Kudi Arasu — 1936, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1936-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 22
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1935-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 528
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
“எனக்கு வீரசொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது?
110க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் இடம் பெற்றுள்ள தொகுதி இது. ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை
தேர்தலிலும் சில உள்ளாட்சி தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவியதால், சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலர் காங்கிரசில் சேர துடித்த காலத்தில், ஒருவன் “வெற்றி பெற்ற” காங்கிரஸ் என்பதில் இருக்கும் அவமானத்தைவிட தோற்றுப்போன" ஜஸ்டிஸ் கட்சி என்பதில் இருப்பது அவமானமாகாது பெரியார் இடித்துரைக்கிறார். இத்தொகுதியில் அடங்கியுள்ள 'ஐஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும்! என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள பெரியாரின் சொற்பொழிவில்,சுயமரியாதை: இயக்கத்தின் மீது சில ஜஸ்டிஸ் கட்சியினர் முன் வைத்த குற்றச்சாட்டு களுக்கு பெரியார் தெளிவாக பதில் அளிக்கிறார். “ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம் கொஞ்சமல்ல. இந்த மாகாணத்திலே எனக்கு மாத்திரம் தான் சி.அய்.டி. தொல்லை. கடிதங்களை உடைத்துப் பார்ப்பது, பத்திரி கையை ஒழிக்க நினைத்து அடிக்கடி ஜாமீன் கேட்பது முதலிய காரி யங்கள் நடக்கின்றன. இவைகள் அக்கட்சியை குறைகூறக் காரணங்க ளாகாது. அக்கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியவர்களின் கையாலாகாதத்தனமாகும்” என்று பெரியார் குறிப்பிடுகிறார்.
ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளை உறுதியாக ஆதரிக்கும் பெரியார், அதேநேநத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களின் சுயநலம் -சந்தர்ப்பவாதங்களை வெளிப்படையாக விமர்சிக்கத் தயங்கவில்லை என்பதை அவரது எழுத்து - பேச்சுகளில் காண முடிகிறது. புகழ் மாலைகளை சூட்டுவதே ஆதரவு காட்டுவதற்கான அணுகுமுறை என்பதிலிருந்து பெரியார் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார்.
காங்கிரசும் வாலிபர்களும்' என்ற தலையங்கம் காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்ட வரலாறுகளை சித்தரிக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 'தமிழ்த் திருநாள்” கூட்டத்தில். பெரியார் நிகழ்த்திய தமிழ்மொழி பற்றிய மிகச் சிறப்பான சொற்பொழிவு இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. “நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக் கொலை புரியும் மாதிரியானாலும் நான் பல பத்திரிகைகள்
நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர். கல்யாணசுந்தர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் “தேச பக்தன், நவசக்தி மூதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும்'' என்று குறிப்பிடும் பெரியார், “தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும்; தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். கடைசியாக தோழர்களே! தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன. அதென்னவென்றால், என்னை இங்கு உள்ளேவிட உங்களுக்கு தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போதுமான ஆதாரமாகும்” என்று குறிப்பிட்டு சொற்பொழிவை முடிக்கிறார்
திருத்துறைப்பூண்டியில் 'தஞ்சை ஜில்லா சுயமரியாதை மாநாட்டில்! பெரியார் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. சுயமரியாதை இயக்கம் - பொதுவுடைமை கொள்கையை கைவிட்டு விட்டது என்று குற்றம்சாட்டி, தோழர்கள் ஜீவா, சிங்காரவேலு போன்றோர் இயக்கத்தை விட்டு வெளியேறியதற்கு பெரியார் இந்த சொற்பொழிவில் பதிலளித்துள்ளார். சுயமரியாதை இயக்கம் சந்தித்த அரசின் பல்வேறு அடக்குமுறைகளை பட்டியலிடும் பெரியார், சுயமரியாதைக் கொள்கையிலேயே சமதர்மமும் பொதுவுடைமையும் அடங்கியுள்ளது என்று விளக்குகிறார். “இந்த இயக்கம் எந்த தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும்,
வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில்
நம்பிக்கை கிடையாது'' என்று கூறுவதோடு “புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். அத்துறையில் இருந்து பார்த்துவிட்டுத்தான் இந்த 'இழிவு' பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன்” என்று குறிப்பிடுகிறார்.
தீண்டாமை ஒழிவதற்கு வழி வகுக்கக்கூடிய ஒரே மதம் இஸ்லாம் மதம் மட்டுமே என்று பெரியார் வலியுறுத்துகிறார். எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாத ஒருவர் இஸ்லாம் மதத்தை ஆதரிக்கலாமா என்று கூட்டம் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் இஸ்லாம் மதத்தில் தீண்டப்படாதவர்கள் சேர்ந்து கொள்வதை ஆதரிப்பது முஸ்லீம் கடவுள் இந்துக் கடவுள்களைவிட மேலான கடவுள் என்றோ, முஸ்லீம் மோட்சம் இந்து மோட்சத்தைவிட மேலானதென்றோ கருதியில்லை. அவற்றைப்
பற்றி எனக்கு நம்பிக்கையுமில்லை; கவலையுமில்லை'' என்று பதிலளிக்
கிறார். தீண்டாமை ஒழிப்புக்கு மட்டுமல்லாது, தேச விடுதலைக்கும்கூட தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களாக வேண்டும் என்று வலியுறுத்தும் பெரியார் அதற்கான காரணங்களையும் விளக்குகிறார்
“ஈ.வெ.ரா. விளக்கம்" எனும் தலைப்பில் பெரியார் தன்னைப் பற்றி எழுதி வெளிவந்துள்ள மற்றொரு தலையங்கம் இவ்வாறு கூறுகிறது.
(பெரியார்) காரிய வீரரே தவிர, கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கைகளைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமா வது செய்ய செளகரியமா யிருந்தால், செய்து விட்டுப் போவதுதான். மேலே ஒழிய, கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜெயிலுக்குப் போவது மேலானது ஆகிவிடாது என்ற கருத்தும் கொண்டவர். ஆகவே காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்குப் பெயர். கோழை என்றாலும் துரோகம் என்றாலும் அவருக்கு கவலை இல்லை. கோழை என்பது செய்வதற்குச் சவுகரியமுள்ள காரியங்களை விட்டு ஓடுவதேயாகும்; துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து
விட்டுச் சுயநலத்துக்காகப் பின்வாங்குவதாகும்'' என்று குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊணிலும் 'மே' தினத்தைக் கொண்டாடுமாறு பெரியார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சியை நீங்கள் ஏன் ஆதரிக்கிறீர்கள் என்று தளவாய்புரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பெரியாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு
பெரியார் “ஜஸ்டிஸ் கட்சியை நான் ஒரு அரசியல் கட்சியாக மதிக்கவில்லை. அது ஒரு சமுதாய சிரதிருத்தக் கட்சியாகும். ஜஸ்டிஸ் கட்சியானது சமூக சுதந்திரத்திற்காகவே ஆட்சி இன்னவிதமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே ஒழிய, இன்னார்தான் ஆட்சி புரிய வேண்டும் என்று சொல்லவில்லை'' என்று பதிலளிக்கிறார்.
பார்ப்பானும் இருக்கக்கூடாது; தீண்டப்படாதவர்களும் இருக்கக் கூடாது என்று கூறும் பெரியார், பார்ப்பனர்களையும், தீண்டப்படாதவர். என்ற பிரிவையும் ஒழித்து விட்டால், சூத்திரர்கள் தானாக ஒழிந்து விடுவார்கள். என்று கூறுகிறார். “அதுதான் எங்கள் சுயராஜ்யம்; அதுதான் எங்கள் அரசியல்; அதுதான் எங்கள் மூச்சு என்பதை உணருங்கள்” என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுகிறார்.
1924 இல் வைக்கத்தில் பெரியார் நடத்திய தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. ஈழவ சமுதாயத்தைச்
சார்ந்த ஒருவர் முதன்முதலாக நீதிபதியானார். 'தேவதாசி முறை' ஒழிந்தது. கடல்தாண்டி பயணம் செய்த சாதி இந்துக்கள் கோயில்களில் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. அரசின் ராணுவத்தில் நாயர்கள் மட்டுமே சேர முடியும் என்ற தடை நீங்கியது. எல்லாவற்றுக்கும் மேலாக திருவிதாங்கூர். சமஸ்தானத்தில் அனைத்து சாலைகளிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்
களிலும் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் செல்ல முடியும் என்ற உத்தரவை திருவிதாங்கூர் மகாராசா பிறப்பித்தார்.
இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்த ஈழவர்கள் அதற்காக கொச்சியில் கூட்டிய மாநாட்டில் பெரியாரின். “பிரசங்கம்: இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. “சுயமரியாதை சமூகமாக,
மதம் இல்லாமல், ஜாதி இல்லாமல் இருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். தலைவர் அய்யப்பன் (ஈழவர் சமூகத் தலைவர்) அபிப்பிராயமும் அதுவேயாகும். அது சாத்தியமானால் எனக்கும் அதுவே சம்மதம். அது சாத்தியமில்லை என்று காணப்படுவதானால் அதற்கும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறும் பெரியார், ஒரு மத வேஷம் பூண்டால்தான் தீண்டாமையும் தெருவில் நடக்காமையும் ஒழிகிறது... அடியோடு தீண்டாமை ஒழிய இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல்” என்று கூறுகிறார்.
குற்றாலத்தில் நடைபெற்ற ஒரு சுயமரியாதை திருமணத்தில் பெரியாரோடு ராஜகோபாலாச்சாரியும் பங்கேற்று மணமக்களைப் பாராட்டிப் பேசிய செய்தி இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. “இத் திருமண முறையை ஆச்சாரியார் ஆதரித்துவிட்டதால், எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டுவிட்டது. இத் திருமண முறைக்கு ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டுவிட்டது” என்கிறார் பெரியார். அதே குற்றாலத்தில் மீண்டும் ஒரு முறை பெரியாரும் ராஜகோபலாச்சாரியும் சந்தித்துப் பேசிய செய்தி பத்திரிகைகளில் பரபரப்பாக வெளி வந்ததைத் தொடர்ந்து சந்திப்பில் என்ன நடந்தது என்பதை விளக்கி பெரியார் எழுதியுள்ள தலையங்கமும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதில் ஆச்சாரியாருக்கும் தனக்கும் உள்ள ஆழமான நட்பை மனம் திறந்து பதிவு செய்திருக்கிறார்.
“காங்கிரசாரின் சீர்திருத்த எதிர்ப்பு என்று பல்வேறு தலையங்கங்களில். பெரியார் குறிப்பிடும் சிரதிருத்தம் என்பது, 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷார். கொண்டு வந்த புதிய சீர்திருத்த சட்டத்தையே ஆகும். சக்லத்வாலா. மறைவிற்கு Gy அரசு' இரங்கல் தலையங்கம் தீட்டியுள்ளது
சக்லத்வாலா குஜராத்திலிருந்து லண்டனில் குடியேறியவர்; சீரிய பொதுவுடைமையாளர்; இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்; பெரியாரின் இங்கிலாந்துப் பயணத்தின்போது, பெருந் துணை புரிந்தவர்.
- பதிப்பாளர்
பொருளடக்கம்
சுயமரியாதைத் தோழர்களும் காங்கிரசும் ஆரியர்களின் யோக்கியதை
15
19
22
புகையிலை வரி அரசாங்கமும் மந்திரியும் கவனிப்பார்களா?
26
தீண்டப்படாதாருக்கு தனித்தொகுதி தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்
27
28
முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா?
32
திருவிதாங்கூர் ஹைக்கோர்ட்டு பொப்பிலி பெருந்தன்மை
35
36
உலகில் முஸ்லீம்கள் ஜனத்தொகை விபரம் பொன்விழாப் புரட்டு
38
40
இந்தியாவில் வகுப்புத் தொல்லை ஒழிய வேண்டும்
48
முனிசிபல் நிர்வாகம் சென்னை சுயமரியாதை இளைஞர்
55
மன்றத்தின் மூன்றாவது ஆண்டுவிழா தோல்விக்குப் பயந்து எதிரியைத் தஞ்சமடைவதா?
58
77
ஜில்லா போர்டும் பொப்பிலியும் சென்னை அரசாங்கமும்
84
தமிழ்த் திருநாள் மன்னர் முடிவெய்தினார்
87
94
96
சக்லத்வாலா சாய்ந்தார்
பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்
98
சத்தியமூர்த்தியாரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்
101
சத்தியமூர்த்தியின் திகுடுதத்தம் சோதிடத்தின் வண்டவாளம்
106
107
பிரார்த்தனை அப்போதே வாக்குக் கொடுத்திட்டேன் பாண்டியன், இராமசாமி அறிக்கை
24
108
25
112
26
116
ரயில் பிரயாணமும் மோட்டார் பிரயாணமும்
27
121
காரைக்குடி பிரதிநிதிகளை ராஜகோபாலாச்சாரியார் ஏமாற்றினாராம் அரசாங்கத்தை காங்கிரசுக்காரர்கள் ஏமாற்றிவிட்டார்களாம் தியாகராய நகரில் சு.ம. பொதுக் கூட்டம்
28
127
29
129
30
131
காங்கிரசும் வாலிபர்களும்
31
137
சீர்திருத்தமும் கட்சிகளும்
32
146
33
150
ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்
34
154
ப்போதாவது பாமர மக்களுக்குப் புத்தி வருமா? தாவது ளுக்குப் புத்தி வரு
35
158
36
163
திரு.வி.க. முதலியார் புறப்பட்டு விட்டார் சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா?
37
165
38
166
39
172
திருச்செங்கோடு தாலூகா ஆதிதிராவிடர் 5-வது மகாநாடு ஸ்தல ஸ்தாபனங்கள் ஏமாந்தது யார்? சர்க்காரா? தேசாயா?
40
177
41
184
42
189
குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது
43
194
மந்திரத்தால் மாங்காய் விழுமா?
44
200
தமிழ்ப் பெரியார் மறைந்தார்
45
202
46
203
ஜவஹர்லால் பிராணனை விட்டது
47
206
கிருத்துரைப்பூண்டி - தஞ்சை ஜில்லா 5 வது சுயமரியாதை மகாநாடு
48
208
ஈ.வெ.ரா. விளக்கம்
49
217
ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி
50
223
மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்
51
228
சுயமரியாதைக்காரரும் மதமும்
52
235
53
240
பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம் வலங்கைமான் தேசீயம்
54
251
55
காங்கிரஸ் புளுகு
253
எப்படி மறக்கமுடியும்?
56
254
ஆரியர் - திராவிடர் என்கின்ற பிரிவை எப்படி மறக்க முடியும்?
57
259
காங்கிரஸ் தலைவர் யோக்கியதை முத்தைய முதலியாருக்கு பாராட்டு
58
263
59
264
இனாம் மசோதாவும் வைஸ்ராயும்
60
265
61
லக்னோவில் ஏமாற்றுந் திருவிழா அல்லது
267
காங்கிரசின் கபட நாடகம்
காங்கிரஸ்காரர் யோக்கியதை
62
274
பகுத்தறிவும் கடவுள் வாக்கும்
63
275
காங்கிரஸ் கபட நாடக முடிவு
64
281
மே தினக் கொண்டாட்டம்
65
288
மனிதன்.
66
289
கொச்சி சமஸ்தானத்தில் பிரசங்கம்
67
295
பாண்டியன் - ராமசாமி அறிக்கை
68
306
தோழர் டி.வி. பிரிவு ணாள மனித சமூக உறவு முறை
69
312
70
313
71
314
72
318
தர்மம் அல்லது பிச்சை
73
இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை
323
கடவுள்
74
328
அசம்பளியில் வெண்ணெய் வெட்டிகள் வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே!
75
335
76
அப்துல் ஹக்கீம்கு ஜே!!
340
ஜின்னாவின் உபதேசம்
77
343
காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்களா?
78
344
79
346
நம்மவர் கோழைத்தனம்
80
பார்ப்பனக் கிளர்ச்சி
349
81
352
உஷார்! உஷார்!! உஷார்!!! பாண்டியன் - ராமசாமி அறிக்கைக் கூட்டம்
82
353
பொய்! பொய்!! வெறுக்கத்தக்க இழிவான பொய்!!!
83
359
காஞ்சீபுரம் தமிழர் மகாநாட்டுக்கு ஈ.வெ.ரா. வேண்டுகோள் ராஜினாமா சூழ்ச்சி காங்கிரஸ் “கண்டிப்பு” நாடகம்
84
360
85
362
இழி தொழில்
86
365
87
367
ஆனந்தக் கூத்து
திருச்சி கூட்டம் -ர்
88
371
சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு
89
373
நத்தானியல் தம்பதிகள் பிரலாபம்
90
379
91
382
தற்கால அரசியல்
சேலம் காலித்தனம்
92
389
சேலத்தில் சத்தியமூர்த்தியார் சவடால்
93
394
தலைவர்களுக்கு புத்தி வருமா?
94
396
95
398
டாக்டர் அன்சாரி மரணம் ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்
96
399
வெற்றி! வெற்றி!!
97
405
கொச்சி மதம் மகாநாடு
98
406
சத்தியமூர்த்தியும் சமதர்மமும். ண்ணா
99
414
100
416
பரிதாபம் சுயமரியாதை இயக்கம்
101
417
102
418
கடவுள் கதை இராமனுக்கு சீதை தங்கை இராவணனுக்கு கீதை மகள் இராமனுக்கு நான்கு பெண்டாட்டிகள்
103
421
104
427
கிராமப் புனருத்தாரணப் புரட்டு பாண்டியன் - ராமசாமி சுற்றுப்பிரயாணம் திருநெல்வேலிக் கூட்டம்
105
431
106
456
குற்றாலத்தில் ௬ு.ம. திருமணம் கோவை கேசும் பார்ப்பனீயமும்
107
463
108
466
109
472
அரசியல் நிலைமை
பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக்கமிட்டியின். சுற்றுப்பிரயாண திட்டம்
481
“மெயி”லும் பார்ப்பனரும்
484
பாண்டியன், ராமசாமி பிரசாரக்கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு நடந்த விஷயம் என்ன?
488
489
493
காங்கிரசும் ஜவஹர்லாலும் பொது உடமையும்
தேச மக்களே உஷார்!
502
வேதம் அல்லது பைபிள் விதிகள் ஆண் பெண் சமத்துவம்
506
512
கடவுள் செயல் அருஞ்சொல் பொருள்
519
526
கன் தாடுவருட சத்தா ஆ. ok ar G z R No. M. 2041 “KUDLARASU” தனிப்பட விலை ஒரு ஆண குடிஅரசு
1924-4 ஸ்தாரிக்கப் டது. எப்பொருள் வாம் யார் ஊாய்க்கேட்பி, ் எப்போருளெ ந்தவ s s T i வெளிவரப். அப் வெய்பபொருள் அணைதழிவு வெல்ப்பொருள் காண்பி, ஷு o
e ரோடு e அணியி சேடி (571988 மச்ச.
1
கிளிக்கண்ணி.
[ம்நுவைங்கள் பாளையம் நர் கட்டி கண்ண கண்ட்
னி g ம aies |
அகத் செல்க கனி க
& Seisesns கோட சொ wmdiari டி L அ்பற்தம் வடி கில sz gy னிய ஆறும் சோத சென்ட்
e
கத்தல் —
D ] e செல்வா.
ட i சென்று
ப்ட் —oa2, O ] L -y க்ரில் கல்வியே
அஸ்ல் செல் கெள
சுயமமியாதைத் தோழர்களும் காங்கிரசும்
சுயமரியாதைத் தோழர்கள் சிலர், ஜஸ்டிஸ் கட்சியானது இரண்டொரு சட்டசபைத் தேர்தலிலும், சில ஸ்தல ஸ்தாபன தேர்தலிலும் தோல்வி அடைந்து விட்டது என்றும் பாமர மக்களிடம் ஆதரவை இழந்துவிட்டது என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளில் காணும் சேதிகளை நம்பி காங்கிரசினிடத்தில் மோகம் ஏற்பட்டு காங்கிரசைத் தழுவ மேல் விழுந்து போகிறார்கள். ஆனால் அதற்காகத் தாங்களாகவே நேரே போய்ச் சேருவதற்குப் போதிய தைரியமில்லாமல் “சுயமரியாதை இயக்கம் இப்படிக் கெட்டுப் போய் விட்டது” “அப்படிக் கெட்டுப் போய்விட்டது", “மந்திரிகள் பின்னால் வால்
பிடித்துத் திரிகிறது'' “பணக்காரர்களை ஆதரிக்கிறது” என்கின்றது போன்ற பாட்டிப் பேச்சுக்களைச் சொல்லிக் கொண்டு போவதன் மூலம், தங்களை
வீரர்கள் என்று கருதுவார்கள் என்று நினைத்துக் கொண்டு செல்லுகிறார்கள்.
சுயமரியாதை இயக்கம் மந்திரிகளைக் கவிழ்த்துப் பார்ப்பனர்கள் வசம் ஒப்படைக்கவோ, பணத்தை “வெறுத்து கண்டவர்களிடம் பல்லைக் கெஞ்சி வாழவோ ஒரு நாளும் ஒப்புக் கொள்ளவில்லை, ஒரு நாளும்
ஒப்புக் கொள்ளப் போவதுமில்லை.
ஆதலால் பணக்காரர்கள் “அல்லாதவர்களும், மந்திரிகள் “ஆகாதவர். களுமாய்!” இருக்கிற காங்கிரசுக்கே இத் தோழர்கள் போய்ச் சேருவதில்
நமக்கு ஆக்ஷ்பணையில்லை
இக்கூட்டத்தாரால் ஜஸ்டிஸ் கட்சி ஒரு நாளும் வெற்றி பெற்றுவிட வில்லை. அவைகள் வெற்றிபெற்று நல்ல உச்சஸ்தானத்தில் இருக்கும்போது அதன் நிழலில் வாழ்ந்தவர்கள்தான் இன்று சுயமரியாதை இயக்கம் கெட்டுப் போய்விட்டது என்றும், அதற்கு மந்திரி மயக்கமும், பணக்காரர் பழக்கமும் இருக்கிறது என்றும் சொல்லுகிறவர்களாய் இருக்கிறார்களே ஒழிய வேறில்லை.
ஆதலால் இதே தோழர்கள் காங்கிரசில் இவர்களுக்கு ஏற்படும் மரியாதையை உணர்ந்தும், ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்ற உடனும், அதற்கு செல்வாக்கும் சாய்காலும் ஏற்பட்ட உடனும் பலர் தாங்களாகவே மறுபடியும் வந்து சேர்ந்து மேலும் மேலும் உதவிபுரிவார்கள் என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு. ஆதலால் மனப்பூர்வமாகவே வழியனுப்பி உபசாரம் சொல்லுகிறோம்.
இந்த தோழர்கள் மாத்திரமல்லாமல் இவர்கள் போல் இனியும் பதினாயிரக்கணக்கான பேர்கள் காங்கிரசில்போய்ச்சேர்ந்தபோதிலும் காங்கிரசில்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக்கொள்ளச் செய்யவோ, வருணாச்சிரம தர்மத்தை கைவிடச் செய்யவோ ஒரு நாளும் முடியாது என்பதை மாத்திரம் கல்லில் எழுதி வைப்போம். எப்போதாவது அந்தப்படி முடியும்படியான ஒருகாலம் ஏற்பட்டு, காங்கிரஸ் வர்ணாச்சிரமத்தை கைவிடவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொள்ளவும் ஏற்பட்டு விடுமானால் நாமும் காங்கிரஸ் நிழலில் நின்று
சத்தியமூர்த்திக்கு ஜே என்று கூட சொல்லிக்கொண்டு கொடி பிடித்து திரிய சிறிதும் வெட்கப்படமாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வேறு சில தோழர்கள் அதாவது சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி குற்றம் சொல்லாமலும், ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி விஷமப் பிரசாரம் செய்யாமலும் இருக்கிறவர்கள் சிலர் “தாங்கள் பெரும் எண்ணிக்கையாக காங்கிரசுக்குப் போய் காங்கிரசை பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்து விடலாம்" என்பதாக சொல்லிக் கொண்டுபோக உத்தேசித்து இருக்கிறார்கள். இவர்கள் உண்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் ஏற்கனவே இதை பலதடவை பரிக்ஷித்துப் பார்த்து ஆய்விட்டது. இந்த எண்ணங்கள் எல்லாம் “நாம் தோல்வி அடைந்துவிட்டோம்” என்று உண்மையில் கருதுவதாலும் நமக்கு செல்வாக்கு போய்விடுமே என்று பயப்படுவதினாலும் ஏற்படும் அறிகுறிகளே என்பதுதான் நமதபிப்பிராயம்
எலக்ஷன்களில் தோற்றுவிடுவோம் என்றே வைத்துக் கொள்ளலாம்,
மந்திரிகள் பதவிகளும் ஜஸ்டிஸ் கட்சியாரிடம் இருந்தே போய்விட்டதாகவே வைத்துக் கொள்ளலாம், இதனாலேயே இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார். செல்வாக்குடன் வாழமுடியாமல் போய்விடும் என்று யாராவது பயப்படக் கூடுமானால் அப்படிப்பட்ட அவர்களுக்கு காங்கிரசே நல்ல பாதுகாப்பான ஸ்தாபனம் என்பதை நாமும் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நாம் மாத்திரம் காங்கிரசுக்கு சினேகிதர்களாகவோ கொடி தூக்கிக்கொண்டு சத்தியமூர்த்தியார்.
பின் திரியும் விபீஷணர்களாகவோ இல்லாமல் காங்கிரசின் ஜன்மத் துவேஷியாயும், சத்தியமூர்த்திகளின் வீரமுள்ள பிறவி எதிரிகளாகவும் இருக்கிறவர்களாய் இருந்தால் நாம் “காங்கிரஸ் மந்திரிகளைக்கூட குரங்குபோல் ஆட்டி வைக்கலாம்” என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்தப்படிஆட்டிவைக்காவிட்டாலும் அம்மந்திரிகளால் எவ்விததொல்லையும் ஏற்படாமலாவது காத்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியம் உண்டு ஆனால் நாமும் காங்கிரசுக்காரர்களாகவோ, காங்கிரஸ் நண்பர்களாகவோ ஆகிவிட்டால் அடியோடு நமது சுயமரியாதையை இழக்க நேரிடும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை
ஒரு காலத்தில் தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, டாக்டர் பி. வரதராஜுலு,
திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் காங்கிரசில் ஆதிக்கம் வைத்து இருந்தவர்கள் என்பதையும், மற்றொரு காலத்தில் காங்கிரசைக் கைப்பற்ற பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் ஏராளமாய்ப் போய்ச் சேர
குடி அரசு- 1936 (1) 16
வேண்டு மென்று இம்மூவரும் இருந்தே பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தோழர்கள் எ. ராமசாமி முதலியார், சர். ஷண்முகம் போன்றவர்கள் எல்லாம் காங்கிரஸ் மெம்பர்களானார்கள். என்பதையும், இவர்களாலும், இந்தத் தீர்மானங்களாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனதோடு எவ்வளவோ பேர் முயன்றும் தோழர் எ. ராமசாமி முதலியாரை ஒரு காங்கிரஸ் கமிட்டி மெம்பராகக்கூட ஆக்க முடியாமல் போய்விட்டதோடு தோழர் வரதராஜுலு நாயுடு 1000 ரூபாய் செலவு செய்து சேலம் காங்கிரஸ் கமிட்டியைக் கைப்பற்றியும்கூட அது செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டு விட்டதென்பதையும் ஞாபகப்படுத்துகிறோம் ஆகவே இன்று உண்மையான பார்ப்பனல்லாதார்கள் என்பவர்களுக்கு
நாம் சொல்லுவதெல்லாம் ஒருவன் “வெற்றி பெற்ற" காங்கிரஸ் என்பதில் இருக்கும் அவமானத்தைவிட “தோற்றுப்போன'' ஜஸ்டிஸ் கட்சி என்பதில் இருப்பது அவமானமாகாது என்பதேயாகும்
எப்படி இருந்த போதிலும் காங்கிரசை பார்ப்பனரல்லாத ஆதிக்கத்துக்குக் கொண்டு வருவதற்காக என்று கருதிக்கொண்டு காங்கிரசில் போய்ச் சேர ஆசைப்படுகிற தோழர்களையும் இனியும் ஒரு தடவை பரீட்சித்துப் பார்க்கட்டும் என்கிற ஆசை மீதே மனப்பூர்வமாக ஆசி கூறி வழியனுப்பு உபகாரத்தோடு அனுப்பிக் கொடுக்கிறோம்
மற்றொரு கூட்டத்தார் காங்கிரஸ் தேசீய சபை என்றும் அதில் அங்கம் வகிக்காமல் இருப்பது தேசத் துரோகமென்றும் கருதுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா. போன்றவர்கள் எல்லாம் ஒரு
காலத்தில் இருந்து தேசபக்த சிகாமணிகளாயும், தேசாபிமானச் சிங்கங்களாயும், தேசீய வீரர்களாகவும் இருந்து தேசத்துக்கோ சமூகத்துக்கோ ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் பார்த்துவிட்டு வெளி வந்தவர்கள்தான்.
இதெல்லாம் பாட்டி கதை ஆதலால் அதற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும் நாம் காலத்தை கழிக்க விரும்பவில்லை. மற்றொரு கூட்டத்தார் அதாவது இன்று காங்கிரசில் தாங்கள். செல்வாக்கோடு இருப்பதாய் கருதிக்கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாத கூட்டத்தார் உண்மையிலேயே நம்மீது அபிமானம் வைத்து கூப்பிடுகிறார்கள். என்ன சொல்லி என்றால் இன்று காங்கிரசில் பார்ப்பனரல்லாதார். தொண்டர்களின் ஆதிக்கம் இருக்கிறது என்றும் இந்தச் சமயம் எப்படிப்பட்ட தீர்மானமும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த தொண்டர்களின் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் பாத்திரமான ஒரு பார்ப்பனரல்லாதார் தலைவர் இன்று அதில் இல்லை என்றும் ஆதலால் யாராவது வந்தால் அவருக்கு பட்டாபிஷேகம் சூட்டக் கூடும் என்றும் மனப்பூர்த்தியான ஆசையுடனும் அபிமானத்துடனும் அழைக்கிறார்கள். இவர்களுக்கு நமது ஹிருதய பூர்வமான நன்றி உரியதாகுக. மட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அவ்வளவுதான் சொல்லக்கூடுமே ஒழிய மற்றப்படி அவர்களின் நினைவு கனவாகக்கூட இருக்க முடியாது என்பதோடு அவ்விஷயத்தை
முடித்து விடுகிறோம். ஏனெனில் அந்தப்படி யாராவது சுதந்திர எண்ணமும் சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள ஒரு பார்ப்பனரல்லாதார் காங்கிரசுக்கு வருவார்களேயானால் சென்னை மாகாண காங்கிரசானது உடனே இந்திய காங்கிரஸ் வேலைக் கமிட்டியாரால் நிர்வகிக்கும்படியான நிலைமை அடைந்துவிடும், இந்தபடி பலதடவை ஆகியும் இருக்கிறது
பார்ப்பனரல்லாதார்களில் பார்ப்பனரல்லாதார் தலைவர்களில் சுயநலக்காரர்கள், வஞ்சகர்கள், மோசக்காரர்கள், ஒழுக்கமில்லாதவர்கள்.
இருக்கலாம்.
ஆனால் அவர்கள் எல்லோரும் தோழர்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரியார்.
முதல் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் வரையில் போன்ற உலகமறிந்த காங்கிரஸ் தலைவர்கள் பொதுநலசேவைக்காரர்கள் என்பவர்களைவிடமோசமானவர்களும் நமது சமூகத்துக்கு கேட்டை விளைவிக்கக் கூடியவர்களுமல்ல என்றும் மலை உச்சியில் இருந்து கூறுவோம்.
மனித சுபாவத்தையும், தனி உடைமை தத்துவத்தையும் உணர்ந்தால். இவை நமக்கு ஒரு பெருங் குற்றமாகத் தோன்றாது
முடிவாக நாம் சொல்லுவதென்ன வென்றால் சென்னை மாகாணத்தைப் பொருத்தவரையிலாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற இரண்டு பிரச்சினையை விட வேறு ஒன்றுமே இன்று இருக்க முடியாது. என்ன விலை கொடுத்தானாலும் பார்ப்பன ஆதிக்கத்தை எந்த துரையிலும் எந்த தலைப்பிலும் ஒழிப்பதே நமது பொது உடமை - நமது சமதர்மம் - நமது தேசீயம் - நமது முக்தி என்பதுதான் நமது அபிப்பிராயம். இதை ஏற்றுக்கொள்ளுபவர்கள் நம்முடன் ஒத்துழைக்கவும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் தங்கள் இஷ்டப்படி நடக்கவும் பூரண உரிமை உடையவர்கள்.
இதுவே நமது புது வருஷ செய்தி
குடி அரசு - தலையங்கம் - 05.01.1936
குடி அரசு- 1936 (1) 18
ஆரியர்களின் யோக்கியதை
ஜர்மனியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளு கிறார்கள். நம் நாட்டுப் பார்ப்பனர்களும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
இந்துமதஆதாரங்களும்ஆரியமதம், ஆரியவேதம், ஆரியக்கடவுள்கள், ஆரிய மன்னர்களின் கதைகள் என்பதாகத்தான் இருந்து வருகின்றன.
புராண ஆராய்ச்சிக்காரர்களும், பண்டிதர்களும், சரித்திர ஆராய்ச்சிக் காரர்களும், பாரதம், ராமாயணம் மற்ற புராதனக் கதைகள் ஆகியவைகளில் வரும் சுரர், அசுரர் என்கின்ற பெயர்களையும், ராக்ஷதர்கள் தேவர்கள் என்கின்ற பெயர்களையும், ராமன் அனுமான் என்கின்ற பெயர்களையும், ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவையே பிரதானமாய்க் கொண்டவை என்பதாகவும் தீர்மானித்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். மேல்நாட்டுச் சரித்திரக்காரர்களும், சிறப்பாக அரசாங்கத்தார்களும் மேல்கண்ட ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவை ஒப்புக்கொண்டு அந்தப்படியே ஆதாரங்கள் ஏற்படுத்தி பள்ளிப் பாடமாகவும் வைத்து வந்திருக்கிறார்கள்.
அரசியல்காரர்களில் தீவிர கொள்கை கொண்ட தேசீயவாதிகள், சமதர்மக்காரர்கள், பொதுவுடமைக்காரர்கள் என்று சொல்லப்படுகின்ற தோழர் ஜவகர்லால் நேரு போன்றவர்களும் தங்களது ஆராய்ச்சிகளில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவுகளை ஒப்புக்கொண்டும் சரித்திரங்களில் இருந்துவரும் ஆரியர் திராவிடர் பிரிவுகளை ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆரியர்களின் தத்துவம் எப்படி இருக்கிறதென்றால் இந்தியா அவர்களுடைய பூர்வீக நாடு என்று சொல்லுவதற்கில்லாமல் இருப்பதோடு இந்தியாவில் ஆரியர்களுக்கு உள்ள சம்மந்தம் கேவலம் ஐரோப்பாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும், அரேபியாவிலும், பர்சியாவிலும் இருந்து வந்து குடியேறின ஐரோப்பியர், முகமதியர்கள், பார்சியர்கள் ஆகியவர்களுக்கு இருந்து வரும் பொறுப்பும், உரிமையும், மனிதாபிமானமும் கூட இல்லாதவர்கள் என்று சொல்லும்படியான நிலையில்தான் இருந்து வருகிறார்கள்.
உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் ஜர்மனியர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டு ஜர்மனி தேசத்திலுள்ள யூதர்களுக்கு
மட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜர்மனியில் இருக்க உரிமையில்லை என்று சொல்லி விரட்டியடிக்கும் தன்மை போலத்தான் இந்தியாவில் உள்ள மக்கள் ஆரியர்களை விரட்டி யடிக்கப்படவேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.
ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்குச் சொல்லும் காரணங்கள்
இந்தியர் ஆரியர்களை விரட்டியடிக்கலாம் என்பதற்கு பொருத்தமானதாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும் அதாவது ஜர்மனியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லுகிறார்கள்.
அவைகளில் ஒன்று, யூதர்கள் தங்களுக்கு என்று தேசமில்லாதவர்கள்
என்றும், தேசமில்லாத (அதாவது ஜிப்ஸி-மலை சாதியார்-லம்பாடிகள்- கூடாரத்தோடு திரிகிறவர்கள் போன்றவர்கள்) என்றும் அப்படிப்பட்டவர்களை ஒரு நாட்டில் வாழவிட்டால் அவர்கள் அந்த நாட்டின் வளப்பத்தையும் முற்போக்கையும் காட்டிக்கொடுத்து ஜீவிக்கிறவர்களாகிவிடுவார்கள் என்பது.
இரண்டாவது, யூதர்கள் சரீரத்தில் பாடுபடமாட்டாதவர்கள்.
சரீரத்தினால் பாடுபடாதவர்கள் ஊரார் உழைப்பைக் கொள்ளை கொண்டு வாழுபவர்களாவார்கள் என்றும், ஊரார் உழைப்பால் வாழுகின்றவர்கள். மனித சமூகத்துக்கு கஷயரோகம் போன்ற வியாதிக்கு சமமானவர்கள் என்பதோடு தங்கள் சோம்பேறி வாழ்க்கைக்கு ஆக நாட்டையும் மனித சமூகத்தையும் பிரிவிணையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக்கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிக்க குறைந்த விலைக்கும் எதையும் காட்டிக்கொடுப்பார்கள் என்பதாகும்
இந்த இரண்டு காரணங்களும் இன்று நம்நாட்டில் ஆரியர் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களாதியோரிடம் இருந்துவருகின்றன.
முதலாவது ஆரியர்களுக்கு இன்னதேசம் என்பதாகவே ஒன்று இல்லை என்பதோடு, ஆரியர்கள் என்பவர்கள் சரீரத்தினால்பாடுபடாமல் மதம், புரோகிதம் ஜாதி உயர்வு, அரசியல் உத்தியோகம், தேசியத் தலைமை என்கின்றதான
சூக்ஷித் தொழில்களால் சிறிதும் சரீரப்பாடுபடாமல் மற்ற ஆரியரல்லாத மக்கள் உழைப்பினாலேயே வஞ்சஜீவியம் நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்கள் வாழ்க்கை தங்கள் ஆதிக்கம் என்பதல்லாமல் மற்றபடி எந்த தேசத்தைப்பற்றியோ எவ்வித ஒழுக்கத்தைப் பற்றியோ எந்த சமூகத்தைப்பற்றியோ சிறிதும் கவலை இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.
இந்தக் காரணத்தாலேயே நமது பழைய ஆதாரங்கள், அகராதிகள். ஆகியவற்றில் ஆரியர்கள் என்றால் மிலேச்சர்கள் என்றும், ஒருவிதக் களைக்கூத்தர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இதற்கேற்பவே ஆரியர்கள் இந்த நாட்டில் என்று காலடி வைத்தார்களோ அன்று முதல் இன்று வரை பலவித வஞ்சகங்களாலும், சூழ்ச்சிகளாலும்
குடி அரசு - 1936 (1) 20
ஏமாற்றி அவர்களை சின்னாபின்னமாகப் பிரித்து ஆபாசக் கற்பனைகளையும் நடத்தைகளையும் வேதமாகவும் மோக்ஷ சாதனமாகவும் ஆக்கி இந்நாட்டு மக்களுக்கு அவர்களே ஆதிக்கக்காரர்களாகவும் “இகம்” “பரம்” இரண்டிற்கும் தர்மகர்த்தாக்களாகவும், சமுதாயம் அரசியல் இரண்டிற்கும் தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும், எஜமானர்களாகவும்கூட
தங்களை ஆக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இவர்களது தர்மகர்த்தாத் தன்மையிலும், எஜமானத் தன்மையிலும், வழிகாட்டித் தன்மையிலும் இந்நாட்டுக்கு எந்தத் துறையிலாவது ஏதாவது கடுகளவு முற்போக்கோ, நன்மையோ ஏற்பட்டிருக்கின்றனவென்று யாராவது சொல்லமுடியுமா என்றுபார்த்தால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
இந்தியாவுக்கோ, இந்திய நாட்டு பழம் பெரும் குடி மக்களுக்கோ ஏதாவது ஒரு நன்மை சிறிதளவாவது ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப் படுமானால், அவற்றில் சிறிது முஸ்லீம் அரசர்களாலும், பெரும்பாலும் ஐரோப்பிய ஆகூஷியிலும் ஏற்பட்டதென்றே சொல்லலாம்.
அதுவும் ஆரியர்களின் முட்டுக்கட்டையையும், தொல்லையையும் சமாளித்து ஏற்பட்டவைகள் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய மற்றப்படி ஆரியர்கள் முயற்சியோ, உதவியோ ஒரு சிறிதாவது கொண்டு ஏற்பட்ட தென்று எதையும் சொல்லமுடியாது
மேலும் இன்று அரசியல், சமூக இயல், பொருளியல், அறிவியல் ஆகிய நான்கு துறைகளிலும் இந்நாட்டு மக்கள் அடைந்திருக்கும் ஈன நிலைக்கு இந்த ஆரியர்களே காரணமென்று சொன்னால் அதுவும் மிகையாகாது
ஆகையால் தேசமில்லாதவர்களும், தேக உழைப்புஇல்லாதவர்களுமான. சமூகம் எந்த நாட்டிற்கும் கேடு விளைவிக்கக்கூடியது என்பதோடு முக்கியமாக இந்தியாவுக்கு அது ஒரு பெருங்கேட்டையே விளைவித்துக் கொண்டிருப்பதாகவே இருந்து வருகிறது இதை நமது பாமர மக்கள் உணராமல் ஏமாந்து போய் தங்களுக்குத் தாங்களே கேட்டை விளைவித்துக் கொள்ளுகிறார்கள் என்பது ஒரு புறமிருக்க, இந்நாட்டு ஆரியரல்லாத மக்களில் படித்தவர்களாயும், விஷயமறிந்தவர்களாயுமுள்ள ஒரு கூட்ட மக்கள் இவ்வாரியர்களுக்கு உள். ஆளாயிருந்து சமூகத்தையே அடியோடு காட்டிக்கொடுத்தும் - கெடுத்தும் தாங்கள் வாழ முயற்சிக்கும் இழிநிலையை உணரும்போது ஆரிய சுபாவம் இவர்களது ரத்தத்தில் எப்படி ஊறியது என்று ஆச்சரியப்படவேண்டி இருப்பதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.01.1936 A0 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
புகையிலை வரி
அரசாங்கத்தார் இவ்வருஷத்தில் புகையிலைக்கு வரி போட வேண்டு மென்பதாக உத்தேசித்து அதற்காக ஒரு மசோதா தயாரித்து இருக்கிறார்கள்.
இவ்வரியானது புகையிலைக்காக வரி போடவேண்டுமென்பதாக இல்லாமல் 1936வருஷத்துஅரசியல்வரவு செலவுதிட்டத்தைச்சரி செய்வதற்காகப் போட்டுத் தீரவேண்டியதாய் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது
காரணம் என்னவெனில் நிலவரியில் 100க்கு 12% விகிதம் குறைக்கப்பட்டதில் சர்க்காருக்குக் குறைந்து போன வரி வருவாய்க்கு வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடிக்கவேண்டியதாக ஏற்பட்டு விட்டதாம்
நில வரி குறைத்ததில் நிலம் உடையவர்களுக்கு லாபம். அதற்கு பதிலாக என்று புகையிலை வரி போடுவதில் விவசாயிகளுக்கும், சிறிய
வியாபாரிகளுக்கும் புகையிலை உபயோகிக்கும் ஏழைமக்களுக்கும் நஷ்டம்.
ஆகையால் நிலவரியை பழையபடி உயர்த்தியாவது புகையிலைவரி போடாமல் விட்டுவிடுவதே நியாயம் என்றால் அது தவறாகாது. அரசாங்கத்தார். ஏதாவது ஒரு வரியைக் குறைத்தால் குறைத்தவுடன் அந்தக் கணக்குச் சரிக்கட்டும்படி செலவையும் குறைத்துக்கொண்டிருக்க வேண்டும் அப்படிக்கில்லாமல் ஆழம் தெரியாமல் காலை விட்டுக்கொண்டால் இரண்டு கிளர்ச்சிக்கு இடம் கொடுத்தவர்களாகிவிடுகிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் செய்கின்ற சூட்சிகளாலும், அரசாங்க உத்தியோகத்தில் பெரிதும் பார்ப்பனர்களே இருப்பதாலும் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள். அரசாங்கத்துக்குத் துரோகம் செய்யாமல் இருக்கவேண்டுமே என்கின்ற பய பக்தியினால் சர்க்கார் உத்தியோகஸ்தர்களின் கொள்ளை சம்பளத்தில் கையை வைக்க பயப்படுகிறார்கள்.
முனிசிப்புகளுக்கும், ஜட்ஜிகளுக்கும் மற்றும் சர்க்கார் காரியாலயத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் கொடுக்கப்படும் சம்பளங்கள் ரூபாய்களை புளியங்கொட்டை மாதிரியே கருதி அள்ளிக் கொடுக்கப்படுகின்றன.
பார்ப்பனர்களுக்கு அரசாங்கத்தில் கொடுக்கப்படும் சம்பளத்துக்கு ஒரு உதாரணமும் யோக்கியதாம்சமும் வேண்டுமானால் ஒருசிறு உதாரணம் காட்டுகிறோம்.
குடி அரசு - 1936 (1)
ப 3
ஒரு காலத்தில் இரண்டு பார்ப்பன வாலிபர்கள் மைசூர் சிவில் சர்வீஸ் பரீகைஷக்குப் போனார்கள். அதில் ஒருவர் பாசானார். ஒருவர் பெயிலானார். பாசானவர் மைசூர் அரசாங்கத்தில் ஆயிரத்துச் சில்லறை ரூபாய் வாங்குகிறார். (fail) பெயிலானவர் மதராஸ் அரசாங்கத்தில் இன்று
3000த்துச் சில்வானம் ரூபாய் வாங்குகிறார். இதுபோலவே தான் பார்ப்பனர்களின் உத்தியோக வேட்டையும், பார்ப்பன ஆதிக்கமும் காங்கிரஸ் தொல்லையும் நம்நாட்டு மக்களின் வரிப்பணங்களை உரிஞ்சிவிடுகிறதோடு எப்படியாவது வருஷம் ஒரு புது வரி போட்டுத் தீரவேண்டிய நிலையிலேயே சர்க்காரைக் கொண்டு வந்து
விட்டு விடுகிறது
நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வளவு தொல்லையைக்கொடுத்த பார்ப்பனீயத்துக்கு காங்கிரசுக்கு பொன்விழாக் கொண்டாடப்படுகிறது
நமது விபீஷணர்களும், மடையர்களும், மூடர்களும், அசடுகளும் அதற்குப் பணம் கொடுத்து பாரதமாதாவுக்கு ஜே போடுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஜனங்களுக்கு புகையிலை வரி மாத்திரமல்லாமல். முட்டாள்வரி என்பதாக ஒரு வரி கூட புதிதாய் திமிர் வரி போல் போட்டாலும் ஆக்ஷேபிக்க ஆள் இல்லை என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது
யாராவது ஆகேஷபிக்கதொடங்கினாலும் இவ்வளவு தொல்லைகளையும் விளைவித்த பார்ப்பனர்கள், பாமர மக்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியைக் காட்டிவிட்டு உசுப்படுத்திவிடவும் அவர்கள் உசுப்புக்கு மயங்கி வாலை ஆட்டிக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சியாரைப்பார்த்து குரைப்பதில் தான் முடிகிறது. மற்றப்படி உண்மையை கண்டுபிடிக்க மிராசுதாரர்களுக்கும் சக்தி இல்லை, விவசாயிகளுக்கும் சக்தி இல்லை, தொழிலாளிகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் சக்தி இல்லை என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் இதை அறிந்த சர்க்கார் இப்போது புகையிலை வரி விஷயத்தில் எப்படி மக்களை ஏமாற்றலாம் என்று பல வழிகள் தேடிக்கொண்டு
இருக்கிறதாகத் தெரிகிறது
அவற்றுள் ஒன்று புகையிலை வரிக்குப் பதிலாக பழயபடி டோல். கேட்டு சுங்கத்தை ஏற்படுத்தலாமா என்று பார்க்கிறார்களாம்
அல்லது ஜனங்கள் கண்டுபிடிக்க முடியாதபடி ஏதாவது வரிகள் கண்டுபிடிக்கலாமா என்றும் பார்க்கிறார்களாம்
இதற்கு ஆக வேண்டி காங்கிரசுக்காரரை கைவசப்படுத்திக் கொண்டால் தான் எந்த வரி போட்டாலும் கிளர்ச்சி ஏற்படாது என்று உத்தியோகப் பார்ப்பனர்கள் சர்க்காருக்கு யோசனை சொல்லுகிறார்களாம்
ஆதியில் தஞ்சை மிராசுதாரர்கள் நிலவரி குறைக்கவேண்டும் என்று கூப்பாடு போட்டபோதே நாம் “எதற்கு ஆக குறைக்கவேண்டும்? யார். B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தலையில் கையை வைக்க குறைக்கவேண்டும்” என்று கேட்டோம் அப்போது அனேக பார்ப்பனரல்லாத முண்டங்கள் நம்மை தேசத்துரோக லிஸ்டில் சேர்த்தன.
இப்போது புகையிலை வரி போடப்போகிறோம் என்று சர்க்கார் சொல்லும்போது இந்த மிராசுதாரர்கள் கூட்டம் எங்கே என்று பாருங்கள். ஏதாவது பேச்சு மூச்சு காட்டுகின்றனவா?
“வேறு யார் தலையிலாகிலும் கையை வைத்து எங்கள் (மிராசுதாரர்கள்) வரியைக் குறைத்தால் போதும்'' என்றுதானே சொல்லுகின்றார்கள்.
வரி குறைக்கவேண்டும் என்று கேட்பவர்கள் சர்க்கார் நிர்வாக வரவு செலவை சரிக்கட்ட வகை இல்லாமலும் வரவு செலவு சரியாய் போகும்படி சர்க்காரை நிர்ப்பந்தப்படுத்தாமலும் வெறும் கூப்பாடு போடுவதன் மூலம் வரியை மாத்திரம் குறைத்துக்கொண்டால் அந்த குறைந்த வரி “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி'' என்பதுபோல் ஏழை விவசாயிகள் தலையிலும் கூலிக்கார தொழிலாளிகள் தலையிலும் தான் எப்படியாவது விடிந்து தீரும்.
நமது “பொருளாதார நிபுணர்கள்" “தேசாபிமானச் சிங்கங்கள்!” இந்த உண்மைகளை மறைத்து, ஏழைகளை ஏமாற்றி பணக்கார மிராசுதாரர்களுக்கு உதவி செய்துவிட்டு வரவு செலவை சரிக்கட்ட சர்க்காரார் புது வரி போட்டால் முட்டாள்களிடமும், கூலிகளிடமும் கொடியைக் கொடுத்து காந்திக்கு ஜே சொல்லச் சொல்லி ஜஸ்டிஸ் கட்சியை வையச் சொல்லுவதோடு பரிகாரம் செய்து விடுகிறார்கள்.
இந்தத் தந்திரம் பார்ப்பனர்களுக்கிருப்பதாலேயே வெள்ளைக்காரர் களும் சர்க்காரும் பயந்து பார்ப்பனர்களுக்கு சில சமயங்களில் உள் உளவாய் இருந்து வெளியில் மாத்திரம் காங்கிரசுக்கு விரோதிகள் போல் காட்டிக் கொண்டு நம் துடையில் கயிறு திரித்து விடுகிறார்கள்.
சமீப காலமாகப் பார்ப்பன அதிகாரிகள் ஜட்ஜி முனிசிப்பு முதல் டிப்டி கலைக்டர் தாசில் முதல் போலீசு சூபரண்டு எட் கான்ஸ்டேபில் வரை:
பலர் காங்கிரசை ஆதரித்தும் காங்கிரஸ் சடங்குகளுக்கு உதவி செய்தும்கூட
புது வருஷப் பட்டங்களில் 100க்கு 90 பார்ப்பனர்களுக்கும் பிரமோஷன்களில் 100க்கு 95 பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதோடு மெயில் பத்திரிகை உள்பட பார்ப்பனரல்லாதாரின் இயக்கத்தையும் ஜஸ்டிஸ் கட்சி வேலை களையும் குறைகூறி பார்ப்பனர்களை தட்டிக்கொடுத்த வண்ணமாகவே இருந்து வருகின்றன. சாதாரணமாக வரவு செலவுகளை சரிக்கட்ட வேண்டுமானால் ஆட்டுக்கு கழுத்தில் தொங்குகின்ற இரண்டு மாம்சத் துண்டு போல ஒரு பயனும் இல்லாமல் இருக்கும்படியான டிப்டி கலைக்டர், டிப்டி சூபரண்ட் போன்ற சில தபாலாபீஸ் மாதிரி காகிதங்களுக்கு முத்திரை போட்டு.
குடி அரசு - 1936 (1) 24
சுருக்குக் கையெழுத்திட்டு கட்டி அனுப்பும் வேலையைத் தவிர வேறு ஒரு பொறுப்புமில்லாத கில டிப்டி உத்தியோகங்களையும் ரிவினியூ போர்ட் முதலியவைகளையும் எடுத்துவிட்டால் அரசாங்கத்துக்கு எவ்வளவோ 10 லட்சக்கணக்கான ரூபாய் மிச்சப்பட்டு விடும்
மற்றும் முனிசீப்பு முதலியவர்களுக்கு முன் போலவே 200ரூபாயில் இருந்து ஆரம்பிப்பதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலியவர்களுக்கு மூன் போலவே 70 ரூபாயில் இருந்தும் சப் இன்ஸ்பெக்டர் முதலியவர்களுக்கு 35 ரூபாயிலிருந்தும் ஆரம்பிப்பதுமான காரியங்கள் செய்யப்படுமானால்
நீதி நிர்வாகம் ஆகிய இந்த இரண்டு இலாக்காக்களில் மாத்திரம் மேலும் சர்க்காருக்கு எத்தனை 10லட்சம் ரூ. மீதியாக்கி மற்றும் எவ்வளவோ வரியை குறைக்கவும் கூடும் என்பதும் யோசித்தால் விளங்காமல் போகாது இவ்வுத்தியோகங்களுக்கு தகுதி உள்ளவர்கள் கிடைக்கமாட்டார்கள் என்று சொல்லமுடியுமா என்று பார்த்தால், பி.எ., பி.எல். பாஸ் செய்தவர்கள் மீ£ 40 ரூ. சம்பளத்துக்கு திண்டாடுகிறார்கள். பி.எ., எம்.எ. பாஸ் செய்தவர்கள் மீ 20, 25ரூ. சம்பளத்துக்கு திண்டாடுகிறார்கள். இவர்களை எல்லாம் அயோக்கியர்களுக்கு பிறந்தவர்கள் என்றும், 400, 500, 1000, 2000 ரூ சம்பளம் வாங்குகிறவர்கள்தான் யோக்கியர்களுக்கு பிறந்தவர்கள் என்றும் சொல்லிவிட முடியுமா?
தேசத்தில் வேலை இல்லாத சாதாரண ஜனங்கள் எவ்வளவு மதிப்புள்ள மானத்தையும் எவ்வளவு சின்ன விலைக்கும் விற்றுவிட்டு கொடியைப் பிடித்துக்கொண்டு காந்திக்கு ஜே, சத்தியமூர்த்திக்கு ஜே, ருக்மணி அம்மாளுக்கு ஜே, கோதை நாயகி அம்மாளுக்கு ஜே என்று தெருவில் மான ஈனமில்லாமல் திரிகிறார்கள் என்பதை நேரில் பார்த்தால் இந்த நாட்டின் ஈன நிலை நன்றாய் விளங்கும். எனவே பொது மக்கள் கோடிக்கணக்காய் இப்படி பரதவிக்க ஒரு
சிலருக்கு 400, 500, 1000, 2000, 4000, 5000 என்று அள்ளிக்கொடுப்பது என்றால் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜன நன்மைக்கு என்று செய்வதா அல்லது வேறு காரியத்துக்கு ஆகச் செய்வதா என்பது பெரிய விடுகதையாக நிற்கிறது ஆகையால் சர்க்கார் பார்ப்பனத் தொல்லைக்கும் பாமர மக்கள் முட்டாள் தனத்துக்கும் பயப்படாமல் தங்களுக்கு உண்டான உறுதியுடன். நின்று பெரும் சம்பளங்களைக் குறைத்து வரவு செலவுகளை சரிக்கட்டுவதன் மூலம் புதிய வரி போடாமல் இருக்க வேண்டும் என்பதை சர்க்கார் நன்மைக்காகவே தெரிவித்துக் கொள்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.01.1936 3 ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அரசாங்கமும் மந்திரியும் கவணிப்பார்களா?
முனிசிபல் நிர்வாகம்
முனிசிபல் நிர்வாகங்களில் இருந்துவந்த சகிக்க முடியாத ஊழல் களையும், மோசடிகளையும் நன்றாய் அறிந்த பிறகே முனிசிபாலிட்டிக்கு கமிஷனர்கள் ஏற்படுத்தப்பட்டார்கள். கமிஷனர்கள் ஏற்பட்டும் அனேக முனிசிபாலிட்டிகளின் பணங்கள் கொள்ளை போகின்றன பாழாகின்றன. பல மூனிசிபாலிட்டிகளின் கமிஷனர்கள் சேர்மென் எச்சை துப்புவதற்கு எச்சைக் கிண்ணம் ஏந்தி நிற்பதை நேரில் பார்க்கிறோம்
இன்னும் மற்ற விஷயங்கள் வெளியிட பரிதாபகரமாய் இருக்கிறது. இதைப் போல ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் ஒரு மோச நாடகம் வேறு இல்லை. ஆதலால் முனிசிபல் நிர்வாகத்தை உத்தேசித்தும் மூனிசிபல் வரி கொடுப்போர் பணம் நல்ல வழியில் பயன்பட உத்தேசித்தும் கமிஷனர்கள். சுயமரியாதையோடு இருக்கவேண்டும் என்பதைக் கருதியும் முனிசிபல் சட்டத்தில் தக்கதொரு சீர்திருத்தம் செய்யவேண்டுமென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.01.1936
குடி அரசு - 1936 (1) 26
தீண்டப்படாதாருக்கு தனித்தொகுதி
காங்கிரசுக்காரர்கள் தீண்டப்படாத மக்களை ஏமாற்றவும், அவர் களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தவுமான காரியங்களில் லஞ்சம் கொடுப்பது போன்ற முறைகளால் வெற்றிபெற்று வருவதால் அரசாங்கத்தார். எப்படியாவது தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங் களில் தனித் தொகுதி முறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல் மந்திரியார் இதை கவனித்து ஸ்தல ஸ்தாபன சட்டங்களில் இம்முறைகளை புகுத்த புதிய திருத்த மசோதா கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
குடி அரசு - பெட்டிச் செய்தி - 05.01.1936
7 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 22
தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்
இலங்கை மந்திரிக்கு உபசாரம்
மந்திரி பதில்
தலைவர் அவர்களே! கொழும்பு மந்திரியார் கனம் தோழர் பெரி சுந்திரம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்வதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். இலங்கை நமக்கு ஒரு நல்ல படிப்பினையான நாடாகும்
நாம் இன்று எதற்கு ஆகப் பாடுபடுகின்றோமோ அதே காரியத்துக்கு ஆக பழங் காலத்திலிருந்தே பெரியதொரு முயற்சி நடத்திருப்பதாக இலங்கை சம்மந்தமான புராணம் (ராமாயணம்) கூறுகிறது
அப் புராணம் எவ்வளவுதான் கற்பனையாக இருந்தாலும் பார்ப்பனர்: தொல்லையையும் அதோடு தமிழ் மக்கள் போர் செய்ததையும், அதில்
பார்ப்பனர்கள் கையாண்ட சூக்ஷியையும் நன்றாய் விளக்குகிறது
இலங்கை " சரித்திரம் தமிழ் மக்களின் பெருமைக்கும் சிறுமைக்கும் உதாரணமாகத் திகழும் கதையென்றே சொல்லவேண்டும்
தமிழ் மக்களில் இராவணன் போன்ற சுத்த சுயமரியாதை வீரர்கள்
இருந்தார்கள் என்பதையும், விபீஷணன் போன்ற துரோகிகள் இருந்து சகோதரத் துரோகம் செய்து பயனடைந்து வந்திருக்கிறார்கள் என்பதையும்
எடுத்துக் காட்டுகிறது இக்கதையை நாம் வெறுத்துவிட முடியாது. ஏனெனில் நம் தமிழ்
மக்கள் இன்றும் அதுபோலவேதான் பல வீரர்களையும், சில விபூஷணர்: களையும் கொண்ட சமூகமாய் இருக்கிறது.
மற்றும் ராமாயணத்தில் தமிழ் மக்களை வானரங்களாகக் கற்பிக்கப்
பட்டியிருக்கிறது ஒருபுறமிருந்தாலும் இன்றும் தமிழ் மக்களில் அனேகர்: புராண வானரங்கள் போலவே எதிரிக்கு மூட்டை சுமக்கும் ஈன:
தன்மையிலும் இழி தன்மையிலும் ஈடுபட்டிருக்கிறதை பார்க்கிறோம்
அதில் ஆரியர் வெற்றிக்கு அவர்கள் செய்த சூக்ஷிகளும், விஷமங்
களும், அக்கிரமங்களும் இன்றும் ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்களுக்கு
குடி அரசு - 1936 (1) 28
ஒரு வழிகாட்டியாகவே இருந்து வருகிறது. அம்முறையையேதான். பார்ப்பனர்கள் இன்றும் கையாளுகிறார்கள். தமிழ் மக்களின் நிலையும் ராமாயணக் கதைபோல் தான் இருந்து வருகின்றது
இன்றும் நம் தமிழ் மக்களில் பார்ப்பனர்களின் சூஷிகளையும், தொல்லைகளையும் அறிந்து அதிலிருந்து விடுபட பாடுபடும் மக்களிலேயே அனேகம்பேர் ராமாயணக் கதையை புண்ணிய காலக்ஷேபமாகவும், மோக்ஷ சாம்ராஜ்யத்துக்கு வழிகாட்டியாகவும் கருதி மதிக்கிறவர்களும், பூஜிக்கிறவர்களும் உண்டு.
நம் தமிழ்மக்கள் உத்தியோகம் பெறுவதற்கு ஆக மாத்திரம் பார்ப்பனர்களை வெறுப்பார்கள்; இழிவாய் கருதி வைவார்கள்.
ஆனால் மோக்ஷம் பெறுவதற்கு என்றாலோ பார்ப்பனர்களை குல
குருவாய், பூதேவர்களாய் மதித்து அவர்கள் காலலம்பின தண்ணீரை புண்ணியத் தீர்த்தமாய் அருந்துவார்கள். இப்படிப்பட்ட சமூகத்தை பார்ப்பனர்கள் வஞ்சிப்பதிலோ ஆதிக்கம் செலுத்துவதிலோ அதிசயம் இருக்க முடியுமா?
ஆகவே நமக்கும் நம்மெதிரிகளுக்கும் பயன்படதக்க நல்ல ஒரு
படிப்பினைக்கு இலங்கை நகரம் மிகவும் பயன்படத்தக்கது என்பதே எனதபிப்பிராயம்
மற்றபடி தோழர் பெரி சுந்திரம் அவர்களை சுமார் 15, 16 வருஷமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். 1919-ம் வருஷத்தில் சென்னை மாகாண சங்க மகாநாட்டில் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களும், தோழர் விஜயராகவ
ஆச்சாரியார் அவர்களும், நானும் இந்திய தொழிலாளர் நிலைமையை அறிந்து அவர்களுக்கு வேண்டியது செய்வதற்கு ஆக என்று நியமிக்கப் பட்டபோதும் கனம் பெரி சுந்திரம் அவர்களுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினதும், அவர் லங்கைக்கு வந்தால் வேண்டிய உதவி செய்வதாக
தெரிவித்திருந்ததும் எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனால் அவருக்கு ஞாபக மிருக்குமோ என்பது சந்தேகம். (பெரி சுந்திரம் நன்றாய் ஞாபகமிருக்கிறது என்றார்) மற்றும் நான் ரஷியாவில் இருந்து திரும்புகையில் கொளும்பில் வந்தவுடன் கொழும்பு பிரமுகர்கள் நடத்திய பாராட்டு விருந்தொன்றுக்கு
மந்திரி பெரி சுந்திரம் அவர்கள் தலைமை வகித்து நமது கொள்கைகள் முழுவதையும் ஆதரித்துப் பேசி கவுரவித்திருக்கிறார். மற்றும் இந்தியாவில் இருந்து கொளும்புக்குச் செல்லும் பிரமுகர்களுக்கு அங்கு வேண்டிய உதவி செய்து வருவதோடு சிறப்பாக இந்திய தொழிலாளிகள் விஷயத்தில் வெகுகாலமாகவே பாடுபட்டு வருகிறார்.
தொழிலாளர் சார்பாகவே லங்கை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிலோன் அரசாங்கத்தில் தொழிலாளர்கள் மந்திரியாக வீற்றிருக்கிறார். 2 ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தோழர் பெரி சுந்திரம் அவர்கள் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு மந்திரியாகி தொழிலாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் உழைக்கும்படியான. சந்தர்ப்பம் ஏற்பட வேண்டும் என்றும், அவர் முழு ஆயுளும் சுகஜீவியாய் மகிழ்ச்சியுடனும்திருப்தியுடனும் இருக்கவேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்.
குறிப்பு: 26.12.1935 ஆம் நாள் கொழும்பு அமைச்சர் தோழர் பெரி சுந்திரம் அவர்களுக்கு சென்னை தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தாரால்
இடத்தப்பெற்ற வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 05.01.1936
குடி அரசு - 1936 (1) 30
0 குட s PR
I.“b!l!lllfl?'killlll'flfllii 111 1111111011] பகுத்தறிவு
மலை RETE R மனோக WSO
| இரண்டாம் ஆண்டு பிறற்து விட்டது.
ு வருட சந்தா ரூ. 1-0-0 உடனே சந்காதாரராகச் சேருங்கள். ஈல் சேர்த்தால் முத்திய இதழ்சன் கிடைப்பது கஷ்டமாஇலிடும், குடிஅரசு?! ஏஜண்கெனிடறும், ஹெக்கின்பாதம் புக்ஸ்டால்களிலும் கடைக்கும், குடிஅரசும், பகுத்தறிவும் சேர்த்து ரூ, 3-0
மனேஜர், “பகுத்தறிவு? ஆபிஸ்,
ட் ஈரோடு, L ன ள்ள இசாமாயண ஆராய்ச்சி 4-காண்டங்கள் செர்த்து ஒன்றாய் இருவிப்பவர்களுக்கு விலை ரூ. 1—0—0 T தர்ப்ப டா என்னம் புத்தகம் வெனிவத்து வீட்ட!!!
சகஜ!
»
$ விலை அணா 0-4-0 பாற் செவவு அணா 0-24) $
மக்ககச் சக்க ககஙக்கரக்கககககக
it ஸ்டரப்பு அனுப்கினாள் ஒர பன்முகம் T e அனுப்பப்பட
(அரிவனினக்கள்] புராணங்கள். (தல்ல ஆராய்சி) இதன் விலை அணா 8, 10 அணா பாம்பு அனுப்பினால் புகபோண்டில் அனுப்பப்படும் U gups) 1] து ரஷ் ய ர, முத்வலல்செல்வதிலை
»
ஐத்.நாண்டுத் இட்டத்தின் கறை, > 10 அணா எடாம்பு அனுப்பு கோருக்கு yidursys அனுப்பப்படும். 1]
இதன் விளை அணி செல்கண்ட மூன்ும் செர்த்து ஒன் றாய் வால்குஜெவர்களுக்கு ரூ.1--0--0 சபால் செறவு வே. விலாசம்; @ அரசு புத்தகாலயம், ஈரோடு.
13
-
முஸ்லீம்கள் தேசத் துரோகிகளா?
தனித்தொகுதி வேண்டும், வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கூறுபவர்களுக்கு தேசத்துரோகப் பட்டம் சூட்டுவது ஒரு கூட்டத்தாரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்தக்கூட்டத்தார் யார்? பார்ப்பனர்களும் பார்ப்பன சோதியில் கலந்த ஒரு சில பார்ப்பனரல்லாதாருமே. ஜனநாயகக் கொள்கைக்கு தனித்தொகுதியும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவமும் முரண்பட்டதென்று சொல்லப்பட்டாலும் இந்தியாவின் விசேஷ நிலைமைக்கு அவை இன்றியமையாதனவாகும். இந்திய நிலைமைக்கு சமதர்மக் கொள்கை பொருந்தாதென்று கூறும் காந்தியாரும் காங்கிரஸ் வாலாக்களும் அந்தந்த தேச நிலைமைக்குத் தக்கபடி கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமென்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.
நூற்றுக்கணக்கான ஜாதிகளும் பாஷைகளும் உடைய இந்தியாவிலே தேசீய உணர்ச்சி என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது; அப்படித்தான் இருக்கவும் முடியும். ஊன்றிப்பார்த்தால் இந்திய நிலைமைக்கு ஜனநாயக ஆட்சி பொருத்தமானதே அல்ல. ஜனநாயக ஆட்சியை விட ஹிட்லர் ஆட்சியே இந்தியாவுக்குப் பொருத்தமானதென்றும்கூடச் சொல்லி விடலாம். இருந்தாலும் ''ஜனநாயகமுறையில்'' உருவாக்கப்பட்ட ஒரு அரசியல்திட்டம் இந்தியர்களுக்கு வரப்போவதால் அந்தத் திட்டத்தினால். எந்த வகுப்பாருக்கும் பாதகம் ஏற்படாத முறையில் தேவையான பாதுகாப்புகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகும். பிரிட்டிஷ்
முதல் மந்திரியின் வகுப்புத் தீர்ப்பு எந்த சமூகத்துக்கும் பூரண திருப்தி யளிக்கவே இல்லையாம். ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒடுக்கப்பட்டவர் களும் அதைக் கண்டித்தே வருகிறார்களாம். அப்படியானால் வகுப்புத் தொல்லை உள்ள நாட்டில் எல்லா வகுப்பாருக்கும் திருப்தியளிக்கக் கூடிய ஒரு சமரசத்திட்டம் காண்பது எப்போதுமே யாராலுமே முடியாத காரியமே எனவே வரப்போகும் சீர்திருத்தம் வெற்றிகரமாக நடந்து தீரவேண்டுமானால் தனித் தொகுதியையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். அந்தப்படி ஒப்புக்கொள்ளாவிட்டால் எவ்வளவு சீர்திருத்தம் வந்தாலும் உள்க்கலகம் ஒருநாளும் ஒழியாது.
இதற்கு கல்கத்தாவில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டையே போதிய அத்தாட்சியாகும். வங்காளத்தில் முஸ்லீம்கள் இந்துக்களைப்போலவே சரிசமமான ஜனத்தொகை கொண்டவர்கள். அப்படி இருந்தும் கல்கத்தா
குடி அரசு - 1936 (1) 32
கார்ப்பரேஷனில் சகல உத்தியோகங்களிலும் முஸ்லீம்களுக்கு நூற்றுக்கு 20 ஸ்தானங்கள் வழங்கவேண்டும் என்று கல்கத்தா கார்ப்பரேஷன் முஸ்லீம் அங்கத்தினர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார்கள். ஹிந்து கெளன்சிலர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் முட்டுக்கட்டை போட்டார்கள். அதன் பயனாய் கல்கத்தா கார்ப்பரேஷன் முஸ்லீம் அங்கத்தினர்களில் ஒருவர் நீங்கலாக மற்ற யாவரும் ராஜிநாமாச் செய்துவிட்டார்கள். தமது சகாக்களைப் பின்பற்றி முஸ்லீம் மேயரும் ராஜிநாமாச் செய்துவிட்டார். முஸ்லீம் மெம்பர்கள் தீர்மானத்தை கல்கத்தா கார்ப்பரேஷன் அங்கீகரிக்கும் வரையில் கல்கத்தா முஸ்லீம்கள் திருப்தியடையமாட்டார்கள் என்றும், கல்கத்தா. கார்ப்பொரேஷனின் தற்போதைய தொகுதி முறையை எடுத்துவிட்டு முஸ்லீம்களுக்குத் தனித்தொகுதி ஏற்படுத்தி ஸ்தானங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கல்கத்தா கிலாபத் மகாநாட்டில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இதனால் முஸ்லீம்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்று சொல்லி விடமுடியுமா? வகுப்புவாதிகள் என்று சொல்லி அவர்கள் கடியை ஒழித்து விட முடியுமா? தத்தமக்கு இருக்கவேண்டிய நியாயமான உரிமைகளைக் காப்பாற்ற முயல்வது எங்ஙனம் தேசத்துரோகமாகும்? மேலும் தேசமே பிரதானம் என்று கூச்சல்போடும் காங்கிரஸ் தியாகிகள் சட்டசபை ஸ்தானங்
களிலும் உத்தியோகங்களிலும் ஏன் கவலை செலுத்த வேண்டும்.
முஸ்லீம்களோ, ஒடுக்கப்பட்டவர்களோ சில சட்டசபை ஸ்தானங் களையோ, சில உத்தியோகங்களையோ அதிகப்படியாகப் பெற்றுவிட்டால் என்ன குடிகேடு வந்துவிடப்போகிறது? முஸ்லீம்களுக்கோ ஒடுக்கப்பட்ட வர்களுக்கோ தேச நிருவாகம் நடத்த ஆற்றலில்லை யென்று எந்த ஆண்: மகனாவது கூற முன் வருவானா? தேச பக்தர்கள் என்று கூறிக்கொள்வோரின் உண்மையான லட்சியம் தேச க்ஷேமமானால், தேச நிர்வாகம் நடத்துவோரின். ஜாதியையோ, மதத்தையோ, வகுப்பையோ ஆராய வேண்டிய அவசியமே இல்லை. எனவே “வகுப்புவாதம் ஒழிய வேண்டும், பொதுத் தொகுதிதான் வேண்டும், தனித்தொகுதி கூடவே கூடாது” என்று கூறுவது பக்கா மோசடியா யல்லவா என்று கேட்கின்றோம்.
வங்காளத்திலே முஸ்லீம்கள் மெஜாரிட்டி சமூகத்தார். அப்படியிருந்தும் நகரசபை உத்தியோகங்களில் 100-க்கு 20வீகிதமே வேண்டுமென்கிறார்கள். இந்தவிதமான கோரிக்கையையும் இந்துக்கள் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. யானால் முஸ்லீம்கள் தனித் தொகுதி வேண்டுவது எங்ஙனம் தப்பாகும்
மேலும் இந்தியா ஹிந்துக்களுக்கே என்று கர்ஜிக்கிறார் ஹிந்து மகா சபை வீரர் பாய்பரமாநந்தர். பண்டித மாளவியாவும் அதை ஆதரிக்கிறார்.
பண்டித மாளவியா காங்கிரசைத் தாங்கும் பெரிய கர்றூண்களில் ஒருவர். எந்த காங்கிரஸ்வாதியும் பாய்பரமாநந்தர் அபிப்பிராயத்தை மறுக்க
இந் நிமிஷம் வரை முன்வரவில்லை. B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மெளனம் உடன்பாட்டுக்கு அறிகுறி என்பது மெய்யானால், ஏனைய காங்கிரஸ் வீரர்களும் பாய் பரமாநந்தரை ஆதரிப்பதாகவே நம்ப வேண்டியதாக
இருக்கிறது பரமாநந்தர் அபிப்பிராயப்படி இந்தியா ஹிந்துக்களுக்கே சொந்த மானால், முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், பார்ஸிகளுக்கும், சீக்கியர்களுக்கும், கூர்க்கர்களுக்கும், ஆங்கிலோ இந்தியர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடமெங்கே? அவர்கள் வங்காளகுடாக் கடலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அல்லது யூதர்களைப்போல் தேசாந்திரிகளாய் அலையவேண்டுமா? ஹிந்து மகாசபையார் ஆணவமும், காங்கிரஸ்காரர் பித்தலாட்டமும் அழியாதிருக்கும் வரை சிறுபான்மை சமூகங்களுக்கும் அரசியல் உணர்ச்சி பெறாத வேறு சில மெஜாரட்டி சமூகங்களுக்கும் தனித்தொகுதியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் இன்றியமையாததே எனவே பார்ப்பனப் பூச்சாண்டிக்கு அஞ்சாமல் அவ் விரண்டையும் பெற அவ்விரண்டினாலும் நலம் பெறவேண்டிய சமூகங்கள் கிளர்ச்சி செய்து கொண்டுதான் இருக்கவேண்டும்
குடி அரசு - கட்டுரை - 12.01.1936
குடி அரசு- 1936 (1) 34
திருவிதாங்கூர் ஹைக்கோர்ட்டு
முதல் ஈழவ நீதிபதி
வைக்கம் சத்தியாக்கிரக பலன்
திருவனந்தபுரம் ஜனவரி 9
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் பயனாக திருவாங்கூரில் ஒடுக்கப் பட்டவர்கள் நிலை முன்னேற்றமடைந்து வருகிறது. இப்பொழுது ஈழவ சமூகத்தைச் சேர்ந்த தோழர் என். குமாரன் திருவிதாங்கூர் ஹைக்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 12.01.1936
5 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பொப்பிலி பெருந்தன்மை
பொதுப்பணத்தை பொன்விழாக் கொண்டாட்டத்துக்குச் செலவு செய்யக்கூடாதென்றும் ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் காங்கிரஸ் கொடி ஏற்றக்கூடாதென்றும் சர்க்கார் உத்தரவு பிறப்பித்ததினால் ஜஸ்டிஸ் கட்சியாரெல்லாம் துரோகிகள் என்று காங்கிரஸ் பார்ப்பனர்கள் கூறுகிறார்கள். இதற்காக, அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு தேச மக்கள் ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் ஒரு பார்ப்பன வக்கீல் “ஹிந்து” பத்திரிகையில் எழுதியிருக்கிறார். ஆனால் இதர மாகாண நிலைமையை கவனித்தால் சென்னை சர்க்கார் மிக்க கெளரவமாக நடந்திருப்பதாகவே தோற்றுகிறது; பொதுப் பணச்செலவில் பொன்விழாக் கொண்டாடக்கூடாதென்று சென்னை சர்க்கார் தடுத்தார்களேயன்றி கொண்டாடியவர்களை தண்டிக்க எண்ணவில்லை. பாஞ்சாலத்தைச் சேர்ந்த ஷெகஃ்புராவிலோ, பொன்விழாக் கொண்டாடிய நகரசபை மெம்பர்களைத் தண்டிக்கப் போவதாக டெபுடி கமிஷனர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
டிசம்பர் 23-ந்தேதியன்று கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் பொன்விழாவையொட்டி முனிசிபல் கட்டிடத்தில் தேசீயக் கொடியை உயர்த்துவதென்றும் தீபாலங்காரம் செய்வதென்றும் அதற்காக 100 ரூபாய் செலவிடுவதென்றும் தீர்மானம் செய்து தலைவர் உட்பட எட்டுப் பேர் முடிவு செய்து பொன்விழாக் கொண்டாடினார்களாம். இது முனிசிபல் சட்டத்துக்கும், ராஜவிசுவாசப் பிரமாணத்துக்கும் விரோதமானதென்றும் அவர்களை முனிசிபல் சட்டத்தின்படி மெம்பர் பதவியிலிருந்து நீக்காதிருக்க ஏதாவது காரணங்களுண்டானால் காட்ட வேண்டுமென்றும் டெபுடி கமிஷனர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். காங்கிரஸ் சர்க்காருக்குப் போட்டி ஸ்தாபனம் என்பது உலகப்பிரசித்தம். ராஜவிசுவாசப் பிரமாணம் செய்து நகர சபைகளிலும் சட்டசபைகளிலும் அங்கத்தினர்களா யிருப்பவர்கள் சர்க்கார் விதிகளுக்கும், உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டுத்தான். நடக்கவேண்டும். ராஜவிசுவாசப் பிரமாணம் செய்கிறவர்கள் சட்டசபைகளில் சர்க்காருக்கு விரோதமாக எதுவும் செய்யக்கூடாதென்று சட்ட மறுப்பு பிரம்மாவான காந்தியாரே கட்டளையிட்டிருக்கிறார். இந்நிலையில் ஷெக்புரா டெபுடி கமிஷனரையோ சென்னை சர்க்காரையோ குறைகூற
குடி அரசு- 1936 (1) 36
முடியாது. வாஸ்தவத்தில், கண்ணியமாக நடந்து கொண்ட சென்னை சர்க்காருக்கு காங்கிரஸ்காரர் நன்றி காட்டவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
சர்க்காரோடு போட்டி போடும் காங்கிரசின் பொன் விழாக் கொண்டாட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றிய ஸ்தல ஸ்தாபன. அங்கத்தினர்களை தண்டிக்க சென்னை சர்க்கார் எண்ணாதது பெரிய காரியமென்றுதானே சொல்ல வேண்டும். ஆகவே ஐஸ்டிஸ் கட்சியையும், மந்திரிகளையும் காங்கிரஸ்காரர் தூற்றுவது அயோக்கியத்தனமாகும்
குடி அரசு - கட்டுரை - 12.01.1936
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உலகில் முஸ்லீம்கன் ஜனத்தொகை விபரம்
- ஒரு உண்மை சுதந்திர வாதி
கோடி
ஆப்பிரிக்காவில் 41 ஜாவா போர்னியோ,
மலேயா ஆகிய நாடுகளில் 10
இந்தியாவில் 9
சைனாவில் 3
ரஷ்யா கிழக்கு ஐரோப்பாவில் 2
மத்திய கிழக்கு ஆசியாவில் 3 e 3
இந்திய ஆதிதிராவிடர்களும் முஸ்லீம்கள் ஆகிவிட்டால் 75 கோடி ஆகிவிடும்.
இந்துக்கள் வகுப்புக்குள் வகுப்பு உற்பத்தி செய்து “அவன் பார்ப்பானுக்கும் சூத்திரச்சிக்கும் பிறந்தவன்” இவன் சூத்திரனுக்கும் பார்ப்பாத்திக்கும் பிறந்தவன்.
இவன் நாடாராய் இருந்து அய்யங்கார் ஆனவன்.
அவன் அம்பட்டனாய் இருந்து அய்யங்கார் ஆனவன்.
இவன் வைசியச்சிக்கும் சூத்திரனுக்கும் பிறந்தவன்.
அவன் சூத்திரனுக்கும் க்ஷத்திரியச்சிக்கும் பிறந்தவன். அவனோடு போனால் இவ்வளவு பாவம். இவனோடு போனால் அவ்வளவு பாவம். பார்ப்பனத்தியுடன் சூத்திரன் போனால் அவன் ஆண் குறியை அறுத்து வாயில் வைக்கவேண்டும்
சூத்திரச்சியுடன் பார்ப்பான் போனால் அவன் ஆண் குறிக்கு தங்கத்தில் உறைபோட வேண்டும்
என்றெல்லாம் சாஸ்திரம் எழுதி கூடுமானவரை அமுலில் கொண்டு வருவதும் அதற்காகவே காந்தி வாழ்வதும்,
குடி அரசு- 1936 (1) 38
அதற்காகவே காந்தி மூச்சுவிடவும் வேண்டும் அதற்காகவே சுயராஜ்ஜியம் பெறவேண்டு மென்பதும். ஆகியவையை எல்லாம் இந்து மகாத்மாக்களும் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் பேசிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.
காரியத்தில் என்னமோ முஸ்லீம்களே இரட்டைப்பங்கு அனுபவிக்க வேண்டியது தான். ஒரு சில பார்ப்பனர்கள் அனுபவிக்கும் கொள்ளை போக போக்கியத்தோடு இந்திய தேசியம் வெற்றி பெறவேண்டியதுதான். ஆகவே தீண்டப்படாத மக்களே! தாழ்த்தப்பட்ட மக்களே! நீங்கள் உங்கள் தீண்டாமை ஒழிவதற்கு என்று இல்லாவிட்டாலும், இந்திய மக்கள் அரசியல் சமூக சுயமரியாதைக்கு என்றாவது உடனே எல்லோரும் முஸ்லீம் ஆகுங்கள். இந்தியாவின் 16 கோடி முஸ்லீம்கள் இந்தியாவின் 48 கோடி இந்துக்களுக்குச் சமமானவர்கள், 16 கோடி முஸ்லீம்கள் ஆகிவிட்டால் இந்தியாவில் 8 நாளில் சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தி விடக்கூடும்.
குடி அரசு - கட்டுரை - 12.01.1936
0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பொன்விழாப் புரட்டு
இந்திய தேசீயக் காங்கிரஸ் என்கின்ற ஸ்தாபனத்துக்கு 50 வருஷம் ஆயுள் ஆய்விட்டதற்காக என்று பொன்விழா என்பதாக ஒரு கொண்டாட்டம் பாமர மக்கள் இடையில் நடத்தப்பட்டது
இது மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களில் பட்டதென்றாலும் நம்நாட்டிலும் 50 வருஷத்துக்கு பதிலாக 60 வருஷம் வாய்தா வைத்து மனித வாழ்க்கைக்கு 60 ம் கல்யாணம் என்பதாக ஒரு சடங்கு செய்வதுண்டு.
இது பெரிதும் 60 வருஷகாலம் தாங்கள் பிழைத்து இருந்ததைப் பற்றி மகிழ்ச்சி எய்தி இச்சடங்கு ஆரம்பிக்கப்பட்டாலும் அச்சடங்கின் செலவு முழுவதும் 60 வருஷம் வாழ்ந்தவனைப் பொறுத்தும் அதை அடைவது
முழுதும் இந்த 60 வருஷம் வாழ்ந்த வாழ்வுக்கு ஒரு சிறுபயனும் உதவியும் அளிக்காமல் பல காரியங்களின் பேரால் சதா ஏமாற்றிப் பிடுங்கி வயிறு வளர்த்தி வந்தவனுக்கே போய்ச் சேரும்படியாகத்தான் முடியும்.
அன்றியும் இந்த 60 ம் கல்யாண விழாக் கொண்டாடுவதற்குத் தகுந்த அளவாக இந்த 60 வருஷம் வாழ்ந்தவனால் பொது ஜனங்களுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதா என்பதைப்பற்றியும் யாரும் கவனிக்கமாட்டார்கள்.
அதுபோலவே காங்கிரஸ் இந்தியாவில் ஏற்பட்டு 50 வருஷமாயிற்று என்றால், அது எதற்காக ஏற்படுத்தப்பட்டது?
அதனால் யாருக்கு என்ன லாபம்?
அதனால் பொது ஜனங்கள் அடைந்த பயன் என்ன? என்பனவாகியவைகளை யோகித்துப்பார்த்தால் இந்தக் காங்கிரசின் 50 வருஷ பொன்விழாவுக்கும், தனிப்பட்ட மனிதனின் 60 வருஷ அறுபதாங் கல்யாணத்திற்கும் ஒரு வித்தியாசமும் இருக்காது
காங்கிரஸ் ஏற்பட்ட நோக்கம்
காங்கிரஸ் ஏற்பட்டதானது இந்தியாவின் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கப்படவேண்டும் என்பதற்கும், அவ்வுத்தியோகங்களுக்கு வெள்ளைக்காரர்களுக்கு உள்ள சலுகை அவ்வளவும் இந்தியர்களுக்கும் காட்டவேண்டும் என்பதற்குமாகவே
குடி அரசு - 1936 (1) 40
ஒழிய, மற்றபடிபொதுஜனங்களுக்கு இன்னது செய்ய வேண்டுமென்பதற்கோ, அரசாங்க முறைகளில் பொது ஜனங்களுக்கு இன்ன மாதிரியான செளகரியம் இருக்க வேண்டும் என்பதற்காகவோ ஏற்பட்டதல்ல
இதன் பயனாய் இந்திய தேசீயக் காங்கிரசானது இந்திய மக்களின் உழைப்பையும், அவர்களுடைய அறிவையும், சுயமரியாதையையும் சாப்பிட்டே காலம் கழித்துக்கொண்டு இந்த 50 வருஷமாய் வாழ்ந்து வந்திருக்கிறது.
இது ஆரம்பக் காலத்திலிருந்து காங்கிரசில் கலந்து வந்தவர்களுக்கு
நன்றாய்த் தெரியும்
காங்கிரஸ் இல்லாதிருந்தால்
இந்த காங்கிரசானது இந்தியாவில் இந்தக் கருத்தோடு ஆரம்பிக்கப் பட்டு இப்படிப்பட்ட வஞ்சகமும் மோசமுமான காரியம் செய்து கொண்டு வந்திருக்காமல் இருந்திருந்தால் இந்திய மக்களின் நிலை இன்று வேறு விதமாய் இருந்திருக்கும். அதாவது உலகத்தில் உள்ள மற்ற எல்லா நாட்டு
மக்களுக்கும் சரி சமமான முறையில் கல்வி, செல்வம், மானம், அறிவு, முற்போக்கு ஆகியவைகளில் முன்னணியில் நிற்கக்கூடியதாய் இருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் இவ்வளவு கேவல நிலையில் இருப்பதற்கும், இனி என்றும் முன்னேற்றத்துக்கு மார்க்கமில்லை என்று அவநம்பிக்கை கொள்ளு வதற்கும் இந்த காங்கிரசே முக்கிய சாதனமாய் இருந்து வருகிறது
உதாரணம் வேண்டுமானால் உலகத்தில் எப்படிப் பட்டவர்களால் ஆளப்பட்ட எவ்வளவு மோசமான நாடும் இந்தியாவைப் போல் இவ்வளவு கேவலமாக பிற்போக்கடைந்திருக்கவே இல்லை
கல்வி.
காங்கிரசால் விளைந்த தீமையை விவரித்து சொல்லுவோமேயானால் கல்வியை எடுத்துக்கொள்ளுவோம்
50 வருஷத்துக்கு முன் இந்திய மக்கள் கல்வியில் என்ன நிலையில் இருந்தார்களோ அதே நிலையில்தான் இன்றும் இந்திய மக்கள் இருக்கிறார்களே ஒழியமற்ற நாடுகள் போல் முன்னேறவில்லை. அதாவது 100-க்கு 10 பேர்களுக் குள்ளாகத்தான் இன்றும் கையெழுத்துப்போடத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.
செல்வம்
செல்வத்தில் பார்த்தாலோ இந்த ஐம்பது வருஷத்துக்கு முன் சராசரி
ஒரு இந்திய மனிதனுக்கு என்ன வரும்படி இருந்ததோ அதே வரும்படிதான் இன்றும் இருந்து வருகிறதே ஒழிய மற்ற ஆளப்படும் தேசங்கள் மாதிரி
சிறிதும் மேன்மையடையவில்லை.
அதாவது சராசரி ஆள் ஒன்றுக்கு தினம் ஒன்றுக்கு 2 அணாவுக்கு உட்பட்ட வரும்படிதான் வந்துகொண்டு இருக்கிறது
41 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆனால் காங்கிரசின் பேரால் முன்னணியில் இருந்து மக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனர்கள் மாத்திரம் 100 க்கு 100 பேர் படித்து சராசரி ஆள் ஒன்றுக்கு தினம் 1க்கு3 ரூபாய் வரும்படிக்கு குறையில்லாமல் இருக்கிறார்கள்.
மானம்
இந்தியர்களின் மானம், பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய விஷயங்
களிலும் இந்த ஐம்பது வருஷத்துக்கு முன் இந்திய மக்கள் நிலை எப்படி இருந்ததோ அதேபோல்தான் அதைவிட மோசமாகவுந்தான் இன்றும்
இருந்து வருகின்றது உதாரணமாக இந்தியாவில் 7 கோடி பேர்கள் பறையர், சக்கிலியர், புலையர், நாயாடிகள் என்று சொல்லும்படியான மக்கள் படிப்பின்றி சுகாதாரமின்றி, நல்வாழ்க்கை இன்றி மனித சமூகத்தை விட தாழ்ந்த மிருக சமூக உரிமையுமின்றி நாய், கழுதை, பன்றிகள் போல் மலத்திலும் கேடாக
மதிக்கப்படுகிறார்கள். மற்றும், அடிமையிலும் கேவலமாய் அதாவது அடிமைக்கு ஒரு பாதுகாப்பு உண்டு. என்னவென்றால் அடிமையின் உண்டி, உடை, படுக்கை, இடம் ஆகியவைகளுக்கு அவனது எஜமான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறான். இந்த தீண்டப்படாத மக்களைப்பற்றியோ அந்த பொறுப்பும் யாருக்கும் கிடையாது. ஆனால் அவர்களிடம் வேலை வாங்க மாத்திரம் எவருக்கும் பாத்தியமுண்டு என்கின்ற முறையில் இருக்கிறார்கள். மற்ற 30 கோடிக்கு மேற்பட்ட பார்ப்பனரல்லாத மக்களும் இழிகுலமாய் சூத்திரர்களாய்த்தான் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரசின் பயனாய் பார்ப்பனர்களோ மேல் ஜாதியாய் சுவாமி என்று அழைக்கும்படியானவர். களாய் இன்னமும் இருந்து வருகிறார்கள்.
சுயமமியாதை
இந்திய மக்கள் சுயமரியாதை விஷயத்திலோ கடுகளவும் அவர்கள் முற்போக்கு அடையவில்லை என்றே சொல்லலாம். உதாரணமாக பார்ப்பான். என்பவன் பிச்சை எடுப்பவன், மானம், ஈனம், முறை என்பவை இன்றி எவ்வித இழிதொழிலும் செய்துவருபவன், மனித சமூகத்தின் சித்திரவதைக் கொப்பான கொடுமைகளுக்கும் மனமிரங்காமல் தன் நலத்துக்கே உதவி அளித்துக் கொள்ளுபவனாய் இருக்கிறான் என்று ஒருவனை மக்கள் உணர்ந்திருந்தாலும் அப்படிப்பட்டவனை இன்றும் இந்திய மக்கள் பிறவி காரணமாகவே ராஜாதி ராஜன் முதல் சகலரும் சுவாமி என்றும், மகராஜ் என்றும் பஹுவசனத்தில் மரியாதை வைத்து அழைத்து மேல்நிலையில்
இருத்தி பூஜிக்கிறார்கள்.
பகுத்தறிவு
இவர்களது பகுத்தறிவுக்கு மத சம்பந்தமான மற்ற விஷயங்களைப் பார்த்தாலேபோதும். ஆகவே, இந்தியா காங்கிரசினால் இந்த ஐம்பது வருஷ
குடி அரசு- 1936 (1) 42
காலமாக எந்த துறையில் பொது ஜனங்களுக்கு எப்படிப்பட்ட நன்மை ஏற்பட்டு இருக்கிறது என்று பார்த்தால் காங்கிரசின் போலித்தனமும், மோகமும் விளங்காமல் போகாது.
அரசியலில்
பொதுவாக அரசியல் தன்மையிலாவது ஏதாவது மக்களுக்கு பயன்: உண்டாயிருக்கிறதா என்று பார்த்தால் அதிலும் எவ்வளவு கொடுமைகள் ஏற்பட்டு பொதுமக்கள் திண்டாடி மானங்கெட்டு தெருவில் நிற்கவும் சில சோம்பேறிகளும், அயோக்கியர்களும், வஞ்சகர்களும் கொள்ளை கொள்ளவுமான நிலையையே அரசியல் கிளர்ச்சி உற்பத்தி செய்திருக்கிறது
வயி
முதல் காரியத்தை எடுத்துக் கொண்டால்,
அரசியல் நிர்வாக வரியின் அளவு மக்களுக்கு ஒன்று பத்தாய் பெருகி இருக்கிறது. அதாவது காங்கிரசுக்கு மூன் இந்தியாவானது சுமார் 30, 40 கோடி ரூ.வரி வருமானத்தில் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்குமானால் இன்று 300, 400 கோடி ரூபாய் வரி வசூலால் நிர்வாகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சர்க்கார் ரிவினியூவரி, ஸ்தலஸ்தாபனவரி, கோர்ட்டு, பதிவு இலாக்காவரி முதலியவைகளைச் சேர்த்துப் பார்த்தோமேயானால் வருஷம் ஒன்றுக்கு இந்தியர்கள் செலுத்துவது 300, 400 கோடி ரூபாய் வரி என்பது குறைவாகவே தோன்றும்
நிர்வாக செலவு
உதாரணமாக சென்னை மாகாண நிர்வாகமானது ஒரு கவர்னர் இரண்டு மந்திரிகள் ஆக மூன்று பேர்களால் ஆட்சி நடத்தப்பட்டு வந்ததானது காங்கிரசின் பயனாய் இன்று ஒரு கவர்னர் ஏழு மந்திரிகள் ஆகியவர்களால் இந்த அதிக எண்ணிக்கை விகிதாசாரத்துக்கு ஏற்ற அதிகச் செலவுடன் நிர்வாகம் நடந்து வருகின்றது. இதர உத்தியோகங்களும் 100க்கு 300, 400 வீதம் பெருகியிருப்பதோடு அவர்களது சம்பள விகிதங்களும் 100க்கு 1000 வீதம் மொத்தத்தில் அதிகரித்திருக்கிறது
நீதி இலாக்கா செலவு
நிர்வாக இலாக்காதான் இப்படி என்றால் நீதி இலாக்காவும் அப்படியே பெருகி அதாவது 5 ஹைக்கோர்டு ஜட்ஜிகள் உள்ள உயர்தர நீதிமன்றம் இன்று 14 ஹைக்கோர்ட்டு ஜட்ஜிகளையும், அதுபோலவே கீழ்தர நீதிமன்றங்களுக்கும் 100க்கு 300, 400 வீதம் முன்சீபுஜட்ஜிகள் குமாஸ்தாக்கள் ஆகிய உத்தியோகங்கள் பெருகி சம்பளங்களும் 100க்கு 100 வீதம் வரையிலும் கூடப் பெருகி அந்த இலாக்காவும் மொத்தத்தில் 100க்கு 500, 1000 வீதம் செலவு அதிகரித்திருக்கின்றது
43 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஸ்தல ஸ்தாபன சய ஆட்சி.
ஸ்தல ஸ்தாபன சுயாட்சித் தன்மைகள் சிரிப்பாய் சிரிக்கும்படியாக மக்கள் வரிப்பணங்கள் பாழாவதோடு உலகிலுள்ள இழி குணங்களுக்கும், மோசடிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகின்றது
சுதந்திரம் என்பதிலோ அரசாங்கத்தாரால் பரிக்ஷார்த்தமாய்க் கொடுத்துப் பார்க்கப்பட்ட சுதந்திரங்கள்கூட திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்துக்குக் காங்கிரஸ்கொண்டு வந்துவிட்டுவிட்டது
மக்கன் ஒற்றுமை
மற்றபடி மக்களின் ஒற்றுமை, நேசம், அன்பு ஆகிவைகளில் எங்கும் ஜாதித் தொல்லை, வகுப்புத் தொல்லை, மதத்தொல்லை என்பவைகளே பெருகி தலைசிறந்து தாண்டவமாடுகின்றதை எவரும் மறுக்க முடியாது என்பதோடு எவரும் வெட்கப்படாமல் இருக்க முடியாது என்கின்ற நிலையில் இருக்கின்றது
பாம்புக்கு பால் வார்ப்பது போல்
இந்த விதமாக இந்த 50 வருஷத்தில் “முன்னேற்றம்” அடைய உதவியாயிருந்த காங்கிரசுக்குப் பொன்விழா கொண்டாடுவது இந்தியர்கள் மதத்தில் நாகப்பாம்பை வணங்கி அதற்கு பால் வார்த்து ஆடு, கோழி வெட்டிப் பொங்கலிட்டுப் பூசை போடும் முட்டாள் தனத்துக்கு சிறிதும் இளைத்ததல்ல என்றே சொல்லலாம்.
காங்கிரசால் பார்ப்பனர் நிலைமை
ஆனால் இந்த 50 வருஷ காங்கிரசின் பயனாய் மனித சமூகத்துக்கே பிறவி எதிரிகளானவர்களும் நல்வாழ்க்கைக் கொள்கைகளுக்கும் நற்குணம் நற்செய்கைகளுக்கும் நாசகாலர்களானவர்களுமானப் பார்ப்பனர்களுடைய நிலை எப்படி மாற்றமடைந்தது? எவ்வளவு முற்போக்கடைந்தது? என்று பார்ப்போமானால் பார்ப்பனர்கள் ஏன் காங்கிரசைவிளம்பரம் செய்கிறார்கள்?
ஏன் காங்கிரசுக்காகப் பாடுபடுகிறார்கள் என்பவைகள் விளங்கும்.
50 வருஷத்துக்கு மூன்பு பார்ப்பனர்களுக்குப் புரோகிதம், கூட்டிக் கொடுத்தல், பிச்சையேற்றல், கோவில், பூசை ஆகிய காரியங்களே அவர்களது வருணத் தொழிலாகவும், பிரத்தியட்ச அனுபவத் தொழிலாகவும் இருந்து வந்ததோடு இத்தொழில்களின் பயனாய் ஏதோ ஆயிரத்தொருவர் உயர்நிலையில் இருக்கக்கூடியவர்களாய் இருந்தார்கள்.
ஆனால் இந்த 50 வருஷகாங்கிரசின்பயணாய் பார்ப்பனர்கள் அடையாத உயர் ஸ்தானமில்லை, அனுபவியாத போக போக்கியமில்லை.
குடி அரசு - 1936 (1) 44
காங்கிரசால் மக்கள் உழைப்பெல்லாம் பார்ப்பனர்களுக்கே
மக்களின் உழைப்பெல்லாம் பார்ப்பன கும்பலுக்கே போய்ச் சேரும் படியான வாய்க்கால் வெட்டப்பட்டு அது நேராய் நிரந்தரமாய் தங்கு தடையின்றி பார்ப்பனர் குண்டிக்கே ஓடிக்கொண்டிருக்கிறது.
எப்படியெனில் முதலாவது பார்ப்பனர்கள் 100-க்கு நூறு பேர்களுக்கு படிப்பு ஏற்படும்படி காங்கிரஸ் செய்து கொண்டது
அரசியல் பெரு உத்தியோகங்களில் 100-க்கு 90 அவர்களுக்கே கிடைக்கும்படி செய்துகொண்டது. அவர்களது ஜாதிமத ஆதிக்கம் நிலையாய் இருக்கும்படி சட்டங்கள் செய்து கொண்டது. இனியும் அவர்களே படிக்கும்
படியும் அவர்களுக்கே உத்தியோகங்கள் கிடைக்கும்படிக்கும் மார்க்கங்கள் செய்து கொண்டிருக்கிறது. அதாவது, நாட்டில் செல்வாக்கும், மக்கள் செல்வாக்கைப் பெறும்படியானதுமானதும் ஏராள வருவாய் உள்ளதுமான தொழில்கள் உத்தியோகம் வக்கீல், வைத்தியம், நாடகம், சங்கீதம், குலகுருத்தனம் முதலிய காரியங்கள் 100-க்கு 90-க்கு மேலாகவே பார்ப்பனர்கள் கையில் எப்போதும் இருக்கும்படி காங்கிரஸ் செய்துவிட்டது.
குடியானவர்கள் நிலை
ஆனால் குடியானவர்களுக்கோ விடிந்தெழுந்தால் எழவு சங்கதி கேட்பதுபோல் புதுப்புதுவரி சங்கதிகள் கேள்விப்படவும், தேடிவைத்த பொருள் ஏதாவது மீதி இருந்தால் அரசியல் காரணமாகவோ, மத இயல் காரணமாகவோ, மோட்ச இயல் காரணமாகவோ, விவகார வில்லங்க இயல் காரணமாகவோ எல்லாம் பார்ப்பானுக்கே போய் சேரும்படியாகவும் தான் ஏற்பட்டதே தவிர, அவனவன் வாழ்க்கை நலத்தையோ, பிள்ளை குட்டிகளின் கல்வி அறிவு, சுயமரியாதை நலத்தையோ கவனிக்க முடியாத - நேரமில்லாத நிலையை காங்கிரஸ் உண்டாக்கி இருக்கிறது இவைகளைத் தவிரவும் மற்றும் இவை போன்றவைகளைத் தவிரவும் காங்கிரஸ் இந்த ஐம்பது வருஷத்தில் மக்களுக்கு ஏதாவது ஒரு உண்மையான நன்மை செய்திருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
பெரும் உத்தியோகம் கிடைத்தால் பயன்?
பெரும் பெரும் உத்தியோகங்கள் இந்தியர்களுக்குக் கிடைத்தது
என்று சொல்லலாம்.
லார்ட் சின்னா, சர். மகமது உஸ்மான் கவர்னர் வேலை பார்த்தார்கள்.
சர். சங்கர் நாயர், சி.பி. ராமசாமி அய்யர் வைசிராய் பிரபு நிர்வாகசபை மெம்பர் வேலை பார்த்தார்கள்.
48 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வி.கிருஷ்ணசாமி அய்யர், சர். சிவசாமி அய்யர், கே. சீனிவாசய்யங்கார், கிருஷ்ணன் நாயர், சர். கே.வி. ரெட்டி, பன்னீர் செல்வம் ஆகியவர்கள் கவர்னர் நிர்வாக சபை மெம்பர்கள் வேலை பார்த்தார்கள் பார்க்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் ஆட்டுக் கழுத்தில் தொங்கும் தோல் துண்டுகள் போல் இருந்து கொண்டு பொது ஜனங்கள் வரிப்பணத்தை கொள்ளைபோல் அனுபவித்தார்கள் என்பதல்லாமல், இந்த உத்தியோகங்களின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன நன்மை செய்யக்கூடிய சக்தி, சவுகரியம், புத்தி ஆகியவைகள் இந்த அதிக எண்ணிக்கை இல்லாத காலத்தில் வெள்ளைக் காரர்கள் பார்த்த காலத்தில் இல்லாததை விட அதிகமாய் இருந்தது என்றோ வெள்ளைக்காரர்கள் செய்ததைவிட நன்மையில் அதிகமாகவோ, தீமையில் குறைவாகவோ செய்தார்கள் என்றோ சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.
பெரிய உத்தியோகம் கேட்டதின் பயன்
வெள்ளைக்காரர்கள் பார்க்கும் உத்தியோகங்களைப் பார்ப்பனர்கள்
பார்க்கவேண்டுமென்று கூச்சல்போட்டது காங்கிரஸ். ஆனால் வெள்ளைக்காரர்கள்
தந்திரமாய் தங்கள் உத்தியோகங்களையும் சம்பளங்களையும் குறைக்காமல் இவர்களுக்கு ஆக பல புது உத்தியோகங்களை அதிகப்படுத்தி அதிகச் சம்பளங்களையும் கொடுத்தார்கள்
பிறகு இவர்களைப் பார்த்துப் பார்ப்பனர் அல்லாதார்கள் கூப்பாடு
போட்டார்கள். அவர்களுக்கு ஆகவும் வெள்ளைக்காரர்கள் தந்திரமாய் தங்கள். உத்தியோகங்களும் பார்ப்பன உத்தியோகங்களும் குறையாமல் மேலும் உத்தியோகங்களை அதிகப்படுத்தி பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கொடுத்தார்கள்.
பிறகு முஸ்லீம்கள் கூப்பாடு போட்டார்கள், அவர்களுக்கும் அப்படியே செய்தார்கள்.
பிறகு தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் சத்தம் போட்டார்கள், இவர்களுக்கும் அப்படியே செய்யப்போகிறார்கள்.
கூப்பாடுகவின் பயன்
ஒவ்வொரு கூப்பாடுகளும் உத்தியோகங்களையும் சம்பளங்களையும் பெருக்கிக்கொண்டுபோய் அதற்கு ஏற்ற அளவு வரிகளும் உயர்த்திக் கொண்டு போய் இவை எல்லாம் ஏழைக் குடியானவன், தொழிலாளி, சின்ன ஜாதி மக்கள் என்பவர்கள் தலையில் கையை வைத்து அவர்களது நிலைமை நாளுக்கு நாள் கேவலமாகிக்கொண்டு வருவதல்லாமல் மற்றபடி காங்கிரஸ் செய்த நன்மை என்ன என்று யாராவது சொல்லமுடியுமா?
குடி அரசு - 1936 (1) 46
காங்கிரசால்
காங்கிரசினால் காந்தி மகாத்மா ஆனார். ராஜகோபாலாச்சாரி ராஜாஜி ஆனார், வல்லபபாய் சர்தார் ஆனார், திலகர் லோகமானியரானார், பெசன்ட் லோகமாதா ஆனார், சத்தியமூர்த்தி பாரதமாதாவின் அருமைப் புதல்வரானார், லக்ஷிமிபதி அம்மாள் தியாக சொரூபி ஆனார்.
இந்தப்படி ஒரு சில ஆட்கள் சர்., கே.சி. ஐ., திவான் பகதூர்கள் ஆவது போல் ஆனார்கள்:
புரட்டிலும், பித்தலாட்டத்திலும் தேர்ச்சி உள்ள வக்கீல்கள் அட்வோகேட்' ஜனரல் ஐகோர்ட் ஜட்ஜிகள் ஆவதுபோல் அயோக்கியத் தனங்களிலும், ஈனத்தனங்களிலும் தேர்ச்சி உள்ள பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் காங்கிரஸ் தலைவர்கள், தேசாபிமானிகளாகின்றார்கள். முன் சொன்னவர்களும்
வக்கீல் கோஷ்டியில் இருந்து சர்க்காரால் பொறுக்கப்படுகிறார்கள், இவர்களும் வக்கீல் கோஷ்டியிலிருந்தே முட்டாள் மக்களால் தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தமாதிரியான காரியங்கள் அல்லாமல் காங்கிரசினால் இந்த 50 வருஷ காலமாய் இந்தியாவுக்கு ஏதாவது நன்மை ஏற்பட்டதாகவோ, ஏழை விவசாயிகள் கூலிகள் ஆகியவர்களுக்கு அனுகூலம் செய்ததாகவோ சொல்ல முடியுமா?
காங்கிரசே காரணம்
அல்லது இந்திய வரிக்கொடுமைகள் எதற்காவது காங்கிரஸ் காரணமில்லை என்பதாகவோ இந்திய மக்களின் கல்வி, செல்வம், அறிவு, சுயமரியாதை, சுதந்திரம் ஆகியவைகளுக்குக் காங்கிரஸ் முட்டுக்கட்டையா யில்லை என்பதாகவோ, சர்க்கார் அடக்குமுறை, சீர்திருத்தப் பாதுகாப்பு ஆகியவைகளுக்கு காங்கிரஸ் காரணமாக இருக்கவில்லை என்பதாகவோ யாராவது எந்த அறிவாளியாவது சொல்லக்கூடுமா என்றும் கேட்கின்றோம்
இப்படிப்பட்ட பொன்விழா
இப்படிப்பட்ட ஒரு கொடுமையையும் கஷ்டத்தையும் முன்னேற்றத் தடையையும் அடிமைத்தளையையும் விளைவித்த காங்கிரசுக்கு பொன்விழாக் கொண்டாடியதானது, ஒரு சூத்திரன் தவம் செய்தான் என்பதற்காக அவனது தலையை வெட்டிய கொடியோனும் அயோக்கியனுமாகிய ராமனுக்கு சூத்திரர்கள் என்கின்ற கலத்தின் கீழ்வரும் மக்களே ஸ்ரீராம நவமி கொண்டாடுவது எவ்வளவு யோக்கியப் பொறுப்பும் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் உடையதோ அதே போன்றது தான் இன்றைய காங்கிரசின் பொன்விழாப் புரட்டு கொண்டாட்டம் என்பது நமது அபிப்பிராயம்
குடி அரசு - தலையங்கம் - 12.01.1936
47 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இந்தியாவில் வகுப்புத் தொல்லை ஓழிய வேண்டும்
உண்மைச் சுதந்திரத்துக்கு மார்க்கம் முஸ்லீம் சமூகம்
16 கோடி ஆவதே
இன்று இந்தியாவில் வகுப்புத் தொல்லையானது அளவிட்டுக் கூறும்படியான நிலையில் இல்லை. இவற்றுள் இந்து முஸ்லீம் வகுப்புத் தொல்லையானது எல்லாவற்றையும்விட தலை சிறந்து விளங்குவதாகும்,
இது இந்தியா முழுமையையும் பொறுத்ததாக இருக்கிறது அடுத்தாற்போல் தீண்டப்படாதவர்கள் மேல்ஜாதிக்காரர்கள் என்கின்ற தொல்லையாகும். இதுவும் ஏறக்குறைய இந்தியா பூராவையும் பொறுத்ததானாலும் தீண்டப்படாத மக்கள் கல்வியிலும், செல்வத்திலும் சுயமரியாதை உணர்ச்சியிலும் மிகவும் பிற்பட்டவர்களாய் இருப்பதாலும்
அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததாலும் தனித்தனியே மக்கள் சுயநலம் கோருவதாலும் அத்தொல்லை சம்பந்தமான கிளர்ச்சிக்கு எவ்வித ஜீவ உணர்ச்சியும் இல்லாமல் போனதோடு அதை பலர் உபயோகித்துப் பயன்
பெறும்படியாக இருந்து வருகிறது அடுத்தாப்போல் சொல்ல வேண்டியது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். வகுப்புத்தொல்லை என்று சொல்லலாம். இது தென்னிந்தியாவில் மாத்திரமே விகேஷ கிளர்ச்சியில் இருந்தாலும் பார்ப்பனரல்லாதார் மத
விஷயத்தில் சுயமரியாதை அற்று பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருப்பதாலும் பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள மதப்படிப்பினையானது தங்கள் சமூகத்தையும் சகோதரர்களையும் காட்டிக்கொடுத்தாவது மூத்தி பெறலாம் என்பதாக கற்பிக்கப்பட்டிருப்பதாலும் அதையே பல வைதீக மக்களும் கீழ்ப்படியிலுள்ள மக்களும் பின்பற்றுவதில் சிறிதும் மான அவமானத்தை கவனிப்பதற்கு இல்லாமல் போய்விட்டதாலும் அக்கிளர்ச்சிக்கும் தகுந்த பலனில்லாமல் போய்விட்டது. என்றாலும் அக்கிளர்ச்சித் தொல்லையில் உண்மையான பொது நன்மைகள் பெரிதும் பாதிக்காமல் இருப்பதில்லை.
அடுத்தாப்போல் பல தொல்லைகள் வடக்கிலும் கிழக்கிலும் நடந்து வருகின்றது என்றாலும் அவை மற்றவைகளைக் கவனிக்கும்போது மிகச் சிறியவை என்றே சொல்லலாம்
குடி அரசு - 1936 (1) 48
எப்படி இருந்தாலும் இந்தியாவானது உலகத்தின் கண்முன் ஒரு காட்டு மிராண்டி தேசமாகவும், இந்திய மக்கள் ஒரு இழிகுல மக்களாகவும் காணப்படுவதற்கு இந்த வகுப்புப் பிரிவுகளும், வகுப்புத் தொல்லைகளும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதுமாத்திரமல்லாமல் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்பவர்களிலேயே 100-க்கு 90- பேர்களாய் உள்ளவர்கள் கல்வியிலும் சுயமரியாதையிலும் கீழ் நிலையில்
இருப்பதற்கும் பொருளாதாரத்தில் மிக மிக கேவல நிலையில் இருப்பதற்கும் இந்த பிரிவினைகளும் அதனால் ஏற்பட்ட தொல்லைகளும்தான் காரணம் என்பதையும் எவரும் மறுக்கமுடியாது
ஆனால் அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் இந்த வகுப்புத்தொல்லைகளை மறைத்தும் அதை அலகஷியப்படுத்திக் கூறியும் விட்டு அதனால் ஏற்பட்ட கெடுதிகளுக்கெல்லாம் அரசாங்கத்தார் மீது பழிபோட்டுப் பேசலாம்.
அரசாங்கத்தைப்பற்றி பேசுவதானால் இன்றைய அரசாங்கம் இதற்கு முன் இருந்த எந்த அரசாங்கத்தையும் விட மோசமானதாய் இருந்ததாக சரித்திரங்கள் காணப்படவில்லை. சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு, மக்களைச் சமமாய்க் காணல் என்கின்ற துறைகளில் இதற்கு முன் இருந்த ஆட்சிகளில்
இது ஒரு துறையிலும் குறைந்ததாகவும் காணப்படவில்லை.
இந்த உண்மைகள் பழய சரித்திரங்களில் காணப்படுவது மாத்திர மல்லாமல் 1920ம் வருஷம்வரை இந்திய அரசியல்வாதிகளும் தேசியவாதி களும் இன்றைய அரசாங்கத்தைப் புகழ்ந்து பாராட்டி “தெய்வீக” ஆட்சியாகவும் தர்மராஜ்ஜிய ஆட்சியாகவும் வர்ணித்து எழுதிய சாசனங்களும் பேசிய பேச்சுக்களும் இன்றும் கல் எழுத்துப்போல் இருந்து வருகின்றன.
இவைகளையெல்லாம் பற்றி இரண்டுவித அபிப்பிராயம் இருக்கலா மானாலும், தர்க்கத்திற்கு இடமிருக்கிறது என்றாலும் உலகமே விழிப்படைந்த இந்த சுயமரியாதை வேகமுள்ள இக்காலத்தில் மற்ற நாடுகள் எல்லாம் பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் சுதந்திரத்திலும் முற்போக்கடைந்து கொண்டிருக்கும்போது இந்தியா மாத்திரம் ஏன் இன்னும் சராசரி கல்வியில் 100-க்கு 92 பேர்கள் தற்குறிகளாகவும், பொருளாதாரத்தில் சராசரி ஒரு மனிதனுக்குரிய தின வரும்படி 2 - அணாவை விட குறைவாகவும் இருக்கும் படியான நிலை, குறிப்பு கண்டுபிடிக்க முடியாத காலத்திலிருந்து இன்றுவரை ஏன் நிலைத்துவருகிறது? இப்படிப்பட்ட ஒரு ஆட்சி ஏன் திருத்தமடையாமல் இருக்கிறது? என்பதற்கு இந்திய அரசியல்வாதிகளும், தேசியவாதிகளும் என்ன பதில் சொல்லக்கூடும்?
இந்திய ஜனத்தொகை லக்ஷம் இரண்டு லக்ஷமல்ல, ஒரு கோடி இரண்டு கோடி மாத்திரம் அல்ல. ஜன கணிதப்படி முப்பத்திஐந்து கோடியாகும். ஆளும் சமூகத்தை பிரித்து பார்ப்போமானால் மிக மிக சொல்பமேயாகும்
49 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆளுகின்றவர்கள் ''தெய்வ பல'' மில்லாமலோ, மந்திர தந்திர சக்தியினாலோ ஆளுகிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது எல்லோருக்கும் தெரிந்த பலத்தைக்கொண்டும் எல்லோரும் அறிந்து கொள்ளக்கூடிய மார்க்கங்களை கொண்டும் தான் ஆளுகிறார்கள். ஆளும் ஜாதியாரைப் பிரித்துப்பார்த்தால் அவர்கள் இந்தியாவில் சில லக்ஷ கணக்கில் தான் இருக்கும். அப்படி இருக்க அவர்களுடைய ஆட்சி ஒழுங்காயில்லையானால் இந்த முப்பத்தி ஐந்து கோடி மக்களும் ஏன் அவர்களைத் திருத்தி நல்ல ஆட்சியாக அரசு புரியும்படி செய்து இருக்கக்கூடாது? ஜனங்களுக்கு புத்தி இல்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது இந்திய மக்கள் பயங்காளிகள் என்று சொல்லிவிட
முடியுமா? அல்லது ஆட்சிபுரிகின்றவர்களாவது மனிததன்மை அற்ற - மிருக சுபாவ - அநாகரீக ஜாதியார் என்று சொல்லிவிட முடியுமா? அப்படியிருந்தால் உலகில் தலை சிறந்த மக்களாகவும் உலகத்துக்கு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் போதிக்கும் மக்களாகவும் அவர்கள் இன்றுஇருக்க முடியுமா என்பவைகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் நமக்குள் ஏதோ.
ஒரு தவறுதல் இருப்பதாகத்தான் உணரமுடியும் அது எது என்று பார்த்தால் இந்த வகுப்புத்தொல்லைகள் என்பவைதான்.
இந்தியா இன்று உள்ள நிலையில் எந்தக் காரணத்தைமுன்னிட்டும் வகுப்புத்தொல்லைகளை ஒழித்துக் கொள்ளக் கூடியதாய் இல்லை. ஏதாவது ஒரு வகுப்பு ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை அடக்கி ஆளும் நிலைமை பெற்றால் தான் வகுப்புத் தொல்லைகள் நீங்க முடியுமே ஒழிய வேறு வழியில் ஒருநாளும் ஒழியக்கூடியதாய் இல்லை.
நம் தேசிய வாதிகளும் அரசியல் வாதிகளும் ஜெயிலிலும் தங்கள் வகுப்பு உரிமை இருந்தாகவேண்டும் என்று தான் பாடுபடுகிறார்களே ஒழிய நாம் எல்லோரும் ஒரேவகுப்பு என்று வேஷத்தில் கூட இருக்கசம்மதிப்பதில்லை.
இதற்கு மார்க்கம்
இப்படிப்பட்ட இந்த இந்திய நாடு இன்று வகுப்புத் தொல்லை ஒழிந்து ஒரு குறிப்பிட்ட லட்சியத்துக்கு எல்லா மக்களுக்கும் ஒருவரை
ஒருவர் நம்பி ஒற்றுமையுடன் பாடுபடவேண்டுமானால் எல்லோரும் ஒரு வகுப்பு ஆவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதுதான் நமது முடிவு
அப்படிப் பார்ப்போமேயானால் அதிகமான ஜனத்தொகை கொண்ட வகுப்பு எதோ அதில் மற்ற வகுப்புக்காரர்கள் கலந்துகொள்வதுதான் புத்திசாலித்தனமாகும் உதாரணமாக நமது காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) இந்தியா
பூராவும் ஒரு பாஷை ஆவதற்கு இந்தி பாஷை தான் தகுந்தது என்று
குடி அரசு - 1936 (1) 50
சொல்லி அதையே இந்தியர்கள் எல்லோரும் கற்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்தியாவின் மெஜாரட்டி ஜனங்கள் இந்தி பேசுகிறார்களா என்பது ஒரு புறம் விவகாரத்துக்கு இடமாய் இருந்தாலும் இருக்கின்ற பாஷைகளில் அதிகமான ஜனங்கள் பேசும் பாஷை இந்தி என்று சொல்லிஅதைக்கற்க அரசாங்கத்தின் மூலமும் முயற்சிசெய்கிறார்கள் அல்லவா?
அதுபோல் இன்று இந்தியாவில் உள்ள வகுப்புகளில் அதிகமான ஜனங்களைக் கொண்ட எந்த வகுப்பார் ஒற்றுமையோடு ஒரேவிதமான வகுப்புணர்ச்சியோடு இருக்கிறார்களோ அந்த வகுப்பைக் கைப்பற்றி விடுவதுதான் இந்தியா ஒருவகுப்பு என்று சொல்லுவதற்கு தகுதி உடையதாகும்.
அப்படி பார்த்தால் இன்று இந்தியாவில் முஸ்லீம் வகுப்புதான் ஒற்றுமையுடன் தங்கள் மக்களுடன் பிறவிக் காரணங்களை லக்ஷியம் செய்யாமல் உண்ணல், பொருந்துதல், சமுதாய வாழ்வில் சமமாக பாவித்தல் முதலிய காரியங்களில் எல்லா வகுப்புகளையும் விட முன்னணியில் இருக்கிறார்கள். அவர்களது எண்ணிக்கை இன்று இந்தியாவில் மாத்திரம் 9 கோடிக்கு மேல்பட்ட ஜனசங்கையாகும் அவ்வளவு ஜனசங்கை உள்ளவர்கள் இந்தியாவில் வேறு எந்த வகுப்பிலும் இல்லை.
இந்துக்கள் என்பவர்கள் சுமார் 24 கோடி இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடுமானால் இவர்களில் சீக்கியர், பாரசீகர், ஜெயினர், பெளத்தர், கிருஸ்தவர் முதலிய இந்துக்கள் அல்லாத வகுப்புகளைப் பிரித்துவிட்டால் 20 கோடிக்குத்தான் வரும். அதிலிருந்தும் தொடுவதற்கும் கிட்ட நெருங்கு வதற்கும் “தகுதி இல்லாத” 7 கோடி தீண்டப்படாத மக்களைப் பிரித்து விட்டால் 13 கோடியே யாகும். இதிலிருந்தும் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ள முடியாத, ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிட முடியாத, சம்மந்தம் செய்ய முடியாத, பார்ப்பனர், கோமுட்டிகள், ஆசாரிகள், செட்டிகள், சைவர்கள் போன்ற பல உள் வகுப்புக்காரர்களையும் பிரித்து விடூவோமேயானால் இன்னும் எவ்வளவு சிறிய தொகைக் கொண்ட வகுப்பாகும் என்று பார்த்தால், சமத்துவமாய் ஒற்றுமையாய் புழங்கிக்கொள்ளும் மக்களுள் முஸ்லீம்களே அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் என்பதில் யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. அப்படி யாராவது ஆக்ஷேபப்படுவதாயிருந்தாலும், ஒற்றுமையிலும் சமத்துவ பாவத்திலும் பலம் பொருந்திய வகுப்பார் முஸ்லீம்கள் தான் என்பதை எவரும் சுலபத்தில் ஆக்ஷ்பிக்க முடியாது அவர்களோடு அதாவது இந்த முஸ்லீம்களோடு டாக்டர் அம்பத்கார் அவர்கள் யோசனைப்படி 7 கோடி தீண்டப்படாத மக்களும் சேர்ந்து முஸ்லீம்கள் எண்ணிக்கையை 947 = 16 கோடியாக ஆக்கிக் கொள்வார் களேயானால் பிறகு அவர்களை அவர்களது இஷ்டத்திற்கு விரோதமாய் அடக்கி ஆளும் மக்கள் உலகத்தில் இல்லை என்றும், இருக்கவும் முடியாது என்றும் வலியுறுத்திக் கூறலாம். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இந்தியாவுக்கு உண்மையாகவே ஒரு சுதந்திர ஆட்சி வேண்டுமானால், ஐரோப்பியா ஆட்சியானது இன்று இந்தியர்களுடைய இஷ்டத்துக்கு விரோதமாக ஆளப்பட்டு வருகின்றது என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுவது அவர்கள் மனப்பூர்வமாய் சொல்லப்படுவதனால் இவைகளுக்கு பரிகாரம் முஸ்லீம் சமூகத்தை 16 கோடியாக ஆக்கிவிடுவதேயாகும்
அப்படிக்கு இல்லாமல் இந்துக்கள் ஆட்சி வேண்டும், கிறிஸ்தவர்கள் ஆட்சி வேண்டும், முஸ்லீம்கள் ஆட்சி வேண்டும், பார்ப்பனர்கள் ஆட்சி வேண்டும், பார்ப்பனரல்லாதார் ஆட்சி வேண்டும், தீண்டப்படாதார் ஆட்சி வேண்டும் என்பன போன்ற முயற்சிகளும் சூழ்ச்சிகளும் ஒவ்வொரு வகுப்பாரும் செய்வது என்பது, பொதுக் கிணற்றில் மலம் விழுந்ததற்கு ஒப்பான பலனைத்தான் கொடுக்குமே அல்லாமல் வேறு எவ்வித பயனையும் கொடுக்க முடியாது
மற்றும் இன்று இந்தியா ஒரு தேசம் என்றோ, ஒரு சமூகம் என்றோ சொல்லிக்கொள்ளுவது ஒரு நாளும் புத்திசாலித்தனமான பேச்சாகவோ, யோக்கியமான பேச்சாகவோ இருக்க முடியாது என்பதும் நமது வெகு நாளைய அபிப்பிராயமாகும்.
ஆதலால் இந்தியாவின் சுயமரியாதையும், விடுதலையும் நெருங்கி இருக்கிறது என்பதோடு இந்தியா ஒரு சமூகம் என்று சொல்லக்கூடிய நிலை எய்துவதற்கும் அறிகுறியேதான் இன்று டாக்டர் அம்பேத்கார் அவர்கள் “தீண்டப்படாதவர்கள் இந்துமதத்தை விட்டு சமுதாய வாழ்வில் சமத்துவம் அளிக்கக்கூடிய வேறுமதத்துக்கு போய்விட வேண்டும்” என்று கண்டு பிடித்த அபிப்பிராயமாகும்.முஸ்லீல் சமூகத்தில் உள்ள செல்வவான்கள், சுதந்திரவாதிகள், சுயமரியாதைக்காரர்கள் ஆகியவர்கள் இது சமயம் பல கோடி ரூபாய்களைப் பண்டாக சேர்த்து ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பண உதவி புரிந்தாவது வேறு பல சவுகரியங்கள் செய்து கொடுத்தாவது முஸ்லீம்களாக ஆக்குவார்களானால் அவர்கள் முஸ்லீம் மதத்தை பெருக்குகிறார்கள் என்பதாக கருதுவதை விட இந்தியாவின் விடுதலைக்கு, சுயமரியாதைக்கு அருகதை உடையவர்களாக்குகிறவர்களாவார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாததாக ஆக்கினவர்களாவார்கள்.
முஸ்லீம் சீர்திருத்தக்காரர்கள் என்பவர்களில் பலரை வயிற்றுப் பசி பிராணனை வாங்குவதால் அவர்களிடம் உள்ள 10-ம் பறந்து போகா விட்டாலும் 10-ல் 6-க்கு குறையாமலாவது பறந்து போய் விடுகின்றன. அதுபோலவே தேசீய முஸ்லீம் என்பவர்களிலும் பலர் பசி கொடுமையால் 10ல் 8ஐ விற்றுப் பிழைக்கிறார்கள். ஆகையால் சீர்திருத்த முஸ்லீம்கள் தேசாபிமான முஸ்லீம் என்பவர்களை விட்டுவிட்டு அவர்களை இவ்விஷயத்தில் லக்ஷியம் செய்யாமல் சுயமரியாதை முஸ்லீம் வாலிபர்கள் ஒன்றுகூடி ஆங்காங்குள்ள.
குடி அரசு - 1936 (1) 52
செல்வவான்களைப் பிடித்து முதலில் நிதியைத் திரட்டிவிட்டால் நிதியின் தொகை இவ்வளவு என்று வெளிப்படுத்தி விட்டால் பஞ்சாமிர்தத்திற்கு ஈக்கள் வந்து விழுவதுபோல் ஏராளமான மக்கள் முஸ்லீம்களாவதாகச் சொல்லிக் கொள்ள முன் வருவார்கள். ஏனெனில் இன்றைய மத தத்துவமும், மதம் மாறும் தத்துவமும் 100-க்கு 75 பாகத்துக்கு மேல் பொருளாதாரத்தையும், அரசியல் ஆதிக்கத்தையுமே பொறுத்திருக்கிறது.
அன்றியும் உண்மையிலேயே ஒரு மனிதன் தனக்கு ஏதாவது ஒரு மதம் வேண்டும் என்று சொல்லுவானேயானால் அவனுக்கும் “இந்து மதத்தை விட, கிறிஸ்தவ மதத்தை விட, முஸ்லீம் மதமே சிறந்தது" என்று இதற்குமுன் பலதடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம் அம்மதமே இன்று உலகில் மற்ற பாகங்களில் எவ்வித வேகமான சீர்திருத்தத்தையும் வரவேற்று வருகின்றதைப் பார்க்கின்றோம்
துருக்கியையும்,ரஷ்யாவையும்,ஈஜிப்டையும்,தார்த்தார் ரிப்பப்ளிக்கையும்
நேரில் பார்த்தவர்களுக்கு பெண்கள் விஷயத்திலோ, தொழுகை விஷயத்திலோ,
மற்ற வைதீக விஷயத்திலோ, வேஷம் விஷயத்திலோ, மற்ற சமூகத்தாருடன். கலந்து வாழும் விஷயத்திலோ முஸ்லீம்கள் எவ்வளவு துணிந்து மாறுதலடைந்து இருக்கிறார்கள் என்பது நன்றாய் விளங்கும்
இந்தியாவில் உள்ள முஸ்லீம் மத சம்பிரதாயங்கள் எல்லாம் முஸ்லீம்
மார்க்கத்தின் அரிவரி ஏ.பி,சி,டி யேயாகும். தண்டவாளத்தின் மீது போகும் ரயில்வண்டி போன்றதேயாகும் உலக முஸ்லீம்களின் மொத்த ஜனத்தொகை இன்று 682870000 அறுபத்தி எட்டேகால் கோடி ஆகும். இன்று இந்தியாவில் உள்ள முஸ்லீம் மார்க்க சம்பிரதாயம் அரிவரி என்று மேலே சொன்னோம். ஆனாலும் அது
பெரிதும் இந்துக்களில் தொல்லைகளை சமாளிக்கவோ இந்துக்களோடு. தொல்லை கொடுக்கவோ நடத்தப்பட்டு வருவதாகும். இதை சாதாரண: முஸ்லீம்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ராஜதந்திர முஸ்லீம்கள் இதை ஒப்புக்கொள்ளுவார்கள். உதாரணமாக சாதாரண முஸ்லீம்கள் காந்தியாரை மகாத்மா என்று கூட சொல்லமாட்டார்கள்; ஏனென்றால் மகமது நபி ஒருவரைத் தவிர மற்றவர்களை மகாத்மா என்று அழைப்பது முஸ்லீம் மார்க்கத்துக்கு ஏற்றதல்ல என்கிறார்கள். என்றாலும் பல காரணங்களால். முஸ்லீம்கள் காந்தியாரையும் அறிந்தும் அறியாமலும் மகாத்மா என்று பிறரையும் சொல்லுவது சகஜமாக இருக்கிறது.
அது போல இன்னும் அனேக விஷயங்கள் மார்க்க விஷயமாக நடைபெற்று வருகின்றது என்றாலும் முஸ்லீம் சமூகம் பலப்படுமானால் அவை இந்துக்களைப்போல் தனித் தனி பிரிவார் சுயநலம் என்று இல்லாமலும் தனிப்பட்ட மனிதன் சுய நலம் என்று இல்லாமலும் அது உயர்ந்த முன்னேற்ற மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளும். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆதலால் வகுப்புத் தொல்லை ஒழியவும், இந்தியா விடுதலையும் சுயமரியாதையும் அடையவும், தீண்டாமை என்பதே இந்தியாவை விட்டு. மறையவும், இதைத்தவிர வேறுமார்க்கமில்லை என்பது தான் இவ் வியாசத்தின் கருத்து
கிருஸ்தவ மார்க்கத்தைப்பற்றியோ என்றால் அவர்களில் ஒரு பெரும் பகுதியாரை நினைத்தால் நமது வருணாச்சிரமப் பார்ப்பனர்கள் 1000 பங்கு மேலானவர்கள் என்று சொல்லலாம் பொதுவுடைமை வாதிகள், நாஸ்திகர்கள் ஆகியவர்களில் சிலர் இந்த அபிப்பிராயத்தில் மாறுபடலாம். இப்போது நாம் இந்த அபிப்பிராயம் கூறுவது நாஸ்திகர்களுக்கும் பொதுவுடமை வாதிகளுக்கும் வைதீக முஸ்லீம்களுக்கும் அல்ல.
ஆஸ்திகர்களாய் ஏதாவது ஒரு மதக்காரர்களாய் தீண்டிக்கொள்ளப் படக்கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும், இந்தியாவை ஒரு வகுப்பாக்கி (நேஷனாக்கி) அதன் மூலம் விடுதலை அடைய வேண்டும் என்று கருதுபவர்களுக்கும் சொல்லும் யோசனையாகும். ஆகவே முஸ்லீம் சுயமரியாதை வாலிபர்கள் இதை சிந்தித்துப் பார்ப்பார்களாக,
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.01.1936
குடி அரசு- 1936 (1) 34
முனிசிபல் நிர்வாகம்
நம் வீட்டுக் காரியங்களை நாமே நமது இஷ்டப்படி நடத்த உரிமை இருக்கவேண்டும். வீட்டுக் காரியங்களில் பிறர் தலையிடுவதை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள். இது பொதுவிதி. ஆனால் வீட்டுக் காரியங்களை நடத்த நமக்கு சக்தியில்லாமல் குடும்பம் பாழானால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டியது அறிவாளிகள் கடமையல்லவா? வீட்டையோ, குடும்பத்தையோ பாழாக்க, வீட்டு முதலாளிக்கோ குடும்பத் தலைவருக்கோ உரிமையு மில்லை; அதிகாரமுமில்லை. குடும்ப நிர்வாகம் நடத்த ஆற்றலில்லாத தலைவர்களைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கி ஏனைய குடும்பத்தினர் குடும்ப நிர்வாகம் நடத்துவதையும் நாம் கண் கூடாகக் காண்கிறோம்
இந்தியர்களை சுய ஆட்சியில் பழக்கும் நல்ல நோக்கத்துடன். 1856-ல் இந்தியாவில் முனிசிபல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930-ல் அது திருத்தப்பட்டது. ஜனங்களுக்கு வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களை ஜனப் பிரதிநிதிகளே கவனித்து நடத்தினால் பொதுஜன க்ஷேமம் விருத்தியடையும் என்பது முனிசிபல் சட்டம் நிறைவேற்றி யவர்களின் கருத்து. ஆனால் தற்காலம் ஸ்தல ஸ்தாபனங்களின் நிலைமை என்ன? கட்சிப் பிணக்கும் சூழ்ச்சிகளும் இல்லாத ஸ்தல ஸ்தாபனங்கள். தென்னாட்டில் உண்டா?
சேர்மன் கட்சி, வைஸ் சேர்மன் கட்சி, மாஜி சேர்மன் கட்சி, மாஜி
வைஸ் சேர்மன் கட்சி எனப் பல கட்சிகள் தோன்றி கட்சிச் சண்டை தாண்டவமாடாத ஸ்தல ஸ்தாபனங்கள் தென்னாட்டில் எத்தனை? தலைவர். தேர்தல் காலங்களில் கட்சி பலம் தேடும் பொருட்டு கையாளப்படும் அயோக்கியத்தனமான சூழ்ச்சிகளை யார்தான் அறியார்கள்.
மேலும் இதுகாறும் ஸ்தல ஸ்தாபனங்களில் எந்த அரசியல்
கட்சியாரும் தலையிடவில்லை. இப்பொழுது புது நாணயமாக காங்கிரஸ்காரர். ஸ்தல ஸ்தாபனங்களில் பிரவேசித்திருக்கிறார்கள். ஜலம், ரஸ்தா, பள்ளிக் கூடம், ஆஸ்பத்திரி, வெளிச்சம், காற்று இவற்றை கவனித்து பொதுஜன. க்ஷேமத்தை விருத்தி செய்யவேண்டிய ஸ்தல ஸ்தாபனங்களில் அரசியல்
கட்சிகளுக்கு வேலையில்லையானாலும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் “பெரியார்கள் முடிவு செய்து விட்டார்கள். சில S வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜில்லாபோர்டு சபைகளிலும் அவர்கள் ஆதிக்கம் பெற்றும் இருக்கிறார்கள். ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ்காரர் பிரவேசிப்பது சரியல்ல வென்று காங்கிரஸ் பக்தர் வலங்கைமான் சாஸ்திரியாரும் கூறுகிறார். யார் என்ன கூறினால் என்ன? காங்கிரஸ் கும்பல் செவி சாய்க்குமா? அரசியல் காரணங்களை முன்னிட்டு ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றவில்லையென காங்கிரஸ்
வாலாக்கள் கூறிக் கொண்டாலும் அவர்களது அந்தரங்க நோக்கம் அரசியல் காரணமே என்பதை அவர்களுடைய பேச்சுகளே உறுதிப்படுத்துகின்றன. ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் தேசீயக் கொடியைப் பறக்க விடுதல், தேசீயத் தலைவர்களுக்கு உபசாரப் பத்திரமளித்தல், கதருக்கு ஆதரவு தேடுதல், ஹிந்திப் பிரசாரம் செய்தல், பாரதியார் பாடலைப் பள்ளிப் பையன்கள் பயிலும்படி செய்தல் முதலியனவே காங்கிரஸ்காரர் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதின் நோக்கம் என காங்கிரஸ்காரரே பகிரங்கமாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் கூடிய திருநெல்வேலி ஜில்லா: போர்டு கூட்டத்தில் இற்நோக்கங்களை பூர்த்தி செய்யக்கூடிய தீர்மானங்கள். சில கொண்டுவரப்பெற்று நிறை வேற்றப்பட்டும் இருக்கின்றன.
ஆகவே ஸ்தல ஸ்தாபன நிருவாகம் குட்டிச்சுவராகும் காலம் உதயமாகிவிட்டது. அதற்குப் பரிகாரம் தேட முயலாவிட்டால் பொதுஜன. க்ஷேமம் பெரிதும் பாதிக்கப்படும் என்பது நிச்சயம்
எனவே ஆபத்தான இந்தச் சந்தர்ப்பத்தில், திருப்பதியில் கூடிய முனிசிபல் ஊழியர் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களுள். ஒரு தீர்மானம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் அதாவது முனிசிபல் நிர்வாகம் மாகாண சர்க்கார் நிருவாகத்துக்கு மாற்றப்பட வேண்டு மென்று ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. மகாநாட்டுக்குத் தலைமை வகித்த வெங்கடகிரி குமாரராஜா இதை ஆதரித்துப் பேசியிருக்கிறார். மகா நாட்டைத் திறந்து வைத்த காங்கிரஸ் பக்தர் தோழர் ஸி. ஆர். ரெட்டியாரும் அதை எதிர்க்கவில்லை. எனவே அவருக்கும் அந்தத் தீர்மானம் உடன்பாடென்றே தோன்றுகிறது
நாமும் ஏறக்குறைய 10-ஆண்டுகளாகவே விடாமல் அடிக்கடி இதையே கூறிவந்திருக்கிறோம். என்றாலும் இத்தனை நாள் பொறுத்தாவது அது ஒரு மகாநாட்டில் காங்கிரஸ் கக்ஷி பிரதான புருஷர் தலைமையிலும்
ஜஸ்டிஸ் கக்ஷி பிரதான புருஷர் தலைமையிலும் வரவேற்புத் தலைவரால் பிரஸ்தாபிக்கப்பட்டதும் இவர்கள் ஆதரித்ததும் பெரிதும் மகிழ்ச்சியேயாகும்
தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனங்களின் தற்கால நிலைமையை உணர்ந்தவர்கள் எல்லாம் அதை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் ஸ்தல ஸ்தாபன நிருவாகம் அவ்வளவுக்கு ஊழலாகி விட்டது. வரிப்பணத்தில் பகுதிப்பணம் கொள்ளை போகவும் பாழாகவும் பயன்படுகின்றது
குடி அரசு- 1936 (1) 56
மேலும் பலவித பொதுநிதிகள் திரட்டி, சரியாக நிர்வாகம் செய்யாமலும், துஷ்பிரயோகம் செய்தும் அவப்பேர் சம்பாதித்திருக்கும் ஒரு கூட்டம், மெம்பர்களாயிருந்தே கண்ட்ராக்ட் எடுத்து அனுபவிக்கும் ஒரு கூட்டம் ஸ்தல ஸ்தாபனங்களில் புகுந்திருக்கும்போது நாம் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா? ஆகவே திருப்பதி மகாநாட்டுத் தீர்மானத்தை சர்க்கார் அநுதாபத்துடன் கவனித்து முனிசிபாலிட்டி களின் நிருவாகத்தை ஏற்று மக்களுக்கு வேண்டுவன செய்ய சீக்கிரம் முன் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.01.1936
ரர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சென்னை சுயமமியாதை இளைஞர் மன்றத்தின்
மூன்றாவது ஆண்டுவிழா
வாலிபர்களும் யொதுசேவையும்
ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம்
ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?
தோழர்களே! இந்த சுயமரியாதை வாலிப சங்க ஆண்டு விழாவுக்கு நானே தலைமை வகிக்க வேண்டுமென்று விரும்பியழைத்த எனது வாலிப
தோழருக்கு முதல் நன்றி செலுத்துகிறேன். இப்போது என்னை இங்கு தலைமை வகிக்க பிரேரேபித்த தோழர் C.D. நாயகம் அவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள்.
அப்புகழ்ச்சி சகிக்கமுடியாததும் எனக்கு வெட்கத்தை உண்டாக்கக் கூடியதாகவுமே இருந்தது.
நான் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களில் எதிலும் தோழர் நாயகம் பின்னடைந்தவரல்ல. அவர்களது ஆசை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை எதுவும் எவ்வகையாலும் குறைந்ததல்ல. ஆதலால் அப்படிப்பட்ட பெரியார் என்னைப் புகழ்வது என்றால் அது அதிகம் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. அன்றியும் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் புகழ்வது என்பதும் பரிகாசத்துக்கு இடமானதேயாகும். ஆனாலும் அவர்களுடைய அன்புக்கு நான் பாத்திரனாக ஆக்கிக் கொள்ளப்பட்டேனே என்கின்ற முறையில் நன்றி செலுத்துகிறேன்.
வாலிபர்கன் பெருமை
தோழர்களே இன்று இங்கு கூடியுள்ள சுயமரியாதை வாலிபசங்க ஆண்டுவிழா சம்பந்தமாய் தலைவர் என்கின்ற முறையில் நான். முன்னுரையாகவோ, முடிவுரையாகவோ ஏதாவது பேசியாக வேண்டு
குடி அரசு- 1936 (1) 58
மென்பதும் அப்படிப் பேசுவதாய் இருந்தால், முதலில் வாலிபர்களைப் பற்றி பொதுவாக சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பது அவசியமாகும் என்று கருதுகிறேன். வாலிபர்களாகிய இளைஞர்களிடத்தில் எனக்கு எப்பவும் நம்பிக்கையுண்டு இளைஞர்களுடைய சாகவாசமே எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கத்தக்கது. ஆதலால் நான் அதையே அதிகம் விரும்புகிறேன். எனக்கு 60 வயது போல் ஆகியும் இளைஞர் சாகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை. ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன்.
இளைஞர் கூட்டுறவும், அவர்களிடம் எனக்குள்ள நம்பிக்கையும் எனது தொண்டிற்கோ கொள்கைக்கோ எப்படிப்பட்ட எதிர்ப்பு ஏற்பட்டாலும், எப்படிப்பட்டவர்கள் எதிர்த்தாலும் யார் பிரிந்துபோனாலும் சிறிதும் மனமுறிவோ சலிப்போ இல்லாமல் எவ்வித எதிர்ப்புகளும் அடிக்கும் பந்து உயர்வதுபோல் எனது வுணர்ச்சிகளையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்பக் கூடியதாகவே முடிகிறது ஆதலால் இளைஞர்களைப் போற்றுகிறேன். விசுவாசிக்கிறேன் அவர்களுடன் இடையறாப் பற்றுதல் இருக்கவேண்டுமென்றே ஆசிக்கிறேன்.
மற்றும் உலகசரித்திரத்திலும் இளைஞர்களுக்கு நல்ல இடம் இருந்து வருகிறது. இளைஞர்கள் வீரமுள்ளவர்கள் காரியத்தை சாதிப்பதில் பிடிவாதக் குணம் காட்டக்கூடியவர்கள். காரிய சாதிப்புக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்காத துணிவுள்ளவர்கள். இளைஞர்களுக்கு இளைஞர்களாக இருப்பதாலேயே அதாவது அவர்களுக்கு எவ்வித கவலைக்கும் இடமில்லாமல் அவர்களது பருவம் இருப்பதினாலேயே அப்பேர்ப்பட்ட அருங் குணங்களுக்குத் தகுதியுமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். தியாகத்துக்கு ஆதாரமே பற்றற்ற தன்மையும் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத்தவிர வேறு ஒன்றிலும் லட்சியமற்ற தன்மையுமே யாகும். இதே இளைஞர்கள் பெரியவர்களென்பவர்களாகிவிட்டால் அவர்களால் ஆகக்கூடிய காரியம் மிகமிகச் சுருக்கமேயாகும்.
பெரியவர் என்றால் என்ன அருத்தம்? பெண்டு, பிள்ளை, வீடு, வாசல் சொத்து, சுகம் இவைகள் சம்மந்தமான தொடர்பும் கவலையும் உள்ளவர்கள்தான் பெரியவர்களே ஒழிய வெறும் வயதே பிரதானமல்ல
வாலிபத்தண்மையின் அபாயம்
வாலிபர்கள் என்பதற்கும் மேற்கண்டவைகள் என்பவற்றைப் பற்றிய கவலை அற்ற தன்மையே ஒழிய சிறு வயது மாத்திரமே காரணமல்ல ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆதலால் தான் வாலிபர்கள் ஒவ்வொரு தேச சரித்திரத்திலும் நல்லிடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட இளைஞர்கள் சுலபத்தில். பற்றிக் கொள்ளக் கூடிய ஒரு அபாயகரமான வஸ்து என்பதற்கு உவமையாகச் சொல்லக்கூடியவர்கள் என்பதையும் நான் சொல்லாமல் இருக்க முடியாது. ஏன் என்றால், இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றிவிடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்கு காணப்படுகின்றதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள். உதாரணமாக குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லா சாமிப் பண்டிகை வந்து அக்கொண்டாட்டம் முடிந்த பிறகு சுமார் 5 நாள் அல்லது ஒரு மாதம் வரை குழந்தைகள் புலி வேஷம் ஆடிக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கலாம் அதுபோலவே மாரியம்மன் பண்டிகைக் கொண்டாட்டம் வந்தால் அது முடிந்த 15 நாள் 1 மாதம்வரைகரகம் எடுத்தாடுவதும், கம்பம் எடுத்தாடுவதும், நெருப்பு சட்டி எடுத்தாடுவதுமாய் விளையாடுவதைப் பார்க்கலாம் அதுபோலவே, புரட்டாசி, மார்கழி மாதம்பஜனை கொண்டாட்டங்கள் வந்து போனால் 5 நாள் வரையிலாவது ராம் ராம் ஜெய கீதாராம் என்றும், கோவிந்தம் பஜரே கோபாலம் பஜரே என்றும் கைதட்டி ஆடும் கூத்துக் களையும் குழந்தைகளிடம் பார்க்கலாம். இவைகளுக்கெல்லாம் காரணம் கொண்டாட்டங்களையும், குதூகலங்களையும் கண்டு அவைகளால் இவர்கள் மயங்கி இழுக்கப்பட்டு விடுவதேயாகும்
சுலபத்தில் வழுக்கி விழக்கூடும்
அதுபோல்தான்வாலிபர்கள்ஒருசெல்வாக்கையோ ஒருபிரசாரத்தையோ காதலையோகண்டு விட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொது ஜன ஆதரவு, புகழ், உற்சாகம் ஆன காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது
ஆதலால் வெறும்செல்வாக்கும் புகழுமான காரியங்களில் காட்டக் கூடிய உற்சாகம், ஊக்கம், துணிவு, தியாகம் ஆகியவை சிற்சில சமயங்களில் நன்மையை விட தீமையை அதிகமாக உண்டாக்கி விடுகின்றது. ஆதலால் வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் ஆகியவைகள் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள்
குடி அரசு- 1936 (1) 60
ஆவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநல சூழ்ச்சிக்கு
இரையாகிவிடுவார்கள். இதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன். எனது வாலிப பருவமும் எனக்கு இன்று இந்த புத்தி கற்பிக்கக் கூடியதாய்த்
தான் இருந்து வந்தது
புகழுக்கு அடிமைப்படக் கூடாது
ஆதலால் அவர்களை நான் வேண்டிக் கொள்வது உற்சாகத்துக்கும், புகழுக்கும் அடிமை ஆகாதீர்கள் என்பதேயாகும். இதை ஏன் இவ்வளவு அழுத்திச் சொல்லுகிறேனென்றால், பாமர மக்களிடம் இன்று இருந்து வரும் தேசியம், தேசபக்தி என்பவைகள் சம்பந்தமான செல்வாக்குக்குநமது எண்ணரிய வாலிபர்கள் அடிமையாகி மனித சமூகத்துக்குச் செய்யவேண்டிய உண்மைத் தொண்டை மறந்து அவர்களது துணிவையும், ஊக்கத்தையும், தன்நல
மறுப்பையும் பாழாக்கி வருவதைப் பார்த்தே சகிக்காமல் இவ்வாறு கூறுகிறேன்.
எப்படி இருந்தபோதிலும் நான் ஆற்றிவரும் இச்சுயமரியாதைத் தொண்டிற்கு இளைஞர்களின் ஆதரவே இன்று வரை உள்ள இவ்வளவு வெற்றியையும் அளித்திருக்கிறது.
இதிலும் எவ்வளவோ விஷமங்களும், சூழ்ச்சிகளும் இயக்கத்திலீடு பட்டவர்கள் என்பவர்களாலேயே நடந்தும், பல வாலிபர்கள் தங்கள் உறுதிகளை கெடுத்துக்கொள்ளாமல் துணிந்து இருந்ததானது எனது ஊக்கத்தை தட்டி எழுப்பி வருகிறது.
நமது நிலை
இன்று முதலில் பேசிய தோழர் முருகப்பா அவர்கள் நமக்குள்ளகஷ்ட நிலைமையையும், எதிர்ப்புகளையும் நன்றாய் விளக்கிக் காட்டினார்.
நாம் பொருளாதாரத்தில் மிக்க கஷ்ட நிலையில் இருக்கிறோம். நாம் யாருக்காகப் பாடுபடுகின்றோமோ அவர்களை நம் எதிரிகளுக்கு பொருளைக் கொடுத்து நம்மை எதிர்க்கச் செய்தவர்களாகிறார்கள். நம் மக்களில் செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் பலருக்கு அறிவும் இல்லை; சுயமரியாதையும் இல்லை. நாம் ஜாதிவித்தியாசத்தை ஒழிக்க வேண்டு மென்றால் ஜாதி முறையில் நான்காம் ஜாதியாய் கீழ்ஜாதியாய் இழிவான ஜாதியாய் இருப்பவனே ஜாதிவித்தியாசம் வளர்க்கப் பொருள்கொடுத்து உதவுகிறான். நம் இயக்கத்துக்கு உதவ அஞ்சுகிறான்; ஏன்? மறுக்கவும் செய்கிறான். சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உணர்ந்தவர்கள் யார்?
பொருளாதாரம்
இந்த சென்னையில் உள்ள இந்த இளைஞர் மன்றம் இந்த வருஷ மெல்லாம் 40 ரூபாயில் வேலை செய்து இன்று இவ்வளவு விமரிசையாக ஆண்டுவிழா கொண்டாடுகிறது.
வட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மற்ற பிற்போக்கான இயக்கங்களுக்கு லக்ஷக்கணக்கான ரூபாய்கள். வசூலாகின்றன. அவற்றால் ஜாதி வித்தியாசங்கள் காப்பாற்றப்படுகின்றன. உதாரணமாக இந்நாட்டில் உள்ள ராமகிருஷ்ண சங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற விடங்களில் எல்லாம் 1000, 10000 கணக்காக
பொருள் பறித்துவிடுகிறது.
ராஜாக்கள், ஜமீன்தார்கள், லேவாதேவிக்காரர்கள் கண்ணை மூடிக் கொண்டு அள்ளிக்கொடுத்து முட்டாள்களாகி தங்கள் ஜாதி இழிவைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்.
அச்சங்கத்தின் கொள்கை என்ன? அங்கு நடப்பதென்ன? என்பன. வாதிகள் யாவருக்காவது தெரியுமா? அங்கு போய் பாருங்கள். ஜாதி வித்தியாசமும் ஜாதிபாகுபாடும் எவ்வளவு தாண்டவமாடுகின்றன? எப்படி பாதுகாக்கப்படுகின்றன? என்பதை பாருங்கள்
தமிழ் மக்களுக்கு ஞானமோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்தால் நமது பிறவி எதிரிகள் நன்மைக்கு ஆகவும், நமது இழிவை காப்பாற்றுவதற்கு ஆகவும் நடக்கும் ஸ்தாபனங்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுப்பார்களா?
சேரமாதேவி குருகுலத்தை தோழர் வரதராஜுலு போர்தொடுத்து அழித்த மாதிரியல்லவா அழித்திருப்பார்கள். விவேகானந்தரின் பெயரைப் பயன்படுத்தி வாழுகிறார்கள். விவேகானந்தரின் உபதேசமோ கொள்கையோ அங்கு காணப்படுகிறதா?
ஆகவே நமக்கு பொருளாதாரத்துக்கு எப்பொழுதும் வசதி ஏற்படாது. நாமாக நம் பொருளைச் செலவு செய்துதான் இப்படிப்பட்ட காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது
நாம் வெற்றி அடைந்தவர்கள்
நாம் பொதுஜனங்களுக்கு ஒரு விஷயத்தில் நன்றி செலுத்தக்
கடமைப் பட்டிருக்கிறோம். அதென்னவென்றால் பொதுஜனங்கள் நம்மை இதுவரை கொல்லாமல் உயிருடன் இருக்கவிட்டு வைத்திருப்பதேயாகும்
ஏனெனில், நமது கொள்கைகள் அப்படிப்பட்டவைகள்.
இன்று இந்நாட்டில் மாத்திரமல்லாமல் உலகில் செல்வாக்குடனும் பக்தியுடனும் போற்றுதலுடனும் இருந்துவரும் கொள்கைகளையும், அமைப்புகளையும், ஸ்தாபனங்களையும் எல்லாம் எதிர்க்கின்றோம்; பழிக்கின்றோம்; பலவற்றை தலைகீழாக மாற்ற வேண்டும் என்கிறோம்; பலவற்றை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிறோம். இப்படிப்பட்ட நாம் இன்று இங்கு இந்த பிரிட்டிஷ் ஆட்சி இல்லாதிருந்தால் என்ன கதி அடைந் திருப்போம் என்பதை இந்த பிரிட்டிஷ் ஆட்சி இல்லாத காலத்தில் நம்
குடி அரசு - 1936 (1) 62
போன்றவர்கள் பட்ட பாட்டையும், அவர்களுக்கு ஆக எழுதி வைத்திருக்கும் தண்டனை கண்டன முறைகளையும் சரித்திரங்களில், புராணங்களில், சாஸ்திரங்களில் வாசித்துப் பாருங்கள் ஆகவே நாம் பொருளையோ செல்வாக்கையோ எதிர்பார்த்தால் நசிந்தே போய்விடுவோம். என்றாலும் நாம் வெற்றியே அடைந்துள்ளோம்
மனிதன் சுயேச்சைக்கு உமியவன்
மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன். காரணம் அவனுக்கு செளகரியம் இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல் மனிதனுக்கு அதற்கு ஏற்ற அறிவு சக்தி இருக்கிறது. ஆனால் மனிதன் அப்படிப்பட்ட செளகரியத்தையும், அறிவு சக்தியையும் அடிமைத்தன்மைக்கும் இழிவுக்குமே பயன்படுத்திக் கொள்ளுகிறான். அதனாலேயே மனித வர்க்க வாழ்வில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்க ஆசைப்படுகிறோம். இது நமது விளையாட்டுக்கு ஆக அல்ல; நேரம் போக்குக்காக அல்ல; கண்டு கண்டு சகிக்க முடியாத பரிதாபத்தினாலேயே இக்காரியத்தைச் செய்யத் துணிகின்றோம். பகுத்தறிவு காரணமாகவே மனிதன் மிருகத்திலும் இழிவான ஜீவனிலும் கேடாக வாழ்கிறான். இது தானா நாம் பகுத்தறிவுக்குச் செய்யும் மரியாதை?
ஜாதி வித்தியாசம்
ஜாதி வித்தியாசத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?
பொருள்வித்தியாசத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?
இவ் வித்தியாசங்கள் பகுத்தறிவினாலா? அல்லது மிருக சுபாவத்தாலா? அயோக்கியத்தனத்தாலா? என்று யோசித்துப் பாருங்கள். இவைகள் கடவுள்கள் முதல் தீர்க்கதரிசிகள், மகாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள் முதல் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றனவே. ஆகவே இவர்கள் இத்தனை பேர்களும் (இருந்திருந்தால்) பகுத்தறிவாளர்கள் என்றோ மனிதத்தன்மை உடையவர்கள் என்றோ சொல்ல முடியுமா? எந்த தர்ம ராஜ்ஜியமும் நீதிராஜ்ஜியமும் மக்களுக்குள் இப்படிப்பட்ட பிறவி இழிவையும் தொல்லையையும் ஏற்படுத்துவதை - இருந்து வருவதை ஒழிக்க முடியவில்லையே. எப்படிப்பட்ட மதமும் மத தர்மமும் இவைகளை ஒழிக்கவில்லையே. ஆகவே நாம் இவைகளை எதிர்ப்பதால் என்ன கெடுதி என்று கேட்கின்றேன்.
சுயமரியாதை இயக்கம்ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்த தாலேயே அதன் யோக்கியதையை கெடுத்துக்கொண்டது என்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று சம்பந்தம்
மனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வருகிறது. ஜாதியோ மதத்தினால்தானே உண்டாகி வருகின்றது. மதமோ கடவுளால் தானே ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உண்டாகி வருகின்றது. இவற்றுள் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.
ஜாதியை அழித்துவிட்டால் இந்துமதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?
ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?
ஜாதியும் மதமும் அழிந்தால் கடவுள் இருக்க முடியுமா?
உதாரணம்
ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தயவு செய்து கேளுங்கள்.
நான்கு ஜாதியை இந்து மத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறை களை கீதை முதலிய கடவுள் வாக்குகள் ஒப்புக்கொள்கின்றன. நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்தந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன், அத்தருமங்கள் தவறி எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்'' என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார்.
இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதி பேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும் கடவுள்களையும் சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்கு பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை மதத்தை கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்.
நாம் மாத்திரமா எதிர்க்கிறோம்?
கடவுளை, மதத்தை, சாஸ்திரங்களை நாங்கள் தானா எதிர்க்கிறோம். மற்றவர்கள் வாழ்த்துகிறார்களா? என்று பாருங்கள். எந்த இந்து ஒருவன். ஜாதிபேதமும், ஜாதிப்பிரிவும், ஜாதி தர்மமும் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறானோ, யார் யார் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூட சொல்லுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் மதத்தையும், கடவுளையும் ஒழித்தவர்கள் அல்லவா? அல்லது மதத்தையும் கடவுளையும் எதிர்த்தவர்கள் அல்லவா? மீறினவர்கள் அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். கிருஷ்ணன் கடவுளென்றும், கீதை அவன் உபதேசமென்றும் கருதுபவர்கள் ஜாதியையும் ஜாதி தர்மத்தை (தொழிலையும்) ஒழிக்க
குடி அரசு- 1936 (1) 64
முடியுமா ஒழிய வேண்டுமென்று சொல்லவாவது முடியுமா? என்று கேட்கின்றேன். இந்த காரணத்தால் தானே காந்தியார் வெகு ஜாக்கிரதையாக நான்கு ஜாதிகளையும் அவைகளினது தர்மங்களையும் (வர்ணாசிரம தர்மத்தை) காக்கவே நான் உயிர் வைத்திருக்கிறேன். அதற்காகவே சுயராஜ்யம் கேட்கிறேன். அதற்காகவே தீண்டாதவர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் செத்தாலும் கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறேன் என்கிறார்.
காந்தி அவதார புருஷரானதேன் அதனால் தானே அவர் பழய தர்மங்களைக் கெடாமல் காப்பாற்ற அவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும், மகாத்மா என்றும் பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகவே அவர் ஒழிந்த மற்றவர்கள் அதாவது ஜாதி வித்தியாசமும், ஜாதி தர்மமும் ஒழிக்க வேண்டுமென்கின்றவர்கள் எல்லோரும் ஒரு அளவுக்காவது சுயமரியாதைக்காரர் அல்லவா என்று பாருங்கள். கராச்சி தீர்மானத்தின் முக்கிய தத்துவமே பழைய சாஸ்திரங்கள். பழக்க வழக்கங்கள் தொழில் முறை முதலியவைகள் கூட காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதும், அந்தப்படி தீர்மானங்கள் இன்றும் வைத்துக் கொண்டிருப்பதும், ஆஸ்திகத்தைக் காப்பாற்றவும் கிருஷ்ணனையும் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் வருணாசிரம தர்மத்தையும் காப்பாற்றவுமே ஒழிய வேறு என்ன?
நாஸ்திகர்களாகாமல் முடியாது ஆகவே நாம் உண்மையில் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும் வருணாச்சிரம தர்மத்தையும் சூத்திரத் தன்மையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாஸ்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் மாத்திரமல்லாமல் மற்றபடி வேறு யார் ஜாதியை ஒழிப்பதானாலும் நாஸ்திகர்களாகித்தான் தீரவேண்டும்.
நாம் மாத்திரம் துணிவுடன் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் இந்த விஷயங்களில் உறுதியாய் இருப்போமானால் ஜாதி பேதத்தால் ஜாதிக் கிரமத்தால் கஷ்டப்படும் மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்ந்துதான் தீருவார்கள்.
பார்ப்பனர்கள் மாத்திரம் எந்தக்காலத்திலும் நம்முடன் சேரமாட்டார்கள். ஏனெனில் இந்த நமது இந்துமதமும், சாஸ்திரமும், கடவுள்களும் அவர்களுக்காக பயன்படும்படியான முறையிலேயே கற்பிக்கப்பட்டு அவர்களே அவற்றால் பயனடைந்து உலகில் உள்ள மனித சமூகத்திலேயே உயர்நிலையை அடைந்து வாழ்ந்து வருவதால் இன்று பார்ப்பனர் ஒழிவதா
ஜாதி ஒழிவதா என்கின்ற நிலையில் நம்முயற்சி இருந்து வருகிறது. பார்ப்பனர் ஒழிந்தால் ஜாதியும் மதமும் கடவுளும் ஒழிந்ததென்றே சொல்லலாம்; ஜாதியும் மதமும் கடவுளும் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஒழிந்தார்கள் என்றே சொல்லலாம்; இவ்வளவு ஏன்? ஜாதி ஒழிந்தாலே பார்ப்பனர்கள் ஒழிந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் தான்.
சு.ம. இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனர்களுக்கே இவ்வளவு பயங்கரமான எதிரிகளாய் காணப்படுகின்றன.
ஜாதி ஓழிப்புக்குக் காங்கிரஸ் எதிமி.
ஜாதி ஒழிப்புக்கு விரோதமாய் பார்ப்பனர்களின் சூழ்ச்சி எப்படிப் பட்டது என்பதை நமது மக்கள் உணரவில்லை தீண்டாமை ஒழிப்புக்கு காந்தியார் பாடுபடுகிறார். ஆனால் தாழ்த்தப் பட்டமக்கள் செருப்பு தைக்கவேண்டும். தோல் பதனிடவேண்டும் என்பதை மாத்திரம் அவர் மாற்றிக்கொள்ள மாட்டார்.
நமது காங்கிரஸ் அபிமானிகள் தீண்டாமை வேலை மேற்கொண்டார்கள். பணம் வசூலித்தார்கள். அதைப் பயன்படுத்தி தோழர் சகஜானந்தத்தைப்
பிடித்து இந்துமதமும் இந்து மத தர்மமும் காப்பாற்ற வேண்டும் என்று பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து பத்திரிகை நடத்தவும் உதவி செய்தார்கள்.
தோழர் M.C. ராஜாவைப் பிடித்து இந்து மதத்தின் புனிதத்தன்மையை பிரசாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் இருந்தன்மையில் இருப்பதை கண்டே டாக்டர் அம்பேத்கார் இந்துமதத்தை அழிக்க தன்னால் முடியாதென்று கருதியும், இந்துமதத்தில் இருந்துகொண்டு தீண்டாமையை ஒழித்துக்கொள்ள முடியாதென்று கருதியும் இந்துமதத்தை விட்டுத் தாம் விலகிக் கொள்வதாக முடிவு செய்துகொண்டார். தீண்டாமை விலக்குப் பண்டிலிருந்து கொடுக்கப்படும் சம்பளம் பார்ப்பனருக்குத்தான் பயன்படுகின்றன. தீண்டாமை விலக்குப் பண்டு போன யோக்கியதையை இன்று யாராவது தெரியவேண்டுமானால் திலகர்நிதி மோசடியே மேலென்று கருதலாம். நடத்தையைப் பார்த்தாலும் காங்கிரஸ்காரர் தோழர்கள் ராமசாமி வரதராஜுலு முதலியவர்களை நடத்திய மாதிரியே மேலென்று தோன்றலாம். தோழர் சன்யாசியை நடத்திய மாதிரியை யோசித்துப்பாருங்கள்.
காங்கிரசிலும் ஜாதியுணர்ச்சி.
எந்தக் காங்கிரஸ் கூட்டத்திலாவது பிராமணர்கள் வேறு மற்றவர்கள் வேறு என்கின்ற பிரிவு இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறார்களா? சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் கூட பார்ப்பனரல்லாதவர்களை வெளியில் வைத்து சாப்பாடு போடவில்லையா?
காங்கிரஸ் கான்பரன்ஸ் முதலிய எந்தக் கூட்டங்களிலும் பார்ப்பனர் களைக் கொண்டுதான் சமையல் செய்திருக்கிறார்களே ஓழிய மற்ற ஜாதிக்காரர்களை சமையல் வீட்டில் நுழையவிட்டிருக்கிறார்களா?
குடி அரசு- 1936 (1) 66
சுயமரியாதை மகாநாடுகளையோ, கூட்டங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். நாடார், நாயுடு, முஸ்லீம், தீண்டப்படாதார் என்கின்றவர்கள் எல்லோரும் கலந்து சமையல் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருமே கலந்து பரிமாறுகிறார்கள். சைவர் முதல் எல்லாப் “பெரிய ஜாதிக்காரர்கள் என்பவர்களும் ஒன்றாய் உட்கார்ந்து தான் சாப்பிடுகிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்களின் தீண்டாமை ஒழிப்புச் சூட்சியை நீங்கள் இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.
சுயமரியாதைக்காரர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் தீண்டாமை இல்லை என்கின்ற காரணத்துக்காகவே சில மதங்களைப் பாராட்டுகிறார்கள். தீண்டாதவர்களுக்கும் சம உரிமை கொடுக்கிறார்கள் என்பதற்காகவே சில அரசியல் இயக்கங்களையும் ஆதரிக்கிறார்கள். மனித உரிமையை அளிக்க மறுக்கும் எதையும் ஒழித்துத் தரவேண்டியது மனிதத் தன்மையின் குணம் என்பதை சுயமரியாதை இயக்கம் பறையடிக்கிறது
ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும்
நிற்க, தோழர்களே,
சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மக்களிடையே சில அபிப்பிராய பேதமிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது
அவ்வவிப்பிராயபேதங்களுள் ஒன்று, நாம் ஜஸ்டிஸ் கஷியாருடன் சம்மந்தப்பட்டு அதை ஆதரிப்பதாக கூறப்படுகிறது
இதைப்பற்றி நான் சிறிதும் கவலைகொள்ளவில்லை. அது அவரவர்கள் அபிப்பிராயம். சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கவியை விட்டு பிரிந்து ஒருநாளும் இருக்கவில்லை. ஜஸ்டிஸ் க்ஷி சுயமரியாதை இயக்கத்தை விட்டுப்பிரிந்து இருக்கலாம். அது மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ்
கக்ஷியார் சுயமரியாதை இயக்கத்துக்கு பல தொல்லைகள் விளைவித்து
இருக்கலாம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அவற்றிற்கு ஜஸ்டிஸ் கக்ஷி காரணமல்ல. அவ்வியக்கத்தில் ஈடுபட்டு அவ்வியக்கத்தை கைப்பற்றிய சுயநலக்காரர்களின் செய்கை
என்றுதான் கருதவேண்டும். ஜஸ்டிஸ் இயக்கத்தின் கொள்கை நம்மை ஒரு
கெடுதியும் செய்துவிடவில்லை.
ஜஸ்டிஸ்கக்ஷியானது ஒவ்வொரு தனிப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நன்மையையும் உண்மையாய் கவனித்து அவற்றிற்கு உரிய உரிமைகளையும், சந்தர்ப்பங்களையும் கொடுப்பது, ஏற்படுத்துவதே முக்கியக் கொள்கை என்பதை அக்ககடி தங்கள் கொள்கையாக வைத்திருக்கும் வரை அதன் தலைவர்களால் அதைக் கைப்பற்றி இருப்பவர்களால் நமக்கு எவ்வித கெடுதி ஏற்படுவதாயினும் அதை வெறுக்க நம்மால் முடியாது ஏட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கடமையை மறக்கலாமா?
அதற்கு பார்ப்பனர்களால் கஷ்டம் உண்டாக்கப்பட்ட காலங்களில் எல்லாம் சுயமரியாதை இயக்கம் இந்தப் பத்து வருஷகாலமாய் ஆதரவளித்து வந்திருக்கிறது. அதை அக்கட்சி உணராமல் இருக்கலாம். காரணம் அதில் சில பதவிகளும் பெரும்பணம் வருவாய்களும் இருப்பதால் சிலர் நாணயமாய் யோக்கியமாய் நடந்துகொள்ள முடியாமல் போகிறது. இது மனித இயற்கை என்பதோடு இதற்காகவே நாம் நமது கடமையில் இருந்து தவறிவிட முடியாது. நமக்கு வேண்டிய கொள்கைகளில் சிலதாவது அங்கு இருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி பார்ப்பனர்களும், அதனால் பயன் எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் செய்து வந்த விஷமப் பிரசாரத்தினால் அக் கட்சி பாமர மக்களிடை போதிய செல்வாக்கற்றுப் போனதால் நமது இளைஞர்கள் பலருக்கு எழுச்சி குன்றிவிட்டதென்பது தவிர, மற்றபடி ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கின்ற தோழர்களிடம் வேறு தக்க காரணங்களை நான் காணமுடியவில்லை: ஆதலால் நான் அப்படிப்பட்ட அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்க முடியாதவனாயிருக்கின்றேன். ஆனபோதிலும் இவற்றால் எல்லாம் எதிரிகளுக்கேற்பட்ட செல்வாக்கினாலும் இனியும் ஏற்படப்போகிற செல்வாக்கினாலும் அவர்கள் என்ன செய்யப் போகிறார்களென்பதைப் பார்க்கவே நான் காத்திருக்கிறேன்.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது என்கின்ற கேள்விக்கு ஆக யாரும் பதில் சொல்ல கவலை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
ஜஸ்டிஸ் கட்சி செய்த வேலை
ஜஸ்டிஸ் கட்சி மனித சமூக உரிமையை சூதுவாதில்லாமல் பாரபக்ஷ
மில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்அதிகாரத்தில் அது அதற்கானவற்றை செய்திருக்கிறது. அது எந்த நிலையிலும் மக்களை ஏமாற்றி வஞ்சிக்க வில்லை. அதன் தொண்டாகிய ஜனப் பிரதிநிதித்துவத்தை சகல வகுப்புக்கும் அது அளித்திருக்கிறது. மற்ற மாகாணங்கள் பின்பற்றும்படியாக அனேக உயர்ந்த காரியங்களைச் செய்திருக்கிறது. இந்தியாவுக்கு வந்த எந்த அரசாங்கமும் செய்துமுடிக்காத காரியங்களை செய்திருக்கிறது. மனிதனை: பொதுவாழ்வில் சமமாக பாவிக்காவிட்டால் தண்டனையென்று பினல் கோர்ட்டில் சட்டமியற்றியிருக்கிறது
பாமர மக்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்பட்ட வகுப்பாருக்கு நன்மைகள் செய்த காரணத்தாலேயே ஏக போக உரிமைக்காரர்கள், பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்கிறார்கள். நாமும் அதற்கு ஆதரவாளிகளாயிருப்பதா?
குடி அரசு- 1936 (1) 68
காங்கிரஸ் என்ன செய்தது? இவ்வளவு குறைகூறும் காங்கிரஸ்காரர்கள் இந்த 50 வருடமாய் இந்திய மக்களுக்குச் செய்த நன்மையென்னவென்று கேட்கின்றேன்.
சென்றவாரத்தில், காங்கிரசுக்காக 50 வருஷ பொன் விழா கொண்டாடினார்கள். இது மக்களை ஏய்க்கவல்லாமல் இதனால் ஏற்பட்ட பலன் என்ன? காங்கிரசினிடம் ஒரு பற்றுதலும் மாய்கையும் ஏற்பட்டு
காங்கிரஸ் பூசாரிகளுக்கு மதிப்பும் வயிறு வளர்ப்பும் ஏற்படவேண்டும் என்பதல்லால் வேறு ஏதாவதுண்டா?
வெள்ளி விழா கொண்டாடினார்களா? காங்கிரசுக்கு 25 வயதானதுக்கு வெள்ளிவிழா கொண்டாடியிருந்தால் இப்போது 50 வயதுக்கு பொன்விழா கொண்டாடுவது முறையாகும் என்று சொல்லலாம். அதில்லாமல் இப்போது திடீரென்று 50 @ பொன்விழா கொண்டாடினார்கள். காங்கிரசு செய்த ஒரு நன்மையாவது அவ்விழாவில் எடுத்து சொல்லப்பட்டதா? சொல்ல முடிந்ததா? சொல்ல ஏதாவது இருக்கிறதா? எவ்வளவு புரட்டு பாருங்கள்! சாமிகள் என்பவற்றிற்கு செய்யும் உற்சவங்கள் போல் காந்திப்படம் காந்தி உருவம் ஆகியவைகளுக்கு ஊர் கோலம் முதலியவைகள், மேளவாத்தியங்கள் தேங்காய் பழ நைவேத்தியம், கற்பூர ஆலத்தி முதலிய காரியங்கள் நடந்தன. இவையெல்லாம் இந்தியரின் காட்டுமிராண்டித் தனத்தை, மிருகப் பிராயத்தை, மடமையைக் குறிக் கின்றனவே அல்லாமல் வேறு ஏதாவது அறிவுடமையை விளக்குகிறதா நாணையத்தை விளக்குகிறதா? இதற்குத் துணை புரிந்த பாதகர்கள் இந்திய மக்களை என்ன செய்யத்தான் பயப்படுவார்கள்? இந்தக் கூட்டத்தார்கள் தானே இன்று தேசபக்தர்கள் தேசாபிமான் சிங்கங்கள், மகாத்மாக்கள், மகா மகாத்மாக்களாக மூட மக்கள் முன் விளங்குகிறார்கள். இதைப் பற்றி எந்த சர்க்காராவது, எந்த அறிவாளியாவது கவனித்தார்களா?
10 நிமிஷம் கொடுக்கிறேன்
இங்கு இப்போது 10 நிமிஷ நேரம் சாவகாசம் கொடுக்கிறேன். ஒருவராவது காங்கிரஸ் இந்திய மக்களுக்கு இன்ன நன்மை செய்தது என்று ஒரு விரலை விடட்டும் பார்க்கிறேன்.
சமுதாயத் துறையில் நடந்ததையும் கெடுத்து, நடப்பதையும் கெடுத்தது என்பதை யார் மறுக்கிறீர்கள்? அதுவிஷமாய் ஏதாவது ஒரு சட்டம் கொண்டுவந்தார்களா? அல்லது கொண்டு வந்த எந்த சட்டத்தை யாவது எதிர்க்காமல் ஆதரித்தார்களா? பொருளாதார விஷயத்தில் ஏழை மக்களுக்குப் பயன்படும்படி என்ன செய்தார்கள்? பெரும் பெரும் சம்பளங்களை அரசாங்கத்தில் ஏற்படுத்தி நாட்டில் யோக்கியர்களே ஒருவர் கூட இருக்க முடியாமற்படி செய்தார்கள்
© ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விவசாயத் துறையில் என்ன செய்தார்கள்? பல உத்தியோகங்கள் ஏற்படுத்தி அவைகளை மனித சமூகத்துக்கு துரோகம் செய்தாவது கைப் பற்றும்படி செய்தார்கள்.
அரசியலில் என்ன சீர்திருத்தம் ஏற்படுத்திணார்கள்?
ஜஸ்டிஸ்காரர்கள் 10, 15, வருஷமாய்த் தான் மந்திரி ஆனார்கள். அதற்கு முன் 35, 40 வருஷம் காங்கிரஸ் ஸ்தாபனம் அரசாங்கத்தார் ஆதரவு பெற்றதாகவே இருந்து வந்ததல்லவா? ராஜபக்தி ராஜவிஸ்வாசத்தோடே நடைபெற்று வந்ததல்லவா? தோழர் டி. ரங்காச்சாரியாரும் டி. விஜய ரங்காச்சாரியாரும் அரசர்கள் விஷ்ணு அம்சம் என்று ஐரோப்பாவில் போய் சொல்லிவிட்டு வந்தார்கள் அல்லவா? காங்கிரஸ் தலைவர்கள் எழுந்து நின்று ராஜ விஸ்வாசம் கூறிவந்தார்களல்லவா? அந்தக்காலம் மூதல் ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரியாய் வந்தவரை என்ன நன்மை செய்ய முடிந்தது? சொல்லட்டுமே ஒரு ஆண்மையுள்ள காங்கிரஸ் பக்தன் என்றுதான் கேட்கிறேன்.
காங்கிரசின் நாணயம்
காங்கிரசுக்காரர்கள் நாணயத்துக்கு உங்களுக்கு உதாரணம் வேண்டுமானால் காங்கிரஸ் சரித்திரத்தையும், அதில் தோன்றின தலைவர்களின் யோக்கியதைகளையும், அவர்கள் உபதேசங்களையும், காங்கிரஸ் கொள்கைகளையும், அவற்றின் திட்டங்களையும் அவற்றைப் பின் பற்றின யோக்கியதைகளையும் அவற்றிற்கு ஆக கோடிக்கணக்கான பணங்கள் செலவுசெய்து வினியோகித்த நாணையங்களையும் அப்பணம் வகுலிக்கவும் எலக்ஷனில் வெற்றிபெறவும் மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி களையும் கவனித்துப் பாருங்கள். சுயமரியாதைக்காரர்கள் ராமாயணத்தை ஆராய்ச்சி செய்கிறமாதிரி கூட ஆராய்ச்சி செய்யாதீர்கள். ஒரு காங்கிரஸ் பக்தனாய் இருந்தே யோக்கியமாய் பகுத்தறிவோடு ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீங்கள் வெட்கப்படாமலிருக்கமாட்டீர்கள் என்று உறுதி கூறுகிறேன். ஆதலால் காங்கிரஸ் பயித்தியம் என்பது மனிதனின் பலவீனம், அறிவற்ற தன்மை அல்லது சுயநலம் என்பதல்லாமல் வேறு இல்லை. ஆகவே தோழர்களே போகிறவர்கள் போகட்டும். இருக்கிறவர்கள் இருக்கட்டும். சுயமரியாதை இளைஞர்கள் தாங்கள் சரி என்று பட்டதற்கு ஆக தைரியமாய் உழையுங்கள். இச்சென்னையில் 16-சுயமரியாதைச் சங்கங்கள் இருப்பதாய் அறிகிறேன். அவைகளில் இரண்டொன்று உள்ளுக்குள் இருந்தே தொல்லை விளைவிக்கும் முறையைக்கொண்டிருப்பதாய் சேதி எட்டுகிறது. அதைப்பற்றி கவலை இல்லை. அவர்களே நம்மை ஏமாற்றி விட்ட பெருமை அடையட்டும். ஆனால் நீங்கள் மாத்திரம் தைரியத்தை விடாமல் உழையுங்கள்.
குடி அரசு- 1936 (1) 70
கேள்விகள்
திலகர் நிதி
முதல் கேள்வி ¢
திலகர் சுயராஜ்ஜிய நிதியைப்பற்றி தோழர் ஈ.வெ.ரா. மீது தினமணி எழுதியிருந்த குறையைப் பற்றியதாகும். அதாவது வைக்கம் சத்தியாக்கிரக சம்மந்தமாய் 1000 ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை என்பது தொக்கி
இருந்தது
இந்தப் புகாரானது திலகர் நிதியைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் மீது ஏற்பட்ட புகார்களுக்கு ஒரு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.ராமசாமியே கணக்கு கொடுக்கவில்லை என்று சமாதானங்
கூறிற்று. இது மிகவும் வேடிக்கையான சமாதானம். ஏனெனில் ஈ.வெ.ராமசாமி ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லையானால் அதற்கு ஆகவே இந்தியன் பினல் கோட்டில் திருட்டு செக்ஷனையே எடுத்து விடவேண்டுமா என்று கேட்கின்றேன். நான் இந்த ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு கொடுத்ததையும் மற்றும் விவரத்தையும் எடுத்துக் கூறிய பின்பே கருவாடு
திருட்டுக் கொடுத்த பார்ப்பனர் போல் அது சம்மந்தமாக மறுபடியும் பேச முடியாமல் இந்த மாகாணத்து பார்ப்பனர்கள் வாயும் அவர்களது பத்திரிக்கைகளின் விஷமங்களும் அடங்கின. ஆயிர ரூபாய் விஷயமாய் நான் கணக்கு அப்போதே கொடுத்து இருக்கிறேன் என்பதோடு அதைத்தெரிய வேண்டியவர்கள் ஈரோட்டுக்கு வந்தால் இன்னும் விவரமாக காட்டத்தயாராய் இருக்கிறேன். அன்றியும் திலகர் நிதியைப்பற்றி ஜஸ்டிஸ் கவி மாத்திரம் குறை கூறினதாய் எழுதி தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்கள்.
இந்தியாவில் எல்லா மாகாணத்தில் உள்ள பத்திரிகைகளும், ஜெயகர் போன்ற பெரியார்களும், பல காங்கிரஸ்காரர்களும் குறை கூறினார்கள். இன்றும் பந்தயம் கூறுகிறார்கள். நடுநிலைமை கொண்ட ஒரு கமிட்டியாரின் பரிசீலனைக்கு காங்கிரஸ்காரர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா என்று கேட்கிறார்கள். ஆகவே திலகர்நிதி ஒழுங்காகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் கூறுவதோடு என்னால் கணக்குக் கொடுபடாத தொகை பாக்கி இருந்தால் எப்பவும் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்.
மறுஜன்மம்
மதுராவில் ஒருபெண் போன ஜன்மத்தைப்பற்றி பேசுவதாகவும் ஆகவே மறுஜன்மத்தைப்பற்றி அபிப்பிராயம் என்ன என்பது ஒரு சீட்டு
மறுஜன்மம் என்பது மதசம்மந்தமான ஒரு விவகாரத்திற்கு உரிய விஷயமே தவிர விஞ்ஞான சம்மந்தமானதல்ல. இதைப்பற்றி பல
ர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இடங்களில் பேசி யிருக்கிறேன். நான் ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை. அப்படி இருக்க ஆத்மாவுக்கு மறுஜன்மம் உண்டா என்பது பற்றி என் அபிப்பிராயம் தெரிய வேண்டுமா?
அது எப்படியோ போகட்டும். மதுராவில் பெண் போன ஜன்ம சங்கதி பேசுகிறார் என்பது கற்பனையேயாகும். பத்திரிகைகளில் வருவதெல்லாம் நிஜம் என்றால் எதையும் விசாரிக்க வேண்டிய அவசியமே இருக்கா தல்லவா? இந்தப்படியான கற்பனைகள் அறியாமையால் கற்பித்துக் கொள்பவைகள் வெகுகாலமாகவே இருந்து வருகின்றன.
இன்றும் பழனிக்கு காவடி கொண்டு போனால் கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, மீன், ஆகியவை உயிர் பெற்று விடுகின்றன என்று இன்னும் அனேகர்கள் நம்புகிறார்கள். அனேகர்கள் காவடி கொண்டும் போகிறார்கள்.
ஒரு சமயத்தில் நானும் முன் ஒருதடவை முதன் மந்திரியாய் இருந்த முனிசாமி நாயுடு அவர்களும் எனது நண்பர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் பழனிக்குப் போனோம். அப்போது நான் அடிவாரத்தில்: இருந்து கொண்டேன். அவர்கள் மலை ஏறிவிட்டு இறங்கி வந்தார்கள்.
இந்த சமயத்தில் அடிவாரத்தில் ஒரு விபூதிக்கடைக்காரன் 2 சாவல்களை தன் கடைமூன் கட்டி அதன் மீது மஞ்சள் குங்குமம் தெளித்து வெத்திலை பாக்கை முன்னால் வைத்து ஒரு உண்டியல் பெட்டியும் வைத்து இருந்தான். இங்கு ஜனங்கள் கூட்டமாக நின்று சாவல்களைக் கும்பிட்டு உண்டியல் கலயத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான் இதை என்ன என்று கேட்டேன். அதற்கு அந்த கடைக்காரன் என்னையும் ஒரு பக்தன் என்றும் மந்திரி என்றும் நினைத்துக் கொண்டு பயபக்தியுடன் எழுந்து நின்று இந்த சாவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள்'' என்று சொன்னான். அதாவது அறுத்து சமைத்து காவடி கட்டி கொண்டுவந்த சாவல்கள் கடவுள் சன்னதியில் உயிர்பெற்று விட்டது என்று விளக்கினான். இதை நான் இரு நண்பர்களுக்கும் காட்டி விளக்கினேன். அவர்கள். சிரித்துவிட்டு “இப்படிப்பட்ட ஆள்கள் தான் உங்கள் பிரசாரத்துக்கு அனு கூலம் செய்துவிடுகிறார்கள்'' என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட்டோம் என்றும் சொல்லிச் சிரித்தார்கள். ஆகவே இப்படிப் பலபேர் மக்களின் முட்டாள் தனத்தால் பிழைக்க வேண்டியவர்கள் கற்பனை செய்வதுண்டு.
நம் நாட்டில் கூட அனேக பத்திராதிபர்கள் வேண்டுமென்றே தங்களுக்கு பொய் என்று பட்டவிஷயத்தைக் கூட ஜனங்கள் ஏமாறத்தக்க விஷயமாய் பிரசுரிக்கிறார்கள். மதமும் தேசீயமும் வெற்றி பெற வேண்டுமானால் மக்களை மூடர்களாக ஆக்கிவைப்பதினால் தான் முடியும் ஆதலால் இப்படிப்பட்ட கேள்விகள் அநேகவற்றிற்கு நான். எத்தனையோ தடவை பதில் சொல்லி இருக்கிறேன்.
குடி அரசு - 1936 (1) 72
இம்மாதிரி கேள்விகளுக்கு ஒருவர் இருவருக்குச் சமாதானம் சொல்லி விடுவதாலும் அடங்கிவிடாது ஒன்று கூறுகிறேன். நல்ல நீதிபதிகள் போல் நான்கு பேரை நியமிக்கலாம். அதற்கு ஆகும் செலவை நான் பொதுக்கட்டி விடுகிறேன். அதில் நம்பிக்கை உள்ளவர்களும் பொதுக்
கட்டட்டும். விசாரித்து அறிந்த பிறகு அது உண்மையானால் நான் கட்டிய தொகையை செலவுக்கு எடுத்துக் கொள்ளட்டும். அது பொய்யானால் அவர்கள் கட்டிய தொகையை எடுத்துக்கொள்ளட்டும். அப்படிக்கில்லாமல் எவ்விதப் பொறுப்பும் இல்லாதவர்கள் இப்படி கண்டபடி கண்டவர்கள் சொல்லுவதை நம்பி உளறிக் கொண்டே இருந்தால் இதற்கு எத்தனை சமாதானம் சொல்ல முடியும்? இவை சில சமயங்களில் வேண்டுமென்றே கற்பிக்கப்படுவது எனக்குத் தெரியும்.
ஜோசியம்
ஜோசியம் பொய்யா மெய்யா என்று அடுத்த கேள்விச் சீட்டில்
இருந்தது. சோதிட ஆராய்ச்சி என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அது பற்றி அநேக வியாசங்கள் குடி அரசிலும் பகுத்தறிவிலும் எழுதி இருக்கிறேன். அப்புத்தக விளம்பரத்துக்கு இம்மாதிரி சொல்லவில்லை. அதன் விலை 4 அணாத்தான்.
இப்பிரச்சினைக்கு முழு சமாதானம் சொல்ல காலம் போதாது இப்பொழுதே நான் பேச ஆரம்பித்து இரண்டுமணி ஆகிவிட்டது பொதுவாக, ஜோசியம் பெரிதும் மனிதன் பிறந்த நேரத்தைப் பொறுத்ததாயிருக்கிறது. அந்த நேரத்துக்கும், அப்பொழுது இருந்த நட்சத்திர நிலைக்கும் மனிதனுடைய வாழ்க்கை நடத்தைகளுக்கும் சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லை. ஒரே குறிப்பிட்ட நேரங்களில் 100க் கணக்கான குழந்தைகளுக்குக் குறையாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. பலன் எல்லாம் ஒன்றாய் இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அபிசீனியா - இதாலி சண்டை நடக்க இடமே இருக்காது இந்தியாவில் உள்ள காந்தி ஜோசியர்களை ஏன் விலை கொடுத்தாவது கொண்டுபோய் விஷயம் தெரிந்து ஒருவரிடம் ஒருவர் ராஜ்யத்தை ஒப்புவித்து சுகமே இருப்பார்கள். நம்மைவிட எந்தக் காரியத்திலும் (முட்டாள் தனத்தைத் தவிர) ஐரோப்பியர்கள் இளைத்தவர்கள் அல்ல ஆதலால் ஜோசியம் என்பது சொல்லுகிறவர்கள் தந்திரமும் கேட்கிறவர்கள் முட்டாள்தனமும் அல்லாமல் வேறில்லை.
அம்பேத்கார்
அடுத்தது எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாத நீர் அம்பேத்கார் வேறு மதத்துக்குப் போவதை ஏன் ஆதரிக்கிறீர். இஸ்லாம் மதத்தைத் B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தழுவும்படி ஏன் கூறுகிறீர்? என்பதாக எழுதப்பட்ட ஒரு சீட்டு கொடுக்கப் பட்டது. தீண்டாதவர்கள் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று 1926ல் வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். 28, 29 முதல் குடிஅரசுப் பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறேன். இதை முதல் முதல் சொன்னவன் நான் தான். அந்தக்காலத்தில் பல சுயமரியாதைத் தோழர்கள் துருக்கி தொப்பி வாங்கிப் போட்டு அழகு பார்த்ததும், லுங்கி கட்டி அழகு பார்த்ததும் எனக்குத் தெரியும். நான் இஸ்லாம் மதத்தில் தீண்டப்படாதவர்கள் சேர்ந்து கொள்ளுவதை ஆதரிப்பது முஸ்லீம் கடவுள் இந்துக் கடவுள்களை விட மேலான கடவுள் என்றோ, முஸ்லீம் மோட்சம்
இந்து மோட்சத்தைவிட மேலானதென்றோ கருதி அல்ல. அவற்றைப் பற்றி எனக்கு நம்பிக்கையுமில்லை கவலையுமில்லை.
முஸ்லீம் மார்க்கத்தில் தீண்டாமைக்கு இடமில்லை; முஸ்லீம்
களுக்குள் தீண்டாமை அனுபவத்திலும் இல்லை. ஆதலால் தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டியவர்கள் முஸ்லீம்களாகிவிடுவதில் ஆட்சேபணை இல்லை என்றும் ஆலோசனை சொல்லுகின்றேன் என்றும் சொல்லுகிறேன். எனக்கு மாறுபாடாகப் பேசுகிறவர்கள் முஸ்லீம் மார்க்கத்திலும் தீண்டாமை இருக்கிறது என்று மெய்ப்பித்தால் அந்த அபிப்பிராயத்தை விட்டு விடத் தயாராய் இருக்கிறேன். தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும் ஜெயின மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை. ஆரிய சமாஜத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப் பட்டுவிடவில்லை.
இந்து மதத்திலும் தீண்டாமைக்கு இடமில்லை என்று தான் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் பலனில் பிரத்தியட்சத்தில் அவரவர்களுக் குள்ளாகவே தீண்டாமை அனுஷ்டிக்கப்படுகிறது
அது மாத்திரமில்லாமல் நாஸ்திகர்களுக்குள்ளாகவும், பகுத்தறிவுவாதி களுக்குள்ளாகவும் தீண்டாமை அனுஷ்டிக்கப்படுகிறது
இஸ்லாம் மதத்தில் தீண்டாமை இல்லை
ஆனால் முஸ்லீம்களுக்குள் மனிதப் பிறவியின் காரணமாய் தீண்டாமை அனுஷ்டிப்பதில்லை
நான் ஆஸ்திக தீண்டாமைக்காரர்களையே முஸ்லீம்களாகி விடுங்கள் என்று சொல்லுவதோடு நாஸ்திக தீண்டாதவர்களுக்கும் கூட தீண்டாமை ஒழிய வேண்டுமானால் வேறு மார்க்கத்தைக் காணோம் என்றும் கூறுகிறேன்.
குடி அரசு- 1936 (1) 74
தவிர இப்போது வர வர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும் சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லீம்களாக ஆகிவிட்டால் பயன்படும்
என்றும் நினைக்கிறேன்.
இந்தியர்களில் இந்துக்களுக்கு சமூக அபிமானம் கிடையாது ஒற்றுமையும் கிடையாது. இரண்டுமில்லாத மக்களுக்கு சுயமரியாதை வெற்றி ஏற்படுவது கடினம். இந்துக்கள் 20 கோடிபேர் இருந்தும் சமூதாய துறையில் முஸ்லீம்கள் பெற்ற வெற்றி இந்துக்கள் பெறமுடியவில்லை.
ஒரு பொது வீதியில் சிறு மஜீது கட்டிக்கொண்டு இங்குமேளவாத்தியம் கூடாது என்று உத்திரவு போட்டால் பொப்பிலி ராஜா ஊர் கோலமோ காந்தியார் ஊர்கோலமோ கூட செல்ல முடியாது. ஏன்? இந்துக்கள் கடவுள்கள் ஊர்வலம் கூட செல்லமுடியாது. இரண்டு நாளைக்கு சத்தம் போட்டு விட்டு பிறகு நமக்கு ஏனிந்தத் தொல்லை என்று சொல்லிவிடுவான்.
சுதந்திரப்போர் என்பதிலும் முஸ்லீம்களுக்கு உள்ள வீரமும் பிடிவாத குணமும் உறுதியும் இந்துக்களுக்கு இல்லை
முஸ்லீம்கன் வலிமை
அவர்கள் பிடித்ததை எல்லாம் சாதித்தவர்கள். இந்துக்கள் இதுவரை
ஒன்றிலும் வெற்றிபெறவில்லை.
34 கோடி பேர்களுக்கு “பொது ஸ்தாபனமாகிய' காங்கிரசுக்கு உள்ள மதிப்பையும் முஸ்லீம்லீக்குக்குள்ள மதிப்பையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். இன்றய 9 கோடி முஸ்லீம் மக்களுடன் 7 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் சேர்ந்தால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியல்ல வேறு எந்த ஆட்சியும் முஸ்லீம்களின் சர்வாதிகாரத்தன்மையின் கீழ்தான் நடந்தாக வேண்டும்.
இந்தியாவின் செல்வம் ஒரு காசு வெளியில் போய்விட முடியாது
ஜயிலில் கூட நான் பார்த்தேன். இந்தியக் கைதிக்கு தொடைக்குமேல் ஒரு துணி கொடுக்கிறார்கள். முஸ்லீம் கைதிக்கு வீதி கூட்டும்படி கால் அளவு கால் செராய் கொடுக்கிறார்கள் முஸ்லீம்களை வேறு சமூகத்தார் எந்தக்காரணம் கொண்டும் அடக்கி விட முடியாது
தேச விடுதலைக்கும் இஸ்லாமே சிறந்தது
ஆதலால் தீண்டாமை ஒழிவது மாத்திரமல்லாமல் தேச விடுதலைக்கும் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களாகிவிடுவது ஆட்சேபிக்க
முடியாததாகும்
நான் சாவதானமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தே பேசுகின்றேன். 75௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நம்மவர்களுக்கு மதப்பிடிவாதம் எதற்காக இருக்க வேண்டும்? இந்து மதத்தால் ஏற்பட்ட நன்மையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
முஸ்லீம் ஆட்சி நம் நாட்டில் இதுவரை இருந்து இருக்குமானால். அன்னிய ஆட்சி என்கிறீர்களே அது இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?
நம் தெய்வங்களும் சடங்குகளும் நம்பிறவி எதிரிகளான பார்ப்பனர். களும் இவ்வளவு பணம் கொள்ளைகொண்டு நம் மக்களை இவ்வளவு மூடர்களாகவும் சுயமரியாதை அற்றவர்களாகவும் வைத்திருக்குமா என்பதை சரித்திரங்கள் கொண்டுபாருங்கள். அன்றியும் உலக சமாதானத்துக்கும் ஓய்வுக்கும் மக்கள் முதலில் ஒரு சமூகமாக ஆகித் தீர வேண்டும். அந்த முறையிலும் இந்து சமூகம் ஒழிவதும், முஸ்லீம் சமூகம் பெருகுவதும் அனுகூலமேயாகும். கடைசியில் உலகில் இரண்டு சமூகம்தான் நிலைக்கும். அவை கிறிஸ்து முஸ்லீம் சமூகமே ஆகும்
உலகம் நாஸ்திக அதாவது பகுத்தறிவான சமூகம் ஆக வேண்டு மானால் கிறிஸ்தவ சமூகத்தைவிட முஸ்லீம் சமூகம் தாராளமாய் இடம் கொடுக்கக் கூடியதாகும்.
இந்துக்கள் இதுவரை சமூக ஒற்றுமைக்கு யாதொரு முயற்சியும் செய்யவில்லை. அதைப்பற்றி லட்சியமும் இல்லை
அம்பத்கார் முஸ்லீம் ஆவதாகச் சொன்னதற்கு யார் என்ன சமாதானம் சொன்னார்கள். வேண்டாம் வேண்டாம் என்கிறார்களே தவிர, வேண்டாம் உனக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று யார் சொன்னார்கள்.
இந்துக்கள் ஏமாற்றுவித்தை
இந்துக்களுக்கோ இந்துத் தலைவர்களுக்கோ இவ்விஷயத்தில் ஆக்ஷேபணை இருக்குமானால் இதற்குள் தீண்டாதவர்களுக்கு சமூகக் கொடுமையும் இழிவையும் நீக்க ஏதாவது ஒரு சட்டம் கொண்டு வந்திருக்க மாட்டார்களா? ஒரு சில வருணாச்சிரமக்காரர்களை மதிக்கிறார்களே ஒழிய, 7-கோடி தீண்டாதவர்களை காங்கிரஸ்காரர் மதிக்கிறார்களா? இந்துக்களாவது கவலைப்படுகிறார்களா? வீண் வேஷத்துக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் பங்கை அபகரிப்பதற்கும் தான் இந்துக்கள் தீண்டாதவர்களை பயன்படுத்திக் கொள்ளுகிறார்களே ஓழிய வேறில்லை. ஆகையால் அதைப்பற்றி யாரும் கவலைப்படாதீர்கள்.
முஸ்லீம் சமூகத்தைப் பெருக்கித் தீண்டாமையை ஒழிப்பதோடு இந்தியாவை விடுதலையடையும்படி செய்யுங்கள்.
குறிப்பு: 12.01.1936 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன். கல்லூரி பெரிய மண்டபத்தில் சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் 3-வது ஆண்டுவிழாவில் ஆற்றிய தலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 19.01.1936
குடி அரசு- 1936 (1) 76
தோல்விக்குப் பயந்து எதிரியைத் தஞ்சமடைவதா?
ஜஸ்டிஸ் கட்சிக்கு இந்திய சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்பதினாலேயே அக்கட்சிக்குத் தலைவர்களாக இருந்து பெருமை பெற்றவர்களும், அனுதாபிகளாக இருந்து பயன் அடைந்தவர்களும் ஒரே அடியாக மனதை விட்டு விட்டார்கள். அதோடு மாத்திரமல்லாமல் எதிரிகளைத் தஞ்சமடைய தந்திரம் செய்கிறார்கள்
ஆனால் கட்சியின் பேரால் யாதொரு பயனும் அடையாமல் ஏதோ தங்களாலான அளவுக்கு உழைத்து வந்தவர்கள் பலர் மெய்மறந்து பொறுப்பற்று உறங்கிக் கொண்டிருந்த தலைவர்களுக்கு உணர்ச்சியும் ஊக்கமும் ஊட்ட “இத்தோல்விகள்" தக்கதொரு சாதனமாகுமென்று கருதி சிறிதும் உறுதியையும் தைரியத்தையும் விடாமல் நம்பிக்கையுடனேதான்.
இருந்து வருகிறார்கள்.
தோல்வி ஏற்பட ஏற்பட தலைவர்களாக இருந்து வருபவர்களுக்கு
தோல்விக்குப் பரிகாரம் காங்கிரசில் சேருவதுதான் என்கின்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றி இப்போது காங்கிரசில் சேர ஆளுக்காள்.
முந்துகிறார்கள்.
ஜஸ்டிஸ்காரர்கள் காங்கிரசில் சேருவதை ஜஸ்டிஸ் கொள்கையோ வேலைத்திட்டமோ எதுவும் குறுக்கே நிற்கவில்லை.
கோயமுத்தூரில் 1927ம் வருஷம் திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி ஸ்பெஷல் மகாநாட்டில் ஜஸ்டிஸ்காரர்கள் காங்கிரசில் சேரலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது அத்தீர்மானம் அதற்குப்பின் நடந்த எந்த மகாநாட்டிலும் மாற்றப்படவில்லை அப்பொழுது அத்தீர்மானம் செய்யக் காரணம் என்னவென்பது பொது ஜனங்கள் அறிந்ததே
அத்தீர்மானமாவதுஉ-
“பலவித அபிப்பிராய பேதமுள்ள பிராமணரல்லாதார் ஸ்லாருள்ளும் ஒற்றுமையை அதிகப்படுத்த வேண்டுவது மிக்க அவசியமாதலாலும், 77௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
துரிதத்தில் சுயபராஜ்யமடைவதற்காக இந்தியாவிலுள்ள பலவித ராஜீயக் கட்சிகளுக்கும் ஒற்றுமையை அதிகப்படுத்துவதற்கான முறைகளைக் கையாள வேண்டியிருப்பதாலும், காங்கிரஸை ஒரு தனி வகுப்பார் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்ட சில சுயநலப்பிரியர்கள். பிராமணரல்லாதாரியக்கத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும்
திரித்து மாற்றிப் பொய்பிரசாரம் செய்து வருவதினாலும், அப்படிப்பட்ட பொய்ப்புரட்டுகளையும் விஷமப் பிரசாரத்தையும் மறுக்க வேண்டியது அவசியமாயிருப்பதினாலும், அதுவுமன்றி பிராமணரல்லாதார் இயக்கத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் சரியாய் விவரித்துக்கூறி ஜனங்களுக்குள் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதி னாலும், இந்த மகாநாடு பிராமணரல்லாதார் எல்லாரும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் சேரவேண்டுமென்று வற்புறுத்தி வேண்டிக் கொள்வதுடன், காங்கிரசிலும் அது போன்ற சங்கங்களிலும் சேரப் பிரியமுள்ள தென்இந்திய நல உரிமைச்சங்கத்தின் அங்கத்தினர் அந்தப்படிச் சேரலாமென்றும் அனுமதிக் கொடுக்கிறது.
தென் இந்திய நலவுரிமைச் சங்கம் தனிச்சங்கமாய் நின்று தன்னுருக்குலையாமல் வேலை செய்யவேண்டுமென்றும் இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.”
(10-7-27 தேதி குடி அரசு)
ஆனால் அத் தீர்மானத்தின்படி ஜஸ்டிஸ்காரர் பலர் காங்கிரசில் சேர்ந்தும் அவர்களது உத்தேசம் சிறிதும் நிறைவேறவில்லை. இந்த முடிவை நாம் கோயமுத்தூர் கான்பரன்சில் எடுத்துக் கூறினோம்.
தோழர்கள் பனகால் அரசர், பி. வரதராஜுலு நாயுடு, திரு. வி. கல்யாண:
சுந்திர முதலியார் ஆகியவர்களுடைய ஆசைக்கு நாம் அடிமையாகி அதை எதிர்க்காமல் இருந்துவிட்டோம்
இன்று அதுபோல ஒரு உணர்ச்சி ஜஸ்டிஸ்காரர்கள் அனேகருக்குத் தோன்றிவிட்டது
காங்கிரசில் சேரவும் போகிறார்கள். பயனைப் பொறுத்தவரையில். முன் போலவேதான் முடிவு ஏற்படப் போகின்றது என்பது நமது அபிப்பிராயம்.
காங்கிரசுக்கு உள்ளே போய்ச் சேர்ந்து காங்கிரசுக்காரர்களின் யோக்கியதையை வெளியாக்கவோ, அல்லது நமது கொள்கைகளை அதிலிருந்து பிரசாரம் செய்யவோ மூடியும் என்று நினைப்பது வீண் கனவேயாகும்
பார்ப்பனர்கள் காங்கிரசை தேசாபிமானத்துக்கு ஆவது, தேச
மக்களின் பொது பிரதிநிதித்துவத்துக்கு ஆவது வைத்திருந்தால் இந்த கொக்கு பிடிக்கிற வித்தையெல்லாம் வெற்றிபெறலாம்
குடி அரசு- 1936 (1) 78
ஆனால் பார்ப்பனர்கள் காங்கிரசை தங்கள் சமூக நன்மைக்காகவே வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றபடியே அவர்கள் அதை பந்தோபஸ்த்து செய்து மற்றவர்கள் உள்ளே நுழையாதபடிக்கு வேட்டை நாய்களை வாசல்படியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது பல அசாத்தியமானதும் மனச்சாட்சியும், பகுத்தறிவும் உள்ளவர்கள் ஒப்புக்கொள்ள முடியாததுமான. திட்டங்கள் இருக்கின்றன. இவ்வளவையும் கடந்து உள்ளே சென்றாலும் காரைக்குடி மகாநாட்டுத் தலைமை விஷயத்தில் தோழர் அவினாகிலிங்கத்துக்கும், தோழர் ருக்குமணி லட்சுமிபதிக்கும் நடந்த கதைகள் நடக்காமல் போகாது
அவினாசிலிங்கத்துக்கும் அவர் போன்றாருக்கும் பார்ப்பனர்கள் கொடுக்கும் விளம்பரமும் பெருமையும் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது அறிவீனமேயாகும்.
காங்கிரசு பார்ப்பன ஸ்தாபனம் என்பதற்கு மற்றும் வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமானால் மிதவாதிகள் என்னும் பார்ப்பனர்களுக்கும் பூரண சுயேச்சைக்காரர்கள் என்னும் பார்ப்பனருக்கும் கொள்கையில் எவ்வளவு எவ்வளவு வித்தியாசமிருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர். காங்கிரசில் உள்ளசலுகையும் அபிமானமும் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.
தோழர் மகாகனம் சீனிவாச சாஸ்திரி என்பவர் காந்தியாரை அராஜகர் என்று சொல்லி சர்க்காரிடம் கூலி பெற்றவர்.
காந்திக்கு அரசியல் ஞானம் இல்லை என்று சொல்லி வெள்ளையர் களிடம் நற்சாட்சிப்பத்திரம் பெற்றவர். இன்று காந்தியாரை மகா வலிமை பெற்ற ஆத்ம சக்தியுடையவர் என்று அவர் சொல்லுவதோடு "காங்கிரசை தோல்வியுற விட்டுவிடலாமா?” “ஜஸ்டிஸ் கட்சி வெற்றிபெறுவதை பார்த்துக் கொண்டு உயிருடன் இருக்கலாமா” என்பதோடு காங்கிரசில் தாங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். தோழர்கள் சர் சிவசாமி அய்யர் என்கிறவரும் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் என்பவரும் காங்கிரசின் “மகிமையையும் பெருமையையும்” வானமளாவப் புகழ்ந்து பேசி மிதவாதிகள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள்
தோழர் சீனிவாசய்யங்கார் அவர்களைப்பற்றி பேசவேண்டியதே இல்லை. அவர்காந்தியாரைமுட்டாள் என்று சொன்னதோடு “காந்தி கோஷ்டியார் எவரும் என் வாசல்படியை மிதிக்கக் கூடாது” என்று கட்டளை போட்டவர். தோழர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள் சீனிவாசய்யங்கார் அவர்கள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் என்று சொன்னதற்குக் கூட பார்க்க முடியாது என்று சொன்னவர். மற்றும் அவர் தோழர் ராஜகோபாலாச்சாரியாரைக் காணுவதே பாவம் என்று கருதுபவர். இப்படிப்பட்டவர் இன்று காங்கிரஸ் தலைவர்களில் முதல் ஸ்தானம் பெற வருகிறார். காங்கிரஸ் பார்ப்பனர்கள் தலைமை ஸ்தானம் அளிப்பதாக உறுதி கூறி அழைக்கிறார்கள்.
79 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இன்று இந் நாட்டில் எந்தப் பார்ப்பனர்களுடைய முகத்திலும் “லக்ஷிமி களை” தாண்டவமாடுகிறது
காங்கிரசில் இல்லாத பார்ப்பனர்கள் இன்னார் என்று பூதக்கண்ணாடி வைத்துக்கூட காண முடியாது
சர்க்கார் உத்தியோகத்திலுள்ள பார்ப்பனர்களும் காங்கிரஸ் வெற்றியை காலக்ஷேமமாகச் செய்கிறார்கள். அவர்கள் ஆண் பெண் குழந்தை குட்டிகள், கிழடு கிண்டுகள் சகிதம் காங்கிரஸ் தாங்கள் சொந்தப் பெரியவர்கள் தேடிவைத்த முதல் போல் கருதி ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
காந்தியார் ஒரு கோடி ரூபாய் தண்டுகிற காலத்தில் ஜனங்களுக்கு அதோ தெரிகிறது சுயராஜ்ஜியம், இதோ தெரிகிறது சுயராஜ்ஜியம் என்று சொன்னதை மக்கள் எப்படி நம்பி பணம் காசு கொடுத்து ஜெயிலுக்கும் போனார்களோ அதுபோன்ற நம்பிக்கையே இப்போது பார்ப்பனர்கள்
எல்லோருக்கும் இருந்து வருகிறது அதாவது அதோ வந்துவிட்டது பார்ப்பன ராஜ்ஜியம், இதோ வந்துவிட்டது பார்ப்பன ராஜ்ஜியம் என்கின்ற உண்மையான நம்பிக்கையே எல்லோருடைய முன்னிலையிலும் தாண்டவமாடுகின்றது. ஜஸ்டிஸ் ஆட்சியின் பயனாய் தங்கள் பிள்ளைகுட்டிகளுக்கு உத்தியோகம் கிடைக்காது என்று கருதி வேறு தொழிலுக்கு தயார் செய்த குழந்தைகளைக்கூட அவற்றை விட்டுவிடச் செய்து இப்போது பள்ளியில் படிக்க வைக்க நெருப்புப்பிடித்த வீட்டுக்காரர் தன் சாமான்களை எடுக்க ஆத்திரப்பட்டு அலைவதுபோல் தோசை மாவு ஆட்டும் கிழவி முதல் அலைகிறார்கள்
இப்படிப்பட்ட பார்ப்பனக் குடும்பச் சொத்தில் பங்கு கிடைக்கும் என்று கருதி ஒரு பார்ப்பனரல்லாதார் அதில் போய்ச் சேருவதென்றால் அது எப்படிப்பட்ட புத்திசாலித்தனமாய் இருக்கும் என்று நம்மால் விளக்கக்கூடவில்லை
இவ்வளவும் ஒருபுறம் இருக்க, புழுத்ததின் மேல் சாணியைப் போட்டதுபோல் நமது நன்றி விசுவாசமுள்ள சர்க்காரின் காற்றும் பார்ப்பனர்களின் யாகத்துக்கு அனுகூலமாகவே அடித்து வருகின்றது வெள்ளைக்காரர்களுடைய “கடாக்ஷ மும் பார்ப்பனர்கள் மீதே இறங்கி வருகிறது. வில்லிங்டன் துரை மகனார் கூட, சாகும் போது சிவ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துபோகும் என்று நம்மவர்கள் கருதுவது போல், “காங்கிரஸ் குஷாலாக வந்து சர்க்காரை ஏற்று நடத்தட்டும் யாரும் அதற்குத் தடைசெய்யாதீர்கள்'” என்று தனது கணங்களுக்கு அசரீரி அருளிவிட்டு வந்த இடத்துக்கு பயணமாகிறார்.
மாகாண கவர்னர்களும் அந்த அசரீரியை வெகு பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்கிறார்கள்
குடி அரசு- 1936 (1) 80
இவற்றிற்கெல்லாம் காரணம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஜஸ்டிஸ்
கட்சிப் பிரமுகர்கள், வைசியர் அண்டாவில் பால் ஊற்றினது போல் ஆளுக்காள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் காங்கிரசுக்கு பயந்ததும், காங்கிரஸ்காரர்களிடம் திருட்டு நேசம் வைத்ததும், கோபம் வந்த போதெல்லாம் அதிருப்தி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரசில் சேர்ந்திடுவேன். காங்கிரசில் சேர்ந்திடுவேன் என்று பிகுவு காட்டினதுமான காரியங்களே காங்கிரசை இவ்வளவு பூச்சாண்டி ஆக்கிவிட்டது
இவற்றை யெல்லாம்விட ஒரு பெரிய அனுகூலம் காங்கிரசுக்கு எதனால் ஏற்பட்டது என்றால் ஜஸ்டிஸ் கட்சியார் பிரசாரம் செய்ய பத்திரிகை மூலமானாலும் சரி, பிரசங்கத்தின் மூலமானாலும் சரி சிறிதும் லட்சிய மில்லாமல் தங்கள் மார்பைப் பார்த்துப் பார்த்து உடல் பூரிக்கச் செய்து கொண்டதேயாகும்
மற்றும் காங்கிரஸ் என்பது கழுதையோ குதிரையோ அதை அடையாளம் பார்க்காதீர்கள். பார்க்கவும் விடமாட்டோம். சொல்வதை நம்புங்கள். நம்ப மாட்டேன் என்று சொல்லவும் உங்களால் முடியாது" என்று சொல்லி சண்டப்பிரசண்டமாய் காங்கிரஸ்காரர்கள் செய்துவந்த பிரசாரமுமேயாகும்.
இவைகள் எல்லாம் எதைக் காட்டுகின்றதென்றால் தலைவர்கள், பிரதானப்பட்ட புருஷர்கள் என்பவர்கள் பயந்து போயும் வேறுசில காரணத் தாலும் பாமர மக்களை சிறிதும் மதியாமல் கை விட்டு விட்டதேயாகும்
ஆன போதிலும்கூட நாம் சிறிதும் அஞ்சவில்லை; அதைரியப்படவு மில்லை. நமது தோழர்கள் யாரும் மனமுடைந்து போகவேண்டியது மில்லை. நமது கொள்கையில், திட்டத்தில் ஏதாவது குறைகள் சூதுகள் இருந்தால் மாத்திரம்தான் நாம் பயப்படவேண்டும்
நம் கொள்கை மந்திரி பதவியே அல்ல, நம் கொள்கை அதிகாரமும் சம்பளமுமேயல்ல, நமதுதிட்டம் நம் சமூகத்தைப் பொறுத்தது மாத்திரமுமல்ல, அரசாங்கத்தை நெருக்கி மனித சமூகம் ஓட்டுக்கும் சம உரிமை வழங்கச் செய்ய வேண்டியதாகும்
ஆதலால் மந்திரி பதவி நம் கையை விட்டுப் போகுமானால் சகல சீர்திருத்தமும் உடைந்து எல்லா இலாக்காவும் அரசாங்கமே ஏற்று ஒழுங்காய் நடத்திக் கொடுக்கும்படியான நிர்பந்தத்தை உண்டாக்க நமக்குத் தெரியும். நம்மால் முடியும். நாம் கிளர்ச்சிசெய்ய ஆரம்பித்தால் பார்ப்பனர். கிளர்ச்சிபோல "நான் ஓயாமல் அழுகிறேன் நீ நோகாமல் அடி" என்கின்ற ஒப்பந்தக் கிளர்ச்சியாக இருக்க முடியாது என்பதோடு “தவளை கடிக்குமா. பார்ப்பனப் படை வெல்லுமா” என்கின்ற பழமொழிப்படியல்ல என்பது உலகமறிந்து விடும். ஆதலால் இம்மாதிரி தோல்வியைப்பற்றி ஏன்: மானமும் துணிவு முள்ளவன் கவலைப்பட வேண்டும்? வட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நம்மை பார்ப்பனர்கள் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொன்னதையும், நாம் (பார்ப்பனரல்லாத கட்சியார்) ஜெயிலுக்குப் போக பயந்தவர்கள் என்று சொன்னதையும் எப்பொழுது தான் பொய்ப்பித்துக் காட்டுவது? அதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? என்று ஒவ்வொரு பார்ப்பனரல்லாத மக்களும் சந்தர்ப்பம் தேடிக் கொண்டு திரியும் இக்
காலத்தில் ஒரு சில ஜஸ்டிஸ் தலைவர்களும் பதவியாளர்களும் எதிரியின்.
காலுக்குள் நுழைவது ஒருநாளும் இத்தோல்விக்கு மருந்து என்று எண்ணக்கூடா தென்பது தான் நமது அபிப்பிராயம்
நமக்கு தோல்வி இதுவரையிலும் இன்று இந்நிமிஷ வரையிலும் ஏற்படவில்லை என்பது நமது உறுதி. இனியுமாவது ஏற்பட்டு விடுமா என்றும் நாம் கருதவில்லை. சர்க்காரும் பார்ப்பனர்களும் அவமானப்படும் படியான தோல்விதான் நமக்கு ஒரு சமயம் ஏற்பட்டாலும் ஏற்படலாமே ஒழிய, நாம் கவலைப்பட தக்க தோல்வி ஏற்படாது என்பது சரியான தீர்க்க தரிசனம் என்று சொல்லுவோம்.
ஆதலால் காங்கிரசுக்கு போகின்றவர்கள் போகட்டும், அதனால் சட்ட விரோதமோ கொள்கை விரோதமோ திட்ட விரோதமோ ஏற்பட்டு விடாது. நியாய விரோதம் இருக்கலாம். நியாயத்துக்கும் சட்டத்துக்கும் கொள்கைக்கும் சம்பந்தமில்லை. ஆதலால் மூன்று மந்திரிகளும், அவர்களது மூன்று காரிய
தரிசிகளும், அவர்களது எடுபிடி ஆள்களும்கூட குஷாலாக காங்கிரசுக்குப் போகட்டும். நமக்கு அது விஷயத்தில் சிறிதும் கவலையில்லை பார்ப்பனரல்லாதார் கட்சிக்கும் அதனால் சிறிதும் கெடுதி ஏற்பட்டு விடாது ஆதலால் அந்த பிரச்சினையை விட்டு விட்டு மற்றதைக் கவனிப்போம். அதாவது என்னவென்றால் நம்மில் ஒரு கூட்டத்தார் பயந்து விட்டார்கள். இனி எந்தக் காரணம் கொண்டும் அவர்களது பயத்தை இப்போது தெளிவிப்பது லேசான காரியமல்ல மற்றொரு கூட்டத்தார் சுவரின் மேல் பூனை போல் இருக்கிறார்கள்; அவர்களை இனி சிறிது கூட நம்புவது புத்திசாலித்தனமாகாது மற்றொரு கூட்டத்தார் தோல்வி ஏற்பட்டால் வெட்கமே என்று ஒதுங்கி நிற்பவர்களாக காட்டிக் கொள்ளுகிறார்கள். இவர்களை சிறிது
காலத்துக்கு மறந்து இருப்பதே நல்லது. மற்றொரு கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு வேலையும் செய்வ தில்லை, இவர்களோடு இருந்து கொண்டு என்னதான் செய்கின்றது என்கிறார்கள். இவர்களை அணாமத்தில் வைத்திருப்போம்
ஆகவே இவர்கள் நீங்கிய ஒரு கூட்டம் “நாங்கள் எந்த தேர்தலுக்கும் எந்த பதவிக்கும் நிற்பதுமில்லை ஆசைப்படுவது மில்லை'' என்கின்ற உறுதி உள்ளவர்கள் ஒன்று சேரவேண்டும்.
அவர்கள் இப்போதே எந்தப்பதவியில் இருந்தாலும் ராஜினாமா செய்ய வேண்டும்
குடி அரசு - 1936 (1) 82
அப்படி ராஜினாமா செய்தவர்களே தலைமைவகித்து நடத்தத்தக்க வண்ணம் ஒரு சாரணர் படை திரட்ட வேண்டும்
அதற்கு அதிகநிதி ஒன்றும் தேவையில்லாத மாதிரி பிரசாரம் வகுக்க வேண்டும் இவ்வளவுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாகும்.
“உலகம் உயர்ந்தோர் மாட்டு” என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் - உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல்
இதற்கு ஆவன செய்யவும் இதைப்பற்றி பல தோழர்களது அபிப்பிராயம் அறியவும் சமீபத்தில் ஒரு கூட்டம் கூட்டவோ அல்லது சிலர்
சுற்றுப் பிரயாணம் செய்யவோ அவசியமென்று கருதுகிறோம். பல வழிகளிலும் தலைவர்கள் என்பவர்களால் தக்கபடியான முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றுகருதி ஏமாற்ற மடையும்படியான நிலைமை ஏற்பட்டு வருவதால் இம்மாதிரியான ஒருகாரியம் அவசியம் என்று படுகின்றது.
குடி அரசு - தலையங்கம் - 19.01.1936
ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜில்லா போர்டும் பொப்பிலியும்
சென்னை அரசாங்கமும்
சில ஜில்லா போர்டுகளை ஸ்தல ஸ்தாபன மந்திரி இரண்டாகப் பிரித்தாலும், மற்றும் சிலவற்றை இரண்டாகப் பிரிக்க ஏற்பாடு செய்து வருவதாலும் காங்கிரஸ்காரர்கள் 2, 3 ஜில்லா போர்டு தேர்தல்களில் தங்களுக்கு வெற்றி ஏற்பட்டது என்கின்ற பெருமை எங்கு வீணாய்ப் போய் விடுமோ என்கின்ற பயத்தால் பார்ப்பனர்கள் எல்லோரும் பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாமுமே பொப்பிலி ராஜா மீது வீண் பழி கூறி பெரியதொரு கூப்பாடுகள் போட்டு மாய அழுகை அழுதன.
ஜஸ்டிஸ் மந்திரிகள் மீது எவ்விதக்குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்த வெள்ளைக்காரர்களும் அவர்களது மெயில் பத்திரிகையுங்கூட இக்கூப்பாடுகளுக்கும் அழுகைக்கும் ஒத்து ஊதினார்கள்.
பொது ஜனங்களும் இந்த விஷமப் பிரசாரத்தைக் கண்டு உண்மை உணரமுடியாமல் திண்டாட வேண்டியவர்களாகி விட்டார்கள்.
தாலூகா போர்டுகள் கலைக்கப்பட்ட காலத்திலேயே ஜில்லா போர்டுகள் பிரிக்கப்படும் என்று கூறப்பட்டிருப்பதும், சென்ற வருஷத்திலேயே இரண்டொரு ஜில்லா போர்டுகள் பிரிக்கப்பட்டதும் யாரும் அறியாததல்ல. அந்த அவசியத்தையும், முறையையும் கருதியே இனியும் சில ஜில்லா. போர்டுகளை பிரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் பொப்பிலிராஜா மீது என்ன குற்றம் என்பது விளங்கவில்லை.
பார்ப்பனர்கள் சொல்லும் குற்றம் என்னவென்றால் தன் கட்சிக்கு அனுகூலமாக ஜில்லா போர்டுகளை மந்திரி பிரிக்கிறார் என்பதேயாகும் அப்படியே இருந்தாலும் தன் கட்சி என்பது என்ன? பொப்பிலி ராஜாவின் ஜமீனின் நன்மையைக் கொண்ட கட்சியா? அல்லது பொப்பிலியின் தனது சுயநலத்தைக் கொண்ட கட்சியா? என்பதை முதலில் அறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
பொப்பிலி ராஜா ஒரு பொது ஜனக் கட்சித்தலைவர். அக்கட்சிக்கு பொதுஜன நன்மைக்கு அனுகூலமானவை என்று அக்கட்சியாரால் கருதப்பட்ட கொள்கைகள் சில உண்டு. அக்கொள்கைகளை நிறைவேற்றவும், பாதுகாக்கவும் வாக்குக் கொடுத்து ஓட்டுப்பெற்று அந்த இலாக்கா
குடி அரசு- 1936 (1) 84
நிர்வாகத்தைக் கைப்பற்றி நிர்வாகம் செலுத்துகிறார். இந்நிலையில் அவர். அக்கட்சியின் நன்மையைக் கருதாமல் இருக்கவேண்டும் என்று எந்த மூடன்தான் மதிக்க முடியும்.
சர். சி.பி. ராமசாமி அய்யர் போலீஸ் மெம்பரானார், லா மெம்பரானார். அவர் கட்சிக்கொள்கை இல்லாத அதிகாரத்தில் இருந்தவர். போலீசில் 100-க்கு 90-க்கு மேல் பார்ப்பன ஆதிக்கமாக்கினார். சட்ட இலாக்காவில். 100-க்கு 99-க்கு மேல் அக்கிரகாரமாகவே ஆக்கினார். அதைப்பற்றி
யாரும் பேசுவாரில்லை. கடைசியாக அவரது ஆதிக்கத்தை ஒழிக்கா விட்டால் ராஜீனாமா கொடுத்து விடுவேன் என்று பனகால் ராஜா சென்னை சர்க்காருக்கும், இந்திய சர்க்காருக்கும் இறுதிக் கடிதம் கொடுத்தார். சென்னை கவர்மெண்டு தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். பிறகு சென்னை அரசாங்கம் ஒரு அளவு வழிக்கு வந்தது. பார்ப்பனர்கள் கூப்பாடுகளை கொஞ்ச நாள் குப்பைத் தொட்டியில் போட்டு வந்தது
இப்போதும் பொப்பிலி ராஜா அதுபோலவே துணிவாரானால் பார்ப்பனர் கூப்பாடுகளின் பயன்கள் குப்பைத்தொட்டிக்குப் போகும்படி செய்யலாம். அப்படிப்பட்ட தைரியம் நமக்கு இல்லை என்று தெரிந்தால் பார்ப்பனர் மாத்திரமல்ல சர்க்கார் மாத்திரமல்ல, தெருவில் பிச்சை யெடுக்கும் கண்ணற்ற கிழவி கூட நம்மை மிரட்டத்தான் செய்வாள்.
இந்தச் சிறிய கூப்பாட்டை சட்டை செய்து சென்னை அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டதானது ஜஸ்டிஸ் கட்சிக்கு அவமானகரமான காரியம் என்றே சொல்லுவோம். அதில் எவ்வளவு தான் நியாயமிருக்கிறதாகச் சொன்னாலும் பார்ப்பனர் கூப்பாட்டை மதித்து சர்க்கார் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவாவது அவ்வறிக்கையால் ஏற்பட்டுவிட்டது.
அரசாங்கத்தார் எதற்கு ஆக இவ் வறிக்கையை வெளியிட்டார்கள்.
என்பது ஒரு சூத்திரமாகத்தான் இருக்கிறது இதிலிருந்து ஜஸ்டிஸ் மந்திரிகள் ராஜினாமா செய்து காட்டவேண்டிய ஒரு நல்ல சந்தர்ப்பம் இழந்துவிடப்பட்டது என்றுதான் கருதுகிறோம்
அரசாங்கத்தாரின் காற்று காங்கிரஸ் பக்கம் அடிக்க ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்தால் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் உடனே ராஜினாமா செய்துவிட வேண்டியதுதான் சுயமரியாதையாகும். ஏனெனில் அபிப்பிராய பேதங்களை
நாம் மதிக்கத் தயாராய் இருக்கிறோம். எதிரிகளுக்கு இடம் கொடுக்கத்தக்க அவசியம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுவிட்டதென்றால் நமக்கு அங்கு என்ன வேலை? இதனால் மற்றவர்கள் நிலை எப்படி ஆனாலும் பொப்பிலி ராஜாவைப் பொருத்தவரை மீ£க்கு 5000 அல்லது 6000 ரூ மீதியாகும் என்பது நமது அபிப்பிராயம். ஜஸ்டிஸ் கட்சியானது எதிரிகளின் எவ்வளவு விஷமப் பிரசாரத்தைப் பொறுத்துக் கொண்டு பாமர மக்களின் முட்டாள். 85— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தனத்தால் ஏற்பட்ட எவ்வளவு தொல்லைகளை சகித்துக் கொண்டு இந்த சென்னை அரசாங்கத்துக்கு உதவி செய்து வந்திருக்கிறது என்பதை ஒருவன் யோசித்துப் பார்த்தால் அதற்கு ஆக என்றென்றும் மறவாத நன்றி காட்டித்தான் தீரவேண்டும் என்று யாரும் சொல்லுவார்கள்.
அப்படிக்கில்லாமல் குதிரை கீழே தள்ளினதோடு நில்லாமல் குழியையும் பறித்ததாம் என்று சொல்லும்படி நடந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை
இதற்கு முன்னும் ஒருதடவை அதாவது தோழர்கள் சுப்பராயன், முத்தையா முதலியார் ஆகியவர்கள் மந்திரிகளாய் இருந்த காலத்திலும் கடைசி காலத்தில் அரசாங்கம் அவர்களுக்கு அனுகூலமாயில்லாமல் இதுபோலவே காரியங்கள் செய்து பொது ஜனங்கள் அரசாங்கத்தில் மந்திரிகளுக்கு செல்வாக்கில்லை என்று நினைக்கும்படி செய்தது யாருக்கும் ஞாபகமிருக்கும். கடைசியாக டாக்டர் சுப்பராயன் அவர்களும் முத்தைய முதலியார் அவர்களும் அரசாங்கத்தை சிறிது மிரட்டியவுடன் அப்படி ஒன்றுமில்லை என்று ஒரு அறிக்கை விடா விட்டாலும் அரசாங்கத் தலைவர்
கடித மூலமாக எழுதிக் கொடுத்து இதை யாருக்கு வேண்டுமானாலும்
காட்டிக் கொள்ளலாம் என்று அனுமதித்தார். அதுபோலவே இப்போது எங்கு பார்த்தாலும் அரசாங்கம் காங்கிரசை ஆதரிக்கிறது ஜஸ்டிஸ் கட்சியை அலக்ஷியப் படுத்துகிறது என்ற பேச்சே பெரும் பேச்சாய் இருக்கிறது ஆதலால் மந்திரிகள் இதை கவனித்து இதற்கு தக்கது செய்து கொண்டு மறுவேலை பார்க்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.01.1936
குடி அரசு- 1936 (1) 86
தமிழ்த் திருநாள்
கடவுள் வணக்கம் இல்லை
மதத்தில் இருந்து தமிழ் விலகிணைலொழிய தமிழுக்கும்
தமிழருக்கும் கயமமியாதை உண்டாகாது
புராணங்கவில் இருந்து தமிழுக்கு இலக்கியம் எடுப்பது மலத்திலிருந்து அரிசி பொறுக்கும் ISl
திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரும் கா.நமச்சிவாய
முதலியாரும் தென்னாட்டின் இன்றைய தமிழ்ப்
யெருமைக்குக் காரணஸ்தராவார்கள்
அன்புள்ள தலைவர் அவர்களே! தோழர்களே! நீங்கள் இவ்வளவு பெரிய கரகோஷமும் ஆரவாரமும் செய்து என்னை இப்பொழுது வரவேற்ற மாதிரி எனது உபன்யாச முடிவில் எனக்கு மகிழ்ச்சியான வழியனுப்பு செய்ய மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் தமிழ் பாஷைக்கு வாழ்த்துக்கூறும் வேலை இலேசானதல்ல. அதிலும் என்போன்ற அதாவது
தமிழ் பாஷைக்கு வல்லின இடையின எழுத்து பேதமும், பிரயோகமும் பாஷையின் இலக்கண இலக்கியமும் அறியாதவனும், தமிழ் பாஷையையே கெடுத்து கொலை செய்து வருபவன் என்கின்ற பழியைப் பெற்றவனுமான. நான் தமிழ் வாழ்த்துக்கு தகுதி உடையவனாவேனா என்று பாருங்கள்.
அன்றியும் தமிழைப்பற்றி அபிப்பிராயங்களிலும் பண்டிதர்களுக்கும் எனக்கும் எவ்வளவோ துறையில் நேர்மாறான கருத்துக்கள் இருந்து வருவதும் எவரும் அறியாததல்ல.
இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் வாழ்த்துதல் என்பதையும் நான் இவ்வளவு சாதாரணமாய்க் கருதுபவனுமல்ல. வாழ்த்துதல் என்றால் பார்ப்பனர்கள் ஏதோ மஞ்சளையும் அரிசியையும் கலந்து பொறுப்பும் பொருளும் இல்லாத ஒன்றின் பெயரைச் சொல்லி வாழ்த்தி (ஆசீர்வாதம் செய்து) விட்டு ஏதோ பெற்று வயிறு வளர்ப்பது மாதிரி வாழ்த்தை அவ்வளவு ஏமாற்றமாக நினைப்பவன் அல்ல. ஆனால் வாழ்த்துதலின் அவசியத்தையும், அதன் பெருமையையும் நான் உணர்ந்தவனேயாவேன். தகுதியும் பொறுப்பும் உடையவர்களே வாழ்த்த வேண்டும். வாழ்த்துபவர்கள் தங்களுக்கு பொருப்பு இருப்பதை உணர்ந்தவர்களாயிருக்க வேண்டும் ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தமிழை வாழ்த்தி விட்டு தமிழுக்கு இடுக்கண் ஏற்படும்போது கவலை அற்றவரும் எவ்வித உதவியும், ஆதரவும் அளிக்கத் தகுதி அற்றவர்களும் வாழ்த்திப் பயன் என்ன? ஆகையால் இங்கு வாழ்த்துதலுக்கு தகுதியைக் கருதாமல் மூப்பையும் நரையையும் கருதியே கட்டளை இடப்பட்டு விட்டேன் என்பதாகக் கருதுகிறேன்.
தமிழில் எந்த அளவும் பள்ளியில் பயின்றவனல்ல. தமிழைப்பற்றி தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன் மதிப்பு என்பதல்லாமல் வெறும் பாஷையைப் பற்றியே நான் எவ்வித பிடிவாதம் கொண்டவனுமல்ல தமிழுக்கு ஆக என்று எவ்வித தொண்டு புரிந்தவனுமல்ல.
தமிழுக்கு வாழ்த்துக்கூற தலைவரும், எனது நண்பருமான தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்களும், தமிழ்ச்சங்க அமைச்சர் தோழர் கா. நமச்சிவாய முதலியாரும் மற்றும் அவர்கள் போன்ற பெரியார்களே உண்மையில் தகுதி உள்ளவர்கள்.
தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்களின் தமிழ்த் தொண்டை நானே நன்றாய் அறிந்தவன். அவரது தமிழ்த்தொண்டுக்கு எடுத்துக்காட்டு வேண்டுமானால் நானேயாவேன். நான் தமிழ் பேசுவதும் எழுதுவதும் தமிழைக்கொலை புரியும் மாதிரியானாலும் நான் பல பத்திரிகைகள் நடத்துவதும், சுமார் 50, 60 புத்தகங்கள் வெளியிட்டதும் தலைவர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தமிழ் பாஷையில் தேசபக்தன், நவசக்தி முதலிய பத்திரிகைகளின் தொண்டேயாகும். திரு.வி.க. முதலியார் அவர்களது தேசபக்தன் பத்திரிகைக்குப் பிறகே தமிழ் அரசியல் மேடைகளைக்: கைப்பற்றிற்று என்று சொல்லுவேன். அரசியல் தலைவர்களையும் தமிழ் அடிமை கொண்டதற்குக் காரணமும் அவர்களது பத்திரிக்கைகளேயாகும்.
அப்பத்திரிகைகள் என்னைவிட மோசமானவர்களையும், தமிழ் பாஷையில் அரசியலை உணரவும், தமிழ்பேசவும் செய்துவிட்டதால் தமிழ் பாஷையைக் காதில் கேட்டால் தோஷம் எனக்கருதும் ஜாதியாரும் தமிழில் கலந்து கொள்ளவும், தமிழை வேஷத்துக்காவது மதிக்கவும் செய்துவிட்டது.
பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களது உழைப்பும் தமிழுக்கு மிகப்பெரியதொன்றும் தமிழர் மறக்க முடியாததுமான தொண்டாகும் பெரியார் நமச்சிவாய முதலியார் அவர்களின் துணிந்த முயற்சி இல்லா திருக்குமானால் இன்று தமிழ்ப்பாட புத்தகங்கள் பெரிதும் ஆரியமத உபாக்கியானங்களாகவும், ஆரியமும் தமிழும் விபசாரித்தனம் செய்து பெற்ற பிள்ளைகள் போலவும் காணப்படும். ஆதலால் தான் தமிழுக்கு வாழ்த்துக்கூற, அப் பெரியார்களும் அவர்கள் போன்றார்களுமே தக்கார். என்று உரைத்தேன்.
தோழர்களே! எனக்கிட்ட கட்டளையில் ஏதேனும் ஒரு சிறு பாகமாவது நிறைவேற்றப்பட வேண்டுமானால் தமிழைப்பற்றிய எனது உள்ளக்
குடி அரசு- 1936 (1) 88
கிடக்கையை உண்மையாய் எடுத்துரைத்தாக வேண்டும். ஆதலால் ஏதோ நான் சொல்வது பற்றி நீங்கள் தவறாகக் கருதாமல் என் கபடமற்ற தன்மையை அங்கீகரித்து உங்களுக்கு சரி என்று பட்டதை மாத்திரம் ஏற்று மற்றதை தள்ளி விடுங்கள். அதற்கு ஆக என் மீது கோபமுறாதீர்கள்
தமிழும் மதமும்
முதலாவதாக தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில்
அதுவும் ஒரு பாஷையாக இருக்கவேண்டுமானால் தமிழையும், மதத்தையும் பிரித்துவிடவேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்மந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளிவைக்கவேண்டும்
மதசம்மந்தமற்ற ஒருவனுக்கு தமிழில் இலக்கியம் காண்பது மிகமிக அரிதாகவே இருக்கிறது. தமிழ் இலக்கணம்கூட மதத்தோடு பொருத்தப் பட்டே இருக்கிறது
மதமும் இலக்கணமும்
உதாரணமாக “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” என்றால் என்ன? நரகர்கள் யார்? தேவர்கள் யார்? இலக்கணத்திலேயே மதத்தைப் போதிக்கும் சூழ்ச்சிதானே இது?
இனி பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் இலக்கியத்துக்குப் புத்தகங்கள் எவை? கம்ப ராமாயணம், பாரதம், பாகவதம், பெரிய புராணம், தேவாரம், திருவாய் மொழி போன்ற மத தத்துவங்களையும், ஆரிய மத தத்துவம் என்னும் ஒரு தனிப்பட்ட வகுப்பின் உயர்வைப் போதித்து மக்களை மானமற்றவர்களாக்கும் ஆபாசக் களஞ்சியங்களும் அல்லாமல். வேறு இலக்கியங்கள் மிதந்து காணப்படுகின்றனவா? இன்றையப் பண்டிதர்களுக்கு உலக ஞானத்தைவிடப் புராண ஞானங்கள் தானே அதிகமாயிருக்கின்றன?
மேல்நாட்டு இலக்கியம்
மேல்நாட்டுப் புலவர்கள் மேல்நாட்டு இலக்கியங்கள்ஆகியவைகளுக்கு இருக்கும் பெருமையும், அறிவும் நம் தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கின்றது என்று சொல்ல முடியுமா? ஷேக்ஸ்பியர் வேண்டுமா? இங்கிலாந்து வேண்டுமா? என்றால் இங்கிலீஷ் மகனே ஷேக்ஸ்பியர் வேண்டும் என்பானாம். நாம் எதைக் கேட்பது?
இந்தியா வேண்டுமா? கம்ப ராமாயணம் வேண்டுமா என்றால் உண்மைத்தமிழ் மகன் என்ன சொல்லுவான்? இரண்டு சனியனும் வேண்டாம் என்று தானே சொல்லுவான்.
மேல் நாட்டில்தான் அறிவாளிகள் உண்டு என்றும், கீழ்நாட்டில் அறிவாளிகள் இல்லை என்றும் நான் சொல்ல வரவில்லை. ஹட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மேல்நாட்டு அறிவாளிகள் தாங்கள் செய்த இலக்கியங்களை மத சம்மந்தமன்னியில் கடவுள் சம்மந்தமன்னியில் பெரிதும் செய்து வைத்தார்கள். அதனால் நூற்றுக்கணக்காக மேல்நாட்டு இலக்கியங்களும் பண்டிதர்களும் போற்றப்படுகிறார்கள்.
கீழ் நாட்டில் குறிப்பாக இந்தியாவில் எத்தனை இலக்கியம் உலகத்தால் மதிக்கப்படுகின்றன? எத்தனை பண்டிதர்கள் உலகத்தால் போற்றப்படுகிறார்கள்? டாக்கூர் அவர்கள் கவிக்கு ஆக போற்றப்படலாம். ஆகவே மதம் கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப்பற்றிய இலக்கியம் ஆகியவைகள் மூலம் தான் ஒரு பாஷையும் அதன் இலக்கியங்களும் மேன்மையும் முடியும் என்பது
மாத்திரமல்லாமல் அதைக்கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள்.
மலத்தில் அரிசி பொறுக்கலாமா?
கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லு கிறார்கள். இருந்து என்ன பயன். ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும்
மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல் தானே கம்பராமாயண: இலக்கியம் இருக்கிறது. அது தமிழ் மக்களை எவ்வளவு இழிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழரின் சரித்திர கால எதிரிகளை எவ்வளவு மேன்மையாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படி கம்ப ராமாயண இலக்கியத்தை படிப்பான். இன்று கம்ப ராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா இழிவு பரவிற்றா என்று நடு நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
கடவுளால் பாஷை உயராது
தமிழ் பாஷையின் பெருமை பரமசிவனுடைய டமாரத்தில் இருந்து வந்ததென்றோ, பரமசிவன் பார்வதியிடம் பேசிய பாஷை என்றோ, சொல்லி விடுவதாலும் தொண்டர் நாதனை தூதிடை விடுத்ததாலும், முதலை உண்ட பாலனை அழைத்ததாலும், எலும்பை பெண்ணாக்கினதாலும், மறைக் கதவைத் திறந்ததாலும் தமிழ் மேன்மையுற்றதாகி விடாது. இந்த ஆபாசக் கதைகள் தமிழ் வளர்ச்சியையும் மேன்மையையும் குறைக்கத்தான் பயன்படும்
பரமசிவனுக்குகந்த பாஷை தமிழ் என்றால் வைணவனும் துருக்கனும் தமிழைப் படிப்பதே பாவமல்லவா? அன்றியும் அந்தப்படியிருந்தால். பார்ப்பான் தமிழ் மொழியை சூத்திர பாஷை என்றும், அதைக் காதில் கேட்பதே பாவம் என்றும் சொல்லுவானா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்திப் புரட்டு.
இன்று, தமிழ்நாட்டில் வந்து தமிழ் கற்று வயிறு வளர்ப்பவர்களாகிய பார்ப்பனர்களே இந்தி பாஷை இந்திய பாஷை ஆக வேண்டு மென்று
குடி அரசு- 1936 (1) 9
முயற்சித்து வெற்றி பெற்று வருகிறார்கள். கோர்ட் பாஷை, அரசாங்க பாஷை ஆகியவைஎல்லாம் இந்தி மயமாகவேண்டும் என்கிறார்கள். காரணம் கேட்டால். இந்தி பாஷையில் துளசிதாஸ் ராமாயணம் நன்றாய் விளங்குமென்கிறார்கள்
தமிழ்ப் பண்டிதர்களுக்கு இதைப்பற்றிச் சிறிதும் கவலை இருந்தது என்று சொல்ல முடியவில்லை; தமிழ்ப்பண்டிதர்கள் இந்த அரசியல்வாதி களின் கூச்சலுக்கும் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கும் பயந்து கொண்டு வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்
செத்த பாம்பு
பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். பொதுப்பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது? பொது ஜனங்களின். வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப் பற்றி கவனிப்பதில்லை. தமிழ் தமிழ் என்று எங்கோ ஒரு மூலையில் இரண்டு பண்டிதர்கள் தான் சத்தம் போடுகிறார்கள். ஆனால் சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் கேப்னெட் மெம்பர்கள் ஐகோர்ட் ஜட்ஜிகள் முதல் எல்லா பார்ப்பன அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். நம்ம பெரிய அதிகாரிகளுக்கோ, பெரிய செல்வாக்கும் செல்வமும் உள்ளவர்களுக்கோ தமிழைப் பற்றி கவலையும் இல்லை; தமிழைப் பற்றி அதிகம் பேருக்கு ஒன்றும் தெரியவும் தெரியாது
தமிழபிமானம் தேசத்துரோகம்
தமிழினிடத்தில் ஒருவன் அபிமானியாக இருந்தாலே அவன் தேசத் துரோகி, வகுப்புவாதி, பிராமணத்துவேஷி என்றெல்லாம் ஆய்விடுகிறான். ஆதலால் மீட்டிங்கிக்கு வரக்கூட நமது மந்திரிகள் பயப்படுகிறார்கள்.
தமிழின் பரிதாப நிலைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும் தமிழ்பாஷையில், எழுத்தில் ஒரு சிறு மாற்றமோ முற்போக்கோ செய்யக்கூட ஒரு தமிழ் அபிமானியும் முயற்சிப்பதில்லை. யாராவது முயற்சித்தாலும் ஆதரவளிப்பதுமில்லை. தற்கால நிலைக்கு தமிழ் போதியதாகவும், செளகரியமுள்ளதாகவும் ஆக்க யார் முயற்சித்தார்கள்.
மாறுதல் அவசியம்
மேல்நாட்டு பாஷைகள் எவ்வளவு மாற்றமடைந்து வருகின்றன. எழுத்துக்களில் எவ்வளவு மாறுதல் செய்து வருகிறார்கள். ரஷ்யாவில் சில பழைய எழுத்துக்களை எடுத்து விட்டார்கள். புதிய எழுத்துக்கள் சேர்த்தார்கள். அமெரிக்காவில் எழுத்து கூட்டுவதாகிய இஸ்பெல்லிங் (Spelling) முறையை மாற்றி விட்டார்கள். துருக்கியில் துருக்கி பாஷைக்கு உண்டான. எழுத்துக்களையே அடியோடு எடுத்துவிட்டு ஆங்கில எழுத்துக்களை ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
யேற்படுத்திக் கொண்டார்கள். தமிழர்கள் தமிழுக்கு ஆக நமக்கு விவரம் தெரிந்த காலமாய் என்ன காரியம் செய்தார்கள். காலத்துக்கு ஏற்ற
மாறுதலுக்கு ஒத்துவராதவன் வெற்றிகரமாய் வாழமுடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப்போட்டிக்கு தகுதியுடையவனாவான்.
தமிழ் எழுத்துக்களில் ஒரு சில மாற்றம் செய்தேன். அநேக பண்டிதர்கள். எனக்கு நன்றி செலுத்தி என்னைப் பாராட்டினார்களேயல்லாமல் ஒருவராவது அம்முயற்சிக்கு ஆதரவளித்தவர்கள் அல்ல
இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய நான் தகுதியற்றவன் என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால் தகுதி உள்ளவர்கள் எவரும் வெளிவராவிட்டால் நான் என் செய்வது? என்னைக்குறைகூறவோதிருத்தவோ முயற்சிப்பதின் மூலமாகவாவது இதற்கு ஒரு வழி பிறக்காதா என்றுதான் துணிந்தேன். இதுவரை யாரும் அதை லக்ஷியம் செய்யவில்லை
ஆனாலும் நான் அம்முறையிலேயே இரண்டு மூன்று பத்திரிக்கைகள். நடத்துகிறேன். அம்முறையிலேயே 10, 20 புத்தகங்களும் வெளியிட்டிருக்
கிறேன். இன்னம் எவ்வளவோ செய்ய வேண்டி இருக்கிறது
பார்ப்பன ஆதிக்கம் இவைகளையெல்லாம் பார்ப்பனர்களே செய்வதாகப் பாசாங்கு செய்து பார்ப்பனர்கள் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தப் பார்த்தார்கள். அநேக பண்டிதர்கள் அவர்களுக்கு ஆதரவும் அளித்தார்கள். கடைசியில் டாக்டர் மாசிலாமணி முதலியார் போன்றவர்களே அம்முயற்சியைப் பாழாக்கி அதைக் காப்பாற்றினார்கள்.
தலைவர் திரு.வி.க. அவர்களும் சிறிது நமக்கு உதவி செய்தார்கள் என்றாலும் வெளியில் வந்து செய்திருந்தால் அதில் நாம் ஆதிக்கம்பெற்று
இருக்கலாம்.
எண்கும் திருநான்
எப்படி ஆனாலும் தமிழ் பாஷை உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது. அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு.வி.க. அவர்களும் அமைச்சர் கா. நமச்சிவாய முதலியார்.
அவர்களும், இத்திருநாளை இம்மாதிரி ஒழிந்த நேரத் திருநாளாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும், ஊக்கத்தையும், உண்டாக்கும் திருநாளாகச் செய்ய வேண்டும். வருஷம் ஒவ்வொரு ஊரில் தலைமைத் திருநாள் நடைபெறச் செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும், சுயமரியாதை அற்றதும், ஆபாசமானதுமான பண்டிகைகள்
குடி அரசு - 1936 (1) 92
கொண்டாடுவதைவிட இப்படி தமிழ்த் திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும், மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாகத் திருநாள்களை பரப்பவேண்டும். நமது பெண்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு திருநாள் வேண்டி இருக்கிறதால் தீபாவளியையும், மாரி பண்டிகையையும் கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆதலால் தக்கது செய்ய வேண்டுகிறேன். கடைசியாக தோழர்களே தமிழ் முன்னேறும் என்பது பற்றி எனக்கு அறிகுறிகள் தென்பட்டுவிட்டன அதென்ன வென்றால் என்னை இங்கு உள்ளே விட உங்களுக்கு தைரியம் ஏற்பட்டுவிட்டது ஒன்றே போதுமான ஆதாரமாகும்.
அன்றியும் இந்தப்பெருமை என்னையும் ஒருபடி உயர்த்திவிட்டது என்னவென்றால் தமிழ்ப் பண்டிதர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் படியான பெருமை ஏற்பட்டுவிட்டதல்லவா? நான் எவ்வளவு தமிழ் அறியாதவனாய் இருந்தாலும் தமிழில் எனக்கு உள்ள ஆசை உங்கள் யாரையும்விடகுறைந்ததல்ல என்பதை தெரிவித்துக்கொண்டு, அந்த ஆசையின். மயக்கத்தால் நான் பேசியவற்றுள் ஏதும் குற்றம் குறைகள் இருப்பின் அவற்றை மன்னித்துக் களைந்துவிட்டு சரி என்று பட்டவையை மாத்திரம் ஏற்று அதற்காவன செய்ய வேண்டிக்கொண்டு விடைபெற்றுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 13-01-1936 ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த்திருநாள் விழாவில் ஆற்றிய சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 26.01.1936
ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மன்னர் முடிவெய்தினார்
இந்திய சக்கரவர்த்தி ஜார்ஜ் மன்னர் தமது 71 வது வயதில் முடிவெய்தினார். எட்வர்ட் மன்னர் முடி புனைந்தார்.
“முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு, பிடி சாம்பலாவது'' என்பது இயற்கையே யாகும். இதில் எவ்வித அதிசயமோ தனி விஷயமோ என்பது சிறிதும் கிடையாது
மனிதனாகப் பிறந்தால் மாத்திரம் அல்ல, கல்லாகவோ வைரக் குன்றமாகவோ பிறந்தாலும்கூட கால பேதத்தில் இந்த முடிவையேதான் அடைந்து தீர வேண்டும். தோன்றின அழியும், அழிந்தன தோன்றும் என்பதே உலக இயற்கை. ஆதலால் விசனப்படுவது பயன்தரக் கூடியதன்று
நமது சக்கரவர்த்தியார் என்னப்பட்ட ஜார்ஜ் அரசர் இந்தியாவின். நல்ல ஆட்சிக்கோ தீமை ஆட்சிக்கோ சம்மந்தப்பட்டவரன்று
பிரிட்டிஷ் ஆட்சி அரசருக்கு கொடுத்துள்ள ஏதோ இரண்டொரு பாதுகாப்பு அதிகாரம் போக, பாக்கி அதிகாரங்கள் அவ்வளவும் ஜனப்பிரதிநிதி சபை என்று சொல்லப்படும் பார்லிமெண்டு சபையின் ஆட்சிக்கு உட்பட்டதாகும்
ஆதலால் ஆட்சி சம்பந்தமான குற்றங்குறைகளைஅரசருக்குப் பொருத்தி அவரது குணா குணங்களைப்பற்றி நாம் பேச நமக்கு நியாயம் இல்லை.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது இன்று உலகில் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாகும். அதில் அரசர் பதவியும், சக்கிரவர்த்தி பதவியும் வகிப்பது என்பது ஒரு பெறுதற்கரிய பேறு என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது. அரசர் தனது சொந்த வாழ்வில் எவ்வித குறைக்கும், குற்றத்துக்கும் இடமில்லாமல் வாழ்ந்தது மனிதத்தன்மைக்கு பெருமை தரத்தக்கதேயாகும். மற்றும் ஜார்ஜ் அரசர் சராசரி இங்கிலாந்து மனித ஆயுளுக்கு ஒன்றுக்கு ஒன்றரையாகவும் வாழ்ந்திருப்பதும், அவ்வாழ்வில். இன்றைய முறையில் பெரிதும் மகிழ்ச்சியுடனும், சுகத்துடனும், போக போக்கியத்துடனும் இருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும்
அவர் 1865 ம் வருஷம் ஜுன் மீ' 3 ந் தேதி பிறந்தார்.
குடி அரசு- 1936 (1) 04
1910ம் வருஷம் மே மாதம் 65 தேதி பட்டம் ஏற்றார். 1936ம் வருஷம் ஜனவரி மீ 21 ந் தேதி முடிவெய்தினார். இவர் பிறப்பு, வாழ்வு, சாவு ஆகிய முறையும் பெருமையாகவே அனுபவித்த பெரியார் என்றுதான். சொல்லிப் பாராட்ட வேண்டும்.
குடி அரசு - தலையங்கம் - 26.01.1936
05 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சக்லத்வாலா சாய்ந்தார்
சக்லத்வாலா சாய்ந்தார் என்பதைக் கேட்ட ஏழைமக்கள் பரிதவிக்காம லிருக்க மாட்டார்கள். அவர் எப்படியும் ஒரு நாளைக்காவது செத்துச் சாய்ந்து தான் தீரவேண்டும். அதை தடுக்க யாராலும் முடியாது. அன்றியும் சக்லத்வாலா இந்திய மக்கள் சராசரி வாழ்வுக்கு ஒன்றுக்கு இரண்டு பங்கு காலம் வாழ்ந்து விட்டார் என்றாலும், அவரது தொண்டு ஏழை மக்களுக் கென்றே பாடுபட்டு உழைத்துப் பட்டினியால் வாடும் மக்களுக்கென்றே இருந்து வந்த படியால் அம்மக்களின் பரிதாபகரமான வாழ்வுக்கு முடிவு ஏற்படும் வரை சக்லத்வாலாவின் வாழ்க்கையை தங்கள் தங்கள் ஜீவவாழ்க்கையைவிடப் பெரிதாக மதித்திருப்பார்கள் என்பதைப்பற்றி நாம் குறிப்பிட வேண்டியதில்லை.
சக்லத்வாலா ஒரு சிம்மம் போன்றவர். அவர் பேச்சு எதிரிலிருக்கும் எவரையும் லட்சியம் செய்து பேசக்கூடியதாய் இருக்காது. அவர் கொண்ட கொள்கையொன்றையே லக்ஷியம் செய்ததாக இருக்கும்.
அவர் பேசும் கூட்டத்தில் அவரது கொள்கைக்கு எதிரிகள் வீற்றிருக் கிறார்கள் என்று கண்ட மாத்திரத்தில் அவருடைய உபன்யாசங்கள் கொள்கை: களின் உருவங்களாகவே நிற்கும். அப்பொழுது தான் சக்லத்வாலாவின் உண்மையானசக்தி வெளியாகும். அவரது கூட்டங்களில் எப்படிப்பட்டவனாலும் விஷமங்கள் செய்ய முடியாது. விஷமங்கள் செய்யப்பட்ட கூட்டங்களே மிகவும் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட கூட்டங்களாக முடியும்
60 வதுக்கு மேற்பட்ட வயதானாலும் சாதாரணமாக 2 மணி 3 மணி
நேரம் பேசுவார்.
கேள்விகளுக்கு பதில் சொல்லுவதில் தான் அவரது தெளிவும், உறுதியும், உற்சாகமும் விளங்கும்
அவருடைய உறுதியான கொள்கைகள் பொது உடமைக் கொள்கைகளே.
இந்தியர்கள் சிலரால் மகாத்மா என்று கூறப்படும் காந்தியாரிடத்தில் அவருக்கு மகா வெறுப்பு உண்டு. லண்டனில் அவர் பேசும் எந்தப் பொதுக் கூட்டங்களிலும் காந்தியாரை சின்னா பின்னமாகக் கிழித்துத் தள்ளிவிடுவார். காந்தியார் மனித சமூக விரோதி என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு ஒற்றர் என்றும், பாடுபட்டு உழைக்கும் மக்களை மேல்ஜாதிக்காரருக்கும், பணக்காரர்களுக்கும் இரை ஆக்கிக் கொடுப்பவரென்றும் சிறிதும் கூசாது ஆதாரங்களோடு புள்ளி விவரங்களோடு எடுத்துக் கூறுவார்.
குடி அரசு- 1936 (1) 96
பாதிரிமார்களைக் கண்டால் அவருக்கு உடல் சிலுத்துக் கொள்ளும் தலை மயிர் உடல் மயிர் எல்லாம் நிமிர்ந்து கொள்ளும்
இங்கிலாந்து தொழிற் கட்சியும், இந்திய காங்கிரசும் ஏழை மக்களை ஏமாற்றும் சாதனம் என்று அடிக்கடி ஒப்பிடுவார்.
இங்கிலாந்திலுள்ள சகல பிற்போக்கான கட்சிகளையும் விட தொழிற்கட்சி மோசமானதும் வேஷமானதுமான கட்சி என்பார். அவருடைய அபிப்பிராயங்களை எப்பேர்ப்பட்டவர்களாலும்
மாற்றமுடியாது
சக்லத்வாலா தானே தனித்த முறையில் ஒரு கட்சியாயிருப்பவர்.
அவர் அபிப்பிராயத்துக்கு இணங்கினவர்கள்தான் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் யாராயிருந்தாலும் வேறு கட்சி என்றுதான். சொல்லி விடுவாரே ஒழிய அபிப்பிராய பேதத்தோடு அவர் கட்சியில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளவே முடியாது. அவ்வளவு பிடிவாத முள்ளவர். அவரது குரல் 20000 ஆயிரம் ஜனங்களுக்கும் கேட்கும். தினம்
3 கூட்டங்களில் பேசினாலும் குரலில் மாறுபாடு உண்டாகாது.
இவர் 3 வது வகுப்பில் பிரயாணம் செய்வார். வெகு சாதாரண உணவையே உண்பார். தனக்கென்று ஒரு செளகரியமும் செய்து கொள்ள மாட்டார். வெகு சாதாரண வாழ்க்கையே வாழ்வார்.
பிரசாரம் ஒன்றே தமது வாழ்வின் லட்சியமாய் இருக்கவேண்டு மென்ற ஆசையுள்ளவர்.
தன்னைப்பற்றி பிறர் என்ன சொல்லுவார்கள், என்ன நினைப்பார்கள். என்கின்ற இரண்டு விஷயங்களையும் சிறிதும் லட்சியம் செய்யமாட்டார்.
சிற்சில சமயங்களில் முதலாளிகளும் பாதிரிகளும்கூட அவரை அழைத்து அவர்களது கூட்டங்களில் பேச விரும்புவார்கள்.
இப்படிப்பட்ட குணங்கள் மிதந்துள்ள தோழர் சக்லத்வாலா அவர்கள். 1874 மார்ச்சு மாதம் 28ம் தேதி பிறந்தார்.
1936 ஜனவரி மாதம் 16ம் தேதி மாலை சாய்ந்தார். அவருக்குப் பதிலாகவோ, அவரைப் போலவோ சொல்லுவதற்கு மற்றொருவர் இனித்தான் பிறக்க வேண்டும்
லண்டனில் ஏழை மக்கள், பாட்டாளிகள், தீவிர உணர்ச்சி வாலிபர்கள் ஆகியவர்கள் உள்ளத்தை அலங்கரித்துக்கொண்டிருந்த அப்பேர்ப்பட்ட பொதுவுடமைப் பெரியார் வாழ்வு முற்றுப் பெற்றதானது பரிகரிக்க முடியாத ஒரு பெரும் நட்டமேயாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.01.1936 ஏட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பார்ப்பனரல்லாத சமூக அபிமானிகளுக்கு விண்ணப்பம்
அன்புள்ள தோழர்களே!
பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்கும் அதன் கொள்கைக்கும் நாட்டில் நல்ல. ஆதரவும் செல்வாக்கும் இருப்பது தாங்கள் அறியாததல்ல.
ஆனால் அதற்கு கவலையும், நாணயமும், திறமையும் கொண்ட
தலைவர்கள் இல்லை என்று சொன்னால் அதை அடியோடு நீங்கள் ஆக ஷேபிக்க மாட்டீர்கள். இன்று அக்கக்ஷிக்கு தலைவர்களும், பாதுகாப் பாளர்களும் மந்திரிமார்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே
கருதும்படி ஆகி விட்டது
அக்கக்ஷியின் பேரில் இன்று சொல்லப்படும் தவறுதல்களுக்கும், பழிகளுக்கும் காரணம் போதிய பிரசாரமின்மையும் அதன் தலைவர்கள் என்போர்களுக்குள் இருந்து வரும் அசிரத்தையின் பயனுமேயாகும்.
மற்றும் அக்ககஷிக்குத் தேர்தல்களில் தோல்வி ஏற்பட்டு வருவதாய் கருதவேண்டி இருப்பதும், சொல்லப்பட்டு வருவதும், தலைவர்களாய் இருப்பவர்கள் என்பவர்களுள் இருக்கும் கட்டுப்பாடற்ற தன்மையும், ஒற்றுமை இன்மையும், அவநம்பிக்கையும், கவலையற்ற தன்மையும், சுயநல உணர்ச்சியும் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறதே தவிர மற்றபடி பொது ஜன ஆதரவில்லாததால் தோல்வி ஏற்பட்டது என்று சொல்லிவிடும்படியாக இல்லை.
என்றாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் உண்மையான பற்றுதலும் கவலையும் கொண்டு உழைத்துவந்த முக்கியஸ்தர்கள் பலர் ஒவ்வொருவராய் இக்கட்சியில் இருந்து விலகி நிற்பதும், எதிர்க்கட்சியாகிய
காங்கிரசில் சேர்ந்து கொள்ளுவதுமாய் இருந்து வருகிறார்கள்.
இன்னும் பலர் ஒவ்வொருவராய் காங்கிரசில் சேர ஏற்பாடுகள். செய்துகொண்டு சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
குடி அரசு- 1936 (1) o8
இவ்வியக்கத்துக்காக உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் செய்தும் செய்யத் துணிந்தும் உழைத்து வந்த ஆங்காங்குள்ள வாலிப தோழர்களின் மனம் உடைந்து சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு அவர்களது ஆதரவுகளும் குறைந்து வருகின்றன.
இந்தநிலை இப்படியே இருந்துவரும்படி அனுமதிப்பது அறிவுடமை
ஆகாது ஆதலால் இதுவிஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் அதாவது அக்கக்ஷியில் உண்மையான பற்றுதலும், அபிமானமும், தீவிர கவலையும் உள்ளவர்கள் ஒன்றுகூடி இதற்கு ஏதாவது ஒருவகை செய்து தக்கமுறையில்
திருத்தி அமைத்துக் கட்டுப்பாடுடன் தீவிரமான பிரசாரம் செய்யவேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம் எனவே இவ்விஷயங்களைப்பற்றி அக்கரையுள்ள எல்லா தோழர்களும் திருச்சியிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு கூட்டம் கூடி யோசித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வந்து பயன்தரத்தக்க மார்க்கம் கண்டு வேண்டுவன செய்ய வேண்டும் என்று கருதி இவ்வேண்டுகோளை தங்களுக்கு அனுப்பியிருக்கிறோம் அதாவது கக்ஷியையே பிரதானமாய் கருதிய மக்களில் “நாங்கள் எந்த தேர்தலுக்கும் எந்த பதவிக்கும் நிற்பதுமில்லை” ஆசைப்படுவது மில்லை என்கின்ற உறுதியுள்ளவர்கள் ஒன்று சேர வேண்டும்
அவர்கள் இப்போதே எந்தப் பதவியில் இருந்தாலும் ராஜினாமா செய்ய வேண்டும்
அப்படி ராஜினாமா செய்தவர்களும் வேறு பதவி எதுவும் வகிக்க இஷ்டப்படாதவர்களுமானவர்களே தலைமை வகித்து நடத்தத்தக்க வண்ணம் ஒரு சாரணர் படை திரட்டவேண்டும்
ஓரளவு நிதி திரட்டி பிரசாரம் வகுக்க வேண்டும் இவ்வளவுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாகும்
“உலகம் உயர்ந்தோர் மாட்டு” என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல். உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல்
இதற்கு ஆவன செய்யவும் இதைப்பற்றி பல தோழர்களது அபிப்பிராயம் அறியவும் சமீபத்தில் ஒரு கூட்டம் கூட்டவோ அல்லது சிலர்
சுற்றுப் பிரயாணம் செய்யவோ அவசியமென்று கருதுகிறோம்
ஏனெனில் பல வழிகளிலும் தலைவர்கள் என்பவர்களால் தக்கபடியான முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்படும் என்று கருதி ஏமாற்றமடையும் படியான நிலைமையே ஏற்பட்டு வருவதால் இம்மாதிரியான ஒரு காரியம் அவசியம் என்று படுகின்றது. 0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தங்கள் ஆதரவான பதில் கிடைத்த பின் இடம் காலம் முதலியவைகளை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
தயவு செய்து உடனே 30-ந் தேதிக்குள்ளாகவே தங்கள் பதிலை அனுப்பக் கோருகிறோம்
தங்களன்புள்ள:-
W.P.A. செளந்திரபாண்டியன்,
ஈ.வெ. ராமசாமி. ஈரோடு
25.1.36
குடி அரசு - அறிக்கை - 26.01.1936
குடி அரசு - 1936 (1) 100
சத்தியமூர்த்தியாரும் வகுப்புவாமிப் பிரதிநிதித்துவமும்
பார்ப்பனரல்லாதார் கட்சியாரின் முக்கிய கொள்கையானது, இந்தியாவில் மக்கள் பல்வேறு மதக்காரர்களாய் மாத்திரமல்லாமல், பல்வேறு ஜாதிகளாய் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சமூக வாழ்வில் பிறவியின் காரணமாகவே உயர்வு தாழ்வு கற்பித்து அந்தப்படியே வெகு காலமாய் நடத்தப்பட்டு வந்ததால் மேல் நிலையில் இருப்பவன் எப்போதும் மேல் நிலையிலேயே இருக்கவும், கீழ்நிலையில் இருப்பவன் எப்போதும்
கீழ் நிலையிலே இருக்கவுமான சமூக வாழ்க்கை அவர்களைப் பற்றிக் கொண்டு விட்டது என்பதை அறிந்து, அவற்றை அடியோடு ஒழித்து சமூக வாழ்விலும் மற்றும் கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றிலும் சகல மக்களுக்கும் சமசந்தர்ப்பம் ஏற்படும்படியாகச்செய்ய வேண்டுமென்பதேயாகும்.
இக்கட்சியை இந்த முக்கிய கொள்கையோடு 1916ல் ஆரம்பித்து இன்று 1936ம் வருஷம்வரை சிறிதும் பின்னடையாமல் எவ்வளவோ எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் இடையில் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்ததின் பயனாய் கொள்கை ஒரு அளவு வெற்றி பெற்று இருக்கிறது என்றாலும் இன்னும் வெற்றி பெற வேண்டிய அளவு எவ்வளவோ இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது
ஆனால் சமூக வாழ்வில் பிற்பட்டு கல்வியிலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் கீழ் நிலையில் வெகுகாலமாய் இருந்துவந்த மக்கள் போதிய பகுத்தறிவும், ஞானமும் பெற்றிருக்க முடியாது ஆதலால் அப்படிப் பட்டவர்களில் சிலர் தங்கள் தனிப்பட்ட அற்ப சுயநலத்தையே பிரதானமாய்க் கருதி தங்களது வகுப்பு சுயமரியாதை முயற்சியைப் பறிகொடுத்து விட்டு, இம்முயற்சிக்கு எதிரிகளாயிருந்து தொல்லை கொடுத்துவரும் பார்ப்பனர்களுக்கு தாசர்களாக இருந்துகொண்டு முட்டுக்கட்டை போட்டு வருவதில் அதிசயம் ஒன்றும் இருக்க முடியாது.
ஏனெனில் இந்நாட்டில் “மிகவும் முக்கியமானதும், சாஸ்வதமானதும் மனிதன் அடைந்து தீரவேண்டியதுமானது'' என்று சொல்லப்பட்ட மோக்ஷ சாம்ராஜ்யமென்னும் “பரலோக சித்திக்கே'' பார்ப்பனர்களைக் குருவாய்க்
101 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கொண்டு அவர்களுக்குத் தாசர்களாகி அவர்களது கால்களைக் கழுவிய தண்ணீரை தீர்த்தமாய் அருந்துவதை கொள்கையாய்க் கொண்டு பின்பற்றி வரும் மக்கள் 'மாய்கையானதும், நிலையற்றதும், அற்பவாழ்வானதும், இதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லாததும் ஆனது'' என்று சொல்லும் படியான இந்த உலக வாழ்க்கைக்கு பார்ப்பனர்களை குருவாய்க் கொள்ளுவதோ, அவர்களுக்கு தாசர்களாய் இருப்பதோ எப்படி ஆச்சரியமானதாக இருக்க முடியும்?
ஆதலால் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு பார்ப்பனரல்லாதார்
சிலர் தாங்கள் உள்பட சகலவகுப்புக்கும் சம சந்தர்ப்பம் கிடைப்பதை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை.
அப்படியெல்லாம் இருந்தும் பார்ப்பனரல்லாதார் இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவை இந்த 10, 20 வருஷகாலமாய் செய்துவந்த வேலையின் பயனாய் அதன் முயற்சி சிறிது கைகூடி அமுலில் வந்திருக்கிறது என்பதோடு மட்டுமில்லாமல், பார்ப்பனர்களே இன்று வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இந்தியாவுக்கு அவசியம்தான் என்று சொல்லும்படியாகவும் செய்து விட்டதுடன், சில வகுப்புகளுக்கு இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிப்பதில்லை என்றும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று
அதாவது எந்தெந்த வகுப்பில் பலமான கட்டுப்பாடு இருந்து ஒரே பிடிவாதமாக தங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்கப்பட்டதோ அந்த வகுப்புகள் விஷயத்தில் பார்ப்பனர்கள் திருடனைத் தேள் கொட்டியதுபோல் இரண்டாம் பேருக்குத் தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டார்கள். எந்தெந்த வகுப்பில் கட்டுப்பாடுகள் இல்லாமல் எதிரிக்கு அடிமைகளாகத்தக்க மக்கள் இருந்தார்களோ அந்த வகுப்புப் பிரதிநிதித் துவத்தைப் பற்றி மாத்திரம் தொல்லை கொடுத்து வந்தார்கள்; வருகிறார்கள்.
அப்படி இருந்தும்கூட பார்ப்பனத் தலைவர் - காங்கிரஸ் தலைவர் - சட்டப்படி இவ்விஷயங்களைப் பற்றிப் பேச உரிமை உள்ளவர் என்று சொல்லும்படியான தோழர் சத்தியமூர்த்தி அவர்களே இன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அவசியம்தான் என்று சொல்லித்தீர வேண்டியதாய்விட்டது
அதாவது அரசியல் உத்தியோகங்கள் முதலியவைகளை எல்லா வகுப்பாரும் அடையவேண்டியதுதான் என்றும், எல்லா வகுப்பாருக்கும் கிடைக்கும்படியாக செய்ய வேண்டியதுதான் என்றும் ஒப்புக்கொண்டு விட்டார். தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் சம்மதித்து இருக்கிறார்.
ஆனால் அதற்கு சட்டம் மாத்திரம் கூடாது என்கிறார்கள்.
அதாவது எதுபோலென்றால் “தீண்டாமை ஒழிய வேண்டியது தான், தீண்டாதார் கோவில், குளம், தெருவு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில்
குடி அரசு - 1936 (1) 102
அனுமதிக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதற்கு சட்டம் செய்யக் கூடாது” என்று எப்படி சத்தியமூர்த்தி, சீனிவாச சாஸ்திரி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் உள்பட வர்ணாச்சிரம பார்ப்பனர்களும், சீர்திருத்த பார்ப்பனர்களும் சொல்லுகிறார்களோ அதுபோலவே “எல்லா வகுப்பாரும் உத்தியோகம் பிரதிநிதித்துவம் ஆகியவை பெறவேண்டியது தான், ஆனால் அதற்கு எவ்வித விதியும் இருக்கக் கூடாது” என்கிறார்கள். அதோடு மாத்திரமல்லாமல் கீழ் உத்தியோகத்தில் மாத்திரம் தான் எல்லா வகுப்பாருக்கும் உத்தியோகம் கொடுக்கலாமே ஒழிய, மேல் உத்தியோகங்கள். கொடுக்கப்படும் போதும் எல்லா வகுப்பாரையும் மனதில் நினையாமல் திறமையை மாத்திரமே நினைக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்.
நாமும் திறமையும், யோக்கியதையும் இல்லாதவருக்கு எந்த உத்தியோகமும் கேட்கவில்லை.
ஆனால் தோழர் சத்தியமூர்த்தியார் திறமையை ஒரு வகுப்பாருக்கே சொந்தமென்று கருதுவாரானால் மாத்திரம் அவர் இந்தப்படி பேச அருகதையுடையவர்தான். அப்படிக்கில்லாமல் எல்லா வகுப்பாரிடையும் யோக்கியதை பெற்ற எல்லா உத்தியோகஸ்தர்களிடையும் மேல் வேலைக்குப் போகத்தகுந்த திறமையுடையவர்கள் விகிதாச்சாரம் இல்லாவிட்டாலும் அவசியமான அளவுக்குக்கூட கிடைக்கமாட்டார்கள் என்று சத்தியமூர்த்தியாரோ அவரது கோஷ்டியார்களோ கருதுவார்களேயானால் அதற்காக வேண்டியே அக் கோஷ்டியாரை அடியோடு அழித்தாக வேண்டியது அவசியம் என்போம். சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை பொது ஜனங்களில் மொத்த ஜனத்தொகை 45000000, 4% கோடி என்றால் அதில் இருந்து பார்ப்பனர் மொத்த ஜனத்தொகை 15 லக்ஷம் பேர் போய் விட்டால் மீதியில் பதினாயிரத்துக்கு ஒருவராவது சர்க்கார் வேலை பார்க்கத் திறமை யுடையவர்கள் இருந்தாலும் 4500 பேர்கள் திறமையுடையவர்கள் கிடைப்பார்களல்லவா?
அல்லது திறமைக்கு ஒரு அளவு கருவியாவது வைத்துத் திறமையாளர்களைப் பரிசோதித்து இன்னார் திறமையுள்ளவர்கள், இன்னார் திறமை இல்லாதவர்கள் என்றாவது, அல்லது இன்ன வகுப்பில் இத்தனை வீதாச்சாரம் திறமையுள்ளவர்கள், இன்ன வகுப்பில் இத்தனை வீதாச்சாரம் திறமையுள்ளவர்கள் என்று கண்டு பிடித்தாவது உத்தியோகத்துக்கு வேண்டிய வீதாச்சாரம் இன்னார் கிடைக்காவிட்டால் அதற்கடுத்த இன்னாரில் எடுத்துக் கொள்வது, அல்லது இன்ன இன்ன வகுப்பில் இருந்து விகிதாச்சாரம் எடுத்துக் கொள்வது என்று பார்த்தால் அப்போதாவது கிடைக்கிறதா இல்லையா என்று பார்த்து ஒரு திட்டம் ஏற்படுத்திக் கொள்ள சம்மதிக்கிறாரா என்று கேட்கின்றோம்
103 ௨. 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இந்தியாவில் ஆட்சிபுரியாத மதமோ, வகுப்போ இன்று ஒன்றும் இல்லை. எல்லா வகுப்பாரும் இந்தியாவில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு காலத்தில் அரசர்களாய் இருந்து நாடு ஆண்டு இருக்கிறார்கள்.
ஆதலால் அப்படிப்பட்ட இந்தியாவில் கேவலம் சர்க்கார் உத்தியோகம் பார்க்கத்தகுந்த திறமையுடையவர்கள் அப்படிப்பட்ட வகுப்புகளில் கிடைக்கமாட்டார்கள் என்றால் இப்படிப்பட்ட ஜன சமூகம் உள்ள நாட்டுக்கு “சுயராஜ்ஜியம் கொடுங்கள் பூரண சுயேச்சை கொடுங்கள்” என்று கேட்பது திறமையுள்ளவர்'” களான சத்தியமூர்த்தியார் வகுப்பு மாத்திரம் ஆட்சி புரியவா என்று கருதவேண்டியிருக்கிறது. அப்படி ஆனால் சத்தியமூர்த்தி வகுப்பார்களைவிட பிரிட்டிஷ்காரர் எத்தனையோ விதத்தில் மேலானவர்கள், ஜாதி ஆணவமும் கெடுதல் புத்தியும் இல்லாதவர்கள் என்பதை யார் ஆக்ஷேபிக்க முடியும்?
ராஜகோபாலாச்சாரியாரும், பிரகாசமும் “ஜஸ்டிஸ் கட்சியார் - பார்ப்பனரல்லாதார் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்!” என்று பேசினார்கள்.
ஆனால் பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் அந்தப்படி மக்களை இழிவு படுத்தும்படியான கொள்கை எதுவும் இல்லை. சத்தியமூர்த்தியார், ராஜ கோபாலாச்சாரியார், பிரகாசம் ஆகியவர்கள் ஆட்சியில் மற்றவர்களுக்கு இழிவுள்ள கொள்கை இல்லையென்று யார் சொல்லிவிட முடியும்?
அப்படிஇல்லையானால் வகுப்பு பிரதிநிதித்துவம் மேல் உத்தியோகங் களுக்கு கூடாது என்று சொல்ல அவருக்கு தைரியம் வந்திருக்குமா என்று கேட்கின்றோம்.
இவை ஒருபுறம் நிற்க, தோழர் சத்தியமூர்த்தியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு விதி வேண்டாம் என்று சொன்னவர் அது யோக்கியமாய் நடைபெற வேறு ஏதாவது ஒரு மார்க்கம் சொன்னாரா என்று
பார்த்தால் அதுவும் இல்லை. தீண்டாமை விலக்குக்கு 16 வருஷமாய் பல லக்ஷ ரூபாய் செலவுடன் வேலை செய்கிறார்கள். என்ன ஆயிற்று? பால்ய விவாகம் கூடாது என்று சட்டம் செய்திருக்கும்போதே “என் மகளுக்கு குழந்தையில் விவாகம் செய்து ஜெயிலுக்குப் போவேன்! என்று சத்தியமூர்த்தியாரே சொன்னார் என்றால் சட்டம் இல்லாமல் செய்வார் என்று இக்கூட்டத்தாரை யார் நம்புவார்கள்?
ஆகவேஏதோசமயம் போல் பேசி மக்களை ஏய்ப்பது என்பதில்லாமல் மற்றபடி நாணயமான காரியம் எதுவும் அக்கூட்டத்தாரிடம் இருப்பதாக
நாம் கூற முடியாது
குடி அரசு- 1936 (1) 104
ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் முதலில் எப்படியாவது பாடுபட்டு பிரதிநிதித்துவமும், உத்தியோக விகிதாச்சாரமும் பார்ப்பன. பார்ப்பனரல்லாத இந்துக்கள், பார்ப்பனரல்லாதார் தாழ்த்தப்பட்ட மக்கள், கிறிஸ்தவர், மகமதியர் என்பவர்களுக்கு ஆகவாவது ஏதாவது விகிதாச்சாரம் கொடுப்பதாய் ஒப்புக் கொள்ளும்படி பார்ப்பனர்களை செய்துவிட்டால் பிறகு இந்தியாவை எவ்வித சுயராஜ்ஜிய ஆட்சியோ, சுதந்திர ஆட்சியோ, சமதர்ம ஆட்சியோ நடை பெறும்படி செய்வது இப்போதைய நிலையைவிட எவ்வளவோ பங்கு சுளுவான நிலையான காரியமாகிவிடும் என்று கூறுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.01.1936
105 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கர்ப்பத்தடையைப்பற்றி ஆட்சேபித்துப் பேசுகையில் விளைபொருள்கள் எல்லா மக்களுக்கும் சரி சமமாகப் பங்கிட்டுப் பிரித்துக் கொடுப்பதானால் ஜனங்களுக்கு உணவுப்பஞ்சம் இருக்காதென்றும், ஆதலால் கர்ப்பத்தடையோ, கர்ப்ப ஆட்சியோ கூடாதென்றும் எடுத்துச்சொன்னார்.
அடுத்த ஓர் இடத்தில் பேசும்போது செல்வங்களை மக்களுக்கு சரிசமமாகப் பங்கிட்டுக் கொடுப்பது என்பதை தாம் ஒரு நாளும் ஒப்புக் கொள்ளமுடியாது என்று சொன்னார். ஆகவே இப்படிப்பட்ட நிலையில் கர்ப்பத்தடையோ, கர்ப்ப ஆட்சியோ அவசியமா இல்லையா? என்று தான் நாம் கேட்கின்றோம்
குடி அரசு - செய்திக் குறிப்பு - 26.01.1936
குடி அரசு- 1936 (1) 106
சோதிடத்தின் வண்டவாளம்
தோழர் லெய்லா என்னும் பெயருடையவரும், மேனாட்டுப் பிரபல சோதிட பண்டிதையுமான ஓர் அம்மையார் அவர்கள் சென்னைக்கு வந்து “தமிழ்நாடு” நிருபரிடம் பலவகையான எதிர்கால நிகழ்ச்சிகளைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறாரென்றும், அவர் சில நாளைக்குமுன் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகள் யாவும் தவறாது நடந்திருக்கின்றனவென்றும் தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருக்கிறது
அச்சோதிட பண்டிதை இப்பொழுது சென்னையிற் கூறிய எதிர்கால நிகழ்ச்சிகளில் ஜார்ஜ் மன்னர்பிரான் உடல் நிலையைப்பற்றியது ஒரு செய்தியாகும். அவர், ஜார்ஜ் மன்னர் நோய் நீங்கி உடல் நலம் பெறுவா ரென்றும், இன்னும் சில வருடங்கள் உயிர்வாழ்வாரென்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறி இரண்டு தினங்கள் ஆவதற்குள் மன்னர்பிரான் மரணமடைந்துவிட்டார். இதிலிருந்து சோதிடத்தின் உண்மையை நாம் நன்றாக அறிந்து கொள்ளலாம். 'காக்கையேறப் பனம்பழம் விழுந்தது” என்னும் (காகதாளி) நியாயம்போல் ஒருவர் கூறினபடியே தற்செயலாய் ஏதோ சில சமயங்களில் வாய்ந்து விடுவதுண்டு. இதனைக்கொண்டே அவ்வாறு கூறியவர்களை தீர்க்கதரிசிகளெனவும், சோதிடவல்லவரெனவும் கூறிப் பெருமைப்படுத்துகின்ற நம்மக்களின் பேதமைத் தன்மையை என்னென்பது? இந்தச் சோதிட விஷயத்தை சில பத்திரிகைகள் மிகப் பிரமாதமாக விளம்பரப்படுத்தியதுடன், அம்மையாரின் படத்தையும் போட்டு விளம்பரப் படுத்தினார்கள். சோதிட எதிர்கால நிகழ்ச்சியின் தத்துவத்தை இவ்வரலாறு எல்லாருக்கும் மிக நன்றாக விளக்கிக் காட்டியிருக்கிறது. எனவே இனியாவது மக்களுக்குச் சோதிடப் பைத்தியம் விலகும் என்று நம்புகிறேன்.
குடி அரசு - செய்தி விமர்சனம் - 26.01.1936
107 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பிரார்த்தணை
பிரார்த்தனை என்பது இன்று உலகில் மக்கள் சமூகம் எல்லோரிடத்திலும் அதாவது கடவுளால் மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்று நம்பும் எல்லோரிடத்திலும் இருந்து வருகிறது. இது எல்லா நாட்டிலும் எல்லா
மதக்காரர்களிடத்திலும் இருந்து வருகிறது பிரார்த்தனை என்பதற்கு ஜபம், தபம், வணக்கம், பூசனை, தொழுகை, முதலிய காரியங்களும் பெயர்களும் சொல்லுவதுண்டு.
இவையெல்லாம் கடவுளை வணங்கி தங்களுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுவதேயாகும்.
தனக்கு வேண்டியவற்றை எல்லாம் அதாவது இம்மையில் இவ்வுலகில் யுக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவை களும், மறுமையில் மேல்லோகத்தில் பாவமன்னிப்பு, மோக்ஷம், நல்ல ஜன்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது
இந்த பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும், அவர் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள் தான் பிரார்த்தனைக் காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும்இந்த பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்
அதாவது கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்து கொள்ளுவது, ஜீவ பலிகொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும் ஆகவே இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது
குடி அரசு - 1936 (1) 108
படித்துப் பாஸ் செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால், பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டு மென்றால், “மோக்ஷத்துக்கு' போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோக்ஷத்துக்கு போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு வேலை செய்யாமல் கூலிகேட்கும் பெரும் சோம்பேறித் தனமும் மோசடியும் என்றும் சொல்வதுதான் மிகப் பொருத்தமாகும்
பேராசையும் சோம்பேறித்தனமும் ஏமாற்றும் தன்மையும் இல்லா விட்டால், பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
மற்றும் மூன் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஆக பிரார்த்தனை செய்வதும் பிரார்த்தனையில் அவைகளை அடையப் பார்ப்பதும் மூன் குறிப்பிட்ட சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுளை சுத்த முட்டாள் என்று கருதி அதை ஏமாற்றச் செய்யும் சூக்ஷி என்று கூட சொல்லி ஆகவேண்டி இருக்கிறது.
எந்த மனிதனும் தகுதியானால் எதையும் அடையலாம்
அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து தகுதியாக்கிக்கொண்டு பலனையடைய எதிர் பாராமல் காரியத்தை செய்யாது பிரார்த்தனையில் பலன் அனுபவிக்கவேண்டும் என்று கருதினால் கடவுள் வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் ஒரு 'அறிவாளி' என்றும் தன்னைப் புகழ்வதாலேயே வேண்டியதைக் கொடுக்கும் ஒரு தற்புகழ்ச்சிக் காரனென்றும் தானே சொல்லவேண்டும்
தவிர இந்த பிரார்த்தனையின் தத்துவமானது மனிதனை சோம்பேறி யாக்குவதோடு சகலவித அயோக்கியத்தனமான காரியங்களுக்கும் லைசென்சு, அனுமதிச் சீட்டுக் கொடுப்பது போலாகிறது. விதை நட்டு தண்ணீர். பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க கத்தி எடுத்துக்கொண்டு போகிறவனுக்கும் யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்பார்ப்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை:
கடவுள் சகலத்தையுமுணர்ந்து அதற்கு தகுந்தபடி பலன் கொடுக்கக் கூடிய சர்வஞ்த்துவம் உள்ளவர் என்று ஒருவன் கருதி இருப்பானேயானால் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்யும் வேலையில் ஈடுபடவோ அதற்காக நேரத்தை செலவு செய்யவோ ஒரு பொழுதும் துணியமாட்டான்.
ஏனென்றால் சகல காரியமும் கடவுளால் தான் ஆகும் என்று நினைத்துக்கொண்டு கடவுள் யாருடைய முயற்சியும் கோரிக்கையும் இல்லாமல் அவனவன் செய்கைக்கும் எண்ணத்துக்கும் தகுதிக்கும் தகுந்தபடி பலன் கொடுப்பதற்குத் தகுந்த ஏற்பாடும் செய்து விட்டார் என்றும் (அதாவது விதியின்படி தான் முடியும் என்றும்) தெரிந்து இருந்த ஒருவன் அந்த தெளிவில் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனை செய்வானா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.
109 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சாதாரணமாக மக்களில் 100க்கு 90 பேர்களிடம் பிரார்த்தனை வெகு கேவலமான - அறிவற்ற வியாபாரத் தனமான முறையில் இருந்து வருகிறது. அதாவது எனக்கு இன்ன பலன் ஏற்பட்டால் உனக்கு இன்ன. காரியம் செய்கிறேன். அல்லது உனக்கு நான் இன்ன காரியம் செய்கிறேன். அதற்கு பதிலாக நீ இன்ன காரியம் எனக்குச் செய் என்கின்ற முறையிலேயே பிரார்த்தனை இருந்து வருகின்றது இவர்கள் எல்லோரும் அதாவது இந்தப் பிரார்த்தனைக்காரர்கள். எல்லோரும் கடவுளை புத்திசாலி என்றோ சர்வ சக்தி உள்ளவன் என்றோ பெரிய மனிதத்தன்மை உடையவன் என்றோ கருதவில்லை என்றுதான் சொல்லி ஆகவேண்டும்
சிலர் சொல்லுகிறார்கள். மனிதன் பாபி, அவன் பாப கர்மத்தைச் செய்துதான் தீருவான். ஆதலால் மன்னிப்பு கேட்டுதான் தீரவேண்டும் என்கிறார்கள்.
நான் பாபம் செய்துதான் தீருவேன். நீ மன்னித்துதான் ஆகவேண்டும் என்று பிரார்த்திப்பதை கடவுள் ஏற்றுக்கொள்வதானால் மனிதன் எந்தப் பாவத்தை செய்வதற்கும் ஏன் பயப்படவேண்டும் என்பது நமக்கு புலப்பட வில்லை. பாபத்துக்கு எல்லாம் மன்னிப்பு இருக்குமானால் புண்ணியம் என்பதற்கு அருத்தம் தான் என்ன? ஆகவே கடவுள் கற்பனையை விட இந்த பிரார்த்தனை கற்பனையானது மிக மிக மோசமானது என்றுதான் சொல்ல வேண்டும். பிரார்த்தனைக் கற்பனை இல்லாவிட்டால் கடவுள் கற்பனை ஒரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் போய்விடும்
மனிதன் பூஜையும் பிரார்த்தனையும் செய்வதற்கு தான் கடவுள். ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கடவுளுக்கு ஆக பூஜையும் பிரார்த்தனையும் ஏற்படுத்தப்படவில்லை
குரு- (பாதிரி) புரோகிதன் (பார்ப்பனர்) ஆகியவர்கள் பிழைப்புக்கு ஆகவே பிரார்த்தனையும் கடவுள் மன்னிப்பும் ஏற்படுத்தப்பட வேண்டியதாய் விட்டது
இந்த இரண்டு காரியமும் இல்லாவிட்டால் பாதிரிக்கோ முல்லாவுக்கோ, புரோகிதனுக்கோ ஏதாவது வேலை உண்டா என்பதை யோசித்துப்பாருங்கள். ஆஸ்திகர்கள் கொள்கைப்படி மனிதனுடைய செய்கையும் எண்ணமும் “தித்திரபுத்திரனுக்கோ கடவுளுக்கோதெரியாமல் இருக்கவே முடியாது" இதற்கு ஆக பலன் கொடுக்க தீர்ப்பு நாளும் எமதர்ம ராஜாவும் இருந்தே இருக்கிறான்.
மத்தியில் பிரார்த்தனை பூசனை என்பது மேல்கண்ட இரண்டையும் ஏமாற்றவா அல்லது குருவும் புரோகிதனும், பிழைக்கவா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது
குடி அரசு - 1936 (1) 110
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன். வீணாய்க்கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனம் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டு விடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகிறது? என்பவைகளை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ பயனற்ற காரியம் என்றோ அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜனவரி 1936
ம ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அப்போதே வாக்குக் கொடுத்திட்டேன்
- சித்திரபுத்திரன்
தாய்:- ஏண்டி சேஷு குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே.
மகள்:- இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை
வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி
தாய்:- நீ என்னடி சொன்னாய்.
மகள்:- நான் என்னம்மா சொல்லட்டும், ஆகட்டுமென்னுதான் சொல்லித் தொலைச்சேன்.
தாய்:- அடிஅடி நாசமாப்போன முண்டே! துலுக்கனையா கட்டிக்கிரேண்ணு சொன்னே, நீ பேதியிலே போக, நீ பிளேக்கிலே போக, உனக்கு ஒரு உளமாந்தை வர.
மகள்:- கோவிச்சுக்காதே அம்மா! அப்ப நான் ஆகட்டும் என்னு சொல்லியிருந்தேன் அல்லவா, அதை வச்சிண்டு வந்து கேட்டான். பின்னே நான் என்ன சொல்றது
அப்பநான்அப்படி சொல்லாதெ இருந்தா வீட்டை இடிச்சிருப்பானம்மா?
தாய்:- உன் தலையிலே நெருப்பைக் கொட்ட, நான் 2, 3 வருஷத்திற்கு முன்னையே உன்னைக் கல்யாணம் பண்ணனும் என்னு உங்கப்பாஓடே சொன்னபோது, உங்கப்பா சாரதா சட்டமோ லக்ஷிமி சட்டமோ என்னமோ பேரெழவு சட்டம் குறுக்கிடறதடி என்று சொன்னார் அந்தப் பிராமணன்: இப்போ நீ மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடற போதே அவனுக்கு வாக்குக்கொடுத்துட்டேன் என்கின்றாயே, இன்னம் கொஞ்ச நாள் போனா பறையனுக்கும் சக்கிலிக்கும் பால் குடிக்கிறபோதே வாக்குக்கொடுத்துட்டே னென்றல்லவாடி சொல்லுவாய். என் வயிறு பத்தி எறியரதேடி, நீ அந்த சுக்கூரோடு கொஞ்சினதைப் பார்த்து
குடி அரசு - 1936 (1) 112
மகள்:- இல்லே அம்மா உன்னெதிரிலே நான் கொஞ்சுவேனா அம்மா? 2, 3, வருஷத்திற்கு முன்னே கல்யாணம் ஆயிருந்தால் கூட அப்பவும் நான் வாக்குத் தவறமாட்டேனம்மா. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லேன். இப்ப அவன் வந்து நீ சொன்ன வார்த்தை என்னடி சேஷு குட்டி என்றானே, அப்பவும் இப்படித்தானே கேட்பான்.
தூய்:- அடிசண்டாளி சொன்ன வார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது அவன் இனிமே இங்கே வந்தா உன் மயிரை அறுத்துடுவேன் தெரியுமா?
சின்னக் குழந்தையாய் இருக்கும்போது என்னமோ சொன்னாளாம் அவன் வந்து இப்போ கேக்கறானாம் என்னடி அனியாயம் இது?
மகள்: நீ மயிரை அறுக்கவாண்டாம் அம்மா சுக்கூரே என் மயிரைக் கத்தரிச்சூடறேன் என்று சொல்லி இருக்கான். யாரோ சரோஜனி குட்டிகளாம் அதுகள் மயிரைக் கத்திரிச்சிண்டிருக்காம். அதுமாதிரி என்னையும் கத்தரிச்சு விட்றேன்னு சொன்னான்.
தாய்:- அய்யய்யோ கெட்டுப்போச்சடி காரியம். நம்ம குடும்பத்தையே ஜாதியையே பாழாக்கீட்டாயே நான் காவேரியில் போய் வீழ்ந்துடறேண்டி உன்னாலே
மகள்:- அம்மாம்மா, வேண்டாம்மா பின்னெ நான் என்னாம்மா சொல்லட்டும் சுக்கூருக்கு?
தாய்:- என்னடி சொல்லறது. நான் அப்போ கொழந்தையா இருக்கச்சே வேடிக்கையா சொன்னா இப்ப என்னமாடா வந்து இத்தனை தைரியமாக் கேக்கறாய் என்று அதட்டிச் சொல்லடி.
மகள்:- இப்பவும் நான் கொழந்தை தாம்மா.
இப்ப யாரையாவது கட்டிண்டா கட்டின ஆம்படையானை இன்னும் 10 நாள் பொறுத்து நான் கொழந்தையா இருக்கும்போது கல்யாணம் செய்தூண்டேன் நீ வாண்டாம் போண்ணு சொன்னா போய்டுவானா? அப்படிதாம்மா சுக்கூரும் கேட்பான். ஒரு தடவை வாக்குத் தவறினால் என்ன? இரண்டு தடவை வாக்குத் தவறினால் என்ன? அப்புறம் தினம் தினம் வாக்குத் தவறினால் தான் என்னம்மா?
நான் சுக்கூர் கிட்ட சொல்லீட்டேன். கட்டின் அவனைக் கட்டிக்கிறேன். இல்லாவிட்டால் கன்னியா மடத்தில் சேர்ந்துக்கிறேன். எனக்குப் புருஷனே வாண்டாம், சுக்கூர் முகத்தில் மறுபடியும் நான் எப்படி விழிப்பேன்.
தாய்:- உங்கப்பா வரட்டுமடி, நாளை காலையில் வரப்போரார். இதெல்லாம் அவரிடம் சொல்லி உன்னை இந்த வாரத்துக்குள்ளாகவே எவன் தலையிலாவது கட்டித்தொலைத்து விட்றேன்.
மகள்:- அப்படியா என்னமோ செய்துக்கோ நான் என்னமோ சுக்கூருக்கு வார்த்தை கொடுத்திட்டேன்.
1 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தாய்:- உம், உம் கொடுப்பேடி ஆள் எளப்பாளியாய் இருந்தால் (என்று சொல்லி விட்டு பேச்சை முடித்து விட்டாள்.)
(இரவு 1 மணிக்கு சுக்கூரும் சேஷுக் குட்டியும் டப்பிள். தகப்பனார்
வந்தார்.)
தாய்:- ஏம் பேசலே கேட்டீளா சேஷு குட்டி அடுத்தாத்து சுக்கூருடன்
ராத்திரி ஓடிட்டா.
தகப்பன்:- அவனோடு தான் போனாள் என்று உனக்கு எப்படிடீ
தெரியும்
தாய்:- நேற்று அவனோடு சிரிச்சிண்டு பேசிகிண்டிருந்தா. நான் கண்டிச்சேன். அவள் ஒரு தைரியம் சின்ன கொழந்தையாய் மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடும்போது அவனைக் கட்டிக்கிறேண்ணு வாக்குக் கொடுத்துட்டாளாம். அதுக்காக அவனை கட்டிக்கணுமாம். அப்படின்னு என்னிடம் சொல்றா, வஸ்சேன் அப்பா வந்த சொல்ரேண்ணே. பயந்துண்டு ஓடிட்டா முண்டை.
தகப்பன்:- சனியன் தொலைந்தது போ. அவன் மேலே அவளுக்கு ஆசை வந்துட்டுது என்னமோ சொல்லிண்டு ஓடிட்டா. நல்லகாரியம் இந்த நம்ம அயோக்கிய ஜாதியிலேயே அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை வேணுமுண்ணா 5000 ரூ வரதக்ஷணை - கல்யாணச் செலவு 2000 ரூ ஆக 7000 - ரூபாயிக்கு எங்கே போரது யாரை விக்கிறது
போகட்டும் போ அவனும் 8.5.0. பாசுபண்ணி இருக்கான். நல்ல அசல் சாயபு, பிராமணனாட்டமா செக்கச்செவேரெண்ணு இருக்கான். பிராமணன் MA. படிக்கிறதும் சரி சாயபு S.SLC. படிக்கிறதும் சரி, சீக்கிரத்திலெ ஏதோ வேலைக்கு வந்துடுவன், நம்மை விட்டது சனியன்.
தாய்:- ஐயய்யோ அசட்டு பிராமணா அப்படிதான் இருந்தாலும்
ஒரு முதலி நாயக்கன் இல்லையா சாயப்போடவா ஓடரது
தகப்பன்:- என்னமோ அவ கண்ணுக்கு பிடிச்சவனோடு போய்ட்டா. நம்ம ஜாதியில் இல்லாவிட்டால் வேறு யாரோடு போனால்தான் என்ன?
முதலிக்கும் சாயபுக்கும் என்னடி வித்தியாசம் மொட்டை ஒன்றுதானே, உனக்கு என்னத்துக்கடி இத்தனை ஆத்திரம்
தாய்:- சுக்கூர் அவாத்திலே பொண்ணை மூடி போட்டல்லவா வெச்சூடுவா. இனி அவளைப் பார்க்க முடியுமா
தகப்பன்:- நீ வேணுமன்னா அவாத்துக்கு போய் தினம் பாத்துட்டு வாடி யாரு வாண்டாமென்றா.
தாய்:- சரி சரி அவாத்துக்கு போனா நாலுபேரு என்ன சொல்லுவா.
குடி அரசு- 1936 (1) 114
தகப்பன்:- என்னமோ சொல்லுவா நான் சம்மதிச்சா அப்பரம் யார்டீ கேக்ரெவா - இனி அப்படித்தாண்டி எல்லாம். ராஜகோபாலாச்சாரியார். சேட்டுக்கு பெண் கொடுக்கலையா?
சூரியராவ் நாயுடு ஒரு சாயபுக்கு பெண் கொடுக்கலையா? நீலகண்ட சாஸ்திரி வெள்ளைக்காரனுக்கு பெண் கொடுக்கலையா? சடோபாத்தியாயா. நாயுடுக்கு பெண் கொடுக்கவில்லையா? நாம்தானா கெட்டுப்போயிட்டோம். அதுவும் நாமா கல்யாணம் செய்து கொடுத்தமா அவளே ஓடிட்டா.
நமக்கு என்னடி பயம் ரூ 7000 மிச்ச மாச்சடி சுக்கூர் அவப்பா சிபார்சிலே நம்ம மணிக்கி கூட ஒரு உத்தியோகம் வந்துடும். நீ ஒண்ணும் சத்தம் போடாதே. யாராவது கேட்டால் காங்கிரஸ்காரர் கேட்டா இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லடி. ஜஸ்டிஸ்காரர் கேட்டா சுயமரியாதையில் சேர்ந்துட்டோம் என்று சொல்லடி அப்பரம்யார்நம்மண்டை வருவா பார்ப்போம்.
தாய்:- சரி பகவானே காலம் இப்படியா கெட்டுப்போகணும்?
தகப்பன்:- என்னடி கெட்டுப்போச்சி? நாளவருஷத்துக்குப் பார்டீ சேஷுகுட்டி தங்க விக்கிரகமாட்டமா பிள்ளை பெத்துடப்போரா எங்கயோ: அவா செளக்கியமாய் இருந்தால் சரி, போய் வேலையைப் பார்.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - ஜனவரி 1936
18 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பாண்டியன், இராமசாமி அறிக்கை
சென்ற வாரம் குடி அரசில் வெளியிடப்பட்ட “பாண்டியன், ராமசாமி: அறிக்கையைப்பற்றி இதுவரை சுமார் 100 தோழர்களிடம்
இருந்து ஆதரவுக் கடிதங்கள் வந்திருக்கின்றன. இன்னமும் பல இடங்களில் இருந்து ஆமோதித்து ஆதரவளிப்பதாகக் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகவே பிப்ரவரி மத்தியில் அல்லது பிற்பகுதி வாரங்களில் ஒரு
நாள் குறிப்பிட்டு திருச்சியிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்
பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர்களில் மிகுந்த தியாக புத்தியுடன் உழைத்து வரும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இவ்வியக்கத்துக்கு ஆக தனது சம்பளம் 4500 ரூ. தவிர மேல்கொண்டு மீ*
1-க்கு 4000, 5000 ரூபாய் வீதம் செலவு செய்கிறார் என்பதையும், சிற்சில சமயங்களில் அவர் சென்னையில் இருந்துகொண்டே இரண்டு நாள் மூன்று நாள் கூட தனது மனைவியாரையும், குழந்தைகளையும் பார்க்கக்கூட செளகரியமில்லாமல் இயக்கத்துக்கு ஆக வேலை செய்கிறார்கள் என்பதையும் நேரிலேயே அறிவோம் இவை இயக்கத்தில் அவருக்குள்ள ஊக்கத்தைக் காட்டுகின்றன. என்று மாத்திரம் சொல்லலாமே தவிர இவற்றால் இயக்கத்துக்கு தமிழ் நாட்டைப் பொறுத்தவரையிலும் ஏதாவது ஒரு பயனாவது ஏற்பட்டதாகச் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறோம். இதற்கு மற்ற யார் காரணஸ்தர். களாக இருந்தாலும் தமிழ் நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு வரவர மதிப்பு குறைகின்றது என்பதை நம்மால் மறுக்க முடியவில்லை.
நாம் இதற்கு முன் பல தடவை எழுதி இருப்பது போல் நம் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலன் என்பது ஒன்றில் மாத்திரம்
எந்தக் காலத்திலும் அலட்சியமில்லாமலும் நாணையக் குறைவில்லாமலும், இருந்தாலும் மற்ற எல்லாக் காரியங்களிலும் சிறிதுகூட நாணைய மில்லாமலும் எவ்வித கொள்கை இல்லாமலும் சூழ்ச்சிமேல் சூழ்ச்சி செய்த வண்ணமாய் நடந்துகொண்டு இருந்தும் அவர்களது முயற்சியானது சுமார் 7.8 தினசரி பத்திரிகைகளும் 20, 30 வார பத்திரிகைகளிலும் தங்கள்.
குடி அரசு- 1936 (1) 116
ஆதீனத்தில் வைத்துக்கொண்டு ஜில்லாக்கள் தோறும் வெறும் காலித்தன. முள்ளவர்களாகப் பார்த்து 20 பேர் 30 பேர் வீதம் பிரசாரகர்களாகவும், தொண்டர்களாகவும் வைத்துக் கொண்டிருப்பதோடு @ 1-க்கு எப்படியாவது
லட்ச ரூபாய்க்கு குறையாமல் பாமர ஜனங்களிடமிருந்து பல வழிகளிலும் பொருள் பறித்து வேலையில்லாத தங்கள் இன வாலிபர்களுக்கும், இந்த பத்திரிகைக்காரர்களுக்கும், தொண்டர்களுக்கும் உதவி வருவதுடன் பொதுஜனங்களின் அபிப்பிராயம் என்பதை ஒரு ஆளே உற்பத்தி செய்து அதைத் தன் இஷ்டப்படி நடத்தத் தகுந்த செல்வாக்கையும் பெற்று வருகிறார்கள்.
நமது தலைவர்களுக்கோ, மக்களுக்கோ இவ்வித கவலையோ, சக்தியோ ஏதாவது இருக்கின்றதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பதைத் தவிர வேறு என்ன பதில் கிடைக்கும் என்று கேட்கின்றோம்
ஜஸ்டிஸ், திராவிடன் என்ற பேப்பர்கள் அவை ஆரம்பமான காலம் முதல் கொண்டு இதுவரை சுமார் 5, 6 லட்ச ரூபாய் சாப்பிட்டிருக்கும் என்று சொன்னால் எவரும் தைரியமாய் மறுக்க முடியாது. மற்றும்
எழவுக்கு போனவள் தாலி அறுத்தாள் என்கின்ற பழமொழிப்படி திராவிடனை ஆதரிக்கப் போன பாவத்துக்கு ஆக கையிலிருந்து 10000, 20000 என்பதாக ரூபாய்கள் இழந்து மானங்கெட்டு வெளியில் வந்தவர்களும் உண்டு. இப்படியெல்லாம் இருந்தும் இன்று கட்சிக்கு என்று சொல்லும் படியான அளவிலாவது வெளியாகும் தமிழ் தினசரி பத்திரிக்கை இல்லை என்பது மாத்திரமல்லாமல் தலைவர்கள் பேரில் வெறுப்பில்லாமல்
பிரசாரம் செய்யும் ஒரு தொண்டராவது பிரசாரகராவது தமிழ் நாடெங்கிலும் கிடையாது என்றும் சொல்லவேண்டி இருக்கிறதற்கு வருந்துகிறோம்
ஆனால் அக்கட்சியின்பேரால் 3 மந்திரிகள் மீ” 13500 ரூபாயும் 3 செக்கரட்டரிகள் மீ” 1500 ரூபாயும் பிரசிடெண்ட் டிப்டி பிரசிடெண்டுகள்.
மீ 3000 ரூபாயும் பெறுகின்றார்கள். பொப்பிலி ராஜா ஒருவர் தவிர மற்றவர்கள் வாங்கும் பணத்துக்கு கணக்கு கேட்க எவருக்கும் உரிமை இல்லை. அவர்கள் கட்சிக்காக செய்யும் காரியம் என்ன என்பதையும் தெரிவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என்பதோடு அல்லாமல் தெரியும்படியாகவும் இல்லை.
இதைத்தவிர கட்சி செல்வாக்கால் கவர்னர் வேலை சட்டமெம்பர். வேலை ஹோம் மெம்பர் வேலை ஆகிய மீ' 10000 ரூ.5000 ரூ.சம்பளமுள்ள. வேலைகள் பெற்றவர்கள் தாங்கள் ஆகாயத்தில் பறக்கிறோமா பூமியில் நடக்கிறோமா என்பது கூட உணரமுடியாத உச்ச நிலையில் இருக்கிறார்கள். மற்றபடி கட்சியின் பேரால் பதவி, பட்டம், பெரு உத்தியோகம் பெற்றவர் களிலும் 100-க்கு 90 பேர்கள் ஜஸ்டிஸ், விடுதலை ஆகிய பத்திரிகைகளுக்கு
1 மீ சந்தாவாவது செலுத்தி இருப்பார்களா? அல்லது படித்தாவது வருகிறார்களா? என்பதும் தைரியமாய்ச் சொல்ல முடியாததாய் இருக்கிறது
17 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆகவே இப்படிப்பட்ட நிலைகள்தான் நமது கட்சியை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாமே தவிர எதிரிகள். பலத்தாலோ, நமது கொள்கைகளின் மேன்மை இல்லை என்றோ, இன்று
நாம் பழி கூறப்படுகின்றோம் என்றோ, தேர்தல்களில் வெற்றி பெறாமல் போகின்றோம் என்றோ சிறிதும் கூறமுடியாது.
இப்படிப்பட்ட தலைவர்களையும், கட்சி பிரமுகர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட ஜனங்களும், சமூகமோ ஒரு வகுப்போ கஷ்டப்பட வேண்டியதுதான் என்பதில் எவருக்கும் ஆட்சேபணைபட செய்ய இட மில்லை என்பதோடு இப்படிப்பட்ட கட்சி ஒரு தடவை அழிந்து புனருத்தாரணம் ஆகவேண்டும் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய இதைரிப்பேர் செய்ய முடியும் என்பது மிககஷ்டமான காரியமாய் இருக்கிறது
ஏனெனில் அசெம்பிளி எலக்ஷனில் எதிரிகளின் சூழ்ச்சிகளையும், அவர்கள் பணம் சம்பாதித்த முறைகளையும் பிரசாரத் தன்மைகளையும், நமக்குள்ளாகவே நடந்த மோசங்களையும் பத்திரிக்கைகளின் வேகங்களையும் விஷமங்களையும் நேரில் பார்த்தும் அதன் பயனாய் நமது பிரமுகர்கள். தோழர்கள் சர். ஷண்முகம், ஏ. ராமசாமி முதலியார், பி. வரத ராஜுலு நாயுடு முதலியவர்களே வெற்றிபெற முடியாமல் போனதையும் பார்த்த பிறகும் கூட நமக்கு சிறிதும் சொரணை ஏற்படாமலும், புதிதாக எவ்வித முயற்சியும் செய்யாமலும் இருந்தால் நம் தலைவர்களுக்கோ பிரமுகர்களுக்கோ, கட்சியின் பேரால் பலன்கள் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கிற மக்களுக்கோ, கவலையோ உண்மையான முயற்சியோ இருப்பதாக எப்படி சொல்லக்கூடும்?
மீ” 5000, 6000 செலவுசெய்து நடத்தும் பத்திரிகையாகிய ஜஸ்டிஸ்க்கு சென்னை மாகாண 4% கோடி மக்களில் ஒரு 1000 பேர்கள் கூட கவலையுடன் படிப்பவர்கள் இல்லை என்றால், எதிரிகள் கையில் 5, 6 தமிழ் தினசரி இருக்கும்போது நமக்கு ஒரு தமிழ் தினசரி கூட இல்லை என்றால், அதுவும் தமிழ்நாட்டு மக்கள் கெஞ்சி கெஞ்சி தீர்மானங்கள் ரூபமாகக் கேட்டும் மதிக்கப்படவில்லை என்றால், எப்படித்தான் இந்தத் தலைவர்கள். நிர்வாகத் திறமை உடையவர்கள் என்றோ உண்மையான கவலை உடையவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியும் என்று கேட்கின்றோம்.
இவை எல்லாம் மிக சாதாரண காரணங்களாகும். இனி முக்கியமான காரணங்கள் எவ்வளவு உண்டு என்பது சென்னை தலைவர்களோ, மந்திரிமார்களோ, அவர்களது காரியதரிசிகளோ தங்களுக்குத் தாங்களே அறியாததல்ல.
பிரசாரத்தில் லட்சியமில்லாத தலைவர்களின் ஊக்கத்தின்நாணையத்தைப்
பற்றி சந்தேகிக்காமல் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்
குடி அரசு - 1936 (1) 118
நாம் எந்தத் தனிப்பட்ட மனிதனுடைய பெருமையைப் பிரசாரம் செய்ய ஆசைப்படவில்லை. நம் கட்சிக்கொள்கை இன்னது, அது செய்தது இன்னது, செய்ய வேண்டியது இன்னது, நமது எதிரிகளின் யோக்கியதை சூழ்ச்சிகள் இன்னது, அவர்கள் செய்தது இன்னது, அவர்கள் செய்யப் போவது இன்னது என்பனவாகிய இந்தக் காரியங்களைப் பிரசாரம் செய்ய நமக்கு இஷ்டமில்லையானால், அல்லது நம்மால் செய்ய முடியவில்லை யானால் நமது கட்சி வேறு எதற்காக தான் உயிர் வாழவேண்டும்? அல்லது வேறு என்னதான் சாதித்துவிட முடியும்? என்பவைகளைப்பற்றி நம் போன்றவர்களுக்கு அதுவும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்காகவே உழைத்து பல கஷ்டம் நஷ்டம் ஆகியவைகளையே அடைந்து கொண்டும் இக்கட்சியின் பயனாய் சொந்தத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி பெறும்படியான பயனும் அடையாமல் தங்களது சொந்த செல்வாக்கையும் இழந்து வருபவர்களுக்கு உரிமை இல்லையா? என்று கேட்கின்றோம்
ஆகையால் எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும்,
நம் பாமர மக்களை விடுவித்து அவர்களை சுதந்திரமுடையவர்களாகவும், சுயமரியாதையுடையவர்களாகவும் ஆக்க வேண்டுமானால் இந்த மந்திரி களையும், ஆங்காங்கு உள்ள இப்போதிய தலைவர்களையும் நம்பிக்கொண்டு இருந்தால் வெற்றிபெற முடியுமா என்கின்ற சந்தேகம் நமக்கு நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது. இப்படித் தோன்றுவது ஒரு சமயம் நம்முடைய பலக்குறைவாய் இருந்தாலும் இருக்கலாம். என்றாலும் நமக்குத் தோன்றுகிற உண்மையை கூறுகிறோம் என்ற விஷயத்தில் யாரும் சிறிதும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
கட்சியின் தலைவர் என்கிற முறையில் முதல் மந்திரி பொப்பிலி ராஜா அவர்கள் மீது குற்றமோ, குறையோ கூறுவதாக யாரும் கருதிவிட வேண்டியதில்லை.
ஏனெனில் அவரைப் பொறுத்தவரையிலும் தாராளமாக பணம் செலவு செய்கிறார்.
கட்சிக்குத் தலைவர் என்கின்ற முறையில் கட்சி நன்மைக்கு சட்டப்படி ஒருவர் எவ்வளவு செய்யக்கூடுமோ அவ்வளவும் செய்து வருகிறார்.
என்றும் சொல்லலாம்.
ஆனால் தமிழ் நாடு, கேரள நாடு, கர்நாடக நாடு ஆகியவற்றின். உண்மை நிலையை தெரிந்து கொள்ளவோ ஆங்காங்குள்ள யோக்கியர். யார், அயோக்கியர் யார் என்பதையும், கட்சிக்கொள்கைக்கு பாடுபடுபவர்கள்.
யார் தங்கள் சுயநலத்துக்காகப் பாடுபடுபவர்கள் யார் என்பதையும் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதோடு தெரிந்து கொள்ளத்தகுந்த சரியான சாதனமும் அவரிடம் ஏதும் இல்லை என்பதோடு,
தமிழ் நாட்டில் ஆங்காங்குள்ள உண்மையான பிரமுகர்களை சரியானபடி அனுசரிக்க வில்லை என்பதும் நமது தாழ்மையான அபிப்பிராயமாகும்
19 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தவிரவும், சர்க்கார் நம் கட்சி விஷயமாய் நடந்துகொண்ட சில சந்தர்ப்பங்களையும் சம்பவங்களையும் உத்தேசித்து கொஞ்சநாளைக்கு முன்பு பொப்பிலி ராஜா அவர்கள் ராஜிநாமா கொடுத்து இருக்கவேண்டும் என்பதும் நமது தாழ்மையான அபிப்பிராயம்
இதைப்பற்றி ஏன் இவ்வளவு சொல்லுகிறோம் என்றால் இன்றைய நிலையில் பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கு இப்படிப்பட்ட தாராள மனப்பாண்மையுடையவரும் தன்நலத்தையே பிரதானமாய்க் கருதாத வருமான தலைவர் கிடைப்பது அருமை என்கின்ற காரணத்தாலேயே அல்லாமல் மற்றொன்றும் அல்ல.
ஆதலால் இப்போதைய நிலைமையில் தோழர்கள் பாண்டியன், ராமசாமி ஆகியவர்களால் அனுப்பப்பட்ட சுற்று அறிக்கை விண்ணப்பமும் அதை ஆதரித்து சுமார் 100 தோழர்கள் எழுதிய கடிதங்களும், அவற்றில். காணும் பெரும்பான்மை யோசனைகளும் தமிழ் நாட்டின் சார்பாய் மனப்பூர்வமாக வரவேற்கிறோம் என்பதோடு அவற்றில் கண்டபடி இம் மாதத்திலேயே ஒரு கூட்டம் கூடி நிர்தாக்ஷண்யமாய் அவரவர்கள் அபிப்பி ராயங்களைக் கூசாது மனம் விட்டுப் பேசி ஏதாவதொரு முடிவுக்கு வந்து தக்கது செய்ய வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமுமான காரியமாகும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.02.1936
குடி அரசு - 1936 (1) 120
ரயில் பிரயாணமும் மோட்டார் பிரயாணமும்
மோட்டார் பஸ்கள் எங்கும் தாராளமாய் ஏற்பட்டுவிட்டதின் பயனாக ரயிலில் பிரயாணம் செய்யும் மக்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தென்னிந்திய ரயில்வேக் கம்பெனியாருக்கு வரும்படி
நாளுக்கு நாள் குறைந்தும் போகிறது இதற்காக வேண்டி மோட்டார் பஸ் நடத்துகிறவர்களுக்கு எவ்வளவு தொல்லையும், நஷ்டமும் ஏற்படுத்ததாமோ, அவ்வளவு தொல்லையும், நஷ்டமும் பலவித தந்திரங்களினாலும் யார் யாரோ செய்து பார்த்தும் மோட்டார் பஸ் பெருக்கத்தை தடைப்படுத்த முடியவில்லை
பஸ்காரர் போலீஸ் இலாக்காவினால் அடையும் தொல்லைகளை அளவிடவே முடியாது. ஜில்லா போர்டார் தொல்லையோ சொல்ல வேண்டியதில்லை.சர்க்கார் சட்டப்படி ஜில்லா போர்டுக்கும், கவர்ன்மெண்டுக்கும் செலுத்தும் வரிக்கு சமமான அளவு போலீஸ் அதிகாரிகளுக்கும்,
பிரசிடெண்டுகளுக்கும், கான்ஸ்டேபிள்களுக்கும் பலவழிகளிலும் செலுத்த
வேண்டியிருக்கிறது இது தவிர போலீஸ் அதிகாரிகளையும், கான்ஸ்டேபிள்களையும் இவர்களது சொந்தக்காரர்களையும் வாடகை இல்லாமல் பிரயாணம் செய்ய அனுமதிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு கஷ்ட நஷ்டம் அனுபவித்தாலும் கூட சில சமயங்களில் அடிக்கடி போலீசாரால் சார்ஜ் செய்யப்பட்டு அபராதம் வகையரா தண்டனை அடையவேண்டி இருக்கிறது
இந்தமாதிரி தொல்லைகள் எதுவும் ரயில்வே கம்பெனியாருக்குக் கிடையாது. இப்படி எல்லாம் இருந்தும் மோட்டார் பஸ்சில் பிரயாணம் செய்கின்ற ஜனங்கள் அதிகமாகிக்கொண்டும் ரயிலில் பிரயாணம் செய்கின்ற பிரயாணிகள் குறைந்துகொண்டும் வருவது மிகுதியும் கவனிக்கத்தக்கதாகும்
ரயில் பிரயாணத்தில் மக்களுக்கு இருக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்ய முயற்சிக்காமல் கம்பெனியார் வெறும் பிரசாரகர்களை நியமித்து விடுவதாலேயே பிரயாணிகள் அதிகப்பட்டு விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் கனவாகத்தான் முடியும் 11௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏற்றும் பிரயாணிகளுக்குக் கணக்குக் கிடையாது. ரயில்வே சட்ட புத்தகத்தில் ஒரு அறைக்கு 8 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது என்று கணக்கு இருந்தாலும், இத்தனை பிரயாணிகள்.
ஏறலாம் என்று பலகையில் எழுதி இருந்தாலும், 16 பேர் ஏற்றப்படுவதையோ, ஏறுவதையோ தடுப்பதற்கு எவ்வித சாதனமும் கிடையாது. எந்த ரயில்வே அதிகாரியும் அதைக் கவனிப்பதும் கிடையாது
ரயிலில் பிரயாணிகள் ஒருவருக்கொருவர் செய்யும் இடைஞ்சலைப் பற்றிக் கேட்பதற்கும் திக்கில்லை. போக்கிரியாகவோ, சுயநலக்காரனாகவோ இருக்கும் ஒருவன் எவ்வளவு இடம் அபகரித்துக் கொண்டாலும், மற்றவர்களுக்கு எவ்வளவு அசெளகரியம் செய்தாலும் பரிகாரத்துக்கு மார்க்கமே கிடைப்பதில்லை
வண்டியில் சுருட்டுக் குடிப்பது, வண்டிகளை அசிங்கம் செய்வது, கலகம் செய்துகொண்டு அடிதடி நிகழ்வது, துர்ப்பாஷைப் பிரயோகம் செய்வது முதலிய காரியங்கள் வெகு சகஜமாக நடைபெற்று வருகின்றன.
பிரயாணிகள் பாலங்களின் மேல் ஏறி இறங்கவேண்டி இருக்கிறது போர்ட்டர்களுடைய தொல்லைகளோ சகிக்க முடியாததாகும் வண்டிகளில் பிச்சைக்காரர்களுடைய தொல்லையும், சாமான் விற்பவர்கள். தொல்லையும் சகிக்கக்கூடியதென்று சொல்லிவிட முடியாது
இந்த லக்ஷணத்தில் கொஞ்சம் ஏமாந்தால் மூட்டைகள் திருட்டுப் போய் விடுகின்றன.
ரயில்வே சிப்பந்திகள், டிராவலிங் டிக்கெட் கலக்டர்கள் மக்களை வெகு இழிவாய்க் கருதி ஆடு மாடுகள் போல் நடத்துவதைச் சிறிது சுயமரியாதை உள்ளவர்களும் சகிக்கக்கூடியதல்ல.
சார்ஜ் சத்தம்
இந்தப் பிரகாரமாக மக்கள் நடத்தப்படுவது ஒருபுறமிருக்க, இனி ரயில் பிரயாணத்தால் மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கவனிப்போம்.
ரயில் பிரயாணத்தில் சார்ஜ்ஜு சத்தம் பஸ் சத்தத்திற்கு ஒன்றுக்கு ஒன்றரையாக இருக்கிறது. உதாரணமாக ஈரோட்டிற்கும் கோயமுத்தூருக்கும் 60 மைல் இருக்கின்றன. ஒருவன் மெயில் வண்டியில் பிரயாணம் செய்ய வேண்டுமானால் ரூ.1-5-6 அணா சார்ஜ் கொடுத்து டிக்கட்டு வாங்க வேண்டும். ஈரோட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷனுக்குப்போக இரண்டணா வாவது கொடுக்க வேண்டும். இறங்கும் ஊராகிய கோயமுத்தூர் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்குப் போக 3 அணா அல்லது 2 அணாவாவது கொடுக்க வேண்டும். இரண்டிடத்திலும் பாசஞ்சர் வண்டிகளானால்
குடி அரசு - 1936 (1) 122
போத்தனூர் உள்பட மூன்று இடத்திலும் போட்டருக்குப் பணம் கொடுக்க வேண்டும். மூட்டைகளைத் தொட்டு பார்த்து எக்சஸ் செய்வதாக மிரட்டும் சிப்பந்திகளுக்கு ஏதாவது தொலைக்க வேண்டும். ஊருக்கும் ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் 1 மைல் சில இடங்களில் 2 மைலுக்கு மேலும் உண்டு.
இந்தத் தொல்லைகள் மோட்டார் பஸ்ஸில் செல்லும் பிரயாணிகளுக்கு இருக்க நியாயமில்லை.
ஈரோட்டிலிருந்து கோயமுத்தூருக்குப் பஸ் சார்ஜ் 12 அணாத்தான். போட்டர் தொல்லை அடியோடு இல்லை. வீட்டுக்குப் போக வண்டித் தொல்லையும் இல்லை. இருந்தாலும் பகுதிச் செலவுடன் முடிந்து விடுகின்றது. சிப்பந்திகள் தொல்லையும், புக்கிங் ஆபீசில் நெருக்கமடையும் தொல்லையும், அவசரத்தில் சில்லறை நழுவும் தொல்லையும், புக்கிங் ஆபீசர் சில்லறை கொடுக்க நேரம் செய்தால் வண்டி போய் விடுமே என்று பயந்து பாக்கிக் காசுகளை விட்டுவிட்டு ஓடும் தொல்லையும் அடியோடு கிடையவே கிடையாது
ஆகவே செலவில் சரிபகுதி மீதி ஆகின்றதா இல்லையா? என்பதோடு எவ்வளவு கஷ்டங்கள் மீதியாகின்றன என்பதை யோசித்துப் பாருங்கள்.
பிமிவினைகள்
இவை தவிர மற்றும் ரயிலில் பிரயாணம் செய்வதால் ஏற்படும் அதிகச் செலவைக் கவனித்துப் பாருங்கள்.
ஊருக்குள் நல்ல காப்பி ஒரு டம்ளர் ஒரு அணா என்றால், ரயில்வே பிளாட்பாரத்தில் கழிநீர் தண்ணீர் போன்ற காப்பி 0-1-3 அணா. அதுவும் முக்கால் டம்ளர். இட்லி பெரிய இட்லி ஊருக்குள் 0-0-3 பை என்றால் ரயிலில் சின்ன இட்லி அதில் பகுதியில் பாதி 0-0-3 பை. இன்னும் வெற்றிலை
பாக்கு புகையிலை முதலியவை ஊர் விலைக்கு மூன்று பங்கு அதிகமாகிறது. பழ வர்க்கங்கள், பதார்த்தங்கள் ஊருக்குள் விற்காத மோசமானவைகளை ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக விலை சொல்லி விற்கிறார்கள்.
குழந்தைகள் வண்டியில் இருப்பதைப் பார்த்தால் விளையாட்டு சாமான் விற்கிறவன் அங்கேயே இருந்து கூப்பாடுபோட்டு வாங்கச் செய்துவிடுகிறான். விலையோ பி.ஆர். அன்சன்ஸ் கம்பனி விலையை மிக மிக சரசமாக்கி விடுகின்றது. இவற்றையெல்லாம் விற்கிறவர்கள் இந்த லாபங்களை அடைகிறார்களா என்று பார்த்தால் இல்லவே இல்லை. எல்லா லாபமும் ரயில்வே கம்பனிக்கே போய் சேர்ந்து விடுகின்றது. மீதி இருந்தால் ரயில்வே சிப்பந்திகளுக்கே போய் சேர்ந்து விடுகின்றது
எப்படி என்றால் ஒவ்வொன்றையும் கண்றாக்டில் விட்டுவிடுகிறார்கள்:
மீ 300 ரூ. 400 ரூ. வாடகை வாங்கிவிடுகிறார்கள். மீ£்கு தட்டத்துக்கு
123 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இவ்வளவு ரூபாய் என்று வாங்கிவிடுகிறார்கள். சிப்பந்திகளும் இந்த கண்ட்றாக்டர்களை பிய்த்து பிடுங்கி சாப்பிட்டு விடுகிறார்கள். இவை யெல்லாம் பிரயாணிகள் தலையில் டிக்கட் பணம் தவிர அதிகச் செலவாக ஏற்பட்டு விடுகின்றது
இந்த லக்ஷணத்தில் மக்களை நடத்துவதும் வெகு இழிவாகவே நடத்துகிறார்கள்.
அதென்னவென்றால் ரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம், பஞ்சமர்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், இந்து பார்ப்பனரல்லாதார்கள் என்பவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு தனி இடமுமாக இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் பார்ப்பனர்கள் இறங்கினால், அவர்கள் எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமையலறைக்குள் சென்று நன்றாக புதிதாகச் சூடுடன் உடனே சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வண்டிக்கு வந்துவிடுகிறார்கள்
பார்ப்பனரல்லாதார் நிலைமையோ எவ்வளவு மேன்மையாக இருந்தாலும் அவன் வெளி மண்டபத்தில் பலகாரத் தட்டத்துக்கு எதிரில் கூட்டமாக நின்றுகொண்டு சாமி! சாமி!! என்று காட்டுமிராண்டி ஜனங்கள் திருவிழாக் காலங்களில் கோவிலில் விபூதிக்கு அலைவதுபோல், ஆளுக்காள் நெருக்கிக்கொண்டு அவதிப்பட்டு ஆறிப்போன கழிபட்ட பதார்த்தங்களை அரைகுறையாய் வாங்கி அவசர அவசரமாய்த் தின்றது பாதி தின்னாதது பாதியுமாய் விட்டுவிட்டு ஓட வேண்டியதாய் இருக்கிறது ரயில்வே ஓட்டல்களில் சாப்பாடு போடுவதும் நீட்டிக்கொண்டே இருந்து விட்டு வண்டி புறப்படும் சமயம் இலை போடுவதும் சாப்பிட வரும் ஆட்கள் அவதி அவதியாய் அரை வயிறு கூட நிறைய சாப்பிட முடியாமல் பணம் கொடுத்து விட்டு ஓடுவதுமாய் இருக்கிறது. ஊருக்குள் 3 அணா ஆனால் ரயிலில் 4 அணா வீதம் கொடுக்கவேண்டி இருக்கிறது
இதைப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சிறிதும் செவி சாய்க்கவே இல்லை
ரயில்வே கம்பனியாருக்கு ஒரு அகம்பாவம் இருந்துவருகிறது
அதென்னவெனில் நம்மைத் தவிர இவர்களுக்கு (பிரயாணிகளுக்கு) வேறு கதி என்ன? என்கின்ற ஆணவம் ஒன்று
பத்திரிக்கைக்காரர்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்கின்ற எலும்புகளைப் போட்டுவிட்டால், அதன் பேரால் அவர்களுக்கு கப்பம் கட்டிவிட்டால் நாம் எப்படி நடந்தாலும் வெளிக்கு வராது என்கின்ற தைரியம் இரண்டு
குடி அரசு - 1936 (1) 124
மற்றும் அரசாங்கம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டும் ஒரே ஜாதி என்பது மாத்திரமல்லாமல் பார்லிமெண்டு மெம்பர்கள் முதல் ரயில்வே கம்பெனிக்கு பங்குக்காரர்கள் தானே என்கின்ற சலுகை முதலிய காரியங்களோடு ஒரு தனிப்பட்ட பிரயாணி தனது கஷ்டத்துக்கு எப்படி சமாதானம் தேடிக் கொள்ள முடியும் என்கின்ற கவலையற்ற தன்மை, ஆகியவைகள் சேர்ந்து ரயில்வே கம்பெனியாரை இக்கஷ்டங்களைக் கவனிக்கச் செய்யாமல் செய்து வருகிறது
மற்றொரு நாடகம் என்னவென்றால் ரயில்வே பிரயாணிகள் சங்கம்
என்று ஒரு போலிச் சங்கம்; அதற்கொரு தலைவர்; அவருக்கொரு கவுரவ உத்தியோகம்; அவர்கள் சொந்தக்காரர்களுக்கு ரயிலில் சம்பள உத்தியோகம்; வேறுபல சலுகை. இவை எல்லாம் சேர்ந்து கம்பெனியாருக்கு ஒரு
நற்சாட்சிப் பத்திரம்
இவ்வளவையும் சகித்துக்கொண்டு ரயில் பிரயாணம் செய்து ரயிலுக்கு பணம் கொடுப்பவர்கள் பார்ப்பனரல்லாதார். ஆனால் ரயிலில்
50, 100, 200 ரூ. சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்கள் கொடுப்பது 100க்கு
99 பார்ப்பனர்களுக்கே. 20ரூ. 30ரூ. உத்தியோகங்கள் கூட எல்லோரையும் விட 100-க்கு 90 பார்ப்பனர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன.
எனவே இப்படி எல்லாம் ஆகிவிட்டால் ரயில்வே பிரயாணத்தில் மக்களுக்கு எவ்வளவு ஆசையும் சவுக்கியமும் இருக்க முடியும்? என்று யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. மற்றும் வெளியில்
எடுத்துச் சொல்லுவதற்கு சட்டம் இடம் கொடுக்க முடியாத அனேக விஷயங்கள் உண்டு என்பதோடு அப்படிப்பட்ட அனேக காரியங்கள் இன்று பிரத்தியட்ச அனுபவத்தில் நடந்தும் வருவதை ரயில்வேகாரர்களே மறுக்க மூடியாது
ஆதலால் பொதுமக்களின் நல்ல காலமாக பஸ் ஒன்று ஏற்பட்டு மக்களுக்கு ரயில் பிரயாணத்தில் இருந்துவரும் கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும், இழிவும் ஒரு அளவுக்காவது ஒழியத்தக்க சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கும் காலத்தில் மறுபடியும் பொது மக்களை ஏமாற்றவும், தொல்லைப்படுத்தவும், ரயில்வே பிரயாண பிரசாரம் என்பதாக சில உத்தியோகங்களை ஏற்படுத்தி அவ்வுத்தியோகங்களை பார்ப்பனர்களுக்கே கொடுத்து ரயிலுக்கு ஆள்பிடிப்பது ஒரு வேடிக்கை என்றே சொல்லுவோம்
ரயில் வண்டியில் மக்கள் பிரயாணம் செய்யவேண்டுமானால் மேல்கண்ட நஷ்டமும், தொல்லையும், இழிவும் மக்களுக்கு இல்லாமல்
இருக்கும்படி செய்தால்தான் முடியுமே ஒழிய, மற்றபடி இந்த மந்திரத்தில் மாங்காய் விழாது என்று ரயில்வே கம்பெனியாருக்கு யோசனை கூறுகிறோம்
15 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மற்றும் ரயில்வே கம்பெனியார்கள் தாங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டி புராண ஆபாசக் கதைகளை விளம்பரம் செய்து உற்சவம் முதலியவைகளைப்பற்றியும், மூர்த்தி, தலம், தீர்த்தம், மோக்ஷம், புண்ணியம்,
சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவைகளைப் பற்றியும் விளம்பரம் செய்து மக்களை மூட நம்பிக்கை உடையவர்களாகவும், முட்டாள்களாகவும் செய்து, அவர்களது பணத்தையும், நேரத்தையும் பாழாக்கும் விஷயங்களைப் பற்றி புள்ளி விவரங்களோடு மற்றொரு சமயம் எழுதுவோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.02.1936
குடி அரசு - 1936 (1) 126
காரைக்குடி பிரதிநிதிகளை ராஜகோபாலாச்சாமியார் ஏமாற்றினாராம்
காரைக்குடி மகாநாட்டுக்கு வழக்கத்துக்கு மாறாக சில பிரதிநிதிகள் அதிகமாகவே வந்தார்களாம். காரணம் என்னவென்றால் சத்தியமூர்த்தியார் சகாப்தத்தை ஒருவிதத்தில் ஒழித்துவிட வேண்டும் என்கின்ற உணர்ச்சி, காங்கிரசிலுள்ள சில சுயமரியாதை உணர்ச்சி உள்ள வாலிபர்களுக்கும், பார்ப்பனரல்லாதார் சூடு ரத்த ஓட்டமுள்ள சில வாலிபர்களுக்கும் இருந்த ஆசையேயாகும். அதனாலேயே அவர்கள் தோழர்கள் முத்துரங்கமவர் களையாவது அவினாசிலிங்கமவர்களையாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவராக ஆக்கிவிடலாம் என்கின்ற ஆசைமீது வந்தார்கள்:
இந்த ஜபம் ராஜகோபாலாச்சாரி அல்லது ராஜாஜி என்பவரிடம் நடக்குமா? முத்துரங்க முதலியார் தலைவராய் வந்துவிட்டால் அந்த தலைமை ஸ்தானம் (His Master Voice) ஹிஸ் மாஸ்டர் வாய்ஸ் மாதிரி, கீனிவாசய்யங்கார் வாய்ஸாக மாறிவிடும். அப்புறம் அது ராஜகோபாலாச் சாரியாரைப் பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டு விடும்
அவினாசிலிங்கனார் தலைவரானால் அவர் தோழர் டி.ஏ. ராமலிங்கம் செட்டியாருக்குத் தம்பியானதால் ஏதாவது பல்டி அடிக்க வேண்டி வந்தாலும் வந்து விடும். அதனாலே தான் உட்காரு என்றால் படுக்கிறமாதிரியான ஆட்களைப் பிடித்து தலைவர் ஸ்தானத்துக்கு வைத்து மந்திரி நியமனம் செய்யும் யோக்கியதை (வரப்போவதில்லை) வரும்போது, தான் முந்திரிக் கொட்டையாக இருந்து வேலை செய்யலாம் என்கின்ற யோசனை வந்து காரைக்குடிக்கு வந்து ஓட்டர்களை ஏமாற்றினார். என்ன சொல்லி ஏமாற்றினார் என்றால் ஓட்டர்களை காந்தி வேண்டுமா? முத்துரங்க முதலியார் வேண்டுமா? என்று கேட்டு ஏமாற்றினார். சத்தியமூர்த்தியையே தலைவராக்கும்படி காந்தியார் எழுதியிருப்பதாயும், சத்தியமூர்த்தியைத் தலைவராக்க விட்டால் காந்தியார் விலகி விடுவார் என்றும், அப்புறம் காங்கிரசுக்கு மந்திரி பதவி வருவது குதிரைக் கொம்பு என்றும் சொன்னாராம்.
இந்த டோஸானது அனேக வாலிபர்கள் - அதாவது மந்திரிகளுக்கு வாலாக இருக்கக்கூடிய பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று காத்திருந் தவர்களுக்கு மயக்க மருந்தாய்ப் போய் விட்டதாம். ஆகவே ஆச்சாரியார் வெற்றி பெற்றார்.
127 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆச்சாரியார் கைவசம் இருக்கும் காந்தி டோஸானது இன்று சர்வரோக நிவாரணமாகிய மின்சார ரசம், அமிர்தாஞ்சனம் ஆகிய சஞ்சீவிகள் போல் விளங்குகிறது உண்மையிலேயே “சர்வ வல்லமை” உள்ள சக்கரவர்த்திகளே ஒழிந்து வருகிறார்கள் என்றால், கேவலம் இந்த பொக்கி டோசுக்குத்தானா. ஒரு காலம் வருவது கஷ்டமாகிவிடும்? ஜனங்களுக்குப் புத்தி வந்தால். இவையெல்லாம் மாயமாய்ப் பறந்து விடும்.
குடி அரசு - தலையங்கம் - 09.02.1936
குடி அரசு - 1936 (1) 128
அரசாங்கத்தை காங்கிரசுக்காரர்கன் ஏமாற்றி விட்டார்களாம்
அரசாங்கத்தார் காங்கிரசுக்காரர்கள் திலகர் நிதி விஷயமாகவும்,
பீகார் பூகம்ப நிதி விஷயமாகவும் நடந்து கொண்ட நாணயத்தைப்பற்றி ரகசிய விசாரணை செய்து சம்பாதித்து வைத்து இருக்கும் புள்ளி விவரங்களை அசம்பிளி கூட்டத்தில் ஏதாவது சந்தர்ப்பம் பார்த்து காங்கிரஸ்காரர்கள் பேச்சுக்கு பதில் சொல்லு முறையில் வெளியாக்கி விடுவதாக ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள். இதைக்கண்டு நடுங்கிப்போய் “காங்கிரஸ் காரர்களாகிய நாங்கள் உங்களுக்கு அந்த மாதிரி சந்தர்ப்பம் கொடுத்தால் தானே அரசங்கத்தாராகிய நீங்கள் எங்கள் வண்டவாளங்களை வெளியிடுவீர்கள்” என்று சொல்லி அரசாங்கம் கோபித்து பதில் சொல்லும் படியான சந்தர்ப்பமே இல்லாமல் செய்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று சொல்லி அந்தப்படி தாங்கள் கொண்டுவர இருந்த தீர்மானங்களையும், பேச இருந்த பேச்சுக்களையும் நிறுத்திக்கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றி விட்டார்கள்.
இதற்குப் பெயர்தான், நிலைமையை சமாளித்துக் கொள்ளப்பட்டதாம் காங்கிரசின் நாணயமும் அரசாங்கத்தின் நாணயமும் எப்படி இருந்த போதிலும் திலகர் சுயராஜ்ஜிய நிதி மோசடியும், பீகார் பூகம்ப நிதி வண்டவாளமும் மறைபட்டுப் போய்விட்டதாக யாரும் கருதிவிட முடியாது.
காங்கிரஸ்காரர்கள் நாணயத்தையும், அவர்களது யோக்கியதையையும், பொறுப்பற்ற தன்மையும் 10, 15 வருஷ காலமாக சர்க்கார் அறிந்திருந்தும் பொது ஜனங்களிடமிருந்து காங்கிரஸ்காரர்கள் பணம் வசூலிக்க அனுமதித்து வந்ததானது அரசாங்கத்தாரின் மீது சுமத்தித் தீர வேண்டிய குற்றமாகும்.
திலகர் நிதி மோகத்துக்கு காங்கிரஸ்காரர்கள் தண்டிக்கப்படும்படியான ஒரு நீதியான ஆட்சி இருக்குமானால், அந்த ஆட்சியில் முதலில் இதை அனுமதித்துக் கொண்டு இருந்த அரசியல் நிர்வாகஸ்தர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
கடவுள், மோட்சம் என்பவற்றின் பேரால் பார்ப்பனர்களும், தாசர்களும், ஆண்டிகளும் மூடமக்களை மோசம் செய்து கொள்ளை அடித்து எப்படி
129 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஒழுக்க ஈனமாக வாழ்ந்து வருகிறார்களோ அது போலவே காங்கிரஸ்,
தேசம், சுயராஜ்ஜியம் என்பவற்றின் பேரால் தேசாபிமானி, தேச பக்தர்கள், தேசீயவாதி என்ற பெயர்களை வைத்துக்கொண்டு பார்ப்பனர்களும், சூழ்ச்சிக்காரர்களும், காலிகளும் பொதுஜனங்களை ஏமாற்றி பணம் வசூலித்து நாட்டைப் பாழாக்குகிறார்கள்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.02.1936
குடி அரசு- 1936 (1) 130
தியாகராய நகமில் சு.ம. பொதுக் கூட்டம்
ஜஸ்டிஸ் கட்சியும் ச.ம. இயக்கமும்
அடிப்படையான கொள்கையில் இரண்டும் ஒன்று
எனவே சயமமியாதைக்காரர் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவேண்டும்
சயநலக்காரர்களுக்கு இனி ஜஸ்டிஸ் கட்சியில் இடமில்லை
தலைவரவர்களே! தோழர்களே!
எங்கள் அறிக்கையைப்பற்றிப் பார்ப்பனப் பத்திரிகைகள் தங்களுக்கு அனுகூலமாக விஷமப் பிரசாரம் செய்து வருகிறபடியால் அதைப்பற்றி சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று தலைவர் கட்டளையிட்டதால் எனது காயலாவையும் கவனிக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து அனுமதி பெற்று வந்து நான் பேசவேண்டியதாயிற்று
எங்கள் அறிக்கையில் ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறியோ அல்லது வேறு கட்சி ஆரம்பிக்க வேண்டுமென்றோ ஒரு வார்த்தையாவது இருக்கிறதா?
அறிக்கையின் கருத்து அவ்வறிக்கையின் உத்தேசமெல்லாம் கட்சியின் பெயரைச் சொல்லிக் கொண்டு முன்னுக்கு வந்தவர்களும், கட்சியின் பிரதான புருஷர்களாய் இருக்கின்றவர்களும் கட்சியினால் மீ” 1000, 10000 வீதம் சம்பளமுள்ள பதவி பெற்றவர்களும், பெற்றுக் கொண்டிருக்கிறவர்களும் தங்கள் சுயநலத்தையே பிரதானமாகக் கருதிக்கொண்டு கட்சியை மோசம் செய்துவிட்டார்கள் என்றும், சிலர் கவலையில்லாமல் இருந்து வருகிறார்கள் என்றும் நாங்கள் கருதி அக்கட்சியை மெத்த செல்வாக்கும், மேன்மையும் உள்ளதாக ஆக்கி, அதனால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இன்னும் அதிகமான நன்மை ஏற்படும்படி செய்யவேண்டும் என்பதேயாகும்.
சுயமரியாதையும் ஜஸ்டிஸும்
சுயமரியாதைக்காரர்கள் என்கின்ற முறையில் எங்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியினிடம் இருக்கும் கவலையும், பற்றுதலும், தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்பவர்கள் விஷயத்தில் கவலையுள்ளதும் 131௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
முற்போக்கேற்படுத்தக்கூடியதுமான கொள்கைகளைக் கொண்டு இருப்பதி னாலும் அதற்கு ஆக அக்கட்சி வேலை செய்து இருப்பதும் செய்து வருவதுமாய் இருப்பதால் தானே ஒழிய மற்றபடி எங்கள் சுயநலத்தை உத்தேசித்தல்ல.
ஜஸ்டிஸ் கட்சியில் எங்களுக்கு (சுயமரியாதைக்காரருக்கு) ஏற்ற கொள்கை: இல்லை என்று இருந்தால் நாங்கள் அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டிய அவசியமில்லை. அக்கட்சியால் நாங்கள் சொந்தத்திலோ சுயமரியாதைக்கட்சி மொத்தத்திலோ ஒன்றும் வழித்துக் கொட்டிக்கொள்ளவில்லை.
ஜஸ்டிஸ் கட்சியில் பட்ட துன்பம்
ஜஸ்டிஸ்கட்சியில் பட்டதுன்பம் கொஞ்சமல்ல; இந்த மாகாணத்திலேயே எனக்கு மாத்திரம் தான் சி.ஐ.டி. தொல்லை, கடிதங்கள் உடைத்துப் பார்ப்பது, பத்திரிகையை ஒழிக்க நினைத்து அடிக்கடி ஜாமீன் கேட்பது முதலிய காரியங்கள் நடக்கின்றன. ஆனால் இவைகள் அக்கட்சியைக் குறை கூறக் கூடிய காரணங்களாகாது. அக்கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியவர் களின் கையாலாகாததனமாகும். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை
ஜஸ்டிஸ் கொன்கை
எதுவரையில் அக்கட்சி ஜாதிபேதங்களை ஒழிப்பதும், வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் வழங்குவதும் ஆகிய இரண்டு கொள்கையையும்
முக்கியமாய்க் கொண்டிருக்கிறதோ அதுவரை அக்கட்சியை நாம் ஆதரித்துத்தான் தீர வேண்டும். அவர்கள் நம்மை எவ்வளவு கேவலமாகவோ அலட்சியமாகவோ கருதினாலும் நமக்கு கவலை இல்லை.
நாஸ்திகம் பொது உடமை
அக்கட்சியில் சிலர், ஏன்? சில முக்கியஸ்தர்களே, சுயமரியாதைக் கட்சி நாஸ்திகக் கட்சி என்றும், பொது உடமைக் கட்சி என்றும் சொல்லு கிறார்களாம். அதனாலேயே நம்முடன்கூட சாவகாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்கிறார்களாம். அதைப்பற்றியும் நமக்கு கவலை இல்லை அப்படிப்பட்டவர்கள் வீட்டில் நாங்களும் பெண் கட்டவோ கொடுக்கவோ செய்து சம்மந்தம் வைத்துக்கொள்ள ஆசைப்படவில்லை.
அன்றியும் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கமா பொது உடமை இயக்கமா என்பதுபற்றியும் விவகாரம் செய்ய முன்வரவில்லை. அது எப்படியோ போகட்டும் அதன் பலாபலனை நாங்கள் அடைந்து கொள்ளு கிறோம். அதற்கு ஆக ஜஸ்டிஸ் தலைவர்களின் சிபார்சு கோரவில்லை
ஆனால்
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களை நான் ஒன்று கேட்கின்றேன். அதாவது ஜஸ்டிஸ் கட்சி நாஸ்திகமும், பொதுஉடமையும் கொண்ட கொள்கை உடையது தானா அல்லவா என்பதேயாகும். எப்படி எனில் ஜாதிகளை ஒழிப்பது நாஸ்திகமா அல்லவா?
குடி அரசு - 1936 (1) 132
ஜாதிகள் “கடவுளா"ல் உண்டாக்கப்படாமல் எப்படி உண்டாயிற்று என்று எந்த ஆஸ்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்லட்டும். கீதை, ராமாயணம், மனுதர்ம சாஸ்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவது தான் ஜாதியை ஒழிப்புநெருப்பில் பொசுக்கா விட்டாலும் குப்பைத்தொட்டியிலாவது போடத் துணிந்தவன். தான் ஜாதியை ஒழிக்க முன் வர முடியும். ஆகவே ஜாதியை ஒழிப்பவர்கள் தங்களை அறியாமலே நாஸ்திகர்களாக இருக்கிறார்கள். கடவுள் பக்தி விஷயத்திலும் ஜஸ்டிஸ் தலைவர்கள் யோக்கியதை எனக்கு நன்றாய்
தெரியும். ஆதலால் அவர்களை இல்லாவிட்டாலும் அவர்களது கொள்கைகளை நாஸ்திகக் கொள்கை என்று தான் கருதி இருக்கிறேன். பொதுஉடமை விஷயத்திலும் ஜஸ்டிஸ்காரர்கள் பொதுஉடமைக் கொள்கைக்காரர்களே. எப்படி எனில் அரசியல் விஷயமான சகல பிரதிநிதித் துவமும் பணம் வரும்படியுள்ள சகல உத்தியோகமும் சகல வகுப்புக்கும் சரிசமமாகப் பங்கிட்டுக்கொடுக்க வேண்டுமென்கிறார்கள்.
பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தால் என்ன? பண வரும்படியுள்ள உத்தியோகங்களை பங்கிட்டுக் கொடுத்தால் என்ன? தனித் தனி மனிதனுக்குக் கொடுக்கும் பிரிவினையின் தன்மையும், தனித் தனி வகுப்புக்கு கொடுக்கும் பிரிவினையின் தன்மையும் கொள்கையில் ஒன்றுதான். ஆதலால் சுயமரியாதைக்காரர்களிடம் இருப்பதாய்ச் சொல்லும் குணங்கள் ஜஸ்டிஸ்காரரிடமும் இருந்து வருகிறது என்றுதான் கருதுகிறேன்.
சுயமரியாதைக்காரர்களும் சர்க்காரை எதிர்க்கவோ, சட்டம் மீறவோ, பலாத்காரம் செய்யவோ இன்றுவரை அவர்கள் தீர்மானித்திருக்கவில்லை அதுபோல் தான் ஜஸ்டிஸ்காரர்களும்
ஆதலால் சு.ம. காரர்கள் ஜஸ்டிஸ்காரருடன் அனுதாபம் காட்டுவதோ ஜஸ்டிஸ்காரர் சு.ம. காரரின் ஒத்துழைப்பைப் பெறுவதோ எவ்விதத்திலும் தப்பில்லை.
ச.ம. கொள்கை
ஆதலால் சு.ம. காரர்களுடைய லட்சியமும் கொள்கையும் எவ்வளவு உன்னதமாய் இருந்தாலும் சரி, இந்தியாவைப் பொறுத்தவரை சிறப்பாகத் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஜாதி பேதத்தை ஒழித்து பார்ப்பனீயத்தை அடியோடு அழிக்காவிடில் உண்மையான சுயமரியாதைக்கு சிறிதுகூட இடமில்லை.
இந்தியாவில் அனேக சீர்திருத்தங்கள் செய்தாய்விட்டது. அநேக தீவிரவாதிகள் பிறந்து பிறந்து இறந்தாய் விட்டது. ஒன்றும் ஏற்படவில்லை. உலகமெல்லாம் எவ்வளவோ மாறுபாடடைந்து விட்டது. இந்தியா
மாத்திரம் இன்னமும் காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறது. இதற்கு ஜாதி தான் காரணம்
133 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜாதியும் பொது உடமையும்
ஜாதிப் பிரிவு இருக்குமிடத்தில் எந்த அரசியலும் பொருளியலும் எப்படி பங்கிட்டுக்கொடுத்தாலும் ஒரே வருஷத்தில் பழையபடி ஆகிவிடும். ஜாதியை கவனிக்காமல் ஜாதியை ஒழிக்காமல் பொதுவுடமை பேசுவது அரிவரி படிக்காமல் B.A. வகுப்பைப்பற்றி பேசுவதாகும். ஆதலால் இன்று
முதல் வேலை ஜாதி ஒழிபட வேண்டும்
ஜஸ்டிஸ் பார்ட்டியும் ஜாதியும்
ஆகவே ஜஸ்டிஸ் பார்ட்டியானது ஜாதி ஒழிப்புக்காக இன்டியன்.
பின்னல் கோட்டில் செக்ஷன் போட்டிருக்கிறது.
ஜஸ்டிஸ் பார்ட்டி
மற்றும் ஜஸ்டிஸ் பார்ட்டி ஆட்களைப் பொறுத்தவரை எவ்வளவோ பல்டி அடித்தார்கள் என்றாலும் கொள்கையைப் பொறுத்தவரைஎவ்விதபல்டியும் அடிக்கவில்லை என்பதைப் பொதுஜனங்கள் மனதில் வைக்க வேண்டும். ஆகையால் அது தோற்றுப்போனாலும் கூட நாம் பயப்பட வேண்டிய
தில்லை. அப்படித் தோற்றுப்போவதானது அக்கட்சியில் உள்ள அழுக்கு மூட்டைகளையும், சுயநலப் பிண்டங்களையும், நன்றி கெட்ட மக்களையும் ஒழித்து அக்கட்சியைப் பரிசுத்தமாக்க அத்தோல்வி பயன்படும். பொப்பிலி ராஜாவுக்கு மந்திரி பதவி போய்விட்டதாகவே வைத்துக்கொண்டாலும் உடனே ராஜா வேலை வந்து விடும். அதுபோலவே மற்றவர்களும் மந்திரி இல்லாததால் வாழ முடியாதவர்களாகிவிட மாட்டார்கள்.
ஆனால் காங்கிரஸ் மந்திரிசபை மாத்திரம் வாழ்ந்து விடும் என்று கருதாதீர்கள். அதை வாழவும் விடாமல் செய்ய நமக்குத் தெரியும்
சி.ரா. - பிரகாசம்
ஒரு காலத்தில் தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியாரும், பிரகாசமும் சொன்னதுபோல் அதாவது - “ஜஸ்டிஸ் கட்சி அரசாளுவதைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்" என்று சொன்னது போல் நாமும் பார்ப்பனர் கட்சி அரசாளுவதை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்கின்ற தத்துவத்தில் முனைந்து பார்ப்பனக்கட்சி ஆட்சியை அரைநொடியில் அழித்துவிட முடியும். அதற்காகவேதான் பார்ப்பனரல்லாதார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்கிறோம்
நான் மந்திமியா?
இல்லாவிட்டால் நான் மந்திரியாக ஆசைப்படுகிறேனா? எனக்கு யோக்கியதை உண்டா? அல்லது மந்திரிகள் தயவு ஏதாவது எனக்குத் தேவையா? எனக்கு ஏதாவது பிள்ளைகுட்டி சுற்றத்தார் என்கின்ற தொல்லை
குடி அரசு- 1936 (1) 134
யாவது இருக்கிறதா? அல்லது மந்திரிகள் தயவால் வாழவேண்டிய அவசியமாவது உண்டா? தலைவர் பாண்டியன் அவர்களுக்காவது மந்திரிகள் தபவோ மந்திரிகளை லட்சியம் செய்ய வேண்டிய அவசியமோ ஏதாவது இருக்கிறதா? பாருங்கள்.
மற்றும்
எனக்கு ஏதாவது சொந்தத்தில் பெருமை வேண்டுமென்றால் நான் காங்கிரசில் இருந்தால் எனக்குக் கிடைக்காதா?
இன்று கூட 4 அணா கொடுத்து காங்கிரசில் நான் சேர்ந்துவிட்டால் தோழர் ராஜாஜி என் குற்றங்களை எல்லாம் மன்னித்து சத்தியமூர்த்திக்குச் சூட்டிய முடியை எடுத்து எனக்குச் சூட்டி விடுவார்.
அப்படியிருக்க நான் ஏன் இந்தப்படி அவஸ்தைப்படுகிறேன் கெட்டபேர் அடைகிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி சாய்ந்தால் பார்ப்பனரல்லாதார் நிலை மோசமாகிவிடும். பார்ப்பனரல்லாதார் மாத்திரம் தங்கள் சுயமரியாதையை யுணர்ந்து நடந்து கொண்டார்களானால் தேர்தலில் யார் ஜெயித்தாலும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
1926 தேர்தல்
1926ல் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியுற்றது. என்ன முழுகிப் போய்விட்டது?
தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொண்டதால் மற்றும் பலமடைந்தார்கள்.
காங்கிரஸ் மந்திமி:
காங்கிரஸ் பிடித்து வைத்த மந்திரிகள் ஒரு வருஷத்தில் ஜஸ்டிஸ் மந்திரிகள் மாத்திரமல்ல - சுயமரியாதை மந்திரிகளானார்கள். முதல். மந்திரியாய் இருந்த டாக்டர்சுப்பராயன் அவர்கள் “நான் சுயமரியாதைக்காரன். தான்" என்று சொல்லவில்லையா?
காங்கிரஸ் மந்திரிகள் யாராயிருந்தாலும் தமிழ் நாட்டிற்குள் தலையை நீட்டிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்
ஒரு கேள்வி
இச்சமயத்தில் ஒரு பார்ப்பன வாலிபர் ஒரு கேள்வி கேட்டார் அதாவது காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரபிரசாத் அவர்களுக்கு சென்னை
கார்ப்பரேஷனில் 15 மெம்பர்கள் வரவேற்பளிக்கவில்லை என்று சொல்லி தடுத்து விட்டார்கள். ஆனால் ரயிலில் லட்சம் பேர்கள் வந்து வரவேற்றார்கள் டிராம், பஸ் எல்லாம் 2 நிமிஷம் நின்றுவிட்டன. ஆதலால் நீங்கள் வரவேற்காவிட்டால் கூட்டம் வராதா? என்று கேட்டார்.
135 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இதற்கு ஈ.வெ.ரா. பதில்
ரயிலுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து மதிப்பதாய் இருந்தால் வருஷா வருஷம் பெரியபாளையத்து மாரியம்மன் திருவிழாவுக்கு பத்து லட்சக் கணக்கான ஜனங்கள் போகிறார்கள், மிதிபட்டுச் சாகிறார்கள். எதற்காக? அங்கு ஆணும் பெண்ணும் அரை நிர்வாணமாய் ஆடும் காட்சியைப் பார்க்கத்தானே? இதனால் அக்கூட்டம் அந்நிர்வாணக் காட்சிக்கு வரவேற்பாக கூடியது என்று பொருளா?
ஒரு டொம்பன் வீதியில் டமாரமடித்தால் உடனே போக்குவரத்து தடைபடும்படி கூட்டம் கூடிவிடுகிறது. நாடகக்காரர்கள் போல் ஒரு மாதமாய் விளம்பரம் செய்து தெருவெல்லாம் நோட்டீஸ் ஒட்டி டாம் டாம் போட்டு யாரைக்கூட்டிவந்தாலும் கூட்டம் கூடித்தான் தீரும். இதனால் யோக்கியதை அதிகம் என்று அறிவாளிகள் கருதிவிட மாட்டார்கள் என்று சொன்னார்.
பிறகு தொடர்ந்து பேசியதாவது ஜஸ்டிஸ் கட்சி கொள்கை ஒரு நாளும் தோற்றுவிடாது. தோற்கவும் விடமாட்டோம். ஆனால் இனி ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் சில சோணகிரிகளும் ஏமாற்றுகாரர்களும் மீ 5000, 10000 வாங்கிக்கொண்டு குஷாலாக குலாவவும், கூத்தாடவும் இவர்களைக் காப்பாற்ற சில சுயநலக்காரர்களும், போக்கிரிகளும் கைதூக்கிக் கொண்டு கொள்ளை அடிக்கும் படியும் இருக்கும்படியான நிலைமையை இனி வளர விடமாட்டோம். அப்படிப்பட்டவர்களாலேயே இயக்கம் பாழாயிற்று. யோக்கியர்கள் எல்லாம் கட்சியை விட்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள் ஆகையால் உண்மையும் தியாக புத்தி கொண்டவர்களுமே அக்கட்சியை இனிமேல் நடத்த வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காகத்தான் நாங்கள் அறிக்கை விட்டோமே ஒழிய அக்கட்சியை ஒழிக்கவல்ல என்பதை தெரிவித்துக் கொண்டு என்வார்த்தையை முடித்துக் கொள்ளுகிறேன். நான் ஆஸ்பத்திரியில் இருந்து வரும்போது பொதுக் கூட்டத்தில் பேசுவது இல்லை என்று டாக்டர் குருசாமி முதலியாரிடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு வந்தேன். ஆனால் வந்த
பிறகு பேசும்படி ஆகிவிட்டது என்றாலும் அதனாலேயே கடைசிவரை பேச முடியாமல் சுருக்கமாகப் பேச வேண்டியதாயிற்று
குறிப்பு: சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் ஆதரவில் 09.02.1936 இல் தியாகராய நகர் பனகல் பார்க் முன்பாக உள்ள திடலில் தோழர் ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன், எம்.எல்.சி. தலைமையில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 16.02.1936
குடி அரசு- 1936 (1) 136
காங்கிரசும் வாலிபர்களும்
இன்று, காங்கிரசு ஸ்தாபனம் தேசாபிமானச் சங்கமென்றும், ஜஸ்டிஸ் ஸ்தாபனம் வகுப்புவாத ஸ்தாபனமென்றும் பொதுமக்களுக்கு கற்பிக்கப்
பட்டு வருகிறது அது மாத்திரமல்லாமல் காங்கிரசில் உள்ளவர்கள் எல்லாம் விரிந்த நோக்கமுடைய தியாகிகள் என்றும், ஜஸ்டிசில் உள்ளவர்கள் எல்லாம் குறுகிய நோக்கமுள்ள சுயநலக்காரர்கள் என்றும் பிரசாரம் செய்யப்படுவதுடன் பொது நோக்குடைய அனேக வாலிபர்கள் உள்ளத்திலும் அம்மாதிரியான. ஒரு அபிப்பிராயம் உண்டாக்கப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டுவித அபிப்பிராயங்களின் மீதுதான் இன்று சென்னை மாகாணத்தில், சிறப்பாக தமிழ்நாட்டில் அரசியல், சமூக இயல் போர் நடந்து
வருகிறது
நமது நிலை ஆனால் நம்மைப் பொறுத்தவரை நாம் இந்த 10, 12 வருஷகாலமாகவே காங்கிரசானது பார்ப்பனர்களுடைய நன்மைக்கு ஆக பயன்படுத்தப் படுகின்ற ஸ்தாபனம் என்றும், ஜஸ்டிசானது பார்ப்பனரல்லாதாருடைய நன்மைக்கு ஆக ஏற்படுத்தப்பட்டு பயன்பட்டு வருகிற ஸ்தாபனம் என்றும் சொல்லி வருவதை யாவரும் உணர்ந்திருக்கலாம். இப்படிச் சொல்லி வருவதாலேயே காங்கிரசில் அனுபோகமில்லாமலோ, காங்கிரசினிடம் ஏதாவது எதிர்பார்த்து ஏமாந்து போய்விட்டதினாலோ சொல்லி வருவதாக
யாரும் கருதிவிடக்கூடாது. ஏனெனில் காங்கிரசில் சகல அனுபவமும் பெற்றே இதைச் சொல்லுகிறோம். காங்கிரசு ஆரம்பித்த காலம் முதல் கொண்டு நாளிது பரியந்தம் அதன் ஆதிக்கம் எப்படி இருந்து வந்திருக்கின்றது என்பதை கவனித்தவர்களுக்கு நமது அபிப்பிராயம் சரியா தப்பா என்பது
ஒரு விதத்தில் புரியலாமானாலும், இப்போதுள்ள வாலிபர்களுக்கு புரிவதற்காக 1919 @ முதல் அதிக விளம்பரம் ஆகி வரும் காங்கிரசைப் பற்றியே கவனிப்போம்
பழைய கதை
1919-ம் வருஷத்தில் தோழர் ஈ.வெ.ராமசாமி தனது முனிசிபல் சேர்மென், ஜில்லா போர்ட் மெம்பர், தாலுக்கா போர்ட் மெம்பர் முதலிய
137 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பதவிகளை ஒரே காகிதத்தில் ராஜீநாமா கொடுத்துவிட்டு தோழர்கள் வரதராஜுலு நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களைப் பின்பற்றி காங்கிரசில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவர். அது சமயம் அவர் முதலில் சென்ற மகாநாடு திருச்சி மாகாண மகாநாடாகும். அதற்கு சுமார் 100 பிரதிநிதிகளுடன் ஈரோட்டிலிருந்து திருச்சிக்கு சென்ற போது அங்கு தோழர்கள் வரதராஜுலு, ஜோசப், சோமசுந்திர பாரதியார், கல்யாணசுந்திர முதலியார், சிதம்பரம் பிள்ளை (இருவரும் இருந்ததாக ஞாபகம்) முதலியவர்கள் முக்கிய பங்கெடுத்துக் கொண்டதையும், ஜஸ்டிஸ் கட்சியை வைவதையும், ராமநாதபுரம் ராஜா தலைமை வகித்ததையும் இவர்களை யெல்லாம் ராஜகோபாலாச்சாரியார், விஜயராகவாச்சாரியார் ஆகியவர்கள் நடத்தினதையும் பார்த்து தோழர் ஈ.வெ.ரா. அதில் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் ஒரே ஒரு சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
முதல் சந்தேகம்
அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரைப்பற்றிக் குறை கூறுவது எல்லாம் சரி, ஆனால் அவர்கள் கேட்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நியாயமானது தானே என்று கேட்டார். அதற்கு தோழர் வரதராஜுலு நாயுடு உள்பட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப்பற்றி யாருக்கும் ஆக்ஷபணை இல்லை என்றும், அதற்காகவே சென்னைமாகாணச்சங்கம் என்பதாக ஒருசங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும், அதற்கு தோழர் பி. கேசவபிள்ளை தலைவர் என்றும், தோழர் பி. வரதராஜுலு காரியதரிசி என்றும் சொல்லப்பட்டது
ஈரோட்டு மகாநாடு.
அந்த சமயம் தோழர் ஈ.வெ.ரா. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதானால் ஜஸ்டிஸ் கட்சி அவசியமில்லை என்று சொன்னதின் பேரில் உடனே அங்கேயே பார்ப்பனரல்லாத பல பிரமுகர்கள் ஒன்று கூடி சென்னை மாகாணச் சங்கம் என்பதின் 2 வது மகாநாட்டை ஈரோட்டிலேயே வேண்டுமானாலும் கூட்டிவகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தலாம் என்றும், அதைக் கூட்ட சம்மதிக்கிறீர்களா என்றும், தோழர் ஈ.வெ.ராமசாமியை தோழர்கள் வரதராஜுலு, கல்யாணசுந்திரம் முதலியவர்கள் கேட்க, ஒரே மாதத்தில் ஈரோட்டில் சென்னை மாகாண மகாநாடு கூட்டப்பட்டது. தோழர் கோவிந்ததாஸ் தலைமை வகித்தார். ஈ.வெ.ரா. வரவேற்பு தலைவராய் இருந்தார்.
தோழர்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, விஜயராகவாச்சாரியார் முதலியவர்கள் வந்து நடத்திக் கொடுத்து வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு போனார்கள். இதன்பிறகு பார்ப்பனரல்லாதார்களில் ஏதோ பணக்காரர்களாய் இருந்தவர்கள்
குடி அரசு- 1936 (1) 138
போக, மற்றபடி உற்சாகமுள்ள வாலிபர் எல்லோரும் இவர்களைப் பார்த்து காங்கிரசில் சேர்ந்தார்கள். அது மாத்திரமல்லாமல் காங்கிரசில் தேரயவாதிகள். (நேஷனலிஸ்ட் அசோசியேஷன்) சங்கம் என்பதாக ஒரு சங்கத்தையும் புதிதாக உண்டாக்கினார்கள். அதிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒப்புக் கொண்டு அச்சங்கத்துக்கு தோழர் சி. விஜயராகவாச்சாரியார் தலைவராகவும் தோழர் ஸி. ராஜகோபாலாச்சாரியார் பொதுக் காரியதரிசியாகவும், தோழர் பிரகாசம் ஆந்திர நிர்மாண காரியதரிசியாகவும், தோழர் ஈ.வெ.ரா தமிழ்நாட்டு நிர்மாணக் காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டார்கள்.
ராஜாஜி சூழ்ச்சி
ஆனால் அதற்கு உபதலைவராயிருக்க தோழர் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெயரை பிரேரேபித்ததில், அது தோழர் ராஜகோபாலாச்
சாரியாருக்கு பிடிக்காததால் அதற்கு பதிலாகவேறு ஒரு பார்ப்பனர் எஸ். கஸ்தூரி ரங்கய்யங்கார் பெயர் பிரேரேபிக்கப்பட்டது. அது சமயம் தோழர் ஈ.வெ.ரா., ராஜகோபாலாச்சாரியாருக்கு கடமைப்பட்டவராக இருந்தும், தோழர் வரதராஜுலு முதலியவர்கள் வி.ஓ. சிதம்பரம் பிள்ளைதான் உபதலைவராய் இருக்க வேண்டும் என்று சொன்னதால், ஈ.வெ. ராவும் அதை ஆதரிக்க, அந்த விஷயம் உடனே பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற உணர்ச்சியைக் கிளப்பி விட்டது
பிறகு, உடனே இந்த விஷயம் ஒத்திப்போடப்பட்டு விட்டு பிற்பகல் மகாநாட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று தலைவர் சொல்லிவிட்டார்.
ஆனால் கூட்டம் முழுவதும் பார்ப்பன மயமாய் இருந்ததால் பிற்பகல் மகாநாட்டுக்கு தொழிலாளிகளில் 50 பேருக்குமேல் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் டெலிகேட்டு பணம் கொடுத்து 50 தொழிலாளி பிரதிநிதிகளை டாக்டர் வரதராஜுலுவும், ஈ.வெ.ராவும், திரு.வி. கல்யாணசுந்தரமும் கூட்டி வந்து உட்காரவைத்தவுடன் தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு சூழ்ச்சி செய்தார். அது என்னவென்றால் உபதலைவர் ஒருவர் என்று இருந்ததை 5, உப தலைவர்களாக்கி அதில் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்களையும் ஒருவராகச் சேர்த்து அதற்கு மதிப்பில்லாமல் ஆக்கினார். இதையும் தோழர் ஈ.வெ.ரா, வரதராஜுலு, கல்யாணசுந்தரம் ஆகியவர்கள் ஒப்புக்கொள்ளாததால் வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் உபதலைவராகத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. நிர்வாகக்கமிட்டி மெம்பர்களிலும் பகுதிக்கு மேல் பார்ப்பனரல்லாதார்களை போட வேண்டுமென்று ஈ.வெ.ரா. வாதாடியதால் அந்தப்படியே போட வேண்டியதாயிற்று. இதைப் பார்த்த தோழர் ராஜகோபாலாக்சாரியார் அன்றையதினமே தனது வாயால் “உங்களை விட ஜஸ்டிஸ் கட்சியாரே 100 மடங்கு தேவலாம்” என்று சொல்லி மனம் புழுங்கி விட்டார். இதைப்பற்றி உண்மை அறிய வேண்டியவர்கள் இன்றும் தோழர்கள் முதலியாரையும் நாயுடுகாரையும் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
139 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
செத்தது
இந்தக் காரணங்களால் அடுத்த நாளே சென்னை மாகாணச்சங்கமும், தேசீயவாதிகள் சங்கமும் உடனே செத்துப் போய்விட்டன.
பிறகு அதைப்பற்றிய பேச்சே கிடையாது. அது முதல் தோழர் ராஜகோபாலாச்சாரி யாருக்கு முதலியாரிடமும், நாயுடுகாரிடமும், அந்தரங்கத்தில் நம்பிக்கை அற்றுப்போய் விட்டது. பின்னரும் அவர்களிடம் எப்போதுமே நம்பிக்கை இல்லாமலும் போய் விட்டது. ஆனால் ஈ.வெ.ரா.விடம் ஆச்சாரியாருக்கு நம்பிக்கை இருந்து வந்தது என்னலாம் ஈ.வெ.ராவும் ஆச்சாரியாரிடம் நம்பிக்கைத் தவறுதலாக நடக்க இஷ்டப்படவே இல்லை. ஆனால் ஒவ்வொன்றையும் நேரில் சொல்லிவிட்டு செய்து வந்ததால் நம்பிக்கை இருந்தது
அடுத்தாப்போல் திருநெல்வேலியில் மாகாண மகாநாடு கூட்டப் பட்டது. தோழர் சீனிவாசய்யங்கார் தலைமை வகித்தார். அங்கும் தோழர் ஈ.வெ.ராவும் தோழர் சிதம்பரம் பிள்ளையும் வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவந்து விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றினார்கள். பொது மகாநாட்டில் தலைவர் தனக்குள்ள விசேஷ அதிகாரத்தைக் கொண்டு அதை நிராகரித்துவிட்டார்.
தஞ்சை மகாநாடு
பிறகு தஞ்சையில் மாகாணக் கான்பரன்சு கூடிற்று. அங்கும் தோழர் ஈ.வெ.ரா. தனது (கோயமுத்தூர் பிரதிநிதிகள்) ஜாகையில் ஒரு பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் கூட்டம் கூட்டி, வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை சென்னை பார்ப்பனரல்லாத பிரதிநிதிகள் தடுத்தும், காங்கிரஸ் ஸ்தாபனங்களில் 100க்கு 50 ஸ்தானங்களுக்குக் குறையாமல் பார்ப்பனரல்லாதார் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகச் சொல்லி ஈ.வெ.ராவுக்கே அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டது
பிறகு திருப்பூர் மாகாண மகாநாட்டுக்கு டாக்டர் வரதராஜுலு தலைமை வகிக்க மாகாணமெங்கும் ஆதரவு இருந்தும் மித்திரன் கூட்டம் முதலிய பார்ப்பனர்கள் அவரைப் போடக்கூடாது என்று சூழ்ச்சி செய்து, கடைசியாக வாசுதேவராவ் என்கின்ற ஒரு அநாமதேயப் பார்ப்பனரைத் தலைவராகப் போட்டுக் கொண்டார்கள்.
அங்கும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் விஷயம் பொது மகா நாட்டிலேயே வந்து, ஒருவருக்கொருவர் கை கலக்கும்படியான நிலை ஏற்பட்டு விட்டது. அதில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பது, கோயில் பிரவேசம் ஆகிய தீர்மானங்கள் பார்ப்பனர்களால் பலமாக எதிர்க்கப்பட்டு கை நழுவ விடப்பட்டன. அங்குதான் தோழர் ஈ.வெ.ரா. ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று சொன்னது
குடி அரசு- 1936 (1) 140
திருச்சி மகாநாடு.
பிறகு திருச்சியில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகக் கூட்டத்தில் தோழர் சீனிவாசய்யங்காருக்கும், தோழர் ராஜகோபாலாச்சாரிக்கும் இருந்த போட்டியால், தோழர் ஈ.வெ.ராமசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நேர்ந்தது என்றாலும் தலைவர். தேர்தல் நடந்து ஓட்டுகள் எண்ணிப்பார்த்து ஈ.வெ.ராமசாமி தலைவரானார். என்று சொன்னவுடனே, சென்னை பார்ப்பனர்கள் அவர்மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அதை அப்போது பார்ப்பனரல்லா தாரிடம் மிக மிக செல்வாக்குப் பெற்றிருந்த வ.வெ.சு. அய்யரைக் கொண்டு பிரேரேபிக்கச் செய்து அவரையே ஓட்டுச் சேகரிக்கச் செய்தார்கள்.
அது சமயம் தோழர் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் எழுந்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்புத் துவேஷத்தின் மீது கொண்டு வரப்பட்டிருக்கிறதென்றும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் பிரேரேபிக்க வேண்டிவரும் என்றும் சொன்னதின் மீது, வ.வெ.சு. அய்யர் எவ்வளவு பாடுபட்டும் அத்தீர்மானம் தோல்வி அடைந்து விட்டது. அவருடைய குருகுலத்தின் வண்டவாளம் வெளியாகவும் அத்தீர்மானமே ஒரு காரணமாய் இருந்தது
திருவண்ணாமலை மகாநாடு.
திருவண்ணாமலை மாகாண மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ராவே தலைமை வகித்து அங்கு பார்ப்பனர், அல்லாதார் விஷயம் தலைமை உரையில் பலமாகப் பேசி விவாதிக்கப்பட்டு குறிப்பாகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது சரி என்றும், மற்ற கட்சிகளைக் காங்கிரசுடன் சேர்த்துக்கொள்ள. முயற்சிக்கும் போது ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் ஏன் தேசத்துரோகக் கட்சி என்று சொல்ல வேண்டுமென்று கேட்டு தலைவர் பிரசங்கிக்கையில், தலைவருடனேயே சில பார்ப்பனர்கள் வாதாடுகையில், அதை ஒரு பார்ப்பனரல்லாத பிரதிநிதி கடினமாகத் தாக்கிப் பேசியபின், பார்ப்பனர்கள்
மேலால் பிரசிங்கிக்க விட்டார்கள்.
௬.ம. இயக்கத் தோற்றம்
அடுத்த, காஞ்சிபுரம் மகாநாட்டிலும் தோழர் கல்யாணசுந்தர முதலியாரை தலைவராக தமிழ்நாடு பூராவும் ஆதரித்தும் சுதேசமித்திரன் கூட்டம் அவர் கூடாது என்று எவ்வளவோ சூழ்ச்சி செய்து கடைசியாக ஈ.வெ.ரா. முயற்கியால் ஓட்டு அதிகத்தில் முதலியார் தலைமைப் பதவிக்கு வந்து காஞ்சீபுரத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியில் நிராகரித்து, பொது மகாநாட்டிலும்
1 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
எதேச்சாதிகாரமாய் நிராகரிக்கப்பட்டு, அதற்கு பின்பே தோழர் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கம் ஏற்படவும், ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டது எனவே பார்ப்பனர்கள் எந்த சமயத்திலாவது ஒரு பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் முன்னுக்கு வரவோ, தலைமைப்பதவி பெறவோ விட்டு இருக்கிறார்களா என்று பார்த்தால் காங்கிரஸ் பார்ப்பனர் இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும்
பார்ப்பனர் தந்திரம் இவையெல்லாம் பழங்கதையானாலும் இன்றும் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது
அவர்களுக்கு நிலைமை கஷ்டமாக இருக்கும் போது குப்புசாமி போன்றவர்களை தலைவர்களாகவும், காரியதரிசி ஆகவும், சர்வாதிகாரி யாகவும் ஆக்கி விடுகிறார்கள். நிலைமை சற்று சவுகரியமாய் இருக்கிறது என்று தெரிந்தால் சத்தியமூர்த்தி போன்றவர்களை தலைவராக்கிக் கொண்டு முத்துரங்க முதலியார் போன்றவர்களையே அழுத்தி விடுகிறார்கள் உண்மையாகப் பேசப் போனால் இன்றும் தோழர் சத்திய மூர்த்தியாருக்கு சாப்பாட்டுக்கு யோக்கியமான வழி என்ன என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லுவாரா?
சத்தியமூர்த்தி ஜாதகம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அறிய, தோழர் மூர்த்தியார் வாடகை வீட்டில் இருந்து கொண்டு டிராம் காரிலும் கால்நடையிலும் சீனிவாசய்யங்காரிடம் சென்று மான்யம் வாங்கிக் கொண்டிருந்தது யாரும் அறிந்ததுதானே?'
இப்போது அவருக்கு இரண்டு இரட்டை மாடிவீடு எப்படி ஏற்பட்டது? மோட்டார் கார் ஏது? சாப்பாட்டுக்கு எப்படி வருகிறது? எந்தத் தொழிலில் சம்பாதித்தார்? இன்கம்டாக்ஸ் எவ்வளவு? தொழில் வரி உண்டா?
மற்றும் அவர் சிவிக் போர்ட் நாமினேஷன்களில் பணத்துக்காக அல்லாமல் எதில் நாணயக் குறைவில்லாமல் நடந்து கொண்டார் என்று சொல்லக்கூடும்?
மெயில் பேப்பர், மூர்த்தியாரை ஆதரிக்கும் இரகசியம், பாஷ்யம் அவர்கள் பட்டப்பகலில் தப்பட்டை அடிப்பதுபோல் எடுத்துச் சொன்னது ஆச்சாரியாருக்குத் தெரியாதா? மூர்த்திக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள சம்மந்தம் ஆச்சாரியாருக்குத் தெரியாதா?
குடி அரசு- 1936 (1) 142
மற்றும் அவருடைய சொந்தப் பழக்க வழக்கம், ஒழுக்கம் ஆகியவை களைப்பற்றி ஆச்சாரியாரே பலமுறை மற்ற ஜனங்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டது யாருக்கும் தெரியாதா?
இன்னும் எவ்வளவோ மற்றவர்களுக்குத் தெரியாத இரகசியங்கள் அவரைப்பற்றி ஆச்சாரியாருக்குத் தெரிந்திருந்தும் இவ்வளவையும் லக்ஷ்யம் செய்யாமல் அதுவும் மூத்துரங்க முதலியாருக்கு விரோதமாக மூர்த்தியாருக்கு தமிழ்நாட்டுத் தலைமைப் பட்டாபிஷேகம் செய்தார் என்றால் மூர்த்தியாரின் குணங்கள் எல்லாம் ஆச்சாரியார் மீது பிரகாசிப்ப தாகத்தானே அர்த்தம்.
ஜாதிப் பற்று
அல்லது ஆச்சாரியாரின் மூக்குக்கு நல்ல வாசனை கெட்ட வாசனை அறிய சக்தி இல்லை என்றாவது சொல்லித் தானே ஆகவேண்டும். எவ்வளவு அயோக்கியரானாலும் சத்தியமூர்த்தியார் பார்ப்பனர், எவ்வளவு யோக்கியரானாலும் முத்துரங்க முதலியார் பார்ப்பனரல்லாதார் என்பதில்லாமல்
இதில் வேறு என்ன காரணம் இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.
காங்கிரஸ் பார்ப்பனர் ஸ்தாபனம், அல்லது பார்ப்பனர் நன்மைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ஸ்தாபனம் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி நமது வாலிபர்களுக்கு வேண்டும் என்று கேட்கின்றோம்.
ஒரு கேள்வி
பார்ப்பனர்கள் தின்று எச்சிலையில் மீதி விழுவதை பொறுக்கவும், நக்கவும் ஆசைப்பட்டு காங்கிரசிலிருப்பவர்கள் இருந்து தொலையட்டும், அவர்கள் கால்கழுவிய “தீர்த்தம்” சாப்பிடுவதின் மூலம் மந்திரிகளாகட்டும், ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் தலைவர்கள் ஆகட்டும், அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளுவோம். அப்படிப்பட்ட எண்ணமில்லாமல் ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகக் கட்சி என்றும், காங்கிரஸ் தேசாபிமானக் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சுயநலக்காரர்கள் நாணயமற்றவர்கள்' என்றும், காங்கிரஸ் தலைவர்கள் சுயநலமற்றவர்கள் நாணயமுள்ளவர்கள் என்றும் கருதிக் கொண்டிருக்கிற, தன்காலில் நிற்கக்கூடிய வாலிபர்களாய் இருக்கிறவர்கள் இப்படிப்பட்ட இயக்கத்துக்கும், இப்படிப்பட்ட தலைவர் களுக்கும் வால் பிடித்துத்திரிவது ஆண்மையும், சுயமரியாதையும் கொண்ட காரியமா என்று கேட்கிறோம். எவ்வளவு காலத்துக்குத்தான் தேசாபிமானம் என்னும் பெயரால் இம்மாதிரி முட்டாள்தனமானதும் சுயமரியாதை அற்றதுமான காரியத்தைச் செய்து கொண்டு உயிர்வாழ்வது என்கின்ற உணர்ச்சி உண்மையான, சுத்த ரத்த ஒட்டமுள்ள வாலிபர்களுக்கு வரவேண்டாமா? என்று கேட்கின்றோம்
143 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அரசியல் விபசாரத்துக்கு முடிவில்லையா?
'கடவுள்' பேரால் நடந்த விபசாரத்துக்குக்கூட முடிவுகாலம் வந்து, பெண்களுக்கும் சுயமரியாதை உணர்ச்சி வந்து விட்டபோது இந்த தேசாபிமானத்தின் பேரால் நடக்கும், விபசாரித்தனத்தைவிட மோசமான, அயோக்கியத்தனத்துக்கும் இழிவுக்கும் மூடிவுகாலம் வந்து நமது வாலிபர்களுக்கு எப்போதுதான் பகுத்தறிவும், சுயமரியாதையும் ஏற்படப்போகின்றதோதெரியவில்லை.சயமரியாதையில் அபிமானமற்றவர்கள். தேசத்தின் மீது அபிமானங்கொண்டு இருக்கிறார்கள் என்றால் இதை யார்தான் நம்புவார்கள்? ஆகவே மனித வாழ்க்கையில் எந்த தத்துவத்தில்
தோழர் மூர்த்தியாரிடம் சுயமரியாதை அல்லது ஒழுக்கம் காணக்கிடக்கின்றது என்று பார்ப்பனரல்லாத காங்கிரஸ் வாலிபர்களை வணக்கமாய் கேட்கின்றோம்.
(சோற்றுக்கு வேறு வழியில்லையே என்பவர்களிடத்தில் நாம் கேட்க வில்லை. அவர்கள் அப்படியே இருக்கட்டும்)
எவ்வளவுதான் பார்ப்பனர்களை நாம் வெறுத்தாலும் பார்ப்பனர் களிடமிருந்து நமது வாலிபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில காரியங் களும் உண்டு. ஆனால் அவற்றை கற்றுக் கொள்ளாமல் அவர்களிடம் இருக்கும் குணங்களில் வெறுத்துத் தள்ளவேண்டியவைகள் எவையோ அவைகளை பல பரிசுத்தமுள்ள வாலிபர்கள் கற்றுக்கொண்டது மிகவும் கஷ்டமான காரியமாகும்
தேசாபிமானமா சுயநலமா?
கடைசியாக, இன்று காங்கிரசுக்கு வந்து சேரும் பார்ப்பனரல்லாத பெரிய ஆட்கள் என்பவர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பயன் அடைந்து விட்டு இன்று அங்கு தங்கள் சுயநலத்துக்கு நம்பிக்கை இல்லை என்று கருதி வந்து சேருகிறார்களா?
அல்லது தேசாபிமானத்தாலா என்று பாருங்கள். ஆகவே சுயநலக்காரர்களுக்கு
- நாணயமில்லாதவர்களுக்குப் புகல் இடமாய் இருப்பதும் பயன்படுத்திக் கொள்ள ஆதாரமாய் இருப்பதும் காங்கிரசா அல்லவா என்பதையும், செல்வாக்கில்லாத சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து அதன் கொள்கைக்காகப் பாடுபடுவதும் அதற்காக அதில் வந்து சேர்வதும் சுயநலமற்றதும், நாணயமுடையதுமான காரியமா அல்லவா என்பதையும் பொதுஜனங்கள் உணர ஆசைப்படுகிறோம்
ஈ.வெ.ரா. சமய சஞ்சீவியா?
தவிர, தோழர் ஈ.வெ.ரா. தனது சொந்த வாழ்வைவிட்டு பொதுநல
வாழ்வு என்பதற்கு வந்த நாள் முதல் இதுவரை தனது லக்ஷ்யத்தில் - கொள்கையில் ஏதாவது மாற்றங்கள் கொண்டு தன்னலத்துக்கு சமயத்துக்கு
குடி அரசு- 1936 (1) 144
தகுந்தபடி நடந்து வருகிறாரா? அல்லது ஒரு குறிப்பிட்ட லக்ஷியத்துக்கு கொள்கைக்கு ஆகவே ஆதி முதல் உழைத்து வருகிறாரா என்பதையும் பொது மக்கள் உணர ஆசைப்படுகிறோம்
ஏனெனில் சில வாலறுந்த வாலிகள் ஈ.வெ.ரா. கடைசி காலத்தில் மந்திரிகளின் பின் திரிகிறாரே என்று விஷமப் பிரசாரம் செய்ததாகவும், தேசாபிமானத்தை விட்டு குறுகலான வழியில் நடக்கிறார் என்று சொல்லிப் பழித்ததாகவும், இதை சில வாலிபர்கள் நம்பி மோசம் போனதாகவும் தெரிந்ததால் இவற்றை எழுதுகிறோம். அன்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு ஏதாவது உணர்ச்சி தோன்றாதா என்ற ஆசையாலேயே இதை லக்ஷ்யம் செய்து எழுதப் புகுந்தோம்
குடி அரசு - தலையங்கம் - 16.02.1936
145 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சீர்திருத்தமும் கட்சிகளும்
புதிய சீர்திருத்தம் என்றால் பதவிகளும், உத்தியோகங்களு மல்லாமல் மற்றப்படி அதனால் ஏழைப் பொது மக்களுக்கு இன்றைய நிலைமையை விட கடுகளவு நன்மைகூட கிடையாது என்பது அறிவுள்ள மக்கள் எல்லாம் அறிந்ததும், நாணயமுள்ள மக்கள் எல்லாம் ஒப்புக் கொள்ளக்கூடியதுமாகும்
புதிய பதவிகளுக்கும், உத்தியோகங்களுக்கும் தகுந்தபடி புதிய புதிய செலவுகளும் உண்டு என்பதையும் அறிஞர்கள் அறியாமலிருக்க மாட்டார்கள்.
இந்தச் செலவுகள் ஏழைமக்கள் தலையில்தான் விடியப் போகின்றனவே ஒழிய புதிய செலவுக்கு ஈடுகொடுக்க பழைய செலவைக் குறைத்துக் கொள்ள புதிய சீர்திருத்தத்தினால் ஒரு நாளும் முடியப் போவதில்லை.
ஆகவே ஏழைப் பாமர மக்களுக்கு அதாவது விவசாயிகளுக்கும், தொழிலாளி மக்களுக்கும் மேலும் மேலும் தொல்லைகளும், ஏழ்மைத் தன்மைகளும் பெருகுவது தான் சீர்திருத்தம் என்றாலும் அதைப்பற்றி படித்த மக்களும் பிரபுக்களும் சிறிதும் லக்ஷ்யம் செய்யாமல் இன்னும் அதிகச் செலவில் புதிய புதிய “சீர்திருத்தங்களை'' வரவேற்ற வண்ணமாயிருந்து வருகிறார்கள். இந்தப்படி வரவேற்பதில் புதிய சீர்திருத்தத்தினால் ஏற்படும் பதவிகளையும், உத்தியோகங்களையும் முழுவதையுமே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்களே) அடையவேண்டும் என்கின்ற ஆசையால் மற்றொருபுறம் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பாடுபடுகிறார்கள்.
பார்ப்பனரல்லாத மக்களோ முன்போல் "சுவாமிகள் சொன்னால் சரி” “அய்யர்வாள் சொன்னால் சரி” என்கின்ற மாதிரியாக இல்லாமல் கிட்டத்தட்ட பார்ப்பனர்களுக்குச் சமமாகவே எல்லாத் துறையிலும் இப்போது சரிபோட்டி போடுகிறார்கள். ஆகவே இனிமேல் பார்ப்பனல்லாதார். போட்டியை அவ்வளவு லேசான போட்டி என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக இன்றைய நிலையில் சீர்திருத்தப் பதவிகளையும் உத்தியோகங்களையும் பெற பார்ப்பனரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் சிலரும், ஜஸ்டிஸ் கட்சியில் இடமும் நம்பிக்கையும் இல்லாதார் காங்கிரஸ் கட்சியின் பேரால் சிலரும் இரண்டிலும் நம்பிக்கையும், இடமும் இல்லாதவர்கள் வெளவால் கட்சியாக இருந்து கொண்டு சமயம் போல்.
குடி அரசு- 1936 (1) 146
நடந்து கொள்வதில் சிலருமாக இருந்து வருகிறார்கள் என்பது மாத்திர மல்லாமல் வேறு பேரால் ஏதாவது புதிய கட்சிகளை ஆரம்பிக்கலாமா என்று சிலரும் யோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு பேர்களையும் ஏமாற்றிவிட்டு எல்லாப் பதவிகளையும், உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே அடித்துக் கொண்டு போய்விடுவது என்பது இனி சுலபத்தில் நடந்து விடக்கூடிய காரியமல்ல. பார்ப்பனர்களின். தொல்லைகளாலும், வீணான கலாட்டாவினாலும் “காங்கிரஸ்காரர்களும் வெற்றி பெற்றார்கள்” என்று சொல்லும்படியான நிலைமை ஒரு சமயம் ஏற்பட்டாலும் பழையபடி பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கம் என்பது மாத்திரம் இனி கனவு கூட காணமுடியாது என்றே சொல்லுவோம்
புதிய சீர்திருத்தத்தில் பார்ப்பனர்களுக்கு ஏதாவது ஆதிக்கம் வருவது என்பது சர்க்காரார் ஏதாவது உள்ளுக்குள் அவர்களுக்கு அனுகூலமாயிருந்து உதவி செய்தால் மாத்திரமே தான் அதுவும் சிறிது சாத்தியப்படலாமே ஒழிய மற்றபடி சர்க்கார் நடு நிலைமை வகித்தால் பார்ப்பன ஆதிக்கம் சிறிதுகூட ஏற்பட்டு விடாது என்று தைரியமாய்ச் சொல்லிவிடலாம்
ஆனால் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் சத்திய மூர்த்தியாரும் அடிக்கடி கவர்னரை பார்த்து “நாங்கள் இனிமேல் நல்ல பிள்ளைகளாய் நடந்து கொள்ளுகிறோம்” என்று வாக்குறுதி கொடுத்து கெஞ்சுவதாலும் சர்க்காருக்கும் காங்கிரசுக்காரர்கள் அரசியலை நடத்திக் கொடுப்பதானால் தங்களுக்கு சிறிதுகூட தொல்லை ஏற்படுவதற்கு இடமில்லாமல் போவதோடு பாமர மக்களிடையிலும் தங்களுக்கு நல்ல.
பேர் இருக்கும்படி அவர்கள் (பார்ப்பனர்கள்) பிரசாரம் செய்வார்கள் என்கின்ற நம்பிக்கையும் ஏற்படக் கூடுமாதலாலும் சர்க்காரார் பார்ப்பனர். களுக்கு அனுகூலமாக இருந்தாலும் இருக்கலாம்
யார் எப்படிப் பாடுபட்டாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை அரசியலில் காங்கிரஸ் (பார்ப்பன) ஆதிக்கம் ஏற்படுவது முடியாத காரியமே என்று மறுபடியும் கூறுவோம். காரணம் என்னவென்றால் முதலாவது - பார்ப்பனர்களில் இன்று யோக்கியமான தலைவர் கிடையாது தோழர் ராஜகோபாலாச்சாரியார் சாமர்த்தியமூள்ள தலைவர் என்றாலும் இன்றைய நிலைமையில் மற்ற மக்களுடைய அதாவது காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று சொல்லி விடுவதற்கில்லை.
காங்கிரசில் வந்து சேரும் பார்ப்பனரல்லாதார் எவரும் சத்தியமூர்த்தி என்றால் அவரை எப்படியோ சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஆச்சாரியார் என்றால் பயப்படுகிறார்கள். பச்சையாய்ச் சொல்ல வேண்டுமானால் வெறுக்கவும் செய்கிறார்கள். அதோடு மாத்திர மல்லாமல் காங்கிரசில் ஆச்சாரியார் காரணமாகவே பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர் என்கின்ற உணர்ச்சி இப்போது வலுத்து வருகிறது
147 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இரண்டாவது - ஆங்காங்குள்ள பெரிய மிராசதாரர்கள், செல்வந்தர்கள், பெரிய செல்வாக்குள்ளவர்கள் ஆகியவர்கள் எல்லாம் அரசாங்கத்தார். காங்கிரசை ஆதரிக்கவில்லை என்று தெரிந்தால் உடனே காங்கிரசை விட்டு விலகி விடுவார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் - அவர்கள் பார்ப்பன ரல்லாதார் என்கின்ற உணர்ச்சியை மறந்து விடுவார்கள் என்று சுலபத்தில் நம்பிவிட முடியாது. ஆகவே எண்ணெய்ச் செலவே ஒழிய பிள்ளை பிழைக்கப் போவதில்லை என்பதை ஆச்சாரியாருக்கு இப்போதே ஜோசியம் சொல்லி விடுகிறோம்
வீணாக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலோர் நன்மைக்கும் உணர்ச்சிக்கும் விரோதமாக தேசீயத்தின் பேரால் இப்படி ஒரு போராட்டம் செய்து கொண்டிருப்பதில் பலன் என்ன என்பதை எடுத்து காட்டவே இவற்றை எழுதுகிறோமே ஒழிய மற்றபடி ஜோசியத்தில் பெயர் வாங்க அல்ல என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்
ஆச்சாரியாருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குற்கொள்கையில் வெளிப்படையாய் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேட்கிறோம். யோக்கியமாய் பேசினால் இருவரும் புதிய சீர்திருத்தத்தை ஏற்று அரசாங்கத்தை நடத்திக் கொடுக்கின்றவர்களேயாவார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மாத்திரமே குறுக்கே இருக்கிறது. அதை ஆச்சாரியாரல்ல இனியும் வேறு
யார் தடுத்தாலும், தடுக்கத் தடுக்க அடிக்கும் பந்து எழும்புவது போல் வளர்ந்து கொண்டும் பலப்பட்டுக் கொண்டும்தான் போகுமே ஒழிய இனி அந்த உணர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை. அன்றியும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர், தீண்டப்படாதவர் என்பவர்கள் ஆகியவர்களுக்கெல்லாம் பிரதிநிதித்துவம் இவ்வளவு என்று காங்கிரசே ஒப்புக்கொண்டாய் விட்டது அந்தப்படியே தொகுதி பிரித்து வெகுகாலமாய் நடந்தும் வருகிறது பார்ப்பனரல்லாதார்களுக்கு மாத்திரம் தடைப்படுத்துவதால் அது எப்படி நின்று விடும்? அல்லது அப்படித் தடை செய்வது எந்த விதத்தில் நியாயமானதாகிவிடும்? ஆகவே இனியும் அதைத் தடைப்படுத்திக் கொண்டிருப்பதில் தனித் தொகுதி தேர்தல் முறைக்கு வழி காட்டுவதாகத்தான் முடியுமே ஒழிய அதை அடக்கிவிட முயற்சித்ததாக ஆகப்போவதில்லை
ஆதலால் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம்'' என்று அதுவும் “சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை" என்று காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமானால் பெரியதொரு அளவுக்கு நாட்டில் அரசியலில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பும், சமூகத் துறையில் ஒருவருக்கொருவர் துவேஷமும் வளர்வதானது குறைவதோடு உண்மையாக மக்கள் நலத்துக்கு பாடுபடும் தியாக குணமுள்ளவர்கள். அரசியலைக் கைப்பற்றி மக்களுக்கு சிறிதாவது நன்மை செய்ய முடியும்.
குடி அரசு- 1936 (1) 148
அப்படிக்கில்லாமல் வீண் வம்பில் வாழ்நாளெல்லாம் காலம் கழித்து விட்டு துவேஷத்துக்கும் வெறுப்புக்கும் ஆசி கூறி விட்டு மாள்வதில் யாருக்குத்தான். என்ன பலன் ஏற்படும் என்பது விளங்கவில்லை: இதை ஏன் இவ்வளவு தூரம் எழுதுகிறோம் என்றால் இவ்வளவும் போதாமல் இனியும் வெறும் செல்வவான்களாகவே வெற்றி பெறும்படியான. மாதிரியில் தேர்தல் தொகுதி இனியும் திருத்தப்படப்போகின்றதென்று தெரிய வருவதாலேயே இதை தெரிவித்துக்கொள்ளுகிறோம் தோழர்களான டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்திர முதலியார், ஜார்ஜ் ஜோசப், வி.ஓ. சிதம்பரம் பிள்ளை முதலியவர்களை காங்கிரசைவிட்டு விரட்டி அடித்த பார்ப்பனர்கள் இப்போது பார்ப்பனரல்லாதார். என்கின்ற முறையில் கெஞ்சிக் கெஞ்சி யெப்படிப்பட்டவர்களை காங்கிரசில் சேர்க்கப் பிரயத்தனப்படுகிறார்கள் என்று பார்த்தால் காங்கிரசின் நிலைமையும் காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) நடந்து கொண்டதின் அறியாமையும் நன்றாய் விளங்கும். ஆகவே காங்கிரசானது தனது தந்திரங்களின் பயனாய் “விலங்கைத் தறித்துவிட்டு குட்டையில் மாட்டிக் கொண்டது'' போல் ஆகப்போகிறது என்பது நிச்சயம்
குடி அரசு - தலையங்கம் - 23.02.1936
1499 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தொழிலாளருக்கு காங்கிரஸ்காரர்
துரோகம்
இந்திய சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் சம்பளப் பட்டுவாடா மசோதாவில், முதலாளிகள் பிரதிநிதி தோழர் மோடி கொண்டு வந்த திருத்த விஷயமாகக் காங்கிரஸ் அங்கத்தினர் நடந்து கொண்ட தோரணையினால் இந்தியத் தொழிலாளர் பிறப்புரிமை பறிமுதலாகியிருக்கும் உண்மையைத் தொழிலாளர் உணர்ந்து கொண்டு விட்டது பாராட்டத்தக்கதே. சென்னையிலும், கோவையிலும் நடைபெற்ற கண்டனக் கூட்டங்களினால் இவ்விஷயத்தில் தொழிலாளர் கொண்டிருக்கும் மனக்கொதிப்பு நன்கு வெளியாகிறது. தோழர்கள் சாமி வெங்கடாசலம் செட்டியாரும், தாசும் நடு நிலைமை வகித்ததினாலேயே, தோழர் மோடி திருத்தம் நிறைவேறிய தென்றும், மற்ற காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் எல்லாம் தோழர் மோடி திருத்தத்துக்கு விரோதமாகவே வோட்டுக் கொடுத்தார்கள் என்றும், சாமி வெங்கடாசலம் செட்டியாரும், தாசும் வியாபாரத் தொகுதியின் பிரதிநிதி களாதலால் அத்தொகுதி வாக்காளர்கள் விருப்பத்தின்படி நடக்கக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்றும், கோவை டவுன் ஹால் மைதானக் கூட்டத்தில், ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் ஒரு நொண்டிச் சமாதானம் கூறி, காங்கிரஸ்காரர் செய்த துரோகத்தின் கொடுமையை மறைக்க முயன்றிருப்பதாகத் தெரிகிறது. தோழர் மோடி திருத்தத்துக்குச் சாதக பாதகமாக வோட்டுக் கொடுத்தவர்களின் பெயர் விபரம் பத்திரிகைகளில் வெளிவராதிருக்கையில் அப்பார்ப்பனர் கூற்றுக்கு ஆதாரம் என்ன என்பதுதான் நமக்கு விளங்க வில்லை. காங்கிரஸ்காரர்கள் மோடி திருத்தத்துக்கு எதிரிடையாக வோட்டுக் கொடுத்திருந்தால், தங்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வெளிவரும்படி செய்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்களா? காங்கிரஸ் மெம்பர்களின் புரட்டை மறைப்பதற்கு ஆகவே சாதக பாதகமாக வோட்டுக் கொடுத்தவர்கள் பெயர்கள் பத்திரிகைகளில் வெளியிடப்படவில்லை.
மற்றும் ஒரு விஷயம் முக்கியமாக கவனிக்கத்தக்கது என்னவென்றால் வர்த்தகத் தொகுதி வாக்காளர் விருப்பப்படி நடக்க தோழர்கள் சாமி வெங்கடாசலமும் தாசும் கடமைப்பட்டிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியானால் தொழிலாளர் விருப்பப்படி நடக்கத் தொழிலாளர் பிரதிநிதிகளானதோழர்கள் ஜோஷியும்,கிரியும்கடமைப்பட்டே இருக்கிறார்கள்.
குடி அரசு - 1936 (1) 150
அக்கடமையைச் செய்ய அவர்கள் முயன்றும் இருக்கிறார்கள். ஆயினும் சொந்தக் கட்சி பலமில்லாததினால் அவர்களது முயற்சி பயன்பெறவில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் இதர கட்சிகளின் உதவியினாலேயே அவர்களது கோரிக்கை நிறைவேற வேண்டியதாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியே இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மெஜாரட்டி கட்சியாக இருப்பதினால், தொழிலாளர் பிரதிநிதிகள் கோரிக்கைகளை ஆதரிக்கவேண்டியதுஅவர்கள் கடமையல்லவா? தொழிலாளர்பிரதிநிதிகளுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் சமதர்மவாதியான தோழர் ரெங்கா ஒருவரே முன்வந்திருக்கிறார். ஏனைய காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. இந்த ஒரு உதாரணத்தினால் முதலாளி தொழிலாளி தகராறுகள் ஏற்பட்டால் காங்கிரஸ்காரர் தொழிலாளர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகவில்லையா? தொழிலாளர்களின் உண்மைப் பிரதிநிதிகள் நாங்களே என்று காங்கிரஸ்காரர் சொல்லிக் கொள்வதற்குப் பொருளே இல்லையென்பது தெளிவாக வில்லையா? இனி, தொழிலாளர் பிரதிநிதி என்று பெருமையடித்துக் கொள்ள காங்கிரஸ் காரருக்கு உரிமை யுண்டா?
மேலும், தோழர் மோடி திருத்தத்தை காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் மறைமுகமாக ஆதரித்தார்கள் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சிகள் இருக்கின்றன. தோழர் மோடி கொண்டு வந்த திருத்த பிரேரணையை சரியான முறையில் தவறில்லாமல் எழுதிக் கொடுக்கும்படி சட்ட மந்திரி சர். என்.என். சர்க்காரை, காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் கேட்டதாகவும், அதன்படி தாம் எழுதிக் கொடுத்ததாகவும் சட்ட மந்திரி சர். என்.என். சர்க்காரே இந்திய சட்ட சபையில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதனால் தோழர் மோடி திருத்தத்துக்கு தோழர் புலாபாய் தேசாய் ஆரம்பத்திலேயே ரகசியத்தில் ஆதரவு அளித்துவிட்டார் என்பது விளங்க வில்லையா? தோழர் தேசாய், பம்பாய்வாசி யானதினாலும், முதலாளிகள். நண்பன் ஆகையினாலும் தோழர் தேசாயும் முதலாளிகள் பிரதிநிதி மோடியும் கலந்தே இந்தத் திருத்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டது என்று யூகிப்பது தவறாகாது. காங்கிரஸ் கட்சித் தலைவர் திருத்தத்தை ஆதரித்ததனாலேயே காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் திருத்தத்தை எதிர்த்துப் பேசவே இல்லை. தோழர்கள் ரெங்காவும் கிரியும் திருத்தத்தை எதிர்த்துப் பேசியிருக்கையில் வாயாடி மெம்பர்களான தேசாய், சத்தியமூர்த்தி போன்றவர்கள் மெளனமாக இருக்கக் காரணம் என்ன?
ராஜன், அவினாசிலிங்கம், முத்துரங்கம், ராஜா, ஆரான் போன்ற தென்னாட்டு வீரர்கள்” ஏன் வாய் திறக்கவில்லை? காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் கட்டுப்பாடாக எதிர்த்திருந்தால் தோழர் மோடி திருத்தம் நிறைவேறியிருக்குமா?
ஒரு சூழ்ச்சி முறையால் சர்க்கார், புலாபாய் தேசாய் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டது என்று தோழர் ரெங்கா.
151 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பகிரங்கமாக இந்தியச் சட்ட சபையில் கூறியிருக்கிறாரே! இதனால் மோடி திருத்தத்தை தேசாய் கம்பெனியார் பரிபூரணமாக ஆதரித்தார்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கவில்லையா?
அன்றியும் தொழிலாளர் சம்பளத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமென்று தோழர் ஜோஷி கொண்டு வந்த திருத்தத்தை தோழர்கள் கிரியும், ரெங்காவும் ஆதரித்துப் பேசியிருக்க ஏனைய காங்கிரஸ்
கட்சி மெம்பர்கள் மெளனமாக இருந்ததேன்? மேற்கூறிய விஷயங்களினால் காங்கிரஸ்காரர்கள் தொழிலாளர் நண்பர்கள் அல்லவென்பது விளங்க வில்லையா? “தொழிலாளருடன் எல்லா விஷயங்களிலும் காங்கிரஸ் ஒன்றுபட்டுழைக்க முடியாது” என்று காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் முன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியதின் உட்பொருளை இப்பொழுதாவது தொழிலாளர்கள் உணர்ந்துகொள்வார்களா? காங்கிரஸ் முதலாளிகள் நண்பனாக இருந்து வருவதினால் “இன்றைய காங்கிரஸின் போக்கு எனக்குப் பிடிக்கவில்லை!” என்று தோழர் சுபாஷ் சந்திரபோஸ் கூறியிருப்பதைத் தொழிலாளர்கள் கவனிப்பார்களா? தேர்தல்களில் வெற்றிபெற தொழிலாளர்கள் வோட்டு காங்கிரஸ்காரர்களுக்கு அவசியந்தான். ஆனால் வோட்டைவிட அதிக முக்கியமானது பணம். காங்கிரஸ் வேலைகளுக்கும் காங்கிரஸ் வாலாக்கள் பிரயாணச் செலவுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் முதலாளிகளே பொருளுதவி செய்து வருகிறார்கள். ஆகவே காங்கிரஸ்காரர்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியமல்ல.
கோவைத் தொழிலாளர் யூனியன் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கும் மூன்று தீர்மானங்களையும் சர்க்கார் ஒப்புக்கொண்டு சம்பளப் பட்டுவாடா மசோதா திருத்தப்பட்டால்தான் தொழிலாளர்கள் குறைகள்
நீங்கும். அதற்காக தொழிலாளர்கள் தீவிரமாகக் கிளர்ச்சி செய்ய வேண்டு மென்று விரும்புகிறோம்.
கடைசியாக, கோவை டவுன்ஹால் மைதானக் கூட்டத்தில் கூறிய ஒரு பார்ப்பனரின் அபிப்பிராயத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் கூற வேண்டியது நமது கடமையென எண்ணுகிறோம்.
சர்க்கார் தங்கள் விசேஷ அதிகாரத்தைக் கொண்டு எதையும் சட்டமாக்கும் சக்தி பெற்றிருக்கும் வரையில் தீர்மானங்கள் தோற்றாலும் வெற்றியுற்றாலும் ஒன்றேதான்" என்று கூறினாராம்
ஆம். வாஸ்தவமே. இந்திய சட்டசபை பொதுஜனப் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல. அதனாலேயே சர்க்காரை எதிர்த்துத் தற்காலம் எதையும் சாதிக்க முடியாதென்றும் ஏனைய கட்சியாரைவிட காங்கிரஸ்காரருக்கு
எதையும் அதிகமாகச் செய்துவிட முடியாதென்றும் நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம்
குடி அரசு - 1936 (1) 152
அதை இப்போது ஒப்புக்கொள்ளும் இந்தக் கூட்டத்தாருக்கு அப்பொழுது இந்தப் புத்தி எங்கு போயிற்று? “காங்கிரஸுக்கு வெற்றி, வெற்றி மேல் வெற்றி” என்று காங்கிரஸ் வாலாக்களும் பத்திரிகைகளும்
கூச்சல் போட்டனவே. அவைகளுக்கு என்ன அருத்தம்?
“நாங்கள் சட்டசபைக்குப் போனால் சர்க்காரை ஆட்டி விடுவோம்” என்று சொன்னதின் கருத்து என்ன?
காங்கிரஸ்காரர் சட்டசபைக்கு போனபிறகு சர்க்காருக்கு எத்தனையோ தோல்விகள் ஏற்பட்டிருந்தும் சர்க்கார் அதன் போக்கில் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது.
எனினும் தாம் ஏதோதோ சாதிக்கப் போகிறதாக காங்கிரஸ்காரர் மேலும் மேலும் தீர்மானங்களும் ஒத்திவைப்பு அவசர பிரேரணைகளும், மசோதாக்களும் கொண்டுவந்து கொண்டே இருக்கிறார்கள். அவைகளால் பயன் விளையாது என்று தெரிந்திருந்தும் பொது மக்களை ஏய்ப்பதற்காக வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் மெம்பர்கள் பின்னால் விளையக்கூடிய பலாபலன்களை லக்ஷ்யம் செய்யாமல் மற்ற தீர்மானங்களின் மேல் நடந்து கொண்ட மாதிரியாகவே மோடிதிருத்தத்தையும்
எதிர்த்து ஏன் தோற்கடித்திருக்கக்கூடாது. தோற்கடித்த திருத்தத்துக்கு தன் விசேஷ அதிகாரத்தினால் சர்க்கார் ஆதரவளித்தால் அந்தப் பழியை சர்க்கார்
மீது போட்டு விடலாமல்லவா?
கண்ணைத் திறந்து கொண்டு பட்டப் பகலிலே வெட்ட வெளிச்சத்திலே இந்தியச் சட்டசபையில் கண்ணாம் பூச்சி விளையாடும் காங்கிரஸ் வாலாக்கள், தோழர் மோடி திருத்த விஷயத்தில் மட்டும் பெரிய காரியக் காரனைப்போல் மீன மேஷம் பார்த்தார்கள் என்றால் கிழவிகளும் கூட சிரிக்க மாட்டார்களா! சிரித்தால்தான் என்ன? காங்கிரஸ் வாலாக்களுக்கு வேண்டியது பணம் தானே! பணம் முதலாளிகளிடம் தானே இருக்கிறது! அப்படி இருக்க காங்கிரஸ்காரர் ஏழைத் தொழிலாளிகளை எப்படி கவனிக்க முடியும்? தேர்தல்களின் போது தொழிலாளர் “தலைவர்களுக்கு” பணம் கொடுத்தால் தொழிலாளர்கள் இடையில் காங்கிரஸ் பிரசாரம் நடந்துவிடும் என்கின்ற தைரியம் காங்கிரஸ்காரர்களுக்கு உண்டு.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.02.1936
1533 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஈரோட்டில் சுயமரியாதை திருமணம்
தோழர்களே!
இன்று இங்கு நடந்த சுயமரியாதைத் திருமணம் பற்றி எனது தோழர்கள் ஈஸ்வரன், ரத்தினசபாபதி, அன்னபூரணியம்மாள் ஆகியவர்கள். பேசினார்கள். சுயமரியாதைத் திருமணம் என்பது ஒரு சீர்திருத்த முறை கொண்ட திருமணமேயாகும். சீர்திருத்தம் என்பது இன்று உலகில் திருமணம் என்கின்ற துறைமாத்திரம் அல்லாமல் மற்றும் உலகில் உள்ள
எல்லாத் துறையிலும் யாருடைய முயற்சியுமில்லாமல் தானாகவே ஏற்பட்டுக் கொண்டுதான் வருகிறது
தொழில் முறையில் கையினால் செய்யப்பட்டவேலைகள் யந்திரத்தினால் செய்வது என்பது எப்படி தானாகவே ஒவ்வொருவருக்குள்ளும் புகுந்து
அது நாளுக்கு நாள் செல்வாக்குப் பெருகிறதோ அதுபோலவேதான் இத்திருமண விஷயமும் நாளுக்கு நாள் மாறுதலடைந்து அந்த முறை ஒரு யந்திரம் போல் ஆகி வருகிறது
யந்திரத்தின் தன்மை என்ன? என்று பார்த்தால் சுருக்கமான நேரத்தில். சுருக்கமான செலவில் குறிப்பிட்ட காரியங்கள் நடைபெறுவதற்கு தான் யந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கையாளப்பட்டு வருகிறது. அது போலவே இந்த ச.ம. திருமணமும் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் குறிப்பிட்ட காரியமான திருமணம் நடத்தப்படுகிற முறை கைக்கொள்ளப் படுகிறது. இதற்குமுன் இத்திருமணங்கள் 3 நாள் 5 நாள் 1000, 2000 ரூ செலவுகளில் நடந்து வந்ததானது 50, 60க்குள் சில திருமணம் 5ரூ.6ரூக்குள்.
2 மணி, 4 மணிக்குள் நடந்து விடுகிறது
இப்படி நடப்பது என்பது சுயமரியாதை இயக்கத்தாலே என்று தோழர்கள் சொன்னார்கள். நான் இது மனிதன் அறிவு பெற்றுவருவதால்தானே ஒழியவெறும் இயக்கமே எதுவும் செய்துவிட முடியாது என்று சொல்லுகிறேன். திருமணம் விஷயத்தில் திருத்தத்தை இப்போது இந்த 10 வருஷ காலத்திற்குள் யாரும் ஒப்புக்கொண்டுவிட்டார்கள். இத் திருமண முறை ஏழைமக்களுக்கே மேன்மையானது என்றாலும் பணத்திமிரும் ஜாதித்திமிரும் கொண்ட முதலாளித்தன்மைக் கூட்டத்தார்களும் பின்பற்றி வருகிறார்கள்.
ஆதலால் இனி திருமண முறையைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
குடி அரசு - 1936 (1) 154
ஆனால் அத்திருமணத்திற்கு முக்கியமாய் தம்பதிகள் ஜோடி சேர்த்தல், தம்பதிகள் உரிமை முதலிய விஷயங்களில் அனேக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன. அதாவது இப்போது இங்கு பெண்ணுக்கு தாலி கட்டப்பட்டது இதற்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லப்பட்டாலும் இந்த தாலி கட்டுவதானது இந்தப் பெண் இந்த மாப்பிள்ளையினுடைய சொத்து'” என்கின்ற அறிகுறிக்கு ஆகத்தான். இந்த தத்துவம் சுலபத்தில் மாறிவிடும் என்று நான் கருத முடியவில்லை. தாலிகட்டாத கல்யாணம் நடந்த போதிலும் மணப்பெண் மணமகனுடைய சொத்து என்பது மாறிவிடும் என்று நான் நினைக்க முடியவில்லை. ஏனெனில் இத் திருமணத்துக்கு சம்மந்தப்படாத கற்பு என்பது ஒன்று பெண்கள் மீதுமாத்திரம் சுமத்தப்பட்டிருக்கிறது. கற்பு என்பதை சுகாதாரத்தையும்,
சரீரத் தத்துவத்தையும், பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன் என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை உதாரணம் என்னவென்றால் கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை. என்பதிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். அதற்கு உதாரணம் என்ன வென்றால் இந்து கடவுள்கள் என்பவற்றிற்கும் கூட ஆண் கடவுள்களுக்கு
கற்பு வலியுறுத்தப்படுவதில்லை. ஆதலால் அந்த அதாவது ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு முறை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்
இந்த தனி உடமை தேசத்தில் இது ஒழிக்கப்படுவது என்பது சுலபத்தில் ஏற்படக்கூடிய காரியமா என்பது எனக்குத் தெரியவில்லை ஏனெனில் பெண்களுக்குத்தான் கற்பு. ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கின்ற தத்துவமே தனி உடமைத் தத்துவத்தைப் பொறுத்தது
ஏன் என்றால் பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலைமை.
எப்படி எனில் “புருஷன் சம்பாதிக்கிறவன், சம்பாதித்த பொருளுக்கு அவனே சொந்தக்காரன், மனைவிக்குச் சோறு போட்டு சேலை கொடுத்துக் காப்பாற்றுகிறவன், மனைவி பெற்ற குழந்தைக்குத் தன் சொத்துக்களைக் கொடுக்கிறவன். குடும்பபாரமும், குடும்ப பொறுப்பும் ஏற்றுக் கொள்ளு கிறவன், ஆகவே அவனுக்கு - அவனால் - காப்பாற்றப்படுகிற - அவன் மீது பொறுப்பு விழுந்த மனைவியை அடக்கி ஆள அவனுக்கு உரிமை உண்டு'” என்பது இன்றைய சமுதாய முறைச் சட்டமாய் இருக்கிறது. இதை எப்படி
ஒருவன் மறுக்க முடியும் சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றால் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு இத்திறமைகள் இல்லாத ஒரு புருஷனைக் கட்டிக்கொள்வதாய் இருந்தால் மாத்திரம் ஆண்களை பெண்கள் அடக்கியாள முடியும். முடியா விட்டாலும்
155 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சம சுதந்திரமாகவாவது இருக்க முடியும். இதில்லாமல் எவ்வளவு சுயமரியாதையும், சம சுதந்திரமும் போதித்தாலும் பெண்களுக்கு சம சுதந்திரமும் சம கற்பு என்பதும் ஒரு நாளும் முடியக்கூடிய காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். அன்றியும் அப்படிப்பட்ட திறமை அற்றவர்களுக்கு சம சுதந்திரம் அளிப்பதும் ஆபத்தான காரியம்தான்.
ஆதலால் பெண்கள் சுதந்திரம் இந்த மாதிரி கல்யாண காலங்களில் பேசி விடுவதாலோ, “சுத்த” சுயமரியாதை முறையில் திருமணம் செய்து விடுவதாலோ ஏற்பட்டு விடாது
தனி உரிமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டு மென்பவர்கள் பெண்களை நன்றாய் படிக்கவைக்க வேண்டும். தங்கள் ஆண் பிள்ளைகளை லக்ஷியம் செய்யாமல் பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்க வேண்டும். ஜீவனத்துக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக் கொடுக்க வேண்டும்.
தாய் தகப்பன்மார் பார்த்து ஒருவனுக்கு பிடித்துக் கொடுப்பது என்று இல்லாமல் அதுவாக (பெண்ணாகவே பார்த்து) தகுந்த வயதும், தொழிலும் ஏற்பட்ட பிறகு ஒருவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் கன்னிகாதானம், கல்யாணம், தாரா முகூர்த்தம் என்கின்ற வார்த்தைகளே மறைந்து அகராதியில்கூட இல்லாமல் ஒழிய வேண்டும். அன்றுதான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க லாயக்குள்ளவர்களாவார்கள்
1, 2, 3 கூட எண்ணத் தெரியாத நிலையில் உள்ள பெண்களைக் கட்டிக்கொண்டு அவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பது என்றால் எப்படி முடியும் என்று யோசித்துப்பாருங்கள்.
கையில் கொடுக்கும் பணத்தை எண்ணத்தெரிய வேண்டாமா? 5 அணா கொடுப்பவனுக்கு 8 அணா எண்ணிக் கொடுத்துவிட்டால் இப்படிப்பட்ட சுதந்திரம் அக்குடும்பத்தை என்ன கதிக்கு ஆளாக்கும் என்று யோசித்துப்பாருங்கள். இதை நான் இங்குள்ள தாய்மார்களுக்காகவே சொல்லுகிறேன். உங்கள் பெண்களை நன்றாய் படிக்க வையுங்கள்; தொழில் சொல்லிக் கொடுங்கள்: 20 வயது வரை கல்யாணம் செய்யாதீர்கள். அப்பொழுது தான் பெண்களுக்கு சுதந்திர உணர்ச்சி உண்டாகும்.
வெறும் நகையும், அலங்காரத் துணியும், சிங்காரிப்பும் அடிமைத் தனத்துக்கு வித்து என்பதை உணருங்கள்.
ஆண்கள் தங்களை சிங்காரித்துக் கொள்ளாமலும், நகை போட்டுக் கொள்ளாமலும் இருக்கும் போது பெண்கள் மாத்திரம் ஏன் தங்களை அலங்கரித்துக் காட்ட வேண்டும். இது ஒன்றே பெண்கள் மட்டமானவர்கள் என்பதற்கும், பெண்களுக்குச் சுயமரியாதை இல்லை என்பதற்கும் ஆதாரமல்லவா என்று கேட்கின்றேன்.
குடி அரசு- 1936 (1) 156
அன்றியும் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் கொடுக்க வயதான மாமியார் பருவப் பெண்கள் சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் தங்கள் இளம் பிராயங்களில் மாமியாரிடம் பட்ட அடிக்கும், இடிக்கும் வட்டி வாங்க தங்கள் மருமகள்மாரை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அவர்களுக்கு பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு பெரிய “குச்சுக்காரத்தனத்துக்கு" ஒப்பாக காணப்படும். ஆனால் அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெண் குழந்தைகள் அவர்கள் மாமி வீட்டுக்குச் சென்று சுதந்திரமாய் இருக்கும் என்பதை நினைத்து திருப்தியடைய வேண்டும் ஆகையால் நான் கடைசியாக கேட்டுக்கொள்வது பெண்களை சுதந்திரத்துக்கு அருகதை உடையவர்களாக ஆக்குங்கள் என்பதுதான். அதைவிட்டு விட்டு பெண்கள் வீட்டு வேலை செய்வது, கோலம் போடுவது, சாணி தட்டுவது, பாத்திரம் கழுவுவது, கும்மியடிப்பது, கோலாட்டமடிப்பது என்பது போன்ற அடிமை வேலைக்குத் தயார் செய்யாதீர்கள். பெண்களை வெறும் பிள்ளை பெறும் யந்திரமாக்காதீர்கள். அதுவும் அந்தப் பெண்ணுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் பெற்றுத் தீரவேண்டிய அடிமை யந்திரமாக ஆக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். கடைசியாக இந்த அளவுக்காவது தோழர் காத்தான் அவர்கள் இத் திருமணத்தை நடத்த முன் வந்ததற்கு அவரையும், மணமக்களையும், சுற்றத்தாரையும் பாராட்டுகிறேன்.
குறிப்பு: ஈரோட்டில் 28.02.1936 ஆம் நாள் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் கட்டடத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 01.03.1936
157 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இப்போதாவது பாமர மக்களுக்குப்
புத்தி வருமா?
பார்ப்பனர்கள் ஏழை மக்களுக்கு அதாவது ஏழை விவசாயிகளுக்கும், ஏழைத் தொழிலாளிகளுக்கும் ஜன்ம விரோதிகள் என்பதற்கு இன்னம் ஏதாவது ருஜுவேண்டுமா? என்று கேட்கின்றோம்.
ஏழைக் குடியானவர்கள் மசோதாவாகிய இனாம்தார் மசோதா என்பதை கொலை செய்தவர்கள் யார் - தொழிலாளிகள் மசோதாவில் சம்பளப் பிடித்தத் திருத்தத்தை ஆதரித்து தொழிலாளர் உரிமையைக் கொலை செய்தவர்கள் யார் என்பதை ஆலோசித்துப் பார்த்து காங்கிரசும் பார்ப்பனீயமும் ஏழை மக்களுக்கு அனுகூலமானதா துரோகமானதா என்பதை உணர வேண்டுகிறோம்
இனாம்தார் மசோதா என்பதின் தத்துவம் எவன் பூமியை நேரில் கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்கிறானோ அவனுக்கே பூமி சொந்தமாய் இருக்க வேண்டும் என்கின்ற தத்துவத்தைக் கொண்டது. இந்த மசோதா ஒரு வழியில் சமதர்ம ஆட்சிக்கு அடிப்படையென்று கூட சொல்லலாம் ஜஸ்டிஸ் கட்சியானது உண்மையிலேயே ஒரு சமதர்ம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்தப் பட்டது என்று நாம் பலதடவை சொல்லி வந்திருக்கிறோம்
அது முக்கியமாய் முதலாவதாக பிறவியிலேயே ஏழையாகவும் அடிமையாகவும் கற்பிக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கென்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது பார்ப்பனர்களின் கொடுமைக்கும்,
சூழ்ச்சிக்கும் தலை கொடுக்க வேண்டியிருந்தபடியால் அதற்குத் தகுந்த நபர்களைக் கொண்டு அக்கட்சி நடைபெற வேண்டியிருந்ததினிமித்தம் பார்ப்பனரல்லாத பணக்காரர்கள், ஜமீன்தார்கள் ஆகியவர்கள் உதவியை நாட வேண்டியதாயிற்று. இன்றும் நிலைமை அதுபோலவே இருப்பதால். பணக்காரர்கள், ஜமீன்தார்கள் உதவி இல்லாமல் அக்கட்சி நடைபெற
முடியாததாய் இருக்கிறது. என்றாலும், அக்கட்சியானது அது ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட கொள்கைக்கு விரோதமில்லாமல் இன்றும் நடந்து வருகிறது என்பதைஅதன் எதிரிகளும் இன்றும் மறுக்க முடியாது. அக்கட்சி கொள்கைப்படி
குடி அரசு- 1936 (1) 158
பொதுமக்களுள் இருந்து வரும் ஜாதி இழிவு, ஜாதி வித்தியாசம் ஆகியவைகளை ஒழிப்பதற்கும் அரசியல்சமூகஇயல் ஆகிய நிர்வாகங்களில்எல்லா மக்களுக்கும் அதாவது “பார்ப்பான் முதல் பறையன் வரை” சம பிரதிநிதித்துவமும், சம
சந்தர்ப்பமும் இருக்கவும் பாடுபட்டு அதை ஒரு அளவுக்கு அமுலில் கொண்டு வந்து விட்டது. அதன் பிறகே மற்ற சமதர்மக் கொள்கைகளையும்
அமுலுக்குக் கொண்டு வர முயற்சித்திருக்கிறது. இந்த முறையில் தான். சமூகச் சீர்திருத்தத் துறையிலும் தீண்டாமை ஒழிப்பு முதல் தேவதாசிகள் ஒழிப்பு மசோதா, விபசாரிகள் ஒழிப்பு மசோதா, தேவஸ்தானப் பணம் பொது நலமான காரியங்களுக்கு பயன்படுத்தும் மசோதா, லேவாதேவிக்காரர்கள் மசோதா, இனாம் குடிகள் மசோதா என்பவைகளான பலவற்றை அடுக்கடுக்காகக் கொண்டு வந்து சட்டங்களாக ஆக்கிக்கொண்டு வரப்படுகிறது.
இந்த மசோதாக்களில் எதையாவது ஒன்றை காங்கிரசோ, பார்ப்பனர் களோ ஆதரித்தார்கள் என்றாவது எதிர்க்காமலாவது இருந்தார்கள் என்றாவது இன்று யாராவது சொல்ல முடியுமா என்பதோடு அவைகள் எவ்வளவோ நிர்ப்பந்தங்களுக்கும் தொல்லைகளுக்கும் இடையில் நிறைவேற்றி சட்டமாக்கிய பிறகாவது அதை உண்டாக்கியவர்களின் உத்தேசப்படி அமுல் நடத்தவாவது விட்டார்களா என்பதை யோசித்தால் பார்ப்பனர்கள் யோக்கியதையும், காங்கிரசின் யோக்கியதையும் மூடனுக்கும் நன்றாய் விளங்கிவிடும். ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்தினாலேயே
டாக்டர் சுப்பராயன் மந்திரி சபையானது ஸ்தல ஸ்தாபனங்களில் சர்க்கார் நாமினேஷன் என்பதை அடியோடு ஒழித்தது. அந்தப்படியான ஒரு ஜனநாயகத்திற்கு இந்தியா பூராவுக்குமே வழிகாட்டிய அவ்வளவு முற்போக்கான வேலையைச் செய்த மந்திரிகளை ஒழிக்க பார்ப்பனர்களும் காங்கிரசும் பட்டபாடு எவ்வளவு என்பது ஒரு புறமிருக்க அந்தத் தன்மையை காங்கிரசுக்காரர்கள் எவ்வளவு தூரம் துஷ்பிரயோகப்படுத்திக் கொண்டார்கள் என்பதை நோக்கும் போது இவர்கள் அரசியல் முற்போக்குக்கு சிறிதாவது அருகர்களா என்பதும் விளங்காமல் போகாது ஆகவே காங்கிரசும், பார்ப்பனீயமும் இந்திய மக்களின் உண்மையான
சுக வாழ்வுக்கானாலும், உண்மையான சமதர்ம வாழ்வுக்கானாலும் பிறவி எதிரிகளாய் இருக்கின்றனவே ஒழிய சிறிதும் அனுகூலமானவர்கள் அல்ல என்பதோடு இவைகளின் காலத்தில் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட முடியாது என்றும் சொல்லிவிடலாம்
இனாம்தார் மசோதா என்றால் என்ன? முற்கூறியதுபோல பூமியை எவன் கஷ்டப்பட்டு உழுகிறானோ அவனே அந்த விளைவின் பயனை அனுபவிக்க வேண்டும் என்கிற, அதாவது எல்லா மக்களும் உண்மையாக பாடுபட்டு எல்லோரும் பலனை விகிதாச்சாரம் அடைய வேண்டும் என்னும் தத்துவம் அதில் இருக்கிறது. இப்போதைய முறையானது பூமிக்கு
159 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சொந்தக்காரன் ஒருவனாகவும் பூமியை கஸ்டப்பட்டு உழுது பயிர் செய்கிறவன் ஒருவனாகவும், பாடுபட்டு உழுது பயிர் செய்பவன் அரைப் பட்டினியாய் கிடக்கவேண்டியது, பாடுபடாமல் நிமித்திய மாத்திரமாய் சொந்தக்காரராய் இருக்கும் சோம்பேறிகள் வெள்ளாமைகளையெல்லாம் கொண்டுபோய் தன் குதிருக்குள் கொட்டிக்கொண்டு தினம் 3-வேளை குளித்து நாலு வேளை சாப்பிட்டு விட்டு தொப்பையைத் தடவிக்கொண்டு திண்ணையில் தூங்க வேண்டியது என்கின்ற முறையே இருந்து வருகிறது
ஜஸ்டிஸ் கட்சியார்கள் இதை மாற்ற வேண்டும் என்கின்ற ஆசையின் மீதே முதல்படியாக எவன் எந்தக் குடியானவன் காலாகாலமாய் உழுது கொண்டு வருகிறானோ அவனே ஒரு குறிப்பிட்ட உரிமையுள்ள பூமிக்கு அதாவது ஏதாவது ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்வதற்கு என்று பொது மக்களால் குறிப்பிட்ட நபருக்கு மான்யம் விட்டு அந்த மான்யதாரன் அந்த பூமியை உழுது பயிர் செய்யாமல் வேறு குடியானவனுக்கு விட்டுவிட்டு அவனிடம் இருந்து பயன்பெற்று வருவதாய் இருந்தால் அந்தப் பயனைப் பற்றிய அளவுக்கு செய்யப்பட்ட ஒரு ஏற்பாடாகும்.
இந்தக்காரியத்தால் யாருக்கு என்ன நஷ்டம்? இப்படிப்பட்ட மான்ய
பூமி அனேகம் ஏற்கனவே விற்றாய்விட்டது. அடமானம் போக்கியம் முதலியவை செய்தும் ஆகிவிட்டது. அனேகம் வேறு பல வழிகளில் கைமாறியும் விட்டது. இப்படிப்பட்ட நிலையில் யாருக்கும் உண்மையில் பெருவாரியான நஸ்டம் எதுவும் ஏற்பட்டுப் போய்விடுவதற்கு இடமில்லை. அப்படி இருந்தும் பார்ப்பனர்கள் கட்டுப்பாடாக காங்கிரஸ், தேசீயம், வருணாச்சிரமம் எல்லாமுமே கூப்பாடு போட்டு அச்சட்டத்தை கொலை செய்து விட்டார்கள்.
இதிலிருந்து ஏழை மக்களுக்கு ஏழைக்குடியானவர்களுக்கு நன்மை
செய்கிறவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார்களா காங்கிரஸ் கட்சி பார்ப்பனர்களா என்பதை உணர வேண்டுகிறோம். இன்றுள்ள விவசாய குடியானவர்கள் நிலைமை உண்மையிலேயே சகிக்கக் கூடியதாயில்லை அனேக குடியானவர்கள் குத்தகைக்கும் கூலிக்கும் உழுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் அத்தனை பேரும் ஏறக்குறைய ஒருவேளைப் பட்டினிக் காரர்களாகவே இருப்பதுடன் அவர்களது பெண்டு பிள்ளைகளும் சேர்ந்து பாடுபட வேண்டி இருக்கிறதே ஒழிய அவர்களுக்கு படிப்போ, சுகாதாரமோ, வைத்தியமோ எல்லாம் பூஜ்ஜியமாகவே இருந்து வருகின்றன.
இதுவும் ஒரு வருணாச்சிரம தர்மம் போலவே மிராசுதார்கள் மக்கள் மிராசுதாரர்களாகவும், கூலி விவசாயி மகன் கூலி விவசாயியாகவும்
குடி அரசு- 1936 (1) 160
பாரம்பரியமாய் இருந்து வரும்படியாக இருந்து வருகிறது. மிராசுதாரர்களின்.
கல் நெஞ்சமானது குடியானவனை அடுத்த தலைமுறைக்குக்கூட அவன் பிள்ளை குட்டிகள் இருக்க முடியாமல் பட்டினியினாலேயே சாகும்படி செய்து விடுவதில் சிறிதுகூட தயங்காது. ஆனாலும் மறுபடியும் அடுத்த வருஷத்துக்கு தங்கள் பூமியை உழ ஆள் வேண்டுமே என்கின்ற சுயநலத்துக் காகவே அரை கஞ்சிக்காவது கொடுத்து அவனை உயிருடன் வைத்திருக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிவிட்டது
இந்தக் காரியங்களுக்கு ஏதாவது யந்திரங்கள் வந்து அது தானாகவே உழுது பயிர்செய்து வெள்ளாமையை வீட்டிற்கு கொண்டுவந்து குதிரில் கொட்டிவிடுமேயானால் கண்டிப்பாய் இந்தக் குடியான ஜனங்கள் கோடிக் கணக்காய் பிளேக்கிலும் பேதியிலும் பூகம்பத்திலும் ஒரே நாளில் போய் விடுகிற மாதிரி ஒழிந்து போய்விட வேண்டியதுதான்.
இதை, இன்று எந்த மகாத்மாவும் கவனிப்பதில்லை. எந்த தேசாபி மானியும் கவனிப்பதில்லை. மகாத்மாக்களின் யோக்கியதை ஆட்டுப்பாலும், ஆரஞ்சிப்பழ ரசமும், பஞ்சணை மெத்தையும், உபசாரத்துக்கு பற்பல தாதிகளுடன் முடிந்து விடுகின்றது தேசப்பக்தர்கள் கடமையோ முனிசிபாலிட்டி, ஜில்லா போர்ட், சட்ட சபை ஆகியவைகளின் ஸ்தானங்களும் ஆதிக்கங்களும் மந்திரி பதவிகளும் பார்ப்பனீய ஆட்சிகளும் என்பவையோடு முடிந்து விடுகின்றன. கொஞ்ச நஞ்சம் ஏதாவது நன்மை செய்யக்கூடிய ஜஸ்டிஸ் கட்சி போன்ற ஸ்தாபனங்களும், நபர்களும் பார்ப்பனக் கூலிகளால் தேசத் துரோகிகள் என்று கற்பிக்கப்பட்டு விடுகின்றன.
குடியானவர்கள் சம்பந்தமான யோக்கியதைகள் இந்த லக்ஷணம் என்றால் தொழிலாளர்கள் விஷயத்திலும் காங்கிரஸ்காரர்கள் இது போலவே துரோகம் செய்து வருகிறார்கள். அதுவும் வெகு துணிவாகவே இவ்விதத் துரோகங்கள் செய்து முதலாளிமார்களிடம் பரிசு பெற்று மெத்தை மேடை வீடுகள் கட்டிக் கொள்ளுகிறார்கள். இவற்றை கொஞ்சமும் பயமில்லாமலும் வெட்ட வெளிச்சமாகவே செய்கிறார்கள்.
என்றாலும் இதை நமது மூட மக்கள் உணருவதற்கில்லாமல். தேசியமும் தேசபத்தியும் செய்து வருகின்றன.
சாமிக்காக என்று சுவாமியின் பொண்டாட்டி ஆய்விட்டதாக பொட்டுக் கட்டிக்கொண்டு குச்சுக்காரத்தனம் செய்வதில் எப்படி வெட்கத்திற்கும் இழிவுக்கும் இடமில்லாமல் போய்விட்டதோ, அதுபோலவே தேசத்துக்காக என்று தேசபக்தன் என்கின்ற பெயரை வைத்துக்கொண்டு குச்சுக்காரத் தனத்தைவிட இழிவானதான சமூகத்துரோகம் செய்து வயிறு வளர்த்தாலும் அது இன்றைய சமூக முறையில் வெட்கத்திற்கும் இழிவுக்கும் இடமில்லாமல் போய்விட்டது
11 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சமுதாயம் இன்று உள்ள முறையில் இம்மாதிரி ஈன வயிறுவளர்க்கும் ஜனங்கள் இருப்பதும், இப்படி ஏழை மக்களைத் தொழிலாளி மக்களை ஒரு கூட்டம் ஏமாற்றி சுபநலமடைந்து சோம்பேறியாய் வாழ்வதும், இவற்றை யெல்லாம் அனுமதித்துக்கொண்டு ஒரு அரசாங்கம் இருப்பதும் சிறிதும் அதிசயமில்லை என்று சொல்ல வேண்டி இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இப்போதாவது பாமர மக்களுக்கு அதாவது காங்கிரஸ் காங்கிரஸ் என்று கூலிகளின் பேச்சைக் கேட்டு பார்ப்பனர்களுக்கு ஓட்டு போட்டு விட்டு தலையில் ஓட்டைக் கவிழ்த்துக்கொள்ளும் பாமர மக்களுக்கு புத்தி வந்து உண்மையாக மக்கள் கூட்டத்துக்கு பாடுபடுகிறவர்கள் யார் என்பதை உணர்ந்து தங்கள் ஓட்டுகளை யோக்கியமான வழியில் பயன்படுத்தப்பட மாட்டார்களா என்றுதான் எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.03.1936
குடி அரசு - 1936 (1) 162
உரிமை பெரிதா?
காசு பெரிதா?
திடீரென்று தொழிலாளர் செய்யும் வேலை நிறுத்தங்களுக்கு தண்டனையாக 13 நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டுமென்று தோழர் மோடி இந்தியச் சட்டசபையில் கொண்டுவந்து நிறைவேற்றிய திருத்தம், இப்பொழுது 8 நாள் சம்பளத்தைப் பிடிக்க வேண்டுமென்று ராஜாங்க
சபையில் திருத்தப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தத்தைக் கொண்டு வந்த தோழர் பி.என். சாப்ரூவின் யோசனையை சர்.பிராங்கு நாய்ஸ் ஒப்புக் கொண்டதுடன் இவ்விஷயத்தில் அக்கரைகொண்ட அங்கத்தினர்கள் எல்லாம் அதை ஆதரிப்பதாயும் சொன்னாராம். தொழிலாளர் பிரதிநிதிகளான. தோழர்கள் ஜோஷியும், கிரியும் தீராப் பொறியாக இந்தத் திருத்தத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், தொழிலாளர் உரிமை பறிபோவதை நம்மால் ஆதரிக்க முடியாது. 13 நாள் சம்பளத்துக்கு பதிலாக 8 நாள் சம்பளம் பிடிப்பதினால் தொழிலாளருக்கு 5 நாள் சம்பளம் இலாபம் ஏற்படலாம் ஆனால் காசை விட உரிமையே முக்கியம். தமது உரிமைகளையும், மானத்தையும் காப்பாற்றும் பொருட்டு திடீர் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் தொழிலாளருக்கு உண்டாகக் கூடும். ஆகவே
திடீர் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை தொழிலாளருக்கு இருந்துதான் தீரவேண்டும். தோழர் சாப்ரு திருத்தத்தினால் தொழிலாளர் திருப்தியடையவே கூடாது. கட்டுப்பாடாகக் கிளர்ச்சி செய்தால் இந்தத் திருத்தத்தையும் ரத்து செய்ய முடியும். சென்னைத் தொழிலாளர் சங்கத்தார் விழிப்படைந்து இவ்விஷயமாகச் சிறிது சுறுசுறுப்புடன் வேலை செய்வது பாராட்டத்தக்கதே அவர்கள் வெளியிட்டிருக்கும் வெளியீடுகள் தொழிலாளர் நிலைமையை பொதுஜனங்களுக்கு விளக்கிக் காட்ட மிக்க உதவி புரியக்கூடும். எனினும் சென்னைத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் பலர் இப்பொழுதும் காங்கிரசில் நம்பிக்கை வைத்திருப்பது பெரிய அதிசயமாகவே இருக்கிறது. அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள் முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்திருப்பது பகிரங்கமான பிறகும் அவர்கள் காங்கிரசை நம்புவது பைத்தியகாரத் தனமல்லவா?
(1) “ தொழிலாளர்களுடைய நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதை காங்கிரஸ் தனது வேலைத்திட்டத்தில் ஒரு முக்கிய அமிசமாகச்
163 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சேர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் காங்கிரஸ் கட்சியினர், பொறுக்குக் கமிட்டியிலிருந்து வெளியான மசோதாவைத் தீரப் பரிசீலனை செய்து திருத்தப் பிரேரணைகள் விஷயத்தில் எவ்விதம் நடந்து கொள்வ தென்று ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். எனினும் அவர்கள் அந்தக் கடமையை அலக்ஷ்யம் செய்து விட்டனர். (2) தோழர் ஜோஷீயின் திருத்தப் பிரேரணைகள் பலவற்றின் மீது ஓட்டெடுத்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களில் ஒரு சாரார் பிரேரணைகளுக்குச் சாதகமாக
ஓட்டுச் செய்வதும் மற்றொரு சாரார் நடுநிலைமை வகித்திருப்பதுமான துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது. (3) தோழர் மோடி ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்த பிறகேனும் காங்கிரஸ் அங்கத்தினர்கள் எச்சரிக்கை அடைந்திருக்க வேண்டும். (4) முக்கியமாக காங்கிரஸ் கட்சியினர் இந்தத் திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கு கட்டுப்பாடான வழியில் முயற்சி செய்யாமலிருந்தது மிகவும் வருந்தத்தக்கதாகும்"
என்றெல்லாம் காங்கிரசை எப்பொழுதும் ஆதரிக்கும் சுதேசமித்திரன்.
குற்றம் சாட்டுமானால் காங்கிரஸ்காரர் செய்த துரோகம் எவ்வளவு பயங்கரமான தென்று நாம் கூறவும் வேண்டுமா? ஆகவே தொழிலாளர்களும் தொழிலாளர். தலைவர்களும் காங்கிரசை நம்புவதினால் பலனேற்படாதென்பதே நமது கண்டிப்பான அபிப்பிராயம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.03.1936
குடி அரசு- 1936 (1) 164
திரு. வி.க. முதலியார்
புறப்பட்டு விட்டார்
காங்கிரசுக்காரர்களின் அயோக்கியத்தனங்களைக் கண்டு சகிக்காமல். தோழர் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் முதலியவர்கள் துணிந்து காங்கிரஸ் சிவிக் போர்டார் என்பவர்களால் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு விரோதமாயும், உண்மையில் தகுதி உடையவர்களுக்கு அநுகூலமாயும் பிரசாரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள்:
காங்கிரஸ் சிவிக் போர்டாரால் தெரிந்தெடுக்கப்படும் மெம்பர்கள் என்பவர்களில் பலர், தெரிந்தெடுப்பு அதிகாரம் பெற்றவர்கள் என்பவர். களுக்குச் சொந்தத்தில் பணம் கொடுத்துத் தெரிந்தெடுத்துக் கொள்ளப்படு
கிறார்கள் என்கின்ற புகார் திருநெல்வேலி, திருச்சி, திருவண்ணாமலை முதலிய இடங்களில் ஏற்பட்டது யாரும் அறியாததல்ல. இம்மாதிரி சூழ்ச்சியும், அயோக்கியத்தனமும் ஒழிய வேண்டும் என்பதே தோழர் முதலியார் போன்றவர்களின் முக்கிய கவலையாக இருந்திருக்குமென்று நம்புகிறோம்.
எப்படி இருந்தாலும் இப்போதாவது இவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி அடைகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.03.1936
165 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சீதை கற்பாயிருந்திருக்க முடியுமா?
ஒரு நெருக்கடியான ஆராய்ச்சி.
- சித்திரபுத்திரன்
சுயமரியாதைக்காரர்கள் கற்பை ஒரு மோக்ஷ சாம்ராஜ்ஜியமான சங்கதி என்று எண்ணுவதில்லையானாலும் புருஷனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எந்த விஷயத்திலும் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது என்பதிலும், இருவர்கள் உரிமையிலும் ஒருவருக்கொருவர் அதிகம் கூடுதல் குறைவு பாராட்டக்கூடாது என்பதிலும் மிகவும் கண்டிப்பானவர்கள்.
இந்நிலையில் இன்று ஆரியர்கள் கற்பு, தமிழர் கற்பு என்கின்ற விஷயத்தில் நடக்கும் விவகார விஷயத்தில் சுயமரியாதைக்காரர்களுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். என்றாலும் இன்றைய முறையில் கற்புக்கு ஒருவித மரியாதை கற்பிக்கப்பட்டு அது இல்லாததற்கு ஒருவித இழிவு கற்பிக்கப்பட்டு அவை அமுலில் இருக்கும் காலத்தில் அதைப்பற்றி பேசித் தமிழர்களுக்கு கற்பு ஆரியர்கள் வந்துதான் கற்றுக் கொடுத்தார்கள், அதற்கு முன்பு இருந்ததில்லை என்று சொன்னால் அது வகுப்பு உணர்ச்சியின் பயனாக எந்தத் தமிழனுக்கும் அவன் சுயமரியாதைக்காரணாய் இருந்தால் இன்னும் அதிகமாகக் கூட வருத்தம் வரத்தான் செய்யும். ஏனெனில் ஒரு வகுப்பை இழிவுபடுத்தி மற்றொரு வகுப்பை உயர்வுபடுத்த வேண்டும் என்கின்ற முறையில் அப்படிச் சொன்னதாகக் கருதும்போது இதற்குப் பயன் படுத்தப்படாத சுயமரியாதை உணர்ச்சியானது வேறு எதற்குத்தான். பயன்படும் என்பதனால்தான். ஆகவே அந்த கற்பைப் பற்றிய விவகாரத்தை விட்டு விட்டு இந்துக்கள் அல்லது ஆரியர்கள் சம்மந்தமான புராண ஆசிரியர்கள் தங்கள் தங்கள் வகுப்பு நலத்துக்கு என்று எழுதி வைத்திருக்கும் புண்ணிய சரித்திரங்கள், தெய்வீக சம்மந்தமான காவியங்கள் என்பவைகளில் கற்பிக்கப்பட்டிருக்கும் முக்கிய பாத்திரங்களுக்கு உயர்வுகளைக்கற்பிப்பதில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்களா? முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்களா? என்று பார்த்தால் சுத்த முட்டாள்தன. மாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்றே கருத வேண்டியிருக்கிறது
குடி அரசு- 1936 (1) 166
ராமாயணம்
ஏனெனில் உதாரணமாக ராமாயணம் என்னும் காவியத்தைப் பற்றி
அதில் வரும் முக்கிய பெண்பாத்திரமாகிய சீதையைப் பற்றியே யோசித்துப்
பார்த்தால் இது விளங்காமல் போகாது முதலாவது சீதை எப்படிப் பிறந்தாள் என்பதற்கு ஆதாரமே கானோம்.
ஆனாலும் சீதையைப்பற்றிய மூன் ஜன்மக் கதை ஒன்று கூர்ம புராணத்தில் உள்ளது.
அது என்னவென்றால் சீதையானவள் குசத்துவசன் என்பவனுடைய வாயில் தோன்றினாளாம். தம்பன் என்னும் அரக்கன் சீதையை இச்சித்து கேட்க குசத்துவசன் மறுக்க குசத்துவசனை அந்த அரக்கன் கொன்று விட்டானாம். பிறகு சீதை விஷ்ணுவை மணக்க ஆசைப்பட்டுத் தவம் செய்கையில் அவ்வழி வந்த ராவணன் சீதையைக் கண்டு பலாத்காரம் செய்து விட்டானாம். பிறகு சீதை ராவணன் தொட்டுவிட்டதால் அந்த தோஷம் நீங்க நெருப்பில் இறங்கிவிட்டாளாம். நெருப்பில் இறங்கும் போது அடுத்த ஜன்மத்தில் லங்கையில் பிறந்து ராவணனை அழித்து விடுவதாகச் சபதம் கூறி இறந்தாளாம்
அந்தப்படியே சீதை லங்கையில் ஒரு தாமரைப் பொய்கையில் கிடந்தாளாம். (எப்படி வந்து கிடந்தாளோ தெரியாது) அப்போது ராவணன் கண்டு எடுத்துப் போய் தன் வீட்டில் மகள் போல் வளர்த்தானாம் ஜோசியர்கள் இச்சீதை லங்கையில் இருந்தால் லங்கைக்கு ஆபத்து என்றார்களாம். அதை நம்பி ராவணன் சீதையை ஒரு பெட்டியில் இட்டுக் கடலில் விட்டு விட்டானாம். அது கரைக்கு வந்து பூமியில் புதைபட்டு விட்டதாம். பிறகு அது ஜனகன் கைக்குக் கிடைத்து அவன் எடுத்து வளர்த்து ராமனுக்குக் கட்டிக் கொடுத்தானாம். (கத போல இந்தக்காலத்தில் ஒரு குழந்தை கிடைத்தால் அதைப் பற்றிப் பொது ஜனங்கள் என்ன சொல்லுவார்கள்? என்பது ஒரு பக்க மிருக்கட்டும்.)
எல்லாவற்றையும் சைன்சுக்கு (விஞ்ஞானத்துக்கு) விரோதமாகவே “தெய்வீக மாக வைத்துப்பார்ப்போம்
ராமாயணக் காவியப்படியே வால்மீகி வாக்குப்படி சீதை ராமனுடைய மனைவி, ராமன் மகாவிஷ்ணு என்னும் ஒரு வைணவக்கடவுளின் அவதாரம் கதைமஹாலக்ஷ்மி; அதாவது மேற்படி வைணவக் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மியின் அவதாரம். இங்கு வேறு சங்கையும் ஏற்படலாம். அதாவது விஷ்ணுவுக்கு இரண்டு பெண்ஜாதிகள் உண்டு அவர்களுக்கு சீதேவி, பூதேவி என்றுகூடச் சொல்லுவார்கள். மற்றும் வேறுபல. பெயர்களும் சொல்லுவார்கள். அப்படியிருக்க விஷ்ணு ராமாவதாரத்தில்
1679 ௨... 96பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஒரு பெண்ஜாதியை மாத்திரம் அழைத்துக்கொண்டு மற்ற பெண்ஜாதியை
ஏன் விட்டுவிட்டு வந்துவிட்டானோ விளங்கவில்லை. அல்லது ராமனுக்கு வேறு பல பெண்ஜாதிகளும் உண்டு என்பதாக வால்மீகி கூறுகிறபடி மற்ற பெண்ஜாதியையும் அழைத்து வந்தானோ என்பதும் தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் பூதேவியும் ராமாயணக்கதையில் வருகின்றாள். ஆனால் பூதேவி ராமனுக்குப் பெண்ஜாதியாய் வரவில்லை. மற்றெப்படி வருகின்றாள் என்றால் மாமியாராய் வருகிறாள். அதாவது ராமன் சீதையை விபசாரி என்று சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கிவரும்படி சொன்னபோது முதல் தடவை நெருப்பில் குதித்து வந்தது போதாமல் மறுபடியும் சந்தேகப்பட்டு குதித்துவரும்படி சொன்னதில் பூமாதேவி வந்து கோபித்து
தன் மகளை (கீதையை) கூட்டிக் கொண்டு போய்விடுகிறாள் ஆகவே விஷ்ணுவாய் இருக்கும்போது சீதேவி பூதேவி என்பவர்கள் பெண்ஜாதிகளாகவும் ராமனாய் வரும்போது பூதேவி, சீதேவி என்பவர்கள் முறையே மாமியாராயும், மனைவியாயும் வருகிறார்கள். இதுவும் இப்போதும் சில இடங்களில் நடப்பதுண்டு. அதாவது கன்றும் தாயுமாகப் பார்த்து மாடு வாங்குவது போல் தாயும் மகளும் பயன்படும்படி சிலர் கல்யாணம் செய்து கொள்வதுண்டு. சில இடங்களில் முதலில் தாயார் பயன்பட்டு பிறகு மகளும் பயன்படுவதுண்டு.
இந்தக் கதையில் ராமனுக்கு என்றாலும் சரி, விஷ்ணுவுக்கு என்றாலும் சரி, தாயும் மகளும் பயன்படுத்தப்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்
ஏனெனில் சீதை ராமாயணக் கதையில் தான் வருகிறாளே ஒழிய அதற்கு முன்பு வந்ததாக நமக்குத் தெரியவில்லை. ஆகவே ராமாயணக் கதைக்கு பின்புதான் விஷ்ணு பெண்ஜாதி சீதை என்று ஏற்பட்டிருக்க வேண்டுமே ஒழிய அதற்குமுன் ஏற்பட்டிருக்க நியாயம் தென்படவில்லை. ஆதலால் விஷ்ணுவின் மனைவிமார் தாயாரும் மகளும் என்று சொன்னால் எப்படி மறுக்க முடியும்?
(இந்த முறைகள் ஒரு புறமிருக்கட்டும். இதனால் ஒன்றும் முழுகிப் போகவில்லை.) எப்படியிருந்தாலும் விஷ்ணு என்றாலும் சரி, ராமன் என்றாலும் சரி, அவன் ஆண் ஆனதால் அவர்களைப் பற்றிக் கேட்க யாருக்கும் அதிகாரமில்லை. எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கவனிப்போம்.
அதாவது சீதை கற்புடையவளாயிருந்திருக்க முடியுமா என்பதேயாகும்.
ராமாயணக் கதைக்கு ஒரு ஆதாரக்கதை - அவசியக்கதை - அதன் பூர்வோத்திரக்கதை என்பது ஒன்று வால்மீகியாலேயே செல்லப்பட்டிருக்கிறது.
அது என்னவென்றால் விஷ்ணு ராமனாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? லக்ஷ்மி கீதையாய் பிறக்க வேண்டிய காரணம் என்ன? கீதை என்னும்
குடி அரசு - 1936 (1) 168
லக்ஷ்மியை மற்றொருவன் தூக்கிக் கொண்டுபோகவேண்டிய காரணம் என்ன? என்பவைகளுக்கு எல்லாம் அதில் நியாயம் சொல்லப்பட்டிருக்கிறது. அதென்னவென்றால் விஷ்ணுவானவன் ஜலந்தராசூரன் என்கின்ற ஒரு ராக்கதனுடைய மனைவி பிருந்தையைத் திருட்டுத் தனமாக மாறு வேஷம் பூண்டு புணர்ந்துவிட்டான்.
எப்படியென்றால் ஜலந்தராசுரன் மனைவி மகா பதிவிரதையாம் அவள் புருஷனை சிவன் கொன்று விட்டானாம். (மகாபதிவிரதையின் புருஷனை சிவன் எப்படி கொன்றானோ கொலை பாதகன் அதிருக்கட்டும்) இந்த சங்கதி அவளுக்குத் தெரியாதாம். (ஏனென்றால் அவள் பதி விரதையல்லவா? எப்படித் தெரியும் பாவம்) அப்படி இறந்துவிட்ட சமயத்தில் விஷ்ணுவானவன் அந்த ஜலந்தராசுரன் போல் உருமாறி அந்தம்மாளைப் புணர்ந்து கொண்டிருந்ததாகவும் விஷ்ணுவின் புணர்ச்சி
வேறுபட்டிருந்ததிலிருந்து அந்தம்மாள் இந்த உருமாறின விஷ்ணு தன் புருஷனல்ல என்பதாகத் தெரிந்து விஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்ததாகவும், அந்தச்சாபத்தில் “ந என்னைகற்பை அழித்தது போல் உன் பெண்ஜாதியினுடைய கற்பை ஒரு அசுரன் அழிக்கவேண்டும்” என்றும் சபித்ததாகவும் அந்தச் சாபம் நிறைவேறவே மகாவிஷ்ணுவும் அவன் மனைவி மகாலக்ஷ்மியும் முறையே ராமனாகவும், சீதையாகவும் வந்ததாகவும் அந்த சாபம் நிறைவேறவே ராவணன் என்கின்ற அசுரன் தோன்றிச் சீதையைத் தூக்கிக்கொண்டு போனதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது ஆகவே, பதிவிரதையான பிருந்தையின் சாபம் நிறைவேறுவதற்கு ஆகவே இவ்வளவு காரியமும் ஏற்பட்டிருக்கும் போது அந்த கற்பு கெடுவது என்கின்ற பாகம் மாத்திரம் நிறைவேறப்படாமல் எப்படி பாக்கியிருக்க முடியும்? என்பது ஒரு சாதாரண கேள்வியாக ஆகிவிடமுடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும். விஷ்ணுவானவன் ஜலந்தராசுரன் மனைவியின் கற்பைக் கெடுக்காமல்
இருந்திருந்தால்தான் சீதையின் கற்பு கெடாமல் இருந்திருக்க முடியுமே ஒழிய, ஜலந்தராசுரன் மனைவியின் கற்பு கெடப்பட்ட பிறகு சீதையின் கற்பு மாத்திரம் கெடாமல் இருந்திருக்கும் என்றால் ராமாயணக் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஆதாரமான முன் கதையாவது பொய்யாயிருந்திருக்க வேண்டும். ஆகவே விஷ்ணு ஜலந்தராசுரன் மனைவியை என்ன என்ன செய்தானோ அதையெல்லாம் ராவணேசுரன் என்பவன் சீதையை செய்துதான் இருக்கவேண்டும் என்பது மாத்திரமல்லாமல் கதைப்படி பார்த்தால் செய்து தான் தீரவேண்டும் என்றே சொல்லுவேன்.
ஏனெனில் ஒரு அசுரன் என்பவன் மனைவியை ஒரு ஆரியன் என்பவன் இப்படி அனுபவித்தான் அப்படி அனுபவித்தான் என்று
19 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆனந்தமாகப் பச்சையாக எழுதிவிட்டு ஆரியன் என்பவன் மனைவியை அசுரன் என்பவன் அனுபவித்தான் என்கின்ற விஷயத்தில் மாத்திரம் ஜாதி அபிமானம் காரணமாக ஜாடை மாடையாய் எழுதியிருந்தாலும் விவகாரத்துக்கு வரும்போது - தாக்ஷண்யமில்லாமல் பார்க்கும் போது உண்மை வெளியாகித்தானே தீரவேண்டும்
அன்றியும் சீதையை ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின்பு ராமன் அந்த மீட்பை அரசியல் காரியத்தை உத்தேசித்து சீதையை மீட்டதாகவும் ராவணன் அனுபவித்ததை தான் அனுபவிக்க முடியாதென்றும் சொல்லி அவளை தனது மனைவியாக ஏற்க மறுத்த சமயத்தில் கீதை தைரியமாக விளக்கமாகதன்னைராவணன் அனுபவிக்கவில்லை என்று சொல்லவே இல்லை.
மற்றபடி என்ன சொன்னாள் என்றால் “நான் ஒரு பெண், அபலை, ராவணன் மகா பலசாலி அவனிடம் எனது சரீரம் சுவாதீனமாய் விட்டது நான் என்ன செய்ய முடியும்? சரீரம் அவனுக்கு சுவாதீனமாய் இருந்தாலும் என் மனம் உன்னிடத்திலேயே தான் இருந்தது!” என்று தான் சொன்னாளே ஒழிய மற்றபடி சந்தேகப்பட வேண்டாம் என்று சொல்லவே இல்லை. (இது வால்மீகி ராமாயணத்தில் உள்ளது.) ஆகவே அந்த முறையில் பார்த்தால் சீதைகற்புடையவளாய் இருந்திருக்க முடியுமா என்பது தான் இந்த வியாசத்தின் கேள்வியாகும்
சில தமிழர்கள் ராவணனுக்கு ஜாதி அபிமானம் காரணமாய் மேன்மையை கற்பிப்பதற்கு ஆக ராவணன் சீதையை அசோகவனத்தில் வைத்து ராஜகுடும்பத்தைச் சேர்ந்த (தன் தம்பி மகளை) பெண்ணை தோழியாக நியமித்து பத்திரமாக வைத்திருந்தான் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்.
இந்தப் பெருமையைப் பற்றியும் கதையில் வால்மீகி ஜாடை மாடையாய் காட்டி இருப்பதுபற்றியும் நமக்கு இப்போது தகறார் இல்லை ஆனால் கதையின் தத்துவப்படி - மூலகாரணப்படி சீதை கற்புடையவளாக இருந்திருக்க முடியுமா என்பதுதான் கேள்வியாகும்
ஆரியர்கள் தேவர்கள் அசுரர்கள் என்கின்ற விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்றால் ஏன் துரோபதை சீதை அகலியை தாரை என்கின்ற முதலிய பஞ்சகன்னிகைகள், மகாபதிவிரதைகள் கோஷ்டியில் இந்த ஜலந்தராசுரன் மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கக்கூடாது?
என்று கேட்கின்றேன். இந்த நான்கு “உத்தம பத்தினிகளின்' யோக்கியதைகளை விட பிருந்தையின் யோக்கியதை என்ன கெட்டுவிட்டது? அந்தம்மாள். பதிவிரதா தன்மைக்கு ஆதாரம் மகா விஷ்ணுவுக்கே (கடவுளுக்கே) சாபம் கொடுத்தது. அந்த சாபம் நிறைவேறிற்று என்றால் இதற்குமேல் உரைகல் வேறு என்ன என்று கேட்கின்றேன். ஆகவே ஆரியர்கள் சகல வழிகளிலும் சகல துறைகளிலும் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வதும் ஆரியர்கள்.
குடி அரசு - 1936 (1) 170
அல்லாதவர்களை இழிவு - கீழ்மைப்படுத்துவதுமான காரியத்திலேயே இருந்து வந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. இந்த மாதிரியான காரியத்துக்காக அவர்கள் எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்வார்கள், செய்கிறார்கள் என்பதிலும்
நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. உதாரணமாக சென்னையில் அசம்பளி தேர்தலின் போது ராமசாமி முதலியாரை தோற்கடிப்பதற்காக எந்த வகையிலும் யாதொரு சம்பந்தமில்லாத ஒரு பெரும் பழியை அதாவது ராமசாமி முதலியார் ஒரு பெண்ணின் தாலியை அறுத்துவிட்டார் என்று பிரசாரம் செய்து அவரை தோற்கடித்தார்கள் என்றால் இவர்கள் இனி என்னதான் செய்யமாட்டார்கள்? இதற்குமுன் என்னதான் செய்திருக்க மாட்டார்கள் என்பது விளங்கும். ஆதலால் கண்மூடித்தனமாக எல்லா புராணங்களையும் நம்பாமலும், மேம்புல்லை மேயாமலும் நன்றாய் ஊன்றிப் பார்த்தால் அவைகளின் யோக்கியதை அத்தனையும் ஆபாசமாகத்தான். இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஆகவே இதை எழுதுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 08.03.1936
11௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே
மனிதனைப் பிடித்து வாட்டும் மூடநம்பிக்கைகளில் பணக்காரத் தன்மையும் ஒரு மூடநம்பிக்கையேயாகும். இந்தப் பணக்காரத் தன்மை மூடநம்பிக்கையானது மத சம்பந்தமான மூடநம்பிக்கைகளைவிட மிக
முக்கியமானதும் மோசமானதுமாகும்
பணம்இல்லாவிட்டால் கடவுளுக்குக் கடவேலை இல்லை என்று முடிவு கட்டிவிடலாம். பணமே கடவுளுணர்ச்சிக்கும் முக்கியமாய் மத உணர்ச்சிக்கும் மற்றும் பல மூடநம்பிக்கை உணர்ச்சிக்கும் மூல காரணமாய் இருக்கிறது பணம் என்று சொல்லுவது செல்வம் என்பதின் கீழ் வரும் எல்லாவற்றையும் பொறுத்தது. அச்செல்வத்தன்மைக்கு அடிப்படையானது புகழ் ஆசை என்று தான் சொல்ல வேண்டும். அப்புகழ் ஆசை என்பதும் வெறும் சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்டதே தவிர மற்றப்படி செல்வ சம்பந்தமான
புகழில் ஆசையில் வேறு எவ்வித பகுத்தறிவும் காண முடியவில்லை
சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிக்கக் கூடுமானாலும் அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.
மனிதனுக்கு சுயநலமும் புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது ஒரு அளவுக்கு உண்மைதான். ஆனால் அதற்கு சாதனம் செல்வம் சேர்ப்பது என்பது இயற்கையாய் ஏற்பட்டதல்ல என்போம். ஒரு மனிதன் மேல் லோகத்தில் போய் சுகமாய் (மோட்சத்தில்) இருக்க இந்த லோகத்தில் கடவுள் தயவும் புண்ணியமும் சம்பாதிக்கலாம் என்று சில காரியங்கள் செய்ய எப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறானோ, அது போலவே தான் சுயநலத்துக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதை சாதனமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவனுக்கு முன் பிறந்த மற்ற எல்லோரும் செய்வதைப் பார்த்து இவனும் செய்கிறான். அதனால் அச்செல்வம் தேடி செலவழிப்பதால் ஏதோ சில செளகரியங்கள் ஏற்படுவதாக கருதிக் கொள்ளுகிறான். மற்றவனும் இவனை பெரியவனாக மதிக்கிறான் என்றாலும் இச்செல்வத்தால் உண்மையில் எவ்வித பலனும் அடைவதில்லை. தன்னைப் பார்த்து பிறர் செல்வவான் என்று
குடி அரசு - 1936 (1) 172
சொல்லுவதை ஒரு புகழாகவும் தனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதை தான் ஏதோ ஒரு பெரிய பலன் அனுபவிப்ப தாகவும் கருதிக்கொள்ளுகிறான்.
மேலும் ஒருவன் செல்வவானாய் இருப்பதற்காக அவனுக்கு சில. கடமைகள் இருக்கிறது. அக்கடமைகளை நிறைவேற்றுவதையும், தான். ஏதோ ஒரு பெரும் பயன் அனுபவிப்பதாகக் கருதிக் கொள்கிறான். ஒருவன் போலீசு அதிகாரியாய் இருப்பதற்காக அவனுக்குள்ள கடமைகளைச் செய்யும் போது அவன் எப்படி தன்னை ஒரு பெரிய தலைவனாக நினைத்து
எப்படி மகிழ்கிறானோ அவனைப் பார்த்து பிறர் அவனை அதிகாரி என்று எப்படி நினைக்கிறார்களோ அவ்வளவுதான் செல்வவான் தான் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தும் போது தன்னை நினைத்து மகிழ்வதும் இவனைப் பார்த்து மற்றவர்கள் நினைப்பதும் என்றுதான் சொல்ல வேண்டும்.
செல்வவான் என்று நினைத்துக் கொள்வதும் பிறர் இவனை செல்வவான் என்று சொல்லுவதும் தவிர செல்வவானுக்கு வேறு என்ன. நலம் இருக்கிறது என்று பார்த்தால் அதிலுள்ள மூடநம்பிக்கை நன்றாய் விளங்கும். செல்வவான் அல்லாத சாதாரண மனிதன் அதாவது வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டும்படியான ஒரு சம நிலையுள்ள மனிதன் இன்னமும் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால், தன்னுடைய தேவைகளுக்காக தன். வருமானமல்லாமல் மற்றொருவனைப் போய் கெஞ்ச வேண்டிய அவசிய மில்லாத மனிதனின் நிலைமையை விட செல்வவான் என்கின்றவன் நிலைமை
எந்த விதத்தில் மேலானது - நன்மையானது என்பதை யோசிப்போம்
செல்வம் (பணம்) தேடவேண்டும் என்று கருதி அதில் இறங்கியவ னுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகின்றது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டிகள் இத்யாதி போட்டிகள் இவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகிறது இவ்வளவோடல்லாமல் சம்பாதித்த பணத்தை காப்பாற்றுவதில் உள்ள சிரமம், இவற்றால் ஏற்படும் எதிரிகள், பொறாமைக்காரர்கள். ஆகியவர்களின்தொல்லைக்கு ஈடுகொடுப்பது ஆகியவை பெருங்கவலைக்கு இடமாய் விடுகிறது. பிறகு செல்வவானாய் இருப்பதற்கு ஆக செய்ய வேண்டிய கடமைகள் இடையறாமல் அதாவது அறுபது நாழிகையும் ஓடும் யந்திரம்போல் செய்து கொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கிறது இவ்வளவோடு இந்தக் காரியம் முடிந்துவிட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. செல்வம் படைத்ததின் பலன் தனக்குப் பிறகு இந்தச் செல்வம் என்ன கதி ஆவது என்கின்ற கவலையானது மற்றொரு பெரும் பாகமான. கவலைக்கு இடமானது. எதிர்பாராத வார்சுகள் ஆண் பிள்ளையோ பெண்பிள்ளையோ அல்லது இரண்டு மில்லாமல் எவனுக்கோ பிறந்த
173 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தத்துப்பிள்ளையோ என்பதொருபக்கமிருக்க ஆண் பிள்ளையானால் எத்தனை பேர்கள்? பெண் பிள்ளையானால் எத்தனை பேர்கள்? அவர்களுக்கு வரும் பெண்ஜாதி புருஷன்மார் யார்? அவர்கள் இச் செல்வத்தை எப்படி அனுபவிப்பார்கள்? எத்தனை நாளைக்கு வைத்து இருப்பார்கள்? தான் எத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டு எந்தஎந்த வழியில் தேடிய செல்வத்தை எத்தனை நாளில் எந்த எந்த வழியில் பாழாக்கி விடுவார்கள்? என்கின்ற கவலை லேசானதல்ல என்பது மாத்திரமல்லாமல் அந்தச் செல்வங்கள் 100-க்கு 75 விகிதம் ஒரு செல்வவான் முன்பாகவே மற்ற செல்வவான் செல்வம் அவன் பிள்ளைகளால் பாழாக்கப்படுவதையும் பார்க்கக்கூடியதாகவே இருக்கிறது
அன்றியும் கஷ்டப்பட்டு தேடிய செல்வவான், தேடிவைப்பதிலேயே கவலையாய் இருந்து சாக அவன் பின் வார்சு ஒருபாடும் படாமல் அதை அல்லது அதன் அனுபவத்தை தான் ஒரு செல்வவான் என்கின்ற உணர்ச்சியிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து வருகிறான். தத்துக்கு வருகிறவன் புதையல் எடுத்தது போல் அனுபவிக்கிறான். ஆகவே செல்வமானது செல்வவானுக்குப் பின்னால் இந்தப்படி யெல்லாம் ஆவதில் செல்வவானுக்கு ஏற்படும் பயன் என்ன? எவ்வளவோ கஷ்டம் - கவலை - தொல்லை ஆகியவைகள் அனுபவித்துப் பொருள் தேடியதற்கு இதுதான் பயன் என்றால் சொத்து சேர்ப்பது என்பது ஒரு மூடநம்பிக்கை அல்லது குருட்டு பழக்க வழக்கத்தில் பட்டது என்பதில் என்ன ஆட்சேபணை இருக்கின்றது என்று கேட்கின்றோம்
ஒரு தாசி ஓடி ஓடி ஒரு இரவுக்கு 10 புருஷர்கள் வீதம் கூடி 10 ஆயிர ரூபாய் நகையும், 2 வீடும், 5, 6 ஏக்கர் நஞ்சை பூமியும் எல்லாம் 30, 40 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிறாள். கிழப்பருவம் வந்த உடன் மகளைத் தயார் செய்கிறாள். மகள் தயாரானதும் மகளிடம் செல்வத்தை ஒப்புவித்து விட்டு செத்துப் போகிறாள். தாய் செத்த பிறகு மகள் தனக்கு இச்சையான ஒரு நாயகனை ஆசை நாயகனாக வைத்துக் கொண்டு அவன் இஷ்டப்படி சல்லாபமாய் விளையாடி 2, 3 வருஷத்தில் சொத்துக்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஓட்டாண்டியாகி இருவரும் கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்ட எத்தனையோ கேசுகள் நாம் பார்க்கின்றோம். இதுபோலவே வியாபாரியோ, வக்கீலோ, மிராசுதாரனோ, லேவாதேவிக்காரனோ, உத்தியோகஸ்தனோ எவனாய் இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் அவனவன் படும் கஷ்டமும் அவன் பிள்ளை வந்து அதைத் தொலைப்பதில் நடந்து கொள்ளும் மாதிரியும் நாம் அறியாததல்ல.
ஏதோஜாதியானது பிறவியால் வருவதுபோல் செல்வமும் பிறவியினால். வரும்படியாக ஜமீன் - அரசு - முதலிய முறைகளில் சட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு வருணாச்சிரமதர்மம் போல் சொத்துக்கள் அழிக்க வசதி இல்லாமல் இஷ்டப்படி அனுபவிக்க வசதி இருக்கிற பதினாயிரத்துக்கு ஒரு
குடி அரசு - 1936 (1) 174
குடும்பம் அதுவும் மூத்த பிள்ளை மாத்திரம் என்பது தவிர மற்ற குடும்பங்கள் எவ்வளவு செல்வமுள்ளதானாலும் 2, 3 தலைமுறைகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை அடைந்து செல்வவான் என்கின்ற தன்மைபோய் மாஜி செல்வவான் குடும்பம் என்று சொல்லத்தக்க நிலையில் எத்தனை குடும்பங்களை நேரில் பார்க்கிறோம்.
புதிய செல்வவான்கள் என்கின்ற முறையில் கவர்ன்மெண்ட் ஷாப்புக்கள் போலவும், பாங்கி காஷியர்கள் போலவும் வரவு செலவு செய்து சம்பாதித்து சம்பாதித்து பின் வார்சுக்கு கணக்கு ஒப்புவித்து விட்டுப் போகிறவர் எத்தனை பேரைப் பார்க்கிறோம் ஆகவே செல்வவான் என்பதில் இருக்கும் புகழும் சுயநல அனுபவமும் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தால் மூன் குறிப்பிட்டதுபோல் பணக்காரத் தன்மை என்பது மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமுமாய் இருப்பதும் அதற்கு அனுகூலமாக அரசாங்கமும் சமூக கட்டுப்பாடும் இருப்பதும் நன்றாய் விளங்கும்
நிற்க “சுயநலம் பேணுவதும் புகழ் விரும்புவதும் மனித இயற்கை. என்பதை மேலே ஒப்புக்கொண்ட பிறகு அதற்கு சாதனமான காரியங்களை செய்வது என்பதில் மனிதன் பணம் சேர்க்காமலும் பணக்காரன் என்கின்ற
புகழ் விரும்பாமலும் இருக்க எப்படி முடியும்? ஆகவே இது இயற்கையே ஒழிய மூடநம்பிக்கையோ குருட்டு பழக்க வழக்கமோ அல்ல” என்று சொல்ல வரலாம்
இதற்கு மேலேயே சமாதானம் சொல்லப்பட்டது. அதாவது மோக்ஷத்தை விரும்புவது எப்படி மூடநம்பிக்கையோ அதுபோல் தான். செல்வத்தையும் அதனால் ஏற்படும் புகழையும் விரும்புவதாகும் என்று சொன்னோம். ஆனால் அது நடைபெறுவதற்கு காரணம் அரசாங்கமும் சமூகக் கட்டுபாடும் என்றும் காட்டினோம். அரசாங்கமும் சமூகக் கட்டுப்பாடும் தனி உடமை தத்துவமான முறையில் இருக்கிறபடியால் அவை நடக்க முடிகின்றது.
வேதாந்த முறை என்பது போன்ற பொதுஉடைமை தத்துவ முறையுள்ள அரசாங்க ஆட்சியும் சமூக கட்டுப்பாடும் உள்ள இடத்தில் சுயநலத்துக்கும் புகழுக்கும் செல்வம் சேர்த்து பணக்காரன் ஆகிறது என்கின்ற தத்துவம் சாதனமாய் இருக்க முடியவே முடியாது. அங்கு எப்படி மதவாதிகள் நாஸ்திகர்களை வெறுத்து குற்றவாளியாக ஆக்குகிறார்களோ அதுபோல் பணக்காரத் தன்மையை வெறுத்து குற்றவாளியாக்கி தண்டிக்கச் செய்கிறார்கள்
அப்படி இருப்பதாலேயே அங்குள்ள மக்களுக்கு சுயநலம் இல்லை என்றாவது புகழில் விருப்பமில்லை யென்றாவது சொல்விட முடியுமா?
என்று பார்த்தால் ஒரு நாளும் முடியாது
175 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இங்குள்ள பணக்காரனுக்கு இருக்கும் சுயநலம் என்பது அவன் பணந்தேடி மீதி வைத்து, தான் எதிர்பாராத பின் வார்சுக்கு தன்னால் அடக்கி ஆள முடியாதபடி அனுபவிக்க விட்டுவிட்டுப் போவதும் தன்னை மாத்திரமோ தன் குடும்பத்தை மாத்திரமோ பணக்கார பிரபுக் குடும்பம் என்று சொல்லும் படியானதையும் சாதனமாய் கருதுகிறான்.
அங்குள்ளவன் சுயநலமும் புகழாசையும் தானும் தனது தோழனும் கூடுமான அளவு பாடுபட்டு தேடி தேவையான அளவு விகிதாச்சாரம் வரும்படி அனுபவித்து மீதி உள்ளதை தானும் தன் தோழர்களும் இன்னமும் கொஞ்சம் முற்போக்கான முறையில் பெருக்கி தேவையான அளவு சரிசமமாய் அனுபவித்து பொதுவில் பொறுப்பு ஏற்றுக்கொள்வதை சாதனமாய் கருதுகிறார்கள்.
இதிலிருந்து அடிப்படையான இயற்கை என்னும் சுயநலமும் புகழாசையும் மாறாமலேயே சாதனங்கள் மாத்திரம் மாறி இருக்கிறதை
உணரலாம். ஆகவே பணக்காரத் தன்மை மூட நம்பிக்கையிலும் குருட்டுப் பழக்க வழக்கத்திலும் பட்டது என்பதும், பணக்காரன் என்று இல்லாமல் எல்லோரும் சரிசமம் என்னும் தன்மை பகுத்தறிவில் பட்டது என்பதும் விளங்கும்
குடி அரசு - தலையங்கம் - 08.03.1936
குடி அரசு- 1936 (1) 176
திருச்செங்காடு தாலூகா ஆதிதிராவிடர் 5 - வது மகாநாடு
தோழர்களே!
இந்த உங்கள் மகாநாட்டில் உங்களுக்கு உள்ள உற்சாகத்தைப் பார்த்து மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது உடல் அசெளக்கியத்தால் நான் வருவதற்குப் பயந்தேன். நான் புறப்படுமுன் பல தோழர்கள் இந்நிலையில் போகக்கூடாது என்று சொன்னார்கள். நீங்கள் ஏமாற்றமடைந்து விடுவீர்கள் என்று சமாதானம் சொல்லிவிட்டு புறப்பட்டு விட்டேன்.
இப்போது இங்கு வந்தபின் உங்கள் உற்சாகத்தைப் பார்த்ததில் இங்கு
நான் வராதிருந்தால் நான்தான் ஏமாற்றமடைய வேண்டியவனாவேன். இவ்வளவு தூரம் இந்த கிராமங்களில் போதிய தண்ணீர் வசதியும் வழி நடைபாதை வசதியும் இல்லாத நடுக்காடுகளில் இப்படிப்பட்ட மகாநாடு கூட்டுவதும், உற்சவம் போல ஆண் பெண்கள் கூடுவதுமான காரியம் உங்கள் விடுதலை விஷயத்தில் உங்களுக்கு உள்ள ஆர்வமே காரணம் என்பதும், உங்கள் பூரண விடுதலைக்கு நீங்கள் உரியவர்களாகி விட்டீர்கள் என்பதும் எனது அபிப்பிராயம்.
இப்படிப்பட்ட உணர்ச்சியும் முயற்சியும் உங்களுக்கு ஏற்படும் படியாகச் செய்தது இந்த பிரிட்டிஷ் அரசாங்கமும் பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியுமே என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள்
உங்களில் சில பார்ப்பனக் கூலிகள் பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சி உங்களுக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை என்றும் கூறி, பார்ப்பனர். களிடம் கூலி பெற்று வாழுவார்கள். அந்தக் கூட்டம் உங்களில் மாத்திரமல்ல எங்களிலும் இருக்கிறார்கள். ஆதலால் ஒரு அளவுக்கு அப்படிப் பட்டவர்கள் வாழ்க்கைக்கு இடம் கொடுத்துத் தான் ஆகவேண்டும்
பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டிற்கு வந்து 200 வருஷங்கள் ஆகியும் இந்த 15, 20 வருஷத்தில் உங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட முற்போக்கானது முந்தின 50 - 100 வருஷகாலத்தில் கூட ஏற்படவில்லை என்று சொல்லலாம். ஏனெனில் இந்த 15, 20 வருஷகாலம் வரை பார்ப்பனரும் அரசாங்கமும் கூட்டு வியாபாரம் போல் ஆக்ஷி நடத்தினார்கள். பிரிட்டிஷ் ஆட்சியே
177 ௨... 96பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பார்ப்பனரிடம் செய்து கொண்ட கூட்டு ஒப்பந்தத்தின் மீதே இந்த நாட்டில் பலம் பெற ஆரம்பித்தது என்று சொல்லலாம். எப்படியெனில் இந்தியாவில் பார்ப்பனர்கள் மதத்தின் பேரால் செய்துவரும் அட்டூழியங்களும் ஆபாசங்களும் இழிவான காரியங்களும் அனேகருடைய ஆராய்ச்சி மூலமும், சரித்திர மூலமும் பிரிட்டிஷாருக்குத் தெரிந்திருந்தும் அவர்கள். மத விஷயத்தில் பிரவேசிப்பதில்லை என்று பார்ப்பனர்களுடன் ஒப்பந்தம் செய்தும், அதற்கு பதிலாக பார்ப்பனர்கள் நாங்கள் எந்தக் காலத்துக்கு ராஜ விஸ்வாசமற்றவர்களாக இருப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தும் ஆகிய இரண்டு காரியங்களே இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் யாதொரு நல்ல பயனும் ஏற்படுவதற்கில்லாமல் பார்ப்பனர்கள் பிரிட்டிஷ்ஆட்சியின் பயன் முழுதுமே அடையும்படியாகவும் ஏற்பட்டு வந்தது. உங்களுடைய நற்காலத்துக்கே இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பன. ரல்லாதார் என்கின்ற உணர்ச்சி ஏற்படவும், அதில் சர்க்கார் பார்ப்பனர்களுக்கு முன்போல அனுகூலமாயில்லாமல் அவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். ஆகிய இரு சமூகத்தையும் ஆதரிக்க ஆரம்பித்ததும், அதன் பயனாக பார்ப்பனர்கள் தங்கள் பழைய முறைப்படி அரசாங்கத்தின் மீது விஷமப் பிரசாரம் செய்யத்தொடங்கினதும் இதற்குத் தாக்குப்பிடிப்பதற்காக அரசாங்கத்தாரும் பார்ப்பனரல்லாதாரும் உங்கள் உங்கள் உதவியை நாடவும் இதில் பார்ப்பனர்களும் போட்டி போடவும் இத்தியாதி காரணங்களால் உங்களுடைய நிலை உங்களது முயற்சி இல்லாமலே உயர்ந்து வருகிறது. ஆகவே இன்றைய பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார். சண்டையும், சர்க்கார் பார்ப்பனர் சண்டையும் உங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்து வருகிறது
இந்தச் சண்டை இல்லாவிட்டால் உங்கள் நிலை மிகவும் மோசமாகவே இருந்திருக்கும். பார்ப்பனர்களின்பேராசையினுடையவும் சூழ்ச்சியினுடையவும் பலன் தான் இன்று இந்த நாட்டுக்கு பல நன்மைகள் ஏற்பட்டு வருகிறது.
என்றையதினம் பார்ப்பனர்களின் யோக்கியதை பொதுமக்கள் உணரும்படியாக ஆயிற்றோ அன்றே அவர்களது மத சம்மந்தமான சூழ்ச்சியும், கடவுள் பேரால் அவர்கள் மக்களை ஏமாற்றி வந்த பித்தலாட்டமும் மக்களுக்கு தாராளமாய் விளங்கும்படியாக ஆகி விட்டது
இந்த இரண்டு சூழ்ச்சிகளும் இனிப் பலிக்காது என்று அவர்கள். உணர்ந்து கொண்ட பின்பேதான் இப்போது சுயராஜ்ஜியம் என்றும் அரசியல் புரட்டுகளை ஆரம்பித்து அதன் மூலம் அவர்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சித்து தங்களுடைய முழு பலத்தையும் காட்டி வருகிறார்கள். இது தான் அவர்களுக்கு கடைசி ஆயுதம். இந்த ஆயுதமும் சீக்கிரத்தில் பயனற்றுப் போகும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை
ஆனால் அவர்களது இப்படிப்பட்ட புரட்டுகளுக்கு நீங்கள் சம்மந்தப் படக் கூடாது என்பதுதான் எனது ஆசை
குடி அரசு- 1936 (1) 178
உங்களுக்கு ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தைப் பார்ப்பனர்கள் பாழாக்கிவிட்டார்கள். உங்கள் நலத்துக்கு வேண்டிய காரியங்களை அரசியல் ஸ்தாபனத்தின் மூலம் நீங்களே செய்துகொள்ளும்படியான ஒரு அருமையான சந்தர்ப்பம் உங்களுக்கு அரசாங்கத்தாரால் அளிக்கப்பட்டது அது என்னவென்றால் சட்டசபைகளிலும் மற்ற சபைகளிலும் உங்களுக்கு உங்கள் சமூகத்தாராலேயே தெரிந்தெடுத்துக்கொள்ளும்படியான பிரதிநிதித்துவ உரிமையாகும்
இந்த உரிமை கிடைத்ததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கத்தின். கிளர்ச்சியேயாகும். எப்படி எனில் உங்களுடைய குறைகள் இங்கிலாந்து பார்லிமெண்டுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகவே பார்ப்பனர்கள் சைமன் கமிஷனை பஹிஷ்கரிக்க சூழ்ச்சி செய்தார்கள். அது சுயமரியாதைக் காரர்கள் இடம் பலிக்கவில்லை. அவர்கள் உங்கள் சமூகத்தை கிளப்பிவிட்டு உங்கள் குறைகளை தெரியும்படி செய்ததுடன் உங்களுக்கு தனித்தொகுதி கொடுத்தால் போதும் மற்ற சுயராஜ்ஜியத்தை பற்றிக் கவலை இல்லை என்று
சொன்னார்கள்.
ஏனென்றால் சுயராஜ்யம் என்று பார்ப்பனர்கள் கூச்சல் போடுவது தாழ்த்தப்பட்ட சமூகத்தார் தலையிலும் பார்ப்பனர் அல்லாதார் தலையிலும் கையை வைத்து அவர்களை அடக்கி ஓடுக்கி தாங்கள் ஆளவேண்டும் என்பது தான். இனி அதற்கு இடமில்லாமல் போகும் காலம் வந்துவிட்டது நீங்கள் மாத்திரம் எந்தக் காரணம் கொண்டும் அரசாங்கத்தாரோடு பிணக்குதல் வைத்துக்கொள்ளாதீர்கள். அரசாங்க தயவு இருந்தால் ஒழிய உங்களுக்கு ஒரு காரியமும் நடக்காது. காங்கிரஸ்காரர்கள் உங்கள் பெயர்களைச் சொல்லி ஊர் ஜனங்களிடம் கொள்ளையடித்து ஏதோ ஒரு நாளைக்கு கருமாதிக்கு எண்ணெய் சீபக்காய் கொடுப்பதுபோல் ஒரு ஸ்பூன் எண்ணெயும், ஒரு சிட்டிகை சீயக்காய் தூளும் கொடுத்துவிட்டு பாக்கியெல்லாம் ஹரிஜன. சேவை என்னும் பேரால் பார்ப்பனர்கள் வயிற்றில் கொட்டிக் கொள்ளுகிறார்கள்.
இதனால் உங்களுக்கு என்ன பலன் ஏற்பட்டது? உங்களை ஏமாற்றுவ தல்லாமல் இதில் வேறு எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. முன்னமேயே பெருத்த ஏமாற்றம் ஒன்று நடந்தாய் விட்டது அதுதான் முன் சொன்ன உங்களுக்கு கிடைத்த தனித்தொகுதியை ஏமாற்றின காரியமாகும். காந்தியார் நீலித்தனம் செய்து பட்டினிப் புரட்டால் தலையில் கல்லைப் போட்டுவிட்டார். எவ்வளவோ தைரியமும் உறுதியும் உள்ள. உங்கள் தலைவர் அம்பத்கார் அது விஷயத்தில் ஏமாந்துவிட்டார் அரசாங்கத்தின் மீது பழி சொல்ல இனி உங்களுக்கு யோக்கியதை கிடையாது உங்கள் கஷ்டத்துக்கு ஆக யார் மீதாவது குற்றம் கூறவேண்டுமானால் அது காந்தியார் புரட்டின் மீதும், அம்பத்காரின் ஏமாந்ததனத்தின் மீதும்தான். குறை கூறவேண்டும். ஆனபோதிலும் ஒன்றும் முழுகிப்போய் விடவில்லை என்று தைரியம் செய்துகொண்டு இனியாவதுவிழித்திருந்தால்நலமடையலாம்.
199 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜஸ்டிஸ் கக்ஷி தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் உங்களுக்கு
தனித் தொகுதிக்கு வழிகாட்டி விட்டார். அதாவது சென்னை நகர முனிசிபல் சட்டத்தில் உங்களுக்கு தனித் தொகுதி ஏற்படுத்தி விட்டார். இது ஒரு பெரிய காரியம் என்றுதான் சொல்லவேண்டும். டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் உங்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தார். தோழர் முத்தய்ய முதலியார் அவர்கள் உங்களுக்கு சர்க்கார் உத்தியோகத்தில் ஸ்தானம் ஒதுக்கி வைத்தார். பொப்பிலி ராஜா அவர்கள் உங்களுக்கு தனித் தொகுதி உண்டாக்கி வைத்தார். ஆனால் மற்ற ஸ்தாபனங்களிலும் தனித் தொகுதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இவற்றின் பயனாக உங்கள் சமூகம் அடைந்து வரும் நன்மையை எந்த மூடனும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கமுடியாது.இவையெல்லாம் ஏற்படசுயமரியாதைக்காரர்கள். எவ்வளவு தூரம் உழைத்தார்கள் என்பதும், அவர்களது ஆதரவு இல்லாமலிருந்தால் காங்கிரசுக்காரர்கள் எவ்வளவு சூழ்ச்சிகளும் முட்டுக்கட்டையும் போட்டு வெற்றிபெற்று இருப்பார்கள் என்பதும் நீங்களே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும்.
இப்போதும் உங்களை ஏமாற்ற பார்ப்பனர்கள் மறுபடியும் சூழ்ச்சி செய்து தான் வருகிறார்கள். அதாவது உங்கள் தலைவர்கள் என்று வியாபாரம் செய்து கொண்டிருக்கும் சில சுயநலமிகளைப் பிடித்து அவர்களுக்கு 1000, 2000 கொடுத்து உங்கள் நலத்துக்கு விரோதமாய் அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி வேண்டாம் என்று சொல்லும்படி செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்கள், பக்கத்தில் படுத்திருப்பவனை கழுத்தறுக்க பயப்படமாட்டார்கள். தனித்தொகுதியோ, தனியே ஸ்தானம் ஒதுக்குவதோ இல்லாமல் இருந்தால் இந்தமாதிரியான சமூகத் துரோகிகளுக்கு இன்று எந்த ஸ்தாபனத்திலாவது இடம் கிடைத்து இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள். சர்க்காரிடமும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் பணம் பெற்று நாமினேஷன் பெற்று பிச்சை வாங்கிக் கொண்டு இவ்வளவும் அனுபவித்தவர்கள் அதை மறந்து பார்ப்பனர்களிடம் கூலிவாங்கிக்கொண்டு குலைப்பதென்றால் இப்படிப்பட்டவர்களை தலைவர்களாகக்கொண்டசமூகம் முன்னேறுமாஎன்பதையோசித்துப்பாருங்கள்.
உங்களுடைய கடமையெல்லாம் போலிகளையும் கூலிகளையும் சுயநலக்காரர்களையும் கண்டுபிடித்து அவர்கள் வண்டவாளங்களை
வெளியாக்குங்கள். அது செய்தாலே போதுமான காரியம் என்று கருதுகிறேன்.
உங்களுக்கு ஆக நாங்கள் செய்யும் காரியங்களை பார்ப்பனர்களைவிட உங்கள் சமூக துரோகிகளே அதிகமாய் கெடுத்து வருகிறார்கள்.
நீங்கள் மற்றொரு விஷயத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் உங்களை நீங்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும் வரையில் உங்கள். ஜாதி இழிவு என்பதும் பறப்பட்டமும் தீண்டக்கூடாது என்கின்ற தன்மையும் நீங்கவே நீங்காது. ஏனெனில் நீங்கள் இந்துக்களாய் இருப்பதினால் தான்
குடி அரசு- 1936 (1) 150
தீண்டாதவர்களாகவும் பறையர் சக்கிலிகளாகவும் இருக்கிறீர்களே ஒழிய மற்றபடி உங்களைத் தொட்டால் நாற்றமடிக்குமென்றோ நெருப்புப் பிடிக்கு மென்றோ விஷமேறும் என்றோ நீங்கள் தீண்டாதவர்களாக ஆக்கப்படவில்லை. உங்களை ஏய்ப்பதற்கு ஆக ஏற்பாடு செய்த பொய்க்கதையாகிய நந்தனும் எவ்வளவு விபூதி பூசியும், எவ்வளவு உத்திராட்சக் கொட்டை கட்டியும் எவ்வளவு “தெய்வீக! காரியம் அதாவது கழனி எல்லாம் ஒரு இரவில் உழுது விதைத்து நாற்று நட்டும் பறையன் பறையனாகவே இருந்து நெருப்பில் பொசுக்கப்பட்டான் என்று தான் முடித்தார்களே ஒழிய வேறு என்ன?
இன்று உங்களில் யார்தான் மனிதனாகக் கருதப்படுகிறார்கள்? எந்த கோவிலில் விடப்பட்டார்கள்? சர்க்கார் உத்திரவும் சட்டமும் இல்லாமல் எந்த குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்?
ஆதலால் நீங்கள் இந்துக்களாக இருப்பதைவிட உங்களுக்கு சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இல்லை என்றே சொல்லுவேன். 2000-3000 வருஷக் கிளர்ச்சியில் ஆகாத காரியங்கள் இந்து மதத்தை விட்டு விலகிவிட்டால் நொடிப்பொழுதில் ஆகிவிடுகின்றதை நான் பிரத்தியக்ஷத்தில் பார்க்கிறேன். ஆனால் கிறிஸ்தவர்களாக ஆகி விடுவதில். தீண்டாமை ஒழிவதில்லை. ஏனெனில் கிறிஸ்தவ மதம் அரசியல்
லக்ஷியத்தில் நமது நாட்டில் இருக்கிறது. அதற்கு சுயமரியாதையில் லக்ஷியமில்லை. இந்த நாட்டுக் கிறிஸ்தவர்களில் 100-க்கு 50 பேருக்கு மேலாகவே கிறிஸ்தவப் பறையர்களாகவே இருக்கிறார்கள். இதை விட வேறு இழிவும் கெட்டபேரும் அந்த மதத்துக்கு வேண்டியதில்லை
பார்ப்பன மதம் எப்படி ஜனங்களை ஏமாற்றுவதற்கு ஆகவே இருக்கிறதோ, அதே போல் நமது நாட்டில் கிறிஸ்தவ மதம் ஜனங்களை ஏமாற்றவே இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அநேகம் பேர் ஆண் பெண் கிறிஸ்தவ ஆதி திராவிடர்களாக இருப்பதாக தெரிகிறது
நீங்கள் மதம் மாறி என்ன பயன்? இந்த இரண்டு மூன்று மாதமாய் ஈரோட்டில் கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களை அவர்கள் கிறிஸ்தவ மேல்ஜாதிக் காரர்கள் தொழும் இடத்தில் வந்து தொழுததற்காக மேல் ஜாதிக்காரர் செருப்பாலடித்து விட்டதாகவும், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மேல்ஜாதிக்காரர் களை செருப்பாலடித்து விட்டதாகவும் கோர்ட்டில் பிராது நடக்கின்றது. இது எவ்வளவு மானக்கேடு பாருங்கள். சாமியார்கள் மேல்ஜாதிக்காரர்களுக்கு சலுகைகாட்டுகின்றார்கள் என்றும், அவர்களே மேல் ஜாதிக்காரர்கள் பிராது செலவுக்கு பணம் கொடுத்தார்கள் என்றும் கோர்ட்டிலேயே புகார் சொல்லப் பட்டது. இந்த மாதிரி மதத்துக்கு போவதால் என்ன பயன்? ஏதாவது ஒரு மதம் வேண்டுமென்றால் எந்த மதக்காரர்களுடைய சலுகையாவது பெற்று இந்துக்களின் கொடுமையில் இருந்து தப்ப வேண்டுமானால் உங்களுக்கு இஸ்லாம் மதமே மேல் என்று சொல்லுவேன். கிறிஸ்தவமதம் என்பது
11 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆள்சேர்த்து கணக்கு காட்டி கிறிஸ்தவ ஆட்சிக்கு பலம் தேடுவதற்குத்தான் பயன்படுகிறதாய் இருக்கிறது. இஸ்லாம் மதமானது ஒரு இஸ்லாமியனை மற்றொருவன் ''இவன் தீண்டாதவன்'' “இஸ்லாம் பறையன்'' என்று சொல்லுவதை ஒரு வினாடிகூட பொறுத்துக்கொண்டு இருக்காது. ஒரு இஸ்லாமியனைப் பார்த்து ஒரு இந்து இவன் பற முஸ்லீம் என்று சொல்லிவிட்டால் உடனே அவன் சொல்லி வாய் மூடுமுன் பல்லைக் கழட்டி கையில் கொடுத்து விடுவான்.
ஆனால் கிறிஸ்தவனோ தானே தன்னை கிறிஸ்தவப் பறையன் என்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடன் என்றும் சொல்லிக் கொள்ளுகிறான். இதைவிடவேறு சுயமரியாதை அற்ற தன்மை இருக்கிறதா என்று கேட்கின்றேன்.
இந்துமதத்துக்கும் சுயமரியாதை இல்லை என்று சொல்வேன். ஒவ்வொரு இந்துவும் ஜாதி முறை கொண்டாடுகிறான். பார்ப்பானை மேல் ஜாதி என்று ஒப்புக்கொள்கிறான். மற்றவனுக்கு தான் மேல் ஜாதிக்காரர் என்று கருதிக் கொள்கிறான். ஆகையால் சமூக சமத்துவத்தில் மக்களை இஸ்லாம் மதம் சமமாக பாவிக்கிறது.
ஆதலால் நீங்கள் அம்பத்கார் கூறுகிறபடி இந்துமதத்தை விட்டு விடவேண்டியது நியாயமே ஆகும். உங்கள் பொட்டும் பூச்சும் வேஷத்துக்கு பயன்படுகிறதே தவிர சுயமரியாதைக்குப் பயன்படுகிறதா? நீங்கள் எவ்வளவு பக்தியுடையவராக வேஷம் போட்டாலும் உங்களை பறைச்சாமியார். என்றுதான் சொல்லுகிறார்கள். வெட்கமில்லாமல் உங்களுக்கு என்று வேறு கோயில் கட்டிக்கொள்கிறீர்கள். இதனால் நீங்கள் கீழ்ஜாதி என்பதை ஒப்புக் கொண்டவர்களா இல்லையா? அந்த சாமி உள்ளவரை அதாவது அந்த பறையர் கோவில்” உள்ளவரை உங்கள் பறைத் தன்மையை நிலை நிறுத்தினவர்களாகிறீர்களா இல்லையா? இதற்கு ஆகவே மேல்ஜாதிகாரர்கள் உங்களுக்கு பணம் கொடுத்து உங்கள் பறைத்தன்மையை நிலை நிறுத்த கோவில் கட்டச் செய்கிறார்கள்
உங்களில் பலர் முட்டாள் தனத்தாலும், அதிலிருந்து சிறிது பொருள் கொள்ளை கொள்ளலாம் என்றும் அந்த வேலையை ஜீவனோபாயமாகக் கொள்கிறார்கள்.
இதற்கெல்லாம் நீங்கள் ஏமாறக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறேன்.
பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் இன்னமும் உங்களுக்கு அநேக நன்மை ஏற்படப்போகின்றது. உங்கள் சமூகத்துக்கு கட்டாயக் கல்வியும் பிள்ளைகளுக்குச் சாப்பாடும் ஏற்பாடு செய்யப் போகிறார்கள். கூடிய
சீக்கிரம் அமுலுக்கு வரலாம். உங்கள் விஷயமாய் சுயமரியாதைக்காரர்கள். போட்ட தீர்மானங்கள் எல்லாம் அமுலுக்கு வரும் காலம் வந்து விட்டது ஆனால் நீங்கள் மாத்திரம் பார்ப்பனர்களுடன் சேர்ந்து விடாதீர்கள். உங்களில் பார்ப்பனக் கூலிகளை நம்பி ஆதரித்து விடாதீர்கள்.
குடி அரசு - 1936 (1) 182
சர்க்காருக்கு விரோதமான கக்ஷிகளிலோ கொள்கைகளிலோ கலந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களைப் போல் நீங்கள் முன்னுக்கு வருகிற வரை சர்க்கார் ஆதரவு உங்களுக்கு அவசியமானது. ஏனெனில் இன்று உங்களை ஒவ்வொருவரும் அரசியல் காரியங்களுக்கு உபயோகித்துக் கொள்ளத் தான் உங்களை நாடுகிறார்களே ஒழிய உண்மையான உங்கள் குறைகளை நீக்க அல்ல. முக்கியமாக பார்ப்பனர்கள் உங்களை மோசம் செய்யவே - உங்களை ஏய்க்கவே உங்களை நாடுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். அரசாங்கத்துக்கும் எனக்கும் எவ்வளவு மாறுபாடான அபிப்பிராயம் இருந்தாலும், அதனிடம் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் நீங்கள் அரசாங்கத்துடன் பிணக்குச் செய்யாமல் அதை எதிர்க்காமல் இருந்து உங்கள் சமூக நன்மையை பெறவேண்டும் என்று கூறுவேன்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஒழித்து பூரண சுயராஜ்யம் பெறுகிறதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி கோடிகோடியாக வசூலித்து மோசம் செய்த காங்கிரஸ் பார்ப்பனர்களும், ஜெயில்களை இடித்து நிரவி விடுவதாக சொன்ன பார்ப்பனர்களும், காந்தியாரும் இன்று புத்திவந்துவிட்டது என்று சொல்லி அரசாங்கப் பதவிக்கும் உத்தியோகத்துக்கும் மண்டி போட்டு சலாம் செய்வதற்கும் முந்தும்போது உங்களுக்கு இதனால் ஒன்றும் முழுகிப் போகாது என்று சொல்லுவேன். கடைசியாக உங்கள் மகாநாட்டுக்கு வந்ததற்கு ஆகவும் இங்கு தலைமை வகித்ததற்கு ஆகவும் நான் மகிழ்ச்சியடைவதோடு உங்களுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன்,
குறிப்பு: 07.03.1936 ஆம் நாள் திருச்செங்கோடு தாலுகா சமுத்திரத்தில் நடைபெற்ற திருச்செங்கோடு தாலுக்கா 5-வது ஆதிதிராவிடர் மாநாட்டில் தலைமை வகித்து ஆற்றிய முகவுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 15.03.1936
183 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஸ்தல ஸ்தாபனங்கள்
ஓட்டுமிமையும் கட்சிகளும்
இந்திய நாட்டிற்கு பிரிட்டிஷார் அளித்துள்ள ஓட்டுரிமையானது இயற்கைக்கு விரோதமானதும், இந்தியாவின் தகுதிக்கு எத்தனையோ பங்கு அதிகமானதுமான ஓட்டுரிமையாகும் ஆனால் இதை அவர்கள் நல்லெண்ணத்தோடு அளித்தார்களா அல்லது மற்ற எண்ணத்தோடு அளித்தார்களா என்பது வேறு விஷயம் என்றாலும் இந்த மாதிரியான ஓட்டுரிமையினால் நாட்டுக்கோ ஏழை மக்களுக்கோ ஏதாவது பயன் ஏற்பட்டதா என்று சொல்ல முடியாது ஏனெனில் நமது நாட்டு மக்களில் 100-க்கு 8 பேர்களே படித்தவர்கள். என்பதும், அந்த 8 பேர்களிலும் பார்ப்பன சமூகம் 100-க்கு 100 பேராய் படித்திருப்பதும், மற்ற ஏழை மக்களில் 100-க்கு 2 பேர் 3 பேர்களே படித்திருப்பதும், பெண்களில் முக்கியமாக பார்ப்பனரல்லாத பெண்களில் 100-க்கு % பேர்களும் தாழ்த்தப்பட்ட மக்களில் 100-க்கு % பேர்களுமே படித்திருப்பதுமான நிலையில் இந்தக் கூட்டத்தார்களைக் கொண்ட இந்திய சமூகம் தங்களுக்கு அளிக்கப்பட்ட ஓட்டுரிமைகளை சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று யார்தான் சொல்ல முடியும். ஆகவே மக்கள் சாதாரண அறிவு விஷயத்திலேயே இப்படி இருக்கும்போது இந்த ஜனங்களிடம் அரசியல் சூழ்ச்சிகளையும் அயோக்கியத் தனங்களையும் உபயோகித்து போதாக்குறைக்கு கள்ளையும், சாராயத்தையும், காசையும் உபயோகிக்கத் துணிந்து விட்டால் இப்படிப்பட்ட பிரதிநிதித்துவம் கழுத்தறுப்பாய் வந்து சேருமே அல்லாமல் கடுகளவாவது யோக்கியமான முறையில் பயன்படுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்
உதாரணம் சொல்ல வேண்டுமானால் சென்னை மாகாணத்தில் தலைசிறந்து விளங்கும் சென்னை நகரமானது இந்தியாவிற்கே அறிவிற் சிறந்த நகரம் என்பதோடு மிகுதியும் நாகரீகம் பெற்ற நகரம் என்றும் சொல்லக் கூடியதாகும்
அப்படிப்பட்ட நகரத்தில் ஒரு சாதாரண பார்ப்பனர், ஒழுக்கத்தில் எந்தத் துறையிலும் திருப்திகரமாய் இல்லாதவர், ஜீவனத்துக்கும் யோக்கியமான மார்க்கமில்லாதவர், நாணயத்திலும் அது போலவே கூறக்கூடியவர் தேர்தலுக்கு நின்றகாலத்தில் எதிர் அபேக்ஷகரின்
குடி அரசு- 1936 (1) 184
சுயநடத்தை நாணயத்தைப் பற்றியோ கொள்கை நாணயத்தைப்பற்றியோ ஒரு குறையும் கூறக்கூடாத நிலையில் உள்ள ஒருவர் விஷயத்தில் எதிரிகள்
சில காலிகளையும் சில கூலிப்பெண்களையும் விட்டு யாரோ ஒரு பெண்ணின் தாலி அறுத்து விட்டார் என்று வெங்காய ரசத்தை கண்ணில் தடவிக்கொண்டு அழச்செய்ததற்கு ஏமாந்து பின்னவருக்கு வோட்டுச் செய்யாமல் முன்னவருக்கு வோட்டுச்செய்துவிட்டார்கள் என்றால் மற்ற பட்டிக்காட்டுப் பாமரஜனங்கள் என்பவர்கள் ஏமாற்றப்படுவதில் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
இதுதான் ஒரு சமயம் சாதாரண பாமரமக்கள் ஓட்டு உடையவரா யிருந்ததால் ஏற்பட்ட பிசகு என்று சொல்லப்படுமானாலும் வருஷத்தில் 10000 ரூ. முதல் லட்ச ரூபாய்க்கும் மேலாகக் கூட வருமானமுடைய மக்கள், வியாபாரிகள், பாங்கர்கள் ஆகிய கூட்டத்தார்களே ஓட்டர்களாய் உள்ள வியாபாரத் தொகுதியில் ஓட்டராயிருப்பதற்கே லாயக்கில்லாதவரும், தவறுதலாய் ஓட்டர் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவரும், அரசியலிலும், பொருளியலிலும் கூட போதிய நாணயமில்லாதவருமான ஒருவர் அபேட்சகராய் இருந்த காலத்தில் எதிர் அபேட்சகர் விஷயத்தில் அந்த வியாபாரத் தொகுதிக்காரர்களால் எவ்வித குறைபாடும் குற்றமும் சொல்லக் கூடாதவராய் இருந்தும், பெரிய வியாபாரியும், வியாபார நிபுணராயும், உண்மையான செல்வந்தராயும், தகுந்த கீர்த்தியும் செல்வாக்கும் உடையவராயு மிருந்தவரைப் பற்றி ஜனங்களுக்கு அதாவது ஒரு ஓட்டருக்காவது புரியாத குறைகளைச் சொல்லி வேறு சிலரின் சுயநலங்களுக்காக துரோகம் செய்ய வசதியும் அவசியமும் அளித்து ஏமாற்றினார்கள் என்றால் பாமர மக்களுக்கு புத்தி இல்லை, ஓட்டுகளை தக்கபடி உபயோகிக்கத் தகுந்த அறிவில்லை என்பதோடு பெரிய பணக்கார வியாபாரிகளுக்கும்கூட பெரிதும் புத்தியில்லை, ஓட்டுகளைத் தகுந்தபடி உபயோகிக்கப் புத்தியில்லை என்று சொல்லுவதற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்
அன்றியும் இந்த மேற்படி எலக்ஷன்கள் நடந்து ஒரு வருஷம் முடிவதற்குள்ளாக வெற்றிபெற்ற கனவான்கள் என்று சொல்லப்பட்டவர்கள் யோக்கியதை உலகம் அறியும்படி வெளியாகியும் அதாவது பாமரமக்களை ஏய்த்தவர் தான் ஓட்டர்களுக்கு வாக்குத்தத்தம் செய்தது போல் நடக்கவில்லை. என்பதை உணர்ந்தும், மற்றொருவர் அதாவது பெரிய வியாபாரிகளையும் பாங்கர்களையும் பிரபுக்களையும் ஏய்த்தவர் உத்தியோகத் தோரணையில் கண்டிறாக்டு பெற்று ஸ்தல ஸ்தாபனத்தின் பணத்தை அனுபவிக்கிறார்கள் என்றும், ஏழைத் தொழிலாளி மக்களுக்கு மோசமும் துரோகமும் செய்து தான் சுயநலத்தை தேடிக்கொண்டார் என்றும், பட்டாங்கமாய் தெரிந்த பின்பும் பாமர மக்களுக்கோ, பணக்காரர்களுக்கோ புத்தி வரவில்லை என்றால் இந்த ஓட்டு உரிமைகள் சர்க்காரால் நமக்கு கொடுக்கப்பட்டது அறிவுடைமையா என்று கேட்கின்றோம்
18 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜில்லா போர்டு தேர்தல்களிலும் சாதாரணமாக 3 வருஷத்துக்கு முன்னால் ஒன்பது ஓட்டு பத்து ஓட்டுகளில் தெரிந்தெடுக்கும்படியாய் இருந்த ஒரு ஜில்லா போர்டு மெம்பர் ஸ்தானத்துக்கு இன்று ஒன்பது ஆயிரம் பத்து ஆயிரம் ஓட்டுகளால் தெரிந்தெடுக்கும்படியான ஓட்டுரிமை நமக்கு வந்ததில் பொய்யும் புளுகும் மாத்திரமல்லாமல் கள்ளும், சாராயமும் செலவழித்து ஓட்டுப் பெற வேண்டியதாயிற்றே ஒழிய மற்றப்படி பிரதிநிதித்துவத்துக்கு எவ்வித யோக்கியதையும் இல்லாமல் அசம்பளி வர்த்தகத் தொகுதிக்கு வெற்றி பெற்றவர் ஏழை மக்களை துரோகம் செய்துவிட்டு கண்றாக்டினால் பிழைக்கும்படியான செளகரியம் பெற்றது போல் இந்த கள்ளு, சாராயம், பொய், பித்தலாட்டம் ஆகிய இழி காரியங்களால் வெற்றி பெற்றவரும் ஏழை மக்களை துரோகம் செய்துவிட்டு கண்டிறாக்டில் பிழைக்க வேண்டியவர்களாகிறார்கள்
இதையும் நேரில் பார்த்துக் கொண்டிருந்தும்கூட மறுபடி மறுபடி அதேமாதிரி நடந்துவருகிறார்கள் என்றால், அரசாங்கத்தார் அளித்த ஓட்டுரிமை மக்களுக்கு எவ்வளவு ஆபத்தை உண்டாக்கக்கூடியதாய் இருக்கிறது என்பது வாசகர்கள் உணர ஆசைப்படுகிறோம்
குறிப்பாக வட ஆற்காடு ஜில்லாவில் இது சமயம் ஜில்லா போர்டு தேர்தல்கள் நடைபெறுகின்றதை ஒரு நடுநிலைக்காரன் பார்த்தால் நமது ஜனங்கள் அடிமைகளாக கூலிகளாக இருக்கத்தான் யோக்கியதை உடையவர்களே தவிர சுதந்திரத்துக்கோ விடுதலைக்கோ சிறிதும் அருகதை இல்லை என்றே சொல்லுவான்.
அபேக்ஷகர்களைப் பற்றி சொல்லாமலும், அபேக்ஷகரை வெளியில் காட்டாமலும் கிராமங்களுக்குப் போய் காந்திக்கு ஓட்டு போடுங்கள் என்று கேட்பதோடு எதிர் அபேக்ஷகர்களைப்பற்றி மிக்க இழிவான முறையில் பச்சையாக குறை கூறி ஏமாற்றப்படுகிறது.
இவைகள் எல்லாம் கையில் வலுத்தவன் காரியம்தான் என்று சொல்லுவதானாலும் கையில் வலுத்தவன் காரியமாவதற்கு அனுகூலமான செளகரியங்களைச் செய்து கொடுத்துக் கொண்டு வருவது அக்கிரமம் என்றும், தலைப்பில் காட்டிய ஓட்டுரிமை என்பதும் இம்மாதிரி கையில் வலுத்தவன் காரியத்துக்கு அனுகலமாயிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவே இதை எழுதுகிறோம்
அன்றியும் இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களினுடைய யோக்கியதை
களும் ஏதாவது ஒரு ஸ்தலஸ்தாபனத்தில் அங்கத்தினாகவோ தலைவராகவோ வெற்றி பெற்று விட்டால் அந்த வெற்றியானது வெற்றி பெற்றவர்களுக்கு
ஒரு வியாபாரம் போலவும், சிலருக்கு புதையல் போலவும் லாபமடையத் தக்க மாதிரி பயனளிக்கக் கூடியதாய் இருப்பதால் வியாபாரத்தில் வக்கீல் தொழிலில் திருட்டுத் தொழில் செய்யப்படவேண்டிய புரட்டு, வஞ்சகம்,
குடி அரசு - 1936 (1) 186
துரோகம், கொலை பாதகத் தொழில் ஆகிய காரியங்களை சிறிதும் தங்குதடையில்லாமல் செய்யக் கூடியதாகவும் செய்யவேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுகிறது. சாதாரணமாக எவ்வளவு சின்ன ஜில்லாபோர்டாக இருந்தாலும் இன்றைய நிலையில் ஜில்லாபோர்டு சட்டம் இருக்கிற நிலைக்கும், மந்திரி சபை இருக்கும் யோக்கியதைக்கும், அரசாங்கத்தின் தன்மைக்கும் பொருந்திப் பார்த்தால் ஒருவன் எப்படியாவது ஒரு ஜில்லாபோர்டு தலைவனாக ஆகி விட்டால் அவன் எவ்வளவு முட்டாளாகவும் யோக்கியனாகவும் இருந்தாலும் 3-வருஷ காலாவதிக்குள் ஒரு லக்ஷ
ரூபாய்க்கு குறையாமலும் சில ஜில்லாபோர்டுகளில் 3-லக்ஷ ரூபாய் போலவும் சம்பாதித்துக்கொள்ளக்கூடிய செளகரியம் இருப்பதை நேரிலும் அனுபவத்திலும் பார்த்து வருகின்றோம்
அதுபோலவே முனிசிபாலிட்டியிலும் ஒரு காலாவதியில் 20000-ரூ முதல் 100000-ரூபாய் வரை சம்பாதித்துக் கொள்ளக் கூடியதாய் இருப்பதுடன் அங்கத்தினர்களுக்கு இதற்குத் தகுந்த விகிதாசாரம் அடையும்படியாகவே இருந்து வருகிறது என்பது மாத்திரமல்லாமல் இம்மாதிரியான காரியத்திற்கு சமூகத்தில் எவ்வித இழிவும் இல்லாமல் மிக்க செல்வாக்கும் பெற்று சர்வசாதாரணமாய் பழக்கத்தில் அனுபவத்தில் நடக்கும்படியாகவும் அப்படிப்பட்டவர்களுக்கே பட்டம், பரிவட்டம், கவுரவம் முதலியவை முதலில் கிடைக்கும்படியாகவும் ஆகிவிடுகிறது
சில உத்தமர்கள் இருக்கலாம் இருக்கிறார்கள் என்றாலும் அப்படிப் பட்டவர்களுக்கு தனிமரியாதை இல்லாமலும் போய்விடுகின்றன.
இவற்றிற்கெல்லாம் காரணம் நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சிகள். ஏற்பட்டதும் சிறப்பாக காங்கிரசு என்றும் தேசாபிமானம் என்றும் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்கள் இதில் பிரவேசித்து இதன் மூலம் தங்கள். வாழ்வையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து அதற்கு ஏற்ற சூழ்ச்சிகள் செய்து கட்சி, பிரதி கட்சி, உள் கலகம் முதலியவைகள். செய்ததே ஒழிய மற்றபடி தமிழ் மக்களிடத்தில் இவ்வித குணம் அருமையாகவே இருந்தது
இப்பொழுதும் பொதுமக்களிடம் நாணயம் யோக்கியம் ஆகிய காரியங்கள் ஏற்பட வேண்டுமானால் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது இன்றைய நிலையில் இருக்கும் மாதிரி அடியோடு ஒழியவேண்டும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் காந்தி சகாப்தம் என்பது அழிந்து ஒழிந்து ஆயிரம் கஐ ஆழத்தில் புதைக்கப்பட்ட அன்றே மக்கள் யோக்கியதை காதாலாவது கேட்க முடியும் என்பதே நமது கருத்து. முனிசிபாலிட்டிகளும் ஜில்லாபோர்டுகளும் யோக்கியமாக நடைபெற வேண்டுமானால் மற்றொரு காரியம் நடைபெற்றாக வேண்டும்
187 ௨... 96பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அதாவது இவைகளுக்கு போடும் கமிஷனர்கள் கூடுமானவரை சுயமரியாதையுடன் நடந்து கொள்ளக்கூடிய செளகரியம் இருக்கும்படி சட்டங்களை திருத்தி தக்க கவுரவமுள்ள அதிகாரிகளைப் போடவேண்டும். இரண்டாவது ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமை வகிப்பவர்கள். சட்டசபையில் இருக்கவோ எட்டிப் பார்க்கவோ இடம் கொடுக்கக் கூடாது.
ஜில்லாப் போர்டிலும் மூனிசிபாலிட்டியிலும் பகல் கொள்ளை அடிக்கிறவன் சட்டசபையில் ஸ்தல ஸ்தாபன மந்திரி கூட சரி சமமாய் உட்கார இடம் கொடுத்தால் எவனுக்கு தான் திருட மனம் வராது என்று கேட்கின்றோம்.
ஸ்தல ஸ்தாபனங்கள் கொள்ளைக்காரர்கள் கூட்டத்தாருக்கு சரணாகதிபோல் கைவசப்பட்டதற்குக் காரணமும், ஸ்தல ஸ்தாபனங்களுக்குச் சென்ற யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்கள் ஆனதற்குக் காரணமும் ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் சட்டசபை மெம்பர்களானதுதான் என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
இன்று அரசாங்கம் இந்தியாவுக்குச் செய்த ஒரு பெருங்கேடு என்று ஏதாவது ஒன்றைச் சொல்லவேண்டுமனால் ஸ்தல ஸ்தாபனங்களை காலிகளும், கன்னெஞ்சக் கூட்டத்தார்களும் கொள்ளையடிக்கும்படி திறந்துவிட்டார்களே என்பதைத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது
அதுவும் இந்தியர்களுக்குக் கொடுத்த சுய ஆட்சி என்கின்ற பெயரால் கொடுக்கப்பட்டது? என்பதை நினைக்கும்போது இதில் அவர்களுடைய எண்ணத்தைக்கூட சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. ஆகவே எப்படியாவது அரசாங்கத்தார் பொதுஜனங்களுக்கும், ஏழை மக்களுக்கும் நேரடியான சம்மந்தமும் அவசியமும் இருக்கிற இந்த முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளை தங்கள் முழு சுவாதீனம் செய்துகொண்டு தங்களது நேரடியான ஆதிக்கத்தில் இருந்து நிர்வாகம் நடக்கும்படி செய்யவேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம்.
காந்தீயம் ஒழிந்த பிறகு வேண்டுமானால் மறுபடியும் பொதுஜனங்கள்
வசம் ஒப்புவிக்கலாமா என்பதுபற்றி யோசிக்கலாம் இப்போது ஸ்தல ஸ்தாபனங்களின் பணம் நாசமாவதையும் கொள்ளை போவதையும் பார்த்தும் உலகிலுள்ள அயோக்கியத்தனங் களுக்கெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்கள் தாயகமாய் இருப்பதைப் பார்த்தும் வயிறு எரிந்துதான் இதை எழுதுகிறோமே ஒழிய அவற்றில் உள்ள எந்த தலைவர்களையோ அங்கத்தினர்களையோ மனதில் வைத்து நாம் எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.03.1936
குடி அரசு- 1936 (1) 188
ஏமாந்தது யார்?
சர்க்காரா2? தேசாயா?
காங்கிரஸ்காரர்களுக்கு ஸ்திர புத்தியோ, சுய புத்தியோ, உறுதியான வேலைத் திட்டமோ கிடையாதென்பதற்கு புதுப்புது ருசுக்கள் பிரதி தினமும் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
1933-34 - வது வருஷத்திய “இந்தியா” என்ற சர்க்கார் அறிக்கையில், “திடீர் திடீர் என்று ஹரிஜன இயக்கத்துக்குப் பணம் கேட்கப்பட்டதினால் பொதுஜனங்களிடையே வெறுப்புத் தோன்றியதென்றும், இவ்வியக்கம் கேவலம் சமூகக் குறைபாடுகளைப் போக்குவதான சீரிய நோக்கம் மாத்திரம் கொண்ட இயக்கம் என்ற விஷயத்தில் சிலர் சந்தேகித்தது நியாயமாகும் என்றும், பீகார் பூகம்ப நிவாரண நிதிக்குச் சரியான கணக்கு வெளியிடப் படவில்லை யென்றும், நிவாரண விஷயத்தில் காங்கிரஸ்காரர் சர்க்காரோடு ஒத்துழைக்கவில்லையென்றும், அரசியல் நோக்கத்துடனேயே நிவாரண வேலைகள் நடத்தப்பட்டன என்றும் கூறப்பட்டிருப்பது காந்தியாரையும் அவரது இயக்கத்தையும் காங்கிரஸ் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாதையும் அவமதிக்கக் கூடியதாயிருக்கிறதென்று காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் பெருங்கூச்சல் போட்டதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். எனவே, சர்க்கார் அறிக்கையைக் கண்டித்து காங்கிரஸ்காரர்களின். மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்திய சட்ட சபையில் ஒரு ஒத்திவைப்பு அவசரப் பிரேரணை கொண்டுவரப் போவதாக “அவசரப் பிரேரணை நிபுணரான” தோழர் சத்தியமூர்த்தி சர்க்காருக்கு நோட்டீசும் கொடுத்தார். ஆனால் அந்த நோட்டீசைப் பார்த்து சர்க்கார் கலங்கவில்லை. சர்க்கார் அறிக்கையில் கூறியுள்ள அபிப்பிராயங்கள் சரியென ரூசுப்படுத்த சர்க்காரிடம் போதுமான தஸ்தாவேஜுகள் இருந்ததினால் அவசரப் பிரேரணை கொண்டுவரும் போது ஒரு கை பார்த்துவிடலாமென்று சர்க்காரும் வரிந்து கட்டிக்கொண்டு தயாராயிருந்தார்கள். கடைசியில் அவசரப் பிரேரணை கொண்டு வரும் சமயம் வந்தபோது, தோழர் சத்தியமூர்த்தி காரணம் கூறாமலே பிரேரணையை வாபீஸ் வாங்கிக்கொண்டார். அதைப் பார்த்து அசம்பிளி மெம்பர்கள் திகைப்படைந்தார்களாம். அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள்கூட ஆக்ளியப்பட்டார்களாம்.நியாய புத்தியுடைய பத்திரிகைகளும் தோழர் சத்தியமூர்த்தியைக் கண்டித்தன. உடனே நமது வீரர் சத்தியமூர்த்தி
189 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஒரு நொண்டிச் சமாதானம் வெளியிட்டார். "இரண்டொரு காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. இப்பொழுது நிலைமை தீர்மானத்துக்கு சாதகமாக இல்லை. வரவு செலவு திட்ட மானிய விவாத காலத்தில், சாதகமான நிலைமையை உண்டுபண்ணிக் கொண்டு, ஒரு வெட்டுப் பிரேரணை மூலம் இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்புவோம். “ நான் என் அவசரப் பிரேரணையை வாப்பீஸ் வாங்கிக் கொண்டதினால் குடி முழுகிப் போக வில்லை” என்று சமாதானம் கூறி தோழர் சத்தியமூர்த்தி மழுப்பினார். அந்த
மழுப்பல் சமாதானத்தைப் பலர் நம்பவில்லையாயினும் வரவு செலவு மான்ய விவாதத்தில் வெட்டுப் பிரேரணை மூலம் காங்கிரஸ்காரர் சாதிக்கப் போவதைப் பார்த்துவிடலாமென்று பொறுமையோடு காத்திருந்தனர். இம்மாதம் 9-ம் தேதி அசம்பிளி காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் புலாபாய் தேசாய் 1933-34-வது வருஷ “இந்தியா” என்ற சர்க்கார் அறிக்கையைக் கண்டிக்கு முகத்தான ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து, அவ்வறிக்கையில் அவருக்கு ஆட்சேபகரமாகத் தோன்றிய விஷயங்களையும் விளக்கிக் கூறினார். தீர்மானத்துக்குச் சாதகபாதகமாகவும் பலர் பேசினார்கள்.
கடைசியாக உள்நாட்டு மந்திரி ஸர் ஹென்ரி கிரேய்க்கு விவாதத்துக்கு பதிலளிக்கையில் கூறியதாவது:-
“சர்க்கார் அறிக்கையிலுள்ள விஷயங்களுக்கு தற்போதைய விளம்பர டைரக்டரோ அவருக்கு முந்திய டைரக்டர்களோ பொறுப்பாளிகளல்ல.: நானே அதற்குப் பொறுப்பாளி. தங்கள் அபிப்பிராயத்தைத் தவிர வேறு அபிப்பிராயமே இருக்கக் கூடாதென்று காங்கிரஸ் கட்சியார் கருதுவது விசித்திரமாக இருக்கிறது. ஒரே விஷயத்தைப் பற்றிப் பல பேர் பல விதமாய்த்தான் அபிப்பிராயப்படுவார்கள். சர்க்கார் அறிக்கையில் எவ்வித வர்ணனையும் கிடையாது; சப்பென்றிருக்கும்படியே எழுதப்பட்டிருக்கிறது. காங்கிரசை ஆதரிக்கும் அநேகம் பத்திரிகைகள் இவ்வறிக்கையைப் பாராட்டி யிருக்கின்றன. ஜனவரி 24-ந் தேதி வெளியான “டிரிப்யூன்” பத்திரிகையைப் படித்தபோது எனக்கே வெட்கம் உண்டாயிற்று. காங்கிரஸ்காரர் எவர் எழுதியிருந்தாலும் இவ்வளவு பூர்த்தியாகவும், வன்மையுடனும் எழுதியிருக்க முடியாதென்று அப்பத்திரிகை இவ்வறிக்கையைப் பற்றிக்
கூறியிருக்கிறது. முன்போலவன்றி, இவ்வருஷ அறிக்கையில் இந்தியப் பத்திரிகைகளின் அபிப்பிராயங்களை நிறைய மேற்கோள் காட்டியிருப்ப
தாகவும் அப்பத்திரிகை பாராட்டியிருக்கிறது
பல அங்கத்தினர்கள் டில்லிக்கு வந்த பிறகு சர்க்காரைக் கண்டிக்க என்ன விஷயங்கள் இருக்கின்றன என்று தேடியிருக்கிறார்கள். அதன்மேல் இந்த அறிக்கை அகப்பட்டுக் கொண்டது. அதுவரை காங்கிரஸ்காரர்களுக்கு இந்த யோசனை தோன்றவில்லை. ஆதி இந்து இயக்கம் சம்பந்தப்பட்டமட்டில், அறிக்கையிலுள்ள வாசகத்தைத் தவறாக மேற்கோள் காட்டி சில பத்திரிகைகள் ஜனங்களுக்கு ஆத்திரமுண்டாக்கியிருக்கின்றன.
குடி அரசு- 1936 (1) 190
ஆதி இந்து இயக்கம் ஜீவகாருண்ய நோக்கங்களை யன்றி இதர நோக்கங்களையும் கொண்டதாகச் சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள் என்றே
சர்க்கார் அறிக்கை கூறியிருக்கிறது. சர்க்கார் சம்பந்தபட்ட மட்டில் காந்தியின். இயக்கத்தில் சர்க்காருக்குத் துளிகூட சந்தேகம் கிடையாது. ஆனால். அறிக்கையில் சிலர் அபிப்பிராயமென்று குறிப்பிட்டதற்கு, போதிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. பத்துப் பன்னிரண்டு பத்திரிகை களிலிருந்து நறுக்கி எடுத்த அபிப்பிராயங்கள் என்னிடமிருக்கின்றன.
பிறர் இப்படி அபிப்பிராயம் கூறுகிறார்கள் என்று சர்க்கார் கூறியதற்காக சர்க்காரைக் கண்டிக்கலாகாது.
பீகார் பூகம்ப கஷ்ட நிவாரண நிதி சம்பந்தப்பட்ட மட்டில் ஸ்தல உத்தியோகஸ்தர்களைப் பண்டித ஜவஹர்லால் குறை கூறினார். அதை மேற்படி மாகாணத்தைச் சேர்ந்த சர். சுல்த்தான் அகமது, தோழர் சச்சிதாநந்த சின்ஹா முதலிய பிரமுகர்கள் மறுத்து, ஸ்தல அதிகாரிகளை பாராட்டி ஒரு பகிரங்க அறிக்கை வெளியிட்டார்கள். பூகம்பம் ஏற்பட்டவுடனே ஆரம்ப காலத்தில் சர்க்காரும் காங்கிரஸ்காரரும் ஒத்துழைத்தார்கள். பின்னர் வீடு கட்டுவது, மண்ணை அகற்றுவது ஆகிய முக்கிய இனங்களுக்குக் காங்கிரஸ் நிதியைச் செலவழிக்க முடியாதென்று காங்கிரஸ்காரர்கள் சொல்லி விட்டார்கள். ஆயினும் சர்க்காரின் வீடு கட்டும் திட்டத்துக்கு தங்கள் நிதியிலிருந்து 10 லக்ஷம் ரூபாய் அளிக்கலாமென்று பாபு ராஜேந்திர பிரசாத் கூறினார். ஆனால் காங்கிரஸ் பூகம்பக் கமிட்டி அவரது யோசனையை நிராகரித்து விட்டது எனவே காங்கிரசும், சர்க்காரும் ஒத்துழைக்கவில்லை, அவ்வருஷத்தில் செலவழியாமலே காங்கிரஸ் நிதியில் பாதி மீதியிருந்தது பத்திரிகைகள், முக்கியமான பீகார் பத்திரிகைகள், காங்கிரஸ் நிதியைப்பற்றித் தகவல். கிடைக்காததைப் பற்றிக் கண்டித்து எழுதி யிருக்கின்றன. சர்க்கார் அறிக்கையைத் தயார் செய்தவர் கூறியது நியாயம் என்பதற்கு மேற்படி பத்திரிகைகளின் அபிப்பிராயங்களை நான் மேற்கோள்களாகக் காட்ட முடியும். காங்கிரஸ் அறிக்கை மிகத் தாமதித்தே வெளிவந்தது. எனவே
சர்க்கார் அறிக்கையில் எவ்வித கெட்ட எண்ணத்தோடும் காங்கிரஸ் பீகார் பூதம்ப நிதியைப்பற்றி அபிப்பிராயம் எழுதவில்லை. நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு தமக்குத் தோன்றிய அபிப்பிராயங்களையே சர்க்கார் அறிக்கையைத் தயாரித்தவர் எழுதியிருக்கிறார்".
தோழர் புலாபாய் தேசாய்க்கு மேற்கூறியவாறு பதிலளித்த உள்நாட்டு மந்திரி ஹென்றி கிரேய்க்கு தயக்கமின்றியும் அச்சமின்றியும் பேசியிருப்பதைத் தோழர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் சர்க்கார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் தவறு என்று கூறவே யில்லை. அவை சரியென்று ருசுப்படுத்தத் தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாயும், மார்தட்டிக் கூறியிருக்கிறார். அதே மூச்சில் காந்தியார்
191 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இயக்கத்தால் சர்க்காருக்கு துளிகூட சந்தேகமில்லை யென்று அவர் சொல்லியிருக்கிறார். காங்கிரஸ்காரருக்குச் சாதகமாகவுள்ளது அந்த ஒரு வாக்கியமே. அது மரியாதைக் குறியான ஒரு சம்பிரதாயப் பேச்சேயன்றி வேறல்ல. காந்தியாரை மிகக் கடுமையாகக் கண்டிப்பவர்களுங்கூட அவரது அந்தரங்க சுத்தியைப்பற்றி சந்தேகப்படுவதில்லை. எனவே காந்தியியக்கத்தைப் பற்றி சர்க்காருக்கு சந்தேகமில்லை யென்று கூறியதினால் சர். ஹென்றி கிரேய்க்கு பணிந்து விட்டாரென்று கூறமுடியாது. சர்க்கார் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தப்பு என்று அவர் ஒப்புக்கொண்டாரா. என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். தப்பு என்று ஒப்புக் கொள்வதற்கு பதிலாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தம்மிடம் தக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்.
சவால் விடுத்தமாதிரி கூறியிருக்கிறார்.
ஸர். ஹென்றி கிரேய்க்கின் இந்த ஆண்மையான பேச்சுக்குத் தோழர் தேசாய் பதிலளித்திருப்பதையும் தமது கண்டனத் தீர்மானத்தை வற்புறுத்தாததையும் கடைசியில் அது தோற்கடிக்கப்பட்டதையும் பார்க்கும் போது காங்கிரஸ்காரரின் பேடித்தன்மையே நன்கு விளங்குகிறது
தாங்கள் அறியாமலே சர்க்கார் அநீதி புரிந்திருக்கலாமென்றும் யாரோ சிலர் அபிப்பிராயம் வேறு விதமாயிருந்ததென்று குறிப்பிடுவதே அறிக்கையைத் தயாரித்தவர் நோக்கமென்றும் உள்நாட்டு மந்திரி உணர்ந்திருப்பதை அவர் பேச்சின் தொனியால் காண்கிறேன். காந்தியாரைப்
பற்றி உள்நாட்டு மந்திரி நல்ல அபிப்பிராயம் தெரிவித்து விட்டதால் எனது கண்டனப் பிரேரணையை வற்புறுத்துவது அவ்வளவு அவசியமில்லையென நான் கருதுகிறேன்” என்று தேசாய் பல்டியடித்துவிட்டது மிகவும் நாணயமற்ற செயல் என்றும் கூறவும் வேண்டுமா? தோழர் தேசாய் என்ன மழுப்பினாலும் சரி, அவரது பேச்சு அவருடைய பலவீனத்தையே காட்டுகிறது. அவருடைய சமாதானம் ஒரு காங்கிரஸ் அரையணா தினசரிக்குக்கூடப் பிடிக்கவில்லை. உண்மையில் தோழர் தேசாய் பல்டியடிக்க தக்க காரணம் இல்லாமலுமில்லை. சர்க்கார் அறிக்கையிலுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மை என ருசுப்படுத்தும் தஸ்தாவேஜிகளை அசம்பிளியில் படித்துக்காட்டி காங்கிரஸ்காரர்களின் வாயை அடைக்கத் தேவையான முஸ்தீபுகளுடன் உள்நாட்டு மந்திரி ஸர். ஹென்றி கிரேய்க்கு அசம்பிளிக்கு வந்தார். காங்கிரஸ்காரர் மானங்கெடப் போவது அந்தப் புண்ணியவான் ஜின்னாவுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சம் சாந்தமாக, காந்தியைப்பற்றி சர்க்காருக்கு சந்தேகம் இல்லையென்று கூறி சமாளித்துவிட வேண்டுமென்று தோழர் ஜின்னா உள்நாட்டு மந்திரியைக் கேட்டுக் கொண்டாராம். தோழர் ஜின்னா சுயேச்சைக்கட்சித் தலைவர். அசம்பிளி வெற்றியும் தோல்வியும் அவரது கட்சி ஆதரவையே பொறுத்திருக்கிறது. அவரது உதவியை நாட வேண்டிய சந்தர்ப்பங்களும் சர்க்காருக்கு அடிக்கடி உண்டாகும். அரசியல்
குடி அரசு - 1936 (1) 192
ஒரு மாதிரி சொக்கட்டானாட்டந்தானே. எனவே உள்நாட்டு மந்திரியும், மசியவேண்டியதாயிற்று. தோழர் தேனய்க்கு பதிலளிக்கையில் முக்கியமான விஷயங்களை மறைக்கவில்லையாயினும் பேச்சின் காரத்தைச் சொற்பம் குறைத்துக்கொண்டார். தமது பேச்சுக்கு ஆதாரமான தஸ்தாவேஜிகளையும் அசம்பிளியில் பகிரங்கமாகப் படித்துக்காட்டவில்லை. எனவே சாது தேசாய் மூக்கறுபடாமல் தப்பித்துக்கொண்டார். தமது கண்டனத் தீர்மானத்தைத் தோழர். தேனாய் வற்புறுத்தாததற்கு இதுவே காரணம். தம் கட்சி நியாயமானதாயிருந்தால் தோழர் தேனாய் சும்மா இருந்திருப்பாரா? கையால் ஆகாததனாலேயே வெகு யோக்கியர் போல் நடந்து கொண்டார். கடைசியில் சர்க்காரை ஆட்டிவைக்கப் புறப்பட்ட தேசாய் தலையைத் தொங்கப்போட வேண்டியதாயிற்று. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் தோழர் சத்தியமூர்த்தி வாய்திறக்காமல் இருந்தது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. இவ்விஷயத்தில் தோழர் தேசாய் நடந்து கொண்ட முறை காங்கிரஸ் பத்திரிகைகளுக்கே பிடிக்கவில்லை யென்றால் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் அவமானத்தை நாம் விளக்கிக் கூறவேண்டுமா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.03.1936
193 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது
குதிரை திருட்டுப் போன பின்பு லாயம் பூட்டப்பட்டது என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது குதிரை லாயத்தை, குதிரை உள்ளே இருக்கும்போது சரியானபடி பூட்டாமலும், கவனிக்காமலும் விட்டுவிட்டு, குதிரை திருட்டுப்போன பின்பு கவனித்து லாயத்தை பூட்டி வைப்பது பைத்தியகாரத்தனம் என்று சொல்லுவார்கள். அதுபோலவே நமது ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் என்பவர்கள் காலா காலத்தில் செய்யவேண்டிய காரியங்கள் எதையும் கவனிக்காமல் விட்டு விட்டு, அக்கட்சிக்கு ஏற்படவேண்டிய கெடுதியும், குறைவும் எவ்வளவு ஏற்படவேண்டுமோ, அவ்வளவும் ஏற்பட்டபிறகு இப்போது கவலை கொண்டவர்கள் போல் காட்டிக்கொண்டு தாங்கள் யோக்கியமாய் நடந்து கொண்டதாக அன்னியருக்கு மெய்ப்பிப்பதற்கு முயற்சிப்பதில் என்ன நன்மை ஏற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை.
கட்சித் தலைவர் பொப்பிலிராஜா அவர்கள் தன்னால் கூடியதைத் துணிந்து செய்தார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவருக்கு எவ்வித ஒத்துழைப்பும் இல்லாமல் போனதாலும், மற்ற உபதலைவர்களுக்குள். பரஸ்பர நம்பிக்கையில்லாமல் போனதாலும் பல சந்தர்ப்பங்களில் அவரது நிலை அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதாலும் அவரது முயற்சி பலனற்றதாகப் போய் விடும்படி ஆகிவிட்டதுடன் அவரது மனமும் தளர்ந்துவிட்டது
மற்ற பல தலைவர்கள் என்பவர்களில் இன்னார் தான் இன்ன வேலை எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் போய்விட்டது
அசம்பளி எலக்ஷன் நடந்து ஒரு வருஷகாலத்துக்கு மேலாகின்றது. அவற்றில் இரண்டொரு தேர்தல்கள் ஏமாற்றப்பட்டு விட்டது என்று சொல்லப்பட்டாலும் மற்ற தேர்தல் முடிவுகள் அநேகமாய் பாமர மக்களிடம் பிரசாரமில்லாமையாலும், ஆங்காங்குள்ள பிரபலஸ்தர்கள் - தலைவர்கள் என்பவர்களின் கவலை ஈனத்தாலும் அபிப்பிராய பேதத்தாலும் ஏற்பட்டவை என்பது நன்றாய் விளங்கக்கூடிய காரியங்களாகும்
குடி அரசு- 1936 (1) 194
இந்தக் காரியங்களால் அசம்பளி தேர்தல் மாத்திரமல்லாமல் மற்றும் அடுத்து வந்த இரண்டொரு தேர்தல்களும் நமக்கு விரோதமாகவே முடிந்தன. இந்த முடிவின் பயனாய் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் கடுகளவு படிப்பினை கூட ஏற்பட முடியாமல் போனதோடு பயமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுபோய் எப்படியாவது தன் தன் காரியமே பிரதானம் என்று கருதி அதையே முக்கியமாய் கவனித்துக்கொள்ள வேண்டியதான உணர்ச்சியைக் கொடுத்ததே அல்லாமல் கட்சியின் பொது நன்மையைப் பற்றியோ, லட்சியத்தைப் பற்றியோ எல்லோரும் மறந்துவிட வேண்டியதாய் விட்டது
காலாகாலத்தில் செய்யப்படாத சிகிச்சையினால் வியாதி எப்படி முற்றிவிடக்கூடுமோ அதுபோல் அலட்சியத்திற்குத் தகுந்த அளவு பரிகாரம் சிரமமாய் போய்விட்டதுடன் அடியோடு நம்பிக்கை இழக்கவேண்டிய அளவுக்கு கொண்டு வந்து விட்டுவிடும் போல் இருக்கிறது
அசம்பளி தேர்தல் முடிவைக் கண்டவுடன் ஜஸ்டிஸ் தலைவர்கள் ஊர் ஜனங்களை திருப்திப்படுத்த ஒரு கூட்டத்தைக் கூட்டி ஜில்லாக்கள் தோறும் மகாநாடு நடத்துவதாகவும், கிராமங்கள் தோறும் பிரசாரம் செய்வதாகவும் திட்டங்கள் போட்டார்கள்.
ஆனால் ஜில்லாத் தலைவர்கள் சிலர் காங்கிரசுக்காரர்களுக்கு பயந்தும், சிலர் மகாநாடு கூட்டினால் வேறு யாருக்காவது செல்வாக்கு ஏற்பட்டுவிடுமோ என்றும், தங்களது வண்டவாளங்கள் வெளிப்பட்டுவிடுமோ. என்றும் பயந்து தாங்களாக எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்ததோடு செய்ய முயற்சித்த மற்றவர்களுடைய முயற்சிகளையும் அடக்கி ஒடுக்கி பாழ்படுத்தி விட்டார்கள். சிலர் காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர் களுக்கும் கைக்கூலி கொடுத்து காரியம் சாதித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.
பிரசாரம் என்றாலே ஜஸ்டிஸ் கடி தலைவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கின்றதே ஒழிய ஒருவருக்காவது அதில் நம்பிக்கை இருப்பதாகத் தெரியவே இல்லை. இதன் காரணம் பிரசாரத்தின் மூலம் வேறு யாராவது பெரிய மனிதர்களாகிவிட்டால் நம்ம கதி என்னாவது என்கின்ற குறுகிய
நோக்கம் சிலருக்கு இருப்பதே ஒழிய வேறில்லை.
அன்றியும் ஜஸ்டிஸ் கக்ஷித் தலைவர்கள் என்பவர்களில் சென்னைத் தலைவர்கள் சிலருக்கும், வெளி ஜில்லாத் தலைவர்கள் பலருக்கும் எவ்வித பதவியும், எந்த தேர்தல் போட்டியும் தனக்கு ஆவதாய் இருந்தால் ஆகட்டும் இல்லாவிட்டால் வேறு யாருக்காவதானாலும் தனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை என்கின்ற மனப்பான்மையே பெரிதும் இருந்து வருகிறது என்பதோடு தனக்கு ஆவதில்லை என்பது உறுதி. ஆனால் எதிரிகளுக்கு உதவி செய்யும் இழி தொழிலையும் கடைப்பிடித்து விடுகிறார்கள். இந்தத் தலைவர்களுடைய ரத்தத்தை எல்லாம் எடுத்து விட்டு புதிய சுத்த ரத்தத்தை
195 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இவர்கள் சரீரத்தில் பாய்ச்சினால் ஒழிய இப்போதைய பிரமுகர்களாலும், தலைவர்களாலும் கக்ஷிக்கு பயன் உண்டாகும் என்று சொல்லுவதற்கு
மிகவும் பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது. இவற்றை நாம் நமது அனுபவத்தில் இருந்து எழுதுகிறோமே ஒழிய மற்றபடி கோபத்தினாலோ, ஆத்திரத்தினாலோ எழுதவில்லை.
நிற்க, 15-3-36-p தேதி ஜஸ்டிஸ் சட்டசபை கட்சி பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒரு புதிய பஞ்சாயத்துக் கமிட்டியும், பிரசாரக் கமிட்டியும், பிரசார ஆபீசும் ஏற்பாடு செய்திருப்பதாய்ப் பத்திரிகைகளில் பார்த்தோம். இந்தக் கமிட்டிகளுக்கு இனி வேலை இருக்கிறதா என்பதும், வேலை இருந்தாலும் இக்கமிட்டி ஏதாவது வேலை செய்யுமா என்பதும் மிக மிக சந்தேகப்படக் கூடியதாகவே இருக்கிறது.
ஏனெனில் இதற்கு முன் இந்த மாதிரி ஏற்பாடு செய்த கமிட்டிகள்
எதுவும் சரியானபடி வேலை செய்ததாகத் தெரியவில்லை என்பதோடு. இவ்விஷயங்களில் எந்த தலைவருக்கு அல்லது எந்த மெம்பருக்கு உண்மையான அக்கரை இருக்கிறது என்பதும் விளங்கவில்லை
இக்கமிட்டிகள் போட்டதாக விளம்பரம் செய்வதெல்லாம் பொது ஜனங்களுக்கு நாங்களும் எங்களால் கூடியதைச் செய்தோம்” என்று சமாதானம் சொல்ல ஒரு சாக்குக்காக செய்யப்பட்டதாக இருக்கிறதே ஒழிய உண்மையில் இந்தக் கமிட்டிகளால் காரியம் என்ன நடைபெறக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
நாம் ஒன்று கேட்கின்றோம். ஆனால் நல்ல எண்ணத்தின் மீதும், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள எந்த அங்கத்தினர்களையும் விட அக்கட்சியின் நன்மையிலும், அச்சமூகத்தின் முற்போக்கிலும் சிறிதுகூட குறைந்தவரல்லாத நிலையிலும் இருந்துகொண்டே கேட்கின்றோம்
1930-ம் @ முதல் 1936-ம் @ வரை இந்த ஆறு வருஷ காலமாய் ஜஸ்டிஸ் கட்சியின் பொருட்டு பாமரமக்களிடம் ஏதாவது பிரசாரம் செய்யப்பட்டிருக்கிறதா என்றும், இந்த மாகாணத்தில் ஆங்கிலம் தெரியாத
4 கோடி மக்களுக்கு அரசியல் விஷயமும், கட்சி விஷயமும் புரியும்படி ஏதாவது மகாநாடோ, பத்திரிக்கைகளோ நடத்தப்பட்டிருக்கின்றனவா. என்றும் கேட்கின்றோம்
அசம்பளி தேர்தலில் கட்சியின் பேரால் ஒரு ஸ்தானம் கூட வெற்றி பெற முடியாமல் போனபிறகும் கூட தேச பாக்ஷ தினசரி பத்திரிகை ஆரம்பிக்காமலும், மகாநாடுகள் கூட்டப்படாமலும் ஒழுங்கான பிரசாரங்களுக்கு ஏற்பாடு செய்யாமலும் இருந்தால் அக்கட்சி உயிர் வாழமுடியும் என்று யார் தான் எதிர்பார்க்க முடியும்
சென்ற வருஷத்திலேயேஜஸ்டிஸ்கட்சியைப்பற்றி சர்க்காரதங்களுடைய வருஷாந்திர ரிபோர்ட்டில் ஜஸ்டிஸ்கட்சி ஒரு கட்டுப்பாடில்லாத -
குடி அரசு - 1936 (1) 196
சீர்குலைந்து போன கட்சி என்று எழுதினது யாவரும் அறிந்ததேயாகும் அதற்கு பதில் சொல்லும் முறையிலாவது யாரும் எந்தவித முயற்சியும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை
இப்பொழுது இந்த 3,4 மாத காலங்களில் திருநெல்வேலி, திருச்சினாப்பள்ளி, திருப்பாப்புலியூர் (கடலூர்) ஆகிய ஜில்லாபோர்டுகளில். பார்ப்பன ஆட்சியே வெற்றி பெற்று வருவதைப் பார்க்கிறோம்
இனி திருவண்ணாமலை, வேலூர் ஆகிய ஜில்லாக்களின் கதி எவ்வாறாகும் என்பதுபற்றி சந்தேகப்பட வேண்டிய அவசியமிருப்பதாய் தெரியவில்லை.
இதுபோலவே இனியும் பிரிக்கப்படப் போகின்ற ஜில்லா போர்டு தேர்தல்கள் விஷயமும் எப்படி ஆகும் என்று யோசிக்கவேண்டிய அவசியமிருக்காது என்றே கருதுகிறோம்
இதன் காரணங்கள் ககஷித் தலைவர்கள் சரியானபடி கவலை எடுத்து வேலை செய்யவில்லை என்பதல்லாமல் கக்ஷிக் கொள்கையினை குறையென்றோ, அவர்கள் தலைமை வைத்து நடத்தின நிர்வாகத்தில் ஏற்பட்ட குற்றத்தாலென்றோ யாராவது சொல்ல முடியுமா? ஒருக்காலும் முடியாது என்பதோடு சென்னை ஜஸ்டிஸ் கக்ஷவி மந்திரிகளின் நிர்வாகமும், சென்னை ஜஸ்டிஸ் கக்ஷி சட்டசபை நிர்வாகமும் இந்தியாவிலேயே வேறெந்த மாகாணத்திலும் நடந்திராத, நடத்த முடியாத அளவு அவ்வளவு திறமையாயும், முற்போக்காயும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் இந்த நிலை ஏற்பட்டதானது பாமர மக்கள் ஆதரவில்லை என்றால் பிரசாரக் குறைவும், பாமர மக்களை லக்ஷியம் செய்யாக் குறைவும் அல்லாமல் வேறு என்ன இருக்க முடியும் இப்பொழுது 15-3-36-ந் தேதியில் போட்ட பஞ்சாயத்துக் கமிட்டியும், பிரசாரக் கமிட்டியும் 15-3-35-ம் வருஷத்தில் போட்டு அதற்கு ஒரு 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி வைத்து 15 500 ரூ செலவில் ஒரு தமிழ் தினசரி ஆரம்பித்திருந்தால் இன்றைய நிலைமை நேர்மாறாக இருந்திருக்கும் அப்படிக்கு இல்லாமல் இப்போது கமிட்டி போட்டதில் தக்க பயன் இருக்குமென்று நம்புவதற்கில்லை.
பஞ்சாயத்து கமிட்டிக்கு இனிமேல் எந்த ஜில்லாவில் போய் என்ன. பஞ்சாயத்தோ சமாதானமோ செய்ய வேலை இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
திருநெல்வேலி ஜில்லா போட்டில் “காங்கிரஸ் சார்பாய்” தலைவர் வந்ததானது காங்கிரசின் கொள்கையாலா அல்லது ஜஸ்டிஸ் க்ஷி தலைவர்கள் என்பவர்களுக்குள் இருந்த சண்டையாலா என்பது யோசித்தால் விளங்காமல் போகாது
1977 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தோழர் தளவாய் முதலியார் அவர்கள் ராஜிக்குக் கட்டுப்பட்டார் அதாவது “எனக்கும் பிரசிடெண்ட் பதவி வேண்டாம். தோழர் ஈஸ்வரன் பிள்ளைக்கும் பிரசிடெண்ட் பதவி வேண்டாம். யாராவது மூன்றாதவர் ஒருவர் இருக்கட்டும்” என்றார்.
மற்ற கட்சியார் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கிடைத்தால் ஈஸ்வரன் பிள்ளைக்கு கிடைக்கட்டும், இல்லாவிட்டால் எப்படியேனும் போகட்டும் என்று சொல்லி பைசல் நடைபெறாமல் பாழக்கினார்கள். இதில் மந்திரிகள் ஆளுக்கொரு கட்சியை சார்ந்தவர்களாக ஆகிவிட்டார்கள்: இதுபோலவே திருச்சி விஷயமும். தோழர் தேவர் அவர்களுக்கும், தோழர் நாராயணசாமி பிள்ளை அவர்களுக்கும் இருந்த அபிப்பிராய பேதமும் இதில் மந்திரிகள் ஆளுக்கொரு கட்சியை அதரித்த காரணமும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் தலைவர் வரமுடியாமல் போய்விட்டது. இது போலவே திருவண்ணாமலை, திருப்பாப்புலியூர் முதலிய இடங்களிலும் ஏற்பட்டன. இந்நிலையில் இனி பஞ்சாயத்து போர்டாருக்கு என்ன வேலை இருக்கிறது என்பது விளங்கவில்லை:
பிரசார விஷயத்திலும் காங்கிரசுக்காரர்கள் % அணா வீதம் 3 தினசரியும், % அணா வீதம் 2 தினசரியும் போட்டு வெளுக்கிறார்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு பத்திரிகை எங்கே இருக்கிறது? பத்திரிகை இல்லாத வெறும் பிரசாரம் என்ன பலனை அளிக்கும் என்று யோசித்துப் பார்த்தால். நாம் வெற்றி பெறாததற்கு உள்ள காரணம் வெளியாகிவிடும் வட ஆற்காடு ஜில்லாவில் ஜஸ்டிஸ் கட்சி பிரசாரத்தைப் பற்றி எழுதிய செய்திகளை ஒரு தினசரி பத்திரிகை கூட பிரசுரிக்க வில்லையாம் அதற்கு மாறாக தப்பு செய்திகளை பிரசுரித்தனவாம். இதைப்பற்றி யார் கவனிக்கிறார்கள் இவற்றையெல்லாம் அறிந்தே ஒரு கால் அணா தினசரி பிரசுரிக்க நாம் எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு அரசாங்கத்தை டிக்ளரேஷன் கேட்டகாலத்தில் பெருவாரியான ஜாமீன் தொகை கட்ட வேண்டுமென்று உத்திரவு செய்துவிட்டார்கள். இதை கவனித்து ஒரு ஏற்பாடு செய்ய கட்சியில் நாதி இல்லாமல் போய்விட்டது. குடி அரசுக்கும் 2000 ரூ ஜாமீன் வாங்கி வைத்திருக்
கிறார்கள். அதையும் திருப்பிக் கொடுக்க அரசாங்கத்தார் மறுத்து விட்டார்கள். இதைப்பற்றி கேட்பதற்கும் நாதி இல்லாமல் போய் விட்டது மாகாணத்தலைவர்கள் நிலை இப்படி என்றால் ஜில்லாத் தலைவர்கள் நிலை சொல்லவே வேண்டியதில்லாத நிலையில் இருக்கிறது
எந்த ஜில்லா தலைவர்களும் தனக்கு ஏதாவது சொந்தத்தில் கிடைக்குமா என்று பார்க்கிறார்களே ஒழிய கட்சியின் பேரால் வெற்றி
குடி அரசு- 1936 (1) 198
என்பதை வேப்பங்காய் போலவே கருதுகிறார்கள். “தனக்கில்லாவிட்டால் அது எப்படியேனும் போகட்டும் என்கிறார்கள்”. இம்மாதிரி கவலையுள்ள தலைவர்களைக் கொண்ட கட்சி வெற்றி பெறாதது அதிசயமாகுமா என்று கேட்கின்றோம்
இந்த 3 வருஷகாலமாக நாம் சொந்த கைப்பொறுப்பு செலவுடனும் சிறைவாசம், அபராதம், பறிமுதல், ஜாமீன் கட்டுதல் முதலிய சர்க்கார் தொல்லைகளுடனும் செய்து வந்த பிரசாரத்தின் பலன்களும் கூட தலைவர்களின் இம்மாதிரி நடவடிக்கைகளால் சிறிது கூட பயன்படாமல் போய் விட்டதை நினைக்கும் போது ஆத்திரம் வராமல் இருக்க முடியவில்லை.
என்றாலும் இனியாவது எந்தத் தீர்மானமும் காகிதத் தீர்மானங்களாய் இல்லாமல் காரியதீர்மானமாக இருக்கும்படிஆங்காங்குள்ள முக்கியஸ்தர்களின் பிணக்குகளை சமாதானம் செய்தல், பிரசாரம் செய்தல், பத்திரிகைகள் நடத்துதல் ஆகிய மூன்றுக்கும் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யவேண்டு மென்று கட்சித் தலைவர்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 22.03.1936
19 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மந்திரத்திணால் மாங்காய் விழுமா?
வைதீகப்பழமான பண்டித மதன்மோகன மாளவியாவும் ஒரு சீர்திருத்தக்காரராம். அவருடைய சீர்திருத்தப்போக்கு மகா விநோதமானது. தீண்டாதார் தீக்ஷ்பெற்றுவிட்டால் ஏனைய இந்துக்களைப் போல அவர்களும் ஆலயங்களுக்குள் போகலாம்; சுவாமி தரிசனம் செய்யலாம் என்பது அவருடையகருத்து. ஆனால் தீண்டாமையைப்பற்றி ஸநாதனிகளுக்குள்ளேயே அபிப்பிராய பேதமிருந்து வருகிறது. பண்டித மாளவியா கோஷ்டியார் வேத சாஸ்திரங்களில் தீண்டாமைக்கு ஆதரவில்லை யென்கிறார்கள். ஏனைய மாறுதல் வேண்டாத ஸநாதனிகள் உண்டு என்கிறார்கள். மாறுதல் வேண்டாத ஸநாதனிகளும் அவர்களை ஆதரிப்பவர்களுமே அதிகமாயிருக்கிறார்கள். எனவே தீண்டாதார் துயரம் அவ்வளவு சுளுவாக நீங்குமென்று நம்புவதற் கில்லை. தீண்டாமையை ஒழிக்க எத்தனையோ பேர் இதற்குமுன் முயன்று பார்த்தும் பயன் ஏற்படாததினாலேயே மத மாறியாவது சுயமதிப்பைப் பெறுங்கள் என்று டாக்டர் அம்பேத்கார் தம் இனத்தாருக்கு யோசனை கூறுகிறார். அவர் யோசனைப்படி பலவிடங்களில் பலர் மத மாறியும் வருகிறார்கள். எனவே ஹிந்து அரசியல்வாதிகளுக்கு கிலி பிடித்திருக்கிறது. தீண்டாதார் மதம் மாறி விட்டால் ஹிந்துக்களின் அரசியல் பலம் குறைந்துவிடும் எனவே தீண்டாதாரை மேலும் ஹிந்து மதத்துக்குள்ளேயே வைத்திருக்க பண்டித மாளவியா போன்ற அரசியல் ஸநாதனிகள் பெருமுயற்சி செய்து
வருகிறார்கள். சென்ற மஹாசிவராத்திரி காலத்து கங்கைக்கரையிலே அநேக தீண்டாதாருக்கு பண்டித மாளவியா தீக்ஷா மந்திரம் உபதேசம் செய்து “சுத்தி"ப்படுத்தியதை நண்பர்கள் அறிந்திருக்கலாம். சென்ற 17ந் தேதியும் நாசிக்கில் அநேக தீண்டாதாருக்கு பண்டித மாளவியா தீக்ஷா மந்திரம் உபதேசம் செய்தாராம்
நாசிக் ராமசாமி ஆலயத்தில் தரிசனம் செய்ய நாசிக் தீண்டாதார் வெகுகாலமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். சத்தியாக்கிரகமும் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. எனவே தீக்ஷா மந்திரம் மூலம் அவர்களை சுத்திப்படுத்தி ஆலயத்துக்கு அழைத்துச் செல்ல பண்டித மாளவியா முயன்று பார்க்கிறதாகத் தெரிகிறது. நாசிக் ஸநாதனிகளும் மாளவியா கோஷ்டியாரும் தீண்டாமை விஷயமாக விவாதம் நடத்திப் பார்த்தார்கள். பலம் பூச்சியம்தான். “ஐயோ அந்த வம்பர்களிடம் வாதம் செய்து ஜெயிக்க முடியாது” என்று சாது மாளவியாவே வாய்விட்டுக்
குடி அரசு - 1936 (1) 200
கூறிவிட்டாராம். “என்னாலான மட்டும் முயன்று பார்த்தேன். திருப்தியான. பலன் கிடைக்கவில்லை" என்றும் ஒப்புக்கொண்டாராம். தீண்டாமையை ஒழித்து, ஒடுக்கப்பட்டவர்களை முன்னேற்ற பண்டித மாளவியா உண்மை யாகவே ஆசைப்படலாம். அவரது அந்தரங்க சுத்தியைப்பற்றி நமக்குச் சந்தேகமே இல்லை. ஆனால் தீண்டாமையை ஒழிக்க அவர் கையாளும் முறை பலனளிக்கக் கூடியதுதானா என்பதே கேள்வி. முதலில் ஓடுக்கப் பட்டவர்களுக்கு தீக்ஷா மந்திரம் உபதேசம் செய்யத் தேவையென்ன? ஹிந்துக்கள் அல்லாதவர்களை ஹிந்து மதத்தில் சேர்க்க தீக்ஷா மந்திரம் உபதேசம் செய்தால் அதற்குப் பொருளுண்டு. ஓடுக்கப்பட்டவர்களும் ஹிந்துக்களே என்று பண்டித மாளவியா ஒப்புக்கொண்டிருக்கையில் அவர்களுக்கு தீக்ஷா மந்திரம் உபதேசம் செய்வது அவர்களை அவமதிப்பதே
யாகும். சுயமரியாதையுடைய ஆதி இந்துக்கள் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீக்ஷா மந்திரம் உபதேசம் செய்வதினால் அதி இந்துக்களிடம் பிறவியிலேயே ஏதோ குறை இருப்பதாகக் கருதப்படு
கிறது. உண்மையில் அத்தகைய குறைகள் எதுவுமில்லை. ஆதி இந்துக்களும் இந்துக்களானால் அவர்களும் ஏனைய இந்துக்களுக்கு ஒப்பானவர்களே. எனவே பண்டித மாளவியாவின் சீர்திருத்த முயற்சிக்கு அர்த்தமே இல்லை. இம்மட்டோ? அவருடைய முயற்சி ஆதி இந்துக்களை அவமதிக்கக் கூடியதாக இருக்கிறது பண்டித மாளவியாவின் மந்திரோபதேசத்தினால் தீண்டாமை யொழியவும் செய்யாது. பண்டிதரிடம் தீக்ஷா மந்திரோபதேசம் பெற்றவர்கள், தீக்ஷை பெற்ற தீண்டாதவரா யிருப்பார்களேயன்றி இந்துக்கள் ஆகிவிட மாட்டார்கள். தீண்டாமைக்கு அடிப்படையாயுள்ளது ஜாதி. ஜாதி ஒழியாமல் தீண்டாமை ஒழியவே செய்யாது. ஆகவே பண்டித மாளவியாவின் முயற்சி வீண் முயற்சியாகும்.
குடி அரசு - கட்டுரை - 22.03.1936
201 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தமிழ்ப் யெரியார் மறைந்தார்
பண்டிதர் தோழர் கா. நமச்சிவாய முதலியார் பிரிவினால் தமிழகத்தாருக்கு ஏற்பட்டிருக்கும் துக்கத்தில் நாமும் மனமாரப் பங்கு கொள்ளுகிறோம். பிறந்தாரெல்லாம் இறப்பது இயற்கையாயினும் நாட்டுக்கும், மக்களுக்கும் நலம் செய்வோர் பிரிவு நாட்டு மக்கள் உள்ளத்தைப்
பெரிதும்துக்கத்தில் ஆழ்த்தச் செய்யும். தற்காலத்துத் தமிழர் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் மிகச் சிலரே. எனவே, கண்மூடும் வரை தமிழர் நலத்துக்காக அல்லும் பகலும் உழைத்துள்ள ஒரு பெரியார் பிரிவை யார்தான் தாங்கவல்லார்? தமிழ் மொழிக்கு தோழர் முதலியார் செய்த தொண்டு மலையினும் பெரியது; கடலினும் அகன்றது. தமிழ் உரைநடைக்கு முதன் முதல் அடிகோலிய ஆறுமுக நாவலருக்குப் பிறகு நூற்றுக்கணக்கான வசன. நூல்கள் இயற்றி தமிழ் செம்மையுறச் செய்த பெருமை காலஞ்சென்ற முதலியாருக்கே சொந்தம். வட மொழிச் சொற்களை அறவே வெறுக்கும் தமிழபிமானியல்ல அவர். இன்றியமையாவிடத்து வடமொழிகளை ஆளுவதே அவரது போக்காயிருந்தது. அவரது நடை எளிதாயும், இனிதாயும், தெளிவாயும் விளங்குகிறது. அவர் எழுதிய நூல்கள் தமிழிலக்கியத்துக்கு அழகு செய்யும் அணிகலன் என்பதற்கும் சந்தேகமே இல்லை. தமிழ் மொழிக்கு இவ்வண்ணம் அரிய சேவை செய்த தோழர் முதலியார் பெயர் அழியாதிருக்கும்படி ஏதேனும் ஒரு ஞாபகச் சின்னம் நிறுவ தமிழகத்தார் முன்வரவேண்டுவது தமிழ் வளர்ச்சிக்கு ஞாபகக் குறிப்பிடுவதாகும். முதலியார் பிரிவால் வாடும் மக்களுக்கும், சுற்றத்தாருக்கும் நமது ஆழ்ந்த அநுதாபம் உரியதாகுக!
குடி அரசு - இரங்கற் செய்தி - 22.03.1936
குடி அரசு - 1936 (1)
N 5
ஜவஹர்லால்
ஜவஹர்லால் ஒரு பெரிய வீரர் என்பதும், சமதர்மவாதி என்பதும் பலருடைய அபிப்பிராயம்.
ஜவஹர்லால் எந்த முறையில் வீரர் என்பதும் எந்த முறையில் சமதர்மவாதி என்பதும் தெரிய வேண்டுமானால் பார்ப்பனர்கள் அவரை வீரரென்றும், சமதர்மவாதி என்றும் செய்யும் பிரசாரத்தைத் தவிர வேறு எவ்வித உதாரணமும் காண முடியாது என்றே சொல்லுவோம்.
சமதர்ம சம்பந்தமாய் இதற்கு முன் பேசிய பலருடைய அபிப்பிராயத்தை சிற்சில சந்தர்ப்பங்களில் கிளிப்பிள்ளை போல் பேசி விட்டது ஒன்றைத் தவிர வேறு ஒரு காரியத்திலும் அவர் சமதர்மவாதி என்று சொல்லும்படி இதுவரை நடந்து கொண்டவரல்ல. அவருடைய சமதர்மம் நடவடிக்கை, சர்க்காரிடம் காந்தியார் தான் இனி சட்டம் மீறுவதில்லை என்றும், சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்றும்
வாக்குக் கொடுத்து விடுதலையாகி வந்த “ராஜியை” ஒப்புக்கொண்டபோதே நன்றாய் விளங்கிற்று அதை மறுக்க அவர் ஒரு இடத்தில் அது ராஜி அல்லவென்றும், மறுதடவை சண்டைக்கு தயாராவதற்கு ஓய்வெடுத்துக் கொள்ளுவது என்றும் சொல்லி அதன் பேரில் சர்க்கார் நடவடிக்கை எடுக்க இருந்ததை
மறுபடியும் காந்தியார் தலையிட்டு அந்த வாக்குமூலத்தை மாற்றி வைக்க வேண்டி வந்தது. பிறகு அவருடைய ஞானத்தைப் பற்றியும் நாம் அதிகம் கூறவேண்டியதில்லை. தகப்பனார் எலும்பையும் மனைவியார் எலும்பையும் அவர்கள் “ஆத்மா மோக்ஷ£மடைய கங்கையில் கரைத்து கிரியை செய்தது ஒன்றே போதுமானது
இந்தக் காரணங்களாலேயே மேல்நாட்டு சமதர்மவாதிகள் கூட்டத்திலிருந்து அவர் விலக்கப்பட்டார். இந்த வீரர் தகப்பன் பணக்காரராய் இருந்தார் என்பதற்காகவும், காந்தியாருக்கு வேண்டிய குடும்பஸ்தர் என்பதற்
காகவும் இந்தியத் தேயிலையை விட அதிகமாக விளம்பரம் செய்யப்படுகிறார்.
தமிழ்நாட்டு இளைஞர் பலருக்கு வேறு போக்கிடம் இல்லாமல் போய்விட்டதாலும், காங்கிரசுக்கு அறிவாளிகளிடத்தில் இழிவு ஏற்பட்டு விட்டதாலும், சுயமரியாதைக் கட்சி பார்ப்பனர்களுக்கு எமனாய் போய்
203 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விட்டதாலும் இளைஞர்கள் பலர் ஜவஹர்லாலுக்கு ஜே போட்டு தேச பக்தர்களாக வேண்டியதாய் விட்டது. பார்ப்பனர்களும் அவரைக் காட்டி ஏமாற்ற வேண்டியதாய் விட்டது
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் போலவே ஜவஹர்லால் அவர்களும் வாயில் எவ்வளவு சமதர்மமும் பொது உடமையும் பேசினாலும் காரியத்தில் பார்ப்பனீபத்தை விட்டுக் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது பயித்தியகாரத் தனமேயாகும்.
காங்கிரசை கஷ்ட நிலைமையில் இருந்து காப்பாற்றவே இது சமயம் ஜவஹர்லாலுக்கு காங்கிரஸ் வேஷம் போட்டு மேடையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்களே ஒழிய ஜவஹர்லாலுக்கும், அவர் வாயில் பேசும் கொள்கைக்கும், காங்கிரசுக்கும் கடுகளகாவது சம்பந்தம் இருக்கும் என்று யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.
வேலை இல்லாத் திண்டாட்டத்தின் பலனாக தேசத்தில் பத்திரிக்கைகள். தாராளமாகப் பெருகிவிட்டன.
அனேகர் பத்திரிகையின் பேரிலேயே தங்கள் ஜீவனத்தையும், வாழ்க்கையும் நிர்மாணித்துக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தாருக்கு
மதம் தேசம் என்கின்ற இரண்டைத் தவிர வேறு வழியில் வாழவோ, பத்திரிக்கையை நடத்தவோ யோக்கியதை இல்லாமல் போய்விட்டது என்பதோடு, இந்த இரண்டுக்கும் பார்ப்பனர்களே வழிகாட்டிகளாக ஆகிவிட்டதால், அவர்கள் போட்ட தண்டவாளத்தின் மீதே மற்றவர்கள் பத்திரிகை அபிப்பிராயம் என்னும் ரயில் போக வேண்டியிருப்பதால் அவர்களுக்குப் பின் ஜவஹர்லால் இருந்துகொண்டு கோவிந்தாப் போடுவதைத் தவிர மற்றப்படி பத்திரிகைக்காரர்களுக்கு வேலையும் யோக்கியதையும் இல்லாமல் போய்விட்டது. ஆதலாலேயே ஜவஹர்லாலும் வீரராக விளம்பரப்படுத்தப்பட்டு விட்டார்.
ஆனால் இவர் காங்கிரசுத் தலைமை வகிக்க ஆரம்பித்த பிறகுதான். காங்கிரசிலுள்ள அபேதவாதிகளுக்கு காங்கிரசினிடம் சுத்தமாக நம்பிக்கை அற்றுப்போகும்படியான காலம் வந்து அவர்கள் காங்கிரசை விட்டே விலகும்படியான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
வடநாட்டு சமதர்ம வாதிகள் காங்கிரசிலிருந்து விலகுகின்ற காலத்தில் தென்னாட்டு சமதர்ம வாதிகள் காங்கிரசில் அதிக நம்பிக்கை வைக்க ஆரம்பிப்பது; சமதர்மத்தின் தன்மையை தென்னாட்டு வாலிபர்கள். உணர்ந்த யோக்கியதையை விளக்குவதாகின்றதே ஒழிய மற்றபடி வேறில்லை. எதுஎப்படிஇருந்தபோதிலும் தோழர் ஜவஹர்லால் காங்கிரசில் தலைமை வகிப்பதினால் காங்கிரஸ் சற்று அதிகமான விளம்பரத்துக்கு பயன்படுமே ஒழிய யோக்கியமான காரியம் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதோடு.
குடி அரசு - 1936 (1) 204
புரட்டும், பித்தலாட்டமும், சூழ்ச்சியும், அயோக்கியத்தனங்களும் இப்போதிருப் பதைவிட 1க்கு 1. ஆக பெருகும் என்பது மாத்திரம் நிச்சயமான காரியமாகும்
உத்தியோகம் பதவி முதலியவைகளை பார்ப்பனர்கள் எப்படியாவது அடையவேண்டும் - மற்ற சமூகத்தாரை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதே ஜவஹர்லால் தலைமையில் நடக்கப்போகும் காங்கிரசின் முடிவு என்பதை இப்போதே ஜோசியம் கூறிவிடுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.03.1936
205 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பிராணனை விட்டது
மதம் மாறுவதற்கா?
இந்து மதத்தில் இருப்பதற்கா?
நாசிக்கில் விச்சிராம் யாதவன் என்ற ஆதிதிராவிட சிறுவன் ஒருவன் தான் தோட்டியாய் இருப்பதில் அவமானமும், வெறுப்பும் அடைந்து தற்கொலை செய்து கொண்டான். இதை பார்ப்பனர்கள் “அச்சிறுவன் மதம் மாறுவதற்கு இஷ்டப்படாமல் தற்கொலை செய்து கொண்டான்" என்று
எழுதி திரித்துக் கூறி இப்போது இந்து மதத்திலிருந்து மதம் மாறவேண்டும் என்கின்ற உணர்ச்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஏற்பட்டிருப்பதை அடக்க அதை ஒரு சூழ்ச்சியாய்க் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் அயோக்கியத்தனத்தைக் காட்ட மற்றொரு உதாரணமேயாகும்
விச்சிராம் யாதவன் என்கின்ற தோட்டிக்கு வயது 18. அச்சிறு வயதிலேயே அவனுக்கு தோட்டி வேலை பிடிக்கவில்லை என்பது இயற்கையேயாகும். அதற்காக அவனுக்கு வேறு மார்க்கமும் இல்லை ஜாதி இழிவும், ஜாதி தொழில் கொடுமையும் நீங்குவதற்காக அச்சமூகத் தலைவர்கள் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாயின. அது சம்மதமாய் இந்துத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பொய்யாயின.
கடைசியாக அவர்கள் (இந்துத் தலைவர்கள்) தீண்டாதவர்கள் பேரால் பணம் வசூலித்து வயிறு வளர்க்க ஆரம்பித்ததையும், இனியும் பலர் அதை ஒரு ஜீவனோபாயமாகக் கொண்டு இருப்பதையும் பார்த்த பின்பு இனி இந்து மதத்தில் இருப்பது கூடாது என்று முடிவு செய்து கொண்டான்.
மதம் மாறுவதால் பயன் ஏற்படாது என்று இந்து மத விஷமக் காரர்களும், அயோக்கியர்களும் செய்த பிரசாரத்தையும் நம்பிவிட்டான். ஆகவே இந்த இழிவிலிருந்து நீங்க வேண்டுமானால் செத்துப் போனால்தான் முடியும் என்று கருதி உயிர் விட்டு விட்டான்.
மதம் மாறுவது குற்றம் என்று அச்சிறுவன் கருதி இருப்பானேயானால் அவன் உயிர்விட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் குஷாலாக இந்து தோட்டியாகவே இருந்து கொண்டிருக்கலாமல்லவா? அவனை மதமாறும்படி யாரும் நிர்பந்தப்படுத்தவில்லை என்பதோடு எந்த
மதத்தாரும் அவனை அழைக்கவுமில்லை
குடி அரசு - 1936 (1) 206
இந்து மதத்தில் தீண்டாதவனாய் இருப்பதும், தோட்டியாயிருப்பதும் மதம் மாறுவதைவிட மேலான காரியம் என்று அவன் கருதி இருப்பானே யானால் ஒருக்காலும் செத்து இருக்கமாட்டான், மற்றவர்களுக்கு மதம் மாற வேண்டாம் என்று எடுத்துச் சொல்லி பெரிய சாமியாராயிருப்பான். அப்படிக்கில்லாமல் மதம் மாறுவதை விட பிராணனை விடுவது மேல் என்று கருதினான் என்பது உண்மையானால் இப்போது அவனைப்போல் அனேகர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். தீண்டப்படாதவர்களாய் தோட்டிகளாய் இருப்பதை விட உயிர் விடுவது மேல் என்று பலர் கருதுவதாலேயே அனேகர் பல கோடிப் பேர்கள் இந்த ஆயிரம் வருஷமாக வேறு மதம் மாறி சமூகத்தில் சுதந்திரமும் சுயமரியாதையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
மற்றும் பலர் இப்போது மதம் மாறவேண்டும் என்று தீர்மானித்து வருகிறார்கள்; மதம் மாறியும் வருகிறார்கள்.
கொச்சி, திருவாங்கூர் ராஜ்ஜியங்களில் தீயர், ஈழவர் சமூகத்தார்
நேற்றுக்கூட மகாநாடு கூடி இந்து மதத்தில் இருந்து விலகுவது என்று தீர்மானித்து விட்டார்கள். நாசிக்கிலும் அனேக ஆதிதிராவிட சாமியார்கள் சாதுக்கள் ஆகியவர்கள் மகாநாடு கூடி மதம் மாறுவதாக தீர்மானித்து இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கல் மனப் பார்ப்பனர்கள் இவற்றிற்கு போக்கிரித்தனமாகவும், விஷமத்தனமாகவும் வியாக்கியானம் செய்வதன் மூலம் மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்களே ஒழிய இக்கொடுமைக்கு எவ்வித பரிகாரமும் செய்ய முன் வந்தவர்கள் அல்லர். ஆகவே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் சுயமரியாதை உள்ளவர்கள் விச்சிராம் யாதவனைப் போல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், தற்கொலை செய்துகொள்ள இஷ்டமில்லையானால் இந்துமதத்தை விட்டு தீண்டாமை இல்லாத மதம் புகவேண்டும். இரண்டும் இல்லாமல் தீண்டாதவனாய் பறையனாய், சக்கிலியாய், தோட்டியாய் இருந்து உயிர் வாழ்வது சுயமரியாதை அற்றதன்மை என்பதோடு பார்ப்பனர்களிடம் கூலி பெற்று மதம் மாறவேண்டாம் என்று தன் சமூகத்தாருக்கு சொல்லுவது தோட்டி வேலை செய்து ஜீவிப்பதைவிட இழிவான காரியம் என்றுகூறுவோம்.
குடி அரசு - கட்டுரை - 22.03.1936
207 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
திருத்துரைப்பூண்டி - தஞ்சை ஜில்லா
5 வது சுயமரியாதை மகாநாடு
ஆம் - ஆம் பொது உடமைப் பிரசாரம் நிறுத்திக்கொண்டேன்.
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்துத் தீருவேன்
தோழர்களே!
சுயமரியாதை இயக்கம் மிக நெருக்கடியில் இருப்பதாகவும்,
சீக்கிரத்தில் செத்துப் போகும் என்றும் இங்கு சொல்லப்பட்டது
இயக்கம் ஒன்றும் நெருக்கடியில் இல்லை என்பது என் அபிப்பிராயம். சிலருக்கு அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பை உத்தேசித்து அப்படித் தோன்றலாம். அதற்கு நான் காது கொடுக்க முடியாது. இந்த இயக்கம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு அனேகர் தங்கள் சுயநலத்துக்கு செளகரியமில்லாதது கண்டு இது போலவேதான் இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது, செத்துப்போய் விட்டது என்று சொல்லிக்கொண்டே
போய்விட்டவர்களும், வெளியில் போய்விட்ட பின்பும் அவர்களால் கூடுமானவரை தொல்லைக் கொடுத்துக் கொண்டு இருந்தவர்களும் இருக்கிறவர்களும் திரும்பி வந்தவர்களும் பலர் உண்டு. அப்படிப்பட்டவர் களையும் அவர்களது விஷமங்களையும் பற்றி நான் சிறிதும் லக்ஷியம் செய்வதில்லை. அந்தப்படி நான் அலக்ஷியமாய் இருந்துவிட்டதால் இதுவரை இயக்கத்துக்கோ, எனக்கோ யாதொரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. இயக்கம் போய்விட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டுதான் திரிகிறார்கள்.
இயக்கம் எங்கு போய் விட்டது. அவர்களை விட்டு விட்டுப் போய் விட்டது. அவ்வளவுதான்.
இப்போதும் சொல்லுகிறேன் இயக்கத்தின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கருதியிருக்கும் எப்படிப்பட்டவர்களுக்கும் இயக்கத்தில் இடம் கிடைக்காது. அவர்கள் யாரானாலும் சரி, இயக்க வளர்ச்சியைவிட இயக்கத்தில் சுயநலம் கருதுபவர்களை கவனிப்பதே என் வேலை. அதனால் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தயாராய் இருந்து கொண்டுதான்
இப்படிச் சொல்லுகிறேன்.
குடி அரசு - 1936 (1) 208
எந்த இயக்கமும் அதிதீவிர கொள்கையில்லாததால் கெட்டுவிடாது இயக்கத்தைத் தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கம் அதனாலேயே மறைந்து போய் இருக்கிறது. மற்றபடி யாருடைய எதிர்ப்பும், யாருடைய தொல்லையும் இருந்தாலும் இயக்கம் அதன் வேலையைச் செய்துதான் தீரும். இயக்கம் நெருக்கடியில் இருப்பதாய் இங்கு வருத்தப்பட்டவர்கள் எப்படி நெருக்கடியில் இருக்கிறது, இதனால் என்ன. கெட்டுப் போய் விட்டது என்று எடுத்துக் காட்டியிருந்தால் எனக்கு அவர்கள். வார்த்தையில் உள்ள உண்மை புலப்பட்டு இருக்கும்.
தோழர்கள் தண்டபாணி, கண்ணப்பர், அய்யாமுத்து, ராமநாதன், தாவுத்ஷா முதலான பலர் சுயமரியாதை இயக்கம் செத்துப் போய் விட்டது என்று சொல்லிக்கொண்டுதான் சிலர் வெளியேறியும், சிலர் தாங்கள். இன்னமும் சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தொல்லை கொடுத்து வந்தார்கள்; சிலர் வருகிறார்கள். இதனால் எந்தக்கொள்கை கெட்டுவிட்டது? என்ன நடவடிக்கை நின்று விட்டது?
இந்த மகாநாடு கூட்டியது பைத்தியக்காரத்தனம் என்று மகாநாடு கூட்டிய பிரமுகர்களுக்குத் தோன்றும்படி இன்று காலை முதல் இங்கு நடவடிக்கை நடக்கிறது. இது எனக்கு முன்னமேயே தெரியும். அதனாலேயே நான் இதற்கு வரவேண்டாம் என்று கருதி கடிதம்கூட எழுதிவிட்டேன். வந்தே தீரவேண்டுமென்று தந்தியும் கடிதங்களும் வந்தன. வந்த பிறகு ஏன் வந்தேன் என்றுதான் தோன்றுகின்றது. எங்கள் பெயர்களை விளம்பரம் செய்து ஆட்களைக் கூட்டி இம்மாதிரி இயக்கம் செத்துவிட்டது என்று மாய அழுகை அழுவதே மகாநாட்டின் வேலை என்றால் இனி மகாநாடுகள் கூட்டமால் இருப்பதுகூட நலமென்றே கருதுகிறேன்.
ஏன் மாகாண மகாநாடு கூட்டவில்லை:
இந்த லக்ஷணத்தில் மாகாண மகாநாடு ஏன் கூட்டவில்லை என்று என்மீது குறை கூறப்பட்டது. மகாநாடு இந்த லக்ஷணத்தில் இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டு எப்படி கூட்டமுடியும்? கூட்டுவதால் பிரயோஜனம் தான் என்ன? கூட்டாததால் என்ன கெட்டுவிடும்?
இதற்குமுன் கூட்டின 3 மகாநாடுகளும் பணக்காரர்களாலும் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களாலும் தான் கூட்டப்பட்டது. இந்த மகாநாடும் ஒரு பணக்காரரின் பெரிய பொருளுதவியின் மீதும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களின் ஆதரவின் மீதும்தான் கூட்டப்பட்டது என்று காரியதரிசி சொன்னார். அப்படியிருக்க பணக்காரர்கள் தயவில் மகாநாடுகளைக் கூட்டி அவர்கள் நிழலில் இருந்துகொண்டு அவர்கள் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அவர்களையே - அக்கட்சியையே வைது கொண்டிருப்பதனால் மகாநாடு எப்படிக்கூட்ட முடியும்?
200 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நாகையில் மாகாண மகாநாட்டைக் கூட்ட தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள் ஏற்றுக்கொண்டார். வேண்டிய ஏற்பாடும் செய்தார். முன் பணமும் கொடுத்தார். அப்படியிருக்க சில தோழர்கள் மகாநாட்டு நிர்வாகத்தில் சம்மந்தப்பட்டவர்களே அவரைக் கேட்காமல் மகாநாட்டுப் பந்தலில் சமதர்ம மகாநாடு கூடும் என்று பத்திரிகையில் விளம்பரம் செய்து
விட்டார்கள். பிறகு பலர் அவரைக் கேட்க ஆரம்பித்த உடன் அவர் அம் முயற்சியை விட்டு விட்டதாகத் தெரிகிறது.
மற்றும் நாளையும் மகாநாடு கூட்டவேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியும் சில பணக்காரர்கள் உதவியும் வேண்டித்தான் இருக்கும் அப்படி இருக்க அவர்களை வைவதன் மூலம் வீரராகக் கருதி இருக்கிறவர் களின் வசவுக்குக் கட்டுப்பட்டு யார் தான் மகாநாடு கூட்டுவார்கள்? வைகின்றவர்களுக்கு யார் தான் ரயில் சார்ஜ் கொடுப்பார்கள்? என்பதை யோசித்துப் பாருங்கள். என்மீது குற்றம் சொல்லுவது யாருக்கும் எளிதுதான். ஆனால் இயக்கத்தில் வேறு எந்தத் தோழர் செய்கின்ற காரியத்தைவிட என் காரியம் என்ன குறைந்து போய் விட்டது என்று யோசித்துப் பாருங்கள்.
இயக்கம் என்றால் எவனோ ரயில் சார்ஜ் கொடுத்து, எவனோ விளம்பரம் செய்து, எவனோ கூட்டம் கூட்டி விட்டால் அதில் வந்து நின்று கொண்டு எல்லோரையும் பயங்காளி என்றும், கோழை என்றும், மந்திரிகள். மாய்கையில் மறைந்து விட்டவன் என்றும், சர்வாதிகாரி என்றும் ஒருவர் மற்றவரை வைதுவிட்டுப் போய் விடுவது அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். என்ன குறைந்தாலும் மாதம் 200, 300 ரூபாய் இயக்கத்துக்காகச் சொந்தப் பொருப்பில் செலவு செய்கிறேன். பல தடவை 1000, 2000 மொத்தமாக செலவு செய்துவருகிறேன். மாதம் 10 பிரசங்கங்களுக்குக் குறையாமல் பெரிதும் என் சொந்தச் செலவிலேயே பல தோழர்களை அழைத்துக் கொண்டு ஊர் ஊராய் கிராமம் கிராமமாகத் திரிந்து நோயுடனும், காயலாவுடனும், டாக்டர்கள் அபிப்பிராயங்களை லக்ஷியம் செய்யாமலும் பிரசாரம் செய்கிறேன். இதற்குமேல் மற்றவர்கள் சாதிப்பதோ. மற்றவர்களுக்கு உள்ள பொறுப்போ இன்னது என்று எனக்கு விளங்கவில்லை.
இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும், வீரசொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதிலும் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்கு மேல் ஒருவன் வீரனாகவோ, மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதுமில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும். ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதுமில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய்
குடி அரசு - 1936 (1) 210
அறிவேன். அத்துறையிலும் நான் இருந்து பார்த்துவிட்டுத் தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தியாகவே வந்தேன். ஆதலால் நான்
புகழ் பெறும் மார்க்கமோ, வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல
காங்கிரசில் உழைத்தபோது எனக்கும், என் குடும்பத்துக்கும் தகுதிக்கு மேற்பட்ட புகழ் கிடைத்தது அப்போது சில பதினாயிரக்கணக்கான ரூபாயில் புகழ் சம்பாதித்தேன். இப்போது பல பதினாயிரக்கணக்கான ரூபாய் செலவும் நஷ்டமும் அடைந்து இகழ்ச்சி அடைகிறேன். என்னவென்றால் 1922 வருஷத்திய சகல கட்சி மகாநாட்டில் காந்தியாரின் ஒத்துழையாமையைப்பற்றிக் கவலை கொண்டு லார்ட் ஆர்டிஞ்சு காந்தியாருக்கு என்னவேண்டும் என்று கேட்கும்படி ஒரு சர்வ கட்சி மகாநாட்டை பம்பாயில் கூட்டி கேட்டு வரும்படி செய்தார். அதில் சங்கரன் நாயர் தலைமை வகித்து காந்தியாரை “உமக்கு என்ன வேண்டும்" என்று கேட்டார். அப்போது காந்தியார் எனக்கு என்னவேண்டும் என்பதை ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளைக் கேட்டுப் பதில் சொல்லுகிறேன் என்று சொன்னார். அந்த இரண்டு பெண்மணிகள் யார், என் மனைவியும், என் தங்கையும்தான். இது 1922ம் வருஷம் ஜனவரி மாதம் 19ந் தேதியிலோ 20ந் தேதியிலோ ஹிந்து பத்திரிகையில் இருந்தது இதைதிருச்சி டாக்டர் ராஜன் கத்தரித்து எனக்கு அனுப்பினார். இதற்கு மேல். எனக்கு இன்னும் என்னவேண்டும்? அதனால் பயனில்லை என்று உணர்ந்தேதான் தேசத்துரோகி, மதத்துரோகி, நாஸ்திகள், கோழை, சர்க்கார் தாசன் என்கின்ற பட்டம் கிடைப்பதானாலும் நாம் செய்யும் வேலையில் மக்களுக்கு ஏதாவது நன்மை ஏற்படவேண்டுமென்று கருதி சில திட்டங்களைக்கொண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து அதில் என் இஷ்டப்படி உழைத்து வருகிறேன்.
இனியும் சாகும்வரை அந்தப்படியே உழைத்து வரத்தான் செய்வேன்.
நான் பயந்துவிட்டது
நான் இப்போது சர்க்காருக்கு பயந்துவிட்டேன் என்றும், பொதுவுடமைப் பிரசாரத்தை விட்டு விட்டேன் என்றும் குறைகூறப்பட்டது. இதைப்பற்றி விஷமப் பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது
இந்தச் சமயத்தில் எனது கருத்தை தைரியமாகவும், விளக்கமாகவும் வெளியிடுகிறேன். தயவு செய்து கவனித்துக் கேட்கவேண்டுமாய்க் கோருகிறேன்.
நான் ரஷ்யாவுக்குப் போவதற்கு முன்பே பொதுவுடைமைத் தத்துவத்தைசுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். ரஷ்யாவில் இருந்து வந்தவுடனும் அதை இன்னும் தீவிரமாய்ப் பிரசாரம் 2௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
செய்ததும் உண்மைதான். அதோடு மாத்திரமல்லாமல் தமிழ் நாட்டில் சுமார் 150 சங்கங்கள் ஆங்காங்கு ஏற்படும்படி செய்து அவைகள் ஒரு அளவுக்கு வேலை செய்து வரும்படி செய்ததும், அவைகளுக்கு நான் சில உதவிகள் செய்து வந்ததும் உண்மைதான். ஒன்றையும் மறைக்கவில்லை. ஆனால் சர்க்காரார் பொதுவுடைமை கொள்கைகள் சட்ட விரோதமானது என்று தீர்மானித்து நமது சுயமரியாதை இயக்கத்தையே அடக்கி ஒடுக்கி ஒழித்துவிட வேண்டும் என்று கருதி இருக்கிறார்கள் என்று உணர்ந்த பிறகும், அதனால் பல கஷ்ட நஷ்டம், தொல்லை ஆகியவை ஏற்பட்ட பிறகும், காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் அடக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் அவர்கள் பின்னடைந்து விட்டதைப் பார்த்தும், நம்முடைய தோழர்கள் சிலர் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாலும், பலர் வெறும் வேஷ விளம்பரத்துக்கு அடிமைப்பட்டுவிட்டார்கள் என்பதை உணர்ந்ததாலும் எனக்கு புத்திசாலித்தனமாக சில காரியம் செய்யவேண்டியதாக ஏற்பட்டு விட்டது. அதுதான் பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொள்ள வேண்டியது என்பதாக ஆகிவிட்டது
அப்படி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம்கூட மறைந்து போயிருக்கும். இந்தப் பிரசாரம்கூட செய்ய முடியாமல் போயிருக்கும் எனக்கு இந்த 2, 3 வருஷத்தில் எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டது? தோழர் ஜீவானந்தம் எழுதிய வியாசத்தைப் பத்திரிகையில் போட்டதற்காக 2000 ரூபாய் ஜாமீன் கொடுத்தேன். கல்வியைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக நானும் என் தங்கையும் சிறைப்பட்டோம். அபராதமும் கோர்ட் செலவுமாக ரூபாய் 2000க்கு மேல் செலவாகி விட்டது. தோழர் ஜீவானந்தம் அவர்களின் மற்றொரு மொழி பெயர்ப்புக்காக என் தமையனாரும் சிறைப்பட்டார். அதற்கும் ரூ.1000 வரை செலவு ஏற்பட்டது. பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுயமரியாதை இயக்கப்பத்திரிகை மற்றொன்றுக்கும் ஜாமீன் கேட்கப்பட்டு நின்றுவிட்டது. இதைப்பார்த்த பல தோழர்கள் ஓடி விட்டதுடன் துரோகம் செய்யவும் ஆரம்பித்தார்கள்.
இப்பொழுதும் நான் ஒரு தினசரி நடத்த சகல ஏற்பாடுகளும் செய்து கொண்டு சர்க்காரை அனுமதி கேட்டதில் பெருவாரியான தொகை ஜாமீன் கட்ட வேண்டுமென்று உத்திரவு வந்து விட்டது. இந்த நிலையில் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்து விட்டு நான் மாத்திரம் வீரனாக ஆவதற்குஜெயிலில் போய் உட்கார்ந்து கொள்ளுவதா? அல்லது பொதுவுடமைப் பிரசாரத்தை நிறுத்தி வைத்துவிட்டு இயக்கத்தின் மற்ற திட்டங்களை நடத்துவதா என்று யோசித்துப்பாருங்கள். இதுதான் எனது உண்மை
ஜெயிலில் எனக்கு என்ன கஷ்டம்? எ. கிளாசில் போட்டார்கள். இனியும் போடுவார்கள். 6 மாதமாவது ஜெயிலுக்குப் போனால்தான் என்: உடம்பு இனியும் 2 வருஷத்திற்கு உழைக்க செளகரியம் கொடுக்கும். நிற்க,
குடி அரசு - 1936 (1) 21
ப்
இயக்கத்திற்காக ஆரம்பமுதல் இந்த நிமிடம்வரை யாரிடத்திலாவது
கால் அணா வசூல் செய்திருக்கிறேனா? அல்லது இயக்கத் தொண்டர்களுக்கு என் சக்தியனுசாரம் அவ்வப்போது உதவாமல் இருந்திருக்கிறேனா? என்: குடும்பநிலை எவ்வளவு கஷ்ட நஷ்டத்திற்கும், கேட்டிற்கும் ஆளாகிவிட்டது உங்களுக்குத் தெரியாதா? ஆனாலும் எனது எஸ்டேட்டும் வருவாய்களும் எப்படி நாசமானாலும் அவற்றை லக்ஷியம் செய்யாமல் இயக்கத்திற்கு என்னால் கூடியதைச் செய்யாமல் இருந்ததே இல்லை. பார்ப்பனர் தொல்லையால், அரசாங்க தொல்லையால் எனது குடும்ப வருவாய் 100-க்கு 25 வீதமாய் விட்டது. இப்படி எல்லாம் ஆனது ஒருபுறமிக்க,
யாரை நம்புவது?
இன்று எந்தத் தோழர்களை நம்பி நான் துணிந்து ஜெயிலுக்குப் போக முடியும்? ஒரு வருஷம் ஐரோப்பா கண்டத்திற்குப் போய் இருந்தேன். இயக்க நிர்வாக சபை அழிந்துவிட்டது. சென்ற வருஷம் 6 மாதம் ஜெயிலுக்குப் போனேன். மகாநாடு கூட்ட வேண்டியதில்லை என்று தீர்மானிக்கப்பட்டு பிரசாரம் நிறுத்தப்பட்டுவிட்டது. பொதுவுடமை என்று சொன்னவுடன் பணக்காரர்கள் பறந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் புத்திசாலித்தனமாய் காரியம் நடத்தாவிட்டால் இயக்கம் நடக்குமா? கடவுள் மதம் ஜாதி ஆகியவைகளால் மக்கள் அனுபவிக்கும் கொடுமையும் இழிவும் ஒழியவேண்டாமா? ஏதோ இரண்டொரு ஆட்கள் அதுவும் சுயநல விஷயமாய் அபிப்பிராயபேதம் கொண்ட ஆட்களின் விஷமப் பிரசாரத்துக்கு பயந்து கொண்டு நான். வீரனாய் விட்டால் இயக்கம் போகும் கதி என்ன? எப்படியோ போகட்டும்
நம் கடமையை செய்வோம் என்பதை எல்லா சமயத்திலும் முட்டாள் தனமாய் நான் பின்பற்றுபவனல்ல ஆகின்ற அளவுக்கு காரியம் ஆகவேண்டும் என்று கருதுகிறேன். இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவர்கள் இஷ்டப்படி நடக்க வழியில்லாமல் இல்லை.
இப்போதும் நம் கொள்கைகளில் சமதர்மமோ, பொதுவுடமைத் தத்துவமோ இல்லை என்று சொல்ல முடியாது. சமதர்மத்துக்கும் பொதுவுடமைக்கும் தோழர் ஜீவானந்தமும் அவர்களது தோழர்களும்தான். பாஷ்யக்காரர்கள் என்பதை நான் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடியாது
ரஷ்யப் பொதுவுடமை எனக்கு நேரிலும் தெரியும். அப்படிப் பட்டவர்கள் ஏகாதிபத்தியத்துடனும், பணக்கார ஆட்சியுடனும் ராஜி செய்து கொண்டு கூடுமான அளவுதான் சமதர்மம் நடத்துகிறார்களே தவிர யாரோ ஒருவர் கோழை என்று சொல்வாரே என்று பயந்து கொள்ளவில்லை
இவைகளையெல்லாம் உத்தேசித்தே சுயமரியாதை இயக்கத் திட்டம் இவ்வளவுதான் என்பதாக ஒரு வருஷத்துக்கு முன்பு (10-3-35ல்) வெளிப் படுத்திவிட்டேன். அதன் பிறகே தாராளமாய் வேலை செய்ய முடிகிறது
213 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இதையும் தடுத்தால்
நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்டவிரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்க மில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே. இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல்கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும்
கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு ககமனுபவிப்பேன், வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் ''புகழை''யும் “வீரப்“பட்டத்தையும் தியாகம் செய்து விட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன். அறிவுள்ளவர்கள் சற்று யோசித்துப் பார்க்கவேண்டும்
இந்த அரசாங்கத்தை "I will mend or end" என்று சொன்ன காந்தியார்
கூற்று என்ன ஆயிற்று?
“நாங்கள் 35 கோடி பேர்களும் நாய்களோ, ஈனப் பன்றிகளோ" என்று சொன்ன தேசாபிமானிகள், தேசிய வீரர்கள் கதி என்ன ஆயிற்று?
ஆட்டிடையன் ஆடுகளை பட்டிக்குள் விரட்டுவது போல் இன்று காந்தியாரே “தேசிய வீரர்களை'' சட்டசபைக்குள் போய் ராஜ பக்தியாயும், ராஜ விஸ்வாசமாயும், ராஜ சந்ததிகளுக்கும் ராஜாங்க சட்டங்களுக்கும் பக்தி விஸ்வாசமாய் இருப்பதாயும் சத்தியம் செய்து “மானங்கெட்டு, மரியாதை கெட்டு” திரியும்படி இப்போது விரட்டி அடிக்கவில்லையா?
அவ்வளவு கேவல நிலைக்கு நாம் இன்னும் போகவில்லை.
நமக்கு பார்ப்பான், பணக்காரன், அரசாங்கம் ஆகிய 3 எதிரிகள். உண்டு. மூன்று பேரையும் ஒரே காலத்தில் ஒழிக்கச் சட்டம் குறுக்கிடுமானால் முறையாக ஒவ்வொன்றாக ஒழிப்போம். இதற்காக நம்முடைய சுயநல வீரப்பிரதாபத்தில் கடுகளவாவது தியாகம் செய்ய வேண்டாமா? இதை உத்தேசித்தே என் தமையனாரை அரசாங்கத்தினிடம் ராஜத்துவேஷம் பரப்புவதில்லை என்று சொல்லி வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டு விடுதலை அடையும்படி சொன்னேன். சர்க்காரின் நிலைமையையும் அவர்களது நடத்தையையும் சக்தியையும் யோசித்து ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். சர்க்கார் சக்தி லேசானதல்ல. உலகத்திலேயே சக்தியும், தந்திரமும் பொருந்திய சர்க்கார் பிரிட்டிஷ் சர்க்காராகும். மேடையில் கூப்பாடு போட நம்மை அனுமதித்து விட்டதாலேயே நாம் பெரியவர்கள்
குடி அரசு- 1936 (1) 214
சர்க்கார் சின்னவர் என்று எண்ணிவிடக்கூடாது. எதிரியின் பலம் அறியாமல்
வீரம் பேசுவது பொறுப்பை உணராததாகும். எப்பொழுது எதற்காக சர்க்காரோடு போராடுவோம் என்பது எனக்குத் தெரியும்
காங்கிரசுக்காரர்கள் தொல்லையின் மீது சர்க்கார் கண்ணோட்டம் இருந்தபோது நம்முடைய பொதுவுடமைப் பிரசாரத்தை அவர்கள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். காங்கிரஸ் தங்களுடைய சட்ட மறுப்பையும், மறியலையும், எதிர்ப்பையும் விட்டுவிட்டு ராஜவிஸ்வாசப் பிரமாண சரணாகதிக்கு வந்த பின்பு நம்மீது கண் வைத்தார்கள்.
2, 3 கோடி ரூபாய் செலவு செய்து பல லக்ஷம் பேரை ஜெயிலுக்கு அனுப்பி புத்தி பெற்ற காந்தியாரையும் காங்கிரசையும் பார்த்தாவது நாம் புத்திசாலித்தனமாய் 4, 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், நாங்கள் எங்கள் குடும்பம் மாத்திரம் கெட்டு ஜெயிலுக்குப் போனதிலும் திருத்திக்கொள்ள முடியாவிட்டால் நாம் பைத்தியக்காரராகி விட மாட்டோமா? நம் தோழர் களின் யோக்கியதை யாருடையது எனக்குத் தெரியாது?
இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கத்தை செத்துப் போய் விட்டது என்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி.
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கியதை போய்விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருந்திருக்கும்? அவர்களுக்கு மேடை ஏது? என்று யோகித்துப் பார்க்கட்டும்.
ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் நம் அபிப்பிராயம் தெரிவிக்க இன்று இந்த மேடை கிடைத்திருக்குமா?
பார்ப்பான் பின்னால் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்தே மாதர கோஷமும், காந்திக்கு ஜ கோஷமும் போட்டால் ஒழிய பலருக்கு சாப்பாட்டிற்கு ஆவது வழி கிடைத்திருக்குமா? நம்மிடம் வீரம் பேசிக் கொண்டு நம்மைக் கோழைகள் என்று சொல்லிக்கொண்டு போனவர்களின். வாழ்க்கை இன்று எப்படி நடக்கிறது
ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் பணம் வாங்கினார்கள்? யாரை ஜெயிலுக்கு அனுப்பினார்கள்? யார் நிழலில் அவர்கள் வாழ்கிறார்கள்? எந்த கொள்கையை விட்டுக்கொடுத்தார்கள்? அவரவர்கள் பணம் செலவு செய்து எலக்ஷனில் ஜெயிக்கிறார்கள், உத்தியோகம் அனுபவிக்கிறார்கள். மற்றப்படி அக்கட்சியின் கொள்கைகளை ஆட்சேபிக்கும் வீரர்கள் என் எதிரில் வரட்டும் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் ௯.ம. இயக்கம் இவ்வளவு
சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து
218 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விட்டாலும் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதியும் இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை.
அன்றியும் அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களின் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல
ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்துவருகிறார்கள். நமதுதிட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். மாமிசம் சாப்பிடுவதனால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொதுவுடமையும் போலி புலி வேஷம்போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது
சர்க்கார் உத்திரவு மீறுவதே சமதர்மமாகி விடாது. உத்திரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்துவிட்டோம்.
ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சு.ம. இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அநுகூலமாகவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத்தான் நாம் சமதர்மம், பொதுவுடமை என்றோம்.
சர்க்கார் பொதுவுடமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலை செய்வதில் என்ன தடை இருக்கிறது
மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத் தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்கமில்லாமல் போகவில்லை.
ஆதலால் எனது நிலை இன்னது என்பதை ஒருவாறு விளக்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.
குறிப்பு: திராத்துறைப்பூண்டியில் 21, 22.03.1936 ஆகிய நாட்களில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட 5 - ஆவது சுயமரியாதை மாநாட்டில் 21.03.1936 இல் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 29.03.1936
குடி அரசு - 1936 (1) 216
ஈ.வெ.ரா. விளக்கம்
தோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்டச் செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சு.ம. தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம்
தோழர் ஈ.வெ.ரா. மீது ச.ம. தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன். ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமே யாகும். பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார். அதாவது அரசாங்கத்தார் பொதுவுடமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்துவிட்டதாலும், சு.ம. இயக்கம் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை
மீறி பொதுவுடமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10.3.35ந்தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சு.ம. மகாநாட்டிலும் விளக்கமாக எடுத்துக்கூறி இருக்கிறார்
பொதுவுடமைப் பிரசார சம்பந்தமாக இதற்கு மேலும் சமாதானம் கூற
முடியாது
அப்படி இருக்க ஒவ்வொரு மகாநாட்டிலும் ஒரு கூட்டம் இதையே திருப்பி கூச்சல் போட்டு கலகம் விளைவிக்க முயற்சிப்பது ஒரு காலமும் நல்ல எண்ணத்தின் மீது செய்யப்படும் காரியம் என்று சொல்லிவிட முடியாது.
அடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளுடன் குலாவுவது என்பதைப் பற்றிய புகார் வெறும் அறியாமையால் ஏற்பட்ட கற்பனையின் மீது உண்டான அசூயையே தவிர வேறு ஒன்றுமில்லை
மந்திரிகளைப்பற்றிய ஈ.வெ.ராவின் அபிப்பிராயம் குடிஅரசு படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. மற்ற பத்திரிகைகளிலும் அவ்வப்போது வந்திருக்கின்றன. மந்திரிகள் ௬ு.ம. இயக்கத்துக்கு செய்த
217 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தீமைகள் பல ஒரு புறமிருக்க அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியையே எதிரிகள்
முயற்சி இல்லாமலேயே ஒழிக்கும்படியான வேலைசெய்து வருவதைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கிறார்.
ஆனால் மந்திரிகள் மீது சுமத்தப்படும் அரசியல் கொள்கைகள், வேலைகள் சம்மந்தப்பட்ட மட்டில் எதிரிகள் கூற்றைக் கண்டித்தும் பல சமயம் மந்திரிகள் கூற்றை ஈ.வெ.ரா. ஆதரித்தும் வருகிறார் என்றால் இது பார்ப்பனரல்லாதார் சமூக நலனை உத்தேசித்தே ஒழிய வேறில்லை.
மற்றப்படி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பது என்பது மாத்திரம் முழுதும் உண்மை. இதை அவர் எப்போதும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டியது தமது கடமை என உணருவதாக சுமார் 15 வருஷமாகவே கூறி வருகிறார். அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி ஏழை மக்கள், தீண்டப்படாத மக்கள், சமூக வாழ்வில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கட்சி என்பதாக உணர்கிறார். அந்த உணர்ச்சி மாறுபடும் வரையில் ஜஸ்டிஸ் கட்சியை அவர் ஆதரித்துத்தான் தீர வேண்டியிருக்கும்
சு.ம. இயக்கம் ஏற்பட்டதும், அது பல கொள்கைகளைக் கொண்டு இருப்பதும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கு உதவி செய்வதற்காகவும் தானே ஒழிய வேறில்லை.
ஜஸ்டிஸ் கட்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் பலர் சரியானபடி ஆதரிக்காததாலேயும், அக்கட்சி எந்த மக்களுக்காக பாடுபடுகின்றதோ அந்த மக்களிடம் போதிய நன்றி விஸ்வாசம் இல்லாததினாலேயும் அக்கட்சி இந்த மாதிரியாக தாழ்ந்த நிலையில் பேசவேண்டியதாக ஆகிவிட்டது
ஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும், பல பணக்காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர அதன் கொள்கைகள், அதுசெய்த வேலைகள் ஆகியவை அனேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை.
இதன் காரணம் பாமர மக்களின் அறியாமை ஒரு புறமிருந்தாலும்
மற்றும் பலருக்கு உத்தியோக ஆசையும், பணத்தாசையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட பொறாமையும் தவிர வேறில்லை என்பது நமது அபிப்பிராயம்
மந்திரிகள் பெரிய உத்தியோகக்காரர்களா யிருக்கிறார்கள். அதன் பிரமுகர்கள் பலர் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்த இரு கூட்டத்தார்களும் கட்சி விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொள்ளாமல் தாங்கள் சுயநலத்துக்கும், அதற்கு வேண்டிய சூழ்ச்சிக்குமே கட்சியின் பெரும்பாகத்தை பயன்படுத்திக் கொள்வதால் பலருக்குத் தானாகவே அக்கட்சியின் மீது துவேஷம் ஏற்படும்படி செய்து விடுகின்றது.
ஆனால் இவ்விரு கூட்டமும் அதாவது மந்திரி உத்தியோகமும், பணக்காரர்கள் ஆதிக்கமும் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்றியமையாதது என்பதாக பலமுறை தோழர் ஈ.வெ.ரா. எடுத்துக்கூறி இருக்கிறார். காரணம் பணக்காரர்கள்
குடி அரசு - 1936 (1) 218
இல்லாவிட்டால் எலக்ஷனில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்காவிட்டால் அரசியல் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. ஆதலால் இந்த இரு கூட்டமும் அவசியமானதாகிறது
இவர்கள் நாணயமாக நடக்கவில்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனாலும் தோழர்கள் சத்தியமூர்த்தியும் கல்யாண: ராமய்யரும் போன்றவர்கள் எலக்ஷனில் வெற்றி பெற்று அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிவதை விட நாணயக் குறைவான மந்திரிகளும், சுயநலப் பணக்காரர்களும் அதிகமான கெடுதிக்காரர்களாக இருந்துவிட முடியாது என்போம்
வெறும் பொறாமை ஒரு நன்மையையும் உண்டாக்கி விடாது. பணக் காரர்களின் இயற்கை குணம் இன்னது என்பது யாரும் அறியாததல்ல. யார். பணக்காரர்களானாலும் இப்படித்தான் இருப்பார்களே தவிர இதற்கு மேல். யோக்கியர்களாக இருந்துவிட முடியாது. இன்று காங்கிரசிலும் முழு சமதர்மத்திலும் இந்த யோக்கியதை உடன் தான் பல பணக்காரர்கள் இருந்து வருகிறார்கள்.
ஆனால் மந்திரிகளுடைய யோக்கியதை யார் பார்த்தாலும் இப்படித்தான். இருக்க முடியுமென்று சொல்லிவிட முடியாது. தோழர்கள் டாக்டர் சுப்பராயன், எஸ்.முத்தைய முதலியார் ஆகியோர்கள் மந்திரி பதவிகளானது கட்சிக்கு நன்றி விசுவாசமுள்ளதாக இருந்தது என்பதை நாம் மறைக்கவில்லை.
பெரிய அரசியல் பிரச்சினை, போட்டி, உள் கலகம், எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தின் ராஜதந்திரம், தங்கள் சுநிலை ஆகியவைகளின் மத்தியில் மந்திரிகள் அரசியல் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியம் என்று
யாரும் நினைத்துவிட முடியாது. அன்றியும் மந்திரி பதவிகளுக்கு எவ்வித யோக்கியப் பொறுப்பான நிபந்தனையுமில்லாமல் லாட்டரிச் சீட்டு விழுவதுபோல் இருப்பதால் மந்திரிகளால் நாம் அடிக்கடி ஏமாற்ற மடைய வேண்டியதாகவும் ஏற்பட்டு விடுவதில் அதிசயமில்லை.
எப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியை அனாதரவு செய்யவோ, மந்திரிகளை கவிழ்க்கவோ சுயமரியாதை இயக்கம் ஒருப்பட முடியாது என்பதுடன் அவற்றை ஆதரிக்க வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்பதில் நமக்கு சிறிதுகூட தயக்கமில்லை
மந்திரிகளுடன் தோழர் ஈ.வெ.ராமசாமி குலாவுகிறார் என்பவர்களில் பலருக்கு உள்ள முக்கியமானதும் சிலருக்கு ஒன்றே யானதுமான காரணம் “மந்திரிகள் ஈ.வெ.ராவுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்று கருதி இருப்பது என்பதாக நாம் உணருகிறோம். இதுவும் மனிதனுடைய பேராசையில் ஏற்பட்ட கற்பனையின் பொறாமையேயாகும். தோழர் ஈ.வெ.ரா. இந்த 12 வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் முதலியவை செய்து வருவதில் ஒரு ஒத்தை ரூபாயாவது எந்த மந்திரியிடமாவதிருந்து கட்சி வேலைக்கு என்றோ, பிரசாரத்துக்கு என்றோ, மற்ற எந்தக் காரியத்துக்கு
219 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆவது என்றோ கேட்கவோ வாங்கவோ வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்ததே கிடையாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்
அக்கட்சியினிடம் காட்டும் அபிமானமும், மந்திரிகளுக்கு பரிந்து பேசும் தன்மையும் சாதாரண மக்களுக்கு இந்த மாதிரி பணம் வாங்காமல் பேச முடியுமா அல்லது மந்திரிகள் பண உதவி இல்லாமல் ஈ.வெ.ரா.வுக்கு இவ்வளவு பிரசாரம் செய்ய முடியுமா என்றெல்லாம் தோன்றலாம். சிலருக்கு தாங்கள் வேண்டும்போதெல்லாம் ஈ.வெ.ரா. பணம் கொடுக்காததால் கோபித்துக் கொள்ளும் காரணமும், கொடுத்தது போதாமல் அயோக்கியத்தனமாய் விஷமப்பிரசாரம் செய்வதற்கு காரணமும் தோழர் ஈ.வெ.ரா. மந்திரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு பங்கு சரியாகக் கொடுக்கவில்லையே என்கின்ற குறைபாடே என்பதுகூட நமக்கு நன்றாய் விளங்குகிறது தோழர்ஈ.வெரா. ஒருசமயத்தில் வெளியிட்ட ஸ்டேட்மெண்டையே இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது “இயக்கத்திற்கு என்றோ வேறு என்ன காரியத்துக்கு என்றோ நாளதுவரையில் எந்த மந்திரிகளிடமிருந்தும்
மற்றும் இயக்கத் தலைவர்கள் என்பவர்களிடமிருந்தும் ஒரு காசும் வசூலித்ததில்லை'' என்று கூறியிருக்கிறார்.
திராவிடன் பத்திரிகை நடத்தும்போது ஜஸ்டிஸ் கட்சியார் பத்திரிகை நஷ்டத்திற்கு மாதம் மாதம் கொடுப்பதாக வாக்குக்கொடுத்த ரூபாயில் ஒரு காசு கூட கொடுக்கவேயில்லை. அதனால் சுமார் 20 - 30 ஆயிரத்துக்கு மேல் வெளியாரும், ஈ.வெ.ராவும் கை நஷ்டப்பட வேண்டிவந்தது. அதற்காக ஆதியில் பெரும் தொகை வாக்குக் கொடுத்த சில தோழர்கள் அக்காலத்தில் திராவிடனுக்கு சுமார் 3, 4 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கொடுத்தார்கள். இதைத் தவிர ஒருவரும் கொடுக்கவும் இல்லை. யாரையும் அவர் கேட்கவும் இல்லை.
டிசம்பர் மாதத்தில் 10 பிரசாரகர்களை தயார் செய்வதற்கும், அவர்களுக்கு ஒருமாத சாப்பாட்டிற்கும் போக்கு வரவு ரயில் சார்ஜுக்குமாக விருதுநகர் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானப்படி தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் வேண்டுகோளின் மீது பொப்பிலி ராஜா 300 ரூ அனுப்பினார்கள். 10, 13 தொண்டர்களின் 1 மீ" போதனைக்கும், சாப்பாடு ரயில் சார்ஜ் செலவுக்கும் இரண்டொரு இடங்களுக்கு பிரசாரத்துக்கு அனுப்புவதற்கும் செலவு செய்யப்பட்டது. அடுத்த மாதத்துக்கு அனுப்பும் விஷயத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே போதனா முறை பெற்றவர்களுக்கு வேலை கொடுப்பதாய் இருந்தால் தான் மேல்கொண்டு ஒரு பேட்ச்சுக்கு போதனா முறை யளிக்கலாம், இல்லாதவரை போதனாமுறையில் பிரயோஜனமில்லை. என்று எழுதி நிறுத்தி விட்டார்.
மற்றப்படி கிரமமாய் கணக்குப் பார்த்தால் மந்திரிகளிடமிருந்து 100, 200 என்கின்ற கணக்கிலாவது ஈ.வெ.ராவுக்கு பணம் வரவேண்டி யிருப்பதாயும் மந்திரித்தனத்தை பாதுகாக்க பல நூறு ரூபாய் ஈ.வெ.ராவுக்கு செலவாகியும் அவர்கள் சொன்ன இடத்துக்குப் போகவும் அவர்கள்
குடி அரசு - 1936 (1) 220
கூப்பிட்டபோது செல்லவும் மற்றும் பல நூறு ரூபாய்கள் செலவாகியும் இருக்குமே ஒழிய ஒரு மந்திரியிடமும் பணம் வாங்கவுமில்லை எதிர்
பார்க்கவும் இல்லை. உண்மையிலேயே சில தோழர் தவறுதலாய் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
யாரிடமும் பணம் வாங்காமலும், சுயநலத்துக்கு ஒரு காரியமும் செய்து கொள்ளாமலும் இருக்கிற ஒருவன் எப்போதும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதோடு அவனுக்கு எவ்வித குறைவும் வராது என்பது தோழர் ஈ.வெ.ராவின் முடிந்த முடிவாகும்
இந்தக் காரணத்தாலேயே அவர் யாரையும் “நான் சொல்லுகிறபடி கேட்டால் கேள் இல்லாவிட்டால் போ" என்றும் “நான் அப்படித்தான். செய்வேன்" என்று சொல்லவும் தனது கொள்கையையும் இஷ்டத்தையும் யாருக்கும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் முடிந்து வருகின்றது.
இந்த இயக்கம் தோழர் ஈ.வெ.ரா. வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொதுநல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார்.
அதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத் தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை.
அன்றியும் அவர் காரிய “வீரரே” தவிர கொள்கை வீரரல்ல கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கை களைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய செளகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான். மேலே ஒழிய கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர். ஆகையால்தான் காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு பெயர்கோழையென்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக்கவலை இல்லை. கோழை என்பது செய்வதற்கு சவுகரியமுள்ள காரியங்களை விட்டு விட்டு ஓடுவதேயாகும்
துரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத் துக்காகப் பின் வாங்குவதாகும்.
இன்று அவருக்கு செய்வதற்கு சவுகரியமூள்ள காரியம் எதையும்
விட்டு விட்டு அவர் ஓடவில்லை 2 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இரண்டாவதாக யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்கு பிரதி பிரயோஜனமடைந்தோ வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை. ஆகையால் பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடமையாகாது கருத்தொரு மித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடமையும் அறிவுடமையுமாகும். கருத்தொருமித்தவர்களே அவரது உயிர்த்தோழர்கள். கருத்து வேறுபாடுடையவர்கள் மற்றவர்களே யாவார்கள் என்பதை கூறி இதை முடிக்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 29.03.1936
குடி அரசு - 1936 (1)
ப ப் 3
ஜஸ்டிஸ் கட்சிக்கு வெற்றி.
ஜஸ்டிஸ் கட்சியார் என்ன நல்ல காரியங்கள் செய்தாலும் சரி அதை எதிர்ப்பதே பார்ப்பனர்களுடையவும், காங்கிரஸ்காரர்களுடையவும், தேசீயப் பத்திரிகைகளுடையவும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜஸ்டிஸ் கட்சியாராலும் ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவு பெற்ற இதரர்களாலும் சென்னைச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மசோதா, விபசாரத் தடை மசோதா, பொட்டுக்கட்டுத் தடை மசோதா, இனாம் குடிகள் மசோதா போன்ற நல்ல மசோதாக்களையெல்லாம் பார்ப்பனர்களும் காங்கிரஸ் வாலாக்களும் தேசீயப் பத்திரிகைகளும் கட்டுப்பாடாக எதிர்த்து வந்திருப்பதை நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சென்னைச் சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியார் செய்யும் காரியங்களினால் நாட்டுக்கு நன்மையுண்டா இல்லையா என்பதை பார்ப்பனரும், காங்கிரஸ் கும்பல்களும் தேசீயப் பத்திரிகைகளும் கவனிப்பதே இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் செய்யும் வேலைகளுக்கெல்லாம் குற்றம் கற்பித்து வகுப்புவாதிகள், தேசத்துரோகிகள், பிற்போக்காளர் என வசைமாரி பொழிவதே ஷெ கூட்டத்தாரின் முக்கிய நோக்கம். இதை விளக்க சமீப காலத்தில் நடந்த ஒரு சம்பவம் போதுமானது.
சட்டசபைத் தேர்தல் தொகுதிகளையும், பிரதிநிதிகளை நிறுத்தும் முறைகளையும், வாக்களிக்கும் மாதிரியையும் நிர்ணயம் செய்ய பிரிட்டிஷ் சர்க்கார் நியமனம் செய்திருந்த ஹாமண்டு கமிட்டியார் சென்னை, பம்பாய், ஆமதாபாத் நீங்கலாக சென்னை பம்பாய் மாகாணங்களில் பல அங்கத்தினர் தொகுதிகளையும் குவியல் ஓட்டுமுறையையும் சிபார்சு செய்தார்கள். இது சென்னைச் சட்டசபை முடிவுக்கும், சென்னைச் சர்க்கார் யோசனைக்கும் முரணானது. சென்னை சர்க்காரும், சென்னைச் சட்ட சபையாரும், ஒரு அங்கத்தினர் தொகுதியையும் மாற்ற முடியாத ஒற்றை ஓட்டு முறையையுமே சிபார்சு செய்தார்கள். உண்மையான ஜனநாயக முறைக்கும், ஏழை அபேக்ஷகர்கள் நலத்துக்கும் ஒரு அங்கத்தினர் தொகுதியே பொருத்தமானது. மேலே கூறிய ஹாமண்டு கமிட்டி சிபார்சை உண்மையான. ஜனநாயகவாதிகள் எல்லாம் கண்டித்தார்கள்.
கடைசியில் ஹாமண்டு கமிட்டி அறிக்கை சென்னை சட்டசபையில் பரிசீலனைக்கு வந்தபோது “பல மெம்பர்கள் தொகுதியின்றி ஒரு மெம்பர் தொகுதிகளே ஏற்படுத்த வேண்டுமென்றும், குவியல் ஓட்டு முறையின்றி
223 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மாற்றக் கூடாத ஒற்றை ஓட்டுமுறையே இருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தி ஜஸ்டிஸ் கட்சிப் பிரதம கொரடாவான திவான்பகதூர் அப்பாத்துரைப் பிள்ளை ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.
தாமே இந்தியாவின் உண்மையான பிரதிநிதிகள் என்று பெருமை யடித்துக்கொள்ளும் காங்கிரஸ்கட்சியாரும், காங்கிரஸ்காரர்களின். வாலைப்பிடித்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம் எனப் பகற்கனவு காணும் டாக்டர் சுப்பராயன் போன்றாரும் தோழர் அப்பாத்துரைப்பிள்ளை. தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்கள். கடைசியில் தீர்மானம் ஓட்டுக்கு விட்டபோது பெரும்பான்மையான ஓட்டுகளால் நிறைவேறியது.
அவ்வளவுதான், உடனே தேசீயப் பத்திரிகைகள் ஜஸ்டிஸ் கட்சியார்.
மீது வசை புராணம் பாடத் தொடங்கின. “ஜஸ்டிஸ் கட்சி பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல. அது பொதுஜன ஆதரவை இழந்துவிட்டது. சர்க்கார் தயவினால் ஜஸ்டிஸ் மந்திரி சபை உயிரோடு இருந்து வருகிறது. எனவே சென்னைச் சட்டசபையில் அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயமாகாது'' என்றெல்லாம் தேசீயப் பத்திரிகைகள் கூறத் தொடங்கின. தேசீயத் தலைவர்கள் என்போரும் தேசீயப் பத்திரிகைகளுக்குப் பக்கப் பாட்டுப்
பாடினர். “சென்னைச் சட்டசபை அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயமல்ல. பல மெம்பர் தொகுதியையும் குவியல் ஓட்டு முறையையுமே சென்னை மாகாணத்தார் ஆதரிக்கிறார்கள்” என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் டாக்டர் சுப்பராயனும், காங்கிரஸ் கட்சித் தலைவர் தோழர் ஸி.ஆர். ரெட்டியாரும் இந்தியா மந்திரிக்குத் தந்தியனுப்பினார்கள் லிபரல்களின் சார்பாக, மூன்றே முக்கால் நாழிகை சட்ட மந்திரியாகவிருந்த தோழர்.
டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியாரும் அம்மாதிரி ஒரு தந்தியனுப்பினாராம். அவர்களை ஆதரித்து தேசீயப் பத்திரிகைகளும் வெகு நீளமான தலையங்கங்களும் எழுதின.
ஆனால் திவான்பகதூர் அப்பாத்துரைப் பிள்ளை நிறைவேற்றிய தீர்மானம் ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவை மட்டும் பெற்றதல்ல. டாக்டர் சுப்பராயனின் ஐக்கிய தேசீயக் கட்சி என்னும் அவியல் கட்சியில் ஒரு பிரபலஸ்தராயிருப்பவரும், கொஞ்ச காலம் டாக்டர் சுப்பராயனின் தோழ மந்திரியாகவிருந்து சைமன் கமிஷன் ஒத்துழைப்பை முன்னிட்டு ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தினால் தமது மந்திரி பதவியை ராஜிநாமாச் செய்து காங்கிரஸ்காரர்களுடையவும், தேசீயப் பத்திரிகைகளுடையவும், மதிப்பைப் பெற்றவருமான தோழர் ௭. ரங்கநாத முதலியாரும், தோழர் அப்பாத்துரைப் பிள்ளை தீர்மானத்தை ஆதரித்திருக்கிறார். மற்றொரு ஐக்கிய தேசீயக் கட்சிப் பிரபலஸ்தரான தோழர் ஸி. பார்த்தசாரதி ஐயங்காரும் அதை ஆதரித்திருக்கிறார். இவை யாவற்றிற்கும் மேலாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியும், ஒரு மெம்பர்.
குடி அரசு- 1936 (1) 224
தொகுதியும் ஒற்றை ஓட்டுமுறையுமே சிலாக்கியமானதென்று கூறியிருக்கிறார். உண்மை இவ்வாறானாலும் தேசீயப் பத்திரிகைகள் ஜஸ்டிஸ் கட்சியாரைத் திட்டிக்கொண்டே இருந்தன.
ஆனால் ஹாமண்டு கமிட்டி அறிக்கை இந்தியச் சட்டசபையில் விவாதத்துக்கு வந்தபோது தேசீயப் பத்திரிகைகளும், காங்கிரஸ்காரரும் டாக்டர் சுப்பராயனும் தலையைத் தொங்கப்போடும்படி நேர்ந்தது. ஹாமண்டு கமிட்டி அறிக்கையைப் பரிகீலனை செய்து முடிவு கூற இந்திய சட்ட சபையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதில் மெம்பர்களாயிருந்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார் அல்ல. “பிற்போக்காளரான” ஜஸ்டிஸ் கட்சியார் மணமே இப்பொழுது இந்தியச் சட்டசபையில் இல்லையல்லவா, எனவே இந்திய சட்டசபை காங்கிரஸ் கட்சி உபதலைவர் பண்டித கோவிந்த வல்லப
பந்த், காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு தலைவரும் அசெம்பளி காங்கிரஸ்
கட்சித் தலைவருமான தோழர் புலாபாய் தேசாய், தோழர் சத்தியமூர்த்தி ராவ்பகதூர் எம்.ஸி. ராஜா, தொழிலாளர் தலைவர் என்.எம். ஜோஷி, தோழர்கள் நீலகண்டதாஸ், அசப் அலி, ஜின்னா, சர். கவாஸ்ஜி, ஜிஹாங்கீர் முதலியவர்களே அந்தக் கமிட்டியில் மெம்பர்களாயிருந்தார்கள்.
அவர்கள் ஹாமண்டு கமிட்டி சிபார்சுகளை பரிசீலனை செய்து “சென்னை, பம்பாய், ஆமதாபாத் நகரங்கள் நீங்கலாக சென்னை, பம்பாய் மாகாணங்களில் பல மெம்பர்கள் தொகுதிகளை ஹாமண்டு கமிட்டியார் சிபார்சு செய்திருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது”
என்று அபிப்பிராயப்பட்டு தேசீயப் பத்திரிகைகள் சென்னை
காங்கிரஸ் தலைவர்கள், டாக்டர் சுப்பராயன், வெங்கட்டராம சாஸ்திரியார் போன்றவர்கள் வாய்க்கு இரும்புப் பூட்டு போட்டுப் பூட்டி விட்டனர். அம்மட்டோ? தோழர்கள் சத்தியமூர்த்தியும், எம். ஸி ராஜாவும் ஜஸ்டிஸ் கட்சியாரைத் தாக்குவோருக்கு சவுக்கடி கொடுக்கிற
மாதிரி அந்த அறிக்கையில் ஒரு குறிப்பும் எழுதி வைத்து விட்டார்கள்.
அதாவது, “ஒரு மெம்பர் தொகுதிகள் வேண்டுமென்ற கொள்கையை நாங்கள் ஆதரிக்கிறோம், ஏழை அபேட்சகர்களுக்கு அவை அனுகூலமாக இருக்கும், வோட்டர்களுடன் நெருங்கிய சம்பந்தம் வைத்துக் கொள்ளவும் அது உதவி புரியும். அதனால், தெளிவான ராஜீயக் கொள்கைகளையுடைய கட்சிகள் வேலை செய்ய செளகரியம் ஏற்படும்" என்று தோழர்கள் சத்திய
மூர்த்தியும், எம்.ஸி. ராஜாவும் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறிவிட்டார்கள். இப்பொழுது பிரிட்டிஷ் சர்க்காரரும், ஜஸ்டிஸ் கட்சியார் தீர்மானத்தின் முக்கியமான பகுதியை ஒப்புக் கொண்டு விட்டதாகத் தெரிய வருகிறது
ஹாமண்டு கமிட்டியார் சிபார்சுகளைப் பற்றி பிரிட்டிஷ் பார்லிமெண்டில். பிரிட்டிஷ் சர்க்கார் சமர்ப்பித்திருக்கும் மூன்று கவுன்சில் உத்தரவுகளின்
25 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நகல்கள் இப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன. அவைகளின்படி சென்னை மாகாணத்தில் பிரதேச தொகுதிகள் எல்லாம் அநேகமாய் ஒரு மெம்பர் தொகுதியாகவே இருக்கும்
ஒடுக்கப்பட்டவர்களுக்கு புனா ஒப்பந்தப்படி பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக 6 விசேஷ இடங்களில் மட்டும் இரு அங்கத்தினர் தொகுதிகள்
இருக்கும்.
கூட்டுத் தொகுதிகள் குவியல் ஓட்டு முறையே கையாளப்படும்.
எந்த எந்த தொழிற் சங்கங்கள் ஓட்டுச் செய்யலாம் என்பதை அறிவிக்க கவர்னருக்கு பிரத்தியேக அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த பட்சம் இரண்டு வருஷங்களாவது வேலை செய்துள்ள தொழிற் சங்கங்கள் தான் பிரதிநிதித்துவத்துக்கு லாயக்கானவை. அத்தகைய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
பட்டம் பெற்று 7 வருஷங்களான கலாசாலைப் பட்டதாரிகளும் செனட்: அங்கத்தினர்களும் சர்வ கலாசாலைத் தொகுதிகளில் ஓட்டர்களாயிருப்பார்கள். ஆகவே ஜஸ்டிஸ் கட்சியாரின் முக்கியமான சிபார்சு பிரிட்டிஷ் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. பார்லிமெண்டும் ஓப்புக்கொள்வது நிச்சயம், இந்த வெற்றிக்காக ஜஸ்டிஸ் கடைசியாரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். சென்னை சர்க்கார் வகுத்திருக்கும் திட்டப்படி சென்னை மாகாணத்தில் 76 ஒரு மெம்பர் தொகுதிகளும், 35 இரு மெம்பர் தொகுதிகளும் இருக்கும்.
ஒரு மெம்பர்கள் ஒற்றை ஓட்டு முறை ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. இரு மெம்பர் தொகுதிகளில் குவியல் ஓட்டு முறையே இருந்து வருமென்று தெரிகிறது. இரு மெம்பர் தொகுதிகளிலே ஒடுக்கப்பட்டவர் களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதினால் ஒடுக்கப் பட்டவர்களின் உண்மையான பிரதிநிதிகள் தேர்தலில் வெற்றி பெறுவது வெகு கஷ்டமே. இதற்கு, புனா ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்த ஒடுக்கப்பட்டவர் களின் தலைவர்களைத்தான் ஓடுக்கப்பட்டவர்கள் குறைகூற வேண்டும் பொதுவாக பிரிட்டிஷ் சர்க்கார் செய்திருக்கும் சிபார்சு திருப்திகர மானதென்றே சொல்லவேண்டும்
இந்த நிலைமையிலாவது தேசீயப் பத்திரிகைகளுக்கும், தேசீயத் தலைவர்களுக்கும் நற்புத்தி உதயமாகியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை யென்றே தெரிகிறது. சென்னை சர்க்காரும், சென்னைச் சட்டசபையும், இந்தியச் சட்டசபையும், இந்திய சர்க்காரும், பிரிட்டிஸ் சர்க்காரும் ஒரு மெம்பர் தொகுதியையும் ஒற்றை ஓட்டு முறையையும் ஒப்புக்கொண்டு விட்டதினால், அவைகளை எதிர்த்தவர்கள் யோக்கியப் பொறுப்புடையார்
குடி அரசு - 1936 (1) 226
களாயிருக்கும் பக்ஷத்தில் தாம் செய்த தவறை உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு பச்சாதாபப்பட வேண்டியதே நியாயம், ஆனால் தேசீயப் பத்திரிகைகளோ இப்பொழுதும் ஊளையிட்டுக்கொண்டே இருக்கின்றன. டாக்டர் சுப்பராயன் கூட “என்ன செய்வது? என்னாலானவரைப் போராடினேன். வெற்றி கிடைக்கவில்லை. எனினும் இப்பொழுதும் நான் பல மெம்பர்கள் தொகுதியையும் குவியல் ஓட்டு முறையையுமே நான் ஆதரிக்கிறேன்" என்று கூறிக்கொண்டு இருக்கிறாராம். வாதத்துக்கு மருந்துண்டு; பிடிவாதத்துக்கு மருந்தேது? எனவே டாக்டர் சுப்பராயனையும் அவரது சகாக்களையும் அவர்கள். போக்கில் விட வேண்டியதுதான்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.03.1936
227 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மாம்ச ஆகாரமும் பார்ப்பனர்களும்
இந்து மதத்தில் பசு மிகவும் மேன்மையாகப் பாவிக்கப்படுகிறதென்றும், முக்கியமான தெய்வமென்றும், அதை வதை செய்வதால் இந்து மதத்திற்கு பெரும் பங்கமேற்படுகிற தென்றும், இந்துக்கள் பெரும் தடை செய்கின்றார்கள். பூர்வீக காலத்திலிருந்த இந்து மதத்திலேயே பசுவதை செய்வதை ஹலாலாக்கி வைத்திருந்தது மட்டுமல்லாமல் முஸ்லீம்கள் அவ்விறைச்சியை எவ்வாறு புசிப்பது அவர்கள் மார்க்கத்தில் கூடுமானதாயிருக்கின்றதோ. அதே போல் இந்துக்களும் அம்மாமிசத்தை புசித்து வந்தனர் என்ற விஷயம் இந்து மத ஆராய்ச்சி நிபுணர்களின் ஆராய்ச்சியில் மறைந்திருப்பதன்று இவ்வாறு இந்து மதத்தில் பசு வதை செய்வது சரியென்றும், பலி செய்யப் பட்ட பசுவின் மாமிசத்தை புசிக்கலாம் என்றும், இந்து வல்லாத மத ஆராய்ச்சி நிபுணர்கள் எத்தனையோ வியாசங்களைப் பிரசுரித்திருக்கின்றார்களே யாயினும் இன்றைக்கு வங்காள பிரபல பூர்வீக மத ஆராய்ச்சியில் இந்து நிபுணரான ராஜா ராஜேந்திரலால் மத்ரா எல்.எல்.டி. சி.ஐ.இ., அவர்களால் எழுதப்பட்ட ஓர் புத்தகத்தில் “இந்து ஆரியன்" என்ற மகுடம் சூட்டப்பட்ட 6-வது அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும்விஷயத்தைநாம் கீழே குறிப்பிடுகின்றோம்:-
அப்புத்தகத்தில் இந்துமதக் கோட்பாடுகள் எவ்வாறு போதிக்கப் பட்டு வந்திருக்கிறதென்பதை இதைப் படிக்கும் நண்பர்களுக்கு நன்கு புலனாகிவிடும். ஆனால் அவர் புத்தமதத்தைச் சார்ந்தவரோவென நீங்கள் நினைக்கக்கூடும். ராஜாசாகிப் அவர்கள் வங்காள வைஷ்ணவர். அவர் தம்முடைய மேலே கூறப்பட்ட புத்தகத்தில் பூர்வீக இந்துக்களின் மதக் கோட்பாடுகளை மிகவும் ஆராய்ச்சியுடன் வரைந்துள்ளார்.
அவர் கூறுவதாவது:-
'இப்பிரச்சினையின் மகுடமே என் தேச நண்பர்களில் பெரும் பான்மையோர்களின் மனதில் பெரும் வெறுப்பை யுண்டு பண்ணும் இமாலய பர்வதத்தைக் கடந்து வரும் ஆரியர்களின் மதக் கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்வதில் நமக்குக் கிடைக்கும் அத்தாட்சிகளே இவ்விஷயத்தில் விவாதிப்பதற்கு போதிய அத்தாட்சியாகும்
பசு மாமிசத்தை உணவாக புசிக்கலாம் என்று நினைத்த வுடனேயே இந்துக்களின் மனம் புண்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள்
குடி அரசு - 1936 (1) 228
தானென்ன? லட்சக்கணக்கான இந்துமதப் பற்றுடைய இந்துமத நிபுணர்களும் கூட பசு மாமிசம் என்ற பெயரையுங் கூட வாயால் சொல்ல அருவறுக்
கிறார்கள். நம் நாட்டில் பசு வதை செய்யும் விஷயத்தில் பெருங் கிளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் உயிர்ப் பிராணிகளை அறுப்பதால் சில ஆத்மாக்கள் அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல், அவ்வாறு அறுக்கப்படுவது விருந்தினர்களுக்கெனக் கருதப்பட்டும் வந்தது. மேலும், இறந்து போன இந்துவுடன் ஓர் பசுவையும் சேர்த்து மயானக் கரையில் வைத்து எரிக்கப்பட்டு வந்தது. இவ்வந்தரங்கமான விஷயத்தை வெளியிடுவதன் நிமித்தம் இந்துக்களின் தற்போதைய கிளர்ச்சிகளை யுணர்ந்த இந்தியர்களுள் பெரும் ஆச்சரியத்தையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணும். இவ்விஷயங்களை நான் எந்த கிதாப் (புத்தகம்) பிலிருந்து எடுத்திருக்கின்றேனோ அக்கிரந்தங்களில் எத்தகைய சந்தேகமும் அதிருப்தியும் கொள்ள முடியாது
புரொபசர் வில்சனின் ஆராய்ச்சி!
என் தேச நண்பர்களில் யார் தக்க கல்வி கற்றிருக்கிறார்களோ அவர்கள் வேதங்களில் 'கோமேதம்' 'அஸ்வமேதம்' என்று பசுவையும் குதிரையையும் பலி கொடுக்கும் யாகங்கள் இருப்பதை நன்கு அறிவார்கள். அவ்யாகத்தின் தாத்பரியம் கால்நடை மிருகங்களை பலி செய்வதே. அவ்வாறு தக்க கல்வி கற்றவர்கள், பலி செய்ய வேண்டுமென்றிருப்பதை உதாரணமாக வரையப் பட்டிருக்கிறதெனக் கருதுகின்றார்கள். அவர்கள். அவ்வாறு மேற்பார்வையாகப் பார்த்து உதாரணமாகக் கூறப்பட்டிருக் கிறதெனக் கருதி விடுவதால் அதன் அந்தரங்கங்கள் மறைவாக இருந்து விடுகிறது. ஆதலின் அத்தகைய பலி அமுலில் கொண்டுவரப்பட்டதன்று என ஜனங்கள் கருதிக்கொள்ளுகிறார்கள். அதே போல் புரொபசர் வில்சன். அவர்கள் இவ்விஷயங்களை ஆராய்ச்சி செய்வதற்காக நாடி முதன் முதலாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பஞ் செய்தபோது அவருக்கும் இதன். அந்தரங்கங்கள் சரிவர விளங்காமல் அவரின் யோசனைக்கும் எட்ட வில்லையாயினும் அத்தகைய கல்வி நிபுணர்கள் போன்றவர்களின் பார்வைக்கும் அந்தரங்கங்கள் மறைந்திருப்பது முடியாத காரியமாகையால் அவர் மேகாவத் மொழி பெயர்ப்பின் ஓரிடத்தில் குறிப்பிடுவதாவது:-
கோமேதம், அஸ்வமேதம் எனப்படும் யாகங்களில் பசு குதிரை இவைகளை பூர்வீக காலத்தில் இந்துக்கள் பொதுவாக பலி செய்து வந்தனர். இந்தப் பலியானது உண்மையான பலியல்லவென்றும், பலியின் பாவனையாகச் செய்யப்பட்டதென்றும் கூறப்படுகிறது. அதாவது:-
பலியாக குறிப்பிடப்பட்ட ஒரு பசுவின் மீது ஏதாவது ஓர் அடையாளத்தைப் போட்டு அதை உயிரோடு விடப்பட்டு வந்தது. ஆனால் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாசகங்களும் இந்துக்கள் செய்யும்
2299 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வேலைக்கு உதவியாகத் தெரியவில்லை. ஏனெனில், பசுவின் இரத்தம் கடலைப் போல ஆகவேண்டுமென்று கூறப்பட்டிருப்பதன் உண்மையான வியாக்கியானம் பசுவின் இரத்தத்தையே வெள்ளமாக ஓட்ட வேண்டு மென்பதேயன்றி பசு பலி யென்று வாயால் சொல்லி ஒரு குறியைப்போட்டு அப்பிராணிகளை வெளியில் ஓட்டி விடுவதுபலியாகமாட்டாது. பசு பலி செய்ய வேண்டுமென ந்தப் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறதோ அப்புத்தகத்திலிருக்கும் வாக்கியத்தின் மொழிபெயர்ப்பு வருமாறு:-
மாம்ச ஆகாரமும் பார்ப்பணர்களும்
“பசு சந்ததிகளின் இரத்தம் ஆறாகக் கிளம்பி ஓடிற்று.”
புரொபசர் அவர்கள் எவ்விஷயத்தில் அத்தாட்சிகள் காட்டுகின்றாரோ அவ்விஷயத்தில் ஜனங்கள் முன்னமே விவாதம் செய்திருக்கின்றார்களாயினும் பலி செய்ய வேண்டுமென வேதத்தில் கண்ட வாக்கியத்திற்கு இரத்தத்தை ஓட்டவேண்டுமென்றே பதில் கூறி இருக்கின்றார்கள். சிலர் அவ்வாக்கியத்திற்கு நேரான வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்
மிஷிகன் விருந்தில் பசு மாமிசம் வஸிஷ்ட ரிஷியானவர் விஸ்வாமித்திரர், ஜனகர், சத்தியானந்தர், ஜமதக்கினி முதலிய ரிஷிகள், சிநேகிதர் ஆகியவர்களுக்கு விருந்தளித்தார். அவ்விருந்திற்காக ஓர் கொழுத்த பெண் பசுக்கன்றை அறுத்தார். ஜமதக்கினிக்கு விருந்துக்குர் சொல்ல போயிருந்த வசிஷ்ட ரிஷி சாப்பாட்டின் இன்பத்தையும் அதன் திவ்ய வாசனைகளையும் கூறுகையில் அவர் கூறியதாவது:-
பசுக்கன்று அறுப்பேன், நெய் சாதம் சமைக்கப்படுகிறது. நீங்கள்.
ஓர் படித்த கல்விமான்; நானும் ஓர் படித்தவன்: ஆதலின் நீங்கள் என் விருந்துக்கு வந்து நாங்கள் சமைத்து வைத்திருக்கும் பசு மாமிசம், நெய் சாதம் இவைகளைச் சாப்பிட்டு எங்களுக்கு ஆசி கூறும்படியாக வேண்டுகிறேன்.
இவ்விஷயங்கள் பூராவும் ஓர் சரிதையிலிருந்து எடுக்கப்பட்டதில் எத்தகைய சந்தேகமும் கிடையாதாயினும், இத்தகைய விஷயங்களை
ஓர் நிமிஷத்திற்காவது இட்டுக்கட்ட முடியாது என்பதும் திண்ணம். ஏனெனில் இவ்விஷயத்தைக் குறிப்பிட்டுள்ள சரிதையின் ஆசிரியருக்கு இதை படிக்கும் பொது ஜனங்களின் மனம் கொதிப்படையு மென்பது தெரிந் திருப்பதுடன், இல்லாததை இட்டுக்கட்டி இத்தகைய விஷயங்களை எழுதத் துணிய மாட்டார்.
விருந்தாவிக்கு மமியாதை
கோல்புருக் என்ற ஒருவர் ஹிந்து மதக் கோட்பாடுகளை மட்டும்
ஓர் புத்தகமாக எழுதியிருக்கிறார். அவர் அப்புத்தகத்தில் கூறுவதாவது:-
குடி அரசு - 1936 (1) 230
பூர்வீக காலத்திலிருந்த ஹிந்துக்கள் தங்கள் வீட்டிற்கு யாராவதொரு
விறாந்தாளி வந்தால் அவருக்காக ஓர் பசுவை அறுப்பது பொதுவான வழக்கமாக இருந்தது. ஆதலின் அவருக்குப் பசுவை அறுப்பவர் என்று கூறப்படுகிறது.
இந்துக்களின் விவாக காலத்தில் பசுவை அறுப்பதற்காகச் சொல்லப்
படும் மந்திர சம்பந்தமான விஷயங்களை கூறுகையில் அவர் கூறுவதாவது:-
நான் இவ்விஷயங்களை எந்தப் புத்தகத்திலிருந்து ஆராய்ச்சி செய்தேனோ அப்புத்தகத்தில் கூறுவதாவது, வரவேற்கத்தக்க விருந்தினர்களான.
கூர்த், புரோஹ்க், சன்யாசி, ராஜா, மாப்பிள்ளை, சினேகிதர், மற்றும் கெளரவிக்கத் தக்க விருந்தினர்கள் இவர்களுக்காக வேண்டி ஒரு பசுவைக் குறிபார்க்கப்பட்டு அறுப்பதற்காக வேண்டி கட்டிவிடுகின்றார்கள். ஆதலின் இவர்களுக்கு பசுவைக் கொல்லுகிறவர்களென்று கூறுகின்றார்கள்.
மனுஸ்மிருதியில் பசு மாமிசம்
எக்காலத்திலுமே பசு மாமிசம் சாப்பிடலாமென மனுஸ்மிருதி அனுமதிக்கிறது. ஆனால் அதைச் சாப்பிடுவதற்கு முன் ஒரு துண்டைத் தேவதைகளுக் கென்றாவது, பெரியோர்களின் ஆத்மாக்களுக்கென்றாவது, விருந்தாளிக்கென்றாவது மனதில் ஞாபகம் செய்து கூப்பிட வேண்டும் மேலும் மனுஸ்மிருதியில் வரையப்பட்டிருப்பதாவது:- யாதொரு மனிதன். கிரயத்திற்காவது, இலவசமாகவாவது பசுமாமிசத்தை வாங்கி தேவர் களுக்காவது அல்லது ஆத்மாக்களுக்காவது ஸ்தோத்திரம் செய்த பிறகு அம் மாமிசத்தைச் சாப்பிடுவதில் எத்தகைய பிணியும் கிடையாது. (மனு 23-5)
ஆனால் மனுஸ்மிருதி பசு மாமிசத்தை ஓர் உணவாகக் கூறவில்லை யாயினும், மனிதன் சாப்பிடக்கூடிய உயிர்ப் பிராணிகளின் நாமங்களைக் கூறப்பட்டிருக்கும் அத்தியாயத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
முள்ளெலி, பெருச்சாளி, ஆமை, முயல் ஆகியவைகளை இந்து மத நிபுணர்கள் உண்ணலாமென வைத்திருக்கின்றார்கள். நான்கு கால். மிருகங்களில் ஒட்டகம் ஒன்று மட்டும் நீங்கலாக ஒரு பக்கத்தில் மட்டும் பல்லிருக்கக் கூடிய மிருகங்கள் எதானாலும் சாப்பிடலாம். (மனு 18-5) மேலே கூறப்பட்ட நிபந்தனைப்படி பசுவும் அதில் சேர்ந்ததென்பதில். ஐயமில்லை. ஏனெனில் பசுவுக்கு ஒரே பக்கத்தில்தான் பற்களுண்டு என்பது மனு ஸ்மிருதியில் மறைவானதன்று, மனு பசுவைச் சாப்பிடக் கூடாதென்று விலக்கியிருந்தால் ஒட்டகத்தோடு சேர்த்துப் பசுவையும் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாதென விலக்கியிருப்பார்கள். ஆனால் முன்பின் வாசகங்களைக் கவனிப்பது கொண்டு பசுவைச் சாப்பிடக் கூடாதென விலக்கவில்லை யென்று நாம் அர்த்தம் செய்து கொள்வது சரியான அத்தாட்சியாகமாட்டாது. ஆதலின் பிரமச்சாரியானவர் தம் வீட்டிற்கு திரும்பி வருவதற்காக குருவுக்கு சில காணிக்கைகள் கொடுக்கின்றார்கள். இவ் விஷயம் மனு ஸமிருதியில் தக்க ஆதாரமாக இருக்கிறது. அதில் எழுதியிருப்பதாவது:-
231 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பிரமச்சாரிகள் விவாகத்திற்கு முன் வேதங்களில் கூறப்பட்டிருக்கும் காணிக்கைகளைச் சேகரித்து புஷ்பங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கம்பளத்தில் உட்கார்ந்து மார்க்கக் கோட்பாட்டின் படி குருவுக்கு ஒரு பசுவை வெகுமதியாக கொடுக்கவேண்டும். (மனு 6- 3) அதன் பின்வரும் ஒரு வாசகத்தில் காணப்படுவது:- இராஜாக்கள் பிரபல விருந்தினர்களுக்காக இன்பமான சாதமும் பசு மாமிசமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றது
அஸ்வ மஹாபாரதம், ராமாயணம்
அஸ்வத் தமது அரச கட்டளையில் துவர்க்கமாகக் கூறுவதாவது:-
ஆதி காலத்தில் அவனுடைய பொங்குமடத்தில் லக்ஷக்கணக்கான உயிர்ப் பிராணிகள் உணவுக்காக அறுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவைகள் இன்னின்ன பிராணிகளென விவரமாகக் கூறப்படவில்லை. அவைகளின் விவரங்கள் தெரியாலிடினும் அவ்வாறு மாமிசம் சாப்பிடும் காலத்தில் அவர் ஆடுகளை மட்டும் போதுமென வைத்திருக்க மாட்டாரென நாம் ஊகித்துக் கொள்ள முடியும்
மஹாபாரதம், ராமாயணம் இவைகளிலும் கோமேத யாகத்தைப்பற்றி கூறப்பட்டிருக்கிறது. கோமேத யாகமென்பது உயிர்ப் பிராணிகளை (குர்பானி) கொலை செய்வது. ஆனால் அதில் விஷயங்கள் விரிவாகக் கூறப்படவில்லை. பசுவின் மாமிசத்தை உணவைப் போல் சாப்பிட்டு வந்ததா இல்லையாவென்ற விவரமும் கூறப்படவில்லை
வைதீகத்தில் பசு மாமிசம்
ஈஸவி 500, 600 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட சர்க் சந்தவென்ற
வைதீகப் புத்தகத்தின் ஒர் அத்தியாயத்தில் இவ்விஷயத்தை விரிவுரையாக கூறப்பட்டிருக்கிறது. அதில் ஓர் அத்தியாயத்தில் உணவு விஷயமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஓர் இடத்தில் காணப்படுவதாவது:-
பசு, எருமை, பன்றி இவைகளின் மாமிசங்களை பிரதி தினந்தோறும் Ll கூடாதென வரையப் பட்டிருக்கிறது
மேலே கூறப்பட்ட விஷயங்களை நன்கு கவனிப்பது கொண்டு தெரிய வருவதாவது:-
அக்காலத்தில் ஹிந்துக்கள் பசு மாமிசம் சாப்பிட்டு வந்தார்களென்பதில்: சந்தேகமில்லை. ஆனால் பசு மாமிசம் தக்க பலமுடைய வஸ்துவானதால்
பிரதி நாட்கள் தோறும் சாப்பிடலாமென அனுமதிக்கப்படவில்லை. மற்றுமோர்:
இடத்தில் அக்கிரந்த கர்த்தாவானவர் கூறுவதாவது:- கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்குப் பசு மாமிசம் கொடுக்கவேண்டுமென்றும், அது பிரசவ காலத்திற்கு வேண்டிய பலத்தைக் கொடுக்கிறதென்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
குடி அரசு - 1936 (1) 23:
ப்
மற்றும் சில வைதீகப் புத்தகங்களில் பல முறைகள் கூறப்பட்டிருக் கிறதாயினும் பசு மாமிசம் அறவே சாப்பிடக் கூடாதென எந்த வைதீகப் புத்தகத்திலும் காணப்படவில்லை. அஸ்மனா விஷபாவுடைய சில வைதீகப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- ஓர் மனிதன் போதையாக இருந்து தெளிவு பெற்றபின்அவன் பசு இறைச்சி சாப்பிடுவதால் பெரும் அனுகூலங் களிருப்பதாக வரையப்பட்டிருக்கிறது
பக மாமிச உப்புக்கண்டம்
குர்ஹீயா சூத்திரத்தில் பசு குர்பானியின் முறை ஓர் விதமாகக் கூறப் பட்டிருக்கிறது. அதற்கு சுடப்பட்ட பசு மாமிசம் உப்புக் கண்டம் எனக் கூறப்படுகிறது. அதற்காக வேண்டி பசுக்களில் நல்ல பசுவாகவும், கொழுத்த தாகவும் இருப்பதுடன் பாதரம் நிறமாகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு இந்தப் பசுவுக்கு பல நிபந்தனைகளுண்டு. அவ்வாறு குர்பானி செய்யப்படும் பசுவிற்கு எத்தனை நிபந்தனைகளிட்டிருக்கின்றார்களோ அத்தனை நிபந்தனைகளும் பொருந்திய ஓர் பசுங்கன்று கிடைத்தால் வெந்நீர் கொண்டு குளிப்பாட்டி அதை ரூரா (சுவாமி)வுக்கு வேண்டுதலைசெய்து கட்டிவைத்து வளர்த்து வருகின்றார்கள். அந்தக் கன்றுக்குப் பற்கள் பூராவும் முளைத்து குறிப்பிட்ட தவணை வந்தவுடன் குர்பானியின் மந்திரம் கிரிவுக்கள் தெரிந்த புர்ஹத் பிராமணனை அழைத்து அவர் படிக்க வேண்டிய மந்திரங்களைப் படித்து நெருப்பில் போட வேண்டிய வஸ்துக்களைப் போட்டு செய்ய வேண்டிய கிரியைகள் பூராவையும் செய்து முடித்துவிட்டு
புது நூதனமாக தயார் செய்யப்பட்ட ஓர் இடத்திற்கு அந்தப் பசுவைக் கொண்டுபோய் பொதுவான சட்டப்படி அறுத்து அதன் ஈரலை எடுத்து
ஓர் தட்டில் வைத்து 12 தேவதைகளின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே அந்தத் தட்டை நெருப்பில் வைத்து விடுகிறார்! அதன் பிறகு வைக்கோல் புற்களை விரித்து கொஞ்சம் அரிசிப் பொத்தலையும் பசு மாமிசத்தையும் வைத்து ரூரோவுக்கு பூஜை செய்கின்றார்கள். பூர்வீக காலத்தில் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசுவின் எலும்பு, ஜவ்வு, தோல் இவைகளை நெருப்பில் போட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு வந்த சம்பீதா ரிஷியானவர் அவ்வாறு நெருப்பில் போடப்படும் வஸ்துக்களில். பொது ஜனங்களுக்குப் பிரயோஜனம் தரக்கூடியதான தோலை நெருப்பில் போடுவதற்கு பதிலாக செருப்பாக தைத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாமென பொதுவாக உத்தரவு செய்து விட்டார். அவ்வாறு ரூராவுக்கு பூஜை செய்ததன் பிறகு பிராமண பூசாரியானவர் இடது பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நேராக எழுந்து நின்று ஏதோ சில மந்திரங்களைப் படித்துக்கொண்டே அறுக்கப்பட்ட பசுவின் இரத்தத்தை அவ்விடங்களிலிருக்கும் சாப்பங்களுக்கு சேர்க்கை செய்து விடுகிறார். இவ்வெல்லாக் கிரியைகளும் செய்து முடித்த பிறகு கடைசியாக (சுவிஸ்த்தாக்கிர்த்) என்ற ஒரு பூஜையும் செய்யப்படுகிறது. பிறகு அப்பசுவுடைய நெஞ்சு மாமிசத்தினின்றும் சுடுவதற்காகக் கொஞ்சம் மாமிசத்தை எடுத்துக் கொள்ளப்படுகிறது
233 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அதன் பிறகு மீதியாயிருக்கும் அப்பசுவின் மாமிசத்தைப் பொதுவாக எல்லோரும் சாப்பிடலாமென்று சில சூத்திரங்கள் கூறுகின்றன. சில சூத்திரங்கள். அப்பசுவை குர்பானி செய்தவர்கள் மட்டும் சாப்பிடலாமெனக் கூறுகின்றன.
இவ்வாறு ஒரு மனிதன் குர்பானி செய்து விட்டால் அவனுக்கு வயது அதிகமாகிறதென்றும், செல்வந்தனாவானென்றும், நல்ல நிலைமையிலே இருப்பானென்றும், தன் மதத்தில் கெளவமுடையவனாக இருப்பானென்றும்,
சந்ததிகள் அதிகமாகுமென்றும், கால் நடை மிருகங்கள் அவனுக்கு அதிகமாகு மென்றும், அவ் வேதத்தில் ஆசை காண்பிக்கப்பட்டிருக்கிறது. சகல தனவந்தர். களும் அவர்கள் வயதில் ஓர் விடுத்தமாவது இவ்வாறு குர்பானி செய்ய வேண்டியது முக்கியமென்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு குர்பானி செய்யப்பட்ட பசு மாமிசம் எவ்வாறு சமைக்கப்பட்டதென்ற விஷயம் விரிவாகக் கூறப்படாதது மிகவும் வருந்தத்தக்கதே. சமைக்கப்படும் முறை விவரமாக கூறப்படாவிடினும் அறுக்கப்பட்ட பசுவின் நெஞ்சு மாமிசத்திலிருந்து சுடுவதற்காக மாமிசம் எடுப்பதே அவர்கள் சமைக்கும் முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - மார்ச்சு 1936
குடி அரசு - 1936 (1) 234
சுயமரமியாதைக்காரரும் மதமும்
மதம் என்பது கடவுளாலும் கடவுள்களால் அனுப்பப்பட்டவர்களாலும் கடவுளை அடைவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்மந்தத்தை விளக்குவதற்கும் ஏற்பட்டவைகள் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம்
மனிதன் நடந்து கொள்ள வேண்டியதற்கு ஆக ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் - விதிகள் - திட்டங்கள் என்பதுதான் மதம் என்பது மற்றொரு
சாராரின் அபிப்பிராயம்
எப்படி இருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் மதம் என்பதைப்பற்றி கொண்டுள்ள அதப்பிராயம் பலர் அறிந்ததேயாகும். நிர்ப்பந்தமான அல்லது மூடநம்பிக்கையானதும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் சாத்தியத்துக்கும், மாறானதும் பகுத்தறிவிற்கும் ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானத்திற்கும் எதிரானதுமான காரியங்களையோ கருத்துக்களையோ ஆதாரங்களையோ ஏற்றுக்கொண்டு இருப்பதே மதம் என்றும், அது எதுவானாலும் அப்படிப் பட்ட மதங்களையே சுயமரியாதைக்காரர்கள் மறுக்கிறார்கள் என்பதோடு அம்மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.
சாதாரணமாக இன்று இந்தியாவில் பெரும்பான்மையான அதாவது 100-க்கு 95 பேர்களுக்கு மேலாகவே உள்ள மக்களை ஆவாகனம் செய்து கொண்டிருக்கும் மதங்களாகிய இந்து மதமும் மற்றும் சீர்திருத்த மதங்கள். என்பவையாகிய இஸ்லாம், கிறிஸ்து, ஆரிய சமாஜம், பிர்மசமாஜம், முதலிய பல மதங்களும் நிர்பந்தமான நம்பிக்கை (அதாவது நம்பித்தான் தீரவேண்டும் என்பது) அல்லது மூடநம்பிக்கை அல்லது கொள்ள முடியாததும் ஆதார மில்லாததுமான விஷயங்களில் நம்பிக்கை வைத்தல் ஆகியவைகளையோ அல்லது இவற்றில் சிலவற்றையோ கொண்டதாகத் தான் காணப்படுகின்றன.
சரீரம் வேறு, ஆத்மா வேறு என்றும், கடவுள் வேறு ஆத்மாவேறு என்றும், அது மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்புடையது என்றும் மனிதனையும் கடவுளையும் ஒன்று சேர்ப்பது என்றும், சரீரத்தின் கூட்டுறவால், அதன் தூண்டுதலால் ஆத்மா செய்த குற்றத்துக்கு கடவுளுடைய தண்டனைகள் ஆத்மாவுக்கு மாத்திரம் தான் கிடைக்கும் என்றும், இறந்த பிறகு அதாவது சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்த பிறகு தீர்ப்பு நாளில் மறுபடியும் ஒரு சரிரத்தைப் பெற்று சித்திர புத்திரன் கணக்குப்படி தண்டனைகள் கண்டனைகள். அடையும் என்றும், செத்தவர்கள் மறுபடியும் பிறப்பார்கள் என்றும்,
238 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஒரு ஆத்மாவுக்கு பல ஜன்மங்கள் உண்டு என்றும், அந்த ஜன்மங்கள் எல்லாம் ஆத்மாவும், சரீரமும் கலந்து இருந்த காலத்தில் செய்த காரியத்துக்கு ஏற்ற விதமாகக் கிடைக்கும் என்றும், இப்படி இன்னும் எவ்வளவோ விஷயங்களைக் கொண்டவைகளே இன்று செல்வாக்குள்ளதும் இந்நாட்டில் 100க்கு 95 பேர்களுடையதுமான மதங்களாய் இருக்கின்றன.
இப்படிப்பட்ட மதங்களைத் தான் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக் கொள்வதில்லை. ஒப்புக் கொள்ளவும் முடியாது என்பதோடு இந்த மதங்களிலிருந்து மக்கள் விடுபட்டு அறிவுச் சுதந்திரவாதிகளாக - பகுத்தறிவுவாதிகளாக ஆக வேண்டும் என்பது சுயமரியாதைக்காரர்களின். முக்கிய லக்ஷயமாகும்
அது போலவே உலக நடப்புக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும் காரணகர்த்தாவாக கடவுள் என்கின்ற ஒரு வஸ்து இருக்கிறது என்பதையும், அது மக்கள் தீண்டப்படாதவர்கள் ஆவதற்கும், மக்களை மேல் ஜாதிக்காரர்கள், முதலாளிகள், அரசர்கள் என்பவர்கள் கொடுமைப்படுத்துவதற்கும் காரணமாயும் மனிதனுக்கு ஆக உலகில் உள்ள. ஜீவராசிகள் ஆடு, மாடு, பன்றி, கோழி, பக்ஷிகள், மச்சங்கள் முதலாகியவைகள். சிருஷ்டிக்கப்பட்டது என்பதற்கும் காரண கர்த்தாவாயும் இருக்கிறது என்பதையும் சுயமரியாதைக்காரர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.
மற்றும், அக்கடவுளே எரிமலை, பூகம்பம், புயல்காற்று, வெள்ளக் கொடுமை ஆகியவைகளுக்கு கர்த்தாவாகவும் விஷஜுரம், தொத்து நோய், கொள்ளை நோய், குறை நோய், உளைமாந்தை ஆகிய வியாதிகளுக்கும்,
தேள், பாம்பு முதலிய விஷக்கிருமிகளுக்கும் புலி, சிங்கம், ஓநாய், நரி முதலிய துஷ்ட ஜெந்துக்களுக்கும், சிருஷ்டி கர்த்தாவாகவும் எலியைப் பூனை தின்பதற்கும், ஆட்டைப் புலி தின்பதற்கும், புழுப்பூச்சிகளை பட்சிகள் தின்பதற்கும், பட்சிகளை வேடர்கள் வேட்டையாடுவதற்கும் காரணகர்த்தாவாயும் இருக்கிற கடவுளையும் சுயமரியாதைக்காரர்கள். ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு அப்படிப்பட்ட கர்த்தாவையும் ஒழிக்கவேண்டும் என்றும் சொல்லுகிறார்கள்.
மேலும் வேறு எப்படிப்பட்ட கடவுளானாலும் அதை வணங்கினால், அதற்கு ஆகாரம், நகை, துணி, பெண்ஜாதி, வைப்பாட்டி முதலியவை வைத்து பூஜைசெய்தால், உயிர்பலிகொடுத்தால், இன்ன இன்ன மாதிரி தொழுதால், ஸ்தோத்திரித்தால் ஜபித்தால் மனிதன் செய்த எல்லா கெட்ட காரியங்களின் பாபங்களையும் மன்னித்துவிடுவார் என்கின்ற கடவுளையும்
ஒப்புக் கொள்ளாததோடு அப்படிப்பட்ட கடவுளுணர்ச்சியையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.
கடவுளைப்பற்றிய மற்ற விஷயத்தை மற்றொரு சமயம் விவரிப்போம்
குடி அரசு - 1936 (1) 236
மதம் என்னும் விஷயத்தில் மேலே குறிப்பிட்ட தன்மைகளைக் கொண்ட மதங்கள் இருக்கக்கூடாது என்பது தான் சுயமரியாதைக்காரர்களின். மத சம்பந்தமான அபிப்பிராயமாகும்
ஏன் இதை முதலில் குறிப்பிடுகிறோம் என்றால் விவகாரங்களுக்கு வரும்போது ஒவ்வொரு மதக்காரரும் தங்கள் தங்கள் மதங்களுக்குவெவ்வேறு
தத்துவம் இருப்பதாகவும், சகலவிதமான பகுத்தறிவு பரீக்ஷகளுக்கும்
தங்கள் மதம் நிற்கும் என்றும் சொல்லி வாதாடும் போது சமயத்துக்குத்
தகுந்தபடி பேசுவதால் நிலைமை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. ஆகையால்
மதங்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பல மதங்களுக்கும் உள்ள பொதுக் கொள்கைகளையே குறிப்பிட்டோம்
மற்றும் மதம் என்னும் வார்த்தைக்கு பலவித அருத்தங்களும், கருத்துக்களும் சொல்லப்படுகின்றன.
உதாரணமாக ஒருவர் “என்னுடைய மதம் யார் மனதையும் புண்படுத்தாமலும் யாருக்கும் என்னால் கூடிய நன்மை செய்வது தான்"
என்று சொல்லுகிறார்.
மற்றொருவர் “என்னுடைய மதம் கடவுளைப்பற்றி கவலைப்படாத நாஸ்திக மதம் தான்” என்கின்றார்.
மற்றொருவர் “என்னுடைய மதம் கடவுள் இல்லை; ஆத்மா இல்லை. ஆனால் கர்மத்துக்குத் தகுந்த பலன் உண்டு!” என்பது தான் என்கிறார்.
மற்றொருவர் “நான் கருதியிருக்கும் மதம் திமிர் அல்லது கொழுப்பு” என்கிறார்.
மற்றொருவர் “மதம் என்னும் வார்த்தைக்கு கொள்கை அல்லது கடமை'' என்பது தான் அர்த்தம் என்கிறார்
மற்றொருவர் “என்னுடைய மதம் விஞ்ஞானம்" என்கிறார்.
மற்றொருவர் “என்னுடைய மதம் மனித ஜீவ அபிமானம்தான்” என்கிறார். மற்றொருவர் “என்னுடைய மதம் பொதுவுடமை கொள்கை" என்கிறார். இப்படியே இன்னும் பலவிதமாய் மதம் என்னும் வார்த்தைக்கு தனித்தனி கருத்துக்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் அவைகளைப்பற்றி யெல்லாம் விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம்.
ஆனால் முகப்பில் கூறிய இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய மதங்களின் அஸ்திவாரம் ஒன்றுபோலவே இருந்தாலும் அதன் மேல் கட்டப்பட்ட கட்டடங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளுகிறோம்.
237 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஒருவன் உண்மையாகவே மதம் இல்லாமல் இருப்பது நாஸ்திகம் என்று கருதிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தின் பேரால் உயிர் வாழ வேண்டியவனாய் இருக்கிறான்; ஆதலால் எப்படியாவது தான் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க வேண்டும். மற்றப்படி மதக்கொள்கைகள். எது எப்படி இருந்தாலும் தான் லக்ஷியம் செய்வதில்லை என்கின்ற கருத்தின் மீதே தனக்குள் எவ்விதக் கொள்கையும் இல்லாமல் ஒரு மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஏதோ ஒரு மத வேஷத்தைப் போட்டுக்கொண்டு இருக்க வேண்டியவனாக இருக்கிறான்.
மற்றும் பலரும் அதுபோலவே மதங்களுக்கு உள்ள செல்வாக்குக்கு பயந்து கொண்டு மத வேஷக்காரர்களாய் இருக்கிறார்கள். பரத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருப்பது போலவே இகத்தில் மேன்மை அடைவதற்கு என்று சிலர் மதவாதிகளாய் இருக்கிறார்கள்.
விளக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பணத்துக்கு ஆகவும், பெண்ணுக்கு ஆகவும், வயிற்றுப் பிழைப்புக்கு ஆகவும், உத்தியோகத்துக் காகவும் எத்தனையோ பேர் மதவாதிகளாகவும், மதமாற்றக்காரர்களாகவும் இருக்கிறார்கள். பொதுவாக பார்க்கப்போனால் கடவுள் ஏற்பட்ட வெகு காலத்துக்கு பிறகுதான் மதம் ஏற்பட்டு இருக்க வேண்டுமே ஒழிய கடவுளும் மதமும் இரட்டைப்பிள்ளைகள் போல் பிறந்தவைகள் அல்ல.
எப்படி இருந்தாலும் மதங்களானவை இன்று சடங்காகவும் வேஷமாகவும் இருக்கின்றனவே ஒழிய கொள்கையாகக் கூட எந்த மதமும் அனுபவத்தில் இருக்கவில்லை. புஸ்தகங்களில் பல கொள்கைகள் இருந்திருக்கலாம்; இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். காரியத்தில்
அக் கொள்கைகள் பெரிதும் அமுலில் இல்லை. ஆகவே அமுலில் இல்லாத கொள்கைகளைக் கொண்ட மதங்களில் எந்த மதம் மேலானது என்றோ, எந்த மதக் கொள்கை மேலானது என்றோ. வாதிப்பதானது ஆகாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோட்டைகளில் எது பலமான கட்டடம் என்றும், எது வசிப்பதற்கு சவுகரியமானது என்றும் கேட்பதுபோல் தான் ஆகும். முதலாவதாக ஒரு மதத்துக்கு கொள்கைகள் எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு கொள்கை நல்ல கொள்கை என்றால் அதற்கு இரண்டு சக்தி இருக்க வேண்டும்
அது எல்லா மக்களுக்கும் ஒன்று போல் அனுபோகத்தில் சமமாக நடத்தக் கூடியதாக இருக்கவேண்டும். அதோடு கூடவே அக்கொள்கைகள் எல்லா மக்களாலும் எவ்வித நிர்ப்பந்தமூம் இல்லாமல் தானாகவே பின்பற்றித் தீரவேண்டியதாகவும் இருக்க வேண்டும்
குடி அரசு - 1936 (1) 238
இப்படிப்பட்ட தத்துவங்களைக் கொண்ட கொள்கையை இதுவரை எந்த பெரியவரும் கண்டுபிடிக்கவுமில்லை. எந்த மதமும் கொண்டிருக்கவும் இல்லை.
அது செய்தால் பாவம் இது செய்தால் மோக்ஷம் என்றும், அது செய்தால் லாபம் இது செய்தால் நஷ்டம் என்றும், அது செய்தால் தண்டனை. இது செய்தால் தூக்கு என்றும், இப்படியாக பல நிர்ப்பந்தங்கள், பயம், தண்டனை கண்டனை ஆகியவைகளின் பாதுகாப்பால் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகளாகவும் அமுலில் கொண்டுவர எப்போதுமே முடியாததாகவும் அமுலில் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட வேண்டியதாகவும் மனிதனால் சாதாரணமாக செய்யக்கூடியதும் செய்வதற்கு ஆசையுண்டாக்கக் கூடியதும் அல்லாததாகவும் இருக்கக்கூடிய கொள்கைகளையேதான் எந்த மதமும் கொண்டிருக்கிறது
எந்தக் கொள்கையாவது கடவுளால் உண்டாக்கப்பட்டதாகவோ அல்லது கடவுளுக்கு இஷ்டமானதாகவோ இருந்திருக்குமானால் அது மக்களுக்கு மிகவும் இஷ்டமானதாகவும், செய்வதற்கு மிகவும் ஆசை யுடையதாகவும், சுலபத்தில் செய்து முடிக்கக்கூடியதாகவும் இருந்திருக்க வேண்டாமா? கடவுளுக்கு இஷ்டமான கொள்கை மனிதனுக்கு கசப்பானதாகவும், பெரும்பான்மையோருக்கு செய்வதற்கு முடியாததாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? ஆகவே கடவுளின் பேரால் மதத்தின் மூலம் மத கர்த்தாக்களால் சொல்லப்பட்ட கொள்கைகள் என்பவை சொன்னவர்களுக்கு அவர்களது புத்தித்திறமையும், அக்காலத்துக்கு சரி என்று பட்ட கருத்துக்களையும் கொண்டவைகளே தவிர எந்தக் கொள்கையும் எந்தக் கடவுளாலும் சிருஷ்டிக்கப்பட்டதல்லவென்றே சுயமரியாதைக்காரர்கள் கருதுகிறார்கள்.
இன்றும் மதமானது மக்களின் கூட்டு வாழ்க்கையின் அவசியத்துக்கு ஏற்ற கொள்கைகளைக் கொண்டது என்பதுடன் அவை பகுத்தறிவுக்கு ஒத்ததாகவும், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ப திருத்திக் கொள்ளக் கூடியதாகவும், சகல மக்களுக்கும் பலன் ஒன்றுபோல் உண்டாகக்கூடிய தாகவும் இருக்கத்தக்க கொள்கைகள் கொண்டது என்றால் அதை சுயமரியாதைக்காரர்கள் மறுப்பதற்கு மூன்வரமாட்டார்கள்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - மார்ச்சு 1936
239 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பட்டுக்கோட்டை பொதுக்கூட்டம்
காந்தியும் காங்கிரசும் சாதித்ததென்ன?
௬.ம. இயக்கம்
மிருகமும் பக்ஷியும் மலமும் மூத்திரமும் கடவுளா?
தோழர்களே!
தோழர்கள் பொன்னம்பலம், அழகிரிசாமி ஆகியவர்கள் பேசுகையில்
நீங்கள் சிரித்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தீர்கள்.
நமது இழி நிலை
நமது கேவல நிலைமையையும், முட்டாள்தனத்தையும் நம்மைப் பார்ப்பனர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பதையும் விளக்கும்போது நமக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி இருந்தால் சிரிப்பு வருமா?
ஆத்திரமும், வெட்கமும் அல்லவா வரும்
நமது இழிவானது நேற்று இன்று என்று இல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருவதால் நமது ரத்தம் வெட்கப்படுவதிற்கில்லாமல் இழிவிலேயே உறைந்து போய்விட்டது.
புரட்சி வேண்டும்
மனிதனுக்கு வெட்கமும், ரோஷமும் ஏற்படுவதற்கு ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கம் மனித சமூகத்தையே மாற்றி அமைக்க ஏற்பட்டதாகும். இந்தக் காரியம் ஒரு பெரும்
சமூகப் புரட்சியால் ஏற்பட வேண்டியதே ஒழிய சிரிப்பு விளையாட்டில் ஏற்படக்
கூடியதல்ல. இதற்காக அனேக தொல்லைகளை அனுபவிக்க வேண்டி வரும். அனேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும், இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும், கீழ்நிலைமைக்கும் ஆளாகிவருகிறோம். நம்மை நாம் திருத்திக்கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மனமாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவதென்பது
ஒருநாளும் முடியாத காரியமாகும்
குடி அரசு- 1936 (1) 240
சமூகத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி, அடிமை ஜாதி என்பவைகள் இருப்பதோடு ஆண் பெண் தன்மைகளில் உயர்வு தாழ்வும் இருந்து வருகிறது. இவை தவிர ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி
தன்மையும் இருந்து வருகிறது இவற்றுள் சில இயற்கையாக ஏற்பட்டதாகவும், சில முயற்சியால் செயற்கையாக ஏற்பட்டதாகவும், இவ்வளவுக்கும் காரணம் மனிதன் அல்ல வென்றும், சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் பொருந்திய கடவுளால் ஏற்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. இவற்றையே மேல் நிலையில் உள்ளவனும் கீழ்நிலையில் உள்ளவனும் நம்பிக் கொண்டிருக்கிறான்.
மூடநம்பிக்கை
இந்த மூடநம்பிக்கை தான் வெகுகாலமாக மனித சமூகத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படுவதற்கில்லாமல் தடுத்துக்கொண்டு வருகிறது சாதாரணமாக மனிதப் பிறவியில் கீழ் ஜாதி, மேல் ஜாதி அடிமை (பறை) ஜாதி என்பவை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறது. இதற்கு ஆக நாளதுவரை யாரும் எவ்வித முயற்சியும் செய்யவில்லை
ஏனெனில் செய்யமுடியாதபடி அவனவன் நம்பிக்கையைச் செய்து கொண்டான்.
ஜாதி வித்தியாசங்களுக்கும், ஜாதிக்கொடுமைக்கும் கடவுள் காரணம் என்று எண்ணிய பிறகு யாரால் தான் பரிகாரம் செய்ய முடியும்? எந்த மனிதனும் மற்ற ஜாதியைப்பற்றி சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப்பற்றி நம்பிக்கை யாகவும், மேன்மையாகவும் கற்பித்துக்கொண்டு மற்றவர்களைத் தாழ்த்தி பெருமையடைகிறான். சாஸ்திரங்களில் மதங்களில் அவற்றிற்கு ஆதாரங்கள். கண்டுபிடிக்கிறான். புராணங்கள் எழுதி வைத்துப் பெருமையடைகிறான்.
இந்தக் குணம் பார்ப்பான் இடமாத்திரமல்ல; எல்லா ஜாதியாரிடமும்
இருந்து வருகிறது ஜாதி பேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விவசாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது
அஸ்திவாரத்தில் கையை வைத்து ஜாதிகளை ஒழிப்பதற்கு இன்று இந்த நாட்டில் சுயமரியாதை இயக்கம் தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.
திருவள்ளுவர், கபிலர், ராமானுஜர் முதலிய புராணக்காரர்களும் பிரம்மசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய மத சம்மந்தமான சில புது முயற்சிகளும், மற்றும் எத்தனையோ சீர்திருத்த முயற்சிகளும் எல்லாம் M வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உண்மையறியாமலும், உலக மெப்புக்கும் தனிப்பட்ட சமூக சுயநலத்தை முன்னிட்டும் செய்யப்பட்ட காரியங்களே தவிர, மனித சமூகத்தில் பிறவியின் பேரால் உள்ள ஜாதிபேதம் அடியோடு ஒழியத்தக்க மாதிரிக்கோ,
ஒழியும் படியாகவோ செய்த காரியங்கள் அல்ல.
இதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். தயவு செய்து நடுநிலையுடன் கவனியுங்கள். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்று செய்யப்பட்டு வந்த முயற்சிகளால் இதுவரை ஜாதி வித்தியாசங்கள் குறைந்ததா அதிகப்பட்டு வந்ததா என்று யோசித்துப்பாருங்கள். நாகரீகம் என்பதே புது
புது ஜாதிகள் உற்பத்தி செய்வதாகத்தான் இருந்து வருகின்றது
ஆதலால் ஜாதியை அடியோடு ஒழிக்க எவரும் முயற்சித்ததில்லை. மற்ற பலஜாதி மக்களின் முயற்சிகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தாலோ அவர்களும் தாங்கள் எப்படியாவது மேல் ஜாதிக்காரர்கள் என்று மதிக்கப்பட வேண்டும் என்கிற முயற்சிகளாகவே இருக்கின்றன.
ஜாதி இல்லாதவர்களும் கலப்பு ஜாதிக்காரர்களும் தாங்கள் ஒரு கலப்பற்ற ஜாதியை சொல்லிக் கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வெட்கப்படுகிறார்களே ஒழிய, தங்களைப் பொறுத்தவரை ஜாதி ஒழிந்ததே என்று யாரும் திருப்தியடைவதில்லை. இந்த தொல்லைகள் அடியோடு ஒழிய வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தில்தான் இடமிருக்கிறது; சுயமரியாதை இயக்கத்தால்தான் முடியும். மற்றபடி எப்படிப்பட்ட சீர்திருத்தவாதியானாலும் காரியத்திற்கு உதவவே உதவான். உதாரணமாக ஆசார சீர்திருத்தம் என்னும் பேரால் இந்தியாவில்
சுமார் 50 வருஷங்களுக்கு முன்பிருந்தே பல அறிஞர்கள், மகாராஜாக்கள், பெரும் பதவியாளர்கள் முதல் எத்தனையோ பேர்கள் பாடுபட்டார்கள். ஒருவராலும் ஒரு சிறு காரியமும் செய்யமுடியவில்லை.
முந்தியிக்கொட்டை காந்தியார்
எல்லாவற்றிற்கும் மேல் முந்திரிக்கொட்டை மாதிரி தோழர் காந்தியார் புறப்பட்டார். ஜாதியைப் பற்றி பேசாமல் [பேசினால் பார்ப்பனர் நிஷ்ட்டூரம் வருமே என்று பயந்து] தீண்டாமையை ஒழிக்கிறேன் என்று புறப்பட்டார். 10, 15 வருஷம் விளம்பரம் பெற்றார். பல பல லக்ஷம் ரூபாய்கள் வசூல் செய்தார். இன்று வரையில் அவர் வாயில் ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு வார்த்தைகூட சொல்ல முடியாமல் போய்விட்டது. அதற்குப் பதிலாக ஜாதிகளை (வர்ணாச்சிரம முறையை) காப்பாற்ற வேண்டியது தனது கடமை என்று சொல்லிவிட்டார்
காரணம் என்ன? தனது மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டுமானால் அவர் “ஜாதிகளை காப்பாற்றுகிறேன் என்று சொல்லித்தானாகவேண்டும் என்கிற நிலைக்கு வந்து விட்டதேயாகும்
குடி அரசு - 1936 (1) 24:
ட்
சுயமரியாதை இயக்கம் துணிந்து சகல ஜாதியும் ஒழிந்துதான் ஆகவேண்டும்என்று சொல்லுவதற்கு காரணம் அது மனித சமூகத்தினிடமிருந்து எவ்வித பெருமையையும் மதிப்பையும் எதிர்பார்க்கவில்லை. ஜாதி ஒழிப்புக்கு தடையாகக்கொண்டு வந்து போடப்படும் எந்த முட்டுக் கட்டையையும் லட்சியம் செய்வதில்லை
மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களின் எவ்வித சூழ்ச்சித் தொல்லை யையும் சமாளிக்கத் தயங்குவதில்லை. இந்தக் காரணங்களாலேயே சுய மரியாதைக்காரர்களால் சிறிதளவாவது வேலை செய்ய சாத்தியமாகின்றது நாளதுவரை ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டும் என்பதற்கு எதிரிகளால் ஏதாவது ஒரு யோக்கியமான காரணம் சொல்லப்பட்டதா என்று யோசித்துப் பாருங்கள்.
ஜாதி எப்படி உண்டாயிற்று
கடவுளால் ஜாதிகள் உற்பத்தி செய்யப்பட்டது என்பதும், மத சாஸ்திரங்களில் ஜாதிகள் இருக்கின்றன என்பதும் தவிர வேறு ஏதாவது சொல்லப்பட்டதா என்று யோசித்துப்பாருங்கள்:
சமீபத்தில் சென்னையில் ஒரு பார்ப்பனர் சங்கராச்சாரி என்ற பட்டத்தை உடையவர் மாத்திரம் ஜாதிக்கு இயற்கையில் ஆதாரமிருக்கிற தென்றும், பார்ப்பானையும் பறையனையும் அவனது ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்து கண்டுபிடித்து விடலாம் என்றும் சொன்னதாகப் பத்திரிகையில். பார்த்தேன்.
இதைத் தவிர வேறு யாரும் ஜாதி வித்தியாசத்துக்கு ஆதாரம் சொல்லவே இல்லை.
மற்றபடி அனேக ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜாதி சங்கிரகம் என்னும் நூலில் வருணாச்சிரம முறைப்படி ஏற்பட்ட நான்கு ஜாதிகள் ஒன்றோடொன்று கலந்தும், மாறியும், கலப்பு முறையிலும், விவசாரித்தனத் தாலும் ஏற்பட்டவைகள் என்று கூறி இன்ன இன்ன ஜாதி கலந்து புணர்ந்தால். இன்ன ஜாதி உண்டாகி இருக்கிறது என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது
இது சங்கராச்சாரி என்பவர் கூறிய அயோக்கியத்தனத்தை விட மோசமான அயோக்கியத்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில் இன்று உள்ள சகல உட்ஜாதியும் விவசாரித்தனத்தால் ஏற்பட்டது என்றால் இதை யார் தான் சகிக்க முடியும்? அன்றியும் இந்த இரண்டு காரியமும் இன்று அமுலில் இல்லை. ஜாதி மாறிய புணர்ச்சிகள் தினமும் லட்சக்கணக்காக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதன் மூலம் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன. இவைகளால் எவ்வித ஜாதியும் புதிதாய் உண்டாவதில்லை. M3 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 22
ஆகவே இந்த தத்துவம் வருணாச்சிரம ஜாதியான நான்கு ஜாதியின்
கீழ் வராதவர்களுக்கு பெரிய இழிவை உண்டாக்குவதற்கும் பயன்படக் கூடியதாய் இருக்கின்றதே தவிர மற்றபடி ஜாதி பிரிப்பதற்கோ, அதனால் ஏதாவது பயன் உண்டாவதற்கோ பயன்படுவதில்லை.
சங்கராச்சாரி
மற்றும் ரத்தத்தைக் கொண்டு ஜாதி கண்டுபிடித்து விடலாம் என்பதும்
மற்ற மக்களின் சுயமரியாதை அற்ற தன்மையை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படுவதே தவிர கேட்பவர்களுக்கு மானம், ஈனம், ரோஷம், அறிவு
இருக்கும் என்று ஒருவன் கருதி இருந்தால் இவ்வளவு பெரிய அயோக்கியத் தனமான வார்த்தைகள் பேச இடமே இருந்திருக்காது. இந்தப்படி ஒரு
சாதனம் இருக்குமானால் ரத்தத்தை பார்த்து பரீட்சிக்கக்கூடுமானால் அப்பரிகைஷையின்படி அந்த சங்கராச்சாரியாரே “கீழ்” ஜாதியில் குறிக்கப்பட வேண்டியவராகி விடுவார் என்பதோடு இன்றைக்கு 100-க்கு 99
பார்ப்பனர்கள் கதியும் அப்படித்தான் ஆகவேண்டி வரும் என்று உறுதியாய்ச் சொல்லுவோம். ஏனெனில் உள் ஜாதிகள் ஏற்பட்டதற்குக் காரணம் கலப்புப்
புணர்ச்சி என்று மற்றொரு சாஸ்திரம் சொல்லுவதேயாகும்
ஏழ்மைக்கு பரிகாரமில்லை இவை நிற்க, ஆண் பெண் உயர்வு தாழ்வு தன்மைகளும், முதலாளி கூலிக்காரன் தன்மைகளும் இதுபோலவே கடவுள் பெயரையும், மதத்தின் பெயரையும் சொல்லி ஏமாற்றுவதாலேயே ஏற்பட்டதே தவிர வேறில்லை
பெண் மக்களின் நிலைமையும், கூலிக்கார ஏழை மக்களின் நிலைமையும் இன்று ஒரு மனிதனால் சகிக்கக்கூடியதாய் இருக்கிறதா என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுளும் மதமும் இல்லாதிருந்தால் இவர்கள் நிலைமைக்கு வேறு ஏதாவது சமாதானம் சொல்ல முடிந்திருக்குமா?
எந்தமகானாலும், எந்த அவதார புருஷனாலும் ஏழ்மைத் தன்மைக்கும், அடிமைத் தன்மைக்கும் நமது நாட்டில் பரிகாரம் சொல்லப்படவே இல்லை. மேலும் மேலும் ஏழ்மைக்கும், அடிமைக்கும் சாதகமான சாதனங்களே ஏற்பட்டு வருகின்றன.
இந்த இருபதாவது நூற்றாண்டில் கூட பழமையை எதாஸ்திதியைக் காப்பாற்ற பலமான முயற்சிகள் நடைபெறுகின்றதே ஒழிய அவற்றை மாற்றுவதற்கு எவ்வித முயற்சியும் இல்லை. ஆதலாலே தான் சுயமரியாதை இயக்கம் ஒன்றே தான் பழமைத் தொல்லைகளை ஒழித்து எதாஸ்திதித்து வத்தை அடியோடு அழிக்கவேண்டும் என்கின்றது
காங்கிரசு
சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதம் எல்லாவற்றையும் விட காங்கிரசே யாகும். அது ஒரு மத பாதுகாப்பு ஸ்தாபனமே ஒழிய மற்றபடி
குடி அரசு - 1936 (1) 244
மனித சமூகத்துக்கு அதனால் கடுகளவு பிரயோஜனமும் ஏற்படப்போவ தில்லை என்பது உறுதி. இந்த நாட்டுக்கு இயற்கையாய் ஏற்பட வேண்டிய முற்போக்கைக்கூட காங்கிரஸ் தடுத்து தேசத்தை பின்னணிக்கு கொண்டு போய்விட்டது. மற்ற நாடுகளில் இந்த 20 வருஷத்தில் ஏற்பட்ட முற்போக்குகளில் 1000ல் ஒரு பங்குகூட நமது நாட்டில் ஏற்படவில்லை. ஒரு பணக்காரத்தன்மை கொண்ட ஆட்சியை மக்களுக்காக யாதொரு காரியமும் செய்யவிடாமல் இந்த நாட்டில் தடுத்து காப்பாற்றி வருவது நமது நாட்டு மத ஸ்தாபனமாகிய காங்கிரசேயாகும். காங்கிரசுக்கு ஜாதிமதச் சண்டை தவிர வேறு என்னகொள்கை இருக்கிறது? வேறு என்ன வேலைதான். அது செய்து இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.
காந்தியார் காங்கிரசுக்குள் அடி வைத்தது முதற்கொண்டு ஜாதி மதச் சண்டைகளும், ஜாதி மத பாதுகாப்புகளும், ஜாதி மத உணர்ச்சிகளும் அல்லாமல் வேறு ஏதாவது ஒரு சிறு நன்மையாவது மக்களுக்கு ஏற்பட்டதாகச் சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன்.
காந்தித் திட்டம் தீண்டாமை விலக்கு
காந்தியார் 1920ல் மனித சமூக நன்மைக்கு என்று நான்கு திட்டங்கள் வகுத்தார். அதாவது தீண்டாமை விலக்கு, இந்து மூஸ்லீம் ஒற்றுமை, மது விலக்கு, கதர் இந்த நான்கும் என்ன கதி அடைந்தது தீண்டாமை விலக்கு என்பது தீண்டாதவர்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு விலகினால் ஒழிய தீண்டாமை விலகாது என்கின்ற நிலைமைக்கு வந்துவிட்டது. 1923ல் நான் இதை ஒரு காங்கிரஸ் கூட்டத்தில் சொன்னபோது என்னை எல்லோரும் வெறுத்தார்கள். 1928, 29-ல் நான். சொல்லும்போது சிலர் பொறுமை காட்டினார்கள்; சிலர் கஷ்டப்பட்டார்கள். ஆனால் அது இன்று இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாய் முடிந்துவிட்டது. தீண்டாமை போக வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்துகொண்டு முடியாது; காங்கிரசிலும் முடியாது; காந்தியாராலும்
முடியாது. இந்து மதத்தைவிட்டு வேறு மதத்திற்கு அதுவும் முஸ்லீம் மதத்துக்குப்போனால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது சரியா தப்பா என்பது ஒரு புறமிருந்தாலும் காந்தியாரின் தீண்டாமை விலக்கு தத்துவம் இன்று இந்தியாவில் இந்த நிலையை உண்டாக்கிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது
இந்து முஸ்லீம் ஓற்றுமை அதுபோலவே இந்து முஸ்லீம் ஒற்றுமையும் இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் ஏற்படுவதா? முஸ்லீம் ராஜ்யம் ஏற்படுவதா என்கின்ற நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது. 20 வருஷத்துக்கு முன் இந்துக்களுக்கும்
248 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
முஸ்லீம்களுக்கும் இருந்த ஒற்றுமை கூட இன்று அடியோடு ஒழிந்துபோய் இந்து ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று முஸ்லீம்களும், முஸ்லீம் ராஜ்யத்தை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்று இந்துக்களும் சொல்லும்படியான நிலைமை உண்டாகிவிட்டது. தீண்டாமை ஒழிந்தாலொழிய சுயராஜ்ஜியம் ஏற்படாதென்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டாலொழிய சுயராஜ்யம் ஏற்படாதென்றும், தீண்டாமை ஒழியாமலும் இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லாமலும் சுயராஜ்யம் கிடைத்தாலும் நான் ஏற்கமாட்டேன் என்றும் சொன்ன காந்தியார் இன்று பெரியதொரு கரணம் போட்டு தலைகீழ் மாற்றமடைந்து “சுயராஜ்யம் வந்த பிறகுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை தானாகவே ஏற்படும்” என்றும் “தீண்டாமையும் தானாகவே ஒழியும்” என்றும் சொல்லிவிட்டார். இந்தமாதிரி அவர் சொன்ன பிறகே முஸ்லீம்களும், தீண்டாதவர்களும் ஒன்று சேர்ந்து “சுயராஜ்யம் கிடைத்தால் நம் இரு சமூகமும் இந்துக்களால். அழுத்தப்பட்டுவிடும்”' என்று பயந்து “எங்களுக்கு உரிய பங்கைக் கொடுத்துவிட்டு சுயராஜ்யப் பேச்சைப் பேசுங்கள்; இல்லாவிட்டால். சுயராஜ்யமே வேண்டாம் என்று சொல்ல வேண்டியவர்களாகி விட்டார்கள்.
இதன் பயனே இன்று தீண்டாதவர்கள் இந்துமதத்தை விட்டு விலகுவதும் முஸ்லீம் மார்க்கத்தில் போய்ச்சேருவதுமாய் ஆகிவிட்டது தினம் தினம் பலர் சேர்ந்தும் வருகிறார்கள்.
இந்த இரண்டோடு அல்லாமல் தென்னாட்டில் பார்ப்பனர் பார்ப்பனர். அல்லாதார் பிரச்சினை முற்கூறிய இரண்டு பிரச்சினைக்கும் சிறிதும் இளைத்ததாக இல்லாமல் வளர்ந்துகொண்டே வருகிறது இவை எல்லாம் எந்தக் காலத்தில் வெடித்து இரத்தக் களரியை உண்டாக்குமோ என்று ஒவ்வொரு நிமிடமும் பயப்படவேண்டியதாய் இருக்கிறதே தவிர, ஏதாவது ஒரு வழியில் சிறிதாவது அடங்கிற்று என்று சொல்லும்படியான மாதிரியில் இல்லை. ஆகவே காந்தியார் அரசியல் போர்வையை போர்த்திக்கொண்டு மத இயல் வேலையைச் செய்துவரும் ஒரு கபட சன்யாசி என்றே முஸ்லீம்களும், இந்துக்களில் பார்ப்பனரல்லாதாரும், தாழ்த்தப்பட்ட மக்களும் உறுதியாய் நம்பிவிட்டார்கள். இதற்கு ஆதாரம் பார்ப்பனர்களும், இந்து மத வெறியர்களும் காந்தியாரை ஆதரிப்பதும் அவரை மகாத்மாவாக்குவதும் ஆகிய ஒன்றே போதுமானது
மதுவிலக்கு
மற்றப்படி காந்தியார் மதுவிலக்குப் பிரச்சினையில்தான் ஆகட்டும் எந்த அளவுக்கு வெற்றிப்பெற்றார் என்பதை யோசித்துப் பாருங்கள். மதுவிலக்கு மறியலுக்காக ஜெயிலுக்குப் போனோம். காந்தியார்.
குடி அரசு- 1936 (1) 246
எதிர்பார்த்ததற்கு மேலாகவே ஜெயிலுக்குப் போனோம். எங்கள் குடும்பத்தில் மாத்திரம் சுமார் 1000க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் வெட்டி எறியப்பட்டன. குடும்ப சகிதம், மனைவி தங்கை சகிதம் மறியல் செய்தோம். மற்றும் பதினாயிரக்கணக்கான பேர்களை மறியல் செய்யும்படியும் செய்தேன். எல்லாம் ஏமாற்றமாய் முடிந்தது. அரசியல் காரியங்களுக்காக நம்மை ஏமாற்றிவிட்டதாக காந்தியாரே, அவரது பிரதம சிஷ்யர்களே பெருமை அடையும்படியாக ஆகிவிட்டது. மதுவிலக்குத் திட்டம் போடும் போது நமது நாட்டில் செலவான கள்ளு, சாராயத்தைவிட இப்போது அதிகமாகவே செலவாகின்றது
கள்ளு, சாராயக் கடைவியாபாரிகள் வீட்டிலேயே காந்தியார் தங்கவும், அவர்களையே இன்று எலக்ஷன்களில் நிறுத்தி வெற்றியை உண்டாக்கிக் கொடுக்கவும் காங்கிரஸ் உழைக்கின்றது
சர்க்காரால் செய்த மதுவிலக்குப் பிரசாரத்தையும் காங்கிரஸ் பழிகூறி
ஒழித்து விட்டது கடைசியாக காந்தியாரும் காங்கிரசும் இப்போதுதான் தான் இதுவரை செய்துவந்த காரியங்கள் மறியல்கள் இது விஷயமாய் சர்க்கார் உத்திரவு முதலியவைகளை மீறியவைகள் எல்லாம் முட்டாள் தனம் என்று
கருதி எந்த இடத்தில் தவறு செய்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது காந்தியாரின் இன்றைய நிலை 1916-ம் வருஷத்தில் இந்தியா எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்குப் போயிருக்கிறது என்பதைத் தவிர வேறில்லை.
இந்த 20 வருஷ ஊக்கம், உழைப்பு, உணர்ச்சி ஆகியவை எல்லாம் அடியோடு பாழாக்கப்பட்டது. காந்தியார் இனி புதிதாக திட்டம் போட வேண்டிய நிலைக்கு வந்து மயக்கத்தில் இருக்கிறார்.
1916-ம் வருஷத்தில் இருந்த அரசியல் சுதந்திரத்தை விட இன்று மோசமாகவும், மக்களுக்கு வரி அதிகமாகவும், செலவு அதிகமாகவும் இருக்கிறதே தவிர காந்தியாலோ காங்கிரசாலோகடுகளவாவது முற்போக்கு ஏற்பட்டதாகச் சொல்வதற்கில்லை.
கதர்
கதர் விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் தோழர் காந்தியாரின். திட்டம் அடியோடு தோல்வி அடைந்து விட்டது, அவனவனுக்கு வேண்டிய உடை அவனவன் நூற்று நெய்து அணிந்துகொள்ள வேண்டுமென்பதே கதர் திட்டத்தின் தத்துவமாகும். அந்தப்படியே நானும் பிரசாரம் செய்து நானும் நூற்றுப்பார்த்தேன். லக்ஷாதிபதி தாய்மாரையும், மனைவிகளையும், மக்கள்களையும் நூற்கச் செய்தேன். கடைசியாக அக்கொள்கை மக்களை காட்டுமிராண்டித் தனமான காலத்துக்குக் கொண்டு போவதற்குச் செய்யப்படும் M ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 22
சூழ்ச்சியே தவிர பொருளாதாரத்துக்கும், வேறு தேச முன்னேற்றத்துக்கும்
சிறிதும் சம்மந்தப்பட்டதல்ல என்பதை நன்றாய் உணர்ந்தேன். இன்று அதன் யோக்கியதையும் அப்படியே ஆகி விட்டது
இன்று கதருக்குள்ள யோக்கியதை யெல்லாம் எலக்ஷனுக்கு ஒரு சூழ்ச்சியாகவும் சில தனிப்பட்ட ஆட்களுக்கு வயிற்றுப்பிழைப்புக்கு மார்க்கமாகவும், பகுத்தறிவும் சுயமரியாதையும் உடைய மக்களை காங்கிரசில் சேர்க்காமல் இருப்பதற்காகவும், சில அடிமைகளை வளர்ப்பதற் காகவும் ஒரு சாதனமாய் இருந்துவருகிறதல்லாமல் வேறு என்ன காரியத்துக்கு பயன்படுகின்றது என்று யோசித்துப் பாருங்கள்.
கெஜம் 2% அணாவுக்கு கிடைக்கும் மில் துணிக்கு பதிலாக கெஜம்
12 அணா 14 அணா போட்டு கதர் வாங்கினாலும் அதற்கு ஈடாக்க முடியாத நிலையில் இருந்து வருவதும், 18 வருஷ காலமாக கோடிக்கணக்கான ரூ செலவு செய்து பிரசாரம் செய்தும் இந்தியா முழுதும் 1000-க்கு ஒருவர். வீதம்கூட பெண்களில் 10000-க்கு ஒருவர் வீதம்கூட மக்கள் வாங்கிக் கட்ட அமலுக்கு கொண்டுவரமுடியாமல் இருக்கிறதென்றால் 10000-க்கு ஒரு பெண்கூட வாங்கிக்கட்ட உதவாமலும் முடியாமலும் இருக்கிறதென்றால்
கதர் திட்டம் வெற்றியடைந்ததா என்று பாருங்கள்.
உப்பு சத்தியாக்கிரகம்
உப்பு சத்தியாக்கிரகத்தின் யோக்கியதையும் உடும்பு வேண்டாம் கை விட்டால் போதும் என்கின்ற மாதிரியில் இர்வின் பிரபு இடம் மண்டி போட்டு இனிமேல் சத்தியாக்கிரகம் செய்வதில்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு ஜெயிலில் அடைபட்டுக்கிடந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்ததோடு முடிவடைந்தது ஆகவே காந்தியாரின் திட்டங்கள் எல்லாம் அடியோடு தோல்வி அடைந்தும் அவரது மகாத்மா பட்டம் மாத்திரம் இன்று கோவில்களுக்குள்ளும், தேர்கள் மீதும், திருவிழாக்களிலும் விளங்கும்படி பிரசாரம் செய்யப்பட்டு வருகிறதில் குறைவில்லை.
இந்தநிலையில் வாலிபர்கள் பலருக்கு காங்கிரஸ் மயக்கமும், காந்தி பைத்தியமும் இன்னும் இருந்து வருவதை நான் பார்க்கிறேன்.
தேர்தல்களுக்கு காந்தி பெயரையும், காந்தியார் பேரால் வசூலித்த பணத்தையும் கொடுத்து வாலிபர்களை ஏற்படுத்தி மதப் பிரசார முறையில் வேலை செய்வதின் பயனே இந்த மயக்கத்துக்கும், பைத்தியத்துக்கும் காரணம் என்பதே எனதபிப்பிராயம்.
இப்படிப்பட்ட மூட ஜனங்கள் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி குறைகூறுவதிலும், பழி சுமத்துவதிலும் அதிசயம் காணமுடியாது
குடி அரசு- 1936 (1) 248
இந்த 10, 12 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்கம் செய்துவந்த வேலைகளை மக்கள் சரியானபடி உணராமல் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம், மதமற்ற இயக்கம் என்று பார்ப்பனர்கள் செய்யும் விஷமப் பிரசாரத்தைத்தான் தெரிந்துகொண்டிருக்கிறது
கடவுளும் மதமும்
கடவுளும் மதமும் உலகில் ஆயிரம் வருஷத்துக்கு முன் இருந்ததைவிட எவ்வளவோ மறைந்தும் மாறுதலடைந்தும் சீர்திருத்தம் பெற்று இருக்கிறது. கடவுளால் மதத்தினால் பிழைக்கும்படி வாழ்க்கை ஏற்படுத்திக் கொண்ட கூட்டம் தவிர - சமூகம் தவிர மற்ற இடங்களில் கடவுளும், மதமும் எவ்வளவோ குறைவடைந்து வருகின்றன.
உருவமில்லாத பெயரில்லாத கடவுள்கள் தோன்றிவிட்டன. மத சின்னமில்லாத மதங்கள் தோன்றிவிட்டன. இரண்டையும்பற்றி கவலைப் படாமல் தங்கள் தங்கள் வேலையை கவனிக்கும்படியான உணர்ச்சிகளும் தோன்றி விட்டன.
தங்களுக்கு அதைப்பற்றிய கவலை யில்லாமல் மற்றவனை ஏய்க்கவும், கட்டுப்படுத்தவும், அடிமையாக்கவும் மாத்திரமே இன்று கடவுளும் மதமும் வெகு மக்களால் கையாளப் படுகின்றதே ஒழிய வேறில்லை:
சகல துறைகளிலும் உலகம் முற்போக்கடைவது போலவே கடவுளிலும் மதத்திலும் கூட உலகம் முற்போக்கடைந்து வருகிறது. சுயமரியாதை இயக்கம் இந்த கணமே எல்லோரையுமே கடவுள் மத நம்பிக்கையை விட்டுவிடும்படி கட்டாயப்படுத்தவில்லை
நமக்கு புரியாததும், நம்மால் அறிய முடியாததும் குணம், உருவம், சலனம் இல்லாததும் ஆன கடவுளைப்பற்றி சுயமரியாதை இயக்கத்துக்கும் கவலையில்லை.
மற்றபடி கடவுளைப்பற்றி தெரிந்துவிட்டதாகச் சொல்லுவதும் அதற்கு உருவம், பெயர், குணம், சலனம் ஏற்படுத்துவதும் அதன் மீது பொறுப்பைச் சுமத்துவதும் மனிதன் மற்றவர்களால் அடையும் கொடுமைக்கும், இழிவுக்கும் பொறுப்பாக்குவதுமான கடவுள் உணர்ச்சியையே சுயமரியாதை இயக்கம் குறைகூறுகிறது. மற்றும் கண்டதெல்லாம், நினைத்த தெல்லாம் கடவுள் என்கின்ற உணர்ச்சியையும் ஆயிரக்கணக்கான கடவுள்கள் உணர்ச்சியையும் ஒழிக்கவேண்டும் என்கின்றது
இன்று ஒரு இந்துவால் எவை எவை எல்லாம் கடவுள் என்பதாக மதிக்கப்படுகின்றது என்றால் மரத்தில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படு
கிறது. புல் பூண்டுகளில் ஒரு கூட்டம் கடவுளாக மதிக்கப்படுகின்றது மலத்தில் ஒரு கூட்டமும், பூச்சி புழுக்களில் ஒரு கூட்டமும், மிருகங்களில். பன்றி, நாய், கழுதை, மாடு முதலிய ஒரு கூட்ட மிருகமும், பக்ஷியில். M9 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 22
கருடன், காக்காய், கோழி முதலிய ஒரு கூட்டமும், கல்லுகளிலும், மண்களிலும் ஒரு கூட்டமும், காகிதங்களிலும் எழுத்துக்களிலும் ஒரு கூட்டமும், மனிதர்களில் ஒரு கூட்டமும் இன்று மனிதனால் கடவுளாகப் பாவிக்கப்பட்டு பூஜை, வணக்கம், பலி முதலியவை செய்து ஏராளமான பொருள்கள் நாசமாக்கப் பட்டு வரப்படுகின்றது. இந்த முட்டாள். தனங்களையும் மோசடி கருத்துக்களையும் முதலில் ஒழிக்க வேண்டுமென்று தான் சு.ம. இயக்கம் சொல்லுகிறது
இதை தைரியமாய் எடுத்துச் சொல்ல இன்று இந் நாட்டில் சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான் இருக்கிறது. அது இந்த மாதிரியான கடவுள் உணர்ச்சிகளை ஒழித்துத் தீருவதென்றே கங்கனம் கட்டிக்கொண்டு
உயிர் வாழுகின்றது
நாஸ்திக இயக்கம் என்று சொல்வதாலேயே அது பயந்துகொள்ளப் போவதில்லை. கடைசிவரை அது உழைத்துத்தான் தீரும். மதவிஷயத்திலும் இப்படித்தான் இருந்து வருகிறது. ஆகவே சுயமரியாதை இயக்கம் இன்னது என்றும் காங்கிரஸ் இயக்கம் இன்னது என்றும் உணர்ந்து உங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள். விஷமப் பிரசாரத்துக்கும் ஏமாற்றும் பிரசாரத்துக்கும் ஆளாகாதீர்கள்.
குறிப்பு: 23.03.1936 ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பட்டுக்கோட்டை போஸ்டாபீசுக்கு எதிரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் 24.03.1936 இல் முத்துப் பேட்டைக்கு அடுத்த புத்தகபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் ஆற்றிய சொற்பொழிவின் விளக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 05.04.1936
குடி அரசு - 1936 (1) 250
வலங்கைமான் தேசீயம்
அண்ணாமலை சர்வகலா சங்க உப அத்யக்ஷர் தோழர் வலங்கைமான் ஸ்ரீனிவாச சாஸ்திரியாரைத் தென்னாடு நன்கறியும். அரசியலில் மிதவாதி யெனக் கூறிக்கொண்டு சாதாரண காலங்களில் காங்கிரசைத் தாக்குவதும் தேர்தல் காலங்களில் காங்கிரஸ்காரரை ஆதரித்துப் பிரசாரம் செய்வதும் அவரது பிறவிக்குணம். மிதவாதியான அவர் காங்கிரஸை ஆதரிக்கக் காரணம் என்ன? காங்கிரஸ் ஆதிக்கம் பார்ப்பனர் முன்னேற்றத்துக்கு உதவிபுரியக்கூடியதாயிருப்பதினாலேயே அவர் காங்கிரஸை ஆதரித்து வருகிறார். மேலும் ஜஸ்டிஸ்கட்சி யென்றால் அவருக்குப் பெரிய வெறுப்பு ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாதக் கட்சியாம். எனவே ஜஸ்டிஸ்கட்சி ஒழிய வேண்டுமாம். இவ்வாறு கூறும் தேசீயப் புலியான வலங்கைமான் சாஸ்திரியார் அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் நடத்துந் திருவிளையாடல், அவரது வகுப்புவாதத்தை நன்கு விளக்கக்கூடியதாயிருக்கிறது. அண்ணாமலை சர்வகலா சங்கத்தை பார்ப்பன மயமாக்குவதே அவரது நோக்கமாயிருந்து வருவது போல் தோற்றுகிறது. அதற்கு சமீபத்தில் அங்கு நடைபெற்ற நியமனங்களே அத்தாட்சி. மஹாமஹோபாத்தியாய குப்புசாமி சாஸ்திரியார் கெளரவ சமஸ்கிருதப் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம் ஆனால் அவர் செய்யும் “கெளரவ” வேலைக்காக அவருக்குப் பிரதிபலன் வழங்கப்படுமா? வழங்கப்பட்டால் எவ்வளவு என்பனபோன்ற தகவல்கள் கிடைக்கவில்லை. அப்பால் டாக்டர் அசுவத நாராயணராவ் கெமிஸ்ட்ரி புரோபஸராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம். இந்த இரண்டு உத்தியோகங் களிலும் இதற்கு முன்னிருந்தவர்கள் பார்ப்பனரல்லாதாரே! இப்பொழுது பார்ப்பனர்களைத் தேடிப்பிடித்து நியமிக்கக் காரணம் என்ன? பார்ப்பனரல்லாதார் கிடையாமல் போய்விட்டார்களா?
மூன்றாவது சாஸ்திரியாரின் அந்தரங்கக் காரியதரிசியான வி.ஆர். வீரமணி அய்யர் சரித்திரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டிருக் கிறாராம். மேலும் அந்த உத்தியோகம் வீரமணி அய்யருக்காகவே நூதனமாக சிருஷ்டிக்கப்பட்டதென்றும் சொல்லப்படுகிறது. நான்காவதாக தோழர் ராமாநுஜாச்சாரியார் தத்துவ சாஸ்திரப் பேராசிரியராகவும், தோழர் பார்த்தசாரதி கெமிஸ்ட்ரி டெமான்ஸ்ட்ரேட்டராகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார்களாம்.
251 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வகுப்புவாதத்தை வெறுக்கும் தோழர் ஸ்ரீனிவாஸ சாஸ்திரியார் தமது இனத்தாரையே அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் குவிப்பது பொருத்தமா யிருக்குமா? மேலும் சாஸ்திரியார் உப அத்யக்ஷரான பிறகு ஏற்பட்ட காலி ஸ்தானங்களுக்கும் புது ஸ்தானங்களுக்கும் பார்ப்பனர்களே கட்டுப்பாடாக நியமிக்கப்பட்டிருக்கிறார்களாம்
ஆங்கிலப் பகுதியில் வேலை செய்யும் 8 ஆசிரியர்களில் 6 பேர் பார்ப்பனர்களாம். நூல் நிலையம் ஹாஸ்டல் குமாஸ்தாக்கள் வேலைகளும்கூட பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மேஸ்திரி உத்தியோகங் களிலும் பார்ப்பனர்களே அதிகமாக இருந்து வருகிறார்கள். தமிழ் ஆராய்ச்சி இலாகாவில் வேலைசெய்யும் மூவரும் பார்ப்பனர்களாம். தொல்காப்பியப் பொருள௱ராய்ச்சி மூலம் பார்ப்பனர் மனப்பான்மை எத்தகையது என்பதை தமிழுலகம் அறிந்துகொண்டுவிட்டது. எனவே இந்தப் பார்ப்பனர்கள் நடத்தும் தமிழராய்ச்சியினால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஏதாவது நன்மை உண்டாகுமா? ஒரு பார்ப்பனரல்லாத கோடீசுரர் வழங்கிய 40 லக்ஷ ரூபாய் நன்கொடையினால் உருப்பெற்ற ஒரு சர்வகலா சங்கம் இவ் வண்ணம் பார்ப்பன அக்கிரகாரமாக மாறி வருவதைத் தடுக்க வழியில்லையா? திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரிக்கு ஒரு லக்ஷம் ரூபாய் நன் கொடையளித்த தோழர் திரவியம் விதி யேற்படுத்தியதுபோல், ஒரு பார்ப்பனரல்லாத கோடீசுரர் கொடையால் தோன்றிய அண்ணாமலை சர்வகலா சங்கத்தில் பார்ப்பனரல்லாத ஆசிரியர்களையே நியமனம் செய்யவேண்டுமென்று ஒரு விதி ஏற்படுத்தினாற்றான் அண்ணாமலை சர்வகலா சங்கம் விருத்தியடையும்.
குடி அரசு - கட்டுரை - 05.04.1936
குடி அரசு - 1936 (1)
ப O ப்
காங்கிரஸ் புளுகு
பாமரமக்கள் காங்கிரசை அதிகமாக ஆதரிக்கும் பொருட்டு, காங்கிரஸ் மனப்பான்மையுடைய பத்திரிகை நிருபர்கள் தத்தம் மனோதர்மப்படி அடிக்கடி பத்திரிகைகளில் கயிறு திரிப்பதுண்டு. வெள்ளை அறிக்கை வெளிவந்த காலத்து, காந்தியாரை இந்தியா மந்திரி லண்டனுக்கு அழைக்கப் போவதாகவும், அவருடன் கலந்து, வரப்போகும் அரசியல் திட்டத்தை வகுக்கப்போவதாகவும் ஒரு கதை கட்டிவிடப்பட்டது. அப்பால், வைஸ்ராய் காந்தியை பேட்டி காணப் போகிறார், காந்தி சிம்லாவுக்குச் செல்லப் போகிறார் என்றெல்லாம் பல வெங்காய வெடிகள் கிளம்பின. இரண்டு வாரங்களுக்கு மூன், எட்வர்டு மன்னர் பண்டித ஜவஹர்லாலைப் பேட்டி காண விரும்பியதாகவும் பண்டிதர் மறுத்து விட்டார் என்றும் ஒரு டெல்லிப் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்தது. அதைப்பற்றிப் பலருக்கு
சந்தேகம் ஏற்படவே அந்தச் செய்தி உண்மைதானென்று அந்த டெல்லிப் பத்திரிகை மீண்டும் ஊர்ஜிதம் செய்தது. ஆனால் பண்டித ஜவஹர்லால்
அந்தச் செய்தியை இதுவரை ஆதரிக்கவோ மறுக்கவோ முன்வரவில்லை சென்ற வாரத்தில் காந்தியாரும் புதிய வைஸ்ராய் லார்டு லின்லித்கோவும்
சந்தித்துப் பேசுவதற்கு லார்டு ஹாலிபாக்ஸ் (பழைய லார்டு இர்வின்) ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகவும் இது சம்பந்தமாகக் கடிதப்போக்குவரத்துகள் நடந்து கொண்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளிவந்தது. அந்தச் செய்தியை காங்கிரஸ் பத்திரிகைகள் எல்லாம் கொட்டை எழுத்துகளில் வெளியிட்டுப் பிரமாதப்படுத்தின. இப்பொழுது
லார்டு ஹாலிபாக்ஸிடமிருந்து தமக்கு ஒரு விதமான கடிதமும் வரவில்லை யென்றும் அந்தச் செய்தி பூராவும் கட்டுக்கதை என்றும் காந்தியாரே மறுத்துக் கண்ணீர் வடிக்கிறார். இம் மாதிரிப் பொய்ச் செய்திகளினால் காங்கிரஸ் மதிப்பு எவ்வளவு காலத்துக்குக் காப்பாற்றப்படுகிறதோ தெரியவில்லை கிராம தேவதைகளின் மீது ஆணை வைத்து ஓட்டுக் கொடுக்கும் அறிவாளிகள் இந்தியாவில் இருக்கும் வரை இம்மாதிரி அரசியல் பித்தலாட்டங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்
குடி அரசு - கட்டுரை - 05.04.1936
253 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
எப்பாடி மறக்கமுடியும்£
இந்நாட்டில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள். ஒருவருக்கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன.
இது எவ்வளவுதான் இன்று ஒருசுயநலக்கூட்டத்தினரின் பிரசாரங்களால். மறைக்கப்பட்டாலும் எவ்வளவுதான் இப்பிரிவினை கூடாது என்று “இதோபதேசம்” செய்யப்பட்டாலும் இந்தப் பிரிவு மற்றெல்லாப் பிரிவு களைவிடசரித்திர சம்மந்தமானதாகவும், முன் பின் பழிவாங்கித் தீரவேண்டிய உணர்ச்சியுடையதாகவும், இருந்து வளர்ந்து கொண்டே வருகிறது
இப்பிரிவைப்பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்று மனிதசமூகத்தில் உள்ள சகலவித பிரிவிலும் இந்த ஆரியர் (தமிழர் அல்லது) திராவிடர் என்கின்ற பிரிவே மிகக் கொடுமையுள்ளதாகவும், இவ்விரு
பிரிவினரும் எந்தக் காலத்திலும் ஒன்றுபடுவதற்கில்லாத வேற்றுமையுடைய தாகவும் இருந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில் பல்வேறு மதங்களின் பேரால் இந்திய மனித சமூகம் பிரிக்கப்பட்டோ பிரிவினைப்பட்டோ இருந்தாலும் அவைகளை யெல்லாம்விட இந்து மதத்தினர் என்பவர்களுக்குள்ளாகவே இருந்து வரும் இந்த ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவானது எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஒன்று படுத்தப்பட முடியாத மாதிரியாய் அமைந்தும் இருந்தும் வருவதேயாகும் உதாரணமாக இந்து சமூகம், முஸ்லீம் சமூகம், கிருஸ்தவ சமூகம் என்பவைகளுக்குள் ஒன்றுக்கொன்று இருந்துவரும் பிரிவுகள் எவ்வளவு பிரதானமாகவும், பெரியதாகவும் காணப்பட்டாலும் கூட அவை ஒரு சிறு மனமாறுதலால் அடியோடு மறைந்து ஒழிந்து போகும்படியானதாக இருக்கின்றன. ஆனால் இந்துக்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆரியர் திராவிடர் என்றோ-பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்றோ இருந்துவரும் சமூகங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரிவினை எப்படிப்பட்ட மனமாற்றத்தாலும் மாறுவதற்கோ மறைவதற்கோ வழியில்லாமல் பிறவி
முதல் சாவுவரை இருந்தே தீரும்படியானதாக இருந்து வருகிறது. காரணம் என்னவென்றால் மற்ற மதப்பிரிவு மதபேதம் ஆகியவைகளுக்கு மனிதனுடைய உணர்ச்சிகள் அல்லது எண்ணங்கள் மாத்திரமே ஆதாரமாய் இருப்பதும்
குடி அரசு- 1936 (1) 254
ஆரியர் திராவிடர் அல்லது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற பிரிவுக்குப் பிறவியே காரணமாய் கற்பிக்கப்பட்டிருப்பதும் தான் முக்கிய காரணமாகும்
மற்றும் மேல்கண்ட மத சம்மந்தமான பிரிவுகளுக்கு மக்களின் வேஷத்தில் ஏதோ சில வித்தியாசங்கள் மாத்திரம் கற்பிக்கப்பட்டிருக் கின்றதே அல்லாமல் ஒரு மதத்துக்கும் மற்றொரு மதத்துக்கும் புழங்கிக் கொள்வதில் எவ்வித வித்தியாசமும் ஆக்ஷேபணையும் இருப்பதில்லை. ஆனால் இந்து மதத்தில் உள்ள ஜாதி சம்மந்தமான பிரிவுகளில் பார்ப்பானுக்கும் பார்ப்பான் அல்லாதவனுக்கும் குறிப்பாக பார்ப்பானுக்கும் தீண்டப்படாதவன். என்பவனுக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் - இருந்துவரும் பேதங்கள். அறிவும் ரோஷமும் உள்ள எந்த மனிதனும் சகிக்க முடியாத தன்மையில்
இருந்து வருகின்றன என்பதுடன் அதை மாற்றுவது அல்லது தணிப்பது என்பது கூட மகா பாதகமான காரியமாய் கருதப்படுவது மாத்திரமல்லாமல்
இப் பேதங்களுக்கும் நடப்புகளுக்கும் “கடவுள் வாக்குகளாகவே ஆதாரங்களும் இருப்பதாகவும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவானது மாற முடியாததும் மாற்ற முடியாததுமாக இருந்து வருகையில் அதை எப்படி ஒருவன் மறக்கவோ, மறைக்கவோ முடியும் என்று கேட்கிறோம். இதை நன்றாய் உணர்ந்து இந்த பிரிவின் பயனாய் பலனை அனுபவிக்கும் கூட்டத்தாராகிய ஆரியர்களே இந்தப் பிரிவினைக்காகத் துக்கப்படுவதாகவும், இந்தப் பிரிவினையைப்பற்றி யாரும் இனி பேசக்கூடாதென்றும், அதைப்பற்றி பேசுவது தேச நன்மைக்கும் மனித சமூக நன்மைக்கும் கேடு என்றும் மாய அழுகை அழுது மக்களை ஏய்க்கிறார்கள் உண்மையாகவே பார்ப்போமானால் இன்று இந்த ஆரியர் திராவிடர் அல்லது பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரிவினை கூடாதென்றும், அது ஒழிக்கப்பட வேண்டும் என்றும், மனப்பூர்வமாக பாடுபடுபவர்கள் திராவிட மக்கள் என்னும் பார்ப்பனரல்லாதாரேயாகும்.
இந்தப் பிரிவினை இருந்துதான் ஆகவேண்டும் என்று பாடுபடுபவர்கள். ஆரியர் என்னும் பார்ப்பனர்களேயாகும்
உதாரணம் வேண்டுமானால் சுலபத்தில் பார்த்துக் கொள்ளலாம் அதாவது வருஷந்தோறும் பார்ப்பனர்கள் பிராமண மகாநாடு, சநாதன மகாநாடு, வர்ணாச்சிரம தர்ம மகாநாடு, ஆரியர் தர்ம பரிபாலன மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளை ஆங்காங்கு கூட்டுவித்து வேதங்களையும், மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும், மனுதர்ம சாஸ்திரப்படி நடக்கவேண்டும் என்றும், வருணாச்சிரமங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் செய்து வருவதுடன். மடாதிபதிகள் சங்கராச்சாரிகள் குருமார்கள் முதலியவர்களைக் கொண்டு பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
288 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இவை மாத்திரமல்லாமல் இந்த பிரிவினைகளை அதாவது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை காட்டுவதற்கு ஆகவும், காப்பாற்றுவதற்காகவும் கோவில், குளம், சத்திரம், காப்பிக்கடை, ஓட்டல் முதலியஜனங்கள்அவசியமாயும் அடிக்கடியும் கூடும்படியாயும் உள்ள இடங்களில் பார்ப்பனர்களுக்கு என்று வேறு இடமும் பார்ப்பனரல்லாதார்க்கு என்று வேறு இடமும் ஒதுக்கப்பட்டு விளம்பர பலகை போட்டு பாதுகாத்து வரப்படுகிறது பார்ப்பனரல்லாதார்களோ இதற்கு நேர்விரோதமாக பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவு இருக்கக்கூடாதென்றும், அம்மாதிரி வித்தியாசமும் பிரிவும் இருப்பது நாட்டுக்கு மாத்திரம் கெடுதியல்லாமல். மனித சமூகத்தின் சுயமரியாதைக்கே கேடானது என்றும் சொல்லி வருகிறார்கள். பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியும், அவர்களது கூட்டத் தீர்மானங்களும் இதை அனுசரித்தே வருகின்றன. இந்தப்படி பார்ப்பனரல்லாதார் செய்து வருவதில் இந்தப் பிரிவு அடியோடு ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் குறிப்பாக எந்த எந்த காரியம் எந்த எந்த பழக்க வழக்கம் ஒழியவேண்டும் என்று சொல்லி அவைகளை எடுத்துக் காட்டி வருவதையே நமது பார்ப்பனர்கள் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரிவினை எது எதில் இருக்கிறது என்று எடுத்துக்காட்டுவதே கூடாது என்றும், அப்படிக் காட்டுவதையே ஆரியர் திராவிடர் என்று பிரிக்கிறதாக ஆகின்றதென்று அதற்கு பெயர் கொடுத்து அதை ஒரு பழியாகச் சொல்லி விஷமப் பிரசாரம் செய்தும் அம் முயற்சியையே அடக்கி ஒழிக்கப்பார்க்கிறார்கள்.
இன்று இத்தென்னாட்டில் ஆரியர் திராவிடர் என்கின்ற பிரச்சினையால் தென்னாட்டு மக்கள் இரண்டு துறையில் துன்பம் அனுபவிப்பதாகக் கருதி அத்துன்பத்தில் இருந்து விடுபடவே ஆரியர்-திராவிடர் அல்லது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஒன்று சமுதாய வாழ்க்கையில் மதம் என்பதை ஆதாரமாய் வைத்து பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களை இழிவும் கீழ்மையும் படுத்துதல்.
இரண்டு அரசியல் வாழ்க்கையில் தேசியம் என்பதை ஆதரவாய் வைத்துக்கொண்டு பார்ப்பனர், பார்ப்பனரல்லாத மக்களை அடக்கி ஒடுக்கி
ஆதிக்கம் செலுத்துதல். இந்த இரண்டு துறையிலும் பார்ப்பனரல்லாத மக்கள் தாழ்த்தப்பட்டு இழிவடைந்திருப்பது மாற்றப்பட்டால் ஒழிய இந்த நாட்டில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ அல்லது ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவு உணர்ச்சியோ ஒரு நாளும் மாறாது, மாறுவதற்கு அனுமதிப்பதும் ஒரு நாளும் நியாயமாகாது. ஏனெனில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவை ஆதியில் உண்டாக்கிக் கொண்டதின் பயனாய் பார்ப்பனர்கள் (ஜனசமூகத்தில் 100-க்கு 3 பேர்களாய் உள்ளவர்கள்)
குடி அரசு - 1936 (1) 256
தங்கள் “கடவுளுக்கு” சமமாய் மதிக்கப்படும் படியாய் செய்துகொண்டு உலக வழக்கிலும் சுவாமி என்று தங்களை மற்றவர்கள் அழைக்கும்படியும் செய்து கொண்டு பொருளாதாரத் துறையில் எல்லோருக்கும் மேலாகவே சுகபோகமாயும் இருந்துகொண்டு வருகிறார்கள். மற்ற 100-க்கு 97 மக்களாய் உள்ள பார்ப்பனரல்லாதார் என்பவர்களோ பெரும்பாலும் 100-க்கு 75 பேர்களுக்கு மேலாகவே சமூக வாழ்வில் இழிவான மிருகத்திலும் கடையாயும், பொருளாதாரத் துறையில் சரீரப் பிரயாசைப் படும்படியாகவும் பெரும்பான்மை மக்கள் பட்டினியினால் வாடி உலக சுக போகத்தை நினைக்கவும் அருகதை அற்றவர்களாகவும் செய்யப்பட்டிருக்கும் போது இந்த கொடுமையும் இழிவும் ஒழிக்கப்படாமல் பேத உணர்ச்சியை மாத்திரம் மறந்திருக்கும்படி எப்படித்தான் அனுமதிக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை
ஆரியர் திராவிடர் பிரிவு வேண்டாம் என்றும், பார்ப்பனர். பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேத உணர்ச்சி வேண்டாம் என்றும் இந்த
10, 20 வருஷகாலமாக பார்ப்பனர்கள் அதாவது சமூக இயலில் பிரதானப்பட்ட பார்ப்பனரும், அரசியலில் புகழும் தலைமையும் பெற்ற பார்ப்பனரும் கூப்பாடு போட்டும் குறைகூறியும் வந்திருக்கிறார்களே ஒழிய ஒரு பார்ப்பனராவது அப்பேத உணர்ச்சிக்கு ஆதாரமான காரியங்களில் ஒரு கடுகளவையாவது ஒழிக்கவோ மறைந்து போகும்படி செய்யவோ முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்
பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியின் பயனாய் - அதுவும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவில் கஷ்டமும் இழிவும் அடைந்து வருவதை விளக்கி விளக்கிக்காட்டி கூப்பாடுபோட்டு வந்ததின் பயனாய் ஏதாவது ஒரு சிறிதாவது அப்பேதக்கொடுமையில் இருந்து மீள வகை கண்டிருக்கக்கூடுமே ஒழிய மற்றப்படி எந்த விதத்திலும் வழியில்லாமலே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இன்னமும், இன்றும் பொது ஸ்தாபனங்களில் அதாவது ரயில்வே, கோவில், சத்திரம், குளம்முதலியஇடங்களில் கூட பார்ப்பனர் பார்ப்பனல்லதார். பிரிவு பார்ப்பனர்களாலேயே ஏற்படுத்தப்பட்டு பார்ப்பனராலேயே காப்பாற்றப்பட்டு வருகிறது. இன்னமும் - நாளையும் பார்ப்பனர்கள். என்பவர்கள் ஆணும் பெண்ணும் பார்ப்பனரல்லாதார்களில் இருந்து பிரித்துக்காட்டும் படியான வேஷத்தையும் வேஷச் சின்னத்தையும் அணிந்து தங்களை பிரித்துக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இருந்து கொண்டு இருக்கும் பார்ப்பனர்கள் மற்றவர்களைப் பார்த்து அதுவும் கஷ்டமும் இழிவும் அடைந்து கொண்டிருக்கின்றவர்களைப் பார்த்து பேத உணர்ச்சியை விட்டுவிடுங்கள் என்று சொன்னால் அதில் நாணயமோ யோக்கியமோ இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்
257 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சமீப காலத்தில் பார்ப்பனர்களால் கூட்டப்பட்ட பல பிராமண மகா நாடுகளிலும், வருணாச்சிரம தர்ம பாதுகாப்பு மகாநாடுகளிலும் செய்யப்பட்ட தீர்மானங்களில் முக்கிய தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் முன் குறிப்பிட்டது போல் “சனாதனதர்மத்தை காப்பாற்ற வேண்டும்” என்றும் “வருணாச்சிரம தர்மத்தை காப்பாற்ற வேண்டும்” என்றும் “மனுதர்ம சாஸ்திர திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரும்படி ஒவ்வொரு பார்ப்பனரும் நடந்து கொள்ள வேண்டு”மென்றுமே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சனாதன தர்மம், வருணாச்சிரம தர்மம், மனுதர்மம் என்றால் என்ன என்பது தெரியாதா என்று கேட்கின்றோம். மனுதர்மம் என்பதை கீழே உபதலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.
இந்தமாதிரி நிலையில் பார்ப்பனர்கள் இருந்துகொண்டு “மத உணர்ச்சி வேண்டாம்'' என்று நமக்கு புத்தி சொல்ல வருவதென்றால் இது “நான் அப்படித்தான் அடிப்பேன் நீ அழுகக்கூடாது உடலைக்கூட அசைக்கக் கூடாது” என்பது போன்ற நீதியாக இருக்கிறதா இல்லையா என்று கேட்கின்றோம். ஆகவே வரப்போகும் அரசியல் போட்டிகளில் பார்ப்பனரல்லாதார். ஒருசமயம் தோல்வியடைந்து விட்டாலும்கூட இந்த மேல் கண்ட பார்ப்பனர். பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரிவினையை சகல துறைகளிலும் அழிந்து ஒழிந்து போகும்படி செய்ய வேண்டிய வேலைகளையாவது தக்கபடி கவனித்து வந்தால் அரசியல் துறை போட்டியில் வெற்றி ஏற்படுவதின் மூலம் கிடைக்கும் நன்மையைவிட கூடுதலான நன்மை கிடைக்கும் என்றே கருதுகிறோம்
ஆகையால் பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனரின் நீலிக்கண்ணீருக்கும், சூழ்ச்சி போதனைக்கும் ஆளாகாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.04.1936
குடி அரசு - 1936 (1) 258
g flwi - திராவிடர் என்கின்ற பியிவை
எப்பாடி மறக்க முடியும்?
மநுதர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்ட திட்டங்களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதில் உள்ள நீதிகளும், விதிகளும், எந்த விதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதிதிராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்து மதத்தில் இருப்பதைவிட பிறமதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக்கொள்வது சரியா? பிசகா? என்பதையும், அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டதிட்டங்கள் அமைந்துள்ள “இந்து” மதத்திலேயே அடிமைப் பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்
1. “பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன்
நீதி செலுத்தலாம் - சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது'' அத்தியாயம் 8, சுலோகம் 20.
2. “சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்"'
௮.8. ௬.22.
3. “சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி”. ௮.8. ௬.22.
4. “ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை". ௮.8 ௯.112
5. “நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்யவேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்லச் செய்ய வேண்டும்; பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின. மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த
259 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர்போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணரவேண்டும்”. அ.8. 5113 - 115
சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்”. அ.3. 5270
சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளைச் சொல்லித் திட்டினால், 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்”. ௮.8. ௬. 271 “பிராமணனைப் பார்த்து 'நீ இதைச் செய்ய வேண்டும்” என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். ௮.8. ௯.272.
சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.” ௮.8. 5281
பபிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை. ௮.8. ௬.143
10
சூத்திரன் பிராமணப் பெண்னைப் புணர்ந்தால் அவனது உயிர். போகும் வரையும் தண்டிக்க வேண்டும்"
11
பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும் எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிட வேண்டும்.” அ.8. சு.380
அரசன், சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிடவேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்”. ௮.8. ௬.410
12
“பிராமணன் கூலி கொடாமலேயே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான்''. ௮.8. ௬ு.413
13
“பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாகமாட்டான்''. ௮.8. ௯.417
14
சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேரவேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது"
15
௮.9. சு.416
பபிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை". ௮.8. 5.155
16
குடி அரசு - 1936 (1) 260
பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரறுடைய பொருளை பிராமணன்.
17
தன் இஷ்டப்படி கொள்ளையிடலாம்". அ. 9. 5 248
18
“பிராமணன் மூடனானாலும் அவனே மேலான தெய்வம்''. ௮.9. 5317
“பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள். ஆவார்கள்''. ௮.9. ௬ு.313
19
'“பிராமணனிடமிருந்து க்ஷத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பஞ்செய்தால், அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்''. ௮.9. சு. 319, 320
20
சூத்திரனுக்கு பிராமணப் பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும் அவன் பிராமணனில்லாத விடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா.
21
விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்யவேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன் பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால் களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக்கொள்ள உரிமையுண்டு”. அ. 11. ௬௯.12.
சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான. பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்”
22
௮.11. ௬.13
“யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது'' அ.11. ௬.20
23
பெண்களையும், சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்”. அ. 11. &.66 ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய
24
25
வேண்டும்''. அ. 11. &.131.
(௮) “அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது''. அ. 11. சு. 132
25
க்ஷத்திரியன் இந்நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்''. அ. 11. & 285
26
“சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவான்; பிராமணன் சூத்திரறுடைய தொழிலைச் செய்யின் பிராமணனே. யாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்”
27
௮.11. ௬௯.75
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
28. “பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால், அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்”. ௮.10. ௬.96.
29. “சூத்திரன் இம்மைக்கும் மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ
வேண்டும்”. அ. 10. .96
30. “பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், கெட்டுப்போன தானியமும், சூத்திரறுடைய ஜீவனத்துக்குக் கொடுக்கப்படும்”. ௮.10
சு.125
31. “சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகமயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக்கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்க விட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்”. அ. 10. ௬.129.
32. “மனுவால் எந்த வருணத்தானுக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும் ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்”. அ. 2 ௯.7
இன்னும் இவை போன்ற ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும் ஒரு சாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால், “பிராமணன்” என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை “மனுதர்மம்” என்று கூறுவதா அல்லது “மனு அதர்மம்” என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.04.1936
குடி அரசு - 1936 (1)
ய 2
காங்கிரஸ் தலைவர் யோக்கியதை
தோழர்சி. ஆர். ரெட்டிஜஸ்டிஸ் கட்சியால் விளம்பரம் பெற்றவர்; அதில் தனக்கு உத்தியோகமோ பதவியோ கிடைக்கவில்லை என்று அக் கட்சிக்கு தொல்லை கொடுத்தவர். பிறகு ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு (ஆந்திரா யூனிவர்சிட்டி வைஸ் சேன்ஸ்லர்) உத்தியோகம் கொடுத்தவுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தவர். அந்த உத்தியோகத்துக்கு காலாவதி ஆகப்போவதை அறிந்து, மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில் உத்தியோகம் கிடைக்காது என்கின்ற சந்தேகத்தின் மீது அதை தேசாபிமானம் காரணமாக ராஜினாமா
கொடுத்து விட்டதாக விளம்பரம் செய்து கொண்டவர்.
காங்கிரஸ் உத்தியோகம் ஏற்கப்போகின்றது என்பதையும், காங்கிரசு எலக்ஷனில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் உணர்ந்த பிறகு காங்கிரசில் சேர்ந்துகொண்டதாக வேஷம் போட்டுக்கொண்டவர். பிறகு உத்தியோகம் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்த உடன் முன் தேசாபிமானத்தின். காரணமாக ராஜினாமாச் செய்து உதறித்தள்ளி விட்டு விட்டுப்போன உத்தியோகத்தை இப்போது மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சி உதவியினாலேயே பெற்றுக்கொண்டு காங்கிரசைவிட்டு விட்டவர். ஆகவே காங்கிரஸ் பக்தியும் உத்தியோகங்களை ராஜினாமா செய்யும் தேசபத்தியும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை இதிலிருந்தே உணர்ந்துகொள்ளலாம்
இப்படிப்பட்ட தேச பக்தியையும் காங்கிரஸ் தலைவர்களையும் வெள்ளைக்கார அரசாங்கம் மதிக்கவில்லை என்றால் அது அரசாங்கத்தின் ஆணவமா அல்லது தேசாபிமானத்தின் அயோக்கியத்தனமா என்பதை வாசகர்களே யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறோம்
குடி அரசு - செய்தி விளக்கம் - 05.04.1936
263 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
முத்தைய முதலியாருக்கு பாராட்டு
சென்னை மாகாண தொகுதி நிர்ணயக்கமிட்டித் தலைவராயிருந்த மாஜி மந்திரி தோழர் எஸ்.முத்தைய முதலியாரவர்களுக்கு சென்னை முதலியார் சங்கத்தார் சென்ற மார்ச்சு 29ந் தேதி ஒரு உபசார விருந்து நடத்தினார்கள். அப்பொழுது தோழர் செய்துள்ள தேசத்தொண்டுகளைப் பாராட்டிப் பேசப்பட்டன. முதலியார் மாகாணத் தொகுதி நிர்ணயக்கமிட்டித் தலைவராய் இருந்து செய்த சேவைகளை தென்னாட்டார் நன்கறிவர். ஒரு பிரதிநிதி தொகுதியை மாகாணக்கமிட்டியார் சிபார்சு செய்தனராயினும் ஹாமண்டு கமிட்டியார் பல மெம்பர் தொகுதிகளையே ஆதரித்தனர். எனினும் சென்னைச் சட்டசபை அபிப்பிராயத்தைத் தழுவி ஒரு பிரதிநிதி தொகுதியை பார்லிமெண்டு ஆதரித்து விட்டது. தமிழர் க்ஷேமத்துக்காக தோழர் முதலியார் பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறார். அவர் மந்திரியாகவிருந்த போது தான் வகுப்புவாரி வீதாசார உத்தியோக உத்தரவு பிறந்தது. பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு அதனால் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை நாம் விளக்கிக் கூறத் தேவையில்லை.
குடி அரசு - செய்தி விளக்கம் - 05.04.1936
குடி அரசு - 1936 (1) 264
இனாம் மசோதாவும் வைஸ்ராயும்
நிராகமித்த காரணம் என்ன?
“உரிமையைப் பறிமுதல்? செய்கிறது என்பது ஒன்றே
- உண்மை விளம்பி
திருத்துறைப் பூண்டியில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில்தோழர் கே.எம். பாலசுப்பிரமணியம் தன்னுடைய சொற்பொழிவில், ஜஸ்டிஸ் கட்சி நிறைவேற்றிய மசோதாவை வைஸ்ராய் அவர்கள் அங்கீகரிக்க மறுத்து நிராகரிக்கக் காரணம், வைஸ்ராய் இம்மசோதாவானது இனாம் தாரர்களின் உரிமைகளை (குடிவார உரிமை) பறிமுதல் செய்து இனாம் குடிகளுக்கு வழங்கும் தன்மையது என்று அபிப்பிராயப்பட்டதேயாகும் என்று கூறினார். இதை எதற்காக எடுத்துரைத்தார் எனின், ஜஸ்டிஸ் கட்சியும்
கூடிய அளவு ஏழை மக்களுக்கு, Expro-priation (பறிமுதல்) என்ற முறையை சட்டபூர்வமாகக் கையாண்டு பிழைப்புவழி செய்து வந்துள்ளது என்பதை விளக்கவே. இது பலருக்குப் போதுமான அளவு பொதுவுடமை தத்துவத்தை
புரட்சி மூலம் செய்யாத உப்புச்சப்பில்லாச் சட்டமாய்த் தோன்றலாம். ஆனால். இது Expropriatory Character (பறிமுதல் தன்மையை) கொண்டிலது என்று கூறுவது தவறாகும். இதைவிடத் தவறு, வைஸ்ராய் இந்த அபிப்பிராயத்தைக் கொள்ளவில்லை என்று கூறுவது
அப்படியிருந்தும், அந்த மகாநாட்டில் சட்டம் பயின்ற தோழர் முத்துசாமி வல்லத்தரசு, வைஸ்ராய் தன் அங்கீகாரத்தை மறுத்ததற்குக் காரணம் பறிமுதல் தன்மையை இனாம் மசோதா கொண்டுள்ளது என்பது அல்ல என்று திருப்பித் திருப்பி வாதாடினார். இது விஷயத்தைச் சந்தேகமறத் தெரிய விரும்பும் தோழர்கள் 22-2-36 சனிக்கிழமை வெளிவந்த 'இந்து', 'ஐஸ்டிஸ்', * மதராஸ் மெயில்", “இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் உண்மை விளங்கும். அதில் வைஸ்ராய் அவர்களின் கடிதம் பிரசரிக்கப்பட்டிருக்கிறது. அதில் கீழக்கண்ட வாக்கியம் இருப்பதை அனைவரும் காணலாம்
“ your Excellency ....... I hereby signify toyou that myreason for withholding my assent from the Madras Estates Land Act, is that .. ... Thave reached the conclusion that the Actis Expropriatory in that it
involves 1௦55 of Kudivaram of land etc ..”
268 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நான் இந்த இனாம் மசோதாவிற்கு என் சம்மதியைக் கொடுக்க மறுப்பதற்குக் காரணம், இனாம்தாரர்களின் குடிவார உரிமையை இது பறிமுதல் செய்யும் தன்மையது என்ற முடிவிற்கு நான் வந்ததேயாகும்.” உண்மை இப்படியிருக்க, தோழர் வல்லத்தரசு எந்தப் பத்திரிகையைப் படித்து இதை மறுத்தாரோ தெரியவில்லை. அபிப்பிராயம் தவறுதலாயினும் அடிப்படையான விஷயங்கள் தவறாகா.
குடி அரசு - கட்டுரை - 05.04.1936
குடி அரசு - 1936 (1) 266
லக்னோவில் ஏமாற்றுந் திருவிழா
அல்லது
காங்கிரசின் கபட நாடகம்
காங்கிரஸ் மகாநாடுகள் என்பவை ஏமாற்றும் திருவிழாக்கள் என்றும், கபட நாடக நடிப்பு என்றும் 10, 12 வருஷ காலமாகவே கூறி வருகின்றோம். அதற்கு ஏற்பவே இன்று லக்னோவில் அவ்வேமாற்றத் திருவிழாவானது நாடக முறையில் நடைபெறுகிறது
அந் நாடகத்திற்கு மூவர் முக்கியமானவர்களாகத் திகழ்கின்றனர்.
ஒன்று - சூத்திரதார் ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டதோழர் காந்தியாராவார்.
இரண்டு - நாடகத்தின் முக்கிய பாத்திரம் ஆகிய தோழர் ஜவஹர்லால் ஆவார்.
மூன்று - அந்நாடகத்தின் கதாசிரியரும் உண்மையான சூத்திர தாருமான தோழர் ராஜகோபாலாச்சாரியாராவர்.
கதாசிரியராய் இருக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இந்திய மக்களின் முட்டாள் தனத்தையும், அவர்களது மூடபக்தியையும் சரியானபடி அளவெடுத்து அதற்கேற்றபடி மக்களை ஏமாற்றத்தக்க விதமாக கதை எழுத வல்லவர். அப்படிப்பட்டவரே உண்மை சூத்திரதாராக (டைரக்டராக) இருந்து நாடகம் நடத்தும்போது கதையின் நடிப்பு வெற்றிகரமாய் முடிவதில் யாருக்குத்தான் சந்தேகம் இருக்க முடியும்?
கதையின் முக்கிய நடிகரான தோழர் ஜவஹர்லால் அவர்கள் இன்று டாக்கீஸ் என்னும் சினிமாக்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் இருக்கும் விளம்பரத்தை விட அதிக விளம்பரம் கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறவர். டம்மி சூத்திரதாரான காந்தியாரோ ராஸ்புடீனையும் தோற்கடிக்கக்கூடிய திறமை பெற்றவர். இப்படிப்பட்டவர்கள் கூடி நடத்தும் கபட நாடகத்தில் யார் தான் ஏமாறாமல் இருக்க முடியும்?
ஆனாலும் இந்த மும்மூர்த்திகளுக்கும் காங்கிரசு என்பதற்கும் உள்ள அதாவது இருந்துவரும் சம்பந்தத்தை முதலில் விளக்குவோம்.
தோழர் காந்தியார் காங்கிரசின் நடத்தை தன்னால் சகிக்க முடியவில்லை என்றும், காங்கிரசிலுள்ளவர்களின் நடத்தை பெரிதும் தனக்கு பிடிக்க
2679 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வில்லை என்றும், காங்கிரசின் நன்மைக்கு ஆகவே காங்கிரசை விட்டு விலகி இருக்க வேண்டியதாக இருக்கிறது என்றும், அந்தப்படி விலகி இருப்பது என்பதுகூட சாதாரணமாய் இல்லாமல் காங்கிரசில் ஒரு நாலு அணா மெம்பராகக்கூட இல்லாமல் விலகி இருக்கப் போவதாகவும் சொல்லிக் கொண்டு விலகிக் கொண்டவர்.
தோழர் ஜவஹர்லால் அவர்களுக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதென்றாலோ, அவர் இன்று தலைமை வகிக்கும் “இந்திய தேசிய காங்கிரசைப் பற்றியே” காங்கிரசு முதலாளிமார்களின் அடிமைக் கூட்ட மென்றும், ஏகாதிபத்தியங்களின் ஒற்றர்கள் கூட்டமென்றும் கூறும் வெளிநாட்டு அபேதவாத ஸ்தாபனங்களில் அங்கத்தினரும், ரஷ்ய தேசத்தின் சுதந்திரத்துக்கு டால்ஸ்டாய் எப்படி முட்டுக்கட்டையாய் இருந்தாரோ அது போல் இந்தியாவின் உண்மைச் சுதந்திரத்துக்கு “மலைபோல் ஒரு எருது படுத்திருக்கிறதே'' என்று சொன்னமாதிரி பெரியதொரு தடையாயும் முட்டுக் கட்டையாயும் காந்தியார் இருந்து வருகிறார் என்று சொல்லும்படியான பொது உடமை ஸ்தாபனங்களின் போர்வையைப் போர்த்திக் கொண்டுமிருப்பவர். மற்றும் இவர் காந்தியாருக்கு எழுதிய கடிதங்களிலும் நேரில் பேசியவைகளிலும், இருவருக்கும் பெரிய விளம்பரம் கிடைக்க சாதனமாய் இருந்த வார்த்தைகளைப் பற்றி எவரும் அறியாததல்ல. அதாவது “காங்கிரஸ் இந்திய ஏழை மக்களுக்கும், பாட்டாளி மக்களுக்கும் இதுவரை யாதொரு நன்மையும் செய்யவில்லை."
“காங்கிரஸ் ஏழை விவசாயிகளையும், ஏழைத்தொழிலாளர்களையும்
வஞ்சித்து வந்திருக்கிறது.”
“காங்கிரஸ் பயனற்றதும் முற்போக்குக்குத் தடையானதுமான ஜாதி மதங்களுக்கு ஆக்கமும் பந்தோபஸ்தும் அளித்து வந்திருக்கிறது.” இவை மாத்திரமல்லாமல் காங்கிரசானது பூமியுடைய ஜமீன்தாரர்
களுக்கும் பணமுடைய முதலாளிகளுக்கும் ஒரு காப்பு ஸ்தாபனமாக இருந்து ஊழியம் புரிந்து வந்திருக்கிறது” என்றெல்லாம் பட்டவர்த்தனமாய்ச் சொல்லி அதன் மூலமே ஒப்பற்ற வீரர் ஆனவர்.
மற்றப்படி தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களோ, யார் யாரோ “தடுத்தும் கெஞ்சிக் கேட்டும் இணங்காமல் ஒரே கோபமாய் காங்கிரசிலிருந்து அதாவது காங்கிரஸ் வேலைகளில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னவர்.
இம்மூன்று முக்கியஸ்தர்கள் கதி இப்படி இருக்க,
மற்ற உப நடிகர்களில் முக்கியமானவரும் பல பார்ட்டில் சிறந்தவருமான தோழர் சத்தியமூர்த்தியாரைப் பற்றிச்சொல்லவே வேண்டியதில்லை. அப்படிச்
குடி அரசு - 1936 (1) 268
சொல்வதானாலும் எவ்வளவு குறைவாய்ச் சொல்லலாமோ அதுவே நன்மையாகும். அவருடைய தியாகமும் அவருடைய நாணயமும், அவருடைய ஒழுக்கமும், அவருடைய பேச்சும், அவருடைய உள்நடத்தையும், அவருடைய வெளி நடத்தையும் முதலாகியவைகளில் எதற்குத்தான் வருணனை வேண்டும் என்றோ அதிகப்படுத்திக் கூற இடமிருக்கிறதென்றோ சொல்ல முடியாது. அப்படிப்பட்டவர்தான் இன்று இந்த காங்கிரஸ் கபட நாடகம் என்னும் ஏமாற்றுந் திருவிழாவுக்கு ஒரு இரசமான பாத்திரராய் விளங்குகிறார்.
இதுபோலவே மற்ற அநேக நடிகர்களைப்பற்றி சொல்லவேண்டியது அவ்வளவு அவசியம் என்று தோன்றவில்லை.
இந்த நாடகம் பார்க்க வரும் நாடகப் பிரியர்களோ, அல்லது நாடக அபிமானிகளோ, அல்லது நாடக பக்தர்களோ ஆகிய தேசாபிமானிகள், தேசீயவாதிகள், தேசபக்தர்கள் என்பவர்களின் மேன்மைகளைப் பற்றியும் ஞானங்களைப்பற்றியும் நாம் விவரிக்க வேண்டுமானால் அவர்கள் நம் ஆழ்வராதிகள் நாயன்மார்கள் போன்ற அதாவது பக்தி ஒன்றே மோக்ஷ சாதனம் என்றும், பக்திக்கு ஆக எதையும் செய்யலாம் என்றும் உறுதி கொண்டிருக்கிறவர்களாவார்கள் என்று சொல்லுவதே போதுமானதாகும்
ஆகவே இப்படிப்பட்ட முக்கிய நடிகர்கள் என்னும் தலைவர்களும், ஆழ்வார்கள் நாயன்மார்கள் போன்ற காங்கிரஸ் பக்தர்களும் பல லட்சக் கணக்கான ரூபாய் செலவில் அடிக்கடி இதுபோலவே கூடி செய்த காரியம் என்ன? செய்யப்போகும் காரியம் என்ன? என்பதுதான் நாம் இப்போது கவனிக்க வேண்டியது என்னும் ஆசையாலேயே இதை எழுதுகிறோம்.
இந்நிலையில் இவர்கள் எல்லாம் இதுவரையில் செய்ததைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை என்று கருதுகிறோம். ஏனெனில் அதைப்பற்றி காங்கிரஸ்காரர்களே தங்களால் தேசத்துக்கு இதுவரை எந்த நன்மையும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுவதில்லை. ஏதாவது சொல்லுவதானால் ஏதோ “ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விட்டு இருக்கிறோம்” என்று மாத்திரமே சொல்லி விடுகிறார்களே ஒழிய காரியம் எதையும் எடுத்துக் காட்டுவ தில்லை. மற்றபடி வேறு எதைச் சொன்னாலும் அதாவது ஜெயிலுக்குப் போனோம், அடிபட்டோம் என்றெல்லாம் சொன்னால் உடனே அதனால் ஏற்படும் பயன் என்ன? என்றும் அப்படியெல்லாம் செய்ததை இப்பொழுது தப்பிதம் என்று உணர்ந்து அவற்றைக் கைவிட்டு விட்டு ராஜபக்திக்கும், ராஜ சேவைக்கும் பிரமாணம் செய்துவிட்டு போட்டி போட வந்துவிட்டீர்களே என்றும் பொது மக்கள் கேள்வி கேட்பதால் அதைப்பற்றியும் அதாவது தங்கள் “தியாகத்தைப்” பற்றியும் பேசாமல் இருக்கிறார்கள். ஆதலால் காங்கிரசு என்ன செய்தது என்ற கேள்வியில் நாம் பிரவேசிக்கவில்லை.
260 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆனால் இப்போது இனி என்ன செய்யப்போகின்றது என்பதை கவனிப்போம். இதை அறிய வேண்டுமானால் இதற்காக அதிகமாய்ச் சிந்தித்துப்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்றே சொல்லுவோம்.
ஏனென்றால் காங்கிரசின் லக்ஷ்யமாக இன்று மூன்றே மூன்று விஷயங்கள் தான் இருக்கின்றன.
அவையாவன:-
1. சீர்திருத்தத்தை என்ன செய்வது?
2. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை என்ன செய்வது?
3. பதவிகளை என்ன செய்வது?
என்பவைகளேயாகும்
இம்மூன்றைப் பற்றியும் காங்கிரஸ் அபிப்பிராயம் என்ன என்பது பற்றி யாரையும் ஜோசியம் கேட்க வேண்டியதில்லை.
சீர்திருத்தத்தை உடைப்பது என்ற கொள்கை காங்கிரசுக்கு எலக்ஷன்
பிரசாரத்துக்கு ஒரு சாதகமாய் இருந்தது என்பது தவிர, மற்றபடி அதை அடியோடு கை விட்டாகி விட்டது எப்படி என்றால் எலக்ஷன் பிரசாரத்தின் போது “நாங்கள் சீர்திருத்தத்தை உடைத்து சுக்கலாக்கி அழித்து விடுகிறோம்; எங்களுக்கு ஓட்டுக்கொடுங்கள்; எங்களுக்கும் சர்க்காருக்கும் பெரியதொரு யுத்தம் நடக்கப்போகிறது; மற்றபடி உள்நாட்டு விவகாரத்தைப் பற்றி கவனிக்காதீர்கள்" என்றும் சொல்லி ஓட்டுப் பெற்றார்கள். எலக்ஷன் முடித்து வெற்றி ஏற்பட்ட பிறகு சீர்திருத்தத்தை என்ன செய்வது என்பது அடியோடு கைவிடப்பட்டு விட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் “ஜஸ்டிஸ் கட்சியார் சீர்திருத்தத்தை ஏற்று நடத்தி விடுவார்கள் ஆனதால் அவர்கள் அதிகாரம் கைப்பற்றாதபடி செய்ய நாம் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள்
அடுத்த இரண்டாவது விஷயமாகிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை அல்லது வகுப்பு தீர்ப்பு என்பது பற்றி காங்கிரஸ் நிலைமை
தந்திரத்திலேயே தான் இருந்து வருகிறது. எப்படி எனில் இப்போது இந்திய அரசியல் என்னும் சீட்டாட்டத்திற்கு முஸ்லீம்களே துருப்பு சீட்டாக இருந்து வருகிறார்கள். அவர்கள் சர்க்காருடன் சேர்ந்தால் சர்க்காருக்கு வெற்றியும், காங்கிரசுடன் சேர்ந்தால் காங்கிரசுக்கு வெற்றியும் என்கின்ற நிலையில் சர்க்காரே அவர்களை ஆக்கி வைத்திருப்பதால். முஸ்லீம்களின் வகுப்பு வாரி பிரதிநிதித்துவ உரிமையில் காங்கிரசு மூச்சுவிட முடியாமல் போய்விட்டது.
அன்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையானது சென்னை மாகாணத்தை பொருத்தவரைதான் பார்ப்பனர்களுக்கு ஆக்ஷ்பகரமுடைய
குடி அரசு - 1936 (1) 270
தாகவும், பார்ப்பன ஆதிக்கத்தை ஆட்டிவிடத்தக்கதாகவும் இருப்பதால் சென்னை மாகாண வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை மாத்திரமே அது தேசீயத்துக்கு விரோத!” மென்றும் மற்ற மாகாண வகுப்புவாரி
பிரதிநிதித்துவ முறை ஒற்றுமையை உத்தேசித்து அனுமதித்துத் தொலைக்க வேண்டிய” தென்றும், “அனுமதிக்காவிட்டாலும் ஆக்ஷேபிக்காமலாவது இருக்க வேண்டும்" என்றும் சொல்லப்பட்டு விட்டது. அதற்கு ஏற்பவே இந்திய சட்டசபையில் அதைப் பற்றிய பேச்சே இந்த ஒன்றரை வருஷ காலமாக எழவில்லை. ஆகையால் வகுப்புவாரி முறையை ஒழிப்பது என்பதும் கைவிடப்பட்ட காரியமேயாகும். அது மாத்திரமல்லாமல் அதை தடுக்க இனி சுலபத்தில் எவராலும் முடியாது என்பதும் உறுதியான விஷயமாய்விட்டது
மூன்றாவதான - பதவி ஏற்பதா வேண்டாமா என்கின்ற பிரச்சினையில். காங்கிரசுக்காரர்களுக்குள் சந்தேகம் ஒன்றும் கிடையாது. ஏனெனில் பதவி ஏற்பது என்கின்ற விஷயத்தில் காங்கிரஸ் பதவி ஏற்காவிட்டால் பிற்போக்காளர்கள். (ஜஸ்டிஸ் கட்சியாளர்கள்) பதவி ஏற்று தீமை செய்து விடுவார்கள் என்று
சாக்குச் சொல்லி பதவி ஏற்பதாகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் முடிவு செய்து கொண்டார். அதற்கு காந்தியாரையும் சரிப்படுத்திக் கொண்டார். ஆனால் அதை பெயரளவுக்கு முடிவு செய்யாமல் மறைவாய் வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன வென்றாலோ கிடைக்குமா கிடைக்காதா என்பது 100-க்கு 90 பாகம் சந்தேகப்பட வேண்டியதாகவே இருப்பதால்தான்.
ஆதலால் அதை மூடி வைத்து மக்களை ஏமாற்ற வேண்டியதாய் இருக்கிறது. தவிரவும் நம் நாட்டு மக்களின் முட்டாள் தனமானது ஒரு விஷயம் அசாத்தியமானது என்று தெரிந்தாலும் தீவிரமான, தியாகமான, கலகம், அடிதடி, கிளர்ச்சி ஆனதான காரியங்களைச் சொன்னால் தான் பாமர மக்கள் படியும்படியான நிலையில் இருப்பதால் ஓட்டுப் பெறும் வரையில். தீவிர கொள்கைகளைப் பேச வேண்டியது அவசியமாகிவிட்டது அதை உத்தேசித்தே மக்களை ஏமாற்ற இது சமயம் சிறிதாவது தீவிரமான கொள்கைகளைத் தேடிப் பிடித்து சொல்ல வேண்டியிருக்கிறது என்றாலும் அதையும் முடிவாய்ச் சொல்லி விட்டால் சென்னை மாகாணத்தில் கஷ்டம் ஏற்படுமாதலால் பதவி ஏற்பது என்பதைச் சென்னை மாகாண காங்கிரசு மகாநாடுகளில் அனுகூலமாக தீர்மானித்துக் கொண்டும் இந்திய காங்கிரசில் மாத்திரம் சந்தேகமாக வைத்துக்கொண்டும் மக்களை ஏமாற்ற வேண்டி இருக்கிறது. ஆகையால் பதவி ஏற்பு விஷயம் இப்போது முடிவு செய்ய வேண்டியதில்லை என்றுதான் காங்கிரசு முடிவு செய்யப்போகிறது இதற்காகவே அதிதீவிரவாதி என்று விளம்பரம் பெற்ற தோழர். ஜவகர்லாலை காங்கிரசுக்கு தலைவராக்கி உண்மையாகவே தங்களை அதி தீவிரவாதிகள் என்று நினைத்துக்கொண்டோ, அல்லது அதிதீவிர வாதிகள் என்று சொல்லப்படுவதில் வீரர் ஆகலாம் என்று கருதிக்கொண்டோ இருக்கிற 7 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பைத்தியக்காரர்களையும், விளம்பரப் பிரியர்களையும் ஏய்ப்பதற்காகவே அவரை தலைவராக்கி வைத்து இருக்கிறார் நமது ஆச்சாரியார்.
பண்டிதருக்கு தான் புத்தகத்தில் படித்திருக்கும் சில கொள்கையைப் பேசத்தான் தெரியும் என்பதோடு காரியத்தில் காந்தியார் சொல்படி நடப்பதைவிட வேறு வழியும் தெரியாது; கதியும் இல்லை.
ஆகையால் வந்த காசுக்கு வட்டம் இல்லை என்கின்ற முறையில் எட்டின பதவியை பெற்று கிடைத்த விளம்பரத்தை அடைந்து விடுவதோடு அவர் காரியம் முடியப்போகிறது ஆகவே இந்தக் காரியங்களால் - இந்த ஏமாற்றும் திருவிழாக்களால் - கபட நாடகங்களால் இந்திய நாட்டுக்கோ, அல்லது இந்தியாவின் 100-க்கு
75 பாகமாகிய ஏழைப் பாட்டாளி மக்களுக்கோ ஏற்படும் லாபம் என்ன என்பதுதான் யோசிக்கத்தக்கதாகும்.
அதிதீவிரக் கொள்கைகளைப்பற்றி பேசுவது நாகரிகமாய் போய்விட்டது. காரியத்தில் காங்கிரசில் உள்ள சமதர்மக்காரர்கள் என்ன செய்தார்கள், அல்லது என்ன செய்கிறார்கள் என்றாவது எவரும் கவனிப்பதில்லை.
காங்கிரஸ் சமதர்மக்காரர்கள் இன்று காங்கிரசிலிருக்கும் கராச்சி தீர்மானத்தை அறியாதவர்கள் என்றாவது சொல்லிவிட முடியுமா என்று
பார்த்தால் எல்லாம் தெரிந்தேதான் காங்கிரசின் பெயரைச் சொல்லிக்கொண்டு
காங்கிரசின் நிழலில் இருக்கிறார்கள்.
காங்கிரசின் நிழலில் இருக்கும் இப்படிப்பட்ட சமதர்மக்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பவர்களைப் பரிகாசம் செய்கிறார்கள் என்றால் அவர்களது சமதர்ம ஞானம் எவ்வளவு என்பதற்கு அது ஒன்றே அளவு
கருவி என்னலாம்.
ஜஸ்டிஸ் கட்சியார் வேறு ஒன்றும் செய்யவில்லையானாலும் சமூக வாழ்வில் சமதர்ம சட்டம் இயற்றியுள்ளார்கள். மத இயலிலும் கோவில் சட்டம், சீர்திருத்தச் சம்மந்தமான சட்டம் இயற்றியுள்ளார்கள். பொருளாதாரத் துறையிலும் ஒரு அளவுக்காவது பறிமுதல் சட்டம் இயற்றினார்கள். இவற்றால் பெரியதொரு லாபம் இல்லை என்றாலும் இக் கொள்கைகள் ஜஸ்டிஸ் கட்சியாரால் ஒப்புக்கொள்ளப்பட்டு ஆதரிக்கவும் படுகிறது என்பதாகவாவது ஆகிவிடவில்லையா என்பதே நமது பிரச்சினை. இவைகளை யெல்லாம் மதிக்காவிட்டாலும்கூட காங்கிரசை விட எந்த வகையில் ஜஸ்டிஸ்கட்சி மோசம் என்று சொல்லிவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை
காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்கு நிற்பதில்லையா? தேர்தலில் வெற்றிபெற்று விட்டால் மந்திரி பதவிகள் வகிக்க சம்மதிக்கமாட்டார்களா?
குடி அரசு- 1936 (1) 272
மந்திரி பதவி கிடைத்தால் சம்பளம் பெறமாட்டார்களா? அப் பதவிகளில் அதிகாரம் இருந்தால் தங்கள் வகுப்பாருக்கும் அல்லது கட்சியாருக்கும் உத்தியோகம் பங்கிட மாட்டார்களா என்பவைகளைக் கவனித்தால் இரு கட்சிக்கும் என்ன வித்தியாசம் சொல்லக்கூடும் என்பது விளங்கவில்லை. ஆகவே காங்கிரஸ் என்பதும் இன்று லக்னோவில் கூடும் கூட்டமும் ஏமாற்றுந் திருவிழா அல்லது கபட நாடகம் என்பதல்லாமல் வேறு இல்லை என்பதும் அதன் முக்கியஸ்தர்களான தோழர்கள் காந்தியார், ஆச்சாரியார், பண்டிதர் ஆகிய மூவர்களும் இந்த ஏமாற்றுந் திருவிழாவான நாடகத்துக்கு கதை ஆசிரியர் சூத்திரதார், முக்கிய பாத்திரம் ஆகியவை ஆனவர்களே தவிர வேறில்லை என்பதுமே நமதபிப்பிராயம் இதை ஆக்ஷபிக்கிறவர்கள் “நீ மாத்திரம் யோக்கியமாய் வாழ்கின்றாயா?” என்று நம்மை கேள்வி கேட்டு விடுவதன் மூலம் திருப்தி அடையாமல் நாம் மேலே எழுதியவற்றில் எது பிசகு? எந்த வாக்கியம் ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டது? என்பதை நடுநிலையில் இருந்து பார்த்து முடிவு செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.04.1936
273 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
காங்கிரஸ்காரர் யோக்கியதை
வரப்போகும் அரசியலை நிராகரிப்பதாகக் கூறிக்கொண்ட காங்கிரஸ்காரர்கள், சீர்திருத்த சம்பந்தமான எத்தகைய வேலையிலும் பங்கு கொள்வதில்லையென்று முடிவுசெய்திருந்தார்கள். மாகாண தொகுதி நிர்ணயக் கமிட்டிகளிலும் அவர்கள் ஸ்தானம் வகிக்கவில்லை. சென்னை மாகாணத் தொகுதி நிர்ணயக்கமிட்டியில் தோழர் ஸி.ஆர். ரெட்டியாருக்கு சென்னை சர்க்கார் வெகு கண்யமாக ஸ்தானம் வழங்கியபோது, சீர்திருத்த சம்பந்தமான வேலைகளில் பங்கு கொள்வதில்லையென்று காங்கிரஸ் தீர்மானித்திருப்பதினால் மாகாணக் கமிட்டியில் ஸ்தானம் வகிக்க முடியா தென்று காரணம் கூறி, தமக்களித்த பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டார். இப்பொழுது ஹாமண்டு அறிக்கை விஷயமாக காங்கிரஸ்வாலாக்கள் சர்க்காரோடு ஒத்துழைத்திருக்கிறார்கள். ஹாமண்டு அறிக்கையைப் பரிசீலனை செய்த கமிட்டியில் அசம்பிளி காங்கிரஸ் மெம்பர்கள் அங்கம் வகித்தார்கள். அந்தக் கமிட்டி அறிக்கையை அசம்பிளி ஆதரிக்கவேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தவரும் காங்கிரஸ் மெம்பரான தோழர் பந்துவே. இம்மாதிரி முன்னுக்குபின் முரணாக நடந்துகொள்ளும் காங்கிரஸ்காரருக்கு எள்ளத்தனையாவது நாணயமோ யோக்கியப் பொறுப்போ இருக்க முடியுமா? என்று கேட்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.04.1936
குடி அரசு- 1936 (1) 274
பகுத்தறிவும் கடவுள் வாக்கும்
வினா மதம் என்றால் என்ன?
விடை₹- உண்மையில் நம்பிக்கை.
வினா?- உண்மை என்றால் என்ன?
விடைஉ ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய பரிபூரணமான ஞானமே உண்மை வினா உண்மையில் நம்பிக்கை என்றால் என்ன?
விடை:- அப்பேர்ப்பட்ட பூரண ஞானம் வாழ்க்கையின் உயரிய லக்ஷ்யத்தைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமானது என்ற நம்பிக்கையே உண்மையில் நம்பிக்கை எனப்படும் வினா உண்மையில் உள்ள நம்பிக்கையை எப்படி நிரூபித்துக் காட்டுவது? விடை தன் உயர்வான - தெளிந்த - அறிவுக்குப் பொருத்தமாக நடப்பதினால் நிரூபித்துக் காட்டலாம். வினா உண்மை அல்லது பரிபூரண ஞானத்தை எப்படி அடைவது? விடை அநுபவத்தினாலும், பயிற்சியினாலும் அடையலாம். வினா வேறு வழியில்லையா?
விடை2- இல்லை. வினா மதத்தைப்பற்றி நீ கூறிய வியாக்கியானம் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட வியாக்கியானம் தானா?
விடைஉ தெய்வ நம்பிக்கையும் தெய்வ அருளைப் பெற்ற மதாசிரியர்கள் வகுத்த விதிகளில் நம்பிக்கையுமே பொதுவாக மதம் என மதிக்கப்படுகிறது. வினா தெய்வீகம் என்றால் என்ன? விடை தெளிவாய் அறியப்பட்ட இயற்கை விதிகளுக்குப் புறம் பானவைகளெல்லாம் தெய்வீகமானவைகளே
வினா?- அத்தகைய விஷயங்களில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?
278 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை?- அவைகளை நாம் எதிர்க்கக்கூடாது. அவைகளைப் பற்றி தாராளமாக விவாதிக்க இடம் கொடுக்க வேண்டும்
வின௱- இதர வழிகளில் அறிந்துகொள்ள முடியாத பல விஷயங்களை: கடவுள் வாக்கான வேதங்கள் நமக்கு விளக்கிக் கூறவில்லையா?
விடை எத்தனையோ வேதங்கள் இருக்கின்றன. எனவே எந்த வேதம் உண்மையான கடவுள் வாக்கு என்பதை நாம் முதலில் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்
வினா?- வேதங்களில் சிலவற்றைக் கூறுக.
விடை: ஜொராஸ்டிரிய வேதம், பிராம்மண வேதம், பெளத்த வேதம், யூத வேதம், கிறிஸ்தவ வேதம், முகமதிய வேதம், மார்மண் வேதம்
வினா? இந்த வேதங்கள் எல்லாம் தெய்வ வாக்கென உரிமை பாராட்டுகின்றனவா?'
விடை- ஆம்
வினா அந்த வேதங்கள் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்யம் செய்கின்றனவா?
விடை4- இல்லை. மாறாக ஒவ்வொன்றும் மற்றவை பொய்யென்று கண்டிக்கின்றன.
வினா£- அதை விளக்குக.
விடைட “எனக்கு நிகராக உலகத்திலோ, சுவர்க்கத்திலோ யாருமில்லை. நானே பூரண ஞானம் பெற்ற புத்தன்" என்று புத்தர் கூறியிருக்கிறாராம்
வினா?- வேறொரு உதாரணம் கூறுக? விடை “நானேஉண்மையானவழிகாட்டி; எனக்கு முன் வந்தவர்கள் எல்லாம் பொய்யர்கள், திருடர்கள், என்னையன்றி வேறு ஒருவருக்கும் என் பிதாவை அணுக முடியாது” என்று இயேசு கூறியிருக்கிறாராம்.
வினா? இதை விட முக்கியமாக மதிக்கக்கூடிய ௬சு வேறு ஏதாவதுண்டா? விடை ஒவ்வொரு மதஸ்தரும் பிற மதஸ்தரை தம் மதத்துக்கு
இழுக்க முயல்கிறார்கள்.
வினா£- மதமாற்றம் என்றால் என்ன? விடை நாம் நம்புவது போல் பிறரும் நம்பும்படி செய்வதே மதமாற்றம்
வினா?- அதன் நோக்கம் என்ன?
குடி அரசு - 1936 (1) 276
விடை நோக்கம் பலவாக இருக்கலாம். எனினும் அவற்றுள். முக்கியமானது நம்மைப் போல் மற்றவர்கள் நம்பாவிட்டால் நரக தண்டனை பெறுவார்கள் என்பதே. வினா மேலே கூறப்பட்ட வேதங்களில் எது உண்மையானது?
விடை- ஒன்றாவது முழுதும் மெய்யானதோ பொய்யானதோ அல்ல. வினா அவற்றுள் எது பொய், எது மெய் என்று எவ்வாறு அறிவது? விடை பகுத்தறிவினால் அறிந்து கொள்ளலாம்.
வினாட அப்படியானால் வேதங்களை விடப் பகுத்தறிவு மேலானது என்று ஏற்படாதா? விடை ஆம். ஏற்படத் தான் செய்யும்
வினா?- அவ்வளவு உயர்வான பகுத்தறிவு நம்மிடம் இருக்கையில், மேலும் நமக்கு மதங்களும் வேதங்களும் வேண்டுமா? விடை நமக்கு வேண்டாம். பகுத்தறிவுக்குப் பொருத்தமான வேதங்களைத்தான் ஒப்புக்கொள்ள முடியும்
வினா£- ஒரு புஸ்தகத்தில் கடவுள் வார்த்தை அடங்கியிருப்பதாக நீ நம்பினால் அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருந்தாலும் இல்லா விட்டாலும் நீ அதைப் பூரணமாக நம்ப வேண்டியது தானே? விடை நம்பத் தேவை இல்லை
வினா- அது எப்படி? விடை நான் குருட்டுத்தனமாக நம்பினால் அந்த நம்பிக்கைக்கு மதிப்பேயில்லை. கட்டாயத்தின் பேரில் நம்பினால் அது மனப்பூர்வமான நம்பிக்கையுமல்ல. பகுத்தறிவால் தூண்டப்பட்டு நான் நம்பினால் என் நம்பிக்கைக்குப் பாத்திரமானது என் பகுத்தறிவேயன்றி வேதமல்ல.
வினா?- இதற்கு ஒரு உதாரணம் கூறுக
விடை- பூமி பரப்பானது என்று எந்த வேதம் கூறினாலும் நாம் நம்பமாட்டோம். ஏனெனில் நமது அநுபவத்திலும் ஆராய்சியிலும் பூமி பரப்பாக இருக்கவில்லை வினாஉ பகுத்தறிவுப்படி தப்பானதையும் நம்ப வேண்டுமென்று வேதம் கட்டளையிட்டால் நீ கடவுள் வாக்கான வேதத்துக்குக் கீழ்ப்படிவாயா? பகுத்தறிவுக்குக் கீழ்ப்படிவாயா? விடைட பகுத்தறிவுக்கொத்தபடி நான் நடந்துகொள்ளாவிட்டால்
நான் ஒழுக்கமுடையவன் ஆகமாட்டேன்.
வினா:- பகுத்தறிவு பொய் என்று கூறுவதை மெய் என்று நம்புவது சாத்தியமில்லையா?
277 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை: சாத்தியமே அல்ல. பகுத்தறிவே மேலான ஆதாரம்; அதிகாரி. மெய்யானதை மெய்யென்று நம்பும்படி பகுத்தறிவைக் கட்டாயப்படுத்த யாருக்குமே அதிகாரமில்லை.
வினா பகுத்தறிவுக்கு முரணான விஷயங்களை எந்த வேதமாவது போதனை செய்கிறதா?
விடை- ஆம். எல்லா வேதங்களும் போதனை செய்கின்றன.
வினா?- உதாரணம் கூறுக.
விடை- படைப்புக் கதை.
வினா?- வேறொரு உதாரணம்
விடை- பிரளயக் கதை.
வினா?- மேலும் ஒரு உதாரணம், விடை மனிதன் சபிக்கப்பட்டு பாபியான கதை.
வினா?- அவைகளைப்பற்றி தற்காலத்திய அபிப்பிராயம் என்ன? விடை வேதங்கள் கூறுகிறபடி மனிதன் சாபத்துக்கு உள்ளாக வில்லை; பிரளயம் உண்டாகவில்லை; கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்க வில்லை என இப்பொழுது நமக்கு நிச்சயமாகத் தெரிகிறது
வினா?- வேதங்களில் உள்ள வேறு தப்புக்கள் எவை
விடை:- சரித்திரப்படியும், விஞ்ஞான சாஸ்திரப்படியும் தப்பான பல விஷயங்கள் வேதங்களில் அடங்கியிருக்கின்றன. வேதங்களில் கூறப்பட்டவைகள் எல்லாம் பரஸ்பர முரணாக இருக்கின்றன. பாபகரமான பல விஷயங்களையும் வேதங்கள் போதனை செய்கின்றன.
வினா வேதங்களில் காணப்படும் இத்தகைய தப்புகளுக்குக் காரணம் என்ன?
விடை மனிதன் தப்புச் செய்யக்கூடியவன் தானே!
வின௱- அப்படியானால் வேதங்கள் எல்லாம் மனிதன் வகுத்தது தானா?
விடை:- வேதங்கள் மக்களின் அறிவும், அறியாமையும், நற்குணமும்,
துர்க்குணங்களும் அடங்கிய ஒரு நூலேயன்றி வேறல்ல.
வினா:- அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?
விடை நம்மிடமுள்ள ஒளி வழிகாட்டுகிறபடி நடக்க வேண்டும்.
வினா£- அது என்ன ஒளி?
விடை:- அதுதான் பகுத்தறிவு
குடி அரசு - 1936 (1) 278
வினா பகுத்தறிவு நம்மை தப்பு வழியில் செலுத்தாதா?
விடை: ஆம். செலுத்தக்கூடும்
வினா அப்படியானால் அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்
விடை ஏனெனில் அதைவிடச்சிறந்த வழிகாட்டி நமக்கு வேறில்லை.
வினா?- வேதங்களுக்கு ஜனங்கள் அதிக மதிப்புக் கொடுக்கக்
காரணம் என்ன?
விடை வேதங்கள் இல்லையானால் ஒழுக்கங் கெட்டுவிடும் என்ற பயமே அதற்குக் காரணம்.
வினா₹- அத்தகைய பயத்துக்கு ஏதாவது ஆதாரமுண்டா?
விடை₹- இல்லவே இல்லை. வேதங்களின் பெயரால் எவ்வளவோ பயங்கர குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. மாறாக வேதங்களையே நம்பாத அநேகர் உத்தமர்களாக இருந்திருக்கிறார்கள்.
வினா?- எப்பொழுதாவது கடவுள் பிரத்தியட்சமாகி வேதத்தை அருளியதுண்டா? விடை இல்லை. சுமார் 5000 வருஷங்களுக்கு முன் கடவுள் வேதத்தை அருளியதாகவே நம்பப்படுகிறது
வினா:- அதற்கு முன் உலகத்தில் ஒழுக்கம் இருந்ததில்லையா? விடை நிச்சயமாக ஒழுக்கம் இருந்தே வந்தது. அதற்குமுன் மக்களும் சமூகங்களும் தேசங்களும் இருந்தே வந்திருக்கின்றன.
வினா£- உலகத்திலுள்ள ஒவ்வொரு தேசத்தாருக்கும் கடவுள் தனித்தனி வேதம் அருளினானா?
விடை: இல்லை. யூதர்களுக்கு மட்டும் கடவுள் வேதம் அருளியதாகவே பொதுவாக நம்பப்படுகிறது
வினா£- அப்படியானால் உலக மக்களில் யூதர்கள் மட்டுந்தானா ஒழுக்கமுடையவர்கள். விடை இல்லவே இல்லை. கடவுள் மூலம் வேதம் பெறாத கிரேக்கர் பண்டுமிக்க நாகரீகம் உடையவர்களாக யிருந்திருக்கிறார்கள்.
வினா?- அதனால் விளங்குவது என்ன?
விடை:- வேதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லை யென்பது அதனால் விளங்குகிறது.
வினா வேதங்களில்லையானால் ஒழுக்கம் கெட்டுவிடும் என்று போதிப்பதினால் நன்மை ஏற்படுமா?
279 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை- ஏற்படாது. முதலில் வேதங்கள் இல்லையானால் ஒழுக்கம்
கெடாது. இரண்டாவது வேதங்களில் ஜனங்களுக்கு நம்பிக்கை இல்லாமலாகி
விட்டால் ஒழுக்கத்திலும் நம்பிக்கை இல்லாமலாகிவிடும் வினா மெய்யான விஷயங்களில் நம்பிக்கையை வலுப்படுத்துவது எப்படி?
விடை- பிரதி பலனை எதிர்பாராமல் நன்மையானதைச் செய்வதி
னாலும், விரும்புவதினாலும் வலுப்படுத்தலாம்
வினா?- நல்லொழுக்கத்திற்கு வேறு தூண்டுதல்கள் எவை? விடை முக்கியமான தூண்டுதல் சுயமதிப்பில் விருப்பம்; இரண்டாவது பிறநல விருப்பம்; மூன்றாவது கடமை உணர்ச்சி
வினா?- கடமையைச் சரிவரச் செய்வது எப்பொழுதும் இன்பகரமாக இருக்குமா? விடை கடமை ஒரு சோதனை என்றும், உத்தமர்களாக இருக்க வேண்டுமானால் நம்மையே நாம் தியாகம் செய்துவிட வேண்டும் என பழைய மதங்கள் போதனை செய்கின்றன.
வினா?- அத்தகைய மதபோதனையினால் விளையும் பயன் என்ன?
விடை?- அதனால் உத்தம வாழ்க்கை நடத்த ஜனங்கள் பயப்படு. கிறார்கள். உத்தம வாழ்க்கையைப்பற்றி எண்ணும் போதும் பயமும் மனச் சோர்வுமே அவர்களுக்கு உண்டாகிறது
வினா? அவ்வளவுதானா? விடை துஷ்டர்களுக்குத்தான் இந்த உலகத்தில் சந்தோஷமாக இருக்க முடியும் என்ற நம்பிக்கையும் பாமர மக்களுக்கு உண்டாகிறது
வினா?- கடமை என்பதற்கு சரியான பொருள் என்ன? விடை கடமை என்பது ஒரு சோதனை அல்ல. தியாகமுமல்ல. கடமை என்பது ஒற்றுமை, அழகு, மகிழ்ச்சி, சரீர மானச விதிகளை நாம் மீறும் போதுதான் நாம் ஆத்ம தியாகம் செய்து சோதனைக்கு உள்ளாகிறோம்
குடி அரசு - வினா விடை - 19.04.1936
குடி அரசு - 1936 (1) 280
காங்கிரஸ் கபட நாடக முடிவு
சென்ற வாரம் காங்கிரஸ் கூட்டம் என்பது ஏமாற்றுந் திருவிழா என்றும், அதன் நடவடிக்கைகள் கபட நாடகம் என்றும், அதற்கு முக்கிய பாத்திரங்கள் தோழர்கள் காந்தி, ராஜகோபாலாச்சாரி, ஜவஹர்லால் நேரு ஆகிய மூவர்கள் என்றும் விளக்கிவிட்டு அதன் பயன் இன்னதாகத்தான் இருக்கும் என்றும் எடுத்துக்காட்டியிருந்தோம்.
இப்பொழுது அவ்வேமாற்றுந் திருவிழா முடிவடைந்த பிறகு நாம் எழுதியது எவ்வளவு சரி என்பதும், கட்டுப்பாடாக பாமரமக்கள் எப்படி ஏய்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நன்றாய் விளங்கும்
தோழர் காந்தியார் பெயரளவில் அங்கு வந்து இருந்து கொண்டு, காரிய அளவில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இஷ்டப்படியே எல்லாக் காரியங்களும் நடைபெற, ஆயுத அளவில் தோழர் ஜவஹர்லால் உதவியாயிருந்து காரியங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
இந்தக் காங்கிரசில் மூன்று விஷயங்கள் முக்கிய லக்ஷிய விஷயங்களாக. பிரஸ்தாபிக்கப்படும் என்றும், அவை இன்ன கதிதான் அடையும் என்றும் சென்ற வாரமே பிரஸ்தாபித்திருந்தோம்.
அதாவது,
1. சீர்திருத்தத்தை என்ன செய்வது?
2. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை என்ன செய்வது?
3. மந்திரி பதவிகளை என்ன செய்வது?
மூன்று விஷயங்களிலும் தலைவர் ஜவஹர்லால் அவர்கள் மிக்க வீரமாகவும் தீரமாகவும் வாயில் மாத்திரம் பேசி இருக்கிறாரே ஒழிய காரியத்தில் அதற்கு நேர்மாறாக நடப்பதற்கே துணைபுரிந்து அந்தப்படியே காரியம் நிறைவேறுவதற்கும் ஏற்றபடி காரியக் கமிட்டியை நியமித்துக் கொண்டார். இதிலுள்ள தந்திரம் என்னவென்றால் ஜவஹர்லால் நேரு ஒரு சமதர்ம வீரர் என்ற பெயருக்கு பாதகமில்லாமலும், காங்கிரஸ் பணக்காரர்களுடையவும் பார்ப்பனர்களுடையவும் கையாயுதம் என்பதற்கு விரோதமில்லாமலும் நடந்து கொண்டதேயாகும்.
வகுப்பு தீர்ப்பை காங்கிரஸ் வார்த்தை அளவில் வெறுத்துத் தள்ளி
விட்டு அது ஒழிவதற்கு வேலை செய்வதா இல்லையா என்பதை வழ வழ வென்றே பேசி வழ வழப்பாகவே விடப்பட்டு விட்டது
2 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அதைப்பற்றி எவ்வித தீர்மானமும் செய்வதற்கு தைரியமில்லாமல் கோழைத்தனமாகவும், சூழ்ச்சித்தனமாகவும் விடப்பட்டு இருக்கிறது
ஆனால் அதைப்பற்றி தலைமை உரையில் பேசும்போது பண்டிதர். சில உண்மையை மறைக்க முடியாமல் பேசியிருப்பதற்கு பாராட்டுகிறோம். அதென்னவென்றால், இப்போதைய நிலைமையில் நமது ராஜீய வாழ்வில் நடுத்தர வகுப்பினரின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் வரையில் வகுப்பு வாதத்தை ஒழித்துவிட முடியாது” என்று பேசியிருக்கிறார். அதோடு
“வகுப்பு தீர்ப்பு ஒழிய வேண்டியதுதான்; ஆனால் இப்போது வகுப்புத் தீர்ப்பு ஒழிய வேண்டுமென்று பேசி அதை ஒழிக்க முயற்சிப்பவர்
களால் வகுப்புத் தீர்ப்பு ஒரு நாளும் ஹியாது. அதற்கு பதிலாக அவர்களது முயற்சிகள் வகுப்புத் தீர்ப்பை நிரந்தரமாக இருக்கும்படிதான் செய்யும்" இந்த வகுப்பு பிரச்சினை ஒழிய காங்கிரஸ் செய்து வந்த முயற்சி களை நான் ஏற்றுக்கொள்ள முடியாது"
“வகுப்பு பிரதிநிதித்துவம் ஒழிய வேண்டுமானால் சம்மந்தப்பட்ட வகுப்புகளின் பயத்தையும் சந்தேகத்தையும் ஒழிக்க வேண்டும். மெஜாரிட்டி வகுப்பாருக்கு தாராள புத்தி வேண்டும்" என்று பேசியிருக்கிறார். ஆகவே வகுப்பு வாதத்துக்கு யார் காரணஸ்தர்கள் என்பதும், வகுப்புவாதம் ஒழியாமல் இருக்கும்படியார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதும் இதிலிருந்து உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்
மற்றும் அவர் மத்திய வகுப்பார் என்று குறிப்பிட்டிருப்பது நமது பார்ப்பன ஆதிக்கத்தையே குறிப்பிடுவதாகவும் இருந்து வருகிறது அதாவது ராஜீய வாழ்வில் அதிக செல்வாக்கு பெற்று இருப்பவர்களையே நடுத்தர வகுப்பார் என்றும், இவர்கள் “பதவி உத்தியோகம் செல்வாக்கு ஆகியவற்றிற்காகவே உயிர் வாழ்பவர்கள்'' என்றும் பேசியிருக்கிறார். ஆதலால் வகுப்பு வாதம் சுலபத்தில் அடங்கக்கூடியதல்ல என்பதோடு அதற்குக் காரணமும் காங்கிரசாகவே இருக்கிறது என்பதைக் காட்டிவிட்டு அது ஒழிவதற்கு எந்த உபாயமும் சொல்லாமல் ஒரு இடத்தில். அவர்களோடு ஒத்து உழைக்க வேண்டுமென்றும், மற்றொரு இடத்தில் அவர்களோடு ஒத்து உழைக்கக்கூடா தென்றும் குழப்பத்துடனும், வழ வழப்புடனும் பேசி இருக்கிறார்
இவர் பேச்சுத்தான் இப்படி இருக்கிறது என்றாலும் அது சம்பந்தமான. காங்கிரஸ் தீர்மானமும் ஏதும் இல்லாமலும் மூடு மந்திரமாக - சூழ்ச்சியாக விட்டு வைக்கப்பட்டிருக்கிறது
இந்த சூழ்ச்சியானது முஸ்லீம்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொள்ளவும் பார்ப்பனரல்லாதாரை தோற்கடிக்கவுமே பயன்படுத்தப் போகிறது.
குடி அரசு - 1936 (1) 282
இனி அடுத்தப்படியாக அரசியல் சீர்திருத்தத்தை என்ன செய்வது என்பது. இது விஷயத்தில் தலைவர் பேச்சு மாத்திரம் வெகு வீர சூரத்தனம் பொருந்தியது தான்.
அதாவது “சீர்திருத்தம் நமது சுயமரியாதைக்கு ஏற்றதல்ல, அது
மிகவும் பிற்போக்கானது, அது அடிமை சாசனமாகும்'” என்று சொல்லி இருக்கிறார். அதோடு அரசியலை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மான அளவில் காரியம் செய்திருக்கிறார். ஆனால் காரிய அளவில் அது என்ன செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டியது முக்கிய கடமையாகும்
காரியத்தில் இது என்ன கதி அடையும் என்பது சட்டசபையைப்
பற்றியும், மந்திரி சபையைப்பற்றியும் செய்யும் தீர்மானத்தில் தான் அடங்கி
இருக்கிறது சட்டசபை பிரவேசத்தை காங்கிரஸ் ஆதரித்துவிட்டது. ஜவஹர்லால் அவர்களும் அதை ஒப்புக்கொண்டுவிட்டார். சட்ட சபைகளை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸில் தீர்மானமும் ஆகிவிட்டது
ரயில் வண்டியில் உட்கார்ந்து கொண்டு ரயில்வண்டியை பஹிஷ்கரிப்பது போல் சீர்திருத்த சட்டப்படி ஏற்பட்ட சட்டசபையில் உட்கார்ந்துகொண்டு சட்டத்தில் கண்டபடி நடப்பதாகவும், சட்டத்துக்கு பக்தி காட்டுவதாகவும் பிரமாணம் செய்துவிட்டு சீர்திருத்தத்தை உடைக்கிறது என்றால் இது “பெளர்ணமி அன்று அமாவாசை வரும்” என்பது போல் இருக்கிறதே ஒழிய வேறில்லை. ஆகவே சீர்திருத்தத்தை உடைப்பது என்பது வெளி வேஷமாகவும், பாமர மக்களை ஏய்ப்பதற்காகவும் செய்யப்பட்டதீர்மானமே ஒழிய, காரியத்தில் அதைஏற்று நடத்துவதே இரகசிய எண்ணமாய் இருக்கிறது. காரணம்காங்கிரசின் பேச்சைக் கேட்க பொதுஜனங்கள் இஷ்டப்படவில்லை என்பதுதான்.
ஏனெனில் காங்கிரசானது இன்று நாட்டில் ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பற்றியும், காங்கிரசுக்கு நாட்டில் செல்வாக்கு இல்லை என்பதுபற்றியும், நாட்டு மக்களிடம் செல்வாக்கு பெற காங்கிரஸ்ஒரு வேலையும் செய்யவில்லை என்பது பற்றியும் தலைவர் ஜவஹர்லால் அவர்கள் தனது பிரசங்கத்தின் முன் பகுதியில் வண்டி வண்டியாய் பேசி இருக்கிறார்.
அதாவது இன்று காங்கிரஸ் பலவீனமாய் இருப்பதற்கும் அது தோல்வி உற்று வருவதற்கும் காரணம் சொல்லிவரும் போது,
1. காங்கிரசை மத்திய வகுப்பார் (அதாவது பார்ப்பனர் ப-ர்.] தலைமை வைத்து நடத்துவது இருதலைக் கொள்ளியாகிவிடுகிறது
2. மத்திய வகுப்பார் சீர்குலைந்ததால் பொதுஜனங்களிடம் இருந்து காங்கிரஸ் பிரிந்துகொள்ள வேண்டியதாயிற்று
283 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
3. பொது ஜனங்கள் தேவைகள் நமது லக்ஷியமாய் இல்லாமல் மத்திய வகுப்பார் காரியமாகவே காங்கிரஸ் நிர்வாகம் நடந்து வந்தது
4. மத்திய வகுப்பார் தொல்லையாலேயே வகுப்புத் தொல்லைகள் ஏற்பட்டது
5. பொது மக்கள் உணர்ச்சியை மதிக்கும்படி நாம் காங்கிரசை திருத்திக் கொள்ளவில்லை.
6. பொதுமக்கள் தேவைகள் காங்கிரசில் உருவான காலத்தில் காங்கிரசிலுள்ள மத்திய வகுப்பாருக்கு அது பிடிக்காமல் போய்விட்டது.
7. பொது மக்களுக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லாத மாதிரியில் காங்கிரஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது
8. காங்கிரசுக்கு பின்னால் இருந்து நடத்துகிறவர்கள் மத்திய தர வகுப்பார்கள்.
9. காங்கிரஸ் பொது ஜனங்களோடு கூடிப் பழகாமல் இருக்கிறது ஏனென்றால் பொது ஜனங்கள் நிலையும் மத்திய வகுப்பார் நிலையும் ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாததாய் இருக்கிறது
10. காங்கிரசின் பயனாய் ஏற்பட்ட காரியங்களும் இந்தமத்திய வகுப்பாரால் அடியோடு மக்கிப்போய் விட்டது. காங்கிரஸ் வேர் ஆட்டம் கொடுத்து விட்டது.
11. காங்கிரஸ் வெறும் கமிட்டிகளை அமைத்து ஆகாயகோட்டை கட்டிவந்தது.
12. காங்கிரசில் பழம் பெருக்காளிகள் வந்து புகுந்து தங்கள் சுயநலங்களை கவனித்துக் கொண்டார்கள்.
13. கட்சி பிரதிகட்சிகளும் மிக்க இழிவான காரியங்களும் நடந்து வந்தன.
14. சமய சஞ்சீவிகளுக்கு காங்கிரஸ் ஆயுதமாக ஆகிவிட்டது
15. மானானமில்லாதவர்களுக்குகாங்கிரசில் ஆதிக்கம் பெற இடமேற்பட்டது.
தேசத்தின் தேவைக்கேற்ப காங்கிரஸ் அமைப்பு இல்லாததால் காங்கிரசுக்கும், பொது ஜனங்களுக்கும் சம்மந்தமில்லாமல் போனதோடு காங்கிரஸ் பொதுஜனங்களுடையதாக இல்லாமல் போய்விட்டது என்றும் கடசியாக நன்றாய் விளங்கும்படி பேசியிருக்கிறார். (இந்த மத்திய வகுப்பார் என்பது பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு யார் என்பது இங்கு
யோசிக்கத் தகுந்தது) இந்த ரீமார்க்குகள் ராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி ஆகியவைகளை குறிவைத்தும் காந்தியாரின் முட்டாள்தனத்தை குறித்தும் வெளிப்படுத்தப் பட்டதாகும். இவற்றை நாம் மனமாற ஆதரிக்கிறோம் ஆகவே இந்தக் காரணங்களால் சட்டசபையை பஹிஷ்கரிக்கவோ பதவிகளை பஹிஷ்கரிக்கவோ சில ஆசாமிகளுக்கு மாத்திரம் முடியலாமே
குடி அரசு- 1936 (1) 284
ஒழிய பொதுஜனங்களால் முடியாது என்று நன்றாய் விளங்கி விட்டதால் பஹிஷ்காரப் பேச்சை விட்டு விட்டு மக்களை வேறு வழியில் ஏமாற்ற வேண்டியதாகிவிட்டது
காங்கிரசைப்பற்றி நம்மாலும், சுயமரியாதைக்காரர்களாலும் இந்த 10 வருஷ காலமாய் என்ன சொல்லி வரப்பட்டதோ அதேதான் இன்று தோழர் ஜவஹர்லால் தனது தலைமை உரையில் பச்சையாக பேசி இருக்கிறார். (இவைகள் காங்கிரஸ் தேசியப் பத்திரிகைகளில் அதுவும் பார்ப்பனப் பத்திரிகையில் சிறப்பாக தினமணியில் இருந்து குறிப்பிடப்பட்டவைகளாகும்.)
என்றாலும் காங்கிரஸ் விஷயத்தில் மக்களை மதவெறி போல் தேசீய வெறியும் மானங்கெடுவது தெரியாமல் ஆடச் செய்கிறது
மற்றும் காங்கிரஸ் சமுதாயத் துறையில் யாதொரு வேலையும் செய்யவில்லை என்றும் சமுதாயத் துறையில் தோழர் ஜவஹர்லால் தன். அபிப்பிராயம் வேறு காங்கிரஸ் அபிப்பிராயம் வேறு என்றும் குட்டாகப் பேசி விட்டுவிட்டார்.
இவ்வளவும் செய்து விட்டு பதவி ஏற்பு விஷயத்தில் ஏதாவதொரு முடிவுக்கு வரும்படி காங்கிரசை நிர்ப்பந்தப்படுத்த இஷ்டமில்லாதவராகவே தலைமைப் பதவியை நடத்தியிருக்கிறார்.
இதற்குக் காரணம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் சூழ்ச்சியும் காந்தியார் நிர்ப்பந்தமூமே யாகும்,
பதவி ஏற்பை தள்ளிவைத்து பின்னால் முடிவு செய்யலாம் என்றால் என்னஅருத்தம் என்பது நமக்குவிளங்கவில்லை. மக்களை ஏமாற்றுவதல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்
சட்டசபைக்குச்செல்லுவதற்கும் பதவி ஏற்பதற்கும் தோழர் ஜவஹர்லால் வித்தியாசம் கற்பிப்பது அவருடைய ராஜீய ஞானத்தையும், அபேதவாத ஞானத்தையும் இவ்வளவுதான் என்பதாக அளவு காட்டுகிறது என்றுதான். நினைக்கவேண்டியிருக்கிறதே தவிர வேறில்லை.
பகிஷ்காரக்காரர்கள் சட்டசபையில் போய் என்ன செய்யமுடியும் என்பதை ஜவஹர்லால் அவர்களின் தகப்பனார் தோழர் மோதிலால் நேரு அனுபவ பூர்வமாய் விளக்கிக் காட்டியிருக்கிறார். அவரது மகன் இப்போது அதற்குமேல் வியாக்கியானம் செய்யப் புறப்பட்டது தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள பேதமேயாகும். அதாவது தகப்பன் சாமி என்கின்ற தத்துவமேயாகும்.
வீணாக ஒரு காரியமுமில்லாமல் இந்த காங்கிரசானது திருவிழாப்போல். ஒரு கூட்டம் கூட்டி ஆரம்பம் முதல் கடைசி வரை தந்திரமும் சூழ்ச்சியுமே முக்கிய லக்ஷியமாகக் கொண்டு காரியங்கள் நடத்தப்பட்டிருக்கிறதல்லாமல் ஒருவரிடத்திலாவது உண்மையோ, நல்ல எண்ணமோ, உண்மையான பொதுநல நோக்கமோ இருந்ததாகச் சொல்ல முடியவில்லை.
2885 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கடசியில் விளம்பர விஷயம். அதாவது அபேதவாதமும் பேசப் பட்டுவிட்டது. ஆனால் தீர்மானங்களில் அந்த வாசனைக்கே இடமில்லாமல் போய்விட்டது
இதனால் பாமர மக்கள் "காங்கிரசுக்கு ஜவஹர்லால் வந்து விட்டார். அபேதவாதம் பேசப்பட்டு விட்டது” என்கின்ற பைத்தியக்காரத்தனமான பிதற்றலோடு ஏமாந்து விடுவார்கள் என்பது நிச்சயம்.
அபேதவாதத்தைப்பற்றி பேசும்போதும்,
“இந்திய சுதந்திரத்துக்கு ஆக நான் பாடுபடுவதன் காரணம் அந்நியர் நம்மை அடக்கி ஆளுவதை நான் சகிக்க முடியாமலிருப்பதுதான்”
என்றும் சொல்லிவிட்டு “தேசத்தில் சமுதாய மாறுதலும் பொருளாதார மாற்றமும் ஏற்பட தேச சுதந்திரம் வேண்டும் என்றும், காங்கிரஸ் ஒரு அபேதவாத ஸ்தாபனம் ஆகவேண்டும்” என்றும் பேசி இருக்கிறார்.
இம் மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது என்பது ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு விளங்காமல் போகாது
மற்றும் பேசும்போது “இத்தேசத்தில் அபேதவாத எண்ணம் வளர வேண்டுமென்று நான் கூறுகிறேன். ஆயினும் காங்கிரசில் அதை பலவந்தமாகத் திணிக்க நான் ஆசைப்படவில்லை" என்கிறார்.
சுதந்திரப் போருக்கு இடையூறாக (அபேதவாதத்தை) திணிக்க விரும்பவில்லை” என்கிறார். ஆகவே அபேதவாதம் வேறு, சுதந்திரப் போர் வேறு என்பது அவர் கருத்தென்று விளங்குகின்றது.
கடசியாக அபேதவாதத்துக்காக இப்போது ஒன்றும் செய்ய முடியா தென்றும், அந்த எண்ணத்தை மக்களுக்குள் புகட்டி வைத்தால் உலகப் புரட்சியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒப்புக் கொள்ளுகிறார்.
ஆகவே இந்தக் காங்கிரசினால் ஏதோ பெரியதொரு காரியம் ஏற்படப்போகிறது, காங்கிரசுக்கு புதிய ஜீவன் ஏற்படப் போகின்றது என்று நினைத்தவர்கள் இதற்கு மேல் ஏமாற்றமடைய முடியாது என்பதற்கு இணங்க பொஸ்ஸ்ஸ்சஸென்று போய்விட்டது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
இனி தோழர் ஜவஹர்லால் அவர்கள் தனது வேலை நடப்பதற்கு காரியக் கமிட்டிக்கு அங்கத்தினர்களை நியமித்திருக்கும் பான்மையோ
“பயித்தியம் தெளிந்துவிட்டது உலக்கை எடுத்துக் கொடு கோவணம்
கட்டிக் கொள்ளுகிறேன்'' என்ற மாதிரி பழைய வருணாச்சிரம உருவாரங் களையே நியமித்துக் கொண்டார். இது தோழர் எஸ். சீனிவாசய்யங்கார் சொல்லுகிற மாதிரி காந்தி கூட்டத்தாரே ஆதிக்கம் வகிக்கும்படி ஆகிவிட்டது
குடி அரசு - 1936 (1) 286
இது “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாப்பாள்” என்பது போல் காங்கிரசானது முன்னிருக்கும் மோசமான நிலைமையை விட மோசமாக ஆளாகிவிட்டது என்று சொல்லுவதற்கு ஏற்றதானதோடு மற்றும் பாமர மக்களை ஏய்க்க அதிக சவுகரியம் பெற்றுவிட்டது என்பதல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லுவோம்
இந்த நாடகத்தால் நமது வாலிபர்கள் பலர் “நான் கெட்டுப்போகிறேன் பந்தயம் போடுகிறாயா?'” என்கின்ற மாதிரியாக கெட்டு பயனற்றுப் போவதுடன் தங்கள் சமூகத்துக்கும் பொதுவாக தாழ்த்தப்பட்ட பிற்பட்ட வகுப்பு மக்களுக்கும் துரோகிகளாகப் போகிறார்கள் என்பதையும் இப்போதே ஜோசியம் கூறுகிறோம்.
மற்ற விஷயம் பின்னால் விளக்குவோம்
குடி அரசு - தலையங்கம் - 19.04.1936
287 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மே தினக் கொண்டாட்டம்
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள் ஆண் பெண் அடங்கலும் மே மீ 1-ந் தேதியை தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
ரஷியாவில் தொழிலாளர் தங்களது ஓரளவு வெற்றியை நினைத்து வெற்றி தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
மற்ற தேசங்களில் தொழிலாளர் குறைபாடுகளை வெளிப்படுத்தி உலக அரசியலிலும், சமூக இயலிலும் தொழிலாளர்கள் சமத்துவமும் ஆதிக்கமும்பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு மேதினம் கொண்டாடுகிறார்கள்.
இந்தியர்களாகிய நாமும் சமூகத்துறையில் ஜாதி மத இழிவிலிருந்தும், பொருளாதாரக் கொடுமையில் இருந்தும் விடுதலை பெறவும், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டம் கூட்டி நமது இழிவையும், கொடுமையையும் எடுத்துச் சொல்லி சகல மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கவேண்டுமென்று விளக்கிக் கொண்டாட வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறேன்.
- ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - அறிக்கை - 19.04.1936
குடி அரசு - 1936 (1) 288
மனிதன்
வினா மனிதன் என்றால் என்ன? விடை பகுத்தறிவுள்ள ஒரு பிராணி
வினா?- மனிதன் தோன்றி எவ்வளவு காலமாயிற்று?
விடை- லட்சக்கணக்கான வருஷங்களாயிற்று
வினா?₹- அவனுடைய பூர்வீகர் யார்? விடை முலையுண்ணும் பிராணிகள்.
வினா:- அது உனக்கு எப்படித் தெரியும்?
விடை மக்கள் உறுப்புகளின் அமைப்பு, கலப்பு, வேலை முறை முதலியவைகளைக் கவனித்தால் மனிதனும் ஒரு பிராணிக்கு ஒப்பாகவே இருக்கிறான்.
வினா? மனிதனுக்கும் பிராணிகளுக்கும் பொதுவாக இருக்கும் சில அம்சங்களை விளக்கிச் சொல்.
விடை மற்றப் பிராணிகளுக்கு இல்லாத தசை நாரோ, எலும்போ, உறுப்புகளோ மனிதனுக்கு இல்லவே இல்லை. வினா இவ்வளவுதானா?
விடை?- மனித உடலும் மிருக உடலும் ஒரே மாதிரிப் பொருள். களாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு உடல்களிலும் ஒரே மாதிரியான அங்க அமைப்பே காணப்படுகின்றன. இரண்டு உடல்களும் ஒரே மாதிரியான ஜனன மரண விதிகளுக்கே கட்டுப்பட்டிருக்கின்றன.
வினா இதர பிராணிகளுக்கும் மனிதனுக்கும் ஏதாவது வித்தியாச முண்டா?
விடை: அறிவிலும் ஒழுக்கத்திலும் மனிதன் மற்றப் பிராணிகளுக்கு மேலானவனாயிருக்கிறான். வினா வேறு வித்தியாசங்கள் உண்டா? விடைட பசிப்பிணியைத் தணிக்க மட்டுமே பிராணிகள் முயற்சி செய்கின்றன. மனிதன் தன் லட்சியங்களை அடைய முயல்கிறான். வினா வேறு ஏதாவதுண்டா?
2 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை தன் சந்ததிகளுக்கும் எதிர்காலத்தில் பிறக்கப் போகிறவர்: களுக்கும் க்ஷமமுண்டாகும்படி மனிதன் வாழ்ந்து உழைக்கிறான்; மிருகங்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய உணர்ச்சியே இல்லை.
வினா?- மனிதனுக்கும் மிருகங்களுக்கு முள்ள சம்பந்தம் என்ன?
விடை?- அவன் மிருக வர்க்கத்திலிருந்து தோன்றினான். அல்லது மிருக வர்க்கத்திலிருந்து அபிவிருத்தியடைந்தான்.
வினா?- மனிதன் மிருக வருக்கத்திலிருந்து தோன்றி அபிவிருத்தி யடைந்தான் என்பதற்கு முக்கியமான ஆதாரமென்ன?
விடை- மனிதக் கரு உயிர்பெறும் முன்பு பல நிலைமை அடை கின்றன. அப்பொழுது அதற்கு மீன்களுக்கு இருப்பது போன்ற மூச்சுக்
கருவிகளும் வாலும், பெரிய கால் விரல்களும், உரோமம் அடர்ந்த உடலும், குரங்குக்கு உள்ளது போன்ற மூளையும் இருக்கின்றன.
வினா?- அதன் பொருள் என்ன?
விடை?- அந்த நிலைமையை எல்லாம் கடந்தே மனிதன் தற்கால உருவத்தை அடைந்தான் என்பதே பொருள்.
வினா?- தற்காலம் காணப்படும் மிருகங்களைப்போல் மனிதனும் ஒரு காலத்திலே மிருகமாயிருந்தான் என்று நீ கூறுகிறாயா?
விடை:- நெடுங்காலம் அவன் குரங்கைப் போலவும் கொரில்லாக் குரங்கைப் போலவும்,பெரியவாலில்லாக்குரங்கைப் போலவும் இருந்துவந்தான்.
வினா₹- எந்தக் காலத்தில் அவன் அவ்வாறு இருந்தான்? விடை திட்டமாகக் கூற முடியாது. ஒருகால் லக்ஷோபிலக்ஷம் வருஷங்களுக்கு முன் இருக்கலாம் வினா அப்படியானால் மனிதன் பிரத்தியேகமாக சிருஷ்டிக்கப் படவில்லையா?
விடை:- இல்லை. அவன் கீழ்த்தரப் பிராணியாக இருந்து நாளா வட்டத்தில் முன்னேறினான்.
வினா மிருகம் மனிதனாக மாறுவதை யாராவது எப்பொழுதாவது கண்ணாரக் கண்டதுண்டா? விடை இல்லை. இயற்கை இரகசியமாக வேலை செய்கிறது குறிப்பிட்டுணர முடியாத பல பருவங்களைக் கடந்து காலக்கிரமத்தில் சிறுகச் சிறுக மனிதன் கீழ்த்தரப் பிராணியிலிருந்து முன்னேற்றமடைந்திருக்கிறான்.
வினா அவனது உடல் மட்டுந்தானா இவ்வாறு முன்னேற்றமடைந்து வளர்ச்சியடைந்திருக்கிறது?
குடி அரசு - 1936 (1) 290
விடை?- இல்லை. அவனது உடலைப்போலவே அவனது மனம் அல்லது பகுத்தறிவும் காலக்கிரமத்தில் சிறுகச் சிறுக முன்னேற்றமடைந்து
வந்திருக்கிறது வினா£ எல்லாப் பிராணிகளும் முன்னேற்றமடைந்து ஏன் மனிதராக வில்லை? விடை எந்தக் காரணத்தினால் காட்டாள ஜாதியாரெல்லாம் நாகரிக மக்களாகவில்லையோ அந்தக் காரணத்தினாலேயே மிருகங்கள் எல்லாம் மக்களாக முன்னேற்றமடையவில்லை.
வினா:- அந்தக் காரணம் எது? விடை சாதகமான நிலை
வினா₹- அதை விளக்கிக் கூறு
விடை2- தேவையே முன்னேற்றத்துக்கு அடிப்படை. சுகமாக வாழ முடியும்வரை மிருகங்களும் காட்டாளர்களும் அந்த நிலைமையிலேயே இருக்கின்றன. ஆபத்துகளினாலோ மரணத்தினாலோ பயமடையும் போதுதான் அவைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளப் புது மார்க்கங்களைக் கண்டுபிடிக்க முயல்கின்றன.
வினா? இதைக் கொஞ்சங் கூட விளக்கிக்கூறு விடை சந்தர்ப்பங்கள் அல்லது நிலைமையத் தழுவியே மனிதன். அல்லது மிருகத்தின் வாழ்க்கை உருப்பெறுகிறது. சந்தர்ப்பங்கள் அல்லது நிலைமையில் மாற்றமேற்படும்போது மனிதன் அல்லது மிருகத்தின் நிலைமையிலும் மாற்றமேற்படுகிறது. வினா மனித முன்னேற்றத்துக்கு முக்கியமாக உதவி புரிந்தது எது?
விடை:- ஜீவிதப் போராட்டமே மற்றவைகளை விட அதிகமாக உதவி புரிந்தது வினா மனித உற்பத்தியைப் பற்றி வேறு ஏதாவது அபிப்பிராய முண்டா?
விடை உண்டு. ஆறாயிரம் வருஷங்களுக்கு முன் கடவுள் மனிதனை நினைத்த மாத்திரத்தில் உத்தமனாக சிருஷ்டித்ததாக அநந்தம் பேர் நம்பி வருகிறார்கள்.
வினா£- உத்தமனாக சிருஷ்டித்தான் என்பதின் பொருள் என்ன? விடை கடவுளைப் போலவே மனிதன் தோற்றுவிக்கப்பட்டானாம்.
வினா£- மனிதன் ஒரு காலத்து கடவுளைப்போல உத்தமனா யிருந்தானென்று உரிமை பாராட்டப்படுகிறதா?
விடை- உரிமை பாராட்டப்படுவதாகத் தோன்றவில்லை.
29] ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வினா அப்படியானால் கடவுளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மனிதன் உத்தமன் அல்லவா?
விடை- இல்லை.
வினா£- அப்படியானால் மனிதன் உத்தமனாக படைக்கப்பட்டான். என்று அவர்கள் ஏன் கூறுகிறார்கள்? விடை ஒரு மனிதனுக்கு எவ்வளவு உத்தமனாக இருக்க முடியுமோ அவ்வளவு உத்தமனாக மனிதன் இருந்தான் என்றே அவர்கள் நம்புகிறார்கள் என நினைக்கிறேன்.
வினா இப்பொழுது அவன் ஏன் உத்தமனாக இருக்கவில்லை. விடை கடவுள் கட்டளையை அவன் மீறியதனால் உத்தமத் தன்மையை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
வினா?- உத்தமனான ஒருவன் எவ்வாறு குற்றம் செய்வான்?
விடை- தன்னுடைய பெருமைக்காக அவன் குற்றம் செய்யும்படி
சிருஷ்டி கர்த்தா அனுமதித்தாராம் வினா அப்படியானால் அவன் கடவுள் கட்டளையை மீறாமல் கட்டளைப்படியே தான் நடந்தானா? விடைஉ கடவுள் நோக்கத்தைப் பூர்த்தி செய்யுமாறு கடவுள் கட்டளைப்படியே அவன் நடந்தான். வினா மனிதன் வீழ்ச்சியடைந்ததினால் ஏற்பட்ட பலன்கள் எவை? விடை எல்லா மக்களுக்கும் பாபம், துன்பம், மரணம் இவைகளே ஏற்பட்ட பலன்கள்.
வினா₹- மனிதன் வீழ்ச்சியடைவதற்கு முன் உலகத்தில் தீமையே இருந்ததில்லையா? விடை விஞ்ஞான சாஸ்திரப்படியும் பைபிலின்படியும் உலகத்தில் தீமை இருக்கத்தான் செய்திருக்கிறது. ஏனெனில் ஆதாம் பாவம் செய்யும்படி சாத்தான் தூண்டியதாக பைபிளில் கூறப்பட்டிருக்கிறது
வினா?- சாத்தானைப் பற்றிய பொதுவான நம்பிக்கை என்ன? விடை சாத்தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் பெரிய விரோதி என்று பொதுவாக நம்பப்படுகிறது
வினா?- வேறு என்ன? விடை கடவுள் நன்மைக்கு அதிகாரியாக இருப்பதுபோல் சாத்தான் தீமைக்கு அதிகாரியாக இருக்கிறானாம்
வினா?- பேய் எப்பொழுது முதல் இருந்துகொண்டு வருகிறது?
குடி அரசு - 1936 (1) 29:
ப்
விடைஉ கடவுள் தோன்றியபோதே பேயும் தோன்றியிருப்பதாக சாமானிய ஜனங்கள் நம்புகிறார்கள்
வினா மக்கள் பேயை நம்பக் காரணம் என்ன? விடை மனித சமூகம் பாலிய தசையிலிருந்தபோது வெளிச்சத்துக்கும், இருளுக்கும், ஜீவனுக்கும், மரணத்துக்கும், அன்புக்கும், வெறுப்புக்கும் காரணம் கூறும் பொருட்டு நன்மை செய்ய ஒன்றும், தீமை செய்ய ஒன்றும் இருப்பதாகவும், அவை இரண்டுமே உலகத்தை அடக்கியாண்டு வருவதாகவும் நம்பிக்கொண்டது
வினா பேய் கடவுளைப்போல் அவ்வளவு புத்திசாலியா?
விடை2- இல்லை. பெரிய தந்திரசாலியாம்
வினா:- பேயின் ஜீவித நோக்கமென்ன?
விடை?- மக்களை கெட்ட வழியில் செலுத்திக் கெடுத்து கடவுள்: வேலையை அழிப்பதே. வினா பேய் இருந்துகொண்டு இருப்பதற்குப் பொறுப்பாளி யார்? விடைஉ பொதுவான நம்பிக்கைஎன்னவெனில் அதி மனிதனைப்போல் பேயும் உத்தமனாகவே இருந்ததாம். அது தானும் கடவுளாக வேண்டு மென்று எண்ணியதினால் அது சுவர்க்கத்திலிருந்து ஓட்டப்பட்டதாம்.
வினா கடவுள் அந்தப் பேயை ஏன் அழிக்கவில்லை? விடை மனிதன் வீழ்ச்சியடைய எக்காரணத்தினால் கடவுள் அனுமதியளித்தானோ அக்காரணத்தினாலேயே கடவுள் பேயை ஒழிக்காமல் வைத்துக்கொண்டு இருக்கிறான்.
வினா?- அதன் பொருள் விளங்கச் சொல்லு?
விடை- தன் பெருமையை நிலைநாட்டும் பொருட்டே கடவுள் பேயை உயிரோடு வைத்துக்கொண்டு இருக்கிறான்.
வினா? எப்பொழுதும் ஒரு நரகமும் பேயும் இருந்து கொண்டு தானிருக்குமா?
விடை:- இருந்துகொண்டு இருக்குமென்று அநேகர் சொல்லுகிறார்கள்.
வினா£- பேய்களைப் பற்றிய இம்மாதிரிக் கதைகளை மக்கள் ஏன் நம்புகிறார்கள் விடை அவர்கள் பெற்றோர் நம்பியதினால் அவர்களும் நம்புகிறார்கள்
வினா:- அந்த நம்பிக்கையைப்பற்றி நீ என்ன எண்ணுகிறாய்?
293 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடைஉ விஷயங்களை ஆராய்ந்து பாராதவர்கள் கூறும் அபிப்பிராயங் களுக்கும், கொண்டிருக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பே இல்லை.
வினா£- பேய் நம்பிக்கையினால் ஏற்பட்ட பலன் என்ன? விடை பேய் நம்பிக்கையினால் மக்கள் மூடபக்தியுடையவர் களாயும், சஞ்சலமுடையவர்களாயும், பயங்காளிகளாயும், குரூரர்களாயும் ஆகிவிடுகிறார்கள்.
வினா? பேய் நம்பிக்கை எப்படி ஒழியும்?
விடை:- அறிவியக்கத்தினால் ஒழியும்
வினா?- உலகத்திலேயே மிகவும் பயங்கரமானது எது? விடை பயந்தான்.
வினா?- ஏன்?
விடை:- பயம், ஹிருதயத்தையும் உடலையும் திமிராக்கி, தற்காப்புக் குள்ள சக்தியை அழித்துவிடுகிறது. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள ஒருவனுக்கு சக்தியில்லாதாகும்போது அரசியல், சமயப் பூச்சாண்டிகளுக்கு அடிமைப்பட்டு விடுகிறான்.
குடி அரசு - வினா விடை - 26.04.1936
குடி அரசு- 1936 (1) 294
கொச்சி சமஸ்தானத்தில்
பிரசங்கம்
வாலிபர்களே உலக முற்போக்குக்கும் உலக பிற்போக்குக்கும் காரணஸ்தர்கன்
அன்புள்ள தோழர்களே! கொச்சி ராஜ்ஜிய தீயர் வாலிப சங்கச்
சார்பாக உங்களைப் பல ஆயிரக்கணக்கில் சந்திக்க நேர்ந்ததற்கு மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பும், உணர்ச்சியும் மிகுந்த ஆடம்பரமான வரவேற்புகளையும், புகழ் வார்த்தைகளையும் கண்டு நான் வெட்கமடைய வேண்டியவனாய் இருக்கிறேன். அவைகள் உண்மையிலேயே
எனது தகுதிக்கு மேற்பட்டவையாகும். என்றாலும் என்னிடம் உங்களுக்கு
உள்ள விஸ்வாசத்துக்கு நான் பெருமை அடைவதோடு எனது மனமார்ந்த
நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைக்கம் சத்தியாக்கிரகம்
வைக்கம் சத்தியாக்கிரகத்தைப்பற்றி பிரஸ்தாபித்தீர்கள். இளம் ஆண்களும் பெண்களும் ஏராளமாய் நிறைந்த இந்த கூட்டத்தையும் குதூகலத்தையும் பார்க்கும் போது வைக்கம் சத்தியாக்கிரகம் தானாகவே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. வைக்கம் சத்தியாக்கிரகமே முதல் முதலாக உங்களையும் என்னையும் சந்திக்க வைத்தது என்பது மாத்திரமல்லாமல் அந்த சத்தியாக்கிரகமானது நம்மை ஒன்றாகக் கட்டி பிணைத்து விட்டது. அந்த வைக்கம் சத்தியாக்கிரகம் செய்த வேலைதான் இன்று இந்தியா பூராவுக்கும் சமுதாயத் துறையில் ஒரு புதிய உணர்ச்சியை கிளப்பிவிட்டு 100க்கணக்கான. வருஷங்களில் கூட நடைபெற முடியாததும் எண்ணமுடியாததுமான காரியங்களையும், எண்ணங்களையும் உண்டாக்கி இருக்கிறது.
இன்றைய நம்முடைய செய்கைளுக்கும் எண்ணங்களுக்கும் கூட வைக்கம் சத்தியாக்கிரகம் ஒருபெரும் காரணமாகும். அது தீய சமுதாயத்தை மாத்திரமல்லாமல் மற்றும்வேறு எத்தனையோசமுதாயத்துக்கு வெளிச்சத்தையும் சுயமரியாதையையும் கொடுத்துவிட்டது
295 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வாலிபர்கள்
நிற்க, இந்த சந்தர்ப்பத்தில் வாலிபர்களைப்பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டு மேலால் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன். வாலிபர் களிடம் எனக்கு அதிக மதிப்பு உண்டு. வாலிபர்களிடம் எனக்கு உள்ள நம்பிக்கையே எனது தொண்டுக்கு ஆதாரமாய் இருந்து வருகிறது வாலிபர்களிடம் நான் இடையறாமல் நெருங்கிப் பழகிவரும் பழக்கமே என்னை நான் இன்னமும் வாலிபனாக நினைத்துக்கொண்டு இருக்கச் செய்து வருகிறது. வாலிபர் நேசமும் அவர்களது கூட்டுறவும் எனக்கு இளமையை
அளித்து வருகிறது என்றுகூட சொல்லுவேன். வாலிபர்களாலேயே உலகில் அபார காரியங்கள் ஆகிவருகின்றன. வாலிபர்கள் அனேக நன்மைக்கும் முற்போக்குக்கும் காரணமாய் இருக்கிறவர்கள்.
எனவே, வாலிபர்களுக்கு இவ்வளவு பெருமை இருந்தாலும் வாலிபர்களால் சில சமயங்களில் ஆபத்து நேர்ந்து வருவதுமுண்டு ஏனென்றால் அவர்கள் சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளத்தக்க வஸ்துக்கள் போன்றவர்கள். வாலிபர்கள் நல்ல காரியத்தில் பிரவேசித்தால் எப்படி அதிக நன்மை உண்டாவது நிச்சபமோ, அதுபோல் வாலிபர்கள் தீய காரியங்களில் பிரவேசித்தால் தீய காரியங்களும் சுலபத்தில் ஏற்பட்டு விடக்கூடும். அவர்கள் ஜாக்கிரதையாக கையாளப்பட வேண்டியவர் களாவார்கள் என்பதையும் நான் மூடி வைக்க இஷ்டப்படவில்லை வாலிபர்கள் தாங்கள் பிரவேசிக்கும் காரியங்களை நன்றாய் ஆலோசித்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு பிறகு பிரவேசிக்க வேண்டும்
சிறிது காலமாக வாலிபர்கள் சுயநலக்காரர்களுக்கும், பிற்போக்காளர் களுக்கும் சுலபமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டு வருகிறதை நான் பார்த்தே இப்படிப் பேசுகிறேன். வாலிப ஆண்கள் கதியே இப்படியானால் வாலிப பெண்களைப் பற்றி பேச வேண்டுமா?
கிரத்தியக்ஷ நிலை தோழர்களே! மனித சமூகத்தின் பிரத்தியக்ஷ நிலைமையை நாம் நன்றாய்ப் பார்க்கிறோம். மனித சமூகம் செல்வமாய் இருந்தாலும், தரித்திரமாய் இருந்தாலும், அறிவுடமையாய் இருந்தாலும், மூடத்தன்மையாய் இருந்தாலும், மேன்மைாய் இருந்தாலும், கீழ்மையாய் இருந்தாலும், பொதுவில் துக்கமும், கவலையும், அதிருப்தியும், அலைச்சலும் கொண்ட தாகவேதான் இருந்து வருகிறது. இது இந்த நாட்டில் மாத்திரமல்ல. உலக முழுவதும் எந்த தேசத்திலும் மனிதன் என்றாலே துக்கத்துக்கும், கவலைக்கும், அதிருப்திக்கும் ஆளானவன் என்பதாகத்தான் இருந்து வருகிறது மனித சமூக சமுதாயத்துக்கு என்று பாடுபடுகின்றவர்கள் எவரும் இதற்கு இதுவரையில், எவ்வித முயற்சியும் செய்ததில்லை. எத்தனையோ
குடி அரசு - 1936 (1) 296
பேர்கள் மனிதத் தன்மைக்கு மீறியவர்கள் என்பதாகப் பேர் பெற்றும், உலக மக்களால் வணங்கும்படியானவர்களாகியும் இதைப்பற்றி யாதொரு காரியமும் செய்தவர்களாகக் காணப்படவில்லை. இதைப்பற்றி சிந்தித்தவர் களாகக் கூடத் தெரியவில்லை. மற்றும் அதற்கு விரோதமாக மனித சமூகத்துக்கு துக்கமும், கவலையும், அதிருப்தியும், அலைச்சலும் இயற்கை யென்றும் மனிதன் தனது முயற்சியால் அவைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்புக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள். பெரும்பான்மையான மக்களால் கருதப்படும், மதிக்கப்படும், தெய்வம், தெய்வசக்தி, தெய்வசக்தி பொருந்தியவர்கள், தெய்வாம்சம் பெற்றவர்கள், தெய்வ அவதாரங்கள் என்பவைகளாகக் கருதப்பட்டவர்களாலும் கூட இவற்றிற்கு நாளது வரை எவ்வித பரிகாரமும் செய்யப்படவில்லை:
இந்தக் காரியங்களில் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே எவ்வித முன்னேற்றமும் ஏற்படவே இல்லை
பயனற்ற வேலை
பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவைகளில் போட்டி போடுவதையே மனித லக்ஷ்யமாய்க் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம் நொந்து துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
இதற்குக் காரணம் என்ன என்பதை சிந்தியுங்கள். மனிதன் உலகிலுள்ள பிராணிகளையெல்லாம் விட விசேஷ அறிவு பெற்றவன். அப்படிப்பட்ட விசேஷ அறிவைப்பெற்ற காரணமாக இக்கஷ்டங்களையும் குறைகளையும் அனுபவிப்பது நியாயமாகுமா?
நாட்டுக்குறை என்ன?
நம் நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் - இந்நாட்டுக்கு இயற்கை வளங்களில் என்ன குறைவு இருக்கிறது? நீர்வளம் நிலவளம் குறைவு என்றோ, கெடுதியானது என்றோ சொல்ல முடியுமா? மக்கள் அறிவுக்குத்தான். ஏதாவது குறை சொல்ல முடியுமா? அல்லது மனிதர்கள் மிருகப்பிராயத்தில் இருந்து இன்றுதான் மனிதப் பிராயத்துக்கு வந்தார்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒன்றும் இல்லையே. இப்படிப்பட்ட நிலையில் ஏன் பலகோடி மக்கள் தீண்டக்கூடாத - கிட்ட நெருங்கக்கூடாத “இழிகுல'” மக்களாகவும், பலகோடி மக்கள் ஜீவனத்துக்கும் மார்க்கமில்லாத - வேலை கிடைக்காத மக்களாகவும், பல கோடி மக்கள் இரவும் பகலும் உழைத்து உழைத்து வஞ்சகர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் அழுதுவிட்டு பிள்ளை குட்டிகளுடன்.
297 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அரைப்பட்டினி கிடக்கும் மக்களாகவும் இருக்கக் காரணமென்ன? யோசித்துப் பாருங்கள். இதற்கு எப்போதாவது எந்தப் பெரியோராவது மார்க்கமோ சமாதானமோ சொன்னதுண்டா? சமுதாய வேலையென்றோ, பொதுநலவேலையென்றோஅரசியல் வேலையென்றோசொல்லப்படுவதானால் அது இக்குறைகளையும், கொடுமைகளையும், பேதங்களையும் சரிப்படுத்துவ தல்லாமல் வேறு எதைச் சொல்லுவது என்று கேட்கின்றேன்.
தெய்வ சங்கற்பமா? இவ்வளவு கொடுமைக்கும் குறைகளுக்கும் தெய்வ சங்கற்பம் என்கின்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால் போதுமானதாகிவிடுமா?
அப்படித்தான் சொல்வதானாலும் தெய்வ சங்கற்பம் தான் ஏன்: இந்தப்படி இருக்கவேண்டும்? தெய்வ சங்கற்பம் என்று சொல்லுகின்றவர்கள் தாங்கள் சொல்லும் தெய்வத்தை முட்டாள் என்றோ, அயோக்கியன் என்றோ. பலவீன - சக்திஅற்றவன் என்றோ சொல்லுவதனால் இந்தக்கூற்றுக்கு ஆதாரம் இருக்கலாம். இன்று எவனும் தான் கற்பித்துக் கொண்டோ, அல்லது உணர்ந்து கொண்டோ இருக்கும் தெய்வத்தை மகா மேதாவி என்றும், மகா நீதீவான் என்றும், சர்வசக்தி உடையவன் என்றும் கருதிக் கொண்டு இக்கொடுமைகளையும் இழிவுகளையும் துன்பமயங்களையும் தெய்வ சங்கற்பம் என்று சொன்னால் அதை முட்டாள்தன மென்றோ, அயோக்கியத்தன. மென்றோ, சோம்பேறித்தன மென்றோ சொல்லாமல் வேறு என்ன சொல்லுவது என்று கேட்கின்றேன். தெய்வத்தின் காரியத்தால் மனித சமூகம் ஒட்டும் ஏன் துக்க மயத்தில், அதிருப்தி மயத்தில் இருக்க வேண்டும்? ஏன். ஒருவனை ஒருவன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தி துன்புறுத்த வேண்டும்? இவைகளைப்பற்றி மனிதன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? இதை யோசித்து, இதற்கொரு காரணம் கண்டுபிடித்து அதை மாற்ற முயற்சிக்க வில்லையானால் மற்றபடி மனிதனுக்கு பகுத்தறிவு இருந்து என்ன பயன்? பெரியார்கள், அவதாரங்கள், தேவதூதர்கள் தோன்றி என்ன பயன்? பொதுநல சேவையோ, சமுதாய சேவையோ, பெரும் பெரும் தியாகமோ செய்து என்ன பயன்? இவையெல்லாம் குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடுவதுபோல் மூடனும் மூடனும் சேர்ந்து முட்டாள் ஆட்டம் ஆடுவது போலவே தானே முடிகிறது
வாலிபர் கடமை இவைகளைப்பற்றி யோசிக்க வேண்டியதுதான் இன்றைய வாலிபர்களின் கடமையாகும். இதை யோசிப்பவர்கள்தான் மனித சமூக விடுதலைக்குப் பாடுபடுபவர்களாகும். ஆனால் இன்றைய விடுதலைப் பேச்சில் இந்த பிரஸ்தாபமே கிடையாது. இதற்கும் மனித சமூக முயற்சிக்கும் சம்மந்தமில்லையென்று முடிவுகட்டிவிட்ட பெரியார்கள்தான் விடுதலைப்
குடி அரசு - 1936 (1) 298
பேச்சைப் பேசி விளம்பரம் பெறுகிறார்கள். மூடமக்களும் இப்படிப் பட்டவர்களைத்தான் மதிக்கிறார்கள். அறிவில்லாமல் வெறும் ஆவேசம் மாத்திரம் உள்ள வாலிபர்களும் இப்படிப்பட்ட “பெரியார்"களைத் தான் பின்பற்றி தங்கள் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்வதோடு உண்மையான விடுதலைக்கும் எமனாய் இருக்கிறார்கள்.
தெய்வம்
சோம்பேறிகளும், வஞ்சகர்களும் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொது குறைகளுக்கு தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகிறார்கள். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒரு சாரார் முடிவு. ஆனால் கொஞ்சம் அளவுக்கு அப்படி இருக்கலாம். பெரும்பாகம் தெய்வ கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாய் இருக்கவேண்டுமென்பது தான் எனது அபிப்பிராயம். இன்று இந்த நாட்டில் சிறப்பாக உங்கள் சமுதாயத்தின் முக்கிய லக்ஷ்யம் உங்கள் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவுக் கொடுமை அதாவது தீண்டாமை, நெருங்காமை என்பவைகளை ஒழிக்க வேண்டும் என்பதே என்று நான் கருதுகிறேன். அதை நானும் ஆமோதிக்கிறேன். மற்ற எந்தப் பிரச்சினையும் விட இதுவேதான் உங்களுடைய முக்கியமானதும் ஒன்றேயானதுமான பிரச்சினையாக இப்போது இருக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை உலகில் வேறு எங்கும் இல்லாத கொடுமைகள் என்றுதான் சொல்லவேண்டும். எந்த பூமியை ஞான பூமி என்றும், புண்ணிய பூமி
என்றும், தர்ம பூமி என்றும் சொல்லுகிறோமோ அந்த பூமியாகிய நமது இந்திய நாட்டில்தான் இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியதனமானதுமான. கொடுமைகள் இருந்து வருகின்றன.
உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தான் ஏராளமான கடவுள்களும், கடவுள் அவதாரங்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும், ரிஷிகளும், முனிவர்களும், மகாத்மாக்களும் தோன்றி இருக்கிறார்கள். இன்றும் அம்மாதிரி பலர் இருந்து வருகிறார்கள். இவர்கள் இத்தனை பேர்களாலும் இந்த முட்டாள்தனமான அயோக்கியத்தனமான கொடுமைக்கு அதாவது தீண்டாமை என்னும் இழிவுக்கு ஒரு பரிகாரமும் செய்ய முடியவில்லை. தீண்டாமை ஆயிரக்கணக்கான வருஷங்களாய்
இருந்து வருகின்றது எந்த தர்ம ராஜ்யமும் இதைப்பற்றி கவனித்து யாதொரு காரியமும் செய்யவில்லை. வேறு யாராவது இவ்விஷயத்தில் பிரவேசித்து ஏதாவது செய்ய முயற்சித்தால், அங்கு ஜாதியும் மதமும், தெய்வமும் வந்து குறுக்கே போடப்படுகிறது. தீண்டாமையைப்பற்றி மக்களை ஏமாற்றி அதை நிலை நிறுத்தத்தான் ஜாதி மத தெய்வ சம்மந்தமான தடைகள் ஏற்படுத்தப்படுகிறதே ஒழிய இவற்றின் பக்தி காரணமாக அல்லவே அல்ல. இதனாலேதான் நாம்
299 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தீண்டாமை ஒழிவுக்கு ஜாதியும், மதமும், தெய்வமும் ஒழிந்தாக வேண்டும் என்கின்றோம். இம் மூன்றும் ஒழியாமல் தீண்டாமை ஒழியப்போவதில்லை. தெய்வம் உள்ளவரை மதம் இருந்துதான் தீரும். மதம் உள்ளவரை ஜாதி இருந்துதான் தீரும். ஜாதி உள்ளவரை தீண்டாமை இருந்துதான் தீரும்.
இன்று தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடுவதாய்ச் சொல்லும் எவரும் ஜாதியையோ மதத்தையோ ஒழிக்க சம்மதிப்பதில்லை
காந்தியார்
தீண்டாமை ஒழிந்தாலொழிய சுயராஜ்ஜியம் வராது என்று சொன்ன. காந்தியாரின் தன்மையை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள்.
காந்தியார் தீண்டாமை போகவேண்டும் என்று மாத்திரம் சொல்லுகிறாரே ஒழிய எங்காவது ஜாதி ஒழிய வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா? அது மாத்திரமல்லாமல் அவர் எவ்வளவு துணிவாக ஜாதியைக் காப்பற்றுவதே எனது சுயராஜ்ஜியத்தின் லக்ஷ்யம்” என்று சொல்லி வருகிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். அதாவது உ
வருணாச்சிரம தர்மமே தனது சுயராஜ்யம்” என்கிறார்.
இந்து மதத்தைக் காப்பாற்றவும், வருணாச்சிரம தர்மத்தை காப்பாற்றவும்தான் நான் உயிர் வாழ்கின்றேன்" என்கிறார்.
இப்படிப்பட்டவரால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று மூட மக்கள். நம்பிக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறார்கள்.
டாக்டர் அம்பேத்கார் இதன் தந்திரத்தை உணர்ந்து கொண்டார். அதனால்தான் காந்தியாரால் தீண்டாமை ஒழியாது என்று சொன்னதோ டல்லாமல் இந்து மதத்திலும் தனக்கு விஸ்வாசமில்லை என்று சொல்லி இந்து மதத்தை விட்டுவிடுவதாகவும் சொல்லிவிட்டார். ஆனால் அவர் அரசியல்வாதியாகவும், அரசியலில் சில பதவிகள் எதிர்பார்க்கிறவராகவும் இருப்பதால் ஜாதி மத நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்தது போல் கடவுள் நம்பிக்கை இழந்துவிட்டதாகச் சொல்ல அஞ்சுகிறார்.
தீய சமுதாயமாகிய நீங்கள் தைரியமாய் ஜாதியும் மதமும் தெய்வமும் ஒழிக்கப்படவேண்டும் என்றும், இவற்றில் உங்களுக்கு சுத்தப்படி நம்பிக்கை இல்லை என்றும் தைரியமாயும் தாராளமாயும் சொல்லிவிட்டீர்கள்.
இந்தியா பூராவுக்கும் ஒரு சமுதாயமாகச் சேர்ந்து மொத்தத்தில் ஜாதி மத தெய்வ நம்பிக்கை இல்லையென்று சொன்னவர்கள் நீங்களேயாகும் அந்தப் பெருமை உங்களுக்கே உண்டு.
தமிழ்நாட்டில் சுமார் லட்சக்கணக்கான பேர்களுக்கு ஜாதியில் நம்பிக்கை இல்லாமலும் பதினாயிரக்கணக்கான பேர்களுக்கு மதத்திலும், தெய்வத்திலும் நம்பிக்கை இல்லாமலும் இருந்தாலும் ஒரு சமுதாயம்
குடி அரசு- 1936 (1) 300
பூராவும் ஜாதி மத தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்லும் படியாக இல்லை. தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தாரில் அநேகருக்கு ஜாதி மத தெய்வ நம்பிக்கை கிடையாது
ஆலயப் பிரவேசம், மதமாற்றம் இப்போது உங்களில் சிலர் ஆலயப் பிரவேச உரிமைக்கு ஆசைப் படுவதாகவும், சிலர் இந்து மதம் விட்டு கிறிஸ்து மதத்திற்குப் போக ஆசைப்படுவதாகவும் இவ்விரண்டுக்கும் கிளர்ச்சி நடப்பதாகவும் கேள்விப்பட்டேன். பத்திரிகைகளிலும் பார்க்கிறேன். இது மிகவும் துக்கமும் பரிதாபகரமுமான விஷயமாகும் ஈழவர்களோ மற்றும் தாழ்ந்த ஜாதியார் என்பவர்களோ ஆலய பிரவேசத்துக்கு ஆசைப்படுவது சிறிதும் சுயமரியாதை அற்ற விஷயமேயாகும் ஆலயத்தில் என்ன இருக்கிறது? அங்கு சென்றால் என்ன பயன் ஏற்பட்டு விடும்? வீணாக உங்கள் பணமும் உங்கள் நேரமும் பாழாவதல்லாமல் ஆலயத்தால் என்ன நேரிடப் போகிறது?
தமிழ்நாட்டில் நாடார் சமூகத்துக்கு சில ஜில்லாக்களில் ஆலயப் பிரவேசம் இல்லாததால் இன்று அவர்கள் எல்லாக் காரியங்களிலும் மற்ற சமூகத்தாரை விட முற்போக்கில் இருக்கிறார்கள். அவர்கள் தர்மங்கள் எல்லாம் கல்விக்கும் மூற்போக்குக்குமாகவே செலவழிக்கப்பட்டு பல “மேல் ஜாதி” சமூகத்தைவிட மேல் அந்தஸ்தில் இருக்கிறார்கள். அவர்களால் பல பள்ளிக்கூடங்களும் ஆஸ்பத்திரிகளுமாக நடைபெறுகிறது. சம்பளமில்லாத. ஹைஸ்கூல்கள் நடத்துகிறார்கள். ஆலயப்பிரவேசம் இருந்து இருந்தால் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் கதிதான் அவர்களும் அடைந்திருப்பார்கள் அதாவது ஏழை மக்களை சுரண்டவும் உலகுக்கு பயன் இல்லாமல் வாழவும் ஆயிருப்பார்கள். உங்களுக்கு ஆலயப் பிரவேசம் கிடைத்தால் நீங்களும் அந்த கதி அடைவதோடு என்றும் கீழ் ஜாதியாய் இருக்கப்போவது நிச்சயம். உங்களுக்கு பகுத்தறிவும் ஏற்படப்போவதில்லை. மனிதனுடைய முட்டாள் தனத்தை நிலைநிறுத்தவும் அயோக்கியர்களும் வஞ்சர்களும் பிழைக்கவுந்தான். ஆலயங்கள் இருந்துவருகின்றன. ஆகையால் அதை நீங்கள் வன்மையாய் எதிர்க்க வேண்டும். நீங்கள் மதத்தையும், தெய்வத்தையும் அலட்சியம் செய்யவும் ஒழிக்கவும் ஆரம்பித்த பிறகே ஆலய விஷயத்தில் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் உங்களுக்கு அந்த உணர்ச்சியை ஊட்டி சிறிது இணங்கியும் வருகிறார்கள். அது உங்களை ஏய்க்கவே ஒழிய காப்பற்றவல்ல.
கிறிஸ்து மதம் அதுபோலவே தீயர்கள் கிறிஸ்து மதம் மாறுவது என்பதையும் நான் பலமாய் ஆட்சேபிக்கிறேன். தீண்டாதவர்கள் கிறிஸ்து மதம் மாறுவது என்பது குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொள்ளுவதேயாகும். கிறிஸ்து
301 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மதத்தால் தீண்டாமை ஒழியாது. அம்மதத்தில் இன்றும் தீண்டாதவர்கள் இருக்கிறார்கள். தீயர்கள் கிறிஸ்தவர்களானால் தீயர் என்கின்ற பெயர் சற்று நீளுமே ஒழிய அதாவது கிறிஸ்தவத் தீயர் என்றுதான் சொல்லப்படுமே யொழிய தீயர் என்கின்ற பெயர் போய்விடாது
தனி சமுதாயமாய் இருப்பதன் மூலமும், மதத்தையும் தெய்வத்தையும் ஒழித்துவிடுவதன் மூலமும் தீண்டாமை ஒழியாது என்று கருதுகிறவர்கள்.
கிருஸ்து மதத்தில் சேருவதைவிட மகமதிய மதத்தில் சேருவது மேல் என்று சொல்லுவேன். அந்த மதத்தில் ஜாதி வித்தியாசமில்லை, அம்மதம் சிறிதாவது வீரமும் ஒற்றுமையும் உள்ள மதமாகும். சமூக வாழ்வில் உயர்வு தாழ்வு பேதம் கற்பிக்காத மதமாகும். உலகிலுள்ள மற்ற மதக்காரர்களை மிரட்டி நடுங்கச் செய்யும் மதமாகும்.
இந்துமதத்திலும்கிருஸ்துவமதத்திலும் உள்ளஅளவு மூடநம்பிக்கையும், புரோகிதப்பிடுங்கல்களும் முஸ்லிம் மதத்தில் இல்லை. முஸ்லீம் சமூகம் பெருகினால் இந்து மத ஆதிக்கம் குறையும் - அரசியலிலும் சுதந்திரம் ஏற்படும். அரசாங்கமும் இந்துக்களும் முஸ்லீம்களைக் கண்டால் தான் பயந்து கொள்ளுகிறது. முஸ்லீம்களுக்கு அரசியலில் இரட்டைப்பங்கு கிடைத்திருப்பதின் காரணம் இதுவே. இந்துக்கள் கிளர்ச்சியை அரசாங்கம் லக்ஷ்யம் செய்வதில்லை. கிருஸ்தவர்களுக்கும் அரசாங்கம் பிச்சை கொடுப்பது போலவே உதவுகிறது. ஆனால் முஸ்லீம்கள் விஷயத்தில் அரசாங்கம் நடுங்குகிறது. காரணம் அவர்களது ஒற்றுமையும் கட்டுப்பாடுமேயாகும். ஆதலால் இந்து மதம் விட்டு வேறு மதத்துக்கு போக வேண்டுமானால் முஸ்லீம் மதமே மேலானது
சுயமரியாதை இயக்கம் சுயமரியாதை இயக்கம் எந்த மதத்தையும் ஒப்புக்கொள்ளுவ
தில்லை. அது தெய்வத்தையும் ஒப்புக்கொள்ளுவதில்லை. இந்த கொள்கைகள் இன்று இந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தினிடம்தான் இருக்கிறது ஆனாலும் தெய்வ நம்பிக்கையும் மத நம்பிக்கையும் உள்ளவர்களை அது புறக்கணிப்பதுமில்லை. பகுத்தறிவை உபயோகிக்க பூரண உரிமை கொடுக்கிறது. மூட நம்பிக்கை, குருட்டு பழக்க வழக்கம் ஆகியவைகளை ஒழிக்கவே அது பெரிதும் பாடுபடுகின்றது. இந்நாட்டில் உள்ள ஜாதிமத தெய்வ விஸ்வாசமற்ற தீய சமுதாயமும் சுயமரியாதை இயக்கமும் ஒன்றாக வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். இங்கு ஆங்காங்கு சு.ம. இயக்க ஸ்தாபனங்களை ஏற்படுத்த வேண்டும்
அரசியல்
தாழ்த்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கும் சமூகம் அரசியல் கிளர்ச்சியில் தலையிடக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம்
குடி அரசு - 1936 (1) 302.
எங்கள் நாட்டு அரசியல் செப்பிடு வித்தையேயாகும். ஒரு கூட்டத்தார் வயிற்றுப்பிழைப்புக்கும் ஆதிக்கத்துமாகவே அங்கு அரசியல் நாடகம் நடத்தப்படுகிறது.
இந்திய அரசியல் சர்வாதிகாரி தோழர் காந்தியாராவார். இவர் ஜாதி காப்பற்றுகிறவர் - வருணாச்சிரமம் காப்பாற்றுகிறவர், இந்து மதம் காப்பாற்றுகிறவர், தெய்வ கட்டளைப்படி நடப்பவர், ராமராஜ்ஜியம் கொண்டுவருபவர். இதன் பயனாகவே மகாத்மாவானவர். இவர் சர்வாதிகாரத் தன்மைக்கு உள்பட்ட அரசியலில் தாழ்த்தப்பட்ட கீழ்படுத்தப்பட்ட மக்களுக்கு கடுகளவு பயன் ஏற்படுமா? அவர் முயற்சியால் இதுவரை கடுகளவு பயனாவது ஏற்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா?
இந்திய அரசியல் ஸ்தாபனத் தலைவர் பண்டித ஜவஹர்லாலை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் புஸ்தகப் பூச்சியேயாகும். புஸ்தகத்தில் படித்ததை ஒப்புவிப்பவர். காரியத்தில் அவருடைய ஞானம் தகப்பனாரையும் மனைவியாரையும் மோக்ஷத்துக்கு அனுப்ப அவர்களது எலும்புகளை கங்கையில் போட்டு சடங்கு செய்தவர். இவர்தான் சமதர்மவாதியாம்
காந்தியார் ஜாதியைப் காப்பாற்றாவிட்டால் அவரது மகாத்மாப் பட்டம் பறந்துவிடும். பண்டித ஜவஹர்லால் எலும்பை கங்கையில் போடாவிட்டால் அவரது வீரப்பட்டம் பறந்துவிடும். பார்ப்பனர்கள் ஒருநாளில் இருவரையும் ஒழித்து சாதாரண ஆள்களாக ஆக்கிவிடுவார்கள்.
இந்த விளம்பர வேட்டை அரசியலில் நீங்கள் சிக்கினால் நசுங்குண்டு போவீர்கள் - நீங்கள் பிறர் பயன்படுத்திக் கொள்ளத்தான் ஆளாவீர்கள்.
எதிமிகளோடு சேராதீர்கள்
அரசாங்கத்துக்கு எதிரியாய் இருப்பவர்களுடன் சேராதீர்கள் உங்களுக்கு வேண்டியது சமுதாய சுயமீரியாதையேயாகும். அது அரசாங்கத்தாரால்தான் கொடுக்க முடியும். உங்களுக்கு உத்தியோகத்தில் பங்கும் வேண்டி இருக்கிறது. இந்த இரண்டிற்கும் அரசியல் ஸ்தாபனங்கள் காங்கிரசும் தேசீயமும் விரோதமானவை. ஆகவே அவை உங்கள் எதிரிகளாகும். அரசாங்கமோ இவ்விஷயங்களில் அனுகூலமாய் இருக்கிறது
இன்றையதினம் தோழர் ஜவஹர்லால் அன்னிய அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று பேசுகிறார். அன்னிய அரசாங்கத்தை கூட்டி வந்தவர்கள் ஜவஹர்லால் ஜாதியார் என்பது அவர் அறியாததல்ல.
பிரிட்டிஷ் அரசாங்கத்தினிடம் ஜாதி மத விஷயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் வாங்கிக் கொண்டு சுதேச ராஜாக்களைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்தவர்கள் ஜவஹர்லால் ஜாதியார்களேயாகும்
303 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இப்பொழுதும் இந்த அரசாங்கத்தை ஒழிக்க முயற்சிப்பதின் காரணம் இந்த அரசாங்கம் ஜாதி மத விஷயத்தில் பிரவேசித்து சீர்திருத்தம் செய்ய புறப்பட்டதேயாகும்
வரப்போகின்ற (கனவு காண்கின்ற) அரசாட்சியிலும் ஜாதிமதத்தைக் காப்பாற்றுவதாக ஒப்பந்தம் செய்து பார்ப்பனர்கள் பந்தோபஸ்து செய்து கொண்டார்கள். அதுதான் கராச்சிக் காங்கிரஸ் ஜீவாதாரமான உரிமையின் முக்கியாம்சமாகும். இதற்கு ஜவஹர்லால் மேலொப்பம் போட்டிருக்கிறார். இந்த மாதிரி புரட்டுகளுக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்.
எங்கள் நாட்டில் பல இழி மக்களுடைய நிலைமையும் கீழ்த்தர சுயநல: மக்களுடைய நிலைமையும் பார்ப்பனர்கள் காலைக் கழுவி தண்ணீரைச் சாப்பிடவேண்டியிருப்பதால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவும் குலாம்களாகவும், அவர்களது மக்களாகவும் இருக்க வேண்டியவர்களாய்
இருக்கிறார்கள். உங்களுக்கு அந்த அவசியம் இல்லை. நீங்கள் ஜாதி, மதம், தெய்வம் ஆகியவைகளில் நம்பிக்கை அற்று உங்கள் சமுதாயத்துக்குள் அவர். களை தலைகாட்டாமல் அடிப்பதே உங்களுடைய உண்மையான சுதந்திரமாகும். அதுவே அரசியல் சுதந்திரமாகும். அதுவே முதல்தர சமதர்மமுமாகும் வாலிபர்களை நான் கேட்டுக் கொள்வதும், வாலிபர்களிடம் நான் எதிர்பார்ப்பதும் இதுதான். எந்தக் காரணம் கொண்டும் அரசியல் புரட்டிலும் காங்கிரஸ் செப்பிடு வித்தையிலும் கலந்து கொள்ளக் கூடாது என்பதே.
திவான்
உங்கள் ஊர் திவானைப் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது. நான் அதைப்
பற்றிப் பேச ஆசைப்படவில்லை. ஒரு காரியம் மாத்திரம் சொல்லுகிறேன். திவான் சர். ஷண்முகம் அவர்கள் பெயரை நினைத்தாலே எங்கள் நாட்டுப் பார்ப்பனர் வயிற்றில் நெருப்புப் பற்றிக் கொள்ளுகிறது. அவர் ஒரு நாளைக்கு கவர்னர் ஆவார் என்பது பார்ப்பனர்களின் ஜோசியம். அதற்காக அவரை எப்படியாவது தட்டி விட வேண்டுமென்று கட்டுப்பாடாக பார்ப்பனர்கள் முயற்சிக்கிறார்கள். எங்கள் மாகாணத்தில் இரண்டு பேர் பார்ப்பனரல்லாதார் கவர்னராகி விட்டார்கள். ஒரு “சாயபும் ஒரு நாயுடுவும்” கவர்னராகிவிட்டார்கள். ஒரு செட்டியாரும்” ஆகக்கூடும். இந்தஸ்தானம் பார்ப்பனருக்கு கிடைக்கவில்லை, இனி கிடைப்பதும் லேசான காரியமல்ல ஆதலால் அவர்கள் இந்த விஷமம் செய்து அவர் பெயரைக் கெடுக்க தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பன சக்தி இங்கு வந்து வேலை செய்கிறது அவரது அரசியல் நிர்வாகம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி நான்
சிபார்சு பேசவில்லை. ஆனால் அவரது சமூக விஷயமான நிர்வாகம் உங்களுக்கு மிகவும் அனுகூலமானதாகவே இருக்கும். அதற்கு ஆகவே
அவர் இங்கு அவர் தகுதிக்கு மிகவும் சிறியதான இந்த வேலையில் இருக்கிறார்.
குடி அரசு- 1936 (1) 304
ஆதலால் அது விஷயத்திலும் நீங்கள் பார்ப்பனர்களுடனோ மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுடனோ சேர்ந்து உங்களந்தஸ்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு இங்கு இருக்கப்பிரியமில்லை. அவர் தன் தகுதிக்கு ஏற்ற மேல் உத்தியோகத்தில் கண் வைத்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் போய் விடக்கூடும். அதற்குள் குறைகளை நீக்கிக் கொள்ள முயற்சியுங்கள்.
குறிப்பு- கொச்சி சமஸ்தானத்தில் தீய வாலிபர் சமாஜங்கள் சார்பாக 19.04.1936 ஆம் நாள் எர்ணா குளத்தில் நடைபெற்ற தீய வாலிப சங்க 4 ஆவது மாநாடு, 20.04.1936 ஆம் நாள் ஒச்சன் துருத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டம், 21.04.1936 ஆம் நாள் சேத்தன்மங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம், 22.04.1936 ஆம் நாள் கிராங்கனூரிலும் திறாச்சூரிலும் நடைபெற்ற பொதுக்கூட்டம் இவற்றில் ஆற்றிய சொற்பொழிவின் சருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 26.04.1936
305 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பாண்டியன் - ராமசாமி அறிக்கை
திருச்சியில் கூட்டம்
26-1-36ந தேதி குடி அரசில் வெளியான பாண்டியன் - ராமசாமி அறிக்கையின் படி கூட்டப்படவேண்டிய கூட்டம் மே மாதம் 3-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் கூட ஏற்பாடு செய்திருக்கும் விஷயம் முன்னமேயே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படிஅக்கூட்டம் 3-5-36ந் தேதி திருச்சியில் தோழர்கள் டி.பி. வேதாசலம், கே.எ.பி. விஸ்வநாதம் ஆகியவர்கள் முயற்சியில் தென்னூர் பழனிச்சாமி பிள்ளை பங்களாவில் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது
இந்தக் கூட்டம் ஒரு கூட்டத்தாருக்கு முக்கியமானதொரு கூட்டம் என்பதைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. பார்ப்பனரும் பார்ப்பனக் கூலிகளும் இதை பரிகசிக்கக்கூடும். அது அவர்களது ஜாதிப்புத்தியும் இழி சுபாவமுமாகும் பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றத்திற்கு என்றே ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியானது இந்த 20 வருஷ காலமாக தென் இந்தியாவில் எவ்வளவோ வேலை செய்து வந்திருக்கிறது. சமூகத் துறையில் இதுவரை எந்தக் கட்சியாரும் எந்த தனிப்பட்ட பெரியாரும் எந்த அரசாங்கமும் செய்திருக்காத - செய்ய நினைக்கவும் இல்லாத அளவு காரியங்களைச் செய்து ஒரு புரட்சியை உண்டாக்கி இருக்கிறது அதாவது இந்த பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் பயனாக பார்ப்பனரல்லாத சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கல்வி, உத்தியோகம், அரசியல், சமூக இயல்களில் சம்மந்தம் சில சந்தர்ப்பங்களில் ஆதிக்கம் முதலாகியவைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதோடு பார்ப்பனரல்லாத மக்கள் என்று ஒரு சமூகம் தென்னிந்தியாவில் அனாமதேயமாய், அடிமையாய், இழிஜாதியாய், மிருகங்களிலும் கேவலமாய், மிருகப் பிராயமாய் இருந்தது மாறி இன்று அவர்களும் ஒரு சக்தியுள்ள மக்களாய் சுயமரியாதையில் உணர்ச்சி உள்ளவர்களாய் இருந்து வருகிறார்கள் என்று இந்தியாவுக்கும் உலகத்துக்கும் எடுத்துக் காட்டும்படி செய்திருக்கிறது
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று ஒன்று ஏற்பட்டு இந்த 20 வருஷ காலமாய் இந்த நாட்டில் இவ்வளவு
குடி அரசு- 1936 (1) 306
வேலை செய்திருக்கவில்லையானால் இன்று அரசாங்கத்திலோ, காங்கிரசிலோ, ஜஸ்டிஸ் கட்சியிலோ, சுயமரியாதை இயக்கத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபனங்களிலோ மற்றும் வேறுபல காரியங்களிலோ: விளம்பரம் பெற்றும், பிரபலம் பெற்றும், ஆதிக்கம் பெற்றும் இருக்கும் பார்ப்பனரல்லாதார்கள் இன்றுள்ள இந்த நிலைமையில் இருந்திருக்க முடியுமா என்பதைக் கவனித்தால் அக்கட்சியின் பெருமையும் அது செய்துள்ள வேலையும்விளங்கும். உண்மையாகவே இன்று பார்ப்பனல்லாதார். இயக்கம் இல்லையானால் இன்று தேச பக்தர்களாய் சுயமரியாதை வீரர்களாய், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களாய், சமதர்ம அபிமானிகளாய், பார்ப்பனரல்லாத சமூக பிரமுகர்களாய் பல துறைகளில், மேதாவிகளாய் இருந்து வரும் தோழர்களில் 100-க்கு 90 பேர்கள் (காந்தியார் இஷ்டப்படி அவரவர்வர்ணாச்சிரமத்தொழில் - பாரம்பரியமான தொழில் செய்ய வேண்டும் என்பது போல்) தாலூக்கா சேவகத்திலும் போலீசு கான்ஸ்டேபிளாயும், வாத்தியக்காரராயும், பறை அடிப்பவர்களாகவும், பாதரக்ஷ உற்பத்திக் காரராகவும் உப்பு மிளகாய் பேரீச்சம்பழம் உருண்டை தட்டம் விற்பவராகவும், தூதுவர்களாகவும், கை வண்டி, ரிக்ஷா வண்டி சாரதிகளாகவும் மற்றும் இப்படிப்பட்ட பல தொழில்காரர்களாகவும் இருந்து கொண்டு பார்ப்பானை
பூஜித்து அவன் எச்சிலையை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதை ஒழிக்காமலும் சிறிதும் தளர்ச்சி இல்லாமலும் அழுத்தம் திருத்தமாய் எடுத்துரைப்போம்.
இதற்கு என்ன ஆதாரம் என்று யாராவது கேட்பார்களேயானால் அதற்கு ஒரே ஒரு பதில்தான் சொல்லுவோம்.
அதாவது முதலிலே சொல்லப்பட்ட ஆட்கள் அல்லது இவர்களுக்கு (ஞாபகத்துக்கு வராத வரையில்) முன் உள்ள இவர்களது பல தலைமுறை முன்னோர்கள் என்ன காரணத்தால் என்ன தொழிலில் எப்படி வாழ்ந்து வந்தார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள் என்பதேயாகும்
அப்படிப்பட்ட நிலையும் நிர்ப்பந்தமும் உள்ள மக்களின் சமூகத்துக்கு என்று ஏற்பட்ட இயக்கம் இந்த 20 வருட காலமாய் தனது வேலையை கூடிய வரையில் தைரியமாக செய்து வந்திருக்கிறது என்பதை
நாம் முதலில் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
அப்படிப்பட்ட இயக்கம் இன்று சிறிது தளர்ச்சி அடைந்திருக்கிறது
சிறிது செல்வாக்கும் குறைந்து வருகிறது. பொது ஜனங்களிடத்தில் ஒரு அளவுக்கு அசூயையும் வெறுப்பையும் கூட பெற்று வருகிறது. இருந்தாலும் இவை யெல்லாம் எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் ஏற்படுவது இயற்கையேயாகும். அதிலும் ஒரு புரட்சிகரமான - மக்களின் சுயநலத்துக்கு ஏற்பட்ட கொள்கைகளுக்கு விரோதமான இயக்கத்துக்கு எதிர்ப்பும் தொல்லையும் தளர்ச்சியும் ஏற்படுவது ஒரு நாளும் அதிசயமாகாது.
307 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஏனெனில் எப்படிப்பட்ட இயக்கமும் மக்களால் தான் நடத்தப்பட வேண்டியதாகும், மக்கள் யோக்கியதைசராசரி - பெரும்பாலும் எப்படிப்பட்டது என்பது நாம் அறியாததல்ல.
தனி உடைமை உலகில் - தனிப்பட்ட மக்கள் தங்கள் சுயநலத்துக்கு தனிப்பட்ட உணர்ச்சியாலேயே போட்டியோடு வாழும் முறை கொண்ட உலகில் கொள்கை, ஒழுக்கம், நீதி, நன்றி ஆகிய காரியங்களை எதிர்பார்ப்பது நெருப்பு குளிர்ந்திருக்க வில்லையே என்று விசனப்படும் முட்டாள் தனத்துக்கே ஒப்பானதாகும் ஆகவே இதுவரையிலாவது இந்த இயக்கம் எப்படி இந்த 20 வருஷமாய் வாழ்ந்து வந்தது என்றுதான் ஆச்சரியப்பட வேண்டுமே யொழிய இந்த 20-வது வருஷத்தில் ஏன் இப்போது மாத்திரம் தளர்ச்சி அடைந்து விட்டது - செல்வாக்கு குறைய நேரிட்டு விட்டது என்று யாரும் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. ஆதலால் இப்போது அவ்வியக்கத்தில் பிரதான்யம் சம்பாதித்துக் கொண்டசிலரின் துரோகத்தால் - அலட்சியத்தால் - நன்றி கெட்ட தனத்தால் அவ்வியக்கம் தளர்வுற்றதானால் மற்ற மக்கள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டு குறை கூறிக் கொண்டு இருப்பது என்றால் அது துரோகம் செய்த மக்களின் இழி செய்கையை விடமோசமான செய்கை - இழிவான செய்கை என்றே சொல்லுவோம் மேலே சொன்னபிரமுகர்களானதுரோகக்காரர்கள் துரோகம் செய்தாலும் அவ்வியக்கத்தில் இருந்து கொண்டே இருக்கிற அளவுக்காவது அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவ்வியக்கத்தினாலேயே மனிதன் என்று மற்ற மக்களின் ஞாபகத்துக்கு வரவேண்டியவனாகி பின்பு அவ்வியக்கத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி வெளியில் இருந்து கொண்டு வையும் பார்ப்பனரல்லாதார்கள் அதைவிட மோச மானவர்களாகவும் இழி பிறவிக்காரர்களாகவும் தான் மதிக்கப்பட வேண்டியவர்களாவார்கள். இப்படிப்பட்ட ஜனங்களில் அதாவது இன்று ஜஸ்டிஸ் கட்சியை குறைகூறும் மக்களில் 100-க்கு 99 பேர்களுடைய தனிப்பட்ட யோக்கியதையும் நாணயமும் அவர்களது “ஜாதகமும்'' “முன்
பின் ஜன்மமும்”” நாம் அறியாததல்ல. ஆகையால் இப்படிப்பட்ட இரண்டு கூட்டத்தின் துரோகத்தையும், நன்றி கெட்ட தனத்தையும், தொல்லையையும் சமாளித்து அந்த அதாவது பார்ப்பனரல்லாத இயக்கத்தை தற்காலம் உள்ள நிலையிலிருந்து தப்புவிக்கச் செய்து - காப்பாற்றி அது முன் ஜனங்களுக்கு செய்து வந்த நன்மையை மறுபடியும் செய்யும்படியாகச் செய்வதற்கே மேற்குறிப்பிட்ட 3-5-365 தேதி கூட்டம் கூட்டப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இவற்றை எழுதுகிறோம்
குடி அரசு - 1936 (1) 308
இந்தபார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் உள்ள சம்மந்தத்தையும், சம்மந்தமும் தொடர்பும் இருக்க வேண்டிய அவசியத்தையும் இதற்கு முன் பல தடவை நாம் விளக்கி இருக்கிறோம் ஒன்றையொன்று நேசிக்காவிட்டாலும் ஒன்றில்லாமல் ஒன்று வாழ்வது கஷ்டம் என்றும், அதாவது அவற்றின் கொள்கைகள் நிறைவேறப் பெறுவது
அசாத்தியம் என்றும் தெரிவித்து வந்திருக்கிறோம்
ஜஸ்டிஸ் கட்சியில் பலர் சுயமரியாதைக் கட்சியை வெறுக்கலாம், தூற்றலாம். ஆனால் இவர்களின் யோக்கியதை, நாணயம் அவர்களது பார்ப்பனரல்லதார் உணர்ச்சி நன்றியறியும் தன்மை லட்சியம் முதலியவை நாமும் பொது ஜனங்களும் நன்றாய் அறியாததல்ல.
அதுபோலவே சுயமரியாதைக்காரர்களிலும் சிலர் ஜஸ்டிஸ் கட்சியை வெறுக்கவும் சிலர் தூற்றவும் செய்யலாம். அதிலிருப்பது தங்களுடைய சுயமரியாதைக்கு கேடு என்றுகூட சொல்லலாம். அவர்களுடைய - அப்படிப்பட்டவர்களுடைய யோக்கியம், லக்ஷியம், நாணயம், வாழ்க்கையின் முன்பின் நிலை, பொறுப்பு, நன்றி அறியும் தன்மை, நடத்தையில் உள்ள கொள்கை முதலிய வெகு சங்கதிகளும் நமக்கும் பொது மக்களில்
பலருக்கும் தெரியாததுமல்ல.
இந்த இரு கூட்டங்களின் வாழ்வுக்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் தோன்றவில்லை. இது இழிவு படுத்தப்பட்ட கொடுமைபடுத்தப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நன்மைக்கு ஆகவே - அவர்களின் மனிதத் தன்மைக்காகவே தோன்றி இரவும் பகலும் அதற்காக உழைத்து வரும் மக்களாலும், இயக்கங்களின் பேரால் எவ்வித சுயநலமும் வாழ்க்கை மார்க்கமும் தேடாத மக்களாலும் துவக்கப்பட்டு அதற்கு ஆகவே உயிர் வாழ்ந்து அதற்கு ஆகவே ஜீவனையும் வாழ்க்கையையும் தத்தம் செய்யும் ஆட்களின் முயற்சியாலேயே வாழ்ந்து வருகிறது
ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதைக் கட்சியும் ஒன்று சேரக் கூடாது என்று சொல்லியும், அவற்றை தனித்தனியே குற்றம் கூறியும் பிரசாரம் செய்தும் வரும் மக்கள் இரண்டு கூட்டத்திலும் இருப்பதானாலும் பொதுவாக பார்ப்பனரல்லாத அதாவது சமூகத்திலும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைக்கு ஆக உழைக்க வேண்டும் என்கின்றவர்களும் - தங்கள் ஓய்வு நேரங்களிலாவது குஷாலுக்கு ஆக இந்த வார்த்தை பேச வேண்டும் என்று கருதுகிறவர்களும் மற்றும் தாங்கள் சுகபோகங்களுக்கு இப்படிப்பட்ட இயக்கங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாவது நினைக்கிறவர்களும் ஆகிய எல்லோரும் இந்த சமயத்தில் சற்று கவலை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் மிகவும் வணக்கமாய் விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்
இயக்கத்தில் முக்கியமாய் உழைக்க வேண்டியவர்களும் அதன். பொறுப்பை வகிக்கவேண்டியவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப்
309 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பற்றி 25-1-36ந் தேதி அறிக்கையில் தோழர்கள் பாண்டியனும் ராமசாமியும் விளக்கி இருக்கிறார்கள். ஆதலால் குறிப்பிட்ட மே மாதம் 3-ந் தேதி ஞாயிற்றுக் கிழமையன்றைக்கு தென்னாட்டில் ஒவ்வொரு இடத்திலும் இருக்கிற - பார்ப்பனரல்லாதார் இயக்கத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் அன்பும் கவலையும் கொண்ட மக்கள் பலர் திருச்சிக்கு வந்து நம் முன்னணி வேலையையும் பிரசார முறையையும் விளக்கி வகுத்து தொடர்ச்சியாய் காரியம் செய்ய உதவி அளிக்கவேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம். கண்ணியமாய் அபிப்பிராய பேதமுள்ள தோழர்களை நாம் சிறிதும் குறைகூற முன்வரவில்லை என்றாலும் அவர்களுடைய கண்ணியமான தொல்லையில் இருந்து இவ்வியக்கங்கள் பாதுகாக்கப்படவேண்டிய முயற்சியை நாம் எடுத்துக் கொள்ளலாமல் இருக்க முடியாது என்பதை தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
கடசியாக நம் அதாவது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு நாம் ஒன்று தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகின்றோம். வாலிபப் பருவம் அபாயகரமான பருவம். சுலபத்தில் நெருப்புப் பற்றிக் கொள்ளக்கூடிய வஸ்துப்போல் மிக பத்திரமாய் காப்பாற்றப்பட வேண்டிய பருவம். அப் பருவத்தை பொறுப்பற்ற, பயனற்ற, சுயநல, நிலையற்ற, தற்கால விளம்பர காரியங்களுக்கு அடிமைப் படுத்தி விடாமலும் பின்னால் சலிப்பும் துக்கமும் படவேண்டிய காரியங்களுக்குப் பந்தகப்படுத்தி விடாமலும் நன்றாய் ஆய்ந்து ஓய்ந்து பார்த்து அவசியமானதும் நிலையானதும், காரியத்தில் செய்யவும் பயனளிக்கவும் கூடியதுமான காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டுகிறோம்.
புதிய சீர்சிருத்தம் என்பது வெறும் உத்தியோகமயமும் பதவி மயமுமேயாகும். இந்நிலையில் பார்ப்பனரல்லாத ஏழை மக்கள் தொழிலாளி மக்கள் முதலியவர்களிடமிருந்து அரசியல் பேரால் கோடிக்கணக்காய் பொருள் பறித்து நாட்டுக்கு சமூகத்துக்கு யாதொரு பயனும் இல்லாத
புல்லுருவி போலும் சமூகத்தை அழிக்கும் க்ஷவரோகக் கிருமி போலும் வாழ்ந்து வரும் பார்ப்பன சமூகமும் அவர்களது கால்களை அலம்பிக்
குடித்து உயிர் வாழும் அவர்களது அடிமைகளும் அனுபவிக்கவும் வாழவும் விட்டு விட்டு அதைப் பார்த்துக் கொண்டு உயிர் வாழ்வது போன்ற இழி
நிலையும் சுயமரியாதை அற்ற தன்மையும் உலகில் வேறு இல்லை என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுகிறோம்
பார்ப்பனரல்லாதாரின் ஒவ்வொரு குடும்பத்திலும் இன்று 2,3,4 பிள்ளைகள் படிக்கின்றன. வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி, வாழ்கையைச்
சுருக்கி பிள்ளைகள் படிப்பிக்கப்படுகின்றன. எல்லாம் ஒரே ஒரு அதாவது அது சரியாய் இருந்தாலும் தப்பாய் இருந்தாலும் உத்தியோகம் என்னும் ஒரே ஒரு காரியத்தை உத்தேசித்தே (100க்கு 90 பிள்ளைகள்) படிப்பிக்கப்படுகின்றன.
குடி அரசு - 1936 (1) 310
இன்று இப்படிப்பட்ட குடும்பக்காரர்கள் தேசாபிமானம் - சமதர்ம வீரம் என்னும் பேர்களால் அவற்றின் போதையால் பார்ப்பனர்களே சீர்திருத்தத்தில் உள்ள உத்தியோகம் பதவி, அதிகாரம் ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்த இடம் கொடுத்து விட்டால் பிறகு இக்குழந்தைகள், இக் குடும்பங்கள். இவர்களது பின் சந்ததிகள் ஆகியவைகளின் யோக்கியதை என்ன ஆவது என்பதையும் இச் சமூகம் மறுபடியும் தலையெடுக்க எத்தனை காலம் ஆகும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்
ஆகையால் ஒவ்வொரு முக்கிய பட்டணங்களில் ஸ்தலங்களில் உள்ள முக்கிய கவலை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் திருச்சி கூட்டத்திற்கு வர வேண்டுமாய் வேண்டிக் கொள்கிறோம்
இக்கூட்டம் நடைபெறுவதற்கு திருச்சி தோழர்கள் கே.ஏ.பி.விஸ்வநாதம்
அவர்களும், டி.பி.வேதாசலம் அவர்களும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொண்டு அவற்றிற்கு ஆன உதவி செய்து வருவதை நாம் மனமாரப் பாராட்டுவதோடு நமது நன்றி அறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.04.1936
3 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தோழர் டி.வி. பிரிவு
ஜஸ்டிஸ் கட்சி ஊழியர்களில் தலை சிறந்தவரான தோழர் டி.வி. சுப்பிரமணியம் சென்ற 215 தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணிக்கு சென்னையில் காலமானதை யறிந்து வருந்துகிறோம். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பமான நாள் முதல் இறக்கும் வரை கட்சிக்கு இடையறாத தொண்டாற்றியவர்களுள் தோழர் டி.வி.யும் ஒருவர். கட்சிக்கும் தனக்கும் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் நேர்ந்த காலத்தும் அவர் கட்சியைக் காட்டிக் கொடுக்கவில்லை; கட்சியை விட்டுப் பிரியவுமில்லை வசைமாரியையும், கல்மாரியையும், மண்மாரியையும் பொருட்படுத்தாமல் மேடையேறி வீரமுழக்கம் செய்வதற்கு அவருக்கு இருந்தது போன்ற நெஞ்சழுத்தம் அதிகப் பேருக்கு இருக்க முடியாது. கட்சிப்பிரசாரம் செய்ய தீரமும் திறமையும் உடைய ஊழியர்கள் ஏராளமாகத் தேவைப்படும் இக்காலத்தில் அவரது பிரிவு கட்சிக்கு நஷ்டமேயாகும்.
குடி அரசு - இரங்கற் செய்தி - 26.04.1936
குடி அரசு - 1936 (1) 312.
கிராமப் புனருத்தாரணப் புரட்டு
இப்பொழுது காங்கிரஸ்காரர்களும் சிறப்பாக காந்தியார், ஜவகர்லால். பண்டிதர் முதலியவர்களும் புதிய மார்க்கம் ஒன்று கண்டுபிடித்து இருக் கிறார்கள். தீண்டாமை, மதுவிலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை, கதர் ஆகிய காரியங்கள் சுயராஜ்றியத்துக்கு மார்க்கம் என்று சொன்னவைகள் இப்பொழுது மக்களின் பகுத்தறிவு என்னும் சண்டமாருதத்தில் சிக்கி சின்னா பின்னப்பட்டுப் போயிற்று. இனி இவைகளின் பேரால் மக்களை ஏய்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிட்டது. புதிய வழி அதாவது தீண்டாதவர்கள் முன்னேற்றம் என்பதும்
ஒரு 20, 30 லக்ஷம் ரூபாய் சம்பாதிக்க முடிந்ததே ஒழிய மற்றபடி அது தீண்டாதவர்கள் இந்து மதம் விட்டு வேறு மதம் புகவேண்டியதுதான் மார்க்கம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. இப்போது பார்ப்பனர்களுக்கு சமதர்ம வீரர் என்னும் பண்டித ஜவஹர்லால் நிழலில் வாழவேண்டியதைத் தவிர வேறு மார்க்கம் இல்லாமல் போய்விட்டது என்றாலும் புதிய முறையில் மக்களை ஏமாற்ற கிராமப் புனருத்தாரணம் என்கின்ற ஒரு புரட்டைக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது
அப்புரட்டை வெளியாக்க எழுதிய ஒரு வியாசம் அளவுக்குமேல் பெரியதாக ஆதி விட்டதால் அதை மே மாத பகுத்தறிவில் சுமார் 40 பக்கமாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஆகவே மே மாத பகுத்தறிவை 10 பாரங்களாகப் பிரசுரித்திருக்கிறோம். ஆகையால் குடிஅரசு சந்தாதாரர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் மே மாத பகுத்தறிவு பத்திரிகை ஒன்று வாங்கி வாசிக்க விரும்புகிறோம். அது ஒரு பெரிய ஆராய்ச்சி வியாசமாகும் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டியதுமாகும்
குடி அரசு - வேண்டுகோள் - 26.04.1936
313 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மனித சமூக உறவு முறை
மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துக்கள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும், உறவு முறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்
பட்டிருக்கிறது அந்நியதிக்கு எவ்வித கொள்கையும், ஆதாரமும் இல்லாமலும் உலகமெங்குமுள்ள மனித சமூகத்தில் ஒரே விதமான உறவு முறை அனுஷ்டிக்கப்படாமலும், தேசாச்சாரம், ஜாதியாச்சாரம், மதாச்சாரம், பழக்கம், வழக்கம் என்கின்ற பலவகையான மார்க்கத்தைப் பின் பற்றியே உறவு முறைகள் கையாளப்படுகின்றன; யாதொரு நியாயமும் காரணமும் சொல்லப்படாமலே பின்பற்றப்படுகின்றன. அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இம்முறைகள் சிறிதும் தவறாமல் மிகவும் ஜாக்கிரதையாய் கையாளப்பட வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தங்களுக்கும் ஆளாகியிருக்கின்றன. ஆகவே, இவைகளையெல்லாம் பார்த்தால் உறவு முறைகள் என்பது அர்த்தமற்ற பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாகவும், குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவுந்தான் காணப்படுகின்றனவே தவிர அவசியங்களை அறிந்து கொண்டதாகக் கருத முடியவில்லை. உதாரணமாக, சகோதரர்கள் விஷயத்தில், ஆண் சகோதர உறவுக்கு ஒரு முறையும், பெண் சகோதர உறவுக்கு ஒரு முறையும் கையாளப்பட்டு வருகிறது. ஆண் சகோதரன் வயிற்றில் பிறந்த குழந்தைகளை தங்கள் தங்கள் குழந்தைகளாகவும், பெண் சகோதரி வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தாங்கள் கலியாணம் செய்யத் தக்க பந்தத்துவம் உடையவர்களாகவும் இந்துக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்கள்.
முஸ்லீம் சமூகத்திலோ பெண் சகோதரி மகளை கலியாணம் செய்து கொள்ளுவது தகாது என்றும், சிறிய தகப்பனார், சிறிய தாயார் பெண்ணைக் கலியாணம் செய்வது தகும் என்றும் கருதப்படுகிறது
சில சமுகங்களில் ஒரு வித ரத்தக் கலப்பும், மூன் சம்பந்தமும் இல்லாதிருந்தாலும் குலங்கள் பெயரையும், கோத்திரங்கள் பெயரையும் பார்த்துக் கொண்டு அதன் பேரிலேயே கலவிக்கு - கலியாணத்துக்கு முறைகள் வைத்துக் கொள்ளப்படுகின்றன.
கிருஸ்துவர்கள் சமுக உறவுமுறை என்பதும் எவ்விதக் கட்டுப் பாட்டுக்கும் உடன்படாமல் கண்மூடித்தனமாய் ஏதோ ஒரு முறையைப் பின்பற்றப்படுவதாய் இருக்கின்றது
குடி அரசு- 1936 (1) 314
வேறு நாடுகளில் தன் கூடப் பிறந்த சகோதரிகளையே, அதாவது சயாம் தேசத்தில் ஆரிய மதத்தைப் பின் பற்றுகின்ற அரசர்கள் தன் கூடப்பிறந்த தங்கையையே மணந்து கொண்டு கலவி செய்கிறார்கள். பவுத்த ராமாயணத்தில், ராமனுக்குச் கீதை உடன் பிறந்த தங்கை என்றும், அக்காலத்தில் ஆரியர்களில். ஒரே தாய் தகப்பன் வயிற்றில் பிறந்த அண்ணன் தங்கைகள் கலியாணம்
செய்து கொள்ளும் வழக்கம் இருந்த தென்றும், அதை அனுசரித்தே தான் இப்போது சயாம் தேசத்தில் நடந்து வருகிறதென்றும் அறியக்கிடக்கின்றது
மலையாள தேசத்தில் சில பாகங்களிலும், திபேத்து தேசத்திலும் ஒரு பெண் பல புருஷருக்கு மனைவியாய் இருக்கும் வழக்கம் இருந்து வருகிறது. நம்நாட்டில் ஒரு புருஷன் பல ஸ்திரீகளைக் கலியாணம் செய்து கொள்ளுகிறான்.
சில ஜாதிகளில் ஒரு குடும்பத்தில் மகனுக்குக் கட்டப்பட்ட பெண் தகப்பனுக்கும், கலியாணம் செய்து கொண்டவனுடைய மற்ற சகோதரர் களுக்கும் கலவிக்குரிய ஸ்திரீயாகக் கருதப்படுகிறாள்.
நம் நாட்டில் தாசி ஜாதி என்பவர்களிலும், மலையாளத்தில் நாயர் ஜாதி என்பவர்களிலும் குடும்ப சொத்துக்குப் பெண்களே உரிமையானவர்களாக இருக்கிறார்கள். மற்ற சமூகங்களில் குடும்ப சொத்துக்குப் பாத்தியஸ்தர்கள் ஆண்பிள்ளைகள் மட்டுந்தான் என்று கருதப்படுகின்றது
இஸ்லாம் சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொத்துரிமை அளிக்கப்பட்டு, பங்கில் வித்தியாசம் கற்பிக்கப்பட்டிருக்கிறது
ஐரோப்பியர்களிலும் உறவு முறை, கலியாண முறை ஆகியவைகளில். இந்தியாவைவிட பல மாறுதல்களும் பல தலை கீழ் முறைகளும் இருக்கக் காண்கின்றோம். அத்தை மக்கள், சிற்றப்பன் மக்கள் ஆகியவர்களை ஒரே மாதிரியாக ('நெவ்யூ' - 'நெய்ஸ்?)ப் பாவிக்கிறார்கள். அதுபோலவே சகோதரன் மக்களுக்கும், சகோதரி மக்களுக்கும் ஒரேவிதமான உறவு முறை கொண்டாடுகிறார்கள். அழைக்கும் முறையிலும் ஒரே முறை வைத்துத்தான் அழைக்கிறார்கள்.
சில தேசங்களில் பெண்கள் பாடுபட்டு சம்பாதித்து ஆண்களுக்குப் போடுகிறார்கள்.அத்தேசங்களிலுள்ள ஆண்கள், இங்குள்ள பெண்களைப்போல, அலங்காரம் செய்துகொண்டு, பெண்களுடைய போகப் பொருளாய் வீட்டில் இருக்கிறார்கள்.
சிலவிடங்களில் விபசாரத்தனத்துக்காக பெண்களை நீக்கி வைக்கிறார்கள். வேறு சில விடங்களில் அதே போன்ற விபசாரத்தனத்துக்காக ஆண்களை
நீக்கி வைக்கிறார்கள். சில விடங்களில் ஆண்கள் விபசாரத்தனத்தை குற்றமாகப் பாவிப்பதில்லை. இன்னுஞ் சில விடங்களில் பெண்கள் விபசாரத்தனமே குற்றமாகப் பாவிக்கப்படுகிறது. மற்றுஞ் சிலவிடங்களில் விபசாரத்தனம்
315 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
எவ்வளவு இருந்தாலும் அதைப்பற்றிய பேச்சே யில்லாமல் இருந்து வருகிறது. சில வகுப்பார்கள் பெண்களைக் கலியாணமே செய்து கொள்வதில்லை.
சிலர் புருஷன் செத்தால் அதிகமாக அழுகிறார்கள்; ஆனால் பெண்சாதி செத்தால் அதிகமாகத் துக்கப்படுவதில்லை. வேறு சிலர் மனைவி செத்தால் அதிகமாக அழுகிறார்கள் புருஷன் செத்தால் அதிகமாகத் துக்கப்படுவதில்லை. அது போலவே சிலர் ஆண் குழந்தை செத்தால் அதிகமாக அழுகிறார்கள்; வெகு நாளைக்கு விசனப்படுகிறார்கள். ஆனால் அங்கு பெண் குழந்தைகள் மரணத்துக்கு அதிகம் கவலைப்படுவதில்லை. சில விடங்களில் பெண்: குழந்தைகள் மரணத்துக்காக அடைகிற விசனமும் துக்கமும் ஆண் குழந்தைகள் சாவை முன்னிட்டு அவ்வளவாக அடைகிறதில்லை. பொதுவாய் சாவுக்காக துக்கப்படுவது என்பது பெரும்பாலும் வயது நிலைமை, இறந்தவர்களால். தங்களுக்கு ஏற்பட்ட - ஏற்படும் - பலாபலன் முதலியவைகளைப் பொருத்தே உண்டாவதாகயிருந்து வருகிறது. ஆகவே கலவிக்கும், துக்கத்துக்கும், விபச்சாரத்துக்கும் சொத்துக்கும்,
கலியாணத்துக்கும் அகில உலக மனித சமூகம் முழுமைக்கும் பொருந்தும் படியான ஒரு முறையோ, வரையறையோ, காரண காரியங்களோ பொதுவாய்
எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
பழைய சரித்திரம் ஒன்றில், ஒரு தேசத்து அரச முறையில் அந்த அரசனுடைய (ராணி) பெண்சாதி இறந்துவிட்டால் உடனே அந்த அரசனின் மகள் ராணி (மனைவி)யாக ஆகிவிடுகிறாள் என்றும், அரசன் இறந்து விட்டால் உடனே மகன் ராஜ (புருஷ)னாக ஆதி விடுகிறான் என்றும், உண்மையான புருஷன் மனைவியாக ஆகிவிடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது இவைகளையெல்லாம் யோசிக்கும்போது கலவி முறை என்பதும், சொத்து முறை என்பதும் பெரும்பாலும் தேசாச்சாரம், மதாச்சாரம் அல்லது ஜாதியாச்சாரம் பழக்க வழக்கம் முதலியவற்றைப் பொருத்திருக்கிறதே தவிர, வேறு நியாயமான - நிர்ப்பந்தமான - உலகமெங்கும் ஒரே வழி துறையான- காரண காரியமான முறை கிடையவே கிடையாது என்றுதான் யூதிக்க வேண்டி யிருக்கிறது. இது விஷயத்தில் மற்ற ஜீவன்களின் இயற்கை சுபாவங்களும் எவ்வித வரையறைக்குக் கட்டுப்பட்டதாகவும் காண முடிவதில்லை:
நமது பழங்காலப் புராணங்களைப் பார்த்தால் தான் பெற்ற மகளையும், தன்னை ஈன்ற தாயையும் புணர்ந்த கதைகள் பல இருக்கின்றன. முறையற்ற. விபசாரத்தன சம்பந்தமான கதைகள் எண்ணிறந்தவைகளிருக்கின்றன. குருவின் மனைவி, சகோதரன் மனைவி ஆகியவர்களை கலவி செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை. பிள்ளைப் பேறுக்காக வேறு புருஷருடன் செய்யுங் கலவி குற்றமாகக் கருதப்படவில்லை. சில விடங்களில் சிஷ்யைகள். குருமார்களுடன் கலவி செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை.
குடி அரசு - 1936 (1) 316
சிலவிடங்களில் பிராமணர்களுடன் கலவி செய்வதைப் பிசகென்று கருதுவ தில்லை. கடவுள்கள் பக்த பெண்களிடம் கலவி செய்த கதை அனந்தம்
பத்துப் பணத்துக்கு மிஞ்சின பதிவிரதை இல்லை என்றும், ஆணும் இடமும் கிடைத்தால் எந்தப் பெண்ணும் பதிவிரதையாய் இருக்க முடியாது என்றும் “தர்ம சாஸ்திரம்” கூறுகின்றன.
பெண் கதியே இப்படியானால் ஆண் கதியைப் பற்றி கூறவேண்டுமா? ஆகவே இவ் விஷயங்களில் இன்னதுதான் சரி, இன்னது தான் தப்பு என்று குறிப்பிடுவதற்கில்லாமல் இருந்து வருகிறது. ஆனாலும் கலவிக்கான. வைத்தியமுறைப்படியும், தேக தத்துவ முறைப்படியும் சில முறைகள். கற்பிக்கப்பட்டிருப்பதை குற்றமென்று சொல்ல இதுவரை எவரும் முற்பட வில்லை. ஆதலால் இதைப் பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றுஞ் சொல்லலாம்.
என்றாலும் கலவியைப்பற்றிய காரியங்களுக்கு பாவம், புண்ணியம், கடவுள் தண்டனை, மானம் என்பவைகள் பொருத்தமாகும்படியாக எவ்வித குறிப்பிட்ட ஒரே மாதிரியான முறையும் கண்டுபிடிக்க முடியாமலிருந்து வருகின்றதென்பது மேற்கண்ட விஷயங்களால் கருதவேண்டியிருக்கிறது
இந்த உறவு முறை சம்பந்தம், கலவி சம்பந்த மாத்திரமல்லாமல்
மற்றும் மனித ஒழுக்க சம்பந்தமான பல காரியங்களிலும் பாவ புண்ணியம் நிர்ணயிக்கவோ, நன்மை தின்மை நிர்ணயிக்கவோ முடியாமல், இதுபோலவே தேசத்துக்கு ஒரு முறை, மதத்துக்கு ஒரு தினுசு, வகுப்புக்கு ஒரு மார்க்கம், ஜாதிக்கு ஒருவிதம் என்பதாகத்தான் இருந்து வருகிறது ஆகவே இவ்விஷயங்களை எடுத்துக்காட்டி, மனிதன் எப்படி நடந்து கொள்ளுவதென்னும் கேள்விக்குப் பொது அறிவும் ஆராய்ச்சியுமுள்ள. மனிதன் என்ன சொல்ல முடியும் என்று யோசிக்கும்போது 'சமயோசிதம்' என்பதைத் தவிர வேறு வழிகாட்டி இருப்பதாக அறிய முடியவில்லை என்பதற்காகவே இவ்வுறவு முறை விஷயத்தை உதாரணமாக எடுத்துக் காட்ட வேண்டியதாயிற்று
(இக்கட்டுரை நகர தூதனுக்கு விசேஷ கட்டுரையாக எழுதப்பட்டதாகும்)
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஏப்ரல் 1936
317 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தர்மம் அல்லது பிச்சை
தர்மம் அதாவது ஏழைகளுக்கு பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்கு பலவித உதவிகள் செய்வது என்பது வரை அனேக விஷயங்கள் தர்மத்தின்
கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன.
இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை- பிச்சைகொடுத்தலைமிக நிர்ப்பந்தமாககட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.
எப்படி எனில் தர்மம் கொடுக்காதவன்பாவி என்றும் அவன் நரகத்துக்கு போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது
இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாக கற்பித்து 32 தர்மங் களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால். அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது அதாவது, அறம் 32. ஒரு மனிதன் சத்திரம், படிப்பவர்களுக்கு சாப்பாடு, பக்தர்களுக்கு உணவு, பசுவுக்கு வாயுறை, கைதிகளுக்கு சாப்பாடு, இரப்பவர்களுக்கு பிச்சை, தின்பண்டம், அநாதிகளைக் காத்தல், பிள்ளைப்பேறுக்கு மருத்துவம் செய்தல், அனாதிப் பிள்ளைகளை வளர்த்தல், பிள்ளைகளுக்கு பால் வார்த்தல், அநாதிப் பிணம் சுடுதல், ஏழைகளுக்கு ஆடை கொடுத்தல், வழிப்போக்கர்களுக்கு சுண்ணாம்பு கொடுத்தல், வைத்தியம் செய்தல், வண்ணான் உதவல், நாவிதன் உதவல், கண்ணாடி காட்டுதல், காதோலை கொடுத்தல், கண்ணுக்கு மருந்து செய்தல், தலை முழுக்காட்ட எண்ணெய் தருதல், பெண்போகம் வேண்டுவோருக்கு போகப் பெண் உதவுதல், கஷ்டத்தில் சிக்குண்டவர்களுக்கு உதவி செய்து விடுவித்தல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல், மடம் கட்டுதல், ரோட்டுப் போடுதல், சாலைமரம் வைத்தல், மாடு எருமை ஆகியவை தங்கள் தினவுகளை தீர்த்துக்கொள்ள சொறி கல் நடுதல், மிருகங்களைக் காத்தல், கக்கூசு கட்டல், விலை கொடுத்து உயிர் மீட்குதல், பெண்தானம் செய்தல், ஆகிய 32 தர்மங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு மனிதனின். கடமை என்று சொல்லப்படுகிறது
குடி அரசு- 1936 (1) 318
அதுபோலவே இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்கு பிச்சைகொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது சிலவு போக மீதி உள்ளதில் 40ல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
இந்தப்படி செய்யா விட்டால் மதத்துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும் கூட கூறப்படுகிறது அதுபோலவே கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை
என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்கு போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தப்படிக்கு தர்மங்கள் செய்யவேண்டிய அவசியங்களை வற்புறுத்தி அந்த வற்புறுத்தல்களை பகவான் சொன்னான் ஆண்டவன் சொன்னான் என்று வேதங்கள் என்பவைகளிலும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த தர்மங்கள் எல்லாம் இருக்கிறவர்கள் அதாவது செல்வவான்கள். இல்லாதவர்களுக்கு ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் இதன் தாத்பரியமாகும்
செல்வவான்களுக்கு செல்வம் கடவுளால் கொடுக்கப்பட்டதாகும் ஆகையால் கடவுள் கொடுத்ததை கடவுளின் சிருஷ்டியாகிய - கடவுளின் பிள்ளைகளாகிய ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டியது அவசியமாகும் என்பதே அந்த தாத்பரியத்தின் உள்கருத்தாகும். செல்வவான்களுக்கு கடவுள் செல்வங்களைக் கொடுத்தார் என்றால் செல்வமில்லாத ஏழை தரித்திரவான்களுக்கு செல்வமில்லாமல் செய்தது கடவுள் தான் என்பதை எந்த மதவாதியும், ஆஸ்திகனும் மறுக்க மாட்டான் என்றும், மறுக்க முடியாது என்றும் சொல்லுவேன்.
செல்வம் என்பது உலகத்தின் பொது சொத்து. அதை யார் உண்டாக்கி யிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொது சொத்தாகும். ஆனால் அந்த பொது சொத்தானது பலாத்காரத்தாலும்,
சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப்போய்
சேரவும் மற்றொருவனுக்கு சிறிது கூட இல்லாமல் தரித்திரம் பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப் படுகிறதே ஒழிய மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.
ஆன போதிலும் கடவுளே ஒருவனை செல்வவானாக ஆக்கினார். என்றும், கடவுளே ஒருவனை ஏழையாக ஆக்கினார் என்றும் வைத்துக் கொள்வதானாலும் தர்மம் - பிச்சை கொடுக்கிற அதிகாரத்தை மாத்திரம் ஏன் பணக்காரனுக்குகொடுத்து அவனுக்கு இஷ்டமிருந்தால் பிறத்தியானுக்கு
319 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பிச்சைபோட்டு மோட்சத்துக்கு போகும்படியும் அவனுக்கு இஷ்டமில்லை யானால் பிச்சை கொடுக்காமல் இருந்து நரகத்துக்கு போகும்படியும் எதற்காக கற்பிக்க வேண்டும் என்பது நமக்கு புலப்படவில்லை. அன்றியும் ஏதோ இரண்டொரு பணக்காரன் பிச்சை கொடுத்து தர்மம் செய்து மோட்சத்துக்கு போவதற்காகவும் பலர் பிச்சை கொடுக்காமல் இருந்து நரகத்திற்குப் போவதற்காகவும் எத்தனையோ கோடிக்கணக்கான பிச்சைக்காரர்களை ஏன் சிருஷ்டித்தார் என்பதும் நமக்கு விளங்கவில்லை. செல்வம் கடவுளால் உண்டாக்கப்பட்டதானால் ஏழையும் பணக்காரனும் கடவுளால் தானே உண்டாயிருக்க வேண்டும். இந்தப்படி ஒரு கடவுள் மூன்றையும் படைத்து ஏழைக்கும் பணக்காரனுக்கும் வாங்கும் கொடுக்கும் உத்தியோகம் கொடுத்து
இதற்கு கணக்கு எழுதி வைத்து அவனவனுக்குத் தகுந்த மோட்ச நரகத்துக்கு அனுப்பும் வேலையில் கடவுள் ஈடுபட்டிருக்கிறார் என்றால் கடவுள் பக்தர்கள் கடவுளை பரம முட்டாளாகவும் பரிசுத்த மடையனாகவும் சிருஷ்டிக்கிறார்களா. அல்லது கடவுளை பரம கருணாநிதியாகவும் பார பட்சமற்ற தந்தையாகவும் சிருஷ்டிக்கிறார்களா என்று கேட்கின்றேன். ஏழையை சிருஷ்டிப்பானேன் பணக்காரனை சிருஷ்டிப்பானேன்?' ஏழையை பணக்காரனிடம் போய் கெஞ்சும்படி செய்வானேன்? பணக்காரன். தனக்கு இஷ்டமிருந்தால் கொடுப்பதும் இஷ்டமில்லாவிட்டால் கொடுக்காமல். ஆளைவிட்டு கழுத்தைப்பிடித்து தள்ளச் சொல்லுவதும் ஏன்? என்பவைகளை யோசித்துப்பார்த்தால் முதலில் இந்த தத்துவம் உண்மையாய் இருக்குமா என்பதே பெரிய சந்தேகமாய் இருப்பதோடு பரிசுத்த ஆஸ்திகத் தன்மையுடன் கடவுளை சிருஷ்டித்துப் பிரசாரம் செய்கின்ற மக்கள் எவ்வளவு முட்டாள் களாய் இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலையாகும்.
கடவுள் பார்த்து ஒரு உத்திரவில் அல்லது ஒரு சங்கல்பத்தில் எல்லாப் பொருளும் எல்லா மக்களுக்கும் பொதுவாய் இருக்கத்தக்கது என்று செய்துவிட முடியாதா? என்று கேட்பதோடு எல்லா ஜீவன்களையும் தானே சிருஷ்டித்து தானே நடத்துகிறவனாய் இருக்கிறபடியால் ஒன்றை ஒன்று துன்புறுத்தவோ ஒன்றை ஒன்று கொன்று தின்னவோ கூடாது என்று நிர்ணயித்து விட முடியாதா என்று கேட்கின்றேன். உண்மையாகவே ஒரு யோக்கியமான கடவுள் இருந்தால் இதை செய்திருக்க மாட்டாரா என்றும் கேட்கின்றேன்.
இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார். களானால் ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்து விட்டாரே, இவர் கடவுளுக்கும் பெரியவரா? என்று கேட்கிறேன்.
ஆதலால் தர்மம் - பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர். களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர - பணக்காரத் தன்மையை காப்பாற்ற ஏற்படுத்தப் பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
குடி அரசு - 1936 (1) 320
ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான் இல்லாத ஏழை மக்களை - தரித்திரவாசிகளான. மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும்.அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழை மக்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே
தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.
பிச்சைக்காரர் இருப்பதும், அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜனசமூகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும் இழிவுமாகும் என்பதோடு ஒரு கடவுள் இருந்தால்
அக் கடவுளுக்கு மிகுந்த அவமானமும் அயோக்கியத்தனமான காரியமுமாகும்.
இந்தக் கருத்தை வைத்தே திருவள்ளுவரும் “பிச்சை எடுத்து வாழ வேண்டிய மனிதனை கடவுள் சிருஷ்டித்து இருப்பானேயானால் அக்கடவுள் இல்லை யென்றுதான் அருத்தம், அவன் இருந்தாலும் ஒழிய வேண்டியதே அவசியம்'” என்று சொல்லியிருக்கிறார்.
திருவள்ளுவர் நூலில் முன்னுக்குப்பின் முரண்கள் பல இருந்தாலும்,
அவர் ஒரு தனிஉடமைக்காரரேயானாலும் இந்த ஒரு விஷயத்தில் தைரியமாய்ச் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும் இதற்கு முரணாக மற்றொரு இடத்திலும் சொல்லி இருக்கிறார். அதாவது “தர்மம் செய்தவனையும் பாவியையும் பார்க்க வேண்டுமானால் பல்லக்கில் போகிறவனையும் பல்லக்கு சுமப்பவனையும்
பார்” என்று சொல்லியிருக்கிறார். ஆகவே இதிலிருந்து தர்மம் செய்ததி னாலேயே பல்லக்கில் போகும்படியான செல்வவானாகப் பிறந்தான். என்றும், தர்மம் செய்யாததினாலேயே பல்லக்குத் தூக்கும் தரித்திரனாகப் பிறந்தானென்றும் சொல்லுகிறார்.
அப்படியானால் ஏழை பணக்காரத்தன்மையை திருவள்ளுவர்
ஆதரிக்கிறார் என்பதாக ஒரு புறத்தில் விளங்குகிறது. இந்த முரணும் மயக்கமும் ஏற்பட்டதற்குக் காரணம் இவருக்கு கடவுள் தன்மையில் ஆத்மார்த்ததில் இருந்த நம்பிக்கையேயாகும். கடவுள் தன்மை அதாவது “மனிதத்தன்மைக்கு மீறின ஒரு சக்தி இருக்கிறது. அதற்கும் உலக நடவடிக்கைகளுக்கும் சம்மந்தம் உண்டு” என்று எவன் கருதினாலும் அப்படிப்பட்டவன் முன்னுக்குப்பின் முரணாகவும், தனி உடமைக்காரனாகவும், உயர்வு தாழ்வை ஆதரிக்கிறவ னாகவும் இருந்துதான் தீருவான்.
எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால் பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்டவிரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான். மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை
321 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சர்க்காரே ஏற்றுக்கொண்டு அதற்கு பணம் வேண்டுமானால் பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிருஸ்து சொன்ன கணக்குப்படியோ முகம்மது நபி சொன்ன கணக்குப்படியோ சர்க்கார் வசூலித்து அதற்கு ஒரு இலாக்கா வைத்து வினியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை
சர்க்கார் தொழில்சாலைகள் வைத்து அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலை வாங்கிக்கொண்டு வினியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக
சர்க்கார் எந்த தொழில்சாலை வைக்கிறார்களோ அந்த மாதிரி தொழில்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்
இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும் பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே தர்மம் செய்வது அக்கிரமம் என்றும், ஜன சமூகத்துக்கு தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு ஆட்சி என்றும் சொல்லுகிறேன்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஏப்ரல் 1936
322 323 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
குடி அரசு - 1936 (1)
இஸ்லாம் மார்க்கத்துக்கும்
இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை
இஸ்லாம் மத ஓழுக்கம்
மதுபானம் கூடாது.
1.
2
சூதாடுதல் கூடாது
விபசாரம் கூடாது
3
4
வட்டி வாங்குதல் கூடாது
போர் செய்தல் கூடாது
5
இந்து மத ஒழுக்கம்
1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்)
2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்)
3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை)
4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்)
5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச
தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்)
மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இஸ்லாம் மதம், கிருஸ்தவ மதம் ஆகிய மதங்கள் எல்லாம் ஒன்றே.
கடவுள்
இந்து மதத்தில் பல கடவுள்கள் உண்டு
இஸ்லாம், கிறிஸ்து மதங்களில் ஒவ்வொரு கடவுள் தான் உண்டு
கடவுள் சாயல்
இந்துமதம் கடவுளை மனிதனாகவே மனித ரூபகமாகவே
பாவிக்கிறது. இஸ்லாம்மதம் கடவுளை மனிதனாகக் கூறுகிறது. அதாவது கடவுளை ஆண்டவன் அவன் இவன் என்று சொல்லுகிறது.
உலக சிருஷ்டி
இந்து மதம் கடவுளால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறுகிறது.
இஸ்லாம் மதமும் உலகம் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டதென்றே
கூறுகிறது
பாவ புண்ணியக் கணக்கு
இந்து மதத்தில் மனிதனுடைய செய்கையை குறித்து வைத்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். சித்திரபுத்திரன் எழுதி வைப்பார்.
இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைகளைக் குறித்து பாவ புண்ணியம் கணக்கு வைக்கப்படும். இரண்டு தூதர்கள் எழுதி வைப்பார்கள்.
சொர்க்க நரகம்
இந்து மதத்தில் மனிதனுடைய பாவத்துக்கு நரகமும் புண்ணியத்துக்கு சொர்க்கமும் உண்டு
இஸ்லாம் மதத்தில் மனிதனுடைய செய்கைக்கு பாவத்துக்கு நரகம், புண்ணியத்துக்கு சுவர்க்கமும் உண்டு.
ஏழு நரகம்
இந்துக்களுக்கு 7 நரகம் உண்டு இஸ்லாம்களுக்கு 7 நரகம் உண்டு.
தூதர் பிசாச
இந்துக்களுக்கு தேவ தூதர்களும் பிசாசும் உண்டு.
இஸ்லாம் மதத்துக்கும் தேவ தூதர்களும் பிசாசுகளும் உண்டு
நான்கு வேதம்
இந்துக்கள் வேதங்களுக்கு ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என: நான்கு பெயர்கள்.
இஸ்லாம் வேதத்துக்கு தைரத்து, ஐபூரு, இஞ்சிலு, குர்ஆன் என நான்கு பெயர்கள்
குடி அரசு- 1936 (1) 324
அவதார புருஷர்
இந்துக்களுக்கு அவதார புருஷர்கள் தெய்வாம்ச புருஷர்கள் ஆகிய லக்ஷக்கணக்கான ஆழ்வார்கள், நாயன்மார்கள் உண்டு
இஸ்லாம் மார்க்கத்துக்கும் லக்ஷக்கணக்கான தேவதூதர்கள், நபி மார்கள் ஆகியவர்கள் உண்டு
புண்ணிய ஸ்தலங்கன்
இந்துக்கு புண்ணிய ஸ்தலங்கள் உண்டு
இஸ்லாம் மார்க்கத்துக்கும் புண்ணிய ஸ்தலமுண்டு
பண்டிகை
இந்துக்களுக்கும் பண்டிகை விரதாதிகள் உண்டு
முஸ்லீம் மார்க்கத்துக்கும் பண்டிகை விரதங்கள் உண்டு.
தொழுகை
இந்துக்களுக்கும் தொழுகை, பிரார்த்தனை இவற்றிற்கு முறைகள், கணக்குகள் உண்டு.
இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொழுகை பிரார்த்தனை கணக்குகள் முறைகள் உண்டு
தான தர்மம்
இந்துக்களுக்கும் தான தர்மங்கள் உண்டு.
இஸ்லாம் மார்க்கத்திலும் தான தர்மங்கள் உண்டு.
விசேஷ நான்
இந்துக்களுக்கு விசேஷ நாள், ஓய்வு நாள் உண்டு
இஸ்லாம் மார்க்கத்திலும் விசேஷ நாள் ஓய்வு நாள் உண்டு.
மற்றவர்கள் மட்டமானவர்கன்
இந்துக்கள், இந்து அல்லாதவர்களை மிலேச்சர்கள் என்கிறார்கள்.
இஸ்லாம் மதத்தில் இஸ்லாம் அல்லாதவர்களை காபர்கள் என்கிறார்கள்.
உள் பிரிவு
இந்து மதத்திலும் உள் பிரிவுகள் உண்டு
இஸ்லாம் மதத்தில் உள் பிரிவினர்கள் உண்டு
325 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
யுத்தம்
இந்து மதத்தில் மத யுத்தம் நடந்திருக்கிறது.
இஸ்லாம் மதத்திலும் மத யுத்தம் நடந்திருக்கிறது
சடங்கு
இந்து மதத்திலும் சடங்குகளும் மந்திரங்களும் உண்டு. இஸ்லாம் மதத்திலும் சடங்குகள் மந்திரங்கள் உண்டு
செத்தவர் சரீரம்
இந்து மதத்திலும் செத்தவர்களுக்கு சரீரம் கொடுக்கப்பட்டு விசாரணை நடக்கும்.
இஸ்லாம் மதத்திலும் செத்தவர்கள் எழுப்பப்பட்டு விசாரணை நடக்கும்
சமாதுக்கு கிபிகை
இந்து மதத்திலும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு
இஸ்லாம் மதத்துக்கும் இறந்து போன பிணத்துக்கு கிரிகைகள், மந்திரங்கள், மரியாதைகள் உண்டு
ச௪மாது வணக்கம்
இந்துக்களுக்கும் சமாது வணக்கம் உண்டு
இஸ்லாம்களுக்கும் சமாது வணக்கம் உண்டு
புனித ஸ்தலங்கன்
இந்துக்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்கு (அடக்கமானதற்கு) ஆக விசேஷ ஸ்தலங்கள் உண்டு
இஸ்லாம்களுக்கும் சிலர் புதைக்கப்பட்டதற்காக விசேஷ ஸ்தலங்கள் உண்டு. மேல்கண்ட அனேக விஷயங்களில் கிறிஸ்தவ மதமும் இதை அனுசரித்தேதான் இருக்கின்றது ஆகவே பொதுவாக மதம் என்றால் கடவுள், நல்வினை, தீவினை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் இறந்த பிறகு இவைகளை அனுபவித்தல் சடங்கு மந்திரங்கள் என்பவை இல்லாமல் எந்த மதமும்
இருக்க முடிவதில்லை.
குடி அரசு - 1936 (1) 326
ஒருமனிதன் கடவுள் என்பதை ஒப்புக்கொண்டு சொர்க்க நரகம், நல்வினை, தீவினை, பாவம் புண்ணியம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளா விட்டால் நாஸ்திகனாய் விடுகிறான். நல்வினை தீவினை என்பவைகளோ மதத்துக்கு ஒரு விதமாய் இருக்கிறது. இந்துவுக்கு கள் குடிப்பது பாவமல்ல. முஸ்லீம்களுக்கு கள் குடிப்பது பாவம். முஸ்லீமுக்கு மாட்டைக் கொல்வது - தின்பது பாவமல்ல. இந்துவுக்கு மாட்டைக் கொல்வது - தின்பது பாவமாகும்.
இதுபோல் இன்னும் அனேக விஷயம் உண்டு. ஆதலால் மதம் என்பது எல்லோருக்கும் ஒன்று போலவே இருந்தாலும் மத சம்பிரதாயம் வேறு
வேறாய் இருந்து வருகிறது மதசம்பிரதாயங்களைப் பார்க்கும் போது சொர்க்க நரக விஷயத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோல்தான் என்றும், நல்வினை தீவினை என்பதும், பாவ புண்ணியம் என்பதும் எல்லா மதத்திலும் கட்டுப்பாடுகள் என்றும், ஆனால் அந்த அந்த மதக்காரர்களின் காலதேசத்துக்கு தக்கபடி செளகரியத்துக்கு தக்கபடி ஏற்பாடு செய்து கொள்ளப்பட்டவைகள் என்றும் விளங்கும்
குடி அரசு - கட்டுரை - 03.05.1936
3277 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கடவுள்
வினா கடவுளைப்பற்றிப் பொதுவாக ஜனங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை விளக்கிக் கூறு
விடை- கடவுள் வான மண்டலத்தையும், பூமியையும், அதிலுள்ள சகல சராசரங்களையும் படைத்தவன் என்று மக்களில் பெரும்பாலார் நம்புகிறார்கள்
வினா?- அப்புறம்? விடை கடவுள் சர்வஞானமுடையவனாம், யாவற்றையும் பார்க்கிறானாம். பிரபஞ்ச முழுதும் அவனது உடமையாம். சர்வ வியாபியாம்.
வின௱- கடவுள் ஒழுக்கத்தைப்பற்றி ஜனங்கள் என்ன சொல்லுகிறார்கள்.
விடை:- அவன் நீதிமானாம்; புனிதனாம்
வினா?- வேறு என்ன?
விடை- அவன் அன்பு மயமானவனாம்.
வினா:- கடவுள் அன்பு மயமானவனென்று ஜனங்கள் எப்பொழுதும் நம்புகிறார்களா?
விடை:- இல்லை. மக்கள் அறிவும் ஒழுக்கமும் உயர உயர கடவுள் யோக்கியதையும் விருத்தியடைந்து கொண்டே போகிறது
வினா?- உன் கருத்தை நன்கு விளக்கிக் கூறு விடை காட்டாளன் கடவுள் ஒரு காட்டாளனாகவும், திருடனாகவும் இருந்தான். அராபித் தலைவன் கடவுளான ஜாப் ஒரு கீழ் நாட்டு யதேச்சாதிகாரியாக இருந்தான். யூதர்கள் கடவுள் போர் வெறியனாயும் பழிக்குப்பழி வாங்கும் குணமுடையவனாகவும் இருந்தான். கிறிஸ்தவர் கடவுளோ அற்பாயுளுடைய மக்கள் செய்யும் குற்றங்களுக்கு நித்திய நரக தண்டனை வழங்கக்கூடியவனாக இருக்கிறான்.
வினா?- கடவுளைப்பற்றிய வேறு அபிப்பிராயங்கள் என்ன? விடை- மக்கள் மனோ வாக்குக் காயங்களினால் செய்யும் காரியங்களில் அவன் சிரத்தையுடையவனாக இருக்கிறானாம்
வினா?- ஏன்?
குடி அரசு - 1936 (1) 328
விடை:- அவனுக்கு விருப்பமான காரியங்களை நாம் செய்தால் பரிசளிக்கவும் விருப்பமில்லாத காரியங்களைச் செய்தால் தண்டனையளிக்கவும் வினு- கடவுளுக்கு என்ன என்ன பெயர் வழங்கப்பட்டிருக்கின்றன?
விடை2- ஒவ்வொரு தேசத்தாரும் கடவுளை ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள். கிரேக்கர்கள் ஜ்யூயஸ் என்றும், ரோமர்கள் ஜோவ் என்றும், பார்சிகள் ஆர்முஸ்ஜித் என்றும், ஹிந்துக்கள் பிரம்மம் என்றும், யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஜிஹோவா என்றும், முகமதியர் அல்லா என்றும் கடவுளை அழைக்கிறார்கள்.
வினா கடவுளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேறு பெயர்கள் எவை? விடை பரம்பொருள், அனந்தன், மூலகாரணன், பரமாத்மா, நித்தியசக்தி, பிரபஞ்சம், இயற்கை, மனம், ஒழுங்கு முதலியன.
வினு- ஆனால் ஜனங்கள் சொல்லும் கடவுள் ஒரே பொருளைத்தானா குறிக்கிறது? விடை இல்லை.சிலர் கடவுளை ஒருஆளாக பாவனை செய்கிறார்கள். சிலர் ஒரு கருத்தெனக் கூறுகிறார்கள். வேறு சிலர் சட்டம் என்கிறார்கள். மற்றும் அறிய முடியாத ஒரு சக்தி என்கிறார்கள். ஒரு கூட்டத்தார் கடவுள். பூரணன் என்கிறார்கள். பின்னும் சிலர் ஜடப் பொருளும் மனமும் ஐக்கியப்படும் நிலையே கடவுள் என நம்புகிறார்கள். வினா மக்கள் எப்பொழுதும் ஒரே கடவுளில் நம்பிக்கை வைத்து வந்திருக்கிறார்களா? விடை மக்களில் பெரும்பாலார் ஒரு கடவுள் அல்லது பல கடவுள்கள் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறார்கள்
வினா₹- ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளுண்டா? விடை பல கடவுள்கள் உண்டென்றே பொதுவாக நம்பப்படுகிறது
வினா?- பல கடவுள்களை நம்புகிறவர்களுக்கு என்ன பெயர் அளிக்கப்படுகிறது?
விடை பல கடவுளை நம்புவோர் பல தெய்வவாதிகள், ஒரே கடவுளை: நம்புவோர் ஏக தெய்வவாதிகள் வினா சில பலதெய்வாதிகளின் பெயர் சொல்லு
விடை:- எகிப்தியர், ஹிந்துக்கள், கிரேக்கர், ரோமர் வினா ஏக தெய்வ வாதிகள் யார்?
விடை௭- யூதர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்.
வினா₹- இவர்கள் எல்லாம் எப்பொழுதுமே ஏக தெய்வவாதிகளாக இருந்தார்களா?
3299 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை இல்லை. ஆதியில் எல்லா ஜாதியாரும் பல தெய்வங்களையே வணங்கி வந்தார்கள்.
வினா?- பல தெய்வ வாதிகளின் கடவுள்கள் எவை? விடைட சூரியன், சந்திரன், ஆவிகள், நிழல்கள், பூதங்கள், பேய் பிசாசுகள், மிருகங்கள், மரங்கள், மலைகள், பாறைகள், நதிகள் முதலியன.
வினா₹- இவைகள் எல்லாம் கடவுளாக நம்பப்பட்டதாய் உனக்கு எப்படித் தெரியும்?
விடை:- எப்படியெனில் ஜனங்கள் அவைகளை வணங்குகிறார்கள்; அவைகளுக்கு ஆலயங்கள் கட்டினார்கள்; விக்கிரகங்கள் உண்டு பண்ணினார்கள்; அவைகளுக்கு பூஜைகள் நடத்தினார்கள்.
வினா?- இந்த தெய்வங்கள் எல்லாம் ஒரே மாதிரி மகிமையுடையன வென்று ஜனங்கள் நம்பினார்களா? விடை எல்லாக் கடவுள்களுக்கும் மேலான ஒரு கடவுளுக்கு அவை அடிமைகள் அல்லது சின்னங்கள் என்று அறிவாளிகளான சொற்பப் பேர் நம்பினார்கள்
வினா£- அறிவில்லாதவர்களோ?
விடை?- அவைகளில் சில அதிக சக்தியுடையவை என்றும், சில கருணையுடையவை என்றும், சில அழகானவை என்றும், சில அதிக புத்தியு/டையவை என்றும் நம்பினார்கள் வினா கடவுள் உற்பத்திக்கு அவர்கள் என்ன காரணம் கூறுகிறார்கள். விடை: கடவுள் உற்பத்திக்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.
வினா?- அவற்றுள் சிலவற்றை விளக்கு
விடை- முதற்காரணம், ஆதிகால மக்கள் அறிவில்லாதவர்களாக குழந்தைகளைப் போல் பயங்காளிகளாயும் இருந்தார்கள். எனவே தனக்கு அறியமுடியாதவைகள் மீது அவர்களுக்குப் பயமுண்டாயிற்று. கண்ணால் காணமுடியாத ஏதோ ஒன்றே பயத்தை உண்டு பண்ணுகிறதென்று நம்பினார்கள். இரண்டாவது: மக்கள் பலவீனராயும், உதவியற்றவராயுமிருப்பதினால் அவர்களுக்கு உதவியளிக்கக்கூடிய சர்வ சக்தியுடையவொன்று இருக்க வேண்டுமென்று நம்பினார்கள் மூன்றாவது மனிதன் இயல்பாக நேச மனப்பான்மையுடையவன்,
பிறருடன் கலந்து பழகவே அவன் எப்பொழுதும் விரும்புகிறான். எனவே தன்னைச் சூழ்ந்திருக்கும் அறிய முடியாத சக்திகளை அறியவும், அவற்றுடன். சம்பந்தம் வைத்துக்கொள்ளும் விரும்புகிறான். இறுதியில் அறியமுடியாத சக்திகளைக் கடவுளாக உருவகப்படுத்திக்கொள்கிறான்.
குடி அரசு- 1936 (1) 330
நான்காவதுஉ தெய்வ நம்பிக்கைக்கு மரணமே முக்கிய காரணம்
வினா- அது எப்படி? விடை நமக்கு உலகத்தில் சிரஞ்சீவியாக வாழமுடியுமானால் தெய்வங்களைப்பற்றியோ, தெய்வீக சக்திகளைப்பற்றியோ நினைக்கத் தேவையே உண்டாகாது. மரணம் உண்டு என்ற உணர்ச்சியினாலேயே மறு ஜென்மத்தைப்பற்றியும், பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமாக இருக்கும் ஒன்றைப்பற்றியும் யோசிக்க வேண்டியதாக ஏற்படுகிறது. பிராணிகளுக்கு மரணத்தைப்பற்றிய சிந்தனையே இல்லாததினால் கடவுளும் இல்லை. வினாஉ தெய்வங்களின் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதா? விடை இல்லை. அது குறைந்துகொண்டே போகிறது.
வினா?- ஏன்? விடை மக்களது அறிவும் சக்தியும் வளர வளர தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை விருத்தியடைகிறது
வினா£- அறிவில்லாதவர் கடவுள்களை விட அறிவுடையோர் கடவுள் குறைவா?
விடை: ஆம். நாகரிகமில்லாதவர்களே பல தெய்வங்களை வணங்குகிறார்கள்
வினா₹- ஏக தெய்வவாதிகள் நிலைமை என்ன? விடை இப்பொழுதும் பெரும்பாலார் ஏக தெய்வ நம்பிக்கையுடை யவர்களாகவே இருக்கிறார்கள்.
வினா£- கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களும் இருக்கிறார்களா? விடை ஆம். அதிகம் பேர் இருக்கிறார்கள்.
வினா அவர்கள் ஏன் கடவுளை நம்பவில்லை?
விடை:- பொதுஜனங்கள் சங்கற்பப்படியுள்ள கடவுள் நமது அறிவுக்கு அதீதமானதென்று அவர்கள் கூறுகிறார்கள். வினா கடவுள் உண்மையை நிருபித்துக் காட்ட முடியாதா?
விடை௦ சிலர் முடியும் என்கிறார்கள்; சிலர் முடியாது என்கிறார்கள்.
வினா₹- கடவுளுண்மைக்கு கூறப்படும் ஆதாரங்கள் எவை? விடை முதல் ஆதாரம் காரண காரிய வாதம்
வினா₹- அதை விளக்கிக் கூறு விடை எதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். எனவே
பிரபஞ்சத்துக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்த கர்த்தாவே கடவுள்.
வினா இது ஒரு பலமான வாதமல்லவா? 331௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை?- பலமான வாதந்தான், ஆனால் முடிவானதல்ல.
வினா?- ஏன்?
விடை: யாவற்றிற்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமானால்
கடவுளுக்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமே
வினா- கடவுள் அனாதியாக இருக்கக் கூடாதா? விடை காரணமில்லாமலே கடவுளுக்கு இயங்க முடியுமானால் காரணமில்லாமல் காரியமில்லை என்ற வாதமே அடியற்று வீழ்ந்து விடுகிறது.
வினா?- அப்புறம்?
விடைட காரணமின்றி அனாதி காலமாக கடவுள் இயங்க முடியுமானால், பிரபஞ்சமும் எக்காரணமுமின்றி அனாதிகாலாமாக இயங்க முடியும்?
வினா?- கடவுளுக்கும் ஒரு காரணமுண்டு என சம்மதித்தால் என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?
விடை:- அப்படியானால் அந்தக்காரணத்துக்கு மூலகாரணமென்ன வென்று ஆராய வேண்டியதாக ஏற்படும். அவ்வாறு ஆராயத் தொடங்கினால் முடிவே ஏற்படாது
வினா?- வேறு வாதமென்ன? விடை பூரணத்துவ வாதம்
வினா?- அது என்ன? விளக்கிக் கூறு?
விடை:- அதாவது நாம் அபூரணராக இருந்தாலும் (குறைபாடுடை யவர்களா இருந்தாலும்) பூரணமான ஒரு பொருள் உண்டென்ற உணர்ச்சி நமக்கு இருந்துகொண்டு இருக்கிறது. அந்த உணர்ச்சி அந்தப் பூரணப் பொருளின் சாயல் என்று நம்பப்படுகிறது.
வினா£- அதனால் நாம் ஊகிக்க வேண்டியதென்ன? விடைஉ- அந்த உணர்ச்சி நமது உள்ளத்து இருந்துகொண்டு இருப்பதினால். அதற்கு ஆதாரமாக ஒன்று இருக்க வேண்டுமென்றும், அதுவே கடவுள் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது
வினா?- மேலும் கொஞ்சம் விளக்குக! விடை ஒரு பூரண வஸ்துவின் பிரதிபிம்பம் நமது உள்ளத்துத் தோன்றவேண்டுமானால் அது உள்பொருளாக இருக்க வேண்டும். அது உள்பொருளாக இல்லையானால் பூரணமாக இருக்க முடியாது
வினா- அப்படியானால் முடிவு என்ன? விடை கடவுளைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதினால்
கடவுள் ஒன்று இருக்கவேண்டும். அப்படி ஒன்று இல்லையானால் நமக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டிருக்கவே செய்யாது என்பதுதான் முடிவு
குடி அரசு - 1936 (1) 332.
வினா₹- இந்த வாதம் சரியானதுதானா?
விடைட முதல்வாதத்தைப்போல இது அவ்வளவு உறுதியானதல்ல
வினா?- ஏன்? விடை பூரணத்துவம் ஒரு குணம். உண்மை ஒரு நிலைமை. அவை இரண்டும் சம்மந்தமற்றவை. ஒரு பெரிய பட்டணம் கடலில் ஆழ்ந்து கிடப்பதாகவோ, மேக மண்டலத்தில் மிதந்துகொண்டிருப்பதாவோ நமது உள்ளத்து ஒரு உணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு பட்டணம் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அதுபோல ஒரு பூரண வஸ்துவைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதினால் ஒரு பூரண வஸ்து இருக்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை.
வினா?- வேறொரு உதாரணத்தினால் விளக்கிக் காட்டு. விடை௭ பூமி பரந்திருப்பதாக வெகுகாலம் மக்கள் நம்பிவந்தார்கள். அந்த உணர்ச்சி உலகத்தின் பிரதிபிம்பமாக இருக்க முடியாது. ஏனெனில் பரப்பான பூமி இல்லவே இல்லை.
வினா: அப்படியானால் பூரண வஸ்துக்களும் அபூரண வஸ்துக்களும் நமது மனோ கற்பிதம் தானா? விடை ஆம்
வினா:- அடுத்த வாதம் என்ன? விடை அடுத்தது உருவக வாதம்
வினா?- அதை விளக்கு, விடை வினாடி, நிமிஷம், மணி காட்டும் முறையில் ஒரு கடிகாரம் உருப்படுத்தப்பட்டிருப்பதினால் அது ஒரு நோக்கத்துடன் உண்டு பண்ணப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டுமென்றும் நாம் அறிகிறோம். அதுபோல உலகமும் ஒரு நோக்கத்தோடு சிருஷ்டிக்கப்பட்டிருப் பதினால் அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்த கர்த்தாவே கடவுள் வினா இந்த வாதம் எப்பேர்ப்பட்டது?'
விடை2- கடிகாரத்தை உலகத்துக்கு உவமையாகக் கூற முடியாது கடிகாரம் எதற்காக உண்டு பண்ணப்பட்டதென்று கூறிவிடலாம். ஆனால் உலகம் எதற்காக உண்டுபண்ணப் பட்டதென்று கூறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
வினா பிரபஞ்ச அமைப்பு கடிகார அமைப்புப்போல அவ்வளவு தெளிவான தல்லவா? விடை தெளிவாக இருந்தால் இரகசியங்களுக்கு இடமே இல்லை வினா கடிகாரத்தைப்பற்றி நாம் பூரணமாக அறிந்திருப்பது போல பிரபஞ்சத்தைப்பற்றி நாம் பூரணமாக அறியவில்லை யென்று நீ கூறுகிறாயா?
333 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை2- ஆம். கடிகாரத்தின் அமைப்பை நமக்குத் தெளிவாக விளக்கிக் கூற முடியும். பிரபஞ்ச அமைப்பைத் தெளிவாக விளக்கிக்கூற முடியாது
வினா?- இந்த வாதத்தைப்பற்றி வேறு ஏதாவது சொல்ல வேண்டிய துண்டா? விடைட கடிகாரத்தைப் பார்த்தவுடன் அதை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்கவேண்டுமென்று அறியலாமேயன்றி கடிகார உற்பத்திக்குக் காரணமான பொருள்களை யுண்டுபண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டு மென்றும் சொல்லமுடியாது.
வினா?- வேறு என்ன?
விடை?- உலகத்தை உண்டு பண்ணியவன் ஒருவன் உண்டென்று ஒப்புக்கொண்டாலும் உலகத்தை சிருஷ்டித்தவன் ஒருவன் இருப்பதாக
நமக்கு ரசுப்படுத்த முடியாது வினா இம்மாதிரியான சங்கடங்கள் பல இருப்பதினால் பிரஸ்தாப விஷயத்தில் நாம் கைக்கொள்ள வேண்டிய நிலை என்ன?
விடைட நாம் அந்தரங்க சுத்தியோடு ஆராயவேண்டும். பிடிவாதமாக எதையும் நம்பக்கூடாது. திறந்த மனத்தோடு உண்மையை அறிய முயல வேண்டும்!
வினா?- கடவுள் என்ற பெயரை நாம் எந்தப் பொருளில் வழங்க வேண்டும்? விடை ஜீவகோடிகளின் உயர்ந்த லக்ஷ்யத்தைக் குறிக்கும் பொருளாகவே நாம் வழங்கவேண்டும்
வினாஉ அப்படியானால் சிலரின் தெய்வங்கள் உத்தமமானவை என்றும், சிலரின் தெய்வங்கள் மோசமானவை யென்றும் ஏற்படாதா? விடைஉ ஆம். நிச்சயமாக ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன்
லக்ஷ்யத்துக்கும் கடவுளுக்கும் அளவு கோலாக இருக்கிறான்.
வினா?- மேலும் கொஞ்சம் விளக்கு
விடை:- நமது கண் பார்வை எட்டும் அளவுக்கே நமக்குப் பார்க்க
முடியும். அதுபோல நமது மனோகக்திக்குஇயன்ற அளவிலேநமக்குசிந்திக்கவும்
விரும்பவும் முடியும் வினா£- அப்படியானால் கடவுளை சிருஷ்டித்தது யார்? விடை ஒவ்வொருவனும் தன் கடவுளை சிருஷ்டித்துக் கொண்டான்.
குடி அரசு - வினா விடை - 03.05.1936
குடி அரசு- 1936 (1) 334
அசம்பவியில் வெண்ணெய் வெட்டிகள்
“அரசியல் என்பது யோக்கியமான வழியில் வாழ்க்கை நடத்தத் தகுதியற்றவர்களின் கடைசி வயிற்றுப்பிழைப்பு மார்க்கம்” என்பதாக மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியிருப்பது யாவரும் அறிந்ததே யாகும்
அதைநமது நாட்டு பார்ப்பன தேசிய வாதிகள், தேசாபிமானத்தலைவர்கள் என்பவர்கள் மெய்ப்பித்துக்காட்டி விட்டார்கள். வக்கீல் வேலையிலும், வியாபாரத்திலும், தாசித்தொழிலிலும் பிரவேசிக்கின்றவர்களுக்கு எப்படி நாணயம், ஒழுக்கம், சத்தியம் முதலியவைகள் வேண்டியதில்லையோ - இருக்க முடியாதோ - இருக்கக்கூடாதோ அது போல் நமது தேச பக்த
கூட்டங்களுக்கும், தேசீயத் தலைவர்களுக்கும் நாணயமும், ஒழுக்கமும், சத்தியமும் சிறிதுகூட இல்லாமல் போய் விட்டன. இவர்களுக்கு வேண்டிய தெல்லாம் எப்படி பாமர மக்களை ஏய்ப்பது, எந்த இழிவான காரியம் செய்தாவது ஸ்தானங்களைக் கைப்பற்றுவது என்கின்ற இரண்டு காரியங்களேயாகும்.
ஆதலால் நம் தேசீயத் தலைவர்கள் இந்த இரண்டு காரியங்களிலும் முதல் நெம்பர் கெட்டிக்காரர்களாகி இன்று அரசியலில் தலை சிறந்து விளங்குகிறார்கள். இந்தக்கூட்டத்தாரின் தேசாபிமானமும், தேசீய வெற்றியுமெல்லாம் பாமரமக்கள் சரியானபடி ஏய்க்கப்பட்டார்களா, அரசியல் பதவிகள் எல்லாம் தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கு பயன்படும்படி கைப்பற்றப்பட்டனவா என்பதை லக்ஷயமாய்க் கொண்டனவேயாகும் இதைநமது வாலிபர்களும் ஏழைப் பாமரமக்களும் உணராமல் ஏமாந்து போய் இந்த ஒழுக்கங்கெட்ட, நாணயங் கெட்ட பித்தாலாட்டக் கூட்டத்தாருக்கு அடிமையாகி தங்கள் சமூக நலனைக் கெடுத்து நாசமடைந்து வருகிறார்கள். இம்மாதிரியான பித்தலாட்டக் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதே முக்கிய விடுதலை என்றும், மனிதனின் சுயமரியாதை என்றும் கருதி 10, 15 வருஷ காலமாகவே நாம் முயற்சித்து வருகிறோம் அம்முயற்சியைப் பார்ப்பன தேசீய வீரர்களும், தேசியத் தலைவரும் தொடர்ந்து கட்டுப்பாடாய் குறைகூறி விஷமப் பிரசாரம் செய்து எதிர்த்து வருகிறார்கள். இவ்வெதிர்ப்புகளை அவர்களது அடிமையாய் இருந்தாலொழிய பிழைக்க முடியாது என்று கருதி இருக்கும் சில ஈனர்களும் ஆதரித்து வந்து பார்ப்பனரிடம் பாத தீர்த்தம் பெறுகிறார்கள்.
335 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
என்ன தான் குறைகூறி, எவ்வளவுதான் விஷமப் பிரசாரம் செய்து
வந்தாலும் ஏதாவது ஒரு காலத்தில் உண்மை வெளிப்படாமல் போவதில்லை. உதாரணமாக இந்திய சட்டசபை தேர்தலின் போது பார்ப்பனர்களும் அவர்களது அடிமைகளும் வெற்றிபெற பார்ப்பன தேச பக்தர்களும், பார்ப்பன தேசீயத் தலைவர்களும் செய்த காரியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல அரசியலைப் பற்றி மேனாட்டு அறிஞர் ஒருவர் சொன்னதற்கு மேலாகவே நடந்து காட்டினார்கள். அதனால் மக்கள் நன்றாய் ஏமாற்றப்பட்டார்கள்.
ஓட்டுப் போட்டு விட்டு வீடு திரும்புவதற்கு முன் வெள்ளைக்கார அரசாங்கம் ஆகாயக் கப்பலில் ஓடிவிடும் என்றும், அரிசியும் பருப்பும் அன்றாடம் தபாலில் விலையில்லாமல் வீடு வந்து சேரும் என்றும் தங்கள் அனுபவிக்கும் பூமிகளுக்கு சர்க்கார் வரியே செலுத்த வேண்டியதில்லை என்றும் கருதினார்கள். ஆனால் எலக்ஷன் நடந்து இன்றைக்கு ஒன்றரைவருஷ காலமாச்சுது. என்ன பலன் ஏற்பட்டது? ஒரு வளைந்த குண்டூசிக்காவது பயன்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பதோடு அதை
சிந்தித்துப் பார்க்கக்கூட நம் பாமர மக்களுக்கு புத்தியில்லையே என்று விசனப்பட வேண்டி இருக்கிறது
மக்களின் ஒழுக்கத்தையும் புத்தியையும் கெடுக்க தேவதாசிகளும் கள்ளுக்கடைகளும் எப்படி இருக்கின்னனவோ அதுபோலவே நமது நாட்டின் மக்களின் ஒழுக்கத்தையும், புத்தியையும் மற்றொரு விதத்தில். கெடுக்க காங்கிரசும் தேசீய பத்திரிகைகளும் இருந்து வருகின்றன என்று சொல்ல வேண்டி இருக்கிறது. ஆதலால் இந்த ஸ்தாபனங்களுக்கும் அவைகளை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கும் அழிவு காலம் ஏற்பட்டு நாணயமாயும், யோக்கியமாயும் நடைபெறும்படியான ஸ்தாபனங்களும் பத்திரிகைகளும் ஏற்பட்டாலொழிய மனித சமூகம் ஒரு நாளும் உருப்படப் போவதில்லை என்பது உறுதியாகும்.
அசம்பளி தேர்தலில் வெற்றி பெற்ற தோழர்கள் அசம்பளிக்கு சென்ற ஒவ்வொருநிமிஷமும்தங்களைவிளம்பரஞ் செய்துகொண்டார்கள். அவற்றிற்கு பார்ப்பனப் பத்திரிகைகள் அளவுக்கு மேற்பட்ட விளம்பரங்கள் கொடுத்தன.
1926, 27-ல் இக்கூட்டத்தார் சுயராஜ்ஜியக் கட்சியின் பேரால் அசம்பளியில் இருந்து கொண்டு செய்த தடபுடலுக்கு சமமாக, ஆகத்தக்க அளவு செலவு செய்து பார்த்தார்கள். “சர்க்காருக்கு தோல்வி மேல் தோல்வி, காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றி” என்று பறை முழக்கினார்கள். “அரசாங்க மெம்பர்களின் வாய்கள் அடைக்கும்படியாக வீர கர்ஜ்ஜனை செய்தார்கள்.” “3 நாள், 4நாள் தொடர்ந்து பேசினார்கள்", “அரசாங்க மெம்பர்கள். தலை குனிந்தார்கள்”, “சத்தியமூர்த்தியின் வீரகர்ஜ்ஜனை, புலாபாயின் மேதாவித்தனம், அவினாசிலிங்கத்தின் ஆணித்தரமான கேள்விகள்!” என்றெல்லாம் கொட்டை எழுத்தில் போட்டார்கள். முடிவில் என்ன ஆயிற்று என்பதே அறிவாளிகள் யோசிக்கத்தக்க விஷயமாகும்.
குடி அரசு- 1936 (1) 336
நாடகத்தில் ராஜவேஷக்காரனும், மந்திரி வேஷக்காரனும், சேவுக வேஷக்காரனும் பேசும் சவடால்கள் போலவே முடிந்ததே தவிர வேறு என்னவாவது ஆயிற்று என்று யாராவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம்.
இந்திய சட்டசபைக்கு இந்த வாய்ப்பேச்சு வீணர்கள் சென்றதின். பயனாக, நடந்திருக்க வேண்டிய காரியங்கள் பல நல்ல காரியங்கள் நடக்க முடியாமல் போயின. சமூக சீர்திருத்த சம்பந்தமான சட்டங்கள் ஏதும் கொண்டு வரவோ, செய்யவோ முடியாமல் போயிற்று. இது பார்ப்பனர்களுக்கும், காந்தியாருக்கும் ஒரு வெற்றி என்று அவர்கள் மகிழலாம்.
தேசத்தின் அருமையான நேரமும், ஏழை மக்களின் ரத்தம் சிந்தி சம்பாதித்த பணமும் வெறும் நாசமாயின. 150 மெம்பர்களுக்கு நாள். ஒன்றுக்கு 20ரூபாய் என்றால் தினம் 3000 ரூபாய் தினப்படி ஆய்விட்டது இவர்கள் ரயில் சார்ஜ் விஷயத்தில் 30 ஆயிரம் ரூபாய் போல் செலவு ஆகிவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பளமே இந்த2, 3 மாதங்களுக்கும் லக்ஷக்கணக்கில் ஆகி இருக்கும். விளம்பரங்களுக்கு ஆகவும், கட்சி துவேஷத்துக்காகவும் விஷமத்தனத்துக்காகவும் கேட்கப்படும் அனாவசிய மானதும், கிருத்துருவமானதுமான கேள்விகளுக்குப்பதில் சேகரிப்பதற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவாகும். இவ்வளவும் போதாமல் கட்சி
பிரதி கட்சி காரணமாய் சர்க்காருக்கு ஆள் பிடிப்பதற்காக பல உத்தியோகங்கள் பதவிகள் உற்பத்தி செய்வதிலும், வேறு விதமான அனுகூலம் செய்வதிலும் எவ்வளவோ செலவுகளும், அசெளகரியங்களும், அனுபவிக்க வேண்டி வரும். இவ்வளவு செய்தும் ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்கின்றோம்
தோழர் புலாபாய் தேசாய் நல்ல கெட்டிக்கார வக்கீல் ஆனார், சத்திய மூர்த்தியார் பெயர் பெற்ற வாயாடி ஆனார், சில பச்சகானாக்கள் துப்பட்டிக்கு கொம்பு முளைத்ததுபோல் விளம்பரம் பெற்றார்கள்.
ஆனால் இவர்கள் அரசாங்க மெம்பர்களால் எவ்வளவு முட்டாள்கள் என்றும், தேசநலத்துக்கு விரோதமாய் வந்து விளம்பரத்துக்கு ஆக தேச நேரத்தையும் பணத்தையும் பாழாக்கினார்கள் என்றும் பட்ட வர்த்தனமாக வெளியாக்கப்பட்டு விட்டார்கள். இவை ஒருபுறமிருக்க, முக்கியமாக இக்கூட்டத்தார் இந்திய சட்ட சபைக்குச்செல்ல ஓட்டு வாங்கும்போது பொது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றினார்களா? அல்லது அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்ததையாவது ஞாபகப்படுத்திப் பார்த்தார்களா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம். வாக்குறுதிகளாவண-
1. புதிய சீர்திருத்தத்தை உடைத்து உருவில்லாமல் ஆக்கி விடுகிறோம்
2. ஒரு புதிய தேசீய சபையை கூட்டச்செய்து அதன்மூலம் இந்நாட்டு. தேவைகளை நிர்ணயித்து அதை அமுலுக்குக் கொண்டுவருவது.
3. அடக்குமுறைச் சட்டங்களை ஒழித்து விடுகிறோம் என்று சொன்னார்கள்.
337 QuRwnRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இந்த காரியங்களில் எதையாவது செய்ய முடிந்ததா, செய்ய முயற்சித்தார்களா என்பதே முக்கிய கேள்வியாகும்
முதலாவது காங்கிரஸ்காரர்கள் தங்களுக்கு போதிய பலமில்லாததால் வேறு இரண்டு மூன்று கூட்டத்தாருக்கு தாங்கள் நிபந்தனை இல்லாத அடிமைகள் ஆக வேண்டியவர்களானார்கள்.
அதாவது, வருணாச்சிரம மாளவியா கூட்டத்தாருக்கும் “வகுப்புவாத” ஜின்னா கூட்டத்தாருக்கும், முதலாளித்துவ மோடி கூட்டத்தாருக்கும் அடிமைகளாக வேண்டியவர்களானார்கள்.
இதனால் சீர்திருத்தத்தை உடைக்கவோ, வேறு ஒரு பொது பிரதிநிதித்துவக் கூட்டம் கூட்டவோ யோக்கியம் இல்லாமல் போய் விட்டதுடன், அடக்குமுறைச்சட்டங்களை ஒழிக்க இவர்களுக்குவாயளப்பைவிட வேறு காரியம் செய்ய முடியாது என்பதும் வெளிப்பட வேண்டியதாயிற்று
ஆகவே ஒரு அளவு தந்திரத்தாலும், தங்கள் கொள்கைக்கு விரோதமாக சில விட்டுக்கொடுக்கும் இழி தொழிலாலும் தாங்கள் இருப்பதாய்க் காட்டிக்கொண்டதைத் தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியாமல் போய்விட்டது
சென்னை சட்டசபையில் உள்ள ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களையும், மந்திரிகளையும் என்னவெல்லாம் குறைகூறினார்களோ அக்குறைகளுக் கெல்லாம் இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் ஆளானதோடு, காங்கிரஸ் மெம்பர்கள் ஜனப்பிரதிநிதிகள் அல்ல என்பதை கல்லின் மேல் எழுத்துப் போல் எழுதும்படியாக நடந்து கொண்டுவிட்டார்கள் என்பதை
யாராலும் மறுக்க முடியாது
சுமார் 50, 60 தீர்மானங்கள் வரை காங்கிரஸ்காரர்களால் நிறைவேற்றப் பட்டவைகளில் ஒன்றாவது சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்படாமல், அநேகமாய் எல்லாம் குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டன என்றால், காங்கிரசுக்காரர்கள் ஜனப்பிரதிநிதிகளாய் இருக்கத் தகுதி உடையவர்களா, அல்லது சுயமரியாதையுடையவர்களா என்று கேட்கின்றோம்.
சர். ஷண்முகத்தை “தோற்கடித்த வீரர்” தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியார் இன்று எங்கே இருக்கிறார்? அவரது மேல் விலாசம் என்ன? என்பது பூதக்கண்ணாடி வைத்துத் தேடவேண்டிய நிலைமையில் மறைந்து
விட்டார். அவர் ஏழைப்பாட்டாளி மக்களுக்கு செய்த மகத்தான துரோகத்தைப்
பற்றி ஒரு காங்கிரசுக்காரரோ, அல்லது ஒரு தேசீயப் பத்திரிகையோ வாயைக் கூடத் திறக்காமல் சாமி வெங்கடாசலத்தினிடம் பங்கு பெற்றுக் கொண்டன என்றால் “தேசீய வாழ்க்கை என்பது யோக்கியமாய்ப் பிழைக்க முடியாத அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம்” என்பதை பச்சையாக ௬ஜாுப்படுத்தி விட்டார்கள் என்றுதானே கருத வேண்டியிருக்கிறது
குடி அரசு- 1936 (1) 338
ஆகவே இந்த ஒன்றரை வருஷ இந்திய சட்டசபை வேலை பொது
மக்களின் பல லக்ஷ ரூபாய் பாழாகி, தொழிலாள ஏழை மக்களுக்குத் துரோகம் செய்து சில போலிகளும் போக்கில்லாதவர்களும் விளம்பரம் பெற்றார்கள் என்பதோடு முடிவடைந்துவிட்டது.
இதற்குப் பெரும்பாலும் காந்தியாரே பொறுப்பாளியாவார், காந்தி பெயரையும், காந்தியார் கும்பிடையும் காட்டியே இப்போலிகள் ஓட்டு
வாங்கினார்கள்.
காந்தியாரின் தோல், வரவர காண்டாமிருகத்தின் தோலுக்கு ஒப்பாய் விட்டதால் அவருக்கும் இதைப்பற்றி யெல்லாம் லட்சியம் இல்லாமல் மகாத்மா பட்டத்தை மாத்திரம் காப்பாற்ற வேண்டியவராய் விட்டார். ஆகவே இனியாவது பொதுமக்களுக்கும் ஏழைப்பாட்டாளி மக்களுக்கும் புத்தி வந்து தேர்தல் காலங்களில் வயிற்றுப் பிழைப்பு வியாபார தேசீயத் தலைவர்களையும் - தேசீய பத்திரிகைகளையும் நம்பி மோசம் போகாமல் புத்தியாயும், மானமாயும் நடந்து கொள்ளமாட்டார்களா. என்கின்ற ஆசையில் இதை எழுதுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 03.05.1936
339 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வேலூர் ஜில்லா போர்டுக்கு ஜே!
அப்துல் ஹக்கீம்கு ஜே!!
செளகார் அப்துல் ஹக்கீம் சாயபு அவர்கள் வேலூர் ஜில்லா போர்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அவர் கோடீஸ்வர செல்வவான், தாராளமாய் தர்மம் செய்யும் தயாளவான், கட்சி பிரதிகட்சி சார்பில்லாமல் தனக்கு தோன்றியபடி நடந்து கொள்ளுபவர் என்றாலும் பார்ப்பனர்களுக்கு மிகவும் வேண்டியவராயும் காங்கிரசுக்கு தாராளமாக கேட்டபோதெல்லாம் பணம் உதவிக் கொண்டும் இருந்து வந்தவர். ஜஸ்டிஸ் கட்சியில் பற்றில்லாதவராகவும் இருந்தவர்.
இப்படி இருந்தும் பாம்புக்கு பால் வார்த்த பயன்போல் பார்ப்பனர்கள் இவருக்கு தொந்திரவு கொடுக்க ஆரம்பித்து அவர் வேலூர் ஜில்லா போர்டுக்கு ஒரு மெம்பராகக்கூட வருவதற்கு இல்லாமல் செய்ய பலமாய் முயற்சித்து இவருக்கு போட்டியாக ஒருமுஸ்லீமை நிறுத்தி மூஸ்லீம்களுக்குள் கட்சி உண்டாக்கினார்கள்.
தோழர் அப்துல் ஹக்கீம் அவர்கள் இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் தன் இஷ்டப்படியே செய்ததுடன் “நான் ஜஸ்டிஸ் கட்சி சார்பாகவே நிற்கிறேன், என்னை யார் என்ன செய்யக்கூடும்” என்று வீரம் பேசினார். “பல கூட்டங்களில் யார் என்ன செய்தாலும் நான் பிரசிடெண்டாய் வரப்போவது நிச்சயம்!” என்று பந்தயம் கட்டினார்.
காங்கிரசின் பேரால் நின்ற பலர் தங்கள் தேர்தல் செலவுகளுக்கு சாயபு அவர்களிடமே உதவி பெற்றார்கள். சிவிக்போர்ட் மெம்பர்களிலும்
சிலர் வாய் பூசப்பட்டார்கள். இவ்வளவும் பெற்றுக்கொண்டு கடைசியில் சாயபை ஏமாற்றப்பார்த்தார்கள். கடைசியாக காங்கிரசுக்காரர்கள் என்பவர்களிலேயே 10 பேர்கள் சாயபு அவர்களை ஆதரிக்க ஓடிவிட்டார்கள். ஆகவே "எவ்வளவு அயோக்கியனாய் இருந்தாலும் 4 அணா கொடுத்து கையெழுத்து போட்டு விட்டால் யோக்கியர்களாகி விடுவார்கள்” என்று சொன்ன ஆச்சாரியாரின் வேதவாக்கு இன்று என்ன ஆயிற்று என்று கேட்கின்றோம்
காங்கிரசுக்காரர்கள் எலக்ஷன்களில் செய்த இழி தொழில்களை நினைத்தால் நம் தேசத்திற்கு சுதந்திரம் வேண்டுமா, வருமா, இந்தியர் என்னும் பேரால் ஒரு சமூகம் இருக்க வேண்டுமா? என்று கூட எண்ண வேண்டிவரும்.
குடி அரசு- 1936 (1) 340
நிற்க, இதுவரை நடந்த ஜில்லா போர்டு தேர்தல்களில் எந்த ஜில்லா போர்டிலாவது உண்மையில் காங்கிரஸ்காரர்கள் ஜெயித்தார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்களின் இழி தொழில்கள், சூழ்ச்சிகள் ஆகியவைகள் வெளியாகப்பட்டதே யல்லாமல் காங்கிரஸ்காரர்கள் யார் ஜெயித்தார்கள் என்று தான் கேட்கின்றோம்
திருநெல்வேலி தளவாய் முதலியாரும், திருச்சி தேவரும், திருப்பாப்
புலியூர் ரெட்டியாரும், திருவண்ணாமலை முதலியாரும் காங்கிரசுக்கு4 அணா கொடுத்திருந்தாலும் கதர்வேஷம் போட்டிருந்தாலும் இவர்கள் காங்கிரஸ்
காரர்கள் என்று எந்த மூடனாவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்
4 அணா கொடுத்ததும், கையெழுத்துப் போடுவதும், கதர் வேஷம் போடுவதும்தான் காங்கிரஸ்காரர்களுக்கு அடையாளம் என்றால் இவர்களை யெல்லாம் காங்கிரசுக்காரர்கள் என்று நாம் ஒப்புக்கொள்ளுகிறோம் அப்படிக்கில்லாமல் காங்கிரசுக்கு ஏதாவது கொள்கைகள் இருக்கிறது, மெம்பர்கள் ஆவதற்கு ஏதாவது சட்டதிட்டங்கள் இருக்கிறது, அதன்படி நடந்தவர்கள் - நடப்பவர்கள் தான் காங்கிரசுக்காரர்கள் என்றால் இப்போது தலைவர்களாய் இருப்பவர்கள் காங்கிரசின் விரோதிகள் என்றே சொல்லுவோம். காங்கிரசின் தோல்விக்கும், பரிதாப நிலைக்கும் இந்த பிரசிடெண்டுகள் காங்கிரஸ் பிரசிடெண்டுகளாய் இருக்கிறார்கள் என்று சொல்லுவது ஒரு பிரத்தியக்ஷ உதாரணம் என்று கூடச் சொல்லுவோம்
ஏனெனில் நேற்று வரை காங்கிரசுக்கு வெளிப்படையான எதிரிகளாய் இருந்தவர்களை சரணாகதி அடைந்து அவர்கள் கால்களுக்குள் புகுந்து அவர்களைக் கூடா ஒழுக்கத்தால் அதாவது கோயில்களுக்கு ஆட்கள் வருவதற்கு தாசி, வேசி, சதுர்க் கச்சேரிகள் வைத்து ஆட்களைப் பிடிப்பது போன்ற காரியங்கள் செய்து சுவாதீனப் படுத்திக் கொண்டு அவர்களைக்
காங்கிரஸ் மெம்பர்கள் என்றும், காங்கிரஸ் வெற்றி என்றும் சொல்லிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டால் பிறகு காங்கிரசுக்கு என்னதான் யோக்கியதை இருக்கிறது என்பது விளங்கவில்லை என்பதோடு எப்படியாவது பாமர மக்கள் ஏமாந்தால் போதும் என்பதல்லாமல் வேறு கொள்கை இல்லை என்பதும் விளங்குகிறது
ஸ்தல ஸ்தாபனம் என்பது ஒரு “குருட்டுக் கோமுட்டிக் கடையாக ஆகிவிட்டது. இதற்குத் தலைமை வகிப்பவர்கள் கடன்காரர்களாயில்லாத
வர்களும், பொருளாதார நெருக்கடி இல்லாதவர்களும், தாட்சண்யத்தாலும் கெஞ்சுதலாலும் ஓட்டுப் பெறுபவர்களாய் இல்லாமல் தன்னுடைய யோக்கியதையாலேயே ஓட்டுப் பெறுகிறவர்களாகவும், இதன் பேரால் பணம் சம்பாதிக்க இஷ்டமில்லாதவர்களாகவும் இருக்க முடியாமலே போய்விட்டது.
3 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு, இந்த ஸ்தாபனங்கள் இத்துறைகளில் மிகமிக மோசமான நிலைமைக்கே போய் கொண்டிருந்தன என்றாலும் ஜஸ்டிஸ் கட்சியின்பயனாய் ஒரு அளவாவது கட்டுத்திட்டம் செய்ய முடிந்தது. இப்போது அடியோடு பாழாகக்கூடிய நிலைமைக்கு போய்க் கொண்டிருப்பதை ஒரு அளவுக்காவது வேலூர் ஜில்லா போர்டைப் பொறுத்தவரையாவது தடுக்க
தோழர் ஹக்கீம் சாயபு அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லுவோம்.
அவர் பணக்காரர், கடனில்லாதவர், இந்த பதவியின் பேரால் ஜீவனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவர். இதிலிருந்து சம்பாதித்து கடன்கட்டவேண்டியதில்லை. மெம்பர்கள் தயவுக்குபல்லைக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு மெம்பர்களுக்கு ஒவ்வொரு கண்டிறாக்ட் கொடுத்து கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தனக்கு ஆகவேண்டி தன் வேலைக்காரன் பேருக்கோ, சொந்தக்காரன் பேருக்கோ கண்டிறாக்ட் எடுத்துப் பணம் சேர்க்க வேண்டிய அவசியமுமில்லாதவர்.
கூடியவரையில் செளகார் சாயபு தேர்தலானது இன்று இந்த 25 ஜில்லா போர்டுகளில் இருக்கும் பிரசிடெண்டுகளை விடநாணயமானதும், யோக்கியமானதுமான கனவான் தேர்தல் என்றே சொல்லுவோம்.
அதோடு மாத்திரமல்லாமல் ஜில்லா போர்டில் இவருடைய காலாவதி ஆவதற்குள்ளாக அவருடைய சொந்தப் பணம் ஒரு லக்ஷ ரூபாயாவது செலவு செய்து நிர்வாகம் செய்வார் என்றும் சொல்லலாம்
இப்படிப்பட்ட ஒரு நன்மையும் வெற்றியுமான காரியம் வேலூர் ஜில்லா போர்டுக்கு ஏற்பட்டதானது காங்கிரசின் தோல்வியினாலேயே என்பதைத் தெரியப்படுத்திக் கொண்டு வேலூர் ஜில்லா போர்டானது இப்படிப்பட்ட ஒரு நாணயஸ்தரைத் தலைவராக அடைந்ததற்காக அதைப் பாராட்டுகிறோம்
[வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படியும் ஒரு முஸ்லீம் வந்ததானது அதுவும் ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் வந்ததானது அக்கட்சியின் நியாய உணர்ச்சியைக் காட்டுகிறது.]
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.05.1936
குடி அரசு- 1936 (1) 342
ஜின்னாவின் உபதேசம்
சமூகமே முதலாவது
“முதலில் சமூக நன்மையை கவனிப்பவனாகவும், இரண்டாவதாக தேச நன்மையைக் கருதுபவனாகவும், மூன்றாவதாகவே சுயநன்மையைக் கருதுபவனாகவும் இருக்கிறவனையே தேர்தல்களில் தெரிந்தெடுங்கள்'' என்று தோழர் ஜின்னா அவர்கள் டெல்லி முஸ்லீம்கள் கூட்டத்தில் உபதேசம் செய்திருக்கிறார். அதையே நாமும் சொல்லுகிறோம். மனித சமூகத்துக்குப் பிறகு தான் தேசமாகும். பித்தலாட்டக்காரர்களும், பிழைக்க வேறு வழியற்றவர்களும் தான் மனிதன் மனிதனால் நாயிலுங் கேடாக மதிக்கப்படுவதை மறந்து தேசத்தைப் பற்றி பேசுவான்.
இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்கு கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால் அவன் மனித இழிவை போக்கத்தான் முதலில் பாடுபடுவான். முடியாவிட்டால் அந்த தேசத்தையே நெருப்பு வைத்து பொசுக்கவே பாடுபடுவானே ஒழிய கேவலம் தான். சொந்தப் பிழைப்புக்கு ஆக இவைகளை மறைத்துக் கொண்டு தேச பக்த வேஷம் போடமாட்டான். இதை உணர்ந்து தான் தோழர் ஜின்னா முதலாவது சமூகம் என்றார். இதை போலி தேச பக்தர்களும் கூலி தேசியவாதிகளும் கவனிப்பார்களா? ஒரு நாளும் கவனிக்க மாட்டார்கள்.
நாம் இதைச் சொன்னால் நம்மை சர்க்கார் தாசர்கள், தேசத்துரோகிகள். என்பார்கள். இதை ஜின்னா அவர்கள் சொன்னதால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். ஏனெனில் முஸ்லீம்கள். தங்களை யாராவது குறை கூறினால் அவர்களுக்கு வாயில் புத்தி கற்பிக்க மாட்டார்கள். உடனே குனிந்து நிமிருவார்கள். ஆதலால் வாய் மூடிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறதோடு அவர்களுக்குள் புகுந்து அவர் சமூக நலனுக்கு முதல் இடம் கொடுத்து மற்றவர்களை ஒழிக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனரல்லாத “இந்துக்களுக்கு இது புரிவதில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.05.1936
343 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
காங்கிரசுக்காரர்கள் பிரதிநிதிகளாவார்கனா?
ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் ஜனங்களுக்குத் தெரிந்தவர்களாகவும், ஜனங்களிடம் உண்மையைச் சொல்லி ஓட்டுக் கேட்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் நமது காங்கிரஸ்காரர்கள் எலக்ஷனில் “வெற்றி” பெற்றார்கள். என்றாலும் ஜனங்களுக்குத் தெரிந்தவர்களா? ஜனங்களிடம் உண்மை பேசி
ஓட்டுப் பெற்றவர்களா? என்பது கவனிக்கத்தக்கதாகும்
காங்கிரசுக்காரர்கள் கொள்கை இன்னது என்று அநேக மக்களுக்குத் தெரியவே தெரியாது. உண்மையிலேயே காங்கிரசுக்கும் இன்னதுதான். எலக்ஷன் கொள்கை என்பதாக ஒன்று இல்லவே இல்லை.
1. காங்கிரசுக்காரர்கள் ஓட்டுக் கேட்பதை காந்திக்கு ஓட்டுப் போடுங்கள் என்பதாக கேட்பது
2. ஜெயிலுக்கு (பாரோ) போனவர்கள் ஆதலால் (யாருக்கோ) ஓட்டுப் போடுங்கள் என்பது
3. பொய்யையும் அன்னியர் மீது அநியாயப் பழிகளையும் கூறி ஓட்டுக் கேட்பது.
4. மூட நம்பிக்கையான மதப்பிரசாரம் செய்து அதை அரசியலுடன் பொருத்தி ஓட்டுக் கேட்பது
5. பெண்களைத் தனிமையில் அனுப்பி முக்கியஸ்தர்களை வசப்படுத்துவது
6. அபேக்ஷகர்கள் யார்? அவர்கள் யோக்கியதை என்ன? முன்பின் நடத்தை என்ன? என்பதை மூடிவைத்து ஓட்டு வாங்குவது
7. தங்கள் அதிகாரத்திற்குச் சம்மந்தமில்லாத காரியங்களைச் செய்வதாகச் சொல்லி ஆசை காட்டி ஏமாற்றி ஓட்டு வாங்குவது
இதுபோல் அனேகப் பித்தலாட்டங்களால் ஓட்டுப்பெற்றவர்கள் உண்மையான பிரதிநிதிகளாவார்களா? என்று கேட்பதோடு, யோக்கியமான அரசாங்கத்தார் இவர்களைப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளலாமா? என்றும் கேட்க வேண்டியிருக்கிறது
குடி அரசு- 1936 (1) 34
காங்கிரஸ்காரர்கள் நடந்துகொண்டதாகவும் பேசியதாகவும் நாம் சொல்லும் மேல்கண்ட 7, 8 காரியங்களுக்கும் நம் வார்த்தைகளையே நம்பும்படி நாம் சர்க்காரைக் கேட்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரிய வேண்டுமானால் எலக்ஷன் பிரசாரத்தில் காங்கிரஸ்காரர்கள் பேசியதையும் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸ் ரகசிய இலாகா குறிப்புகளையும் C.LD. சுருக்கெழுத்துக்காரர் எடுத்த பிரசங்கங்களையும், அக் கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் யோக்கியதையும் காங்கிரஸ் மெம்பர்களைக் கமிட்டியில் வைத்தே அலசிப் பார்த்து உண்மை தெரிந்து கொள்ளும் படி வேண்டுகிறோம்
ஆதலால் ஸ்தல ஸ்தாபனம் என்னும் பேரால் உபயோகமற்றச் “சுதந்தரத்தை”க் கொடுத்துவிட்டு அதையும்யோக்கியதையும் பிரதிநிதித்துவமும் அற்ற ஆட்கள் வந்து நடத்தும்படி செய்துவிட்டு இந்திய மக்களை வேடிக்கை பார்ப்பதானது. மிகமிக அதர்மமான காரியம் என்று நம் அரசாங்கத்தாருக்கு எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை. ஏன் என்றால் ஏழைகள் வரிப்பணம் பதறப் பதற கொள்ளை போகின்றது, நாசமாகின்றது என்பதால்தான்.
குடி அரசு - கட்டுரை - 03.05.1936
348 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நம்மவர் கோழைத்தனம்
தோழர் சுபாஷ் சந்திரபோஸைக் கைது செய்து, விசாரணையின்றிச் சிறையிலடைத்து வைத்திருப்பதை அழுத்தமாய்க் கண்டிப்பதாக ஒரு தீர்மானம் கொண்டுவர அனுமதி வேண்டுமென்று சென்னை நகரசபை மெம்பர் தோழர் தாமோதரம் நாயுடு ஏப்ரல் 28-ந் தேதி மாலை சென்னை நகரசபைக் கூட்டத்தில் ஒரு பிரேரணை கொண்டுவந்தார். இம்மாதிரிப் பிரேரணைகளுக்கு, நகரசபையில் பிரசன்னமாயிருக்கும் மெம்பர்களில் முக்கால்வாசிப் பேர் ஆதரவளித்தால்தான் சட்டப்படி அநுமதி கொடுக்க முடியும். ஆகவே மேயர் பிரேரணையை ஓட்டுக்கு விட்டார். 18 பேர் சாதகமாகவும், 7 பேர் பாதகமாகவும் ஓட்டுக் கொடுக்க 6 பேர் நடுநிலைமை வகித்தனர். எனவே பிரேரணை தோற்றுப் போய்விட்டதாக மேயர் தெரிவித்தார். உடனே தோழர் சக்கரை செட்டியார் எழுந்து சபையில் பிரசன்னமாயிருந்த அங்கத்தினர் 25 பேரில் 18 பேர் பிரேரணைக்குச் சாதகமாக ஓட் செய்திருக்கின்றனரென்றும், 25-ல் முக்கால்வாசிப் பேர்கள் என்பது 183 பேர்கள் என்றும், ஒரு நபரில் % மனிதன் என்பது கருதக்கூடாத விஷய மென்றும் ஆதலின் பிரேரணைக்கு சபை அநுமதி கொடுத்து விட்டதாகவே கருதப்பட வேண்டும் என்றும் கூறினார். ஆனால் முக்கால்வாசிப் பேர் என்பது பாதிக்கு மேற்பட்டதென்றும், ஆதலின் அதை ஒன்றாகவே மதிக்க வேண்டு மென்றும், பிரேரணைக்கு சபை அநுமதி மறுத்து விட்டதென்றும் மேயர் அப்துல் ஹமீத்கான் கண்டிப்பாக முடிவு கூற பிரேரணை நிராகரிக்கப்பட்டது
ஆனால் இந்தச் சிறு விதிகூட மேயராய் வர ஆசைப்படும் சக்கரை செட்டியாருக்கு தெரியாமல் போனது ஆச்சர்யமே.
நிற்க, தோழர் சுபாஷ்சந்திரபோஸை சர்க்கார் சிறைப்படுத்தியதும் விசாரணையின்றி சிறையிலடைத்து வைத்திருப்பதும் தவறேயாகும். சட்ட மறுப்பையும், புரட்சி இயக்கத்தையும் அடக்கிவிட்டதாகப் பெருமை பாராட்டிக்கொள்ளும் சர்க்கார் அவைகளை ஒழிப்பதற்கு உதவி புரிந்த சாதனங்கள் எல்லாம் தமது கையில் இப்பொழுதும் இருந்து வருகையில் தோழர் சுபாஷ் சந்திரபோஸை கைது செய்யத் தேவையே இல்லை. அவர் இந்தியாவுக்கு வந்த பிறகு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டதாக சர்க்காருக்குத் தகவல் கிடைத்தால் எந்த நிமிஷத்தில் அவரைக் கைது செய்யவும் சர்க்காருக்கு முடியும். மேலும் அவரை சர்க்கார் கைது செய்யாதிருந்தால் அவர் காங்கிரஸ் காரியதரிசியாக நியமிக்கப்பட்டிருப்பார். காங்கிரஸ்
குடி அரசு- 1936 (1) 346
தலைவர் அபேதவாதியாக விருந்தாலும், காங்கிரஸ் அவரைப் பின்பற்ற வில்லையென்பது லக்ஷ்மணபுரி முடிவுகளினால் தெளிவாகி விட்டது
காங்கிரஸ்காரரில் பெரும்பாலார் பதவி மோகம் கொண்டிருப்பதினால்.
காங்கிரஸ் ராஜபக்தி ஸ்தாபனமாகவும், ஒத்துழைப்பு ஸ்தாபனமாகப் போவதும் உலகமறிந்த விஷயம். இந்நிலையில் காங்கிரஸ் காரியதரிசி ஆகவிருந்த
சுபாஷ் பாபுவினால் கடுகளவு தொல்லையாவது விளையமன்று சந்தேகப்படத் தேவை இல்லை.
தோழர் சுபாஷ்போஸ் சிறைவாசத்தைக் கண்டிக்குமுகத்தான் அசம்பிளி மெம்பர்கள் எல்லாம் ராஜினாமாச் செய்து விட்டு வெளியேறியிருந்தால்
சென்னைச் சட்டசபை ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் எல்லாம் உடன் வெளியேற வேண்டுமென்று நாமும் சிபார்சு செய்திருப்போம். அன்றி சென்னைச் சட்டசபையில் ஒரு கண்டனத் தீர்மானம் வந்திருந்தால் அதை ஆதரிக்குமாறு நாம் ஜஸ்டிஸ் கட்சியாரைக் கேட்டுமிருப்போம்
ஆனால் சென்னை நகரசபைக்கும் கண்டனத் தீர்மானத்துக்கும் என்ன. சம்மந்தம் என்பதுதான் நமது கேள்வி
அரசியல் விஷயங்களுக்கும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை. இது ஜஸ்டிஸ் கட்சியாரின் கொள்கை. பலாபலன்களை எதிர்பாராமல் அந்தக் கொள்கையைக் காப்பாற்ற வேண்டியதே ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லிக் கொள்வோரின் கடமை. அம்மாதிரி உறுதியான கட்சிப்பற்றுடையோர்களாற்றான் கட்சிக்கு வலிமையும் பெருமையும் உண்டாக முடியும். ஆனால் சென்னை நகரசபையில் நடந்திருப்பதென்ன? ஒரு 4 அணா காங்கிரஸ்வாதி கொண்டுவந்த தீர்மானத்தை ஒரு வெகுநாளைய காங்கிரஸ்வாதியான மேயரே ஸ்தல ஸ்தாபன விதிகளுக்கு முரணானது என்று தைரியமாக நிராகரித்திருக்கிறார்
அடிக்கடி கரணம்போடும் தோழர் சக்கரை செட்டியாரின் மழுப்பலில் மயங்கி மேயர் தோழர் அப்துல் ஹமீத்கான் பிரேரணைக்கு அனுமதி யளித்திருக்கலாம். சாமானியர் அவ்வாறே செய்திருப்பார்கள். ஆனால் நெஞ்சழுத்தமுடைய அமீத்கான் ஸ்தல ஸ்தாபன விதிகளுக்கே மதிப்பு கொடுத்தார். கட்சிப்பற்றுக்கோ, மலிவான வேஷப் பாராட்டுக்கோ மதிப்புக் கொடுக்கவில்லை.
ஆனால் தம் கட்சிக்கொள்கைப்படி அத்தீர்மானத்தை எதிர்க்கக் கடமைப் பட்ட ஜஸ்டிஸ் கட்சியாரோ பிரஸ்தாப விஷயத்தில் மிகவும் கோழைத்தனமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சிப் பேரைச் சொல்லிக்கொள்ளும் தோழர்கள் பாலசுந்தரம் நாயுடு, சி.பி. சுப்பிரமணியம், பார்த்தசாரதி நாயக்கர், வெங்கடசாமி நாயுடு, ஜானகி ராமசெட்டி, சிவசண்முகம் பிள்ளை, டாக்டர் நடேச முதலியார் ஆகிய 7 பேரும் நடுநிலைமை வகித்து கட்சிக் கொள்கையை அலட்சியம் செய்ததுடன் தமது கோழைத்தனத்தையும் காட்டிக்கொண்டது
347 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். நெருக்கடியான சமயங்களில் கட்சிக் கொள்கைகளைக் கொலை செய்பவர்களே கட்சிக்குப் பேராபத்து விளைவிக்கக் கூடியவர்கள். ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகரும் சட்டசபை உதவித் தலைவருமான டாக்டர் நடேசமுதலியார் அவ்வாறு நடந்து கொண்டது ஒரு பொழுதும் ஆதரிக்கத்தக்கதே யல்ல. காங்கிரஸ்காரருக்கு பயந்து இவர்கள் நடுநிலைமை வகித்ததினால் இவர்களை தேச பக்தர்கள் என்று காங்கிரஸ்காரர் கூறப் போவதில்லை. வரப்போகும் நகரசபைத் தேர்தல்களில் இவர்களுக்குப் போட்டியாக ஆட்களை நிறுத்தத்தான் போகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் எல்லாம் தேசத்துரோகிகள், பிற்போக்காளர்கள் என்று பிரசாரம் செய்யத்தான். போகிறார்கள். தற்கால மிருப்பதுபோல் சென்னை ஜஸ்டிஸ்கட்சித் தலைவர்கள்.
மேலும் இருந்துகொண்டிருந்தால், அடுத்த நகரசபைத் தேர்தலில் இந்த ஏழு பேரும் தோல்வியுற்று மண் கெளவத்தான் போகிறார்கள்.
ஒருகால் தீர்மானம் நேர்மையானதென்று இந்த ஏழுபேருக்கும் தோன்றியிருந்தால் அவர்கள் அனைவரும் தீர்மானத்துக்கு ஆதரவாக தைரியமாக வோட்டளித்திருக்கலாம். அப்பொழுது தைரியசாலிகள் என்ற பெயராவது கிடைத்திருக்கும். நடுநிலைமை வகித்ததினால் கட்சிக்குத் துரோகம் செய்ததுடன் தமது பயங்காளித்தனத்தையும் காட்டிக்கொண்டு விட்டார்கள். அரசியலில், நடுநிலைமை ஒண்ணாம் நம்பர் பயங்காளித்தன. மாகவே மதிக்கப்படுகிறது. இம்மாதிரி சமய சஞ்சீவித் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் நிறைந்திருப்பதினாலேயே ஜஸ்டிஸ் கட்சி இன்று மேல் மூச்சு வாங்கிக்கொண்டு கிடக்கிறது. உறுதியான கட்சிப் பற்றில்லாதவர்கள் ஆயிரம் பேர் கட்சியிலிருப்பதைவிட அசைக்க முடியாத கட்சிப்பற்றுடையவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கட்சிக்கு அவமானமாவது ஏற்படாமலிருக்கும். கடைசியாக ஒரு சிறு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறோம். சென்ற மேயர் தேர்தலின்போது மூன்று முஸ்லீம் காங்கிரஸ்வாதிகள் மேயர் பதவிக்குப் போட்டிபோட முன்வந்தனர். அவர்களுள் தோழர் அப்துல் ஹமீத்கானையே ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரிக்கவேண்டுமென்று கட்சித் தலைவர் பொப்பிலி ராஜா கட்டளையிட்டார். அதற்குக் காரணம் என்ன? தோழர் அப்துல் ஹமீத்கான் காங்கிரஸ்வாதியாக இருந்தாலும், நேர்மையும், மனவுறுதியும் உடையவர் என்று பொப்பிலி ராஜா நம்பியதே காரணம் பொப்பிலி ராஜா நம்பிக்கை நியாயமானதென்பதை தோழர் ஹமீத்கான். ஏப்ரல் 285 தேதி நடவடிக்கைகளினால் யோக்கியமாய் நடந்து சந்தேகமறக் காட்டி விட்டார். தோழர் ஹமீத்கானுக்குள்ள மனவுறுதி டாக்டர் நடேச முதலியாருக்கு இருந்திருந்தால் எவ்வளவோ அழகாக இருந்திருக்குமே!
குடி அரசு - கட்டுரை - 03.05.1936
குடி அரசு- 1936 (1) 348
பார்ப்பனக் கிளர்ச்சி
சென்னை மாகாணத்திலே வருஷந்தோறும் எத்தனையோ பேர் கொலைக் குற்றத்துக்கும், கொள்ளைக் குற்றத்துக்கும் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்காக எந்த சமூகமும் ஒன்றாகத் திரண்டு புரளி செய்தது கிடையாது. பெயர் பெற்ற கருங்குழிப் பிரதேசப் பார்சல் வழக்கில் தோழர் ராமநுஐய்யங்காருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது தென்னாட்டுப் பார்ப்பன சமூகம் ஒன்றாகத் திரண்டெழுந்தது. சென்னையில் பிரபலம் பெற்ற பார்ப்பன லாயர்கள் எல்லாம் அந்தக் கேசில் கவனம் செலுத்தலாயினர். ஹைக்கோர்ட்டு செஷன்சில் அவ்வழக்கு விசாரணை நடந்தது. மேல் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்ய விக்ஷ அனுமதி வேண்டுமாம். பிரஸ்தாப வழக்கின் போக்குக்கு விக்ஷ அனுமதியளிக்கவே இடமில்லையாம். எனினும் விசேஷ அனுமதியளிக்கும் அதிகாரமுடையவர் கிளர்ச்சி செய்யும் சமூகத்தைச் சேர்ந்தவராயிருந்ததினால் விசேஷ அனுமதியும் கிடைத்தது. ஹைகோர்ட்
புல் பெஞ்சில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. ஹைக்கோர்ட்டு செஷன்ஸ் தீர்ப்பில் தலையிடத் தமக்கு அதிகாரமில்லையென்று புல் பெஞ்சு
தீர்ப்பும் பிறந்தது. அப்பால் பிரிவி கெளன்சிலுக்கு அப்பீல் அனுமதி கோரப்பட்டது. அதற்கும் சென்னை ஹைக்கோர்ட்டார் அனுமதியளிக்கவில்லை. உடனே, பிரிவி கெளன்சிலுக்கே நேரடியாக விண்ணப்பம் செய்யப்பட்டது பிரிவி கெளன்கிலும் கிளர்ச்சிக்காரருக்கு அனுகூலமாக முடிவு கூறவில்லை அப்பால் சென்னை சர்க்காருக்கு எதிரிக்கு கருணை காட்டும்படி மனுச் செய்யப்பட்டது. அம்முயற்சியும் பலிக்கவில்லை. கடைசியில் வைஸ்ராய்க்கு விண்ணப்பம் செய்யப்பட்டு மரண தண்டனை ஆயுட்காலச் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கிடையில் எதிரிக்கு சிறைச் சாப்பாடு பிடிக்கவில்லையென்றும், பழ உணவு வழங்க வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்யப்பட்டு சர்க்கார் அனுமதியின் பேரில் ராமானுஜய்யங்கார். பழ உணவுஉண்டுவருவதாகவே நமது ஞாபகம்.எதிரி பெரிய பணக்காரருமல்ல, ஜமின்தாருமல்ல. லக்ஷக்கணக்காகச் செலவு செய்ய சக்தியுடையவர் களுக்குத்தான் விசேஷ அனுமதி பெறவும் ஹைக்கோர்ட்டில் அப்பீல் செய்யவும், பிரிவி கெளன்சிலில் விண்ணப்பம் செய்யவும், மாகாண கவர்னருக்கும் வைஸ்ராய்க்கும் கருணை மனு அனுப்பவும், வைஸ்ராயிடம் நேர்முகமாக வாதாட லாயர்களை அமர்த்தவும் மூடியும். எனினும் எதிரி ஒரு பார்ப்பனராயிருந்ததினாலும் பார்ப்பன சமூகம் முழுதும் அவர்
349 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விஷயத்தில் அநுதாபம் காட்டியதினாலும், லக்ஷக்கணக்காக பீஸ் வாங்கும் பார்ப்பன லாயர்கள் அவருக்காக இனாமாய்ப் பேசவும் முயற்சி செய்யவும் முன் வந்ததினாலும் எந்தக் கொலைக் கேசிலும் உண்டாயிராத கிளர்ச்சியும் பரபரப்பும் தோழர் ராமாநுஜம் கேசில் உண்டாயிற்று. வைஸ்ராயிடம் விண்ணப்பம் செய்து கொண்டது மூலம் தோழர் ராமாநுஜத்தின் ரணதண்டனை ஆயுட்காலச் சிறைத்தண்டனையாக மாறியபிறகுதான் மரணதண்டனையை
ரத்து செய்ய மாகாண கவர்னருக்கும் வைஸ்ராய்க்கும் அதிகாரமுண்டென்ற உண்மையை சாமானிய மக்கள் அறியலானார்கள்.
பார்ப்பனப் பத்திரிகைகளும் வக்கீல்களும் ஒன்று சேர்ந்து குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு கிளர்ச்சி செய்ததினால் தோழர். ராமாநுஜம் வழக்கு அமிதமாக விளம்பரமுமாயிற்று. தோழர் ராமாநுஜம் விஷயமாக பார்ப்பனர் கிளர்ச்சி செய்ததையோ, அவரது மரண தண்டனை ஆயுட்கால தண்டனையாக மாறியதையோ இதர சமூகத்தார் ஆட்சேபிக்கவு மில்லை லக்ஷ்யம் செய்யவுமில்லை. ஆனால் தோழர் கோவை ரத்தினசபாபதி கவுண்டரின் சிறைவாச தண்டனையை வைஸ்ராய் ரத்து செய்ததைக் கண்டித்து பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன லாயர்களும், பார்ப்பன மாஜி நீதிபதிகளும் கிளர்ச்சி செய்வது பெரிய ஆச்சரியமாகவே இருக்கிறது தோழர் ராமாநுஐய்யங்கார் மரண தண்டனையை ஆயுட்காலச் சிறைவாச தண்டனையாக மாற்றிய வைஸ்ராய்தான் தோழர் ரத்தினசபாபதி கவுண்டரின். சிறைத் தண்டனையை ரத்து செய்திருக்கிறார். ராமாநுஜத்துக்கு நியாயம் வழங்கிய வைஸ்ராய் கெளண்டர் விஷயத்தில் மட்டுமா நியாய ரஹிதமாக. நடந்துகொள்வார்?
தோழர் கவுண்டர் தண்டனை ரத்து செய்யப்பட்டதினால் எந்தப் பார்ப்பானுக்கு அல்லது பார்ப்பனப் பத்திரிகைக்கு என்ன கேடு வந்துவிட்டது? தோழர் கெளண்டர் தண்டனை ரத்து செய்யப்பட்டதினால் இந்தியாவைக் கடல் கொண்டுவிடப்போகிறதா? பார்ப்பன லாயர்களுக்கும், பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இவ் விஷயத்தில் இவ்வளவு ஆத்திரமுண்டாகக் காரணம் என்ன? தமது கேசின் போக்கை விளக்கி தோழர் கெளவுண்டர் வைஸ்ராய்க்கு மனுச் செய்தார். மனுவைப் பரிசீலனை செய்து வைஸ்ராய் தண்டனையை ரத்து செய்தார். இவ்வளவுதான் சங்கதி. வைஸ்ராய் செய்யும் எத்தனையோ முடிபுகளில் இதுவும் ஒன்றென எண்ணி சும்மாயிராமல் பார்ப்பன லாயர்கள் பத்திரிகைகளில் பத்திபத்தியாய் எழுதுவதும், கிளர்ச்சி செய்வதும், வைஸ்ராய் மீது குற்றம் சாட்டுவதும் குறும்புத்தனமா யில்லையா? தோழர் கெளவுண்டர் தண்டனை ரத்தானது ரத்தானதுதான். ஆயிரம் பார்ப்பன லாயர்கள் கிளர்ச்சி செய்தாலும் வைஸ்ராய் தீர்ப்புக்கு மாற்றமேற்படப் போவதில்லை. இது மூலம் தென்னாட்டு மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில படிப்பினைகள் இருக்கின்றன. பார்ப்பனர்களின் ஜாதிப்பற்று பிரஸ்தாப விஷயத்தினால் நன்கு விளங்குகிறது. தோழர் கெளவுண்டர் வைஸ்ராய்க்குச்
குடி அரசு- 1936 (1) 350
செய்து கொண்ட மனுவில் காங்கிரஸ்காரர் தூண்டுதலினால் ஒரு பார்ப்பன. போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு ஜோடித்ததாயும் பார்ப்பன ஜூரிகள் பிரமோஷனுக்கு அனுகூலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தாராம் வைஸ்ராய் தீர்ப்பினால் தோழர் கெளவுண்டர் கூறிய காரணங்களை வைஸ்ராய் ஒப்புக்கொண்டு விட்டதாக ஏற்படுவதினால் இனி பார்ப்பன. உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகம் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டதாம். பாருங்கள் பார்ப்பனர்களின் ஜாதிப்பற்றை! ஒரு பார்ப்பன. இன்ஸ்பெக்டருக்காக இவர்கள் ஏன் இவ்வளவு பரிந்து பேச வேண்டும்? கிளர்ச்சி செய்ய வேண்டும்? கெளவுண்டர் கூறியவைகளையெல்லாம் வைஸ்ராய் நம்பினார் என்பதற்கு என்ன ஆதாரம்? தக்க காரணங்களில்லாமல் வைஸ்ராய் தண்டனையை ரத்து செய்வாரா? பருத்தி நூல்காரர் ஒப்புக் கொள்ளக்கூடிய முறையிற்றான் வைஸ்ராய் தீர்ப்புச் செய்ய வேண்டுமென்று ஏதாவது சட்டமோ சம்பிரதாயமோ இருக்கிறதா? உண்மையில் பார்ப்பனர். போடும் கூச்சல் வெகு வேடிக்கையாகவே இருக்கிறது. பார்ப்பனர் வால் பிடித்துத் திரியும் பார்ப்பனரல்லாதார் இது மூலமாவது பார்ப்பனர்களின் ஜாதிப்பற்றையும் குறும்பையும் அறிந்து கொள்வார்களா?
குடி அரசு - கட்டுரை - 03.05.1936
351 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உஷார்! உஷார்!! உஷார்!!!
மறுபடியும் தென்னாட்டிற்கு (காங்கிரஸ் தலைவர்களை) வடநாட்டு ஆசாமிகளைக் கூட்டி வந்து உங்களை ஏய்க்கப் போகிறார்கள். இதைத் தவிர தென்னாட்டு பார்ப்பனர்களுக்கு இப்போது தேச சேவை வேறு கிடையாது.
தோழர்களே! ஏமாந்து விடாதீர்கள் - ஏமாந்து விடாதீர்கள்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 03.05.1936
குடி அரசு - 1936 (1) 352.
பாண்டியன் - ராமசாமி! அறிக்கைக் கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே!
எங்களுடைய ஒரு சிறு சாதாரண பத்திரிகை விளம்பர அழைப்பை மதித்து இன்று இங்கு இந்த வெயில் காலத்தில் சென்னை முதல் திருநெல்வேலி ஈறாக வெகு தூரத்தில் இருந்து இவ்வளவு பேர்கள் அதாவது 300, 400 பேர்கள் விஜயம் செய்திருப்பதற்கு நான் எனது மனப்பூர்வமான. நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இது எங்களுக்கு மிகவும் பெருமையும், நம்பிக்கையும் கொடுக்கக்கூடிய காரியமாகும் என்பதையும்
தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்தக் கூட்டம் பார்ப்பனரல்லாதார் அதாவது தென்னிந்திய நலவுரிமைச் சங்க (ஜஸ்டிஸ்) இயக்கத்தின் சம்மந்தமாய் அழைப்பு அனுப்பி, அவ்வியக்கத்தின் நன்மைக்கு ஏற்ற காரியங்களைச் செய்யவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதை அறிக்கையில் இருந்து நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும்.
ஆனால் அவ்வியக்கத்திற்குச் சம்மந்தப்பட்டவர்கள் அதாவது அவ்வியக்கத்தின் பேரால் பட்டம் பதவி பெற்று, ஆயிரக்கணக்கான சம்பளங்களும், லக்ஷக்கணக்கான பணங்களும், பட்டங்களும் அனுபவித்தவர்.
களும், அனுபவிப்பவர்களும், அதனாலேயே பிழைப்பவர்களும், பெரு வாழ்வு வாழ்பவர்களும் ஆன பெருமான்கள் யாராவது இன்று இங்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தால் இந்த 400 பேர்களில் ஒரு 4, 5 பேர்களாவது வந்திருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகவே அக்கூட்டத்தார்களுக்கு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தினால் வரும் லாபத்தை அடைவதைத் தவிர, மற்றபடி அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கோ, அல்லது பொது ஜனங்களுக்கு பயன்படும்படிக்கு உழைப்பதற்கோ, அல்லது ஏதாவது உதவி செய்வதற்கோ எவ்வளவு கவலை இருக்கிறது என்பதை இதனால் நாம் உணர்ந்து கொண்டோம்.
பார்ப்பனரல்லாதார் இயக்கமானது இன்று பாமர ஜனங்களால் சரியாய் மதிக்கப்படாமல் இருப்பதற்கும், பல காரியங்களில் தோல்வியேற் படுவதற்கும் காரணம் என்ன என்பதும், அதற்குப் பொறுப்பாளிகள் யார் என்பதும் ஒருவாறு இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்குகின்றதல்லவா?
353 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உண்மையாகவே 1930ம் வருஷம் முதல் அதாவது இப்போதைய மந்திரிசபை ஏற்பட்ட காலம் முதல் இயக்கத்துக்காக பாமர மக்களிடம் பிரசாரமே கிடையாது என்பதுடன் சரியான பத்திரிகையும் கிடையாது என்றும் சொல்லுவேன். ஆனால் அது மக்களுக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறது என்பதை நான் மறைக்கவில்லை. அதற்காக நன்றியும் செலுத்துகிறேன்.
எந்த இயக்கம் தான் ஆகட்டும், இயக்கத்தின் பேரால் சிலர் பணமும், பதவியும், பட்டமும் சம்பாதித்துக் கொண்டு இருப்பதை மாத்திரம் பலர் பார்த்துக் கொண்டு இருக்கவும், ஒரு கூட்டத்தார் பொறாமைப்பட்டு விஷமப் பிரசாரம் செய்து கொண்டு இருக்கவும் அதற்கு எவ்வித சாமாதானமும் சொல்லி பாமர மக்களை திருப்திப் படுத்தாமலும், இயக்கத்தால் ஏற்பட்ட உண்மையான நன்மைகளை எடுத்துக் காட்டாமலும் இருந்தால் அப்படிப்பட்ட இயக்கம் எவ்வளவு நல்ல காரியம் செய்திருந்த போதிலும் நாட்டில் வாழ முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பொய்யான விவகாரமானாலும் எதிர் வியாஜ்யம் ஆடாவிட்டால் ஒரு தலைப்பக்ஷமாய் எக்ஸ்பார்டியாய்தானே தீர்மானமாகும். அது போலவே பிரசாரம் செய்யாத காரணமாகவே நமது இயக்கம் பொது ஜனங்களால் சரியானபடி மதிக்கப்படாமல் இருக்கிறது என்பதை உணர்ந்தே
2 வருஷ காலமாய் நாம் பிரசாரம், பிரசாரம் என்று தலையில் அடித்துக் கொண்டோம். அதைப் பதவியிலிருப்பவர்களும், பபனை அனுபவிப்பவர்.
களும், சிறிதும் லக்ஷ்யம் செய்தவர்களல்ல. இயக்கம் தங்களுடைய சொந்த சொத்தென்றும், மற்றவர்களுக்கு அதில் உரிமை இல்லை என்றும் கருதிக் கொண்டுநம்மையெல்லாம் ஒருதீண்டாதவர்கள் போலவே கருதி நடத்தினார்கள்.
இந்த இயக்கம் மந்திரிகளுக்கும் பதவி வேட்டைக்காரருக்கும் மாத்திரமே சொந்த மென்றும், அவர்களுக்காக மாத்திரமே இந்த இயக்கம்
இருக்கிறது என்றும் நாங்கள் கருதி இருந்தால் இந்த இயக்கத்தை 10 வருஷத்திற்கு முன்பே சாகவிட்டு இருப்போம். இந்த இயக்கம் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், ஏழை, தீண்டாத மக்களுக்கும் விடுதலை அளிக்கவே இருக்கிறது என்று நாங்கள் உண்மையாகவே கருதுகிறபடியால் பதவியாளர்களது கொடுமையையும், துரோகத்தையும்,
சூழ்ச்சியையும், அலக்ஷியத்தையும், அவமதிப்பையும் லக்ஷியம் செய்யாமல் இயக்கத்துக்காக உழைக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
இயக்கப் பதவியாளர்கள் மற்றவர்களை பக்கத்தில் அணுகவிடாமலும், கீழே இறங்கி வந்து பாமர மக்களிடம் பிரசாரம் செய்யாமலும், சரியான பத்திரிகைகள் நடத்தாமலும் இருப்பதன் காரணம் இயக்கம் பரவி செல்வாக்குப் பெற்று விட்டால் வேறு யாராவது பங்குக்கு வந்துவிடுவார்களே என்கின்ற பயம் என்றுதான் நான் கருதுகிறேன்.
எப்படி இருந்தபோதிலும் நமக்கு உள்ள பொறுப்புகளை மனதார அலட்சியம் செய்து எதிரிகளுக்கு இடம் கொடுக்க நம் மனது சம்மதிக்காத
குடி அரசு- 1936 (1) 354
தாலேயே நாமெல்லோரும் இன்று இங்கு கூடியிருக்கிறோம். இந்த 400 பேர்களிலும் தனியாக ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லக் கூடியவர்கள் 10 பேர் இருக்கலாம். (இந்த சமயத்தில் ஒருவர் 2 அல்லது 3 பேர் தான் என்றார். அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னாரோ அவரும் நாங்களும் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்) ஆகவே இதிலிருந்து ஜஸ்டிஸ் கட்சியார் இக் கூட்டத்திற்கு வராவிட்டாலும் சுயமரியாதைக்காரர்கள் எல்லோரும் (ஏதோ இரண்டொருவர் தவிர) பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பற்றும் கவலையும் உள்ளவர்கள் என்பது நன்றாய் விளங்குகின்றது.
சரியானபடி பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யாததாலும் இயக்கத்துக்கு உழைத்துவரும் தொண்டர்களுக்குசரியான வேலை கொடுக்க முடியாததாலும் அனாவசியமான அபிப்பிராய பேதங்களும், உள் கலகங்களும் நடக்க இடமேற்படுகிறதே ஒழிய, மற்றபடி பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு உழைக்க வேண்டியது சுயமரியாதைக்காரர்களுடைய வேலை அல்ல என்று
யாரும் சொல்ல முடியாது.
நம் எதிரிகள் இப்போது நம்மைப் பற்றி அதிகமாகப் பழி கூறி மிக வேகமாக விஷமப் பிரசாரம் செய்யக் காரணம் சமீபத்தில் அதாவது ஒரு வருஷத்துக்குள் வரப்போகும் தேர்தல்களை உத்தேசித்தேயாகும். அதற்குள்.
நாம் கட்டுப்பாடாக எதிரிகள் விஷமங்களுக்கும், பொய்ப்புக்கும், பழிக்கும் சமாதானம் சொல்லாத பக்ஷம் தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார்கள். தோல்வி அடைந்து விடுவார்கள் என்பது உறுதியான காரியமாகும்.
ஆகையால் எது எப்படி இருந்த போதிலும் யார் அலட்சியமாய் இருந்த போதிலும் நாம் ஒரு கட்டுப்பாடான, தொடர்ச்சியான பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு ஆகவே இன்று இங்கு கூடி இருக்கிறோம். இன்று செய்யும் ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் மதித்து அதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்
பத்திரிகை வேண்டும், பணம் வேண்டும்; தொடர்ந்து வேலை செய்ய தொண்டர்கள் வேண்டும். இவைகளுக்கு வேண்டிய மார்க்கம் செய்வதே இன்றைய வேலையாகும்.
ஆதலால் தயவு செய்து நீங்கள் எல்லோரும் இதற்கு தக்க வழி செய்ய உதவ வேண்டும் என்றும், அனாவசியமான அபிப்பிராய பேதங்களை மறந்து ஒத்து உழைக்க வேண்டும் என்றும் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.
தவிர எங்களுடைய அறிக்கையில் இந்த பிரசாரத்தை நடத்துகிற ஸ்தாபனத்தில் அங்கம் பெறுகிறவர் எவ்வித உத்தியோகமும் பதவியும் உள்ளவர்களாகவும், ஆசைப்படுபவர்களாகவும் இருக்கக்கூடாது என்று எழுதியிருந்தோம்.
355 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பல முக்கியமானவர்களும் உண்மையானவர்களுமான தோழர்கள் அந்த அபிப்பிராயம் காரியத்துக்கு கெடுதியானதென்றும், அது அனுபவ சாத்தியமானதல்ல வென்றும், அதனால் எதிரிகளுக்கு இடம் கொடுத்ததாக ஆகிவிடும் என்றும், பார்ப்பனரல்லாதார் இயக்கம் சட்டமறுப்பாலோ, பஹிஷ்காரத்தாலோ காரியம் செய்வதல்ல வென்றும் சொல்வதால் நாங்கள் அதை ஒப்புக் கொண்டு எங்கள் அபிப்பிராயத்தை வலியுறுத்தாமல் விட்டு விடுகிறோம். மற்றவர்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை மனம் விட்டு சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 05.04.1936 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பாண்டியன் - ராமசாமி அறிக்கைக் கூட்டத்தில் கூட்டம் ஆரம்பிக்கும் போது ஆற்றிய உரை.
தோழர்களே!
இன்றையக் கூட்டம் எதிர்பாராத வெற்றியுடன் முடிவடைந்திருக்கிறது. இக்கூட்டத்திற்கு இவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இக்கூட்டத்திற்கு வந்தவர்கள் எங்களுக்காகவோ, எங்கள் தாக்ஷண்ணி யத்துக்காகவோ வந்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. பார்ப்பனல்லாதார். இயக்கத்தின் சோர்வு நிலையை உணர்ந்து நம்மைப் போலவே சரி பங்கு கவலை கொண்டு இந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களால் ஆனதைச் செய்ய வேண்டும் என்கின்ற உணர்ச்சியின் மீதே வந்திருக்கிறார்கள். இன்றைய கூட்ட நடவடிக்கையிலும், தீர்மானங்களிலும் எவ்வித
கீச்சு மூச்சு சப்தம் கூட இல்லாமல் ஒரே அபிப்பிராயமாக சகல காரியமும் நடந்ததற்குக் காரணம், எங்கள் நடவடிக்கையும் தீர்மானங்களும் சிறிது கூட ஆகேஷபணைக்கு இடமில்லாமல் இருந்ததாலேயே என்று நான் நினைக்க வில்லை. இன்றைய நம் இயக்கத்தின் நிலைமையானது சண்டை போட யாருக்கும் ஆசை அளிக்கவில்லை. ஏனென்றால் இயக்கத்துக்கு செல்வாக்கு தளர்ந்திருக்கிறது, ஆதலால் எவ்வித அபிப்பிராய பேதத்தையும் காட்டாது எல்லோரும் ஒத்துழைத்து பழய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற கவலையும், பொறுப்பும், பெருந்தன்மையும் கொண்ட உணர்ச்சியே யாகும்.
மற்றும் இக்கூட்டம் எனக்கு மற்றொரு தைரியத்தையும் கொடுத்தது. அதாவது சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாய் வேலை செய்த தோழர்கள் மனம் வேறுபட்டு விட்டார்கள் என்றும், அதனால் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டு விட்டதென்றும், இயக்கத் தோழர்களை லக்ஷியம் செய்யாமல் நான் என்னிஷ்டப்படி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் தோழர்களுக்கு என்னிடம்
குடி அரசு - 1936 (1) 356
வெறுப்பு ஏற்பட்டு விட்டதென்றும், இதனால் ச.ம. இயக்கம் ஆடிப்போய் விட்டதென்றும் சிலர் பேசிக்கொண்டதும் எதிரிகளின் பத்திரிகைகள் இதை ஆயுதமாகக் கொண்டு விஷமப் பிரசாரம் செய்ததும் என் தகவலுக்கு வந்தது. அதைப்பற்றி நான் சிறிது யோசனை செய்ததும் உண்டு. அதாவது நான் ஏதாவது தப்பான வழியில் செல்கிறேனோ என்று தயங்கினேன். இன்றைய கூட்டத்தையும், இங்குள்ளவர்களது ஒருமனப்பட்ட அபிப்பிராயத்தையும், அவர்களது பொறுப்பையும், கவலையையும் பார்க்கும் போது நாம் செய்தது சரியென்றும், தொடர்ந்து ஊக்கத்துடனும் உறுதியுடனும் வேலை செய்ய வேண்டும் என்றும் எனக்குப் படுகிறது.
ஏனெனில் இன்றைய கூட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானதோழர்கள் எல்லோரும் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்கள். எல்லாம் எங்கள் அறிக்கையை ஆதரிக்கிறார்கள் என்றே ஏற்படுகிறது ஆகையால் இனி நம் எதிரிகள் சுயமரியாதைக்காரர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்று விஷமப் பிரசாரம் செய்ய முடியாது
கமிட்டியில் முக்கியமாக பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரமுகர்களையே
நாம் தெரிந்தெடுத்திருக்கிறோம். அவர்கள் ஒத்துழைப்பு கிடைக்குமென்றே நம்புகிறோம். கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கு இருக்கிற பொறுப்பை நாம் எந்தக் காரணம் கொண்டும் விட்டுவிட முடியாது.
ஒரு வாரத்துக்குள்ளாகவே நானும் தோழர்கள் பாண்டியனும், சி.டி.நாயகமும், வி.வி.ராமசாமியும் சுற்றுப் பிரயாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆங்காங்குள்ளவர்கள் கூடிய ஆதரவு காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
பத்திமிக்கை
நமக்கு தமிழில் ஒரு தினசரி அவசியம். ஒரு வருஷத்துக்கு ஆவது நடத்தி ஆக வேண்டும். சர்க்காருக்கு மறுபடியும் எழுதினேன். கோயமுத்தூர் கலக்டர் இப்போது கடைசியாக 2000 ரூபாய் ஜாமீன் கேட்டிருக்கிறார். முன்னாலும் குடிஅரசுக்கு ஜாமீன் கட்டி இருக்கிறேன். கூடிய வரை பார்த்து விட்டுக் கட்டியாவது நடத்த வேண்டி இருக்கிறது.
40,50 ஊர்களுக்கு 100-100 பத்திரிகை வீதம் 4, 5 ஆயிரம் பத்திரிகை அனுப்ப வசதி இருக்கிறது. ஆனால் பார்சல் செலவை ஏற்றுக் கொள்ள ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் வேண்டும். வருஷத்துக்கு ஒரு ஊருக்கு 75 ரூபாய்க்கு மேலாகாது. இதற்கு ஆள் கிடைத்தால் மற்ற செலவுகள் வேறு வழிகளில் சரிப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால் பத்திரிகை விஷயம் எனக்கு ஞாபகத்தில் இல்லை என்றோ நான் முயற்சிக்காமலிருக்கிறேன் என்றோ யாரும் கருதக் கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
357 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பட்டுக்கோட்டையில் அடுத்த மாதம் தொண்டர்கள் மகாநாடு நடக்கப்போகிறது. தொண்டர்கள் யாவரும் அவசியம் அங்குவரவேண்டும். மற்ற வேலைகளை அங்கு ஏற்பாடு செய்யலாம் என்று கருதுகிறேன். கடைசியாக நீங்கள் இன்று இத்தனை பேர்கள் வந்து ஒரு நல்ல முடிவுக்கு வர உதவியளித்ததற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 05.04.1936 ஆம் நாள் திருச்சியில் நடைபெற்ற பாண்டியன் - ராமசாமி அறிக்கைக் கூட்டத்தில் கூட்டம் முடிவடையும் போது ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 10.05.1936
குடி அரசு - 1936 (1) 358
பொய்! பொய்!!
வெறுக்கத் தக்க இழிவான
பொய்!!!
டாக்டர் அம்பத்கார் இன்னம் 10 வருஷத்துக்கு இந்து மதத்தை விட்டு விடும்படி பிரசாரம் செய்வதில்லை என்று காந்தியாரிடம் பிரமாணம் செய்து கொடுத்ததாக தேசிய (பார்ப்பன) பத்திரிக்கைகளில் வந்த செய்தி பொய்! பொய்!! முழுப்பொய்!!! என்று டாக்டர் அம்பேத்கார் தெரிவித்து விட்டார்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 10.05.1936
359 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
காஞ்சீபுரம் தமிழர் மகாநாட்டுக்கு
ஈ.வெ.ரா. வேண்டுகோள்
தோழர்களே! காஞ்சீபுரத்தில் ஜுன் 5 கடைசி வாரத்தில் 38-வது
தமிழர் மாகாண மகாநாடு கூடப்போவதாக அறிகிறேன். அது விஷயமாய் எனக்கு வந்த கடிதங்களையும் குறிப்பாக தோழர் வி. ஓ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் எழுதிய கடிதத்தையும் பார்த்தேன்.
காஞ்சீபுரத்தில் 22-11-25-ந் தேதி கூட்டிய 31-வது மகாநாடுதான், அதுவும் எனது தோழர் திரு. வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் தலைமையில் கூடிய மகாநாடுதான் என்னை காங்கிரசை விட்டு விரட்டி சுயமரியாதை இயக்கத் தொண்டையும் பார்ப்பனரல்லாதார் இயக்கத் தொண்டையும் செய்யும்படி செய்தது
எதற்கு ஆக காஞ்சீபுரம் மகாநாட்டை விட்டு வெளியேறினேனோ அந்தக் காரியம் இப்பொழுது தமிழ் மக்களால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது என்றாலும் முழுதும் அது கை கூடுவதில் மற்றும் அனேக கஷ்டங்கள். இருந்து வருகின்றன. எதிரிகளின் எதிர்ப்பு முயற்சி ஓய்ந்தபாடில்லை. இதை அனேகர்கள் அதாவது காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களும் உணருகிறார்கள். ஆனால் பல காரணங்களால் அவர்களும் நானும் ஓத்து வேலை செய்ய முடியாமல் இருக்கிறது
என்னைப் போலவே பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் அக்கரை கொண்டு பட்டமோ, பதவியோ, வருவாயோ எதிர்பார்க்காமல் சுயநலமற்று உழைக்கும் பல தோழர்கள் காங்கிரசில் இருக்கிறார்கள் என்பதை நான் மனப் பூர்வமாக உணர்ந்தும் மூன் கூறியதுபோல் பல காரணங்களால் ஒத்துழைக்க முடியாமல் இருந்து வருவதை நான் உணர்கிறேன். ஆகவே இது விஷயமாய் எனக்குத் தோன்றுவதை நான் மகாநாடு கூட்டும் பிரமுகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
காஞ்சீபுரம் 38 - வது தமிழர் மகாநாடு கூடும் சமயத்தில் 31-வது மகாநாடு கூடிய சமயத்தில் செய்தது போலவே சகல கட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்பதாக ஒன்று கூட்டுங்கள் என்று கேட்டுக் கொள்வதேயாகும் அதற்கு தோழர் எஸ். முத்தைய முதலியாரையோ, சி.எஸ். ரத்தினசபாபதி
குடி அரசு- 1936 (1) 360
முதலியாரையோ மற்றும் தங்களுக்கு பிடித்தவர்களையோ அல்லது அதற்கு ஆக ஏற்படுத்தும் வரவேற்புக் கமிட்டியார் இஷ்டப்படியோ ஒரு தலைவரை நியமித்து எல்லோருக்கும் அழைப்பு அனுப்புங்கள். அதில்
கலந்து பேசி எல்லோருக்கும் திருப்திகரமான ஒரு முடிவை செய்து சகல கட்சிகளிலும் புகுத்தப்பாருங்கள். முடியாத பக்ஷம் என்ன செய்வது என்பதையும் எப்படி நாம் எல்லாம் சேர்ந்து தொண்டாற்றுவது என்பதையும் யோசிப்போம். இது அங்கீகரிக்கப்படுமானால் மேலால் எனது அபிப்பிராயங் களை விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்.
ஈ.வெ.ராமசாமி
குடி அரசு - வேண்டுகோள் - 10.05.1936
3௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ராஜிணாமா சூழ்ச்சி
காங்கிரஸ் “கண்டிப்பு நாடகம்
வடஆற்காடு ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரஸ் தோல்வி உற்றதை மறைத்து பொது மக்கள் கண்களில் மிளகாய் பொடியைத் தூவ காங்கிரஸ் கண்டிப்பு முறையைக் கையாளப் போவதாக ஒரு நாடகம் நடிக்கப்படுகிறது.
காங்கிரசுக்கு எப்போதாவது ஒரு கண்டிப்போ, ஒழுங்கு முறையோ இருந்திருந்தால் இந்த கண்டிப்பு நாடகத்தைப் பார்க்க நாலு பேராவது வரக்கூடும். இன்று திடீரென்று ஏதோ தவறு ஏற்பட்டதாகவும், அதை அடியோடு அடக்கப்போவதாகவும் வேஷம் போடுவதானது தோழர் ஷண்முகம் தேர்தலில் ஏற்பட்ட துரோகத்துக்கு ஜஸ்டிஸ் கட்சியார் எடுத்துக் கொண்ட நடவடிக்கையைப் பார்த்து இது காப்பி அடிப்பதேயாகும் அதாவது மயிலைப் பார்த்து வான் கோழி ஆடுவது போலவேயாகும்.
திருநெல்வேலி ஜில்லாபோர்டு எலக்ஷனில் காங்கிரஸ் எந்தக் கண்டிப்பு முறையை எந்த ஒழுக்கத்தைக் கையாடிற்று
காங்கிரசின் பேரால் இன்று வெற்றி பெற்ற ஜில்லா போர்டு மெம்பருக்கு பிரசிடெண்டு வேலை செய்து வைத்ததா, ஒழுங்கைப் பற்றியோ, கண்டிப்பைப் பற்றியோ பேச காங்கிரசுக்கு வெட்கமில்லையா? என்று கேட்கின்றோம்
1. தளவாய் முதலியார் காங்கிரஸ் ரூல்படி காங்கிரஸ் மெம்பரா? அல்லது காங்கிரஸ் தலைவர்கள் சிவிக் போர்ட் மெம்பர்கள் ஆகியவர்களை விலைக்கு வாங்கிய முறைப்படி காங்கிரஸ் மெம்பரா?
2. அந்த தேர்தலில் காங்கிரஸ் நியமித்த தலைவருக்கு ஓட்டுப் போடாத மெம்பர்களைப்பற்றி காங்கிரஸ் என்ன கண்டிப்பு முறையைக்கையாடிற்று?
3. வேலூர் ஜில்லா போர்டு எலக்ஷனுக்கு கள்ளுக்கடை கண்டிராக்ட்தாரரை அபேட்சகராக காங்கிரஸ் நிறுத்த வில்லையா?
4. காங்கிரஸ் சிவிக் போர்ட் நியமனத்துக்கு விரோதமாக நின்ற காங்கிரஸ் அங்கத்தினர்களை காங்கிரஸ் என்ன செய்தது?
5. அந்தப்படி காங்கிரஸை மீறி நின்ற காங்கிரஸ்காரர்களை மறுபடியும் காங்கிரஸ் கெஞ்சி தங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ள வில்லையா?
குடி அரசு - 1936 (1) 362.
6. செளகார் அப்துல் அக்கீம் சாயுபு அவர்கள் காங்கிரசுக்கு விரோதமாய் இருந்தும், தேர்தலில் காங்கிரசுக்கு விரோதமாய் வேலை செய்து இருந்தும், அவர் கதர் கட்டாதிருந்தும், அவர் காங்கிரசில் சேராதிருந்தும் இருக்க தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் “அப்துல் அக்கீம் சாயபுக்கு விட்டுக் கொடுங்கள்!” என்று சொன்னது எந்தக் கண்டிப்பையும்
ஒழுக்கத்தையும் சேர்ந்தது?
7. திருவண்ணாமலை தோழர் ஷண்முக முதலியார் எந்த சட்டப்படி காங்கிரஸ்மெம்பர்? இப்படிஇன்னம் எத்தனையோ கேள்விகள் கேட்கலாம். எனவே காங்கிரசு என்னும் பேரால் பார்ப்பனர்கள் தங்கள் இஷ்டம் போலெல்லாம் நடந்து கொண்டு அதை காங்கிரஸ் சட்டம் என்றும், கொள்கை என்றும் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவதல்லாமல் இப்போது கண்டிப்பு பேச வந்து விட்டது “கூச்சுக்காரி கிராக்கியில்லாததால் கற்பு பிரசாரத்துக்கு விண்ணப்பம் போடுகிற மாதிரி" இருக்கிறது
இந்த தடவை வேலூர் ஜில்லா போர்டுக்கு தலைவராய் காங்கிரசால் நியமனம் செய்யப்பட்ட தோழர் டி.வி. கண்ணப்ப முதலியாரைப் பற்றி காங்கிரஸ் மெம்பர்களே வகுப்புவாதம் பேசி காங்கிரசின் பேரால் தெரிந் தெடுக்கப்பட்ட மெம்பர்களில் முதலியார் பட்டக்காரர்களே அதிகமாய் இருப்பதால் முதலியார் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முதலியார்கள் கட்டுப்பாடாய் செளகார் சாயபை ஆதரித்து விடுவார்கள் என்று பயந்தும் ஒரு டி.வி. கண்ணப்ப முதலியாரை தேர்ந்தெடுத்து நியமித்தார்களாம் இதுதான் வகுப்பு வாதமில்லாத காங்கிரசின் யோக்கியதை.
மற்றும் அக்கூட்டத்திலேயே ஒரு பார்ப்பனரும் முதலியாரல்லாத 2,
3 தோழர்களும் கண்ணப்ப முதலியாரை பிரசிடெண்டாக தெரிந்தெடுத்த
பின் அவர் தலைமையின் கீழ் மெம்பராய் இருப்பது தாங்கள் சுயமரியாதைக்கு ஈனம் என்று பேசிக் கொண்டார்களாம்
இது எப்படியோ இருக்கட்டும். ராஜினாமா பூச்சி காட்டுவது எதற்கு ஆக என்று கேட்கிறோம். ராஜினாமா பூச்சி காட்டுவது காங்கிரசின் வெகு நாளைய தந்திரம் என்பது நமக்குத் தெரியும்
சட்டசபைகளில் ராஜினாமா நாடகம், வெளியேறும் நாடகம் எல்லாம் இன்றைய நேரு அல்ல இவர்கள் அப்பன் நேரு காலத்திலேயே நடித்துக் காட்டி பொக்கணமாய் போன விஷயம், அதை மறுபடியும் ஜில்லா போர்டில் காட்டுவது முட்டாள் தனம் என்று உணரும் காலம் உடனே வரும் என்று உறுதி கூறுவோம்.
தோழர் TR. வெங்கிட்டராம சாஸ்திரியார் சட்ட மெம்பர் வேலையை
சர். சி.பி. ராமசாமி பேச்சைக் கேட்டு ராஜினாமா செய்தார். என்ன நடந்தது? அதில் இளைத்து நீண்டு போன அய்யர் இன்னம் உடல் தேறாமல் என்ன என்னமோ உளறிக்கொட்டுவதோடு அவர்வாழ்க்கைசரி என்ற நிலைக்குவந்தது.
38 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நிற்க, 26 பேர் ராஜினாமா செய்யாவிட்டால் காங்கிரஸ் அவர்களை என்ன செய்யக்கூடும்? தோழர் சேஷாசல செட்டியார் தனக்காகவும் தோழர். சீனிவாச ராவுக்காகவும் இந்த தேர்தலில் சுமார் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தாராம். இவர்கள் ராஜினாமா செய்தால் ஓட்டருக்கும், பெட்ரோலுக்கும், கார்காரனுக்கும், கூலிகளுக்கும் இன்னம் ஒரு 10 ஆயிரம்
ரூ அல்லது 15 ஆயிரம் ரூபாயாவது பிரேஸ் விழுகும். மற்றபடி ஜில்லா போர்ட் கட்டிடத்தில் ஒட்டிய ஒரு ஒட்டரைக் கூட்டைக் கூட அசைக்க முடியுமா: என்று கேட்கின்றோம்
ராஜினாமா செய்தபின் செய்யப் போகின்ற வேலை என்ன என்றும், அதனால் ஏற்படும் பயன் என்ன என்றும் காங்கிரஸ் எடுத்துக் காட்டியிருந்தால். அது புத்திசாலித்தனமாயிருக்கும். அதில்லாமல் பூச்சாண்டி காட்டினால் வாய்த் தவிடும் போய் நெருப்பும் அணைந்தது என்கின்ற மாதிரியில்தான். தானாகத் தேடித் தின்பதும் கெட்டு வாழ்க்கைப்படுவதும் கெட்டு தெருவில்.
நிற்க வேண்டியதல்லாமல் வேறில்லை.
ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து மனிதர்களாகி பெருமை அடைந்த ஆள்கள் ஒரு நாள் கூத்துக்கு மீசையை சிரைத்துக் கொண்டதுபோல் எலக்ஷனுக்காக காங்கிரசில் சேருகிறார்கள் அவர்களை என்ன செய்வது?
காங்கிரசுக்கு சுயமரியாதையோ, நாணயமோ இருக்குமானால் இப்படிப்பட்ட ஆள்களை வலிய அணைந்து பட்டம் கட்டுமா என்பதையும் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். ஆகவே ராஜினாமா பூச்சாண்டிக்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும், காங்கிரசு யோக்கியமானதாகவும், நாணயமுள்ளதாகவும், ரோஷமுள்ளதாகவும் இருந்தால் 26 பேர்களையும் ராஜினாமா கொடுக்கச் செய்து பார்க்கட்டும் என்றும், அது முடியாவிட்டால் பார்ப்பன “மித்திரன்” சொல்வது போல் காங்கிரஸ் கமிட்டி சிவிக் போர்ட் எல்லாம் கலைக்கட்டும் என்றும், பிறகு நடப்பது என்ன என்பதை பார்க்கலாம் என்றும் காத்திருக்கிறோம். வேலூர் ஜில்லா போர்டு மெம்பர்கள் இந்தப் பூச்சாண்டிக்கு ஏமாந்து போகமாட்டார்கள். என்றும் எண்ணுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 10.05.1936
குடி அரசு- 1936 (1) 364
இழி தொழில்
காந்தி கூட்டத்தாரின் அயோக்கியப் பிரசாரம்
இந்தியாவில் உள்ள பத்திரிகைகள் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால் அவர்கள் தங்களுக்கு அனுகூலமாக எவ்வித சேதிகளையும், விஷமத்தனமான காரியங்களையும் அடியோடு பொய்யாக கற்பித்து விஷமப் பிரசாரம் செய்து விடுகிறார்கள். அது பரவி மக்களுக்குள் செய்ய வேண்டிய விஷமங்களைச் செய்த பின் ஒரு அலட்சிய விஷயம் போல்
மறுப்பு எழுதி தெரியாத ஏதோ ஒரு கோடியில் பலர் கண்களுக்கு தெரியாமல் பிரசுரித்து விட்டு யோக்கியர்கள் ஆகிவிடுகிறார்கள்.
இந்தப்படியான அயோக்கியப் பிரசாரத்தாலேயே காந்தியாரை மகாத்மாவாக்கியும், பண்டித மாளவியாவை தேச பக்தராக்கியும், பண்டித ஜவார்லாலை வீரராக்கியும், தமிழ் மக்களை ஏமாற்றியும் வாழ்ந்து வருகிறார்கள்.
காந்தியாரைப் பற்றியும், நேருக்களைப் பற்றியும் இப்பார்ப்பனர்கள் கட்டிவிட்ட புளுகு கொஞ்ச நஞ்சமல்ல. அப்புளுகுகளைப் பிரசாரம் செய்ய காலிகளுக்கும், கூலிகளுக்கும் காசு கொடுத்து உசுப்பிவிட்டதும் கொஞ்ச நஞ்சமல்ல.
காந்தியாரை ஜெயிலுக்குள் போட்டு பூட்டினால் வெளியில் வந்து விடுகிறார் என்றும், அதனாலேயே அவரை சர்க்கார் பூட்டுவதில்லை யென்றும், அடிக்கடி விட்டு விடுகிறார்கள் என்றும் கட்டி விட்டார்கள். அவர். மூத்திரம் பன்னீர் வாடை அடிக்கின்ற தென்றும், சிலந்திப் பூச்சிகள் எல்லாம் காந்தியார் பெயரை இந்தியில் எழுதுகின்றன என்றும் காலிகளை விட்டு பேசச் செய்தார்கள்.
காந்தியாரை ராஜா கூப்பிட்டார், மந்திரி கூப்பிட்டார், வைசிராய் கூப்பிட்டார், வைஸ்ராய் வந்து காணப் போகிறார், முசோலினி கூப்பிடுகிறார். என்றெல்லாம் கிறிதும் மானம் வெட்கம் இல்லாத பொய்களை எழுதினார்கள். அசோசியேட் பிரஸ், யுனைட்டெட் பிரஸ் முதலியவற்றின் மூலம் வெளியாக்கினார்கள்.
ஜவஹர்லாலைப் பற்றியும் இதைவிட மோசமான இழிவான
புளுகுகள் புளுகி புகழ்ந்தார்கள்.
365 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கடைசியாக “அவைகளுக்கு ஆதாரம் இல்லை” என்று ஒரு வரியில் எழுதினார்கள். என்றாலும் காங்கிரசில் பார்ப்பனர்களின் எச்சில் இலையில் சிந்திக்கிடப்பதைப் பொறுக்கித்தின்று ஜீவனம் நடத்தும் இழி மக்கள் இனியும் அம்மாதிரியே பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றார்கள்.
நிற்க, இவ்வாரத்தில் “டாக்டர் அம்பேத்கார் இன்னம் பத்து வருஷத்துக்கு ஹரிஜனங்களை பிற மதத்துக்கு சேரும்படி பிரசாரம் செய்வதில்லை என்று காந்தியாரிடம் பிரமாணம் செய்து கொடுத்து விட்டார்" என்று கொட்டை எழுத்துக்களில் 2, 3 கலம் தலைப்புக் கொடுத்து போட்டு விட்டு அதை
மறுத்து அம்பேத்கார் கொடுத்த சேதியை அது போல் வெளியிடாமல் விஷமத்தனமாக இரண்டருத்தம் கொடுக்கும்படியான மாதிரியில் பிரசுரிப்பது எவ்வளவு ஈனத்தனமும், இழிமக்கள் செய்கையும் ஆகும் என்று கேட்கின்றோம் மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம் அதுபோல் நம் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்துக்கும் மானமற்ற தன்மைக்கும் ஒரு அளவு இல்லாமல் போய்விட்டதால் அதோடு போராடுவது சிரமமாகத்தான் இருக்கிறது எவ்வளவு பெரிய ஒரு காரியத்தில் இம்மாதிரியான அயோக்கியத் தனங்கள் சிறிதும் வெட்கமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம். இந்த சேதி வந்தவுடன் டாக்டர் அம்பத்காரைப் பற்றி மற்ற மக்கள் வெகு கேவலமாக நினைத்து விட்டார்கள்: அம்பத்கார் சீர்திருத்த உலகில் செத்துவிட்டார் என்றே மக்கள் கருதி விட்டார்கள்.
அம்பத்காருக்கு இது மகத்தான அக்கிரமம் செய்ததாகும் என்பதில் என்ன சந்தேகம்?
இந்தக் கூட்டத்தார் அம்பத்கார் தூங்கும் போது கழுத்தறுக்க பயப்படுவார்களா என்பது யோசிக்கத்தக்க விஷயமாகும்
காந்தி கூட்டத்தார் தங்கள் காரியத்துக்கு என்ன வேண்டுமானலும் செய்வார்கள், எவ்வளவு இழிவான காரியமும், துரோகமான காரியமும் செய்வார்கள் என்பதை இது ருஜுப்படுத்த வில்லையா?
ஆகவே இந்தியாவுக்கு மானமோ, சுயமரியாதையோ ஏற்பட வேண்டுமானால் இந்த மாதிரி காந்தி கூட்டத்தார் அழிந்து ஒழிந்தாக வேண்டும் என்கின்றதை தவிர வேறு விமோசனமில்லை
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.05.1936
குடி அரசு- 1936 (1) 366
ஆனந்தக் கூத்து
ஈழுவ சமுதாயமும் இந்து மதமும்
திருவாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலும், பிரிட்டிஷ் மலபாரிலும் 23 லக்ஷம் ஜனங்கள் ஈழவர்கள் என்றும், தீயர்கள் என்றும் சொல்லப்படுவ தல்லாமல் அவர்கள் 5-வது ஜாதியாயும் பஞ்சமரில் பட்டவராயும் தீண்டத்தகாதவராயும் பாவித்து வரப்படுகிறது ஈழவ சமுதாயம் தீண்டத்தகாத வகுப்புபோல் கொடுமை செய்யப்பட்டு வந்தாலும் அச்சமூகம் இன்று சூத்திரர்கள் என்று தாங்களாகவே ஒப்புக் கொள்ளும் நாயர் சமுதாயத்துக்கும், பார்ப்பன சமுதாயத்துக்கும் அறிவிலும் ஆற்றலிலும் எள்ளளவும் குறைந்தவர்கள் அல்ல என்கின்ற நிலையில் இன்று இருந்து வருகிறார்கள். கல்வியிலும் நல்ல முற்போக்கடைந்து இருக்கிறார்கள். இதற்கு உதாரணம் வேண்டுமானால் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் மகமதியருக்கு பள்ளிக் கூடத்தில் அரைச் சம்பளம் உண்டு. ஆனால்ஈழவருக்குஅரைச்சம்பளச்சகாயம் இல்லை.காரணம் என்னவென்றால் ஈழவர்கள் கல்வியில் பிற்பட்ட வகுப்பு அல்ல என்கின்ற காரணமே யாகும்
அப்படிப்பட்ட ஈழவ சமூகம் வைக்கம் சத்தியாக் கிரகத்துக்குப்
பிறகும், அவர்களது ஒப்பற்ற தலைவராகிய ஸ்ரீநாராயணகுருசாமியின்' தீவிர சீர்திருத்த வேலைக்குப் பின்னும் இனி அரை நிமிஷம் தீண்டாத ஜாதியாகவோ, பஞ்சம ஜாதியாகவோ இருந்து உயிர் வாழக்கூடாது என்கின்ற உணர்ச்சி பெற்று பெரியதொரு கிளர்ச்சி செய்து வருகிறார்கள். என்றாலும் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கும், கிளர்ச்சிக்கும் பார்ப்பனர்கள் எப்படி பெரியதொரு வியாதியாயும், கூற்றுவர்களாயும் இருக்கிறார்களோ அது போலவே திருவாங்கூரில் ஈழவர்களுக்கு நாயர்கள் முட்டுக்கட்டையாயும் எதிர்ப்பாயும் இருந்து வருகின்றார்களாம்
தமிழ்நாட்டில் எப்படி தமிழ் மக்கள் பார்ப்பனர்கள் கொடுமை சகிக்கமாட்டாமல் இந்து மதத்தையும், ஜாதியையும் சிலர் கடவுள்களையும் கூடவெறுத்து விலகிவிட்டார்களோ அதுபோல் மலையாளத்தில் நாயர்கள். தொல்லையை சகிக்க மாட்டாமல் 23 லக்ஷ ஈழவர்களும் ஒரே அடியாய் மதத்தையும் கடவுளையும் விட்டு விலகிவிடத் தீர்மானித்து விட்டார்கள்.
இம்மாதம் 6, 7 - ந் தேதிகளில் திருவாங்கூர் சங்கனாச்சேரியில் கூடிய SN.D.P. யோக மகாநாடுகளில் அதாவது 3 மகாநாடுகளிலும், வாலிப மகா
37 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நாட்டிலும், மத மகாநாட்டிலும், பொது மகாநாட்டிலும் ஒரே அடியாக 10000 பேர்களுக்கு மேல் ஆண்களும், பெண்களுமாய் கூடியுள்ள பெரிய கூட்டத்தில் “இந்துமதம் மனித சமூக முன்னேற்றத்துக்கும், சுயமரியாதைக்கும் எதிராய் இருப்பதால் ஈழவ சமுதாயம் ஒட்டுக்கும் இந்து மதத்தை விட்டு விலகிவிட வேண்டும்”
என்று பெரிதொரு உற்சாகத்தோடு ஏகமனதாய் தீர்மானித்து விட்டார்கள். அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், ஈழவ சமுதாயத்தை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை பாமர மக்களாய் வைத்திருக்க, ஈழவருக்கு ஆலயப் பிரவேசம் கொடுக்க ஜாதி இந்துக்கள் என்பவர்கள் முன் வந்திருக்கிறபடியால் ஈழவர்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதோடு கோவில்களுக்கும் போகக்கூடாது” என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டார்கள்.
தமிழ் நாட்டில் ஈழவர்களை விட இழிவாகவும் கேவலமாகவும் கருதப்பட்டு கல்வி இல்லாமலும், உரிமை இல்லாமலும், கொடுமைப் படுத்தப்படும் ஆதி திராவிட மக்களில் சிலர் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து சமூக நலத்தையும், சுயமரியாதையையும் பறிகொடுத்து விட்டு இந்து மதத்தையும், கோவில்களையும் கட்டி அழுவது மாத்திரமல்லாமல் இந்து மத பிரசாரமும், கோவில் பிரசாரமும் செய்வதென்றால், இந்த ஆதி திராவிட சமூகத்துக்கும் ஈழவ சமூகத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை
இந்து மதத்தை ஒழிக்கவேண்டும் என்றும், இந்துமதம் மனித சுயமரியாதைக்கு எதிரானது என்பதோடு அயோக்கியர்களது சுயநலத்துக்கும், சோம்பேறிகளது வயிற்றுப் பாட்டிற்கும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அதில் யோக்கியமோ நாணயமோ இல்லை என்று வெகு காலமாகவே சொல்லி வருகிறோம் உதாரணமாக, தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் 1922ல் திருப்பூரில் கூடிய தமிழ் மாகாண காங்கிரஸ் மகாநாட்டில் இந்து மதத்தைக் குறை கூறி இராமாயணத்தையும், மனுதர்ம சாஸ்திரத்தையும் நெருப்பில் இட்டு பொசுக்க வேண்டும் என்று சொன்னதும்,
மற்றொரு சமயத்தில் தோழர் ராமசாமி நான் இந்துவாய் இருந்து சாகமாட்டேன் என்று சொன்னதும் யாருக்கும் ஞாபகமிருக்கும். ஆகவே, இந்த இரண்டு வார்த்தைகளையும் தைரியமாக முதல் முதல் இந்த நாட்டில். வெளிப்படையாகச் சொன்னதோடு மாத்திரமல்லாமல் அது சந்து பொந்து மூலை முடுக்குகளில் பிரசாரம் செய்து வந்ததும் தோழர் ஈ.வெ. ராமசாமியாகும். அதை ஆதரித்து நாம் எழுதி வந்ததும், பிரசாரம் செய்து வந்ததும் அந்தக் காலம் முதல் இதுவரை அனேகம் பேருக்கு ஆத்திரமாகவும் வருத்தமாகவும் இருந்து வந்தாலும், அதற்கு எதிராக எத்தனையோ பேர் பிரசாரம் செய்து
குடி அரசு- 1936 (1) 368
வந்திருந்தாலும் இன்று அந்த அபிப்பிராயம் எல்லா எதிர்ப்புகளையும் விஷமங்களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்து ஆண்மையோடும், சக்தியோடும் தலைதூக்கி இமயமலை முதல் கன்னியாகுமரி வரை மதத்தை ஒழி! கடவுளை ஒழி!! இந்து மதம் அயோக்கியர்களின் வயிற்றுப் பிழைப்பு மதம்!!! என்று 10000 பேர் 20000 பேர் உள்ள கூட்டத்தில் வீர கர்ஜ்ஜனை செய்யும்படியான நிலைமைக்கு வந்துவிட்டது
காந்திகளும், மாளவியாக்களும், நேருக்களும் என்னதான் களிமண் உபதேசமும் , ஞானஸ்நான உபதேசமும் ஹரிஜன முன்னேற்ற வேஷமும் எலும்பை கங்கையில் போட்டு நபரை மோகஷத்துக்கு அனுப்பும் நாடகமும் செய்தாலும், நடத்தினாலும் இனி இந்து மதத்தைக் காப்பாற்றுவது என்பது வெள்ளரிக்காய்க்குப் பூண் போடும் வேலையாகத்தான் முடியுமே ஒழிய காரியத்தில் ஒன்றும் ஆகப்போவதில்லை
கிறிஸ்துமதம் மேல்நாடுகளில் ஆட்டம் கொடுத்துவிட்டது. ஏழ்மையின் காரணமாக இந்து மதத்தின் கொடுமையின் காரணமாக உத்தியோக ஆசை பரிகாரமாக இந்தியாவில் கொஞ்சம் இருக்கிறது. அதுவும் ஏழைகளை வஞ்சித்து ஊரைக் கொள்ளையடித்த சில பணக்காரர்களின் பணங்களால் கிருஸ்துமதம் இருப்பதாக வாயால் சொல்லிக் கொள்ளப் படுவதல்லாமல் காரியத்தில் மதம் மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது
ஐரோப்பாவிலும் கூட கிழக்கு கோடி ரஷ்யாவிலும், மேற்கு கோடி ஸ்பெயினிலும் செத்தே விட்டது. மத்திய ஐரோப்பாவில் பரிகாசத்துக்கு இடமாய் விட்டது. இப்போது இருப்பதாய் சொல்லும் கிருஸ்து மதம் அரசர்களையும், பணக்காரர்களையும் காப்பாற்றவும் ஜனநாயகத்தையும் ஏழைகள் விடுதலையையும் தடுக்கவும், ஏமாற்றவுமே ஐரோப்பாவில்
(மதம்) இருந்து வருகிறதே அல்லாமல் வலது கன்னத்தில் அடித்தால் இடது கன்னத்தைக் காட்டவோ, அயோக்கியர்களை, கொடுமைக்காரர்களை நரகத்துக்கு அனுப்பவோ இல்லை. ஆகையால் தமிழ் நாட்டில் எப்படிப் பார்ப்பன ஆதிக்கம் கூலிகளின் கூப்பாடுகளால் இருக்கிறதோ அதுபோல் மதமும் சோம்பேறி வயிற்றுப் பிழைப்பாளர்களின் பிரசாரத்தால் தான் இருக்கிறது தவிர வேறில்லை உலக மனித சமுதாயம் முன்னேற்றமடைவதற்கு இந்து மதமும் கிருஸ்து மதமும் முதலில் ஒழிந்தாக வேண்டும் என்பதை இப்போதாவது இந்திய மக்களும், ஐரோப்பிய மக்களும் உணர்ந்ததற்கு நாம் பாராட்டாமல்
இருக்க முடியாது இதுவரை கிருஸ்தவ மத யோக்கியதைக்கு ஒரே ஒரு நற்சாக்ஷிப் பத்திரமிருந்து வந்தது. அதாவது அமெரிக்காவில் கிறிஸ்தவ நீக்கிறோவர்களை கிறிஸ்தவ ஐரோப்பியர்கள் எப்படி நடத்துகிறார்கள்? இந்தியாவில் கிறிஸ்தவ கோவில்களில் பற-பள்ள-சக்கிலியர் என்கின்ற கிருஸ்தவர்களை பாதிரிகள் எப்படி நடத்துகிறார்கள் என்பதே.
39 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இப்போது அபிசீனிய கிருஸ்தவர்களையும் அபிசீனிய கிருஸ்தவ நாடுகளையும், ஐரோப்பிய கிருஸ்தவர்களும் ஐரோப்பிய கிருஸ்தவ நாடுகளும் எப்படி நடத்திற்று என்கின்ற இரண்டாவது நற்சாக்ஷிப் பத்திரம் ஏற்பட்டு விட்டது. அம்மதம் ஒழிய வேண்டும் என்பதற்கு இவைகளை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும் அதுபோலவே இந்து மதத்துக்கும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களிடத்தும் மற்றும் பார்ப்பனரல்லாத மக்களிடத்தும் பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதும், அவர்களை எப்படிக் கருதி எப்படி நடத்துகிறார்கள் என்பதும், இந்துமத வேத சாஸ்திரங்களில் அம்மதத்தைச் சேர்ந்த 100க்கு 97 மக்களின் நிலை எப்படி இருந்து வருகிறது என்பதும் மானமுள்ள சுத்த ரத்த ஓட்டமுள்ள. ஜாதி மக்களுக்கு ஒரு நல்ல அத்தாட்சியாகும். அதோடு இப்போது அரசியல் சீர்திருத்த சமயத்தில் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் நடந்து கொண்டதும் பார்ப்பனர்கள் மற்ற ஜாதியார்களை வஞ்சிக்க எவ்வளவு சூழ்ச்சியான காரியம் செய்கிறார்கள் என்பதும் அடுத்த மாதத்தில் தமிழ் மக்களை ஏய்க்க தோழர்கள் மாளவியாவையும், காந்தியையும், நேருவையும் தமிழ்நாட்டுக்குக் கூட்டி வந்து எவ்வளவு மோசமும் துரோகமும் செய்ய உத்தேசித்து இருக்கிறார்கள் என்பதும் இரண்டாவது அத்தாட்சியாகும் ஆகவே மத விஷயமாக இந்த 10, 12 வருஷ காலத்திலேயே நாம் சொல்லி வந்ததெல்லாம் ருஜுவாகி பாமர மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இந்துமதம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கூச்சல் ஆகாயத்தை பிளந்து நிற்கிறது என்பதைப் பார்க்கும் போது நாம் ஆனந்தக் கூத்தாடாமல் இருப்பதற்கில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.05.1936
குடி அரசு- 1936 (1) 370
திருச்சி கூட்டம்
1
திருச்சியில் பாண்டியன் - ராமசாமி அறிக்கைப்படி ஏற்படுத்தப்பட்ட கூட்டம் 3-5-36ந் தேதி நடந்து விட்டது. கூட்டத்துக்கு 400 பேர்கள். வந்திருந்தார்கள் என்றால் அவர்களது அறிக்கைக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது என்பது யாவருக்கும் விளங்கும். அக் கூட்டத்தில் பிரசாரத்தைப்பற்றி முக்கியமாய்ப் பேசி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த ஏற்பாடுகள் காரியத்தில் நடக்கவேண்டும். அதன் பிறகு தான் கூட்டத்தின். வெற்றியைப் பற்றி பேச யோக்கியதை உண்டு.
“ஆண்டிகள் மடம் கட்டுவது போல்" என்று ஒரு பழமொழி சொல்லு
வார்கள். அதாவது வாயில் பேசிவிட்டு காரியத்தில் அலட்சியமாய் இருப்பது என்பதற்கு இப்பழமொழி சொல்லப்படுவது. அப்படிப்போல் இக்கூட்ட நடவடிக்கையும் ஏற்பட்டுவிடுமோ என்று பயப்படாமல் இருக்க முடியவில்லை.
ஐஸ்டிஸ் கட்சியார் பிரசாரத்துக்கு பல கூட்டம் போட்டார்கள் சட்டசபை எலக்ஷன் தோல்வியும், ஜில்லா போர்டு எலக்ஷன் தோல்வியும் ஏற்பட்டும் கூட அவர்களது பிரசார முயற்சி எருமை மாட்டின் மீது மழை பெய்வது போலவே இருந்து வருகிறது. நெல்லூர் கூட்டம், குண்டூர் கூட்டம், விருதுநகர் கூட்டம், பிரண்ட் சன் பார்க்குக் கூட்டம் என பல கூட்டம் கூடி
விட்டது. ஒரு காரியமும் நடக்கவில்லை. எனவே வருஷா வருஷம் லட்சக் கணக்கான ரூபாய் வரும்படி உள்ள மந்திரிகளும், ஆயிரக்கணக்கான. வரும்படி உள்ள காரியதரிசிகளும் அவர்கள் பெரியவர்கள் வீட்டு வரும்படி போல் அனுபவிப்பவர்களாலேயே ஆகாத காரியம், இயக்கத்தால் யாதொரு பலனும் அடையாமல் நஷ்டமும், கஷ்டமும், கெட்ட பேரும் சம்பாதித்தவர்களால் என்ன செய்ய முடியும் என்று ஒருவர் யோசித்தால் அது தப்பாகிவிடாது
என்றாலும் பார்ப்பனரல்லாத வாலிபர்கள் இதில் தைரியமாய் முன் வந்து பிரமுகர்கள் என்பவர்களை நெருக்க வேண்டும். ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத அபிமானிகள் தங்கள் தங்களால் கூடிய கவலை எடுத்து ஏதாவது ஒரு தொண்டு செய்ய முன் வரவேண்டும். பார்ப்பனரல்லாதார். இயக்க வேலை ஒரு எதிர் நீச்சல் வேலையைப் போல இருந்து வருகிறது 371௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பார்ப்பன ஆதிக்கம் அரசியலில் வலுத்து இருப்பதால் மந்திரிகள். தங்கள் காரியத்தைத் தவிர வேறு காரியம் பார்க்க முடியாமல் பார்ப்பனர்களால் செய்யப்பட்டு விட்டதால் உழைப்பவர்களுக்கு உதவி இல்லா விட்டாலும் கேடில்லாமலாவது இருக்கும்படி பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போய் விட்டது
என்றாலும் திருச்சி கூட்டத்தில் நியமிக்கப்பட்ட கமிட்டித் தோழர்கள் தயவு செய்து சிறிதாவது திருச்சி தோழர்கள் முயற்சியை லட்சியம் செய்து தங்களால் கூடிய உதவி செய்து பிரசாரத்தை நடத்திக் கொடுக்க வேண்டுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.05.1936
குடி அரசு - 1936 (1) 372.
சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு
காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் பலர் காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களின் நடத்தையும், நாணயமும், எண்ணமும் பிடிக்காமல் அதாவது காங்கிரசை பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை நலத்துக்கும் தங்கள் சொந்த பார்ப்பன சமூக நலத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அக்காரிய சித்திக்கு ஆகவே மற்ற காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் பெயர்களையும், பணங்களையும், தொண்டர்களையும், உழைப்புகளையும், ஆயுதமாக உபயோகித்துக் கொள்ளுகிறார்கள் என்றும், இந்த 20 வருஷ காலமாக எங்கும் கூப்பாடு எழுந்த வண்ணமாக இருந்து வருகிறது என்பது யாரும் அறியாததல்ல.
சுமார் 10, 12 வருஷங்களுக்கு முன்பாகவே தோழர் ஈ.வெ.ராமசாமி இதை உணர்ந்து அடியோடு காங்கிரசையும் பார்ப்பனரையும் விட்டு விலகி வந்து தனித்த முறையில் தன்னாலான தொண்டை தான் சரி என்று பட்ட காரியத்திற்கு பயன்படுத்தி வருகிறார் என்பதும் யாரும் அறியாததல்ல. இப்பொழுது சமீபகாலத்தில் அதுவும் காங்கிரசுக்கு எங்கும் வெற்றி என்று சொல்லப்படும் காலத்திலும் தோழர்கள் கல்யாணசுந்தர முதலியார், வி.ஓ.சிதம்பரம் பிள்ளை, ராய சொக்கலிங்கம், தண்டபாணிபிள்ளை, வேதாரண்யம் காங்கிரஸ் காரியதரிசி, தியாகராஜஞானியார், சாமி ஷண்முகாநந்தம் முதலிய பல காங்கிரஸ் பிரமுகர்களும் காங்கிரசுக்காவே தங்களை தியாகம் செய்துகொண்ட பல தொண்டர்களும் அதுபோலவே காங்கிரசில் இருக்கும் பார்ப்பனரல்லாதார் நடத்தை முதலியவை பிடிக்காமல் கண்டித்தும், எதிர்த்தும், பேசியும், எழுதியும் வருவதோடு காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்களை தனிப்பட்ட முறையில் கண்டித்துப் பேசி காங்கிரஸ் ஊழலையும், பார்ப்பனர் சூழ்ச்சிகளையும் பல வழிகளில் வெளியிட்டும் வந்திருக்கிறார்கள்.
இதன் பயனாகவே தோழர் கல்யாணசுந்திர முதலியார் காங்கிரசை பரிசுத்தம் செய்வதற்காக காங்கிரஸ் பற்றுக் கொண்ட பார்ப்பனரல்லாதாரைக் கொண்ட ஒரு கூட்டத்தைக் காஞ்சீபுரத்தில் கூட்டுவதாக விளம்பரம் செய்ததோடு மாத்திரமல்லாமல் காங்கிரசினிடம் அபிப்பிராய பேதம் கொண்ட பார்ப்பனரல்லாதார்களும் அதில் ஒத்துழைக்க வேண்டுமென்றும் தனித்தனியாகப் பல பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்கு எழுதிக் கேட்டுக் கொண்டும் இருந்தார்.
373 QuRwnfdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இதை நம்பியே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அதே சமயத்தில் ஒரு சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டினால் அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்கள் எல்லோரும் எவ்வளவு தூரம் ஒன்று கூடி உழைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்து அந்த அளவுக்கு ஒற்றுமையாய் வேலை செய்வதின் பயணாய் தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் இருந்துவரும் பார்ப்பன ஆதிக்கத்தையும் சூழ்ச்சியையும் ஒருவாறு குலைக்கப் பார்க்கலாம் என்கின்ற ஆசையின் மீதே ஒரு சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்டும்படி காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் மகாநாடு கூட்ட முயற்சித்த பிரமுகர்களையும் குறிப்பாக தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியாரையும் கேட்டுக் கொண்டார். அதன்பயன் இப்போது காஞ்சீபுரத்தில் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட கூட்டப்படுவதில்லை என்கின்ற முடிவு ஏற்பட்டு விட்டதாகத் தோழர் திரு.வி.க. அவர்கள் மெயில் பத்திரிக்கைக்கு அனுப்பிய சேதியில் இருந்து தெரியவருகிறது
அது மாத்திரமல்லாமல் இந்த காங்கிரஸ் பார்ப்பனரல்லாத பிரமுகர்களை. நம்பி முன்னுக்கு வந்த பலருக்கும் அப்பிரமுகர்கள் மீது சிறப்பாகத் தோழர் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மீது மனக்கசப்பும் அவநம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது
அப்பிரமுகர்களில் தோழர் முதலியாரவர்களின் சொந்த நாணயத்தை பாதிக்கும்படியாகக்கூட கண்டித்தெழுதப்பட்ட பல கடிதங்களும் பத்திரிக்கையில் பிரசுரிக்கும்படி சேதிகளும் நமக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றை வெளியிட நாம் விரும்பவில்லை.
ஆனாலும் இம்மாதிரியாக தோழர் முதலியார் அவர்களால் அடிக்கடி சில அபிப்பிராயங்கள் வெளியிடப்படுவதும் அவற்றை நம்பி பலர் கலந்து கொள்வதும் பிறகு யாதொரு யோக்கியமான காரணமும் இல்லாமல் முதலியார் அவர்கள் பின் வாங்கிக் கொள்வதும் இவர்களை நம்பின பேர்களை தெருவில் தியங்க விட்டுவிடுவதுமான காரியம் ஏன் செய்யப்பட வேண்டும்? என்பது நமக்கு விளங்கவில்லை
காங்கிரஸ் அனுபவமும் அங்குள்ள பார்ப்பனர்கள் யோக்கியதையும், அவர்களது சுயநல தந்திரமும் சூட்சியும், அடிக்கடி நம்மை ஏமாற்றி வருவதும் நாம் அறியாததல்ல. தோழர்கள் கல்யாணசுந்திர முதலியார். போன்ற காங்கிரஸ் பார்ப்பனரல்லாத பிரமுகர்களும் அறியாததல்ல
இன்னும் விளக்கமாய்ச் சொல்லவேண்டுமானால் இவற்றை தோழர் ஈ.வெ. ராமசாமி அறிவதற்கு முன்னதாகவே முதலியார் போன்ற மற்ற பிரமுகர்கள் அறிந்ததேயாகும் என்றும் உறுதியாய் கூறலாம். என்றாலும் தோழர்ராமசாமி அவர்கள் உணர்ந்த உடன் அவர்களை விட்டுவெளியேறியதால் ஏதோஒரு சிறு அளவாவது தன் காலால் நின்று கொண்டு தன்னால் கூடியதை தன்னிஷ்டப்படி செய்ய முடிந்தது. இதனால் தனக்கு ஏற்படும் நல்ல பெயரையோ கெட்ட பெயரையோ லட்சியம் செய்யாமலும் இருக்க முடிந்தது.
குடி அரசு- 1936 (1) 374
ஆனால் மற்றவர்கள் என்ன காரணத்தாலோ அந்த தைரியம் கொள்ளாததால் பார்ப்பனர்களின் கூட்டுறவில் இருந்து விலகி இருப்பதாய் காட்டிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்து வரவேண்டியதாய் ஏற்பட்டுவிட்டது
இதற்கு ஏதாவது ஒருகாரணம் சொல்ல வேண்டுமானால்பார்ப்பனரல்லாத பிரமுகர்களில் ஒருவருக்கு மற்றவரிடம் நம்பிக்கை இன்மையும், துவேஷமும், போட்டியும், பொறாமைக் குணமும் தான் முக்கியமானது என்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய மற்றப்படி பொதுநல சேவையோ மக்கள் நலன். பற்றிய கொள்கைகளோ வேறு ஏதோ காரணமாக இருக்கலாம் என்று
நம்மால் சொல்ல முடியவில்லை.
பார்ப்பன பிரமுகர்களுக்குள்ளும் ஒருவருக்கொருவர் போட்டியும், பொறாமையும், துவேஷமும், வெறுப்பும் இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு உத்தமமான குணம் இருந்து வருகிறது. அது என்னவென்றால் கொள்கையில் அபிப்பிராய பேதமே இருப்பதில்லை. இருந்தாலும் அது ஒற்றுமைக்கு இடையூறாய் இருப்பதுமில்லை. அதிலும் தங்கள் சமூக நலம் என்பதே முக்கியமான முதன்மையான லட்சியமாகவும் அதற்கு ஆக எத்தகைய
தியாகமும் செய்ய தகுந்த உறுதியுமான உத்தம குணமும் இருந்து வருகிறது நம்மிலோ பல பிரமுகர்கள் ஒருவேளை கூழுக்குப் போடும் உப்புக்கு நமது சமூக நலனை விட்டுக்கொடுக்கும் தன்மையும் எதை விற்றானாலும் நம் சுயநலமே பெரிதெனக்கருதும் சாமானிய குணமும் இருந்து வருகிறது
இதற்கு உதாரணம் வேண்டுமானால் காங்கிரஸ் பார்ப்பனரல்லா தார்களை பார்ப்பனர்கள் எப்படி மதிக்கிறார்கள் அந்த மதிப்பை பார்ப்பன ரல்லாதார்கள் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே போதுமானது
இது நிற்க மற்றொரு காரியத்தையும் உதாரணமாக கூறுவோம் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் இந்திய சட்டசபை தேர்தலுக்கு ஒரு அபேக்ஷகராக நின்ற காலத்தில் 4 அணா கொடுத்து காங்கிரஸ் பாரத்தில்
ஒரு கையெழுத்து போட்டிருந்தால் அவருக்கு ஒரு காசு செலவு கூட இல்லாமல் அந்த பதவி கிடைத்து இருக்கும். தோழர் ராமசாமி கூட பதவி வேண்டுமானால் காங்கிரசில் சேர்ந்து கொள்வதில் குற்றமில்லை என்றும் காங்கிரஸ் அபிப்பிராயத்துக்கும், தோழர் வரதராஜுலு அபிப்பிராயத்துக்கும் அதிக வித்தியாசமில்லை என்றும் கூட ஜாடை காட்டினார்.
ஆனால் தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் அதற்கு சம்மதிக்காதவராய் கண்டிப்பாய் வெளியில் இருந்தே அந்த பதவியை அடையலாம் என்றும் சொல்லி அதற்கு ஆக தானே கடைசிவரை
கூட இருந்து உழைத்து வெற்றி தேடித்தர உதவுவதாயும் வாக்களித்தார். மற்றொரு பிரமுகரும் அப்படியே சொன்னார்.
373 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இதைப் பலரும் நம்பினார்கள். நாயுடுவும் நம்பினார். ஆனால் கடைசியில் நடந்தது என்ன? அவரை நடு ஆற்றில் விட்டு விட்டு எல்லோரும் ஓடிப்போனார்கள். இதை அறிந்தும், தோழர் ராமசாமிக்கு தான் நிற்பதானால் காங்கிரசில் சேராவிட்டாலும் அந்த ஸ்தானம் போட்டி இல்லாமல் பெறலாம் என்கின்ற உறுதி எதிர்க்கட்சி தலைவரால் தோழர் ராமசாமிக்கு ஜாடை காட்டப்பட்டும் இவைகளை லக்ஷியம் செய்யாமல் கடைசியாக தோல்வியில் தனக்கும் பங்கு இருக்கட்டும் என்பதற்காகவே அவர் மாத்திரம் தோழர் வரதராஜுலுவுடன் கடைசிவரை இருந்து வந்தார்.
இப்படி இன்னும் பல உதாரணங்கள் காட்டலாம். ஆனால் பார்ப்பன. சமூகத்தில் மாத்திரம் இம்மாதிரியான சம்பவங்கள் தங்களுக்குள் ஒருவருக் கொருவர் ஏற்படுத்திக் கொள்ளுவது என்பது எதிர்பார்க்க முடியாததாகும்.
இப்போதும் தோழர் திரு.வி.க. அவர்கள் காஞ்சீபுரத்தில் 38வது தமிழர் மகாநாடு கூட்டுவது என்கின்ற பிரச்சினைக்கு முக்கியகாரண கர்த்தராய் இல்லாத பக்ஷம் அவ்வுத்தேசம் அந்த முறையில் வெளிவந் திருக்காதென்றே கருதலாம். அதை தோழர் ஈ.வெ.ராவும் நம்பி ஒரு வேண்டுகோளும் விடுத்திருக்கமாட்டார்.
கடைசியில் பொஸ்ஸென்று போய்விட்டது. அதற்குக் காரணம் இன்னது என்று உள் எண்ணம் கற்பித்து முதலியார் அவர்களைத் தாக்கி பல கடிதங்கள் வந்திருக்கின்றன. அவை எப்படியோ போகட்டும்
இம்மாதிரி அடிக்கடி செய்வதால் பார்ப்பனரல்லாதார் பொதுநலத்துக்குக் கேடு எவ்வளவு ஏற்படக்கூடுமோ அதில் ஒரு அளவுக்காவது தோழர் முதலியார். அவர்களது நற்பெயரையும் பாதிக்காதா? என்றே பயப்படுகின்றோம்
இது ஒருபுறமிருக்க தோழர் திரு.வி.க. அவர்களுக்கு பார்ப்பனர்கள் இடம் இருக்கும் துவேஷத்துக்கும் அவநம்பிக்கைக்கும் எல்லையே கிடையாது என்பதை நாம் தைரியமாய் சொல்லக்கூடும். ஆனால் அவர்களிடம்
அவருக்கு பயமும் தாட்சண்யமும் அதுபோலவே எல்லையற்றதாகும்.
இந்தக் காரணத்தாலேயே துவேஷம் அதிகரித்திருக்கும் போது பார்ப்பனரை எதிர்க்க துணிவதும், நம் போன்றவர்களை உதவிக்கு அழைப்பதும் பயமும், தாட்சண்யமும் அதிகரிக்கும்போது ஒருவரையும் கலக்காமல் பின் வாங்கிக்கொள்வதுமாய் தொடர்ந்து நடந்து வருகிறது போனது போகட்டும், இப்பொழுதும் சர்வகட்சி பார்ப்பனரல்லாதார். கூட்டம் ஒன்று கூட்டப்படுமானால் அது எல்லோருக்கும் பயன்தரும் என்பதே நமதபிப்பிராயம்
காங்கிரசை விட்டு விலகி வாழ முடியாத பார்ப்பனரல்லாதாருக்குக் கூட தங்களை சிறிதாவது சுயமரியாதையோடு வாழும்படி செய்வதற்கும்
குடி அரசு- 1936 (1) 376
பார்ப்பனரால் சுயமரியாதையுடன் நடத்தப்படுவதற்கும் இக்கூட்டம் பயன்படும் என்றே சொல்லுவோம். அன்றியும் அக்கூட்டத்தின் பயனாய் காங்கிரசு பார்ப்பனர்களுக்கும் காங்கிரசிலில்லாத உண்மையான பார்ப்பனரல்லாதார் நலம் கருது வோருக்கும் ஏதாவது ஒரு ராஜி ஏற்பட மார்க்கமேற்பட்டாலும் ஏற்படலாம்.
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வேற்றுமையாலும், தேசீயம் - வகுப்புவாதம் என்னும் வேற்றுமையாலும் நாட்டில் இருதரப்பிலும் அயோக்கியர்களுக்கும் சமய சஞ்சீவிகளுக்கும் நாணயமற்றவர்களுக்கும்
தான் யோகத்தின் மேல் யோகம் அடிப்பதைத் தவிர வேறு என்ன பொது நன்மை ஏற்பட்டு வருகிறது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். ஆகையால் பார்ப்பனத் தலைவர்களும் இதை யோசித்துப் பார்த்தார்களானால் அவர்களிலும் யோக்கியமாய் இருப்பவர்கள் ஏதாவது
ஒரு அளவுக்கு இரங்கி வந்து நல்ல முடிவுக்கு வரக்கூடும்.
இந்தக் காரணங்களால் தோழர் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார். அவர்கள் மறுபடியும் புனராலோசனை செய்து பார்ப்பனரல்லாதார் காங்கிரஸ் கூட்டம் அதாவது 38 வது தமிழர் கூட்டம் கூட்டாவிட்டாலும் சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் கூட்டம் கூட்டவாவது முன்வருவார் என்று எதிர்பார்க்கிறோம்
தோழர்கள் வரதராஜுலு நாயுடு, வி.ஓ.சிதம்பரம்பிள்ளை, மாசிலாமணி முதலியார் முதலியவர்கள் தங்கள் சம்மதத்தை மனப்பூர்வமாய் தெரிவித்து இருக்கிறார்கள். ஆதலால் முதலியாரவர்கள் பயப்படத் தேவையில்லை என்றே கருதுகிறோம்
பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு ஆக என்று உழைக்கும் உண்மையான பல தோழர்கள் ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் என்பவர்களிடம் எவ்வளவோ இழிவும் சுயமரியாதைக் குறைவுமான பல சங்கடங்களை அனுபவித்துக் கொண்டுதான் வருகிறார்கள். அதையும் நாம் மறைக்கவில்லை. பதவியும் லாபமும் பெற்றவர்கள் எல்லாம் - பெற்றுக் கொண்டு இருப்பவர்கள். எல்லாம் “ஐஸ்டிஸ் கட்சி இன்னமுமா இருக்கிறது செத்த பாம்பை எடுத்து எத்தனை நாளைக்கு ஆட்ட முடியும்” என்றெல்லாம் கேட்பதைக்கூட சகித்துக் கொண்டு மறுபடியும் அப்படிப்பட்டவர்கள் பதவியும், பட்டமும், செல்வமும் பெறுவதற்கு ஆகவே உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கிறார்கள். இம்மகாநாடு கூட்டப்படுவதால் அவ்வித இழிவிலும்
நிர்ப்பந்தத்திலும் இருந்தாவது விலக நம் போன்றவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படாதா என்பதற்காகவே சர்வகட்சி பார்ப்பனரல்லாதார். மகாநாடு கூட்ட ஆசைப்படுகிறோமே ஒழிய மற்றபடி அதனால் சுயநலமோ, சுயநல பெரிய லாபம் பெறவோ, பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர்களின் மதிப்பைப் பெறவோ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
377 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இந்தப்படி எழுதுவதினாலேயே பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏதோ நெருக்கடியில் இருப்பதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம்
தோழர் ஈ.வெ.ரா. சுற்றுப்பிரயாணம் வாரத்துக்கு ஒரு தரம் தவறாமல். இருந்து வருவது யாவரும் அறிந்திருக்கலாம். சென்ற இடங்களில் எல்லாம் இருக்கும் உற்சாகமும், ஊக்கமும் ஆதரவும், ஆடம்பரங்களும், கூட்டங்களும், மற்ற காரியங்களும் பார்ப்பனர்களும் பத்திரிக்கைகளும் எவ்வளவு தான். மறைத்துத் திருத்திக்கூறினாலும் அவர்களை அறியாமலே அவர்களது பத்திரிகையில் வரும் சேதிகளாலும் மற்ற பத்திரிக்கைகளில் வரும் சேதிகளிலும் பார்த்து இருக்கலாம்.
ஆதலால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கோ அக்கொள்கைகளுக்கோ. ஒரு சிறு ஆதரவும் குறையவில்லை என்பதோடு ஊக்கமும் வேகமும் வளர்ந்து கொண்டுதான் போகின்றது என்றும் காங்கிரசின் யோக்கியதை வெளுத்து வருகிறது என்றும் சொல்லுவோம். தலைவர்களின் - பயன் அடைந்தவர்களின் - பதவியும், பட்டமும், செல்வமும் பெற்றவர்களின். துரோகமும், சுயநல சூழ்ச்சியும் மக்களை ஒன்று சேரவிடாமல் செய்யும் காரியங்களும், பிரசாரமின்மையும், தினசரி பத்திரிக்கை இன்மையும், எல்லாம் சேர்ந்து இன்று உள்ள உணர்ச்சியும், ஊக்கமும் பயன் தருவதற்கு இல்லாமல் செய்து வருகிறது என்பதைத் தவிர வேறில்லை. ஆகவே காங்கிரஸ் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் யோசித்து சர்வகட்சி பார்ப்பனரல்லாதார் மகாநாட்டை கூட்ட யோசிப்பார்கள் என்று ஆசைப்படுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 17.05.1936
குடி அரசு- 1936 (1) 378
நத்தாணியல் தம்பதிகள் பிரலாபம்
வேலூர் ஜில்லாபோர்டு உபதலைவர் டாக்டர் நத்தானியேலும் அவரது மனைவியாரும் ஜில்லாபோர்டு மெம்பருமான தோழர் ஜுலியா நத்தானியேல் அம்மாளும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவருக்கு அனுப்பிய ராஜிநாமாக் கடிதம் வேறிடத்து வெளிவருகிறது. அதைப் படித்துப் பார்ப்பவர்களுக்கு டாக்டர் நத்தானியேல் தம்பதிகள் உள்ளம் எவ்வளவு தூரம் புண்பட்டிருக்கிறதென்பது விளங்காமல் போகாது ஆரஅமர யோசியாமல் அவசரப்பட்டு காங்கிரசில் சேர்ந்து விட்டதைப் பற்றி டாக்டர் நத்தானியேல் வருந்துவதுடன் காங்கிரசில் சேர்ந்த அந்தப் பொல்லாத காலம் முதல் தான் மன அமைதியுடன் வாழ்ந்ததில்லையென்றும் கூறுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் என்போர் ஆசை வார்த்தை கூறி மயக்கித் தம்மை காங்கிரசில் சேர்த்ததையும் பிறகு ஒரு உதவியும் செய்யாது கை விட்டதையும், சிரமத்தையும், செலவையும், தொழில் நஷ்டத்தையும், கஷ்டத்தையும் மதியாது ஒரு மாத காலம் சுயமாக வேலை செய்து தேர்தலில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் டாக்டர் நன்குவிளக்கியிருக்கிறார்.
வேலூர் ஜில்லாபோர்டு தேர்தலில் துரோகம் செய்தவர்களைக்கண்டு. பிடிப்பது அசாத்தியமென்றும், எனவே காங்கிரஸ் பேரால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எல்லாம் ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் தீர்மானம் செய்திருந்தாலும், துரோகம் செய்தவர்கள். யாராயிருக்கக்கூடுமென்பதையும் டாக்டர் நத்தானியேல் குறிப்பாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜில்லாபோர்டு தலைவர் பதவிக்கு அபேக்ஷகரைத் தேர்ந்தெடுக்க கூடிய கூட்டத்தில் சென்னை மேயர் தோழர் அப்துல் ஹமீத்கான். பிரசன்னமாயிருந்து கூட்டத்தலைவர் கட்டளைப்படி தோழர் அப்துல் ஹக்கீம் ஸாஹிபுக்காகப் பரிந்து பேசியதையும் தோழர் ராஜகோபாலாச்சாரி அதை ஆதரித்ததையும், தாம் மட்டும் ஜில்லா போர்டு மெம்பராயிருந்தால் தோழர் அப்துல் ஹக்கீமுக்கே வோட்டுக் கொடுப்பேனெனக் கூறியதையும் டாக்டர் நத்தானியேல் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தோழர் ராஜகோபாலாச்சாரி அவ்வாறு கூறியதாக பலர் ஏற்கெனவே பத்திரிகைகளில்: எழுதியிருக்கிறார்கள். அவைகளை மறுக்க தோழர் ராஜகோபாலாச்சாரியார் இதுவரை முன் வரவில்லை. அக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்த டாக்டர் நத்தானியலே இப்பொழுது அதைப் பகிரங்கப் படுத்திவிட்டார். எனவே காங்கிரஸ் “துரோகத்துக்கு முதன் முதல் வித்துப் போட்டவர் தோழர். ராஜகோபாலாச்சாரியார் என்பதற்கு சந்தேகமே இல்லை.
379 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அப்பால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் சிபார்சையும் மதியாமல் அபேட்சகரைத் தேர்ந்தெடுக்கும் நாடகம் நடந்ததையும் தோழர் கண்ணப்ப முதலியாரும் வேறு ஒரு பார்ப்பனரும் போட்டி போட்டதையும் தோழர். முதலியாருக்கு 13-ம் அவரது எதிரிக்கு 12-ம் வோட்டுகள் கிடைக்க, ஒரு வோட்டு மிகுதியினால் தோழர் கண்ணப்ப முதலியார் தேர்ந்தெடுக்கப் பட்டதையும் உடனே அதைப் பலர் பகிரங்கமாக ஆட்சேபித்ததையும், ஜில்லாபோர்டு தலைவர் பதவிக்குத் தேவையான யோக்கியதாம்சங்கள் அவருக்கில்லையென்று பலர் வெளிப்படையாகக் கூறியதையும் டாக்டர் நத்தானியேல் விசதமாக விளக்கியிருக்கிறார். இந்நிலையில், தோழர் அப்துல் ஹக்கீமை ஆதரித்த காங்கிரஸ் மெம்பர்கள் தோழர் கண்ணப்ப முதலியாருக்கு எதிரிடையாக வோட்டுக் கொடுத்த அந்த 12 பேரில் தான்: இருக்க வேண்டுமென்பதற்கு சந்தேகமே இல்லை. பத்துப்பேர் செய்த துரோகத்துக்கு- அந்தப் பத்துப் பேரை நிர்ணயம் செய்யப் போதுமான தகவல்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியாரிடம் இருக்கும்போது - 26 பேரும் கும்பலாக ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று கூறுவது பெரிய அக்கிரமமாகும்
நத்தானியேல் தம்பதிகள் கூறுவனவற்றைப் பார்த்தால் அவர்கள். ராஜிநாமாச் செய்யக் கடமைப்பட்டவர்களுமல்ல. எனவே அவர்களை காங்கிரஸ்காரர் தூற்றுவதும் பழிப்பதும் கண்டிக்கத்தக்க செயல்களாகும். “இந்த துராத்மாக்கள் உதவியின்றி காங்கிரசுக்கு உயிர்வாழ முடியாதா?” என்று தோழர் ஜுலியா நத்தேனியேல் அம்மையார் மனமுடைந்து
கேட்கிறார். தோழர் ஜுலியா அம்மையார் எழுதிய ஆங்கில ராஜிநாமாக்
கடிதத்தில் தம்மை ஹிம்சிக்கும் காங்கிரஸ்காரரை Miscreant என அம்மையார்
அழைக்கிறார். Miscreant என்ற ஆங்கில பதத்துக்கு & Vile Wreatch (இழிவான பாதகன்) 8 4618518016 scoudrel (வெறுக்கத்தக்க போக்கிரி) என: சேம்பரின் இருபதாவது நூற்றாண்டு ஆங்கில அகராதி பொருள் கூறுகிறது. பொதுவாக மாதர்கள் சாந்தகுணமுடையவர்கள். சாந்தகுணமுடைய
மாதுக்கே வேலூர் காங்கிரஸ்காரர் Miscreant எனத் தோன்றவேண்டுமானால், அவர்கள் எவ்வளவு கேவலமாக நடந்திருக்க வேண்டுமென்பதை நாம் விளக்கத் தேவையில்லை. ராஜினாமாச் செய்தவர்களை, சென்னை அரை அணா, காலணா கந்தல் பத்திரிகைகள் பயமுறுத்துவதைப் பார்த்தால் இன்னும் என்ன என்ன கொடுமைகள் விளையுமோ தெரியவில்லை
காங்கிரஸ் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதி மொழியில் கையெழுத்துப் போட்ட பின்பு, காங்கிரசை அலட்சியம் செய்வதென்றால் அதனால் ஏற்படும் பலன்களை அநுபவிக்காமல் தப்பிவிடமுடியாது. கடைசிவரையில் ஏமாற்றிவிடலாமென்று நினைப்பவர்களை காங்கிரஸ் சும்மாவிட்டுவிடாது. இதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளட்டும்” எனஒரு சென்னை அரையனாக் கந்தல் பூச்சாண்டி காட்டுகிறது.
குடி அரசு- 1936 (1) 350
நத்தானியல் தம்பதிகள் ராஜிநாமாவைக் கண்டித்தெழுதும் ஒரு சென்னை காலணா கந்தல் “இந்த இருவர்கள் (நத்தானியில் தம்பதிகள்) தொகுதியில் உள்ள வோட்டர்கள் இவ்விருவர்களையும் அஹிம்சா தர்ம முறையில் பகிஷ்காரம் செய்து பொது ஜன வாக்குக்குத் தலைவணங்கும்படி செய்ய வேண்டும்” எனப் பாமர மக்களைத் தூண்டுகிறது. ஆனால் இந்தக்
கந்தல் பத்திரிகைகளின் பூச்சாண்டிக்கு பயப்படுவ தென்றால் தென்னாட்டில் ஒருவருக்குமே உயிர் வாழ முடியாது
எனவே காங்கிரஸ் "Miscreant" மூலம் யோக்கியர்களுக்குத் துன்ப முண்டாகாமல் பார்த்துக் கொள்வது சர்க்காருடையவும் யோக்கியப் பொறுப்புடையவர்களுடையவும் நீங்காக் கடமையாகும். அஹிம்ஸா முறை பகிஷ்காரத்தினால் காங்கிரஸ் மானம் கொஞ்சம் கூட கெடுமேயன்றி காங்கிரஸ் மதிப்பு உயர்ந்து விடாதென்பதையும் காங்கிரஸ்வாலாக்கள். உணர்ந்திருப்பார்களாக!
நத்தானியேல் தம்பதிகளைக் கண்டிக்கும் காங்கிரஸ் பத்திரிகைகளும் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது ராஜிநாமாக் கடிதத்தில் காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை? எந்த அரசியல் கட்சிக்கும் கெளரவமளிக்காத பல விஷயங்கள் அந்த ராஜிநாமாக் கடிதங்களில் அடங்கியிருக்கின்றன. அவைகளை மறுக்க ஏன் இந்தப் பத்திரிகைகளும், தலைவர்களும் முன்வரவில்லை. நான் ஜில்லா போர்டு மெம்பராயிருந்தால் தோழர் அப்துல் ஹக்கீமுக்கே வோட்டுக் கொடுப்பேன் என்று கூறி காங்கிரஸ் கட்சிமெம்பர்களைத் தப்பு வழியில் திருப்பிய தோழர் ராஜகோபாலாச்சாரியாரை இந்தப் பத்திரிகைகளும் தலைவர்களும் ஏன் கண்டிக்க வில்லை? இவ் விஷயத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் மெளனம் சாதிப்பதேன்? தேச மகா ஜனங்களே இதை நீங்கள் கவனியுங்கள்!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.05.1936
381 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தற்கால அரசியல்
தலைவரவர்களே! தோழர்களே!!
இன்று தற்கால அரசியல் என்பது பற்றி நான் பேசுவேன் என்று
நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
தற்கால அரசியல் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததேயாகும் அரசியல் என்கின்ற வார்த்தை புதிய வார்த்தை. நம் நாட்டில் முன் காலத்தில் அரசியல் என்கின்ற பிரஸ்தாபம் இருந்ததாக யாரும் சொல்ல முடியாது அரசியல் என்று பேசுவதே தோஷமான காரியமாகும். ஏனென்றால் இந்துமத வேத ஆதாரப்படி அரசர்கள் கடவுள்களாவார்கள். அதாவது அரசன் விஷ்ணு அம்சம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எவ்வளவோ புராணங்களிலும் அரசர்களின் அநீதிக்காகப் பிரஜைகள் அரசியல் என்று பேர் வைத்து இயக்கம் உண்டாக்கி கிளர்ச்சி செய்ததாக ஒரு வார்த்தையும் காண முடியாது
ஆதலால் அரசியல் என்கின்ற வார்த்தை மேல் நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்ததாகும். மேல்நாட்டுக்கார மேதாவி ஒருவரே அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் வயிற்றுப்பிழைப்புக்கு கடைசி மார்க்கம் என்று சொல்லி இருக்கிறார்.
அரசியல் என்கின்ற வார்த்தை எப்படி மேல்நாட்டில் இருந்து இறக்குமதி ஆயிற்றோ அதுபோலவே அரசியல் காரியங்களும் மேல் நாட்டிலிருந்தே இறக்குமதியாகி அந்த காரியங்களே நடந்து வருகின்றன. மற்ற நாட்டு அரசியல் லட்சியம் சுதந்திரம் என்று சொல்லப்பட்டால் நமது நாட்டு அரசியல் லட்சியம் சுயராஜ்யம் என்று சொல்லப்படுகிறது. இதை அயோக்கியத்தனத்துக்கு மேல் அயோக்கியத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல் என்பதே அயோக்கியத்தனம் என்றால் சுயராஜ்யம் என்பது அதைவிட மோசமானது என்றுதான் சொல்லவேண்டும்
சுயராஜ்யம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை. மோக்ஷம் என்ற வார்த்தை எப்படி அர்த்தமில்லாமல் வெறும் சூழ்ச்சியும், தந்திரமும் நிறைந்த வார்த்தையோ அதுபோல்தான் சுயராஜ்யம் என்கின்ற வார்த்தையும்
இருந்து வருகிறது மோக்ஷம் என்கின்ற வார்த்தைக்கு சோம்பேறிகளும் அயோக்கியர்களும் ஆகிய புரோகிதர்கள் என்ன அருத்தம் சொல்லுகிறார்கள்? சுலபத்தில்
குடி அரசு - 1936 (1) 382.
மக்கள் ஆசைப்படும்படியாகவும், சுலபத்தில் ஏமாறும்படியாகவும் பார்த்து அதற்கு அர்த்தம் சொல்லுகிறார்கள். அதாவது மோக்ஷத்தில் எல்லாம் தங்கமயமாய் இருக்கும் என்றும் ஊர்வசி முதலிய நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும், காமதேனுவால் நல்ல ஆகாரம் கிடைக்குமென்றும், கற்பக விருக்ஷத்தால் மற்றும் வேண்டிய போக போக்கிய பொருள்களும் கிடைக்குமென்றும் சொல்லி மக்களுக்கு ஆசையூட்டுகிறார்கள். இந்த ஆசை மனிதனுக்கு ஏற்பட்ட பின்பு புரோகிதர்கள் வெகு சுலபத்தில் அதற்கு
மார்க்கம் சொல்லிவிடுகிறார்கள். அதாவது “எனக்கு 4 அணா தக௲ஷணை கொடுத்து என் காலில் விழுந்து கால் கழுவின தண்ணீரை சாப்பிட்டால் மோக்ஷத்திற்கு
டிக்கட்டு கிடைக்கும்” என்று சொல்லுகிறார்கள். பேராசை பிடித்த முட்டாள்கள் அதுபோலவே நடந்து கொள்வதன் மூலம் புரோகிதர்களின் சோம்பேறிப் பிழைப்பையும் அயோக்கியத்தனத்தையும் ஆதரிக்கிறார்கள். அதுபோலவே அரசியல் என்னும் பேரால் வயிறு வளர்க்கும் சோம்பேறி அயோக்கிய அரசியல் புரோகிதர்கள் மக்கள் சுலபத்தில் ஏமாறும்படி சுயராஜ்யத்துக்கு அருத்தம் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அதாவது சுயராஜ்யம் ராமராஜ்யம் என்றும், அரிசிபருப்பு சும்மா கிடைக்குமென்றும், பூமிகளுக்கு வரி இருக்காதென்றும், வானத்தில் இருந்து மழை வேண்டும் போதெல்லாம் பெய்யும் என்றும், ரயிலுக்கு சார்ஜ் இருக்கா தென்றும், தபால் தந்தி சும்மா அனுப்பலாம் என்றும் சொல்லுகிறார்கள். இதைக் கேட்கும் பேராசை பிடித்த மூட ஜனங்களும் மடையர்களும் நம்பிவிடுகிறார்கள். இந்த நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு விட்டதை தெரிந்த அரசியல் புரோகிதர்கள் சுலபத்தில் சுயராஜ்யத்துக்கு மார்க்கம் சொல்லி விடுகிறார்கள்
அதாவது காங்கிரசுக்கு கால் ரூபாய் கொடுத்து கையெழுத்து போட்டுவிட்டால் போதும் என்றும், அதுவும் செய்ய சக்தி அற்றவர்கள் எங்களுக்கு ஓட்டு கொடுத்தால் போதும் என்றும், அதுவே சுயராஜ்யத்திற்கு போகும் டிக்கட் ஆகிவிடும் என்றும் சொல்லி விடுகிறார்கள்.
இதனால்தான் அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்களின் கடசி வயிற்று பிழைப்பு மார்க்கம் என்பது உறுதியாகிறது.
உதாரணமாக இந்தியாவில் அரசியலின் பேரால் காங்கிரசு என்கின்ற ஸ்தாபனம் ஏற்பட்டு 50 வருஷங்கள் ஆயிற்று
அதனால் ஏற்பட்ட நன்மை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள் காங்கிரசின் பேரால் மக்கள் ஏமாற்றப்பட்டார்கள், காங்கிரஸ் ஏற்பட்ட பின்பு மக்கள் உழைப்பில் இருந்து அதிக பாகம் வரியாக கொடுக்கப்பட வேண்டியதாயிற்று
383 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அதன்பயனாய் சோம்பேறிகள் அயோக்கியர்கள், பிச்சையெடுத்து வயிறு வளர்த்த பார்ப்பனர்கள் ஆகியவர்கள் பெரும் பெரும் பதவியும் ஆயிரம் பத்தாயிரம் ரூபாய் மாத வருமானங்களும் அடைந்தார்கள் - அடைகிறார்கள் - இன்னும் அடைய மூயற்சிக்கிறார்கள் என்பதல்லாமல் 50 வருஷ காங்கிரசால் ஏற்பட்ட பலன் இன்னது என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.
இதுதான் அரசியலின் பலன் என்றால் அரசியல் என்பது வடிகட்டின அயோக்கியர்கள் வயிற்றுப் பிழைப்பு என்பதில் என்ன தப்பு என்று கேட்கிறேன்.
நிற்க, சுயராஜ்யம் என்பதற்கு மற்றொரு வியாக்கியானம் சொல்லப் படுகிறது. அதாவது இந்தியா அன்னியனால் ஆளப்படுவதால் அது பர ராஜ்யமாய் இருக்கிறது என்று அன்னியராகிய வெள்ளைக்காரனை விரட்டி அடித்துவிட்டால் அதுவே சுயராஜ்யமாகிவிடும் என்றும் சொல்லுகிறார்கள்.
அப்படியானால் இந்தியா அன்னிய ராஜ்யமாய் இல்லாமல் இந்திய மக்களாலேயே ஆளப்பட்ட காலமாகிய ராமன், அரிச்சந்திரன் முதலியவர்களும் சேர சோழ, பாண்டியன், நாயக்கன் ஆகியவர்களும் ஆண்ட காலத்தில் இல்லாத என்ன அக்கிரமும் கொடுமையும் கஷ்டமும் இழிவும் இந்த வெள்ளைக்கார ஆட்சியால் அதிகமாகி இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
ராமன் காலத்து ஏழைகளும் கூலிகளும், அரிச்சந்திரன் காலத்து பறையனும், பார்ப்பன அயோக்கியத்தனமும், சேர, சோழ, பாண்டியன், காலத்து மனுநீதி ஆட்சியும் தான் இன்று இருக்கிறதே தவிர அதைவிட கொடுமையாக இன்று என்ன இருக்கிறது என்று உங்களைக் கேட்கிறேன்.
இந்திய சுயராஜ்யத்தில் வேதத்தின் விதிப்படி, மனுதர்ம சாஸ்திர நியதிப்படி அவனவன் அவனவன் வருணத்துக்கும் ஜாதிக்கும் தகுந்த தொழிலைச் செய்தாக வேண்டும். ஆனால் வெள்ளைக்கார பர ராஜ்யத்தில் அந்த நிபந்தனை இல்லை. குறைந்து வருகிறது. இதுதான் சுயராஜ்யத்துக்கும், பர ராஜ்யத்துக்கும் வித்தியாசம் என்பதல்லாமல் மற்றபடி வேறு என்ன கெடுதி சொல்லமுடியும்
பழங்கால சுயராஜ்யத்துக்கு ஒரு பழமொழி உண்டு. “நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பார்கள். இந்தப் பழமொழி பர ராஜ்யத்தில் பறந்தோடிவிட்டது வெள்ளைக்கார ராஜ்யத்தில் தோழர் எம்.சி. ராஜா அவர்களும், என். சிவராஜு அவர்களும் இன்று வாத்தியார்களாய் மந்திரி சட்டசபை அங்கத்தினர்களாய் இருக்கிறார்கள். மற்றும் அனேக “தோட்டிகள்" சாமியார்களாகி விபூதி உத்திராக்ஷ தாரணர்களாகி விட்டார்கள்:
நாளைக்கு மந்திரிகளாய்க்கூட வரப்போகிறார்கள்
இந்தக் காரியம் சுயராஜ்ய காலத்தில் இருந்ததா அல்லது சுயராஜ்ய காலத்தில் உண்டாகுமா என்று கேட்கிறேன்.
குடி அரசு- 1936 (1) 384
சுயராஜ்ய திட்டமாகிய கராச்சி பிரஜா உரிமை திட்டத்தில் ஜாதி மத வருணங்களையும் சாஸ்திர புராணங்களையும் ஜாதி தொழில்களையும் காப்பாற்றப்படும்” என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய சுயராஜ்யத்தில் மனிதன் இழிவும் பட்டினியும் நீங்கி சுயமரியாதையுடன். எல்லாரும் வாழ முடியுமா? என்று கேட்கின்றேன்.
காந்தியார் சுயராஜ்யம் வருணாச்சிரம ராமராஜ்யமாகும்.
ஜவஹர்லால் சுயராஜ்யம் யார் மனதையும் புண்படுத்தாத கோமுட்டித்
தந்திரமாகும். இனி சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் சுயராஜ்யத்தைப் பற்றி கேட்கவேண்டுமா? ஆகவே சுயராஜ்யம் என்பது உள்ளபடியே அயோக்கியர்களும், தந்திரசாலிகளும், சோம்பேறிகளும் ஆதிக்கம் செலுத்தும் ராமராஜ்யமாகுமே யொழிய ஏழை மக்களுக்கும் இழிகுல மக்கள் என்பவர்களுக்கும் கடுகளவு லாபமும் இல்லை என்பதோடு இன்னமும் அதிக துன்பமும் தொல்லையும் உள்ள ராஜ்யமேயாகும்
ஆகையால் இன்றைய அரசியலையோ சுயராஜ்யத்தையோ நாம்
ஒப்புக் கொள்ள முடியாது.
ஒரு கேள்வி
இந்த சமயத்தில் ஒருவர் “அப்படியானால் நீங்கள் ஏன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறீர்கள்”? என்று கேட்டார்.
நான் இந்தக் கேள்வியை வரவேற்கிறேன். நானே இதன் காரணத்தை முடிவில் சொல்ல இருந்தேன். இப்போது கேட்டுவிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகும்.
ஜஸ்டிஸ் கட்சியை நான் ஒரு அரசியல் கட்சியாக மதிக்கவில்லை. அது ஒரு சமுதாய சீர்திருத்தக் கட்சியாகும்.
ஜஸ்டிஸ் கட்சியானது சமூக சுதந்திரத்திற்கு ஆகவே ஆட்சி இன்ன விதமாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதே ஒழிய இன்னார்தான். ஆட்சி புரிய வேண்டும் என்று சொல்லவில்லை.
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் நிர்வாகத்தில் எல்லா ஜாதியாரும் மதத்தாரும் வகுப்பாரும் விகிதாச்சாரம் ஸ்தானம் வகிக்க
வேண்டும் என்று சொல்லுகிறது
அது வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டுப்போய் விடவேண்டும் என்றோ, அவர்களுக்கு அரசியலில் சம்மந்தமே கூடாது என்றோ, இந்துவே ஆளவேண்டும் என்றோ, மற்ற ஜாதி மதத்துக்கு விகிதாச்சாரம் பதவி கொடுக்க முடியாது என்றோ சொல்லுவதில்லை.
385 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆட்சியில் இன்ன இன்ன முறை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கைப் பிரச்சினையே ஒழிய இன்னார்தான் ஆளவேண்டும் என்கின்ற நபர் பிரச்சினை கிடையாது
ஆகையால் நான் ஜஸ்டிஸ் கட்சியை ஒரு சீர்திருத்த இயக்கக்கட்சி என்று கருதுகிறேன். இந்த கொள்கைகளை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகிறதா? என்று கேள்வி கேட்டவர் சொல்லட்டும் என்று கேட்கிறேன்.
நிற்க, காங்கிரஸ் இதுவரை உத்தியோகப் பெருக்கத்துக்கும் பதவி அபகரிப்புக்கும் அல்லாமல் எந்தவித சமூக சீர்திருத்தத்திற்காகவாவது முயற்சி செய்கிறதா? அல்லது முயற்சி செய்தவர்களையாவது ஆதரித்து இருக்கிறதா? என்று கேட்கிறேன்.
சகலவித சீர்திருத்தத்திற்கும் காந்தி முதல் சத்தியமூர்த்தி வரை காங்கிரஸ் தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டே வந்திருக்கிறார்கள்.
குழந்தைகளைக் கல்யாணம் செய்ய வேண்டாம் என்றால் காங்கிரஸ் காரர்களே முட்டுக்கட்டை போடுவது விபசாரித்தனத்துக்கு என்று ஒரு ஜாதியும் அதை ஆதரிக்க ஒரு ஸ்தாபனமும் வேண்டாம் என்றால் அதற்கும் காங்கிரஸ்காரர்களே முட்டுக்கட்டை போடுவது கோவில்களை எல்லா ஜாதியாருக்கும் திறந்துவிட சட்டம் கொண்டு வந்தால் அதற்கும் காங்கிரசுக்காரர்களே முட்டுக்கட்டை ஆகிய இடையூறுகள். செய்து வந்திருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு அரசியல் ஸ்தாபனங்களில் இடம் இருக்கும்படி பிரிக்க வேண்டும் என்றால் அதற்கும் காங்கிரசுக்காரர்களே முட்டுக்கட்டை
இம்மாதிரி எவ்வித சமூக சீர்திருத்தத்திற்கும் காங்கிரஸ் முட்டுக் கட்டையாகவே இருந்து வருகிறது. இதன் காரணம் என்ன? பார்ப்பனர்களின் உயர்வும் ஏக போக ஆதிக்கமும் போய்விடும் என்கின்ற பயமே.
ஆனால் ஜஸ்டிஸ் இயக்கம் அப்படி இல்லை. இதுவரை சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட சகலவித சமூக சீர்திருத்த சட்டங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியே காரணமாகவும் ஆதாரமாகவும் இருந்து வந்திருக்கிறது என்று சொல்லுவேன்.
இதுபோல் காங்கிரஸ் ஏதாவது ஒரு சமூக சீர்திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்தோ ஆதாரமாயிருந்தோ வந்திருக்கிறதா? என்று கேட்கிறேன். சமூக சீர்திருத்தமல்லாமல் சமூக சுதந்திரம் பேசப்படும் எவ்வித சுயராஜ்யமும், திருட்டு ராஜ்யம், அயோக்கியர்கள் ராஜ்யம் என்று சொல்லுவேன். அது காந்தியானாலும் ஜவஹர்லால் ஆனாலும் சத்தியமூர்த்தி ஆனாலும் ஒரே யோக்கியதை என்றுதான் சொல்லுவேன்.
குடி அரசு- 1936 (1) 386
இன்றைய அரசியல் நிர்வாகத்தில் இந்திய வைஸ்ராயாக லின்லித்கோ பிரபுபோய் சத்தியமூர்த்தி வந்தால் என்ன? வில்லிங்டன் பிரபுபோய் காந்தியார். வந்தால் என்ன? இர்வின் பிரபு போய் ஜவஹர்லால் வந்தால் என்ன?
யார் வந்தாலும் நமக்கென்ன கவலை. பிராமணன் என்கின்ற ஒரு சோம்பேறி ஜாதியும், பறையன் என்கின்ற ஒரு பாட்டாளி ஜாதியும் மறைந்து சமமான மனிதர்கள் என்கின்ற ஒரே மனித ஜாதி இருந்து வருமா?
இதற்கு காந்தியோ, சத்தியமூர்த்தியோ, ஜவஹர்லாலோ ஒப்புக் கொள்ளுகிறார்களா என்று கேட்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொள்ளு
கிறார்கள். ஆகவேதான் காங்கிரசை அரசியல் பித்தலாட்டம் என்கிறேன்.
ஜஸ்டிஸ் கட்சியை சீர்திருத்தக் கட்சி என்கின்றேன்.
இதை ஆட்சேபிக்கிறவர்களை நான் அறைகூவி அழைக்கின்றேன்.
என்போல் உள்ளவர்கள் எங்கள் குடும்ப நிலையை பாழாக்கிக் கொண்டு சொந்தப்பணத்தை செலவு செய்து கொண்டு கட்சியின் பேரால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் சொந்தத்துக்கு எதிர்பாராமல் ஏன் இந்த
மாதிரி கிராமம் கிராமமாய் காயலாவோடு அலைகிறோம் என்பதை சுயநலமற்ற வாலிபர்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். கூலிகளைப்பற்றி
எனக்குக் கவலையில்லை.
மனித சமூக ஜீவாபிமானம் பிரதானமே ஒழிய பழமையைக் காப்பாற்ற உத்தியோகமும், பதவியும், அதிகாரமும் விரும்பும் அரசியலோ சுயராஜ்யமோ 2000 வருஷத்துக்கு முந்தின நிலைமைக்குப் போகும் தேசீயமோ, தேசபக்தியோ பிரதானமல்ல. அவைகளை ஒழித்தாக வேண்டும்.
வாலிபர்களே! நீங்கள் ஏதாவது மனித சமூகத்துக்கு உழைக்க வேண்டு. மானால் பார்ப்பனர்களையும், பறையர்களையும் அடியோடு ஒழியுங்கள் அதுவே உங்களுடைய முக்கியமானதும் முதன்மையானதுமான வேலை.
பார்ப்பனர்களும் பறையர்களும் ஒழிந்தால் சூத்திரர்கள் தானாக ஒழிந்து விடுவார்கள். ஒரு சிறு பார்ப்பன பூண்டு இருந்தாலும் பறையனும்
சூத்திரனும் இருந்துதான் இருப்பான்.
சுயமரியாதை இயக்கத்தின் முதல் வேலை பார்ப்பான் என்று ஒருவனும், பறையன் என்று ஒருவனும் இருக்கக்கூடாது என்பதே. அதுதான் எங்கள் சுயராஜ்யம், அதுதான் எங்கள் அரசியல், அதுதான் எங்கள் மூச்சு என்பதை உணருங்கள். அது இல்லாத மற்றதெல்லாம் அயோக்கியர்கள், வஞ்சகர்கள், மனித சமூகத் துரோகிகள் வாழ்க்கை என்று கருதுங்கள். சுய மரியாதைக்
காரருக்கு ஜஸ்டிஸ் கட்சி ஒரு நல்ல ஆயுதமாகும். அதை உபயோகித்துக் கொள்ள யெவரும் தவறிவிடக்கூடாது என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
387 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அரசியல் சுயராஜ்யத்தை விட சமூக சுயராஜ்யம் ஆயிரம் மடங்கு மேலானது. இதில் புரட்டு பித்தலாட்டமில்லை, இதில் சுயநலம் இல்லை. ஏழை மக்கள் நலமும், “இழி மக்கள்'' விடுதலையுமேயாகும்
குறிப்பு: 13.05.1936ஆம் நாள் இராஜபாளையத்தை அடுத்த தளவாய்புரத்தில் நடைபெற்ற தளவாய்புரம் சீர்திருத்த வாலிப சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 24.05.1936
குடி அரசு- 1936 (1) 388
சேலம் காலித்தனம்
சேலத்தில் 18-5-365 தேதியில் நடந்த பொதுக்கூட்டமொன்றில் சில காங்கிரஸ் தொண்டர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் ஈனத்தனமாய் வைது பிரசங்கம் செய்ததை சுயமரியாதைக்காரர்கள் பொறுமையுடன் கேட்டுக் கொண்டு நின்றிருக்கிறார்கள்.
அதற்கு காரணம் அத்தொண்டர்கள் மீது குற்றமில்லை என்றும், அவர்களை கூலி கொடுத்து ஏவி விட்டவர்கள் காரணம் என்றும், இந்தியாவின் வறுமை நிலைமையானது இம்மாதிரி இழிவான தொழிலாவது செய்து வயிறு வளர்க்க வேண்டி இருப்பதால் அதைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் கருதியிருந்ததேயாகும் என்று தெரிகிறது
ஆனால் அதே மாதிரி தன்மையில் தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் பேசியதால் அவரைசில தோழர்கள் கேள்வி கேட்க வேண்டியவர்களானார்கள். காரணம் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்றும், அதன் தலைவர்கள் தேசத் துரோகிகள் என்றும் மற்றும் கேவலமாகவும் பேசியதேயாகும்
இந்நிலைமையில் தோழர் சத்தியமூர்த்தியோ அல்லது அவர்களது கூலிகளோ ஆண்மையும், சுயமரியாதையும், வீரமும் உடையவர்களானால் கேள்விகளுக்கு தக்க விடையளித்திருக்க வேண்டும். விடையளிக்காவிட்டால் அம்மாதிரியான பேச்சுக்களை பேசாமலாவதிருந்திருக்க வேண்டும்
அப்படிக்கில்லாமல் கூட்டத்தில் கேட்பவர்களுக்கு கொதிப்பு ஏற்படும்படியாக பேசிவிட்டு கேள்வி கேட்பவர்களை பலாத்காரத்தால் அடக்கிவிடுவது என்று நினைத்துக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் காரியம் நடத்துவார்களானால் இவர்களது சுயராஜ்யத்தில் உள்ள மோசடியும் துரோகமும் இன்னது என்று தெரிந்து கொள்ள வசதி ஏற்படுவதோடு, அந்த ஸ்தாபனமே அடியோடு மறைந்துபோகும்படி செய்ய ஒவ்வொருவனுக்கும் உரிமை உண்டு என்றே கருதுகிறோம்
சேலத்தில் முன் இரண்டொருமுறை காங்கிரஸ்காரர்கள் செய்த கலவரத்துக்கு புத்தி கற்பிக்க ஏற்பட்ட சமயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் பஹிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டு தப்பித்துக் கொண்டது யாவரும் அறிந்ததேயாகும். இது போலவே மதுரை, வேலூர் முதலிய இடங்களிலும் காங்கிரஸ்காரர்களின் காலித்தனத்திற்கு புத்தி
39 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கற்பிக்க ஏற்பட்ட சமயங்களில் எல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள். மன்னிப்பு கேட்டுக் கொண்டதும் யாவரும் அறிந்ததேயாகும். இதே சத்திய மூர்த்தியாரும் ஒரு மன்னிப்பு அறிக்கை விட்டதும் யாவரும் அறிந்ததாகும்.
அப்படி இருக்க இப்போது மறுபடியும் அதே மாதிரி பேசுவதும், கேள்வி கேட்டவர்களைத் தாக்குவதும், காலித்தனம் செய்வது என்பதும் மகா கேவலமான கோழைத்தனமும் அயோக்கியத்தனமுமான காரியமுமாகும்.
காங்கிரஸ்காரர்கள் முன்னைய காலித்தனங்களின் போது மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கவில்லையானால் கேள்வி கேட்பவர்கள் ஜாக்கிரதை யுடனேயே வந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.
அப்படிக்கில்லாமல் இனி அப்படிச் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து செய்ததற்காக வருத்தமும் தெரிவித்துக்கொண்டதால் இவர்கள் யோக்கியர்கள், சொன்னபடி நடந்து கொள்வார்கள் என்று கருதி ஜாக்கிரதையில்லாமலே வந்துவிட்டார்கள். இந்த நிலைமையை உணர்ந்த பேடிகள் கேள்விக்கு பதில் பலாத்காரம் தான் என்பதைக் காட்டிக் கொண்டார்கள்.
நாம் இதற்கு ஆக சிறிதும் வருத்தப்படவில்லை. கொள்கையில் நாணயத்தில்.
பலம் இல்லாமல் காலிகளின் உதவியால் அயோக்கிய பிரசாரம் எத்தனை நாளைக்கு நடக்கும் என்பது நமக்குத் தெரியும். பலாத்காரத்தால். வெற்றிபெற்றுவிடக்கூடுமானால் அது பார்ப்பனரல்லாதாருக்குத்தான்
முடியும். பார்ப்பனரால் ஒருநாளும் மூடியாது. கூலிகளுக்கு ஒரு நாள்: இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்குப் புத்தி வந்துவிடும் என்பதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம்
ஆனால் காங்கிரசுக்காரர்களின் யோக்கியதையை சுயமரியாதைக்காரர்கள் உணர்ந்து இருந்தும் அவர்களது மன்னிப்பு வேண்டுகோளையும் வாக்குத் தத்தத்தையும் நம்பினதுதான் பைத்தியக்காரத்தனமாக ஆகிவிட்டது என்று கருத வேண்டியிருக்கிறது
சுதேசமித்திரன்
சேலம் கூட்ட நடவடிக்கையைப்பற்றி மே மாதம் 20ந் தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் “நமது நிருபர்!” பேரால் வெளியிடப் பட்டிருக்கும் சேதியில் அதாவது 6வது பக்கம் 4வது கலம் கடசி வாக்கியத்தில்,
"சீமான் சத்தியமூர்த்தி பேசி முடிந்ததும் அக்கிராசனர் பேச ஆரம்பித்ததும் ஸ்ரீமான் சித்தய்யன் என்ற சுயமரியாதைக்காரர் ஒருவர் சில கேள்விகள் கேட்க எழுந்தார். அச்சமயம் 9-45 மணி இருக்கும். இவ்வளவு நேரத்துக்கு பின் கேள்விகேட்டு கூட்டத்தை இன்னும் நீடிப்பதை ஜனங்கள் ஆதரிக்கவில்லை. அச்சமயம் கூச்சல் ஏற்பட்டதைக்கண்டு அக்கிராசனர். கூட்டத்தை கலைத்துவிட்டார்.
குடி அரசு- 1936 (1) 300
கூட்டம் முடிந்ததும் சிலர் சீமான் சித்தையனையும் இன்னும் சிலரையும் தாக்கி அடித்தார்கள். போலீஸ்காரர்கள் வந்து இவர்களை வெளியேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.
வெளியேற்றிய போலீஸ்காரர்களுக்கும் சில இடங்களில் அடி விழுந்தது” என்று பிரசுரிக்கப்பட்டிருக்கிறது
திணைமணி
மற்றும் 20-5-36 தேதி தினமணி 2ம் பக்கம் 4வது கலம் மத்தியில் “கத்தியமூர்த்திக்குக் கேள்விகளடங்கிய கடிதம் கொடுக்கப்பட்டது. தலைவர் கேள்வி கேட்பவனை மேடைக்கு வரும்படி அழைத்தார். அவரை பலமாகத் தாக்கினார்கள்'' என்று எழுதி இருக்கிறது
இதிலிருந்து என்ன விளங்குகிறது என்பதை வாசகர்கள் அறிய வேண்டுகிறோம்.
அதாவது காங்கிரஸ்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சியையும், சுயமரியாதைக் கட்சியையும் பற்றி பொய்யும் புளுகும் கூறி வசைபாடும் போதெல்லாம் பொறுமையாகவே கேட்டுக் கொண்டிருந்து யாதொரு கலவரமும் இல்லாமல் கூட்ட முடிவில் கேள்விகளை எழுதிக்கொடுத்து கேட்டு
இருக்கிறார்கள் என்பதும், அதற்கு பதில் சொல்லாமல் கூட்டத்தை அக்கிராசனர். முடிவுரை கூட கூறாமல் முடித்துவிட்டு பலாத்காரத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். என்பதும் நன்றாய் புலப்படுகிறதா இல்லையா என்று கேட்கிறோம். ஆகவே தோழர்சித்தப்யனை வேண்டுமென்றே கெட்ட எண்ணத்தோடு மேடைக்கு அழைத்து அடித்து இருக்கிறார்கள் என்பது நன்றாய் விளங்குகிறது. இது ஆண்மையுள்ள மனிதர்கள் செய்யும் காரியமா? பேடி நாய்கள் செய்யும் காரியமா? என்பதை யோசிக்கும்படியும் இதை அனுமதித்த தலைவர் சத்தியமூர்த்தியார் எவ்வித தண்டனைக்கு யோக்கியதை உடையவராவார் என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி விரும்புகிறோம்
இதற்கு முன்னும் இப்படி நடந்த பல செய்கைகளை நாம் பார்த்த பிறகே 'காலித்தனமும் பலாத்காரமும் காங்கிரஸ் கூலிகளுக்கு மாத்திரம் சொந்தமல்ல” என்று எழுதி இருந்தோம். அதன் பிறகே காங்கிரஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டதும் தோழர் சத்தியமூர்த்தி மேடையேறிப் பேச சவுகரியமும் ஏற்பட்டதுமாகும்
ஆனால் அது காங்கிரஸ்காரர்களுக்கு உடனே மறந்து போய்விட்டது இனியொரு தரமும் காலித்தனமும் பலாத்காரமும் காங்கிரசுக்காரர்களுக்கு மாத்திரம் சொந்தமல்ல என்று காட்டினால் தான் அவர்களுக்கு புத்திவரும் என்கின்ற நிலையை சேலத்தில் சத்தியமூர்த்தியார் கொண்டுவந்து விட்டுவிட்டார்.
391 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சேலம் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலோ, அல்லது இனி சுயமரியாதைக் கட்சியையும், ஐஸ்டிஸ் கக்ஷியையும் பற்றி பேசிக்கொண்டோ. இருக்கும்படியாக தோழர் சத்தியமூர்த்தியாரை அனுமதிக்கக்கூடாது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது.
பலாத்காரம் ஏற்பட்டாலும் அடிதடி நடந்தாலும் சத்தியமூர்த்தியாருக்கு ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றும், அவர் ஓடிவிடுவார் என்றும் அவர் மீது ஒரு அடி கூட படாது என்றும் நம்மவர்களே,, பார்ப்பனரல்லாத வாலிபர்களேதான் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகவேண்டிவரும் என்றும் நமக்குத் தெரியும்
இம்மாதிரி கஷ்ட நிலையை பார்ப்பனர்கள் உண்டாக்கிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இதனாலேயே பொதுமக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நாம் ஆரம்ப முதல் பலாத்காரம் கூடாது என்றும், கூட்டங்களில் குழப்பம் கூடாது என்றும், நம் கட்சியைப்பற்றி பேசும் சமயங்களில் மாத்திரம் அதுவும் கூட்டம் முடிவில் கேள்வி கேட்கலாம்
என்றும் எழுதி வருகிறோம்
அந்தப்படியே சுயமரியாதைத் தோழர்கள் நடந்து வருகிறார்கள். அப்படி இருந்தும் காங்கிரசுக்காரர்கள் பலாத்காரம் செய்தால் இனி நாம் என்ன செய்வது? பலாத்காரத்துக்கு அதுவும் பார்ப்பன கூலிகளின் பலாத்காரத்துக்கு வெற்றி ஏற்படும்படி விட்டுவிட்டு ஓடிப்போவதா? அல்லது இனி இப்படி நடவாதபடி அவர்களுக்குப் புத்தி கற்பிப்பதா? என்பதே முக்கிய பிரச்சினையாக ஆகிவிட்டது.
பொதுவாக சர்க்கார் இம்மாதிரி விஷயங்களில் தலையிட்டு இப்படிப் பட்டக் காரியங்கள் நடக்காதபடி தகுந்த எச்சரிக்கையான காரியங்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இதைப்பற்றிப் பலதடவை எழுதியிருக்கிறோம்.
இது விஷயத்தில் சர்க்கார் பொறுப்பற்றவர்களாய் போய்விட்டதால்
புதுச்சேரி மாதிரி கையில் வலுத்தவன் காரியமாக ஆக இடம் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். கையில் வலுத்தவன் காரியம் என்று ஆகுமானால் பார்ப்பனப் பூண்டு சித்திரத்தில் கூட இருப்பதற்கு அருகதையற்றதாகிவிடும் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லுவோம்
போலீஸ் நீதி முதலிய இலாக்காக்களில் பார்ப்பன ஆதிக்கம் தலை
சிறந்து விளங்குவதாலும், பார்ப்பனரல்லாத அந்த இலாக்காத் தலைவர்கள். நாட்களையும், பணங்களையும் எண்ணுகிற வேலையிலேயே ஈடுபட்டு
இருப்பதாலும் பதிலுக்கு பதில் செய்யும் கைபலம் பயன்படாமல் போனாலும் போகலாம் என்று சிலர் கருதலாம். ஆனாலும் பார்ப்பனரல்லாதார் இதையே ஒரு பிரச்சினையாகக் கொண்டு விட்டால் கண்டிப்பாகப் பார்ப்பனப்பூண்டு மறைந்துவிடும் என்று பந்தயங் கூறுவோம்.
குடி அரசு - 1936 (1) 392.
சகல மக்களுக்கும் சம நியாயம் வழங்க வேண்டும் என்று கருதுகின்ற
நாம் சுயநலத்திற்கும் தன்னல ஆதிக்கத்திற்கும் பங்கம் வரும் என்று கருதுகின்ற மக்களால் ஏமாற்றப்படும் தொல்லையை சமாளித்துத்தான். ஆகவேண்டும் என்றும், அவர்கள் தொல்லை கொடுப்பது இயற்கைதான் என்றும் நாம் கருதுவதாலேயே இவைகளை சகித்துக்கொண்டே வருகிறோம்.
தோழர் ஈ.வெ. ராமசாமி எந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்தபோதும் அவரைக்கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தே வந்திருக்கிறார். கேள்விகளை வரவேற்று பதில் சொல்லியே கூட்டங்கள் ஒழுங்காய் முடிவு பெற்றிருக்கின்றன.
மடியில் கனமிருந்தாலொழிய வழியில் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்பது போல் யோக்கியமாக உண்மை நிலையை பேசுகிறவர்கள் எந்தக் கேள்விக்கும் பயப்பட வேண்டியதில்லை. பாமர மக்களை ஏமாற்றக் கருதி கண்டபடி உளறுகிறவர்களும் பொறுப்பில்லாமல் முட்டாள் தனமாய் பேசுகிறவர்களுமேதான் கேள்விக்குப் பயந்து கோழைகளாய் பேடித்தனமாக கூட்டத்தை முடித்துக் கொண்டு ஓடுவதும் பலாத்காரம் செய்வதுமான காரியத்தில் இறங்குவார்கள். எப்படி இருந்தாலும் இதன்பயனை காங்கிரஸ் தலைவர்கள் அனுபவித்துத்தான் தீருவார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 24.05.1936
393 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சேலத்தில் சத்திய மூர்த்தியார் சவடால்
பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றித் தோழர் சத்திய மூர்த்தி சேலம் மகாநாட்டில் பேசிவருகையில் “பண்டித ஜவஹர்லால் சொல்லுவதை நான் ஆதாரமாய் எடுத்துக்கொள்ள முடியாது” “காந்தி அபிப்பிராயம் என்ன என்பது எனக்குத் தெரியாது'' ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு ஆக சிறை செல்லத் தயாராய் இருக்கிறேன்” “மந்திரி ஆகி
மேட்டூர் தண்ணீரை சேலத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசி இருக்கிறார். இது 20-5-36ம் தமிழ்நாடுவில் இருக்கிறது
ஜஸ்டிஸ் கட்சி ஒழிவதற்கு ஆக ஒரு பார்ப்பனர் சிறை செல்லுவதாய் இருந்தால் பார்ப்பனப்பூண்டு ஒழிவதற்கு ஆக எத்தனை பார்ப்பனரல்லாத மக்கள் சிறைச் செல்லத் தயாராய் இருப்பார்கள் என்பதை சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அறியார் போலும்
பார்ப்பன ஆதிக்கமானது மனித சமூகத்துக்கு சிறப்பாக பார்ப்பன ரல்லாத சமூகத்துக்கு செய்துவந்த கொடுமைக்கும் துரோகத்துக்கும் நிவர்த்திக்காக ஆயிரக்கணக்கான பார்ப்பன மக்கள் ஜெயிலுக்குப் போவது மாத்திரமல்லாமல் தூக்கு மேடைக்கு போனாலும் தகும் என்றும் தகுதியான
காரியம் என்றும் சொல்லலாம்
ஆனால் பார்ப்பனரல்லாத சமூகம் யோக்கியப் பொறுப்பும், பொறுமையும், சமத்துவ உணர்ச்சியும் கொண்டதாய் இருப்பதால் அதன் தலைவர்கள் மக்களுக்கு அப்படிப்பட்ட அபிப்பிராயம் உதிக்கவே முடியாமல் செய்து வருகிறார்கள். இதை அனுகூலமாகக் கொண்டு சில பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கம் பேடித்தனமான இயக்கம் என்று கருதிக் கொண்டு தங்கள் கொடுமையையும் சூழ்ச்சியையும் மேலும் மேலும் காட்டி வருகிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு.
இனிவரும் பார்ப்பனரல்லாதார் சமூக வாலிபர்களுக்கு பலாத்காரத்தில் இறங்கவும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காகத் தூக்குமேடை செல்லுவதை அவசியமாகக் கருதவும் தோழர் சத்தியமூர்த்தியாரே எடுத்துக்காட்டி வழிகாட்டுகிறார் என்றே கருதவேண்டி இருக்கிறது.
ஜஸ்டிஸ் கட்சிக்கும் சத்தியமூர்த்தியார் கொள்கைக்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு விரலையாவது சுட்டிக் காட்டுவாரா?
குடி அரசு- 1936 (1) 304
மேலே காட்டப்பட்டபடி ஜவஹர்லால் கொள்கையை ஒப்புக் கொள்ளாதவர், காந்தியாரின் கொள்கை இன்னதென்றே தெரியாதவர், ஜெயிலுக்குப் போவதும், ஒத்துழையாமையும் சட்டமறுப்பும் கூடாது என்பவர், மந்திரி ஆகி மேட்டூர் தண்ணீரை சேலத்துக்கு கொண்டு வரவேண்டும் அதற்கு ஆக மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லுகிறவர் ஆகியவர்க்கு ஜஸ்டிஸ் கட்சி கொள்கையில் எது விரோதம்? எதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும்? என்று கேட்கிறோம். ஆகவே சத்தியமூர்த்தியாருக்கும் ஜஸ்டிஸ் கட்சியாருக்கும் உள்ள வித்தியாசம் எல்லாம் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேதம் தவிர பார்ப்பனர்கள் - பிராமணர்கள் கடவுள் முகத்தில் பிறந்தவர்கள், பார்ப்பனரல்லாதார் - சூத்திரர்கள் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் தீண்டாதார் ஜாதியார்கள் சண்டாளர்கள் என்பதல்லாமல் வேறு என்ன வித்தியாசம் என்று கேட்கின்றோம் சுயமரியாதை அற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கும் பார்ப்பனர்களுக்கு கூலியாய் இருந்து தங்களது சமூகத்தைக் காட்டிக்கொடுத்து மானத்தை விட்டுக்கொடுக்கும் வாலிபர்களுக்கும் எதை விட்டுக்கொடுத்தாவது அதிகாரமும் பதவியும் சம்பாதிக்க வேண்டும் என்பவர்களுக்கும் வேண்டு மானால் சத்தியமூர்த்திக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசமிருப்பதாக தோன்றலாம். ஆனால் சுத்த ரத்த ஓட்டமுள்ள சுயமரியாதை வாலிபர்களை நாம் இன்னம் ஒருமுறை கேட்கின்றோம். சத்தியமூர்த்திக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்றும், எதற்காக ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க சத்தியமூர்த்தியார் ஜெயிலுக்கு போகவேண்டுமென்றும் யோசித்து பார்க்கும்படியும் அதற்கு யோக்கியமான சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாத வாலிபர்கள் என்ன பதில் செய்யவேண்டுமென்றும் கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்கு ஜெயிலுக்கு போவதென்றால் பலாத்காரம் செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவதாகத்தானே அருத்தம்.
தேர்தல் சமீபம் ஆக ஆக சத்தியமூர்த்திக்கு மூளைக் கொதிப்பு அதிகமாகின்றது. கூலிகளுக்கு அதிக உற்சாக மூட்டுகிறார். தலை, கால், கண்: தெரியாமல் நடந்து கொள்ளுகிறார்கள். எப்படியானாலும் இதன் பயனையும் அனுபவிப்பார்கள் என்பதில் நமக்கு சந்தேகமில்லை
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.05.1936
395 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தலைவர்களுக்கு புத்தி வருமா
சென்னை கார்ப்பரேஷன் கெளன்சிலர் தோழர் எம். சுந்தரம் நாயுடு ஜஸ்டிஸ் கட்சியை விட்டுப் பிரிந்து விட்டதாகத் தெரிய வருகிறது பிரிவதற்குள்ள காரணத்தை விளக்கி அவர் எழுதியுள்ள ஒரு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-
“ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தது முதல் நான் அதில் அங்கத்தினராக இருந்து வந்திருக்கிறேன். கெளன்சில் வேலையைத் தவிர்த்து அதை (கட்சியை) ஒழுங்குபடுத்துவதற்கோ நல்ல தேசீய வழிகளில் அதைத் திருப்புவதற்கோ அதன் தலைவர்கள் கொஞ்சம் கூட இஷ்டப்படுவதாகத் தோன்றவில்லை. நகரத்தில் ஆதரிப்பவர்களோடோ அல்லது மற்ற இடங்களில் தங்களை ஆதரிப்பவர்களோடோ அவர்கள் சம்பந்தம் ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை. முக்கியமான தீர்மானங்களைச் செய்வதிலும் அவர்கள் கலப்பதில்லை. ஒரு அரசியல் கட்சி முறையில் யதார்த்தமாக வேலை செய்வதை அதி நிறுத்திவிட்டது". தோழர் சுந்தரம் நாயுடு கூறியிருக்கும் மேல்காட்டிய அபிப்பிராயங்கள் முற்றிலும் சரியானவைகளாகும். ஜஸ்டிஸ் கட்சியின் தற்கால நிலைமையை படம் பிடித்ததுபோல் அவர் விளக்கிக் காட்டியிருக்கிறார். சென்ற அசம்பிளித் தேர்தல் காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்காக அந்தரங்க சுத்தியாக வேலை செய்த இரண்டொருவரில் தோழர் சுந்தரம் நாயுடுவும் ஒருவர். அவருக்கே கட்சி மீது இப்பொழுது வெறுப்புத் தோன்றியிருக்க வேண்டுமானால் அதற்கு ஜவாப்தாரிகள் கட்சித் தலைவர்களேயாகும். சென்னை நகர சபைக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெறப்போகிறது. காங்கிரஸ் கட்சியார் இப்பொழுதே வேலை செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களோ உண்பதும் உறங்குவதுமே போதுமென்று திருப்தி யடைந்திருக்கிறார்கள். கட்சியைப் பற்றிய சிந்தனையே அவர்களுக்கு இல்லை. சென்னை அசம்பிளிக்கு இப்பொழுது வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள். சென்னையிலும் வெளியூர்களிலும் வாக்காளர். பதிவு விஷயத்தில் காங்கிரஸ்காரர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சென்னையிலே காங்கிரஸ் தொண்டர்கள் முயற்சியினால் பிரதிதினமும் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறார்களாம். ஜஸ்டிஸ் கட்சியாரோ ஒன்றும் செய்யவில்லை. மத்திய பிரசாரக் கமிட்டிக் காரியதரிசி தோழர் மதனகோபால நாயுடு, ஜஸ்டிஸ், விடுதலை பத்திரிகைகளில்
குடி அரசு- 1936 (1) 396
வாக்காளர் பதிவு செய்ய வேண்டியதைப்பற்றி இரண்டு அறிக்கைகள் வெளியிட்டு விட்டுச் சும்மா இருக்கிறார். நம்மவர்கள் பூரணமான அரசியல் உணர்ச்சி பெற்றவர்கள் அல்ல. பிறர் தூண்டினாற்றான் அவர்கள் தத்தம் பெயர்களைப் பதிவு செய்ய முன் வருவார்கள். காங்கிரஸ்காரர் வாக்காளர். களுக்குத் தேவையான உதவிகள் எல்லாம் செய்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களோ படே ஆசாமிகள். பக்கத்து வீட்டுக்காரனிடம் பேசமாட்டார்கள். வீடு தேடிச் சென்றாலும் பேட்டி கொடுக்க மாட்டார்கள். இந்தக் காலத்திலே இப்பேர்ப்பட்ட ஆசாமிகளை வைத்துக் கொண்டு எந்தக்கட்சியையாவது நடத்த முடியுமா? இப்பேர்ப்பட்ட உணர்ச்சியற்ற தலைவர்களைக் கொண்ட கட்சியை யார்தான் கட்டி அழுவார்கள்? இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சி பேரால் சென்னை நகரத்துக்கு மூன்று பிரதிநிதிகள் சென்னைச் சட்டசபையில் வீற்றிருக்கிறார்கள். அவர்களுள் இருவர் கெளன்சில் சிக்கரிட்டரிகள். மாதா மாதம் 500-ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஒருவர் கெளன்சில் டிப்டி பிரசிடெண்டு. மாதம் 500-ரூபாய் சம்பளம். கட்சியின் பெயரால் வாங்கும் காசுக்காகவாவது இந்த மும்மூர்த்திகளும் கட்சி முன்னேற்றத்துக்காக சிறிதளவாவது வேலை செய்ய வேண்டாமா? தற்காலமிருப்பது போல் மேலும் அவர்கள் இருந்துகொண்டிருந்திருந்தால் அடுத்த தேர்தலில் அவர்கள். முறியடிக்கப்படுவது திண்ணம், திண்ணம். வேலை செய்யவேண்டிய காலத்து சும்மா இருந்துவிட்டு கடைசி காலத்து கட்சிப்பிரசாரம் செய்வது வீண் பணச்செலவேயாகும். சென்னை நிலைமை மிக மிக மோசமாகவே இருக்கிறது. சென்னையில் முனிசிபல் வார்டுகள் தோறும் ஒவ்வொரு கிளை ஸ்தாபிக்கவும் மெம்பர்கள் சேர்க்கவும் எத்தனையோ முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் தீர்மானப்படி ஒன்றுமே நடைபெறவில்லை. தற்கால சட்டசபை மெம்பர்களான டாக்டர் நடேசமுதலியார் தோழர்கள் சுந்தரராவ் நாயுடு, மதனகோபால் நாயுடு ஆகிய மூவரும் வசிக்கும் சேப்பாக்கம், புதுப்பேட்டை, ஜார்ஜ் டெளண் முதலிய பகுதிகளிலாவது கிளைச்சங்கங்கள் உண்டா? தொண்டர்கள் உண்டா? கட்சிப் பிரசாரம் உண்டா? இல்லை, இல்லை. இல்லை யென்றே எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டியிருக்கிறது கட்சியின் பேரைச் சொல்லிக்கொண்டு தேர்தல் காலத்து இவர்கள் எவ்வாறு வெளிவரப்போகிறார்களோ தெரியவில்லை. தோழர் சுந்தரம் நாயுடு ராஜிநாமாவைப் பார்த்த பிறகாவது இவர்களுக்கு உணர்ச்சி உண்டாகுமா!
புத்தி வருமா?
குடி அரசு - கட்டுரை - 24.05.1936
397 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
டாக்டர் அன்சாரி மரணம்
டாக்டர் அன்சாரி பிரிவு பொதுவாக தேசத்துக்கு பெரிய நஷ்டமே சட்டமறுப்பு மூலம் சுயராஜ்யம் பெற முயல்வது முட்டாள்தனமென உணர்ந்த பின்னரும் நேர் வழியைப் பின்பற்ற காங்கிரஸ் தலைவர்கள் தயங்கிக் கொண்டிருந்தனர். தவறை ஒப்புக்கொள்வது அகெளரவமாகாதென உணர்ந்த டாக்டர் அன்சாரியோ துரபிமானத்துக்குக் கட்டுப்பட்டுப் பின்னடையவில்லை. தைரியமாக மூன் வந்து சட்ட மறுப்புக் கொள்கையை மாற்றி சட்டசபை மூலம் வேலை செய்யப் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு ஸ்தாபனத்துக்கும் அவரே காரணம். பார்லிமெண்டரி போர்டின் முதல் தலைவராயிருந்தவரும் அவரே. அசெளக்கியம் காரணமாக அரசியல் வாழ்வைத் துறந்ததாகக் கூறப்பட்டாலும் சுயநலக்காரர் சூழ்ச்சிகளினால் காங்கிரஸ் அலங்கோலப்பட்டு வருவதை யுணர்ந்தே அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டும். வகுப்புத் தீர்ப்பு உடைபடாமலிருப்பதற்கும் அவரே காரணம். காங்கிரஸ் ஹிந்து மெம்பர்கள் வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கா விட்டாலும் டாக்டர் அன்சாரிக்குப் பயந்தே நடுநிலைமை வகித்து வருகின்றனர். முஸ்லீம்கள் க்ஷேமத்தை அவர் கண்ணும் கருத்துமாய்க் காப்பாற்றி வந்தார். வகுப்புத் தீர்ப்பை ஹிந்து மகா சபையாரும், வங்காள ஹிந்துக்களும் கட்டுப்பாடாக எதிர்த்து வரும் இக்காலத்து டாக்டர் அன்சாரி மறைந்தது வருந்தத்தக்கதே. அன்னார் சுற்றத்தாருக்கு நமது ஹிருதய பூர்வமான. அநுதாபம் உரித்தாகுக!
குடி அரசு - இரங்கற் செய்தி - 24.05.1936
குடி அரசு- 1936 (1) 398
ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கம்
தோழர்களே! ஈரோடு வர்த்தகக் குமாஸ்தாக்களின் சங்கத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு நிரம்பவுண்டு. நான் எனது 11-வது வயதில் வியாபாரத் தொழிலுக்கு வந்தவன். எனது 42-வது வயதுவரை வியாபாரியாகவே இருந்தேன். ஈரோடு வர்த்தக சங்கம் 1916ம் வருஷம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு மூன்பு இருந்தே அதில் தலைவனாக பல வருஷம் இருந்தேன்.
கடைசியாக நான் முனிசிபல் சேர்மென் ஆனதும், காங்கிரசில் சேர்ந்ததும்தான் எனது வியாபாரம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். நான். ஏற்றுக்கொண்ட பொதுவேலைகளில் அதிகக் கவனம் செலுத்தியதாலேயே
என் சொந்த வேலைகள் கவனிக்கப்படாமல் போய் விட்டன. ஆனபோதிலும் இந்த ஊர் வர்த்தகர்களிடமும் வர்த்தகக் குமாஸ்தாக்களிடமும் எனக்கு மிகவும் பற்றுதலும் மரியாதையும் உண்டு. நான் உள்ளூரிலேயே இருக்க முடியாததாலும் போதிய சாவகாசமில்லாததாலேயும் அடிக்கடி அவர்களுடன்: கலந்து கொள்ள முடியாமல் போகிறது
என்றாலும் இன்று இந்த அதாவது ஈரோடு வர்த்தகர்களும், வர்த்தகக் குமாஸ்தாக்களும் கலந்த இந்தப் பெரிய கூட்டத்தில் கலந்து கொண்டதை நான் ஒரு பெருமையாகவே நினைக்கிறேன். அதிலும் எனது நண்பர் தோழர் வி.வி. ஷண்முகம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்வதில் மிகவும் பெருமையாக மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்குச் செய்யும் மரியாதையை எனக்குச் செய்வதுபோலவே கருதுகிறேன்.
தோழர் வி.வி.ஷண்முகம் அவர்கள் குடும்பம் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் மிக்க செல்வந்தர்கள், நல்ல படிப்புள்ளவர்கள், பொது விஷயங்களிலும் ஊக்கமுள்ளவர்கள். ஒரு சகோதரர் பி.ஏ. வாசித்துத் தூத்துக்குடி பர்மை நடத்துகிறார். மற்றொரு சகோதரர் விருதுநகர் சேர்மெனாக இருக்கிறார். மற்றும் அனேக பொதுக்காரியங்களில் உழைக்கிறார். வருஷா வருஷம் இவர்கள் வியாபாரத்தில் ஏராளமான பணம் சம்பாதித்தாலும் பொதுக்காரியங்களில் அதிக ஊக்கம். ஆகையால் அவர்களை நீங்கள் வரவேற்று மரியாதை செய்து அவருடைய உபதேசங்களை பெறமுயற்சித்தது மிகவும் புத்திசாலித்தன காரியமாகும்
399 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நிற்க, என்னுடைய முடிவுரையாகப் பேசுவதில் முக்கிய பாகமாக குமாஸ்தாக்களைப் பற்றிப் பேசுவது பொருத்தமானதென்று நினைக்கிறேன்.
நான் இந்த ஊரில் பிரபல வியாபாரியாயும், வியாபார சங்கத் தலைவனாகவு மிருந்த காலத்தில் என்னுடைய நெருங்கிய ஆப்தரான நண்பர்கள் குமாஸ்தாக்களாக இருந்தார்களே ஒழிய முதலாளிமார்களல்ல. எனக்காக வேண்டிய காரியங்களெல்லாம் ஈரோட்டிலுள்ள எல்லாக் குமாஸ்தாக் களிடத்திலிருந்தும் அடைந்து வந்தேன். ஆகையால் குமாஸ்தாக்களிடத்தில் எப்பொழுதுமே எனக்கு மதிப்பு அதிகம்
குமாஸ்தாக்களெனப்படுபவர்கள் யார் என்பதை முதலில் உணர வேண்டும். அவர்கள் வருணாச்சிரம அடிமைகளல்ல. முதலாளிகளின் கூலிகளல்ல. முதலாளிகளின் உற்ற துணைவர்களாவர்கள். அடுத்த நிமிஷத்தில் முதலாளிகளாக வருபவர்கள். எப்படி எம்.ஏ.க்கு கீழ்படி பி.ஏ இருக்கின்றதோ அதுபோல் முதலாளிக்கு முந்திய படியில் இருப்பவர்கள் குமாஸ்தாக்களேயாவார்கள்.
இப்பொழுது இந்த ஊர் முதலாளிமார்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் 100-க்கு 90 பேர்களுக்கு மேலாகவே குமாஸ்தாக்களாக இருந்தவர்களும் குமாஸ்தாக்களாக இருந்து முதலாளியானவர்களுடைய பிள்ளைகளுமேயாவார்கள். ஆதலால் குமாஸ்தாக்கள் என்பதை யாரும் இழிவாய்க் கருதிவிட முடியாது.
குமாஸ்தாக்களுக்கு மரியாதை ஏற்பட வேண்டுமானால் குமாஸ்தாக்கள் முதலில், தங்களைத் தாங்களே மரியாதை செய்து கொள்ள வேண்டும் தங்களைப்பற்றி தாழ்மையாய் நினைத்துக் கொள்ளக்கூடாது. குமாஸ்தாக்களை கவுரவமாகவும், தாராளமாகவும் முதலாளிமார்கள் நடத்தினால் அதற்குத் தகுந்த லாபமடைவார்கள்.
இந்த நாட்டில் குமாஸ்தாக்களின்நிலைமை மிகமோசமாகத்தானிருக்கிறது. அவர்களுக்கு ஓய்வு கிடையாது. காலை 6 மணிக்கு எழுந்து 7 மணிக்குக் கடைக்குப் போகவும் இரவு 10 மணிக்கு வீடு திரும்பவுமான நிலைமையிலிருக்: கிறார்கள். ஒழுங்கான லீவ் கிடையாது. வாழ்க்கையில் பின் வாழ்க்கைக்கு ஒரு பந்தோபஸ்தும் கிடையாது. அவர்களுடைய உத்தியோகத்திற்கும் கால அளவுக்கு ஒருஜவாப்தாரித்துவம் கிடையாது. எப்பொழுது வேண்டுமானாலும் முதலாளிமார்கள் குமாஸ்தாக்களை வீட்டுக்கு அனுப்பிவிடலாம். அதற்குக் காரணம் “வேண்டாமென்றால் வெளியில் போக வேண்டியது தானே'' என்பது தான். இந்த நிலையில் அவர்களுடைய வருமானமோ பெரும்பாலும் சாதாரண மனிதனின் ஜீவியத்திற்கே போதாமலிக்கிறது. இந்தக் காரணங்களிலேயே குமாஸ்தாக்கள் வருணாச்சிரம அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகிறார்கள். ஒரு முதலாளி இடத்தில் ஒரு குமாஸ்தா விஸ்வாசத்துடன் 30 வருஷகாலம் உழைத்துவிட்டு வீட்டுக்குப் போவதா: யிருந்தால் முதலாளிக்குப் பழைய பாக்கிக்காக பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு
குடி அரசு- 1936 (1) 400
போகவேண்டி இருப்பதும், அல்லது அதிக பத்துவளியை தள்ளிக் கொடுக்கும்படி கெஞ்சிவிட்டுப் போகவேண்டி இருப்பதும், வீட்டுக்குப்போய் பிள்ளைக்குட்டிகளின் வரும்படியை எதிர்பார்த்து நடைப் பிணங்களாய்
இருக்க வேண்டியதாய்த் தான் முடிகிறது
சர்க்கார் உத்தியோகம்
உத்தியோகத்தை விட வர்த்தக குமாஸ்தாக்களாக இருப்பது மேல் என்று தோழர் கேசவலால் சொன்னார். உத்தியோகத்தை இகழ்ச்சியாகவும் பேசினார். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன்.
மாதம் 100 ரூபாய் சம்பளத்தில் இருக்கும் குமாஸ்தாவை 15 வருஷம் பொறுத்து முதலாளி வீட்டுக்குப் போ என்று சொன்னால் ஏன் என்று கேட்பதற்கு உரிமையில்லை. வேறு இடத்தில் வேலை கிடைக்கும் வரை சாப்பாட்டிற்கும் வழியில்லை.
30 வருஷம் உழைத்த பிறகும் வீட்டுக்குப் போகும் போது வெறுங் கையோடுதான் போக வேண்டும். ஆணால் 8 ரூபாய், 10 ரூபாய் சம்பளமுள்ள
சர்க்கார் சேவகரை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் உத்தியோகத்துக்கு காரண்டியிருக்கிறது. அவன் வேலை செய்து நீங்கிய பின் பென்ஷன் இருக்கிறது. ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டி ரயில்வே ஆகியவைகளில் பிராவிடண்ட் பண்டு இருக்கிறது. மேல்நாடுகளிலும் இப்படித்தான் வெள்ளைக்கார வியாபார ஸ்தலங்களிலும் இப்படித்தான். இந்தியாவில்தான். எந்தத் தொழிலுக்கும் தொழிலாளிகளுக்கும் நம்பிக்கையான வாழ்க்கைக்கு இடம் இல்லை. இது மிகவும் கொடுமையான விஷயம்
ஓய்வு
தவிர குமாஸ்தாக்களுக்கு ஓய்வு வேண்டாமா? அநேக குமாஸ்தாக் களுக்கு தங்கள் பிள்ளை குட்டிகளையும், பெண் ஜாதியையும் வெளிச்சத்தில் பகல் காலத்தில் பார்க்கக்கூட நேரம் கிடையாது. பிள்ளைகள் எழுந்திருக்கு முன் கடைக்கு ஓடிவரவேண்டும். பிள்ளைகள் தூங்கின பிறகு வீட்டுக்குப் போகவேண்டும். இப்படித்தான் இருக்கிறது. லீவ் நாட்களும் கிடையாது இது மிகவும் கொடுமையான - ஜீவஹிம்சையான காரியமாகும்.
மனித சமூகம் உள்ள நேரமெல்லாம் கஞ்சிக்கு ஆகவே உழைக்க வேண்டும் என்பது மிகவும் அவமானகரமும், இழிவுமான காரியமாகும் இது முதலாளிமார்களுக்கும் அரசாங்கத்திற்கும் கூட அநாகரீகமான காட்டு மிராண்டித்தனமான காரியமாகும்.
மேல்நாடுகளில் காலை 9 மணிக்குத்திறந்து 2 மணிக்கு மூடி 4 மணிக்குத் திறந்து 7 மணிக்கு மூடி விடவேண்டும். இது முனிசிபல் சட்டமாகும். இதற்கு விரோதமாய் மருந்து ஷாப்புகளும், ஓட்டல்களும் தவிர வேறு எந்தக் கடை
401 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
திறந்திருந்தாலும் அக்கடைக்காரர்களை போலீசார்கள் பிராசிகூஷன் செய்து விடுவார்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தவறாமல் கடைமூடி விடுவார்கள். குமாஸ்தாக்களுக்கு பிராவிடெண்ட் பண்டு, போனஸ் முதலியவை உண்டு
இங்கு ஒன்றும் இல்லை. இந்த ஊரில் ஷராப் கடைக்காரர்களும் பல சரக்குக் கடைக்காரர்களும் மாதத்தில் ஒரு நாள் லீவு விடுகிறார்களாம் மண்டிக்கடைக்காரர்கள் இன்னமும் அப்படி செய்யாமல் இருப்பது அவர்களுக்கு அவமானகரமான காரியமாகும்
குமாஸ்தாக்கள் சங்கம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். வர்த்தகர்கள் சங்கமும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இருவர்களும் ஒத்து ஒரு ஏற்பாடு செய்யவேண்டும்
குமாஸ்தாக்கள் குறைகளை கண்டிப்பாய் வியாபாரிகள் கவனிக்க வேண்டும். குமாஸ்தாக்களால்தான் முதலாளிகளாகிறார்கள். அப்படிப் பட்டவர்கள் 30 வருஷம் உழைத்துவிட்டு வீட்டுக்குப் போய் பிள்ளை குட்டிகள் வரும்படியை எதிர்பார்ப்பதும், பிள்ளை இல்லாதவர்கள் பிச்சை எடுக்கவேண்டிவருவதும் முதலாளிகளுக்குத்தான் இழிவாகும். குமாஸ்தாக்கள். கஷ்டத்துக்கு ஒரு கதை சொல்லுவதுண்டு.
ஒரு கதை
அதாவது ஒரு முதலாளி தன் மகளை ஒரு குமாஸ்தாவுக்கு கொடுத்தார். அந்த குமாஸ்தா மற்றொரு முதலாளி கடையில் குமாஸ்தாவாக இருந்தார். குமாஸ்தா காலை 6 மணிக்கு எழுந்து கடைக்குப் போவதும் பகல் சாப்பாடு தருவித்துக் கொள்வதும் இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வருவதும் வந்தவுடன் சாப்பிட்டுவிட்டு தூங்கப்போவதும் பெண்ஜாதியிடம் கொஞ்சவோ குலாவவோ கூட நேரமும் உற்சாகமும் இல்லாமல் இருப்பதுமாயிருந்தான். இதைப்பார்த்த முதலாளி மகள் இதை எப்படி தான் தகப்பனுக்கு தெரிவிப்பது என்று சமயம் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ஒருநாள். அவர்களது வீட்டுவாசலில் கட்டி இருந்த இரண்டு கன்றுக்குட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று கால்களைத் தூக்கிப் போட்டு குதித்து முட்டி விளையாடிக் கொண்டிருந்தன. இதைப்பார்த்த அந்த முதலாளி மகள் தகப்பனைக் கூப்பிட்டு அப்பா அப்பா இந்த கன்றுகுட்டிகளுக்கு ஒரு குமாஸ்தா வேலை செய்து வைத்துவிடு, அதன் திமிர் அடங்கிவிடும் என்றாள். இதைக்கேட்ட தகப்பன் யோசிக்கத் தொடங்கி உண்மையை அறிந்து பிறகு தன் குமாஸ்தாக்களையும் ஒழுங்காய் நடத்தி, தன் மருமகனையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான் என்று ஒரு கதை உண்டு. அதுபோல் நம் குமாஸ்தாக்கள். வாழ்க்கை இருந்து வருகிறதை யாரும் மறுக்க முடியாது வேலை செய்யும் நேரம் திட்டப்படுத்த வேண்டும். தோட்டிகளுக்குக் கூட வேலை நேர திட்டம் இருக்கிறது
குடி அரசு- 1936 (1) 402
காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் வியாபார வேலை தீர்ந்துவிட வேண்டும். 7 மணி அடித்தவுடன் கிளப்புகளுக்கோ, விளையாட்டு மைதானங் களுக்கோ, பார்க்குக்கோ போய்விட வேண்டும். தன் பெண்டு பிள்ளைகளுடன் போய் உலாவவும் விளையாடவும் வசதி செய்து கொள்ள வேண்டும். இது அவசியம் மனித சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமையாகும்.
நாணயம்
குமாஸ்தாக்கள் நாணயமாய் இருக்கவேண்டும் என்று தோழர் வி.வி.ஷண்முகம் சொன்னார். நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் முதலாளிமார்களும் நாணயமாய் இருக்க வேண்டும். லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும். குமாஸ்தாவின் நல்வாழ்க்கையின் பொறுப்பை முதலாளி ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த வழக்கம் முதலாளிகளிடம்இல்லை.
குமாஸ்தா திருடினால்தான் சீக்கிரம் முன்னுக்கு வரமுடிகிறது, பணம் சேர்க்க முடிகிறது. அல்லது முதலாளி டிஸ்மிஸ் செய்த காரணத்தால் வேறு சொந்தத்தில் கடை வைத்து சீக்கிரம் முதலாளியாக முடிகிறது
அப்படி முதலாளி ஆனவர்கள் இந்த ஊரிலேயே இருக்கிறார்கள் அப்படி இருக்க வெறும் நாணயம் பேசி என்ன பயன்?
முதலாளிகள் நாணயம் எனக்குத்தெரியும். நானும் 30 வருஷகாலம் முதலாளியாய் இருந்தவன். என் தகப்பனார் 50 வருஷ காலம் முதலாளியாய் இருந்தவர். நாங்கள் திருடினது குமாஸ்தாக்கள் பார்த்துக்கொண்டும் உதவி செய்து கொண்டும் தான் இருப்பார்கள். 10 மனு சரக்கை 8 மனு என்று கூட சொல்லியிருக்கிறோம். மூட்டைக் கணக்கில் கூட திருடி இருக்கிறோம். ஒரு வண்டிக்காரன் 10 மூட்டை கொண்டு வந்தால் 8 மூட்டையை அவிழ்த்து கொட்டிவிட்டு 2 மூட்டையை உள்ளே கொண்டுபோய் மறைத்துக்கொண்டு இரண்டு காலிச் சாக்குகளை கொண்டு வந்து போட்டு 10 மூட்டை கொட்டினதாக கணக்குக்காட்டி 10 பைகளை ஒப்புவித்து விடுவோம் இப்படியே எல்லா வியாபாரிகளும் செய்வார்கள். இதனாலேயே கிராம விவசாய குடியானவர்கள் எல்லாம் பாப்பராகி கூலிகளானார்கள். இந்த முதலாளிமார்களிடம் பழகும் குமாஸ்தா எப்படி நாணயமாய் இருப்பான். இந்த திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொழில் முறையாய் விடுகிறது. அதாவது தாசி கற்புப் போலவும், வக்கீல் ஒழுக்கம் போலவும் வியாபாரி நாணயமும் கேள்விக்கு இடமில்லாததாகி விடுகிறது.
அரசியலில் எப்படி அதிக அயோக்கியத்தனமுள்ளவர்களே தலைவர்களாகி விடுகிறார்களோ அதுபோல் அதிகம் திருடத் துணிந்த முதலாளியே பெரிய - கவுரவ - கெட்டிக்கார முதலாளியாகிறான்.
குமாஸ்தா திருடிவிட்டால் கிரிமினல் குற்றவாளி ஆகிவிடுகிறான்.
403 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆகையால் குமாஸ்தாக்கள் நாணயமாய் இருக்க வேண்டும்
என்பதில் அருத்தமே இல்லை. குமாஸ்தாவை முதலாளி நன்மைக்காக முதலாளியே திருடச் சொல்லுகிறான். அத்திருட்டில ஒரு நேர்மையான பங்கு கொடுப்பதாய் இருந்தால் குமாஸ்தாவை திருடாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ள உரிமை உண்டு
திருட்டு இன்றைய தனிஉடமை உலகில் உலக சுபாவம். கையில் வலுத்தவனுக்குத்தான் நாணயம் ஒழுக்கம் என்று சொல்லிக்கொள்ள
முடியும். இளைத்தவன் குற்றவாளியாகத் தான் இருக்க முடிகிறது முதலாளியும் குமாஸ்தாவும் வாழ்க்கைத் துணைவர்கள் போல வாழ வேண்டும். இருவருக்கும் ஒரே நியாயமிருக்க வேண்டும். முதலுக்கு ஆக அதிகப்பங்கு எடுத்துக் கொள்வதை நான் ஆக்ஷேபிக்கவில்லை.
நான் சொல்லுவது புதுமையாகத் தோன்றுமாதலால், அதிதீவிர முறையாகத் தோன்றுமாதலால் குமாஸ்தாமார்கள் அவசரப்படாமல் முதலாளிகளுக்கு இணங்கி படிப்படியாக முன்னேறப் பார்க்க வேண்டும். முதலாளிகளோடு சச்சரவு கூடாது
நயத்திலும் பிறகு பயத்திலும் காரியம் சாதிக்கப் பார்க்க வேண்டும் முதலாளிகளும் ஒருபடி இறங்கி வந்து குமாஸ்தாக்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னால் ஆனதை எப்போதும் குமாஸ்தாக்களுக்கு செய்ய காத்திருக்கிறேன்.
குறிப்பு: ஈரோட்டில் 22.05.1936 ஆம் நாள் நடைபெற்ற ஈரோடு வர்த்தக குமாஸ்தாக்கள் சங்கக் கூட்டத்தில் ஆற்றிய தலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 31.05.1936
குடி அரசு - 1936 (1) 404
வெற்றி! வெற்றி!!
வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொதுரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்டதாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவிதாங்கூரில் எத்தனையோ சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. தேவதாசி ஏற்பாட்டை முதன். முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி ஹிந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப்பட்டது. நாயர்களுக்கு மட்டும் பிரவேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் சாதியாரும் கேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்ணர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவிதாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 31.05.1936
405 ௨. பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கொச்சி மதம் மகாநாடு
தலைவரவர்களே! தோழர்களே!!
இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் மதம் மகாநாடு என்பதற்கு என்னையும் அபிப்பிராயம் கூறும்படி அழைத்திருக்கிறீர்கள்.
பல மதங்களைப் பற்றிய பல அபிப்பிராயக்காரர்கள் இப்போது இங்கு தங்கள் அபிப்பிராயங்களைச் சொல்லிவிட்டார்கள்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தைப்பற்றி அதன் தலைவர்களால் உபதேசிக்கப்பட்டதர்மங்களின் பெருமைகளை உங்களுக்கு விளக்கினார்கள். இந்த நிலையில் நான் பேசுவது உங்களுக்கு அவ்வளவு திருப்தி அளிக்குமோ: என்று பயப்படுகிறேன். நான் எந்த மதத்தையும் ஆதரிப்பவனல்ல, எந்த மதத்தைப் பற்றியும் அதிகம் பாடுபட்டுப் படித்தவனுமல்ல. நான் எல்லா மதங்களையும், அந்தந்த மதக்காரர்களின் வாழ்க்கை நிலை மூலம் வெளியிலிருந்து அறிந்து அதைப்பற்றி மாத்திரமே அபிப்பிராயம் கொண்டிருக்கிறவன்.
இப்போது நமக்கு மதத்தைப்பற்றிய கவலையும், மத மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டிய அவசியமும் எதனால் ஏற்பட்டது? எதற்காக மதத்தைப்
பற்றி பேசுகிறோம்? என்பவைகளை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் மத மகாநாட்டில் எந்த மதத்தில் மோக்ஷம் சமீபத்தில் இருக்கிறது என்றோ, எந்த மதத்தில் நமது கொடிய அக்கிரமங்கள் சுலபத்தில் மன்னிக்கப்பட்டு விடும் என்றோ, எந்தக் கடவுள் நல்ல கடவுள் என்றோ பார்க்கப்போகிறோமா? அப்படியானால் எனக்கு இங்கு பேச்சே இல்லை ஏனெனில் எனக்கு மோக்ஷத்திலோ, பாவ மன்னிப்பிலோ, கடவுள் ஆட்சியிலோ சிறிதும் நம்பிக்கை கிடையாது. ஆத்மா என்பதோ, ஜீவன் என்பதோ ஒன்று இருப்பதாக நான் நம்புபவனே அல்ல. அது விஷயத்தில் எல்லா மதமும் ஒன்றுபோல் தான் இருக்கிறது. உலகில் உள்ள சகல மதத்துக்கும் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளும், மோட்சமும், நரகமும், ஆத்மாவும், ஜீவனும் உண்டு. பிரார்த்திப்பதின் மூலம் எல்லா மதத்திலும் பாவ மன்னிப்பு உண்டு இவற்றில் ஒன்று பெரிது மற்றது சிறிது என்று சொல்வதற்கில்லை.
பாவ மன்னிப்பில் இந்துமதமே அதிக மேலான மதமாகும் எவ்வளவு அயோக்கியனானாலும், கொடுமைக்காரனானாலும் ஒரு தடவை ராமா என்றோ, சிவா என்றோ சொல்லிவிட்டால் சகல பாபமும் போய்விடும்
குடி அரசு - 1936 (1) 406
என்று சொல்லப்படுகிறது. அதுகூட வேண்டாம். ஒரு சிடுக்கை சாம்பல் நம்மை அறியாது நம்மீது பட்டிருந்தாலும் போதும். அதைவிடச்க்கிரமாகவும் சுலபமாகவும் மற்ற மதத்தில் பாவ மன்னிப்பு இருக்கும் என்று நான். நினைக்கவில்லை. ஆதலால், ஆத்மார்த்தம், பாவமன்னிப்பு என்பதற்காக நமக்கு இப்போது மத விசாரணை தேவையில்லை பொதுவாக மதங்கள் யாரால் சிருஷ்டிக்கப் பட்டிருந்தாலும் அதனால். என்ன பலன் இருந்து வந்தாலும் இனி நாம் அவற்றை ஆதரிக்க முடியாது அதைஉண்டாக்கினவர்கள் பெரியவர்களாய், விவேகிகளாய், பரோபகாரிகளாய்
இருந்திருக்கலாம். அவர்களிடத்திலும் எனக்கு சண்டையில்லை. அவரவர்கள். அவ்வக்கால நிலைமைக்கு ஏற்றபடி அனுகூலித்தவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அவை ஒருவிதத்திலும் பிரயோஜனப்பட மாட்டா.
உலகப் பிரயாணத்தில் அந்தந்த காலத்துக்கு ஏற்ற கால அட்டவணையை (டைம் டேபிள்) பார்க்க வேண்டும். போன மாசத்து ரயில்வே கால அட்டவணையை (டைம் டேபிள்) கொண்டு மணி பார்த்து ரயிலுக்குப் போனால் ரயில் தவறிவிடும். இப்போது மாதத்துக்கு ஒரு கைட் ஏற்படுகிறது.
கிறிஸ்து நாதர் தான் ஆகட்டும், மகமது நபிதான் ஆகட்டும், ஸ்ரீ நாராயண குருஸ்வாமி தானாகட்டும் அந்தந்த காலத்துக்கு அவரவர்கள். சரியானவர்களாயிருக்கலாம்.
எப்போதைக்கும் எந்தெந்த காலத்துக்கும் அவர்கள் தான் வழிகாட்டிகள், அவர்கள் சொன்னதுதான் எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் என்றால் அதை நான் ஒத்துக்கொள்ள முடியாது. காலம் மாறி வருகிறது, அறிவும் ஞானமும் பெருகிவருகிறது. இனியும் அபாரமாய் மாறி வருகிறது. இந்த சமயத்தில் 5000 வருஷம் 2500 வருஷம் 2000 வருஷம் 1500 வருஷம் முந்திய விஷயங்களைப் பார்த்துக்கொண்டு அப்போது இருந்தவர்கள். சொன்னதை கேட்டுக்கொண்டு அவைகளில் எது மேல் எது கீழ் யார் பெரியவர் என்று பார்ப்பது பயனற்ற வேலை
இந்து மதம் என்பது ஒன்று இல்லையானாலும் அதற்கு ஆக சொல்லப்படும் கொள்கைகள் மகா புராதனமானது. அதைவிட புத்தர் உபதேசம் சிறந்ததாக இருக்க நியாயம் உண்டு. ஐயாயிர வருஷத்து நிலையை விட 2500 வருஷத்து நிலை மேலானது தானே. அதைவிட கிறிஸ்து மதம் 2000 வருஷத்துக்கு முன் ஏற்பட்டது மேலானதாய் இருக்க நியாயமுண்டு. புத்தரை அனுசரித்தே சில கற்பனைகளை கிறிஸ்து அப்போதைக்கு அனுபவ சாத்தியமாய் சொல்லிப் போனார். அதைவிட மகம்மது மதம் 1500 வருஷங்களுக்கு மூன் ஏற்பட்டது மேலானதாக இருக்கக்கூடுமல்லவா? மகமது நபி பாலைவன அக்கிரமங்கள் சகிக்க மாட்டாமல் புத்தர் சொன்னதையும் கிறிஸ்து சொன்னதையும் அலசிப்பார்த்து கால தேசத்துக்கு ஏற்ற மாதிரி திருத்தினார். இவர் அவர்கள் இருவரையும் விட மேலானவராய் இருக்கலாம்
407 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கால்நடை வயதுக்கும் கட்டை வண்டி வயதுக்கும் ரயில் மோட்டார். வண்டி வயதுக்கும் ஒன்றுக்கொன்று மேலானதுதான். ஆனால், இன்று ஆகாயக் கப்பல் வயதில் நாம் இருந்து கொண்டு அதற்கு மேலான வழி தேடிக் கொண்டு இருக்கையில் கால்நடை நல்லதா கட்டை வண்டி நல்லதா. என்று பார்ப்பது அறிவுடமையாகுமா? அந்தக்காலத்தில் அவர்கள் மேதாவிகளாய் இருந்திருக்கலாம். அந்தக்கால புத்திக்கும் மேதாவித்தனத்துக்கும் தக்கபடி வாழ்க்கைத்திட்டங்கள் ஏற்படுத்தி இருக்கலாம். அவ்வளவோடு அம் மதங்களுக்கும் அம்மதத் தலைவர்களுக்கும் மதிப்புக் கொடுப்பதுதான் சரி
ஸ்ரீ நாராயண குரு சுவாமி போதனை கூட 1929 வருஷத்தோடு சரி. இப்போது அவர் இறந்து 6, 7 வருஷம் ஆகின்றது. இன்றைக்கும் ஒருவர்
வந்து ஸ்ரீ நாராயணகுரு சுவாமி சொன்னபடிதான் நடக்க வேண்டும், அந்த
மதம் தான் சிரேஷ்டம் என்றால் அதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது
அவர் ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு கடவுள் இருக்க வேண்டியதுதான்
சரி என்று சொல்லிப்போனார். அன்று அதுவும் இந்துக்களுக்குத்தான் அது சரியாய் இருக்கலாம்
ஏனெனில் பல மதம் பல ஜாதி பல கடவுள்களை உடையவர்களா யிருந்ததால் அவை மாறி ஒன்றாகட்டும் என்று சொல்லியிருக்கலாம்.
இன்று ஜாதியும், மதமும், கடவுளும், அடியோடு போகவேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிற காலத்தில் ஒரு ஜாதிக்கும் ஒரு மதத்துக்கும் ஒரு கடவுளுக்கும் தான் இங்கு என்ன வேலை? ஆதலால் நாராயணகுரு சுவாமி கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? இதற்கு ஆக நாராயண குருசுவாமியை குற்றஞ்சொல்லவில்லை. அந்தக் காலத்துக்கு அந்த கைட் செல்லும். இப்போது செல்லாது. அதன்படி பார்த்துப்போனால் ரயில் தவறிப்போகும் என்று தான் சொல்லுகிறேன்.
பல மதக்காரர்களும் இங்கு வந்து பேசியதைப் பார்த்து இரண்டொருவர் பரிகாசம் செய்தார்கள். மதக்காரர்கள் பேசியதில் என்ன தவறு இருக்கிறது? ஈழவ சமுதாயம் என்பது ஒரு அழகான புத்தியுள்ள பணமுள்ள வாலிப பெண்போல் இருக்கிறது. அது இந்துமதம் என்னும் கொடிய துஷ்ட அயோக்கிய புருஷனால் அடித்து துன்புறுத்தி வெளியில் துரத்தப்பட்டு இப்போது தெருவில் நின்று தியங்குகிறது
இந்தநிலையில் இப்படிப்பட்ட பெண்ணைப் பார்த்தஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இது இயற்கைதானே. ஒருவனுடைய பெண் ஜாதியாய் இருக்கும் பெண்ணைப் பார்த்தே மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்றால் கிடைத்தால் அனுபவிக்கலாம் என்று கருதுகிறார்கள் என்றால் வெளியில் அடித்து துரத்தப்பட்ட நிர்க்கதியான பெண்ணைப் பார்த்து ஒருவர். ஆசைப்படுவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறேன்.
குடி அரசு - 1936 (1) 408
நான் கிழவனாக 60 வயது கழிந்தவனாக இருந்தாலும் நல்ல புத்தி, பணம், அழகு, வாலிபம் இருந்தால் கவுரவத்திற்காவது நமக்கு பாரியாள். இருக்கட்டும் என்று தோன்றும். இது இயல்புதானே. அதுபோல் 25 லக்ஷம் ஈழவ சமூகம் இந்து மதத்தில் இருந்து வெளிப்பட்டுவிட்டால் அவர்கள் அத்தனைபேரும் நம் நம் மதத்துக்கு வரட்டும் என்று ஒவ்வொரு மதக்காரரும்
கருதுவதில் என்ன பிழை இருக்கிறது?
இன்று சீக்கியரும், கிறிஸ்தவரும், மகமதியரும், புத்தரும் தங்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி கூறுகிறார்கள். நீங்களோ இந்து மதத்தை விட்டு விடுவது என்று தீர்மானித்தும் விட்டீர்கள்.
இனி என்ன செய்வது என்பதை யோசிக்க வேண்டும். உங்களில்
சிலர் ஒருமதமும் வேண்டியதில்லை சுயமரியாதைக்காரராய் இருப்போம் என்கிறார்கள். மற்றும் சிலர் கிறிஸ்து மதத்தை ஆதரிக்கிறார்கள். சிலர் முஸ்லீம் மதத்தை ஆதரிக்கிறார்கள். சிலர் பவுத்த மதத்தையும், சிலர் சீக்கிய மதத்தையும் ஆதரிக்கிறார்கள். சிலர் மதம் மாறுவது அவமானம் என்கிறார்கள்.
இவற்றையெல்லாம் அடியோடு சரி என்றோ, தப்பு என்றோ சொல்லி விடமுடியாது. இவைகளை நாம் யோசித்துத்தான் ஆகவேண்டும் அதற்காகத்தான் நாம் இன்று இங்கு கூடி இருக்கிறோம்
ஒரு மதமும் வேண்டாம் என்பது சரியான பேச்சு. நானும் அந்தக் கருத்துக் கொண்டவன். எனக்கு மதத்திலும், தெய்வத்திலும், தனத்திலும் கூட நம்பிக்கை இல்லை.
ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும்,
சுகமும் கிடையாது, அந்த நிலை அடைந்துதான் ஆகவேண்டும். அதுவே எனது கொள்கை.
மதம் மக்களுக்கு அபினி (மது) என்றார் ஒரு பெரியார். ஆனால் நான். மதம் மக்களுக்கு விஷம் என்கின்றேன். மதக்காரனுக்கு சுயமரியாதையும் சுய அறிவும் இல்லை. மனிதனின் முற்போக்கையும் ஒற்றுமையையும்
தடுத்து நிற்பது மதம். மனிதனுக்கு மற்ற ஜீவன்களைவிட அதிக புத்தி இருந்தும் மனிதன் அடிமையாய் இருப்பதற்குக் காரணம் மதம் ஆகையால் நான் எந்த மதத்திற்கும் விரோதிதான். மதங்கள் அழிய வேண்டும் என்கின்ற கருத்துடையவன் தான். ஆனால் இன்றைக்கு ஈழவருக்கு எது சாத்தியம், எது அவசியம், எதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்பவைகளை யோசித்து பிறகு நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்
ஈழவர்கள் இன்று இந்து மதத்தை விட்டு விட்டதாகத் தீர்மானித்ததும், வேறு மதத்தைப்பற்றி யோசிக்க மூன் வந்ததும் ஆத்மார்த்தத்துக்கும் மோகஷத்துக்கும் அல்ல. கண்டிப்பாய் அல்ல.அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும்
4099 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தீண்டாமை என்னும் கொடுமையில் இருந்து நீங்கி மனித சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கேயாகும். இதைப் பொறுத்தவரையில் தான் இப்போது பேசவேண்டும்
அப்படி வாழ்வதற்கு சுயமரியாதை சமூகமாக மதம் இல்லாமல் ஜாதி இல்லாமல் இருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். தலைவர் அய்யப்பன் அபிப்பிராயமும் அதுவேயாகும். அது சாத்தியமானால் எனக்கும் அதுவே சம்மதம். அது சாத்தியமில்லை என்று காணப்படுவதானால்
அதற்கும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டாமா?
மதம் இல்லாமல் கடவுள் இல்லாமல் ஒரு சமுதாயம் இன்று ரஷ்யாவில்தான் இருக்கிறது. வேறெங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மற்ற இடங்களில் ஆங்காங்கு எங்கோ ஒன்று இரண்டு பேர். இருக்கலாம். ஆனால் மதம், தெய்வம் இல்லாமல் இருப்பவர்களுக்கு இன்று ரஷ்ய நாட்டைத் தவிர வேறு நாட்டில் செளகரியம் இருக்காது. இன்றைய பெரும்பான்மையான நாடுகள் தனி உடைமை நாடுகள். தனி உடமை முறை ஆட்சி உள்ள நாடுகளாகும். தனி உடமை முறையை ஆதரிக்கவே ஆட்சிக்கு மதமும் தெய்வமும் ஆதிக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசாங்கம் மதத்தையும் தெய்வத்தையும் காப்பாற்றி அதன் அஸ்திவாரத்தின் மீதே ஆட்சி முறை கட்டப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வாழ்க்கை போட்டியில் இருக்கிறது. மனித வாழ்க்கைப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க ஈழவ சமுதாயம் ஓட்டுக்கும் சம்மதிக்கும் என்பதாக
நான் நினைக்க முடியாது. ஏனெனில் மக்கள் எல்லோருமே தனி உடமைக்காரர்களாய் இருக்கிறார்கள். இன்று மதம் இல்லாதவனுக்கு சட்டசபையில் சாதாரண நிலையில் இடமில்லை. சில உத்தியோகங்கள் கூட இல்லை. ஒன்று இரண்டு இருக்கலாம். கொச்சி ராஜாவோ, திருவாங்கூர் ராஜாவோ கடவுள், மதம் இல்லாதவன் என்றால் பெரிய பாவியாக கருதுவார்கள். மக்களும் அப்படியே கருதுகிறார்கள். இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாதவர்கள் சுயமரியாதைக்காரர்களாய் இருக்கலாம்.
மதமும், கடவுளும் இல்லாததால் எனக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கிறது என்பது எனது நிலையை உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். நானும் ஒரு அளவுக்குத் துறவியாயிருக்கத் தயாராயிருப்பதால் தான்
முடிகிறது. அதுவும் அடியோடு பச்சையாய்ச் சொல்லிவிட முடிவதில்லை.
இன்னும் என்னைப்பற்றிய ஆதாரங்களில் மதம், ஜாதி, கடவுள் எல்லாம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அடியோடு இல்லாமல் செய்வதற்கு வெகுதூரம் வாதாட வேண்டியிருக்கிறது. இவை ஒருபுறமிருக்க உங்களுக்கு தீண்டாமை கொடுமை ஒழிய வேண்டும். அதற்காகவே இங்குமதப்பேச்சு பேசுகிறோமே அல்லாமல் மற்றப்படி
குடி அரசு - 1936 (1) 410
பகுத்தறிவு தன்மையை உத்தேசித்தோ, சுயமரியாதையை உத்தேசித்தோ, உலகப்பொது நலத்தை உத்தேசித்தோ இப்போது இங்கு பேச வில்லை
ஆகையால் இந்தப் பிரச்சினையில் யுக்தி வாதத்தையும் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கையையும், பொது உடமைத்தத்துவத்தையும் ஒன்றாகப் போட்டு குழப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
இன்று ஈழவர்கள் என்ன செய்தால் அவர்கள் தீண்டப்படக் கூடியவர்கள், தெருவில் நடக்கக்கூடியவர்கள், பள்ளியில் சேர்ந்து படிக்கக் கூடியவர்கள், மற்றவர்களைப் போல் மனிதத்தன்மையுடையவர்கள் ஆவார்கள் என்பதே முக்கிய பிரச்சினை. ஆதலால் அதற்கு ஒரு வழி வேண்டும். இந்து மதத்தை விட்டுவிடுவதாலேயே இன்று மேல்கண்ட நிலைமை ஏற்பட்டு விடாது. சுயமரியாதைக்காரர்கள் ஆகிவிட்டதாலேயே தீண்டாமை, நெருங்காமை போய்விடாது
ஒருமதவேஷம் பூண்டால்தான்தீண்டாமையும், தெருவில் நடக்காமையும் ஒழிகிறது. பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொள்ளப்படு கிறது. அதுவும் எல்லா மத வேஷத்துக்கும் ஆவதில்லை. இஸ்லாம் மதவேஷத்துக்குத்தான். இன்று இந்திய நாட்டில் தெருவும் பள்ளிக்கூடமும் திறந்து விடப்படுகிறது கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இருக்கிறது. சீக்கியமதம் எனக்குத் தெரியாது. இந்த நாட்டில் அதன் செல்வாக்கு எவ்வளவு இருக்க முடியும் பெளத்தமதம் தீண்டாமையை ஒழித்து விடவில்லை. ஆதலால் ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், அடியோடு தீண்டாமை ஒழிய வேண்டுமானால் இஸ்லாம் மத வேஷம் போட்டுக் கொள்வது மேல் என்று கருதுகிறேன். மதநம்பிக்கைக்காக நான் சொல்ல வரவில்லை. வேறு காரியங்களைப் பொறுத்துப் பார்த்தால் அதிலும் சில அசெளகரியங்கள் இருக்கலாம் என்றாலும் இந்தியாவில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் அரேபியா, பாலஸ்தீனம், துருக்கி, ஆப்கானிஸ்தானத்தில். இருந்து வந்தவர்கள் அல்ல. நம்பிக்கை பிரதானமாகி முஸ்லீம்கள் ஆனவர்களும் அல்ல. கால தேச வர்த்தமானத்தால், கட்டாயப்படுத்தப்பட்டு முஸ்லீம்கள் ஆகி இந்த நாட்டில் சமூக சுதந்திரத்தோடு வாழுகிறார்கள்
கிறிஸ்தவர்களும் அப்படித்தான் என்றாலும் மகமதியரை விட அதிகம் பேர் மனிதத்தன்மை இல்லாமல் கிறிஸ்தவ மதத்தில் வாழ்கிறார்கள். ஏனென்றால் வேஷக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ மதத்தில் அதிகம் உண்டு. தீண்டாமை அனுசரிக்கிறவர்கள் வேஷக் கிறிஸ்தவர்கள் - சுயநலக் கிறிஸ்தவர்களே ஆவார்கள். தீண்டாமையை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களும் வேஷக் கிறிஸ்தவர்கள் - சுயமரியாதையற்ற கிறிஸ்தவர்களே ஆவார்கள். கிறிஸ்துவ மதத்தையோ இந்து மதத்தையோ சீர்திருத்தம் செய்து விடலாம் என்று எதிர்பார்க்க முடியாது. மார்ட்டின் லூதர் காரியம் 100க்கு 90 கிறிஸ்தவரிடம் பலிக்கவில்லை. 4௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கிறிஸ்தவ மதத்திலும் இந்து மதத்திலும் மதத்தின் பேரால் வயிறு வளர்க்க ஏற்பாடு செய்துகொண்ட சுயநல மக்கள் கூட்டம் உண்டு. அவர்கள் பூண்டு உள்ளவரை அந்த மதங்கள் சீர்திருத்தமடைய முடியாது
பார்ப்பனர்களும் பாதிரிகளும் மதத்தினால் பெருமை அடைந்து பாடுபடாமல் குடும்பத்தோடு வயிறு வளர்க்கிறவர்கள். இவர்களது பெருமையும் சோம்பேறி வாழ்க்கையும் ஒழிய அவர்கள் சம்மதித்தால் ஒழிய அம் மதங்கள் சீர்திருத்தமடைய முடியாது. ஆனால் இப்போது அவர்கள் சாவு நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். மேல்நாட்டில் மதம் எப்படி இருக்கிறது என்கின்றதை அறிந்தவர்களுக்குத்தான் நான் சொல்வது
புரியும். கூலிக்கும் சுயநலத்துக்கும் பிரசாரம் செய்யும் புரோகிதர்களுக்கு இது புரியாது. புரிந்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
ஆதலால் தீண்டாமை ஒழியவும் இன்னமும் காலத்துக்குத் தகுந்த மாதிரி சீர்திருத்தமடையவும் சமூக வாழ்வில் சுயமரியாதையுடனும் வீரத்துடனும் வாழவும் இஸ்லாம் மதவேஷம் எவ்வளவோ மேலானது
மத தர்மம் உண்மையான மத நம்பிக்கை என்பது அவரவர்கள். இஷ்டத்தைப் பொறுத்தது. அவனவன் பகுத்தறிவை பொறுத்தது. அதில் நான் இப்போது பிரவேசிக்கவில்லை. அன்றியும் “சகல கஷ்டங்களையும், வாழ்க்கை அசவுகரியங்களையும் சகித்துக்கொண்டு சுயமரியாதையுடன் இருக்கிறேன்" என்பவர்களையும் நான் வேறு மத வேஷம் போடும்படி சொல்வதில்லை. அவர்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள் அப்படியே இருக்கட்டும்
எப்படியானாலும் இன்று ஒரு விஷயத்தில் அபிப்பிராய பேதமில்லாமல்:
ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். அதாவது இந்து மதம் ஈழவ சமுதாயத்துக்கு கேடான மதம் என்றும், அம்மதத்தில் இனி இருப்பதால் யாதொரு பயனும் இல்லையென்றும், மனிதன் மானத்தோடு மனிதத் தன்மையோடு வாழ முடியாது என்றும், ஆதலால் இந்து மதத்தை விட்டு விலகிவிட வேண்டும் என்றும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டோம். அது வரையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே இதை நான் 1926-ல் சொல்லி இருக்கிறேன். குடி அரசில் எழுதி இருக்கிறேன். 1926-ல் “நான் இந்துவாய் இறக்கப் போவதில்லை'” என்று கூட்டத்தில் சபதம் செய்துமிருக்கிறேன். 1922-ல் நான் இந்துமத சாஸ்திரங்களை கொளுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேடையிலேயே பேசினேன். 1927-ல் மனுதர்மம் முதலிய சாஸ்திரங்களை கொளுத்தினேன். அவைகளையெல்லாம் இப்போது 10-வருஷம் பொறுத்து இந்திய தீண்டாத சமூகத் தலைவர்களும் தீண்டாமைக்கு ஆட்பட்ட சமூகமும் சொல்லி அவற்றை தீர்மான மூலமாக செய்யும் காலம் வந்துவிட்டது அதே மாதிரியாக கடவுள் நம்பிக்கையும் சமீப காலத்தில் ஆட்டம் கொடுக்கப் போகின்றது என்கின்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பிறகு பணம் தனி உடமை விஷயத்திலும் இந்த கதியே ஏற்படும்.
குடி அரசு- 1936 (1) 412
ஆதலால் பிற்கால வாழ்வில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் மனிதன் புத்திசாலித்தனமாய் கால தேச வர்த்தமானத்துக்குத் தகுந்தபடி படிப்படியாய் அனுபவ சாத்தியமாய் நடந்து கொள்ள வேண்டும்
காந்தி மதம் இங்கு பேசப்பட்டது. அது துருப்பு பிடித்த கொள்கையாக ஆகிவிட்டது. இனி அதற்கு யோக்கியதை உண்டாகப்போவதில்லை. அவர் கிறிஸ்துவுக்கு முந்தின காலத்துக்கு போகப் பார்க்கிறார்.
ஜவஹர்லால் நேரு விஷயமும் வெறும் அரசியலேயாகி விட்டது தனக்கென்று கொள்கை இல்லை. எலும்புக்கு மோக்ஷம் கொடுக்கப்பார்க்கிறார். எப்படியாவது விளம்பர உலகில் காந்திக்கு அடுத்த பிரைஸ் வாங்க பார்க்கிறார்.அந்தக்காரியங்களுக்கும் இன்று நாம்எதற்குஆக மத “விசாரணை“ப் பேச்சு பேசுகிறோமோ அதற்கும் சம்பந்தமில்லை. ஆகையால் எதற்காக இந்துமதம் விடுகிறோம்?
மதம் இல்லாமல் தனி உடைமை உலகில் தனி உடமை ஆட்சியில் வாழமுடியுமா? முடியாவிட்டால் என்ன செய்வது? எது நல்லது? என்கின்ற காரியங்களை பிரத்தியட்சஅனுபவத்தையும் பகுத்தறிவையும் உபயோகித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். நான் சொன்னவற்றை கண்மூடித்தனமாக நம்பி விடாதீர்கள்.
குறிப்பு: 23, 24.05.1936 நாள்களில் கொச்சி மட்டாஞ்சேரி கேசவன் அரங்கில் நடைபெற்ற கொச்சி தீயர் சமுதாய மாநாடு, பெண்கள் மாநாடு, எல்லா மத மாநாடு இவற்றில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 31.05.1936
413 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சத்தியமூர்த்தியும் சமதர்மமும்
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆனைமலை ஐரோப்பியர் சங்கத்தில் ஐரோப்பியர் முன்னிலையில் பேசும் போது
“காங்கிரஸ் சமதர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் சமதர்மத்துக்கு விரோதமானது, ஜவஹர்லாலை காங்கிரஸ் தலைவராக
ஏற்றுக் கொண்டதானது அவருடைய தனிப்பட்ட முறையிலேயே ஒழிய, அவருடைய கொள்கைகளுக்காக அல்ல, சமதர்மம் பணக்காரர்களைப் பாதிக்கும், சமதர்மம் சமூக வேறுபாடுகளை ஒழித்துவிடும், ஏழைகளுக்கு எஜமானர்களாய் எவரும் இருக்க முடியாது, ஆதலால் காங்கிரஸ் சமதர்மத்தை ஆதரிக்காது, காங்கிரஸ் செல்வவான்களைக் காப்பாற்றும், வெள்ளைக்காரரோடு ராஜி செய்து கொள்ளும்'' என்பதாக பேசி இருக்கிறார். இதை 27-5-36ந் தேதி தாருல் இஸ்லாம் பத்திரிகை 2ம் பக்கம் 5, 6-வது கலத்தில் காணலாம். ஆகவே தமிழ்நாட்டு வாலிபர்களில் சிலர் காங்கிரசானது சமதர்மக் கொள்கையுடையதென்றும், சமூக வேற்றுமையை ஒழிக்கக்கூடிய தென்றும், சமதர்மக்காரரும் சமூக வேற்றுமையை ஒழிக்க வேண்டுமென்பவர்களும் காங்கிரசில் வந்து சேர வேண்டும் என்றும் சொல்லுவார்களேயானால் அவர்களை அறிஞர்கள் என்றோ யோக்கியர்கள் என்றோ எப்படி சொல்ல முடியும். தோழர் ஜவஹர்லாலை காங்கிரஸ் பிரசிடெண்டாக தெரிந்தெடுத்த போதே நாம் ஜவஹர்லாலைக் காட்டி வாலிபர்களையும், தேச மக்களையும், ஏழைகளையும் ஏமாற்ற காங்கிரஸ்காரர்கள் காந்தியார் உள்பட சூழ்ச்சி செய்கிறார்கள் என்று சொன்னோம். அது இப்போது தோழர் சத்தியமூர்த்தியார் வாக்காகவே ருஜுவாகிவிட்டது
நம்நாட்டு காங்கிரஸ் தலைவர் நம்மிடம் வந்து பூரண சுயராஜ்யம் என்பதும், வெள்ளைக்காரரிடம் சென்று நீங்களும் நாங்களும் ராஜி செய்து கொள்ளலாம் என்பதும், சமூக வேற்றுமைகளை ஒழிப்பதில்லை என்பதும், ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி அது பொதுவுடமை கட்சி என்பதும், சமூக வேற்றுமைகளை ஒழித்து எல்லா மக்களையும் சமமாக்க முயற்சிக்கிறது என்பதும் இப்படியாக பல திகுடுதத்த சூழ்ச்சிகள் செய்து வருவதைப் பொதுமக்கள் உணராமல் காங்கிரசு காங்கிரசு என்று கூப்பாடு போட்டால் இவர்களை என்ன என்று கூறுவது? செம்மறி ஆடுகள் என்றா அல்லது பார்ப்பனர்கள் கை கொழுக்கட்டைகள் என்றா? என்று நமக்கு விளங்கவில்லை.
குடி அரசு- 1936 (1) 414
உத்தியோகம் பதவி கூலி ஆகியவைகளுக்கு ஆசைப்பட்டு காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களின் கால்களுக்குள் நுழைபவர். களைப் பற்றி நாம் குறை கூறவில்லை.
ஆனால் ஜஸ்டிஸ் கட்சி தேசத் துரோகக் கட்சி யென்றோ, மக்களுக்கு விரோதமான கட்சியென்றோ, வெள்ளைக்காரர்களுக்கு உடந்தையான. கட்சியென்றோ, உத்தியோக வேட்டைக் கட்சி யென்றோ யாராவது சொல்வார்களானால் அவர்களைத்தான் நாம் மடையர்கள் என்றோ, அல்லா விட்டால் அயோக்கியர்கள், கூட்டி கொடுத்து வயிறு வளர்ப்பவர்கள், சமூகத் துரோகிகள் என்றோ கூறாமல் இருக்க முடியவில்லை. காங்கிரஸ்காரர்களைவிட, காங்கிரஸ் தலைவர்களை விட எந்த விதத்திலாவது ஜஸ்டிஸ் கட்சியும்,
ஐஸ்டிஸ் தலைவர்களும் கொள்கையில் மோசமென்றோ ஒழுக்கத்தில் நாணயத்தில் மோசமானவர்கள் என்றோ யாராவது சொல்ல முடியுமா?
உத்தியோகம் ஒப்புக் கொள்வது சீர்திருத்தத்தை நடத்திக் கொடுப்பது, வெள்ளைக்காரருடன் ராஜி செய்து கொள்வது, பணக்காரர்களை காப்பாற்றுவது, சமூக வேற்றுமைகளை காப்பாற்றி நிலைக்கச் செய்வது ஆகிய காரியங்கள். இன்றைய காங்கிரசில் திடமாக இருக்கும்போது இந்திய அரசியல் கட்சிகளில் காங்கிரசைவிட மோசமான கட்சி வேறு எது என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ் சமதர்மக்காரர்கள் இருக்கிறதாகச் சொல்லுவதெல்லாம் புரட்டு அல்லாமல் வேறு உண்மையிருக்க முடியுமா? என்று யோசிக்கும்படி வேண்டுகிறோம்
தோழர் ஜவஹர்லால் அவர்களும் பம்பாய் வர்த்தகரிடம் சென்று தன்னுடைய சமதர்மமானது பகல் கொள்ளையடிக்கும் வர்த்தகர்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்யாது என்று வாக்குக் கொடுத்து அவர்களை காங்கிரசை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தினம் ஒன்றுக்கு நல்ல வழியில் 2 அணாசம்பாதித்து வயிறு வளர்க்க முடியாத சோம்பேறிகளும், இழிமக்களும் மானம் வெட்கமில்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி கூலி பெற்று பார்ப்பனரல்லாதார் இயக்கங்களையும், தலைவர்களையும், தோழர்களையும், இழிதனமாய் பேசுவதும், பலாத்காரம் செய்வதுமான காரியங்களில் ஈடுபடுவதானால் இவற்றை அடக்கவும், ஒழிக்கவும் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள், பதவியிலிருப்பவர்கள் முயற்சி எடுத்துத் தக்கப் பிரசாரம் செய்ய வேண்டாமா என்று கேட்டு இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 31.05.1936
415 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜவஹர்லாலும் சமதர்மமும்
பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால் தாங்கள். காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்கு பதிலாக நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
அதாவது தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமூகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்ல வென்றும், ஆனால் நாளாவட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார்.
மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-5-36 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 கலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும்
இதை அறியாமல் அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள்தனமே யாகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.05.1936
குடி அரசு- 1936 (1) 416
பரிதாபம்
தோழர் செளந்திரபாண்டியன் அவர்களின் இரண்டாவது மகன் 14 வயதுள்ள ராஜசேகரன் கொடைக்கானல் ஏரியில் விளையாடுகையில் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான் என்று கேட்டு விசனிக்கிறோம்.
ராஜகேகரன் தோழர்செளந்திரபாண்டியன் அவர்களின் 4 புதல்வர்களிலும் இரண்டாவதவன். ஆனாலும் மிகவும் கெட்டிக்காரனும், புத்திசாலியும், நல்ல குணமும், ஜனங்களிடம் குஷாலாய் பழகும் குணமும் உடைய அபுரூபன். அப்படிப்பட்ட அவனைப் பறிகொடுத்த தாயார், தந்தையர், சுற்றத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் துக்கமும், விசனமும், பரிதாபமும் இல்லாமல் இருக்க முடியாது தான். ஆனால் துக்கமும் விசனமும் இருந்து என்ன பயன்? யாரால் இனி என்ன செய்யமுடியும்? துக்கப்படுவதில் பயனில்லை என்று சொல்லி தேற்ற முயற்சிக்கத்தான் மற்றவர்களால் முடியும். இயற்கையை நன்றாய் உணர்ந்த தோழர் பாண்டியன் குடும்பத்தாருக்கு எவருடைய தேறுதலும் அவசியமிருக்காது என்றே கருதுகிறோம்.
குடி அரசு - இரங்கற் செய்தி - 31.05.1936
417௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சுயமமியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் பல பிரபல தோழர்கள் இவ்வியக்கத்தின் கொள்கைகளையாவது ஒப்புக்கொள்ளலாம் என்றாலும் அவ்வியக்கத்தின் பெயரை ஒப்புக் கொள்ள முடியாதென்றும், ஏனென்றால் சுயமரியாதை இயக்கம் என்று சொல்லும்போதே நமக்கு சுயமரியாதை இல்லையென்று ஒப்புக் கொண்டதாக ஆகிறதென்றும் ஆதலால் அந்தப் பெயரை எடுத்துவிட்டு வேறுபெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். பல சமாதானம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்கள்.
இப்போது அந்தப்படி சொன்ன தோழர்களையே உங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா? என்று கேட்க வேண்டியதாய் விட்டது.
உதாரணமாக பல பெரிய இலாகா தலைமை ஸ்தானங்களுக்கு பார்ப்பனரல்லாதார்களே தலைவர்களாயிருந்தும் அவர்கள் கீழுள்ள பார்ப்பனர்கள் எழுதி வைத்ததில் கையெழுத்துப்போட வேண்டியதைத்தவிர: வேறு ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார்கள்.
சென்னை மாகாணத்தில் ஏறக்குறைய 8 வருஷ காலமாக பார்ப்பன. ரல்லாதவர்கள் தான் போலீஸ் இலாகாவில் தலைவர்களாக இருந்து வருகிறார்கள் என்றாலும் போலீஸ் அதிகாரம் பார்ப்பனர்களின் ஏகபோக: பிதுரார்ஜிதச் சொத்தாக இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாத போலீசு சூப்ரண்டுகளும், சர்க்கில்களும், சப் இன்ஸ்பெக்டர்களும் நாள்களை எண்ணுவதிலும் சம்பளம் வாங்குவதிலும் கவலையாய் இருக்கிறார்களே ஒழிய, பார்ப்பனரல்லாதார் உலகம் எப்படி இருக்கிறது என்று கூட திரும்பிப் பார்ப்பதில்லை.
ஆனால் அவ்வுத்தியோகங்களில் உள்ள பார்ப்பனர்களோ பெரும்பாலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு உழைப்பதும் காங்கிரசை காப்பாற்றுவதுமான. வேலையில் தீவிரமாய் இருக்கிறார்கள்
இதன் காரணம் பார்ப்பனரல்லாதார்களுக்கு சுயமரியாதை இல்லாதது என்பதல்லாமல் வேறு என்ன சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
பார்ப்பனரல்லாத இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் இல்லாமல் இருந்தால் போலீஸ் இலாகாவில் இன்று பார்ப்பனரல்லாதார் நிலை எப்படி
குடி அரசு- 1936 (1) 418
இருந்திருக்கும்? இவ்வளவு பேராவது அந்த இலாகாவில் இருந்திருக்க முடியுமா? என்பவைகளைக் கவனித்துப் பார்த்தால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு சுயமரியாதை இருக்கிறதா என்பது விளங்கும்.
மற்றும் சுயமரியாதைக் கூட்டங்களிலும், ஜஸ்டிஸ் கட்சி கூட்டங்களிலும் காங்கிரஸ்காரர்களும் கூலிகளும் வந்து கலகம் செய்வதும், காங்கிரஸ் கூட்டங்களில் காலிகள் சுயமரியதை இயக்கத் தலைவர்களையும் ஐஸ்டிஸ்
கட்சித் தலைவர்களையும் ஈனத்தனமாகவும், இழிதன்மையாகவும் பொய்யும் பழியும் கூறி பேசுவதும் கேள்விகள் கேட்டால் பலாத்காரத்தை உபயோகிப்பதும், இவைகளுக்கு பெரும்பாலும் பார்ப்பன போலீஸ் நடத்தையே காரணமாய் இருப்பதும், இதைப்பற்றி அரசாங்கம் கவனிக்க வேண்டுமென்று பல தடவை கூப்பாடு போட்டும் கவனிக்காமல் இருப்பதும் ஆகிய காரியங்கள் பார்ப்பனரல்லாதார்க்கு சுயமரியாதை இல்லை என்பதை ருஜுப்பிக்கிறதா இல்லையா என்று கேட்கின்றோம்.
ஏனெனில் சென்றவாரம் சேலத்தில் காங்கிரசின் பேரால் சில காலிகள். செய்த அட்டூழியங்களுக்கு சேலம் போலீசார் இடங் கொடுத்தவர்களாவார்கள். என்பதற்கு என்ன சந்தேகம் என்பது கேட்கவேண்டியிருக்கிறது
சேலத்தில் போலீஸ்சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர், சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனர், சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மாத்திரம் பார்ப்பனரல்லாதார். நடவடிக்கை நடந்த இடத்துக்கு பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந் திருந்தும் கொலைகள் நடக்கும்படியான கலவரம் காங்கிரஸ் கூட்டத்தில் நடப்ப தென்றால் இதற்கு யார் காரணமாய் இருக்கவேண்டும் என்று கேட்கின்றோம். சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்ப்பனரல்லாதாராய் இருந்ததால் தானும் காங்கிரஸ் காலிகளிடம்அடிபட்டுக்கொண்டாவதுசுயமரியாதைக்காரர்களையும், ஜஸ்டிஸ்காரரையும் அதிகமாக அடிபடாமலும் கொலை நடக்காமலும் காப்பாற்றி இருக்கிறார். இதைப் பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே பார்க்கலாம்.
ராசிபுரத்திலேயும் அதற்கு முந்திய வாரங்களில் பார்ப்பன போலீசாரால் தொல்லை விளைந்திருக்கிறது
இவைகளையெல்லாம் கவனிக்க முடியாத மந்திரிகளும் போலீஸ் மெம்பர்களும் ஜஸ்டிஸ்கட்சியின் பெயராலேயே உத்தியோகம் பார்த்துக் கொண்டு மாதம் 4-ஆயிரம் ஐயாயிரம் பணம் பெறுகிறவர்கள் என்றால் இந்த சமூகத்துக்கு சுயமரியாதை இல்லை என்பதிலும் சுயமரியாதைக்கு ஆகவே, இன்னமும் பல வருஷங்களுக்கு இவ்வியக்கம் பாடுபடவேண்டி
யிருக்கிறது என்பதிலும் என்ன ஆக்ஷேபம் இருக்கிறது என்று கேட்கின்றோம்.
சேலம் நடவடிக்கைக்கு சேலம் ஜில்லா அதிகாரியான கலைக்டராவது கவனிப்பார் என்றாலோ அவரும் “புளிப்புக்கு அவளப்பனே' என்கின்ற மாதிரி பார்ப்பன கலைக்டரேயாவார். இந்தக் காரணங்களாலேயே சேலம்
49 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஜில்லாவில் உள்ள சில்லறை பார்ப்பன அதிகாரிகளுக்கும் சிறப்பாக போலீஸ் அதிகாரிகளுக்கும் தைரியம் அதிகமாகி கலகங்கள் நடத்தப்பட
ஆக்கமதிகரித்து வருகிறது கடைசிமுறையாக நாம் இதைச் சர்க்காருக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம் அதாவது பொதுக்கூட்ட விஷயங்களில் ஏதாவது ஒரு நியதி ஏற்படுத்தி காலித்தனம் நிகழாமல் இருக்கும்படி செய்ய சர்க்கார் முன்வராத பக்ஷம் கண்டிப்பாய் பொதுக்கூட்டங்களில் இனி கொலைகள் நடக்கும்படியான. நிலைமை ஏற்படக்கூடும் என்பதையும் அப்படி ஏற்பட்டால் அதற்கு சர்க்கார் தான் பொறுப்பாளியாவர்கள் என்பதையும் வினயமாய் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். கூட்டங்களானது கொள்கையைப் பொறுத்தில்லாமல் வெறும் வகுப்பு உணர்ச்சியைக் கொண்டே பார்ப்பனர்கள் நடத்தி வருவதால் அதற்கு பார்ப்பன அதிகாரிகளின் நீதி நிர்வாகத் தன்மை உள் உளவாய் இருப்பதால் நாம் இம்மாதிரி தெரிவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை அரசாங்கத்தார் கவனித்து தக்கது செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியவர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுவதாய் ஒப்புக் கொண்டு கேள்வி கேட்டவர்களை மேடைக்கு வரும்படி அழைத்து அடிக்கச் செய்திருப்பதும், போலீஸ்காரர்கள் அக்கூட்டத்தில் ஒருவர் கூட இல்லாதிருந்ததும், மற்றும் நமக்கு கிடைத்திருக்கும் சில தகவல்களும் கொண்டே நாம் இதை கவனிக்கும்படி அரசாங்கத்தாருக்கு எழுத நேர்ந்ததே ஒழிய மற்றப்படி வகுப்பு துவேஷம் கொண்டல்ல - கோழைத்தனம் கொண்டல்ல என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
மற்றும் ராசிபுரம் நடவடிக்கையைப் பற்றி 5-3-36ந் தேதி குடியரசில் விளக்கிவிட்டு ஸ்தல அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என்றும் எழுதி
யிருந்தோம். அப்படி இருந்தும் மேலும் அதே மாதிரி பல இடங்களில் நடப்பதாலும் மற்றொரு கட்சியாரும் இம்மாதிரி ஆகிவிட்டால் என்ன ஆகும் என்கின்ற பயத்தாலும் எழுத நேரிட்டது. ஆகையால் அரசாங்கத்தார் இதையாவது கவனிப்பார்கள் என்று நம்புகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.05.1936
குடி அரசு- 1936 (1) 420
கடவுள் கதை
உலக உற்பத்தி “*சந்தேகந்தெவிய?? சம்ப£ஷணை
- சித்திரபுத்திரன்
கதை சொல்லுகிறவன்:- ஒரே ஒரு கடவுள் இருந்தார். கதை கேட்கிறவன்:- ஊம், அவர் எங்கே இருந்தார்?
க.சொ:- ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே. நான் சொல்லுவதை ஊம் என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல மூடியும்
க.கே:- சரி, சரி சொல்லு, ஒரே ஒரு கடவுள். அப்புறம்?
க.சொ:- ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்
க.கே:- சரி, எப்போ?
க.சொ: பாரு மறுபடியும், இரட்டை அதிகப் பிரசங்கமாய் கேட்கிறாயே.
க.கே:- சரி, சரி. தப்பு சொல்லப்பா சொல்லு
க.சொ:- உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.
க.கே:- (அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்திருக்கிறார் போல் இருக்கிறது. அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார் பாவம்! என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பொறுத்து) சரி அப்புறம் (என்று சொன்னான்)
க.சொ:- என்ன இந்த மாதிரி நான் சொல்லுவதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கயோ யோசனையாய் இருக்கிறாயே
க.கே:- இல்லை. நீ சொல்லுகிறபோதே சில சந்தேகம் தோன்றியன. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப்பிரசங்கி என்று சொல்லி விடுகின்றாய்.ஆதலால்மனதிலேயேநினைத்து சமாதானம் செய்து கொண்டேன்.
க.சொ:- அப்படி யெல்லாம் சந்தேகம் கூட தோன்றக்கூடாது. கதை பாட்டி கதையல்ல; கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்கவேண்டும். தெரியுமா?
க.கே:- சரி அப்படியே ஆகட்டும். சொல்லு பார்ப்போம்
க.சொ:- எதிலே விட்டேன்? அது கூட ஞாபகமில்லை, உன் தொந்திரவினால். 4௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
588 சரி, கோபித்துக்கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகிறேன்.
ஒரே ஒரு கடவுள் அவர் ஒரு நாள் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக்கொள். என்னை அதிகப்பிரசங்கி என்கிறாய் எனக்காவது ஞாபகமிருக்கிறது. மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது பாவம். அப்புறம் சொல்லு
க.சொ:- பாவம் என்ன எளவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது. அப்புறம் என்ன பண்ணினார் என்பதுகூட மறந்து போய் விட்டது. யோசனை பண்ணி சொல்லுகிறேன் பொறு. (சற்று பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாகக் கடவது என்று சொன்னார்.
க.கே- இருட்டில் உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்? பாவம் கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்.
க.சொ:- அதையெல்லாம் நீ தெரிந்து கொள்வதற்குத்தானே இந்தக்கதை சொல்லுறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.
க.கே- சரி, சரி சொல்லு, உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும்போல் இருக்கிறது
க.சொ:- என்ன போட்டி?
க.கே- இல்லையப்பா, வெளிச்சத்தைத்தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்குமுன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப்பயன் கடவுளுக்குத் தொந்திரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காக சிருஷ்டித்து விட்டு ஓடிப்போய் விட்டான் போலிருக்கிறது. கண்டால் நான் அவனை என்ன செய்வேன் தெரியுமா?
க.சொ:- தொலைந்து போகுது, அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே; சொல்வதைக் கேளு
க.கே:- சரி சொல்லு க.சொஃ அப்புறம் மேடு பள்ளம் எல்லாம் சமன் ஆகவேண்டும்
என்று கருதினார்; அதுபோலவே ஆயிற்று
க.கே:- கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களை யெல்லாம் சமன் ஆகவேண்டும் என்ற சொன்னாராக்கும், அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள் நல்ல கடவுள். எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள். மேடு பள்ளம் இருந்தால் நம்ம கதி என்ன ஆவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும், குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும். ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார்.
குடி அரசு- 1936 (1) 422
ஆனால் அப்புறம் எவனோ புறப்பட்டு மறுபடியும் பழயபடி இருட்டும், மேடும் பள்ளமும், குழியும், குன்றும் ஏற்படும்படி செய்து விட்டான் போலிருக்கிறது. இருக்கட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம். அப்புறம் என்ன செய்தார்?
க.சொ:- அப்புறம் அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்
க.கே:- சரி, யோசித்தார்.
க.சொ:- அதற்குள் ஒருநாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள். அதாவது இரண்டாவது நாள் காற்று உண்டாகக் கடவது என்று சொன்னார்; உடனே காற்று உண்டாய் விட்டது
க.கே:- பிறகு என்ன செய்தார்?
க.சொ:- அதற்கும் ஒரு நாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள். பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார், பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாகக் கடவது என்று நினைத்தார், உடனே சமுத்திரம் செடிகள் உண்டாயின.
க.கே:- பிறகு?
க.சொ:- இதற்குள் மூன்று நாள் முடிந்து விட்டது. நான்காம் நாள் உட்கார்ந்துகொண்டு யோசித்தார் யோசித்தார், ரம்ப கஷ்டப்பட்டு என்ன செய்வது என்று யோசித்தார்.
௯கே- அய்யோ பாவம்; கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார், மனிதர்களுக்கு நன்றி விஸ்வாசம் இருக்கிறதா? போனால் போகட்டும், அப்புறம் என்ன செய்தார்? சொல்லு சீக்கிரம்
க.சொ:- அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா? சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் ஆகியவைகள் உண்டாக வேண்டும் என்று கருதி ஒரே அடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார், உடனே உண்டாகிவிட்டன. க.கே- சரி, சரி. இப்போது புரிந்தது: அந்தக் கடவுளின் பெருமை நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்கு கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பது வெளியாயிற்று
க.சொ:- பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா? கடைசிவரை பொறுமையாய்க் கேட்டால், எல்லா சந்தேகமும் விளங்கிவிடும் என்று. எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்
க.கே:- அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்று என்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தை யெல்லாம் சமன்
493 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
செய்தது ஒன்று, மற்றும் சூரியன் பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டுபிடிக்கவும் முடிந்ததுபார். இது எவ்வளவு அற்புதமான செய்கை, அப்புறம் மேலே சொல்லு. மிகவும் ருசிகரமாகவும் மஹிமை பொருந்திய
தாகவும் இருக்கிறது இந்தக் கடவுள் கதை க.சொ:- அதற்குள் என்ன தெரிந்துகொண்டாய்? இன்னம் கேள். எவ்வளவு அதிசயமாயும் ருசியாயும் இருக்கும் பார். அப்புறம் ஐந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும் பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார்; உடனே அகிவிட்டன
க.கே:- இத்தனை கோடி கோடி கோடி மீன்களும் ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும் பெருமையும் எப்படிப்பட்டது
பார். அப்புறம்?
க.சொ:- அப்புறம்தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும் மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார். உடனே மிருகங்களும் மனிதர்களும் உண்டாகிவிட்டார்கள்.
க.கே:- அப்பாடா! கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே ஒரு வாரம் போல் 6 நாள் விடாமல் கஸ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, பூமி, சமுத்திரம், செடிகள், சூரியன், நக்ஷத்திரம், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார். என்ன கஷ்டம்? இதற்கு ஆக அவருக்கு களைப்பு இளைப்பு ஏற்படவில்லையா?
க.சொ:- ஓடாதே சொல்லுகிறேன் கேள். நமக்கு இருக்கிற புத்தி கடவுளுக்கு இருக்காதா? ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதனால் தான் இப்போது கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் ஆகக் கருதப்படுகிறது.
க.கே:- சரி புரிஞ்சது. கடவுள் தயவினால் வேலை செய்யாதவன் கூட இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்துக் கொள்ளுகிறான். கடவுள் எவ்வளவு கருணை உடையவர்? சரி. அப்புறம்
க.சொ:- மனிதரை கடவுள் சிருஷ்டித்தாரென்றால் எப்படி சிருஷ்டித்தார் தெரியுமா?
க.கே:- அதை கேட்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். நீ அதை அதிகப் பிரசங்க கேள்வி என்று சொல்லிவிடுவாயே என்று விட்டு விட்டேன். ஆனாலும் நல்லவேளையாய் நீயே சொல்லப் புறப்பட்டுவிட்டால். அதுவும் அந்தக்கடவுள் செயலாகத்தான் இருக்கவேண்டும். சொல்லு, சொல்லு.
க.சொ:- முதல் முதலில் ஒரே ஒரு மனிதனை சிருஷ்டித்தார். பிறகு அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அந்த எலும்பிலிருந்து
குடி அரசு- 1936 (1) 424
ஒரு பெண்ணை சிருஷ்டித்து இரண்டுபேரையும் ஷோக்காய் ஒரு நந்தவனத்தில் உலாவச் சொன்னார். அந்த நந்தவனத்தில் சில பழச்செடிகள் இருந்தன. அந்த பழச்செடிகளில் ஒரு பழச்செடியின் பழத்தை சாப்பிடக் கூடாது என்று கடவுள் அந்த ஆண் பெண் இருவருக்கும் சொல்லி வைத்தார். கடசியாக அந்த ஜோடி கடவுள் வார்த்தையைத் தட்டிவிட்டு பிசாசு வார்த்தையைக் கேட்டு அந்தப் பழத்தை சாப்பிட்டு விட்டது
க.கே:- நில்லு, நில்லு. இங்கே எனக்கு கோபம் வருகிறது. அந்தக் கோபம் ஆறினால் தான் மேல்கொண்டு கதை கேட்க முடியும்
க.சொ:- என்ன கோபம்?
க.கே:- அதெப்படி? அங்கே சாத்தான் வந்தான். அவனை யார் சிருஷ்டித்தது? மேல்படி 6-நாள் வேலையிலும் கடவுள் சாத்தானை சிருஷ்டிக்கவே இல்லையே. அந்தப்பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டித்தல்லவா கடவுளுடன் போட்டி போட அந்த நந்தவனத்துக்கு அனுப்பி யிருக்கவேண்டும்? அந்த பயலைக்கண்டு பிடித்து அவனுக்கு தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா? ஒரு சமயம் கடவுளும் தனது பெறுந்தன்மையில் அந்த சாத்தானையும் அவனை சிருஷ்டித்த மற்றொரு சாத்தானையும் சும்மா விட்டிருப்பார். நமக்கு புத்தியும் ரோசமும் வேண்டாமா? அந்த சாத்தானையும் அவனைச் சிருஷ்டித்தவனையும் கண்டு பிடித்து தகுந்தபடி புத்தி கற்பிக்கா விட்டால் நமக்கும் மற்ற மிருங்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுதான். என்னுடைய ஆத்திரம். இதற்கு ஒரு வழி சொல்லு. எனக்கு கோபம் வந்து வந்து போகிறது
க.சொ:- ஆத்திரப்படாதே. நான் சொல்வதை பூராவும் கேள். பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம்
க.கே:- சரி, சொல்லித்தொலை, நமக்கென்ன மானமா, வெட்கமா, அறிவா என்ன இருக்கிறது? எவன் வந்து என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு சாமி மாடுமாதிரி தலையை ஆட்ட வேண்டியது தானே. அப்புறம்?
க.சொ:- அந்தப்பழத்தைச் சாப்பிட்ட இருவருக்கும் இரண்டு ஆண்
குழந்தைகள் பிறந்தன. க.கே:- ஆளுக்கு ஒரு குழந்தையா?
க.சொ:- இரண்டுபேருக்கும் சேர்ந்து இரண்டு குழந்தைகள் பிறந்தன. க.கே:- சரி அப்புறம் என்ன ஆச்சுது?
க.சொ:- என்ன ஆவது? பிசாசு பேச்சைக் கேட்பதால் பிறந்த பிள்ளை யோக்கியமாக இருக்குமா? அவைகள் ஒன்றோடொன்று சண்டை இட்டுக் கொண்டு இளையது மூத்ததைக் கொன்று விட்டது
க.கே:- காலம் கலிகாலமல்லவா? மூத்தது மோளை, இளையது காளை. கொல்லாமல் இருக்குமா? அப்புறம்?
498 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
க.சொ:- இளையவனைக் கடவுள் உன் அண்ணன் எங்கே என்று கேட்டார். இளையவன் எனக்குத் தெரியாது என்று சொன்னார். உடனே கடவுள் கோபித்துக்கொண்டு அந்த ஆதி ஆண் பெண் ஆகியவர்களிடத்தில் மறுபடியும் ஒரு குழந்தை உண்டாகும்படி செய்தார்.
க.கே:- எப்படியோ செய்தார், அப்புறம்?
க.சொ:- இதற்குள்ளாக கொச கொசவென்று குழந்தைகள் பெருகி விட்டன. இவைகள் எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன. இவைகளில் ஒன்று தவிர மற்றவைகள் எல்லாம் இறந்து போயின.
க.கே:- ஐயையோ! அப்புறம் கடவுள் என்ன செய்தார்?
க.சொ:- என்ன செய்தார். மிஞ்சின குழந்தையை ஒரு கப்பல் தயார் செய்யச் செய்து அதில் கடவுள் முன் உற்பத்தி செய்த பொருள்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு தண்ணீரில் மிதக்கச் சொன்னார். அந்தப்படியே மிதங்கினான். இந்த சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்து விட்டது. இந்தக் கப்பல் மாத்திரம் மிஞ்சிற்று மீதியான கப்பலினாலும் அதிலிருந்தவர்களாலும் இப்பொழுது காணப்படுகிற உலகமும் அதிலுள்ள சகலமும் உண்டாயின.
க.கே:- அந்தக் கப்பலில் சந்திரன், சூரியன், நட்சத்திரம் முதலிய எல்லாம் ஏற்றப்பட்டு எல்லாம் முழுகிப் போச்சாக்கும்.
க.சொ:- ஆம் எல்லாம் அடியோடு முழுகிவிட்டன.
க.கே- போதுமப்பா, இன்னம் இதற்கு மேல் சொன்னால் என்னால் கேட்க முடியாது. நல்ல தங்கமான கதை இது.
க.சொ:- சரி. அப்படியானால் இப்போது நிறுத்தி விட்டு மற்றொரு நாளைக்குஇன்ணொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகிறேன் நீ கேளு.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - மே 1936
குடி அரசு- 1936 (1) 426
இராமனுக்கு சீதை தங்கை இராவணனுக்கு சீதை மகன்
இராமனுக்கு நான்கு பெண்டாட்டிகள்
இராமாயணம் என்பது சூரிய குல அரசர்களின் சித்திரங்களில். ஒன்று என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இராமாயணம் என்னும் பெயரால் பல நூற்றுக்கணக்கான இராமாயணங்கள் இருந்ததாகவும், நூறு கோடிக்கணக்கான சுலோகங்கள் இருந்ததாகவும், அவைகள் காலப் போக்கில் பல “தெய்வீக காரணங்களால் மறைந்து போய் விட்டன! வென்றும், ஆனாலும் இப்போது 24 விதமான இராமாயணங்கள் இருப்பதாகவும், அவற்றை தோழர் கோவிந்ததாஸ் அவர்கள் வட இந்தியாவிலுள்ள ஒரு மடத்தில் தாமே நேரில் பார்த்ததாகவும் தாம் எழுதிய “இந்து மதம்” என்ற
புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அதை அனுசரித்தே சென்னை மைலாப்பூர் ராமாயண விலாசம்'' என்னும் கிருகத்தில் உள்ள இராமாயணப் பிரசுர கர்த்தாவாகிய திரு, சி.ஆர். சீனிவாசய்யங்கார் பி.ஏ. என்பவரால் எழுதப்பட்டு 1928-ம் வருஷத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தியிருக்கும் இதர ராமாயணங்கள்'” என்னும் புஸ்தகத்தில் மேல்கண்ட விஷயங்கள் விளக்கப்பட்டு முதல் தடவையாக நான்கு இராமாயணங்கள் அதில் விவரிக்கப்பட்டு வெளியிடப் பட்டிருக்கின்றன. (அப்புத்தகத்தின் விலை ரூ 1.) அவையாவன:- ஜைன ராமாயணம், பெளத்த ராமாயணம், யவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் என்பவைகளாகும்.
இவற்றுள் பவன ராமாயணம், கிறைஸ்த ராமாயணம் ஆகியவைகள் பெரும்பாலும் இராமாயணக் கதையைப் போன்ற போக்கில் இருந்தாலும் கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயரும் மற்ற சில்லறை விஷயங்களும் பெரிதும் மாறுபட்டு அந்தந்த பாஷைக்கு ஏற்ற பெயர்களாக இருப்பதால் அதை நாம் இதில் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு உபயோகித்துக் கொள்ள விரும்பவில்லை
ஆனால் மற்ற இரண்டும் அதாவது ஜைன பெளத்த ராமாயணங்கள் பெரிதும் கதைப் போக்கிலும் பெயர்களிலும் எல்லாம் பொருத்தமாக இருக்கின்றன. ஆனால் சில்லறை விஷயத்தில் மாத்திரம் பல விஷயங்கள் மாறுபட்டிருக்கின்றன.
427 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அதில் ஜைன ராமாயணம் என்பது இப்போதும் அடையாற்றுப் புத்தகசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக பதிப்பாசிரியரே எழுதியிருக்கிறார். அதில் தசரதன், ராவணன் முதலியவர்களுடைய சந்ததிக்கிரமம், பிறப்பு, வளர்ப்பு முதலியவைகளும் சிறிது வித்தியாசப்பட்டாலும், மூல புருஷனாகிய தசரதனை அப்படியே ஏற்றுக் கொண்டு அவனுக்கு நான்கு மனைவிகள் என்றும், அவர்களின் பெயர்கள் 1. அபாரஜிதை, 2. சுமத்ரை,
3. கைகேயி, 4. சுப்ரபை என்றும் குறிப்பிட்டு விட்டு கைகேயிக்கு தசரதன் கொடுத்த இரண்டு வரத்தையும் அப்படியே குறித்திருப்பதுடன், அபராஜிதைக்கு ராமன் பிறந்ததாகவும், சுமத்திரைக்கு லக்ஷ்மணன் பிறந்ததாகவும், கைகேயிக்கு பரதன் பிறந்ததாகவும், சுப்ரபைக்கு சத்துருக்கன் பிறந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
இது போலவே சீதையை ஜனகராஜனுடைய மகள் என்றும், வில்லை வளைப்பவனுக்கு ஜனகன் சீதையைக் கொடுப்பதாக நிபந்தனை வைத்திருந்தானென்றும், ஆகவே, வில்லை வளைத்தே ராமன் சீதையை மணந்தான் என்றும், லக்ஷ்மணனுக்கு 18 பெண்சாதிகள் என்றும், பரதனுக்கு ஜனகனுடைய சகோதரரின் குமாரத்தி கொடுக்கப்பட்டா ளென்றும் சொல்லப் பட்டிருக்கின்றது
மற்ற பட்டாபிஷேகக் கதையும் வால்மீகி ராமாயணத்தைப் போலவே இருந்தாலும் சிறு சிறு மாறுதல்களுடன், தபசு செய்ததற்காக சம்பூகன் வதைக்கப் பட்டதும் குறிக்கப்பட்டிருப்பதோடு இராமனுக்கு நான்கு பெண்சாதிகள் என்றும், அவர்களின் பெயர் 1 சீதை, 2 பிரபாவதி, 3 ரதினிபா, 4 ஸ்ரீதாமா என்பவர்கள் என்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் வால்மீகி இராமாயணத்திலும் கூட இருக்கிறது.
பெளத்த ராமாயணம்
பெளத்த ராமாயணத்திலும், தசரத ராஜனுக்கு பதினாயிரம் மனைவிகள் என்றும், அவர்களில் மூத்தவளுக்கு ராமன் லக்ஷ்மணன் என்பவர்களான இரண்டு ஆணும், சீதை என்று ஒரு பெண்ணும் ஆக மூன்று குழந்தைகள் பிறந்தன என்றும் அடுத்த மனைவிக்கு பரதன் என்கின்ற ஒரு ஆண் குழந்தை மாத்திரம் பிறந்தது என்றும், அரசன் பரதனுக்குப் பட்டங் கொடுப்பதாய் இளைய மனைவிக்கு வாக்குக் கொடுத்திருந்தான் என்றும், ஆனால் அரசன். அந்தப்படி செய்யாமல் ராமனுக்குப் பட்டம் கொடுக்க ஏற்பாடு செய்தான். என்றும், இளைய மனைவி கட்டாயப்படுத்தினதால் பரதனுக்குப் பட்டம் கொடுத்து விட்டு ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகிய சகோதர சகோதரிகளை பரதன் கொன்று விடுவான் எனப் பயந்து காட்டுக்கனுப்பி விட்டான் என்றும், பரதன் தமயனைத் தேடிக் காட்டுக்குப் போய் ராமனையே பட்டத்தை ஒப்புக் கொள்ளச் சொன்னதாகவும், ராமன் தன் தகப்பனார் இறந்த பிறகுதான் தான் நாட்டுக்குத் திரும்பி வர முடியுமென்றதாகவும், அதுவரை அவனது பாதரட்சையையும் மற்ற சகோதர சகோதரிகளையும் அனுப்பும்படி பரதன்
குடி அரசு- 1936 (1) 428
கேட்டு வாங்கி அழைத்துவந்ததாகவும், பன்னிரண்டு வருஷமான பின். தசரதன் இறந்து போனதாகவும், பிறகு ராமன் அயோத்திக்கு வந்ததாகவும், வந்தவுடன் ஊர்ஜனங்கள் ராமனுடைய தங்கையாகிய சீதையை அவளது தமையனாகிய ராமனுக்குக் கலியாணம் செய்வித்து பட்டங் கட்டினதாகவும்
எழுதப்பட்டிருக்கிறது. இவைகளை மெய்ப்பிக்க தோழர் அய்யங்கார், அந்தக்காலத்தில் அண்ணனும் தங்கையும் கலியாணம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு என்றும், எகிப்து தேச ராஜதர்மமே சகோதரியை மணப்பது தான் என்றும் இதை அறிந்து தான் ரிக்வேதம் 10-வது மண்டலத்தில் 10, 12 சுலோகங்களில் சகோதரியை மணப்பது கண்டிக்கப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு மூன் அவ்வழக்கமிருந்து வந்ததற்கும் மேலும் ஆதாரமாக சூரியனும் அக்கினியும் தங்களது தங்கைகளையே மணந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் எழுதியிருக்கின்றார்.
தோழர் சி.ஆர். சீனிவாசய்யங்கார் தாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வால்மீகி ராமாயணம் பின் பகுதிக் குறிப்பு 431-ம் பக்கத்தில், கீதை தரதனுடையமகள் என்றும், அவளை தசரதன் ஜனனுக்குத் தானம் கொடுத்தார் என்றும், அவள் பூமியில் பட்டால் பூமி இழுத்துக்கொள்ளும் என்றும், ஆதலால் பூமியில் விடாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நிபந்தனையுடன் தசரதன் கொடுத்தான் என்றும், தசரதன் இல்லாதபோது ஒரு நாள் கீதை பூமியின் மீது நின்றுவிட்டாள் என்றும், அதனால் அவள் பூமிக்குள் மறைந்து போய்விட்டாள் என்றும், பிறகு கொஞ்ச காலம் பொறுத்து ஜனகன் பூமியை உழும்போது கீதை பூமிக்குள்ளிருந்து கலப்பையில் தட்டுப்பட்டுஜனனால். எடுத்து வளர்க்கப்பட்டாள் என்றும், ஆனால் ஜனகனுக்கு அவள் தான் முன் வளர்த்து வந்த சீதை என்று தோன்றவில்லை யென்றும், ஆகவே அவளது தமையனாகிய ராமனுக்கே அவளைக் கலியாணம் செய்து கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டு விட்டு, இந்த விஷயம் வசிஷ்ட புராணத்திலும், ஸ்கண்டோத்திர புராணத்திலும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அன்றியும் இதே தோழர் சீனிவாசய்யங்கார், “எவனொருவன் தன்னுடைய தங்கையை மணம் செய்து கொள்ளுகின்றானோ அவனது மனைவியைத் தூக்கிக்கொண்டு போவதால் உனக்கு மரணமுண்டு' என்று ராவணனுக்கும் ஒரு காலத்தில் நாரதர் சாபம் கொடுத்திருந்ததாகவும், அந்தச் சாபத்தின் பலனாய் ராவணனானவன் ராமன் தன் தங்கையாகிய கீதையை மனைவியாக மணந்து கொண்ட விஷயம் தெரியாமல் கீதையை தூக்கிக்கொண்டு போனதாகவும், அதனாலேயே ராவணன் ராமனால் கொல்லப்பட்டதாகவும், ராவணனுக்கு உண்மையில் ராமன் தன் தங்கையைக் கட்டிக்கொண்டது தெரியாதென்றும், தெரிந்திருந்தால் சீதையைத் தொட்டிருக்க மாட்டான் என்றும், இந்த உண்மைகள் பார்க்கவ புராணத்தில் இருப்பதாகவும் மேற்கண்ட 431-ம் பக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றார்
499 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
மற்றும் இதே தோழர் சீனிவாசய்யங்கார் அதற்குக் கீழேயே சீதை ராவணன் மகள் என்றும், அவள் பிறந்த காலதோஷத்தால் தகப்பனுக்கு (இராவணனுக்கு) ஆபத்து விளையும் என்று நாரதர் இராவணனுக்குச் சொன்னதாகவும் அந்தக் காரணத்தால் இராவணன் தன் மகளாகிய கீதையை ஒரு பெட்டியில் வைத்து சமுத்திரத்தில் கொண்டுபோய் எறிந்து விட்டதாகவும், அது ஜனகனது ராஜ்யத்தில் ஓடும் ஆற்றிலடித்துக்கொண்டு வரப்பட்டதாகவும், அதை ஜனகன் கண்டெடுத்து வளர்த்து ராமனுக்குக் கொடுத்ததாகவும், ராமனும் கீதையும் வனத்திலிருக்கும்போது ராவணன்கீதையைத் தன் மகள் என்று தெரியாமல் எடுத்துக்கொண்டு வந்து விட்டதாகவும், குறிப்பிட்டு விட்டு இந்த உண்மை மவுட்கலிய ராமாயணத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். இவைகள் உண்மையாய் இருக்கலாம் என்பதற்கு அவர் ஒரு யுத்தி காரணமும் சொல்லுகிறார். அதாவது, “கீதையின் பிறப்பைப் பற்றியோ, அவளுடைய பழைய சந்ததியைப் பற்றியோ வால்மீகர் எங்கும் ஒரு வரிகூட எழுதவில்லை. ஆதலால் இந்தக் கூற்றுக்கள் உண்மையாக இருக்கலாம்” என்கின்றார். எனவே சீதை தசரதனுக்கு மகள் என்பதற்கும், ராமனுக்குத் தங்கை என்பதற்கும் இதுவரை 4, 5 ஆதாரங்களும், ராவணனுக்கு மகள் என்பதற்கு இரண்டு ஆதாரங்களும் கிடைக்கின்றன. இன்னமும் மற்ற ராமாயணங்களில். என்னென்ன பந்தத்வங்களும் இருக்குமென்பது ஊகிக்கக்கூட வில்லை.
(இக்கட்டுரை “ஆனந்தவிகடன்” அனுபந்தத்திற்கு எழுதப்பட்டதாகும்.)
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - மே 1936
குடி அரசு- 1936 (1) 430
கிராமப் புனருத்தாரணப் புரட்டு
Back 1௦ Nature இயற்கை வழிக்குத் திரும்பு! Back 1௦ the Village
கிராமத்திற்குப் போ!! Support village industries குடிசைத் தொழிலை ஆதரி! என்கிற பல்லவிகளைத் தேச பக்தர்களில் பலர் இதுபோது பாடி வருகிறார்கள். BA, MA. பட்டதாரிகளுக்கெல்லாம் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை யேற்றுக் கொள்ளும்படி உபதேசம் செய்யப்படுகிறது. படித்தவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கும் பாமரரின் தரித்திரத்தைப் போக்குவதற்கும் எல்லோரும் கிராமத்துக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது தான் சிறந்த மார்க்கம் என்று சொல்லப்பட்டு வருகிறது. கிராமப் புனருத்தாரணஞ் செய்வதற்காக தோழர் காந்தியார். அகில இந்திய கிராமக் கைத்தொழிற் சங்கம் என்பதாக (The All India
Village Industries Association) ஒரு சங்கத்தைத் தோற்றுவித்திருக்கிறார். கவர்ன்மெண்டாரும் இந்த வேலையைச் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைத்திருக்கின்றனர்.
ஆனால் நாம் இந்த சந்தர்ப்பத்தில் இயற்கை வழிக்குத் திரும்புவதும், கிராமத்திற்குப் போவதும், எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதும் நாட்டு மக்களுக்கு நலந்தரக் கூடிய காரியங்களா? நடக்கக் கூடிய காரியங்களா?
கிராமத்திலா நமது கதி மோக்ஷம்? என்கிற விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து
பார்ப்போம்
பட்டிணமா கிராமமா?
கிராமந்தோறும் மின்சார சக்திகளையும், ரேடியோ நிலையங்களையும், நாடு முழுதும் ஆகாய விமானப் போக்குவரத்து மார்க்கங்களையும் ஏற்படுத்த முயற்சிக்கும் “சாத்தான்” அரசாங்கத்தின் கிராம புனருத்தாரண நோக்கத்திற்கும், முறைக்கும் ஒவ்வொருவனும் அவனவனுக்கு வேண்டிய உணவையும் உடையையும் அவனவனே தயார் செய்து கொள்ள வேண்டும் என்கிற “மகாத்மா!” காந்தியாரின் கிராமப்புனருத்தாரண நோக்கத்திற்கும் முறைக்கும், யாதொரு சம்பந்தமும் இருக்க முடியாது. இருவர் கொள்கை களுக்கும், அடிப்படைத் தத்துவங்களிலேயே, மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற வித்தியாசங்கள் இருக்கின்றன. அரசாங்கத்தின் கிராமப் புனருத்தாரண வேலையைப் பற்றி நாம் கவனிக்க தேவையில்லை. நாம் விரும்பினாலும் வெறுத்தாலும் இன்றைய நிலையில், அரசாங்கம் இது
431 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விஷயத்தில் நம் அபிப்பிராயத்தை மதிக்கப் போவதில்லை. ஆகையால் இங்கே நாம் ஆராய எடுத்துக்கொண்டது தேசபக்தர் என்பவர்களின் (காந்தியாரின்) கிராமப் புனருத்தாரண - கிராம சேவையைப் பற்றியேயாகும்.
காந்தியாரின் கொள்கைப்படி பட்டண வாசமும் நாகரீக வாழ்க்கையும் இயற்கைக்கு விரோதமானவை; மனிதனுக்கு கெடுதி செய்பவை; கிராம வாசமும் எளிய வாழ்க்கையும் இபற்கையோடொன்று பட்டவை; மனிதனுக்கு நன்மை செய்பவை; ஆகையால் எல்லோரும் கிராமங்களுக்குப் போனால். க்ஷேமம் அடையலாம் என்பது கருத்தாகும். கிராமவாசம் பட்டினவாசம் இரண்டில் எது சிறந்தது என்பதைக் கவனிப்பதற்கு முன் கிராம வாழ்க்கையின் மேன்மைக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படும் அதன் தத்துவ பீடமான இயற்கை வாழ்க்கையைப் பற்றி மூதலில் ஆராய்வோம்
இயற்கை என்பது என்ன? இயற்கை வாழ்க்கை, இயற்கை வழி, இயற்கைச் சக்தி, இயற்கைச் சட்டம் என்று தாராளமாய்ச் சொல்லப்படும் போது, இயற்கை என்ற வார்த்தையின் தெளிவான அர்த்தம் என்ன என்பது கவனிக்கப் படுவதில்லை. ஆனால் அதன் அர்த்தத்தைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்த வேண்டியது இயற்கை வாழ்கையைப் பற்றிய இந்த ஆராய்ச்சிக்கு மிகவும் அவசியமாகும் “இயற்கையைப் பின்பற்றி வாழ்க்கை நடத்து” என்று சொல்லும்போது சாதாரணமாய்க் கவனிக்கப்படாத அர்த்தத்தை முதலில் கவனிப்போம்.
இயற்கையின் விமிந்த பொருன்
ஒரு பொருளின் தோற்றம், குணம் அல்லது சக்தி, செய்கை, அகியவை எல்லாம் சேர்ந்த அதன் முழுத்தன்மையை அப்பொருளின் இயற்கையென்று பொதுப்படச் சொல்லலாம். தீயின் இயற்கை சுடுதல், எரிதல், புகைதல், ஒளிவிடுதல் முதலியன. நீரின் இயற்கை பள்ளம் நோக்கிப் பாய்தல், தன் சமநிலைக்குப் பரவுதல் முதலியன. இம்மாதிரியே எல்லாப் பொருள்களுக்கும் அவைகளுக்குள்ள சக்திகளின் (மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்படாதனவும்) தொகுதியை அப்பொருள்களின் இயற்கை என்னலாம். ஒவ்வொரு பொருளுக்கும் வேறு வேறான இயற்கை இருப்பினும், அவ்வப்பொருளின் இயற்கையானது, கால தேச வேறுபாட்டால் மாறுபாடடையாமல், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒரே தன்மைத்தாய் இருக்கிறது. பொருள்களுக்குள்ள இயற்கைச் சக்திகள் வெளிப்பட்டு இயங்கும் முறையை அதனதன் சுபாவத்தை இயற்கை விதி அல்லது சட்டம் என்று சொல்லலாம். சூடு விரியச் செய்கிறது. குளிர் இறுகச் செய்கிறது. இதுபோன்ற இயற்கை விதிகளும் காலதேச வேறுபாட்டால் மாறுபாடடையாமல், எங்கும் எப்போதும் ஒரே மாதிரி நிகழக் கூடியவை. காற்றும் தண்ணீரும் இல்லாமல் பிராணிகள் உயிர்வாழமுடியாது என்பதும் ஒர்இயற்கைவிதி. இவ்வாறே உலகில் உள்ள எல்லாப் பொருள்களின் எல்லாத் தன்மைகளும் எல்லாச் சக்திகளும்,
குடி அரசு - 1936 (1) 432.
அவை இயங்கும் எல்லா விதிகளும் சேர்ந்தது இயற்கையென்று விரிந்த பொருள்கொண்டு பார்க்கும்போது எப்பொருளையும், எச்செய்கையையும் செயற்கை என்று சொல்ல முடியாது. செயற்கை அனைத்தும் இயற்கையே யாகும். ஏனெனில் இயற்கைக்குப் புறம்பான சக்தி செயற்கைக்கு ஏது? இயற்கைச் சக்திகளை ஏவி, இயற்கை விதிகளின் படி இயங்கச் செய்யத்தான் மனிதனால் முடியுமே தவிர, இயற்கையில் இல்லாத புதுச் சக்தியைப் பொருள். களுக்கு ஊட்டவோ, இயற்கை விதிகளுக்கு மாறாக அச்சக்திகளை இயங்கச் செய்யவோ, மனிதனால் முடியாது.
இயற்கையும் செயற்கையும்
இயற்கைப் பொருள்களையும் இயற்கைச் சக்திகளையும் கொண்டு
ஓர் குறிப்பிட்ட நோக்கத்தையடைய மனிதன் செய்யும் முயற்சியும், அம்முயற்சியின் பயனும் செயற்கையெனப்படுகிறது. ஆனால், காவேரிக் கரையிலிருந்த மரம் வெள்ளத்தில் மிதந்து வருவதற்கும், கடல்களைக் கடக்கக் கட்டப்பட்ட கப்பல்கள் தண்ணீரில் மிதந்து செல்வதற்கும் ஆதாரமான இயற்கை விதி ஒன்றே. உலை மூடியை எழுப்பும் நீராவிச் சக்திக்கும், ரயில் என்ஜினை இயங்குவிக்கும் நீராவிச் சக்திக்கும், அளவிலும், அமைப்பிலும் அன்றித் தன்மையில் என்ன வித்தியாசம்? காட்டில், தானே உதிர்ந்து மண்ணில் புதைந்த மாங்கொட்டையும் தோட்டத்தில் குடியானவன் கொண்டுபோய் ஊன்றிய மாங்கொட்டையும் முளைத்தெழுவது ஒரே விதமான இயற்கைச் சக்தியைக்கொண்டல்லவா? ஆகையால் செயற்கையெனப்படும் எல்லா வற்றிலும் மனிதன் செய்யும் முயற்சிகள் இயற்கைக்கு மாறுபட்டனவாகா. இன்ன பொருளை இன்ன நிலையில் வைப்பது, இன்ன வகையில் சேர்ப்பது, அல்லது இன்ன அளவில் பிரிப்பது ஆகிய காரியங்களினால், இன்ன சக்திகள், இன்ன வகையில் தோன்றி இன்ன விதிகளின்படி இயங்கும் என்கிற உண்மைகளைக் கவனித்தறிந்து தனக்குச் சாதகமான பலனை அளிக்கும்படி, அப்பொருளை, அத்தன்மையில் நிறுத்தவோ,. சேர்க்கவோ, பிரிக்கவோ செய்யும் முயற்சிகளை இயற்கைக்குப் புறம்பானவை என்று எப்படிச் சொல்லக்கூடும்? இவ்வாறு முயற்சிக்கும் மனிதனுடைய எண்ணங்களும், மனோ முயற்சியும், இதற்காக இவன் எடுத்துக் கொள்ளும் தேக முயற்சியும் கூட, இயற்கை சக்திகளுக்கும், இயற்கை விதிகளுக்கும் கட்டுப்பட்டே நிகழ்தல் கூடும் என்றால், எது இயற்கை? எது செயற்கை? எனவே, இயற்கை என்பதன் விரிந்த பொருளில் எதுவும் செயற்கையாதல் இல்லையாதலால்,
ரயில் எஞ்ஜினும், காந்திக்குல்லாயும் இயற்கையேயாதலால், விவசாயமும், கைத்தொழிலும் இயற்கையேயாதலால், “இயற்கையைப் பின்பற்று; இயற்கை வழியைப் பின்பற்று” என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. இயற்கைக்குப் புறம்பாகவோ இயற்கைக்கு மாறாகவோ, ஒரு நிமிஷங்கூட நடக்க முடியாத ஒருவனை, “இயற்கையைப் பின்பற்று” என்று சொல்வது, உயிர் வாழ வேண்டின் சதா சுவாசித்துக் கொண்டிரு” என்று சொல்வது போலிருக்கிறது!
433 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இரண்டாவது அர்த்தம் இயற்கை வழிக்குத் திரும்பு' என்று சொல்லும் போது தாங்கள் கொண்ட அர்த்தம், மேலே கூறிய விரிந்த எண்ணத்தில் அல்ல, வேறு
அர்த்தத்தில் என்று தேச பக்தர்கள் சொல்லக்கூடும். மனிதனுடைய தூண்டுதல், ஏவுதல், முயற்சி முதலிய எவ்வித சம்பந்தமும் இல்லாமல், பொருள்கள். தாமாக இயங்குகின்ற தன்மை தான் நாங்கள் சொல்லும் இயற்கை. இந்தக் குறுகிய அர்த்தத்தின்படிதான், இயற்கை, நம் நடத்தைக்கும் வாழ்க்கைக்கும் வழி காட்டுகிறது, அதை அனுசரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று சொல்லுவதாகக் காந்தியார் சொல்லலாம். மனித சம்பந்தம் எதுவும் இல்லாமல், இயற்கையாக உள்ள நிலைமையும், மனித முயற்சியின்றித் தானாக நிகழும் நிகழ்ச்சிகளும், நியாயமும், காருண்யமும், தெய்வத் தன்மையும் வாய்ந்தவை யென்றும், பொருள்கள் தானாக இயங்கும் நெறி, உயர் நெறி, உண்மை நெறி, நீதி நெறி என்றும், மனிதனுடைய அறிவு
கற்பிக்கும் நெறியும் ஒழுக்கமும், நீதியற்றவை, நேர்மையற்றவை யென்றும், ஆகையால் நாகரிக வாழ்க்கையும், விஞ்ஞான நெறியும், தள்ளத் தக்கவை யென்றும் சொல்லப்படும் வாதங்களை இனி ஆராய்வோம்
இயற்கை காட்டும் நியாயம்
மனித சம்பந்தமில்லாது தானாக நிகழும் காரியங்கள் எல்லாம், நியாயமானவை யென்றால், நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நியாய விரோதமானதாகு மல்லவா? பிறந்த மேனியை மறைத்து வேட்டி கட்டிக் கொள்வது மயிரைச் சிரைத்துக் கொள்வது உணவைச் சமைத்து உண்பது முதலான ஒவ்வொரு காரியமும் இயற்கைக்கு விரோதமாகின்றது. இயற்கை காட்டும் வழியைப் பின்பற்றுபவன், உணவைப் பச்சையாகவே தின்ன வேண்டும்; குளிருக்கும், மழைக்கும் ஒதுங்குவதற்கு வீடு கட்டிக் கொள்ளக்கூடாது; சட்டை போட்டுக் கொள்ளக் கூடாது. ஆனால் மனிதன் இவற்றைச் செய்வதிலிருந்து இந்த அளவில், இயற்கையைத் தன் போக்கில் போக விடாமல் கட்டுப் படுத்துகிறான் அல்லவா? ஆகையால், தானாக இயங்கும் இயற்கையின் போக்கு நியாயமானதல்ல என்பதை இந்த அளவுக்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். இயற்கையின் சக்திகள் தானாக இயங்கும் நிலையில், மனிதனுக்குச் சகாயம் செய்வதில்லை.
இயற்கையின் கொடுமை
நமக்கு இன்றியமையாது வேண்டிய மழைத் தண்ணீரை ஆறுகள் அடித்துக் கொண்டு போய் சாகுபடிக்கு உபயோகமில்லாதபடி சமுத்திரத்தில் சேர்க்கிறது. ஆற்று வெள்ளத்தை அணை கட்டித் தேக்கிக் கால்வாய் மூலம் நிலங்களுக்குப் பாய்ச்சிக் கொள்ளும் முயற்சி இயற்கையின் போக்குக்கு விரோதமாயினும் கிறப்புக்குரியதல்லவா? பெருங் காடுகளில் தானாகத்
குடி அரசு - 1936 (1) 434
தோன்றுங் காட்டுத் தீ பரந்த பிரதேசங்களை நாசப்படுத்துவதுடன் அப்பிரதேசத்தில் வாழும் அனேக ஜீவப் பிராணிகளையும் உடன்கட்டை ஏறச் செய்கிறது. யாருக்கும் மூன் எச்சரிக்கை செய்யாமல் எல்லா ஜோஸ்யர் களையும் ஏமாற்றித் திடீரென்று தோன்றும் பூகம்பங்களால் ஏற்படும் துன்பங்கள் அளவிடக் கூடியதா? தானாக உற்பத்தியாகி மனிதனுடைய அடக்குமுறைக்கு
மீறி பெருகி வரும் விஷப் பூச்சிகளும், வியாதிக்கிருமிகளும் துஷ்ட ஜந்துக்களும் மனிதனுக்குச் செய்யும் துன்பங்கள் கொஞ்சமா? மேற்கூறிய கொடுமைகளை ஒரு தனி மனிதன் செய்தால், அச்செய்கையை நியாயமான தென்றோ, காருண்யமானதென்றோ, யாராவது சொல்லத்துணிவார்களா? ஆனால் ஆஸ்திகர்களையும் நாஸ்திகர்களையும், நல்லவர்களையும், கெட்டவர்களையும், அறிஞர்களையும், மூடர்களையும் வித்தியாசமின்றி ஒரே நிலையில் வைத்துத் தன்னுடைய யதேச்சாதிகார ஆட்சி புரியும் இயற்கை நெறியை உயர் நெறியென்றும் நீதிநெறியென்றும் நாம் ஒப்புக்கொள்ள முடியுமா? இந்த இயற்கைப் போக்கைத் தழுவி நாம் நடந்து கொள்ள முடியுமா? அப்படியன்றித் தன் போக்கில் இயங்கும் இயற்கை மனிதனால். அடக்கி ஆளப்படத் தகுதியுள்ளதே யன்றிப் பின்பற்றத் தகுதியுடையதல்ல. என்று சொல்வதில் என்ன குற்றம்?
உணர்ச்சியா அல்லது அறிவா? எதைப் பின்பற்றுவது? நம்முடைய செய்கைகளுக்கெல்லாம் கர்த்தா, நமது எண்ணங்கள் நம்முடைய எண்ணங்கள், இருவகைகளில் உருக்கொள்கின்றன. இயல்பாக எழும் உணர்ச்சி பற்றியும், ஆராய்ந்து பார்க்கும் அறிவு பற்றியும் என்று இரண்டு விதங்களில் நம் எண்ணங்கள் எழுப்பப்பட்டு செய்கைக்குத் தூண்டு கின்றன. இவற்றுள் எவ்வகை எண்ணங்களை நாம் பின்பற்ற வேண்டும்? உணர்ச்சி பற்றி ஏற்படுபவைகளையா? அறிவு பற்றி ஏற்படுபவைகளையா? உணர்ச்சி பற்றி எழும் எண்ணங்கள் இயற்கையானவையாகும். அறிவு பற்றி எழும் எண்ணங்கள் இயற்கையின் போக்குக்கு மாறுபட்டவையாகும் இதை ஒரு உதாரணங்கொண்டு விளக்குவோம்
பாதையில் ஒரு பணப்பை இருப்பதை வழிப்போக்கன் ஒருவன். பார்க்கிறான். பணப்பையின் தோற்றம் வழிப்போக்கன் மூளையில் உடனே சில உணர்ச்சிகளை உண்டாக்குகிறது. “பெரிய பை - நிறையப் பணம் - எல்லாம் ரூபாய்கள் தானோ - பணக்காரனாகி விடலாம் - கஷ்டம் ஒழிந்தது என்று இம்மாதிரி உணர்ச்சிகள் உதித்து வழிப்போக்கன் மனத்தை உணர்ச்சி வசமாக்குகின்றன. இயற்கையா யெழுந்த இவ்வுணர்ச்சிகளைப் பின்பற்றி உடனே ஓடிப் பாதையில் உள்ள பையை எடுத்துக் கொள்வது இயற்கையைப் பின் பற்றுவதாகும். ஆனால் இயற்கையுணர்ச்சியைப் பின்பற்ற வொட்டாமல் தடுக்கிறது மூளையின் மற்றொரு சக்தியாகிய பகுத்தறிவு. “பை நம்முடையதல்ல, சொந்தக்காரன் பக்கத்தில் இருக்கிறானா? -
438 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ரோட்டில் யாராவது வருகிறார்களா? - ஓரத்தில் உள்ள மரத்தருகில். ஒருவன் உட்காந்திருக்கிறானே - பையைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் - அவன்தான் பையைப் பாதையில் வைத்துவிட்டு மலஜலங் கழிக்கிறான் - பைக்குடையவன் அவனாகத்தான் இருக்கலாம் - அவசரப்பட்டு என்ன பைத்தியக்காரத்தனம் செய்ய நினைத்தோம்” என்ற எண்ணங்களைப் பகுத்தறிவு கிளப்புகிறது. முதலில் எழுந்த உணர்ச்சிகள் பகுத்தறிவின் நிதான புத்தியால் அடக்கப்பட்டு அவன் நடத்தையை நிர்ணயித்தது. முதலில் எழுந்த உணர்ச்சிகளைப் பின் பற்றி நடந்திருக்கலாமா? அல்லது அறிவைக்கொண்டு நிதானித்து நடந்தது சரியா? நிதானித்து அறிவைக் கொண்டு நடப்பது இயற்கை வழிக்கு மாறானதானாலும், உலகம் ஒப்புக் கொள்ளக் கூடியதல்லவா? இயற்கையுணர்ச்சிகளைப் பின்பற்றி நடப்பது எப்போதும் நியாயமானதாக இருக்காது. பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து இயற்கையுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நடப்பதையே உலகம் எப்போதும் சிலாகிக்கிறது
செயற்கையின் பெருமை
இயற்கைக்கு மாறாக, இயற்கையின் போக்கைக் கட்டுப்படுத்தி, மனிதனுடைய செளகரியத்தையும் நன்மையையும் கோரி மனிதன் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் புகழத்தக்கவைகளாக இருக்கின்றனவே யன்றி யாராலும் இழிவு படுத்தப் படுவதில்லை. பெரிய ஆறுகள் இயற்கையில் பிரித்த இரண்டு கரைகளைச் சேர்க்கும் பாலத்தைக் கட்டுவது இயற்கைக்கு விரோதமாயினும் சிறப்புக்குரியதாகும். நிலத்தின் கீழ் உள்ள நீர் ஊற்றுக்களைக் கிணறுகள் மூலம் மனிதன் பயன்படுத்திக் கொள்வதை
யார் கூடாதென்று சொல்ல முடியும்? ஆழத்தில் இயற்கை மறைத்து வைத்துள்ள உலோக வகைகளையும், இரத்தினங்களையும் தோண்டி யெடுப்பது புகழ்ச்சிக்குரியதல்லவா? சிவ சமுத்திரம், பாய்கரை நீர் வீழ்ச்சிகளைத்
தூரத்திலிருந்து அவற்றின் இயற்கைத் தோற்றத்தைக் கண்டு, ஆகாச கங்கை யென்றும், ஆஸ்ரம வாசத்திற்குத் தகுதியான இடமென்றும், வர்ணித்த கவியும், ரிஷியும் அந் நீர்வீழ்ச்சிகள் ஒளித்து வீணாக்கி வந்த பெருஞ்சக்தியைக் கட்டுப்படுத்தி மனிதன் இட்ட வேலையைச் செய்யும் பணிப் பெண்ணாக மாற்றிக் கொடுத்த இன்ஜினியரை விட எப்படி மேலானவர் ஆவார்கள்? இராஜபுதனப் பாலைவனத்தில் பளிங்குப் பாறையாக இருந்த இயற்கைப் பொருள் வெட்டப்பட்டு நாடுகடத்தப் பட்டு பல்லாயிரம் கைகளால் அடுக்க ஒரு தாஜ்மஹாலாக மாறிக் காட்சியளித்த போது அவ்வியற்கைப் பொருளின் பெருமை செயற்கை நிலையில் குறைந்தாவிட்டது?
ஆகையால்
தானாக, மனித சம்பந்தமில்லாமல், இயங்குகின்ற நிலைமையில், இயற்கை யென்பது மனிதனால் பின்பற்றுவதற்கு தகாதது, யோக்கியதையற்றது
குடி அரசு - 1936 (1) 436
மனிதனால் அடக்கப்பட்டு மாற்றிக் கொள்ளப் படவே தகுதியுள்ளது என்று இது வரை கூறியவற்றால் ஏற்படுகிறது. முதலில் எடுத்துக் கொண்ட விரிந்த அர்த்தத்தில் இயற்கையைப் பின் பற்றுவது அர்த்தமற்றது என்பதை மேலே விளக்கிக் காட்டினோம். மனிதன் இயற்கைப் பொருள்களையே யன்றித் தன்னுடைய இயற்கை இச்சைகளையும் உணர்ச்சிகளையும் கூடப் பின். பற்றக்கூடாது, அவற்றைத் தன் அறிவைக் கொண்டு அடக்க வேண்டு மென்றும், அறிவு கற்பிக்கும் நெறியே, ஞான நெறியே பின் பற்றத் தகுதி வாய்ந்தது என்றும் கண்டோம்
இனி, இயற்கை வழியிலிருந்தும் அதிகம் மாறுபடாத கிராம வாழ்க்கைக்குப் போய் எளிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்வது நலம் தரும் என்று சொல்வதைக் கவனிப்போம்
மனிதன் இயற்கை
உடம்பெல்லாம் வாயாகவும், வயிறெல்லாம் பல்லாகவும் அமைந்து, உண்பதும் உறங்குவதும் தவிர்த்து வேறு தொழிலை யறியாத ஓரறிவு, ஈரறிவுப் பிராணிகள் கூடத் தனித்து வாழ்வதில்லை. தன் இனத்துடன்
சேர்ந்து கும்பலாகவே வாழ்கின்றன. மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவுகளை: யுடைய மிருகங்கள், பறவைகள் முதலான பிராணிகளும் தனித்து வாழ்வ தில்லை; கூட்ட வாழ்க்கையையே விரும்பி நடத்துகின்றன. மனிதரிலும், தலைசிறுத்து, உடல் பெருத்துப் புலன் உணர்ச்சியன்றிப் போத உணர்வில்லாத அஞ்ஞானச் செல்வங்கள் கூடத் தனித்து வாழப் பிரியப்படுவதில்லை. அறிவுள்ள மனிதனோ, என்றும் தன் இனத்தின் கூட்டுறவையும் சங்க வாழ்க்கையையுமே விரும்புகிறான். “இனிது இனிது ஏகாந்தம் இனிது” என்ற அபிப்பிராயத்தை நாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அன்பின். வழியது உயிர் நிலை யாகையால், மனிதன் எப்பொழுதும் பிறர்க்கு அன்பு காட்டவும், பிறர் அன்பைப் பெறவும் ஆசைப்படுகிறான். மரணத்தின். பயங்கரமெல்லாம், இனிமேல் பிறர் அன்புக்குப் பாத்திரமாகி பிறர் அன்பைப் பெறவும், பிறரிடம் அன்பைச் செலுத்தவும் வசதி யில்லாமற் போகிறதே என்கிற காரணத்தாலேயே, ஏற்படுவதாகச் சொல்லலாம். பிற உயிர்களின். சம்பந்தத்திலிருந்து முற்றிலும் நீங்கி, ஏகாங்கியாக இருக்க வேண்டு மென்ற பயத்தை நினைத்தே உடலை விட்டு நீங்கும் உயிர், மோக்ஷ உலகை விரும்பாது நில உலகிலேயே மீண்டும் இருக்க ஆசைப்படுகிறது இறந்தவர்களுடைய 'ஆவி' மறுபடியும் இவ்வுலக வாழ்வை விரும்பித் தாங்கள் முன் வாழ்ந்த இடங்களைச் சுற்றிக் கொண்டும், பிற உயிர்களைப்
பற்றிக் கொண்டும் “பேய் பிசாசு"களாகித் தங்களுடைய ஆசைகளைத்
தீர்த்துக் கொள்கின்றன என்ற கொள்கையும், மனிதனுக்கு இயல்பாகவுள்ள சங்க வாழ்க்கை விருப்பத்தைக் காட்டுகிறது. தாங்கள் ஏற்படுத்தியுள்ள. தண்டனைகளில் எல்லாம் தனியறையில் சிறை வைப்பது (Solitary Confinement) மிகவும் கொடியதென்று அரசாங்கங்கள் நினைப்பதிலும்
437 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உண்மையில்லாமலில்லை. இவற்றிலிருந்து மனிதன் எப்போதும் கூட்டமாக வாழவே விரும்புகிறான் என்கிற உண்மை விளங்குகிறதல்லவா?
சமூக வாழ்வின் ஆரம்பம்
பிராணிகள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாது வேண்டியவை
(1) காற்று (2) தண்ணீர் (3) சாப்பாடு. இவற்றுள் காற்றில்லாமல் சில நிமிஷங்கள் கூட வாழ முடியாது. தண்ணீரில்லாமல் சில நாட்களுக்கு மேல் உயிரோடிருக்க முடியாது. இவ்விரண்டின் இன்றியமையாத் தன்மைக்குத் தக்கபடி, இவ்விரண்டு பொருள்களும் (காற்றும் நீரும்) எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக் கூடிய விதத்தில், யாவர்க்கும் பொது உடமையாய், எந்தப் பலவானாலும் தன்னுடைய தனி உடமையாக்கிக் கொள்ள முடியாத வகையில், உலகமெங்கும் இயற்கையாய் அமைந்துள்ளன. மூன்றாவதான, 'உணவு' முதல் இரண்டைப்போலப் பொது உடமையாயில்லாமல், மண்ணாசை கொண்ட மன்னராலும், பொன்னாசை கொண்ட மக்களாலும், ஆதியிலிருந்தே தனியுடமையாக்கிக்கொள்ளப் பட்டிருக்கிறது. உணவையும் பொது உடமையாக்கி எல்லார்க்கும் எளிதில் கிடைக்கும்படி செய்யவேண்டு மென்பது, அன்பின் வழிவந்த அறிவாளர் ஒவ்வொருவரும் ஆதி காலந் தொட்டுக் கொண்டுள்ள ஆசை கண்டு வந்த கனா. “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றியான்' என்றும் “உறுபசியும் ஓவாப்பிணியும், செறுபகையும் சேராதியல்வது நாடு” என்றும் வள்ளுவர் கூறிப் போந்தார். “தனி ஒருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழிப்போம்" என்றார் பாரதி. கனவை நனவாக்கி, உணவையும் பொதுவுடமையாக்கிப் பசியையொழித்து, மக்களுக்குள் ஏற்றத் தாழ்வு
கற்பிக்கும் பகையையும் ஒழித்து ருஷ்யாவை, நாடாகச் செய்தார் லெனின்.
நாடோடி வாழ்க்கை
ஓரிடத்திலிருந்து உழுது பயிர்செய்து தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உண்டாக்கிக் கொள்ளத் தெரியாத காலத்தில் மனிதன் எதைத்தின்று எப்படி வாழ்ந்தான்? - காடுகள் இருந்த இடங்களில் காய்கனி களைத் தின்று மரப் பொற்துகளிலும், மலைக்குகைகளிலும் வாழ்ந்து வந்தான்.
காய்கனி கிடையாத போது, காட்டில் உள்ள மிருகங்களையும் பக்ஷிகளையும் வேட்டையாடிப் பிடித்துத் தின்றிருந்தான். இவைகளுக்காகக் காடு காடாக வனம் வனமாக அலைந்து திரிந்தான். நீர் நிலைகளை டுத்துத் தங்கி வந்தான். இவை யொன்றுங் கிடைக்காத இடங்களில் நரமாமிச பட்சணியாகவும் இருந்தான்.
மிருகங்களைப் பிடித்துக் கொன்று தின்றவன், நாளடைவில் அம்மிருகங்களைப் பழக்கி வளர்த்து அவற்றைக் கொல்லாமல், அவற்றின் பொருள்களிலிருந்து உணவையும், உடையையும் பெற்றுக் கொள்ளத்
குடி அரசு- 1936 (1) 438
தெரிந்தான். அக்காலத்தில் அவனுக்கு உணவையும், உடையையும் அளித்த மிருகங்களை வளர்க்க வேண்டி, மேய்ச்சல் காடுகளைத் தேடியலைந்து ஓரிடத்திலும் நிலைத்து வாழாமல் நாடோடி வாழ்க்கை நடத்தினான்.
கிராமங்கவின் தோற்றம்
பிறகு, உழுது பயிர்செய்யத் தெரிந்து கொண்டான். அக்காலத்தில்
தான், மனிதன் ஒரு இடத்தில் நிலையாகத் தங்கி வாழ ஆரம்பித்தான். சாகுபடிக்குத் தகுதியான நிலவளமும், குடிப்பதற்கு தண்ணீர் எப்போதும் உள்ளதுமான இடத்தையே தான் தங்கி வசிப்பதற்கு ஏற்றதெனக் கண்டு, இவ்விரண்டு வசதிகளும் பொருந்திய இடங்களில் தங்கினான். மழைத் தண்ணீர் பள்ளம் படுகைகளில் தேங்கி நின்ற நீர்நிலைகளும், மேற்பரப்பில்
ஓடும் ஆறுகளுமே, அந்தக்கால மனிதனுக்கிருந்த, தெரிந்த ஜலவசதிகள், நிலத்தின் கீழ் உள்ள ஊற்றுக்களை கிணறு தோண்டி உபயோகிக்க அவனுக்குத் தெரியாது. மழை நீரையும் ஆற்று வெள்ளத்தையும் குளங்களில் தேக்கி, மழையற்ற காலங்களில் உபயோகித்துக் கொள்ளவும் தெரியாது. வருஷ முழுவதும் வற்றாது ஒடும் ஆறுகளையே அவன் நம்பியிருந்தான். ஆகையால்
தான் ஆறுகளை யடுத்தே மனிதன் குடியேறிப் பெருகினான். இப்போதுள்ள ஊர்களிலும், நகரங்களிலும் மிகப் பழமையானவைகள் எல்லாம் பெரிய ஆறுகளை அடுத்துள்ளவைகளாகும். காசி, பிரயாகை, பாடலிபுரம், காவிரிப் பூம்பட்டினம், உறையூர், மதுரை, கருவூர், நெல்லை, பேரூர் முதலிய பழைய ஊர்கள் எல்லாம் நதிக்கரை நகரங்களே யாகும். ஈரோடை, வெள்ளோடை, சிற்றோடை, பவானி, கீழ்வானி, மேல்வானி, ஆற்றூர், புனலூர், ஜலத்தூர், மதுக்கரை, மீன்கரை, ஓடத்துறை, நெல்லித்துறை முதலான ஊர்ப்பெயர்கள் அவ்வூர்கள் ஆதியில் தோன்றுவதற்குக் காரணமாயிருந்த ஜலவசதிகளைக் குறிக்கின்றனவல்லவா? இது போலவே, இப்போது ஊர்களாயிருந்த இடம் முன் பெருங்காடுகளாயிருந்து, மனிதன் அக்காடுகளை வெட்டி நாடாக்கின உண்மையையும், நமது நாட்டில் உள்ள பல ஊர்ப் பெயர்கள் தெரிவிக்கின்றன.
தென்னம்பாளையம், பனங்காட்டூர், புளியம்பட்டி, மாமரத்துப்பட்டி, விளாமரத்துப் பட்டி, வேலாம் பூண்டி, ஈஞ்சம் பள்ளி, எட்டிக் குட்டை, புங்கம்பாளையம், வேப்பம்பாளையம், மூருங்கைத் தொழுவு, வாகைத் தொழுவு, நெரிஞ்சிப் பேட்டை, வாழைத் தோட்டம், முதலிய ஊர்ப்பெயர்கள். காடுவெட்டி நாடாக்கிய காலத்தில் அவ்விடங்களில் சிறப்பாய் இருந்த மரஞ்செடி தாவரங்களைக் குறிப்பிடுகின்றன. அது போலவே, புலியூர்,
சிங்கம் பேட்டை, நரிப்பட்டி, பன்றிமடை, கரடிமடை, மானுப்பட்டி முதலிய ஊர்ப்பெயர்கள் அக்காடுகளில் யதேச்சையாயிருந்த மிருகங்களை மனிதன் அழித்து ஊர் கட்டியதைக் குறிப்பனவாகும். நதிக்கரைகளில் ஊர்கள் உண்டாக்கிப் பெருகிய மனிதன், ஜனப்பெருக்கால், நதிகளை விட்டு
மேட்டுப் பாங்கான நிலங்களிலும் குடியேறவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது,
439 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆறுகளைத் தவிர்த்து வேறு ஜலவசதியைக் காணமுயன்றான். நிலத்தைத் தோண்டிக் கீழ் உள்ள ஊற்றுக்களிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளத் தெரிந்தான். மேட்டுபாவி, பூலாங்கிணறு, வெள்ளக் கிணறு, கரடி பாவி, பருபாவி, கிணற்றுக்கடவு, பண்ணைக்கிணறு, அல்லிக் கேணி, கூவலூர் முதலிய ஊர்ப்பெயர்கள், மனிதன் கிணறு தோண்டத் தெரிந்து கொண்ட பின், ஆற்றங் கரைகளைவிட்டு, மேட்டுப் பிரதேசங்களில் குடியேறிய காலத்தில் தோன்றியவை என்று தெரிவிக்கின்றன. இவ்வாறு தோன்றிய குடியிருப்புகள் அங்குள்ள நீர்வளம் நிலவளத்திற்கேற்ப வளர்ந்து வந்தன. சிறு சிறு கூட்டங்களாய்ப் பரவி நாடெங்கும் குடியிருப்புகளை (கிராமங்களை) உண்டாக்கி வாழ்ந்த மக்களை, ஆட்பலமும், அறிவும் கொண்ட ஒருவன் அடக்கித் தலைவனணாகித் தன் அதிகாரத்தையும், ஆட்சியையும் நிலைக்கச் செய்ய அங்கங்கே கோட்டை களைக் கட்டினான். இந்தக் கோட்டைகளையடுத்தும் ஊர்கள் தோன்றின. அரசனையண்டி அவனைக் காத்து, மற்றவர்களை அரசன் ஆணைக்கடங்கச் செய்யவும், மதத்தின் பெயரால் மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும் அங்கங்கே கோயில்கள் தோன்றின. இக்கோயில்களையடுத்தும் ஊர்கள் ஏற்பட்டன.
கிராம சமூகம் பழைய நிலை
நாள் முழுதும் ஒரு முயலையோ, மானையோ பின் பற்றிக் காடு. முழுதும் ஓடித்திரிந்து அதைக் கொன்று கொண்டு வந்து, காய்ந்த சுள்ளிகளைச் சேர்த்துச் சக்கிமுக்கி தட்டித் தீயுண்டாக்கி இறைச்சியை வாட்டித் தானும்
தன் மனைவி மக்களும் தின்று மரத்தடியிலும், மலைக்குகையிலும் வாழ்ந்து வந்த மனிதன், விவசாயம் செய்யத் தெரிந்து கொண்ட பின் ஓரிடத்தில் தங்கி, விளைநிலத்திற்கருகில் வளைவு கட்டிக் கொண்டு வாழத் தொடங்கியபோது, இவனுக்கருகில் இவன் இனத்தார்களும் இவனைப்போலவே வளைவுகள் கட்டிக்கொண்டு வாழலாயினர். விவசாய வாழ்க்கையில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலைத்து வாழ வாரம்பித்த போது, மனிதன் வாழ்க்கையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன. ஒரு குடியிருப்புக்குச் சுற்றிலுமுள்ள விளை நிலங்களை அக்குடியிருப்பில் தங்கிய பல குடும்பங்களும் தங்களுக்குள் பங்கிட்டு அவரவர் நிலத்திற்கு வரையறை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தது. ஆகையால் நிலம் தனி உடமையாக்கப் பட்டது. தனியுடமைக் கொள்கை ஏற்பட்ட பின் நாளடைவில் சிலர் அதிக நிலங்கள் பெறவும், சிலர் நிலம் இல்லாது போகவும் நேர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. பயிர்த்தொழில் செய்ய வேண்டியவன் வேறு தொழில்களைச் செய்ய போதிய சாவகாசமும் திறமையும், பயிற்சியும் பெற முடியாமற் போயிற்று. நிலம் இல்லாதவர்கள் வேலையற்றுப் போகவே, குடியானவனுக்கு வேண்டிய இதர பொருள்களையும் செளகரியங்களையும் செய்து கொடுத்துக் குடியானவனிடமிருந்து தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு கிராமத்தில் வசித்தவர்களில் பெரும்பாலானவர் பயிர்த்தொழிலைச் செய்தனர்.
குடி அரசு- 1936 (1) 440
இவர்களுக்கு வேண்டிய உடையைத் தயாரித்துக் கொடுக்கச் சேடன், சேணியன், கைக்கோளனும், உழவுக் கருவிகளைச் செய்து கொடுக்கத் தர்சன், கொல்லனும், பாத்திரம் செய்து கொடுக்கக் குயவன் கன்னானும், வீடு கட்டவும், கிணறு வெட்டவும் ஓட்டன், கொத்தனும், இலை தயாரித்துக் கொடுக்கவும், மாலை கட்டிக் கொடுக்கவும் ஆண்டி, பண்டாரமும், துணி வெளுத்துக் கொடுக்க வண்ணானும், க்ஷவரம் செய்து அழகு படுத்த நாவிதனும், அணிகலன் செய்து கொடுக்கத் தட்டானும், பண்ணை வேலைகளில் கடின வேலைகளைச் செய்யப் பள்ளர், சக்கிலியரும் என்று அவசியமான தொழில்களைச் செய்யச் சிலர் ஏற்படுத்தப் பட்டனர். கிராம வாழ்க்கை பின்னும் சிறிது நாகரிகப்பட்ட போது, குடியானவன் குடித்துக் களிக்கக் கள்ளும், மதுவும் தயாரித்துக் கொடுக்கச் சிலரும், கோவில்களும், பூசாரிகளும், தேவடியார்கள், சின்னமேளம், பெரிய மேளங்களும் தோன்றின. மேற்கூறிய அனைவரும் குடியானவன் தயவை எதிர்பார்த்து அவன் விளைவிப்பதில் பங்கு பெற்று வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சமூக வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாங்களே தயாரித்துக் கொள்ளக் கூடிய வகையில் ஜனங்களும், தொழில்களும் ஏற்பட்டு, ஒவ்வொரு கிராமமும் ஒரு தனிப்பட்ட சமூகமாய் பிறர் தயவை எதிர்பாராமல் அக்காலத்திய கிராம வாழ்க்கை நடத்தப்பட்டு வந்தது. இன்றைய நிலையில் மீண்டும் இவ்வித கிராம வாழ்க்கைக்குத் திரும்புவது சாத்தியமான காரியமா? இவ்வித கிராமங்கள் பலவற்றால் ஆகிய ஒரு நாட்டை ஒருவன் கைப்பற்றி ஆட்சி செய்யும்போது, அவன் இந்தக் கிராம வாழ்க்கையின் அமைப்பைச் சீர்குலைக்காமல், மேலும் பலமாக்கி வைத்துத் தன் ஆட்சியை நிலை. பெறுத்துவதற்குச் சாதகம் செய்து கொண்டான். ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை ஏற்படுத்தி அவன் மூலம் தனக்குத் தேவையான கப்பத்தை வாங்கிக் கொண்டு தன் கட்டளைப்படி நடந்து தனக்குதவிபுரிபவர்களுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் வரி நீக்கப்பட்ட விளைநிலங்களை ஊழிய இனாமென்றும், தேவதாயம், பிரம்மதாயம் என்றும் சாமிக்கும், பூசாரிக்கும், பிராமணருக்கும் கொடுத்து இவர்களைத் தன் ஆட்சிக்கு அரண்களாக்கிக் கொண்டான். கிராம அமைப்பு முடி ஆட்சிக்கும், கொடுங்கோன்மைக்கும் சாதகமான அமைப்பு என்பதைக் கண்டதினால், பழைய இந்து அரசர்கள் காலத்தில் இருந்த இவ்வமைப்புப் பின்னால் முகமதிய அரசர்களாலும், அதற்குப்பின் வந்த கிருஸ்தவ (இங்கிலீஸ்) அரசாங்கத்தாலும், அப்படியே காப்பாற்றப்பட்டு வருகிறது. மானியங்களும், இனாம்களும், பிரம்மதாயத்திற்கும் தேவதாயத்திற்கும் இன்றும் இருந்து வருகின்றன. சிறு சிறு கிராமங்களில் தனிப்பட்ட சமூகங்களாய் வாழ்ந்து வந்த மக்கள், இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று கவலை கொள்ளாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. கிராமவாசிகளுக்குத் தங்கள் கிராம எல்லைக்கு அப்பால் உள்ள எதைப்பற்றியும் அக்கரை இல்லை. விரிந்த மனப்பான்மையும், நாட்டுப் பற்றும், பொது உணர்ச்சியும் இவர்களுக்குள் ஏற்பட வசதிகள்
44 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இருக்கவில்லை. சண்டமாருதத்தால் கலக்கப்பட்டுக் கொந்தளிக்கும் கடலின் கரையோரங்களில், அலைகள் ஒதுக்கும் குப்பைகூளங்களும், பாசியும், நுரையும் படிந்து, சலனமற்றிருக்கும் உப்பங்கழிகளைப்போல, உலகில் நடக்கும் எவ்விதப் புரட்சிகளுக்கும் எட்டாது உணர்வற்று அசைவற்று இருந்து வந்தன நம் நாட்டுக் கிராமங்கள்.
நிலைக்கச் செய்ய முடியுமா?
மிகப் பழமையானதும், எளிதில் உடைக்க முடியாததும், தொடர்ச்சியாக அரசாங்கங்களின் பாதுகாப்புப் பெற்று வந்ததுமான இந்தக் கிராம அமைப்பும், கிராம வாழ்க்கை முறையும், நாகரீக வளர்ச்சியால் நாளடைவில் சீர்குலைந்து சின்னா பின்னப்பட்டு இன்று அழிந்து ஒழிந்து போகும் நிலையில் இருக்கிறது. பலங்குன்றி, ஜீவநாடிகள் எல்லாம் அடங்கிக் குற்றுயிராயிருக்கும் இவ்வமைப்பையும் முறையையும், பலங் கொடுத்து உயிர்ப்பிக்கப் பல வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர். இந்த வைத்திய போர்டின் தலைவராக விளங்குகின்றார் தோழர் காந்தியார். தன்னுடைய உடலுக்கு தானே வைத்தியம் செய்து பல பல விதமான உணவுகளை உண்டு பட்டினி கிடந்தும் பரீக்ஷித்துப் பார்ப்பது போல், கிராமவாழ்க்கையைப் புனர் நிர்மாணம் செய்வதற்கும் பல மருந்துகள் பரீக்ஷிக்கப் படுகின்றன. 'நூற்போர் சங்கம்” என்ற ஊசி வழியாகக் 'கதர்' என்னும் மருந்து சென்ற பத்து வருஷங்களாக இஞ்செக்ஷன் செய்யப்பட்டு வருகிறது. கிராமக்கைத்தொழில் அபிவிர்த்தி சங்கம் என்கிற புது ஊசி ஒன்று இப்போது தயாரிக்கப்பட்டு, கருப்பட்டியும், விளக்கெண்ணெயும், இஞ்செக்ஷன் செய்யப்பட வேண்டும் என்று இப்போது தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. இந்த வைத்தியம் நோயைத் தீர்க்குமா?
கிராம வாழ்க்கையின் தற்கால நிலை
கிராமங்களைப் பிடித்திருக்கும் நோய் என்ன? எங்கும் வேலையில்லாத் திண்டாட்டம். கூலி கிடைக்காத குறை. வேலையும், கலியும் கிடைக்காததால், கிராமங்களில் உள்ளவர் கிராமங்களை விட்டுப் பட்டணங்களுக்கும் பிற நாடுகளுக்கும் போய் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் கிராமங்கள் நாளுக்கு நாள் மெலிந்து, சிறப்பிழந்து வருகின்றன. ஒவ்வொரு சென்ஸஸ் கணக்குப்படியும், கிராமாந்தரங்களில் வாழும் ஜனங்களின் தொகை குறைந்து கொண்டும், பட்டணங்களின் ஜனத்தொகை வளர்ந்து கொண்டும் வருகின்றன. கிராமங்களில் வசித்து வந்த உயர் ஜாதிக்காரர் என்பவர்களில் அநேகமாய் எல்லோரும் கிராமங்களை விட்டுப் பட்டணங்களில் குடியேறி விட்டனர். எங்கு பார்த்தாலும், கிராமங்களில் உள்ள அக்கிரகாரங்கள் எல்லாம் பாழடைந்து கிடக்கின்றன. பட்டணங்கள் ஒவ்வொன்றிலும் “எக்ஸ்டென்ஷன்ஸ்” என்கிற அக்கிரகாரப் புதூர்கள் ஏற்பட்டுவருகின்றன. கீழ் ஜாதிகள் என்போரிலும், விவசாயிகளைத் தவிர்த்த மற்றையோரில் பெரும்பாலோர், பெரிய ஆலைகள் உள்ள பட்டணங்களுக்குப் போய்க் கொண்டு வருகின்றனர்.
குடி அரசு- 1936 (1) 442
பட்டணம் போவதேன்?
விவசாயத் தொழிலில் ஈடுபட்ட குடியானவர்களைத் தவிர, மற்ற ஜாதியார்கள் எல்லோரும், கிராமங்களை விட்டு பட்டணங்களுக்குப் போவதேன்? இன்றைய நிலையில், கிராமங்களில், விவசாயி ஒருவனுக்கே, தொழிலும், ஜீவனம் செய்ய மார்க்கமும் இருக்கிறது. மற்ற தொழிலாளி களுக்கும் 55 ஜீவனக்காரருக்கும் கிராமங்களில் பிழைக்கும் வழி இல்லை. வண்ணான், நாவிதன், புரோகிதன், பூசாரி, ஆண்டி, ஒட்டன், பள்ளன், சக்கிலியன் முதலானவர்களுக்கு ஓரளவு தொழில் இருக்கிறதாகச் சொன்னாலும்,
தச்சன், கொல்லன், தட்டான், கன்னான், குயவன், வாணியன், சேணியன், சேடன், கைக்கோளன் முதலான பலருக்குத் தங்கள் குலத் தொழிலைக் கிராமங்களில் நடத்தி அதன் மூலம் ஜீவனம் செய்ய இன்றைய நிலை இடம் கொடுப்ப தில்லை. குடியானவனுக்கு இவர்கள் உதவி தேவை இல்லை. ஆகையால் அவன் தன் விளைவில் இவர்களுக்குப் பங்குகொடுப்பதை நிறுத்தி விட்டான்.
கிராமக் கைத்தொழில் அழிவின் காரணங்கள்
சமீப காலம் வரை, குடியானவனுக்கு வேண்டிய சகல பொருள்களும் கிராமங்களில் உள்ள பரம்பரைத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டு வந்தன. இன்று இப்பொருள்கள் எல்லாம் அனேகமாய் இயந்திர சாலைகளில் தயாரிக்கப்பட்டு வியாபாரிகளால் கடைகளிலும் சந்தைகளிலும் விற்கப்படு கின்றன. உழவுத் தொழிலுக்கு இன்றியமையாது வேண்டிய கலப்பை, ஏர்ச்சட்டம், பரம்புச் சட்டம், நுகம், தடி, உழுகோல் முதலிய மரச்சாமான் களைப் பெரும்பாலும் இன்றைய குடியானவன் தன் ஊரிலுள்ள தச்சனிடம் போய் வாங்கிக் கொள்வதை நிறுத்திவிட்டான். அடுத்துள்ள பட்டணத்திற்குப் போய் மரக்கடையில் வாங்கிக்கொள்கிறான். கொழு, கொத்து, அரிவாள், மண்வெட்டி முதலிய இரும்புச் சாமான்களை பட்டணக்கரையிலுள்ள. இரும்புக் கடையில் வாங்குகிறானேயன்றி உள்ளூரில் உள்ள கொல்லனிடம் பெற முடிவதில்லை. இயந்திரசாலைகளில் செய்யப்படும் இரும்புச் சாமான்கள் அதிக நயமாகவும் மலிவாகவும் கிடைக்கின்றன. மரச் சாமான்களும் இயந்திரசாலைகளில் அறுவை செய்து, ரயில் மார்க்கமாக இறக்குமதி செய்யப்பட்டு, மரக்கடைகளில் மொத்தமாகத் தயார்செய்யப்படுவதால் விலை குறைவாகவும், பொருள் நயமாகவும் கிடைக்கின்றன. உழவுத் தொழில் கருவிகளின் நிலைமையே இப்படியானால், மற்ற பொருள்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. மில் துணிகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதால், சேடன், சேணியன், கைக்கோளன் முதலியவர்களின் தொழில்கள் மூடங்கிவிட்டன. ஷராப் கடைகளில், தேவையான பொன், வெள்ளி நகைகள் நாகரிகமாகத் தயாரிக்கப் பட்டு, எப்போதும் தயாரிலிருப்பதால், தட்டான் கிராமத்தை விட்டுப் பட்டணங்களில் உள்ள ஷராப்புக் கடைக்காரனிடம் கூலிக்கு வரவேண்டியதாயிற்று. பீங்கானும்
443 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அலுமினியப் பாத்திரமும், இயந்திரங்கள் மூலம் ஏராளமாய் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்குக் கிடைப்பதால், குயவன், கன்னான். முதலியவர்களின் தனிப்பட்ட தொழிலுக்குத் தேவையில்லாது போயிற்று கூரைகளுக்குப் போடும் ஓடுகள் கூட, மலையாளத்தில் இயந்திரங்கள் மூலம் பெருவாரியாக உற்பத்தி செய்யப்பட்டு நாடெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவ்வாறே எந்தப் பொருளை எடுத்துக் கொண்ட போதிலும், தனிப்பட்ட ஒரு கைத்தொழில்காரன், முன்போல் அதைச் செய்து இயந்திர உற்பத்திப் பொருளுடன் போட்டியாக விற்க முடியாத நிலையில், தன். தொழிலை விட வேண்டியவனாகி விட்டான். கிராமக் கைத் தொழில்கள் அழிந்ததற்கு முக்கியமான காரணம், இயந்திரப் பெருக்கமும் இயந்திர உற்பத்தியும் என்று சொல்லலாம். இயந்தரங்கள் மூலம், பொருள்கள் பெரு வாரியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பெருந்தொகையாகத் தயாரிப்பதில் விலை குறைகிறது. விலை குறைவாயுள்ள இயந்தர உற்பத்திப் பொருளை, வாங்குபவன், ஆதரிக்கிறான். இயந்தரமும் கிராமக் கைத்தொழிலாளியும் போட்டிபோட்டதில், ரயிலுடன் போட்டி போட்டு ஓடிச்செத்த குதிரையைப் போல, கைத்தொழில்காரன் தோற்றுத் தன் தொழிலை இழந்தான்.
இரண்டாவது காரணம்
போக்கு வரவுக்குரிய வசதிகள் முன்காலத்திற்கு இப்போது மிகமிக அதிகரித்து விட்டதும் கிராமக் கைத்தொழிலின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாகும். முன் காலத்தில் ஒரு கிராமத்துப் பொருள் அடுத்த கிராமத்திற்குப் போவது கூட மிகுந்த கஷ்டமானதாயிருந்தது. மிகவும் விலை பெற்ற, அல்லது, இன்றியமையாத பொருள்களை ஒரு நாட்டிலிருந்து வேறுநாட்டிற்குக் கொண்டு போகப்பட்டன. இன்றைய தினம் சர்வ சாதாரணமாய்க் கிடைக்கும்
உப்பு ஒருகாலத்தில், உள் நாட்டு ஜனங்களுக்கு (சமுத்திரக் கரையிலிருந்து அதி தூரத்தில் உள்ளவர்களுக்கு) கிடைத்தற்கரிய பொருளாயிருந்தது. போக்கு வரவு சாதனங்களின் குறைவும் கஷ்டமும், கிராமக் கைத்தொழிலாளியின் கரடு முரடான சாமான்களை அதிக விலைக்கு விற்கத் துணை செய்தன. தற்காலத்தில் போக்குவரத்துக்குள்ள மிகுந்த வசதிகள், இயந்திர உற்பத்திப் பொருள்களை மூலை முடக்குகளில் எல்லாம் பரப்பிக் கிராமக் கைத்தொழில் காரன் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது. அழுகிற குழந்தைக்கு விளையாட்டுச் சாமான் கொடுத்து சமாதானப்படுத்தும் அன்பு, தாய்க்கு அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. ஆனால் அதற்காக அன்று போல, தச்சனைத் தேடி, மரம் தேடிக்கொடுத்து, அவன் கேட்கிற கூலியும் கொடுத்து, ஒருவாரம் பத்துநாள் அவனிடம் நடந்து ஒரு மரப் பொம்மை வாங்கிக் கொடுக்கிற தாயார் இன்றில்லை. சந்தைக்குப் போகிறபோது, முக்கால் துட்டுக்கு ஒரு ஜப்பான் பொம்மை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறாள். குழந்தையும் தச்சன் செய்த மரக்கட்டை பொம்மையை விடப் பகட்டான ஜப்பான் பொம்மையை அதிகப் பிரியமாக ஏற்றுக்கொள்கிறது
குடி அரசு - 1936 (1) 444
மூன்றாவது காரணம்
பண்டு தொட்டே, கிராமங்களில், கைத்தொழில்களுக்கும், தொழிலாளர்.
களுக்கும் இருந்து வந்த இழிவும், கிராமக் கைத்தொழில் க்ஷீணத்திற்கு ஒரு காரணமாகும். உழுதுண்டு வாழ்பவனே வாழ்பவன், மற்ற எல்லோரும் தொழுது உண்டு பின்னால் திரிபவர் என்கிற நிலைமைதான் கிராமங்களில் இன்றும் இருக்கிறது. பட்டணங்களில் எவன் எந்தத் தொழிலைச் செய்தாலும் கேட்பவன் இல்லை. சக்கிலியொருவன் காப்பிக்கடை வைப்பதைத் தடுக்க
முடியாது. தற்போதுள்ள சமூக நிலையில், அவனுக்கு அது லாபகரமாக இருக்காது என்கின்ற பயத்தினால் அவன் வைப்பதில்லையே தவிர, நேர்முகமான தடையில்லை. ஆனால் கிராமத்தில், ஜாதியாசாரமும், குல ஆசாரமும் ஒருவன் தனக்கிஷ்டமான தொழிலைச் செய்வதற்குத் தடையா யிருக்கின்றன. கைத்தொழில்காரருக்கெல்லாம் பொதுவாகச் சில அவமரியாதை களும், இழிவுகளும் இருந்து வருகின்றன. சில ஜாதிகள் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது, குதிரையேறக் கூடாது, வண்டியேறக் கூடாது, வேஷ்டியை முழங்காலுக்குக் கீழே தொங்க விட்டுக் கட்டிக் கொள்ளக் கூடாது என்ற பல கொடுமைகள் இன்னும் அனேக கிராமங்களில் இருந்து வருகின்றன. இவ்வித நிர்ப்பந்தங்களுக்கடங்கித் தன் சுயமரியாதையை யிழந்து தொழில் செய்து கிராமங்களில் வாழ்வதை விடப் பட்டணங்களுக்குப் போவது மேல் என்று நினைத்து கிராமங்களை விட்டவர் பலர். பட்டணங்களில் தொழில் செய்வது லாபகரமும் ஆகும் என்று தெரிந்த பின் கிராமங்களில் இருக்க எந்தத் தொழிலாளியும் விரும்ப மாட்டான். ஈன ஜாதிகள் என்கிற இழிவைச் சுமந்து கொண்டு, ஈனத் தொழில் என்று ஏசப்படும் தொழிலைச் செய்து அரை வயிற்றுக்கும் போதாக் கஞ்சி குடித்துக் கிராமத்தில் வாழ்வதை
விட, பட்டணம் வந்து, ஒரு சலவைச் சாலையையோ, 'பார்பர் ஷாப்' அல்லது, “ஷேவிங் சலூன்” என்ற காரியாலயத்தையோ ஏற்படுத்திக் கொண்டு, சுயமரியாதையுடன் தொழில் செய்வது மேல் என்று கிராமத்து வண்ணானும், நாவிதனும் பட்டிணத்திற்கு வருவதை யார் ஆக்ஷேபிக்க முடியும்? எனவே, கிராமங்களில் இன்னும், பலம் பெற்றிருக்கிற ஜாதிக்கட்டுப்பாட்டின் கொடுமை களும், இழிவுகளும், அனேக தொழிலாளிகளைக் கிராமங்களிலிருந்து துரத்தி விட்டன என்று சொல்வது சிறிதும் மிகையாகாது
அடிப்படையான காரணம்
கிராம அமைப்பின் அஸ்திபாரம் அசைந்து, கிராம வாழ்க்கை என்ற பழய கோபுரம் இடிந்து விழுவதற்கு நான்காவதாக ஒரு முக்கிய காரணம் உண்டு. அது என்னவென்றால், மேற்கத்திய (ஆங்கில) கல்வியும், அக்கல்வி போதிக்கப்படும் முறையும். சாத்தான் அரசாங்கத்தின் கொடுமைகளில் எல்லாம்
மிகக் கொடுமையானது மேற்கத்திய கல்வி (Western education) இங்கிலீஷ் படிப்பு, என்று காந்தியார் சொல்கிறார். ஆனால் இந்த நாட்டு மக்கள், சமதர்ம ஆட்சிக்கு லாயக்காவதற்கும், நாகரீக மடைந்த மற்ற நாடுகளைப் போல்
445 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உயரிய வாழ்க்கை நடத்துவதற்கும் வேண்டிய ஆசையைக் கிளப்பி, ஜனங்களின் கண்களைத் திறந்து, தங்கள் தரித்திர வாழ்க்கையில் அதிருப்தியை உண்டாக்கி, இன்ப வாழ்க்கையில் மோஹத்தைக் கொடுத்து அவ்வாழ்க்கையை விரைவில் அடையத்தக்க பயிற்சியையும் கொடுத்து வருவது, இங்லீஷ் படிப்பும், ஆண் பெண், ஜாதி, மத, வித்தியாசமின்றி அது போதிக்கப்படும் முறையுமே என்பது மறுக்க முடியாத உண்மை. கிராமவாசிகளான குடியானவனையும் தொழிலாளியையும், பட்டிக்காட்டு முட்டாள்கள்,
காட்டுமிராண்டிகள்'' என்று இதுவரை ஏசி இழிவுபடுத்தி வந்த படித்த கூட்டத்தார், இன்றையதினம் “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்று சொல்லியும் மேல் வரி எழுதிக் கொண்டு நடிக்கவும் ஏற்பட்ட நிர்ப்பந்த நிலைமை எப்படி வந்தது? இங்கிலீஷ் படிப்பும் அதன் விளைவாகிய சமத்துவ உணர்ச்சியும் பாமர ஜனங்களுக்குள் பரவியதா லல்லவா? சத்திரத்துச் சாப்பாடும் மடத்து நித்திரையும் தங்கள் பிறப்புரிமையாகக் கொண்டு வாழ்ந்த கூட்டத்தார்களே இன்றைய தினம் “வீணில், உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்ற சமதர்ம தீர்க்கதரிசியாகிய பாரதியின் அதிதீவிரப் பொது உடமைத் தத்துவத்தை ஒப்புக் கொண்டவர்கள் போல் நடிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைமையும், மேற்கத்திய கல்வியின் விளைவால் அல்லவா?
ஒரு பட்டிக் காட்டில் தாழ்ந்த குலமென்பதிற் பிறந்த ஒரு சாமிக்கண்ணு, உலகம் மதிக்கத்தக்க ஒரு பேரறிஞராய் விளங்குவதற்கு இடமளித்து, சாத்தான் அரசாங்கத்தின் மேற்கத்திய கல்வி முறையல்லவா? பழய தர்மப்படி படிப்பதற்கு உரிமையில்லாத “சூத்திர” குலங்களிற்பிறந்த ஒரு சுப்பராயனும் ஒரு செங்கோடனும் ஷண்முகமும், மூதல் மந்திரியாகவும், ஜில்லா கலெக்டராகவும், திவானாகவும் வர முடிந்தது தற்போதைய கல்வி முறையால் அல்லவா? நமது அம்பத்காரும், சிவராஜும், சீனிவாசனும், இழி குலங்கள் என்று சொல்லப்படும் ஜாதிகளில் பிறந்தும், புகழ் பெற்றுக் கண்ணியமான கனவான்களாகவதற்குத் துணை நிற்பதெது? இவர்களைப் போன்ற அறிவாளிகள், பண்டைக்காலத்தில், ஒரு சம்பூகனாகவோ, சாத்தானாகவோ இருந்து அரச தண்டனைக்கும், சமூக நிந்தனைக்கும், ஆளாகி ஒழியவும், அல்லது ஒரு பிண்ணாக்கு சித்தனாகவோ, ஒரு பாம்பாட்டிச் சித்தனாகவோ, கல்லுளி சித்தனாகவோ மாறிச் சந்நியாசி வாழ்க்கையை மேற் கொள்ளவும் தானே முடிந்தது? ஆகையால், இந்நாட்டில் சமத்துவ உணர்ச்சி பரவுவதற்கும், ஜாதி பற்றிய தொழில் முறைகள் கைவிடப்பட்டு, அறிவு பற்றியத் தொழிலை மாற்றிக் கொண்டு உயர்வடைவதற்கும் செளகரியம் உண்டானதன் அடிப்படைக் காரணம், மேற்கத்திய (இங்கிலீஷ்) படிப்பும் அப்படிப்பு வித்தியாசமின்றி எல்லார்க்கும் போதிக்கப்படுவதுமேயாகும்.
மேற்கூறிய காரணங்களால் கிராமக் கைத்தொழில்கள் சீர்குலைந்தன. கொஞ்ச நஞ்சம் உள்ள தொழிலாளிகளும் கிராமங்களை விட்டுப் பட்டணங்
குடி அரசு- 1936 (1) 446
களில் குடியேறி வருகின்றனர். கிராமங்களில் தொழிலாளர் நிலை இப்படியாக, உழவுத் தொழிலிலேயே ஈடுபட்டுள்ள குடியானவர்களைப் பற்றியும் விவசாயக் கூலிகளைப் பற்றியும் இனிக் கவனிப்போம்.
கிராமக் குடியானவன் நிலைமை
கிராமங்களில் உள்ள உழு நிலங்களில் பெரும்பாகம் அவற்றைச் சாகுபடி செய்யும் குடியானவன் கையிலிருந்து பட்டணங்களில் உள்ள வக்கீல்களுக்கும், பெருஞ் சம்பளம் பெறும் உத்தியோகஸ்தர்களுக்கும், செளகார்களுக்கும், முதலாளிகளுக்கும் மாறிவிட்டன. மாறிக்கொண்டு வருகின்றன. சொந்த நிலம் உடைய குடியானவன் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. சொற்ப நிலம் உடையவனுக்கு உழவுத்தொழிலில் தன் குடும்பத்திற்குப் போதிய வருவாய் கிடைக்காததால், கடன் வாங்கி
விரைவில் தனக்குள்ள சிறிது நிலத்தையும் இழந்து வருகிறான். குத்தகை அல்லது குடிவாரத்திற்குச் சாகுபடி செய்பவர் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உழைப்பின் முழுப் பிரயோஜனத்தையும் அடைவதில்லை. பெரும் பகுதியை பட்டணங்களில், உண்டுகளித்திருப்போர்க்கு உரிமையாக்க வேண்டியவணாயிருக்கிறான். பெரிய மிராஸ்தார்கள் என்கிற குடியானவர்கள், கிராம வாழ்க்கையின் குறுகிய உணர்ச்சிகளால், தங்களுக்குள் குரோதங் கொண்டு கட்சி கட்டிக்கொண்டு, அற்பவிஷயங்களுக்கெல்லாம் வியாச்சியங்கள். தொடர்ந்து தங்கள் ஆஸ்திகளை வக்கீல்களுக்கும் நியாயஸ்தலத் தேவதை களுக்கும் கொட்டி ஆண்டிகளாகின்றனர். கட்சியில்லாத கிராமம் சாதாரணமாய் நமது நாட்டில் இல்லை யென்றே சொல்லலாம். தாராள நோக்கமும், விரிந்த மனப்பான்மையும், நமது பட்டணங்களில் உள்ள அளவில் ஒரு சிறிது கூடக் கிராமங்களில் இல்லை. குறுகிய நோக்கமும், அவசரப் புத்தியும், மூர்க்கத் தன்மையும், கிராம வாழ்க்கையின் இன்றியமையாச் சிறப்புக்களாயிருக்கின்றன. கிராமங்களில் இத்தன்மைகளோடு விளங்கும் குடியானவர்கள் இல்லாவிட்டால், பட்டணங்களில் உள்ள வக்கீல்களுக்கும், நியாயஸ்தலங்களில் உள்ள தேவதைகளுக்கும் அவசியம் இருக்காது என்று சொல்வதில் தவறு ஒன்று
மில்லை. நிலங்களையுடைய குடியானவர்கள் தங்கள் அவிவேகத்தினாலும், பிடிவாதத்தினாலும், காலத்திற்கொப்ப மாற்றிக் கொள்ளுந் தன்மையில்லாத தாலும், நாளுக்கு நாள் க்ஷீணித்து வருகின்றனர்
பண்ணையாட்கள், விவசாயக் கூலிகள் இவர்கள் நிலைமை இன்னும் பரிதாபகரமானது. காலை 5 மணிக்கெழுந்து பகல் முழுதும் உழைத்தாலும், இவர்கள் தரித்திரம் விடிவதில்லை. மூன்று பைசாவுக்கு சீமை யெண்ணெய் வாங்கி விளக்கேற்றிக் கொள்ளவும் வகையின்றி, அந்திப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் கஞ்சி குடித்து விட்டுப் பெண்டு பிள்ளைகளை விட்டு பண்ணாடியின் தோட்டத்துக் களத்திலும் பட்டிப் புழுதியிலும், பட்டி நாயுடன் படுத்துக்காவல் காக்கவேண்டியது பண்ணையாளின் வாழ்க்கை. பண்ணைகளில்.
447 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
சேராது, கண்ட கூலிக்குப் போகும் கலியின் நிலை கொஞ்சம் மேலானது
என்றாலும், இவனுக்கு வருஷ முழுவதும் கூலி கிடைப்பதில்லை. கூலி தேடிப் பத்துமைல் பதினைந்து மைல்களுக்கப்பாலுள்ள பட்டணங்களுக்கு வரவேண்டியிருக்கிறது. இவன் மனைவி, ஒரு சுமை புல்லோ, விறகோ சுமந்து வந்து பட்டணத்தில் ஹணா, இரண்டணாவுக்கு விற்று, உப்புப்புளி வாங்கிக் கொண்டு போக வேண்டியவளாக இருக்கிறாள். கிராமங்களிலிராந்து காய்கறி,
தயிர், பால் முதலியவற்றைக் கொண்டு வந்து பட்டணங்களில் விற்று ஜீவனம்
செய்பவர்கள், பட்டணங்களை யடுத்துள்ள சுற்றுக்கிராமங்களில் வசிப்பவர்களில்: பெரும்பாலானவராயிருக்கின்றனர். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடியானவர்கள், பண்ணையாட்கள், கூலிகள் முதலியவர்களின் வாழ்க்கை நிலை இவ்வாறிருக்கும் போது, இவ்விதக் கிராம வாழ்க்கைக்குப் போவதன் மூலம் நமக்குக் கதி மோட்சம் ஏற்படும் என்று சொல்வது எவ்வளவு வஞ்சகம்! எவ்வளவு புரட்டு!!!
பட்டண வாழ்க்கையின் சிறப்பு
கிராமங்களில் என்னென்ன குறைகளும் கொடுமைகளும் இருக் கின்றனவோ, அவைகளில் ஒன்றும் பட்டணங்களில் இல்லை
1. ஜாதிக் கட்டுப்பாட்டின் கொடுமைகள் இல்லை. தனி மனிதன் சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் கிராமங்களில் உள்ள தடைகள் பட்டணங்களில் இல்லை
2. படிப்புக்கும், வைத்திய உதவிக்கும் வசதிகள் இருக்கின்றன.
3. தொழில் முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் விரிந்த வசதியும், ஆதரவும் பட்டணங்களில் போல் கிராமங்களில் இல்லை.
4. அறிவுவளர்ச்சிக்கும், இன்ப நுகர்ச்சிக்கும் ஏற்ற வசதிகளும் சாதனங்களும் இருக்கின்றன.
5. உழைப்புக்குத் தக்க கூலி கிடைக்கிறது
6. அறிவின் திறமைக்குத் தக்கபடி உயர்வடைய வசதிகள் அதிகம்.
7... எக்காரியத்துக்கும் எவனும் போட்டி போடலாம்.
மேற்கூறியபடி, சில கஷ்டங்கள் இன்மையும், பல செளகரியங்கள் உண்மையும், பட்டணவாசத்தை மேன்மையுள்ளதாகவும், யாவரும் விரும்பத் தக்கதாகவும் செய்கின்றன. வாழ்க்கையில் முன்னேற்ற மடைய விரும்பும் ஒவ்வொருவனும், பெரிய பட்டணங்களில் தங்கி வாழவே
விரும்புகிறான். நூறு காந்திகள் கூடிப் பிரசாரம் செய்த போதிலும், இவ்வுலக
சுக போகங்களை விரும்புகிறவனையும், இன்ப வாழ்க்கையின் ருசியறிந்தவனையும், அறிவை வளர்க்க விரும்புபவனையும், கிராமத்திற்குப் போகச் செய்ய முடியாது. “கிராமத்திற்குப் போ” என்று
குடி அரசு- 1936 (1) 448
உபதேசம் செய்கிறவன் எவனும் தன்னைப் பொறுத்தமட்டில் கிராமத்திற்குப் போய், பட்டிக்காட்டானாக, மங்கி, மழுங்கிப் போகச் சம்மதிக்கிறதில்லை. பிறர்க்கு மட்டும் உபதேசம் செய்ய மூன் வருகிறான். காரணம் சுயநலம்,
பயம். பட்டிக்காட்டான் பட்டணத்திற்கு வந்து நாகரிக வாழ்க்கையின். ருசியறிந்து விட்டால், பிறகு அவன் திரும்பவும் பட்டிக் காட்டிற்குப் போய் வாழ விரும்ப மாட்டான். நாட்டுப்புற வாசிகளை இது வரை ஏமாற்றி வாழ்ந்து வந்தபடித்தபட்டண வாசிகளின் சுகஜீவன வாழ்க்கைக்கு ஆபத்து வந்து விடும். ஏமாற்றப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை குறைந்தால், ஏமாற்றுகிறவர். வருத்தப்படுவது இயற்கை. எல்லோரும் நாகரிக வாழ்க்கைக்குப் போட்டி போட்டால் அவசியமான உணவுப் பொருள்களையும், உடைத்தாதுப் பொருள்களையும் உற்பத்தி செய்ய ஆட்கள் இல்லாமற் போய்விடும் என்ற பயமும் சிலருக்கிருக்கலாம்
ஆனால், இந்த பயம் ஆதாரமற்றது. உழவன் வயற்புறத்தில், சேற்றிலும், வதியிலும் வசிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நகரங்களிலிருந்து கொண்டு நாகரிக வாழ்க்கை நடத்திக்கொண்டு, இப்போது செய்வதை விடச் சிறப்பாக விவசாயம் செய்ய மூடியும்.
ருசியறியாப் பூனைகள்
பாலுக்குச்சர்க்கரை போத வில்லை யென்பவனுக்கும், கூழுக்கு உப்பில்லை என்பவனுக்கும் உள்ள துக்கம் ஒரே தன்மையானது என்று
சில பெரியோர்கள் சொல்லலாம். ஆனால் நாம் ஒப்புக் கொள்வதில்லை. அகில மெல்லாம் பிடித்து ஆகாயத்தையும் ஆட்கொள்ள முயற்சிக்கும் மேற்கத்தியவர் வருத்தமும், மண்ணிற் புழுவாய்க்கிடந்து வயிற்றுக்குண: வில்லை யென்று அழுகின்ற நம் நாட்டவர் துக்கமும் ஒரே தன்மையது என்று எப்படிச் சொல்ல மூடியும்? குடிக்கத் தண்ணீர் இல்லாதவன், சேறும் குப்பையும் நிறைந்த அழுக்குக் குட்டையைக் கண்டு பேரானந்தம் அடையலாம். ஏழ்மையின் இன்றியமையாப் பல ஜோலிகளையும் விட்டு, ஒரு குடம் தண்ணீருக்காக ஊர்ப் பொதுக் கிணற்றருகில் காத்துக்கிடந்து உயர்ஜாதிக்காரி யொருத்தி மனமிளகி ஒரு குடம் ஊற்றியதற்காக வாயார வாழ்த்திச் செல்லும் ஆதிதிராவிட சகோதரியின் திருப்திக்கும், பசியின் கொடுமையால் வைக்கோலையும் விரும்பிப் புசிக்கும் குதிரையின் திருப்திக்கும் வித்தியாச மென்ன? வேண்டுமென்றே மனிதப் பிறவியின் உயர் இலட்சியங்களையும், உரிமைகளையும் பறிமுதல் செய்து, மனிதனை மிருகத்தினும் கீழாக்கி வைத்துக் கொண்டு, எளிய வாழ்க்கையில் அவன் திருப்தியடைகிறான் என்று சொல்வதும், எளிய வாழ்க்கையே அவனுக்குப் பொருத்தமானது என்று உபதேசிப்பதும் யோக்கியமும் நியாயமும் ஆகுமா? ருசி யறியாத பூனை உரி உரியாய்த் தாண்டாது. தென்னாலிராமன் பூனை பாலைக் கண்டால்
பயந்து ஓட்டம் பிடித்தது வாஸ்தவம். அதனாலேயே, பூனைகளுக்கெல்லாம்
40 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பால் ஆகாதென்று தீர்மானிப்பது நியாயமாகுமா? பாலின் ருசியையறிந்த பூனை, உரியில் பால் இருப்பதைத் தெரிந்து, பாலைக்குடிக்க முயலும் போது
நாம் அதைத் தடுப்பது, பாலைப் பூனை குடிக்கக் கூடாது, நமக்கு வேண்டும் என்ற சுயநலத்தாலல்லவா? பூனை பால் குடிக்க வேண்டுமென்று நாம் நினைத்தால், அதற்குச் சிறிது ரசி காட்ட வேண்டும். தென்னாலி ராமனைப் போல சூடு போடக் கூடாது. பாமரர் நாகரிக வாழ்க்கை நடத்த வேண்டுமாயின், நாகரிக வாழ்க்கையின் சுகத்தை அவர்கள் ரசியறிய வேண்டும்.
மூடுமந்திர மகிமை
பிரஞ்சு தேசத்தில் புரட்சி ஏற்படுவதற்கு மூன், புரட்சிக்காரர்கள். இரகசியமாகக் கூடித் தங்கள் காரியாதிகளை நடத்தி வந்தனர். ஒரு சமயம்,
நாட்டுப் புறத்தில் கல் உடைத்து வாழும் ஒரு பாமரனைப் பாரிஸ் நகரத்திற்குப் புரட்சிக்காரர் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வர நேர்ந்தது. குறிப்பிட்ட ஒரு சம்பவத்தைக் குறித்து அப்பாமரன் விசாரிக்கப்பட்ட பின் அவனைத் திரும்பவும் நாட்டுப்புறத்தில் உள்ள அவன் கிராமத்திற்கு இரகசியமாகவே அனுப்பிவிடத் தீர்மானித்தார்கள். அப்போது அப்பாமரன், புரட்சிக்காரர் களிடம், தான் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பாரீஸில் தங்கி அதன் காட்சிகளைக் காண விரும்புவதாகவும், மூன்றா நாள் நடைபெறப் போகும் அரசன் நகரப் பிரவேசக் காட்சியைக் காண விரும்புவதாகவும் அவர்களிடம் தெரிவித்தான். புரட்சிக்காரரில் ஒருவர், அப்பேதைக் கூலியின் ஆசையைத்
தீர்த்து வைப்பதாகவும், தானே அவனை அம்மூன்று நாட்களும் வைத்துப் போஷிப்பதாகவும் ஒப்புக்கொண்டார். அப்போது மற்ற புரட்சிக்காரர். ஆகஷபித்தனர். “இவன் ஒரு பாமரன். அரசனைப்பார்க்க ஆசைப்படுகிறான்.
அரசனும், பிரபுக்களும், அழகிய பெண்களும் அலங்காரமாக ஊர்வலம் வருவதை இவன் கண்டால் மதி மயங்கி விடுவான். ஏதாவது உளறிக்கொட்டி நம்மைக் காட்டிக்கொடுத்தாலும் கொடுத்துவிடுவான். இவனை இங்கே வைத்திருப்பது ஆபத்தானது” என்று சிலர் சொன்னார்கள். ஆனால் முதலில் ஒப்புக்கொண்ட புரட்சிக்காரர் சொன்னார்.
“நாய் முயலைப் பிடிக்கவேண்டுமானால், முதலில் அதற்கு முயலைக்காட்டி, ரத்தச் சுவையும் ஊட்டி, பின் உசுப்படுத்தியும் விட வேண்டும். அப்புறம் அது, தானே சென்று நாம் காட்டிய பொருளை வீழ்த்தி
நம் காலடியில் சேர்க்கும். இம்மனிதன் நீங்கள் நினைக்கிற படி அவ்வளவு முட்டாளும் அல்ல. நம்மைக்காட்டிக்கொடுத்து விடுவான் என்று நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. வாயைத்திறந்தால், நமக்கு மூன் இவனும் தூக்கு மேடையேற வேண்டுமென்பதை இவன் அறியாதவனல்ல. ஆகையால் இவனைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என் வசம் ஒப்புவித்து விடுங்கள்” என்று சமாதானஞ் சொல்லி அப்பாமரனை தன்னுடன் அழைத்துச் சென்று பாரிஸ் நகரின் அற்புத அலங்காரங்களையும், நாகரிக வாழ்க்கையின்
குடி அரசு- 1936 (1) 450
போக போக்கியங்களையும் இரண்டு நாள் சுற்றிக் காண்பித்து, மூன்றாம் நாள் அரசனும் அரசியும் நகர்ப்பிரவேசம் செய்யும் காட்சியையும் காண்பிக்க வேண்டி, அவனைக் கூட்டிக் கொண்டு போய் ஊர்வலம் வரும் பாதையோரத்தில் மேடான இடத்தில் வேடிக்கை பார்க்கக் கூடியுள்ள ஜனங்களுடன் நிறுத்தி, அரசர் பவனி வருவதைப் பார்க்கச் செய்தார். மின்னுகின்ற அங்கி தரித்த ராணுவ வீரர்களும், குதிரை வீரர்களும் முறுக்கிய மீசைகளுடனும் உறுவிய கத்திகளுடனும் சென்றனர். கில்ட் பூசிய கோச் வண்டிகளில் அலங்கார உடை தரித்த அழகிகளும், பிரபுக்களும், கொஞ்சிக்
கொஞ்சிப் பேசிச் சென்றனர். ஜனங்கள் தங்கள் கஷ்டங்களை யெல்லாம் மறந்து சந்தோஷ ஆரவாரஞ் செய்தனர். நமது கூலிக்காரக் கொத்தனும், கண் குளிரக் கண்டு களித்தான். திறந்த கோச் வண்டியில் அரசனும், அரசியும் தோன்றியவுடன் எல்லோரும் “கடவுள் அரசனைக் காக்க. அரசி நீடூழி வாழ்க” என்று பெருத்த ஆரவாரஞ் செய்தனர். இந்த ஆரவாரத்தில் மெய் மறந்து சந்தோஷங்கொண்ட நாட்டுப் புறத்தான், கூடச் சேர்ந்து, “அரசன் வாழ்க, அரசி வாழ்க, அரசனும் அரசியும் என்றென்றும் வாழ்க. பிரபுக்கள் வாழ்க, சேனா வீரர்கள் வாழ்க, எல்லோரும் வாழ்க" என்று உறக்கக் கூவிக் கொண்டு கூத்தாடினான். அப்போது அவன் பக்கத்திலிருந்த புரட்சிக்கார நண்பர், புன்னகை செய்து, மெதுவாய் அவன் தோளைப் பற்றி அசைத்து “தம்பி அரசன் போய் விட்டான் நாம் வீட்டுக்குப் போகலாம் வா” என்று சாந்தமாகச் சொன்னார். கொத்தன் தன்னுடைய மித மிஞ்சிய உற்சாகத்தில்
தன் நிலைமையை மறந்து கூத்தாடியதற்காகப் பெரிதும் வெட்கமடைந்தவனாய் “ஐயா மன்னிக்க வேண்டும். நான் மதி மயங்கிப் போனேன். இனி மேல் ஜாக்கிரதையாக நடந்து கொள்வேன்” என்று பணிவுடன் சொன்னான். அதற்கு அப்புரட்சிக்காரர் “நண்பா, நீ வெட்கப்பட வேண்டியதில்லை. உன்னிலும் மேலான அறிவாளிகள் பலர் இம்மாதிரி ஆடம்பரங்களில் மயங்கிவிடுகிறார்கள். நீ மயங்கியதில் ஆச்சரியமில்லை. அரசனையும் பிரபுக்களையும் வாழ்த்துவதற்கு உன்னைப் போன்ற ஆவேசங் கொண்ட பாமரர் கூட்டம் இருப்பது, எங்களுக்கும் அனுகூலமே.”
கொத்தன்:- “என்னைப் போன்றவர் இருப்பது உங்களுக் கெப்படி அனுகூலம்?”
புரட்சிக்காரர்- “உங்கள் கூப்பாட்டைக் கண்டு, இது என்றென்றைக்கும் சாஸ்வத மென்றும், உண்மையிலேயே ஜனங்கள் கஷ்டமின்றிச் சந்தோஷப் படுகிறார்களென்றும், இவர்கள் நினைத்துக் கொள்ளுகிறார்கள். தங்களுடைய அக்கிரம வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்கு உங்கள் கூச்சல் இவர் களைத் தூண்டுகிறது. இப்பேதைகள் தங்கள் அந்திய காலம் சமீபத்தில் இருக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளாமற் போவதற்கும் உங்கள் ஆரவாரம் துணை செய்கிறது. ஆகையால் நீ வருத்தப்பட வேண்டியதில்லை. இப்போது நான் கேட்பதற்குப் பதில் சொல்,
451 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அழகாகச் சிங்காரிக்கப்பட்ட பல பொம்மைகளை உன் முன்னால் வைத்து அவற்றில் உனக்கிஷ்டமானதை எடுத்துக் கொள்ளும்படி சொன்னால்,
நீ எதை எடுப்பாய்? எல்லாவற்றிலும் அதிக அழகுள்ளதும், அதிக அலங்காரம் செய்யப்பட்டிருப்பதையும் அல்லவா?
கொத்தன்:- ஆம் அதிக அழகும் அலங்காரமும் உள்ளதைத்தான். எடுப்பேன்.
புரட்சிக்காரர்:- பல வர்ணங்கள் கொண்ட தோகைகளையுடைய பறவைகள் சிலவற்றை அவற்றின் கால்களைப் பிணைத்து, உன் முன் வைத்து உனக்கிஷ்டமான இறகுகளைப் பிடுங்கிக் கொள்ளும் படி சொன்னால், எந்தப்பட்சியின் இறகுகளை விரும்புவாய்? காக்கையின் இறகையா, கொக்கின் இறகையா, மயிலின் தோகையையா?
கொத்தன்:- மயிலின் தோகையைத்தான்.
புரட்சிக்காரர்- சரி. இன்று, அலங்கரிக்கப்பட்ட பல பொம்மைகளையும், கண்ணைக் கவரும் தோகைகளையுடைய மயில்களையும் நீ பார்த்தாய் காலம் வரும் போது இன்று நீ கண்ட காட்சி பயன்படும். மனதைக் கவரும் எதிலும் ஊக்கத்துடன் கலந்து கொள்ளும் மனப்பான்மை உனக்கிருப்பதை நான் கண்டு கொண்டேன். இன்று அரசனை வாழ்த்திய நீ நாளை அரசனை. வெறுத்து ஒழிக்கும் கூட்டத்திலும் இதே ஆர்வத்துடன் கலந்து கொள்வாய் என்று எனக்குத் தெரியும்?” என்று சொல்லிக்கொண்டே அப் பப்டிக்காட்டுக் கொத்தனை அழைத்துச் சென்றார்.
பட்டிக்காட்டுப் பாமரரைப் பட்டணவாசம் செய்யும் பணக்காரர்
மீதும், உயர் ஜாதிக்காரர் மீதும் உசுப்படுத்திவிடும் புரட்சிக்காரர் இன்று தமிழ்நாட்டில் இல்லை. ஆனால் பணக்காரருக்கும் உயர் ஜாதிக்காரருக்கும் காவலாளியாக விளங்கும் காந்தியாரின் காங்கிரஸும், தீண்டாமை விலக்குக் கமிட்டியும், இவ்வேலையைத் தாங்கள் அறியாமலே செய்து வருவது ஆச்சரியமல்லவா? மேடைகளில் சமத்துவ கீதங்கள் பாடி, சமத்துவம் பேசி, வாய்ச்சேவை செய்து வந்ததன் பலனாகக் காங்கிரஸ் கும்பலில் உள்ள பாமரர் மனத்தில் புதுப்புது உணர்ச்சிகள் எதிர்பாராவண்ணம் முளைத்து வேரூன்றிவிட்டன. காங்கிரஸ் மயில்களையும், அன்னங்களையும் மேடைக் கூட்டங்களில் கண்ட பாமரன் அவற்றின் தோகைமேல் மோகங்கொண்டு விட்டான். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டுகளித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்று தினமும் கொட்டை கொட்டையாய் மேல் வரிச்சட்டம் போட்டுக்கொண்டு வெளிவரும் தேரியப்பத்திரிக்கைகளைப் படிக்கும் பாமரன் யோசிக்க ஆரம்பித்து விட்டான். அதிதிராவிட சந்நியாசிகள் இழிவுக்குத் தலைகுனிய மாட்டேன் என்கின்றனர். பூனை பாலின் ருசியறிந்து கொண்டது, நாய் ரத்தச்சுவை கொண்டு விட்டது இனிமேல் பூனையைப் பாலிலிருந்தும் நாயை முயலிலிருந்தும் பிரித்து
குடி அரசு- 1936 (1) 452
வைப்பது முடிகிற காரியமல்ல. வெள்ளாளன், பாலைக்குடித்து ருசியறிந்து விட்டால், பாலைக் கொடுக்க ஒப்ப மாட்டான் என்று தனக்குத் தேவை யில்லாத காலத்திற் கூட “வெள்ளாளன் பாலைப்பிடுங்கி வேலியில் ஊற்று” என்ற சாணக்கிய தர்மம் இனி நடக்காது. ஆனைமலை நீலகிரிக்கோ, கண்டி கொளும்புக்கோ, பினாங்கு சிங்கப்பூருக்கோ போய்ச் சிறிது பொருள் சேர்த்துக்கொண்டு வந்து, நாகரிக வாழ்க்கையின் ருசியையும் அறிந்துள்ள பறையன் தன் ஊருக்குத் திரும்பி வந்தவுடன், அவனைப் பழையபடி, பழைய சோற்றுத் தண்ணீர்க்கும், பாளைக்கம்புக்கும் நாள் முழுதும் பாடுபடும்படி செய்ய எந்தக் கவுண்டனாலும் இக்காலத்தில் முடியாது. நாகரிக வாழ்க்கையின். ருசியறிந்தவன், அநாகரிக வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டான். இவனைப் பார்த்து இவன் சுற்றமும் சமூகமும் முன்னேற முயல்கிறது. காலச் சக்கரத்தின். வேகத்தால் நாகரிக வாழ்க்கை இவ்விதம் நாட்டுப் புறங்களிலெல்லாம் பரவும் போது, கிராமப்புனருத்தாரணம் கிராம நிர்மாணம் செய்வது என்று சொல்லிக்கொண்டு, அநாகரிக வாழ்க்கைக்கு மக்களைத் தூண்டி எளிய வாழ்க்கையை ஏற்கும் படி பிரசாரம் செய்வது நலம் தரும் காரியமாகுமா?
வருங்காலம்
வருங்கால வாழ்வில், கிராமங்களுக்கு இடமே இல்லை. பெரியவர்கள் சம்பாதித்த தென்று, ஓட்டைக் குச்சுகளைக் காப்பாற்றுவது பேதமை. பழைய மண் சுவரின் மேல் மச்சுக் கட்டுவதும் முடியாத காரியம் பழைய குச்சுகளைத் தரைமட்டமாக்கி விட்டுப் புதிய மாளிகைகளுக்கு அஸ்திவாரம் போடவேண்டும். யார் என்ன முயற்சி எடுத்துக்கொண்ட போதிலும், கிராமங்கள் வெகு சீக்கிரத்தில் நசித்து ஒழிந்து போவது நிச்சயம். பெரிய நகரங்கள் தான் எங்கும் பெருகும்
ரமுஷியாவைப் பார்
புரட்சிக்குப் பின் ருஷியாவில் ஏற்பட்ட மகத்தான மாறுதல்களில் மிக முக்கியமானது, பட்டிக்காட்டு வாழ்க்கையை ஒழித்து நாடெங்கும் நகர வாழ்க்கையை ஏற்படுத்தியதாகும். இலட்சம் இரண்டு லட்சம் ஜனங்கள் வசிக்கக் கூடிய பெரிய பட்டணங்களை நாட்டின் பலபாகங்களில் நிர்மாணித்து, அவ்வப் பிரதேசத்தின் வசதிகளுக்கேற்ற இயந்திர சாலை களையும் ஏற்படுத்தி, சுற்றுப் பக்கத்தில் குக்கிராமத்தில் வசித்து வந்த மக்களை யெல்லாம் நகரங்களில் குடியேற்றி, இயந்திர சாதனங்களைக் கொண்டு தொழில் செய்யவும், நாகரிக வாழ்வின் நன்மைகளைப் பெறவும் செய்திருக் கின்றனர். இதன் பலனாக 100க்குப் பத்து பேர் கூட படிக்காதிருந்த நாட்டில்
10 வருஷங்களில் 100க்கு 99 பெயர் படித்தவர்களாகவும், அதற்கேற்ப வாழ்க்கை நிலைமை எல்லாத் துறைகளிலும் உயரவும் முடிந்தது கூட்டுப் பண்ணைகளில், இயந்திரக் கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்யப்
453 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
படுவதன் மூலம் முன் இருந்ததை விடப் பத்து மடங்கு அதிகமான உணவுப் பொருள்களும், மற்ற பொருள்களும் விளைவிக்கப் பட்டு மக்களுக்குப் பஞ்சம், பசி யின்னதென்பது மறந்து போய்விட்டது. இயந்திர வாகனங்கள் ஏராளமாக இருப்பதால், 10, 15 மைல்களுக்கப்பால் உள்ள பண்ணைகளுக்குச்
சிறிதும் கஷ்டமில்லாமற் போய் வேலை செய்து விட்டு மாலையில் நகரங் களுக்குத் திரும்பி வந்து நாகரிக வாழ்க்கையின் சகல செளகரியங்களையும் அனுபவிக்கின்றனர். உழவன் மண்ணைக் கவ்விக் கொண்டு காத்துக்கிடக்கும் அநாகரிக நிலை மாறி விட்டது
இயந்திர சகாப்தம்
விஞ்ஞானத்தின் வெற்றிக் கொடியை ஏந்திச் செல்லும் இயந்திர
யுகத்தின் சக்தியை எதிர்க்க யாரால் முடியும்? மனித சமூகத்திற்கு விஞ்ஞானம் அளித்துள்ள நன்மைகள் அளவிறந்தன. இயந்திரங்களால் மனிதன் அடையும் செளகரியங்கள் எண்ணிறந்தன. சுருங்கச் சொல்லின், முன் யுகங்களில் அரசன் முதலான ஒரு சிலர் அனுபவித்து வந்த சுகங்களை இன்று பாமரர் பலரும் எளிதில் அனுபவிக்க முடிகிறது. ஆனால் விஞ்ஞான வளர்ச்சி சிறந்தோங்கும் மேற்கு நாடுகளில் இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் பொருளாதார நெருக்கடி முதலிய கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன வென்றும், இயந்திரப் பெருக்கத்தினால் க்ஷேமம் இல்லை என்றும் சிலர் சொல்லக்கூடும். இவர்கள். மேற்கு நாடுகள் தற்போது அனுபவிப்பதாகச் சொல்லப்படும் கஷ்டங்களின். தன்மையையும் அதன் மூலகாரணத்தையும் சரியாக அறிந்து கொள்ள வில்லை.
என்று தான் நாம் சொல்லுவோம். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம் நம் நாட்டிற் போல் வயிற்றுக்
கில்லாத பட்டினிக் கஷ்டமல்ல. கூழுக்கு உப்பு இல்லை என்ற துக்கமல்ல.
பாலுக்குச் சர்க்கரை போதவில்லை! என்ற கஷ்டந்தான். அதுவும் சிலருக்குத்தான். ஏற்பட்டிருக்கிறது. அங்கே ஏற்பட்டுள்ள இந்தச் சிறு கஷ்டமும், அந்நாட்டில் பழைய காலத்திலிருந்து வரும் சில பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்டனவே யன்றி வேறு காரணங்களினாலன்று. இயந்திர காலத்திற்குத் தக்கபடி இங்கிலாந்திலும், அமெரிக்கா முதலிய தனி உடமை நாடுகளிலும், அந்நாடுகளின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளில் போதுமான அளவு மாறுதல்கள் செய்து கொள்ளாததனாலேயே, மேற்கூறிய கஷ்டங்கள் இருக்கின்றன. இயந்திர காலத்திற்கேற்ற வகையில், சமூக, பொருளாதாரக்: கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கும் ரஷியாவில் இவ்விதத் துன்பங்கள். தோன்றவில்லை. விஞ்ஞான வளர்ச்சியினாலும் இயந்திரப் பெருக்கத்தாலும் அந்நாட்டில் இன்பமேயன்றித் துன்பமில்லை. ஆகையால் ஆராய்ந்தறியாமலும், நாடுகளின் வேறுபட்ட நிலைமைகளை ஒப்பிட்டுப் பாராமலும், இயந்திரங் களையும், விஞ்ஞானத்தையும் குறை கூறுவது புத்திசாலித்தனமாகாது
குடி அரசு- 1936 (1) 454
செல்வநிலை யென்பது, வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும்
நேரமும் குறைந்து ஓய்வுக்கும் கலைப்பயிற்சிக்கும், இன்ப நுகர்ச்சிக்கும் வசதியும் நேரமும் மிகுந்துள்ள நிலைமையாகும். நாள் முழுதும் வேலை செய்ய வேண்டிய நிலை அடிமை நிலை. ஏழ்மை நிலை. அநாகரீக நிலை. குறிப்பிட்ட சிறிது நேரம் மட்டும் உழைத்து அதன் பயனாகத் தனக்கு வேண்டிய அனைத்தையும் அடையும் நிலைமை, நாகரிக நிலை - எஜமான் நிலை. விஞ்ஞானமும், இயந்திரமும், மனிதனை இவ்வுலகின் எஜமானனாக்கு கின்றன. ஆகையால் பழமையான நம் நாட்டில் விஞ்ஞானம் வளரவும் இயந்திரங்கள் பெருகவும் முயற்சிப்பது அறிவுடமையாகும்
பட்டிக்காட்டு முட்டாளும், நாட்டுப் புறத்துக் காட்டுமிராண்டியும் முன்னேற்றமடைய ஒரே மார்க்கந்தான் உண்டு. இவர்கள் எல்லோரும் பட்டண வாசம் செய்ய வேண்டும். கிராம வாழ்க்கையை விட்டு நாகரிக நகர வாழ்க்கை நடத்த வேண்டும்.
இன்று கிராமவாசிகளுக்கு வேண்டிய தென்ன? இவர்களிடை எவ்வித பிரசாரம் தேவை? என்று பார்ப்போமானால், இந்நாட்டு மக்களிடை தொன்று தொட்டிருந்து வரும் “நற்குணங்கள்” எனப்படும் அடிமைக் குணங்களும், பழக்க வழக்கங்கள் எனப்படும் பைத்தியக்காரத் தன்மைகளும் ஒழிய வேண்டும். மேல் நாட்டவர்களிடம் இருக்கும் “துர்க்குணங்கள்'' எனப்படும் சுதந்தர புத்தியும், உலோகாயத குணங்களும் ஏற்பட வேண்டும் வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம் என்று இவ்வுலக வாழ்வை இழிவு செய்யும் ஞானம் கூடாது. உள்ளது போதும் என்று எணிதில் வரும் திருப்தியும், தம்மின் மெலியாரைப் பார்த்து, தங்கள் செல்வம் எவ்வளவோ பெரிது என்று எண்ணியடையும் மகிழ்ச்சியும், முயற்சியைக் கொல்லும் கொடிய நற்குணங்களாதலால் கைவிடப் பட வேண்டும். மூட நம்பிக்கையால் ஏற்படும் பக்தியும், பக்திப் பெருக்கால் வரும் பயமும் மக்களை விட்டு ஓட்டப்பட வேண்டும். தன் சொந்த உரிமைகளைப் போற்றாத ஆண்மையற்ற சாந்தம் கூடாது. நம்முடைய கிராம ஜனங்களுக்குத் தங்கள் எளிய வாழ்க்கையில் அதிருப்தி வேண்டும். தங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள ஆசை வேண்டும். தங்கள் முன்னேற்றத்துக்குள்ள தடைகளை உடைத்தெறிய தைரியம் வேண்டும். தாங்கள் யார்க்கும் தாழ்ந்தவர் அல்ல என்னும் தன்மதிப்புணர்ச்சி வேண்டும். இவ்வாறு தைரியமாகப் பிரசாரம் செய்யும் கிராம சேவகர்களே இப்போது தேவை. யானை பிடிக்க எண்ணி வேட்டைக்குப் போனவன் யானையே கொண்டு வருவான். குருவி வேட்டைக்குப் போனவன் வெறும் கையாகவும் வருவான். ரொம்ப அதிர்ஷ்ட மிருந்தாற்கூடக் குருவிக்கு மேல் ஒன்றும் கொண்டு வரமாட்டான்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - மே 1936
488 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பாண்டியன் — ராமசாமி! சுற்றுப்பிரயாணம்
திருநெல்வேலிக் கூட்டம்
ஆச்சாமியார் - ராமசாமி சம்பாஷணை
தலைவர் அவர்களே! தோழர்களே!!
இயக்கத்தின் அவசியத்தைப்பற்றியும், அது செய்துள்ள வேலையைப்
பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மையைப் பற்றியும் எல்லோரும் பேசிவிட்டார்கள். இனி நான் இக்கூட்டத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றியே சிறிது பேசுகிறேன்.
தலைவர் தோழர் நாயகம் அவர்கள் தெரிவித்ததுபோல் திருச்சி
மீட்டிங் தீர்மானப்படி மேல்கொண்டு அதுவிஷயமாய் நடைபெற வேண்டிய காரியங்களுக்கு ஆக இங்கு வந்திருக்கிறோம்.
இயக்கத்தின் பேரால் பதவியும் பட்டமும் பெற்று வாழும் பெரியார்கள். எங்களை லட்சியம் செய்யாவிட்டாலும் இந்நாட்டு பாமர மக்களும் வாலிபர்களும் கிராம ஏழை ஜனங்களும் எங்களை மதிக்கிறார்கள். எங்கள் வேலைக்கு ஆக்கமளிக்கிறார்கள் என்பது இம்மாதிரி கூட்டங்களாலேயே விளங்குகிறது. அந்த தைரியத்தின் மீதே நாங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களை சகித்துக்கொண்டு இந்த தொண்டில் ஈடுபட்டு இருக்கிறோம். திருச்சி மத்தியக் கமிட்டி தீர்மானப்படி ஜில்லாவுக்கு சுமார் 1500 ரூ வசூலானால் போதுமானது. இது கூட செய்ய நம்மால் ஆகவில்லையானால்
நம் செல்வவான்களின் யோக்கியதைக்கு வேறு ஒன்றும் உதாரணம் கூற வேண்டியதில்லை.
காந்தியாரோ, ராஜேந்திரபிரசாத்தோ, மற்றும் காங்கிரஸ் விளம்பரத்தில் எந்தஆளோவந்துவிட்டால் லட்சம், ஐம்பதுஆயிரம் என்று வசூலாகிவிடுகிறது. நம்மவர்களே அந்தப்பணங்களில் பெரும்பாகம் கொடுத்துவிட்டு அந்தப்பணத்தின் பயனாகவே வசவும், இழிவும், பழிப்பும் பெற்று வாழ்கிறார்கள். எதற்கு ஆக பணம் கொடுக்கின்றோம், அந்தப்பணம் என்ன ஆகின்றது என்கின்ற ஞானமே நம் செல்வவான்களுக்கு இருப்பதில்லை
நாம் ஏதாவது ஒரு பெரிய அவசியத்துக்கு சிறு தொகை கேட்டாலும் அதற்கு என்னென்னெல்லாமோ வியாக்கியானமும் கேள்விகளும் புறப்படுகின்றன.
குடி அரசு- 1936 (1) 456
மத விஷயத்தில் புரோகிதர்களுக்கும் குருமார்களுக்கும் செலவு செய்வதுபோலவே பார்ப்பனர்களுக்கு காங்கிரஸ் விஷயமாகவும் முட்டாள். தனமாகச் செல்வத்தை அள்ளிக்கொடுத்து மானம் கெடுகிறார்கள்.
இந்த சிறு தொகைக்கு நானும் தோழர் பாண்டியன், நாயகம், ராமசாமி, வாலகுருவா ரெட்டியார் ஆகியவர்கள் இரண்டு தடவை இந்த ஊருக்கு வந்துவிட்டோம். வந்து எவ்வளவு கஷ்டப்பட்டோம். எங்களால் தோழர். ஈஸ்வரம்பிள்ளைவாளுக்கும் எவ்வளவு கஷ்டம் முன்தடவை வந்திருந்தபோது நாங்கள் பட்டபாட்டிற்கு அளவில்லை நாங்கள் வந்த நாள் பகலில் 3 மணிக்கு சாப்பிட்டோம். பஸ்ஸில் பகல் பிரயாணத்தில் 3, 4 மணி நேரம் வெயிலில் அவஸ்தைப் பட்டோம்.
இராத்திரி பட்டினி கிடந்தோம். எங்களால் பிள்ளைவாளும் கஷ்டப் பட்டு பட்டினிகிடந்தார்.
நாங்கள் ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டோம். அந்த விருந்துக்காரர் வந்து கூப்பிடுவார் கூப்பிடுவார் என்று இரவு 11 மணி வரை காத்திருந்து பிறகு நாங்களாகவே தூங்கிவிட்டோம். விருந்துக்காரர் நல்ல சமையல். செய்து வைத்துக் கொண்டு அவரும் காத்து இருந்து கோபத்துடன் சாப்பிட்டாராம். விருந்துக்காரரின் காரியக்காரரால் இந்த கதி ஏற்பட்டது
அதுபோல் மற்றும்பல கஷ்டங்கள் அனுபவிக்கிறோம். உண்மையாகவே இந்த பிரசாரவேலை ஏற்றுக்கொள்ளாதிருந்தால் தோழர் பாண்டியன் அவர்களின் அருமைப்புதல்வன் ஏரியில் தவறி இறந்திருக்க மாட்டான். அவர் அன்று பழனிக்கு பிரசார காரியமாய் போய் விட்டதாலேயே பையனை ஒரு நண்பர் கூட்டிக்கொண்டு போக நேர்ந்ததும், காப்பாற்ற முடியாமல் போனதுமாகும். இந்த மாதிரி காரியங்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை. இனியும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால் இந்த கஷ்டங்கள் பயனுள்ள காரியத்துக்கு பயன்பட வேண்டாமா என்பதே எனது கவலை.
இந்த ஜில்லாவுக்கு இந்த காரியத்துக்கு எத்தனை தடவை வருவது? இந்த ஜில்லாக்காரர் இந்த இயக்கத்தால் பயன் அடையவில்லையா. திருநெல்வேலி ஜில்லாவில் மாத்திரம் 2 மந்திரிகள் அதுவும் ஒரு மந்திரி 3 வருஷம் மற்றொரு மந்திரி 6 வருஷம் பதவி வகித்தாய்விட்டது. இந்த ஜில்லாவிலேயே 2 இந்து மத பரிபாலன போர்டு கமிஷனர் L 800 ரூ. வீதம்
5, 5 வருஷம் அனுபவித்து ஆய்விட்டது.
இந்த ஜில்லாவில் இருந்தே ஒரு ஹைகோர்ட்டு ஜட்ஜும் நியமிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இந்த இயக்க அபிவிருத்திக்கு என்ன காரியம் செய் கிறார்கள்? ஆட்களை கண்டு பிடிப்பதே கஷ்டமான காரியமாய் இருக்கிறது
அவர்களுக்கு உத்தியோகமும் பணமும் வந்தால் எங்களுக்கு என்ன பிரயோஜனம்”? என்று ஒருவர் கேட்டார்.
457 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
உங்களுக்கு பிரயோஜனமில்லாமல் இல்லை. உதாரணமாக மாஜி
மந்திரி சிவஞானம் பிள்ளைவாள் மந்திரி வேலையில் சம்பாதித்தபணம் பூராவும் எலக்ஷனில் உங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். மற்ற மந்திரி முதலியவர்களும் எலக்ஷன் வந்தால் தெரியும். மற்றும் இந்த ஜில்லாக்காரர்களுக்கு தஞ்சை ஜில்லாப் பார்ப்பனர்களுக்குப்போல் உத்தியோகங்கள் தாராளமாய் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் அல்லாமல் வேறு என்ன? வெறும் தகுதியாலேயே ஏற்பட்டுவிட்டது என்று சொல்லிவிடமுடியுமா?
நான் இவற்றையெல்லாம் அடியோடு தப்பு என்று சொல்ல வரவில்லை. காந்தியாரின் ராமராஜ்யம் வந்தாலும் இப்படித்தான் நடக்கும். ஆனால் அது சமயம் வெறும் பார்ப்பனர்கள் பெயரை மாத்திரம் எழுதிப் போட்டு சீட்டு குலுக்கப்படும். இப்பொழுது கொஞ்சமானாலும் பார்ப்பனரல்லாதார். பெயரும் போட்டு சீட்டு குலுக்கப்படுகிறது. ஏதோ சில பெயர்களுக்கு மாத்திரம் பிரைஸ் விழுந்தாலும் இது திருநெல்வேலி ஜில்லாவுக்கே விழுகிறது என்று சொல்லுகிறேன்.
இன்றைய அரசியல் தத்துவமே - பிரச்சினையே இந்தப்பதவிப் போட்டியும் உத்தியோக வேட்டையுமேயாக இருப்பதால் பார்ப்பனர்களாகிய அதாவது நம் சமூக எதிரிகள் நமக்கு பலவித தொல்லைகளையும், துன்பங்களையும் கொடுத்து வருகிறார்கள்.
அதில் இருந்தும் மீள வேண்டாமா? அதற்குப் பதில் பிரசாரம் செய்து நம்மீது சுமத்தப்படும் பழிகளில் இருந்து நாம் மீள வேண்டாமா? போட்டி இருந்துதான் தீரும்; போரும் இருந்துதான் தீரும். தனி உடமை உலகில் இது இயற்கையேயாகும். ஆனால் அதை சமாளிக்க நாம் அவ்வப்போது முயற்சிக்காவிடில் நம் பின் சந்ததிகளின் 58 அதோகதி ஆகிவிடும். ஏன் தீண்டப்படாதவர்களாகவே ஆகிவிடும். பிறகு இப்போது மதத்தில் பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை மோட்சத்துக்காக அருந்துவது போலவே அரசியலிலும் உத்தியோகத்திலும் பார்ப்பனன் கால் கழுவின: தண்ணீரை சாப்பிடவேண்டியது மாத்திரம் அல்லாமல் இன்னமும் ஈனமான காரியம் கூட செய்து வாழ வேண்டி வந்துவிடும்
இன்றைய நிலையில் மந்திரிகளை குற்றம் சொல்வதிலேயே நம் காரியம் ஆகிவிடாது. மந்திரிகள் நிலைமையும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர்களுக்குப் போதுமான பலம் இல்லை. பொறாமையாலும் சுயநலத்தாலும் அவர்களை கவிழ்க்கப் பார்க்கிறவர்களுக்கு பலம் அதிகமாய் இருக்கிறது. ஆகவே அவர்கள் அந்த ஸ்தானத்தை பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் காலி செய்து கொடுக்காமல் பார்த்துக்கொள்ளும் வேலையே சரியாய் இருக்கிறது. அவர்கள் ராஜிநாமா கொடுக்காமல் இருப்பதையே நாம் பாராட்ட வேண்டும். துணிந்து ராஜிநாமா கொடுத்து விட்டால் நம் கதி என்ன ஆவது, அந்த ஸ்தானத்துக்கு யார் வருவார்கள் என்பதை யோசித்து பாருங்கள்.
குடி அரசு- 1936 (1) 458
இம் மாத முதலில் திருவாங்கூர் தீயர் மகாநாட்டின் போது ஒரு தீர்மானம் வந்தது. அதாவது ஹைகோர்ட் ஐட்ஜி பதவியும் ஜில்லா ஐட்ஜி பதவியும் ஈழவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் மகாராஜாவை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டது. உடனே ஒரு ஈழவ வாலிபன் அதை எதிர்த்தான். காரணம் கூறும்படி தலைவர் கேட்டார். அதற்கு அந்த வாலிபன்,
“உத்தியோகம் வருவதாய் இருந்தால் நம்மில் முக்கியஸ்தர்களுக்குத்தான் அவ்வுத்தியோகம் வரும், அது கிடைத்தவுடன் அவ்வுத்தியோகஸ்தர் அந்த உத்தியோகத்தை காப்பாற்றிக்கொள்ளவும் நல்ல பிள்ளை என்று எதிரிகளிடம்
பேர் எடுக்கவும் நம்மை காட்டிக் கொடுத்து நம் சமூகதுரோகியாக கொஞ்சமும்
பயப்படமாட்டார். அப்படியே இதுவரை சிலர் ஆகியும் விட்டார்கள்”
என்று சொன்னான். சபையோருக்கும் அது சரி என்றும் தோன்றிவிட்டது
பிறகு மகாநாட்டுத் தலைவர் அய்யப்பன் அவர்கள் அதற்கு மறுமொழியாக
நம் பிறவி எதிரிகள் சமூகத்தில் உள்ள நம் சமூக அபி மானியை விட நமது சமூகத்தில் உள்ள சமூக துரோகியே மேலானவர், ஏனென்றால் எப்படியாவது அந்த ஒன்று இரண்டு ஸ்தானங்களிலாவது நம் எதிரிகள் இல்லாமல் செய்யக்கூடுமானால் அதுவே வெற்றியென்று சொன்னார். அதுபோல் நமக்கு நன்மை செய்யாவிட்டாலும் கெடுதி செய்கிறவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கவாவது இவர்கள் மந்திரிகளாய் இருப்பது நமக்கு நன்மையாகும்.
தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி ஏதோ ஒரு சுயநலப் பார்ப்பனன் பேச்சைக் கேட்டுக்கொண்டு சட்ட மந்திரி பதவியை ராஜிநாமா
செய்தார். பிறகு அவர் கதி என்ன ஆயிற்று? தான் ராஜிநாமா செய்தது தவறு என்று அவரே நினைத்து நினைத்து அழுதார். சங்கராச்சாரிகளும் அவரை ராஜிநாமா கொடுத்ததற்காக வைதார்கள். காங்கிரஸ் தலைவர்களும் “நீர் ராஜிநாமா கொடுத்த காரணமே தென்னாட்டில் காங்கிரஸ் இவ்வளவு ஈன ஸ்திதிக்கு வந்து பார்ப்பனரல்லாதார்களை இத்தனை பேர்களை காங்கிரசில் சேர்க்க வேண்டியதாய் விட்டது'' என்று வருத்தம் தெரிவித்துக் கொண்டார்கள். தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு கீழ் நோக்க அது ஒரு டர்னிங் பாயின்ட் ஆகிவிட்டது
ஆதலால் சத்தியமூர்த்தி போன்றவர்கள் மந்திரியாவதை விட அவர். மந்திரித்துவத்தின் கீழ் நாம் பிரஜைகளாய் இருந்து வாழும்படியான அவமானத்தைவிட இன்று உள்ள மந்திரிகள் எவ்வளவோ மேலானவர்கள் என்பதை நமது வாலிபர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வெறும்
வீரம் ஒன்றுக்குமுதவாது. நமக்கு எதிர் பிரசாரத்துக்கு எவ்வித சாதனமும் இல்லை. பத்திரிகை இல்லை. நம் வாலிபர்கள் மனதில் நம் கட்சியைப் பற்றி நம்பிக்கை உண்டாக நாம் எவ்வித வேலையும் செய்யவில்லை. இந்தக் காரணங்களே நம் கட்சியில் கொள்கைப் பற்றுள்ளவர்கள் எல்லாம் எதிர்க் கட்சிக்குப் போகவேண்டி ஏற்பட்டுவிட்டது. இனியும் நாம் அப்படியே
4599 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இருந்தால் அனேகர் போய்விடுவார்கள். கொள்கை அபிப்பிராயத்தால் நம் கட்சியை விட்டு இதுவரை ஒரு குஞ்சுகூட எதிர்க்கட்சிக்கு போகவில்லை.
நம் கட்சியில் இருந்தால் பதவி கிடைக்காது என்கின்ற பயத்தாலேயே அனேகர் கட்சியை விடவும் எதிரிகளாகிய காங்கிரஸ்காரர்களிடம் தஞ்சம் புகவும் செய்கிறார்கள். உதாரணமாக தோழர்கள் தேவர், குமாரசாமி முதலியார் ஆகியவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு கொள்கை வித்தியாசம் என்ன அழுகின்றது, இவர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தால் இந்தப் பதவி கிடைத்து இருக்குமா? கட்சி மாறிவிட்டாலும் நம் கொள்கைக்கு சிறிதாவது விரோதமாய் இருக்கிறார்களா?
ஆதலால் நம் கட்சிக்கு பலமும் செல்வாக்கும் ஏற்படும்படி செய்தால் ஒருவரும் கட்சியை விட்டு போகமாட்டார்கள். எல்லோரும் திரும்பி ஓடிவந்து விடுவார்கள். பார்ப்பனர்கள் கூட வந்து கெஞ்சுவார்கள். ஆதலால் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு ஆக நாங்கள் ஜில்லா ஒன்று இப்போது 1500 ரூபாய்க்குள்ளாகத்தான் உத்தேச செலவு திட்டம் போட்டிருக்கிறோம். இதில் 1000 ரூபாயை 12 மாத பிரசாரத்துக்கும் 500 ரூபாயை ஆபீசு செலவுக்கும் 12 மாதம் பத்திரிகை நடத்தும் செலவுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இதுகூட செய்ய நாம் தயாராய் இருக்கவில்லையானால் ஒரு தடவை நமது கட்சியை மூழ்கிப்போக விட்டுவிட வேண்டியதுதான். ஆனால் நம் மனம் சம்மதிக்காததினாலேயே இவ்வளவு தூரம் கஷ்டப்படு கிறோம். இதை நீங்கள் உணர வேண்டும்
நாம் காங்கிரசுக்காரரிடம் வர்மமோ, துவேஷமோ வைத்து அவர்களை எதிர்க்கவில்லை. நாம் காங்கிரசுக்காரரை ஏன் நம் எதிரிகளாய் பாவிக்கின்றோம்? நம்முடைய லட்சியத்தை எதிர்ப்பதே அவர்களுடைய வேலையாய் இருப்பதால்தான். இப்போது நம் லட்சியம் 2. அதாவது ஒன்று
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். இரண்டு சமூக சமத்துவ சீர்திருத்தம். இந்த இரண்டுக்கும் காங்கிரஸ் அனுகூலமாயிருந்தால் அரசியல் சீர்திருத்தத்தில் அவர்கள் காட்டும் பக்கத்தில் படித்துப் பார்க்காமலே கையெழுத்துப்போடத் தயாராயிருக்கிறோம். வெறும் காகிதத்தில் வேண்டுமானாலும் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கத் தயார். அரசாங்கத்தை எதிர்ப்பதில் நாம் கோழைகள் அல்ல. பார்ப்பனர்களைவிட ஒருபடி முன்னுக்கு நிற்போம். ஆனால் எதற்காக எதிர்க்கிறோம் என்பது விளங்க வேண்டும். பார்ப்பான் பிழைப்பதற்கு நாம் அரசாங்கத்தை எதிர்ப்பதா? சதா சர்வகாலம் அதனுடன் (காங்கிரசுடன்) போராடிக்கொண்டிருப்பதிலேயே நம் வாழ்நாள் கழிவது எனக்கு சலிப்பாகத் தான் இருக்கிறது.
ஒரு கேள்வி அப்படியானால் நீங்கள் ஏன் காங்கிரசில் வந்து சேரக் கூடாது? (என்று தோழர் பழனியாண்டி முதலியார் கேட்டார்)
பதில் காங்கிரசில் சேரக்கூடாது என்கின்ற விரதம் இல்லை. மகமதியர்களுக்குக் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கொடுத்து ராஜி செய்து
குடி அரசு- 1936 (1) 460
கொண்டதுபோல் மற்ற சமூகத்துக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் கொடுப்பதாகவும் சமூக வேறுபாடுகளை அழித்துச் சமத்துவம் ஏற்படுத்துவ தாகவும் ஒப்புக்கொண்டால் வந்து சேரத் தயாராயிருக்கிறோம். இதை நான் 12 வருஷ காலமாகச் சொல்லிவருகிறேன். இதை ஆக்ஷபிக்க ஆகேகூபிக்க எதிர்ப்பும், துவேஷமும் அதிகமாய்தான் வளரும். அதை அடக்கிவிட இனி யாராலும் முடியாது. இதற்காகப் பல பார்ப்பனரல்லாத காங்கிரஸ்
பிரமுகர்களுக்கும் கடிதம் எழுதினேன்.
கேள்விட- தோழர் ராஜகோபாலாச்சாரியுடன் நீங்கள் குற்றாலத்தில் பேசினீர்களாமே. என்ன பேசினீர்கள்?
பதில்உ- இங்கு எடுத்துச் சொல்லும்படியாக ஒன்றும் விசேஷப் பேச்சு கிடையாது. குற்றாலத்தில் என்னை ஒரு அவசரத்தில் சந்தித்தார். ஒருநாள். வருவதுதானே என்றார். ஆகட்டும் வருகிறேன் என்றேன். அந்தப்படி ஒருநாள். போனேன். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அநேக விஷயங்களில் எங்களுக்குள் அபிப்பிராய பேதமிருப்பதாகத் தெரிய வில்லை. அவ்வளவுதான்.
கேள்வி முடிவு என்ன?
பதில்?- முடிவு இன்னது என்று விளக்குவதற்கு ஒன்றும் இல்லை.
கேள்வி£- காங்கிரசு தான் பிரதிநிதித்துவ சபை. அதனால் தான் நீங்கள் விரும்புவது கைகூடும். என்றைக்கு ஆனாலும் நீங்கள் ஒரு நாளைக்கு காங்கிரசில் வந்து சேரத்தான் போகிறீர்கள்.
பதில்?- அந்நிலை ஏற்பட்டால் நான் சந்தோஷப்படுவேன். காங்கிரஸ் அதற்கு தகுதியாகிவிட்டால் நமது இயக்கம் என்று தனியாய் இருக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது. ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேரலாம் என்கின்ற தீர்மானம் கோயமுத்தூரில் செய்தது இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் அந்த நிலைக்கு வரவேண்டுமே
கேள்வி நீங்கள் எல்லோரும் வந்து சேர்ந்து அந்தப்படிசெய்யுங்களேன்.
பதில்3- நான் முயற்சித்தாய்விட்டது, முயற்சிப்பவர்களை நான். ஆக்ஷபிக்கவில்லை. இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் பார்ப்பன தலைவர்கள் ஒப்புக்கொண்டால் ஒழிய முடியாது இவ்விஷயமாய் மற்றும் தோழர்கள் பி. வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்திர முதலியார், வி.ஒ. சிதம்பரம் பிள்ளை ஆகியவர்களுக்கு எழுதினேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
சமீபத்தில் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் கட்சிபேத மன்னியில். ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வந்து பிறகு தோழர் ராஜகோபாலாச்சாரியாருடன்
கலக்கலாம்.
இந்தகமிட்டி சம்மந்தமான வேலைகள் பூர்த்தியான பிறகு எல்லோரையும் ஒன்று சேர்க்க எங்களாலான முயற்சி செய்ய எண்ணி இருக்கிறோம்.
4 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பதவியே பிரதானம் என்று கருதுகிறவர்கள் நம்முடன் இல்லா விட்டாலும் பொது நன்மையை உத்தேசித்து பொது வாழ்வில் இருக்கிற மற்றவர்கள் ஏன் ஒன்று கூடக்கூடாது?
நிற்க, இப்பொழுது நமக்கு பணம் மாத்திரமே பிரதானமல்ல. ஆங்காங் குள்ள வாலிபர்களுக்குப் புதிய உணர்ச்சி உண்டாக வேண்டும். தைரியமாய் தியாகபுத்தியுள்ள பலர் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கத் துணிந்து பிரசாரத்தில் இறங்கவேண்டும். இந்த பிரசாரத்தில் சுயமரியாதை இயக்க பிரசார கொள்கைகளையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது கட்சிப்பெயர் சிலருக்கு பிடிக்கவில்லை என்றார்கள். அதைப் பற்றிக் கவலையில்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது தப்பல்ல. ஜஸ்டிஸ் என்பது பத்திரிகை பெயரே ஒழிய வேறில்லை.
காங்கிரசுக்காரருக்குள் - பார்ப்பனர்களுக்குள் இவ்வித அபிப்பிராய பேதம் கிடையாது. எந்தப் பெயர் இருந்தாலும் “தலைவர் சொன்னால் சரி" என்று ஒப்புக்கொள்ளுவார்கள். அவர்களுக்குள் கட்சி அபிப்பிராய
பேதமும் இல்லை. காங்கிரசை பார்ப்பனர் இயக்கம் என்கின்ற ஒரே கருத்து
மீது எல்லோரும் ஒன்று சேர்ந்து கொள்ளுகிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் சமதர்மம் என்கிறார்கள் - சீர்திருத்தத்தை உடைக்க வேண்டும் என்கிறார்கள், பிரிட்டிஸ் சம்மந்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்கிறார்கள்.
இந்த மூன்றுக்கும் நேர் விரோதி என்று சொல்லி பிரிட்டிவின் பேரில் கவிபாடி பட்டம், பதவி, பணம் சம்பாதித்த சீனிவாச சாஸ்திரியார் காங்கிரசை ஆதரிக்கிறார், காங்கிரசுக்கு வக்காலத்து பேசுகிறார், பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தைப் பற்றி விஷமப்பிரசாரம் செய்கிறார் என்றால் மற்ற பார்ப்பனர்களைப்பற்றி பேசவேண்டுமா?
ஆதலால் நம்மவர்களுக்கு அந்த புத்தி வேண்டும். பதவி மோக முள்ளவர்களுக்கு நல்ல புத்தி வராதுதான் என்றாலும் பதவியைப்பற்றி லட்சியமில்லாதவர்கள் இதைக் கவனித்துத் தங்கள் பின் சந்ததிகளின் நன்மையை உத்தேசித்து இந்த இயக்கத்துக்கு தங்களாலானதைச் செய்யுங்கள்
பதவி ஆள்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லுகிறேன். இன்று 100, 200 கொடுத்து பிரசாரத்துக்கு உதவி செய்யத் தவறினால் நாளைத் தேர்தல்களில் 1000, 10000 அதிகமாய் செலவு செய்ய வேண்டிவரும் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
குறிப்பு: 31.05.1936 ஆம் நாள் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 07.06.1936
குடி அரசு- 1936 (1) 42
குற்றாலத்தில் &.10. திருமணம்
எனது மதிப்புக்கு உரிய தோழர் ஆச்சாரியார் அவர்களும் தோழர் முதலியார் அவர்களும் இத்திருமணத்தைப் பாராட்டிப் பேசியது எனக்கு
மிகவும் பெருமையளிக்கத் தக்கதாகவே இருந்தது
இதுவரை நான் எத்தனையோ திருமணத்தில் கலந்திருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்; தலைமை வகித்தும் இருக்கிறேன் என்றாலும் இன்றைய திருமணத்தில் நான் கலந்திருந்ததை உண்மையாகவே நான் பெருமையாக எண்ணுகிறேன். இத்திருமண முறை இப்பெரியார்களின் ஆமோதிப்பையும் ஆசியையும் பெற்றது உண்மையிலேயே எனக்குக் கிடைக்கக் கூடாத ஒரு சாதனம் கிடைத்தது போலவே இருக்கிறது. மணமக்களுக்கும் இந்த சந்தர்ப்பமானது ஒரு மறக்கக்கூடாததும், என்றும் ஞாபகத்தில் இருக்கக் கூடிய பெருமையானதுமான சம்பவமும் ஆகும். ஆதலால் அவர்களையும் நான் பாராட்டுகிறேன்.
எனது பணிவிற்குரிய ஆச்சாரியார் அவர்கள் நான் இத்திருமணத்துக்கு புரோகிதன் என்று சொன்னார்கள். இது தான் புரோகித முறையாகவும் புரோகிதத்துக்கு இவ்வளவு தான் வேலை என்றும் இருந்தால் நான் அந்த புரோகித பட்டத்தை ஏற்க தயாராய் இருப்பதோடு புரோகிதத் தன்மையை எதிர்க்கவுமாட்டேன். புரோகிதக் கொடுமையும் புரோகிதப் புரட்டும் பொறுக்க முடியாமல் இருப்பதாலும் அப்படி இருந்தும் அதற்கு செல்வாக்கு இருப்பதாலும் தான் புரோகிதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கின்றேன். மற்றபடி எனக்கு வேறு எண்ணம் இல்லை. இன்று நடந்த இந்த காரியங்கள் கூட இல்லாமல் திருமணங்கள் என்பவை நடக்க வேண்டும் என்பது எனது அவா. அப்படியே அநேக இடங்களில் நடக்கின்றன. ஆணும் பெண்ணும் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு போய் வாழ்க்கைத் துணைவர்களாகி விட்டோம் என்று சொல்லி கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிட்டால்
போதும். அந்த வெறும் கையெழுத்துத் திருமணத்துக்கு இதைவிட அதிக மதிப்பும் நன்மையும் சுதந்திரமும் உண்டு. புருஷன் பல பெண்ஜாதிகளைக்
கட்டிக் கொள்ள முடியாது, தொந்தரவு பண்ண முடியாது. ஆண் பெண்: குழந்தைகளுக்கு சொத்தில் சரிபங்கு உண்டு
நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் ஆணோ, பெண்ணோ பிரிந்து இஷ்டமானால் வேறு கல்யாணமும் செய்து கொள்ளலாம். புரோகிதக்கூலி,
463 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தக்ஷணை, தாம்பூலம், சாப்பாடு, ஆடல், பாடல், ஆடம்பரம் ஆகிய செலவும் தொல்லையும் கிடையாது. இன்றுகூட நாம் இங்குக்கூடி இந்தக் காரியங் களாவது செய்வது இந்த வாழ்க்கை ஒப்பந்தத்துக்கு ஒரு விளம்பரத்துக்கு ஆகவே ஒழிய மற்றபடி இப்படிச் செய்தால் தான் கல்யாணமாகும் என்பதற்கு ஆக அல்ல. ஆகையால் வரவர இவைகள் கூட அவசியமில்லாத மாதிரி செய்து கொள்ள வேண்டும். சட்டங்களிலும் சீர்திருத்தங்கள் வேண்டும்.
மற்றும் ஆச்சாரியார் அவர்கள் நான் அவர்களை திருமணத்தை பாராட்டி வாழ்த்தும்படி கேட்டதை ஆசீர்வாதம் செய்யும்படி கேட்டதாகவும், அது கடவுளுக்குத்தான் உரிமை என்றும் சொன்னார். நான் கேட்டுக் கொண்டதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆச்சாரியார் பாராட்டுதலுக்கும் வாழ்த்துதலுக்கும் மதிப்பு உண்டென்று இப்போதும் கருதுகிறேன். இத்திருமண முறையை பெரியார் ஆச்சாரியார் ஆதரித்து விட்டதால் எனக்கு எவ்வளவோ தைரியம் ஏற்பட்டு விட்டது
இத்திருமண முறைக்கு இன்று ஒரு பொது ஆமோதிப்பு ஏற்பட்டு விட்டதென்றும் அது இம்முறை பெருக ஒரு நல்ல ஆதரவு என்றும் சொல்லுவேன்.
இது நமக்கு ஒரு லாபகரமான காரியம் என்றே கருதுகிறேன். அதற்கு ஆக அவர்களுக்கு நான் மிகுதியும் கடமைப்பட்டவனேயாவேன்.
நிற்க, ஆசீர்வாதம் செய்யச் சொன்னேன் என்பதிலும் எனக்கு ஆக்ஷேபணையில்லை.
ஆனால் அதற்கு தான் தகுதியில்லை என்றும், கடவுள்தான் செய்ய வேண்டும் என்றும் சொன்னதற்கு நான் சொல்லக்கூடிய சமாதானம் என்னவென்றால் ஆச்சாரியார் அவர்கள் ஆசீர்வாதம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் என்றே சொல்லுகிறேன். அவர் போன்றவர்கள் இம் மண: மக்கள் வாழ்க்கை நலத்தில் ஆசைகொண்டு ஆசி கூறிவிட்டால் அந்த ஆசி வீண் ஆசியாகவோ, கடவுள் ஆசியாவோ, தக்ஷணைக்கு ஆக செய்யும் ஆசியாகவோ ஆகிவிடுமா?
உதாரணமாக அரசியல் உலகில் ஒரு வைசிராய் ஒரு ஆசாமியைப் பார்த்து “நீ முன்னேற்றமடைய தகுதி உடையவன், நீ முன்னேற்றமடைந்து பெரிய பதவிகளுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஆசி கூறுவாரேயானால் அந்த ஆளுக்கு அந்த ஆசி பயன்படுமா படாதா என்று யோசித்துப் பாருங்கள். வைசிராயானவர் அந்த ஆசாமிக்கு ஆபத்து வரும் காலத்தில் எல்லாம் தன்னால் கூடியதைச் செய்து தன் வாக்கு நிறைவேற முயற்சிப்பாரா இல்லையா என்று யோகித்துப்பாருங்கள். அதுபோல் ஆச்சாரியார் அவர்களால் ஆசிபெற்று விட்டால் மணமக்கள் வாழ்க்கையில் ஆச்சாரியார் அவர்கள் கண்காணிப்பும் கவலையும் இருந்துதான் தீரும். அதற்கு ஆகத்தான் தகுந்தவர்களிடம் ஆசிபெறவேண்டுமென்பது
குடி அரசு - 1936 (1) 464
மற்றபடி கடவுள் ஆசி என்றால் அரை அணா வாங்கிக்கொண்டு தெருவில் போகின்றவன் யாதொரு பொறுப்பும் இல்லாமல் மணமக்கள் 16 மக்கள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் கடவுள் கிருபையில் வாழவேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள் அதனால் என்ன ஆகிவிடும்? 10, 12 குழந்தைகள் பெற்று அவைகள் கை முய் என்று பசியால் வாடி அழுதால் ஆசீர்வாதக்காரன் பக்கத்து வீட்டில் இருந்தால் என்ன சொல்லுவான். தன் ஆசீர்வாதத்தால் ஏற்பட்டதென்றோ, தனது பிரார்த்தனையில் கடவுள் கொடுத்தார் என்றோ எண்ணி உதவி செய்வானா? “இதென்னடா எழவு பன்றி குட்டி போட்ட மாதிரி 10, 12 உருப்படிகள் பெற்று பக்கத்து வீட்டில் இருந்து கொண்டு நமக்கு வீண் தொந்திரவு கொடுக்கிறார். தூக்கமில்லை” என்று வெறுப்புடன் இழித்துரைப்பான். ஆகையால் யாரும் ஆசீர்வாதம் செய்யலாம் என்பதும், கடவுள் மீது பழிபோடலாம் என்பதும் நியாயமாகிவிடாது. மணமக்களுக்கு ஆச்சாரியார் அவர்களது ஆசீர்வாதத்தை உண்மையாகவே பெருமையாய் கருதுகிறேன். ஆசீர்வாதம் என்றாலும், வாழ்த்து என்றாலும், ஆசி என்றாலும், ஆசைப் படுகிறேன் என்றாலும் கருத்து ஒன்றுதான். தனது ஆசையையும் நல்ல எண்ணத்தையும் தெரிவிப்பதேயாகும்
தோழர் சிதம்பரநாத முதலியார் அவர்களும் இத்திருமணத்தை பாராட்டியதும் இங்கு விஜயம் செய்ததும் பாராட்டற்குரியதேயாகும்
கடசியாக இவ்வளவு சுருக்கமுறையில் திருமணம் நடத்திக்கொள்ள முற்பட்ட மணமக்களுக்கும், அதை ஒப்புக்கொண்ட மணமக்கள் பெற்றோர். களுக்கும் இங்கு விஜயம் செய்த பெரியார்களுக்கும் நன்றிகூறி அமருகிறேன்.
குறிப்பு: 31.05.1936 ஆம் நாள் குற்றாலம் காடல்குடி ஜமீன்தார் பங்களாவில் நடைபெற்ற சென்னை என்.டி. ஷண்முகம் (பட்டணம்பொடி) கம்பெனி நிறுவனர் என்.தங்கவேலு - மதுரை அய்யம்பாளையம் வணிகர் கே.எஸ். ராமசாமி அவர்கள் குமாரத்தி பூரணத்தம்மாள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 07.06.1936
468 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
கோவை கேசும் பார்ப்பண்பமும்
இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் இந்த 20-வது நூற்றாண்டிலும், பார்ப்பனர்களின் ஆதிக்கம் மத இயலிலும், சமூக இயலிலும், அரசியலிலும் தலைதூக்கி விளங்குவதற்குக் காரணம் பார்ப்பனர்கள் பத்திரிகை உலகத்தை முற்றுகை போட்டு வெற்றியடைந்து சுவாதீனப்படுத்தி அடிமை கொண்டதேயாகும்
இத்தென்னாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரிடையாக எவராலும் பத்திரிகை நடத்துவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகவே ஆகிவிட்டது. ஏதாவது ஒன்று அரை பத்திரிக்கைகள் பார்ப்பனர்களை எதிர்த்து இருக்குமானால் அவற்றின் நிலையும் உயிருக்கு ஊஞ்சலாடும் தன்மையதாகவே இருந்து வரவேண்டியிருக்கிறது
பத்திரிகை நடத்துவதில் கொடுமையையும், கல் நெஞ்சையும், நாணயக் குறைவையும், அதர்மத்தையும் காட்டுவதில் பார்ப்பனர்கள் சிறிது கூடத் தயங்குவதில்லை. உண்மையிலேயே இத்தமிழ்நாட்டில் இந்த 10 வருஷ காலமாய் குடிஅரசுஎன்னும் பத்திரிகை ஒன்று இல்லாமல் இருந்திருக்குமானால். இன்று இத்தென்னாட்டு நிலை, ஏன்? இந்திய காங்கிரஸ் நிலை, அரசியல். சீர்திருத்த நிலை கூட வேறு விதமாகவே இருந்திருக்கும் என்று சொல்லுவதற்கு நாம் சிறிதும் பின்னடையவில்லை. உதாரணமாக இன்று காங்கிரஸ் கொள்கைகளில் உள் கருப்பொருள்களையும், தலைவர்களின் உள் எண்ணங்களையும் அவற்றால் மக்களுக்கு ஏற்படும் கெடுதிகளையும் குடி அரசு விளக்கமாக, நிர்வாணமாக தைரியமாய் எடுத்துக்காட்டி வருவதால் அவர்கள் குடி அரசுக்கு சமாதானம் சொல்லித் தீரவேண்டிய முறையில் தங்கள் கொள்கைகளையும் திட்டங்களையும் தந்திரமாய் அமைத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது
அதுமாத்திரமல்லாமல் சில சமயங்களில் ஒரு அளவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதாகவும் ஏற்பட்டுவிடுகிறது. இதன் பயனாய் நிலைமைகள் எத்தனையோ விஷயங்களில் மாறுதலடைய வேண்டியதாகி விட்டதென்றாலும் அநேக விஷயங்களில் நமது நிலை மோசமாகிக்கொண்டு. வருகிறது என்பதையும் மறைக்கவில்லை. ஏனென்றால் பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகை மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் என்பவர்களால். நடத்தப்படும் பத்திரிகைகளும் 100க்கு 95க்கு மேலாக பார்ப்பனர்களையும் பார்ப்பனப் பத்திரிக்கைகளையும் தங்கள் வழிகாட்டிகளாகக் கொண்டு
குடி அரசு- 1936 (1) 466
அவர்களுக்கு பின் தாளம் போடும் முறையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன. மற்றும் “பார்ப்பனர்கள் குறை கூறினால் நம்மால் வாழ முடியாது-நமக்கு பத்திரிகை உலகில் இடம் கிடைக்க மாட்டாது! என்கின்ற மன உறுதியுடனேயும் இருந்து வருகின்றன. இந்த நிலைமைதான் தென்னாட்டில் இன்னமும் பார்ப்பன ஆதிக்கம் இருந்து வர ஆக்கம் அளித்து வருகிறது. அநேக மேடைகளிலும் மகாநாடுகளிலும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் இந்த நாட்டில் பார்ப்பனரல்லாதார் வாழ்க்கை சுயமரியாதையுள்ள வாழ்க்கையாக ஆவதற்கு ஏதாவது ஒரு அறிகுறி காணவேண்டுமானால் அது முதலில் “இந்து” “சுதேசமித்திரன்'' பத்திரிக்கைகளின் வீழ்ச்சியைப் பொறுத்த தேயாகும்” என்று பல தடவை சொல்லி வந்திருப்பது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். மற்றும் நாமும் எத்தனைக்கு எத்தனை அப்பத்திரிகைள். வீழ்ச்சி அடைகின்றனவோ அத்தனைக்கு அத்தனை பார்ப்பனரல்லாத மக்கள் நிலை மேல்நோக்கி விட்டதென்பதும், எத்தனைக்கு எத்தனை அப் பத்திரிகைகள் செல்வாக்கடைகின்றனவோ அத்தனைக் கத்தனை பார்ப்பன ரல்லாதார் சமூக நிலை இழிவு அடைய கீழ் நோக்கி விட்டதென்றும் அறியலாம் என்று சொல்லுவதுடன் இதுதான் இப்பரீகைஷக்கு நிர்ணயமான அளவு கருவி என்றும் பல தடவை சொல்லி வந்திருக்கிறோம். இவற்றிற்கு நாம் பல உதாரணங்கள் கூறலாம். தேர்தல் காலங்களில் அப்பத்திரிக்கைகள் எவ்வளவு கேவலமான முறைகளைக் கையாண்டு வந்திருக்கின்றன. என்பதும் பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப்பற்றி சந்தர்ப்பா சந்தர்ப்பம் இல்லாமல் எவ்வளவு தூரம் வீண்பழி சுமத்தி தொல்லை விளைவித்து தலையெடுக்க வொட்டாமல் செய்து வந்திருக்கின்றன என்பதும் மற்றும் பொது நடப்புகளையும் அவை திரித்தும், பழித்தும், மறைத்தும், கற்பித்தும் பிரசுரித்து வந்திருக்கின்றன என்பதும் போதுமான உதாரணங்களாகும்
இன்று உள்ள அரசியல், சமுதாய இயல் பிரச்சினைகளில் எந்தக்கட்சி மேலானது என்றோ எந்தக் கட்சி தீவிரமானதென்றோ, எந்தக் கட்சி பிற்போக்கான தென்றோ, அவ்வக்கட்சி கொள்கைகளை எடுத்துக்காட்டி வித்தியாசம் காட்ட முடியுமா என்று பார்த்தால் ஒரு வித்தியாசமும் இல்லை என்பதை நன்றாய் அறிந்திருந்தும் பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரமே ஒரு கட்சி மேல் என்றும் மற்றொரு கட்சி கீழ் என்றும் மக்கள் கருதும்படி செய்து வருகிறது
மற்றும் தனிப்பட்ட மக்கள் விஷயத்தையே எடுத்துக்கொள்வோம் பொப்பிலி ராஜா, பனகால் ராஜா, சர்.பி. தியாகராய செட்டியார் போன்ற மாபெருந் தலைவர்களைப் பற்றி இந்து மித்திரன் பத்திரிக்கைகளும் அவர்களைப் பின்பற்றி வாழ வேண்டிய பத்திரிக்கைகளும் எப்படி எழுதி வந்தன. ஆனால் அதே பத்திரிகை அவர்கள் சமீபத்தில் கூட நிற்க தகுதியும், நாணயமும் அற்ற தோழர்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரியார், ஸ்ரீனிவாச சாஸ்திரியார் போன்றவர்களை எப்படி உயர்த்தி புகழ்ந்து கூறி விளம்பரம் கொடுத்து பெரிய மனிதர்களாக்கி வருகின்றன என்பது கொண்டும் உணரலாம்.
467 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தோழர் சீனிவாச சாஸ்திரியாருக்கு என்ன கொள்கையென்று யாராவது சொல்ல முடியுமா? அவரது நாணயம் இன்னது என்று யாரும் அறிய முடியாதா? காந்தியாரை கைதி செய்ய இடம் கொடுத்து பட்டம் பதவி பெற்றதும், தன்னை மிதவாதி என்று சொல்லிக்கொண்டு அரசாங்கத்துக்கு கவிபாடி மகாகனம் ஆனதும், நாட்டுக்கோட்டை ராஜாவுக்கு உதவி செய்து வெகுமானம் பெற்று வாழ்க்கை நடத்துவதும், இப்போது காங்கிரசை ஆதரிப்பதும், பார்ப்பனரல்லாதார் கட்சி முன்னுக்கு வருவதைப் பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது என்று சொல்வதும், கடசியாக இழவு வீட்டில் இருந்து கொண்டும் பார்ப்பனரல்லாத கட்சியைப்பற்றி விஷமத்தனாய்ப் பேசுவதும் ஆகிய காரியங்கள் அவர் செய்து வந்ததையும் வருவதையும் இந்து, மித்திரன் முதலியவை அறியாது என்று யாராவது சொல்லிவிட முடியுமா? அதுபோலவே தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரின் தன்மையைப் பற்றியும் சொல்லிக்காட்ட வேண்டியதில்லை. எவரும் அறியாததல்ல இப்படி இருக்க இவ்விரு சாஸ்திரிகளுக்கும் “இந்து”, “மித்திரன்” பத்திரிகைகளில் தினம் தினம் கலம் கலமாய் இடம் கொடுத்து விளம்பரம் தருவதல்லாமல் அவர்களால் கக்கப்படும் விஷங்களை பாமரமக்களுக்குள்
புகுத்துகின்றன. அனேக பல முக்கியமான விஷயங்களையும் உண்மையான விஷயங்களையும் தைரியமாய் மறைக்கின்றன. மறைக்க முடியாவிட்டால்
திரித்துக் கூறி விடுகின்றன. இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும், சமீபத்தில் இவ்வாரத்தில் நடந்த ஒரு விஷயத்தை வெளிப்படுத்த ஆசைப்படுகிறோம். அதை வெளிப்படுத்தவே தான் இவ்வளவு எடுத்துக்காட்டினோம். அதென்னவெனில் தோழர் கோவை ரத்தினசபாபதி கவுண்டர் கேசில் பார்ப்பனர்கள் நடந்து
வந்த மாதிரியும், இன்று நடந்து வரும் மாதிரியும் இந்து அவற்றை ஆதரித்துச் செய்யும் அநீதியையும் பத்திரிகை ஒழுக்கக் கேட்டையும் எடுத்துக் காட்ட ஆசைப்படுவதேயாகும். தோழர் இரத்தினசபாபதி
கவுண்டர் கேசானது அது பொய்யா மெய்யா அல்லது தப்பா சரியா என்பதைப் பற்றி நாம் இந்த சந்தர்ப்பத்தில் பேசுவதில்லை. ஆனால் அக்கேஸ் நடத்தப்பட்டதில் பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொண்டார்கள், அது முடிந்த பிறகும் பார்ப்பனர்கள் எவ்வளவு விஷத்தைக் கக்குகிறார்கள் என்பதைத் தெரிவிக்கவே எழுதுகிறோம்
அக்கேசு கோயமுத்தூர் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போர். அல்லது கோயமுத்தூர் காங்கிரஸ் ஜஸ்டிஸ் கட்சி போர் என்கிற தலைப்பிலேயே நடந்து வந்தது. உதாரணம் வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியார் - அதாவது பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் தீவிரமாய் வேலை செய்து வந்தப் பிரமுகர்கள் ஒருபக்கமும் பார்ப்பனர்களும் அவர்களது
குடி அரசு- 1936 (1) 468
அடிமைகள் ஒரு பக்கமுமாக இருந்து கேஸ் நடத்தப்பட்டு வந்தது என்பதற்கு அந்த விவகாரத்தில் இருதரப்பிலும் சம்பந்தப்பட்ட சம்பந்தப்படுத்தப்பட்ட பெயர்களைக் கொண்டு அறியலாம்
அக்கேஸ் மூலமாக கோவை பார்ப்பனரல்லாத தலைவர்கள் எல்லோரையும் அழுத்திவிடப் பெருமுயற்சி செய்யப்பட்டது. சிலர். ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கூட போலீஸ் தயவை சம்பாதிக்க வேண்டியவர்களானார்களாம்.
கடைசியாக செஷன் ஜட்ஜி அவர்களே கேசை விடுதலை செய்வதற்கு அனுகூலமாகவே ஜூரிகளுக்கு விஷயங்களை எடுத்துச் சொன்னதாகவும் தெரிகிறது. அப்படியெல்லாம் இருந்தும் வகுப்பு உணர்ச்சி முதலிய காரணமாகவே ஜூரிகளால் தண்டிக்கப்படலாயிற்று
தண்டிக்கப்பட்டவர் விடுதலையாவதற்கு முயற்சி செய்தார் இந்நிலையில் தண்டனை போதாதென்றும் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியில் போராடப்பட்டது. அது பயன்படாமல் போயிற்று. பின் இந்த கட்சி பிரதி கட்சி காரணத்தாலேயும் பார்ப்பனர். பார்ப்பனர் அல்லாதார் வகுப்பு துவேஷம் காரணமாயும் தான் தண்டனை அடைய நேரிட்டது என்று கருதிய தோழர் ரத்தினசபாபதி கவுண்டர் அவர்கள் தன்னை நிரபராதி என்று வைசிராய்க்கு தான் கண்ட உண்மையைக் காட்டி விண்ணப்பம் செய்து கொண்டார். வைஸ்ராய் அவர்கள் உண்மையை கண்டுபிடிக்க ரகசிய ஏற்பாடு செய்து விண்ணப்பத்தில் கண்ட விஷயத்தின். தன்மையை அறிந்தார். கவுண்டரை மன்னிக்க வேண்டும் என்று தோன்றிற்று கவுண்டரை விடுதலை செய்து விட்டார். இதில் யாருக்கு என்ன முழுகிப் போய்விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை
இந்து, சுதேசமித்திரன், தினமணி முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள்
எல்லாம் கவுண்டரை விடுதலை செய்தது தப்பு என்று தலையங்கம் எழுதின.
தோழர்கள் TR. வெங்கிட்டராம சாஸ்திரியார், வி.வி.கனிவாசய்யங்கார் முதலிய பார்ப்பன பிரமுகர்கள் எல்லோரும் கவுண்டரை விடுதலை செய்தது தப்பு என்று பத்திரிகைகளுக்கு தினம் தினம் கலம் கலமாக
வியாசங்கள் எழுதினார்கள்.
இக்கேசு விஷயத்தில் பார்ப்பனக் கொடுமை அவ்வளவோடு நின்று விடவில்லை. இவர்கள் வியாசங்களுக்கு பதிலாக எழுதப்பட்ட மற்றவர்கள். கட்டுரைகளை பிரசரிக்கவும் மறுத்துவிட்டன. அதாவது சிக்கந்திராபாத்தில் இருந்து ஒரு பார்ப்பனரல்லாத வக்கீல் திவான்பகதூர் ஏ.வேணுகோபால் அவர்கள் தோழர் வி.வி.சீனிவாசய்யங்கார் கூற்றுக்குச் சரியான பதில் எழுதி அதுவும் அய்யங்காருடைய வெறும் சட்ட சம்மந்தமான பிரச்சினைகளுக்கு மாத்திரம் சமாதானம் எழுதி அனுப்பப்பட்ட கட்டுரையை இந்து பத்திரிகை லட்சியம் செய்யவே இல்லை. பிறகு தோழர்
49 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஏ. வேணுகோபால் அவர்கள் மறுபடியும் அக்கட்டுரை நகலை வைத்து ரிஜிஸ்டர் கடிதம் மூலம் இந்துவுக்கு அனுப்ப இந்து அதைப் பெற்றுக் கொண்டு அக்கட்டுரைக்கு இடமில்லை என்று சொல்லி அவற்றை வாப்பீசு செய்து விட்டது. இந்த கடித வர்த்தமானத்தையும் கட்டுரையையும் வேறுபக்கம் பிரசுரித்திருக்கிறோம். இந்து பத்திரிகையில் கவுண்டர் விடுதலைக்கு விரோதமாக தலையங்கம் எழுதவும் பல கட்டுரைகள் பல கலங்களில்
பிரசுரிக்கவும் இந்துவுக்கு இடம் இருந்து வந்திருக்கிறது
ஆனால் விடுதலைக்கு அனுகூலமாகவைசிராய்தீர்ப்பை நியாயப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு இடம் இல்லை என்றால் இந்துவுக்கு பத்திரிக்கையில் இடமில்லையா மனதில் இடமில்லையா என்பதை பொது ஜனங்கள் உணரவேண்டுமென்பதற்குஆகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்.
கட்டுரையாளரான திவான் பகதூர் வேணுகோபால் அவர்கள் தனது கட்டுரையை ஒரு தடவையில் போட இடமில்லையானால் இரண்டு தடவையாக பிரசுரிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் அக்கட்டுரை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது என்றால் இந்து பத்திரிகையின் பத்திரிகை தர்மமும் அவர்களது பொதுநல நடு நிலைமையும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
எந்த விஷயத்தையும் பிரசரிக்கவும் மறுக்கவும் பத்திரிகை ஆசிரியருக்கு உரிமை உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கு எந்தக் காரணம் வேண்டுமானலும் சொல்லிக்கொள்ள ஆசிரியருக்கு உரிமை உண்டு காரணம் சொல்லாமல் இருக்கவும் உரிமை உண்டு
ஆனால் இப்படிப்பட்ட பத்திரிக்கைகள் தங்களை பொது நலத்துக்காக பாரபட்சமின்றி நடந்துகொள்ளும் பத்திரிக்கைகள் என்று சொல்லிக் கொள்ளும் உரிமையைக் கூட பொது ஜனங்கள் நம்பவேண்டுமா ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதுதான் நமது கேள்வியாகும்
திவான்பகதூர் வேணுகோபால் வியாசம் இந்துவில் சுமார் 23 கலம் அல்லது 2% கலம் வரலாம். இதற்கு இந்து பத்திரிக்கையில் 2 தடவையாகக்கூட பிரசுரிக்க இடமில்லையாம். ஆனால் தோழர் வி.வி. சீனிவாசய்யங்காருடைய கட்டுரைக்கு 11 கலங்கள் செலவழிக்கப்பட்டிருக்கிறது. தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் கட்டுரை 2 கலம் வரை செலவழிக்கப் பட்டிருக்கிறது. இந்துவின் தலையங்கத்துக்கு ஆகவும் ஒரு கலம் கொடுத்து நீண்ட தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. இந்தப்படியான சுமார் 13, 14 கலம்கொண்டஅதுவும் ஒரு மனிதன்தண்டனையில் இருந்து விடுதலையானதை ஆட்சேபித்து வன்மம் காட்டும் வியாசங்களுக்குப் பதிலாக “குற்றவாளி”
பக்கம் வெறும் சட்ட சம்பந்தமான சமாதானத்தை பிரசுரிக்கக்கூட இடம் இல்லை என்று இந்து பத்திரிகை சொல்லிவிட்டால் இந்த வழக்கு பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியில் நடந்திருக்கிறது என்றும் வகுப்பு உணர்ச்சி காரணமாகவே தண்டனை அடைய நேரிட்டது என்றும் கவுண்டர்
குடி அரசு- 1936 (1) 470
நினைத்ததிலும் அதை காட்டி தான் விடுதலை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டதிலும் என்ன தப்பு இருக்கமுடியும் என்பதோடு என்ன ஆட்சேபணை இருக்க முடியும் என்று கேட்கிறோம்
நாளைக்கு நமக்கு சுயராஜ்ஜியம் கிடைத்து இவர்கள் கைக்கு அதிகாரம் வந்து அப்போதும் இந்த பத்திரிக்கைகளே தேசீயப் பத்திரிக்கை களாக இருந்து வந்து இந்த தோழர்கள் டி.ஆர்.வியும், வி.வி.எஸ்.சும் நீதிபதிகளாகவோ நீதிவாதிகளாகவோ இருந்து விடுவார்களேயானால் நமது கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்து பத்திரிகை பார்ப்பனரல்லாத மக்கள் பலர் தேசீயப் பத்திரிகை என்றும் உண்மை சேதிப் பத்திரிகை யென்றும் சொல்லுவார் களேயானால் அவர்கள் எவ்வளவு மடையர்களாகவும் இல்லாவிட்டால் பார்ப்பன அடிமைகளாகவும் இருக்க வேண்டும் என்று கேட்கின்றோம்
பார்ப்பனப் பத்திரிக்கைகள் சரசமாய் கிடைப்பதால் வாங்கி வாசிப்பதாக பல பார்ப்பனரல்லாதார் சொல்லுகிறார்கள். இவர்களை நாம் ஒன்று கேட்கின்றோம். அதாவது விஷம் சரசமாய் கிடைத்தால் வாங்கி சாப்பிடுவார்களா என்பதேயாகும். இந்து பத்திரிக்கையில் நமக்கு எப்படி கேடு வருகிறது என்றால் அதை நடுநிலைமை பத்திரிகையென்றும் தேசீயப்பத்திரிகை என்றும் அதில் காணப்படுவததெல்லாம் உண்மை என்றும் கருதுவதாலேயே நமது சமூகத்துக்குக் கேடு உண்டாகின்றது
ஜஸ்டிஸ்,விடுதலை, குடிஅரசு முதலிய பத்திரிக்கைகளை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? வாங்கிபடிக்கிறார்களா? வேறு ஒருவர் படிப்பதையாவது பொறுத்துக் கொண்டிருக்கிறார்களா என்று துருவிப் பார்க்கும்படி பார்ப்பனரல்லாதாரைக் கேட்கின்றோம். அதற்கு எவ்வளவு கெட்டபேர் சூட்டுகிறார்கள் என்பதையும் யோசித்துப்பாருங்கள்.
கடைசியாக இந்த அநீதிக்கு இந்த கொடுமைக்கு திவான் பகதூர் வேணுகோபால் அவர்கள் ஒரே ஒருபதில் தான் தன்னால் செய்ய முடிந்ததை செய்திருக்கிறார். அதாவது இந்து பத்திரிகை வாங்கிப் படிப்பதை நிறுத்தி விட்டார். இதனால் இந்து பத்திரிகைக்கு யாதொரு நட்டமும் ஏற்பட்டுவிடாது என்பது அதற்கு தெரிவதற்கு முன் நமக்குத்தெரியும். ஆனால் திவான்பகதூர் வேணுகோபாலுக்கு ஏற்பட்ட அவமானமும் தோழர் ரத்தினசபாபதிக் கவுண்டருக்கு ஏற்பட்ட கஷ்டமும் மற்ற மக்களுக்கும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் இந்து பத்திரிகை வாங்கி படிக்கும் மற்ற பார்ப்பனரல்லாதாரும், சுயமரியாதை பெற்று திவான்பகதூர் போலவே நடந்து கொண்டால் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒழிந்து போகா விட்டாலும் சிறிதாவது திருத்த மடைந்து அவற்றின் கொடுமைகளும், தொல்லைகளும் குறையாதா என்று கேட்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 07.06.1936
471௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அரசியல் நிலைமை
சேலம் விக்டோரியா மார்க்கட்டில்
பிரசங்கம்
தோழர்களே!
இங்கு நாங்கள் இன்று பிரசங்கத்துக்காக வரவில்லை. தமிழ்நாடு பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரசாரக் கமிட்டி வேலையாக வந்தோம். வந்த இடத்தில் எங்களைக் கேட்காமலே நோட்டீசு போடப்பட்டிருந்தது. இந்தத் தோழர்களுக்கு பயந்து பேசுவதற்கு ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது
பிரசாரம்
தமிழ்நாட்டிற்கு பார்ப்பனரல்லாதார் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இயக்கப் பிரசாரம் சிறிதும் கூட நடைபெற வில்லை. பதவிகளில் இருக்கும் தலைவர்களுக்கு பிரசாரத்தைப் பற்றி கவலை இல்லை. பிரசாரத்தில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. சமய சஞ்சீவிகளுக்கு பிரசாரம் தேவையில்லை என்று ஒரு பழமொழி உண்டு.
அவர்களுக்கு எந்தக்கட்சி வலுக்கின்றதோ அந்தக் கட்சியில் சேர்ந்து தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்ளும் சக்தியும் குணமும் உண்டு.
ஆனால் பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கு நாம் அதிகமான
பிரசாரம் செய்ய வேண்டியிருக்கிறது. நம் சமூக நலத்துக்கு நம் சமூகத்தவரே
சிலர் எதிரிகளாகவும், எதிரிகளின் ஆயுதங்களாகவும் இருந்து நமக்கு எதிர்ப்பிரசாரம் செய்வதால் நமது பாமர மக்கள் ஏமாந்து போக நேரிடுகிறது.
எதிர் விவகாரம் செய்யாவிட்டால் எவ்வளவு பொய்யும் அக்கிரமுமான வியாஜ்ஜியமாயிருந்தாலும் ஜெயித்து விடுமல்லவா? அதுபோல் நம் எதிரிகளின் சூழ்ச்சிகளும், விஷமங்களும் வெற்றி பெறுவதற்குக் காரணம் என்ன? நமது பிரசாரக் குறைவேயாகும்
அதனாலேயே நாங்கள் பல அசெளகரியங்களுக்கிடையில் இவ்வேலையில் பிரவேசித்திருக்கிறோம். கட்சியினால் பட்டம், பதவி, பணம், செல்வாக்கு முதலியவை சம்பாதித்து வரும் மக்கள் கவனியாதிருப்பது
எங்களுக்குத் தெரியும். அவர்கள் எங்களை அலட்சியமாயும், கேவலமாயும் கருதுவதும் எங்களுக்குத் தெரியும். இருந்த போதிலும் நாங்கள் அவர்களைப்
குடி அரசு- 1936 (1) 472
பற்றிக் கவனிக்க வேண்டியோ அவர்களை எதிர்பார்க்கவேண்டியோ உள்ள அவசியத்தில் இல்லை. பொதுமக்கள் நலத்தை கவனிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஆதலால் நாங்கள் பல கஷ்டங்களுடன் இந்த சுற்றுப்பிரயாணம் செய்கிறோம்
தோழர் பாண்டியன் குழந்தை அஜாக்கிரதையால் ஏரியில் முழுகி இறந்து இன்றைக்கு 10, 15 நாள் தான் ஆகிறது. அதைக்கூட லட்சியம் செய்யாமல் அவர் வந்து இருக்கிறார். 3வது வகுப்பிலும் மாட்டு வண்டியிலும் இரவு தூக்கம், பகல் ஓய்வு இல்லாமல் பிரயாணம் செய்கிறார். தோழர்
வி.வி. ராமசாமி வீட்டில் மனைவியார் பிரசவ வேதனையைக்கூட லட்சியம் செய்யாமல் அது போலவே சுற்றுகிறார். அவர் வியாபாரத் தொழில் முதலியவை இது சமயம் எவ்வளவோ பாதிக்கப்படுகிறது. இப்பொழுது
இந்தக் கூட்டத்தில் தோழர் போக்ஸ் துரையால் அவருக்கு கொடுக்கப்பட்ட
தந்திக் கவரானது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்கின்ற சேதியாகும். தோழர் சி.டி.நாயகம் அவர்கள் ரிடையர் ஆகி ஓய்வாய் இருக்க வேண்டிய காலத்தில், மற்றும் அவருக்கு குடும்பநிலை மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அவசரமுள்ள சமயத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அலைகிறார். எனக்கு அப்படிப்பட்ட தொந்திரவோ, பெருமையோ ஒன்றும் இல்லா விட்டாலும் எனது தாயாரை மிக்க கஷ்ட நிலையில் விட்டு விட்டு ஒவ்வொரு நிமிஷமும் முடிவு தந்தியை எதிர்பார்த்துக் கொண்டு திரிகிறேன். தோழர்
வி.வி. ராமசாமிக்கு இங்கு வந்த தந்தியை என் தாயார் முடிவு தந்திதானோ என்று நெஞ்சம் திக்கென்னும் உணர்ச்சியோடு வாங்கினேன். அது ஆண்: குழந்தை பிறந்த தந்தி ஆனதால் அவர் வசம் கொடுத்துவிட்டேன்.
இந் நிலையில் நாங்கள் செய்யும் பிரசாரம் மனித சமூக நன்மையை உத்தேசித்து மாத்திரமல்லாமல் மக்களின் இழிவைப் போக்கிச் சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்க வேண்டும் என்கின்ற ஆசையையும் கவலையையும் கொண்டேயாகும். ஆதலால் எங்கள் வேலைக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தற்கால அரசியல் நிலை
இன்று நான் அரசியல் நிலை என்பது பற்றி பேசுவேன் என்று குறிப்பிட்டிருக்கிறது. அரசியல் நிலையைப் பற்றி நான் என்ன பேசுவது?
நீங்கள் பார்த்தும் கேட்டும் உள்ள விஷயத்தைப் பற்றித்தானே பேச வேண்டும். அதாவது சென்ற மாதத்தில் இதே இடத்தில் எனது நண்பர்களான. தோழர்கள் சித்தய்யனும், நடேசனும், தமிழ்நாடு ஏஜண்டும் ஒரு கூட்டத்தாரால்
அடியும் உதையும் பட்டதும் அதற்கு தூண்டுகோலாயிருந்த ஒரு தலைவர்: தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் இந்த மாதத்தில் திருச்சியில் அதன். வட்டியுள்பட செருப்புகளும், அழுகை முட்டைகளும் அபிஷேகமாகும்படியான
473 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பாக்கியம் பெற்று ஓடி ஒளிந்து கதவு தாழ் இடும்படியான நிலைமை ஏற்பட்டதும் (இது இந்தியன் எக்ஸ்பிரசில் இருக்கிறது) ஆகிய காரியங்கள். தான் இன்றைய அரசியல் நிலைமையாய் இருக்கிறது
இதைப்பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் வெட்கப்படு
கிறேன். ஆனாலும் இன்றைய அரசியல் நிலையில் இவையெல்லாம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதை நிறுத்த நம்மால் முடியாது. 1907ல் அதாவது 30 வருஷங்களுக்கு முன்பே நமது அரசியலில் செருப்புகளும், ஜோடுகளும் அதுவும் காங்கிரஸ் மகாசபை கூட்டத்திலேயே கோகலே, திலகர் பிரசன்னத்திலேயே செருப்பு ஜோடு
பறந்ததென்றால் சித்தய்யனுக்கு அடி விழுவதும் சத்தியமூர்த்திக்கு செருப்பு பறப்பதும் அதிசயமென்றோ எதிர்பார்க்காததென்றோ அரசியலுக்கு விரோதமான தென்றோ யார்தான் சொல்ல முடியும்? இன்றைய இந்திய அரசியல் தத்துவநிலை வேறு நாட்டிலோ அல்லது பிரிட்டிஷ் அரசாங்கம் இல்லாத இந்தியாவிலோ நடைபெறுமானால் இதுவரை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், இந்து-முஸ்லீம், மேல் ஜாதி -
கீழ் ஜாதி என்பவைகளில் ஏதாவது ஒரு பிரிவு பூண்டற்றுப் போயிருக்கும் என்பதை மனதில் இருத்தவேண்டும்
இந்த மாதிரி வகுப்பு சச்சரவு இல்லாத வெறும் அதிகாரம் கைப்பற்றும் சச்சரவை அரசியலாகக் கொண்ட மேனாடுகளிலும் இம்மாதிரி பலாத்காரம் சகஜமாய்க் காண்கின்றோம்.
வகுப்பு உணர்ச்சியுடன் கூடிய அரசியல் சச்சரவில் மேல் நாடு
களிலும் கூட பலாத்காரத்தோடு மாத்திரம் இல்லாமல் கொலைகளும், சுட்டுக்கொள்பவைகளும் பார்க்கின்றோம். ஆனால் அரசியல் கிளர்ச்சிகளில் இது இயற்கையேயாகும்
வகுப்புணர்ச்சியே அடிப்படை
நமது அரசியல் கிளர்ச்சி என்பது என்ன? எந்த வகுப்பார் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதுதானே ஒழிய வேறு எதை அடிப்படையாய்க் கொண்டிருக்கிறது
உதாரணம் வேண்டுமானாலும் காந்தியும் - வட்டமேஜையும் என்கின்ற அத்தியாயத்தை திருப்பி பாருங்கள். அதில் என்ன இருக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உங்களுக்கு (இந்தியர்களுக்கு) என்ன வேண்டும் என்று கேட்க அழைத்தார்கள். இந்தியர்களாகிய நாம் அங்கு சென்று என்ன சொன்னோம்.
இந்துக்கள் சார்பாய் காந்தியார் “எங்கள் பழய பழக்க வழக்கம் காப்பாற்றப்படவேண்டும்” என்றார்.
குடி அரசு - 1936 (1) 474
இந்துக்களில் பார்ப்பனரல்லாதார் சார்பாய் சென்ற ஏ. இராமசாமி முதலியார், பாத்ரோ ஆகியவர்கள் “நீங்கள் கொடுக்கப்போகும் சுதந்திரத்தில் எங்களுக்கும் எங்கள் விகிதாச்சாரமாவது கிடைக்க வேண்டு” மென்று சொன்னார்கள்.
இந்துக்களில் தீண்டப்படாதார் என்கின்ற வகுப்புக்காக தோழர் அம்பேத்கார், “எங்கள் வகுப்புக்கு இவ்வளவு என்று பிரித்து கொடுத்து விட்டு பிறகு எவ்வளவு சுதந்திரம் வேண்டுமானாலும் கொடுங்கள்'' என்று சொன்னார். வெள்ளைக்காரர்கள் பிரதிநிதிகள் “நாங்கள் இந்தியாவில் பயமின்றி வாழும் படியான ஏற்பாடுகள் செய்துவிட்டு அதற்கேற்ற சுதந்தரங்கள் கொடுங்கள்” என்று சொன்னார்கள்.
கிறிஸ்தவர்கள் பிரதிநிதியும் அப்படியே சொன்னார். முஸ்லீம் பிரதிநிதியாகிய தோழர் ஜின்னா என்ன சொன்னார்? “எங்கள் நிலை இன்னதென்று ஏற்பட்டுவிட வேண்டும். எங்கள் சமூக பாதுகாப்புக்காக நான் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் இந்துக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டால் காந்தியார் காட்டிய இடத்தில் கையெழுத்து போடுகிறோம். அவரையே எங்கள் தலைவராகவும் ஒப்புக் கொள்ளுகிறோம். எங்கள் சமூகத்தின் பேரால் என்ன வேண்டுமானலும் செய்து கொள்ள அனுமதியளித்து வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறோம்” என்று சொன்னார்.
இவற்றிற்கெல்லாம் காந்தியாரின் பதில் என்ன?
இவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள், இவர்கள் எல்லாம் சர்க்கார் கூலிகள், நான் ஒருவன் தான் தேசபக்தன். இந்தியாவில் உள்ள சகல மதஸ்தர்களுக்கும், சகல வகுப்பார்களுக்கும் நான்தான் ஏக தலைவன். நான் கேட்கும் சுயராஜ்யத்தைக் கொடுத்து விட்டால் பிறகு இவர்கள் விஷயத்தை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்”
என்று சொன்னதோடு மாத்திரமல்லாமல் “இவர்களுக்கு என் சம்மதியில்லாமல் அரசியலில் பிரதிநிதித்துவம் கொடுத்தால் நான். தற்கொலை செய்து கொண்டு செத்துப்போவேன்'' என்று சபதம் கூறி விட்டு வந்தார். வட்டமேஜை அஷ்ட கோணல் மேஜையாயிற்று
இந்த நிலை சிறிதுகூட மாற்றமடையாத நிலையிலேயே இன்று சீர்திருத்தம் என்பது வந்துவிட்டது. அதன்படி சட்டசபைகளுக்குப் போகவும், பதவிகளை ஏற்கவும் வட்டமேஜைக்கு சென்று இருந்த எல்லாகட்சியாரும் ஆசைப்பட்டு இப்போதிருந்தே போட்டியும், அடிதடியும், செருப்புப் பறப்புகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. இன்றைய அரசியல் போராட்டத்தை முஸ்லீம்கள் “இந்து முஸ்லீம்” போராட்ட மென்கிறார்கள்
ஆதி திராவிடர் “மேல்ஜாதி கீழ் ஜாதி” போராட்டமென்கிறார்கள்.
நாம் “பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்” போராட்டமென்கிறோம்
475 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பார்ப்பனர்கள் சில கூலிகளையும் பேராசைக்காரரையும் சேர்த்துக் கொண்டு “தேசபக்தர்கள் தேசத்துரோகிகள்” போராட்ட மென்கிறார்கள். ஒருவரும் இந்தியர் - பிரிட்டிஷார் போராட்ட மென்று சொல்லுவதில்லை உதாரணமாக சத்தியமூர்த்தியார் செல்லுமிடங்களில் எல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சியை வெட்டி 500 கெஐ ஆழத்தில் புதைப்பதே தனது வேலை என்கிறார். அதோடுகூட பார்ப்பனர்கள் பொதுமக்களை மத விஷயத்தில் ஏமாற்றி பணம் பறித்து வாழ்வது போல் இந்த போராட்ட விஷயத்தில் தேசாபிமானப் பேர் வைத்துக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து தங்கள் போரை பலமாய் நடத்துகிறார்கள்.
அவர்கள் சிறு கூட்டத்தார் பெருலாபம் கொள்ளையடிப்பதால் அதற்கு கேடு வரும்போது கட்டுப்பாடாய் வேலை செய்ய சவுகரியமிருக்கிறது நாம் பெருங் கூட்டத்தாராய் இருப்பதாலும் நம்மிலும் பல பிரிவுகள் இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் கல்வி அறிவற்றவர்களாய் இருப்பதாலும் பதவி பெற்றவர்களும் படித்தவர்களும் மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்கு அடிமையாயும் சுயநலக்காரர்களாயும் இருப்பதாலும், தங்கள் யோக்கியதைக்கு மீறின அந்தஸ்துகளை இவர் அனுபவித்து விட்டதாலும், இனி எப்படியோ போகட்டுமென்றும், கவலையற்றும்,
ஒற்றுமையற்றும், கட்டுப்பாடற்றும் திரிவதோடு சமயத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் இருப்பதாலும் நமக்கு அச்சிறு கூட்டத்தாரின் எதிர்ப்பிலிருந்தும், விஷமத்திலிருந்தும் சூழ்ச்சியிலிருந்தும் தப்பித்துக் கொள்ள முடியவில்லை.
தேசத்துரோகி யார்?
மற்றபடி நாம் எந்த விதத்தில் தேச துரோகிகள்? இந்த தேசத்துக்கு அன்னிய ஆட்சி யென்பதை அழைத்து வந்தவர்கள் யார்? அவர்களுக்கு இங்கு என்றும் நிலை பெரும்படியான ஆட்சிக்கு கட்டிடம் கட்டிக்கொடுத்து அவற்றிற்கு தூண்களாய் நின்றவர்கள் யார்? சரித்திரங்களை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.
நாம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையிலோ, ஆதிதிராவிடர். என்கின்ற முறையிலோ, முஸ்லீம்கள் என்ற முறையிலோ, இந்த தேசத்துக்கு துரோகம் செய்ததாக ஏதாவது ஒரு உதாரணத்தை எடுத்துக் காட்டட்டும், நாம் உடனே அதற்கு பிராயச்சித்தம் செய்து கொள்ளத் தயாராய் இருக்கிறோம்.
வெள்ளைக்காரர்களைத் தங்கள் தெய்வம் என்றும், விஷ்ணுவின் அம்சம் என்றும், அவர்களும் தாங்களும் ஒரே ஜாதி என்றும் அவர் முகச்சாயலும் தங்கள் முகச் சாயலும் ஒரேமாதிரி இருக்கிறது என்றும், அவர்களும் தாங்களும் ராஜியாய் போய் இந்த நாட்டில் நிரந்தரமாய் வாழவேண்டு மென்றும் நேற்று
குடி அரசு- 1936 (1) 476
வரையிலும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்கள் யார்? பார்ப்பனர்களா? அவர்கள் ஒழிந்த மற்றவர்களா என்று யோசித்துப் பாருங்கள்
இன்றுகூட பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட விடுதலை கேட்டாலும் சரி, அதற்கு ஆக என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும் சரி, வெள்ளைக்காரப் பூண்டு இந்தியாவில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தாலும் சரி எங்களுக்கு ஆக்ஷ்பணை இல்லை. ஆனால் அதற்கப்புறம் நடப்பதென்ன? அதில் எங்கள் பங்கு என்ன? என்பதை மாத்திரம் சொல்லிவிடட்டும் நாங்களும் கையெழுத்துப் போடுகிறோம். அதற்கு ஆக பார்ப்பனர்கள். எத்தனைபேர் சாகிறார்களோ அதற்கு இரண்டு பங்கு உயிர் கொடுக்கின்றோம், பிறகு யார் தேச பக்தர்கள்? யார் கோழைகள், யார் தேசத்தை காட்டிக் கொடுத்து கக்கூசில் போய் ஒளிந்து கொள்பவர்கள்? என்று பார்க்கலாம் அதைவிட்டு விட்டு உண்மைக் காரணம் என்ன என்பதை மறைத்துவிட்டு எங்களை கோழைகள் என்றும் தேசத்துரோகி என்றும் சொல்லிவிடுவ தாலேயே எங்களை ஒழித்துவிடுவது என்று நினைத்தால் அது முடியுமா என்று தான் கேட்கின்றேன்.
யார் கோழைகள்
தோழர் சத்தியமூர்த்தியை விட நான் எதிலும் பயந்தவன் அல்ல. அவர் ஒரு தடவை ஜெயிலுக்கு போயிருந்தால் நான் 7, 8 தடவை ஜெயிலுக்கு போயிருப்பேன். என் குடும்பமும் ஜெயிலுக்குப் போயிருக்கும். இத் தமிழ் நாட்டில் அரசியலில் கும்பல் கும்பலாக எதிர்வாதம் செய்யாமல் வலுவில் ஜெயிலுக்கு போவதற்கு வழிகாட்டினவன் நானும் என் குடும்பமுமாகும்
அதுவும் சத்தியமூர்த்தி செல்வத்துக்கும், அவரது செல்வாக்குக்கும் அவர் பொது வாழ்வில் அடைந்திருக்கும் நிலைமைக்கும் நான் ஒன்றிலும் குறைந்தவனல்ல என்றாலும் அவர் ஏ கிளாஸ் கைதியாய் சிறையிலிருந்தார். நான் சி கிளாஸ் கைதியாய் மூத்திரச் சட்டியில் தண்ணீர் சாப்பிட்டுக் கொண்டு வேலை செய்து கொண்டு கோணிச் சாக்கில் படுத்துக் கொண்டு சிறையில் இருந்தேன்.
சென்ற வருஷம் எனக்குக் கிடைத்தத் தண்டனையின் போதுகூட எனக்கு சி கிளாஸ் கொடுக்க வேண்டும் என்று எனது ஸ்டேட்மெண்டிலேயே எழுதிக் கொண்டேன். அதை எனது தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தான் அடித்து விட்டார்கள்.
பிறகு எனக்கு ஏ கிளாஸ் கொடுத்தார்கள். ராஜமகேந்திரம் ஜெயிலில் எனக்கு கொடுத்த கட்டில், மேஜை, மெத்தை எல்லாவற்றையும் வேண்டாம் என்று வாபீஸ் செய்துவிட்டு சி கிளாஸ் கைதியாகவே இருந்தேன். சாப்பாடு மாத்திரம் டாக்டர் சிபார்சின் மீது கோதுமை ரொட்டி கிடைத்தது. மற்றபடி நான் ஜெயிலில் எந்த உயர் நிலையிலும் இருக்க இல்லை, சவுகரியம் அடையவும் இல்லை, ஜெயில் சட்டத்தை எந்த வழியிலும் மீறவும் இல்லை. 477௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆகவே நாங்கள் சத்தியமூர்த்தியாரை விடவோ, மற்ற யாரையும் விடவோ பாப்பர் என்றோ கோழை என்றோ கஷ்டத்துக்குப் பயந்தவர்கள் என்றோ யாரும் சொல்லிவிட முடியாது
பயனற்ற தியாகம்
காங்கிரஸ்காரர்கள் அடிபட்டார்கள், உதை பட்டார்கள், லக்ஷம் பேர் ஜெயிலுக்கு போனார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனால். ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்கின்றேன்.
இன்று அவை தப்பு என்று எண்ணவில்லை என்று சொல்வதானாலும் அதனால் பிரயோஜனமில்லை என்றும் அந்த மாதிரி “தியாகத்தால்” வெள்ளைக்காரர்கள் மனதை இளகச் செய்ய முடியவில்லை என்றும் இனி செய்யக்கூடாது என்றும் காங்கிரஸ் தீர்மானித்து விட்டதா இல்லையா என்று கேட்கின்றேன். காங்கிரஸ் 1933 ல் தீர்மானித்தால் பார்ப்பனரல்லாதார். இயக்கம் 1920லேயே இப்படித் தீர்மானித்தது. இதில் என்ன தப்பு சொல்ல முடியும்? இதனால் பார்ப்பனரல்லாதார் கோழைகளாகி விடுவார்களா? தேசத் துரோகிகளாகி விடுவார்களா?
சம்பளம்
4000, 5000, 6000 சம்பளம் வாங்குவதைப் பற்றி குறை கூறப்படு கிறது. சம்பளம் வாங்குவதில் தப்பு என்ன? யார் வாங்குகிறார்கள்? பஞ்சாங்கக்காரனுடைய மகனும் முனிசிபாலிட்டிவிளக்கில் படித்தவனுடைய மகனுமா, பிச்சை வாங்கி பிழைத்தவனுடைய மகனுமா வாங்குகிறார்கள்? பெரிதும் தகுந்த யோக்கியதை உடையவர்களே வாங்குகிறார்கள்.
இந்த சம்பளம் யார் கேட்டது? யார் ஏற்படுத்தியது? இவர்கள் வாங்காவிட்டால் அது பார்ப்பனர்களுக்கு போகாமல் ஏழை மக்களுக்கு பயன்படுமா? அல்லது பார்ப்பனர்கள் வாங்காமல் இருப்பதாக தக்க ஜாமீன் கொடுப்பார்களா? அப்படி ஆனால் இன்றே ராஜினாமா செய்யலாம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் மந்திரிகளுக்கு மாதம் 5500 ரூபாய் சம்பளம் ஏற்படுத்தியது பார்ப்பனர்களே யாகும். அவர். களுடைய காங்கிரசேயாகும். (Nineteen) நைன்டீன் மிமோராண்டம் என்னும் 19 காங்கிரஸ் தலைவர்கள் கையொப்பமிட்டு பிரிட்டிஷாருக்கு அனுப்பிய காங்கிரஸ் அரசியல் திட்டத்தின் சாரமேயாகும்
1920 வருஷத்துக்கு முன்னிட்ட காங்கிரசுகள் எல்லாம் 5500 ரூபாய் சம்பளம் கேட்டு ஆதரித்து விண்ணப்பம் போட்டிருக்கிறது. அதை இப்போது பார்ப்பனரல்லாதார் பெறுகிறார்கள். அவ்வளவுதானே ஒழிய அது பார்ப்பனரல்லாதார் இயக்கத் தீர்மானமல்ல. அப்படி இருந்தும் பார்ப்பன. ரல்லாதார் இயக்கத்தார்கள் மாதம் 1000 ரூபாய் குறைத்துக் கொண்டார்கள்.
சர்கள் சி.பி. ராமசாமி அய்யர், சிவசாமி அய்யர், பி. ராஜகோபாலாச்சாரி,
குடி அரசு- 1936 (1) 478
கே.சனிவாசய்யங்கார், வி. கிருஷ்ணசாமி அய்யர் (ஒரு நாள் ஆன போதிலும்)
டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி ஆகியவர்கள் வாங்கிய சம்பளங்களும் அதற்கு மேற் போகாததுந்தானே ஒழிய வேறில்லை.
அப்படியிருக்க சம்பளத்தைப் பற்றி ஏன் இவ்வளவு பொறாமைப்பட வேண்டும்? இவை அதாவது இந்தப்படியான சம்பளமும் உத்தியோகங்களும் பதவிகளும் பார்ப்பனர்கள் பார்த்தால் தேசாபிமானம், பார்ப்பனரல்லாதார்
பார்த்தால் தேசத்துரோகம் என்று சொல்லுவதானால் அப்படிப்பட்ட தேசாபி மானத்தை வெட்டி சாய்த்து 1000 கெஜ ஆழத்தில் புதைத்தாக வேண்டும்
காங்கிரசால் என்ன முடிந்தது?
பார்ப்பனரல்லாதாரை வைது பழி சுமத்தி, சூழ்ச்சி செய்து இந்திய சட்ட சபைக்குப் பார்ப்பனர்களும் அவர்கள் அடிமைகளுமே போய் இருந்தும் அங்கு என்ன செய்ய முடிந்தது? அவர்கள் காரியத்துக்கு சிறிதாவது மதிப்புக் கொடுக்கப்பட்டதா? அவர்களாவது மதிக்கப்பட்டார்களா? தோழர் சத்தியமூர்த்திக்கு அங்கு எவ்வளவு அவமானம் நடந்தது? என்ன செய்ய முடிந்தது? அப்படியிருக்க இனியும் ஸ்தல ஸ்தாபனங்களை கைப்பற்ற வேண்டும் என்பதின்கருத்து என்ன? அது அரசியலுக்காகவா? வகுப்புஆதிக்கத்துக்காகவா? என்று கேட்கின்றேன்.
யார் வகுப்புவாதி?
வீணில் எங்களை ராக்ஷதர், அசுரர், தேசத்துரோகி, உத்தியோக வேட்டைக்காரர் என்று வைவதால் ஒரு காரியமும் ஆகிவிடாது. இன்றைய நிலை உள்ளவரை நாங்கள் எதற்கும் பயந்து ஏமாந்து போக மாட்டோம்
வகுப்புவாதி என்று எங்களை பேசிவிடுவதாலேயே நாங்கள் எங்கள் சமூக நலனை விட்டுக்கொடுத்து விட முடியாது. பார்ப்பனர்கள் தங்களைத் தவிர மற்ற எல்லோரையும் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர், நாம் ஆகிய எல்லோரையும் வகுப்புவாதிகள் என்கிறார்கள். எல்லாச் சமூகத்திலும் இரண்டொரு கூலிகளைச் சேர்த்துக் கொண்டு அவர்களை விட்டும் நம்மை வையச் சொல்லுகிறார்கள்.
இன்று காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார்களிலும் எனது தோழர் கல்யாணசுந்தர முதலியார் ஒருவர் தவிர மற்றவர்கள் எல்லோரும் வகுப்பு உரிமையை ஓப்புக்கொள்ளுகிறார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். தோழர்கள் வரதராஜுலு, சிதம்பரம் பிள்ளை முதலியவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆகையால் அந்தக் காரணம் வைத்து தேசாபிமானிகளையும், தேசத் துரோகிகளையும் பிரிப்பது தற்கொலையாகும்
4799 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
இன்று இந்தியாவில் தலைசிறந்த வகுப்பு வாதிகள் பார்ப்பனர்களே
யாகும். அவர்கள் வகுப்பு வாதத்தால் நமக்குள் இருக்கும் - நாம் அனுபவிக்கும் இழிவுகள் நீங்கவே நாம் வகுப்பு உரிமை கேட்கின்றோமே ஒழிய மற்றபடி வெள்ளைக்காரர்களுடைய கூலிகளாய் இருந்தல்ல.
காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் காங்கிரஸ் பார்ப்பனர் ஸ்தாபனம் அல்லவென்றும், காங்கிரஸ் வகுப்பு ஆதிக்கத்துக்குப் பாடுபடும் வகுப்புவாத ஸ்தாபனம் அல்ல வென்றும் ருஜுப்பிக்கவேண்டுமானால் எல்லா வகுப்பாரையும் கூப்பிட்டு உட்காரவைத்து அவர்கள் பயத்தை நீக்க முயற்சித்து, முடியாவிட்டால் அவர்களுக்கு கேட்கும் உரிமை கொடுத்து எல்லோரிடத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டும் அல்லது அது வேண்டாம் என்றால் பார்ப்பனர்கள் மாத்திரம் ஒன்று சேர்ந்து நாங்கள் இந்த அளவுக்கு மேல் எந்த உரிமையும் அனுபவிப்பதில்லை என்று ஒப்புக் கொள்ளட்டும். நாம் ராஜியாய் போகத் தயாராய் இருக்கின்றோம். அதைவிட்டு விட்டு தேசத்துரோக பூச்சாண்டியால் இனி ஏமாந்து போகமாட்டோம் நாங்கள் தோல்வி அடைவதாய் இருந்தாலும் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். உயிர் போகும் வரை போராடியே தீருவோம்
குறிப்பு: 09.06.1936 ஆம் நாள் சேலம் விக்டோரியா மார்க்கட் மைதானத்தில் சேலம் கெளன்சிலர் தோழர் வி.ஆர். பெருமாள் செட்டியார் தலைமையில் அரசியல் நிலைமை என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1936
குடி அரசு- 1936 (1) 480
பார்ப்பணரல்லாதார்
இயக்கப் பிரசாரக்கமிட்டியின் சுற்றுப்பிரயாண திட்டம்
ஜஸ்டிஸ் கட்சியில் வறுமை நீங்குமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் பேசியதாவது:-
இன்று இந்தியாவில் எந்தக் கட்சியாலும் வறுமை நீங்காது என்றும், வறுமை நீங்க காங்கிரசிலும் கூட திட்டம் இல்லை என்றும் இந்து சமூகத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகளே வறுமைக்கும், செல்வத்துக்கும் பெரும்பாலும் காரணமாய் இருக்கிறதென்றும், அது ஒழிக்கப்பட்டால் இன்றுள்ள இவ்வளவு வறுமை இருக்காதென்றும் வறுமை என்று சொல்லப்படுவது பெரும்பாலும்
கீழ் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களுக்குள்தான் இருக்கிறது என்றும் உதாரணமாக பார்ப்பானையும், “பறையனையும்'' எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பார்ப்பான் எவனாவது வறுமையில் கஷ்டப்படு கிறானா? எவனாவது மூட்டை தூக்குகிறானா? சரீரக் கஷ்டமான வேலை செய்கிறானா? என்றும், பறையர்கள் முதலிய படிப்படியான கீழ்ஜாதிகள் என்பவைகள் எவ்வளவோ கஷ்டப்படுவதுடன் வறுமையால் படிப்பில்லாமல் வீட்டுவசதி, வயித்திய வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்றும், ஜாதி ஒழிந்தால் வறுமைகள் அநேகமாய் குறையும் என்றும், ஒரு அளவுக்கு செல்வமும் உழைப்பும் சமமாக பிரிக்கப்படும் என்றும், காங்கிரஸ் இந்த கொள்கைக்கு விரோதம் என்றும், காங்கிரஸ் திட்டத்திலும் காந்தீயத்திலும் ஜாதி ஒழிப்பு திட்டம் இல்லை என்றும், காந்தியார் ஒரு இடத்திலாவது ஜாதி பாகுபாடுகள் அடியோடு ஒழிந்தாக வேண்டுமென்று சொல்லவே இல்லை என்றும், காங்கிரசின் வறுமை நீக்கும் திட்டமெல்லாம் கதர்தான். என்றும், கதருக்கு இதுவரை 10 கோடி ரூபாய் பாழாயிருக்கலாம் என்றும், எப்படி எனில் 2 அணாதுணிக்கு 10 அணா 12 அணா வீதம் விலைகொடுத்து வாங்கி கட்டியவர்களின் நஷ்ட பணம் எவ்வளவு இருக்கலாம் என்று பார்த்தால் விளங்கும் என்றும், அப்படியெல்லாம் செய்தும் கதர் நிர்வாகிகள்தான். கொள்ளைபோல் அதிக சம்பளம் பெற்று வாழ முடிந்ததே தவிர நூல் நூற்றவர்களுக்கு தினம் 1 அணாவுக்கு கூட விதியில்லை என்றும், அதுவும் ஏழை மக்களில் 109க்கு அரைப் பேருக்குக்கூட கிடைத்திருக்காது என்றும்,
அதுவும் நாளுக்குநாள் குறைந்து முன் இருந்ததில் 100க்கு 25 வீதம்தான்
4] ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
நடை பெறுகிறதென்றும், அதுவும் காங்கிரசினால் வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறவர்களாலும் காங்கிரசினால் தகுதிக்கு மேற்பட்ட பட்டம் பதவி வேட்டை ஆடுகிறவர்களாலும் தான் நிபந்தனையின் காரணமாய் கதர் மதிக்கத்தக்கதாய் விட்டதென்றும், ஆதலால் அதுவும் பயன்படாது என்பதோடு
கதர் இன்று சாவதற்கு மேல்மூச்செடுக்கும் நிலையில் இருக்கிறது என்றும், இனி கொஞ்சகாலத்தில் கதரை பயித்தியக்கார ஆஸ்பத்திரி கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்றும், தனி உடமை உள்ள வரை அடியோடு தரித்திரம் நீங்க முயற்சிப்பதும், வழி சொல்லுவதும் முட்டாள்தனமும் ஹம்பக்கும் தான் என்றும், ஜஸ்டிஸ் கட்சியின் சமூதாய வேலையின் பயனாகத்தான் ஒரு அளவுக்கு அதுவும் ஒரு கூட்டத்தார் வறுமையிலேயே இருக்க வேண்டும், ஒரு கூட்டத்தார் சோம்பேறிகளாய் இருந்து செல்வமும் போக போக்கியமும் அனுபவிக்க வேண்டும் என்று இருக்கும் கொடிய முறை மாறக்கூடும் என்றும் சொன்னார்.
இரண்டாவது கேள்வி.
மதம் கூடாது என்கின்ற நீர் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மதத்தை ஏன் சிபார்சு செய்கிறீர் என்று கேட்டதற்கு பதில் சொன்னதாவது:-
ஆம். சிபார்சு செய்கிறேன் என்றும், இதைப்பற்றி நாள் கணக்கில் பேசி 109த்துக் கணக்கான கலம் கணக்கில் சமாதானம் எழுதி இருப்பதாகவும் இப்போதும் சொல்லத் தயார் என்றும் சொல்லி விளக்கியதாவது:-
“நான் ஜாதியால் கொடுமையடையாத சுயமரியாதைக்காரர்களையோ மேல்ஜாதிக்கார இந்துக்கள் என்பவர்களையோ மதம் மாறுங்கள் என்று கட்டாயப்படுத்துவதில்லை.
தாழ்ந்த வகுப்பார்கள் பறையர், சக்கிலியர், தோட்டிகள், பள்ளர்கள், புலையர், நாயாடிகள் என்பது முதலிய பெயர்களால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஜனசமூக உரிமை இல்லாமல் அடிக்கப்பட்டு தொடவோ, நெருங்கவோ, பார்க்கவோ கூட அனுமதிக்கப்படாமல் செய்து கல்வி இல்லாமல், வீடு இல்லாமல், பிழைப்புக்கு சராசரி மார்க்கத்துக்குக் கூட நெருங்க அனுமதியில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டு நாயிலும், நாய் பன்றி மலத்திலும் கேடாய் மதிக்கப்படும் மக்களைப் பார்த்தே நீங்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் இந்து மதம் என்பதை விட்டு விட்டு மகமதியர்கள் என்று சொல்லிக்கொள்ளுங்கள்; அதற்குத் தகுந்தபடி நடவுங்கள்" என்று சொல்லுகிறேன் என்று சொன்னதோடு இதனால் சுயமரியாதைக்காரர் முதல் யாருக்கு என்ன நஷ்டம் என்பது விளங்கவில்லை என்றும், இக்கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அறியாமையாலும் முஸ்லீம்களிடம் இருக்கும் துவேஷத்தினாலும்தான் கேட்கிறார்களே ஒழிய வேறில்லை என்றும், கண்டிப்பாக இந்தியாவில் தீண்டாமை ஒழிந்து மனித சமூகம் ஒற்றுமை அடையவேண்டுமானால் எல்லோரும் ஒரு மதமாக முதலில் ஆகித்தான்.
குடி அரசு - 1936 (1) 482.
தீரவேண்டிவரும் என்றும், அதுவும் முஸ்லீம்களாக ஆனால் தான் முடியலாம் என்றும் “ஆத்மார்த்தத்துக்காக மதம்" என்றால் நாம் வாதாட வேண்டியதுதான். என்றும், மனித சமூகத்தில் பல மதங்களின் பேரால் இருக்கும் தொல்லையும், கொடுமையும் ஒழித்து அரசியல், பொருளியல், சமூக இயல் ஆகிய காரியங்களில் முன்னேற்றமடைய ஒரு மத வேஷம் அனுகூலிக்குமானால் அதற்காக அறியாமை காரணமாகவோ, துவேஷம் காரணமாகவோ, சுயநலம் காரணமாகவோ யாரும் முட்டுக்கட்டை போடக்கூடாது என்றும் சொன்னார்.
குறிப்பு: 06.06.1936 ஆம் நாள் நாகையில் நடைபெற்ற “பார்ப்பனரல்லாதார். பிரசாரக் கமிட்டி” பொதுக் கூட்டத்தில் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 14.06.1936
483 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
““மெயி?லும் பார்ப்பனரும்
மெயில்!” பத்திரிகையானது ஐரோப்பியர்களுடைய உரிமைகளை காப்பாற்ற நடத்தப்படும் பத்திரிகை என்பது பொதுஜனங்களது அபிப்பிராயம், ஆனால் அது அவ்வளவோடு நிற்காமல் இப்போது பார்ப்பனர்கள் உரிமையைக் காப்பாற்ற தீவிரமாய் புறப்பட்டு விட்டது
இதன் முக்கிய காரணம் இன்னது என்பது நமக்கு புலப்படவில்லை.
ஜெர்மன் ஹிட்லர் எப்படிதன்னைஆரியர் எனக்கருதிக் கொண்டாரோ அதுபோல் மெயில் ஆசிரியர் தன்னையும் ஆரியர் சந்ததி என்று கருதிக் கொண்டாரோ, அல்லது தென்னாட்டுப் பார்ப்பனர்களை தங்கள் சந்ததியார். என்று கருதிக் கொண்டாரோ என்னவோ என்று தான் சந்தேகிக்க வேண்டி
இருக்கிறது
எப்படியிருந்த போதிலும் எதற்கும் ஒரு அளவு உண்டு. என்ன காரணத்தால் மெயில் தன் அளவைக் கூட மீறிவிட்டதோ தெரியவில்லை.
ஏனென்றால் 6-ந் தேதி மெயில் பத்திரிகை உபதலையங்கம் ஒன்றில் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை காங்கிரசுக்காரர் ஒப்புக் கொண்டால் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசில் சேர்ந்து விடுகிறோம்” என்று தோழர் நடேச முதலியார் சொன்னதைக் கண்டித்து எழுதும் போது
பவகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் இல்லை என்பது தானே அருத்தம்'' என்று “மெயில்”
எழுதியிருக்கிறது இந்தப்படி சொல்ல பார்ப்பனர்களுக்குக்கூட தைரியமில்லை, அப்படி இருக்க மெயிலுக்கு பார்ப்பனர்கள் இடம் இவ்வளவு கவலை வந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியானம் செய்ததுபற்றி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
மற்றும் இந்த வியாக்கியானம் பார்ப்பனர்கள் இடம் அபிமானம் வைத்து மெயில் செய்ததோ அல்லது காங்கிரசும் ஜஸ்டிஸ் கட்சியும் ஒன்றாகிவிட்டால் தங்கள் நிலைக்கு ஆபத்து வரக்கூடுமோ என்று பயந்து இந்த பாஷ்யத்தில் புகுந்ததோ என்பது நமக்கு விளங்கவில்லை தோழர்இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒருசமயத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு வேறு ஒருமாதிரி வியாக்கியானம் தெரிவித்தார்.
குடி அரசு- 1936 (1) 484
“அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது நாட்டில் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு கூட்டத்தாரைப் பின் தள்ளுவதாகும்'' என்றார்.
மற்றும் தோழர் சீனிவாச சாஸ்திரியார் சமீபத்தில் ஒரு எழவு வீட்டில் அழும்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் மகா மேதாவியான தோழர் எம்.ராமச்சந்திரராவ் பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடியது தவறிவிட்டது என்றார். எழவு வீட்டில் தாயாரை பெண்டுக்கு இழுப்பவன் கல்யாண வீட்டில் மதினியாரை சும்மா விடுவானா?” என்று ஒரு பழமொழி உண்டு.
அதுபோல் எழவு வீட்டிலேயே பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வைதவர் கல்யாண வீடாகிய மற்ற சமயங்களில் ஜஸ்டிஸ் கட்சிக்கு எவ்வளவு கேடு செய்திருப்பார் என்பதை நாம் தெரியப்படுத்த வேண்டியதில்லை.
எது எப்படி இருந்தாலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது பார்ப்பனர்களுக்கு கூற்றுவனாய் காணப்படுகிறது என்பதும், அதனாலேயே அவர்கள் அதை எதிர்க்கிறார்கள் என்பதும், வெளிப்படையாய் அந்த உண்மையைச் சொல்லி எதிர்க்க வீரமற்ற கோழைத்தனத்தாலேயே “வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தேசீயத்துக்கு விரோதம்” என்று கூறி அறிவற்ற மக்களை ஏய்ப்பது என்பதும், பார்ப்பனர் தயவில்லாமல் வாழமுடியாத மக்களும் பார்ப்பனர்களிடம் கூலி பெறும் அடிமைகளும் கூலிகளும் அதற்கு பின்தாளம் போடுகிறார்கள் என்பதும் உண்மை என்பது இதனால் விளக்கமாகிவிட்டது.
ஆனால் இதே மெயில் முன் ஒரு காலத்தில் வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தை ஆதரித்தும் உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர்களே கொள்ளை கொண்டு வருகிறார்கள் என்றும், அப்படி கொள்ளை கொண்டும் அவர்களுக்கு நன்றி விஸ்வாசமில்லை என்றும், அது நன்றியற்ற ஜாதி என்றும் எழுதியதை மறந்து விட்டதானது நாம் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியமடைய வேண்டிய விஷயமாகும்.
மெயில் எழுதியதற்கு ஆதாரம் வேண்டுமானால் காட்டத் தயாராய் இருக்கிறோம் அதாவது தோழர் சர். சி.பி. ராமசாமி அய்யரின் சட்ட மெம்பர் ஆயுள்காலம் தீர்ந்த உடன் தோழர் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் அந்த உத்தியோகத்துக்கு நியமிக்கப்பட்ட போது விஷப் பல்லை பிடுங்கியதுபோல் சட்ட மெம்பருக்கு அப்போது இருந்த போலீஸ் இலாகா நிர்வாகத்தைப் பிடுங்கி ஹோம் மெம்பராகிய சர். உஸ்மான் அவர்களுக்கு கொடுத்து விட்டவுடன் கோபித்துக் கொண்டு சி.பி. அய்யர் பேச்சைக் கேட்டு சாஸ்திரியார் ராஜினாமா கொடுத்துவிட்ட காலத்தில் மெயில் என்ன தலையங்கம் எழுதிற்று என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தால் நன்றாய் விளங்கும் என்று சொல்லுவோம்.
485 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டது முதல் பார்ப்பனர்களே அவ்வாட்சி நிர்வாகத்திலும் உத்தியோகங்களிலும் பெரிய பங்கு அனுபவித்து வந்திருக்கிறார்கள் என்றும், சென்னை அரசாங்கத்தில் நிர்வாக சபையில் இந்தியர்களை நியமிப்பது என்ற முறை ஏற்பட்டது முதல் சட்ட மெம்பர் ஸ்தானத்தில் பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இனி அப்படிச் செய்யாமல் பார்ப்பனரல்லாதாருக்கும் கொடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஆகவே பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கிறார்கள் என்றும் மற்றும் பார்ப்பனர்களை கண்டித்தும் எழுதியது இன்றும் தேடிப் பார்த்தால் கிடைக்கும்.
அப்படிக்கு இருக்க வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் பார்ப்பனர்களுக்கு உத்தியோகமில்லை என்பது தானே பொருள் என்று இப்போது மெயில் கூறுவது தர்மமா, யோக்கியமா என்று கேட்கின்றோம்
வேண்டுமானால் இப்படிச் சொல்லட்டும். அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் பார்ப்பனர்களுக்கு ஏகபோக ஆட்சி இல்லை என்று அருத்தம் என்று சொல்லட்டும். அதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.
முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுத்ததால் இந்துக்களுக்கு உத்தியோகம் இல்லை என்று ஆகிவிட்டதா? அல்லது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பதாக இதுவரை 6, 7 வருஷ காலமாய் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கியதால் பார்ப்பனர்களுக்கு உத்தியோகம் இல்லாமல்போய் விட்டதா என்றும் “தீண்டப்படாதவர்" களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்ததால் தீண்டக்கூடிய ஜாதியார்களுக்கு உத்தியோகம் இல்லை என்று ஆகிவிட்டதா என்பதையும் யோசித்துப் பார்த்தால் “மெயில்” தனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் என்றே நினைக்கிறோம்
இந்தப்படியெல்லாம் மெயிலும் பார்ப்பனர்களும் கூடி பார்ப்பன ரல்லாதாரை பழி சுமத்துவதாலோ அல்லது இதை மாற்றி வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் தேசத் துரோகம் என்றோ, தேசீயத்துக்கு விரோதமென்றோ
கூறி பாமர மக்களை ஏய்க்கப் பார்ப்பதாலோ இனி வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நமது அபிப்பிராயம். அதை யார் தொட்டாலும் சீறிக் கடிக்கக்கூடிய பலத்தையும் தைரியத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெற்றுவிட்டது
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இவ்வளவு பலமும் செல்வாக்கும் ஏற்பட்டதெல்லாம் பார்ப்பனர்கள் அதை ஆட்சேபித்ததும், அவ்வுணர்ச்சியைக் கெடுக்க பல வித சூழ்ச்சிகள் செய்ததுமேயாகும். இனியும் கடசியாக நாம் ஒன்று சொல்லுவோம்
அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை இனியும் பார்ப்பனர்கள். எதிர்ப்பார்களேயானால் கூடிய சீக்கிரத்தில் பார்ப்பனர்களே வகுப்புவாரிப்
குடி அரசு- 1936 (1) 486
பிரதிநிதித்துவம் கேட்கும் படியான நிலைமை வந்து விடும் - கட்டாயம் வந்துவிடும் - இப்போதே சில இடங்களில் வந்து விட்டது என்பதேயாகும்
ஏனென்றால் ஆட்சேபிக்க ஆட்சேபிக்க மக்கள் கவனம் அதிலேயே செலுத்தப்பட வேண்டியதாகி உத்தியோகப் போட்டியே அரசியலாகி பெருங் கூட்டத்தார் காரியம் நிறைவேறிவிடும். பிரித்தாளும் சூழ்ச்சி இது விஷயத்தில் மாத்திரம் இனி செல்லாது.
ஆதலால் உண்மையான பொதுநலப்பற்றும் நல்ல அரசாட்சியும் விரும்புகிறவர்கள் இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு முட்டுக்கட்டை போடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு அரசியல் கிளர்ச்சி நடத்தாமல் யோக்கியமான காரியத்துக்கு நடத்தினால் நாமும் காலால் இடும் வேலையைக் கையால் - தலையால் செய்யக் காத்திருக்கிறோம் அப்படிக்கில்லா விட்டால் இருதரப்புக்களிலும் அயோக்கியர்களும் சமய சஞ்சீவிகளும் ஒரு வேளை கூழுக்கு எதையும் விற்பவர்களும் தான் தலைவர்களாகி கொள்ளை அடிப்பதையும் பொதுநலத்தைப் பாழாக்குவதையும் பார்த்துக் கொண்டும் அப்படிப்பட்ட காரியத்துக்கு உதவி செய்து கொண்டும் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடும் என்று சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். மெயிலைப்பற்றி நாம் ஒன்றும் கவலைப்படவில்லை. அதன் கொள்கை நமக்கு தெரியாததல்ல. ஆல் பழுத்தால் அங்கு அத்தி பழுத்தால் இங்கு என்று சமயம் போல் நடந்து கொள்ள வேண்டிய கடமை உள்ளது
ஆனால் மற்றவர்கள் அதாவது சிறிதாவது பொதுநல உணர்ச்சி உள்ளவர்கள், பொதுநலத்துக்கு ஆக உண்மையான தியாகம் செய்தவர்கள் இவ்விஷயத்தை யோசித்து ஒரு யோக்கியமான முடிவுக்கு வரும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.06.1936
487 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பாண்டியன், ராமசாமி பிரசாரக் கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு
நாளது 21-ந் தேதி - கோபி 20-5 தேதி - கோயமுத்தூர் 23-5 தேதி - ஈரோடு
24-ந் தேதி - தஞ்சை
25-ந் தேதி - திருச்சி
26-ந் தேதி - திருச்சி 27-ந் தேதி - சேலம்
28-ந் தேதி - ராசீபுரம்
29-ந் தேதி - கடலூர்
30-ந் தேதி - சென்னை ஜூலை 1,2-ந் தேதிகளில் செங்கல்பட்டு ஜில்லாவுக்காக சென்னையில். உள்ள பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவார்கள்.
3-ந்தேதி - வேலூர்
4-ந் தேதி - அம்பலூர்
சந்தர்ப்பங்களை உத்தேசித்து ஜூலை மாதம் புரோகிராம் மாத்திரம் மாற்றப்படலாம்
இந்தப்படி தோழர்கள் செளந்திரபாண்டியன், ஈ.வெ.ராமசாமி, சி.டி.நாயகம், வி.வி.ராமசாமி முதலியவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். ஆங்காங்கும் மற்றும் அந்தந்த ஜில்லாக்களிலும் உள்ள இயக்கத் தோழர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து வேண்டிய உதவி செய்ய வேண்டுகிறோம்.
C.D. நாயகம்,
E.V. ராமசாமி
காரியதரிசிகள்.
குடி அரசு - அறிவிப்பு - 14.06.1936
குடி அரசு- 1936 (1) 488
நடந்த விஷயம் என்ன?
ஈ.வெ.ரா. - சி.ஆர். சந்திப்பு
தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் நானும் குற்றாலத்தில் கண்டு பேசிய விஷயம் தமிழ்நாடு பத்திரிகை உலகத்தில் மிகப் பிரமாதப் படுத்தப்பட்டு விட்டது
என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் முதலில் இந்த விஷயத்தை கேட்டு விட்டே மரியாதைக்கு விசாரிக்கும் க்ஷம லாபங்களைக் கூட விசாரிக்கிறார்கள். சந்திக்க முடியாத அனேகம் பேர்கள் உள்ளத்திலும் இந்த எண்ணமே இருக்கும் என்பதில் ஆக்ஷ்பணை இருக்க நியாயமில்லை. ஆகையால் அதை விளக்கி விடுகிறேன். பத்திரிகை நிருபர்கள் பலர். என்னை விசாரித்தார்கள். நான் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல என்றே பதில் சொல்லிவிட்டேன். நிருபர்கள் சேதியில் 100க்கு 90 என் விஷயத்தைப் பொறுத்தவரை திரித்தும் பிசகாயும் மாற்றியுமே எனக்கு காணப்படுகின்றன. ஆதலால் நானே குறிப்பிட்டு விடுகிறேன். எங்கள் சம்பாஷணை ஒன்றும் உண்மையிலேயே அவ்வளவு குறிப்பிடக்கூடிய தல்ல. ஆனால் கவனிக்கக்கூடியதேயாகும்
எனக்கு பொதுவாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரிடம் எப்போதுமே மரியாதை உண்டு. அவருக்கும் என்னிடம் அன்பு உண்டு என்றே கருதிக் கொண்டிருக்கிறேன். அதாவது நான் அவரது அன்புக்கு பாத்திரமானவன் என்கின்ற கருத்தில். ஆச்சாரியாரைப்பற்றி அரசியல் விஷயத்தில் பொதுநல விஷயத்தில் எவ்வளவு மாறுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தாலும், கண்டித்துப்
பேசியும் எழுதியும் வந்தாலும் தனிப்பட்ட விஷயத்தில் அவரை எனது மரியாதைக்கு உரியவர் என்றே கருதி இருக்கிறேன்.
நாங்கள் பொது வாழ்வில் நுழைவதற்கு மூன் அவர் சேலம் சேர்மெனாயும் நான் ஈரோடு சேர்மெனாயும் இருக்கும் போதே எங்களில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுள்ள மாதிரியில் நெருக்கமுள்ளவர்களாய் இருந்ததோடு இருவரும் சொந்த வாழ்க்கையை அலட்சியம் செய்து பொதுவாழ்வில் தலையிடுவது என்கின்ற அருத்தத்தின் மீதே சற்றேறக் குறைய ஒரே காலத்தில் இருவரும் சேர்மென் பதவியையும் மற்றும் உள்ள
48 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
Sl கவுரவ பதவிகளையும் ராஜினாமா செய்துவிட்டு தோழர் வரதராஜுலுவும் உள்பட நெருங்கி கலந்து இருந்தோம். பிறகு ஒத்துழையாமை ஆரம்பமான வுடன் நான் அவருடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட காதலி போலவே
இருந்து வந்தேன். எங்களுக்குள் வெகுநாள் ஒத்துழையாமையில் அபிப்பிராய பேதமே இல்லாதிருந்தது. அவர் இஷ்டத்தை அறிந்து அதுவே என் அபிப்பிராயம் போல் காட்டி அவரை இணங்கச் செய்வதுபோல் ஒவ்வொரு விஷயத்திலும் நடந்து கொள்வேன். அதனாலேயே அனேகர் என்னைக் கண்டு விட்டே அவரைக் காணுவார்கள்.
அப்படிப்பட்டநிலை வகுப்பு உணர்ச்சி காரணமாகவே இருவருக்கும் மாற்றமடைய நேரிட்டுவிட்டது. அதன் பிறகு பல சம்பவங்கள் ஏற்பட்டு விட்டன என்றாலும் அவரைக் காணும் போது என்னை அறியாமலே அவரிடத்தில் ஒரு மரியாதையும் பணிவும் ஏற்பட்டு விடுகின்றன. அவரைக்காணும் போது எப்படி மரியாதையும் பணிவும் ஏற்படுகிறதோ அதுபோல் ஒரு பரிதாபமும் ஏற்படாமல் இருப்பதில்லை.
காரணம், எவ்வளவு பெரிய தியாகம் செய்தவர் அவ்வளவு தியாகமும் ஒரு பயனுமில்லாமல் போகும்படியாய் விட்டதே பாவம் என்று பரிதாபப்படுவதுண்டு. என்றாலும் அவருடைய ஒவ்வொரு வார்த்தையையும் இரண்டு மூன்று அர்த்தம் செய்து பார்க்காமல் நான் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நான் பிரிந்து விட்ட பிறகும் ஒரு சமயத்தில் சட்டசபைக்கு நிற்கும்படி என்னை வேண்டினார். இந்திய சட்டசபைக்கும் நான் நிற்பது நல்லது என்கின்ற ஜாடையும் காட்டினார். எனக்கு வெற்றி செலவில்லாமல் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கையும் உறுதியும் இருந்தும் இந்த ஸ்தானங்களுக்கு அவருடைய ஆதரவில் செல்வது எனது வாழ்வைக் கெடுத்து விடுமோ என்று அஞ்சியே மறுத்துவிட்டேன்.
இப்படியெல்லாம் இருந்தாலும் தற்கால அரசியல் புரட்டுக்களை நான் அறிந்திருப்பது போலவே ஆச்சாரியார் அவர்களும் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. இரு கட்சிகளிலும் பெரிதும் சமய சஞ்சீவிகளே பயன் அனுபவித்து விடுவதும் நாம் ஒருவரை ஒருவர் துவேஷித்து முன்னேற ஒட்டாமல் தடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்கள் நலம் கொள்ளை போவதும் என்னைவிட நன்றாய் உணர்ந்திருக்கிறார் என்பதே என் அபிப்பிராயம்.
இந்த நிலையில் என்னை அவர் கோயமுத்தூர் ஜெயிலில் எதிர் பிளாக்கில் ஒரு கைதியாக சந்தித்தார். தோழர் சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் என்னை ஜெயிலில் சந்தித்த அதட்டியினாலும் தோழர் ஆச்சாரியார் முயற்சியாலும் நான் ஆச்சாரியார் அறைக்குப் பக்கத்தில் அவருடைய சமையலறை சாப்பாட்டில் இருக்க நேர்ந்தது
குடி அரசு - 1936 (1) 490
அப்பொழுதும் எங்கள் பழைய கதை ஞாபகத்துக்கு வந்ததுடன் இருவருக்கும் கண்களில் நீர் ததும்ப எங்கள் காதலைக் காட்டிக் கொண்டோம். எந்த கருத்தில் என்றால் எனக்கும் அப்படிப்பட்ட தலைவர் ஒருவர் கிடைக்கமாட்டார், அவருக்கும் என்னைப்போல ஒரு தொண்டன் கிடைக்க மாட்டான் என்கின்ற உணர்ச்சிக் கருத்தில் என்றே சொல்லலாம். முடிவில் இருவரும் சேர்ந்து முன்போல ஒத்து உழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்து உழைக்க சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்.
அதற்கு பிறகு ஒருதரம் சந்திக்க நேர்ந்தும் இருவரும் சரிவர அந்த அபிப்பிராயத்தை வலியுறுத்திக் கொள்ளவில்லை
பிறகு சுமார் 20 மாதம் பொறுத்து நானும் தோழர்கள் பாண்டியன். முதலியவர்களும் குற்றாலத்தில் ஒரு நாள் ஸ்நானத்துக்கு போகையில் அங்கு நான்கு நாள் முன்னதாகவே சுகத்துக்காக போயிருந்த ஆச்சாரியார் அவர்கள் தன் ஜாகையிலிருந்தே என்னைக் கண்டார். பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அருவியில் குளித்துவிட்டு அவர் ஜாகைக்கு போனேன். அப்பொழுது மாலை 3 மணி இருக்குமாதலாலும் நானும் என் தோழர்களும் அதுவரை சாப்பிட வில்லையாதலாலும் ஆச்சாரியார் அவர்களிடம் அதிக நேரம் பேச சாவகாசமில்லை என்று சொல்லி அவசரமாய் விடை கேட்டேன். “ஏன் ஒரு நாள் சாவகாசமாக இங்கு தங்குவது தானே”
என்றார். நான் இப்போது சாவகாசமில்லை என்றும் மற்றொரு நாள் வருவதாயும் சொன்னேன். அவசியம் வரவேண்டும் என்றார். ஆகட்டும் என்றேன். அந்தப்படியே 15 நாள் பொறுத்து மறுபடியும் குற்றாலம் சென்றேன். அது சமயம் அவர் ஒரு வனபோஜனத்துக்கு புறப்பட்டுக்கொண்டு வீட்டின் முன் வாசலுக்கு வந்துவிட்டார். என்னைக் கண்டதும் ஆசையாக வரவேற்று வன போஜனத்துக்கு அழைத்தார். நான் பின் சென்றேன். செல்லுகையில் வழியில் சிறிது முன்னாக சென்று கொண்டிருந்த நாங்கள் காதல் மிகுதியால் அர்த்தமற்ற வார்த்தைகளைப் பேசுவதுபோல் பல விஷயங்களை கலக்கிக் கலக்கி அங்கொன்று இங்கொன்றுமாக பேசிக் கொண்டே சுமார் 1% மைல் நடந்தோம். சங்கேத இடம் சென்று மற்ற எல்லோருடனும் சேர்ந்து சம்பாஷித்தோம். பிறகு வீட்டுக்கு திரும்பி அன்று மாலையும் இரவும் கழித்தோம். தானாக வந்த விஷயங்களைப் பற்றித்தான் பேசினோமே ஒழிய குறிப்பாக எதையும் வருத்தி ஒன்றும் பேசவில்லை. இவைகளிலேயே அனேக விஷயங்கள் கலந்து கொண்டன.
முடிவு என்ன வென்றால் இன்றைய இரு கட்சி கிளர்ச்சிகளும் எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதும், சேர்ந்து இன்ன இன்ன காரியம் செய்தால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் நலன் ஏற்படும் என்பதும் பேசி ஒரு
49] ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அபிப்பிராயத்துக்கு வந்த விஷயங்களாகும். அவரை விட எனக்கு இருவரும்
கலந்து ஒற்றுமையாய் ஒரு வேலை செய்யக்கூடிய காலம் வராதா என்கின்ற ஆசை ததும்பி இருந்தது அவ்வளவு பெரிய விஷயம் பேச அந்த சந்தர்ப்பம் போதாது என்கின்ற எண்ணமும் இருந்தது
ஆனால் சில விஷயங்களில் இருவருக்கும் நேர்மாறான அபிப்பிராயம் இருப்பதும் அது விஷயத்தில் ஒத்து வர முடியாதே என்று பயப்படக் கூடிய அம்சங்களும் வெளியாயிற்று
எப்படி இருந்த போதிலும் ஒரு சமயத்தில் கூடுவோம் என்கின்ற நம்பிக்கை குறையவில்லை.
இவ்வளவுதான் நாங்கள் கலந்து பேசியதின் தத்துவமாகும்.
ஈ.வெ.ரா.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.06.1936
குடி அரசு- 1936 (1) 492
காங்கிரசும் ஜவஹர்லாலும் பொது உடமையும்
இன்று காங்கிரசினுடைய முக்கிய வேலை வரப்போகும் தேர்தலில் காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற வேண்டுமென்கின்ற ஒரே வேலைதான். என்பதைப் பற்றி யாருக்கும் சந்தேகம் இருக்குமென்று நாம் கருதவில்லை. ஆனால் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்வது என்பதில் காங்கிரஸ் கொள்கை இன்னது என்பதாக ஒருவருக்காவது விஷயம் விளங்கி இருக்கும் என்றோ, அல்லது மக்களுக்கு விளங்கும்படி காங்கிரஸ்காரர்கள் விளக்கி வருகிறார்கள் என்றோ சொல்லுவதற்கில்லை. கட்டுப்பாடாகவே பொது மக்கள் இவ் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
தேர்தல்களின் போது தேர்தல் பிரச்சினையாக இருப்பது “காந்தி பெரியவர்” என்பதும் அவர் “மகாத்மா” என்பதும் ஒரு அத்தியாயமாகவும் “காங்கிரஸ்காரர்கள் ஜெயிலுக்குப் போனார்கள், அடிபட்டார்கள்” என்பதும் “பாரத மாதாவுக்கு ஜே” என்பதும் இரண்டாவது அத்தியாயமாகவும், “ஆதலால் காந்திக்கு ஓட்டுப்போடுங்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்பது மூன்றாவது அத்தியாயமாகவும் இருந்து எலக்ஷன் பிரசாரம் செய்து வெற்றி உண்டாக்க மூயற்சிப்பதாய் இருக்கிறதே ஒழிய வேறில்லை இவ்வளவோடு தேர்தல் வேலையும் பதவி வேலையும் முடிந்து விடுகிறது உதாரணமாக காங்கிரஸ் சென்ற வருஷம் முன் இந்திய சட்டசபைக்குப் போட்டி போடும்போது வேறுவேறு பல விஷயங்களும் எலக்ஷன்' பிரச்சினையாக சொல்லப்பட்டன என்றாலும் எலக்ஷன் நடந்து வெற்றி ஏற்பட்ட பிறகு அவை பொது ஜனங்களுக்குக்கூட ஞாபகமில்லாமல் போகும்படி பல்வேறு விஷயங்களைப்பற்றி ஜால வேடிக்கை செய்து “இந்திய சட்டசபையில் காங்கிரசுக்கு வெற்றிமேல் வெற்றி” என்று சொல்லி
பிரசாரம் செய்து அந்தப்படியே பாமரமக்களை நம்பும்படியும் செய்தாய்விட்டது
ஸ்தல ஸ்தாபனம்
இவை ஒரு புறமிருந்தாலும் ஜில்லாபோர்டு, முனிசிபாலிடி ஆகிய விஷயங்களிலும் இதுபோலவே காங்கிரஸ் வெற்றி பெறவேண்டும் என்று பிரசாரம் செய்து காங்கிரசுக்கு வெற்றி ஏற்பட்டதாக ஆகியும், சுமார் 6, 7 ஜில்லா போர்டுகளும் 1, 2 மூனிசிபாலிடிகளும் காங்கிரஸ் வசப்பட்டன
43 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
என்று சொல்லப்பட்டும் இன்று உண்மை நிலையை பார்ப்போமானால் பபழயபடியே தான் நிர்வாகம் நடக்கின்றது” என்று சில போர்டுகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்வதும், “மெம்பர்கள் மோசம் செய்துவிட்டார்கள். நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள்” என்று கில போர்டுகளில் போர்டு காங்கிரஸ் அங்கத்தினர்கள் ராஜினாமா செய்வதும், போர்டு தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்ளவில்லை” என்றுகிலபோர்டு மெம்பர்கள் காங்கிரஸ் கட்சிபதவியைராஜினாமாசெய்வதும்,
சில போர்டை கலைத்துவிடவேண்டும்'' என்று போர்டிலுள்ள
காங்கிரஸ் மெம்பர்களே தீர்மானம் செய்வதும்,
கில போர்டு காங்கிரஸ் பிரசிடெண்டு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் போர்டு மெம்பர்களே முயற்சிப்பதுமான
காரியங்கள் நடந்து வருகின்றன.
வேலூர்
இவற்றில் எல்லாவற்றையும் விட அதிக விசேஷமானதும் குறிப்பிடத்தக்கதுமான காரியம் என்னவென்றால், வேலூர் ஜில்லா போர்டு தேர்தலில் காங்கிரசின் பேரால் வெற்றி பெற்ற மெம்பர்கள் 26 பிரசிடெண்டு தேர்தலில் காங்கிரஸ் பேரால் நிறுத்தப்பட்ட பிரசிடெண்டுக்கு ஓட்டுக்கொடுத்தவர்கள் 15 பேர்கள், பாக்கி 11 பேர்கள் எதிர்கட்சிக்கு ஓட்டு செய்திருக்கிறார்கள்
ஆனால் இந்த நடத்தையை கண்டிப்பதற்கு அறிகுறியாய் ராஜினாமா கொடுத்தவர்களோ 21 பேர்கள். இந்த 21 பேர்களில் காங்கிரஸ் பிரசிடெண்டுக்கு ஓட்டு செய்த 15-பேர்கள் போக எதிர்கட்சிக்கு ஓட்டு செய்யப்பட்ட 11 பேர்களில் 6-பேர்களும் கண்டிப்பதில் கலந்து ராஜினாமா செய்திருக்கிறார்கள் ஆகவே காங்கிரசுக்காரர்களின் நாணயத்துக்கு யாராலும் ஆட்சேபிக்க முடியாததும் பிரத்தியட்ச அனுபவமானதுமான உதாரணம் இதைவிட வேறு என்ன வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட நாணயக்குறைவான காரியங்கள் காங்கிரசுக்கு சகஜமாக இருக்கின்றது என்பதும் இதனால் நன்றாய் விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்
இது போலவே மற்ற போர்டுகளிலும் காங்கிரசின் பேரால் வெற்றி பெற்றவர்கள் என்று சொல்லப்பட்டவர்களில் சில பேர்களில் பலரும் பல பேர்களில் சிலரும் இம்மாதிரியாகவே “துரோகம் செய்து வந்திருக்கிறார்கள். இவற்றை எதற்காக எடுத்துக்காட்டுகிறோம் என்றால் காங்கிரஸ் ஒன்றுதான் நியாயமான உண்மையான ஐனப்பிரதிநிதி ஸ்தாபனம் என்றும்,
குடி அரசு- 1936 (1) 494
நாணயமான ஸ்தாபனம் என்றும் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் காங்கிரசுக்கு வந்துவிட்டால் அவன் உடனே யோக்கியனாகவும் நாணயஸ். தனாகவும் ஆகிவிடுவான் என்றும் சொல்லி அயோக்கியர்களாகவே பொறுக்கி எடுத்து காங்கிரசில் சேர்த்த குணமும், அயோக்கியர்களுக்கு இன்று புகலிடம் காங்கிரசு தான் என்று சொல்லி பாவமன்னிப்பு டிக்கட்டு கொடுத்து வந்த தன்மையும் என்ன ஆயிற்று என்பதை விளக்குவதற்காகவும் உலகிலுள்ள விகிதாச்சார அயோக்கியர்கள் காங்கிரசிலும் இருக்கிறார்களே ஒழிய ஒரு அளவுக்காவது மற்ற ஸ்தாபனங்களை விட குறைந்த யோக்கியமான.
ஸ்தாபனம் அல்ல என்றும் மெய்ப்பிப்பதற்கு ஆகவே எடுத்துக் காட்டினோம்.
காங்கிரஸ் கொன்கை இவை நிற்க, இன்று காங்கிரஸ் மறுபடியும் ஸ்தல ஸ்தாபனங்களையும் சட்டசபைகளையும் கைப்பற்ற ஆசைப்படுவதற்கும் முயற்சிப்பதற்கும் ஆக செய்யும் காரியங்களில் காங்கிரசின் திட்டம் என்ன என்பது பற்றி இப்போது யோசித்துப் பார்ப்போம்
காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே அதாவது சட்டப்படிக்கு அதிகாரம்
பெற்ற தலைவர்கள் என்பவர்களுக்குள்ளாகவே ஆளுக்குஒரு அபிப்பிராயமும் தினத்துக்கு ஒரு அபிப்பிராயமும் சொல்லப்பட்டுவருவதும் அவர்களுக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு வருவதும் மற்றவர்களிடம் சமயத்துக்குத் தகுந்தபடி பேசிவருவதும் இன்று யாராவது இல்லையென்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் பண்டித நேரு பொது உடமை அபேதவாதம் ஆகியவைகளே தனது கொள்கை என மக்கள் நம்பும்படி பேசுகிறார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரோ “அபேதவாதம் பொது உடமை ஆகியவைகளை அடியோடு ஒழிக்க வேண்டும்” என்கின்றார்.
ஆனால் “காங்கிரசின் லக்ஷியம் பூரண சுயேச்சை" என்று தீர்மானத்தில் இருக்கிறது. “பூரண சுயேச்சைக்கு அருத்தம் பிரிட்டிஷாருடைய ஆதிக்கம் - தொடர்பு இந்தியாவின் மீது இருக்கக்கூடாது என்பது தான்'' என்று எல்லா இந்திய காங்கிரஸ் தலைவர் ஜவார்லால் பண்டிதர் வியாக்யானம் சொல்லுகிறார். மற்றொரு பக்கம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரோ “பார்லிமெண்டு கமிட்டி சட்டப்படி பூரண சுயேச்சை என்பதற்கு குடியேற்ற நாட்டு அந்தஸ்து” என்று பாஷ்யம் சொல்லுகிறார், அதோடு கூட “பிரிட்டிஷாரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அனுமதிப்பதும் அதில் அடங்கும்” என்று பூரண சுயேச்சை என்பதற்கு வியாக்கியானம் சொல்லுகிறார்.
495 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வட்டமேஜை மகாநாட்டுக்கு இந்தியாவின் “ஏகப் பிரதிநிதி"யாகச் சென்ற தோழர் காந்தியாரோ, “பூரண சுயேச்சையென்றால் அதன் சாரம் இருந்தாலும் போதும்” என்பது அருத்தம் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.
மற்றும் பழய காங்கிரஸ் வாதிகளில் முக்கியமானவரான தோழர்கள். விஜயராகவாச்சாரியார் மாளவியா போன்றவர்கள் "பிரிட்டிஷ் சம்மந்தம் அடியோடு அறவே ஒழித்துவிடுவது என்பது இன்றைக்குக் கூடாத காரியம் என்றும் இன்னும் கொஞ்ச நாளைக்கு அவர்கள் இருக்கவேண்டும்” என்றும் அபிப்பிராயம் காங்கிரசில் சொல்லுகிறார்கள்.
வெற்றி பெற்றபின் எண்ண செய்வது?
இந்த வியாக்யான பேதங்கள் ஒருபுறமிருக்க இவ்வளவையும் லட்சியம் செய்யாமல் பொது ஜனங்கள் ஏமாந்து போவதன் மூலம்
தேர்தல்களில் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளை கைப்பற்றி
விட்டால் பிறகு என்ன செய்வது என்பதிலும் இன்று மறைக்க முடியாத
மூன்று வித அபிப்பிராயங்கள் இருந்து வருகின்றன.
1. சட்டசபையை கைப்பற்றி, மந்திரி பதவியை ஏற்காமல் முட்டுக் கட்டை போட்டு சீர்திருத்தம் நடக்காமல் பார்க்க வேண்டும் என்பது
2. சட்டசபையை கைப்பற்றி, மந்திரி சபையையும் கைப்பற்றி சீர்திருத்தங்களை உடைத்தெறிய வேண்டும் என்பது
3. சட்டசபையைக் கைப்பற்றினால் மந்திரி சபையையும் கைப்பற்ற வேண்டும், மந்திரி பதவியை கைப்பற்றினால் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுத்தாக வேண்டும் என்பது
இதைத் தவிர சில சாதாரண காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ்
பிரமுகர்களும் சட்ட சபைக்குள் போவதே சீர்திருத்தம் நடத்துவதுபோல் தான்
ஆகும். ஆதலால் மந்திரி பதவி மறுப்பது என்பதோ சீர்திருத்தத்தை உடைப்பது என்பதோ பயன்படாததும் முடியாததுமான காரியமாகும் என்கிறார்கள். இவ்வளவு குளறுபடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியார் “நான் மந்திரி ஆய்தீருவேன்' என்றும் “நான் மந்திரியானால். இன்ன இன்ன காரியம் உங்களுக்கு (ஜனங்களுக்கு ) செய்கிறேன். எனக்கு மந்திரியாக யோக்கியதை இல்லையா?” என்றும் தினந்தோறும் சொல்லிக் கொண்டே வருகிறார்.
காங்கிரசோ இவைகளுக்கெல்லாம் ஒரு விளக்கமான தீர்மானம் செய்யாமல் வழ வழா முறையில் “ஸ்தானங்களை கைப்பற்றிய பின்பு மாகாண காங்கிரஸ் கமிட்டிகளைக் கலந்து பிறகு மந்திரி பதவியைப்பற்றி பேசலாம்! என்று தீர்மானித்து இருக்கின்றது. அடுத்தாப்போல் தலைவர் பட்டத்துக்கு வரப்போகும் ஆச்சாரியார் “அதற்கு இப்போது என்ன அவசரம் ஸ்தானங்களை முதலில் கைப்பற்றுங்கள்” என்கின்றார்.
குடி அரசு- 1936 (1) 496
மாகாணங்களோ ஒவ்வொன்று ஒவ்வொரு விதமாகவும் ஒரே மாகாணம் பல விதமாகவும் அபிப்பிராயம் கூறுவதோடு மகாநாடுகளிலும் பலவித தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன.
ஆகவே இன்று தேர்தல்களுக்கு காங்கிரசினிடம் அரசியல் பிரச்சினை என்பது இன்னது என்பதாக இல்லாமலே ஸ்தானங்களையும் ஸ்தாபனங் களையும்கைப்பற்ற வேண்டும் என்கின்ற காரியம் மாத்திரம் பிரச்சினையாகவும் அதற்கு ஆதாரமாக “காந்தி பெரியவர், பட்டினி கிடந்தவர், காங்கிரசுக் காரர்கள் ஜெயிலுக்குப் போனவர்கள், அடிபட்டவர்கள், பாரத மாதாவுக்கு
ஜே'' என்கின்ற விஷயங்கள் மாத்திரமே பிரச்சினையாக இருக்கின்றன.
அபேதவாதம்
தேர்தல் விஷயம்தான் இப்படி என்றாலோ மற்ற முக்கிய கொள்கைகள் விஷயத்திலாவது காங்கிரஸ் ஒரு கொள்கையில் இருக்கின்றதா என்று
பார்த்தால் அதுவும் இன்று சிரிப்பாய்சிரிக்கும் விதமாகவே இருந்து வருகின்றது
காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் காங்கிரசின் லட்சியம் பூரண
சுயேச்சைஎன்றும், பூரணசுயேச்சை பெற்ற பின்அபேதவாதமே தனதுகொள்கை என்றும் சொல்லுகிறார். அவருடைய கவுன்சிலுக்கு முக்கால் வாசிப்பேர்களை அபேதவாதத்துக்கு எதிரிகளாகவே பார்த்து நியமித்துக் கொண்டிருக்கிறார்.
மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தோழர்கள் ராஜேந்திர பிரசாத்,
பட்டேல், ஆனே, மாளவியா, விஜயராகவாச்சாரியார், ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் இன்று அபேதவாதம் முட்டாள்தனமானது என்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
அப்படியானால் அபேதவாதக்காரரை காங்கிரஸ் தலைவராக ஏன் நியமித்தீர்கள் என்று கேட்டால் “அது அவருடைய (ஜவஹர்லாலுடைய) கொள்கைக்கு ஆக அல்ல, அவர் பெரிய மனிதனுடைய மகன் என்பதற்கு ஆகவும் அவர் செய்த தியாகத்துக்கு ஆகவும்'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரே பதில் சொல்லுகிறார்.
இந்த நிலையில் இன்னம் 4, 5 மாதம் கழிந்தால் காங்கிரசுக்கு வேறு தலைவர் வரப்போகிறார். அது அனேகமாக தோழர் ராஜகோபாலாச்சாரியாராக. இருக்கலாம். அவரது அபிப்பிராயம் எல்லோரும் அறிந்ததே
தோழர் காந்தியாரும் இது விஷயத்தில் அபேதவாத எதிரிகளுக்கு உதவியாகவே இருந்து வருகிறார். ஆகவே எலக்ஷன், பதவி ஏற்பு, அபேதவாதம் ஆகியவை ஒன்றுக்கொன்று தம்மில் முரண்பட்டு ஒன்றோ டொன்று போர் புரிகின்றன. இது ஒரு புறமிருக்க தோழர் மாளவியா கூட்டத்தார் காங்கிரசில் இருந்து பிரிந்து வகுப்பு உணர்ச்சி காரணமாக வேறு
கக்ஷி ஆரம்பித்து இருக்கிறார்கள். காங்கிரசுக்காரர்களோ வகுப்பு தீர்ப்பைப்
497 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பற்றி பேசினால் முஸ்லீம்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போய்விடும் என்கின்ற பயத்தினால் அதை (வகுப்பு தீர்ப்பை) அனுமதித்துக் கொண்டு சமயம் போல் நடக்க இடமிருப்பதாக காட்டி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவரோ “வகுப்புத் தீர்ப்பைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் வங்காளத்துக்கு செய்த வகுப்புத் தீர்ப்பு மாத்திரம் அதீதமான” தென்றும் அதனால்தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் கூறுகிறார்.
இந்த நிலையில் பொது ஜனங்களிடையில் காங்கிரசில் பிளவு இருக்கிறது என்கின்ற அபிப்பிராயம் குடி கொண்டிருப்பதை மாற்ற வேண்டி தோழர் ஜவஹர்லால் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது அபேதவாதத்தின் உண்மை வேஷம் வெளிப்பட்டு விட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது
பருஷியாவின் பொருளாதாரக் கொள்கையை நான் நம்புகிறேன், ரஷியா அனேக விஷயங்களில் ஆச்சரியமான முன்னேற்றமடைந்திருக் கிறது, ஆனால் குருட்டுத்தனமாக ருஷியாவை நான் பின்பற்ற மாட்டேன், பொதுவுடமை என்ற ரஷிய சம்மந்தமான வார்த்தையை விட்டு அபேதவாதத்தை நான் வற்புறுத்துகிறேன்”
கதர் நமது பொருளாதாரப் பிரச்சினைக்கு முடிவான பரிகாரமாகாது.”
“நான் கூறும் அபேதவாதம் இந்தியாவுக்கு எப்படிவரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அபேதவாதத்தாலன்றி நமது ஏழ்மையை போக்க முடியாது.” ஆனால் அபேதவாதம் ஏற்படுவதற்கு மூன் நமக்கு சுயேச்சை வேண்டும்.” எனக்கு பூரண ஜனநாயகத்தில் தான் நம்பிக்கை, இப்போது நான் ராஜீய ஜனநாயகத்துக்கே பாடுபடுகிறேன்." நமது பிரச்சினைகளை ஜனநாயகத்தின் மூலம் தீர்ப்பதற்காக இந்த விஷயங்களை (அபேதவாத விஷயங்களை ப-ர்) நான் ஜனங்கள் மூன் எடுத்துக் கூறுகிறேன். இதை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது."
“நான் அபேதவாதத்தை ஜனங்களிடம் பிரசாரம் செய்யவில்லை"
அது இந்தியாவுக்கு வரும்படி செய்ய என்ன செய்வது என்று சொல்ல முடியாது என்பதாக முதலிலேயே சொல்லிவிட்டார்.
இந்த வாக்கியங்கள் 13-6-365 தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் 21-வது பக்கத்தில் 1,2,3,4 நெம்பர் கலங்களில் இருக்கின்றன. ஆகவே காங்கிரஸ் அபேதவாதமோ, ஜவஹர்லால் நேருவின் அபேதவாதமோ என்ன என்பதை இதிலிருந்து வாசகர்களையே விளங்கிக் கொள்ள விரும்புகிறோம்.
குடி அரசு- 1936 (1) 498
நிற்க, 'பொதுவுடமையோ அபேதவாதமோ சுதந்திரம் பெறுமுன் முடியாது (என்றும்) ஆதலால் முதலில் சுதந்திரம் பெற முயற்சிப்போம்”
என்றும் கூறுபவர்களின் கூற்றையும் சிறிது கவனிப்போம்
இந்தியாவுக்கு சுதந்திரமில்லாமல் எப்படிப் பொதுவுடைமை வராதோ, அதுபோலவே இந்தியாவில் பார்ப்பானும் பறையனும் மேல் ஜாதியும் கீழ்ஜாதியும் ஒழியாமல் - அழியாமல் சுதந்திரம் வரமுடியுமா என்று கேட்கின்றோம்.
பார்ப்பன ஆதிக்கம் அழியாமல் இருக்க சுயராஜ்யம் வருவதாய் இருந்தால் கீழ்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் அப்படிப்பட்ட சுதந்திரம் இந்தியாவுக்கு வர அனுமதிக்க முடியுமா? அனுமதிக்கலாமா? என்று கேட்கின்றோம்
தீழ் ஜாதிக்காரர்கள் சம்மந்தம் கேட்டுக்கொண்டு ரஷ்யாவுக்கு பொதுவுடமை வரவில்லை" என்று நமது சமதர்ம வீரர்கள் பதில் சொல்லக்
கூடும். இது குதிரைக்கு குர்ரம் என்று தெலுங்கு பெயர் சொன்னவுடன். ஆனைக்கு அர்ரம் என்று சொல்லி தனக்கு தெலுங்கு வந்துவிட்டதாக பாவித்துக் கொண்ட பையனையே ஒக்கும். ரஷியாவில் ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படும் என்று நினைப்பது பெரியதொரு அறியாமையே
ஆகும். இந்தியாவுக்கு ஏற்பட்டாலும் போதாது. இங்கிலாந்துக்கும் ஏற்பட வேண்டும். இங்கிலாந்துக்கு ஏற்பட்டாலும் போதாது. நேச தேசங்களுக்கும் ஏற்படவேண்டும். இதற்கு ஒரு உலக யுத்தம் வந்தாக வேண்டும். அப்படி ஒரு உலகயுத்தம் ஏற்பட்டாலும் அதில் பிரிட்டிஷுக்கு வெற்றி ஏற்படுத்திக் கொடுக்க இந்தியாவிலேயே 6 கோடி மக்கள் மாத்திரமல்ல 15 கோடி மக்களுடைய உயிரும் பல ராஜாக்களினுடையவும், ஐமீன்தார்களினுடையவும், முதலாளிகளினுடையவும் செல்வமும் காத்துக்கொண்டு இருக்கின்றன. என்பதை மறந்துவிடக்கூடாது
பொதுஉடமை என்கிற வார்த்தை ஏழைகள் காதுக்கு இனிமைதான், அபேதவாதம் பேச்சுக்கு சிங்காரம் தான்.
ஆனால் “அது எப்படி வரும் என்றும் அதற்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லையே” என்று ஜவஹர்லாலே சொல்லுவதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அதோடு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பலத்தையும் தந்திரத்தையும் இந்தியர்களின் பிரிவினையையும் பலமற்ற தன்மையையும் மடமையையும் கூட சேர்த்து யோசித்துப்பாருங்கள், நம் நாட்டில் மற்ற ஸ்தாபனங்களையும் சுயராஜ்யம், சுதந்திரம் என்கின்ற வார்த்தைகளையும் எப்படி சில சோம்பேறிகளும் வேலையற்றோர்களும் தங்களது வாழ்க்கைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களோ அதுபோல் பொதுஉடமை என்கிற வார்த்தையையும், சமதர்மம் என்கின்ற வார்த்தையையும்
40 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பல ஆள்கள் பயன்படுத்திக்கொண்டு இந்நாட்டு செல்வமும் இந்நாட்டு பெண்களும் இப்பொழுதே எல்லோரும் பொது என்று கருதிவிடுவதன். மூலம் அந்தக் கொள்கைக்கே கேடு உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பணமுள்ளவன் என்று கருதிக் கொள்ளுகிற ஒவ்வொருவனும் தன் பணத்துக்கு
சர்க்கார் தபவையும் காவலையும் எதிர்பார்க்கவும், நம் பெண்களுக்குக் கல்வியும் சுதந்திர சக்தியும் வாழ்வுக்கு சொந்த தொழிலும் இல்லாததால் அவர்கள் இன்னமும் ஒருவனுடைய சொத்தாகவே இருந்து வரவேண்டி யிருப்பதால் சுதந்திரக்காதல் என்கின்ற கொள்கைக்கு கேடு உண்டாகக் கூடியதாகவும் இருந்துவர வேண்டியதாகின்றது. இந்தக் காரணங்களினாலேயே பொதுவுடமை, சமதர்மம் என்னும் விஷயமாக வெறும் பிரசாரம் செய்வது கூடகுற்றம் என்றும் அபாயம் என்றும் கருதுகிறவர்களுக்கு இடம் ஏற்பட்டு விடுகிறது. சர்க்காருக்கும் இதை அடக்க வேண்டும் என்று போலிச்சாக்கு உண்டாகிவிடுகிறது இன்றைய தனி உடமை உலகில் வெறும் ஆட்கள் என்பவர்கள். இதற்காகக் கோபித்துக் கொள்வதால் பயனில்லை. ஒரு தாசி சுதந்திர கற்பைப்பற்றிப் பேசினால் மக்கள் என்ன சொல்லுவார்கள். ஆளுக்கொரு கல்லெடுத்துப் போடுவார்களே ஒழிய பொறுமையாய் கேட்கக்கூட மாட்டார்களல்லவா? அதுபோலவே ஜீவனத்துக்கும் தொழிலுக்கும் மார்க்கமில்லாதவர்கள் பொதுஉடமைப் பிரசாரம் செய்தால் இன்றைய நிலைமையில் அதிகம் எதிர்ப்பு ஏற்படுவது என்பதிலும் கஷ்டம் ஏற்படுவது என்பதிலும் மக்கள் அபிப்பிராயத்தை சரியானபடி மதிக்கமாட்டார்கள்
என்பதிலும் ஆச்சரியமில்லை.
எப்படி இருந்தாலும் எலக்ஷன் போட்டி காலத்தில் பதவியையும் அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று தேசீயத்தின் பேராலும் சமுதாயத்தின் பேராலும் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பொது உடமைப் பிரசாரமோ, சமதர்மப் பிரசாரமோ செய்வது என்பது ஒருநாளும் அறிவுடமையான காரியம் என்றோ, யோக்கியமான காரியம் என்றோ சொல்லிவிட முடியாது.
கைப்பற்றியதற்கு அப்புறம் என்ன செய்வது என்பதில் விளக்கமோ தெளிவோ இருந்தால் தான் எலக்ஷன் பிரசாரங்களில் இவற்றை கலக்கிக் கொள்வது ஒரு அளவுக்காவது இப்போது ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கு இல்லாமல் இப்போது சட்டசபை ஓட்டு பெறுவதற்குச் செய்யப்படும் ஜவஹர்லால் போன்றவர்களின் அபேதவாதப் பிரசாரத்தை யாரும் கண்டிக்காமல் இருக்கமாட்டார்கள்.
அபேதவாதம் குற்றமென்று நாம் ஒருநாளும் சொல்லமாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது சாந்தியும் சமாதானமும் ஏற்படும் என்பதையும் நாம் வலியுறுத்துவோம். அது பிரசாரம் செய்யப்பட வேண்டிய காலம் எது என்பதையும் நாம் அறிவோம்
குடி அரசு - 1936 (1) 500
ஆனால் அது சமூக விஷயத்தில் உள்ள கொடுமைகளைக் களையாமலோ - களைய முயற்சி செய்யாமலோ ஏற்பட்டுவிடும் என்பதை நாம் ஒருநாளும் ஒப்புக்கொள்ளமாட்டோம். அபேதவாதம் மாத்திரமில்லாமல் சுதந்திரம், சுயராஜியம் என்கின்ற வார்த்தைகளுக்கும் என்ன அருத்தம் இருந்தபோதிலும் கூட சமுதாயக் கொடுமைகள் அதுவும் பிறவி காரணமாய் இருந்துவரும் கொடுமைகள் நீக்கப்படாமல் அவ்வார்த்தைகளை உச்சரிப்பது கூட யோக்கியமான காரியம் என்று நாம் சொல்ல மாட்டோம்
குடி அரசு - தலையங்கம் - 21.06.1936
501 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தேச மக்களே உஷார்!
வரப்போகும் அரசியல் சீர்திருத்தம் இந்தியர் விரும்பும் அளவுக்கு முற்போக்கானதாயில்லை; மற்றும் பல குறைபாடுகளும் அதில் அடங்கி யுள்ளன. எனினும் அரசியல் ஞானமுடையவர்கள் அதை ஒப்புக்கொண்டு அனுதாபத்துடன் அமல் நடத்தினால் மக்களுக்குப் பல நன்மைகள் செய்ய முடியுமென்றும் மேற்கொண்டு அதிகப்படியான உரிமைகள் பெற அடிகோலலாமென்றும் அனுபவ ஞானமுடைய அரசியல்வாதிகள் கூறுகிறார்கள். காங்கிரஸ்காரர் மதிப்பைப் பெற்றவரும் அசம்பிளியில் காங்கிரஸ் பெற்ற “வெற்றி மேல் வெற்றிகளுக்கு உதவி புரிந்தவருமான தோழர் ஜின்னாவின் அபிப்பிராயமும் அனேகமாக இதுவேயாகும் ஆனால் பூரண சுயேச்சை வாதிகளும் “கலப்பற்ற தேசபத்தி” யுடையவர் களுமான காங்கிரஸ்காரர்களோ, வரப்போகும் சீர்திருத்தம் வேண்டவே வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு, மாகாண கவர்னர்களுக்கும் வைசிராய்க்கும் அதிகப்படியான விசேஷ அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதே காரணமாம். எவ்வளவு திறமையுடைய மந்திரிகளுக்கும் அந்த விசேஷ அதிகாரங்களை மீறி உருப்படியான வேலை செய்யவே முடியாதாம் ஆனால் வரப்போகும் சீர்திருத்தத்தில் அமோகமான விசேஷ அதிகாரங்கள் புகுத்தப்பட்டதற்கு காங்கிரஸ்காரர்களே காரணம் என்று ஸர்.டெல் பகதூர்
சாப்ரு போன்ற விஷயமறிந்த அநுபவ அறிவாளிகள் கூறுகிறார்கள். அதன். உண்மை நிலை எப்படி இருந்தாலும் சரி; விசேஷ அதிகாரங்கள் அதி பயங்கரமானவை என்பதை காங்கிரஸ்காரர் எல்லாம் ஒப்புக்கொள்ளத்தான். செய்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர். சத்தியமூர்த்தியோ வேறுவிதமாக அபிப்பிராயப்படுகிறார். அவர் இந்திய அரசியல் சட்டத்தை மிக ஜாக்கிரதையாகப் படித்துப் பார்த்தாராம். விசேஷ
அதிகாரம் வெறும் ஓலைப்பாம்பாம். அதைக்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாதாம். சமஷ்டி அரசியல் ஏற்பட முடியாதபடி காங்கிரஸ்காரர் முட்டுக்கட்டை போடுவதைத் தடுக்க அந்த விசேஷ அதிகாரங்களுக்கு சக்தியே இல்லையாம். அப்படியானால் விசேஷ அதிகாரங்களைப் பார்த்து
காங்கிரஸ்காரர் ஏக கூச்சல் போடக் காரணம் என்னவென்று சாமானிய ஜனங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கு விடையளிக்கு முன் வேறொரு பம்பாய் காங்கிரஸ்வாதியான தோழர் கே.எம். முன்ஷி என்ன சொல்லுகிறார்.
குடி அரசு - 1936 (1) 502.
என்று பார்ப்போம். “எவ்வளவு சக்தி வாய்ந்த தேசீயக் கட்சிக்கும் அரசியல் திட்டத்தை உடைக்க முடியாது. அதாவது சர்க்காரைத் திக்குமுக்காடச் செய்யவோ அரசியல் ஆர்ப்பாட்டமான மாறுதல்கள் செய்யவோ முடியாது அந்தக் கட்சி ஆர்ப்பாட்ட மாறுதல்கள் செய்யும் ஆசையை அடக்கிக் கொண்டு உருப்படியான வேலைகளைச் செய்ய முற்பட வேண்டும். சக்தி சேகரிக்க வேண்டும். ஸ்திரத் தன்மையை வளர்க்க வேண்டும். அரசியலில் அன்றாட வேலைகளைச் செய்வதோடு கொஞ்சம் கொஞ்சமாக இலாக்காக்களைச் சீர்திருத்த வேண்டும். சிவில் சர்வீஸ்களைச் சமாளித்துக் கொண்டு கவர்னரை வெறும் பாவையாகப் பண்ணிவிட வேண்டும். இது சிரம சாத்தியமான காரியம். ரொம்பப் பொறுமையும், உழைப்பும் காட்ட வேண்டிய வேலை” என தோழர் முன்ஷி கூறுகிறார். தோழர் சத்தியமூர்த்தி ஆர்ப்பாட்டப் பேச்சுகளுக்கும் தோழர் முன்ஷியின் புத்திசாலித்தனமான வார்த்தைகளுக்கும் எவ்வளவு வித்தியாசமிருக்கிறது பாருங்கள். சட்ட சபைக்குள் புகுந்து அரசியலை உடைத்து விடுவதாகக் கூறுவது ஒரு செம்புக்காசும் விலை பெறாத பைத்தியக்காரப் பேச்சு. பாமர மக்கள் அப்பேச்சைக் கேட்டு ஏமாறலாம்; வியப்படையலாம்; மூர்த்தி கூட்டத்தாரைக் கொண்டாடலாம். ஆனால் விவேகிகள் ஆதரிக்கவே மாட்டார்கள் அதனாலேயே, “மந்திரி பதவி ஒப்புக்கொண்டு அரசியலை உடைத் தெறிவோம் என்று கூறுவது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் வித்தை'' என காங்கிரஸ் தலைவர் பண்டித ஜவஹர்லால் கூறுகிறார்.
மற்றும் சென்ற அசம்பிளித் தேர்தலின் போது சத்தியமூர்த்தி கோஷ்டியார் என்ன சொன்னார்கள். “சட்டசபைக்குள் புகுந்து அரசியலைக்
கவிழ்த்து பிரதிநிதித்துவ பை கூட்டி எதிர்கால அரசியலை அமைப்போம்” என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அவர்கள் சட்டசபைக்குள் புகுந்து சுமார் இரண்டு வருஷமாயிற்று. பிரதிநித்துவ சபையைப் பற்றிய பேச்சையே காணவில்லை. இப்பொழுது தோழர் சத்தியமூர்த்தி என்ன
சொல்லுகிறார் என்றால் “புதியஅரசியலைஅமல் செய்வது அசாத்தியமாகும்படி செய்ய முடியாவிட்டாலும் மிகச் சங்கடமாகும்படியான தோரணையில்
சர்க்கார் நிர்வாகத்தை மந்திரிகள் நடத்தி, பரஸ்பர சம்மதத்தின் பேரில் புதிய அரசியல் திட்டம் ஒன்றைத் தயாரிக்கும் நிர்ப்பந்தமான ஓர் நிலைமையை மந்திரிகள் உண்டாக்கிவிட முடியும்” என தோழர் சத்தியமூர்த்தி வழவழ வென்று பேசி மழுப்பப் பார்க்கிறார்.
தோழர் சத்தியமூர்த்தி மழுப்பலை நினைக்கும் போது சாமானியர் இல்லங்களில் பிரதி தினமும் நடைபெறும் புருஷன் பெண்டாட்டி சண்டைதான் நமது ஞாபகத்துக்கு வருகிறது. புருஷன் பசியோடு வீட்டுக்கு வருகிறான். சாப்பாடு தயாரில்லை. சீறி விழுந்து பெண்டாட்டியை அடிக்கிறான். அவள் கோபித்துக்கொண்டு தாய்வீடு செல்லப் புறப்படுகிறாள். அவள் தாய்வீடு சென்றால் வீடு குட்டிச்சுவர்தான். வேறுகதியில்லை
58 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
புருஷனே மனைவியைக் கெஞ்சி மன்றாடி சமாதானம் கூறி இருவரும் மறு நிமிஷம் ராஜியாய்ப் போய்விடுகிறார்கள். மந்திரி பதவி ஒப்புக்கொண்டு இம்மாதிரி கவர்னருடன் புருஷன் பெண்டாட்டிச் சண்டை போட்டு காங்கிரஸ்காரர் விரும்பும் பூரண சுயேச்சையை வெகு சுளுவில் பெற்று விடலாமென்று சாது சத்தியமூர்த்தி மனப்பால் குடிக்கிறார். அவரது இந்த பைத்தியகாரப் பேச்சுக்கு எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுக்கலாம் என்பதை தேச மக்களே நிதானம் செய்து கொள்ளட்டும்.
முன்னுக்குப்பின் முரணாகவும் சந்தர்ப்பத்துக்குத் தக்க படியும் பேசுவதில் காங்கிரஸ்காரரைப் போன்ற சமர்த்தர்கள் இல்லவே இல்லை. அசம்பிளித் தேர்தலின் போது வரப்போகும் அரசியல் சீர்திருத்தத்தைக் கண்ணெடுத்தும் பாரோம்; கையாலும் தொடோம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அசம்பிளியில் அரசியல் சீர்திருத்தத்தைக் கண்டித்து கத்து கத்தென்று கத்தினார்கள். அவ்வாறு கத்தியவர்களில் தோழர் சத்தியமூர்த்தியும் ஒருவர். இப்பொழுது அவர் மந்திரி பதவியைக் கைப்பற்ற தவங்கிடக்கிறார். அவருடைய பேச்சு வங்காள காங்கிரஸ் தலைவர் தோழர் சரத்சந்திர போசுக்குக்கூடப் பிடிக்கவில்லை. “புதிய அரசியல் திட்டத்தைப்பற்றி டில்லி அசம்பிளியில் சத்தியமூர்த்தி பேசியிருப்பதைப் போல் நான் பேசியிருப்பே னாயின் புதிய அரசியல் திட்டத்தின் கீழ் பதவி ஏற்பது அவசியமென்று ஒரே ஸ்தாயியில் பேச நான் மிகவும் வெட்கப்பட்டிருப்பேன்'' என அவர் கூறுகிறார். ஆனால் சத்தியமூர்த்தி கோஷ்டியாரிடம் வெட்கத்தையும் மானத்தையும் ரோஷத்தையும் எதிர்பார்க்க முடியாதென்பதை தோழர் சரத்சந்திர போஸ் அறியார் போலும்
காங்கிரஸ்காரர் மந்திரி பதவி ஒப்புக்கொள்வதை நாம் ஆட்சேபிக்க வில்லை. மந்திரிபதவி ஒப்புக்கொண்டு அரசியலைக் கவிழ்த்து விடுவோம், மலையைப் பொடியாக்கிவிடுவோம், கடலை மடுவாக்கி விடுவோம் எனப் புலம்புவதையே நாம் ஆட்சேபிக்கிறோம். காங்கிரஸ்காரர் கடுகத்தனையாவது யோக்கியப் பொறுப்புடையவர்களானால், அசம்பிளித் தேர்தல் காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்தபடி, அரசியலைக் கவிழ்த்து பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை நிர்ணயம் செய்ய முற்பட வேண்டும் அவ்வாறு செய்ய ஆற்றலில்லாதவர்கள் மந்திரி பதவி ஒப்புக்கொண்டு ஏதேதோ சாதிக்கப் போகிறதாகக் கூறுவது வெறும் ஹம்பக் பேச்சாகும். காங்கிரஸ்காரருக்குஅரசியல் ஞானமும்இல்லை;திடமானகொள்கையுமில்லை, பாமர மக்களை ஏமாற்றி அவர்களுடைய ஆதரவைப் பெறும் பொருட்டு பகட்டாகவும், ஆடம்பரமாகவும் ஏதாவது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார்கள். “சட்ட சபைகள் மூலம் நாட்டுக்கு நன்மை செய்ய முடியும் என்று உணர நமக்கு 16 வருஷம் பிடித்தது” என தோழர் பிரகாசமே பிரலாபிக்கிறார். இதனால் காங்கிரஸ்காரருக்கு அனுபவ ஞானம் கிடையாது என்பது புலனாகவில்லையா?'
குடி அரசு- 1936 (1) 304
1920 முதல் நாளிது வரை காங்கிரஸ்காரர் கூறியுள்ளவைகளில் ஒரு சின்னக் காரியத்தையாவது சாதித்திருக்கிறார்களா? காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டதைப் பற்றி அவர்கள் வெகு பிரமாதமாகப் பேசிக் கொள்கிறார்கள். சூது வாதறியாத பாமர மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சை நம்பி சட்ட மறுப்பில் ஈடுபட்டுப் பாழாய்ப்போவதைப் பார்க்கப் பொறாத ஒரு “நல்லெண்ணமுடைய வைஸ்ராய், பாழும் சட்ட மறுப்பை நிறுத்துவதற்காகச் செய்த ஒரு யுக்தியே காந்தி-இர்வின் ஒப்பந்தம் அதனால் இந்திய அரசியல் அமைப்பில் ஒரு சுள்ளாணி கூட மாற்றப்பட வில்லை. மக்கள் உப்புக்காய்ச்சும் சுதந்திரமும் பெற்றுவிடவில்லை. 1920-ல்
இருந்த நிலைமையிலேயே இந்தியா இன்று இருந்து வருகிறது இதைப்பற்றி ராசீபுரம் மகாநாட்டுத் தலைவர் தோழர் செளந்திரபாண்டியன் அவர்கள் தலைமையுரையில் வெகு ஆணித்தரமாக எடுத்துக்காட்டி யிருக்கிறார். ஆகவே இனி பொதுமக்கள் காங்கிரஸ்காரரை நம்பினால் மேலும் கீழான நிலைமையையே இந்தியா அடையும். எனவே அரசியல் ஆர்ப்பாட்டக்காரரின் மாய வலையில் சிக்காமல் தேசமக்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.06.1936
505 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
வேதம் அல்லது பைபில் விதிகள்
வினா:- பைபில் விதிகள் எவை?
விடை:- சமயாசாரியர்களால் தேவ வாக்கென மதிக்கப்படுவன
வெல்லாம் பைபில் விதிகள் எனப்படும்.
வினா: பைபில் விதிகள் அதி முதல் ஒரே மாதிரியாக இருந்து வந்திருக்கின்றனவா?
விடை:- இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்கள் எல்லாம் யூதர்களா யிருந்ததினால் பழைய ஏற்பாடே கடவுள் வாக்கு என்றும் கிறிஸ்து மதத்துக்கு அதுவே ஆதாரமென்றும் நம்பினார்கள்
வினா:- இதைப்பற்றி அப்போஸ்தலகர்கள் என்ன சொன்னார்கள்?
விடை:- புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டைப்போல் முக்கியமான தென்று அவர்கள் நம்பவில்லை யென்றே தெரிய வருகிறது
வினா:- பழைய ஏற்பாட்டுக்கு சமமான நிலையில் புதிய ஏற்பாடு எப்பொழுது மதிக்கப்பட்டது?
விடை:- யூதக் கிறிஸ்தவர்களுக்கும் இதர கிறிஸ்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதினால் கத்தோலிக்க திருச்சபை ஸ்தாபனமாயிற்று. மத சம்பந்தமான விஷயங்களில் முடிவு கூற கத்தோலிக்க திருச்சபைக்கே அதிகார முண்டென மதிக்கப்பட்டது. எனவே பொதுவாக கடவுள் வாக்கென மதிக்கக்
கூடிய ஒரு நூலுக்குத் தேவையுண்டாயிற்று. உடனே பல வேத விதிகள். தொகுக்கப்பட்டன. கடைசியில் அவை புதிய ஏற்பாடாக உருப்பெற்றன.
வினா:- இந்தப் புதிய ஏற்பாடு எப்பொழுது உருவாயிற்று?
விடை:- இரண்டாவது நூற்றாண்டின் பின் பகுதியில்
வினா:- ஆதிவேத விதிகளில் அடங்கிய புஸ்தகங்கள் எவை? விடை ஜஸ்டின், டெர்ட்டுலியன், இரேனியஸ், ஆரிஜென் முதலிய பாதிரிமார் ஒவ்வொருவரும் தனித்தனியாக அப்புத்தகங்களைப் பற்றி ஒரு பட்டியல் வெளியிட்டார்கள். வினா: முரோட்டரி வெளியிட்ட வேத விதிகள் எவை?
குடி அரசு - 1936 (1) 506
விடை:- அவை கி.பி 170-ல் வெளியாயிற்று. அதில் ஹிப்ரூக்களுக்கு பால் எழுதிய கடிதங்களும் பீட்டர், ஜான், ஜேம்ஸ் வகுத்த விதிகளும் அடங்கியிருக்கவில்லை.
வினா:- சிரியன் வேத விதிகள் எவை?
விடை:- அதில் பீட்டரின் இரண்டாவது கடிதமும், ஜான் எழுதிய மூன்றாவது கடிதமும் அப்போஸ்தலர்கள் சட்டங்களும் தேவ வாக்குகளும் அடங்கியிருக்கவில்லை. வினா: தகராறில் இருந்து வரும் இதர பைபில் நூல்கள் எவை?
விடை:- பால் கடிதங்கள், ஜேம்ஸ் கடிதங்கள், அப்போஸ்தலர்கள். சட்டங்கள் அடங்கிய புத்தகங்கள், பழைய ஏற்பாட்டிலுள்ள ஜாப் எஸ்தர் முதலியோர் வசனங்கள் முதலியன தகராறில் இருந்து வருகின்றன.
வினா:- லூதர் பைபில் என்றால் என்ன?
விடை:- தேவவாக்குகள் அடங்கிய புத்தகமும் ஜேம்ஸ் கடிதங்கள் மெய்யாகவே கடவுள் வார்த்தைகள் என்று லூதர் நம்பவில்லை.
வினா:- பைபில் விதிகளின் தற்கால நிலைமை என்ன?
விடை:- இங்கிலாந்து சர்ச்சு 39-வது விதி ஆறாவது பிரிவில் கூறப்பட்டிருப்பதாவது:- “பழைய புது ஏற்பாட்டு விதிகள் சந்தேகமற்ற ஆதாரங்கள் என வேத நூல்களின் பெயரால் ஒப்புக் கொள்கிறோம்.” ஆனால் இது தெளிவில்லாததாகவும் தப்பு வழியில் செலுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. ஏனெனில் புதிய ஏற்பாட்டில் ஆட்சேபிக்கப்படாத பகுதி எதுவும் இல்லவே இல்லை.
வினா:- கத்தோலிக்க பைபில் புராடஸ்டன்டு பைபிலுக்கும் பொருத்தமாக இருக்கிறதா?
விடை:- இல்லை. கத்தோலிக்க பைபிலில் கடவுள் வாக்காக
மதிக்கப்படும் 72 புத்தகங்கள் அடங்கி யிருக்கின்றன.
வினா:- அது எப்படி?
விடை:- மத சம்பந்தமற்றவை என புராடஸ்டண்டுகள் நிராகரிக்கும் பலவற்றை கத்தோலிக்கர் தேவ வாக்கென நம்புகிறார்கள்.
வினா:- அந்தப் புஸ்தகங்களை கடவுள் வாக்கென மதியாதவர்களை கத்தோலிக்கர் எவ்வாறு நடத்துகிறார்கள்?
விடை:- டிரண்டில் கூடிய கத்தோலிக்கப் பாதிரி சங்கத்தார் அவர்கள்.
மீது ஒரு சாபம் பிறப்பித்திருக்கிறார்கள்.
வினா:- கத்தோலிக்க பைபில் எப்பொழுது மொழிபெயர்க்கப்பட்டது?
507 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை:- நான்காவது நூற்றாண்டில் செயிண்டு ஜெரோமால் அது மொழிபெயர்க்கப்பட்டதென நம்பப்படுகிறது
வினா:- அந்த மொழிபெயர்ப்பின் பெயர் என்ன?
விடை:- அதற்கு லத்தீன் வல்கேட்டு என்று பெயர்.
வினா:-கத்தோலிக்கபைபில் எப்பொழுதாவது திருத்தி எழுதப்பட்டதா? விடை:- ஆம், பாப்பரசர்கள் 5வது சிக்டள்ஸாலும் 8வது கிளமெண்டாலும் திருத்தி எழுதப்பட்டது
வினா:- தற்கால புராடஸ்டண்டு பைபில் எப்பொழுது மொழி பெயர்க்கப்பட்டது?
விடை:- 1611-ல் இங்கிலாந்து அரசர் ஜேம்ஸ் காலத்து மொழி
பெயர்க்கப்பட்டது
வினா:- அதற்குப் பிறகு அது திருத்தப்பட்டதா?
விடை: ஆம். 1884-ல் ஒரு புது மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.
வினா:- ஜேம்ஸ் அரசர் காலத்து வெளி வந்த மொழி பெயர்ப்புக்கும்
இதற்கும் ஏதாவது வித்தியாச முண்டா?
விடை:- ஆம், வித்தியாசமுண்டு
வினா:- வித்தியாசங்கள் எவை?
விடை:- ஜான் 4:37-ல் “சுவர்க்கத்தில் மூவர் இருக்கிறார்கள். அவை பிதா, புத்திரன், தேவ ஆவி. அவை மூன்றும் ஒன்றே” திருமூர்த்திக் கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட இந்த வாக்கியம் புது மொழி
பெயர்ப்பில் காணப்படவில்லை.
வினா:- வேறு வித்தியாச முண்டா? விடை:- புது மொழிபெயர்ப்பில் மார்ஜினில் பொறிக்கப்பட்ட பல குறிப்புகளினால் இதுவரை மறுக்க முடியாத ஆதாரங்களாய் நம்பப்பட்ட வைகளைப்பற்றி சந்தேகங்கள் உண்டாகின்றன.
வினா:- ஒரு உதாரணம் கூறு
விடை:- மார்க்கு எழுதிய சுவிசேஷத்தில் கடைசி அத்தியாயத்தில் பின் வருமாறு ஒரு குறிப்புச் சேர்க்கப்பட்டிருக்கிறது. “மிகப் பழமையான இரண்டு கிரேக்கக் கையெழுத்துப் பிரதிகளும் வேறு சிலவும் 9 வது வாக்கியத்திலிருந்து கடைசி வரை நிராகரித்து விட்டன” மற்றும் பின் வருமாறு ஒரு குறிப்புச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ''வேத வாக்கியங்களில்: பல பிரதி பேதங்களை மற்றும் சிலர் கூறுகிறார்கள்.”
வினா:- அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்கியங்கள் மிக முக்கியமானவைகளா?
குடி அரசு - 1936 (1) 508
விடை:- ஆம்; அவை இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றியும் சுவர்க்கம் சென்றதைப்பற்றியும் நித்திய நரக தண்டனையைப் பற்றியும் கூறுகின்றன.
வினா:- அந்தக் குறிப்புகளினால் என்ன ஊகிக்கக் கிடக்கின்றன.
விடை:- மொழி பெயர்ப்பாளர் பல கையெழுத்துப் பிரதிகளிலிருந்து கடவுள் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்தார்களென்று ஊகிக்க இடமிருக்கிறது. வினா:- வெளிவந்துள்ள மொழி பெயர்ப்புகள் இவ்வளவு தானா?
விடை:- பிரமாணமாக ஒப்புக் கொள்ளப்பட்ட பைபில்கள் சரியல்ல வென்று நம்பி வேறு பல பண்டிதர்கள் பல மொழி பெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
வினா:- புராடஸ்டண்டுகளும் கத்தோலிக்கரும் பைபிலை ஒரே மாதிரியாக மதிக்கிறார்களா?
விடை:- அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக மதிக்கவில்லை
வினா:- வித்தியாசத்தை விளக்கு:
விடை:- கடவுள் வார்த்தைக்கு மகிமையும் அதிகாரமும் கற்பிப்பது திருச்சபையே என்று கத்தோலிக்கர் நம்புகிறார்கள்.
வினா:- அதற்கு அவர்கள் கூறும் நியாயம் என்ன?
விடை:- அகஸ்தியன் வார்த்தைகளை அவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். “நான் அறிந்த விஷயங்களை விட அறியாத விஷயங்கள் பைபிலில் ஏராளமாக இருக்கின்றன” என்று அவர் கூறியிருக்கிறாராம் ஒரு பாஷியகாரர் உதவியின்றி அவருக்கே கடவுள் வார்த்தைகளை உணர முடியாதானால் சாமானியருக்கு எப்படி முடியுமென்று கத்தோலிக்கர் கேட்கிறார்கள்.
வினா:- பைபிலுக்கு இதரர் கூறும் வியாக்கியானங்களை கத்தோலிக்கர்கள் நம்புகிறார்களா?
விடை:- அவர்கள் நம்பவில்லை.
வினா:- ஜனங்கள் பைபில் வாசிப்பதை அவர்கள் ஆதரிக்கிறார்களா?
விடை:- பிஷப்பின் அநுமதியின் பேரிற்றான் ஜனங்கள் பைபில்
வாசிக்கலாமாம்.
வினா:- பைபிலைப் பற்றி புராடஸ்டண்டு கொள்கை என்ன?
விடை:- பைபில் சரியான கடவுள் வார்த்தை என்றும் அதை ஒவ்வொருவரும் வாசித்துப் பொருளுணர வேண்டு மென்றும் புராடஸ்டண்டுகள் கூறுகிறார்கள்:
வினா:- தவறு செய்யக் கூடிய மக்கள் தவறில்லாத பைபிலை எப்படி வாசித்துப் பொருளுணர மூடியும்?
509 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
விடை: தேவ ஆவி உண்மைப் பொருளை எல்லோருக்கும் விளக்கிக் கூறுமென்று சொல்லப்படுகிறது
வினா:- தேவ ஆவி எல்லோருக்கும் ஒருப் போலப் பொருளை விளக்கிக் கூறுகிறதா?
விடை:- இல்லவே இல்லை. பைபில் வாக்கியங்களுக்குப் பலதிறப் பட்ட பாஷியங்கள் இருக்கின்றன.
வினா:- ஞானஸ்தான விஷயத்தில் புராடஸ்டன்டுகளெல்லாம் ஒற்றுமையான அபிப்பிராயமுடையவர்களா யிருக்கிறார்களா?
விடை:- இல்லை.
வினா:- தேவ சங்கற்ப விஷயத்தை எல்லாரும் ஒப்புக்கொள்கிறார்களா?
விடை:- இல்லை.
வினா:- நித்திய நரக தண்டனையை எல்லாரும் நம்புகிறார்களா?
விடை:- இல்லை.
வினா:- பாவமன்னிப்பு எல்லாருக்கும் உடன்பாடுதானா?
விடை:- இல்லை.
வினா:- இயேசு தேவகுமாரன் என்று எல்லோரும் நம்புகிறார்களா?
விடை:- இவ்விஷயங்களைப் பற்றி யெல்லாம் தேவன் கூறியிருப்பதாக
ஒப்புக் கொண்டாலும் இயேசு தேவ குமாரன் என்று எல்லோரும் நம்ப வில்லை,
வினா:- இவ்விஷயங்களைப் பற்றி தேவன் சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறியிருந்தால்கிறிஸ்தவர்களுக்குள்ளே அபிப்பிராய பேதமிருக்கஇட முண்டா?
விடை:- இல்லை.
வினா:- அபிப்பிராய வித்தியாசமுடைய மத வாதிகளுக்குள் சமரசம் ஏற்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை:- பழைய வேத வாக்கியங்களை யெல்லாம் விளக்கி தேவன் மீண்டுமொரு முறை கூற வேண்டும்
வினா:- பைபில் தேவ வாக்கு என்பதை ஆட்சேபிப்பதேன்?
விடை:- பைபில் தேவ வாக்காயிருந்தால் உண்மை ஒரு குலத்தாருக்கே உரியது என்று ஏற்பட்டு விடும்.
வினா:- வேறு ஆட்சேபணை யுண்டா? விடை:- ஆராய்ச்சிக்கே தேவையில்லை யென்று ஏற்பட்டு விடும்;
புது உண்மைகளை அடக்க பாதிரிமாருக்கு அதிகாரம் கிடைத்துவிடும்; விசால புத்தியுடையவர்களை அவர்கள் ஹிம்சிக்கத் தொடங்கி விடுவார்கள்.
வினா:- இதைப்பற்றி சரித்திரம் என்ன சொல்லுகிறது?
குடி அரசு- 1936 (1) 510
வினா:- அறிய வேண்டியவையெல்லாம் குர் ஆனில் அடங்கி யிருப்பதினால் அலக்சாண்டரியா நூல் நிலையத்தை எரித்துச் சாம்பலாக்க உமார் கட்டளையிட்டானாம். அதுபோலவே பைபிலில் எல்லா உண்மைகளும் அடங்கி யிருப்பதாக நம்பி கத்தோலிக்கர் கிரேக்க ரோம நாகரிகத்தை எதிர்த்துப் போராடி அடியோடு ஒழித்தார்கள். தற்காலத்து விஞ்ஞான. சாஸ்திரிகளும் புது விஷயங்களைக் கண்டு பிடிப்பவரும் அவிசுவாசிகள் எனப் பழிக்கப்படுகிறார்கள்.
வினா:- இந்த திருஷ்டாந்தங்களினால் நாம் முடிவுகட்ட வேண்டியதென்ன?
விடை:- வேதங்கள் மக்கள் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை என்றுதான் முடிவுகட்ட வேண்டும்
வினா:- பைபிலைப் பற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்பொழுது எத்தகைய அபிப்பிராயம் இருந்து வருகிறது?
விடை:- அறிவு விளக்கம் பெறாத ஆதி கால மக்கள் எழுதிய நூல் என்ற அபிப்பிராயமே இருந்து வருகிறது
வினா:- பைபிலை யாராவது தேவ வாக்கென மதிக்கிறார்களா?
விடை:- கல்வியறிவில்லாதவர்கள் மதிக்கிறார்கள்.
வினா:- பைபிலினால் உபயோகமென்ன?
விடை:- பைபில் வாக்கியங்களில் ஓப்புக்கொள்ளத்தக்கவைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். மற்றவைகளைத் தள்ள வேண்டும்
பகுத்தறிவு (மா.இ.) - வினா விடை - ஜுன் 1936
11௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஆண் பெண் சமத்துவம்
ஆண் மக்கள் தங்களுடைய பெண் மக்களை அதாவது தாங்கள். மிகுதியும் மரியாதை செலுத்தும் தாய்மார்களாயிருந்தாலும் சரி, அன்பு
செலுத்தும் சகோதரியாயிருந்தாலும் சரி, காதலுக்குரித்தான மனைவிகளா
யிருந்தாலும் சரி ஒரே படியாக அவர்களைக் கேவலமாகவே எண்ணியும்,
மதித்தும் வருவது சகஜமாக இருந்து வருகிறது. நமது நாட்டில் வெகுகாலமாக இம்மாதிரி பெண்களை இழிவாகக் கருதப்படுவதற்கு நமது சாஸ்திரங்களும், பண்டிதப் பெரியோர்களும், முற்றும் துறந்த முனிவர்களென்று சொல்லப் பட்டவர்களும் ஒருவித காரணமுமின்றி பெண்களைக் கேவலமாக வர்ணித்து வந்ததோடு, பாரபக்ஷமாக ஏட்டிலும் எழுதிவைத் திருக்கின்றனர். இதைப் படிக்கும் மக்கள் சாதாரணமாக தங்கள் பகுத்தறிவைக் கொண்டே ஆராயாமல் தங்கள் பெண்மக்களைக் கேவலமாக நடத்தி வந்ததோடு அவர்களுக்கு எவ்விதத்திலும் சமத்துவம் ஏற்படாதபடி சட்ட திட்டங்களையும் செய்து அதைப் பழக்கத்திலும் கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பழக்கமானது இந்தியர் ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழமாகப்
பதிந்து விட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பலனால் மக்கள் சிறிது சிறிதாக உண்மையை உணர்ந்து வருகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆண் பெண்: சமத்துவத்தைப் பற்றி மேனாட்டு மனோதத்வ நிபுணர்கள் செய்யும் முடிவையும் நாம் பெரிதும் கவனிக்க வேண்டியது அவசியம்.
ஆடவர்கள் சாதாரணமாகப் பெண்களை “பேதையர்க" ளென்று அழைப்பதில் எவரும் பின் வாங்குவதில்லை. அடுப்பங்கரையில் சட்டி சுரண்டும் அம்மையர்களைத்தான் இவ்வாறு கூறிவிடுகிறார்களென்றாலோ. தற்கால படிப்புப் படித்து ஆண்களைப் போலவே பி.ஏ., எம்.ஏ., பட்டம் பெற்றவர்களையும் கூட “எப்படியிருந்தாலும் பெண்புத்தி பின் புத்தி தானே; பேதமை என்பது மாதர்க்கணிகலன்" என்று அலட்சியமாகக் கூறி விடுகிறார்கள்.
இதைப் போல் பாமர மக்கள் கூறுவதுதான் ஒருபுறமென்றால் படித்த ஆண்களும் இவ்வாறு கூறுவதற்கு கூச்சமடைவதில்லை. அவர்கள் கூறுவ தெல்லாம் என்ன? பெண்களுக்கு 'மூளையில்லை' என்பதுதான் பொதுவானது. இது மனிதனுடைய பழக்க வாசனையா, அல்லது இயற்கைவாசனையா: என்று கூட நாம் சில சமயங்களில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. என்றாலும்
இது ஒரு அலட்சிய புத்தியினாலும், தற்பெருமையினாலும் நாளா வட்டத்தில்
குடி அரசு - 1936 (1) 512
நிலைபெற்று விட்ட ஒரு தப்பபிப்பிராயமென்றே கூறவேண்டும். இந்தக் காரணத்தினாலேயே அவர்களை அலட்சியம் செய்து சரியான கல்வியை அளிக்காமல் இருந்து விட்டார்களெனக் கூறலாம். பெண்கள் புத்தியில்லா தவர்களென்று பொதுவாகக் கருதப்படுவதால் ஒவ்வொரு ஆடவரும் தங்கள் பெண்டிர்க்கு எல்லா விஷயத்திலுமே தங்களுடைய “புத்திசாலித் தனமான" யோசனைகளைக் கூற முன் வந்து விடுகிறார்கள். சமைக்கின்ற வேலை முதற்கொண்டு வீட்டு வேலைகள் சகலமும் சேர்த்துப் பிள்ளை பராமரிப்பு வரையிலுங் கூட விஷயங்கள் தங்களுக்கு எந்த விதத்திலும் அனுபோகமில்லாதிருந்துங் கூட தங்களுக்கு அதிக புத்தியுண்டு என்கின்ற ஒரு தற்பெருமையினால் - எதையும் யூகித்து சொல்லக்கூடிய திறமை உண்டென்கின்ற அசட்டுத் தைரியத்தால் தங்கள் யோசனையைப் பெண் களுக்குக் கூற முன் வந்து விடுகிறார்கள். இந்த சம்பவமானது எந்தக்
குடும்பத்திலும் சகஜமானதென்றாலும் அவர்கள் அப்படிக் கூறும் சந்தர்ப்பங்கள் நேரும்போதெல்லாம் குடும்பத்திற்குள் கொஞ்சம் “மூறு முறுப்பு” ஏற்படாமல் போவதில்லை. சாதாரணமாக வீட்டிலுள்ள பெண்டிர் அந்த ''நிபுணத்தனமான'' யோசனையை எதிர்த்துக் கண்டிக்காமல் விடுவதில்லை. சில சமயம் ஆத்திரம் பொங்கி தாங்கள் எப்பொழுதும்
காட்டும் அடக்கத்தையும் கூட மீறி “நீங்கள் பேசுவது இன்னதென்றே புரியாமல் பேசுகிறீர்கள்; உங்கள் வேலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்'” என்று கூடச் சொல்லி விடுவார்கள். ஆடவர் தற்பெருமைக்குச் சிறிது ஆட்டங்கொடுத்தாலும் தனது படிப்பை விடுவதில்லை. ஏனெனில் தன் பெண்ஜாதியைவிட இல்லை, மற்ற எந்தப் பெண்களையும் விடவே தனக்கு “அதிகமான மூளை” இருப்பதாகவே அவரது எண்ணம். அதோடு அதை “நிரூபித்து” காட்டக் கூட முடியுமென்று கூறுவார்கள். அதற்கு உதாரணங்களின் மேல் உதாரணம் எடுத்துக்காட்டுவார்கள். எது எப்படி யிருந்தாலும் இவர்கள் இம்மாதிரியாக தம் பெண் ஜாதிகளுக்கு குடும்ப விஷயத்தைப்பற்றி யோசனை கூறப்போகும் போதெல்லாம் “முறுமுறுப்பு” ஏற்படுவதற்குக் காரணந்தான் என்ன வென்று யோசித்தாலோ இவர்
கூறும் 10 யோசனைகளில் 9L யோசனைகள் சரியாகயிருப்பதில்லை. ஆனால்
இவர் யோசனை சரியென்று இவர் நிரூபிப்பதற்கு பேசுகின்ற பேச்சோ ஊரை வளைக்கும்; ஆடுகின்ற ஆட்டமோ சொல்ல முடியாது. மற்ற உப அங்கங் களுக்கும் குறைவிருக்காது. இருந்தும் என்ன பயன். சில சமயம் இவர். கூறப்புறப்படும் யோசனைகள் யாவுமே பிசகாய்ப்போய் விடுவதுண்டு.
ஆனால் அவர்கள் சச்சரவு எப்படியிருந்தாலும் இருந்து போகட்டும், மனோதத்வ நிபுணர்கள் இது விஷயமாக என்ன கூறுகிறார்களென்றாலோ பெண்டிர்க்கும் “சரியான மூளை உண்டு” என்கிறார்கள். இது உத்தேச மென்றோ, கிட்டத்தட்ட என்றோ, வேறு சித்தாந்தமென்றோ சொல்லி விட
513 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
முடியாது. அவர்கள் நேரடியாகச் சோதித்துப் பார்த்து ஆராய்ந்தறிந்து கண்டறிந்த முடிவுண்மைகளாகும். அமெரிக்காவிலே ஒரு கல்லூரியிலுள்ள 115 ஆண்களையும், 111 பெண்களையும் எடுத்துக்கொண்டு அவர்களுடைய புத்தித்திறமையைப்பற்றி வெகு கவனமாக சோதனை செய்து பார்த்ததில் சராசரியாக பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி, சமத்துவமாக 142
மார்க்குகள் கொடுத்தார்களாம். அதை விடுத்து பல பிரபல்யமான கல்லூரி களிலுள்ள எல்லோரையும் ஒன்று சேர்த்து மொத்தம் 3175 ஆண்களையும், 1575 பெண்களையும் சோதித்துப்பார்த்ததில் அவர்களுடைய கல்வித் திறமையானது ‘g கிரேடு, 9 கிரேடு முதலிய இரண்டுமே சேர்த்து ஆண்களுக்கு 100க்கு 75.4 மார்க்குகள் என்றும், பெண்களுக்கு 100க்கு 75.2 மார்க்குகள் என்றும் முடிவிற்கு வந்தார்களாம். அமெரிக்காவில் ஹேர்வார்டு பல்கலைக்கழகமானது சற்று மேல் தரமான கல்லூரி. இதனுடைய மாணவர்களையும், உயர்தாராட்கிளிப் பெண் கல்லூரியிலுள்ள மாணவி களையும் சோதித்து சில மாதங்கள் அவர்களுடைய அறிவுத்திறமையை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் மாத்திரம் முதல் தரமானவர்களென்று தேர்ந்தெடுக்கப்பெற்று அவர்களுக்கு 86%
மார்க்குகள் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஹார்வார்டு மாணவர் எல்லோரையும் விட நிரம்பத் தாழ்ந்ததான 8% மார்க்கு வாங்கினதைப்பற்றி யாவரும் ஆச்சரியப்பட நேர்ந்தது. ஆனால் வெகு குறைந்த மார்க்குகள் வாங்கின பெண்மணிகள் மாத்திரம் 28% மார்க்குக்கு குறையாமல் வாங்கி
யிருந்தார்கள். பொதுவாக எல்லோரையும் சேர்த்து சராசரி பார்த்தபொழுது மாணவர்களுக்கு 100க்கு 50.5 ஆகவும், மாணவிகளுக்கு சராசரி 100க்கு
55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதில் பெண்களுக்கும் ஆண்களுக்கு மிடையே அறிவு, திறமை இவைகளில் அதிகமான வித்தியாசங்கள் இருக்கவில்லை என்பது திட்டமாகத் தெரிகிறது. மற்றும் அவரவர்களுக்கு இட்ட வேலைகளில் சிறிதும் ஏற்றத்தாழ்வு கூற முடியாதபடி திறமையாகவே நடத்தக்கூடிய ஆற்றல் உண்டென்று தெரிகிறது
இப்பொழுது நாம் சாதாரணமாக உலகத்திலேயே உள்ள ஆண், பெண்களையும் எடுத்துக்கொண்டோமானாலும், திறமைசாலிகளான பெண்கள் சராசரியில் சமத்துவமாகவே தோன்றியிருப்பதாகக் கண்டு கொள்ளலாம். ஆண்களுக்குப் பிறகு எவ்வளவோ காலத்திற்குப் பின்னால் பெண்கள் தங்கள் சுதந்திரங்களைப் பெற்றிருந்தாலும் இந்தக்
குறுகிய காலத்திற்குள் நல்ல புகழ்பெற்ற ஆசிரியைகளும், நடிகர்களும், பிரசங்கிகளும், வர்த்தகம் முதலான துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களும், எண்ணிக்கையில் கூடுமான வரையில் வீதாச்சாரத்திற்குக் குறையா. தென்பது திண்ணம், இந்தியாவின் பெண்கள் சுதந்திரமோ வெகுகாலமாகத் தடுக்கப்பட்டிருந்தும் அவர்களிலும் புகழ் பெற்றவர்களும், அறிவிலும்,
குடி அரசு- 1936 (1) 514
ஆற்றலிலும், ஆண்களோடு சமத்துவமாக வைத்துப் போற்றக்கூடிய இயல் புடையவர்கள் எத்தனையோ பேர் இந்த குறுகிய காலத்திற்குள் தோன்றி யிருக்கிறார்களென்பதையும் கண்டு கொள்ளலாம்.
இதனால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள சமத்துவமானது ஒரே தன்மையிலென்பதாக தவறுதலாகக் கொள்ளக்கூடாது. அவர்கள். ஆண்களுக்குச் சமத்துவமான துணைவர்களே ஒழிய, அதாவது தன்மையில் வேறுபட்டாலும் ஒவ்வொருவருக்குமுள்ள திறமையில் அவரவர்கள். சமத்துவமென்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய ஆண்களைப் போன்ற நகல்கள் என்று கூறுவதல்ல. இருபாலார்களுக்கிடையே அவசியமான வித்தியாசங்கள் உண்டு. அவர்களுடைய மனோ பாவத்தில் தெளிவாக வித்தியாசப் படுகிறார்களென்பதாக புரொபசர் எட்வர்ட்டி தான்டைட் என்ற மனோ தத்துவ சாஸ்திரி கூறுகிறார். பெண்களானவர்கள் பாஷா வித்வத்திலும், சடுதியான ஞாபக சக்தியிலும், கிரகிக்கும் தன்மையை யுடையவர்களென்றும், ஆண்களோ சரித்திர ஆராய்ச்சியிலும், உள் உணர்ச்சியிலும், திரேக பலத்திலும், ரசாயன சாஸ்திரங்களிலும் பெருமையாய் இருப்பதோடு நுணுக்கமான வேலைகளிலும் திறமைசாலிகள் என்றும் கூறுகிறார். ஒவ்வொரு பாலாருக்கும் இம்மாதிரியான, இயல்பான குணா குணங்கள் தனித்தனியாக இருக்கிறதென்பதை உணராமல் ஆண்களுக்குள்ள அறிவுத்திறமையில் பெண்கள் குறைவானவர்கள் என்ற முடிவுக்கு வருவதானது ஒரு பெரிய தவறு; ஒரு பிரபல விஞ்ஞான சாஸ்திரியானவர் விஞ்ஞான ஆராய்ச்சியைப்
பற்றி வியாசம் தயாரிக்கும்போதெல்லாம் அடிக்கடி தன் பக்கத்திலுள்ள
13 வயதுடைய மகளை தனக்குச் சந்தேகமாய் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எழுத்துக் கூட்டுதலைக் கேட்டுக் கொண்டு எழுதுவாராம் இந்தப் பெண் சாதாரணமாகப் பள்ளி மாணவியாயிருந்தும் விஞ்ஞான கலை சம்பந்தமான வார்த்தைகளைக் கூட பிழையில்லாமலும் தயக்கமின்றியும் எழுத்துக் கூட்டிச் சொல்லும் வழக்கமுண்டாம். அப்படிச் சொல்லும் பொழு தெல்லாம் அந்தப் பெண் குழந்தையானது தனக்கு இருக்கும் ஞாபகசக்தி கூட தந்தையாருக்கு இல்லாதிருப்பதைப் பற்றி பெரிதும் வியப்புறுவாளாம் ஒவ்வொரு குடும்பத்திலும், வீட்டு ஆண்களுக்கு பாட்டனார் திதி எப்பொழுது, அமாவாசை எப்பொழுது, தான் ஊர் போய் வந்தது எப்பொழுது என்பதான வெகு சாதாரணமான விஷயங்களைக் கூட எந்தத் தேதியிலென்பது கூட ஆண் மக்களுக்கு ஞாபகம் வருவதில்லை. குடும்பத்தில் நடந்த எந்த சந்தர்ப்பங்களைப் பற்றியும் சரியானபடி எந்த தேதியில் நடந்தது என்று சொல்லவும் முடியாது. தன்னுடைய பவுண்டன் பேனாவை எங்காவது வைத்து விட்டு வீடெல்லாம் தேடித் திரிவார்கள். ஆனால் வீட்டிலுள்ள பெண்களோ எதுவாயிருந்தாலும் மறக்காமல் ஞாபகத்தோடு சொல்வதும், எடுத்துக் கொடுப்பதும், ஞாபகமூட்டுவதும் வெகு சகஜமான தென்பது
515 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
யாவருக்கும் தெரிந்த விஷயம். மேனாட்டிலோ தற்சமயம் பெரும்பாலான. பெண்கள் தங்கள் பாஷா ஞானத்தின் திறமையை யாவருக்கும் திடுக்கிடும் படியான விதத்தில் பிரத்தியட்சத்தில் காட்டி வருகின்றார்கள். முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதை இப்பொழுதும் நாம் கவனிக்க விட்டு விட்டே பார்த்தாலும் 100க்கு 30 பேர்கள் வரையில் உலகத்தில் புகழ் பெற்ற பேராசியர்களாய் இருப்பவர்கள் பெண்களென்றே சொல்ல வேண்டும் இங்கிலாந்தில் நூல் வல்லார்களெல்லாம் பெண்மணிகளே. பிரான்சில். எத்தனையோ நூலாசிரியர்களும் நடிக நாடகத்தில் பேர்போனவர்களும், அரசியல் நிபுணர்களும் பெண்களாக இருந்திருக்கின்றனர். இத்தாலியி லிருந்தும், ஜர்மனியிலிருந்தும் எவ்வளவோ சங்கீத சாகித்யத்தில் பேர் போனவர்களெல்லாம் தோன்றியிருக்கின்றனர். அமெரிக்காவில் எவ்வளவோ சமூக சீர்திருத்தத்தில் புகழ் பெற்ற பெண்களைக் காணலாம். இன்னும் அநேக தொழில்களிலும் ஈடுபட்டு இருக்கின்றார்களெனினும் சமூக
சீர்திருத்தத்தில் முனைந்து நிற்பவர்கள் பெண்கள் தான் அதிகமெனலாம். வர வர அமெரிக்கப் பெண்கள் அரசியல் விஷயத்திலும் புகுந்து யாவருடைய போற்றுதலையும் பெற்று வருகின்றனர். சமீப காலத்திற்கு முன் தான் விஞ்ஞான. சாஸ்திர வழிகளிலும் தங்களுக்குத் திறமையுண்டென்று பெண்கள் அறியத் தொடங்கினார்கள். சென்ற ஜனக் கணிதத்திலிருந்து விஞ்ஞான ரசாயன சாஸ்திர ஆராய்ச்சியிலும் முனைந்து நிற்கும் பெண்கள் 10 வருடங்களுக் குள்ளாக இரட்டிப்பாக அதிகரித்திருக்கின்றார்களென்று தெரிகிறது. இப்பொழுது அமெரிக்காவிலோ 10 வருடங்களுக்கு முன் 400 பேர் இருந்த விடத்தில் இப்பொழுது 3000 பெண்கள் பிளான் வரைவதில் திறமைசாலிகளாகவும், பெண் கல்லூரித் தலைவிகளாகவும் பேராசிரியர்களில் 10000க்கு மேற்பட்டவர். களும், 2000 ஜட்சுகளும், லாயர்களில் சுமார் 5000 வரையிலும் பெண்கள் இருப்பதாகவும் தெரிகிறது. பாங்கு உத்தியோகத்தில் முக்கிய ஸ்தானங்கள் வகித்து வருபவர்கள் மாத்திரம் 4000க்கு மேற்பட்டவர்களென்று தெரிகிறது. பெண்கள் டாக்டர்களாகவும், நர்சுகளாகவும், பாதிரிமார்களாகவும் எத்தனையோ 1000 பேர்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இவற்றை யெல்லாம் கொண்டு
நாம் என்ன முடிவிற்கு வர முடிகிறதென்றால் அவர்களுக்கு எந்த விஷயங் களிலும் ஆண்களைப் போன்ற திறமை உண்டென்றும் ஆனால் அவர்களுக்கு முன்னிருந்த சந்தர்ப்பங்கள் அவர்களுக்கு அவர்களுடைய திறமையைக் காட்ட ஒட்டாதபடி செய்ததே ஒழிய அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டால் அவர்களுடைய போக்கில் நல்ல திறமையைக் காட்டக் கூடுமென்பதாகவே நாம் கருத வேண்டி இருக்கிறது
ஒரு காலத்தில் ஆண்களுடைய மூளையை விட பெண்களுடைய மூளைஅளவில் சிறியதாக இருந்திருப்பதால் புத்தியில் பெண்கள் குறைந்தவர்கள். என்று கருதப்பட்டது. ஆனால், உடற்கூறு சாஸ்திரிகளும் மனோதத்துவ
சாஸ்திரிகளும் மூளையினுடைய அளவில் உள்ள வித்தியாசத்தைக் கொண்டு.
குடி அரசு- 1936 (1) 516
புத்தியை நிர்ணயிக்க முடியாதென்றும், பெரிய மூளைகளை விட சிறிய மூளைகளிலே தான் அதிலும் பெண்களுடைய மூளைகளிலே அதிகமான “பிரைன் செல்கள்" இருப்பதாகவும், செல்களுடைய எண்ணிக்கைக்கு தகுந்த விதத்திலேதான் புத்தியின் அளவும் இருக்கிறதென்றும், ஆதலால் சாதாரணமாகப் பெண்களும், ஆண்களும் சமத்துவமான அறிவு பலம் உடையவர்களென்று முடிவு கட்டி இருக்கின்றனர். ஆனால், ஆண்கள் எப்பொழுதும் தங்கள். மனைவிக்கு “மூளை இல்லை” யென்று அடிக்கடி ஏன் சொல்லுகிறார்களென்று யோசித்துப் பார்க்குமிடத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மனப்போக்கும், குணப்போக்கும், உணர்ச்சிப்போக்கும் வித்தியாசப்பட்டு இருப்பதினாலேயே யென்பதை கவனிக்க வேண்டியது. இவற்றை அளவிடுவதற்கு நிபுணர். களாலேயே பெரிதும் கஷ்டமாயிருக்கிறது. அவர்களுக்கு உணர்ச்சியும், உற்சாகமும் புத்திப் போக்கு, மதாபிமானம், இரக்கம், பொறுமை, கூச்சம், நாணம் முதலியவைகளான குணங்கள் அதிகமாயிருந்து வருகின்றன. ஆண்களோ, சுயேச்சையிலும், தீவிரத்திலும் உள் உணர்ச்சியிலும், கேலிகளிலும் அதிகமான போக்குடையவர்களாய் இருந்து வருகிறார்கள்.
இந்த அளவு கூட சராசரி என்று தான் கொள்ள வேண்டி இருக்கிறதே ஒழிய தனித்தனியாகவும் கூற முடியவில்லை. ஏனெனில் சில ஆண்கள் குழந்தை களிடத்தில் பெண்களைவிட அதிகமான ஆர்வத்தைக் காண்பிக்கின்றனர். சில பெண்கள் ஆண்களைப் போல திடமும், தீவிரமுள்ளவர்களாகவு மிருக்கிறார்கள். பெண்களானவர்கள் ஒரு ஆசாமியினுடைய தோற்றத்தைக் கொண்டே நிர்ணயிக்க மூற்படுகிறார்கள். ஆனால் ஆண்கள் உண்மை நிகழ்ச்சிகளைக்கொண்டே தங்கள் அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். ஆண்களானவர்கள் ஒருவர் செய்த காரியத்தைக் கொண்டே அவர்களை மதிக்கின்றார்களே ஒழிய அவர்களுடைய குணாகுணங்களைக் கொண்டோ, அந்தரங்க நடவடிக்கைகளைப் பற்றியோ கவலைப்படுவ தில்லை. மனித ஸ்பாவத்தை சம்பந்தப்பட்டு எந்த விஷயங்களையும் பெண்களுக்கு யூகித்து உணர்வதற்கான நுட்ப அறிவானது ஆண்களை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு உதாரணமாக, ஒரு ஆணானவன் எவ்வளவுதான் தன் மனைவியோடு பழகி இருந்தாலும் அவளுடைய குணா குணங்களை சரிவர அறிந்து கொள்வதற்கு சக்தியில்லாமலிருக்க, ஒரு மனைவி தான் பழகிய புருஷனின் குணா குணத்தை சிறு காலத்திற்குள் அவனைப் பற்றி அவனே உணர்ந்திருப்பதைவிட அதிகமாக உணர்ந்திருக்கிறாள்.
எவ்வளவு காரணங்கள் இதைப்போல் சொன்னாலும் ஆண்களுக்கு மாத்திரம்பழக்கவாசனையால் ஏற்பட்ட ஒரு அபிப்பிராயமானது திருந்துவதற்கு வெகு நாட்கள் பிடிக்கும்போல் தோன்றுகிறது. இருந்தாலும் இதற்கு முக்கியமான காரணம் குடும்பத்தில் சச்சரவு ஏற்படாமல் சமாதானம் நிலவ வேண்டுமென்று பெண்கள் நினைத்துத் தங்கள் ஆண்மக்களுக்கு அடிக்கடி எந்த விஷயத்திலும் விட்டுக் கொடுத்து விடுவதினாலேயே
517 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
பெண்களைப்பற்றி சர்வ சாதாரணமாக சமத்துவமில்லாதவர்களென்று
எண்ணம் தோன்றுவதற்கு இடமாயிருக்கிறது. மேலும், அவர்கள் சுதந்திரத்தோடு தங்களுடைய சுய சம்பாத்திய முயற்சியினால் வாழ்ந்து காட்ட வேண்டுவதும் அவசியமாயிருக்கிறது. பெண்கள் தங்கள் ஜீவனத்திற்கு ஆண்களை எப்பொழுதும் எதிர்பார்த்து நிற்பதானது அவர்களை ஆண்களுக்கு சமத்துவ மானவர்களாய்ச் செய்ய முடியாமலிருக்கிறது. பெண்கள் அறிவுத்திறமையில் சமத்துவமானவர்களாயினும் புத்திப் போக்கில் மாத்திரம் மாறுபட்டவர்களாய் இருக்கிறார்களாதலால் அவர்கள் இருவரும் சமத்துவமானவர்களென்பதோடு
இவர்கள் இருவருடைய குணாகுணங்களும் ஒத்து நின்று ஒரு காரியம் நடத்துவதாலேயே வாழ்க்கையும் இன்பமும் ஏற்பட முடியுமென்பதையும் திண்ணமாய் உணர வேண்டும்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜுன் 1936
குடி அரசு - 1936 (1) 518
கடவுள் செயல்
ஏழைகன் துயரம்
இடம் - கோயில்,
பாத்திரங்கள் - புரோகிதர்கள், ஏழை மக்கள், சாது
ஆண்; பெண்; குழந்தைகள் ஆகியவர்கள் ஒருகடவுள் விக்கிரகத்தின் முன் நின்று முறையிடுகின்றார்கள்:-
@ கடவுளே! பஞ்சம்! பஞ்சம்!! இதைப் பார்த்துக் கொண்டு சகித்து மெளனம் சாதிக்கும் கடவுளே தங்களை வணங்குகிறோம். எங்களைக் காப்பாற்றும், காப்பாற்றும்
சதாகாலமும், தங்களையே தொழுகிறோம். ஆனால் தாங்கள் சிறிதும் செவி சாய்ப்பதில்லை.
“அதுவும் எங்கள் நன்மைக்கே" என்று நம்பும்படி கற்பிக்கப்பட்டிருக் கிறோம். அவ்வாறே நாங்களும் நம்புகிறோம். நாங்கள் எப்பொழுதும் நம்புகிறவர்கள். யார் எதைச் சொன்னாலும் நம்புகிறோம். அப்படியெல்லாம் நம்பியும் இன்னும் பட்டினி கிடக்கின்றோம்.
தயவு செய்து எங்களைக் காப்பாற்றும்! கடவுளே காப்பாற்றும்! நாங்கள் - ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மிதிக்கப்படுபவர்கள், உம்முடைய மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள், உணவற்றவர்கள், ரத்தமற்றவர்கள்.
குப்பைமேடுகளிலும், அழுக்கு மூலைகளிலும், குடிசைகளிலும் ஆடுமாடுகளைப்போல் சதா “துன்பம்” என்னும் கருவிலேயே வளர்ந்து வருபவர்கள். ஆதரவற்றவர்கள். ஏனைய ஜனங்களால் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்ட, பசிப்பிணியால் வாடிவதங்கும் அனாதைகள். எங்களைக் காப்பாற்றும்! கடவுளே காப்பாற்றும்
(அருவருப்பும், அலட்சியமும் நிறைந்த ஒரு சிரிப்பு விக்கிரகத்தின்
பின் புறமிருந்து கேட்கிறது)
மீண்டும் ஏழை மக்கள்:- எங்கள் நெஞ்சலர்ந்திருக்கிறது. எங்கள் குழந்தைகளின் உதடுகளெல்லாம் காய்ந்திருக்கின்றன. இன்னும் சில இறந்து கொண்டிருக்கின்றன.
519 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
எங்களுடைய குடிசைகளில் தானியமே கிடையாது, ஆனால் ஒரு சிலருடைய களஞ்சியங்களில் தானியங்கள் நிறைந்திருக்கின்றன. அவர்கள் விலைக்கு வாங்கி சேமித்து வைத்திருக்கிறார்கள். எங்களால் விலைக்கு வாங்க முடியாது; விலைகள் உயர்ந்து விட்டன. அந்தோ கஷ்டம் நாங்கள் என் செய்வோம்? எங்கள் கையில் காசில்லை. இதோ தங்களுக்கு புஷ்பங்கள் கொண்டுவந்திருக்கிறோம்
மற்றொருவர்:- நான் வெறுங்கையோடு தான் வந்திருக்கிறேன்.
ஒரு பெண்:- இதோ நான் தேங்காய் பழம் கொண்டு வந்திருக்கிறேன்.
என் கையிலிருந்த காப்பை விற்றுத் தேங்காய் பழம் வாங்கினேன்.
மீண்டும் ஏழைகள்:- சதா துன்பம்! ஆண்டவனே பேசக் கூடாதா? நாங்கள் - ஏழைகளாகிய நாங்கள் - ஆதரவற்ற நாங்கள்... பசியால் மடிகின்ற நாங்கள், சதா காலமும் ஏன் துன்பத்திலும், கஷ்டத்திலும் அழுந்தித் தவிக்க வேண்டும். தாங்கள் வாயைந்திறந்து பேசக்கூடாதா? நாங்கள் அருகதை யற்றவர்களாக்கும். எல்லாம் தங்கள் சித்தம்
மறுபடியும் ஏழைகள்:- ஆண்டவனே! எங்கள் ஆண்டவனே! நாங்கள். எதையும் சகித்துக் கொள்வோம். ஆனால் ஓ கடவுளே! எங்கள் குழந்தைகள் பசிப்பிணியால் மடிகின்றன. கொடுமை! அந்தோ கொடுமை! என்றென்றும் துன்பம்- எங்காவது தீப்பற்றிக்கொண்டால் எங்கள் குடிசைகளே அதிவிரைவில். பற்றிக்கொள்ளுகின்றன. காலரா முதலிய தொத்து நோய்களால் எங்களில் அநேகர் ஈக்களைப் போல் மடிந்து விடுகின்றனர். மழைவந்தால் எங்கள் குடிகைகள் ஒழுகுகின்றன. எங்கள் குழந்தை குட்டிகளெல்லாம் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் எங்கள் குடிசைகளை யெல்லாம் கங்காதேவி கமளிகரம் செய்து விடுகிறாள். அன்பான ஆண்டவனே! தங்களைத் திருப்திப் படுத்துகிறோம். எங்களைக் காப்பாற்றும், காப்பாற்றும்.
(விக்கிரகத்தின் பின்புறம் தங்க நாணயங்கள் விழுகின்ற சப்தம் கேட்கின்றது.)
இன்னும் எவ்வளவு காலம் கஷ்டப்படுவது, நாங்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது எங்கள் 'தலைவிதி' யாக்கும். அறிவாளிகளோ எங்களைப் பார்த்து நாங்கள் கஷ்டப்படத்தான் வேண்டுமென்கிறார்கள். எங்கள் எஜமானர்களும் அவ்விதமே கூறுகிறார்கள். முன் ஜென்மத்தில் செய்த வினையை இப்போது அனுபவிக்கிறோ மென்கிறார்கள். அது எங்கள் கர்மவினை என்கிறார்கள். அதையே அடிக்கடி சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
ஆனால் நல்ல வீடுகளில் யாதொரு வேலையும் செய்யாமல் பணக்காரர்களாய் செளகரியமாய் வசித்து வருபவர்கள் வண்டி வண்டியாய்த் தானியங்கள் வாங்கி சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் முன் ஜென்மத்தில் நல்ல காரியங்கள் செய்திருப்பார்களாம். அந்த விதம் சொல்லியே எங்களை நம்பச் செய்கிறார்கள். நாங்களும் நம்புகிறோம்.
குடி அரசு - 1936 (1) 520
இந்த ஜென்மத்தில் அவர்கள் எந்த நல்ல காரியமும் செய்வதைக்கானோம்.
ஏன் அநேக காரியங்கள் செய்கிறார்கள். அவை நல்ல காரியங்களா? அல்ல.
ஆனால் செல்வவான்கள் கெட்ட செய்கைகள் செய்வார்களா? என்கிறார்கள். அப்படியானால் அவர்களிடமுள்ள தானியத்தில் எங்களுக்கு கொஞ்சம், கொஞ்சம் பகிர்ந்து கொடுத்தால் அது நன்மையான காரியமாகாதா? கட்டாயம் செய்வார்கள், கடவுள் சம்மதமிருந்தால் எல்லாம் அவர். விருப்பப்படிதானே நடக்கும், வறியராகிய நமக்கு அவருடைய சித்தம் மிகவும் கொடுமையான - சகிக்க முடியாத் துன்பத்தோடு கூடிய உருக்கக் கூடிய கஷ்டத் தோற்றத்தோடு வருகிறது அவரது சோதனையெல்லாம் அவரது சித்தம். ஆனால் நம்மீது செலுத்தும் சித்தத்தின் தோற்றமென்ன? காலரா, பிளேக், நெருப்பு, வெள்ளம், பஞ்சம் முதலிய இந்த தோற்றத் தோடேயே நம்மை ஆச்ர்வதிக்கிறார். இவை மட்டுமா? வரிப்பழு, அதிக வேலை, தூசி, உஷ்ணம், கல்லுடைத்தல், பாரமான சுமைகளை தூக்கல், வியர்வை, களைப்பு, அபராதம், எஜமானனின் கடுங்கோபம், வசவு, தண்டனை இது போன்றன.
ஆனால் சிலருக்கு வேறுவிதமாய் தோற்றமளிக்கிறார். நல்ல
காற்று, சுவையான உணவு, பெரிய வீடுகள், பட்டு மெத்தைகள், பிரகாசமான. விளக்குகள், அசையாத வாகனங்கள், ஆடல் பாடல்கள், சிரிப்பு, சந்தோஷம் இவை முதலியன.
எப்படி இருந்தாலும் அவருடைய சித்தத்தை ஏற்று நாம் அநுபவிக்க வேண்டியதுதான். அவ்விதமே நாம் போதிக்கப்பட்டு வருகிறோம். ஒரு
சிலர் ஏனையோர்க்கு இதை போதிக்கிறார்கள். எல்லோரும் அந்த ஒரு சிலரது சித்தப்படி அடங்கி நடக்க வேண்டும். ஏனெனில் அந்த ஒரு சிலரது சித்தம் கடவுளது சித்தமாகும். கடவுளே காப்பாற்றும்! எங்களைக் காப்பாற்றும்!
(அக்கோவிலின் மற்றொரு பக்கம் நடைபெறும் ஒரு செல்வந்தர். விவாகம் - அங்கு நடக்கும் நடன சத்தம், கைகள் கொட்டும் சத்தம் காதைத் தொளைக்கிறது.)
பசி... பசி... எப்படிச் சுடுகிறது? பிள்ளை பெற்றவளுக்குத் தெரியும் பிரசவ வேதனை என்பது போல பசியை அநுபவித்தவர்களுக்கே அதன். வேதனை தெரியும். ஒரு சிலருக்கு அது தெரியவே தெரியாது. ஏனை யோருக்கு அது தெரியும், அதிக காலமாகத் தெரியும். பசியென்ற நெருப்பு வயிற்றைச்சுடுகிறது.
மறுபடியும் ஏழைகள்:- ஓ ஆண்டவனே! இப்போது ஒரு கைப்பிடி தானியமே வேண்டும். அதற்காகவே தங்களை வணங்குகிறோம்
எங்களது பெண்களின் கண்ணீர் தங்கள் மனதை கரைப்பதில்லையா? எங்களது குழந்தைகளின் சோர்ந்த கண்கள் தங்கள் கருணையை ஈர்ப்ப
521 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
தில்லையா? ரத்தம் வற்றிய அவர்களது உடல் தங்கள் கண்ணோட்டத்தை அழைப்பதில்லையா? உழைத்து ஒடிந்து போன அவர்களது சரீரம் தங்களது பெருமையைக் குறைப்பதில்லையா?
லட்சக் கணக்கானவர்கள் தாங்கள் தங்கள் சுயமரியாதை இழந்து மிருகங்களாகிக் கொண்டிருக்க தங்கள் சுயமரியாதையை நிலைநாட்ட இயலுமா? கஷ்டங்களெல்லாம் புண்ணியமானவையென்று அந்த ஒரு
சிலர் சொல்லுகிறார்கள், கையால் அவர் கொடுக்கிற கஷ்டங்களுக்காக நாம் அவருக்கு வந்தனம் செலுத்த வேண்டுமாம். இது என்ன நியாயம்?
(வழக்கம்போல் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு பிராமண: புரோகிதர்கள் உள்ளே வருகிறார்கள்.) அதோ அவர்கள் வருகிறார்கள்; மோட்ச வீட்டின் திறவுகோல் அவர்களிடமே இருக்கிறது. அவர்கள் மிகுந்த அறிவாளிகள்.
ஏழை மக்கள்:- காப்பாற்றுங்கள்! எங்களைக் காப்பாற்றுங்கள்!
புரோகிதர்கள்: இதென்ன ஒப்பாரி வைக்கிறீர்கள். நீங்களெல்லாம் என்ன மிருகங்களா? நிம்மதியான இந்த இடத்தை அசுத்தம் செய்கிறீர்கள். (விக்கிரகத்தை சுட்டிக் காட்டி) அதோ பாருங்கள், என்ன மெளனமாய், சாந்தமே உருக்கொண்டு விளங்குகிறார் பகவான்.
ஏழைகள்:- ஆண்டவனின் கோபத்தை சாந்தப் படுத்தவே நாங்கள் வந்திருக்கிறோம். அவரது கோபத்தினால் எங்கும் பஞ்சம்
புரோகிதர்கள்:- நீங்கள் ஏன் வெறுங்கையோடு வந்திருக்கிறீர்கள்?
ஏழைகள்:- நாங்கள் துன்பம் நிறைந்த மனதுடன் வந்திருக்கிறோம். கடவுள் காணிக்கை செலுத்துகிறவர்களின் குறைகளையே கேட்பவர், நாங்கள் எங்கள் உயிரையே காணிக்கையாக கொண்டுவந்திருக்கிறோம். துன்பம் என்னும் புஷ்பத்தையும் கொண்டு வந்திருக்கிறோம்
புரோகிதர்கள்:- அவருக்கு இவை தேவை யில்லை. பலருடைய துன்பத்தை அவர் பொருட்படுத்துபவரல்ல. சிலருடைய சந்தோஷமே திருப்தியளிக்கக் கூடியது. போங்கள் வெளியே. எவ்வளவு தைரியத்தோடு நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள். மரியாதையாகத் திரும்பி விடுங்கள்:
ஒருவர்:- நான் ஒரு தேங்காய் கொண்டுவந்திருக்கிறேன்.
புரோகிதன்:- அஃதென்ன அற்பம்.
ஓர் வயோதிகன்:- நான் ஒரு ஆடு கொண்டுவந்திருக்கிறேன். கூட்டத்திலுள்ளவர்கள் (கோபத்துடன்) அந்த ஆடு திருடியது, அவன்: எஜமானனிடம் திருடியது
வயோதிகன்:- இல்லை! இல்லை! நான் அதை விலைக்கு வாங்கினேன்.
ஒருவன்:- உனக்கு அவ்வளவு பணமேது.
குடி அரசு - 1936 (1) 522.
வயோதிகன்:- அது கடவுளுக்குத் தெரியும். என் மகளை விற்று அந்தப் பணத்திற்கே ஆடு வாங்கினேன். ஆட்டைப் பலியிடுங்கள், என் மகளைப் பலியிடுவதற்கு சமமாகும்
புரோகிதன்:- ஒரு ஆடு - அவன் மகள், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
(விக்கிரகத்தின் பின் புறமிருந்து சத்தம்.)
“எல்லா ஏழைகளும் ஆடுகளே''
புரோகிதன்:- ஆட்டைக் கொல்லுங்கள். (ஆட்டை கொல்லப் போகும் அதே சமயம் ஒரு சாது உள்ளே வருகிறார்.)
ஜனங்கள்:- யார்அது? ஓ கோ! அவர்தான் கடவுளைப் பற்றி பக்திரசம் ஒழுகப்பாடிப்புகழ்ந்து எழுதியபக்தர். அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது
சாது:- கடைசியாக பைத்தியகாரனானதற்கு சந்தோஷிக்கிறேன். நாம் எல்லோரும் ஏன் கஷ்டப்பட வேண்டும், முட்டாள்கள்.
ஜனங்கள்:- நாங்கள் எல்லோரும் கஷ்டப்பட்டுத்தான் தீரவேண்டு மென்று எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். தாங்களும் கூட முன்னம் சொல்லி யிருக்கிறீர்கள், எழுதியிருக்கிறீர்கள்.
சாது- அப்படியா... நான் என்னுடைய பாட்டுகளைச் சுட்டுக்கொளுத்தி விட்டேன். பொய்யும் முட்டாள்தனமும் மோசமும் நிறைந்த முந்திய நாட்களைப் புதைத்து விட்டேன். என் வீட்டின் மேல் மாடியில் உட்கார்ந்து கொண்டு, பசியினால் வாடுகின்ற உலகத்தைப்பார்த்து அது 'கடவுள் சித்தம், கர்ம வினை' என்று புலமை நிறைந்த பாட்டுகள் பாடுவதும், மற்றவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையிலும், நோயினால் வீடில்லாமலும், கந்தையோடும், பசியோடும் வாடி வதங்குவதைப் பற்றி யோசிப்பதும், ஒரு சிலரது செளக்கியமான வாழ்க்கைக்கு நேர் விரோதமாயிருப்பதும், கடவுளது அறிய முடியாத திருவிளையாடல்களில் ஒன்றென எண்ணியதும் எல்லாம் மோசமும் பொய்யுமேயாகும்.
கடவுளைப்பற்றி நான் அவ்வளவு புகழ்ந்தெழுதியதற்குக் காரணம் செளக்கியமான வீட்டில் வசித்து வந்தேன். காலந்தவறாது கவலையின்றி உணவருந்தினேன். புஷ்பங்களும், பறவைகளும் அழகானவையென்று நினைக்க சாவகாசமிருந்தமையால் அவைகள் அழகானவை என்று எண்ணினேன். கடவுள் என்றால் என்ன? கவலையற்ற சாப்பாடும், அதன். பின்னர் ஏற்படுகிற வேலையின்மையும் சேர்ந்து உண்டாகிற முடிவே
நீங்கள் பல நாள் பட்டினி கிடந்தீர்களானால் கடவுள் காற்றாய்ப் பறக்கிறார். கடவுள் என்பது செல்வந்தர்களது பொழுது போக்கு என்பதும் ஏழைகளை நசிப்பிக்க சவுகரியமுமான போதை வஸ்து என்பதும் எனக்கு இப்போது தெரிய வந்தது. அவர்களுக்கு உணவில்லை, கடவுளில்லை
523 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
ஓய்வில்லை, கடவுளில்லை என்ற இந்த உண்மைகளை, வறியனாகி, அதிக துன்பங்களை அனுபவித்த பிறகே நான் அறிந்து கொண்டேன்.
ஓர் வயோதிக மாது:- நான் ஏழை, எப்போதும் ஏழை. ஆனால் கடவுளைப்பற்றி எண்ணம் உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. சாகின்ற நிலையிலுங்கூட அந்த எண்ணம் உண்டாயிற்றே.
சாது:- அது இயற்கைதான். ஒருசிலர் ஏனையோரை கடவுள் என்ற மதுவை உண்ணும் கெட்ட பழக்கத்தில் ஆழ்த்தி விட்டார்கள். இறக்கப் போகும் மனிதனைக்கூட குடிக்காமல் தடுக்க இயலாது. இந்தக் கொடிய பழக்கத்தை விட ஒரே ஒரு மருந்துதானுண்டு. அது தான் ஞானம் - உணவு, ஒவ்வொரு மனிதனின் உரிமை என்ற ஞானம். ஒவ்வொருவரும் அந்த உணவுக்காக மண்டியிட்டு வணங்குதலாகாது. ஆனால் சண்டை யிட்டுப் பெற வேண்டுமென்ற ஞானம்
ஜனங்கள்:- பெரியோர்களெல்லாம் அதற்காக வணங்கி, விரதமிருந்து தவமிருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களே
சாது:- தெய்வ வணக்கம் மது. ஆம் அதிக நாளாய் நாம் அந்த மயக்கத்தில் இருந்து விட்டோம். சகோதரர்களே! சகோதரிகளே! உண்மையாய்ச் சொல்லுங்கள். நீங்கள் வாழ்நாளெல்லாம் தெய்வ வணக்கம் செய்கிறீர்களே கடவுள் எப்போதாவது செவிசாய்த்து உங்கள் முறையீட்டைக் கேட்டதுண்டா? செல்வந்தர்கள் அதிகமாக கோவிலுக்குப் போவதையும் தெய்வத்தை வணங்குவதையும் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப் போனாலும் சகல ஆடம்பரங்களோடும் தங்களை ஏனையோர் நன்கு மதிக்க வேண்டும், கெளரவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடேயே போகிறார்கள் என்பதும் தாங்களறியீரா?
புரோகிதர்கள்:- அவனை (அந்த சாதுவை)ப் பிடித்து வெளியே தள்ளுங்கள். பைத்தியக்காரனைப் போல உளறுகிறான் அவன்.
சாது:- நாங்கள் பசியாய் இருக்கிறோம் உணவு வேண்டும். இந்தக் கல்லை (விக்ரகத்தை சுட்டிக் காட்டி) கேட்கிறோம். உம்மிடம் எங்களுக்குப் பேச்சில்லை
புரோகிதர்கள்: உன்னுடைய முட்டாள்தனத்தை யெல்லாம் அவிழ்த்து விடாதே, அதிகப்பிரசங்க மடையா, மரியாதையாகப் போய் விடு, இல்லாவிடில் போலீஸ்காரரைக் கூப்பிடுவோம். நீ கடவுளையும் எங்களையும் அவதூறாய்ப் பேசுகிறாய்
ஜனங்கள்:- அந்தோ! அநியாயம், அவரைப் பிடித்துக் கைதியாக்கி அடைத்து விடுவார்களே
சாது:- அறியாமையிலும், மூட நம்பிக்கையிலும் உழலும் உங்கள். கிறையைவிட வேறு சிறை இருக்க முடியுமா? புரோகிதர்களே! நீங்களும்
குடி அரசு- 1936 (1) 524
உங்கள் கடவுளும் பேடிகள். சக்தியற்றவர்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. போலீஸ் உதவி கொண்டு உங்களையும் உங்கள் கடவுளையும் காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறீர்கள்.
சாது:- பசியால் வாடும் ஜனங்களே! புரோகிதர்கள் பரம்பரை ஜாலவித்தைக்காரர்கள். உங்களுடைய அறியாமையையும், மூட நம்பிக்கையையுமே கருவியாகக் கொண்டு அவர்கள் உங்களிடம் பணம் பறித்து உண்டு கொழுத்து வருகிறார்கள். இந்த ஜன்மத்தில் நன்மை செய்தால் அடுத்த ஜன்மத்தில் பலன் அநுபவிக்கலாம் என்கிறார்கள். முன்: இறந்தவர்கள் யாராவது வந்து நம்மிடம் அதைப் பற்றிச் சொல்லியிருக் கிறார்களா? அல்லது நாமாவது அறிய முடிகிறதா? கிடையவே கிடையாது. இன்று கஷ்டப்படுகிற நமக்கு இன்றே பரிகாரம் கிடைக்க வேண்டும் இல்லையேல் அது மோகமும், முட்டாள் நம்பிக்கையுமே யாகும். அதை
நீங்கள் ஏன் நம்பவேண்டும்?
புரோகிதர்:- நாங்கள் உன்னை சபிக்கிறோம்
சாது:- புரோகிதர்கள் ஆசிர்வதிக்க அறியார்களே!
புரோகிதர்: நீ அதிகம் பேசினால் கடவுள் உன்னைக் கொல்வார்.
சாது:- உமது கடவுளை நான் கொல்லுகிறேன் பார்.
(சாது ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து விக்கிரகத்தை உதைத்துத்தள்ள. அதன் கீழ் தங்க நாணயங்கள் குவிந்து கிடக்கின்றன.)
புரோகிதர்கள்:- நாம் மோசம் போனோம், நமது ரகசியமெல்லாம் வெளியாய் விட்டன. நமது பிழைப்பே போய்விட்டது
சாது:- (ஜனங்களைப்பார்த்து) இப்பொழுது உங்கள் கண்களினால் உண்மையைக் கண்டுணருங்கள். அதோ தங்க நாணயங்களைப் பாருங்கள்.
ஜனங்கள்:- ஆ என்ன ஆச்சரியம்! தங்க நாணயங்கள்!
சாது:- ஒவ்வொரு நாணயமும், நம்முடைய ரத்தத்தின் துளிகளாகும்
நீங்கள் வணங்கிய விக்ரகத்தின் கீழ் என்ன இருக்கிறது? உண்மையை இப்போது அறிந்தீர்களா? (மனமுடைந்த சிரிப்புடன் எல்லோரும் வெளியே வருகின்றனர்.)
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - ஜுன் 1936
525 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
அருஞ்சொல் பொருள்
அனுகூலித்தவர் - உதவி செய்தவர்
அசூயை - பொறாமை, அவதூறு
அதட்டியினால் - தாக்கத்தால், அழுத்தத்தால்
அதப்பிராயம் - மதிப்பு
அபுரூபன் - மிக அழகுள்ளவன்
அனந்தம் - அளவில்லாதது
அஷ்டகோணல் - எட்டுவிதமாய் திருகிக்கொண்டு.
ஆசிக்கிறேன் - விரும்புகிறேன்
ஆவாகனம் - அக்கினிக்குப் பலி கொடுத்தல் (தன்வயப்படுத்திக்கொள்ளுதல்)
இதோபதேசம் - நல்லறிவுரை
இரண்டருத்தம் - இருபொருள்படும்படி
உப அத்யக்ஷரர் - துணைவேந்தர்
எதாஸ்திதித்துவம் - உள்ள நிலையே தொடர்வது, பழமையைப் பாதுகாப்பது
ஏகாங்கி - தனித்திருப்பவன்
கணங்களுக்கு - கூட்டத்திற்கு கண்டனை - கண்டிக்கை
கண்யம் செய்கின்றனவா? - மதிக்கின்றனவா?
குச்சுக்காரத்தனம் - விபசாரத்தனம்
சங்கல்பம் - கொள்கை
சங்கேத இடம் - குறிப்பிட்ட இடம்
குடி அரசு - 1936 (1) 526
சங்கை
- எண்ணம்
சம்பாஷித்தல்
- உரையாடுதல்
சாய்க்கால்
- செல்வாக்கு
- சிட்டிகை(பெருவிரலும் ஆள்காட்டி விரலும் சேர்ந்து எடுக்கும் அளவு)
சிடுக்கை
- சூதாட்டம் (பந்தயம் கட்டி விளையாடும் தாய விளையாட்டு)
சொக்கட்டானாட்டம்
செளகார்
- வடநாட்டு முதலாளி
- நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை
தத்தம்
தியங்கவிட்டு
- கலங்கவிட்டு
- தீமை
தின்மை
- பொருளை அழிப்பவன், கொடியோன்
நாசகாலன்'
நாயாடிகள்
- திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார்
- சகுனம்
நிமித்தியம்
- நியாய விரோதமாக
நியாய ரஹிதமாக
- இரக்கமின்மை
நிர்தாக்ஷண்யம்
- ஊதியத்துக்கும் மேலதிகமாக வாங்கியுள்ள தொகை
பத்துவளி
பந்தகம்
- அடமானம், சார்ந்திருத்தல், முடிச்சு
- கத்தாட்டுச் சிறார்கள், சிறுபிள்ளைத் தனமானவர்கள்.
பச்சகானாக்கள்
பரத்தில்
- மேல் உலகில்
பரதவிக்க
- வருந்த
பரியந்தம்
- எல்லை
- மனைவி
பாரியாள்.
பிரதான்யம்
- முக்கியம், முதன்மை இடம்
பிரலாபம்
- புலம்பல்
வர்மம்
- உட்பகை
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 22
527
வனபோஜனம்
காடுகளுக்குள் இயற்கைச் சூழலில் இருந்து உண்ணும் விருந்து
தடவையாவது வெளிப்படையாக
விடுத்தமாவது விசிதமாக
3000815 சில்வானம்
30004515 சொச்சம்
க்ஷய ரோகம்
காசநோய்
ஸ்தாயி
குரல் அளவு
ஜக்காத்
இஸ்லாத்தில் அய்ந்து கடமைகளுள் ஒன்று
(தருமம் செய்தல்)
ஜுரிகள் (ury)
நீதிமன்றத்தில் நடுவர்களுக்கு உதவியா
யிருப்பவர்கள்.
மதத்தால் தடைசெய்யப்பட்டது
ஹலாலாக்கி
குடி அரசு - 1936 (1)