Kudi Arasu — 1935, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1935-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 21
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1935-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 496
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
பெரியார் வேலைத்திட்டம்:
நீதிக்கட்சி ஏற்றது
தாழ்த்தப்பட்டோர் மற்றும் சுயமரியாதை மாநாடுகளில் பெரியார். நிகழ்த்திய உரைகளும் - நீதிக்கட்சிக்கு பெரியார் தந்த வேலைத்திட்டமும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் கூடிய நீதிக்கட்சியின். நிர்வாகக்குழு பெரியார் தந்த வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கிறது
பெரியாரின் செயல்திட்டங்களோடு நீதிக்கட்சி செயல்படத் தொடங்குவதைக் கண்டு அஞ்சிய காங்கிரசார், இது காங்கிரஸ் கட்சி
கராச்சியில் உருவாக்கிய திட்டத்தின் நகல் எனப் பேசத் தொடங்க, 'குடி அரசு' அதை அழுத்தமாக மறுக்கிறது மறைமலை அடிகளாரின் 'அறிவுரைக்கொத்து' நூலில் இடம் பெற்றுள்ள ஒரு கட்டுரையை சென்னைப்பல்கலைக்கழகம் பாடமாக ஏற்றதை எதிர்த்து பார்ப்பன ஏடுகள் கூக்குரலிட்டதற்கு பெரியார். கொதித்தெழுந்து கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு அடிகளாரை ஆதரித்து அனல் பறக்கும் தலையங்கத்தை எழுதினார்.பார்ப்பனரல்லாதார். இயக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்துக்கு பிரபல பாடகி கே.பி. சுந்தராம்பாளை காங்கிரஸ் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனாலும் பார்ப்பனப் பாடகிகளை மிஞ்சம் வகையில் புகழ் ஏணியை அவர் எட்டும்போது பார்ப்பன ஏடுகள் சுந்தராம்பாளை குறைகூறத் தொடங்கியபோது 'குடி அரசு' கே.பி. சுந்தராம்பாளுக்கு ஆதரவாக களமிறங்கியது
பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் இந்துமதத்தைவிட்டு வெளியேறி சமஉரிமை வழங்கும் வேறு எந்த மதத்திலும் சேர்ந்துவிடுமாறு அறிவித்தவுடன், 'சபாஷ் அம்பத்கார்' என்று 'குடிஅரசு' வரவேற்று எழுதியதோடு, அம்பேத்காரின் முடிவை கடுமையாக விமர்சித்த பார்ப்பன ஏடுகளுக்கும் பதிலளித்தது. இந்து மதத்தைவிட்டு வெளியேறும் முடிவை எக்காரணத்தாலும் மாற்றவேண்டாம். முதலில் 10 லட்சம் பேரை மதமாற்றம் செய்துவிட்டு இறுதியில் அம்பேத்கர் மதம் மாறுவதே பயனுள்ளதாக இருக்கும் என்று பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். அம்பேத்கரைப் போன்றவர்கள் “இந்துமதத்தைவிட்டுப் போய்விட்டால், இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோச
மடைந்துவிடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்திலிருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியது அம்பேத்கரின் முதல் கடமையாகும்” என்று பெரியார் அறிவுறுத்துகின்றார். மதங்களையே எதிர்க்கும் சுயமரியாதை இயக்கம் மதமாற்றத்தை எப்படி ஆதரிக்கலாம் என்று “தீவிர” சுயமரியாதைக்காரர் எழுதிய
கடிதத்துக்கு விரிவான விளக்கமளித்து பெரியார் எழுதிய 'மதம் மாறுதல்” எனும் தலையங்கத்தில், சுயமரியாதை இயக்கத்தின் மத எதிர்ப்புக்கொள்கைகள். பரிணாமம் பெற்றே வளர்ந்ததைக் குறிப்பிடும் பெரியார் அக்கொள்கைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் பின்பற்ற வேண்டிய நெகிழ்ச்சியான. அணுகுமுறைகளையும் விளக்கிக்காட்டுகிறார். தீண்டாமையிலிருந்து விடுபட வேண்டும் என்று விரும்பும் ஒரு பக்தி உணர்வாளரிடம் “நீ சாமியை விட தைரிய மில்லாதவன். உனக்கு நான் யோசனை சொல்ல மாட்டேன். ஆதலால் நீ தீண்டாதவனாகவே இருந்து செத்துப்போ" என்று ஒரு சுயமரியாதைக்காரன் எப்படி சொல்லமுடியும்? என்று கேட்கிறார். “எந்த
விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான். அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே தவிர, மற்றபடி அனுபவ
சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புஸ்தகப்பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு
மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள்' அல்ல என்று சொல்ல வேண்டும்'' என்று பெரியார் சுட்டிக் காட்டியிருப்பது
வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பார்ப்பனர்கள் காங்கிரசைக் கைப்பற்றிக் கொண்டு அதன்வழியாகத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் அரசியலுக்கு ஆதரவு திரட்ட, வடநாட்டு காங்கிரஸ் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் தமிழ்நாடு வந்தபோது அவருக்கு எதிராக “பகிஷ்கார இயக்கம்' நடத்த 'குடி அரசு' அறைகூவல் விடுத்தது. சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சிகளில் இராஜேந்திரப் பிரசாத்துக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சிகள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டன.
காங்கிரஸ் மாநாடுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி இடத்திலே சாப்பாடு போடப்பட்டு வந்தது. எசனை என்னும் ஊரில் நடந்த பெரம்பலூர். வட்ட காங்கிரஸ் மாநாட்டுக்கு அழைக்கப்பட்ட காங்கிரஸின் தீண்டாமை விலக்குக் கமிட்டியின் ஒரு மேல்பார்வை அதிகாரியான சன்னாசி என்னும் தாழ்த்தப்பட்ட தோழருக்கு 'சமபந்தி' மறுக்கப்பட்டு தனி இடத்தில் சாப்பாடு. போடப்பட்டது. 'சாயம் வெளுத்தது! என்று 'குடி அரசு' தலையங்கம் இந்த தேசிய தீண்டாமையை' அம்பலப்படுத்துகிறது. இதன் காரணமாக தீண்டாமைவிலக்குக் கமிட்டியிலிருந்து தோழர் சன்னாசியை காங்கிரஸ்நீக்கியது.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 'தேசாபிமானம்' எனும் தலையங்கம்; கருத்தாழமிக்க சிந்தனை விருந்து. சர்வதேச நாடுகள் உருவாக்கிய 'சர்வதேச பாதுகாப்புச் சங்கம்' இளைத்தவனை வலுத்தவன் கொடுமைப்படுத்தவே உதவுகிறது என்று விமர்சிக்கும் அத்தலையங்கம் உலகம் முழுவதும் இராணுவங்கள் கலைக்கப்பட்டு உலகம் ஒரே தேசமாகவும், மக்கள் ஒரே ஜாதியாகவும் கருதப்படவேண்டும் என்ற விரிந்த பார்வையை மூன் வைக்கிறது. மக்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொண்டு மேன்மக்களாகச் செயல்படும் பார்ப்பானும் பணக்காரனும் தங்களின் நலனுக்காக கூலிகளை வைத்து நடத்தும் பிரச்சாரமே 'தேசாபிமான பக்தி' என்று விளங்கிடும் அந்தத் தலையங்கம், இந்த 'தேசபக்திக்கு' எதிரான 'தேசத் துரோகமே' பாமர மக்களுக்கு பயன்களை விளைவிக்கும் என்று உரத்து முழக்கமிடுகிறது
'தர்மராஜ்ய விளம்பரம்' 'தர்மராஜ்ய ஸ்தாபனம்! 'தர்மராஜ்ய தர்பார்! என்று மூன்று தலைப்புகளில் தீட்டப்பட்ட 'கற்பனை சித்திரங்களும்: 'சித்திரபுத்திரன்' உரையாடல் சித்திரங்களும் இத் தொகுப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. காங்கிரசுக்குள் நடந்த அய்யர் - அய்யங்கார் குழு மோதல்களை 'காங்கிரசின் யோக்கியதை' எனும் தலையங்கம் அம்பலப்படுத்துகிறது வைக்கம் போராட்டத்துக்காக பெற்ற காங்கிரஸ் கட்சி பணத்துக்கு பெரியார். கணக்குத் தரவில்லை என்ற பார்ப்பன ஏட்டின் குற்றச்சாட்டுக்கு அனல்பறக்க
'குடி அரசு' தந்த மறுப்பு 'குச்சிக்காரிப் புத்தி! எனும் தலைப்பில் இரு தலையங்கங்களாக வெளிவந்துள்ளது
ஈரோட்டில் பள்ளி ஒன்றில் பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா? என்று இரு அணிகள் பங்கேற்ற 'வாக்குவாதத்துக்கு' (பட்டிமன்றம்) பெரியார் தலைவராக இருந்து வழங்கிய தீர்ப்புரை இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மற்றொரு சிறப்புக் கட்டுரையாகும்
பார்ப்பனர் ரத்தம் வேறு, தீண்டப்படாதோர் ரத்தம் வேறு என்று சங்கராச்சாரி பேசியதற்கு “குடி அரசு' எழுதிய கண்டனம், அருப்புக்கோட்டை,
இராசிபுரம், விருதுநகர் மநாகாடுகளில் பெரியார் சொற்பொழிவு என்று
சுமார் 115 தலைப்புகளில் பெரியாரின் எழுத்து - பேச்சுகளைத் தாங்கி
மலர்ந்துள்ளது இத்தொகுப்பு
- பதிப்பாளர்
பொருளடக்கம்
அருப்புக்கோட்டை மகாநாடுகள்
13
144 நல்ல காரியம்
17
கானாடுகாத்தான் வைசு-ஷ. பார்வதி - நடராஜன்
கிருமணம்
பார்ப்பனத் தொல்லை
© ® N ஓ உ
சாயம் வெளுத்தது
தஞ்சை ஜில்லா ஆதி திராவிட வாலிபர் மகாநாடு
காங்கிரசின் அலங்கோலம்
செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி
விதண்டா வாதம்
பொது உடமை தேசத்தில் கலைகள்.
ராம - ராவண ஆராய்ச்சி
புராண மரியாதைக்காரனுக்கும்
சுயமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை
கடவுள்?
சூக்ஷியும் விஷமமும் பொறாமையும்
காங்கிரசின் துரோகம்
குற்றாலத்தில் பொதுக் கூட்டம்
போக்கிரித்தனமான புகார்
வேண்டுகோள்
101
பதினோறாவது ஆண்டு
சபாஷ் திவான்பகதூர்.
109
மறைமலையடிகளின் “அறிவுரைக்கொத்து''
111
சென்னை கலாசாலைகளில் பார்ப்பனராதிக்கம்
22
113
சம்பளக் கொள்ளை
23
115
ஜோசியம்
24
125
ஜோசிய விதண்டா வாதம்
25
132
மூடநம்பிக்கை
26
133
மதப் போட்டி
27
137
கோர்ட்டில் பிரமாணம்
28
140
தர்மராஜ்ய விளம்பரம்
29
143
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
30
149
தோட்டத்தில் பகுதி கிணறா?
31
156
கேள்வியும் உத்தரமும்
32
158
காங்கிரஸ்காரர்கள் ஜாமீன் கொடுப்பார்களா?
33
165
மடச்சட்டமும் மதிப்பற்ற உத்தியோகமும்
34
176
தர்மராஜ்ய ஸ்தாபனம்
35
184
சமதர்மம்
36
189
எது பிற்போக்கான கட்சி?
37
196
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
38
203
காங்கிரஸ் கொள்கை நாடகம்
39
207
ஸ்தல ஸ்தாபனங்களும் காங்கிரஸ்காரர்களும்
40
211
சிவில் ஜெயில்
41
218
ஈரோடு வெங்கிட நாயக்கர்
42
220
ஈரோடு பெற்றோர் சங்கம்
43
223
கீட்டாட்டத்தின் தீமைகள்
44
225
காங்கிரஸ்காரனுக்கும் ஜஸ்டிஸ்காரனுக்கும் சம்பாஷணை:
45
227
தேசாபிமானம்
46
235
காங்கிரஸ்காரர்களின் தகுடுதத்தம்
47
240
காங்கிரஸ் கட்சியினரும் ஸ்தல ஸ்தாபன பரிசுத்தமும்
48
241
மதமின்றி மக்கள் வாழமுடியாதா?
49
243
கடவுள் சக்தி
50
250
திருவள்ளுவர் நாஸ்திகர்
51
253
கீழ் மேல் கிருஷ்ணன் - அர்ஜுனன் சம்வாதம்
52
254
53
255
தர்மராஜ்ய தர்பார்
54
258
இராசீபுரம் தாலூகா தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு
55
265
மற்றொரு சூழ்ச்சி
56
271
பகிஷ்கரியுங்கள்! இராஜேந்திரப்
57
பிரசாத்தைப் பகிஷ்கரியுங்கள்!!
275
இராசீபுரம் தாலூகா தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு
276
58
தற்கால அரசியல் நிலை.
279
59
காங்கிரசின் யோக்கியதை
287
60
காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம்
294
61
296
62
காங்கிரஸ் வியாபாரம்
ஜஸ்டிஸ் கட்சிக்கு நிதி வசூல்
298
63
தேசபக்தி
299
64
சபாஷ் அம்பத்கார் -1
300
65
முடிவை மாற்ற வேண்டாம்
306
66
ஈரோடு முனிசிபாலிட்டியும் மின்சார விளக்கும்
307
67
திருச்சி மகாநாடு
68
313
அம்பத்காரும் இந்து மதமும் - 1T
317
69
திருச்சி சுயமரியாதை மகாநாடு
321
70
பட்டப் பகல் ஏமாற்றுந் திருவிழா ALC.C.
323
71
விதண்டாவாதம்
72
326
மதங்களின் சக்தி
328
73
திதி
330
74
331
75
பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா?
335
76
தேர்தல் தொல்லை
ராமகிருஷ்ணா மடம்
339
77
காங்கிரஸ் தியாகம்
78
341
ஸ்தல ஸ்தாபனம்
79
342
காங்கிரஸ் தலைவருக்கு தமிழ் நாடெங்கும்
80
பகிஷ்காரம்
346
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
81
354
ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டி
82
358
மதம் மாறுதல்.
83
364
திருவாங்கூர் திவான்
84
370
விஜயராகவாச்சாரியார்
85
371
காங்கிரசைப் புதையுங்கள்
86
373
திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்.
87
375
காந்தியும் ஜாதிப்பாகுபாடும்
88
380
விதண்டாவாதம்
89
384
குச்சிக்காரி புத்தி - 1
90
387
குச்சிச்காரி புத்தி -17
91
396
92
403
யார் திட்டத்தை யார் திருடியது?
வகுப்புப் போர்
93
412
தேவகோட்டையில் பார்ப்பனீய தாண்டவம்
94
415
சத்தியமூர்த்தியும் கோவைப் பிரசங்கமும்
95
417
தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்
96
430
பொன் விழாப் புரட்டு
97
432
சத்தியமூர்த்திக்கு சனியன் பிடித்தது சேச்சே இல்லை
98
433
காங்கிரஸ் பொது ஸ்தாபனமா?
99
437
வேண்டுகோள்
100
442
செட்டிநாடும் ஜஸ்டிஸ் கட்சியும்
101
444
தோழர்களே! உஷார்!
102
446
ஜாதிப்புத்தி போகாதையா ராஜகோபால மாலே
103
449
ஒரு விசேஷம்
104
451
105
453
எச்சரிக்கை
ஜஸ்டிஸ்” கொள்கை வெற்றி
106.
454
கல்கத்தா கலாட்டா
107.
459
சபாஷ் பம்பாய்! தேவகோட்டை வக்கீல் சங்கம்
108.
463
109.
466
காங்கிரசுக்கு எதிர்ப்பு
110.
469
கொள்ளைக்காரப் பார்ப்பனர்
111.
471
காங்கிரஸின் பிரசார வெற்றி
112.
47
oo
பொப்பிலி ராஜா அறிக்கை
113.
48
விஜயராகவ ஆச்சாரியார்க்கு பீஷ்மப் பட்டம்
114.
488
காங்கிரஸ் பிளவு
115.
491
அருஞ்சொல் பொருள்
116.
492
உள் தாடுவருட சத்து ரூ. 3-0 கணித் க அபி R« No. M. 2041 “KUDI-ARASU” தனிப்பிசதி விலை ஒறு அணா டிஅரசு
1924-6 ஸதாயிக்கப்பட்டது. எப்பொருள் ஊர்ப் i எப்பொருளெ த்தைத்தவ ணும். பல் P B வெளிவரும், - மெய்ப்பொருள் அண்பதறிவு - W Nl < Py )
மாலை, சரோ வுலாகலி அயனி iem டப) பகர் 45
B e குடி அரசு பதிப்பக வெளியீடுகள்.
இத்தியானின் ஞா குறைபாசென், இக பல்வலி அங்கள் கனை அநரியாலிருந்த டாக்
வட்ட நர் அகட s லயும். கொண்ட கான அரிய அன். e ) ன்னை அணை லெனினும், மதமும்,
இதத ரவ வெழுுடையைக் கொல்கலி/ யே VL. மூர் சடவெட el அள்கள். சென அனில் நடைபெற்ற சமூக ச b மகாலாட்டன் தை: [கைத் றத்தை நவ் வல் இப் சநுமாரக்குதசணைைல gl தோழர்கள் o4 பொ.துவுடைமைத் தத்.அவங்கள்.. வொறுகா விது இ இருக்கு போண்டி ய வயரு கமய செயிபழலாத சவதர்கள் ற அரசு வாட்கள். ல்கள் அணா 2, ரிய கட்ச எந்த்தகாட்டம் மச சகச ள், | பர்ணரர்ட் வர: கலை னையே ப இயல் தும் கடவுளும், பிரபஞ்சமும், “அவவ செய்னா நாக நட ரீங்கார அலாகளால் எழுதப்பட்ட | சாரும். அணா ந் o s என்றி. க்கள், கிளிகளை 6 சட வெட, கைவல்ய சாமியாரின் s B s, இது தோர் . oo 11l o வே ட்டு ™ பட்டுப் புரங்கள் அனைதிறிதும் வள்ள] ்சல்பபையிரயாண திலன்றுக்க இருப்வி வருக்க கடக. பூர் அஸ் காழ் னன் oy [] சரை நவி இடகலை செய்த செ பெர்சன் வ என்னக் எடத்த 5 ஜட்கவதாருஸ்ட தோற் o, கெடா அவாகள் த் டத 1 ல எட்டு அய்யம் பல குழ கையன் இரமாயண ஆராய்சி, i இ இவனைத் ச சக்க மதுதீதி விளக்கம், 5 a இதமதன்ல el e வல் கொடுவமையுல விக்குது, விளை அணை L. சூடி அரச பப்படம் சரோ, IR
அருப்புக்கோட்டை மகாநாடுகள்
ராமனாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையானது சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்படும் வரையில் தீவிர காங்கிரஸ் கோட்டையாய் இருந்து வந்தது என்பதோடு, தோழர் ஈ.வெ.ரா. தமிழ்நாடு மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்த காலத்தில், அவருக்கு வலக்கை போல் இருந்து, அவரது நோக்கப்படி தொண்டாற்றி வந்திருப்பதை இன்றும் காங்கிரஸ் ரிகார்டுகளில் பார்க்கலாம். அப்படிப்பட்ட, அருப்புக்கோட்டைசு.ம. இயக்கம் ஆரம்பமானவுடன், ஒரேகூட்டமாக அதில்
சேர்ந்து உழைத்து வருவது யாவரும் அறிந்ததே யாகும்.
இந்த நிலையில் ஜுன்மாதம்29, 30, உகளில் அருப்புக்கோட்டையில் நான்கு மகாநாடுகள் நடந்திருக்கின்றன.
அதாவது தோழர்கள் 8.5.பழனிச்சாமி அவர்கள் வரவேற்புத் தலைவராகவும், கே.முத்துச்சாமி வல்லத்தரசு, B.A, BL, ML.C., அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு சுயமரியாதை மகாநாடும்,
தோழர்கள் சு.க. குழந்தைவேல் முதலியார் வரவேற்பு அக்கிராசன ராகவும், விருதுநகர் மூனிகிபல் சேர்மென் வி.வி.ராமசாமி அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு ஜஸ்டிஸ் மகாநாடும்,
தோழர்கள் ராஜம்மாள் சாது கந்தசாமி அவர்கள் வரவேற்புத் தலைவராகவும், எஸ். நீலாவதி அம்மாளை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு பெண்கள் மகாநாடும்,
தோழர்கள் சு.வீ. சோமசந்திரம் அவர்களை வரவேற்புத் தலைவராகவும்,
ப. ஜீவானந்தம் அவர்களை மகாநாட்டுத் தலைவராகவும் கொண்டு தொழிலாளர் மகாநாடும் வெகு சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடைபெற்றிருக்கின்றன சுயமரியாதை இயக்கம் அதி தீவிரக் கொள்கை கொண்டு விட்டதாலும், சர்க்காரை விரோதித்துக் கொண்டதாலும் ஒழிந்துபோய் விட்டது'' என்று பேசிக் கொண்டிருக்கிறவர்களும் ''அது அரசியலில் நுழைந்ததால் மறைந்துவிட்டது” என்று பேசிக் கொண்டிருக்கிறவர்களும், “சு.ம. இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை தழுவி இருப்பதால் அது வெறும்
பணக்காரர் இயக்கமாகி தேய்ந்து வருகிறது'' என்று பேசிக் கொண்டிருக்கிற
வர்களும் ''அதன் தலைவர் மந்திரிகளோடு அளவளாவிக் கொண்டு மந்திரிகளுக்குள் அய்க்கியமாகி பார்ப்பனரல்லாதார்களுக்கு உத்தியோகம் வாங்கிக் கொடுக்கும் வேலையில் இறங்கி உத்தியோக வேட்டை ஆடிக் கொண்டிருந்ததால் அதன் பெருமை குறைந்து போய்விட்டது" என்று பேசிக் கொண்டு இருக்கிறவர்களும், “சு.ம. இயக்கம் தீவிரக் கொள்கைகளை விட்டுக் கொடுத்து, சர்க்காருக்கு அடி பணிந்து சர்க்கார் தாசத்துவம் பெற்றுவிட்டதால் 10 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது'' என்று சொல்லிக் கொண்டு இருக்கிறவர்களும், ௯.ம. இயக்கத்தின் பேரால் பிழைக்கக் கருதி இருந்த சிலரின் சுயநல புத்தியை அறிந்து வெளியாக்கப்பட்டவர்.
களில் பலர் “சு.ம. இயக்கமாவது - வெங்காயமாவது, அதெல்லாம் ஒழிந்து வெகுகாலமாகி விட்டது” என்று பேசிக் கொண்டு இயக்கத்திற்கு எதிர்ப்பும், விஷமப் பிரசாரமும் செய்து கொண்டு இருக்கிறவர்களும், ரயில்வே ஸ்டேஷனுக்கு வெகுதூரத்திற்கப்பால் நடந்த அருப்புக் கோட்டை மகாநாடுகளில், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் தேர் திருவிழாப் போல் ஜனங்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கிழவர்கள், கிறிஸ்தவர்கள், முகம்மதியர்கள் முதலிய கூட்டத்தார்கள் 1000க்கணக்காய் வந்து கூடினதும், இயக்கம் கொள்கை திட்டம் சம்பந்தமான விவாதங்களில் வெகு ஊக்கமாகவும், நுட்பமாகவும் கலந்து பங்கெடுத்துக் கொண்டதும், அவர்களது பாட்டுகளும், பேச்சுகளும், குதூகலங்களும் இயக்கத்தினிடத்தில் காட்டிய பகுத்தறிவோடு கூடியுள்ள பக்தியையும் கண்டிருப்பார்களேயானால், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்ட முட்டாள்தனத்திற்கு வருந்தியே இருப்பார்கள். அன்றியும், இன்று இயக்கத்தைக் குறை சொல்லிப் பழித்துத் திரிகின்ற ஒவ்வொருவரும், இயக்கத்தின் பேரால் பெருமை பெற்றுப் பிழைத்துத் திரிந்த தங்கள் வாழ்வுதான் போய்விட்டதே தவிர இயக்கத்துக்கு எவ்வித குறையும் ஏற்படவில்லை என்பதையும் நன்றாய் உணருவார்கள். அதாவது, இம்மாதிரிக் கூட்டத்தாருக்கு உதாரணமாக ஒரு கதை சொல்லப்படுவதுண்டு
அதாவது:
ஒரு காட்டில் திரிந்த நரி, ஒரு நதியில் தண்ணீர் குடிக்க வந்ததில் வெள்ளம் வந்து தண்ணீரில் அந்த நரியை அடித்துக் கொண்டு போனது.
தண்ணீரில் போய்க் கொண்டிருந்த நரி மேலுக்கு வர முடியாமல் வேகமாய்ப் போய்க் கொண்டிருந்ததால் கரையில் இருந்த ஜனங்களைப் பார்த்து, “ஐயோ உலகம் போச்சுதே! உலகம் போச்சுதே!!” என்று கூப்பாடு போட்டது
அதைக் கேட்ட வெளியில் கரையில் நின்று கொண்டிருந்த ஜனங்கள், இதன் பேச்சை நம்பி உலகத்துக்கு ஏதோ ஆபத்து வந்துவிட்டதாகக் கருதி வெகுபிரயாசைப்பட்டு நரியைக் காப்பாற்றி கரை சேர்த்து எல்லோரும் கூடி நரியைப் பார்த்து, “உலகம் போச்சுது, உலகம் போச்சுது என்று கூப்பாடு
குடி அரசு- 1935 (2) 14
போட்டாயே உலகத்துக்கு என்ன ஆபத்து வந்து விட்டது” என்று வெகு கவலையாய்க் கேட்டார்கள். அதற்கு அந்த நரியானது, தான் ஓட்டம் பிடிக்க செளகரியமான வழியைப் பார்த்துக் கொண்டு ஜனங்களைப் பார்த்து, ஐயன்மீர்! நீங்கள் எல்லோரும் எவ்வளவோ பாடுபட்டு என்னைக் காப்பாற்றி இருக்கவில்லையானால் எனக்கு இந்த உலக வாழ்வு போய் விட்டிருக்குமல்லவா? நான் செத்துத் தானே இருப்பேன். பிறகு எனக்கு என்ன உண்டு? ஆகையால் எனக்கு உலகம் போச்சுது உலகம் போச்சுது
என்று தானே சொன்னேனே ஒழிய உங்களுக்கு ஒன்றுமில்லை. இந்தப் பெரு வெள்ளத்தால் க்ஷேமம் உண்டு” என்று சொல்லிவிட்டு ஓட்டமெடுத்ததாம்
இந்தக் கதை போல் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங் களுக்காகவும், சுயநலத்தில் ஏமாற்றமடைந்ததற்காகவும், இயக்கத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாகப் பாசாங்கு செய்து போலி அழுகை அழுது, மக்களை ஏய்ப்பதன் மூலம் நலனடையப் பார்க்கிறார்கள் என்பதும், அம்மகாநாட்டைப் பார்த்தவர்களுக்கு நன்றாய் விளங்கி இருக்கும்
சுயமரியாதை இயக்கம் (போய்விடாது, போகச் செய்ய எவராலும் முடியாது. தோழர் ராமசாமியே ஒழிந்து போனாலும் சரி, எப்படிப்பட்டவர். கரணம் போட்டு யாருடைய தாசனாய் விட்டாலும் சரி, இயக்கமானது ஒரு நாளும் அழியாது, மறையாது, களைத்தும் போகாது.) போய்விட்டது என்றே வைத்துக் கொள்ளுவோம். அதற்காக எவரும் தியாகம் செய்து விடவில்லை; பெருவாரியான நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடவும் இல்லை; அதன் இயங்குதலில் - அதன் பரவுதலில், அது யாருடைய தயவையும் பெற்று இருக்கவுமில்லை.
அது யாருக்கும் எவ்வித வாக்குத் தத்தமும் செய்து எவரிடமும் எவ்வித அட்வான்சோ, சன்மானமோ, தயவோ, தியாகமோ, பெற்றோ எதிர் பார்த்தோ இருந்ததுமில்லை. ஆகையால் அதற்காக எவரும் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லாத நிலையிலும் அது சில கொள்கையைக் கொண்டு, சில திட்டங்களை வகுத்துத் தன் இஷ்டப்படி சென்று கொண்டு இருக்கிறதாகவும், அதை ஏற்றுப் பின் வருபவர்களை உயிருக்குயிராய் மதிக்கிறதும், மற்றவர்களை உன்னால் முடிந்ததைப் பார் அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்கின்றதுமானதானாய் போய்க் கொண்டிருக்கிற நிலையில்தா னிருந்து வருகின்றதென்பதும் விளங்கும் ஆகவே அது ஒழிந்துவிடும் என்று கவலைப்படுவதும், ஒழிந்து விட்டதே என்று துக்கப்படுவதும் வடிகட்டின பயித்தியக்காரத்தனமேயாகும் என்பதையும் கூட்டம் நன்றாய் விளக்கிக் காட்டிற்று என்றும் சொல்லலாம் எனவே அருப்புக்கோட்டை மகாநாடுகள் ஒவ்வொரு முக்கிய பிரச்சினைக்கும் ஒவ்வொரு மகாநாடாகவும், பொதுப் பிரச்சினைக்காக சு.ம மகாநாடாகவும் ஆக 4 மகாநாடுகள் நடந்தது மிகவும் பாராட்டத்தக்கதாகும்
15 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வரவேற்புத் தலைவர்கள் உபன்யாசங்களும், மகாநாட்டுத் தலைவர்கள் உபன்யாசங்களும், தீர்மானங்களும், தீர்மானத்தின்மீது பேசிய பேச்சுகளும் கல்லும் விளங்கிக் கொள்ளும் மாதிரியில் மிகத் தெளிவாகவும், அரிய கருத்துகள் அடங்கியதாகவும் இருந்தன.
குறிப்பாக தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் தொழிலாளர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து நிகழ்த்திய சொற்பெருக்கானது பொது ஜனங்களுக்கு புதிய ஒரு எழுச்சியை உண்டாக்கிற்று என்று சொல்லலாம்.
முடிவாக ஏதோ சில காரணங்களால், சரியாகவோ, தப்பாகவோ தோழர் ஈ.வெ.ராமசாமி சிறையில் இருக்கும்போது, நிர்வாக சபையார் பொது மகாநாடுகள் கூட்டக் கூடாது என்று உத்திரவு போட்டிருந்தாலும்,
மறுபடியும் அவர்களது ஆக்ஷ்பனை இல்லாமலேயே இப்போது ஆங்காங்கு மகாநாடுகள் நடக்க ஏற்பாடாகி வருவதும், மக்கள் மூன் போலவே உற்சாகமாய் மகாநாடுகளில் கலந்து கொள்வதும், அதன் மூலம் பெரும் பிரசாரங்கள் நடப்பதும், இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையே உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அன்றியும் தோழர்கள் செளந்திரபாண்டியன், V.V. ராமசாமி முதலியவர்கள் இயக்க விஷயத்தில் முன்போலவே ஊக்கமெடுத்து, முன்னிலும் அதிகமாய்ப் பிரசாரம் முதலியவைகள் செய்ய வேண்டுமென்று முன் வந்து, மக்களுக்கு ஊக்கத்தை உண்டாக்கி வரும் விஷயமும் மிகுதியும் மகிழ்ச்சிக்கு உரியது என்பதும் நாம் விளக்க வேண்டியதில்லை
குடி அரசு - தலையங்கம் - 07.07.1935
குடி அரசு- 1935 (2) 16
144 நல்ல காரியம்
சேலத்திலும், வேலூரிலும் பொதுக் கூட்டங்களுக்கு 144 பிரிவுப்படி உத்திரவுகள் போட்டு சர்க்காரார் பொதுக் கூட்டங்களைத் தடுத்ததாகத் தெரிய வருகிறது.
இதே முறையை இனியும் ஆங்காங்கு கூட்டப்படும் பொதுக் கூட்டங்களுக்கும் கையாடப்படலாம். இதனால் கூட்டங்களில் ஏற்படும் காலித்தனங்கள் ஒருவாறு ஒழிந்து விடலாம் என்று சர்க்கார் கருதி இருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.
இதைப் பற்றி சுமார் 6, 7 மாதங்களுக்கு முன் நாம் குடிஅரசில்
எழுதியும் இருக்கிறோம். காங்கிரசின் பேரால் பொது ஜனங்களை ஏமாற்றி, தாராளமாய்ப் பணங்கள் வசூல் செய்து, அவற்றைக் காலித்தனம் செய்யப்படுவதற்காக, சில தோழர்களுக்குக் கொடுத்து, அவர்களைப் பெரிய தேசப் பக்தர்களாக்கி, உசுப்படுத்தி விடுவதால், கூட்டங்களில் இம்மாதிரியான தொல்லைகள் நடைபெற வசதிகள் ஏற்பட்டுவிடுகின்றன.
சர்க்காரார் ஒவ்வொரு ஆள்களுடையவும் ஜீவனத்துக்கு மார்க்கம் என்ன? என்பதைத் தெரிந்து சரியான மார்க்கமில்லாமல் இம்மாதிரி வாழ்க்கையிலிருந்து வருபவர்களிடம் ஜாமீன் நடவடிக்கை நடத்திப் பொது ஜனங்களுக்குச் சவுகரியத்தையும், அமைதியையும் உண்டாக்கித் தர வேண்டும் என்றும், பொதுக் கூட்டங்கள் விஷயத்திலும் குறைந்த அளவு 12 மணி நேரத்துக்கு முன்பாகிலும் மீட்டிங்கைப் பற்றி சர்க்காருக்குத் தெரிவித்து உத்திரவு பெற்று மீட்டிங்கை நடத்தும்படியான சட்டம் இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட ஒவ்வொரு கூட்டத்துக்கும் போலீசார். ஆஜராகிக் கூட்டத்தைக் காலித்தனமில்லாமல் அமைதியாய் நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும், நாகரீக தேசத்திலும் சுதந்திரமும், சகோதரத் துவமும், சமத்துவமுமுள்ள தேசங்களில் இந்தப்படியே நடக்கின்றது என்றும் தெரிவித்திருக்கிறோம். இந்தப்படி செய்யாமல் எல்லாக் கூட்டங்
களுக்கும் சர்க்கார் 144 போட்டுவிட்டார்கள்.
காங்கிரசின் பேரால் பணம் வசூல் செய்த காலம் முதல் கொண்டுதான், கூட்டங்களில் காலித்தனம் ஏற்படுவது என்பது ஆரம்பமாயிற்று என்று ஆதாரங்களோடு சொல்லலாம்.
17௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இதற்கு உதாரணம் காங்கிரசுக்காரர்கள், தங்களைத் தவிர மற்றவர் களுக்குப் பொது மேடை (பப்ளிக் பிளாட்பாரம்) கிடையாது என்று ஆங்காங்கு சதா சர்வகாலம் பெருமை அடித்துக் கொள்ளுவதும் ஒன்றாகும்
சுயமரியாதை இயக்கத்தைப் பொருத்தவரையில், எந்தக் குழப்பங் களிலாவது சுயமரியாதைக்காரர்கள் சம்மந்தப்பட்டிருந்தார்கள் என்று தெரிந்த போதெல்லாம் நாம் அவர்களை வன்மையாய்க் கண்டித்தே வந்திருக்கிறோம்.
நாளதுவரைஎந்தக்காங்கிரஸ் பத்திரிகையோ, காங்கிரஸ் தலைவர்களோ தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஈறாக எவரும் தங்கள் ஆள்களாலும், கூலிகளாலும் ஏற்பட்ட காலித்தனங்களைப் பற்றி ஒரு சிறு வார்த்தையாவது சொல்லிக் கண்டித்து இருப்பதாக நாம் காணவே முடியவில்லை
அது மாத்திரமல்லாமல், அப்படிப்பட்டகாலித்தனங்களைக் காங்கிரஸ் பத்திரிகைகள், தேசீயப் பத்திரிகைகள், பார்ப்பனப் பத்திரிகைகள் என்பவைகள் தேசப்பக்தி என்பதாகப் பாராட்டியும், மிகைப்படுத்தியும் எழுதி எதிரிகளை அதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு இழிவுபடுத்தியும், காலிகளையும், காலித்தனங்களையும், உற்சாகப்படுத்திக் கொண்டும் வந்திருக்கின்றன. இதற்குப் பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்
இந்த மாதிரி நிலையில் பதிலுக்குப் பதில் காலித்தனம் செய்ய இஷ்டமில்லாதவர்களுக்கும், காலித்தனத்தை வெறுப்பவர்களுக்கும் சர்க்காரிடம் முறையிட்டு, புதிய சட்டங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை. இப்படிக் கேட்டுக் கொள்வதை காலித்தனத்தில் வெற்றி பெறக் கருதியிருப்பவர்கள் கோழைத்தனம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
காங்கிரசுக்காரர்களால்தான் இவ்வித நிலைமை ஏற்பட்டதென்பதை எடுத்துக் காட்டினோமேயானால், அதற்கும் தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் அவர்களைப் போன்ற தலைவர்கள் “காங்கிரசின் வீரத்தினாலும், ஆண்மையாலும், சர்க்காராரும் மற்றக் கட்சியாரும் பயந்து கொண்டு, புதுச் சட்டங்கள் மூலம் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்'' என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனாலும் அது விஷயத்தில் நமக்குக் கவலை இல்லை. இந்தியாவுக்கு யோக்கியமான சுயராஜ்ஜியம் என்பது கிடைத்ததாக வைத்துக் கொண்டாலும், எப்படிப்பட்ட சுயராஜ்ஜிய ஆட்சியிலும் இப்படிப்பட்ட காலித்தனங்கள் நடவாமல் இருப்பதற்கு அவசியமான சட்டங்கள் செய்ய வேண்டியது அவசியமே ஆகும்.
இந்திய அரசாங்கம் இதற்கு முன்னையே இந்தக் காரியம் செய்து இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட காலித்தனங்களால் அவர்களுக்கும் சில சமயத்தில் அனுகூலமிருக்கிறபடியால், இதைப் பற்றி கவனிக்காமல் அவ்வப்போது அதுவும் தங்களுக்கு இஷ்டப்பட்டபோது கவனித்து தக்கது செய்து வருகிறார்கள்.
குடி அரசு- 1935 (2) 18
இனி வரப்போகும் தேர்தல் சம்பந்தமான பிரசாரங்களில், காங்கிரசுக் காரர்கள் பேசும் சந்தர்ப்பங்களில் எதிரிகளை அவன், இவன், அயோக்கியன், திருடன், தேசத் துரோகி, சர்க்கார் கூலிகள், அடிமைக் கூட்டம், குலாம் என்று
எல்லாம் இழி மொழிகளில் பேசி வருவது போல் பேச நேரிட்டால், அவர் களுக்குப் புத்தி கற்பிக்காமல் இருப்பது என்பது சுலபத்தில் சகிக்கக்கூடிய காரியமாய் இருக்காது. அன்றியும் மற்றவர்கள் கூட்டங்களில் போய் காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய யோக்கியதைகளை எங்குவெளிப்படுத்தி விடுவார்களோ என்று பயந்து கூட்டங்களில் கலாட்டா செய்து கலைக்க முயற்சிக்கும்போதும், அவர்களுக்குப் புத்தி கற்பிக்கவோ, பதிலுக்குப் பதில் செய்யவோ ஆசை ஏற்படாது என்று சொல்லவும் முடியாது
ஆகவே கூட்டங்கள் ஒழுங்காயும் கண்ணியமான முறையிலும் நடைபெற வேண்டும் என்று கருதுகிற எவரும் சர்க்கார், பந்தோபஸ்தைக் கோரியே ஆக வேண்டிய நிலைமையை காங்கிரஸ்காரர்கள் உண்டாக்கி
விட்டதால், இனி கூட்டங்கள் கிரமமாய் நடைபெற சர்க்காருக்குத் தெரிவித்து விட்டே கூட்டம் நடத்தக் கூடியதான ஒரு சட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம்
சேலத்தில் 144 ஏற்படக் காரணமாய் இருந்த விஷயங்களைப் பற்றி, தோழர்கள் அவனாசிலிங்கம் செட்டியாரும், வெங்கிடாசல ரெட்டியாரும் சேலம் கூட்டத்தில் எடுத்துச் சொல்லி, அதற்கு ஆக தங்கள் வருத்தத்தை தெரிவித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் வந்திருக்கும் விஷயங்களைப் பார்த்தாலே எவருக்கும் சுலபமாய் விளங்கும்
அதுபோலவே வேலூரிலும் யார் நடத்தையால் 144 போட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதும் பத்திரிக்கைகளிலிருந்தே விளங்கும்
அதாவது தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் சார்பாக 28.6.35-ந் தேதியில் கோட்டை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பல தோழர்கள் பேசுவார்கள் என்றும் பெயரைக் கண்டே 25.6.35 தேதியிலேயே, அதாவது 3 நாளைக்கு முன்பிருந்தே நோட்டீசுகள் வெளியிட்டு, தண்டோராவும் போட்டு வந்தும், இதையறிந்த காங்கிரஸ் காரர்கள் 28.6.35-ல் அதே இடத்தில் போட்டிக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள். இதனால் கலெக்டர் 144 போட வேண்டி வந்து கூட்டம் நிறுத்தப்பட்டுப் போயிற்றாம். ஜஸ்டிஸ் கட்சி பிரசாரத்துக்கு ஆரம்பித்த உடன். காங்கிரஸ்காரர்கள் இம்மாதிரியான நடத்தையை மேற்கொண்டதானது மிகவும் இழிவானதும் பயங்காளித்தனமானதும் என்பதோடு, இதைக் காங்கிரஸ் பத்திரிகைகளும் தலைவர்கள் என்பவர்களும் கண்டிக்காமல் இருப்பது வெறுக்கத்தக்கது என்றும் சொல்லுவோம்.
19 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆகையால் இந்த விஷயத்தில் சர்க்காரார் தங்கள் கடமையை உணர்ந்து கூட்டங்கள் ஒழுங்காய் நடைபெற பொறுப்பு ஏற்றுக் கொண்டு பந்தோபஸ்து செய்யவில்லையானாலும் 144 உத்திரவாவது போட்டு, காலித்தனங்கள் நடக்காமல் தடுத்ததை ஒரு அளவுக்காவது நல்ல காரியம் என்று சொல்லி பாராட்டித் தீர வேண்டியிருக்கிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.07.1935
குடி அரசு- 1935 (2) 20
கானாடுகாத்தான் வைசு.ஷ. பார்வதி - நடராஜன்
திருமணம்
தலைவர் அவர்களே! மணமக்களே!! பெற்றோர்களே!!! தோழர்களே!!!
இன்று நடந்த இத் திருமணத்திற்கு நமது மாகாண அபிவிர்த்தி மந்திரியும், பிரபல கனவானுமான நண்பர் பி.டி.ராஜன் அவர்கள் தலைமை வகித்தது மிகவும் பாராட்டத்தக்கதாகும். சீர்திருத்த துரையில் மிக்க ஆர்வமுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
அவரும் இம்மாதிரியான சிரதிருத்தங்களில் எப்போதும் முன்னணியில் நிற்பவர் என்பது நீங்கள் அறிந்ததேயாகும்.
சுருக்கமாகவும், விளக்கமாகவும் சொல்ல வேண்டுமானால், இத்திருமண மானது நேற்றே அரசாங்க ஆதாரத்தில் பதிவாகிவிட்டது
நமது சமூக முறையில் உள்ள வழக்கப்படி இன்று நடந்த இந்நிகழ்ச்சி மணமக்கள் இருவரும்சதிபதிகளாக குடும்ப வாழ்க்கையில் இறங்கி விட்டார்கள் என்பதை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்யப்படும் காரியமேயாகும்.
எனினும், இத் திருமண நிகழ்ச்சி இயக்கங்களில் நடக்கும் மற்ற திருமண நிகழ்ச்சியைப் போல் இல்லாமல் சிறிது மாறுபட்டிருக்கலாம் இத்திருமணங்கள் சுயமரியாதைத் திருமணம் என்றும், அப்படிச் சொல்ல வெட்கப்படுபவர்களோ இஷ்டமில்லாதவர்களோ சீர்திருத்த திருமணம்
என்றும் சொல்லப்படுவதுண்டு.
எப்படியானாலும் திருமண தத்துவத்தில் எவ்வித மாறுதலும் இல்லை. ஒரு புருஷனும், ஒரு பெண்ணும் கூடி கூட்டு வாழ்க்கை நடத்துவது என்ற தத்துவத்திலேயே தான் இது நடைபெற்றிருக்கிறது ஆனால் அத்தத்துவத்துக்கு ஆக நடைபெறும் நிகழ்ச்சிகளில் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். இவைகள் காலதேசவர்த்தமானத்தில் தானாகவே ஏற்பட்டு வருகின்றன.
மனிதன் சுபாவத்திலேயே மாறுபாட்டை விரும்புகிறவன், அதிலும் இந்த காலமானது அறிவு சுதந்திரத்தைக் கொடுக்கும்படியான காலமாகப்
21 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
போய்க் கொண்டு இருக்கிறது. மாறுதலும், அறிவும் சேர்ந்துதான் சுயமரியாதை என்றோகிதிருத்தம் என்றோசெல்லப்பட்டிருக்கிறது. இதைப்பற்றிப் பேசுவதை, சுயமரியாதை என்று சொல்லப்பட்டாலும், புராண மரியாதையோ, வைதீக மரியாதையோ, வேத மரியாதையோ கொண்டவர்களும் இன்று தானாகவே பல மாறுதலிலும், சீர்திருத்தங்களிலும் விழுந்து நீந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வைதீகர்கள் என்று சொல்லப்படும் கூட்டங்களில் முதன்மை பெற்ற பார்ப்பனர்களே திருமணம் முதலிய வைதீகச் சடங்குகள் என்பவைகளில் பெரியதொரு மாறுதல்களை கையாடிக் கொண்டு வருகிறார்கள்
அவர்களில் அநேகர் திருமணங்கள் ஒரு நாளில் முடிந்து விடுகின்றன. முன்பெல்லாம் ஒரு நாள் கல்யாணத்துக்காக என்றே கோவிலுக்குப் போய் முடித்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது கோவிலுக்குக்கூட போகாமலே வீட்டிலேயே ஒரே நாளில் திருமணத்தை முடித்துக் கொள்ளுகிறார்கள்.
காரணம் கேட்டால் “சுவாமி கோவிலில் மாத்திரம் தானா இருக்கிறார்?
எங்கும் இருக்கிறார். அப்படிப்பட்டவரை கோவிலில் மாத்திரம் இருக்கிறார் என்று கருதி கோவிலுக்கு போவது அரை நாஸ்திகம்” என்று சொல்லி விடுகிறார்கள்.
ஆகவே மாறுதலும், சீர்திருத்தமும் அதிசயமானதல்ல. அன்றியும் இம்மாறுதலால் ஏதாவது நஷ்டம் ஏற்பட்டதா என்று பாருங்கள். முதலாவது
பணம் மிச்சம். அவற்றை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யலாம். நேரக்
கேடு, அதிகமான தொந்திரவு, தொல்லை அலைச்சல் முதலியவை இல்லை. அர்த்தமற்றதும், மூடநம்பிக்கையானதும், காட்டுமிராண்டித் தனமானதுமான வேஷங்கள், காரியங்கள் ஆகியவைகள் இல்லை. வீணாக 5 நாள் விருந்து போடுவதிலும், பார்ப்பானைக் கொண்டு குப்பை செத்தை போட்டுப் புகைத்து நமக்கு விளங்காத விஷயத்தைப் பற்றி பேசுவதிலும் ஓதுவதிலும் என்ன பயன்? சீர்திருத்தம் என்பதினால் மனித சமூகத்துக்கு எவ்வளவு நன்மை இருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள்.
அன்றியும் இன்று நடந்த மற்றொரு சங்கதியையும் நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அதாவது மாப்பிள்ளைக்கு பெண் ஒரு சங்கலியைக் கழுத்தில் மாட்டிற்று.பெண்ணுக்கு மாப்பிள்ளையும் ஒருசங்கலியை கழுத்தில் மாட்டினார்.
இது ஆணும் பெண்ணும் வாழ்க்கையில் சமமே ஒழிய ஒருவருக் கொருவர் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதற்கு அறிகுறியாகும். இதை ஒரு புரட்சியான காரியம் என்றே சொல்லலாம்
மணமகள் பார்வதி தனக்கு தாலிகட்டிக் கொள்ள இஷ்டமில்லை
என்றும், தாலி பெண் அடிமையைக் குறிக்கும் சாதனம் என்று சொல்லி தாலியை
குடி அரசு - 1935 (2)
ப 3
மறுத்ததால் இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் சங்கிலி போட்டுக் கொள்வது என்கின்ற ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று
இன்று நடந்தசீர்திருத்தங்களுக்குப் பெரிதும் பெண்ணும் பொருப்பாளி என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தோழர் வைசு.ஷண்முகம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர் என்பதையும், அவர் சுமார் 20 வருஷங்களுக்கு முன்பிருந்தே சீர்திருத்த தொண்டில் ஈடுபட்டு உழைத்து வருகிறவர் என்பதும் நீங்கள். அறிந்ததேயாகும். இத் திருமணம் இம்முறையில் நடக்க ஏற்பாடு ஆகி இருக்கவில்லை என்றால் பெண்ணுக்கு கலப்பு மணமாவது செய்து கொள்வதன் மூலம் சீர்திருத்த முறையில் திருமணம் செய்து செட்டிமார். சமூகத்துக்கே ஒரு முதல் வழிகாட்டி ஆக வேண்டும் என்பதே முக்கிய ஆசை. தோழர் வைசு. அவர்களும் இதற்காகவே எவ்வளவோ முயற்சி எடுத்து
சீர்திருத்தத்தில் தக்க ஆர்வமுள்ள இந்த மணமகனை தேர்ந்தெடுத்தார்கள். இதை சீர்திருத்த மணம் என்பதோடு சுதந்திரக் காதல் மணம் என்றும் சொல்லலாம். மணமகன் வீட்டார்களும், இச்சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டது பாராட்டத்தக்கது. செட்டியார் சமூகத்தார்களும் இவ்வளவு பேர். தம்பதிகள் சகிதம் வந்திருப்பது சீர்திருத்த வெற்றியைக் குறிக்கின்றது
இந்த வைபவங்கள் எல்லாம் பெரிதும் இச்சமூகம் கண்டு களித்து இதை பின்பற்ற வேண்டும் என்கின்ற நோக்கத்தை முன்னிட்டே நடத்தப்படுவதாகும்
கடைசியாக கனம் மந்திரியார் அவர்கள் ஒருநாள் சாவகாசத்தில் அழைக்கப்பட்டும் அவருக்கு இன்று வேறு இடங்களில் முக்கியமான வேலைகள் அமைக்கப்பட்டிருந்தும், எவ்வித ஆக்ஷ்பனையும் சொல்லாமல் மிக்க திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இன்று சரியாய் குறிப்பிட்ட நேரத்துக்கு விஜயம் செய்து நமது திருமண நிகழ்ச்சியை அலங்கரித்து பெருமைப்படுத்திக் கொடுத்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுள்ளவர். களாவோம் என்பதைத் தெரிவித்து விட்டு முடித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: 07.07.1935 ஆம் நாள் நடைபெற்ற செட்டிநாடு கானாடுகாத்தான் தோழர் வைசு. சண்முகம் மகள் பார்வதி - காரைக்குடி தோழர் ப.மெ.மெ.மெ. மெய்யப்ப செட்டியார் மகன்நடராஜன் திருமணத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 14.07.1935
23 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பார்ப்பனத் தொல்லை
தென்னாட்டில் அரசியலிலாகட்டும்,சமூகஇயலிலாகட்டும், பொருளாதார இயலிலாகட்டும் நமது பார்ப்பனர்களுடைய சூட்சிகள் அளவிட முடியாத அளவு தொல்லை விளைவித்து வருவது யாவரும் அறிந்ததேயாகும்
இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கு மத விஷயமாக கிடைத்துவிட்ட உயர்வே அவர்கள் மற்ற சமூகங்களுக்கு இவ்வளவு தொல்லைகளை விளைவித்து வர ஏதுவாயிருப்பதினாலே அவர்களுக்கு மத விஷயமாய் உள்ள ஆதிக்கத்தை முதலில் ஒழித்தாக வேண்டுமென்று இந்த பத்து வருஷ காலமாகச் சுயமரியாதை இயக்கம் உழைத்து வருகிறது
இதுவரையில் பார்ப்பனத் தொல்லையிலும், கட்டுப்பாட்டிலும் இருந்து விலக எத்தனையோ பேர் எத்தனையோ காலமாக முயன்று வந்தும் அதற்கு முக்கிய ஆதாரமாய் இருந்து வந்த மதச் சலுகையை அசைக்க எவரும் துணிவு கொள்ளாததாலேயே “பார்ப்பன ஆதிக்கத்தை அசைக்க யாராலும் முடியாது” என்கின்ற பெருமையைப் பார்ப்பனர்கள் பெற்று வந்திருக்கிறார்கள்.
ஆனால், சுயமரியாதை இயக்க பிரசாரத்தின் பயனாய் ஒரு அளவுக்கு மக்கள் தெளிவு பெற்று மத ஆதிக்கத்திலும் கை வைக்க ஆரம்பித்த பிறகே பார்ப்பனர்கள் பயந்து தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள புதிய புதிய வழிகள் கண்டு பிடித்து பூமிக்கும் வானத்துக்குமாகத் தாவிக் குதிக்கும்படியான அளவு முயற்சியோடு பாடுபட வேண்டியவர்களாய்
இருந்து வருகிறார்கள். பார்ப்பனர்க்குள்ளாகவே தங்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு “அரசாங்கத்தை எதிர்க்கும்'' தேசீயம் என்னும் பேரால் ஒரு பிரிவும், “சர்க்காரை ஆதரிக்கும் உத்தியோகம் பார்ப்பது" என்னும் பேரால் ஒரு பிரிவும், “மதங்களைக் காப்பாற்றும் வைதீகம்” என்னும் பேரால் ஒரு பிரிவுமாகப் பிரிந்து மூன்று துறைகளையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு அவைகளுக்குத் தாங்களே கர்த்தாக்களாய் இருந்து கொண்டு மற்ற மக்களை
எந்தத் துறையிலும் முன்னேறாதபடி தொல்லை விளைவித்து வருகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது பார்ப்பனரல்லாத மக்கள், பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காகவே அதாவது பார்ப்பனர்களின் எதிர்ப்பிலும், தகர்ப்பிலும் சிக்கிக் கொண்டு வெகுபாடுபட வேண்டியதாய்
இருந்து வருகிறது
குடி அரசு- 1935 (2) 24
பார்ப்பனர்கள் ஆண் பெண் அடங்கலும் எல்லோரும் படித்தவர்கள். சூட்ச்சி தெரிந்திருக்கிறவர்கள், சகல துறைகளிலும் ஏற்கனவே ஆதிக்கம் பெற்று மக்களை அடக்கி மிரட்டி ஆண்டு வருகிறவர்கள்.
பார்ப்பனரல்லாதார்களோ 100க்கு 90 பேருக்கு மேல்பட்டு கல்வியறிவு இல்லாதவர்கள், அரசியலிலும், சமூக இயலிலும், மத இயலிலும் தலைமுறை தலைமுறையாயடிமைப்படுத்தப்பட்டுக் கிடந்ததின் பயனாய் உலக வாழ்க்கையே அடிமைத்தனமானது என்று கருதி நுகத்தடிக்குக் கழுத்தை
நீட்டிக் கொண்டே இருந்து வந்தவர்கள். ஆதலினாலேயே பார்ப்பனர்கள் எல்லோரும் பார்ப்பனரல்லாதார் சுதந்திர முயற்சி எதிரிகளாகவும், விரோதிகளாகவும் இருக்கவும், பார்ப்பனரல்லாதாரில் மாத்திரம் பல பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களுக்கு அடிமையாகவும், ஒற்றர்களாகவும் இருந்துவரவுமான காரியம் நடைபெற இடமேற்பட்டு விடுகிறது
இந்தக் காரணங்களாலேயும், பார்ப்பனரல்லாதார் முயற்சிக்கு வெற்றி பெற முடியாமல் இருந்து வருகிறது என்ற போதிலும், ஏதோ பல தோழர்கள் உண்மை முயற்சியால் ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாதார்.
சமூகம் வெற்றி பெற்று அரசியலில் சிறிது ஆதிக்கம் பெற்று முழு விடுதலைக்குப் பாடுபட்டு வருகிறார்கள் என்றாலும் உத்தியோகம் முதலிய காரியங்களால் பார்ப்பனரல்லாதார்க்குள்ளும் ஒருவருக்கொருவர். கட்சிகளும், மனக்கசப்புகளும் ஏற்பட்டு கொஞ்ச நஞ்சம் ஏற்பட்ட வெற்றியும் மேல் நோக்காமல் கீழே நோக்கும்படியான நிலையிருக்கிறது
பார்ப்பனரல்லாதார் கட்சி - இயக்கம் என்பதை பார்ப்பனரல்லாதார் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாய் ஆதரிக்க முன் வராமல் அலட்சியமாயிருந்து வந்ததால் இயக்கம் முன்னேற்றமடைய இடமில்லாமல் எப்படியாவது உயிருடன் இருந்தால் போதும் என்கின்ற நிலையில்
உயிருக்குப் போராட வேண்டிய நிலைமையிலிருக்கிறது.
இதைப் பார்ப்பனர்கள் நன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டு இது சமயம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை யடியோடு நசுக்கப் பார்க்கிறார்கள்.
இன்று எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து கொண்டதோடு, எல்லாப் பார்ப்பனப் பத்திரிகைகளும் ஒன்று சேர்ந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியையும், அதன் பிரமுகர்களையும் பழிப்பதும், இழிப்பதும், பொய்யும், புளுகும், புரட்டும், பித்தலாட்டமும் கொண்டு சதா நிந்திப்பதும், விஷமப்
பிரசாரம் செய்வதுமே தொழிலாகக்கொண்டு வேலை செய்தும் வருகின்றன. புதிய சீர்திருத்தம் வரப் போகின்றது என்பதை உணர்ந்த உடனும் அதில். ஏராளமாக ஆதிக்கம் செலுத்த தாராளமாய் இடம் இருக்கிறது என்பதை அறிந்ததும் இப்போது முன்னிலும் அதிகமான ஆத்திரமும் வேகமும் கொண்டு வேலை செய்கிறார்கள்.
25 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆகவே இப்போது ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றிப் பார்ப்பனர்கள் சொல்லி வரும் குற்றங்கள் குறைகள் என்ன என்பதை யாருமே அறிவார்கள். தோழர் காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை பார்ப்பனரல்லாதார் கட்சி நடவடிக்கைகளில் எதையாவது ஒன்றைக் குறித்தோ, கக்ஷிப் பிரமுகர்களின் நடத்தைகளில் எதையாவது ஒன்றைக் குறித்தோ விளக்கிச் சொல்லி யோக்கியமான முறையில் குறை கூறியவர்களுமல்ல.
பாமர மக்களின் முட்டாள்தனத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு,
ஜஸ்டிஸ் கட்சியார் பெண் பிள்ளையின் தாலியை அறுத்தார்கள் என்றும்; தொண்டர்களை போலீசார் தடியாலடித்ததை ஆதரித்தார்கள் என்றும்;
கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை என்றும்;
சர்க்கார் கிஸ்து குறைக்கவில்லை என்றும்; ஏராளமான சம்பளம் வாங்குகிறார்கள் என்றும், ராஜினாமா செய்யவில்லை என்றும்,
மற்றும் இதுபோன்ற அர்த்தமற்றதும், அறிவற்றதுமான வார்த்தைகளைச் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவைகளை நமது மக்கள். பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பதில்லை என்பதோடு, வயிற்றுப் பிழைப்பின் மூலமும், சுயநலத்தின் மூலமும், பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையில் இருக்கும் சில பார்ப்பனரல்லாதார்களும் இப்படிப்பட்ட நாணயமும், பொருப்புமற்ற பிரசாரத்துக்கு உதவிகளாகவும், கூலிகளாகவும் இருந்து அதைப் பரவ இடம் கொடுத்து வருகிறார்கள். யாரோ ஒரு பெண்ணை ஏதோ ஒரு மேஜிஸ்ட்ரேட் தண்டித்துவிட்டு தாலியைப் பற்றி அலக்ஷியமாய் பேசினார் என்றால் அதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் எப்படி ஜவாப்தாரி என்பதை சிறிதும் யோசிக்காமல் அதை ஜஸ்டிஸ் கட்சி மீது பழி சுமத்தி விஷம பிரசாரம் செய்வது என்பது எவ்வளவு இழிவான காரியம் என்பதையும் அரசியல் துறையில் இருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனத்துக்கு துணிகிறார்கள் என்பதையும் பொது மக்கள் யோசிக்க வேண்டும் அதுபோலவே தொண்டர்களை போலீசார் அடித்தார்கள் என்பதும் இந்தியா பூராவும் நிகழ்ந்த விஷயமே தவிர இங்கு மாத்திரம் நடந்ததல்ல என்பதோடு சத்தியாக்கிரகத்தை அடக்க சர்க்கார் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் போலீசாரை விட்டு அடக்கச் சொன்னதும் ஒன்றாகும்
இதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் என்ன செய்ய முடியும்? ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரஸ் சத்தியாக்கிரகத்தை ஒப்புக் கொண்டவர்கள் அல்ல என்பதோடு ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் கையில் போலீஸ் நிர்வாகம் இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும்
குடி அரசு- 1935 (2) 26
கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை என்பதும், ஜெயில் ஆரம்பமான காலம் முதல் இருந்து வரும் முறையீடாகும். இதற்காகப் பல தடவை முயற்சி செய்தும் அரசாங்கத்தார் ஒப்புக்கொள்ளவில்லை என்பதோடு ஜெயில் நிர்வாகம் ஜஸ்டிஸ் மந்திரிகள் கையில் இல்லை என்பதும் யாவரும் அறிந்ததாகும்
சர்க்கார் பூமி வரியைக் குறைக்கவில்லை என்பதிலும் கொஞ்சமும் அர்த்தமில்லை. பூமி வரி விதிக்கும் அதிகாரம் ஜஸ்டிஸ் மந்திரிகள் கையில் இல்லை. சர்க்கார் மந்திரிகளைச் சேர்ந்தது என்பதோடு வரவு சிலவு இலாக்கா மந்திரியின் கையில் இருப்பதாகும்
செலவைக் குறைக்காமல் வரியைக் குறைப்பதால் அரசாங்கம் நடைபெறாது என்கின்ற வாதம் பொருளாதார மந்திரியுடையதாகும் செலவைக் குறைப்பதில் பெருஞ் சம்பள விஷயமும் சில இலாக்காக்கள் சென்னை அரசாங்கத்தின் கையில்கூட இல்லாமல் இந்திய அரசாங்கத் தினிடமும், இந்தியா மந்திரியிடமும் இருந்து வருவதாகும். காங்கிரஸ் பார்ப்பனர்களுடையதாதலாலும், பார்ப்பனர்களே பெரிய உத்தியோகங் களில் இருப்பதாலும், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், சம்பள விஷயத்தில் பார்ப்பனர்களோ, காங்கிரசோ வாயைத் திறப்பதே இல்லை.
இந்த நிலையில்கூட வரி குறைப்பு விஷயத்தில் ஜஸ்டிஸ் மந்திரிகள் ஒரு அளவுக்கு சிபார்சும் செய்திருக்கிறார்கள். அதில் வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள்.
ஏராளமான சம்பளம் வாங்குகிறார்கள் என்பதிலும் அறிவுடைமை இருப்பதாகக் காணவில்லை. மந்திரிகள் சம்பளம் 5000 ரூ. என்பது சட்டப்படி ஏற்பட்ட சம்பளமாகும் என்றாலும் ஜஸ்டிஸ் மந்திரிகள் அதிலிருந்தும் 1000
ரூ. குறைத்துக் கொண்டு 4000 ரூ. தான் வாங்குகிறார்கள்.
இந்த நாலாயிர ரூபாயில் பெரும்பாகம் கட்சிப் பிரசாரத்திற்கும்,
கட்சிப் பத்திரிகைகளுக்கும், கட்சி சம்பந்தமான மற்றச் செலவுகளுக்கும் செலவு செய்து வருகிறார்கள்.
கேவலம் படி விஷயங்களில் ஒரு சிறு பாகம்கூட கட்சி நன்மைக்குக் கொடுக்க சவுகரியமில்லையென்றும் தினம் 20 ரூபாய் ஒரு நபருக்குச் சாப்பாட்டுச் செலவுக்கு வேண்டியிருக்கிறதென்றும் காங்கிரஸ் இந்திய சட்டசபை பிரதிநிதிகள் சொல்லும்போது கிட்டத்தட்ட வாங்கும் சம்பளங்களில் சரி பகுதிக்கு மேலாகவே கட்சி நன்மைக்கு செலவு செய்யும் மந்திரிகளை அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று சொல்லுவது எப்படிப் பொருந்தும் என்பது நமக்குப் புரியவில்லை. மொத்தத்தில் சம்பளங்களைச் சட்டப்படி குறைத்துவிட்டால் அப்போது அதிகச் சம்பளமென்கின்ற பேச்சே இருக்காது. அதற்கு காங்கிரசுக்காரர் உண்மையாய் முயர்ச்சிப்பது கிடையாது 27௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கடைசியாக, “இந்த காரியங்கள் செய்ய முடியவில்லையானால் ஏன். ராஜினாமா செய்யவில்லை?'' என்று பார்ப்பனர்கள் கேட்கிறார்கள். ராஜினாமா செய்துவிட்டதினால் என்ன காரியம் ஆகிவிடும் என்பதை நன்றாய் யோசித்துப் பார்க்க வேண்டும். ராஜினாமா செய்த ஸ்தானம் அப்படியே யெப்போதும் காலியாக இருக்குமா? இதுவரை காங்கிரசுக்காரர்களோ. மற்றவர்களோ ராஜினாமா செய்த ஸ்தானங்கள், உத்தியோகங்கள் என்பவை ஏதாவது இருக்குமானால் அது காலியாகவே இருக்கிறதா? அல்லது காங்கிரஸ்காரர்களாவது மறுபடியும் அதில் பிரவேசிக்காமல் இருந்திருக் கிறார்களா? அப்படியே ராஜினாமா செய்து அந்த ஸ்தானங்களும் காலியாக இருந்தால் மிதவாதிகள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள், வர்ணாச்சிரமக்காரர்கள் எந்தக் கட்சியும் சேராதவர்கள் ராஜ விசுவாசிகள் ஆகிய கூட்டத்தார்கள் அந்த ஸ்தானங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?
அவர்களும் ஏற்றுக்கொள்வதில்லையென்றே வைத்துக் கொண்டாலும்
சர்க்காரார் தங்கள் உத்தியோகஸ்தர்களைக் கொண்டு அந்த ஸ்தானங்களைப்
பூர்த்தி செய்து காரியங்கள் நடத்த மாட்டார்களா என்பவைகளையெல்லாம் யோசித்துப் பார்த்தால் ராஜினாமா செய்வது எவ்வளவு பயனற்றதும், முட்டாள்தனமானதுமான காரியம் என்பது விளங்காமல் போகாது
மேல் குறிப்பிட்ட 4, 5 காரியங்களுக்காகவும், மற்றும் தொட்டதற் கெல்லாமும் “ஏன் ராஜினாமா செய்யவில்லை” “ஏன் ராஜினாமா செய்யவில்லை'' என்று கேட்கும் காங்கிரஸ்காரர்கள் தாங்கள் ஏன் தங்கள். பதவிகளை ராஜினாமா செய்யவில்லை என்று கேட்டால் அதற்கு என்ன
பதில் சொல்லுவார்கள்? கேட்ட உடனே திருடனைத் தேள் கொட்டியது போல் தலையைக் கவிழ்ந்து கொண்டு ஓடப் பார்க்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது உதாரணமாக சென்னை சட்டசபையில் காங்கிரஸ்காரர்களுக்கு நூற்றுக்கணக்கான தோல்விகள் ஏற்பட்டன. ஏன் ராஜினாமா செய்யவில்லை?
அதுபோல இந்திய சட்டசபையிலும் பல தோல்விகள் ஏற்பட்டன. இவர்கள் வெற்றி பெற்றதாகச் சொல்லி பெருமை பேசும் காரியங்கள். ஒவ்வொன்றையும் சர்க்காரார் நிராகரித்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள். என்று அவர்களே சொல்லிக் கொள்ளுகிறார்கள். அப்படி இருக்க ஏன் காங்கிரஸ்காரர்கள் ராஜினாமா செய்யவில்லை.
காங்கிரசுக்காரர்கள் இந்தச் சர்க்காராருடைய யோக்கியதைகள்
பூராவும் தெரிந்தும் இந்தியாவில் அவர்களுடைய ஆட்சியை ஒழித்துப் பூரண சுதந்திரமுள்ள நாடாக இந்தியாவை ஆக்குகிறோம் என்று காங்கிரசில் தீர்மானித்துக் கொண்டும், சுயமரியாதையைப் பற்றி பிரமாதமாய்ப் பேசிக் கொண்டும் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், “இந்திய அரசருக்கும், சட்டப்படி ஏற்பட்ட அவரது அரசாங்கத்துக்கும், மற்றும் அரசர் பெருமானின் சந்ததி
குடி அரசு- 1935 (2) 28
யார்களுக்கும், பக்தி விசுவாசத்துடன் இருந்து நடந்து கொள்ளுகிறேன்" என்று “கடவுளை” வேண்டி சத்தியம் செய்து கொடுத்து, “ஒரு காரியமும் செய்ய முடியாத! சட்டசபையிலும், கமிட்டியிலும் தொங்கிக் கொண்டும்
நத்திக் கொண்டும் தினம் 20ரூ. படி வாங்கிக் கொண்டும் இருக்கும்போது அதைவிடப் பெரிய பதவியில் இருந்து கொண்டு “பொது ஜனங்களுக்கு ஒரு அளவுக்காவது தாங்கள் எண்ணுகின்றபடி நன்மை செய்ய இடம் இருக்கிறது” என்று கருதிக் கொண்டிருக்கும் கூட்டத்தார் எப்படி ராஜினாமா செய்வார்கள் என்றும், இப்படிப்பட்டவர்கள் அவர்களை ராஜினாமா செய்யும்படி கேட்பது யோக்கியப் பொருப்பும், நாணையமும் அறிவுடை யவுமான காரியமா என்றும் கேட்கின்றோம்
ஆகவே இன்று தோழர் ராஜகோபாலாச்சாரி முதல் சத்தியமூர்த்தி ஈறாக, “ஜஸ்டிஸ் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும், ஜஸ்டிஸ் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்” என்கின்ற ஒரே பல்லவியைப்
பாடிக் கொண்டு திரிவதும், அவர்களது கூலிகளும், அடிமைகளுமான சில பார்ப்பனரல்லாதாரும் அதையே சொல்லிக் கொண்டு திரிவதும் எவ்வளவு விஷமத்தனமானதும், போக்கிரித்தனமான காரியம் என்பது இப்போதாவது விளங்குகின்றதா? என்றுதான் கேட்கின்றோம்
சுமார் 15 வருஷ காலமாகவே பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையை அழிக்க என்னென்னமோ முயற்சி செய்து பார்த்தார்கள். 1927-ல் காங்கிரஸ் “கட்டளைக்கு” விரோதமாய் மந்திரிகளை ஏற்படுத்தினார்கள்; ஆதரித்தார்கள். மந்திரிகளுக்குச் சிபார்சாய் இருந்தார்கள். மந்திரிகளிடம் பேச வக்காலத்துப் பெற்று பணமும் சம்பாதித்தார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன சொன்னார்கள் என்றால், “நாங்கள் இந்த மாதிரி எல்லாம் செய்யாவிட்டால் தேசத் துரோகிகள், அந்த ஸ்தானங்களில் அமர்ந்து கொள்ளுவார்கள்” என்று சமாதானங்கள் சொன்னார்கள்
இதை வெளி மாகாண காங்கிரசுக்காரர்களே ஒப்புக் கொள்ளவில்லை
அப்படி இருக்க இப்போதுள்ள இந்த மந்திரிகளும், மந்திரி கட்சியார்களும் மந்திரி ஸ்தானத்தை “ராஜினாமா செய்து விட்டால் சமூகத் துரோகிகளும், ஜாதி அகம்பாவக்காரர்களும், பார்ப்பனக் கூலிகளும், அடிமைகளும், அந்த ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு பொது ஜனங்களின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்துக்கும் கேடு செய்வார்கள் என்பதோடு பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும் துரோகம் செய்து வருவார்கள்!” என்று கண்ணியமாய் கருதினால் அவர்கள் எப்படி ராஜினாமா செய்ய முடியும்?
தோழர் சத்தியமூர்த்தி தான் மந்திரி வேலைக்கு ஆசைப்படுவதில்லை என்று எப்போதாவது சொன்னாரா? அல்லது எந்த மந்திரியையும் ஆதரிப்ப தில்லை என்று எங்காவது பொய் சத்தியமாவது செய்து கொடுத்தாரா?
29 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஒன்றும் இல்லாமல் “நீ மந்திரியாய் இருப்பது தேச துரோகம்; நான் மந்திரியாய் இருப்பதே தேசபக்தி” என்று சொன்னால் இதை எந்த முட்டாள் தான் கேட்க முடியும் என்று கேட்கின்றோம்
டாக்டர் சுப்பராயன் மந்திரிசபையை ஏற்படுத்தினவர்கள், காங்கிரசுக் காரர்கள் என்பதும், அதை ஆதரித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என்பதும் கடைசியாக டாக்டர் சுப்பராயன் தீண்டப்படாதவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்தவுடன் அவரையே ஒழிக்க முயற்சி செய்தும் எப்படியாவது டாக்டர் சுப்பராயன் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜஸ்டிஸ் மந்திரிசபையை ஏற்படுத்த 1930-ல் இவர்கள் பாடுபட்டதும் காங்கிரஸ் தேசீயப் பத்திரிகைகள் இந்து, சுதேசமித்திரன் உள்பட எல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து நிற்கின்றதும் யாரும் அறியாததா என்று கேட்கின்றோம். ஆகவே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) என்பவர்களுக்கு எப்படியாவது எந்தக் காரியம் செய்தாவது பதவி அடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒரு லட்சியமும் இல்லை என்பதையும் இதற்காக எவ்வளவு பொய்யும், புழுகும், அக்கிரமமும், அயோக்கியத்தனமும் செய்யலாம் என்று அவர்கள் கருதி இருக்கிறார்கள் என்பதையும் அதையே அவர்களது லட்சியமாய்க் கொண்டு இருந்து வருகின்றார்கள் என்பதையும் தெரிவிக்கவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.07.1935
குடி அரசு- 1935 (2) 30
சாயம் வெளுத்தது
ஹரிஜன சேவைப் புரட்டு
இந்து சமூகத்தில் உள்ள தீண்டாமை என்னும் கொடுமையை அடியோடு ஒழித்தாலல்லது இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிடைக்காது”
தீண்டாமை ஒழிப்பதற்கு முன் சுயராஜ்ஜியம் கிடைத்தாலும்
நிலைக்காது”
“தீண்டாமை ஒழிக்கப்படாததற்கு முன் சுயராஜ்ஜியம் கிடைப்பதாய் இருந்தாலும் அதை நான் ஏற்க மாட்டேன்"
என்பதான இந்த வாக்கியங்களும் மற்றும் இவை போன்ற அனேக வாக்கியங்களும் தோழர் காந்தியாரின் 1920-ம் வருஷத்திய “அருள்”
மொழிகளாகும்.
இந்த மொழிகள் நாளுக்கு நாள் பலம் பெற்று இன்று தீண்டாமை
ஒழிப்புக்குப் பொது மக்களிடம் 20, 30 லட்சக்கணக்கில் ரூபாய்கள் வசூல் செய்து அவற்றைக் கொண்டு ஹரிஜன சேவை என்னும் பேரால் ஒரு “தனி இயக்கத்தையும்'' ஏற்படுத்தி வேலைகள் நடத்தப்பட்டு வருவதாக
காங்கிரஸ்காரர்கள் சொல்லுகின்றார்கள்.
மற்றும் தோழர் காந்தியார் அரசியல் கைதியாய் சிறையில் இருக்கும்
போதும் தனக்குத் தீண்டாமை விலக்கு வேலை செய்ய தாராளமாய் இடம் கொடுக்காவிட்டால் தான் பட்டினி கிடந்து சாகப் போவதாய் சர்க்காருக்குத்
தெரிவித்து அதனால் பட்டினியும் கிடந்து அதற்காக விடுதலையும் பெற்று
இருக்கிறார்.
ஆகவே காங்கிரசானது தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு ஆக
மிகவும் பாடுபடுவதாகவும், தீண்டாமை விலக்கை மிகவும் மூக்கியமாய்க்
கருதி இருப்பதாகவும் உலகம் முழுவதும் நம்பும்படியாகச் செய்து கொண்டது.
தோழர் காந்தியாரும் தீண்டாமை விலக்கில் மிகக் கவலையுடன் இருப்பதாகவும் காட்டிக் கொண்டு வந்திருக்கிறார்.
31 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இவைகள் எல்லாம் பேச்சிலும் எழுத்திலும் மாத்திரம் தான் இருந்து வருகின்றனவே ஒழிய காரியத்தில் இல்லை என்பதை பல உதாரணங்களால் சமீப காலமாக பொதுமக்கள் உணர்ந்து வருகிறார்கள் என்பது யாவரும்
ஒப்புக் கொள்ளாததாகும் வட்டமேஜை மகாநாட்டில் தோழர் காந்தியார் எனது உயிர் போனாலும் தீண்டப்படாதார் என்பவர்களுக்குப் பிரதிநிதித்துவ ஸ்தானங்கள். ஒதுக்கி வைக்கவோ பிரித்துக் கொடுக்கவோ சம்மதிக்க மாட்டேன்" என்று சொன்னார். அதே சமயத்தில் “முகமதியர்களுக்குத் தனித் தொகுதியால் தெரிந்தெடுக்கும் சுதந்திரம் கொண்ட பிரதிநிதித்துவமும் ஸ்தானமும் கொடுக்க சம்மதிக்கிறேன்” என்றும் சொன்னார். இப்படிச் சொன்னதானது தோழர் காந்தியார் விஷயங்களை உணர்ந்து பார்க்காமலும், அனுபவங்களை அறியாமலும் சொன்னார் என்று யாரும் சொல்லிவிட முடியாது
இந்தியாவில் இந்துக்கள் என்று சொல்லப்பட்ட சமூகம் சுமார் 22 கோடி மக்களைக் கொண்டதாய் இருக்குமானால் அதில் 3 ல் ஒரு பங்கு மக்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள் என்பதும், அவர்களின். ஜனத்தொகை 100-க்கு 30 வீதம் பிரதிநிதித்துவம் பெற அருகதை இருந்தாலும் மொத்த பிரதிநிதித்துவங்களில் 100க்கு இருவர், ஒருவர்கூட
தனித் தொகுதி இல்லாமலும் ஒதுக்கி வைக்காமலும் சர்க்காராரே பார்த்து, தயவு வைத்து அவர்களுக்கென்றே ஒன்று இரண்டு ஸ்தானங்கள் நியமனம் மூலம் வழங்காமலும், அவர்கள் (தீண்டப்படாதவர்கள்) எந்தப் பிரதிநிதித் துவத்தையும், பொது ஜனங்களின் தவவாலோ, பொதுத்தேர்தல் மூலமாகவோ அடையவில்லை என்பதை நன்றாய்த் தெரிந்து இருந்தும் அவர்களுக்கு
எந்த பிரதிநிதித்துவமும் தனித் தொகுதி மூலமோ, ஸ்தானங்கள் ஒதுக்குவது மூலமோ கூடவே கூடாது என்று சொன்னார் என்றால் இதைத் தெரியாமல் சொன்னார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆகவே காந்தியார் மேல்கண்டபடி சொன்ன பிறகு கடைசியாக அரசாங்கத்தார் ஏதோ சில பிரதிநிதித்துவங்கள் கொடுக்க சம்மதித்த பிறகு அதையும் ஒழிக்க தோழர் காந்தியார் பட்டினி கிடந்து அதை ஒழித்து பிறகு ஏதோ ஒரு வகையில் தக்க பயனற்ற முறையில் பிரதிநிதித்துவம் அடைய முடிந்தது என்றே வைத்துக் கொள்ளலாம் எனவேதீண்டாமைஒழிக்கப்படாமல் சுயராஜ்யம்பெற முடியாது என்றும், மற்றும் என்ன என்னமோ சொன்னவர்கள் தீண்டாதவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியாவது ஏதாவது செய்தார்களா என்பதை மேல் கண்ட சம்பவங்களைக் கொண்டு பார்த்தால் அதன் தன்மை விளங்காமல் போகாது
அரசியலில்தான் அவர்கள் நிலை இந்த கதியானால், சமூக இயலில் அவர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த மரியாதை என்ன என்று பார்ப்போம்.
குடி அரசு- 1935 (2) 32
தீண்டாதவர்களுக்கு ஆக வழி நடைப்பாதை விஷயங்களில் இருந்துவரும் குறைகள் சர்க்கார் மூலமாய் ஏதாவது ஒன்று இரண்டு தீர்க்கப்பட்டிருக்கலாம். அல்லது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஏதாவது செய்திருக்கலாம். அல்லது தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் தாங்களே முயற்சி செய்து சிறிது சிறிதளவாவது தீர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம்
என்று சொல்லலாமே ஒழிய காந்தியாராலோ காங்கிரசுக்காரர்களாலோ ஒரு
சிறு தடையையாவது நிவர்த்திக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்வதற்கு இன்று வரை தக்க ஆதாரம் ஏதும் இல்லை:
அன்னியத்துணி மறியல், கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு,
உப்புக் காய்ச்சுவதற்கு முயற்சி என்கின்ற காரியங்கள் மாத்திரம் வெகு வேகமாகவும், வெகு தியாகமாகவும் நடந்ததே ஒழிய மற்றபடிதீண்டப்படா. தவர்களுக்கு தெருவு, குளம், பள்ளிக்கூடம், சத்திரம், கோவில் முதலியவைகள் அனுமதிக்கப்படும் என்பதற்காக பொது மக்களிடம் பணம் வசூல் செய்து கொண்டதே தவிர மேல் கொண்டு ஒரு காரியமும் அவர்களுக்காக
நடந்ததாகச் சொல்ல முடியவில்லை.
மற்றும் ஏதாவது நடந்ததாகச் சொல்லக் கூடும் என்றாலோ அது தீண்டப்படாதவர்களின் அசுத்தங்களையும், தீண்டாமை நிலை நிற்க வேண்டிய அவசியத்துக்கு காரணங்களையும் மக்கள் அறியும்படியாக செய்தார்கள் என்றுதான் சொல்லலாம். எப்படியெனில் தீண்டப்படாதவர். களுக்கு சோப்பு கொடுப்பது, எண்ணை சீயக்காய் கொடுப்பது முதலிய காரியங்கள் செய்வதன் மூலம், “தீண்டப்படாதவர்கள் அசுத்தமானவர்கள், முதலில் அவ்வசுத்தங்களை நீக்க வேண்டியது அவசியம்” என்று ஜனங்கள் நினைக்கும்படியாக அவர்கள் காட்டிக் கொடுத்துக் கொண்டு வந்தார்கள்.
அசுத்தமும், அழுக்கும் இன்று தீண்டப்படாதவர்களிடம் மாத்திரம் இருக்கின்றது என்று யாரும் சொல்லிவிட முடியாது. அன்றியும் தீண்டப் படாதவர்களுக்கு சோப்பும், எண்ணை சீயக்காயும் கொடுப்பது சுகாதார வேலையாகுமே ஒழிய, ஒரு நாளும் தீண்டாமை விலக்கு வேலை ஆகு மென்று சொல்ல முடியவே முடியாது
நிற்க இந்த மாகாணத்தைப் பொருத்த வரையில் தீண்டப்படாத சமூகத்தாருக்கு ஜஸ்டிஸ் கட்சியாரும், சர்க்காரும் எவ்வளவு தூரம் நன்மை செய்ய முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறார்கள்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தீண்டப்படாதவர்கள் கல்வி விஷயத்தைப் பிரத்தியேகமாய் கவனிக்க ஏற்பாடு செய்தார்கள். அவர்களுக்கு குடியிருக்க நிர்பந்தமான இடங்களில் இடவசதி செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு சிற்சில இடங்களில் கூடிய வரையில் பூமி அடமானமும் செய்து கொடுத்தார்கள்.
33 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அவர்களுக்கு உத்தியோகங்களிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் பிரதிநிதித்துவத்துக்கு இடம் ஒதுக்கி வைத்து அமரச் செய்தார்கள்.
இவ்வளவும் செய்தது மாத்திரம் அல்லாமல் பொது ரஸ்த்தா, கிணறு, குளம், குட்டை, மார்கட்டு, கோர்ட்டு ஸ்தலங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மற்றப் பிரஜைகளுக்கு உள்ள சகல சுதந்திரங்களையும் சட்டபூர்வமாய் ஏற்படுத்திக் கொடுத்தார்கள். பொதுவாக குளம், கிணறு, ரஸ்தா, மார்க்கட்டு ஆகியவைகளில் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் புழங்குவதை யாராவது தடுத்தால் அவர்களுக்கு 100 ரூ. அபராதம் விதிக்கப்படும்” என்று கூட சட்டம் செய்து, அதை இன்று லோகல் போர்ட் ஆக்டிலும், முனிசிபல் ஆக்டிலும், பொது மார்க்கட்டு ஆக்டிலும் விதியாக ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மத சம்பந்தமான ஸ்தலங்கள் என்பவைகள் அதாவது கோவில்கள், மடங்கள் என்பவைகள் தவிர மற்றவைகளில் எல்லாம் தீண்டப்படாதவர்களுக்கும், மற்றவர்களைப் போலவே உரிமை உண்டு என்று செய்து விட்டார்கள். ஆகவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜா உரிமையில் தீண்டப் படாதவர்கள் என்பவர்களுக்கு எவ்வித வித்தியாசமும், அசெளகரியமும் இல்லாமல் சட்டபூர்வமாய் செய்யப்பட்டுவிட்டது
ஆனால், இந்துக்கள் என்பவர்களுக்கு மாத்திரம் உள்ள பிரஜா உரிமையில் தீண்டப்படாதவர்களுக்கு உள்ள குறை சிறிதும் நீக்கப்பட வில்லை என்பதோடு அரசாங்கத்தாரோ, மற்றவர்களோ முயற்சிப்பதற்கும் காங்கிரஸ்காரர்களும், காந்தியாரும் உதவி செய்யவில்லை” என்பது மாத்திரமல்லாமல் தங்களால் கூடுமான அளவு தடையும் செய்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறது
காங்கிரஸ்காரர்கள் கராச்சியில் செய்த பிரஜா உரிமைத் தீர்மானத்தில் அதுவரை சர்க்கார் தீண்டப்படாதவர்களுக்குச் சட்ட ரூபமாக, ஏற்கனவே செய்த காரியங்கள் எவையோ அவற்றை மாத்திரம் அனுமதித்து விட்டு கோயில், மடம், சத்திரம் முதலிய காரியங்களைப் பற்றி ஒன்றும் பேசாமல் விட்டுவிட்டு “கோவில் இதில் சேர்ந்ததல்ல” “பழைய பழக்கத்துக்கு விரோதமாய் எதுவும் செய்யப்பட மாட்டாது” என்றும் சொல்லி வாக்குறுதி கொடுத்து விட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல் கோயில் பிரவேச விஷயமாய் சட்டசபைக்கு வந்த தீர்மானங்களையும் ஒழித்து இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும்போது இனி யாரும் அப்படிப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வரக் கூடாதென்றும், மற்றவர்கள் கொண்டு வந்தாலும் ஆதரிக்கக் கூடாதென்றும் அத் தீர்மானங்களுக்கும் ஜனப் பிரதிநிதிகளுக்கும் இப்போது சம்பந்தமில்லை என்றும் சொல்லி விட்டார்கள்.
குடி அரசு- 1935 (2) 34
ஆகவே காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை ஒழிப்பு விஷயமாய் பொது ஜனங்களிடம் இருந்து பணங்களை வசூல் செய்து எலக்ஷன் பிரசாரத்துக்குச் செலவு செய்து விட்டு சில காங்கிரஸ் தொண்டர்களுக்குச் சம்பளம் கொடுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதல்லாமல் தீண்டாதவர்களுக்கு ஆகஇன்னகாரியம்செய்தார்கள் என்று சுட்டிக்காட்டக்கூடிய யோக்கியதையில் அவர்கள் இல்லை என்று தைரியமாகக் கூறலாம்.
தவிர காங்கிரஸ்காரர்களுக்கு தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் வந்த “அபிமானம்” எல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷியார்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேழ்க்க ஆரம்பித்த பிறகும், ஜஸ்டிஸ் ககஷிக்காரர்கள் தீண்டப்படாதவர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்ட பிரகும் மூன் வந்த பிறகும் தானே ஒழிய அதற்கு முன் எந்தக் காங்கிரசாவது எந்தக் காங்கிரஸ் தலைவர்களாவது இவர்கள் விஷயமாய் ஏதாவது காரியம் செய்திருக் கிறதாகவாவது அல்லது செய்ய முயற்சித்ததாகவாவது ஆதாரம் இருக்கிறதா என்று கவனித்துப் பார்த்தால் இதன் உண்மை விளங்காமல் போகாது.
ஜஸ்டிஸ்காரர்கள் கேட்ட சுதந்திரத்தில் அதை தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் வழங்கும் நிபந்தனையையும் காட்டித்தான் கேட்டார்களே ஒழிய அவர்களை விலக்கி வைத்துக் கேட்கவில்லை. அவர்கள் கேட்டதை கொடுக்க ஒப்புக் கொண்டார்கள் என்பதோடல்லாமல் கொடுக்கும்படி சர்க்காருக்கும் சிபார்சும் செய்தார்கள்.
ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவர்கள் கேட்டதை கொடுக்க ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு சர்க்காராரும் கொடுக்கக் கூடாது என்பதற்கு தங்களாலான தடையையும் செய்தார்கள்.
சமூக விஷயத்தில்
மற்றும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தாங்கள் எங்கு மகாநாடு கூட்டின. காலங்களிலும் தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களை எல்லாம் சமமாக நடத்தி சமபந்தி சாப்பாடாகவே நடத்தி வந்திருக்கிறார்களே. ஒழிய ஒரு இடத்திலாவது ஒரு மகாநாட்டிலாவது அவர்களை ஒதுக்கி வைத்தோ, வெளியில் வைத்தோ சாப்பாடு போட்டு இழிவாய் நடத்த வில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்
தீண்டாதவர்கள் என்பவர்களை சரி சமமாக நடத்த வேண்டும் என்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி ஸ்தாபனங்கள் எங்கு எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அடிக்கடி சமபந்தி போஜனம் என்று ஏற்பாடு செய்தும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களைக் கொண்டே பக்குவம் செய்தும் பரிமாரச் செய்தும் விருந்து நடத்தி வருவதும் யாவரும் அறிந்ததாகும்
35 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ்:
ஆனால் காங்கிரசுக்காரர்கள் எங்கு மகாநாடு நடத்தினாலும் நாளது வரை பார்ப்பனர்களுக்கு வேறு இடம், பார்ப்பனரல்லாதார்களுக்கு வேறு இடம், தீண்டப்படாதவர்களுக்கு வேறு இடம் என்பதாகப் பிரித்து பிரித்து ஒதுக்கிவைத்தும்வெளியில் வைத்துமே சாப்பாடு போட்டும் வந்திருக்கிறார்கள்.
காங்கிரசின் பண்டில் இருந்து “அதி தீவிர தேச பக்தர்” வி.வி.எஸ். அய்யரால் நடத்தப்பட்ட குருகுலம் என்பது ஒழிக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் இதன் உண்மை விளங்கும். இது நடந்த பிறகும் நாட்டில் சமூக விஷயமாய் புது கிளர்ச்சிகள் எங்கும் நடந்து வருவதைப் பார்த்த பிறகும், தீண்டப்படாதவர்களது தனித் தொகுதிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதில் இனி அவர்களை சமமாய் நடத்துகிறோம் என்று வாக்குக் கொடுத்து அதை ஒருநிபந்தனையாகச் சொன்ன பிறகும், இப்போது 1935ம் வருஷத்தில் காங்கிரஸ்காரர்கள் தீண்டப்படாதவர்கள் விஷயத்தில் அரசியல் சம்பந்தமாக நடைபெறும் காரியங்களிலேயே எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொதுஜன கவனத்துக்கு கொண்டுவர ஆசைப்படுகிறோம். அதற்காகவே இதை எடுத்துக் காட்டுகிறோம்
சன்னாசி
அதாவது சென்ற மாதம் திருச்சி ஜில்லா பெரம்பலூர் தாலூக்கா எசனை என்னும் ஊரில் நடந்த பிரம்பலூர் தாலூக்கா அரசியல் மகாநாட்டில் மகாநாடு நடத்தி வைப்பவர்களும், காங்கிரஸ் சமதர்மத் தொண்டர்களும் ஆனவர்கள் 'ஹரிஜன' சமூகத்தைச் சேர்ந்தவரும் “ஹரிஜன' வேலைக்கு நியமிக்கப்பட்ட ஒரு மேல் பார்வை அதிகாரியுமான தோழர் சன்யாசி என்பவர் விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பொது ஜனங்கள் கவனிக்க வேண்டுகிறோம்
இது விஷயமாய் தோழர் சன்யாசி அவர்களால் பத்திரிக்கைகளுக்கு எழுதப்பட்ட “ஒரு பகிரங்கக் கடிதம்" என்பதைப் பார்த்தே அதை ஆதாரமாய் வைத்தே அதற்கு நாளது வரை சுமார் 20 நாளாக அந்த மகாநாட்டுக்காரரோ, ஹரிஜன சேவைக்கமிட்டித் தலைவர்களோ, காங்கிரஸ் தலைவர்களோ யாதொரு பதிலும் சொல்லாமல் “மாம்சம் பறிகொடுத்த பார்ப்பனத்தி” போல் மெளனமாய் இருப்பதை அறிந்தே இதைப் பற்றி எழுதுகிறோம்
தோழர் சன்யாசி அவர்கள் இம்மகாநாட்டுக்கு அழைக்கப்பட்ட போதே மகாநாடு நடத்துவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டவரும், மகாநாட்டிற்காக தோழர் சன்னியாசியை அழைக்க வந்தவருமான தோழர் குரும்பலூர் நடேசய்யர் என்னும் பார்ப்பனர் ஒருவர் தோழர் சன்னியாசியை மகாநாட்டுக்கு அழைத்தபோது தோழர் சன்யாசி சாப்பாடு விஷயத்தில்
குடி அரசு- 1935 (2) 36
மக்களை எப்படி நடத்துவீர்கள் என்று கேட்டதில் “சமபந்தி முறையைத் தழுவி சாப்பாட்டு வசதி செய்யப்பட்டிருக்கிறது'' என்று சொன்னாராம்
ஆனால் மகாநாட்டு காலை நிகழ்ச்சிகள் நடந்து பகல் சாப்பாட்டிற்கு எல்லோரும் புறப்படும்போது கதர் கடையில் உட்கார்ந்திருந்த தோழர் சன்யாசியை மகாநாட்டுக் காரியதரிசிகளில் ஒருவரான தோழர் நடராஜ பிள்ளை என்கின்ற பார்ப்பனரல்லாதார் வந்து "சமபந்தி போஜனம் நடக்கப் போகின்றது உங்களையும் கூட உட்கார வைத்து சாப்பிடப் போகின்றோம் வாருங்கள்'' என்று அழைத்துப் போனாராம்
அங்கு சாப்பாட்டு விடுதிக்குள் போய் பார்த்ததும் ஏற்கனவே இரண்டு பந்தி நடந்து விட்டதாகவும் சற்று பொருக்க வேண்டும்” என்றும் சொல்லி முன் குறிப்பிடப்பட்ட தோழர் குரும்பலூர் நடேசய்யர் என்பவர் அவசரமாக ஓடி வந்து “உமக்கு சாப்பிட இடம் வேறாக ஏற்படுத்தியிருக்கிறது'' என்று சொல்லி வெளியில் அழைத்துப் போய் நாலைந்து வீட்டுக்கு அப்புறம் ஒரு வீட்டு தாழ்வாரத்தில் உட்கார வைத்து விட்டுப் போய்ப் பின் ஒரு மணி நேரம் பொருத்து ஒரு தாம்பாளத்தில் இலை போட்டு அதில் சோறு குழம்பு எல்லாம் சேர்த்து வைத்து அந்த தாழ்வாரத்தை விட்டு வெளியில் அழைத்து திறந்த வெளியில் இலையை இழுத்து விட்டு உட்கார்ந்து சாப்பிடும்படி சொன்னாராம்
முதல் நாள் இரவு சாப்பாடு சாப்பிட்டதோடு காலை ஆகாரமும் இல்லாது இருந்த தோழர் சன்யாசி அதிக பசியாய் இருந்தும் அவர் தன்னை இந்தப்படி அவமானமாகவும், இழிவாகவும் நடத்திய கொடுமையை எண்ணி தனக்கு பசியில்லையென்றும், சாப்பாடு வேண்டியதில்லை
என்றும், சாப்பிட்டாய்விட்டதாகவும் சொல்லி விட்டு வந்து மகாநாட்டின்.
மற்ற நடவடிக்கைகளையும் கவனித்து விட்டு இரவு 12% மணிக்கு திருச்சிக்கு வந்து சாப்பிட்டாராம்
(இந்த சேதிகள் 7-ந் தேதி “நகர தூதன்” பத்திரிகையில் காணப் படுவதாகும்.) ஆகவே பார்ப்பனர்களின் மனிதாபிமானமும், சமத்துவத் தன்மையும், காங்கிரசின் தீண்டாமை ஒழிக்கும் தத்துவமும், ஹரிஜன வேலையின் உண்மையும் எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
தோழர் சன்யாசி அவர்களின் பகிரங்கக் கடிதத்தில் “நான் 1916-ம் வருஷ முதல் 1932-ம் வருஷ வரை ஒவ்வொரு ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கும் சென்று இருக்கின்றேன். அவைகளில் இந்த மாதிரி ஒரு இடத்திலும் நடந்ததில்லை. காங்கிரஸ் கட்சி மகாநாட்டுக்கு போனது இதுதான் முதல் தடவை”' என்று கூறுகின்றார்
37 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பார்ப்பனர்கள் காங்கிரசைப் பற்றிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதும், காந்தியாரை மகாத்மாவாக்கி பாமர மக்களுக்கு விளம்பரப்படுத்துவதும், தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ளவும் மற்ற மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவுமேதான் என்று இந்த 10 வருஷ காலமாக நாம் கூப்பாடு போட்டுக் கொண்டு வருவதும் அது விஷயமாய் ஒவ்வொரு
நாளும் பேசி வருவதும், எழுதி வருவதும் ஒரு வார்த்தையாவது, ஒரு எழுத்தாவது பிசகுபட்டிருக்கின்றதா என்பதைப் பிரத்தியேகமாய் அலசிப் பார்க்க வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்
கடைசியாக காங்கிரசுக்காரர் ஜஸ்டிஸ்கட்சியாரை ஒழித்துவிட்டு தாங்கள் தான் ஆதிக்கத்துக்கு வரவேண்டும் என்று சொல்லுவதின் கருத்து என்ன என்பது இப்போதாவது விளங்குகிறதா என்று கேட்க்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 21.07.1935
குடி அரசு- 1935 (2) 38
தஞ்சை ஜில்லா ஆதி திராவிட
வாலிபர் மகாநாடு
தோழர்களே!
இன்று இம்மகாநாட்டைத் திறந்து வைப்பது என்னும் முறையில் இந்த மகாநாடு சம்பந்தமாய் நான் ஏதாவது சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமாய் என்னுடைய அபிப்பிராயம் நீங்கள் தெரிந்ததேயாகும்
தாழ்த்தப்பட்ட மக்களை, அவர்களுக்கு மற்றவர்கள் இழைத்து வரும் கொடுமையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான. கருத்துடன் பார்த்தால் அது ஒரு புரட்சி வேலையே ஆகும். ஏனெனில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை ஒரு பெரிய அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது
எப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள், கீழ் ஜாதி மக்கள், தீண்டப் படாதவர்கள் என்பவர்கள் எல்லாம் பிறவியிலேயே கீழ்மைத் தன்மை அடைந்தவர்கள் என்றும், அவர்கள் கடவுள்களாலேயே அந்தப்படி பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும், அதற்கு மதங்களும் மத சாஸ்திரங்களுமே ஆதாரங்கள் என்றும், கடவுள் செயலையோ மத விதிகளையோ யாரும் மாற்றக் கூடாதென்றும், அவை மாற்றுதலுக்கு கட்டுப்பட்டதல்லவென்றும் சொல்லப்படக் கூடிய ஒரு பலமான அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும், தீண்டாமைத் தத்துவம் மனித சமூகத்தில் இருந்து விலக்கப்படுவதும் வெரும் வாய் வார்த்தையாலோ, பிரசாரத்தினாலோ, மேல் ஜாதிக்காரர்களைக் கேட்டுக் கொள்ளுவதினாலோ ஆகக்கூடிய காரியம் என்று யாராவது நினைத்தால் அவர்களது வாழ்வு வீண்: வாழ்வு என்றுதான் சொல்வேன்.
தாழ்த்தப்பட்டவர்கள், தீண்டப்படாதவர்கள் என்பவர்களில் சிலர் தாங்கள் ஏதோ குளித்து முழுகிவிட்டு, விபூதிப் பூச்சோ, பட்டை நாமமோ விதிப்படி அணிந்து வைதீகர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு, மது,
39 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மாம்சம் சாப்பிடுவதில்லை என்று சொல்லிக் கொண்டு சுவாமி என்று பெயர். வைத்துக் கொண்டு திரிந்தால், தங்கள் நிலை உயர்ந்து விடும் என்றும் தீண்டாமை ஒழிந்துவிடும் என்றும் கருதி இருக்கிறார்கள்.
இது மற்றவர்களை ஏமாற்ற நினைத்துத் தங்களையே ஏமாற்றிக் கொள்ளும் பைத்தியக்காரத்தனமேயாகும்
இந்தப்படி வெகு பேர் தாழ்த்தப்பட்ட மக்களில் ஆதிதிராவிடர்களில் வெகுகாலமாகவே வேஷம் போட்டுப் பார்த்தாய்விட்டது. அதற்கு பல புராண சரித்திர ஆதாரங்கள் உண்டு
ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு இருந்து நாளது வரை தீண்டாமை விலக்கு விஷயத்தில் ஒரு காரியமும் முடிந்ததில்லை என்று தைரியமாய்ச் சொல்லலாம். ஏதோ சில பாஷாண்டிகள் செய்த காரியங்களால் தங்கள் சுயநலத்துக்குப் பயன் ஏற்படுத்திக் கொள்ளத்தான் முடிந்திருக்குமே ஒழிய அப்படிப்பட்ட வேஷத்தாலும் பக்தியாலும் காரியத்தில் ஏதும் ஆகி இருக்காது. ஆவதற்கும் நியாயமில்லை.
ஏனெனில் அதின் அஸ்திவாரம் அப்பேர்ப்பட்டதாகும்
தீண்டாமை விஷயம் ஒருபுறமிருக்கட்டும். எவ்வளவோ காலமாக போராடி வந்தும் எப்படிப்பட்டவர்கள் எல்லாம் பாடுபட்டும் சூத்திரப் பட்டம் அதுவும் 100க்கு 3 பேர்களால் 100க்கு 97 மக்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கும் சூத்திரப் பட்டம் ஒழிக்கப்பட முடிந்ததா? “சூத்திரர்”
களில் சிலர் மகாத்மா - ரிஷி - முனிவர் - ஆழ்வார்கள், நாயன்மார்கள், தெய்வத் தன்மை வாய்ந்தவர்கள் என்றெல்லாம்கூட ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மனித சமூகத்தில் ஒரு பெருங் கூட்டத்தைச் சூத்திரன் என்பதாகக் குறிக்க ஏற்படுத்தப்பட்ட கலம் இன்னும் அழிக்கப்படவே இல்லை. அது சுலபத்தில் அழிக்கப்படக் கூடியதாயும் இல்லை.
நேற்று இவ்விடம் உங்கள் ஆதி திராவிட மகாநாட்டைத் திறந்தவரும் அதற்குத் தலைமை வகித்தவரும் இருவரும் மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள் தான். அதாவது மந்திரியார் கனம் பி.டி.ராஜன் அவர்களும், உங்கள் ஜில்லா போர்ட் பிரசிடெண்டு தோழர் சாமியப்ப முதலியார் அவர்களும் சைவ வேளாளர் - அதுவும் தொண்ட மண்டல சைவ வேளாளர் ஆவார்கள்.
பார்ப்பனர்களுக்கு அடுத்த ஜாதியார் என்பதோடு, அவ் வகுப்பில்
சிலர் பார்ப்பனர் வீட்டில்கூட சாப்பிட மாட்டோம் என்பார்கள். அப்படி இருந்தும் அப்படிப்பட்டவர்களைப் பார்த்து “உயர உயரப் பரந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா'' என்றுதான் பார்ப்பனர்கள் கேட்பார்கள்.
அது மாத்திரமல்லாமல் அவர்கள் எல்லோரையுமே சூத்திரன் என்கின்ற கலத்தில்தான் பார்ப்பனர்கள் பதிவார்களே ஒழிய 4 வருணம்
குடி அரசு- 1935 (2) 40
என்பதில், தொண்ட மண்டலம் வேளாளர் என்பதற்கு வேறு கலம் இல்லவே இல்லை. எத்தனையோ தொண்ட மண்டல வேளாளர் தாங்கள் சூத்திரர்கள் அல்லவென்றும், தங்களுக்கும் வருணாச்சிரமத்திற்கும் சம்மந்தமில்லை என்றும் வெகு காலமாகவே கூப்பாடு போட்டிருக்கிறார்கள்.
மற்றும் பலர் தங்களை சாதாரண சூத்திரர்கள் அல்லவென்றும், சற் சூத்திரர்கள் என்றும் “பட்டுக் குஞ்சம் கட்டிக் கொள்வது'' போல் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். என்ன செய்தும் அதை மாற்ற முடியாமலே போய் விட்டது. அப்படி இருக்க ஐயோ பாவம் உலக வாழ்க்கையில் எவ்வளவோ கீழான நிலையில் வைக்கப்பட்டு எவ்வித ஆதரவும் சவுகரியமும் இல்லாத நீங்கள் பரத்தன்மையை ஒழித்துவிடுவதோ மறைத்து விடுவதோ என்றால் அதுவும் மத சம்மந்தமான வைதீக வேஷத்தைப் போட்டுக் கொண்டு
ஒழித்து விடுவது என்றால் அது சமுத்திரத்தை சிட்டுக் குருவி வற்றடிக்க முயற்சித்தது போல்தான் ஆகுமே ஒழிய வேறில்லை.
வர்ணங்கள் என்பது 'கடவுளால்' சிருஷ்டிக்கப்பட்டதாகும். எப்படி எனில் “கீதையில் பகவான்'' கிருஷ்ணன் “நான்கு வர்ணத்தையும் நான்தான். சிருஷ்டித்தேன்'' என்று சொல்லி இருக்கிறார்.
ஜாதிகள் என்பது மதத்தினால் ஏற்பட்டதாகும். எப்படி எனில் மனுதர்ம சாஸ்திரத்தில் சண்டாள ஜாதி உற்பத்திக் கிரமம் மற்ற ஜாதிப் பிரிவு உற்பத்திக் கிரமம் சொல்லப்பட்டிருக்கிறது
ஆகவே கடவுளும் மதமும் அதற்கு ஆதாரமான கீதையும் மனுதர்ம சாஸ்திரமும் காப்பாற்றப்படுவதாய் இருந்தால் சூத்திரப்பட்டமும் கீழ்ஜாதித் தன்மையும் எப்படி மாற்றப்பட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
தோழர் காந்தியார் தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் என்று வரக்
கத்து கத்திப்பார்த்துவிட்டார். பல லக்ஷ ரூபாயும் வசூலித்து மேல்ஜாதிக்காரர். மேல் வருணக்காரர் என்பவர் கையில் ஒப்படைத்து விட்டாரே தவிர, மற்றபடி தீண்டாமையின் ஒரு சிறு தூசைக்கூட அசைக்க முடியவில்லை.
ஏன் என்றால் அவர் மற்றொரு பக்கம் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் வருணத்தையும் ஜாதிக் கிரமத்தையும் ஆதரித்து வருகிறார்.
இன்று தீண்டாமை விலக்கு வேலையிலும், ஜாதி வித்தியாசம் ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100க்கு 100 பேரும் கீதை மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றை நம்பும் - ஆதரிக்கும் சோணகிரிகளேயாவார்கள்.
இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களேயாவார்கள். ஆகவே தீண்டாமை ஒழிப்புக்கோ, ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால்
41 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
முடியவில்லையானால் மதத்தை விட்டு நீங்களாவது விலகி ஆக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ,
பரத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப் போன்ற உருதி
உதாரணம் வேண்டுமானால் இதுவரையில் தீண்டப்படாதவர்களா. யிருந்து மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப் படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதரித்தள்ளிவிட்ட பின்புதான் தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள். இதற்கு கோடிக்கணக்கான மக்களை ஊர் பெயருடன் புள்ளி விபரத்தோடு காட்டலாம்.
ஆதலால் மதத்தை காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள்.
தோழர் காந்தியார் ஒரு மத வாதியே ஒழிய மனித ஜீவ அபிமானவாதி அல்லவே அல்ல. அவர் தனது இந்து மதம் காப்பாற்றப்படுவதற்காகத்தான் தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறாரே ஒழிய தீண்டப்படாத மக்களின் கொடுமைகள் தீர வேண்டுமென்பதை முக்கியமாய்க் கொள்ளவில்லை
காங்கிரசுக்காரர்களுக்கும் தீண்டாமையைப் பற்றிய கவலை கிடையாது. ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள். அனுபவத்தில் தீண்டாமை ஒழிப்பை அவர்கள் கையாடுவதானால் முடிவில் அவர்களே தீண்டத்தகாதவர்களாக ஆகிவிட நேரிடும் என்பது அவர்களுக்குத் தெரியும் ஏனெனில் தீண்டாமை ஒழியும் போது பார்ப்பனர்களின் மேல்ஜாதித் தன்மையும் ஒழிந்துவிடும். மேல் ஜாதித் தன்மை ஒழிந்துவிட்டால் பிறகு
பார்ப்பனர்களை யார் சட்டை செய்வார்கள். ஆகவே தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஏதாவது விடுதலை. வேண்டுமானால் அரசாங்கத்தைக் கொண்டுதான் செய்து கொள்ள முடியும்
அரசாங்கம் மனித சமூகத்தில் உள்ள கொடுமைகளையும், ஒருவரை ஒருவர் கொடுமையாய் நடத்தும் கொடுமையையும் ஒழிப்பதற்கு ஆகவே இருந்து வர வேண்டியதாகும். அதோடு மாத்திரமல்லாமல் இன்று இருந்து வரும் அரசாங்கம் தீண்டாமையை அனுசரிக்கும் அரசாங்கம் அல்ல தீண்டப்படாதவரைப் பொருத்தவரை நல்ல காலத்தின் அறிகுறியாக இந்தியாவின் ஏக சக்ராதிபத்தியமானது இந்திய அரசர்கள் கையில் இல்லாமல் ஒரு அன்னிய கண்ட அரசரிடத்தில் இருக்கிறது. இதை இந்தியர்கள் ஆட்சிக்குக் கொண்டு வரத்தான் காங்கிரஸ் முயற்சிக்கிறதாம். முயற்சியும் நடக்கின்றது
அப்படியானால் அதற்குள்ளாகவே உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களால் கூடுமானவரை இன்றைய ஆட்சியைப் பார்ப்பன ஆட்சி செய்யப்படுவதற்காக
குடி அரசு- 1935 (2) 42
செய்யப்படும் முயற்சியை எதிர்த்து நில்லுங்கள். சுயராஜியம் சுய ஆட்சி என்பது ராமராஜ்ஜிய ஆட்சி, கீதை ஆட்சி, மனுமுறை ஆட்சி என்றெல்லாம் சொல்லப்படுவது நீங்கள் அறிந்ததேயாகும். மனு ஆட்சிக்கோ, ராமராஜ்ஜிய ஆட்சிக்கோ இந்தியா போய் விடுவதானால் இந்தியா பூகம்பத்தினாலோ, சண்டமாருதத்தாலோ, காட்டு வெள்ளத்தாலோ அழிந்து போவதே மேலானதாகும். ஆதலால் நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியிலேயே உங்கள் விடுதலைக்கு முயற்சி செய்யுங்கள்
பழைய ஆட்சிகள் எதுவும் தீண்டாமையை ஒழிக்க முடியவே இல்லை.
இந்த ஆட்சியால் நீங்கள் கலெக்டர்களானீர்கள், ஜட்ஜுகளானீர்கள்,
வக்கீல்களானீர்கள், டாக்டர்களானீர்கள், உபாத்தியாயர்களானீர்கள், சட்ட சபை மெம்பர்களானீர்கள், ராவ் பகதூர், திவான் பகதூர்களானீர்கள், மந்திரி களுமாகப் போகிறீர்கள். ஆகவே உங்களுடைய குறைகள் கவனிக்கப்படவும் உங்கள் சமூகம் முற்போக்கடைந்து மற்ற மக்கள் போல் பாவிக்கப்படவும், பிரிட்டிஷ் ஆட்சியில்தான் இடம் உண்டே ஒழிய இந்து மதத்தில், இந்து ஆட்சியில், ராமராஜ்ஜியத்தில், மனு நீதி ஆட்சியில், கீதையில், சுதேச மன்னர்கள். ஆட்சியில் இடமில்லை என்பதை உங்களுக்கு வலியுறுத்துகிறேன்.
மற்ற வகுப்பாருடைய அரசியல் கிளர்ச்சிகளில் நீங்கள் பட்டுக் கொள்ளாதீர்கள். அதெல்லாம் பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும், படித்த கூட்டமும் இன்னமும் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தவே பாடுபடும்
கிளர்ச்சியாகும். உங்களுக்கு அந்த மூன்றும் இல்லை. அவற்றைப் பெற
நீங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தையே எதிர்பாருங்கள். மற்றவர்கள் எல்லாம், பிரிட்டிஷ் அரசாங்க பக்தராய் ராஜவிசுவாசிகளாய் இருந்துதான் இன்றைய மேல் பதவி அடைந்து இன்னும் மேல் பதவிக்கு கிளர்ச்சி செய்கிறார்கள். நீங்களும் அதுபோலவே இருந்து சம பதவியாவது அடைந்து பின்னால் வேண்டுமானால் கிளர்ச்சி செய்து மேல் பதவிக்கு வர முயலுங்கள்.
தோழர்களே! உங்கள் விஷயங்களைப் பொருத்த மட்டில் என்னுடைய அபிப்பிராயம் இதுவேயாகும். பிறகு நீங்கள் யோசித்துப் பார்த்து உங்களுக்குத் தோன்றியபடி நடவுங்கள்.
குறிப்பு: 10.07.1935 இல் சீர்காழியில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட அதித் திராவிட வாலிபர் மகாநாட்டைத் திறந்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 28.07.1935
43 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரசின் அலங்கோலம்
காங்கிரசிலிருந்து தோழர்கள் காந்தி “விலகினார்”
அன்சாரி “விலகினார்”
ராஜகோபாலாச்சாரியார் “விலகினார்”
இவர்கள் விலகிக் கொண்டதாக காட்டிக் கொண்டதில் ஆச்சரிய மொன்றுமில்லை.
ஏனெனில் இவர்கள் காங்கிரசிலிருந்து கொண்டு செய்வதற்கு வேலை
ஒன்றும் இல்லை.
காங்கிரசினுடைய வேலை இப்போது ஓட்டுப் பிரசாரம் செய்வதைத் தவிர வேறு ஒன்றுக்கும் இடமில்லாமல் போய்விட்டது
நிர்மாண திட்டங்கள் நிர்வாணத் திட்டங்களாக ஆகி விட்டது
இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயம் “சுயராஜ்ஜியம் ஏற்பட்டால் ஒழிய, முடியாது” என்று தோழர் காந்தியாரே வட்டமேஜை மகாநாட்டில் சொல்லி விட்டார்.
மதுவிலக்கு விஷயம் அதுபோலவே “சுயராஜ்ஜியம் கிடைத்தால் தான் செய்ய முடியுமே ஒழிய மற்றபடி யார் பாடுபட்டாலும் முடியாது” என்று சத்தியமூர்த்தியாராலேயே சொல்லப்பட்டாய்விட்டது
கதர்
இனி கதர் விஷயமாக ''ஒரு காலத்தில் கதர் என்கின்ற ஒருவித துணி கையால் நூற்று, கையால் நெய்தது இருந்து வந்தது” என்று சொல்லும் படியாக ஆகிவிட்டது
காந்தி கதர் ஆலயத்தில் தோழர் இராஜகோபாலாச்சாரியாரின் மேல் பார்வையில் இருக்கும் காந்தி ஆஸ்ரமத்தில் சுமார் 50 ஆயிரம் ரூ. பொருமான
கதர் துணி தூங்குகின்றது தமிழ்நாடு காதி வஸ்திராலயத்தில் லட்சக்கணக்கான ரூ. பொருமான.
கதர் துணி தூங்குவதோடு பூசனம் பிடித்து இத்து மடிகின்றது தமிழ்நாட்டில் பல ஜில்லாக்களிலும் உள்ள கதர் ஸ்தாபனங்கள் மூடப்படுகின்றன.
குடி அரசு - 1935 (2) 44
கதர் ஸ்தாபனத்தில் மீ. 100, 200 ரூ. சம்பளங்களில் இருந்து வந்த பார்ப்பனதேசபக்தர்கள் இப்போது அதைமெள்ள நழுவவிட்டு விட்டுகாங்கிரஸ் செல்வாக்கில் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி தேடிக் கொண்டார்கள் இன்றைய தினம் காங்கிரசில் கதருக்கு உள்ள யோக்கியதை யெல்லாம் மூடர்களும், பார்ப்பன அடிமைகளுமல்லாமல் வேறொருவரும் காங்கிரசுக்குள். நுழையாமல் இருப்பதற்கு ஆக காவலாய் கதர் வைக்கப்பட்டிருக்கிறது என்பதல்லாமல் வேறொன்றுமில்லை.
எப்படி என்றால் “காங்கிரசு நிர்வாக ஸ்தாபனங்களின் தேர்தலுக்கு நிற்கின்றவர்கள் கதர் கட்டிக் கொண்டிருக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.”
“காங்கிரஸ் கமிட்டிகளுக்கு தேர்தலுக்கு ஓட்டுக் கொடுப்பவர்கள்
கதர் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்"
என்கின்ற இரண்டு காரியத்துக்கும் கதர் நிபந்தனை ஏற்படுத்தி இருக்கிறார்கள் ஆகவே ஒரு மனிதன் எவ்வளவு யோக்கியனாகவும் தேசாபிமானி யாகவும் அஹிம்சையில், சத்தியத்தில் உண்மையான நம்பிக்கை உடையவ னாகவும் இருந்தாலும் அவன் கதர் கட்டி இருந்தால்தான் காங்கிரசில் ஸ்தானம் வகிக்க முடியும் பங்கு எடுத்துக் கொள்ள முடியும் என்பதாகும்
ஒரு சமயம் காங்கிரசின் மற்ற எல்லா திட்டங்களிலும் நம்பிக்கை இருந்து கதரில் மாத்திரம் நம்பிக்கை குறைவானவராய் இருந்து விட்டால் அவர் இந்திய தேசிய ஸ்தாபனம் என்று சொல்லப்படும் பொது ஸ்தாபனம் என்பதில் ஸ்தானம் வகிக்க அருகதை அற்றவராகி விடுகிறார்.
ஆகவே கதரானது இன்று ஒரு சுயநல காரியத்துக்கு அதாவது தங்கள்.
(பார்ப்பனர்கள்) அடிமைகள் அல்லாதவர்களை விலக்கி துரத்தி அடிப்பதற்கே ஒரு சாதனமாய் இருந்து வருவதல்லாமல் மற்றபடி அதில் எவ்வித தத்துவமும் இல்லை என்பது முடிவடைந்த விஷயமாகும்.
இன்று திருப்பூர் காதி வஸ்திராலய நிர்வாகமும் கதரின் பேரால். காங்கிரசுக்கு மக்களிடத்தில் ஏதாவது ஒரு பிடிமானம் இருக்க வேண்டும் என்பதும், அதனால் ஏதோ சிலருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் இருக்கும்படி செய்து அவர்களை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தவிர வேறு ஒரு காரியமும் இல்லாமல் போய்விட்டது.
தீண்டாமை
“இனி தீண்டாமை விலக்கு என்பது தீண்டப்படாதவர்கள் சமூகத் துறையில் இந்துக்களாகவே இருக்க வேண்டும்” அவர்கள் வேறு மதங்களுக்கு போய் அம்மத எண்ணிக்கையை பெருக்கிக் காட்டக் கூடாது என்பதற்கும், அரசியல் துறையில் அவர்கள் இந்துக்களின் எண்ணிக்கையை
48 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பெருக்கிக் காட்டவும், இந்துக்கள் என்பவர்களுக்கு ஒரு பெருங் கூட்டம் பிறவிஅடிமையாய் இருந்து தங்களுக்கு பயன்பட்டு வரவேண்டும் என்பதற்கும் மாத்திரமே தீண்டாமை விலக்குப் பிரசாரம் இருந்து வருகின்றதே ஒழிய மற்றபடி மனித சமூகத்தில் பிறவியில் வித்தியாசமில்லாமல் யாவரும் சமமாய் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆக சிறிதும் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இந்து முஸ்லீம் ஆகவே நிர்மாணத் திட்டங்கள் என்பவைகள் இந்த நிலையை அடைந்துவிட்டது மாத்திரமல்லாமல் காங்கிரசு நிர்மாணத் திட்டம் என்பதை காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட பிறகே காங்கிரசினிடத்தில் முஸ்லீம்களுக்கும் நம்பிக்கைஅற்றுப்போனதோடு மாத்திரமல்லாமல் துவேஷமும் வெருப்பும்கூட ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம்
எப்படியெனில் 1919, 1920 ம் வருஷங்களில் காங்கிரஸ் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொன்னவுடன் முகமதிய தலைவர்களான அலி சகோதரர்களும் மகம்மதலி ஜின்னா அவர்களும் மற்றும் முஸ்லீம் மத சம்பந்தமான பெரியார்கள் என்பவர்களும் காந்தியாருக்கு ஒரு தீர்க்க தரிசிக்கு செய்யும் மரியாதை போல் செய்து வந்தார்கள்.
கடைசியாக அவர்கள் எல்லோருமே ஒருவருக்குப் பின் ஒருவராய் காந்தியார் மீதும், காங்கிரசின் மீதும் குறைக் கூறிக்கொண்டே நழுவி விட்டதோடு மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு எதிர்ப்பாய் இருக்கிற தோடல்லாமல் “காந்தியார் இந்தியாவில் இந்துக்கள் ராஜ்ஜியத்தை
ஸ்தாபிக்க முயற்சிக்கிறார். ஆதலால், முஸ்லீம்களே உஷாராய் இருங்கள்”
என்று சொல்ல வேண்டியவர்களாகி விட்டார்கள்.
பார்ப்பணல்லாதார்
பார்ப்பனரல்லாதாரிலும் காங்கிரசின் தயவால் பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் இல்லாத பார்ப்பனரல்லாதார் எவ்வளவோ பேர் காங்கிரசுக்கு ஆக குடும்பத்துடன் உயிரைக் கொடுக்கத் தயாராய் இருந்து காந்தியாருக்கு சீஷர்கள் போல் இருந்தவர்கள் எல்லாம் கடசியாக காந்தியாரை ஒரு கபட சன்யாசி என்று சொல்லுவதோடல்லாமல் காங்கிரஸ் பார்ப்பன ஆட்சியை நிலைநாட்டப் பார்க்கிறது என்றும், காந்தியார் பார்ப்பனர்களின் அடிமை என்றும் சொல்லி காங்கிரசையே ஒழிக்க முயற்சிக்கிறார்கள். தீண்டாமை விலக்கு விஷயத்தில் ஏதோ மாத சம்பளமாகவோ கைக் கூலியாகவோ அல்லது அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு ஆவது ஒரு அணா, இரண்டு அணா என்றோ ஏதாவது பணம் உதவாவிட்டால் காங்கிரசில், ஒரு தீண்டப்படாதவராவது இல்லை என்கின்ற நிலையில் தான் இன்று காங்கிரசுக்கும் தீண்டப்படாதவருக்கும் உள்ள சம்பந்தம் இருந்து வருகின்றது.
குடி அரசு- 1935 (2) 46
அது மாத்திரமல்லாமல் தங்கள் சுயமாய் காங்கிரஸ் தயவில்லாமல் வயிற்றுப் பிழைப்பை நடத்திக் கொண்டு போகலாம் என்று எண்ணக் கூடிய தன்னம்பிக்கை உடைய தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோருமே இன்று “காங்கிரஸ் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு எதிரிடையான ஸ்தாபனம்” என்றும் “காங்கிரசினால் ஒரு நாளும் தீண்டப்படாத மக்களுக்கு விடுதலை ஏற்படாதென்றும்” ஆதலால் “காங்கிரசில் விழுந்து மாயவேண்டாம்” என்றும் தங்கள் சமூகத்தாருக்கு எச்சரிக்கை செய்வதோடு நூற்றுக்கணக்கான கூட்டங்களிலும் தீர்மானமும் செய்து வருகிறார்கள்.
அதற்கேற்றாற்போல் காங்கிரஸ்காரர்கள் செய்து வரும் செய்கை களும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் கூற்றை ஆதரித்தே வந்து கொண்டிருக்கிறது
ஆலயப் பிரவேசம்
உதாரணமாக ஆலயப் பிரவேசம் என்கின்ற விஷயத்தில் பூனா ஒப்பந்தத்தின் போது தோழர்கள் மாளவியா, காந்தி, ராஜகோபாலாச்சாரியார். முதலிய தலைவர்கள், தீண்டப்படாத மக்களுக்கு உறுதி கொடுத்துவிட்டு இப்போது காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்கு மெஜார்ட்டியாக வந்து விட்டவுடன் “பொதுஜன அபிப்பிராயத்தை சரி செய்து கொண்டாலல்லாமல் ஆலயப் பிரவேச விஷயம் மாத்திரமல்லாமல் வேறு எந்தவிதமான சமுதாய சீர்திருத்தங்களும் செய்யக் கூடாது” என்று சொல்லிவிட்டார்கள்.
அப்படியாவது காங்கிரஸ்காரர்களோ அல்லது அதன் முக்கிய தலைவர்களோ என்று சொல்லப்பட்ட தோழர்கள் காந்தி, மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய பெரியார்கள் பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆலயப் பிரவேச விஷயமாகவோ, சமுதாய விஷயமாகவோ ஏதாவது பிரசாரம் செய்தார்களா? அல்லது சீர்திருத்த மகாநாடுகள் கூட்டி ஜனங்களுக்கு ஏதாவது எடுத்துச் சொன்னார்களா? அல்லது யாரையாவது கேட்டுக் கொண்டார்களா? அல்லது தீண்டாமை ஒழிப்புக்கு விரோதமாய் பார்ப்பனர். களும், சங்கராச்சாரியார்கள் என்பவர்களும், சனாதனிகள் என்பவர்களும் செய்து வரும் விஷமப் பிரசாரத்துக்காவது ஏதாவது சமாதானம் சொன்னார்களா? என்று பார்த்தால் அது விஷயத்தில் திருடனைத் தேள் கொட்டியதுபோல் வாயை வெகு பத்திரமாக மூடிக் கொண்டு அவ்விஷமப் பிரசாரத்துக்கு இடம் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்.
தீண்டாமை விலக்கின் பேரால் பொது மக்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளை அடித்த ரூபாய்களைப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்குமே கொடுத்து காப்பாற்றி வருகிறார்களே அல்லாமல், ஒரு பத்திரிகை மூலமாயாவது இப்படிப்பட்ட விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் கொடுக்கக்கூட இல்லை. 47௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சங்கராச்சாரியார்
சங்கராச்சாரியார் என்னும் ஒரு பார்ப்பனர் “பார்ப்பனனுக்கும் பரையனுக்கும் பிறவியிலேயே சரீரத்தில் ரத்தபேதம் இருக்கின்றது என்றும் “பரையன் ரத்தத்தையும் பார்ப்பனன் ரத்தத்தையும் வேறு வேறாய்ப் பரீட்சித்துப் பார்த்தால் பர ரத்தம் இன்னது என்றும் பார்ப்பன ரத்தம் இன்னது என்றும் தெரிவித்து விடலாம்" என்றும் அபிப்பிராயம் கொடுத்தார்.
இதைப் பற்றி எந்தக் காங்கிரஸ் பார்ப்பனராவது தீண்டாமை விலக்குக் கமிட்டிக்கு தலைவராய் இருந்து தீண்டாமைக் கமிட்டி பண்டை சுவஹா செய்கின்ற பார்ப்பனனாவது ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லை. கழுதையோகுதிரையோயாராய் இருந்தாலும், சங்கராச்சாரியார் வாயிலிருந்து வந்தது என்று சொன்னால் அது மதிக்கத்தக்க வார்த்தையாகத்தானே மக்கள் மதிக்கிறார்கள். அப்படிக்கு இருக்க இந்த மாதிரி விஷமத்தனமானதும் போக்கிரித்தனமானதுமான 'ஸ்ரீமுகத்துக்கு' யாரும் பதில் சொல்லவில்லை யானாலும் “தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்காகவே உயிர் வாழ் கின்றேன்" என்று சொல்லி பொது மக்களிடம் இருந்து 10 லட்சக்கணக்கான ரூபா வசூல் செய்த தோழர் ஆகிய காந்தியாருக்காவது இப்படிப்பட்ட விஷமப் பிரசாரத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்கின்ற அறிவு இருக்க வேண்டாமா என்று கேழ்க்கின்றோம்
சங்கராச்சாரி இப்படி சொன்னபிறகும் இதற்கு எந்த காங்கிரஸ்வாதியும், காந்தியாரும், எந்த சீர்திருத்தப் பார்ப்பனரும், தீண்டாமை விலக்கு கமிட்டித் தலைவர்களும் யாதொரு பதிலும் சொல்லாத காரணத்தால் இன்று அந்த சங்கராச்சாரி சொன்னபடியே எல்லா பார்ப்பனர்களும் காப்பிக்கடை, ஓட்டல், வக்கீல், வக்கீல் குமாஸ்தா, புரோகிதன், அர்ச்சகன், வைத்தியன், தூதுவன் ஆகிய எல்லாப் பார்ப்பனர்களும் அதையே சொல்லிக் கொண்டு தீண்டப்படாதவர்கள் என்பவர்களை முன்பைவிடமோசமாய் நடத்துகிறார்கள்.
அனுபவத்தில் அடக்கு முறை
தவிரவும் காங்கிரசுக்காரர்கள் தீண்டாமை விலக்கு விஷயத்தில் காரியத்தில் அனுபவத்தில் எப்படி நடந்து வருகிறார்கள் என்பதைப் பற்றி சென்ற வார தலையங்கத்தில் குறிப்பிடுகையில் தோழர் சன்யாசி என்ற ஆதி திராவிடரை காங்கிரசார் எப்படி நடத்தினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.
அதன் பயனாக இவ்வாரம் தீண்டாமை விலக்கு கமிட்டியில் இருந்து தோழர் சன்யாசியை நீக்கி விட்டார்கள் என்கின்ற செய்தி கிடைத்திருக்கிறது.
திருச்சி “நகர தூதன்" பத்திரிகையில் சென்ற வாரமே இச்செய்கையை கதரிசனமாக குறிப்பிட்டிருந்தது
த்
அதாவது, “தோழர்கள் சன்யாசியை வேலையை விட்டு நீக்கி விடுவார்கள்” என்று எழுதியிருந்தது. அதுபோலவே நடந்து விட்டது.
குடி அரசு- 1935 (2) 48
காங்கிரசில் இருக்கும் அடக்குமுறைக்கும், கொடுமை முறைக்கும் இதைவிட வேறு எதை ஆதாரம் காட்ட வேண்டும் என்பது நமக்கு விளங்க வில்லை. “குதிரை கீழே தூக்கிப் போட்டதுமல்லாமல் புதைக்க குழியும் பரித்தது'' என்பது போல் தோழர் சன்யாசியை இழிவுபடுத்தி அவமானப் படுத்தியது மாத்திரமல்லாமல் அவரை உத்தியோகத்தில் இருந்தும் நீக்கிவிட்டார்கள் என்றால்,
அடக்கு முறையையும் தண்டனைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமல்லாமல் உலகிலுள்ள ஏனைய அரசாங்கங்களும் இந்திய தேசீயக் காங்கிரசினிடமும் இந்தியப் பார்ப்பனர்களிடமும் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிபார்சு செய்ய வேண்டிய அளவுக்கு வந்துவிட்டது
என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
தோழர் காந்தியார் இதற்கு என்ன பதில் சொல்லுவார்?
குடி அரசு - தலையங்கம் - 28.07.1935
49 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி
நாட்டுக்கோட்டை நகரத்தார் லேவாதேவியின் மூலம் நன்றாய் பணம் சம்பாதிக்கக்கூடிய சமூகத்தார்கள் என்பது யாவரும் அறிந்ததாகும்
ஆனால் அப்பணத்தை ஒழுங்கான முறையில் செலவு செய்யவோ அல்லது தங்கள் சமூகத்தில் அல்லது பின் தங்கள் சந்ததிகள் அறிவுபெற்று விளங்கும்படி பயன்படுத்தவோ அச்சமூகத்தில் அனேகருக்குத் தெரியாது என்றே சொல்லவேண்டும். அவர்களுடைய பணம் எல்லாம் கோயில் கட்டுதல், வேத பாடசாலை வைத்தல், உற்சவங்களுக்கு வாகனம் செய்தல், சாமிக்கு பாலபிஷேகத்துக்கு பசுமடம் வைத்தல், யாத்திரை செல்லுதல் ஆகிய கடவுள் செலவுக்கும் மற்றும் கல்யாணம் செய்தல், புதுமை செய்தல், 10-ம், 60-ம் கல்யாணம்
செய்தல், கருமாதி திதி செய்தல், உபதேசம் பெருதல், திருவாதிரை செய்தல் முதலாகிய வைதீக சடங்குகளுக்கும் பெரிதும் செலவு செய்து வீண் பெருமை பெறப் பயன்படுத்தப்படுகின்றனவே ஒழிய செல்வத்தினால் ஏற்படவேண்டிய பயனைக்கருதி செலவழிப்பது என்பது மிகவும் அருமையாகவே காணப்படும்.
இவை தவிர அவசியமில்லாமல் 1 லக்ஷம், 2 லக்ஷம், 5 லக்ஷம் போட்டு வீடு கட்டிக் கொள்வது ஆகிய காரியமும் செய்யப்படுகிறது மற்றும் இன்னாட்டில் பல லக்ஷக்கணக்கான பிச்சைக்காரர்களும், பல கோடிக்கணக்கான தற்குறிகளும், 10 லக்ஷக்கணக்காக வேலையற்றுத்
திண்டாடும் மக்களும் இருப்பதை இக்கூட்டத்தார்கள் அறியமாட்டார்கள்
என்றும் சொல்ல முடியாது
இந்நிலையில் நமது நாட்டு மக்கள் இருக்க, இப்போது சிறிது காலமாய்
ஒரு புதிய கூட்ட வாலிபர்கள் தாசி வைப்பது, மதுபானம் அருந்துவது, சீட்டுகள் பந்தயங்கள் ஆடுவது, கார் வைப்பது முதலிய தர்பார் செலவில் இறங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இவற்றால் எல்லாம் அந்த
சமூகத்துக்கோ, நாட்டு நலனுக்கோ ஏதாவது கடுகளவாவது பயன் இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா?
அச்சமூகத்தில் கொஞ்ச காலமாய் சில வாலிபர்களுக்கு சீர்திருத்த ஆர்வம் ஏற்பட்டு ஏதோ இரண்டொரு சீர்திருத்தம் செய்ய ஏற்பட்டது என்றாலும் அவை சீர்திருத்தக்காரர்களாலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் அதிக பயன் கொடுப்பதற்கில்லாமல் போய்விட்டது
குடி அரசு- 1935 (2) 50
இவ்வளவு காலம் பொருத்தேனும் அச்சமூகப் பிரமுகர் ஒருவரால். பெருந்தொகை ஒதுக்கி வைத்து ஒரு யூனிவர்சிட்டி ஏற்படுத்தப்பட்டது என்றாலும் அதுவும் பெரிதும் ஒரு வகுப்பாருடைய நன்மைக்கே பயன்படும் படியான மாதிரியில் அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.
இருந்தாலும் கோவில் கட்டுவதை விட்டு இதாவது செய்தார்களே என்று போற்ற வேண்டியது அவசியமாகும்
மற்றும் பல செல்வவான்களுக்கு இப்போது இந்த எண்ணம் உதித்து இருப்பதாகவும் தெரிகிறது. எனவே கடவுள் விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அச்செல்வம் கல்வி விஷயத்துக்கு பயன்படும்படியாக மாறுவது போலவே வைதீகச் சடங்கு விஷயமும் மாறி அவைகள் பொது மக்கள் கல்விக்கு பயன்படா விட்டாலும் அந்தந்த குடும்ப மக்களின் கல்வி, நாகரீகம், நல்வாழ்க்கைப் பழக்கம் ஆகியவைகளுக்காகவது பயன்படும்படியான மார்க்கம் ஏற்பட்டால். அதிலிருந்து பிறகு அனேக முற்போக்குகள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கலாம் ஆகவே வைதீகச் சடங்குகள் விஷயத்தில் இவ்வளவு காலம் பொருத்தாவது அச்சமூகத்தில் ஒரு பெரும் சீர்திருத்தம் ஏற்பட்டதையும் இனியும் பல ஏற்படப் போவதாகக் காணப்படுவதையும் பார்த்து நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்
என்னவெனில் சுயமரியாதை சங்கத்தில் ஆரம்ப முதல் நிர்வாக சபை அங்கத்தினராய் இருந்துவரும் தோழர் வைசு. ஷண்முகம் அவர்கள் தனது மகள் தோழர் பார்வதிக்கு நடத்தின திருமணத்தை ஒரு பெரும் சீர்திருத்த திருமணமாகவே நடத்திக்காட்டி விட்டார். அதாவது புரோகிதம் இல்லை என்பதும், ஒரே நாளில் முடித்தது என்பதும் மற்றும் எவ்வித வைதீகச் சடங்கும் இல்லாமல் செய்தது என்பதும் மிக குறைந்த செலவில் நடத்தப்பட்டது என்பதும் பாராட்டக்கூடியதேயாகும்
அதுபோலவே அதே திருமணத்தை ஓட்டி மற்றும் சில தோழர்கள்
தம்பதி சகிதம் ஒன்று கூடி தங்கள் குழந்தைகளுக்கு புதுமை என்னும் சடங்கு செய்வதில்லை என்று முடிவு செய்து கொண்டு விட்டார்கள். புதுமை என்பது
ஒரு தம்பதிக்கு முதல் முதல் பிறக்கும் குழந்தைக்கு செய்யும் ஒரு சடங்காகும். இச்சடங்குக்கு எவ்வளவு ஏழையாய் இருந்தாலும் குறைந்தது 2500 ரூ. முதல் 10000 ரூபாய் வரை செலவு ஏற்படும். இதை நிறுத்துவது என்பது அச்சமூகத்தில் முடியாத காரியமாகும்
யாராவது நிருத்தினால் அவர்கள் அச்சமூகத்தில் மிகவும் இழிவாகவும், கேவலமாகவும் கருதப்பட வேண்டியவர்களாவார்கள். ஆகவே இப்படிப்பட்ட சடங்கையும் மற்றும் இது போன்ற சடங்கு களையும் செய்வதில்லை என்று ஒரு கூட்டத்தார் முடிவு செய்து விட்டார்கள்.
51 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதாவது 8-7-35-ந் தேதி மாலை 5 மணிக்கு கானாடுகாத்தான் தோழர்: வைசு ஷண்முகம் அவர்களது இன்பமாளிகையில் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தலைமையில் ஒரு சிறு கூட்டத் தம்பதிகள் கூட்டம் கூட்டப்பட்டு இம்மாதிரி வைதீகச்சடங்கால் ஏற்படும் பணச் செலவையும் பயனற்ற தன்மையையும் எடுத்துச்சொல்லி மேல் கண்ட முடிவுக்கு வந்து பல தம்பதி களிடம் உறுதிமொழியும் கையொப்பமும் வாங்கப்பட்டுவிட்டது.
மற்றும் பல தம்பதிகள் தங்கள் பெயர்களையும் அதில் சேர்த்துக் கொள்ளும்படி சொன்னார்கள். ஆயினும் அவைகளை பின்னால் தெரிவிக்கப்படும்.
இந்தக் கூட்டம் கூட்டவும் இந்த முடிவுக்கு வரவும் முக்கியஸ்தராய் இருந்தவர் தோழர் மு. நடராஜனாவார். ஆனால் முதல் முதல் கையொப்பமிட முனைந்தவர்கள் தோழர்கள் வைசு. ஷ. சோலை தம்பதிகளாவார்கள். மற்ற தம்பதிகளும் வெகு அன்புடனும் ஆசையுடனும் ஒப்பிக் கையொப்பமிட்ட பிறகு தம்பதிகள் குதூகலத்துடன் கைகொடுத்து ஆனந்தித்த காட்சி மிக மிக அருமையாய் இருந்தது.
இக்கூட்ட நிகழ்ச்சியையும் கையொப்பங்களையும் படமாக்கி இதில் பிரசுரித்திருக்கிறோம்.* மற்றும் இந்த முடிவை ஒப்புக் கொள்ளு கிறவர்கள் தம்பதி சகிதமாய் ஒப்புக்கொண்டு கையொப்பங்களை அனுப்பினால் நன்றி அறிதலுடன் ஏற்று பிரசுரிக்கப்படும்.
குடி அரசு - கட்டுரை - 28.07.1935
குடி அரசு - 1935 (2) 52
ண்
8 குடி. அசசு
செட்டி நாட்டில் க சீர், த்தப்புரட்சி வ ட சர்திருக்தப்பு. i 2 it சங்கள் கழுகின் சேவ்தன், 104 U0 ல்யாணம் துயெளிவ ம்செ்வப்பறநதது S8 சநாத ப. ந ள்ளது வன ல்கள் அதிகள செய்கள், சுன இதி செய்தா. பற்னம் இளைட்டன் எ நன் ன்ன அவுத்து i பலன் உப்பல் பெருச, ருண காடம்கணல்வல வக்கார் SN படத்து அச்சுத் செய்தல் முதனாவ திக சடல சன. பட கோடிக்கணர்சான MowesZS கொன்ட அவருக்குள் செக்வன எ கக்கம் பொதும் செ செ தாகரிகட, 10 சாஷகணல் ல் P பண்பாக்கு கக ஜே சென்ன ௮ எண் பொருளைபதப்பவன் காச பெளைய ததி இண்டாழ் 45 ர்க் எட்ட அகட பனம் எல் L S o e பகர இருப இ்டட்ட் அண்டன் செல்ல oo ைத்தள், உதிரலக்க னைக்கு சொழ்பான என் அம் சொ sy b Fiosotesioardcdu e ற்ற வகை செய்த், சர் ப கொட் க கம்ோத்து .
g ந: e Mafia-awn. oy e B v ட்ட = $2... ணன் கைது 2 0.4 தலா D5 அரி வம oy - ot வாடல் வழியை தர்க்கா 2V SN D g
fw,,z:%z@“x இனியன e g Ly RN அதித o அனைவ
மம் யன செல்வமான
@ .
4 அகசாகிது கர்வமாக வத
8 vl 3 by . - மற அம்மை
இ LT L வ இசவ இவவ வகு e துத்கத்கள எவ் - e சாம் எனன எறி்க்கலாள்.
b கன சக்க வல பன்
சத, 7 உது க தோழர் கைக, ஒழுக ன்
விதண்டா வாதம்
குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தது. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண்சாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளை
யாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்கு மானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும் ஆகவே20 வயதுக்கு மேற்பட்டபிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள்? இந்த7 பிள்ளைகளும் ஒரு காசுகடசம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப்போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காகவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சைபோட்ட கிருஷ்ண பகவானுக்காவது என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பையல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா?” என்று கேட்கக்கூடிய
புத்தி இருந்திருக்காதா?
கக
கேள்வி:- என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்துவிட்டதா?
பதில்:- அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே! அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும் தெரியாததையும் நான் ஓப்புக்கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு? கக்க
கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?
பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவரா யிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?
கக்க
ராமாயணம் நடந்தது திரேதாயுகத்தில். அதில் ராவணன் அரைக்கோடி வருஷம் (50-லக்ஷம் வருஷம்) அரசாண்டான் என்று காணப்படுகிறது
குடி அரசு- 1935 (2) 34
அந்த யுகத்திற்கு மொத்த வருஷமே 12 லக்ஷத்து 96 ஆயிரம் வருஷங்களாகும். நாலு யுகமும் சேர்ந்தாலுமே 43 லக்ஷத்து 20 ஆயிரம்
வருஷந்தான் ஆகிறது ஆகவே ராவணன் எப்படி அரைக்கோடி வருஷம் அரசாண்டு
இருக்கமுடியும்?
பகுத்தறிவு (மா.இ.) - வினா விடை - ஜூலை 1935
55௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பொது உடமை தேசத்தில் கலைகள்
பொது உடமை தத்துவம் பெருகி மக்கள் சமதர்மக் கொள்கைக்கு ஆளாகிவிட்டால், எல்லோரும் சோம்பேறிகளாக ஆகிவிடுவார்கள் என்றும், கலைகள் விருத்தியாகாதென்றும், அற்புதங்களும் அதிசயங்களும்
கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுமென்றும், உற்சாகமற்ற வாழ்க்கையாக ஆதி விடுமென்றும், உலக முற்போக்கே தடைப்பட்டு விடுமென்றும், பொதுவாக மனித சமூகத்தின் அறிவே மங்கிவிடுமென்றும் சொல்லப்படுகின்றது
இன்று உலகில் பொது உடமை தேசமாகவும் சமதர்மக் கொள்கை ஆட்சி புரியக்கூடியதாகவும் இருந்து வரும் நாடு ரஷ்ய தேசமாகும்
அது 81 சதுர மயில் விஸ்தீர்ணமும் 17% கோடி ஜனத்தொகை கொண்டதுமான தேசமாகும். அத்தேசம் தனி உடமைத் தத்துவத்தின் கீழ், சமதர்மம் என்கின்ற வாசனையே அற்று, உயர்வு தாழ்வு தத்துவத்தில் வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது.
அப்படி இருந்தும் அந்த தேசம் ஏறக்குறைய ஒரு காட்டுமிராண்டி தேசம் போலவே, இந்தியாவை விட மோசமான நிலைமையில் சமீப காலம் வரை இருந்து வந்திருக்கிறது. 1917-ஆம் னக்கு முன் அந்நாட்டு மக்கள் 100-க்கு 8-பேர், பத்துப் பேர்களே படித்திருந்தார்கள்.
மூக்குக்கண்ணாடியைப்பார்த்து ஆச்சரியப்படும்படியான நிலையில் கோடிக்கணக்கான மக்கள் இருந்தார்கள். மகாயுத்தம் நடந்ததை உணர முடியாமலும், உலக நடப்பில் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ள முடியாமலும் கோடிக்கணக்கான மக்கள் இருந்திருக்கிறார்கள். பல ஜாதி, பல மதம் என்பதாகப் பிரித்து ஒற்றுமையே இல்லாமல் இருந்து வந்தார்கள்.
இன்று ரஷிய தேசம் பொது உடமைத் தத்துவத்துக்கு வந்த - சமதர்மக் கொள்கைப்படி ஆட்சி புரிய ஆரம்பித்த இந்த 18-வருட காலத்தில் உலகத்தில் கலைகளில் முதன்மை ஸ்தானம் பெறப் பார்க்கிறது. ரஷியக்கலை வளர்ச்சியும், அதன் முற்போக்கும் இன்று வேறு எந்த தேசத்திலும் அவ்வளவு வேகமாக நடைபெறவில்லை என்றே சொல்லவேண்டும் இலக்கியம், சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம், ஆகியவைகளில் ரஷியாவுடன் போட்டி போட மற்ற தேசங்களில் அனேகம் பயப்படுகின்றன. போர்த்திறத்தில் ரஷ்யாவைக் கண்டு மற்ற தேசங்கள் பயப்படுகின்றன என்று சொன்னால் அதை மறுக்க இன்று எத்தேசத்துக்கும் தைரியமில்லை.
குடி அரசு- 1935 (2) 56
வைத்திய விஷயத்தில் செத்தவனைப் பிழைக்க வைத்தல் முதலான அனேக காரியங்களில் உலகத்தில் முதன்மை பெற்று வருகிறார்கள். விஞ்ஞான. ஆராய்ச்சிக்காக ரஷியா எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியே அது இன்று எல்லாத் துறைகளிலும் உலகத்தைப் பின்னடையச் செய்கிறது
அதாவது ரஷிய சோவியத் அரசாங்கமானது ஆராய்ச்சித்துறையில் வேலை செய்து புதிய புதிய விஷயங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்து வதற்கு முதல் தர விஞ்ஞான நிபுணர்களாக (30000) முப்பது ஆயிரம் பேர்களைத் தெரிந்தெடுத்து அதற்கு ''இன்வெண்ட் கில்ட்'' என்று பெயர் வைத்துக் காரியங்கள் செய்யச்செய்து வருகிறார்கள். இந்நிபுணர்கள். இதுவரை அனேக அற்புதங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் அனேக: விஷயங்கள் கண்டு பிடிக்க உறுதி கொண்டு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
கை விரல் நசுங்கித் துண்டுபட்டுவிட்ட ஒருவனுக்கு அவன் கால்
விரல் ஒன்றை வெட்டி தைத்துப் பொருத்தி இயற்கையான கை விரலாகச் செய்யப்பட்டது
குருடர்கள் கண்களுக்கு மின்சார சக்தி ஏற்றுவதன் மூலம் வெளிச்சம் வரும்படி செய்யப்பட்டிருக்கிறது. ஒரே கம்பியில் ரயில் வண்டியைத் தாங்கும்படி செய்து பிரபாணிகளை ஏற்றிக்கொண்டு மணிக்கு 185-மைல் வேகம் ஓடும்படி செய்யப்பட்டிருக்கிறது.
செத்த பிராணிகளை அதாவது பனியில் மூழ்கி உறைந்து உயிர். துறந்த பிராணிகளை 2, 3, 4 மாதகாலம் பொறுத்துக்கூட உயிர் வரும்படி செய்யப்பட்டிருக்கிறது, ரத்தத்தை வெளியிலெடுத்ததும் மறுபடியும் சரீரத்துக்குள் பாய்ச்சப்படுகிறது
கம்பளங்களுக்கு, ஜெந்துக்களின் மயிர்களை வெட்டாமல் தானே உதிரும்படி செய்து மறுபடியும் சீக்கிரம் முளைக்கும்படி செய்யப்படுகிறது
பூமி விவசாய ஆராய்ச்சியில் பெரியதொரு மாற்றமும் பயனும் ஏற்படும்படியாக பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது
இன்னும் பல காரியங்கள் நடக்கின்றன. எனவே கலைவளர்ச்சி, அதிசயம், அற்புதங்கள் கண்டு பிடித்தல், முயற்சி, விஞ்ஞான முன்னேற்றம் முதலியவைகள் எல்லாம் தனி உடமை நாட்டில் தான் ஏற்படும் என்று சொல்லுவதானது தனி உடமை பணமே சுயநலம், பணமே வேலைக்கு பிரதி பலன் என்றதான பழக்கத்தினால் ஏற்படும் மனப்பான்மையே ஒழிய, அவை இயற்கையாகத் தோன்றுவதல்ல. பணமில்லாத போட்டி விளையாட்டுகளில், பந்தயங்களில் மக்கள் இறங்கி வேலை செய்வதையும் பண வருவாயில்லாத காரியத்துக்கு மக்கள் பலர் உயிர் விடும்படியான அளவு முயற்சி செய்வதையும், உயிரையே இழப்பதையும் கூட பார்க்கின்றோம். இவர்களுடைய லக்ஷியம் என்ன என்று பார்த்தோமேயானால் சமதர்ம நாட்டில் போட்டியும், பந்தயமும், அதற்காக உற்சாகமும் ஊக்கமும் ஏன் இருக்காது என்பது விளங்கும் 57௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
நிற்க ஒரு மனிதன் இரண்டு மனிதர்களால் செய்யப்படுகின்ற காரியங்கள் போக, 1000-பேர் 10000-பேர், 100000-பேர்களால், ஒரு வருஷம், பத்து வருஷம் பாடுபட்டு, 10-கோடிரூ, 20-கோடிரூ, செலவிட்டுச் செய்ய வேண்டிய அதிசயமான காரியங்கள் எல்லாம் பெரிதும் சமதர்ம நாட்டில் தான் செய்ய முடியும்
ஏனெனில், சமதர்ம நாட்டில் உள்ளதை விகிதாசாரம் சாப்பிட்டுவிட்டு, முடிந்ததைக் கூலி இல்லாமல் செய்வது என்பதால் எப்படிப்பட்ட வேலைக்கும் மூலதனக் கவலையோ வட்டிக்கணக்கு பார்க்க வேண்டிய அவசியமோ இல்லாமல் போய்விடுகிறது. ஆதலால் சமதர்ம மக்கள் வாழ்க்கை எழுச்சி உள்ளதும், ரசமுள்ளதுமாக இருக்காது என்று யாரும் எண்ணிவிட வேண்டியதில்லை.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜூலை 1935
குடி அரசு- 1935 (2) 58
ராம — ரவண ஆராய்ச்சி
- சித்திரபுத்திரன்
ராமனின் “*தெய்வீகத்தண்மையும்?? ராவணனின்
““ராக்ஷ்தத்தன்மையும்??
ராமனின் தெய்வீகத்தண்மையான காரியங்கள்
1. ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக்கொடுத்தான்.
2. சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு
உத்தரவு கொடுத்தான்.
3. வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டினான்.
4. ராவணனைக் கொன்று விபீஷணனுக்குப் பட்டங் கட்டினான்.
5. 5-மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபசாரப் பட்டம் கட்டி தனியே காட்டில் கொண்டுபோய் விட்டுவந்தான்.
இந்த ஐந்து அரும்பெருங் காரியங்களைச் செய்திருக்கிறான் ராமன். இந்தக் காரியங்களிலிருந்து ராமனிடத்தில் தெய்வத்தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, மனுஷ்யத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா?
1. தாடகையைக் கொன்றதற்காக என்ன சமாதானம் சொல்லமுடியும்? தாடகை செய்த குற்றமென்பதெல்லாம் அவள் தேவர் (ஆரியர்) களுடைய யாகத்தைத் தடுத்துக்கொண்டு வந்தாள் என்பதே. யாகம் என்றால் என்ன என்பதைப்பற்றி நாம் சொல்லவேண்டியதேயில்லை குதிரை, மாடு, ஆடு, மனிதன் முதலிய ஜீவன்களை (சித்திரவதை செய்து) கொன்று பக்குவம் செய்யும் ஒரு காரியமாகும். அதுதான் இன்று முறையே அஸ்வமேத யாகம், பசுமேத யாகம், அஜமேத யாகம், நரமேத யாகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது
இன்றுகூடப் பார்ப்பனர்கள் எங்காவது யாகம் செய்வதாயிருந்தால், ஜீவகாருண்ய மதக்காரர்கள் என்று சொல்லப்படும் ஜைனர்களும், மற்றும் சைவர்களும், ஜீவகாருண்யமுடையவர்களும் ஆட்சேபிப்பதை நாம் பார்க்கின்றோம். யாகங்களைத் தடுக்கும்படியாக சட்டம் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தாரை வேண்டுகின்றோம்.
59 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
யாகத்தைத் தடுத்ததற்காகவே ஜைனர்கள் கழுவேற்றப்பட்டிருக் கிறார்கள் என்றும் புராணங்களில் அறிகிறோம். திருவள்ளுவர், புத்தர் முதலிய பல பெரியோர்கள் யாகத்தைக் கண்டித்தும் இருக்கிறார்கள். சென்ற மாதத்தில் தேவகோட்டையில் நடந்த யாகத்தைக்கூட பலர் தடுத்தும், கடைசியாக யாகம் செய்த பார்ப்பனர்கள் சர்க்காரிடம் முறையிட்டு ரிசர்வ் போலீஸ்காரர்கள் பந்தோபஸ்தின்மீது யாகம் நடத்தப்பட்டிருக்கிறது
இந்தக்காலத்திலேயே யாகத்துக்கு இப்படி ஆக்ஷேபனைகளும்
எதிர்ப்புகளும் இருக்கும்போது அந்தக்காலத்தில் ஆரியர்கள் இந்நாட்டில் பிரவேசித்த ஆரம்ப காலத்தில் இம்மாதிரியான ஜீவ இம்சைக்கு எதிர்ப்பு இல்லாமல் இருக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
ராஜ குடும்பத்தைச் சேர்ந்த தாடகை என்கின்ற வயது சென்ற பெண்: ஒருத்தி யாகத்தை ஆட்சேபித்ததற்காக அவள் கொல்லப்படுவது என்றால், அதுவும் தெய்வத்தன்மை உடையவன் என்று சொல்லப்படும் ஒரு ராஜகுமாரனால் கொல்லப்படுவது என்றால் இது எப்படி நீதியாகும்?
யாகம் செய்யவேண்டிய ஆரியர் மனிதத் தன்மையும் யோக்கியமும் உடையவர்களாய் இருந்திருந்தால் தாடகையைச்சிறைப்படுத்தி வைத்திருந்து
யாகம் முடிந்தபின்பு விடுதலை செய்திருக்கலாம் அல்லவா? அப்படி இல்லாமல் அவளை வில்லால் அம்புவிட்டு ராமன் கொன்ற செய்கை எந்தச் சட்டப்படி நீதியாகும்? இன்று எந்த அரசாங்கத்திலாவது இப்படிப்பட்ட கொடுமையான நீதியைப் பார்க்கிறோமா? அல்லதுகாதிலாவது கேட்கிறோமா?
2. சூர்ப்ப நகையை மூக்கும் காதும் அறுத்தது என்பது எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செய்கை என்பதை அவரவர்களே தான் யோசித்துப் பார்க்கவேண்டும். சூர்ப்பநகை செய்த தப்பிதமெல்லாம் “ராமனைப் புணர'' ஆசைப்பட்டாள் என்பதேயாகும். இது ஒரு பெரிய குற்றமாகுமா? முதலாவது ஒரு பெண், அதிலும் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவள் காட்டில் திரியும் இரு வாலிபர்களை வலிய அணைய ஆசைப்பட்டாள் என்பது சாதாரணமான இயற்கை நடப்புக்கு அதீதப்பட்ட காரியமேயாகும். அப்படித்தான் ராமன் மீது காதல் கொண்டுவிட்டதினாலேயே அது காதும்
மூக்கும் அறுக்க வேண்டியதான அவ்வளவு பெரிய குற்றமாக ஆகிவிடுமா? இந்தக் காரியமானது இன்றைய உலக நடப்புத் தன்மைக்கு எவ்வளவு இழிவானதும், கீழ்மக்கள் செய்கை என்று சொல்லக்கூடியது மானதாகும் என்பதை யோசித்தால் ராமன் தெய்வத்தன்மை கொண்டவன் என்றோ, நல்ல குடிப்பிறப்பினன்என்றோ, நீதிக்கும் மனுஷ்யத்தன்மைக்கும் கட்டுப்பட்டவனாய் இருந்தான் என்றோ சொல்லமுடியுமா?
3. வாலியைக் கொன்றதைக் கவனிப்போம். வாலிக்கும் ராமனுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. வாலிக்கும் அவன் தம்பி சுக்ரீவனுக்கும் ஏதாவது தகறாறு இருந்திருக்கலாம். கிஷ்கிந்தா ராஜ்யம் வாலிக்குச்
குடி அரசு- 1935 (2) 60
சொந்தமானது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் வாலி ஜேஷ்ட
குமாரன் ஆனதால் அவனுக்குப் பட்டம் வந்துவிட்டது
வாலி அயல் நாடுகளுக்குச் சென்ற காலத்தில் சுக்கிரீவன் ராஜியபாரம் செய்து வந்தான். வாலி திரும்பி வந்து கேட்டவுடன் சுக்கிரீவன் ராஜியத்தை வாலியிடம் ஒப்புவித்து இருக்கவேண்டியது நேர்மையாகும். அப்படிக் கில்லாமல் சகோதரத் துரோகியும் நம்பிக்கைத் துரோகியுமான சுக்ரீவன், எஜமானத் துரோகியான அனுமானை வசப்படுத்திக்கொண்டு இருவரும் ராஜாவுக்கு விரோதமாகச் சதியாலோசனை செய்து ராஜ்யத்தை வாலிக்குக் கொடுக்க மறுத்ததால் வாலி சுக்கிரீவனுடன் போர் புரிந்து ஜெயித்து சுக்கிரீவனை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று
அந்த முறையில் அவன் மனைவியைச்சுவாதீனப்படுத்திக் கொள்ள வாலி எண்ணியதாகவே வைத்துக்கொண்டாலும் இதற்காக ராமன் வாலியைக் கொல்லவேண்டிய அவசியம் என்ன? பழயகால யுத்த முறைகளில் பெண்களைக் கைப்பற்றும் விஷயங்களும் இருந்ததாகக் காணப்படுவதை வைத்துக் கொண்டு பார்க்கும்போது வாலியை ராமன் கொன்றது என்பது எவ்வளவு துர்க்கிருதமான காரியம் என்பதை நாம் எடுத்துக் காட்டவேண்டியதில்லை
ராமன் வாலியைக் கொன்றதானது ஏதாவது ஒரு நீதியைக் கொண்ட தாக இருந்திருக்குமானால் வாலிக்குப் பிறகு அந்த ராஜ்யத்துக்கு வாலியின்
குமாரனான அங்கதனுக்கல்லவா பட்டாபிஷேகம் செய்திருக்கவேண்டும்? அப்படியில்லாமல் சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டப்பட்டதானது, சூழ்ச்சியின் காரணமாகவே ராமன் வாலியைக் கொன்றான் என்பதற்கு மற்றுமோர். ஆதாரமாகின்றதல்லவா? இந்தக் காரியத்தாலும் ராமனிடம் தெய்வத் தன்மையோ, மனிதத்தன்மையோ, நீதியோ, ஒழுக்கமோ இருந்ததாகக் காணப்படவில்லை.
4. ராமன் ராவணனைக் கொன்றது சம்பந்தமாக ராவணன் செய்த குற்றம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு முன்பதாக ஒரு சங்கதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் அதாவது:- ராமாயண நிகழ்ச்சி, ராவண ஆட்சி, ராம ராவண யுத்தம் எல்லாம் பூலோகம் என்கின்ற இந்த உலகத்தில் நடந்தவைகளே ஒழிய மேலுலகம் என்பதிலோ, கீழுலகம் என்பதிலோ நடந்தவையல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்
இராவணன் செய்த குற்றங்கள்
1. தேவர்களைக் கொடுமைப் படுத்தினது
2. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அவரவர்கள் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுத்துத் தொல்லை கொடுத்தது
3. சீதையைத் திருடினது
61 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இராவணன் எப்படிப்பட்டவனென்பதை அறிந்தால் இக்குற்றங்களை அவன் செய்திருப்பானா என்பது யாவருக்கும் விளங்கும்
1. இராவணன் மகா கல்விமான். 2. வேதசாஸ்திரங்களில் விற்பனன்.
3. குடிகளையும், சுற்றத்தார்களையும் இரக்கமுடன் ஆதரித்தவன். 4. தைரிய
சாலி. 5. வீரன். 6. ஆச்சரியப்படத்தக்க அதி பலசாலி. 7. மிகவும் பக்திமான்.
8. தவசிரேஷ்டன். 9. கடவுளுடைய பிரீதிக்குப் பாத்திரனானவன். 10. பல வரங்களைப் பெற்ற வரப்பிரசாதி. இராவணனுக்கு இந்தப் பத்து குணங் களையும் வால்மீகியே கற்பித்திருக்கிறார்.
இப்படிப்பட்டவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினானென்றால் நம்பமுடியுமா? இக்குற்றத்தைச் சாட்டுவதற்கு மூன் தேவர்கள் யார் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்
மேல் லோகத்தில் இருப்பதாய் சொல்லப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு இந்த பூலோகமாகிய நர லோகத்தில் வேலை கிடையாது அப்படிப்பட்ட தேவர்களை இப்படிப்பட்ட 10 குணங்களுள்ள ராவணன்: கொடுமைப்படுத்துவான் என்று அறிவுள்ள யாரும் நம்பமுடியாது
இன்றையதினம் இங்கு பூதேவர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு. எப்படி ஒரு கூட்டம் மக்கள், மற்ற சமூகத்தாருடைய சுதந்தரத்துக்கும், சுயமரியாதைக்கும் முட்டுக்கட்டை யாயிருந்து வாழ்ந்து வருகிறார்களோ, அதுபோலவேதான் அப்போதும் இந்தக் கூட்டம் தங்களைத் தேவர் என்று சொல்லிக்கொண்டு மக்களுக்குத்தொல்லை செய்துகொண்டே வந்திருப்பார்கள். அத்தொல்லையை ஒழிப்பதற்கு இன்றும் பலர் முயற்சிப்பது போல், அப்பொழுது ராவணன் முயற்சித்திருக்கலாம்.
இராமாயணக் கதையைப் பற்றி எழுதுகிற சரித்திரக்காரர்கள். ராமாயணத்தை ஆரியர், திராவிடர் போராட்டமென்று சொல்லுவதும்,
இன்று பார்ப்பனர்களாகிய பூதேவர்களுக்கு விரோதமாக ஏதாவது காரியங்கள் செய்யப்பட்டால் அந்த அரசாங்கத்தையும், ஆட்களையும் புராணக் கதைகளை ஒப்பிட்டு ராக்ஷதர்களாக ஆக்கிப் பழித்து இழித்துக் கூறி விஷமப் பிரசாரம் செய்வதையுமே அக்கூற்றுக்கு ஆதாரமாய்க் கொள்ளலாம்.
2. இராவணன் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் இடையூறு செய்ததைப் பற்றி யோசிப்போம். முனிவர், ரிஷிகள் என்பவர்கள் ஆரியர்களுக் குள்ளாகவே ஒரு கூட்டத்தாராகும். அதாவது ஆரிய ஆச்சார அனுஷ்டானங் களை மிகவும் கடினமாக அனுஷ்டிப்பவர்களாகும். இக்கூட்டத்தார் ஆரியரல்லாதவர்களைக் காணுவதும் தீது, அவர்களோடு பேசுவதும் தீது, அவர்களோடு நெருங்குவதும் தீது, இணங்குவதும் தீது என்று கருதி ஆரியரல்லாத மக்களை மிகவும் இழிவாய்க் கருதி நடத்துகின்றார்கள்.
இன்றும் பார்ப்பனர்கள் திலகமகரிஷி ரமணரிவி காந்தி ரிஷி என்றும்,
ராய் முனிவர், தாதாபாய் முனிவர், சுப்பரமணிய அய்யர் முனீந்திரர்
குடி அரசு- 1935 (2) 62
என்றெல்லாம் சாதாரண மக்களையே அழைத்து அந்தப் பெயரைபிரசாரம் செய்து நிலை நிறுத்துவதுபோல் சில ஆட்களுக்கு அந்தப் பட்டம் இருந்திருக்கலாம்
ஆனால் அப்படிப்பட்ட முனிவர்களும் ரிஷிகளும் மற்ற மக்களை நடத்துகின்ற மாதிரியைப் பார்த்தால் எந்த வீரனுக்காவது ஜீவகாருண்ய வாதிக்காவது ஆத்திரமும் கோபமும் வராமல் இருக்க முடியுமா?
இந்த முனிவர்களும், ரிஷிகளும் உண்மையான “முனிவர்” களாக வும்'ரிஷி'”களாகவும் இருந்திருந்தால் ராவணணுக்கு அவர்கள் கிட்ட நெருங்கியிருக்க மூடிந்திருக்குமா?
ஒன்று, ராவணன் பக்தியும் தவமும் கொண்டவனாய் இருந்திருந்தால். இப்படிப்பட்ட காரியம் செய்திருக்க மாட்டான் என்றாவது எண்ண வேண்டும். அல்லது ரிஷிகளும் முனிகளும் உண்மையானவர்களாய் யோக்கியர்களாய் இருந்திருந்தால் இராவணனால் அவர்களுக்கு ஒரு கெடுதியும் செய்யமுடிந்திருக்காது என்றாவது எண்ணவேண்டும் அப்படிக்கில்லாமல் இரண்டும் கெட்ட தனமாய் கதையில் சொல்லப்பட்ட விஷயத்தைப் பொருந்தாத கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்
3. சீதையைத் திருடிக் கொண்டுபோய்விட்டதைக் கவனிப்போம்
கீதைசட்டதிட்ட ஆதிக்கமில்லாத காட்டில் வசித்து வந்தவள். அவள் நடத்தையில் இருந்து அவள் ஒரு சாதாரணமான பெண் என்பது விளங்கும். அதாவது ராமன் மானை விரட்டிக்கொண்டு சென்ற பிறகு லட்சுமணனையும் போய் ராமனைப்பார்த்து வரும்படி சீதைசொன்ன. சமயத்தில், லட்சுமணன் காட்டில் உன்னைத் தனியே விட்டுவிட்டு போகக்கூடாது என்றும் சொன்ன நல் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல், “ராமன் எப்படியாவது தொலைந்தால் என்னை நீ கைப்பற்றி அனுபவிக்கலாம் என்று கருதி, ராமனைக் காப்பாற்றப் போக மறுக்கிறாயா?'” என்று சொன்னதில் இருந்தே சீதை கீழ் மக்களைச் சேர்ந்தவள் என்பதும், அந்தக் கூட்டத்தாருள் எப்படிப்பட்ட வழக்கம் இருந்து வந்தது என்பதும், லட்சுமணன் சீதையிடம் அதுவரையில் எப்படி நடந்து வந்திருக்கிறான். என்பதும் நன்றாய் விளங்குகின்றது
மற்றும் ராமன் ராவணனுடைய பாட்டியைக் கொன்று இருக்கிறான். ராவணனுடைய தங்கையை மூக்கும் காதும் அறுக்கச் செய்திருக்கிறான். இப்படிப்பட்ட யோக்கியனுடைய பெண்சாதியைத் தூக்கிக் கொண்டு வந்தது என்பது, எந்தச்சட்டப்படி, நீதிநூல்படி, பழக்கவழக்கப்படி, இயற்கை. தத்துவப்படி குற்றமென்பது விளங்கவில்லை.
அன்றியும், சீதையை ராவணன் என்ன செய்தான்? அவள்மீது இரக்கம் கொண்டு சீதைக்குப் புத்திமதி கூறி இருக்கிறான். ராம லட்சுமணர்களின். யோக்கியதையையும், இருப்பையும் எடுத்துச்சொல்லி அவர்கள் மீதுள்ள. ஆசைகளை விட்டுவிட்டுத் தன்னிடமே இருந்து விடும்படி சொன்னான்.
63 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ராம லட்சுமணர்கள், தாடகை, சூர்ப்பனகை ஆகியவர்களிடம் நடந்து கொண்டது போல் அவ்வளவு இழிவாய் நடந்து கொள்ளாமல் ராவணன் கீதையைமிகவும் பத்திரமாகவும், நீதியாகவும் வைத்துக்காப்பாற்றி யிருக்கிறான்.
ஒரு பெண்ணை ஒருவன் இச்சிப்பதோ, ஒரு ஆணை ஒரு பெண் இச்சிப்பதோ, இணங்கும்படி கேட்பதோ, கெஞ்சுவதோ குற்றமாகும் என்று சொல்லுவது இயற்கையையும், மனிதசுபாவத்தையும் அறியாத முட்டாள். தனமேயாகும். பலாத்காரம் செய்வதையும் இணங்க வைக்கக் கொடுமை செய்வதையும் மாத்திரம் குற்றமென்று சொல்லலாம்.
பெண்கள் ஆண்களுடைய சொத்துக்கள், ஆண்களின் அடிமைகள் என்கிற சட்டப்படி வேண்டுமானால் ஒருவன் மனைவியை ஒருவன் இச்சிப்பது தப்பு என்று சொல்லலாமே யொழிய பெண்களும் ஆண்களைப் போன்ற ஜீவனாகும் என்றும், அவர்களுக்கும் காதல் சுதந்தரம் உண்டு என்றும் நினைத்தால் சீதையை ராவணன் தனக்கு இணங்கும்படி கேட்டுக் கொண்டதில் என்ன தப்பு இருக்கிறது என்பது விளங்கவில்லை
மற்றபடி ராவணன் சீதையை பலாத்காரம் செய்ததாகவோ, சீதையைக் கொடுமைப்படுத்தியதாகவோ, குரூரமாய் நடத்தியதாகவோ, ராவணனை
இழித்துக் கூறுவதையே கொள்கையாகக் கொண்ட ராமாயணத்திலேயே ஒரு வரிகூட காணக்கிடைக்கவில்லை. ஆதலால் அவ்விஷயத்தில் ராவணன்
பெருங் குற்றவாளி என்று சொல்லிவிடமுடியாது. ராவணனுடைய மற்ற யோக்கியதைகள், வால்மீகி கூறியபடி உண்மையாய் இருக்குமானால், இந்தக் காரியத்தையாவது ராவணன் செய்திருப்பானா என்று சந்தேகிக்காமலிருக்க முடியாது. ஆகவே வாலி, ராவணன் சங்கதி இப்படி இருக்கட்டும்.
ராமன் தெய்வத்தன்மையுடையவனும், நேர்மைக்குணம் படைத்த வனுமாய் இருந்திருந்தால் சுக்கிரீவனையும், விடீஷணனையும் வசப்படுத்தி அவர்களது தமையன்மார்களுக்கு விரோதமாக, சகோதரத் துரோகம் செய்யத்தூண்டியிருப்பானா? பரதன் ராமனிடத்தில் எப்படி நடந்து கொண்டானோ அப்படி விபீஷணனையும் சுக்கிரீவனையும் முறையே ராவணனிடத்திலும், வாலியிடத்திலும் நடந்துகொள்ளும்படி செய்திருக்க வேண்டும் அல்லவா?
பரதன் ராமனிடத்தில் நடந்து கொண்டதுபோல் விபீஷணன் ராவணனிடம் நடந்து கொண்டிருப்பானேயானால் விபீஷணனை ஆழ்வாராக்கி யிருப்பார்களா? அவனுக்கு பட்டம் கட்டியிருப்பார்களா? என்று யோசித்துப்
பார்த்தால் ராமனுடைய சூதும் சூழ்ச்சியும் விளங்காமல் போகாது. யாதொரு குற்றமற்ற கைகேசி, தன் மகனுக்குப் பட்டம் வேண்டும் என்று கேட்டதற்காக,
அதுவும் கைகேசியிடமும், கைகேசியின் தகப்பனாரான கேகய மன்னனிடமும், கைகேசி வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே பட்டம் சூட்டுகிறேன் என்று
குடி அரசு - 1935 (2) 64
தசதரன் வாக்குக்கொடுத்தபடி மகனுக்குப்பட்டம் கேட்ட கைகேசியான தாயாரைக்கூட இகழ்ந்து இழிவு படுத்தியல்லவா பரதன் தமயனுக்கு தொண்டு செய்து பக்தி காட்டி இருக்கிறான்.
அப்படிப்பட்ட சகோதர பக்தியும், தொண்டும், அதன் பெருமையை உணரும் தன்மையும், விபீஷணனிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது? விபீஷணனுக்குச் சகோதரத் துரோகி பட்டம் இல்லாமல் ஆழ்வார் பட்டம் எங்கிருந்து வந்தது? விபீஷணனுடைய தொண்டையும், சகோதரத் துரோகத்தையும் தெய்வத்தன்மையுடைய ராமன் ஏற்றுக்கொள்ளலாமா?
இவைகள் ஒருபுறமிருக்க, ராமன் சீதையை எப்படி நடத்தி இருக்கிறான். என்பது ராமாயணக் கதையில் முக்கியமாய் கவனிக்க வேண்டிய பாகமாகும்.
ராமாயண சீதையானவள் உலகப்பெண்களுக்கு ஓர் உதாரணமாய் கற்பிக்கப்பட்டவள்; அவளுடைய பதிபக்தி மிக்க விசேஷமாய் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அவளது பிறப்பைப்பற்றி அறிய அறிவுக்கு ஒத்ததான ஆதாரம் ஒன்றும் இல்லை. மற்றபடி ராமனுக்கு மனைவியானாள். என்பதும், ராமனுடன் காட்டுக்கு வந்துவிட்டாள் என்பதும், ராவணன் தூக்கிக் கொண்டு போய் எவ்வளவு முயற்சித்தும் அவள் இணங்கவில்லை. என்பதுமாகிய காரியங்கள் தான் சீதையின் பெருமைக்குக் காரணமாகும்
அப்படிப்பட்ட சீதையின் கற்பு, கொண்ட கணவனால் - தெய்வத் தன்மை கொண்ட ராமனால் - சீதையுடன் சதாசர்வ காலமும் பழகி அவளது குணா குணங்களை நன்றாய் அறிந்த ராமனால் ஒரு தடவை அல்லாமல் பலதடவை சந்தேகிக்கும்படி ஏற்பட்டுவிட்டது. சீதை நெருப்பில் இறங்கி வந்துகூட ராமனுக்கு அவள் மீதில் உள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது கடைசியாக கதையின் முடிவானது சீதை 5-மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது
இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்க வில்லை. ''உலக மெப்புதலைக்காக செய்யப்பட்டது! என்றாலும் இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. இதைப்பார்க்கின்றபோது, அதாவது தனது மனைவியை 5-மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டுவரும்படி செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்ப நகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி செய்ததும் ஒரு ஆச்சரியமென்று சொல்லமுடியாது. ஆகவே ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட
மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்கிரீவன் விபீஷண நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்துகொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டதும் முதலியவை தக்கதொரு அத்தாட்சியாகும்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜூலை 1935
65 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
புராண மமியாதைக்காரனுக்கும் சுயமமியாதைக்காரனுக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
விஷயம்:- மோக்ஷமடைய காசிக்குப் போவது
சுயமரியாதைக்காரன்:- ஐயா தாங்கள் இவ்வளவு அவசரமாக எங்கு சென்றுவிட்டு வருகிறீர்கள்?
புராண மரியாதைக்காரன்:- எங்கும் இல்லை, ஒரு இடத்தில் கொஞ்சம்
கடன் கேட்டிருந்தேன்; அதற்காகப் போய் விட்டு வருகிறேன்.
சு.ம:- தங்களுக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமென்ன? தங்கள் பிள்ளைகள் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கும்போது நீங்கள் கூடவா கடன் வாங்கவேண்டும்?
பு.ம- நான்யாத்திரைபோகப்போகிறேன்; அதற்காகப் பணம் வேண்டும் பிள்ளைகளைக்கேட்டால் கொடுக்க மாட்டான்கள்
சு.ம:- இப்பொழுது என்ன யாத்திரை வந்தது தங்களுக்கு?
பு.ம:- கொஞ்ச காலமாகவே எனக்குக் காசிக்குப்போக வேண்டும் என்கின்ற அவா; கடவுள் செயலால் அது இப்போதுதான் முடிந்தது. ஆதலால் காசிக்குப்போகிறேன்.
சு.ம:- என்ன அய்யா இது அதிசயமாய் இருக்கிறது! இந்தப்பண நெருக்கடியான சமயத்தில் கடன் வாங்கிக்கொண்டு காசிக்குப்போகிறேன்'
என்று சொல்லுகிறீர்களே! அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது?
பு.ம:- ஒரு அவசரமும் புதிதாய் வந்து விடவில்லை; இந்தப் பாழாய்ப்போன சுயமரியாதை இயக்கம் வந்து நம்ம பிள்ளைகளையெல்லாம்
கெடுத்து விட்டது. அதனால்தான் நான் இவ்வளவு கஷ்டத்துடன் காசி
யாத்திரை வைத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது
சு.ம:- சுயமரியாதை இயக்கத்துக்கும் தாங்கள் காசிக்குப்போக வேண்டியதற்கும் என்ன சம்பந்தம்?
குடி அரசு- 1935 (2) 66
பு.ம:- சம்பந்தம் என்னவென்றா கேட்கிறீர்கள்? நானோ வயது
முதிர்ந்த கிழவன்; எனது உடல் நிலை மிகவும் மோசமாய் இருக்கிறது; எந்தச் சமயத்தில் பகவான் தனது திருவடி நிழலுக்கு அழைத்துக் கொள்ளுவாரோ தெரியவில்லை. ஒருசமயம் அந்தப்படி ஏதாவது திடீர் என்று ஏற்பட்டு விட்டால், என்னுடைய பிள்ளைகள் எனக்குச்செய்ய வேண்டிய சரமக்கிரியைகளையெல்லாம் செய்வார்களா? திதி செய்வார்களா? எள்ளுந் தண்ணீரும் இறைப்பார்களா? பிண்டம் போடுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்! இந்த நாசமாய்ப்போன சுயமரியாதைக்காரர். களால் எவ்வளவு அநியாயங்கள் ஏற்பட்டுவிட்டன பாருங்கள். மட அதைப்பற்றிச் சாவகாசமாய்ப் பேசிக்கொள்ளலாம்; இதற்காக காசிக்கு ஏன் போகவேண்டும் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் சொல்லாமல் சுயமரியாதைக்காரர்களையே சும்மா வைகின்றீர்களே!
பும:- இதற்காகத்தான் காசிக்குப்போகிறேன். இன்னும் சொல்லுகிறேன். கேளுங்கள். ஒரு மனிதன் காசியில் போய் இறந்துவிட்டால் அவனுக்கு யாரும்
திதி பண்ணினாலும், பண்ணாவிட்டாலும், பிண்டம் போட்டாலும், போடா விட்டாலும், அவன் கவலைப்பட வேண்டியதில்லை. காசியில் இறந்தாலே மோக்ஷம் கிடைத்துவிடும். இதில் ஏதாவது கொஞ்சம் நஞ்சம் சந்தேகம் இருப்பதானால் கயாவுக்குப் போய் நமக்கு நாமே பிண்டம் போட்டுக் கொண்டு சிரார்த்தம் செய்துகொள்ளலாம்; வேறு எவனும் போட வேண்டு மென்று எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஆதலால் நான் இங்கிருந்து நேரே கயாவுக்குப் போய், அங்கு எனக்கு நானே இங்கிருந்து செய்து கொண்டு பிறகு காசிக்குப்போய் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கப் போகிறேன்.
சு.ம:- அப்படியானால், தாங்கள் சொல்லுவதைப்பார்த்தால் மறுபடியும் இங்கு திரும்பி வரமாட்டீர்கள்போல் தோன்றுகிறதே!
பு.ம:- ஆம்! ஆம்!! இனி எனக்கு இங்கு என்ன வேலை? கடவுள் கிருபையால் நான் பாடுபட்டு எவ்வளவோ சம்பாதித்தேன். பகவான். எனக்கு யாதொரு குறைவும் வைக்கவில்லை. எல்லாவற்றையும் இந்தப் பிள்ளைகளுடைய படிப்புக்கும், கலியாணத்துக்கும், மற்ற சடங்குகளுக்கும் நன்றாய்ச் செலவு செய்தேன். அவர்கள் நல்ல நிலைமைக்கும் வந்தார்கள்; கடைசியாக இந்தச் சுயமரியாதைக்காரன்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அவனுடைய பெற்ற தாயாருக்கே திதி, திவசம் ஒன்றும் கொடுப்பதில்லை. வீட்டிலோ ஒரு நாள்-கிழமை-பண்டிகை என்பவை எதுவுமே இல்லை. இப்படிப்பட்டவன்கள் எனக்குத் திதி செய்வான்௧ளா? எள்ளும் தண்ணீரும் கூட இறைக்கமாட்டான்களே! கொள்ளிகூட வைக்கமாட்டான்களே! ஆதலால் இங்கே இருந்து இறந்து கருமங்கள் செய்யப்படாமல் என் ஆத்மா நரகத்துக்குப்போய் அவஸ்தைப்பட்டு, நாய், கழுதையாய்ப் பிறப்பதைவிட,
காசியில் போய் இறந்துவிட்டால் ஒரு பயலுடைய தயவுகூட இல்லாமல் மோக்ஷம் கிடைத்து விடும் என்பது உறுதி 7௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அன்றியும் அவனவன் வந்த காரியத்தைப் பார்க்க வேண்டாமா? எவ்வளவு காலத்துக்குத்தான் இந்தப் பூலோகத்தில் இருந்தாலும் என்ன பயன்?
சு.ம:- ஓஹோ! அப்படியா சங்கதி? மனிதன் என்ன பாவம் செய்தாலும், எவ்வளவு அக்கிரமம் செய்தாலும் திதி செய்யப்படுவதாலோ, காசியில். போய்ச் செத்துப்போவதினாலோ மோட்சத்துக்குப் போய் விடுவானாக்கும்!
அன்றியும் மனிதன் எவ்வளவு யோக்கியமாய் நடந்திருந்தாலும், எவ்வளவு புண்ணியம் செய்தவனாய் இருந்தாலும் அவன் இறந்துபோன பிறகு, அவனது பிள்ளைகளோ, சந்ததியார்களோ செய்த குற்றத்துக்காக (திதி செய்யாததற்காக) நரகத்துக்குப் போவதுடன், நாய், கழுதையாய்ப் பிறப்பானாக்கும். இது என்ன நீதி?
என்ன சாஸ்திரம்? எந்தக் கடவுளுடைய உத்திரவோ தெரியவில்லை. அதிருக்கட்டும், தாங்கள் எதற்காக இந்தப் பூலோகத்துக்கு வந்தீர்கள்? அது ஒன்றும் எனக்கு விளங்கவில்லையே!
பு.மஃ- மனிதன் எதற்காகப் பிறந்தான்? ஸ்ரீமந் நாராயணனைப் பக்தி பண்ணவும், பூஜிக்கவும், அவன் பாதாரவிந்தம் அடையவும்தானே? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? சம அப்படியா? தாங்கள் நாராயணன் பாதாரவிந்தம் சேருவதற்கும், தங்கள் பிள்ளைகள் எள்ளும் தண்ணீரும் இறைப்பதற்கும், நீங்கள் கயாவுக்கும், காசிக்கும் போவதற்கும், காசியில் சாவதற்கும் எப்படி அய்யா சம்பந்தம் இருக்கமுடியும்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! சற்று விவரமாய்ச் சொல்லுங்கள்! நானும் தங்களுடனேயே புறப்பட்டு விடுகிறேன். எனக்கு மாத்திரம் மோட்சம் வேண்டாமா? நாராயணனுடைய பாதாரவிந்தம் வேண்டாமா?
பு.ம:- இதெல்லாம் எவ்வளவு சொன்னாலும் உங்களுக்குச் சுலபத்தில்
புரியாது
சு.ம:- பின்னை எப்படித்தான் புரியும்? அதன் இரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! என் ஆத்மாவும் முக்தியடையட்டும்
பு.ம:- உங்களுக்குப் புரியவேண்டுமானால் நல்ல குரு கடாட்சம்
வேண்டும். பெரியோர்கள் சாவகாசம் வேண்டும். முன்னோர்கள் நூல்களைப் பார்க்கவேண்டும். சாஸ்திரங்களில் பரீக்ஷ இருக்கவேண்டும். புராணங்களை மரியாதை செய்ய வேண்டும். பக்தி சிரத்தையுடன் அவைகளைப் படிக்க வேண்டும். எதற்கும் பிராப்த கருமம் இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் அனுகூலமாக பகவான் கடாட்சம் இருக்கவேண்டும். இப்படிக்கெல்லாம் இல்லாமல் சும்மா ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆசைப்படுவதனாலேயே, முக்தி என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடக்கூடிய காரியமல்ல:
குடி அரசு - 1935 (2) 68
௯ூம:- இப்போது எனக்கு ஆசைவந்துவிட்டது. நான் கொஞ்சம் கூட சுமரியாதைக்காரர்களுடன் சாவகாசமே வைத்துக்கொள்வதில்லை. தாங்கள். சொன்னபடியே நடந்து, நானும் நாராயணன் திருவடியை அடைந்தாக வேண்டும். தாங்களே எனக்கு நல்ல குருவாகவும், நேசத்திற்கேற்ற பெரியோராகவும் இருந்து உபதேசம் செய்யவேண்டும். மற்றபடி முன்னோர்கள் நூல்கள் என்றீர்களே! அவர்கள் எவ்வளவு காலத்துக்கு முன்னோர்களா யிருக்கவேண்டும்! அவர்களில் சிலருடைய பெயர்களை யாவது சொல்லுங்கள்! அவர்களது நூல்களுடைய பெயர்களையும் சொல்லுங்கள்! அந்தப் படியே செய்யப்பார்க்கிறேன். பிறகு சாஸ்திரங் களின் பரீக்ஷ என்றால் என்னென்ன சாஸ்திரங்கள்? அவைகளை எப்படிப் பரீக்ஷிப்பது? தயவு செய்து அதையும் கடாட்சிக்கவேண்டும் புராணங்களை மரியாதை செய்வது என்றால் எப்படி மரியாதை செய்வது? விழுந்து கும்பிட்டால் போதுமா? அல்லது அவைகளில் உள்ள விஷயங்களை எல்லாம் அப்படியே நம்பி ஆகவேண்டுமா? மற்றும் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும் என்றால் பணம் கொடுத்து வாங்கி, குளித்து முழுகிவிட்டுப் புராணங்களுக்குத் தீபதூபம் வைத்து பூஜை செய்து நானே படித்தால் போதுமா? அல்லது வேறு யாருக்காவது பணம் கொடுத்துப் படிக்கவைக்க வேண்டுமா? என்பதையும் அருள வேண்டும்.
அன்றியும் எனக்குப் பிராப்த கர்மம் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படி அறிவது? இவ்வளவான பாடு பட்டும் பிராப்த கர்மம் இல்லாவிட்டால் எல்லாம் வீண் செலவாகவும், வீண் கஷ்டமாகவும் ஆகிவிடுமே! அது மாத்திரமல்லாமல், அதாவது பிராப்த கர்மம் இருக்கா- இல்லையா? என்று அறிவது மாத்திரமல்லாமல், பகவன் கடாக்ஷம் வேறு இருக்க வேண்டும் என்று முடிவாய்ச்சொல்லிவிட்டீர்களே! அதை எப்படித்தெரிந்து கொள்ளுவது? இதை அறியாமல் கடைசியாய்ச் செய்த காரியமெல்லாமல் வீணாய்ப் போகும் படி விட்டுவிடக்கூடாதே என்கின்ற கவலை அடியேனுக்கு அதிகமாய் இருக்கிறது. ஆதலால் குருசுவாமிகள் இவற்றையெல்லாம் கடாக்ஷித்தருளுவதுடன், தங்களுக்குப் பிராப்த கருமம் இருப்பதும், பகவான் கடாக்ஷம் இருப்பதும் எப்படித் தெரியவந்தது? என்பதையும் அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
பு.ம: சரி! சரி! விளங்கிவிட்டது. நீரும் பக்காச் சுயமரியாதைக்காரன் என்பது நன்றாய் விளங்கி விட்டது! அவன்களுக்குத்தான் இந்த குயுக்தியான. பேச்சுகளும், போக்கிரித்தனமான பேச்சுகளும் பேசத்தெரியும். உம்மிடத்தில் பேசுவதில் பயனில்லை போம்!
௯ூம:- என்ன சுவாமீ! இவ்வளவு சந்தேகப்பட்டு விட்டீர்கள்! நான். தங்களைக் குருவாக அடைந்து விட்டேன் என்று சொன்னேனே! தங்களிடத்தில் அல்லாமல் வேறு யாரிடத்தில் எனது முக்திக்கு வேண்டிய விஷயங்களையும், சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவடைவது?
69 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பு.ம:- வேண்டாமையா! நான் உமக்குக் குருவாகவும் இல்லை; என்னை எவ்வித கேள்வியும் கேட்க வேண்டாம்; என்னோடு கூட நீர் வரவும் வேண்டாம். நீர்சரியானசுயமரியாதைக்காரர் என்பதில் ஆக்ஷ்பனை யில்லை. உம்மைப்போன்ற ஆள்களால் தான் என் பிள்ளைகள் கெட்டு இந்தப்படி நாசமாய் விட்டதுகள். சரி! போம்! போம்! இங்கே நில்லாதேயும்.
சு.ம:- சுவாமிகளே கோபிக்காதீர்கள்! தங்களுக்கு வருத்தம் வருவதானால் நான் பேசவேயில்லை, வாயை மூடிக்கொள்ளுகிறேன்.
ஒரு சமயம் நான் மோக்ஷமடைய பிராப்த கர்மம் இல்லையோ; என்னமோ தெரியவில்லை. தங்களைப்போன்ற பெரியார்களைக் குருவாக அடைந்தும் இப்படியாகிவிட்டது. என் சங்கதியைப் பின்னால் பார்த்துக் கொள்ளுகிறேன். தங்கள் விஷயத்தில் ஒரு சிறு சந்தேகம்! அதைக் கேட்கலாமா என்பதை எதிர் பார்க்கிறேன். அதை நிவர்த்தி செய்தால் திருப்தியாவேன்.
பு.ம:- என்ன ஐயா சந்தேகம்?
சு.ம:- இல்லை சுவாமிகள்! இவ்வளவு தீர்மானத்துடனும்,
உறுதியுடனும், பிடிவாதத்துடனும் இந்த முதிர்ந்த வயதில் முக்திக்காகப் போகின்றீர்களே, போகும் வழியில், காசி கயாவைப் போய் சேருவதற்குமுன் வழியில் ஏதாவது நேர்ந்து, தாங்கள் சாகவேண்டி ஏற்பட்டுவிட்டால் இந்த உத்தேசங்கள் எல்லாம் என்ன ஆகிறது? நீங்கள் தான் திரும்பி வரப்போவ தில்லையே பிறகு இன்று வாங்கும் கடனை யார் கட்டுவது?
பு.ம:- நான் செத்துப்போய்விட்டால் நல்ல காரியமாச்சுது! போம் வெளியே! இங்கே நில்லாதேயும்! பயணம் புறப்படும்போது சகுனத் தடைமாதிரி! வாயில் வரும் வார்த்தையைப் பாருங்கள்! மனிதனுக்கு எதாவது புத்தியிருக்கிறதா? கடனைப்பற்றி நீர் கவலைப்படவேண்டியதில்லை. அடுத்த ஜன்மத்தில் மாடாய் பிறந்தாவது அவன் கடன் கட்டிவிடுவேன்.
௯.ம:- சரி! சரி!! கோபித்துக்கொள்ளாதீர்கள்! நான் இதோ போகிறேன்! நீங்களும் உங்கள் சாஸ்திர புராணங்களும், அதற்கு நீங்கள் செய்யும் மரியாதைகளும் மிக நன்றாய் இருக்கிறது! இனி உங்களைப்போன்ற புராண மரியாதைக்காரர்களே மோக்ஷத்துக்குப் போகட்டும், அதற்காக கடன். கொடுத்தவன்கள் எல்லோரும் அடுத்த ஜன்மத்திலேயே வசூல் செய்யட்டும். ரொம்ப நாணயம் தான்.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - ஜூலை 1935
குடி அரசு- 1935 (2) 70
கடவுள் ?
என்ன சமாதானம்?
கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்து வருகிறது கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று
யாராலும் சொல்லமுடியாது.
அப்படியிருந்தும் கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்லமுடிவதில்லை. ஆகவே ஒவ்வொரு ஆஸ்திகனும், தனக்குப் புரியாத ஒன்றையே- தன்னால் தெரிந்துகொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன்றையே, குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு கடவுள் கடவுள் என்று கட்டி அழுகிறான்.
கடவுளுக்கு லக்ஷணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாக கடவுள் சங்கதியில் இரண்டிலொன்று, அதாவது உண்டு, இல்லை என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்கள்.
கம்பர்கூட சீதையின் இடையை வர்ணிக்கும்போது, “சீதையின் இடையானது கடவுள்போல் இருந்தது” என்று வர்ணிக்கிறார். அதாவது கடவுள் எப்படி “உண்டோ, இல்லையோ!” என்பதாகச் சந்தேகப்படக் கூடியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டு பிடிக்க முடியாத அவ்வளவு நுண்ணியதாய் இருக்கிறது என்று கூறினார்.
கம்பரை நாஸ்திகர் என்று யாரும் சொல்லமாட்டார்கள். மக்களும் பெரும்பாலோரும் ஆஸ்திகர்கள் எல்லோரும், தங்கள் குற்றங்களுக்கும்,
தங்கள் துற்குணங்களுக்கும், தங்கள் தரித்திரத்திற்கும், துன்பத்துக்கும் தாங்களே காரணமென்று வருந்தி அவற்றைப்போக்கும்படி கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள்.
இந்துக்கள், கடவுளை ஒரு மனிதனைப்போலவே கற்பித்துக்கொண்டு அதிலும் ஒரு செல்வம் பொருந்திய மனிதனாய்க் கற்பித்துக்கொண்டு, அதற்கு மனிதனைப் போலவே வீடு, வாசல், பெண்டு, பிள்ளை, பல பெண்டு, பல வைப்பாட்டி, உடை, ஆகாரம், வாகனம் ஆகியவைகளைக் கொடுத்து வருகிறார்கள்.
71 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மற்ற கிறிஸ்து, முஸ்லீம் ஆகிய மதஸ்தர்களுக்கும் கடவுளை மனிதன் போலவே கற்பித்து, அக்கடவுளுக்கு நன்மை, தீமை, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், கோபம் ஆகிய குணங்களைக் கற்பித்து தன்னை வணங்கினவனுக்கும், தன் இஷ்டப்படி நடந்தவனுக்கும் நன்மையளிப்பதும், தன்னை வணங்காதவனுக்கும், தன் இஷ்டப்படி நடக்காதவனுக்கும் தீமை அளிப்பதுமான குணத்தைக் கற்பித்திருக்கிறார்கள்.
சர்வ சக்தியுடைய பூரணத்தன்மை பெற்று, எங்கும் நிறைந்திருக்கிற
ஒரு கடவுளுக்கு மோக்ஷம் நரகம் எதற்கு? கடவுள் இஸ்டத்துக்கு விரோதமாய் நடக்கும்படியான சந்தர்ப்பம் மனிதனுக்கு எப்படி வரும்?
உலகத்தில் தீமை எப்படி உண்டாயிற்று? அதை யார் கற்பித்தார்கள்? தீய குணம் மனிதனை அடையக் காரணமென்ன?
தீயதைச்செய்துவிட்டுக்கடவுளைவணங்குவதாலோ , பிரார்த்திப்பதாலோ. அதன் பயன் எப்படி அதிகரிக்கப்பட்டு விடும்? தீமையினால் துன்பம் அடைந்தவனுக்குப் பரிகாரம் எப்படி ஏற்படும்? தீமை செய்தவர்கள் கடவுளை வணங்கிப் பிரார்த்திப்பதின் மூலம், தீமைக்குண்டான பலனை அனுபவிக்கமுடியாமல் போய்விடுவார்கள் என்றால், தீமை எப்படி? எப்பொழுது? உலகைவிட்டு அகல்வது? எத்தனையோ கோடிக்கணக்கான வருடங்களாகக் கோடிக்கணக்கான மக்கள் தீமைக்காக மன்னிக்கப்பட்டும், தீமைக்காகத் தண்டிக்கப்பட்டும், உலகில் இன்றும், நாளையும், இனியும் வெகு காலத்துக்கும், தீமை இருந்து கொண்டே வருகிறது என்றால் இதுவரையும், தண்டனையும் மன்னிப்பும் என்ன பலனைக் கொடுத்து வந்திருக்கின்றன?
தீமையின் கொடுமையை மக்கள் அனுபவிக்காமல் இருப்பதற்கு என்னதான் வழி? தீமையைச் செய்தவன் மன்னிப்பு பெற்றோ, தண்டனை அடைந்தோ, தன் செய்கைக்குப் பரிகாரம் பெற்றுக்கொள்ளுகிறான் என்றே வைத்துக் கொள்வோம். தீமையை அடைந்தவனுக்கு இந்தக் கடவுள் என்ன பரிகாரம் செய்கிறார் என்பது விளங்கவில்லை. தீமையை அடைகின்ற மனிதன், கடவுள் சித்தத்தால் தான் தீமை அடைகிறான் என்று தானே சொல்லவேண்டும்? அப்படியில்லாவிட்டால், கடவுளின் காவலை மீறி, ஒரு மனிதனுக்கு ஒரு மனிதன் தீமை செய்துவிட முடியுமா? ஆகவே கடவுள் சித்தத்தால் ஒரு மனிதன் தீமையை அடைகிறான். என்றால், பிறகு தீமை செய்தவனுக்குத் தண்டனை எப்படி வரும்? அவன் எதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்? கடவுள்சித்தமில்லாமல், தனிப்பட்ட முறையில் தன் சொந்தத்தில ஒரு மனிதன் ஒரு காரியத்தை ஒருவருக்குச் செய்துவிடமுடியுமா?
குடி அரசு - 1935 (2) 72
கடவுள், மனிதன் மூலமாகவே தன்னுடைய ஆட்சியை நடத்துகிறார் என்பதே பெருமித ஆஸ்திகர்கள் முடிவு. அதனாலேயே பிச்சை பெற்றவனும்,
கடவுள் கொடுத்தார்என்று சொல்லுகிறான். உத்தியோகம் பெற்றவனும், கடவுள் கொடுத்தார் என்று சொல்லுகிறான். உதவி பெற்றவனும் கடவுள் கொடுத்தார். என்று சொல்லுகிறான். ஏதாவது ஒரு கூட்டத்தில் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொண்டவனும் கடவுள் தப்பித்துவிட்டார் என்று சொல்லுகிறான். ஆகவே எந்த நன்மைக்கும், தீமைக்கும் மனிதன் மீது பொருப்பைச் சுமத்துவது எப்படி முடியும்?
அன்றியும் கடவுள் சர்வ வியாபியாய் இருக்கும்போதும், மனிதனுடைய ஒவ்வொரு எண்ணங்களையும், காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும், மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம், பொருள், நேரம் எதற்காகச் செலவு செய்யவேண்டும்?
அவர் தெரிந்துகொள்ள முடியாத எந்தக் காரியத்தைப் பிரார்த்தனை
யினாலும், ஜபத்தினாலும், தொழுகையினாலும் அவருக்கு அறிவிக்க முடியும்? பிரார்த்தனைக்கும் - ஜபத்துக்கும் இரங்குகிறவர் என்றால், கடவுள் தற்பெருமைக்காரரா அல்லது பிரதிப் பிரயோஜனம் பெறும் வியாபார முறைக்காரரா?
இவ்வளவுகாலப் பிரார்த்தனையும், ஜபமும், தொகையும் மனிதனை ஏதாவது ஒரு வழியில் யோக்கியமாய் நடப்பதற்குப் பயன்பட்டிருக்கிறதா?
நன்மைக்கும், தீமைக்கும் கடவுளே கர்த்தராய் இருக்கும் போது,
உலகில் நன்மை, தீமை இல்லாமல் இருக்கச் செய்ய முடியாதா? அதை எவராவது சில மக்கள் அடைந்துதான் தீரவேண்டுமா?
அன்றியும் நமது பிரார்த்தனையும், தொழுகையுமாவது நமக்குத் தீமை அணுகாமல் செய்யமுடியுமா? அப்படிச் செய்தாலும், அத்தீமை உலகில் உள்ளவரை ஏதாவது ஒரு மனிதனையாவது அணுகித்தானே தீரவேண்டும்?
ஆகவே மனித சமூகம், பொதுவில் தீமையில் இருந்து எப்படித் தப்ப முடியும்? தீமையினால் மக்கள் கஷ்டப்படுவார்கள், துன்பப்படுவார்கள் என்பதைக் கடவுள் அறிந்திருக்க மாட்டார் என்று யாராவது நம்ப முடியுமா?
அப்படி இருக்கும்போது, சர்வசக்தியும், சர்வ தயாபரத் தன்மையும் கொண்ட கடவுள், உலகத்துக்குத் தீமையை ஏன் சிருஷ்டித்தார்?
விஷப் பூச்சி, விஷக்கிராமி, விஷரோகம், தரித்திரம், துன்பம், கொலைத் தொழில், கொள்ளைத் தொழில், திருட்டு, பொய், வஞ்சகம், விவசாரம், கஷ்டமான வேலை, அடிமைத்தனம், கொடுங்கோல் ஆட்சி, ராஜத்துரோகப்
73 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பிரஜைகள், கடவுளை மறுப்பது, கடவுளை வைவது, முதலாகிய தீமை என்னும் விஷயங்களையெல்லாம் கடவுள் ஏன் சிருஸ்டித்தார்?
இவற்றால் யாராவது ஒருவர் கஷ்டப்படுகிறாரா? இல்லையா? இவற்றால் கடவுளுக்கு என்ன லாபம்?
பூகம்பம், எரிமலை வெடிப்பு, புயல் காற்று, கடு மழை ஆகிய காரியங்களை ஏன் சிருஷ்டித்தார்?
கெட்ட மனிதர்கள் துன்பமனுபவிக்க என்று சொல்லப்படுமானால், கெட்ட மனிதர்களை ஏன் சிருஷ்டித்தார்?
நல்ல மனிதன், கெட்ட மனிதன் என்று சொல்லமுடியாத குழந்தைகள், மற்ற ஜீவன்கள் ஆகியவைகளுக்கும் துன்பம் அடையும்படி ஏன் செய்தார்?
இவைகளுக்கெல்லாம் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும், சர்வ தயாபரத் தத்துவமும் உடைய ஒரு கடவுள் உலகத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறாரா? என்று சொல்லும் ஆஸ்திகன் என்ன பதில் சொல்லக்கூடும்?
இந்தக் கேள்விகள் வெகுகாலமாகவே இருந்து வருகின்றன என்று பதில் சொல்லிவிட்டால் போதுமா?
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜூலை 1935
குடி அரசு- 1935 (2) 74
சூக்வியும் விஷமமும் பொறாமையும்
தோழர் சுந்திராம்பாள் இந்துமத தர்மப்படி கொடுமைப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
இந்தியாவில் சிறப்பாகத் தென்னாட்டில் சமீபகாலம் வரை தேவதாசி வகுப்பு என்பதானது அவர்கள் எவ்வளவு ஒழுக்கத்துடனிருந்தாலும், எப்படி மதிக்கப்பட்டு வந்தது என்பதை ஐம்பது, அறுபது வயதுக்கு மேற்பட்ட மக்களைக் கேட்டுப் பார்த்தால் விளங்கும்
மற்றும் அந்த வகுப்பார் எவ்வளவு வித்வானாயிருந்தாலும், எவ்வளவு மேதாவியாய், செல்வவானாய் இருந்தாலும் மற்றவர்கள் அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவது போல் ஒருமையில் அதாவது அடிஅடே என்று அழைக்க வேண்டியதும், மற்றவர்களை அவர்கள் பன்மையில், எஜமான்றே, சாமிகளே என்று அழைக்க வேண்டியது நட்டத்தில் நின்று கைகட்டி வாய் பொத்திக் கொண்டு பேச வேண்டிய
ஜாதியாய் இருந்து வந்தது உதாரணமாக கோவை ஜில்லாவில் அந்த வகுப்பைச் சேர்ந்த பல
லக்ஷத்திற்கு அதிபதியாய் இருந்த ஒரு பிரபுவை நல்ல தர்ம சிந்தை உள்ள பெரியாரை அந்த வகுப்பு என்கின்ற காரணத்துக்காக பார்ப்பனர்களும்,
மற்ற குடியானவர்களும் கூட ஒருமையிலேயே அழைத்து வந்தார்கள்.
இன்னமும்கூட தஞ்சை, திருச்சி, மதுரை முதலிய ஜில்லாக்களில் சங்கீத வித்தையில் மகா வித்வ சிரோமணிகளாயிருந்து மணிக்கு 100, 200 ரூபாய்கள் வீதம் வரும்படி சம்பாதிக்கத் தகுந்த செல்வமும், ஞானமும் உடையவர்களாய் இருந்து வந்த பெரியார்களையும் ஒருமையிலேயே அழைப்பதும் பேசுவதுமாயிருந்து வந்தது நமக்குத் தெரியும்.
அப்படிப்பட்ட கொடுமைகள் எல்லாம் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கமும் சிறப்பாக சுயமரியாதை இயக்கமும் தோன்றி வேலைசெய்து வந்ததின் காரணமாய் இருந்தஇடம் தெரியாமல் மறைந்து வெகு தீவிரமாக மாறி சமத்துவமாக பாவிப்பது மாத்திரமல்லாமல் சிற்சில சமயங் களில் மேலாகவும் மதிக்கக்கூடிய தன்மை உண்டாகிக் கொண்டு வருகின்றது. 75௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆனால் அவ்வகுப்பில் உள்ள சிலர் அதை உணராமல் ஜஸ்டிஸ் கட்சியையும் பழித்தும், இழித்தும் கூறி அதை அழிக்கக் காத்திருக்கும் கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போடுவதைப் பார்க்கிறோம்.
தோழர் சுந்திராம்பாள் அம்மாள் அவர்களும் சேர்ந்து அக்கூட்டத்தாருக்கு உதவி புரிந்து வந்ததையும் நாம் அறிவோம். நாம் அவர்களது நிலையை உத்தேசித்தும், தொழிலை உத்தேசித்தும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் இருந்து வந்ததோடு ஏதோ நமது இயக்கங்களை வைவதின் மூலமாவது சிலருக்குப் பார்ப்பனர்களிடம் பெருமையும், சமத்துவ பாவிப்பும், வாழ்க்கை செளகரியங்களும் பெற மார்க்கமிருந்து வருகிறதல்லவா என்று
கருதி ஒரு அளவு திருப்தியையும் அடைந்து வந்தோம்
கடைசியாக அம்மாள் அவர்களுக்கு பெருமையும், கியாதியும் பெருகி செல்வமும் சேர்ந்து இனி எவ்வித குறைவும் இல்லை என்கின்ற தன்மை ஏற்பட்டவுடன் அம்மாளை பயன்படுத்தி, பலன் அனுபவித்து வந்த பார்ப்பனர்களே பொறாமை அடையும்படியாக ஏற்பட்டுவிட்டது
அதே தொழிலில் ஈடுபட்ட இரண்டொரு பார்ப்பனர்களுடைய சுயநலத்துக்கு அம்மாள் முட்டுக்கட்டையாய் இருக்கிறார்களென்ற விஷயம் தெரிந்தவுடன் ஒரே அடியாய் அம்மாளை கவிழ்த்துவிட வேண்டுமென்று இப்போது எல்லாப் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
இன்றைய நாடக உலகிலும், சினிமா உலகிலும் இனி எவராலும் அசைக்க முடியாத அளவுக்கு தோழர் சுந்திராம்பாள் அம்மாளுக்கு எப்படியோ கியாதியும் விளம்பரமும் ஏற்பட்டு விட்டதும், சினிமா தொழில் விருத்தியாக ஆக அம்மாளுக்கே கிராக்கி அதிகமாக ஏற்படும் என்பதும், அதனால் இன்னும் எதேஸ்டமாக பொருளும் கீர்த்தியும் சேரும் என்பதும் பார்ப்பனர்கள் நன்றாய் அறிந்து கொண்டார்கள்.
ஒரு பார்ப்பனரல்லாத பெண், அதிலும் தாழ்மையாய் கருதப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் இந்தப்படி கியாதியும், செல்வமும் பெறுவதா. என்கின்ற விஷயத்தில் பார்ப்பனர்களுக்கு பொறாமையில்லாமல் இருக்க முடியும் என்று யார் தான் எதிர்பார்க்க முடியும்?
தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இதுவரையில் எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது பெருமை பெறவோ, கீர்த்தி அடையவோ, மேல் நிலைக்குப் போகவோ ஏதாவது ஒரு கலையின் மூலம் செல்வம் பெறவோ அனுமதித்து இருக்கிறார்கள் என்று எவராவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் “ஒரு நாளுமில்லை" என்கின்ற பதில்தான் கிடைக்கும்.
அப்படிப்பட்டவர்கள் இன்று தோழர் சுந்தராம்பாள் அவர்களை
எப்படி நாடகராணி ஆக அனுமதிப்பார்கள்? அதிலும் அந்தத் தொழிலிலேயே
குடி அரசு- 1935 (2) 76
பல பார்ப்பனர்கள் பெண்ணும் ஆணுமாய் போட்டி போட்டுக் கொண்டு ஊராரை ஏமாற்ற நினைத்துக் கூட்டுக் கொள்ளை விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கும் போது அம்மாளை பார்ப்பனர்கள் மிஞ்ச விட்டு விடுவார்களா என்பதை யோசிக்க வேண்டுகிறோம்
இந்த நிலையில் பார்ப்பன பத்திரிக்கைகள் எல்லாம் பெரிதும் இப்போது திடீரென்று ஒன்று சேர்ந்த கொண்டு தோழர் சுந்திராம்பாள் அவர்கள் ஞானத்தையும் நடிப்பையும் இகழ்ந்தும், பரிகாசம் செய்தும், விஷமப் பிரசாரமாய் எழுதுவதும், பேசுவதும் ஒரு புறத்தில் நடக்கவும் தோழர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்களும் சில காங்கிரஸ் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சியை வைவதற்காகவும் கூட்டம் கூட்டிக் கொள்வதற் காகவும் அம்மாளைப் பயன்படுத்திக் கொள்ள மற்றொரு புறத்தில் முயற்சி செய்வதுமான காரியங்களைப் பார்த்தால் எப்படி அவர்கள் ஆளுக்கு ஒரு தொண்டை ஏற்றுக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளத்தக்க
சூழ்ச்சி புத்தியும், விஷமப் புத்தியும் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்பதும் சுலபத்தில் விளங்காமல் போகாது
ஒரு சாதாரண நாடக நடிப்பு விஷயத்தில் அதில் ஈடுபட்டு பிரக்யாதி பெற்ற ஒரு பார்ப்பனரல்லாதார்பெண்ணுடைய பெயரைக் கெடுக்க இவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமது பார்ப்பனர்களுக்கு ஏன் வந்தது என்பது ஒருபுரமிருக்க சாதாரணமாய் நாடக விஷயம், பாட்டு விஷயம் மற்றும் ஏதாவது வித்வத்துவ விஷயம் ஆகியவைகளில் யாரையாவது அளவுக்கு மிஞ்சிக் கூட புகழ்ந்து பேசுவதும், எழுதுவதும் மரியாதையான காரியமாய் இருக்கலாம். இதை யாரும் செய்யலாம் இதனால் யாரும் குற்றம் சொல்லவுமாட்டார்கள்: கோபிக்கவும் மாட்டார்கள் ஆனால் இகழ்ந்தும், குற்றம் சொல்லியும் அதுவும் உண்மைக்குவிரோதமாகவும் எழுதுவதும், பேசுவதும் இதுவரைஎங்காவது, அதிலும் தேசீயப்பத்திரிகைகள், காங்கிரஸ் பத்திரிகைகள், காந்தியைப் பின்பற்றுகின்றவர்கள் என்கின்றவர். களுக்குவழக்கத்திலிருந்து வந்திருக்கிறதா? அல்லது அப்படிப்பட்ட காரியத்தை மனிதத் தன்மையாகவாவது மதிக்கப்பட்டிருக்கிறதா? அனாவசியமாக ஒரு பெண் விஷயத்தில் பார்ப்பனரல்லாத பெண் என்ற காரணத்துக்காக இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு பொறாமையும், கெடுதல்புத்தியும் ஏன் வரவேண்டும்? என்று பார்த்தால் இவையெல்லாம் பார்ப்பனர்களுடையவும், அவர்களது தேசீபத்தினுடையவும், காங்கிரசினுடையவும் யோக்கியதையை விளக்கும் உரைகல் என்பது நன்றாய் விளங்கிவிடும்
அம்மாள் விஷயத்தில் “ஆனந்த விகடன்" பத்திரிகையானது சிறிதாவது மனிதத் தன்மையோ, ஈர நெஞ்சம் என்பதோடல்லாமல் பார்ப்பனத் தன்மையை உள்ளது உள்ளபடியே நிர்வாணமாய் காட்டியிருக்கிறது. அதற்கு ஒரு அளவு “சினிமா உலகம்” என்கின்ற பத்திரிகை பதிலளித்திருக்கின்றது 77௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
என்றாலும், அதற்கு தக்க பதில் கொடுக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் நாம் சிறிதும் கவலை எடுத்துக் கொள்ளாமல் இந்த சம்பவமானது தென்னாட்டுப் பார்ப்பனர்களின் தன்மையை பச்சையாய் எடுத்துக்காட்டுவதற்கு ஒரு நல்ல அத்தாட்சியாய் ஏற்பட்டதே என்று மகிழ்ச்சியடைகின்றோம் அதோடு இது விஷயத்தில் கவலை எடுத்து தோழர் சுந்திராம்பாள் அம்மாள் அவர்களை ஆதரித்து எழுதியும், பார்ப்பனர்களுடைய விஷமக் கூற்றுக்கும், கெடுதல் புத்திகளுக்கும் புத்தி கற்பிக்கத்தக்க மறுப்புகள் எழுதியும், வெளியாக்கியும் வரும் பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளாகிய தமிழ்நாடு” “ஊழியன்” “நகர தூதன்!” முதலிய பத்திரிகைகளைப் பாராட்டுவதோடு அவர்களுக்கு நன்றியும் செலுத்துகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 04.08.1935
குடி அரசு- 1935 (2) 78
காங்கிரசின் துரோகம்
தோழர் சத்தியமூர்த்தி ஐயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானது முதற் கொண்டு தென்னிந்தியாவில் காங்கிரஸ் பிரசாரம் வெகு உற்சாகமாகவும் நடைபெறுகின்றது.
காங்கிரஸ் பிரசாரம் என்றால் என்ன என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. அது கதரைப் பற்றியோ, தீண்டாமை விலக்கைப் பற்றியோ, இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியோ, மது விலக்கைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ அல்லது ஏழை எளிய மக்களின் துயரத்தைப் போக்குவதைப் பற்றியோ அல்ல. மற்றென்னவென்றால் “ஜஸ்டிஸ் கட்சியார் தேசத் துரோகிகள்" “அவர்கள் மந்திரிகளாய் இருக்கிறார்கள்” எப்படியாவது அவர்களை மந்திரி பதவியில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்பதேயாகும்.
இந்தப் பிரசாரம் இன்று தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் முதற்கொண்டு எல்லாக் காங்கிரஸ்காரர்களும் செய்து வருகிறார்கள். இதுவே இன்று காங்கிரசின் கொள்கையாக அகிவிட்டது. இதற்கு ஆக மட்டில்லாத பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களது பொய்களை எடுத்துக் காட்டி எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவர்களுக்கு ஆசை வெட்கமறியாது என்கின்ற பழமொழிபோல் சிறிதும் வெட்கமின்றி மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லி வருகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் மாகாண சட்டசபையில் கந்தாயம் குறைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ்காரரோடு சேர்ந்து ஓட்டுச் செய்யவில்லை என்பதாக பிரமாதப்படுத்தி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் கிஸ்து வஜாவில் 100க்கு 12% வீதம் கிஸ்து தள்ளிக் கொடுக்கவும் மறு வருஷமும் குறைக்கபடவும் ஜஸ்டிஸ் கட்சியார் பொருப்பாளிகள் என்பதை யோக்கியர்கள் ஒவ்வொருவர்களும் ஒப்புக் கொண்டே தீருவார்கள் ஆனால் காங்கிரசுக்காரர்களின் துரோகத்தை அளவிட்டுச் சொல்ல வேண்டுமானால் புள்ளி விவரங்களோடு சொல்லலாம்
குறிப்பாக தொழிலாளர் ஏழை மக்களுக்கு காங்கிரஸ்காரர்கள் செய்த மாபெருந் துரோகத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுகின்றோம். இதை எந்த காங்கிரஸ்வாதியாவது மறுக்கட்டும் பார்ப்போம்
79 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதாவது காங்கிரசுக்காரர்கள் சுயராஜ்ஜியக் கட்சியார் என்னும் பெயரால் இந்திய சட்டசபையில் இருக்கும்போது 1928-ல் இந்திய சட்டசபையில் தொழிலாளர்கள் வேலை நேர விஷயமாய் சுரங்கத் தொழிலாளர் தினம் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானத்துக்குத் திருத்தமாக 8 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்று தொழிலாளிகளின் சார்பாய் தோழர் ஜோஷி கொண்டு வந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக் கொடுக்காததால் அத் தீர்மானம் தோல்வியுற்று 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற தீர்மானமே நிறைவேறி விட்டது
இதற்கு காங்கிரஸ்காரர்கள் என்ன சமாதானம் சொல்லுகிறார்கள். என்று கேழ்க்கின்றோம். ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் செல்வவான்களுக்கு விரோதம் செய்து வரியைக் குறைக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். அதனால் நாம் கவலைப்படவில்லை. பூமி இருக்கிறவர்கள் வரி கொடுக்கட்டும் ஏதோ ஒரு இரண்டு வருஷம் விலை குறைவால் கட்டவில்லை என்றாலும்
மறு வருஷங்களில் அது சரிப்பட்டுப் போகலாம்
ஆனால் தொழிலாளி ஏழை மக்கள் 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட உதவியாய் இருந்தார்களே இவர்கள் ஏழைகள் பிரதிநிதிகளா அல்லது முதலாளிகள் கூலிகளா என்று யோசித்துப் பார்க்கும்படி வாக்காளர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.08.1935
குடி அரசு- 1935 (2) 80
குற்றாலத்தில் பொதுக் கூட்டம்
தோழர்களே!
இன்று இங்கு பேசிய தோழர்களான பொன்னம்பலம், ஜீவானந்தம் ஆகியவர்கள் வெகு விளக்கமாகவும், எழுச்சியாகவும் பேசியதைக் கேட்டீர்கள். அவர்கள் பெரிதும் கடவுள், மதம், ஜாதி, செல்வவான்கள் ஆகிய தன்மைகள் ஒழிபட வேண்டும் என்று கருத்துப்படப் பேசினார்கள். இப்படிப் பேசியது உங்களில் அநேகருக்குப் பிடிக்காமலிருக்கலாம்
சிலருக்கு மன வருத்தமும் ஏற்பட்டிருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்கு வெறுப்போ, அதிருப்தியோ ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசவில்லை. இன்றுள்ள இந்நாட்டு மக்கள் நிலையையும், உலக நிலையையும் உணர்ந்து பார்த்து இன்று நடைமுறையிலுள்ள மதம், ஜாதி, கடவுள் முதலியவைகள் ஒழியாமல் மனித சமூகத்துக்கு விமோச்சனமும், சாந்தியும் இல்லை என்பதை உணர்ந்து அதற்காகப் பேசினார்களே ஒழிய வேறில்லை
என்னைப் பொருத்தவரை நானும் அவைகள் ஒழியப்பட வேண்டும் என்று சொல்வதோடு அவற்றையெல்லாம் ஆதரிக்கும் அரசியல் கிளர்ச்சிகளும், அரசியல்களும் ஒழிய வேண்டும் என்றும் சொல்லுபவன். ஏனெனில் அரசியலும், அரசியல் கிளர்ச்சிகளுமே மேற்கண்டதான கெடுதிகளை ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.
இந்தப்படி சொல்லுவதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது
இந்த தேசத்து கடவுள்களின் யோக்கியதைகளை நீங்கள் சிறிது யோசித்துப் பாருங்கள். அவைகள் தானாகவே உண்டானவைகளாக இருந்தாலும் சரி, மனிதர்களாலேயே உண்டாக்கப்பட்டவைகளாகவே இருந்தாலும் சரி அவைகளால் நமது நாட்டுக்கும், மனித சமூகத்துக்கும் எவ்வளவு கேடுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
இந்த நாட்டுப் பொருளாதாரக் கேட்டுக்கும் கல்வி அறிவற்ற தன்மைக்கும் யார் ஜவாப்தாரி? என்பதை யோசியுங்கள்.
கடவுள்
இந்தக் கடவுள்கள் நம் நாட்டுச் செல்வங்கள் எவ்வளவை பாழ்படுத்துகின்றன.
81 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தென்னாட்டு கோவில்களுக்கு வருஷம் 2%கோடிரூபாய் வருமானம். இது சர்க்கார்கணக்கு. அதற்காக மக்களுடைய பணம் செலவாவது மேற்கொண்டு
4, 5 கோடி ரூபாயாக இருக்கலாம்
உங்கள் திருநெல்வேலி, மதுரை, ராமனாதபுரம், தஞ்சை ஆகிய ஜில்லாக் களை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் வரும்படிகளும் அதற்காக மக்கள் செய்யும் செலவுகளும் என்ன பயன் அடைகின்றன? இவ்வளவு பணம் பாழாகியும் இந்த நாட்டில் 100-க்கு 8 பேர் தானே. கையெழுத்து போடத் தெரிந்தவர்களாய் இருக்கிறார்கள்.
100-க்கு 75 பேருக்கு மெய் உழைப்பாளிகள் தரித்திரர்களாய் இருக்கிறார்கள். இத்தனை கோடி ரூபாய் பாழாகும்படியாக இருந்து கொண்டு, அனாவசியமான போக போக்கியத்தை அனுபவித்து வரும் கடவுள்கள் இந்த நாட்டு மக்களில் 100-க்கு 92 பேர்களை தற்குறிகளாக வைத்து இருக்கின்றன என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்கள் நன்றி கெட்டவைகள் அல்லவா என்று கேட்கின்றேன்.
கல்விக்கும், கடவுளுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லப்படுமானால் இக் கடவுள்களுக்காக இவ்வளவு கோடி ரூபாய்கள் செலவாகும்படி ஏன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். வீணாக பகுத்தறிவும், யோசனையும் இல்லாமல் “சுயமரியாதைக் காரர்கள் கடவுளை வைகிறார்கள்” என்று சொல்லுவதில் பயன் என்ன?
இந்திய நாட்டையே இந்தக் கடவுள்கள் தானே இக்கதியாக்கி இருக்கின்றன.
கடவுள்களுக்கு பெண்டு பிள்ளை, வீடு வாசல், சொத்துக்கள், நகைகள், தாசி வேசிகள், வைப்பாட்டிகள் எல்லாம் எதற்கு?
இதைப் பார்த்துத்தானே ஒவ்வொரு மனிதனும் நடந்து கொள்ளுகிறான்.
நமது கடவுள்களுக்கு உர்ச்சவம் என்பதெல்லாம் பெரிதும் வருஷம் தோறும் கல்யாணம் செய்வது என்பதற்கு ஆகவே நடைபெறுகின்றன. கடவுளுக்கு கல்யாணம் எதற்கு? சென்ற வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று ஏதாவது தவரி விட்டதா? அல்லது எந்தக் கோர்ட்டின் மூலமாவது கல்யாண ரத்து ஆகி விட்டதா? இது சிரிப்புக்கிடமான கல்யாணமல்லவா? இந்தக் கல்யாணங்கள் சுயமரியாதை முறைப்படி நடப்பதாயிருந்தால் நமக்கு கவலையில்லை. அப்படிக்கில்லாமல் எவ்வளவு செலவு எத்தனை கால மெனக்கேடு, எத்தனை பேர்களுக்கு கஷ்டம். பெரிய ராஜா வீட்டுக் கல்யாணத்துக்கு மேல் நடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்தால் இந்தக் கடவுள்கள் எல்லாம் ஒழியாமல் எப்படி மனிதன் சீர்பட முடியும்? எப்படி அறிவு பெற முடியும்? எப்படி இந்த நாட்டு செல்வமும், நேரமும் பயனுள்ள காரியத்துக்கு உபயோகப்படுத்தப்பட முடியும்?
குடி அரசு - 1935 (2) 82
கோபிப்பதில் பயன் என்ன? எங்களை நாஸ்திகர்கள் என்று சுலபமாக சொல்லிவிடலாம். மற்ற நாட்டார்கள், மற்ற மதக்காரர்கள் இந்துக்களையும், இந்து கடவுள்களையும் பார்த்து நாஸ்திகர்கள், அஞ்ஞானிகள் என்று சொல்லுவதோடு மாத்திரமல்லாமல், காட்டுமிராண்டிப் பிராயமுள்ளவர்கள் என்று சொல்லுகிறார்களே. யாருக்காவது மானமோ, வெட்கமோ இருக்கின்றதா? எந்தக் கடவுளாவது இதற்காக நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துவிட்டதா? அல்லது அவர்களை இப்படிச் சொல்ல வேண்டாம் என்றாவது சொல்லி வைத்ததா?
ஒன்றும் இல்லையே. ஆஸ்திகம், நாஸ்திகம் என்றால் அதற்கு அர்த்தமே இல்லாமல் கையில் வலுத்தவன் கதையாகத்தானே இருக்கின்றது
ஆஸ்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத்தானே மக்கள் நடந்து காட்டுகின்றார்கள்.
ஆதலால் தோழர்களே இந்தக் கடவுளையும், இந்த ஆஸ்திகத் தன்மையையும் ஒழிக்கப்படாமல் மனிதன் மனிதத்தன்மையை அடைய முடியாது என்பது எங்களது அபிப்பிராயமாகும்.
மற்றும் மனிதனுடைய இழிவும், தரித்திரமும், அதாவது ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழிவாய் நடத்துவதும், ஒரு மனிதனது உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக் கொண்டு, உழைத்தவனை தரித்திரனாய், நோயாளியாய், அடிமையாய் வைத்திருப்பதும் கடவுள் செயல் என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளையாவது ஒழிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கின்றேன். ஆகவே நீங்கள், சுயமரியாதைக்காரர்கள் ஏன் கடவுளைப் பற்றிப் பேசுகின்றார்கள் என்பதை இப்போதாவது உணர்ந்து பாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.
அனாவசியமாய் உங்களுக்கே புரியாத வார்த்தையாகிய கடவுள் என்கின்ற வார்த்தையைக் கட்டி அழுது கொண்டு “எல்லாம் இருக்கட்டும் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, இல்லையா?” என்கின்ற அசட்டுத்தனமும், முட்டாள்தனமுமான கேள்வியை கேட்பதில் உங்கள் புத்தியை செலவழிக்
காதீர்கள். அதனால் எங்களை மடக்கி விடலாம் என்றோ எங்களை பழிப்புக்கு உள்ளாக்கி விடலாம் என்றோ கருதி விடாதீர்கள்.
உலகம் எப்படிசிருஷ்டிக்கப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?
நீங்கள் எப்படிப் பிறந்திருந்தால்தான் அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை?
83 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
உலகில் உள்ள வஸ்துக்கள், உலகில் நடக்கும் செய்கைகள் எல்லாம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது, எப்படி நடைபெறுகின்றது என்பதை எந்த மனிதனாவது அறிந்திருக்கின்றான் என்று நீங்கள் சொல்லிவிட முடியுமா?
அது யாரால் எப்படி நடந்தால்தான் என்ன?
உங்களுக்கும் எனக்கும் தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கிறது இன்று பாடுபட்டாலும் தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் எவ்வளவோ இருக்கின்றன.
அவற்றைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டும் தெரிய வேண்டும் என்று ஆசைபட்டுக் கொண்டிருக்கின்றவர்கள் சமுத்திரத்து அலைகளையும், மணலையும், மழைத் துளிகளையும் எண்ண ஆசைப்படும் மூட சிகாமணி களுக்கே ஒப்பாவார்கள்.
மக்கள் படும் கஷ்டங்கள், நமது கண்களுக்குத் தெரிகின்றன.
மற்ற மக்களால் நாம் இழிவும், துன்பமும் அனுபவிப்பதை நாம் உணர்கின்றோம். இதுவே முதலில் ஒழிக்கப்பட வேண்டும். எந்தக் காரணத்தாலானாலும் சரி, இவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் கடவுள் உள்பட எல்லாம் அழிக்கப்பட வேண்டும் என்று தான் நாங்கள் சொல்லுகின்றோம்.
இது சரியா? தப்பா என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். ஆகுமா? ஆகாதா? என்பதைப் பற்றிப் பிறகு யோசிப்போம்.
மதம்
கடவுளைப் போலவே நமது மதங்களும் இருந்து வருகின்றன.
ஒரு மதத்துக்கு மேற்பட்ட மதங்கள் இருக்கின்றன என்றால், “அவைகள் இருக்க வேண்டியதுதான்" என்றால், அப்படிப்பட்டவர்கள் ஒரு கடவுளுக்கு மேற்பட்ட கடவுள்களையும் ஒப்புக்கொண்டோ, அனுமதித்தோ. தான் ஆக வேண்டும்
வேண்டுமென்றால் ஒரு மதத்தைப் பார்த்து மற்ற மதக்காரன், “உன்னுடைய மதம் மதமல்ல. என்னுடைய மதம் தான் உண்மையான மதம் கடவுளால் அனுப்பப்பட்ட அல்லது சொல்லப்பட்ட மதம்” என்று சொல்லிக் கொள்ளலாம்
ஒரு மதக்காரனின் கடவுள் போலவேதான் மற்ற மதக்காரனின். கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது
அவற்றிற்கு ஏதாவது பரீகைஷக் கருவி உண்டா?
ஒருவனுடைய கடவுளின் குணம் போலவே மற்றவனுடைய கடவுளும் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம்? அதற்கு ஏதாவது நிபந்தனை உண்டா? ஒரு கடவுளை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உரிமை
குடி அரசு - 1935 (2) 84
இருந்தால் பல கடவுள்களை சிருஷ்டிக்க ஒருவனுக்கு உள்ள உரிமையை
யார் தடுக்க முடியும்? யாருக்கு அதிகாரம் யார் கொடுத்திருக்கிறார்கள்?
ஆதலால் ஒரு கடவுள் மதக்காரனே மகா உத்தமமானவன் என்றும் பல கடவுள் மதக்காரன் மோசமானவன் என்றும் சுலபத்தில் சொல்லிவிட
முடியாது
நாம் இங்கு மதத்தைப் பற்றி கவனிக்க வேண்டியதெல்லாம் எந்த மதமாவது மக்கள் எல்லோரையும் இன்பமாய், செழுமையாய், சமத்துவமாய் வாழ வைத்திருக்கிறதா? வாழ வைக்க முடிந்ததா? என்பதுவே யாகும்
உலகிலுள்ள எந்த மதத்தை அனுசரிக்கின்ற மக்களுக்குள்ளும், எந்த மதத்தை அனுசரிக்கிற தேசத்திற்குள்ளும், ஏழை பணக்காரன், எஜமான் அடிமை, உழைப்பாளி உழைப்பான் பயனை அனுபவிக்கிறவன், பிரபு பிச்சைக்காரன், வித்துவான் முட்டாள், படித்தவன் தற்குறி, மெத்தை வீட்டில் இருப்பவன் ஓட்டைக் குடிகைகூட இல்லாதவன், சுகாதார வசதி உள்ளவன் சுகாதார வசதியில்லாதவன், மேல்மகன் - கீழ்மகன், உழைக்காமல் சாப்பிடுபவன் - உழைத்தும் பட்டினி கிடப்பவன், அளவுக்கு மிஞ்சி வேலை செய்து சம்பாதித்து பணம் மீத்து வைப்பவன் - வேலையே இல்லாமல் திண்டாடுகின்றவன் என்பது போன்ற வித்தியாசங்கள் இல்லை என்று யாராவது சொல்லக் கூடுமா. இது முன் ஜன்ம கர்ம வினை என்றால் என்ன? அல்லது கடவுள் சித்தம் என்றால் என்ன? கஷ்டம் வித்தியாசம் எல்லாம் ஒன்று போல் தானே இருக்கிறது?
ஒரு மதத்தில் “ஆண்டிக்கும் அரசனுக்கும் வித்தியாசமில்லை” என்று சொல்லப்படுமானால், மற்றொரு மதத்தில் “கழுதைக்கும், மகான்களுக்கும் வித்தியாசம் இல்லை. எல்லா உள்ளத்திலும் நானே ஆத்மாவாய் இருக்கிறேன்'' என்று கடவுளே சொன்னதாக அவர்கள் வேதங்கள் வேதாந்தங்கள் சொல்லுகின்றன.
இப்படிப்பட்ட சிங்காரப் பேச்சுகளால் பயனென்ன?
இவற்றால் எல்லாம் மக்களை மக்கள் ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய ஒரு வேளைக் கஞ்சிக்குப் போட வேண்டிய உப்பு மண்ணுக்குக்கூட உதவாது என்றுதான் சொல்லுவேன்.
நான் அனேக தேசம் பார்த்து இருக்கிறேன், பல மத மக்களையும் சந்தித்திருக்கின்றேன். எங்கும் பசிக் கொடுமை பிச்சைக்காரர் தொல்லை, பணக்காரர்கள் கொள்ளை, ஆண் பெண் பேதம்,மனிதனுக்குமனிதன் கொடுமை, வேலையில்லாத்திண்டாட்டம் முதலிய காரியங்கள் இருந்துதான் வருகின்றன.
இதற்கு எந்த மதமானாலென்ன? பட்டினி கிடப்பவனும், பட்டினி
ஆக்குபவனும் இந்து மதத்தின் பேரால் இருந்தாலென்ன? கிருஸ்து மதத்தின்
85 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பேரால் இருந்தால் என்ன? இஸ்லாம் மதத்தின் பேரால் இருந்தால் என்ன?
பார்சி மதத்தின் பேரால் இருந்தால் என்ன? சீக் மதத்தின் பெயரால் இருந்தால் என்ன? ஆரிய சமாஜ்யத்தின் பேரால் இருந்தால் என்ன? பிரமசமாஜ மதத்தின் பேரால் இருந்தால் என்ன? அல்லது சைவ, வைணவ, ஸ்மார்த்த முதலிய எந்தப் பிரிவு மதங்களின் பேரால் இருந்தால் என்ன? எல்லாம் மக்கள் வாழ்க்கை நிலையை ஒன்றுபோல் தானே நடத்துகின்றன.
இந்துமதமானது ஏழ்மைக்கும் கொடுமைக்கும் 'அவனவனின் முன் ஜன்ம கர்மத்தின் பயன்'' என்றால் மற்ற மதங்கள் “கடவுள் சித்தத்தின் பயன்'” என்றுதான் சொல்லுகின்றனவே ஒழிய அதை நான் தீர்த்து விடுகின்றேன் என்னிடத்தில் ஏழை பணக்காரர் என்கின்ற பிரிவு இல்லை என்று எந்த மதமும் சொல்லுவதே கிடையாது. வேண்டுமானால் ஒவ்வொரு
சிறு காரியங்களுக்கு ஒவ்வொரு மதம் அனுகூலமாக இருக்கலாம்.
ஒரு மதத்தில் தீண்டாமை இருந்தால் மற்றொரு மதத்தில் பாராமை இருக்கலாம். இப்படி ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொன்று அனுகூல மானதாக இருக்கலாம். ஆனால் இன்று உலகம் பூராவும் இருந்து வரும் பொருளாதார பேதம், சமூகக் கொடுமை முதலியவைகளுக்கு மதங்கள்தான் அனுகலமாயும் ஆதரவாயும் இருந்து வருகின்றன என்பதை நான் உணர்கிறேன்.
மதத்தோடு சம்பந்தப்படாத ஏழ்மையும் தரித்திரமூம் கொடுமையும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. எல்லா மதமும் சகல காரியத்தையும் ஆண்டவன் செயல் என்றுதான் சொல்லுகின்றன.
ஆனால் தனக்கு இஷ்டமில்லாத காரியங்களை மாத்திரம் அந்த குறிப்பிட்ட மனிதன் செயல் என்று சொல்லி ஆத்திரப்படுகின்றன.
இப்படிப்பட்ட குளறுபடியான மதங்கள் மக்களுக்கு என்ன பயனைத் தரும்? இது வரையாவது என்ன பயனைத் தந்து வந்தது? ஆதலால் தான் சமதர்மத்துக்கு மதம் விரோதம் என்று சொல்ல வேண்டி வருகிறது
செல்வவான்
மற்றும் தோழர் ஜீவானந்தம் அவர்கள் செல்வவான் என்கின்ற தன்மையும் ஒழிந்தால்தான் பொருளாதாரக் கஷ்டம் ஒழியும் என்றார்.
நான் அதுவும் சரி என்றே சொல்லுவேன்.
செல்வவான்களின் செல்வங்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்பதையும் அது எப்படி செலவழிக்கப்படுகின்றது என்பதையும் யோகித்துப் பாருங்கள்
எவ்வளவு ஏழை உழைப்பாளி மக்களின் உழைப்பின் பயனை கொள்ளைக் கொண்டால் ஒருவன் செல்வவானாக மூடியும் என்பதை
குடி அரசு - 1935 (2) 86
யோசித்துப் பாருங்கள். அப்படிப்பட்ட பணம் அனாவசியமான கட்டடங் களுக்கும், கல்லுருவங்களுக்கும், கோட்டைகள் கட்டுவதற்கும், உலோக உருவங்களுக்கும், கல்யாண உர்ச்சவம் தேர் திருவிழா செய்வதற்கும், சோம்பேரிகளுக்கு சோறு போட்டு தடி ராமன்கள் ஆக்குவதற்கும், பால், நெய், எண்ணெய் குடம் குடமாகக் கல்லிலும், நெருப்பிலும் கொட்டுவதற்கும் வீணாக்கப்படுகின்றனவா இல்லையா?
மற்றொரு புறத்தில் கல்யாணம், கருமாதி, பிறந்த நாள், புதுமை, 60ம் கல்யாணம், திவசம், பண்டிகை முதலிய காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா?
மற்றொரு புறத்தில் தாசிகள், வேசிகள், சாராயன வகைகள், சூதாட்ட வகைகள், மோட்டார் கார்கள் என்பன போன்ற காரியங்களுக்கு பாழாக்கப் படுகின்றனவா இல்லையா? செல்வங்களை இந்தப்படி பாழாக்கும் செல்வவான்கள் ஒழிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?
இந்தக் குற்றாலத்தில் நான் பார்க்கின்றேன். இன்று சுமார் 100 தாசிகளுக்கு மேல் குடியேறி இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் 4, 2 நாட்டுக்கோட்டை செல்வவான் உள்பட பல பிரபுக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். பலர் கூட்டிக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.
கூதாடியதற்காகபோலீசார் இரண்டொரு தடவை பிடித்தும் அவர்களுக்கு கப்பம் கட்டி விட்டு மறுபடியும் அதே காலக்ஷேபமாக இருக்கிறார்கள்.
இன்னும் என்ன என்னமோ நடக்கின்றன. மற்றபடி பெரிய பெரிய ஜமீன்தார், மிட்டாதார், ராஜா பட்டக்காரர், சர் பட்டக்காரர் முதலியவர்களின் யோக்கியதையை சொல்ல வேண்டுமா?
மற்றும் சுதேச ராஜாக்கள் முதலியவர்கள் சங்கதி சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட செல்வவான்கள் ஒழிவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்று யோசித்துப் பாருங்கள்.
மடாதிபதிகன்
கடவுளையும், மதத்தையும், செல்வவான்களையும் காப்பாற்றும் மடாதிபதிகள், குருமார்கள் யோக்கியதையை சற்று சிந்தித்துப் பாருங்கள்:
ஒவ்வொரு மடத்துக்கு ஆயிரக்கணக்கான வேலி நிலங்களும் வருஷம் பதினாயிரம் ரூபாய், லட்சம் ரூபாய் என்று சொல்லும்படியான
வரும்படிகளும் இருந்து வருகின்றன. இவை மக்களுக்குஎன்னபயனைத்தருகின்றன. அயோக்கியர்களுக்கும், சோம்பேரிகளுக்கும் குடி கேடர்களுக்குமே பயன் அளிக்கின்றன. இப்படிப் பட்ட மடங்கள் தன்மையும் குருமார் தன்மையும் அனுமதிக்கப்படலாமா?
87 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
5 லட்ச ரூபாய் செலவிட்டு ஒரு தொழிற்சாலை வைத்தால் தினம் சராசரி 2500 பேர்களுக்கு தொழிலும் நல்ல ஜீவனமும் இருக்கும்படி தொழிற்சாலைகள் கட்டலாம்.
நமது நாட்டு கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும், மடங்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து தொழிற்சாலைகள் கட்டினால் இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ, ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரி
நிகர் சமானமான மனிதர்களாகவே காணப்படலாம்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாத்திரம் வருஷம் 20 லட்ச ரூபாய் வரும்படி வருகின்றது. எனவே இந்த வரும்படியில் வருஷம் 4தொழில்சாலை கட்டி 10000 பேர்கள் வீதம் நிரந்தரமாய் வேலைகள் கொடுத்துக் கொண்டே
போகலாம்.
நமது தொழில்சாலை சாமான்கள் உலக சந்தைகளில் எல்லாம் கேட்ட விலைக்கு விற்கலாம் ஆகவே சுயமரியாதைக்காரர்கள் ஏழை மக்கள், பாமர மக்கள். இருக்கும் நிலைமையையும், படும் கஷ்டத்தையும் உணர்ந்து இதற்கு என்ன காரணம் என்பதை துருவிக் கண்டு பிடித்து, பிறகு தான் கடவுள், மதம், செல்வவான் மடாதிபதிகள் என்பவற்றைப் பற்றி குறை கூற முன் வந்தார்களே. ஒழிய மற்றபடி அவர்களால் கடவுளாகவோ மத கர்த்தாக்களாகவோ, செல்வவான்களாகவோ ஆவதற்கு அல்ல என்பதை உங்களுக்குத் தெரியப்
படுத்திக் கொள்ளுகிறேன். தோழர்களே, நாங்கள் எங்கள் அபிப்பிராயங்களைச் சொன்னோம்.
நீங்கள் உங்கள் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரி என்று பட்டபடிக்கு நடந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசியாக இந்தக் கூட்டம் கூட்டி வைத்த தோழர் சிங்காரவேலு பாண்டியன் அவர்களுக்கும், இங்கு பேசிய தோழர்கள் ஜீவானந்தம், பொன்னம்பலம் அவர்களுக்கும், இவ்வளவு நேரம் மழைத் தூரலிலும், குளிரிலும் பொறுமையாக இருந்து கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கும் எனது நன்றியறிதலையும் வந்தனத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 06.08.1935 ஆம் நாள் குற்றாலம் அய்ந்தருவி சாலை வடபுரம் தெப்பக்குள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 11. 08.1935
குடி அரசு- 1935 (2) 88
போக்கிரித்தனமான புகார்
சென்ற வாரம் நமது “குடிஅரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் தோழர் சுந்தராம்பாள் அம்மாள் விஷயமாகப் பார்ப்பனர்கள் பொறாமை கொண்டு தம் பத்திரிகைகளில் செய்து வரும் விஷமத்தனமான பிரசாரத்தைப்
பற்றி எழுதியிருந்தோம் இவ்வாரம் பார்ப்பனர்களுடையவும், பார்ப்பனப் பத்திரிகை களினுடையவும், போக்கிரித்தனமான புகார்களைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு மிகுதியும் வருந்துகின்றோம்
நம் நாட்டு பார்ப்பனர்களை நாம் பகைக்கவோ, வெறுக்கவோ, சிறிதுகூட ஆசைப்படுவது கிடையாது என்பதோடு, எப்படியாவது அவர்களுடன் கலந்து ஐக்கியப்பட்டு தொண்டாற்ற ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா. என்றே சிறப்பாக சிறிது காலமாய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
இந்நிலையில் பார்ப்பன விஷமம் எல்லைக்கடங்காது. மேலும் மேலும் பெருகிக் கொண்டே போவதுடன் இந்நாட்டில் இனி தமிழ் மக்கள் வாழ்வதா? அல்லது பார்ப்பனர் வாழ்வதா? என்கின்ற இரண்டிலொன்றைக் கரைகாணபார்ப்பனர் ஒருங்கே கூடி முனைந்துவிட்டார்கள்.அது பற்றிஎதையுஞ் செய்யத் துணிந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது
நாடகக் கலையில் ஒரு தமிழ் மாது பெரும் புகழ் பெறக் கூடாது என்று எப்படி விஷமப் பிரசாரம் செய்தார்களோ அதுபோலவே இந்த வாரத்தில்
தமிழ் கலையில் ஒரு தமிழ் பெரியார் பேரும், புகழும் பெறுவதற்கு இடையூறாய் தங்கள் விஷத்தைக் கக்க ஆரம்பித்து விட்டார்கள்.
தென்னாட்டுக் கலா வல்லவருள் தலைசிறந்து விளங்கும் சுவாமி வேதாசலமென்னும் மறைமலை அடிகள் அவர்களை தமிழ் உலகமும், சிறப்பாக சைவ உலகமும் நன்கலிந்திருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.
சுவாமிகள் ஒரு பெரும் ஆஸ்திகர் என்பதோடு தமிழ் பாஷையில் இணையில்லாத பண்டிதர் என்பதும் தமிழ் பாஷையுடையவும், தமிழ் பாஷையின் வளர்ச்சியின் எதிரிகளும் அறிந்ததேயாகும். அதோடு
மாத்திரமல்லாமல் சுவாமிகள் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறானவர் என்பதோடு சுயமரியாதைக் கொள்கையானது, மக்களுக்குக் கேடு விளைவிக்கத் தக்கது என்கின்ற அபிப்பிராயமும் உடையவர்.
89 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அன்றியும் சுவாமிகளின் தோளானது ஒரு முப்பிரி நூலைச் சுமந்து யிருக்குமானால் இத் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் இன்று அவரை அகஸ்தியராக்கியிருப்பார்கள். ஏனெனில் அவரினின்று எத்தனையோ மடங்கு தாழ்ந்த ஞானமுடையவர்கள் பருத்தி நூலைத் தாங்கிய பண்பினாலேயே மகாமஹோபாத்தியாயரானதோடு மாத்திரமல்லாமல் தமிழ் “கடவுளான சுப்பிரமணியனுக்கு'” ஒப்பாகப் பேசியும், எழுதியும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். உதாரணமாக இன்று தமிழ் பாஷையின் பேரால் பெரு நிதி திரட்டிக் கொண்டவரும் பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும் தமிழுக்குத் தாயகமெனவும் விளம்பரப்படுத்தப்பட்டு மகாமஹோபாத்தியாயர் எனப் பட்டம் சூட்டப் பெற்றவருமான தோழர் உ.வே.சாமிநாதையர் அவர்களை ஒரு தட்டில் வைத்து சுவாமி வேதாச்சலமவர்களை மற்றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமிநாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்க முடியும் என்பதை, ஒவ்வொரு நேர்மையான மகனும் தன் தன் நெஞ்சில் கையை வைத்து உண்மை உணர்வோடு பார்ப்பானானால் நன்றாய் விளங்கிவிடும்
தோழர் சுவாமிநாதய்யர் அவர்கள் வெகுகாலமாக பல தமிழ்ப் பெரியாரும், தமிழ் அபிமானிகளும் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியச் சுவடிகளையும், அவற்றிற்கு அவ்வப்போது பல அறிஞர்களும், பண்டிதர்களும்
குறித்து வைத்து இருந்த உரைகளையும், கருத்துகளையும் கைப்பற்றி அவற்றில் பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாகவும், பார்ப்பனர்களுக்கு பிரதிகூலமாகவும் இருந்த கூற்றுகளை மாற்றியமைத்து ஆற்றிய நூல்கள் போலவே எல்லாவற்றையும் பார்ப்பனிபத்துக்கு அரணாக்கிப் பதிப்பித்துப் பயன் பெற்றார் என்பதல்லாமல் தன் சொந்த மனோதர்மத்தில் யாவருக்கும் பயன்படும்படி பார்ப்பன முறையில் ஏதாவது புத்தகமோ, வியாசமோ எழுதி இருக்கின்றாரா என்று பார்த்தால் நாம் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பது செவ்வன விளங்கும்
சுவாமி வேதாச்சலமவர்கள் அவ்வாறின்றி எத்தனையோ நூல்கள் தாமாகவே இயற்றியதுடன் தமதாராய்ச்சித் திறத்தால் எவ்வளவோ அறிய விஷயங்கள் கண்டுபிடித்து சகல மக்களும் பயன்படத்தக்க பல அறிய கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருக்கிறார் என்பதை தமிழின் “கூற்றுவர்"களும் உணருவார்கள்.
இப்படிப்பட்டசுவாமி வேதாச்சலமவர்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் விஷமப் பிரசாரம் செய்ய இப்போது ஏன் புறப்பட்டார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம்; ஆனால் நமக்கு அது அதிசயமாய்த் தோன்ற வில்லை. ஏனெனில் இதற்கு முன்ணலேயே செய்திருக்க வேண்டியவர்கள் இத்தனை நாள் எப்படி சுவாமி வேதாச்சலத்தைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்யாதிருந்தார்கள் என்பதுதான் ஒருவருக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம்.
குடி அரசு- 1935 (2) 9
இரண்டைப் பற்றியும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் மறைமலையடிகளைப் பற்றி நம் பார்ப்பனர்கள் முன்னும் விஷமப் பிரசாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள், இப்போதும் செய்துதான் வருகிறார்கள், இனியும் செய்யத்தான் போகிறார்கள்.
எப்பொழுது அவர் சுவாமி வேதாச்சலமானாரோ அப்போது முதலும், எப்பொழுது சுவாமி வேதாச்சலமவர்கள் சுவாமி வேதாச்சலமென்னும் மறைமலை அடிகள் என்பதாகஆனாரோஅப்பொழுதுஅதைவிட அதிகமாகவும் அவரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
நமது பார்ப்பனர்களுக்கு ஒருவன் விரோதியாக வேண்டுமானால் தமிழ் பாஷையில் இணையில்லாப் பற்றும், இணையில்லா ஞானமும்
இருந்து வருவது ஒன்றே போதுமானதாகும். அப்படிக்கிருக்க நமது சுவாமி வேதாச்சாலமவர்களை பார்ப்பனர் எப்படி வெறுக்காமலும், பழித்துக் கூறாமலும் இருக்க முடியும்.
இப்பொழுது சுவாமி வேதாசலம் அவர்களைப் பற்றி பார்ப்பனக் குழாத்திலும் அவர்களது பத்திரிகைகளிலும் நடந்து வரும் பிரசாரத்தை நாம்
விஷமப் பிரசாரம் என்று மாத்திரம் சொல்வதல்லாமல் அதை ஒரு போக்கிரித்தனமான புகார் பிரசாரம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது
ஏனெனில் சுவாமிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் ஒரு சிறிய நூலில், “தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும்” என்ற தலைப்பின்.
கீழ் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் குறிப்பாக கொண்டு அது தேச
நலனுக்கும் மக்கள் நலனுக்கும் கேடானது என்பதாகச் சொல்லி அவரது
பெயருக்கு இழுக்கு உண்டாகும்படியாக பிரசாரம் செய்கின்றார்கள்.
இரண்டு வாரகாலமாக இந்தப்பிரசாரம் பத்திரிகைகளில் அடிபடுவதோடு பல பார்ப்பனப் பத்திரிகைகள் இவ்விஷயத்திற்கு ஆக தலையங்கமும் உப தலையங்கமும் எழுதுவதோடு வழக்கம் போல் ஆங்காங்கு கூட்டம் போட்டு கண்டித்ததாக சூட்சிச் செய்திகளும் பிரசுரமாகின்றன. அவற்றுள். ஒரு பத்திரிகை “விஷமத்தனமான புத்தகம்'' என்கின்ற தலைப்பிலும், மற்றொரு பத்திரிகை மறைமலை அடிகள் சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்து விட்டார் என்பது ஆகவும், மற்றும் பல தங்களுக்கு தோன்றிய விதமாகவும் எழுதி அப்புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக வைத்தது பிசகு என்றும் அதை எடுத்து விட வேண்டும் என்றும் எழுதி இருக்கின்றன.
இந்தக் கூற்றுகளை வேண்டுமென்றே செய்யப்படும் போக்கிரித் தனமான விஷமக் கூற்று என்று சொல்லி தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்
ஏனெனில் சுவாமி வேதாசலம் அவர்களால் எழுதப்பட்ட அறிவுரைக்
கொத்து என்னும் புத்தகத்தில் தமிழ் மக்களை இழிவுபடுத்தியும் அடிமைப்புத்தி ஏற்படும்படியும் துவேஷம் ஏற்படும்படியும் கட்டுரை எழுதி தமிழ் மக்களை
91 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கேவலப்படுத்தி இருப்பதாக எழுதி ஓலமிடுகின்றன. அதில் என்ன எழுதப் பட்டிருக்கிறது, எதற்காக இப்படி ஓலமிட வேண்டியதாயிற்று என்பதற்கு உதாரணம் காட்டும் போது ஒரு பத்திரிகையானது,
தமிழருக்கு சுய அறிவு கிடையாது”
ஓத வ ட
ஒற்றுமைக் குணம் கிடையாது” “கல்வியில் விருப்பம் கிடையாது"
பமேல்நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் கிடையாது"
தமிழர்கள் கைக்கூலி (லஞ்சம்) கொடுக்கிறார்கள்"
உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள்" அப்படி என்றால் என்ன? என்றும் கேட்கின்றது
7... “பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கிறார்கள்”
என்ற வாக்கியங்களை எடுத்துக் காட்டி இவை அடிமைப்புத்தியையும் துவேஷத்தையும் விளைவிக்கும் என்று சொல்லி இப்புத்தகத்தை பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்படியாக அனுமதிக்கக் கூடாது என்று எழுதியிருக்கின்றது.
இவற்றிற்கு சமாதானம் கூறியே இப்பத்திரிகைகளின் போக்கை போக்கிரித்தனமான புகார் கூறும் குணமுடையவை என்று எடுத்துக் கூற ஆசைப்படுகின்றோம்
1. தமிழருக்கு சுய அறிவு கிடையாது என்பதில் ஏதாவது குற்றமிருக்கிறதா என்று கேட்கின்றோம் கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழ் மக்களில் நூற்றுக்கு 10 அல்லது 5 வீதமான மக்களுக்கு ஆவது சுய புத்தி இருக்கின்றது என்று யாராவது கூற முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம். ஒருவர். இருவருக்கு சுய புத்தி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது அச்சமூகம் முழுமைக்கும்இருப்பதாகக் கொள்ளக் கூடியதாகிவிடுமா என்று கேட்கின்றோம்.
தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் “மோக்ஷ'மடைய மலத்தையும் மூத்திரத்தையும் சாப்பிடுவானா?
தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன்தன்மகளைச்சாமி பேரால் பொட்டுக். கட்டி பார்ப்பனனுக்கு மாத்திரம் குறைந்த விகிதத்துக்கு கலவிக்கு விடுவானா?
தமிழனுக்குப் புத்தியிருந்தால் பார்ப்பான் காலில் பவுன் பவுனாக நாணையம் கொட்டிக் கொடுத்து அவன் காலைக் கழுவின தண்ணீரைக் குடிப்பானா?'
தமிழனுக்குப் புத்தியிருந்தால் காப்பிக் கடையில் எச்சைக் கிண்ணம் கழுவும் பார்ப்பானையும், கூட்டிக் கொடுக்கும் பார்ப்பானையும் சுவாமி என்று கூப்பிடுவானா?
குடி அரசு - 1935 (2) 92
தமிழனுக்குப் புத்தியிருந்தால் கடுகளவாவது சுயபுத்தியிருந்தால் அரிசி, பருப்பு, காய் கரியை பார்பானுக்குப் படைத்து விழுந்து கும்பிட்டு இவற்றை இறந்து போன என் பெற்றோர்களுக்குக் கொண்டு போய் சேர்த்து அவர்களை மோகஷத்திற்கு அனுப்புங்கள்” என்று சொல்லுவானா?
தமிழனுக்குப் புத்தியிருந்தால் தன்னை சூத்திரன் என்றும், தீண்டப் படாதவன் என்றும் அழைக்கிற, கருதுகிற பார்ப்பானை, சகோதரன் என்றும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை என்றும் ஒரு தேச மக்கள் என்றும் கருதி அவனோடு நட்புக் கொள்வானா?
தமிழனுக்குப் புத்தி இருந்தால் தன்னை தொட்டால் பாவம், தன் பாஷையைக் கேட்டால் தோஷம், தன்னை கோவிலுக்குள் கடவுள் இருக்கும் அறையில் அனுமதித்தால் தோஷம் என்று சொல்லும் பார்ப்பானுடன் கூடிக் கொண்டு தமிழ் மக்கள் கழகத்தைக் கெடுக்கவும் அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கவுமான தொண்டைச் செய்து ஒற்றுப் பார்ப்பானிடம் பிச்சை வாங்கிப் பிழைப்பானா?
தமிழ் மக்களுக்குப் புத்தியிருந்தால் கெஜம் 3 அணாவுக்கு விற்கும் அருமையான, நயமான துணியை வாங்கிக் கட்டுவதை விட்டு விட்டு கெஜம்
6, 7 அணாப் போட்டு ஆபாசத் துணியை தேசாபிமானம் என்னும் பேரால் வாங்கிக் கட்டிக் கொண்டுத் திரிவானா?
மோக்ஷத்திற்கு போக மலமூத்திரங்களை உண்பதற்கும் சுயராஜ்ஜியம் பெற கோணி ரட்டைக் கட்டுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதைக்கூட உணராமல் இருப்பானா என்று கேட்பதோடு தமிழ் மக்களுக்கு பெரும்பான்மை யானவர்களுக்குப் புத்தியும் இல்லை, சுயமரியாதையும் இல்லை என்பதற்கு இன்னும் இது போன்ற எத்தனைஆயிரம் எடுத்துக்காட்டுகள்வேண்டுமானாலும் இருக்கின்றது என்று கூறத் தயாராய் இருக்கிறோம்
2. தமிழ் மக்களுக்குள் ஒற்றுமைக் குணம் கிடையாது என்பது பொய்யா என்று கேட்கின்றோம்
தமிழ் மக்கள் தங்களைப் பார்ப்பனரால் 1008 ஜாதியாராகப் பிரிக்கப் பட்டு அவர்கள் முன்னோர்களால் செய்த புராண சரித்திர ஆதாரத்தோடு ஒவ்வொருவருக்கும் கீழ் மேல் நிலை கற்பிக்கப்பட்டு ஒருவருக்கொருவர். உண்பனை, தின்பனை, கொடுப்பனை, கொள்வனை, கூடி உறவாடுவன. முதலிய ஐக்கிய பாவமற்றவைகளைச் செய்து கொண்டு ஒருவன் உண்பதை ஒருவன் பார்க்கக்கூட கூடாது என்கின்ற நியதி ஏற்படுத்தி ஒவ்வொருவன். தொழிலையும் ஜாதியையும் இழிவாக்கி ஒருவனிடம் ஒருவனுக்கு சரித்திரப்பூர்வமாகவே துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி செய்து மக்களைப் பிரித்து வைத்து ஒரு சிறு சோம்பேறிக் கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வயிர் வளர்க்க வேண்டி சதாகாலமும் எல்லாத் தமிழ் மக்களும்
93 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஒருவரோடு ஒருவர் விருப்பற்று துவேஷத்துடன் இருக்கும்படி செய்து இருப்பது பொய்யென்று யாராவது சொல்ல முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்
3. தமிழ் மக்களுக்கு கல்வியில் விருப்பம் கிடையாது என்பது முழுதும் உண்மையற்றது என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
இந்நாட்டுத் தமிழ் மக்களில் எத்தனைப் பேர் கல்வி கற்று இருக்கிறார்கள்? ஆரிய மக்களில் எத்தனை பேர் கல்வி கற்று இருக்கிறார்கள் என்கின்ற கணக்கைப் பார்த்தால் சுவாமிகளின் வாக்கு எத்தனை பரிசுத்தமானது என்பது விளங்கும். இன்று பள்ளி உபாத்தியாயர்கள் பெரிதும் பார்ப்பனர்களானதினாலும் பார்ப்பனர்களே தமிழ் மக்கள் பலருக்குக் குல குருவாய் இருப்பதாலும் இவ்விரு கூட்டத்தாரும் பார்ப்பனரல்லாத மக்களைப் பார்த்து “உங்களுக்கு படிப்பு எதற்கு, நீங்கள் மாடு கன்று மேய்த்து ஏர் உழுபவர்கள் தானே, அன்றியும் உங்களுக்கு படிப்பு வருமா, உங்களுக்கு நாக்குத் திரும்புமா” என்றெல்லாம் கேட்டு அவர்களது தன்னம்பிக்கையைக் கெடுத்து உச்சாஹத்தைத் தடுத்து மனச் சோர்வை உண்டாக்கி மாடு மேய்ப்பதில், வண்டி ஓட்டுவதில், மோகத்தை உண்டாக்கி தமிழ் மக்களுக்கு கல்வி ஆசையில்லாமலும் கல்வி கற்க முடியாமலும் செய்ததை எந்த ஒரு யோக்கியமான பார்ப்பனராவது மறுக்க முடியுமா என்று கேட்க்கின்றோம்.
மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரராகவும், கீழ் ஜாதியாராகவும் கற்பிக்கப்பட்டு விட்டதாலும், பார்ப்பனரல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்படாது என்றும், கல்வி கற்பதும் கூடாதென்றும், மனுதர்ம நூல் முதலியவைகளில் இருப்பதால் அதனாலும் பார்ப்பனரல்லாதார் கல்வி கற்கவும் ஆசைப்படவும் முடியாமல் போனதோடு மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரிதும் 5 வயது முதலே பாடுபட்டால்தான் அவர்களது குடும்பம் வாழ முடியும் என்கின்ற மாதிரியில் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டு விட்டதாலும், தமிழ் மக்களுக்கு கல்வி ஏற்படவும் ஆசை உண்டாகவும் இடமில்லாமல் போய்விட்டது என்பது பொய்யா மெய்யா என்று கேள்க்கின்றோம்
சமஸ்கிருத நீதி நூல் ஒன்றில் “குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன் இம் மூன்றையும் கிட்ட சேர்க்கலாகாது'' என்று ரிஷிகள் வாக்கே இருக்க, இந்நிலையில் எந்தப் பார்ப்பனரல்லாதாரையாவது படிக்க பார்ப்பனர்கள் வசதி செய்து கொடுத்திருப்பார்களா என்றும் கேட்கின்றோம்
4. மேல் நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் இங்கு கிடையாது என்பது
இப்படி எழுதின அப்பத்திரிகையாவது ஆங்கிலேயர் வருவதற்கு முன்னோ, அல்லது ஆரிய அரசர்கள் காலத்திலோ ஏதாவது பள்ளிக்கூடங்கள் இருந்ததாக இரண்டு ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர்களையாவது குறிப்பிட்டதா
குடி அரசு- 1935 (2) 04
அல்லது இனியாவது குறிப்பிட முடியுமா? என்று கேள்க்கின்றோம். இதைப் பற்றி மிஸ் மேயோ அம்மையாரே எழுதி இருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கக் கூடாது என்றும், படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால்கூட காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றவும் ஏற்படுத்தி இருக்கும் சாஸ்திர தர்மம் யாரும் அறியார்கள் என்று நினைத்துக் கொண்டு இப்பத்திரிகை மனப்பால் குடிக்கின்றதா என்று கேட்கின்றோம்
முதலாவது ஆங்கிலேயர்களுக்கு முன் புஸ்தகம், காகிதம், சிலேட்டு ஏதாவது இருந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? படிக்கும் விஷயம்
தான் ஏதாவது இருந்ததா?
குறள், தொல்காப்பியம் என்பது போல் ஏதோ சில நூல்கள் இருக்கின்றதே அது எப்படி வந்தது என்று சொல்லுகின்றது அப்பத்திரிகை.
இது மனதறிந்த அக்கிரமமான சமாதானம். ஏனெனில் தொல்காப்பியம்,
குறள் படித்தவர்கள் லட்சத்தில் ஒருவர் இருப்பார்கள். அதுவும் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் யாரோ ஒருவர் மூலம் ஒருவர் பாட்டாகக் கேட்டு நெட்டுருப் பண்ணி வைத்திருந்தால் அவர்கள் பெரிய வித்வான்௧ளாக ஆகி விடுவார்கள். அவ்வளவு தான் படிப்பே ஒழிய பள்ளிக்கூடம் வைத்து பிள்ளைகள் அங்கு போய் எழுதுவது, படிப்பது என்பவைகள் தாராளமாய் இருந்ததாக எந்த ஆதாரத்திலும் எவராலும் சொல்லப்படவே இல்லை. அதனாலேயே தான் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் தாராளமாய் 10000-க்கு ஒருவர் இருவர் படித்ததாகவும் காணப்படவில்லை.
5. தமிழர்கள் கைக்கூலி கொடுக்கிறார்கள் என்பது?
பார்ப்பனர்கள் அதிகாரம் வகிக்க ஆரம்பித்தது முதல் கொண்டே இந்நாட்டில் லஞ்சம் எவ்வளவு தாராளமாகக் கடையில் கத்தரிக்காய், பீடி, சிகரெட் வாங்குவது போல் எவ்வளவு மலிவாக இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமா?
பார்ப்பனர்களே அதிகாரிகளானதாலும், பார்ப்பனர்களே வக்கீல்கள், குமாஸ்தாக்கள் ஆனதினாலும், லஞ்சம் எவ்வளவானாலும் பெரிதும் எப்படியாவது பார்ப்பனர்களுக்கே போய்ச் சேரக்கூடியதாய் இருந்தாலும் லஞ்சத்தைத் தாராளப்படுத்தவும் அவசியமாய் செல்வாக்குப் படுத்தவும் ஏற்பட்டதோடு அது மக்களைக் கவர்ந்தும் விட்டது
லஞ்சவிஷயத்தைப் பற்றி சுவாமிகள் மாத்திரமல்ல, நாம் மாத்திரமல்ல, அனேக பெரியார்கள், அதிகாரிகள், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்கள். என்பவர்களெல்லாம் வண்டி வண்டியாய் சொல்லி இருக்கிறார்கள்.
மற்றும் ஹைக்கோர்ட்டு முதல் அரசாங்க தலைமை ஸ்தாபனங்கள். முதல் ரயில்வே, காபீஸ்ட் இலாக்கா, பஞ்சாயத்து கோர்ட், கிராமக் கோர்ட்டு உள்பட அவற்றிற்குள் நுழைகின்றவர்கள் ஒவ்வொருவரும் 100க்கு 90க்கு
95 ௨௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மேம்பட்டவர்கள் லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கும் வக்கல்களையே தேடிப் பிடிக்கிறார்கள் என்பதும் அதற்குண்டான சகல வழிகளையும் வக்கீல் களும், அவர்களது சிப்பந்திகளும் கற்றுக் கொடுத்து அவர்களை நடத்து கிறார்கள் என்பதும் ஒரு சிறிதாவது மறுக்கக் கூடியதா என்று கேட்கின்றோம்.
6. உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள் என்பதை உண்மை அல்ல வென்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
இந்த விஷயம் வெளிப்படையான இரகசியமாகும்
கொஞ்சகாலத்துக்கு முன் திருச்சியில் ஒரு சின்ன அதிகாரி ஒரு பெரிய அதிகாரி ஒருவருக்கு தன் மனைவியை அனுப்பியதில் அப்பெரிய அதிகாரி
அப்பெண்ணின் மார்பின் முனையைக் கடித்து விட்ட சேதி யாரும் அறியாததா.
மற்றும் கும்பகோணத்தில் ஒரு உயர்தர அதிகாரிக்கு ஒரு கீழ்த்தர அதிகாரி தன் சகோதரியை அனுப்பி அந்தம்மாள் அவரோடு கூடவே இருந்து கொண்டு வர மாட்டேன் என்று சொன்னது யாரும் அறியாததா.
மற்றும் சில ஜில்லா பெரிய அதிகாரிகள் செல்லுமிடங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சின்ன அதிகாரியை தன்னுடைய சாமான்கள் போலவே கூட அழைத்துக் கொண்டு போவது என்பதும், அதனால் அந்த சின்ன அதிகாரி தனது யோக்கியதைக்கு மீறின பதவிகள் பெறுவதும் கோவை ஜில்லாவில் பல தடவை நடந்த சம்பவங்களாகும்.
மற்றும் வேறு எத்தனையோவிதங்களில் இம்மாதிரியான பிரஸ்தாபங்கள்
சர்வ சாதாரணமாகவே பலவிடங்களிலும் வழங்கி வருவதானது யாரும் அறியாதது என்று சொல்லிவிட முடியுமா?
7. பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கின்றார்கள் என்பது இதைக்கூட தப்பு என்று சொல்ல வந்ததானது வேண்டுமென்றே செய்யப்படும் போக்கிரித்தனமான புகார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும். இன்றைய கல்வி, அறிவுக்குப் பயன்படாததென்றும் வயிற்றுப் பிழைப்பிற்கு அதுவும் அடிமை பிழைப்பு பிழைத்து வயிறு பிழைப்பதற்கு என்றும் சொல்லாதவர்கள் யாருமே இல்லை. அப்படிப்பட்டவர்களும், அவர்களது பிள்ளை குட்டிகளும் மறுபடியும் அக் கல்வியையே கற்கின்றார்கள் என்றால் வேறு எதற்காக அவர்கள் கற்கிறார்கள் என்பதை அப் பத்திரிகை யாவது கூறி இருக்க வேண்டாமா?
இன்று கல்வி கற்றவர்கள் என்கின்ற கூட்டத்தில் சேர்ந்த எவராவது அக்கல்வியை பணம் சம்பாதிப்பதைவிட வேறு காரியத்துக்கு உபயோகப் படுத்துகிறார்களா? அல்லது கற்ற B.A, MA., டாக்டர்கள் என்பவர்களுக்காவது அறிவு ஏற்பட்டிருக்கிறது என்றுசொல்லமுடியுமா? எத்தனைடாக்டர்கள் தூரமான
தன் பெண்ணை தெருவில் தள்ளி கதவைச் சாத்துகிறதைப் பார்க்கிறோம்
குடி அரசு- 1935 (2) 96
எத்தனை பூகோள சாஸ்திரிகள் கிரகணத்துக்கு சமுத்திரக்கரையில். மூக்கைப் பிடித்து உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம்.
எத்தனை பிரபல நியாயவாதிகள், தர்க்கவாதிகள் தாங்கள் மோட்சம் போககல்லைக் கும்பிடுவதைப் பார்க்கின்றோம். இவர்கள் எல்லாம் புத்திக்காக படித்தவர்களா பணம் சம்பாதிக்கப் படித்தவர்களா என்று கேட்கின்றோம்
உரலை நினைத்து அவலை இடிப்பது போல் பார்ப்பனப் பத்திரிகைகள். வேறு ஏதோ காரணம் வைத்துக் கொண்டு இந்தப் போக்கிரித்தனமான. வேலையில் பிரவேசித்து இருக்கின்றன.
அவர்களது சூட்சித் திரமும், விஷமத் திரமும் இப்புத்தகத்தைப் படிக்கக் கூடாது என்று செய்வதில் வெற்றி அளித்துவிடலாம்
அல்லது சில வாக்கியங்களை எடுத்துவிட வேண்டுமென்று செய்தாலும்
செய்து விடலாம்
பிறகு பாட புத்தக விஷயத்தில் எப்படிப்பட்ட கொள்கை அனுசரிக்க வேண்டும் என்பதில் என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.
தமிழ் மக்களும், தமிழ் பண்டிதர்களும் தமிழ் ரத்தமோடும் தமிழ் அபிமானிகளும் இத்தகைய சீர்கேட்டை நிவர்த்தித்து சரியான நடைமுறையில். நடத்த அமைக்கப்பட்ட அதிகார வர்க்கங்களும் அவைகளை நிர்வகிக்கும் மந்திரி வர்க்கங்களும் பின்னால் என்ன செய்வார்கள், அல்லது அவர்கள் என்ன கதி அடைவார்கள் என்பதைப் பார்க்கவே காத்திருக்கிறோம்
இதற்கு ஆக ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து இதன். காரணமாகவாவது பாட புத்தக அமைப்புக்கு ஒரு நல்ல காலம் வரட்டும் என்று ஆசைப்படுகின்றோம்
பார்ப்பனர்களில் ஒருவருக்குஒரு விஷயம் பட்டால் அது கம்பியில்லாத
தந்தி போல் ஒவ்வொரு பார்ப்பனர் உள்ளத்திலும் படிகின்றது
பார்ப்பனரல்லாதாரோ சிலர் இதன் மூலம் வயிறு கழுவ பார்ப்பனருக்கு
அடிமையாகிறார்கள்.
வெட்கம்! வெட்கம்!!
எதற்கென்று அழுவது!!!
குடி அரசு - தலையங்கம் - 11.08.1935
97 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வேண்டுகோள்
தோழர் சாமி வேதாசலம் அவர்கள் எழுதிய “அறிவுக்கொத்து” என்னும் நூலை சென்னை சர்வகலாசாலை இண்டர்மிடியேட் வகுப்பு மாணவர்களுக்குப் பாட புத்தகமாக வைத்திருப்பது கண்டு பார்ப்பனர்கள் அற்பத்தன. கிளர்ச்சிகளும், விஷமப் பிரசாரங்களும் செய்து கொண்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் அந்நூலில் “தமிழ்நாட்டவரும், மேல் நாட்டவரும்" என்ற கட்டுரையில் பார்ப்பனர்களுடைய குற்றங் குறைகளைப் பற்றிக் கூறியிருப்பதாகும். ஆனால் அக்கட்டுரையில் பெரும்பான்மையான ஏழை மக்களின் வறுமையையும், அறியாமையையும் நீங்குவதற்கு வேண்டியன. செய்யாமல் வாளாவிருப்பது கண்டு, கண்டித்து எழுதப்பட்டிருக்கிறது.
ஆதலால் ஒவ்வொரு ஊரிலுள்ள சுயமரியாதைச் சங்கங்களும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் பார்ப்பனர்களுடைய விஷமப் பிரசாரத்தைக் கண்டித்து சர்க்காருக்குத் தீர்மானங்கள் அனுப்பும்படி வேண்டுகிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 11.08.1935
குடி அரசு - 1935 (2) 98
றிட M. 2041 “KUDI-ARASU"
19244 க்கும்
குடி. அரசு பதிப்பக வெனியிடுகள்.
லை
பதிணோறாவது ஆண்டு.
நமது குடி அரசுக்கு ஒன்பதாமாண்டு நிறைந்த பிறகு இப்போது இரண்டு வருஷம் கழித்து பதினோறாவது ஆண்டில், பதினோறாவது மாலையின் முதல் மலராக இவ்வார இதழ் ஆரம்பமாகின்றது
இதுவும் இந்தப்படி மே மாத முதல் வாரத்திலேயே ஆரம்பமாகி இருக்க வேண்டியதானது பல காரணங்களால் தவறிவிட்டது. கூடிய சீக்கிரம்
குடி அரசின் பத்தாமாண்டு விழா நடத்த உத்தேசித்துள்ளோம்
பத்தாவது ஆண்டிற்கும் குடி அரசு மாலையாய் இல்லாமல் “புரட்சி” மாலையாகவும், ''பகுத்தறிவு'' மாலையாகவும் வெளியாக்க வேண்டி ஏற்பட்டுவிட்டதால் அவ்விரண்டின் பேரால் உள்ள மலர்களை 10 வது ஆண்டு மாலையாக வைத்துக் கொண்டு இப்போது குடி அரசு பதினோறாவது ஆண்டு மாலையாக இதைப் பிரசுரிக்கின்றோம்.
குடிஅரசு தோன்றிய காலம் முதல் நாளது வரை அது எப்படிப்பட்ட கொள்கையுடன் நிலவி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும், குடி அரசு இந்த பதினோறு வருஷ காலத்தில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும் வாசகர்களுக்கு ஞாபக மூட்ட வேண்டியதில்லை யென்று கருதுகிறோம்
அது 1925 வருஷம் மே மாதம் 2 தேதியில் திருப்பாதிரிப் புலியூர் ஸ்ரீலஸ்ரீசிவ ஷண்முக மெஞ்ஞான சிவாச்சாரியார் சுவாமிகள் என்பவர்களால் துவக்க விழா செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் முதல் மாலை முதல் மலரில்
“தேசம், தேசம் எனக் கூக்குரல் இடுவது நமது நோக்கமன்று” “மக்களுக்குள்சுயமரியாதையும், சமத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்”
என்கின்ற இரு வாக்கியங்களையும் முக்கிய நோக்கமாகக் குறிப்பிட்டு அந்நோக்கம் நிறைவேற்றப்பட குடி அரசு தன்னாலியன்ற அளவு தன் முழு பலத்தையும் உபயோகித்து பாடுபட்டு வந்து இருக்கின்றது
குடி அரசின் ஆசிரியர் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஒரு தீவிர பிரபல காங்கிரஸ் வாதியாயும் ஓத்துழையாமைவாதியாயும் இருந்தவர்.
101 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதற்கு சாட்சியம் என்னவென்றால், அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், மாகாண காங்கிரஸ் வேலைக் கமிட்டிக்கும் பல வருஷங்கள் காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்தார்.
காங்கிரசின் பேரால் பல முறை A.B.C. வகுப்புப் பிரிவுகள் இல்லாத காலத்தில் சிறை சென்றார். அதோடு மாத்திரமல்லாமல் அவர் பேரில் ஏற்பட்ட பல துவேஷ - வகுப்புத் துவேஷ கேஸ்களிலெல்லாம் எதிர் வியாஜ்ஜியமாடாமல் விட்டு விட்டதோடு சர்க்கார் நீதியில் நம்பிக்கை இல்லை என்றும் சொன்னவர்.
தமிழ்நாட்டில் பல சத்தியாக்கிரகத்தையும், சட்ட மறுப்பையும், மரியல் களையும் நடத்தி பல நூற்றுக்கணக்கான தொண்டர்களை சிறைக்கனுப்பினார்.
தமிழ்நாடு காங்கிரசின் சார்பாய் இந்தியா முழுவதற்குமே முதல் முதலாக கதர் ஸ்தாபனம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதற்கு பல வருஷம் தலைவராய் இருந்து தமிழ்நாட்டிலும், மலையாளத்திலும் பல கிளை ஸ்தாபனங்களையும் தன் கையால் திறந்து வைத்தார்.
இரவும் பகலுமாய் வீட்டிலும் பிரயாணத்திலும் இராட்டினமும் கையுமாகவே இருந்து சுற்றிச் சுற்றி அதனால் கையில் வினை ஏற்பட்டு அதற்காக தோழர் காந்தியாரிடமிருந்து கொஞ்ச காலத்துக்கு ராட்டினம் சுற்ற வேண்டியதில்லை என்று தனி விதிவிலக்குப் பெற்றார். மாகாண காங்கிரஸ் மகாநாடுகளிலும், நூற்றுக்கணக்கான ஜில்லா, தாலூகா, கிராம காங்கிரஸ் மகாநாடுகளிலும் தலைமை வகித்திருக்கிறார்.
சர்க்காரால் சுமார் 40, 50-க்கு மேற்பட்ட 144 தடை உத்திரவுகள்
பெற்றிருக்கிறார்.
காங்கிரஸ் ஸ்தாபனங்களாலும், ஸ்தல ஸ்தாபனங்களாகிய முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து ஆகியவைகளாலும் சுமார் 500க்கு மேற்பட்ட வரவேற்புகளும் பத்திரங்களும் பெற்றார்.
இம்மாதிரியான காங்கிரஸ் தொண்டில் தான் மாத்திரம் அல்லாமல், தனது மனைவியார், சகோதரியார், சகோதரர் முதலாகிய குடும்ப அங்கத்தினர்களும் காங்கிரசில் ஈடுபட்டு மறியல் முதலியவைகள் செய்து தோழர் காந்தியார் முதலியவர்களால் தனிப்பட்ட நற்சாக்ஷிப் பத்திரங்களும்
பெற்றிருக்கிறார்.
இவ்வளவு மாத்திரமல்லாமல் தோழர் ராமசாமி அவர்கள் இன்றுள்ள தேச பக்தர்களில் 100-க்கு 90 பேர்களைப் போல தங்கள் பிழைப்புக்கு வேறு மார்க்கம் இல்லாமல் தேச பக்தியை வயிற்றுப் பிழைப்பு வியாபாரமாகக் கொண்டோ அல்லது பல வக்கீல்கள் டாக்டர் ஆகியவர்களைப் போல் தங்கள் தொழில் செல்வாக்கு பெறுவதற்காக தேச பக்தியை ஒரு முதற்படியாய்க்
குடி அரசு - 1935 (2) 102.
கொண்டோ அல்லது தங்கள் தொழில்களில் முன்னேற்றமடைய முடியாது என்று கருதி அதை விட்டுவிட்டு தேசபக்தியின் பேரால் விளம்பரமும் வாழ்வும் பெறலாம் என்றோ மற்றும் பலவித தனிப்பட்ட சுயநலத்தைக் கருதியோ. காங்கிரசில் சேர்ந்தவர் அல்ல என்பதையும் பொது மக்கள் அறியத்தக்க இரண்டொரு உதாரணங்களையும் காட்டிவிட்டு மேல் செல்லுவோம்
அதாவது தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் சேலம் முனிசிபல் சேர்மெனாய் இருக்கும்போது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஈரோடு. முனிசிபல் சேர்மெனாயும், கோவை ஜில்லா போர்ட்மெம்பராயும் தாலுக்கா போர்ட் மெம்பராயும் அரசாங்கத்திற்கு மிகமிக நல்ல பிள்ளையாய் பட்டம்,
நற்சாட்சிப் பத்திரம்ஆகியவைகளுக்குசிபார்சுசெய்யப்பட்டவராயும் இருந்தவர்.
தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் சேலம் சேர்மென் பதவியை ராஜீனாமா செய்த உடன், தோழர் ஈ.வெ. ராமசாமி தனது முனிசிபல் சேர்மென்
பதவி, ஜில்லா தாலூக்கா போர்ட் மெம்பர்கள் பதவி முதலாகியவைகளை ஒருங்கே ஒரே நாளில் ராஜினாமா கொடுத்து விட்டவர்.
அக்காலத்தில் வருஷம் 1000 ரூபாய் இன்கம்டாக்ஸ் (வருமான) வரியாக சர்க்காருக்கு செலுத்தக்கூடிய லாபமுள்ள வியாபாரம் நடத்தி வந்தவர் என்பது மாத்திரமல்லாமல் அவரது வர்த்தகப் புகழையும், திறமையையும் அரசாங்கத்தார் மதித்ததற்கு அறிகுறியாய் முன் கூறப்பட்ட சேர்மென் முதலிய பதவிகளை ராஜீனாமா செய்த பிறகும்கூட அவருக்கு இந்த மாகாண இன்கம்டாக்ஸ் (வருமான வரி) ஆபீஸ் உத்தியோகஸ்த ரல்லாத விசாரணை கமிட்டியில் ஒருவராக இந்தியா கவர்ன்மெண்டாரால். நியமிக்கப்பட்டு அதற்கு தினம் 100 ரூ. படியும், இரட்டை முதல் வகுப்பு பிரயாணச் செலவும் பெற அனுமதிக்கப்பட்டவர்.
ஆகவே இப்படிப்பட்ட நிலையில் இருந்த குடி அரசு ஆசிரியர் இந்த
10 வருஷ காலமாய் காங்கிரசையும், தேசபக்த கூட்டத்தையும் விட்டு விலகி தேசாபிமானப் பட்டத்தையும், தியாகமூர்த்திப் பட்டத்தையும் வெறுத்து இன்று அவற்றைத் தாக்கிப் பாமர மக்களிடையிலும், அரசாங்கத்தாரிடையிலும், அதிருப்தி பெற்று எதிர் நீச்சம் போன்ற கஷ்டமான தொண்டில் ஏன் ஈடுபட்டு இருக்கிறார்? என்பதை முதலில் வாசகர்கள் உணர வேண்டுமாய் ஆசைப்படுகின்றோம்.
என்னவெனில் முதலாவது£- இன்றும் நேற்றும் மாபெரும் தியாகி யென்றும் பாரதமாதாவின் அருந்தவப் புதல்வரென்றும் மகா தீவிரவாதி யென்றும் விளம்பரப்படுத்தப்பட்ட தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களால் காங்கிரஸ் நிதியைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட “தேச பக்தி புகட்டும் ஆச்சிரமமாகிய சேரமாதேவி குருகுலத்தில் கற்பிக்கப்பட்ட ஜாதி வித்தியாசப் பிரிவுகளை ஆச்சிரமத்தைப் பொருத்தவரை கூட ஒழிக்க சம்மதப்படாமலும், ஒழிக்கப்படவேண்டும் என்று காரியக் கமிட்டியில் பார்ப்பனரல்லாதார் ஓட்டு
103 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பலத்தைக்கொண்டு தீர்மானித்தவுடன் தோழர்கள் சி. ராஜகோபாலாச்சாரியார் டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், டாக்டர் டி.வி. சாஸ்திரியார், கே. சந்தானம், என்.எஸ். வரதாச்சாரியார் முதலிய சீர்திருத்தப்! பார்ப்பன "தேச பக்தர்கள்! ராஜினாமாகொடுத்து கமிட்டியில் இருந்து விலகியதும், குருகுல ஆச்சிரமத்துக்கு ஆக தீவிர பிரசாரம் செய்த தோழர் வரதராஜுலு அவர்கள் மீது சில பார்ப்பனர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்ததும் (அது நிறை வேறவில்லை) அதுபோலவே தோழர் ஈ.வெ. ராமசாமி பேரிலும் (அதற்கும்
சிறிது நாள்களுக்கு முந்தியே தோழர் ஈ.வெ.ரா. மாகாண காங்கிரஸ் கமிட்டி தலைவரானவுடன்) தோழர் வ.வே.சு. அய்யர் அவர்களால் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டதுமான காரியங்கள் (அதுவும் நிறைவேறவில்லை) ஒருபுறம் காங்கிரசு பார்ப்பனரிடம் அதிருப்தி ஏற்படச் செய்ததோடு இரண்டாவதாக காஞ்சீபுரம் மாகாண (கான்பரன்ஸ்) மகாநாட்டில் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களால் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானத்தை விஷயாலோசனைக் கமிட்டியிலும் மகாநாட்டிலும் பிரேரேபிக்கவே அனுமதி தராமல் தலைவரின் தனி அதிகாரத்தின் கீழ் எதேச்சாதிகாரமாய் நிராகரிக்கப்பட்டதுமே முக்கிய காரணமாகி அப்பொழுதே தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்த மகாநாடு கூட்டத்திலிருந்து எழுந்து,
'காங்கிரசினால் பொது மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்து விட்டேன்” என்றும்,
''இன்று முதல் ஜாதி ஒழிப்புக்கும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் துக்கும் நான் தனியே நின்று உழைக்கும் வேலையைக் கைக் கொள்ளப் போகிறேன்" என்றும்,
காங்கிரசின் யோக்கியதையையும், அதைக் கைப்பற்றி தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களுடையவும், அவர்களது அடிமைகளுடையவும், கூலிகளுடையவும் யோக்கியதையையும் பாமர மக்கள் உணரும்படி செய்வதையே எனது முக்கிய தொண்டாகக் கொள்ளப் போகிறேன்"
என்றும் சொல்லிவிட்டு சில தோழர்களுடனும் பெருத்த கரகோஷத் துடனும் மகாநாட்டை விட்டு வெளியேறினார்.
அன்று முதல் இன்று வரை அதுபோலவே ஜாதி ஒழிப்புக்கு ஆகவும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்காகவும், குடி அரசும் அதன் ஆசிரியரும் பாடுபட்டு வருவதோடு மற்றும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஆதாரமாய் பயன்படுத்தப்படும் ஜாதி, மதம், கடவுள் தன்மை, எளியோர் வலியோர் தன்மைஆகியவைகளும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும் என்றும் முனைந்து பாடுபட்டு வந்திருக்கின்றது.
இதை நமது வாசகர்கள் அதாவது ஆதியில் இருந்து கவனித்து வருகின்றவர்கள் நன்கு அறிவார்கள்.
குடி அரசு - 1935 (2) 104
இம் முயற்சியின் பயனாக பத்திரிகை பல தடவை சர்க்காரால் ஜாமீன் கேட்கப்பட்டதும், ஜாமீன் தொகையும் ஆயிரக்கணக்கில் கட்டப்பட்டதும், அதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ. ராமசாமியும், அவரது சகோதரி தோழர் கண்ணம்மாளும், அவரது சகோதரர் தோழர் கிருஷ்ணசாமியும்சிறை சென்றதும் பெருந்துகை அபராதமாகவும், செலவாகவும் நஷ்டப்பட்டதும், பத்திரிகையின் பெயர்களையும் புரட்சி என்றும், பகுத்தறிவு என்றும் அடிக்கடி பெயர் மாற்றப்பட்டதும் ஆன காரியங்கள் நடந்ததும் வாசகர்கள் அறிந்ததேயாகும்
இவ்வளவும் தவிர இதன் ஆசிரியர் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் ஐரோப்பா, ஆப்பிரிகா முதலிய நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வந்த பிறகு ரஷ்ய அரசாங்கத்தின் சம்மந்தம் ஈ.வெ.ராவுக்கு இருந்து வருவதாக சந்தேகப்பட்டு அரசாங்க சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டேபிள்கள் ஆகியவர்கள் இன்னமும் எப்போதும் பின் தொடரவும் அவரது நடவடிக்கைகளை எல்லாம் துப்பறிவோர்களைக் கொண்டு கவனிக்கவும், அவரது கடிதப் போக்குவரத்துக்களை எல்லாம் உடைத்துப்
பார்க்கவும் அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் அவரது நண்பர்களான.
சர். ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் போன்றார்களினது கடிதங்களும் கூட உடைத்துப் பார்க்கப்படவும் அவ்வளவோடு நிற்காமல் எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை ஒழித்துவிட வேண்டும் என்று முயற்சித்து ஆட்டுக்குட்டி புலி கதை போல் பழய குப்பைகளைக் கிளறி குற்றம் கண்டுபிடிப்பதும் ஆன காரியங்கள் செய்யப்பட்டிருப்பதோடு சுயமரியாதை இயக்கமே சட்டவிரோதமான இயக்கம் என்று உத்திரவு பிறப்பிக்கவும்
சர்க்கார் தீர்மானித்திருக்கிறார்கள்
இவைகள் எல்லாம் சர்க்காரார் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும் தோழர் ஈ.வெ.ரா.வைப் பற்றியும் தப்பபிப்பிராயம் கொண்டும், சுயமரியாதை இயக்கம் மக்களை பலாத்காரத்தில் கொண்டு போய்விடும் என்றும், அது சட்ட விரோதமாய் நடக்க மக்களைத் தூண்டுகின்றது என்றும் கருதியதால் தான் இப்படிச் செய்கிறார்கள் என்று நாம் கருதி சுயமரியாதை இயக்கத்தில் பலாத்காரமோ சட்டவிரோதமாய் நடக்க மக்களைத்தூண்டுவதோ ஆகிய காரியம் இல்லை என்றும், அதன் கொள்கைகள் இன்னது இன்னதுதான் என்றும் விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டும் சர்க்கார் அதையும் நம்பாமல் மறுபடியும் முன் போலவே தொந்திரவுகள் கொடுத்து வருகிறார்கள் என்பதை இச்சமயத்தில் வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டி இருக்கிறது
சு.ம. இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இது வரையிலும் எந்த சமயத்திலும் சர்க்காருக்கு விரோதமாக சட்ட மறுப்போ அல்லது சட்ட விரோதமான காரியமோ செய்வது என்று ஒரு நாளும் தீர்மானித்ததில்லை, யெவரும் பேசியதுமில்லை என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
அதில் தீவிர உணர்ச்சி உள்ள வாலிபர்கள் பலர் இருக்கிறார்கள். என்றாலும் பொருப்புள்ளவர்கள் என்று சர்க்காரால் கருதக் கூடியவர்களாகவே
105 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பல பெரியோர்களும் இருக்கிறார்கள் என்பதோடு அப்படிப்பட்டவர்கள் இன்னமும் சம. சங்க ஸ்தாபனத்துக்குத் தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும்
இருந்து வருகிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே.
நிற்க ம. இயக்கமோ, குடி அரசோ சட்டவிரோதமான பொதுவுடமைப் பிரசாரம் செய்து வந்தன என்று சொல்லப்படுமானால் பொதுவுடமைப் பிரசாரம் சட்ட விரோதமானது என்று எப்பொழுது சர்க்கார் உத்திரவு பிறப்பித்தார்களோ அப்பொழுது முதலே அவ்வித பிரசாரமானது எங்கு இருந்தாலும் யார் செய்தாலும் நிறுத்தப்பட வேண்டும் என்பது ஆக அங்கத் தினர்களுக்கும் தெரிவிக்கும் முறையில் குடி அரசிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டாய் விட்டன. ஏனெனில் பொதுவுடமைக் கொள்கை கூடாது என்பதாக அல்லா விட்டாலும் சர்க்கார் உத்திரவுக்கு விரோதமாக செய்யக் கூடாது என்கின்ற காரணத்தையே முக்கியமாய்க் கொண்டு இம்மாதிரி செய்யப்பட்டதாகும் ஏனெனில்சுயமரியாதைஇயக்கம் பலவித அபிப்பிராயமுடையவர்களது கூட்டுநவையும் அனுதாபத்தையும் ஆதரவையும் கொண்டிருப்பதாலும் அது அனேக விஷயங்களில் பெரியதொரு மாறுதல் செய்ய வேண்டிய அவசியத்துக்கு உட்பட்டு இருப்பதாலும் அதை சர்க்காருக்கு விரோதமான. இயக்கம் என்பதாக ஆக்கக் கூடாதென்று கருதியேசட்டவரம்பிற்கு உட்பட்டதாக ஆதி முதல் கொண்டே நடத்தப்பட்டு வருகின்றது
பல தோழர்களுக்கு சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடப்பது என்பது அவமானமாகவோ, பயங்காளித்தனமாகவோ தோன்றலாம். என்றாலும் அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எவ்வித நிபந்தனையையோ, நிர்பந்த்தையோ சுமத்த ஆசைப்படவில்லை
ஆனால் அப்படிப்பட்டவர்களை ஒன்று மாத்திரம் கேட்டுக் கொண்டிருக் கின்றோம். அதாவது சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சட்டமீறுவதோ, சட்டத்தை மறுப்பதோ, சர்க்கார் உத்திரவை மீறுவதோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதேயாகும்.
காங்கிரசை விட - அதன் ஒரே தலைவரான காந்தியாரை விட சட்ட மீறுதலில் - சர்க்கார் உத்திரவுகளை அலட்சியம் செய்வதில் விளம்பரம் பெற்றவர்கள் யாருமில்லை.
அந்தப்படி யாராவது இருப்பதாகச்சொல்லப்படுமானால் அவர்களும் காங்கிரசையும், காந்தியாரையும் பின்பற்றினவர்களாகவே தான் இருக்கக் கூடும்.
அப்படிப்பட்ட 'வீர' ஸ்தாபனமும் 'வீரர்'களும் “சட்ட மறுப்பை விட்டு. விட்டோம் சட்டங்களை மீறாமல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து எங்களது கிளர்ச்சிகளைச் செய்து கொள்ளுகிறோம்'” என்று உலகமறிய தீர்மானங்கள் செய்து சட்டசபைக்குள் புகுந்து ராஜ விஸ்வாசப் பிரமாணமும் செய்து சட்டம் செய்கின்ற வேலையிலும் முனைந்து இருக்கிறார்கள்.
குடி அரசு - 1935 (2) 106
அவ்வளவோடு மாத்திரமா? அதைவிட வீரதீரர்களான சமதர்மவாதிகள். என்பவர்கள் - மேல்நாடெல்லாம் சுற்றுப் பிரயாணம் செய்து விட்டு வந்து ரஷியாவின் திக்கு நோக்கித் தெண்டனிட்டு கொண்டு லெனினை உள்ளக் கோவிலில் வைத்து மார்க்சின் உபதேசங்களை மந்திரமாய் ஜபித்துக் கொண்டிருப்பவர்கள் ராமராஜ்ஜியத்தை விரும்பும் - வருணாச்சிரமத்தை ஆதரிக்கும் - பழயதைக் காப்பாற்றும் காங்கிரசுக்கு பக்தர்களாய் - கதர் வேஷதாரிகளாய் இருந்து வருவது யாவரும் அறியாததல்ல.
மேலும் அவர்கள் சட்ட மறுப்பைக் கைவிட்டதாகவும், சட்டத்துக்கு அடங்கி நடப்பதாகவும், அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்தும் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்தும் இந்த சட்டசபையில் வீற்றிருப்பதையும்
யாரும் அறியாததல்ல.
இதனால் எல்லாம் அந்த ரஷியவாதிகள் - சமதர்மவாதிகள் என்பவர்கள். இன்று அவமானமடைந்தவர்களாகவோ கோழைகளாக ஆகிவிட்டவர் களாகவோ யாராலாவது மதிக்கப்படுவதாய் நாம் காண முடியவில்லை ஆகவே சுயமரியாதை இயக்கம் சட்டத்திற்கு மீறியதல்லவென்றும், சட்டத்தை மறுப்பதல்லவென்றும் சொல்லிக் கொள்ளுவதால் எந்த சுயமரியாதைக்காரரும் அவமானப்பட வேண்டியதில்லை என்பதற்காகவே இதை எடுத்துக் காட்டுகின்றோம் இந்தியாவிற்கு சிறப்பாகத் தென் இந்தியாவிற்கு ஜாதி வித்தியாசங்கள் ஒழிக்கப்படுவதும் சட்டபூர்வமாக இது வெற்றி பெறும் வரை சமூக எதிர்ப்பையும் இழிவையும் சமாளிக்க அரசாங்கத்தின் மூலம் அரசியல் உரிமை ஸ்தாபனங்களில் பேதப்படுத்தப்பட்டவகுப்புகள்விகிதாசார உரிமைகள். பெற பாடுபடுவதும் ஒருபெரும் சமதர்மப் புரட்சியாகவே நாம் கருதுகின்றோம்.
இந்த கருத்தினாலேயே குடி அரசு ஆசிரியர் காங்கிரஸ் கூட்டத்தை
விட்டு வெளி வந்தது முதல் நாளது வரை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் திற்காகவும் ஜாதி, மத வித்தியாசத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அசெளகரியங் களை போக்குவதற்கு ஆகவும் ஏற்படுத்தப்பட்ட தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சியாரின் ஒத்துழைப்பை ஏற்றும் அவர்களுக்கு அதன் கொள்கை விரோதிகளால் கஷ்டமும், தொல்லையும் ஏற்படுத்தப்பட்ட காலங்களில் எல்லாம் கூடுமான அளவு ஓத்துழைத்து உதவி புரிந்தும் வந்திருப்பதுடன் குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் அந்தப்படியே செய்து வந்திருக்கிறது - இன்றும் செய்து வருகின்றது என்பதையும் வாசகர். களுக்கு ஞாபகமூட்டுகிறோம்
சமூக வாழ்க்கையில் சமதர்மம் முறை ஏற்படாமல் பொருளாதாரத் துரையிலும் அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான காரியமென்றோ முடியக் கூடிய காரியம் என்றோ நம்மால் கருத முடியவில்லை
107 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
குறுகலான வழியில் விரிசலான வண்டியை நடத்துவது வண்டிக்குத் தான் பெரிய நாசத்தை விளைவிக்கும். ஆகவே சமுதாயமாகிய வழி விரிவடைந்து செப்பனிடப்பட்டாலல்லாமல் பொருளாதார சமத்துவமாகிய வண்டியை சிறிதும் நடத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது
அபிப்பிராய பேதம் என்பது இயற்கையேயாகும். ஆதலால் இதற்கு மாறுபட்ட அபிப்பிராயம் யாருக்கும் ஏற்படாது என்றோ, ஏற்படக்கூடாது என்றோ நாம் சொல்ல வரவில்லை.
ஆனால் நமது அபிப்பிராயம் இதுவென்றும் இந்த அபிப்பிராயத்தையே இதுவரை சுயமரியாதை இயக்கம் செயலில் கொண்டு வந்திருக்கின்றது என்றும் இந்த வரையரைக்குள்ளாக இருந்துதான் மற்றும் பல அபிப்பிராயங்களையும் தெரிவித்து வந்திருக்கின்றது என்றும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மற்றும் ஆஸ்திக நாஸ்திக விஷயங்களில் இரு அபிப்பிராயக்காரர் களுக்கும் இயக்கத்தில் இடமிருந்து வந்தாலும் இயக்கம் பெரிதும் ஆஸ்திகத்தை பிரசாரம் செய்யாமலும் செய்வதை ஆதரிக்காமலும்
அனுமதிக்காமலும் இருந்து வந்திருக்கின்றது
மற்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆஸ்திகர்கள் பலர் நடந்து கொண்டு வந்த காரியங்களும் பெரிதும் நாஸ்திகமாகவே அதன் எதிரிகளாலும், பல பாமர மக்களாலும் கருதப்பட்டு வந்திருக்கின்றன.
நாஸ்திகம் சட்ட விரோதமானது என்று சர்க்காரால் தீர்மானிக்கப்படும் வரை இந்த நிலையிலிருந்து இயக்கம் மாறுபடவேண்டிய அவசியமில்லை என்பதே நமது அபிப்பிராயம் என்பதோடு இயக்கத்தில் அங்கத்தினர். களாகவும், அனுதாபிகளாகவும், ஆதரவாளர்களாகவும் இருக்க ஆஸ்த்திகர் களுக்கும் உரிமை உண்டு என்பதும் நமதபிப்பிராயமாகும்
எப்படி இருந்தாலும் மதவாதிகள், கடவுள்வாதிகள், செல்வவான்கள், மேல் ஜாதிக்காரர்கள் ஆகியவர்களுடைய புன்சிரிப்பையும், ஆதரவையும்
நாம் எப்படி பெற முடியாதோ அதுபோலவேதான் அரசாங்கத்தாருடைய ஆதரவையும் பெற முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது என்றாலும் அதற்காக நாம் தாழ்ந்தோ நமது கொள்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு
பின் செல்லுவதோ ஆகிய காரியங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் எதுவும் நமக்கு ஏற்பட்டுவிடவில்லை என்பதே நமது உறுதியான அபிப்பிராயம். இந்த நோக்கத்துடனேயே குடி அரசு இப் பத்து வருஷ காலமாக வேலைசெய்து வந்து பதினோறாவது ஆண்டில் புகுந்திருக்கிறது என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 18.08.1935
குடி அரசு - 1935 (2) 108
சபாஷ் திவான்பகதூர்
சென்னைக்குச் சமீபத்தில் காங்கிரஸ் பிரசாரத்துக்காக வரப்போகும் காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷன் சபையில் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்டஒரு தீர்மானத்தை தோழர் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் எதிர்த்துத் தோற்கடித்தார் என்கின்ற சேதியைக் கேட்டு மிகுதியும் மகிழ்ச்சியடைந்ததோடு திவான் பகதூர் அவர்களின் தீரத்துக்காக மெச்சி அவரை மிகுதியும் பாராட்டுகின்றோம்
தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் நாமறிந்த வரை ஒரு துணிந்த தியாகியேயாவார். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப் போலவே காங்கிரசில் சேர்ந்ததின் பயனாய் உண்மையான கஷ்டமும் நஷ்டமும் அடைந்தவர்.
தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம் அவர் அதிபுத்திசாலியாய் இருக்கும்காரணத்துக்காகவும், அதிகயுத்திசாலியாய் இருக்கும் காரணத்துக்காவும் காங்கிரஸ்காரர்கள் பலருக்கே அதிருப்தியும், வெறுப்பும் உண்டாகி யிருக்கலாம். ஆனால் ராஜேந்திரரிடம் அப்படி இருக்காது. எப்படியோ இவ்விருவர்களது வாழ்வானது அவர்களுக்கும் பிரயோஜனப்படாமல், பொது மக்களுக்கும் பிரயோஜனப்படாமல் பெரும் ஏமாற்றமாய் போய்விட்டதே ஒழிய மற்றப்படி பெரியார்களிலேயே சேர்க்கப்பட வேண்டியவராவார்கள் என்று சொல்லலாம்
அப்படிப்பட்டவர்களில் ஒருவரான தோழர்ராஜேந்திரருக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுப்பதில் பெருந்தவறு ஒன்றும் ஏற்பட்டு விடாது என்பது நமக்குத் தெரிந்தது போலவே திவான் பகதூர் ராமசாமி முதலியார் அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை
ஆனால், இந்நாட்டுப் பார்ப்பனரல்லாதார் சமூக ஸ்தாபனத்துக்கு விரோதமாகவும், அந்த ஸ்தாபனத்தின் மீதும், அந்த ஸ்தாபன பிரமுகர்களாய் இருப்பவர்கள் மீதும் பாமர மக்களுக்கு வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படியான விஷத்தை இந்நாட்டுப் பார்ப்பனர் ராஜேந்திரருக்கு ஊட்டி அதை இங்கு வந்து கக்கி விட்டுப் போகும்படி செய்வதற்காகவுமே அவரை இங்கு கூட்டி வருகிறார்கள்.
199 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இது போலவே நமது பார்ப்பனர்கள் அனேக தடவைகளில் வெளிநாட்டுக்காரர் யாராவது ஒருவரைப் பிரமாதமாக விளம்பரப்படுத்தி இங்கு அழைத்து வந்து இந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்குக் கேடுண்டாகும்படியான காரியத்தைச் செய்திருக்கிறார்கள்.
ஆனதினால் அதைக் கண்டிக்கும் முறையில் அல்லது வெறுக்கும் முறையிலேயே சென்னை மாகாண வாசிகள் பேராலோ சென்னை நகர எல்லா மக்களின் பேராலோ அவருக்கு வரவேற்பு அளித்து அவரது வரவின் காரணத்தை எல்லா மக்களும் ஒப்புக் கொண்டதாகச் செய்யப்படும் சூட்சியைத் தகர்க்கவே தோழர் ராமசாமி முதலியார் வரவேற்பை எதிர்த்திருக்கிறார் என்பதும் இது மிகவும் சரியான காரியம் என்பதும் நமதபிப்பிராயமாகும்
தோழர் ராமசாமி முதலியாரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்ய இதை ஒரு காரியமாக பார்ப்பனர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளக் கூடும்.
ஆனால் தோழர் ராமசாமி முதலியார் எப்படி நடந்து கொண்டாலும் ஒரு நாளும் பார்ப்பனர்கள் அவரை நல்ல பிள்ளை என்று சொல்லப் போவதில்லை.
தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு தோழர் சர்.ஆர்.கே.ஷண்முகம் ஒன்று தோழர் திவான் பகதூர் இராமசாமி முதலியார் ஒன்று ஆகிய இருவர்களும் தேவர்" களுக்கு எப்படி இரணியன்! “ராவணன்” ஆகியவர்கள் கடும் பகையாளிகளாகிய “ராக்ஷதர்களோ” அது போன்ற
கடும் பகையாளர்களாகிய ராக்ஷதர்களாவர்கள்.
ஆனால் இவர்கள் இருவர்களும் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள். எப்படி சாகாமல் பாஷாணத்தையே தின்று ஜீரணித்துவிடுமோ அதுபோல் இந்த பார்ப்பனர்களின் விஷக் கடலில் இருந்து நீந்தித் தப்பித்துத்தான் வருகிறார்கள்.
ஆனால் தோழர் சர். ஷண்முகம் போல் திவான் பகதூர் ராமசாமிக்கு சில சமயங்களில் தைரியம் இருப்பதில்லை. என்னவெனில் மதங்கள். புராணங்கள் ஆகியவற்றிற்கு நல்ல பிள்ளையாக நடக்காவிட்டால் எதாவது ஆபத்து வருமோ எனப் பயப்பட்டு வருவதுண்டு. என்றாலும் துணிந்து காங்கிரஸ் தலைவருக்கு சென்னைக் கார்ப்பரேசனில் வரவேற்பு கொடுக்க முடியாது என்று சொன்னதை மிகுதியும் பாராட்டுவதோடு இதை மற்ற ஸ்தல ஸ்தாபனங்களும் பின்பற்ற தைரியமடைய வேண்டும் என்று விரும்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 18.08.1935
குடி அரசு - 1935 (2) 110
மறைமலையடிகவின்
““அறிவுரைக்கொத்து??
*“விடுதலை??யின் அபிப்பிராயம்
சில நாட்களாக சுயநலக் கூட்டத்தாரிற் சிலர், மறைமலையடிகளின் “அறிவுரைக்கொத்து" என்ற நூல் சென்னை சர்வகலாசாலை 'இண்டர்மிடியேட்' வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகமாக வைத்திருப்பது கண்டு, அழுக்காறு கொண்டு, அற்பத்தனமான கிளர்ச்சி செய்து வருவதை நமது வாசகர்கள்
அறிவார்கள். அவர்களுடைய முக்கியமான வாதம், அடிகள் தம்முடைய “தமிழ்நாட்டவரும், மேல்நாட்டவரும்” என்ற ஒரு கட்டுரையில் பிராமணர் களுடைய குற்றங் குறைகளைப் பற்றிக் கூறியிருக்கிறார்கள் என்பதாகும் பிராமணர், பிராமணரல்லாதார், சைவர், வைணவர், மாத்துவர் முதலிய
சாதி, சமய வகுப்பினர்கள், பெரும்பாலான ஏழை மக்களின் வறுமையையும் அறியாமையையும் நீக்குவதற்கு வேண்டியன செய்யாமல் வாளா இருப்பது கண்டு, அடிகள் மனம் புழுங்கி, அவர்களைக் கண்டித்து எழுதியிருக்கிறார்கள்.
சில விஷயங்களில் பிராமணர்களைவிட பிராமணரல்லாதார் மிகக் கொடியரா யிருக்கிறார்கள் என்றும் அடிகள் அடித்துரைத்துக் கூறியிருக்கிறார்கள் இவ்வுண்மையை நமது வாசகர்கள் அறியும் பொருட்டும், சுயநலக் கூட்டத்தாரின் கிளர்ச்சியினால் ஏமாறாமலிருக்கும் பொருட்டும், கிளர்ச்சியின். காரணமான “தமிழ்நாட்டவரும், மேல்நாட்டவரும்'' என்ற கட்டுரையை “விடுதலையில் பிரசுரிக்கிறோம். (அது மற்றொரு பக்கம் பார்க்க) அதைப்
படிக்கும் ஒவ்வொருவருக்கும் நம் நாட்டினருடைய முற்போக்குக்குத் தடையான குற்றங்களிவை யென்பதும், மேல்நாட்டவரிடத்திலிருந்து நம்மனோர் அறியவேண்டிய படிப்பினைகளிவை யென்பதும் புலனாகும். இப்படிப்பட்ட உயரிய நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரையைச் சிலர் கடிந்தெழுதுவது எவ்வளவு அற்பத்தனமான காரியம்! தங்களுடைய குற்றங்களைப் பிறர் சொல்லுதலும் கூடாது என்ற இறுமாப்புடைய கூட்டம் எக்காலத்தில்தான் திருந்தும்? சென்னை சர்வகலாசாலையைப் பொருத்தமட்டில், மறைமலையடிகளின் நூலைப் பாடப்புத்தகமாக வைத்தல் கூடாதென்ற
கிளர்ச்சி எங்ஙனம் முடியப்போகிறது என்ற கேள்வி நிகழுகின்றது “சிண்டிகேட்!” என்ற சர்வகலாசாலை நிர்வாகக் கழகத்தார் அந்நூலைப்
ம ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பற்றிய பிரச்சினையை பாடப்புத்தகமாக வைத்த கழகத்தின் யோசனைக்கு அனுப்பியுள்ளார்கள். சமூக சீர்திருத்தம், அறிவு வளர்ச்சி, மக்கள் முன்னேற்றம் முதலிய உன்னத எண்ணங்களைக் கொண்டு எழுதப்பட்ட “அறிவுரைக் கொத்து” என்ற நூலை, பாடப் புத்தகமாக வைத்த பிறகு, சுயநலக் கூட்டத்தாரிற்
சிலரின் கிளர்ச்சிக்குப் பயந்து, அதை விலக்குவார்களானால், அக்கழகத் தின்மேல் தமிழ் நாட்டார் வைத்துள்ள மதிப்பு மிகவும் குறையும் என்பதில்
ஒரு சிறிதும் ஐயமில்லை.
குடி அரசு - கட்டுரை - 18.08.1935
குடி அரசு - 1935 (2) 112
சென்னை கலாசாலைகவில்
பார்ப்பணராதிக்கம்
சென்னையிலுள்ள உயர்தரக் கலா சாலைகளான தொண்டை மண்டலம் துலுவ வேளாளர் உயந்தரக் கலாசாலை, இந்து இயாலாஜிகல் ஹைஸ்கூல், பச்சையப்பன் கல்லூரி முதலியவிடங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கை வருமாறு;-
தொண்டமண்டலம் துலுவ வேளாளர் உயர்தர கலாசாலை
தலைமை உபாத்தியாயர் பார்ப்பனர். பி.ஏ.எல்.டி. பாஸ் செய்த உபாத்தியாயர் 1ல் 12 பார்ப்பனர், 1 பார்ப்பனரல்லாதார், சக்கண்டரி இரேட் பாஸ் செய்த உபாத்தியாயர் 27ல் 22 பார்ப்பனர், 5 பார்ப்பன ரல்லாதார்கள். பண்டிதர்கள் 7ல் 3 பார்ப்பனர், 4 பார்ப்பனரல்லாதார், டிரில், டிராயிங் உபாத்தியாயர்கள் 2ல் 2 பார்ப்பனர், 2 பார்ப்பறைல்லாதார். இங்கு மொத்தம் 52 உத்தியோகஸ்தர்களில் 40 பார்ப்பனர் 12 பார்ப்பனல்லாதார்.
இந்து தியாலாஜிக்கல் ஹைஸ்கூல் தலைமை உபாத்தியாயர் பார்ப்பனர். பி.ஏ.எல்.டி. பாஸ் செய்த உதவி உபாத்தியாயர்கள் 14ல் 13 பார்ப்பனர், ஒரு பார்ப்பனரல்லாதார், சகண்டரிகரேட் டிரெயினிங் பாஸ்செய்த உபாத்தியாயர்களில் 19ல்
15 பார்ப்பனர், கீபார்ப்பனரல்லாதார், பண்டிதர்கள் 6ல் 5 பார்ப்பனர், ஒரு பார்ப்பணல்லாதார், டிராயிங், டிரில், கமர்சியல் உபாத்தியாயர்கள்
3ல் 2 பார்ப்பனர், 1 பார்ப்பனரல்லாதார், கிளார்க்குகள் 8ல் சம் பார்ப்பனர்கள்; இங்கு ஆக மொத்தம் 46ல் 39 பார்ப்பனர், 17 பார்ப்பனரல்லாதார்.
பச்சையப்பன் கல்லூமி தலைமை உபாத்தியாயர் பார்ப்பனர். பி.ஏ.எல்.டி. பாஸ் செய்த உதவி உபாத்தியாயர்கள் 19ல் 10 பார்ப்பனர்கள், 6 பார்ப்பனரல்லாதார்கள், பண்டிதர்கள் 6ல் 3 பார்ப்பனர், 3 பார்ப்பனரல்லாதார், புராயிங், புரில், கமர்சியல் உபாத்தியாயர் 7ல் 3 பார்ப்பனர் 4 பார்ப்பனரல்லாதார். இங்கு மொத்தம் 3ல் 17 பார்ப்பனர்கள், 13 பார்ப்பனரல்லாதார்கள்.
1 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
முத்தியாலுப்பேட்டை உயர்தரக் கலாசாலை
தலைமை ஆரியர் பார்ப்பனரல்லாதார். பி.ஏ.எல்.டி. பாஸ் செய்த உதவி ஆரியர்கள் 17ல் 18 பார்ப்பனர், 5 பார்ப்பனல்லாதார், செக்கண்டரி கிரேட் பாஸ் செய்த உபாத்தயாயர்கள் 18ல் 15 பார்ப்பனர்கள்,
3 பார்ப்பனரல்லாதார். பண்டிதர்கள் 17ல் 4 பார்ப்பனர், 7 பார்ப்பன. ரல்லாதார். டிராயிங், டிரில், கமர்சியல் டிரில் உபாத்தியாயர்கள் கம் பார்ப்பனரல்லாதார்கள். கொர்க்குகள் கல் 8 பார்ப்பனர்கள், 2 பார்ப்பனரல்லாதார்கள். இதில் மொத்தம் 87ல் 34 பார்ப்பனர்கள், 23 பார்ப்பனரல்லாதார்.
பத்திராதிபர் குறிப்பு இப்பள்ளிக்கூடங்கள் சர்க்காரால் அனுமதிக்கப்பட்டது என்பதுடன். சர்க்காருடைய உதவித் துகையும் பெறக்கூடியதாய் இருந்தால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உபாத்தியாயர்களை ஏற்படுத்த வேண்டுமென்று கட்டாயப் படுத்தசர்க்காருக்கு உரிமை உண்டு என்றும் அவற்றை இதுவரை கல்வி மந்திரி கையாளாமல் இருப்பது ஒரு பயங்காளிதனமென்றோ அல்லது கவலையற்ற தன்மை என்றோ சொல்லாமல் இருக்க முடியவில்லை. அன்றியும் பச்சியப்பா கலாசாலையின் மெம்பர்கள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தையும் அதை ஆதரிக்கும் கட்சிப் பிரமுகர்களாயிருந்தும் பார்ப்பன உபாத்தியாயர்கள் 17ம் பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் 13ம் என்று ஏற்படுத்தி இருக்குமானால், பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற விஷயத்தில் எவ்வளவு அக்கரை காட்டி வருகிறார்கள் என்பதை குறிப்பிட மிகவும் வருந்துகிறோம்.
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 18.08.1935
குடி அரசு - 1935 (2) 114
சம்பளக் கொள்ளை
இன்று நாடெங்கும் படித்த மக்களின் கஞ்சிக்கில்லாத் திண்டாட்டங்கள் நெஞ்சைப் பிளக்கின்றன. இக்காட்சி பாமர மக்கள் திண்டாட்டத்தைப்
பார்க்கும் காட்சியைவிட மிக மிக பரிதாபகரமாகவே இருக்கிறது
படித்த மக்களென்போரும், பாமர மக்களென்போரும் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல்லாதார்களாகவே இருக்கிறார்கள். பாமர மக்கள் என்பார்களிலாவது பலருக்கு பட்டினி கிடந்து பழக்கமுண்டு. பலர் இரண்டு நாள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமையல் செய்கின்றவர்களாகவும் ஒரு நாள் செய்த சமையலில் தண்ணீரை ஊற்றி வைத்து தினம் தினம் அந்தத் தண்ணீரை வடித்து அதில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டு, மறுபடியும் தண்ணீரை ஊற்றிப் பாத்திரத்தை நிரப்பி வைத்து மறு நாளைக்கு அந்த மாதிரியே செய்பவர்களுமாவார்கள்.
ஆனால் படித்தவர்கள் நிலை என்பதோ அப்படி இல்லை. படிப்புக்கு செலவாக வேண்டிய நாள் S.S.L.C. ஆனாலும் குறைந்தது 11 வருஷம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது
இதற்குப் பணமோ பட்டணவாசியானால் 1000 ரூ. முதல் 1500 ரூபாயுக்குக் குறையாமலும் கிராமவாசியானால் 2000 ரூ. முதல் 2500, 3000 ரூபாயுக்குக் குறையாமலும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது
பள்ளிப் பிள்ளையாய் இருக்கும்போது அவர்களது வாழ்க்கையோ அவர்களது வீட்டில் சாப்பாட்டுக்கும், உடைக்கும் எவ்வளவு கஷ்டமாய் இருந்தாலும் அதைக் கவனிக்காமல், பிள்ளைகளுக்கு வேளை வேளைக்குச் சாப்பாடு, நல்ல துணி, செலவுக்குக் காசு முதலியவைகள் தாராளமாய் உதவி, தரித்திரம் ஏழ்மை என்பது இன்னது என்றே தெரிய முடியாமல் செல்வவான் குழந்தைகளோடு ஒன்றாகப் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட பிள்ளைகள் பி.ஏ., எம்.ஏ., அல்லது வேறு காலேஜ் படிப்புகள் படிக்க ஆரம்பித்துவிட்டால், அவர்களது குடும்பம் திண்டாடித் தெருவில் நின்று சுயமரியாதை அற்று வாழ்வதாய் இருந்தாலும், இந்தப் பிள்ளைகளுக்கு மாதம் 35, 40, 50, 60 ரூபாய்கள் வீதம் முக்கிய பட்டணங்களுக்கு அனுப்பி அங்கு ஜமீன்தார் வீட்டுப் பிள்ளைகளுக்கும் குடியானவன் வீட்டுப் பிள்ளைகளுக்கும் வித்தியாசமில்லாதபடி வாழ்க்கை நடத்திப் பழக்கப்பட்டவர்களாவார்கள்.
158 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இந்த மாதிரி பிள்ளைகள் படித்து ஏதோ ஒரு வகையில் தேர்ச்சியோ பட்டமோ பெற்றுவிட்டால் பிடித்தது “சனியன்”கள். கிழிந்த வேஷ்டிகளையும் கிழிந்த சொக்காய்களையும் உடுத்திக் கொண்டு கதவு வைத்த வீட்டு வாசல்களிலெல்லாம் காத்துக் காத்துச் சலித்து இவர்களுக்கு வேலை கொடுக்காதவர்களையும் சிபார்சுக் கடிதம் கொடுக்காதவர்களையும் வைதுவிட்டுப் போவதோடல்லாமல் "ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து பார்ப்பனர்
கட்சி (காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தாலாவது உத்தியோகம் கிடைக்கு”மென்றும், “இந்த கவர்ன்மெண்டு ஒழிந்து சுயராஜ்ஜிய கவர்ன்மென்டானால் உத்தியோகம் வரும்” என்றும், “பணக்காரர்கள் ஒழிந்து விட்டால் யாதொரு குறையும் ஏற்படா'தென்றும், “பிரிட்டிஷ் ஆதிக்கமே இருந்தால் கட்டாயம் வேலை கிடைத்திருக்கும்” என்றும், இன்னும் எப்படி எப்படியோ உளரிக் கொண்டு திரிவதும், அவர்களது வீட்டார் "இந்தப் பிள்ளை பாஸ் பண்ணிவிட்டு வந்தவுடன் பெரிய உத்தியோகத்துக்கு வந்து கலெக்டர்களாகி, ஜட்ஜுகளாகி, மந்திரிகளாகி 4000, 5000 சம்பள மேற்பட்டு ஆயிரக் கணக்காய் வளித்து கொட்டிக் கொள்ளலாம்” என்று கருதி இருந்தவர்கள் ஏமாற்றமடைந்து சிபார்சு கடிதம் வாங்க சிபார்சு பிடிப்பதற்கு ஆளைத்
தேடிக் கொண்டு தெருத் தெருவாய் திரிவது ஒரு புறமும், மற்றொரு புறம் உத்தியோகத்துக்கு ஆள்கள் தேவை என்கின்ற விளம்பரங்களைக் கண்டு பிடிக்க பூதக்கண்ணாடி வைத்து பத்திரிகைகளைத் தேடித் தேடி கண்களைப் போக்கிக் கொண்டு திரிவதும்,
இவற்றையெல்லாம் விட மிக மிகக் கொடுமை என்று சொல்லும்படியாக உத்தியோக வினியோகத்துக்காக, சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்குவிண்ணப்பம் போடவிளம்பரங்கள் பார்த்து, விண்ணப்பம்
தயார் செய்து 16 ரூ. கொடுத்து டாக்டர் சர்ட்டிபிக்கேட் பெற்று 5 ரூபாயோ,
10 ரூபாயோ விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்புவதும், அவர்கள் நேரில் பார்க்க வேண்டுமென்று சொல்லிவிட்டால் மேல் கொண்டு 10 ரூ, 20ரூ சில ஊர்களிலிருந்து போக 30 ரூ வீதம் செலவழித்துக் கொண்டு போய் வெறுமையாய்திரும்பி வருவதுமானகோரக்காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன. வாழைக்குருத்து போன்ற இளம் வாலிபர்கள் -தங்களுடைய உள்ளத்தை வீரத்துடனும், சுயமரியாதையுடனும் வளர்க்கப்பட வேண்டியவர்கள் - ஒவ்வொருவரும் லெனின் போலவும், ஸ்ட்டாலின் போலவும், புரட்சி வீரர்களாகவும், சர்வாதிகார சூரர்களாகவும் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட வேண்டியவர்கள். இந்த மாதிரியாக அலைந்து திரிந்து மனம் உடைந்து காங்கிரசில் சேர்ந்து எலக்ஷன் கூலிப் பிரசாரம் செய்வோமா, ஜஸ்டிசில் சேர்ந்து காங்கிரசின் யோக்கியதையை வெளியாக்கும் கூலிப் பிரசாரம் செய்வோமா, சுயமரியாதையில் சேர்ந்து சிபார்சு கடிதம் பெறும்
கூலிப் பிரசாரம் செய்வோமா என்று எவ்விதக் குறிப்பும் இல்லாமல்,
குடி அரசு - 1935 (2) 116
வாரத்துக்கு ஒரு கட்சி சார்பாய்ப் பேசி 10 நாளைக்குக் கூட ஒரே கட்சியில் இருந்து பார்ப்போம் என்கிற பொறுமை கூட இல்லாமல், மாறி மாறி உளறிக் கொண்டு திரிவதுமான இழிவான நிலைமையில் அவதிப்பட்டுக் கொண்டிருப்ப தானால், இந்த நாட்டுக்கோ ஆட்சித் திறத்துக்கோ என்ன பெருமை இருக்கின்றது என்பது நமக்கு புலப்படவில்லை.
படித்த பிள்ளைகளின் பெற்றோர்கள் படும்பாட்டை இவ்வளவு அவ்வளவு என்று உள்ளபடி எடுத்துச் சொல்ல நமக்குச் சிறிதுகூட சக்தி இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது
இன்று ஜஸ்டிஸ் கட்சி தூற்றப்படுவதும் அதை பல பார்ப்பனரல்லாத வாலிபர்கள் குறை கூறிக் கொண்டு திரிவதும் அரசாங்கத்தைப் பற்றி கண்டபடி உளறிக் கொட்டி வைத்து பாமர ஜனங்களுக்கு அதனிடத்தில் வெறுப்புண்டாகும்படி துஷ்டப் பிரசாரம் செய்யப்படுவதுமான காரியங் களுக்கு முக்கிய காரணம் என்ன என்று பார்த்தோமானால் உத்தியோகம் இல்லாமல் திண்டாடப்படுபவர்களால் ஏற்பட்ட கிளர்ச்சி என்று சொல்லுவதற் கில்லாமல் வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
படித்துவிட்டு உத்தியோகமில்லாமல் திரியும் வாலிபர்களுடைய ஆத்திரமும், கஷ்டமும், கொடுமையான வாழ்வும் ஒருபுறமும் பாமர மக்களில் வேலை இல்லாமல் திண்டாடும் கஷ்டமும், தரித்திரமும், கொடுமையான வாழ்வும் மற்றொரு புறமும் சேர்ந்துவிட்டது
பாமர மக்கள் படும் கஷ்டம் என்னும் நெருப்புக்குப் படித்தவர்களின். வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் நெய்யைப் பார்ப்பனர்கள் என்கின்ற யாக கர்த்தாக்கள் ஆகுதியாக்கிவிட்டு கிளர்ச்சி என்னும், ஓமம் வளர்த்தி நாட்டில் எங்கும் சமாதானம் இல்லாமை என்னும் பலனை உண்டாக்கி வருகிறார்கள். இக் கிளர்ச்சிக்கு பார்ப்பனர்களே முக்கிய ஆதாரக்காரர் என்றாலும் உத்தியோகமின்மையில் ஏமாற்றமடைந்த அறிஞர்
சி.ஆர். ரெட்டி போன்ற சில பார்ப்பனரல்லாதார்களும் அவர்களை ஆதரிக் கிறார்கள் என்பதை மறுக்க முடியாது
இக் கிளர்ச்சிக்கு யார் காரணமாய் இருந்தாலும், அவர்கள் சுயநலத்தோடு செய்கிறார்களா, பொதுநல நோக்கத்தோடு செய்கிறார்களா என்பது ஒருபுறமிருந்தாலும், இக் கிளர்ச்சிக்கு இடம் கொடுக்கும் வேலை யில்லாத் திண்டாட்டத்தை எப்படியாவது ஒழிக்க வேண்டியதே இன்றைய அரளட்சியுடையவும் அரசாங்கத்தின் ஆதிக்கம் பெற்றிருப்பவர்களுடையவும் கடமையாகும் என்பதை நாம் வலியுறுத்திச் சொல்லித்தான் தீருவோம்.
நமது மாகாண ஆட்சியின் ஒரு பாகத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவர் களாகச் சொல்லப்படும் ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனர் தொல்லையால் போதிய பலமின்றி இருக்கிறார்கள் என்பதோடு அவர்களால் ஏதாவது செய்யக்
17 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கூடுமானாலும் செய்ய ஆசைப்பட்டாலும் அதையும் செய்யவொட்டாமல் பல சூட்சிகளைச் செய்து ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைக் கட்டிப் போட்டு பாமரஜனங்களிடம் வசவு கேட்பதற்கு சவுகரியமாய் இருக்கும்படி செய்து வருவதால் அவர்கள் மீதே நாம் எவ்விதப் பழிகளையும் சுமத்த முடியவில்லை.
ஆனால் சர்க்காரார் இந்த மாதிரியான வேலையில்லாத் திண்டாட்டத்தை
ஒழிக்க எவ்வித நல்ல முறையையும் கையாடினார்கள் என்றோ கவலை எடுத்துக் கொண்டு செய்தார்கள் என்றோ சொல்ல முடியாமைக்கு வருந்துவதோடு அரசாங்கமும் இந் நிலைமைக்கு முழுவதும் பொறுப்பானது என்று சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
நமது வீட்டு வாசல் எப்பொழுது பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் கஷ்டப்படுவோர்களாலேயே நிரப்பப்பட்டிருப்பதுடன் நமது வேலையைக்கூட சரிவரச் செய்ய முடியாமல் இக்கூட்டத்தாராலேயே அசெளக்கியப்படுகின்றோம்
நிஷ்காரணமாய் அநேகருடைய விரோதத்துக்கும் நிஷ்டூரத்துக்கும்
எதிர்ப்புக்கும் ஆளாக வேண்டியும் ஏற்படுகின்றது. இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது? எப்படிப் போக்குவது? என்கின்ற கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது நமது அரசாங்கத்தின் முக்கியமான கடமையாகும்
என்று வலியுறுத்திக் கூற ஜனநாயக ஆட்சி செலுத்துகின்றோம் என்று சொல்லிக் கொள்ளும் ஆட்சியில் உள்ள ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு.
இது விஷயமாய் நமது அரசாங்கத்தில் இப்போது நடந்து வரும்
காரியம் எல்லாம் சரியானது என்று சொல்ல முடியவில்லை.
ஏனென்றால் அவசியமில்லாமல் தங்கள் உத்தியோகஸ்தர்களுடைய சம்பளங்களை உயர்த்தி உயர்த்தி மக்களுக்கு உத்தியோக ஆசையும், உத்தியோகப் போராட்டமும் ஏற்படும்படி செய்கிறார்கள். இது அவர்கள். வேண்டுமென்றே செய்யவில்லை என்று சொல்லப்படுமானாலும் அவர்களது நடத்தை இப்பயனை விளைவிப்பதற்கு அனுகூலமாகவே இருக்கிறது என்றாவது சொல்லித் தீர வேண்டும்.
உதாரணமாக இரண்டொரு காரியங்களைக் குறிப்பிடுகின்றோம் இக்காரியத்துக்கு ஜஸ்டிஸ் கட்சி மந்திரியும் ஆதரவாயிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதற்கு வருந்தாமல் இருக்க முடியவில்லை அதாவது ஜில்லா போர்ட் ஆசிரியர்களுக்கு சம்பள கிரேடு ஏற்படுத்தி ஒரு உத்திரவு பிரப்புவித்திருக்கிறார்கள். அதில் BA., LT உபாத்தியாயர்களுக்கு 65 முதல் 100 வரை சம்பளம் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது மிகவும் அதிகமான சம்பளம் என்றும் 40 முதல் 60
ரூ. வரை இருந்தாலே படிக்க வேண்டிய மக்களால் தாங்க முடியாததும் வேண்டுமென்றே அதிகமாய் கொடுக்கப்படுவதாகவும் கருதி வந்திருக்கிறோம்.
குடி அரசு - 1935 (2) 118
முதலாவது, இவர்களால் சொல்லிக் கொடுக்கப்படும் படிப்பானது மக்களுக்குப் பயன்படாதது என்று தோழர்கள் டாக்கூர், ராய், போஸ் முதல் அனேக கல்விக் கடல்களும் கலா ஞானிகளும் சொன்ன உண்மையாகும்
மற்றும் நமது நாட்டு அரசியல் கிளர்ச்சிக்காரர்களும் தோழர்கள். காந்தி முதல் சத்தியமூர்த்தியார் வரை உள்ள காங்கிரஸ்காரர்களும் ஒப்புக் கொண்டதாகும். இந்தப் படிப்பு படித்த மக்களும் 100க்கு 90 பேர்கள் சொந்தப் புத்தி இல்லாதவர்களாகவும், பிறத்தியார் புத்தியைக் கேள்ப்பதற்கு யோக்கியதை அற்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள். இரண்டாவது£- பி.ஏ. எல்.டி.கள் மாதம் 1-க்கு 30 ரூ, 35 ரூ சம்பளத்துக்கு வருவதற்கு அநேகப் பேர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!
அது மாத்திரமல்லாமல் கவர்ன்மெண்டாரால் இவ்வளவு பேர்கள் தான்]... படிக்க முடியும் என்று நிர்ப்பந்தப்படுத்தி இருந்தும் இனி மேலும் சுலபத்தில் யாரும் L.T. படிக்க முடியாதபடி பல தடைகள் அதாவது ““உபாத்தியாயர்களாய் இருந்தவர்கள் தான் 1... வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்'' ஆனால் 1.7. பாஸ் செய்தவர்கள் தான் உபாத்தியாயர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்'' என்று திருவாழ்தான் குதிரைக்கு புல்லுப் போட்ட மாதிரியான உத்திரவு போட்டு சுலபத்தில் LT படிக்க முடியாதபடி தடுத்து இருந்தும், அவர்கள் 30 ரூ, 35 ரூ உத்தியோகத்துக்கு வர கெஞ்சுகிறார்கள் என்பதோடு இந்தச் சம்பளத்துக்கும் தள்ள முடியாததும் சுலபத்தில் சபலத்தை உண்டாக்கக் கூடியதுமான சிபார்சுகள் கொண்டு வரப்படுகின்றன.
தாராளமாய் மக்களை]... படிக்கவிட்டு வகுப்புக்கு பிள்ளைகள் 40, 45 என்று இருப்பதை 20, 22 என்று ஆக்கி சம்பளத்தையும் 35 முதல் 50 என்று ஆக்கினோமானால் கல்வியில் இப்போது இருப்பதைவிட இன்னமும் இரண்டு பங்கு அதிகம் பிள்ளைகள் பட்டம் பெரும்படியாகச் செய்யலாம்
சாதாரணமாக ஒரு வக்கீல் தொழிலுக்கும், உபாத்தியாயர் தொழிலுக்கும் அனேக வித்தியாசமுண்டு. வக்கீல்கள் பெருத்தால் வழக்கு பெருக்கும், வக்கீல்கள் பலரிடம் ஒழுக்கம் இல்லை என்பதோடு அவர்கள் சமாதானத்துக்கு பங்கமானவர்களாகவும் இருக்கிறார்கள். வக்கீல் தொழிலில் ஒரு மனிதன் உண்மைக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமாக வியாபாரிகள் போலும் பொது மக்கள் போலும் நடக்க உரிமை உண்டு என்பார்கள். அப்படிப்பட்ட தொழில் கல்வியை கற்க எவ்வித நிபந்தனையும் இல்லை, பி.ஏ. படித்த எவரும் வக்கீல் ஆகலாம் என்பது சர்க்கார் விதியாகும்.
ஆனால் உபாத்தியாயர் தொழிலில் அப்படி இல்லை, அவர்களால் நாட்டுக்கு எவ்வித தீங்கும் இல்லை, அதிகம் பேர்கள் உபாத்தியாயர் களானால் அதிகம் பேருக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கத்தான் வசதி ஏற்படலாமே ஒழிய வக்கீல்களைப் போல் தீமைகளை விளைவிக்க மாட்டார்கள். அப்படி இருக்க, வக்கீல் தொழிலுக்கு வரைமுறை இல்லாமல்
19 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
யாரையும் படிக்கச் செய்துவிட்டு வாத்தியார் தொழிலுக்கு வரையரை நிர்ப்பந்தங்கள் தடைகள் ஏற்படுத்துவது என்றால் அதில் ஏதாவது இரகசியம் இருக்கத்தான் வேண்டும் என்று நினைக்க இடமேற்படுகின்றது
தவிர, உபாத்தியாயர் படிப்புக்கு வேறுவிதமான கஷ்டமும் இருப்பது அர்த்தமற்றதாகும். அதாவது ஒரு பி.ஏ. படித்தவர் உபாத்தியாயர் படிப்புக்கு விண்ணப்பம் போட 3 ரூபாய் கட்ட வேண்டும். 180 கேண்டிடேட்டுகளே சேர்க்கப்படுவார்கள் என்றால் 1500 பேர் 2000 பேர் விண்ணப்பம் போடுகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 3 ரூ வீதம் 5000 அல்லது 6000 ரூ. வசூலிக்கப்படுகின்றது. தெரிந்தெடுத்து சேர்த்துக் கொண்ட கேண்டிடேட்டுகள். போக மீதி பேர்கள் அடுத்த வருஷத்துக்கு விண்ணப்பம் போட வேண்டு மானால் மறுபடியும் 3 ரூபாயுடன் போட வேண்டுமாம்
இது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை அரசாங்கம் கவனிக்க வில்லை என்றால் அது மிகவும் பரிதபிக்க வேண்டிய காரியமல்லவா? இப்படியிருக்க உபாத்தியாயர்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் 100க்கு 30 பிள்ளைகள் 40 பிள்ளைகள்கூட பாஸ் செய்வதில்லை. இதுவும்கூட அந்த வகுப்பின் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் வடிகட்டி பகுதி பேர்கள் முக்கால்வாசி பேர்களை நிறுத்தி அனுப்பியும் இந்த கதி அடைகின்றன என்றால் இன்னும் சில பள்ளிகளில் 100க்கு 20 வீதம் 25 வீதமே பாசாக்கப்படுகிறார்கள் என்றால் இந்தக் கல்வி நிலைக்கும், பொருப்பற்ற நிலைக்கும் யார் பொறுப்பாளி என்பது ஒருபுறமிருக்க இதை ஏன் மாற்றியமைக்கக் கூடாதென்று கேட்கின்றோம்.
மற்றும் உலகில் மற்ற எல்லாத் தொழிலுக்கும் ஒரு நிபந்தனை உண்டு.
வக்கீலுக்கு எத்தனை கேசு ஜெயிக்கப்படுகிறது? என்பதும் போலீசுக்கு எத்தனை குற்றம் கண்டுபிடிக்கப்படுகிறது? என்பதும் ஜட்ஜிக்கு எத்தனை அபீல்களில் தீர்ப்பு மாறுதல் அடையவில்லை? என்பதும் இப்படியே பல வேலைகளுக்கும் யோக்கியதாம்ச பரீக்ஷை உண்டு.
உபாத்தியாயர்களுக்கு ஒரு பரீகைஷயும் கிடையாது. ஒரு பொறுப்பும் கிடையாது. பையன் பாஸ் செய்தால் வாத்தியாயர் கெட்டிக்காரர். பெயில் ஆகிவிட்டால் பையன் முட்டாள் என்பதுடன் பொறுப்பு தீர்ந்து விடுகிறது
நிற்க, இந்த செலவுகள் ஏழைப் பெற்றோர்களின் தலையிலேயே சுமரும்படி வைத்திருப்பதால், இதனால் படிக்க முடியாமல் ஏற்படும் கஷ்டம் எவ்வளவு என்பதைக் கவனிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்
இப்படி ஏற்பட்டதற்குக் காரணம் எல்.டி. படித்த உபாத்தியாயர்கள் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாய் இருப்பதால் கல்வி இலாக்காவில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்து வந்ததால் என்பதல்லாமல் வேறு என்ன. காரணம் என்பது விளங்கவில்லை
குடி அரசு - 1935 (2) 120
உபாத்தியாயர்கள் சுகமாய் கவலையற்று சாப்பிடும்படியான சம்பளம் கொடுக்கப்பட வேண்டாமா? என்று கேட்கலாம். ஆனால் பிள்ளைகளின் தகப்பனாரின் நிலை, அவர்களின் வரவு, படிக்க வேண்டிய செளகரியம் ஆகியவைகளைக் கவனிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
ஒரு நல்ல குடும்பத்துக்கு மாதம் 40, 50 ரூபா போதாதா?
ஆடுகளின் பாதுகாப்புகளைக் கவனித்தால் நரிகளின் கதி என்ன ஆவது என்ற கேள்வி நியாயமானதாகுமா? என்று கேட்கின்றோம் கல்வியை அதிகப்படுத்த வேண்டுமென்கின்ற கூக்குரலுக்கு மத்தியில் 100க்கு 8 பிள்ளைகளே படித்திருக்கிறார்கள் என்கின்ற நாட்டில், இம்மாதிரியாக கல்விக்குத் தடை ஏற்படும்படியான காரியங்கள் சர்க்காரால் செய்யப்பட்டால் - ஸ்தல ஸ்தாபனங்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தப் படுமானால் கல்வியைப் பற்றிய சர்க்கார் எண்ணத்தை எப்படிப் பாராட்ட முடியும் என்று கேட்கின்றோம்.
நிற்க, மற்ற இலாக்காக்களிலும் சம்பளங்கள் மனம் பதறும்படியாகவும் சுலபத்தில் சபலமடையக்கூடிய பலவீனத்தைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது. ஏன் இச் சம்பளங்களைக் குறைக்கக் கூடாது என்பதற்கு
சர்க்கார் சரியான சமாதானம் சொல்லவே இல்லை:
வெளிநாட்டில் இருந்து வரும் வெள்ளைக்கார அதிகாரிகளின் சம்பளம் இந்தியர்கள் சம்பளத்தைவிடக் கொஞ்சம் அதிகமாய் இருக்க வேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் எப்பொழுதுமே வந்துதான் ஆக வேண்டுமா? என்ற கேள்விக்குச் சரியான விடை இல்லாமல் தான் இருந்து வருகின்றது.
இது ஒருபுறமிருக்க, சில உத்தியோகங்களுக்கு வெள்ளைக்காரர்கள் சம்பளமே இந்தியர்களுக்கும் ஏன் கொடுக்கப்பட வேண்டும்? என்பது விளங்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் பட்டினி கிடந்து திண்டாடவும் பத்து லட்சக்கணக்கான படித்த நாகரீகம் பெற்ற மக்கள் என்பவர்கள் உத்தியோகம் இல்லாமல் திண்டாடவும் இவர்களால் நாட்டில் சமாதானம் இல்லாமல், பல தீங்குகளும், தொல்லைகளும் விளையும்படியான காரியங்கள் தொடர்ந்து நடைபெறவுமாய் இருக்கிறதுமான காரியம் ஒரு நாகரீக ஆட்சிக்கு அழகாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்
மந்திரிகள் சம்பளம் மிக மிக அக்கிரமமானதோடு அது கிரிமினல் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் அச்சம்பளமே இந்தியாவில் நல்ல அரசாட்சிக்கு இடமில்லாமல் செய்து வருகின்றது
நாய்கள் எச்சில் இலைக்கு சண்டை போட்டுக் கொள்வதுபோல் ஏழை மக்கள் தினம் 2 அணா 3 அணா கூலி வேலைக்கு சண்டை போட்டுக் கொண்டு பட்டினி கிடக்கும் போது, ஜனத் தலைவர்கள், தேச பக்தியாளர்கள் 11௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மீ” 4000, 5000 ரூ. உத்தியோகங்களுக்கு சண்டை போட்டுக் கொண்டு அரசாங்கமும் சரிவர நடத்தப்பட முடியாமல் - ஏழைகளின் உண்மையான நிலையும் இன்னதென்று அரசாங்கம் அறிய முடியாமல் செய்யப்பட்டால்
இக் கொடுமைகளை எப்படி எடுத்துச் சொல்லாமல் வாய் மூடிக் கொண்டு இருக்க முடியும் என்று கேட்கின்றோம்.
சம்பளக் கொள்ளை ஆட்சியின் பயன் என்று சொல்ல இடமிருக்கக் கூடாது என்பதே நமது ஆசை. சம்பளம் குறைந்தால் ஏழைப் பணக்காரத் தன்மை ஏராளமாய் குறைந்து விடும்.
கொஞ்சம் கொஞ்சமாக தொழில் முறைகள் விர்த்தியாகி, விவசாய முறைகள் விர்த்தியாகி ஜனங்களுக்கு செளக்கியமும் தாராளமாய் வேலையும் கிடைக்கக்கூடும்
கேவலம் ஒரு மணிக்கு ஒரு காசுகூட கிடைக்க வழியில்லாததும், கைத்தொழில் முறையையும் ஏழைகள் முற்போக்கடைவதையும் கொலை செய்வதற்கு ஒப்பானதுமான ராட்டினப் பிரசாரத்தில் எவ்வளவு மக்கள் தங்கள். புத்தியை இழந்து மயங்கிக் கிடக்கிறார்கள் என்று பார்த்தால் உண்மையாக பயன்படுவதான காரியங்களான தொழில்முறைகளை சர்க்கார் செய்து வந்தால் எவ்வளவு நன்மையும், நல்ல எண்ணமும் புகழும் நமது சர்க்காருக்கு ஏற்படக் கூடும் என்பதை சிறிது யோசித்தாலும் விளங்காமல் போகாது
ஆகவே, அரசாங்கத்தார் அரசாங்க சம்பளங்களைக் குறைத்தாலல்லாது இன்று இந்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க முடியாது என்பதோடு மாத்திரமல்லாமல், மனித சமூகத்தில் இருந்து வரும் அனேக: கொடுமைகளை ஒழிக்கவும் முடியாது என்று சொல்லுவோம்
சம்பளத்தைக் குறைத்தால் சம்பளம் குறைந்த பணம் மீதியாவதோடு அனேக நிர்வாக உத்தியோகங்களையும் குறைக்கலாம். எப்படி எனில், சம்பளத்தால் குறைக்கப்பட்ட பணங்களைக் கொண்டு ஆங்காங்கு தொழிற்சாலைகளை அரசாங்கத்தார் ஏற்படுத்தலாம். அதனால் அநேகருக்குத் தொழில் ஏற்பட்டுவிடும். இதனால் மக்கள் தொழில் இல்லாமலும் ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமலும் இருப்பதினால் செய்யப்படும் திருட்டு, கொள்ளை, சமாதானக் கேடான குற்றங்கள், கிளர்ச்சிகள் முதலியவைகள். தானாகவே அடங்கிவிடும். ஆதலால் நிர்வாகக் கோர்ட்டுகளோ சமாதானத்
துக்கும் சமாதான பங்கத்தை அடக்கி வைப்பதற்குமாக செய்யப்படும் செலவுகளோ மாத்திரமல்லாமல் ஏழை மக்கள் கவனிக்கப்பட இடமே இல்லாமல் போனதற்கு காரணமான இச்சம்பளக் கொள்ளை சண்டையும் இல்லாமல் போய்விடும்
ஆகவே படிப்புக்கு இடையூறாகவும், ஏழை மக்களுக்கு வேலை கிடைப்பதற்கும் அவர்கள் பட்டினி கஷ்டப்படாமல் இருப்பதற்கும் ஏற்ற
குடி அரசு - 1935 (2) 122
தொழில்களுக்கு இடையூறாகவும், மக்களின் சமாதானத்துக்குஇடையூறாகவும் இருந்துவரும் சம்பளக் கொள்ளை ஒழிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமான காரியங்களில் ஒன்றாகும்
இக் குற்றத்துக்கு யார் பொறுப்பாளி என்று பார்ப்போமேயானால் இச்சம்பளங்கள் பெரும்பாலும் காங்கிரசினாலும், காங்கிரஸ் கிளர்ச்சியினாலும் தேசாபிமானிகள் தேச பக்தர்கள் என்றவர்களாலும் நிர்ணயிக்கப் பட்டு கிளர்ச்சி செய்யப்பட்டு ஏற்பட்ட துன்பமான காரியம் என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய, சர்க்காரையோ ஜஸ்டிஸ் கட்சியாரையோ முழுதும் பொறுப்பாளிகளாக்கிவிட முடியாது என்பது நமது அபிப்பிராயம், ஏனென்றால் காங்கிரஸ்காரர்கள் பெரும் பெரும் சம்பளத் திட்டங்கள் ஏற்படுத்திக் கிளர்ச்சி செய்யும் பொழுது இச் சம்பளங்கள் முழுவதும் தாங்களே அடைவோம் என்று கருதி இருந்தார்கள்.
மற்றபடி வேண்டுமானால் இப்படி சம்பளம் ஏற்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட விளைவை சர்க்காரும், ஜஸ்டிஸாரும் அனுபவிக்கிறார்கள் என்று சொல்லலாம். அதற்கு யார் என்ன செய்ய முடியும்?
சம்பள நிலை இப்படி உள்ள வரையில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் பெரியதொரு தொல்லையும், சமாதானக் கேடும், வகுப்புத் துவேஷமும், வகுப்புத் துரோகமும், வகுப்புத் துவேஷங்களைக் கிளப்பி விடும் முயற்சிகளும், சுயநலங்களும் உத்தியோகத்துக்காக எந்தக் காரியத்தையும் செய்ய ஆசையும், துணிவும் என்பவைகள் எல்லாம் ஏற்பட்டுத்தான் தீரும் என்பதோடு அது வளர்ந்தும், நிலைத்தும் இருந்து கொண்டும்தான் வரும் என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம்
இப்படிச் சொல்லுவதால் அதிக சம்பளம் வாங்கிப் பிழைக்கும் நபர் களுக்கு நாம் விரோதியாகக் காணப்படலாம். ஆனால் பாமர ஜனங்களுக்கு துரோகியாக ஆகி இக் கூட்டத்தார்களின் முகமனுக்கு ஆளாகி தேசபக்தராவதை விட ஈனமான காரியம் வேறு இல்லை என்று கருதுவதால் நாம் நமக்கு சரி என்று பட்டதையும் இன்று முக்கியமாய் செய்யப்பட வேண்டிய காரியம் இன்னது என்று உணர்வதையும் வெளிப்படுத்தி விடுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 25.08.1935
123 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பகுத்தறிவு.
அறிவை வளர்க்கும் ஓர் மாத வெளியீடு,
)0(
அறிவுடையார் எல்லாம் உடையார்] அறிவிலார்
என் உடையரேனும் இனர். (கான்)
மலர் 1, 1 ஈரோடு 1935 ஆகஸ்ட்டு L | இகழ் 4
ஒற்றுமை.
(சாமி, Rgiusarsi.)
கும்மி மெட்
தந்தமை என்றுசொல் போநனிலே-தரு உண்வம தொனிக்குது காஇனிலே--இிதை வெற்திடிடனில்கு கண்டிடலே--இர்த மேதினி எல்றும் சென்திடுவோம் (ஒற்றுமை:
விர உணர்ச்ரியைச் கொண்டிடுவோம்--கிலை வேற்றுமை வேரைச் களைக்திடுவோம்--இர்தப்
பாறால கத்தினர் யசவறாம் ஒன்றெனும் பான்மையை வில்றூப் பசப்பிடுவோம் -(தத்துமை
பிறப்பினுள் வேற்றுமை ஏதுமுண்டோ--என்று பேதையர் தங்களைக்கேட்டிடுளோம்-- அன்றி
இறப்பினுள் வேற்றுமை ஏதமுண்டோ--என ஏழையர் தம்மையும் சேட்டிடவேரம் (ஒற்துமைத
ஜோசியம்
ஜோசியம் என்பது ஒரு மனிதனுடைய பிரந்த நேரத்தைக்கொண்டு அந்தச்சமயம் கிரகங்கள் இருந்த நிலைமைக்கேற்ப மனிதனுடைய பலா பலன்களைக் குறிப்பதென்பதாகும்,
இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதனின் வாழ்க்கை, அவனது பிரப்பு, இறப்பு, இன்பம், துன்பம், சுகம், அசெளக்கியம், செல்வம், தரித்திரம், தொழில், மேன்மை, கீழ்மை, புத்திர களத்திர தன்மை, எண்ணிக்கை, ஆயுள் முதலியவைகளைக் குறிப்பதாகும்.
இதைக் கூர்ந்து பார்ப்போமானால் மேல் கண்ட பலன்கள் ஜோசியத்தின் மூலம் உணரலாம் என்பது உண்மையாய் இருக்குமாயின் ஒரு மனிதனின்.
பிரந்த நேரத்தைக்கொண்டு அப்போதிருந்த கிரகங்களின் நிலையை அறிந்து பலன்களை கணிப்பது என்பதில் குறிப்பிட்ட ஜாதகனுடைய பலன் மாத்திர மல்லாமல் அவனது பலாபலனுக்குச் சம்பந்தப்பட்ட மற்ற அனேகருடைய பலன்களும் அதில் அத்துபடி ஆகிவிடவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனென்றால் ஒரு ஜாதகனுக்கு செல்வம் வரவேண்டுமானால், வியாதி வரவேண்டுமானால், உத்தியோகம் வரவேண்டுமானால், சாவு வரவேண்டுமானால் அவை வருவதற்கு ஹேதுவான மாற்றங்களும் இந்த ஜோசியத்தின் மூலம் அறிந்தாகவேண்டும். இவனால் மற்றவர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களும், இவனுக்கு மற்றவர்களால் ஏற்படும் லாப நஷ்டங்களும் கணிக்கப்படும்போது இவனது பலாபலன்களைப் போலவே மற்றவர்களது பலாபலன்களும் ஏற்கனவே அவனவன் ஜாதக பலனின். பயனாய் ஏற்பட்டதாகத் தான் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு ஜாதகனுக்கு சொத்து திருட்டுப்போவதாய் வைத்துக் கொள்ளுவோம், அந்தச் சொத்தை திருடுகிறவனுடைய ஜாதகத்திலும் அவனுக்கு இன்னானுடைய சொத்து திருட்டுப்போகும் என்றும் அது இன்னவனுக்கு கிடைக்க வேண்டும் என்றும் ஏற்பட்டிருந் தாலொழிய - அதற்குத் தகுதியான மாதிரி கிரக அமைப்பும், அந்தப்படி கிரகம் அமைந்த நேரத்தில் அவரவர் பிரந்துமிருந்தாலொழிய இரண்டும் சாத்தியமான காரியமாக ஆகிவிடாது.
இதுபோலவே ஒரு ஜாதகன் மற்றொருவனை கொலை செய்வதாய் வைத்துக்கொள்ளுவோம். இதுவும் இந்த ஜாதகன் இன்னானைக் கொலை
15 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
செய்து இன்ன பயன் அனுபவிப்பான் என்று பலன் இருப்பது போலவே இவனால் கொலை உண்ணப்பட்டவன் ஜாதகத்திலும் இன்னாறால் இவன் கொலை உண்ணப்பட்டு அதனால் இந்த ஜாதகனுக்கு இன்ன பலன் ஏற்படும் என்றும் இருந்துதானே ஆகவேண்டும்.
இதுபோலவே தான் எந்த ஒரு ஜாதகனுடைய பலனை கவனித்தாலும் அந்தப்பலனுக்கு சம்பந்தப்பட்ட எல்லா மனிதர்களுடையவும் ஜீவராசி களுடையவும் அந்தந்தப் பொருள்களுடையவும் ஜாதகமும் சம்மந்தப்படாமல் ஒரு காரியமும் நடக்காது. மனிதன் பிரக்கும்போது உள்ள நேரத்தைக் கொண்டு அந்த மனிதனின் வாழ்வின் பலாபலன் சொல்லப்படுவது போலவே வஸ்துக்கள், தாவரங்கள் முதலியவைகளுடைய பிரந்த நேரத்தைக்கொண்டும் பலாபலன்களைச் சொல்லலாம் அல்லவா?
உதாரணமாக ஒரு விக்கிரகம் செய்யப்பட்டால் அது செய்யத் தொடங்கிய நேரத்தையோ செய்து முடிந்த நேரத்தையோ கொண்டு அதன் வைபவத்தைக் குறிக்கலாம் என்று ஜோசியர்கள் கூறுகிறார்கள்.
அது உண்மையானால் இந்த பலன் என்பது விக்கிரங்களுக்கு மாத்திரமல்லாமல் உலகத்தில் செய்யப்படும் எல்லாப் பொருள்களுக்கும் பொருத்தமானது என்றுதானே சொல்லவேண்டும்
ஒரு கடியாரம், ஒரு லாந்தர், ஒரு பாத்திரம், ஒரு நாற்காலி முதலியவைகளில் ஏதோ ஒன்றை வைத்துக்கொள்ளுவோம். அது செய்யத் துடங்கிய நேரமோ அல்லது செய்து முடிந்த நேரமோ, அல்லது வாங்கிய நேரமோ குறித்துக்கொண்டால் அந்த நேரத்தில் இருந்த கிரக நிலைக்கேற்ப மற்றும் அதனுடைய சலனத்துக்கு ஏற்ப பலாபலன்கள் குறிப்பிடக்கூடிய தாகவே இருக்கவேண்டும்
ஏனெனில் மனிதனுக்கும், விக்கிரகத்துக்கும் வாழ்க்கை எப்படி இருக்கின்றதோ அப்படித்தான் மற்ற ஜீவன் புல் பூண்டு சாதாரண வஸ்துக்கள் ஆகியவைகளுக்கும் இருந்து வருகின்றது
ஒரு குதிரை பட்டத்துக் குதிரையாய் இருந்து பெருத்த சுபோகமும் பெருமையும் அடைகின்றது. அதோடு கூடப் பிரந்த மற்றொரு குதிரை ஜட்கா வண்டியில் தினமும் கட்டப்பட்டு முதுகுப்பட்டைவாங்கப்படுவதோடு றெய்ன்ஸ் கயிற்றால் விதரில் அடி வாங்கி விதர் வீங்கி கஷ்டப்படுகின்றது இது அவற்றின் பிரந்த நேர கிரகாச்சாரப்பலன் என்றுதானே சொல்ல வேண்டும்.
இதுபோலவே ஒரே பாரையில் உடைத்த இரண்டு பாளக் கல்லுகளில்: ஒன்று விக்கிரகமாகி பொன், வைர ஆபரணங்கள் அணிந்து தினம் 6 கால பூஜை, சதுர், பாட்டு, வைபவம், இரண்டு மூன்று பெண்ஜாதிகள், பல தாசிகள், வருஷா வருஷம் கல்யாணம், பெரிய ஆலயம், திருவிழா முதலிய வைபவங் களைப் பெருகின்றது. அதனோடு பிரந்த மற்றொரு கல் மூனிசிபாலிட்டி
குடி அரசு - 1935 (2) 126
கக்கூசுக்கு பாவப்பட்டு தினம் நூற்றுக்கணக்கான பேர் செருப்புக்காலால் மிதித்து அதன்மீது ஏறி மலபாதை கழிக்கவும் சதா விளக்குமாறு போட்டு அடித்து கழுவவும், போகின்ற வருகின்ற பேர் காரி உமிழவுமான பலனை அடைகின்றது. இதுவும் அந்தக்கல் பிரந்த நேரத்தின் பயனும் அப்போதிருந்த கிரகநிலைக்கேற்ப ஏற்பட்ட பலன் என்றுதானே சொல்லவேண்டும்
அதுபோலவே ஒரே தொழில்சாலையில் ஒரே நேரத்தில் செய்யப்பட்ட இரண்டு கடியாரங்களை எடுத்துக்கொண்டால் ஒன்று மகாராஜா கையில் கட்டப்பட்டு சிறிதும் ஆட்டம் அசைவு இல்லாமலும் சரியாய் மணி காட்டிக்கொண்டு மேன்மையாய் இருக்கின்றது மற்றொன்றோ ஒரு கூலிக்காரன் கையில் சிக்கி கண்டபடி அடிபட்டு சாமான்கள் முரிந்து கடியாரமே கெட்டு மூன்றாம் நாளே குப்பைத் தொட்டியில் எரியும்படியாக ஆகிவிடுகின்றது
இதுவும் அந்த கடியாரம் பிரந்த நேரத்திலோ அல்லது வாங்கப்பட்ட நேரத்திலோ கிரகங்கள் அமைந்திருந்தமையைக் கொண்டும் அதன் சஞ்சாரங்களைக் கொண்டும் ஏற்பட்ட பலன் என்றுதானே சொல்லவேண்டும். இதுபோலவே யாவரும் வெருக்கும் மலம் முதல்கொண்டு ஒவ்வொரு வஸ்த்துக்கும் அதனதன் பிரந்த நேரத்தின் பயனாய் பலாபலன் இருந்து வந்தால் தான் ஜாதகம் என்பதாக ஒன்று இருக்க முடியுமே ஒழிய மனிதனுக்கு மாத்திரம்தான் ஜாதகம் சொல்ல முடியம் என்றால் அதை யார் ஒப்புக் கொள்வார்கள்.
சிலர் குதிரைக்கும், யானைக்கும் ஜாதகம் வைத்திருப்பதும் பார்ப்பதும்
நாம் பார்த்திருக்கிறோம்
மனிதனுக்கு ஜாதக பலன் சொல்ல முடிகின்றபோது குதிரைக்கும், யானைக்கும், நாயுக்கும், கழுதைக்கும் சொல்ல முடியாது என்று சொன்னால் அது நியாயமாகுமா? அதுபோலவே குதிரைக்கும், யானைக்கும், நாயுக்கும் ஜாதகம் பலன் சொல்லுவதாய் இருந்தால் கோழிக்கும், குருவிக்கும், பாம்புக்கும், தேளுக்கும், ஓணானுக்கும், பல்லிக்கும், ஈயுக்கும், எறும்புக்கும், பூச்சிக்கும்,
புழுவுக்கும், கிருமிக்கும் ஜாதக பலன் சொல்ல முடியாது என்று யாராவது சொல்ல முடியுமா?
கோழிக்கும், குருவிக்கும், பூச்சிக்கும், புழுவுக்கும், அதன் பிரந்த நேரத்தைக்கொண்டு பலன் சொல்லலாம் என்றால் மரத்துக்கும், செடிக்கும், புல்லுக்கும், பூண்டுக்கும் அது முளைத்த நேரத்தைக்கொண்டு ஏன் பலன் சொல்ல முடியாது? ஆகவே வஸ்து என்று ஒன்று ஏற்பட்டு அது பிரப்பதற்கோ தோன்று வதற்கோ ஒரு நேரமும் இருந்து அந்த நேரத்தைக்கொண்டு அப்போதிருந்த
127 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கிரக நிலையை அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் ஜோசியம் சொல்லலாம் என்பதுதான் ஜோசியத்தின் தன்மையாக இருக்கவேண்டும்.
இந்த முடிவு எப்படியோ ஆகட்டும். முதலாவதாக ஒரு மனிதனுடை யவோ, ஜீவனுடையவோ பிறந்த நேரத்தை எப்படி கணிக்கமுடியும் பிரசவகாலத்தில் வயிற்றுவலி ஏற்பட்ட நேரம் முதல் சிசுவானது கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாகிறது. உருவம் வெளிப்பட்டு தலையோ காலோ தெரிந்து வெகு நேரம் சென்றும் சில சிசுக்கள் மணிக்கணக்கில் கீழே விழாமல் சிக்கிக்கொண்டும் இருக்கின்றன. கீழே விழுந்த நேரத்தையே எடுத்துக் கொள்வதாய் இருந்தாலும் பெரும்பான்மையான சிசுக்கள் விஷயத்தில் எப்படி சரியான நேரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
ஒரு நாளைக்கு 16 முகூர்த்தங்கள் ஒரு முகர்த்தத்திற்கு 3% நாளிகை தான் இருக்கின்றன. ஒவ்வொருலக்கினத்துக்கும் 4% முதல் 53 நாளிகையும் ஒவ்வொரு நகஷத்திரத்திற்கு சுமார் 60 நாளிகையும் உண்டு
இதற்குள் பிரக்கும் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் கிரகம் நக்ஷத்திரம் என்பவை ஒன்றாகவேதான் இருக்க முடியும். உலகில் ஏற்படும் பிரப்பு இறப்புகள் எல்லாம் இந்த லக்கினத்துக்குள்ளும் இந்த நக்ஷத்திரங்களுக் குள்ளும் தான் வந்தாக வேண்டும்.
அந்தப்படியே வந்து அதைக்கொண்டே பலன் சொல்லக்கூடும் என்றே வைத்துக்கொண்டாலும் மனிதனுடைய நித்திய வாழ்க்கை அனுபவத்துக்கும், பிரந்தபோது கிரகங்கள் இருந்து வந்த நிலைக்கும் எப்படி சம்பந்தம் இருந்துவர முடியும்? எப்படி இருக்கக்கூடும் என்பதை எந்தவானசாஸ்திரியாவது நக்ஷத்திர சாஸ்திரியாவது, ஜீவ தத்துவ சாஸ்திரியாவது, உடல் தத்துவ சாஸ்திரியாவது, பொது விஞ்ஞான சாஸ்திரியாவது ஒத்துக்கொள்ளுகின்றார்களா?
ஜோசியம் என்பது பிரந்த காலத்தைக் கொண்டு, அப்போதிருந்த கிரக நிலையை அறிந்து சொல்வது என்பதோடு மாத்திரம் இல்லாமல் மற்றும் எதை எதையோ கொண்டு சொல்லக்கூடியதாய் இருந்து வருவனதாயும் பார்க்கிறோம்,
ஒருஜாதகனுக்கு பலன் சொல்ல அவன் ஜோசியம் கேழ்க்கும்படியான நேரத்தை குறித்து அப்போது இருக்கும் கிரக நிலையை அறிந்துகூட சொல்லப்படுகிறது. மற்றும் ஜாதகனின் பேர் நாமத்தைக் கொண்டும், அவன் சொல்லும் எண்ணைக் கொண்டும், அவர் சரீரத்தில் தொடும் அங்கத்தைக் கொண்டும் இன்னும் என்ன என்னமோ ஆதாரங்களைக் கொண்டும் சொல்லப்படுகின்றன. இவைகளுக்கு எல்லாம் விஞ்ஞான சாஸ்திரம் இடம் கொடுக்கிறதா? விஞ்ஞானத்துக்கு அதாவது பஞ்சேந்திரியங்களால் அறியக்கூடிய தன்மைக்கு விரோதமாய் ஒருகாரியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சொல்லப்படு மானால் பிறகுஉலகில் விஷயங்களை எப்படித்தான்நிர்தாரணம்செய்ய முடியும்
குடி அரசு - 1935 (2) 128
ஒரு வஸ்து நிர்ணயத்துக்கோ ஒரு விஷய நிர்ணயத்துக்கோ ஏதாவது ஒரு முறை அல்லதுவிதி இல்லாவிட்டால் பிறகு எப்படித்தான் விஷயங்களை நிர்தாரணம் செய்ய முடியும்
இந்த விஷயங்கள் ஒரு புறம் இருக்க; இந்த ஜாதக பலன்கள் மனிதனுக்கு இந்தப்படி யெல்லாம் அமைவதற்கு ஒரு காரணமும் வேண்டி இருக்கிறது ஏனெனில் மனித வாழ்க்கையின் தன்மையும் பலன்களும் அனுபவமும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாய்இருப்பதைஇயற்கைஎன்று ஒப்புக்கொள்ளாமல். இருப்பதால் அவற்றிற்கு காரணம் கண்டு பிடிக்கவேண்டி இருக்கிறது அதற்கு ஜோசியர்களும் மற்றும் கிரக பலன்களில் நம்பிக்கை உள்ளவர்களும் “கிரகங்கள் அந்தப்படியெல்லாம் அமைவதற்கே” காரணம் சொல்லுகிறார்கள். அதாவது ஒவ்வொருவருடைய கிரகாச்சார பலனும் ஜாதகன் பிரப்பதற்கு முன்னமே அமைக்கப்பட்டதற்கு அந்தந்த ஜாதகர்களின் முன் ஜன்ம கர்மத்தின் பலன் என்றும் அல்லது அவனுடைய மூன் ஜன்ம நடத்தைக்கு தக்கபடி கடவுளால் விதிக்கப்பட்ட விதி என்றும் சொல்லப்படுகிறது
ஜோசியத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்களோ நம்புகின்றவர்களோ முன் ஜன்மம், முன் ஜன்ம கர்மம், அதை அனுசரித்து கடவுளால் ஏற்படுத்தப் பட்ட விதி முதலியவைகளை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும் அப்படி இல்லாவிட்டால் யாதொரு பழிபாவமும் அறியாத ஒரு ஜீவன் தான் பிரக்கும் போது நிஷ்காரணமாய் யதேச்சையாயும் இயற்கையாயும் அமைந்திருந்த கிரகங்களின் பயனாய் பலன்களை அடைவதென்றால் அதையும் இயற்கை என்று சொல்லித்தானே ஆக வேண்டும்.
ஆகவே அந்தக்காரணம் தான் முன் ஜன்ம கர்மத்தின் பலனாகவும், தலைவிதியாகவும் சொல்லப்படுவதாகின்றது. இதை ஒப்புக்கொள்ளுவ
தனால் இதில் மற்றொரு பெரிய பிரச்சனை வந்து புகுந்து கொள்கின்றது.
அதாவது இம்மாதிரி அமையப்பட்ட கிரகங்களின் பலனாகவோ அல்லது முன் ஜன்மத்தின் கர்மத்தின் பலனாகவோ தலைவிதியின் பயனாகவோ கடவுள் சித்தத்தின் பலனாகவோ ஏற்பட்ட அல்லது ஒரு ஜாதகனால் செய்யப்பட்ட காரியங்களுக்கு மறுபடியும் பலன்கள் உண்டா.
என்பதும் அதற்கு அந்த ஜாதகன் பொருப்பா என்பதும் அது அந்த ஜாதகனை எப்படி கட்டுப்படுத்தும் என்பதுமேயாகும்.
உதாரணமாக ஒரு ஜாதகன் ஒரு மனிதனைக் கொலைசெய்வதாக வைத்துக்கொள்ளுவோம், இந்தக் கொலையானது “இந்த ஜாதகன் இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன கிழமை, இன்ன மணிக்கு, இன்ன ஊர், இன்னானை, இவ்விதமாய், கொலை செய்வான்'' என்று கொலை செய்தவனுடைய ஜாதகத்திலும் “இன்ன வருஷம், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, இன்ன மனிதனால்
129 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கொலை செய்யப்படுவான் என்று கொலை உண்டவன் ஜாதகத்திலும் கர்மத்தின் பயனாலோ, அல்லது கடவுள் சித்தத்தாலோ ஏற்பட்டில்லாமல் இக்கொலை எப்படி ஏற்பட்டிருக்கமுடியுமா?
அந்தப்படி விதி ஏற்பட்டிருக்கும் போது கொலை செய்பவன் இந்தக்கொலையை செய்யக்கூடாது என்று எவ்வளவு தான் கருதினாலும் அவனால் கொலை செய்யாமல் இருக்கமுடியுமா? அதுபோலவே கொலை உண்டவனும் தான் எவ்வளவு தான் ஜாக்கிரதையாய் இருந்தாலும் ஒரு தண்டவாளப் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்தாலும் கொலையிலிருந்து
தப்பித்து இருக்க முடியுமா?
''அன்றெழுதினவன் அழித்தெழுதுவானா”
விதியை யாரால் வெல்லமுடியும்” அவனவனின் முன் ஜன்ம கர்மத்தின் பயனை அவனவன் அனுபவித்தே தீரவேண்டும்"
என்றபடி விதியில் உள்ளது போல் நடந்து தானே தீரும். இந்தப்படி விதியினாலோ மூன் ஜன்மக் கருமத்தின் பலனாலோ ஜாதக ரீதியாய் செய்யப்பட்ட இந்தக் கொலைக்கும் கொலை உண்ணப்பட்டதற்கும் இந்த ஜாதகன் எப்படி ஜவாப்தாரியாக ஆகமுடியும்? ஜாதகனை எப்படி குற்றம் சொல்லமுடியும்? இதற்காக ஜாதகனுக்கு பாவமோ நரகமோ கர்மத்தின் பயனோ எப்படி ஏற்படும்? இந்த ஜாதகனுக்கு பாவமோ நரகமோ எப்படி ஏற்படும் என்பது மாத்திரமல்லாமல் மக்கள் விதியின்படியோ முன் ஜன்ம கர்மத்தின் விளைவின்படியோ செய்யப்பட்ட காரியங்களுக்கு பாவம் என்றோ புண்ணியம் என்றோ எப்படி சொல்லலாம் அதற்காக நரகமோ மோக்ஷமோஅடுத்தஜன்மத்தில் அடையவேண்டிய பயனே எப்படிசித்திக்கும். ஆகவே மனிதன் அவன் செய்யுங் காரியங்கள் எல்லாம் ஜாதகப் பலன்படியும், ஜாதகப்பலன்கள் எல்லாம் விதிப்படியும், விதி எல்லாம் முன்ஜன்ம கர்மத்தின் பலன்படியும் நடப்பதாய் இருக்கையில் பாவபுண்ணியம் என்ற பாகுபாடும், நற்செய்கை துர்செய்கை என்கின்ற பெயரும், எப்படி பொருந்தும்? மோக்ஷத்திற்கும், நரகத்திற்கும் அவசியம் தான் ஏது? அது எதற்காக இருக்கவேண்டும்?
கடவுள்தானாகட்டும்இந்த செய்கைகளுக்குதீர்ப்புகளோ, விசாரனையோ, சன்மானமோ, தண்டனையோ எப்படி செய்ய முடியும்? என்பவைகளை யோசித்தால் ஜோசியம் என்பதாக ஒன்று இருக்க முடியுமா? அது பிரந்த நேரத்தைக்கொண்டு மனிதவாழ்க்கையில் ஒவ்வொரு பயனும் சொல்லமுடியுமா?
அப்படி ஒரு சாஸ்திரம் இருக்க பகுத்தறிவின்படி சையன்ஸ்படி இடம் இருக்கிறதா? என்பவைகளை யோசித்து பார்க்கவேண்டும்
குடி அரசு - 1935 (2) 130
ஜோசியம் என்பதைப்பற்றி இந்துக்கள், மகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள்
முதல் எல்லா ஆஸ்திகக்காரர்களுக்கும், நம்பிக்கை இருந்து வருகின்றது
சிற்சில மனிதர்கள் ஆஸ்திகர்களாய் இல்லாதவர்களும் ஜோசியத்தை நம்புகிறார்கள். ஏனெனில் அது ஒரு சாஸ்திரமென்றும் அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை யென்றும் ஜோசியம் விஞ்ஞான பரீக்ஷையால் நிர்ணயிக்கக் கூடியதென்றும், ஆதலால் அது பிரந்த நேரத்தையும், நக்ஷத்திரங்களையும், கிரகங்களையும் பொருத்ததென்றும், நக்ஷத்திரங்களும், கிரகங்களும் உண்மை ஆனதினாலும் பிரத்தியக்ஷ பிரமாணமானதினாலும் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அனுபவத்திற்கு ஒத்து இருக்கிறதென்றும், இப்படிபலவாராகப் பேசி அதை ஒப்புக்கொள்ளுகிறவர்களும், நம்புகிறவர்களும் சமாதானம் சொல்லுகின்றார்கள்.
இந்த சமாதானங்களைப்பற்றி பின் ஒரு சமயம் ஆலோசிப்போம் இப்போது இந்தப்படி ஒரு சாஸ்திரமோ பலனோ இருக்க நியாயம் உண்டா என்பதைப்பற்றி மாத்திரமே இவற்றைக்கொண்டு ஆராய்ந்தோம்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஆகஸ்ட்டு 1935
131௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஜோசிய விதண்டா வாதம்
- சித்திரபுத்திரன்
வெள்ளைக்காரர்கள் ஜோசியத்தில் இந்தியர்களைப்போல் எத்தனை பெண்சாதி என்பதை அறிய இடம் இருக்குமா?
திபேத்தில் இருக்கிற பெண்கள் ஜாதகத்தில் இத்தனை புருஷன். என்பதை அறிவதற்குவசமிருக்கிறதுபோல் இந்தியாவில் விதவை மணமில்லாத பெண்களுக்கு இத்தனை புருஷர் இருக்கிறார்கள் என்று அறிய முடியுமா?
இந்தியாவில் உள்ள மக்களுக்கு பூமி, கன்று காலி, வீடு வாசல், சொத்து இவ்வளவு என்று கண்டுபிடிக்க வசமிருப்பதுபோல் ரஷியர்களுக்கும் கண்டுபிடிக்க வசமிருக்குமா?
பகுத்தறிவு (மா.இ.) - துணுக்குகள் - ஆகஸ்ட்டு 1935
குடி அரசு - 1935 (2) 132.
மூடநம்பிக்கை
வெள்விக்கிழமை விளக்கு வைத்த நேரம்
- சித்திரபுத்திரன்
நகை வியாபாரி:- ஐயா, தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை. வாங்கிவந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதைத் தெரிவித்துவிட்டால் அதை வேறு ஒருவர் வேண்டுமென்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.
வைதீகர்:- செட்டியாரே, அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குருக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ளக் காசை எண்ணிப்பார்த்
தார்கள். அதில் 68-காசுகளிருந்தது. எட்டு எண்ணிக்கைக் கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி வருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.
நகை வியாபாரி:- அப்படியானால், தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.
வைதீகர்:- ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆக்ஷேபனையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள் கொடுத்துவிடுகின்றேன்.
நகைவியாபாரி:- அவர் இன்று இராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர். ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.
வைதீகர்- செட்டியாரே, தாங்களென்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள். வெள்ளிக்கிழமை அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா? அது லக்ஷிமி அல்லவா?
நகை வியாபாரி:- என்ன ஐயா, வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டுவருகிறேன் என்று எடுத்துக்கொண்டுவந்த நகையை வேறு ஒருவர்அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால், வெள்ளிக்
133 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கிழமை விளக்கு வைத்த நேரம் என்கின்றீர்களே இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன, நேரமென்ன என்பது எனக்கு விளங்கவில்லையே
வைதீகர்:- (தனக்குள்ளாகவே 'இந்த இளவு நகையை நாம் ஏன் இந்த மனிதனிடம் வாங்கிவந்தோம்' என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும். உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை
இருக்கும். நல்ல ராகு காலத்தில் எடுத்துவந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த் தான் தீரும், எனக்குப் புத்தி வந்தது. இனி இந்த மாதிரி செய்யமாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.
நகை வியாபாரி:- இது என்ன ஐயா, தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால், நாள் கோள் எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கெவன் புத்தி சொல்லிக்கொடுத்தான். அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையைக் கொடுங்கள் நேரமாகுது
வைதீகர்:- நீங்கள் @y அரசு' பத்திரிகை கக்ஷியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும் கேலி செய்கின்றீர்களே, அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை, கெட்டதில்லை, மேல் இல்லை,
கீழ் இல்லை, கோவில் இல்லை, குளமில்லை, சாஸ்திரமில்லை, புராணமில்லை, பரையனும் பாப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாஸ்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே
நகை வியாபாரி:- நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்து கொள்ளும், அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்து
விடும், பவுன் விலை இறங்கப்போகின்றது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறொரு ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர் இருட்டாகப்போகிறது, சீக்கிரம் எடுத்துக்கொண்டுவாரும்
வைதீகர்:- (வீட்டிற்குள் போய் சம்சாரத்துடன் யோசிக்கின்றார்)
என்ன, ஏன் பேசவில்லை, செட்டியார் காசுமாலை கேட்கின்றார்.
அம்மா: வெகுநேர்த்தி இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லக்ஷிமியை வீட்டை விட்டு வெளியில் கொடுக்கலாமா?
புருஷன்:- எல்லாம் நான் சொல்லிப்பார்த்தாய் விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாகவேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டு வெளியில் காத்துக்கொண்டிருக்கிறார்.
அம்மா:- (பலமாய் சத்தம்போட்டுக்கொண்டு வெளியில் வருகிற போது பேசிக்கொண்டு வருவதாவது) செட்டியாருக்குத்தான் புத்தியில்லை.
குடி அரசு - 1935 (2) 134
உங்களுக்குமா புத்தியில்லை. அவர் என்ன செட்டியா மட்டியா? வீடுவாசல் வைத்து பிழைத்த மனிதனா, நாடோடித் தடம்போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கிறார். நான் போய் கேட்கிறேன், (என்று வெளியில் வந்து) என்ன செட்டியாரே உமக்கு புத்தியில்லையா? இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்து விட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்
விடுவீரா, அல்லது ஏதோ ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் காத்திருக்கிறான் என்கிறீரே அவன் தான் கொள்ளையில் போய்விடுவானா? உமக்குத்தான். புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்க வேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப்போய் கேட்கச்சொல்லலாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச்சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன அவனைக் கொண்டுபோகிறது?
இந்தச்சமயத்தில் மகன் வந்துவிட்டான்.
மகன்:- என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?
தாயார்:- இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கி நிற்கிறார்.
மகன்:- அதெல்லாம்இருக்கட்டும்ஜாஸ்தி பேசாதே? நமக்கு காசிமாலை யேது? நம் வீட்டில் காசிமாலை இல்லையே, நேற்றுத்தானே அப்பா ஒரு காசிமாலை வாங்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார். அதற்குள்ளாகவா. வாங்கி ஆய்விட்டது காசிமாலை?
தாயார்:- உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ, இன்று காலையில் கடைக்குப்போனார், இந்த செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது, அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கி வந்தார். நேற்று நினைக்கும்போதே ராகு காலம், இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போதும் பூனை குறுக்கே போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலைசுத்தி யெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படிச் செய்யாமல் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப்பார்த்தேன். காசுஅறுபத்தி எட்டாயிருந்தது, உடனே தலையைச்சுற்றி எரிந்துவிட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படுகிறார்; யாரோ வேறே கிராக்கி காத்துக்கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.
மகன்:- ஐயய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்கிறது குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது; வெள்ளியாவது, சனியாவது,
135 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ராகாவது, கேதாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டுவந்து பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு வெள்ளியுஞ் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது. பேசாமல் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்து விடு; இல்லாவிட்டல் பெட்டியை உடைத்து விடுவேன் தெரியுமா?
அதற்குள் அப்பா வந்துவிட்டார்.
அப்பா:- என்னடா பயலே. பலே அதிகப்பிரசங்கியாய்ப்போய் விட்டே. நான் அப்போதே உன்னை “குடி அரசு" பத்திரிகையைப் படிக்க வேண்டாம் கெட்டுப்போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச்சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம்! கர்மம்! இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து ஊரிலுள்ள சிறு பிள்ளைகளை யெல்லாம் நாஸ்திகமாக்கி விட்டது
மகன்:- “வெகு நன்றாயிருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டான்.
பிறகு புருஷனும் பெண்ஜாதியும் ராகுகாலத்தில் அந்த செட்டி இடம் நகைவாங்கிவந்ததேபிசகான காரியம். இதுவும் வரும் இன்னமும் எவ்வளவோ கெடுதியும் வரும். என்னை அடிக்க வேண்டும்......லே என்று ஒருவருக் கொருவர் பேசிக்கொண்டார்கள்.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - ஆகஸ்ட்டு 1935
குடி அரசு - 1935 (2) 136
மதப் போட்டி
யாரைப்பார்த்து யார் காப்பியடித்தார்?
- சித்திரபுத்திரன்
மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும், மோக்ஷம், நரகம் இருந்தாக வேண்டும், கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும் இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது. இந்து மதத்துக்கோ இவைகள் மாத்திரம் போதாது. அதாவது பல கடவுள்கள் வேண்டும். பலவிதமான மோக்ஷங்கள் பலவிதமான நரகங்கள் வேண்டும் மற்றும் பலவிதமான பிறப்புகள், முன்பின் ஜன்மங்கள் வேண்டும், பலவிதமான அவதாரங்கள், பலவிதமான குருமார்கள் வேண்டும் இவ்வளவும் போராமல் கடவுளை நேரில் கண்டு மோக்ஷத்திற்குப் போன பலவிதமான பக்தர்கள் வேண்டும்
இந்தக்காரியங்கள் சிறப்பாக இந்துமதத்தின் உட்பிரிவு மதங்களான. சைவ மதம், வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு
மதங்களுக்கும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்து வருகின்றன.
பெயர்களைப் பொருத்தவரையில் சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழிய காரியங்களைப் பொருத்தவரையில் ஏறக்குறைய ஒருவரைப்பார்த்து
ஒருவர் காப்பியடித்து போலவேதான் இருக்கிறது.
உதாரணமாக வைணவத்தில் ராமாயணம் ஏற்பட்டதற்குக் காரணம் விஷ்ணுவும் அவரது மனைவியாகிய லக்ஷிமியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது என்றால் சைவத்துக்கு கந்தபுராணம் ஏற்பட்டதற்குக் காரணம் சிவனும் அவரது மனைவியாகிய பார்வதியும் கலவி செய்ததில் இருந்தே ஏற்பட்டது
எப்படியெனில் விஷ்ணுவும் லக்ஷிமியும் பகல் நேரத்தில் கலவியில் இருந்தபோது சில ரிஷிகள் படுக்கை அறைக்குள் பிரவேசித்து விஷ்ணுவைக் காண ஆசைப்பட்டதாகவும் துவாரபாலகர்கள் தடுத்ததாகவும், அதற்கு அவர்களை ரிஷிகள் சபித்ததாகவும், அந்தச் சாபம் தீரவேண்டியதற்காகவே ராமாயணம் முதலியவை ஏற்பட வேண்டியதாயிற்றாம்.
137 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதுபோலவே பரமசிவன் பார்வதியோடு பல நூறு வருஷங்கள். விடாமல் கலவி செய்து கொண்டு இருந்ததாகவும் அதனால் ஏற்படும் வீரியமும், கர்பமும் மிகக் கொடுமையான காரியத்தைச் செய்யக்கூடியதாகி
விடும் என்று தேவர்கள் முறையிட கலவி முற்றுப்பெறுவதற்கு முன்பாகவே கலவியை நிறுத்திக்கொள்ள வேண்டியதாகி அதனால் இந்திரியம் நிலத்தில் விழுந்து பிறகு என்னென்னமோ ஆபாசமாகி கடைசியாக சுப்பிரமணியர் தோன்றி கந்தபுராணம் ஏற்படவேண்டிதாயிற்று என்றுமே கதைகள் இருக்கின்றன.
அன்றியும் பூபாரம் தீர்க்கவும் ராக்ஷதர்களை அழிக்கவும் விஷ்ணு ராமராய்த் தோன்றினார். அதுபோலவே பூபாரம் தீர்க்கவும் அசுரர்களை அழிக்கவும் சிவன் சுப்பிரமணியனாகத் தோன்றினார்.
ராமன் பிறப்பதற்காக தேவர்கள் விஷ்ணுவை வேண்டினார்கள். சுப்பிரமணியன் பிறப்பதற்காகவும் தேவர்கள் சிவனை வேண்டினார்கள். ராமன் ராக்ஷதர்கள் என்பவர்களைக் கொன்றான். சுப்பிரமணியன் அசுரர்கள் என்பவர்களைக் கொன்றான். ராமன் ராக்ஷதர்களைக் கொல்லும்போது (மூலபலம்) கொல்லக்கொல்ல உற்பத்தியாகிக் கொண்டே வந்தன சுப்பிரமணியன் அசுரர்களைக் கொல்லும்போது கொல்லக்கொல்ல அசுரர்கள். தலைகள் முளைத்துக்கொண்டே வந்தன.
ராமன் பெண்ஜாதி சீதை ஒரு வளர்ப்புப்பெண். சமுத்திரத்தில் கண்டெடுக்கப்பட்டவள். சுப்பிரமணியன் பெண்ஜாதியும் ஒரு வளர்ப்புப் பெண். வள்ளிச்செடிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவள்.
சைவத்துக்கும் வைணவத்துக்கும் இனியும் அனேக விஷயங்களில் கடவுள்களைப்பற்றிய கதைப்பொருத்தங்கள் காணலாம்
அதுபோல சைவ வைணவ ஆச்சாரியார்கள் விஷயங்களிலும், சைவத்துக்கு நாயன்மார்களாகவும் வைணவத்துக்கு ஆழ்வாராதிகளாகவும், ஏற்படுத்தப்பட்டிருப்பதோடல்லாமல் பல பக்தர்களையும் அவர்கள் செய்த காரியங்கள் அதன் பயனாய் அவர்கள் அடைந்த முக்திகள் ஆகிய விஷயங்
களிலும் ஒன்றுபோலவே கதைகள் கற்பிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். வைணவ பக்தர்கள் விஷயத்துக்கு பக்தலீலாமிருதம் என்னும் புத்தகம் போலவே சைவபக்தர்கள் விஷயத்துக்கு பெரிய புராணம் என்னும் புத்தகமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வைணவ பக்தரில் ஒரு குயவர் இருந்தால் சைவ பக்தரிலும் ஒரு குயவர் இருக்கிறார். எப்படி எனில் வைணவக் குயவர் கோராகும்பராய் இருந்தால் சைவக்குயவர் திருநீலகண்டராய் இருக்கிறார்.
இரு குயவ பக்தர்களுடைய கதையும் ஒன்றுபோலவே அதாவது கோராகும்பாரும் தன் பெண்ஜாதியுடன் பேசாமல் இருந்து கடைசியாக மகாவிஷ்ணுவே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்து வைக்கிறார்.
குடி அரசு - 1935 (2) 138
திருநீலகண்ட குயவனாரும் தன் பெண்ஜாதியோடு பேசாமல் இருந்து கடைசியாக சிவபெருமான் வந்தே இருவரையும் பேசும்படி செய்து சேர்த்து வைக்கிறார்.
மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதிலும் வைணவ மதத்துக்கு சோக்கமாலா என்கின்ற தீண்டாத ஜாதி பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள் விடாமல் தடுக்கப்பட்டடு கனவுகண்டு கடைசியாக விஷ்ணு
வந்து அழைத்துப்போகிறார்.
சைவத்திலும் தீண்டப்படாத வகுப்புக்கு நந்தன் என்பதாக ஒருவர் இருந்து பரமசிவன் வந்து கனவில் சொல்லி சாமி தரிசனம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு மத புராணங்களிலும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் ஒரே மாதியான உயர்வும் மற்றவர்களுக்கு இழிவும் ஏற்படுத்தப் பட்டிருப்பதோடு ஜாதி பாகுபாடுகளைப்பற்றி ஒரே மாதிரியாகவே
குறிப்பிட்டு பலப்படுத்தி இருக்கிறது இவற்றுள் சைவத்தைப் பார்த்து வைணவர்கள் காப்பி அடித்தார்களா? அல்லது வைணவர்களைப் பார்த்து சைவர்கள் காப்பி அடித்தார்களா? என்பது ஒரு ஆராய்ச்சி வேலையாய் இருக்கலாம்
அதில் பிரவேசிக்க நமக்கு இஷ்டமில்லை. ஏனெனில், தமிழ்நாட்டில் தான் சைவத்தைப்பற்றி பிரபலமாய் பேசப்படுகின்றதே ஒழிய மற்றபடி இந்தியாவின் வடபாகம் முழுவதும் ஆந்திர தேசம் உள்பட வைணவமே மேலோங்கி இருக்கிறது. வடநாட்டில் வைணவம் என்றால் தான் மாம்சம்
சாப்பிடாதவர் என்று அருத்தமாகும் ஆகையால் இவை இரண்டிற்கும் மதக் கிரந்தங்கள், மதக்கதைகள், மதபக்தர்கள், மதக்கடவுள்கள் என்பவைகளில் ஒன்றை ஒன்று காப்பி அடித்தோ அல்லது இருவரும் ஒன்றாய் உட்கார்ந்து கூடிப்பேசியோ ஒரு
முடிவுக்கு வந்துதான் இப்பெரும் புளுகு மூட்டைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது அறியக் கிடக்கின்றது
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஆகஸ்ட்டு 1935
139 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கோர்ட்டில் பிரமாணம்
- சித்திரபுத்திரன்
மேஜிஸ்ட்டேட்: (சாக்ஷியைப் பார்த்து) உன் பேரன்ன?
சாக்ஷி? என் பேர் சின்னசாமிங்கோ.
மே: உன் தகப்பன் பேர் என்ன?
&m என் தகப்பன் பேர் பெரியசாமிங்கோ.
மே: உன் வயது என்ன?
சாஉ என் வயசு 36ங்கோ.
மே: உன் மதம் என்ன?
சா: இந்து மதமுங்கோ.
மே: உன் ஜாதி என்ன?
சாஉ சாதியா?
மே: ஆமா.
சாஉ சாமி குடியான சாதிதாங்கோ.
மே: சரி, சத்தியமாய் சொல்கிறேன் என்று சொல்லு
சாஉ சத்தியமாச் சொல்றனுங்கோ.
மே: நீ இப்ப சத்தியம் செய்திருக்கிறே, உண்மையைச் சொல்ல வேணும்,
எது உனக்கு நல்லா தெரியுமோ எதை நீ கண்ணில் பார்த்தாயோ அதைத்தான். சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் தெரியுமா?
சா: சாமி அப்படியே ஆகட்டுங்கோ. நான் நேர்லெ பார்த்ததைத்தான் சொல்லணுமே? காதுலே கேட்டதைக்கூட பெரியவங்க சொன்னதைக்கூட சொல்லக் கூடாதா சாமி?
மே: நேரில் பார்த்ததை மாத்திரம் சொல்லு தெரிந்ததா?
சா: தெரிஞ்சிகிட்டேஞ் சாமி. அப்பளையே (அப்பொழுதே) நாஞ் சொன்னதெயெல்லாம் அடிச்சுப் போடுங்கோ.
மே: எதை அடிக்கிறதுடா.
குடி அரசு - 1935 (2) 140
சாஉ சாமி மின்னே நாஞ் சொல்லல்லே, எம் பேரு எங்கப்பம் பேரு எம்பட வயசு அதெல்லாந்தா.
மே: அதையெல்லாம் நான் எதற்காக அடிப்பது?
&M எசமாங்கதா ''நேர்லெ பார்த்ததுதாஞ் சொல்லணு, காதுலே கேட்டது சொல்லக் கூடாது, சத்தியம் பண்ணி இருக்கிறே, பாக்காதது சொன்னா தெண்டிச்சிப் போடுவே" எண்ணு சொன்னீங்களே. நம்முளுக்கு எனத்துக்குங்கோ அந்த வம்பெல்லாம். எங்கப்பெ என்னைப் பெக்க பாடுபட்டதெ பாத்தனா? எங்கம்மாதா என்னைப் பெத்ததெ பாத்தனா? எம்பட வயசைத்தான் நானு எண்ணிகிட்டு வந்தெனா? நமக்கு நேர்லெ
ஒணுந் தெரியாது சாமி. நானும் ஒரு எளவையும் பாக்கில்லை. அடீங்கோ! அடீங்கோ!! எளிதினதை எல்லாம் அடிங்கோ. அல்லாத்தையும் அடிங்கோ
மே: அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் இல்லை. கேசைப் பற்றித்தான். கேட்கப் போகிறேன். அதைப் பற்றி நீ பார்த்ததைச் சொல்லு
சா: அந்த எளவே நமக்கு வாண்டாம். நம்மொ பாக்காத சங்கதி நம்மாலெ ஒண்ணுஞ் சொல்ல முடியாது. அப்பறம் நாளைக்கு ஒருத்தெ கேப்பானுங்கோ, எதிரி வக்கீலு உனக்கெப்படி தெரியும் எம்பான். அப்பரம் கடசீலே எல்லாம் தகராரா வந்து சேரும். அடீங்கோ! அடீங்கோ!! நாஞ் சொன்னதையெல்லாம் அடீங்கோ!!! இல்லாவிட்டா நாம் போறே வெளியிலே.
மோடேய் என்ன? ரம்ப குறும்பு பண்ணுகிறாய். கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லு, இல்லாவிட்டால் உன்னை தண்டித்து விடுவேன். நீ யென்ன பலே போக்கிரியாய் இருக்கிறயே
சாய இல்லைங்க சாமி! நீங்கத்தானே பாத்ததெச் சொல்லூண்ணு சொன்னீங்கோ!
மே: உஸ். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு
சா சரி கேளுங்க சாமி. நாம் பாத்ததையும் கேட்டதையும் சொல்லிப்புட்டு போறேன்.
மே: இந்தக் கேசில் உனக்கு என்ன தெரியும்?
சா: நான் கடவீதிக்குப் போனே, போனனா? கருப்பன் சுப்பனெ அடிக்கப் போனான். அப்போ கருப்பந் தம்பி “அடிடா சுப்பனை வந்தது வரட்டும். மேசத்திரட்டு சுப்பய்யனுக்கு 100 ரூ கொடுத்தா பேசாத உட்டுடுறான்'' எண்ணு சொன்னான். கருப்பந் தம்பி ரங்கன் “அடிடா பார்க்கலாம் மேசத்திரட்டு பொண்டாட்டி பாகிரதிகிட்டே 200 ரூ கொடுத்து உன்னை ஆறு மாசம் தண்டிக்கச் சொல்லி மண்ணு செமக்க வைக்கிறேம் பாரு. மின்ன எத்தனையோ தடவை கொடுத்து இருக்கிறேன் எண்ணு சொன்னா. பெரிய காத்தடிச்சது கண்ணுலெ மண்ணைரப்ராப்லெ இருந்ததுங்கோ.
1 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கண்ணெ இருக்கி மூடிக்கிட்டே. அப்பறம் என்ன நடந்ததுண்ணு தெரியாதுங்கோ. இப்ப இரண்டு பேரும் பணத்தை வச்சிகிட்டு எசமாங்க ஊட்டிலே காத்து கிடக்கிறாங்களாம்! அம்புட்டுத்தா எனக்குத் தெரியுஞ் சாமி. இதை எளுதிக்கிங்கோ அப்பறம் என்னமோ பண்ணிக்கிங்கோ.
மே? என்ன உளருகிறாய்?
சா: நானா உளர்ரே ஊர்லெ சாமி அல்லாரும் அப்படித்தா பேசிக்கிறாங்கோ. என்ன பண்ணுனாலும் மேசத்திரட்டுக்கு பணம் கொடுத்தா உட்டுடுவாங்கோண்ணு கொஞ்சம் பேறா பேசராங்கோ. மேசத்திரட்டு பொண்டாட்டிகிட்டே பணங் கொடுத்தா ஆரையும் தண்டிக்கப் பண்ணலாமுண்ணு பேசராங்க. அம்புட்டுத்தான் நம்முளுக்குத் தெரியும். நா ஒண்ணும் ஒளரலே.
கடசியாக மேஜிஸ்ரேட்டு ஒன்றையும் எழுதிக் கொள்ளாமல் சாக்ஷியை அதட்டினதற்கு ஆகவும் மரியாதை இல்லாமல் பேசினதற்கு ஆகவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கேசை ராஜி செய்துவிடும்படி கெஞ்சி சாக்ஷியை வீட்டிற்கு வரச் சொன்னார்.
குடி அரசு - உரையாடல் - 01.09.1935
குடி அரசு - 1935 (2) 142
தர்மராஜ்ய விளம்பரம்
- யார் எழுதினால் என்ன?
“சுயராஜ்யம்” “சுயராஜ்யம்” என்று இதுவரை சொல்லிக் கொண்டு வந்த காங்கிரஸ்காரர்கள், கொஞ்சகாலமாக, “ராமராஜ்யம்” 'தர்ம ராஜ்யம்: என்று மாற்றி மாற்றிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கேட்கப் போனால், “வெறும் பெயரில் என்ன இருக்கிறது. சுயராஜ்யம் என்றும் சொல்லலாம், ராம ராஜ்யம் என்று நாங்கள் சொல்லுவதும் அதுதான். குடி அரசு என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள். பெயரைப் பற்றி நமக்குள் சண்டை வேண்டாம். பின்னால் பார்த்துக் கொள்வோம்" என்று எல்லாம் ஒன்றுதான் என்று பொருள்படும்படி பதில் சொல்லுகிறார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது என்பது நாணயமான பேச்சாகாது. சீவக் கட்டைக்கு விளக்குமாறு என்றும் சொல்லலாம். திருவலகு என்றும் சொல்லலாம்! கோவிலில் கூட்டுவதும் குப்பைதான் என்றாலும் திருவலகு என்று எளிதில் அர்த்தம் விளங்காத பெயரைச் சொல்லி, சீவக்கட்டையின். தகுதிக்கு அதிகப்படியான மதிப்பை அதன் தலையில் ஏற்றி ஏமாற்றுவது சுலபமாயிருந்து வருகிறது. இதைப் போலவே, பார்ப்பான் ஐயனாகிப், பூசுரனாகி, மனிதத் தன்மையில் இழி நிலையிலிருந்து கடவுட் தன்மையை
எட்டிப் பூலோகக் கடவுள் என்று எல்லாராலும் போற்றி வணங்கப்படுவதற்கு உரியவனாகி விட்டதாகச் சொல்லப்படும்போது, அவன் அடையும் மரியாதை உயர்வு எல்லாம் பெரும்பாலும் பெயர் மாறாட்டத்தால் செய்யப்படும் பித்தலாட்டத்தால் ஏற்படுகிறதே தவிர, வேறு உண்மையுள்ள. காரணம் ஒன்றினாலும் அன்று. ‘Give the dog 8 bad name and hang 1 என்பது இங்கிலிஷ் பழமொழி. நாயைக் கொல்ல நினைத்தால் அதற்கு பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லாரையும் கடிக்கிறது என்று பெயர் கொடுத்துச் சுட்டுக்கொல் என்பது இதன் பொருள். அவர்களுக்குப் பிடிக்காத ஒருவனை இழிவுபடுத்த வேண்டுமானால், அவனுக்கு நாஸ்திகன், தேசத் துரோகி, சர்க்கார் தாசன் என்ற பட்டங்களை சூட்டுகிறார்கள். சதா காலமும் இப்படியே தூற்றி, ஜனங்கள் நம்பும்படி செய்கிறார்கள். அதைப் போலவே தங்களுக்கு வேண்டிய ஒருவனைப் பெருமைப்படுத்த வேண்டுமானால், அவனுக்குமகாத்மா, தேசப்பந்து, தீனபந்து, தேச உத்தாரகன், தேசோத்தாரணன் என்ற பெரிய பட்டங்களைக் கொடுத்து, எங்கும், எப்போதும், ஓயாது, கூசாது கூறி வருகிறார்கள். இந்தப் பதங்களில் கடுகளவு உண்மைகூட
143 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இல்லையென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவர்களுக்கு அந்தரங்க எண்ணத்தின்படி ஒருவனைத் தூற்றவோ, போற்றவோ, வசதியான காரணம் கற்பித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினால், மனமறியப் பொய் சொல்லி நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். தற்காலம் தமிழ்நாட்டிலே, தேச பக்தர்கள் என்று புகழப்படும் ஒரு சில ஆசாமிகளையும்
தேசத் துரோகிகள் என்று இகழப்படும் ஒரு சில ஆசாமிகளையும், தினந்தோறும் அவர்கள் தலைமையில் ஏற்படும் புகழ்ச்சிக்கும் அவர்கள் எவ்வளவு தூரம் தகுதியுடையவர்கள் என்பதையும், நாம் மேலேகூறிய மனோதத்துவ நியதிப்படி ஆராய்ந்தால் தான் உண்மை புலப்படும்
காங்கிரசின் இலட்சியம்
தர்ம ராஜ்யம் என்று சொல்லப்படுவதுடன், இப்போது ஒரு புதிய
கட்சியும் “தார்மீக தேசீயக் கட்சி” என்ற திருப்பெயருடன் (Dhammic Nationalist Party) சென்னையில் ஸ்தாபிக்கப்பட்டு, பிரசாரம் செய்து வருகிறது. இந்தப் புதிய கட்சி, காங்கிரசுக்குட்பட்டதென்றும் இதன் அங்கத்தினர் எல்லோரும் காங்கிரஸ்காரர் என்றும் தேசத்தில் உள்ள சனாதனிகள் எல்லோரையும் காங்கிரசில் சேர்ப்பதே இதன் நோக்கமென்றும், இக்கட்சி ஸ்தாபகர்கள் சொல்லி வருகின்றனர். சனாதனிகளைக் காங்கிரசில் சேர்ப்பதன் உட்கருத்து, காங்கிரஸை முற்றிலும் சனாதன சபையாகச் செய்து, பார்ப்பன ஆதிக்கத்திற் குட்படுத்தவும், அதில் தற்போது கிளர்ச்சி செய்து வலுப்பெற்று வரும் சோஷலிஸ்ட் (அபேதவாதக்) கட்சியைஅடக்கி ஒழிக்கவுமேயாகும்.தீண்டாமை விலக்கு முதலிய போலிக் கிளர்ச்சியைக் கண்டு விலகிப் பயந்திருக்கும், சில வைதீகர்களுக்கு, “நீங்கள் எங்கள் ஹரிஜனப் பிரசாரத்தைக் கண்டு மயங்க வேண்டாம். அது வெறும் வாய்ப் பேச்சு வேஷம். சன்னாசியின் விஷயத்தில். நாங்கள் நடந்து கொண்டதை இது சம்பந்தமாக காந்தியாரின் பேச்சை பாருங்கள். வர்ணாஸ்ரம தர்மத்தை எப்படியும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆகையால் நீங்கள் எல்லோரும் காங்கிரஸில் சேர்ந்து எங்களுக்குப் பக்கபலமாயிருக்க வேண்டும்” என்று தைரியஞ் சொல்லி வைதீகர்களைச்
சேர்த்துக் கொள்வதற்கென்றே இந்தப் புதிய கட்சி ஏற்பட்டிருக்கிறது
சுயராஜ்யம், ராமராஜ்யம், தர்மராஜ்யம் ஆக மாறியதன் ரகசியத்தையும் இந்த மாறுதலால் விளையப் போகும் நன்மை தீமைகளையும் பற்றிச் சிறிது ஆராய்வது அவசியமாகும்
சுதந்தரப் போர்
1857 ஆம் வருஷத்தில் இந்தநாட்டின் விடுதலைக்காகஒரு துணிகரமான முயற்சி செய்யப்பட்டது. சில சிற்றரசர்களும் சேனைத் தலைவர்களும் சேர்ந்து, இந்தியாவிலிருந்து இங்கிலீஷ்காரரை ஓட்டி விடுவதென்று தீர்மானித்து தைரியமாகச் சண்டை ஆரம்பித்தனர். சண்டை ஆரம்பத்திலேயே,
குடி அரசு - 1935 (2) 144
இந்தியாவின் பழய தலைநகராகிய டெல்லி, கலகக்காரர்கள் கைவசமாயிற்று ஆறு மாதம் வரை டெல்லி கலகக்காரர் ஆட்சியில் இருந்தது. முடிவில் முயற்சி வெற்றியடையவில்லை. கலகக்காரர் தோற்றனர். இங்கீலிஷ் ஆட்சி முன்னிலும் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுப் போய்விட்டது. தேச சரித்திரத்தில் இந்நிகழ்ச்சி 'இந்திய சிப்பாய் கலகம்” என்று எழுதப்பட்டது தான் மிச்சம் அப்போது செய்யப்பட்ட சிப்பாய் கலகம் அல்லது சுதந்தரப் போர் எதற்காகச் செய்யப்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால், சுயராஜ்யமோ, தர்மராஜ்யமோ ஸ்தாபிப்பதற்கல்ல என்பது விளங்கும். புதிதாய் வந்த இங்கிலீஷ் கம்பெனி ஆட்சிக்குப் பலம் பொருந்திய விரோதிகள் பலர் ஏற்பட்டனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எல்லோருக்கும் எதிரியான. வெள்ளைக்காரரைத் துரத்திவிட முடிவு கட்டினர். வெள்ளைக்காரனைத் துரத்திய பின் என்ன செய்வது என்று தீர்மானிக்கவில்லை. ஆகையால் தான், டெல்லியைக் கைப்பற்றியவுடன் எந்த ராஜ்யத்தை ஸ்தாபிப்பது என்று தோன்றாமல், அங்கிருந்த மொகலாய வம்சத்தைச் சேர்ந்த ஒருவனைப் பாதுஷாவாக்கிப் பழய மொகலாய ராஜ்யம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தினர். அதிலிருந்து ஆறுமாதம் வரைடெல்லிக் கோட்டையின். மேல் பறந்த கொடி சுயராஜ்ய, தர்மராஜ்ய, ராமராஜ்யக் கொடியல்ல; பழய மொகலாய சக்ரவர்த்திகளின் கொடி
காங்கிரசின் தோற்றம்
இதற்கப்புறம் 30 வருஷங் கழித்து ஒரு ஆங்கிலக் கனவானின் (4.0. Hume) பெரு முயற்சியால் ஏற்பட்ட காங்கிரஸின் நோக்கமும் சுயராஜ்யம் அல்ல. இங்கிலிஷ் ஆட்சியில் சில சீர்திருத்தங்கள் பெறுவது குடியேற்ற
நாட்டு அந்தஸ்து பெறுவது என்று தான் இருந்து வந்தது. சுயராஜ்யம் என்ற பதம் 1906ல் தான் முதலில் உச்சரிக்கப்பட்டது. இந்த 30 வருஷங்களில் அதன் பொருள் இன்னதென்று தெளிவாக நாளது வரை சொல்லி விளக்கப்பட வில்லை. சுயராஜ்யம் பூரண சுயராஜ்யமென்று விரிந்ததே ஒழிய, சுயராஜ்யத்தின். அடிப்படையான தத்துவங்கள்கூட எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வகையில், இன்னும் விளங்கப்படவில்லை. இவ்வாறு மூடு மந்திரமாக விருந்த சுயராஜ்யம் என்பது, இப்போது ராமராஜ்யம் தர்மராஜ்யம் என்று பேசப்பட்டு வருவதிலிருந்து, காங்கிரஸ்காரர் கோரும் சுயராஜ்யத்தின். யோக்கியதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்பட்டு வருகிறது
சுயராஜ்யம் என்ற வார்த்தைக்குச் 'சொந்த அரசன் ஆளும் இடம் அல்லது நாடு' என்றுதான் அர்த்தம். அதாவது நமக்குள் ஒரு அரசனை (இந்துவோ, மஹம்மதியனோ, 1857-ல் மொகலாய வார்சு முன் நின்றது) ஏற்படுத்தி நம்முடைய நாட்டை, நம்முடைய அரசனைக் கொண்டு ஆள்வது என்றுதான் தாராளமாய் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், சுயராஜ்யம் என்ற சொல்லில் கோலாட்சி தான் குறிக்கப்படுகிறதேயல்லாமல், குடியாட்சி குறிக்கப்படுவதாகக் கொள்வதற்கில்லை. சுயாட்சி என்று
145 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சொன்னால், நம்முடைய குடிகள் ஆட்சி, அரசர் ஆட்சி என்ற இரண்டிற்கும் பொருந்தும் ராஜ்யமும் ஆட்சியும் ஒன்று என்றே வழக்கத்தில் பேசப்பட்டு வருவதிலிருந்து சுயராஜ்யம் என்ற லக்ஷியத்தின் முழு விவரத்தையும் பெரும்பாலார் உணரவில்லை யென்று தான் சொல்ல வேண்டும்
ஆயினும் இந்த'சுயராஜ்யம்' என்றுஅர்த்தமில்லாத ஒரு வார்த்தையானது, காந்தியின் காங்கிரஸ் நிர்வாகத்தின்போது, பெரியதோர் மந்திர வார்த்தையாகிக் கேட்ட மாத்திரத்தில், சாமான்ய ஜனங்கள் என்னென்னவோ பகற்கனவுகள் காணும்படி செய்து வந்தது. சுயராஜ்யம் வந்ததும், நாட்டில் பொன்னும் பொருளும் மலிந்து விடப்போகிறது. பாலும் தேனும் பாய்ந்தோடப் போகிறது. அணாவிற்கு ஆறு படி அரிசி விற்கப் போகிறது; ஒருவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை, வரியில்லை, வழக்கில்லை, சட்டமில்லை, தண்டனையில்லை, கட்டுப்பாடில்லை” யென்று தேசபக்தர்கள் கூறி வந்தார்கள். அதற்கு ஏற்றாப்போல் காந்தியும், “ராட்டையை எடு, ரட்டைக் கட்டு; வீட்டை மெழுகு, விளக்கெண்ணை விளக்கையேற்று, லக்ஷிமி வரப் போகிறாள்!” என்று நம்பிக்கையோடு உபதேசம் செய்து வந்தார். இதையெல்லாம் கவனிக்கும்போது, சுயராஜ்யம் என்று உர ஜபித்தவர்களில் ஒரு சிலராவது அதன் உண்மைத் தன்மையென்ன, அதனால் என்ன மாறுதல் எவ்வளவு தூரம் ஏற்படக்கூடும் என்பதை உணர்ந்து பேசினார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறோம்
ராமராஜ்யம் ஒத்துழையாமை இயக்கம் மும்முரமாய் நடத்தப்பட்ட போதெல்லாம் சுயராஜ்யமே குறிக்கோளாக இருந்து. இரண்டு முறை சட்ட மறுப்பு இயக்கம் தோல்வியுற்று, ஒத்துழையாமையே செத்தொழிந்த பிறகு, ராமராஜ்யம் தர்மராஜ்யம் என்று பகிரங்கமாக இப்போது சொல்லப்பட்டு வருவதைக் கவனிக்க வேண்டும். முதன்முதலில் காந்தியார் ஒத்துழையாமை ஆரம்பித்த போது மகம்மதியரும் பெரும்பாலும் அவ்வியக்கத்தை ஆதரித்து வந்தனர். (அப்போது அவர்களுக்குக் கிலாபத்துப் பித்தும் அதிகமாயிருந்தது. இந்து மகாசபையும் இப்போதிருப்பதைப்போல அவ்வளவு பிரபலமாயில்லை) ஆகையால், அப்போது ராமராஜ்யம் தர்மராஜ்யம் என்ற பேச்சு வெளியில் வரவில்லை. வந்திருந்தால் மகமதியர்கள் அதன் தலையில் அடித்திருப்பார்கள். பிற்பாடு மகமதியர் காங்கிரசிலிருந்து பிரிந்து நின்றனர். இரண்டாவது, மூன்றாவது சத்தியாக்கிரஹத்தில் மகமதியர் கலந்து கொள்ளவில்லை: காங்கிரஸ், பெரும்பாலும் இந்துக்கள் சபையாக மாறிய பிறகுதான், ராமராஜ்யம் என்ற பேச்சும் கிளம்பியது. இனிமேல் மகமதியரைப் பற்றிக் கவனிப்பதில் பயனில்லை. அவர்கள் (3ந் தரம், 4ந் தரம் ஆளுகளைத் தவிற மற்றவர்கள்) காங்கிரசில் சேர மாட்டார்கள் என்று தெரிந்துவிட்டதாலும், இனிமேல் ஏமாற்றப்பட வேண்டியவர்கள் இந்து சமுதாயத்தின் பாமர மக்களேயென்று தீர்மானமாகத் தெரிந்து விட்டதாலும் இந்து சமூகப்
குடி அரசு - 1935 (2) 146
பாமரர்களை, அவர்களது கடவுள் பெயராலும், கடவுள் அவதாரங்களான இராமன், கிருஷ்ணன் பெயராலும் ஏமாற்றுவது எளிதெனக் கண்டதாலுமே, காந்தியும் அவரது சீடர்களும் பகிரங்கமாக “நாம் கோருவது ராமராஜ்யம், தர்மராஜ்யம்”” என்று சொல்லத் துணிந்தார்கள்
ராமராஜ்யத்தின் யோக்கியதை
ராமாயணம் என்பதில் வெகு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது ராமனுடைய ராஜ்யத்தில் சூத்திரன் ஒருவன் தவம் செய்ததால் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைந்ததாகவும், தங்களுக்கு உரிய தொழிலைச் சூத்திரன் செய்ததால் தான் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்தது (சிறுவன் இறந்தான்) என்று இராமராஜ்யத்தில் உள்ள பிராமணர்கள் அரசனாகிய இராமனிடம் பிராது செய்ததாகவும், பிராது விசாரித்து நீதி செலுத்துகிற முறையில் இராமன் அந்தச் சூத்திரனைத் தவம் செய்த தப்பிதத்திற்காகத் தலையைக் கொய்து தர்மம் நிலை நிறுத்தினான் என்றும் ராமாயணத்தில் விளக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ராமன் பெரிய வர்ணாச்சிரமக்காரன் என்றும், அவனது ஆட்சி முறை வர்ணாச்சிரம பாதுகாப்பு என்றும் பிராமண பக்தனென்றும் யாரும் சந்தேகமறத் தெரியக்
கூடும். இவ்வாறு நீதி புரிந்து ஆட்சி செய்த இராமனுடைய ஆட்சியைப் போல் ஆட்சி முறை ஏற்படுத்துவதுதான் காங்கிரசின் நோக்கம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று இப்போது பகிரங்கமாகவே சொல்லப்படுகிறது காங்கிரஸ் கோரும் இந்த இராமராஜ்யத்தின் கீழ் நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் சமத்துவமும், சமஉரிமையும், சுயமரியாதையும் பெற்று, ஜாதி வித்தியாசக் கொடுமைகளினின்றும் நீங்கிச் சமத்துவம் பெற்று சுகம் பெறக்
கூடும் என்று இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும், பார்ப்பனரல்லாதாரின். நம்பிக்கை பெரிதா அல்லது அவர்களின் மூளை கெட்ட தன்மை பெரிதா என்பதை வாசகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தர்மராஜ்யத்தின் யோக்கியதை
தர்ம சாஸ்திரங்கள் என்பனவற்றில் மிகத் தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. புண்ணிய பூமியாகிய இப்பரத கண்டத்திலே, அநாதி வேதங்களால் சொல்லப்பட்டதும், தர்மம் குலைந்து அதர்மம் தலையெடுத்த காலங்களிலெல்லாம் அவதாரஞ் செய்து துஷ்ட நிக்கிரகமும் சிஷ்ட பரிபாலனமும் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கடவுளாலேயே ஏற்படுத்தப் பட்டதுமாகிய வர்ணாச்சிரம தர்மம் என்றும் நிலை பெற்று அமுல் நடத்தவும், தர்ம தேவதை நான்கு பாதங்களிலும் நடமாடவும், மனுமுறைப்படி மன்னன் கோலோக்சவும், மக்கள் தங்கள் குலானார சாதியானாரப்படி தங்கள் கடமைகளைச் செய்யவும், சூத்திரன் மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் ஊழியஞ் செய்து மறு ஜன்மத்தில் வைசியனாகப் பிறக்கலாம் என்ற நம்பிக்கையில் களித்திருக்கவும், வைசியன் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை நடத்தி அரசனுக்கு வேண்டும்
147 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
போது தனதானியாதிகளைக் கொடுத்து உதவுவதும், பிராமணர்களுக்குத்தான தர்மங்களை விசேஷமாக செய்து அவர்களோடு சிற்சில சமயங்களில் 'மனவாள்லு' என்று சொந்தம் பாராட்டிக் கொள்ள உரிமை பெறுவதுமே தன். கடமை யென்று கருதி, அவ்வாறு நடப்பதன் மூலம் அடுத்த ஜன்மத்தில் க்ஷத்திரியனாகப் பிறக்கலாம் என்று நம்பிக்கை கொண்டு சந்தோஷப்படவும், க்ஷத்திரியன் பிராமணருக்கு வேண்டிய செளகரியங்களைத் தேடிக் கொடுத்து, சிஷ்டபரிபாலனஞ் செய்வதும், வேத வித்தகர்க்கு ஏற்படும் விபத்துகளைத் தடுத்து அவர்களின் விரோதிகளான துஷ்டர்களை நிக்கிரஹஞ் செய்வதுமே தன் குலதர்மம் என்று எண்ணி நடக்கவும், அவ்வாறு நடப்பதின் நிமித்தம் மறு ஜன்மத்தில் புனிதமான பிராமண ஜன்மம் பெறலாமென்று எண்ணி மனங் களித்திருக்கவும், அரசன், தினம் லக்ஷம் பிராமண போஜனம் செய்விப்பதாலும், அநேக யாகங்கள் செய்து வைப்பதாலும் 100 அஸ்வமேத யாகம் செய்து முடிப்பதாலும், இந்திரப் பதவி பெற்று, மேனகை ஊர்வசி முதலிய தேவமாதர்களைக் கூடிச் சதாகாலம் இன்புற்றிருக்கலாமென ஆசை கொண்டு நடக்கவும், பிராமணனோ, அரசனுக்கு துணையாக அறிவுப் பொக்கிஷமென்று இருந்து கொண்டு, புதிது புதிதாகப் புராணங்களையும், ஸ்மிருதி சுருதிகளையும், தர்மசாஸ்திரங் களையும் ஏற்படுத்திக் கொண்டு, நாடு முழுவதும் தங்களது ஏகபோக மான்யமாக அனுபவிக்கவும், அரசனைப் பார்த்து நாட்டைக் கொடு என்றால் நாட்டைக் கொடுக்கவும், மகனை கொடு என்றால் மறுக்காமல் கொடுக்கவும், பெண்டாட்டியை கொடு என்றால் பேசாது கொடுக்கவும் அப்படி நடப்பதுதான் அரச தர்மம் என்றும், அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்று குடிகளும் அவ்வாறே நடக்க வேண்டுமென்றும் தர்ம சாஸ்திரங்களை நாடெங்கும் அனுசரிக்கும்படி பிரசாரம் செய்து தங்கள் இனவிருத்திக்கு உழைப்பது தங்கள் கடமை, குலாசாரம் என்று பிராமணன் நடந்து கொண்டு வரவும், இவ்வாறு நான்கு ஜாதியாரும் வர்ணாச்சிரமத்தைக் கடைப்பிடித்து நடப்பதற்குச் சாதகமான ஆட்சி முறையே தர்மராஜ்யம் ஆகும். அப்போது பசுவும் புலியும் ஒரு துறையில் நீர் குடிக்கும் என்பதில் என்ன சந்தேகம்? இவ்விதமான தர்மராஜ்யத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் குறிக்கோள் என்று இப்போது காங்கிரஸ்காரர் தெள்ளத் தெளியச் சொல்லுகிறார்கள்.
இங்கிலீஷ் அரசாங்கம் இன்று அசைக்க முடியாதபடி பலமாய் இருக்கிற இந்தக் காலத்திலேயே, வாய் கூசாமல் ராமராஜ்யம் தர்மராஜ்யம் ஏற்படுத்தப் போகிறோம் என்று ஒரு கூட்டத்தார் பகிரங்கமாகச் சொல்லத் துணிந்திருக்கிறார்கள் என்றால், இவர்களின் நெஞ்சுத் துணிவை மெச்சுவதா? அல்லது இதைக் கேட்டுக் கொண்டு, இவர்களுக்கு ஆதரவாயிருந்து கூடச் சேர்ந்து கோவிந்தா போடுகிற “வானர சைன்யம்” என்று பட்டம் பெற்று வருகிற பாமர மக்களின் முட்டாள்தனத்திற்கு வருந்துவதா என்று தெரியவில்லை.
குடி அரசு - கட்டுரை - 01.09.1935
குடி அரசு - 1935 (2) 148
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நம் பார்ப்பனர்களுக்கு இழவு சேதிகள் போல் காணப்படுகின்றது என்பது நமக்குத் தெரியும்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கோருவதே பார்ப்பனரல்லாத சமூகங்களின் (ஜஸ்டிஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதையே பார்ப்பன சமூக (காங்கிரஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும் இருந்து வருகின்றது என்பதை அனேக ஆதாரத் துடன் எடுத்துச் சொல்லலாம்.
இன்று இந்நாட்டில் மதங்களின் பேரால் உள்ள ஸ்தாபனங்களான இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, சீக்கிய ஸ்தாபனங்களும்,
வகுப்புகளின் பேரால் உள்ள மேல் ஜாதி, நடு ஜாதி, கீழ் ஜாதிகள் என்று சொல்லப்படும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே கண்ணாகக் கொண்டு கிளர்ச்சிகள் செய்வதை யாரும் மறுக்க முடியாது
அன்றியும், வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை, மிதவாதம் முதலாகிய கட்சிகள் என்பவைகளில் சிலது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்தும், சிலது ஆதரித்தும், கிளர்ச்சி செய்வதைத்தான் முக்கியமாகவும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும் கருதி வந்திருக்கின்றன, கருதியும் வருகின்றன. இவ்வளவோடு மாத்திரமல்லாமல் இவைகளில் பெரும்பான்மையான ஸ்தாபனங்கள்,
'வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இருப்பதாய் இருந்தால் பிரிட்டிஷ் ஆட்சியே ஏகபோகமாய் இருக்கட்டும்" சிலதுகள் “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இல்லாமலிருப்பதினால் பிரிட்டிஷ் ஆட்சியே என்றென்றும் இருப்பது நலம்" என்றும் கூப்பாடு போடுவதைப் பெரும் பெரும் தேசாபிமானிகள் முழுச் சுதந்திரவாதிகள், சமதர்மவாதிகள் என்பவர்கள் வாயாலேயே காது செவிடு பட கேட்டு வருகிறோம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்காகவே ஏற்பட்ட கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சியானது, அதை ஏற்படுத்தியவர்கள் எவ்வளவோ பெரிய தன்னல.
199 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மறுப்புள்ளவர்களாகவும், தேசாபிமானமுள்ளவராகவும், சமூகாபிமான முள்ளவராகவுமாய் இருந்தும், பார்ப்பனர்களும் அவர்களது ஆதிக்கமுள்ள. காங்கிரசும் அந்த (ஜஸ்டிஸ்) ஸ்தாபனத்தை எதிர்த்து, அதன் தலைவர்களைப் பற்றி விஷமப்பிரசாரம் செய்து அத்தலைவர்கள் மீது பாமர மூட ஜனங்களுக்கு ஆத்திரமும் துவேஷமும் ஏற்படும்படியாகச் செய்துவிட்டதோடு அத்தலைவர். களைக்கண்டகண்ட இடத்தில் வையவும், அடிக்கவும் அவர்களது வீடுகளுக்குள்.
புகுந்து கலகங்கள், பலாத்காரமான காரியங்கள், கொள்ளைகள் முதலிய காரியங்கள்கூட செய்யும்படியாகவும் செய்து விட்டதால் அக்கட்சித் தலைவர்கள் மாத்திரம் அல்லாமல் மற்ற அபிமானிகளும், ஆதரவாளிகளும் சர்க்காருடைய தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதோடு, சர்க்கார் சம்மதப்பட்டால்தான் பார்ப்பனர்கள் எதிர்ப்பை சமாளித்து தாங்கள் கோரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைப் பெற்று சமதானத்தோடு வாழலாம் என்கின்ற நிலைமை பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஏற்பட்டுவிட்டதால், சர்க்கார் தயவாலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை பெற்று சமாதானமாய் வாழ வேண்டியதாய்விட்டது
இன்றும் நாளையும் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குறையாகக் கூறப்படும் குற்றமெல்லாம் “ஜஸ்டிஸ் கட்சியார் சர்க்கார் தயவு பெறப்பாடுபடு கிறார்கள் “சர்க்காருக்கு அனுகூலமாக இருக்கிறார்கள்!” “சர்க்கார் தாசர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லுவதைத் தவிற வேறு ஒன்றும் முக்கியமாய் காணப்படவில்லை.
இப்படிச் சொல்லப்படுவதால் ஜஸ்டிஸ் கட்சியாரோ, அல்லது அவர்களை ஆதரிக்கும் சுயமரியாதை இயக்கத்தார்கள் முதல் மற்ற எந்தக் கட்சியாரோ, வருத்தப்பட வேண்டியதில்லை என்பதோடு, அவமானமாகக் கருதவோ அல்லது அதை மறுக்கவோகூட யாரும் முயற்சிக்கவும் வேண்டியதில்லை என்பதே நமதபிப்பிராயம் ஏனெனில் இந்த நாட்டில் ஒரு மனிதன் அல்லது மனித உடல் பெற்ற எந்த ஜீவனும் பார்ப்பானுக்கோ, பார்ப்பன மதத்துக்கோ, பார்ப்பன சாஸ்திரத்துக்கோ, பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட கடவுளுக்கோ அடிமையாய் - ஆதரவாளியாய் - அனுதாபியாய் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட, சர்க்கார்க்கு அரசாங்கத்திற்கு அனுகூலியாகவோ, தாசராகவோ இருப்பது கீழானதோ, இழிவானதோ ஆன காரியம் அல்ல என்பதோடு பல பங்கு மேலானது என்று கூடச் சொல்லலாம் இன்றைய தேச பக்தர் - காங்கிரஸ் பக்தர் - பிராமண பக்தர் - மத
பக்தர் ஆகியவர்கள் வாழ்வைவிட அரசாங்க பக்த வாழ்வு ஒரு விதத்திலும், நாணையமற்றதாகவோ சுயமரியாதை அற்றதாகவோ, யோக்கியமற்ற தாகவோ ஒரு இடத்திலும் நாம் ஒரு நாளும் காண முடியவில்லை.
குடி அரசு - 1935 (2) 150
இன்றைய உலக, சமுக வாழ்வு முறையில் ஒரு மனிதன் ஒரு அரசாட்சியின் கீழ் பிரஜையாய் இருப்பது எவ்வளவு அவமானகரமான வாழ்வு அல்லவோ அது போல்தான் ஒழுங்குக்கு கட்டுப்பட்ட எந்த அரசியல்வாதியும் ஒரு அரசாங்கத்துக்கு அனுகூலமாகவும் அதனுடைய சட்டதிட்டங்களுக்கு அடங்கினவனாகவும், அரசாங்க விஸ்வாசனாகவும், அரசாங்க பதவியாளனாகவும் இருப்பது குற்றமில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவோம்
ஆனால் பார்ப்பனர்களுக்கு அடிமையாக, பார்ப்பன தாசராக, பார்ப்பனர்களையும், அவர்களது ஆதிக்கம் நிலைநிற்கத்தக்ககொள்கைகளையும்
ஆதரிக்கும் குலாமாக, தாசராக இருப்பது என்பது மாத்திரம் ஒரு நாளும் நீதியோ, சுயமரியாதையோ, வீரமோ, பரிசுத்த ரத்த ஓட்டமுள்ள சரீரம் கொண்ட ஜீவத் தன்மையோ ஆன காரியமாக ஆகவே ஆகாது
இன்று பார்ப்பனர்கள் பின்னால் அவர்கள் தயவால் பிழைப்பை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தால் அவர்களது வாய்களாய், உதடுகளாய், அடிமைகளாய், அவர்களைச்சுவாமி என்று கூப்பிட்டுக் கொண்டு, முன்னோடும் பிள்ளைகளாய் திரியும் மானங்கெட்ட மக்கள் எத்தனையோ பேர், சிறிதும் வெட்கமில்லாமல் தங்களைத் தேசபக்தர்கள் - தேசீயவாதிகள் தேரீயவீரர்கள். என்று சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்கும் அவமானத்தைவிட- இழிவைவிட அரசாங்கத்துக்கு தாசராய் இருந்து வயிறு வளர்ப்பதோ, பெருமை பெறுவதோ ஒரு நாளும் ஒரு கடுகளவும் இழிவான - அவமானமான காரியம் ஆகாது என்பதுடன் அதற்காக எந்தப் பார்ப்பனரல்லாதாரும் பின் வாங்கவோ மறுக்கவோ முயற்சிக்க வேண்டியதில்லை என்றும் சங்கநாதம் செய்வோம்
பிழைக்க வேறு வழியில்லாமலும், மானம் ஏற்படக் கூடிய ரத்த ஓட்ட
மில்லாமலும் திரிகின்ற அனேக காலிகள் தங்களுக்குப் பேச சக்தி இல்லாத காரணத்தாலும், நியாயமான காரணங்களைச் சொல்லி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலிய பார்ப்பனரல்லாதார் கட்சிக் கொள்கைகளை மறுக்க யோக்கியதை இல்லாததாலும் “ஜஸ்டிஸ் கட்சி சர்க்கார் தாசர் கட்சி, அரசாங்க குலாம் கட்சி, வெட்கங் கெட்ட கட்சி, மானம் கெட்ட கட்சி! என்று மடத்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் குறைக்கிறார்கள். இவர்களது குறைப்புகளை கிராமப்போனில் பிடித்து மெஷின்களில் வெளியிடுவது போல் பார்ப்பனப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தி பார்ப்பனரல்லாத கட்சியார் மீது துவேஷத்தை உண்டாக்கி அதன் பயனை அனுபவிக்கின்றன.
இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் காரணமாக தோழர்கள்
காந்தியார், டி. பிரகாசம், சி. ராஜகோபாலாச்சாரி முதலிய பார்ப்பன தாசரும், பார்ப்பனரும் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியைவிட, பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் ஆட்சியே மேலானது என்று சொல்லி “அரசாங்கத்தாசராகவும், குலாம்”
151 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
களாகவும் ஆவதே மேல் என்று கருதி காங்கிரஸ் பக்தர்களை “குலாம்” வேலைக்குப் போக இன்று உசுப்படுத்தி விட்டிருக்கவில்லையா?
இனிமேல் இக்கூட்டத்தார் எவ்வளவு விஷமம் செய்தாலும், எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் அரசாங்கத்துக்கு எவ்வளவு அடி பணிந்தாலும் அவை ஒரு சிறிதும் பயன்படப் போவதில்லை என்பது நமது உறுதி. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை என்பது இனி நம் நாட்டில் இராமாயணக் கதையில் “வாலியை எதிர்ப்பவனுடைய பலம் எல்லாம் வாலிக்கே வந்து சேரும்' என்று சொல்லப்பட்டது போல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எவ்வளவுக்கு எவ்வளவு எதிர்க்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அக் கொள்கைக்கு பலமும் செல்வாக்கும் பலப்பட்டுக் கொண்டேதான் வருகிறது.
வந்து கொண்டேதான் இருக்கப் போகிறது.
தங்களைத் தவிர சமதர்மத்துக்கு வேறு பாஷியக்காரர்கள் இல்லை என்று கருதிக் கொண்டிருக்கிற ஏட்டுச்சுரக்காய் வாதிகளுக்கு வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தப்பாக காணப்படலாம். ஆனால் அந்தக் கட்சி கூச்சலளளவோடு சரி என்றும், பார்ப்பனர் கொடுக்கும் சபாஷ் பட்டத்தோடும் சரி என்றுதான் சொல்லலாமே தவிற மற்றபடி வகுப்புவாரி முறை சமதர்மத்தில் கல்லெழுத்துப் போல் இடம் பெறத்தான் போகிறது
மேலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையானது சென்னை மாகாணத்தில் தமிழ்நாட்டில் மாத்திரமல்லாமல், கர்நாடக நாடு என்னும் மைசூர் ராஜியத்தில் வெகு நாளைக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. சென்ற வாரத்துக்கு முந்தின வாரத்தில் திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் வகுப்புவாரி முறை ஏற்படுத்தப்பட்டாய்விட்டது.
இனி கொச்சி சமஸ்தானத்திலும் அதற்கு வேண்டிய எல்லாக் காரியமும் செய்யப்பட்டாய் விட்டது. புதுக்கோட்டை சமஸ்தானத்திலும் விதை ஊன்றியாய்விட்டது இவை தவிர, இதர மாகாணங்களாகிய டெல்லி, பஞ்சாப் முதலிய மாகாணங்களிலும், விதை விதைக்கப்பட்டாய்விட்டது. அரசியல் சீர்திருத்தச் சட்டத்திலும் கிளர்ச்சியோடு பலமாக இடம் பெற்றுவிட்டது
உலகில் அமெரிக்கா முதலிய குடியரசு நாடுகளிலும் மற்றும் மதம்,
ஜாதி, தொழில் ஆகியவைகளால் பிரிக்கப்பட்ட நாடுகளிலும் வகுப்புவாரி முறை செல்வாக்குப் பெற்றுவிட்டது.
இனி, இந்தப் பார்ப்பனர்கள் இதற்காக பாடுபடுவது என்பது தங்கள். யோக்கியதையைக் கெடுத்துக் கொள்வதற்காக செய்யப்படும் முட்டாள். தனமான காரியம் என்பதல்லாமல் வேறில்லை.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் குறை கூற நாளாவட்டத்தில் அது விரிவடைகிறதே தவிற இனி ஒரு நாளும் அடங்கப் போவதில்லை.
குடி அரசு - 1935 (2) 152.
சென்ற மாதத்தில் நமது மாகாணத்தில் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், ஸ்தல ஸ்தாபன பள்ளிக்கூடங்களுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைப்படி சிப்பந்திகள் நியமிக்க உத்திரவு வந்துவிட்டது
இனி சர்க்கார் சகாயம் பெரும் பள்ளிக்கூட உபாத்தியாயர்களுக்கும், சிப்பந்திகளுக்கும்கூட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விகிதப்படி சிப்பந்திகள் நியமிக்கப்பட முயற்சிகள் நடக்கிறது. அது கிடைக்கும் வரை யாரும் சும்மா
இருக்கப் போவதில்லை.
அவ்வளவு மாத்திரம் தானா என்று பார்த்தால், பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் பிள்ளைகளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விகித எண்ணிக்கைபடிதான் சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற நிலை ஏற்பட்டா. லொழிய சாந்தி ஏற்படும் என்பதாக நாம் நினைக்கவில்லை.
ஏனென்று கேட்கப்படுமானால் கேவலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பதற்காக இந்நாட்டுப் பூர்வீக மக்களும் 100க்கு 90 பாகம் அரசாங்கத்துக்கு வரி செலுத்தும் மக்களும், இந்நாட்டு பார்ப்பன. மக்கள் முழுவதும் உயிர் வாழ்வதற்கும் அவர்களது பஞ்சாங்க தர்ப்பைப்
புல் தொழிலும் பல்லைக் கெஞ்சிக் கெஞ்சி பிச்சை வாங்கிப் பிழைக்கும் தொழிலிலும் மற்றும் எவ்வளவோ ஈனத் தொழில்களும் ஒழிந்து, இன்று ராஜாக்கள், பிரபுக்கள், மடாதிபதிகள் போல் வாழ்க்கை நடத்துவதற்கு அனுகூலமாய் இருந்து உழைத்து உழைத்து அழுத பார்ப்பனரல்லாத ஏழைப் பாட்டாளி மக்களைக் கெடுக்கவும், இழிவு படுத்தவும், அவர் என்றும் தலை. எடுக்காதபடி அழுத்தி வைக்கவும், அவர்களது ஸ்தாபனங்களுக்குத் தொல்லை கொடுக்கவும், அவர்களது தலைவர்களை ஒழிக்கவும், துணிந்து விட்டார்கள் என்றால், இந்த நன்றி விஸ்வாசமில்லாத கூட்டத்தை பழையபடி பஞ்சாங்கம் தர்ப்பைப்புல் பிழைப்புக்குக்கூட இடமில்லாமல். செய்வதில் என்ன குற்றம் என்று கேட்கின்றோம்
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களின் சொந்த யோக்கியதையும், பொது யோக்கியதையும் இந்த மாகாணத்தில் யாருக்குத் தெரியாது? அப்படிப்பட்ட அவர் இன்று இந்த மாகாணத்து மக்களுக்கு ஏன்? இந்திய 35 கோடி மக்களுக்கு அரசியல் தலைவராக்கப்பட்டு அவரால் நாக்கில் நரம்பில்லாமலும், ரத்தத்தில் சொரணை இல்லாமலும், நெஞ்சில் பயமில்லாமலும் பேசப்பட்டு, பார்ப்பனரல்லாத மக்கள் இழிவுபடுத்தப் படுவதென்றால் அப்படிப்பட்டவர்கள் விஷயத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வாழ விரும்புகிறவர்கள் விஷயத்தில் ஏன் தாக்ஷண்யம் பார்க்க வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை. இன்றைய தினம் பார்ப்பனர்களை எதிர்க்கவும் அவர்களது யோக்கியதை வெளியாக்கவும் நமக்குத் தக்க சந்தர்ப்பமும், செளகரியமும் ஏற்பட்டு வருவதற்கு ஆதாரமாய் இருப்பது பார்ப்பனர்கள் நமது
1533 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை எதிர்ப்பதும் அதன் காரணமாகவே
நம் ஸ்தாபனங்களையும், தலைவர்களையும் இழிவுபடுத்துவதும், நம் ஆட்களையே கூலிக்கமர்த்தி நம் மீது ஏவி விடுவதுமேயாகும். ஆகையால் இந்த நிலை, அதாவது இப்பார்ப்பனர்கள் கிளர்ச்சியும் அவர்களது கூலிகளுடைய குலைப்பும் இனியும் நிலைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகின்றோமே ஒழிய இது அடங்கிவிட வேண்டுமென்று நாம் உண்மையாகவே ஆசைப்படவில்லை
நிற்க, இன்று அமுலில் இருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விகிதம் ஏற்படுத்தப்பட்டு 5, 6 வருஷ காலமாகிவிட்டதால் இனியும் அந்த விகிதமே பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு போதுமா என்று கேட்கின்றோம். இது மிகுதியும் நியாயமற்றதும், போறாததுமானது என்பது நமது அபிப்பிராயம்
ஏனெனில், 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பனர்களுக்கு 100க்கு 16% ஸ்தானங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. மீதி உள்ள ஸ்தானங்களில் மகமதியர்களுக்கு 12, கிறிஸ்தவர்களுக்கு 6 ஸ்தானங்கள் போக மீதி 62 ஸ்தானங்களே 100க்கு 75 பேர்களுக்கு மேல் உள்ள சமுதாயமாகிய பார்ப்பனரல்லாத இந்துக்கள் ஆதி திராவிடர்கள் என்கின்ற இரு சமூகத்துக்கும் கொடுக்கப்பட்டிருப்பது என்றால் இது எப்படி நியாயமாகும்
இந்த முறை ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இதற்காக என்னதான். சமாதானம் சொல்லப் பட்டிருந்தாலும் 5, 6 வருஷம் பொருத்தும் இப்போதும் அந்த முறையே இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அவசியம் என்று கேட்கின்றோம். இந்த 5, 6 வருஷ காலமாய் இந்த முறைப்படி வினியோகிக் கப்பட்டு வந்தும், இன்று கணக்குப் பார்த்தால் அதற்கு முன் இருந்த நிலைமையைக் குறிப்பிட வேண்டிய ஒரு சிறு அளவுக்குக்கூட அசைத்ததாகத் தெரியவில்லை. மொத்தம் இந்து சமூகத்தில் கிட்டத்தட்ட 100க்கு 25 விகிதம் உள்ள ஆதி திராவிட சமூகத்துக்கு 100க்கு 6 ஸ்தானம் என்பது எவ்வளவு கொடுமையான விகிதம் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
ஆகையால் பார்ப்பனர்களுக்குள்ள 16 ஸ்தானங்களை இனியும் கொஞ்சகாலம் வரை 10 ஸ்தானமாகவாவது ஆக்கிவிட்டு, அதை தாழ்த்தப் பட்ட மக்கள் என்பவர்களுக்கும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர் களுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துவிட வேண்டும் என்றே சொல்லுகின்றோம்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களுக்கு 100க்கு 16% ஸ்தானம் வழங்குவதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 100க்கு 6 ஸ்தானமே வழங்குவதும் இனி அரை நாழிகை கூட பொருத்துக் கொண்டிருக்கக்கூடிய
காரியம் அல்ல என்றே கூறுவோம்
நமது பார்ப்பனரல்லாத சட்டசபை அங்கத்தினர்களில் பெரும் பகுதிப் பேர் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குப் பிரதிநிதிகள் என்று சொல்லுவது
குடி அரசு - 1935 (2) 154
சுத்த முட்டாள்தனமே யாகும். அவர்களில் பெரும் பகுதி பேர் பார்ப்பனர்கள். பிரதிநிதிகள் என்றும், பார்ப்பனர்கள் அடிமைகள் என்றும் சொல்லக் கூடியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டி இருப்பதற்கு வருந்துகிறோம்
நமது மந்திரிமார்களும் இவ்விஷயத்தில் போதிய உணர்ச்சி அற்றவர்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறதற்கு வருந்துகிறோம்
ஆகையால், அடுத்து கூடப் போகும் சட்டசபைக் கூட்டத்தில், இந்த வகுப்புவாரி முறை விகிதத்தை மாற்றி பார்ப்பனரல்லாதாருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பார்ப்பனர்களுக்குள்ள ஜனத் தொகை விகிதாச்சாரத்தில் 3-ல் ஒரு பங்கு வீதமாவது ஜனத் தொகைக்குத் தகுந்தபடி ஏற்படும்படியாக முயற்சி செய்யப்பட வேண்டும் என்பதோடு மற்றும் பல துறைகளுக்கும் இம்முயற்சியை விரிவாகச் செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.09.1935
155 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தோட்டத்தில் பகுதி கிணறா?
பிரஞ்சு தேசத்தில் கத்தோலிக்க குருமார்கள் மாத்திரம் 47015 பேர்கள் இருப்பதாக ஒரு பிரஞ்சு அறிக்கை கூறுகிறது. அன்னாட்டு ஜனத்தொகை:
4 கோடி இதை லீகித்துப் பார்த்தால் குழந்தை, குஞ்சு, கிழடு, கிண்டு, மொண்டி, முடம் உள்பட 850 உருப்படிக்கு ஒரு கத்தோலிக்க குரு இருக்கிறார். என்று தெரிகின்றது
கத்தோலிக்க பிரிவு போலவே பிரஞ்சு தேசத்தில் இன்னம் பல
பிரிவுகளும் உண்டு. அந்தப் பிரிவுகளுக்கும் இது போன்ற அளவுள்ள குருமார்கள் இருப்பார்களேயானால் கிட்டத்தட்ட 2 கோடி குருமார்களுக்கு குறையாமல் ஆய்விடக்கூடும்
அப்படியானால் “தோட்டத்தில் பகுதி பாகம் கிணறு” என்பது போல ஜனத்தொகையில் பகுதி குருமார்களாகத்தான் காணப்படும்
பெண்களையும், குழந்தைகளையும் குறைத்துவிட்டால் “ஒரு கூடை கல்லும் பிடாரி ஆனது” போல எல்லா மக்களும் குருமாராய்த்தான்' இருக்க வேண்டும்
இந்து மதத்தில் 22 கோடி மக்களில் 33 கோடி தெய்வங்கள் உண்டு. இது ஆள் ஒன்றுக்கு 1%க் கடவுள் ஆகிறது. ஆனால் இந்த குருமார்கள் என்ன விகிதாச்சாரம் ஆகிறார்கள் என்று கணக்குக்கு தெரியவில்லை இவ்வளவு குருமார்களை காப்பாற்ற வேண்டிய பொருப்பு இவர்களுக்கு சாப்பாடு, துணிமணி, வீடு வாசல், போக்கு வரவு செலவு ஆகியவைகளுக்கு யார் பாடுபட்டுக் கொடுப்பது என்பது ஒரு பெரிய பிரச்சினை அல்லவா?
இப்படி தேசந்தோறும் மதங்கள்தோறும் குருமார்கள், ஆச்சாரிமார்கள், மடாதிபதிகள், உபதேசியார்கள், குருக்கள், அர்ச்சகர், தேவ அடியார்கள் முதலாகிய மக்கள் பல கோடிக் கணக்கில் ஏற்பட்டு தெய்வப் பிரார்த்தனை, பாவ மண்ணிப்பு, புத்திமதி கூறுதல் ஆகிய காரியங்கள் ஆயிரக்கணக்கான. வருஷங்களாக பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடத்தப்பட்டுவந்தும்
உலகில் கொலை, களவு, விபசாரம், வஞ்சனை, சூது, பொறாமை, ஏமாற்றுதல்: முதலாகிய காரியங்கள் என்பவைகள் விகிதாச்சாரம் எல்லா மதத்திலும் எல்லா தேசத்திலும் எல்லா ஜாதியிலும் நடைபெற்றுக்கொண்டே வருவதோடு,
குடி அரசு - 1935 (2) 156
நீதி நிர்வாக ஸ்தாபனங்கள் இல்லாமல் மனித சமூகத்தில் சட்டப்படிகான
சமாதானம் ஒழுங்கு கூட நடைபெருவதற்கில்லாமல் இருந்து வருகின்றன. இவ்வளவோடு மாத்திரமல்லாமல் பசி,பசி, நோய்,நோய் சம்சாரத் தொல்லை சகிக்க முடியவில்லை, பிள்ளை குட்டிகள் உபத்திரவம் பொருக்க முடியவில்லை, என்கின்ற கூப்பாடு இருந்துகொண்டே வருகின்றன. எனவே, மதங்கள், கடவுள்கள் மாத்திரம் அல்லாமல், குருமார்கள்
மதப் பிரசாரகர்கள் கடவுள் பக்தர்கள் கடவுள் பூஜைக்காரர்கள் கடவுள் பிரசாரக்காரர்கள் ஆகியவர்கள் ஏன்? எதற்கு ஆக? இருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.
குடி அரசு - கட்டுரை - 01.09.1935
157 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கேள்வியும் உத்தரமும்
தம்பிக்கும் - அண்ணனுக்கும்
தம்பிக்கும் வாசக்காமிக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
தம்பி:உ அடே அண்ணா உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை, தயவு செய்து பதில் சொல்லுகிறாயா? அப்புறம் மார்க்கு தருகிறேன்.
அண்ணன்: அய்யா தம்பி கேள் பார்ப்போம். ஒரு கை பார்க்கிறேன்.
தம்பிஉ அடேய் அண்ணா பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்: களைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா? அண்ணன்: இது தானா பெரிய கேள்வி இதற்கு பதில் நம்ம வீட்டு வாசக்காரி அம்மா சொல்லி விடுவார்களே.
தம்பிஉ எனக்குத் தெரியவில்லையே
அண்ணன்: சொல்லச் சொல்லுகிறேன் கேள். அம்மா வாசக்காரி தம்பிக்கு சில கேள்விகளுக்குப் பதில் வேண்டுமாம் சொல்லுகிறாயா?
வாசக்காரி: தெரிஞ்ச வரையில் சொல்லுகிறேன்.
அண்ணன்: தம்பி பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்களைக் கண்டுபிடிக்க ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லம்மா பார்ப்போம்
வாசக்காரிஉ இதுதானா ஒரு பிரமாதமான கேள்வி? சொல்லுகிறேன் கேளுங்கோ தம்பி! எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள், இந்து முதல் ஆனந்த விகடன் வரை புகழ்ந்து பேசு கின்றனவோ அந்தப் பார்ப்பனரல்லாதார்களும் சி. இராஜகோபாலாச்சாரியார் முதல் சத்தியமூர்த்தியார் வரை எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரை புகழ்ந்து பேசுகிறார்களோ அந்த பார்ப்பனரல்லாதாரும் முதல் நெம்பர் வடிகட்டின விபூஷணாள்வார்கள் ஆஞ்சனேய ஆழ்வார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இருவர்களும் சகோதரத் துரோகி, குலத் துரோகி,
குடி அரசு - 1935 (2) 158
காட்டிக் கொடுப்பவர், சுயநலத்துக்கு எவ்வளவு இழிவான காரியமும் செய்பவர்கள், என்றெல்லாம் ஆன பின்பு தானே ராம பிரானால்" (ஆரியக் கதைகளில்) ஆழ்வார்களாக சீரஞ்சீவிகளாக கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் அந்த விபூஷணர், அனுமார் ஆகியவர்களைவிட 100 மடங்காவது அதிகமான. வர்களாய் இல்லாவிட்டால் எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனர்களுமான இந்தக் காலம் ராமாயணம் ராமபிரான் ஆகியவைகள் பார்ப்பனரல்லாதார்களைப் புகழ்ந்து கூறுமா? இது தெரியாமல் போயிற்றே உங்களுக்கு?
தம்பி எல்லாரையும் அப்படி சொல்லிவிட முடியுமா?
வாசக்காரி: முடியாது என்று காணப்பட்டால் அப்படிப்பட்டவர்களை (பார்ப்பனர்களால் புகழ்ந்து கூறப்பட்டவர்களை) முட்டாள்கள், முழு மூடர்கள் என்கின்ற கலத்திலாவது போட்டுத்தான் ஆக வேண்டும். அயோக்கியர்கள் என்பதிலிருந்து (Exemption) எக்ஸ்செம்ஷன் செய்து விடலாம்.
தம்பி: இவ்வளவு பரந்த உலகில் எவ்வளவோ பெருமை பெற்றதாக சரித்திரத்தில் கூறிக் கொள்ளும் தமிழ் மக்களில் சிலராவது இவ்வளவு இழிவான நிலையை அடைவானேன்?
வாசக்காரி: சிலருக்கு பிழைப்புக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு உத்தியோகத்துக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு விளம்பரத்துக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு “இன்னது இன்னது கெட்டால் இன்ன இன்ன இடம் தான் போய்ச் சேர வேண்டும்' என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரி பார்ப்பனரல்லாத சமூகக் குழுவாகிய தங்கள் இனத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு இந்நாட்டில் பார்ப்பனக் குழுவில்லாமல் வேறு புகல் இடம் இல்லாமல் போய்விட்டதல்லவா? ஆகையால் தான்.
தம்பிஉ உண்மையிலேயே நல்ல நிலைமையில் நல்ல எண்ணத்தோடு. பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் யாருமில்லையா?
வாசக்காரிஉ நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்க்கலாம். ஒரு பார்ப்பனரல்லாதார் பெயரையாவது. தோழர்கள் சி.ஆர். ரெட்டியார் முதல் அ.கு. முதலியார் வரை உள்ள கூட்டங்களை பார்ப்பனரல்லாதார் சமூக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்குமானால், அவர்கள் தேவைகளை அரைகுறையாகவாவது கவனிக்கப்பட்டிருக்குமானால் அவைகள் பார்ப்பனர்கள் பின்னால் வால்களை ஆட்டிக் கொண்டு திரியுமா? நேரில் சென்று ரகசியமாய் கேட்டால் இந்தப் பிழைப்பு பிழைக்கிறதற்கு அவர்கள் அடையும் வெட்கம் இன்னது என்பது விளங்கும்
தம்பி: அப்படியா! இந்த இழிவான நிலை எப்பொழுது மாறும்?
வாசக்காரிஉ அந்த ராமாயண காலத்திலேயே இருந்து ஆரம்பித்த காரியம் இந்த ராமாயணம் பொப்பிலி அயனம் ஆகிய காலத்தில்
159 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மாற்றப்பட்டுவிட முடியுமா? தமிழ் மக்களில் அனேகருடைய ரத்தத்தையே அடியோடு சிரிஞ்சு செய்து எடுத்துவிட்டு நல்ல சுத்த ரத்தத்தை இஞ்ஜக்ட் செய்ய வேண்டும். அப்படிசுத்தப்படுத்த இன்னும் குறைந்தது 2, 3 ராமாயணம், பொப்பிலி அயவனமாவது ஆய்தான் தீர வேண்டும்
தம்பிஉ சரி அப்புறம் இன்னொரு கேள்வி
இந்தப் பார்ப்பனர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் பார்ப்பன ரல்லாதார் தலைவர்களை ராக்ஷதர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் படம் போட்டு வைகின்றனவே. இதற்கெல்லாம் கேள்வி முறை இல்லையா? மற்றும் ஒரு தலைவரை, “அவர் ஜாதிப் புத்தியைக் காட்டிவிட்டார் என்று ஜனங்களுக்கு சொல்லாமல் சொல்லிக் காட்ட செக்கு போட்டுக் காட்டி இழிவுபடுத்தினதன்றோ அதற்கும் ஒன்றும் கேள்வி முறை இல்லையா? மற்றும் பல பார்ப்பனப் பத்திரிகைகள் பார்ப்பனரல்லாத தலைவர்களை குலாம், தாசர், அடிமை, தேசத் துரோகி, பாவி என்றும் இன்னும் சில பார்ப்பனர்கள் பொப்பிலி ராஜா, ஷண்முகம் செட்டியார், ராமசாமி முதலியார் முதலியவர்களை அவன், இவன், அயோக்கியன் என்றெல்லாம் வெட்டவெளியாய்க் கூட்டங்களில் பேசுகிறார்களே, மற்றும்
ஒரு பார்ப்பனப் பெண், கடலூர் ஜில்லாவில் பேசும் பொழுது அந்த ஜில்லா போர்டு மெம்பராய் இருக்கும் பெண்களைப் பற்றி இழிவாகச் சொல்லிற்றாம். இதற்கெல்லாம் கேள்வி முறை இல்லையா? நமது பொருமைக்கு எல்லை வேண்டாமா? அவ்வளவு அநாகரிக கேள்வி கேட்பாரற்ற ராஜ்ய பாரத்திலா
நாம் இருந்து கொண்டிருக்கிறோம்
வாசக்காரி? அப்படி ஒன்றும் இல்லை. “குட்டி நாய் குறைத்ததற்கு ஆக பட்டி நாய்களை உதைப்பது அழகா" என்றபடி சிறிது நிதானித்தோம்
நாம் நிதானித்ததைப் பார்த்து பட்டி நாய்கள் நம்மை பயங்காளிகள் என்று நினைத்துக் கொண்டு பரிகாசம் செய்தன. இப்போது பட்டி நாயுக்கும் குட்டி நாயுக்கும் சேர்ந்து புத்தி கற்பிப்பதுபோல வைதவர்களுக்கும், வையத் தூண்டிவைவதைப் பார்த்து சிரித்தவர்களுக்கும், புத்தி வரும்படியும் நல்ல பிள்ளைகளாகும்படியும் நம்மால் ஆனதைச் செய்யத் தொடங்கி இருக்கிறோம்
சீக்கிரம் அடங்கிவிடக் கூடும். தோழர் சுந்திராம்பாள் நடிப்பையும், பாட்டையும் பற்றி தங்கள் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கவில்லையே என்கின்ற ஆத்திரத்துக்கு ஆகவும், ஒரு பார்ப்பனரல்லாத பெண் பிரபல மாகிவிடுமே என்கின்ற துஷ்டப் புத்தியாலும் இழித்துப் பழித்துக் கூறின பத்திரிகைகளுக்கு புத்தி வரும்படி செய்யவில்லையா? (அவர்கள் தோல் மொத்தமானதால் அவ்வளவு சீக்கிரம் புத்தி வராது) அதுபோலவே சுவாமி வேதாசலம் அவர்கள் புத்தகத்தைப் பற்றி பொறாமையும், ஆத்திரமும் கொண்டு செய்த சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் தக்க புத்தி கற்பிக்க ஆரம்பித்தவுடன்
குடி அரசு - 1935 (2) 160
“பிச்சைபோடாவிட்டாலும் நாயைப் பிடித்துக் கட்டுங்கள்” என்பது போலவும், “உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்'' என்பது போலவும் இப்பொழுது பார்ப்பனர்கள் “இன்னம் இரண்டு புஸ்தகத்தை வேண்டுமானாலும் பாடப் புத்தகமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஆக இன்னமும் புத்தி கற்பிக்காதீர்கள்” என்று கெஞ்சும்படியான நிலைக்கு வந்து விடவில்லையா? அதுபோல் நாம் முன்னமேயே கவனிக்க ஆரம்பித்து இருந்தால் பார்ப்பனர்
களும், அவர்களது பத்திரிகைகளும், அவர்களது கூலிகளும் வெகு நாளிலேயே அடங்கி இருக்கும்
தம்பிஉ ஏன் பார்ப்பனரல்லாதார் அவ்வப்பொழுது முயற்சி எடுத்து தானே வந்திருக்கிறார்கள்.
வாசக்காரி: எங்கு எடுத்து வந்திருக்கிறார்கள்? குடி அரசு” பொது உடமையில் புகுதாமல் இருந்திருந்து, 'திராவிடன்' நாட்டுக் கொட்டை செட்டியார் கைக்குப் போய் பார்ப்பனர் தயவுக்கு அஞ்சி ஒழியாமல் இருந்திருக்குமானால் இந்த 3 வருஷத்தில் எவ்வளவோ காரியம் ஆயிருக்கும் என்பதோடு பார்ப்பனர்களுக்கு இவ்வளவு வாலும் வளர்ந்திருக்காது அவர்களுடைய பத்திரிகைகளுக்கு இவ்வளவு திமிரும் ஏற்பட்டிருக்காது என்பது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் கிடைத்து இவ்வளவு அயோக்கியத்தனமாக குறைக்கவும் முன் வந்திருக்க மாட்டார்கள். சாதாரணமாக தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் செக்கு போட்டு ஓட்டுகிற மாதிரி படம் போட்ட காலத்தில் தக்கதொரு கிளர்ச்சி செய்திருந்தால் இத்தனை நாள் அது தேய்ந்து மாய்ந்து ஒழிந்து போய் இருக்கும். சர்க்காருக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் அடங்கி
இருக்கும். அப்பொழுது “குடிஅரசு” சிறிது வீரம் பேசி விட்டு அடங்கி விட்டது அதிலிருந்து அதற்கு (ஆனந்த விகடனுக்கு) தைரியம் அதிகமாய் விட்டது இப்போது அது பார்ப்பனர்களுக்கு தலைசிறந்த ஆயுதமாக விளங்குகிறது
அதாவது, பார்ப்பனரல்லாத வகுப்பு தாசிகள், பார்ப்பனரிடம் சினேகம் இருப்பதாய் சொல்லிக் கொள்ளுவதில் பெருமை அடையும் அற்ப
புத்தி போல் நமது குழந்தைகளும் பெண்மணிகளும் ஆனந்தவிகடன்படிக்கவும் ஆசைபடவும் அனுமதிப்பது போன்ற அற்ப காரியங்கள் செய்து வருகிறோம்
தமிழ் மக்களின் ரத்த பரிக்ஷைக்கு ஆனந்த விகடன் படிப்பது என்கின்ற மானமற்ற தன்மையே தர்மாமீட்டர் ஆகும் என்பதுதான் என் அபிப்பிராயம்
''சூதாடுவதற்காக அதை வாங்கினோமே ஒழிய படிப்பதற்காக அதை யாரும் வாங்குவதில்லை” என்று சில சிகாமணிகள் சமாதானம்
சொல்லக்கூடும். அதுதான் எப்படி யோக்கியமான பதிலாகும்?
ஒரு மனிதன் சூதாட்டம் ஆட வேண்டும் என்றால் பார்ப்பான் இடம் போய்தானா ஆட வேண்டும். மோக்ஷத்திற்குப் பார்ப்பானிடம் திரவுகோல்
11 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இருப்பதுபோல் அந்தப் பார்ப்பானிடம் தானா சூதுக்கும் திரவுகோல் இருக்க வேண்டும்? அந்தப் பணங்களையும் பார்ப்பான் தானா திங்க வேண்டும்? அதிலும் நம்மை கீழ் ஜாதி என்றும், ராக்ஷதன் என்றும் சொல்லுபவனா திங்க வேண்டும்? பார்ப்பனரல்லாதாரிலும் அதுபோலவே
சிலர் ஆயத்துரை (சூதாடு தொழில்) வைத்து நடத்துகிறார்களே அதில் போய்ச் சேருவதுதானே. அவர்கள் பார்ப்பனர்கள் போல் இவ்வளவு கேவலமாகவும், இவ்வளவு இழிவாகவும் வைய மாட்டார்களே, இதையாவது கவனிக்க வேண்டாமா? பார்ப்பான் நமது ஜனங்களை, போதை வேண்டுமானால் கள்ளுக் குடியுங்கள், கீமைச் சாராயம் குடிக்காதீர் என்கிறானே அதன் அர்த்தம் என்ன? அதுபோல் சூதாட பார்ப்பானிடம் போகாதீர்கள் என்று சொல்லுகிறேன்.
வாசக்காரி: தம்பியாரே இன்னும் கேளுங்கள். எந்தப் பார்ப்பானாவது பார்ப்பானைத் திட்டுகிறானா? பார்ப்பானை திட்டுகிற பத்திரிகையைப் படிக்கிறானா? இதைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?
சத்தியமூர்த்தியாரிடம் என்ன குணம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? அவர் “தமிழ்நாட்டுத்தலைவர்' ஆனதினால் நான் ஒன்றும் சொல்லக் கூடாது என்றாலும், உதாரணத்துக்குத் தானே சொல்லுகிறேன். அவரைப் பற்றி அவர் முதல் முதல் சீமைக்கு போனது முதல் நாளது வரை நடந்ததை, எந்தப் பார்ப்பானாவது எந்தப் பத்திரிகையாவது ஏதாவது மூச்சு காட்டி எழுதுகின்றனவா? பேசுகின்றார்களா? ஒரே அடியாய் விளம்பரம் செய்து ஆகாயத்தில் தூக்கி வைத்து அவரை ''ஒரு நாளாவது மந்திரி ஆக்கிப் பார்க்காமல் இருப்பதில்லை!” என்று விரதம் எடுத்துக் கொண்டு இருப்பதோடு, அனேக பார்ப்பன அம்மாமார்களும் அதுவரை தலை முடிவதில்லை என்று சபதம் கூறி இருக்கிறார்கள். அது தான் கிடக்கட்டும் தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகத்தைப் பற்றி அனேக பார்ப்பனரல்லாத
கூலிகளும், காலிகளும் குரைக்கின்றனவே அவரிடம் சொந்த நடவடிக்கைகளில் தனிப்பட்ட ஒழுக்கங்களில் - சமூக கெளரவங்களில் எவ்வித கெட்ட நடத்தையும் இல்லை என்பதை நம்மிடம் ஒப்புக் கொண்டு, பார்ப்பனர்களிடம் போய் கூலிகள் பெற்று பல பார்ப்பனரல்லாத காலிகள் குரைக்கின்றனவே. ஆனால் தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யர்வாள் அவர்களைப் பற்றி எந்தப் பார்ப்பனனாவது எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது மூச்சு பேச்சு காட்டுகின்றனவா? எவ்வளவு கீழான மாமா பார்ப்பானாவது பேசுகிறானா?
அவரும் ஒரு சமஸ்தானத்துக்கு ஒரு வேலை இல்லாத உத்யோகஸ்தர் ஆக மீ 4000, 5000 சம்பாதித்தார். அதுவும் போதாது என்று இன்னும் பெரிய உத்தியோகம் பெறப் பார்க்கிறார். “லார்டு வில்லிங்டன் துரை மகனாருக்கு ரொம்ப வேண்டியவர்” என்கின்ற சேதி அடிபடுகின்றது. லார்டு வில்லிங்டன். துரையிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு இவரே பூசாரி என்கின்றார்கள். இன்னமும் சி.பி. அவர்களைப் பற்றி என்ன என்னமோ மார்க்கட்டு, நாடகக் கொட்டகை எல்லாம் கத்தரிக்காய் கடை முதல் தப்பட்டை அடிக்கப்படுகிறது.
குடி அரசு - 1935 (2) 162.
அதைப் பற்றி படமா கேலியா....... ஒன்றும் இல்லாமல் காப்பிக் கடையிலும், வக்கீல் குமாஸ்தா அரைகளிலும், “பிறந்தால் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களுக்கு கை, கால்களாகவாவது பிறந்த சுகம் அனுபவிக்க வேண்டும்” என்று தானே புகழ்ந்து கூறி மகிழ்ச்சி அடைகின்றார்கள். இதிலிருந்து யார் கெட்டிக்காரர்கள்? யார் புத்திசாலிகள்? யார் மடையர்கள்? யார் சமூகத் துரோகிகள்? யார் வயிற்றுப் பிழைப்புக் கூலிகள்? என்பதையாவது உணர்ந்து பாருங்கள்.
சரி.பொப்பிலி ராஜாவை எதற்காகராகஷதர் என்று சொல்ல வேண்டும்? ராவணனாவது ராமர் பெண்டாட்டியைத் தூக்கிக் கொண்டு போய் என்ன என்னமோ செய்தான் என்பதாக சொல்லி அதனால் ராக்ஷதன் என்று சொன்னார்கள். பொப்பிலி ராஜா யார் பெண்டாட்டியை அடித்துக் கொண்டு போனார்? என்ன செய்தார்? ஏன் அவரை ராக்ஷதர் என்று சொல்ல வேண்டும்? இனி மேலாவது, எந்தப் பார்ப்பானாவது பொப்பிலியை ராக்ஷதன் என்று சொன்னாலும் படம் போட்டாலும் சரி உடனே நம்ம ஆள் ஒருத்தர் அந்தப் பார்ப்பான் வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்து அவன் பெண்டாட்டி வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா என்று தெரிந்து விட்டு வந்து அந்தப் பார்ப்பானை “அட மடையா உன் பெண்டாட்டி உன் வீட்டில் தான். இருக்கிறார்கள். இப்பொழுதுதான் நான் பார்த்துவிட்டு வந்தேன். எவனோ ஒரு ஏகாலி பேச்சைக் கேட்டுக் கொண்டு பொப்பிலி மீது சந்தேகப்பட்டு அவரை ராக்ஷதன் என்று சொல்லுகிறாயே உனக்கு புத்தியில்லையா" என்று கேட்பதோடு அதுபோலவே எழுதுவதோ ஆகிய காரியம் வைத்துக் கொண்டால் இனி எவனும் அந்த மாதிரி காரியம் செய்யவே மாட்டான்.
தம்பி: அப்படியெல்லாம் கேட்பது நல்லதா? நாய் கடித்தால் நாமும் அதைக் கடிக்கலாமா?
வாசக்காரி: கடிக்க வேண்டாம். தடி எடுத்து விரட்டியாவது துறத்த வேண்டாமா? “நாய்ச் சாமிக்கு மலைக் கொழுக்கட்டை ஆராதனை" என்பதுபோல் அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டியது மனிதத் தன்மை மாத்திரமல்லாமல் அறிவாளியான வீரன் செயலுமாகும்
நல்ல குதிரைக்கு சவுக்கு ஆட்டினால் போதும். தோல் மொத்தமாய் இருக்கிற மந்திகுதிரை அல்லது எருமைக்கிடாவை மொத்தமான தொண்ணைக் கம்பால் இருக்கினால் தான் நகரும். அதுபோல் நம்ம தற்காப்பைப் பொருத்த வரையாவது, “பதிலுக்குப் பதில் செய்யத் தயாராய் இருக்கிறோம் - எங்களால் முடியும்” என்றாவது காட்டிக் கொள்ளாமல்கூட இருப்பதென்றால் நம்மை நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம்கூட இல்லை.
அன்றியும், அப்படி இருந்ததாலேயேதான் எச்சைக்கலைப் பார்ப்பான்கூட நம்மை ராக்ஷதன் என்கிறான்.
163 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தம்பி? இந்தப்படியெல்லாம் நாம் நடந்தால் பாமர மூடஜனங்களுக்கு நம்மிடம் இன்னும் அதிக வெறுப்பு ஏற்படும்படியாக இந்தப் பார்ப்பனர்கள் செய்துவிட மாட்டார்களா?
வாசக்காரிரசெய்துவிட்டுப்போகட்டுமேஅதனால்என்னமுழுகிப்போகும்?
தம்பிஉ நம்மவர்களுக்கு மந்திரி வேலை போய் விடாதா?
வாசக்காரி போய்த்தான் தொலையட்டுமே பார்ப்பான் மந்திரியாய்
வந்துவிட்டால் உலகமே முழுகிப் போய்விடுமா? ஒரு வண்டி செங்கல்லும் பிடாரி ஆனது'' என்பது போல், எல்லாப் பார்ப்பானுமே மந்திரிகளாய் விடட்டுமே நம்மை இனி என்ன அசைத்து விட முடியுமா?
மந்திரி அதிகாரம் நம்மை விட்டுத்துலைந்தால் நமது நிலை என்னதான் ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படவாவது மந்திரி உத்தியோகம் நம்மை விட்டுத்தான் ஒரு தடவையாவது தொலை யட்டுமே. பாமரஜனங்களுக்குப் புத்தி வரஒரு சந்தர்ப்பமாவது கொடுக்கலாமே?
இப்பொழுது “பார்ப்பனர்கள் மந்திரிகளாய் விட்டால் பரிசம் இல்லாமல் பெண் கிடைக்கும். ஆளுக்கு 2, 3 கூடக் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற முட்டாள் பயல்களுக்கு அவனவன் வீட்டிலுள்ளதையாவது காப்பாற்ற முடிகின்றதா அல்லது மனுநீதிபோல் நடக்க வேண்டி வருமா என்பதையாவது தெரிந்து கொள்ளட்டுமே.
தம்பி அப்படியானால் இப்போது ஏன், “மந்திரி வேலை நம்ம கையை விட்டுப் போகக் கூடாது” என்று கருதுகின்றவர்களுடன் கூடிக் கொண்டு என்னையும் பாடுபடச் சொல்லுகிறாய்.
வாசக்காரி: இது கூடவா தம்பி உங்களுக்கு தெரியவில்லை?
தம்பிஉ தெரியவில்லை.
வாசக்காரி: பார்ப்பான் சங்கதி வெளியாக்குவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா? அதற்காகவேண்டி நானும்கூட்டத்தில் கோவிந்தாப்போடுகின்றேன்.
நான் கூப்பாடு போடாவிட்டாலும், நீ கூப்பாடு போடாவிட்டாலும் மந்திரி வேலைநம்மஆளுகள் கையை விட்டு ஒருநாளும்போய்விடப் போவதில்லை.
ஆனாலும் நம்ம பிரசார சங்கதி நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? அன்றியும் நம்ம ஆளுகளை இந்தப் பார்ப்பனர்கள் இவ்வளவு அயோக்கியத்தனமாய் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது? அதற்காகத்தான்.
தம்பி: சரி இன்னம் ஒரு நாளைக்குகந்திக்கலாம். நான்போய் வருகிறேன்.
குடி அரசு - உரையாடல் - 08.09.1935
குடி அரசு - 1935 (2) 164
காங்கிரஸ்காரர்கன் ஜாமீன் கொடுப்பார்களா?
கிளர்ச்சியின் தத்துவம் தோழர்களே! இப்போது நம்நாட்டில் பொது மக்களிடையில் அரசியலின் பேரால் வேகமான பிரசாரங்கள் நடைபெறுகின்றன. அவற்றின் மூலம் பெரியதொரு கிளர்ச்சியை உண்டு பண்ணி அதன் மூலம் பாமர மக்களை வசப்படுத்தி அரசியலில் ஆதிக்கம் பெற வேண்டும் என்பதையே, முக்கிய நோக்கமாகக் கொண்டு செய்யப்படுகின்றது. என்றாலும், அக்கிளர்ச்சி பெரிதும், வகுப்பு முறையில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற வகுப்பு பிரிவை உண்டாக்கி அதன் மூலம் வகுப்பு ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தின் பேரிலும்தான் இன்று கிளர்ச்சிகள் நடக்கின்றன. அவ்வளவுடன் மாத்திரமே நடப்பதாகவும் எண்ணுவதற்கில்லை.
இந்துக்கள், முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என்பது போன்ற மதப் பிரிவுகளின் பேரிலும், மத ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற உள் லட்சியத்தின் பேரிலும் சில மதஸ்தர்கள், தாங்கள் எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதால் அதிக எண்ணிக்கை மக்களைக் கொண்ட மதக்காரர்களால் அடக்கி ஆளாமல் இருக்க வேண்டும் என்கின்ற லட்சியத்தின் பேரிலும் கிளர்ச்சிகள் செய்யப்படுகின்றன.
இந்த மாதிரி கிளர்ச்சி இன்று மாத்திரமல்லாமல், சரித்திரகாலம் தொட்டே மதப்போர் வகுப்பு போர்கள் என்பதாக நடந்து வந்திருக்கின்றன. ஆனால் இன்று அப்படி இல்லாமல் பெயரளவில் அரசியல் கிளர்ச்சி அரசியல் போர் என்று சொல்லப்படுகின்றது
எப்படிப்பட்ட அரசியல் கிளர்ச்சியும், போரும் மதம், வகுப்பு, ஜாதி ஆகியவைகளில் எதையாவது ஒன்றின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நடந்திருக்கின்றன - நடைபெறுகின்றன என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய, மற்றபடி எல்லாப் பொது ஜனங்களின் நன்மையைப் பொருத்தும், விடுதலையைப் பொருத்தும் நடந்திருப்பதாகச்சொல்வதற்கில்லை. சாதாரணமாக நம்நாட்டில் சிறப்பாக தென்னாட்டில் நடக்கும் கிளர்ச்சி அரசியல் கிளர்ச்சி என்பதாக மூன் சொன்னேன். ஆனால் அது இன்று
165 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மாத்திரமல்லாமல் சரித்திர காலம் மூதல் நடந்து வருகிறது என்றும் சொன்னேன். அதற்கு அதாரம் வேண்டுமென்றால் வேதம், ஸ்மிருதி, புராணம் முதலியவைகளைப் பாருங்கள். வேதம் வேதகாலம் பெரும்பாலும் வெள்ளையர், கருப்பர் சண்டையாகவே இருந்து வந்து இருக்கிறது என்பதை வேதம் அறிந்த யாரும் உணரலாம்.
வேத காலம்
வேதத்தில் கஉவுளையோ, அல்லதுஆரியர் தலைவரான இந்தினையோ பிரார்த்திக்கும் பிரார்த்தனைகள் மந்திரங்கள் எல்லாம் கருப்பு நிறக்காரர்கள் தங்களுக்கு கொடுமைகள் செய்கின்றார்கள் என்றும், தங்கள் சுகபோகங் களுக்கு பங்காளிகளாய் இருக்கிறார்கள் என்றும், தங்கள் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறார்கள் என்றும், ஆதலால் கருப்பர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்றும், ஒழிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாகவே காணலாம்
மற்றும் ஸ்மிருதி என்பவைகளைப் பார்த்தாலும் பார்ப்பனர்கள். என்பவர்களுக்கு ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் உயர்வும், செளகரியமும் அல்லாதவர்கள் பார்ப்பனர் அல்லது கருப்பு நிறக்காரர்கள் என்பவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் இழிவும் கொடுமையும், அதை ஆதரிக்கும் அரசர்களைத் தவிர மற்றவர்களை அவர்கள் அழித்து வந்திருக்கிறதும் காணலாம்.
புராண காலம்
அதுபோலவே புராணங்களைப் பார்த்தாலும் எங்கும் பூசுரர்கள்.
அசுரர்கள் சண்டையும், தேவர்கள் ராக்ஷதர்கள் சண்டையும், பூ தேவர்கள்
அரக்கர்கள் சண்டையுமாக மலிந்து கிடப்பதைப் பார்க்கலாம் அதேசண்டைகள் கிளர்ச்சிகள் ஆகியவைகள் தான் இன்று தேசபக்தர்கள், தேசத் துரோகிகள் என்னும் பேரால் நடைபெறுகின்றன.
அந்தக் காலத்தில் புராணங்களில் நடந்ததாகச் சொல்லப்படும் சூட்சிகள் எல்லாம் இந்தக் காலத்திலும் இக்கிளர்ச்சிக்கு நடைபெறுகின்றன.
இந்திரபட்டம் பெறவோ, வேறுமேன்மை பெறவோ (பார்ப்பனர்களைத் தவிர) வேறு யார் தவம் (பாடுபட்டாலும்) செய்தாலும் அவர்களை எவ்வளவு சூழ்ச்சிகள் இழிவான வஞ்சனையான காரியங்கள் செய்திருக் கிறார்கள் என்பதைப் பார்த்தால், இன்றைய காரியங்களைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட முடியாது
தபம் செய்பவர்கள் தவத்தைக் கெடுக்க அனேக தடவைகளில் பெண்டுகளை விட்டே மயக்கிக் கெடுத்திருக்கிறார்கள். ராவணனுடைய தவத்தின் மகிமையை எவ்வளவு சூட்சி செய்து கெடுத்திருக்கிறார்கள்
குடி அரசு - 1935 (2) 166
இரணியன் தபசின் மகிமையை எவ்வளவு சூழ்ச்சி செய்து கெடுத்து இருக்கிறார்கள். பத்மாசூரன் தவத்தின் மகிமையை எப்படிப்பட்ட தந்திரத்தால் கெடுத்திருக்கிறார்கள். இது போலவே புராணங்கள் முழுவதும் ஏறக்குறைய மகா மேன்மையான தவம் செய்து பெற்ற வலிமையை தந்திரங்களாலும், சூழ்ச்சிகளாலும், வஞ்சகத்தாலும் கெடுத்து, அவர்களை ஒழித்ததாகவே தான் காணலாம்
இவைகள் எல்லாம் உண்மை அல்ல என்றும், பொய்க் கதைகள் என்றும் மிகைப்படுத்தி மாற்றிக் கூறப்பட்டவை என்றும் சொல்லப்படுவது உண்மை ஆனாலும் கூட பார்ப்பனரல்லாதாரை எப்படி நடத்த வேண்டும், எப்படி வஞ்சிக்க வேண்டும், எப்படி அவர்களை தலை எடுக்கவொட்டாதபடி அழுத்தி வைக்க வேண்டும், தலை எடுத்தவர்களை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகும் என்பதை யாரும் மறுக்க முடியாது
அந்த முறையில் தான் இன்று பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார். என்கின்ற கிளர்ச்சி அரசியலின் பேரால் தேசபக்தி தேசாபிமானம் என்பதின்
பேரால் நடைபெறுகிறது
தேசாபிமானம்
இந்திய சரித்திரங்களினாலும் சரி, புராணத்தினாலும் சரி மூன் காலத்தில் தேசாபிமானம் என்கின்ற பேச்சோ, தேசபக்தி என்கின்ற பேச்சோ, கிளர்ச்சியோ இருந்து வந்ததாக காண்பதற்கில்லை. தேச பக்தி, தேசாபிமானம் என்கின்ற வார்த்தை மேல்நாட்டிலிருந்து வந்ததாகும்.
நம் நாட்டில் ராஜாக்களுக்கும் ராஜாக்களுக்குமாத்தான் சண்டைகள் நடந்திருக்கிறது. அது விஸ்தீரணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் ஒரு வகுப்பாரை ஒழிக்கவுமே அல்லாமல், தேச நன்மைக்கு என்று தேசபக்தி பூண்டு அரசர்களுடன், பொது ஜனங்கள் போர் புரிந்ததாக சரித்திரம் இல்லை
மேல்நாட்டு தேசாபிமானத்துக்கும், தேசபக்திக்கும் நாம் இங்கு இன்று
கற்பிக்கிற அருத்தம் இருந்ததில்லை. அங்குள்ள தேசாபிமானத்தாலும், தேச பக்தியாலும் எந்த தேச மக்களுக்கும் விடுதலை ஏற்பட்டதாக ஆதாரமோ அனுபவமோ இருந்ததும் இல்லை அனேக பெரியார்கள் தேசாபிமானம் என்பதை மிக இழிவாக குறை கூறி இருக்கிறார்கள். தேசாபிமானத்தின் யோக்கியதையும், பலனும் அப்படியேதான் மிக தந்திரமுடையதாகவும், சூழ்ச்சி உடையதாகவும் ஏமாற்றும் குணம் உடையதாகவுந்தான் இருந்து வருகின்றது
பாரத தேசம்
சாதாரணமாக இந்த நாட்டை பாரத தேசம் என்று சொல்லுவதுகூட யோக்கியமான பெயராகாது. பரதன் என்கின்றவன் ஆண்டதால் பாரத
1679 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தேசம் என்று சொல்லப்படுமானால் அதற்கு முன் ஆண்டவர்கள் பெயர் ஏன் சொல்லக் கூடாது? அதற்கு பின் ஆண்டவர்கள் ஆளுகின்றவர்கள் பெயர்கள் என்ன கதியாவது? எந்த தேசத்துக்காவது எப்பவோ ஒரு காலத்தில் ஆண்டவன் பெயர்சொல்லப்படுகிறதா? இந்தப் பெயர் ஆரிய ஆதிக்கத்தைக் குறிப்பதேதவிர வேறில்லை. அக்காலத்திய அரசர்களை நாம் மதிப்பதாகவோ, பாராட்டுவதாகவோ சொல்லுவதும், பழங்கால அரசர்கள் ஆட்சி போன்ற அரசியல் முறை வேண்டுமென்று சொல்லுவதும் பெரிதும், சுயமரியாதை அற்றதும் முட்டாள்தனமானதுமான காரியமாகும்
பழைய ஆட்சி
பழங்கால அரசர்களின் ராஜா விசாரணை, ராஜ நீதி என்பவை என்ன என்பதற்கு அக்கால ஆதாரங்கள் சரித்திரங்கள் அல்லாமல், அவர்களைப் போல் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தாலும் நன்றாய் விளங்கும். உதாரணமாக, ஒரு அரசன் ராஜா சபைக்கு வந்த உடன் மந்திரியை என்ன கேட்கின்றான்.
பிராமணர்களுக்கு மான்யம், அன்ன சத்திரம், வேதபாட சாலை, (இலவசப் படிப்பு) ஆகியவைகள் தாராளமாய் வழங்கி இருக்கிறாயா, அவர்கள் மனம் நோகாமல் சந்தோஷத்தோடு வாழ உதவி செய்து வருகிறாயா" என்று கேட்டுவிட்டு, “மற்ற வகுப்பார் பிராமணர்களுக்கு அடங்கி அவரவர்களுக்கு இட்ட கருமப்படி நடந்து வருகிறார்களா" என்றுதான் கேள்க்கின்றானே ஒழிய, வேறு என்ன? அதாவது வர்ணாச்சிரம ராஜ்யபாரம் தானே இதுவரை நடந்து வந்திருக்கிறதே ஒழிய வேறு என்ன?
ராமராஜ்ஜியம்
ஆகவே இன்று இந்நாட்டில் நடக்கும் கிளர்ச்சியை வெரும் அரசியல் கிளர்ச்சி என்பதாகவே வைத்துக் கொண்டாலும்கூட எவ்வித ஆட்சி முறையை விரும்பும் அரசியல் கிளர்ச்சி என்று பார்ப்போமானால், அது பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் பலப்படுத்தவும் நடக்கும் வருணாச்சிரம ஆட்சி அல்லது, ராமராஜ்ஜிய தர்ம ஆட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இதை இன்றைய அரசியல் கிளர்ச்சியின் சர்வாதிகாரத் தலைவராய் இருந்த காந்தியார் பல தடவை சொல்லி இருக்கிறார்கள். மற்றும், இன்றைய அரசியல் கிளர்ச்சிக்கு உதாரணங்கள் பார்ப்பனீய ஆதிக்கப் புராணங்களிலிருந்தே கையாளப்படுகின்றன. யாராவது அவ்வாட்சி முறையைப் பார்ப்பன ஆதிக்க முறையாய் இருக்குமோ என்று சந்தேகப்பட்டால் அவர்களை இன்று ராட்சதர்கள், அசுரர்கள், அரக்கர்கள் என்றுதான் கூறப்படுகின்றது இவைகளைக் கண்ட எவன்தான் இன்றைய அரசியல் கிளர்ச்சி பார்ப்பன ஆதிக்கத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிக் கிளர்ச்சியல்ல வென்று சொல்ல முடியும்?
குடி அரசு - 1935 (2) 168
முஸ்லீம்கள் கண் விழிப்பு
அன்றியும் இன்றையக் கிளர்ச்சி இந்துமத ஆதிக்கக் கிளர்ச்சியாய் இருக்கக்கூடும் என்று கருதி சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாகவே, முஸ்லீம்கள் பயந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றும், அதற்காக அரசியல் பதவிகளில் தங்கள் பிரதிநிதித்துவத்துக்கு வரையன ஏற்பட்டு விடவேண்டும் என்றும் கிளர்ச்சி செய்து ஒரு திட்டத்தையும் அளவையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதுபோலவே கிருஸ்தவர்களும், ஆங்கிலேயர் களும், ஆங்கிலோ இந்தியர்களும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள்.
ஆட்சேபனை ஏன்?
அதைப் பின்பற்றியே, இந்தியர்களில் மற்றொரு சார்பார்களாகிய இந்துக்கள் என்பவர்களிலும் உள்ள மூன்று பிரிவார்களில் அதாவது மேல் ஜாதி, நடு ஜாதி, கீழ் ஜாதி என்று சொல்லப்படுபவர்களுக்குள்ளும், அரசியலிலும், சமூக இயலிலும் பிற்பட்டு தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்தப்
பட்டு கல்வியிலும், செல்வத்திலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும், குறைவான, கீழான நிலையில் இருப்பவர்கள் மேல் நிலையில் இருப்பவர். களிடம் சந்தேகமோ, பயமோ கொண்டு தங்கள் நிலையைப் பந்தோபஸ்த்து செய்து கொள்ள வேண்டுமானால், மேல் நிலையில் மேல் ஜாதிக்காரர்கள் என்னும் பேரால் அரசியல் உரிமை என்பவற்றை ஏகபோகமாய் அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் மறுக்க வேண்டும்? கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், ஆங்கிலேயர்கள், ஆங்கிலேய இந்தியர்கள் என்கின்ற வகுப்பார்கள் விஷயத்தில் சர்க்கார் பிரவேசமில்லாமல் தாங்களாகவே ஒப்புக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களால் கீழ் ஜாதி, கடை ஜாதி என்று சொல்லப்பட்டு உண்மையாகவே தாழ்மையாய் இழிவாய் நடத்தப்படுகின்றவர்களுக்கு சமமாய் நடத்து கிறோம் என்று ஏன் பந்தோபஸ்த்து அளிக்கக் கூடாது.
“அந்தப்படி இவர்களுக்கு எல்லாம் பந்தோபஸ்த்து அளிப்பதானால், பிரிட்டிஷ் ராஜாங்கமே மேலானதென்றும் தங்களுக்கு சுயராஜ்ஜியம்கூட வேண்டாம்'' என்றும் ஏன் சொல்ல வேண்டும். பயப்படுகிறவனுக்கும் நம்பாதவனுக்கும் கஷ்டப்பட்டு இழிநிலையில் இருக்கிறவனுக்கும் சமாதானம் சொல்லவில்லையானால், எப்படி எல்லா மக்களுடையவும் கூட்டுறவைப் பெற முடியும். ஏதோ இரண்டொரு மோசிடி, போக்கற்றவன், வயிற்றுச் சோற்றுக் கூலிகளை புராண காலத்து சூழ்ச்சிகள் செய்து வசப்படுத்திக் கொண்டு அனுமார்களாக ஆக்கி, மற்றவர்கள் மீது ஏவி விடுவதாலும், தேசத்துரோகிகள், ராட்சதர்கள், அசுரர்கள், அடிமைகள், குலாம்கள் என்று வைவதினாலும், வைய்யச் செய்வதினாலும் சந்தேகமும், பயமும், துவேஷமும், வெறுப்பும் பலப்படுமா? குறையுமா? என்றும் கேட்கின்றேன்.
19 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பார்ப்பன ஆட்சி இனி முடியாது
இன்னமும் ஒரு ஆயிரம் கூலிகளை வசப்படுத்தி, உசுப்படுத்தி விட்டாலும், பயமும், துவேஷமும் வளர்ந்து எதிர்ப்பு அதிகமாகி அதிகத் தொல்லையைத்தான் விளைவிக்குமே தவிர ஒரு நாளும் இக்கிளர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை என்பதோடு, பிரிட்டிஷ் ராஜாங்கத்தையே சுயராஜ்ஜியத்தைவிட 1000 பங்கு மேலான ராஜ்ஜியம் என்று சொல்லும் படியாக ஆக்கத்தான் முடியும் என்பதோடு, பார்ப்பனர்கள் கோரும் தங்கள் ஆதிக்க ஆட்சி கனவாக ஆகிவிடும்.
சமீபகாலத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலின் வெற்றியானது பார்ப்பனர்களுக்கு பெருத்த ஆணவத்தைக் கொடுத்துவிட்டதோடு, துணிகரமாக காசைக் கொடுத்து காலிகளை ஏவிவிட்டு, ஈனத்தனமாக வையும்படி செய்து வருகிறார்கள். இதன் பின் விளைவு அவர்களுக்கு தற்கொலையாகத்தான் ஏற்படப் போகின்றது.
அசம்பளி வெற்றி.
இந்திய சட்டசபைத் தேர்தல் வெற்றியானது, பார்ப்பனர்களின் யோக்கியதையையும் அவர்களது ஆயுதமாகிய காங்கிரசின் யோக்கிய தையையும் பாமர மக்கள் அறிவதற்கு ஒரு கண்ணாடி போல் இன்று நமக்கு பயன்பட்டு வருகிறது. அதோடு நம் மக்களைத் தட்டி எழுப்பி ஊக்கத்தையும், உணர்ச்சியையும் உண்டாக்கப் பயன்பட்டிருக்கிறது.
இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஜெயித்து இருந்தால்கூட இந்த நன்மைகள் - இவ்வளவு நன்மைகள் நமக்கு
ஏற்பட்டிருக்க முடியாது காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் இந்திய சட்டசபைக்குப் போய் என்ன செய்து விட்டார்கள்? அவர்களின் வாக்குத் தத்தங்கள் என்ன ஆயிற்று? அவர்களுக்கு வெற்றி ஏற்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு வெற்றி ஏற்பட்டால் இன்ன இன்னது செய்வார்கள் என்றும் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்குக் கொடுக்க ஓட்டு கேட்டு வாங்கிக் கொடுத்த தலைவர்கள், காந்தியார், ராஜகோபலாச்சாரியார்களான மகாத்மாக்களும், குட்டி மகாத்மாக்களும் இன்று ஏன் ஓடி ஒளிந்து கொண்டார்கள்? தங்களுக்கும் காங்கிரசுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி ஏன் ஓய்வெடுத்துக் கொண்டார்கள்?
இவர்கள் ஓடி ஒளிந்து கொண்டதாலேயே இவர்களது வாக்குத் தத்தங்கள் மறக்கப்பட்டு விடுமா? நாளை இந்த யோக்கியர்கள் பொது ஜனங்கள் முன்னால் வந்து ஓட்டுக் கேட்க யோக்கியதை உண்டா? இந்த நிலைமை எல்லாம் நாம் இந்திய சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டதாலேயே ஏற்பட்டதென்று மகிழ்ச்சியடைய வேண்டும்.
குடி அரசு - 1935 (2) 170
மந்திரிகள் மீது குறை
நிற்க, இன்று பார்ப்பனக் கிளர்ச்சியில், நம் மந்திரிகளை குறை கூறி மக்களுக்கு அவர்களிடத்தில் வெறுப்பை உண்டாக்க முயற்சிக்கிறார்கள் மந்திரிகள் செய்த குற்றம் என்ன என்றாவது அவர்கள் நடந்து கொண்ட நாணயக் குறைவான காரியம் இன்னது என்றாவது இதுவரை எவரும் மெய்ப்பித்தது கிடையாது. பாமர மக்கள் ஏமாறும்படி விஷமமாய் பிரசாரம் செய்வது என்பதைத் தவிர காரியத்தில் நிரூபிக்க யோக்கியதை இல்லாமலே
இருந்து வருகிறார்கள். இதுவரை மந்திரிகள் மீது சொல்லப்படும் குறைகள் எல்லாம் மந்திரி களுக்கு சம்மந்தமில்லாத காரியங்களைப் பற்றியே சொல்லி வருகிறார்கள் போலீசார்தொண்டர்களை அடித்தது பற்றியும், சர்க்காரார் பூமிகளுக்கு வரிகளைக் குறைக்கவில்லை என்றும், ஜெயில் கைதிகளுக்கு மோர் கொடுக்கவில்லை என்றும், உத்தியோகத்தில் நத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ராஜீனாமா கொடுக்கவில்லை என்றும், முட்டாள்தனமாக உளறு கிறார்களே தவிர, நியாயமானதும் உண்மையானதுமான ஒரு குற்றத்தையும்
எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லாமலே இருந்து வருகிறார்கள்.
போலீசார் தொண்டர்களை அடித்ததும், வரி குறைத்தும், கைதிகளுக்கு மோர் கொடுப்பதும் மந்திரிகள் இலாக்காவைச் சேர்ந்த காரியங்கள் அல்ல என்பது அரசியலில் ஏ.பி. கூட படிக்காத மூடனுக்கும் தெரிந்திருக்கும் அப்படி இருக்க இவ்விஷயங்களுக்காக மந்திரிகள் மீது பழி சுமத்துவது என்பது “அரசியல் என்பதும், தேசாபிமானம், தேசபக்தி என்பதும், வடிகட்டின அயோக்கியத்தனம் என்று சொன்ன ஞானிகளின் மொழியை பரமார்த்த சத்தியம் என்பதாக ௬ஜுப்பிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
மந்திரிகள் ராஜிணாமா செய்யவில்லை
நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைப் பற்றியும், பார்ப்பனரல்லாதார் மந்திரிகளைப் பற்றியும் கூறி வரும் விஷமத்தனமான.
புகார்களுக்கும், பழிக்கும் அவ்வப்போது ஜஸ்டிஸ், விடுதலை, குடிஅரசு, நகர தூதன் முதலிய பத்திரிகைகள் மறுப்புகள் கூறி வந்திருப்பதுடன், இனியும் அந்தப்படி விஷமப் பிரசாரங்கள் செய்யாமல் இருக்கத்தக்க புத்தி வரும்படி எழுதியும், பேசியும் வந்திருக்கிறோம். அப்படி இருந்தும், பாமர மக்களின் முட்டாள்தனத்தை அனுகூலமாய்க் கொண்டு இனியும் முன்போலவே செய்து வருகிறார்கள்.
சமீபகாலத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள், “ஜஸ்டிஸ் மந்திரிகள் சில காரியங்கள் செய்வதை அவை தங்கள் அதிகாரத்தில் அடங்கினதல்ல என்று சொல்லுகிறார்கள். அப்படியானால் ஏன் ராஜீனாமா செய்யவில்லை" என்று கேட்டிருக்கிறார். 1௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ்காரர் ஜாமீன் கொடுப்பார்களா?
மந்திரிகள் ராஜினாமா செய்துவிட்டால் பிறகு அந்த மந்திரி பதவி காலியாக இருக்கும் என்பதற்கு சிலர் ஜாமீன் கொடுப்பார்களா? அல்லது தங்களைப் பொருத்த வரையிலாவது அந்த மந்திரி பதவிகளை ஏற்பதில்லை. என்பதற்கு ஆவது தக்க ஜாமீன் கொடுப்பார்களா? இவர்களது அரசியல் சர்வாதிகாரியான காந்தியாராவது, இவர்களது ஜாதி தலைவரான சங்கராச்சாரியார்களாவது உத்திரவாதம் கொடுப்பார்களா? ஒன்று மில்லாமல் “நீங்கள் ராஜினாமா கொடுங்கள், நாங்கள் போய் குந்திக்கொள்ளுகிறோம்”' என்றால் யார்தான் ராஜினாமா கொடுப்பார்கள்.
தோழர் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது வால்களாக மற்றும்
சுமார் 10 தோழர்களும் தென்னாட்டில் இருந்து இந்திய சட்டசபைக்கு போய் பல தடவை தோல்வி அடைந்து, பல தடவை அவமானமடைந்தார்களே அதாவது 43 தடவை சர்க்காரை தோல்வி அடைய செய்து 43 தீர்மானங்களில் வெற்றி பெற்று அந்த 43 வெற்றியையும் வில்லிங்டன் துரைமகனார் குப்பைத் தொட்டியில் போட்டு காரி உமிழ்ந்து விட்டாரே அதற்கு ஆக எந்த தேசிய வீரராவது, தேச பக்தராவது அவமானமடைந்து ராஜினாமா செய்தார்களா?
''ஒரு காசுக்குப் பயனில்லாமல் ஒரு காரியமும் செய்ய முடியாமல் இருப்பதும், நாய், கழுதைகள் கூட போய் உட்காருவதற்கு தகுதி அற்றதுமான ஸ்தானம்'' என்று இவர்களாலேயே சொல்லப்பட்ட பதவியில் போய் உட்கார்ந்து கொண்டு எவ்வளவோ பாடுபட்டுச் செய்த 3% டஜன் தீர்மானங்களை சர்க்கார் அலட்சியம் செய்த பிறகுகூட அந்த ஸ்தானத்தைவிட மானமோ ரோஷமோ ஏற்படவில்லையானால், தாங்கள் கருதுகிறபடி ஒரு அளவுக்காவது நன்மை செய்யக் கூடிய பதவியை தங்கள் அதிகாரத்தில். இல்லாத காரியங்கள் நடைபெறவில்லை என்பதற்காக யார் ராஜினாமா செய்யக் கூடும். லார்டு வில்லிங்டன் துரை அவர்களை பார்க்க வேண்டுமென்று தோழர் காந்தியார் பல தடவை கெஞ்சியும் 'வாசற்படியை
மிதிக்க அனுமதி தரமாட்டேன் போ'' என்று சொன்னவரின் தலைமையில் உள்ள ஸ்தானத்துக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்து கொண்டு போய் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு மேலும் 43 அவமானங்கள் ஏற்பட்ட பிறகும் அதை விட்டுவிட்டு வர முடியவில்லையானால், யார் மானமில்லாமல் ஒட்டிக்கொண்டு இருக்கிறவர்கள். இவர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளைப் பற்றி பேச சிறிதளவாவது யோக்கியதை உண்டா என்று கேட்கிறேன்.
மந்திரிகள் அதிகச் சம்பளம் வாங்குவதாக வயிற்றெரிச்சல் படுவதோடு. தாங்கள் அந்த வேலைகளை மீ” 500 ரூ. சம்பளம் பெற்றுக் கொண்டு பார்ப்பதாகச் சொல்லுகிறார்கள். இவர்களின் முன் பின் யோக்கியதையை அறிந்த எவரும் இவர்களது வாய் வார்த்தையை எப்படி நம்ப முடியும்
குடி அரசு - 1935 (2) 172
ஆதலால் இவர்கள் மந்திரி பதவி அடைந்தால் 500 ரூ. மாத்திரம்
எடுத்துக் கொண்டு பாக்கியைச் சர்க்காருக்கே விட்டுவிடுகிறோம் என்பதாக கூறி அந்த மேல்கண்ட தொகையாகிய மீதி ரூ.4833-5-4 பையை ஐந்து வருஷத்துக்கு கணக்குப் போட்டு இம்பீரியல் பாங்கியிலோ, இந்தியன். பாங்கியிலோ டிப்பாசிட்டு கட்ட சம்மதிக்கிறார்களா என்று கேட்கின்றேன்.
முன்பு ஒரு தடவை இப்படித்தான் பிரயாணப்படி கூட வாங்குவ தில்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் சிலர் பொய்ப் பிரயாணப்படி கொடுத்து சிக்கிக் கொண்டு விழித்தது பலருக்குத் தெரிந்த விஷயம்.
சமீபகாலத்தில் இந்தத் தடவைகூட பகுதி பிரயாணப்படியாவது காங்கிரஸ் நிதிக்கு காங்கிரஸ் தலைவர் கேட்டதற்கு முடியாது என்று சொன்னதும் பலருக்குத் தெரியும். இந்த நிலையில் உள்ள சத்திய கீர்த்திகள். தாராளப் பிரபுக்கள் தான் ஜஸ்டிஸ் கட்சியார் வாங்கும் சம்பளத்தில் பொறாமைப் படுகிறார்கள். காங்கிரசுக்காரர்கள் பொது ஜனங்களை ஏமாற்றி சுயராஜ்ஜியம், கதர், தீண்டாமை விலக்கு, கிராமப்புனருத்தாரணம், தலைவர்களுக்குப் பண முடிப்பு என்னும் பேரால் பொது மக்கள் பணம் கொள்ளை அடித்து நன்றாய் அனுபவிக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் அப்படி இல்லாமல் தங்களுக்குக் கிடைக்கும் சட்டப்படியான சம்பளம்
பெற்று கட்சி நலனுக்கு ஒரு அளவைச் செலவு செய்கிறார்கள். இதைப் பற்றி
ஏன் பேச வேண்டும்?
காங்கிரஸ்காரர்கள் தாங்கள் மந்திரியானால் அவ்வளவு பணம் வாங்குவதில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
“சர்க்கார் சாப்பிடுவதை நாங்கள் கதருக்கு உபயோகப்படுத்தினால் என்ன, தீண்டாமை விலக்குக்கு உபயோகப்படுத்தினால் என்ன?" என்று சொல்லி வாயில் போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன ஜவாப்தாரித்தனம் இருக்கிறது.
அவர்கள் மந்திரியானால் 500 ரூபாயுக்கு மேல் எடுத்துக் கொள்ளுவ தில்லை என்பது உறுதியானால் இப்பொழுதே மீதி பணம் எவ்வளவு ஏற்படுமோஅதை பாங்கியில் போட்டு விடுவார்களா? அல்லது காந்தியாரோ, சங்கராச்சாரியாரோ இந்தப் பார்ப்பனர்களுக்காக ஜாமீன் கொடுப்பார்களா?
வீணாக வாய் இனிக்கப் பேசி மக்களை ஏமாற்றுவதைவிட வேறு
என்ன இருக்கிறது
ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டிகளைக் கைப்பற்றி பரிசுத்தப்படுத்த வேண்டுமாம். அதற்காக பழைய ஆட்களைத்தான் காங்கிரசின் பேரால் நிற்கும்படி கெஞ்சுகிறார்களே ஒழிய புதிய ஆள்கள் ஒருவரையும் பிடிப்பதாக காணவில்லை
173 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இன்று பதவியில் இருக்கும் ஆட்கள் காங்கிரசில் கையெழுத்துப் போட்டு விட்டால் மாத்திரம் யோக்கியர்களாகி விடுவார்களா? ஆகவே பல துறையிலும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு தகுந்த அடிமைகள் வேண்டும் என்று தேடுவதைத் தவிர காரியத்தில் அவர்களுக்கு எவ்வித கொள்கையும் இல்லை.
காங்கிரஸ்காரர்கள் என்றாலும் சரி, பார்ப்பனர்கள் என்றாலும் சரி எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை மந்திரி பதவியில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதே அவர்களது கொள்கை.
மந்திரி பதவி போகப் போவதில்லை என்றாலும், மந்திரி பதவி போய்விட்டது என்றே வைத்துக் கொள்ளுவோம். இதனால் என்ன முழுகிப் போகும். முன்பு ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சிக்கு மந்திரி பதவி கிடைக்க வில்லை. அதனால் கட்சி இரட்டிப்பு பலம் பெற்றதுடன் காங்கிரசினால் - ராஜகோபாலாச்சாரியாரால் - விஜயராகாவாச்சாரியரால் பிடித்து வைத்த தேசீய மந்திரிகள் ஜஸ்டிஸ் கட்சிக்கு தாசானுதாசர்களாய் இருந்தார்களே ஒழிய பார்ப்பன கூலிகளாக ஒரு நாளும் இருக்கவில்லை.
பிறகு அவர்களை ஒழிக்க காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் பத்திரிகை களுமே பாடுபட வேண்டியதாயிற்று. சென்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தான் மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ராஜகோபாலாச்சாரியார், இந்துப் பத்திரிகை எல்லாம் கூப்பாடு போட்டன. அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டால், ஜஸ்டிஸ் கட்சி பலப்படுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். சுயமரியாதைக்காரர்கள் சர்வாதிகாரிகளாக இடமும் ஏற்படும். ஆதலால் நமது கடமையைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேனே ஒழிய ஜஸ்டிஸ் கட்சி தோற்று விட்டால் உலகம் முழுகிப் போகும் என்றோ, பார்ப்பனரல்லாதார் அழிந்து விடுவார்கள் என்றோ நான் பயப்படவில்லை.
தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்கள்
மீதும் நான் குற்றம் சொல்ல வரவில்லை. அவர்களைக் குற்றம் சொல்லுவதும்
குற்றமாகும். ஏனெனில் அவர்கள் உண்மையான சமூக பக்தர்கள். தங்கள் சமூகத்தை எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. அதற்காக அவர்களிடம் எனக்கு மதிப்பு உண்டு.
தங்கள் சமூகத்துக்காக உழைக்கும் மற்ற பார்ப்பனர்களையும் பாராட்டுகிறேன்.
ஆனால் அவர்களுடன் கூடிக் கொண்டு தங்கள் வயிற்றுப் பிழைப்புக் காகவும் தங்கள் தனிப்பட்ட சுயநலத்துக்காகவும் குறைக்கும் பார்ப்பனரல்லாத கடைகெட்ட கூலிகளிடம் தான் எனக்கு ஆத்திரமும், வெட்கமும் ஏற்படு
கின்றது. நமது சமூகம் இவ்வளவு கேவலமான இழிவான நிலைமைக்கு போகக்கூடிய மக்களை பெற்றுவிட்டதே என்று மனம் வருந்துகிறது.
குடி அரசு - 1935 (2) 174
எப்படி ஆனாலும் யோக்கியமான முறையில் நடக்கும் எதிர் பிரசாரத்தை நான் வரவேற்கிறேன். வீண் காலித்தனம், கூலித்தனமுமான பிரசாரம் பொதுவாகவே ஜனசமூக யோக்கியதையையே கெடுத்துவரும்
யார் வந்து என்ன அபிப்பிராயம் சொன்னாலும் பொருமையாய் யோக்கியமாய் கேளுங்கள். கூட்டத்தில் குழப்பம், காலித்தனம் என்பவைகளை கையாடாதீர்கள். சொல்வதை பொருமையோடு கேட்க வேண்டும் விஷயங்கள் கேட்ட பின்பு ஆராய்ந்து பார்க்க வேண்டும். சரியானது என்று பட்டதை ஒப்புக் கொண்டு மற்றதை தள்ளிவிட வேண்டும்.
குறிப்பு: 31.08.1935 இல் திறாத்துரைப்பூண்டி, 01.09.1935 இல் திருச்சி (டவுன் ஹால்), 93.09.1935 இல் திண்டுக்கல் (டவுன் ஹால்) முதலிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 08.09.1935
175 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மடச் சட்டமும்
மதிப்பற்ற உத்தியோகமும்
நமது நாட்டு சுயராஜ்ஜிய முறையைப் பற்றி பல தடவை எழுதி வந்திருக்கிறோம். சிறப்பாக இன்று ஜனநாயக முறை என்று சொல்லப் படுவதைக் கொண்ட எந்த அரசியலும் பாமர மக்கள் நன்மைக்குப் பயன்படாது என்று எடுத்துக்காட்டி வந்திருப்பதோடு குறிப்பாக நம் நாட்டுக்கு அவை அடியோடு பொருந்தாது என்றும் சொல்லி வந்திருக்கிறோம்
பல மத, சாதி பேதங் கொண்ட சமூகமும், பலவித வாழ்க்கை
லட்சியம், தொழில் முறை லட்சியம் முதலியவை கொண்ட சமூகமுமாகிய
நம் நாட்டுக்குக் கண்டிப்பாக அப்படிப்பட்ட எந்தவித ஜனநாயக முறையும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்
ஜனநாயகம் என்பது பொது ஜனங்களுக்காக, பொது ஜனங்களால் பொது ஜனங்களுடைய ஆட்சியால் நடத்தத் தகுதி உள்ள நாட்டுக்குத்தான் பொருத்தமுடையது என்று சொல்லப்படும். அப்படிப்பட்ட ஆட்சி அதன் உண்மைத் தத்துவத்தில் நம் நாட்டில் நடைபெற முதலாவது இன்னமும் அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளுவது என்பது சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடியதல்ல என்பதோடு, நம் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய தலைவர்களோ, பிரதிநிதி ஸ்தாபனமோ ஒப்புக் கொள்ளக்
கூடும் என்று ஒரு நாளும் எதிர்பார்க்க முடியாது
பொது ஜனங்கள் என்பவர்களும், இந்நாட்டின் எல்லா மக்களுக்கும், எல்லாத் தொழில் முறைக்கும் ஒரே மாதிரியான சட்ட அமுல் இருப்பதை
ஒப்புக் கொள்ளுவார்கள் என்றும் இன்று எதிர்பார்க்க முடியாது
இவ்விஷயம் சரியா, தப்பா என்பதை தனித்தனியாக ஒவ்வொரு மதவாதியையும், ஒவ்வொரு ஜாதி வாதியையும், தொழில் முறையில் ஒவ்வொரு வகுப்புவாதியையும் கேட்டுப் பார்த்தால் நாம் சொல்லுவது
மிகவும் சரியானது என்கின்ற அபிப்பிராயம் விளங்கும்.
ஆதலால், நாம் இன்று நம் நாட்டில் ஜனநாயகம் என்னும் பேரால் நடந்து வரும் அக்கிரமங்களையும், பாதகங்களையும் எடுத்துக் சொல்ல வேண்டியதும், ஜனநாயக ஆட்சி என்பதானது முடிநாயக ஆட்சியால் ஏற்படும்பபனைவிட
குடி அரசு - 1935 (2) 176
அனுபவத்தில் எவ்வளவு மோசமாகவும், பாதகமாகவும் நடைபெறுகின்றது என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி முயற்சி என்பது ஏற்பட்டு இன்றைக்கு 50 வருஷம் ஆகப் போகின்றது.
அம்முயற்சி, ஆரம்பத்தில் சில பதவிகளும், பல உத்தியோகங்களும், இந்தியர்களுக்கு கிடைக்கவேண்டும் என்கின்ற தேசீய லட்சியத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து சுயராஜ்ஜியம் என்னும் தேசீய அரசியல் லட்சியத்துக்கு
வந்து, அந்த முறையில் உள்நாட்டுத் தகறார்களுக்கு ஏற்ப ஏதேதோ புரியாததும், பொருத்தமற்றதும், முன்னுக்குப் பின் முரணானதுமான காரியத்தில் இறங்கி, பொதுநல ஆர்வத்தால் பொதுமக்களால் நடைபெறுகின்றது என்று சொல்வதற்கு இல்லாமல், மதம், ஜாதி, வகுப்பு என்கின்றதான தனிப்பட்ட சுயநல லட்சியத்தால், தனிப்பட்ட சுயநல மக்களால் நடைபெறுகின்றது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டு, அந்தந்த மதம், ஜாதி, வகுப்பு, தொழில் முறை ஆகியவற்றிற்கு பந்தோபஸ்த்தளித்து நம்பச் செய்யும் முயற்சியே முக்கியமானதாகவும், இவ்விஷயங்களில் தெளிவான அபிப்பிராயங்கள் மக்களுக்கு ஏற்படாமல் குழப்பமான நிலையில் இருக்கும்படி செய்து, தங்கள் தங்கள் மத ஜாதி வகுப்பு தொழில் முறை லட்சியம் ஈடேறும் படியாகவும், முயற்சிகளும், கிளர்ச்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாகவே இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தேசீய அரசியல் கிளர்ச்சி என்பது பெரிதும் மதப் பூசலாகவும், ஜாதிப்
பூசலாகவும் இருந்து வருகிறது. இதற்கு மார்க்கங்கள் என்பவை பாமர மக்களை ஏமாற்றுவது, விஷமப் பிரசாரம் செய்வது, காலித்தனத்தால் வெல்லப் பார்ப்பது முதலிய பல அற்ப காரியங்களாகவே இருந்து வருகின்றன.
இதற்கு மகாத்மாக்கள், தியாகிகள் என்கின்றவர்கள் எல்லோரும் மூளையாகவும், மோகனாஸ்திரங்களாகவும், இருந்து கொண்டு மேற்கண்ட அற்ப காரியங்கள் நடைபெற தளகர்த்தர்களாகவும் இருந்து வருகிறார்கள்.
இதன் பயனாகவே தேசீய, அரசியல், ஜனநாயகம் என்னும் போர்வை களைப் போர்த்துக் கொண்டு தனிப்பட்ட ஜாதி, மத, வகுப்பு நாயகங்களைப் பலப்படுத்தி, அவற்றின் ஆதிக்கத்துக்கு கொண்டு வர முயற்சிக்கும் காரியத்தை விட கஷ்டப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு, மனித சமூகத்தின் பின் தள்ளப்பட்டு, ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில் இருந்து துன்பமும் கேவலமும் அவமானமும் அடைந்து வரும் மக்கள், முதலில் விடுதலை பெற வேண்டும் என்கின்ற லட்சியத்தில் ஜாதிவாதி, வகுப்புவாதி என்கின்ற நிலையிலேயே யாதொரு போர்வையும் இல்லாமல் வெளிப் படையாய் வெள்ளையாய் நின்று போராடி வருகின்றோம். 177௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இப் போராட்டமானது, எந்த தனிப்பட்ட ஜாதி வகுப்பு என்றில்லாமல் பொதுவாக கீழ்மைப்படுத்தப்பட்ட ஏழ்மைப்படுத்தப்பட்டமக்கள் என்கின்றவர். களுக்காகவென்றே நடத்தி வருகின்றோம்
ஆதலாலேயே அனேக விஷயங்களில் நாம் பச்சையாகவும், வெள்ளையாகவும் பேச வேண்டிய நிலையில் இருந்து வருகின்றோம் அதோடு மாத்திரமல்லாமல், போலித்தனமானதும் வஞ்சகத்தனமானதுமான தேசிய, அரசியல், ஜனநாயக முயற்சி, கிளர்ச்சி என்பவைகளை எல்லா வற்றையும் வெளியாக்கித் தீரவேண்டிய நிலையில் இருக்கின்றோம்
இப்படிச் செய்வதில் இனி ஏற்படப்போகும் தேசிய அரசியல் ஜனநாயகம் என்பதைப் பற்றி இந்தத் தலையங்கத்தில் பேசாமல், இப்போது ஏதோ ஒரு அளவுக்காவது ஏற்பட்டு ஜனநாயகம் என்னும் பேரால் ஸ்தல சுயாட்சி என்னும் தலைப்பின் கீழ் நடந்துவரும் காரியங்களைப் பற்றியும் அவற்றின் பலன்களைப் பற்றியுமே குறிப்பிட விரும்புகின்றோம். அதாவது இன்றைய ஸ்தல ஸ்தாபன நிர்வாகமென்று சொல்லப்படும், முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு முதலியவைகளைப் பற்றியே குறிப்பிட ஆசைப்படுகிறோம்.
இதைப் பற்றி முன்னாலேயே பல தடவை குறிப்பிட்டிருந்தாலும், அக்குறிப்புகள் அத்துறைகளில் ஏதோ இரண்டொரு சீர்திருத்தங்கள் செய்வதற்கு தூண்டுகோலாய் இருந்தது என்றாலும் இன்று நாட்டில் உள்ள.
உள் கலகங்களும், மோசமான நடவடிக்கைகளும், பிரஜா உரிமை என்பதை உணர முடியாமல் செய்து, பாமர மக்களை பொது ஜனங்களை ஏமாற்றி வஞ்சித்து கொடுமைப்படுத்தி, பொது மக்கள் வரிப் பணத்தால் சிலர் பயன் பெறவும், பொது மக்கள் வரிப்பணம் பாழாகவும் அனுகூலமாய் - பலம் பொருந்திய ஆயுதமாய் இருப்பதாக நாம் அனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் உணர்வதாலும், இம் மாதிரியான காரியங்களை குறைப்பதற்காக என்று கருதிச் செய்த சில சீர்திருத்தங்கள் என்பவை, இன்னும் மோசமான காரியங்களைச் செய்ய இடமளித்து விட்டதாலும் இதைப் பற்றி எழுதித் தீர வேண்டிய நிலைமைக்கு இன்று வந்து விட்டோம்.
கமிஷனர்கள்
இன்று மூனிசிபாலிட்டிகளுக்கு நிர்வாக அதிகாரியாக ஒவ்வொரு உத்தியோகஸ்தரை சர்க்கார் உத்தியோக வர்க்கத்தில் இருந்தும், சர்க்கார் உத்தியோகஸ்தராகவும் நியமனம் செய்ய சமீபத்தில் ஒரு சட்டம் செய்யப்பட்டு, அந்தப்படி சற்று ஏறக்குறைய எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் கமிஷனர் என்னும் பெயருடன் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதன் அனுபவத்தைப் பார்த்த அளவில், அதனால் ஏற்பட்ட பயனை: அறிந்த அளவில் இம் மாதிரியானகமிஷனர்களை ஏற்படுத்துவதற்காக செய்யப்
குடி அரசு - 1935 (2) 178
பட்ட சட்டம் பெரிதும் முட்டாள்தனமானதாக இருக்கின்றது என்பதையும், அந்தக் கமிஷனர் என்னும் உத்தியோகம் பெரிதும் மானக் கேடான உத்தியோகமாய் இருந்து வருகின்றது என்பதையும், அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்கும் எடுத்துக்காட்ட ஆசைப்படுகின்றோம்
ஏனெனில், கூடிய சீக்கிரத்தில் ஜில்லா போர்டுகளுக்கும் இம்மாதிரி நிர்வாக உத்தியோகஸ்தர்களை நியமிக்கச் சட்டம் செய்ய காரியங்கள் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிய வருவதால், முனிசிபாலிட்டியின் கமிஷனர்கள் சம்மந்தமான சட்டம் போலவே மற்றொரு சட்டம் செய்து, முனிசிபல் கமிஷனர்களுக்குள்ள அதிகாரங்களைப் போன்ற போலி அதிகாரமுள்ள உத்தியோகஸ்தர்களையும் நியமிப்பதானால் அதை வேண்டாம் என்று சொல்லவே மிகுதியும் இதை எடுத்துக் காட்டுகிறோம்
ஏனெனில், இன்று முனிசிபல் கமிஷனர் வேலைக்கு, எந்த சுயமரியாதை உள்ள அதிகாரியும் வர முடியாத நிலைமையில் அவ்வதிகாரத் தன்மை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து வருகின்றது
நாம் முனிசிபாலிட்டிக்கும் ஜில்லா போர்டுக்கும் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அரசாங்க சார்பாகவே அந்த நிர்வாகங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதின காலத்தில் முனிசிபாலிட்டிகளுக்கு டிப்டி கலக்டர்கள் அதிகாரத்துக்கும், பதவிக்கும் குறையாதவர்களாகவும், ஜில்லா போர்டு நிர்வாகத்துக்கு சப்-கலக்டர்கள் அதிகாரத்துக்கும், பதவிக்கும் குறைந்தில்லாதவர்களாகவும் இருந்து வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம். அதோடு மாத்திரம் அல்லாமல், அவர்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருக்க வேண்டுமே ஒழிய மெம்பர்கள், கவுன்சிலர்கள் ஆகியவர்களுடைய தயவுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தோம்
ஆனால், அரசாங்கத்தார் அந்தப்படி செய்யாமல் சிறிய உத்தியோகஸ்தர் களை நியமித்ததோடு அவ்வுத்தியோகஸ்தர்கள் தலையெழுத்தை முனிசிபல் கவுன்சிலர்களின் உதட்டு முனையில் தொங்கிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டதால் அச்சட்டம் புத்திசாலித்தனமானது என்றோ, அப்பதவிக்கு வருகிறவர்கள் சுதந்திர உணர்வும், மானமும் உடையவர்களாக இருக்கக் கூடும் என்றோ, அவ்வதிகாரிகளின் அதிகாரம் யோக்கியமாயும், நடுநிலையாயும், பொது ஜனங்களுக்குப் பயன்படக் கூடியதாயும், இருக்க முடியும் என்றோ, யாராவது எதிர்பார்க்க முடியுமா என்று கேள்க்கின்றோம் சாதாரணமாக ஒரு ஜில்லா கோர்ட்டுக்கும் செஷன் கோர்ட்டுக்கும் ஒரு ஜட்ஜியை நியமித்து அந்த ஜட்ஜியின் மேல் ஜில்லா போர்டு பிரசிடெண்டுக்கும் மெம்பர்களுக்கும் ஆதிக்கம் வைத்து அந்த ஜட்ஜியின்
மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் கொடுத்து அக்கோர்ட்டு காரியங்கள் நடைபெற செய்தோமானால், அந்த கோர்ட் நடவடிக்கை எப்படி நடைபெறும்? அந்த ஜட்ஜின் நீதி எப்படி இருக்கும்?
19 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதனால் பாமர மக்களுக்கு எப்படிப்பட்ட பலன் ஏற்படும்? ஆங்காங்குள்ள இன்றய ஜில்லா போர்டு மெம்பர்கள், பிரசிடெண்டுகள் அவர்களுக்கு வேண்டியவர்கள் ஆகியவர்களால் எப்படிப்பட்ட காரியங்கள் நடைபெறும்? என்பது போன்றவைகளையெல்லாம் மனதில் சித்திரித்துப் பார்ப்போமானால் இன்றைய கமிஷனர்களால் என்ன பயன் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை ஒருவாறு உணரலாம் என்றே கருதுகின்றோம்
இன்றையதேர்தல்களில், எவ்வளவுதான் சாதாரண கூலிக்கும், ஏழைக்கும் கூட ஓட்டு இருக்கின்றது என்று சொல்லப்பட்டாலும், பெருத்த பணக்காரனும், போக்கிரியும், ஜம்புலிங்கமும் தான் தேர்தலில் வெற்றி பெற முடிகின்றதே தவிர, மற்றபடி பொது ஜனப் பிரதிநிதி என்று சொல்லத் தகுதி உள்ளவர்கள். முனிசிபாலிட்டி, ஜில்லாப் போர்டு முதலியவைகளில் மெஜார்ட்டியாக இல்லாவிட்டாலும் கவனிக்கத் தகுந்த அளவாவது வர முடிவதில்லை
இந்த நிலை சென்னை மாகாணம் மாத்திரமல்லாமல் இந்தியா முழுவதுமே இருந்து வருகிறது என்று சொல்லலாம் பொதுவாக ஒரு அரசியல் நிர்வாகம் இருக்க வேண்டும் என்றும், மக்களுடைய நலங்களை அந்நிருவாகம் ஏற்று நடத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவதின் காரணமெல்லாம், மேல் கண்ட மாதிரி எளியோரை செல்வவான்கள் கொடுமைப்படுத்தாமலும், நல்லவர்கள் என்னும் சாதுக்களை போக்கிரிகள் தொல்லைப்படுத்தாமலும், பாமர மக்களைக் காட்டுராஜாக்கள் கொள்ளை கொள்ளாமலும் இருக்க வேண்டும் என்கின்ற காரணங் களுக்காகவே அரசியல் நிர்வாகம் வேண்டும் என்பதாக இருந்து வருகிறது.
அப்படி இருக்க அப்படிப்பட்ட ஒரு நிர்வாகமே அதாவது, சிறு மீனை, பெருமீன் விழுங்கும்படியாகவும், இளைத்தவனை வலுத்தவன். விழுங்கும்படியாகவும் பொது மக்கள் வரிப்பணங்களை மனம் போனபடி அனுபவிக்கும்படியாகவும் சிலருக்கு அரசாங்க மூலம் லைசென்சு கொடுப்பதுபோல், ஸ்தல ஸ்தாபன நிருவாகங்கள் அமைந்துவிடுமானால் மக்களுக்கு இதைவிடகொடுமையான காரியம் என்ன? என்று கேட்கின்றோம். இன்றைய கமிஷனர்கள் நிலையானது, முன்பு ஸ்தல ஸ்தாபனங்களில் மெம்பர்களுக்கும், தலைவர்களுக்கும் இருந்து வந்த சிறிது பொருப்பு களையும் பாழாக்கிவிட்டு, தங்கள் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்து கொள்வதற்கு தைரியத்தையும், செளகரியத்தையும் கொடுத்து பொருப்பற்ற நிலைமையை அளித்து வருகிறது என்று சொல்லித் தீர வேண்டி இருக்கிறது
கமிஷனர்கள் இல்லாமல் சேர்மென் ஆதிக்கம் உள்ள கவுன்சிலில், கவுன்சிலர்களுக்கு சிறிது பயமும் சேர்மென்களுக்கு சிறிது யோசித்துப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது இப்போது, கமிஷனர்களுக்கு முக்கியமான பொறுப்பெல்லாம் தங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதாகவே இருந்து
குடி அரசு - 1935 (2) 180
வருகின்றது. அதற்கு கவுன்சிலர்களும், சேர்மென்களுமே யஜமானர்கள். இந்நிலையில் கமிஷனர்களிடம் நடுக்கண்ட நீதியும், பொறுப்புள்ளதும் முனிசிபாலிட்டியின் நன்மைக்கு ஏற்றதுமான நிர்வாகமும் எப்படி எதிர்பார்க்க முடியும் என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்
ரஷ்யாவில்கூட நம்பிக்கையில்லாத் தீர்மான முறை இருக்கிறது”
என்று சொல்லப்படுமானாலும், அந்தப் பொருப்பு ஓட்டுச் செய்ய
பிரதிநிதித்துவம் பெற்ற டிப்டிகளிடம் இருந்து வருகின்றன. அவர்களுக்கு தனிப்பட்ட சொத்துரிமை இல்லாததால், சொத்து சம்பந்தமான சுயநல காரியங்கள் யாருக்கும் கிடையவே கிடையாது ஆதலால், சுயநலத்துக்கு ஆக நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கு இடமே இல்லை.
அன்றியும் நிர்வாக பதவியால் அனுபவிக்கும் சம்பளமோ, அதிகாரமோ, வாழ்க்கையோ எதுவும் ஒரு சாதாரண குடிமக்களுக்கு உள்ளது போலவேதான் இருந்து வருகிறது. ஆதலால் நிர்வாக உத்யோகஸ்தன். யாராவது ஒருவரையாவது நியாய விரோதமாய் திருப்தி செய்து பதவி வகிக்க வேண்டுமே என்கின்ற அவசியம் ஏற்படுவதற்கே இடமில்லை
இங்குள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானமானது லட்சம் பிரஜைகள் உள்ள ஸ்தாபனத்துக்கு 30 பேர்கள் வசம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் அதிகாரமும், அதில் பகுதியோ, அரையே அரைக்கால் வாசிப்பேரோ சம்மதித்தால் போதும் என்கின்ற நிலையில் இருக்கிறது
இந்த நிலையில் சுயமரியாதையும் நீதி வழங்குவதில் கண்டிப்பான உணர்ச்சியும் உள்ளவர்கள் எப்படி கிடைப்பார்கள்? அல்லது எப்படி முனிசிபாலிட்டிகளில் இருந்து நியாயம் செலுத்துவார்கள்? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்
கவுன்சிலர்களுடன் கமிஷனரும் ஒரு கவுன்சிலராகி அவர்கள் சுயநலங்களில் விகிதாச்சாரம் பங்குக்கு அருகாராகிவிட்டால் அம் முனிசிபாலிட்டியின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பது பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.
கொஞ்சநாளைக்கு முன்பு, கோயமுத்தூர் முனிசிபல் கவுன்சிலர்கள், கோயமுத்தூர் கவுன்சில் கமிஷனர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இதை அரசாங்கத்தார் சிறிதுகூட யோசித்து நியாயம் கண்டுபிடிக்க முயற்சிக்காமல், உடனே அவரை மாற்றிவிட்டார்கள் சட்டத்தின் பேரால் சட்டத்தின் நிர்பந்தத்திற்கு என்று செய்யும் முட்டாள்தனமான காரியங்களில் இது தலைசிறந்த காரியம் என்று சொல்லித்
தீர வேண்டி இருப்பதற்கு வருந்தினாலும், பொது நன்மையை உத்தேசித்து சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது
11 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காளை மாடு கண்ணுப் போட்டு இருக்கிறது” என்று சொன்னால் மாட்டுக்கு சொந்தக்காரன் “பிடித்துக் கட்டி பால் கற” என்று சொல்வது போன்ற காரியம் ஒரு அரசியலில் அதுவும் ஸ்தல ஸ்தாபன சுய ஆட்சி முறையில் இருந்தால் இது அரசாங்கத்தாரால் வழங்கப்பட்ட யோக்கியமான
சுய ஆட்சி முறை ஆகுமா? என்று கேட்டுத்தீர வேண்டி இருக்கிறது
கோயமுத்தூர் முனிசிபல் கவுன்சிலர்களுக்கு நம்பிக்கை அற்றுப் போகும்படி நடந்து கொண்ட ஒரு அதிகாரியை, திருச்சி கவுன்சிலுக்கு அனுப்புவதென்றால் “கோயமுத்தூர் கவுன்சிலர்கள் யோக்கியமானவர்கள் அல்ல, திருச்சி கவுன்சிலர்கள் யோக்கியமானவர்கள் ஆதலால் அந்தக்கமிஷனரை திருச்சிக்கனுப்பினால், அவரது நம்பிக்கையில் ஆட்சேபம் இருக்காது” என்று கருதித் தானே திருச்சிக்கு மாற்றி இருக்க வேண்டும். அல்லது “அங்கு கவுன்சிலர்களே இல்லாததால் கோயமுத்தூர் கவுன்சிலர்கள் நம்பிக்கை பெறாத அதிகாரி திருச்சிக்குப் போய் எப்படியோ ஏதேச்சாதிகாரமாய் நடந்து கொள்ளட்டும். அதனால் ஜனங்கள் எக்கேடோ கெட்டுப் போகட்டும்” என்று
கருதித் தானே திருச்சிக்கு அனுப்பி இருக்க வேண்டும்?
அல்லது, அந்தக் கமிஷனரை கவர்மெண்டு உத்தியோகத்துக்கே எடுத்துக் கொள்ளுவதாய் இருந்தால் ஜனப்பிரதிநிதிகளால் நம்பிக்கை இல்லை என்று ஒரு தடவை கருதப்பட்ட ஒரு உத்தியோகஸ்தரை அதைவிடப் பெரிய நிர்வாகத்தைப் பார்ப்பதற்கு அதைவிடப் பெரிய பொறுப்பைக் கொடுத்து அனுப்புவதென்றால் இந்தக் கோவை ஜனப்பிரதிநிதிகளான. கவுன்சிலர்களை எவ்வளவோ கேவலமாக மதித்ததாகவாவது ஆகவில்லையா என்று கேட்கின்றோம்?
நம்பிக்கை இல்லை என்கின்ற காரியமான ஒரு ஆயுதத்தை இவ்வளவு கேவலமான முறையில் பிரயோகிக்க மக்களுக்கு அதுவும் இந்திய மக்களுக்கு அதாவது, 100க்கு 8 பேரே கையெழுத்துப் போடத் தெரிந்த சமூக மக்களுக்கு கையாள இடங்கொடுக்கப்படுமானால், அரசாங்கத்தார் தங்கள் பொறுப்பை சரியாகப் பயன்படுத்துகிறோம் என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்?
ஒரு கமிஷனர் அதிகாரியை நல்லவர் என்று அரசாங்கம் கருதி இருக்குமானால், அந்த கவுன்சில் இனி அப்படிச் செய்யாதபடியான பாடம்
கற்றுக் கொள்ளத்தக்க பொறுப்பை அரசாங்கம் ஏற்று அதற்கேற்ற காரியத்தைச் செய்திருக்க வேண்டும்
இரண்டும் இல்லாமல் இம்மாதிரியான காரியங்கள் செய்வது ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களை மேலும் மேலும் ஊழல்படுத்த, அரசாங்கத்தாரும், துணையாய் இருக்கிறார்கள் என்று சொல்லும்படியாக நடந்து கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்
குடி அரசு - 1935 (2) 182
கோவை, பழனி முதலிய கவுன்சில்களில் நம்பிக்கையில்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, கும்பகோணம் முதலிய பல முனிசிபாலிட்டிகளில் கவுன்சிலர்களுக்கும் கமிஷனர்களுக்கும் தகராராகவும் இருப்பதோடு, சில முனிசிபாலிட்டிகளில் கமிஷனர்கள். சிறிதுகூட சுயமரியாதை இல்லாமல், சேர்மென்களையும், கவுன்சிலர்களையும் பேப்பர்கள் மீது உத்திரவு போடும்படி செய்து, உத்திரவை படித்துக்கூடப் பார்க்காமல் தங்கள் கையெழுத்தை போட்டுத் தீர வேண்டியதான அவ்வளவு மானமற்ற தன்மையில் இருந்து வருவதாகவும் உணருகிறோம்
இப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும்படியான தன்மையில் முனிசிபல் நிர்வாகத்துக்குப் பாதுகாப்பளிக்கப் பட்டிருக்கிறது என்பது ஒரு வேஷமான பாதுகாப்பே அல்லாமல் உண்மையான யோக்கியமான பாதுகாப்பு அல்ல என்றுதான் சொல்லுவோம்.
கமிஷனர் மீது தவறுதல்கள் இருக்கும் பட்சம், முனிசிபல் கவுன்சிலர் களும், சேர்மெனும் சேர்ந்து குற்றப் பத்திரிகை தயாரித்து தங்கள் கவுன்சிலில் தீர்மானித்து, கமிஷனரின் சமாதானம் கேட்டு, அது திருப்தி இல்லாவிட்டால், அதை சர்க்காருக்கு சேர்மென் அனுப்பிவிட வேண்டும் என்பதாகவும், சர்க்காரார் ஒரு நியாய உத்தியோகஸ்தரை அனுப்பி விசாரிக்கச் செய்து உண்மையை கண்டுபிடித்து ரிப்போர்ட் செய்யும்படி செய்து பிறகு தங்களுடைய நீதியை வழங்க வேண்டும் என்றும், சட்டம் இருக்குமானால் கமிஷனர்களிடமும், கவுன்சிலர்களிடமும் நியாயத்தையும் யோக்கியமான. நிர்வாகத்தையும் எதிர்பார்க்க முடியும். அப்படிக்கில்லாமல் இவ்விஷயத்தில் முனிசிபல் கவுன்சிலர்கள் முடிவையே ஆதாரமாய்க் கொண்டு காரியங்கள். நடப்பது என்பது நீதியான காரியமாகாது என்பதோடு சிறிதுகூட பொறுப்பை உணர்ந்த காரியமாகவும் ஆக மாட்டாது.
முனிசிபல் கவுன்சிலிடம் சர்க்காருக்கு உண்மையிலேயே அவ்வளவு நம்பிக்கை இருந்திருக்குமானால், கமிஷனரே தேவையில்லை என்பதோடு
மற்றும் கவுன்சிலுக்கு இருந்த அனேக அதிகாரங்களைப் படிப்படியாகப் பிடுங்கி இந்தப்படி தங்கள் சுயநலத்துக்கு மாத்திரம் பயன்படுத்திக் கொள்வதன்றி பொதுநலத்தில் ஒரு பொறுப்புமில்லாமல் நிர்வாகம் நடக்கும்படியான காரியத்தைச் செய்திருக்க வேண்டியதில்லை
ஆகையால், அரசாங்கத்தார் கவனித்து கமிஷனர் சம்பந்தமான சட்டத்தை அறிவுடைய சட்டமாகவும், கமிஷனர் உத்தியோகத்தை சுயமரியாதை உடைய உத்தியோகமாகவும் செய்யும் படியாக கோருகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.09.1935
18 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தர்மராஜ்ய ஸ்தாபனம்
(ஒரு ஜோஸ்யம் ]
- எவர் எழுதினால் என்ன?
1.9.35ந தேதி குடி அரசில் தர்ம ராஜ்ஜிய விளம்பரம் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். இப்போது தர்மராஜ்ய ஸ்தாபனத்தைப் பற்றி
ஒரு மானச ஜோசியம் எழுதுகிறோம்
1936-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி டெல்லியில் தர்மராஜ்ய ஸ்தாபனம் என்பதாக எங்கும் ஒரே முழக்கம். நாலு பேர் சேர்ந்த இடத்தில்
எல்லாம் அதே பேச்சு. பத்திரிகைகளில் எல்லாம் அதே எழுத்து. தர்மராஜ்ய பூபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ராமராஜ கிருஷ்ண தேவ புஷ்ய மித்திர வர்மனுடைய வம்ச பரம்பரைப் பழமையைப் பற்றியும், அவருடைய குலப் பெருமையைப் பற்றியும், அவரது குணாதியசங்களைப் பற்றியும், பத்திரிக்கைகளில் எல்லாம் வானமளாவிய புகழ் மாலைகள். தர்மராஜ்யத்தின். அமைப்பு, அதன் சட்ட திட்டங்கள், அதன் புதிய அதிகாரிகள், அவர்களின் யோக்கியதாம்சங்கள், அன்று நடைபெறவிருக்கும் மகுடாபிஷேக வைபவத்தின். சிறப்பு, நிகழ்ச்சிக் குறிப்பு, நகரில் அதற்காகச் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் முதலானவற்றைப் பற்றிய செய்திகளும், வர்ணனைகளும், கட்டுரைகளுமே அன்றைய பத்திரிக்கைகளில் எல்லாம் நிறைந்திருந்தன. அன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்த அபிப்பிராயங்களில் சிலவற்றின் சாராம்சத்தைக் கீழ்க் காண்க.
ஆரியதர்மம் என்ற பத்திரிகையில் இந்தியாவை இனி மேற்கொண்டு, 'ஆரிய வர்த்தம்' ஒரு குடும்பத்தவர்போல் ஐக்கியமாயிருந்து தென்னாட்டிலுள்ள
அசுரர், அரக்கர், ராக்ஷஸக் கூட்டங்களைத் தலையெடுக்கவொட்டாமல் அடக்கி வதைத்து, நாட்டை ஆரியர்களின் போக பூமியாக்கி இமயம் முதல் குமரி வரை எங்கும் ஆரிய மணம் கமழும்படி செய்ய வேண்டும், ஆரியர்களின் இம்முயற்சிக்கு அரசன் பூர்ண உதவி புரிய வேண்டும் என்று
ஒரு தலையங்கம் எழுதியிருந்தது
மனுதர்மம் என்ற பத்திரிகையில், இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியாகவே யிருக்கலாம். ஆனால் இது முதற்கொண்டு டெல்லி என்ற
குடி அரசு - 1935 (2) 184
பெயரை மாற்றி, இந்திரப் பிரஸ்தம் என்றே வழங்க வேண்டும். இந்தப் புதுப்பெயரை ஒத்துக் கொள்ளாத ஒரு மகம்மதியப் பத்திரிகையின் அபிப்பிராயத்தை மறுத்தும் ஒரு தலையங்கம் இருந்தது.
பிரசீன தர்மம் என்ற பத்திரிகையில், அன்று நடக்க வேண்டிய மகுடாபிஷேக வைபவம் எவ்விதம் நடத்தப்பட வேண்டுமென்றும், அதற்குப் பூர்வாங்கமாகச் செய்யப்படவேண்டிய யாக மெக்ஞாதிகள் என்னென்னவென்றும் சாஸ்திரோத்தமாகப் பல மேற்கோள்களுடன் ஒரு சங்கராச்சாரியார் எழுதிய கட்டுரை பிரசரிக்கப்பட்டிருந்தது.
ராஜதர்மம் என்ற பத்திரிகையில் பரத கண்டத்தின் ஏக சக்ராதிபதியாக, முனிபுங்கவர்களாலும், சற்ஜனர்களாலும் நிச்சயிக்கப்பட்டிருக்கும் கோசல. நாட்டு க்ஷத்திரிய பரம்பரையின் பூர்வோத்தரம், குடிப் பெருமைகளை விளக்கியும், இப்போது பட்டத்துக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள ராமராஜ பூபதியின் பிறப்பு, வளர்ப்பு, குணாதிசயங்களை விவரித்தும், அவருக்குச் சூட்டப்படும் பட்டப் பெயராகிய “பாரத தேச, வீரகேசரி, பரசமய கோளரி, ஆர்யப் பிரிய பிராமணதாஸ, விப்பிரமித்திர, ராஜராஜ, ராமராஜா, கிருஷ்ண தேவ, புஷ்யமித்ர, மஹாவீர பூபதி'' என்பதன் அர்த்தத்தை விளக்கியும் ஓர் விரிவான தலையங்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது
வைதீகதர்மம் என்றபத்திரிகையில், மன்னர்பிரானின் மகுடாபிஷேகத்தை யொட்டி தேசத்தில் உள்ள வைதீர்களுக்கெல்லாம் வழங்க வேண்டியதான. தரும வகைகளைப் பற்றியும், வைதீகர்கள் செய்ய வேண்டிய தப, ஜப, யாக, யெக்ஞாதிகளைக் குறித்தும் விவரமான ஒரு கட்டுரை மிளிர்ந்தது
ஸ்திரீ தர்மம் என்ற பத்திரிகையில், ராஜ தர்பாரில் நடனம் முதலிய பணி செய்வதற்குத் தேவலோகத்திலிருந்து அப்ரஸ்திரீகளை வரவழைக்கும் வழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றும், ஆரியர்கள் காஷ்மீரம் முதலான. வடநாட்டு மலைநாடுகளில் இருந்த பழைய காலத்திற்றான் அவ்வாறு செய்ய அவசியமிருந்ததென்றும், தற்காலத்திலோ, அப்ரஸ்திரீ வர்க்கம் தேசமெங்கும் குடியேறிப் பரவியிருப்பதால், நாலாபக்கங்களிலும் தூதர்களை அனுப்பித் தேவையான அப்ஸர்ஸ்களை அவ்வப்போது கொணர்ந்து அரசனுடைய அந்தப்புறத்திலும், அயோத்தியை அடுத்துள்ள பர்ன சாலைகளிலும் குடியேற்றி வைப்பதே தருமம் என்றும் ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது
வர்ண ஸ்ரம தர்மம் என்ற பத்திரிக்கையில், நாட்டில் வர்ணாஸ்ரம
தர்மம் சீர்குலைந்திருப்பதைப் பற்றியும், ஜாதி சங்கமங்களின் கெடுதலைக்
குறித்தும், சண்டாளர், சூத்திரர் முதலான கீழ் வர்ணத்தார்கள், மேல் வர்ணத்தார்கள் செய்யக் கூடிய தொழில்களைச் செய்து வருவதால் ஏற்படும்
185 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கெடுதல்களைக் குறித்தும், வர்ணாஸ்ரம நெறியை மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும், அதற்காக அரசன் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சியைக் குறித்தும் பழைய காலத்தில் வர்ணாஸ்ரம தர்மத்தை நிலைநாட்டுவது இராமபிரான் எடுத்துக் கொண்ட நடவடிக்கையை உதாரணங் காட்டியும் ஒரு கட்டுரை வெளிப்படுத்தப்பட்டிருந்தது
பிராமண தர்மம் என்ற பத்திரிக்கையில், பிராமணர்கள் பிற மதத்தினராலும், பிற வர்ணத்தாராலும் அடைந்து வரும் கஷ்டங்களைக்
குறித்தும், வேத நெறி வீழ்ந்துபட்டதால் இதுவரை நாட்டிற்கேற்பட்ட துன்பங்களைப் பற்றியும், இனிமேல் தர்ம ராஜ்ஜியத்தில் பிராமணர் துன்பம்
நீங்கி வாழ முடியும் என்று நம்புவதாகவும், பிராமண குல வைரிகளாகிய சமணர், பெளத்தர், பஞ்சமர், சங்கமர், விஸ்வகருமர் முதலிய சமூகங்களை பண்டைக் காலத்தில் எப்படி இழிவுபடுத்தி அடிமைப்படுத்திக்கொண்டார்களோ, அப்படியே அதுபோல, இக்காலத்தில் தென்னாட்டில் தோன்றியிருக்கும், ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக் கட்சி யென்ற அரக்கர் கூட்டத்தையும், அழிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் அதற்காக ஒவ்வொரு பிராமணனும் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறித்தும் ஒரு விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
பத்திரிக்கைகளைப் பார்த்தால் எங்கும் தர்ம மயமாகவேயிருந்தது. நாலு பாதங்களில் நடமாட வேண்டிய தர்ம தேவதை ஆயிரம் பாதங்களோடும், பதினாயிரம் வாய்களோடும் தவழ்ந்ததாகச் சொல்லலாம்
மகுடாபிசேக வைபவம்
தர்பார் மண்டபம் இந்திரசபை போலவே சித்திரித்து அலங்கரிக்கப் பட்டிருந்தது. சுமார் 50000 பெயர் உட்காரக்கூடிய விஸ்தீரணம் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. உயர்ந்த மேடையின் மீது சிங்காதனம் நாட்டப் பட்டிருந்தது. அதன் இருபுறமும் வரிசையாக ஆசனங்கள், அதற்கடுத்த கீழ்படியில் வேறு பல ஆசனங்கள், மண்டப மத்தியில் பெரிய ஓமகுண்டத்தி
லிருந்து புகையெழுந்து சூழ்ந்து கொண்டிருந்தது. ஓம குண்டத்தின் அருகில் முனிபுங்கவர்கள் வேத மந்திரமோதிக் கொண்டிருந்தனர். மண்டப வாயிலில் இருந்த சாரணர்கள் சங்கநாதம் செய்தனர். மந்திரி பிரதானிகள் புடைசூழ தேவமாதர் முன் செல்ல, ஆடையாபரண அலங்கிருதனாய் அரசன் ராமராஜவர்மன் மண்டபத்துள் நுழைந்தான். உடனே மண்டபத்திலிருந்த அனைவரும் எழுந்து, 'ஐயவிஜயீபவ! ஜயவிஜயீபவ!! ஜயவிஜயீபவ!!!! என்று வாழ்த்தினர். அரசன் ஓமகுண்டத்திற்கருகில் சென்று வேள்வியாளரை வணங்கி, அவர்கள் சொற்படி அக்கினிபகவானுக்கும்; இந்திரனுக்கும் ஆகுதி கொடுத்து அங்கிருந்த அந்தணாளரின் அடிகளைப் பூஜித்து அவர்களால் ஆசீர்வதித்துப் பெற்ற பின் மேடைக்குச் சென்று அங்கு அமைந்திருந்த
குடி அரசு - 1935 (2) 186
அலங்காரச் சிங்காதனத்தமர்ந்தனன். அமர்ந்ததும் மஹாத்மா காந்தி எழுந்து, சபையில் உள்ள வேத வித்தகர் பிராமண உத்தமர்க்கெல்லாம் தன்: வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுச் செய்த பிரசங்கத்தின் சாராம்ஸமாவது:-
பல நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்சியினால் நமது நாடு அடைந்துள்ள கஷ்ட நஷ்டங்களைக் கூறி, இந்நாள் தன் இஷ்டதேவனாகிய தோழர் இராமச்சந்திரனுடைய கருணையினாலும், பெரியோர்கள் செய்த தபோ மகிமையினாலும், நமது நாட்டிற்கு உகந்த அரசாட்சியை நாமே ஏற்படுத்திக் கொண்டு ஒரு மாத காலம் நம் இஷ்டம்போல் ஆட்சி செய்ய உரிமை பெற்றிருப்பதாகவும், இந்த ஒரு மாத காலத்தில் நாட்டில் யாதொரு குறையும் நேராமல் ஆட்சி புரிந்து காட்டுவோமானால், நம்முடைய தர்மராஜ்யத்தை சாஸ்வதமாக அங்கீகரித்துக் கொள்வதாக இங்கிலீஷ் அரசாங்கத்தார் வாக்களித்திருப்பதாகவும், இந்த ஏற்பாட்டுக்கு இணங்காத மகம்மதிய மாகாணங்களாகிய, பஞ்சாப், வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களைக்
குறித்து வருந்துவதாகவும், நாளடைவில் தர்மராஜ்யத்தின் செங்கோன்மையைக் கண்டு அவர்களும் தங்கள் தப்பிதத்தை யுணர்ந்து, தர்மராஜ்யத்திற்குட்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும், இன்று ஸ்தாபிக்கப்படும் தர்மராஜ்யத்தின் அமைப்பைப் பற்றி தானும், ராஜாஜீயும், ராஜேந்திரரும், சத்தியமூர்த்தியும் தீர்க்காலோசனை செய்து நமது நாட்டுக்குக் முடியரசுதான். ஏற்றதென்று தீர்மானித்ததாகவும், அதன்படி பழய ராஜவம்சத்தின் வழி வந்த பழமையான ஒரு ராஜ பரம்பரையைச் சேர்ந்த ராமராஜவர்மனைத் தர்மராஜ்ய பூபதியாகத் தெரிந்தெடுத்ததாகவும், ஜனங்கள் ஏகமனதாக
ஒப்புக் கொண்டு விட்டதாகவும், இன்று ஏற்படுத்தும் தர்மராஜ்யம் சாஸ்வதமாக இருக்க வேண்டி தோழர் ராமச்சந்திர மூர்த்தியைப் பிரார்த்திருப்பதாகவும், தர்மராஜ்ய பூபதி, நமது நாட்டு வழக்கங்களுக்கிணங்கவும், வேத நெறி வழுவாமலும், மனு முறைப்படி ஆட்சி செய்து வர்ணாஸ்ரம தர்மத்தையும், சனாதன தர்மத்தையும், நிலைபெறச் செய்வார் என்று தான் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறி, ரத்தினங்கள் இழைத்து ஒளி வீசும்
கிரீடம் ஒன்றை எடுத்து மேடைக்குச் சென்று அங்கு வீற்றிருந்த லோககுரு சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பாதத்தில் வைத்து அன்னவர் திருக்கரங்களால் அரசனுக்கு முடி சூட்டும்படி கேட்டுக் கொண்டு மேடையினின்றும் இறங்கி வந்து தன் ஆசனத்தில் அமர்ந்தார்.லோக குருவும் தன் கமண்டலத்திலிருந்து கங்காஜலம் அதன் மீது புரோச்சித்து கிரீடத்தை எடுத்து வேதமந்திர உச்சாடனஞ் செய்து அரசன் தலையில் சூட்டி ஆசீர்வதித்தார். அப்போது விண்ணவர் பூமாரி பெய்தனர். மண்டபத்தில் உள்ளவர்கள் “ராமராஜவர்மனுக்கு ஜே! ஆர்யப் பிரியருக்கு ஜே! பிராமணதாசருக்கு ஜே! விப்பிரமித்திரருக்கு ஜே! பூசுரகாவலர்க்கு ஜே! திராவிட வைரிக்கு ஜே! அரக்கரை அழிக்க வந்தவனுக்கு ஜே!” என்று வாழ்த்தி ஆர்ப்பரித்தனர்.
187 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அமளி அடங்க அரைமணி நேரமாயிற்று. அரசன் எழுந்து தனக்கும்,
தன் குடும்பத்தினருக்கும் செய்த பெரும் உபசாரத்திற்காகப் பாரத நாட்டு ஜனங்களைப் பாராட்டுவதாகவும், நன்றி செலுத்துவதாகவும், தன்னால் இயன்ற வரை முன்னோர் முறைப்படியும், வேத சாஸ்திர விதிப்படியும் ரிஷிகள், முனிவர்கள் யோசனைப்படிக்கும் தர்மராஜ்ய பரிபாலனம் செய்வதாக உறுதி கூறி அமர்ந்தார். மீண்டும் அரசனுக்குப் பல ஜே கூறப்பட்டது. அதன்பின் அரச சமூகத்தில் சில அப்ஸர ஸ்திரீகள் தோன்றி நடனம் செய்து அரசனைக் களிப்பித்தனர். பிறகு தர்பார் கலைந்தது.
குறிப்பு. அடுத்த வெளியீட்டில் ஒரு கனவு வெளிவரும். பர்.
குடி அரசு - கட்டுரை - 15.09.1935
குடி அரசு - 1935 (2) 188
சமதர்மம்
தலைவரவர்கள் சமதர்மம் பொதுவுடமை என்பதைப் பற்றி பேசுவது குற்றமல்ல என்றும், ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருவர் தீர்ப்புக் கூறிவிட்டதாகச் சொன்னார். அந்த மாதிரி பல தீர்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை காகிதத் தீர்ப்பெயொழிய நடைமுறைத் தீர்ப்பல்ல.
அந்தத் தீர்ப்புகளுக்கு எல்லா மேஜிஸ்ட்ரேட்களும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அந்தந்த சந்தர்ப்பம் அந்தந்த இடத்து அவ்வப்போதைய நிலமை, சர்க்காரின் மனப்பான்மை, பேசிய ஆளின் தன்மை ஆகியவைகளைக் கவனித்துத்தான் அமுல் நடத்துவார்கள். - ஜட்ஜி தீர்ப்பை விட சட்டமே பிரதானமானது. பொது உடைமை சட்ட விரோதம் என்று சர்க்கார் ஒரு பக்கத்தில் சட்டம் செய்துவிட்டு மற்றொரு
பக்கம் பொது உடைமைப் பிரசாரம் குற்றமல்ல என்று தீர்ப்புச் செய்தால். இதில் ஏதாவது இரகசியம் இருக்கத்தான் வேண்டும். சட்டம் பொது ஜனங்களுக்கு, தீர்ப்போ குறிப்பிட்ட நபருக்கு. தலைவர் போன்ற வக்கீல்கள் பொது உடைமை பிரசாரமல்ல, ரஷ்ய பிரசாரமே செய்தாலும் எந்த ஜட்ஜியும் குற்றமல்ல என்றுதான் சொல்லுவார்கள்.
மற்றபடிஉண்மையான எண்ணத்தோடும், எவரொருவர் சொல்லுவதைப் பத்துப் பேராவது கேட்டு உணர்ச்சி கொண்டு விடுவார்கள் என்று கருதக்கூடியவர்கள் யாராவது பேசினால் சர்க்கார் இந்த ஹைகோர்ட்டு தீர்ப்புகளையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். அந்தவுணர்ச்சி பரவுவதை அடக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தாக வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். என்னுடைய வழக்கில் ஹைகோர்ட்டு தீர்ப்புகளை எடுத்து சொன்னதில் ஜில்லா மேஜிஸ்ட்ரேட், “ஹைகோர்ட் தீர்ப்புகளை பின்பற்ற எனக்கு சக்தி போராது அதெல்லாம் ஹைகோர்ட்டார் பார்த்துக் கொள்ளட்டும்"
என்றும் சொல்லி தண்டித்து விட்டார்.
ஹைகோர்ட்டில் எவ்வளவு தீர்ப்புகள் காட்டியும் கீழ்கோர்ட் தீர்ப்பே காயமாகி விட்டது. எந்தத் தீர்ப்பையும் ஜட்ஜி லட்சியம் செய்யவில்லை.
ஆதலால் ஜட்ஜ்கள் தீர்ப்புகளைவிட சட்டம்தான் முக்கியமானதாய் இருக்கிறது. சட்டமோ சர்க்கார் இஷ்டப்படி நடக்க இடம் கொடுக்கக் கூடியது.
18 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆனால், சட்டத்தில் சமதர்மம் என்பது சட்ட விரோதம் என்று இன்னமும் நமது அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. நான் சட்டம் மீறுவது என்ற திட்டத்தைக் கொண்டவனல்ல. ஆனாலும் இன்று சமதர்மத்தைப்
பற்றிப் பேசுவதைப் பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை
நிற்க, இன்று இன்ன விஷயம் பேசுவது என்பதைப் பற்றி முன்னதாக
ஒன்றும் எனக்கு சொல்லாமல் இப்பொழுதுதான் சொல்லப்பட்டது ஆனாலும் அதைப்பற்றி ஏதோ சில வார்த்தைகள் சொல்லுகிறேன். தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷியலிசம் என்னும் ஒரு வார்த்தைக்கு தமிழ் மொழிபெயர்ப்பாக கையாளப்படுகிறதென்றாலும் சோஷியலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒரு விதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும் தகுதிக்கும், செளகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடி தான் பிரயோகிக்கப் படுகின்றது. சில இடத்தில் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது ஆகவே சோஷயலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையருக்க அவ்வார்த்தையில் எவ்வித குறிப்பும் இல்லை.
சில இடத்து சோஷியலிசத்துக்கும் பொது உடமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வருகிறது. சில இடத்தில் வெகு சாதாரண விஷயத்திற்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொதுவுடமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது
இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்கு சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இன்று இங்கு பிரயோகிக்கின்றேன்.
ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு, தாழ்வு, பேதாபேதம் இல்லை பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நமதுநாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது. அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால் அதற்கு நம் நாட்டு மக்கள் அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்ப மாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள்
குடி அரசு - 1935 (2) 190
ஏனெனில் பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்மந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் அதை மாற்றுவதற்கு தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டு சமதர்மம் பேசுவது பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.
முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல்படியாகும் அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுருத்தி வருகிறேன்.
நிற்க, பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அருத்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவைகள் எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேசசமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொருத்த வரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்து தான் தீரும்
நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதிபேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால் தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும் பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு
இடமளித்தும் வருகிறது.
எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள் களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத் தான். உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்கு காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ் மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மம் சொன்னால் தான் உண்மையாக கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது
191 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை
ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால் தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீர வேண்டியிருக்கிறது
நாஸ்திகனாவதற்கு கடவுள் இல்லை என்றுகூட சொல்ல வேண்டிய தில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது
ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக-கடவுளால் கற்பிக்கப்பட்டதாக- கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது
அந்தமத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும் கருதப் படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று பெயர்.
முகம்மதியர்கள் கொரானை மதிப்பதைவிட, கிறிஸ்தவர்கள் பைபிளை மதிப்பதைவிட, கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதித்திருக்கிறார்கள். ஆனால் அப் புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும் அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கிறது. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அருத்தம்.
ஜாதிஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில்கூட 100க்கு99%பேர்கள். கீதையை பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளைப் பற்றி கண்ணீர்
விடும் தோழர் காந்தியார் கீதைக்குத்தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பாய்
சொல்லுகிறார்.
கீதையே தன்னை நடத்துவதாகவும் சொல்லுகிறார். இரவும் பகலும் ஒழிந்த நேரம் முழுவதும் கீதை பாராயணத்திலேயே இருக்கிறார்.
இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள
மேல் கீழ் நிலைகள் எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தவரு என்றோ
கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றி கவலை இல்லை என்றோ சொல்ல
துணியாவிட்டால் - சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப்பிரிவு, ஜாதி வித்தியாசம்
குடி அரசு - 1935 (2) 192.
ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும் கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாஸ்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது
ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்கு தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்கு கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது
இதுமாத்திரமல்லாமல்சர்வமும் கடவுள் செயல் என்றும், மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும், பேதத்துக்கும், உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொருப்பாளி என்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும்
என்றும் சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் வேண்டும்
ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும் பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும் கடவுள் கொடுத்தது
என்றும், கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால்,
அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்? அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டிருக்க முடியும் எந்த மாதிரியான மூடக் கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும் மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கி பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் படிக்கும் மற்றொருவனைகீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேரிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய் நோயாய், கட்டக் கந்தை அற்று, இருக்க இடமற்றுத் திரியும்படியும் சொல்லி இருக்கவே இருக்காது.
இந்தக் காரியங்களுக்கு கடவுளை பொருத்துகின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.
ஊரார் உழைப்பை கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக
முடியாது
நாட்டுக் கோட்டையார்களில் 10 லட்சம், 20 லட்சம், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள், இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கும் இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?
ஏதோஇதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால், தொழில் முறையினால், மனவலிமையினால், சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?
193 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இவ்வளவு பணம் இவர்களுக்கு சேருவதற்கு ஆதாரமாய் இருந்த முறையை யார்தான் சரியான முறை என்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்கு கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான் நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக்கொள்கைகளையும் கொண்டுவந்து குறுக்கேபோட்டால் அக்கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்
மற்றும் கடன்பட்டு வட்டிக் கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டு பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி
எரிய எரிய அப்பணங்களை கோவில் கட்ட, வாகனம் செய்ய, சாமிக்கு
கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்கு போக, தாசிகளை வைத்து உர்ச்சவம் வாண வேடிக்கை செய்ய பாழ்பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்? இந்த அக்கிரமங்களை பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள் தான் இருக்க முடியும்?
அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன நஷ்டம் வரும்?
அப்படிப்பட்டக் கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்து போகுமே என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்? தோழர்களே இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளை கற்பித்து நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.
சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள், கொடுங்கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலத்துக்கு தான் பயன்படுகின்றதே ஒழிய, வேறு காரியத்துக்கும் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு ஆக என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்கு மானால், அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லா
விட்டாலும் நமக்கு கவலையில்லை. இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்க்கிறேன்.
கடவுளை சதாகாலம் கட்டியழுது, அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்க காரியங்கள் நமக்குத் தெரியாதா?
கடவுளுக்கு ஆக லக்ஷம், 10 லக்ஷம் பணம் போட்டு கோவிலை கட்டிக் கும்பாபிஷேகம் செய்து ஐந்து வேளை 6 வேளை பூஜை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்கமாய் யோக்கியமாய்
குடி அரசு - 1935 (2) 194.
நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குருவாய், சங்கராச்சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய், பாதிரியாய், பெரிய குருவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்கமானவர்கள் என்று சந்தேகமறச் சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?
இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?
எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக் கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை - மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக் கூடாது என்றும் தான் சொல்லி வருகிறேன். மனித வாழ்க்கைக்கும் பேதா பேதங்களுக்கும் கடவுள் சம்மந்தமில்லை என்று சொல்லும் பக்ஷம் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை? ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன். இனி மற்ற விஷயம் மற்றொரு சமயம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 08.09.1935 ஆம் நாள் தேவகோட்டையில் தோழர் லட்சுமிரதன் பாரதியார் வீட்டு மைதானத்தில் 'சமதர்மம்' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு
குடி அரசு - சொற்பொழிவு - 15.09.1935
195 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எது பிற்போக்கான கட்சி?
7.9.35ந் தேதி தூத்துக்குடியில் கூடிய திருநெல்வேலி ஜில்லா அரசியல் மகாநாடு என்னும் பார்ப்பன ஆதிக்க மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் சி.ஆர்.ரெட்டி அவர்கள் காங்கிரசின் உண்மை சொருபத்தையும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு உண்மையான மார்க்கத்தையும் வெட்டவெளிச்சமாய் கொட்டி விட்டார்.
இன்று காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் முக்கிய நோக்கமெல்லாம் ஜஸ்டிஸ் மந்திரி சபையைக் கவிழ்க்க வேண்டும், அதைப் பார்ப்பன ஆதிக்க மந்திரிசபையாக ஆக்க வேண்டும் என்பதேயாகும்
அதற்காக வேண்டியே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவிக்கு வந்தவுடன். காங்கிரஸ்காரர்கள் தங்கள் வேலைத் திட்டமாக அதி தீவிர தத்துவங்களை எடுத்துச் சொல்லி பாமர மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதை முக்கிய கருத்தாய் கொண்டு 15 வருஷ காலம் வேலை செய்தும் அது சிறிதும் பயன்படாமல் போனதால் அடியோடு அவற்றைக் கைவிட்டு விட்டு இப்போது எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியைக் கவிழ்த்து மந்திரி பதவிகளை அடைய வேண்டும் என்கின்ற கவலையில் இருக்கிறார்கள்.
காங்கிரசுக்காரர்கள் இந்த நிலைமைக்கு வந்தவுடன் தங்களுடைய பழைய பாடங்களை எல்லாம் மறக்கப்பட வேண்டியவர்களாகிவிட்டார்கள். அதாவது முதலில் சட்டசபை மூலம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதைப் பஹிஷ்கரித்தும்,
பிறகு, சட்டசபைக்குச் சென்று பார்த்து சட்டசபை அதிகார வர்க்கத்தின் ஆயுதம் என்றும், அதற்குள் நுழைந்தால் அதிகார வர்க்கத்தின் கை பலப்பட்டு விடும் என்றும்,
சட்டசபைக்குப் போவதும், அங்குஇருப்பதும் தேசீய நேரக்கேடு என்றும்,
தோசேவைக்குப் பயன்படாத சட்டசபை அழிந்து போன நந்தவனத்துக்கு ஒப்பானதென்றும், அதில் ஆடு மேய்ந்தாலென்ன? கழுதை மேய்ந்தாலென்ன? என்பதுபோல் கெட்டுப் போன ஸ்தாபனத்தில் வேறு யார் இருந்தால் நமக்கு என்ன? அதைப் பற்றி சிந்திக்கவே கூடாது என்றும்,
சட்டசபை கள்ளுக்கடை, சாராயக் கடை ஆகியவைகளுக்கொப்பான தென்றும்,
குடி அரசு - 1935 (2) 196
சட்டசபைக்குப் போகிறவர்கள் நாய், கழுதைகளுக்குச் சமானமென்றும்
கூறி, சட்டசபைத் தேர்தல்களின்போது கழுதைகளைப் பிடித்து அவற்றின். கழுத்துகளில் அட்டைகளைக் கட்டித் தொங்கவிட்டு,
“சட்டசபைக்குப் போகிறேன் எனக்கு ஓட்டுக் கொடு" என்று கழுதைகள் மக்களை ஓட்டுக் கேட்பது போல எழுதியும்,
“சட்டசபைக்குப் போகிறவர்கள் தேசத் துரோகிகள்'' என்றும், “தயவு செய்து ஓட்டுக் கொடுக்காதீர்கள்" என்றும் காந்தியார் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சுவது போல் படம் போட்டு சுவர்களில் ஒட்டியும்,
இரண்டொரு தடவை உள்ளே சென்று, பிறகு அது பயன்படக் கூடியதல்ல என்று சொல்லி வெளி வருவது போல் நடந்தும், மற்றும் ஏதேதோ தந்திரங்களும், கிளர்ச்சிகளும் எல்லாம் செய்து பார்த்துவிட்டு, இந்த 15 வருஷ காலமாக பல கோடி ரூபாய்களை அரசியல் செலவுக்கென்று பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து, பாழாக்கிவிட்டு இப்போது முன். சொன்னவைகளையெல்லாம் அடியோடு மாற்றி புதியதொரு பாடத்தைச்
சொல்லிக் கொண்டு அதாவது,
“காங்கிரசுக்காரர்களாகிய நாம் எவ்வளவோ வேண்டாம் என்று சொல்லியும் நம்மை லட்சியம் செய்யாமல், இந்தியாவுக்கு சைமன் கமிஷனை அனுப்பி நமக்கு விரோதமாக, நம்மை லட்சியம் செய்யாமல் ஒரு தலைப்பக்ஷமாக நம்நாட்டில் விசாரித்துக்கொண்டு போன சேதிகளை
நம் அபிப்பிராயம் என்று வைத்துக் கொண்டு ஒரு புதிய சீர்திருத்தம் தயாரித்திருப்பதானது காங்கிரசின் சுயமரியாதைக்கு ஈனம் ஆனதால் அப்படிப்பட்டசீர்திருத்தத்தை உடைத்து நொருக்கி பாழாக்கி விடவேண்டும். அதற்காக சட்டசபைக்குப் போக வேண்டியிருப்பதால், பொது ஜனங்கள் ஓட்டுக் கொடுக்க வேண்டும்” என்று காந்தியார் பேரால் பல ஸ்ரீ முகங்களைப் பிரசுரித்து, அனுமார் படம் போட்டு ஓட்டுக் கேட்டு சட்டசபைக்குப் போய் அங்கு தங்களுக்குப் பலமாக இடமும் ஏற்பட்ட உடன்,
இப்போது “சீர்திருத்தத்தை உடைப்பது என்பது ஆகாத காரியம்” என்றும், “சீர்திருத்தத்தை உடைப்பது முட்டாள்தனமான காரியம்” என்றும் சொல்ல மூன் வந்து, மெல்ல மெல்ல மாகாண சட்டசபைகளையும் கைப்பற்றி ஆக வேண்டும்” என்கின்ற உறுதியை அடைந்து விட்டார்கள்.
இந்த நிலையில் மாகாண சட்டசபையைக் கைப்பற்ற இன்று காங்கிரசுக்காரர்கள் சொல்லும் காரணங்களை பொது ஜனங்கள் உணர வேண்டும் என்பதற்கு ஆகவே இதை எழுதுகிறோம்
தலைப்பில் குறிப்பிட்ட, அதாவது இம்மாதம் முதல் வாரத்தில் தூத்துக்குடியில் கூட்டிய திருநெல்வேலி ஜில்லா அரசியல் மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் சி.ஆர். ரெட்டி அவர்கள்,
1977 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
“சீர்திருத்தத்தை உடைத்தெறிய வேண்டும் என்கின்ற உத்தேசத்துடன் நான் சட்டசபைப் பிரவேசத்தையும், உத்தியோகம் ஏற்பதையும் கைக்கொள்ள மாட்டேன்'' என்று பேசி இருக்கிறார். ஆகவே சீர்திருத்தத்தை உடைத்து நொறுக்குவது என்னும் பேரால் ஓட்டு வாங்கின இவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை இப்போது மாற்றிக் கொண்டதால் உடனே ராஜீனாமா செய்துவிட்டு, “நாங்கள் சட்டசபைக்குப் போய் உத்தியோகம் ஏற்போம்” என்றும், “சீர்திருத்தத்தை உடைத்து நொறுக்க மாட்டோம்” என்றும், ஓட்டர்களுக்குச் சொல்லி அதன் பேரில் ஓட்டு பெறுவார்களானால் இவர்களை ஜனப் பிரதிநிதிகள் என்றோ, யோக்கியமான பிரதிநிதிகள் என்றோ சொல்லலாம். அப்படிக்கு இல்லாமல் ஒன்றைச் சொல்லி ஓட்டுப் பெற்று, இடம் கிடைத்தவுடன் முன் சொன்னதற்கு விரோதமாக மற்றொன்றைச் சொல்லுவதென்றால் இவர்களை எப்படி மக்கள் நம்ப முடியும் என்று கேட்கின்றோம்.
மற்றும் “உத்தியோகம் ஏற்கக் கூடாது என்றால் சட்டசபைக்கு போவது என்பது வீண் வேலை” என்று சொல்லுகிறார். ஆகவே இவ்விரண்டு வாசகங்களையும் ஒன்று சேர்த்து வைப்போ மானால் இன்றைய காங்கிரஸ்காரருக்கும், மிதவாதிகளுக்கும், ஜஸ்டிஸ் கட்சியாருக்கும், சீர்திருத்தத்தைப் பற்றியோ, மந்திரி பதவிகளை பற்றியோ அல்லது மற்றும் ஏதாவது கொள்கையிலோ என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று கேட்கின்றோம்
ஜஸ்டிஸ்காரர்கள் அரசியல் பிரதிநிதித்துவத்திலும், உத்தியோகங் களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்றார்கள்.
காங்கிரஸ்காரர்களோ, கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியவர்களைப் பொறுத்த வரை மேல்கண்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை வேண்டியதுதான் என்று ஒப்புக் கொண்டு, காங்கிரஸ் தீர்மானங்கள் மூலமாகவும், பூனா பாக்ட் என்னும் ராஜீ மூலமாகவும் உறுதி செய்து கொண்டு விட்டார்கள். மிதவாதிகளுக்கும் இவ்விஷயத்தில் ஆகூஷ்பணை இல்லை. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் காங்கிரசுக்கு ஆக்ஷ்பணை இருப்பதாக காணப்படும் விஷயம் எல்லாம் தென்னிந்தியாவில், சென்னை மாகாணத்தில் இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்றதைப் பொருத்த அளவில்தான் பார்ப்பனர்களுக்கு ஆட்சேபணை இருப்பதாகச் சொல்லக்கூடும். அப்படி ஆனால் இவ்விஷயத்தில் நாம்
ஒன்று கேட்கின்றோம் அதாவது இன்று காங்கிரசில் மிகமிகப் பிரதானப்பட்ட புருஷர்களாய் இருக்கும் பார்ப்பனரல்லாதார்களில் தோழர் சி.ஆர். ரெட்டி போன்றவர்கள் இந்தப் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிக்
குடி அரசு - 1935 (2) 198
கிறார்களா என்பதேயாகும். மற்றும் இவர்கள் விரும்பும் தோழர்ப சுப்பராயன்,
டி.எ. ராமலிங்கம் செட்டியார் ஆகிய கூட்டத்தார்கள் ஆட்சேபிக்கிறார்களா என்று கேள்க்கின்றோம்.
மேலும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இன்று ஜில்லாக்கள் தோறும், பட்டணங்கள் தோறும், ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், சட்டசபைக்கும் தேடிப்
பிடிக்கும் பார்ப்பனரல்லாதார்களில் யாராவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிக்கிறார்களா என்றும் கேள்க்கின்றோம்
ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளுவதாய் தீர்மானம் செய்தவுடன், அனேக பார்ப்பனரல்லாதார் “இனி காங்கிரசுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் என்ன வித்தியாசம்? ஏன் ஜஸ்டிஸ் கட்சி, அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சி என்பதாக ஒன்று இருக்க வேண்டும்!” என்றெல்லாம் கேட்டார்கள். இப்படிக் கேட்பது சுத்த முட்டாள்தனம் என்றும் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றாலும் சரி, ஜஸ்டிஸ் கட்சி என்றாலும் சரி, தென்னிந்திய நல உரிமைக் கட்சி என்றாலும் சரி எல்லாம் அரசியல் விஷயத்தில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டுக் கிளர்ச்சி செய்வதும், சமூக விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்பதும் ஆகியவைகளைக் கொள்கையாகக் கொண்டது என்றும், அதை ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனர்களைத்தான், ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வதே ஒழிய மற்றப்படி பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்துக்கு விரோதமான எல்லாப் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளுவதாக எப்போதும் சொல்லவே இல்லை என்றும் பல தடவை பரம மூடர்களுக்கும் விளங்கும்படி எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். ஆகவே இதுவரையில் அரசியல் விஷயத்தில் சட்டத்துக்கு மீறியும் சட்டங்களை மறுத்தும் கிளர்ச்சி செய்து வந்ததாகவும் சீர்திருத்தங்களை: பஹிஷ்கரிப்பதோடு மாத்திரமல்லாமல், அதை உடைத்துத் தகர்த்து எறிவதாகவும், மந்திரி பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவைகளை ஏற்காமல், அவற்றை எதிர்த்து யாருக்கும் நிலைக்காமல் இருக்கும்படி செய்வதாகவும் சொல்லி வந்த காங்கிரசுக்காரர்கள், இன்று அரசியல் விஷயத்தில் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு சட்ட மறுப்பைக் கைவிட்டுவிட்டு சட்டசபைக்குச் சென்று உத்தியோகத்தையும் பதவியையும் ஏற்றுக் கொள்வதுடன். சீர்திருத்தத்தையும் உடைப்பதில்லை என்றும் சொல்லி வாக்குக் கொடுத்து ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்துவிட்ட பிறகு, இனி ஜஸ்டிஸ் கட்சிக் காரருக்கும், காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் ஏனைய கட்சிக்காரருக்கும் அரசியலில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று கேள்க்கின்றோம்.
மற்றும் ஆங்காங்கு எந்த எந்த தோழர்கள் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களாக நாளது வரை இருந்து வந்தார்களோ, வெளி ஜில்லாக்களிலும், தாலூக்காக் களிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், சட்டசபைகளிலும் ஜஸ்டிஸ் கட்சியில்
19 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எந்த எந்த பார்ப்பனரல்லாத தோழர்கள் இருந்து வந்தார்களோ அவர்கள். எல்லாரையுமேதான் இன்று காங்கிரஸ்காரர்கள் என்பவர்கள் காங்கிரசின் பேரால் சட்டசபைக்கும், ஸ்தல ஸ்தாபனத்துக்கும் நிற்கும்படி கெஞ்சுகிறார்கள்.
மற்றும் எந்த எந்த இடங்களில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் சட்டசபையிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் இருப்பதால் அந்தந்த ஸ்தல ஸ்தாபனம் ஒழுங்கீனமாய், நாணையக் குறைவாய், சுயநலமாய் நடக்கின்றது என்று காங்கிரஸ்காரரும், அவர்களது காலிகளும், கூலிகளும் குறைத்து வந்தார்களோ அந்தப் பார்ப்பனரல்லாதார்களையேதான் இன்று காங்கிரஸ் பிரமுகர்கள் காங்கிரசுக்கு 4 அணா கொடுத்துவிட்டால் பழயபடியே நடக்க அனுமதி கொடுப்பதாய் கெஞ்சுகிறார்கள். அதுவும் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று மண்டிப் போட்டுக் கெஞ்சுகிறார்கள். ஆகவே இதிலிருந்து காங்கிரசுக்கு ஆள் பிடிப்பதில் கொள்கை வித்தியாசமோ, திட்ட வித்தியாசமோ, ஒழுக்க வித்தியாசமோ, நாணைய வித்தியாசமோ ஏதாவது இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
இன்றும் காங்கிரசில் கையெழுத்துப் போட்டு ஸ்தானங்கள் பெற்ற தோழர்கள் சி.ஆர். ரெட்டி, இரத்தினவேலு தேவர், பிச்சைமுத்துக் கோனார், அவனாசிலிங்கம் செட்டியார், சாமி வெங்கிடாசலம் செட்டியார் உள்பட இன்னும் பலர் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆட்சேபிக்கிறார்களா என்று கேட்பதோடு மற்றும் காங்கிரசுக்காரர்கள் தங்களோடு சேர்ந்து கொள்ளும்படி கெஞ்சும் தோழர்களான திருநெல்வேலி ரங்கநாத முதலியார், ஈஸ்வரம் பிள்ளை, சிதம்பரநாத முதலியார், ராமநாதபுரம் ராஜா, பாலுய்யா பிள்ளை, மதுரை சேத்தூர் ஜமீன்தார், போடி அழகண்ணன் செட்டியார், முத்து செட்டியார், திருச்சி டி.எம். நாராயணசாமி பிள்ளை, மீனாம்பள்ளி ஜமீன்தார், தஞ்சை நாடிமுத்து பிள்ளை, ராஜப்பா, வீரப்ப வாண்டையார், சாமியப்பா முதலியார், ஜம்புலிங்க முதலியார், வேணுகோபால் நாயுடு, ராமச்சந்திரப் படையாச்சி, சேலம் எல்லப்ப செட்டியார், ராஜமாணிக்க பண்டாரம், வி.எம்.ராமசாமி முதலியார் முதலிய இன்னும் எவ்வளவோ பேர்கள் இன்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வேண்டாம் என்று சொல்லுவார்களா என்றும் கேட்கின்றோம்
வீணாக, கொள்கை வித்தியாசமோ, திட்ட வித்தியாசமோ, அர்த்த வித்தியாசமோ இல்லாமல் எப்படியாவது என்ன செய்தாவது இன்று பதவியில் இருப்பவர்களை ஒழித்து விட்டு அந்தப் பதவியை கைப்பற்றி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க அதுவும் ஜாதி அகம்பாவமும், சுயநல வெறியும் கொண்ட பார்ப்பன ஆதிக்கத்துக்கு அனுகூலமாய் இருக்கும்படி சூட்சிகள் செய்யப் பாடுபட்டால் அச்சூட்சிகளை அறியாமல் சில மக்கள் முட்டாள்தனமாக உளருவதென்றால், இவர்களது நிலைமைக்கு பரிதாபப்பட வேண்டியதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
குடி அரசு - 1935 (2) 200.
ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தால் அதற்கு சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றி பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், அதிகாரத்தில் உள்ளவர்களால் பயன்பெற உத்தேசித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும், இந்த நான்கு கூட்டத்தாருடைய கூலிகள் ஒரு புறமும், வேறு வகையில் பிழைக்க வகையற்று இப்படிப்பட்ட நிலைமையைப் பயன்படுத்தியே வாழ நினைத்திருப்பவர்கள் ஒரு புறமும், இன்னும் பலவிதமானவர்கள் ஒரு புறமுமாக விரோத பாவத்தில் இருந்து பதவியிலிருப்பவர்கள் என்ன நன்மை செய்திருந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லாமல் அவர்களுக்குதொல்லை விளைவிப்பதுஇயற்கையேயாகும்.
இன்று உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்கு நாட்டில் செல்வாக்கு இல்லை என்றோ, அவர்களது கொள்கைகளை மக்கள் ஆதரிப்பது இல்லை என்றோ, யாராவது சொல்லக்கூடுமானால் இந்த15, 16 வருஷங்களாக ஸ்தல ஸ்தாபனம் கிராம பஞ்சாயத்து முதல் மந்திரி கப வரையில் இவ்வளவு சூக்ஷிகளையும், தொல்லையையும் சமாளித்து ஜனங்கள் தேர்தல் பலத்தைக் கொண்டே ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கத்தில் இருந்திருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மத்தியில் சிறிது நாள் காங்கிரஸ் ஆதிக்கத்தில் மந்திரி பதவி இருக்க நேர்ந்தும் ஏன் மாதக் கணக்குக்குள் கவிழ்ந்து போக நேரிட்டது? என்று கேட்கின்றோம்
ஜஸ்டிஸ் கட்சியை வகுப்புவாதக் கட்சி என்று யாராவது சொன்னால் அதற்குசமாதானம் சொல்லவேண்டும் என்பதைஒப்புக்கொள்வதோடு அதற்கும் பல தடவை சொல்லப்பட்டு வந்திருக்கிறது என்பதை ஞாபகமூட்டுகிறோம்
ஆனால் ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கான கட்சி என்றும், பணக்காரர் கட்சி என்றும் சொல்லி அதன் மீது குறை கூறி அதற்கு ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று யாராவது பிரசாரம் செய்வார்களேயானால், அவர்களை பரம முட்டாள்கள் என்றோ அதை ஒப்புக் கொள்ள அவர்களுக்கு இஷ்டமில்லை யானால், வடிகட்டின அயோக்கியத்தனத்தால் சொல்லப்படுகிறது என்றோதான் சொல்லித் தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்
இன்று நடுநிலையில் இருந்து யோக்கியமாய் இருந்து ஒருவன் பார்ப்பானானால் காங்கிரஸ்காரர்களைவிட ஜஸ்டிஸ்காரர்கள் பணக்காரர்கள் என்று சொல்லிவிட முடியுமா? ஜஸ்டிஸ்காரர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சாதாரணமாக கணக்குப் பார்த்தால், தமிழ்நாட்டைப் பொருத்தவரைகூட காங்கிரசிலும், ஜஸ்டிஸ் கட்சிக்கு வெளியிலும் தாராளமாக பணக்காரர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதார்களை எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருக்கும் ஏழை மக்கள், நடுத்தர மக்கள் என்பவர்களைவிட சிறிதாவது அதிகமாகவே தான் ஜஸ்டிஸ் கட்சியில் இருக்கிறார்கள்.
201 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கொள்கை விஷயத்திலும் சட்டத்திற்கு அடங்கின கிளர்ச்சி என்பதிலும், சட்ட மறுப்பு செய்வதில்லை என்பதிலும், சீர்திருத்தத்தை உடைப்பதில்லை என்பதிலும், சட்டசபைக்கு போவதிலும், உத்தியோகம் மந்திரி பதவி ஏற்பதிலும், கிருஸ்தவர், முகமதியர், ஆதித் திராவிடர், ஆங்கிலேயர் ஆங்கிலோ இந்தியர் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்குவதை ஒப்புக் கொள்ளுவதிலும், மற்றும் எல்லாவற்றிலும் காங்கிரஸ்காரர்களைப் போலவேதான் ஐஸ்டிஸ்காரர்களும் கொள்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இவை தவிர, வருணாஸ்ரமத்தை ஒழிப்பதிலும், ஜாதி பேதத்தைத் தகர்ப்பதிலும், எல்லா ஜாதிக்கும் கோவில் முதலிய பிரவேசம் அளிப்பதிலும், சகல ஜாதியாருக்குச் சமசந்தர்ப்பமும், சம உரிமையும் ஏற்படும்படி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்குவதிலும் ஜஸ்டிஸ்காரர்கள். தயாராய் இருக்கிறார்கள். இக்கொள்கைகளை காங்கிரஸ்காரர்கள் ஒப்புக் கொள்கிறார்களா என்பதை வர்ணாச்சிரம தர்மத்தால் பின் தள்ளப்பட்டு கீழ்மைப்படுத்தி இழிவாக்கப்பட்ட மக்களாகிய பார்ப்பனரல்லாதார்களை கேள்க்கின்றோம் ஆகவே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களைவிட எந்த விதத்தில் காங்கிரஸ் காரர்கள் மேலானவர்கள் என்பதோடு ஜஸ்டிஸ் கட்சி எந்த விதத்தில் பிற்போக்கான கட்சி என்றும் கேட்டு இதை முடிக்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 15.09.1935
குடி அரசு - 1935 (2)
N 5
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்
- அபேதவாதி எழுதுவது
50 வருஷ காங்கிரசினால் இந்தியாவுக்கு என்ன பலன் ஏற்பட்டது என்று தோழர் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் காங்கிரஸ்காரர்களை ஒரு கேள்வி கேட்டார். அதற்கு எந்தக் காங்கிரஸ்வாதியும், எந்தக் காங்கிரஸ் பத்திரிகையும் யோக்கியமாய் பதில் சொல்ல முன்வரவில்லை.
“சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.”
வெறுங்கையில் முழம் போட்டால் கணக்கு ஏற்படுமா?
என்பதுபோல் ஒன்றும் பதில் சொல்லுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது
இருந்த போதிலும் இக்கேள்விக்குப் பதில் சொல்ல காங்கிரஸ்காரர் களுக்குத்தான் யோக்கியதை இல்லாமல் போய்விட்டதே ஒழிய மற்றப்படி நமக்கு யோக்கியதை இல்லாமல் போகவில்லை. என்னவென்றால்,
முதல்முதலாக சும்மா “சுந்தரமூர்த்தி சுவாமிகள் வேலை" செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் தேசபக்தர்களானார்கள். பச்சைப் பச்சையான வக்கீல்கள் எல்லாம் லோகமான்யர், மகாத்மா, தேசபந்து, தேசோத்காரணர், ராஜாஜி ஆனார்கள்.
மற்றும் வேறு வழியில் ஜீவிக்க முடியாமல் தங்கள் வாழ்க்கை இன்னது என்று குதிர்பாடு இல்லாத காரணத்தால் சர்க்காருக்கு ஜாமீன் கொடுத்துவிட்டு வாழ வேண்டியவர்கள் எல்லாம் பெரியதொரு தேசாபிமானிகள் ஆனார்கள்.
தகரப் போகணி அம்மாமார்கள் எல்லாம் மேடை மீது ஏறி பெரிய பெரிய பொதுநல சேவைக்காரர்களையும் தற்கால சமூக முறையில் மதிக்கப்பட வேண்டியவர்களையும் குச்சிக்கார பாஷையில் வையும்படியான தைரியத்தை அடைந்தார்கள்
இதுகளும் இதுகள் போன்ற மற்றும் பல காரியங்களும் தனிப்பட்ட நபர்கள் இந்த 50 வருஷ காங்கிரசினால் பயன் அடைந்தார்கள் என்பது ஒரு
203 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
புறமிருக்க தேசப் பூசல், மதப் பூசல், வகுப்புப் பூசல் ஆகியவைகள். தலைநிமிர்ந்து தீயைப் போல் இனி யாராலும், எந்த வகையிலும் அணைக்க முடியாத மாதிரியில் எரிந்து கொண்டிருக்கின்றன.
மக்களுக்குள் ஒருவருக்கொருவர் ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு துவேஷம், வெறுப்பு, பொறாமை, ஒருவரை ஒருவர் கெடுக்க
சூழ்ச்சி செய்தல் ஆகியவைகள் பாதாமி அல்வா சாப்பிடுவதுபோல் அவ்வளவு ஆவலுடனும், மகிழ்ச்சியுடனும் செய்யப்படுகின்றன.
“சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பதுபோல் தானாகவே சகலவித நன்மையையும் மக்களுக்குச் செய்து தீரவேண்டிய நிலையில் பொறுப்பை ஏற்று இருந்த அரசாங்கத்தை குறும்புத்தனமான கிளர்ச்சிகள் செய்து யாதொரு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத நிலைமையில் கொண்டு வந்து விட்டது.
ஜனங்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தப்படுத்த வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய மக்களை அரசியல் கிளர்ச்சியின் பேரால் முட்டாள்களாக்கி வைத்து அரசாங்க நடவடிக்கையைக் கணிக்க முடியாமல் செய்து ஒருவரோடொருவர் ஒரு வகுப்பாரோடொரு வகுப்பார், ஒரு மதக்காரரோடொரு மதக்காரர்கள். சண்டை போட்டுக் கொண்டிருக்கும்படி செய்துவிட்டது
இவ்வளவு தானா?
காலணாக் கார்டு முக்காலணா, அரையணா கவர் ஒன்னே காலணா, மயிலுக்கு 2 காசு இருந்த ரயில் சார்ஜ் இன்று 3 காசு, 4 காசு, 4% காசு ஆயிற்று
மாதம் 6 ரூ. வாங்கிக் கொண்டிருந்த சம்பளக்காரனுக்கு இன்று மாதம்
18 ரூ. கொடுக்க வேண்டியதாயிற்று
ஜில்லாவுக்கு 2 முனிசீப் கோர்ட்டு இருந்த நீதி இன்று ஜில்லாவுக்கு 6,7,8 முனிக்ப் கோர்ட்டுகள் ஆயிற்று. அரசாங்க வரி 56 கோடி ரூ. 60 கோடிரூ, இருந்ததானது 200 கோடி ரூ. வரி ஆகிவிட்டது
22 கோடி ரூ. செலவில் நிர்வகித்து வந்த ராணுவம் காங்கிரஸ் கிளர்ச்சி
பிறகு 65 கோடி ரூபாய் செலவில் நிர்வகிக்க வேண்டி வந்துவிட்டது
இந்தச் சம்பள உயர்வு உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை உயர்வு அரசாங்க நீதி நிர்வாக ஸ்தாபனங்களின் எண்ணிக்கை உயர்வு எல்லாம் ஏற்பட்டதற்குக் காங்கிரஸ் கிளர்ச்சியின் காரணமே ஒழிய வேறில்லை:
இவற்றை எல்லாம் ருஜுப்பிக்க காங்கிரஸ் தீர்மானங்களை எடுத்துக் காட்ட நம்மால் முடியும்
குடி அரசு - 1935 (2) 204
இதை ௬ஜுப்பிக்க வேண்டும் என்று நம்மைக் கேட்க இஷ்டமில்லா தவர்கள் சுதேசமித்திரன் புத்தக சாலையில் விற்கும் காங்கிரஸ் சரித்திரம் என்னும் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பார்த்தால் காங்கிரசினால் விளைந்த தீமைகள் - கேடுகள் உள்ளங்கை பப்ளிமாஸ் பழம் போல் விளங்கும்.
சர்க்காரிடத்தில் ஜனங்களுக்குத்துவேஷமும், வெறுப்பும் உண்டாகும்படி செய்வதையே என்றைய தினம் காங்கிரசானது அரசியல் கிளர்ச்சி லட்சியமாய்க் கொண்டதோ அன்று முதலே சர்க்கார் தங்கள் ஆட்சியை கிரமமாகவும், பத்திரமாகவும் நடைபெறச் செய்ய அதிக உத்தியோகஸ் தர்களை நியமிக்கவும், என்ன செய்தாலும் விட்டுவிட்டு ஓடாமல் இருக்கும்படிக்கும் சுவாமி வேதாசலமவர்கள் அறிவுரைக் கொத்தில் சொல்லி இருப்பது போல் எது செய்தாவது உத்தியோகத்தில் வந்து சேரவுமான நிலையை சர்க்கார் உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று
தொழில் வரி, வருமான வரி, அன்னிய சாமான்கள் மீது அதிக வரி, கள்ளு சாராயங்களுக்கு 100க்கு 300 பங்கு வரி முதலிய கடுமையான வரிகள் எல்லாம் போட்டு பணம் வசூல் செய்து உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுத்தாக வேண்டிய அவசியமே காங்கிரஸ் முட்டாள்தனமாக - சர்க்காரைக் கண்விழித்து அதிக ஜாக்கிரதை செய்து கொள்ளும்படி - செய்த கிளர்ச்சி தானே ஒழிய வேறில்லை.
சர்க்கார் உத்தியோகத்தில் பார்ப்பனர்களே இருந்தாலும் பார்ப்பனர்களே படித்தவர்களாகவும் உத்தியோகத்துக்கு லாயக்கானவர்களாகவும், பார்ப்பனர்களுக்கே சகல உத்தியோகமும் கிடைக்கத்தக்க மாதிரியில் ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையில் இருந்தாலும் வரி கொடுக்கிற ஜனங்கள் பார்ப்பனரல்லாதவர்களாகவே 100க்கு 95 பேர்கள் இருந்தாலும் பார்ப்பன. ஆதிக்கம் பெற்ற காங்கிரஸ் இந்த நிலையை உண்டாக்கி வளர்த்திக் காப்பாற்ற வேண்டி வந்தது.
காங்கிரசின் 50 வருஷ கிளர்ச்சியில் சர்க்காரிடம் இருந்து பெற்ற ஏதாவதொரு பெரிய உத்தியோகமோ ஏதாவது ஒரு சுதந்திரமோ யோக்கியமாய், நாணயமாய் நடத்த முடிந்தது என்று யாராவது சொல்ல முடியுமா?
கோர்ட்டு அதிகாரிகள், டிப்டி கலக்டர்கள், முனிசீப்புகள், ஜட்ஜிகள், போலீசு சூப்ரண்டுகள் ஆகியவர்கள் முதல் அவர்கள் சிப்பந்திகள் வரை பலர். செய்யும் அயோக்கியத்தனம், வாங்கும் லஞ்சம் அளிக்கும் அக்கிரமமான.
தீர்ப்புகள் ஆகியவைகளைப் பற்றி ஒரு காங்கிரசுக்காரனும் பேசுவதில்லை.
வெள்ளைக்கார கேப்நட் மெம்பர்கள், வெள்ளைக்கார பெரிய அதிகாரிகள் நடத்தையைப் பற்றி எந்தக் காங்கிரஸ்வாதியும் பேசுவதில்லை.
205 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆனால் பார்ப்பனரல்லாத ஸ்தல ஸ்தாபனத் தலைவர்கள் அரசாங்க மந்திரிமார்கள் ஆகியவர்களைப் பற்றி மாத்திரம் மகாத்மாக்கள் முதல் சத்தியமூர்த்தி வரை எல்லாக் காங்கிரஸ்காரர்களும் குறை கூறி விஷமம் செய்து கண்டபடி தூற்றிய வண்ணமாகவே இருக்கிறார்கள். இதெல்லாம் காங்கிரசினால் ஏற்பட்ட பயன் என்று சொன்னால் யாராவது மறுக்க முடியுமா?
காங்கிரசினால் ஏற்பட்ட யோக்கியதைகள் இன்னம் வேண்டுமானால் இதுபோல் ஆயிரக்கணக்காக சொல்லலாம். சிலது நியாய விரோத மில்லா
விட்டாலும் சட்ட விரோதமாகுமே என்று பயப்பட வேண்டியிருக்கிறது
குடி அரசு - கட்டுரை - 22.09.1935
குடி அரசு - 1935 (2) 206
காங்கிரஸ் கொள்கை நாடகம்
- பழைய காங்கிரஸ்காரன்
காங்கிரஸ் உத்தியோகமேற்கும் விஷயத்தில் அபிப்பிராய பேத மேற்பட்டதற்காக சர்தார் சாதுல்சிங் அவர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டாராம்.
காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் செல்வதை பற்றியோ காந்தியார் சம்மதித்து விட்டார்.
அந்தப்படி பலர் சட்டசபைக்குச் சென்றும் விட்டார்கள்.
சர்க்காரார் காக்காய் கருப்பு என்றால் காங்கிரஸ்காரர்கள் வெள்ளை என்று சொல்லிச் சர்க்காருக்குத் தொந்திரவு கொடுத்து அவர்களுடைய தீர்மானங்களையெல்லாம் எதிர்ப்பதே தங்கள் வேலை என்றால் இனி மாகாண சட்டசபைகளில் அந்த ஜபம் சாயாது.
இந்த மாதிரி முன்காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்டவிஷமத்தனமான. காரணத்தாலேயே அரசாங்கம் நல்ல அரசாட்சிப் புரிய வேண்டும் என்னும் காரணத்துக்காக அனேக பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்டது.
எவ்வளவு தீர்மானங்களைத் தோற்கடித்தாலும் அவை குப்பைத் தொட்டிக்குத்தான்போகுமே ஒழிய தீர்மானத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆகவே அரசாங்கத்தைப் பல தீர்மானங்களில் தோற்கடித்துவிட்டதாகக். காங்கிரஸ்காரர்கள் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியதும், பொறுப்பில்லாத சட்டசபை மெம்பர்கள் செய்த காரியத்தைச் சர்க்கார் லட்சியம் செய்யாமல் தோற்கடித்த அத் தீர்மானங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நல்ல அரசாட்சிக்கு வேண்டியபடி பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்டு திருத்திக் கொண்டோம்” என்று சொல்லி அரசாங்கத்தார் சர்ட்டிபை செய்து காங்கிரஸ்காரர்கள் முகத்தில் கரியைப் பூசுவதும், காங்கிரசுக்காரர்கள் வெட்கமில்லாமல் பிரயாணப்படி கிடைத்தால் போதுமென்று மறுபடியும் மறுபடியும் அதே ஸ்தானத்தில் அமர்ந்து அதே வேலையைச் செய்து கொண்டு இந்திய சுயமரியாதையைப் பாழாக்குவதற்கு ஆளாகி இருப்பதும் தான் முடியும்.
இந்த உண்மை காங்கிரசுக்காரர்களுக்குத் தெரியாது என்று யாரும்
நம்ப முடியாது
207 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எப்படியாவது உளரிக் கொட்டிப் பாமரமக்களை ஏமாற்றிச்சட்டகபைக்குள் நுழைந்து விட்டால் அப்புறம் சவுகரியப்படி நடந்து கொள்ளலாம் என்கின்ற
சூழ்ச்சி எண்ணத்தின் மீதே ஆளுக்கொரு அபிப்பிராயம் சொல்லி வருகிறார்களே ஒழிய வேறில்லை.
உதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்து விடுவதினாலும் உத்தியோகங் களைக் கைப்பற்றிக் கொள்ளுவதினாலும் அரசாங்கத்தைக் கடுகளவுகூட அசைக்க முடியாது என்பதும் இதுவரையும் யாரும் எந்த ஒரு துறையிலும்
சிறிது பாகத்தையாவது அசைக்க முடியவில்லை என்பதும் அரசியல் ஞானமுள்ள யாவரும் அறிந்த காரியமாகும்
சாதாரணமாய் மக்களை ஏமாற்றச் சட்டசபையில் அதிகப் பிரசங்கத்
தனமாகவும், பலாபலனைப் பற்றி லட்சியமில்லாமலும், கூப்பாடு போடலாம். அப்படிப்பட்ட கூப்பாட்டிற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து அரசாங்கத்தார் திருப்பி நல்ல சூடும் கொடுக்கலாம். அது மாத்திரமல்லாமல் அதன் பயனாய் பொது ஜனங்களுக்கு பல நிர்ப்பந்தங்களையும், அதிக வரியையும் ஏற்படுத்திச் சட்டசபை மெம்பர்களின் தொல்லைகளைச் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்
இவற்றைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அல்லது இதுவரை முடிந்தது என்ன? என்று பார்த்தால் விளங்கும்
தென் இந்திய மக்கள் என்ன செய்தாவது பார்ப்பனர்கள் செல்வாக்கில் இருந்த அரசியல் ஆதிக்கத்தை ஒழிப்பது என்று கங்கணம் கட்டி எவ்வளவோ
பழிப்புக்கும், எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் ஆளாகி ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் வழி திறக்கப் பட்டிருக்கிறது
இனி,அதைஎந்தவிதத்திலும் 100 மகாத்மாக்கள் அல்ல, 500 ராஜாஜிகள் அல்ல, அவர்கள் பாட்டன் பூட்டன்களான ரிஷிகள் அல்ல, இனியும் எவராலும் அதைத் தடுக்க முடியாது. வேண்டுமானால் தென்னாட்டு மூட மக்களிடம் பணம் பறிக்கலாம். அதைக்கொண்டு பார்ப்பனரல்லாதாரர்களில் சில கூலிகளைப் பிடித்து காலித்தனம் செய்யச் செய்யலாம்.
இதன் பலனாக எல்லாம் பார்ப்பனர் என்னாளும் நிரந்தரமாகத் தலை. எடுக்காமல் இருக்கும்படியான நிலையை கெட்டியாக ஏற்படுத்திக் கொள்ளத்தான் முடியுமே ஒழிய பழைய ஆதிக்கத்தைக் கனவிலும் நினைக்க முடியாது என்பது உறுதி. இந்தப் பார்ப்பனர்களுடைய யோக்கியதையும் அவர்களது கூலிகளின் காலித்தனத்தையும் கண்ட பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி அல்லது அன்னிய ஆட்சி என்பதால்தான் இந்தியாவுக்கு என்றாவது சமதர்ம ஆட்சி ஏற்படலாமே ஒழிய, மற்றபடி இந்தப் பார்ப்பனர்கள் கூறும் சுயராஜ்யம் என்னும் பார்ப்பன ஆதிக்க ஆட்சியினால் ஒரு நன்மையும் ஏற்படாததோடு,
குடி அரசு - 1935 (2) 208
இன்னும் காட்டுமிராண்டித்தனத்துக்கும், அடிமைத்தனத்துக்கும்தான் நம்நாடு போகக் கூடும் என்று முடிவு கட்ட வேண்டியிருக்கிறது
காங்கிரசின் பொருளாதார ஞானம் கதருடன் நின்றுவிட்டது
காங்கிரசின் கிராமப் புனருத்தாரண ஞானம் கருப்பட்டியுடனும்,
வெல்லக் கட்டியுடனும், கைகுத்து அரிசியுடனும் நின்றுவிட்டது
காங்கிரசின் சமுதாய சீர்திருத்த ஞானம் மதத்தையும், பழைய கலைகளையும் காப்பாற்றுவது என்பதுடன் முடிவு பெற்றுவிட்டது ஆகவே இப்படிப்பட்ட திட்டங்களைக் கொண்ட சுயராஜ்ஜியத்தில் இந்திய மக்கள் வாழ வேண்டியிருந்தால் அவர்களது வாழ்க்கை நிலை, முற்போக்கு, சுதந்திரம், விடுதலை ஆகியவைகளைப் பற்றி நாம் ஒன்றும் யோசிக்க வேண்டியதே இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது
இப்படிப்பட்ட பொருளாதாரம், கிராமப்புனருத்தாரணம், சமூக பாதுகாப்புத்
திட்டம் ஆகியவைகளைக் கொண்டதல்ல என்பது மாத்திரம் உறுதி
ஆனால், இந்நாட்டு மேல் ஜாதிக்காரரும், செல்வவான்களும் அனுபவிப்பதைத் தாங்கள் ஏன் அனுபவிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்கிறது
இப்படிக் கேட்பதில் அருத்தம் இல்லாமல் இல்லை
அதாவது இந்த நாட்டுப் பழனி ஆண்டவர் தலையில் கொட்டி வீணாக ஜலதாரைக்குப் போகும் பாலை நாங்கள் வாங்கிக் கொண்டு போய் அங்குள்ள இளங் குழந்தைகளுக்கு கொடுக்கிறோமே என்கின்றது. அதுபோலவே இந்த நாட்டுச் சோம்பேறிக் கூட்டங்களான பார்ப்பனர். முதலியவர்கள் பாடுபடாமல் அனுபவிக்கும் செல்வத்தை எங்கள் நாட்டுக்குக் கொண்டு போய் அங்குள்ள ஏழை மக்கள், தொழிலாள மக்கள் ஆகியவர்களுக்குப் பயன்படும்படி செய்கிறோமே என்கின்றது. இதில் தப்பு என்ன என்று கேட்கின்றோம்.
நம்நாட்டு நாட்டுக் கோட்டையார் பணம், ஜமீன்தாரர்கள் பணம், மிராசுதாரர்கள் பணம், மில் முதலாளிகள் பணம், கப்பல் வியாபாரிகள் பணம் எல்லாம் மற்றும் அவர்கள் லட்ச லட்சமாய்ச் சம்பாதிக்கும் லாபம் எல்லாம் என்ன கதி அடைகிறது? இதை மாற்ற அடக்க ஒடுக்க முடியாத சுயராஜ்ஜியத்துக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்துக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கின்றோம்
எவ்வளவுதான் ஜீவகாருண்யத்துக்குச் சட்டமிருந்தாலும் நாய்களை
அடித்துக் கொல்ல அனுமதி இருந்துதான் வருகிறது. கசாப்புக்கடைகளில் தினம் லட்சக்கணக்கான ஆடு, மாடு, கோழி, பன்றி முதலியவை கொல்லப்பட்டு, விற்கப்பட்டு, தின்னப்பட்டுத்தான் வருகிறது
200 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எவ்வளவுதான் ஜீவகாருண்யமும் பசுவைத் தெய்வமென்று கொண்டாடும் தன்மையும் இருந்தாலும் காலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை மாடுகள் செக்கில் சுற்றுவதும் பாரம் இழுப்பதும் குதிரைகள் ஜட்கா வண்டிகளில் ஓடுவதும் மேல் தோல் எழும்படி பட்டை வாங்குவதும் அனுமதிக்கப்பட்டுத்தான் வருகிறது
அது போலவே இந்திய ஏழை மக்களைப் பற்றி எவ்வளவுதான். கண்ணீர் வடித்துப் பரோபகாரம் பேசினாலும் அவர்களது சுயமரியாதையும் அறிவும் பாடுபட்ட கூலியும் பாழாகும்படியான காரியங்கள் சுயராஜ்யத்
திட்டத்திலும், மதத் திட்டத்திலும் இருந்துதான் வருகிறது ஆகவே, “சுயராஜ்யம்” ஜஸ்டிஸ் ராஜ்யத்தை விட - ஏன்? பிரிட்டிஷ் ராஜ்யத்தைவிட எப்படி மேலானது என்பது மாத்திரமல்லாமல் எப்படித் தேவையானதாகும் என்று கேட்கின்றோம்
குடி அரசு - கட்டுரை - 22.09.1935
குடி அரசு - 1935 (2) 210
ஸ்தல ஸ்தாபனங்களும்
காங்கிரஸ்காரர்களும்
இந்திய தேசியக்காங்கிரஸ் என்பது பார்ப்பன ஆதிக்கஸ்தாபனமென்றும், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்க ஸ்தாபனமாய் வெகுகாலமாய் இருந்து வந்த மத ஸ்தாபனங்களுக்கு யோக்கியதையற்றுப் போனவுடன் அதற்குப் பதிலாய் காங்கிரஸ் ஸ்தாபனத்தைத் தங்கள் ஆதிக்கத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் நாம் 10, 12 வருஷகாலமாகவே சொல்லி வருகிறோம்.
அதற்கும் 7, 8 வருஷங்கள் முன்பு இருந்தே வெகுகாலமாகப் பிரபல காங்கிரஸ்வாதிகளாய் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராய செட்டியார் போன்ற அறிஞர்களும் அந்தப் படியே சொல்லி காங்கிரசுக்கு எதிராகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாக ஒரு ஸ்தாபனத்தைத் தென்னிந்தியாவெங்கும் ஏற்படுத்திப் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் சூழ்ச்சிக்கும் காங்கிரஸ் ஆயுதமாய் இருப்பதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இது இம்மாகாண மாத்திரமல்லாமல் மற்ற சில மாகாணங்களிலும்
பரவி இருக்கிறது. மேற்கண்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பித்த காலத்தில் காங்கிரசுக்குத் தென்னிந்தியாவில் அடியோடு செல்வாக்கற்றுப் போய், செல்வமும், பொறுப்பும் வரி செலுத்தும் தன்மையும் உள்ள பார்ப்பனரல்லாதார். 100க்கு 99 பேர்கள் காங்கிரசை விட்டு விலகி மேல் கண்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் ஜஸ்டிஸ் இயக்கத்தில் சேர்ந்து இருந்தார்கள்
இந்தர்சந்தர்ப்பத்தில் பார்ப்பனர்கள் ஒரு யுக்தி செய்து பார்ப்பனரல்லாதார் சங்கமென்றே சென்னை மாகாணச் சங்கமென்ற ஒன்றை ஆரம்பித்துச் சில புதுவேகமுள்ள வாலிபர்களையும் பொதுநல சேவையில் ஈடுபட்டு முன்னுக்கு வரவேண்டிய சில பார்ப்பனரல்லாதாரையும் அதில் பிணைத்து,
“தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பது சர்க்காருடைய கட்சி'”யென்றும், '“பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக என்று தெ.இ.ந.உ.
சங்கத்தார் என்னும் ஜஸ்டிஸ் கட்சியார் கேட்கும் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ்காரர்களுக்குஆட்சேணை இல்லை” என்றும் சொல்லி மற்றும் சில பார்ப்பனரல்லாதாரையும் வேறுபல 2௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வழிகளில் ஆசைக்காட்டி கைவசப்படுத்தி ஜஸ்டிஸ் கட்சியை எதிர்க்கவும், அதன் தலைவர்களைத் தூற்றவும் செய்து வந்தார்கள்.
நாளாவட்டத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்கள் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தை மெல்ல மெல்ல கை நழுவவிட்டதோடு மாத்திரமல்லாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத் துரோகமானதென்று சொல்லி அதற்கு விரோதமாயும் வேலை செய்ததோடு ஜஸ்டிஸ் கட்சியை அழிப்பதே காங்கிரசின் முக்கிய கொள்கை என்கின்ற அளவுக்கு வந்து விட்டார்கள். இன்றும் அதே பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த மத்தியில் ஜஸ்டிஸ் கட்சி பொது ஜனங்களின் ஆதரவினால் சட்டசபையிலும், அரசாங்க நிர்வாக சபையிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், பார்ப்பனர்களுக்குச் சமமாகவும், சிலவற்றில் மேலாகவும் ஆதிக்கம் பெற்றுவிட்டதால் தேர்தல் போட்டிகளில் தோல்வியுற்ற பார்ப்பனரல்லாதாரும், அதிகாரங்களிலும், பதவிகளிலும் ஏமாற்றமடைந்த பார்ப்பனரல்லாதாரும், ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராக நின்றாவது ஸ்தானமும், பதவியும் பெற வேண்டியவர்களாகி ஆதியில் காங்கிரசை பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ஜஸ்டிஸ் கட்சியில் வாழ்ந்தவர்களிலேயே
பலர் திரும்பவும் காங்கிரசினுடைய தயவு பெற வேண்டியவர்களாகி காங்கிரசோடு கலக்க வேண்டியவர்களானார்கள். இதெல்லாம் பழங்கதை
என்றும் யாவரும் அறிந்ததென்றும் வைத்துக் கொள்வோம்.
எப்படி இருந்த போதிலும் இன்றைய தினம் காங்கிரசிலுள்ள பார்ப்பனரல்லாதார்களில் 100க்கு 99 பேர்கள் யோக்கியமாயும், நாணையமாயும் ஒரு விஷயத்தை மாத்திரம் வெளிப்படையாய் ஒப்புக் கொள்ளுகிறார்கள். அதாவது காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமாகத்தான் இருக்கிறது என்பதையும், பிரத்தியக்ஷத்திலும், அனுபவத்திலும் காங்கிரஸ் ஸ்தாபனங்களில் பார்ப்பனர்களே முக்கிய தலைவர்களாகவும், காசு பணம் உத்தியோக விஷயத்தில் ஆதிக்கக்காரர்களாகவும் இருக்கிறார்கள். என்பதையும், தங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறார்களே தவிர சந்தர்ப்பம் வரும்போது தாங்களே (பார்ப்பனர்களே) புகுந்து கொள்ளு கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்வதோடு தோழர் ஈ.வெ. ராமசாமி போன்றவர்கள் காங்கிரசுக்கு வந்தால் தாங்கள் எல்லாரும் கூடுமான முயற்சி செய்து காங்கிரசில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து அதை பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்துக்கு திருப்பித் தருவதாகவும் இப்போது தங்களுக்கு போதுமான பலமில்லாததால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் தாராளமாய் சொல்லுகிறார்கள்.
இப்படிச் சொல்லும் காரணம் தங்களுக்குத் தேசபக்தி இருப்பதாயும் ஜஸ்டிஸ் கட்சிக்கு அதில்லை என்பதுமாம். எந்தக் காரணத்தாலேயோ இன்று
குடி அரசு - 1935 (2) 212.
காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கிறது என்பதில் காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் முதல் எந்தக் கட்சியிலும் சேராத பார்ப்பனரல்லாதார் உள்பட யாருக்கும் எவ்வித ஆட்சேபணையும் இல்லை
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையைப் பொறுத்த வரையிலும்கூட எல்லாப் பார்ப்பனர்களும் விரோதமாய் இருந்தாலும் கொஞ்ச காலத்துக்கு ஆவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டியதுதான்'' என்று காங்கிரசிலுள்ள எல்லா பார்ப்பனரல்லாதாருமே
ஒரு மனதாய் ஒப்புக் கொள்ளுகிறார்கள்.
இப்படிச் சொல்லும் பார்ப்பனரல்லாதார்களை “ஜஸ்டிஸ் கட்சியார்
எந்த விதத்தில் தேசாபிமானமில்லாதவர்கள்” என்று கேட்டால் அதற்குத் தாங்களாகவே தங்கள் அபிப்பிராயப்படியே பதில் சொல்ல இன்று ஒருவருக்குக்கூட யோக்கியதை இல்லாமல் இருந்து வருகிறது
ஏனெனில், நாம் மூன் குறிப்பிட்டதுபோல் இன்று காங்கிரசிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் ஒரு காலத்தில் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைகளை ஒப்புக் கொண்டு அக்கட்சியில் இருந்து விட்டு வந்தவர்களாதலால் இப்போது அந்தக் கொள்கைகளைக் குற்றம் சொல்ல அவர்களது மனச்சாட்சி இடம் தரவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் “பொப்பிலி ராஜாவுக்குக் கண்ணும் மூளையும் பெரிது'' என்றும் “ராமசாமி முதலியாருக்கு யுக்தியும், தந்திரமும் அதிகம்" என்றும் “குமாரசாமி ரெட்டியார் சம்பளம் அதிகம் வாங்குகிறார்” என்றும் “ஷண்முகம் செட்டியார் சீக்கிரத்தில் முன்னுக்கு வந்து விட்டார்” என்றும் இதுபோல் தனிப்பட்ட நபர்களிடத்தில் அசூயை கொண்டு பொறாமையில் அர்த்தமற்ற
குற்றம் சொல்லுவதைத் தவிர மற்றபடி காங்கிரஸ் கொள்கைக்கும்,
திட்டத்திற்கும், நடவடிக்கைக்கும், ஜஸ்டிஸ் கொள்கைக்கும், திட்டத்துக்கும், நடவடிக்கைக்கும் இன்ன வித்தியாசம் என்று யாருமே சொல்ல வரவில்லை.
ஏதாவது ஒரு குற்றத்தை ஜஸ்டிஸ் கட்சி மீதோ, அதன் தலைவர்கள் மீதோ அவசியம் சொல்லித் தீர வேண்டியதுதான எலக்ஷன் சமயத்தில்கூட காங்கிரஸ்காரர்கள் காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை என்ன சொன்னார்கள் என்று பார்த்தால் ஜஸ்டிஸார் “பெண்ணின் தாலியை அறுத்தார்கள்” என்றும், “நிலவரியைக் குறைக்கவில்லை” என்றும் “கைதிக்கு மோர் கொடுக்கவில்லை" என்றும், “போலீசார்களால் தொண்டர்கள் அடிக்கப் பட்டார்கள்" என்றும் தான் சொன்னார்கள்.
இந்தக்காரியங்களுக்கும், ஜஸ்டிஸ்கட்சிக்கும்எவ்விதசம்மந்தமுமில்லை என்பது அரசியல் AB.C. தெரிந்த எவருக்கும் தெரிந்த காரியமானாலும் “ஓட்டர்கள் முட்டாள்கள், பெரும்பாலோர் முழு மூடர்கள், மற்றும் சிலர் இனத்துரோகிகள், ஆதலால் நாம் சொல்லுவதை நம்புவார்கள் - ஒப்புக்
213 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கொள்ளுவார்கள்” என்கின்ற தைரியத்தின் மீது அயோக்கியத்தனமாய் பொருத்தமில்லாததாய் உள்ளவைகளைத்தான் சொன்னார்களே தவிர மற்றபடி வேறு ஒன்றும் சொல்லவில்லை; சொல்ல முடியவும் இல்லை.
கூட்டங்களில் இந்த போக்கிரித்தனமான விஷமப் பிரசாரத்தைப் பற்றி
மறுத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்த காலத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி போன்றவர்களும், காந்தியாரும் என்ன சொன்னார்கள் என்பது யாரும் அறியாததல்ல.
அவர்கள் சொன்னதாவது, இன்று எலக்ஷனில் காங்கிரஸ்காரர்கள் போட்டி போடுவதானது
எந்தக் கட்சியாரோடும், தகராறு செய்வதற்காகவோ எந்தக் கட்சியாரையாவது
குற்றம் கூறித் தோற்கடிப்பதற்காகவோ அல்ல" என்றும்,
சர்க்காருக்கும், காங்கிரசுக்கும் உள்ள தகராறுக்காகவேதான் இன்று எலக்ஷனில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசிக்கிறார்களே ஒழிய வேறு காரணத்தால் அல்ல” என்றும் சொன்னார்கள்.
இப்போது சட்டசபைக்குப் போன பிறகு சர்க்காருடன் சீர்திருத்த விஷயமாய்ச் செய்யப் போவதாகச் சொன்ன தகராரை - போரை அடியோடு கட்டி வைத்து விட்டு சர்க்கார் ஏணி என்றால் இவர்கள் கோணி என்று சொல்லிக் கொண்டு எம்.எல்.ஏ. என்ற பட்டத்துடன் இருந்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலைமையில் தான் இங்கு ஸ்தல ஸ்தாபன சம்பந்தமான தேர்தல் விஷயத்தில் இன்று காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்து அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சிப்பதோடு அதற்கு ஆக எவ்வளவோ சூட்சி செய்த போதிலும் தேர்தல்களில் பிரவேசிப்பதற்கு காங்கிரஸ்காரர்கள் சொல்லும் காரணம் மிகவும் விசித்திரமானது
அதாவது “ஸ்தல ஸ்தாபனங்கள் நேர் கேடாகவும், கண்ட்ராக்டர்கள். ராஜ்யமாகவும் நடைபெறுவதால் அவற்றைக் கைப்பற்றி நாங்கள் யோக்கியமாக நடத்தப் போகிறோம்'' என்பதாகும். இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களில் ஜஸ்டிஸ்காரர்களும் ஒரு கட்சியும் இல்லாதவர்களும் தான் அதிகமாய் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பொது ஜனங்களின் ஓட்டுகளின் மீது வந்தவர்களே ஒழிய எல்லோர் கண்களிலும் மிளகாய்ப் பொடி தூவி விட்டோ ஜஸ்டிஸ் கட்சி நியமனத்தாலோ வந்தவர் அல்ல. ஆகவே இவர்களால் “நேர்கேடாய் கண்ட்ராக்டர்கள் ராஜ்யமாய் ஆட்சி புரியப்படுகிறது'” என்று சொல்லப்படுமானால் ஓட்டர்கள் பொறுப்பில்லாமல், நாணயமில்லாமல் நேர் இல்லாமல் ஓட்டுச்செய்திருந்தால் ஒழிய மற்றபடி வேறு காரணங்களால் இவர்கள் ஸ்தானங்கள் பெற்று இருக்க முடியாது அல்லவா?
குடி அரசு - 1935 (2) 214
அப்படிப்பட்ட ஓட்டர்கள் தான் இன்று காங்கிரஸ்காரர்களுக்கும்
ஓட்டுச் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறார்களே ஒழிய வேறு புது ஓட்டர்கள் எந்தக் குயவன் சூளையில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்டு வந்துவிடவில்லை.
ஓட்டர்கள் மாத்திரம் பழய ஓட்டர்கள் என்பதில்லாமல் ஸ்தல ஸ்தாபன பதவிக்கு காங்கிரசால் நிறுத்தப்படப் போகிறவர்களும் பெரும்பாலும் பழய ஆட்களாகத்தான் இருந்து வருகிறார்களே ஒழிய மற்றபடி புதிதாய்
“புடம் போட்டு சுத்தம் செய்யப்பட்டவர்கள் அல்ல."
ஸ்தல ஸ்தாபன கட்டடங்கள், சிப்பந்திகள் ஆகியவர்களும் கக்கூஸ் எடுப்பவர்கள் முதல் கமிஷனர் வரை பழய ஆட்கள் தானே ஒழிய வேறில்லை.
ஸ்தல ஸ்தாபன சட்டமும், ஸ்தல ஸ்தாபன மந்திரியும், நிர்வாக அரசாங்கம் கவர்னர் முதலியனவர்களும் பழயவர்கள் தானே ஒழிய எதுவும் எந்த வண்ணானாலும் சலவை செய்யப்பட்டவைகள் அல்ல
இந்த நிலையில் எந்த முறையில் எந்த ஆதாரத்தைக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் அதுவும் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து அடிபட்டு ஓடி வந்த தோழர்கள் சி.ஆர்.ரெட்டி, சக்கரை செட்டி போன்றவர்களாய் இருந்து வரும் காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களைப் பரிசுத்தப்படுத்தப் போகிறார்கள். என்று கேட்கின்றோம். இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.
இன்று இரண்டொரு இடங்களில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ்காரர்கள் என்னும் பெயரால் இரண்டொரு அங்கத்தினர்கள் இருந்து வருகிறார்கள் என்பது யாவரும் உணர்ந்ததாகும். ஆகவே அப்படிப்பட்ட அவர்களுடைய யோக்கியதைகள் இன்று எப்படி இருந்து வருகின்றது என்று பார்ப்போம் உதாரணமாக காங்கிரஸ்காரர் இருந்து வரும் சென்ன கோவை முதலிய நகரசபை ஸ்தாபனங்களை எடுத்துக் கொள்வோம் சென்னை நகரசபையிலுள்ள காங்கிரஸ்காரர்களில் மெஜாரிட்டி ஆட்கள் எப்படி ஜீவிக்கிறார்கள். அவர்கள் உள்ள கமிட்டிகளின் மூலம் அவர்களுக்கு வரும் வரும்படி எவ்வளவு? எந்தெந்த ஸ்டாண்டிங் கமிட்டியில் உள்ள காங்கிரஸ்காரர்களில் கண்ட்ராக்டர்கள் இடம் மாமூல் பெறாத கவுன்சிலர்களும், கண்ட்ராக்டில் பங்கு பெறாத கவுன்சிலர்களும் எத்தனை எத்தனை பேர்?
நகரசபைத் தலைவரிடத்தில் தினமானம், மாதமானம், வருஷமானம், சன்மானம் பெறாத அங்கத்தினர்கள் எவ்வளவு பேர்?
மற்றும் பொது ஜனங்களில் தனிப்பட்ட நபர்களின் சுயநலத்துக்காகக் கார்ப்பரேஷன் தீர்மானங்களை விற்று விலை பெறாதவர்கள் எத்தனை பேர்?
218 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மற்றும் கார்ப்பரேஷனில் உத்தியோகங்களுக்குத் தங்களுடைய
பந்துக்கள், சினேகிதர்கள், பணம் கொடுத்தவர்கள் ஆகியவர்களை சிபார்சு
செய்து அதற்காகத் தலைவருக்கும், கமிஷனருக்கும் அடிமையாகி பலனும் பதமும் பெறாதவர்கள் எத்தனை பேர்? என்பவைகளைப் பற்றி பாலன்ஸ்
வீட் எடுத்தால் யார் மீதியாவார்கள் என்று கேட்கின்றோம்
ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள சில காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய ஜீவனோபாயத்துக்குச் சரியான கணக்கோ, யோக்கியமான மார்க்கமோ காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.
இனி அடுத்தாப்போல், கோவை காங்கிரஸ் அங்கத்தினர்களில் சிலரை எடுத்துக் கொள்வோம். இவர்களில் கண்ட்ராக்டர்களிடம் பங்கு வாங்குவோர் எத்தனைபேர்? கண்ட்ராக்ட் வாங்கித் தருவதாய் சன்மானம் வாங்கியவர்கள் எத்தனை பேர்? உத்தியோகம் வாங்கித் தருவதாய் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு உத்தியோகம் வாங்கித் தராமலும், அட்வான்சை திருப்பிக் கொடுக்காமலும் தெருவில் சிரிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்? உபாத்தியாயப் பெண்களிடத்தில் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டு வெஞ்சாமரம் வீசப்பட்டவர்கள் எத்தனை பேர்? போக்குவரத்து இடத்தில் போக்கிரித்தனமாய் நடந்து மானங்கெட்டு மதிப்பிழந்து திரிபவர்கள் எத்தனை பேர்? தங்கள் இனத்தில் கமிஷனர்கள் வந்து விட்டார்கள் என்கின்ற சலுகையால் சிப்பந்திகளை மிரட்டி எச்சில் பொறுக்கினவர்கள் எத்தனை பேர்? தங்கள் இனக் கவுன்சிலர்களைத் தருவிக்க விஷமம் செய்தவர்கள் எத்தனை பேர்? இவற்றையெல்லாம் ஒரு தனிக் கமிட்டிப் போட்டு அதற்குக் காங்கிரஸ்காரர்களிலேயே மெஜாரிட்டி மெம்பர்கள் நியமித்து ஒரு வெளிப்படையான விசாரணை வைத்து அறிக்கை வெளியிட காங்கிரஸ்காரர்களுக்குத் தைரியமிருந்தால் இன்னும் அனேக விஷயம் வெளியாகுமென்றே உறுதியாய்ச் சொல்லுவோம் சென்னைக்கார்ப்பரேஷன் தலைவர் குமாரராஜா ஆவார். அவருடைய பிரதம சிஷ்யர்கள் அல்லாவிட்டாலும் நண்பராகவாவது மதிக்கப்பட வேண்டியவர்கள் தோழர்கள் தாமோதரம் நாயுடு, சக்கரை செட்டியார் போன்றவர்கள். தலைவர்களுட்பட இவர்கள் இதுவரை ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்கள். ஆகவே சென்னைக் கார்ப்பரேஷனைப் புனிதப்படுத்த இந்த நபர்களையே காங்கிரசில் சேர்த்துக் கொண்டு அவர்களையே பழயபடியே தலைவராகவும், அங்கத்தினர்களாகவும் வைத்துக் கொண்டு நிர்வாகம் "நேர்மை அற்றதாய்" இருந்து வந்த சென்னைக் கார்ப்பரேஷன் எப்படி புனிதத் தன்மை அடைந்துவிடும் என்று கேட்கின்றோம்.
நடத்தினால் “நாணயக் குறைவாய்'
ஆகவே இன்று காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களைப் பரிசுத்தப்படுத்துகிறோம் என்று சொல்லுவது முதல் நெம்பர் வடிகட்டின
குடி அரசு - 1935 (2) 216
அயோக்கியத்தனமானதும் இன்று ஆதிக்கத்திலிருப்பவர்களைத் தங்கள் அடிமைகளாக்கிப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு மார்க்கம் செய்து கொள்ளலாம் என்கின்ற சூட்சித்தனமானதுமான காரியமே ஒழிய வேறில்லை.
மற்றும் யார் நிற்பதானாலும் சரி, காங்கிரசின் பேரால் நிற்பதாய் ஒப்புக் கொண்டு காங்கிரசுக்கு 100 ரூபாயோ 200 ரூபாயோ கொடுத்துவிட்டால் அவர்களுக்குப் போட்டி போடாமல் விட்டுவிடுகிறோம் என்று சொல்லி மிரட்டி பணம் பறிப்பது ஒரு வழிப்பறிக் கொள்ளைக்கு ஒப்பான போக்கடாத்தனமே தவிர வேறில்லை ஆகவே காங்கிரசின் பேரால் எவ்வளவு கேவலமான காரியம் நடப்பதானாலும் தேர்தல்களின் பேரால் தேர்தலுக்கு நிற்பவர்கள் தங்களுக்கு எப்படியாவது ஸ்தானம் கிடைத்தால் போதும் என்று எவ்வளவு கீழ்மையாய் நடந்து கொள்வதானாலும் ஓட்டர்கள் தங்களுக்குச் சிறிதாவது புத்தி இருந்தால் காங்கிரஸ் பித்தலாட்டங்களுக்கும் இப்படிப்பட்ட வழிப்பறிக் கொள்ளைக்கும் இடம் கொடுக்காமல் தங்கள் சொந்தப் புத்திப்படி சுயமரியாதையுடன் நடந்து கொள்வார்களாக
குடி அரசு - தலையங்கம் - 22.09.1935
217 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சிவில் ஜெயில்
கடன்காரர்கள் கடன் கட்ட முடியாமல் போவதற்கு ஆக அவர்களைச் சிறைப்படுத்துவது என்னும் வழக்கம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது ஒழிக்கப்பட்டு விடவேண்டும் என்றும் பல தடவை எழுதியும், பேசியும் வந்திருக்கிறோம்.
சிவில் ஜெயில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆகவே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களும் முக்கியமாய் தான் சிவில் ஜெயில் செல்வதாய்ச் சொல்லி வேலூர் சிவில் ஜெயிலுக்குச் சென்று சில காலம் ஜெயிலில் இருந்துவிட்டும் வந்தார். (அக்கடன் பிறகு தீர்க்கப்பட்டு விட்டது)
ஒரு மனிதன் கடன்காரனாகிவிட்டால் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தவிர அவனைக் குற்றவாளிபோல் மதித்துச் சிறையில் அடைத்து வைப்பது என்பது முதலாளித்துவத்துக்கு அனுகூலமான காரியமே ஒழிய, சாதாரண ஜனங்கள், ஏழைகள் ஆகியவர்களுக்கு சிறிதும் அனுகூலமான காரியமாகாது
ஒரு நாணையமான - யோக்கியமான - சத்தியவானான மனிதன் கடன்காரணாகிவிடலாம். கடன்காரனாவதற்குதுஷ்டத்தனமோ குற்றமானதனமோ
எதுவும் வேண்டியதில்லை. மேலும் ஒருவன் கெட்டவனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாமலிருப்பதற்கு ஆகவே கடன்காரன் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் பணக்காரர்கள், பணம் சம்பாதிப்பவர்கள், பணம் சம்பாதித்து லேவாதேவி செய்பவர்கள் ஆகியவர்களது நடத்தையும் நாணயத்தையும், குணத்தையும் பார்த்தால் 100க்கு 99 கடன்காரர்கள் யோக்கியர்களாக இருந்ததால்தான் கடன்காரர்களாக வேண்டியவர்களானார்கள்.
என்று கருத வேண்டி இருக்கிறது ஆகவே அப்படிப்பட்டவர்களைச் சிறையில் வைத்து கஷ்டப்படுத்தி அவர்களுக்கு அவமானம் உண்டாக்குவதோடு அவர்களது பெண்டு பிள்ளைகளையும் பரிதபிக்கச் செய்வது என்றால் அதை எந்தக் காட்டுராஜா ஆட்சி மக்களும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே மேல்நாடுகளில் அனேக ராஜ்ஜியங்களில் இம்முறை எடுக்கப்பட்டு விட்டது. நம் நாட்டிலும் பல அறிஞர்கள் இந்த முறையை ஆகு்ஷேபித்துக் கண்டித்து வந்திருக்கிறார்கள்.
குடி அரசு - 1935 (2) 218
அதோடு நமது அரசாங்க ஆட்சிக்கும் இது ஒரு பெரிய மாசாக இருந்து வந்ததாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
ஆகவே அப்படிப்பட்ட காரியமானது இப்போது அடியோடு ஒழிக்கப்பட நமது அரசாங்கத்தாரால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு அது இன்று செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சீக்கிரத்தில் இந்திய சட்டசபைக்கு வந்து நிறைவேற்றப்பட்டு சட்டமாகலாம் என்கின்ற
நம்பிக்கை இருந்து வருகின்றது வெகுகாலத்துக்கு முன்பாகவே இச்சட்டம் வந்திருக்குமானாலும் பொதுஜன அபிப்பிராயம் மாகாண அரசாங்க அபிப்பிராயம் ஆகியவை தெரிய வேண்டும் என்கின்ற காரணத்துக்காக இரண்டு வருஷ காலமாய் தவக்கத்தில் இருந்து வந்து இப்போது சட்டசபைக்கு வருகிறது
இதில் ஒரு விஷயம் நாம் இப்போது தெரிவித்து விடுகிறோம் அதாவது இன்று இந்திய சட்டசபையில் உள்ள சட்டசபை அங்கத்தினர்கள் பலர் பணக்காரர்களாகவும், பலர் பணக்காரர்கள் கூலிகளாகவும், ஏஜண்டுகளாகவும் இருக்கிறார்கள்.
ஏனென்றால் 20 ஆயிரம், 30 ஆயிரம் செலவு செய்தால்தான் இன்று எவரும் இந்திய சட்டசபைக்குப் போகலாம். பணம் இல்லாவிட்டால் வேறு எந்தப் பணக்காரனாவது பணமும் மோட்டார் காரும், பெட்றோல் எண்ணையும் கொடுத்துத் தன்னுடைய கூலிகளை விட்டு ஓட்டு வாங்கிக் கொடுத்தால் தான் சட்டசபைக்குப் போகலாம். இரண்டும் இல்லாத ஒரு சுதந்திரவாதி சட்டசபைக்குப் போவது என்பது மோக்ஷலோகத்துக்குப் போவது என்பது எப்படியோ அதுபோல்தான். ஆகவே அப்படிப்பட்ட பணக்காரர்களாயும், அவர்களுடைய கூலிகளாயும் உள்ளவர்கள் பலர் இருந்தால் சட்டசபையில் நல்ல முறையில் சூட்சி இல்லாமல் இச்சட்டம் நிறைவேறுமா என்று பயப்பட வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லி விடுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.09.1935
219 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஈரோடு. வெங்கிட நாயக்கர்
வைத்தியசாலைத் திறப்பு விழா
எங்களது தகப்பனார் பேரால் இந்த வைத்தியசாலை ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்று இப்பொழுதுதான் நாங்கள் வெளிப்படையாய் காரியங்கள் செய்தபோதிலும், வெகு காலமாகவே எங்கள் வீட்டில் ஒரு அளவுக்கு பொதுஜனங்களுக்கு வைத்திய வசதி செய்து வரப்பட்டிருக்கிறது.
எனது தமையனார் அவர்களுக்கும் வைத்தியத்தில் 20, 30 வருஷ மாகவே அனுபவமுண்டு. அனேக நல்ல மருந்துகள் செய்யும் முறைகளும் பிரயோசிக்கும் முறைகளும் தெரியும். அனேக மருந்துகள் செய்யப்பட்டு இப்போதும் தயாராக இருக்கிறது
இருந்தபோதிலும் இந்த வைத்தியசாலையானது எங்களுடைய முயற்சி யிலேயே நன்றாக நடைபெறுமென்று நாங்கள் கருதி இதைத் தொடங்கவில்லை.
இதற்குப் பொதுஜனங்கள் ஆதரவு பெரிதும் வேண்டும். அதற்காகவே தான் உங்களையெல்லாம் நாங்கள் வரவேண்டுமென்று கோரினதும், நிலம்பூர் ராஜா அவர்களை இந்த வைத்தியசாலையைத் திறந்து வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதே ஒழிய விளம்பரத்திற்காக அல்ல என்று வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
பெரியோர்கள் ஆசீர்வாதம் என்பதில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை கிடையாது. அவர்கள் ஆதரவு பெற வேண்டுமென்பதற்கு அவர்களுடைய ஆசி கூறப்பெறுவது என்பது ஒரு மார்க்கம் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஏனென்றால் பெரியோர்களால் வாழ்த்துப்பெற்றுவிட்டால் பிறகு அது நன்றாக நடைபெறவேண்டுமென்றும், அதற்கு ஏதாவது கஷ்டம் வந்த காலத்தில் உதவ வேண்டுமென்றும் கவலை கொண்டு முன் வருவது உண்மையான பெரியோர்களுடைய இயல்பாகும்
ஏனெனில் தங்கள் வாக்கு வீணாகக்கூடாதென்பதும்; தாங்கள் வாழ்த்து பொய்த்துப் போகக்கூடாதென்றும் கவலைப்படுவார்கள். ஆகையினாலேயே உங்களுடைய வாழ்த்துப் பெற்ற இந்த தர்ம வைத்தியசாலையின் பிற்கால வாழ்வில் நம்பிக்கை இருக்கிறது
குடி அரசு - 1935 (2)
ப ப் S
ஸ்தாபனங்கள் ஏற்படுவதும், மறைந்து போவதும் இயற்கை. ஆகையால்
நாம் நம்முடைய ஆசையை ஆதாரமாக வைத்தும் உண்மையான முயற்சியைக்கொண்டும் அவனவனுக்கு நல்லதென்றும், அவசியமென்றும் தோன்றியதைச் செய்து விடவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை ஆரம்பித்திருக்கிறோம்
நாட்டு வைத்தியத்திற்கு நமது நாட்டில் செல்வாக்கில்லை
நாட்டு வைத்தியத்திற்கு அறிவாளிகளென்ற மக்களிடம் நம்பிக்கையு மில்லை. ஆனால், இதுவரையில் இங்கு நடந்த உபன்யாசங்களில் நாட்டு வைத்தியத்தைப்பற்றி வெகு பிரமாதமாகப் பேசப்பட்டிருக்கிறது.
அப்பெருமைகள் சாஸ்திரங்களிலோ, புஸ்தகங்களிலோ இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அனுபவத்தையும், பலனையும் கொண்டு மதிக்கும்போது அப்படிச் சொல்லமுடியவில்லை.
நாட்டு வைத்தியத்திற்கு செல்வாக்கில்லாமல் போனது மேல்நாட்டு வைத்தியத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதும் அரசாங்கத்தின் பயனாக இருக்கலாம். ஆனபோதிலும் அரசாங்கத்தார் சமீப காலமாக நாட்டு வைத்தியங் களுக்கு செல்வாக்கு ஏற்படவும் அதனால் மக்கள் பயனடையவும் முயற்சித்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும்
என்னைப் பொறுத்த வரையில் எந்த வைத்தியமானாலும் ஜனங் களுடைய கஷ்டத்தையும், நோயையும் தீர்க்க வேண்டுமென்பதுதான் எனது ஆசை என்றாலும் எனக்கு மேல் நாட்டு வைத்தியத்தில்தான் அதிக நம்பிக்கை, ஆனால் அது பொது ஜனங்களுக்கு சரியானபடி பயன்படுவதில்லை.
பொது ஜனங்களுடைய வரிப்பணத்தினாலேயே மேல்நாட்டு வைத்தியம் இந்நாட்டில் நடந்து வருகிறதென்றாலும் சராசரி நூற்றுக்கு
10 நோயாளிக்குக்கூட மேல்நாட்டு வைத்தியம் கிடைப்பதில்லை என்பதோடு, அதிலும் செல்வவான்களுக்குத்தான் அது கிடைக்கக்கூடியதாக இருக்கிறதே ஒழிய பாமர மக்களுக்கு கஷ்ட சாத்தியமாக இருக்கிறது
வைத்தியம் என்பது வைத்தியர்களாலேயேதான் செய்துகொள்ளப்பட வேண்டியது என்பதில்லாமலும் பணச் செலவில் தான் பரிகாரம்செய்து கொள்ளலாம் என்பதில்லாமலும் வைத்தியமே அவசியம் தேவை என்பது கூட இல்லாமலும் இருக்கும்படியான காரியங்களைச் செய்யவேண்டியதும், அதற்குத்தக்கபடி மக்களைப் படிப்பிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்
ஆனால் பல காரணங்களால் அரசாங்கம் இதை முக்கியமாய் கொள்வதற்கு இல்லாமல் போய்விட்டதால், பொது ஜனங்களில் பொது ஜனங்கள் நன்மைக்கு உழைப்பவர்களாவது இதை ஒவ்வொருவரும் மேற்போட்டுக்கொண்டால் மிக நன்மை பயக்கும்
இ ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதனாலேயே நமக்குச் சக்தியிருக்கிறதோ இல்லையோ என்பதைக் கவனிக்காமலும் நம்மால் கடைசி வரை கொண்டு செலுத்தமுடியுமோ, முடியாதோ என்று முடிவு கட்டாமலும் இவ்வளவு பெரிய காரியத்தை துவக்கி விட்டோம்
நமது ஊர் முனிசிபல் சேர்மன், கமிஷனர் ஆகியவர்கள் அனேகமாக வைத்தியசாலைக்கே வேலையில்லாமல் செய்யக் கூடிய அளவுக்குப் பொது சுகாதாரத்தையும், அது சம்மந்தமாக ஜனங்களுடைய தேவைகளையும் கவனித்து வருகிறார்கள். ஆதலால் இது விஷயத்தில் வைத்தியசாலைக்கு அதிக பாரமேற்படுமே என்று நாங்கள் கவலைப்படவில்லை. ஆகவே நாங்கள் நிலம்பூர் மகாராஜா அவர்களை இந்த வைத்திய சாலையை துவக்கு விழா செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: 14.09.1935 ஆம் நாள் நடைபெற்ற ஈரோடு வெங்கிட நாயக்கர் தர்ம வைத்தியசாலைத் திறப்பு விழாவில் (42, ஈரோடு கச்சேரி வீதி) நிலம்பூர் அரசர் (சீனியர்) அவர்களை வைத்தியச் சாலையை திறந்து வைக்க அழைத்த போது ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 22.09.1935
குடி அரசு - 1935 (2)
ப ப் 3
ஈரோடு பெற்றோர் சங்கம்
கமிஷனருக்குப் பாராட்டு.
தலைவர் அவர்களே! தோழர்களே!!
இன்று இங்கு கூடியிருக்கும் கூட்டம் நம் நகரை விட்டுப் போகும் கமிஷனரைப் பாராட்டுவதற்காகக் கூடியிருக்கும் கூட்டமாகும். இதுவரை பல கூட்டங்களில் அவரைப் பாராட்டிப் பேசப்பட்டுவிட்டது. இன்று கமிஷனர்
நம் முன் அவர் செய்த வேலைகளையும், செய்யவிருந்த வேலைகளைப்
பற்றியும் பேசினார்.
இங்கு பேசிய பலர் கமிஷனர் வந்து பல காரியங்கள் செய்துவிட்டார்.
என்று புகழ்ந்து பேசினார்கள்.
ஆனால் கமிஷனர் வந்தபின்தான் இந்த வேலைகள் செய்ய முடிந்தது
என்றால் சேர்மனும், கெளன்சிலர்களும் இதுவரை தூங்கினார்களா என்று
நீங்கள் நினைக்க வேண்டாம்.
இம்மாதிரி வேலைகள் கமிஷனர்களால்தான் மூடியும். கடைவீதி கமிஷனர் வந்தவுடன்தான் அகலமாகவிருக்கிறது என்று ஒரு நண்பர் பேசினார்.
கடைவீதி அகலம் செய்யும் விஷயம் சேர்மனோ, கவுன்சிலர்களோ
செய்தால், செய்ய முயற்சித்தால் அடிவிழுகும். ஏனெனில் கடைவீதியில் பாதிக் கடைகள் கெளன்சிலர்கள் கடைகள். கடைவீதியில் பழக்கடை வைத்திருந்ததை எடுப்பதற்கு கமிஷனர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. அதற்காக அவரை இரவில் அடிப்பதற்குக்கூட முயற்சித்தார்கள். அவர் அதை லக்ஷியம் செய்யவில்லை. இம்மாதிரி ஆபீசர்களால்தான் இம்மாதிரி வேலைகள் செய்ய முடியும். ஏனெனில் கமிஷனர்களெல்லாம் ஊழியர்கள். சேர்மன், கெளன்சிலர்கள், பிரதிநிதிகள். ஊழியர்களால்தான் தைரியமாகவும், தாட்க்ஷண்யமில்லாமலும் செய்ய முடியும். பிரதிநிதிகள் அவ்விதம் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் நாளைக்கு ஓட்டுக்குப் போக வேண்டும்
புருஷோத்தம் அவர்கள் ஒரு நல்ல ஊழியர். நான் ஏன் அவரை ஊழியர் என்று கூறுகிறேன் என்றால் அவர் தன்னை ஒரு ஊழியர் என்றே
கூறிக் கொள்ளுவார்.
அவர் காரியம் சாதிப்பதற்குக் கெஞ்ச வேண்டிய இடத்தில் கெஞ்சி
தம் காரியத்தைச் சாதிப்பார்.
இவர் பல குழந்தைகளை விட்டுச் செல்வதாகச் சொன்னார்கள்.
223 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
லெஜிட்டிமேட் குழந்தைகள் அதுபோகத் தனக்கு சம்மந்தமில்லாத (இன்லெஜிட்டிமேட்) பல குழந்தைகளை விட்டுச் செல்லுகிறார் என்று நான். கூறுகிறேன்.
ஆனால் இவர் வந்தபின் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது அதாவது ஆப்பீசர்களும், பொது ஜனங்களும் ஒன்று சேர்ந்து விஷயங்களை உணர்ந்து கொள்ளும்படி செய்தார்.
அவர் இவ்வூரை விட்டுப் போவதால் அவர் செய்துவிட்டுப் பாக்கி விட்டிருக்கும்வேலைகள் நின்று விடாது. இவைகள் யாவும் இது சமயம் நமது ஊருக்கு வந்திருக்கும் புதுக் கமிஷனர் செய்வார் என்று நான் நம்புகிறேன்.
தோழர் புருஷோத்தம் அவர்கள் போகப் போகும் இடம், தகராறுகள் இருக்கும் இடம், முனிசிபாலிட்டியைக் கலைத்துவிட யோசித்துக் கொண்டிருக்கும் இடம். அம்மாதிரி இடத்திற்குப் போய்த்தான் அங்கு சமாதானம் செய்து இம்மாதிரி வேலைகள் செய்ய வேண்டும். ஆகையால் இவர் அங்கு அவசியம் போக வேண்டும். இவர் போனால் சமாதானம் செய்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது
இவர் போவதால் நம் முனிசிபாலிட்டியைக் கலைத்து விடுவார்களென்று நீங்கள் நினைக்க வேண்டாம். நமது சேர்மன் இருக்கும்போது அம்மாதிரி
ஒன்றும் நடைபெறாது
நமது சேர்மனுக்கு வருகிற கலெக்டர்களை எல்லாம் சுவாதீனம் செய்து கொள்ளத் தெரியும். ஆகையால் நம் ஊருக்கு நன்மையான காரியத்தை செய்துவிட்டு மற்றொரு ஊருக்குப் போகும் கமிஷனரைப் பாராட்டி அனுப்ப வேண்டுகிறேன்.
[புதிதாக வந்திருக்கும் கமிஷனர் தோழர் ராமதாஸ் நாயுடு அவர்கள் எழுந்து தோழர் புருஷோத்தம் அவர்கள் செய்துவிட்டுப் போயிருக்கும் வேலைகளைத் தாம் செய்வதாகவும், அவர் செய்து வந்தது போலவே பொது ஜனங்களின் நன்மைக்கும் பாடுபடுவதாகவும் கூறினார்.]
குறிப்பு: ஈரோடு முனிசிபல் பாடசாலையைச் சேர்ந்த பெற்றோர்கள் சங்க ஆதரவில் ஈரோடு கமிஷனர் திரு புருஷோத்தம் அவர்கள் திருநெல்வேலி கமிஷனராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நடை பெற்ற பாராட்டுக் கூட்டத்தில் கமிஷனரைப் பாராட்டி ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 29.09.1935
குடி அரசு - 1935 (2) 224
சீட்டாட்டத்தின் தீமைகள்
- உண்மை விளம்பி
முன்பு ஒரு தடவை சீட்டாட்டத்தின் ஒரு பகுதியைப் பற்றி ஆடி மீ
6-ந் தேதி 'குடி அரசில் வெளியாயிருப்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்! ஆனால் இப்பொழுது மேற்படி விளையாட்டினால் ஏற்படும் மிக முக்கியமான கெடுதல்களைப் பற்றிக் கூறுவோம். அக்கெடுதல்கள் என்னவென்றால் :-
1. பொருள் நஷ்டம் ஏற்படுகிறது
2. தேக ஆரோக்கியத்திற்குக் கெடுதலாயிருக்கிறது
3. தன் மரியாதையை இழக்க நேருகிறது
ஆகையால் இம்மூன்று அதி முக்கியமான தீமைகளையும் தெளிவாய் உலகுக்கறிவிக்க வேண்டியது எனது கடமையாய் விட்டது
சீட்டாடுவதால் பலவிதமான மார்க்கங்களில் பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. சீட்டாடும் செல்வச் சிகாமணிகள் பெட்டியில் பணமிருக்கிற வரையில் நோட்டு நோட்டாய் வெளியில் விடுவார்கள். பெட்டியிலுள்ள பணமும் எத்தனை நாட்களுக்குத்தான் வரும்! பணப் பெட்டியிலுள்ள கரன்ஸி நோட்டுகளும் ரொக்கம் சில்லரைகளும் சிறுகச் சிறுக வெளியே போய்க் கொண்டிருந்தால் - கொஞ்ச நாட்களுக்குள் பெட்டியும் காலியாய் விடுமென்பது திண்ணம். பிறகு பணத்திற்கு என்ன செய்வார்கள் என்றால் ஒன்று நான்காகப் பிராமிசரி நோட்டெழுதி ஸ்டாம்பில் கையொப்பமிட்டுக் கொடுத்துப் பணம் வாங்குவார்கள். ஒன்றுக்கு நான்காக எழுதிக் கொடுத்து வாங்குவது என்பது எப்படி என்றால், பணம் கொடுப்பவன் ரூபாய் 100 கொடுத்தால் 400 ரூபாய் பெற்றுக் கொண்டதாக எழுதிக் கொடுத்து பணம் வாங்கும் 'மடச் சாம்பிராணிகள்' இப்படி முட்டாள்தனமாய் எழுதிக் கொடுத்து பணம் வாங்குபவன் அதிக பணக்காரனாயிருந்தால்தான், இவ்வாறு எழுதி வாங்கிக் கொண்டு கொடுக்கும் “ஊர் முதலடிக்கிற ஆசாமிகள் பணம் கொடுப்பார்கள். இந்தப்படியாக எழுதிக் கொடுத்து வாங்கும் சமாச்சாரம் தகப்பனாருக்குத் தெரிந்தவுடன் தனக்கும், மகனுக்கும் சம்பந்தமில்லை என்றும், தன்னுடைய சொத்தில் பாத்தியதை இல்லை என்றும், தன்னுடைய மகன் தற்சமயம் கடன் வாங்க வேண்டிய நிலைமை ஏற்படவேண்டியதில்லை என்றும் அப்படியாராவது என்னுடைய மகனிடத்தில் நோட்டெழுதி வாங்கிக் கொண்டு கடன் கொடுத்திருந்தால் அவர்கள் 2௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
என்னுடைய சொத்து முதலியவைகளின் மூலம் தொடரக் கூடாது என்றும் தினசரி, வாரப் பதிப்பு முதலிய பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவிட்டால் அநேகமாக யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். ஆகையால் இப்பொழுது அதிகப் பந்தயங்கள் வைத்துச் சீட்டாடுவதற்கு வீட்டிலும் பணம் கிடைப்ப தில்லை. கடன் வாங்கவும் முடியாது என்றால் பணத்திற்கு என்ன செய்வார்கள்
என்று வாசகர்கள் கேட்கலாம். அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வார்கள். என்றால், தான் போட்டிருக்கும் நகைகளையும், அல்லது மனைவியினுடைய தங்க வைர நகைகள் முதலியவற்றையும் ஈடு வைத்தாவது, அல்லது விற்றாவது பணத்தைச் சேகரித்துக் கொண்டு தினமும் சீட்டு விளையாடுவார்கள். இதை விடப் பொருள் நஷ்டமும், கேவலமும் என்ன வேண்டுமென்று கேட்கிறேன்?
தினசரியும் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு சீட்டுப் போடுவதால் அனேக வியாதிகள் உண்டாகுமென்பது நிச்சயம். காரணம் என்னவென்றால் கீட்டாடும் பொழுது கூட்டமாயிருப்பதால் சுத்தமான காற்று முதலியவைகளைச் சுவாசிக்கமுடியாது. விளையாடும்பொழுது சுருட்டு, சிகரெட்முதலியவைகளை அதிகமாய் உபயோகிப்பதால் ஹிருதயத்தில் கேட்டை விளைவிக்கிறது வெகுநேரம் உட்கார்ந்து கொண்டே விளையாடுவதால் கை, கால், இடுப்பு முதலியவைகளில் மேல் வலி போன்ற வலிகள் நிச்சயமாய் ஏற்படுகின்றன. சரியான நேரங்களில் சாப்பிடாமல் சீட்டு விளையாடிக் கொண்டே இருந்துவிட்டு நேரங்கெட்டுச்சாப்பிடுவதாலும், விளையாடும் பொழுதுகண்ட உணவுப்பொருள் களை எல்லாம் சாப்பிடுவதாலும் ஜீரணக் கருவி முதலியவைகளில் கோளாறுகள் ஏற்படுகிறது. ஜீரணமடையாமல் பல வியாதிகள் ஏற்படஏதுவாகிறது.
சீட்டாடும் மகான்கள் விளையாடும் பொழுது ஒருவருக்கொருவர் மரியாதை முதலியவைகள் இல்லாமலே பேசிக் கொள்வார்கள். சீட்டு விளையாடும் பொழுது தகரார் வந்துவிட்டால் ஒவ்வொருவரும் அவரவர்கள் இஷ்டப்படியே ஒரே சமயத்தில் பத்து வீடுகளுக்கு அப்பால் கேட்கும்படி இரைந்து பேசுவார்கள். இப்படிச் சீட்டாடும் சீமான்கள் போலீஸின் மூலம் கிரிமினல் குற்றத்திற்கு உட்பட்டு விட்டார்கள் ஆனால் தப்பித்துக்கொள்வதற்குப் பணத்தைப் பணமென்று பார்க்காமல் செலவழிப்பார்கள். மேலும் ஒவ்வொரு வாய்தாவிற்கும் தவறாமல் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிற்கு ஆஜராக வேண்டும். மாஜிஸ்டிரேட் எங்கெங்கு 'காம்ப் போடுகிறாரோ அங்கங்கு ... போல் அலைய வேண்டும். இப்படிஅவமரியாதையுடனும், கஷ்டங்களுடன் ஏன். அப்படிச் சீட்டு விளையாட வேண்டுமென்று கேட்கிறேன்?
ஆகையால் இனிமேலாவது சீட்டாடாமலும் அப்படி விளையாடும் பொழுதைப் பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பதின் மூலமாகவும், வீட்டுக் காரியங்களைக் கவனிப்பதின் மூலமாகவும், உலக முன்னேற்றத்திற்கும், மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பதற்கும் பாடுபடுமாறும் சீட்டாடும் இளைஞர்களையும் பெரியோர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
குடி அரசு - கட்டுரை - 29.09.1935
குடி அரசு - 1935 (2) 226
காங்கிரஸ்காரனுக்கும்
ஜஸ்டிஸ்காரனுக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
ஜஸ்டிஸ்காரன்? காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரபிரசாத் அவர்கள் சென்னைக்கு வரும்போது அவருக்கு உபசாரப் பத்திரம் படிக்கக் கூடாது என்று சென்னைக் கார்ப்பரேஷன்காரர்கள் தீர்மானித்தார்கள் அல்லவா?
காங்கிரஸ்காரர்கள்? ஆம்;
ஜு அப்படியானால் அத் தீர்மானத்திற்குச் சென்னைவாசிகள் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மரியாதை செய்ய இஷ்டம் இல்லை என்றும் தானே அருத்தம்?
கா அப்படி அருத்தமாகுமா? கார்ப்பரேஷன் மெஜாரிட்டி கவுன்சிலர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்காரராய் இருப்பதால் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கு காங்கிரஸ் தலைவருக்கு மரியாதை செய்ய இஷ்டமில்லை என்று தான் அருத்தம்
ஜு கார்ப்பரேஷனில் எந்தக் கட்சி மெஜாரிட்டியாய் இருந்தாலும் சரி, அவர்கள் செய்யும் தீர்மானம் கார்ப்பரேஷன் தீர்மானம் என்று தானே அருத்தம்?
காஉஆம் அது சரிதான். இருந்தாலும் அது சென்னை வாசிகள் தீர்மானம் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளும் முடியாது
ஜு ஏன் அப்படிச் சொல்ல முடியாது. கார்ப்பரேஷனில் மெஜாரிட்டியாய் இருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சென்னை ஓட்டர்களால் தெரிந்தெடுக்கப்
பட்டவர்கள் அல்லவா?
கா: ஆம்
28 அப்படியானால் அவர்களது அபிப்பிராயமும் அவர்களது
முடிவும் பொதுஜன அபிப்பிராயம் என்றுதானே கொள்ள வேண்டும்?
கா? அப்படி ஒரு நாளும் சொல்ல முடியாது. எலக்ஷனில் ஒரு கட்சி ஜெயித்துவிட்டதாலேயே அது பொது ஜன அபிப்பிராயமாகிவிடுமா? அவர்கள் பொதுஜனப் பிரதிநிதிகள் ஆகிவிடுவார்களா?
27 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
298 பின்னை எலக்ஷன் என்றால் என்ன அருத்தம். மற்றப்படி யாரைத்தான் பொது ஜன பிரதிநிதி என்பது? பொதுஜன அபிப்பிராயம் தெரிவதற்கு என்னதான் வழி?
கா எலக்ஷனில் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம் ஆகியவை களைக் கிளப்பி விட்டுப் பொய்யும் புளுகும் சொல்லி பணங்காசைக் கண்டபடி வாரி இரைத்து, ஓட்டு வாங்கி விட்டால் அது பொதுஜன அபிப்பிராயமாகிவிடுமா? கார்ப்பரேஷனில் காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு அளிக்காதது ஒரு நாளும் சென்னைவாசிகள் அபிப்பிராயமு மாகாது. கார்ப்பரேஷன் அபிப்பிராயமுமாகாது. அதை தேசத்துரோகிகள் அபிப்பிராயம் என்றுதான் சொல்ல வேண்டும்
ஜு அப்படியானால் பொதுஜனங்களின் ஓட்டையும், தேர்தலையும் பொது ஜனங்களின் சரியான அபிப்பிராயம் என்று ஒப்புக் கொள்ளுவதில்லை என்பதுதானே நீங்கள் பேசுவதின் அருத்தம்
&M மறுபடியும் உங்களுக்கு என்ன சந்தேகம்? காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு இல்லை என்று ஒரு கார்ப்பரேஷன் தீர்மானம் செய்து விட்டால் அதைப் பொதுஜன அபிப்பிராயம் என்று எப்படி ஐயா சொல்ல முடியும். இதுகூடவா உங்களுக்குத் தெரியாது?
ஜு காங்கிரஸ் பிரசிடெண்டானாலும் சரி, வெஞ்சாமரம் பிரசிடெண்டா னாலும் சரி அதைப் பற்றி நான் உங்களைக் கேட்கவில்லை. சென்னைக் கார்ப்பரேஷன் என்று சொல்லும் சென்னை நகரப் பிரதிநிதிகளைக் கொண்ட சென்னை நகர பரிபாலன சபையார் அபிப்பிராயத்தை நீர் சென்னை மகாஜனங்களின் அபிப்பிராயம் என்று ஒப்புக் கொள்ளுகிறீரா இல்லையா?
காஉ இதென்னையா கஷ்டமாய் இருக்கிறது. எலக்ஷன்களையே முதலாவது யோக்கியமானது என்று சொல்ல முடியவில்லை. அதிலும் ஜஸ்டிஸ் கட்சி மெஜாரிட்டி கொண்ட கார்ப்பரேஷனை எப்படி ஜனப் பிரதிநிதித்துவமானது என்று நான் ஒப்புக் கொள்ள முடியும்?
ஜு மறுபடியும் வழ வழ என்று பேசாதேயும். ஜனங்களின் ஓட்டுப் பெற்ற நகர பரிபாலன சபை அங்கத்தினர்கள் தீர்மானத்தைப் பொதுஜன அபிப்பிராயம் என்று ஒப்புக் கொள்ளுகிறீரா இல்லையா? இரண்டிலொன்று சொல்லும். காந்தியார் போல் வழ வழ என்று திருகணி பீரங்கி மாதிரி பேசாதேயும்
கா: சரி ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறேன். அது பொது ஜன அபிப்பிராயமாகாது. ஒரு நாளும் ஆகாது. அவ்வளவுதான்.
ஜு எது?
காய கார்ப்பரேஷன் அபிப்பிராயம்.
ஜு சரி அந்த கார்ப்பரேஷன் அங்கத்தினர்கள் பொது ஜனங்கள் பிரதிநிதிகளா அல்லவா?
கா: ஒரு நாளும் அவர்கள் பொதுஜனப் பிரதிநிதிகள் ஆக மாட்டார்கள்.
குடி அரசு - 1935 (2) 228
ஜு நிரம்பச் சந்தோஷம். நீர் மிகவும் நல்ல பிள்ளை. இதை நன்றாய் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இப்பொழுது நீர் என்ன சொல்லி இருக்கிறீர்? கார்ப்பரேஷன் தீர்மானம் பொது ஜனத் தீர்மானம் அல்ல வென்றும், சென்னைப் பொதுஜன ஓட்டுப் பெற்ற கார்ப்பரேஷன் கவுன்சிலர்களைப் பொதுஜன பிரதிநிதிகள் அல்ல வென்றும் சொல்லி இருக்கிறீர்.
கா ஆம், ஆம். காங்கிரஸ் தலைவருக்கு
ஜு அதெல்லாம் ஒன்றும் பேசாதீர். நான் உம்மை இப்பொழுது ஒரு குறிப்பிட்ட ஆள்களைப் பற்றியோ குறிப்பிட்ட செய்கையைப் பற்றியோ. கேட்கவில்லை தெரியுமா?
கா சரி, சரி. கார்ப்பரேஷன் தீர்மானம் பொது ஜன அபிப்பிராயமாகாது
தான். அந்த கவுன்சிலர்களும் பொதுஜன பிரதிநிதிகள் அல்லத்தான்.
ஜு நிரம்ப சந்தோஷம். மற்றொரு கேள்வி கேட்கிறேன். தயவு செய்து
பதில் சொல்லுகிறீர்களா?
காய கேளுமே. பேஷாய்ச் சொல்லுகிறேன். எப்படிப்பட்ட சூஸ்திரக் கேள்வி என்று பார்ப்போம்
ஜ ஒன்றும் சூஸ்திரக் கேள்வி இல்லை. சாதாரணக் கேள்வி தான்.
கா? எப்படி இருந்தாலும் கேளும்
ஜு நேற்று தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை நகர மகா ஜனங்களால் இந்திய சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டாரல்லவா? அவர், கார்ப்பரேஷனுக்கு ஜஸ்டிஸ் க௯டி அங்கத்தினர்களை யார் தெரிந்தெடுத் தார்களோ அந்த ஓட்டர்களைக் கொண்டு தானே தெரிந்தெடுக்கப்பட்டார்?
கா: இருக்கலாம்
298 இருக்கலாம் என்ன? வருக்கலாம் என்ன? அப்படித்தானா அல்லவா? இரண்டில் ஒன்று வேண்டும்; இந்தக் காந்தி பாஷை உதவாது
என்று முன்னமே சொன்னேன்.
காஉ சரி அப்படியேதான் வைத்துக் கொள்ளுமே?
ஜு அதெல்லாம் முடியாது. தோழர் சத்தியமூர்த்தியார் கார்ப்பரேஷன் ஜஸ்டிஸ் கக்ஷி அங்கத்தினர்களைத் தெரிந்தெடுத்த ஓட்டர்களால் தானே இந்திய சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார்? ஆமாம் இல்லை என்று
இரண்டில் ஒரு பதில்:
&M ஆமாம். அப்புறம் என்ன சொல்லும் பார்ப்போம்
ஜு அப்படியானால் தோழர் சத்தியமூர்த்தி பொதுஜனப் பிரதிநிதியா? அவரைத் தெரிந்தெடுத்த ஓட்டர்கள் பொதுஜனங்களா? என்பதுதான் எனது அடுத்த கேள்வி?
229 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
an இதற்கு என்ன சந்தேகம்? ஓட்டர்கள் பொது ஜனங்கள் தான். அவர்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் பொதுஜனப் பிரதிநிதிகள் தான். அதனால் தான் 5000, 10000 ரூபாய்கள் செலவு செய்தாவது தேர்தலில் வெற்றி பெற்றுப் பொது ஜனப் பிரதிநிதியாக ஆக வேண்டும் என்று ஒவ்வொரு பொதுநல சேவைக்காரரும் முயற்சித்து சட்டசபைக்குப் போவது. இது கூடவா உமக்குத் தெரியாது
ஜு சரிதெரிந்து கொண்டேன். தோழர்சத்தியமூர்த்தியார் கார்ப்பரேஷனில் கவுன்சிலராய் இருக்கிறார் அல்லவா?
&3 ஆம்
ஜு அவர் பொதுஜனப் பிரதிநிதி தானே?
&3 ஆம்
ஜு அவரைத் தெரிந்தெடுத்தவர்கள் பொது ஜனங்கள் தானே?
&3 ஆம்
ஜ தோழர் சத்தியமூர்த்தி அய்யரும் தேர்தலுக்குப் பணம் செலவழித்தவர் தானே?
கா: ஏதோ கொஞ்சம் செலவழித்திருக்கலாம்.
28 மறுபடியும் வழவழப் பேச்சு வேண்டாம். எலக்ஷனுக்குச் சத்தியமூர்த்தி அய்யரும் பணம் செலவழித்தவர் தானே?
&3 ஆம்
ஜு எலக்ஷனுக்காகச்சத்தியமூர்த்திஅய்யரும் பிரசாரம் செய்தவர்தானே?
&3 ஆம்
ஜு அப்பிரசாரத்தில் ஜஸ்டிஸ் கட்சி மீது குற்றம் குறைகள் சொல்லிப் பொது ஜனங்களுக்கு துவேஷம் வெறுப்புக் கிளம்பும்படியாகவும் பிரசாரம் செய்து தானே?
கா: துவேஷம் வெறுப்பு ஏற்படும்படியாக அல்ல, உண்மையைச் சொல்லித்தான் பிரசாரம் செய்தது
ஜ உண்மையோ பொய்யோ அதைப்பற்றி கவலையில்லை. அதை உண்மையென்றும் பொய்யென்றும் தீர்மானிக்க நீரும் சத்தியமூர்த்தியுமே ஜட்ஜிகள் அல்ல. சத்தியமூர்த்தி ஜஸ்டிஸ் கட்சியார் மீது குற்றம் சொல்லிப்
பிரசாரம் செய்ததில் ஜஸ்டிஸ் கட்சி மீது ஜனங்களுக்குவெறுப்பு ஏற்பட்டுத்தானே.
சத்தியமூர்த்திக்கு ஓட்டுக் கிடைத்தது.
கா: ஆம்
குடி அரசு - 1935 (2) 230
ஜு ஆகவே ஜஸ்டிஸ் கட்சியார் கார்ப்பரேஷனுக்கு கவுன்சிலர்கள் ஆவதற்கு எப்படி எப்படி நடந்து யார் யார் ஓட்டுப் பெற்று கவுன்சிலர்கள் ஆனார்களோ அதுபோல் தானே சத்தியமூர்த்தியும் மற்ற காங்கிரஸ்காரரும் நடந்து ஓட்டுப் பெற்றிருக்கிறார்கள்?
கா சரி
298 ஆம், அல்ல என்று இரண்டில் ஒன்று சொல்லும்
கா: ஆம்
29t அதே சென்னைக் கார்ப்பரேஷனானது, "காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும்" என்று காங்கிரஸ்காரர்கள் ஓட்டால் ஒரு தீர்மானம் நிறைவேறி இருந்தால் அதை பொதுஜனத் தீர்மானம் என்று சொல்லுவீரா அல்லது “பொதுஜனங்களிடம் பொய்யும் புளுகும் ஜஸ்டிஸ்
கட்சி மீது துவேஷம் உண்டாகும்படியும் விஷமப் பிரசாரம் செய்து ஏராளமான பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்கின காங்கிரஸ்காரர். தீர்மானம்” என்று சொல்லுவீரா? அல்லது “சென்னை நகர வாசிகளான பொது ஜனங்களுடைய அபிப்பிராயம்” என்று சொல்லுவீரா? இப்பொழுது இரண்டிலொரு பதில் சொல்லும் பார்ப்போம். உம்முடைய நடுநிலைமை - நேர்மை யோக்கியதையை
கா? என்ன சார் இப்படிச் சொல்லுகிறீர். காங்கிரஸ் அபிப்பிராயம் தானே பொது ஜன அபிப்பிராயம்?
ஜு நான் உம்மைக் கேட்கிறேன். என்ன சார் இப்படிச் சொல்லுகிறீர்கள். பொது ஜன அபிப்பிராயம் தானே ஜஸ்டிஸ் கட்சி அபிப்பிராயம்?
கா சரி நமக்குள் தகராரு எதற்கு ஆக? எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.
228 முடியவே முடியாது. காங்கிரஸ்காரருக்குச் சிறிதளவாவது மானம், வெட்கம், சுயமரியாதை இருக்குமானால் அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளிபோல் யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும் காங்கிரஸ் தலைவரைச் சென்னை ஜனங்கள், சென்னைப் பொது ஜனங்கள் வர வேண்டாம், திரும்பிப் போ என்று சொல்லி விட்டார்கள். ஆகையால் அவரை நீங்கள் சென்னை நகருக்குள் அழைத்து வரக்கூடாது. காங்கிரசுக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும், சுயமரியாதை இருக்கிறதா இல்லையா என்பதை இதில் முடிவு கட்டிவிட வேண்டும்
மானம் வெட்கம் இல்லாமல் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காங்கிரஸ் தலைவரை சென்னை நகருக்குள் அழைத்து வருவதால் நாங்கள். 1000 ஆயிரம் கருப்புக் கொடி பிடிப்போம்
231 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
நீங்கள் வெளியில் வைத்துச் சாப்பாடு போட்டீர்களே தோழர் சன்னியாசிக்கு அந்த சன்னியாசியின் சகோதரர்களே 1000 பேர் கருப்புக் கொடி பிடிப்பார்கள். உங்கள் சூழ்ச்சி ஒன்றும் அன்று பலிக்கப் போவதில்லை.
வேண்டுமானால் இன்னம் 1000 தடவை ஜஸ்டிஸ் க்ஷி தேசத் துரோகக் க௯ஷியென்றும் பொப்பிலி ராஜா ராக்ஷதன் என்றும் எழுதி எழுதிக் கத்தை கட்டிக் கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி அக்கரை இல்லை
கா: ஏன் இப்படிக் கோபித்துக் கொள்ளுகிறீர்கள். அபிப்பிராய பேதம் மனிதர்களுக்கு இயற்கை தானே?
அதற்காகப் பெரியார்களை, தலைவர்களை அவமதிக்கலாமா?
உங்கள் தலைவரானால் என்ன எங்கள் தலைவரானால் என்ன? எல்லோரும் பகுமானிக்க வேண்டியவர்கள்தானே?
சுயமரியாதை இயக்கக்காரர்கள் எங்களை எவ்வளவோ கேவலமாக பேசுகிறார்கள். அப்படி ஆனாலும் அவர்கள் தலைவர் ராமசாமி நாயக்கரிடம் காங்கிரஸ்காரருக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது? அவரைப்
பற்றி நாங்கள் ஏதாவது பேசுகிறோமா?
298 இந்த மதிப்பெல்லாம் எங்களுக்குத் தெரியும். 'உதைப்பானுக்கு வெளுப்பான் ஜாதி டோபி'' என்கின்றபடி சுயமரியாதைக்காரர்கள் வட்டி முதலுடன் சேர்த்துத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். உங்கள் கொடி வழிப்பட்டி அவர்களிடம் இருக்கிறது. அதற்காக அவரைக் கண்டால் பயப்படுகிறீர்கள். மற்றும் அவர்கள் தங்களுக்கு என்று யாரிடமும் ஓட்டுக் கேட்க வருவதுமில்லை. வேறு ஒன்றும் கேட்பதுமில்லை. அதனால் அவரிடம் உங்கள் ஜபம் பலிப்பதுமில்லை.
கா: மற்ற யாரிடம் தான் நாங்கள் வம்புக்குப் போகிறோம்
ஜு ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களை நீங்கள் எவ்வளவு கேவலமாய் பேசுகிறீர்கள்? சுத்தக் காலிப் பசங்களுக்கெல்லாம் காசைக் கொடுத்து அவர்கள் மீது உசுப்படுத்தி விடுகிறீர்கள்.
உங்கள் கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, புராணம், இதிகாசம் ஆகிய பத்திரிக்கைகள் எல்லாம் எங்கள் தலைவர்களை எவ்வளவு அயோக்கியத்தனமாய் அற்பத்தனமாய் எழுதுகின்றன?
நாய் கடித்தால் நாய்களைத் திருப்பிக் கடிக்கக் கூடாது என்று பார்ப்பதாலல்லவா அவை குளிர் விட்டு அற்பத்தனமாய் எழுதுகின்றன. இந்த தடவை உங்கள் காங்கிரஸ் தலைவர் வரவை காந்தி வரவை விட மிக மோசமாய் நடத்திக் காட்டிக் கருப்புக் கொடிகள் ஊர் ஊராகப் பிடித்துத் தென் இந்திய மக்கள் காங்கிரசை மதிப்பதில்லை என்றும், காங்கிரஸ்
குடி அரசு - 1935 (2) 23
ப்
கொள்கைகள் நாணையமற்றதும், யோக்கியமற்றதும் என்றும் தென்னிந்திய பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தவும், குறைவு படுத்தவும், அவர்களது முற்போக்கைத் தடுக்கவும் செய்யப்படும் பார்ப்பன சூட்சி நிரம்பியதென்றும் நிரூபித்துக் காட்டப் போகிறோம்
கா? அப்படியெல்லாம் செய்வதில் நம் தேசத்துக்கு நாம் மரியாதை செய்தவர்களாகி விடுவோமா?
29t தேசமாவது வெஞ்சாமரமாவது?
காந்தியார் வந்தபோது வசூலித்த ரூபாய்கள் தானே இந்திய சட்டசபை எலக்ஷனுக்குப் பிரசாரம் செய்யப் பயன்பட்டது. அந்தப் பணத்தினால் வயிறு கழுவும் கூலிகள் தானே செல்லுமிடங்களிலெல்லாம் குடிகாரன் வெறிகாரன் போல் ஜஸ்டிஸ் கட்சியையும் அக்கட்சித் தலைவர். களையும் சூரியனைப் பார்த்து நாய்கள் குலைப்பதுபோல் குலைக்கிறார்கள்.
இப்போதும் காங்கிரஸ் தலைவர் என்று ஒரு நபரைக் கூட்டி வந்து நாடகம் நடத்தி ஊர் ஊராய் பணமுடிப்பு என்று முட்டாள்களிடம் பணம் வசூல் செய்து அதைப் பழயபடியே கூலிகளுக்குக் கொடுத்துக் காலித்தனம் செய்யச் சொல்லப் போகிறீர்கள். இதற்கு எந்த மூடம் தான் சம்மதிக்கும் நீரே சொல்லும் பார்ப்போம்.
காய என்ன இருந்தாலும் தலைவரல்லவா?
ஜு சரி வைத்துக் கொள்ளும். எங்கள் தலைவர்களான சர்.பி.தியாகராய செட்டியார் வீட்டுக்குக் காலிப் பசங்களை அனுப்பிக் கண்ணாடி ஜன்னலை உடைக்கச் செய்து வீட்டிற்குள் கல்லுகள் எறியவில்லையா?
டாக்டர் நாயர் சீமையில் செத்துப் போனபோது அங்கிருந்த உங்கள் ஆளுகள் ஒருவர் கூடப் போகாமல் பிரேத அடக்கத்துக்கே விஷமம் செய்யவில்லையா? பனக்கால் அரசரைப் பற்றி இழிவாகப் பொய்ப் பிரசாரம் செய்து அவர் எலக்ஷன் போது அவர் செத்து விட்டார் என்று புகையிலை வழங்கவில்லையா?'
டாக்டர் சுப்பராயன் போகும் இடங்களில் கருப்புக் கொடி பிடிக்கவில்லையா?
சர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைப் பற்றி கண்டபடி அயோக்கியத் தனமாக எழுதவும் பேசவும் இல்லையா?
இன்று பொப்பிலி ராஜாவைப் பற்றிக் கேவலமாகவும், இழிவாகவும் படங்கள் வியாசங்கள் எழுதி ராட்சதன் அசுரன் என்றெல்லாம் சொல்லுவதோடு அவர் கடன்காரர் என்றும் அவன் இவன் என்றும் மற்றும் பலவிதமாகக் குறை கூறியும் எழுதியும் பேசியும் வரவில்லையா?
233 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மற்றும் சிலரைப் பற்றி இழிவாய்ப் பேசுவதும் கூட்டங்களில். காலித்தனம் செய்வதுமான காரியங்கள் காங்கிரஸ்காரர்களால் நடைபெறவில்லையா? பிறகு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவில்லையா?
இதெல்லாம் யோக்கியமான காரியமா? தலைவர்களை மரியாதை செய்யும் காரியமா? என்று யோசித்துப் பாருங்கள்.
கா£ இவர்களுக்கும் காங்கிரஸ் தலைவர்கள், ராஜேந்திரபாபு ஆகியவர்களுக்கும் வித்தியாசமில்லையா?
29t என்ன வித்தியாசம் சொல்லுமே பார்ப்போம். ஒவ்வொரு நபரின். யோக்கியமும் எடுத்து விரிக்கட்டுமா?
கா: சாவகாசமாப் பேசிக் கொள்ளலாம்
குடி அரசு - உரையாடல் - 29.09.1935
குடி அரசு - 1935 (2) 234
தேசாபிமானம்
தேசாபிமானம், தேச பக்தி என்பவைகள் சுயநலச் சூட்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் வகுப்பு நலத்துக்கு ஆக பாமர மக்களுக்குள் புகுத்தப்படும், ஒரு (வெறி) போதையென்றும் பல தடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம்
மற்றும் “தேசாபிமானம் என்பது காலிகளுக்கு ஏற்பட்ட கடைசி ஜீவனமார்க்கம்' என்று மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறிய ஆப்த மொழி என்றும் பல தடவை எடுத்துக்காட்டி இருக்கிறோம் இவற்றை எந்த ஒரு தேசபக்தனும், தேசாபிமானியும் இதுவரை மறுக்கவே இல்லை என்பதோடு இவ்வாப்தவாக்கியங்கள் நிறைந்த ஆங்கிலப் புத்தகங்கள் பாடப் புத்தகங்களாகவும் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இனியும் யாருக்கு ஆவது இவற்றில் சந்தேகங்களிருக்குமானால். இன்றை அபிசீனியா, இத்தாலி யுத்த மேகங்களையும், இடியையும், மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவதுபோல் விளங்கும்
மற்றும் தேசாபிமான விஷயமாயும், தேசங்களைக் காப்பாற்றும் விஷயமாயும் பல தேசக் காவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சர்வதேச பாதுகாப்புச் சங்கத்தின் யோக்கியதையைப் பார்த்தாலும் தெரியும் இளைத்தவனை வலுத்தவன் கொடுமைப்படுத்துவதும்,
ஏமாந்தவனைத் தந்திரசாலி ஏமாற்றுவதும்தான் இன்று ஆஸ்திகர் களுடைய கடவுள்களின்இரண்டு கண்களாகவும், தேசபக்தர்கள், தேசாபிமானிகள் என்பவர்களின் ஜீவநாடியாகவும் இருந்து வருகின்றன.
இந்த இரண்டு காரியங்களுக்கு ஆகத்தான் அதாவது இம்சித்தல், ஏமாற்றுதல் ஆக இரண்டு காரியங்களுக்கு ஆகவும் அவை நிரந்தரமாகவும்,
ஒழுங்காகவும், பத்ததியாகவும் நடைபெறுவதற்கு ஆகவேதான் உலகில் கடவுள், மதம், மோட்சம், நரகம், சாஸ்திரம், புராணம், அரசு, பிரதிநிதித்துவம், சட்டசபை, சட்டம், போலீசு, நீதிபதி, சிறைக்கூடம், சத்தியம், நீதி, ஒழுக்கம், ஒழுங்குமுறை, யோக்கியம், பரிசுத்தம், பெரியவர் வாக்கு, மகாத்மாக்கள். சேவை, தெய்வத் தன்மை பொருந்தியவர்கள் அவதாரம் என்பன போன்ற சர்க்கரை பூசிய பாஷாணங்கள் இன்று உலகில் கற்பிக்கப்பட்டு இருந்து செல்வாக்குப் பெற்றோ பெறாமலோ காப்பாற்றப்பட்டு வருகின்றன.
238 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஜப்பான் சைனாவோடு போர் தொடுத்தபோது ஜப்பானுக்கு அதன் வியாபாரப் பொருள் விற்பதற்கு நாடுகள் இல்லை. அதற்குப் போதிய துறைமுகமில்லை. மற்ற நாடுகளைப் போல் அதற்கு குடியேற்ற நாடு இல்லை என்பது போன்ற காரணங்கள்தான் வெளிப்படையாகவே சொல்லப்பட்டன.
இத்தாலி அபிசீனியா மீது போர் தொடுப்பதற்கும் இந்தக் காரணங்கள். தான் இன்று முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. பிறகு பிறத்தியாரை ஏமாற்ற ஏதோ மொண்டிச் சாக்குகள் பஞ்சாயத்தில் பேசப்படுகின்றன.
சர்வதேசப் பாதுகாப்புச் சங்கத்தில் யுத்தத்துக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் போக மற்ற நாட்டு அங்கத்தினர்களோவெனில் உலகத்துக்கோ தங்களுக்கோ சரியென்று பட்டதை வெளியில் சொல்லவே மயங்குகின்றார்கள்.
காரணம் என்னவென்றால் யுத்தத்தில் சம்பந்தப்பட்டு வலுவில் தாக்க முற்பட்ட நாடுகள் மற்ற பிரநிநிதிகளைப் பார்த்து, “உங்களுக்கு மாத்திரம் வியாபாரத்துக்குப் பல நாடுகள் இருக்கின்றன. நீங்கள் மாத்திரம் உங்கள். தேசமல்லாமல் வேறு பல தேசங்களை குடியேற்ற நாடாகவும் அனுபவிக் கிறீர்களேஅது மாதிரி எங்களுக்கும் வேண்டாமா?” என்று கேட்க ஆரம்பித்தால் தலைகுனிய வேண்டியவர்களாய் இருக்க வேண்டி இருப்பதால் “நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு'' என்று சொல்ல வேண்டியதாய் விட்டன. சர்வதேசசங்கம் என்பது கண்டித்து உண்மையான எண்ணத்தோடு இத்தாலியைப் பார்த்து ஒரு உறுமல் உறுமி இருக்குமானால், இன்று இத்தாலி வாலை ஒடுக்கிக் கொண்டு அடங்கி இருக்கும்.
ஜப்பான் சைனா சண்டையின் போதும், ஜப்பான் இஷ்டம் ஒரு அளவுக்கு பூர்த்தியான பின்பே சர்வதேச சங்கம் மிரட்ட ஆரம்பித்தது அதுபோலவே இத்தாலியின் உள் எண்ணம் பூர்த்தி ஆன பின்புதான். சர்வதேச சங்கம் மிரட்டும் போல் இருக்கிறது பொதுவாகவே சர்வதேச சங்கத்தை நாம் ஒரு உண்மையான உலகப் பாதுகாப்புச் சங்கம் என்று சொல்ல முடியவில்லை. அதை வலுத்தவர்கள், தந்திரக்காரர்கள் பாதுகாப்புச் சங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். யோக்கியமான ஒரு சர்வதேச பாதுகாப்புச் சங்கம் இருக்க வேண்டு மானால் அது உலக, எல்லா தேசங்களுக்கும் ஒவ்வொரு பிரதிநிதியைத் தெரிந்தெடுத்து, அந்தப் பிரதிநிதிகள் அடங்கிய சபைக்கு உலக அரசியல், ராணுவம் ஆகியவை முழுவதையும் ஒப்படைத்துவிட்டு, இன்று தனித்தனி ராஜாவாகவோ சர்வாதிகாரியாகவோ இருப்பவர்களுக்கு ஜீவானாம்சம் கொடுத்து உட்கார வைத்து அச்சபைக்கு தலைவர்களாகத் தேசம், ஜாதி, மதம், கடவுள் செயல் என்கின்ற குறுகிய நோக்கமற்று உலகம் எல்லாம் ஒரு தேசமாகவும், மக்கள் எல்லாம் ஒரே (மனித) ஜாதியாகவும் கருதுபவராகவும்,
குடி அரசு - 1935 (2) 236
உலக சொத்துக்கள் எல்லா மக்களுக்கும் சொந்தமானது என்கின்ற சகோதர உணர்ச்சி உள்ளவராகவும் உள்ளவரைத் தலைவராகப் போட்டு ஆட்சி நடத்தப்படுமானால் அது உண்மையான சர்வதேச பாதுகாப்புச் சங்கமாக இருக்கலாம்
35 கோடி மக்கள் உள்ள இந்தியாவுக்கும், 45 கோடி மக்கள் உள்ள சைனாவுக்கும் (கிட்டத்தட்ட உலக ஜன சமூகத்தில் சரி பகுதி உள்ள தேசங்களுக்கு) இன்று சர்வதேச சங்கத்தில் இருக்கும் பிரதிநிதிகள் யார் என்பதும் அவர்கள் இந்த தேசங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு என்ன. உதவி செய்தார்கள் என்பதும், சர்வதேச சங்கத்தின் நீதியான ஆக்ஷியில் இவ்விரு தேச மக்களும் திருப்தியாய் கவலை இல்லாமல் மானத்தோடு வாழுகின்றார்களா என்பதும் கவனித்துப்பார்த்தால் இன்றைய சர்வதேச பாதுகாப்புச் சங்கத்தின் யோக்கியதை தானாகவே விளங்கும் ஆகவே சர்வ தேசாபிமானச் சங்கத்தின் யோக்கியதையே இப்படி இருக்கும்போது, இனி தனித்தனி தேசாபிமான சங்கத்தின் யோக்கியதையும் அச்சங்கத்தால் ஏற்பட்ட தேசப் பாதுகாப்பு யோக்கியதையும் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நாம் அதிகம் வர்ணிக்க வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்
இந்திய தேசாபிமானம், தேசபக்தி என்பது இன்று ஒரு சாதாரண மனிதராகிய காந்தியாரிடம் அதாவது மகாத்மா என்பவரிடம் மக்கள் வைத்திருக்கும் - வைக்கும் பக்தி அபிமானம் ஆகியவற்றைப் பொருத்தே
இருக்கிறது எவனாவது காந்தியாரை முட்டாள் என்று சொல்லிவிட்டாலோ அல்லது அவர் நம்மைப் போல சாதாரண மனிதர்தான் என்று சொல்லி விட்டாலோ அதுவே இன்று எந்த மனிதனையும் தேசத்துரோகி என்றும், தேசாபிமானமற்றவர்கள் என்று சொல்லி விடுவதற்கும் பரிக்ஷிப்பதற்கும் போதுமான கருவியாய் இருக்கிறது.
இன்று இந்தியாவில் உள்ள தேசாபிமானம் பணச்செலவினாலும், பார்ப்பனப் பிரசாரத்தாலும் ஏற்படுவதே ஒழிய மற்றபடி மக்கள் சமூகத்துக்கு பொதுவாக உள்ள ஏதாவது ஒரு குறையையோ தேவையையோ உத்தேசித்து ஏற்பட்டதல்ல
பார்ப்பான் தன்னை மனித சமூகத்தில் இருந்து பிரித்துக் கொண்டு தான் மாத்திரமே மேல் ஜாதிக்காரன் என்றும், மற்றவர் தனக்கு தொண்டு செய்யவே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுகிறவன், பணக்காரர்களாய் முதலாளிகளாய் இருக்கிறவர்களோ அவர்களுக்கும் அதுபோலவே தாங்கள் மற்ற சாதாரண மக்களிடம் இருந்து விலக்கப் பட்டவர்கள் என்றும், மற்ற மக்களிடம் தமக்கிஷ்டமான வேலை வாங்கிக் கொண்டு தமக்கிஷ்டமான கூலி கொடுக்கவே கடவுள் தங்களை சிருஷ்டித்துத்
237 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தமக்கு செல்வத்தைக் கொடுத்து மற்ற மக்களைத் தொழில் செய்யச் சிருஷ்டித்து இருக்கிறார் என்றும் கருதிக் கொண்டிருக்கிறவர்கள்.
இவ்விரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசமெல்லாம் பார்ப்பான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக் கொள்ள உரிமையுள்ளவன் என்பதும், பணக்காரன் ஏதாவது கூலி கொடுத்து வேலை வாங்க வேண்டும் என்பதும், தவிரமற்றப்படி மற்ற ஜனங்களைவிட தாங்கள் மேலானவர்கள் என்பதிலும் இந்நிலை கடவுளால் அளிக்கப்பட்டது என்பதிலும் வித்தியாசமான அபிப்பிராயமில்லவே இல்லை.
இப்படிப்பட்ட இந்த இரண்டு கூட்டத்தாரும் சேர்ந்துதான் இந்தியாவின் தேசாபிமானத்துக்குக் கர்த்தாக்களாய் இருக்கிறார்கள்.
எப்படி என்றால் பணக்காரன் பணத்தை பல லட்சக்கணக்காய் கொடுக்கிறான், பார்ப்பான் தந்திரத்தை பிரயோகிக்கிறான். இருவரும் சேர்ந்து கூலிகளைப் பிடித்து தேசாபிமானப் பிரசாரம் நடத்தி அதற்கு செல்வாக்கை உண்டாக்கி விடுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு கூட்டத்தார்களாலும் இவர்களுடைய கூலிகளாலும் நடத்தப்படும் தேசாபிமானம் பாமர மக்களுக்குப் பயன்படுமா: அல்லது இந்த மூன்று கூட்டத்தையும் வெளியாக்கி அவர்களை ஒழிக்க முயற்சிக்கும் “தேசத் துரோகம்” பாமர மக்களுக்கு பயன்படுமா என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டும்
இன்று நம்முடைய பொது ஜனங்கள் அல்லது பாமர ஜனங்கள் என்பவர்களின் யோக்கியதை நாம் அறியாததல்ல. அவர்கள் ஆண்களில் 100க்கு 90 தற்குறிகள் பெண்களில் 100க்கு 98 தற்குறிகள். அதோடு மாத்திரமல்லாமல் 100க்கு 50 பேர்களுக்கு மேல் ஜீவனத்துக்கு வேறு எவ்வித மார்க்கமும் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்தாவது ஜீவனம் நடத்த வேண்டும் என்கின்ற கவலையும் பசிப்பிணியும் உள்ளவர்கள். எனவே இந்த நாட்டில் நன்மை - தீமை, யோக்கியன்- அயோக்கியன், சுயநலக்காரன் - பொதுநலக்காரன், சூட்சிக்காரன் - உண்மையானவன் என்கின்ற தன்மைகளைக் கண்டுபிடிக்கச் சரியான அறிவும் யோக்கியதையும் பொதுமக்களுக்கு எப்படி உண்டாகும்?
ஆகவே, யாரோ ஒரு சில நபர்கள் தான் உண்மையாகவும் கவலையாகவும், உழைக்கக் கூடியவர்களாகவோ உண்மையை எடுத்துச் சொல்லக் கூடியவர்களாகவோ கிடைக்கலாம். ஆனால் அவர்கள் பொது ஜனங்களால் மகாத்மா என்றோ, தேசாபிமானி என்றோ தேச பக்தர் என்றோ தேசியவாதி என்றோ கருதப்படக் கூடியவர்களாய் இருக்க முடியாது என்பதோடு அவர்கள் '' தேசத் துரோகியாயும், மதத் துரோகியாயும், நாஸ்திகர்களாயும்'' தான் இருக்க முடியும்.
குடி அரசு - 1935 (2) 238
அதோடு மாத்திரமல்லாமல் பொதுஜனங்களால் வசவு கேட்கவும் துன்புறுத்தப்படவும் வேண்டியவர்களாகவும் கூட இருக்கக் கூடும்
எப்படி இருந்தாலும் முடிவில் “தேசத் துரோகிகள்” எனப்படுபவர் களும் நாஸ்திகர்கள் என்னப்படுபவர்களும் தான் வெற்றி பெறுவார்களே தவிர - அவர்கள் தான் வெற்றி பெற்றாக வேண்டுமே தவிர மற்றபடி இந்த ஜால வித்தையான தேசபக்தி வெற்றியடையவோ மக்களுக்குப் பயன்படவோ போவதில்லை என்பது உறுதி.
குடி அரசு - தலையங்கம் - 29.09.1935
239 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ்காரர்களின் தகுடுதத்தம்
கராச்சியில் காங்கிரஸ்காரர்கள் கூடிச் செய்த தீர்மானங்களில் ஒன்று சம்பளத் திட்டத்தைக் குறித்ததாகும். அதில் இந்தியாவிலே உயர்ந்த சம்பளம் எனப்படுவது ரூ.500க்கு மேற்படக் கூடாது என்றும், இப்பொழுது கொடுத்து வரும்சம்பளக் கொள்ளையைக் குறைக்க வேண்டுமென்றும் எந்தக் காங்கிரஸ் காரர்கள் பேசினார்களோ அதே காங்கிரஸ்காரர்கள் இன்று பம்பாய் நகரசபை
(Corporation)ufed உதவிக் கமிஷனர் பதவியிலிருந்து வரும் தோழர் எஃபி.சிவதாஷனி என்பவர் வாங்கி வந்த ரூ.1750 ஐ ரூ.2000மாக மாற்று வதற்காக ஒரு தீர்மானத்தைக் காங்கிரஸ்காரர்களே ஆதரித்தவர்களுமாய்ப் பொறுப்பாளிகளுமாயிருக்கிறார்கள் என்று அறிவீர்களேயானால், அக்காங்கிரஸ் காரர்களின் தகுடுதத்தத்தை என்னென்று நினைக்கிறீர்கள். அகில இந்திய சட்டசபையில் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் சகலரும் கராச்சித் தீர்மானத்தின்படி சம்பளத் திட்டத்தை ரூ.500 றாகக் குறைக்க வேண்டும் என்று வாய் வீச்சு வீசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பம்பாயில் இன்று அவர்கள் அதிகாரவர்க்கத்தில் இருக்கிற தங்களது கட்சிக்காரர் என்ற ஒரு எண்ணத்திற் காகவே இம்மாதிரிக் காரியங்கள் செய்யப்பட்டு வருமேயானால் அவர்களது யோக்கியதை எவ்வளவு தூரம் நாணயமானது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள்.
இத் தீர்மானத்தை ஆதரிக்கிறவர்கள் சொல்லும் சமாதானமாவது ஐ.சி.எஸ். படித்து லாபகரமான உத்தியோகத்தை விடுத்து இம் முனிசிபல் உத்தியோகத்திற்குஎன்று உழைக்க முன் வந்தவருக்குஇவ்வளவு ஆவது சம்பளம் அளிக்கப்பட வேண்டாமா என்பதாகும். ஆனால் இன்று கல்கத்தா நகர சபையில். அதே உத்தியோகம் பார்த்து வருபவரும் ஐ.சி.எஸ். படித்து வந்தவருமான தோழர் சுபாஷ்போஸ்என்பவருக்குரூ.1200 வழங்கப்படுவது எப்படிநியாயமானதாகும். மக்களுக்காகவே உழைக்கிறோம் என்று சொல்லிவரும் ஐ.சி.எஸ்.
படித்துத் தனது லாபகரமான அல்லது ஆதாயகரமான உத்தியோகத்தை விட்டுவிட்டு வருபவர்களுக்கு ரூ.1750 என்பது ஒரு அற்பமான ஊதியமாக நினைக்கப்படுமானால் ஐ.சி.எஸ். படித்து விட்டு தங்கள் நாட்டை விட்டு 6000 மைல் கடந்து வந்து சேவை செய்யும் வெள்ளைக்கார ஐ.சி.எஸ். 5000 வாங்குவதில் தப்பென்ன?'”
குடி அரசு - செய்தி விமர்சனம் - 29.09.1935
குடி அரசு - 1935 (2) 240
காங்கிரஸ் கட்சியினரும்
ஸ்தல ஸ்தாபன பயிகுத்தமும்
ஸ்தல ஸ்தாபனங்களில் பல ஊழல்களிருப்பதாகவும், காங்கிரஸ்காரர்கள்
தேர்தலில் வெற்றிபெற்று நகர பரிபாலன சபைகளிலும், ஜில்லா 'போர்டு'களிலும் அங்கத்தினர்களானால், அவ்வூழல்கள் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து விடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பிரசாரம் செய்துவருவதை நமது வாசகர்கள் அறிவார்கள். நேற்றை “இந்து” பத்திரிக்கையில் திருநெல்வேலி ஜில்லா 'போற்டு' தேர்தல்களைக் குறித்து தோழர் சத்தியமூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் ஸ்தல ஸ்தாபனங்களைப் பரிசுத்தப்படுத்தும் வேலையை காங்கிரஸ்காரர்கள் கைக்கொண்டிருக் கிறார்கள் என்றும் ஆகையால் அவர்களுக்கு “ஓட்'டுக் கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் இவ்வேலையைச் செய்வதற்குச்
சிறிதேனும் யோக்கியதையுடையவர்களல்லர் என்ற விஷயம் அவர்களுடைய பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர்களுக்கு நன்கு தெரியும் டாக்டர் சுப்பராயனின் மந்திரி சபையை ஆதரித்த காலத்தில் சென்னைக் காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தார்கள் என்பது நாடறிந்து, நாடு நகைத்த விஷயம். இன்றைக்கும் காங்கிரஸ்காரர் பலருடைய யோக்கியதையும், பரிசுத்தமும் எவ்வளவிலிருக்கிறதென்பது ஒரு சிலருக்கே தெரியும். சென்னை நகர பரிபாலன சபையில் நடந்த ஒரு உருசிகரமான விஷயம் இதற்கு உதாரணமாகும். சென்ற வாரம் நடந்த சபைக்கூட்டத்தில், தோழர். சி.பி. சுப்பிரமணியம், சபையின் அங்கத்தினரான.
ஒருவர் தன்னுடைய 'ஏஜண்ட்' மூலமாக, நகர பரிபாலன சபையின் சிமிட்டி 'கண்ட்ராக்ட்'டைப் பெற்றிருக்கிறார் என்றும் அதை ருஜுப்படுத்த முடியு மென்றும் கூறினார். இதன் சம்பந்தமாக, “மெட்ராஸ் மெயில்! பத்திரிகையின்.
நிருபர், வெள்ளைக்காரர்களுடைய சிமிட்டி 'ஏஜண்ட்'டான பிரபல காங்கிரஸ் தலைவர், தோழர் சாமி வெங்கடாஜலம் செட்டியாரைப் பேட்டி கண்டார். அப்பேட்டியின் விவரம் நேற்றைய மெயில்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. அதைக் குறிக்கு முன், வாசகர்கள் சில விஷயங்கள் அறிய வேண்டும். தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியார் சென்னை நகர பரிபாலன. சபையின் அங்கத்தினர். நகர சபையின் அங்கத்தினர்கள் 'கண்ட்ராக்ட்' எடுத்தல் கூடாதென்பது சட்டமாகும். ஆனால், சபையால் ஒப்புக்கொள்ளப்பட்ட 'டெண்டர்' தோழர் கூரத்தாழ்வார் செட்டியாரால் கொடுக்கப்பட்டது. தோழர்
2 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கூரத்தாழ்வார் செட்டியார் தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியாரின் 'ஏஜண்ட்' என்பதை ருசுப்படுத்தக்கூடும் என்று தோழர் சுப்பிரமணியம் நகர சபையில் கூறியிருக்கிறார். இதைப்பற்றி, “மெயில் நிருபரிடம் தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியார் கூறியதாவது:-
“எனக்கும் தோழர் கூரத்தாழ்வாருக்கும் ஒருவித சம்பந்தமு மில்லை. மற்றவர்களுக்கு சிமிட்டி விற்பதைப் போல் அவருக்கும் நான் விற்றிருக்கிறேன். நானும் தோழர் கூரத்தாழ்வாரும் தனித்தனியாக வர்த்தகம் செய்துகொண்டு வருகிறோம். நாங்கள் ஒரே கட்டிடத்தில் (அதாவது 61, கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, ஜார்ஜ்டெளன்) வெவ்வேறு பாகத்தில் இருக்கிறோம். தோழர் கூரத்தாழ்வார் நகர சபைக்கு சாதாரண வர்த்தக முறையில், சிமிட்டி வருவித்துக் கொடுப்பவராயிருக்கலாம். என்னுடைய 'டெலிபோனை' ஒவ்வொரு
சமயத்தில் தோழர் கூரத்தாழ்வார் உபயோகித்திருக்கலாம்.'
இந்த விவரத்திலிருந்து தோழர் கூரத்தாழ்வார், தோழர் சாமி வெங்கடாஜலம் செட்டியாரின் 'ஏஜண்ட்' தான் என்று கூறமுடியாது எனினும் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் 'கமிட்டி'யார் இவ்விஷயத்தை நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். மற்றும், இந்திய சட்டசபையில், நேற்றையதினம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு அங்கத்தினரைப் பற்றி, உள்நாட்டு மந்திரியான சர். ஹென்றிக்ரெயிக் சில விஷயங்களைச் சொன்னார். அக்காங்கிரஸ் அங்கத்தினர் ஒரு நியாய விசாரணை நடத்துவதற்கு அரை இலட்சம் ரூபாய் பெற்றாரென்றும், சில சாட்சிகள் சரியான சாட்சி சொல்லுவதைத் தடை செய்ய முயன்றாரென்றும், வக்கீல்களுடைய நாணயத்திற்கு மீறி ஒழுங்கற்ற காரியத்தைச் செய்தாரென்றும் சர். ஹென்றி கூறினார். இம்மாதிரியான குணங்களையுடைய காங்கிரஸ் கட்சியினரா ஸ்தல ஸ்தாபனங்களைப் பரிசுத்தப்படுத்தப் போகிறார்கள்? முதன் முதலில் பரிசுத்தப்பட வேண்டியவர்கள் காங்கிரஸ்காரர்களாவர் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்
“விடுதலை”
குடி அரசு - மறு பிரசுரம் - 29.09.1935
குடி அரசு - 1935 (2)
ட்
ய்
மதமின்றி மக்கன் வாழமுடியாதா?
(ஜோசப் மெக்காப் எழுதியதை அனுசரித்து எழுதப்பட்டது)
மக்கள் வாழ்க்கை நாகரீகமாய் நடத்தப்பட மதம் வேண்டுமென்பது மதக்காரர்களுடைய வாதமாகும். இப்படிப்பட்ட வாதமும் தங்கள் தங்கள் மதம்தான் மனித சமூக நாகரீக வாழ்க்கைக்கு ஏற்றது என்பது ஒவ்வொரு மதக்காரர்களின் பிடிவாதமுமாகும்
மதமில்லாமல் உலகில் எவ்வளவோ ஜீவகோடிகளும், பல மக்களும் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்போமேயானால் அதற்கு பதில் சாதாரண அசேதன வாழ்க்கை வாழலாமே ஒழிய நாகரீகமான வாழ்க்கை நடத்தமுடியாது என்றும், அதற்காகத்தான் மதமில்லாவிட்டால் மக்கள் நாகரீக வாழ்க்கை நடத்தமுடியாதென்று சொல்லப்படுவதாகவும் சொல்லுவார்கள்.
அதற்காகவேண்டியே மதவாதிகள் மதத்தைப் பற்றி பிரசாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களும்,
பிரசாரங்களும், புராணங்களாலும், படங்களாலும், கதைகளாலும், நடிப்பு
களாலும், கோவில்களாலும் மற்றும் பல சாதனங்களாலும் செய்து வருகிறார்கள். இவ்வளோவோடு நிற்காமல், கடவுளற்ற, மதமற்ற உலகத்தில் மக்கள் பல கொடுமைகளையும், தீமைகளையும், ஹிம்சைகளையும் அடைவது போலவும், அசுர ஆட்சியே நடைபெருவதாகவும் கட்டுகள் கட்டி மக்களைப் பயமுறுத்துகிறார்கள்
மேலும், கொள்ளை நோய்களும், விஷ நோய்களும் துஷ்ட தேவதை களின் கோபத்தின் பலன் என்றும், வால் நட்சத்திரத்தின் வாயிலிருந்து கக்கப்படும் தீப்பொரியின் விளைவென்றும் பேசி மக்களை ஒருவித பயத்துக்குள்ளாக்குகிறார்கள்.
காந்தியாரும் இப்படித்தான். அதாவது, பூகம்பத்தால் விளையும் கேடுகளும், வெள்ளத்தாலும் நெருப்பாலும் ஏற்படும் கொடுமைகளும் கடவுள் கோபத்தால் ஏற்பட்ட விளைவின் பயனென்றும் சொல்லி மக்களை மிரட்டுகிறார்.
மனிதர்கள் நடந்துகொள்ளவேண்டிய ஒழுக்கச் சட்டம் என்பதெல்லாம் அந்தந்த சமூக நிலை அனுசரித்து ஏற்படுத்தப்பட வேண்டியதேயல்லாமல்,
243 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மனிதர்கள் மேல் உலகத்துக்குப் போவதற்குத் தகுந்தபடியும், அங்கு சென்றபின் நடக்கவேண்டிய காரியங்களுக்குத் தக்கபடியும் அமைக்கப்பட வேண்டியதேயில்லை.
மதமில்லாவிட்டால், மக்கள் கோவிலுக்குப் போகமாட்டார்களே என்றோ, மக்கள் கோவிலுக்குப் போகாவிட்டால் மக்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ளமாட்டார்களே என்றோ யாரும் பயப்படவேண்டியதில்லை.
உதாரணம் வேண்டுமானால், கோவிலுக்குப் போவதை நிருத்திவிட்டவர். களிடமிருந்தே அவர்களது விகிதாச்சாரத்துக்குக் குறைவில்லாத அளவு குற்றங்கள குறைந்துகொண்டு வந்திருப்பதற்கு அநேக ஆதாரங்கள் புள்ளி விபரத்தோடு காட்டலாம்
மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று நாம் சொல்ல ஆரம்பித்த தாலேயே ஏன் சொல்லுகின்றோம்? அதற்காக என்ன அவசியத்தைக் காட்டுகின்றோம் என்பதைச் சிந்திக்காமலேயே, சிந்திக்காவிட்டாலும்
நமக்குக் காது கூட கொடுக்காமலேயே ஏதோ ஒரு பெரிய அபாயம் வந்து விட்டது போல் மிகக் கவலையாக சிந்தனைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.
இதற்குக் காரணமெல்லாம் அவர்கள் ஒழுக்கம் கெட்டுவிடுமே என்பது கூட அல்லாமல் நரகம் சித்தித்துவிடுமே என்பதும், மேல் லோக வாழ்க்கை பெருத்த மோசமானதாகிவிடுமே என்பதுமேயாகும். ஏனெனில், குருக்கள்மார் மதத்தை மக்களுக்குள் புகுத்துவதற்காகவும், மக்கள் மனதில் என்றென்றும் மதம் நிலைத்திருப்பதற்காகவும் நரகத்தைப்பற்றி அவ்வளவு அதிகமாக வருணித்து அவ்வளவு அதிகமான பயத்துக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்கள். பொதுவாகவே, கடவுள் உதவி வேண்டுமானால், மதம் வேண்டும் என்பதும், மதம் வேண்டுமானால் குருக்கள் வேண்டுமென்பதுமே மதத்தின் அவசியத்துக்குக் காரணமாக்கி அதன் மூலம் குருக்கள்மார் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். சாதாரணமாகப்பார்த்தாலும், மனித சுபாவமானதும், மனித சக்தியானதும் மதத்தைக்கொண்டேதான் வெளிப்படக் கூடியதென்றோ, நிலை நிற்கக்கூடியதென்றோ சொல்லுவது சுத்தத் தப்பான. அபிப்பிராயமாகும்.
கோவிலையும், மதத்தையும் மிகப்பிரமாதமாய் கருதாதவர்களும்
அதில் கவலையில்லாதவர்களும் அவற்றில் அனுதாபமோ, நம்பிக்கையோ இல்லாதவர்களுமான மக்களுக்குள்ளாகவே எத்தனையோ பேர்கள் தங்கள் தங்கள் சுபாவங்களையும், சக்திகளையும் உணர்ந்துகொண்டு எவ்வளவோ மேலான நல்ல தன்மையுடனும், அதி மேதாவித் தனமான அறிவுடனும் உடல் பொருள் ஆவி யாகியவற்றை மக்கள் நல் வாழ்க்கைக்குப் பயன் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்.
குடி அரசு - 1935 (2) 244
மதத்தினாலும், பக்தியினாலுந்தான் மக்கள் தங்கள் சக்தியை உணரலாம் என்பதும், நன்மையான காரியங்களைச் செய்யலாம் என்பதும், மேலான அறிவைப் பெறலாம் என்பதும் மெத்த பலமற்ற வாதமேயாகும்
ஒழுக்கத்துக்காகவும், சமுதாய ஒழுக்கத்துக்காகவும் மனிதனுக்கு மதம் வேண்டுமென்பது மிக மிக பலமற்ற வாதமாகும். வரப்போகின்ற காலத்தில் மதக்கோட்பாடுகளைப்பற்றி பிரமாதப்படுத்துவதும், அதற்காக பல காரணங்களைக் கட்டுக்கட்டி மக்களுக்குள் புகுத்துவதும், அவற்றை யெல்லாம் நம்பும்படி செய்வதும் இனி முடியாது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.
எப்படித்தான் பாடுபட்டு புகுத்தினாலும், உண்மையான நம்பிக்கை ஏற்படுவதற்கு இடமில்லாமல் போனால் அவை எப்படி மதிப்புப் பெறமுடியும்? ஜனங்களைக் கோவிலுக்குப் போகும்படி செய்தல் ஒரு
விஷயம். அவர்களை நரகத்திலோ, அல்லது மற்ற புராதன கொள்கைகளிலோ நம்பிக்கை கொள்ளச் செய்வது வேறு விஷயம்
சிறிது யோசித்தாலும் நரகத்தின் அடிப்படை முழுவதும் பொய்யாகி
விடும். கோவிலுக்குப் போகாததாலேயே நாம் கெட்டுப்போய் விடமாட்டோம்.
நாம் கோவிலுக்குப்போவது குறைந்து போயிருந்தாலும் நாம் நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்தே வருகிறோம். நான் வாசாகைங்கரியம் செய்வதாக யாரும் நினைக்க வேண்டாம். நான் ஒருவருக்கு விரோதமாக வீண் வார்த்தைகளைச் சொல்லவில்லை. நமது காலத்தைப்பற்றி உரிய காலத்தில்
சரித்திர சம்பந்தமாகவும் சமுதாய சம்பந்தமாகவும் ஆராய்ச்சி செய்வோமானால் ஏராளமான உண்மைகளும் புள்ளி விபரங்களுமே நாம் முன்னேற்றமடைய வில்லையா என்ற சந்தேகங்களை அறவே ஒழித்துவிடும். தற்காலத்தைவிட
முற்காலத்தில் குற்றங்களும், பலாத்காரங்களும் அக்கிரமங்களும் உலகத்தில் அதிகமாகவே இருந்தன. முற்காலத்தவர் நம்மைவிட அதிக சுகஜீவிகளாயிருந்ததில்லை. அவைகளைப்பற்றி நாம் நிச்சயமான புள்ளி விபரங்களை காட்டலாம்
மதக்காரர்கள் நாம் மடுவில் மூழ்கி இறக்கிறோம் என்று கருதுகிறார்கள். அதாவது நாம் அநீதியை வளர்க்கிறோம் என்பதாகும். இதற்கு ஆதாரமான புள்ளி விபரங்கள் ஒன்றுமில்லை. ஆகவே இந்த அபிப்பிராயம் அர்த்தமற்றது பத்திரிகைகளில் தோன்றும் விபசாரவிஷயங்களையும் குற்ற விபரங்களையும்
பார்த்து அத்தகைய அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள். ஆதிகாலத்தில் இத்தகைய பத்திரிகை விளம்பர முறைகள் இருந்ததில்லை யென்பதை
மக்கள் மறந்துவிடுகிறார்கள். ஆயினும் அக்காலத்திலும் விபசாரங்களும் குற்றங்களும் இருந்தே வந்திருக்கின்றன. ஆதிப்யூரிட்டன்ஸ் என்பவர்களிடம் விபசாரம் மிகுந்திருந்ததாக ருசுப்படுத்தும் சரித்திரம் சாட்சியங்களைப்பற்றி தோழர் ரூப்பர்ட்ஹக்ஸ், “ஹால்டிபன் ஜீலியஸ் மாதப் பத்திரிகை” யில்
248 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சமீபத்தில் எழுதியிருக்கிறார். பக்குள் என்னும் பேர்போன சரித்திர ஆசிரியர் ஸ்காத்லந்துப் யூரிட்டன்ஸ் என்பவர்களிடம் பயங்கரமான துர்கிருத்தியங்கள் இருந்தனவென்று எழுதியிருக்கிறார். அப்படியே மத்திய காலங்களிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் இருந்து வந்திருக்கிறது. இவ்விஷயங்களிலும் நாம் நமது முன்னோர்களைவிட அதிகமாகக் கெட்டுப்போகவில்லை.
இனி ஒழுக்க முறைகளின் பலன்களைப்பற்றிப் பேசுவோம். இது மகா முக்கியமான விஷயம். இதனால் உலகம் பாதிக்கப்படவில்லையென. இலேசாய்க் கருதப்படுகிறது. பென் லிண்டுஸி என்னும் நீதிபதி “நவீன வாலிபர்களின் புரட்சி” என்னும் நூல் எழுதியிருக்கிறார். அவர் அமரிக்க வாலிபர்களின் எண்ணங்கள், நடத்தைகள் முதலியவைகளைப்பற்றி மிக நன்றாய் அறிந்தவர். அவரைப்போல இளைஞர்களை அறிந்தவர் வேறு யாரும் கிடையாது. அவர் வாலிபர்களுக்குள் காதல் சுதந்தரம் வெகு அதிகமாக இருக்கிறதென்று தமது நூலில் விளக்குகிறார். அது வழக்கத்திற்கு அதிகமாக இருக்கிறதாவென்பது அவருக்குத் தெரியாது. அவ்விஷயத்தில் புகுந்து சரியான ஆராய்ச்சி செய்தாலொழிய யாருக்கும் உண்மை விளங்காது
கிழவர்களின் அபிப்பிராயங்கள் உயபயோகமற்றவை. இங்கிலாந்திலே கிழவர்கள் வாலிபர்களாயிருந்தபோது பருவகாலம் வித்தியாசமுள்ளதாக இருந்ததென்று சாதாரணமாய் நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் அப்படியில்லை யென்பதை ருசுப்படுத்த சாக்ஷியங்கள் இருக்கின்றன. நீதிபதி லிண்டுஸி அறிந்து சொல்வது என்னவென்றால், கோவிலுக்குப்போய் உபதேசங்கள் கேட்கும் வாலிபர்களுக்குள்ளும் இளம் பெண்களுக்குள்ளும் தான் காதல் சுதந்தரம் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான்.
நவீன உலகம் தனக்கென்று சொந்தமாகச் சட்டங்கள் செய்துகொள்ள வேண்டும். குற்றத்தைப்பற்றியும் பலவந்தத்தைப் பற்றியும் பயப்பட வேண்டாம். ஜனங்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் மணவாழ்க்கை விஷயமாக ஜனசமூகம் தன் சமுதாய நன்மைகளை பாதுகாத்துக்கொள்ளும் சமுதாயத்தைப பாதித்து யாருக்கும் தீங்கு செய்யாத தனிப்பட்ட நபர்களின் காரியங்களைக் கோவில்கள் அடக்கியாள முடியாது. இனி வருங்காலத்தில் அதைப்பற்றிய உண்மையை நாம் நன்குதெரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு பெரிய விஷயம். அதைப்பிறகு எடுத்துக்கொண்டு நன்றாக ஆராய வேண்டும்.
இனி மதத்தை எப்படித் திருத்தினாலும், அதை எப்படிக் கலைத் தமைத்தாலும், அதை ஒழிந்து போவதினின்றும் தடுக்க முடியாது. அதன் கொள்கைகளில் ஒன்றாவது கண்டனத்திற்குட்படாமல் இருக்க முடியாது எல்லா மக்களையும் ஒப்புக்கொள்ளும்படி இனிச்செய்ய முடியாது
சிலர் எல்லா மதக் கோட்பாடுகளையும் விட்டு ஒழிக்க அபிவிருத்தி சங்கங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாமென்கின்றார்கள். இது எப்படி
குடி அரசு - 1935 (2) 246
ஒரு பெரிய மதமாகிவிடும் என்பதைப் பற்றிச் சுலபமாய்ப் பரீக்ஷித்து
விடலாம். சென்ற நூறு வருஷங்களாக உலகில் பல இடங்களில், சிறப்பாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கூட மதாபிமான வைத்கச் சங்கங்களும் கோவில்களுமிருந்தன. அவைகளில் அநேகம் மதக்கோட்பாடுகள் இல்லாமலே
இருந்து வருகின்றன. சமீப காலத்திலிருந்து ஒழுக்காபிவிருத்திச் சங்கங்களும் இருந்து வருகின்றன. அவைகள் நீதி விஷயங்களின் சம்பந்தம் மட்டும் பெற்றிருக்கின்றன. மேலே கூறப்பட்டவைகளில் ஒன்றும் பொது மனிதர்களால் போற்றப்டுவதில்லை. கோவிலுக்குப் போகாத ஆறுகோடி அமெரிக்கர்களும், மூன்று கோடி பிரிட்டிஷ்காரர்களும் அத்தகைய சபைகளின் கூட்டங்களுக்குப் போவதே கிடையாது. அப்படிப்பட்ட சபைகள் நூறுக்குக் குறைந்தேயிருக்கும். சபை ஒன்றில் சில நூறு அங்கத்தவர்கள் தான் இருப்பார்கள். அவர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவும் கிடையாது
நம்முடைய காலத்திற்கு ஞாயிற்றுக்கிழமைக் கூட்டம் தேவையில்லை
அதற்குத் தெய்வ வணக்கமோ அதற்குப்பதிலாக வேறு எதுவுமோ தேவையில்லை. மனிதன் இயற்கையிலேயே சாஸ்வதமான மதப்பற்றுள்ளவ னல்லவா? மனிதனிடத்தில் நீங்காத மதப்பிரியம் உண்டு என்று அறிஞர்களான. அநேக ஆசிரியர்கள் கூறவில்லையா? அதனால்தான் ஒரு மதம் மறைந்ததும் வேறு ஒன்று அதற்குப் பதிலாகக் கிளம்பி விடுகிறது என்று அவ்வறிஞர்கள் கூறவில்லையா? இனி வருங்காலத்தில் எது மதமாயிருக்கக் கூடும்? இவ்விஷங்களைப்பற்றி வேறு கட்டுரைகளில் பேசுவோம்
நவீன நாகரீகத்தில் முன்னேற்றமடைந்திருக்கும் இடங்களின் நிலைமையென்ன? அங்குள்ள மக்களில் மூன்றில் இரண்டு பாகத்தவர் கோவிலுக்குப் போவதில்லை. அவர்கள் வீட்டில் கடவுளை வணங்கு கின்றார்கள் என்றும் யாரும் சொல்ல முடியாது. இந்த தேசங்களில் லட்சக்கணக்கான குருக்கள் ஜனங்களைக் கோவிலுக்குப் போகும்படி நியாயம் சொல்லிக் கொண்டு தானிருக்கிறார்கள். மனைவிமார்களும் குமாரத்தி
களும் தங்கள் தங்கள் ஆடவர்களை அதற்குக் கட்டாயப் படுத்தும்படி தூண்டப் படுகிறார்கள்.கோவில் பூஜாமுறைகளைக் கூடியவரையில் கவர்ச்சியுள்ளதாக்கு
கிறார்கள். குறிப்பிட்ட கிழமைகளின் நீண்ட பூஜா காலத்திற்குப் பதிலாக இனிமையான மாலைப் பூஜைகளை கிழமைதோறும் நடத்துகிறார்கள்
சங்கீதம் அதிகமாகவும், பிரசங்கம் கொஞ்சமாகவும் உள்ள கூட்டங்களை நடத்துகிறார்கள். உற்சாகத்தை உண்டாக்கத்தக்க மத கற்பனைகளைப் பற்றிய தலையங்கங்களைப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துகிறார்கள் சமுதாய ஊக்கம் உண்டாகிறது. கோவில் சம்பந்தத்தோடு சமுதாய வாழ்வு அபிவிருத்தி செய்யப்படுகிறது. ஆடல் பாடல் ஆடும் படக் காட்சிகள் நடத்தப் படுகின்றன. புதிய மதங்களான கிறிஸ்துவ விஞ்ஞானம், ஒழுக்க அபிவிருத்தி, தியாசபி முதலியவை பழையவைகளோடு போட்டி போடுகின்றன.
247 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
முடிவு என்ன? உண்மை விஷயம் என்ன? நவீன நாகரீகத்தில் ஜனத்தொகையில் பாதி யல்லது முக்கால் பாகம் இவைகளையெல்லாம் அசட்டை செய்து கோவிலுக்குப் போக மறுக்கிறது. மதக்கோட்பாடுகள் குறைந்ததற்கேற்ப குறைந்த ஜனங்களே போகிறார்கள். கோவிலுக்குப் போகும்படி ஜனங்களை நிர்பந்தம் செய்யவில்லையென்று வைத்துக் கொள்ளுவோம். பத்து வருஷங்களுக்குக் குருக்கள்மார்கள் எல்லோரும் உலகத்தில் தங்கள் வேலையை நிறுத்திவிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். முடிவென்னவாகும்? நீங்களே யதார்த்தமான பதில் கூறுங்கள்.
நான் என் அபிப்பிராயத்தை அங்கு வற்புருத்த விரும்பவில்லை. ஆனால் அப்போது இன்னும் எத்தனை பேர் கோவிலுக்குப் போவதை நிறுத்தி விடுவார்களோ என்பதை நினைக்க ஆச்சரியமாயிருக்கின்றது
மனிதனுக்கு இயற்கையிலேயே மதப்பற்றுக் கிடையாதென்பது வெளிப்படை. நாகரீக மக்களின் தொகையில் பாதிக்கும் குறைந்தவர்களை மதப்பற்றுள்ளவர்களாக வைத்துக்கொள்ள பத்து லட்சம் பாதிரிகளின். மிகுந்த முயற்சி தேவையாக இருக்கிறது. இயற்கை மதப்பற்றைப் பற்றிப் பேசும் ஆசிரியர்கள் ஒரு தவறு செய்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள். பழைய காலத்தையே கவனிக்கிறார்கள், தற்காலத்தைப் பற்றி அறியாதிருக்
கிறார்கள். மூன் காலத்தில் ஒரு மதம் போனால் வேறு மதம் உண்டாயிற்று ஆசியாவில் இருந்ததுபோல படித்தவர்கள் பல நூற்றாண்டுகளாக மதம்
ஒன்றும் இல்லாமலே இருந்துவந்தார்கள். எப்படியிருந்தாலும் நமது காலம்
ஒரு புதிய காலமேயாகும். உலக சந்தர்ப்பங்கள் முழுவதும் மாறிவிட்டன. இருபதாவது நூற்றாண்டில் என்ன நேரிடுமென்று யாறும் கூறமுடியாது மதத்தைப் போற்ற நமது தலைமுறையில் அரசியல் நிர்பந்தத்தையும் உண்டாக்க முடியாது. சென்ற பதினைந்து நூற்றாண்டுகளாக அப்படித்தான் நடந்துவருகிறது. மதப் பற்று மனிதனுக்கு இயற்கையல்லவென்பதைக் கண்டுபிடித்தோம். அநேகர் மதத்தை விட்டு விட்டார்கள். மதப் புத்தகத்தை யாரும் படிப்பதில்லை. நமது மதப் புஸ்தகங்களிலும் பத்திரிகைகளிலும்
மதக் குறிப்புகள் காணப்படுவதில்லை. மேடைகளில் மதங்கள் கேவலமாய்ப் பேசப்படுகின்றன. அதைக் கேட்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் நகைக்கிறார்கள். ஆடும் படக் காட்சிகளில் மதத்தை ஒப்புக்குச் சேர்த்திருக்கிறார்கள். அது கண்டு ஜனங்கள் புன்சிரிப்புக் கொள்ளுகிறார்கள். மதம் மெதுவாக இறந்துகொண்டிருக்கிறது அதனால் வாழ்வும் மனமும் கெட்டுப்போகுமா? மதத்தை அலகஷியம் செய்த எண்பது லட்சம் லண்டன் வாசிகளுடைய மனமும் வாழ்வும் கெட்டுப்போகவில்லை. இவர்களைப்பற்றி நான் நன்கு அறிந்திருக்கிறேன். இவர்களுக்கு மதம் கிடையாது. இவர்கள் மதத்தைப்
பற்றியும் நினைப்பதில்லை. கெட்டுப்போகுமென்பதும், அவநம்பிக்கையால்
குடி அரசு - 1935 (2) 248
அபாய மென்பதும் சாதுர்யமான கட்டுக் கதைகளேயாகும். வாழ்வு நல்லது அது ருசிகரமானது. லட்சாதி லட்சம் பேர் அனுபவித்தானந்திக்க முடியும் பக்தி மிகுந்த முற்காலத்தில் அவர்கள் அடைபட்டுக்கிடந்தார்கள். மக்களின். விருப்பத்திற்கேற்ப கலைகளிருக்கின்றன. அறிஞர்களுக்கு விஞ்ஞானம் இருக்கிறது; இலக்கியம் இருக்கிறது, பெருமை மிக்க தேசமும் கடலும் இருக்கின்றன. நகரத்தில் 1001-வேடிக்கை வினோதங்கள் இருக்கின்றன. மக்கள் வாழ்வு வேகமாய் மாறுதலடைந்து வருகிறது. சரித்திரத்தில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது. ஆகவே மதமின்றி மக்கள் வாழமுடியாது என்று மதப்பிரசாரகர்கள் பயப்படவேண்டியதில்லை
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - செப்டம்பர் 1935
249 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கடவுள் சக்தி
விதண்டாவாதம்
நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது
கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்
கக்க ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதியவைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புகூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவைகளில் கஷ்டப்படுத்திவைக்கவும் முடியுமாம். கக்க நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!
கக்க
அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்தபிறகு, எல்லார் குற்றம் குறைகளையும் ஒன்றாய்
பதியவைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குளியிலிருந்து எழுப்பிக் கணக்குப்பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம் கக்க இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி யாகவே அவ்வப்போது அவளைச் சுட்டு எரித்தபின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவை பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து அந்த சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஐந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்கவேண்டும் என்று கட்டளையிடுமாம்
க
குடி அரசு - 1935 (2) 250
கிறிஸ்துவ சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்
கக
அந்தப் பாவம் ஏசுகிறிஸ்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்
ன
மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான். மன்னிக்கப்படுமாம்.
ன
சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம் அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்
ன வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம் விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.
ன
ஆனால் சைவ வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்
ன
அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்
கக
அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம்
கக
இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும் பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்டமோக்ஷங்களோ அல்லது நல்லஜன்மமோ எதுவேண்டுமோ அது கிடைத்து விடுமாம்
ன
ஆகவே பொதுவாகக் கடவுள்களுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்துகொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப்பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகா மகா பெரிய பெரிய பாவமாம்.
251 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவைகளுக்கெல்லாம் பிராயச்சித்தமும் மன்னிப்புமுண்டாம்.
க
ஆனால் கடவுளைப்பற்றியோ அவரது சக்தியைப்பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டுவிட்டானோ பிடித்தது மீளாத சனியன். க் அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறிஸ்துநாதரைப் பிடித்தாலும்
சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம் கடவுளை சந்தேகிக்கப்பட்ட குற்றம்?) மன்னிக்கப்படவே மாட்டாது. க்
ஆனால், இந்த எல்லா கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும் அவர்களுடைய அவதாரங்களுக்கு கடவுளைப்பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப்பற்றியும் மக்களை சந்தேகப் படாமல் இருக்கும் படிக்கோ, அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும் படிக்கோ செய்யவிக்க முடியாதாம் க்
ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம் க்
பாவம் நாம் ஏன் அவற்றை தொந்திரவு செய்ய வேண்டும் க்
எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - செப்டம்பர் 1935
குடி அரசு - 1935 (2)
ப O ப்
திருவன்னாவர் நாஸ்திகர்
கடவுள் ஒழிய வேண்டும்
பிச்சை எடுத்து வாழும்படியாக மக்களை கடவுள் சிருஷ்டித்து இருந்தால் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதாவது,
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான்”
என்று 1062 வது குறளாகச் சொல்லி இருக்கிறார்.
இன்று இவ்வுலகில் பிச்சைஎடுத்துவாழும் மக்கள் எந்த மதத்தினராயினும் எந்தக்கடவுளைவணங்குபவராயினும் அவரவர்கள் அந்தக் கடவுளால் பிரப்பு விக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டுமே ழியஅவனவன்தாய்தகப்பன். முயற்சியால் பிறந்து அவனவன் புத்திக் கேட்டால் சோம்பலால் குறும்புத்தனத்தால். பிச்சை எடுக்கிறார்கள் என்று எந்த ஆஸ்திகனும் சொல்லமாட்டான்.
அப்படிச் சொல்வாராயின் எந்த ஆஸ்திகனும் பிச்சைக்காரர்களுக்கு
தருமம் செய்ய முன் வரவுமாட்டான். அது மட்டுமா, எந்த வேதமும் சாஸ்திரமும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்யும்படி சொல்வும் முன்வராது அவ்வளவோடு மாத்திரமா!
எந்தக் கடவுளும், பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்தவர்களுக்கு, மோக்ஷமோ, சன்மானமோ கொடுக்கவும் முன்வராது ஆகவே, பிச்சைக்காரர்களும் அவர்களது தொழில்களும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதுதான் அவர்கள் முடிவு அதனால்தான், திருவள்ளுவர் பொய்யா மொழிப் புலவர் “பரந்து கெடுக உலகம் இயற்றியான்" என்று துணிவாய்ச் சொல்லிவிட்டார்.
தரித்திரத்தையும், ஏழ்மையையும், பிச்சை எடுக்கும் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் கண்டிப்பாகக் கடவுள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று சமதர்மவாதிகளும் சொல்லுகிறார்கள். இப்படிச் சொல்லுவதால் திருவள்ளுவர் நாஸ்திகராகும் போது சமதர்மவாதிகள் நாஸ்திகர்களாவதில்
எந்த உலகமும் முழுகிப் போய்விடாது ஆதலால்தான், ஏழ்மையையே ஒழிக்கப் பாடுபடுகின்ற தேசமெல்லாம் முதலில் கடவுளை ஒழிக்கப் பாடுபடும் வேலையையே மேற்போட்டுக் கொண்டு வருகின்றன போலும்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - செப்டம்பர் 1935
253 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கீழ் மேல்
என்கை கீழே: உன் கை மேலே
ஒரு பார்ப்பன யாசகக்காரன்:- ஐயா பிரபுவே யேதாவது தர்மம் கொடுங்கள் உங்களுக்கு மகா புண்ணியமுண்டு
பிரபு:- போம் வோய், போய் எங்காவது பாடுபடுமேன். மண்ணு வெட்டினாலும் தினம் 8-அணா சம்பாதிப்பீரே. கொட்டாப்புளியாட்டமாய் இருந்துகொண்டு வடக்கயிறாட்டமாக பூணூல் போட்டுக் கொண்டு பிச்சைக்கு வறீரே வெட்கமில்லையா?
யாசகக்காரன்:- என்னமோ பிரபுவே தங்கள் கை மேலாகி விட்டது, என்கை கீழாகிவிட்டது என்ன வேண்டுமானாலும் தாங்கள் சொல்லக்கூடும்.
பிரபு- மேலென்ன, கீழென்ன. இதற்காக நீர் ஏன் பொறாமைப்படுகிறீர். கடையில் 10-அணா போட்டால் ஒரு ஜர்மன் (க்ஷவரக்) கத்தி கிடைக்கும். வாங்கிக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் உட்காரும்; எத்தனை பேர். தலைக்கு மேல் உம்ம கை போகுது பாரும். உமக்கென்னத்துக்கு உம்ம கைக்கு மேல் நம்ம கை போகிறதே என்கின்ற பொறாமை
'யாசகக்காரன்:- சரி நான்போய் வருகிறேன். பகவான் இப்படிதங்களைச் சொல்லவைத்தான், நம்மளைக் கேள்க்க வைத்தான். தங்களை நொந்து என்ன பயன்.
பிரபு:- அப்படியானால் அடியுமே அந்த பகவானை. போம் போம் சோம்பேரியே
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - செப்டம்பர் 1935
குடி அரசு - 1935 (2) 254
கிருஷ்ணன் — அர்ஜுனன் சம்வாதம்
- சித்திரபுத்திரன்
அர்ஜுனன்:- சகேசீனாம் நிகேசீனாம் காகதிபுருஷோத்தமா?
கிருஷ்ணன்:- அஹம் சந்யாசி ரூபேணாம் புரோஷ்டிதாம் தனஞ்செயா! இதன் பொருள்.
அர்ஜுனன்:- ஹே புருஷோத்மா! தலையில் மயிருடனும், மயிரில்லாமல்: மொட்டத் தலையுடனும் இருக்கும் (படியாய் நீ செய்திருக்கின்ற) விதவைகளுக்கு என்ன கதி?
கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! நானே சந்நியாசியாக பூமியில் அவதரித்து அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வேன்.
அர்ஜுனன்:- ஹே கிருஷ்ணா! உன்னை ஒரு பெரிய கடவுளென்று சொல்லிவிட்டு பிறகு நீ இப்படிச் செய்தாய், அப்படிச் செய்தாய், கண்ட ஸ்திரீகளுடன் கலந்தாய், உதைபட்டாய், அடி பட்டாய், அழுவாரற்ற பிணமாய் செத்தாய் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களே இதைப்பற்றி உனக்கு சிறிதும் அவமானமில்லையா?
கிருஷ்ணன்:- ஹே அர்ஜுனா! அதைப்பற்றி நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். இதெல்லாம் எனது திருவிளையாடலென்றும் இவற்றைப் படித்த கேட்ட ஒவ்வொருவரும் இதனைக் கொண்டாட வேண்டுமே ஒழிய குற்றம் சொல்லக்கூடாதென்றும், குற்றம் சொன்னால் பாவமென்றும், நரகமென்றும் அவற்றை எழுதின அவர்களே எழுதி இழிவை அடக்கி விட்டார்கள். ஆதலால் நமக்கு ஏன் கவலை?
அர்ஜுனன்:- கிருஷ்ணா அதுதான் போகட்டும். நம்பமுடியாத அநேக பொய்யையும், புழுகையும் சொல்லி நீ சின்னக்குழந்தையாயிருக்கும்போது பெரிய முலையை உருஞ்சி சூப்பையாக்கி விட்டாயென்றும், மலையை சுண்டு விரலால் குடையாய்ப் பிடித்தாய் என்றும் 10 ஆயிரம் பெண்களை ஏககாலத்தில் கலந்தாய் என்றும் இப்படியெல்லாம் எழுதி இருக்கின்றார்களே, இந்தப் புளுகுகளை எவன் நம்புவான்?
கிருஷ்ணன்:- ஓ! அர்ஜுனா அதைப்பற்றியும் நீ கவலைப்படாதே. ஏனென்றால் அந்தப்படியெல்லாம் எழுதினவர்கள் இவற்றையெல்லாம்
288 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எவன் நம்பவில்லையோ அவன் நாஸ்திகன் என்றும் அவனை அரசன் தண்டிக்க வேண்டுமென்றும் அரசன் தண்டிக்காவிட்டாலும் அவன் நரகத்துக்குப் போகவேண்டும் என்றும் எழுதி மக்களை மிரட்டிப் பயப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். ஆதலால் எவனும் தைரியமாய் தான் இவற்றை நம்புவதில்லை என்று வெளியில் சொல்ல வரமாட்டான்?
அர்ஜுனன்:- அதென்ன கிருஷ்ணா பாவம் என்றாலென்ன? நரகம் என்றால் என்ன? எனக்கு ஒன்றும் புரியவில்லையே
கிருஷ்ணன்:- அந்தப்படி புரியாமலிருக்கின்றதாகவே பார்த்துதான் சொல்லி இருக்கின்றார்கள்.
அர்ஜுனன்:- அதென்ன புரியாததைச் சொன்னால் என்ன பயன்.
கிருஷ்ணன்:- ஒருவனுக்குத் தெரியாததையும், புரியாததையும் சொன்னால்தான் மனிதர்கள் பயப்படுவார்கள். புரியும்படியானதாக எதைச் சொன்னாலும் திருப்பிக் கேழ்க்க ஆரம்பித்து விடுவார்கள். ஆதலால்தான் அது செய்தால் பாபம், இது செய்தால் பாவம், நினைத்தால் பாவம் என்றெல்லாம் மிரட்டி வைத்திருக்கின்றார்கள்.
அர்ஜுனன்:- இந்த மாதிரி எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும்?
கிருஷ்ணன்:- முடிந்த வரையில் முடியட்டும்
அர்ஜுனன்:- இந்தப் புரட்டு வெளியாய் விட்டால் அப்புரம் என்ன செய்வது?
கிருஷ்ணன்:- அப்புரம் வேறு புறட்டை யுண்டாக்கிக்கொள்ள அவர்களுக்குத் தெரியும்
அர்ஜுனன்:- அதென்ன புரட்டு?
கிருஷ்ணன்:- அரசியல் புரட்டு.
அர்ஜுனன்:- அதுவும் வெளியாகி விட்டால்
கிருஷ்ணன்:- அதற்குள் பார்த்துக் கொள்ளுவோம். இந்த இரண்டு
புரட்டும் மண்டுகள் நிறைந்த இந்தியாவுக்கு சுலபத்தில் வெளியாய் விடவா போகின்றது?
அர்ஜுனன்:- சுயமரியாதைக்காரர்கள் இந்த இரண்டையுமே சேர்த்து வெட்ட வெளியாக்கிக் கொண்டு வருகின்றார்களே சீக்கிரத்தில் வெளியாய் விடாதா?
கிருஷ்ணன்:- அவர்களால் சுலபத்தில் முடியாது. ஏனென்றால் அந்த இரண்டு புரட்டின் மேல் தங்கள் வாழ்வையே ஏற்பாடு செய்து கொண்ட அநேகர் சுயமரியாதைக்காரர்களுக்குள்ளாகவே இருக்கிறார்கள். அந்தப்படி
குடி அரசு - 1935 (2) 256
மீறி அவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைக்குக் கேடுவந்தாலும் வரட்டு மென்று துணிந்துக் கட்டுப்பாடாய் வேலை செய்தாலும் கூட அது தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் தான் செல்லும். இந்தியாவில் மற்ற பாகங்கள் எவ்வளவோ இருக்கின்றன.
அர்ஜுனன்:- எப்படியானாலும் என்றைக்கிருந்தாலும் இந்த இரண்டு
புரட்டுக்கும் ஆபத்து ஆபத்துதான்.
கிருஷ்ணன்:- அந்தக்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம். நடந்தவரை நடக்கட்டும்.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - செப்டம்பர் 1935
257 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தர்மராஜ்ய தர்பார்
ஒரு கனவு
- யார் எழுதினால் என்ன?
1.9.35ந்தேதி “குடி அரசில்!” “தர்மராஜ்ய விளம்பரம்” என்று ஒரு கட்டுரையும், 15.9.35 ந் தேதி “குடி அரசில்” “தர்மராஜ்ய ஸ்தாபனம்” என்ற கட்டுரையும் எழுதி இருந்தேன். இப்போது 'தர்மராஜ்ய தர்பார்” என்ற கனவைப் பற்றி எழுதுகிறேன்.
தர்மராஜ்ய பூபதி, ராமராஜ, கிருஷ்ண தேவ, மஹாவீர, புஷ்யமித்ரவர்மன், ஆடையாபரண அலங்கிருதனாய், அப்ஸர ஸ்தீரிகள் முன் செல்ல, நாற்படைகள் அணி வகுத்து நிற்க, வேதப்பிராமணர் ஆசி கூற, பல சிற்றரசர்கள் புடை சூழ, தர்பார் மண்டபத்தில் பிரவேசித்தார். சபையில் இருந்த எல்லோரும் எழுந்து நின்று நமஸ்கரித்து, 'ஜயவிஜயீபவ! ஜயவிஜயீபவ!! ஐயவிஜயீபவ!!!' என்று ஜய கோஷஞ் செய்தனர். இரத்தினங்கள் ஒளி வீச ஒய்யார நடை நடந்து, அரசன் சிங்காதனத்தமர்ந்தனன்.
மந்திரிகள் வந்தனந் தந்தோம் மஹாராஜ்!
அரசன்: கல்யாண்! கல்யாண் மந்திரிகளே!
மந்உ ராஜபூபதி! நமது தர்மராஜ்யம் ஸ்தாபனமாகி இன்றைக்கு இரண்டு தினங்களாகின்றன. நேற்றைய தர்பாரில் அரசியல் விஷயங்களைக் கவனிக்கப் போதிய நேரமில்லாததால் பரத நாட்டிய விமர்சனத்தோடு தர்பார் கலைந்தது. இன்றைய தர்பாரில் தங்கள் முன்னிலையில் சங்கீதம், பரதநாட்டியம், இவ்விரண்டு கலைகளிலும் தேர்ச்சி பெற்ற பாரசீக நாட்டுப் பெண்மணி ஒருத்தியும், காஸ்மீகர நாட்டுக் கன்னியர் இருவரும் தங்கள். கலைத் திறமைகளைக் காட்ட ஆவலோடு தங்கள் உத்திரவை எதிர்பார்த்திருக் கிறார்கள். அரசாங்க விஷயங்கள் சில அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியிருக்கின்றன. தங்கள் இஷ்டம் எதுவோ தெரிவிக்க வேண்டுகிறோம்
அர: பிரதானி நமது குடிபடைகளின் கலைத் தேர்ச்சியைக் கவனித்துச் சன்மானிப்பதும் நமது கடமையல்லவா? அரச காரியங்களில் சேர்ந்ததல்லவா? ஆகையால் முதலில் சங்கீத, நாட்டிய விற்பன்னிகளின் பயிற்சி நடக்கட்டும். ஆஸ்தான ஆச்சார்ய ஸ்வாமிகள் குறுக்கிட்டு,
குடி அரசு - 1935 (2) 258
“அரசே! நான் சொல்வதைக் கவனியும்! நம்முடைய தர்மராஜ்யம் இன்னும் வலுப்பெறவில்லை. ஆரம்பத்திலேயே, அரசன் தேசகாரியங்களைக் கவனியாமல் ஆடல் பாடல்களில் காலங்களிக்கிறான் என்று ஜனங்கள் சொல்ல இடந்தரலாகாது. மேலும் நம்முடைய தர்மராஜ்யத்திற்கு ஆரம்ப
காலத்தில் பல விரோதிகள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒழித்து ராஜ்யத்தைப் பலப்படுத்துவது முதல் கடமை. இது விஷயமாக உள்நாட்டு
மந்திரியார் தேசத்தில் பல மாகாணங்களிலிருந்து விசேஷ வர்த்தமானங்களை அறிந்து சில திட்டங்களைச் சமூகத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறக்
காத்திருக்கிறார். ஆகையால், முதலில் வழக்கம் போல் தேச விசாரணை செய்து நீதி செலுத்திப் பின் ஆடல் பாடல்களைக் கவனிக்கலாம்."
அர: குருமகாராஜ்! தங்களிஷ்டம் போல் நடக்கின்றேன். பிரதான்! நமது தேசத்தில் மாதமும் மாரி பெய்து குடி ஜனங்களிட்ட பயிர்கள் தழைத்தோங்கி க்ஷமமாயிருக்கின்றனரா?
மந்: அரசே! வருணபகவானது அனுக்கிரகத்தால் மாதமழை
குறைவின்றிப் பெய்கின்றது. குடிகள் யாதொரு குறைவுமின்றி வாழ்கின்றனர்.
அர: தேவலாயங்களில் திரிகால பூஜைகள் தினந்தோறும் தவறாமல் நடக்கின்றனவா?
மந்: நாட்டிலுள்ள சர்வ தேவாலயங்களிலும் காலமுறை தவறாமல் பூஜைகள் நடந்து வருகின்றன.
அர: வேதப் பிராமணர் வேதாகமங்களை ஓதி வருகின்றனரா? அவர். செய்ய வேண்டிய, யாகயெக்ஞாதிகள் யாதொரு இடையூறின்றி நடத்தப் படுகின்றனவா?
மந்: அரசே! தங்களது ஆக்ஞா சக்கரத்தின் கீழ், அந்தணர்கள் யாதொரு குறையும் இன்றி யாகயெக்ஞங்களைச் செய்து கொண்டும், வேதமோதிக் கொண்டும் வருகின்றனர். இவ் விஷயத்தில் நாங்கள் சர்வ ஜாக்கிரதையாக நடந்து வருகிறோம்.
அர: சிற்றரசர்கள் தாங்கள் கட்ட வேண்டிய பகுதிப் பணங்களைச் சரிவரக் கட்டி வருகிறார்களா? பொக்கிஷம் நிறைந்துள்ளதா. பொக்கிஷக் கணக்குகளை அவ்வப்போது பரிசோதித்து வருகிறீர்களா?
மந் பிரபோ! சிற்றரசர்களின் கப்பங்கள் தடையின்றி வந்து சேர்கின்றன. பொக்கிஷத்திற்கு போதிய திரவியம் இருக்கிறது. பொக்கிஷக் கணக்குகளும் சரியாய் இருக்கின்றன.
அர: நமது நாட்டில் உள்ள தர்மசத்திரங்களில் எல்லாம், விதிப்படி பிராமண போஜனம் நடந்து வருகிறதா?
259 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மந்: ஹிமோத்கிரி முதற்கொண்டு, கன்னியாகுமரி வரையுள்ள தங்கள் நாட்டில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள சத்திரங்களில் எல்லாம் அரசிறைப் பணத்தில், அந்தணாளர்களுக்குத் தேவையான எல்லாம் குறைவின்றி அளிக்கப்பட்டு வருவதாக ஆங்காங்குள்ள மாகாணத் தலைவர்கள் தினந்தினம் அறிக்கை செய்து வருகின்றனர். இது விஷயத்தில் அசிரத்தைக் காட்டுபவர்களைக் குறித்து அவ்வப்போது கண்டிப்பான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆகையால் பிராமணோத்தமர் களுக்கு யாதொரு குறைவும் நேர்வதில்லை மஹராஜ்!
அர: வைசியர்கள் தங்கள் குல நீதிப்படி தங்கள் கடமைகளைச் செய்து வருகின்றனரா?
மந்: வைசிய ஜாதியார் எல்லோரும் தங்கள் நீதிக்குட்பட்டுக் குல தருமங்களைக் கடைப்பிடித்து நடந்து வருகின்றனர்.
அரட நான்காம் வருணத்தோராகிய சூத்திரர்கள் தங்கள் ஜாதித் தர்மப்படி மற்ற மூன்று வருணத்தவர்களுக்கும் வேண்டிய ஊழியங்களைச்
செய்து வருகின்றனரா?
மந்: அவ்வாறே நடந்து வருகின்றனர். ஆனால் சிற்சில இடங்களில்
மட்டும் ஒரு சிலர் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். மிலேச்சர்கள் அரசாட்சியில் எல்லோரும் சமம் என்று செய்து வந்த வழக்கத்தினால். இம்மாதிரி சிலர் பேசி வருகின்றனர். நாளடைவில் நமது பிராசீன தர்மம் பிரகாசிக்கப் பிரகாசிக்க எல்லாம் சரிப்பட்டு விடும் மஹராஜ்!
அர: சந்தோஷம் மந்திரிகளே! வாழ்க வந்தணர் வாழ்க வந்தணர். வானவர் ஆனினம்... அச்சமயம் உள்நாட்டு மந்திரி எழுந்து “மஹராஜ்” இப்பொழுதுதான் தென்னாட்டில் நமது சிற்றரசர் சத்தியமூர்த்தியாரிடமிருந்து
ஒரு தூதன் மிக முக்கியமானதும் - அவசரமானதுமான தகவல்களைக் கொண்டு வந்து சேர்ந்திருக்கிறான். அவற்றைக் கேட்டருள வேண்டும்
அர: நீரே விஷயத்தைச் சீக்கிரம் சொல்லும்.
உ.நா.மந். நமது தர்மராஜ்ய ஆதிபத்தியத்தைத் தேச மஹாஜனங்கள். எல்லோரும் சந்தோஷமாக வரவேற்கிறார்கள். ஆனால் தென்னாட்டில்
மட்டும் சில இராக்ஷச வார்சுகள் தங்கள் அரசாட்சிக்கு உட்படுவதில்லை யென்றும், தர்மராஜ்யத்தை வெறுப்பதாகவும், நமது சட்டத்திட்டங்களுக்குப் பணிவதில்லையென்றும் பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டு தென்னாட்டு ஜனங்களிடம் ராஜத் துவேஷப் பிரசங்கங்களைச் செய்துகொண்டு வேதத்தையும், மதத்தையும், நீதி சாஸ்திரங்களையும் நிந்தித்து ஜனங்களை அராஜசத்திலும், நாஸ்திகத்திலும் செலுத்தி வருகின்றனர்
அர: ஆ! அவ்வளவு தைர்யமா அவர்களுக்கு!
குடி அரசு - 1935 (2) 260
உ.நா.மந்.. ஆம் மஹராஜ்! அவ்வசுரப்படை நாளுக்கு நாள் பெருகி வருவதாகவும், அவர்களின் தலைவர்களாகிய பொப்பிலி அரக்கன், ஈரோட்டு ராம ராக்ஷதன், கோவை ஷண்முகாசுரன், சென்னை ராமாசுரன், மதுரை செளந்திரபாண்டியாசுரன் முதலானவர்களும், தலைவிகளாகிய நீலி, காமி, குஞ்சி, பூரணி முதலானவர்களும், மிக்க நெஞ்சத் துணிவும், எதற்கும் அஞ்சாத வீரமும் உடையவர்களென்றும், அவர்கள் செய்கின்ற அட்டூழியங்களை ஆஸ்திக ஜனங்களாகிய சனாதனிகளும், முக்கியமாகத் தேவர்களும், பூசுரர்களும் சகிக்க முடியாமல் தர்மராஜ்ய பூபதியாகிய ராமராஜாவிடம் சரண் புகுவதாகத் தெரிவிக்கிறதாகவும், சிஷ்டர்களாகிய சற்ஜனர்களைக் காப்பாற்றி ரக்ஷிக்க முன் வரவேண்டுமென்று கோருவதாகவும் நமது
சிற்றரசர் தெரிவிக்கின்றார்.
அர: அப்படியானால் நாம் செய்ய வேண்டியதென்ன? மந்திரி பிரதானிகளே, சபையோர்களே, இவ்விஷயத்தில் உங்கள் கருத்தைத்
தெரிவிக்கக் கோருகிறேன். e மஹராஜ்! இந்த ராக்ஷசக் கூட்டத்தை வளரவிட்டால் நமது ராஜ்யத்திற்கே ஆபத்து வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் இவ்வசுரர்களையும் அவர்கள் தலைவர்களையும் முதலில் அழித்து ஒழிக்க வேண்டியது நமது கடமை. துஷ்டர்களை சம்ஹாரம் செய்வது ராஜ தர்மமும் ஆகும். தென்னாட்டில் நமது சிற்றரசர் இடத்துள்ள சேனையால் இந்த ராக்ஷசப் படையுடன் போர் செய்து ஜயிக்க முடியாது. ஆகையால் இங்கிருந்து ஒரு சைன்யத்தை நமது வீரர் சேனாதிபதி சர்தார்சிங் தலைமையின் கீழ் உடனே அனுப்பி வைக்க வேண்டும் மஹராஜ்!
அர ஆம், அது நல்ல யோசனைதான் அப்படியே செய்வோம் இன்னும் இரண்டு தினங்களில் தர்ம ரக்ஷண்யா சேனையுடன் சர்தார் இங்கிருந்து புறப்படவுள்ளார் என்றும், ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் என்றும் நமது சிற்றரசருக்குத் தேறுதல் சொல்லித் தென்னாட்டுத் தூதனை: இப்போதே அனுப்பி வைக்க வேண்டியது, குருதேவ்! இந்த ராக்ஷசர்களை யழிக்க இன்னும் என்ன முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டும். அதையும்
தெரிவிக்கக் கோருகிறேன்.
குருதேவ? அரசே, சேனையை அனுப்பி நமது ராணுவப் பலத்தைக் கொண்டு துஷ்டர்களாகிய அவ்வசுர கூட்டத்தை அறவே ஒழித்துவிடுவது
தான் சரியான முறை என்றாலும், உலக நிந்தனை ஏற்படாதபடி, சில முறைகளைக் கையாள வேண்டும். ராக்ஷசர் செய்யும் குற்றங்களை நமது தர்பாரில் விசாரித்து அவர்கள் பேரில் ஏற்படும் குற்றங்களையும், அக் குற்றங்களுக்குத் தர்மசாஸ்திரங்களில் விதிக்கப்படும் தண்டனைகளையும், நாடெங்கும் விளம்பரப்படுத்த வேண்டும். இவ்விஷயமாக நான்
மந்திரிகளுடன் கலந்து யோசித்து ஒரு அறிக்கையைத் தயாரித்திருக்கிறேன். 21௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அந்தஅறிக்கையை உள்நாட்டு மந்திரி இப்போது சமூகத்தில் வாசித்துக்காட்டுவர்.
பின் இதைத் தேசத்திலுள்ள பத்திரிகைகளில் எல்லாம் பிரசுரிக்கப்படும்
உ.நா.மந்.£ அரசே! நமது குருதேவருடைய யோசனையின்படி தயாரித்திருக்கும் அறிக்கையாவது:- வேத சம்மதமாகவும், கடவுள் சம்மதமாகவும் ஸ்தாபிக்கப்பட்ட நமது தர்ம ராஜ்யத்திற்கும், நமது தேசப் பிராசீன தர்மத்திற்கும், வர்ணாஸ்ரம தர்மத்திற்கும் எதிரிடையாகப் பிரசாரஞ் செய்து, தேவர்களுக்கும், பூசுரர்களுக்கும், வேத வேள்விகளுக்கும் விரோதமாக ஜனங்களைக் கிளப்பிவிட்டு, நாட்டில் குழப்பஞ் செய்து கொண்டு நாள்தோறும் பிரம்மத் துரோகம், ராஜத் துரோகம், தேசத் துரோகம், தர்மத் துரோகம் முதலான குற்றங்களைச் செய்து கொண்டும், நமது சத்பிரஜைகளாகிய சனாதனிகளையும், வர்ணாஸ்ரமிகளையும் சதா
இழிவுபடுத்தியும் இம்சித்தும் வருவதாகத் தென்னாட்டிலுள்ள நமது சிற்றரசர் அறிக்கை செய்வதாலும், மேற்படி குற்றங்கள் முற்றிலும் உண்மையென்று நமது குருதேவர்களும், ரிவீஸ்வரர்களும், மந்திரி பிரதானிகளும், சமஸ்தான புரோகிதர்கள், ஜோஸ்யர்கள், நிமித்திகர்கள், ஒற்றர்கள் முதலானவர்களால் ருஜுப்படுத்தப்படுவதாலும், கீழ்க்கண்ட அரக்கர்களுக்குத் தர்ம சாஸ்திரங்களில் கூறியபடி கீழ்க்கண்ட தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் இன்று முதல் தர்மராஜ்ய பிரஸ்டர்கள் ஆவார்கள். இவ்வரக்கர்களுக்காவது, இவர்களைச் சேர்ந்தவர்களுக்காவது, நமது நாட்டிலுள்ள பிரஜைகள் ஒருவரும் யாதொரு சகாயமும் செய்யக்கூடாது. இது அரசன் ஆணை. தர்மராஜ்ய விரோதிகளான அரக்கர்களை அழிப்பதற்கு ஒத்தாசை புரியும் நமது பிரஜைகளுக்கு அவரவர் சேவைக்குத் தக்கபடி சன்மானஞ் செய்யப்படும். தேச விரோதிகளென்று பிரஸ்டம் செய்யப்பட்ட அரக்கர்களைப் பற்றிய விவரமும் அவர்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்துபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளசன்மானங்களையும் கீழே குறிப்பிட்டிருக்கிறோம்.
1. “பொப்பிலி அரக்கன்! அரக்கர்களுக்கெல்லாம் தலைவன். இவன் குபேரனுக்கு நிகரான சம்பத்துடையவன். பல மாய்கைகள் கற்றவன். வாலியைப் போல் எதிர்ப்பவர் பலத்தையிழுத்துக்கொள்பவன். இராவணனைப் போல் ஏழரைக் கோடி ஆயுள் பெற்றவன். மிகுந்த புஜபல பராக்கிரமம் பொருந்தியவன். எவ்வித ஆபத்துக்கும் சளைக்காதவன். இவனை ஜயிப்பது மிகவும் கஷ்டம். ஆகையால் இவனிடம் யுத்தத்திற்குப் போகிறவர்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவன் செய்து வரும் அக்கிரமங்களுக்கு ஆயிரம் முறை தூக்கிலிட்டுச் சித்திரவதை செய்வதும் போதிய தண்டனையாகாது இவனிடத்தில் எள்ளளவும் தாட்சண்யமோ, இரக்கமோ கொள்ளக் கூடாது. யாரும் இவனைக் கண்டவிடத்தில் சுட்டுக் கொல்லலாம் இவனை வீழ்த்தி வருபவர்களுக்குப் பதினாயிரம் பொன் பரிசு
குடி அரசு - 1935 (2) 26:
2
கொடுப்பதுடன், இந்திர நாட்டுச் சுந்தரிகளில் இஷ்டமானவர்களை மணந்து கொண்டு, கோசல நாட்டில் 19 கிராமங்களை ஜாகீர் பெற்று
அரசப் பிரியனாக வாழலாம்
2. ஈரோட்டு ராம ராக்ஷசன்: இவனே இந்த அரக்கர்களுக்கெல்லாம் குருவும், தந்தையும் போன்றவன். எண்ண முடியாத மாயாஜாலங் கற்றவன். எவரையும் மயக்கக்கூடிய வாக்குச் சாதுர்யமுள்ளவன். எதற்கும் அஞ்சாத திடமான நெஞ்சம் படைத்தவன். தேவர்களையும், பூசுரர்களையும் எள்ளி நகையாடுபவன். தென்னாட்டில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிக்கெல்லாம் காரணகர்த்தா இவனே. அனேக வாலிபர்களையும், பெண்களையும் மயக்கித் தன் படையில் சேர்த்து வருபவன். இவன் ஒருவன் ஒழிந்தால் மற்ற அரக்கர்களெல்லாம் எளிதில் அடங்கி விடுவார்கள். ஆகையால் இவனைத் தாட்சண்யமின்றி வதை செய்து வருபவனுக்கு பதினாயிரம் பொன்னும் 16 கிராம மான்யமும், இந்திரலோக மாதர் இருவர்களும் சன்மானஞ் செய்யப்படுவதுடன், வடநாட்டில் ஒன்றின் சிற்றரசப் பதவியும் வழங்கப்படும்
3. கோவை ஷண்முகாசுரன் முன் சொன்ன இருவர்களைவிட ஒரு
விதத்திலும் இளைத்தவனல்ல, இவன் அதிசூக்கும புத்தி நுட்பமும், அறிவும் படைத்தவன். அத்தோடு திரண்ட ஐஸ்வர்யமும் படைத்தவன். மிலேச்ச நாட்டு ஜனங்களால் பெரிதும் அபிமானிக்கப்படுபவன். இவன் செல்வாக்குப் பெற்றிருக்கும்வரை நமது ராஜ்யத்திற்கு ஆபத்தாகும். ஆகையால் இவனை யாரும் நிர்த்தாட்சண்யமாகக் கண்டவிடத்து வதை செய்யலாம். அவ்வாறு வீழ்த்தி வருபவர்களுக்கு முன் சொன்ன மாதிரியே சன்மானங்கள் வழங்கப்படும்
4. சென்னைராமாசுரன், (5) மதுரைப் பாண்டியாசுரன் இவர்களிருவர்களும் இராக்ஷதப் படையின் தீர்மான தலைவர்கள் எதற்கும் அஞ்சாத
வீரர்கள். இந்த அரக்கர் சேனாதிபதிகளை அழித்துக் கொல்பவர்களுக்கு ஐயாயிரம் பொன்னும், பத்துக் கிராம ஜாகீரும், அப்ஸர நாட்டுக் கன்னியர்களில் ஒருத்தியும், தர்ம ராஜ்ய சேனையில் சேனாதிபத்யமும் வழங்கப்படும். மற்றுமுள்ள ராக்ஷ்தப் படைத் தலைவர்கள். தலைவிகளைப் பற்றிய விவரங்களையும் அவர்களை அடக்குவதற்கு ஏற்படுத்தப்பட்டசன்மானங்களையும், எல்லாக் கொத்தவால் சாவடிகளிலும் கண்டு கொள்க.
மஹராஜ்! இந்த அறிக்கையை இன்றே நாடெங்கும் விளம்பரஞ் செய்ய வேண்டும். உத்தரவு கொடுப்பீராக
அர சபாஷ் மந்திரி! நீர் வாசித்த இவ்வறிக்கையை நாம் மனமுவந்து அங்கீகரிக்கின்றோம். நமது தர்மராஜ்ய பாதுகாப்புக்காக நமது குருமஹராஜ் செய்துள்ள யோசனைகள் எல்லாம் நமக்குச் சம்மதமேயாகும்
263 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அரசன் தன் அங்கீகாரத்தைத் தெரிவித்ததும் சபையோர் எல்லோரும் ஜயகோஷம் செய்தனர். தேவர்கள் பூமாரி பெய்தனர். அந்தணர் ஆசி கூறினர்.
ஆனால் இந்த ஆரவாரத்தினிடையே மிலேச்ச ராஜ்ய இரு போலீஸ்களும், சர்ஜண்டுகளும், 4 போலீஸ் சிப்பாய்களும் எப்படியோ மண்டபத்தினுள் வந்து தர்ம ராஜ்ய பூபதியையும், மந்திரிகளையும் பார்த்து, உங்கள் நாடகத்தை முடியுங்கள். உடனே எங்களோடு எழுந்து வாருங்கள்!” என்று சொல்லவும், சபா மண்டபத்திலிருந்தவர்கள் எல்லாரும் ஒரு வினாடியில் எங்கோ மறைந்துவிட்டனர். மேடையில் இருந்த சிலர் நடுநடுங்கி எழுந்து போலீசார் பின் சென்றனர்.
குடி அரசு - உரையாடல் - 06.10.1935
குடி அரசு - 1935 (2) 264
இராசீபுரம் தாலூகா
தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு
தோழர்களே! இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப் பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷ காலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் செளகரியமும் பெற்றிருக் கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான்.
ஏற்பட்டிருக்கிறது இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற்காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்ட தாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண்டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத்தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில். காணலாம். அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்த போதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில் குளித்து விட்டு வந்தும், கடவுளுடைய சம்மதமும் உத்தரவும் பெற்ற பிறகும் ஏதோ முத்தியோ, மோக்ஷமோ அடைந்ததாகத்தான் காணப்படுகின்றனவே ஒழிய, இந்த உலகத்தில் மற்ற மனிதர்களைப் போல் மானத்துடன் வாழ முயற்சித்ததாகவோ வாழ முடிந்ததாகவோ பொய்க் கதைகள் கூட கிடையாது. அது மாத்திரமல்லாமல் இந்து (ஆரிய) அரசர்கள்
காலத்திலும், நீங்கள் இன்றுள்ள நிலையைவிட மிக்க கேவலமான நிலையில் நடத்தப்பட்டதாகத்தான் காண முடிகின்றது
அன்றியும் தமிழ் அரசர்கள் மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிக்க கேவலமாகவே உயிர்வாழ்ந்ததாகத்தான் காணக் கிடக்கிறது
அவற்றிற்கு உதாரணம் திருவாங்கூர், கொச்சி முதலிய இந்து அரசர்கள் வாழும் நாட்டில் நீங்கள் எப்படி நடத்தப்பட்டீர்கள்? நடத்தப் படுகிறீர்கள்? என்பதைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்
265 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இந்து அரசர்கள் அல்லாத மகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர். அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக் காலமே உங்களை ஒரு அளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியக்ஷ அனுபவமும் காணப்படுகின்றது. உண்மையாகவே இந்நாட்டில் முகம்மதிய அரசர்கள் ஆட்சி 600, 700 வருஷகாலம் நடந்திருக்கவில்லையானால், தாழ்த்தப்பட்ட தீண்டாத மக்களின் எண்ணிக்கை இன்று “தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு" என்பதுபோல் சுமார் 15, 20 கோடி மக்களுக்குக் குறையாமல் இருந்திருக்கும்
தீண்டப்படாதவர்கள் எண்ணிக்கை இன்று இந்திய ஜனத்தொகையில்
5-ல் ஒரு பாகத்திற்கு உள்ளாக இருப்பதற்குக் காரணம் முகமதிய ஆட்சியே
ஆகும். அது பெருகாமல் அந்த அளவுக்கு உள்ளாகவே இருந்து வருவதற்கும், கூடிய சீக்கிரத்தில் அடியோடு ஒழிந்து போவதற்கும் நம்பிக்கைக்கு இடம் ஏற்படக் காரணமாய் இருப்பது பிரிட்டிஸ் அரசாட்சியின் பயனே ஆகும்
இந்த இரண்டு ஆட்சியும் எந்தக் காரணத்தாலோ இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்க வில்லையானால் இந்தியாவில் ராஜ குடும்பமும், பார்ப்பனர் குடும்பமும் தவிர மற்ற மக்கள் எல்லோரும் தீண்டத்தகாதவர்களாய், தாழ்த்தப்பட்ட மக்களாய்த்தான் இருந்திருக்க வேண்டும். இன்றுகூடப் பார்ப்பனரொழிந்த மற்ற மக்கள் கீழ் ஜாதிக்காரராய் மத சம்பிரதாயப் படியும், பழக்க வழக்கப்படியும் ஏன் அரசாங்க சட்டமுறைப்படியும் குறிப்பிடப்பட்டிருப்பதை யாரே மறுக்க முடியும்?
பழய கால அரசர்கள் யோக்கியதைகள் பார்க்க வேண்டுமானால், அவர்கள் மக்களை எப்படி நடத்தினார்கள் என்பதை உணர வேண்டுமானால், ராமன், அரிச்சந்திரன், சந்தனராஜன், பாண்டியன் முதலிய இந்து அரசர்கள். என்பவர்கள் நாடகத்தைப் பார்த்தாலே அறியலாம்
முதல் முதலாக அரசன் கொலு மண்டபத்துக்கு வந்தவுடன் என்ன கேட்கிறான்.
மந்திரி! நமது நாட்டில் பிராமணர்கள் ஜபதபம், ஓமம், எக்கியம், யாகம் முதலியவைகளைச் செய்து சுகமாக வாழ்கின்றார்களா?
அவர்களுக்கு மான்யங்கள் முதலியவைகள் தாராளமாக விடப் பட்டிருக்கின்றனவா?
சூத்திரர்கள், பிராமணர் முதலியவர்களுக்கு அடங்கி ஒடுங்கி ஒழுங்காகத் தொண்டு செய்து வருகிறார்களா?" என்று தானே நகர விசாரணை செய்கிறார்களே ஒழிய வேறு என்ன?
ஆனால் இன்று உள்ள பிரிட்டிஸ் ஆட்சியின் நகரவிசாரணை எப்படி இருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1935 (2) 266
சமீப காலத்தில் பாராளுமன்றம் என்னும் பார்லிமெண்டைத் துவக்கியபோது அரசர் பெருமான் என்ன சொன்னார்? என்னுடைய பிரஜைகள் எல்லோரையும் அவர்கள் எந்த ஜாதியினராய் இருந்தாலும், எவ்வித வித்தியாசமும் இல்லாமல் எல்லாத் துறையிலும் சரி சமமாய் நடத்துவேன்" என்று சொல்லித் திறந்து வைத்தார்.
அந்தப்படி அவர் நடத்துவார் என்பதற்கு என்ன நம்பிக்கை என்று ராமராஜ்ய ஸ்தாபிதர்களாகிய காந்தியாரும், காந்தி பக்தர்களும் கேட்கலாம்.
மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்த மட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.
இன்று தாலூக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்துச் சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள்; சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோ. கூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள். உதாரணமாக இன்றும் சில அக்கிரகாரங்களில் உங்களை எச்சிலை எடுக்கவோ, குப்பை கூட்டவோ, கக்கூஸ் வாரவோ கூட உங்களை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டியில் அக்கிராகாரத்துக்கு கக்கூஸ் எடுக்கச் சூத்திரர்கள் என்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா?
இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கியிருக்கிறது. ஆகவே நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்யாசம் செய்வதாய் “தேசாபிமான வீரர்”களுக்குத் தோன்றலாம்
பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்து போக வேண்டும் என்கின்ற ஆசை யுள்ளவன் நான்.
ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லா தவர்கள் என்றும் பொது ஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.
279 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ராஜாக்கள் மாத்திரமல்லாமல் பணக்காரர்கள், ஜமீன்தார்கள், வியாபாரிகள், முதலாளிகள் என்கின்றதான கூட்டங்கள் கூடப் பொது ஜனங்களை அரித்துத் தின்னும் புழுக்கள் ஆனதால் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூடச் சொல்லுகிறவன் நான்.
உங்களைப் பொறுத்த வரையிலும் நீங்கள் காந்தி ராஜ்ஜியத்துக்கோ, ராமராஜ்ஜியத்துக்கோ கராச்சி சமதர்ம ராஜ்ஜியத்துக்கோ போவதைவிட பிரிட்டிஷ் அரசாங்கம் ஆயிரம் மடங்கு மேலானது என்று பறை அடிப்பேன்.
ராமராஜ்ஜியத்தில் ஆகட்டும், காந்தி ராஜ்ஜியத்திலாகட்டும், கராச்சி திட்ட சமதர்ம ராஜ்ஜியத்திலாகட்டும், வருணாச்சிரம தர்மமோ, ஜாதிப் பாகுபாடோ இவைகள் சம்மந்தப்பட்ட பழய பழக்க வழக்கங்கள் அது சம்மந்தமான கலைகளோ சிறிதுகூட மாற்ற முடியாது என்றும் அவை பத்திரமாகக் காப்பாற்றப்படும் என்றும் மேல் ஜாதியாருக்கு வாக்குறுதிகள். கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த வாக்குறுதிகள் உங்களுக்கு எவ்வளவு ஆபத்து என்பது இப்போது ஒரு சமயம் உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்
இந்த வாக்குறுதிகள் எவ்வித முற்போக்குக்கும் முட்டுக்கட்டையாக
வந்து தடுத்துக் கொள்ளும் ஏதோ ஒரு காலத்தில் விக்டோரியா மகாராணியார் “உங்கள் மத
விஷயங்களில் பிரவேசிப்பதில்லை'' என்று வாக்குறுதி கொடுத்ததாகக்
கூறிக் கொண்டு, இன்று அவ்வாக்குறுதியை, ஏதாவது ஒரு பொதுக் கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும்,
ஏதாவது ஒரு பொது ரோட்டில் எல்லோரும் நடக்கலாம் என்றாலும்,
ஒரு பொதுச் சத்திரத்தில் எல்லோரும் இருக்கலாம் என்றாலும்,
விபசாரத்துக்குக் கடவுள் பேரால் பெண்களுக்கு (பொட்டுக்கட்டு) லைசென்சு கொடுக்கக் கூடாது என்றாலும்,
ஏதாவது ஒரு கடவுள் என்பதைக் கோயிலில் சென்று தரிசிக்கலாம்
என்றாலும்,
பால் குடிக்கும் குழந்தைகளை சீலை கட்டத் தெரியாத குழந்தைகளைப் பெண் ஜாதியாக ஆக்கிப் படுக்கை வீட்டிற்குள் விடக் கூடாது என்றாலும், அவ்வாக்குறுதிகள் வந்து முட்டுக்கட்டையாக இருக்கும்படி பயன்படுத்தப் படுகின்றன. இப்படி இருக்கும் போது பழய பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், கலைகள், தொழில் முறைகள் ஆகியவை காப்பாற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஒரு சமதர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்ப தென்றால் அந்த சமதர்ம ராஜ்யத்துக்குக் காந்தியாரால் ராமராஜ்ஜியம் என்றும் வருணாச்சிரம
குடி அரசு - 1935 (2) 268
ராஜ்ஜியம் என்றும் பாஷ்யம் சொல்லப்பட்டு இருக்கிறது என்றால், சர்வ வியாதிக்கும் ஒரே மாத்திரை என்பது போல் சகலவித சீர்திருத்தத்துக்கும் இந்த ஒரு வாக்குறுதியே எமனாய் வந்து கொன்றுவிடாதா என்று யோசித்துப் பாருங்கள். இந்த வாக்குறுதியின் கீழ் என்ன என்ன சீர்திருத்தமோ, ஏதாவது ஒரு மாறுதலோ செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்த்து இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன் உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம் இந்த ராமராஜ்ஜியத்தில் - வர்ணாச்சிரம ராஜ்ஜியத்தில் - கராச்சி சமதர்ம
ராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் எத்தனை பேர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. இவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்று உள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத் தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத் தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தித்துக் கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ அரசாங்கத்தாரோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது என்றும் சொல்லுவதற்கு ஆகவே இவற்றைச் சொல்லுகிறேன்.
நீங்கள் எல்லாம் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள்.
அவர்கள் நிலை வேறு, உங்கள் நிலை வேறு. அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும், பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள் உத்தியோகம் தொழில்கள் ஆகியவைகளில் எதிலும் போட்டி போடத் தகுதி அடைந்து விட்டார்கள்.
பார்ப்பனர்கள் சங்ககியோ கேட்க வேண்டியதில்லை. எல்லா
விதத்திலும் மதத்தாலும் பழக்க வழக்கத்தாலும் பிரத்தியக்ஷத்திலும் மேல் நிலையில் இருக்கிறார்கள்.
பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதை அடைந்து விட்டார்கள். 100க்கு 100 பேர் படித்து இருக்கிறார்கள். 100க்கு 90க்கு மேல் உத்தியோகங்கள் அவர்கள் கைவசம் இருக்கிறது
260 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இனி அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அவர்களோ அவர்களது அடிமைகளோ நாட்டை ஆள வேண்டியது என்பதைத் தவிர வேறு இல்லை ஆதலால் அவர்கள் அரசாங்கத்தாரோடு போராடவும், சட்டம் மீறும் அரசாங்கத்துக்குச் சதா தொல்லை விளைவிக்கவும் செளகர்யமுடையவர் களாயிருக்கிறார்கள்.
இது மாத்திரமல்லாமல் அவர்கள் மதத்துக்கும், பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச்சீர்திருத்தங்களைச் செய்ய வொட்டாமலும் செய்து விட்டால் அது அமுலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழி மறிப்பதற்காக அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். (தொடர்ச்சி 13.10.1935 குடி அரசு)
குறிப்பு: 29.09.1938 ஆம் நாள் இராசிபுரம் உயர்நிலைப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இராசீபுரம் தாலூக்கா தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் ஆற்றிய தலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 06.10.1935
குடி அரசு - 1935 (2) 270
மற்றொரு சூழ்ச்சி
எச்சமிக்கை - எச்சரிக்கை
தமிழ்மக்களிடத்தில் பார்ப்பனர்களுக்குச்செல்வாக்கற்றுப் போய்விட்டது என்பதும், பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதையும், நமது பார்ப்பனர்கள் உணர்ந்து விட்டார்களே யானால் உடனே வேறு மாகாணத்தில் இருந்து யாரையாவது பிடித்து வந்து அவரை இந்திரன், சந்திரன், மகாத்மா என்றெல்லாம் ஆக்கி விளம்பரப் படுத்தி, அதன் மூலமாகத் தங்கள் சூழ்ச்சிக்கு ஆக்கம் தேடிக் கொள்ளுவது வழக்கம் என்பதை நாம் பல தடவை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம் அதுபோலவே இப்போது சென்ற வருஷத்திய இந்திய சட்டசபைத் தேர்தல் நடந்ததில், அவர்கள் பெற்ற வெற்றியானது பார்ப்பனர்களின். சூழ்ச்சியையும், நாணயத்தையும் பளிங்கு போல் விளக்கிவிட்டதாலும், இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்று கருதி, தோழர் ராஜகோபாலாச் சாரியார் போன்ற ஆசாமிகள் தாங்கள் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வேஷம் போட்டுத் தங்கள் ஜவாப்தாரித்தனத்தில் இருந்து நழுவிக் கொண்டாலும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் மாகாணத் தலைவர்களாகிக் கண்டபடி உளறிக் கொட்டி, காங்கிரசின் யோக்கியதையையும், தலைமைத் தன்மையின் யோக்கியதையையும் சிரிப்பாய்ச் சிரிக்க வைத்துவிட்டதோடு, பார்ப்பன சூழ்ச்சி இன்னது என்பதை வெளிப்படையாய் அறியும்படியாகச் செய்து விட்டதனாலேயும், இப்போது அடுத்த வாரத்தில் வரப்போகும் ஜில்லா போர்டு தேர்தல்களுக்குப் பார்ப்பனர் போட்டி போடவோ, கட்சி சேர்க்கவோ யோக்கியதை இல்லாமல் போய்விட்டதை நன்றாய் உணர்ந்து கொண்டார்கள்.
இச் சூட்சிகளை மறைத்து மக்களை ஏமாற்ற அரை டஜன், ஒரு டஜன் என்கின்ற கணக்கில் இளம் பெண்களை அழைத்துக் கொண்டு நாடகக்காரர்கள் மாதிரி, “வருகிறார்கள்! வருகிறார்கள்!! யார் தெரியுமா?” என்று துண்டு விளம்பரங்கள் போட்டு, அப்படிப்பட்ட அம்மாள், இப்படிப்பட்ட அம்மாள் என்றெல்லாம் யோக்கியதா பட்சம் குறிப்பிட்டுக் கிராமம் கிராமமாய் இழுத்துக் கொண்டு போய்க் காட்டி, ஏமாற்ற முயற்சித்து அதுவும் பயன்படாமல் போகவே, இப்போது தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து வந்து விளம்பரங்கள் செய்து ஊர் ஊராய் இழுத்துக் கொண்டு ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
போய்க் காட்டியும், அவரைக் கொண்டு பார்ப்பனக் கட்சியைப் புகழும் படியாகவும், பார்ப்பனரல்லாதார் கட்சியை இகழும்படியாகவும் பேசச் செய்து ஓட்டர்களை ஏமாற்றத் தீர்மானித்து விட்டார்கள்.
இவ்வளவு மாத்திரமல்லாமல், அவர் பேரால் சிறிது பணமும் பொது மக்களிடம் இருந்து வசூல் செய்து, அதை சுயராஜ்ஜிய பண்டு, கதர் பண்டு, தீண்டப்படாதார் பண்டு என்ற பேர்களினால் தேர்தல் பிரசாரங்களுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் பயன்படுத்திக் கொண்டது போலவும், சில காலிகளுக்குக் கொடுத்து, பார்ப்பனரல்லாத கட்சியையும், பல தலைவர்களையும் வைவதற்குப் பயன்படுத்திக் கொண்டது போலவும், இப்போதும் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பேராலும் கொஞ்சம் பணம் வசூலித்து பார்ப்பனப் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இப்படிப்பட்ட நடவடிக்கையானது இன்று நேற்று மாத்திரம் இல்லாமல் புராண காலம் தொட்டே இந்தப்படி நடந்து வந்திருப்பதாக அனேக ஆதாரங்கள் இருந்து வருகின்றன. அவைகள். அதாவது அப்புராணக்கதைகள் எல்லாம் உண்மையாக இல்லாவிட்டாலும், பார்ப்பனர்களுக்கும் அவர்களது ஆதிக்கத்துக்கும் குறைவு வரும்படியான சம்பவங்கள் ஏதாவது ஏற்படுமானால் அதிலிருந்து சமாளித்துக்கொள்ள. இன்ன இன்ன மாதிரி நடக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூல் களாகவாவது அச்சரித்திரங்கள் இருந்து வருகின்றன. அதாவது எவனாவது ஒருவன் இந்திரபட்டம் அடைய ஆசைப்பட்டு தபசோ, ஐபமோ செய்தால் அத் தபத்தையும், ஐபத்தையும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்ற பெண்களை விட்டு மயக்கி, அத் தபசியின் தபத்தையும் பிரார்த்தனையையும் அழித்துவிட்டு வரும்படிச் செய்வது ஒரு மார்க்கமாகவும் அனுபவ அனுகூலமாகவும் இருந்து வந்திருக்கிறது
இப்போது அது செய்து பார்த்துவிட்டார்கள். இனி, பிறகு யாரை அவர்கள் எதிரிகளாய்க் கருதுகிறார்களோ, அந்தக் கூட்டத்தில் இருந்தே சில ஆட்களுக்குப் பலவித ஆசைகாட்டிப் பட்டத்தையோ, அரசையோ அவர்களுக்குத் தருவதாகச் சொல்லி சுவாதீனப்படுத்தியும் ஆழ்வார்கள் ஆக்கியும் அவர்களைக் கொண்டு எதிரிகளுக்குத் தொல்லை விளைவித்துத் தோற்கடிக்கச் செய்வது என்பது இரண்டாவது சூட்சியாகும். அந்த முறையையும் கையாண்டு பார்த்துப் பயன்படாமல் போய்விட்டது
இனி, அடுத்த மூன்றாவது முறை என்னவென்றால், தங்கள் அடிமைகளில் சிலரைப் பிடித்து, அவதாரங்கள் என்பதாக ஆக்கி, அவர்களைக் கொண்டு மக்களை ஏமாற்றி எதிரிகளுக்குக் கேடு சூழச் செய்து வருவது
இந்தக் குணங்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குப் பரம்பரைச் சொத்தென்றும், அவைதான் அவர்களது வெற்றிக்கு மார்க்கம் என்பதும் ராமாயணம் முதலிய இதிகாசங்களையும், புராணங்களையும்பார்த்தால்தெரியும்.
குடி அரசு - 1935 (2) 272.
ஆகவே அதுபோலவே இப்போது பார்ப்பனரல்லாதார்களை ஜெயிக்கத் தோழர் ராஜேந்திரப் பிரசாத்தைக் கூட்டி வந்து அவதாரமாக விளம்பரப் படுத்திப் பணம் தண்டவும் தேர்தலில் வெற்றி பெறவும் சூழ்ச்சி செய்கிறார்கள். பொது ஜனங்கள் இப்படிப்பட்ட சூழ்ச்சிக்குக் கண்டிப்பாக இடம் கொடுக்கக் கூடாது என்பதாக நாம் எச்சரிக்கை செய்கிறோம்
தோழர் ராஜேந்திரப் பிரசாத்தைப் பற்றித் தனிப்பட்ட முறையில் நமக்கு உள்ள அபிப்பிராயத்தை முன்பு ஒருமுறை வெளியிட்டிருக்கிறோம் அவர் எப்படிப்பட்டவராய் இருந்தாலும், அவர் வரவழைக்கப்பட்ட காரணமும், அதனால் விளையப்போகும் பயனும் எப்படிப்பட்டது என்று பார்த்தால், கண்டிப்பாக அவரைக் கொண்டு சூழ்ச்சி செய்விக்கப் பார்ப்பனருக்குச் சிறிதும் நாம் இடம் கொடுக்கக் கூடாது என்பதே நமது அபிப்பிராயமாகும்
தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்திய மக்களுக்குத் தகுதி உடைய தலைவராய் இருந்திருப்பாரானால், தென் நாட்டிலிருந்து வரும் தகராருக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதற்குத் தகுந்தபடி பார்ப்பனர்களுக்கு அறிவுறுத்தி ஏதாவது சமாதானம் செய்ய முயற்சித்திருப்பார். ஆனால் இவர் அப்படிக்கெல்லாம் இல்லாமல் ஒரு கட்சியின் சார்பாய் வந்து, பார்ப்பனரல்லாதார் கட்சியையும், மக்களையும் தேசபக்தி இல்லாதவர்கள்; தேசத் துரோகிகள் என்று வைதுவிட்டுப் போக வருகிறார்.
கிளிப்பிள்ளை போல் பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கொட்டி விட்டுப் போகப் போகிறார். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்தப் படியேதான் தோழர்கள் காந்தி, வல்லபாய்படேல், பாங்கர், பஜாஜ், மாளவியா முதலியவர்கள் இந்நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு வைதுவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இந்த உண்மைகளை நன்றாய் உணர்ந்துதான், சென்னை கார்ப்பரேஷன் காரர்கள் தைரியமாய் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
இம்மாகாணத் தலைநகரச்சபை செய்த காரியம் இன்னது என்பதைச் சிறிதுகூட உணராமல் சில உள்நாட்டுப் பட்டணங்களில் வரவேற்பு அளிப்பதாகத் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இந்த நகரசபைக்காரர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குப் பயந்து இந்த மாதிரியான முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபட்டார்களே ஒழிய, மனப்பூர்த்தியாகக் காங்கிரசை மரியாதை செய்யவோ ராஜேந்திர பிரசாத் அவர்களை வரவேற்கவோ வேண்டும் என்று கருதிச் செய்தவர்கள் அல்ல. ஆகவே, வெளிப் பட்டணங்களில் உள்ளவர்கள் தாங்கள் அதிருப்தியைக் காட்டவும், ராஜேந்திர பிரசாத் அவர்களைத் தாங்கள் தலைவர்கள் என்று
273 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஒப்புக்கொள்ளவில்லையென்றும் ராஜேந்திரபிரசாத் அவர்களுக்கும் மற்ற மாகாண
ஜனங்களுக்கும் தெரியும்படியாகச் செய்ய வேண்டியது இவர்களது கடனாகும்.
தோழர் காந்தியார் வரவை பகிஷ்கரித்த மாதிரியானது, காந்தியாராலேயே புகழப்பட்டது மாத்திரமல்லாமல் இந்தியாவே
தென்னிந்தியாவைப் புகழ்ந்தது
'ராஜேந்திரரே திரும்பிப் போம். நீர் எங்கள் பிரதிநிதி அல்ல'' என்று நாம் கருதி இருப்பதை ராஜேந்திர பிரசாத் அவர்கள் அறியும்படி செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களுடையவும் கடமையாகும்
தமிழ் மக்களில் சிலர் சுக்ரீவ ஆழ்வார்களும், ஆஞ்சனேய ஆழ்வார்களும், விபூஷண ஆழ்வார்களும் உண்டு என்பதை நாம் மறைக்கவில்லை. அவர்களால் ராஜேந்திர பிரசாத் வரவேற்கவும் படலாம்
மற்றும் பல கூலிகளும் காலிகளும் இதற்கு உதவியாகவும் இருக்கலாம்.
ஏனெனில் சிலருக்கு அவரால் ஓட்டுக் கிடைக்கலாம் என்பதோடு, அவர் பேரால் வசூல் செய்யப்பட்டும், பணம் இன்னும் ஆறு மாதத்துக்கு காலிகளுக்குப் பயன்படலாம் என்கின்ற எண்ணமும், ஆசையும் ஒவ்வொருவருக்கும் இல்லாமலில்லை. ஆதலால் இந்தக் கூட்டம் அவரை வரவேற்க வேண்டியது அவர்களுக்கு இன்றியமையாத காரணமாகலாம்
ஆனால் உண்மைத் தமிழ் மக்கள் - தன்மானமும், பரிசுத்த குருதி ஓட்டமும் உள்ள தமிழ் மக்கள், ராஜேந்திரரை வரவேற்பது என்பது சத்தமாகச் சுயமரியாதை அற்றதனமாகும் என்பதே நமதபிப்பிராயமாகும்.
ஆங்காங்குள்ள தென்னிந்திய நலஉரிமைச்சங்கங்களும், சுயமரியாதைச் சங்கங்களும் கூட்டங்கள் கூட்டி பகிஷ்காரக் கமிட்டியும் திட்டமும் ஏற்பாடு செய்து, அவரது வரவை பகிஷ்கரித்துக் காட்ட வேண்டியது அவசியமும், ஆண்மையுமான காரியம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
ஆனால், பகிஷ்காரமானது காந்தியார் வந்தபோது பகிஷ்கரித்துக் காட்டியது போலவே சமாதானமாகவும், ஒழுக்கமாகவும், கவுரமாகவும், நடந்து பகிஷ்கரிக்க வேண்டுமே ஒழிய, காங்கிரஸ்காரர்கள் போல். காலித்தனமான முறையில் பகிஷ்கரிப்பது யோக்கியப் பொறுப்பற்ற காரியமேயாகும்
பகிஷ்காரம் வெற்றி பெறாவிட்டாலும் யோக்கியமாகவும், சமாதானமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதும், இவ்விஷயத்தில் காங்கிரஸ்காரர்களைப் பின்பற்றக் கூடாது என்பதுமே நமது முக்கியமான வேண்டுகோளாகும்
குடி அரசு - தலையங்கம் - 06.10.1935
குடி அரசு - 1935 (2) 274
பகிஷ்கமியுங்கள்! இராஜேந்திரப் பிரசாத்தைப்
பகிஷ்கமியுங்கள்!!
தென்னாட்டில் பார்ப்பனச் செல்வாக்கு ஒழிந்ததும், பார்ப்பனச் சூட்சியைத் தென்னாட்டு மக்கள் அறிந்து கொண்டார்களென்றும், தெரிந்த தென்னாட்டுப் பார்ப்பனர்கள் வடநாட்டிலிருந்து தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களைக் கொண்டு வந்து, தாங்கள் இழந்த செல்வாக்கையும், சூட்சியையும் மீண்டும் தென்னாட்டில் நிலைநிறுத்த, தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களுக்குப் பார்ப்பனீய மந்திரோச்சாடனம் செய்வித்து, ஊர் ஊராக அழைத்து வந்து, பார்ப்பனரல்லாத கட்சியையும், இயக்கத்தையும், தலைவர்களையும் தூற்றித் தங்கள் சூழ்ச்சியை நிலைநிறுத்தவும் பணந் திரட்டவும் வருகிறார்கள்.
தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களே! சுயமரியாதைத் தோழர்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு உண்மையுள்ள பார்ப்பனரல்லாத இரத்தமும், சுயமரியாதை இரத்தமும் ஓடுமானால், தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களைப் பகிஷ்கரித்து நமது வெறுப்பைத் தோழர் பிரசாத் அவர்கள் அறியும்படி செய்ய வேண்டும்
சுயமரியாதைச் சங்கங்களும், பார்ப்பனரல்லாத சங்கங்களும் உடனே கூட்டங்கள் கூட்டி, பகிஷ்காரத் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியிட்டுப் பகிஷ்காரஞ் செய்ய வேண்டுகிறோம்
குடி அரசு - வேண்டுகோள் - 06.10.1935
278௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இராசீபுரம் தாஜாகா தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு
எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக்கூடாது என்று சொல்ல வேண்டியவணாய்
இருக்கின்றேன்.
உங்களுக்குள் தேசாபிமானம்என்கின்றயோக்கியமற்ற சூட்சிக்குநீங்கள் ஆளாகக் கூடாது. அது சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோக்ஷ நரகம் என்பது போன்ற மூடநம்பிக்கையாகும்
உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம் தான் உண்மையாய் வேண்டும். தேசாபிமானம் என்பதைப்போல் அர்த்தம் தெரியாததும் சூட்சி நிறைந்ததுமான வார்த்தை அல்ல நான் இப்போது உங்களுக்குச் சொல்லும் சுயமரியாதை என்கின்ற வார்த்தை. நீங்கள் மனித சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். மிருகங்களில் மிக மிகக் கீழாகவும், இழிவாகவும், கருதப்படுகின்ற நாய், கழுதை, பன்றி ஆகியவைகளை மதிப்பது போலக்கூட நீங்கள் மதிக்கப்படுவதில்லை என்று உங்கள் வரவேற்புத் தலைவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள் அதைத்தான் நானும் சொல்லி அந்தக் காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும், மனிதத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறேன். இதை நீங்கள் மனதில் கெட்டியாய்ப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் இன்றைய தேசாபிமானம் என்பது உங்களுடைய சுயமரியாதையையும் முற்போக்கையும் தடுப்பதாகவே இருந்து வருகின்றது
அதற்கு ஆகவே தேசாபிமானம் என்பது கற்பிக்கப்பட்டது என்றுகூட சொல்லலாம்.
காந்தியாருடைய தேசாபிமானத்தைப் பார்த்தாலே மற்றவர்கள் தேசாபிமானத்தின் யோக்கியதையைப்பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை. வட்டமேஜை மகாநாட்டில் உங்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படும் பட்சத்தில் அது தனது தேசாபிமானதுக்கு விரோதமானதென்றும், உயிரைவிட்டாவது உங்கள் தனிப் பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதுதான் தனது தேசாபிமானம் என்றும் காந்தியார் சொல்லவில்லையா?
குடி அரசு - 1935 (2) 276
அவரை உங்கள் தலைவர் என்றும், அவர் கொண்ட தேசாபிமானம்
தான் உங்கள் தேசாபிமானம் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுவீர்களானால் உங்கள் கட்சி என்ன ஆகி இருக்கும்
மற்ற தேசாபிமானக்காரர்கள் தங்களுக்கு எந்தெந்த மாதிரி பிரதிநிதித்துவம் கேட்கிறார்களோ அது உங்களுக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து இருக்க வேண்டாமா?
கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், சீக்கியர்கள், நாட்டுக்கோட்டையார்கள் என்கின்ற பிரிவுக்காரர்களும், ஜாதிக்காரர்களும் தனிப்பிரதிநிதித்துவம் பெறும்போது நீங்கள் தீண்டப்படாதவர்களாய் இருக்கிறவர்கள் தனிப் பிரதிநிதித்துவம் பெறுவது தேசாபிமானத்துக்கு விரோதமென்றால் அப்படிப்பட்ட தேசாபிமானத்தின் யோக்கியதையை நான் சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றேன். ஆகவே தேசாபிமானம் என்பதும், சீர்திருத்தமென்பதும், கஷ்டப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட மக்கள் விடுதலை அடையக்கூடாது என்பதோடு பாமர
மக்கள் சீர்திருத்தம் - முன்னேற்றம் அடையக் கூடாது என்பதுமேயாகும்.
அரசாங்கத்தார் வழங்கிய சீர்திருத்தத்தில் உங்களுக்கு சுயமரியாதை உள்ள சீர்திருத்தம் இருந்தது. அதை தேசாபிமான சீர்திருத்தம் என்னும் பூனா. ஒப்பந்தம் பாழாக்கிவிட்டது
பூனா ஒப்பந்தத்தை உங்களில் சிலர் ஆதரிப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக மிக ஆச்சரியமாய்
இருக்கிறது அதாவது நீங்கள் மேல்ஜாதிக்காரர்களைப் போய் வோட்டு கேட்க வேண்டுமாம். மேல் ஜாதிக்காரர்கள் உங்களை வந்து ஓட்டு கேட்க வேண்டுமாம். இதில் பரஸ்பர ஸ்நேகம் ஏற்படுமாம்
இது “மைனா பிடிக்கின்ற வித்தை"யே ஒழிய இதில் நாணயமோ அறிவுடமையோ இல்லை.
பார்ப்பார் அதிகாரியாய் இருக்கிற கச்சேரிக்குள் நீங்கள் போக வேண்டுமானாலே சர்க்கார் உத்திரவும், பொதுத் தெருவில் நீங்கள் நடக்க வேண்டுமானாலே பினல் கோட் சட்டமும் வேண்டி இருக்கிறபோது நீங்கள். பார்ப்பன அக்கிராரத்தில் நடந்து போய் அவர்கள் வீட்டு வாசல் நடை கடந்து உள் ஆசாரத்தில் படுத்து வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் பார்ப்பானிடம் போய் ஓட்டுக் கேட்க முடியுமா? மற்றும் அதுபோலவே தன்னை மேல்ஜாதிக்காரன் என்றும் உங்களைத் தீண்டத்தகாதவன் என்றும்
கருதிக் கொண்டிருக்கும் மற்ற ஜாதியாரிடமாவது நீங்கள் போய் ஓட்டுக் கேட்க முடியுமா? 277௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அவர்களாவது உங்கள் சேரிக்கு எலும்பையும் தோலையும் குப்பையையும் மயிரையும் மிதித்துக் கொண்டு வந்து ஓட்டுக் கேட்டு விடுவார்களா? அவ்வளவு மனமாற்றம் ஏற்பட்டிருக்குமானால் உங்களை கோவிலுக்குள் விடுவதாக வாக்குறுதி கொடுத்து பூனா ஒப்பந்தம் செய்து கொண்ட காந்தியார் இன்று பொது ஜனங்கள் அதற்குத் தயாராய் இல்லை ஆதலால் அது சம்மந்தமாக ஒரு சட்டமும் கொண்டு வரக்கூடாது என்று சொல்ல முடியுமா?
இந்திய சட்டசபைக்குச் சென்ற காங்கிரஸ் தேச பக்தர்களாவது சமூக சீர்திருத்த சம்மந்தமாக எவ்வித சட்டமும் கொண்டுவர முடியாது என்று சொல்லுவார்களா?
ஒருதோட்டியை விட்டு உங்கள் எல்லோரையும் இழுத்துவரச் செய்து தங்கள் இஷ்டப்படி ஓட்டு போடாவிட்டால் உதைப்பேன் என்று எச்சரிக்கை செய்து வெளிப்படையாய்ச் சொல்லிவிட்டுப் போகும்படி செய்வார்களே ஒழிய உங்களை வந்து ஓட்டுக் கேட்பார்களா?
அப்படியே நீங்கள் கேட்பதாகவே வைத்துக் கொண்டாலும் உங்களில் சுதந்திரபுத்தி உள்ளவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா?
அப்படியே போடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அதனால் இரண்டு ஜாதிக்கும் அதாவது பற ஜாதிக்கும் பார்ப்பார ஜாதிக்கும் பரஸ்பர நம்பிக்கை ஏற்பட்டு விடுமா?
இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்றவர்களுக்கு ஒரே தொகுதி இருந்தும் ஒருவருக்கொருவர் ஓட்டுக் கேட்டும் இன்று இரு ஜாதியும் பரஸ்பர சினேகமாய் இருக்கிறார்களா?
இதுவெல்லாம் உங்களை ஏமாற்றச் செய்யும் சூட்சியே அல்லாமல் உண்மையில் நாணயமான காரியமல்ல என்பதை மனதில் இருத்துங்கள்.
இன்று இந்நாட்டில் முகமதியர் இந்துக்கள் என்பவர்களை ஓட்டுக் கேட்காததினாலும் இந்துக்கள் என்பவர்கள் முகமதியர்களை ஓட்டுக் கேட்காததினாலும் ஒருவரை ஒருவர் தெருவில் விடாமல் உதைத்து விரட்டுகிறார்களா? ஆகவே நீங்கள் தேசாபிமானம், மகாத்மா என்கின்ற வார்த்தைகளுக்கு உட்பட்டதின் பயனால் உங்கள் சுயமரியாதை வழியைத்தான் அடைத்துக் கொள்ளப் போகிறீர்கள்.
குறிப்பு: 06.10.1935 குடிஅரசு சொற்பொழிவு தொடர்ச்சி.
குடி அரசு - சொற்பொழிவு - 13.10.1935
குடி அரசு - 1935 (2) 278
தற்கால அரசியல் நிலை
தோழர்களே!
தற்கால அரசியல், ஜஸ்டிஸ் காங்கிரஸ் கட்சிகள், ஜில்லா போர்டு தேர்தலும் அரசியல் கட்சிகளும் என்கின்ற தலைப்புகளானது வெவ்வேறாகக் காணப்பட்டாலும் அவற்றைப் பற்றிய விஷயங்கள் இன்றைய நிலையில் பெரிதும் ஒரே தத்துவமும் ஒரே கருத்தும் கொண்டதாகத்தான் இருக்கிறது
தற்கால அரசியலானது ஜஸ்டிஸ் காங்கிரஸ் கட்சி போராட்டங்களாகவும், அப்போராட்டங்கள் பெரிதும் தேர்தல்களையும், பதவிகளையும், உத்தியோகங்களையும் பற்றியதாகவும் இன்று அவை குறிப்பாக ஜில்லா போர்டு தேர்தல்களையும் பிரசிடெண்டு பதவிகளையும் பொருத்ததாகவுமே இருக்கின்றன.
அரசியலும் கட்சிப் போர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்ததோ அன்று முதலே ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதைகளும் நாணயங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும் சுயநலக்காரர்களுக்கும் தாயகமாகவும் பிழைப்புக்கிடமாகவும் ஏற்பட்டுவிட்டது.
ஸ்தல ஸ்தாபனம்
ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் சம்மந்தப்பட்ட வரையில் அரசியல் கட்சியும் தேசாபிமான சூட்சியும் பிரவேசிக்கக் கூடாது என்பது எனது வெகுநாளைய அபிப்பிராயம். சுமார் 15 வருஷ காலமாகவே இதை நான் வலியுறுத்துகிறேன். ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களைப் பொறுத்தவரை சகல பதவிகளில் இருந்தும் அனுபவம் பெற்றதை ஆதாரமாக வைத்தே சொல்லி வருகிறேன். ஸ்தல ஸ்தாபனம் என்பவற்றிற்கும் அரசியல் கொள்கை என்பதற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது என்று ஏன் சொல்லுகிறேன். என்றால், ஸ்தல ஸ்தாபனம் என்பது ஒரு கிராமத்தையோ, நகரத்தையோ, ஜில்லாவையோ தான் பொறுத்ததாகும். அதுவும் அவற்றுள் இன்ன இன்ன காரியம் செய்ய வேண்டியது என்பதும், இன்ன விதமாய்ச் செய்ய வேண்டியது என்பதும், இன்ன நிர்வாகத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது என்பதும், இன்ன சட்டத்திற்கு அடங்கி நடக்க வேண்டுமென்பதும் வரையறுக்கப்பட்டதாகும்
279 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதை மீறியோ அல்லது அதை அலட்சியப்படுத்தியோ எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதோடு இதற்கு அதிகமான அரசியல் ஞானம் ஒன்றும் தேவையுமில்லை.
ரோட்டுப் போடுவது, ரோட்டுகளை நன்றாய் வைத்திருப்பது, குடி தண்ணீர் வசதி செய்து கொடுப்பது, பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தி நிர்வகிப்பது, வைத்தியம், சுகாதாரம் ஆகிய வசதிகள் செய்வது முதலிய காரியங்களே ஸ்தல ஸ்தாபன நிர்வாகமாகும். இதற்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள அனுபவசாலிகளும், பரோபகார உணர்ச்சியுள்ளவர்களுமே தேவையாகும். இதற்கு ஆக தெரிந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை இவர் காங்கிரஸ்காரரா ஜஸ்டிஸ்காரரா என்று பார்க்க வேண்டியதில்லை. மேற்கண்ட விஷயங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்சியிலும் கொள்கை வித்தியாசமில்லை. நிர்வாகத்தில் நாணயக் குறைவு இருப்பதோ அசிரத்தை இருப்பதோ ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பதோ, மெம்பர் களுக்குக் கண்ட்ராக்ட்டுக் கொடுப்பதோ மெம்பர்களும், தலைவர்களும் இதில் பணம் சம்பாதிப்பதோ முதலாகிய கெட்ட காரியங்கள் இன்று எந்தக்
கட்சியிலும் கொள்கையாக இல்லை.
அபேக்ஷகர் யோக்கியதை.
அந்தப்படி ஏதாவது நடக்குமானால் அது தனிப்பட்ட நபர்களின். காரியமே ஒழிய கட்சிக் கொள்கையின் திட்டம் என்று எந்த மடையனும் சொல்ல முடியாது. இந்தக் காரியங்கள் இன்று காங்கிரஸ் கட்சியின் பேராலும் காங்கிரஸ் அபிமானத்தாலும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு வந்த அனேக பிரசிடெண்டுகளிடமும், மெம்பர்களிடமும் தாராளமாய் இருந்து வருகிறது. அதை நான் பல தடவை எடுத்துக் காட்டி வந்திருக்கிறேன். சென்னை, கோவை முதலிய ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள காங்கிரஸ் அங்கத்தினர், தலைவர்கள் ஆகியவர்களுடைய யோக்கியதையே
இதற்குத் தகுந்த உதாரணமாகும் தேசாபிமானிகள், தேசபக்தர்கள் என்று ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றிய சில தோழர்களுடைய யோக்கியதையை நன்றாய்க் கவனித்துப் பார்த்தால் “தேசாபிமானம் என்பது காலிகளின் கடைசி வாழ்க்கை மார்க்கம்” என்று சொன்ன அறிஞரின் ஞான மொழி எவ்வளவு சரியானது என்பது எவ்வளவு ஞானமற்றவனுக்கும் விளங்கும். இந்த ஜில்லா போர்டு தேர்தலுக்காகக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் கட்சி சார்பாய் சில ஆட்களை நிறுத்தி தங்கள் கட்சிக்கே ஓட்டுக்கொடுக்க வேண்டுமென்று பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இதுபோலவே மற்றும் பல இடங்களிலும் செய்து வருகிறார்கள். அப்படிச் செய்வதில் தங்கள் யோக்கியதைகளையும் ஸ்தல ஸ்தாபன
குடி அரசு - 1935 (2) 280
விஷயமாய் மற்ற கட்சிக்காரர்களிடம் இல்லாத தங்கள் கொள்கைகளையும் சொல்லியோ அல்லது அதற்குத் தகுதியாகத் தங்கள் நபர்கள் இருப்பதையோ சொல்லிப் பிரசாரம் செய்யாமல் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை வைவதும் தாங்களே தேசாபிமானிகள் என்றும், அரசாங்கத்தோடு போர்புரிகிறவர்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் தேசத்துரோகிகள் என்றும், அவர்கள் அரசாங்கத்துக்கு அடிமைகள் என்றும், மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், தாங்கள் யோக்கியமாய் நடந்து கொள்ளுகின்றவர்கள் என்றும் பாமர மக்களிடம் அயோக்கியத்தனமாய்ப் பேசி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.
தேசாபிமானம்
தேசபக்தி, தேசாபிமானம் என்கின்ற பேச்சே இந்துக்கள் அகராதியில் கிடையவே கிடையாது. புராண காலங்களிலானாலும் மற்ற தமிழ் அரசர்கள். காலங்களிலானாலும் சாஸ்திரம், புராணம், தமிழ் இலக்கிய இலக்கணம் ஆகிய எதிலும் தேசாபிமானம் அரசர்களோடு உரிமைக்கு போராடுதல் ஆகிய வார்த்தைகளே காண முடியாது
அரசர்களை, கடவுளாகவும், கடவுளவதாரமாகவும், கடவுள் தன்மை பெற்றவர்களாகவும் பாவிக்க வேண்டும் என்பது ஆரியர்களின் சித்தாந்த
மாகும். அரசரோடு எதிர்த்தால் அந்நாடும் அந்த நபர்களும் அழிந்து போகும் என்றும் நரகம் கிடைக்குமென்றும் அனேக ஆதாரங்கள் இருக்கிறது
வேண்டுமானால் ஆரியர்கள் அனாரியர்கள் சண்டைகளும், அபிமானம் துவேஷம் ஆகியவைகளும், ஆரியர்கள் கருப்பு நிறக்காரர்களை ஒழிக்கப் பிரார்த்தனைகளும் சூட்சிகளும் நடந்ததாகவும் அதற்கேற்ற அரசை ஸ்தாபிக்க முயற்சித்து வெற்றி பெற்றதாகவும், வேதம் புராணங்கள் ஆகியவைகளில் காணக் கிடக்கின்றன.
இந்த நாட்டில் ஜாதி மதப் பூச்சாண்டிகளுக்கு யோக்கியதை அற்றுப் போனதோடு அவற்றின் வண்டவாளங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்பேதான் தேசாபிமானப் பூச்சாண்டி பார்ப்பனர்களால் கண்டுபிடிக்கப் பட்டதே ஒழிய வேறில்லை. ஆகவே மக்களை ஏமாற்றப் பார்க்கும் ஒருதந்திரம்தான்தேசாபிமானமே
அல்லாமல் அதில் அருத்தம் கிடையாது
ஜஸ்டிஸ் கட்சி எண்ன கெடுதி செய்தது யாரை ஏமாற்றிற்று
எப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியானது மக்களுக்கு என்ன கெடுதி செய்தது என்பதையும், மக்களை எதில் ஏமாற்றியது என்பதையும், எந்தக் காங்கிஸ்வாதியோ ஏதாவது ஒரு தேச பக்தனோ இன்று விரல் மடக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள் 2௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பொது ஜனங்களை LMD s பறித்து காலிகளுக்கும் கூலிகளுக்கும் கொடுத்து ஏவி விட்டு வையச் செய்வது தேசாபிமானமாக ஏற்பட்டு விடாது.
ஜஸ்டிஸ் கட்சி பொது ஜனங்களிடம் ஒரு வருஷத்தில் சுயராஜ்யம் வாங்கித் தருகின்றேன் என்று யாரை ஏமாற்றி எத்தனை கோடி ரூபாய்களை
வசூல் செய்தது? இதோ தெரிகிறது சுயராஜ்யம் அதோ தெரிகிறது சுயராஜ்யம்; இன்னமும் கொஞ்சம் பணம் கொடுங்கள் என்று எப்போதாவது சொல்லி யாரை ஏமாற்றிற்று?
கதர் கட்டினால், கைராட்டினம் சுற்றினால் சுயராஜ்யம் வருமென்று அதற்காக எத்தனை லக்ஷ லக்ஷ ரூபாய் வசூல் செய்தது?
ஐயிலுக்குப் போனால் தான் சுயராஜ்யம் வருமென்று எத்தனை பேரை ஐயிலுக்கு அனுப்பிற்று?
உதைபட்டால் அடிபட்டால் தான் சுயராஜ்ஜியம் வருமென்று எத்தனை பேரை அடி உதை படச் செய்தது?
சட்டம் மீறினால், சத்தியாக்கிரகம் செய்தால் சுயராஜ்யம் வருமென்று எத்தனை பேரை சண்டித்தனம் செய்யும்படி தூண்டிற்று
சர்க்கார் பேரில் துவேஷம் ஏற்படும்படி செய்வதே நமது கடமை என்றும், சட்டசபைகளை பகிஷ்கரிப்பதே சுயமரியாதை என்றும் வீரப் பிரதாபம் பேசிவிட்டு ராஜபக்தி, ராஜ விசுவாச சத்தியம் செய்து கொண்டு எந்தெந்த சட்டசபையில் எங்கெங்கு மானம்கெட்டு உட்கார்ந்து படி வாங்கிப் பிழைத்துத் திரிந்தது?
எந்தெந்தத் தேர்தலில் சமயத்துக்குத் தக்க பொய்யான வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்றவுடன் குட்டிக்கரணம் போட்டது?
எந்தெந்த தேர்தலில் கழுதைகளும் நாயுந்தான் சட்டசபைக்குப் போகும் என்று சொல்லி கழுதைக்கு அட்டை கட்டி ஓட்டுப் போடும்படி கேட்டுவிட்டு இப்போது கழுதைக்கும், நாயுக்கும் பதிலாகப் போய் மண்டி போட்டுச் சலாம் செய்கிறது?
எந்தெந்த சட்டசபைகளை கள்ளுக்கடை என்று சொல்லிவிட்டு இப்போது அந்தச் சட்டசபைகளுக்குக் காசி யாத்திரை போல் போய் தொங்கிக் கொண்டு இருக்கிறது? இவை ஒன்றும் ஜஸ்டிஸ் கட்சி செய்யவில்லையே?
அது எந்த ராஜாங்கத்தையும் அழித்து விடுவதாகவோ கவிழ்த்து விடுவதாகவோ ஒருவரிடமும் ஒப்பந்தம் பேசி ஒரு காசுகூட அட்வான்சோ, உண்டியல் பிச்சையோ எடுக்கவே இல்லையே
குடி அரசு - 1935 (2) 28
&
ஜஸ்டிஸ் கொள்கை
அது ஏற்பட்டதற்குக் காரணமும் அதன் கொள்கையும் ஒரே ஒரு விஷயம் தானே. அதாவது தேசாபிமானம், சுயராஜ்ஜியம் என்னும் பேரால் மக்களை 35 வருஷ காலம் ஏமாற்றி மோசம் செய்து சுயநலம், சுயவகுப்பு அபிமான
நலம் அடைந்து வந்த பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தை வெளியாக்கி அரசியல் பிரதிநிதித்துவத்திலும், உத்தியோகத்திலும் சகல வகுப்பு
மக்களுக்கும் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் ஏற்படும்படி செய்வது என்னும் கொள்கையையே பிரதானமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதாகும்.
இந்தக் கொள்கையுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பித்த தலைவர்கள்
யார் என்பது பார்த்தாலோ,
வெகுகாலமாகக் காங்கிரசில் இருந்து தேசபக்த பட்டம் பெற்று அரசாங்கக் கண்காணிப்புக்கு ஆளாகி சதா சர்வகாலம் C.LD. உத்தியோகஸ் தர்களுக்கு மத்தியில் இருந்த தேசாபிமானி என்று கருதப்பட்ட தோழர் டாக்டர் நாயர் அவர்களாலும், சர். தியாகராயச் செட்டியாராலும் ஏற்படுத்தப்பட்டதே ஒழிய கவர்னராகவும், மந்திரியாகவும், பிரதம காரியதரிசியாகவும் வரவேண்டும் என்று ஆசை கொண்டு சதா நாக்கில் தண்ணீர் சொட்டவிட்டுக் கொண்டிருக்கும் “தேசீய வீரர்கள்" என்று தங்களுக்குத் தாங்களே தலைமை சூட்டிக் கொள்ளும் நபர்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல ஆகவே இப்படிப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை நிர்த்தாரணம் செய்யத் தோன்றிய ஜஸ்டிஸ் கட்சியானது எந்த மக்களிடமாவது ஒன்றைச் சொல்லி மற்றொன்றைச் செய்து ஏமாற்றி இருக்கிறதா?
ஜஸ்டிஸ் வாக்குறுதி.
ஜஸ்டிஸ்கட்சி எந்ததேர்தலுக்குநின்றாலும் ஜனங்களிடம் யோக்கியமாய் நாணயமாய் உண்மையைச் சொல்லி அதாவது,
நாங்கள் சர்க்காரிடம் ஒத்துழையாமை செய்ய மாட்டோம் என்றும்,
சட்டம் மீற மாட்டோம் என்றும்,
சட்டத்திற்கும் சமாதானத்துக்கும் களங்கம் ஏற்படும்படி சர்க்காராலும் பொது ஜனங்களாலும் கருதும்படி நடக்க மாட்டோம் என்றும், சீர்திருத்தத்தை உடைக்க மாட்டோம் என்றும்,
அதிக சீர்திருத்தம் பெறவும் மக்களுக்கு நன்மை செய்யவும் மந்திரி வேலையை ஏற்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கைப்படி எங்களால் கூடியதைத்தான் செய்வோமென்றும்,
283 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பொது ஜனங்களிடம் வாக்குக் கொடுத்துத்தான் ஓட்டு வாங்கி இன்று அந்தப்படி நிர்வாகம் செய்து வருகிறார்களே ஒழிய, அதுவும் இன்று நேற்று அல்லாமல் இந்த 20 வருஷ காலமாய் அதே கொள்கையோடு பொது ஜன ஓட்டுப் பெற்று தொடர்ந்து நிர்வாகம் செய்து வருகிறார்களே ஒழிய வருஷத்துக்கு ஒரு கொள்கை மாற்றியோ மாதத்துக்கு ஒரு திட்டம் மாற்றியோ பொது ஜனங்களை ஏமாற்றியோ ஏதாவது காரியம் செய்து வருகிறார்களா என்று கேட்கிறேன்.
எதற்கு ஆக ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவது? அது செய்த தவறுதல் இன்னது என்றாவது அயோக்கியத்தனம் இன்னது என்றாவது இன்று எந்த மனிதனாவது விரல் விடமுடியுமா என்று கேட்கிறேன்.
பல பொறுப்பற்ற அயோக்கியர்களும் கூலிகளும் காலிகளும் ஜஸ்டிஸ் கட்சி பெண்கள் தாலி அறுத்ததென்றும், தேசாபிமானிகளையும் தேசபக்தர்களையும் அடித்து உதைத்து துன்பப்படுத்திற்றென்றும், வரி குறைக்கவில்லை என்றும், மழை பெய்விக்கச் செய்யவில்லை என்றும் குலைக்கின்றனர்.
இவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு சம்பந்தப்பட்ட வேலை அல்ல என்பதும் இதற்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சி பொறுப்பாளி அல்லவென்றும் அரசியல் அரிவரி படித்த மடையனுக்குக் கூடத் தெரியும்.
ஜாதிப் போரோ கட்சிப் போரோ நடத்துவதாய் இருந்தால்
யோக்கியமாய், மானமாய், ஆண்மையாய் வீரர்களைக் கொண்டு போர் நடத்த வேண்டும். ஆனால் இன்று நம் பார்ப்பனர்கள் யோக்கியம், ஆண்மை, மானம், வீரம் ஆகியவைகளை அடியோடு துலைத்து விட்டு மானமற்ற காலிகளையும், எச்சிலை வாழ்வுக்காரர்களையும் பிடித்து இம்மாதிரி தப்பான பிரசாரத்தைக் கொண்டு அதுவும் கல்வி அறிவு என்பது 1000க்கு 50 பேருக்குகூட இல்லாத பாமர மக்களிடையிலும் 1000க்கு 10 பேருக்குக் கூட கல்வி அறிவில்லாத பெண் மக்களிடையிலும் விஷமப் பிரசாரம் செய்து ஏய்ப்பதென்றால் இது மானமுள்ள ஜாதிப் போராட்டமோ ஆண்மையுள்ள அரசியல் கிளர்ச்சியோ ஆகுமா என்று கேட்கிறேன்.
ஜஸ்டிஸ்காரர்கள் ஜெயிலுக்கு போகவில்லை என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ்காரர்கள் ஜெயிலுக்கு போவதால் பயன் உண்டு என்று கருதினால் காங்கிரசுக்காரர்களைவிட 10 பங்கு பேர் ஜெயிலுக்கு போக முடியும். ஜெயில் என்பது தேள், பாம்பு நிறைந்த இடம் அல்ல.
நானும் 7, 8 தரம் போய்வந்துதான் இருக்கிறேன். அங்கு தேச
பக்தர்களுக்கு தினமும் அல்வாவும், அக்காரவடிசலும், நெய்யும், தயிரும், பாலும், கட்டிலும், மெத்தையும், மேஜையும், நாற்காலியும் தாண்டவ மாடுவதை நேரிலேயே பார்த்துத்தான் இருக்கிறேன்.
குடி அரசு - 1935 (2) 284
உண்மை தெரிய வேண்டுமானால் என்னைப் பொறுத்தவரை
சர்க்கார் கொடுத்த கட்டிலும், மெத்தையும், நாற்காலியும் மற்ற சில சவுகரியமும் வேண்டாம் என்று தூக்கி வீசி எறிந்துவிட்டு சும்மா இருந்துவிட்டு வந்தேன். வேண்டுமானால் ராஜமேந்திர ஜெயில் சூப்ரண்டுக்கு
எழுதி கேட்டுக் கொள்ளலாம்
தோழர்கள் சத்தியமூர்த்தி முதல் ராகவாச்சாரி வரையில் அவரவர்கள் வீட்டில் அனுபவிக்கும்யோக்கியதைக்கு மேல்10 பங்கு அனுபவித்து வந்தார்கள்.
இன்றும் ஜெயிலில் போகிற ஆட்களுக்குத் தகுந்தபடி சிபார்சுக்குத்
தகுந்தபடி பார்ப்பன சொந்தக்காரர்களுக்குத் தகுந்தபடி காசுக்குத் தகுந்தபடி நடக்கின்ற முறை இருக்கிறது என்பது கிரிமினல் கைதிக்குக் கூடத் தெரியும்
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஜெயில் ஒரு பூச்சாண்டி அல்ல என்றே சொல்லுவேன். மற்றபடி காங்கிரஸ்காரர்கள் கும்பல் கும்பலாக ஜெயிலுக்கு போனார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கடைசியாக தாங்கள் செய்தது தவறு என்று உணர்ந்தோ அல்லது சர்க்காரை ஏமாற்ற என்று கருதியோ “இனிமேல் அப்படிச் செய்யவில்லை எங்களைத் திறந்து விடுங்கள்” என்று எழுதி காந்தியார் கையொப்பமிட்ட பிறகு வெளியில் வந்தவர்களே ஒழிய காலாவதி கடந்து வந்தவர்களோ அல்லது சுயராஜ்ஜியம் ஏற்பட்டு ஜெயில்களை உடைத்துக் கொண்டு வெளி வந்தவர்கள் அல்ல அல்லது வந்தவுடன் மறுபடியும் ஜெயிலிலே வாசமாய் இருந்தவர்கள் என்றாவது யாரையாவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறேன்.
காந்தி இர்வின் ஒப்பந்தம் என்ன என்று கேட்கிறேன்.
“காந்தியார் இனிமேல் சட்டம் மீறக் கூடாது”
“சர்க்கார் எல்லாரையும் திறந்துவிட்டு விட வேண்டியது” என்பதல்லாமல் அதில் ஏற்பட்ட சுயராஜ்யம் என்ன என்று கேட்கிறேன். அது மாத்திரமா? இன்றைய காங்கிரஸ் தீர்மானம் தான் என்ன?
“காங்கிரஸ் சட்ட மறுப்பை சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைத்து விட்டது (கைவிட்டு விட்டது) ஆதலால் (பொய்யாகவோ மெய்யாகவோ) “சட்டமறுப்பில் நம்பிக்கைக் கொண்ட காந்தியார் காங்கிரசை விட்டு விலகிக் கொண்டார்” என்பதல்லாமல் வேறு என்ன?
அன்றியும் சட்டமறுப்பைக் கைவிட்ட பிறகு காங்கிரஸ் சர்வாதிகாரி (காந்தியார்) வைசிராயை தாங்களாகவே வலுவில் பேட்டி காண ஆசைப்பட்டும் பல தடவை ஆசைப்பட்டும் “பேட்டி கொடுக்க முடியாது” என்று சொல்லியும் காங்கிரசின் சுமரியாதையானது இந்திய சட்டசபைக்கும் போய் வைசிராயைப் பார்த்து எழுந்து நின்று தலை வணங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதே ஒழிய மானத்தோடு வாழ முடிந்ததா என்று யோசித்துப் பாருங்கள்.
285 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஜஸ்டிஸ் கட்சியாருக்கு அவமானம் ஏற்பட்டவுடன் அவர்கள் ஏன்
ராஜீனாமா செய்யவில்லை” என்று கூலிப் பிரசாரர்கள் கேட்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியார் அவமானப்படும்படியாக அவர்கள் கொள்கை இவ்வளவு மோசமாக எங்கும் தோற்கடிக்கப்படவில்லை
அன்றியும் தோற்கடிக்கப்பட்டால் வெளியில் வந்து விடுவதாக
யாரிடமும் சொல்லவுமில்லை.
ஆனால் காங்கிரஸ்காரர்கள் தீர்மானம் 45 தடவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டது
ஒருவருக்காவது சொரணையோ சூடுள்ள ரத்த ஓட்டமோ சிறிதுகூட இருப்பதாகக் காட்டிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு அவமரியாதைக்கும் புருஷனைச் சாகக் கொடுத்த பெண் போல் முக்காடு போட்டுக் கொண்டு பிரயாணப்படியை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வதும் மறுபடியும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவதுமாய் இருக்கிறார்கள். இவ்வளவு அவமானம் பெற்றும் அந்தப் பதவியை பூணூல் உச்சிக் குடுமி போல் காப்பாற்றுகிறார்கள். ஆகவே இவர்கள் எந்த முகத்தைக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை குறை கூற முடியும். எனவே தோழர்களே, இப்படிப்பட்ட ஜில்லா போர்டு தேர்தலுக்கு உங்களில் பெரும்பாலோருக்குப் புரியாத கட்சி விஷயங்களால் குழப்பமடையாமல் உங்களுக்கு நேரில் தெரிந்த பொதுநல ஊக்கமுள்ளவர். களையும் பொதுநல வாழ்வில் சுத்தமூள்ளவர்களையும் தேர்ந்தெடுங்கள்.
குறிப்பு: 02.10.1938 ஆம் நாள் முதல் 06.10.1935 ஆம் நாள் முடிய திருநெல்வேலி மாவட்ட சுற்றுப் பயணத்தின்போது ஆற்றிய சொற்பொழிவுகளின் சருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 13.10.1935
குடி அரசு - 1935 (2) 286
காங்கிரசின் யோக்கியதை
இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்பட்டு சுமார் 50 வருஷமாகிறது. அது ஆரம்பமானது முதல் சுமார் 35 வருஷ காலம் வரையில்,
அரசாங்கத்தினிடமிருந்து பல உத்தியோகங்கள் பெறுவதும்,
உத்தியோகங்களுக்குச் சம்பளங்கள் உயர்த்தப்படுவதும்,
புதிய உத்தியோகங்கள் கற்பிக்கப்படுவதும்,
புதிய கோர்ட்டுகள், புதிய அரசாங்க ஆபீசுகள், புதிய இலாக்காக்கள், அவற்றிற்கு புதிய புதிய உத்தியோகஸ்தர்கள் முதலியவைகளை ஏற்படுத்த வேண்டுமென்று கோரி அந்தப்படி அதிகப்படுத்துவதும்,
இதற்கு வேண்டிய செலவிற்காக அரசாங்கத்தைக் கொண்டு பொது ஜனங்களின் மீது புதிய புதிய வரிகள் போடச் செய்து வசூலிப்பதும்,
இந்தப்படி புதிதாக போடப்படும் வரிகள் பணக்காரர்களையோ, பெரிய உத்தியோகம் பார்த்து அதிக சம்பளம் வாங்கும் பணக்கார உத்தியோகஸ்தர்களையோ பாதிக்காமல் பெரிதும் ஏழை மக்கள் சாதாரண மக்கள், தொழிலாளிகள், கூலிகள் ஆகியவர்களையே பாதிக்கும்படியான மாதிரியில் வரி விதிக்கப்படுவதுமான காரியங்களையே செய்து வந்திருக்கிறது இவ்வளவு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் ஏற்பட்டு 35 வருஷ காலம் வரை இந்திய தேசீய காங்கிரஸ் மகாநாடு என்பவைகள் கூட்டப்பட்டவுடன். முதல் தீர்மானமாக அரசாங்கத்தையும், சக்கரவர்த்தி பெருமானையும், புகழ்ந்து கூறி, “அரசர், அல்லது சக்கரவர்த்தி, விஷ்ணுவின் அவதாரம்” என்றும் பேசி “அரசருக்கும், அரச சந்ததிகளுக்கும், அரசாங்க சட்டதிட்ட
நீதி நிர்வாகங்களுக்கும், தாங்களும் தங்கள் சந்ததிகளும் பக்தி விஸ்வாசத்துடன் கட்டுப்பட்டு நடப்போமாகவும்'” என்று முதல் தீர்மானம்
தோழர்கள் சுரேந்தரநாத் பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி, பாலகங்காதர திலக், கோகலே, பெசண்ட், கரம்சந்தர மோகன்தாஸ் காந்தி முதலாகியவர்கள் மற்றும் தேசியவாதிகள், தேசாபிமானிகள் என்பவர் களாலேயே பிரரேபித்தும், ஆமோதித்தும், ஆதரித்தும், ஓட்டுக் கொடுத்தும் நிறைவேற்றுவதும், இத்தீர்மானங்கள் பிரரேபிக்கப்படும்போது ஒழுங்காகவும் உண்மையான பக்தியுடனும் நடைபெறுகின்றதா என்பதை நேரிலிருந்து
287 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பார்த்துப் போகும்படி அந்தந்த மாகாண கவர்னர் முதலிய அதிகாரிகளையே அழைத்து வந்து நேரிலிருந்து பார்க்கும்படி செய்ய இத்தலைவர்கள் முயற்சிப்பதும் ஆகிய காரியங்களே பெரிதும் காங்கிரஸ் வேலையாகவும் அதையே செய்து வந்ததாகவும் இருந்து வந்தது இந்த யோக்கியதையில் உள்ள காங்கிரஸானது அக்காலத்தில் மற்ற மாகாணங்களில் பார்ப்பனர், படித்தவர்கள், பணக்காரர் ஆகியவர் ஆதிக்கத்தில் இருந்திருந்தாலும், சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை அடியோடு பார்ப்பனர்கள் கையிலேயே இருந்திருந்தாலும் அது பெரிதும் அவர்களிலுள்ள இரு பிரிவுகளில் ஒன்றாகிய விபூதி பூசும் பார்ப்பனர் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு அய்யங்கார் பார்ப்பனர்களைப் புறக்கணித்து விட்டதால் காங்கிரசின் பயனாய் ஏற்பட்ட - கிடைக்கப்பட்ட பெரும் உத்தியோகங்களும், சிறு உத்தியோகங்களும் விபூதி பூசும் அய்யர். பார்ப்பனர்களே அனுபவித்துக் கொண்டு அய்யங்கார் பார்ப்பனர்களை உத்தியோகப் பட்டினி போட்டு வந்தார்கள். அதாவது காங்கிரஸ் தலைவர், காரியதரிசி, ஹைக்கோர்ட் ஜட்ஜிகள், அட்வோகேட் ஜனரல், கவுன்சில் மெம்பர் ஆகியவர்கள் பெரிதும் முத்துசாமி அய்யர், மணி அய்யர், சதாசிவ அய்யர், பி.ஆர். சுந்திரமய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர், சிவசாமி அய்யர்,
சி.பி. ராமசாமி அய்யர், எம். ராமச்சந்திரராவ், எல்.ஏ. கோவிந்தராகவய்யர், பி.என்.சர்மா, ஜி.ஏ.நடேசய்யர், சீனிவாச சாஸ்திரி முதலான அய்யர் சாஸ்திரி சர்மா பார்ப்பனர்களே இருந்து அனுபவித்து வந்தார்கள். இந்தப்படி இருந்ததால் அய்யங்கார் பார்ப்பனர்கள் காங்கிரசில் புகுந்து பங்கு பெற்று இவ்வுத்தியோகங்களைக் கைப்பற்ற முயற்சிக்க வேண்டியவர்களானார்கள்.
காங்கிரசில் இந்த அய்யர், அய்யங்கார் யுத்தம் பெசண்டம்மையார். காலத்து வலுத்து வெளிப்படையாய் நடக்க ஆரம்பித்தது
இதற்கு மற்றுமொரு காரணம் சென்னை மாகாண அய்யர் பார்ப்பனர் களின் ஆதிக்கமானது, பிரபல - முக்கியமான அரசியல்வாதியென்று சொல்லும்படியான தோழர் சி.விஜயராகவாச்சாரியாரை அவர் அய்யங்கார் என்கிற காரணத்துக்காக வெகுகாலமாய் அவர் எந்தக் காங்கிரசுக்கும் தலைமை வகிப்பதற்கில்லாமலே செய்து அவர் பேர் வரும்போதெல்லாம் சென்னை மாகாணத்தில் அவருக்கு விரோதமாய் ஒரு அய்யங்கார். அல்லாதவரை போட்டு தோற்கடித்தே வந்திருக்கிறார்கள். உதாரணமாக சர். சங்கர நாயருக்கு கிடைத்த சான்சுகூட ஆச்சாரியாருக்கு
கிடைக்கவில்லை.
ஆதலால் அய்யங்கார்கள் ஒன்று கூடி வெளிநாட்டுப் பிரபல அரசியல்வாதியான திலகரை சுவாதீனப்படுத்திக்கொண்டு இம்மாகாண அய்யர் பார்ப்பனர்களை எதிர்க்க இம்மாகாணத்தில் அக்காலத்தில்
குடி அரசு - 1935 (2) 288
அரசியலில் கலந்திருந்த தோழர்கள் சிதம்பரம்பிள்ளை, சக்கரைச் செட்டியார் போன்றவர்களை அமர்த்திக் கொண்டு பெசண்டம்மையார், அய்யர் பார்ப்பனர் ஆகியவர்களை வையும்படி ஏவிவிட்டு ஒரு அளவுக்கு அய்யர்கள் ஆட்சியை ஆட்டத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் அய்யர் அய்யங்கார் சண்டையையும் அதன் உள் எண்ணத்தையும் அறிந்த தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத பிரபல அரசியல்வாதிகளான தோழர்கள் டாக்டர் நாயர், தியாகராயர் மற்றும் 2ந்தர, 3ந்தர அரசியல்வாதிகள் சேர்ந்து தங்கள் சமூகம் அடியோடு கவனிப்பாரற்றுக் கிடப்பதை உணர்ந்து அவ்வுத்தியோகங்களில் தங்கள் வகுப்புகளுக்கும் கொஞ்சம்பங்குகிடைக்கவேண்டுமென்று முயற்சிக்கவேண்டியவர்களானார்கள்.
இந்தச் சமயத்தில் பிரிவுபட்டிருந்த அய்யர், அய்யங்கார், பார்ப்பனர்கள் தங்கள் விரோதத்தை மறந்து பார்ப்பனரல்லாதாரின் இம்முயற்சியின் பயனாய் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார் முயற்சியை எதிர்த்து அழிக்க வேண்டியவர்களானார்கள்.
இந்த நிலையில் பார்ப்பனர்களுக்கு ஒரு பார்ப்பனரல்லாத தலைவரும், பார்ப்பனரல்லாத தேசபக்தர்களும் வேண்டியிருந்தது என்பதோடு சற்று
அதிக புத்திசாலித்தனமான சூக்ஷிகளும் தந்திரங்களும் வேண்டி இருந்தது இப்படிப்பட்ட ஒரு அவசியமானதும் இன்றியமையாததுமான சந்தர்ப்பம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டுவிட்டதால்தான் காந்தியார் தலைவராகவும், தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, பி. வரதராஜுலு, திரு. வி. கல்யாணசுந்திரம், சிங்காரவேலு, ஆரியா, டி.வி. கோபாலசாமி முதலியார், முத்துரங்க முதலியார், சுப்பிரமணிய நயினார், ராமச்சந்திர செட்டியார் போன்றவர்கள் திடீரென்று தேசபக்தர்களாகவும், தேசாபிமானிகளாகவும், தேசீயவாதிகளாகவும் ஆக்கப்பட்டார்கள்.
அதன் பிறகுதான் அய்யர்கள் ராஜ்ஜியம் ஒரு அளவுக்கு ஒழிந்து அய்யங்கார் ராஜ்ஜியமாகி வெகுநாளாகத் தள்ளப்பட்டுக் கிடந்த விஜயராகவாச்சாரியார் கல்லறையில் ஒரு காலும் காங்கிரஸ் தலைமையில் ஒரு காலும் இருக்கும்படியாக கிழ வயதில் காங்கிரஸ் தலைவராக்கப் பட்டார். அதன் பின்பே தோழர் ராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அவர்கள் தமிழ்நாடு
காங்கிரஸ் காரியதரிசியாகவும், சீனிவாச அய்யங்கார், பாவியம் அய்யங்கார், சந்தானம் அய்யங்கார், வரதாச்சாரி ஆகியவர்கள் காங்கிரசில் பிரதானப்பட்டவர்களானார்கள். அதன் பிறகே இந்த அய்யங்கார் கூட்டத்திற்கு நிபந்தனை இல்லாத அடிமைகள் யாரோ அவர்களே அய்யர் பார்ப்பனர்களிலும் பார்ப்பனர் அல்லாதாரிலும், முகம்மதியர்களிலும், கிறிஸ்தவர்களிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களிலும், தேசபக்தர்கள், தேசியவாதிகள், தேசீய பிரசாரகர்கள் ஆகியவர்கள் ஏற்பட இடமேற்பட்டது
2 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இதற்குச் சம்மதிக்காத தேசபக்தர்கள் திடீரென்று தேசத் துரோகிகள்,
சர்க்கார் குலாம்கள் என்று ஆக்கப்பட்டார்கள். இதுதான் இந்திய தேசீய காங்கிரசின் தென்னாட்டுச் சரித்திரமாகும்
இந்த நிலையில் உள்ள காங்கிரஸானது சமீபகாலமாய் தென்னாட்டில் வெளிப்படையாக, பட்டாங்கமாக பார்ப்பனர்கள் ஒரு புறமும், பார்ப்பனரல்லாதார்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், தீண்டப்படாதவர்கள் உள்பட எல்லோரும் மற்றொரு புறமாகவும் தங்கள் சமூக ஸ்தாபனங் களோடு இருந்து போர் புரிந்து வருகிறார்கள்.
இப்போரில் காங்கிரஸ் ஸ்தாபனம் தேசத்துக்காக போர் புரிகின்ற தெனவும் பார்ப்பனரல்லாதார் ஸ்தாபனம் வகுப்புவாதத்துக்கு ஆக அதாவது உத்தியோகத்துக்கு ஆகப் போர்புரிகின்றது என்றும் உத்தியோகம் என்றால் மந்திரி பதவிகள் என்றும் பார்ப்பனர்கள் பறையடித்து பிரசாரம் செய்கிறார்கள்.
பார்ப்பனர்களுக்குப் பத்திரிகை உலகம் அடிமைப்பட்டுவிட்டதாலும் பார்ப்பனர்களின் ஆதரவில்லாமல் தென்னாட்டில் எந்தப் பத்திரிகையும் வாழ முடியாத நிலைமையில் இருப்பதாலும் பார்ப்பனப் பத்திரிகையில் வெளியாக்கப்படும் அபிப்பிராயங்களே தேச மகாஜனங்களின் அபிப்பிராயங்கள் என்று எழுதி பின்பற்றாத பத்திரிகைகள் இந்நாட்டில் தலைகாட்ட முடியாத நிலையிலிருப்பதாலும் அரசியலின் பேராலோ, பொது வாழ்வின் பேராலோ தேசாபிமானம், தேசபக்தி, தேசியம் என்னும் பேராலோ வாழ வேண்டியவர்களோ பெருமையும், புகழும் பெற வேண்டியவர்களோ எப்படியாவது பார்ப்பனர்களுக்கும் அவர்களது பத்திரிகையின் ஸ்ரீ முகங்களுக்கும் கட்டுப்பட்டு தீர வேண்டியவர்களாகி விட்டார்கள்.
இதனால் பாமர மக்கள் உண்மையை உணர முடியாமல் போனதோடு சிறையில் அடைபட்ட மக்கள் போல் அரசியல் விஷயத்தில் சிறிதும் சுதந்திரமோ, சுயேச்சை புத்தியோ, அபிப்பிராயமோ அடைவதற்கு தகுதி யில்லாதவர்களாகவும், சவுகரியமில்லாதவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.
இம்மாதிரியான காரியங்களால் ஓரளவில் பார்ப்பன ஆட்சி தென்னாட்டில் நடைபெறுகின்றதென்பதாக வைத்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் நிலையானது 1920 முதல் 1935 வரையில் பார்ப்போமானால் நாளுக்கு நாள் இறங்கு முகத்தில் வந்து கொண்டே இருக்கிறதே தவிர,
சிறிதும் மேல் நோக்கினதாகவோ, கீழ் நோக்காமலாவது இருக்கிறதாகவோ சொல்ல முடியவில்லை.
அது மாத்திரமல்லாமல் இன்றைய நிலைமையானது பார்ப்பனர்களை இது காலம் வரை தாம் செய்து வந்த காரியம் தப்பு என்பதாக உணரும் படியாகவும், 1920-ம் வருஷத்துக்கு மூன் இருந்த நிலைமைக்குப் போக
குடி அரசு - 1935 (2) 290.
வேண்டியதே தங்கள் சமூகத்துக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதாகவும்,
புத்தி கற்பித்துவிட்டதுடன், இப்பதினைந்து வருஷமாக இந்தப் போரை நடத்திக் கொண்டு வந்த தலைவரும், தளகர்த்தரும், அதாவது காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைமையை கொண்டு வந்து விட்டுவிட்டது. அந்த ஓய்வு தங்களுடைய நலனுக்கு என்று இல்லாமல் காங்கிரசின் நன்மைக்காக ஓய்வெடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லித் தீரவேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டது
இதன் கருத்து என்னவென்றால் இவர்கள் காங்கிரசில் இருப்பதால். காங்கிரசை நடத்தும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் காங்கிரசுக்கு நன்மையில்லாமல் தீமையே என்றும் தாங்கள் ஒதுங்கி இருப்பதாலேயே காங்கிரசுக்கு நன்மை என்றும் கருதினார்கள் என்பது வெளிப்படையாய் விளங்குகிறது.
அதோடு மாத்திரமல்லாமல் காந்தியார், ஒரு புறமும் வைசிராய் -
ராஜப்பிரதிநிதி ஒரு புறமும் இருந்து ராஜி பேசி ஒரு பத்திரத்தில் இருவரும் கையொப்பமிடும்படியான நிலைமை பெற்றிருந்த ஒரு தலைவர்” அதே அரசாங்க ராஜப் பிரதிநிதியை பார்க்க, தன்னுடைய குறைகளை தெரிவித்துக் கொள்ள - எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அதாவது பேட்டியில் தன்னை எப்படி வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு தடவைக்கு மூன்று தடவை விண்ணப்பித்துக் கொண்டும் அதை லட்சியம் செய்யாமல் பேட்டி மறுத்தும், அதே தலைவர் தானே சர்வாதிகாரி என்றும் தன்னை மனிதத் தன்மைக்கு மேம்பட்டவர் என்றும் கருதிக் கொண்டும், பிறத்தியாரை அம்மாதிரி கருதவும், அழைக்கவும் செய்து கொண்டும் இருந்தவர் இந்நிலை அடைந்து இவரது வேண்டுகோளெல்லாம் மறுக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்பட்ட காலத்தில் இன்றும் 1920-ம் வருஷத்துக்கு முந்திய காங்கிரசின் ராஜ விஸ்வாசப் பிரமாணமும், உத்தியோகம் ஏற்கும் முயற்சியும் செய்யப்படுகிறதென்றால் பேட்டி மறுத்து அலட்சியப்படுத்தப்பட்ட வைசிராய் சட்டசபையில் போய் தலைகுனிந்து அதற்கு மேற்பட்ட ராஜபக்தி விஸ்வாசப் பிரமாணம் செய்து அமரத்துவம் செய்வதென்றால் இதுவரை காங்கிரஸ் செய்து வந்தகாரியம் முட்டாள்தனமா? அல்லது சூட்சியா? அல்லது ஏதாவது ஒரு உண்மைக் கொள்கைக்கோ மனிதத் தன்மையான சுயமரியாதைக்கோ செய்யப்பட்ட காரியமா? என்பதைப் பொது ஜனங்கள் உணர வேண்டும் என்பதற்கு ஆகவே இந்த “பாட்டி கதை'' என்பதை எழுதினோம்
இந்த நிலைமையிலுள்ள காங்கிரசானது இப்போது தேசம், தேசாபிமானம், சுயராஜ்யம், பூரண சுயேச்சை, அரசாங்கத்தைப் பணிய வைத்தல் ஆகிய பெயர்களை சொல்லிக் கொண்டு சத்தியமாகவும், நீதியாகவும், யோக்கியமாகவும் நடப்பதாகவும் கூறிக் கொண்டு கிறிஸ்தவர்
29] ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
களையும், மகமதியர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும், பார்ப்பனரல்லாதார். களையும் இவர்களுடைய ஸ்தாபனங்களையும் வகுப்பு வாதம் என்றும், வகுப்புவாதிகள் என்றும், தேசத் துரோகமென்றும், சர்க்காரின் அடிமைகள் என்றும் சொல்லிப் பிரசாரம் செய்து வந்தவர்கள் இன்று சத்தியம், யோக்கியம் முதலிய குணங்களை அடியோடு ஒதுக்கி வைத்துவிட்டு சுயராஜ்யம், விடுதலை, பூரண சுயேச்சை என்ற வார்த்தைகளையெல்லாம் மறந்துவிட்டு எப்படி மெம்பராவது, எப்படி பிரசிடெண்டாவது என்பதற்கு ஏற்ற சூக்ஷி, தந்திரம், பொய், ஏமாற்று ஆகியவைகளையே முக்கிய திட்டமாக வைத்து பார்ப்பன வகுப்பு நபனையே கொள்கையாய்க் கொண்டு கிளர்ச்சி நடத்தப்பட்டு வருகிறது
சமீபத்தில் நடக்கப் போகும் ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ்காரர்கள் ஜெயம் பெற வேண்டுமென்று சொல்லிக் கொண்டு அந்த ஸ்தானங்களுக்கு காங்கிரஸ்காரர்களையே நிறுத்தப் போவதாய் சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சிக்குள் புகுந்து கலகத்தையும், மித்திர பேதத்தையும் உண்டாக்கி அந்த மெம்பர்களின் பலவீனத்துக்குத் தகுந்தபடி ஆசை காட்டி காரியங்கள் செய்து பொய்வாக்குகள் கொடுத்து அவர்களை ஏமாற்றி சுவாதீனம் செய்து அவர்களையே காங்கிரஸ் மெம்பர்கள் என்று பெயர் சொல்லி நிறுத்துகிறார்கள்.
சிதம்பரத்தில் காங்கிரஸ் மெம்பர்கள் ஜெயித்தார்கள் என்று சொல்லி பொது மக்களுக்குத் தப்பபிப்பிராயம் ஏற்படும்படி செய்து, அக்கவுன்சிலில் ஏற்பட்ட ஒரு செனட்டு மெம்பர் தேர்தலில் தோழர் வேணுகோபால் பிள்ளை (ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்) பெருவாரி ஓட்டுகளால் தெரிந்தெடுக்கப்பட்டார். மதுரை முனிசிபல் கவுன்சிலில் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்றார்கள் என்று பார்ப்பனப் பத்திரிகைகள் முழங்குகின்றன. ஆனால் பெரும்பாலும் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் பணச் செலவுக்கும், கூலிகள் வசவுக்கும் பயந்து கொண்டு புரட்டுக்குப் புரட்டாக கட்சிப் பெயர் மாற்றி பணம் மாத்திரம் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்களே தவிர, அவர்களையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைகளை விட்டுக் கொடுத்த காங்கிரஸ் மெம்பர்கள் என்று சொல்லி விட முடியாது
அதற்கு உதாரணம் சென்ற 10 ந் தேதி மதுரை முனிசிபல் கவுன்சில் மீட்டிங்கில் 24பேர் ஆஜரிருந்தும் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்துக்கு 6 பேர் தான் ஓட்டுக் கொடுத்தார்கள். 18 பேர் மறுத்து விட்டார்கள். அதுபோலவே திருநெல்வேலி, திருச்சி ஆகிய ஜில்லா போர்டு களுக்கும், காங்கிரஸ் மெம்பர் என்று பெரும்பாகம் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களையே நிறுத்துகிறார்கள்.
குடி அரசு - 1935 (2) 29:
ப்
அவர்கள் அத்தனை பேரும் காங்கிரஸ்காரர்களை ஏய்க்கவே 4 அணா கொடுத்து காங்கிரஸ் பேரால் நிற்க சம்மதித்து இருக்கிறார்கள். இவர்களைத் தவிர காங்கிரஸ்காரர்களுக்கு தேர்தல்களுக்கு நிறுத்த ஆள்களும் கிடைப்பதில்லை.
காங்கிரஸ்காரர்களே சில ஜஸ்டிஸ் மெம்பர்களுக்கு அவரவர்கள் இஷ்டம் போல் நடக்க உரிமை கொடுத்து தேர்தலின் முடிவு வரை தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் கிடைத்தால் போதும் என்று சொல்லுகிறார்கள்.
பாமர மக்களை ஏமாற்றவும், வெளி மாகாணக்காரர்களுக்கு எண்ணிக்கை அதிகமாகத் தெரியவும் பாடுபடுகிறார்களே ஒழிய மற்றபடி ஆள்களை தெரிந்தெடுப்பதில் எவ்வித நாணயமும் கவனிக்கப்படுவதில்லை.
மற்றும் காங்கிரஸ் கொள்கைப்படி ஒரு காங்கிரஸ் அங்கத்தினருக்கு இருக்க வேண்டிய யோக்கியதையும், அவர் நடந்து கொள்ள வேண்டிய முறையும் கொண்ட மெம்பர் இந்த கூட்டத்தால் யாராவது இருப்பதாய்ச் சொல்ல முடிவதுமில்லை.
கதர் ரூ.க்கு எத்தனை படி என்று இன்னமும் கேட்கும் ஆட்கள் திருநெல்வேலி, திருச்சி,மதுரைமுதலியவிடங்களில் காங்கிரஸ் தெரிந்தெடுப்பில் 109க்கு 75 பேர் இருப்பார்கள் என்றால் மற்றதைப் பற்றி கேட்க வேண்டுமா? ஆகவே காங்கிரஸ்காரர்கள் என்று ஒரு கூட்டம் ஏற்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் நாணயம், ஒழுக்கம், கற்பு என்று என்ன என்ன குணம் இன்று நல்லது என்னும் பேரால் இருந்து வந்ததோ அவைகளெல்லாம் அடியோடு மறைந்து போய்விட்டதுடன் பொது ஸ்தாபனங்களின் தன்மையும், நிர்வாகத்தின் யோக்கியதையும் பாழாகிக் கொண்டு வருகின்றது.
மனிதத் தன்மைக்கு ஜீவநாடி மானமேயாகும். காங்கிரசுக்கு அது
சிறிது கூட இல்லாமல் போனதுடன் எவ்வளவுக்கு எவ்வளவு மானங்கெடவாழ முடிகின்றதோ அதுவே காங்கிரசின்மேலானவாழ்க்கையாக இருந்து வருகின்றது
ஆகையால் இக்கொடிய நோயை அழிக்கவேண்டியது சுயமரியாதையும், சமதர்மமும் கோரும் மக்களின் இன்றியமையாக் கடமையாகும் என்பதைத்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.10.1935
293 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம்
காங்கிரஸ்காரர்கள் சிதம்பரம், மதுரை முதலிய முனிசிபல் தேர்தல்களில். தாங்களே வெற்றியடைந்ததாகத் தப்பட்டை அடித்து மக்களை ஏமாற்றி வந்தார்கள்.
இந்த ஏமாற்றம் ஒரு 15 நாட்களுக்குக்கூட நிலைக்க முடியாத தன்மையில் வெற்றியின் வண்டவாளம் வெட்டவெளிச்சமாகிவிட்டது
சிதம்பரம் முனிசிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் அக்கிராசனராய் வர
முடிந்தது என்பது ஒருபுறமிருந்தாலும் மற்ற காரியங்களில் ஜஸ்டிஸ் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. உதாரணமாக சிதம்பரம் முனிசிபாலிட்டியில் இருந்து செனட்டுக்குத் தெரிந்தெடுக்கப்படும் ஸ்தானத்துக்கு ஒரு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் தோழர் வேணுகோபால் பிள்ளை அவர்களே ஒரு காங்கிரஸ் பார்ப்பனருக்கு விரோதமாய் நின்று பெருமித ஓட்டுகளால் வெற்றி பெற்று விட்டார்.
மற்றும் மதுரை முனிசிபல் கவுன்சிலில் 'காங்கிரஸ்காரர்களே வெற்றி பெற்று விட்டார்கள்” என்றும், “மதுரை காங்கிரஸ் கோட்டையாக ஆகிவிட்டது என்றும், மதுரையில் ஜஸ்டிஸ் கட்சி மாண்டுவிட்டதால் சென்னை மாகாணம் முழுவதிலும் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டு விட்டது” என்றும் பார்ப்பனக் கூலிகளும் தோழர் சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் பறையடித்தன. அதன். யோக்கியதையும் 10.10.35-ல் நடந்த ராஜேந்திரபாபு வரவேற்புத் தீர்மானத்தில் தார் அபிஷேகம் செய்யப்பட்டு விட்டது அதாவது “ராஜேந்திர பிரசாத் அவர்கள் காங்கிரஸ் பிரசாரம் செய்ய இந்த ஊருக்கு வருகிறார். ஆதலால் அவரை வரவேற்பது காங்கிரசை ஆதரிப்பதாகும். ஆகையால் மதுரை முனிசிபாலிட்டியின் பேரால் அவரை வரவேற்கக் கூடாது”
என்பதாகச் சொல்லி மதுரை கவுன்சிலர்கள் மறுத்து விட்டார்கள். 15 மெம்பர்கள் எதிர்த்தும் 3 பேர் நடுநிலை வகிப்பதன் மூலம் மறுத்தும் வரவேற்புத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு விட்டது.
காங்கிரஸ் தலைவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதற்கு
6 பேர்கள் தான் அனுகூலமாய் இருந்திருக்கிறார்கள்
குடி அரசு - 1935 (2) 294.
ஆகவே ஆஜரான 24 மெம்பர்களில் 18 பேர்கள் காங்கிரஸ் மெம்பர்கள் அல்ல என்பதோடு, காங்கிரசுக் கொள்கையை எதிர்ப்பவர்கள் என்பதும் இதனால் விளங்குகிறதல்லவா? எனவே காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். திருநெல்வேலி, திருச்சி ஆகிய தேர்தல்களும் “உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” (அதன் தகப்பன்) என்று ஆகப் போகிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.10.1935
295 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ் வியாபாரம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள் இதுகாறும் பல துறையில் வியாபார முறைகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். “சுயராஜ்யம் கொடுக்கிறோம் பணம் கொடுங்கள்” என்பார் ஒருவேளை, “ஜெயிலுக்கும் போனோம், 'ஓட்'டுக்கொடுங்கள்' என்பார் வேெறொருவேளை, “தடியடி பட்டோம், சட்டசபைக்கு எங்களை அனுப்புங்கள்” என்பார் மற்றொரு வேளை. இப்படித் தாங்கள் செய்ததாகக் கூறப்பட்ட 'தியாகங்களை' வியாபாரப் பண்டங்களாக்கி அரசியலில் தொழில் புரியும் அறிவாளர்களைப்பற்றி நாம்
அதிகம் கூறவேண்டியதில்லை. நாளாக ஆக, காங்கிரஸ் கட்சியினருடைய யோக்கியதை பொதுஜனங்களுக்கு நன்றாகப் புலப்பட்டுக்கொண்டு வருகிறது. எனினும், சுயநலக் கூட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்கள் செய்து கொண்டு வரும் செய்கைகள் பலவற்றைப் பொதுஜனங்கள் அறிவார்கள். உதாரணமாக, காங்கிரஸ் தலைவர் வரவேற்பிற்காக வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து, காசியில் எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கும் தோழர் துர்க்காபாய் அம்மாளுடைய செலவிற்காகப் பணம் அனுப்பப்பட்டிருக்கிறதென்று நம்பத்தக்க இடத்திலிருந்து தெரியவருகிறது. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரால் பொதுஜனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதிகள் எக்கதியாகின்றன, எங்கு போகின்றன என்ற விஷயம் கீழ்க்கண்ட விவரங்களால் விளங்கும். அவர்கள் தம்முடைய சுற்றுப் பிரயாணங்களில் சிலவிடங்களில் காங்கிரஸ் 'கமிட்டி' காரியாலயத்தில் தங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்ட சில நண்பர்களில்லத்தில் உண்டு தம்முடைய
பிரசாரத்தைச் செய்தபோதிலும், கணக்குப் புத்தகங்களில் தங்குமிடத்திற்கும்,
உணவிற்கும் செலவாயிற்று என்று தவறாகச் சில தொகைகளை எழுதி யிருக்கிறார்களென்றால், அவர்களைப்பற்றி என்னென்று சொல்வது? ஒரு
காங்கிரஸ் பிரமுகர் தன்னுடைய 'கம்பெனி'யின் வேலையாகச் சென்றபோது காங்கரஸ் பிரசாரமும் செய்ததனால் தனக்கு நேர்ந்த செலவு விவரங்கள். முழுவதையும் 'கம்பெனி' கணக்கில் எழுதி, அதே சிலவு விவரங்களை
காங்கிரஸ் கணக்கிலும் எழுதியிருக்கிறாரென்றாலும் அவருடைய தியாக புத்தியை எப்படி மெச்சிக் கொள்ளுவது? தாழ்த்தப்பட்ட மக்களுடைய
குடி அரசு - 1935 (2) 296
முன்னேற்றத்திற்காக ஏற்படுத்தப்பட்டு ஒரு சங்கக் காரியாலயத்தின். வருகைக்காக மாதம் ஐம்பது ரூபாய் வசூலிக்கப்பட்ட நிதியிலிருந்து பதினொன்று மாதங்கள் வரைக்கும் கொடுக்கப்பட்டு வந்து, அது பதினொன்று மாதங்களுக்கும் குறிப்பிட்ட கட்டடத்தில் அச் சங்க காரியாலயம் இல்லை யென்றால் யாரை நோவது? இவற்றையெல்லாம் அறிந்து பொதுஜனங்கள் இனிமேலாவது ஜாக்கிரதையாயிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்
*விடுதலை'
குடி அரசு - மறு பிரசுரம் - 13.10.1935
297 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஜஸ்டிஸ் கட்சிக்கு நிதி வசூல்
குண்டூர் ஜஸ்டிஸ்கட்சி மகாநாட்டில் கட்சிப்பிரசாரத்துக்கு ஒரு லட்சத்துச் சொச்ச ரூபாய் வரை கையொப்பமிடப்பட்டிருக்கிறது. இதில் கட்சித் தலைவர். பொப்பிலி ராஜா அவர்கள் 25000 ரூபாய்க்குக் கையொப்பமிட்டிருக்கிறார். இது தவிர பொப்பிலிராஜா அவர்கள் தலைமை ஸ்தானம் பெற்றது முதல்
மாதம் 1க்கு 5000 ரூபாய் முதல் 7500 ரூபாய் வரை மாதந்தோறும்
கட்சிக்காக என்று செலவழித்து வந்திருக்கிறார். இவர் கட்சியின்பேரால் ஒரு சின்னக் காசு பயன் அடைந்தவர் அல்ல என்பதோடு அவருக்கு ஏற்கனவே ராஜா பட்டமும், அவர் தகப்பனாருக்கு மகாராஜா பட்டமும், பல லட்சக்கணக்கான சொத்துக்களும் வருவாய்களும் இருந்து வருகின்றன.
மற்றும் நான்கு ராஜாக்கள் தலைக்கு 15000 ரூபாய் வீதம் அதாவது செல்லப்பள்ளி, வெங்கிடகிரி, மீர்சாபூர், பர்வாக்கிமிடி ஆகியவர்கள் 6000 ரூபாய்க்கு கையொப்பமிட்டிருக்கிறார்கள். மற்றும் மந்திரிகளாகிய தோழர்கள்.
பி.டி. ராஜன் அவர்கள் 5000மும், திவான்பகதூர் குமாரசாமி செட்டியார் 5000மும் கையொப்பம் செய்திருக்கிறார்கள். ஆக நபர் 7க்கு ரூபாய் 95000 கையொப்பமாகி இருக்கின்றது.
காங்கிரசுக்காரர்கள் போல இந்தப் பணம் ஏழைகளை வஞ்சித்தும் பெண் மக்களை ஏமாற்றியும் வசூலிக்கப்படாமல், பணக்காரர்கள் என்கின்ற கூட்டத்தாரே முன் வந்து தாராளமாய் உதவி இருப்பதானது, அக்கட்சியானது ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியவர்கள் நன்மைக்கு செல்வவான்கள். கலந்து உழைப்பது என்பதை ர௬ஜுப்படுத்துகிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.10.1935
குடி அரசு - 1935 (2) 298
தேசபக்தி
தேசபக்தி என்னும் பேரால் இத்தாலியும் அபிசீனியாவும் போர் தொடங்கி இத்தாலி மக்களும் அபிசீனிய மக்களும் குளுமாயி கோயிலில் ஆட்டுக்குட்டி பலியிடப்படுவதுபோல் பதினாயிரக்கணக்காய்ப் பலியிடப்பட்டு
வருகிறார்கள். அதை (அந்த யுத்தத்தை) நீதியும் சமாதானமும் என்னும் வல்லரசுகள் பத்திரமாய் காப்பாற்றி வருகிறார்கள்:
இன்னும் தேசபக்தி வலுக்க வலுக்க 1000-ம் 10000 மாகி, 1000-ம்
1000000-ம் கணக்கான மக்கள் பலியிடப்படப்போகிறார்கள்.
நீதியும் சமாதானமும் வலுக்க ஆரம்பித்தால் 1000000 கணக்கான
மக்கள் கோடிக்கணக்காக பலியிடப்படப் போகிறார்கள். ஆகவே தேசபக்தியின் பெருமைதான் என்ன! கடவுள் பெருமைதான் என்ன!
அபிசீனிய மன்னன் தனது பலி ஆடுகளைத் தேசபக்தி என்ற சங்கை
ஊதித்தான் கூப்பிடுகிறான்.
இட்டாலி சர்வாதிகாரி தன்னுடைய பலி ஆடுகளையும் தேசபக்தி என்கின்ற சங்கை ஊதித்தான் அழைக்கிறான். ஆகவே தேசபக்தி என்பது மக்களை மக்கள் பலிகொடுப்பதும் மக்களை மக்கள் பலி வாங்குவதும் தவிர வேறு ஒன்றையும் காணோம் அப்படி வேறு ஏதாவது இருக்கக் கூடுமானால் அது ஜான்சன் என்னும் தத்துவஞானி சொன்னதுபோல் “தேசபக்தி என்பது காலிகளின் கடசி ஜீவனோபாயம்” என்பதாகத்தான் இருக்க வேண்டும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.10.1935
29 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சபாஷ் அம்பத்கார்
1
தோழர் டாக்டர் அம்பத்கார் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில்,
மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர் களிடத்தில் நம் மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன.
இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது
வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்
இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான். ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால்,
நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.
நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்
நாம் நம்மை இந்துக்கள் என்று இனி கூறிக் கொள்வது கூடாது
அதனால்தான் மேல்ஜாதிக்காரர்கள் நம்மை இழிவாகவும் கொடுமை யாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இம்மாதிரி கொடுமைப்படுத்த அவர்களுக்கு துணிவு இருந்திருக்காது.
எந்தமதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்து கிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள்.
பிறக்கும்போதே நான் தீண்டப்படாதவனாய்ப் பிறந்தேன் என்றாலும், அது நான் செய்த குற்றமல்ல.ஆனால் இறக்கும்போது நான்தீண்டப்படாதவனாய் இறக்க மாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது
அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை'' என்று பேசி இருக்கிறார்.
குடி அரசு - 1935 (2) 300
இப்பேச்சுக்குப் பிறகு சுமார் 15000 பேர்கள் கூடி உள்ள அம்மகாநாட்டில் ஏகமனதாய் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது.
அதாவது,
“ஆதி இந்துக்கள் இந்துமதத்தை விட்டு அடியோடு விலகிவிட வேண்டும். சமத்துவ பாவிப்பு உள்ள வேறு எந்த மதத்திலாவது சேர்ந்து கொள்ள வேண்டும்”' என்பதாகும்.
இதற்கு இந்துக்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள், “வருணாச்சிரமமும் கீதை உபதேசமும் எனது இரு சுவாசங்கள்" என்றும்,
“இந்து மதமே நாணாய் இருக்கிறேன்" என்றும் சொல்லும் காந்தியாரும்,
மதத்தில் நாங்கள் பிரவேசிப்பதில்லை என்றும், பழய கலைகளையும் பழய பழக்க வழக்கம் தொழில் முறை ஆகியவைகளையும் வெகு பத்திரமாய் காப்பாற்றிக் கொடுப்போம் என்றும்,
இந்துக்களுக்கும் வருணாச்சிரம தர்மிகளுக்கும் வாக்குறுதியும் பாதுகாப்பும் அளித்திருக்கும் “சமதர்ம காங்கிரஸ்காரர்களும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.
தோழர் அம்பத்கார் அவர்கள் பேசியிருக்கும் பேச்சும், பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானமும் புதிதல்ல, அல்லது அவர்களே முதல் முதல் கண்டுபிடித்த சொந்தக் கருத்தல்ல.
ஏனெனில்,
இந்து மதத்தை பார்ப்பனரல்லாத மக்கள் விட்டுவிட வேண்டுமென்றும், யாரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், சுயமரியாதை இயக்கமானது 1925 முதலே சங்குநாதம் செய்து வருகிறது
சென்ற ஜன கணிதத்தில் அனேக ஜாதி இந்துக்கள் என்பவர்களே தங்களை இந்துக்கள் அல்ல என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சேர்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுபவரானாலும், தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப் போவதில்லை என்று சுமார் 10 வருஷத்துக்கு முன்பே சொல்லி இருக்கிறார்.
அதுமாத்திரமல்லாமல் இந்துமதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அது ஜாதி பாகுபாட்டின் பயனாய் பயன் அனுபவிக்கும் சோம்பேறிக் கூட்டத்தின் கற்பனை என்றும் சொல்லி, அந்தப்படி பல மகாநாடுகளில் பல தீர்மானங்களும் செய்யச்செய்திருக்கிறார். இவ்வளவோடுமாத்திரமல்லாமல் மனு நூலையும் இராமாயணத்தையும் சுட்டெரிக்க வேண்டும் என்று, 1922-ல் திருப்பூரில் கூடிய சென்னை
301 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மாகாண தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாட்டில் மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாய் இருக்கும்போதே கூறி இருக்கிறார்.
அந்தப்படியே சுயமரியாதை மகாநாட்டில் ராமாயணமும், மனுதர்ம சாஸ்திரங்களும் சுட்டெரிக்கப்பட்டுமிருக்கின்றன.
மற்றும் கேரள தேசத்து அதாவது மலையாளம், கொச்சி, திருவாங்கூர் தேசத்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய தீயர், ஈழவர், நாடார், பில்லவா ஆகிய சுமார் 20 அல்லது 30 லட்சம் ஜனத் தொகை கொண்ட சமூகம் தங்களது மகாநாட்டிலும் தாங்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்றும், தங்களை இனி யாரும் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்றும், தங்களுக்கு மதத்தில் நம்பிக்கையே இல்லை என்றும் பல தீர்மானங்கள் இந்த 6, 7 வருஷ காலமாகவே 10000-க்கணக்கான
மக்கள் கூட்டத்தில் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.
கடைசியாக 1933-ல் கூட்டப்பட்ட 511). யோகம் என்னும் அவர்களது சமூக மகாநாட்டில் மிதவாதி பத்திராதிபரும் பெரிய செல்வவானும் சென்னை சட்டசபை அங்கத்தினருமான தோழர் சி.கிருஷ்ணன், B.A,BL., அவர்களது தலைமையில் 'ஈழவ சமூக மக்களுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. ஆதலால் ஈழவ சமூக மக்கள் தங்களை இனிமேல் இந்துக்கள் என்று யாரும் சொல்லிக் கொள்ளக் கூடாது'' என்று தீர்மானித்து இருக்கிறார்கள்.
ஆகவே பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டுத் தீர்மானமும்
தலைவர் அம்பேத்கார் அவர்களது வீர கர்ஜனையும் எதுவும் புதிதல்ல
இவற்றிற்கு இதுவரை காந்தியாரும், காங்கிரசுக்காரரும், வருணாச்
சிரமிகளும், பார்ப்பனர்களும், இந்துமத பாதுகாப்பாளர்களும் என்ன பதில் சொல்லி வந்தார்களோ, எப்படி கருதினார்களோ அப்படியேதான் இதையும்
கருதுவார்கள் - இதற்கும் பதில் சொல்லுவார்கள் என்பதில்சிறிதும் அய்யமில்லை.
தீண்டப்படாதவர்கள் விஷயமாகவோ, ஜாதி வித்தியாசம் விஷயமாகவோ, இந்து மத சீர்திருத்த விஷயமாகவோ இந்து மதம் என்றும்
சாதி வித்தியாசம் என்றும் ஏற்பட்ட காலம் முதலே முயற்சிகள்
செய்யப்பட்டுத்தான் வந்திருக்கின்றன.
கபிலர், திருவள்ளுவர், ராமானுஜர் முதலாகியவர்கள் “தெய்வத் தன்மையில்'' இருந்து பாடுபட்டிருப்பதாய் சரித்திரம் கூறுகின்றன. புத்தர் முதலிய அரசர்கள் பாடுபட்டிருப்பதாய் ஆதாரங்கள் கூறுகின்றன.
ராம் மோகன்ராய் மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி, ராமலிங்க சுவாமிகள், விவேகானந்தர் முதலிய ஞானவான்கள் முயற்சித்திருப்பதாய்ப் பிரத்தியட்ச அனுபவங்கள் கூறுகின்றன.
இவர்கள் எல்லாம் இன்று பூஜிக்கப்படுகிறார்கள் என்றாலும் காரியத்தில் ஒரு பயனும் ஏற்பட்டதாகக் கூற முடியாது
குடி அரசு - 1935 (2) 302
மேற்கண்ட பெரியார்களுக்கு சிஷ்யர்களாக 100 பேர்களோ
பதினாயிரம் பேர்களோ ஒரு லட்சம் பேர்களோ இருக்கலாம்
அவரவர்கள் ஸ்தாபனங்களில் ஒரு சில லக்ஷம் அங்கத்தினர்கள். இருக்கலாம். மற்றப்படி காரியத்தில் நடந்ததென்ன என்று பார்த்தால் பழய நிலைமையேதான். சட்டதிட்டங்கள் மூலம், வருணாச்சிரம கூட்டங்கள்
மூலம் பத்திரப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது ஆகவே இவ்விஷயத்தில் ஏதாவது ஒரு காரியம் தகுந்த அளவுக்கு நடைபெற வேண்டுமானால் மேல்கண்டபடி சுவாமிகள் என்றும், அவதாரங்கள் என்றும், மகாத்மா என்றும், பூஜிக்கப்படத்தக்கவர்கள் என்றும் சொல்லி சொல்லிக் கொள்ளுபவர்களால் ஒரு காரியமும் நடைபெறாது இவர்களை பண்டார சன்னதிகள், சங்கராச்சாரியார்கள் என்று சொல்லப் படுபவர்களுக்கு ஒரு படி மேலாகச் சொல்லலாம். ஆனால் பொது ஜனங்களால் வெறுக்கப்படுகிறவர்களாலும் தூற்றப்படுகின்றவர்களாலும் தான் அவசியமான ஏதாவது மாறுதல்கள் காரியத்தில் நடைபெறக்கூடும் எனவே தோழர் அம்பத்கார் அவர்களின் கர்ஜ்ஜனையும், வீரமும், ஞானமும் நிறைந்த தீர்மானமும் பொது ஜனங்களால் எவ்வளவுதான். வெறுக்கப்பட்ட போதிலும் அவர் எவ்வளவு தான் தூற்றப்பட்ட போதிலும் அதுதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள இந்துக்களில் பார்ப்பனரல்லாத மக்களாகிய 100க்கு 97 விகிதாச்சாரமுள்ள 24 கோடி இந்து மக்களின் விடுதலைக்கு சர்வசமய சஞ்சீவி ஆகப் போகிறது
இதைப் பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம் அம்பேத்கார். அவர்கள் பார்ப்பன சூட்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத் தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதோடு வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்து விடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்கிறோம்
அனேகமாய் மதங்கள் என்பவைகள் எதுவும் ஏதோ ஒருவிதமான குருட்டு நம்பிக்கை மீதும் மூரட்டுப் பிடிவாதத்தின் மீதே தான் கட்டப் பட்டிருக்கின்றன. எல்லா மதங்களுக்கும் ஒரே அஸ்திவாரம் தான்.
ஆதலால் “ஒரு தப்பிதத்தின் பாவ நிவர்த்திக்கு ஆக மற்றொரு
தப்பிதம் செய்யக் கூடாது'' என்கின்ற பழமொழியை இந்தச் சமயத்தில் நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நமது ஆசையாகும்.
நிற்க தோழர் அம்பேத்காரின் வாக்குமூலத்துக்கும் பம்பாய் ஆதி திராவிட மகாநாட்டு தீர்மானத்துக்கும் காந்தியாரும், பார்ப்பனர்களும் என்ன பதில் சொன்னார்கள் என்று பார்ப்போம். தோழர் காந்தியார் தனது வழக்கமான சூட்சித் திறத்தைக் காட்டும் முறையில் “தோழர் அம்பேத்கார். இந்தப்படி பேசியதை நான் நம்பவில்லை” என்பதாக பாசாங்கு காட்டிவிட்டு பிறகு அந்த தீர்மானமும் அவரது பேச்சும் துர்அதிர்ஷ்டவசமானது என்றும்,
303 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கோபத்தில் பேசியது என்றும், தீண்டாமை விஷயத்தில் ஏதோ அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் தவறுதல் நடக்கின்றனவென்றும், அதற்கு ஆக இப்படி செய்யக் கூடாதென்றும், அம்பேத்காருக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்குமானால்தான் தன் அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்
என்றும் சொல்லிவிட்டு,
மதம் என்பது ஒருவருக்கு மாற்றிக் கொள்ளக்கூடியது அல்ல வென்றும், அது முடியாதது என்றும், மதம் மாறிவிட்டதினாலேயே தீண்டாமை ஒழிந்துவிடாது என்றும் சொல்லி அம்பேத்காரை நாஸ்திகர் என்று ஜனங்கள் பழிக்கும்படி விஷமம் செய்து இருக்கிறாரே ஒழிய, அக் கொடுமைகளுக்கு திருப்தியும் சாந்தியுமளிக்கத்தக்க வேறு எவ்வித சமாதானமும் சொல்லவில்லை. ஆகவே காந்தியாரின் கருத்துக்களை ஒரு வாக்கியத்தில் சொல்வதாய் இருந்தால் அம்பேத்காருடன் பந்தயம் கட்டுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது உன்னால் முடியாது, உன் இஷ்டப்படி நடக்காது, உன்னால் ஆனதைப் பார், உன்னை துலைத்து விடுகிறேன் என்பதுதான் கருத்தாகும்.
மற்றபடி காங்கிரஸ்காரர்களுடையவும், பார்ப்பனர்களுடையவும்
பதில் என்ன என்று பார்ப்போமானால்,
சுதேசமித்திரன் பத்திரிகையானது அம்பேத்காரை பரிகாசம் செய்கிறது
அதாவது 'ஏரியோடு கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறார் அம்பேத்கார். அதற்கேற்ற தீர்மானம் செய்திருக்கிறது ஆதி இந்து மகாநாடு'' என்று ஏளனம் செய்திருக்கிறது
அதாவது ஜாதி இந்துக்கள் சமூகம் ஏரியைப் போல் இருக்கிறதென்றும், அம்பேத்காரும் 6 கோடி தீண்டப்படாத மக்களும் (வெளிக்குப் போய்) கால் கழுவாத மக்கள் என்றும், வெளிக்குப் போய் கால் கழுவாமல் அசுத்தமாய் இருக்கிறவன் ஏரியுடன் கோபித்துக் கொண்டால் ஏரிக்கு ஒரு குறைவும் ஏற்படாதென்றும், ஏரி சுத்தமாக இருக்கும் என்றும் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போகிறவன் தான் அசிங்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஆதலால் அம்பேத்காரும் தீண்டப்படாதவர்களும் வேறு மதத்துக்கு போய்விட்டால் ஜாதி இந்துக்களுக்கு லாபமே ஒழிய நஷ்டமில்லை என்றும் பொருள்பட அதற்கு ஏற்ற பழமொழியைச் சொல்லுகிறது அதோடு “நீண்டகாலப் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றி விடமுடியாது” “தீண்டாமை ஒழிய வேண்டுமானால் தாழ்ந்த வகுப்பினரின் மனோபாவத்திலும் விசேஷ மாறுதல் ஏற்பட வேண்டும்”
அம்பேத்காரின் பேச்சும் ஆதி இந்துக்களின் தீர்மானமும் “காரியத்தில் நடக்கக்கூடிய காரியம் அல்ல” வெறும் வாய் பேச்சு மிரட்டல் என்கிறது
குடி அரசு - 1935 (2) 304
டாக்டர் அம்பேத்காரே தான் வேறு மதத்துக்கு போகக் கூடுமே ஒழிய மற்ற தாழ்ந்த வகுப்பார் இவர் பேச்சை கேட்க மாட்டார்கள் என்றும் தைரியம் கொள்ளுகிறது அதோடு கூடவே அம்பேத்காரை நம்பாதீர்கள் நம்பி எந்த மதக்காரரும் அவரை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்று மற்ற மதக்காரர்களுக்கும் எச்சரிக்கை செய்கிறது. கடசியாக இதனால் எல்லாம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றும் வீரம் பேசுகிறது.
மற்றபடிஅக்கிரகாரத் தெரு திண்ணைகளில் இருக்கும் மடிசஞ்சிகளும், அவர்களது வார்சுகளும், காபிக் கடைகளிலும், வக்கீல்கள் தாழ்வாரங்களிலும் சுதேசமித்திரனின் பழமொழி போலவே அதைவிட சற்று மேன்மையாக,
“மூக்கு மயிர் பிடுங்கப்படுவதால் ஆள் பாரம் குறைந்து விடப் போகிறதா?” என்று அலட்சியமாய் பேசப்படுகின்றன.
ஆகவே அம்பேத்கார் சொன்ன பேச்சும், தீர்மானமும் பல காலமாய் இருந்து வந்திருப்பதால் பழய பாட்டானதால் பார்ப்பனர்களுக்கும் இந்து
மதப் பித்தர்களுக்கும் சிறிதும் உருத்தப் போவதில்லை என்பது உறுதி
ஆனாலும், தோழர் அம்பேத்காருடைய பேச்சுக்கும், ஆதி இந்துக்கள் தீர்மானத்துக்கும் ஏதாவது மதிப்பு இருக்க வேண்டுமானால், அவர் உடனே இந்தக் காரியத்தை அதாவது ஆதி இந்துக்கள் ஆதி திராவிடர்கள் முதலிய தீண்டப்படாத வகுப்பு என்பவர்களிடையில் உடனே பிரசாரம் செய்து அவர்களை இந்து மதத்திலிருந்து வெளிக் கிளப்பிவிட வேண்டும். தோழர் அம்பேத்காரை பொறுத்தவரையில் சிறிது நாள் பொறுத்துத்தான் மதத்தை போக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது பார்ப்பனர்களுக்கு இப்படிப்பட்ட ஆட்கள் இந்துமதத்தை விட்டுப் போய்விட்டால் இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோஷமடைந்து விடுவார்கள். ஆகையால் மதம் மாறாமல் இருந்து கொண்டு எவ்வளவு பெயர்களை மதத்தில் இருந்து வெளியாக்கலாமோ அந்தக் காரியத்தை செய்ய வேண்டியது அம்பேத்காரின். முதல் கடமையாகும். பூனா ஒப்பந்தத்தால் ஏமாற்றப்பட்ட அம்பேத்காருக்கு இப்பொழுதாவது உண்மை கண்டு கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டதற்கு ஆக
நாம் அவரை மனமாரக் கையாரப் பாராட்டுகிறோம்.
மற்றவை மற்றொரு சமயம் எழுதுவோம்
குடி அரசு - தலையங்கம் - 20.10.1935
305 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
முடிவை மாற்ற வேண்டாம்
டாக்டர் அம்பேத்காருக்கு ராமசாமி தந்தி.
தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பின்வரும் தந்தி அடித்துள்ளார்.
தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன்.
தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லக்ஷம் பேரையாவது மதமாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜனமாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும்
குடி அரசு - வேண்டுகோள் - 20.10.1935
குடி அரசு - 1935 (2) 306
ஈரோடு முனிசிபாலிட்டியும்
மின்சார வினக்கும்
ஈரோடு முனிசிபாலிட்டியானது எவ்வளவோ மோசமான நிலைமையில் இருந்து, அதாவது எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும், அயோக்கியத் தனங்களுக்கும், திருட்டு புரட்டு போர்ஜரி முதலிய கிரிமினல் காரியங்களுக்கு தாயகமாய் இருந்து, பொது ஜனங்களும் கவுன்சிலர்களும் எவ்வளவோ கூப்பாடு போட்டும் அரசாங்கத்தில் சரியான கேள்வி கேப்பாடு இல்லாமல் இருந்து கடைசியாக மெஜார்ட்டி கவுன்சிலர்கள் 13 பேர்கள் ராஜினாமா கொடுத்தும் அரசாங்கத்தார் லக்ஷியம் பண்ணாமல் இருந்து, முனிசிபல் பணங்களுக்கும் மற்றும் கல்வி இலாக்காப் பணம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வேறு ஏதேதோ காரியங்களுக்கு என்று கொள்ளை போயும், சுமார் வருஷம் 3லக்ஷ ரூபாய் வரும்படியுள்ள முனிசிபாலிட்டியானது ஆபீசு சம்பளத்துக்குகூட பணம் இல்லாமல் பாப்பராகியும் கடைசியாக தோழர் கான்சாயபு, க்ஷக்தாவுத் சாயபு முதலிய சிலரது பெரு முயற்சியால் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுத்து சிறிது சிறிதாக யோக்கியமான நிலைமைக்கு வந்து, இப்போது பொது ஜனங்களுடையவும், அரசாங்கத்தாருடையவும் பாராட்டுதலுக்கு பாத்தியமானதாக ஆகி இருக்கிறது என்பது யாரும் அறிந்ததாகும். இன்னும் அநேக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது என்றாலும் பொது நிலமை வரவர உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது
கடைசி வருஷத்து நிர்வாகத்தைப்பற்றி கலைக்டர் துரையவர்கள்
கூறி இருப்பதில் சிலவற்றை இங்கே தருகிறோம்
“நான் ஈரோட்டில் சில தினங்கள் இருந்திருக்கிறேன். அது சமயம் ஈரோடு முனிசிபல் நிர்வாக விஷயங்களைப்பற்றி நன்றாய்க் கவனித்தேன். சேர்மனும், கமிஷனரும், கெளன்சில் மெம்பர்களும் சேர்ந்து அம்முனிசிபாலிட்டியில் செய்துள்ள காரியங்களும், முயற்சிகளும் என்: மனதைக் கவர்ந்தன. ரோட்டுகள் எல்லாம் மிக்க மேலான நல்ல நிலைமையில் இருக்கின்றன. இன்னும் சில ரோட்டுகள் ரிப்பேர் செய்வதற்கான பொருட்கள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.
307 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இந்த முனிசிபல் நிர்வாகத்தைப்பார்த்தால் கடந்த ஒரு வருஷமாக நடைபெற்ற முற்போக்கான பல வேலைகளையும், இன்னும் மேலான நிலைக்கு வரக்கூடும் என்ற அறிகுறியையும் தெளிவு படுத்துகிறது” என்பதாக மிகவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.
ஆனால் ஒரு விஷயத்தில் அதாவது மின்சார விளக்கு விஷயத்தில்
சிறிது அதிருப்தி அடைந்திருக்கிறதாகத் தெரியவருவதை நாம் மறைக்க ஆசைப்படாமல் அதற்கு சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்
மின்சார விளக்கு சரித்திரம்
ஈரோடு மின்சாரத் திட்டமானது ஒரு சரித்திரத்துக்கு ஒப்பானதாகும் என்பதோடு ஸ்தல சுயாக்ஷி விஷயத்தில் அரசாங்கத்தின் தன்மையை எடுத்துக்காட்ட ஒரு கண்ணாடி போன்றதுமாகும்
ஈரோடு மின்சார விளக்குத் திட்டம் 1926 முதல் ஆலோசனையால் இருந்து 1928ல் மின்சார விளக்குப் போடுவது என்ற முடிவுக்கு வந்து அரசாங்கத்தாரோடு கடித போக்குவரத்து செய்து வந்ததாகும்.
1928-ல் மைசூர் அரசாங்கத்தினிடமிருந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்த மின்சாரத்தை ஈரோட்டுக்கும் அந்த வழியில் வரவழைத்துக் கொள்ளலாம் என்று முதலில் கவுன்சில் முடிவு செய்து கவர்மெண்டைக் கேட்க கவர்மெண்டும் அங்கீகரித்து விட்டது
அதன்படி மைசூர் கவர்மெண்டினிடமிருந்து பெற்றுக் கொள்ளச் செய்திருந்த ஏற்பாடானது என்ன காரணத்திலோ சென்னை அரசாங்கத்தின் பிரவேசத்தினால் மைசூர் கவர்மெண்ட் மின்சாரம் கொடுக்க மறுத்து விட்டது
பிறகு முனிசிபாலிட்டியார் தாங்களே யந்திரம் வைத்து மின்சாரம் உண்டாக்கி தங்கள் ஊருக்கு வினியோகித்துக் கொள்வதாய் முடிவு செய்து சர்வை செய்து பிளான் போட்டு எஸ்ட்டிமேட்டும் தயார் செய்து லக்ஷம் ரூபாய் கடன் வேண்டுமென்று கவர்மெண்டை கடன் கேட்டார்கள்: கவர்மெண்டார் இடைகால வழியில் கொடுக்க முடியாதென்று சொல்லி வேறு எங்காவது வாங்கிக்கொள்ள அனுமதி கொடுத்தார்கள். (12-4-35
நெ 13594 எல்.எம்.)
அந்த உத்திரவுபடி கோயமுத்தூர் ஜில்லா போர்டில் 295 லக்ஷம் ரூபாய்
தயார் செய்து கொண்டு பிளான் எஸ்ட்டிமேட் ஆகியவைகளை சர்க்காருக்கு
அனுப்பி வேலை துவக்க லைசென்சு கொடுக்கும்படி கேட்கப்பட்டது
இதன் பேரில் கவர்மெண்டிடம் வேறு ஒரு திட்டம் யோசனையில்
இருப்பதால் இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 9-9-29ல் ஒரு
ஜீ.ஒ. உத்திரவு கிடைத்தது. இந்த நிலையில் கல்கத்தா ஆக்டேவியஸ்
ஸ்டீல் கம்பனியாரிடமிருந்து ஈரோட்டுக்கும் சேலத்துக்கும் மின்சாரம்
குடி அரசு - 1935 (2) 308
வினியோகிக்க தங்களுக்கு அனுமதி கொடுக்கும்படி சர்க்கார் லைசென்சு கேட்டு இருப்பதாகவும் ஈரோடு முனிசிபாலிட்டி அதை ஆதரிக்க வேண்டும்
என்றும் ஒரு கடிதம் வந்தது இதன்மீது ஈரோடு முனிசிபல் கவுன்சிலானது வேறு கம்பனிக்கு லைசென்சு கொடுக்கக் கூடாதென்றும் தாங்கள் இவ்விஷயத்துக்காக அதிக பணம் செலவு செய்து திட்டம் போட்டு பிளான் எஸ்ட்டிமேட்டும் பணமும் தயார் செய்துகொண்டாய் விட்டது என்றும் தங்களுக்கே லைசென்சு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
பிறகு 4-10-29ல் கவர்மெண்டார் தாங்களாகவே 3098 3-சி
எல்.எம். நெ. மெமோராண்டத்தின் மூலம் “கடன் விண்ணப்பம் கெஜட்டில் பிரசுரிக்கப்படும், லைசென்சுக்கு முறைப்படி விண்ணப்பம் போடுங்கள்” என்று தெரிவித்தார்கள்.
அதன்பேரில் கவுன்சில் டிராப்ட் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டது காரியமும் ஒரு அளவுக்கு துவக்கப்பட்டது.
இந்த சமயத்தில் திடீரென்று ஒரு கவர்மெண்டு உத்திரவு வந்தது அதில் ஈரோட்டுக்கு கவர்மெண்டார் தாங்களே மின்சாரம் சப்பிளை செய்யத் தயாராய் இருக்கிறார்கள். ஆதலால் முனிசிபாலிட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியதில்லை என்று கண்டிருந்தது
அதற்கும் கவுன்சிலர்கள் சம்மதித்து “அப்படியானால் மின்சாரச் சக்தியை எங்களுக்கு மொத்தமாய் கொடுத்து விட்டால் நாங்கள் ஊருக்குள். வினியோகித்துக் கொள்ளுகிறோம்" என்று ஈரோடு முனிசிபாலிட்டி சர்க்காரைக் கேட்டுக் கொண்டது
இந்த மத்தியில் மறுபடியும் கல்கத்தா கம்பினியாரிடமிருந்து சர்க்காரிடம் மின்சார சக்தி மொத்தமாய் வாங்கி தாங்கள் சில்லரையில் ஈரோட்டுக்கு வினியோகிப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ளும்படியும்
ஒரு கடிதம் வந்தது ஈரோடு கவுன்சிலானது அதை ஒப்புக்கொள்ளமுடியாது என்றும் தங்கள் முனிசிபாலிட்டியே அந்த வினியோக லாப நஷ்டத்தை அடைய வேண்டுமே ஒழிய சர்க்காருக்கும் முனிசிபாலிட்டிக்கும், மத்தியில் வேறு ஒரு தனிப்பட்ட நபர் அடையக்கூடாது என்று சர்க்காருக்கும் கல்கத்தா. ஆக்டேவியஸ் கம்பெனிக்கும் கவுன்சிலர்கள் தெரிவித்து விட்டு சர்க்கார், முன் தெரிவித்தபடி தங்களுக்கு மொத்தமாய் மின்சார சக்தி கொடுக்கும் படியாகவும் ஊருக்குள் வினியோகிக்க லைசென்சு வேண்டுமென்றும் கேட்டார்கள். அதோடு கூடவே தாமதம் ஆனால் ஏற்பாடு செய்த கடன். தொகைக்கு வீணாக அதிக வட்டி கொடுக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தார்கள். இதற்குக் கவர்மெண்ட்டார் “இவ்விஷயமாக ஆலோசனையில் இருக்கிறது” என்று 15-12-30-ந் தேதியில் தெரிவித்தார்கள்.
309 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதன் மீது சிறிது நாள் பொறுத்துக் கவுன்சிலர்கள் “தயவு செய்து உடனே தங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் தாமதம் ஆனதால் கஷ்டமும் அசெளகரியமும் ஏற்படுவதாகவும்” தெரிவித்துக் கொண்டார்கள்
இவ்வளவும் கவனிக்கப்படாமல் கடைசியாக கல்கத்தா ஆக்டேவியஸ்
ஸ்டீல் கம்பனியாருக்கு லைசென்சு கொடுத்து விட்டதாகக் கவர்மென்டிட மிருந்து 11-12-30ந் தேதி 11034 ஈ. உத்திரவு வந்தது
இதுதான் சர்க்காருக்கும், ஈரோடு மூனிசிபாலிட்டிக்கும் மின்சார சக்தி விஷயமாய் நடந்த கதைச் சுருக்கம்
லைசென்ஸ் கண்டிஷன்
இனி அக்கம்பெனியாருக்கு லைசென்ஸ் கொடுத்ததில் சர்க்ரர் அனுமதித்திருக்கும் கண்டிஷனை சற்று கவனிப்போம். அது ஒரே அடியாய் 20 வருஷத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஈரோட்டுக்கும் சேலத்துக்கும் ஒன்றாய் லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியாக பிரித்துக் கொள்ள முடியாது. 20 வருஷம் பொறுத்தும் கம்பினிக்காக செலவு செய்ததாகச் சொல்லப்படும் செலவுத் தொகைகள் பூராவும் கொடுத்தால்தான் அதுவும் இரண்டு முனிசிபாலிட்டியும் சேர்ந்து தான் திரும்பிப் பெறமுடியும்.
மற்றும் கம்பினியார் ஊருக்குள் விளக்குப் போடுவதில் 30 மயில் தூரமுள்ள வீதிகளில் 7 மயில் தூரம் இப்போது போட்டிருப்பது போக பாக்கி 23 மயில்களுக்கு விளக்குப் போட்டால் அவ்விளக்குப் போடுவதற்கு உண்டான சார்ஜ் கொடுப்பதைத் தவிர அதற்கு ஏற்பட்ட எரக்ஷன் செலவு அதாவது கட்டடம், கம்பம் கம்பி முதலிய செலவு தொகைகளுக்கும் வருஷம் 1க்கு 100-க்கு 12% வீதம் வட்டியும் கொடுத்து வரவேண்டும். இந்தப்படி இனிபோட வேண்டிய பாகத்துக்கும் லக்ஷக்கணக்கான.
ரூபாய்கள் செலவாகலாம்
விளக்குக்கு உண்டான மின் சக்திக்கு சார்ஜ் கொடுத்து அதன் செலவு தொகைக்கு 100-க்கு 12% வீதம் வருஷ வருஷம் வட்டி கொடுப்பதனால் வருஷம் எவ்வளவு ஆயிரம் ரூபாய் ஈரோடு முனிசிபாலிட்டி கொடுக்க வேண்டிவரும். முனிசிபாலிட்டிக்கு எவ்வளவு பதினாயிரக் கணக்கான தொகை வருஷ வருஷம் நஷ்டம் ஏற்படக் கூடும் என்பதையும் இந்தப்படி 20 வருஷவாய்தா வரையில் கொடுத்துவர 20 வருஷம் பொறுத்தபின்பு சாமான்கள் பழையது ஆகி பழுதுபட்டு கெட்டுப்போய் மாற்ற வேண்டிய சமயத்தில் கம்பெனிக்காரர்களுடைய கொள்முதல், போக்குவரத்து செலவு, அவர்களுடைய கமிஷன் “நஷ்டம்'' எல்லாம் சேர்ந்த தொகையை 10 லக்ஷ்க்கணக்காகக்கட்டிவிட்டு முனிசிபாலிட்டியார்திருப்பி வாங்கிக்கொள்ள. வேண்டும். பிறகு மறுபடியும் அனேகமாய் எல்லாம் புதுப்பிக்கப்படவேண்டி
வரும். அதற்கு பல லக்ஷக்கணக்காய் தொகை வேண்டும்
குடி அரசு - 1935 (2) 310
இதற்கு சம்மதிக்காவிட்டால் மீண்டும் கம்பனியாரே சாஸ்வதமாய்
நடத்தி இந்தக் கண்டிஷன்படியே அதன் லாபத்தை என்றென்றும் அடைந்து
கொண்டிருக்க வேண்டும். இது அந்த நிபந்தனையின் கருத்து.
இந்தக் கொடுமையானதும் அடிமைத்தனமான நிபந்தனைகளுக்கு
ஒரு முனிசிபல் கவுன்சில் ஒப்புக் கொள்ளுமானால் இதை விட வேறு என்ன கெடுதி முனிசிபாலிட்டிக்கு இக்கவுன்சில் செய்ய வேண்டும் என்பதை யோசித்து பார்க்க விரும்புகிறோம்
ஆகையால் கவுன்சிலர்களும், சேர்மெனும், கமிஷனரும் சேர்ந்து எப்படியாவது இணங்கி வந்து கம்பெனிக்காரருடன் இருவருக்கும் நஷ்டமில்லாத மாதிரியில் ஒருவித சமாதானத்துக்கு வரவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தும் பயன் ஏற்படாததால் கடைசியில் தங்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை என்பதை சர்க்காருக்கு தெரிவித்துக் கொள்ள. வேண்டி ஒரு வித முடிவுக்கு வந்து சில தீர்மானங்களை சர்க்காருக்கு அனுப்பி இருக்கிறார்கள்
(அது மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.)
அது ஒப்புக்கொள்ளப்படுமானால் கம்பெனியாருக்கும் முனிசிபாலிட்டி யாருக்கும் கலைக்டர் துரையவர்களுக்கும் சர்க்காருக்கும் பொது ஜனங் களுக்கும் திருப்தி அளிக்கக்கூடும்.
இல்லாதவரையில் விஷயம் இப்படியே இருக்க வேண்டியதாகதான். ஏற்பட்டுவிடும்
அதற்காக முனிசிபாலிட்டி மீது யாரும் குறை கூறுவது எவ்விதத்திலும் நியாயமாகாது என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் மூனிசிபாலிட்டியார் பொது ஜனங்களின் பிரதிநிதிகள் பொது ஜன நன்மைக்கு உழைக்க கட்டுப்பட்டவர்கள்.
ஆகையால் அவர்களுக்கு சரியென்று பட்டதைச் செய்யக்
கடமைப்பட்டவர்கள்.
கடைசியாக இந்த ஊர் மகாஜனங்கள் பெரும்பாகம் பேர்கள் இந்த விஷயங்களை மிகவும் நன்றாக உணர்ந்தவர். ஆனதாலேயே யாவருடைய தூண்டுதலும் இல்லாமலும் கம்பனியார் எவ்வளவோ தந்திரங்களை உபயோகித்தும் மின்சார சக்தியை தங்களுடைய சொந்த வீட்டு விளக்கு முதலியவைகளுக்குக் கூட 4 வருஷ காலமாய் எடுத்துக் கொள்ளாமல்
இருந்து வருகிறார்கள். இதைக் கண்டாவது கலைக்டர் துரையவர்களும் அரசாங்கமும் பொதுஜனங்களின் உணர்ச்சி எப்படி இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்
3 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பொது ஜனங்களுக்கு முனிசிபாலிட்டிமீது தப்பபிப்பிராயம் ஏற்படும்படி சில விஷமக்காரர்கள் தப்பான விஷயங்களை எடுத்துச் சொல்லிவந்தும் அவர்கள் ஏமாந்து போகாமல் இருந்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.ஆகையால் முனிசிபாலிட்டியார் பிடிவாதம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுமானால் அது உண்மையல்ல. மூனிசிபாலிட்டியார் செய்வதெல்லாம் வரிசெலுத்தும் ஈரோடு வாசிகளின் நன்மைக்கு ஆகவே ஒழிய மற்றபடி யாருடைய சுய நலத்துக்காவோ, வீம்புக்காகவோ, தங்கள். கவுரவத்துக்காகவோ அல்ல என்பதை பொது ஜனங்களுக்கும் கலைக்டர் துரை அவர்களும் அரசாங்கமும் உணரவேண்டுமென்று விரும்புகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 20.10.1935
குடி அரசு - 1935 (2) 312
திருச்சி மகாநாடு
இயக்கம் ஆரம்பமானதேன்?
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது அதன் காரணஸ்தர்கள் என்ன நோக்கத்துடன் இதனை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும்.
ஜஸ்டிஸ் கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் காரர்களிலேயே பலர் ஒப்புக் கொண்டு 1918-19-ல் முதலில் வேலை செய்து பின்னர் காங்கிரசில் சேர்ந்து மேற்படி வகுப்புவாரி தீர்மானத்தை காங்கிரசின் கூட்டத்தில் கொண்டுவந்த காலத்தில் இத்தீர்மானம் லிஸ்டிலிருந்து ரத்து செய்யப்பட்ட காரணத்தால் காஞ்சீபுர மகாநாட்டில் நானும் மற்றும் சிலரும் அதற்காகவும், பார்ப்பன சூட்சியை வெளியாக்கி அவர்களது ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் வேறொரு கட்சியை ஏற்படுத்துவதாகச் சொல்லி சபதங்கூறி வெளிவந்தோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை அமுலுக்கு கொண்டுவர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு நாம் ஆதரவு கொடுத்தோம் என்பதையும், பிராமணரல்லாதாருக்கு நன்மை செய்ய ஏற்பட்ட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க முயற்சிக்கும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஆகியவர்கள் தொல்லையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகவுமே நாம் இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தோம் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைக்க வேண்டும். ஈரோட்டு வேலைத் திட்டக் கூட்ட சமதர்ம திட்டத்துக்கு நாம் ஒருபோதும் பின் வாங்கக் கூடாது. ஆனால் அத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய விஷயத்தில் நமது பொறுப்பைக் கொண்டு செலுத்த அவற்றை அமுலுக்குக் கொண்டுவர, தக்க அனுபவ சாத்தியமான திட்டத்தோடு வேலை செய்ய வேண்டும். இவற்றிற்கு ஜஸ்டிஸ் கட்சியாரின் உதவியை எவ்வளவு தூரம் உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுயமரியாதை கட்சியில் 100க்கு 90 பேர்கள் ஜஸ்டிஸ் கட்சியில் அனுதாபிகளாகவும், மெம்பர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருக்கின்றார்கள். நம் இயக்க நன்மையை உத்தேசித்து நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு உதவி செய்யக் கூடுமோ அவ்வளவு தூரம் நாம் செய்ய வேண்டும் என்கிற கருத்தில் தான் ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களாய் இருக்கிறார்களே ஒழிய மந்திரிகளாவதற்கல்ல
313 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொள்கை உண்டு.
ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொள்கை இருக்கிறது. அவர்கள் எந்தக் கொள்கைகளைக் கொண்டு ஆரம்பித்தார்களோ அக்கொள்கைகளை இப்போதும் காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் போகும் வழியில் உத்தியோகம் சம்பளம் வந்தால் அதை விட்டுவிட வேண்டுமா? மேலும் அக் கட்சியார் தங்களது கொள்கையாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விட்டு விட்டார்களா? அல்லது அவர்கள் எப்போதாவது அரசாங்கத்தை மிரட்டுவதாகச் சொல்லி உங்களிடம் ஓட்டுப் பெற்று பல்டி அடித்தார்களா?
நாம் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டுமென்று கருதினால் அதற்கு ஏற்ற திட்டம் போட்டு வெளிப்படையாய்ச் சொல்லிவிட வேண்டும் ஆனால் நம்மிடம் அப்படி ஒன்றும் தற்போது இல்லை. ஈரோடு திட்டத்தில் (அது மற்றொரு பக்கம் பிரசரிக்கப்பட்டிருக்கிறது. பர்.) தேர்தல்களில் ஸ்தானங்களை ஏற்று சட்டம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது பொதுவுடமை சட்ட விரோதமானது என்று அரசாங்கத்தார் தீர்மானித்து விட்டார்கள். வீணாக ஏன் ஜெயிலுக்குப் போக வேண்டும்? நமக்கு முக்கியமான வேறு வேலை செய்ய இடமில்லையா? இனிமேலா நாம் ஜெயிலுக்குப் போய் வீரத்தன்மையைக் காட்ட வேண்டும்? நான்கு பேர்கள் மட்டும் கட்சியின் சார்பாக ஜெயிலுக்குப் போனால் பலன் கிட்டிவிடுமா? நான் ஜெயிலுக்குப் போகப் பயப்படவில்லை. நான் ஜெயிலுக்குப் போனால் எனக்கு என்ன கஷ்டம் இருக்கும்? ஒன்றுமில்லை சுகமாக இருப்பேன். அதிகாரிகளும் என்னைக் கண்டு கிழவனாய் விட்டானேயென்று மரியாதை செய்கிறார்கள்.
“இந்த அரசாங்கத்தை ஒன்று உருக்கி வாரு அல்லது உடைத்து விடு” என்று கர்ஜித்துக் கொண்டு உழைத்து வந்த காந்தி இன்று எங்கே? “10 லக்ஷம் பேர் ரத்தம் சிந்த உயிரைவிடக் காத்திருக்கிறார்கள்'' என்று சொன்ன காந்தி, இப்போது எல்லோரையும் சட்டசபைக்குப் போய் ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்யும்படி சொல்லவில்லையா? 100000க்கணக்காக காங்கிரஸ்காரர்கள், தொண்டர்கள் ஜெயிலுக்குப் போன பலன் என்ன ஆயிற்று? அன்று வசூலித்த கோடி ரூபாய் எங்கே? அதற்கப்புறம் வசூலித்த 50 லக்ஷ ரூபாய் எங்கே? பட்டாஸ் வெடிகள் போல் எல்லாம் வெடித்து ஓய்ந்து போய்விடவில்லையா? இப்படியிருக்கும்போது அரசாங்கத்தோடு ஜஸ்டிஸ் கட்சியார் ஏன் ஒத்துழைக்கின்றார்கள் என்றால் அவர்கள் மனித சமூகத்துரோகக் கட்சியார்கள் சபைக்குள் நுழைந்து கொள்ளாது பார்த்துக் கொள்கிறார்கள். ஜாதி ஆணவக்காரர்கள் ஏகபோக உரிமைக்காரர்கள் உள் நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா? இந்தக் காரணத்துக்காகத்தான் இப்படிச் செய்கின்றனர். இந்த முயற்சியில் நமக்குப் பங்கில்லையா? ஜாதி ஆணவமும், ஜாதி ஆதிக்கமும் சட்டசபையில் தாண்டவமாட நாம் சம்மதிக்கலாமா? நாம் அனுபவத்தில் பயன்படத் தக்கமாதிரியில்
குடி அரசு - 1935 (2) 314
புத்திசாலித்தனமாய், தந்திரத்தில் நாம் வேலை செய்ய வேண்டும். எல்லா விஷயங்களையும் நாம் தீர யோசிக்க வேண்டும். சர்க்கார் காங்கிரசை அடக்கிவிட்டோமென்று இந்த எண்ணத்துடனேயே நமது இயக்கத்தையும் அடக்கிவிடப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு இடம் கொடுக்காமல் நமது பிரசாரத்தை பின்னும் பலப்படுத்தி வேலை செய்ய வேண்டும். வெறும் ஆவேசம் கொண்ட வாலிபர்களுக்காக நமது இயக்கம் இரையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
“சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியார்தான் ஜாதி ஆணவம் பிடித்த பார்ப்பனர்களும் கொள்கை இல்லாத காங்கிரசுக்காரரும் உள் நுழைந்து விடாமல் காப்பாற்றி வருகிறார்கள். வீணாக ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நாம் குறை பேசக் கூடாது. வீராவேசப் பேச்சால் ஒன்றும் முடியாது. பணக்காரர்களை
நாம் தற்போதுள்ள நிலைமையில் எப்படி ஒழிக்க முடியும்? எந்த வகையில், அனுபவத்தில் இன்று அது முடியும்? பார்ப்பான் ஒழிவதற்கு முன் பணக்காரத் தன்மை ஒழிந்து விடுமா? அது சாத்தியமா என்று எண்ணிப் பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சியார் இல்லாவிட்டால் பொட்டுக் கட்டும் வழக்கம் ஒழிந்திருக்குமா? குழந்தை மணம் ஒழிக்க சட்டம் வந்திருக்குமா? தீண்டாமை விலக்குக்கு ஒரு அளவாவது சட்டம் ஏற்பட்டிருக்குமா? இவ்வளவு பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பெற்றிருக்க முடியுமா? பார்ப்பனரல்லாதாருக்கு இவ்வளவு சுயமரியாதையாவது ஏற்பட்டிருக்குமா? மற்றும் பல நன்மைகள் நமக்கு ஏற்பட்டிருக்குமா என்பதை எண்ணிப் பாருங்கள். “பாழாய்ப் போன எலெக்ஷன்” என்று சொல்லி விடுவதில் பயனில்லை. பாழாய்ப் போன எலெக்ஷனில் வருகிறவன் எவனாயிருந்தாலும் அவனைத்தான் சர்க்காரும் மதிக்கிறார்கள். அவன் வசம் தான் நிர்வாகம் போய்ச் சேருகிறது; எதிரிகள் வசம் போனால் அதைக் கொண்டு நன்மை அதிகம் செய்யாவிட்டாலும் நமக்குத் தீமை அதிகம் விளைவிக்க முடியும் அங்கு சேர்ந்து செய்யும் சட்டம் தான் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகிறது அவன் செய்வதுதான் நமது தலைவிதியாகிறது. எலெக்ஷனில்தான் நம்
பிரதிநிதியை அனுப்ப முடிகிறது சமதர்மம் என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்திற் புகுத்தித் தணல் விட்டெரியச் செய்தது, நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார். “சமதர்மம் ஒரு நாளில் ஏற்படக் கூடியதல்ல. ரஷியாவில்கூட
ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான். அதுவும் சந்தர்ப்பம் சரியாய் இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமூகத் துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குறை கூறுவதால் நாம் நன்மையைச் செய்வதாகாது. நமது கொள்கைக்கு பலம்
ஏற்படுத்த தகுந்த நல்ல நிலைமை ஏற்படுத்தும் வரை தற்போது நடக்கும் வேலைத் திட்டத்துக்குத் தடை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது இயக்கத்துக்கு இன்று நிர்ப்பந்தம் ஏற்பட்டகாரணத்தாலேயே
315 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
நாம் நம் நிலைமையை நன்கு பரிசீலனை செய்து திட்டமொன்றை வகுக்க வேண்டும். எந்த அளவுக்குத் தடையில்லையோ அந்த அளவுக்குப் பிரசாரம் செய்யலாம். தடை மீற வேண்டுமென்று நாம் முடிவு செய்த பின்பே அதைப் பற்றி யோசிக்க வேண்டும். சமதர்மத்தில் எனக்குள்ள ஆர்வம் அவசரம்
நீங்கள் அறியாததல்ல. படிப்படியான திட்டத்துடன் அதை ஒழுங்கான வழிமுறைகளுடன் கொண்டு செலுத்த வேண்டும்
சமதர்மமென்பது மதம் மாறுவது என்பது போல வெறும் உணர்ச்சியல்ல. காரியத்தில் அனேக மாறுதல்களும், புரட்சிகளும் ஏற்பட வேண்டும் அதற்குத் திட்டங்கள், பிரசாரம் செய்யச் செளகரியங்கள் முதலியவை களெல்லாம் வேண்டும். அவைகளையும், காலதேச வர்த்தமானங்களுக்குத் தகுந்தபடி செலுத்தக்கூடிய ஆற்றலும், துணிவும் வேண்டும். கண்மூடித்தனமாக வெறும் பாமர மக்களின் திருப்தியையே எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள்
பின் செல்லவுங் கூடாது. நாம் பாமர மக்களைத் திருப்பி நடத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். சமதர்மத்துக்கு நாம் திட்டம் வைத்திருக்கிறோம். அத் திட்டத்துக்கு இம்மி அளவு பின்போகும்படியோ மாற்றிக் கொள்ளும்படியோ
நான் சொல்ல வரவில்லை.
குறிப்பு: 19.10.1935 ஆம் நாள் திருச்சி டவுன்ஹாலில் பெரிய கொட்டகையில் நடைபெற்ற திருச்சி மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய தலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 27.10.1935
குடி அரசு - 1935 (2) 316
அம்பத்காரும் இந்து மதமும்
11
இந்து மதத்தில் இருந்து அம்பத்காரும், தாழ்த்தப்பட்டவர்களும் மாத்திரமே அல்லாமல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் தீண்டாதவர்கள் என்பவர்கள் நீங்கிய சுமார் 17 கோடி பேர்களும் கூட இந்து மதத்தை விட்டு விலக வேண்டியவர்களேயாவார்கள்.
இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே
ஒப்புக் கொள்ளுகிறார்.
இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல்நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமூகத்தாருடைய சடங்கு, பிரார்த்தனை, வழிபடு கடவுள்கள் முதலியவை களுக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் ஒரே பெயராக இந்துமதம், அதாவது இந்தியர்களின் மதம் என்பதாகப் பெயரிட்டு விட்டார்கள்.
அக்காலத்தில் இருந்த திராவிடர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், ஆரியர் பழக்கவழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், மலை நாட்டு மக்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், ஆரிய சமாஜமும் இந்துமதம் என்றும், பிரம்மசமாஜமும் இந்து மதம் என்றும், வேதாந்தமும் இந்து மதம் என்றும், கடவுளையும் மதத்தையும் சரீரத்தையும்,
உயிரையும் துறந்த துறவறமும் இந்துமதம் என்றும், பவுத்தர்கள் பழக்கவழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், நாஸ்திகர்கள் கொள்கைகளுக்கும் இந்துமதம் என்றும் இப்படிப் பல விதமாய் அவர்கள் அதாவது கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் தவிர, மற்ற எவர்களது நடவடிக்கைக்கும் இந்துமதம் என்றே பேர் வைத்து விட்டார்கள். அதாவது இந்தியர்களின் மதம் எனச் சொல்லி விட்டார்கள். ஆகவே, இந்துமதம் என்றால் இந்தியர்கள் மதம் என்றுதான் அர்த்தமே ஒழிய, ஒரு தனிப்பட்ட குறிப்பான கொள்கைகளுக்கு இந்துமதம்
என்று பெயரில்லை. என்றாலும் அக்காலத்தில் ஆரியர்கள் சிறிது செல்வாக்குப் பெற்று இருந்ததால் அவர்கள் தங்கள் பழக்க வழக்கம்,
317 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சடங்கு, தங்களின் வழிபடு கடவுள்கள் ஆகியவைகளையே பிற இந்தியர்கள் மீதும் சுமத்தி அதற்கு அதிகமான செல்வாக்கை உண்டாக்கி வைத்துக் கொண்டிருந்தபடியால் ஆரியர்கள் பழக்க வழக்கம், சடங்கு, வழிபடு கடவுள், அவர்களது இலக்கிய ஆதாரங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் என்பன முதலியவைகளே இந்துக்களின் மதமாகவும், மத ஆதாரங்களாகவும்ஆக்கப்பட்டுவிட்டன. ஆரியர்களுக்கு எதிர்ப்பானவைகளும், ஆரியர்கள் அல்லாதவர்களும் கூட விவகாரத்திற்கு இடம் இல்லாமல் போகட்டும் என்கின்ற காரியத்துக்காகவே எல்லாம் இந்துமதம் தான் எல்லோரும் இந்துக்கள் தான் என்றும், அதுவும் இந்துமதம் இதுவும் இந்துமதம் என்றும் இந்துமதத்தில் எல்லாக் கொள்கையும் உண்டு என்றும், ஒரு இந்து எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும், பல சமயங்கள் சேர்ந்தது இந்துமதம் என்றும், அவ்வப்போது தோன்றிய பல பெரியார்களின் அபிப்பிராயங்கள் எல்லாமுமே இந்துமதமாகவே
இருக்கிறது என்றும், எந்த மதக்கருத்தும், இந்துமதத்தில் உண்டு என்றும், எப்படிப்பட்டவனும் இந்துவாய் இருக்கலாம் என்றும், புத்தர்கள் சமணர்கள். ஜெயினர்கள் எல்லாருடைய அபிப்பிராயமும் இந்துமதத்தில் இருந்து வந்ததுதான் என்றும், இந்துமதத்துக்கு பொருத்தமானதே என்றும் சொல்லி பொதுவாக இன்று முகமதியர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாத எவரும் இந்துக்கள் என்றே சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
இந்து மதம் என்பதாக இந்துக்களுடைய பழய ஆதாரங்கள் என்று சொல்லும்படியான எதிலும் ஒரு வார்த்தை கூட கிடையாது
இந்தியாவின் பெயரைக் குறிப்பதற்கு இந்துஸ்தான் என்று ஒரு வார்த்தை காணப்படலாமோ என்னமோ அதுகூட தைரியமாய் சொல்வதற்கு இல்லை. இந்தியா என்கின்ற பெயர்கூட இந்துமத ஆதாரங்கள் என்பவைகளில் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்து மதம் என்பதற்கு என்னதான் அருத்தம் என்று பழய அதாவது
சுமார் 100 வருஷம் 200 வருஷம் முந்திய ஐரோப்பிய அகராதிகளையும், ஐரோப்பிய கலைகளையும் பார்ப்போமானால் மகமதியர்கள் அல்லாதவர்கள் அனுஷ்டிக்கும் மதம் என்றும், ஆரியர்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுபவர்களுக்குச் சொல்லும் மதப் பெயர் என்றும், ஆரியர்கள் அனுஷ்டிக்கும் ஆச்சார அனுஷ்டானங்கள் என்றும் தான் காணப்படு கின்றனவே அன்றி வேறு ஒன்றும் சொல்லப்படுவதாகக் காண முடியவில்லை.
இந்து மதம் பிரத்தியக்ஷத்தில் என்னமாய் இருக்கிறது என்று பார்ப்போமானால் விக்கிரகங்களை வணங்குவது, ஜாதி வித்தியாசங்களை - உயர்வு தாழ்வுகளை பாராட்டுவது ஆகிய இந்த இரண்டு காரியம் தான் இந்த உலகத்தில் வேறு எந்த தேச மக்களிடத்திலும் வேறு எந்த மதஸ்தரிடத்திலும் இல்லாத குணங்கள் கொண்டு இருந்து வருகிறது.
குடி அரசு - 1935 (2) 318
இந்த இரண்டு காரியங்களைப் பற்றி அறிஞர்கள் என்பவர்கள் வெகு
காலத்துக்கு முன்பே தவறுதலானது என்றும் அவசியமற்றது என்றும் முடிவுகட்டி விட்டார்கள். அதற்கும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் உள்ள பெரியார்கள் என்பவர்களுடைய வாக்கும் உபதேசமும்
இருந்து வருகிறது. இவைகளையும் இந்து மத ஆதாரமாகவும், அப் பெரியார்களையும் இந்துமதத்தில் தெய்வீகாம்சம் பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுவதோடு விக்கிரக ஆராதனையில் நம்பிக்கை இல்லாதவனும் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவற்றை வெறுப்பவனும், இகழ்பவனும் கூட இந்து தான் என்றும், அதற்கும் ஆதாரம் இந்து மதத்தில் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது ஆகவே இப்போது எது இந்துமதம், எது இந்துமதம் அல்லாதது என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்
ஆனால், தேசீயத் தலைவர்கள் மதத் தலைவர்கள் என்று சொல்லப் பட்டவர்களான தோழர்கள் காந்தியார், மாளவியார் முதலாகியவர்கள் இந்து மதம் என்று எதைச் சொல்லுகிறார்கள் என்று பார்த்தால் வருணாச்சிரமத்தை பரிசுத்தமாக்கி நிலைநிறுத்துவது தான் இந்துமதம் என்கிறார் காந்தியார். களிமண்ணும் கங்கை ஜலமும் கூடவே இருக்க வேண்டியதுதான் இந்துமதம் என்று செய்து காட்டுகிறார் மாளவியார்.
மகம்மதிய ஆதிக்கம் தலையெடுக்காமல் செய்வதுதான் இந்துமதம் என்கிறார் மூஞ்செயாரும், பரமானந்தனாரும். மற்றபடி சங்கராச்சாரி களுடைய இந்து மதம் எப்படிப்பட்டது? இராமனுஜாச்சாரியாருடைய இந்து மதம் எப்படிப்பட்டது? பண்டார சன்னதிகளுடைய இந்துமதம் எப்படிப் பட்டது? மனுதர்மசாஸ்திர இந்து மதம் எப்படிப்பட்டது? இதிகாசமாகிய கீதையுடைய இந்து மதம் எப்படிப்பட்டது? புராணங்களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? சைவர்களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? மற்றும் பார்ப்பனரல்லாத சைவர்கள் இந்துமதம் எப்படிப்பட்டது? வைணவர் களுடைய இந்துமதம் எப்படிப்பட்டது? என்பவைகளைப் பற்றி நாம் விவரிக்க இதில் இடம் வைத்துக் கொள்ளவில்லை.
எப்படி இருந்தாலும் இஸ்லாமியர்களைப் போலவும் கிறிஸ்தவர்களைப் போலவும் மதம் என்பதற்கு இருந்து வரும் ஆதாரம், கொள்கை, குறிப்பிட்டவர்களுடைய உபதேசம் என்பதாக எதுவும் இல்லாமல் வார்த்தை அளவில் குருட்டு அபிமான அளவில் இந்துமதம் இருந்து வருகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
இந்த லட்சணத்தில் உள்ள இந்துமதம் ஒரு மனிதனைத் தீண்டக்கூடாதவன் என்றும், ஒரு மனிதனை தாசிமகன், வைப்பாட்டி மகன், அடிமை மகன் என்றும் சொல்லிக் கொண்டு உரிமையும் பாராட்டி 100க்கு 97 மக்களை சுயமரியாதையற்றவர்களாக்கி 100க்கு 25 மக்களை
319 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தீண்டாதவர்கள், சண்டாளர்கள் என்று இழிவுபடுத்தி வருவதென்றால், இப்படிப்பட்ட இந்தமதம் உலகத்தில் எதற்காக இருக்க வேண்டும்? இது அடியோடு ஒழிக்கப்படுவதில் என்ன தப்பு? என்றுதான் கேட்கின்றோம்
ஜாதி அகம்பாவம் பிடித்த சோம்பேறிப் பார்ப்பனீயக் கூட்டம் தங்களது சுயநலங்களை உத்தேசித்து இந்துமதம் ஒழியச் சம்மதப்பட மாட்டார்கள் என்பதோடு, “இந்துமதத்தை ஒழிக்க உன்னாலும் முடியாது உங்கள் பாட்டனாலும் முடியாது” என்று சொல்லுவார்கள். ஆனால் அது வேறு விஷயம். தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்த ஒரு ஆள் இந்து மதத்தை விட்டு விடுகிறேன் என்றும், ' சண்டாளர்கள்", “இழி மக்கள்!” என்று சொல்லக்கூடிய ஒரு கூட்ட மக்களின் மகாநாட்டில் “இந்து மதத்தை விட்டு விடவேண்டும்” என்று ஒரு தீர்மானம் செய்தவுடன் இமயமலை முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள தேசீயத் தலைவர்கள், தேசீய பத்திராதிபர்கள், மகாத்மாக்கள், மாளவியாக்கள், இந்துமதத் தலைவர்கள், “வீரர்கள்”, “தியாகிகள்', “சத்தியாக்கிரகிகள்” எல்லோருக்குமே தலையில் இடி விழுந்தது போல் ஆகிவிட்டதுடன் இதற்காக எத்தனை பொய்புரட்டு, ஏமாற்று, தந்திரம் ஆகிய இழிகாரியங்கள் எல்லாம் செய்து, “அம்பேத்கார் அவ்வளவு பெரிய மனுஷன் அல்ல'' என்றும் “பம்பாய் மாகாண தீண்டப்படாதார் மகாநாடு தக்க பிரதிநிதித்துவம் பொருந்தியது அல்ல” என்றும் தாங்கள் கூப்பாடு போடுவது போதாமல் அவ் வகுப்பிலேயே பல வயிற்றுச்சோற்றுக் கருப்பன்களைப் பிடித்து ஒரு திராம் இரண்டு திராம் சாராயம் வாங்கிக் கொடுத்து எழுதச் சொல்லியும், எழுதினதாக ஒப்புக் கொள்ளச் சொல்லியும் இவ்வளவு பாடுபடுவதைப் பார்க்கும்போதே முடியாது என்று சொல்லுபவர்கள் உண்மையாக நம்புகிறார்களா அல்லது பயந்து நடுங்கி அப்படி உளறுகிறார்களா என்பது விளங்கும்
இந்துமதம் நாளுக்கு நாள் ஒழிகிறதா இல்லையா என்பதும் பிற மதம்
நாளுக்கு நாள் ஓங்குகிறதா இல்லையா என்பதும் ஒரு 50 வருஷம் ஜன கணிதத்தைப் பார்த்தால் தானாகவே விளங்கும். ஆகையால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டுமென்று முயற்சி செய்தவர்கள் இப்பார்ப்பனர்களுடைய மிரட்டலுக்கு பயப்படாமல் சித்திரத்தில் படம் எழுதக்கூட ஒரு இந்துவின் பழய சின்னம் இல்லாத அளவுக்கு இந்துமதம் என்னும் புரட்டான ஒரு கட்டும், சூழ்ச்சியும் அழிய வேண்டியது அவசியம் என்றும் அது அழிந்து போகப் போவது உறுதி தான்
என்றும் தைரியமாய்க் கூறுவோம்
குடி அரசு - தலையங்கம் - 27.10.1935
குடி அரசு - 1935 (2) 320
திருச்சி சுயமமியாதை மகாநாடு
இம்மாதம் 19- தேதி திருச்சியில் கூடிய திருச்சி ஜில்லா சுயமரியாதை மகாநாடானது, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப்பற்றி, கண்டபடி தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றே விஷமத்தன. மாகவே குறை கூறிக்கொண்டு திரிந்தவர்களுக்கு வாயடைக்கும்படியான அளவுக்கு காரியம் செய்திருக்கிறது
சிறப்பாக மகாநாட்டுத் தலைவர் தோழர் செளந்திரபாண்டியன் அவர்களது தலைமைப் பிரசாங்கமானது, ஜஸ்டிஸ் கட்சியை சுயமரியாதை இயக்கம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு தகுந்த காரணங்களை நன்றாய் விளக்கி இருக்கிறதோடு சுயமரியாதை இயக்கம் நாளுக்கு நாள் அதனுடைய கொள்கைகளில் விசால நோக்கத்துடனும் தீவிரமான மேல்
நோக்கத்துடனும் முன்னேறி இருந்தாலும், அவற்றிலிருந்து ஒரு சிறிதும் பின் வாங்காமல் இருக்க வேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதன் ஆரம்ப நோக்கத்தையே அலட்சியப்படுத்துவது சுயமரியாதை ஆகாது என்பதை அறியும்படி செய்திருக்கிறது
அன்றியும் திருச்சி மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட விருதுநகர் மகாநாட்டுத் தீர்மானத்தையும், ஈரோடு வேலைத்திட்டக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சமதர்மத் திட்டத் தீர்மானத்தையும் படித்துப் பார்ப்பவர்களுக்கு எலக்ஷனில் சம்மந்தம் வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதையும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டுமா வேண்டாமா என்கின்ற விஷயத்தைப் பற்றியும் ஒரு தெளிவான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்குமென்றே நினைக்கிறோம்
மேலும் சுயமரியாதை இயக்கம் சட்டத்துக்கு முரண்பாடு இல்லாமல் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது என்றும் விளங்கும்
மற்றும் தலைவர் அவர்கள் இயக்கத்துக்கு கட்டுப்பாடும் ஒழுங்கு முறையும் ஸ்தாபன பலமும் இருக்க வேண்டும் என்று முடிவாகக் கூறி இருப்பதும் மிகவும் கவனிக்க வேண்டிய காரியமாகும்.
இதுவரை எப்படி இருந்து வந்திருந்தாலும் இனி இயக்கம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் சுயேச்சை இருக்கும்படியாக இருக்கக்கூடாது என்பதை நாமும் வலியுறுத்துகிறோம்.
321 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
விருதுநகர் ஜஸ்டிஸ் தொண்டர் மகாநாட்டில் தோழர் ஈ.வெ. ரா தெரிவித்தது போல் கட்டுப்பாடு என்பது விளம்பரப்படுத்திவிடக் கூடிய காரியமல்ல.
அநேகர்களின் நிஷ்டூரத்துக்கும், அநேகர் இயக்கத்தை விட்டு வெளியே போவதற்குச் சம்மதிக்கக்கூடிய நிலையிலும் தைரியமாகப் பலரை இழக்கத் துணிவதிலும் தான் கட்டுப்பாடு ஏற்படக்கூடுமே தவிர தாக்ஷண்ணியத்தாலும், பயத்தாலும், போலி ஒற்றுமையினாலும் கட்டுப்பாடு. ஏற்படுவது சுலபமான காரியம் அல்ல.
அதோடு கூடவே பொருளாதாரநிலையிலும் ஒரு அளவுக்கு செளகரியம் இருக்க வேண்டும் இவ்வளவோடும்கூட சர்வாதிகாரத் தன்மைக்கும் சிறிதாவது இடமளித்தாக வேண்டும் இவ்வளவு காரியமும் இல்லாமல் வெறும் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று பேசுவதால் மாத்திரம் கட்டுப்பாடு ஏற்பட்டுவிடாது. ஆகையால் அந்த விஷயத்தையும் தலைவர் போன்றவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
இனி வருங்காலத்தில் காங்கிரஸ் கூப்பாட்டுக்கு யோக்கியதையற்றுப் போகுமாகையால் சுயமரியாதை இயக்கம் காங்கிரசை எதிர்ப்பதற்காக செலவழித்து வந்த நேரத்தையும், பிரசாரத்தையும், ஊக்கத்தையும் இனி சுயமரியாதை இயக்க சமுதாயத் துறைப் பிரசாரத்துக்குத் தாராளமாகச் செலவிடலாம் ஆகையால் சீக்கிரத்தில் கட்டுப்பாடும், ஸ்தாபன பலமும் ஏற்பாடு செய்து கொண்டு தக்கதொரு வேலைக்கமிட்டி அமைத்துக் கொண்டு முன்னிலும் அதிகமான பிரசாரத்துக்கு சுயமரியாதை இயக்கத் தோழர்கள். தயாராய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.10.1935
குடி அரசு - 1935 (2) 322
பட்டப் பகல் ஏமாற்றுந் திருவிழா
AIC.C.
சென்னையில் அக்டோபர் 5 17, 18ந் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூடி “பிரமாதமான” வேலை செய்துவிட்டது அதாவது மந்திரி பதவிகளை ஏற்பதா இல்லையா என்கின்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அம்முடிவு என்னவென்றால் பதவி ஏற்பதா இல்லையா என்பதைப் பற்றி இப்போது ஒரு முடிவுக்கும் வர முடியாது என்பது ஆனாலிது விஷயத்தைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்வதில் எவ்வித ஆக்ஷேபணையுமில்லை என்றும் தீர்மானித்துக் கொண்டது
இதன் கருத்தென்னவென்று பார்த்தால் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு எப்படி எப்படி பேசினால் மக்கள் ஏமாந்து ஓட்டுச் செய்வார்களோ அந்த முறைகளைக் கையாள காங்கிரசின் பேரால் பயனனுபவிக்கக் கருதி இருக்கும் பதவிவேட்டைக்காரருக்கு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதுதான்.
இது காங்கிரசின் சூழ்ச்சிக்கு சரியான உதாரணமா அல்லவா என்று பாருங்கள்.
மற்றும் இந்தத் தீர்மானம் "பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடுத்துக் கொடு கோவணம் கட்டிக் கொள்ள வேண்டும்'' என்று ஒரு பைத்தியக்காரன் சொன்னது போலவே இருக்கிறது
காரியக் கமிட்டித் தீர்மானம் செய்வதற்கு முன்னுமிந்த நிலைமை தான் இருந்து வந்ததென்பதோடு இதனாலேயே பல காங்கிரஸ் பிரமுகர்களும் தங்கள் வருத்தத்தை தெரிவித்ததோடு ராஜீனாமாவும் செய்திருப்பதாய் பத்திரிகைகளில் பார்த்து வருகிறோம்
தென்னாட்டில் சிறப்பாக தமிழ்நாட்டில் பல காங்கிரஸ் மகாநாடுகளில் பதவி ஏற்க வேண்டும் என்றும், பதவி ஏற்காவிட்டால் சட்டசபைக்குப் போவது முட்டாள்தனமென்றும், பதவி ஏற்பதோடு மாத்திரமல்லாமல் சீர்திருத்தத்தை நடத்திக் கொடுக்க வேண்டும் என்றும், சட்டசபைக்குப் போன பின்பும் பதவி ஏற்ற பின்பும் சீர்திருத்தத்தை அழிப்பது என்பது
323 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
முட்டாள்தனமானது என்றும் தோழர்கள் சத்தியமூர்த்தி, சி.ஆர். ரெட்டி முதலிய பல காங்கிரஸ்காரர்கள் பேசி அதை அனுசரித்து பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கும்போது இப்போது திடீரென்று தோழர் சத்தியமூர்த்தி
பல்ட்டி அடித்து இந்தப் பிரச்சினையை ஒத்தி வைக்க அனுகூலமாக இருந்திருப்பதில் ஏதாவது இரகசியம் இல்லாமல் இருப்பதற்கில்லை.
இரகசியம்
அந்த இரகசியம் என்னவென்றால் தீர்மானத்தின் 2வது பிரிவாகிய “பதவி ஏற்கலாமா கூடாதா என்னும் விஷயத்தைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் அவரவர்கள் இஷ்டப்படி (சமயத்துக்குத் தகுந்தபடி) பேசி பிரசாரம் செய்து கொள்ளலாம்'' என்கின்ற தந்திரம் நிறைந்த தீர்மானமேயாகும். இதை நாம் சூட்சி என்று சொன்னால் காங்கிரஸ்காரர்கள் ராஜ தந்திரம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே பாமர மக்களை ஏமாற்றிப் பார்ப்பனர்கள். பதவி அனுபவிக்க வேண்டும் என்பதைத் தவிர காங்கிரசில் வேறு எவ்வித பயனும் இல்லை என்று நாம் சொல்லி வருவதற்கு இவை சரியான
அத்தாக்ஷியாகும்.
மற்றும் சத்தியம், நேர்மை, பரிசுத்தம் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்படுவதும் மனிதத் தன்மைக்கு மீறின சக்தியும் “தெய்வீகத் தன்மையும் கொண்ட ஒரு மகாத்மாவின்'' சர்வாதிகாரத்தின் கீழ் நடைபெற்று வருவதும் இந்தியா முழுமைக்குமே சர்வ பிரதிநிதித்துவமான சபை என்று சொல்லப்பட்டதுமான காங்கிரசுக்கு இன்று புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றம், சூட்சி, மூடு மந்திரம் ஆகிய காரியங்கள் இல்லாமல்
ஒரு காரியமும் செய்ய முடியவில்லை என்பதை நமது பார்ப்பனர்கள்.
நிரூபித்துக் காட்டி விட்டார்கள்.
இன்று காங்கிரசு மூன்று முக்கிய கொள்கைகளைக் கைக் கொண்டு
இருக்கிறது. அந்த மூன்று கொள்கைகள் தான் மற்ற அரசியல் ஸ்தாபனங்களில்
இருந்து காங்கிரஸ் பிரிந்திருக்கிறது என்பதைக் காட்டுவதாகும்.
1. அதாவது இந்திய சமுதாயத்தில் அரசியலில் வகுப்புவாதம் கூடாது என்பது
2. இந்திய சீர்திருத்தத்தை ஏற்காமல் அதை நாசமாக்குவது என்பது
3. அரசியலில் பதவி ஏற்கக் கூடாது என்பது.
இம்மூன்று காரியமும் காங்கிரசுக்கு முக்கியமான காரியம் என்று சொல்லி வந்திருப்பதுடன் அவை இல்லாததற்கு ஆகவே மற்ற அரசியல் கட்சிகளை (ஜஸ்டிஸ் கட்சியை) காங்கிரஸ் குறை கூறி விஷமப் பிரசாரமும் செய்து வந்திருக்கிறது
இம் மூன்று விஷயங்களில் இன்றைய காங்கிரசின் யோக்கியதை என்ன என்று பார்ப்போம்
குடி அரசு - 1935 (2) 324
மூடுமந்திரம்
மூன்றையும் மூடு மந்திரமாகவே வைத்து அவரவர்களுக்கு தகுந்தபடி சமய சந்தர்ப்பத்துக்கு தகுந்தபடி பேசி மக்களை ஏமாற்றி வருகிறது
1. வகுப்புவாதப் பிரச்சினையாகிய வகுப்பு தீர்ப்பைப் பற்றி அதாவது முஸ்லீம்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்டிருக்கும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி “காங்கிரஸ் இப்போது ஒன்றும் சொல்லுவ தில்லை” என்பது.
(இதை முஸ்லீம்களைப் பொறுத்தவரை மூடுமந்திரமாக வைத்திருக்கிறது.)
2. சீர்திருத்தத்தை உடைப்பது என்பதைப் பற்றி “இப்போது ஒன்றும் பேசக் கூடாது!”
(அதையும் சென்னை மாகாணத்தைப் பொறுத்த வரை மூடு மந்திரமாக
வைத்திருக்கிறது. )
3. சீர்திருத்த அரசியலில் மந்திரி பதவி ஏற்கக் கூடாது என்பதும், இப்போது முடிவு கட்ட முடியாது ஆனால் அவரவர்கள் இஷ்டப்படி
பேசிக் கொள்ளலாம்
(இதுவும் இந்திய ஓட்டர்கள் எல்லோரையும் ஏமாற்ற மூடு மந்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது.) ஆகவே காங்கிரசானது எந்த கொள்கையில் அல்லது எந்த
திட்டத்தில் தெளிவாகவும், யோக்கியமாகவும் அபிப்பிராயம் கொண்டு இருக்கிறது என்று பார்த்தால் மக்களை ஏமாற்றுவது என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய தேசீய காங்கிரஸ் ஸ்தாபனமே ஏமாற்று ஸ்தாபனமென்றும், காங்கிரஸ் மகாநாடுகள் எல்லாம் ஏமாற்றுந் திருவிழா என்றும் 1927-லேயே
நாம் எழுதியிருக்கிறோம் ஆகவே காங்கிரசானது காந்தியார் கைக்கு என்று வந்ததோ அன்று முதலே அது சூட்சி, தந்திரம், புரட்டு, பித்தலாட்டம் முதலாகிய ஏமாற்று காரியங்களில் பிரவேசித்து பாமர மக்களை ஏய்த்து வஞ்சித்து பொருள். கொள்ளை கொண்டு பார்ப்பனர்களும் காலிகளும் படித்தவர்களும், அதாவது பிராமணர்களும்” க்ஷத்திரியர்களும்'' “வைசியர்களும்” பிழைக்கும்படியான நிலைமையும், பாடுபடுகிற மக்களும் ஏழை விவசாயிகளும் இந்தக் கூட்டங்களுக்கு உழைத்து உழைத்து அழுது ஓட்டாண்டியாகவுமான காரியம் தான் நடந்து வருகிறது
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.10.1935
325 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
விதண்டாவாதம்
ஒரு கிருஸ்தவன் இந்துவாகிவிட்டால் உடனே அவனது பெற்றோர் களுக்குத் திதி - திவசம் - சிரார்த்தம் செய்யவேண்டும் என்று இந்து புரோகிதர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த மதம் மாநியவனுடைய பெற்றோர்கள் உடனே இந்து பிதிர்லோகத்துக்கு வந்துவிடுவார்களா? அல்லது கிறிஸ்துவ பிதிர்லோகத்திலேயே இருப்பார்களா? இந்துக்கடவுள்கள் அவனை இந்து லிஸ்டில் தாக்கல் செய்து கொண்டு, அந்தப்படியான பாவ புண்ணியத்துக்கு ஏற்ற நரக மோக்ஷங்களில் இடம் ஒதுக்கிவிடுவார்களா?
கக்க
ஒரு பெண் கொஞ்ச காலம் குடும்பத்தில் இருந்து விதவை ஆகிச் சாப்பாட்டிற்கு வேறு மார்க்கமில்லாமலும், பராமரிப்புக்கு ஆளில்லாமலும் போனதால் கடவுள் பக்தி அதிகமாகி கடவுளுக்கு ஆக பொட்டுக்கட்டிக் கொண்டு நல்ல தேவதாசியாக ஆகிவிட்டால், அவர்களுக்கு விபசார தோஷமுண்டா?
கக்க
குடும்ப ஸ்திரீ விபசாரம் செய்தால் பாவம் ஏற்படலாம். தேவதாசி ஆஸ்திகர்களான தேவ பக்தர்களிடம் மாத்திரம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் பாவம் எப்படி வரும்.
கக்க ஒரு பிறவி முஸ்லீம் இந்துவாகி விக்கிரகங்களை வணங்கினால் அவனைக் கடவுள் தண்டிப்பாரா? அல்லது கடவுள் தன்னுடைய லிஸ்டி லிருந்து அவன் பெயரை அடித்துவிடுவாரா. கக்க ஒரு பிறவி இந்து முஸ்லீம் ஆகி இந்து விக்கிரகங்களை உடைத்தெரிந்தால், இந்துக் கடவுள் அவனை தண்டிப்பாரா அல்லது இந்து லிஸ்டிலிருந்து அவன் பெயரை அடித்து விடுவாரா?
கக்க
ஒரு நாஸ்திகன் வீட்டில் ஒரு பிள்ளை பிறந்து அதற்கு கடவுள் என்கின்ற பெயரே தெரிவிக்கப்படாமல் இருந்து வளர்த்துவந்தால் அப் பிள்ளை பெரியவனாகி தொழுகாததற்காவும், பிரார்த்தனை செய்யாத
குடி அரசு - 1935 (2) 326
தற்காவும் எந்தமதக் கடவுளாவது தண்டிக்குமா அல்லது “அவன் நம்ம லிஸ்டில் சேர்ந்தவனல்ல'' வென்று கவனிக்காமல் விட்டுவிடுமா?
ன அதுபோலவே ஒரு ஆஸ்திகன் சுயமரியாதைக்காரர் சாவகாசத்தால் நாஸ்திகனாகி உண்மையிலேயே அவன் மனதில் கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்றும், பாவ புண்ணிய மென்பதெல்லாம் பணக்காரர்கள், புரோகிதர்கள் சுயநலத்திற்கு ஏற்படுத்திக்கொண்ட பித்தலாட்டம் என்றும் உணர்ந்து கடவுளைப் பற்றிக் கவலையில்லாமல் நடந்துகொண்டால் எந்தக் கடவுளாவது அவனைத் தண்டிக்குமா? அல்லது “அவன்தான் சுயமரியாதையில் சேர்ந்துவிட்டானே தொலைந்துபோகட்டும்” என்று அசார்சமாய் விட்டுவிடுமா?
பகுத்தறிவு (மா.இ.) - துணுக்குகள் - அக்டோபர் 1935
327 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மதங்களின் சக்தி
இந்து இந்தியாவானது 33 கோடி தேவர்களைக் (33-கோடி இந்துக்களைக்) கொண்டிருந்த காலத்திலும் இந்தியாவைக் காப்பாற்றிக் கொள்ள அதற்குச் சக்தி இல்லாமல் போனதோடு இந்து கோவில்கள், அதிலுள்ள இந்துக் கடவுள்கள் எல்லாம் அன்னிய மதக்காரர்களால் இடிக்கவும் உடைக்கவும் கொள்ளை இடவும் பட்டன.
அவ்வளவு மாத்திரம் தாணா?
இந்து இந்தியா ஒழிந்த பிறகு இந்து முஸ்லீம் இந்தியாவாகி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியா தாய்நாடாக ஆகி இந்துக்கள் கோவில்களும் முஸ்லீம்கள் கோவில்களும் பதினாயிரக்கணக்காக ஏற்பட்ட
பிறகும் இந்தியாவைக் காப்பாற்ற இரண்டு மதத்திற்கும் சக்தியில்லாமல் போய், ஒரு சிறிய கிறிஸ்து மத சமூகத்தார் கைக்குப் போய்விட்டது. இரு மத மக்களும் ஒரு சிறு மக்களைக்கொண்ட தேச மத கூட்டத்துக்கு “அடிமைகளாய்!” இருக்கிறார்கள்
இது மாத்திரம் தானா?
மதத்தலைவர் போன்ற கிலாபத்துத் தலைவர் ஆட்சியில் இருந்த
துருக்கி தேசமானது உயிருக்கு ஊஞ்சலாடி மதத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை; மதம் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது என்ற பகுத்தறிவு வாதியின் ஆதிக்கத்தாலேயே காப்பாற்றப்பட்டது
தோட்டத்தில் பகுதி கிணறு என்கின்றபடி, ஊணில் பகுதி கிறிஸ்தவர் கோவில்களாய் இருந்து ஜனங்களில் பகுதி பாதிரிகளாய் இருந்த ரஷியதேசம் இன்று நாஸ்திகர்கள் இடம் சிக்கிக் கொண்ட பிரகுதான் வெகு சுகப்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆகவே மதங்களின் வலிமைகளைப்பற்றி பரீக்ஷிப்பதற்கு வேறு ஏதோ பரீக்ஷை இருக்கின்றதுபோல் காணப்படுகிறது. அது எதுவாய் இருக்கலாமென்றால்,
குடி அரசு - 1935 (2) 328
எந்த மதக்காரரும் இந்த உலகத்தில் இந்தச் சரீரத்தோடு ஒரு பலனும் அடையமுடியாமல் இந்த உலகத்தையும் இந்தச் சடலத்தையும் விட்ட பிறகு மற்றொரு உலகத்துக்குப் போய் சுதந்திரத்தோடு மோட்சத்தில் இருக்கலாம் என்பதாகும்
ஆனால் அறிவில்லாத மக்கள் மதங்களைப்பற்றி இந்த உலகத்தில் பயனை எதிர்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் அதைவிட மூட மக்கள் இந்த உலகத்திலேயே மதத்துக்குப் பயன் உண்டு என்று சமாதானம் சொல்ல வருகிறார்களே
அதுதான் அதிசயமாய் இருக்கிறது
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - அக்டோபர் 1935
3299 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
திதி
இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டுமென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப்பற்றி 3 விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது
1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா மற்றொரு சரீரத்தைப் பற்றிக் கொண்டுதான் இந்த சரீரத்தை விடுவதாக.
2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்த உடன் பிதிர்லோகத்தை அடைந்து அங்கு இருப்பதாக. (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ)
3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோக்ஷத்திலோ, நரகத்திலோ பலன் அனுபவித்துக்கொண்டிருப்பதாக.
ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்துத் திதி கொடுப்பது?
இது தவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும் சரீரம் உருவம் குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே. சரீரம் உருவம் குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்கமாறு ஆகியவை எப்படிப் போய்ச்சேரும் அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - அக்டோபர் 1935
குடி அரசு - 1935 (2) 330
பெண்களுக்கு உமிமை
கொடுக்கலாமா?
தோழர்களே! இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமையைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான். தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப் பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்.
நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழிய வேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம் என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள். தோழர்களே இன்று பெண்ணுரிமையைப் பற்றிப் பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்
இதைப் பற்றி பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா?
நாம் ஆஸ்திகர்களா நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ முடிவோ நமக்கு ஆதாரமா? அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்.
ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவு கட்டிவிட்டது. அம்முடிவுகள் வேத முடிவு, கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது.
கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும் முகமதியர்களுடைய வேதத்திலும்
இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்கு சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம் ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவுக்கு வருவோமானால் அம்முடிவு நமது மதவேத கட்டளைக்கு விரோதமாய் இருந்தால் நாம் அவ்வேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா அல்லது 331௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளை கைவிட்டு விடுவதா என்பதை
முதலில் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இரங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய்விடாதா?
முன் பேசிய சிலர் பெண்கள் சுதந்திர விஷயம் முன்னமேயே முடிவு கட்டப்பட்டது என்று சொன்னார். மற்றொருவர் நம் பெரியோர்கள் நன்றாய் யோசித்துச் செய்திருக்கிறதாகச் சொன்னார்.
ஆகையால் இம்மாதிரியான பெரியதொரு சீர்திருத்தவாதிகள் உண்மை சீர்திருத்தவாதிகளானால் மேல்கண்ட பிரச்சினையை முதலில்
முடிவு செய்து கொள்ள வேண்டும்.
நிற்க, ஆணும் பெண்ணும் மனிதர்கள் தான். உருவு பேதம் மனிதத் தன்மையைப் பாதிக்கக்கூடியதல்ல.
மனித வர்க்கத்தில் புத்திக் குறைவு, பலக் குறைவு என்பது இயற்கையில். ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் ஒன்றுபோலவேதான் இருக்கிறது அப்பியாசத்தால் இருபாலரும் ஒன்று போலவேதான் அடைகின்றார்கள்.
ஆண்களில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு பலவீனமானவர்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு கெட்ட குணமுடையவர்கள் இருக்கிறார்களோ? அதுபோல்தான் பெண்களிலும் இருக்கலாம்.
மேல் கொண்டு ஏதாவது இருந்தால் அது செயர்க்கையால் அதாவது ஆண்களாகிய நாம் அவர்களை குழந்தைப் பிராய முதல் அடிமைப்படுத்தி கல்வியில்லாமல் உலக ஞானம் அறிய இடம் இல்லாமல் அடக்கி வைத்துவிட்டதால் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை. தாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வியாபாரத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்து எவ்வளவு ஆண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் சம்பாதித்து எப்படி நிர்வகித்து வருகிறார்கள் பாருங்கள்
ஆண்களில் எழுத்து வாசனை அற்றவர்களுடையவும் சமத்துவ மில்லாமல் அடக்கி வைத்திருக்கும் மிருகங்களுக்கு ஒப்பான சில தாழ்த்தப்பட்ட மக்களுடையவும் அறிவு, வீரம், பராக்கிரமம் எல்லாம்
எப்படி இருக்கிறது?
வியாபாரம் செய்யும் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் பெண்களும் இன்று அவரவர்கள் தொழில்களை சரியாய் செய்யவில்லையா? உபாத்தியாயர் பெண்கள் தங்கள் உத்தியோகத்தை சரியாய் செய்ய வில்லையா? எந்த விதத்தில் அவர்கள் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்?
ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஆண்களாக இருந்தும் ஜெயிலரையும் ஜெயில் சூப்ரண்டையும் கண்டால் நடுங்குகிறார்களே, அவர்களுக்கு ஆண்மை வீரம் பராக்கிரமம் சுயபுத்தி எல்லாம் எங்கு போய்விட்டது?
குடி அரசு - 1935 (2) 332
இந்தியாவில் கிறிஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக் கிறார்கள் - முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடி வைத்திருக்கிறார்கள்.
இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து உரிமை இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டி வரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி, மந்திரி பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்றுதான் சொல்ல வேண்டி
வரும் - எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக்
கற்கத் தாராளமாய் வசதி அளிக்க வேண்டும் - 18 வயது 20 வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும் ஒவ்வொரு பெண்ணும் தான் சுகமாய் வாழத்தகுந்த ஒரு தொழில் அல்லது ஒரு மார்க்கத்துக்கு தயார் செய்யப்பட வேண்டும். தன் புருஷனை வயது வந்த பிறகு தானே தெரிந்தெடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும் இவை செய்துவிட்டால் நீங்கள் எந்தப் பெண்ணையும் தேடிப் போய்
சுதந்திரம் கொடுக்க அலைய வேண்டாம். பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கலாமா வேண்டாமா என்று இம் மாதிரிகூட்டம் போட்டு வாக்குவாதம் செய்ய வேண்டாம். தானாகவே பெற்று விடுவார்கள்.
பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் வீட்டு வேலை யார் பார்ப்பது
என்று யாரும் கவலைப்படவேண்டியதில்லை. இன்றைய வீட்டு வேலைகள் என்பது மக்களின் முட்டாள்தனத்தால் ஏற்பட்டதே ஒழிய அவை எல்லாம் இயற்கையாய் உள்ள வேலை அல்ல. இன்றைய வீட்டு வேலை இனி 20 வருஷத்துக்குள் முக்கால்வாசி குறைந்து போகும் - உலகமுற்போக்குவீட்டுவேலைகளைக் குறைத்து வருகிறது.
நம்முடைய அருத்தமற்ற பேராசை சுயநலங்களே நமக்கு இவ்வளவு
வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது
கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல - கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்டநபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள். அதற்காக மற்றொருவர் அடையப் போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம் - ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம். பெண் அடிமை அல்ல; அவளுக்கு நாம் எஜமானல்ல, கார்டியன் அல்ல என்று எண்ணிக் கொள்ள வேண்டும். பெண் தன்னைப்
333 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்
கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்குமே தான் வருமே ஒழிய ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக்கூடிய தன்மை வந்துவிடும்
ஆகவேதோழர்களானநீங்கள் நன்றாய் ஆலோசித்துஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.
குறிப்பு: 18.10.1935 ஆம் நாள் ஈரோடு லண்டன் மிஷின் கம்யூனிட்டி டிரெய்னிங் பள்ளிக்கூட மாணவர்கள் சங்கத்தின் சார்பாக பள்ளிக்கூட வகுப்பு மண்டபத்தில் நடைபெற்ற “பெண் உரிமை அவசியமா?” விவாதத்தில் தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 03.11.1935
குடி அரசு - 1935 (2) 334
தேர்தல் தொல்லை
காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் பிரவேசிக்க ஆரம்பித்த பின்பு சட்டம் சமாதானம் எல்லாம் பறந்து போகும்படி செய்து விட்டார்கள். அஹிம்சை
என்றும் யோக்கியம் என்றும் பேச்சுக்களை வாயில் சொல்லிக் கொண்டு காரியத்தில் செய்யும் காலித்தனங்களுக்கும் கலகத்துக்கும் குழப்பங்களுக்கும் அளவே இல்லாமல் இருந்து வருகிறது
திருநெல்வேலி ஜில்லா போர்டு மெம்பர் தேர்தலில் தோழர் ஐ.ஈஸ்வரம்பிள்ளை வெற்றி பெற்றுவிட்டார் என்றாலும் இவருக்கு விரோதமாய் செய்த காலித்தனங்களுக்கு ஆதாரம் ஈஸ்வரம்பிள்ளை அவர்களுடைய மோட்டார் காரானது எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு விட்டது என்பதைப் பார்த்தால் காங்கிரசின் பேரால் ஏற்பட்ட மற்ற தொல்லைகளுக்கும், விஷமங்களுக்கும் அளவு சொல்ல வேண்டுமா? ஆகவே பார்ப்பனர்கள் செய்யும் இம்மாதிரியான கிருத்திரமங்களால் பார்ப்பனரல்லாதார் முன்னிலும் அதிகமான விழிப்படையவும் ஒற்றுமை அடையவும் பார்ப்பனரை அடியோடு வெறுக்கவும் தான் ஏற்படுமே ஒழிய, மற்றப்படி பார்ப்பனர்களுக்கு இவற்றால் எல்லாம் ஒன்றும் லாபம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பது உறுதியான விஷயமாகும்
இந்த 10, 20 வருஷ காலமாகவே பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலனுக்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சிகளிலிருந்தெல்லாம் வரிசையாய் தோல்வி அடைந்தே வந்திருக்கிறார்களே அல்லாமல் எதிலும் வெற்றி முகம் கண்டார்கள் என்று சொல்ல முடியாது இவர்களுடைய "சத்தியாக்கிரகம்" “தடி அடிபடுதல்" “சிறை செல்லுதல்" முதலாகிய சண்டித்தனங்களால்கூட எதிலும் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லிவிட முடியாது
இவை மாத்திரமல்லாமல் பெரிய பெரிய தியாகிகளைப் போலும் எதையும் விரும்பாத இந்திரிய நிக்கிரஹக்காரர்களைப் போலும் வேஷம் போட்டு செய்து வந்த சூழ்ச்சிகளான பகிஷ்காரமெல்லாம் அதாவது அதிகாரம், பதவி, உத்தியோகம் எதுவும் வேண்டியதில்லை என்று வீம்பு பேசியதெல்லாம் இன்று எச்சிலையில் ஒட்டிக் கொண்டிருப்பதை நக்கும்படியான மானங்கெட்டத் தன்மைக்குக் கொண்டு வந்துவிட்டதே
335 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஒழிய, ஒன்றிலாவது வெற்றி பெற்றோம் என்றோ வீம்பைக்காப்பாற்றினோம் என்றோ சொல்லிக் கொள்ளுவதற்கே இல்லாமல் போய்விட்டது
மற்றும் ஜன சமூக நன்மைக்குப் பாடுபடுகிறோமென்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தை அலட்சியம் செய்து விட்டதாகப் பாசாங்கு செய்து ஏற்படுத்திய நிர்மாணத் திட்டங்கள் தான் என்ன ஆயிற்று? என்று பார்த்தால்,
மது விலக்கு என்பது இன்று அக்கிராரத்திலும் மது வாய்க்கால் ஓடும்படிச் செய்து விட்டது
இந்து முஸ்லீம் ஒற்றுமையானது கட்சிக்கு 100 பேர் 200 பேர் கொல்லப்படும்படியான சேதியும், ஒருவரை ஒருவர் பஹிஸ்காரம் செய்யும் சேதியும் இந்து முஸ்லீம் வகுப்புக் கலவரம் என்னும் தலைப்பில் சதா காதுகளில் “ரீங்காரம்” செய்து கொண்டே இருக்கிறது
தீண்டாமை விலக்கு வேலையோ தீண்டாதவர் வேறு எந்த மதம் புகுவது என்கின்ற யோசனையில் கொண்டுவந்து விட்டுவிட்டது. அதைத் தடுக்கவே சூழ்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது
சட்டசபைகளையும் ஸ்தல ஸ்தாபனங்களையும் பஹிஷ்காரம் செய்து காலி செய்யப்படும் வேலையோ அவைகளைக் கைப்பற்ற இன்று பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சியும், கலவரங்களும், அதனால் ஏற்படும் கொலைகளும், புதுச்சேரி எலக்ஷனைத் தோற்கடிக்கும் போல் செய்து வருகிறது.
மற்றபடி ஸ்தல ஸ்தாபனங்களில் புகுந்து அவற்றைப் பரிசுத்தப்
படுத்தும் யோக்கியதையும் கன்றாக்ட் ராஜ்யத்தை அழிக்கும் வேலையும் சென்னைக் கார்ப்பரேஷனில் சாமி வெங்கடாசலம் செட்டியாராலும் கோவை ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ் அங்கத்தினர்களாலும் செய்து காட்டியதானது இனி இவர்கள் மக்கள் முன் சிறிதும் தலைகாட்ட முடியாத நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டுவிட்டது
மக்களிடம் வசூலித்த பணங்கள் பாழாக்கப்பட்ட விதமோ இன்னவிதத்தில்தான் என்று சொல்ல முடியவில்லை. ஜனங்களுக்குப் பார்ப்பனர்களிடத்திலும் இவர்கள் மகாத்மா, தியாகி என்றெல்லாம் வேஷம் போட்டு அழைத்து வரும் தலைவர்களிடத்திலும் இருக்கும் ஒற்றுமையும் பக்தியும் நம்பிக்கையும் காந்தியார் வந்தபோது கறுப்புக் கொடிகள் பறந்ததும், ராஜேந்திர பிரசாத் அவர்கள் முக்கிய ஊர்களுக்கு இரவில் வந்து இரவில் ஓட்டம் பிடிக்கும்படியான நிகழ்ச்சிக் குறிப்புகளும் ஊர் ஊருக்கு 1% ரூ., 41% ரூ., 53% ரூ. என்கின்ற முறையில் பணப்பை பிரசெண்ட்டு செய்யும்படியான நிலையிலும் வந்துவிட்டது சென்னை, மதுரை முதலிய பல முக்கிய பட்டணங்களில் ஜனப்
பிரதிநிதி சபைகளின் வரவேற்பு இல்லை என்று ஒழுங்குமுறைப்படி தீர்மானிக்கப்பட்டாய் விட்டது
குடி அரசு - 1935 (2) 336
காத்தானையும், தீர்த்தானையும் பிடித்து ஒரு இரவில் புதுச் சங்கம் கற்பனை செய்து மானங்கெட்ட உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுக்க வேண்டியதாய்விட்டது.
இனி என்ன “பெருமை” நம்நாட்டில் இப்பார்ப்பனர்களுக்கு இருக்கிறது என்றோ அல்லது இந்த 10, 15 வருஷ சூட்சியினால் என்ன பெருமை ஏற்பட்டது என்றோ சொல்லுவார்களோ தெரியவில்லை
ஆனால் ஒரு விஷயத்தில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். என்று சொல்லலாம். அதென்னவென்றால் முன்காலப் பார்ப்பனர்கள் எப்படி பார்ப்பனரல்லாதார்களுக்குள் பல ஜாதி பல உள் வகுப்புகள் பிரித்து தாங்கள் மாத்திரம் சோம்பேறிகளாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கத் தந்திரம் செய்து வந்தார்களோ அது போல் இப்போது அரசியல் தேசாபிமானம் என்னும் பேரால் பல கட்சிகள் உண்டாக்கிப் பார்ப்பன. ரல்லாதாருக்குள் பிரிவை ஏற்படுத்தி பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் வாலறுந்தவர்களையும், மூக்கறுந்தவர்களையும், கஞ்சிக்கும் பதவிக்கும் மார்க்கம் அறுந்தவர்களையும் தங்கள் வசம் சேர்த்துக் கொண்டு கலகம்
செய்து, சூழ்ச்சி செய்து தொல்லை விளைவிப்பதில் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றாலும் அதிலும் சிறிது காலத்துக்கே தான் இந்தப்படி வெற்றி பெற முடியுமே ஒழிய வேறில்லை. ஆனாலும் அந்த மாதிரி ஆட்களுக்கும்கூட இப்போது வரவர யோக்கியதை குறைந்து கொண்டுதான் வருகிறதே தவிர - அப்படிப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்கள்தான் ஏதாவது அழுக வேண்டுமே தவிர, அவர்களால் பார்ப்பனர்களுக்கு ஒரு காரியமும் இனி ஆகப் போவதில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம் உதாரணமாக இன்று பார்ப்பனர்களுடன் இருக்கும் சில பழய நபர்களை - முழுடிக்கட் என்பவர்களையே எடுத்துக் கொள்ளலாம். தோழர்கள் CR. ரெட்டி, V. சக்கரை செட்டியார், V.O. சிதம்பரம் பிள்ளை போன்றவர். களையே எடுத்துக் கொண்டோமேயானால் இவர்கள் இதுவரை எத்தனை கரணம் போட்டவர்கள், எத்தனை தடவை காங்கிரஸ்காரர் களானார்கள். எத்தனை தடவை ஜஸ்டிஸ்காரர்களானார்கள், இவர்களுக்கு இன்று பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கு எவ்வளவு? இவர்கள் பேசுவதால் மனம் மாறி பார்ப்பனர்களை ஆதரிக்க எத்தனை நபர்கள் வந்துவிடக் கூடும்? அல்லது இவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பார்ப்பனர்களை ஆதரிக்கக்கூடும்? அல்லது இவர்களை இந்தப் பார்ப்பனர்கள் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் விளம்பரம் செய்து பயனனுபவிக்க மூடியும்? எனவே முழு டிக்கட்டுகளுடைய நிலைமையே இப்படியிருந்தால் இனி காங்கிரஸ் காலித்தனத்துக்குப் பயந்து எலக்ஷன் செலவுக்குப் பயந்து வந்து சேரும் அரை டிக்கட்டுகளைப்பற்றி எடுத்துச் சொல்ல நாம் அதிக நேரம் செலவழிக்க ஆசைப்படவில்லை.
337 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எனவே பார்ப்பனர்கள் காங்கிரஸ் வேஷம் போட்டு இன்று பார்ப்பனரல்லாதார்களுக்கு விளைவிக்கும் இம்மாதிரி தொல்லை எல்லாம் சில்லரை விஷமம் என்று கருதக் கூடியதாய் தான் இருக்க முடியுமே தவிர மற்றபடி இதனால் எல்லாம் ஒரு காரியத்தையும் சாதித்துவிட முடியாது என்றும், தாங்கள் இதுவரை செய்ததெல்லாம் தப்பான காரியமென்றும் கூடிய சீக்கிரத்தில் நமது பார்ப்பனர்கள் உணரப் போகிறார்கள் என்பதும் நிச்சயமான காரியமாகும்
வரப்போகும் சட்டசபை தேர்தல்களிலாகட்டும் பார்ப்பனர்கள்.
எந்த விதத்தில் வெற்றி அடைந்து விட முடியும்? முதலாவது பார்ப்பனர்களுக்கு தேர்தலில் சொல்லிக் கொள்ள ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதைத் தவிர, இன்று வேறு என்ன கொள்கை இருக்கிறது? அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் செய்யக்கூடிய காரியம் ஒன்றே ஒன்று தான். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அளிக்கலாம். மற்றென்னவாவது செய்யக் கூடும் என்றால் சமூக சீர்திருத்த சம்மந்தமாக எதாவது சட்டம் வந்தால் அதை எதிர்க்கலாம். இந்த இரண்டு காரியத்தைத் தவிர இவர்கள் சட்டசபையில் என்ன செய்யக்கூடும்?
இந்தக் காரியங்களும் செய்யத்தக்க அளவுக்கு பார்ப்பனர்கள் சட்டசபைக்குள் நுழைந்து விடுவது என்பது லேசான காரியமல்ல. ஆகவே அடுத்த சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் கூச்சல் போட்டதுதான் லாபமாய் இருக்கலாம். அல்லது கலகம், அடிதடி, சில கொலைகள் ஆகியவை நடக்கச் செய்தது தான் லாபமாய் இருக்கலாம் மற்றபடி பார்ப்பன ஆதிக்கம் வந்துவிடும் என்று கருதுவது கனவாகக்கூட இருக்க முடியாது என்று இப்போதே ஒவ்வொருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆதலால் பார்ப்பனர்களின் வெறும் கூப்பாட்டையும், விஷமப் பிரசாரத்தையும், காலித்தனத்தையும் கண்டு யாரும் ஏமாந்து போயோ எலெக்ஷன் செலவுக்கு பயந்தோ அவர்களிடம் போய் சரணாகதி அடைந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 03.11.1935
குடி அரசு - 1935 (2) 338
ராமகிருஷ்ணா மடம்
சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் என்பது சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட செல்வாக்கை ஒட்டி பார்ப்பனர்கள். உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சி முறையில் ஏற்படுத்தப்பட்ட மடம் இதற்குப் பச்சை வர்ணாச்சிரம பார்ப்பனர்களே காரியத்தில் சர்வாதிகாரியாய் இருப்பது வழக்கம். இம் மடத்தில் இன்னும் பார்ப்பனருக்கு வேறு இடம், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்கின்ற பிரிவு பல காரியங்களில். இருந்து வருவதோடு பிள்ளைகளுடைய பிரார்த்தனை விஷயத்தில்கூட
வ.வெ.சு. அய்யர் குருகுலத்தில் இருந்தது போலவே நடந்து வருகிறது ஆனால் இதற்கு பணவருவாய் மாத்திரம் பெரிதும் ஏன் முக்கால் பாகத்துக்கு மேல் பார்ப்பனரல்லாதாரிடையே இருந்துதான் வருகிறது
சர்க்காரில் மிக செல்வாக்குள்ள உத்தியோகத்தில் இருக்கும் பல. பார்ப்பனர்கள் தாங்கள் உத்தியோக செல்வாக்கை உபயோகித்து பாமர மக்களுடைய பணம் தங்களுக்கு வந்து சேரும்படி பல வித தந்திரங்கள் செய்து பணம் சேர்க்கிறார்கள்.
இது தவிர அரசாங்கத்தாரிடம் இருந்தும் பண வருவாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தடவை சட்டசபையில் இவ்விஷயத்தைப் பற்றி விவாதிக்க ஏற்பட்டதில் சர்க்காரில் செல்வாக்குள்ள உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர்.
களின் வேண்டுகோளால் பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.
இப்போதும் அந்த மடத்தில் ஜாதி வித்தியாசமும் இடப் பிரிவும் இருப்பதோடு அதன் பேரால் உள்ள பத்திரிகையானது பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல், எந்தக் கூட்டத்தாரை ஏமாற்றிப் பணம் கொள்ளை கொள்ளுகின்றதோ அந்தக் கூட்டத்தாரையும் இழித்துரைத்து விஷமப் பிரசாரம் செய்கின்றது
இதைப் பற்றி விடுதலைப் பத்திரிகை எடுத்துக் காட்டியதற்கு ஆக அம்மடத்திற்கு, வெறும் நிமித்திய மாத்திரமாய் பெயருக்கு இருக்கும் தலைவரான ஒரு அமிர்தேஸ்வரானந்த சுவாமி என்பவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது ராமகிருஷ்ண மடத்தில் இருந்து
339 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வெளிவரும் பத்திரிகையானது ஜஸ்டிஸ் சக்ஷியை தாக்கி எழுதியிருப்பதற்கு ஆக நான் மிகுதியும் வருந்துகிறேன். இனிமேல் இம்மாதிரி நடப்பதில்லை என்பதாக எழுதிக் கொண்டிருக்கிறார்.
இந்த மன்னிப்பை விடுதலை ஒப்புக்கொண்டு இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்புடன் நின்று விட்டது.
ராமகிருஷ்ண மடத்தில் நடக்கும் பார்ப்பனீய விஷமம் இது ஒன்று மாத்திரமல்லாமல் இப்போது மாத்திரமல்ல இருந்து வருகிறது என்பதைப் பார்ப்பனரல்லாத மக்கள் உணர வேண்டுகிறோம்
சுருங்கச் சொன்னால் காந்தியாரின் பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் எவ்வளவு தொல்லை விளைவிக்கிறார்களோ அதைவிடக் கொஞ்சமென்று சொல்லிவிட முடியாது
அது ஒரு பார்ப்பன அக்கிரகாரம் மாத்திரமல்லாமல் பெரிதும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சோறு படி போடும் ஒரு தர்ம சத்திரம் போன்றதென்றே சொல்ல வேண்டும். ஆகையால் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் இதில் பிரவேசித்து சர்க்காரிலிருந்து அதற்கு இனி பணம் போகாமல் இருக்கும்படிக்கும் பொது ஜனங்களிடம் டிராமா, கதை, காலட்க்ஷேபம், பஞ்ச நிவர்த்தி, வெள்ளக் கஷ்ட நிவர்த்தி, புயல் கஷ்ட நிவர்த்தி, பூகம்பக் கஷ்ட நிவர்த்தி என்னும் பேரால் பணம் அச்சங்கத்துக்குப் போகாமல் இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கிய கடமை ஆகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.11.1935
குடி அரசு - 1935 (2) 340
காங்கிரஸ் தியாகம்
- ஒரு பழைய கைதி
காங்கிரஸ் பிரசாரராகிய தோழர் தெய்வநாயகய்யா தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அவர் சிறை சென்ற நிமிட முதல், இதுவரை ஒவ்வொரு நாளும் தெய்வநாயகய்யாவுக்கு 8-கிளாஸ் படி கொடுக்கவேண்டுமென்று காங்கிரஸ்காரர்கள் கூப்பாடு போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். என்ன மானங்கெட்ட தனம் இது?
வீம்புக்குஜெயிலுக்குப்போகமக்களை காங்கிரஸ்காரர் தூண்டுவானேன்?'
இப்போது 8-கிளாஸ் 8-கிளாஸ் என்று கெஞ்சுவானேன்.
ஜெயிலில் -கிளாஸ் படி கொடுக்கப்படுமானால் இன்று தமிழ் நாட்டில் மாத்திரம் ஒரு கோடி பேர்கள் ஜெயிலுக்குப் போக தாங்களாகவே விண்ணப்பம் போடத் தயாராய் இருப்பார்கள். 8-கிளாஸ் என்றால் சாதம், பருப்பு, நெய், மாம்சம், ரொட்டி, வெண்ணை, காப்பி, தயிர், பால் ஆகியவைகள் கிடைக்கும். இது கிடைப்பதாய் இருந்தால் யார் ஜெயிலுக்குப் போகப் பயப்படுவார்கள்.
இதில் என்ன பெரிய தியாகம் இருக்கிறது. இது கிடையாத ஜனங்கள் நமது நாட்டில் 100க்கு 50 பேர்களுக்கு மேலாகவே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாதா?
இந்த நிலையில் ஜெயிலுக்குப் போன காங்கிரஸ்காரர்களுக்கு சட்டசபை ஸ்தானமும், ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானமும் பிரதி பிரயோஜனமாகக் கிடைக்கவேண்டுமாம். இதற்கு பெயர்தான் தியாகமும் தேசபக்தியுமாம்
குடி அரசு - கட்டுரை - 03.11.1935
3 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஸ்தல ஸ்தாபனம்
தலைவரவர்களே! தோழர்களே!!
சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே இவ்வூர் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் அவர்கள் இந்த பஞ்சாயத்து ஆபீசு கட்டடம் திறப்பு விழா கொண்டாட்டத்தின்போது பெரியதொரு கூட்டம் வரும் என்றும், அந்தச் சமயத்தில் ஒரு மணி நேரமாவது அக்கூட்டத்தின் கவனத்துக்கு வேலை இருக்கும்படியாக ஏதாவது ஒரு உபன்யாசம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். நானும் அதற்கு இணங்கி இந்த சமயத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்பது பற்றி பேசுவதாகவும் ஒப்புக் கொண்டேன். அதற் கேற்றாப்போல் இன்று ஸ்தல ஸ்தாபனத்தில் சம்பந்தப்பட்டவர்களும் அதன் நிர்வாகஸ்தர்களுமாகவே ஏராளமாகக் கூடி இருக்கிறீர்கள்.
கனம் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்கள் தலைமையில் பேசுவதற்கு மிகுதியும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்தல ஸ்தாபன சம்மந்தமான அனுபவம் எனக்கும் சிறிது உண்டு. ஆனால் அவற்றை நான் ஒரு விதமாய் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒரு விதமாய் உணர்ந்திருக்கக் கூடும் என்னவென்றால் ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதையே நாணயமில்லாத காரியம் என்று தான் கருதுகிறேன். அதனால் பொது ஜனங்களது நன்மைக்கு கேடும், சர்க்காருக்கு ஒரு பெரும் பொறுப்பிலிருந்து விடுதலையும் ஏற்படுகிறது என்று நன்றாய்ச் சொல்லுவேன். ஒரு நல்ல அரசாங்கத்திற்கு இருக்க வேண்டிய பொறுப்புகளில் மக்களுடைய கல்வி, சுகாதாரம், வைத்தியம், போக்குவரத்து வசதி ஆகியவைகள் முக்கியமான பொறுப்பாகும்.
அந்த முக்கியமான பொறுப்புகளை அரசாங்கத்தார் பொது ஜனங்கள். தலையிலேயே தள்ளி விட்டார்கள். அதிலும் பொறுப்பற்ற ஜனங்கள் தலையிலேயே தள்ளிவிடப்பட்டது
மற்றும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகப் பதவி ஒரு பொறுப்பான பதவி என்று கருதுவதற்கில்லாமல் அதை ஒரு போக போக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும், பெருமைக்கும் ஏற்ற பதவி என்று கருதும்படியாகச் செய்து விட்டார்கள்.
ஸ்தலஸ்தாபனப் பொறுப்பு பொது ஜனங்கள் கையில் இருக்க வேண்டும் என்று கேட்டு அச்சுதந்திரத்தைப் பெற்றவர்கள் படித்த கூட்டத்தவர் களேயாவார்கள். அதை இன்று அனுபவிப்பவர்கள் வியாபாரிகளும், பெரிதும் மிராசுதாரர்களுமாவார்கள்.
குடி அரசு - 1935 (2) 342
வியாபாரிகளுக்கும், மிராசுதாரர்களுக்கும் வேறு எவ்வளவோ சொந்தக் காரியங்களும், நிர்வாகத்திலேயே அவை சம்மந்தமான தொடர்புகளும் உண்டு என்பதை நான் எடுத்துக் கூற வேண்டியதில்லை. அவர்களுடைய வியாபார நேரமும், குடும்ப விவகார நேரமும் போன மீதி நேரத்தில் இளைப்பாறுவது போன்ற நேரமும் உணர்ச்சியும் தான். அவர்கள் இந்த ஸ்தல ஸ்தாபன நிர்வாக பதவியில் இருந்து செய்யக்கூடும்
இந்த விளையாட்டு நேரமும், இளைப்பாறும் உணர்ச்சியும்கூட நேர்மையாயும், நீதியாயும் அப்பதவியை செலுத்த முடியாமல் அனேக தாக்ஷண்யங்களும், பிரதி உபகாரமும் நன்றி செலுத்தும் முறையும் சேர்த்து பாழாக்கி வருகின்றது இன்றைய ஸ்தலஸ்தாபன நிர்வாகமானது சுமார் 10, 20 வருஷங்களுக்கு முன் “பொறுப்பற்ற ஒரு அன்னிய அரசாங்கம்” என்று சொல்லப்படுவதால் நடந்து வந்த நாணயப்படியும் நீதிப்படியும் திறமைப்படியும்கூட “இன்று பொது ஜனங்களாலும் பொது ஜனப் பிரதிநிதிகளாலும்'' நடத்தப்பட முடியவில்லை.
பிரசிடெண்டுகள், மெம்பர்களைத் திருப்திப்படுத்தி அவர்கள் தயவிலேயே தொங்கிக் கொண்டு தன் காரியம் பார்த்துக்கொள்ள வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
மெம்பர்கள் தங்களுக்குத் தேர்தலில் உதவி செய்தவர்களைத் திருப்தி செய்து கொண்டு தன் காரியம் பார்க்க வேண்டியவர்களாகிறார்கள். தேர்தலுக்கு வருவதோ அதில் வெற்றி பெறுவதோ ஆயிரம் பதினாயிரக்கணக்காய்
ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது
ஒருவியாபாரியும், ஒரு குடித்தனக்காரனும் இந்தப் பண நெருக்கடியான காலத்தில் ஆயிரம் பதினாயிரமாய் பணம் வட்டிக்கு வாங்கி செலவு செய்து பதவி பெற்றால் அப்பதவி மூலம் நீதியும், நேர்மையும், நாணையமும், யோக்கியப் பொறுப்பும் எப்படி எதிர்பார்க்க முடியும். அக் கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டாமா?
இதற்கு மேல் அரசாங்கமோ ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்துக்கு பொறுப்பு இல்லாவிட்டாலும் அதிகாரம் செலுத்துவதில் “நவாப்” தர்பாரைப் பின்பற்றுகின்றது
மெம்பர்களும், தலைவர்களும் தங்கள் காரியம் பார்த்துக் கொள்வதில் மாத்திரம் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறார்களே ஒழிய மற்ற நிர்வாகத்தில்
சுதந்திரம் இல்லை. சர்க்கார் சட்டப்படிதான் நடக்க வேண்டும். சர்க்கார். நிபுணர்கள் சொல்லுவதைத்தான் வேத வாக்காகக் கொள்ள வேண்டும் மற்றபடி இடம்பொருள்ஏவல் ஆகியவைகளுக்கோசமயசந்தர்ப்பங்களுக்கோ அனுபவ சாத்தியமான காரியங்களுக்கோ சிறிதும் இடமில்லை.
343 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சீமையில் என்ன நடக்கிறதோ அதுதான் ஒரு இந்திய குக்கிராமத்திலும்
நடக்க வேண்டும். அதைத் திருத்தவோ ஊருக்குத் தகுந்தபடி நடத்தவோ பிரதிநிதிகளுக்கு அதிகாரமில்லை.
ஸ்தல ஸ்தாபன இலாக்கா மேலதிகாரிகளும் அவர்களது சிப்பந்திகளும் ஜனப் பிரதிநிதிகளைத் தங்கள் வாயில் காப்போன்களைப்போல் மதிக்கிறார்கள். அந்த யோக்கியதைக்குத் தகுந்தபடி தான் ஜன பிரதிநிதிகள். அதிகம் பேர் நடந்து கொள்ளுகிறார்கள் என்றாலும் மொத்தத்தில் அந்த இலாக்கா சிறிதும் பொறுப்பும் சுயமரியாதையும் அற்றது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் எப்படி கண்ட்றாக்டர்கள் ராஜ்ஜியமென்று சொல்லப்படுகிறிதோ அதுபோலவே தான் ஸ்தல ஸ்தாபன இலாக்கா சர்க்கார் சிப்பந்திகளும் கன்ட்றாக்ட் ராஜ்யம் என்றுதான் சொல்ல வேண்டும்
ஈரோடு முனிசிபாலிட்டியாராகட்டும், கோவை ஜில்லா போர்டாரா
கட்டும் இப்போது எவ்வளவு நேர்மையாக நிர்வாகம் நடத்தப்படுகிறது
என்று சொல்லப்பட்டாலும், இவை ஒரு டிப்டி கலைக்டர் நிர்வாகத்திலும்
ஒரு ஜில்லாக் கலைக்டர் நிர்வாகத்திலும் இருந்தால் இதைவிட குறைந்த செலவில் இன்றைய செளகரியத்தைவிட பல மடங்கு மேன்மையானதும் நன்மையானதுமான நிர்வாகம் நடைபெறும்
அவர்களுக்குப் பல சுதந்திரங்களும் அனேக செளகரியங்களும் உண்டு. பொது ஜனப் பிரதிநிதிகள் கையில் ஒப்புவித்து சரியானபடி
நிர்வாகம் நடைபெறவில்லையென்று சொல்லுவதற்கு அனுகூலமாகவே பல செளகரியங்களை பிடுங்கிக் கொண்டார்கள். ஒரு முனிசிபாலிட்டியோ ஒருஜில்லா போர்டோ வெகுநாள் பாடுபட்டு வெகு கஷ்டத்துடன் தயாரித்த ஒரு திட்டத்தை ஒரு கிராமக் கணக்குப் பிள்ளை நினைத்தால் அடியோடு கவிழ்ந்துவிடும்படியான நிலையில்தான் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு
சர்க்காரின் ஆதரவு இருந்து வருகிறது. சுயமரியாதையைப் பிரதானமாய் கருதுபவர்கள் இந்த ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தில் இருப்பது மிகக் கஷ்டமான காரியமாகும்
தாலுக்கா போர்டுகளை எடுத்துவிட்டது பற்றி பலருக்கு அதிருப்தி
இருந்து வருகிறது. ஆனால் அரசாங்கத்தார் அதற்குப் பதிலாக அந்தந்த சர்க்கிளிலிருந்து நேரடியாக ஜில்லா போர்டுக்கு அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொடுத்திருக்கிறார்கள். ஆதலால் அந்தந்த
சர்க்கிள் தேவைகளையும் கவனித்துப் பொறுப்பேற்று நடத்த செளகரியம் இல்லாமல் போகவில்லை. தாலூக்கா போர்டு நிர்வாகம் நாம் பார்த்தது தானே ஒழிய நமக்குத் தெரியாததல்ல. அதில் இருந்த ஊழல்கள் எவ்வளவு என்பதை நான் இப்போது சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். வரிப்
குடி அரசு - 1935 (2) 344
பணமும், சர்க்கார் கிராண்டும் எல்லாம் சம்பளங்களுக்குத்தான் சரியாகப் போயிற்றே ஒழிய காரியத்துக்கு ஆவதில்லை. 6 மாதம் 8 மாதம் சம்பளம் இல்லாமல் திண்டாடின தாலூக்கா போர்டுகள் பல உண்டு.
ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நம்ம பக்கங்களில் எவ்வளவோ தேவலாம் என்று சொல்லுவேன். மற்ற தமிழ் ஜில்லாக்களிலேயே எவ்வளவோ மோசமாக நடைபெற்று வந்தன. கட்சிப் பிரிவுகளாலும், ஒரு கட்சியை மற்றொரு கட்சி தூற்றி கைப்பற்றி விடுவதினாலும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் நேர்மை அடைந்துவிடாது
ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தைச் சர்க்கார் தலையில் போட்டு நாம் கண்டித்து வேலை வாங்க வேண்டும். அவர்களும் நன்றாய்ச் செய்வார்கள்.
நாமும் தாட்சண்ணியமில்லாமல் வேலை வாங்கலாம்
இப்போது கட்சிகளும், சுயநலமும்தான் நிர்வாகம் செய்கிறது ஆகையால் இன்றைய ஸ்தல ஸ்தாபனம் ஜனப் பிரதிநிதிகளுக்கு லாபத்தையும் கெளரவத்தையும் கொடுக்கக் கூடியதாய் இருந்தாலும் பொதுஜன நன்மைக்கு ஏற்றதாக இல்லை என்பதோடு அந்த ஸ்தல ஸ்தாபன. யந்திரமானது அந்தப்படி பொதுஜன நன்மைக்கு ஏற்ற விதமாக நேர்மையுடனும் சுதந்திரத்துடனும் நிர்வாகம் செய்யக்கூடியதாய் இல்லை என்பதுதான் எனது அபிப்பிராயம்.
குறிப்பு: 21.10.1935 ஆம் நாள் ஈரோடு அருகில் உள்ள பிராமண பெரிய அக்கிரகார யூனியன் பஞ்சாயத்து அலுவலகக் கட்டடமாகிய மகமத் இப்ராகிம் ஹால் திறப்பு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 10.11.1935
348 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ் தவைவருக்கு
தமிழ் நாடெங்கும் பகிஷ்காரம்
காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திர பிரசாத் நல்லவர், மனிதர்களின் சராசரி குணங்களுக்கு ராஜேந்திர பிரசாத் மேலானவர் என்றே நாம் கருதியிருக்கிறோம். ஆனால் அவர் தப்பான வழியில் செல்லும்படியான நிலைமையை எப்படியோ அடைந்துவிட்டார். பொதுவாக தென்னாட்டில் சுமார் 20 வருஷ காலமாக வெளிப்படை யாகவே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சியும் பிரிவும்
அரசியலிலும் சமூக இயலிலும் இருந்து வருவதை எவரும் மறுக்க முடியாது.
இந்த விஷயம் குறிப்பாகத் தோழர்கள் காந்தியார், மாளவியா, வல்லபாய் பட்டேல், சரோஜினியம்மாள், ஜமன்லால் பஜாஜ், சங்கர்லால் பாங்கர், ராஜேந்திரபிரசாத், ஜவர்லால் நேரு முதலிய காந்தி கோஷ்டியார் - காங்கிரஸ் பிரமுகர்கள் என்பவர்கள் அறியாததல்ல.
மற்றும் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்களுக்கு மதிப்பற்றுப் போன விஷயமும், சென்னை மாகாணப் பாமர மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கடி வட நாட்டிலிருந்து யாரையாவது விளம்பரப்படுத்தி அவர்களைக் கூட்டி வந்து பிரசாரம் செய்வித்து பாமர மக்களை ஏமாற்றி வருவதும் பணம் சம்பாதிப்பதும் மேல்கண்ட காங்கிரஸ் பிரமுகர்கள் அறியாததல்ல
காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களில் எவராவது இதுவரை சென்னை மாகாணத்தில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் அபிப்பிராயபேதம்
ஏன் இருக்கிறது என்றாவது, இதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்றாவது ஒரு நாளாவது கடுகத்தனை கவலை எடுத்து இதில் பிரவேசித்து ஏதாவது ஒரு ஒழுங்கு செய்ய முயற்சித்தவர்களேயல்ல.
இதை அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று சிறிதும் சொல்லிவிட
முடியாது ஏனெனில் 'ஜஸ்டிஸ்' 'திராவிடன்' "குடி அரசு' முதலிய பத்திரிகைகள். உண்மை நிலையை எடுத்து இந்தப் பிரமுகர்களுக்கு விவரித்திருப்பது மாத்திரமல்லாமல், தோழர் காந்தி, சரோஜினியம்மாள் முதலியவர்களுக்கு
நேரில் தூது போவதுபோல் சென்று விளக்கிக் காட்டி இருக்கிறார்கள்.
குடி அரசு - 1935 (2) 346
அன்றியும் காங்கிரசில் முக்கியமாகக் கலந்து உழைத்துப் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்துப் பல தடவை ஜெயிலுக்கும் சென்ற தோழர்கள் ஈ.வெ. ராமசாமி, பி. வரதராஜுலு, ஆரியா முதலியவர்கள் காந்தியார் இடம் நேரில் சொல்லியிருப்பதுடன், காங்கிரசை விட்டுப்
பிரிந்தும், சிலர் காங்கிரசுக்கு எதிராய் பிரசாரம் செய்தும் வருகிறார்கள் என்பதும் இரகசியமான காரியமல்ல
இவ்வளவையும் அலட்சியம் செய்துவிட்டு தங்களை அழைக்கிறார்கள், ஊர்வலம் செய்கிறார்கள், நூற்றுக்கணக்கான வரவேற்பு வாசிக்கிறார்கள், மகாத்மா என்றும், சர்தார் என்றும், ராஜா என்றும், முனிவர் என்றும், அவதாரம் என்றும் கூறி நன்றாய் விளம்பரம் செய்கிறார்கள் என்கின்ற முட்டாள்தனமான பேராசைக்கு அடிமைப்பட்டு தமிழ்நாட்டுக்கு வந்து மானங்கெட்டுத் திரும்ப ஏற்பட்டால் அதற்கு யார் ஜவாப்தாரியாவார்கள் என்று கேட்கின்றோம்.
பாவம் ராஜேந்திர பிரசாத் அவர்கள் என்னைத் திரும்பிப் போ என்று ஆரவாரம் செய்கிறீர்களே நான் எங்கே போவது” என்று சொல்லி போவதற்கு வழி தெரியாமல் திகைத்தாராம்
அவருக்கு இந்தக் கதி வந்திருக்கக் கூடாதுதான். என் செய்வது; பனை
மரத்தடியில் இருந்து பாலைக் குடித்தாலும் கள்ளைக் குடித்ததாகத்தான் பார்க்கிறவர்கள் சொல்லுவார்கள்.
ஆனால் ராஜேந்திர பிரசாத் பார்ப்பனர்கள் கூடத் திரிந்து, அவர்கள் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டு அவர்கள் பின் திரிந்து கொண்டு அவர்களுக்கு கவி பாடிக் கொண்டு இருந்தால் யார்தான் மதிப்பார்கள்?
நான் எங்கே போவது என்று ராஜேந்திர பிரசாத் கேட்டவுடன் ஒரு சிறுவன் “பார்ப்பன சூழ்ச்சிக்கு தொண்டு புரிவதை விட்டு நாணயமான காரியத்துக்குத் தொண்டு புரியப் Gur என்று சொன்னானாம். ராஜேந்திரப் பிரசாத் சிரித்தாராம். பொதுநல வாழ்வில் அபிப்பிராய பேதம் இருந்தால் மக்களை வெறுப்பதும், பகிஷ்கரிப்பதும் கூடாது என்று சிலர் சோம்பேறி வேதாந்தம் பேசுவதுண்டு
சிலர் தோல்வி ஏற்பட்ட பின் இந்த முடிவுக்கு வருவதும் உண்டு
சிலரின் கோழைத்தனம் இந்த முடிவுக்குக் கொண்டு வந்து விடுவது உண்டு
சிலர் உண்மையாகவும் நினைப்பதும் உண்டு
எப்படி இருந்தாலும் பகிஷ்கரிப்பதுதான் அபிப்பிராய பேதத்தைக் காட்டுவதற்கு ஏற்ற சின்னம் என்பதை அரசியலில் தோழர் காந்தியார்தான்
347 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
முதல்முதலாக எடுத்துச் சொன்னவர் என்று பார்ப்பனர்களே ஒப்புக் கொள்ளுகிறார்கள். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களைப் பார்த்துத்தான் இப்போது மற்றவர்களும் காப்பி அடிக்கிறார்கள் என்று அவர்களே வெட்கமில்லாமல் பத்திரிக்கையில் எழுதி பெருமை அடைந்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில் பகிஷ்கரிப்பதானது எந்த முறைப்படி இப்பார்ப்பனர் களுக்கும், அவர்களது கூலிகளுக்கும் குற்றம் என்றோ, ஒழுங்கற்றது என்றோ படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை
இன்று பகிஷ்காரத்தைக் குறை கூறி கண்டபடி ஊளையிடும் பார்ப்பனப் பத்திரிக்கைகளுக்கு சென்ற வாரத்தில் “பார்ப்பனரல்லாதார் இயக்கத் தலைவர் பொப்பிலி ராஜா போலீஸ் பந்தோபஸ்தில் 144 தடை உத்திரவில் பகிஷ்காரத்தைத் தடுத்துப் பிரசாரம் செய்து விட்டு வந்தார்” என்று எழுதி மகிழ்ந்த காலத்தில் இந்தப் புத்தி எங்கு போயிற்று? அதற்கு முந்திய வாரத்தில் மதுரையில் தோழர் குமாரசாமி ரெட்டியார் பிரசாரம் செய்யும்போது அவரது கூட்டத்தில் கலவரம் செய்து, கூட்டமே நடக்க முடியாமல் செய்த அயோக்கியத்தனங்களைப் பற்றி இந்த தர்ம நியாயம் பேசுகிறவர்கள் என்ன செய்தார்கள்.
அக்காலத்தில் இவர்களுடைய வாயும் கையும் வேறு என்ன வேலையில் ஈடுபட்டிருந்தது என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
ராஜேந்திரப் பிரசாத்தைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று நாம் முதலில் சொன்ன காலத்தில் சென்னை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் பயந்து தங்களுக்கும் எங்கு இக்கதி நேர்ந்துவிடுமோவென திகில்பட்டு பகிஷ்காரம் வேண்டாம் என்று நமக்குத் தெரிவித்ததோடு நமது பகிஷ்கார சேதியைக்கூடத் தங்கள் பத்திரிக்கையில் போட மறுத்து விட்டார்கள்.
நாமும் ஒரு அளவுக்கு தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டோம்.
பிறகு சில எச்சிலைப் பத்திரிகைகள் பகிஷ்காரம் எங்கே என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தன.
(ஏன் எச்சிலைப் பத்திரிகைகள் என்று எழுதுகிறோம் என்றால் பணம் வாங்கிக் கொண்டு பணத்துக்குத் தகுந்தபடி கூலிக்குத் தகுந்தபடி கூப்பாடு போடும் கொள்கையை கொண்டிருப்பதாய் தெரிய வருவதால் அப்படி
எழுதுகிறோம்.)
பகிஷ்காரம் செய்வது என்பது கஷ்டமான காரியம் அல்லவே அல்ல. யாரையும் பஹிஷ்கரிக்கக் கூடும்
இந்த முறை ஒருவருக்கு மாத்திரம் சொந்தமானதுமல்ல.
குடி அரசு - 1935 (2) 348
காந்திக் குல்லாயைப் போட்டுக் கொண்டு, பாரதமாதாவுக்கு ஜே காந்திக்கு ஜே என்று கூப்பாடு போட்டுக் கொண்டு, கொடிகளைப் பிடித்துக் கொண்டு உண்டியல் பெட்டியுடன் தெருவில் திரியும் முட்டாள்தனத்தைவிட, இழிவைவிட ஒருவரைப்பார்த்து அதுவும் தங்களுடைய நன்மைக்கு விரோதமானவர் என்று சரியாகவோ தப்பாகவோ கருதிய ஒருவரைப் பார்த்து திரும்பிப் போ என்று சொல்லுவது எந்த வகையிலும் முட்டாள் தனமானதென்றோ, இழிவானதென்றோ சொல்லிவிட முடியாது
அன்றியும் இதை இன்று அரசியல் உலகில் சர்வசாதாரணமாக ஆக்கப்பட்டுவிட்டது. இனி இப்படிப்பட்ட காரியங்கள் ஒரு கூட்டத்தாருக் குத்தான் சொந்தமென்றோ மற்றவர்கள் செய்யக் கூடாது என்றோ சொல்லிவிட முடியாது என்பது உறுதி
நாம் இரண்டு வாரத்துக்கு முன் எழுதியபடி காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் தேர்தல் சூட்சி செய்ய ஆரம்பித்த காலம் முதல். இம்மாதிரியான காரியங்கள் மாத்திரமல்லாமல் அடிதடி, கொலை, சண்டித்தனம் முதலிய காரியங்கள் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது திருச்செந்தூர் கூட்டத்திலும் தென்காசி கூட்டத்திலும் காங்கிரஸ் காலிகள்
கல் எறிந்தார்கள். எப்படியானாலும் கொலையானாலும், அடிதடியானாலும் பார்ப்பனர்களுக்கு எந்த விதத்திலும் நஷ்டமும் இல்லை; கஷ்டமும் இல்லை
ஏனெனில் இரண்டு கட்சியிலும் அடிக்கிறவனும் அடிபடுகிறவனும் பார்ப்பனர் அல்ல. பார்ப்பனரல்லாதவர்களே தான். ஆகையால், இச் செய்கையை நிறுத்தப் பார்ப்பனர்கள் ஒரு நாளும் உடன்பட மாட்டார்கள். ஏதாவது ஒரு வழியில் பதிலுக்கு பதில் செய்யாமல் இருக்கப் பார்ப்பனர்கள்.
ஒருநாளும் அடங்கவுமாட்டார்கள்.
அரசாங்கத்தார் இதில் பிரவேசித்து இம்மாதிரியான காரியத்தை நிறுத்தினால் தான் கலவரம், குழப்பம், பகிஷ்காரம் ஆகியவை நிற்க முடியுமேயல்லாமல் இனி “நியாயத்தை'' உணர்ந்து பொது ஜனங்கள்
நிறுத்திவிடப் போவதில்லை.
மதுரையில் தோழர் குமாரசாமி ரெட்டியார் பேசும்போது குழப்பஞ் செய்த காலிகளையும், கூலிகளையும் ஒரு பார்ப்பனப் பத்திரிகையும் கண்டிக்கவில்லை. போலீசாரும் ஜாடைமாடைமாய் இருந்தார்கள். “பொது ஜனங்களுக்கு ஆத்திரம் வந்து அப்படிச் செய்தார்கள் என்று சிறிதுகூட வெட்கமில்லாமல் பார்ப்பனக் கூலிகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும் சொல்லின, எழுதின.
கடைசியாகத் தோழர் செளந்திரபாண்டியன் இரண்டொரு பொது ஜனங்களைக் காங்கிரஸ் கூட்டத்துக்கு அனுப்ப காங்கிரஸ்காரர்களுக்குப்
புத்தி வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
349 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இப்போதும் ராஜேந்திர பிரசாத் சுற்றுப் பிரயாணத்திலும் திருச்சியில் காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் வந்த வண்டியில் இருந்தே மணல் மூடிச்சுகளும், கல்லுகளும் பறந்தன என்றால் - கருப்புக்கொடி பிடித்திருந்த வாலிபனுடைய கண்ணில் அடிபட்டதென்றால் - காந்திக் குல்லாவும், காங்கிரஸ் கொடியும் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர்கள் விறகு வண்டியில் இருந்த விறகுக் கட்டைகளைப் பிடுங்கி அடித்தார்கள் என்றால், காலித்தனம், பலாத்காரம் காந்தி தொண்டர்களுக்கும், காங்கிரஸ் காரர்களுக்கும் மாத்திரமே சொந்தமாக இனி எவ்வளவு நாளைக்கு
இருந்துவிட முடியும்
அதுவும் சதா சர்வகாலம் “அஹிம்சா தர்மமூர்த்தி மகாத்மாகாந்தியாரின். அருமைச் சிஷ்யன்” என்று தன்னை சொல்லிக் கொள்ளும் Dr. ராஜன். அவர்கள் கூட இருந்து நடத்தும் கூட்டத்தில் காங்கிரஸ்காரர் காலித்தனம் ஆரம்பிப்பதென்றால் சுயமரியாதைக்காரருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கும் காங்கிரஸ் அல்லாதவர்களுக்கும் காலித்தனம் தெரியும் என்று காட்டிக் கொள்ள நேர்ந்தால் என்ன தப்பு என்றுதான் கேட்கின்றோம்
நிற்க, முக்கிய இடங்களில் உணர்ச்சிகளைக் கிளப்பக் கூடியதான. எலக்ஷன்கள் இருக்கிற காலத்தில் வடநாட்டிலிருந்து ஒரு ஆசாமியைப் பிடித்து வந்து ஊர்கோலம் செய்து பணம் வசூல் செய்ய வேண்டிய காரணமென்ன என்று கேட்கிறோம்
தோழர் ராஜேந்திரப் பிரசாத் அவர்கள் இங்கு எலக்ஷன் நடப்பது தனக்குத் தெரியாது என்றும், எலக்ஷன் பிரசாரத்துக்காகத் தான் இங்கு வரவில்லை என்றும் சென்னையில் கூட்டத்தில் முதல் நாளே சொல்லிக் கொண்டார். பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தையே தனது பிரசாரத்துக்கு பல்லவியாகவும் வைத்துக் கொண்டார்.
அப்படியானால் அது உண்மையானால், ராஜேந்திரப் பிரசாத் அவர்கள் சென்னை மாகாணத்தில் எலக்ஷன் நடப்பது தெரிந்தும் காங்கிரசின் பேரால் எலக்ஷனில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார். கட்சிகள் போட்டி போடுகிறார்கள் என்பது தெரிந்தும் இவர் நல்லவரானால் என்ன செய்திருக்க வேண்டும்?
மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டுதமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியைக் கண்டித்து விட்டு “மற்றொரு சமயம் நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு அடுத்த ரயிலில் மரியாதையாக வேறு மாகாணத்துக்குப் போய்விட்டு எலக்ஷன் முடிந்த பிறகு வந்திருக்க வேண்டும். அல்லது தகரார் என்ன என்பதை உணர ஆசைப்பட்டு அதற்குப் பரிகாரம் செய்திருக்க வேண்டும்
அப்படிக்கில்லாமல், “எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்கின்ற மாதிரியில் ஊர் ஊராய்ச் சென்று காங்கிரசை ஆதரியுங்கள், காங்கிரசை
குடி அரசு - 1935 (2) 350
ஆதரியுங்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார். இதை ஒன்றுக்குப் பத்தாகப் பெரிதாக்கிப் பத்திரிகைகள் எலக்ஷன் பிரதேசங்களுக்கு சேதிகள் அனுப்பிக் கொண்டே வந்தன.
இதன் பயனாய் ஒரு பார்ப்பனர், 2 பார்ப்பனருக்குக்கூட இடமில்லாத
ஸ்தாபனங்களில் 5, 10 ஸ்தானங்களை பார்ப்பனர்கள் பெண்டு பிள்ளை: களுடன் அடித்துக் கொண்டார்கள். இவர்களை இராஜேந்திர பிரசாத் பாராட்டி ஆசீர்வதித்தும் விட்டார். இதற்கு பெயர் என்ன என்று கேட்கின்றோம்
ஆகவே ராஜேந்திர பிரசாத் எலக்ஷன் பிரசாரம் செய்ய வரவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஆதலால் இம் மாதிரியான பார்ப்பன சூட்சிக்கு பதில் சூட்சி செய்வது பாவமானால் அதற்கு ஏற்பட்ட நரகத்தில் வாசம் செய்துதான் ஆக வேண்டுமே ஒழிய எப்படி அந்த சூழ்ச்சிகளை அனுமதிக்க முடியும்?
தோழர் ராஜேந்திர பிரசாத்தை எந்த ஊரில் பகிஷ்கரிக்கவில்லை? சென்னையில் முனிசிபல் சபை பகிஷ்கரித்தது. சென்னை ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் ஒரு விதத்தில் கறுப்புக்கொடி காட்டி பகிஷ்கரிக்க பயந்திருந்
தாலும் மற்றொரு விதத்தில் இதுவரை சென்னை சரித்திரத்தில் இல்லாததும்,
என்றும் சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்று இருக்கும்படியாகவும் சென்னை கார்ப்பரேஷன் பகிஷ்கரித்து, சென்னை மாகாணத்துக்கு வழிகாட்டினார்கள். பயங்காளிகளான கவுன்சிலர்களும், செட்டியார் தன்மையுள்ள மெம்பர்களும் உள்ள முனிசிபாலிட்டியும், ஜில்லா போர்டும் சிலது வரவேற்புப் பத்திரம் கொடுத்திருந்தாலும் முக்கிய நகரங்கள் மறுத்துவிட்டிருக்கின்றன.
சில இடங்களில் தலைவர் இருந்து வரவேற்புப் படிக்காமல் இருப்பதன் மூலம் தங்கள் பகிஷ்காரத்தைக் காட்டிவிட்டார்கள்.
உதாரணமாகக் காரைக்குடியிலும் மாயவரத்திலும் வேறு இரண்டொரு இடத்திலும் முனிசிபல் வரவேற்பு இருந்தும் படித்துக் கொடுப்பதற்கு தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. சில இடங்களில் உபதலைவரும் ஒப்புக்கொள்ளவில்லை. சில இடங்களுக்கு இரவில் போய் இரவில் புறப்பட்டு விட்டார்கள். சில இடங்களில் வெளியிட்டிருந்த வீதியை விட்டு வேறு வீதியில் போனார்கள். சில இடங்களில் ஊர்கோலமே நிறுத்திவிட்டார்கள்.
சில இடத்து நிகழ்ச்சி குறிப்புகளை வெளியிடாமலும் பொதுக் கூட்டத்தை
நிறுத்தியும் வீட்டுக்குள் உபசாரப் பத்திரம் படிக்கப்பட்டு சவாரி விட்டார்கள்.
ஆகவே உபசாரப் பத்திர வரவேற்பின் யோக்கியதைகள் இதிலிருந்து
அறிந்து கொள்ளலாம்
தவிர பொதுஜன வரவேற்பு 'நடந்த' சகல ஊர்களிலும் பகிஷ்காரம் என்பதும் பல விதத்தில் நடந்திருக்கிறது
351 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
போலீசார் தலையிட்டு விரட்டிய ஊர்களில் பகிஷ்காரத் துண்டுப் பிரசுரங்கள் கையில் கொடுக்கப்பட்டும் சுவர்களில் ஒட்டப்பட்டும் நடந்திருக்கின்றன. போலீசார் அதிகமாய்த் தலைஇடாத ஊர்களில் நன்றாய் காந்தியார் பஹிஷ்காரத்தைவிட மேலாகவே நடந்திருக்கின்றன.
விருதுநகர், திருச்சி, தஞ்சை, மாயவரம், பட்டுக்கோட்டை, தேவகோட்டை, காரைக்குடி (இங்கு வரவேற்புப் பத்திரம் படிக்க சேர்மென் மறுத்துவிட்டார்) ஆண்டிப்பட்டி, திண்டுக்கல், திருத்துறைப்பூண்டி, லால்குடி, சீரங்கம், பொன்மலை, ஒரத்தநாடு, மன்னார்குடி, நாகப்பட்டினம், வாணியம்பாடி முதலிய இன்னும் அனேக ஊர்களில் கருப்புக்கொடியுடன் சில இடங்களில் 30 அடி உயரம் 10 10 அகலமுள்ள கருப்புக் கொடிகளும், சில இடங்களில் 100ம் சில இடங்களில் 500 மாக மக்கள் கையில் கருப்புக் கொடிகளை பிடித்துக் கொண்டு அணிவகுத்து பஹிஷ்கரித்து இருக்கிறார்கள்.
ஆனால் காங்கிரஸ்காரர்கள் பலாத்காரம் ஆரம்பித்த இடங்களில்
சிறிது குழப்பம் ஏற்பட்டு இருந்தாலும் மற்ற ஊர்களில் குழப்பம் இல்லாமல், ஒழுங்கு தவறுதல் இல்லாமல் பஹிஷ்காரம் நடைபெற்றிருப்பதற்கு
மகிழ்ச்சி அடைகின்றோம் ஆகவே தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களோ, காந்தியாரோ
மற்றும் எந்த பிரமூகரோ ஆனாலும்கூட தமிழ்நாட்டில் உள்ள நிலையை உணராமலோ, உணர்ந்தும் தெரியாதவர்கள் போல் நடந்து கொண்டு விளம்பரத்துக்குஆசைப்பட்டோ இந்நாட்டுக்கு வந்து, பார்ப்பன சூட்சிக்குத் துணை புரிவார்களானால், அப்படிப்பட்டவர்களை தமிழ்நாட்டு மக்கள் சிறப்பாகத் தமிழ் மக்கள் பஹிஷ்கரிக்காமல் இருக்க மாட்டாாகள். அல்லது தங்களுடைய அதிருப்தியையாவது காட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்
வேண்டுமானால் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும் இந்தக் காரியமானது யாரோ சில காலிகள் - சர்க்கார் குலாம்கள் செய்யும் காரியமே தவிர பொதுஜனங்கள் செய்யும் காரியம் அல்ல!” என்று சொல்லி அவர்களை ஏமாற்றலாம். அந்த ஏமாற்றலுக்கும் நாம் தலைகொடுத்து இது பொது ஜனங்கள் செய்யும் காரியம்தான் என்று அவர்கள் அறியும்படி செய்ய எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்யக் காத்துக் கொண்டுதான் இருக்கிறோம்
முடிவாக இந்தப் பஹிஷ்காரத்தால் ஏற்பட்ட லாபம் என்ன என்று சில சோம்பேறிகள் கேட்கலாம். சிலர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்காது. ஆனால் அந்த வார்த்தைக்குக் காது கொடுக்கும் சிலருக்கு விளங்குவதற்காக இந்த பகிஷ்காரத்தால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை சுருக்கமாகக் காட்டுகிறோம்
குடி அரசு - 1935 (2) 352
தேசீயப் பத்திரிகை என்பவைகளுக்கும், தேசீயத்தின் பேரால் வயிறு வளர்ப்பவர்களுக்கும் கூலி கொடுத்து சுயமரியாதைக்காரர்களையும், ஜஸ்டிஸ்காரர்களையும் வையச் செய்வதற்கு பண வசூல் செய்த சூக்ஷியை தகுந்த அளவுக்கு வெற்றி பெறாமல் செய்த பலன் ஏற்பட்டது இரண்டாவதாக காங்கிரஸ் அபிப்பிராயமே பொதுஜன அபிப்பிராயம்
என்றும், அது சொல்வது தான் வேதவாக்கென்றும், அதற்கே ஓட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் அது பாவம் தேசத் துரோகம் என்றும் பாமர மக்களை ஏமாற்றும் புராணத் தன்மையும், தேசீயத் தன்மையும் வெற்றி பெறாமல் இருக்கச் செய்ததோடு வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது கடைசியாக பகிஷ்காரம் காங்கிரசுக்கே சொந்தமென்பது மாத்திர மல்லாமல் எல்லோருக்கும் சொந்தம் என்றும் ஆயிற்று. இனியாவது காங்கிரசுக்காரர்கள் இம்மாதிரியான சூழ்ச்சிகளும், கலவரங்களும், கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படாமல் இருக்கும்படி நடந்து கொள்ள மாட்டார்களா என்று எச்சரிக்கை செய்யவும், சத்தியமூர்த்தியும் அவர். போன்ற சிலரும் கூட்டங்களில் மற்றவர்களை அவன், இவன், குடிகாரன், குலாம் என்றெல்லாம் இழிமொழிப் பிரயோகம் இல்லாமல் யோக்கியமாய் நடந்து கொள்ளத் தூண்டாதா என்றும் பரீட்சை பார்க்கவும் பயன்பட்டது அந்தக் காரியங்கள் சிலருக்கு வேண்டாததாய் இருக்கலாம். ஆனால் நமக்கு வேண்டியதாய் இருந்தது
குடி அரசு - தலையங்கம் - 10.11.1935
353 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
பார்ப்பனல்லாதாருக்குத் தனித்தொகுதி வேண்டும்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது
ஜஸ்டிஸ் கட்சியானது இன்று எல்லோருடைய செல்வத்தையும், பலாத்காரத்தாலோ, சட்டபூர்வமாகவோ கைப்பற்றி எல்லா மக்களுக்கும்
பங்கிட்டுக் கொடுக்கத் துணியாவிட்டாலும், அதைவிட முக்கியகாரியமான. எல்லா மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தைச் சமமாய் அடையலாம் என்றும், எவ்வித சமத்துவத்துக்கும் சட்டத்தின் மூலமாய் மாத்திரம் தகுதி இல்லாமல் பிறவியின் மூலமாகவே தகுதி அற்றவர்கள் என்று ஏற்படுத்தியிருந்த சமூகக் கட்டுகளை உடைத்து சகல பிரஜைகளுக்கும் சம உரிமை கொடுக்கும் காரியத்தில் முயற்சித்து வெற்றி பெற்று வருகிறது.
இன்று எல்லோரும் சமமாக மண், பெண், பொன் ஆகியவைகளை அனுபவிப்பவிக்கலாம் என்பதற்கும், கைப்பற்றலாம் என்பதற்கும் சில நிபந்தனைகள் இருந்தாலும் அனுபவிப்பது குற்றமல்ல என்கிறதும், அது நாஸ்திகமாகாது என்கிறதும் நம்நாட்டில் அனுபவத்தில் வந்து விட்டது ஆதலால் முழு அமுலில் வர இன்னும் சில முறைகள் வகுக்கவும்,
திருத்தவும் தான் வேண்டியிருக்கிறது.
ஆனால் சகல மக்களும் சமூக வாழ்வில் ஒன்று என்பதும், சகல பிரஜா உரிமையும் பிரதிநிதித்துவமும் சகல மக்களும் சமமாய் அனுபவிக்கலாம் என்பதும் சட்டப்படிக் கூட அதிகமாய் இல்லாமல் பிறவி காரணமாய் மதப்படி, சாஸ்திரப்படி பலமாக தடுக்கப்பட்டிருப்பதுடன் இதை மீறுவது மதத்திற்கு விரோதம் - நாஸ்திகம் என்றெல்லாம் சொல்லப்படுவதுடன்
அமுலிலும் இருந்து வருகிறது. அரசியலானது மதக்கட்டளையையும், மததத்துவத்தையும், அடிப்படையாகக் கொண்டது என்பதிலும் சந்தேகமிருக்காது
இப்படிப்பட்ட தடுப்புகளையும், மதக் கட்டளைகளையும், ஆஸ்திகத் தையும், அலட்சியம் செய்து இன்று ஜஸ்டிஸ் கட்சியின் முயற்சியானது மதம், சாஸ்திரம் இவை சம்மந்தமான ஆஸ்திகம் என்பனவற்றை யெல்லாம் தவிடு பொடி ஆகும்படிச் செய்து சண்டாளன், இழிமகன், அடிமை என்பவர்களுக்கு
குடி அரசு - 1935 (2) 354
எல்லாம் அரசியலில் சம உரிமை, பிரதிநிதித்துவத்தில் சம உரிமை சமூக வாழ்வில் சம உரிமை என்ற கொள்கையை நிலை நிறுத்தி விட்டார்கள்.
இன்று பார்ப்பனர்கள் பறையர்களிடம் படிக்கிறார்கள்.
இன்று பார்ப்பனர்களுடன் சேர்ந்து பறையர்கள், சக்கிலியர்கள். உட்கார்ந்து சட்டம் செய்கின்றார்கள்.
தொட்டால், பேசினால், நிழல்பட்டால், கண்ணில் தென்பட்டால் பாவம் என்கின்ற ஆஸ்திகம் ஒழிந்து, அது சம்பந்தமான சாஸ்திரம், மதக் கட்டளை ஆகியவை பொசுக்கப்பட்டு, அப்படிப்பட்டவர்களுடன் சாஸ்திரிகள், ஆச்சாரிகள் முதலியவர்கள் சரிசமமாக உட்காரும்படியாக செய்துவிட்டார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் கிரமப்படி பிரதிநிதித்துவ உரிமை அடையும்படி சட்டம் செய்து விட்டார்கள்.
முக்கியமாக இந்நாட்டில் இன்று அரசியலில் உள்ள கட்சி இரண்டுதான், அதாவது ஒன்று சாஸ்திரம், மதம் ஆகியதையே அடிப்படையாகக் கொண்ட காங்கிரசு, மற்றொன்று அதை லட்சியம் செய்யாமல் எல்லா மக்களுக்கும் எல்லா உரிமையும் சட்டப்படி, கணக்குப்படி இருக்க வேண்டும் என்கின்ற அளவில் நாஸ்திகம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி. ஒரு சமயம் நாஸ்திக பாஷ்யக்காரர்களின் பத்துவாப்படி, அருள்வாக்குப்படி ஜஸ்டிஸ் கட்சியார் நாஸ்திகர் அல்லாதவர்களாகவும், மத நம்பிக்கைக்காரர்கள் ஆகவும் இருக்கலாம் என்றாலும் அனுபவ சாத்தியக் கொள்கைக்காரர்களுக்கு ஜஸ்டிஸ்காரர்களின் கொள்கையைப் பார்த்தால் அவர்கள் குருட்டு ஆத்திகர்கள். அல்ல, மூடநம்பிக்கை மதவெறியர்கள் அல்ல என்பது விளங்கும்.
ஜஸ்டிஸ் கட்சியார் எல்லா மக்களுக்கும் சமூகத்துறையில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமத்துவம் வழங்க வேண்டும் என்று ஆரம்பித்த காலத்தில் அவர்கள் அரசியல் உத்தியோகங்களிலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும் சகல ஜாதியாருக்கும் சமத்துவம், சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்றே ஆரம்பித்தார்கள். அதை எதிர்த்த முறையில்தான் இந்நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற வகுப்புப் பிரிவும், காங்கிரஸ் - ஜஸ்டிஸ் என்கின்ற கட்சிப் பிரிவும் ஏற்பட்டது அதனாலேயே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் உரிமையும் வேண்டாம் என்பதுதான் தேசீயம், தேச பக்தி என்பதாகவும், அவை வேண்டும் என்பதே தேசத் துரோகம், குலாம்தனம் என்பதாகவும் சொல்லப்பட்டு ஜஸ்டிஸ் கட்சி இழிவுபடுத்தப்பட்டது. அவற்றையெல்லாம் சமாளித்துத் தங்களது கொள்கையில் ஜஸ்டிஸ் கட்சியார் வெற்றி பெற்று, இன்று அவர்கள் உச்ச ஸ்தானத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாரம் சென்னை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சென்னை நகரசபை சட்டப்படி ஜஸ்டிஸ் கட்சி கொள்கை முழுவதும் வெற்றி பெற்று
விட்டது என்று சொல்லலாம்
358 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி இந்நாட்டில் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள், இந்துக்கள் என்று மூன்று மதப்பிரிவும், இந்துக்களுக்குள் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று மூன்று பிரிவும் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம், தனித் தொகுதி தேர்தல், தனி உத்தியோக எண்ணிக்கை ஆகியவைகள் இருக்க வேண்டுமென்று ஜஸ்டிஸ் கட்சியார் கேட்டார்கள். அதற்காக பாடுபட்டார்கள். “இந்தியா பூராவும்” அதை எதிர்த்தது
கடசியாக உத்தியோகத்தில் பங்கு வீதக் கொள்கை ஒப்புக் கொள்ளப்பட்டது.
பிரதிநிதித்துவத்திலும் ஸ்தானம் ஒப்புக் கொள்ளப்பட்டது
இன்று தேர்தல்களிலும் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதிகள் ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது. இதற்கு மாத்திரம் கடசியாக பார்ப்பனர்களும், காந்தியாரும் எவ்வளவோ சூட்சி செய்து காந்தியாரின். பட்டினிச் சண்டித்தனமும் பயன்படுத்தப்பட்டது. என்ன செய்தும் தனித் தொகுதி கிறிஸ்தவர், மகமதியர், ஐரோப்பியர், இந்துக்கள் ஆகியவர்களுக்கு இருப்பது போல இந்துக்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் ஏற்பட்டு விட்டது. சென்னை முனிசிபாலிட்டிகளுக்கு கவுன்சிலராய் நிற்கும் தீண்டப்படாதவர் ஒருவருக்கு இனி தீண்டப்படாதவர்கள் தான் ஓட்டுக் கொடுக்க முடியும். பார்ப்பனர் ஓட்டை எதிர்பார்த்து எச்சைத் தொட்டி ஓரம் இனி தீண்டப்படாதவர் நிற்க வேண்டியதில்லை
இந்த சட்டத்தின் மூலம் பொப்பிலி “அரக்கன்” செய்த வேலை இப்போது சுப்பராய ஆழ்வாராக (விபூஷணனாக) இருக்கும் 6 வருஷத்துக்கு
முன் சுப்பராய ராக்ஷசனாக இருந்தவர் செய்த வேலையைவிட முத்தையா. முதலியார் (அசுரன்) செய்த வேலையைவிட மேலான வேலை என்றே சொல்லுவோம்.
அதாவது தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதித்துவம் ஒதுக்க முதலில் சட்டம் செய்தவர் டாக்டர் சுப்பராயன் அவர்களாவர்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு உத்தியோகம் வழங்க சட்டம் செய்தவர் தோழர் எஸ்.முத்தையா முதலியார் என்றே சொல்லலாம்
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி வழங்கினவர் பொப்பிலி அரசர் என்றே சொல்ல வேண்டும்
இம் மூவர் எப்படிப்பட்டவராயிருந்தாலும், நாளைக்கு இவர்கள்.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராயிருந்தாலும், இந்தக் காரியங்களுக்கு இவர்களுக்கு சிலை வைத்து கெளரவிக்க வேண்டியது நன்றி உடைமையாகும் என்பதில் நமக்குச் சிறிதும் ஆக்ஷ்பணையில்லை.
குடி அரசு - 1935 (2) 356
இதற்காகத் தோழர் சுயமரியாதை வீரர் சிவராஜ் அவர்களின் உறுதியையும், பிடிவாதத்தையும் போற்றாமலிருக்க முடியவில்லை.
ஆனால் இன்னும் ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதாவது எல்லாத் தேர்தல்களும் பார்ப்பனத் தொகுதி, பார்ப்பனரல்லாதார் தொகுதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்பதே தான்.
அதைப் பலர் ஒப்புக் கொள்ளுவதில்லை. அதற்கு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் “இப்பொழுதே பார்ப்பனர்கள் செல்வாக்கு ஒழிந்துவிட்டது. இனி அவர்கள் விகிதாச்சாரம் கூட பெற முடியாது ஆதலால் அவர்களுக்குத் தனித் தொகுதி கொடுத்தால் அவர்களுக்கு அதிக ஸ்தானம் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. பார்ப்பனர்கள் கூட்டுத் தொகுதியில் இருந்தால் சதா தொல்லை விளைவித்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக திருச்சி, திருநெல்வேலி ஜில்லா போர்டுகளைக் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என்பதில் என்ன கருத்து இருந்தது
பொதுத் தொகுதி இருப்பதினால் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு பல அய்யர்களும், அம்மாள்களும், பல சாஸ்திரிகளும், பல சாஸ்திரிச்சி அம்மாள் அவர்களும் புகுந்து கொண்டார்கள். இப்பொழுது எந்தப் பிரசிடெண்டு வந்தாலும் எப்படியாவது சரிப்படுத்தி தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளுவார்கள்.
ஆதலால் அதையும் முடித்துவிட்டால் பிறகு பார்ப்பனத் தொல்லை பெரிய அளவுக்குக் குறைந்து போகும். அவர்களோடு கூடஇருந்தால் நம்மவர்களுக்குச் சதா தொல்லைதான். அவர்கள் பச்சோந்தி மாதிரி சமயத்துக்குத் தகுந்த நிறம், தேவேந்திரன் மாதிரி யாரையும் இந்திரப் பட்டம் அடையவொட்டாமலும் எப்படியாவது தபசைக் கலைத்த கதைகள் போல். தொல்லை விளைவித்துக் கொண்டே இருப்பார்கள். கண்களை அரித்துத் தின்னும் பூச்சிகள் போல் மனித சமூகத்தின் உழைப்பையும், சுயமரியாதை யையும், சாந்தியையும், ஒற்றுமையையும் அரித்துத் தின்னும் மனித உருக் கிருமிகளே யாவார்கள்
ஆதலால் இனி நாம் செய்ய வேண்டிய வேலை சட்டம், சமாதானம், மனித சமூகத் திருப்தி, ஒற்றுமை ஆகியவைகளை உத்தேசித்தாவது பார்ப்பனத் தொகுதி பார்ப்பனரல்லாதார் தொகுதி என்று பிரித்துவிடும் படியான தொண்டில் இறங்கித் தீவிரமாய் வேலை செய்ய வேண்டும் என்று கருதுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.11.1935
357 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டி
ஈ.வெ.ராமசாமி திட்டம் ஓப்புக்கொள்ளப்பட்டது
14.11.35 தேதி மாலை 3 மணிக்கு சென்னை தியாகராயர் மண்டபத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (ஜஸ்டிஸ் கட்சியின்) நிர்வாக சயைக்கூட்டம் கூடிற்று.
இக்கூட்டத்திற்குத் தோழர்கள் பொப்பிலி ராஜா, சர். மகமது உஸ்மான், பி.டி. ராஜன், இவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார், பி.டி. குமாரசாமி செட்டியார், சர். எ. பி.பாத்ரோ, வெங்கட்ட கரி ராஜா, மீர்சாபூர் ராஜா, கள்ளிக்கோட்டா ராஜா, டாக்டர் 8. நடேச முதலியார், ஈ.வெ. ராமசாமி, 8.வி. ராமன், இவான்பகதூர்அப்பாதுரை பிள்ளை, 8. ஜயராம் நாயுடு, சி.டி. நாயகம், வி.வி. ராமசாமி, ஜம்புலிங்க முதலியார், பொன்னம்பலனார், கே.வி. அழகர்சாமி, ஏ.எஸ். அருணாசலம், கே.எம். பாலசுப்பிரமணியம், டி.எ.வி. நாதன், .ஆ.பெ. விஸ்வநாதம், டி.வி. சுப்பிரமணியம், வாசுதேவ், ஆரணி சுகந்த முதலியார், என்.ஆர். சாமியப்பா, ச.எல். நரசிம்ம ரெட்டி, சுந்தரராவ் நாயுடு, ஆர். மகனகோபால் நாயுடு, ரங்கராமானுஜன், டப்பள்யூ.எஸ். இரஷ்ணசாமி நாயுடு, முத்துக்குமாரசாமி முதலியார், இருஷ்ணா ரெட்டியார், அப்துல்ரஜாக் சாயபு, தளவாய் ரங்கநாத முதலியார்முதலியகமார்&அங்கத்தினர்கள்விஜயம் செய்தருந்தார்கள்.
கூட்டத்திற்குத் தோழர் இவான் பகதூர் அப்பாதுரை பிள்ளை: அவர்கள்தலைமைவகத்துகூட்டத்தின்நோக்கத்தை எடுத்துச்சொன்னார்.
பிறகு தோழர்பொப்பிலி ராஜாளழுந்து தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களால்ஜஸ்டிஸ்கட்சிக்குஅனுப்பிஇருக்கும்வேலைத்திட்டத்தைப் பிரரேபிக்கும்படி தோழர் ராமசாமியைக் கேட்டுக் கொண்டார்.
தோழர் ராமசாமி எழுந்து தான் அனுப்பிய தீர்மானம்* ஒரு வருஷத்துக்கு மூன் கூடிய மாகாண மகாநாட்டிலேயே ஒப்புக் கொள்ளப்பட்டதென்றும், அது இரண்டு மூன்று தடவை பரிசீலனை செய்து திருத்தப்பட்டதென்றும், விருதுநகர் மகாநாட்டில் எல்லாப் பிரமுகர்களும் இருந்து நன்றாய் விவகரித்து ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதென்றும்,
குடி அரசு - 1935 (2) 358
கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஒப்புக் கொண்டு இதை வேலைத் திட்டத்தில் சேர்த்து அவைகளை அமுலுக்கு கொண்டு வரவேண்டு மென்றும், பொது ஜனங்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் முக்கியமாய் நம் எதிரிகளும் நம் இயக்கத்திலேயே உள்ள சில வம்பர்களும் இதை ஒரு காரணமாய் வைத்து இன்னும் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்று சொல்லி விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்றும், ஆதலால் அதை
ஒப்புக் கொண்டு அமுலுக்கு வரக் கூடுமான காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும் சொல்லி தீர்மானங்களைப் பிரரேபித்தார். தோழர் பாசுதேவ் எம்.எல்.சி. அவர்கள் ஆதரித்தார். உடனே சர்.எ.பி.பாத்ரோ அவர்கள் எழுந்து தீர்மானங்கள்
மிகவும் யோசித்து ஒப்புக் கொள்ளக்கூடியதாயிருக்கின்றன. அவசரப்
படக் கூடாது என்று சொல்லி அதற்கு ஒரு சப் கமிட்டி நியமிக்க வேண்டும் என்று சொன்னார். இதைசர். மகமது உஸ்மான்அவர்களும் வெங்கிட்ட கிரி ராஜா அவர்களும் கனம் பி.டி.ராஜன் அவர்களும் ஆதரித்து சப் கமிட்டி நியமிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.
தோழர்கள் மதனகோபால் நாயுடு, கள்ளிக்கோட்டா ராஜா, நரசிம்மரெட்டி, அழகர்சாமி, டாக்டர் சி. நடேச முதலியார், பாலகிருஷ்ணநாயுடு, பாலசுப்பிரமணியம் முதலியவர்கள்தீர்மானத்தை
ஒப்புக் கொள்ளலாம் என்றும், இது மிகவும் சரியான திட்டம் என்றும், இவற்றில் பல ஏற்கனவே ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையாய் இருந்து வருகின்றனவென்றும் பாக்கியும் முன்னமேயே இருந்திருக்க வேண்டியவை என்றும் சொன்னார்கள்.
சர். பாத்ரோ அவர்கள் மறுபடியும் எழுந்து இவற்றில் பல தீர்மானங்கள் மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த வேலைகள் என்றும் இந்த அரசாங்கத்தின் மூலம் செய்ய முடியாதவைகள் என்றும் பொதுவாக கான்பரன்ஸ்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று சொல்லி மறுபடியும் எதிர்த்தார்.
ஏதோ ஒரு விதமாய் தலைவர் தீர்மானம் எழுதப் போகும் சமயத்தில் "இதை ஓட்டுக்கு விடு முன் தோழர்ராமசாமி அபிப்பிராயம் என்ன என்பது தெரிய வேண்டு' மென்று தோழர் டி.வி.சுப்பிரமணியம் அவர்கள் சொன்னார். தோழர் இராமசாமி தனக்கு கடைசியில் பதில் சொல்லசந்தர்ப்பம் அளிக்கப்படுமென்றும் அப்போது சொல்வதாகவும் சொன்னார்.
பிறகு பொப்பிலி ராஜா அவர்கள் எழுந்து இத் தீர்மானம் ஒரு வருஷத்துக்கு முன் மகாநாட்டின்போதே கொள்கைகளில் ஒப்புக் கொள்ளப்பட்டது என்றும், வாசக திருத்தங்களுக்காக 2, கூட்டங்கள்
359 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கூடி சர். ஷண்முகம், சர். பாத்ரோ, வெங்கிட்ட கிரி ராஜா, சர். உஸ்மான் உள்பட பல பிரமுகர்கள் இருந்து பரிசீலனை செய்யப்பட்டிருக் கிறதென்றும், நமது இயக்கம் எல்லா இந்திய இயக்கமானதால் இங்கு செய்யக்கூடியதை இங்கும் மத்திய அரசாங்கத்தில் செய்யக் கூடியதை அங்கும் செய்யலாம் என்றும், இத்தீர்மானங்களில் பலவற்றை நாம் அமுலில் கொண்டுவர ஏற்கனவே முயன்று வேலை செய்து வருகிறோம் என்றும், இனி இதை ஒத்தி வைக்கக் கூடாதென்றும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் சொன்னார். உடனே தோழர்சர். மகமத் உஸ்மான் எழுந்து,
“தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் வேலைத் திட்டத்தை இக்கமிட்டி ஒப்புக் கொள்ளுகிறது. அதை ஐஸ்டிஸ் கட்சி வேலைத் இட்டமாக ஏற்று தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது! என்று தீர்மான ரூபமாக பிரேரேபித்தார், அதை பொப்பிலி ராஜா ஆமோதித்துவிட்டு ஓட்டுக்குவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தலைவர்தீர்மானத்தை வாசித்துவிட்டு ஓட்டுக் கேட்டார். எல்லோருமே ஓட்டுக் கொடுத்தார்கள். எதிராக சர்.ஏ.பி.பாத்ரோ அவர்கள் மாத்திரம் கை தூக்கினார். தீர்மானம் நிறைவேறியதாக தலைவர் சொன்னார்.
பிறகு பிரசார விஷயமாய் யோசிக்கப்பட்டது.
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எழுந்து, “வேறு ஜனங்கள் நம்மிடம் வந்து புதிதாக சேராவிட்டாலும் நம் கட்சியில் இருக்கிறவர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறார்கள்" என்றும், இதற்கு காரணம் பிரசாரமின்மைதான் என்றும், கிராம ஜனங்களுக்கு காங்கிரஸ் விளம்பரம் தான் போய் எட்டுகிறதே தவிர நம் கட்சி பிரசாரம் தெரிவதில்லை என்றும்,
நாம் பொது மக்களுக்குச் செய்த நன்மைகளை காங்கிரஸ்காரர்கள் செய்ததாக கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், காங்கிரசினால் ஏற்பட்ட கெடுதிகள் நம்மால் ஏற்பட்டதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் இதற்கு காரணம் காங்கிரசின் விஷமப் பிரசாரத்துக்கும் பார்ப்பனப் பத்திரிகைகளின் அயோக்கியத்தனத்துக்கும் எல்லை கடந்து போய்விட்டது தான் என்றும் சொல்லி தன் பாக்கெட்டிலிருந்த ஒரு பத்திரிகையை எடுத்துக்
காட்டி அதில் பொப்பிலி ராஜாவைப் பற்றி எழுதி இருக்கும் சில பொய்யும், போக்கிரித்தனமானதுமான வாசகங்களை படித்துக் காட்டி இதற்குத் தகுந்தபடி ஏற்பாடு செய்யவில்லையானால் காலிகளுக்கும் பார்ப்பன விஷமப் பிரசாரத்துக்கும் பயந்து பொப்பிலி ராஜாகூட காங்கிரசில் சேர வேண்டிவந்தாலும் வரும் என்றும் (பெரிய சிரிப்பு) ஏனென்றால் காங்கிரஸ் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் எவ்வளவு காலித்தனமாக எழுதவும், பேசவும் செய்கின்றன என்றும், அதைக் கண்டு இப்போது பல பிரமுகர்கள்
குடி அரசு - 1935 (2) 360
பயந்து போய் காங்கிரசில் சேர்ந்தால் வசவு இருக்காது செலவு இருக்காது என்று கருதுகிறார்கள் என்றும், இதை இப்படியே வளரவிடுவது மிகவும் கோழைத்தனம் என்றும், இன்று மீனாம்பள்ளி ஜமீன்தார் ஒரு சாதாரண மனுஷரின் போட்டியில் வெகு கஷ்டப்படுகிறார் என்றும், பல ஜமீன்தார் களுக்கு தங்கள் எல்லையிலேயே சாயம் போய்க் கொண்டிருக்கிறது என்றும், அது எப்படிப் போனாலும் முதலில் பார்ப்பனீயத்தை ஒழிக்க ஒரு ஏற்பாடு செய்து தகுந்த கொள்கைகளுடன் தகுந்த பிரசாரம் செய்து எதிரிகளின் தொல்லையை சமாளிக்க வேண்டும் என்றும் விடுதலை தினசரி ஆக வேண்டும் என்றும் சொன்னார்.
தோழர் கனம் பி.டி.ராஜன் அவர்கள் எழுந்து தோழர் ராமசாமி சொன்னது அவ்வளவும் சரி என்றும், தோழர் ராமசாமி அவர்கள்தனது தோழர்களுடன் தன்னுடைய சொந்த செலவிலேயே பிரசாரம் செய்து கொண்டு வருகிறார் என்றும், அதை பாராட்டுவதோடு நின்று விடாமல் பலமான பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் விடுதலை இனசரி ஆவதற்கு தக்க ஏற்பாடுகள் நடக்கின்றன என்றும் சொன்னார்.
பொப்பிலி ராஜாஅவர்கள் எழுந்து அந்த அந்த ஜில்லாகாரர்கள். அந்த அந்த எல்லையைக் கவனித்துக் கொண்டால் நலமாய் இருக்கும் என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் சொன்னார்.
பிரசாரகஷ்டத்தைப்பற்றி தோழர்கள்கே.எம். பாலசுப்பிரமணியம், கே.வி.அழகிரிசாமி, மதுரைஅருணாசலம் ஆ&யவர்கள் பேசுகையில் பிரசாரத்தின்போது பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்யும் அக்ரெமங்களையும், பார்ப்பன நிர்வாக அதிகாரிகள் செய்யும் அக்கிரமங்களையும், லால்குடி முதலிய சம்பவங்களையும் எடுத்துச் சொல்லிஅரசாங்கத்தார்கவனிக்காமல் இருப்பதைதாக்கிப் பேசினார்கள்.
தோழர் அருணாசலம் பேசுகையில் காங்கிரஸ் சட்டசபை மெம்பர்கள் தங்கள் கட்சி சம்மந்தமாயும், தங்கள் கட்சி நபர்கள் சம்மந்தமாகவும் சட்டசபையில் அனேக கேள்விகள் கேட்இன்றார்கள் என்றும், ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தினர்களை பிரசாரகர்களை போலீசார். செய்யும் கொடுமையைப் பற்றியும் ஜெயிலில் நடத்தும் கொடுமையைப் பற்றியும் உபாத்தியாயர்கள் செய்யும் அயோக்கயத்தனங்களைப் பற்றியும் சிறிதும் கவனிப்பதில்லை என்றும், ஒரு கேள்விகூட கேட்பதில்லை என்றும் சொல்லி சட்டசபை மெம்பர்களையும் இலாக்கா மந்திரிகளையும் தாக்கி பேசினார். பிறகு கட்சி திட்ட விஷயமாய் மற்றும் என்ன என்ன திட்டங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க கிழ்க்கண்டவர்கள் அடங்கிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. 3௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தோழர்கள் பொப்பிலி ராஜா, சர். மகமது உஸ்மான், கனம்
பி.டி. ராஜன், கனம் எஸ். குமாரசாமி ரெட்டியார், ஈ.வெ. ராமசாமி, டாக்டர் நடேச முதலியார், கே.எம். பாலசுப்பிரமணியம், வெங்கிடகரி ராஜா மற்றும் 2 பேர்களை சேர்த்துக் கொள்ள அதிகாரம் கொடுக்கப் பட்டது. பிறகு ஒரு டீ பார்ட்டி நடந்தது.
குடி அரசு - சொற்பொழிவு -17.11.1935
*தோழர் ஈ.வெ.ராமசாமி தீர்மானங்கள்
ஜஸ்டிஸ் கட்சி ஓப்புக் கொண்டது
1. விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும் அவர்கள் மறுபடியும் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களைகடனுக்காக கடன்காரர்களை பூமியைக்கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும்.
2. அனியாய வட்டி, லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாகப் பெருக்க வேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும்.
3. சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களை குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களை குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்கார். வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும், மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு
வாதாடும் (Benami) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு, அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிடவேண்டும்
4. விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர் - மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளை பொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாகச் செய்ய வேண்டும்
5. பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி, தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட்ரிசிட்டி முதலியவைகளை
குடி அரசு - 1935 (2) 362
சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படி செய்ய வேண்டும்
இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத்திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்ய வேண்டும்
தேசப் பொதுமக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதற்கேற்ற வரும்படி கிடைக்கும்படி வரும்படி விகிதத்தை நிர்ணயிக்கவும் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்
குறிப்பிட்ட காலத்திற்குள் சகல மக்களுக்கும் ஆரம்பப் படிப்பு ஏற்படும்படி செய்துவிடவேண்டும்
மதுபானம் ஒழியும்படியாக கூடிய முயற்சிகளையும் சட்டங்களையும் செய்துவிட வேண்டும்
மனித சமூகத்தில் இருந்து வரும் தீண்டாமையையும் பிறவிக் காரணமாக உள்ள வித்தியாசக்கொடுமைகளையும் அடியோடு ஒழித்துவிடவேண்டும்.
10
அரசியல் உத்தியோகங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார்களுக்கும் அவரவர்கள் ஜனத்தொகை பெருக்கத்துக்குத் தக்கபடியும் அரசியல் லக்ஷியத்துக்குத் தக்கபடியும் கிடைக்கும்படியாகச் செய்ய வேண்டும்
11
பூமி வரி விதிக்கும் முறையானது எல்லா மக்களுக்கும் சமமான வரிப் பளுவாய் இருக்கும்படியாகவும் அவசியமான இடங்களில் விலக்கு செய்யும்படியானதாகவும் மாற்றி அமைக்க வேண்டும். (அதாவது ஏழைக் குடியானவர்களுக்கு கொஞ்ச விகிதமும் இருக்க வேண்டும்.)
12
முனிசிபாலிட்டிகளுக்கும், கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கும், ஜனங்களுக்கும் இன்னும் அதிகமான காரியங்கள் செய்யும்படியான சுதந்திரங்கள் கொடுத்து, அவைகளை சர்க்கார் அதிகாரிகளின் மேல் பார்வையில் நடைபெறச் செய்ய வேண்டும்.
13
தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால், நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயலவேண்டியதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்
14
இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக்கொள்கைகளை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும்
15
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
363
மதம் மாறுதல்
தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்திலிருந்து மாறிவிடுவதாகச் செய்து கொண்ட முடிவையும் நாசிக் மகாநாட்டில் அவரது தலைமையின்
கீழ் செய்யப்பட்ட தீர்மானமான ஆதி இந்துக்கள் மதம் மாற வேண்டுமாய்த் தீர்மானித்ததையும், தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஆதரித்ததையும்,
குடி அரசில் ஆதரித்தெழுதியதையும் பற்றி சிலர் குறைகூறித் திரிவதாய் தெரிகிறதுடன், ஒரு தோழர்அதைவிளக்க வேண்டுமென்று கேட்கும் முறையில் கண்டித்து ஒரு கடிதம் எழுதி ஒரு அணா ஸ்டாம்பும் அனுப்பி இருக்கிறார்.
இதை மதித்து இதற்கு சமாதானம் எழுத வேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்று தோன்றினாலும், அதன் பேரில் விஷமப் பிரசாரம் செய்ய சில விஷமிகளுக்கு இடம் இல்லாமல் போகட்டும் என்பதாகக் கருதி நமது அபிப்பிராயத்தை எழுதுகிறோம்
முதலாவது சுயமரியாதை இயக்கத்தில் எப்படிப்பட்ட தீர்மானங்கள் இருந்தாலும் அவைகள் சிபார்சு செய்யக் கூடியதை தவிர எல்லாத் தீர்மானங்களும் நிர்ப்பந்தமானதும் “அவைகளை அனுசரிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்கள் அல்ல. அதில் மெம்பர்களாகவே இருக்கத் தகுதியுடையவர்கள் அல்ல'' என்கின்ற அதிகாரமானதுமான தீர்மானமல்ல
இரண்டாவது சுயமரியாதை இயக்கத்தில் ஆஸ்திகர்களும், நாஸ்திகர். களும் மெம்பர்களாய் இருக்கலாம் என்கின்ற முறை அனுபவத்தில் அனுசரிக்கப்பட்டு வருகிறது
மூன்றாவது, ஒருவன் இந்து மதத்தை விட்டால் மதமில்லாதவனாகவும், நாஸ்திகனாகவும் தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறு சிறிதாவது அதைவிடமேலானதும், சிர்திருத்தமானதும் மூடநம்பிக்கைகள் குறைவானதுமான மதத்தை அனுசரிக்கக் கூடாது என்றோ, நாஸ்திகனாக ஆகாவிட்டால் இந்துமதம் தான் மேலானது என்றோ சொல்லக்கூடிய நிபந்தனையுமில்லை.
நான்காவது இந்துமதத்தில் இருந்து வேறு மதத்துக்குப் போவது அல்லது மதம் மாறுவது என்றால் இந்துமதத்தைப் போல ஒரு மூட நம்பிக்கையுள்ள மதத்துக்குப் போவதுதான் என்பது அர்த்தமுமல்ல
இன்று மதம் என்கின்ற தலைப்பின் கீழ் இந்து, கிறிஸ்து, முஸ்லீம், பெளத்தம், பாரகீகம், சீக்கியம், ஆரியசமாஜம், பிரம்மசமாஜம் ஆகியவைகள்
குடி அரசு - 1935 (2) 364
வருவது போல், சார்வாக மதம், லோகாயுத மதம், மாயாவாத மதம், சூன்யவாத மதம், பஞ்ச பூத மதம், சங்கர மதம், வேதாந்த மதம், நாஸ்திக மதம் என்கின்ற வார்த்தைகளும், தனது முடிவில் மதத்தைச் சேர்த்துக் கொண்டு தான் வழங்கப்படுகின்றன.
ஒருவன் லோகாயுத மதத்துக்கோ, சார்வாக மதத்துக்கோ, நாஸ்திக மதத்துக்கோ போகிறேன் என்று கருதி இந்துமதத்தை விட்டு மாறுகிறேன் என்றால், அதை ஆதரிப்பதுகூட குற்றமானாலும் ஆகலாம் போல் இருக் கிறது இந்த மதமொழிப்பு வீரர்களுடைய கருத்துப்படி என்று எண்ண வேண்டியிருக்கிறது
நிற்க நாம் செய்யும் சீர்திருத்தமானது - நமது மதமொழிப்பு உணர்ச்சியானது, சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த தினத்திலேயே பிரசாரம் செய்யப்பட்டுவிடவில்லை. செங்கல்பட்டு மகாநாட்டில் கடவுளுக்கென காசைத் தொலைக்க வேண்டாம் என்றோம். பூஜை அபிஷேகம், ஆராதனை, உற்சவம் ஆகியவைகள் கூடாது என்றோம் ஈரோடு மகாநாட்டில் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதே என்றோம். பிறகு மூன்றாவது விருதுநகர் மகாநாட்டில் மதங்கள்கூட கூடாது என்றோம். இப்பொழுது இன்னும் தீவிரமாகப் போக ஆசைப்படுகிறோம் இவைகள் எல்லாம் சுயமரியாதைக்காரர்களுக்குச் சரியாயிருக்கலாம்; சுயமரியாதைக்காரர்களுக்கு உபதேசமும் செய்யலாம்
ஆனால் அம்பத்காரைப் போன்ற ஒரு ஆஸ்திகர் அல்லது ஏதாவது மதத்தின் பேரால் மனிதன் வாழ்ந்தாக வேண்டும் என்றும் கருதி இருக்கிறவர் களை சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்வது என்று கேட்கின்றோம்
அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போடுவதா? அல்லது எக்கெதியோ அடைந்து எக்கேடோ கெட்டுப்போ என்று அலக்ஷியமாக விட்டுவிடுவதா என்று கேட்கின்றோம்
சுயமரியாதைக்காரர்கள் கல்யாண பந்தத்தை - கல்யாண முறையை - கொள்கையை சரி என்று ஒப்புக் கொள்ளுவதில்லை. அவ்வளவோடு மாத்திரமல்ல, இன்னமும் எவ்வளவோ தூரம் போகிறார்கள். பலர் எப்படி எப்படியோ நடக்கிறார்கள்.
அப்படி எல்லாம் இருந்தாலும்கூட அக்கொள்கைகளை லட்சியம் செய்யாமல் இன்று புரோகிதம் மாத்திரமில்லாத அளவில் அதுவும் பார்ப்பனப் புரோகிதம் மாத்திரம் இல்லாத அளவில் சுயமரியாதைக்காரர்கள் எவ்வளவு கல்யாணங்கள் நடத்துகிறார்கள்? தாலி கட்டும் கல்யாணங் களைக்கூட தலைமை வகித்து நடத்திக் கொடுக்கிறார்களே இதன் அருத்தம் என்ன? என்று கேட்கின்றோம். இப்படி இன்னமும் எவ்வளவு நடக்கின்றன?
38 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இவை ஒருபுறமிருக்கட்டும். தீவிர சுயமரியாதைக்காரர் ஒருவரை ஒரு “பறையன்” கண்டு வணங்கி “அய்யா எனக்கு சாமியை விட்டுவிட போதிய அறிவோ, தைரியமோ, தியாக புத்தியோ வரவில்லை. ஆனால் எனக்கு இந்த தீண்டத்தகாதவனாய் இருக்க இனி ஒரு நிமிஷம் கூட சகிக்க முடியவில்லை. இதற்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் பார்ப்போம்" என்று கெஞ்சினால் அவனுக்கு இந்த தீவிர சுயமரியாதைக்காரர் அல்லது சுயமரியாதை சமதர்மக்காரர்கள் என்ன பதில் சொல்லுவார்கள் என்று கேட்கின்றோம்
“நீ சாமியைவிட தைரியமில்லாதவன் உனக்கு நான் யோசனை சொல்ல மாட்டேன். ஆதலால் நீ தீண்டாதவனாகவே இருந்து செத்துப் போ" என்று சொல்லுவார்களா அல்லது “அதைப் பற்றி நமக்கு கவலையில்லை:
நீ எக்கேடோ கெட்டுப்போ'' என்று சொல்லுவார்களா என்று கேட்கின்றோம்.
எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.
வெளிப்படையாய் நாம் பேசுவதானால் அம்பத்காரும், அவரைப் பின்பற்றுவோரும், நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால் அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபணை என்ன என்று கேட்கின்றோம்.
முகம்மதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம், கடவுள் இருக்கலாம், மூடநம்பிக்கை இருக்கலாம், மதச்
சின்னம், மதச் சடங்கு இருக்கலாம், சமதர்மமில்லாமலுமிருக்கலாம் இதெல்லாம் யாருக்கு கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர் களுக்கும் முகம்மதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். நாஸ்திகருக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம். சமதர்மவாதிகளுக்கும், பொதுஉடமைக்காரர். களுக்கும் மகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்
ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற - ஒதுக்கப்பட்டிருக்கின்ற - தாழ்த்தப்பட்டு, கொடுமைப் படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும் புழுத்த விஷக் கிருமிகளிலும்
குடி அரசு - 1935 (2) 366
கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் - தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டு இருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா? இல்லையா என்று கேட்கின்றோம். உண்மையாகவே சுயமரியாதைக்காரருக்கு இந்தச் சமயத்திலும் வேலை இருக்கிறது என்றுதான் நாம் கருதுகிறோம்
ஏனெனில் அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச்
சக்கிலி, கிறிஸ்தவப் பிள்ளை, கிறிஸ்தவ நாயக்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லீம் என்றோ அழைக்க இடமில்லாமலும், அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்ற சமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு “எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்" என்கின்றவன் போனால் இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும் “சரி எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்" என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.
நமக்குக் கடிதம் எழுதின நண்பர் “இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது. பெண்களுக்கு உறை போட்டு மூடி வைத்து இருக்கிறார்கள் என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும் தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்
இஸ்லாம் மார்க்கம் தாண்டவமாடும் துருக்கி, ஈஜீப்ட், பர்ஷியா முதலிய இடங்களில் மூடி கிடையாது என்பதோடு, அம்பத்கார் தமது மனைவிக்கு மூடி போடா விட்டால் எந்த முஸ்லீமும் அவரை கோவிலுக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட முடியாது. எப்படி இருந்தாலும் நாம் அதைப் பற்றி இப்போது விவகரிக்க அவசியமில்லை என்று கருதுகிறோம் ஆகவே தோழர் அம்பத்கார் மதம் மாறுவதில் எந்த மதம் மாறப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. உலகாயுத மதத்தையோ, நாஸ்திக மதத்தையோ தழுவவோ அல்லது முஸ்லீம் மதத்தைத் தழுவவோ போகிறாரோ என்பதும் நமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும் வெறும் ஏமாற்றமும் சூழ்ச்சியும் கொண்டதும், சண்டாளன், பாவி, இழி குலத்தவன், தீண்டத்தகாதவன் என்று மனிதனை வெறுத்துத் தள்ளுவதும், ஒருவர் உழைப்பை ஒருவர் கொள்ளை கொள்ளுவதுமான காரியங்களை மதக்கட்டளையாகக் கொண்டதுமான இந்து மதத்தை விட்டுவிடுகிறேன்
37 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
என்றால், அதைப் பொருத்தவரையில் முதலில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடையவும் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்
இந்து மதம் சீர்திருத்தமடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும் சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்
இந்துமதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை. இந்துமதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம்
இந்துமதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை. அதை சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்துமத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொருத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொருத்தது அல்ல.
எந்த மகாத்மாவானாலும், சீர்திருத்தக்காரனானாலும், சுவாமி பட்டம் பெற்றவனானாலும், தன்னுடைய சீர்திருத்தத்தை மதம், சாஸ்திரம் அனுமதிக்கிறது என்று வேஷம் போட்டுத்தான் சீர்திருத்தம் செய்ய ஆசைப்படுகிறாரே ஒழிய வேறில்லை.
எந்த வேதமும், எந்த மதமும், சாஸ்திரமும் இந்த மகாத்மாவுக்கும், சுவாமிக்கும் சீர்திருத்தம் செய்ய எங்கும் அதிகாரம் கொடுக்கவில்லை. அது வேதத்தின் சாரமான - பகவான் வாக்கான என்று சொல்லப்படும் கீதையிலும், மனு தர்ம சாஸ்திரத்திலும், பராசர் ஸ்மிருதியிலும் பச்சையாய் சொல்லி இருக்கிறது. இவற்றை விவகாரத்துக்கு இடமானது என்று சொல்லிவிட முடியாது. இன்று பொதுஜனங்களை ஏமாற்ற, தற்கால சாந்தியாக சொல்லிக் கொண்டாலும் அந்த முறைக்கும், சாஸ்திரத்துக்கும் மாத்திரமல்லாமல் பழக்க வழக்கங்களுக்கும் அரசியல் காப்பளித்துவிட்ட பிறகு இந்த விவகாரத்துக்கு இடமேது என்று கேட்கின்றோம்
இன்று ஏமாற்றி ஓட்டு வாங்கிக் கொண்டு நாளைக்கு எந்த ஊர் என்று கேட்டால் அதற்கு யார் என்ன செய்ய முடியும்? ஆகவே தீண்டாமை விஷயத்தில் இவ்வித குழப்பம், இருவித அருத்தம், சமயம் போல் திருப்பிக் கொள்ளும் செளகரியம் ஆகியவைகள் இல்லாத மதமே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பவர் களுக்கு ஏற்றதாகும் என்பது நமது அபிப்பிராயம்
வெகு நெருக்கடியான சமயத்தில் அம்பத்கார் இடமும், சிவராஜு இடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு பொது ஜனங்களிடம் லக்ஷக் கணக்கான பணமும் வசூல் செய்து கொண்டு அதைச் செலவழித்து எலக்ஷனில்
குடி அரசு - 1935 (2) 368
வெற்றியும் அடைந்து கொண்டு கடைசியில் தீண்டாமை விலக்கு சம்மந்தமாக சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் தானே இன்று அம்பத்கார் வேறு மதத்துக்குப் போகிறாரே என்று வயிற்றில் அடித்துக் கொள்ளுகிறார்கள்?
இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அம்பத்கார் வேறு மதத்துக்கு போவதை அனுமதிக்கக்கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான். நியாயமாகுமா?
இதையெல்லாம் கவனித்தால் ஒரு காரியமும் செய்ய முடியாது ஆதலால் அம்பத்காருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன் அம் முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமதபிப்பிராயம்
குடி அரசு - தலையங்கம் - 17.11.1935
39 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
திருவாங்கூர் திவான்
சர். ஷண்முகம் ஓப்புக்கொள்ள மாட்டார்
திருவாங்கூர் திவான் பதவி சமீப காலத்தில் காலி ஆகலாம் என்றும், அதற்கு சர். ஷண்முகம் அவர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பிரஸ்தாபம்
இருந்து வந்தது இப்போது அந்த ஸ்தானத்தை சர். ஷண்முகம் அவர்கள் விரும்பவில்லை என்றும், திருவாங்கூர் சமஸ்தானத்தில் தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யரின் ஆதிக்கம் இருந்து வரக்கூடும் என்றும், அதனால் அங்குதான் மீ” 4000 ரூ சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெறும் கையெழுத்தைப் போட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு உருப்படியான காரியம் எதுவும் செய்வது கஷ்டமாக இருக்கும் என்றும் கருதி அதை மறுத்துவிட்டதாகத்
தகுந்த நம்பக் கூடிய இடத்தில் இருந்து செய்தி கிடைத்திருக்கின்றது. இதை ஆதரிக்கத் தகுந்த மாதிரியாக மற்றொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. அதாவது திருவாங்கூருக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சம்மந்தம் ஒழிந்துவிட்டது என்று நன்றாய் தெரியும் வரை ஒரு செல்வாக்குள்ள வெள்ளைக்கார ஐ.சி.எஸ். கலக்டரை திவானாகப் போடுவது என்று கருதி இருப்பதாகத் தெரிய வருகிறது ஆகவே தோழர் சர்.ஷண்முகம் கொச்சி திவானாக இப்பொழுது மீ” 3000 ரூ. சம்பளம் மாத்திரமும், சில செளகரியங்கள் மாத்திரமும் அடையும்படியாக இருந்த போதிலும்கூட அது திருவாங்கூர் திவான் பதவி ஏற்று 15 4000 ரூ. சம்பளமும் பல செளகரியமும் கிடைப்பதைவிட (கொச்சியே) மேலென்று கருதும் மூக்கிய காரணம் கொச்சி ராஜாவின் மேலான குணமும் சம்பளத்தை லக்ஷியம் செய்யாமல் பிரயோஜனகரமான காரியங்கள் செய்ய வேண்டும் என்கின்ற (சர். ஷண்முகம் அவர்களது) ஆசையுமேயாகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.11.1935
குடி அரசு - 1935 (2) 370
விஜயராகவாச்சாரியார்
சேலம் தோழர் விஜயராகவாச்சாரியார் அவர்களின் காங்கிரஸ் சேவையைப் பாராட்டி அவருக்குப் பகுமானம் அளிக்க சில பார்ப்பனர்கள்.
முயற்சித்துப் பலரிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.
அதில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், காங்கிரசைக்
கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் கையெழுத்து வாங்கி காங்கிரசை எல்லோரும் ஒப்புக் கொண்டது போல் உலகத்துக்குக் காட்டச் சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்பதாகும்
தோழர் விஜயராகவாச்சாரியார் பெரியவர். நல்ல கிரிமினல் வக்கீல் அரசியல் விஷயங்களைப் பற்றி விவகரிக்கத் தகுந்த நல்ல ஞானமுடையவர். அவரது பெயர் காங்கிரசிலும், பழய கால அரசியல் பிரதிநிதித்துவத்திலும்
பல நாளாய் அடிபட்டு வருகிறது
சுமார் 50 வருஷத்துக்கு முன் சேலம் கலகத்தில் அவர் கைதியாக்கப் பட்டார்.இவைகள் அவருடைய யோக்கியதாம்சங்களாகும் என்பதில்
யாருக்கும் எவ்வித ஆக்ஷ்பணையும் இருக்காது. இவைகளைப் பொருத்தவரை பற்றுள்ளவர்கள் பாராட்டிக் கொள்ளலாம்
ஆனால் இவைகளைப்பற்றி மாறுபாடான அபிப்பிராயமுள்ளவர்கள். இதை எப்படிப் பாராட்ட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை
இன்றைய தினம் அவர் காங்கிரசுக்கு உழைத்ததைப் பற்றி காங்கிரஸ் பொன்விழாவின் போது பகுமானமளிக்கசிலரிடம் பார்ப்பனர்கள் கையெழுத்து வாங்குவதில் ஜஸ்டிஸ் கட்சியார் சிலரிடம் சென்று எதற்கு ஆக கையெழுத்து கேட்க வேண்டும்? அவர்களும் புத்தி இல்லாமல் எப்படி ஏமாந்து கையெழுத்துப் போடுகிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது
இந்த முட்டாள்தனத்துக்கு எங்கு போய் முட்டிக் கொள்வது என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் இரண்டொருவர்களைக் கேட்க அவர்கள் நாங்கள் காங்கிரசை ஒப்புக் கொள்ளாதவர்கள் ஆனதால் இதில் கையெழுத்துப் போட முடியாது என்று
சொல்லிவிட்டார்களாம் 371௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தங்களால் வெறுக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்துக்கோ கொள்கைக்கோ உழைத்தவர்களைப் பாராட்டுவது என்றால், இதில் அறியாமை அல்லது கோழைத்தனம் அல்லது கவலை ஈனம் என்பவை அல்லாமல் வேறு எவ்வித புத்திசாலித்தனமோ யோக்கியமோ இருக்க நியாயமில்லை. உதாரணமாக தோழர் காந்தியாரை ஏன் பஹிஷ்கரித்தோம்? ஸ்தல ஸ்தாபனங்களில் ஏன் வரவேற்புக் கூடாது என்றோம்? ஏன் கருப்புக்கொடி பிடித்தோம்? காந்தியாரின் தந்திர புத்தியைப் பாராட்டுவதை நாம் ஆகஷ்பிக்க மாட்டோம்
ஆனால் அவர் “சத்தியாக்கிரக”த்துக்கும் “சுயராஜ்ஜியத்துக்கும் உழைத்ததை நாம் பாராட்டி வரவேற்க முடியுமா அல்லது அதற்காக அளிக்கப்படும் நற்சாட்சிப் பத்திரத்தில் கையொப்பமிட முடியுமா என்று கேட்கின்றோம். அதுபோலவே தோழர் விஜயராகவாச்சாரியார் இவ்வளவு காலம் பிழைத்திருப்பதையும் அவர் கிரிமினல் வக்கீலாக 80 வருஷம் வரையில் உழைத்ததையும் பாராட்டலாம்
ஆனால், காங்கிரசுக்கு உழைத்ததைப் பாராட்ட பார்ப்பனர்களுக்கு விட்டுவிட வேண்டுமே ஒழிய நம்மவர்கள் அதில் கலந்து கொள்வது திருடர்களைப் பாராட்டத் திருட்டுக் கொடுத்தவர்களும் சேர்ந்து கொள்வது போலவே ஆகும்
பார்ப்பனர்கள் தாங்கள் எந்த ஒரு கூட்டத்தை - தனிப்பட்ட நபரை வைகிறார்களோ குறை கூறுகிறார்களோ அவர்களிடமே வெட்கமில்லாமல் போய் அவர்கள் பாராட்டுதலைப் பெற்று விளம்பரம் செய்து கொள்வதில் கை தேர்ந்தவர்கள் என்பதோடு அவர்களது சூழ்ச்சிக்கு ஏமாந்து போவதில் பார்ப்பனரல்லாதவர்கள் கை தேர்ந்தவர்கள் என்பதையும் சொல்லாமல்
இருக்க முடியவில்லை. ஆகவே பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்பவர்கள் இனியாவது தங்கள் புத்தியையும், வீரத்தையும் பறி கொடுத்து முட்டாள்தனத்தைத்
தேடிக் கொள்ளாமல் இருக்க வேண்டுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.11.1935
குடி அரசு - 1935 (2) 372
காங்கிரசைப் புதையுங்கள்
காங்கிரசுக்காரர்கள் பொதுமக்களிடம் ஓட்டுப் பெறுவதற்காகப்
பிரசாரம் செய்தகாலையில் பல மேடைகளில் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி உள்பட எல்லாக் காங்கிரஸ்காரர்களும் இப்போது எங்களுக்கும், சர்க்காருக்கும் தான் யுத்தம் என்றும், ஜஸ்டிஸ் காங்கிரஸ்
பிரிவு இதில் காட்டக் கூடாது என்றும் சொல்லி ஓட்டுப் பெற்றபின், இப்போது மந்திரி பதவி பெறுவதும், சர்க்காரை நடத்திக் கொடுப்பது மூலம் சர்க்காரோடு யுத்தம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வதோடு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதுதான் எங்கள் வேலை ஆதலால் சர்க்காரிடம் எங்களுக்குப் போர் இல்லை என்பதாக அதாவது நேற்று கும்பகோணத்தில் தோழர் சத்தியமூர்த்தி கோர்ட்டில் காங்கிரசார் செய்ததாக ஏற்பட்ட காலித்தனக் கேசில் சாட்சி சொல்லும் போது “ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பது தான் எங்கள் வேலை” என்று சாட்சிப் பெட்டி மேல் இருந்து கொண்டு தைரியமாய் சொன்னது, காங்கிரஸ்காரர்களின் மனப்பான்மையை நன்றே விளக்கிக் காட்டக்கூடியதாகும்
ஆனால் இவர்கள் இப்படி வாயினால் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
காரியத்தில் இந்தியா முழுவதிலுமே எல்லாப் பாகங்களிலிருந்தும், “காங்கிரஸ் கட்சியை ஆழக் குழிதோண்டி புதைக்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டும் அதற்கு ஆவன செய்து கொண்டும் வருகிறார்கள். அதற்கு உதாரணம் வேண்டுமானால் கீழே காண்கட
ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் “இந்திய சமஸ்தானங்களும், ஜமீன்தார்களும்” மாதப் பத்திரிகை 'காங்கிரசைப் புதையுங்கள்! என்ற மகுடமிட்டு ஒரு வியாசத்தை வரைந்திருக்கிறது. அவ்வியாசத்தில் பின் வரும் விஷயம் காணக் கிடக்கிறது
“ஜஸ்டிஸ் கட்சியின் விடா முயற்சியின் பயனாகவும் அவர்கள். தளராத ஊக்கத்தோடு காங்கிரசை எதிர்த்து பிரசாரஞ் செய்து வந்ததின் பயனாகவும் பொது மக்கள் விழிப்படைந்து காங்கிரசின் ஒழுக்கக்
கேடுகளையும், அதன் நிலையையும் கண்டு கொள்ள முடிந்தது. அதனால் இந்த பெரும் புகழ் ஜஸ்டிஸ் கட்சிக்கே உரித்தானது. பொது மக்களும் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். நாட்டிற்காக தன்
373 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
நலத்தை பேணாது, பிற நலத்திற்கு உழைத்து வரும் ஆனரபில் ராஜா பொப்பிலி, சர்.எ. பாத்ரோ, திவான்பகதூர் எ. ராமசாமி முதலியார் போன்ற அரும்பெரும் தேசீயத் தலைவர்களைக் கொண்டு அக்கட்சி நிற்கிறது உண்மையாகவே அவர்கள் தேசீயத் தலைவர்களாகக் கொள்ளல் வேண்டும். இக்கட்சி ஒரு நோக்கத்தோடே காங்கிரசோடு எதிர்த்து போராடுகிறது. இன்று தென்னாட்டில் காங்கிரஸ்காரர்கள் எங்கேயாவது தோற்றார்கள் என்றால், அத்தோல்வி ஜஸ்டிஸ் கட்சியாரால் தான் ஏற்பட்டதென்று சொல்லவேண்டும்
குடி அரசு - கட்டுரை - 24.11.1935
குடி அரசு - 1935 (2) 374
திருடியது காங்கிரஸ்காரர்கன்தான்
சென்ற திங்கட்கிழமை (18.11.35) இதழில் “தினமணி'' என்ற சுயநலக் கூட்டத்தாரின் பத்திரிகை, திலகர் சுயராஜ்ய நிதியைத் திருடிய காங்கிரஸ்காரரின் படலத்தைப் பாராயணம் செய்ததற்காக, கடுங்கோபங் கொண்டு கண்டபடி எழுதியிருக்கிறது. கோபத்தால் அறிவு அந்தர்த்தானமாகிறது என்ற விஷயத்தை அப்பத்திரிகை தன் தலையங்கத்தில் நன்றாகத் தெரியப்படுத்தியிருக்கிறது. திருடியது யார்?” என்ற தலைப்பிட்டு எழுதியதற்குப் பதில் “திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்'” என்று எடுத்துக்காட்ட விரும்புகிறோம். திலகருடைய பெயரையும், இந்தியத் தாயினுடைய பெயரையும் கூறி, வழிபறிக் கொள்ளைக்காரர்களைப் போல, பெண் மக்கள் அணிந்திருந்த நகைகளையும்கூடத் திலகர் நிதிக்காகக் கொண்டு, மலை போலிருந்த ஒரு கோடி ரூபாய்களைக் கரைத்து, பெரும்பாலும் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டவர்களைத் “திருடர்கள் என்று கூறாமல் “தேசபக்தர்கள்” என்று கூறுவதெங்ஙனம்? ஆனால், “காங்கிரசைத் திட்டுவதையே தொழிலாய்க் கொண்டிருக்கும் பூனா “மராட்டா'' பத்திரிகையில் விஷயங்கள் வெளி வந்த காரணத்தால், அவைகளை நம்பக் கூடாதென்று ''தினமணி'' கூறுகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (17.11.35-ல்) வெளிவந்த ''மராட்டா'' வில், பிராமணரல்லாதார் காங்கிரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டுள்ள தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் கொள்கையிடத்தபிமானமுள்ள 'மராட்டா'' காங்கிரசைச் சுத்தப்படுத்த வேண்டுமென்ற உயரிய நோக்கங் கொண்டுதான் திலகர் நிதியைத் திருடியவர்களுடைய மோசமான காரியங்களை வெளிப்படுத்தியுள்ள தென்பது நன்றாகத் தெரிகிறது. “திருடியவர்கள் யார்?” என்ற கேள்விக்குத் “தினமணி”யே பதிலளித்திருக்கிறது. அப்பத்திரிகை கூறுவதாவது₹-
''ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செலவிட்டதில் ஏதோ சில தொகைகளை திரும்பக் கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள். கஷ்டப்படலாம். ஆனால், மோசம் செய்ய வேண்டுமென்று எடுத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேசபக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாய் விட்டதால், அதனால் மூழ்கிப் போவது எதுவுமில்லை. ஏனெனில், தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச் சார்ந்தது." இதனால்,
37$ ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
திருடர்கள் காங்கிரஸ் “Hurdsdr தான் என்பது விளக்கமாகத் தெரிகிறது. மோசம் செய்ய வேண்டும்” என்ற எண்ணத்தைக் கொண்டாலும், கொள்ளாவிட்டாலும், மோசம் செய்த விஷயத்தை மாத்திரம் 'தினமணி' மறுக்கவில்லை. “தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த தேச பக்தர்கள்
சில ஆயிரம் ரூபாய்களைத் திருடினால் தோஷமில்லை என்று “தினமணி”
கூறுகிறது. அதனால் "மூழ்கிப் போவது எதுவுமில்லை” என்கிறது. ஆனால், சுயநலக்கடலில் முழுகி மறைந்தது ஒரு கோடி ரூபாய் என்ற விஷயம் மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாய் அனேக ஆண்டுகள் இருந்த தோழர் பி.வி.மகாஜன் விளக்கிக் காட்டியிருக்கிறார். 'தினமணி'
கூறும் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ள வேண்டியதுதான் - அதாவது “தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச் சேர்ந்தது” என்பதாகும். ஆனால், “தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த” தேசபக்தர்கள் திலகர் ஞாபகார்த்தத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நிதியைத் தம் சுயநலத்திற்காகத் “தியாகம் செய்ததற்கும் காங்கிரசினுடைய பொறுப்பிற்கும் என்ன சம்பந்தம்? தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச்
சேர்ந்திருக்க, திலகர் நிதியிலிருந்து, தியாகிகள் பெருந்தொகைகளைக் கையாண்டு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்டதைப் பற்றித் தான் கேள்வி எழுந்திருக்கிறது சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் இரண்டு குற்றங்கள் கூறுகிறார் தோழர் மகாஜன் என்று “தினமணி'' எழுதுகிறது. இரண்டு. குற்றங்களல்ல, ஏழு குற்றங்கள், சென்னை சுயநலக் கூட்டக் காங்கிரஸ் காரர்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. அவை பின் வருமாறு
1. தோழர்சி. இராஜகோபாலாச்சாரியாரிடம் மூன்று ஆண்டு களாக ரூ.19,000 “அட்வான்ஸ்” ஆக நின்றிருந்தது
2. தோழர் டி. பிரகாசம் பந்துலுவிற்கு ரூ.10,000 கடனாகக் கொடுக்கப்பட்டு, பின்பு அக்கடன் தொகை ரத்து செய்யப்பட்டது
3. ரூ.44,500-க்குக் கொடுக்கப்பட்ட 'செக்'குகள் மாற்றப் படவில்லை என்று கணக்கில் எழுதி வைக்கப்பட்டது.
4. ரூ.20,000 நிரந்தர 'டிபாசிட்'டில் வைக்கப்பட்டதைப் பற்றி பாங்கி விவகாரங்கள் 'காஷ்புக்'கிலும் “டே புக்'கிலும் பதிவு செய்யப்படவில்லை.
5. ரூ.20,225 மேற்குறித்தபடி 'டிபாசிட் விவகாரங்கள் கணக்குப் புத்தகங்களில் பதிவு செய்யவில்லை
6. அங்கத்தினர்கள் ஜாபிதாவின்படி, அவர்களிடம் வசூல் செய்த பணத்திற்கும், கணக்குப் புத்தகங்களில் வரவு
குடி அரசு - 1935 (2) 376
வைக்கப்பட்டிருக்கிற தொகைக்கும் காரணம் காட்ட முடியாத வித்தியாசம் இருக்கின்றது
7. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களுக்கு பிரயாணச் செலவு ரூ.1,400 கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஏழு குற்றங்களில், இரண்டு குற்றங்களுக்கு 'ஜவாபு' சொல்ல 'தினமணி' முயற்சித்திருக்கிறது. “தென்னாட்டுக் காந்தியடிகள்'' என்று கருதப்படும் தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம் கொடுக்கப்பட்ட ரூ.19,000 “அட்வான்ஸ்” - ஆகக் கொடுக்கப்பட்டது என்ற விஷயத்தை
நாம் நன்றாக அறிவோம். “அட்வான்ஸ்” கொடுத்தால் அதற்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமென்பது முக்கியமான விஷயம். 'ஸ்ரீ ஆச்சாரியார். தம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள பணத்திற்குக் கணக்கு விவரங்களையும்
மீதப் பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டதை பின் ரிப்போர்ட்டுகளில் பார்க்கலாம்” என்று 'தினமணி'' கூறுகிறது. "பின் ரிப்போர்ட்டுகள்”” எழுதப்படவில்லை என்பதுதான் மாஜி காங்கிரஸ் காரியதரிசி தோழர் மகாஜன் அவர்களுடைய குற்றச்சாட்டு. அப் “பின் ரிப்போர்ட்டுகளை”த் “தினமணி”யில் பிரசரிக்கும்படி அப்பத்திரிகைக்குச் 'சவால்' கூறுகிறோம்
பொது மக்களிடமிருந்து பகற்கொள்ளையடித்த கோடி ரூபாயைப்
பற்றிக் கணக்குக் கேட்பதற்கு நமக்கு அதிகாரமில்லை என்று ''தினமணி'”
கூறுகிறது. “தேசீய வேலைக்காக வசூலித்தது காங்கிரஸ், அதை நிர்வகித்து, அதை எப்படிச் செலவு செய்ய வேண்டுமென்று முடிவு செய்யும் பொறுப்பும் காங்கிரசையே சேர்ந்தது. அந்த காங்கிரஸ் பார்த்து ஒன்றைச் செய்யும்போது அதில் குற்றங்குறை காண விரோதிகளுக்கு என்ன வாய் இருக்கிற தென்று கேட்கிறோம்"
என்று அப்பத்திரிகை வாய் கூசாமல் கேட்கிறது. திலகர் நிதி மோசடியை வெளிப்படுத்தினவர்கள் நம் போன்ற காங்கிரஸ்காரரின் விரோதிகளல்ல; காங்கிரசிற்குப் பிராமணரல்லாதார் ஆதரவளிக்க வேண்டுமென்று கூறும் திலகரால் ஏற்படுத்தப்பட்ட ''மராட்டா' பத்திரிகையும், மகாராஷ்டிர மாகாணக் காங்கிரசின் காரியதரிசியாய் வெகுகாலம் இருந்த தோழர். மகாஜனும் தான் அந் நிதி காங்கிரஸ்காரரால் கையாண்ட விஷயங்களைக் கூறியவர்கள். மேலும், “காங்கிரஸ் ஒரு கட்சியல்ல, அது தேசமேயாகும்'' என்று கூறியவர்கள், இப்போது, “காங்கிரஸ் ஒரு கட்சி தான்; அதன். விஷயங்களில் வேறு கட்சியினர் பிரவேசித்தல் கூடாது'' என்று வாதாடுவதற்கு நியாயமிருக்கிறதா என்று கேட்கிறோம். “தேசீய வேலைக்காக வசூலித்த'' பணம் சுயநலக் காங்கிரஸ்காரர்களுடைய வயிறு வளர்ச்சிக்கு உபயோகப்பட்ட காரணத்தைக் கேட்டால், "காங்கிரஸ் பார்த்து
377 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஒன்றைச் செய்யும்போது, அதில் குற்றங் குறை காண விரோதிகளுக்கு” உரிமை இல்லை என்று “தினமணி!” கூறுகிறது. திலகர் சுயராஜ்ய நிதி காங்கிரஸ் கட்சியினரால் தமக்குள் வசூலிக்கப்பட்ட நிதியல்ல, பொது மக்களிடமும் ஏழை மக்களிடமும் தேசத்தின் பெயரைச் சொல்லி வசூலித்தது; பெண் மக்கள் அணிந்திருந்த ஆபரணங்களை இந்தியத் தாயின் பெயரைச் சொல்லி அபகரித்துச் சேர்த்த நிதி; அதைச் சுயநலக் கூட்டத்தார் சுயராஜ்யத்திற்கு உபயோகிக்காமல் பெரும்பான்மையான தொகைகளைத் தமது வயிற்று ராஜ்யத்திற்கு உபயோகித்ததை அதட்டி கேட்க இந்தியர் ஒவ்வொருவருக்கும் சர்வ உரிமையும் உண்டு, என்று சுயநல மணிக்கு நாம் இடித்துரைக்க விரும்புகிறோம்
தோழர் பிரகாசம் பந்துலுவுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்து
ரத்து செய்த விஷயத்தைப் பற்றி எழுதும்போது, “தமது சொத்துக்கள் அனைத்தையும் பத்திரிகைகளுக்காக"த் தோழர் பிரகாசம் செலவிட்டா ரென்றும், அதைப் பார்த்த பிறகு அக்கடன் தொகை ரத்து செய்யப்பட்ட தென்றும், “தினமணி'' கூறுகிறது. இதனால் சில விஷயங்கள் புலனாகின்றன. தோழர் பிரகாசத்தின் சொத்துக்கள் அதிகமாயிருந்தால், ரூ.10,000 கடன் கொடுத்திருக்க வேண்டியதில்லை. சொத்துக்கள் கொஞ்சமாயிருந்தால் அதை “மகத்தான தியாகம்” என்று கூறுவது உண்மையன்று. தன்னுடைய சொத்துக்களையெல்லாம் பத்திரிகைகள் நடத்துவதில் இழந்து, தோழர் பிரகாசம் நஷ்டமடைந்தார் என்றால் அவர் பத்திரிகைகளை ஒழுங்காகவும், நிர்வாகத் திறமையுடனும் நடத்த யோக்கியதையற்றவர் என்று தெரிகிறது பத்திரிகைகளுக்காகத் தன் சொந்த சொத்தையும் இழந்து கடன் வாங்கின. தொகையையும் செலவு செய்தார் என்ற விஷயம் உண்மையாயிருந்தால், அவரால் நடத்தப்பட்ட பத்திரிகைகள் இன்னும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஆனால் அப்பத்திரிகைகள் திலகர் நிதி மறைந்த மாதிரி மறைந்து போய்விட்டன. தினமணி” கூறுகிறது
“காங்கிரஸ் மகாசபை தியாகிகள் கூட்டம், அங்கே அகப்பட்டதைச் சுருட்டுவது, மேல் பதவிக்கு தாவுவது, பதவிகளுக்காக லஞ்சம் வாங்குவது, கொடுப்பது இவைகளுக்கு இடமே கிடையாது"
ஆனால், 'அகப்பட்டதைச் சுருட்டிய” பலருக்குக் காங்கிரசில் தாராளமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறதென்ற விஷயம், தோழர் மகாஜன் கட்டுரைகளில் நன்றாகப் புலப்படுகின்றது. ஒரு கோடி ரூபாய்களை 'சுவாஹா' செய்யும் காங்கிரஸ்காரர்களுக்கு “மேல் பதவிக்கு தாவுவது, பதவிகளுக்காக லஞ்சம் வாங்குவது, கொடுப்பது” முதலிய சிறிய வருமானங்கள் வேண்டியதில்லை; ஆனால் அப்படிப்பட்ட காங்கிரஸ்காரர்கள். சென்னையில் பலர் இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம்
குடி அரசு - 1935 (2) 378
கடைசியாக தியாகராயர் நிதிக்குக் கணக்குக் காட்டும்படி “தினமணி” சவால் கூறுகிறது. அச்சவாலுக்கு நாம் ஆணித்தரமான பதில் கூறுகிறோம் தியாகராயர் நிதிக்கு, திலகர் நிதியைப் போலல்லாமல், சரியான கணக்குகள் இருக்கின்றன. அந்நிதியைக் கொண்டுதான் “தியாகராய மெமோரியல் பில்டிங்ஸ்” என்று தற்போது பெயர் கொண்டுள்ள கட்டிடங்கள் வாங்கப் பட்டன. கட்டிட கிரயத் தொகை நிதியின் தொகையைவிட அதிகமானதால், மிகுதி தொகைக்குக் குதவைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கிறது அக்கடன் இன்னும் தீராமல், வட்டி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கடனைத் தீர்ப்பதற்காக ஜஸ்டிஸ் கட்சியினர் பண உதவி செய்ய வேண்டு மென்று, 1924-ம் ஆண்டில், வி.பி. ஹாலில் நடந்த ஜஸ்டிஸ் மகாநாட்டில், தியாகராயரின் குடும்பத் தலைவரும், தியாகராய நிதியின் 'டிரஸ்டி'யும் ஆன திவான் பகதூர் பி.டி. குமாரசாமிச் செட்டியார், தமது வரவேற்புக் கழகத் தலைமையுரையில் வேண்டியிருக்கிறார். தியாகராயர் நிதிக்குக் கணக்குக் கேட்கும் பெரியார்களை கண் வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்று பிறகு சென்னை மலைச்சாலை 14ம் நம்பர் கட்டடங்களைப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம். திலகர் நிதி, திலகருக்கு ஞாபகார்த்தம் ஒன்றுமில்லாமல் மறைந்தது. ஆனால், தியாகராயர் நிதி தியாகராயருடைய ஞாபகார்த்த கட்டிடங்களை வாங்குவதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. திலகர் நிதியைக் காங்கிரஸ்காரர்கள் கையாண்டார்கள் என்று திலகர் பத்திரிகை கூறுகிறது. ஆனால், தியாகராயர் நிதி செலவிடப்பட்டு மேல் ஏற்பட்ட ஞாபகார்த்த கட்டிட கடன் தொகைக்கு உதவி செய்ய வேண்டுமென்று தியாகராயர் சகோதரரின் புதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விஷயங்களைச் சாவதானமாகவும், சாவகாசமாகவும் யோசனை செய்யும்படி, திலகர் நிதியைத் திருடியவர்களின். தரப்பில் வாதிக்கும் 'தினமணி”யை வேண்டுகிறோம்
*விடுதலை'
குடி அரசு - மறுபிரசுரம் - 24.11.1935
379 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காந்தியும் ஜாதிப்பாகுபாடும்
தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்று சொன்னவுடன், காந்தியார் உள்பட பல இந்துமத பிரசாரகர்களுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது. ஆனால், ஜாதி வித்தியாசம் தீண்டாமை ஆகிய விஷயங்களில் காந்தியார் அபிப்பிராயத்தைப்பற்றி பிரபல சீர்திருத்தவாதியும், தேசீயவாதியும், காங்கிரஸ் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காங்கிரஸ் தலைவருமான சர்.சி. சங்கரநாயர் சொல்லி இருப்பதைக் கவனித்துப் பாருங்கள். (அவர் சுயமரியாதைக்காரர் அல்ல)
தோழர் காந்தியார் எல்லாப் பொது மக்களுக்கும் கல்வி புகட்டப் படவேண்டியதில்லையென்றும், அதிலும் ஆங்கிலக்கல்வி அறவே ஒழிக்கப்படவேண்டும் என்றும் விரும்புகிறார். ஏன் அவர் அவ்வாறு கருதுகிறார் என்று பார்த்தால், கல்வி கற்றுவிடுவதினால் பொது மக்கள் தாங்கள் இருந்துவரும் வாழ்வில் அதிருப்தியடைந்து விடுவார்கள் என்பது ஒன்றேயாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அந்தந்த வகுப்பார் தங்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தற்கால நிலைமையோடு திருப்தி யடைந்திருக்க வேண்டும் - அதாவது அடிமை எப்பொழுதும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதாகும். அவர் அந்த முடிவிற்கு வந்ததற்குக் காரணம், தாம் வருணமுறைப்படி ஜாதி பாகுபாட்டை ஒப்புக்கொண்டதேயாகும்.
மேலும் “காந்தியார் வருணாச்சிரமம் - ஜாதிபாகுபாடு - மனித இயற்கைக்கே இயல்பானது என்றும், இந்துமதம் அவ்வியல்பான ஒரு குணத்தை சாஸ்திரீக முறைப்படி வகுத்திருக்கிறது என்றும், இவ்வெண்ணம் மனிதனுக்குப் பிறப்பிலிருந்தே தோன்றக் கூடியதாகும் என்றும், எவனும்
தான் நினைத்த மாத்திரத்தில் தனது வருணத்தை (ஜாதியை) மாற்றிக் கொள்ளவோ அல்லது நிர்ணயத்துக் கொள்ளவோ முடியாது என்றும், ஆத்மா வளர்ச்சியைக் கருதும் ஒவ்வொருவனும் சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் தடுக்க வேண்டும்" என்றும் கூறியிருக்கிறார்.
“பஞ்சமர்கள் என்றோ அல்லது மற்றும் அதுபோன்ற பலபேர்கள் என்றோ அல்லது வேறு எந்த நாமத்தால் அழைக்கப்பட்ட மக்களானாலும் சரியே, அவர்கள் யாவரும் தனியாகப் பிரிக்கப்பட்டு, உயர்ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற மக்களுக்கு ஊழியஞ்செய்து உழல்வதே அவர்களின் கடமை என்பதாக அவர் நினைக்கிறார் போலும்!”
குடி அரசு - 1935 (2) 380
''அவர் எழுதினதிலிருந்து நாம் அறியக்கிடப்பதாவது, இந்திய சரிதத்தைப்பற்றிய அறிவு அவருக்கு மிகக் குறைவு என்றோ அல்லது அவரது ஜீவியத்தின் முக்கிய பாகம் பிற நாடுகளில் வாழ்க்கையை நடத்தினவர் என்றோ அல்லது ஒரு வேளை இந்நாட்டில் ஜாதிப்பாகு பாட்டால் ஏற்பட்டு வரும் தீமைகளை தாம் அறியாமல் இருந்திருக்க வேண்டும் என்பதாகவோ அது காட்டுகிறது. அப்படி இல்லையானால் கீழே காணப்படுகிற விஷயங்களை அறிந்திருப்பார்.
1. ''இந்தியாவை அந்நியர் - அதாவது மகமதியர், ஆங்கிலேயர் முதலானவர்கள் ஜயித்து ஆளுவதற்கு இந்நாட்டில் உள்ள ஜாதிப் பாகுபாடே காரணமாகும். மேலும் அவர்கள் தங்களது ஆட்சியை செலுத்தி வருவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களே காரணமாகும் அவர்களது உதவி தான் மிகவும் ஆதரவை அளித்துவரக் கூடியதாகும்.”
2. “இந்தியாவில் அதிகமான பேர் கிறிஸ்தவ மதத்திலும் மகமதிய
மதத்திலும் மாறினதற்கு இந்தியாவிலுள்ள ஜாதிப் பிரிவினையேயாகும்.”
3. “மனித வர்க்கத்தின் இழிவிற்கே இதுதான் பொறுப்பாகும். பழய காலத்திலிருந்த அடிமையின் இழிவோ அல்லது தற்காலத்தில் உள்ள அடிமையின் இழிவோ அல்லது வேறு எதுவானாலும் இத்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எள்ளளவும் சமமாகாது.."
4. “இந்தியாவின்கண் உள்ள இந்துக்கள் - மகமதியர்கள் பிராமணர்கள் - பிராமணரல்லாதார்கள் என்று சொல்லக்கூடிய கட்சி பிரதிகட்சிகள் இருப்பதற்கும் இந்த ஜாதிப்பிரிவே காரணமாகும்.”
5. “சமூக முன்னேற்றத்திற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ அல்லது தேசீய முன்னேற்றத்திற்கோ ஆனாலும் சரியே இந்த ஜாதிப் பிரச்சனைதான் பெரும் தடையாய் இருக்கிறது.” “ஆகவே ஏதோ அங்குமிங்குமுள்ள சில அற்பமான குறைகளைத் துடைத்து விட்டு, முக்கியமான, ஜாதிப்பிரிவினைக்கே அஸ்திவாரமான கோட்பாடுகளையெல்லாம் தோழர் காந்தியார் அவ்வாறே ஆதரித்து வருகிறார்.”
“மெக்காலே பள்ளிக் கூடத்தில் 4-வது பாரம் படிக்கிற ஒரு பள்ளிப் பையன் கூட நம்பமுடியாத ஒரு பெரிய விசாரணையில் இறங்கியிருக்கிறார். அதாவது ஜாதிப்பாகுபாடுகளின் அவசியமும் அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மையும் என்பதைக் குறித்தும் ஜாதிப்பாகுபாடு இருந்துவர வேண்டும் என்பது பற்றியும் அதனால் லாபம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க பெரியதொரு ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்.
“இந்த ஜாதிப்பாகுபாடு சம்மந்தமான விஷயங்களால் ஏற்படக்கூடிய தீமைகளையும் குறைவுகளையும் பற்றிய ஞானம் அவருக்கு இல்லை என்று தான் சொல்லவேண்டும். அது சம்மந்தமான ஆதாரங்களையும் அவர் பார்த்திருக்கவில்லை என்று தான் தெரிகிறது."
31 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அன்றியும் அவர் ஜாதி பாகுபாட்டை ஆதரிப்பதானது உயர் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்களுடைய ஆதரவை தேடிக் கொள்வதற்காகவேயாகும். ஏன்அவர்களுடையஆதரவைத்தேடுகிறார் என்றால் அவர்கள் தான் அவருடைய வேலைக்கு பணவுதவியளிக்கிறார்கள். அவர்கள் உதவாவிடில் அவருடைய திட்டமெல்லாம் பாழாய் போய்விடும்.” அவருடைய கோஷ்டியார்களிலே ஒருவர் இந்நாட்டில் இருந்த கலைகளையும் சாஸ்திரங்களையும் இந்த ஜாதிப்பிரிவே அழிந்து விட்டது
என்று கூறியிருக்கிறார். 'இந்தியாவானது ஒரு காலத்தில் எல்லா கலைகளுக்கும், (விஞ்ஞான) சயன்சு முதலிய சாஸ்திரங்களுக்கும் பிறப்பிடமாயிருந்து புகழப்பெற்றும் வந்தது. அத்தகைய ஒரு நாடு இப்பொழுது தாழ்த்தப்பட்டு, சுதந்திரமற்று, அடிமையாக்கப்பட்டு இருப்பதற்கும், மக்கள் சுதந்திரமற்று வாழ்வதற்கும் காரணமாய் இருந்து வருவது இந்த ஜாதிப் பாகுபாடு ஒழிந்துபோகும் என்ற பயமேயாகும்' என ஹிந்து ரசாயன சாஸ்திரத்தைப் பற்றிய சரித்திரம் எழுதிய ஸர்.பி.சி.ரே அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.”
இந்நாட்டில் உயர்ந்த சர்க்கார் உத்தியோகத்திற்கு இன்றியமையாத கல்வி வேண்டாம் என்பதும், இந்தியர் கைத்தொழில் உற்பத்திக்கும் உலோக:
அபிவிருத்திக்கும் அவசியமான கல்வி தேவையில்லை என்பதும் தோழர் காந்தியாரின் அபிப்பிராயம்." இவ்வெண்ணத்திற்கேற்பவே காந்தியார் காசியில் உள்ள நேஷனல்
ஹிந்து சர்வகாலாசாலையையும் அலிகாரிலிருக்கும் மகமதிய சர்வகலா சாலையையும் ஒழிப்பதற்காக அரும்பாடுபட்டார். மேல்நாட்டுக் கல்வியையும் கீழ்நாட்டுக் கல்வியையும் அக்கலாசாலைகளில் போதிக்கப்பட்டு வந்திருந்தது. காந்தியாருடைய பெரு முயற்சி யாவும் இவ்விஷயத்தில் நல்லதிர்ஷ்ட வசமாக சித்தியளிக்காமல் போய்விட்டது."
தோழர் காந்தியார் அவ்வாறு ஜாதிபாகுபாட்டை ஆதரித்ததால் உயர்ந்த ஜாதியார்களின் ஆதரவும், ஹிந்து மதத்தின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளும் அவருக்குப் பக்கபலமாயிருக்கின்றன. அவரும் அவருடைய சகாக்களும், மகமதியர்களும், மகமதியரல்லாதார்கள் என்ற பிரச்சனையை பலப்படுத்தி அவ்விரு வகுப்பாருக்குள்ளும் பெரிய பிளவுகளை உண்டு பண்ணியும் வருகிறார்கள். இதைவிட மேலாக இந்தியர்கள், ஆங்கிலேயர்கள் என்ற பிரச்சனையை உண்டாக்கி இவர் களுக்குள்ளும் தீராப் பகையையும், வெறுப்பையும், பயத்தையும்
ஏற்படுத்தி இருக்கிறார்கள்.” ஆகவே சீர்திருத்தவாதிகள் எனப்படுபவர்கள் யாவரும் சிறப்பாக இந்துப்பெண்கள் மகமதியப் பெண்கள் முதலானவர்களிடம் உள்ள குறைகளை நீக்கி அவர்களின் நிலையை உயர்த்தப் பாடுபட வேண்டும்.
குடி அரசு - 1935 (2) 382
அவர்களின் ஒத்துழைப்பும் முன்னேற்றமுமில்லாமல் இந்திய நாடானது ஒருநாளும் நாகரீக தேசங்களோடு சமமாகப் பாவிக்க முடியாது என்பதாகும்.”
தோழர் காந்தியார் மற்றொருபுறம், மகமதியர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வீண் எண்ணம் எல்லாம் ஆசைகளுக்கு இடங்கொடுக்கக் கூடியதென்றும், இந்து மதத்தில் உள்ள குலாச்சாரம் நியாயமானதென்றும் நினைக்கிறார். தற்காலத்தில் உள்ள பெண்களின் நிலைக்குக் காரணமான ஜாதி அனுஷ்டானத்தையே நாம் ஆதரிக்கவேண்டும் என்றும் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறுகிறார். ஒடுக்கக் கூடிய அல்லது அடக்கி ஆளக்கூடிய சட்டங்களை ஆதரித்தும் வருகிறார். இச்சட்டங்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேறவிடாமல் அடிமைப்படுத்தி, அறிவற்று, சுயமரியாதையற்று இருக்கச் செய்திருக்கிறது. நம்முடைய எதிரிகள் நமக்கு சுய ஆட்சி நடத்தும் சக்தியில்லை என்று சந்தேகிக்கச் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல். நமக்குச் சுய ஆட்சி (Home Rule) இந்தியாவிற்கு அளிப்பதை தாமதிக்கும்படியாகவும், அதற்கான நியாயங்களை அவர்கள் கூறுவதற்கான வசதிகளையும் தோழர் காந்தியார் ஏற்படுத்தி
விட்டார். நான் முன்கூறியபடி அவர் எல்லாத்துறைகளிலும் அதாவது சீர்திருத்தவாதிகள் முயல்கிற சகல மார்க்கங்களிலும், குல வித்தியாசத்தையும் வகுப்பு வித்தியாசத்தையும் கிளர்ச்சி செய்து கொண்டும் தேசம் பிற்போக்கடையும்படியான காரியங்களைச் செய்து கொண்டும் வந்திருக்கிறார்."
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - நவம்பர் 1935
383 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
விதண்டாவாதம்
- குறும்புச் சந்தேகி
மதத்துக்குஅரசாங்கம் பாதுகாப்பாயிருக்கிறதா? அல்லதுஅரசாங்கத்துக்கு மதம் பாதுகாப்பாயிருக்கிறதா? க்
கடவுளுக்கு பணக்காரன் பாதுகாப்பா? அல்லது பணக்காரனுக்கு கடவுள் பாதுகாப்பாயிருக்கிறதா? க்
மதத்தைப் பணக்காரன் காக்கின்றானா அல்லது பணக்காரனை மதம் காக்கின்றதா? க்
கடவுள் இல்லாமல் பணக்காரன் வாழமுடியுமா? அல்லது பணக்காரன் இல்லாமல் கடவுள் வாழ முடியுமா? க் பார்ப்பானை கடவுள் உண்டாக்கினாரா? அல்லது கடவுளை
பார்ப்பான் உண்டாக்கினானா? க்
கடவுள் இல்லாமல் மனிதன் வாழ முடியாதா? அல்லது மனிதன். இல்லாமல் கடவுள் வாழமுடியாதா? க்
மனிதனுக்காக மதம் இருக்கிறதா? அல்லது மதத்துக்காக மனிதன் இருக்கிறானா? க்
மதம் மக்களை மாற்றிக்கொள்ளுகிறதா? அல்லது மக்கள் மதத்தை மாற்றிக்கொள்ளுகிறார்களா?' க் மனிதனுக்கு மதம் “ஜாதியைப் போல்'' பிரவியில் ஏற்பட்டதா? அல்லது மனிதன் பிறந்தபின் மதம் வந்து புகுந்து கொள்ளுகிறதா? க்
குடி அரசு - 1935 (2) 384
இப்பொழுது, காந்தியார் மனிதனுக்கு மதம் பிறப்போடு வருகிறது
என்கிறார். அன்றியும் அது சட்டையைக் கழட்டுவதுபோல் கழட்டக்கூடியது அல்ல என்கிறார். ok
அப்படியானால், மதமற்ற நாஸ்திகனுக்குப் பிறக்கிற குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது? ok
தகப்பன் கிறிஸ்தவனாகவும், தாய் இந்துவாகவும் இருந்தால் இவர்களது குழந்தை எந்த மதத்தோடு பிறக்கிறது? ok
எல்லா மதக்காரர்களுடனும் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் தேவதாசிகளின் குழந்தைகளுக்கு எந்தமதம் பிறவி மதம்? ok
இந்து பிரசிடெண்ட்டுகளுக்கும் கிறிஸ்துவ உபாத்தினிகளுக்கும்
பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த மதம் பிறவி மதம் ook
முஸ்லீம் சேர்மென்களுக்கும் இந்து உபாத்தினிகளுக்கும் பிறக்கும்
குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது? க்
ஐரோப்பிய ஆபீசர்களுக்கும், இந்திய உத்தியோகஸ்தர் பெண்களுக்கும்
பிறக்கும் குழந்தை எந்த மதத்தைச் சேர்ந்தது? ook
முதலில் ஒரு இந்துவையும், பிறகு ஒரு முஸ்லீமையும் மணந்து கொண்ட கிறிஸ்துவ பெண்ணுக்கு பிறந்த குழந்தைகள் எந்த மதத்தோடு பிறக்கின்றன? ok ஆரிய சமாஜிகளால் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் முதலியவர் களிலிருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும், கிறிஸ்தவர்களால் இந்துக்களில் இருந்து மதம் மாற்றம் செய்யப்பட்டவர்களும், முஸ்லீம்களால் இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இருந்து மத மாற்றம் செய்யப்பட்டவர்களும் எந்த மதத்தோடு பிறந்தவர்களாகிறார்கள். ook
அது எப்படி கண்டுபிடிக்கமுடியும்? க்
3885 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இந்தப்படி மதம் மாறியவர்களும், மதம் மாற்றப்பட்டவர்களும் செத்தால் மதம் மாறியதற்காக நரக மோக்ஷமடைவார்களா?
ன
எந்த மத சம்பந்தமான மோக்ஷ நரகங்களை அடைவார்கள்?
ன இன்று இந்தியாவில் உள்ள 8-கோடி முஸ்லீம்களும் ஒரு கோடி கிறிஸ்தவர்களும் ஆதாம் ஏவாள் காலம் தொட்டே முஸ்லீமாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களா? அல்லது சட்டையைக் கழட்டுவது போல், பழய மதங்களைக் கழட்டிவிட்டு, வேறு மதத்தை மாட்டிக் கொண்டவர்களா?
ன மதங்களுக்கு இருக்கும் சட்டம்தான் ஜாதிப்பிரிவுகளுக்கும், வருணாச்சிரம தர்மங்களுக்கும் இருந்து வருகிறதா அல்லது இவைகளுக்கு வேறு சட்டமா?
ன ராமானுஜர் காலத்தில் வைணவர்களாக ஆக்கப்பட்ட, ஆசாரிகள், மண் உடையார்கள், நாடார்கள், தேவாங்கர்கள், பல “தாழ்ந்த வகுப்பார்கள் எல்லோரையும் அவர்கள் சந்ததியார்களையும் இன்று எப்படி மதிக்கிறது?
ன
கீதைப்படியும், மனுதர்ம சாஸ்திரப்படியும் சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த வருணத்தைச் சேர்ந்தது?
பகுத்தறிவு (மா.இ.) - துணுக்குகள் - நவம்பர் 1935
குடி அரசு - 1935 (2) 386
குச்சிக்காரி புத்தி < மாத்திரம் வாழ்ரயேோ??*
I
காங்கிரசின் அயோக்கியத்தனமும், அதில் வயிறு வளர்த்த பார்ப்பனர்களின் இழி தன்மையும், அவர்களுடைய கூலிகளின் கூட்டிக் கொடுக்கும் தனமும் இன்று அசல் குச்சிக்காரியின் தன்மைக்கே வந்துவிட்டது.
காங்கிரஸ்காரர்கள் பொது மக்களை ஏமாற்றி வசூலித்த கோடிக் கணக்கான ரூபாய்களின் மோசத்தைக் குறித்து வெகுநாளாகவே பொது ஜனங்கள் பேசி வருகிறார்கள். காந்தியார் முதல் ஒவ்வொருவரையும் அனேகர் நேரில் கண்டு கேட்டும் வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காங்கிரஸ்காரர் அவ்வப்போது மழுப்பிக் கொண்டே வந்திருக்கிறார்களே. ஒழிய கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாளதுவரை சரியான சமாதானம் சொல்லப்படவில்லை.
ஒரு கோடி ரூபாய் பித்தலாட்டம்
அதாவது ஒரு கோடி ரூபாய் இன்ன காலத்துக்குள் சேர்ந்துவிட்டால் ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறேன் என்று காந்தியார் முதல் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் பொது ஜனங்களை ஏமாற்றி ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவே வசூலித்தார்கள்.
ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் வந்ததா? இதோ சுயராஜ்யம் வந்துவிட்டது. அதோ சுயராஜ்யம் வந்து விட்டது என்று சொன்னதோடு சுயராஜ்யத்தின் நிழல் தெரிகின்றது என்றுகூட சொல்லி மறுபடியும் வசூல் செய்தார்கள். இது இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?
சுயராஜ்யம் வராத விஷயம் ஒரு பெரும் ஏமாற்றமாக இருக்கட்டும், ஏனெனில் அந்த வார்த்தையே “நீக்கிரி மூக்கிரி” என்பதுபோல் அர்த்த மற்றதாகிவிட்டது. ஆதலால் ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காகவே அப்படிச் சொன்னதாக இருக்கட்டும். ஆனால் அந்த ஒரு கோடி ரூபாய் என்ன ஆயிற்று என்பதற்கு சரியான பதில் சொல்ல வேண்டியது யோக்கியர்களின் கடமையல்லவா?
387 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதற்கப்புறமும் 3, 4 தடவைகளில் பணம் லட்சக்கணக்கில் வசூலிக்கப்பட்டன. அவற்றின் கதி என்ன ஆயிற்று என்பதற்குப் பதில் சொல்ல வேண்டியது யோக்கியர்களின் கடமை அல்லவா?
முட்டாள்களின் பணத்தை மோசக்காரர்கள் வஞ்சகக்காரர்கள் வசூலித்து வயிறு வளர்ப்பது இயற்கை என்றாலும் அந்தப் பணமானது மற்ற சாதுக்களுக்கும் உண்மையான தொண்டு புரிபவர்களுக்கும் இடையூறாக இருக்குமானால் இனியும் மக்களை ஏமாற்றி வசூலிக்காமல் இருப்பதற்கும், முட்டாள்கள் மோசம் போகாமல் இருப்பதற்கும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது உண்மையான ஊழியர்களின் கடமை அல்லவா என்று கேட்கின்றோம்
ஆகவே இந்த 3, 4 தடவை வசூலித்த பொதுப் பணம் சுமார் 20000000 இரண்டு கோடி ரூபாய்க்கு காங்கிரஸ்காரர்கள் இப்போது என்ன விபரம் சொல்லுகிறார்கள் என்பதைக் கவனிப்போம்
முதலாவது விபரம் என்னவென்றால் அதைப்பற்றிக் கணக்குக் கேட்பவன் தேசத் துரோகி என்று சொல்லி இழிகுணமாய் வைவதாகும்
இரண்டாவது விபரம் என்னவென்றால் கேட்பவனை நீ மாத்திரம் யோக்கியனா என்று குச்சிக்காரித்தனமாய்ப் பேசுவதாகும்.
மூன்றாவது விபரம் ஏதோ அங்கும் இங்கும் சில தவறுதல்கள் இருப்பது சகஜம்தான். அதை எல்லாம் ஒரு பெரிய காரியத்தில் கவனிக்கலாமா? தேசபக்தர்கள் தியாகிகள் என்பவர்கள் தானே கையாண்டு இருக்கிறார்கள். போனால் போகட்டுமே என்று பல்லைக் கெஞ்சுவதாகும்.
2 கோடி ரூபாய் நாசமானதைப் பற்றி இங்கு நாம் அதிகக் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்தியா பூராவுக்கும் சிறிது காலத்தில் (2 கோடி ரூ.) பொது மக்களிடம் இருந்து சுயராஜ்ஜியத்தின் பேரால் வசூலிக்கப்பட்டது 2 கோடியாகுமானால், இதே கூட்டத்தார் தென்னாட்டில் மாத்திரம் கோயில்கள் மடங்கள் என்னும் பேரால் வசூலிக்கப்படும் ரூபாய்கள் வருஷம் ஒன்றுக்கு 235 கோடி ரூபாய் 3 கோடி ரூபாய் ஆகின்றது.
இந்தப் பணங்கள் 2% கோடி அல்லாமல் கணக்குக்கு வராமல் சுவாமி, கோவில், மடம் என்னும் பெயரால் கொள்ளையடிக்கும் பணம் அதைப் போல் பல மடங்கு இருக்கலாம். இவையெல்லாம் என்ன கதி ஆகின்றது என்று பார்த்தால் காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்னும் பெயரால் போகும் கொள்ளை, அதில் நடக்கும் அயோக்கியத்தனம், திருட்டு புரட்டு ஆகியவை பிரமாதமல்ல என்று தோன்றும். ஆனால் இரண்டுக்கும் தான் “கணக்கு” வெளியிடப்படுகிறது என்று சொல்லலாம்
குடி அரசு - 1935 (2) 388
இதற்குக் கணக்குக் கேட்டாலும் கேட்டவனை இதுபோலவேதான் நாஸ்திகன் என்றும், மதத்துரோகி என்றும், ஜாதித் துவேஷி என்றும், பச்சையாய் பார்ப்பன துவேஷி என்றும் தான் சமாதானம் சொல்லப்படுகிறது
காட்டப்படும் கணக்குகளினுடைய மோசம் எப்படி இருக்கும் என்று பார்த்தால் ஒரு யோக்கியமான கோர்ட்டு மூலம் இன்று உள்ள குருக்கள். அர்ச்சகர், தர்மகர்த்தாக்கள், டிரஸ்டிகள், கமிட்டி மெம்பர்கள் என்பவர்களில். 100க்கு 99 பேர் “போர்ஜரி, பொய்க்கணக்கு, பொதுச் சொத்தை கையாளுதல் என்கின்ற குற்றங்களுக்கு வருஷக்கணக்காய் ஜெயிலுக்கு போக வேண்டியவர். களாவார்கள், பலர் நாடு கடத்தப்பட வேண்டியவர்களுமாவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் வேண்டியதில்லை. கோவில் கள்ளர் குகை என்றும், விவசாரிகள் இல்லம் என்றும் சொன்னவர்கள் வாய்க்குச் சர்க்கரை போடவேண்டும் என்று சொல்லும்படியான நிலையில்தான் இருந்து வருகிறது.
மற்றும் அக் கணக்குகளைப் பார்க்க யாருக்கு அக்கரை? யார் மூலம் பரிசோதகர்கள் வைத்து பார்க்கப்படுகின்றது? பரிசோதகர்களின் யோக்கியதை என்ன? அர்ச்சகர் குருக்கள் ஆகியவர்களிடம் உள்ள மோகனாஸ்திரம் என்ன? டிரஸ்டிகளின் செல்வாக்கு எப்படிப்பட்டது? என்பவைகளையெல்லாம் பார்த்தால் எந்தக் கணக்காவது உண்மையாய் யோக்கியமாய் பார்க்கப்பட்டு எந்தக் கணக்காவது உள்ளதை வெளியில் சொல்லிவிட முடியுமா என்பதும் மற்றும் அக்கணக்கின் யோக்கியதையும் நன்றாய் விளங்கும் அதுபோலவே காங்கிரசையும் சுயராஜ்ஜியப் பேச்சையும் அதன் டிரஸ்டிகள், கமிட்டி மெம்பர்கள் பிரசாரகர்கள் ஆகியவர்களின் யோக்கியதையும் பார்த்தால் தேசாபிமானம் என்பது வடிகட்டின அயோக்கியர்களின். வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் என்று சொன்னவர்கள் வாய்க்கு சர்க்கரை போட வேண்டிய அளவுக்கு மெய்ப்பிக்கப்பட்டுவிடும்
நமது தேசாபிமானிகள் யார்? அதன் டிரஸ்டிகள் யார்? கமிட்டியார்கள் யார்? இவர்களின் கூலிகள் யார்? இவர்களை ஆதரிக்கும் பத்திரிகைக் காரர்கள் யார் என்பவைகளைக் கவனித்து இவர்களின் நடவடிக்கை இது வரை எப்படி இருந்து வந்தது என்பதையும், அவர்களது தனிப்பட்ட யோக்கியதையும், கொடிவழிப்பட்டியையும் பார்த்தால் தேசாபிமானத்தின் பேரால் வசூலிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளை போயிற்று என்று சொல்லுவதில் அதிசயமிருக்காது. ஏனெனில் அதைத் தவிர வேறு ஒன்றுக்கும் வசூலிக்கப்படவில்லை என்றும், அதிலுள்ள ஆட்களின் யோக்கியதை இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது என்றும்,
தெரிந்த விஷயத்தைப் பற்றி குறை கூறுவது முட்டாள்தனத்தைத் தவிர வேறு பயன் அளிக்கக்கூடியதாகுமா என்பதும் விளங்கும்
39 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இந்த நிலையில் சுயராஜ்ஜிய நிதிப் பணங்கள் யார் பேரால் வசூல் செய்யப்பட்டதோ அவரது சந்ததியார்களே இப்பண சம்மந்தமான கணக்குகளில் உள்ள புரட்டுகளைக் கண்டு பிடித்து வெளியிட்டிருப்பதைச் சில பத்திரிகைகள் எடுத்துக்காட்டி, பொது ஜனங்களுக்கு இனியும் இப்படி முட்டாள்தனமாக ஏமாந்து போகக்கூடாது என்று எச்சரிக்கை செய்தால் அதைக் கண்ட யோக்கியர்கள் ஆத்திரப்படுவதின் காரணம் என்ன என்பதை விளக்க வேண்டுமா?
தமிழ்நாட்டு கமிட்டியைப் பொருத்தவரை பணம் கொள்ளை போன. விஷயம், கணக்குச் சொல்லாமல் வரவு வைத்து சரி செய்து கொண்ட விஷயம் எல்லாம் கூட்டிப் பார்த்தால் நமக்குத் தெரிந்த வரை 3, 4 வருஷங்களில் வருஷம் பல பல ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று இப்போதும் பந்தயம் கட்டி உறுதி கூறுவோம்.
மொத்தத்தில் இப்பவும் ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிடுகின்றோம். அதை மறுக்க காங்கிரசாருக்கு அல்லது அவர்கள் கூலிகளுக்கு சரக்கு இருக்குமானால் வெளியில் வரட்டும் என்று அறைகூவி அழைக்கின்றோம்.
அதாவது 1922, 23, 24, 25-ல் காங்கிரசில் இருந்த பார்ப்பனர்கள் தோழர்கள் டாக்டர் ராஜன் சாஸ்திரியார், எம்.கே. ஆச்சாரியார், சந்தானமய்யங்கார், சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சேலம் பார்ப்பனர்கள், திருநெல்வேலி பார்ப்பனர்கள், சென்னைக்காரர்கள் முதலிய சகல பார்ப்பனர்களும், தாங்கள் வாங்கிய பணங்களுக்கு வாங்கியபடி சரியான கணக்குக் கொடுத்தார்களா? எவ்வளவோ ஆயிரம் ரூபாய் இவர்கள் பேரிலிருந்து சரியான வகையும் பொறுப்பும் தெரியாமல் வசூலிக்க முடியாமல் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு (ஆயிரம் ஆயிரமாய்) வரவு வைத்து செலவெழுதப்பட்டது
இந்தக் கூட்டத்தில் சேராமல் இன்று எந்தக் காங்கிரஸ் பார்ப்பனராவது மீதியாய் இருக்கிறார்களா என்பதாகும்
மற்றும் எத்தனையோ பார்ப்பனர்கள் கதர்கடையில் இருந்து பணம் பச்சையாகத் திருடிக் கொண்டு போய் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் நடத்தாமல் விடப்பட்டிருக்கிறது என்பது பொய்யா என்று கேட்கின்றோம்.
மற்றும் திருச்சியில் மாத்திரம் நேற்று மீனாம்பள்ளி ஜமீன்தாருக்குப் போட்டியாய் காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நின்றவர்கள் அவர்களுக்கு வேலைசெய்தவர்கள் முதல் கதர் போர்டில் கதர் சம்மந்தத்தில் இருந்த ஒரு டஜன் பார்ப்பனர்களில் (பெயர் வேண்டுமென்று காங்கிரஸ் பத்திரிகைகள் கேட்டால் எழுதத் தயாராயிருக்கிறோம்) ஒருவராவது யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்
குடி அரசு - 1935 (2) 390
காங்கிரஸ் ஆபீசில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை பார்த்தவர்களில் பண விஷயத்தில் நாணயமாய் நடந்து கொண்டவர்கள் 100க்கு 10 பேராவது உண்டா என்று கேட்கின்றோம்
காங்கிரஸ் ஆடிட் ரிப்போர்ட்டு என்பதாக 1922 வருஷ முதல் நாளது வரை அச்சிட்டு வைத்திருப்பதும், அக்கணக்குகளில் யார் யார் பேரால் வர வேண்டிய ரூபாய்கள் விவரமில்லாமல் ஒரு வரியில் வரவு வைத்துச் செலவெழுதப்பட்டதும், இன்றும் ஒரு நடுநிலைமைக்காரர் தணிக்கை செய்து பார்த்தால் ஷி ஒரு கோடி ரூபாய்போன வழியைப் பற்றி “மராட்டா' 'விடுதலை' ஆகிய பத்திரிகைகள் சொல்வது எவ்வளவு கொஞ்சமானது என்பது விளங்கும்
ராமசாமி மீது குறை
தோழர் ஈ.வெ. ராமசாமி வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு வாங்கிய நிதிக்கு கணக்குக் கொடுக்கவில்லை என்பதை ஒரு காங்கிரஸ் பத்திரிகை மராட்டாவில் வந்த சேதியை எடுத்து எழுதிய விடுதலையின் பிரசாரத்துக்கு சமாதானமாகச் சொல்லுகிறது
இந்தச் சமாதானமானது விடுதலை சொன்ன குறைகளை காங்கிரஸ் பத்திரிகை ஆதரிக்கிறது என்று தான் அர்த்தமே ஒழிய, காங்கிரஸ் பண விஷயத்தில் அதன் நிர்வாகிகள் யோக்கியமாய் பொறுப்பாய் நடந்து கொண்டார்கள் என்பதாக ஆகவில்லை. தோழர் ராமசாமி இடம் கொடுத்த பணத்துக்கு ராமசாமி கணக்குச் சொல்லவில்லை என்பது வாஸ்தவமாய் இருந்து அவரிடம் கணக்குக் கேட்டு வாங்காமலும் வாங்கியிருந்தால் கொடுத்த பணத்தை வரவு செலவு செய்து கொண்டு பாக்கி உள்ளதற்கு கணக்கு வாங்காமலோ, வசூல் செய்யாமாலோ விட்டிருப்பார்களானால், காங்கிரஸ்காரர்கள் பணவிஷயத்தில் எவ்வளவு பொறுப்பற்றவர்களாய் நடந்திருக்கிறார்கள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்
அன்றியும் நூறோ, இருநூறோ, ஐநூறோ, ஆயிரமோ ஈ.வெ.ரா. மீது பாக்கி இருந்தால் அதை வசூலிக்க அவரிடம் இன்று வரை மார்க்க மில்லாமல் போய்விட்டதா? என்றும் கேட்கின்றோம் இனி கதர் நிதி, திலகர் நிதி விஷயத்திலும் ஈ.வெ.ராமசாமியிடம் கணக்கு சொல்லப்படாமல் பாக்கி இருக்குமானால் எதற்காக அவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர் ஈ.வெ.ரா. 1924ம் வருஷம் முதல் காங்கிரசையும், காங்கிரஸ் வேலையாட்களையும், காங்கிரஸ் தலைவர்களையும் தயவுதாட்சண்ணிய மின்றி வெளியாக்கிய வண்ணமாகவே இருந்து வருகிறாரே ஒழிய யாருக்கும் அடிமையாய் இருந்து வரவில்லை.
391 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அப்படி இருக்க ஈ.வெ.ரா.விடம் கதர் நிதிக்கு என்றோ, திலகர்
நிதிக்கு என்றோ, வைக்கம் நிதிக்கு என்றோ கொடுத்த பணம் ஏதாவது மீதி இருக்குமானால், இந்த 10, 13 வருஷமாய் வசூல் செய்ய எது தடையாய்
இருந்தது என்பதும், அதையேன் வெளிப்படுத்தாமல் இதுவரை மூடி
வைக்கப்பட்டிருந்தது என்பதும் விளங்கவில்லை.
தோழர் ஆதிநாராயண செட்டியார் எழுதிய கணக்கு அறிக்கையைப்
பார்த்தால் ஈ.வெ.ரா. யோக்கியதை வெளியாகும் என்று அப்பத்திரிகை:
எழுதி இருக்கிறது. தோழர் ஆதிநாராயண செட்டியார் யோக்கியதை பெற்ற ஒரு கணக்கு பரிசோதகரல்ல என்றாலும், அவர் எழுதியதாகச் சொல்லப்படும் அறிக்கைக்குப் பிறகுதான் தோழர் ஈ.வெ. ராமசாமி மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாகவும், மாகாணக் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மாகாண கான்பரன்ஸ், ஜில்லா கான்பரன்சுகளில் சுமார் 100க்கு மேற்பட்ட கான்பரன்சுக்குத் தலைவராகவும் கதர் போர்டுக்கு 5 வருஷ தலைவராகவும் தெரிந்தெடுக்கப்பட்டார் ஆகவே வாங்கிய பணத்துக்குக் கணக்குக் கொடுக்காதவர் எப்படி மாகாண காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கு பல தடவை தலைவராக தெரிந் தெடுக்கப்பட்டார் என்பதை கவனித்தால் அவரை தெரிந்தெடுத்து அவரை பின்பற்றிய அத்தனை பேரும் திருட்டில் பங்கு வாங்கியவர்களா? அல்லது மடையர்களா? அல்லது அயோக்கியர்களா? என்று கேட்கின்றோம்
காரியதரிசி பதவிக்கு அறிக்கை எழுதிய தோழர் ஆதி நாராயண செட்டியார், பல தடவை ஈ.வெ.ராவுடன் போட்டி போட்டு ஈ.வெ.ரா. வாங்கிய ஓட்டுக்கு 100க்கு 15 போலவே ஒவ்வொரு தடவையும் ஓட்டுப் பெற்று தோல்வி அடைந்திருக்கிறார். மற்றும் ஆதிநாராயண செட்டியாரைப் பற்றிய பாக்கி விஷயம் இதில் வர வேண்டியதில்லை. ஆகையால் அதை விட்டுவிட்டோம். ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் கணக்கு தணிக்கை விஷயத்தில் ஆதிநாராயண செட்டியார் போன்ற ஆட்களை காங்கிரஸ் பார்ப்பனர்கள் நன்றாய் உபயோகித்துக் கொண்டார்கள். பிறகு அவரின் திருப்தி அற்ற நடத்தையாலேயே வேறு தகுதியுள்ள பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
விவரம் * “வைக்கம் சத்தியாக்கிரகம்?
இவை ஒருபுறம் இருக்கட்டும். தோழர் ஈ.வெ.ரா. வைக்கம் சத்தியாக்கிரக
நிதி விஷயமாய் வாங்கிய பணத்துக்கு கணக்கு கொடுக்கவில்லை
என்பதற்கு சமாதானம் சொல்லி ஆக வேண்டுமல்லவா? குச்சிக்காரி மாதிரி
“நீ மாத்திரம் யோக்கியனா'' என்று சொன்னால் போருமா? அல்லது பெரிய காரியத்தில் இதெல்லாம் கவனிக்கக் கூடாது” என்று சொல்லி
குடி அரசு - 1935 (2) 392
தப்பித்துக் கொள்ளலாமா? அல்லது ''சகலத்தையுந் துறந்த தேச பக்த தியாகிகள் தானே கையாடினார்கள்'' என்று சொல்லலாமா? கணக்கு சொல்லித் தானே ஆக வேண்டும். எனவே வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு அட்வான்சாக ரூபாய் ஆயிரம் (19000 அல்ல) ஈ.வெ.ரா. பேருக்கு வைக்கத்துக்கு அனுப்பியது உண்மை. அப்பணத்துக்கு ஈ.வெ.ரா.வால் 2 தடவை கணக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதாரம் கூறுகிறோம்
முதலில் 2 தடவை ஏன் கணக்கு கொடுக்கப்பட்டது என்பது ஒரு கிளைக் கேள்வி ஆகலாம். ரகீதுகளுடன் முதல் தடவை கொடுத்தக் கணக்கு காங்கிரஸ் ஆபீசில் கை தவறி விட்டது. இரண்டாம் தடவை கணக்கு கேட்டதற்கு ஈ.வெ.ரா. முதலிலேயே வவுச்சருடன் கணக்கு அனுப்பி ஆய்விட்டது என்று பதிலெழுதினார். பிறகு தோழர் முத்துரங்க முதலியார்
ஆபீசுக்கு அதிகாரியாக வந்தார். அந்த சமயம் ஈ.வெ.ரா. காங்கிரசை பலமாக தாக்கிக் கொண்டிருந்த சமயம். ஆதலால் முத்துரங்கத்தைப் பிடித்து அவர் மூலமாக ஈ.வெ.ரா. மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தயாரிக்க சூகி செய்து அதற்கு ஆக எவ்வளவோ தூரம் பழங்கணக்குகளை எல்லாம் பூதக்கண்ணாடி வைத்து ஆபீசில் பரிசீலிக்கப்பட்டு, இந்த ஒரு விஷயம் அதாவது, “1000க்கு கணக்கு அனுப்பாமல் இருக்கும்” விஷயத்தைக் கண்டுபிடித்து கணக்கு அனுப்பும்படி ஈ.வெ.ராவுக்கு ரிஜிஸ்டர் நோட்டீசு அனுப்பி, கணக்கு கேட்கப்பட்டது. கணக்கு அனுப்பாவிட்டால் பத்திரிகை களில் பிரசுரிக்கப்படும் என்று அதில் எழுதி இருந்தது. அதற்குப் பதிலாக மறுபடியும் ஒரு தடவை கணக்குகளை ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பப்பட்டது
இந்தக் கணக்கின் பேரில் அக்கணக்கில் கண்ட நபர் ஒவ்வொரு வருக்கும் எழுதி அதில் கண்ட பணம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டதா என்று காங்கிரஸ் ஆபீசிலிருந்து எழுதிக் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் பெற்றுக் கொண்டதாக ஆபீசுக்குத் தகவல் எழுதியும் இருக்கிறார்கள்.
அதாவது 1000 ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாக்கிரக காரியதரிசிக்கு கொடுக்கப்பட்டதும் பாக்கி 300ல் பாலக்காடு சவுரி ஆச்சிரமத்துக்கு கதருக்குப் பஞ்சு வாங்கி அனுப்பியதும், மீதி நூத்திச் சில்லரை ரூபாய் கோட்டார் சத்தியாக்கிரகத்துக்கு கொடுக்கப்பட்டதும் ஆகிய கணக்குகள் மேல்கண்டபடி இரண்டு தடவை அனுப்பப்பட்டிருக்கிறது.
கதர் நிதி
மற்றபடி கதர் நிதி பண்டு 500 ரூ. விஷயமாய் ஈரோடு பொறுத்தவரை எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரைத் தோழர் சந்தானமய்யங்காரே பல தடவை நடந்து கேட்டு பகுதி வசூல் செய்யப்பட்டு, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டு விட்டார்கள். இது அவருக்கும் நன்றாய் தெரியும்.
393 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மற்றபடி திலகர் நிதி விஷயம் ஒன்றும் கிடையாது. ஜில்லா ஆபீசு கணக்கு விஷயமாய் ஈரோடு ஜில்லா கமிட்டி காரியதரிசியிடமிருந்து கோயமுத்தூர் ஜில்லா கமிட்டி காரியதரிசி கணக்குப் பார்த்து நேர் செய்து வரவேண்டிய ரூபாய்கள் பூராவும் பெற்றுக் கொண்டு கணக்கில் கையொப்பம் செய்து விட்டு போயிருக்கிறார். இவைகளில் எதற்கும் ஈ.வெ.ராமசாமிக்கு நேரில் சம்பந்தமில்லை.
இந்த உண்மைகள் இன்றும் யார் வேண்டுமானாலும் ஆதாரங்களோடு அறிய தக்க சவுகரியம் இருக்கிறது. இவை எப்படியோ இருந்தாலும் காங்கிரஸ் பணம் பாழாயும் கொள்ளை போயும் இருப்பதை ஈ.வெ.ராமசாமி கணக்கு கொடுக்கவில்லை என்று எழுதும் குற்றச்சாட்டு எப்படி சமாதானப்படுத்தும் என்பது விளங்கவில்லை
பிரகாசம் 10000
பிரகாசத்துக்கு கொடுத்த 10000 பத்து ஆயிரம் ரூபாய் மோசம் செய்யப்பட்டது என்பதற்கு சொன்ன சமாதானம் மிகவும் மோசமானதாகும். என்னவென்றால் பிரகாசம் 10000 ரூ. கடன் வாங்கினார். கொடுப்பதாகச் சொன்னபடி கொடுக்கவில்லை. பிறகு அவர் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ள கமிட்டி தீர்மானித்தது. தோழர் சீனிவாசய்யங்கார் தலைவராய் வந்ததும் அதை மெள்ள நழுவ விட்டார். பிறகு இவ்விஷயம் காந்தியார் தகவலுக்கு எட்டச் செய்யப்பட்டது
பிறகு ஏதோ தவணையின் மீது கொடுப்பதாக பிரகாசத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது. கடைசியில் 'ஸ்வஹா' செய்து கொள்ளப்பட்டது. ஆகவே பிரகாசம் பத்திரிகை நடத்தி நஷ்டப்பட்டதற்கும், காங்கிரசிடம் கடன் வாங்கி பஞ்சாயத்து செய்து கடைசியாக காந்தியார் முன்னிலையில் கொடுப்பதாக
ஒப்புக் கொண்டு ஏமாற்றினதற்கும் என்ன சம்மந்தம் என்பதை பொது ஜனங்களே யூகித்துக் கொள்ள வேண்டும்
ராஜகோபாலாச்சாரியார் 19000
தவிர ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் அட்வான்சாக கொடுத்த 19000க்கு கணக்கு இல்லை என்று சொன்னால் அதற்கு சமாதானம் செலவு விபரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று அப்பத்திரிகை
எழுதுகிறது. எத்தனை வருஷமாக காத்திருப்பது? அந்தப் பணம் எந்த மாதிரி செலவு செய்யப்பட்டது? (ஆச்சாரியார் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால்)
சத்தியமூர்த்தி தேர்தலுக்காக செலவு செய்யப்பட்டதா அல்லது வேறு என்ன காரியத்துக்கு செய்யப்பட்டது என்பதைப் பல வருஷங்களாகியும்
குடி அரசு - 1935 (2) 394
காங்கிரஸ்காரரே தெரியும்படியான நிலைமை ஏற்படவில்லையானால், அப்பணம் யோக்கியமாய் செலவழிக்கப்பட்டது என்று எப்படிச் சொல்லிவிட முடியும்?
அல்லது பண விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் கவலையுடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? கடைசியாக இந்த தவறுதல்களுக்கு அப்பத்திரிகை சொல்லும் சமாதானம் “தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகி விட்டால் மூழ்கிப் போவது ஒன்றும் இல்லை” என்று எழுதிவிட்டு, ஜஸ்டிஸ் கட்சியில் சிலர் பதவிகளுக்காக உத்தியோகத்துக்காக லஞ்சம் வாங்கினதாக எழுதி இருக்கிறது. இதைப்பற்றி அடுத்த வாரம் விவரிப்போம்.
குடி அரசு - தலையங்கம் - 24.11.1935
395 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
குச்சிக்காரி புத்தி
11
சென்ற வார குடி அரசில் திலகர் நிதியை காங்கிரஸ் கையாண்ட யோக்கியதையைப் பற்றி நாம் எழுதி இருந்தோம்.
அதற்கு காங்கிரஸ் பத்திரிகைகள் எதுவும் திருப்திகரமான சமாதானம் எழுதவில்லை. வாலை ஒடுக்கிக் கொண்டன.
ஆனால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் பூசி மெழுகும் சமாதானம் எழுதியிருந்தார். அது சரியான சமாதானமா என்று பார்த்தால் எந்தத் தவறுதலை ஆதாரமாக வைத்து மராட்டா பத்திரிகை காங்கிரஸ்காரர்கள் திலகர் நிதியைக் கையாண்டதைப் பற்றி எழுதிற்றோ அத்தவறுதல்களைப் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்டு, பிறகு பூசி மெழுகப்பட்டிருக்கிறது.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லும் சமாதானங்கள் சில அய்ட்டங்களுக்கு கணக்கிலேயே இருந்திருக்க வேண்டியவைகளே ஒழிய, இப்பொழுது சமாதானம் சொல்லி மெய்ப்பிப்பதற்குத் தகுதியானவை அல்ல. அப்படிச் சொல்வதாய் இருந்தாலும் அது சந்தேகத்திற்கு இடமில்லாதது என்று சொல்லிவிட முடியவில்லை. ஏனெனில் பணப் புழக்கத்தில் குற்றமோ குறையோ, ஒழுங்கு தவறுதல்களையோ கண்டு பிடித்தவர்களை திருப்பிக் கண்டிக்கும் யோக்கியதையில் இருப்பவர்கள் தாங்கள் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லாத நிலையில் இருக்க வேண்டும்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் சமாதானம் அப்படிக்கில்லை என்பதை கோபப்படுகிறவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம் ஏனெனில் தீண்டாமை விலக்குக்காக மாகாண கிராண்டாக 20000 ரூ கொடுக்கப்பட்டு அந்த இலாக்காவை ராஜகோபாலாச்சாரியாருக்கு ஒப்படைக்கப்பட்டு அவர் ஒரு வருஷத்திலேயே அந்த இலாக்காவை தோழர் ஈ.வெ. ராமசாமி பேருக்கு மாற்றப்பட்டிருந்து அது ஒரு வருஷத்திலேயே மாகாண கமிட்டிக்கோ, பொக்கிஷத்துக்கோ, போயிருக்கு மானால் “3 வருஷ காலம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் மீதே அட்வான்சாக இருக்க! காரணமில்லை.
ஆகவே அந்த ரூ.19000 என்கின்ற துகை இந்த தீண்டாமை விலக்கு கிராண்டான 20000 ரூபாயைப் பொருத்ததுதானா வேறு துகையா என்பதுவும் விளங்கவில்லை.
குடி அரசு - 1935 (2) 396
இது விஷயத்தில் நாம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் மீது குறை கூறுவதாக அல்ல. அவர் எடுத்துக் கொண்டதாகவும் அல்ல. ஆனாலும்
திலகர் நிதி பணம் கையாண்ட முறை யோக்கியமான முறை அல்ல என்றும் பார்ப்பன சுயவகுப்பு நலத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆகவே சொல்லுகிறோம். பல பார்ப்பனர்கள் சுயநலத்துக்கு ஒழுங்கு தவறாக கையாடினார்கள் என்பதையும் எப்பொழுதும் எங்கும் ௬ுஜுவிட தயாராய் இருக்கிறோம். ஏனெனில் தங்களை அளவுக்கு மீறின பரிசுத்தர்களாகக்
காட்டிக் கொள்வதோடு குற்றம் கண்டுபிடித்தவர்களை யோக்கியப் பொறுப்பின்றி தாக்குவதால் உண்மையான யோக்கியதையை வெளிப்படுத்த
வேண்டி இருக்கிறது
திலகர் சுயராஜ்ஜிய நிதி, கதர் அட்வான்ஸ் என்னும் பேரால் எத்தனையோ பேர்களுக்கு பல ஆயிரக்கணக்கில் 1000, 2000, 3000, 4000, 5000 என்பதாகக்கூட கடனாக பாண்டு எழுதிக் கொண்டு கொடுக்கப்பட்டது நமக்குத் தெரியும். இவற்றுள் பல அதாவது முக்கால் பாகம் அதாவது பார்ப்பனர்கள் வாங்கிய கடன் பாக்கிகள் ஒரு வரியால் வஜா செய்யப் பட்டிருப்பது இன்றும் கணக்குகளில் பார்க்கலாம்
ஆனால் பார்ப்பனரல்லாதார் வாங்கியவைகளில் பெரும்பாகம் அவரவர்களது வீடு வாசல்கள் விற்றுக் கொடுக்கும்படி வசூல் செய்யப்
பட்டிருக்கிறது உதாரணமாக சேலத்தில் மாத்திரம் வக்கீல் பார்ப்பனர்கள் 4, 5 பேர்களுடைய பாக்கியை பணம் வாங்காமலே வரவு வைத்து பாண்டைக்
கிழித்துக் கொடுக்கப்பட்டது
ஆனால் சாத்தூர் தோழர் சுப்பிரமணிய நாயனார், தஞ்சாவூர் டாக்டர். ராமசந்திரம் செட்டியார் இவர்கள் போன்றவர்கள் பாக்கிகள் அவர்களது வீடுகள் விற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தோழர் சுப்பிரமணிய நாயனார். ஏராளமான பிள்ளை குட்டிக்காரர் எல்லோரும் உயர்ந்த படிப்புப் படித்துக் கொண்டிருந்தவர்கள் அதுசமயம் அவரும் சாத்தூர் சேர்மனாய் இருந்து
வக்கீல் உத்தியோகத்திலும் மீ” 400, 500 சம்பாதித்துக் கொண்டு உயர்ந்த வாழ்க்கை நடத்தியவர். அப்படிப்பட்டவர் குடும்பத்துடன் ஒத்துழையாமையில் ஈடுபட்டு பிள்ளைகள் படிப்பை நிறுத்தி சேர்மென் வேலையும், வக்கீல் வேலையும் விட்டு காங்கிரசில் உழைத்தவர். அவரிடம் கொடுக்கப்பட்ட பணத்துக்கு மற்றவர்களுக்கு காட்டிய சலுகை காட்டாமல் வசூலித்ததால். இவர் குடும்பமே இப்போது கஷ்டப்படுகிறது. பிள்ளைகுட்டிகள் திண்டாடுகின்றன. அதுபோலவே டாக்டர் ராமச்சந்திர செட்டியாரிடமும் நிர்தாட்சண்யம் காட்டப்பட்டது. ஆனால் இந்தப்படி எந்தப் பார்ப்பனரிடமும் காட்டப்படவில்லை என்று நெய்யில் கையை விடுவோம்
397 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மாகாண காங்கிரஸ் ஆபீசு திருச்சியில் டாக்டர் ராஜன் குடியிருந்த வீட்டு மேல்மாடி அறையில் இருந்த காலத்தில் மீ 15, 20 ரூ. வீதம் வாடகை வசூல் செய்து கொண்டார். ஆனால் அதே மாகாண காங்கிரஸ் ஆபிசு ஈரோடு ஈ.வெ.ராமசாமி அவர்கள் வீட்டில் வருஷக்கணக்காய் இருந்தது ஆபீசு குமாஸ்தா, மேனேஜர், கூட்டுக் காரியதரிசி ஆகியவர்களுக்கு வீட்டிலேயே சாப்பாடு வருஷக்கணக்காய் இலவசமாய்ப் போட்டு வந்ததோடு ஆபீசுவாடகைக்கு என்று ஒரு தம்பிடி வாடகையும் கொடுக்கப்படவில்லை.
தோழர் ராமசாமி தன் தொழிலை, குடும்ப எஸ்டேட் நிர்வாகத்தை விட்டுவிட்டு அலைந்ததும் மற்றவர்கள் 2 வது வகுப்பில் பிரயாணம் செய்தால் தான் 3வது வகுப்பில் பிரயாணம் செய்வதுமாக அலைந்து திரிந்தும் குடும்பத்திலும் தொழிலிலும் ரூ. 40000, 50000 நஷ்டப்பட்டதும் 20000, 30000 பொரும்படியான தஸ்தாவேஜுகளை எல்லாம் கோர்ட்டுக்குப் போகக் கூடாது என்கின்ற காரணத்துக்காக வசூல் செய்ய முடியாமல் விட்டுவிட்டதும் காங்கிரசில் வாசக்கூட்டியாய் இருந்தவர் களுக்கும் தெரியும். அப்படியிருக்க இதற்கு பதில் உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கும் தன்மையிலும் கொஞ்சமும் நன்றி விஸ்வாச மில்லாமலும் “ஈ.வெ.ராமசாமி வாங்கிய பணத்துக்குகணக்கு கொடுக்கவில்லை” என்று சொல்லுவதும், எழுதுவதும் எவ்வளவு கீழ் ஜாதிப் புத்தி என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
தெரியாமல் எழுதி இருந்தால் அதைப் பற்றி குற்றம் சொல்ல முடியாது. விஷயம் தெரிந்து அவரை எழுதிக் கேட்டு அவரும் கணக்குடன். பதில் எழுதி அனுப்பி இருக்க அக்கணக்கு சரியா தப்பா என்பதாக இதில் சம்மந்தப்பட்ட நாயர்களுக்கு மற்ற யார் விஷயத்திலும் நடந்து கொள்ளாத மாதிரி எழுதிக் கேட்டுத் தெரிந்து கொண்டு மிருக்க இப்போது வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு ஈ.வெ.ராமசாமி கணக்கு கொடுக்கவில்லை என்றால் இந்தக் கூட்டத்தார் தூங்குகிறபோது பக்கத்தில் படுத்திருந்தால் கழுத்தறுக்கப் பயப்படுவார்களா என்று கேட்கின்றோம் பொது நிதிக்கு திரட்டிய பணம் என்றாலும் அது செலவழிக்கப்பட்ட மாதிரியை பொது ஜனங்கள் அறியவும் அவர்கள் மேலும் ஏமாந்து போகாம லிருக்கும்படி செய்யவும் யாருக்கும் உரிமை உண்டு என்று சொல்லுவோம்.
தோழர் பிரகாசம் அவர்கள் சொந்தத்தில் பாண்டு எழுதிக் கொடுத்து 10000 ரூ. பணம் கடனாக வாங்கி இருக்கிறார்.
அவர் பத்திரிக்கை நடத்துவதற்கும் தோழர்கள் கஸ்தூரி ரங்கயங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் பத்திரிகை நடத்துவதற்கும் என்ன. வித்தியாசம் என்று கேட்கின்றோம்.
காங்கிரசின் எந்த தீர்மானப்படி தோழர் பிரகாசத்தின் பத்திரிக்கையை காங்கிரஸ் பத்திரிக்கை என்று சொல்லப்படுகிறது என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1935 (2) 398
அப்பத்திரிகை தோழர்கள் சத்தியமூர்த்தியை வைது எழுதி யிருக்கிறது ராஜகோபாலாச்சாரியாரை வைது எழுதி இருக்கிறது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் வைது எழுதி இருக்கிறது. சில சமயங்களில் காங்கிரஸ் கொள்கைகளையும் வைது எழுதியிருக்கிறது. போதாக் குறைச்சலுக்கு பார்ப்பனரல்லாதார் கட்சியை வர்ஜா வர்ஜமில்லாமல் வைது எழுதியிருக்கிறது.
பிரகாசத்துக்கு பணம் கொடுத்துவிட்டு பிறகு சுயராஜ்ஜிய பத்திரிகைக்கு கொடுத்தது என்று சொல்லி கடசியாக தள்ளிக் கொடுக்கப்பட்டுவிட்டது என்று சொன்னால் இதனால் எப்படி பொதுப் பணத்தை யோக்கியமாய் கையாடி இருக்கிறது என்றும் சொல்ல முடியும் என்று கேட்கின்றோம்
விடுதலை, குடிஅரசு, ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிகை எழுதினால் பார்ப்பனத் துவேசத்தின் மீது எழுதிற்று என்று சொல்லலாம்
தோழர் எம்.ஆர். ஐயக்கர் பார்ப்பனத் துவேஷியுமல்ல, காங்கிரஸ் துரோகியுமல்ல, கட்காரும் மராட்ட பத்திரிகையும் பார்ப்பனத் துவேஷியுமல்ல, காங்கிரஸ் துரோகியுமல்ல.
மாஜி மாகாண காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும் மராட்ட பத்திரிகை ஆசிரியருமான மகாஜன் பார்ப்பனத் துவேஷியுமல்ல, காங்கிரஸ் துவேஷியுமல்ல. மேல்கண்ட இவர்கள் எடுத்துக்காட்டின குறைபாடுகளையும் ஒழுங்கீனங்களையும் இப்பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் மறைத்துவிட்டு பொதுஜனங்கள் கண்களில் மண்ணைப் போடுவதற்கு ஆக காங்கிரஸ் விரோதிகள் அயோக்கியர்கள் திருடர்கள் எழுதுகிறார்கள் என்று எழுதுவதும், இந்த மறைவில் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் பார்ப்பனர். களின் அயோக்கியத்தனத்தையும் இழி தன்மையையும் புரட்டுகளையும் காட்டுவதற்கு போதுமான ஆதாரம் அல்லவா? என்று கேட்கின்றோம்.
பார்ப்பன அயோக்கியத்தனத்தையும், மோசத்தையும் எடுத்துக் காட்டுவதற்கு யார் முயற்சித்தாலும் அவர்களை இம்மாதிரி இழித்தன்மை யாகப் பேசுவதும் அவர்கள் மீது அயோக்கியத்தனமாய் குறை கூறுவதும்
சிறிதும் மானம் வெட்கம் ஈனம் கவனிக்காமல் பழி சுமத்துவதுமான காரியம் செய்வதென்றால் யார் தான் சம்மதிப்பார்கள். யார் தான் இவர்களுக்கு புத்தி கற்பிக்காமல் இருப்பார்கள் என்று கேட்கிறோம்
இன்னமும் நாம் தைரியமாயும் ஆதாரத்துடனும் சொல்லுகிறோம் பொது ஜனங்களிடம் வசூலிக்கப்பட்ட பணங்கள் பார்ப்பன நலத்துக்காகவே செலவழிக்கப்பட்டு வருகின்றது என்பது மாத்திரமல்லாமல் 100க்கு 80 பாகம் பார்ப்பனர் வயிற்றிலேயே அருத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதோடு, பித்தலாட்டமாகவே செலவழிக்கப்பட்டு வருகின்றது என்றும் சொல்லுகிறோம்
இப்படிப்பட்ட நிலைமையில் உள்ள யோக்கியர்கள் ராமசாமியை கணக்குக் கொடுக்கவில்லை என்றும் ஜஸ்டிஸ் கட்சியாரை பணம் மோசம்
399 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
செய்தார்கள் என்றும், லஞ்சம் வாங்கினார்கள் என்றும் கூறி மற்றொரு குற்றச்சாட்டை வம்பில் கொண்டுவந்து புகுத்தி தப்பித்துக் கொள்ளப் பார்த்தால் இதற்கும் சமாதானம் சொல்லாமல் எப்படி வாயை மூடிக் கொண்டிருக்க முடியும்
ஜஸ்டிஸ் கட்சியார் யாரிடம் எந்த உத்தியோகத்துக்கு லஞ்சம் வாங்கினார்கள்? தலைவர்கள் வாங்கினார்களா? மந்திரிகள் வாங்கினார்களா? மற்ற எடுபிடி ஆள் வாங்குகிறார்களா? அது இந்த 15 வருஷ ஆட்சியில். இப்போதுதான் தெரிந்ததா? என்பவைகளுக்கு மராட்டப் பத்திரிகை மாதிரி, மகாஜன் மாதிரி விபரம் எடுத்துக் காட்டினால் அது ஆண்மையாகும் அப்படி இல்லாமல் “சூரியனைப் பார்த்து சுவானம் கரைவது போல்” கரைவதில் பயனென்ன? இதனால் என்ன வெற்றி அடைந்துவிட முடியும்?
என்று கேட்கின்றோம்
காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் எவ்வளவு கேவலமாய் நடந்து கொண்டார்கள் என்பது யாருக்காவது தெரியவேண்டுமானால் அடியில் கண்ட விடுகதையை விடுவித்துப் பாருங்கள்.
சட்டசபையில் தனிப்பட்ட நபர்களைப் பொருத்த விஷயங்களில் கேள்விகள் கேட்பதற்காக கேள்வி ஒன்றுக்கு 5 ரூ. வாங்கும் தலைவர் 25
ரூ. வாங்கும் தலைவர் 50 ரூபாய் வாங்கும் தலைவர் என்பதாக மூன்றுவித தலைவர்கள் - இருக்கிறார்களா இல்லையா?
றஉ சுப்பராயன் மந்திரியாக இருக்கும் வரை அவரிடம் போய் சிபார்சு செய்ய சிபார்சு ஒன்றுக்கு 250 முதல் 1000 ரூபாய் வரையில் வாங்கி வந்தவர் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?
டாக்டர் சுப்பராயன் மந்திரியாய் இருக்கும் வரை அவரைத் தொந்திரவு கொடுக்காமல் இருப்பதற்காக மாதம் 250 ரூ. வீதம் மாதமானம் வாங்கியவர்கள் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா? அண்ணாமலை யூனிவர்சிட்டியில் பாசாக்கி வைப்பதற்கு குறுக்கே கலகம் விளைவிக்காமல் இருப்பதற்கும் சீக்கிரம் முடியும்படி செய்வதற்கும்
5 கலம் கொண்ட தொகை வாங்கியவர்கள் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?
குமாரராஜா மேயர் காலம் முழுவதும் அவருக்குத் தொல்லை விளைவிக்காமல் இருப்பதற்கு மாதமானம் மோட்டார் கார் முதலியவைகள். வாங்கிக் கொண்டவர் காங்கிரசில் தலைவராக இருக்கிறாரா இல்லையா?
மற்றும் இன்னமும் சில பெரிய ஆட்கள் என்பவர்களிடம் அவர்கள் ஊழல்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக தினமானம், வருஷமானம் நிவேதனத் தொகை வாங்கி வருபவர்கள் காங்கிரஸ் தலைவர்களாகஇல்லையா?'
குடி அரசு - 1935 (2) 400
இவர்கள் எல்லோரும் காங்கிரசில் தலைவர்களாக இருக்கிறார்களா. இல்லையா? என்கின்ற விடுகதைகளை விடுவித்துப் பார்த்தால் உண்மையாகவே பதவிக்கு ஆசைப்பட்டும் பதவியை துர்வினியோகம் செய்தும் பணம் சம்பாதிப்பவர்கள் காங்கிரஸ் தலைவர்களா? ஜஸ்டிஸ் தலைவர்களா? என்பது விளங்காமல் போகாது
கண்ணாடி வீட்டில் குடி இருந்து கொண்டு மச்சு வீட்டின் மீது கல் எறிவது முட்டாள் தனமாக முடியும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா?
அன்றியும் ஸ்தல ஸ்தாபனங்களில் தங்கள் பதவி பெறுவதன் மூலம் கண்றாக்ட் பெற்று லாபம் பெறுவது காங்கிரஸ்காரர்களா, ஜஸ்டிஸ்காரர்களா என்பதற்கும் தோழர் கூரத்தாழ்வார் ரசீது பார்த்தாலே விளங்கி விடும்
மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள். ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ்காரர்கள். குறைத்து வந்ததின் யோக்கியதைகளை பார்க்க வேண்டுமானால் ஸ்தல ஸ்தாபனங்களில் ஜஸ்டிஸ் சக்ஷியின் பேரால் இருந்து வந்த தலைவர்கள். காலில் விழுந்து அவர்களது கால் தூசி மூக்கில் ஒட்டும்படி கும்பிட்டு தங்கள் கசஷிக்கு வரும்படி கெஞ்சினதையும், கெஞ்சி சேர்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாலே வாஸ்தவத்திலே ஜஸ்டிஸ் கக்ஷித் தலைவர்கள் அயோக்கியர்களா அல்லது இனிமேல் அயோக்கியத்தனம் செய்வதற்கு ஆக கூப்பிடப்படு கிறார்களா என்பது விளங்கும்.
போர்
முடிவாக நாம் ஒன்று கூறுகிறோம். இன்று தென் இந்தியாவில் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் போர் நடக்கின்றது. அது அரசியல் போர் அல்ல, உத்தியோக போர் அல்ல - எலக்ஷன் போரும் அல்ல. மற்றென்னவென்றால் பல்லாயிர வருடமாக இருந்து வந்த பார்ப்பன ஆதிக்கத்துக்கும் திடீரென்று விழித்தெழுந்த பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கும் நடக்கும் போராட்டமாகும். இதில் ஆதிக்கத்தில் இருந்து
வந்த பார்ப்பனருக்கு சகல பலமும், சகல சவுகரியமும், சகலவித தந்திரம்,
யுக்த்தி, ஜாலவித்தை ஆகியவைகள் யாவும் இருந்து வருகின்றன.
பார்ப்பனரல்லாதாரிலே சுயமரியாதை என்றால் என்ன என்றுகூட தெரியாத மக்கள் பல்லாயிரக்கணக்காய் இன்னும் இருக்கிறார்கள் ஒருவேளை சோற்றுக்கு மானத்தை விற்றுப் பழகிவந்த மக்கள் தாராளமாய் இருக்கிறார்கள்.
உதாரணம் வேண்டுமானால் குறிப்பிடுகின்றோம். பார்ப்பனரல்லாத சுயமரியாதைப் போர் தொடங்கிய சிறிது காலத்துக்குள் அதாவது இந்த 15, 20 வருஷத்துக்குள் ஒரு பார்ப்பனராவது நமதுபோருக்கு உதவி செய்யவோ அல்லது தங்கள் சமூகத்தை காட்டிக் கொடுக்கவோ தங்கள் சமூக
401 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆதிக்கத்தையும் அயோக்கியத்தனத்தையும் விட்டுக் கொடுக்கவோ நம்முடன் கலந்து கொள்ளவோ இதுவரை ஒரு உருப்படியாவது வந்து சேர்ந்திருக்கிறதா, ஒரு பார்ப்பன குச்சிக்காரியாவது வந்து சேர்ந்திருக்கிறதா. என்பதையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் இருந்து ஆரம்ப முதல் இதுவரை எத்தனை பேர் 100க்கணக்காகவும் ஆயிரக்கணக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்கும் கூலிக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு விபூஷணன் போல் அவர்களிடம் சரணாகதி அடைகின்றார்கள் என்பதும் ஆராய்ந்து
பார்த்தால் விளங்கும்
நேற்று வரை பார்ப்பனர்களை மாத்திரம் அல்லாமல் காங்கிரசையும் குறை கூறிக் கொண்டு இருந்து, அதற்காக ஜஸ்டிஸ் கட்சியில் பல யோக்கியதைகள் பெற்று விட்டு இன்று அதுவும் காங்கிரசின் யோக்கியதை விவகாரத்துக்கு இடமில்லாமல் வெட்ட வெளிச்சமான பின்பு அதனோடு. அளவளாவுவதென்றால் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை பெற இன்னமும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது பயப்படத்தகுந்த
மாதிரியில் விளங்குகிறது
இது ஒருபுறமிருக்க இந்தப் போரில் தைரியமாய் நெஞ்சுத் துணிவாய் எந்தவிதமான அயோக்கியத்தனத்தையும் செய்வதென்றும், எப்படிப்பட்ட மானத்தையும் விட்டுக் கொடுப்பதென்றும், எதையும் தியாகம் செய்வதென்றும் துணிந்து பார்ப்பனர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். இதை சமாளிக்க முடியாமல் அனேக பார்ப்பனரல்லாதார் புறமுதுகு காட்டி ஓடுவதென்றும், எதிரிகளிடம் சரணாகதி அடைவதென்றும் துணிந்து விட்டார்களானாலும் சுயமரியாதையில் லக்ஷியமுள்ள சிலராவது துணிந்து நிற்போமானால் அவசியம் வெற்றி ஏற்படும் என்பதே நமது துணிவு, இப்பொழுது பார்ப்பனரல்லாதாருக்கு வேண்டியதெல்லாம் தைரியத்தோடு கூடிய சுயமரியாதை உணர்ச்சிதான். மற்றப்படி மற்ற பல சவுகரியங்கள் நமக்கும் அனுகூலமாய் இருக்கின்றன.
இது சமயம் தேர்தல் வெற்றியே நமது லக்ஷியமல்ல. அதில் ஏற்படும்
பலன் எதுவானாலும் நமக்கு அனுகூலமானதேயாகும்
ஆதலால் போரை நடத்தி சீக்கிரத்தில் பலனை கண்டுவிட வேண்டியதுதான். ஏனெனில் புராணக்காரர்கள் ஜெயித்தால் வெற்றி, போரில் மாண்டால் வீர சொர்க்கம் என்பதுபோல் நாம் தேர்தல் போரில் ஜெயித்தால் பதவி, தோற்றால் சுயமரியாதை உணர்ச்சி பன்மடங்கு வீறு கொண்டு எழும். ஆதலால் துணிவோடு எழுங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 01.12.1935
குடி அரசு - 1935 (2) 402
யார் திட்டத்தை யார் திருடியது?
ஜஸ்டிஸ் கட்சியார் தோழர் ஈ.வெ.ராமசாமியின் திட்டங்களைத் தங்களது வேலைத் திட்டங்களுடன் சேர்த்துக் கொண்ட நிமிடம் முதல் சென்னைப் பார்ப்பனர்கள் ஆண்-பெண் அடங்கலுக்கும் பேதியும், வயிற்றுக் கடுப்பும் எடுத்து ஜன்னி கண்டவர்கள் போல் வாய்க்கு வந்தபடி உளரிக் கொட்டிய வண்ணமாய் இருந்து வருகிறார்கள். உதாரணமாய் அத் திட்டங்கள் கொஞ்ச நாளைக்கு முன் விருதுநகர் மகாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்டவுடனேயே தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அதைப்
பற்றி ஒரு ஸ்ரீமுகம் விடுத்தார். அதில் அவர் அத் தீர்மானங்களைப் பற்றி,
“ஜஸ்டிஸ் கட்சியாரால் ஜீரணிக்க முடியாத மருந்தை சாப்பிட்டு விட்டார்கள்” என்றும் “அது அபேதவாத திட்டம்” என்றும்,
“பொதுவுடமைத் திட்டம்” என்றும், “ராமசாமியை சுவாதீனப்படுத்திக் கொள்வதற்கு ஆக விலை கொடுக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது'' என்றும்,
“அது ராஜபக்தி பொதுவுடமைத் தீர்மானம்” என்றும் இப்படியாகப் பலவிதமாய் ஒன்றுக்கொன்று முரணாய் உளரிக் கொட்டினார்.
காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும், மற்ற காங்கிரஸ்காரர்களும் ஈ.வெ.ரா. தீர்மானங்கள் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவை என்றும், சாரமற்றவைகள் என்றும், வெறும் ஏட்டுத் தீர்மானங்கள் என்றும், தண்ணீரின் மேல் எழுதி வைக்க வேண்டியதுதான் பாக்கி என்றும், இன்னும் பலவிதமாக எத்தனை விதங்களில் அத் தீர்மானங்களைப் பற்றிப் பொது ஜனங்களை ஏமாற்றவும் சர்க்காரை உசுப்படுத்தி விடவும் கூடுமோ அத்தனை வகைகளில் எழுதியும் பேசியும் வந்தார்கள் வருகிறார்கள்.
ஆனால் இத் திட்டங்களை ஜஸ்டிஸ் கட்சியார் மகாநாட்டிலும் நிர்வாக சபைக் கூட்டத்திலும் ஒப்புக் கொள்ளும் வரையிலும், அவர்களாவது இத் திட்டங்களை ஒப்புக் கொள்ளுவதாவது தோழர் ஈ.வெ.ரா. கனாக் காண்கிறார்” என்றும், ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றும், ஒப்புக் கொண்டால் அவர்களது மந்திரி வேலை போய்விடும் என்றும் கூறினார்கள் - அதோடு பந்தயமும் கட்டினார்கள். இப்போது ஒப்புகொண்ட பிறகு சர்க்காருக்கு ஜஸ்டிஸ் கட்சியார் மீது ஆத்திரம் வரும்படியாக மேல்காட்டியபடி அத்தீர்மானங்கள் பொது
403 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
உடமைத் தீர்மானங்களாகும் என்று சொல்லிவிட்டு பிறகு எங்கு ஜனங்கள் இதை நம்பி இவர்களை ஆதரித்து விடுவார்களோ என்று பயந்து “அது ராஜபக்தி பொது உடமைத் தீர்மானம்” என்றும் சொன்னார்கள்.
ஒரு கட்சியார் தங்கள் வேலைத் திட்டமாக ஏதோ ஒரு தீர்மானத்தை செய்து கொண்டால் அதற்கு ஆக இந்தப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதை முதலில் யோசிக்க வேண்டும்
அத்தீர்மானங்களில் பலாத்காரம் உண்டாக்கும்படியான பொதுஉடமைத் தத்துவம் எதில் இருக்கின்றது? அல்லது ராஜ பக்தியை காட்டக்கூடிய ராஜவிஸ்வாசப் பிரமாணத் தன்மை எந்தத் தீர்மானத்தில் இருக்கிறது என்பவைகளை எடுத்துக்காட்டியிருந்தால் இவர்களை யோக்கியர்கள் என்றோ நாணயஸ்தர்கள் என்றோ சொல்லிக் கொள்ளலாம். அப்படிக்கு இல்லாமல் பொது உடமை என்றும், ராஜபக்தி என்றும் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் எழுதுவதால் பொது ஜனங்களும் சர்க்காரும் இவர்களது யோக்கியதையையும் அரசியல் ஞானத்தையும் அறிந்து கொள்ள மாட்டார்களா என்று கேட்கின்றோம்
தவிர அத் தீர்மானங்கள் என்ன காரணத்தால் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஜீரணமாகாத ஆகாரம் என்பதையாவது விளக்கினார்களா என்று கேட்கின்றோம். அதில் எவ்வளவு செய்யக் கூடுமோ எவ்வளவுக்கு பொது ஜனங்களும் அரசாங்கமும் தயாராக இருக்கக் கூடுமோ அவ்வளவு அளவுக்கு வெகு ஜாக்கிரதையாகவே பொறுப்புடன் தான் தயாரிக்கப் பட்டதே தவிர பார்ப்பனர்களைப் போல் பொது ஜனங்களை ஏமாற்றவோ, அவர்களிடம் பணம் பறிக்கவோ ஓட்டு வாங்கவோ மோகக் கருத்துடன். ஒரே மூச்சில் சமுத்திரத்தை உறிஞ்சி விடுகிறேன் என்று ஞான சூனியமாய் பேச்சுக்கு மாத்திரம் தயாரிக்கப்பட்டதல்ல.
தவிர, ஈ.வெ.ரா. தீர்மானங்கள் காங்கிரஸ் தீர்மானங்களில் இருந்து திருடியது என்று சொல்லுவது மனதறிந்து, வேண்டுமென்றே சொல்லும், போக்கிரித்தனமான விஷமக் கூற்றாகும். எப்படி எனில் ஈ.வெ.ராமசாமி தீர்மானங்களில் உள்ள முக்கியத் தீர்மானங்கள் கராச்சி தீர்மானத்தில் இல்லவே இல்லை. கராச்சி தீர்மானத்தில் உள்ள முக்கிய தீர்மானங்கள் ஈ.வெ.ரா. தீர்மானத்தில் இல்லவே இல்லை. இது இரண்டு கண்ணும் அற்ற குருடனுக்கும் விளங்கும்
அதாவது சகல வகுப்பாருக்கும் அவர்களது எண்ணிக்கைக்கு தகுந்தபடி பிரதிநிதித்துவம் உத்தியோகம் அரசியலில் அளிக்க வேண்டும் என்கின்ற தீர்மானம் கராச்சித் தீர்மானத்தில் எங்கு இருக்கிறது? என்று கேட்கின்றோம்
குடி அரசு - 1935 (2) 404
அதுபோலவே கராச்சித் தீர்மானத்தில் உள்ள ‘s மதங்களையும் பழக்க வழக்கங்களையும் அவரவர் வருணாச்சிரம தொழில்களையும் காப்பாற்றிக் கொடுக்க உத்திரவாதம் கூறுகிறது” என்ற பார்ப்பன பாதுகாப்புத் தீர்மானம் ஈ.வெ.ரா. திட்டத்தில் எங்கு இருக்கின்றது? என்று கேட்பதுடன் பார்ப்பனக் காங்கிரசுக்கும் பார்ப்பனரல்லாத ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதைத் தவிர வேறு என்ன வித்தியாசம் இன்று கொள்கையிலும் திட்டத்திலும் இருக்கிறது என்றும் கேட்கின்றோம்.
ராஜ விஸ்வாசம் என்பது ஜஸ்டிஸ் கட்சியாரிடம் இருக்கும் அளவுக்கு எத்தனை டிக்ரி காங்கிரஸ்காரரிடம் குறைவாய் இருக்கிறது?
காங்கிரஸ் கட்சி ஆனாலும் அவங்கப்பன் காந்தி கட்சியானாலும்,
மற்றும் பொது உடமைக் கட்சியானாலும், அல்லது பலாத்காரப் புரக்ஷிப் பொது உடமைக் கட்சியானாலும், சட்டசபைக்கோ மற்றும் எந்த கிராம சபைக்கோ போனாலும் ராஜவிஸ்வாசம் என்று சும்மா சொன்னால் மாத்திரம் போதாமல் அவர்கள் குல தெய்வத்தை வேண்டி சத்தியம் செய்து ஆக வேண்டும் என்பதை யார் மறுக்க முடியும்?
மந்திரி வேலை பார்ப்பதும், சம்பளம் வாங்குவதும் எழுந்து தலைவணங்கி நிற்பதும் ஆகியவைகள் கூட எந்தக் கட்சி சட்டசபைக்குப் போனாலும் அடைந்தும் செய்தும்தான் தீர வேண்டும்
வேண்டுமானால் பொதுஜனங்களை ஏமாற்ற அயோக்கியத்தனமான எண்ணத்துடனும் வஞ்சகப் புத்தியுடனும் “இப்பொழுது அதைப் பற்றி பேச வேண்டியதில்லை” என்று காங்கிரஸ்காரர்கள் என்னும் காந்தி சிஷ்யர்கள் சொல்லலாம். ஆனால் காரியத்தில் இப்பொழுதிருந்தே நாக்கில் தண்ணீர் சொட்டவிட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். இதை யார் மறுக்கிறவர்கள்?
கிராமாந்திரங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.
“இழவு வீட்டில் சிறிய தாயாரைப் பெண்டாளக் கையைப் பிடித்து இழுத்தவன், கல்யாண வீட்டில் அத்தை மகளை சும்மா விடுவானா?”
என்று சொல்லுவார்கள். அது போல் ஒத்துழையாமை, சட்டமறுப்பு, உத்தியோக மறுப்பு, முட்டுக்கட்டை, பட்டம் துறப்பு, மந்திரிகள் அழிப்பு ஆகிய தீர்மானங்கள் வண்டிவண்டியாய் அமுலிலேயே இருந்த காலத்தில். சட்டசபைக்குப் போய் ராஜவிஸ்வாசப் பிரமாணம் செய்து தலைவர், கமிட்டி அங்கத்தினர் முதலிய பதவிகள் அடைந்து ரூ. 3000, 4000 மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு மந்திரிகளை ஏற்படுத்தி அவர்களை ஆதரித்து அரசாங்கத்தை நடத்திக் கொடுத்தவர்கள் - அவர்களிடம் தனிப்பட்ட முறையில் மாத வருமானம் வாங்கிக் கொண்டு வந்தவர்கள் இப்போது சகல கட்டுகளும் அறுத்துவிட்டு “நான் கண்ணை மூடிக் கொள்ளுகிறேன்.
405 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அவரவர்கள் இஷ்டம் போல் ஜமாய்க்கலாம்'' என்று அவர்களது குல தெய்வமே (காந்தியே) உத்திரவு கொடுத்துவிட்ட பிறகு இனி எவ்விஷயத்துக்கு ஆனாலும் எதற்காக ஏன் பயப்படுவார்கள்? எந்தக் காரியத்தை செய்யப் பயப்படுவார்கள்? என்று கேட்கின்றோம். ஆகவே இப்படிப்பட்ட இவர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியாரைவிட எந்த விதத்தில் உயர்ந்த கொள்கைகளை உடையவர்கள் என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம் ஆகவே பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி ஆதிக்கத்தை காப்பாற்றிக் கொள்ளத்தக்க மாதிரி செய்யப்பட்ட கராச்சித் தீர்மானத்தில் இருந்து ஈ.வெ.ரா. எதைத் திருடி யிருக்கிறார் என்பதும், பார்ப்பனரல்லாதார் தங்கள் குறைகளையும் இழிவுகளையும் போக்கிக் கொள்ளு மார்க்கமாக செய்யப் பட்ட தீர்மானங்கள் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளக் கூடியதா என்றும், அது
கராச்சித் திட்டத்தில் இருக்கிறதா என்றும் மறுபடியும் அழுத்தமாய்க் கேட்கின்றோம்
கராச்சி தீர்மானங்கள் செய்யப்பட்ட ரகசியத்தின் வண்டவாளம்
கராச்சி தீர்மானம் ஆன உடனேயே நாம் எழுதி யிருக்கிறோம்
கராச்சி தீர்மானங்கள் சில சுயமரியாதைக்காரர்கள் தீர்மானத்திலிருந்து திருடியதாகும். மற்றும் அவை பார்ப்பன ஆதிக்கத்திற்கு உத்திரவாதம் கொடுத்த தீர்மானங்களின் புரட்டுகளைப் பார்ப்பனரல்லாதார் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படி சில தீர்மானங்கள் வேஷத்துக்கு ஆகவே காப்பி
அடித்ததாகும். அதாவது காங்கிரஸ் காரியதரிசி ஜவகர்லால் அவர்கள் கராச்சி காங்கிரசில் அறிக்கை வாசிக்கும்போது “தமிழ்நாட்டில் ஒரு வேலையும் நடக்கவில்லை" என்றும், “காங்கிரஸ் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்பவைகள் யோக்கியமாக நடந்து கொள்ளவில்லை!” என்றும் குறிப்பிட்டு வாசித்துவிட்டார். அதற்கு ஆக ஆத்திரப்பட்டு சமாதானம் சொல்லப்புகுந்த சென்னைப் பார்ப்பனர்கள் தங்கள் நாட்டில் “சுயமரியாதை இயக்கம் ஒன்று அலாசுகிறது'' என்றும், "அவர்கள் தீர்மானங்கள் காங்கிரசை ஒன்றும் செய்யவொட்டாமல் அடக்கிவிட்டன'' என்றும் சொல்லி தங்களுக்கு வேண்டிய பந்தோபஸ்தை மேலே கூறியபடி ஜாதி மத தொழில் பழக்கவழக்கம், சமஸ்கிருத பாஷை, சாஸ்திரம் ஆகிய வருணாச்சிரம தர்மங்களைக் காப்பாற்றும் ஒரு உத்திரவாத தீர்மானத்தை செய்து கொண்டு. மற்றபடி பொது மக்களை ஏமாற்றும் பொருட்டு சுயமரியாதைக் காரர்களைவிட மிக்க தீவிரவாதிகள் போல் அரசியலில் சில தீர்மானங்கள். செய்து கொண்டார்கள். அவை அன்றே மறைந்துபோய் இன்றுதான் அதாவது ஈ.வெ.ரா. திட்டம் போட்ட பிறகுதான் அதுவும் உண்மையான
குடி அரசு - 1935 (2) 406
கராச்சித் தீர்மானங்களை மாற்றி ஈ.வெ.ரா. தீர்மானத்தைப் போல் புதிதாக உருக்கி வார்த்து காட்டப்படுகின்றது. இது 1931 ஆம் @ பத்திரிகைகளில்
பார்த்தால் விளங்கும்
இதைப் பற்றி அன்றே 1931லேயே திராவிடனிலும் குடிஅரசிலும் எழுதியதே ஒழிய இன்று புதிதாய் எழுதுவதல்ல என்பதையும் ஞாபக மூட்டுகிறோம்
தவிர ஜஸ்டிஸ் கட்சியார் இதை ஒப்புக் கொண்டது வேஷத்துக்கு
நாம் என்றும், பொது ஜனங்களை ஏமாற்ற என்றும் இவற்றைத் தண்ணீரில்
தான் எழுதவேண்டும் என்றும் சொல்லி வருவதைப் பற்றி ஆராய்வோம்
ஜஸ்டிஸ் சக்ஷி தீர்மானங்களில் எவை இதுவரை ஏமாற்றப்பட்டது என்பது முதலில் விளக்கப்பட வேண்டும்
மதுபான ஒழிப்பு விஷயத்தில் ஜஸ்டிஸ் கடியார் சட்டசபையில் ஒரு கேள்விக்கு பதில் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்று குறை கூறப்படுகிறது. அதுவும் ஓட்டர்களுக்கு கொடுத்த வாக்குறுதி அல்ல இதற்கும் ஜஸ்டிஸ் கக்ஷியார் சொன்ன வாய்தா இன்னமும் முடிந்து விடவில்லை. அதாவது 20 வருஷ காலத்தில் மதுபானத்தை ஒழித்துவிடக்
கூடும் என்று 1925, 26 இல் சொன்னார்களாம். அந்த கணக்குப்படி இன்னும் பகுதி வருஷம்கூட ஆகவில்லை. இன்னமும் 10க்கு மேல் பாக்கி இருக்கிறது. அவர்கள் அது விஷயமாய் முயற்சி எடுத்துத்தான் வருகிறார்கள். காங்கிரஸ்காரர்கள் பொது ஜனங்களை ஏமாற்றவும் சர்க்காருக்கு தொந்திரவு கொடுக்கவும், ஏமாற்று மது விலக்குப் பிரசார நாடகமாகிய மறியல், சட்டமறுப்பு ஆகிய காரியங்களை மது விஷயத்தில் பயன்படுத்தி குழப்பம், சமாதான பங்கம், பலாத்காரம் முதலியவைகள் ஏற்படும்படி செய்து கொண்டே வந்ததால் சர்க்காரார் மந்திரிகளின் முயற்சிக்கு இடம் கொடுக்கவில்லை. இப்போது காங்கிரசுக்காரர்களுக்கு சர்க்கார் புத்தி கற்பித்தது பயன்பட்டு அவர்கள் இந்த விஷமம் இனி செய்யமுடியாமல் செய்யப்பட்டு விட்டதால், இனி சுலபத்தில் மதுவிலக்கு முயற்சி பலிக்கக் கூடிய காலம் வந்துவிட்டது. இனியும் 10 வருஷகாலம் வாய்தாவும் இருக்கிறது. ஆதலால் அதைப்பற்றி குறை கூறுவது ஒப்புக் கொள்ளத்தக்கதாகாது
மதுபானம் பெரிதும் இந்தியர்களுக்கு சிறப்பாக இந்துக்களுக்கு மதத்தோடு, மதக் கடவுள்களோடு கீழ்த்தர ஜாதியார் என்பவர்களுக்கும்,
கீழ்த்தர கடவுள்கள் என்பவர்களுக்கும் குல தெய்வ வழிபாடாக
அமைக்கப்பட்டிருக்கிறது.
மத விஷயத்தில் பிரவேசிக்கக் கூடாது என்பது ராணியாரிடம் பார்ப்பனர் வாங்கி இருக்கும் ஒரு மோசடி ஒப்பந்தமாகும்
407 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அன்றியும் “மதுபானத்தை நிறுத்திவிடுகிறோம் அதற்கு ஆக பணம் கொடுங்கள்" என்று சொல்லி ஜஸ்டிஸ் கச்ஷியார் யாரிடம் எவ்வளவு லக்ஷ ரூபாய்கள் வசூலித்து 'சுவாஹா' செய்து கொண்டார்கள் என்றாவது யாராவது சொல்ல முடியுமா? அல்லது அந்த பிரச்சினையின் மீது ஓட்டு. பெற்றார்களா? எனவே இந்த நிலையில் ஜஸ்டிஸ் கக்ஷியார் சொன்ன வாய்தாவைக்கூட பொறுக்காமல் அவர்கள் மீது குற்றம் சாட்டுவதை நல்ல. எண்ணம் என்று யாரால் சொல்ல மூடியும்? காங்கிரஸ் கலால் மந்திரி மதுபானம் நல்லதா கெட்டதா என்று பரிசோதித்துப் பார்ப்பதாகச் சொல்லி ஏமாற்றினார் - ஜஸ்டிஸ் மந்திரி அப்படி செய்யவில்லை. மது கெட்டது என்பதில் அவர்களுக்கு சந்தேகமில்லை. மற்றபடி ஜஸ்டிஸ் கக்ஷியாருடைய தீர்மானங்கள் இதுவரையில் எது ஏமாற்றப்பட்டுவிட்டது என்று யாராவது சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம்
காங்கிரஸ்காரர் தீர்மானங்களின் வண்டவாளங்களை சற்று கவனிப்போம்
காங்கிரஸ்காரர்களின் ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் சம்பாதித்துக்
கொடுக்கும் திட்டமும் அதற்கு ஆக வாங்கிய ஒரு கோடி ரூபாயும் என்ன ஆயிற்று? தீண்டாமை விலக்கப்படாமல் சுயராஜ்ஜிய முயற்சி செய்வது முட்டாள்தனம் என்றும், சுயராஜ்ஜியம் வராது என்றும், வந்தாலும் நிலைக்காது என்றும் சொன்ன திட்டங்களும் அதற்கு ஆக வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயும் என்ன ஆயிற்று?
இந்து முஸ்லீம் ஒற்றுமைத் திட்டம் என்ன ஆயிற்று?
காங்கிரசின் மதுவிலக்குத் திட்டம், மறியல் திட்டம், இவற்றிற்காகச் சட்டம் மீறும் திட்டம் ஆகியவைகள் என்ன ஆயிற்று?
இந்தியா பூராவும் வீடுகள் தோறும் ராட்டினம் சுற்றுவதும், எல்லோரும் கதர் கட்டுவதும், அதற்காக வசூலித்த ரூபாயும் என்ன ஆயிற்று?
“நாய், கழுதை, பன்றிகள் தான் சட்டசபைக்குப் போகுமே ஒழிய மனிதன் போக மாட்டான் என்றும் சட்டசபை கள்ளுக்கடை" என்றும் சொன்ன திட்டம் என்ன ஆயிற்று?
இவர்கள் கல்லில் எழுதி வைக்கப்பட்டனவா தண்ணீரில் எழுதி
வைக்கப்பட்டாய் விட்டனவா?
இவைகளுக்காக வசூல் செய்த கோடிக்கணக்கான ரூபாய் என்ன ஆயிற்று? இந்தப் பணம் எந்த பாங்கியில் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது?
ரிசர்வ் பாங்கியிலா பார்ப்பனர் வயிற்றுப் பாங்கியிலா?
குடி அரசு - 1935 (2) 408
இந்த சர்க்காரோடு ஒத்துழைப்பது பாவம், மத விரோதம் என்ற திட்டம் கல்லில் எழுதப்பட்டிருக்கிறதா? தண்ணீரில் எழுதப்பட்டிருக்கிறதா?
இன்று ராஜ விஸ்வாசம் அரசாங்க விஸ்வாசம் செய்ய யார் மூலம் கடவுள் வாக்கு இறக்கி இருக்கிறார்?
இந்த அரசாங்கத்தை திருத்துவது அல்லது உடைப்பது என்ற திட்டம் தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா கல்லில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறதா?
குடியேற்ற நாட்டந்தஸ்து திட்டமும், பூரண சுயேச்கைத் திட்டமும் இன்று கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா?
வட்டமேஜை மகாநாட்டுக்குப் போய் சுயராஜ்ஜியத்தின் நிழல் தெரிந்தால் போதும் என்று சொல்லும்படி எந்தக் கடவுள் மந்திரம் இறக்கினார்?
வட்டமேஜை பகிஷ்காரத் தீர்மானம் கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா? அங்கு போய் கெடுதி செய்துவிட்டு திரும்பி வரும்படி எந்தக் கடவுள் கனவில் சொன்னார்?
அரசாங்க சீர்திருத்தத்தை உடைக்கும் தீர்மானம் இன்று இந்திய சட்டசபையில் கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா? இன்று அங்கு ராஜ விஸ்வாசம் பிரமாணம் செய்யும்படி எந்த அசரீரி சொல்லிற்று?
தீண்டாமை விலக்கு வேலை செய்யாவிட்டால் பட்டினி கிடந்து சாவேன் என்று சொல்லி சர்க்காரை ஏமாற்றி ஜெயிலில் இருந்து வெளியில் வந்த “மகாத்மா சித்தம் இன்று கல்லில் எழுதி வைக்கப்பட்டதா தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா?
இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஆகப் பட்டினி கிடந்து சாவேன் என்ற தீர்மானம் தண்ணீரில் எழுதி வைக்கப்பட்டதா? கல்லில் எழுதி வைக்கப்பட்டதா?
அப்பொழுது வட்டமேஜையில் சுயராஜ்ஜியம் கொடுத்துவிட்டால் பிறகுமுஸ்லீம்களைஒரு கைபார்க்கிறேன் என்று சொன்னது எந்த வேத வாக்கு?
இன்று காந்தியாருடைய அல்லது காங்கிரஸ்காரருடைய எந்தத் தீர்மானம் - எந்தத் திட்டம் - ஓட்டர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதி தண்ணீரில் எழுதி வைக்காமல் கல்லில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்
சென்ற வருஷத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலின்போது “காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் சண்டையே ஒழிய ஜஸ்டிசுக்கும்,
400 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரசுக்கும் யாதொரு சண்டையும்” இல்லை என்று சொல்லி வாக்குக் கொடுத்து ஓட்டு வாங்கிய வாக்குறுதிகள் தண்ணீரில் எழுதி வைக்கப் பட்டதா கல்லில் எழுதி வைக்கப்பட்டதா? என்று கேட்பதோடு மற்றும் இதுவரை காங்கிரசுக்காரர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு நன்மையையாவது எடுத்துக்காட்ட முடியுமா என்று காங்கிரஸ்காரர்களை அறைகூவி அழைக்கின்றோம்
மற்றும் சமூக சீர்திருத்தத்தில் தேவஸ்தான பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா? சாரதா பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?
விவசாரிகள் ஒழிப்பு பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?
பொட்டுக்கட்டுவதை ஒழிக்கும் பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?
இனாம்தார் பில்லை காங்கிரஸ் ஆதரித்ததா?
காங்கிரஸ் கமிட்டி தலைவரான தோழர் சத்தியமூர்த்தியாவது ஆதரித்தாரா? சாரதா பில்லை ஒழிக்க அவர் தன் மகளுக்கு சிறு வயதில் கல்யாணம் செய்து ஜெயிலுக்கு போகிறேன் என்று சொல்ல வில்லையா?
பொட்டுக் கட்டுவதை ஒழித்தால் கடவுள்கள் சக்தி ஒழிந்து போகும் என்று விவசாரித்தனத்துக்கு வக்காலத்து பேசவில்லையா?
பாதுகாப்பு விஷயத்தில்
மற்றும் “இந்திய சீர்திருத்த சட்டத்தில் பாதுகாப்புகள் வண்டி
வண்டியாய் ஏற்பட்டதற்கு நாங்கள் தான் காரணம் எங்கள் நடவடிக்கையைப் பார்த்து பயந்து தான் சர்க்கார் இவ்வளவு பாதுகாப்புகள் ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களே ஒப்புக் கொள்ள வில்லையா? இவைகளைத் தவிர காங்கிரஸ்காரர்கள் ஏதாவது ஒரு நன்மையான காரியம் செய்தார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா என்று மறுபடியும் கேட்கின்றோம்
பொது ஜனங்களுக்கு ஒரு உணர்ச்சியை ஊட்டினோம்'' என்று சொல்லுவதில் ஏதாவது யோக்கியப் பொறுப்போ அர்த்தமோ இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்
மக்களுக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டது என்று சொல்ல வேண்டாமா? அந்த உணர்ச்சியால் என்ன ஏற்பட்டது? நன்மை ஏற்பட்டதா? தீமை ஏற்பட்டதா? இரண்டு கோடி ரூபாய்க்கும் இத்தனை பேரை ஏமாற்றி சிறைக்கு அனுப்பினதற்கும், அடிபடச் செய்ததற்கும் இந்த உணர்ச்சியும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதும் பழயதிட்டங்கள் பூராவும்தப்பு என்று உணர்ந்து சட்டசபைக்குள் புக மக்களை ஏமாற்றுவதும் தான் பிரதி பிரயோஜனமா?
குடி அரசு - 1935 (2) 410
என்பவைகளை யோசித்தால் காங்கிரஸ்காரர்களுக்கு இதில் புத்திசாலித்தனமோ பொறுப்போ நாணயமோ இருக்கிறதா என்று கேட்கின்றோம்.
ஜஸ்டிஸ் கக்ஷி ஏற்பட்ட பிறகு உண்மையில் தீண்டாமை ஒழிந்து
வருகிறது தீண்டாமை விலக்குக்கு ஒரு அளவு சட்டம் செய்யப்பட்டிருக்கிறது
பள்ளிக்கூடங்கள் பெருகி வருகின்றன - ரோட்டுகள் ஆஸ்பத்திரிகள் அதிகமாகி வருகின்றன.
ஜஸ்டிஸ் க்ஷி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னிட்ட 15 வருஷ காலங்களில் இவ்விஷயங்களில் எவ்வளவு முற்போக்கு ஏற்பட்டிருக்கிறதோ. அதைப் போன்று இரட்டிப்பாகவும் சில விஷயங்களில் மூன்று பங்காகவும் இந்த 15 வருஷ காலங்களில் விருத்தி அடைந்து இருக்கிறது. இவை வெறும் உணர்ச்சி அல்ல, காரியத்தில் பெருகி இருக்கிறது என்பதற்கு புள்ளி விபரங்கள் இருக்கின்றன.
இப்படியெல்லாம் இருக்க ஜஸ்டிஸ் கக்ஷியார் தீர்மானம் அம்பக் என்றும், வேஷம் என்றும், தண்ணீரில் எழுத வேண்டும் என்றும் ஜீரணமாகாத தீர்மானமென்றும், எலக்ஷன் தீர்மானமென்றும், சொல்லுவதானது அவர்கள் சொல்லுவதைக் கேட்பவர்களும் எழுதுவதை படிப்பவர்களும் நன்றாக கடைந்தெடுத்த முட்டாள்கள், மடையர்கள், களிமண்ணுத் தலையர்கள். என்று எண்ணிக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனம் தவிர வேறு என்ன.
என்று சொல்ல முடியும்?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.12.1935
4௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வகுப்புப் போர்
சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் வகுப்புப்போரை கிளப்புவதாக அரசியல் பிழைப்புக்காரர்கள் கூப்பாடு போடுகிறார்கள். அதனாலேயே ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.
“அரசியல் காரணங்களுக்கு ஆக இன்று கவர்மெண்டாருடன்
காங்கிரஸ்காரர்கள் போர் புரியப் போகிறார்கள். ஆதலால் ஜஸ்டிஸ்காரர்கள் தயவுசெய்து இதில் குறுக்கிடக் கூடாது'' என்று காங்கிரஸ்காரர்கள். சொல்லி அசம்பிளி தேர்தலில் ஓட்டு கேட்டார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் ஒவ்வொரு தனி நபரிடத்திலும் இதைச் சொல்லியே கெஞ்சி ஓட்டுப் பெற்றார்.
ஆனால் வெற்றி பெற்ற உடன் ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைப்பதே இவ்வெற்றியின் பயனாய் செய்ய வேண்டிய வேலை என்றும், இவ்வெற்றியினாலேயே ஜஸ்டிஸ் கட்சி மாண்டுவிட்டது என்பது ருஜுவாகிறது. ஆதலால் ஜஸ்டிஸ் மந்திரிகளைத் தள்ளிவிட்டு எங்களுக்கு அந்த மந்திரி ஸ்தானங்கள் அளிக்க வேண்டும் என்றும், அதே ராஜகோபாலாச்சாரியார் கவர்னரிடம் போய் மண்டி போட்டு கெஞ்சினார். எச்சிலைப் பத்திரிக்கைகளும் அதுபோலவே எழுதின. ஆகவே அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்தது சர்க்காரோடு போர் புரிவதற்கு அல்லவென்றும்,
ஜஸ்டிஸ் மந்திரிசபையைக் கவிழ்த்துவிட்டு மந்திரி பதவியை அடைந்து பிரிட்டிஷ் ஆட்சி சர்க்காரை நடத்திக் கொடுத்து பெரும் பெரும் சம்பளம் வாங்கவும், உத்தியோகத்துறையைப் பார்ப்பன அக்கிரகார மாக்கவும்தான் என்றும் சுயமரியாதைக்காரர்களும், ஜஸ்டிஸ்காரர்களும் சொல்லி வந்ததை மெய்ப்படுத்திவிட்டார்கள்.
இப்போது காங்கிரஸ்காரர்கள் ஓடி ஓடி ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புத் துவேஷங்களை கிளப்பிவிடுகிறார்கள் என்று அழுகிறார்கள்
வகுப்புத் துவேஷத்தை ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் சுயமரியாதைக் காரர்களும், புதிதாக உண்டாக்குகிறார்களா ஏற்கனவே நீடித்த காலமாய்
குடி அரசு - 1935 (2) 412
இருந்து வருவதைக் காட்டி அதை அடியோடு ஒழிக்கப் பார்க்கிறார்களா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை கேட்கின்றோம்.
வகுப்பு என்பது யாரால் ஏற்பட்டது? வகுப்புக்கு வகுப்பு பேதமும் மேல் கீழ் தன்மையும் யாரால் ஏற்பட்டது?
கீழ் வகுப்பார் என்பவர்களைக் கொடுமை செய்து வருகிறவர்கள் யார்?
பெருங்குடி மக்களை சூத்திரன் என்றும், 4வது வகுப்பான் என்றும் சொல்லுகிறவர்கள் யார்?
பிராமணனுக்கு வேறு இடம் சூத்திரனுக்கு வேறு இடம் என்று சொல்லி எழுதிக் காட்டி யிருப்பவர்கள் யார்?
பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதி வைத்திருப்பவர்கள் யார்?
பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரம் செய்தவர்கள் யார்?
மக்களைப் “பிறப்பித்த கடவுளை” ஆராதிக்க வேண்டுமானால் எங்கள் மூலம் தான் ஆராதிக்க முடியும் என்றும், ஐந்தாவது வகுப்பானுக்கு அந்த உரிமையும் இல்லை என்றும், அவன் கோவிலுக்குள், குளத்துக்குள் வரக்கூடாது என்றும் தடுக்கிறவர்கள் யார்? அதுவும் சட்டபூர்வமாகவும் சாஸ்திர மூலமாகவும் தடுத்து விடுகிறவர்கள் யார்?
இவர்கள் எல்லாம் வகுப்புவாதிகள் அல்லாதவர்களா? வகுப்புத் துவேஷக்காரர்கள் அல்லாதவர்களா?
வகுப்பு அபிமானிகளா? வகுப்பு அன்பர்களா? என்று கேட்கின்றோம்
பார்ப்பனரல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சியாராகட்டும் சுயமரியாதைக் காரர்கள் ஆகட்டும் மனித உரிமைக்கு போராடுகிறார்களே அல்லாமல், மனித ஜீவ அபிமானத்துக்கு போராடுகிறார்களே அல்லாமல், மற்றபடி பணத்துக்கு போராடுகிறார்களா? அரசியல் ஏகபோக உரிமைக்கு போராடுகிறார்களா? ஜாதி அகம்பாவத்துக்கோ ஜாதி ஆணவத்துக்கோ ஜாதி ஆதிக்கத்துக்கோ போராடுகிறார்களா? இவைகளையெல்லாம் விட்டுவிட்டு “ஜஸ்டிஸ் கட்சியார் வரி குறைக்கவில்லை, மழை தருவிக்கவில்லை, லட்டு பாயாசம் பரிமாரவில்லை'' என்றெல்லாம் விஷமத்தனமாயும், போக்கிரித்தனமாயும் பேசுவதில் என்ன. லாபம்? என்று கேட்கின்றோம்.
இன்று ஜஸ்டிஸ் கட்சியார்பணக்காரர்களுக்கும், சொத்து உள்ளவனுக்கும் வரி குறைக்கப்படவில்லை என்று காங்கிரஸ்காரர் சொல்லுவது உண்மையாய் இருக்குமானால், சொத்து இல்லாத ஏழைகளாய் கூலிகளாய்
இருக்கும் பாமர மக்களுக்கு அவர்கள் வாங்கிச் சாப்பிடும் தவிட்டுக் குருணைக்கு காங்கிரஸ்காரர்கள் அசம்பளியில் வரி போட்டார்களே அது
மிகவும் ஏழை அபிமானமான காரியமா என்று கேட்கின்றோம்
413 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பூமிக்கு வரி போடுவதோ குறைப்பதோ ஆன வேலை ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கத்தில் இல்லை, மந்திரிகள் ஆதிக்கத்தில் இல்லை
ஜஸ்டிஸ் கட்சியார் அரசாங்கத்தை வரி குறைக்க வேண்டாம் என்று சொல்லவும் இல்லை என்பது எந்த ஜீவனுக்கும் தெரிந்த விஷயம்
ஆனால், காங்கிரஸ்காரர்கள் அசம்பளி சட்டசபையில் குருணைக்கு வரிபோடுங்கள் என்று சொன்னார்களே, அதற்கு அனுகூலமாக ஓட்டும் கொடுத்தார்களே இந்த யோக்கியர்களுக்கு ஜஸ்டிஸ் கட்சியார் வரி குறைக்கவில்லை என்று சொல்ல வாய் இருக்கிறதா என்று கேட்கின்றோம்.
காங்கிரஸ்காரர்கள் வீரத்துடன் ஆண்மையுடன் மானத்துடன் சண்டை செய்வதாய் இருந்தால் அவர்களுடன் சரிசமமாய் சண்டைக்கு நின்று போர் புரியலாம், அப்போரில் உயிரையும் விட்டு பிணத்தை ஊர்கோலம் செய்து புதைக்கும்படியும் செய்து கொள்ளலாம்
அப்படிக்கில்லாமல் பேதிப்பு, வஞ்சம், பொய், களவு, சூது ஆகிய காரியங்களையே ஆயுதமாக வைத்துக் கொண்டு அனுமானைப் போல் தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து எதிரியின் காலைக் கழுவி சாப்பிட்டு உயிர் வாழ்ந்த ஜீவனைப் போல் உள்ள சில ஆட்களைக் கைவசப்படுத்தி அவரவர்களை தங்கள் கொடி சின்னமாக வைத்துக் கொண்டு போர் புரிவது என்றால் இந்தப் போரை எப்படி வளர விட்டுக் கொண்டிருக்க முடியும்?
மானம் சுயமரியாதை என்பது சோத்துக்கு முந்தினதா சோத்துக்கு பிந்தினதா என்று கேட்கின்றோம்? சோத்துக்கு பிந்தினதுதான் மானம் என்றால் அந்த சோற்றைவிட மலம் மேலானது என்றுதான் மக்களுக்கு விளங்க வைக்க கற்றூணடித்து நிலை நிறுத்துவோம் ஆகவே இன்று பார்ப்பனப் போரானது சண்டிப் போராகப் போய்விட்டது - மனிதத் தன்மைப் போராக இல்லை.
ஆதலால் பார்ப்பனக் கூச்சலுக்கும், அவர்களது காலிகள் கூலிகள், கூச்சலுக்கும், எச்சிலை பத்திரிகைகளின் விஷமங்களுக்கும் பயந்து போகாமல் நமது போரை எதிரிகள் வகுப்புப்போர் என்றாலும், உத்தியோகப் போர் என்றாலும், பணக்காரப் போர் என்றாலும், மந்திரி பதவிப்போர் என்றாலும் ஒன்றையும் லக்ஷியம் செய்யாமல் இப்படிச் சொல்லுகின்றவர்களையெல்லாம் பார்ப்பனர்களின் - பணக்காரர்களின். வகுப்பு ஆதிக்கக்காரர்களின் லைசன்சு பெற்ற கூலிகள் என்று சந்தேகமற தீர்மானித்து விட்டு இன்றையப் போரை தைரியத்துடன் எதிரியின் யோக்கியதைக்குத் தகுந்தபடி தொடர்ந்து நடத்த வேண்டும் என்றே ஆசைப்படுகின்றோம்
குடி அரசு - கட்டுரை - 08.12.1935
குடி அரசு - 1935 (2) 414
தேவகோட்டையில்
பார்ப்பனீய தாண்டவம்
தேவகோட்டை நியாயஸ்தலத்தில் வக்கீல் சங்கத்தில் தாகத்துக்குத் தண்ணீர் சாப்பிடுவதற்காக வைத்திருக்கும் பாத்திரத்தையும், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று வக்கீல் சங்கத்தில் பார்ப்பனர்கள் தங்கள் மெஜாரிட்டியைக் கொண்டு தீர்மானித்துக் கொண்டார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் மைனாரிட்டியார் மூன்றே பேர் ஆனதால் அதை ஆட்சேபித்து பலன்படாமல் தங்களுக்குள்ளாக செய்து கொண்ட ஒரு கண்டனத் தீர்மானத்தை நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இதை பார்ப்பன வக்கீல்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. தேவகோட்டையிலுள்ள பார்ப்பனரல்லாத வக்கீல்களில் ஒருவர் தோழர் எஸ்.லட்சுமிரதன் பாரதியார், எம்.ஏ., பி.எல்., நமது நண்பர் ஆவார். இவர் காங்கிரஸ் தீண்டாமை விலக்கு கமிட்டி பிரசிடெண்டும் சுயமரியாதை இயக்கத்துக்கும் உற்ற நண்பரும் ஆவார். தேவகோட்டை வக்கீல் பார்ப்பனர்கள் பெரிதும் காங்கிரசுக்காரர்கள். இந்த நிலையில் இவருடைய கதியே இப்படி இருக்குமானால் காங்கிரசின் தீண்டாமை விலக்கு விஷயத்தின் யோக்கியதையைப் பற்றி நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே இதனால் தான் “நம் மீதுள்ள தீண்டாமையை விலக்கிக் கொள்ள நாம் முதலில் முயற்சிக்க வேண்டும்” என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறது
தீண்டாமை விலக்குக்கு பத்து லட்சக்கணக்காக பணம் வசூலித்தார்கள். அந்த பணச் செல்வாக்கை பயன்படுத்தி அசம்பளி எலக்ஷனில் வெற்றி பெற்றார்கள்.
அந்தப் பணச் செலவில் கூலிகளையும் காலிகளையும் நியமனம் செய்து ஜஸ்டிஸ் கட்சியை வைய்பச் செய்தார்கள்.
அந்தப் பணத்தை துஷ்பிரயோகம் செய்து எச்சிலைப் பத்திரிகை களையும் எச்சிலை நக்கும் பத்திரிகைகளையும் வசப்படுத்தி ஈனத்தனமாய்
415 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இழி தன்மையாய் பார்ப்பனரல்லாதார்களையும், உண்மையாய் பாடுபடுகின்றவர்களையும் பார்த்து குரைக்கச் செய்தார்கள். இவைகள் ஒருபுறமிருந்தாலும் இன்று பச்சையாய் வெள்ளையாய் பொது இடத்தில் பார்ப்பானுக்குத்தான் உரிமை, பார்ப்பனரல்லாதாருக்கு அவ்விடத்தில் உரிமை இல்லை. பார்ப்பான் சாப்பிடுகிற பாத்திரத்தில் பார்ப்பனரல்லாதார் தண்ணீர் சாப்பிடக்கூடாது என்று தங்கள் மெஜாரிட்டி பலத்தைக் கொண்டு தீர்மானம் செய்து ஒதுக்கித் தள்ளி விட்டார்கள்.
இனி வெள்ளைக்கார ஆக்ஷி போய் சத்தியமூர்த்தி ஆக்ஷியோ ராமராஜ்ஜிய ஆக்ஷியோ ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதைப் பற்றி நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா என்று கேட்கின்றோம்
பார்ப்பனர்கள் இப்படி நம்மைக் கொடுமை செய்கிறார்களே இழிவு படுத்துகிறார்களே என்பது வரவர நமக்கு அவ்வளவு வேதனையாகவோ. ஆச்சரியமாகவோ காணப்படுவதில்லை. ஏனெனில் அவை அவர்களது பரம்பரை வழக்கம். இன்றும் அவர்களது ஜீவன் போன்ற லக்ஷியம் ஆதலால் அதில் அதிசயமில்லை. ஆனால் பார்ப்பனரல்லாதார் அப்படிப்பட்ட பார்ப்பனர்களுடன். சேர்ந்து கொண்டும், அவர்களை ஆதரித்துக் கொண்டும், அவர்களது பூட்சுகளை நாக்கினால் சுத்தப்படுத்திக் கொண்டும் வாழுகின்றார்களே என்பதைப் பற்றி யோசிக்கும்போது, பார்ப்பனரல்லாதாரில் சிலராவது உண்மையிலேயே பிறவியிலேயே இழி மக்களாய் மானமற்றவர்களாய் இருக்கிறார்கள் என்று காந்தியார் சொல்லும் வருணாச்சிரம தர்மம் இவர்களைப் பற்றி தானா என்ற பிரச்சினையைக் கிளப்பி விடுகின்றது ஆகவே தோழர் பாரதியாரை பார்ப்பனர் பாத்திரத்தை தொடக் கூடாது என்று சொன்ன கொடுமையைவிட, பாரதியாருக்கு ராணுவத்தில் சுதந்திரமோ கஜானாவில் சுதந்திரமோ கொடுக்க மாட்டேன் என்று வெள்ளைக்காரன் சொல்லுவதை அதிகக் கொடுமையானதென்றோ சமமான கொடுமையானதென்றோ ஆயிரத்தில் ஒரு பங்கான கொடுமை யானதென்றோ நமக்கு தோன்றவில்லை. ஆகவே காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார்- சத்தியமூர்த்தியை தலைவராகக் கொண்ட காங்கிரஸ் தேசபக்தர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்?
இந்தக் கொடுமை தேவகோட்டைப் பார்ப்பனர் கொடுமை மாத்திரமல்லவென்றும், சக்கெண்ட் லைன் பீச்சில் உள்ள ஓண்ணறை அணா: (பாப்பன) அம்மங்கார் முதல் டம்பாச்சாரி நாடகத்தில் வரும் கும்பகோண அய்யர் சந்ததியார் வரையில் உள்ள “பிராமணிய” சமூகத்தின் ஜீவாதாரத் திட்டம் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு பதில் இறுப்பார்களாக.
குடி அரசு - கட்டுரை - 08.12.1935
குடி அரசு - 1935 (2) 416
சத்தியமூர்த்தியும் கோவைப் பிரசங்கமும்
இன்று தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுடைய பெயர் அமிர்தாஞ்ஜனம் டப்பி போல் விளம்பரம் செய்யப்படுகின்றது. விளம்பரத்தின் பயனாய் அவரது பெயரும் ஒரு அளவுக்கு தினமும் தவறாமல் பத்திரிகைகளில் அடிபடுகிறது. அதோடு மாத்திரமல்லாமல் அவரும் தமிழ்நாட்டில் பல இடங்களில் அடிக்கடி உண்மையிலேயே அடிபடுகிறார். அவ்வளவோடு நிற்பதில்லை. “ஊரார் வீட்டு நெய்யே - என் பெண்டாட்டி கையே” என்று ஆனந்தமடைந்த ஒரு நெய் வெறியர் போல் “ஊரார் வீட்டுப் பணமே எனது சுற்றுப் பிரபாணமோ" என்கின்ற மாதிரி இப்போது தினம் ஒரு ஊராகவும், ஏன்? தினம் 2, 3 ஊர்களாகவும், தான் மாத்திரமல்லாமல் தமது தர்ம பத்தினி சமேதராய் சஞ்சாரம் செய்த வண்ணமாய் இருக்கிறார்.
காங்கிரஸ் பணம் இருக்கிறது, எலும்பில்லாத கை இருக்கிறது,
சரியாய் எழுதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாத கணக்கு இருக்கிறது, யாராவது எந்த ஆடிட்டராவது கணக்கு தப்புக் கணக்காகவோ ஒழுங்கீனமான கணக்காகவோ இருக்கிறது என்று ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினால் அதைஎடுத்துச்சொல்லுகிறவர்களை “நீதான் திருடன், அயோக்கியன், நாயே, கழுதையே” என்று கேட்க எச்சில் இலை - காலிப் பத்திரிகைகள் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் ரகசியத்தில் குமாரராஜா சாஹேப் அவர்கள் வாங்கிக் கொடுத்த மோட்டார் காரும் அவரது பண ஆதரவும் இருக்கிறது ஆகவே இனி நமது சத்தியமூர்த்தி சாஸ்திரியாருக்கு வேண்டியது என்ன? ஆகாயத்தில் மனைவி மக்களுடன் பறப்பதற்கு ஒரு ஏரோபிணானும், அங்கு ஆகாய சஞ்சாரம் செய்ய சில மண்டலங்களும் அங்கு வசவு கேட்பதற்குச் சில மானங்கெட்ட ஆட்களும், அதை விளம்பரம் செய்யவும் காட்டிக் கொடுப்பதற்கும் சில எச்சில் நக்கிப் பத்திரிக்கைகளும் சில
கூலிகளும் தேவை
கிடைத்தற்கு அமிய பொக்கிஷம்
எப்படி இருந்தாலும் உண்மையிலேயே சத்தியமூர்த்தியாரைப் பார்த்து நாம் பொறாமைப்படவில்லை. பாராட்டுகிறோம். ஒரு விஷயத்தில்
417 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அவருடைய சில குணங்கள் நம்மவருக்கும் வரவேண்டுமென்றும், அவரைப் போல் வகுப்பு அபிமானத்தில் மாறாத, சலியாத குணம் நம்மவர்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம்.
அவர், அதாவது தோழர் சத்தியமூர்த்தி, சாஸ்திரியார் நமது நண்பர். சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரைவிட மேலானவர் என்று கூடச் சொல்லுவோம்.
அதென்னவென்றால் இன்று தோழர் ஆச்சாரியாரவர்களுக்கு உள்ள பார்ப்பன அபிமானம், பார்ப்பனீய ஆதிக்கத்தில் சிறிதும் விட்டுக் கொடுக் காமல் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்ற பிடிவாதமான காரியங்களில் அவரைவிட பல மடங்கு மேலான ஆசை தோழர் சாஸ்திரியாருக்கு உண்டு.
எந்த சமயத்திலும் எந்த விலைக்கும் பார்ப்பன அபிமானத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், பார்ப்பனக் கலை, பாஷை, தொழில், பழக்க
வழக்கம், வருணாச்சிரமம்ஆகியவைகளையும்சிறிதுகூடவிட்டுக்கொடுக்காதவர்.
சத்தியமூர்த்தியாருக்குப் பயந்துதான் காந்தியார் வர்ணாச்சிரம தர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார் என்றுகூட சொல்லலாம். மற்றும் சத்தியமூர்த்தியாரால் தான் கராச்சி காங்கிரசில் மதம், ஜாதி, வருணாச்சிரமம், பழக்கம், வழக்கம், தொழில், சாஸ்திரம், புராணம் ஆகியவை காப்பாற்றப்படுவதாகப் பார்ப்பனருக்கு உறுதி கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சொல்லலாம் அவ்வளவுதானா இன்னமும் பொது ரோட்டு, பொது பள்ளிக்கூடம் எல்லா ஜாதியாருக்கும் உரிமை உண்டு என்ற தீர்மானத்தில் வெகு ஜாக்கிரதையாக, வெகு பிடிவாதமாக கோவில்கள் விலக்கப்பட்டது என்றும் சொல்லலாம். இவ்விஷயங்களில் இவ்வளவு தைரியமாய்ப் பேச ஆச்சாரியாருக்கு சக்தி போதாது; தந்திரமாய் ஏதாவது செய்யக்கூடும் ஆனாலும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு இவருக்கு நிகரான தலைவர் நம் பார்ப்பனர்களுக்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். ஆதலால் இவர் பார்ப்பனர்களுக்குக்கிடைத்தற்கரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அழகான உச்சிக்குடுமி.
இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஆவதற்கு முன் தலையில் கிராப்பு வைத்திருந்தார். இப்போது தலைவராக ஆன உடன் கிராப்பை எடுத்து விட்டு அழகான உச்சிக்குடுமி வைத்துக் கொண்டார் - உத்தம பிராமணனாக - பச்சைப் பிராமணனாக ஆக்கிக் கொண்டார். இன்று சாஸ்திரியாரை எல்லாப் பார்ப்பனர்களும் அபிப்பிராய பேதமில்லாமல் எப்படி மத விஷயத்தில் சங்கராச்சாரிய “சுவாமிகளை'' மதித்து மரியாதை செய்கிறார்களோ அது போல சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை அரசியல் விஷயத்தில் சங்கராச்சாரி போல் மரியாதை செய்கிறார்கள். எந்தப்
குடி அரசு - 1935 (2) 418
பார்ப்பானாவது சத்தியமூர்த்தியாரை அலட்சியமாகப் பேசினால் அவர் நபியை குற்றம் சொன்ன மகம்மதியனை விட அதிக கேவலமாகக் கண்டிக்கப்படத்தக்கவனாகிக் கண்டிக்கப்படுகிறான்.
இந்தச் சமயத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த லெனின்கிராடில் நடித்துக் காட்டப்பட்ட ஒரு நாடகம் ஞாபகத்துக்கு வருகிறது
ஓரு ரஷியக் கதை
அதாவது, ஒரு கொள்ளையும் கொலையும் கலந்த குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவனின் தண்டனை நிறைவேற்றப்
படும் நாளில், அதிகாலையில் ஒரு பாதிரியார் சென்று அவனுக்கு இறுதிக்கால உபதேசம் செய்து, அவனது பாவங்களுக்கு மன்னிப்பு கொடுப்பதற்காக சூரிய உதயத்துக்கு முன் நல்ல குமரி இருட்டுச் சமயத்தில் சிறைச்சாலையில் உள்ள அவனது அறைக்குச் சென்று குற்றவாளிக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது அக்குற்றவாளி பாதிரியாரின். கழுத்தை நெறித்துக் கொன்று தள்ளி விட்டு தன் உடுப்பை பாதிரியாருக்குப் போட்டு விட்டு அவரது உடுப்பைக் கழற்றி தான் அணிந்து கொண்டு பாதிரி போல் வெளியில் வந்து விட்டான்.
ஜெயில் அதிகாரிகள் குற்றவாளியை கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போக வந்ததில் இருட்டு ஆனதினால் கைதி மூர்ச்சையாய்
கிடக்கிறான் என்று கருதி, தூக்கும்போது சந்தேகப்பட்டுப் பார்த்துத் தாங்கள்.
தப்பித்துக் கொள்ள அவசரமாய்க் கொண்டு போய் கொலை செய்ததாக
பாசாங்கு செய்து புதைத்து விட்டார்கள்.
வெளியில் வந்த குற்றவாளி அந்த உடுப்புடனேயே ஒரு தனிப் பாதிரியாகி, பல பெண்களைச் சேர்த்துக் கொண்டு ஒரு மடத்தை உண்டாக்கி அம்மடத்துக்கு அப் பெண்கள் மூலமாக பணம் சம்பாதித்து, பிரபல பாதிரியாகி போப் எலக்ஷனுக்கு நின்று பெண்கள் உதவியாலும், பல தந்திரங்களாலும் எலக்ஷனில் வெற்றி பெற்று விட்டான்.
போப் எலக்ஷனில் வெற்றி பெற்ற உடனேஅரசனும் நியாயாதிபதியும் வந்து போப்புக்கு மரியாதை செய்து கை கால்களுக்கு முத்தமிட்டு வணங்க வேண்டியது அப்போதைய முறை. அந்தப்படி அரசன் மரியாதை முடிந்த உடன் நியாயாதிபதி மரியாதை செய்ய வந்தபோது இந்த போப்புதான் முன் கொலை, கொள்ளை அகிய குற்றத்துக்கு மரண தண்டனைவிதிக்கப்பட்டவன். என்பதாக கண்டு கொண்டு பொது ஜனங்களைப் பார்த்து நியாயாதிபதி ஏதோ பேசத் தொடங்கினார்.
போப்பின் உள் ஆட்களும், அங்கிருந்தவர்களும், அந்த நியாயாதிபதி
மீது கோபித்தார்கள். அதற்கு அந்த நியாயாதிபதி இந்த போப்பைப் பற்றி சில வார்த்தை பேச வேண்டுமென்றார். உடனே மற்றவர்கள் கோபம்
499 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கொண்டு நியாயாதிபதியை தாக்க ஆரம்பித்து நியாயாதிபதியை கைது செய்ய முயன்றார்கள். இதற்கு அரசர் முதல் மற்ற பாதிரிகள் எல்லோரும் போப்புக்கு அனுகூலமாகவே இருந்தார்கள். இந்தப் போப்புடன் கூடவே கூட்டுக் கொள்ளையில் பங்காளிகளாய் இருந்து கண்டுபிடிக்க முடியாமல் மறைவாய்த் திரிந்தவர்களும், மற்றும் பலரும் குட்டிப் பாதிரிகளாகி இந்த போப்பு எலக்ஷனுக்கு வேலை செய்து அவரது பட்டாபிஷேகத்துக்கும் உதவியாய் இருந்தார்கள்.இவர்களே முன்னணியில் இருந்தார்கள். இதை பார்த்து நியாயாதிபதி பயந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தானாகவே காலைத் தொட்டு முத்தமிட்டு விட்டுப் போனார்.
இது ஒரு டிராமா. அதுபோல் நமது சத்தியமூர்த்தியார் அவரைப்
பற்றி இப்போது எந்த நியாயாதிபதியும் ஏதும் பேசாமல் காலைத் தொட்டு
முத்தமிட வேண்டிய நிலைமையை அடைந்திருக்கிறார்.
மூர்த்தியின் இரண்டு ஆசை
இப்படிப்பட்ட இவருக்கு இன்று இரண்டு கொள்கைகள் (ஆசை) தான் உண்டு.
அதாவது, ஒன்று - ஜஸ்டிஸ் கட்சியை (பார்ப்பனரல்லாதார். இயக்கத்தை) குழி தோண்டி 500 கஜ ஆழத்தில் புதைக்க வேண்டும் என்பது
மற்றொன்று - ஒரு நாளைக்கு ஆவது தான் சென்னை அரசாங்க முதல் மந்திரியாகி சலூன் வண்டியில் மனைவி மக்களுடன் பிரயாணம் செய்ய வேண்டும் என்பது.
இந்த இரண்டு காரியத்தில் முன்னையது ஜாதி அபிமானம், பின்னையது அந்த ஜாதி அபிமானத்துக்கு கூலியும் சாதனமும் ஆகும் ஆகவே இந்த இரண்டு காரியங்களுக்கும் இன்று தென்னாட்டுப் பார்ப்பனர், ஆந்திர நாட்டுப் பார்ப்பனர், கேரள நாட்டுப் பார்ப்பனர், கர்நாடக நாட்டுப் பார்ப்பனர் ஆகியவர்களும் இவர்கள் சட்டப்படிக்கான மனைவிகள் குழந்தைகள் ஆகியவர்களும், சட்டத்திற்குள் வரக்கூடாதவர்களான மனைவிகளும் மக்களும் உதவியாய் பாடுபடுகிறார்கள்.
இந்த தைரியத்தில் தான் தோழர் சத்தியமூர்த்தியும், அவர்கள் கூட்ட பத்திரிகைகளும் காரியம் கைகூடிவிட்டதாகவே கருதிக்கொண்டும் சில விஷயங்களில் கனவு கண்டு கொண்டும் “ஜெயினக் கடவுள்" மாதிரி ஆகி தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாளும் ஆசை நிறைவேறாது என்றாலும் இப்பவும் ஒன்று கூறுகிறோம். ஜஸ்டிஸ் கட்சியை 500 கஜம் அல்லது 5000 கஜம் ஆழத்தில் புதைக்க (முடியாது) முடிந்ததாகவே
குடி அரசு - 1935 (2) 420
வைத்துக் கொள்ளுவோம். காங்கிரஸ் கொள்கைகள் இருந்த இடங்களில்
புல்லு முளைத்ததுபோல் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடத்தில் புல்லு முளைத்து, பொப்பிலிக்கும் மந்திரி வேலை போய் ராஜா ஆய்விட்டதாகவே வைத்துக் கொள்ளுவோம். அப்போதும் சத்தியமூர்த்தியோ அவர்கள் சிஷ்ய கோடிகளோ முதல் மந்திரியாகவோ ஜில்லா போர்டு தலைவராகவோ ஆகிவிட முடியும் என்பது மாத்திரம் கனவிற்கூடப் பார்க்க முடியாது என்பதை உறுதியாய்ச் சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியை 500 கஐ ஆழத்துக்கு கீழ் புதைத்துவிட வேண்டுமென்று சத்தியமூர்த்தியார் ஆசைப்பட்டாலும் காரியத்தில் அவர் ஜஸ்டிஸ் கட்சியானது என்றும் நிலைக்கும்படியான அசோக ஸ்தம்பம் போல் விளங்கும்படி உபகாரம் செய்துதான் வருகிறார்.
எப்படி என்றால், முதலாவதாக ஜஸ்டிஸ் கட்சியைப் பரிசுத்தம் செய்து வருகிறார். வெறும் பட்டம் பதவிக்கு ஆக மாத்திரம் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து வந்த “பெரியார்களை” எல்லாம் தான் அழைத்துக் கொள்ளுவதன் மூலம் அக்கட்சிக்குப் பல விதத்திலும் தொல்லையைக் குறைத்துக் கொண்டும், பதவிப் போட்டியைக் குறைத்துக் கொண்டும் வருகிறார். அன்றியும் அந்தப்படி அழைத்துக் கொள்ளும் ஆட்கள் அத்தனை பேரும் சத்தியமூர்த்தியாருக்கு உலை வைக்கவும், அவருடன். போட்டி போடவும், அவரது காலைவாரி விட்டு மேலே உட்காரவும் ஆசையும், ஆற்றலும் கொண்டவர்கள் என்பதோடு சத்தியமூர்த்தியாரை தலைவர் என்று வாயில் கூட சொல்லுவதைவிட பிராணனை விட்டு விடுவது மேல் என்றே கருதத்தக்க சுயமரியாதை உள்ளவர்கள்.
வெற்றியின் யோக்கியதை திருநெல்வேலி.
உதாரணமாக, திருநெல்வேலி ஜில்லா போர்டு பார்ப்பன மயமாக ஆய்விட்டது என்றும், காங்கிரசுக்கே வெற்றி மேல் வெற்றி என்றும், 52 ஸ்தானங்களில் 31 ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் ஆட்கள் வந்துவிட்டார்கள். என்றும் சொல்லி, சத்தியமூர்த்தியார் பறையடித்தார். பார்ப்பன எச்சிலைப் பத்திரிக்கைகள், பார்ப்பனர்கள் எச்சிலையை நக்கும் பத்திரிக்கைகள் ஜஸ்டிஸ் கட்சிக்கு சாவோலை படித்தன.
முடிவு என்ன ஆயிற்று? அன்றைக்கு என்று ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து ஒருவரை அழைத்துப் போய் அதுவும் கொஞ்சம்கூட சந்தேகப்படுவதற்கு இடமில்லாத அசல் பார்ப்பனரல்லாதாரை, அதுவும் எந்த சமயத்தில் பார்ப்பனக் கும்பலுக்கு பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைக்கலாம் என்று சதா கிளிச்ச குச்சியை கையில் வைத்திருக்கும் பார்ப்பனரல்லாதாரைத் தான். அழைத்துப் போய் ஜில்லா போர்டு தலைவர் ஸ்தானம் கொடுப்பதாக காங்கிரஸ் தலைவரே தீர்மானித்துவிட்டார். 41௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
திருச்சி
திருச்சியிலும் ஜில்லா போர்டில் காங்கிரசுக்கு வெற்றி மேல் வெற்றி என்று எச்சிலைப் பத்திரிக்கைகளும் எச்சை நக்கிப் பத்திரிக்கைகளும் தப்பட்டை அடித்தன. கடசியாக அந்த தலைமை ஸ்தானமும் பச்சைப் பார்ப்பனரல்லாதாருக்கு அதுவும் நேற்று வரை பார்ப்பனர்களை மாத்திரமல்லாமல் அவர்கள் பழந்தலைமுறை முதல் உள்ள மக்களை பெண்டு பிள்ளைகளுடன் அமிர்தக் கடையிலும் “விஷ்ணுவின் முதல் அவதார"க் கடையிலும் நடக்கும் சம்பாஷணை போல் வைது கொண்டிருந்த பெரியாரே” - தோழர் தேவரே இன்று திருச்சி ஜில்லா போர்டுக்கு காங்கிரசினால் சத்தியமூர்த்தியார் வாயினால் “வசிஷ்டன் ராமனுக்கு” பட்டங்கட்டிய மாதிரி பட்டங்கட்டி விட்டார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், வெகுநாளாக காங்கிரசில் இருந்து கொண்டு பெண்டு பிள்ளைகளுடன் ஜெயிலுக்குப் போய், தமிழ்நாடு காங்கிரசுக்கு சர்வாதிகாரியாய் இருந்த டாக்டர் டி.வி.எஸ். சாஸ்திரியாருடைய பெயரை தோழர் சத்தியமூர்த்தியார் ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு வாயில் கூட உச்சரிக்கவில்லை என்று சொல்லி பத்திரிக்கைகளை விட்டு எழுதச் சொல்லுவதோடு, டாக்டர் சுப்பராயனிடமிருந்து அத்தாட்சி வாங்கி விளம்பரம்படுத்த வேண்டிய அளவு பயம் ஏற்பட்டுவிட்டது. டாக்டர் சுப்பராயன் அவர்களும் வெகு ஜாக்கிரதையாகவே அத்தாட்சி கொடுத்திருக்கிறார். அதாவது 'அந்தப்படி பட்டுக்கோட்டையில் பேசவில்லை' என்பதாகும். மற்ற ஊரில் பேசி இருக்கலாமோ என்னமோ அது வேறு விஷயம் அப்படியாவது சத்தியமூர்த்தியார் பட்டாபிஷேகம் செய்த ஆட்களுக்காவது தலைவர் ஸ்தானம் கிடைக்கிறதோ அல்லது காங்கிரஸ் மெம்பர்களே நாமம் சாத்தப் போகிறார்களோ பின்னால் பார்க்கலாம்
இனி தென்னாற்காடு இருக்கிறது. அதில் பார்ப்பனப் பூண்டு உள்ள வரை ஞாபகம் இருக்கும்படியாக தோழர் ஜம்புலிங்க முதலியார் காங்கிரஸ்காரர்களுக்கு புத்தி கற்பித்துவிடப் போகிறார்
ஜெயிலுக்கு போனால்தான் தலைவராகலாமாம்
இந்த நிலையில் தோழர் சத்தியமூர்த்தியார் “ஜெயிலுக்குப் போகாதவர்களுக்குத் தலைவர் ஸ்தானம் கிடையாது'' என்று கோவையில்
உத்திரவு போட்டிருக்கிறார். அவருடைய வாக்கு எவ்வளவு சத்தியமானது என்பதற்கு தளவாய் முதலியார், திருச்சி தேவர் இவர்கள் எந்த ஜெயிலுக்குப் போய் வந்தார்கள் என்பதைப் பார்த்தாலே விளங்கி விடும்
குடி அரசு - 1935 (2) 422
மற்றும் ஜெயிலுக்குப் போய் வருவது என்பதற்கு மூர்த்தியார். அகராதியில் என்ன வியாக்கியானம் இருக்கிறது என்பதும் நமக்கு விளங்கவில்லை.
மோட்டாரில் துண்டு நோட்டீஸ் வினியோகிக்க வேண்டியது, போலீசார் மோட்டாரில் அழைத்துப் போகவேண்டியது, மேஜிஸ்ட்ரேட் தண்டிக்க வேண்டியது & கிளாஸ் வகுப்பில் போடும்படி கெஞ்ச வேண்டியது, ஜெயில் சூப்ரண்டு சிபார்சு பிடித்து ஆஸ்பத்திரி ஸ்பெஷல் வார்டுக்கு போய் விட வேண்டியது, அங்கிருந்து ஜஸ்டிஸ் கட்சியாரைக் கெஞ்சி விடுதலை ஆகி விட வேண்டியது, ஜெயில் ரூலுக்கு விரோதமாய் நடந்த குற்றங்களையெல்லாம் மன்னித்து விட வேண்டியது. இன்னும் சில ரகம் உண்டு. அவற்றைச் சொன்னால் ஜெயில் அதிகாரிகள் பாடு திண்டாட்டமாகிவிடும் ஆகவே இந்தப்படி போவதைத் தான் நமது மூர்த்தியார் ஜெயில் பிரவேசம் என்று கருதினாரோ என்னமோ?
ஜெயிலுக்கு போகாத தலைவர்கள்
இதுகூட இல்லாத தோழர் கே.பாஷ்யம் தலைவரானாரே அது எந்த ஸ்பெஷல் கிளாஸ்படி என்பது நமக்கு விளங்கவில்லை. மற்றும் சுதேசமித்திரன் பத்திராபதிபர் எந்த ஜெயிலுக்குப் போனார்?
தோழர் எஸ். சீனிவாசயங்காரை எல்லா இந்திய காங்கிரஸ் தலைவரே வீட்டுக்கு போய் தமிழ்நாடு காங்கிரசை தலைமை வகித்து நடத்தக்கூப்பிட்டாரேஅவர் எந்த ஜெயிலுக்கு போனார் தோழர்சி.ஆர். ரெட்டி அவர்கள் பல மகாநாட்டுக்கு தலைமை வகித்தாய்விட்டதே அவர் எந்த ஜெயிலுக்கு போனார்? சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்கள் எந்த ஜெயிலுக்கு போனார். இவ்வளவு சங்கதி இருக்க, கோயமுத்தூருக்கு போன. உடன் மாத்திரம் மூர்த்தியாருக்கு ஏன், எதற்கு ஆக இந்த ஞானம் உதயமாய் விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் கோயமுத்தூரில் தலைவர் போட்டி வரலாமென்று பயந்து இப்போதே பழைய ஆட்களுக்கு உறுதி கூறினாரோ என்று கருத வேண்டி இருக்கிறது
அசம்பவி எலக்ஷன்
நிற்க அசெம்பளி எலக்ஷனில் ஜஸ்டிஸ் கட்சிக்கு “தோல்வி” ஏற்பட்டது முதல் ஜஸ்டிஸ் கட்சியை புதைத்து விட்டோம்; அது செத்தது; உயிருக்குத் திண்டாடுகிறது; ஒழியப் போகிறது என்று இருக்க இருக்க சுரம் கம்மியாகவே பேசிக் கொண்டு வருவது யாரும் அறிந்ததாகும். எச்சிலை பத்திரிக்கைகளும் எச்சை நக்கும் பத்திரிக்கைகளும் அதுபோலவே மானமற்று ஈனத்தை லக்ஷியம் செய்யாமல் பின் மேளமடிப்பதும் யாவரும்
அறிந்ததாகும்
4233 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எது செத்தது?
அன்று முதல் இன்று வரை இந்த ஒரு வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சி எதில் செத்து வருகிறது? எ. ராமசாமி முதலியார் தோற்றார், சத்தியமூர்த்தி வெற்றி பெற்றார். இதில் ராமசாமி முதலியார் புதைக்கப்பட்டுவிட்டாரா? அவர். பெருமை மங்கிவிட்டதா? அல்லது சத்தியமூர்த்திக்கு இறக்கை முளைத்ததா?'
இந்த ஒரு காரணமே காங்கிரசு அடங்கிற்று என்பதற்கு அத்தாக்ஷி ஆகிவிட்டது. ராமசாமி முதலியார் தோற்றார். சத்தியமூர்த்தி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். அன்று முதலே காங்கிரஸ் பெருமையில் இடி விழுந்தது, காங்கிரஸ் பார்ப்பன ஸ்தாபனம் என்பதை வெட்ட வெளிச்ச மாக்கிற்று, பார்ப்பனரல்லாதாரில் செல்லாக் காசுக்கும் ஈய ரூபாய்களுக்கும் தான் காங்கிரஸ் இருப்பிடமாயிற்று
சர். ஆர்.கே. ஷண்முகம் தோற்றார்; சாமி வெங்கிடாசலம் ஜெயித்தார்; என்ன ஆயிற்று? ஷண்முகம்புதைக்கப்பட்டுவிட்டாரா? சாமிவெங்கிடாகலத்துக்கு இறக்கை முளைத்ததா? ஷண்முகம் இன்று இந்தியாவில் குன்றின் மேலிட்ட 5000 கேண்டல் பவர் மின்சார விளக்கு மாதிரி விளங்குகிறார். சாமி வெங்கிடாசலம் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்தார்.
ஜஸ்டிஸ் கட்சிக்கு லட்ச ரூபாய் பண்டு ஏற்பட்டது. அருமையான திட்டங்கள் அதுவும் காங்கிரசுக்காரர்களும், அவர்களது எச்சிலைப் பத்திரிகைகளும் எச்சை நக்கும் பத்திரிகைகளும் பொறாமைப்பட்டு வயிற்றெரிச்சல்பட்டு இடித்துக் கொள்ளும்படியான திட்டங்களும் ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள தொல்லைகள் எல்லாம் விலகி பரிசுத்தத்தன்மை அடையும்படியான தெளிவுகளும் ஏற்பட்டன.
எலக்ஷன் தான் சோதனையா?
ஒரு கட்சியின் தன்மைக்கு அதனின் முக்கிய யோக்கியதைக்கு எலக்ஷனில் வெற்றி பெறுவதையே முக்கியமாய்க் கருதுவதாய் இருந்தால், இந்த 15 வருஷ காலமாய் காங்கிரசுக்காரர்களாகட்டும் பார்ப்பனர் களாகட்டும் பஞ்சாய்ப் பறக்கும்படி ஜஸ்டிஸ் கட்சி அடித்து துரத்தி வந்ததே அப்போது அது உயர்ந்த யோக்கியதை உடையதாகிவிடவில்லையா? காங்கிரசாகட்டும், அல்லது பார்ப்பனர்களாகட்டும் தங்கள் கொள்கையிலாவது தங்களுடைய நாணயத்தாலாவது இந்த நாட்டில் இன்று வாழ்கிறார்கள்
என்று யாராவது சொல்லிவிட முடியுமா? என்று சபதம் கூறிக் கேட்கின்றோம்.
இந்த 15 வருஷத்தில் 2 கோடி ரூபாய் பொது மக்களிடம் இருந்து
வசூல் செய்து கண்டபடி ஒழுங்கும் நாணயமும் தவறுதலாகச் செலவு செய்து மானத்தோடு பிழைக்க வகை அற்ற கூலிகளைப் பிடித்தும், வயிற்றுப் பிழைப்புக்கே நடத்தும் பத்திரிக்கைகளைப் பிடித்தும் கூலி கொடுத்து
குடி அரசு - 1935 (2) 424
பிரசாரம் செய்த பயனாய் அது மக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறதே ஒழிய, காங்கிரசினுடையவோ பார்ப்பனர்களுடைய யோக்கியதையாலோ பரோபகார தர்மத்தினாலா என்று பாருங்கள். இன்றைய தினமும் இந்த நாட்டில் இன்றும் வேறு யாராவது இவ்வளவு பணம் செலவு செய்து ஏன் இதில் பகுதிப் பணம் செலவு செய்து பிரசாரம் செய்தால் நம் நாட்டில் கொஞ்ச காலத்துக்கு கழுதை மூத்திரமும்
நாய் விட்டையும் ரூபாய் எடை ரூபாய் விலைக்கு விற்கும்படி செய்து விடலாம். பணத்துக்கு இருக்கிற சக்தி, பெரும்பான்மையான மக்களுக்கு இருக்கிற தரித்திர புத்தி, பார்ப்பனர்களுக்கு இருக்கிற சூட்சி எல்லாம் சேர்ந்தால் கல்லுக் கடவுளானது மாத்திரமல்லாமல் இன்னமும் எது வேண்டுமானாலும் எதுவாகவும் ஆகிவிடும்.
மூர்த்தியாமின் கோவை பிரசங்கம்
தோழர் சத்தியமூர்த்தி கோவையில் 2.12.35-ல் பேசும்போது, ஈ.வெ.ரா. திட்டம் கராச்சி திட்டத்தை தழுவிய திட்டம் என்றும்,
ஆனால் ஜஸ்டிஸ் கட்சி இப்போது ஒப்புக் கொண்டிருப்பது வேறு என்றும், ஜாதி மத பேதங்களையும் ஏழை, பணக்காரத் தன்மைகளையும் கிளப்பிவிட்டு ஜஸ்டிஸ் கட்சி ஓட்டு கேட்கிறது என்றும்,
காங்கிரஸ் ஜாதி மதப் பூசல்களையும் கிளப்பி விட்டு ஓட்டு சம்பாதிக்கவில்லை என்றும்,
ஜஸ்டிஸ் கட்சி 15 வருஷமாய் ஒன்றும் செய்யவில்லை என்றும்,
மந்திரிகள் ஏன் தங்கள் சம்பளங்களை குறைத்துக் கொள்ளவில்லை என்றும்,
இந்திய வருமானத்தில் £ பாகம் ராணுவச் செலவுக்குப் போய் விடுகிறதென்றும்,
விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், வரியை குறைக்கவில்லை என்றும், இனிமேல் ஏதோ செய்வதாகச் சொல்லுவது நம்ப முடியாது என்றும் பேசி இருக்கிறார்
திட்டத்தின் இரகசியம்
ஈ.வெ.ரா. திட்டத்தின் இரசசியத்தைப் பற்றி நாம் இதுவரை வெளியிட விரும்பவில்லை. இப்போதும் வெளியிட காலம் வரவில்லை ஆனால் ஒன்று மாத்திரம் சொல்லுவோம், அத்திட்டங்கள் காங்கிரசுக்கு ஜீரணமாகாது என்று தக்க காங்கிரஸ் தலைவர்களால் தெரிந்த பிறகு தான் ஜஸ்டிஸ் கட்சிக்குக் கொடுத்து கட்டாயப்படுத்தப்பட்டது
498 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதாவது, ஜாதி மதப் பாதுகாப்பையும், பழக்க வழக்க பாதுகாப்பையும் பற்றிய கராய்ச்சி தீர்மானத்தை எடுத்துவிடவும், சகல வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் விகிதாச்சாரம் வழங்கவும், காங்கிரஸ் தலைவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இன்றாவது ஒப்புக் கொள்கிறார்களா என்று கேட்கின்றோம்
ஆனால் ஜஸ்டிஸ் கட்சியார் ஜாதி மத பழக்க வழக்க பாதுகாப்புக்கு வாதாடவில்லை. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஜனசங்கையின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி இருக்க வேண்டுமென்பதை ஒப்புக் கொண்டார்கள்
1934 னா நவம்பர் மாதம் வரையில் அத்திட்டங்கள் காங்கிரசையும் ஜஸ்டிசையும் ஆகிய இரண்டு கட்சியையும் ஏலம் கூறிற்று. கோவை மாகாண காங்கிரஸ் கான்பரன்சில் விஷயாலோசனைக் கமிட்டியில் அத்திட்டங்கள் தள்ளப்பட்டுவிட்டன. சென்னை மாகாண ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் அத்திட்டங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன. ஆகவே இனியும் சத்தியமூர்த்தியாரோ காங்கிரஸ்காரரோ ஈ.வெ.ரா. திட்டம் கராச்சி திட்டம் என்றும் திருடப்பட்ட திட்டம் என்றும் மறுபடியும் சொல்லுவார்களா என்று கேட்கின்றோம்.
ஈ.வெ.ரா. திட்டத்தை மூர்த்தி ஒப்புக் கொள்ளுகிறாரா?
இன்றானாலும் சரி சத்தியமூர்த்தியார் ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொண்டபடி தங்களது கராச்சி திட்டத்தில் உள்ள ஜாதி, மதம், பழக்கம், வழக்கம், பரம்பரைத் தொழில் ஆகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்
படும் என்று வாக்குறுதி கூறி இருக்கும் ஒப்பந்த தீர்மானத்தை எடுத்து விடவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஜனத்தொகைக்குத் தகுந்தபடி அரசியலிலும் பிரதிநிதித்துவத்திலும் கொடுப்பதாகவும் உள்ள திட்டத்தை ஒப்புக் கொள்ளவும் சம்மதிக்கிறார்களா? என்று கேட்கின்றோம் அந்தப்படிக்கு இல்லாத “தலைவர் ஒரு கூட்டம் முட்டாள்களையும், கூலிகளையும், காலிகளையும் பேராசைப் பிணங்களையும் தங்கள் கூட சேர்த்துக் கொண்டு சதா சர்வகாலம் நாட்டில் கலவரம் செய்து கொண்டு வருவதில் லாபம் என்ன? என்றும், இந்த முறையை அனுசரித்து வந்ததின் பயனாய் இதுவரை காங்கிரசாகட்டும், பார்ப்பனர்களாகட்டும் அடைந்த
பயன் என்ன வென்றும் கேட்கின்றோம்
காந்தி - ஆச்சாமியார் அஞ்ஞாதவாசம் இன்றைய காங்கிரசின் நிலைமைக்கும், காங்கிரஸ்காரர்கள் நிலைமைக்கும், அதன் கொள்கையின் நிலைமைக்கும் தோழர்கள் காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாரும் அஞ்ஞாத வாசம் செய்ய நேரிட்டதே உண்மையாய் நேரிடவில்லை என்று சொல்லுவதானாலும் அந்தப்படி
குடி அரசு - 1935 (2) 426
விலகிக் கொண்டதாக வேஷம் போட்டாக வேண்டிய நிலைமையாவது ஏற்பட்டு விட்டதே அது ஒன்றே போதாதா? என்று கேட்கிறோம்
தோழர் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட்டேன் என்று சொல்லியும், காங்கிரசில் தான் 4 அணா மெம்பராகக் கூட இருக்கவில்லை என்று சொல்லியும், விட்டு விலகிக்கொண்ட பின்பும் காந்தியார் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்கவும், அவர் 'பெருமையை' காலக்ஷேமம் செய்து ஆள் சேர்க்கவுமான காரியம் செய்து காங்கிரஸ் பிழைக்க வேண்டியிருக்கும் நிலைமையேஅதனுடையசாவு குறித்தஅறிகுறிபோதாதாஎன்றும் கேட்கின்றோம்.
ஜஸ்டிஸ் கட்சியார் ஜாதி மத பேதத்தையும், ஏழை பணக்காரத் தன்மையையும், எடுத்துக் காட்டி ஓட்டுப் பெறுவதில் என்ன தப்பு? என்று கேட்கின்றோம்
இல்லாத ஜாதி மத பேதத்தையும், இல்லாத ஏழை பணக்கார பேதத்தையும் அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்களா?
அல்லது இன்றுள்ள ஜாதி மத பேதமும், ஏழை பணக்காரத் தன்மையும் இப்படியே எஞ்ஞான்றும் இருக்க வேண்டுமா? இவை ஒழிக்கப்பட வேண்டாமா? என்று கேட்கின்றோம்
காங்கிரசுக்காரர்கள் அவைகளைப் பற்றி பேசக்கூடாது என்பதி னாலேயே அவைகளை திருட்டுத்தனமாய் நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்
என்பது தானே அருத்தம்
செருப்பு ஆண்டால் என்ன? பூட்ஸ் ஆண்டால் என்ன?
இந்த தேசத்தை யார் ஆண்டால் என்ன? ஒரு காலத்தில் ஒரு ஜோடி செருப்பு சிம்மாசனத்தில் இருந்து கொண்டு ஆண்ட ராஜ்ஜியம் என்றுதானே
இந்நாட்டுக்குப் பெயர் இருந்து கொண்டு வருகிறது. அதற்கு ஆதாரமும் காட்டப்படுகிறதே.
செருப்பு ஆட்சியின் கீழ் குடிகளாய் இருந்தவர்களின் பரம்பரையர்கள் தானே இந்தியர்களாகிய நாம்? அப்படி இருக்கும்போது யார் ஆண்டால். என்ன? எந்த பூட்ஸ் ஆண்டால் என்ன?
ஜாதி பேதமும் ஏழை பணக்கார பேதமும் ஒழிந்துவிட்டால் தர்ம ராஜ்ஜியம் என்பதற்கு அப்புறம் வேறு என்ன வேண்டும் என்று தோழர். சத்தியமூர்த்தியாரைக் கேட்கின்றோம் அவை ஒழிந்தால் தங்கள் ஜாதிக்கு மதிப்புப் போய்விடும் என்பதோடு தங்கள் ஜாதிக்குப் பணம் கொடுக்கும் முட்டாள் பணக்காரன் போய்விடுவான் என்கின்ற பயமா? என்று கேட்கின்றோம்
வரியும் சம்பளமும் குறைய வேண்டுமானால் ஜாதி பேதமும் ஏழை பணக்காரத் தன்மையும் ஒழிந்தால் ஒழிய கண்டிப்பாய் முடியவே முடியாது
427 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
என்பது நமது அபிப்பிராயம். ஆதலால் தான் சுயமரியாதைக்காரர் திட்டத்திலும், ஜஸ்டிஸ்காரர் திட்டத்திலும் ஜாதி பேதமும் ஏழை பணக்காரத் தன்மையும் ஒழிய வேண்டும் என்பது தலை சிறந்து விளங்குகிறது
ஜஸ்டிஸ் கட்சி இதுவரை என்ன செய்தது? என்று கேட்கின்றார்.
மனித சமூகத்தில் ஜாதி முறையில் ஒரு பெரிய புரட்சியை உண்டாக்கி விடவில்லையா?
இந்தியா தோன்றிய இவ்வளவு காலத்துக்கு காங்கிரஸ் தோன்றிய இவ்வளவு காலத்திற்கு வேறு யார் இந்த மாதிரியாக ஒரு புரட்சியைச் செய்தார்கள் என்று கேட்கின்றோம்.
காந்தியாரும் பறையன் தப்புக் கொட்டி ஆக வேண்டும் சக்கிலி செருப்பு தைத்துத்தான் ஆக வேண்டும், அதற்காகத்தான் நான் சுயராஜ்ஜியம் கேட்கின்றேன் என்று தானே சொன்னார்.
ஜஸ்டிஸார் செய்த வேலை
ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் பறையனும் சக்கிலியும் குரு (உபாத்தியாயர்) ஆகலாம், கலக்டர் (க்ஷத்திரியன்) ஆகலாம், பணக்காரன் (வைசியன்) ஆகலாம், மந்திரி ஆகலாம் எதுவும் ஆகலாம் என்றும்,
பிராமணன் மாடு மேய்க்கலாம், பிணம் அறுக்கலாம், தாசி, வேசி, மாமா ஆகலாம் என்றும் செய்தார்களே. இவைகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் மக்களுக்கும் வெறுப்பாய் அலட்சியமாய் காணலாம். ஆனால் சூத்திரன் என்ற தலைப்பின் கீழும் பறையன் என்ற தலைப்பின் கீழும் சட்டப்படி மதப்படி வருபவர் களுக்கு இதைவிட வேறு என்ன நன்மை ஜஸ்டிஸ் கட்சி செய்ய வேண்டும்? இதைவிட அசாத்தியமான காரியம் இதுவரை இந்திய நாட்டில் யார் செய்து அனுபவத்தில் கொண்டு வந்தார்கள் என்று கேட்கின்றோம்
அதிக சம்பளம் ஏற்படுத்தினது யார்?
ஜஸ்டிஸ் கட்சியார் இல்லாதிருந்தால் இன்று காங்கிரசில் இத்தனை பார்ப்பனரல்லாதாராவது இருக்க முடியுமாஎன்கின்ற கேள்வி கேட்பதோடு, பார்ப்பனரல்லாதார்களில் 3-ம் தரம், 4-ம் தரம் ஆட்களும் கழிக்கப்பட்ட ஆட்களும் காங்கிரசில் மூதல் தர ஆளுக்கு சரி சமமாகவும் முடியுமா? என்றும் கேட்கின்றோம்
ஜஸ்டிஸ் க்ஷி சம்பளம் அதிகம் வாங்குகிறார்கள் என்று பொறாமைப் படுகிறார் நமது சத்தியமூர்த்தியார்.
இது காங்கிரசுக்காரர்கள் செய்த அக்கிரமமே ஒழிய ஜஸ்டிஸ் செய்த
அக்கிரமமல்ல.
குடி அரசு - 1935 (2) 428
காங்கிரஸ்காரர்கள் சமர்ப்பித்த 19 (னைன்டீன் மிமோராண்டம்) பேர் கோரிக்கைப்படி மிண்டோ மார்லி சீர்திருத்தத் திட்டப்படி வாங்கப்படும் சம்பளமே ஒழிய காங்கிரஸ்காரர்களின் தீர்மானப்படி வாங்குகிற சம்பளமே ஒழிய, இதுவரை காங்கிரஸ் தலைவரும், காரியதரிசிகளும் வாங்கி வந்த சம்பளம் தானே ஒழிய ஜஸ்டிஸ் கட்சியார் ஏற்படுத்திக் கொண்டதல்ல என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்
காங்கிரசுக்காரர்கள் ஒரு கதர் காரியதரிசிக்கு B 200-300 ரூ. வீதம் சம்பளம் கொடுக்கவில்லையா? ஏழைகளுக்கு நாள் ஒன்றுக்கு 8 காசு வரும்படி உள்ள காரியத்துக்கு B 200, 300 ரூ. மேற்பார்வை ஆட்கள் வாங்கினால் மந்திரிகள் 3000, 4000 வாங்குவது அதிகமா? என்று கேட்கின்றோம்
ராணுவச் செலவுக்கு யார் பொறுப்பு?
% பாகம் ராணுவச் செலவுக்கு போகிறது என்று பிரலாபிக்கிறார். இந்த நிலைமை காங்கிரஸ் ஏற்பட்டு அது பொருப்பில்லாமல் பாமர மக்களையும் கூலிகளையும் தூண்டிவிட்டு தொல்லை விளைவித்ததின் பயனாய் பாதுகாப்புக்காக ஏற்படுத்த வேண்டியதாய் விட்டது என்று
சர்க்கார் சொல்லுகிறார்களே இதை சத்தியமூர்த்தியார் ஆக்ஷபிக்கிறாரா என்று கேட்கின்றோம்
இவர் ஆட்சேபித்தால் மற்றொரு காங்கிரஸ் தலைவர் தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் அவர்கள் ' எங்களுக்கு பயந்து தான். அரசாங்கம் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டது. காங்கிரசானது அரசாங்கத்தை நடுங்கச் செய்துவிட்டது” என்று சொல்லுகிறாரே இவர்கள் இருவரில் யார் புத்திசாலி என்று கண்டுபிடிக்க முடிகிறதா? என்று கேட்கின்றோம் ஆகவே எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதும், 500 கெஜ ஆழத்தில் புதைப்பதும் தங்கள் கொள்கையாய் கொண்ட சத்தியமூர்த்தி கூட்டத்தாரிடத்திலும், அவர்களது கூலிகளிடத்திலும் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்
குடி அரசு - தலையங்கம் - 08.12.1935
499 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்
சமீபத்தில் நடக்கப்போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப்பிரசாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரசாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும். தம்முடைய பிரசாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப்பிரசாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரணமென்ன? காரணம்
சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய ரிப்போர்ட்டு'களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள். அந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டுபண்ணியது அவர்களுடைய சுயமரியாதைக்கும், கெளரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றிபெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசிகளான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம். சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில்,
குடி அரசு - 1935 (2) 430
தீர்மானம் 'வாப்பீஸ்' வாங்கிக்கொள்ளப்பட்டது. பின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தி யோகஸ்தர்களுடைய 'ரிப்போர்ட்'டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள். இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது; காங்கிரஸ் காரர்கள்தான். சட்டசபையில் இதை விவாதித்து ரத்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக்கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான. விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம் படையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி “ஓட்டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக்கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றி விடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ் நாட்டின் விவசாய விருத்திக்குத் கற்றுண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேகபலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம்! இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப்போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.
*விடுதலை'
குடி அரசு - மறு பிரசுரம் - 08.12.1935
431 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
யொன் விழாப் புரட்டு
1. காங்கிரஸ் லக்ஷ்யம் என்ன? கலப்பற்ற பூரண சுயராஜ்யம்
2. அது வந்துவிட்டதா? இல்லை. நிழல்கூடக் காணப்படவில்லை சுயராஜ்ய நிதிதான் கரைந்தது.
3. ஆயின், பொன்விழாக் கொண்டாடுவதின் மர்மம் என்ன? தேச மக்களை மயக்கவே. காங்கிரஸ் மதிப்புக் குறைகிறது. பார்ப்பனச் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்க வேண்டாமா?
4. ஆகவே பொன்விழாக் கொண்டாடப் பார்ப்பனர் சூழ்ச்சி செய்கிறார்கள்.
தென்னாட்டுப் பெருங்குடி மக்களே! ஏமாந்து போக வேண்டாம்.
உஷார்! உஷார்!! உஷார்!!!
குடி அரசு - பெட்டிச் செய்தி - 15.12.1935
குடி அரசு - 1935 (2) 432.
சத்தியமூர்த்திக்கு சனியன் பிடித்தது சேச்சே இல்லை
- சித்திரபுத்திரன்
தோழர் சத்தியமூர்த்தியார் காங்கிரஸ் தலைவரானது முதல் தமிழ்நாட்டில் காங்கிரசின் யோக்கியதை மணல் வீடு சரிவதுபோல் சரிந்து வருவது ஒருபுறமிருக்க, சில புது மதமாற்றக்காரர்கள் அதாவது புதிதாய் காங்கிரசில் இருந்து வருபவர்கள் சத்தியமூர்த்தியாரைத் தலைவராய்க் கொள்ளவும், அவரைத் தலைவர் என்று வாயில் சொல்லவும் இஷ்டப் படாமல் தயங்குவதாலும், அய்யர், அய்யங்கார் ஜாதி உணர்ச்சியால், பல அய்யங்கார்கள் சத்தியமூர்த்தி அய்யர் தலைமை ஸ்தானத்தைப் பற்றி பொறாமைப்பட்டு முணுமுணுப்பதாலும், காங்கிரசில் ஏற்கனவே இருந்து வரும் தோழர்கள் சாமி வெங்கிடாசலம் செட்டியார், முத்துரங்க முதலியார், திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் போன்றவர்கள் சத்தியமூர்த்தியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளியில் தலைநீட்ட வெட்கப்படுவதாலும், தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் சிறிதும் அடக்கம் ஒடுக்கம் இல்லாமல் காங்கிரசின் உத்தியோக ஆசையையும், பதவி ஆசையையும் வெட்ட வெளிச்சமாய் வெளியில் காட்டி காங்கிரசின் கொள்கையை சந்தி சிரிக்க வைத்து விட்டதாலும், தான் மந்திரி பதவி வகிக்க வேண்டும் என்பதாலும் தானேதான் முதல் மந்திரி பதவி வகித்துத் தீர வேண்டும் என்று சொல்லுவ தாலும், தோழர்கள் சி.ஆர். ரெட்டி, டாக்டர் சுப்பராயன், டி.எ. ராமலிங்கம் செட்டியார் முதலியவர்களும் முதல் மந்திரி வேலை தங்களுக்கே வேண்டும் என்றும் தனித்தனியாய் இப்போதே வாக்குறுதி கேட்பதாலும், இவ்வளவு சனியனும் ஒன்றாய் சேர்ந்ததோடு 'புழுத்ததின் மீது நாய் விட்டை இட்டது'' என்பதுபோல் நமது தொட்டது தொலங்காப் பிரபு தோழர். ஸ்ரீனிவாசய்யங்காருக்கு இந்த தடவை காங்கிரசுக்கு மந்திரி வேலை கிடைத்துவிடக் கூடும் என்கின்ற நம்பிக்கை உண்டாகி, தான் ஏன். அப்பதவிக்கு வரக் கூடாது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டதாலும், அவர் தனது சொந்தத்தில் இருந்து நன்றாய்ப் பணம் செலவு செய்வார் என்கின்ற எண்ணத்தினால் பழய அவரது கூலிகள் ஸ்ரீனிவாசய்யங்கார் தலைவராய் வந்தால் மூன் அரித்துத் தின்னது போல் இப்பவும் அரித்துத்
433 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தின்ன ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படும் என்று கருதுவதாலும், தோழர் ஸ்ரீனிவாசய்யங்காருக்கு ஒரு யோகம் “சுக்கிர திசை” அடிக்கப் போகிறபடியால் நமது தோழர் சத்தியமூர்த்தியாருக்கு “சனிதிசை'' எட்டிப்பார்க்கிறது
இந்த சமயம் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் அய்யர்கள் பலம் இல்லை எல்லாம் அய்யங்கார்கள் பலமாகவே போய்விட்டது. பத்திரிக்கைகளும் அய்யங்கார் பலமாகவே ஆகிவிட்டது. அதாவது தோழர்கள் கே. கனிவாசய்யங்கார், சி.ஆர். சீனிவாசய்யங்கார், கே. சந்தானமய்யங்கார் ஆகியவர்களே பத்திராதிபர்களாக இருக்கிறார்கள். வேறு ஆட்கள் பத்திராதிபர்களாக இருக்கும் பத்திரிக்கைகள் இருந்தாலும் அவற்றின் நஷ்ட ஈடுகளுக்கும், நடப்பு ஈடுகளுக்கும் அய்யங்கார் உதவியும், அய்யங்கார்கள் கிராண்டும் தான் தேவையாயிருக்கிறது ஆகவே இந்த தடவை சீனிவாசய்யங்கார் உறைத்து உறுதியாய் நின்றுவிட்டால் மூர்த்தியார் நிலைமை அதோ கதிதான்.
ஐயோபாவம்.மூர்த்தியாரின் நிலைமைக்கு நாம் மிகவும்இரங்குகிறோம்
“நல்ல சமயத்தில்” இம்மாதிரி ஆனது மிகவும் பரிதபிக்கத்தக்க விஷயமாகும்.
எப்பொழுதும் இந்த அய்யங்கார் பார்ப்பனர்கள் ஆழம் பார்ப்பதற்கு மாத்திரம் சத்தியமூர்த்தியாரை விட்டுப் பார்க்கச் செய்வதும், ஒன்றும் அபாயமில்லை என்று தெரிந்தால் பிறகு அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு தாங்கள் அனுபவிப்பதுமாகவே செய்து வந்திருக்கிறார்கள். இவர்கள் என்னதான் செய்தாலும் மூர்த்தியார், மிக நல்லவர். இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ள மாட்டார்.
ஏன் என்றால் கோபித்துக் கொண்டால் அப்புறம் எங்காவது போய் ஒண்டுவதற்கு ஆவது இடம் வேண்டுமே. ஆதலால் “பூமாதேவி” பொறுமையைவிட மூர்த்தியார் பொறுமை மிகவும் ஆத்ம சக்தி கொண்ட பொறுமை ஆகும்
நமது மூர்த்தியார் ஒரு எக்கிறிமெண்டு செய்து கொண்டு அதாவது சீனிவாசய்யங்கார் முதல் மந்திரியாக வந்தால் அவரிடம் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் இருக்குமானால், தனக்கு முதல் மந்திரி காரியதரிசி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து மற்றதையெல்லாம் உடனே மறந்துவிட்டு இன்று சத்தியமூர்த்தியார் தலைமையில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை சீனிவாசய்யங்காருக்கு தன் கையாலேயே கழட்டி சாத்திவிடுவார்.
இந்த உத்தியோகத்தினால் குறைந்தது மந்திரி சம்பளத்துக்கு கம்மியில்லாத படியாவது சரிப்படுத்திக் கொள்ளக்கூடிய சக்தியும்
குடி அரசு - 1935 (2) 434
தைரியமும் அவருக்கு உண்டு. அவர் மூலமாகவே தான், முதல் மந்திரி யாரிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் பேச வேண்டும் என்று ஒரு ஜி.ஒ
பிறப்பித்து விடுவதாய் இருந்தால் பிறகு நம் சத்தியமூர்த்தியாருக்கு எவ்வித அதிருப்தியும் இருக்காது. அவர் வீட்டிலும் மனக்கோணல் இருக்காது
ஆனால் மற்றொரு விஷயம். நமது அய்யங்கார் இவ்வளவோடு நிற்பாரா என்பது ஒரு பெரிய பிரச்சினையாகும் சென்னை மாகாணத்துக்கு மாத்திரம் காங்கிரஸ் தலைவராய் இருப்பது அவருடைய கவுரதைக்கு பொருத்தமானதல்லவே
ஏனெனில் அவர் ஒரு காலத்தில் சோகத்தில் நடந்த அகில இந்திய காங்கிரசுக்கு தலைமை வகித்த அகில இந்தியத் தலைவராயிற்றே! ராஜேந்திர பிரசாத்துக்குக் கீழாக இருக்க மனம் வருமா? என்பது நியாயமாகவே யோசிக்கத் தகுந்த விஷயமாகும். ஆதலால் தற்கால சாந்தியாகவாவது அகில இந்திய காங்கிரசில் ஏதாவது ஒரு பெரிய ஸ்தானம் வேண்டியிருக்கிறது
இது சமயம் ஒரு தகுந்த வேலையும் காலி இருக்கிறது. அதற்குத் தகுந்த ஆள் இல்லாமல் காங்கிரஸ் தலைவர்களும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதென்னவென்றால் அதுதான் லக்னோ காங்கிரசுக்கு தலைவர் கிடைக்காமல் திண்டாடும் காரியம். அதற்குத் தோழர் சீனிவாசய்யங்காரை நியமித்து எல்லா இந்திய காங்கிரசுக்கு தலைவராக்குவதாய் இருந்தால், தமிழ்நாட்டில் - ஏன் சென்னை மாகாணத்தில் சட்டசபை தேர்தல்களுக்கு ஏற்படும் செலவுகளையும் ஒப்புக் கொள்ளக்கூடும். ஏனெனில் 5 வருஷம் மந்திரி வேலை பார்த்தால் வருஷம் 50 ஆயிரம் வீதம் ரூ. 250000 கிடைக்கும். இதில் வட்டிக்கு 50000 தள்ளிவிட்டாலும், 2 லக்ஷ ரூபாய் காங்கிரசுக்கு கொடுத்துவிடுவார். வக்கீல் வேலைக்கு மகன் இருக்கிறார். தனியாகவும் யோசனை சொல்ல சவுகரியமிருக்கிறது. ஹைக்கோர்ட் ஜட்ஜிகளில் பார்ப்பன ஜட்ஜிகளாவது சலுகை காட்ட நியாயமிருக்கிறது ஆதலால் அந்த வரும்படியும் பிரமாதமாய் எதுவும் குறைந்துவிடாது
எனவே இப்போது தோழர்கள் பாஷ்யம், சி.ஆர். சீனிவாசய்யங்கார் விருந்து வைத்து அய்யங்காரை அழைத்ததிலும் தோழர்கள் கல்யாணசுந்திர முதலியார், முத்துரங்க முதலியார், சாமி வெங்கிடாசலம், அப்துல் அமீத்கான் முதலிய பக்தர்கள் காங்கிரசுக்கு வரும்படி அழைத்ததிலும், தோழர் ஸ்ரீமான் அய்யங்கார் தேசம் விரும்பினால் வருகிறேன் என்று சொன்னதிலும் எவ்வித தவறுதலும் இல்லை. ஸ்ரீமானை தேசம் விரும்புவதிலும் எவ்வித ஆக்ஷபணையும் இல்லை. அதைப் பற்றியும் இப்போதே “ஜோசியம்” கூறுவோம்
ஏனெனில் தேசம் என்றால் தெரியாதா?
438. QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
சக்கரைச் செட்டியார், குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை,
எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர், என்.எஸ். வரதாச்சாரியார், உபயதுல்லா. சாயபு, அமீத்கான் சாயபு, செல்வபதி செட்டியார் முதலாகிய பல தடவை
சிறைச் சென்றுவிட்ட தேச பக்தர்கள் தானே. ஆகவே இவர்கள் அழைப்பு வெறும் அழைப்பு மாத்திரம் இருக்காது. மேளதாளத்துடனும், சதிர்ப் பாட்டுக் கச்சேரியுடனும் தான் இருக்கும்.
எனவே இதன் பயனாய் இனி தமிழ்நாட்டில் புதியதோர் சகாப்தம், புதியதோர் உணர்ச்சி, புதியதோர் எழுச்சி (யாருக்கு? என்று கேட்காதீர்கள்) உண்டாக்கப்படுவதோடு தேசபக்தி விண்ணப்பங்கள் சர்வீஸ் கமிஷனுக்கு எஸ்.எஸ்.எல்.சி. விண்ணப்பங்கள் போல் பறப்பதுடன் காங்கிரசில் வந்து ஞானஸ்நானம் பெற புதிய புதிய ஆட்களும் வந்து சேரக் கூடும்
கடைசியாய் நாம் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது அய்யங்கார் ஜாதகம் ஒன்று இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் மேலே அது ஜோசிய ஜாதகமல்ல. அனுபவ ஜாதகம் என்பது தான்.
குடி அரசு - கட்டுரை - 15.12.1935
குடி அரசு - 1935 (2) 436
காங்கிரஸ் பொது ஸ்தாபனமா?
தங்களுடைய சொந்த யோக்கியதையினால் பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற யோக்கியதை இல்லாதவர்களும், மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாவதற்கு தங்கள் சொந்தப் பொறுப்பில் எவ்விதத் தகுதியும் இல்லாதவர்களும் பாமர மக்களை ஏமாற்றுவதற்கு ஆக காங்கிரஸ் என்றும், காந்தியென்றும் சொல்லுவதோடு அவர்களுக்குப் புரியாத விஷயங் களையும், கொள்கைகளையும் சொல்லி மோசம் செய்கிறார்கள். காங்கிரசின் யோக்கியதை என்ன காந்தியாரின் நிலைமைதான் என்ன என்பவைகளை பாமர மக்களுக்கு எடுத்துச்சொல்ல ஆசைப்படுகிறோம்
காங்கிரசு என்பது இந்திய 35 கோடி மக்களுக்கும், இந்து முஸ்லீம் கிறிஸ்தவ புத்த முதலிய எல்லா மதக்காரர்களுக்கும், பார்ப்பனர் முதல் பறையன் என்பவர் வரை சகல ஜாதியாருக்கும் பொதுவானதென்றும், பிரதிநிதித்துவம் பொருந்தியதென்றும் சொல்லுகிறார்கள்.
எடுத்ததற்கெல்லாம் காங்கிரஸ்தான் பெரிய ஸ்தாபனம் என்றும், காங்கிரஸ்தான் அகில இந்திய ஸ்தாபனம் என்றும், அதற்குத்தான். பிரதிநிதித்துவத் தன்மை உண்டென்றும், மற்றவர்கள் எல்லாம் பொறுப்பற்றவர்கள் என்றும் சொல்லுகிறார்கள். அப்படியானால் இந்திய நாட்டில் உள்ள பல்வேறு மதக்காரர்களிலும் பல்வேறு ஜாதி வகுப்புக் கார்களிலும் காங்கிரசை யார் ஒப்புக்கொள்ளுகிறார்கள்? யார் மதிக்கிறார்கள்? என்று யாராவது எந்த காங்கிரஸ் வாதியாவது எடுத்துச்சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம்
இந்தியாவில் உள்ள 8 கோடி முஸ்லீம்களுக்கு ஆக ஏற்பட்டிருக்கும் அதுவும் 1907 முதல் ஏற்பட்டிருக்கும் முஸ்லீம் லீக் காங்கிரஸை ஒப்புக் கொள்கிறதா? என்று கேட்கின்றோம்
6 கோடி தீண்டப்படாதார் என்பவர்களுக்கு ஆக ஏற்பட்ட தீண்டாதார் சபை ஒத்துக்கொள்ளுகிறதா? என்று கேட்கின்றோம்.
22 கோடி இந்துக்களுக்கு ஆக ஏற்பட்ட இந்து மகாசபை ஒப்புக் கொள்ளுகிறதா?
இந்து மதத்தையும், வேதத்தையும், சாஸ்திரத்தையும் ஆதாரமாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட சனாதன தர்ம சபையாராவது வருணாச்சிரம தர்ம சபையாராவது ஒப்புக் கொள்ளுகிறார்களா?
437 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஒரு கோடி கிறிஸ்தவர்களுக்கு ஆக ஏற்பட்ட அகில இந்திய கிறிஸ்தவ சங்கத்தார் ஒப்புக் கொள்ளுகிறார்களா?
சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய மாகாணங்களில் பார்ப்பனரல்லாதார்களுக்கு ஆக ஏற்பட்ட பார்ப்பனரல்லாதார் சங்கத்தார்
ஏற்றுக் கொள்ளுகிறார்களா?
பார்ப்பனர்களுக்கு ஆக என்று தனியாக ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் ஆரிய மகாஜன சபையார் ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்றும் கேட்கின்றோம்.
இனி, தனித்தனியாய்ப் பார்த்தால் படையாச்சி மகாஜன சபை, நாடார் மகாஜன சபை, வேளாளர் மகாஜன சபை, தேவேந்திர வேளாளர் சபை, அருந்ததியர் சபை, குறவர் சபை, மறவர் சபை, நாயுடு சபை, ரெட்டி மகாஜன சபை, யாதவர் மகாஜன சபை, செங்குந்தர் மகாஜன சபை, விஸ்வப் பிராமண மகாஜன சபை, செளராஷ்டிர பிராமண மகாஜன சபை, தேவாங்கப் பிராமண மகாஜன சபை, சாலியப் பிராமண மகாஜன சபை, குலாலப் பிராமண மகா சபையார் ஒப்புக் கொள்ளுகிறார்களா? ஆகவே காங்கிரஸ் இந்திய மக்களுக்கு பொது என்றால் இந்தியாவில் காங்கிரசை ஒப்புக் கொள்ளுகின்றவர்களோ ஆதரிக்கின்றவர்களோ யார். இருக்கிறார்கள்?
பணக்காரர்கள் விளம்பரத்துக்கும், பதவி ஆசைக்கும் ஆசைப்படும் காலிகளின் வசவுக்கு பயந்தும் காங்கிரசுக்குப் பணம் கொடுக்கிறார்கள்.
சிலர் நாலணாவும் கொடுத்து விடுகிறார்கள். பசிக்கு பயந்த ஆட்கள் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு காலித்தனமாய் கூப்பாடு போடுகிறார்கள். எந்த விதத்திலும் பொறுப்பும், கவலையும் இல்லாதவன் தன்னை எப்படி வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ள இடம் கொடுத்து விடுகிறது இதனால் காங்கிரசு, காங்கிரசு என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம் கூப்பாடு போடவும், மற்றொரு கூட்டம் அதை ஆதரிக்கவும் இடம் ஏற்பட்டதே அல்லாமல், உண்மையாய் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பு என்ன? கொள்கை என்ன? என்பதை அறிவாளிகள் சிந்திப்பார்களாக.
சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரைப் பற்றி பார்ப்பனர்கள் செய்த விஷமங்களுக்கு ஏதாவது எல்லை இருந்ததா? முதலாவது அவரது ஜாதித் தொழிலைப் பற்றி படம் போட்டு பரிகாசம் செய்வது முதல் கொண்டு எந்த
துறையில் பார்ப்பனர்கள் அவரை சும்மா விட்டார்கள்.
பனக்கால் ராஜா உயிரோடு இருந்த வரையில் அவரைப் பற்றி செய்த அயோக்கியப் பிரசாரத்துக்கு அளவே இல்லை.
அதற்கப்புறம் இப்போது பொப்பிலி ராஜாவைப் பற்றி இன்ன மாதிரிதான் என்பதாக இல்லாமல் பத்திரிகைகளில் ஆரிய பாஷையில்
குடி அரசு - 1935 (2) 438
உள்ள வார்த்தைகள் எல்லாம் கொட்டிக் கலந்தாய்விட்டது. மேடைகளில் “ஹரிஜன பாஷையில் உள்ள வார்த்தைகள் எல்லாம் கொட்டிக் கலந்தாய் விட்டது. மற்றும் தோழர் ராமசாமியைத்தான் விட்டார்களா? தோழர் வரதராஜுலுவைத்தான் விட்டார்களா?
இவ்வளவு கேவலமான காரியங்கள் செய்வதோடல்லாமல் நாட்டின் அரசியல் நலத்துக்கும், மக்களின் மமூக நலத்துக்கும், எவ்வளவு தடையாகவும், முட்டுக்கட்டையாகவும் இருக்க வேண்டுமோ அவ்வளவு முட்டுக் கட்டையாய் இருந்து மனித சமூகத்தை முன்னேற வொட்டாமல் தடுத்து பாழ்படுத்தி வருகின்றார்கள். இவைகளை காங்கிரஸ்காரர்கள் என்னும் பார்ப்பனர்களும், அவர்களது அடிமைகளும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் ஒன்று கேட்கின்றோம்
காங்கிரஸ்காரர்கள் சிறப்பாக தென் இந்திய பார்ப்பனர்கள் பொறுப்பற்று மேடைகளில் பேசிக் கத்தி கூப்பாடு போட்டது தவிர இந்த 20, 30 வருஷ காலமாக ஏதாவது ஒரு சட்டசபையில் சமூக சம்மந்தமான. ஏதாவது ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார்களா? என்று கேட்பதோடு சமூக சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட மசோதா எதையாவது ஆக்ஷேபிக் காமல் விட்டிருக்கிறார்களா என்றும் கேட்கின்றோம்
மிக மிகச் சாதாரணமான மசோதா அதாவது விபசாரித்தனத்துக்கு ஆகப் பெண்களை கடவுள் பேரால் லைசென்சு கொடுப்பதாகிய முத்திரை போடுவது அல்லது பாஸ் (பொட்டுக்) கட்டுவது என்கின்ற இழிவான. காரியத்தை நிறுத்துவதற்கு ஆக கொண்டு வரப்பட்ட ஒரு மசோதாவை
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரே இன்று தலைவராய் இருப்பவரே
எதிர்த்தார் என்றால், காங்கிரசின் யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? என்று கேட்கின்றோம்
காங்கிரசின் கவலை எல்லாம் மந்திரி பதவியைக் கைப்பற்றி, சம்பளம் வாங்க வேண்டும். அரசியலை அக்கிரகாரமாக்க வேண்டும் என்பதேயல்லாமல் வேறு அரசியலிலோ சமுதாய இயலிலோ அவர்களுக்கு உள்ள கொள்கை என்ன என்று கேட்கின்றோம்
காங்கிரஸ்காரர்கள் டாக்டர் சுப்பராயனை மந்திரியாக்கினார்கள்; அவர் சமுதாயத் துறையில் சற்றுத் தீவிர கொள்கையைக் காட்டினார்; அவரை ஒழிக்கச் சூழ்ச்சி செய்தார்கள். பிறகு முனிசாமி நாயுடுவை மந்திரியாக்கப் பிரயத்தனப்பட்டார்கள். அவர் மந்திரி ஆகி பார்ப்பனர் களுக்கு உள் ஆளாயிருந்தார். ஜஸ்டிஸ் கட்சியாரால் ஒழிக்கப்பட வேண்டியவரானார். எப்படி இருந்தாலும் இரு மந்திரிக்கும் காங்கரஸ் காலாடிகளுக்கு பயந்து கப்பம் கட்டாமல் மாத்திரம் இருக்க முடியவில்லை.
439 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இப்போது பொப்பிலி ராஜா மந்திரியானார்; அவர் காங்கிரஸ் வாயாடிகளுக்கு கப்பம் கட்டுவதில்லை. பார்ப்பனர்களுக்கு உள் ஆளாகவும் இருப்பதில்லை. அவரை பார்ப்பனர்கள் ஒழிக்க வேண்டும் என்பதில் முனைந்து இருக்கிறார்கள். ஆகவே அரசியல் விஷயமாய் காங்கிரஸ்காரர்களுக்கு இதைத் தவிர வேறு என்ன கொள்கையோ, வேலையோ இருந்து வருகிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். வேறு வேலை இருக்குமானால் அதை சென்னை சட்டசபையில் காட்ட முடியாவிட்டாலும், இந்திய சட்டசபையில் காட்டுவதற்கு எவ்வளவோ சந்தர்ப்பமும் பலமும் இருந்து வருகிறதே, அதைக்கொண்டு என்ன செய்தார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.
அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதற்கு பதிலாக அதை ஆதரித்தார்கள். பண்டிட் மாளவியாவையும், பங்காளிகளையும் பலி கொடுத்து முஸ்லீம்கள் தனித்தொகுதி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை
ஒப்புக் கொண்டு முஸ்லீம் தயவை சம்பாதித்தார்கள்?
அப்படியாவது முஸ்லீம் தயவை சம்பாதித்தவர்கள் அசம்பளியில் என்ன செய்ய சக்தி உடையவர்களானார்கள்.
அடக்குமுறைச்சட்டங்கள்அவளச்சட்டங்கள்ஆகியமனிதத்தன்மைக்கு மாறான சட்டங்கள் எல்லாம் புனருத்தாரணம் செய்து புதுப்பிக்கத்தானே.
முடிந்தது
அடக்குமுறைச்சட்டங்கள், அவசரச் சட்டங்கள் ஆகியவை ஒழிப்பதும் சீர்திருத்த சட்டத்தை ஒழிப்பதும் ஆன காரியத்துக்கு ஆகவே இந்திய சட்டசபைக்குப் போனவர்கள் கதி இதுவானால் - இவ்வளவு அவமானமும், கெடுதியும் காங்கிரஸ்காரர்கள் மெஜாரிடியாய் இருக்கும்போதே ஏற்பட்டும், இவைகளைத் தவிர வேறு ஒரு காரியத்தையும் செய்ய முடியாத நிலையில். இருக்கும்படியான அப்பாவப்பட்ட அசம்பளியை விட்டுவிட்டு வரவோ, ராஜினாமா கொடுக்கவோ முடியவில்லையானால், சில காரியங்கள் நம்மிஷ்டப்படி செய்ய முடியாவிட்டாலும், பல காரியங்கள் செய்ய சவுகரியமுள்ளதும், எதிரிகள் உட்கார்ந்து விஷமத்தனம் செய்ய முடியாமல் இருப்பதற்கு சவுகரியம் உள்ளதுமான ஸ்தாபனங்களான மந்திரி பதவிகளை
ஏன் ராஜினாமா செய்யவில்லை என்று இவர்கள் கேட்பதில் ஏதாவது புத்திசாலித்தனமிருக்கிறதா? என்று கேட்கின்றோம்.
சொந்த முறையில் 3 - வது வகுப்பில் பிரயாணம் செய்த அனுபவமும் தகுதியும் உள்ளவர்களே தேசாபிமானத்தின் பேரால் முதல் வகுப்பில், தன் பெண் ஜாதி பிள்ளையுடன் போக ஆசைப்படும் போது, சதா சர்வகாலம்
குடி அரசு - 1935 (2) 440
முதல் 2-ம் வகுப்பிலேயே பாரம்பரியமாக போய் வந்தவர்கள் முதல் வகுப்பில் பிரயாணம் செய்வதைப் பார்த்து ஏன் பொறாமைப்பட வேண்டும் என்று கேட்கின்றோம்
காங்கிரசின் பேரால் தேசாபிமானத்தின் பேரால் அசம்பளிக்குப் போய் காங்கிரஸ் தீர்மானத்துக்கு விரோதமாய் உத்தியோகம் பெற்ற ஒரு வக்கீல் பட்டேல் அவர்கள் வருஷத்தில் 3, 4 மாத வேலைக்கு L5 4000 ரூ வீதம் 12 மாதமும் சம்பளம் வாங்கியிருக்கும் போது, 12 மீ' நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் ராஜாக்கள் பிரபுக்கள் என்பவர்கள் 4000 ரூ சம்பளம் வாங்கினால் எப்படி அதைவிட மோசமான தேசத் துரோகமாகும் என்று கேட்கின்றோம் இப்படியாக பல விதத்திலும் காங்கிரஸ்காரர்களின் நடத்தை இருக்கும்போது காங்கிரசின் யோக்கியதை இருக்கும்போது மற்றவர்களைக் குற்றம் சொல்லுவது எப்படி யோக்கியமான காரியமோ நாணயமான காரியமோ ஆகும் என்று கேட்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 15.12.1935
44 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
வேண்டுகோள்
காங்கிரசுக்கு பல பத்திரிகைகள் இருக்கின்றன. அவைகள் பெரிதும் பார்ப்பனர்களாலும் அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகளாலும் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர்கள் பணமும் காங்கிரஸ் பணமும் அவைகளுக்கு தாராளமாய் உதவப்பட்டு வருகிறது.
ஆதலால் பார்ப்பனரின் வஞ்சம், சூழ்ச்சி, பொய் விஷமம் ஆகியவைகளை மனதார மறைத்து அவர்கள் திருப்திக்கும், கூலிக்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியையும், சமூகத்தையும், அவர்களுக்காக வேலை செய்யும் பத்திரிக்கைகளையும் வைதும், பழி கூறியும் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன.
ஜஸ்டிஸ் கட்சித் திட்டத்தைப் பற்றிப் பழி கூறுவதும், அவர்களால் ஏற்பட்டநன்மைகளை திரித்துக்கூறுவதும், அவர்களுக்கு சம்மந்தமில்லாத காரியத்தைப் பற்றி பழி கூறுவதுமே தொழிலாய்க் கொண்டிருக்கின்றன. பாமர மக்கள் இதையெல்லாம் சுலபமாக நம்பி ஏமாந்து போகிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சிக்கும், பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கும் இன்று
தினசரிப் பத்திரிகை இல்லை. வாரப் பத்திரிக்கைகளும் வெகு சிலவே
ஆதலால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் “குடி அரசு” “விடுதலை” “நகர தூதன்” முதலிய பத்திரிக்கைகளை ஜில்லாக்கள் தோறும் தாராளமாய்ப் பரவும்படி செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.
எலக்ஷன் போது பணம் செலவு செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று தைரியம் கொள்ளுவது 100க்கு 90 ஏமாற்றமாகவே முடியும் பிரசாரத்தின் மூலம் நகத்தில் கிள்ளி எறிய வேண்டிய அற்ப விஷயம் பணத்தின் மூலம் கோடாலி போட்டு வெட்ட வேண்டிய அளவு கஷ்டத்தை உண்டாக்கி விடும். ஆங்காங்குள்ள ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கு பத்திரிக்கை விஷயங்கள் கொயினா மருந்து போல் தோன்றும் எலக்ஷனுக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு செய்வது என்பது 110 டிகிரி உஷ்ண காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல் இருக்கும், தலைவர்களுக்கு இது பிறவிக் குணம்
ஆதலால் மற்ற பார்ப்பனரல்லாத அபிமானிகளாகிய ஆங்காங் குள்ளவர்கள் தான் இவ்விஷயத்தில் கவலை எடுத்து உழைக்க வேண்டும்.
குடி அரசு - 1935 (2) 442
சந்தா சேர்க்கும் விஷயத்தில் வெட்கமோ தாக்ஷண்யமோ பாராமல் அறிமுகமுள்ள ஒவ்வொருவரையும் சந்தா சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
பார்ப்பனர்கள் பண முடிப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு 10 ஆயிரம் 20ஆயிரம் ஒரு லக்ஷம் ரூ. கூட சேர்த்து விடுகிறார்கள்.
நாம் அவர்களை பரிகாசம் செய்வதிலும், பழி கூறுவதிலும், கொடுத்தவனை முட்டாள் என்பதிலும் திருப்தி அடைகிறோம்
நாமும் அதுபோல் பணம் வசூலிக்க இன்று முடியாவிட்டாலும், நமது பத்திரிக்கைகளை படிக்கும்படி கூட செய்யவில்லையானால் நமது சமூகம் விடுதலைக்கும் சுயமரியாதைக்கும் எப்படி தகுதி உடையதாகும்.
ஆதலால் இந்த டிசம்பர் மாதத்தில் ஒரு 1000 சந்தாதாரர்களாவது உயரும்படி செய்ய வேண்டியது அபிமானிகளின் கடமையாகும்
குடி அரசு - வேண்டுகோள் - 15.12.1935
443 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
செட்டிநாடும் ஜஸ்டிஸ் கட்சியும்
பார்ப்பனப் பத்தியிகைகவின் விஷமமும் ஆத்திரமும்
செட்டிநாடு குமாரராஜா அவர்கள் மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சியில்
சேர்த்துக் கொள்ளப்பட்டதைப்பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் விஷமப் பிரசாரம் செய்து மறுபடியும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் கலகம் ஏற்படாதா என்று ஆசைப்படுகின்றன. சில பத்திரிகைகள் பொப்பிலியின் சரணாகதி என்று எழுதின. சில பத்திரிகைகள் பொப்பிலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்
என்று எழுதின.
கடைசியாக சேர்த்துக் கெள்ளப்பட்ட சம்பவத்தை ஒரு பத்திரிகை பொப்பிலியின் தோல்வி என்றும் எழுதியிருக்கிறது. ஏதாவது ஒரு பொதுநலத்தை உத்தேசித்து ஒற்றுமை ஏற்படுங்காலையில் யார் தோற்றார்.
யார் ஜெயித்தார் என்கின்ற பிரச்சினையைப் பற்றிய விஷமங்கள் அவ்வொற்றுமையின் விரோதிகளாலேயே தான் அதிகமாய் ஏற்படும்.
இந்த ஒற்றுமைப் பிரச்சினையானது மாஜி கவர்னர் சர். மகம்மது உஸ்மான் அவர்கள் முயற்சியால் ஏற்பட்டதாகும். அவரது முயற்சிக்கு உள்ள முக்கிய காரணம் இப்போது வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
சர். உஸ்மான் அவர்கள், குமாரராஜாவை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், பழமை விஷயங்கள் சரியோ, தப்போ என்பதைப் பற்றி
யாரும் கவனிக்காமல் மறந்துவிடவேண்டும் என்றும் சொல்லி ஜஸ்டிஸ்
கட்சி பிரமுகர்களையெல்லாம் கேட்டுக் கொண்டார்.
அந்தப்படியே அதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. குமாரராஜா அவர்களும் அக்கூட்டத்துக்கு வந்தார்.
சர். உஸ்மான் அவர்கள் “தேசத்தின் நன்மைக்கு ஆக ஒற்றுமையுடன்
சேர்ந்து வேலை செய்யுங்கள்'' என்றும் சொன்னார்.
அதுபோலவே பொப்பிலி ராஜா அவர்கள் சர். உஸ்மான் அவர்கள் வேண்டுகோளை மதித்து, பழைய சங்கதிகளை மறந்து செட்டிநாடு குமாரராஜா அவர்களை வரவேற்பதோடு அவரது கூட்டுறவை பாராட்டுகிறேன். என்றும் சொன்னார்.
குடி அரசு - 1935 (2) 444
குமாரராஜா அவர்களும் பழைய சங்கதிகளை மறந்து பொப்பிலி ராஜாவின் சினேக உணர்ச்சியை பாராட்டி ஒத்துழைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். இதுதான் ராஜி சடங்கில் காணப்படுகிறது. இதில் யாருக்கு தோல்வி? யாருக்கு வெற்றி? என்று கேட்கின்றோம்
குமாரராஜா ஜஸ்டிஸ் கட்சி கூட்டத்துக்கு வந்த பெருந்தன்மையை உத்தேசித்து அவரைப் பற்றிய ஜஸ்டிஸ் சட்டசபை கக்ஷி 11.12.34-ந் தேதி நடவடிக்கைகளை புஸ்தகத்தில் அடித்து விடுவது என்று பெருந்தன்மையாய் தீர்மானித்துக் கொண்டார்கள். அதுபோலவே ஜஸ்டிஸ் ஆசிரியரும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் ஏதாவது எழுதி இருந்தால் பின் வாங்கிக் கொள்வதாகவும் வருத்தப்படுவ
தாகவும் தெரிவித்திருக்கிறார். இவை எல்லாம் செட்டிநாட்டு குமாரராஜா அவர்கள் துணிந்து வந்துவிட்டதால் பிறகு அவரிடம் மனிதத் தன்மையை காட்டிக் கொள்ளவும், அவரை கெளரவப்படுத்தவும் ஏற்பட்டவைகளாகும். எப்படி இருந்தாலும் குமாரராஜா அவர்கள் சேர்த்துக் கெள்ளப்பட்டதும் கெளரவிக்கப்பட்டதும் எல்லாம் ஒரு பொதுநலத்தை உத்தேசித்தே ஒழிய மற்றபடி யாருடைய சுயநலத்தையும் உத்தேசித்தல்ல என்பது மாத்திரம் உறுதி என்பதை நாம் அழுத்தமாகக் கூறுவோம். இதற்கு ஆக பார்ப்பனப் பத்திரிகைகள் இம்மாதிரி விஷமத்தனமும், ஆத்திரமும் காட்டுவது அவைகளின் அற்ப புத்தியை தெள்ளென விளக்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்
குடி அரசு - துணைத் தலையங்கம - 15.12.1935
445 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தோழர்களே! உஷார்!
பாமர ஜனங்களை மயக்குவதில் மதத்தின் பெயரால், கடவுள் பெயரால், சுவர்க்கத்தின் பெயரால் பட்டப்பகலில் கொள்ளையடிப்பதில் - புதுப்புது மோசடி முறைகளை சிருஷ்டிப்பதில் பார்ப்பனர்களுக்கு இணையானவர்கள் இல்லவே இல்லை. அனாதிகாலமாக ஏமாற்று வித்தையினாலேயே அவர்கள் வயிறு வளர்த்து வருகிறார்கள். வேதங்கள், வேதாகமங்கள், கலைகள் முதலிய யாவும் பார்ப்பனப் புரட்டுப் பிழைப்புக்கு அழியா ஞாபகச் சின்னங்களாகும். மேனாட்டுக் கல்வி மூலம் மக்களின் பொது ஞானம் விருத்தியாகி, சீர்திருத்தக்காரர் முயற்சியினால் பகுத்தறிவு உணர்ச்சி வளர்ந்து அனாசாரங்களும் குருட்டு நம்பிக்கைகளும் ஒழியத் தொடங்கிவிட்டன. புராணக் குப்பைகளையும் தர்ப்பைப் புல்லையும் காட்டி மக்களை ஏமாற்ற முடியாதென்ற நிலைமையும் ஏற்பட்டுவிட்டது பன்னூற்றாண்டு காலமாய் குறுக்கு வளைந்து வேலை செய்யாமல் மோசடி வித்தையினால் வயிறு வளர்த்து வந்த பார்ப்பனர்களுக்கு பிழைப்புக்கு வேறு வழி வேண்டாமா? ஆகவே காங்கிரசைப் பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸே பார்ப்பனர்களின் உடலும் பொருளும்
ஆவியும்; காங்கிரஸே பார்ப்பனர்; பார்ப்பனரே காங்கிரஸ். காங்கிரஸ் இன்றேல் பார்ப்பனர் இல்லை. பார்ப்பனர் இன்றேல் காங்கிரஸ் இல்லை. எனவே பார்ப்பனர் உயிர் வாழ வேண்டுமானால் - செல்வாக்குப் பெற வேண்டுமானால் - தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமனால் காங்கிரஸ் வலுப் பெற்று விளங்க வேண்டியதுதான் - முன்னம் ஆத்ம விடுதலைக்காக - மோட்சத்துக்காக, கடவுளை வணங்க தட்சணை கொடு என்று மக்களை ஏமாற்றிப் பணம் பறித்தார்கள். இப்பொழுதோ தேச விடுதலைக்காக, காங்கிரசைப் போற்று, காணிக்கை போடு என்று ஏமாற்றி வருகிறார்கள்.
வெளிநாடுகளில் நடைபெறும் சுதந்திரப் போர்களையறிந்த நம்மவர்கள் காங்கிரஸ்காரரும், சுதந்திரப் போர் தொடுப்பதாகவே தப்பர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
தேச விடுதலைக்காக காங்கிரஸ்காரர் செய்த முயற்சிகள் எல்லாம் பாழாகி, எந்த சர்க்காரோடு போராடினார்களோ அந்த சர்க்காரே தமக்கு சரணாகதியென்று பட்டவர்த்தனமாகக் கூறி சாத்தான் சர்க்காரின் கீழ் மந்திரி பதவி பெறப் பெரு முயற்சி செய்யப்படுவது கண்டும் நம்மவர்களில்
குடி அரசு - 1935 (2) 446
ஒருசாராருக்கு காங்கிரஸ் மயக்கம் தெளியவில்லை. காங்கிரஸ் மீது ஒரு குருட்டுப் பற்று - மாயப் பாசம் - ஆதாரமற்ற அபிமானம் - ஒரு சாராருக்கு இருந்தே வருகிறது. அந்தக் குருட்டு பக்தியை புதுப்புரட்டுக்களால் வளர்த்து காங்கிரசுக்கு பலம் தேட பார்ப்பன அரசியல்வாதிகள் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்கள். பொன் விழாக் கொண்டாடும் புதிய முறைகளையும் பார்ப்பனத் தலைவர்கள் வகுக்கிறார்கள். அவர்கள் கையாளப் போகும் முறைகள் எல்லாம் பாமர மக்களின் கண்ணில் மண்ணைப் போட்டு ஏமாற்றும் முறைகளாகவே இருக்கின்றன கார்த்திகைக்குப் போட்ட தீபங்களையெல்லாம் அப்படியே எடுத்து வைத்திருந்து டிசம்பர் 28-ந் தேதி மீண்டும் தீபம் போட்டு பொன்விழாவைக் கொண்டாடுங்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தோழர் சத்தியமூர்த்தித் தென்னாட்டு மக்களுக்கு ஆர்டர் கொடுக்கிறார். கார்த்திகை தீபத்துக்கும் தேச விடுதலைக்கும் சம்பந்தமென்ன? கார்த்திகை தீபம் மதத்தின் பெயரால் நடைபெறும் ஒரு ஏமாற்று வித்தை. காங்கிரஸ் பொன் விழாவும் அரசியலின் பெயரால் நடைபெறப் போகும் ஒரு ஏமாற்று வித்தை தானோ! காங்கிரஸ் லக்ஷியம் கைகூடாதிருக்கையில் பொன் விழாக் கொண்டாடுவது மூடத்தனமல்லவா? என்று ஒரு வங்க காங்கிரஸ் தலைவர். ராஜேந்திர பாபுவிடம் கடித மூலம் கேட்டார். ராஜேந்திர பாபு அதற்கு என்ன. பதிலளித்தார் தெரியுமா? “பொன் விழாக் கொண்டாடவில்லை; 50 வருஷம் பூர்த்தி அடையும் இந்த சந்தர்ப்பத்தில் பிரசாரம் செய்து காங்கிரஸ் பலத்தை விருத்தி செய்யவே முயல்கிறோம்'” என்று பதிலளித்திருக்கிறார். பொன் விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி தலைவர்களுக்குள்ளேயே அபிப்பிராய பேதம் இருந்து வருகையில் குட்டித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதின் மர்மம் என்ன? பொன் விழாவின் பெயரால் பொது மக்கள் பணத்தைப் பாழக்க அநேக ஸ்தல ஸ்தாபனங்கள் தீர்மானித் திருப்பது நியாயமாகுமா? நகரசபை, ஜில்லா போர்டு மண்டபங்களிலும் மற்றும் பொது ஸ்தலங்களிலும் ஒரு நாளைக்கு தேசீயக் கொடியைப் பறக்க விட்டுவிட்டால் பூரண சுயராஜ்யம் வந்து விடுமா? ஒன்றரை அணாவாக இருக்கும் இந்தியர்களின் தின வருமானம் உயர்ந்து விடுமா? இந்திய மரணம் விகிதம் குறைந்துவிடுமா? 100க்கு 94 பேர் நிரக்ஷர குக்ிகளாக விருக்கும் அநியாயம் அழிந்து விடுமா? காங்கிரஸ்காரர் புத்தியில்லாமல் காளை கன்று போடப் போகிறதென்றால், கயிற்றை எடு, கன்றைக் கட்டு, பாலைக் கற என நாமும் கூறுவதா? “காளையாவது ஏது? கன்று போடுவது ஏது? பக்கா முட்டாள் தனம் என்று கூற அறிவுள்ள இந்தியன் ஒருவனாவது இந்தியாவில் இல்லையா? இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்ற ஒருவனாவது இருக்க வேண்டாமா? தோழர்களே அன்புகூர்ந்து சிந்தித்துப் பாருங்கள். பொன்விழாக் கொண்டாட்டம் எவ்வளவு மோசடியானது, முட்டாள்தனமானது, கேலிக் கூத்து என்பதை உணருங்கள். விவேகிகள்
447 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
என்ன சொன்னாலும், டிசம்பர் 285 தேதி சுயநலக்காரர்கள் பொன்விழாக் கொண்டாடத்தான் போகிறார்கள். அர்த்தமற்ற மதச்சடங்குகள் நடைபெறும் இந்தியாவிலே காங்கிரஸ் பொன் விழா நடைபெறுவது ஒரு அதிசயமல்ல. சுயநலக் கூட்டத்தார் கொண்டாடப் போகும் போலிக் கூத்தினால் காங்கிரசின் மதிப்பும் உயர்ந்து விடாது. ஆனால் முட்டாள்தனமென நாம் உணரும் விஷயத்தை நாம் பகிரங்கமாகக் கூறிவிட வேண்டியது நமது கடமையல்லவா? ஆகவே பொன் விழாவை நீங்கள் பகிஷ்கரிப்பதாக உங்களுக்குப் பிரியமான முறைகளால் உலக மக்களுக்கு விளக்கி காட்டி விடுங்கள். தமிழ்நாட்டுத் தோழர்களே! உஷார்! உஷார்!!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.12.1935
குடி அரசு - 1935 (2) 448
ஜாதிப்புத்தி Cunsnenswn ராஜகோபால மாலே
காரைக்குடியில் நடக்கும் காங்கிரஸ் மாகாண மகாநாட்டுக்கு தலைவராக தமிழ் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியை உத்தேசித்து பல ஜில்லா காங்கிரஸ் கமிட்டிகளும் தோழர் அவனாசிலிங்கம் செட்டியாரையே சிபார்சு செய்ய முடிவு செய்து கொண்டிருப்பதை உணர்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் தங்கள் ஜாதியைச் சேர்ந்த தோழர் ருக்மணி அம்மாளை தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜில்லாக் கமிட்டிக்கு ரகசியமாகக் கடிதம் எழுதியிருக்கிறார். இதை அறிந்த ஊழியன் என்னும் பார்ப்பனரல்லாத பத்திரிக்கை மூர்த்தியாரின்.
நடத்தையைக் கண்டித்து எழுதி இருக்கிறது. இதற்குப் பதில் எழுதும் முறையில் ஜெயபாரதி என்னும் ஒரு பார்ப்பன பத்திரிக்கை டிசம்பர் 9-ந் தேதி பத்திரிக்கையில் சத்தியமூர்த்தியாரை ஆதரித்து,
“தியாகமே உருவாய் விளங்கும் ஸ்ரீமதி ருக்குமணி லட்சுமிபதியை சிபார்சு செய்து கடிதம் எழுதுவதில் என்ன தப்பு” என்று கேட்கின்றது
தோழர் ருக்குமணியம்மாள் தியாகமே உருக்கொண்டவர் என்றால், தோழர் அவனாசிலிங்கம் செட்டியார் என்ன உருக்கொண்டவர் என்று அப்பத்திரிக்கை கருதியதோ தெரியவில்லை. தியாகமும் தியாக உருவும் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன அம்மாமார்களுக்கும்தான் உண்டு என்பதை அஸ்திவாரமாகக்கொண்டு தான் காங்கிரஸ் இருந்து வருகின்றது என்று சுமார் 20 வருஷத்துக்கு முன்பே டாக்டர் நாயர் அவர்கள் கருதித்தான். தியாகமே உருவாய்க் கொள்ளத்தக்க ஜீவன் பார்ப்பனரல்லாதாரிலும் உண்டு என்பதைக் காட்டுவதற்காக ஜஸ்டிஸ் கட்சியை ஸ்தாபித்தார்கள்.
அவர் வார்த்தை மெய்யாக்க அடிக்கடி இது போன்ற சம்பவங்கள்.
நடந்து வருகின்றன. இதுபோலவே 1925ல் காஞ்சீபுரம் மாகாண மகாநாட்டுக்கு தோழர் கல்யாணசுந்திர முதலியாரை தலைவராகப் போடுவதற்கு தமிழ்நாட்டு ஜில்லாக்கள் முடிவு செய்திருக்கும் போது, அதுசமையம் மித்திரன் ஆசிரியராய். இருந்தவர் முதலியாருக்குக் கிடைக்காமல் இருக்கும்படி செய்வதற்கு எவ்வளவோ பாடுபட்டதும், இதைப் பற்றி குடிஅரசு அப்போதே கண்டித்தும் பத்திரிகை பார்த்தால் தெரியவரும்.
4499 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அதுபோலவே தோழர் வரதராஜுலு நாயுடு திருப்பூர் மாகாண மகாநாட்டுக்கு தலைமை வகிக்காமல் செய்ய வேண்டும் என்று மித்திரன். கூட்டத்தார் செய்த சூக்ஷியும், அப்போது நடந்த தகறாறுகளும் காங்கிரசி லிருந்தவர்கள் மாத்திரம் அல்லாமல் இந்தியா பூராவுமே சிரித்தது யாவரும் அறிவார்கள்.
ஆகவே எத்தனை தடவை சலவை செய்தாலும் ஜாதிபுத்தி போகாதையா ராஜகோபாலமாலே என்ற வாக்குத் தவறாது
பார்ப்பனர் போட்டிக்கு வரும்போது எவ்வளவு உயர்ந்த தரமுள்ள பார்ப்பனரல்லாதாராய் இருந்தாலும் அழுத்தி விடுவார்கள். பார்ப்பன. ரல்லாதாரில் யாராவது தகுந்த ஆசாமி எதிரியாய் வருவதாய் இருந்தால் ஒரு பச்சசானாவை கொண்டு வந்து போட்டு அதற்கு பெரிய தியாகமூர்த்தி உருவம் உண்டாக்கிவிடுவார்கள். எனவே பாரசர் ஸ்மிருதிப்படி எப்படிப்பட்ட விவகார தோஷமும் நெய் பூசிக்கொள்ளுவதாலும், பட்டினி கிடப்பதாலும்
தீர்ந்து விடுகிறதோ அதுபோல், எப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களும் தேசபக்தி தேசாபிமானம் என்கின்ற மந்திரத்தால் பரிகாரமாகிவிடுகிறது
எனவே நமது பார்ப்பனர் சக்தியை யாரே அளவெடுக்க முடியும்?
குடி அரசு - கட்டுரை - 15.12.1935
குடி அரசு - 1935 (2) 450
ஒரு விசேஷம்
- வம்பளப்போன்
சென்னையில் நடந்த தலைவர் தெரிந்தெடுப்பு விருந்துக்கு தோழர் சத்தியமூர்த்தியை அழைக்கவே இல்லையாம். லக்ஷ்மிபதி அம்மாளை கூப்பிடவே இல்லையாம். காங்கிரசின் நன்றி விசுவாசத்திற்கு வேறு என்ன.
ருஜுவு வேண்டும்.
சத்தியமூர்த்தியார் லக்ஷிமிபதி அம்மாளை காரைக்குடி மகாநாட்டுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஜில்லா சபைகளுக்கு ரகசியக் கடிதம் எழுதினதினால் இருவரையும் குற்றவாளியாக்கி தலைமைப் பதவியில் இருந்து தள்ளப்போகிறார்கள் போலும்!
குடி அரசு - செய்தி விமர்சனம் - 15.12.1935
451 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
[பக்கம் 84] உன்க்கு சத்தா க )
1% No. M. 2041 “KUDI-ARASU” ;d«una லை. ஒரு க Lg- A%
1924-6 வதாயிக்கப்பட்டது.
எப்பொறுள் வார் யார் வாய்க்கேட்பினும் எப்பொருளெத்தன் மைத்தாயினும் அப்பொருள் லி அுதோ ம் வெளிவரும், அப்பொருள் வெல்ப்பொருள் காண்பி எட s G கைதி
வைப] கோது வலத wrlagh மீ 1 மடய | வம் 19,
AR N R R AR N WA ல்லை
g அயாசாதி விட்டது! யாரால விட்ட gill ராமாயண ஆராய்:சி
ப் ஆரண்யகாண்டம்
: - : g பாரத ஆராய்ச்சி,
இ. சத்திரசேகாப்பாவாசால் ஆராய்சி செய்யப்பட்ட அரிய நூல், சுமார் ந் பக்கங்கள் கொண்டன (ஷம்மி சைஸ்) விலை அணக அணா ஸ்டாம்பு அனுப்பினால் ஒரு புஸ்தகம் அணுப்பப்படும்,
புதிய [ஆகிபருவம்] ஆராய்ச்சி, விலை அணா 0—4—0
!
இ. தூசைவன் என்பவரால் தொரு்கப்பட்ட அருமையான அல். 05 — அணஸ்டாம்பு அனுப்பினால் ஒருபுஸ்தகம் அஆப்பப்படும்,
விலாசம்:-- குடி. அரசு புத்தகாலயம், ஈரோடு. A R A A R
எச்சரிக்கை
சுயமரியாதை இயக்கத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு குப்புசாமி என்ற வாலிபர் ஒருவர் விழுப்புரம் நாகப்பட்டினம் முதலிய ஊர்களில் பண விஷயத்தில் மோசம் செய்துவிட்டுப் போய்விட்டதாக நமக்கு தகவல் வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் சிலர் இவ்வாறு செய்து வருவதாகவும் தகவல் வந்திருக்கிறது. ஆகையால் இம்மாதிரி இயக்கப் பெயர் கூறுபவர்களுக்கு செளகரியம் செய்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி நமது இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
போர்?
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 22.12.1935
453 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
“ஜஸ்டிஸ்? கொன்கை வெற்றி.
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்று நாம் பலமுறை வற்புறுத்தி யிருப்பதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட்டமே யோக்கியதையுடையவர்கள் தோல்வியடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடைவதும் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. தேச மக்களில் 100-க்கு 94 பேர் எழுத்து வாஸனையில்லாத பாமர மக்களாய் இருக்கும் வரை தேர்தலில் மோசடிகளும், சூழ்ச்சிகளும், அயோக்கியத்தனங்களும் தாராளமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தேர்தல்களுக்கு முன் வந்திருப்பவர்களின் யோக்கியதை, அவர்களோ, அவர்களது கட்சியோ
இதுகாறும் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகள், தேசமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்குள்ள ஆற்றல் தேர்தலுக்கு முன் வந்திருப்பவருக்கோ, அவரது கட்சிக்கோ உண்டா என்ற சிந்தனை அபேட்சகர்களின் அல்லது அவர்களது கட்சியின் பூர்வச் சரித்திரம் ஆகிய காரியங்களைப் பற்றிச் சிந்தனை செய்யாமல் காந்திக்காகவும், கதருக்காகவும் ஓட்டுக் கொடுக்கும் அறிவற்ற மக்கள் இருக்கும் வரை தற்காலத் தேர்தல்களை, ஜனநாயக முறைப்படி நடக்கும் தேர்தல்கள் என்று சொல்ல முடியுமா? அனேக இடங்களில் நடைபெற்ற நகர சபை, ஜில்லா போர்டு தேர்தல்களில், மதுவிலக்குத் திட்டத்தை தமது லக்ஷியமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ் காரர்கள் தாராளமாகக் கள் வழங்கினதாகப் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இதை எந்தப் பொறுப்புடைய காங்கிரஸ்வாதியும் இந்நிமிஷம் வரை மறுக்க முன் வரவில்லை. மற்றும் கைக் கூலிப் பேய் தாண்டவமாடியதாயும் பலர் புகார் செய்திருக்கிறார்கள்.
திருநெல்வேலியில் ஜில்லா போர்டு காங்கிரஸ் கட்சித் தலைவர். தோழர் குப்புசாமி அய்யர் தலைமையில் நடைபெற்ற ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில், காங்கிரஸ்வாதியான தோழர் ஷண்முகம் பிள்ளை என்பார் ஜில்லா போர்டு தேர்தலில் பல காங்கிரஸ் அபேட்சகர்கள் கைக்கூலி வழங்கியதாகத் தாம் கேள்விப்பட்டதாயும், காங்கிரசின் கெளரவத்துக்கு அதுஅடாத செயல் என்றும் பகிரங்கமாகக் கண்டித்துப் பேசினார். தலைவரோ
குடி அரசு - 1935 (2) 454
ஏனைய காங்கிரஸ்வாதிகளோ அதை மறுக்கவில்லை. எனவே தேர்தல் காலங்களில் காங்கிரஸ்காரர் லஞ்சம் வழங்குகிறார்கள் என்பது உறுதியாகிறது.
இந்நிலையில் காங்கிரஸ்காரர் பெறும் வெற்றிக்கு மதிப்போ, யோக்கியதையோ, நாணயமோ உண்டு என்று கூற முடியுமா?
சென்ற வருஷ நவம்பரில் நடைபெற்ற அசம்பிளித் தேர்தலின் போது
(1) வரப்போகும் சீர்திருத்த அரசியலைக் கவிழ்ப்போம் (2) பிரதிநிதித்துவ சபை கூட்டுவோம் (3) எதிர்கால அரசியலை அமைப்போம் என்று காங்கிரஸ்காரர்கள் வாக்காளர்களுக்கு உறுதி கூறினார்கள். அந்த மூன்று காரியங்களில் ஒன்றையாவது காங்கிரஸ்காரர்கள் நிறைவேற்றி வைக்கவில்லை. நிறைவேற்ற முயலவுமில்லை. மாறாக எதிர்கால அரசியலைக் கைப்பற்றி மந்திரிகளாகவும் காங்கிரஸ்காரர் பகிரங்கமாக முயற்சி செய்கிறார்கள். தேச மக்களுக்கு எள்ளளவேனும் அரசியல் உணர்ச்சியோ, ஞானமோ இருந்திருந்தால் தேர்தல் வாக்குறுதிகளைக் காற்று வாக்கில் பறக்கவிட்ட அயோக்கியப் பேர்வழிகளுக்கு மீண்டும் ஓட்டுக் கொடுப்பார்களா? தேச மக்கள் எல்லாம் அப்பாவிகள் என்ற நம்பிக்கையினாற்றானே காங்கிரஸ்காரர் மீண்டும் அவர்களிடம் ஓட்டுக் கேட்க முன் வருகிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை மீறுகிறவர்களுக்கு மீண்டும் ஓட்டுக் கொடுக்கும் முட்டாள்தனத்தை இந்தியாவிலன்றி உண்மையான ஜனநாயக அரசியல் அமுலில் இருக்கும் எந்த நாட்டிலாவது பார்க்க முடியுமா? சுயராஜ்யம் நடத்த இந்தியர்களுக்கு லாயக்கில்லை யென்று கன்சர்வெட்டிவ் கட்சியார் கூறும்போது நாம் அவர்கள் மீது சீறி விழுகிறோம்; திட்டுகிறோம்; துரோகப்பட்டம் சூட்டுகிறோம். ஓட்டுரிமையைப் புத்திசாலித்தனமாக வழங்கத் தெரியாத மக்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது
குரங்கு கையில் கூரிய கத்தியையோ, ரிவால்வாரையோ கொடுப்பதற்கே ஒப்பாகும். 75 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருக்கும் இக்காலத்திலேயே தேர்தல்களில் மானக்கேடான அலங்கோலங்கள் நடைபெறுகின்றன. வரப்போகும் சீர்திருத்தப்படி ஏழரைக் கோடிப்பேர் ஓட்டுரிமை பெறப் போகிறார்கள். ஜனநாயகக் கொள்கைப்படி பிராய பூர்த்தி வந்தவர்கள்
எல்லாம் ஓட்டுரிமை பெற வேண்டியது அவசியமானாலும் இந்தியாவின் தற்கால நிலையில் ஏழரைக்கோடிப் பேர் ஓட்டுரிமை பெறுவது ஆபத்தான பலனையே கொடுக்கப் போகிறது. ஏழரைக் கோடிபேர் வாக்குரிமை பெறப் போவதை தோழர் சத்தியமூர்த்தி இரு கையாலும் வரவேற்பதே நமது அபிப்பிராயத்துக்கு மறுக்க முடியாத அத்தாட்சி. காந்தி, கதர், பாரத மாதா, அடிமைச் சங்கிலி, விடுதலை என்பன போன்ற பகட்டு வார்த்தைகளைச் சொல்லி பாமர மக்களை மயக்கச் செளகரியம் இருப்பதினாலேயே தோழர் சத்தியமூர்த்தி ஆனந்தக் கூத்தாடுகிறார். தேச மக்களின் தற்கால மோசமான. நிலைமையைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நாம் மனச் சோர்வடைந்து ஜனநாயக ஆட்சியைவிட ஹிட்லர் ஆட்சியினாலும், முசோலினியாட்சியி
488 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
னாலும் இந்தியாவுக்கு அதிக நன்மை ஏற்படாதா என்று நாம் நம்மையே கேட்டுக் கொண்டதுண்டு. மனச் சோர்வினால் இத்தகைய மனத் தடுமாற்றம் அனேகருக்கு ஏற்படுவது சகஜமே. நாம் விரும்பினாலும், வெறுத்தாலும்
புதிய அரசியல் சீர்திருத்தம் வரப்போவது உறுதி
அதன்படி ஏழரைக்கோடி பேர் ஓட்டுரிமை பெறப் போவதும் நிச்சயம். காலம் ஏமாற்றக்காரருக்கு அநுகூலமாயிருந்தாலும், நாம் மனந்தளர்ந்து கை கால்களைப் பரக்கப் போட்டு அல்லற்படாமல் நாம் நமது கடமையைச் செவ்வனே செய்வதைத் தவிர வேறு கதியில்லை.
திருநெல்வேலி, திருச்சி, கர்நூல், அனந்தப்பூர், சித்தூர் முதலிய இடங்களில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்காரரே வெற்றிக்கொடி நாட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தென்னாற்காடு ஜில்லா தேர்தல் முடிவு நாளை அல்லது மறுநாள் வெளிவரவும் கூடும். தென்னாற்காட்டில் நமக்குத் தோல்வியே ஏற்பட்டாலும் நாம் அதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
ஏன்? தேர்தல் வெற்றி தோல்விகளினால், தற்கால நிலையில் அபேட்சகர்களில் யோக்கியதா, யோக்கியதைகளை நிர்ணயிக்க முடியாத நிலைமையே நமது அபிப்பிராயத்துக்கு காரணம். நமது கூற்றை விளக்குவதற்கு ஆந்திர வீரர் தோழர் டி. பிரகாசம் டிசம்பர் 20-ந் தேதி வெள்ளிக் கிழமை ஹிந்துப் பத்திரிகையில் எழுதியுள்ள ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டால் போதுமானது. ஆந்திர தேசத்தில், ஜில்லா போர்டு தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்காரருக்கு வாழ்த்துக் கூறுகையில் தோழர் பிரகாசம் அறிந்தோ அறியாமலோ அக்கடிதத்தில் சில மானக்கேடான உண்மைகளையும் வெளியிடுகிறார். அவர் எழுதுவதாவது,
தர்நூலிலும், அனந்தப்பூரிலும் காங்கிரஸ் பேரால் தேர்ந் தெடுக்கப்படாத ஜில்லா போர்டு மெம்பர்கள் காங்கிரஸ் அபேட்சகர்களையே ஆதரித்தார்கள். சிலர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தமது அபிப்பிராயத்தையே மாற்றிக் கொண்டு காங்கிரசில் சேர்ந்து கொண்டார்கள். தேர்தலில் காங்கிரஸ்காரரோடு போட்டி போட்டு வெற்றிப் பெற்றவர்களும் தலைவர் தேர்தல்களில் காங்கிரஸ் அபேட்சகர்களையே ஆதரித்தார்கள்."
ஜில்லா போர்டு தேர்தலுக்கு முன் வருபவர்கள் எல்லாம் பொதுவாக படிப்பும், அந்தஸ்தும், சமூக வாழ்வில் மதிப்புக்குரிய ஸ்தானமும் பெற்றிருப்பவர்களே. அவர்களே தோழர் பிரகாசம் கூறுகிறபடி நடந்திருக்கையில் வெற்றி தோல்விகளை எண்ணி மாரடித்துக் கொள்வதில் பயனுண்டா? கட்சிப் பற்றோ, கொள்கையோ, மனவுறுதியோ இல்லாத இத்தகைய ஆசாமிகளை நம்பினால் எந்தக் கட்சிக்குத்தான் மானக்கேடு ஏற்படாது? அரசியலில் கூடு விட்டுக் கூடு பாய்வது ஒரு மாதிரி அரசியல்
குடி அரசு - 1935 (2) 456
விபசாரமேயாகும். விபசாரிகளையாவது மன்னித்து விடலாம். ஏன்? படிப்போ, நற்பழக்கமோ இல்லாதவர்கள்; வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லா தவர்கள். மேலும் மதத்தின் பேரால் விபசாரம் ஆதரிக்கப்படுவதினால் சாமானிய விபசாரிகளைக் குறை கூற வழியில்லை.
அரசியல் விபசாரிகள் நிலைமையோ அப்படியல்ல. படிப்பும், பணமும், அந்தஸ்தும் உடையவர்கள். அவர்கள் கட்சித் துரோகம் செய்து விபசாரியாவதைவிட கொடுமை, மானக்கேடு, துரோகம் வேறுண்டா? திருநெல்வேலியிலும் திருச்சியிலும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த அரசியல் சிங்கங்களைப் பற்றிய வரலாறுகளை தென்னாட்டு பத்திரிகைகளில் காங்கிரஸ்காரரே வெளியிட்டிருக்கிறார்களாகையால், அவைகளை மீண்டும் எடுத்துக் கூறி நமது பத்திரிகையை அசத்தப்படுத்த நாம் விரும்பவில்லை: ஆகவே காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் வெற்றிக்கு எவ்வளவு மதிப்புக் கொடுக்கலாம் என்பதை தேச மக்களே நிர்ணயம் செய்து கொள்ளட்டும். ஜில்லா போர்டு தேர்தல்களிலும், தலைவர் தேர்தல்களிலும், வெற்றி பெற்றவர்கள் எந்தப் போர்வையைப் போர்த்திக் கொண்டாலும், இது வரை தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர்களில் பெரும்பாலாரும், தலைவர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதாரா யிருப்பதை நம்மவர்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறோம் அவர்களில் பெரும்பாலார் அரசியல் விபசாரக் குற்றத்துக்கு ஆளாகி யிருந்தாலும் அரசியல் விபசாரம் மன்னிக்க தக்கதென்ற உணர்ச்சி நம்மவர்களில் பெரும்பாலார் உள்ளத்துக்குக் குடி கொண்டிருக்கையில் அவர்களது வெற்றியை நமது வெற்றியாகப் பாராட்டுவதில் அவ்வளவு குற்றமில்லையென்றே நினைக்கிறோம் இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளினால் ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் கொள்கை வெற்றி பெற்றிருக்கும் சந்தோஷச் செய்தியை எந்த மலையுச்சியிலிருந்தும் கூற நாம் தயாராயிருக்கிறோம் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களினால் பல உண்மைகள் வெளி வந்துள்ளதையும் நம்மவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டும்.
தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால் பார்ப்பனரல்லாத பிரமுகர்களின் காலில் விழுவதைத் தவிர காங்கிரஸ்காரருக்கு வேறு வழியில்லை யென்பது புலனாகிவிட்டது
சிறை புகுந்த - தடியடிபட்ட காங்கிரஸ்காரர்களைவிட சட்ட வரம்புக் குட்பட்டு ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையைப் பின்பற்றி வந்தவர்களுக்கே நாட்டில் மதிப்புண்டென்பதும் சந்தேகத்துக்கு இடமின்றி வெளியாகிவிட்டது.
இத்தியாதி காரணங்களால், பார்ப்பனரல்லாதார் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் பெற வேண்டும் என்ற ஜஸ்டிஸ் கட்சியின் மூலக்
457 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
கொள்கை வெற்றி பெற்று வருவதைக் கண்ணுள்ளோர் பார்த்துக் கொள்ளட்டும். இதுவரை வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளால் ஜஸ்டிஸ் கட்சிக்குத் தோல்வியேற்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் அஞ்சக் கூடிய தோல்வியல்லவென்பதை நம்மவர்கள் நம்புவார்களாக!
தென்னாற்காடு தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு அடுத்த வாரம் மீண்டும் இதைப் பற்றி எழுதுவோம்
குடி அரசு - தலையங்கம் - 22.12.1935
குடி அரசு - 1935 (2) 458
கல்கத்தா கலாட்டா
சென்குப்தா கட்சியாருக்கும், சுபாஷ் போஸ் கட்சியாருக்கும் ஏற்பட்டிருந்த பிணக்கு மூலம் கல்கத்தா நகரசபை வெகுகாலம் சீரழிந்து கிடந்ததை அன்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கடைசியாக மாஜி மந்திரி தோழர் ஏ.கே. பஸ்லுல் ஹக் நகரசபை மேயர் ஆனது முதல் நகரசபைக் காரியங்கள் ஒருவாறு நடந்து கொண்டிருந்தன. நகரசபை கூடும்போ தெல்லாம் பெரும்பாலும் வாய்ச்சண்டை நடப்பது சகஜமாயிருந்து வந்தும் தமது சாதுரிய புத்தியினால் மேயர் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தார். இப்பொழுதோ இந்திய ஸ்தல ஸ்தாபனங்களுக்கே மானக்கேட்டை யுண்டுபண்ணக்கூடிய நிலைமை கல்கத்தா நகர சபையில் ஏற்பட்டிருக்கிறது கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் 100க்கு 25 விகிதம் முஸ்லீம்களை நியமிக்க வேண்டுமென்ற தீர்மானத்தைப் பற்றி ஆலோசிப்பதற்காக ஒரு விசேஷக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று 16 முஸ்லீம் அங்கத்தினர்கள். செய்துகொண்ட விண்ணப்பத்தின்படி சென்ற 13ந் தேதி ஒரு விசேஷக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் கல்கத்தாவில் வசிக்கும் முஸ்லீம் களுக்கும், இதர சமூகத்தினருக்கும் கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றிக் கார்பொரேஷன் கைக்கொண்டிருக்கும் கொள்கையை மேலும் அமலுக்குக் கொண்டுவரும் விஷயத்தை விசேஷ கமிட்டி பரிசீலனை செய்ய வேண்டுமென்று முடிவாயிற்றாம். ஆனால் விசேஷக் கமிட்டிக்கு அங்கத்தினர் தேர்ந்தெடுக்க முயன்றபோது தொல்லை ஆரம்பமாயிற்றாம். விசேஷக் கமிட்டிக்கு பிரேரணை செய்யப்பட்ட பல பெயர்கள் முஸ்லீம் அங்கத்தினர்களுக்குப் பிடிக்கவில்லையாம்
கடைசியில் 5 ஹிந்துக்களும் 2 முஸ்லீம்களும் அடங்கிய விசேஷக் கமிட்டி ஒன்று நியமனமாயிற்றாம். இது முஸ்லீம் மெம்பர்களுக்குப் பிடிக்காததினால் அவர்கள் வெளியேறி தம் பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட வேண்டுமென்று முடிவு செய்தார்களாம். பிரஸ்தாபக் கூட்டத்தில் அங்கத்தினர்கள் நடந்து கொண்ட மாதிரியைப் பார்த்து மேயர் தோழர் பஸ்லுல் ஹக் மிகவும் மனம் புண்பட்டிருப்பதாகத் தெரிகிறது அங்கத்தினர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதை சகிக்கப் பொறாத மேயர் “இங்கு நீங்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுவதின். மூலம் உங்கள் எதிரிகளுக்குத்தான் ஆதரவு கொடுத்து வருகிறீர்கள் அவர்கள் உங்கள் எல்லோரையுமே கேவலப்படுத்தப் போகிறார்கள். இந்த
499 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
ஆபாச விஷயங்கள் எல்லாம் அன்னிய நாடுகளுக்குத் தந்தியில் பறக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவுக்கு சுயராஜ்யம் வழங்கக் கூடாது என்பதற்கு இதையெல்லாம் ஆதாரமாக உபயோகித்து இந்திய விரோதிகள் வாதிப்பார்கள்” என்று கூறினாராம். எனினும் அங்கத்தினர்கள் அடங்கவில்லை. தான் தோன்றித்தனமாகவே நடந்து கொண்டார்கள். கடைசியாக மனம்
சலித்து "ஒழுங்கான முறையில் தனது அலுவல்களைக் கவனிக்காத ஒரு சபையுடன் சம்பந்தப்பட்டிருக்க எனக்கு விருப்பமில்லை; ராஜிநாமாச் செய்துவிடுவதே நல்லது என்ற அபிப்பிராயம் நாளுக்கு நாள் பலப்பட்டு வருகிறது!” என்று கூறி கூட்டத்தைக் கலைத்தாராம். அப்பால் மேயர். அறையில் ஒரு அந்தரங்கக் கூட்டம் நடந்தது. நகர சபையை விட்டு வெளியேறிய முஸ்லீம் மெம்பர்கள் தங்கள் ஸ்தானங்களை ராஜிநாமாச் செய்துவிடுவதாகச் சொன்னார்கள். ஆத்திரப்படக் கூடாதென்று சிலர். அபிப்பிராயப்பட்டதின் பேரில் ஒரு முடிவுக்கும் வராமல் பிரிந்தார்கள். சமரசம் ஏற்படுத்த மேயரும் எவ்வளவோ முயன்றார், பலன் ஏற்படவில்லை.
16-ந் தேதி மத்தியானம் 15 முஸ்லீம் அங்கத்தினர் சேர்ந்தாற்போல் ராஜிநாமாச் செய்துவிட்டனர். வேறு கதியில்லாமல் மேயரும் தமது ஸ்தானத்தை ராஜிநாமாச் செய்துவிட்டார். அங்கத்தினர் பதவியை மட்டும் அவர் ராஜிநாமாச் செய்யவில்லை. தமது சகோதர அங்கத்தினர் அனைவரும் ராஜிநாமாச் செய்துவிட்டதினால் தாமும் ராஜிநாமாச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், எனினும் சமரஸம் ஏற்படுமா? என்று பார்ப்பதற்காகவே தாம் அங்கத்தினர் பதவியை வகித்துக் கொண்டிருப்பதாயும் மேயர் தெரிவித்துவிட்டாராம்
கடைசியில் கல்கத்தா நகரசபை குடை சாய்ந்து கிடக்கிறது, இதற்குக் காரணம் என்ன? காரணத்தை ராஜிநாமாச் செய்த முஸ்லீம் அங்கத்தினர். வெகு தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். அரசியல் காரணங்களை முன்னிறுத்தி நகரசபை ஹிந்து மெம்பர்கள் காரியங்களை நடத்தி வருவதினால் எல்லா சமூகங்களுக்கும் நீதி வழங்கப்படவில்லையென்றும், அத்தகைய ஒரு ஸ்தாபனத்தில் இருக்க தாம் விரும்பவில்லையென்றும் முஸ்லீம் அங்கத்தினர்கள் பட்டவர்த்தனமாகக் கூறியிருக்கிறார்கள்.
ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்ற வேண்டுமென்று சுயநலக் கூட்டத்தார் தென்னாட்டில் ஆர்ப்பாட்டம் செய்து வருவதினால் அவர்கள். ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றினால் என்ன நிலைமை ஏற்படும் என்பதை தென்னாட்டு மக்களுக்கு விளக்கிக் கூறும் பொருட்டே கல்கத்தா. சம்பவத்தைப் பற்றி இன்று விரிவாக எழுத எண்ணினோம்
பிரிட்டிஷ் முதன் மந்திரியின் வகுப்புத் தீர்ப்பு வங்காள ஹிந்துக் களுக்கு ஒரு சிறிதும் பிடிக்கவே இல்லை. பொதுவாக வடநாட்டு இந்துக்கள். எல்லாம் வகுப்புத் தீர்ப்பை எதிர்த்தாலும் தேச க்ஷேமத்தை முன்னிட்டு
குடி அரசு - 1935 (2) 460
சிறிது விட்டுக் கொடுத்து இந்தியர்களாகவே ஒரு சமரசம் செய்து, வகுப்புத் தீர்ப்பின் வன்மையைக் குறைக்க ஒருவாறு இணங்கினர். பண்டித மாளவியா கூட்டிய சர்வகட்சி மகாநாட்டு முடிவுகளை ஏனைய மாகாணங்கள் எல்லாம்
ஒப்புக் கொண்டன. சமரசம் ஏற்பட்டு விடும் போலவும் தோன்றிற்று வங்காள ஹிந்துக்களின் பிடிவாதத்தினால் மாளவியாவின் சமரச முயற்சி முறிந்தது. வங்காளத்திலே முஸ்லீம்களே மெஜாரட்டி சமூகத்தார். எனவே அவர்களுக்கு ஹிந்துக்களைவிட அதிகப்படியான ஸ்தானங்கள் வகுப்புத் தீர்ப்புப்படி அளிக்கப்பட்டிருக்கின்னன. அதை வங்க ஹிந்துக்கள் எதிர்க் கிறார்கள். அந்த எதிர்ப்பை மறைக்க காங்கிரஸ்காரர் சூழ்ச்சி செய்தாலும் வங்க ஹிந்துக்களின் அதிருப்தி இருந்து கொண்டே இருக்கிறது. தேசீய முஸ்லீம்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கவோ எதிர்க்கவோ செய்வதில்லை யென்று காங்கிரஸ் மூடிவு செய்திருந்தாலும் ஹிந்து மகாசபையாரும் வங்க ஹிந்துக்களும் காங்கிரசின்
இந்தப் பேடி நிலைமையை ஆட்சேபித்துக் கொண்டே இருக்கிறார்கள் வகுப்புத் தீர்ப்பு விஷயம் அவ்வளவு சுளுவாக மழுப்பக் கூடியதல்ல வென்றும், காங்கிரஸ்காரரின் நடுநிலைமைப் போக்கு கண்டிக்கத்தக்க தென்றும், வகுப்புத் தீர்ப்புக்குச் சரியான முடிவு கண்டாலொழிய பொதுவாக ஹிந்து இந்தியாவும், விசேஷமாக வங்காள ஹிந்துக்களும் காங்கிரசை ஆதரிக்கப்போவதில்லை யென்றும் சமீபத்தில் பாபு சுபாஷ் சந்திரபோஸ்.
ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கல்கத்தா நகரசபைஹிந்து மெம்பர்கள் எல்லாம் காங்கிரஸ் வாலாக்களே. முஸ்லீம்கள் அரசியல் சுதந்திரங்களுக்கு முட்டுக்கட்டை போடும் தோரணையிலேயே அவர்கள் காரியங்கள் நடத்தி வருகிறார்கள். தற்காலம் கல்கத்தா நகரசபை மூன் முஸ்லீம்கள் கொண்டு வந்திருக்கும் கோரிக்கை அவ்வளவு அமிதமானதல்ல. கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் 100-க்கு 25 விகிதம் முஸ்லீம்களுக்குஅளிக்க வேண்டுமென்பதே அவர்களது கோரிக்கை. ஒரு மெஜாரட்டி சமூகத்தாருக்கு இதைவிட அதிகப்படியான ஒரு விகிதத்தைக் கோர சட்டப்படி உரிமை இருந்தும் 100-க்கு 25 விகிதம் கோரும் ஒரு தீர்மானத்தை கல்கத்தா நகர சபை ஹிந்து மெம்பர்கள். ஆதரிக்கவில்லை என்றால் இதைவிடப் பெரிய கொடுமை வேறுண்டா?
காங்கிரஸ்காரர் ஸ்தல ஸ்தாபனங்களில் நுழையத் தொடங்கியதும் ஸ்தல ஸ்தாபன நிருவாகம் ஊழலாகத் தொடங்கிவிட்டது. அரசியல் காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு சாமானிய விஷயங்களிலும் கலாட்டா செய்வதே அவர்கள் வாடிக்கையாகி விட்டது.
கல்கத்தா நகர சபையில் ஏற்பட்டிருக்கும் மானங்கெட்ட நிலைமை தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று பலர். அஞ்சுகின்றனர். காங்கிரஸ்காரர்களுக்கு சுதந்திரத்துக்கும், கலாட்டாவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. நிதான புத்தியும் கிடையாது. கூச்சலும்
4 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
குழப்பமுமே சுதந்தரத்துக்கு அழகென்று அவர்கள் தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தேசீயக் கொடி ஏற்றுவது, தலைவர்களுக்கு உபசாரப் பத்திரமளிப்பது, கதர் வாங்குவது முதலிய திருவிளையாடல்களே காங்கிரஸ் பார்வையில் பெரிய தேச சேவையாகத் தோன்றுகின்றன. மக்களது போக்குவரத்து சாதனங்கள், சுகாதார வசதிகள், கல்வி முறை முதலியவற்றை விருத்தி செய்ய வேண்டிய ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் தேசீயக் கொடியாகிய திருக்கூத்துகளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை குறுகிய நோக்குடைய காங்கிரஸ் வாலாக்கள் அறிவதில்லை. எனவே காங்கிரஸ்காரர் ஆதிக்கம் பெற்றால் தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனங்களும் குட்டிச் சுவராவது உறுதி.
ஆனால் இதுவரையுள்ள ஸ்தல ஸ்தாபன தேர்தல்களின் முடிவுகளை உற்று நோக்கினால் நம்மவர்கள் அவ்வளவாக அஞ்சத் தேவையில்லை என்றே தோற்றுகிறது. ஏனெனில் காங்கிரஸ் பேரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலர் அசல் காங்கிரஸ்வாலாக்கள் அல்ல. சட்டமறுப்பு தர்பாரில் ஈடுபட்ட அசல் காங்கிரஸ்வாதிகளே கலாட்டாக்காரர்கள். தென்னாட்டு ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களில் பலர் தேர்தலுக்காக காங்கிரஸ்காரர் ஆனவர்களே.அவர்களில் மிக்காரும்நிதானஸ்தர்களாகையினால் மதிமயங்கி எதுவும் செய்துவிட மாட்டார்கள். மேற்கொண்டு நடக்கவிருக்கும் தேர்தல்களிலும் நிதானஸ்தர்களைப் பொறுக்கி எடுத்து ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அனுப்பினால் கல்கத்தா நகர சபைக்கு ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தி நமது ஸ்தாபனங்களுக்கும் ஏற்படாமல் காப்பாற்றிக் கொள்ளலாம். தென்னாட்டார் இதனை கவனிப்பார்களாக!
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.12.1935
குடி அரசு - 1935 (2) 462
சபாஷ் பம்பாய்!
பம்பாய் மாகாணம், காங்கிரஸ் உணர்ச்சி மிக்க பிரதேசம். பம்பாய் நகரமும் அப்படியே. உப்புப் போர் பம்பாய் மாகாணத்திலேயே ஆரம்பமாயிற்று. உலகப் பிரசித்திபெற்ற காந்தியாரின் தண்டியாத்திரை தமாஷ் மூலம், பகுத்தறிவற்ற பாமர ஜனங்களுக்கும், கிராம வாசிகளுக்கும் காங்கிரஸ் மீது ஒரு குருட்டு பக்தி ஏற்பட்டது. பாமர மக்களின் குருட்டு பக்தியை காங்கிரஸ் சார்பாக திருப்ப வேண்டுமென்ற அந்தரங்க நோக்கத்துடனேயே காந்தியார் சபர்மதியிலிருந்து தமது சத்தியாக்கிரக கோஷ்டியுடன் தண்டிக்குக் கால்நடையாகப் பிரயாணமானார். பத்திரிகை நிருபர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். காந்தி கோஷ்டியாருக்கு வழிநெடுகக் கிடைத்த ராஜோபசாரங்களை ஒன்றுக்குப் பத்தாக வர்ணித்து அவர்கள் பத்தி பத்தியாய் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஒரு குக்கிராமத்திலே ஒரு நாவித மாது காந்தியாருக்கு க்ஷ்ளரம் செய்த அதிசயத்தைக்கூட பத்திரிகை நிருபர்கள் விட்டுவிடவில்லை. க்ஷளரக்
கூலி கொடுக்க வேண்டிய காந்தியார் அந்த சாதுப் பெண்ணின் காதணியைக் காணிக்கையாகப் பெற்றதையுங்கூட பத்திரிகை நிருபர்கள் மறவாமல் பத்திரிகைகளுக்கு எழுதியனுப்பினார்கள். இத்தகைய விளம்பரங்களினால். பம்பாய் மாகாணத்துக்கு காந்தி பைத்தியமும், காங்கிரஸ் பித்தும் பிடித்தது கடைசியாக உப்புப்போர் ஆரம்பமான போது ஆயிரக்கணக் கானவர்கள் தடியடிப் பட்டார்கள்; சிறை புகுந்தார்கள். அக்காலத்திலே பம்பாய் நகரம் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. உப்புப் போருடன்
விதம் விதமான மறியல்களும் பம்பாயில் நடைபெறத் தொடங்கின. தேச சேவிகைகளும் மறியலில் கலந்துகொண்டதினால் மறியல்களுக்கு ஒரு தனிப் பகட்டும் ஏற்பட்டது. தொண்டர்களும் சேவிகைகளும் சிறைபுகச் சிறைபுக அவர்களது ஸ்தாபனங்களுக்கு மேற்கொண்டும் பலர் முன் வந்து கொண்டிருந்தனர். உப்புப் போரிலும், மறியலிலும் பம்பாய் நகரமே சாம்பியன் மெடல் பெறத்தகுந்ததென்றும் கூறப்பட்டது. அத்தகைய காங்கிரஸ் பக்தி - காந்திப் பித்து மிக்க பம்பாய் நகரத்தின் இன்றைய நிலைமை என்ன? அந்தோ! சொன்னால் வெட்கக்கேடு. டிசம்பர் 28-ந் தேதி நடக்கப் போகும் காங்கிரஸ் ஜுப்பிலியைப் பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று காங்கிரஸ் சமதர்மிகளான தோழர்கள் எம்.ஆர்.மாசானியும், மேஹர் அலியும் கொண்டுவந்த தீர்மானம்
48 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பெரும்பான்மையான வோட்டுகளினால் பம்பாய் நகர சபையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களோ மிக மிக மிதமானவை.காசு பணம் செலவில்லாதவை. தேசீயக் கொடி ஏற்ற வேண்டுமென்றோ, தீபாலங்காரங்கள் செய்ய வேண்டுமென்றோ, அன்னதானம் செய்ய வேண்டுமென்றோ, ஊர்வலம் நடத்த வேண்டுமென்றோ அவர்கள் வற்புறுத்தவில்லை. காங்கிரஸ் ஆரம்பமாகி 50 ஆண்டு பூர்த்தியானதற்குத் தமது சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தேச மகாஜனங்களுக்கு தேசீய உணர்ச்சியையும், தியாக உணர்ச்சியையும் எழுப்பிய காங்கிரசைப் பாராட்டுவதாகவும் மட்டுமே அத் தீர்மானங்கள். கூறின. இந்த சாரமற்ற தீர்மானங்களையும்கூட, காங்கிரசுக்காகப் பலமுறை சிறைச் சென்ற தோழர் நாரிமனை மேயராகக் கொண்ட பம்பாய் நகரசபை கவிழ்த்துவிட்டதென்றால் பம்பாய் நகரத்தில் காங்கிரஸ் பித்து தெளிந்து வருகிறதென்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா! காந்தீயம் தாண்டவ மாடும் ஆமதாபாத் ஜில்லா போர்டும் ஜூபிலி விழாக் கொண்டாடத் தேவையில்லையென முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில், 500 ரூபாய் செலவு செய்து காங்கிரஸ் பொன் விழாக் கொண்டாட வேண்டுமென்று சென்னை நகரசபை தீர்மானித்திருப்பது வெகு வேடிக்கையாகவே இருக்கிறது. முதலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது நகரசபை அதற்கு அனுமதியளிக்கவே இல்லை. இரண்டாம் முறை, மிதித்த காலுக்கு முத்தம் கொடுக்கும் ஐரோப்பிய மெம்பர்கள் நடுநிலைமை வகித்ததினாலும், ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் பலர் அக் கூட்டத்துக்கு விஜயம் செய்யா திருந்ததினாலும் பொன் விழாக் கொண்டாட்டத் தீர்மானம் நிறைவேறிற்று
மற்றும் வெளி ஜில்லாக்களிலுள்ள பல நகரசபைகளும், ஜில்லா போர்டுகளும் பொன்விழாக் கொண்டாடத் தீர்மானித்திருக்கின்றன. பொன்விழாக் கொண்டாடத் தீர்மானத்தை தூத்துக்குடி நகரசபைத் தலைவர். நிராகரித்து விட்டாலும், மீண்டும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சி நடைபெற்று வருகிறதாம். முடிவு என்னாகுமோ தெரியவில்லை. சென்னை நகரசபைத் தீர்மானம் சர்க்காருக்குச் சென்றிருப்பதாயும், அது விஷயமாக என்ன செய்வதென்று சர்க்கார் யோசித்துக் கொண்டிருப்பதாயும் சொல்லப்படுகிறது. நாட்டிலுள்ள எத்தனையோ அரசியல் கட்சிகளுள். காங்கிரஸ் கட்சியும் ஒன்று. அது பழமையான கட்சியாக இருக்கலாம்; வலிமை பொருந்திய கட்சியாக இருக்கலாம். இருந்தாலும் இந்தியாவிலுள்ள எத்தனையோ கட்சிகளுள் அதுவும் ஒன்றென்பதை நாம் மறந்துவிடக்
கூடாது. எனவே அத்தகைய ஒரு அரசியல் கட்சியின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக ஸ்தல ஸ்தாபனங்கள் பொதுப் பணத்தைச் செலவு செய்யலாமா என்னும் விஷயம் மூக்கியமாய்ச் சிந்திக்கத் தக்கது. மேலும் இந்தியாவைப் போன்ற வறுமை மிகுந்த நாட்டில், இவ்வளவு பொருளாதார மந்தம் தாண்டவமாடும் சமயத்தில் ஜனங்கள் தீபாலங்காரம் என்ற வெளிப் பகட்டுக் காரியத்தில் பணத்தை விரயம் செய்யக் கூடாது”
குடி அரசு - 1935 (2) 464
என்று பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொன் விழாவின்போது தீபாலங்காரம்வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திரபிரசாதும் கட்டளையிட்டிருக்கிறார். அம்மட்டோ! அபிப்பிராய பேதத்துக்கு இடமில்லாத முறையில் விழாக் கொண்டாட வேண்டுமென்றும் காங்கிரஸ் தலைவர் வற்புறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் பக்தர்களோ, ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் தேசீயக் கொடியைப் பறக்கவிட வேண்டுமென்கிறார்கள். காங்கிரஸ்காரரின் மூவர்ணக் கொடி எவ்வாறு தேசீயக் கொடியாகும். எல்லா அரசியல் கட்சியாரும் ஒப்புக் கொண்ட கொடியைத்தான் “தேசீயக்கொடி'' என்று கூறலாம். காங்கிரஸ்காரரின் ராட்டைக்கொடி தேசீயக் கொடியாகா தென்றும், தேசீயக் கொடியை நிர்ணயம் செய்யும் உரிமை வட்டமேஜை மகாநாடு போன்ற சர்வகட்சி மகாநாட்டுக்கே உண்டென்றும் தேசீய தினசரியான “தமிழ்நாடு” வெகு காலத்துக்கு முன்னேயே கூறியிருக்கிறது விவாதத்துக்கு இடமாகவிருக்கும்போது தேசீயக் கொடியை ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் பறக்கவிடுவது காங்கிரஸ் தலைவர் கட்டளைக்கு முரணாகாதா? “இந்தியாவைப் போன்ற வறுமை நாட்டில் இவ்வளவு பொருளாதார மந்தம் தாண்டவமாடும் இக்காலத்து” சென்னை நகரசபை, பொன்விழாவுக்காக 500 ரூபா செலவு செய்வது நீதியாகுமா? இதர ஸ்தல ஸ்தாபனங்கள் பணச்செலவு செய்யலாமா? சொந்தப் பணத்திலிருந்தோ, காங்கிரஸ் நிதியிலிருந்தோ, விழுங்கி யேப்பமிட்டது போக மீதமா யிருக்கும் திலகர் சுயராஜ்ய நிதியிலிருந்தோ, பொன் விழாக் கொண்டாட காங்கிரஸ்காரர் செலவு செய்வதை நாம் ஆட்சேபிக்கவில்லை. அது அவர்கள் சொந்த விஷயம். பொதுப் பணத்திலிருந்துசெலவு செய்வதையே நாம் ஆட்சேபிக்கிறோம்.
கொடியேற்று விஷயமாக சர்க்கார் பிறப்பித்திருக்கும் உத்தரவை அரசியல் ஞானமும், நேர்மையும் உடையவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் என்பது நிச்சயம். 1932-ம் வருஷத்தில் தேசீயக் கொடிசம்பந்தமாக சர்க்கார் பிறப்பித்துள்ள தடை யுத்தரவை காங்கிரஸ் பொன்விழா சமயத்து ஞாபகத்தில் வைக்கும்படியும், அமல் நடத்தும்படியும் சென்னை சர்க்கார் ஸ்தல ஸ்தாபனங்களுக்கெல்லாம் தெரிவித்திருப்பதாக அறிகின்றோம் எனவே தேசீயக் கொடித் தொல்லை ஒழிந்துவிடுமென்று நம்பலாம். பொன் விழாவுக்கு ஸ்தல ஸ்தாபன பணத்தைச் செலவு செய்வது சம்பந்தமாக சர்க்கார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை தேசமக்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
குடி அரசு - கட்டுரை - 22.12.1935
465 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
தேவகோட்டை வக்கீல் சங்கம்
பார்ப்பண்யத் தாண்டவம்
ஒரு விளக்கம்
தேவகோட்டை 12-12-35
தோழர் எஸ். லக்ஷ்மீரதன் பாரதி அவர்கள் எழுதுவதாவது:-
சென்ற வாரத்தில் “குடிஅரசு” பத்திரிகையில் “தேவகோட்டையில் பார்ப்பனீயத் தாண்டவம்” என்ற தலைப்பின் கழ் பிரசுரிக்கப்பட்ட விவரங்களைப் படித்தேன். அதில் கண்ட விவரங்கள் சில சரியானதா யில்லாத படியால் பின்வரும் குறிப்பை அனுப்புகிறேன். அதைப் பிரகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராமண வக்கீல் அங்கத்தினர் பலர் பிராமண அங்கத்தினர் களுக்கு மட்டும் தனியாக இரண்டு தண்ணீர்ப் பானைகள் வக்கீல் சங்கத்தில் வைக்கவேண்டுமென்று சங்கத்திற்கு எழுதினார்கள். அதன் பேரில் சங்கத்தின் நிர்வாகக் கமிட்டியானது, இதைப் பொதுக் கூட்டத்திலோ நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்திலோ ஆலோசனை செய்யாமல் சுற்றறிக்கை மூலமாகப் பின் வரும் தீர்மானத்தை நிறை வேற்றியது. “சிற்றுண்டி சாப்பிடும் இடமும் அதில் வைத்திருக்கும் தண்ணீர் பானைகளும் பிராமண அங்கத்தினர்களுக்குமட்டும் தனியான உபயோகத்திற்கு அமைத்திருக்கிறது. இத்தீர்மானத்தை சங்கத்தின் விளம்பரப் பலகையிலும் பிரசுரித்தார்கள். அத்தீர்மானத்தின்கழ்காரியதரி8, இதரஅங்கத்தினருடைய உபயோகத்திற்காக டிபன் ஷெட்டிற்கு வெளியே தண்ணீர்ப்பானை வைத்திருப்பதாக எழுதியிருந்தார். இந்த முறையைக் கமிட்டியின் அங்கத்தினரில் ஒருவரான அட்வகேட் தோழர் எ. ரெங்கசாமி ஐயங்காரவர்கள் ஆட்சேபணை செய்தார்.
இந்த விளம்பரம் பிரசுரம் செய்யப்பட்டதைப் பார்த்த மூன்று பிராமணரல்லாத வக்கல்களும் இத்தீர்மானம் நியாயமற்றதென்றும், அறிவுக்குப் பொருத்தமற்றதென்றும், சட்டத்திற்கும் அதிகார வரம்பிற்கும் மீறியதென்றும் அதனால் தாங்கள் அதை மதிக்கப் போவதில்லையென்றும் காரியதரிசிக்கு அறிக்கை யிட்டார்கள்.
குடி அரசு - 1935 (2) 466
அதன்பின்னால் அட்வகேட் தோழர் எ. ரங்கசாமி ஐயங்காரவர்கள். தன்னுடைய கமிட்டி மெம்பர் ஸ்தானத்தை ராஜிநாமாச் செய்து விட்டார்கள்.
இந்த நிலைமையில் இருக்கிறது இந்தப் பிரச்சினை. இன்னும் வக்கில் சங்கக் கூட்டத்திலும் ஒரு முடிவு செய்யப்படவில்லை. ஆனால் 83 அங்கத்தினர்களில் 80 பேர் பிராமணர்களாக இருப்பதி னாலும் இவர்களிற் பலர் ஏற்கனவே தங்கள் உபயோகத்திற்காக தனிப் பானைகள் வைக்க வேண்டுமென்று எழுத்து மூலமாகக் கேட்டிருப்பதி னாலும் இந்த விஷயம் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் வந்தாலும் நிச்சயமாக இதே விதமாகத்தான் தீர்மானிக்கப்படுமென்றே எதர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் எல்லோரும் படித்தவர்களான தாலும் அறிவாளிகள் ஆனபடியாலும் பொதுச்சங்கத்தில் இவ்வித அறிவற்றதும் வகுப்புத் துவேஷத் தன்மையுடையதுமான இர்மானத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம்.
இச்சங்கத்தின் அங்கத்தினர் பெரிதும் காங்கிரஸ்காரர் எனக் கண்டிருப்பது சரியல்ல. காங்கிரஸ்காரர் வெகு சிலரே ஆவர். சிலர் பெரும் சனாதன கட்சியினர். பெரும்பாலோர் ஒரு கட்சியினையும் சேராதவர்கள். சென்ற இந்தியச் சட்டசபைத் தேர்தலுக்கு முன் தோழர் ராஜகோபாலாச்சாரியார் இச்சங்கத்துக்கு வந்து அங்கத்தினர்களைக் கண்டு பேச முயன்றபோது எதிர்ப்பேர்ப் பட்டதினால் அவருக்கு வர முடியாமல் போய்விட்டதென்றால் அதிலிருந்து இவர்கள் எவ்வளவு தூரம் காங்கிரஸ்காரர்கள் என்பதை ஒருவாறு அறிந்து கொள்ளலாம்.
பாரதியார் காங்கிரஸ் இண்டாமை விலக்குக் கமிட்டியின் தலைவர் என்ற கண்டிருப்பதும் சரியில்லை. ஹரிஜன சேவா சங்கம் காங்கிரஸ்காரர்களுக்கு எவ்விதத்திலும் சொந்தமானதல்ல. பாரதியார் அதற்கு காரியதரிசயாக இருந்தாரேயொழிய தலைவராக இருந்தது இடையாது. மற்ற விவரங்கள் எழுதியவருடைய அபிப்பிராயங்களாகும்.
குடி அரசுப் பத்திரிகையில் எப்பொழுதும் சரியான விவரங்களே வரவேண்டுமென்பது என்னுடைய அவா. அதனால் இதனை அவசியம் பிரசுரிக்குமாறு வேண்டிக்கொள்ளுகிறேன்.
பத்திராதிபர் குறிப்பு- தோழர் பாரதியாரின் விளக்கக் கடிதத்துக்கு வந்தனம். “ஹரிஜன” சேவா சங்க காரியதரிசியான பாரதியாரைத் தலைவர் எனக் குறிப்பிட்ட தவறை ஒப்புக்கொள்கிறோம்.
இந்தத் தவறினால் நமதபிப்பிராயத்துக்கு எள்ளளவேனும் பாதகமேற்படவில்லை யென்பதை தோழர் உணரவேண்டும்
479 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
உத்தியோகத் தோரணையில் ''ஹரிஜன'' சேவா சங்கத்துக்கும் காங்கிரசுக்கும் எத்தகைய சம்பந்தமும் இல்லாதிருக்கலாம்.
ஆனால் கிரியாம்சையில் “ஹரிஜன” சேவா சங்கம் காங்கிரஸ்காரரின் குடும்பச் சொத்து என்று தானே மதிக்கப்பட்டு வருகிறது
வக்கீல் சங்க பார்ப்பன அங்கத்தினரில் பெரும்பாலார் காங்கிரஸ் அங்கத்தினர் அல்லாதவராயிருப்பதினால் நமது அபிப்பிராயத்துக்கு எத்தகைய
குந்தகமும் ஏற்பட்டுவிடாது.
பார்ப்பனர்களாய் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதித் திமிர் கொண்டவர்கள் என்பதே நமது திடமான அபிப்பிராயம். பிரஸ்தாப தகறார் மூலம் தேவகோட்டை வக்கீல் சங்க நிர்வாக கமிட்டி மெம்பர் பதவியை ராஜினாமாச் செய்த தோழர் ௭. ரெங்கசாமி அய்யங்கார் போன்றவர்களைப் புறநடை என்று தான் தள்ளவேண்டும். எனினும் இவ்விஷயத்தில் கண்ணியமாக நடந்துகொண்ட தோழர் ரங்கசாமி அய்யங்காரைப் பாராட்டுகிறோம்.
வக்கீல் சங்கப் பொதுக் கூட்டத்தில் பிரஸ்தாப விஷயம் ஆலோசனைக்கு வந்து நிர்வாகக் கமிட்டித் தீர்மானம் சரியென ஒப்புக்கொள்ளப்பட்டால் தோழர் எ. ரங்கசாமி அய்யங்கார் வக்கீல் சங்கத்திலிருந்தும் விலகிவிடுவார். என்றும் நம்புகிறோம்
வக்கீல் சங்க நிர்வாக கமிட்டியின் தீர்மானம் “நியாயமற்றதென்றும் அறிவிற்குப் பொருத்தமற்றதென்றும் சட்டதிற்கும் அதிகார வரம்பிற்கும் மீறியதென்றும் அதனால் அதைத் தாங்கள் மதிக்கப்போகிறதில்லை யென்றும் காரியதரிசிக்கு அறிக்கையிட்ட மூன்று பிராமணரல்லாத வக்கீல்களும் அத் தீர்மானத்தை இதுவரை மீறவில்லையானால் இனியேனும் மீறித் தம் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள முன் வருவார்களாக! தேவகோட்டைவக்கீல்சங்க அங்கத்தினர் 83பேரில் 80 பேர்பிராமணர்கள் என்றும் அவர்களில் பலர் தங்கள் உபயோகத்திற்காக தனிப் பானைகள் வைக்க. வேண்டுமென்று எழுத்து மூலம் ஏற்கனவே கேட்டிருப்பதாயும் இந்த விஷயம் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் வந்தாலும் நிச்சயமாக இதே விதமாகத்தான் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கும் தோழர் பாரதியார் அதே மூச்சில் எல்லோரும் படித்தவர்களானதினாலும் அறிவாளிகள் ஆனபடியாலும் பொதுச்சங்கத்தில் இவ்வித அறிவற்றதும் வகுப்புத் துவேஷத் தன்மை யுடையதுமான தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படலாம் என்று கூறுவது தான் நமக்கும் பெரிய வியப்பாக விருக்கிறது.
தோழர்பாரதியார் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படவேண்டா மென்பது நமது நோக்கமல்ல. பொதுக்கூட்டத்தில் பிரஸ்தாபத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகாவது தோழர் பாரதியாரின் மயக்கம் தெளியுமானால் அதுவே நமக்குப் போதுமானது
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 22.12.1935
குடி அரசு - 1935 (2) 468
காங்கிரசுக்கு எதிர்ப்பு
அகில இந்திய முயற்சி.
பிரபலஸ்தர்கன் ஆதரவு
வரப்போகும் சீர்திருத்தத்தைக் கவிழ்ப்போம்; பிரதிநிதி சபை அமைப்போம்; எதிர்கால அரசியலைவகுப்போம் என்று அசம்பிளித் தேர்தலுக்கு முன் கூச்சல் போட்டு பொதுஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பறித்த காங்கிரஸ் வாலாக்கள் மந்திரி பதவிகளைக் கைப்பற்ற முயர்ச்சி செய்து வருகிறார்கள்.
இதிலும் காங்கிரஸ்காரர்களுக்குள் ஒற்றுமையான அபிப்பிராயம் இல்லை. சில மாகாணங்கள் ஆதரிக்கின்றன. காங்கிரஸ் நிர்வாகிகளோ திட்டமாக எதுவும் கூறவில்லை. பதவி ஏற்கும் பிரச்சினையை லக்ஷ்மணபுரி காங்கிரசில் முடிவுசெய்து கொள்ளலாமென்று ஒத்திப்போட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் முடிவை எதிர்பாராமலே தேச நலத்துக்கான முயற்சிகள் செய்ய பொறுப்புடைய தேசத் தலைவர்களுக்கு உரிமையுண்டு
“காங்கிரஸே இந்தியா, இந்தியாவே காங்கிரஸ்” என்று காங்கிரஸ் வாலாக்கள் கூறிக்கொண்டாலும் பொதுஜனங்கள் அதை ஆதரிக்கவில்லை. வரப்போகும் சீர்திருத்தம் எவ்வளவு குறைபாடுகள் உடையதாயிருந்தாலும் அதை ஒப்புக்கொண்டு அதனால் கிடைக்கக்கூடிய சாத்தியமான நன்மைகள் எல்லாம் தேச மக்களுக்குக் கிடைக்கும்படி கடனாற்றுவதே விவேகிகள் கடமை. அகில இந்திய மதிப்புப் பெற்ற பொறுப்புடைய தலைவர்கள் எல்லாம் இவ்வாறே அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள். வரப்போகும் சீர்திருத்தத்தை ஏற்று நடத்தும் நோக்கத்துடன் ஸ்வராஜ்யக் கட்சியாரும், தேசீயக் கட்சியாரும் ஆந்திரம், வங்காளம், பீகார், பம்பாய் மத்திய மாகாணம், மகாராஷ்டிரம் முதலிய பிரதேசங்களில் தனித்தனி ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி தத்தம் கட்சிகளுக்கு ஆதரவு தேடப் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். அரசியல் அநுபவம் வாய்ந்த பல பிரபலஸ்தர்கள் இம் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
எல்லா மாகாணங்களிலுமுள்ள ஸ்வராஜ்யக் கட்சியாரையும், தேசீயக் கட்சியாரையும் வரவழைத்து புனாவில் ஒரு மகாநாடு கூட்டி ஒரு அகில இந்தியக்கட்சி ஏற்படுத்த ஆந்திர மாகாண ஸ்வராஜ்யக் கட்சிக் காரியதரிசி தோழர் ஜி.வி. சுப்பராவ் முயற்சி செய்வதாயும் தெரிகிறது இந்தியா முழுதும் செல்வாக்கும், அரசியல் அநுபவமும் உடையவர்கள்
460 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எல்லாம் இம் முயற்சியில் கலந்துகொள்வார்களாகையால் வரப்போகும்
சீர்திருத்தச் சட்டசபைகளில் காங்கிரஸ்காரர் ஆதிக்கம் பெறவே முடியாது. ஸ்தாபனமாகப் போகும் இந்த அகில இந்தியக் கட்சிக் கொள்கை களுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கைகளுக்கும் பாராட்டத்தக்க வேற்றுமை யில்லை. எல்லாக் கட்சிகளும் சட்ட வரம்புக்குட்பட்டவைகளே. தற்கால ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம் ஏனைய தேசீயக் கட்சி வேலைத் திட்டங்
களுக்குக் குறைந்ததல்ல. சட்ட வரம்புக்குட்பட்ட கட்சிகள் எல்லாம் ஊக்கமாக உழைத்தால் காங்கிரஸ் தலை தூக்கவே முடியாது. எனவே காங்கிரஸ்காரர் மிரட்டல்கள். வீண் மிரட்டல்கள் என்பதை தேச மகாஜனங்கள் உணர்வார்களாக!
குடி அரசு - கட்டுரை - 22.12.1935
குடி அரசு - 1935 (2) 470
கொனள்ளைக்காரப் பார்ப்பனர்
ஏழை ஏழையென்று ஏமாற்றும் வித்தை
நம்மவர்கள் கண்மூடி தர்மம்
- உண்மை விளம்பி
ஒருவன் செய்த தப்பிதத்திற்குத் தக்கபடி தண்டனை கொடுப்பது உலக தர்மம். ஆனால் தப்பிதம் செய்தவன் பிறந்த ஜாதிக்குத் தக்கபடி தண்டனை விதிப்பது இந்து தர்மம். மரியாதையும், தனிப்பட்ட நபரின் யோக்கியதையைப் பொறுத்து வருவதில்லை. அவனுடைய ஜாதியைப் பொறுத்தே நமது நாட்டில் மனிதர்களின் உயர்வும், மரியாதையும் கவனிக்கப்படுகின்றன. ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கிய மனுநீதி இன்று இல்லை. இங்கிலீஷ்கார ராஜ்யத்தில் கிரிமினல் குற்றங்களைப் பொறுத்த வரையில் சட்டம் எல்லா ஜாதிகளையும் சமமாகப் பாவித்து அமுல்
செய்கிறது. ஆயினும் சமூக வாழ்வில் ஜாதி பற்றிய சலுகைகளும், கொடுமை
களும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை.
சட்ட மூலம் அரசாங்கத்தினிடம் பெற முடியாமற் போன விசேஷ உரிமைகளை, பொது ஜனங்களின் அனுதாப மூலமாகப் பெற்று அனுபவித்து வருகின்றனர் பார்ப்பனர். பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் கையாளும் முறைகள் பல. அவற்றுள் ஒன்று “பிராமணனும், பசுவும் ஒன்று அவர்களால் நன்மையேயன்றித் தீமையில்லை. பிராமணன் ஏழை! அவனை ஆதரிப்பது மற்றவர் கடமை” என்று சொல்லிக் கொண்டு, தங்கள் சமூகத்தின் ஏழ்மையைப் பற்றியும், ஆதரவற்ற நிலைமையைப் பற்றியும் சதா விளம்பரப்படுத்தி மற்றவர்களை நம்பும்படி செய்கின்றனர். “பாவம்! ஏழை பிராமணன்! பிழைச்சிட்டுப் போறான்!” என்று நம்முடைய
ஜமீன்தார்களும், பிரபுக்களும், முதலாளிகளும், அதிகாரிகளும் பிராமணருக்கு அனுதாபங் காட்டுவதில் போட்டி போட்டு வருகின்றனர். இந்த அனுதாபமும், ஆதரவும் எவ்வளவு நியாயமற்றவை என்று ஒரு நிமிஷம் யோசித்துப் பார்த்தால்கூட விளங்காமல் போகாது
முதலாவது பிராமணன், ஏழை என்பது ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை. இரண்டாவது பிராமணன் என்கின்ற காரணத்திற்காக ஒருவன் பிழைச்சுட்டுப் போறான் என்பது அர்த்தமற்ற இரக்கம் 471௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பிராமணன் ஏழையா?
பிராமணர் மற்ற சமூகத்தினரைலிட மிகவும் எளிய நிலையில் இருப்பவர்கள் என்று சாதாரணமாய் எல்லோரும் நம்பி வருகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறில்லை. இந்தியாவின் தற்காலப் பொருளாதார நிலையில் மற்ற எல்லாச் சமூகங்களையும்விட உயர்ந்த அந்தஸ்தில் வாழ்ந்து வரும் சமூகம் பார்ப்பன சமூகம் என்பது மறுக்க முடியாத உண்மை
எங்கேயோ ஒரு நாயக்கர் ஒரு ஜமீன்தாராகவோ, சிற்றரசனாகவோ இருந்தால் அவர் சமூகத்தவர்களில் 100க்கு 99 பெயர் உண்ணவும், உடுக்கவும் வகையின்றி மிகவும் தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறார்கள். எங்கேயோ ஒரு கவுண்டர் பெரிய பண்ணையக்காரராக இருந்தால் அவரைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஜனங்கள் பண்ணை யடிமைகளாகவும், கூலிகளாகவும் தான் இருக்கின்றனர். எங்கேயோ ஒரு செட்டியார் லக்ஷப் பிரபுவாக இருந்தால் அவர் சமூகத்தவர்களில் முக்காலே மூணு வீசம் பேர். நித்திய தரித்திரத்தில் நீந்திக் கொண்டிருப்பவர்கள் தான். எங்கேயோ ஒரு முதலியார் மில் முதலாளியாக இருந்தால் அவர் சமூகத்தவர்களில் பெரும்பாலானவர்கள் கந்தையைக் கட்டிக் காய்ச்சிக் குடிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இப்படியே மற்ற பார்ப்பனரல்லாத சமூகங்களின் நிலைமையும் இருந்து வருகிறது. மகம்மதியர் நிலை இன்னும் மோசம். எப்பவோ ஒரு காலத்தில் அவர்கள் நவாப்புகளாக இருந்தார்கள் என்ற சரித்திர நினைவைத் தவிர தற்காலம் சுக வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய செளகரியங்கள் அவர்களில் பெரும்பாலார்க்கு இல்லை. ஆதி திராவிடர் நிலைமையோ சொல்ல வேண்டியதில்லை. “யாக்கை அகத்ததோ புறத்ததோ" என்ற ஆராய்ச்சியைத் தினந் தினம் செய்து வருகின்றது அக்சமூகம்.
இந்தச் சமூகங்களின் மத்தியில், இந்திய சமுதாயத்தின் துக்ககரமான, பயங்கரமான தரித்திர நிலையில், கூடுமானவரை தங்களுக்கு வேண்டிய எல்லா செளகரியங்களையும் கஷ்டமில்லாமல் பெற்றுக் கவலையற்றுச் சுகஜீவனம் செய்து வருகிற சமூகம் ஒன்று இருக்கிறதென்றால் அது பார்ப்பன சமூகமேயாகும். இந்த உண்மையை ஒப்புக் கொள்ளாதவர் பலர் இருக்கலாம். அவர்கள் தான் “பாவம்! ஏழைப் பிராமணன்! போறான் போ” என்பவர்கள். தினசரி வாழ்க்கையில் பார்ப்பனர் நிலைமையையும், மற்றவர். நிலைமையையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து பார்த்தால் நாம் கூறும் முடிவை மறுக்க எவரும் துணியார்.
தற்கால சமூக வாழ்க்கை
ஒரு சமூகத்தின் சிறப்பும், செல்வமும், அச்சமூகத்தவரின் கல்வி நிலையைப் பொறுத்திருக்கின்றன. பிராமணரில் 100க்கு 95 பெயர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறார்கள். மற்றவர்களில் 100க்கு 5 அல்லது 6 பெயர்
குடி அரசு - 1935 (2) 472
கூடப் படித்தவர் என்று சொல்லுவதற்கில்லை. இந்த ஒரு விஷயத்திலிருந்தே பிராமணர் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கின்றனர் என்பது விளங்கும் வேறு உதாரணங்கள் தேவையில்லையென்றாலும், சாதாரண ஜனங்களும் நன்றாக உணரும் பொருட்டு, எல்லோர்க்கும் கட்புலனாகக் கூடிய வேறு சில உதாரணங்களையும், நம்மவர் தினசரி வாழ்க்கையிலிருந்து எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்
(1) பெரிய பட்டணங்களில் சிங்காரச் சோலைகளுக்கிடையில் அலங்கார மாளிகைகள் கட்டிக் கொண்டும், மோட்டார் முதலிய வாகனாதிகள் வைத்துக் கொண்டும், ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களில் பார்ப்பனர் எத்தனை பேர் என்றும், மற்றவர் எத்தனை பேர் என்றும் கவளித்திருந்தால் பாதிக்கு மேல் பார்ப்பனர்தான் என்று தெரியும். மொத்த ஜனத் தொகையில் பார்ப்பனர் எண்ணிக்கையையும், பங்களா வாழ்க்கை நடத்துபவர்களில் இவர்கள் எண்ணிக்கையையும் கவனிக்கும்போது பணக்காரர்கள் யார்? என்பது விளங்காமல் போகாது. மிகவும் ஏழையென்று சொல்லிக் கொள்ளுகிற பார்ப்பான்கூட மாதம் 3 அல்லது 4 ரூபாய் குடிக்கூலி கொடுத்தாவது, வெயில், மழை, பனி முதலியவற்றின் கொடுமைகளுக்கு உட்படாமல் ஏதோ வீடு என்பதில் குடியிருக்கிறான். ஆனால் பிராமணரல்லாதாரில், வேலி யொதுக்கிலும், மரத்தடியிலும், கீற்றுச் சாலைகளிலும் தங்கி, வெய்யிலில் காய்ந்து, மழையில் நனைந்து பனியில் உலர்ந்து பரிதவிக்கும் குடும்பங்கள் எத்தனை ஆயிரம்?
(2) பார்ப்பனரில் பெண்கள் எவரும் வீட்டைவிட்டு வெளியில் போக வேண்டிய அவசியம் இல்லை. குடும்பங்களைத் தவிர கூலி வேலைக்குப் போகிறவர் கிடையாது. கிராமத்தில் வசிப்பவர்கூட விறகு பொறுக்கவோ, கீரை பறிக்கவோ வெய்யிலில் வெளியே போகிற வழக்கமில்லை. ஆனால் பிராமணரல்லாதாரில், குடும்ப காரியங்களையும் பார்த்துக் கொண்டு தினமும் கூலிக்குப் போய் கால் பணம், அரைப் பணம் சம்பாதிக்கவும், வேலி வேலியாய் விறகு பொறுக்கி வரவும், காடுகாடாய்ப் போய்க் கீரை பறித்து வரவும் வேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்க்கை நடத்த வேண்டிய பெண்கள் எத்தனை லக்ஷம்?
(3) காப்பி ஓட்டலில் சம்பளத்துக்கு இருக்கும் பார்ப்பான் வீட்டுப் பெண்கள் கூட சாதாரணமாய்க் கட்டுவது பட்டுப் புடவை. போடுவது நாகரீகப் பாடியுடன் ஜாக்கட்டு. ஒவ்வொருத்தி உடம்பின் மேலும் குறைந்தது 500 ரூபாய் பொறுமான நகைகள். ஆனால் பார்ப்பனரல்லா தவர்களில் (தங்களை அழகுபடுத்தி உடம்பை விற்று வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ள விலை மாதர் தவிர) பட்டுப்புடவை கட்டிப் பாடியும் ஜாக்கட்டும் போடும் பெண்கள் எத்தனை பேர்? தங்கள்.
473 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
மானத்தைக் காப்பாற்றி உடலை மறைக்கவும் போதிய துணியின்றிக் கிழிசலையும் பொத்தலையும் மறைத்து மறைத்துக் கட்டி வெளியில் போகும் துயரப்படுபவர் எத்தனை லக்ஷம்? இடுப்பில் இருப்பதைத் தவிர்த்து வேறு துணியில்லாததால் அழுக்கையே கட்டி அவஸ்தைப் படுபவர் எத்தனை லக்ஷம்? பெண்களுக்கியல்பாகவுள்ள நகைப் பைத்தியத்தைத் திருப்தி செய்து கொள்கிறதற்காகச் செம்பு பித்தளை மோதிரங்களையும், காப்பு கொலுககளை மண் வளையல்களையும், கண்ணாடி மணி மாலைகளையும் (எல்லாம் சேர்ந்து ஒரு வெள்ளி ரூபாய் பொறாது) அணிந்து திருப்திபடுகிறவர்கள் எத்தனை கோடி?
(4) யாசகள் செய்து ஜீவிக்கிற பார்ப்பான் வீட்டிலும் தினம் இரண்டு வேளை சமைத்துக் காய்கறி பதார்த்தங்களுடன் சாப்பிடுவதும், ஒரு வேளையாவது காப்பி குடிப்பதும் சாதாரணமாய் நடக்கிற காரியங்கள். மற்றவர்கள் 100க்கு எத்தனை பேருக்குத் தினம் காப்பி சாப்பிட முடிகிறது? ஒருவேளை சமைத்து இரண்டு வேளை யுண்டு மிஞ்சியதைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டிய நிலையில் எத்தனை பேர் இருக்கின்றனர்? பகலெல்லாம் பட்டினி கிடந்து பொழுது விடிந்த பின் காய்ச்சிக் குடிக்கிற குடும்பங்கள் எத்தனை?
(5) பரம ஏழை என்கிற பார்ப்பான் வீட்டிலும் தங்களுக்குத் தேவையுள்ள வெண்கலப் பாத்திரங்களும், செம்புப் பித்தளைப் பாத்திரங்களும் இருப்பதோடு குறைந்தது இரண்டு வெள்ளி டம்ளரும், ஒரு வெள்ளித் தட்டும் சாதாரணமாய் இருக்கும். மற்றவர்களின் வீடுகளில் வெள்ளிப் பாத்திரங்களைக் காண முடியுமா? தண்ணீர் எடுக்கத் தகரப் பாத்திரங் களுக்கும் விதியற்று மண் பானைகளையும் சொப்புக்களையும் உபயோகிக்கிற குடும்பங்கள் எத்தனை லக்ஷம்? இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள பானை யில்லாமல் அவ்வப்போது வாய்க்காலுக்கோ கிணற்றுக்கோ போய்க் கொண்டு வரவேண்டிய நிலையில் உள்ளவர்கள் எவ்வளவு பேர்?
(6) மிகவும் தரித்திரம் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பான் கூடத் தன்: வீட்டில் நடக்கும் நலம் தீமை முதலிய காரியங்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய முடிகிறது. மற்றவர்களில் இவ்வாறு செய்பவர்கள், செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர்? வளைகாப்பும், சீமந்தமும், ஆண்டு நிறைவும், ஆயுள் ஓமமும், அறுபதாங் கல்யாணமும் (கஷ்டியாப்த பூர்த்தி) பிராமணரல்லாதாரில் எத்தனைக் குடும்பங்களில் நடைபெற்று வருகின்றன? இவ்வாறே பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகலாம் இவற்றிலிருந்து விளங்கும் உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டிலுள்ள
குடி அரசு - 1935 (2) 474
மற்ற எல்லாச் சமூகங்களையும்விட பிராமண சமூகத்தின் பொருளாதார நிலை மேலானது என்பதே, பார்ப்பனருடைய உயர்ந்த நிலைக்குக் காரணம் என்னவென்று விவரிக்க இது சமயமல்ல. பொருளாதார நிலையில் உள்ள ஏற்றத் தாழ்வைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். இரு சமூகங்களின் நிலைமை இப்படியிருக்க, “பாவம்! பிராமணன் ஏழை பிழைச்சுட்டுப் போறான்" என்று பிராமணரல்லாத பிரபுக்களில் சிலர் தங்களைச் சுற்றியுள்ள தரித்திரத்தையும், துக்கத்தையும் கவனிக்காது, பிராமணருக்குச் சலுகை காட்ட முன் வருவது எவ்வளவு மடத்தனம்? ஏழை பிராமணன் என்று தங்களைச் சொல்லிக் கொள்வதன் மூலம், பார்ப்பான் என்ன அக்கிரமம் செய்தாலும், தப்பிக் கொள்ளவும் கஷ்டப்பட்டு சுகஜீவனம் நடத்தவும் முடிகிறதல்லவா? மனு தர்மம் பிரிட்டிஷ் ராஜாங்கத்தில் வெளிப்படையாய் அமுல் செலுத்துவதில்லை யென்றாலும், சமூக வாழ்வில் மறைமுகமாகப் பாமர ஜனங்களின் அனுதாபத்தைக் கவர்ந்து அமுல் செலுத்தி வருகிறது என்பதில் என்ன சந்தேகம்?
பிச்சை போடுவதிலும் ஜாதியா? “பிராமணாளுக்குத் தர்மம் செய்தால் ரொம்பப் புண்யமுண்டு. வீடு தேடி வந்த பிராமணாளுக்கு இல்லை யென்று சொல்லாதே” என்கிறான். செம்பை எடுத்துக் கொண்டு நேராக வீட்டினுள் வந்து ஒரு பிராமணன் இவன் கேட்பது பசியைத் தணித்துக் கொள்ளச் சாப்பாடு அல்ல. பச்சரிசி அரைப்படி தினம் 6 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக ஊரை ஒரு தரம் சுற்றிவிட்டு இரண்டு மணி நேரத்தில் சுமார் 8, 9 படி அரிசி சம்பாதித்து
விடுகிறான். ஒரு ரூபாய் ஆயிற்று
“சாமீ ஈ இ! குலையெல்லாம் எரியுது. ஏதாவது பழயது இத்தனை இருந்தா ஊத்துங்கோ' என்று ஈனஸ்வரத்தில் தெருவில் நின்று கொண்டு கேட்கிறான் ஒரு கிழவன். “சக்கிலி பறையருக்குப் போடறதில்லை போ” என்று வீட்டுக்காரர் உள்ளேயிருந்து சொல்லுகிறார். கிழவன் வீதிக் கடைசி வரை கேட்டும் ஒருவரும் ஒன்றும் போடவில்லை. முனிசிபாலிடிகுப்பைத் தொட்டியில் உள்ள எச்சிலையைப் பார்க்கிறது பசி
குடி அரசு - கட்டுரை - 29.12.1935
475 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸின் பிரசார வெற்றி
*திணசமி? அவசியம்
இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும், கீழ்மையும், கட்சிகளின் பெருமையும் சிறுமையும் அவற்றின் வெற்றியும் தோல்வியும் எல்லாம் பிரசாரத்தின் பலத்தைப் பொறுத்திருக்கிறதே அல்லாமல் அதனதன் உண்மைத் தன்மையைப் பொறுத்ததாக இல்லை. இதைப் பற்றி இதற்கு முன் பல தடவை எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம்
இன்று நம் தென்னாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எனப்பட்ட காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் பெயரளவில்தான் அரசியல் கொள்கைகளை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன என்று சொல்லக் கூடியனவாயிருக்கின்றனவே தவிர காரியத்தில் அவை பெரிதும் சமூக முன்னேற்றமான கொள்கைகளையே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகின்றன. இதற்கு ஆதாரம் வேண்டுமென்போர் அதிக தூரம் கஷ்டப்பட்டுத் தேடிப் பார்க்க வேண்டியதில்லை. சுலபத்திலேயே உணர்ந்து கொள்ளலாம். எப்படியெனில் இரண்டு கட்சிக்கும், அதாவது காங்கிரஸ் - ஜஸ்டிஸ் என்கின்ற இரண்டு கட்சிக்கும் அரசியல் கொள்கைகளில் உள்ள வித்தியாசம் என்ன என்பதைக் கவனித்தாலே தெரிய வரும்
இன்று காங்கிரஸ்காரர்கள் கேட்கும் “சுயராஜ்ய”த்திற்கும் ஜஸ்டிஸ்காரர் கேட்கும் “சுயராஜ்ய”த்திற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றது என்ற யாராலாவது சொல்ல முடியுமா?
அன்னிய ஆட்சியையோ வெள்ளையர் ஆட்சியையோ விரட்டி அடிப்பதுதான் தங்கள் கொள்கை என்று இன்று யாரும் சொல்லுவதே கிடையாது. அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதில்லை என்றோ, அரசியல் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்றோ, அரசாங்கத்தினிடமும் அரசரிடமும் பக்தியாயும் விஸ்வாசமாயும் இருப்பதில்லை என்றோ, சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை என்றோ இரு கட்சியாரும் இன்று சொல்லுவதில்லை.
காங்கிரஸ் பொன்விழாவில் பீஷ்மப் பட்டம் சூட்டப்பட்ட
சி. விஜயராகவாச்சாரியாரே அது சமயம் பிரிட்டிஷ் சம்மந்தமுள்ள சுயராஜ்யம் தான் வேண்டுமென்றும் சட்டமறுப்புக் கிளர்ச்சி அராஜகத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டது என்றும் சொல்லிவிட்டார்.
குடி அரசு - 1935 (2) 476
1936 ம் வருடக் கடைசி அல்லது 1937-ம் வருட ஆரம்பத்தில் வரப்போகும் அரசியல் சீர்திருத்தங்களை ஏற்று அரசியலை நடத்துவதில்லை என்றோ அதன் பதவிகளை ஒப்புக் கொள்ளுவதில்லை என்றோ, சீர்திருத்தத்தை உடைத்துச் சின்னாபின்னப்படுத்துவதாகவோ யாரும் சொல்லுவதில்லை.
சட்டசபைக்குப் போவதும் ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதும்
ராஜபக்தி பிரமாணம் செய்வதும் மந்திரி பதவி ஏற்பதுவுமான காரியங்களில் இரு கட்சிகளினுடைய ஆசையிலும் முயற்சிகளிலும் எதுவும் ஒரு சிறிதும் குறைந்ததாக இல்லவே இல்லை.
ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஆதிக்கத்திற்கு வந்தால் உத்தியோகங்
களிலும், பதவிகளிலும், பிரதிநிதித்துவத்திலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைப்படி வினியோகம் ஏற்பட முயற்சிக்கும் என்கின்றதான ஒன்றில்
தான் காங்கிரஸ் கொள்கையிலிருந்து மாறுபட்டிருக்கிறது அதுபோலவே காங்கிரஸ் கட்சியும் ஆதிக்கத்துக்கு வந்தால் ஜாதிப்
பிரிவும், வருணாச்சிரம முறையும் காக்கப்படும் என்கின்றதான ஒன்றில்தான் ஜஸ்டிஸ் கொள்கையில் இருந்து மாறுபட்டிருக்கிறது. எனவே இவ்விரண்டு கட்சிகளும் மேற்படி இரண்டு கொள்கைகளான சமுதாய சம்மந்தமான கொள்கைகளில்தான் வேறுபட்டு வித்தியாசப் பட்டிருக்கின்றனவே ஒழிய மற்றபடி அரசியலில் எவ்வித சிறிய மாறுதலும் கொண்டிருக்கவில்லை.
ஆனால் பாமர மக்களின் உள்ளத்தில் ஜஸ்டிஸ் கட்சி பெரியதொரு பிற்போக்கான கட்சியென்றும், தேசாபிமானமற்ற கட்சி என்றும், அரசாங்கத்தோடு ஒத்துழைக்கும் கட்சி என்றும் பதியச்செய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே காங்கிரஸ் கட்சியானது முற்போக்கான கட்சியென்றும், தேசாபிமான கட்சியென்றும், அரசாங்கத்தை ஒழிப்பதற்கு ஏற்பட்ட கட்சி யென்றும் பதியச் செய்யப்பட்டிருக்கிறது
நம் நாட்டுப் பாமர மக்களுக்கு முற்போக்கு எது பிற்போக்கு எது என்பதும், தேசாபிமானம் எது, தேசத் துரோகம் எது என்பதும், அரசாங்கத்தோடு ஒத்துழைப்பது என்பது எது, அரசாங்கத்தை ஒழிப்பது என்பது எது என்பதுமாகிய காரியங்கள் இன்னது என்றே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஏனெனில் அவர்களுக்கு கல்வி அறிவும் பகுத்தறிவும் எவ்வளவு
தூரம் ஏற்படும்படி நாம் செய்து வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தாலே உண்மை விளங்கிவிடும்
மத சம்பந்தத்திலும், சமூதாய சம்பந்தமான பழக்க வழக்கங்களிலும் அவர்கள் எவ்வளவு மூட நம்பிக்கையில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்களோ 477௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அவ்வளவே தான் அல்லது அந்த அறிவே தான் அவர்களுக்கு அரசியல்
தத்துவங்களிலும் இருக்க முடிகிறதே தவிர அதிலிருந்து மாறுபடத் தகுந்த சுயேச்சை அறிவு ஏதும் அவர்களிடத்து இல்லை.
அன்றியும் இது விஷயமாக நடந்து வரும் பிரசாரமும், மற்ற பிரசார சவுகரியமும் காங்கிரசுக்காரர்களுக்கே அதிகமாய் இருப்பதால் காங்கிரசு காரர்களின் இஷ்டம் நிறைவேறுவதற்கு வசதி ஏற்பட்டு விடுகின்றது
காங்கிரசுகாரருக்கு உள்ள சவுகரியங்களில் முக்கியமானது பத்திரிகை சவுகரியமாகும். இரண்டாவது பண சவுகரியமாகும். மூன்றாவது மக்களுக்குள் இருந்து வரும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை உபயோகித்துக் கொள்ளுவதற்கு ஏற்ற வசதிகளாகும்
நான்காவது அவர்கள் (காங்கிரஸ்காரர்கள்) இந்த 15 வருஷ காலமாக எவ்வித பொறுப்புள்ள பதவியும் வகிக்க முடியாமல் போனதின் பயனால் பொது ஜனங்கள் இவர்களுடைய ஆட்சி முறை யோக்கியதையை உணர மார்க்கமில்லாமல் போனதும் ஜனங்களுக்கு இவர்கள் எவ்வித ஜவாப்புதாரித் தனத்துக்கும் அருகர்களாயில்லாமலிருந்தது முதலியவையாகும்.
ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. காங்கிரசைப் போல் பத்திரிகைகள் இல்லை. காங்கிரசுக்கு 100 பத்திரிகை இருந்தால் ஜஸ்டிஸ் கட்சிக்கு 5 பத்திரிகைகூட இல்லை.
காங்கிரசுக்கு ஆங்கிலத்தில் மெயில் உள்பட 3 தினசரி பத்திரிகைகளும்
தமிழில் ஐந்து தினசரி பத்திரிகைகளும், தெலுங்கிலும், மலையாளத்திலும், கன்னடத்திலும் 10 தினசரிகளும் 5000, 10000, 15000 என்கின்ற கணக்கில் பிரதிகளையுடையனவாகவும் இருக்கின்றன.
வாரப் பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் முதலியனவும், அதுபோலவே ஆங்கிலத்திலும், தமிழிலும் 40, 50 என்கின்ற கணக்கில் 5000, 10000 கணக்கில் பிரதிகள் வெளியாகும்படியாக இருந்து வருகின்றன. அதோடு மதங்களைக் காப்பாற்ற குறிகள், உற்சவங்கள், விரதங்கள், சடங்குகள், ஸ்மார்த்தங்கள் முதலியவை இருப்பது போன்று காங்கிரசின் விளம்பரத்துக்குக் காங்கிரசு கான்பரன்சு, தேசீய வாரம், தேசீய சுகாதார வாரம், தேசீய கண்காட்சி, கதர் காட்சி, சுதேசியம், தேசீயக் கொடி, பொன்விழா, தலைவர் வருகை, தலைவருக்குப் பண முடிப்பு, கொடியேற்றம், தேசீய பஜனை, ஊர்வலம் முதலியவையும், அவை போன்ற பல காரியங்களும் பாமர மக்களுக்கு சதா இடையறாத காங்கிரஸ் பக்தியும், அபிமானமும் ஏற்படும்படி செய்து வருகிறதுடன் பொருளாதாரமும் எப்படி எப்படியோ போதிய அளவுக்கும் காங்கிரசின் பேரால் 1000க்கணக்கான
பேர் வாழ்வதற்கும் போதுமானபடி அவ்வப்போது எப்படி எப்படியோ சம்பாதிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனரல்லாதாரில் போதிய பதவி இல்லாத
குடி அரசு - 1935 (2) 478
காரணத்தால் பதவி இழந்தவர்களும், பதவி போட்டியில் தோற்றவர்களும், எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களும் இயற்கையாகவே பார்ப்பனர் களோடு ஒன்று சேருவதன் மூலம் ஆள் பலமும் எப்படி எப்படியோ
சேர்ந்துவிடுகிறது
இத்தியாதி காரணங்களால் காங்கிரஸ் உள்ளுக்குள்ளாக எவ்வளவு
தான் வகுப்புவாதக் கொள்கையை உடையதாய் இருந்தாலும், எவ்வளவுதான் அரசியலில் பிற்போக்கானதாக இருந்தாலும் உண்மையிலும், ஒழுக்கத்திலும், நாணயத்திலும் சிறிதும் பற்றில்லாததாய் இருந்தாலும் எல்லாம் மறைபட்டுப் பாமர மக்களை ஏமாற்றி வெற்றி அடையத்தக்கதாக ஆகி வருகிறது உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டுமானால் காங்கிரசானது சமூக சம்பந்தமாக முற்போக்குள்ள ஒவ்வொரு பிரச்சினையிலும் முட்டுக் கட்டையாகவே இருந்து வந்திருக்கிறது உதாரணமாக சாரதா சட்டம், தீண்டாமை விலக்கு சட்டம், தேவஸ்தான சட்டம், பொட்டுக் கட்டுதல் ஒழிப்பு சட்டம், விபசாரிகள் ஒழிப்புச் சட்டம், இனாம்தார் ஒழிப்பு சட்டம் முதலாகிய சட்டங்கள் ஏற்படுத்துவதிலெல்லாம் காங்கிசுக்காரர்கள் முட்டுக்கட்டையாகவே
இருந்து வந்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் இருந்தும் காங்கிரஸ்காரர்கள் தங்களது பத்திரிகைகளின் பிரசார பலத்தால் தேசாபிமானிகள், முற்போக்காளர்கள், தேசியவாதிகள் என்கின்ற பெயரை பாமர மக்களிடமிருந்து அடைந்து வருகிறார்கள்.
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி இனி காங்கிரஸ் பிரசாரத்திற்கு ஈடு கொடுக்கும்படியாக தங்களது பிரசாரத்தையும் தகுந்த அளவுக்கு தொடங்காவிட்டால் காங்கிரசுடன் போட்டி போட்டு சமாளிக்க முடியாமல் போய்விடும் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
காங்கிரஸ் பிரசாரத்தைக் கண்டு பயந்து நடுங்கி அனேக ஜஸ்டிஸ் காரர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்கு புற முதுகைக் காட்டிவிட்டு காங்கிரசிற்கு ஓடோடிப் போய் அதில் சேர்ந்து வருகிறார்கள். விளம்பரமில்லாத சரக்கு எவ்வளவு நல்லதாயிருந்தாலும் விற்பனை இல்லாமல் போவது அதிசயமல்ல. இவ்விஷயங்களை நாம் பல தடவை எடுத்துக் காட்டியும் ஜஸ்டிஸ்
கட்சித் தலைவர்கள் தகுந்தபடி செவி கொடுத்ததாகத் தெரியவில்லை ஆகையால் பார்ப்பனரல்லாத சமூக நலத்தில் கவலையுள்ளவர்கள் சிலராவது சேர்ந்து இதற்கு ஏதாவது ஒரு வழி செய்து தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதென்றே கருதுகின்றோம்
4799 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
என்னவென்றால் காங்கிரஸ் பத்திரிகைகளின் விஷமப் பிரசாரங்களுக்கு
பதில் சொல்ல நம்மிடம் இருக்கும் வாரப் பத்திரிகைகளுக்குப் போதிய
சவுகரியமில்லை.
எப்படி எனில் 4, 5 காங்கிரஸ் தமிழ் தினசரிகளும் ஆளுக்கொரு குற்றத்தை தினமும் சுமத்தி வந்தால் நமது வாரப் பத்திரிகைகள். வாரத்திற்கொரு முறை ஏதோ ஒன்று இரண்டிற்குத்தான் பதில் சொல்ல
முடிகின்றது. அதற்குள் மற்ற குற்றச்சாட்டும் விஷமப் பிரசாரமும் ஜீரணமாகிறதுடன் ரத்தத்தில் கலந்து விடுகின்றன.
5 பத்திரிகைகள் 6 நாள்களுக்கு 6 x 5 = 30 குற்றச்சாட்டுகளுக்கும் விஷமப் பிரசாரத்துக்கும் ஒரு நாளில் எவ்வளவு மறுப்பும் சமாதானமும் சொல்ல முடியும் என்பதை யோசித்தால் அதனால் ஏற்படும் கெடுதி எவ்வளவு என்பது யாருக்கும் விளங்காமல் போகாது
இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுக்கும்படியான முயற்சியும் பிரசாரமும் இல்லாமல் நம் கொள்கைகளின் மேன்மையையும், அதனால் ஏற்பட வேண்டிய நல்ல பயனையும் மாத்திரம் கருதிக் கொண்டு சும்மா இருந்தால் நாம் எப்படிவெற்றி பெறக் கூடும் என்பதை யாவரும் யோசித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்
காங்கிரசில் எவ்வளவுதான் புரட்டும், பித்தலாட்டமும், கூடாத காரியங்களும் இருந்து வந்த போதிலும் எவ்வளவுதான் அது வெறுக்கப்பட வேண்டியதும், அழிக்கப்பட வேண்டியதுமானாலும் முயற்சி பலனை அளிக்கும் என்பதற்கு காங்கிரசை ஒரு உதாரணமாகக் கொள்ளாமல் இருக்க
முடியாது எவ்வளவு இருந்த போதிலும் இன்று நம் கொள்கையிலும் நமது வெகு சிறு முயற்சியிலும் நமக்குள்ள தைரியமெல்லாம் காங்கிரசு வெற்றி பெறாது என்பதேயல்ல. மற்றென்ன வென்றால் காங்கிரஸ் எவ்வளவுதான் வெற்றி பெற்றாலும் அதன் மூலம் பழயபடி பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்கு வர முடியாது என்பதும்,
அவர்களது வெற்றியெல்லாம் நமக்கு பல வழிகளில் தொல்லை கொடுக்கக்கூடியதாகுமே தவிர அவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) யாதொரு பயனையும் கொடுக்க முடியாது என்கின்ற தைரியமுமேயாகும்.
இதுவரை இந்த 10 வருஷ காலமாய் பார்ப்பனர்கள் முயற்சி பாமர மக்களின் மனதில் விஷத்தை செலுத்தி இருக்கிறது என்பதொன்று மாத்திரமல்லாமல், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அது ஒரு சிறு நன்மையும் அளிக்கவில்லை என்பதை புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவோம்.
உதாரணம் வேண்டுமானால் திருநெல்வேலி ஜில்லா போர்டில் “31 காங்கிரஸ்காரர்கள் ஜெயித்து வந்தும் 32வதாக ஒரு ஜஸ்டிஸ்காரரைப்
குடி அரசு - 1935 (2) 480
பிடித்துத் தலைவராக்கி, 32 ஐ 26 ஆகச் செய்து கொண்டதுடன், போர்டு நிர்வாகம் ஊழலாகி கட்சி சண்டை வலுத்து பழயபடி ஜஸ்டிஸ் போர்டாக ஆகப் போகின்றது என்பது ஒன்றே போதுமானதாகும் பழய உதாரணம் வேண்டுமானாலும் ஒன்று கூறுகிறோம். 1926-ல் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றும், காங்கிரசினால் மந்திரிசபை அமைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டும், அந்தப்படியே காங்கிரஸ் மந்திரி சபை அமைத்து ஆதரித்து வந்தும் ஒரே வருஷத்தில அது ஜஸ்டிஸ் மந்திரி சபையாகி “10 வருஷ காலமாக அசல் ஜஸ்டிஸ் மந்திரிகள் செய்து முடிக்க முடியாத காரியத்தை இந்த மந்திரி சபை செய்துவிட்டது என்று சுதேசமித்திரன் ஒப்பாரி வைத்து அழுகும்படியான காரியத்தை (வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை) செய்து விட்டது ஆகையால் சுயமரியாதை இயக்கம் உள்ள வரை காங்கிரசுக்கு வெற்றி ஏற்படாது என்பதோடு பெயரளவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது என்கின்ற கூப்பாட்டைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் தைரியமாய்க் கூறுவோம். ஆனாலும் நமக்கு வெற்றி ஏற்பட வேண்டுமானால் இன்னும் அதிகமான பத்திரிகைப் பிரசாரம் இருந்தே ஆக வேண்டும் எனவே பல தோழர்களின் அறிவுறுத்தலுக்கும் சில நிர்பந்தங்
களுக்கும் ஆளாகி சமீபத்தில் ஒரு தினசரி காலணாப் பத்திரிகை ஒன்று ஏற்படுத்தித் தீர வேண்டியது அவசியமாகி விட்டது
இதற்கு மூன் பல தடவை இதைப் பற்றி ஆலோசித்து நடத்துவது என்கின்ற முடிவுக்கு வந்து வந்து அதிலுள்ள கஷ்டங்களை நினைத்து பயந்து பயந்து அம்முடிவைக் கைவிட வேண்டியதாயிற்று. கடைசியாக 4, மாதங்களுக்கு முன் கூட தினசரிக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு விடுதலை என்கின்ற பத்திரிகையை வாரம் இருமுறையாக துவக்கப் போவதாகவும் சமீபத்தில் தினசரியாக ஆக்கப் போவதாகவும் தெரிய வந்ததால் அவ்வெண்ணம் கைவிடப்பட்டது இப்போது சமீபத்தில் விடுதலை தினசரி ஆகும் என்கின்ற நம்பிக்கைக்கு இடமில்லாமல் இருப்பதால், ஒரு காலணா தினசரியை ஆரம்பிக்க உத்தேசித்து அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் பயனாய் இன்னும் அதிகமான கஷ்டத்துக்கும் நண்டத்துக்கும் நாம் ஆள் ஆக வேண்டி வரும் என்பது தெரிந்திருந்தாலும் வேறு வழி இல்லாததால் அதில் ஈடுபட வேண்டி இருக்கிறது
அதற்கு வேண்டிய ஆதரவு தமிழ் மக்களிடையே இருக்குமென்று நம்பியே அவ்வேலையில் ஈடுபடுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.12.1935
4] ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
பொப்பிலி ராஜா அறிக்கை
1930-ல் உருப்பெற்ற, தற்காலச் சென்னைச் சட்டசபை, சட்டப்படி 1932-ல் கலைக்கப்பட்டு 1933-ல் புதுச் சட்டசபை ஏற்பட்டிருக்க வேண்டும். எனினும் மூன்று முறை சட்டசபையின் ஆயுள் கவர்னரின் விசேஷ அதிகாரத்தினால் நீட்டப்பட்டதனால் 1930-ல் தோன்றிய சட்டசபை இப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இது சென்னை மாகாணத்தில் மட்டும் காணப்படும் புதுமையுமன்று. இந்தியாவிலுள்ள மாகாண சட்டசபைகள் எல்லாம் ஆயுள் நீடிக்கப்பட்டே இருக்கின்றன. இதற்கு மாகாண மந்திரிகளோ அவர்களை ஆதரிக்கும் கட்சியாரோ மாகாண கவர்னர்களோ, வைஸ்ராயோ ஐவாப்தாரிகளல்ல. புதுச் சீர்திருத்தம் அமலுக்கு வரும்வரை “மன்னர் பெருமான்” சர்க்கார் எப்படியாவது இயங்கிக் கொண்டு இருந்து ஆக வேண்டும். பொதுத் தேர்தல் நடத்த அரசியல் சம்பந்தமான தடைகள் ஏற்பட்டால், சட்டசபைகளின் ஆயுளை நீட்ட சீர்திருத்த சட்டம், மாகாண கவர்னர்களுக்கு அதிகாரமளிக்கிறது. அந்த அதிகாரத்தை உபயோகித்தே மாகாண சட்டசபைகளின் ஆயுளை அதிகாரிகள் நீட்டியிருக்கிறார்கள்.
ஆயுள் நீட்டக் காரணம்
மந்திரிகள் மீதுள்ள கருணையினாலோ, மாகாணங்களில் மந்திரிமாரை ஆதரிக்கும் கட்சியார் மீதுள்ள பரிவினாலோ மாகாண கவர்னர்கள் சட்டசபைகளின் ஆயுளை நிட்டவில்லை. ஆயுளை நீட்டிய பாபத்துக்காக மந்திரிமாரையும், மந்திரி கட்கியாரையும் சென்னை மாகாணத்தைத் தவிர வேறு எந்த மாகாணத்திலும் காங்கிரஸ்காரரோ இதர அரசியல் கட்சியாரோ தூற்றவுமில்லை. கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றவுமில்லை சென்னையிற்றான் காங்கிரஸ் பார்ப்பனர்கள் - அவர்கள் பாட்டனார் வீட்டு முதல் கொள்ளை போவதுபோல் அட்டகாசம் செய்கிறார்கள்; அலறுகிறார்கள்; மாரடிக்கிறார்கள்.
பித்தலாட்டப் பேச்சு பொப்பிலி மந்திரி சபை ராஜிநாமாச் செய்ய வேண்டுமென்று காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஒப்பாரி வைக்கத் தொடங்கி வருஷங்கள் இரண்டு மூன்று ஆகிவிட்டன. “காலாவதியான சட்டசபைக்குப் பொதுஜன ஆதரவு கிடையாது; தற்கால சட்டசபை பிரதிநிதித்துவம் வாய்ந்த சபை அல்ல” எனக் கூச்சல் போடும் காங்கிரஸ்காரர் உபதேர்தல்கள் வரும்போது
குடி அரசு - 1935 (2) 482.
போட்டி போடத் தயங்குவதும் இல்லை. காங்கிரஸ்காரர் எவ்வளவேனும் யோக்கியப் பொறுப்பும், நாணயமும் அந்தரங்க சுத்தியும் உடையவர் களானால் உபதேர்தல்களில் போட்டி போடலாமா? வெற்றி பெற்று சட்டசபையில் குந்தியிருக்கலாமா?
உபதேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ்காரர்கள் தாமும் சட்டசபை மெம்பர்கள் என்று கூறும் ஏக காரணத்தினாலேயே, தற்காலச் சட்டசபை பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்லவென்று கூறுவது சுத்தப் பித்தலாட்டமென்பது தெளிவாகிவிட்டது
மேலும், புதுச் சீர்திருத்தச் சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறி விட்டதினால் மாண்டு - போர்டு சீர்திருத்தச் சட்டம் ரத்ததாகிவிட்டது
புதுச் சட்டப்படிதான் தேர்தல் நடத்த முடியும். அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பூர்த்தியாகும்போது தற்காலச் சட்டசபை கலைக்கப்படும். பொதுத் தேர்தலும் வரும். காங்கிரஸ்காரர் உட்பட எல்லாக் கட்சியாரும் தாராளமாகப் போட்டி போடலாம். பொப்பிலி ராஜாவோ ஜஸ்டிஸ் கட்சியாரோ குறுக்கே நிற்கப்போவதில்லை காங்கிரஸ்காரர் மெஜாரட்டி பலம் பெற்றால் மந்திரிமாரும் ஆகலாம் ஒருவரும் அவர்களைத் தடுக்க மாட்டார்கள்; தடுக்கவும் முடியாது
யொப்பிலி விளக்கம்
எனவே “சட்டசபையைக் கலைக்க வேண்டும்; பொப்பிலி ராஜா ராஜிநாமாச் செய்ய வேண்டும்” என்று கூச்சல் போடுவதற்குப் பொருளே இல்லை. மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று பொப்பிலி ராஜா ஆசைப்படவுமில்லை.
தோழர் சத்தியமூர்த்தி பிதற்றலுக்கு பதிலாக பொப்பிலிராஜா மிகவும் கண்ணியமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சட்டசபையின் ஆயுளை நீட்ட வேண்டுமென்று லார்டு எர்ஸ்கையினையோ அவருக்கு முன்னிருந்தவர்களையோ நாங்கள் கேட்டுக் கொண்டதுமில்லை எங்களுடன் கலந்து சட்டசபைகளின் ஆயுள் நீட்டப்படவுமில்லை. சட்ட சபையைக் கலைத்து மாற்றப்பட்ட இலாக்காக்களின் நிருவாகத்தைக் கவர்னர். ஏற்றுக் கொண்டாலும் நான் தடுக்கப் போவதில்லை” என பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இந்நிலையில் சட்டசபை ஆயுள் நீட்டப்பட்டதற்கு மந்திரிமாரைக் குறை கூறுவது அக்கிரமமல்லவா?
பிரிட்டிஷ் ஆட்சி முறை, சில சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டது. தடுக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டாலன்றி சட்டதிட்டங்களை மீறி பிரிட்டிஷ் அதிகாரிகள் காரியங்கள் நடத்த மாட்டார்கள். காங்கிரஸ் பார்ப்பனக் கூட்டம் என்ன கூச்சல் போட்டாலும் சரி, சட்டசபையைக் கலைக்கும் வண்ணம் நெருக்கடி ஏற்படவில்லையென்று மாகாண கவர்னர் கருதுகிறார்.
483 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
எனவே காங்கிரஸ்காரர் மந்திரி பதவி மோகத்தினால் மாதாமாதம் 4000 ரூபாய் பார்ப்பனரல்லாத மந்திரிகள் பைக்குள் விழுகிறதே என்ற வயிற்றெரிச்சலினால் - லபோ, லபோ என்று வயிற்றில் அடித்துக் கொள்வது மானக்கேடேயாகும்.
காங்கிரசும் காந்தியுமே காரணம் உண்மையில் சட்டசபைகளின் ஆயுள் நீட்டப்பட்டதற்கும் - புதிய அரசியல் அமலில் வரத் தயக்கம் ஏற்பட்டிருப்பதற்கும், அரசியல் ஞானம் என்பது துளிகூட இல்லாத காங்கிரஸ் வாலாக்களே காரணமாகும். முதல் லண்டன் மகாநாட்டில், ஏனைய அரசியல்வாதிகளுடன் கலந்து,
ஒத்துழைத்திருந்தால் இரண்டு வருஷங்களுக்கு முன்னமேயே புதிய சீர்திருத்தச் சட்டம் பார்லிமெண்டில் நிறைவேறி அமலிலும் வந்திருக்கக்
கூடும். “என் சேவல் கூவாவிட்டால் பொழுது விடியாதென்று எண்ணிக் கொண்டிருந்த கிழவியைப் போல்" நாம் செல்லாவிட்டால் வட்டமேஜை மகாநாடே நடைபெறாதென்று காங்கிரஸ்காரர் மனப்பால் குடித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததுபோல் மகாநாட்டு வேலை ஒன்றும் தடைபடவில்லை.
முதல் மகாநாடு செவ்வையாகவே நடைபெற்றது. காங்கிரஸ்காரரின் ஒத்துழைப்பில்லாமலே வட்டமேஜை மகாநாடு வெற்றிகரமாக முடிவு பெற்றுவிடும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் இரண்டாவது மாநாட்டுக்கு காந்தியார் காங்கிரசின் ஏகப் பிரதிநிதியாகச் சென்றார். அனுபவ சாத்திய மல்லாத பல காரியங்களை வற்புறுத்தினார். சமரசமாக முடியவிருந்த வகுப்புப் பிரச்சினைக்கு ஹிமாலய மூட்டுக்கட்டையையும் போட்டார் முஸ்லீம்களுக்குச் சலுகை காட்டி ஒடுக்கப்பட்டவர்கள் கழுத்தில் கத்தி வைக்கவும் சூழ்ச்சி செய்தார். அதையுணர்ந்த ஒடுக்கப்பட்டவர்கள் பிரதிநிதிகளான ராவ்பகதூர் ஸ்ரீநிவாசனும், டாக்டர் அம்பேத்காரும் காந்தியார் சூழ்ச்சிகளை லண்டன் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்தவே இரண்டாவது மகாநாட்டு வேலை தடைபட்டது. இரண்டாவது மகாநாட்டில் காந்தியார் முட்டுக்கட்டை போடாது இருந்திருந்தால் மூன்றாவது மகாநாடு. கூட்டாமலே ஒரு கால் காரியங்கள் மூடிந்திருக்கவும் கூடும். எனவே புதுச் சீர்திருத்தம் அமலில் வரத் தவக்கம் ஏற்பட்டதற்கும், சட்டசபைகளின் ஆயுள் நீட்டப்பட்டதற்கும், காங்கிரஸ்காரர்களே காரணம். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளையோ, ஜஸ்டிஸ் கட்சியாரையோ குறைகூறுவதில் பயனில்லை.
கீரை விற்கும் கிழவியும் ஓப்ப மாட்டான்
சட்டசபையைக் கலைக்க வேண்டும், மந்திரிகள் ராஜிநாமாச் செய்ய வேண்டும் என்பதற்குத் தோழர் சத்தியமூர்த்தி கூறும் காரணங்களைத் தெருவில் கீரை விற்கும் கிழவிகளும்கூட ஒப்புக்கொள்ள மாட்டார்கள் கோக்கலே மண்டபத்தில் கூடிய பார்ப்பன கும்பல்களுக்கு தோழர்
குடி அரசு - 1935 (2) 484
சத்தியமூர்த்தி கூறிய காரணங்கள் உடன்பாடாக இருக்கலாம். ஆனால் விவேகிகள் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். தோழர் சத்தியமூர்த்தியின். குற்றச்சாட்டுக்கு பொப்பிலி ராஜா தமது அறிக்கையில் தக்க ஆதாரங் களுடன் பதிலளித்திருக்கிறார். அவ்வறிக்கை மற்றோரிடத்து வெளிவருகிறது. அவ்வறிக்கையைப் பாரபட்சம் இன்றி படிப்பவர்களுக்குத் தோழர் மூர்த்தியின் பிதற்றல்களுக்கு ஆதாரமே இல்லை என்பது நன்கு புலனாகும். கட்சி நலத்துக்காக ஜில்லா போர்டுகளைப் பிரிப்பதாக தோழர் மூர்த்தி கூறுகிறார். ஸ்தல ஸ்தாபனத் திருத்தச் சட்டப்படி தாலூகா போர்டுகள். கலைக்கப்பட்டபோது, பெரிய ஜில்லா போர்டுகளை பிரிக்கத் தேவை யுண்டாயிற்று. சட்டமும் அதற்கு இடமளிக்கிறது. சட்டப்படியே பொப்பிலி ராஜா நடந்தும் இருக்கிறார். அவரது அறிக்கையைப் படிக்கும் பள்ளிப் பையன்களும்கூட இதை ஒப்புக் கொள்வர். ஜில்லா போர்டுகளைக் கலைத்துவிட்டு தாலூக்கா போர்டுகளை ஏற்படுத்த வேண்டுமென்று தோழர் மூர்த்தி கூறுவது அனுபவ சாத்தியமில்லை யென்றும் பொப்பிலி ராஜா தக்க ஆதாரங்களுடன் விளக்கிக் காட்டி இருக்கிறார். 1933-ல் நிருவாகச் செலவுக்கும் பணமில்லாமல் 90 தாலூக்கா போர்டுகள் ஸ்தம்பித்தன. சிப்பந்திகளுக்குப் பல மாதச் சம்பளம் கொடுக்கப்படவில்லை. 203 தாலூகா போர்டுகளில் 129 போர்டுகள் வரவு செலவுகளைச் சரிக்கட்ட
சக்தியற்றிருந்தன. அதனாலேயே அவைகள் மூடப்பட்டன. தோழர் சத்தியமூர்த்தி உபதேசப்படி ஜில்லா போர்டுகளைக் கலைத்து மீண்டும் தாலூகா போர்டுகள் ஏற்படுத்தப்பட்டால் 1933வது வருஷத்திய நிலைமை தானே மீண்டும் ஏற்படும்.
குறும்புத்தணமான கூச்சல்
கவர்னரைக் கலவாமலே பொப்பிலி ராஜா ஜில்லா போர்டுகளைப் பிரிவினை செய்யத் தொடங்கி யிருப்பதாக எத்தகைய ஆதாரமுமின்றி தோழர் மூர்த்தி ஒரு குற்றம் சாட்டுகிறார். அவரை ஆதரிக்கப் புறப்பட்ட சென்னை மெயிலும் பொப்பிலி ராஜா அறிக்கையைக் கருத்தூன்றிப் படிக்காமல் தோழர் மூர்த்தி குற்றச்சாட்டை ஆமோதிக்கிறது. வேறொரு அரையணா காங்கிரஸ் தினசரியும் அவ்வாறே புலம்புகிறது. ஆனால் உன்மை நிலை என்ன? பொப்பிலி ராஜா தான்றோன்றித்தனமாக எதுவும் செய்துவிட வில்லை. ஜில்லா போர்டு பிரிவினை விஷயம் லோக்கல் போர்டு இன்ஸ்பெக்டரால் பரிசீலனை செய்யப்பட்டு, பொக்கிஷ மந்திரி, கவர்னர் முதலியவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பிறகே பொப்பிலி ராஜா அவர்களால் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தை பொப்பிலி ராஜா தமது அறிக்கையில் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே தோழர் மூர்த்தியும் அவரை அதரிக்கும் தேசீய, ஆங்கலோ இந்தியப் பத்திரிகைகளும் வீண் கூச்சல் போடுவது குறும்புத்தனமாகும். பொது ஜனங்கள் மனத்தில் தப்பெண்ண முண்டாகும்படி செய்யப்படும் இந்த சூழ்ச்சியைப் பார்த்து எவரும் ஏமாந்து போக மாட்டார்கள் என்பது நிச்சயம்
485 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
காங்கிரஸ் வெற்றி! மர்மம்
ஜில்லா போற்டு தேர்தல்களில் காங்கிரஸ்காரர்களுக்கு ஏற்பட்டிருப்ப தாகக் கூறப்படும் வெற்றியின் இரகசியத்தையும் பொப்பிலி ராஜா தமது அறிக்கையில் பகிரங்கப்படுத்தியிருக்கிறார். மேற்கு கோதாவரி தென்னாற்காடு ஜில்லாக்களில் காங்கிரஸ்காரருக்கு மெஜாரட்டி கிடைத்திருப்பதாகத் தோன்றினாலும் மற்ற ஜில்லாக்களில் மெஜாரட்டி இல்லவே இல்லை. திருச்சி, திருநெல்வேலி, சிற்றூர் ஜில்லாக்களில் காங்கிரசும் ஜஸ்டிசும் சமநிலையிலேயே இருக்கின்றன. கடப்பை ஜில்லாவின் ஜஸ்டிஸ் கட்சிக்கே மெஜாரட்டி கிடைக்குமென்று தோன்றுகிறது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆதிக்கம் பெற்ற ஜில்லாக்களில் காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு சொந்தப் பகையை முன்னிட்டு ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் காங்கிரசை ஆதரித்ததே காரணம். மேலும் அவ்வாறு தலைவர்களாக வந்தவர்களும் நேற்று வரை ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித் தவர்களே. எனவே காங்கிரஸ்காரர் மெஜாரட்டி பெற்றுவிட்டதாக ஆர்ப்பாட்டம் செய்வது வெறும் பகட்டேயாகும்
யொறாமையும் வகுப்புத் துவேஷமும் தவிர வேறில்லை
தோழர் சத்தியமூர்த்தி பேச்சையும், பொப்பிலிராஜா அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தோழர் மூர்த்தி பேச்சில் பொறாமை, பகை, வகுப்புத் துவேஷம் முதலியனவும் பொப்பிலி ராஜா அறிக்கையில் நேர்மை சாந்தம் மரியாதை முதலியனவும் அடங்கி யிருப்பதைக் காணலாம். தோழர் மூர்த்தி நினைத்துக் கொண்டிருப்பது போல் தேச மக்கள் முச்சூடும் மூடர்களல்ல அறிவாளிகள் கொஞ்சப் பேராவது இருக்கக் கூடும். அவர்கள் தோழர் மூர்த்தி பேச்சை ஆதரிக்கவே மாட்டார்கள். மேலும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் நிறைவேற்றும் நலந்தரும் சட்டங்களை எல்லாம் - பொதுஜன கேஷமத்துக்காகவே அவர்கள் செய்யும் காரியங்களையெல்லாம் தென்னாட்டுப்
பார்ப்பனர்களும், அவர்களது வால்களும், அவர்களை ஆதரிக்கும் பத்திரிகை களும் கட்டுப்பாடாக எதிர்த்து வருவது ஒரு வாடிக்கையாக இருந்து வருகிறது. அறநிலையப் பாதுகாப்பு மசோதாவைக் கவிழ்க்கத் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகளை யாரே அறியார்கள். கடைசியில் தோழர் சித்தரஞ்சன் தாஸே அதை ஆதரித்தார். அதைப் போன்ற ஒரு மசோதா வங்காளத்துக்குத் தேவை யென்று பகிரங்கமாகக் கூறினார்
இனாம் பில் பொப்பிலி ராஜா நிறைவேற்றி இருக்கும் இனாம் குடிகள் மசோதாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் ரெங்காவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் தோழர் சந்தானமும் மற்றும் காங்கிரஸ் சமதர்மிகளும் ஆதரிக் கிறார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பார்ப்பனர்களும், வெங்கட்டராம சாஸ்திரியார் போன்ற மிதவாத பார்ப்பனர்களும் அந்த
குடி அரசு - 1935 (2) 486
மசோதாவைக் கவிழ்க்க இப்பொழுதும் சூழ்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர். அம்மட்டோ! தேசீயப் பத்திரிகைகள் என்று கூறிக் கொள்ளும் ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளும் அவர்களுக்கு பக்கபல மாகவே இருக்கின்றன. பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு ஒன்றை அமலுக்குக் கொண்டு வரும்போது அதை அமலுக்குக் கொண்டு வருபவர்களிடம் ஒரு சாராருக்கு துவேஷம் ஏற்படுவது சகஜமே. ஆனால் அந்த துவேஷத்துக்கு அஞ்சி நியாயமாக செய்ய வேண்டியவைகளைச் செய்ய அஞ்சுகிறவர்கள் உண்மையான தேச நிர்வாகிகள் ஆகவே மாட்டார்கள். பொப்பிலி ராஜா காலத்து நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களை ஒரு சாரார் கட்டுப்பாடாக எதிர்த்து வந்தும், தேச நலத்தை முன்நிறுத்தி, தமது செயலால் தமக்கோ தமது கட்சிக்கோ ஏற்படக் கூடிய பலாபலன் களையும் மதியாமல் தம் கடமையைச் செய்து வரும் பொப்பிலி ராஜாவை நேர்மையும் யோக்கியப் பொறுப்பும் உடையவர்கள் போற்றுவார்கள். என்பது திண்ணம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.12.1935
487 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
விஜயராகவ ஆச்சாமியார்க்கு
பீஷ்மப் பட்டம்
தோழர் விஜயராகவ ஆச்சாரி அய்யங்காருக்கு பீஷ்ம பட்டம் அளிப்பதற்கு அய்யங்கார்கள் ஒரு பெரும் கூட்டம் கூட்டி ஆடம்பரம் செய்து பீஷ்ம பட்டாபிஷேகம் செய்து விட்டார்கள்.
இக்கூட்டத்திற்கு வரவேற்புத் தலைவர் சி.ஆர். சீனிவாச அய்யங்கார். அதற்கு தலைமை வகித்தவர் எஸ். சீனிவாச அய்யங்கார். கூட்டத்தில் பிரசங்கம் செய்தவர் சி. ராஜகோபாலாச்சாரி அய்யங்கார். வந்தனோபசாரம் சொன்னவர் வி.வி. சீனிவாச அய்யங்கார். ஆகவே ஆரம்பம் முதல். கடசிவரை 5 அய்யங்கார்கள் முக்கியஸ்தராய் கூடி ஒரு அய்யங்காருக்கு
பீஷ்மப் பட்டம் அளித்தார்கள் என்றாலும், யாருக்கு என்பதை உணர்ந்தால். அவர்களது தேசாபிமான சூட்சி விளங்காமல் போகாது
விஜயராகவாச்சாரியார் ஒரு வக்கீல். வேண்டுமானால் கெட்டிக்கார வக்கீல் என்று சொல்லலாம்.70 வயதுக்குமேல் கூட வக்கீல் வேலை பார்க்கிறவர். வக்கீல்கள் தங்கள் தொழில் விருத்திக்கு தேசாபிமானத் பேச்சு பேசுவதும், தேசாபிமானச் சடங்குகளில் கலந்து கொள்வதும் போல கலந்து கொண்டு தேசாபிமானி ஆனவரே தவிர தோழர் ராஜகோபாலாச்சாரியார் போல்
ஒரு பொது லட்சியத்துக்காக “தேசாபிமானி” ஆனவரல்ல. அப்படிப்பட்ட தேசாபிமானத்துக்காக ஒரு காசு நஷ்டமோ ஒரு எறும்புக்கடி கஷ்டமோ அடைந்தவருமல்ல. அவருடைய காங்கிரஸ் பக்திக்கும் உதாரணம் சொல்ல: வேண்டுமானால் சுதேசமித்திரன் 27 தேதி தலையங்கம் 2ம் பத்தியில்,
“இப்பால் காங்கிரஸ் கொள்கையில் ஏற்பட்ட மாறுதலால் விஜயராகவாச்சாரியார் முன்போல் காங்கிரஸ் வேலைகளில் ஈடுபட முடியா விட்டாலும்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதும், பட்டாபிஷேக கூட்டத்துக்கு வந்தனோபசாரம் கூறிய தோழர் வி.வி. சீனிவாசய்யங்கார் வரையில்,
“இன்று ஜனங்கள் விஜயராகவாச்சாரியாருக்கு அளித்த வரவேற்பிலிருந்து அவருக்குள்ள சொற்ப சந்தேகமும் நீங்கி அவர் கடமையை உணர்ந்து பொது வாழ்வில் அவர் மீண்டும் வேலை செய்வாரென்று நம்புகிறேன்'” என்று கூறியிருக்கிறார்.
குடி அரசு - 1935 (2) 488
ஆகவே அவருக்கு இன்றைய காங்கிரசின் கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்பதும், அவர் இப்போது விலகி இருக்கிறார் என்பதும் தெற்றென விளங்குகிறது. இவரைப்போல் ஏன் இவரை விட அதிகம் காங்கிரசுக்கு தொண்டு செய்து பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து கொள்கை பிடிக்காமல் வெளியில் இருந்துகொண்டு காங்கிரசை ஆதரித்துக்கொண்டு காங்கிரஸ் அபிமானிகளாக தோழர் டாக்டர் பி. வரதராஜுலு நாயுடுவைப் போன்றவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் பார்ப்பனரல்லாதாராயும், சீரதிருத்தக்காரராயும் இருப்பதும், தோழர் விஜயராகவாச்சாரியார் பார்ப்பனராயும் அதிலும் அய்யங்காராயும் அதிலும் வருணாச்சிரமக்காரராயும் இருப்பது தவிர மற்றபடி இப்பட்டாபிஷேக வைபவத்துக்கு யாதொரு தனிக் காரணமும் காணப்படவில்லை.
தோழர் விஜயராகவாச்சாரியாரின் தேசக்திக்கும், தேசீய வாதத்துக்கும், சுயராஜ்ஜியத்துக்கும் மற்றொரு உதாரணமும் கூறுவோம்
விஜயராகவாச்சாரியார் இப்பட்டாபிஷேகத்துக்கு பதிலளிக்கும் மறுமொழியில் என்ன கூறுகிறார் என்றால்,
“பிரிட்டிஷார் சம்மந்தத்தின் கீழ் சுயராஜ்ஜியம் பெறவேண்டும் என்பதுதான் எனது கொள்கை'' என்று சொல்லியதோடு,
“லார்ட் இர்வினிடம் காந்தியார் பேசும்போதும் பிரிட்டிஷ் சம்மந்தத்தின்.
கீழ் சுயராஜ்ஜியம் அடைவதுதான் தனது கொள்கை என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்றும்,
“சுயேச்சையின் சாராம்சம் கிடைத்தால் போதும்” என்று காந்தியார். சொன்னார் என்றும் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் இருந்த மற்ற ஐயங்கார்களின் யோக்கியதைக்கும் உதாரணம் வேண்டுமானால் கூறுவோம்
எஸ். னிவாசய்யங்கார் “பூரணசுயேச்சை” என்கின்ற அஹம்பிரம்மவாதி.
வி.வி. சீனிவாசய்யங்கார் பச்சை வருணாச்சிரம தர்மவாதி
சி. ராஜகோபாலாச்சாரியார் மக்களையும், சர்க்காரையும் ஏமாற்றி பார்ப்பன ஆதிக்கம் பெறவேண்டிய உண்மைத் தியாகிவாதி
சி.ஆர். சீனிவாசய்யங்கார் பணவாதி, பார்ப்பன மித்திரவாதி,
இவைகள் சங்கராச்சாரி கொள்கை போல் ஒன்றுக்கொன்று முரணா யிருந்தாலும் பொதுவாக பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதையை அழித்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த தங்கள் அபிப்பிராய பேதங்களை மறந்து ஒன்று கூடி ஒரு திருவிழாக் கொண்டாடி இருக்கிறார்கள். நம்மவர்களோ
சிலர் அக் கூட்டத்திற்கு சென்று தீவட்டித் தடிப்பிடித்திருக்கிறார்கள்.
48 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
இது அய்யங்கார் ஆதிக்கக் கூட்டம் என்பதற்கு உதாரணம் வேண்டு. மானால் காங்கிரஸ் தலைவர் தோழர் சத்தியமூர்த்தியாரைக் காணவே காணோம். அவரது சகா லட்சிமிபதி அம்மாள் போன்றவர்களையும் அக் கூட்டத்தில் காணோம்
காங்கிரசு பொன்விழாவில் காங்கிரசுக்கு உழைத்தவருக்கு பட்டம் கட்டுகிற காலத்தில் காங்கிரஸ் தலைவர் குழாம் அக் கூட்டத்தில் இல்லை என்றால், அது எப்படிப்பட்ட கூட்டமாய் இருக்கவேண்டும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா?
முடிவாக வெள்ளைக்காரர்கள் ஆட்சி சம்மந்தத்துடன் சுயராஜ்யம் கோருபவரும், சத்தியாக்கிரகம் சட்ட மீறுதல் முதலிய காரியங்களால் அராஜகம் ஏற்பட்டுவிட்டது என்பவரும் ஒருகாலத்தில் காந்தியாருக்கும் மொராலிட்டி (ஒழுக்கம்) இல்லை என்று சொன்னவருமான ஒரு பெரியாருக்கு இவ்வளவு ஆடம்பரங்கள் நடத்தப்பட்டிருக்கிறது என்றால், பார்ப்பனக் கொள்கைக்கும் அவர்களது சூழ்ச்சிக்கும் வேறு என்ன உதாரணம் காட்ட வேண்டுமென்பதோடு, இதிலிருந்தாவது பார்ப்பனரல்லாத மக்கள். ஏதாவது படிப்பினை கற்றுக்கொள்ளமாட்டார்களா என்கின்ற ஆசையோடு இதை முடிக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 29.12.1935
குடி அரசு - 1935 (2) 490
காங்கிரஸ் பிளவு
மூன்று இடங்களில் அலங்கோலம்
வீரவாகு பிள்ளையும் பியிந்தாராம்
எங்கும் காங்கிரசுக்கே வெற்றியென்று கூறப்பட்டாலும் காங்கிரஸ் வெற்றியின் யோக்கியதை இப்பொழுதுதான் வெளிவரத் தொடங்குகிறது திருநெல்வேலியில் தோழர்கள் கன்னியப்ப நாடார், ஷண்முக திரவிய நாடார், என்: சங்கரலிங்க ரெட்டியார், என். சின்னக்கண்ணுப் பிள்ளை முதலியோர் காங்கிரசிலிருந்து விலகி விட்டதைப்பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேறொரு காங்கிரஸ் மெம்பரான தோழர் ஸ்ரீநிவாச ரெட்டியார் ராஜிநாமாச் செய்யாமலே ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டதாகத் தெரிகிறது
ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தூத்துக்குடித் தோழர் எம்.ஸி.வீரவாகு பிள்ளையும் தமது பதவியை ராஜிநாமாச் செய்து விட்டாராம்.
மதுரை நகரசபை காங்கிரஸ் கட்சிக் காரியதரிசி தோழர் எஸ்.ஜெகன்னாத ஐயங்காரும் தமது பதவியை உதறித் தள்ளிவிட்டாராம்
ஒழுங்கும், கட்டுப்பாடும், தேசபக்தியும் தாண்டவமாடும் காங்கிரஸ் ஸ்தாபனங்களின் அலங்கோலத்தைப் பாருங்கள்! ஜில்லாபோர்டு நகரசபைகள் வேலை ஆரம்பமாகும் முன்னமேயே. இந்தக் குழப்பத்தினால். காங்கிரஸ்காரரின் ஸ்தல ஸ்தாபன நிருவாகம் எவ்வளவு அழகாக இருக்குமென்று கூறவும் வேண்டுமா?
குடி அரசு - கட்டுரை - 29.12.1935
49] ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
அருஞ்சொல் பொருள்
அந்தணாளன்
பார்ப்பான்
அசார்சமாய்
அசட்டையாய்
அரசாங்க வரி
அரசிறை
வரலாறு
அயனம்
பலி (வேள்வித் தீயில் இடுதல்)
ஆகுதி அந்தர்த்தானம்
மறைவு, மறைகை
உச்சாஹம் ஏதேஸ்டமாக
உற்சாகம்
விருப்பமாக
ஏகாலி
வண்ணான்
கடாக்ஷம்
கடைக்கண் பார்வை
கண்டனை
கண்டனம்
தொழிலற்றுத் திரிவோர்கள்
காலாடிகள்
கியாதி
புகழ்
கிஸ்து
நிலவரி அடமானப் பத்திரம்
குதவைப்பத்திரம்
விடியற்கு முன் உள்ள இருள்
குமரி இருட்டு கொடிவழிப்பட்டி
வம்ச பரம்பரை விவரம்
சதிபதி
கணவன் மனைவியர்
சமேதரன்
கூடியிருப்பவன்
இறப்புச் சடங்கு
சரமக்கிரியை
உயர்நிலையில் உள்ளவர்கள் பயணம் செய்வதற்கான தனி பெட்டி (தொடர்வண்டியில்)
சலூன் வண்டி
சிங்காதனம்
அரியணை:
நல்லவற்றைக் காப்பாற்றுதல்
சிஷ்ட பரிபாலனம்
சீஷர்கள்
மாணவர்கள்
குடி அரசு - 1935 (2)
சுமரும்படி
சுமக்கும்படி
சுவானம்
நாய்
தவக்கம் தனதானியாதி
தாமதம்
பணம் தானியம் போன்றவை
துஷ்ட நிக்கிரகம் தொண்ணை
தீயவற்றை அழித்தல்
பாதுகாப்புக்கென வைத்திருக்கும் கனமான:
தடி; பெரிய தடி கோவணம்மட்டும் கட்டிக்கொண்டுஆடையின்றி
நட்டத்தில்
இருத்தல்
நாயாடி
திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார்
நிக்கிரம்
அடக்குதல், தண்டனை
நிமித்திகர் நிர்த்தாரணம்
கணியர், குறிசொல்லுபவர்
நிலையிடுகை இரக்கமின்மை
நிர்த்தாட்சண்யம் நிவேதனத் தொகை
கடவுளுக்குப் படைக்கும் அமுது
காரணம் இன்றி
நிஷ்காரணம்
வெறுப்பு, கொடுமை
நிஷ்டூரம்
பட விசிறி (தலைக்கு மேலாக தொங்கும் நீண்டதுணியை ஒருவர் இருபுறமும் அசையு
பங்கா
மாறு இழுத்து காற்றமைப்பை ஏற்படுத்தும் பொறியமைப்பு
பகுமானம்
பாராட்டிப் போற்றல், கவுரவித்தல். சிறுபிள்ளைத்தனமானவர்
பச்சகானா.
சொற்பொருள், வழிகாட்டும் நூல்.
பத்ததி
கடவுள் தன்மை
பரத்துவம்
பத்துவாப்படி
தீர்ப்புப்படி
பாதார விந்தம்
திருவடித் தாமரை மனைவி மக்கள்.
புத்திர களத்திர புனருத்தாரணம்
மறு சீரமைப்பு பகை
பேதிப்பு
பிண்டம்
தந்தையார் பொருட்டு போடும் சோற்றுருண்டை
பிரக்யாதி
புகழ்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -21
493
மடிசஞ்சிகள் - சனாதன பார்ப்பனர்கள் மனவாள்லு - எங்களவர்கள், நம்மவர்கள்
வஜா - நிலவரி தள்ளுபடி
ரெய்ன்ஸ் கயிறு - கடிவாளக் கயிறு
வாசா கைங்கரியம் - வெறும் பேச்சு வானர சைன்யம் - குரங்குப்படை
ஜம்புலிங்கம் - அந்த நாளில் வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரன் ஜலதாரை - நீரோட்டம், சாக்கடை
ஸ்தம்பம் - நினைவுத்தூண்:
யாக மெக்ஞாதிகள் - யாகம், யக்கும் முதலியவை
குடி அரசு - 1935 (2) 494.