மிடம் பொறாமை உள்ளவர்கள் நமது பேச்சு வெற்றி ஆகிவிட்டால். நமக்கு யோக்கியதை வந்து விடுமே என்கின்ற “அபிமான”த்தின் மீது ஏதோ காலும், அரையும், ஒன்றுமாகச் சேர்த்து 10, 18, 20, 40 என்கிற முறையிலேயே பெரிதும் பண முடிப்பு வழங்கி இருக்கிறார்கள்.
மற்றபடி இந்தத் தடவை அவர்களுக்குப் பொதுமக்கள் நல்ல புத்தி கற்பித்ததற்கு மகிழ்ச்சியோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
4979 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்தப் பணங்கள் எதற்காக செலவழிக்கப் போகின்றன என்பதைப்
பற்றி நாம் எழுத வேண்டியதில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்காகப் பார்ப்பன. அபேக்ஷகர்களுக்குத்தான் பெரிதும் செலவிடப்போகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆகவே மோட்சத்துக்காக என்று நம்மிடம் பார்ப்பனர்கள் வசூலிப்பது போலவே சுயராஜ்யத்துக்காக என்றும், பணம் பறிப்பதில் தீரர்கள் ஆகிவிட்டார்கள். நம்முடைய முட்டாள்தனம்தான் இன்னமும் மாறாமல்
இருந்து வருகிறது இனியாவது பார்ப்பனரல்லாத மக்கள் அறிவு பெற்றுப் பார்ப்பன
சூழ்ச்சி வெற்றிபெறாமல் போகிறபடி செய்வார்களாக.
குடி அரசு - கட்டுரை - 27.12.1936
குடி அரசு - 1936 (2), 498
சட்டசபை வேட்டை
சென்னை சட்டசபையாகிய லெஜிஸ்லேட்டிவ் அசம்பிளி தேர்தலுக்கு காங்கிரஸ் மடிகட்டி நிற்கிறது. ஜஸ்டிஸ்கட்சியும் மடிகட்டி நிற்கிறது. மற்றும் பல கட்சிகளும் சில தனிப்பட்ட நபர்களும் மடிகட்டி நிற்கின்றார்கள் எல்லோருக்கும் ஆசைப்பட உரிமையுண்டு. எல்லோரும் அதன் பயனை அனுபவிக்கவும் உரிமையுடையவர்களே ஆவார்கள். ஏனென்றால் சட்ட சபையில் செய்யும் வேலை எதுவானாலும் இந்நாட்டு மக்கள் எல்லோரையும் பற்றியதாகும். அதற்கு ஏற்படும் செலவு அவ்வளவும் இந்நாட்டு மக்களின் உழைப்பால் சம்பாதிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட வரிப்பணத்தைப் பொருத்ததேயாகும். ஆதலால் செல்வவான், ஏழை, படித்தவன், படிக்காதவன், மேல் ஜாதி கீழ் ஜாதி என்கின்றதான எவ்வித பிரிவு தடையும் இல்லாமல் எல்லோருக்கும் சம்மந்தப்பட்டதும் உரிமையுடையதுமேயாகும். ஆனால் ஒரு கூட்டத்தாரோ, ஒரு ஜாதியாரோ, ஒரு கட்சியாரோ, தங்களுக்குத்தான் உரிமையுண்டென்றும், தாங்கள் தான் தகுதி உடையவர்கள்
என்றும் சொல்லி தனி பாத்தியம் கொண்டாடுவதும் மற்ற ஒரு கூட்டத்தாரை உரிமையற்றவர்கள் என்றும், தகுதியற்றவர்கள் என்றும் சொல்லி வைவதும், தடுப்பதுமான காரியத்தை யார் செய்தாலும் அதை ஆக்ஷேபிக்காமலோ: அம்முயற்சியை ஒழிக்காமலோ இருக்க முடியவில்லை. இதையேன் சொல்லுகின்றோமென்றால் காங்கிரஸ்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டத்தார் இப்போது இந்த சட்டசபை தேர்தலில் தாங்கள் தான் நிற்க உரிமையுடையவர்கள் என்றும், தாங்கள் தான் மெம்பர்களாகத் தகுதி உடையவர்கள் என்றும் மற்றவர்கள் தகுதி அற்றவர்கள் என்றும் சொல்லி பிரசாரம் செய்து வருவதால் அதை ஆகேபித்து
மறுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆகவே இதைப்பற்றி எழுதுகிறோம்
சட்டசபைக்குப் போகிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் அங்கு சென்று தாங்கள் செய்யப்போகும் வேலை என்ன என்பதையும், சட்ட சபையைப் பற்றினவரை தங்களுடைய கொள்கை என்ன என்பதையும் நாணயமாகவும், யோக்கியமாகவும் ஓட்டர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்டவர்களாவார்கள். சட்ட சபைக்குச் செல்லுபவர்களின் வேலையையும், கொள்கையையும் நன்றாகத் தெரிந்து கொண்டே ஓட்டர்களும் ஓட்டு செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
49 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
இந்த இரண்டு குணமும் இல்லாத அபேட்சகர்களும், ஓட்டர்களும் இருப்பார்களானால் அவர்கள் அரசியலைப் பொருத்தவரையில் பூமிக்குப் பாரமான மாம்சபிண்டங்கள் என்று சொல்ல வேண்டியவர்களே யாவார்கள். இன்று சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் தாங்களே சட்டசபைக்குப் போக உரிமையுடையவர்கள் என்றும், தங்களைத்தவிர வேறு யாருக்கும் ஓட்டர்கள் ஓட்டு செய்யக்கூடாதென்றும் சொல்லுவதோடு தாங்கள் சட்டசபைக்குச் செல்வதானது தங்களைத் தவிர உள்ள மற்ற கட்சியை அதாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகவும், ஜஸ்டிஸ் கட்சியார் சட்டசபைக்குப்போகாமல் தடுப்பதற்காகவும் சட்டசபைக்குப் போகிறோம் என்கின்றார்கள். மற்றபடி தங்களுக்கு வேறு எவ்வித கொள்கையோ, தகுதியோ இருப்பதாக அவர்கள் இதுவரை சொல்லவே இல்லை. சிற் சில சமயங்களில் சட்டசபையில் போய் என்னசெய்வது என்பதை இனிமேல் அதாவது தேர்தல் முடிந்த பிறகு தீர்மானிக்கப்போவதாய் சொல்லுகிறார்கள். சிற்சில சமயங்களில் சட்ட சபைக்குப் போய் சுயராஜியம் பெரும் நாளைத் துரிதப்படுத்தப் போவதாய் சொல்லுகிறார்கள். சிற்சில சமயங்களில் சட்ட சபையில் சுயராஜியம் பெற முடியாது என்றும், சட்டசபைக்கு ஆதாரமான புதியசீர்திருத்தத்தை உடைத்து சர்க்காரை திக்குமுக்கலாடச்செய்யப்போகிறோம் என்றும் சொல்லுகிறார்கள். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் சட்டசபைத் தேர்தல் முடிந்து அங்கத்தினர்களான பிறகு அரசியலை நடத்தும் பொறுப்புகளை வகிக்கும் படியான மந்திரி பதவிகளை வகிக்கும் விஷயத்திலும் காங்கிரஸ்காரர்கள் எவ்வித அபிப்பிராயமும் சொல்லாமல் மந்திரிபதவியை ஏற்றாலும் ஏற்போம். மறுத்தாலும் மறுப்போம். ஏற்றபிறகு அரசியல் சட்டப்படி நடந்தாலும் நடப்போம். அல்லது எதிர்த்து அரசியல் சட்டத்தை உடைத்தாலும் உடைப்போம் என்று ஒரு பொறுப்பும், ஒரு ஜவாப்தாரித்தனமும் இல்லாதவர்களாகவே பேசுகிறார்கள்
சட்டசபைக்குப் போவது என்பதும் அங்கு மந்திரி பதவி ஏற்று அதை உடைப்பது என்பதும் விளையாட்டுக் காரியமல்ல என்பதும் லேசில் செய்யக் கூடிய காரியம் அல்ல என்பதும் நாம் விவரித்துச் சொல்லவேண்டியதில்லை. சட்டசபை தேர்தல் என்பதில் ஒவ்வொரு தனி நபர் தேர்தல் ஒன்றுக்கு சராசரி 10 ஆயிரம் ரூபாயுக்கு குறையாமல் செலவு செய்து பெறவேண்டிய ஸ்தானமாகும். இதுபோலவே அரசியல் மந்திரிபதவி சபை என்பதும் மாகாணம் ஒன்றுக்கு சராசரி 5 50 ஆயிரம் ரூபாய் ஒரு லக்ஷ ரூபாய் என்பதான செலவைக் கொண்டது என்பதும் யாரும் அறியாததல்ல.
சட்டசபை கூட்டங்கள் நடக்கும் காலத்தின் பணச் செலவும் நாள் ஒன்றுக்கு மாகாணம் ஒன்றுக்கு 4000, 5000 ரூபாய் வீதம் செலவாகக்கூடிய காரியமே தவிர வேறல்ல. இன்னும் மற்ற செலவுகள் எவ்வளவோ உண்டு.
குடி அரசு - 1936 (2), 500
இவ்வளவு பணச் செலவும் நடத்தி இப்படி பொருப்பில்லாமல். பேசுபவர்களை மெம்பர்களாகக் கொண்ட நமதுநாடு எப்படிப்பட்ட நாடு என்று பார்ப்போமானால் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு சராசரி வருமானம் 0-1-6 ஒன்றரை அணாவோ, 0-2-0 இரண்டு அணாவோ கிடைப்பதுகூட கஷ்டமான காரியம் என்று சொல்லும்படியானதும், விவசாயிகளாய் இருப்பவர்கள் தங்கள் விவசாய விளைபொருள்களின் பயனைக்கொண்டு சர்க்கார் வரி கட்டுவதே கஷ்டமாய் இருக்கிறதே என்று கூக்குரலிடும் படியானதுமான நாடு என்பதை யாரும் மறுக்க முடியாது.
எனவே இப்படிப்பட்ட பணச் செலவும், கஷ்டமும் உள்ள சட்டசபை மெம்பர் ஸ்தானங்களையும் அரசியல் பதவிகளையும் இம்மாதிரி அதாவது “அங்குபோய் என்ன செய்வோம் என்பது எங்களுக்கே தெரியாது, அதற்காக இப்போது எங்களிடத்தில் ஒரு திட்டமும் இல்லை, உடைப்போமோ, நடத்துவோமோ இப்போது சொல்லமுடியாது, கூனோ, குருடோ, மொண்டியோ, முடமோ, மிருகமோ, பிண்டமோ யாரை நாங்கள் நிறுத்தினாலும் நீங்கள் ஓட்டுப்போட வேண்டும்'' என்று பொருப்பில்லாமல், கவலையில்லாமல் பேசுகிறவர்கள் அந்த ஸ்தானங்களை அடைய மக்கள் ஓட்டு செய்வது என்றால் இதை யார்தான் புத்திசாலித்தனமான காரியம் என்றோ, யோக்கியபொருப்பை உணர்ந்த காரியம் என்றோ சொல்லக்கூடும் என்று கேட்க ஆசைப்படுகிறோம்.
தவிரவும் காங்கிரஸ்காரர்கள் மற்ற கட்சியாரை அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதற்காவது ஏதாவது சரியான காரணம் சொல்லுகிறார்களா என்று பார்த்தால் அதுவும் பொறாமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதாவது “ஜஸ்டிஸ்கட்சி சர்க்காரை ஆதரிக்கிறது,
சீர்திருத்தத்தை ஏற்று நடத்துகிறது, வகுப்புவாதம் பேசுகிறது'' என்கின்ற மூன்று “குறை “களை கூறுகிறார்கள். இவற்றை குறையென்று யாராவது சொல்ல முடியுமா என்பதை முதலில் யோசிக்கவேண்டும்
இந்த நாட்டில் இன்று சர்க்காரை ஆதரிக்காமலோ, சர்க்காருடன்
ஒத்துப் போகாமலோ ஒரு காரியமும் நம்மால் செய்யமுடியவில்லை
சர்க்கார் என்றால் நமது வரிப்பணம், பட்டாளம், பீரங்கி, துப்பாக்கி, போலீசு, ஜெயில் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இவற்றை அலட்சியமாய் இதுவரை யாரும் கருதியதில்லை. கருதினவர்களும் யாதொரு காரியத்தையும் சாதித்துவிடவும் இல்லை.
காங்கிரசே இவற்றை ஒருகாலத்தில் அலட்சியமாய் கருதிற்று என்று சொல்லப்பட்டாலும் இன்று அப்படி கருதியதால் ஒரு காரியமும் சாதிக்கக் கூடவில்லை என்ற முடிவுக்குவந்து இனி பட்டாளத்தையோ, ஜெயிலையோ, போலீசையோ அலட்சியமாய்க் கருதுவதில்லை என்று சர்க்காருக்கு எழுதிக்
501 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கொடுத்துவிட்டு வந்து சட்டசபைக்குள்ளும், ஸ்தல ஸ்தாபனங்களுக்குள்ளும், ராஜவிஸ்வாசப் பிரமாணமும், சட்டத்திற்கு கீழ்படியும் பிரமாணமும் செய்து அரசாங்க ஸ்தாபனத்துக்குள்ளும் அரசாங்க சீரதிருத்தத்திற்குள்ளும் நுழைய மடிகட்டி நிற்கிறது. இந்நிலையில் ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்றது என்றால் இதற்கு ஏதாவது அருத்தம் உண்டா என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். மற்றபடி ஜஸ்டிஸ் சீர்திருத்தத்தை ஏற்று நடத்துகிறது என்பதிலும் குற்றம் என்ன சொல்லக்கூடும்?
காங்கிரசானது 1920-ம் வருஷத்தில் இப்போது அமுலில் இருக்கும்
சீர்திருத்தத்தை போராதது என்றும், தகுதி அற்றது என்றும், அதிருப்திகரமானது என்றும் சொல்லி அரசியலின் சகல சம்மந்தத்தையும் பஹிஷ்கரித்துப் பார்த்தாய் விட்டது. பிறகு சீர்திருத்தத்தை உடைக்கச் சட்ட சபைக்குப் போவதாய்ச் சொல்லி தாஸ், நேரு, லஜபதி, மாளவியா போன்ற பெரியார்கள் சட்டசபைக்கு மெஜாரிட்டியாய் போய் தங்களால் ஆனதை யெல்லாம் செய்து பார்த்தாய் விட்டது. சென்னை மாகாணத்தில்தான் ஜஸ்டிஸ் கட்சியார் இருந்து கொண்டு காங்கிரஸ்வேலையை தடுத்துவிட்டார்கள். என்று காங்கிரஸ்காரரால் சொல்லப்படுவதானாலும் பஞ்சாப், வங்காளம், மத்திய மாகாணம் முதலிய “பாரதத்தாயின்” நேத்திரமும், இருதயமும் போன்றதான தேசீய வீரர்களும், அருந்தவப் புத்திரர்களும் மகா தியாக உருவங்களும் இருந்த நாடுகளில் - ஜஸ்டிஸ் கட்சி வாசனையே இல்லாத நாடுகளில் காங்கிரஸ்காரர்களால் எந்த அளவுக்கு முட்டுக்கட்டை போட்டு சீர்திருத்தத்தை உடைத்து அரசாங்கம் நடைபெற முடியாமலோ, அரசாங்கத்தார். கீழே இரங்கி வரும்படியாகவோ செய்ய முடிந்தது என்று கேட்கின்றோம் ஆகவே இந்த 16 வருஷ காலமாய் காங்கிரஸ்காரர்கள் அரசியலில் ஞானமும், பொருப்பும் கடுகளவும் இல்லாமல் பொது ஜனங்களின் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் தங்கள் ஆயுதங்களாகக் கொண்டு தங்களால் கூடுமானவரை ஆடிப்பாடி குதித்துக் கும்மாளம் போட்டுவிட்டு சிறிதும் பொருப்பும் மானமும் இல்லாமல் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பதாய்ச் சொல்லி ஒரு கோடி இரண்டு கோடி, ரூபாய்கள் வசூல்செய்து ஒரு லட்சம், இரண்டு லட்சம் பேரை ஜெயிலுக்கு அனுப்பியும் கட்டுக்கடங்காமல் காலித்தனமாய் திரியச் செய்தும் சகல முயற்சியிலும் படுதோல்வி அடைந்த காந்தியாரே காங்கிரசில் ஒழுக்கமில்லை, நாணையமில்லை, நான் காங்கிரசை விட்டு வெளியேபோய் காங்கிரசுக்கு மேன்மை உண்டாக்கப்போகிறேன் என்று சொல்லி ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிப்போய் காங்கிரசுக்கு காக்ஷியாளராய் வருகிறேன் என்பதும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஒழித்துவிடப் போகிறோம் நீங்கள் மாத்திரம் இந்த ஒரு தேர்தலுக்கு ஓட்டுக் கொடுத்தால் போதும் என்ற ராஜகோபாலாச்சாரியார். ஒவ்வொரு தேர்தலிலும் சொல்லி மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி கடைசியாக காங்கிரசுக்குக் கட்டுப்பாடும், நாணையமும் உண்டாவதற்காக ஆக நான்.
குடி அரசு - 1936 (2), 502
காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகி நிற்கிறேன் என்று சொல்லி ஏமாற்றிவிட்டுப் போய் உட்கார்ந்து கொண்டு மறுபடியும் இந்த ஒருதடவை மாத்திரம் ஓட்டுசெய்யுங்கள் இல்லாவிட்டால் வங்காளக்குடாக் கடலில் விழுந்து சாகவேண்டி வரும் என்று சொல்வதுமாய் இருக்கும்போது ஐஸ்டிஸ்காரர்கள் சீர்திருத்தத்தை நடத்திவிட்டு இனியும் அதிக சீர்திருத்தங்கள் கொடுங்கள் என்று கேட்பதில் என்ன தப்பு என்று யோசித்துப்பார்க்கும்படி வேண்டுகிறோம்.
வகுப்புவாதம்
மற்றபடி ஜஸ்டிஸ்காரர்கள் வகுப்புவாதம் பேசுகிறார்கள் என்பதில் ஏதாவது அருத்தம் இருக்கிறதா என்று கேட்கின்றோம். இந்தியா என்றாலே வகுப்புவாதம் என்பதல்லாமல் வேறு ஏதாவது பொருள் இருக்கிறதா என்று கேட்கின்றோம். இந்தியாவில் பல மதம், பல ஜாதி, பல உள் வகுப்புகள் நிறைந்திருக்கின்றன. இதில் கட்டுப்படாத மனிதன் யாருமே கிடையாது காந்தியாரும் தன்னை இந்து என்றும், சனாதன வர்ணாச்சிரம இந்து என்றும், இந்து மதத்தின் சனாதன வர்ணாச்சிரமத்தைக் காப்பாற்றவே மூச்சு விடுகிறேன் என்றும் சொல்லி வருவதை யாரும் மறுக்க முடியாது. தோழர்கள் மெளலானாக்கள் முகமதலி, ஷவுக்கத்தலி, அஜ்மால்கான், அன்சாரி, அப்துல்கலாம் ஆசாத், மகமதலி ஜின்னா போன்ற தேசிய வீரர்களும் ஒப்பற்ற தேசபக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி “நான் முதலாவது முஸ்லீம், இரண்டாவது மூஸ்லீம், அப்புரம் மூன்றாவதுதான். இந்தியன்'' அதாவது எனக்கு முதல் லக்ஷியம் முஸ்லீம் மார்க்கம், இரண்டாவது லக்ஷியம் முஸ்லீம் சமூகம், மூன்றாவது லக்ஷியம் தான் இந்தியா தேசம் என்று சொல்லி இருப்பதும் இனியும் சொல்லி வருவதும் யாராவது மறுக்கக் கூடுமா என்று கேட்கின்றோம்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும், சத்தியமூர்த்தியார் அவர்களும் “எனக்கு உச்சிக் குடிமையும், பூனூலும், பஞ்சகச்சமும், வர்ணாச்சிரம தர்மமும், கீதையும், மனு தர்ம சாஸ்திரமும், உப நிஷத்தும், புராணமும், ஆகமமும்தான் முதல் லட்சியம், பார்ப்பன வகுப்பின் நன்மை இரண்டாவது லட்சியம், அப்புரம் தான் தேசாபிமானம் என்பது மூன்றாவது லட்சியம்” என்று காட்டி வரவில்லையா என்று கேட்கின்றோம்.
தேசிய கெ௱டி
மற்றும் ஒப்பற்றதும், உயிருக்குச் சமானமானதுமான “தேசியக்கொடி” என்பதில் என்ன விளங்குகிறது? சிகப்பு, பச்சை, வெள்ளை அகிய வர்ணங்கள் அதாவது வர்ணதர்மம் தான் விளங்குகிறது. என்ன என்றால் சிகப்பு வர்ணம் இந்துக்களைக் குறிப்பது, பச்சை வர்ணம் முஸ்லீம்களைக் குறிப்பது, வெள்ளை வர்ணம் மற்ற வேறு பல மதக்காரர்களையும், வகுப்புக்காரர்களையும் குறிப்பது என்பதாக வியாக்கியானம் சொல்லப்படவில்லையா என்று
503 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கேட்கின்றோம். 1910ம் வருஷத்திலேயே இந்திய சட்டசபையில் முஸ்லீம்களுக்கு இவ்வளவு ஸ்தானங்கள் கிறிஸ்தவர்களுக்கு இவ்வளவு ஸ்தானங்கள் என்று அவரவர் ஜனத்தொகைக்குத் தக்கபடி பிரிவு ஏற்பட்டு அதை காங்கிரசும் எவ்வித ஆக்ஷேபணையும் இல்லாமல் ஒப்புக்கொண்டு காங்கிரஸ் கொள்கையிலும், திட்டத்திலும் லக்னோ பேக்ட் என்பதாக இடம் கொடுத்து தீர்மானங்கள் செய்துகொண்டதா இல்லையா என்று பழைய ஆதாரங்களைப் புரட்டிப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
1932ல் தோழர் காந்தியார் இந்தியத் தீண்டப்படாத மக்கள் என்னும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய ஜனத்தொகை எண்ணிக்கைக்குத் தக்கப்படி எண்ணிக்கை கொடுத்து அச் சமூகத்தாரிடம் ராஜி பேசி முடித்துக் கொண்டு அந்த முடிவை அரசாங்கமும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்துக்கு காங்கிரசும், இந்திய தேசியத் தலைவர்களும் இரு சமூகப் பிரமுகர்களும் விண்ணப்பம் செய்து கொள்ளவில்லையா என்று கேட்கின்றோம்.
இவற்றால் எல்லாம் உடைந்துவிடாத சீர்திருத்தமும், கெடாத தேசீயமும், ஜஸ்டிஸ் கட்சி சீர்திருத்தத்தை நடத்திக்கொடுப்பதாலும் மற்ற சமூகங்களுக்கும் உரிமை வழங்க வேண்டும் என்று கேட்பதாலும் தானா இந்திய தேசீய விடுதலை தடை பட்டுப்போகும்? என்று கேட்கின்றோம்
காங்கிரசானது 1885ம் வருஷத்தில் துவக்கப்பட்டதற்கு காரணமே இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் அதிகமான பதவிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தானே ஒழிய இந்தியர்களுக்கு சுயராஜ்யம் கொடுக்கவோ, பூரணசுயேச்சை ஏற்படுத்தவோ அல்ல என்பதை நாம் எங்கிருந்தும் ருஜுப்பிக்கத் தயாராய் இருக்கிறோம். இந்தியர்களுக்கு அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் சம்பாதிப்பது என்பது மாத்திரம் அல்லாமல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்றென்றும் நிலைக்கச் செய்து இரண்டு தேசத்தையும் ஒன்றாகக்கட்டி பிணைப்பது என்பதும் காங்கிரசின் முக்கிய கொள்கையாக இருந்து வந்தது என்பதையும் எப்பவும் ருஜுப்பிக்கத்தயாராய் இருக்கிறோம். காங்கிரசின் முக்கிய தீர்மானமே ராஜவிஸ்வாசப் பிரமாணமும், பிரிட்டிஷ் ஆட்சி என்றென்றும் இந்தியாவின் மீது இருக்கவேண்டும் என்றும் கடவுளை வேண்டிக்கொள்ளும் தீர்மானமும், ராஜ வாழ்த்துத் தீர்மானமுமாக இருந்தது என்பதை 1920ம் வருஷம் வரையில் இருந்து வந்தது என்பதையும் மெய்ப்பிக்கவும் ஆதாரம் காட்டவும் தயாராய் இருக்கிறோம்.
இன்றும் கூட தோழர்கள் காந்தியார், ஜவஹர்லால், பட்டேல் மற்றும் தேர்தல் பிரசாரம் செய்யும் சமதர்ம வீரர்கள் தேர்தலுக்கு சமதர்மத்தின்மீது நிற்கும் சமதர்ம வாதிகள் தோழர் ரங்கா உள்பட இந்த பிரிட்டிஷ் ஆட்சிக்கு விஸ்வாசமாய் இருப்பதாகவும், பிரிட்டிஷ் அரசரிடமும், அரச பின் சந்ததி இடமும் பக்தியாய் இருப்பதாகவும், பிரிட்டிஷ் அரசியல் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடப்பதாகவும் பிரமாணம் அதுவும் அவரவர்கள் இஷ்ட
குடி அரசு - 1936 (2), 504
தேவதையை வேண்டி பிரமாணம் செய்து விட்டு ஸ்தானத்தில் அமரவே அந்தப்படி பிரமாணத்தின்படி நடந்து கொள்ளவே சட்ட சபைக்கோ, ஸ்தல ஸ்தாபனத்துக்கோ செல்லுகிறார்கள் என்பதையும் யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்
இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைவதிலும், சட்ட சபையில் முட்டுக்கட்டை போட்டு அரசியலையோ சீர்திருத்த்தையோ உடைப்பது என்பதிலும் கடுகளவாவது நாணையமோ அறிவோ இருக்க முடியுமா என்று கேட்கின்றோம் சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை காங்கிரசின் பேரால் செய்யப்படும் காரியங்கள் இந்நாட்டுப் பார்ப்பன ஆதிக்கத்துக்காகச் செய்யப்படும் காரியங்கள் என்றும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்துக்காகச் செய்யப்படும் முயற்சிகளை ஒழித்து இந்நாட்டில் 'பிராமணர்! 'சூத்திரர்: என்கின்ற இரண்டு வகுப்பை நிலை நிறுத்தி மனு ஆட்சியை கொண்டுவர முயற்சிக்கும் காரியங்கள் என்றும், குறிப்பாக பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் முயற்சியால் பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் உள்பட ஒவ்வொரு முக்கிய வகுப்புக்கும் ஏற்பட்டிருக்கும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தையும், வகுப்பு உரிமையையும் ஒழிக்கவே சூட்சி செய்யப்படுகின்றதென்றும் நாம் இந்த 10,
12 வருஷங்களாகவே சொல்லி வருகின்றபடியே இன்றும் சொல்லுகின்றோம் ஆகவே இன்றைய தேர்தல் போரில் பார்ப்பனரல்லாத மக்கள் காங்கிரசின் பேரால் சொல்லப்படும் பொய் பித்தலாட்டமான பேச்சுகளுக்கும், செய்யப்படும் காலித்தனமான காரியங்களுக்கும், கோடாலிக் காம்புகளுடைய கூலி விஷமப் பிரசாரங்களுக்கும் யாரும் ஏமாந்துவிடாமல் இரண்டு கட்சியின் உண்மை யோக்கியதைகளையும் உள் எண்ணங்களையும் முன் பின் நடத்தைகளையும் நன்றாய் உணர்ந்து பிறகு தங்கள் தங்கள் ஓட்டுகளை பயன்படுத்தும்படி வேண்டுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 27.12.1936
505 ——————————— ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
தேசிய பத்திரிகைகளின் யோக்கியம்
காங்கிரஸ் பத்திரிகைகள் என்பது பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகைகளேயாகும். “இந்து”, “சுதேசமித்திரன்”, “தினமணி”, “ஜெயபாரதி” முதலிய பத்திரிகைகள் பார்ப்பன ஆதிக்கத்தில் நடைபெறுகின்றன என்பதை நாம் சொல்லி யாரும் அறியவேண்டிய நிலைமையில் இல்லை.
இந்த பத்திரிகைகளின் நேர்மையற்ற விஷமப் பிரசாரமே இன்று நாட்டில் மக்கள் பெரிதும் உண்மை உணரமுடியாமல் போவதோடு ஏமாந்து போவதற்கும் இடம் ஏற்படுகிறது
சமீபத்தில் சென்னையில் நடந்த ஷெடியூல் வகுப்பார் தேர்தலில். தாழ்த்தப்பட்ட வகுப்பு தொகுதிக்கு காங்கிரஸ் சார்பாக தோழர் பாலகிருஷ்ண பிள்ளை அவர்கள் நின்றார். ஜஸ்டிஸ் சார்பாக தோழர் ஜே. சிவஷண்முகம் பிள்ளை அவர்கள் நின்றார். காங்கிரஸ் அபேக்ஷகருக்கு 117 ஓட்டுகளும், ஜஸ்டிஸ் அபேசுஷ்கருக்கு 1057 ஓட்டுகளும் கிடைத்து காங்கிரஸ் அபேக்ஷர் கட்டின பணம் இழக்கக்கூடிய படுதோல்வி அடைந்திருக்கிறார். இதை வெளியிட்ட காங்கிரஸ் பத்திரிகைகள் காங்கிரஸ் அபேச்ஷ்கர் தோற்றார் ஜஸ்டிஸ் அபேச்ஷகர் வெற்றிபெற்றார் என்று எழுதும் யோக்கியமான காரியத்தை கைக்கொள்ளவே இல்லை. முடிவை மாத்திரம் தான் வெளியிட்டன. ஆகவே தேசிய பத்திரிகைகளின் நேர்மையை பொது மக்கள் உணர்ந்துகொள்ள இது ஒரு தக்கசமயம் என்பதற்காகவே இதை எடுத்துக்காட்டுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.12.1936
குடி அரசு - 1936 (2), 506
சட்டசபை உடைப்பது மெய்யா?
காங்கிரஸ்காரர்கள் ராஜாங்க சபைக்கு (ஸ்டேட் கவுன்சிலுக்கு) ஆட்களை நிறுத்தினார்கள். அங்குபோய் சட்டசபையை உடைக்கவோ, சீர்திருத்தத்தை உடைக்கவோ ஏதாவது இடம் இருக்கிறதா என்று கேட்கிறோம்.
வெறும் பதவிவேட்டை அல்லாமல் அதில் வேறு நாணையம் இருக்கிறதா என்று கேட்கின்றோம். சென்னை மாகாணத்தில் ஸ்டேட் கவுன்சிலுக்கு இரண்டுபேரைத்தான் நிறுத்த காங்கிரசுக்கு முடிந்தது. மற்ற இரண்டு ஸ்தானங்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு வருணாச்சிரம சவுக்கார் சேட்டையும், ஒரு ஆந்திர பார்ப்பனரையும் தான் நிறுத்த முடிந்தது. அவர்கள் இருவரும் காங்கிரஸ் அல்லாதார் பெற்று வெற்றிபெற்ற ஓட்டை விட மிகக்குறைந்த ஓட்டுபெற்று 3வது 4வது நபர்களாய் வெற்றி பெற்றார்கள். ஆகவே நாட்டில் அறிவாளிகளில் அரசியல் நிர்வாக அனுபவம் பெற்ற மக்களிடத்தில் காங்கிரசுக்கு உள்ள மதிப்பு எவ்வளவு என்பதற்கும் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைகளில் செய்யப்போகும் முட்டுக்கட்டை யோக்கியதை எப்படிப்பட்டது என்பதற்கும் இந்த ராஜாங்கசபைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகும்
குடி அரசு - கட்டுரை - 27.12.1936
507 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
கல்யாண விடுதலை
ஆண் பெண் கல்யாண விஷயத்தில் அதாவது புருஷன் பெண்ஜாதி என்ற வாழ்க்கையானது நமது நாட்டில் உள்ள கொடுமையைப் போல் வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கல்யாண: தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்ளுவது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில். இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்து பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்வித கல்யாணத்திற்கு தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்து பெண்களை வஞ்சிக்கின்றோம்
பொதுவாக கவனித்தால் நமது நாடுமாத்திரமல்லாமல் உலகத்திலேயே அநேகமாய் கல்யாண விஷயத்தில் பெண்கள் மிக்க கொடுமையும், இயற்கைக்கு விரோதமான நிர்ப்பந்தமும் படுத்தப்படுகிறார்கள் என்பதை நடுநிலைமையுள்ள எவரும் மறுக்கமுடியாது. ஆனால் நமது நாடோ இவ்விஷயத்தில் மற்ற எல்லா நாட்டையும் விட மிக்க மோசமாகவே இருந்து வருகிறது
இக்கொடுமைகள் இனியும் இப்படியே நிலைபெற்று வருமானால் சமீபகாலத்திற்குள்ளாக அதாவது ஒரு அரை நூற்றாண்டுகளுக்குள்ளாக கல்யாணச் சடங்கும், சொந்தமும் உலகத்தில் அநேகமாய் மறைந்தே போகும் என்பதை உறுதியாய்ச் சொல்லலாம். இதை அறிந்தே மற்ற நாடுகளில் அறிஞர்கள் பெண்கள் கொடுமையை நாளுக்கு நாள் தளர்த்திக்கொண்டு வருகின்றார்கள். நம் நாடு மாத்திரம் குரங்குப்பிடியாய் பழய கருப்பனாகவே இருந்து வருகின்றது. ஆதலால் தலைகீழ் முறையான பெண்கள் கிளர்ச்சி ஒன்று நமது நாட்டில் தான் அவசரமாய் ஏற்பட வேண்டியிருக்கின்றது
செங்கல்பட்டில் கூடிய மகாநாட்டில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தங்கள் தங்கள் கல்யாண விடுதலை செய்து கொள்ள உரிமை இருக்க வேண்டும் என்பதாக ஒரு தீர்மானம் செய்யப்பட்டவுடனும் சென்னையில் கூடிய பெண்கள் மகாநாட்டில் கல்யாண ரத்துக்கு ஒரு சட்டம் வேண்டும் என்று தீர்மானித்த உடனும் உலகமே முழுகிவிட்டதாக சீர்திருத்த வாதிகள். என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் உட்பட பலர் கூக்குரலிட்டார்கள். ஆனால்செங்கல்பட்டு தீர்மானத்திற்குப் பிறகு வெளிநாட்டிலும், இந்தியாவிலும் பல விடங்களில் கல்யாண ரத்துச் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவில் கல்யாணமே தினசரி ஒப்பந்தம்போல் பாவிக்கப்பட்டு வருகிறது.
குடி அரசு - 1936 (2), 508
ஜர்மனியில் புருஷனுக்கும், பெண்ஜாதிக்கும் இஷ்டமில்லையானால் உடனே. காரணம் சொல்லாமலே கல்யாணத்தை ரத்து செய்துகொள்ளலாம் என்பதாக சட்டம் கொண்டுவரப்பட்டது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும்
சமிபத்தில் பரோடா அரசாங்கத்தாரும் கல்யாண ரத்துக்குச் சட்ட சபையில் சட்டம் நிறைவேற்றி விட்டார்கள். மற்ற மேல்நாடுகளிலும் இவ்விதச் சட்டங்கள் இருந்து வருகின்றன. நமது நாட்டில் மாத்திரம் இவ்விஷயம் சட்டம் செய்வதில் கவனிக்கப்படாமலிருந்து வருகின்றதானது மிகவும் அறிவீனமான காரியம் என்றே சொல்லவேண்டும். சாதாரணமாக தென்னாட்டில் பத்திரிகைகள் மூலம் அனேக புருஷர்கள் தங்களது பெண்ஜாதிகளின். நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு கொலைகள் செய்ததாக தினம் தினமும் செய்திகள் வெளியாவதைப் பார்த்து வருகின்றோம்
சில சமயங்களில் ஒரு பெண்ஜாதியின் நடவடிக்கை சந்தேகத்திற்கு பல கொலைகள் நடந்ததாகவும் பார்க்கின்றோம். தெய்வீக சம்மதமான கல்யாணங்கள் இப்படி முடிவடைவானேன் என்பதைப்பற்றி தெய்வீகத்தில் பிடிவாதமுள்ள எவருக்குமே யோசிக்கப் புத்தியில்லை. பெண்கள் உலகம் முன்னேற்றமடைய வேண்டுமானால், அவர்களுக்கும் மனிதத்தன்மை ஏற்பட வேண்டுமானால் ஆண்களுக்கும் திருப்தியும், இன்பமும், உண்மையான காதலும், ஒழுக்கமும் ஏற்பட வேண்டுமானால் கல்யாண: ரத்துக்கு இடம் அளிக்கப்பட வேண்டியது முக்கியமான காரியமாகும் அப்படிக்கில்லாதவரை ஆண், பெண் இருவருக்கும் சுதந்திர வாழ்க்கைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.
நமது “சீர்திருத்தவாதிகள்" பலர், ஒரு மனிதன் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வதைப்பற்றி மாத்திரம் குடி முழுகிப்போய்விட்டதாகக்
கூச்சல் போடுகின்றார்கள். இவர்கள் எதை உத்தேசித்து இப்படிச் கூச்சல் போடுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. மதத்தை உத்தேசித்தா? அல்லது பகுத்தறிவை உத்தேசித்தா? அல்லது பெண்கள் நலத்தை உத்தேசித்தா? அல்லது மனித சுதந்திரத்தை உத்தேசித்தா? என்பது நமக்குச்
சிறிதும் விளங்கவில்லை. அல்லது மனித ஒழுக்கத்தை உத்தேசித்து இப்படிப் பேசுகின்றார்களா என்பதும் விளங்கவில்லை
நிற்க, ஒரு பெண்ஜாதிக்கு மேல் மனிதன் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொல்லுபவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். அதென்னவெனில், கல்யாணம் என்பது மனிதன் இன்பத்துக்கும், திருப்திக்குமா? அல்லது சடங்குக்காகவா? என்று கேட்பதோடு இஷ்டமில்லாத, ஒற்றுமைக்கு இசையாத, கலவிக்கு உதவாத ஒரு பெண் எந்தக் காரணத்தினாலோ ஒருவனுக்குப் பெண்ஜாதியாக நேர்ந்துவிட்டால் அப்போது புருஷனுடைய கடமை என்ன என்று கேட்கின்றோம். அதுபோலவே ஒரு பெண்ணுக்கும் அப்படிப்பட்ட ஒரு புருஷன் அமைந்துவிட்டால் அப் பெண்ணின் கதி என்ன என்றுதான் கேட்கின்றோம். கல்யாணம் என்பது தெய்வீகமாகவோ,
599 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
பிரிக்க முடியாததாகவோ உண்மையில் இருக்குமாயின் அதில் இவ்வித குணங்கள் ஏற்பட முடியுமா என்பதை யோசித்தாலே தெய்வீகம் என்பது முழுப் புரட்டு என்பது எப்படிப்பட்ட மனிதனுக்கும் புரியாமல் போகாது. ஆகவே நமது நாட்டிலும் மற்ற நாடுகளில் இருப்பதுபோன்ற கல்யாண ரத்துக்குச் சட்டம் சமீபத்தில் ஏற்படாமல் போகுமாயின் கல்யாண மறுப்புப் பிரசாரமும் கல்யாண ஆன புருஷர்களுக்கும் பெண்களுக்கும் பலதாரப் பிரசாரமும்தான் செய்யவேண்டி வரும். அன்றியும் இது சமயம் ஒன்றுமைக்கும், திருப்திக்கும், இன்பத்திற்கும் உதவாத பெண்களை, உடைய புருஷர்கள் கண்டிப்பாக தைரியமாக முன் வந்து தங்களுக்கு இஷ்டமான பெண்களை திரும்பவும் மணம் செய்துகொள்ளத் துணிய வேண்டும் என்றும் தூண்டுகின்றோம். ஏனெனில் அப்படி ஏற்பட்டால்தான் தெய்வீகம் என்கின்ற பெயரைச் சொல்லிக்கொண்டு புருஷர்களுக்கும், பெண்களுக்கும் சம்மதமும் முன் பின் அறிமுகமும் இல்லாமல் செய்யப்பட்டுவரும் கல்யாணங்களில் மக்கள் அடையும் துன்பம் ஒழிபட முடியும், மனிதன் ஏன் பிறந்தானோ ஏன் சாகிறானோ என்பது வேறு விஷயம் ஆதலால் அது ஒரு புறமிருந்தாலும் மனிதன் இருக்கும்வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தியுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்
அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற்கிடமான. இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவகோடிகளின் திருப்திக்கும், இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் “ஏதோ கல்யாணம் என்பதாகச் செய்து கொண்டோமே, செய்தாய் விட்டதே, எப்படி இருந்தாலும் சகித்துக் கொண்டுதானே இருக்க வேண்டும்” என்று கருதி துன்பத்தையும், அதிருப்தியையும் அனுபவித்துக்கொண்டிருப்பதும், அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்வதும், மனிதத்தன்மையும், சுயமரியாதையும் அற்ற தன்மையுமேயாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்
- ஈ.வெ.ரா.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - டிசம்பர் 1936
குடி அரசு - 1936 (2), 510
அருஞ்சொல் பொருள்
அதிதி - விருந்தினர், புதியவர் அவடத்திய கடாஷத்தால் - அவ்விடத்து பெரும் அருளால்
அவிழ்தம் - மருந்து அக்ஷராப்பியாசம் - எழுத்துப்பயிற்சி (முதன் முதலாக எழுதக்
கற்றுத் தருதல்) ஆகுதி - அக்கினியில் மந்திரபூர்வமாகச் செய்யும்
ஓமம்
உஞ்சவிருத்தி - அரிசிப் பிச்சை யெடுத்து நடத்தும் வாழ்க்கை:
உபாதானம் - அரிசிப் பிச்சை உளமாந்தை - கடு நோய், உட்புண்:
கபாத்து - போர்வீரர்கள் பயிலும் உடற்பயிற்சி
கலாபம் - கலகம்
காட்டுப் பிரவாகம் - காட்டாற்று வெள்ளம்
காலாடிகள் - தொழிலற்றுத் திரிவோர்கள்
கூடார்ந்த - உட்கருத்து, மறைபொருட்கருத்து
கொட்டணம் - நெற்குற்றுகை
சண்ட மாருதம் - பெருங்காற்று
சதாசாரம் - நல்லொழுக்கம்
சந்தியா வந்தனம் - காலை, உச்சி, மாலைகளில் வேதமந்திரங்களால் செய்யும் வழிபாடு
சம்சயம் - அய்யம், சந்தேகம்
சன்னது - விருது, பட்டம்
சாங்கோபாங்கமாக - முழுமையாக
சிகை்ஷ - தண்டனை,
சொண்டு - குழிவு, செருக்கு 5... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 23
ஞாபகஸ்தம்பம்
நினைவுத் தூண் இரட்டை ஆட்சி
டயார்க்கி கவர்ண்மென்ட்
தவரத் தெரியாத
தவழ்ந்து போகத் தெரியாத ஒரு குடியில் பிறந்த உரிமைப் பங்காளி
தாயாதி
நிர்ப்பயம்
பயமில்லாமல்
நிரக்ஷரகுஷி
எழுத்தறிவற்றவன் கொடுமை,
நிஷ்டூரம் பலிதமாகாமல்
பலிக்காமல், வெற்றி பெறாமல்
பரதவிக்க
வருந்த எல்லை, வரைக்கும்
பரியந்தம்
பஹுமானம்
பாராட்டு, பரிசு, வெகுமானம் மனைவி
பாரியாள்
பிரக்யாதி
புகழ்
பிரசங்கி
பேச்சாளர்:
பிரஸ்தாபிக்க முடியவில்லை புரணமான
அறிவிக்க முடியவில்லை
தோன்றுகின்ற, மயக்கமான பெருமை
பெற்றி
மார்ச
ஏமாற்று
தடை, குறைவு உடன்படிக்கைப் பத்திரம்
முட்டு
முச்சலிக்கா
தங்கியிருக்கும்
வதியும் வஜா
நிலவரி தள்ளுபடி
வாத்சல்யம்
அன்பு, பாசம்
பக்கம்
வாயல்
விரிவாக
விசதமாக
விபச்சார விடுதிகள்.
விபசாரக் குச்சுகள்
தனங்கள், மார்பகங்கள் தெளிவாக
ஸ்தன்னியங்கள். ஸ்பஷ்டமாக
விருதா செலவு
வீணான செலவு
குடி அரசு - 1936 (2)