Kudi Arasu — 1935, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1935-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 20
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1935-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 480
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
“விடுதலை ஏடு வெளிவரத் தொடங்கியது
“வாழ்துக்களையும், புது வருடப் பிறப்புக் கொண்டாட்டங்களையும் பலவித மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகத்தான் கருத வேண்டுமே யொழிய மற்றபடி இதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. ஆதலால் இதை நாம் கொண்டாடவில்லை என்பதோடு புது வருடப் பிறப்புக்காக நாம் யாரையும் வாழ்த்தவும் போவதில்லை”
- என்று புத்தாண்டு வாழ்த்து மறுப்புடன் இத்தொகுதி தொடங்குகிறது. 6.1.1935 'பகுத்தறிவு' வார ஏட்டில் தான் முதன்முதலாக தமிழ் எழுத்துச்
சீர்திருத்தம் அறிமுகமாகிறது. இடையில் ஓராண்டு காலம் நிறுத்தப்பட்டிருந்த குடி அரசு மீண்டும், 13.1.1935 முதல் பயணத்தைத் தொடருகிறது. 'குடி அரசுக்கு இது 11 ஆவது வருடம். வார ஏடான 'பகுத்தறிவு' நிறுத்தப்பட்டு, அறிவியல் பரப்பிடும் மாத ஏடாக மே மாதம் முதல் தேதியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இக்காலப் பகுதியில் 'பகுத்தறிவு' வெளியிட்ட இலக்கியச்செறிவுள்ள எட்டு 'படைப்புகள்' இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
சமதர்மத்தை வலியுறுத்தியும், பொருளாதாரம் பற்றியும் பெரியார் பல தலையங்கங்களைத் தீட்டியுள்ளார். விருதுநகரில் கூடிய நீதிக்கட்சியின் மாநாடு, பெரியார் முன் வைத்த சமதர்ம - பொருளாதாரத் திட்டங்களை தீர்மானங்களாக ஏற்றது. பகத்சிங் எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதற்காக தோழர் ஜீவானந்தம்
மற்றும் "உண்மை விளக்கம் பிரஸ்' பதிப்பாசிரியர் தோழர் ஈ.வெ கிருஷ்ணசாமி ஆகியோர் மீது 'ராஜ துவேஷ' வழக்கு தொடர்ந்து, கைது செய்து, பிரிட்டிஷ் ஆட்சி சிறையில் அடைத்தது. பின்னர் அந்த வழக்கில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இருவரும் மன்னிப்புக் கோரியே விடுதலைப் பெற்றனர்; அது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பெரியார் விளக்கமளித்தார்.
இந்தப்படி இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஐவாப்தாரி
என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று எழுதிய பெரியார், இப்படி ஒரு முடிவு எடுத்தமைக்கு, இந்த வழக்கு மட்டுமே காரணமல்ல; சுயமரியாதை இயக்கத்தை அழித்துவிட தொடங்கப்பட்ட முயற்சிகளிலிருந்து இயக்கத்தைக் காப்பாற்றுவதற்கே” என்று விளக்கமளித்தார்.
“சர்க்கார் எனக்கு ரஷ்யாவிலிருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு, அதிக கவலை எடுத்து, எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.அய்.டி. சப் இன்ஸ்பெக்டர் மாதம் 200
ரூபாய் செலவிலும், எனது தபால்களையெல்லாம், வருவதையும், போவதையும் இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று ஒரு சி.அய்.டி.
சப் இன்ஸ்பெக்டரும், என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும் நான் செல்லுமிடங்களிலெல்லாம் என் பின் தொடர்ந்து, எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன - இன்னமும் இருந்து வருகின்றன'' என்று அரசின்: அடக்குமுறைகளை சுட்டிக்காட்டினார். அது மட்டுமல்ல; “பாதிரிகளின்
பிரமச்சரிய லக்ஷணம்'' என்ற 'குடி அரசு' உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட 1550 நூல்களை போலீசார் பறிமுதல் செய்தனர் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட “குடி அரசுக் கலம்பகம் என்ற நூலையும், பிரிட்டிஷ் ஆட்சி பறி முதல் செய்தது. ஆட்சி பறிமுதல் செய்யும் நான்காவது நூல் இது என்று “குடி அரசு' சுட்டிக் காட்டியது. பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்கொண்டே சுயமரியாதை இயக்கம் இயங்கியதை இந்த உண்மைகள் உணர்த்தி நிற்கின்றன.
லண்டன் வட்டமேஜை மாநாட்டில் - 'தீண்டப்படாதார் தனித்தொகுதி உரிமைகளை முறியடிக்க காந்தியும், காங்கிரசும் நடத்திய சூழ்ச்சிகளை வெளிப்படுத்தும் பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுக்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. “சேலம் ஜில்லா பள்ளர் சமூக மாநாட்டில் பேசிய பெரியார் -
“நான் அய்ரோப்பாவிலிருந்து தோழர் அம்பேத்காருக்கு 6, 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிடக் கேவலமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்திருந்தேன். அதை வாங்கிப் பார்த்துக் கொண்டே மகாத்மாவின் 'பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியாஜி ராஜகோபாலாச்சாரியார்ஜி போன்ற பிரகஸ்பதிகளின் ஆசீர்வாதத்துக்கு ஏமாந்தும், கையெழுத்துப் போட்டதும் உங்கள் விடுதலையை பாழாக்கிவிட்டது. கைக்கெட்டியது வாய்க் கெட்டவில்லை" என்று குறிப்பிடுகிறார்.
வட்டமேஜை மாநாட்டில் என்ன நடந்தது? என்ற கேள்வியை எழுப்பி பெரியார் கோபி சமூக சீர்திருத்த கூட்டத்தில் இவ்வாறு பேசினார்?
“முகமதியர்கள் இந்து ராஜ்யத்தைவிட பிரிட்டிஷார் ராஜ்ஜியம் மேல் என்றார்கள்.
இந்துக்கள், முகமதியர் ராஜ்ஜியத்தைவிட, பிரிட்டிஷார் ராஜ்ஜியமே மேல் என்றார்கள்.
பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ் கட்சியார்) பார்ப்பன ராஜ்ஜியத்தைவிட, பிரிட்டிஷ் ராஜ்ஜியமே மேல் என்றார்கள்
பார்ப்பனர் (காங்கிரஸ்காரர்கள்), பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்றார்கள்.
காந்தியார், தீண்டப்படாதார் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாக சொல்லிவிட்டார்.
அதாவது, சுயராஜ்யம் இல்லாவிட்டாலும் சரி, சீர்திருத்தம் இல்லா விட்டாலும் சரி தீண்டப்படாதவர்களுக்கு வகுப்புரிமை வழங்க முடியாது என்று சொன்னது மாத்திரமல்லாமல் உயிரைக் கூடவிட்டு விடுவேன் என்று சொன்னார்”
இப்படி ஆயிரக்கணக்கான வருடங்களாக 'இந்து' தேசாந்திரத்தில் வகுப்புக்கு வகுப்பு விரோதமும், கலகமும் நடந்து கொண்டு வந்திருக்கிறது என்று கூறிய பெரியார், வகுப்புவாரி உரிமைகள் வழங்கப்படுவதுதான்.
இதற்குதீர்வுஎன்று தனது கருத்துக்கு அழுத்தமான நியாயங்களை முன் வைத்தார்.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட தோழர் நாட்டுக்கோட்டை முத்தையா செட்டியார், ராஜகோபாலாச்சாரி மற்றும் பார்ப்பனர்களின் ரகசிய ஆலோசனைகளோடு - பொப்பலிராஜா தலைமையில் அமைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவைக்கு எதிராக ரூ.70,000 செலவு செய்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து தோல்வி அடைந்தார். முத்தையா செட்டியாரின் இந்த துரோகத்தைக் கடுமையாக சாடி, பெரியார் எழுதிய தலையங்கம், இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அதே பெரியார் நீதிக்கட்சியை வலிமைப்படுத்த ஏற்பாடான. விருதுநகர் மாநாடு பற்றி எழுதும் போது -
“டாக்டர் சுப்பராயன், குமாரராஜா, முத்தையா செட்டியார் போன்ற கட்சியிலிருந்து பிரிந்து நின்று கட்சிக்குத் தொல்லைக் கொடுத்துவரும் கனவான்களையும்உள்ளே இழுத்துப்போட்டுப்பார்ப்பனர்அல்லாதாரிடையில் மதிக்கத் தகுந்த பிரிவினையில்லை; கட்சி பேதம் இல்லை என்பதான ஒரு நிலையையும் மாநாட்டில் ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்” - என்று எழுதியிருப்பது - பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் அவசியம் குறித்த பெரியாரின் கவலையை உணர்த்துகிறது. அதே நேரத்தில், ஜஸ்டிஸ் கட்சியின்
குறைபாடுகளைஒளிவுமறைவின்றி எடுத்துரைக்கவும் பெரியார் தயங்கவில்லை என்பதை, இத் தொகுதியில் அடங்கியுள்ள அவரது எழுத்து, பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். ஆதிதிராவிடர்களுக்கான உரிமைகளை வழங்குவதில், நீதிக்கட்சி ஆட்சி கூட உரிய கவனம் செலுத்தி செயல்படவில்லை என்ற விமர்சனத்தையும் தயங்காமல் பெரியார் முன் வைத்துள்ளார்.
ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறவன், ஜாதி மாநாடுகளில் பங்கேற்கலாமா என்ற கேள்விக்கு சேலம் மாவட்டம் மோகனூரில் நடந்த தேவேந்திர குல மாநாட்டில் பேசிய பெரியார், 'ஜாதி மதக்கொடுமைகளையும், அவற்றிற்கு ஆதாரமான கடவுள்களையும், புரட்டுகளையும் விளக்கிக் கூறுவதற்கே' இந்த மாநாடுகளில் பங்கேற்பதாக விளக்கமளித்திருக்கிறார்.
பழந் தமிழர் கொள்கைகளோடு பெருமளவு பொருத்தமாக இருப்பது இஸ்லாம் மதமே என்று எழுதும் பெரியார், 'சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதில் பெரிதும் இல்லையானாலும், இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாராளமாய் இடமிருக்கிறது” என்று குறிப்பிடுகிறார். 15-ம் நூற்றாண்டோடு தனது ஆயுளை முடித்துக் கொள்ளாமல், அது தாராள நோக்கத்தோடு இருந்திருக்குமானால், உலகம் பூராவையும் இஸ்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் என்ற கருத்தையும் முன் வைக்கிறார். அவரது இஸ்லாமிய ஆதரவு விமர்சனத்துக்குட்பட்டதாகவே இருந்துள்ளதை அவரது பேச்சு எழுத்துகளில் புரிந்துணர முடியும். உ.வே. சாமிநாத அய்யரின், பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் தொகுப்புப் பற்றி “குடி அரசு' தனது கருத்துக்களை “பார்ப்பனர் சூழ்ச்சி - சாமிநாதய்யர் ஜெயந்தி” என்ற தலையங்கத்தில் பதிவு செய்திருக்கிறது. இந்திய சட்டசபையில், 'ஆலயப் பிரவேச உரிமை' மசோதாவை வலியுறுத்த வேண்டாம் என்று, காந்தி காங்கிரசாருக்கு அறிவுரை கூறுகிறார். இந்தச் சட்டம் பொதுவுடமைக் கொள்கையைச் சார்ந்தது என்று காந்தியாரிடம் கூறப்பட்டதே, அதற்குக் காரணம் என்று பெரியார் அம்பலப்படுத்துகிறார்.
மூடப் பண்டிகைகளை பெண்கள் கைவிடச் செய்யவேண்டுமானால், அதற்கு மாற்று விழாக்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறும் பெரியார், மே தினத்தைக் கொண்டாடுமாறு பரிந்துரைக்கிறார். இந்தியாவின் வர்க்க வேறுபாடுகள் “வர்ண வேறுபாடுகள்! உருவத்தில் இருப்பதை இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள அவரது மே தின சொற்பொழிவுகள் ஆழமாக விளக்குகின்றன. இராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்விலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 'ஆச்சாரியார் ஓய்வு' என்ற தலைப்பில் பெரியார் எழுதியதுணைத் தலையங்கம், ஆச்சாரியார் நிறைகுறைகளை மதிப்பிடுகிறது. ஆச்சாரியாரைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி அய்யர் காங்கிரஸ் தலைவரா
கிறார். ஆர்.கே. சண்முகம் கொச்சி சமஸ்தானத்தின் திவான் ஆகிறார்.
திண்டிவனம் பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் ஆற்றிய சொற்பொழிவு, அவரது சுய சிந்தனைக்கு சான்றாகத் திகழும் சிந்தனைக் கருவூலமாகத் திகழ்கிறது. சுயமரியாதைக் கண்ணோட்டத்திலான வாழ்வியல் சிந்தனையை எட்டே பக்கங்களில் பெரியார் பசுமரத்தாணியாக உள்ளத்தில் பதிய செய்து விட்டார். மாவட்ட நிர்வாக சபையிலும் (District Board) எஸ்.அய்.ஆர். என்ற தனியார் ரயில்வே நிறுவனத்திலும் வகுப்புவாரி
பிரதிநிதித்துவம் அமுலுக்கு வருகின்றன.
கருத்துப் பிழிவாக அமைந்துள்ள 'வகுப்புவாதம்' தலையங்கம், “கடவுள் படைப்பை'' கேள்விக்குள்ளாக்கும் சித்திரபுத்திரன் உரையாடல், வழக்கறிஞர்கள் - வட்டிக் கடைக்காரர்கள்; மடத்தலைவர்கள் மீதான. பெரியாரின் கடும் கண்டனங்கள். தேவகோட்டை பொதுக்கூட்டத்தில் யாகத்தைப் பற்றிப் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ப்பனர்களுக்கு பெரியார் தந்த பதிலடி; 14 வயதில் கணவனை இழந்து “விதவை"யாக்கப்பட்ட இளம் பெண்ணை திண்டிவனத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் மேடை ஏற்றிக்காட்டி, பெரியார்'விதவை மறுமணத்தை' அதரித்துப் பேசிய உருக்கமான நிகழ்வு - என்று கருத்து மணம் பரப்பி மலர்ந்திருக்கிறது இத்தொகுப்பு
நீதிக்கட்சி சார்பில் வாரம் இருமுறை ஏடாக 'விடுதலை' அறிமுகமாகும் காலமும் இதுவே!
- பதிப்பாளர்
பொருளடக்கம்
வருஷப் பிறப்பு சனாதனப் பார்ப்பனர் மகாநாடு ணா, ற, னா, ணை, லை, ளை, னை எழுத்துக்கள் மாற்றம் 200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை
வரி குறைப்பும் சம்பளக் கூடுதலும்
ஜஸ்டிஸ் கட்சி செய்த “பாவம்”
“குடி அரசு"
“பகுத்தறிவு”
தெரிவிப்பு (எழுத்து வடிவங்கள் திருத்தம்) காங்கிரஸ் முதலாளிகள் கோட்டை ஈரோடு முனிசிபாலிட்டி
தமிழ் எழுத்து சீர்திருத்தம் வக்கீல் தொல்லைகள்.
முனிசாமி நாயுடுவின் முடிவு பொப்பிலி ராஜாவும் வைசிராய் பேட்டியும்! தஞ்சை ஜில்லா 4-வது சுயமரியாதை மகாநாடு முட்டாள்களுக்கு வரி உயிரைக் காத்ததற்கு உபகாரம்
பகுத்தறிவு இந்திய சட்டசபைக்கு ஒரு பாரபக்ஷமற்ற சுயேச்சையுள்ள தலைவர்
குடி அரசு ஆபீஸ் சோதனை தோழர் சிவராஜ் தீர்மானமும் சுவாமி சகஜானந்தம் வேஷமும்
காந்தியும் காங்கிரசும் SIR. கம்பெனியார் கவனிப்பார்களா?
காங்கிரசின் குலைவு
மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு
26
80
“பகுத்தறிவு” திருத்தம் “பகுத்தறிவுக்கு 2000 ரூபாய் ஜாமீன்
27
81
28
82
கூட்டுறவு மந்திரி கவனிப்பாரா?
29
85
புத்தக வியாபாரிகள் கொள்ளை
30
91
ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்
31
95
சேலம் ஜில்லா பள்ளர் சமூக மகாநாடு
32
98
காங்கிரஸ் வாக்குறுதிகள் எங்கே? ஏழைகளை வஞ்சிப்பதே காங்கிரஸ் தொண்டு
33
104
34
105
காங்கிரஸ் கூத்து
35
112
36
அனியாயம்! அனியாயம்!! அரிசிக்கு வரி போடுவது அனியாயம்!!!
117
தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது அன்னிய அரிசிக்கு வரி விதிப்பது அனியாயம்
37
118
38
123
சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை
39
124
சிவில் கடனுக்கு ஜெயிலா?
40
126
இந்தியாவுக்கு ஆங்கிலம் “வரப்பிரசாதம்”
41
128
காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?
42
132
வைசு. ஷண்முகம் பட்டினி விரதம் வெற்றியின் யோக்கியதை
43
133
44
136
சாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்?
45
141
பார்ப்பனர் சூழ்ச்சி சுயமரியாதை இயக்கம் மடங்களுக்கு ஆபத்தா?
46
144
47
150
48
153
இது தர்மம் ஆகுமா? அன்னிய அரிசிக்குத் தடையா?
49
158
50
162
வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்
51
166
பெண்கள் நாடு
52
168
நம்பிக்கையில்லாத் தீர்மானமும் 70000 ரூபாயும் கொச்சி பிரஜைகளுக்கு ஜே!
53
169
54
176
விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு
55
179
கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்
56
184
கிருஷ்ணசாமி - ஜீவானந்தம் விடுதலை
57
186
58
கோயிலுக்குள் போகலாம்
187
காங்கிரசின் வெற்றி பார்ப்பனர்கள் வெற்றி! ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பார்ப்பனரல்லாதார் வெற்றி!
59
190
இந்தியாவைப் பற்றி பிரசாரம்
60
191
ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஒற்றுமை எனது அறிக்கையின் விளக்கம்
61
194
62
195
கல்வி மந்திரிக்கு ஜே!
63
201
தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை தெரிந்ததா பார்ப்பனர் சங்கதி?
64
203
65
204
விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு
66
205
ஒருவன் யோக்கியதை அவன்: விரோதியினால் தெரியும் ஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்
67
213
68
222
குல்லூக பட்டரின் குயுத்தி வாதம் சென்னைத் தேர்தலும் பார்ப்பனர் உத்தியோகமும்
69
224
70
226
விருதுநகர் தீர்மானங்கள்.
71
234
1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது ஆச்சாரியாருக்கு ஆப்பு
72
237
73
238
கராச்சி தீர்மானத்தின் யோக்கியதை
74
241
காங்கிரஸ் ஒரு வியாதி
75
243
வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநலச் சேவைக்கு லாயக்கானவர்களா?
76
250
77
254
ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்துவிடுமா?
78
258
வேண்டுகோள்
கடனுக்காக சிறையில்லை?
79
259
யார் மாறிவிட்டார்கள்? யார் இழிமக்கள்? பெண்கள் நிலையம்
80
260
81
268
100-க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?
82
272
சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்
83
276
மே தினக் கொண்டாட்டம்
84
278
புதிய “தேசத் துரோகிகள்”
85
279
காரைக்குடியில் சு.ம. திருமணம்
86
280
“ஸ்ரீராம” நவமி
87.
285
நமது பத்திரிகை
88
289
89
291
அறிவின் பயன்
சந்தேகக் கேள்விகள் சரியான விடைகள் ஏண்டா படிக்கவில்லை?
90
293
91
296
பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?
92
299
வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை
93
307
மதம் போய் விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது
94
311
95
316
அறிக்கை
மே விழாவும் ஜூபிலி விழாவும்
96
317
97.
321
சொர்க்கம்
கோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்
98
324
மே தினம் என்றால் என்ன? தேவக்கோட்டையில் மே தினம்
99
326
100
332
நீடாமங்கலத்தில் சுயமரியாதைத் திருமணம்
101
334
கடவுள்
102
335
நாஸ்திகம் எது?
103
337
104
338
ஏன் ஜூப்பிலியை?
அரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா?
105
339
ஆச்சாரியார் ஓய்வு
106
347
இனி என்ன குறை?
107
350
கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்
108
352
109
355
உண்மையைக் கக்கி விட்டார்
பெண்கள் வீட்டுக்குள் இருக்கவேண்டுமாம்!
110
357
வகுப்பு வாதம்
111
360
திண்டிவனம் பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழா
112
366
இளம் விதவையின் காட்சி “விதண்டா வாதம்”
113
374
114
377
எல்லாம் சுயமரியாதையால் தான்.
115
379
மத ஆட்சி
116
385
நாஸ்திகம்
117
386
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
118
391
. சுயமரியாதை மாகாண மகாநாடு
398
. அருப்புக்கோட்டை, திண்டிவனம், விழுப்புரம்,
சேலம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் செய்த பிரசங்கம்
400
, சத்தியமூர்த்தி திருவிளையாடல்.
408
, 10 வருஷ உத்தியோக வேட்டை
411
. ஒரு நற்செய்தி “விடுதலை”
425
, கடவுள் கருணை
427
, சங்கராச்சாரியின் சங்கடம்
430
. தவறுதல்
431
. பாராட்டுகிறோம்.
432
, சீர்திருத்தப் பிரசங்கம்
433
. ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு
442
, கோபி சமூகச் சீர்திருத்த சங்கத்தில் பிரசங்கம்
448
, 51ல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
456
. மற்றொரு புத்தகம் பறிமுதல்
461
, கொச்சி திவானின் சமதர்மத் தீர்ப்பு
462
, இராமனாதபுரம் ஜில்லா சிவில் கோர்ட்டுகளில்
பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்
463
ட யார் கெட்டிக்காரர்கள்
465
. யார் வெட்கங்கெட்ட மடையர்கள்?
467
. எல்லாம் ஒன்றே
473
. மற்றொரு பண்டு வசூல்
474
. திருவாங்கூரில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
476
குடி அரசு தேசத்திலும் அடக்குமுறை
477
. கடவுள் கருணை
478
. அருஞ்சொல் பொருள்.
479
வெளிதுடு ட ரூ.600 1 No. M. 3066 “PAHUTHARIVU" pefiufs @ விலை ஒரு அணா
எப்பொருள் கார்வார் லால்கேப்பினும் எப்பொருளெத்தன்மைத்தாயினும் ம் வேளிவு அப்பொ ஸ்வரம் க னு க ந வெல்ப்பொகுல் அன்பி,
i 1. w8, s எார்கழி o 8ல் (டப) ம் 20,
AR RN OR RN A RN NN N R
சாதி சடங்கொழித்தல்
அண்ணன் பாட்டுகள்.
(பயக்கும் ரோம ணவணன் அங்கள் இவ்வ]
PR SRR 1 சனை்டாக்கைதிசோம் . சாதியச் செலவை சகிலன் கட்துனைத்தோம். பி சளென்தே ன்னே. வைகள். ன ke பொல் அவதிப் புத்துவி்டோ்.
ம று விறனப்பால்அவ்னெ e o e ரு தலைவி தடாக. . ஆடியின் எமெல்லால் தர் அன்னையின் பாவ்ண்ணே
L பாத Afmr— ன்னே. ங்கப் பத்தாம. ஸ் முரக்கண்டேல் அவளா வெ சாம்மழனால்.
4 மதத்தில் போலே அன்னே. க்கா ச்ம் கிதவம் சால்க் கண்டே அன்த வெட்டி டோல் செக்கன் சட்தகைத்தோம் க. அன்னன் A~ e கள் கத்த o
5. அடம் குரம்களென்றே ம்க் அ அக்கட ககக அன்னே. க்கத் சடநினர்
சலா சென்மரொ்றும் ஒரு:
வருஷப் பிறப்பு
இங்கிலீஷ் புது வருஷம் பிறந்தது என்று மக்கள் அதை ஒரு பண்டிகை போல் கொண்டாடினார்கள். “புதிய வருஷம் உங்களுக்கு ஒரு சந்தோஷகரமான வருஷமாய் கழிய வேண்டும்” என்று ஒருவருக்கொருவர். வாழ்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.
தமிழ் வருஷப் பிரப்புக்கும் கூட சில இடங்களில் இம்மாதிரி வாழ்த்துச் சொல்லிக் கொள்வதும், சன்மானம் வழங்கிக் கொள்வதும் உண்டு.
இவை ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொள்ளும்போது தலைப்பில் மகா-௱ஈ-ஈ-ஸ்ரீ என்று போடுவதும், மேல் விலாசம் எழுதும் போதும் ஒருவருக்கொருவர் மகா-ஈ என்று போடுவதும் எப்படி ஒரு பத்ததியாகவும், வழக்கமாகவும் இருந்து வருகின்றதோ அதுபோல் தான்
புதிய வருஷப் பிறப்பு வாழ்த்தும் இருந்து வருகின்றது
அனுபவத்தில் எவ்வித வாழ்த்தும் மக்களுக்கு யாதொரு பயனும் அளிப்பதில்லை. அவனவனுடைய நிலைமையில் இவ் வாழ்த்துக்களால் எவ்வித மாறுதலும் ஏற்படுவதுமில்லை.
ஆகவே இவ்வாழ்த்துக்களையும், புது வருடப் பிறப்புக் கொண்டாட்டங் களையும் பலவித மூடப் பழக்க வழக்கங்களில் ஒன்றாகத்தான் கருத வேண்டுமே யொழிய மற்றபடி இதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை. ஆதலால் இதை நாம் கொண்டாடவில்லை என்பதோடு புது வருடப் பிறப்புக்காக நாம் யாரையும் வாழ்த்தவும் போவதில்லை.
ஆனால் புது வருடம் பிறக்கும்போது இந்த நாட்டில் மக்களுக்கு வேலை இல்லாக் கஷ்டம் சென்ற வருஷங்களைவிட இரட்டிப்பாய் இருக்கும்
நிலையில் பிறந்திருக்கிறது.
எங்கு பார்த்தாலும் எந்தத் துரையில் ஆனாலும் “வேலையில்லை, வேலையில்லை'' என்று மக்கள் அலைந்த வண்ணமாக இருக்கிறார்கள்.
அருமையான கைத்தொழில்காரர்களும், நல்ல வேலை ஞான: முள்ளவர்களும், வியாபார குமாஸ்தாக்களும், S.SL.C., இ. 10, படித்தவர்களும், மற்றும் வக்கீல், வாத்தியார், வைத்தியர், இஞ்சினீர்
முதலியவற்றில் படித்து பட்டம் பெற்றவர்களும் “வேலை இல்லை, வேலை இல்லை” என்று அலைந்த வண்ணமாக இருக்கிறார்கள். 5.5.1. படித்தவர்
மீ£ 10 ரூபாயுக்கும், 9.&. படித்தவர் 5 15, 20 ரூபாய்க்கும், BA.BL, படித்தவர்கள் 15" 35, 40 ரூபாய்க்கும் சம்பளத்துக்கு வருவதற்கு 100க்கணக்காய் காத்திருக்கிறார்கள். BALT, கள் 25 அல்லது 30 ரூபாய் கொடுத்தால் போதும் என்று அலைகின்றவர்களும் இருக்கிறார்கள். 8.ஃ.யும் MA.ub போலீஸ் கான்ஸ்டேபிளாகச் சேருவதற்கு அலைவதாக மலையாளத்தில் இருந்து சேதிகள் வந்திருக்கின்றன. வைத்தியத்தில் அசிஸ்டெண்ட் சர்ஜன் பாஸ் செய்தவர்கள் 50 ரூ. சம்பளத்துக்கு பறக்கிறார்கள்.
இவர்கள் நிலைமை இப்படி இருக்கும்போது, வெறும் நாலாவது பாரம் 5 - வது, 6 - வது பாரம் வரை படித்து விட்டு மேலால் படிக்க முடியாமலும், 2 தரம், 3 தரம் பரீக்ஷையில் பெயிலாகிவிட்டும் சரீரத்தால் வேலை செய்ய வெட்கப்பட்டுக் கொண்டு எழுத்து வேலை, எடுபிடி ஆள் வேலை ஆகியவைகளுக்காக B 6 ரூ. 7 ரூபாயிக்கு தொங்கிக் கொண்டிருக்கும் 1000க்கணக்கான மக்களின் நிலைமையைப் பற்றி சொல்ல வேண்டுமா என்று கேட்கின்றோம்
நாள்தோறும் காலை நேரங்களில் படுக்கையைவிட்டு எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு முன் வாசல் முத்தத்துக்கு வந்தால் வேலை கேட்பதற்காக வந்து வாசற்படியண்டை காத்து நிற்கும் ஆட்கள் முகத்தில் தான் விழிக்க நேருகிறது. அவரவர் குடும்ப நிலையையும், படிப்பதற்காகப் பட்ட கஷ்டங்களையும் மற்றும் பட்டினி கிடக்கும் மாதிரியையும் கேட்டால் கேட்கும் போதே உலக நிலையைப் பற்றி ஆத்திரம் சொல்லி
முடியாத அளவு தோன்றுகின்றது. பட்டணங்களில் உள்ள குடும்பங்களில் சற்றேரக்குறைய 100-க்கு முப்பது நாற்பது குடும்பங்களுக்கு மேலாகவே இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றதாக தெரிய வருகின்றது
இந்த நிலை மாறுவதற்கு புது வருடப் பிறப்பும் புது வருஷ வாழ்த்தும் என்ன செய்யப் போகின்றது என்பது தெரியவில்லை.
நாட்டின் செல்வ நிலைக்கு இந்த 10 அல்லது 15 வருஷ காலமாகவே எவ்விதக் குறைவும் சொல்ல முடியாமல், நாளுக்கு நாள் செல்வம் வளர்ந்து கொண்டே வந்திருக்கின்றது
இந்தியாவின் வருமான வரிக் கணக்கையோ, அல்லது இந்த மாகாணத்தின் வருமான வரிக் கணக்கையோ பார்த்தால் செல்வவான்களுக்குச் செல்வம் எப்படி வளர்ந்து கொண்டு வந்திருக்கின்றது என்பதும், புதிய வரும்படிக்காரர்கள் எவ்வளவு பேர்கள் உயர்ந்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வரும்,
குடி அரசு - 1935 (1) 16
அரசாங்க உத்தியோகஸ்தர்களுடைய நிலைமையும் இப்போது எவ்வளவு கொண்டாட்டமாய் இருந்து வருகின்றது என்பதை ஆகாரப் பொருள், துணி,மற்றஅனுபவப்பொருள்ஆகியவை இந்த 4, 5 வருஷங்களில் 100-க்கு 50 பங்கு வீதம் விலைகள் குறைந்து வந்திருப்பதைக் கவனித்தால் விளங்கும். ஆகவே வியாபாரிகளும், அரசாங்க உத்தியோகஸ்தர்களும் முறையே செல்வம் பெருகிக் கொண்டு சம்பளங்களில் ஏராளமாக மிச்சம்
செய்து கொண்டு போக போக்கியங்களுடன் வாழுவதும் மற்றபடி ஏராளமான பொது மக்கள் வேலையில்லாமல் கஞ்சிக்கும், துணிக்கும் திண்டாடிக் கொண்டு கிடப்பதும் என்றால் இந்த மாதிரி வாழ்க்கை முறையை என்ன வென்று சொல்வது என்பது நமக்கே விளங்கவில்லை.
புது வருஷம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதும் நமக்கு விளங்கவில்லை
இந்த நிலைமையில் உள்ள நாட்டில் அர்த்தமற்ற கிளர்ச்சிக்கு
மாத்திரம் ஒன்றும் குறைவில்லை.
அரசியல் சீர்திருத்தம் வேண்டுமென்றும், அரசியலில் மக்களுக்கு அதிகமான அதிக்கம், அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் ஏழை மக்கள் பேரால் கிளர்ச்சி செய்யப்படுகின்றதே ஒழிய இப்படிப்பட்ட ஏழை மக்களுக்கு இச்சீர்திருத்தத்திலோ, அல்லது போதாது என்று கேழ்க்கப்படும் மற்ற சீர்திருத்தத்திலோ என்ன மார்க்கம் இருக்கிறது என்பது விளங்கவில்லை. ஆகவே புது வருஷம் இந்த கஷ்டத்திற்கு என்ன செய்யப் போகிறது என்று புது வருஷ வாழ்த்துக்காரர்களைக் கேழ்க்கின்றோம்
நிற்க, புது வருஷம் இந்த மாதிரி வேலையில்லாத் திண்டாட்டம் பட்டினி என்பதையே வாகனமாய்க் கொண்டு வந்திருக்கிறது என்று சொல்வதோடு மாத்திரமல்லாமல் யுத்த கோஷம் என்னும் உருவத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இப்போது உலகமெல்லாம் யுத்த கோஷமாகவே இருக்கிறது. அன்பையும், தயாளத் தத்துவத்தையுமே அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லப்படும் கிறிஸ்து மதம் தாண்டவமாடும் தேசங்களே இப்போது யுத்த பேரிகையை முழக்குகின்றது
யுத்த தளவாடங்கள், குண்டு, துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு,
யுத்தக் கப்பல், ஆகாயக் கப்பல் விஷப் புகை ஆகியவைகள் உற்பத்தி செய்வதில் முனைந்திருக்கின்றன.
கிறிஸ்து மதம் இதை பார்த்துக் கொண்டே இருக்கின்றன. கிறிஸ்துவும் இதற்கு ஆசிர்வாதம் செய்து கொண்டே இருக்கிறார்.
யுத்தத்தில் நாளைக்கு சாகப் போகும் மக்களுக்கு வீர சொர்க்கத்தில் இடம் ஏற்பாடு செய்யும் வேலையில் கடவுள் ஈடுபட்டு இருக்கிறார் போலும்
மட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
ஆனால் நாளைக்கு யுத்தத்தின் பேரால் சாகப் போகும் மக்கள் யாரென்று பார்ப்போமேயானால் யாதொரு பாவமும் அறியாத ஏழைப் பாமர மக்களே
10 லட்சக்கணக்காகவும் கோடிக்கணக்காகவும் சாகப் போகிறார்கள்
யுத்தத்தில் யார் ஜெயித்தாலும் யார் தோல்வியுற்றாலும் ஏழை
மக்களுக்கு ஒரே ஒரு பலன்தான் உண்டு. அதாவது யுத்தத்தில் குண்டுக்கு இறையாகி உயிரைவிட்டு “வீர சொர்க்கத்துக்கு” போக வேண்டியதுதான். ஆகவே இந்தக் கோலத்துடன்தான் 1935வது வருஷம் பிரந்திருக்கிறது இதற்குத்தான் மக்கள் வாழ்த்துக் கூறுகிறார்கள்.
பகுத்தறிவு - தலையங்கம் - 06.01.1935
குடி அரசு- 1935 (1) 18
சணாதனப் பார்ப்பனர் மகாநாடு
சென்ற வாரம் தஞ்சையில் சனாதனப் பார்ப்பனர்கள் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டு அதில் அடியில் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டிருக்கின்றன. சனாதன தர்மத்தை நிலைபெறச் செய்யத்தக்க சுதேசி கைத்தொழில்களை அதரிக்க வேண்டும். சனாதன தர்மத்தை பாதுகாக்க
ஒரு நிதி திரட்ட வேண்டும். குருகுலங்கள் ஆரம்பித்து புராணங்களை போதிக்க வேண்டும் பார்ப்பனர்கள் சமுதாயப் பழக்க வழக்கங்களுக்கும், சாஸ்திரங்களுக்கும் விரோதமில்லாமல் நடக்க வேண்டும்
பிராமணர்களுக்கு சாகுபடிக்காக சர்க்காரார் நிலங்கள் வழங்க வேண்டும். பிராமணர்களிடையே ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க வேண்டும்.
பிராமணர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க மற்ற
ஜாதியார்கள் அடியில் கண்ட முறைகளால் ஏற்பாடு செய்ய வேண்டும்
(அ) திண்ணைப் பள்ளிக் கூடங்கள் வைக்க வேண்டும்
(ஆ) அறுவடையின்போது பிராமணர்களுக்கு தானியங்கள் கொடுக்க வேண்டும்.
(இ) விசேஷ தினங்களில் பிராமணர்களுக்குச் சன்மானங்கள் வழங்க வேண்டும்.
(ஈஸ) கிராமங்களில் பிராமணர்களைக் கொண்டு புராணக் காலச்க்ஷேபங்கள்.
செய்விக்கச் செய்ய வேண்டும்
(௨) பிராமணர்களை ஆயுர்வேத வைத்தியர்களாக தர்ப்பித்து செய்து அவர்களிடம் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும்
(ஊ) பிராமணர்கள் லேவாதேவி தொழிலில் ஈடுபடவேண்டும்
கூட்டுக் கமிட்டி அறிக்கை
(அ) கூட்டுக் கமிட்டி அறிக்கையில் இந்தியர்களில் ஒவ்வொரு வகுப்பாருக்கு மத சுதந்திரமளிக்க வேண்டும் மட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
(ஆ) மத சம்பந்தமான சட்டம் செய்வதில் வைசிராயுக்கும் கவர்னர்களுக்கும் பாதுகாப்புகள் இருக்க வேண்டும்
(இ) அவர்கள் சம்மந்தமில்லாமல் மத சம்பந்தமாக எந்தவித சட்டமும் கொண்டு வரக் கூடாது
(ஈ) மத குருக்களின் அபிப்பிராயப்படி சர்க்கார் மத விஷயத்தில் நடக்க வேண்டும்
(௨) இந்து மதக் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய வேண்டும்
(ஊ) இந்துக்களை வேறு மதத்துக்கு விடக் கூடாது.
சாரதா சட்டம்
இந்து மதப் பெற்றோர்களுக்கு விவாக விஷயத்தில் பூரண அதிகாரமிருப்பதால் சராதா சட்டம் செல்லாது. ஆதலால் அதை ரத்து செய்து விட வேண்டும்
சிறுவர் சிறுமிகளை 15 வயது வரை அயல் மதங்களைப் போதிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பக் கூடாது” என்பதாக பல தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இந்த மகாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் ஒரு வக்கீலாயிருந்தவரும், ஜில்லா முனிச்ப்பு, ஜில்லா ஜட்ஜி ஆகிய உத்தியோகங்களில் இருந்து பென்ஷன் பெற்று விலகினவரும், சனாதன பார்ப்பனர் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் ஒரு பார்ப்பனராகும். இவரது அக்கிராசனப் பிரசங்கத்தில்,
பிராமணர்களுக்கு ஆங்காங்கு சங்கங்கள் இருக்க வேண்டுமென்றும்,
அடிக்கடி பிராமணர்கள் மகாநாடுகள் கூட்டி ஒற்றுமையுடன் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும்,
பிராமணர்களுடைய ஆசாரங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும்,
சமஸ்கிருதத்தை விருத்தி செய்ய வேண்டும் என்றும்,
இப்போது பிராமணர்களுக்குஏற்பட்டவேலையில்லாத் திண்டாட்டத்தை
ஒழிக்க எப்படியாவது முயல வேண்டுமென்றும்,
இதர சமூக நன்மையை கவனிப்பதில் பிராமண தர்மத்தை கைவிட்டு விடக் கூடாதென்றும்,
நீண்ட காலமாக பிராமணர்கள் முயற்சி கைகூடாமல் போய்விட்டது
என்றும்,
பிராமணர்களுக்கு ராஜீய விஷயத்தில் தோல்வி ஏற்பட்டதற்குக் காரணம் தக்க முறைகளை அனுஷ்டிக்காதது என்றும்,
குடி அரசு - 1935 (1) 20
அரசியல் சீர்திருத்தத்தில் மதம், சமூகம் ஆகியவைகளைப் பற்றி கவர்னர்களுக்கும், வைசிராய்களுக்கும் (எதேச்சாதிகாரம்) பாதுகாப்புகள்.
இருக்க வேண்டும் என்றும், எந்த சமயத்திலும் சனாதன ஆச்சாரம் கைவிடக் கூடாது என்றும் பேசியிருக்கிறார். இதிலிருந்து இந்த மாகாணத்தின்
பார்ப்பனர்கள் நிலை என்ன என்பது ஒருவாறாகப் புலப்படலாம்
அதாவது பார்ப்பனர்களுக்கு தனியாக ஒரு ஸ்தாபனம் இருக்க வேண்டியது என்பதும், அந்த ஸ்தாபனத்தின் மூலம் பார்ப்பனர்களின். சனாதன தர்மம் என்பதாகிய வருணாச்சிரம தர்மம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதும், அதன் பயனாக பார்ப்பனர்கள் சமூக வாழ்வில் உயர்வானவர்களாகவும், மற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவும், தீண்டப்படாதவர். களாகவும் (4வது, 5வது ஜாதியார்களாய்) இருந்து வரும்படி செய்ய வேண்டியது என்பதும் முக்கிய தாற்பரியமாகும்
இது மாத்திரமல்லாமல் அரசியலிலும் பார்ப்பனர்களின் உயர்வை பாதிக்கக்கூடிய எவ்வித சட்டமும் திட்டமும் ஏற்படாமல் வருணாச்சிரமப் படியே அரசியல் நடந்து வர வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள் அதோடு மாத்திரமல்லாமல் பொருளாதார விஷயத்திலும், சரீரப் பாடுபடாமல் வாத்தியார், வைத்தியர், மற்ற ஜாதியார் தங்களுக்கு சன்மானம் வழங்குதல், லேவாதேவியின் மூலம் பாடுபடுகின்றவர்கள். செல்வத்தை உருஞ்சுதல் ஆகிய காரியங்களை மாத்திரம் செய்ய வேண்டும் என்றும், தங்கள் ஜாதி, மத உயர்வுக்கு உதவியான ஆசார அனுஷ்டான பழக்க வழக்கங்களை கைவிடக் கூடாதென்றும் தீர்மானித்திருப்பதும் ஆகியவைகளையும் சேர்த்து பார்ப்போமேயானால் பார்ப்பனர்கள் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில் தங்களுக்கு சகல விதத்திலும் ஆதிக்கம் இருக்க வேண்டுமென்பதும் சகலத்திலும் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டியவர்களாய் இருக்க வேண்டும் என்பதேதான்பார்ப்பனர்களுடைய சங்கத்தினுடையவும், மகாநாட்டினுடையவும் லட்சியமாய் இருந்திருக்கிறது.
சுருங்கச் சொல்ல வேண்டுமானால் புராண காலத்திய ராமராஜியத்
தையும், மநுதர்ம ராஜியத்தையும் விரும்புகிறார்கள் என்றும், அதற்கு ஏற்ற சூட்சிகளையே ஒரு கூட்டம் அரசியல் மூலமும், ஒரு கூட்டம் சமுதாய
இயல் மூலமும், ஒரு கூட்டம் கல்வி இயல் மூலமும், ஒரு கூட்டம் காந்தீயம் மூலமும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதையும் யாரும் மறுக்க முடியாது
பார்ப்பனரல்லாத மக்கள் சிலரும் இதற்கு அடிமைகளாய் இருந்து ஆதரவு அளித்து வருகின்றார்கள் என்பது மாத்திரமல்லாமல் தாங்கள். ஏன் பார்ப்பனர்களாக பிறக்கவில்லை என்று விசனப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரிய வருகின்றது A0 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இவ்வளவு அக்கிரமங்களில் இருந்தும், கொடுமைகளில் இருந்தும், சூட்சிகளில் இருந்தும் இன்னாட்டுப் பழங்குடி மக்கள் தப்புவித்து விடுதலை. பெறுவதற்கு ஒரே ஒரு ஸ்தாபனம் தான் இன்று தென் இந்தியாவில்
இருந்து வந்தது அதுதான் தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதார் சங்கமாக இருந்து
வந்தது. அதையும் சிலர் தங்கள் சுயநலத்துக்காக என்று பெருத்ததொரு துரோகம் செய்து அதில் பார்ப்பனர்களையும் கொண்டு வந்து புகுத்திக் கொள்ள சம்மதித்துவிட்டார்கள். எனவே இப்போது முன் கூறப்பட்ட கொடுமைகளையும், சூட்சி களையும் விளக்கிக் காட்டவோ, மக்களை அதிலிருந்து தப்புவிக்கச் செய்யவோ இன்று இந்திய பார்ப்பனரல்லாத மக்களுக்கு எவ்வித மார்க்கமும், சங்கமும் இல்லாமல் இருந்து வருகின்றது. அடிமை வாழ்க்கையில் ஆர்வம் கொண்ட மக்கள் அனேகருக்கு பார்ப்பனரல்லாதார் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருப்பதே மிக்க கஷ்டமாகத் தோன்றுகின்றதாம். இவர்கள் உடலில். சுயமரியாதை ரத்தம் இருக்கின்றது என்று எப்படி சொல்ல முடியும்
அன்றியும் இவ்வளவோடு அல்லாமல் மற்றொரு பார்ப்பனரல்லாத கூட்டத்தார் வர்ணாச்சிரமத்தை ஆதரித்து அதைக் காப்பாற்றவும் பாடுபடுகின்றார்கள் என்றால் இவர்கள் சரீரத்தில் எந்த விதத்தில் இரத்தம்
ஓடிக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை
இந்த 20 நூற்றாண்டில் உலகத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் தொழிலில், செல்வத்தில், வாழ்க்கையில் சிறிதுகூட உயர்வோ, தாழ்வோ அல்லது கூடக் குறைவான அனுபவமோ. தனி உடமைப் பாத்தியமோ ஏதுவும் கொண்டாடக் கூடாது என்கின்ற தனிக் கொள்கைகள் ஆகியவைகளை கோடிக்கணக்கான மக்கள் அனுபவித்து வந்து கொண்டும், பிரசாரங்கள் செய்து கொண்டும் அதற்குத் தகுந்தபடி அரசியல், சமூக இயல்களை அமைக்க முயற்சித்துக் கொண்டு இருந்து வரும் இந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் வருணாச்சிரமம் பேசுவதும், சில பார்ப்பனரல்லாதார் தங்களை பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள், 4வது ஜாதியார், 5வது ஜாதியார் என்று சொல்லிக் கொண்டு அவர்களது அடிமைகளாய் இருந்து வருவதோடு பார்ப்பனரல்லாத சங்கம் என்பதாக ஒன்று இருக்கக் கூடாது என்றும் சொல்லுவதும் என்றால், இந்த நாட்டை என்ன நாடு என்று சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்த நாட்டில் இன்று இந்த வெள்ளைக்கார பிரிட்டிஷ் அரசாங்கம் என்பது இல்லாமல் வேறு ஏதாவது ஒரு இந்திய அரசாங்கம் இருந்திருக்குமானால் இந்தக் கூட்டத்தார்கள் பார்ப்பனரல்லாத மக்களை என்ன கதிக்கு ஆளாக்கி எப்படிப்பட்ட நிலைமையில் வைத்திருப்பார்கள். என்பதை யோசித்துப் பார்த்தால் இந்தக் கூட்டத்தார் சொல்லும் சுயராஜ்யத்தின் யோக்கியதை என்ன என்பது நன்றாய் விளங்கும்
குடி அரசு - 1935 (1)
ப 3
சில பார்ப்பனர்கள் அரசியலின் பேரால் “சீர்திருத்தத்தில் கவர்னர், வைசிராய் ஆகியவர்களின் அதிகாரத்துக்கு பாதுகாப்புகள் கூடாது” என்பதும், அதே பார்ப்பனர்கள் சமூக இயலின் பேரால் தங்கள் தங்கள் நன்மைக்கு கெடுதி வராத அளவுக்கு கவர்னர் வைசிராய் ஆகியவர்களுக்கு பாதுகாப்புகள் வேண்டும் என்பதும், அதே பார்ப்பனர்கள் கல்வி இயலின் பேரால் சமஸ்கிருதம், ஹிந்தி, புராணங்கள், இந்து வேதங்கள் ஆகியவைகள் கற்பிப்பதன் மூலம் மக்களை மடையர்களாக்கி பார்ப்பனர்களுக்கு பிறவி அடிமைகளாக ஆக்கி வைக்க வேண்டும் என்பதுமான காரியங்களே இன்று இந்நாட்டில் தேசீயம், தேசாபிமானம், மத அபிமானம், பொது நலசேவை ஆகியவைகளாய் திகழ்ந்து வருகின்றன. இவற்றை நமது பார்ப்பனரல்லாத மக்கள் அறிந்து பார்ப்பன சூட்சியில் இருந்து விடுதலை பெற்று சுயமரியாதை அடைவது எப்படி எப்போது என்று கேட்கின்றோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 06.01.1935
B ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ணா, ற, னா, ணை, லை, ணை, னை
எழுத்துக்கள் மாற்றம்
சென்ற வாரம் பகுத்தறிவில் எழுத்தில் சீர்திருத்தம் என்று ஒரு சிறு உபதலையங்கம் எழுதி இருந்ததில் இவ்வார முதல் கொண்டு நமது பத்திரிக்கை பழய பெயராகிய குடி அரசு என்னும் பெயராலேயே வெளியிடலாம் என்று கருதி அதில் ணா, ற, னா, ணை, லை, ளை, னை என்கின்ற எழுத்துக்களை முறையே ணா-றா-னா-ணை-லை-ளை-னை என்று அச்சில் பிரசுரிக்கப்படும் என்பதாக எழுதி இருந்தோம். அந்தப் படிக்கே விஷயங்களை எழுத்துக் கோர்த்து இருந்தோம். எவ்வளவோ முயற்சி எடுத்தும் குடி அரசுக்கு இன்று வரை போஸ்டல் உத்திரவு கிடைக்காததால் சனிக்கிழமை இரவு வரை தந்தியை எதிர்பார்த்தும் கடைசியாக இவ்வாரம் பகுத்தறிவு என்னும் பெயராலேயே பிரசரித்து அனுப்ப நேர்ந்தது. வாசகர்கள் விஷயத்தைப் படிக்கும்போது ணா - றா - னா என்கின்ற எழுத்துக்கள் வரும் போது அவற்றை ணா, @ @ என்ற உச்சரிப்புப் போலவும் ணை - @ -ளை - னை என்கின்ற எழுத்துக்கள் வரும்போது ணை, லை, ளை, னை என்ற உச்சரிப்புப் போலவும் உச்சரித்துக் கூட்டி வாசித்துக் கொள்ள வேண்டுமாய் கோறுகிறோம். இந்தப்படியே சில புஸ்தகங்களும் பிரசுரிக்க இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு - அறிவிப்பு - 06.01.1935
குடி அரசு- 1935 (1) 24
200000 கோவா கிறிஸ்தவர்களின் சுயமரியாதை
இரண்டு லக்ஷம் பேர் சுயமரியாதைக்காக இந்து மதத்தில் சேரப் போகின்றார்களாம்
கோவாவில் உள்ள கத்தோலிக்க கிருஸ்தவக் கோவில்களில் வகுப்பு வேற்றுமையும், ஜாதி வித்தியாசமும் பாராட்டப்படுவதை சகிக்கமாட்டாமல் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
சமீபத்தில் பூனாவில் கூடப்போகும் இந்திய கத்தோலிக்கக் கிறிஸ்தவர் மகாநாட்டுக்கு ஒரு தீர்மானம் அனுப்பப் போகிறார்கள். அதாவது:-
“இப்பொழுது நடமுறையில் இருந்து வரும் வகுப்பு வேற்றுமையில் இரண்டு லக்ஷம் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களுக்கு மதத்தின் மீதும் துவேஷம் ஏற்பட்டிருக்கிறது. இதை மாற்றாவிட்டால் இரண்டு லக்ஷம் பேரும் இந்து மதத்தில் சேர்ந்து விடுவோம்” என்று சொல்லப்போகின்றார்களாம். இந்து மதத்தில் பார்ப்பனர்கள் எப்படியோ, அப்படியே நமது ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்களும் ஆவார்கள். அவர்கள் இந்த மாதிரி பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டார்கள். ஒரு இந்து இருந்தாலும் போதும் அவனை புழுமாதிரி அரித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கலாம் என்று எப்படி நமது பார்ப்பனர்கள் கருதிக்கொண்டு அறிவுக்கும், மானத்துக்கும் பொருத்தமில்லாத முறைகளை வைத்து வாழுகின்றார்களோ அதுபோலவே ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவன் இருந்தாலும் போதும் என்ற தைரியத்தின் பேரில் அறிவுக்கும், மானத்துக்கும் பொருத்தமில்லாத கொள்கைகளை வைத்து வாழலாம் என்கின்ற குணமுடையவர்கள். ஆதலால் அவர்களுக்கு நீதியைப் பற்றியோ, கிறிஸ்து கட்டளைகள் என்பதைப் பற்றியோ, பகுத்தறிவைப் பற்றியோ கவலை கிடையாது
மக்களைப் பிரிவினையாகவும், வேற்றுமையாகவும் நடத்துவதற்கு அவர்கள் வெட்கப்படுவதும் கிடையாது. எல்லோரையும் நன்றாய் வைவார்கள். கடசியாய் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி போடுவார்கள்.
பகுத்தறிவு - கட்டுரை - 06.01.1935 3 ஏரரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
உரக g 2t யன்
ந ரன] ட வனல்க ட அற்ற sy, காலஞ் சென்த தோழர் சே கலிப் எ, Py பட்டு, gelmpems சவ, பற்த்தப் LrideTesken அல், e 3 சமதர்ம உபன்யாசம், போர. ங்கு அவர்களின் தமிழ் மானை ARy e e அவை அணு. வெண் (9ல் 1§ அனா எடு அதுப்படம் ™
இந்தியாவின் குறைபாடுகள், நச o gl லிகிதம் பனலக & தவன் கட்ட ந அவம் அதும் தாய்க் கொடை சான அரிய தல் NS o க
விராலி, கெணிள் அலா (தீப்பட்ட புத்தகதிநின் தமிழு:
பொ.துவுடைமைத் தத்துவங்கள், வ்கி Aty g கல களு
don.”- உபற்யராசம். கர் குட்டா அக் அகல செய்த சங்கத்தை நன்றும் இட்ட ப 1 ப ர, இலங்கை: உபற்யாளம். இத தேோழு் வெ, சாமசாமி அவர்கள் பேன் காட்டி ச்சத்றுபபியாண திறினிறுந்கு. கி ுஙக ருங்காள் கொழுவி கண்டு பஸ்ப. இடல்னின் செய்த சொ தபோழிகை ுயுதாருப்ட தோழர் ச, வெட் அவர்களை. அணைக்கும் குழப்ப
கடவுளும் வஞ்சரம், ஸ் நன் ன கர்கள் நடை
கைவல்ய மியான் கட்டளைகள், இத i 50 அலைக் அல் e
ஒருக் இருர்ததாகரிரொல் துவது உண்மை அல்ல என்னும். அந்திப்பட இரு அகசிறியர் இருச்நிருக்க முடியாது என்றும். சங்கக் எனது சொண்பப்படபலை e இறு சிடுகா என்த சதி தர்கள் எழும் பட்டதாகும், நல் இராமலிங்க சுவாமிகள் யாடல்
ப மலிங்க எலாமி என்பவன் சமதர்ம தது: o
மேயோ கூற்று; தோழர் (தீ, எய்யாழுவ்தார்! பேயோ கத்தை எடுத்துக்காட்டி, By காட்டன் நீங்வையை விலகக் e B
தோழர் கே. கஸ் பாகப்பிவணிகல் வின மினல், அட்ககேட் அலர்கணல் எழுதப்பட்டது, இது சமது: A0 ரெணகளுக்கு விலக
வவுப் கொண்டன,
குடி அரசு புத்தகாலயம், ஈரோடு,
N P T E SRR R கிவி Prioted கங்கள் . V. Kcishosssary இ o பெற் Viaklam i
o 00 டிஅரசு
உளக. ஈத்த கூ, 50. KUDLARASU” தலிப்வத dhme ஒரு அணை
R. No. M. 2041
1924-ல் றாலிக்கப்பட்டது. B வெளிவரும், அரிப்பா க வெ.க்கஙளரா்,
எப்பொருள் வாரி யார் வாய்க்கெட்பி g
ப்பொறுனெ தத மைத்தாயி ணும்.
(பெயிப்பொருள் சாண்பதறிவு,
மெய்ப்பொருள். யுத்த
ரோடு, பவன அர்கழிய் B (டை மல 25
வெள்ளையராட்சியை விழ்த்துமுன் 1
(செரைய்கால் செ: தம்ப) P L
1. வெல்வாவாமரிசவ் விழத்தவத்துமுள். GamGusastaderans வள்ள கொள்ளும்கம்டல் இட்டு அன்ப porr g )
29
2 மண்தனையனிதள் மாக்காய்புக்க ணும்வென் தோல. அணியாக மசய்கர்டை அடவைய்ணாழ்த்தனே o () சத்து
று ார் எல்பைழீழ்உ/ை @43005u0eman
()
1 அவின் ம் Dt e 2 B கன்சி ண்டனில் g s b3 P பெண்குளைஇ்சாட்டிள் விக்க susple (@) [ b gt i உண்டொழுப்பம் கழப்பவள் syt அவவகல்பேன்றாடி காரண b v gt டோம்
அறுவை கோடிக்கு மே துன்ன க்களை. e பாழுங்கழுதாவப் தீத்தனட்டக்தனனில். குமே பாலிகளாகடேலே அத்தனை து T ள்கள் அலை s It கொள்கதத்து.
சய்காட்டி ல்க சண்பை சான டம் சுவா ழிக்காது. ப்னாளமிட்டு கல்கம் கண்க. aay 2ok ஒது
10 e க்கள் பகம் ரசு குட்ட e A o Y குடிஅ௮ . சனத் உலர்த்நிக்சொண்டா்க துத்செத்தை மூட்டச்கடவசாக — ண்கள் கறார் o தகைய” எனை nbsd o b ey ரோடு, 1935-GB0 இனவரி-மி' 13-8. ன்ன வக்க வன்க எனை தகன என் byt குதைர்றிதந்த சம்பளம் எவென் தாத்அல் சிலாட்டுகண: அவுக்க இலியா வரி குறைப்பும், சம்பளக் கூடுதலும்.
Qs ச்சா நக mhimi o et o
Sriadena களப் i கொண்ட கட ுகியாகன்களும் த்த தோழர்கள் எ
கன்ம அதத் நன் கே கக பனகன அக் க் "ல அறச் செலு OIS, திலக டது ன கன் e ey o i et Bt 5 ik பிருக்சளே யார் கைதி. தரம் இரிந்து கொண் சினைக் பொன்னினமுகுனவற்திற்கு ல்கள் தான் இமத மிரா - இ்கட்ந் ததள்கள் எனன சதான ப்ளான் சேல்வ சென் த்க் e கந்தனை எட் ண ண் அதர் க % ன் ல வல்லை க் டள Ll oo பக் அ
ட் o கதவான வ வகை விதைப்புக்கு 250" Grbe கண்ட வா காண்ப டுக்களர்க இடக் என்க தயக்க க கத்தல் & வ கல்ப ளசைன அரிகரன் த் . கங்கள் செய்வத it சிவனை கநிக்பத்னில்ப அர்கெதுகக்தவ்கள் வக். தட்டமை ல் அனையன் வண் அடை வா் கெளுத்தி ஒறு கோரக்க 2 S L ஆரின் எ... எலிக் ஓல் P =t v எனன கஷ்ட சாடை கைக அறு அட்ட t சமன அகக்ட்டத்தா்தைம் வ வல் முத்திய மக்க அத நாத்கபட் ட் ம் இன ர் சன அவல் மட்ட ட்
செல்தானகேற்கிபட முடில. அலைபமுடவரொ தின மீனு Y வகைகளின் மீனு சக்கை கடக்க கேண்மோால் னுரசக்படம அரிசப்ளவானும அதிக்ரு சேன குள வல்கள் 'அசணம் என்ன கென்றாள்
கல்தா 100 அதும் பொகு இருப்பாள். சிடும்சமனைநுறைமதன உதியோகணதர்கருடைய மகா அதத e ity
வரி குறைப்பும் சம்பனக் கூடுதலும்
சென்ற வாரம் தஞ்சை ஜில்லா மிராசுதார்கள் மகாநாடு கூட்டி நஞ்சை பூமி வரிகளை 100-க்கு 50 பாகம் வீதம் குறைக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறார்கள்.
மகாநாட்டில் கலந்து கொண்ட தோழர்கள் எல்லோரும் அதாவது
யார் யாருடைய பெயர்கள் மகாநாட்டு நடவடிக்கையில் காணப்பட்டனவோ. அவர்கள் பெரிதும் மிராசுதாரர்கள், லட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் என்று சொல்லத்தக்க பிரபுக்களே யாவார்கள்.
இன்னும் சற்று விபரமாய்ச் சொல்ல வேண்டுமானால் நிலத்தை உழுவதும், விதை விதைப்பதும், மண்வெட்டி கொண்டு வரப்பு வெட்டி நீர் பாய்ச்சுவதும், அறுப்பதுமான காரியங்கள் செய்வது மகா பாவமானது - தோஷமானது என்று எந்த எந்தக் கூட்டத்தாருக்கு மனுதர்மத்தில் விதி விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கூட்டத்தார்களும் ஆளைத் தூக்கி ஆள் மேல் போட்டு வீண் கலகங்களையும், வம்புகளையும், வழக்குகளையும் உண்டாக்கி மக்களின் சமாதானத்தையும், சாந்தியையும் பாழாக்கி நோகாமல் வாழ்ந்து வக்கீல், வைத்தியம், உத்தியோகம் முதலிய பேர்களால் மாதம் 10000, 20000 போல் சம்பாதிக்கும் கூட்டத்தார்களுமான அய்யர், ஆச்சாரியார், பந்துலு, சர்மா, சாஸ்திரி, ஸ்றெளத்திரி, தீட்சதர், ஜடாவல்லபர், வாஜ்பேயர் முதலாகிய வகுப்பைச் சேர்ந்த நபர்களும், மற்றும் தினமும் பார்ப்பன வகுப்பு முதல் பலபட்டரை வகுப்பு அடங்க தினம் 10, 12 பேர்களுக்கு குறையாத வேசிகளும், தாசிகளும், எக்ஷா பிராண்டி முதல் ஷாம்பெயின் வரை உள்ள பான வகையில் தினம் ஒரு குரோசுக்கு குறையாமலும், அனுபவித்து, “ஆண்டவன் சிவபெருமான்” பூஜைக் கணக்கில் செலவெழுதி வரும் அவதார புருஷர்களும், புண்ணிய சீலர்களுமாகிய மடாதிபதிகளும் மற்றும் வரவு என்ன? செலவு என்ன? பூமிகள் எங்கே இருக்கின்றது? அது எப்படி வெள்ளாண்மை ஆகின்றது? நெல்லு மரத்தில் காய்க்கின்றதா? செடியில் காய்க்கின்றதா? என்பவைகூட அறியாதவர்களும், நித்தியமும் பண்டிகை, உற்சவம், பால், டிராமா, சினிமா, கார், வெகு உல்லாசம் ஆகியவைகளிலேயே உழன்று கொண்டு யார் மனைவி அழகானவள், எவர் மகள் லட்சணமுள்ளவள் என்று அண்ணாத்தைகள் வைத்து தேடித் திரிந்து கொண்டும், லட்சிமி புத்திரர்கள் என்று பார்ப்பனர். களால் அழைக்கப்பட்டு கொண்டும் இருக்கும்படியான பிரபுக்களுமே அதில் பெரிதும் காணப்பட்டிருக்கிறார்கள்.
29 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்தக் கூட்டத்தாருக்குத்தான் வரிப் பளுவு தாங்கவில்லையாம், வரிப்பணத்தில் பகுதி தள்ளி விட வேண்டுமாம், வரிகள் கொடுக்க கையில் பணமில்லையாம், அந்தோ என்ன கஷ்ட காலம்!! எவ்வளவு ஏழ்மை!!! என்பதை வாசகர்கள் தான் உணர வேண்டும்
இதற்கு அனுகூலமாக காங்கிரஸ் என்னும் பேரால் சில பார்ப்பனர். களும், மாதம் 1000, 5000 ரூ. வீதம் சம்பாதிக்கும் உத்தியோகப் பார்ப்பனர்களும் உள்ளே புகுந்து கொண்டு இந்த மிராசுதாரர்களுக்கு வரி கொடுக்காதீர்கள் என்கின்ற (வரி மறுப்பு) உபதேசம் வேறு
செய்கின்றார்கள் என்றால்,
தேசத்தின் “ஏழ்மை'' நிலைக்கும், “நாணையமான அரசியல்” கிளர்ச்சிக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை
பார்ப்பனர்கள் குருமார்கள் பிரபுக்கள் ஆகிய கூட்டத்தாரின் நாடகம் இப்படி இருக்க, மற்றொரு புறத்தில் மாதம் 500, 1000, 2000, 5000 ரூ வீதமும் சம்பளம் பெறும் “ஏழை'” உத்தியோகஸ்தர்கள் கிளர்ச்சி செய்து தங்கள் சம்பளங்களில் 100க்கு 10 ரூபாய் வீதமும், 100க்கு 5 ரூபாய் வீதமும் சம்பளம் குறைத்ததுகூட மிகவும் அனியாயம் என்று பழையபடியே கூப்பாடு போட்டு அதையும் உயர்த்திக் கொண்டார்கள். அரசாங்கத்தாரும் கருணை: கூர்ந்து இப்போதிருக்கும் பண நெருக்கடியையும் கூட லக்ஷியம் செய்யாமல் முன் குறைந்திருந்த சம்பளங்களை இப்போது கூட்டிக் கொடுப்பதாய் வரமளித்து விட்டார்கள்.
ஆகவே மிராசதாரர்களுக்கும் வரி குறைக்கப்பட வேண்டும் அதோடு கூடவே அதிகாரிகளுக்கும் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பதே
முடிவு. அப்படியானால் இதை சரிக் கட்டுவதற்கு மார்க்கம் என்னவென்று பார்ப்போமானால் பாடுபட்டு உழைக்கும் ஏழைப் பாட்டாளி மக்கள் தலையில் கை வைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றுமே இல்லை.
அரசாங்க மந்திரிகள் செல்லுமிடங்களில் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி அழுது அவற்றிற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று கெஞ்சினால் அதற்கு பதில் “அரசாங்கத்தில் பணமில்லை. ஆதலால் ஒன்றும் செய்ய முடியவில்லை” என்று சொல்லி விடுகிறார்கள்.
அரசாங்க “பணமுடை காரணத்தால்” பள்ளிக்கூடங்கள் குறைக்கப் பட்டுவிட்டன. சுகாதார காரியங்கள் குறைக்கப்பட்டு விட்டன. ரோட்டு, பாலம் முதலிய போக்குவரவு வசதிகளும் குறைக்கப்பட்டுவிட்டன. கைத் தொழில் இலாக்கா அடியோடு மூடப்பட்டு விட்டன. தாழ்த்தப்பட்ட, பின்பட்ட வகுப்பு மக்களின் விஷயங்கள் கைவிடப்பட்டுவிட்டன. 100
ரூ. கடன் வாங்கினவரிடமிருந்து வசூல் செய்ய வேண்டுமானால் 50 ரூ. செலவு செய்தும், “ஆசாமி கண்ணுக்கு கிடைக்கவில்லை” என்கின்ற சேதிதான்.
குடி அரசு - 1935 (1) 30
கேழ்விப்பட முடிகின்றது என்பதுடன் சொத்தின் மீது நடவடிக்கை நடத்த வேண்டுமானால் அதற்கு வேறு 25 ரூ. செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
காரணம் என்னவென்றால் பஞ்ச காலமும், பொருளாதார நெருக்கடியும் என்று சட்ட இலாக்காவும், நீதி இலாக்காவும் பதில் சொல்லுகின்றன.
ஆகவே இந்த நிலையில் ஏழைகளுடைய வாழ்க்கையும், அவர் களுடைய முற்போக்கும் என்ன ஆவது என்பதை கவனித்தோமானால் இந்த மிராசுதாரர்களது மகாநாடும், உத்தியோகஸ்தர்களுடைய மகாநாடும் அரசாங்கத்தின் போக்கும் மக்களைப் பரிகசிப்பது போன்றும், ஆத்திரத்தை மூட்டக்கூடியதாகவும் இல்லையா என்று கேள்க்கின்றோம்
நிற்க மற்றொரு கொடுமை என்னவென்றால் அன்னிய நாட்டு உணவுப் பொருள்கள் இந்தியாவுக்கு வந்து அவைகள் குறைந்த விலைக்கு விற்கப் படுவதால் மிராசுதாரர்களுடைய விளை பொருள்களுக்கு விலை இல்லாமல் போகின்றதாம். அதற்காக அப்பொருள்கள் மீது அதிக வரிகள். போட்டு வெளிநாட்டு உணவுப் பொருள்கள் இந்நாட்டுக்கு வராமல் தடுக்க வேண்டுமாம். இதன் அருத்தம் என்ன என்று கேட்கின்றோம்
சாதாரணமாக சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் மாகாண மொத்த வரி வருமானம் 200000000 இருபது கோடி ரூபாயானால் இதில் சுமார் 5% கோடி ரூபாய்கள் தான் இந்த மிராசுதாரப் பிரபுக்கள் “பஞ்சத்தையும்” “பணக்கஷ்டத்தையும்” பொருத்துக் கொண்டு கொடுக்கும் நிலவரியாகும். இதிலும் மொத்த பூமி வரி செலுத்தும் நபர்கள் 4500000 பேர்கள். ஆனால் இதில் 3500000 பேர்கள் 10 ரூபாய்க்கு கீழ்பட்ட வரி செலுத்துகிறவர்கள். இவர்கள் செலுத்தும்
வரி ஒரு கோடி சில்லரை ரூபாயாகும். பாக்கி ஒரு லட்சம் மிராசுதார்கள். 4% கோடி ரூபாய்தான் செலுத்துகிறார்கள். பாக்கி 145000000 பதினாலரை கோடி ரூபாய்களும் கள்ளு, சாராயம் குடிக்கும் ஏழை கூலி ஆளுகளும், கஞ்சா, அபினி அடிக்கும் பிச்சைக்காரர்களும், வெளிநாட்டில் இருந்து வரும் ஆடை, உணவு, அனுபவப் பொருள்கள் ஆகியவைகள் வாங்குவதன் மூலம் அவற்றின் மீது விதிக்கப்பட்டிருக்கும் (டூட்டி என்று சொல்லப்படும்) சுங்கங்களும் முதலாகிய வகைகளின் மீது வசூலிக்கப்
படும் வரிகளேயாகும்
ஆகவே வெளிநாட்டு சாமான்களின் மீது விதிக்கப்படும் வரிகளில் 100க்கு 80 பாகம் வரிகள் ஏழைக்கூலி மக்கள் தொழிலாளிகள் ஆகியவர் களிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றன.
உதாரணமாக கிருசநாயில் எண்ணை, நெருப்புகுச்சி, உப்பு, துணி முதலாகிய வஸ்துக்களை வாங்குகிறவர்களில் ஏழை மக்களே மொத்தத்தில் 1005 80 பேர்களுக்கு மேலாக இருப்பதால் அந்த வரி யார் மீது விதிக்கப் ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பட்டதாகும் என்பதையும், கள்ளும், சாறாயமும் 100க்கு 98 பேர்கள்
கூலிகளும், தொழிலாளிகளுமே உபயோகிப்பதால் கலால் வரி வருமானம்
யார் மீது விதிக்கப்பட்ட வரி ஆகும் என்பதையும் யோசித்துப் பார்த்தால் அரசாங்க வரி வருமானம் பெரிதும் ஏழைகளால் வசூலிக்கப்பட்டு அவற்றை செல்வவான்களையும் அவர்களுடைய செல்வங்களையும் ஆதிக்கங்களையும் காப்பாற்ற பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் படித்த வாயாடிக் கூட்டங்களுக்கு ஆயிரம், பதினாயிரமாக சம்பளமாகவும், வரும்படியாகவும் வருவாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் விளங்கும்.
இந்த நிலையில் போதாக்குறைக்கு வெளிநாட்டில் இருந்து வரும்
அரிசிக்கும், நெல்லுக்கும் வரிபோட்டு அவற்றின் விலைகளை உயர்த்தி அதை மக்களை வாங்கச் செய்வதின் மூலம் மிராசுதாரர்கள் தங்களுக்கு
லாபம் உண்டாக வழி தேடுவது என்பது எவ்வளவு அநியாயமானதும், கொடுமையானதும் என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.
விவசாயிக்கு விலையில்லையானால் வெளிநாட்டு உணவுப் பொருள்கள் மீது வரிப் போடுவதும் மில் முதலாளிகளுக்கு லாபம் இல்லையானால் வெளிநாட்டு சாமான்கள் மீது வரிப் போடுவதும் தான் செல்வவான்கள் பணம் சேர்க்கும் முறையாக இருக்கின்றது என்று ஏற்படுமானால் இவர்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து அதிலேயே வாழும் கொடுந்தன்மை அல்லவா என்று கேள்க்கின்றோம்.
கட்டாத வியாபாரங்களையும், கட்டாத விவசாயங்களையும் செய்யும்படி இந்த முதலாளிகளையும், மிட்டா மிராசுதாரர்களையும் யார். கெஞ்சுகிறார்கள்? கட்டாவிட்டால் மரியாதையுடன் விட்டுவிட்டுப் போய்விட்டால் சர்க்காரார் அந்த இரண்டு காரியங்களையும் தானாக சொந்தத்தில் பார்க்க முன்வருவார்கள். அப்போது ஏராளமான ஆட்களுக்குத் தாராளமாய் வேலை கொடுப்பார்கள். ஒரு தொழிலும் கட்டாமல் போவதற்கு இடமேற்படாது. இதுதான் யோக்கியதை ஆட்சியாகவும் இருக்க முடியும் அப்படிக்கில்லாமல் விவசாயக்காரருக்கும், வியாபாரிக்கும் லாபம் வருவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யும்படியும், யார் கழுத்தை வேண்டு மானாலும் அறுக்கும்படியும் அரசாங்கத்தை தூண்டுவதும், கெஞ்சுவதும் யோக்கியமான சுயராஜ்யம் கேட்பதாகுமா என்று கேட்கின்றோம்.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல ஆயிரக்கணக்கான குடும்பம் சீறழிந்து கொண்டும், மானமழிந்து கொண்டும் மற்றும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒருவன் சம்பாதிக்க, 9 பேர் சோம்பேரியாய் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் சமயத்தில் ஆகாரப் பொருள்கள் மீது வரி போடும்படி அரசாங்கத்தை இந்த மிராசுதார் பிரபுக்கள் கேட்ப்பது என்பது எவ்வளவு மனந் துணிந்த செய்கை என்பது யோசிக்கத் தக்கதாகும்
குடி அரசு- 1935 (1) 32
ஜப்பானில் இருந்து வரும் துணி மூன்று மூள அகலமுள்ளது கஜம் ஒன்றுக்கு இரண்டு அணாவுக்குப் புதுச்சேரியில் கிடைக்கின்றது. ஆனால் அதே துணி இந்தியாவில் கஜம் நாலணா, நாலரையணாவுக்கு வாங்க வேண்டி இருக்கிறது. நெசவு மில் முதலாளிகளின் நன்மைக்காக இந்த வரி போட வேண்டியது நமது சுயராஜ்யம் வாங்கிக் கொடுக்கும் அரசியல்வாதிகளின். கடமையாய் இருக்கிறது. ஆகவே சர்க்கார் வரி குறைத்தாலும் குறைக்கா விட்டாலும் மற்ற அதிகாரிகளுக்குச் சம்பளம் இன்னமும் உயர்த்தினாலும் தாழ்த்தினாலும் ஏழைகளின் உணவுப் பொருளுக்கும் உடைப் பொருளுக்கும் அவை எங்கிருந்து வந்தாலும் வரி போடாமலும் கல்வியையும், சுகாதாரத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனையும் சிக்கனம் என்னும் பேரால் குறைக்காமல் இருக்கும்படியும் தெரிவித்துக் கொள்கிறோம்
குடி அரசு - தலையங்கம் - 13.01.1935
B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஜஸ்டிஸ் கட்சி செய்த “பாவம்?
ஜஸ்டிஸ் கட்சியை பார்ப்பனர்கள் ஆசை தீர வைது விட்டார்கள். இனி வைவதற்கு வார்த்தைகளும், விஷயங்களும் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு திரியும் இந்த நெருக்கடியான சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்களும் விறட்டி அடிக்கப்பட்டவர்களுமான ஆசாமிகள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை வைவதற்கு மூன்று புதிய காரணங்கள் கண்டுபிடித்து பார்ப்பனர்களுக்கு காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது:-
1. கமிஷனர்களை நியமித்தது
2. தாலூக்கா போர்டுகளை எடுத்தது
3. ஜில்லா போர்டுகளை இரண்டாகப் பிரிப்பது
இந்தக் காரியங்கள் ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை அங்கத்தினர்கள். ஏகமைனதாய் அபிப்பிராயம் கொடுத்தும், பார்ப்பனர்களும், பார்ப்பன தாசர்களும் தாராளமாய் ஸ்தானம் பெற்ற சட்டசபையின் மெஜாரிட்டியாரால் தீர்மானங்கள் செய்யப்பட்டும், பிறகுதான் அமுலில் செய்யப்பட்டு வருகின்றனவே ஒழிய கட்சித் தலைவரின் சர்வாதிகார முறையில் செய்யப்பட்ட காரியங்கள் அல்ல. இவை எப்படி இருந்தாலும்,
முனிசிபாலிட்டி விஷயத்தில் அனேக சேர்மென்கள் யோக்கியதை
களும், நிர்வாகங்களும், நாணையமாகவும், நியாயமாகவும் இல்லை என்றும் சொல்லி அவர்களது அயோக்கியத்தனங்களையும், நாணையக் குறைவுகளையும் ஏதேச்சாதிகாரங்களையும், புள்ளி விவரங்களோடு காட்டி வந்ததுடன் கண்ட்ராக்ட் விஷயங்களிலும், சிப்பந்திகள் நியமன விஷயங்களிலும் அவர்கள் நடந்து வரும் ஒழுக்கங் கெட்ட காரியங் களையும், கவுன்சிலில் சதா இருந்து வந்த கட்சி எதிர்க்கட்சிகளையும் அதனால் அடிக்கடி ஏற்பட்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும்
பற்றி புள்ளி விபரங்களோடும் குடி அரசு பத்திரிகை 1926ம் வருஷ முதலே
எடுத்துக்காட்டி எழுதி வந்திருந்ததோடு இந்த நாணையக் குறைவுகளும், அயோக்கியத் தனங்களும், கட்சிப் பிரதிக் கட்சிகளும் ஆகிய காரியங்கள் குறைக்கப்பட்டு முனிசிபல் நிர்வாகம் செவ்வனே நடைபெறுவதற்கு சென்னை கார்ப்பரேஷனுக்கு இருந்து வருவது போல் எல்லா முனிசிபாலிட்டி
குடி அரசு- 1935 (1) 34
களுக்கும் கமிஷனர் நியமனம் ஏற்பட வேண்டுமென்று நாமும் கூப்பாடு போட்டு வந்திருப்பதும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டு வந்திருப்பதும் யாரும் அறியாததல்ல அதுபோலவே தாஜூக்கா போர்டுகளைப் பற்றியும், அவற்றின் பயனற்ற தன்மையைப் பற்றியும், அவற்றில் நடந்து வந்த அட்டூழியங் களையும், ஒரு கில கிராமவாசிகளே பிரசிடெண்ட், மெம்பர்கள், இவர் களுக்கு சொந்தக்காரர்கள் என்கின்ற பெயர்களால் கொள்ளை கொண்டு வந்ததும், அவற்றால் ஏற்பட்ட கலகங்களையும் பற்றி எவ்வளவோ ஸ்தல ஸ்தாபனம் என்னும் தலைப்பின் கீழ் எழுதி வந்தும் பயன்படாததால் அவை அனாவசியமென்றும் எடுத்துவிட வேண்டும் என்றும் எழுதி வந்ததும் மந்திரிகளிடம் நேரில் சென்று கேட்டுக் கொண்டதும் இக்கூட்டத்தார்கள் தெரியாது என்று சொல்லிவிட முடியாது
தாலூக்கா போர்டுகளை எடுத்துவிட்டதால் ஜில்லா போர்டுகளுக்கு அதிக வேலை என்கின்ற காரணத்துக்காக அவைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்று மந்திரி அந்தக் காலத்திலேயே தெரிவித்திருந்ததும் அதற்காக பெரிய சம்பளத்தில் ஒரு ஐரோப்பியரை நியமித்து ரிபோர்ட்டு செய்யும்படி அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதும் யாரும் அறியாததல்ல.
இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி எந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரரோ, சுயமரியாதைக்காரரோ ஒருவராவது வாய்திறந்து ஒரு ஆட்சேபணையான வார்த்தைகூட சொன்னதை நாம் கேட்டறியோம்
ஆனால் பார்ப்பனரல்லாத மந்திரிகள் எது செய்தாலும் வேண்டு மென்றே துவேஷப் பிரசாரமும், விஷமப் பிரசாரமும் செய்து வந்த பார்ப்பனர்களும், அவர்கள் கூலிகளும் மாத்திரம் சில சமயங்களில் கூப்பாடு போட்டுவிட்டு கடைசியாக பார்ப்பனர்களுக்கும் இரண்டொரு கமிஷனர் வேலை கிடைத்தவுடன் அவர்களும் ஒரு அளவுக்கு வாயை
மூடிக் கொண்ட பிறகு இப்போது பார்ப்பனரல்லாதார் என்றும், ஜஸ்டிஸ் கட்சியார் என்றும், சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் ஆட்கள் அந்தக் காரியங்களை குறைகூற முன் வருவதை யோசித்தால் அவர்களது நிலமை எவ்வளவு தூரம் பரிதபிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பது புலப்படும்
இன்னமும் டிஸ்டிரிக் போர்டுகளைப் பிரித்தாலும் சரி, பிரிக்கா விட்டாலும் சரி அவைகளையும் கலைத்தாலும் சரி, கலைக்காவிட்டாலும்
சரி டிஸ்டிரிக் போர்டுகளுக்கும் நிர்வாக அதிகாரி (எக்ஸ்கியூட்டிவ் ஆபிசர்)களை நியமிக்க வேண்டியது அவசியமான காரியம் என்பதை மாத்திரம் வலியுறுத்தாமல் இருக்க முடியவில்லை.
பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட கண்ட்ராக்ட் வேலைகளை 1005 15 ரூ வீதம் குறைத்து வேலை தெரிந்த பரம்பரை கண்ராக்டர்களும், 35 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வேலைக்காரர்களும் டெண்டரில் கேட்டிருக்க 100க்கு 10 ரூ, 15 ரூ எஸ்டிமேட் தொகைக்கு மேல் அதிகம் வைத்து வேலை தெரியாதவர்களும் எப்பொழுதுமே கண்ராக்டர்களாக இல்லாதவர்களும், பிரசிடெண்டு குடும்பத்து மெம்பர். களுக்கும், மெம்பர்கள் குடும்பத்து மெம்பர்களுக்கும் வேறு காலி ஆசாமிகள். பேருக்கும் வேலைகள், கண்ராக்ட் கொடுக்கப்பட்டு அப்பணங்கள் குடும்பச் சொத்துபோல் பிரித்துக் கொள்ளப்படுகின்றதென்றால் ஜில்லா போர்டு நிர்வாகங் களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்து பிரசிடெண்டுகள் அட்டூழியங் களிலிருந்து நிர்வாகத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேள்க்கின்றோம்.
மற்றும் சிப்பந்திகளை பிரசிடெண்டுகளும், அவர்கள் குடும்பத்தார்
களும் சில இடங்களில் மெம்பர்களும் நடத்துகிற மாதிரியைப் பற்றி பல: இழிவான புகார்களெல்லாம் வந்து கொண்டு இருப்பதும் யாரும் அறியாததல்ல. இப்படிப்பட்ட காரியங்களுக்காகவும், பிரசிடெண்டுகளின் கொடுமைகளில் இருந்து சிப்பந்திகளை மீட்கவும் நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வேண்டாமா என்று மறுபடியும் கேழ்க்கின்றோம்
சில பிரசிடெண்டுகள் சட்டசபை மெம்பர்களாய் இருப்பதால் அவர்களது அக்கிரமங்கள் எல்லாம் பூசி மெழுகப்பட்டு வருகின்றது என்பது நமக்குத் தெரியும். ஆதலால் எவ்வளவு கெட்ட பேர் வந்தாலும் அவைகளைப் பற்றி பயப்படாமல் டிஸ்டிரிக் போர்டுகளுக்கும் உடனே நிர்வாக அதிகாரிகளை ஏற்படுத்த ஸ்தல ஸ்தாபன மந்திரியார் முன்வரவேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்
இந்தக் காரியங்களைத்தான் ஒரு பெரிய “பாபகர”மான குற்றமாகச் சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியின் மீது அக்கட்சியார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களே குறை கூறுவது மகா கேவலமானதும், யோக்கியப் பொருப்பற்றதுமான காரியம் என்று சொல்லவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.01.1935
குடி அரசு- 1935 (1) 36
குடி அரசு??
குடி அரசு பத்திரிகை துவக்கப்பட்டு இன்றைக்கு 11-வது வருஷம்
நடக்கின்றது. மத்தியில் ஒரு வருஷ காலம் அது அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டி ஏற்பட்டு அதன் கொள்கைகள் 'புரட்சி', “பகுத்தறிவு' என்னும் பெயரால் வெளியிடப்பட்டு வந்து இப்போது மறுபடியும் 1935-வது வருஷம் ஜனவரி மீ' மூதல் பழயபடி குடிஅரசு என்னும் பெயராலேயே அது வெளியாக்கப்பட்டு முன் நிறுத்தப்பட்டதிலிருந்தே தொடர்ந்து 9-ம் மாலை 23-வது மலராய் வெளி வருகிறது. ஆதியில் “குடி அரசு” மனித சமூகத்துக்கு என்ன தொண்டு செய்ய முன் வந்ததோ, அதே தொண்டை எப்படிப்பட்ட கஷ்டமான காலத்திலும், நெருக்கடியான காலத்திலும் பின்னடையாமல் செய்து வந்திருப்பதோடு இப்போதும் அதையே கடைப் பிடித்து தன்னாலான தொண்டாற்ற துணிவுடன் முன் வந்திருக்கிறது
குடி அரசு - அறிவிப்பு - 13.01.1935
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
“u@dshley’
“பகுத்தறிவு என்னும் பெயரால் மாத வெளியீடு ஒன்று வெளிப்படுத்த உத்தேசித்து உள்ளோம். இந்த உத்தேசமானது சுமார் 4,
5 வருஷத்துக்கு முன்னாலேயே செய்யப்பட்டதானது குடிஅரசு வாசகர். களுக்குத் தெரியும். அதைப்பற்றிய விபரம் சீக்கிரத்தில் தெரிவித்துக் கொள்ளுவோம்
குடி அரசு - அறிவிப்பு - 13.01.1935
குடி அரசு - 1935 (1) 38
தெரிவிப்பு
எழுத்து வடிவங்கள் திருத்தம்
ணா. றா. னா. ணை. லை.ளை. னை. ஆகிய எழுத்துக்களை முறையே
ணா. றா. னா. ணை. லை. ளை. னை. என்பதாகத் திருத்தி
அச்சுக் கோர்த்திருக்கிறோம்.
(போர்)
குடி அரசு - அறிவிப்பு - 13.01.1935
39 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
காங்கிரஸ் முதலாவிகன் கோட்டை
லாகூரில் கூடிய காங்கிரஸ் அபேதவாதிகள்,
“காங்கிரஸ் திட்டத்தில் முதலாளிகளுக்கு நன்மை இருக்கின்றதே யொழிய பொது ஜனங்களுக்கு எவ்வித பயனும் கிடையாது” என்றும்
“காந்தியின் கிராமப் புனருத்தாரணத் திட்டத்தால் கிராம வாசிகளுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை” என்றும்
“ஒரு சில சுயநலக்கூட்டத்தார்களே அரசியலின் பேரால் பலனடைந்து வருகிறார்களே ஒழிய பாமர ஜனங்களுக்கு யாதொரு பலனும் ஏற்பட இடமில்லை” என்றும் முதலாளிகளைக் காப்பாற்றவும், சமதர்ம இயக்கத்தில் கிராம ஜனங்கள் சேராமல் இருப்பதற்காக கிராமத்தார்களை ஏமாற்றவுமே காந்தியார் கிராமப் புனருத்தாரண சங்கம் ஏற்படுத்தி இருக்கிறாரே ஒழிய வேறு இல்லை" என்றும்
“மதம் என்பதை அடியோடு ஒழிந்தாலொழிய ஜனசமூக முன்னேற்றமும், பொதுஜன ஒற்றுமையும் ஏற்படாது'' என்றும்
மதத்தில் ஏமாற்றம் தவிர வேறு ஒன்றுமே இல்லை” என்றும் பட்டவர்த்தனமாக பல பொதுக்கூட்டங்களில் பேசினார்கள்.
இதைச் சுயமரியாதைக்காரர்கள் சொன்னால் அவர்களை தேசத் துரோகிகள் என்றும், அரசாங்கக் கூலிகள் என்றும், நாஸ்திகர்கள் என்றும், தென்னாட்டுக் காங்கிரஸ் கூலிகள் ஊளை இடுகின்றன.
இப்போது லாகூரில் பேசியவர்கள் சுயமரியாதைக்காரர்கள் அல்ல என்பதையும், காங்கிரஸ்காரர்கள் என்பதையும் தெரிந்தால் என்ன சொல்லப் போகிறார்கள்? முக்காடு போட்டுக் கொள்ளப் போகிறார்களா? இல்லாவிட்டால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகப் போகிறார்களா? அல்லது இரண்டோடு மானமும் இல்லாமல் மூன்றும் கெட்டவர்கள் இராம பஜனையும், புராணப்பிரசங்கமும் செய்யப்போகின்றார்களா என்று கேட்கின்றோம்
குடி அரசு - கட்டுரை - 13.01.1935
குடி அரசு- 1935 (1) 40
ஈரோடு முனிசிபாலிட்டி
மிருகக் காக்ஷி சாலை
இவ்வூர் பீபிள்ஸ் பார்க்கிலிருக்கும் மிருக காக்ஷிற்கு முனிசிபல் கமிஷனரின் வேண்டுகோளுக் கிணங்கி சென்னை கார்ப்பொரேஷன் சங்கத்தார் 2 பெண் சிங்கங்களும், 2 மான்களும் இலவசமாய் அளித்ததை இவ்வூர் முனிசிபாலிட்டியார் தங்களிடமிருக்கும் லாரி மூலம் சென்னையி லிருந்து அம் மிருகங்களை கொண்டுவந்திருக்கிறார்கள். ஏற்கனவே மிருகக்
காக்ஷியில் இருந்து வரும் கரடி, முதலை ஆகிய நூதன மிருகங்களுடன்: இம்மிருகங்களையும் வைத்து நன்கு போஷிக்கப்பட்டு வருவதோடு பொதுஜனங்கள் சொற்ப கட்டணத்தில் மிருகங்களைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்
ஏற்கனவே இருக்கும் கரடிகள் இரண்டும் பெண் கரடிகளாக விருப்பதால். அவைகளில் ஒரு பெண் கரடியைக் கொடுத்து ஒரு ஆண் கரடியை இந்த
சிங்கம் கொண்டு வந்த இடத்திற்கே கொடுத்து பெற்றுக்கொண்டால் மிக நலமாக விருக்கும் அதேபோல் சிறுத்தையையும் மாத்திக் கொள்ளலாமென: நினைக்கிறோம்
(போர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 13.01.1935
41 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
20 குடி அசசு என் wriaf P2
வலதுகை PR SN T I TR R RN R A
குடி. அரசு பதிப்பக வெளியிடுகள்.
இத்தியாளின் குறைபாடுகள்,
ப ந்பொழிவு.
தெனின் அவர்களால். எழு கொழியெயாப்பாரும்
இராமலிங்க சுவாமிகள் பாடல் ததவ, தீரத் ஆர்ககப்ப மெயோ கூற்று.
தொழர் €. நீ, அய்யாடுத்தவால் மேயோ கத்தை சடுத்தக்ட்ட இரிய காட்டன் கிகையையை ஸ்ைக்் எழுதப்பட ப் கலை அமை B பங்கஜம். பார்வெனியத்தை தெள்ளிதின் விளக்கும். சாடக வலர
பொல்ஸ்விர் முறை குடி அசசு புத்தகாலயம், சுசோடு, லல வல வலக்கை ல்க Béited Frinted எம் Fobiebed by K. V. Eriboummy ot the மய Vikkhas மாவடு Erode.
தமிழ் எழுத்து சீர்திருத்தம்
தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள். செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.
தோழர் குருசாமி அவர்கள் எழுதியது போல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.
தமிழ் எழுத்துக்களைப் பற்றி அழுக்கு மூட்டைப் பண்டிதர்கள் எவ்வளவு தத்துவார்த்தம் சொன்னாலும் அது எவ்வளவோ விஷயத்தில் சீர்திருத்தமடைய வேண்டும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.
ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ அல்லது வேறு பல விஷயமோ: எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும். உதாரணமாக நெருப்புக்கு சுமார் நூறு ஆயிரம், பதினாயிரம் வருஷங் களுக்கு முந்தி சக்கி முக்கி கல்லுகள் தான் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இது ஒரு கடவுளால்” ஆதியில் பொதிய மலையில் இருந்தோ, கைலாச மலையில் இருந்தோ கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, உபதேசிக்கப் பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அழுத்துவதோ, ஒரு முளையைதிருப்புவதோஆதியகாரியத்தில் வந்து விட்டது.
இது போலவே பஞ்ச பூதங்களிலும் அவைகள் உற்பத்தி, சேர்க்கை, அனுபவம் ஆகியவைகளிலும் நாளுக்கு நாள் எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கின்றன என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதும் தெரிந்தால் கேவலம் ஒரு புராதன பாஷை எழுத்துக்கள் என்பதில் எவ்வளவு சிதிருத்தம் அவசியமிருக்கும், அல்லது செய்யக் கூடும் என்பது தானாய் விளங்கும்.
சாதாரணமாய் 500 வருஷத்திற்கு முந்தி இருந்த மக்களின் அறிவுக்கும், அவர்களின் வாழ்க்கை செளகரியத்துக்கும் இன்று இருக்கும் மக்களின் அறிவுக்கும், வாழ்க்கை அவசியத்துக்கும் எவ்வளவோ மாறுதலும், முற்போக்கும் இருந்து வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
43 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இதனால் பூர்வீக மக்களை மடையர்கள் என்றே சொல்லி ஆக வேண்டும் என்பதாக நாம் சொல்ல வரவில்லை. ஆனால் பூர்வீக மக்கள். என்பவர்கள் விஷயங்களையும், ஞானங்களையும் அல்லது திருத்தங்களையும் எவ்வளவு தூரத்தில் கொண்டுவந்து விட்டுப் போனார்களோ அதிலிருந்தே அதற்குப் பிற்காலத்து மக்கள் அவ் விஷயங்களை ஆரம்பித்து வைக்க ஹேது இருந்ததால் அதைவிட சற்று அதிக முற்போக்கான நிலமைக்கு அவ்விஷயங்களைக் கொண்டு வந்து விட்டுப் போக முடிந்தது அதுபோலவே இப்போதும் அதிலிருந்தே ஆரம்பிக்கின்றபடியால் அது இன்னும் விசேஷமான மாறுதல்களாக முடிகின்றது. அது போலவே இன்னும் ஒரு 100 ஆண்டு அல்லது 500 ஆண்டுகள் சென்றால் இன்றைய நிலையில் இருந்து இன்னமும் எவ்வளவோ தூரம் மாற்றமடைந்த முன்னேற்றங்கள் என்பவை ஏற்படலாம். அதனால் இந்த நூற்றாண்டு மக்களை காட்டுமிராண்டிப் பிராயமுள்ள மக்கள் என்றுகூட சொல்லும்படி ஏற்பட்டாலும் ஏற்படலாம். அதற்காக வேண்டி இன்னமும் ஐநூறு வருஷத்
திற்குப் பின் எப்படி இருக்க வேண்டிவரும் என்று கருதி இப்பொழுதே கண்டுபிடித்து செய்துவிட முடியாது
முன்னேற்றம், மாறுதல் என்பவைகள் காலதேச வர்த்தமானத்தையும், அன்று உள்ள அறிவு விருத்தியையும் பொருத்ததே ஒழிய மத வெறியர்கள். சொல்லுவது போன்ற தீர்க்க தரிசனத்தைப் பொருத்ததல்ல என்பதே நமது அபிப்பிராயம். முக்காலத்துக்கு ஏற்ற தீர்க்க தரிசனம் என்பது ஆராய்ச்சி அற்ற அறிவீனர்களின் வசனமேயாகும். “விபூதி வைத்துக் கொள்ளுவதற்கு ஆக கடவுள் மனிதனுக்கு நெற்றியை நீள வசத்தில் மூன்று விரல் உயரத்தில் 6 அங்குல அகலத்தில் ஏற்படுத்தினார்” என்று சொல்லுவது எவ்வளவு தீர்க்க தரிசனமும், தத்துவார்த்தமூம் கொண்டதோ அதுபோல் தான் முக்கால தீர்க்கதரிசனமும் ஆகும். ஆதலால் உலக விஷயங்களில். மனித சமூக வாழ்க்கை சம்பந்தப்பட்டவைகளில் தீர்க்க தரிசனத்தையும், தெய்வீகத் தத்துவார்த்தங்களையும் கொண்டு வந்து கலக்கிக் கொண்டு
குரங்குப்பிடியாய் பழமையையே கட்டிக் கொண்டு அழுவதினாலோ, அல்லது மாறுதல்கள் வரும் போதெல்லாம் சீறி விழுந்து கோபிப்பதினாலோ யாதொரு பிரயோஜனமும் ஏற்பட்டு விடாது என்பதோடு அது சாத்தியப்படக் கூடியது என்றும் சொல்ல முடியாது பழயதை மாற்றக் கூடாது என்பதும், பழயவைகள் எல்லாம் தெய்வாம்சத்தால் ஏற்பட்டதென்பதும், பழய செய்கைகளோ, பழய தத்துவங் களோ, பழய மாதிரிகளோ, பழய உபதேசங்களோ முக்காலத்துக்கும், முடிவு காலம் வரைக்கும் இருப்பதற்கும், பின்பற்றுவதற்கும், தகுதியான தீர்க்க தரிசனத்துடன் தெய்வீகத் தன்மையில் ஏற்பட்டது என்று சொல்லப்படு மானால் அவைகளை மத வெறியர்களுக்கும் பழமையில் பிழைக்கக் காத்துக் கொண்டிருக்கும் சோம்பேரி சுயநலக் கூட்டங்களுக்கும் விட்டுவிட
குடி அரசு - 1935 (1) 44
வேண்டுமே ஒழிய அவற்றைப் பொதுஜன சாதாரண நித்திய வாழ்க்கையில் கொண்டு வந்து கலக்கி முற்போக்குக்கும், செளகரியத்துக்கும் தொல்லை விளைவிக்கக் கூடாது.
எவ்வளவு மதவெறியனும், குரங்குப் பிடிவாதக்காரனும் இன்றைய வாழ்க்கையில் மாற்றமடைந்து கொண்டும் மாற்றத்தை ஏற்றுக் கொண்டும்தான் இங்கு வாழ்ந்து வருகிறானே ஒழிய எவனும் தெய்வீகத்துக்கு மாறுபட்டதென்றோ, தத்துவங்களுக்கு மாறுபட்டதென்றோ. கருதி எதையும் விட்டு விட்டு காட்டுக்கு ஓடிப் போகவில்லை. அல்லது தற்கொலை செய்து கொண்டு “ஆண்டவனை அடைந்து விடவும் இல்லை.
ஆகையால் மாறுதலைக் கண்டு அஞ்சாமல் அறிவுடமையோடும், ஆண்மையோடும் நின்று விஷயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து காலத்துக்கும், அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளி, கூட்டுவன கூட்டி திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவு கொண்டவன். என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும் என்பதை அனேகர். உணர்ந்திருந்தாலும், அதன் பயனாய் இன்றைய தமிழ் எழுத்துக்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பல என்பதைப் பற்றி பலருக்கு அபிப்பிராயம் இருந்தாலும் யெவரும் தைரியமாய் முன்வராமலே இருக்கிறார்கள். “இவ்வளவு பெரிய காரியத்திற்கு பாஷை ஞானம், இலக்கண ஞானம், பொதுக் கல்வி இல்லாத ஒரு சாதாரண மனிதன் முயற்சிக்கலாமா'” என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் தகுந்த புலமையும், பாஷா ஞானமும், இலக்கண அறிவும் உள்ளவர்கள் எவரும் மூயற்சிக்காவிட்டால் என்: செய்வது? தவம் செய்வதா? அல்லது ஜபம் செய்வதா?
தமிழ் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. எழுத்துக்கள் ஏற்பட்டது இன்று நேற்றல்ல. ஆனால் எழுத்துக்கள் கல்லிலும், ஓலையிலும் எழுதும்காலம் போய் காகிதத்தில் எழுதவும், அச்சில் வார்த்துக் கோர்க்கவும் ஏற்பட்ட காலம் தொட்டு இன்று வரை அவற்றில் யாதொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. ஆதலால் யாராவது ஒருவர் துணிந்து இறங்க வேண்டியதாயிற்று
புதிய மாறுதல்களால் அதாவது போக்குவரத்து வசதியின் காரணத்தால் ஏற்பட்ட பல தேச மக்கள் கூட்டுறவாலும், பல தேச பாஷை சொற்களும், பல தேசப் பொருள்களும் கலரும்படி ஏற்பட்ட சம்பவங்களாலும், இன்று அனேக வார்த்தைகள் உச்சரிப்புகள் தமிழில் சர்வ சாதாரணமாய் கலந்து விட்டன. அவைகளை உச்சரிக்கும்போதும், எழுதும் போதும் தமிழ் பாஷையும், தமிழ் எழுத்தும் விகாரமாய் வெட்கப்பட வேண்டி இருக்கிற தன்மையில்
இருக்கின்றன. (அதற்கு தத்துவார்த்தமும், விதியும் இருக்கலாம்) ஆதலால் சில எழுத்துக்கள் வேறு பாஷைகளில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதுகூட மிக அவசியமாகும். அதற்கு வெட்கமாய் இருக்கும் பக்ஷம் புதியதாகவாவது எழுத்துக்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
45 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இவைகள் ஒருபுறமிருக்க இப்போது உயிர் மெய் எழுத்துக்கள். என்று சொல்லப்படும் 18 எழுத்துக்களிலும் ஒவ்வொன்றுக்கும் உள்ள இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு சப்தங்கள் கலந்த எழுத்துக்கள் தனித்தனி வடிவம் கொண்டு அதாவது கி, கீ, கு, கூ என்பது மாதிரியே 18 எழுத்துக்களும் தனித்தனி உருவம் பெற்று 18 x 4 = ஆக மொத்தம் 72 எழுத்துக்கள் அதிகமாக அனாவசியமாக இருந்து வருகின்றன.
இந்தத் தனித்தனி வடிவங்கள் எதற்காக இருக்க வேண்டும்? எல்லா
உயிர்மெய் எழுத்துக்களுக்கும் ஆ காரம், ஏ காரம் ஆகிய சப்தங்களுக்கு
£, € ஆகிய குறிப்புகளைச் சேர்த்து எப்படி கா, கே என்று ஆக்கிக் கொள்ளுகின்றோமோ அதுபோலவே மேல்கண்ட கி, கீ, கு, கூ முதலிய சப்தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட குறிப்பு அடையாளத்தை ஏன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது மிகவும் யோசிக்கத்தக்க விஷயமாகும்
உதாரணமாக ஜ,ஷ முதலிய கிரந்த அக்ஷரங்கள் என்று சொல்லப் படுபவைகளுக்கு இன்றும் உ கரம், ஊ காரம் சப்தங்களுக்கு கு, கூ என்கிற மாதிரி தனி எழுத்துக்கள் இல்லாமல், உ கரத்துக்கு © இந்த
மாதிரி குறிப்புகளையும் ஊ காரத்திற்கு இந்த மாதிரி குறிப்புகளையும்
சேர்த்து ஜு, ஜூ, ஷு, ஷூ, ஸு, ஸூ, ஹு, ஹூ என்பதாக ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதுபோல் தமிழ் எழுத்துக்களிலும் கி. கீ. கு. கூ ஆகியவைகளுக்கு , இ என்பது போன்றவைகளையோ அல்லது வேறு விதமான குறிப்புகளையோ சேர்த்தால் அச்சில் 72 தனி எழுத்துக்கள். தேவையில்லை என்பதோடு பிள்ளைகள் தமிழ் கற்பதற்கும் 72 எழுத்துக்களைத் தனியாக இந்த ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லாத செளகரியமும் ஏற்படும்.
மற்றும் எழுத்துக் குறைவால் அச்சில் செளகரியம் ஏற்படுவது போலவே தமிழ் எழுத்து டைப்ரயிட்டிங்கி என்று அச்சடிக்கும் யந்திரம் செய்வதிலும், மிகுந்த செளகரியமும், விலை சகாயமாய் செய்யக்கூடிய நிலைமையும் ஏற்படும்
எழுத்துக்கள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துக்களைச் சேர்ப்பது, என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.
உதாரணமாக உயிரெழுத்துக்கள் என்பவைகளில் ஐ, ஒள என்கின்ற இரண்டு எழுத்துக்களும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயமாகும். ஐ காரம் வேண்டிய எழுத்துக்களுக்கு டை இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக ய் என்ற எழுத்தை பின்னால் சேர்த்துக் கொண்டால் ஐ கார சப்தம் தானாகவே வந்து
விடுகின்றது. உதாரணமாக கை என்பதற்குப் பதிலாக கய் என்று எழுதினால்: சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்
குடி அரசு- 1935 (1) 46
அதுபோலவே ஒள காரத்துக்கும், கெள என்பதற்குப் பதிலாக கவ் என்றோ, கவு என்றோ எழுதினால் சப்தம் மாறுவதில்லை. கெளமதி - கவ்மதி, கவுமதி என்கின்ற சப்தங்கள் ஒன்று போலவே உச்சரிப்பதைக் காணலாம்
இந்த வகையில் ஐ, ஒள இரண்டு எழுத்து உயிரெழுத்திலேயே
குறைத்து விட்டால் அதனாலும் பெரிதும் அனுகூலம் உண்டு. ஆகவே கி, கீ, கு, கூ என்கின்ற சப்தங்களுக்கு தனிக் குறிப்பு வடிவங்கள் ஏற்படுத்துவதன் மூலம் குறிப்புகள் அதிகமானாலும் ஒ, ஒள குறிப்புகள் குறைபடுவதன் மூலம் கிட்டதட்ட சரிபட்டுப் போக இடமேற்படும். கையெழுத்து எழுதுவதற்கும் அசெளகரியமிருக்காது
தமிழ் எழுத்துக்களில் மேலே குறிப்பிட்ட இந்தப்படியான சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்படுமானால் அப்போது தமிழில் மொத்த எழுத்துக்கள் 46-ம் 7 குறிப்பு எழுத்துக்களும் ஆக 53 எழுத்துக்
களில் தமிழ் பாஷை முழுவதும் அடங்கிவிடும். அதாவது உயிர் எழுத்து 10, உயிர் மெய் எழுத்து 18, ஒற்றெழுத்து 19 எழுத்துக்களின் குறிப்புகள் (அதாவது £,ு,8, @, G இதுகள் போல்)
7 ஆக மொத்தம் 54 எழுத்துக்களுக்குள் அடங்கி விடும்
அக்சுக்கும் 54 அரைகள் (கேஸ்கள்) இருந்தால் போதுமானதாகும் பிள்ளைகளுக்கும் இந்த 54 எழுத்துக்கள் ஞாபகமிருந்தால் போதுமானதாகும். R ஸ, ஷ, ஹ, க்ஷ என்கின்ற கிரந்த அக்ஷரங்களான எழுத்துக் களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் அதில் குற்றெழுத்து உள்பட ஒரு பத்து எழுத்து அதிகமாகி 64 எழுத்துக்களாகலாம்
ஆனால் இப்பொழுதோ வடி 64 எழுத்துக்களுக்குப் பதிலாக சுமார்
150க்கு மேல் 160 எழுத்துக்கள் வரை இருந்து வருகின்றன என்பதும்
குறிப்பிடத்தக்கதாகும்
பாஷையின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக் கொள்ளக் கூடிய
தாகவும் இருப்பதைப் பொருத்ததே ஒழிய வேறல்ல. ஆதலால் இந்த மாற்றங்கள் நாளாவட்டத்தில் செய்யக் கூடியது என்று சொல்லுவதானாலும் ணா, ணை முதலிய 7 எழுத்துக்களைப் பொருத்த வரையில் உள்ள மாற்றத்தை வாசகர்கள் இப்போது முதலே அனுமதிப்பார்கள் என்றே கருதுகின்றோம் இதுவரை பல தோழர்கள் ஆதரித்ததோடு மற்ற மாறுதல்களையும் எழுதியிருப்பதும் இப்பொழுதே செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருப்பதும் நமக்கு தைரியத்தைக் கொடுக்கின்றது.
அவர்களுக்கு நமது நன்றியும் பாராட்டுதலும் உரியதாகுக.
குடி அரசு - தலையங்கம் - 20.01.1935
47 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வக்கீல் தொல்லைகள்
ஒரு தேசத்தில் எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இருந்தாலும், ஒரு தேசத்தில் எவ்வளவு வழிப்பறி - தீவட்டிக் கொள்ளை - பகல் கொள்ளை போன்ற வெளிப்படையாய், பலாத்காரமாய் மனம் பதறப் பதற பித்துக் கொள்ளும் கொடுமைகள் இருந்தாலும் மற்றும், சமூக வாழ்க்கையில் சமாதானத்துக்கும், சாந்திக்கும், நல்லொழுக்கத்துக்கும் விரோதமானது என்று சொல்லப்படும் கள்ளு, சாராயக் கடைகள், தாசி வேசி வீடுகள், சூது மடங்கள் ஆகியவைகள் இருந்தாலும், சாமான்கள் விலை பேசுவதுபோல்
நீதிக்கும், தீர்ப்புக்கும் லஞ்சம் வாங்கும் அனியாய அயோக்கிய நீதிமுறைகள் இருந்தாலும், அவைகளையெல்லாம் விட இன்றைய வக்கீல் தன்மை என்பது மனித சமூகத்துக்கு மிக மிக கஷ்டமானதும், தொல்லையானதும், சித்திரவதைக்கு ஒப்பானதுமான துன்பங்களைக் கொடுக்கக் கூடியது என்பது நமது பல நாளைய அபிப்பிராயமாகும்
மனித சமூகத்துக்கு காலரா, பிளேக்கு, க்ஷயம், உளமாந்தை போன்ற கொள்ளை நோய்கள் எப்படியோ, அதுபோலவே தான் மனித சமூக ஒழுக்கத்துக்கும், நாணையத்துக்கும், சாந்திக்கும் வக்கீல் சமூகம் ஒரு பெரும் வியாதியேயாகும்
வக்கீல் சமூகம் என்கின்ற ஒரு கூட்டம் இல்லாதிருந்திருக்குமானால். இன்று அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவற்றில் இருந்து வரும் கேடுகள் 100க்கு 99 பாகம் இல்லாமலே இருந்திருக்கும் என்று உறுதியாய்ச் சொல்ல அனேக விபரங்கள் நம்மிடமிருக்கின்றன.
காங்கிரசில் காந்தியார், முதல் முதல் அதாவது 1920-ம் வருஷம் பிரவேசித்து மக்களுக்கு ஒத்துழையாமையைப் பற்றி உபதேசிப்பதற்கு முன் மக்கள் ஒழுக்கம் பெற வேண்டும் என்று சொல்லி வந்த காலத்தில் முதல் முதல் காங்கிரஸ் சபையை பரிசுத்தமாக்க வேண்டுமென்கின்ற திட்டம் வகுத்தபோது “காங்கிரசில் வக்கீல்களைச் சேர்க்கக் கூடாது” என்பதாக முதல் விதி ஏற்படுத்தினது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும் அதோடு கூடவே அதற்குக் காரணம் சொல்லும் போது அக்கூட்டத்தார் தேசத்திற்கு எவ்வளவு கேடானவர்கள் என்பதை வெகு அழகாகவும், உண்மையை அப்படியே சிறிதுகூட மிகைப்படுத்தாமலும் போட்டோ படம் எடுத்தது போல் விளக்கியும் காட்டி இருக்கிறார். தானும் சிறிது காலம்
வக்கீலாய் இருந்ததால் அது அவருக்கு நன்றாய் தெரிய முடிந்தது.
குடி அரசு- 1935 (1) 48
கடைசியாக காந்தியார் “காங்கிரசில் வக்கீல்கள் இருப்பதைவிட சக்கிலிகள் இருப்பது மேலானதும், நன்மை பயக்கத்தக்கதுமான காரியம்” என்றும் சொல்லி இருக்கிறார்.
காந்தியார் “சக்கிலி ஜாதி” என்பதை கீழான ஜாதி என்று கருதி இருக்க மாட்டார் என்றாலும் 1920-ல் அவரது மனப்பான்மை இருந்த நிலையில் வக்கீல்கள் மனித சமூகத்தில் மிக மிகக் கீழானவர்கள் என்று காட்டுவதற்காக அன்று மனித சமூகத்தில் எந்தக் கூட்டத்தாரையும், எந்தத் தொழிலையும் இழிவாய்க் கருதும் வழக்கம் இருந்ததோ அந்தக் கூட்டத் தாரையும், தொழிலையும் ஒரு உதாரணத்துக்காக எடுத்துக் காட்டினார் என்பதையாவது ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அப்படிப்பட்ட கீழானதும் இழிவானதுமான வக்கீல் கூட்டமேதான் இன்று உலக நடப்பில் சகல துறையிலும் ஆதிக்கம் வகிக்கும் நிலையில்: இருந்து வருகின்றது என்றால் இதன் பயனாய் மக்கள் எவ்வளவு துன்பமும், துயரமும் அடைவார்கள் என்பதை எடுத்துக்காட்ட வேண்டுமா என்று கேட்கின்றோம்
அரசியல் துறையில் நாணையமில்லை, நாணையமில்லை என்று வெகுகாலமாகவே ஒருமுகங் கொண்டதான பெரியதொரு கூச்சல் இருந்து வருவது யாரும் அறியாததல்ல. அப்படி இருந்தும் இன்றும் அத்துறை அவ்வளவு நாணையக் குறைவாகவே ஏன் இருந்து வருகின்றது என்று பார்ப்போமானால் அரசியல் துறையின் பிறப்பிடம் முதல், வளர்ப்பிடம், வாழ்க்கைப்படும் இடம் எல்லாமுமே வக்கீல் கூட்டத்தார்கள் கையிலேயே இருந்து வருகின்றது என்பதைத் தவிர வேறு காரணங்கள் சொல்ல நமக்குத் தோன்றவில்லை
இன்றுஅதிகாரிகள்லஞ்சம் வாங்குவது என்பது எவ்வளவு சாதாரணமாய் இருக்கின்றது என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. 1000, 10000,
100000, 1000000, 10000000 ரூபாய்கள் பொருமான வியாஜ்யங்களின். தலையெழுத்துக்கள் எல்லாம் ஒரு காலத்தில் வக்கீல் உத்தியோகத்தில்
மீ£ 100, 50க்குக்கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடித் தெருவில் அலைந்து கொண்டிருந்த டவுட் வக்கீல் பேர்வழிகளின் கை பேனாவின் நுனியில் அடிமைப்பட்டுக் கிடக்க நேரிடும்போது லஞ்சங்கள் பெருகியும், சிகரெட்,
பீடி விற்பனை போல சாதாரணமாய் பொது ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றும் இருப்பதில் ஏதாவது அதிசயமிருக்க முடியுமா என்று கேட்கின்றோம்
இந்தியாவில் உள்ள ஆட்சியின் நாணையக் குறைவைப் பற்றியும்,
நீதி நிர்வாகத்தின் நாணையக் குறைவுகளைப் பற்றியும் குறை சொல்லக் கூடிய அம்சங்கள் எவ்வளவு இருக்கின்றதோ சற்றேரக்குறைய அவ்வளவுக்கும் வக்கீல் கூட்டத்தின் சம்மந்தம் அவற்றில் கலந்திருப்பதே காரணம் என்று தைரியமாய்ச் சொல்லலாம்.
49 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வக்கீல்கள் பிழைக்கும்படியாகவே சட்டங்கள் தயாறாகிக் கொண்டு வருகின்றன. வக்கீல்கள் பிழைக்கும்படியாகவே அரசியல் கிளர்ச்சிகளும், தத்துவங்களும் நடைபெற்று ஏற்பட்டு வருகின்றன. மற்றும் கோர்ட்டுகளும், விசாரணைகளும், தீர்ப்புகளும்கூட வக்கீல்கள் பிழைப்புக்கு அனுகூலமாகவே
இருந்து வருகின்றன. தேச மக்களின் நன்மைக்கு ஆக என்று சொல்லப்படும் அரசியல். திட்டம் என்பது 100-க்கு 99 பாகமும் வக்கீல்கள் பிழைப்புக்கு அனுகூல மானவைகளே ஒழிய மனித சமூக பொது நலனுக்கு அனுகூலமானதென்று சொல்ல முடியாது.
இந்திய வக்கீல்களைப் பற்றி சமீப காலத்திலேயே பல அறிஞர்கள் அபிப்பிராயங்கள் கொடுத்து வந்திருக்கிறார்கள்
மற்றும் சமீப காலமாகக் கூட கோர்ட்டுகளில் வக்கீல்கள் ஒழுக்கக் குறைவாகவும், நாணையக் குறைவாகவும் நடந்து கொள்ளும் விஷயங் களைப் பற்றியும் தாராளமாய் பல அதிகாரிகள் குறிப்பிட்டிருப்பதுடன். கட்சிக்காரர்களுடைய பணங்களை மோசம் செய்ததற்காகக் கடுங்காவல் போன்ற சிறை தண்டனையும் வக்கீலுக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் இந்த வக்கீல்கள் பாமர மக்களிடம் எவ்வளவு மோசமாயும், நாணையக் குறைவாயும் நடந்திருப்பார்கள் என்பதற்கு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றோம்.
சண்டே டெஸ்பாச் என்ற ஒரு லண்டன் பத்திரிகையில் ஐடன்கிறாலி என்ற ஒருவர் இந்திய நீதி நிர்வாகத்தைப் பற்றி எழுதுகையில்,
இத்திய வக்கீல்கள் மிகவும் ஒழுங்கீனமானவர்கள் ஆவார்கள். அவர்களுக்குச் சிறிதும் மதிப்புக் கொடுக்க முடியாது” என்றும்,
இந்தியஜட்ஜுகள்லஞ்சம் வாங்குபவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றும் சமீபத்தில் சென்ற வாரத்தில் திருநெல்வேலியில் ஐரோப்பிய ஐ.சி.எஸ். ஜட்ஜி ஒருவர் குறிப்பிட்டிருப்பதாவது.
''இந்திய வக்கீல்களுக்கு ஒரு லட்சியமும், ஒரு கோரிக்கையும் இருப்பதாகத் தெரியவில்லை!” (அதாவது வக்கீல்களுக்கு கொள்கையே கிடையாது என்பதாகும்.)
“எப்படியும் தங்கள் சுயநலமே முக்கிய நோக்கம்.”
“வக்கீல்கள் தங்களை சீர்படுத்திக் கொள்வதில் கவலைப்படுவதே கிடையாது. சுமார் 500 வருஷங்களுக்கு முன் இங்கிலாந்து தேசத்தில் எப்படி வக்கீல்கள் வழக்குகளை விர்த்தி செய்து மக்களைக் கெடுத்து வக்கீல் தொழிலுக்கு மிகவும் இழிவை உண்டாக்கி வந்தார்களோ அதுபோலவே இப்போது இந்திய வக்கீல்கள் நிலை இருந்து வருகிறது”
குடி அரசு - 1935 (1) 50
“இந்தியாவில் நீதி செலுத்தும் விஷயத்தில் வக்கீல்களை நம்ப முடியவில்லை. மிகுந்த அவநம்பிக்கை கொள்ள வேண்டியிருக்கிறது''
என்று குறிப்பிட்டிருக்கிறார். (இந்த ஜட்ஜியின் பெயர் தோழர் ஈஈ.மேக், ஐ.சி.எஸ்.)
மற்றும் இதே வாரத்தில் அதுவும் நமது ஐகோர்ட்டிலேயே ஆஜரான வக்கீலைப் பற்றி, “வக்கீலின் நடத்தை மிகவும் ஒழுங்கீனமானது. இதை மிகவும் பலமாகக் கண்டிக்க வேண்டும். இவருக்கு புத்தி கற்பிக்க வேண்டும்” என்று எழுதி இருக்கிறார்.
மற்றொரு வழக்கில் ஒரு வக்கீல் ஒரு கட்சிக்காரன் பாப்பர் வியாஜ்யம் செய்து அவனுக்கு ரிசீவராக இருந்த ஒரு வக்கீல் கட்சிக்காரனுக்காக கிடைத்த ரூபாய்களை ஒரு தடவை 2000மும், மற்றொரு தடவை 1000மும் ஆக மூவாயிரம் ரூபாய் மோசடி செய்து ஒரு வழக்கில் 2 வருஷக் கடுங்காவலும், மற்றொரு வழக்கில் ஒரு வருஷக் கடுங்காவலும் பெற்று இருக்கிறார்.
சமீபத்தில் ஹைகோர்ட் ஐரோப்பிய ஜட்ஜு ஒருவர் “வக்கீல்களுக்கு உள்ள கடமையை கவனிப்பதில்லை. தப்பு வழக்கை சிருஷ்டிக்கிறது கூடாது'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த ஒரு வருஷத்தில் இந்திய வக்கீல் நடவடிக்கைகளைப் பற்றிய குறிப்புகள் வெளியில் வந்தவைகளை மாத்திரம் எடுத்துப் போடப்படுமானால் மனுதர்ம சாஸ்திரம் பராசரஸ்மிருதி ஆகிய இரண்டையும்விட பெரிதாகவே ஒரு புத்தகமாகும்
இன்னமும் தினமும் நித்திய வாழ்க்கையில் விவகார முறையிலும், சொந்த முறையிலும் வக்கீல் கூட்டத்தில் பெரும்பான்மையோரிடம் இருந்து வரும் ஒழுக்கத் தவறுதலான காரியங்கள் சொல்லி முடியாது அனேகமாக முன்சீப், ஜட்ஜி, சப் மேஜிஸ்ரேட், டிப்டி மேஜிஸ்ரேட் ஆகிய உத்தியோகஸ்தர்கள் சற்றேரக்குறைய அந்த ஜாதிக்காரர்களாகவே இருப்பதால் வக்கீல்களின் அக்கிரமங்களும், அட்டூழியங்களும் வெகு சாதாரணமாக மறைக்கப்பட்டு விடுகின்றன. எனவே மனித சமூக ஒழுக்கத்தைப் பற்றியோ, மக்கள் நீதியைப் பற்றியோ ஜனசமூக சமாதானத்தையும், ஒழுங்கையும் பற்றியோ ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் இந்த வக்கீல் சமூகத்தை ஒழித்தால் அல்லது மற்றபடி ஒரு “தர்ம தேவதையே" உருவம் பெற்று ஆட்சி
புரிவதாய் இருந்தாலும் இன்றைய நிலைமையைவிட ஒரு மயிர்க்கால் அளவுகூட மக்களுக்குப் பயன்படாது என்பது நமது அபிப்பிராயமாகும்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.01.1935
ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
முனிசாமி நாயுடுவின் முடிவு
தோழர் B. முனிசாமி நாயுடு திடீரென்று முடிவு எய்திய செய்தி கேட்டு திடுக்கிட்டு விட்டோம்.
அவருக்கு வயது இப்போது 50தேதான் ஆகின்றது. இவர் ஒரு கெட்டிக்கார வக்கீல் என்று பெயர் வாங்கியர். அவர் ஜஸ்டிஸ் கட்சியில் ஒரு பிரபலஸ்தராய் விளங்கினார். பனகால் ராஜா முடிவெய்திய பிறகு அக்கட்சிக்குத் தலைவராக ஆனார். அதன் பயனாய் முதல் மந்திரி ஸ்தானமும் பெற்றார். மந்திரி போட்டியின் பலனாகவும், காங்கிரசை சில சந்தர்பங் களில் ஆதரித்ததின் பயனாகவும் மந்திரி உத்தியோகம் விட்டுவிட வேண்டி நேர்ந்தது என்றாலும் கட்சியை விட்டு விலகாமலும் எதிர்கட்சியாகிய காங்கிரசினிடம் சேராமலும் ஜனநாயக ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு கட்சி ஏற்படுத்தி அதற்கு தலைவராய் விளங்கி வந்தார்.
சமீப காலத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் இரண்டரக் கலந்து விடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்து இந்த மாத முடிவிலோ, அடுத்த மாத துவக்கத்திலோ, ஒரு மந்திரி பதவியை அடையக்கூடிய நிலையில் இருந்தார்.
அதன் பயனாக ஜஸ்டிஸ் கட்சி மிகவும் ஒற்றுமையையும், பலத்தையும் பெறக்கூடிய நிலையும் இருந்தது. தோழர் முனிசாமி நாயுடு கட்சி விஸ்வாசி என்பது மாத்திரமல்லாமல். ஒரு காலத்தில் அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்கு மந்திரி பதவி போய்விட்டதான 1927-ம் வருஷ தொடக்கத்தில் காங்கிரஸ்காரர்களால் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைத்த காலத்தில் ஒரு மந்திரி ஸ்தானத்தை தோழர் முனிசாமி நாயுடுவுக்கும் கொடுப்பதாக கூறி வருந்தி அழைத்த போது அப்பதவியை தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டவரும், ஏழை விவசாயிகள் விஷயமாக ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்னும் விஷயத்தில் சிரத்தை கொண்டிருந்தவர். சட்டசபை நடவடிக்கைகளிலும், சட்டங்களிலும் நல்ல அனுபவம் உள்ளவரும் அவரேயாவார். இவருடைய முடிவானது இது சமயம் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு பெரிய நஷ்டம் என்று சொல்ல வேண்டும். எனவே தோழர் முனிசாமி
நாயுடுவின் முடிவுக்கு வருந்துவதோடு அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - இரங்கற் செய்தி - 20.01.1935
குடி அரசு- 1935 (1) 32
பொப்பிலி ராஜாவும்
வைசிராய் பேட்டியும்!
- C.ID. எழுதுவது
பொப்பிலி ராஜா அவர்கள் கல்கத்தாவுக்குச் சென்றபோது வைசிராய்
பிரபு பேட்டி அளிக்க மறுத்து விட்டதாகச் சில பத்திரிகைகள் எழுதுகின்றன.
இதை ஒரு பொருப்பும் - நாணையமுள்ள பத்திரிகையின் நடவடிக்கை
என்று சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்.
பொப்பிலி ராஜா கல்கத்தாவுக்கு ஜனவரியை உத்தேசித்தும், சில நண்பர்களைக் காணவும் சென்றாரே ஒழிய வைசிறாயைப் பார்க்க செல்லவில்லை.
வைசிராயைப் பேட்டி கேழ்க்கவும் இல்லை.
பொப்பிலி ராஜா வைசிறாய் பிரபுவைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால் வைசிராய் பிரபு பார்க்க முடியாது என்று சொல்லி விடுவாரா?
அவ்வளவு பெரிய துரோகம் அவரை நம்பினவர்களுக்கோ, சர்க்காருக்கோ அல்லது வைசிறாய் வருத்தப்படும்படியோ என்ன செய்து விட்டார் என்று அறிவுள்ளவர்கள் நினைக்க மாட்டார்களா?
பொப்பிலி என்பதற்காக இல்லாவிட்டாலும் ஒரு மாகாண முதல் மந்திரியை வைசிராய் பார்க்க மறுத்துவிட்டார் என்பது எந்த பைத்தியக் காரனாவது நம்பக்கூடிய சேதியா? அல்லது எந்தப் பைத்தியக்காரனாவது சொல்லக்கூடிய சேதியா? செட்டி நாட்டு ராஜாவின் பணமானது சில மக்களை அடியோடு அறிவிழக்கச் செய்து விட்டது என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம்
இது நிற்க மற்றொரு விஷயம் இங்கு குறிப்பிடத்தக்கதாகும் அதாவது வேறு ஒரு கனவானை வைசிராய் பிரபு பார்க்க சவுகரிய மில்லை என்று சொல்லி விட்டது உண்மை. அதற்காக பதினாயிரக் கணக்கான ரூ. செலவு செய்து வேண்டா விருந்தாய் பேட்டி கண்டதும் உண்மை. அந்த பேட்டியிலும் உத்தேசித்துச் சென்ற காரியங்கள் எல்லாம் பொக்கணமாய் போய் விட்டதும் உண்மை. இந்த இரகசியங்களைத் தெரிய ஆசைப்பட்டால் புள்ளி விவரங்களோடு தெரிவிக்கத் தயாராய் இருக்கிறேன். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஆகவே செட்டிநாட்டு ராஜாவை ஆதரிக்கின்ற பத்திரிகையென்றோ அவரது பணத்தில் நடைபெறுகின்ற பத்திரிகை என்றோ ஒன்று இருக்கு மானால் அதனால் பொப்பிலியையும், மற்றவர்களையும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான பொய்களாலும், கேவலமான வார்த்தைகளாலும் வைவதன் மூலம் செட்டி நாட்டு ராஜாவுக்கு நன்மை செய்வதாக ஏற்பட்டு
விடாது. அதற்கு நேர்மாறான பலனே ஏற்படும். திருப்பிச் சொல்ல எவ்வளவோ உண்மையான சங்கதிகள் அடக்க முடியாமல் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.
செட்டிநாட்டு ராஜா கண்ணாடி வீட்டில் குடி இருக்கிறார். பொப்பிலியும், ஷண்முகமும் கருங்கல் வீட்டில் குடி இருக்கிறார்கள். என்பதைச் செட்டிநாடு அறிய வேண்டும். இதை அவரிடம் பணம் வாங்குகின்றவர்கள் அறிய வேண்டிய அவசியமில்லை, ஏன் என்றால் நாளைக்குச் செட்டிநாடு இளைத்தால் பணம் கொடுக்க பொப்பிலி இருக்கிறார், ஷண்முகம் இருக்கிறார் என்கின்ற தைரியம் அவர்களுக்கு உண்டு. இதை ஒரு செட்டிப் பிள்ளை அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.
குடி அரசு - கட்டுரை - 20.01.1935
குடி அரசு- 1935 (1) 34
தஞ்சை ஜில்லா 4-வது சுயமரியாதை மகாநாடு
தோழர்களே!
ஒரு வருஷ காலத்துக்குப் பிறகு இன்று சுயமரியாதை மகாநாடு இங்கு கூடுகின்றது. மாதத்திற்கு 2, 3 மகாநாடுகள் கூட்டிக் கொண்டிருந்த
நாம் அடக்குமுறையில் அடக்கப்பட்டது போல் ஒரு வருஷ காலமாக ஒன்றும் இல்லாமல் இருந்து இன்று இங்கு கூடி இருக்கிறோம். மகாநாடு என்கின்ற முறையில் நாம் இந்த ஒரு வருஷ காலமாய் கூட்டம் கூட்டி இருக்காவிட்டாலும் பிரசாரம் என்கின்ற முறையில் ஏறக்குறைய வாரம்
ஒரு முறையாவது ஒவ்வொரு இடங்களில் பலர் தனித்தனியேயும்,
கூடியும் பிரசாரம் என்கின்ற முறையிலும் சுயமரியாதைத் திருமணம்,
சங்கத் திறப்பு விழா, ஆண்டு விழா முதலிய பெயர்களிலும் கூட்டம்
கூட்டி நமது தொண்டுகளை ஆற்றி வந்திருக்கிறோம். ஆகையால் நாம் சோர்ந்தோ, அயர்ந்தோ, அலட்சியமாயோ, அடக்கு முறையில் பின் வாங்கியோ இருந்து விட்டோம் என்று யாரும் சொல்லிவிட முடியாது
வேலை செய்ய வேண்டும் என்கின்றவர்களுக்கு மகாநாடு இருந்தாலும்,
இல்லாவிட்டாலும் வேலை செய்ய இடமிருந்து கொண்டுதான் இருக்கும்.
ஆதலால் மகாநாடுகள் கூட்டப்படாததால் இயக்க காரியங்கள் எதுவும் கெட்டுப் போய் விடவில்லை.
பிரசார நிலை
உண்மையாகவும், சுருக்கமாகவும் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதைச் சங்கத்தின் நிலையானது ஒரு பிரசாரப் பிராயத்தில் இருக்கின்றது என்றும் அந்தப் பிரசாரத்துக்காகவே மகாநாடு முதலியவைகளும் கூட்டப்பட்டு வருகின்றன என்றும் சொல்ல வேண்டும். இயக்கத்திலே ஈடுபட்டுள்ள தோழர்களுடைய கடமையும் முக்கியமாக பிரசாரமேயாகும் ஆதலால் இந்தக் காரியம் எந்தக் காரணம் கொண்டு அடங்கி இருக்கவும் இல்லை. அடக்கப்பட்டுவிடவும் இல்லை 55௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
திட்டம்
பிரசார சம்மந்தமான திட்டங்கள் விஷயத்தில் ஏதாவது ஒருவருக் கொருவர் சிறிது அபிப்பிராய பேதம் இருந்த போதிலும் அபிப்பிராய
பேதத்துக்கு இடமில்லாமல் செய்துகொண்டு இருக்கின்ற திட்டங்கள். எவ்வளவோ இருந்து கொண்டு இருக்கின்றன. ஆனதால் அபிப்பிராய
பேதம் காரணமாக தொண்டாற்ற இடமில்லாமல் போய் விட்டது என்றும்
யாரும் சொல்லிக் கொள்ள முடியாது
கொள்கை
நிற்க, நமது இயக்கக் கொள்கைகள் விஷயமாயும், அபிப்பிராய பேதங்கள் சிறிது இருந்து வருவதாகச் சொல்லப்படுகின்றது
நமது கொள்கைகள் என்று சொல்லப்படுவதும், ஈரோட்டு வேலைத் திட்டங்கள் என்று சொல்லப்படுவதும் நாம் இந்த 4 வருஷங்களாக செய்து கொண்டு வந்த பிரசார சம்மந்தமான திட்டங்கள் தானே தவிர புதிதாக ஏற்பட்டது என்று சொல்வதற்கில்லை
அது எப்படி இருந்த போதிலும் இப்போது அரசாங்கமானது நமது இயக்க விஷயத்தில் சற்று கடினமான முறைகளை கையாளத் தொடங்கி இருக்கிறார்கள். சுயமரியாதை இயக்கம் சட்ட விரோதமான இயக்கமென்றுகூட அரசாங்கத்தார் தீர்மானித்து உத்திரவு போட உத்தேசித்தார்களாம். அந்த
முயற்சி இன்னமும் இருந்து வருகின்றதாம். அந்தப்படி அரசாங்கத்தார் செய்தால் அது புத்திசாலித்தனமான. காரியமாகாது
சட்ட மறுப்பு இல்லை
ஏனெனில் நமது இயக்கத்தில் எப்படிப்பட்ட கொள்கைகள் இருந்தாலும் நாம் அவைகளை யெல்லாம் சட்ட வரம்பிற்கு உள்பட்டும் சட்டங்களை மீறாமலும் பலாத்காரம் இல்லாமலும் செய்வது என்றுதான். ஆதி முதல் விதிகள் வைத்துக் கொண்டு இருக்கிறோம். சட்டம் மீறுவதானாலும் வெளிப்படையாய் சொல்லிவிட்டுத்தான் செய்வோமே ஒழிய இரகசியமாகவோ, பித்தலாட்டமாகவோ நாம் எந்தக் காரியமும் செய்ய மாட்டோம். இதை பல தடவை தெரிவித்து இருக்கிறோம். நமது திட்ட
விதி என்று ஏதாவது இருக்குமானால் அவைகளிலெல்லாம் இதை விவரமாய் குறிப்பிட்டு மிருக்கிறோம்
சட்ட மறுப்பு ஓடுக்கம்
சட்டம் மீறுவது தெய்வ கட்டளையென்றும் மனச்சாட்சியின் தீர்ப்பு என்றும் சொல்லி வந்த காங்கிரசே இன்று “நாங்கள் சட்டப்படி நடந்து
குடி அரசு- 1935 (1) 56
கொள்ளுகிறோம். சட்ட மறுப்பு என்பதை 1000 கஜ ஆளத்தில் புதைத்து விட்டோம்” என்று சொல்லி விட்ட பிறகு சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்ற விதியுள்ள சு.ம. இயக்கம் சட்டத்திற்கு விரோதம் என்கின்ற சாக்கை வைத்து அடக்கிவிட கவர்மெண்டார் நினைத்ததானது காங்கிரசை அடக்கி ஒடுக்கி பணியச் செய்து விட்டோம் என்று கருதி கொண்டாடும் வெற்றிக் கொண்டாட்டத்தின் வேலைத் திட்டமென்று தான் சொல்ல வேண்டும் எப்படியிருந்த போதிலும் நாம் காங்கிரசைப் போலவே அரசாங்கத்திற்கு எதிராக இல்லாதபடி நமது வேலைத் திட்டம் இருக்கிறது என்பதைக் காட்டித்தான் ஆக வேண்டும். அவர்கள் எதையாவது ஆக்ஷேபித்தால் நாம் அதற்குத் தகுந்தபடி அமைத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
திருத்திக் கொன்னத் தயார்
நாம் உண்மையிலேயே ஏழை பாமர மக்களுக்காகவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் பாடுபடுகின்ற இயக்கமுடையவர்களாவோம்.
நமக்கு எதிராக சர்க்கார் வரவேண்டிய அவசியமே இல்லை. நமது திட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஓட்டுவதோ, கவிழ்ப்பதோ ஆகிய கருத்தும் அவசியமுமில்லை நம்முடைய இயக்கம் ஒரு குறிப்பிட்ட முறையைக் கொண்டதே யொழிய ஒரு தேசத்தாரையோ, ஒரு ஜாதியாரையோ குறி கொண்டதல்ல. நம்முடைய முறைக்கு எதிரிகள் நமது நாட்டிலேயே மலிந்து கிடக்கின்றார்கள். அப்படி இருக்கும் போது நமக்கு அரசாங்க விரோதம் என்பது தேவை இல்லாதது
ஆதலால் இன்றைய திட்டங்களில் எதையாவது அரசாங்கத்தார் குற்றமானது கூடாது என்று சொல்லுவார்களானால் திருத்தி அமைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்
விட்டுக் கொடுக்க மாட்டோம்
நமது கொள்கைகளை நாம் விட்டுக் கொடுக்க முடியாது. மனித சமூக சமத்துவமும், சாந்தியும், நமது லக்ஷியமும் கொள்கையுமாகும் அக் கொள்கைகளை காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்பட்ட அரசாங்கம் அனுமதிக்கிற அளவுக்கு நாம் பிரசாரம் செய்ய வேண்டியதை நாம் கடமையாய்க் கொண்டிருக்கிறோம் கொள்கைகளே தப்பு என்கின்ற நிலை வரும்போது நாம் ஒன்று
கூடி யோசித்து, ஒரு முடிவுக்கு வர வேண்டியது அவசியமாகும். ஆதலால் இப்போது அதற்கான நமது வேலைத் திட்டத்தை நடத்தக் கூடிய முறையில் அமைத்துக் கொண்டு நாம் இன்னும் ஊக்கமாகவும், வேகமாகவும் வேலை செய்ய வேண்டியது அவசியமாகும் 57௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
எல்லோரும் இருக்கலாம்
நமது இயக்கத்தில் எல்லோரும் இருக்கும்படி செய்ய வேண்டும்
என்று சிலர் சொல்லுகிறார்கள். ஆட்சேபணை இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் யாரும் இருக்கலாம். “மேல் ஜாதி", “கீழ் ஜாதி" என்பவர்கள் யாரும் இருக்கலாம். ஏழை பணக்காரர்களும் இருக்கலாம். அரசாங்க உத்தியோகஸ்தர்களும், காங்கிரஸ்காரர்களும் இருக்கலாம். நாம் புரோகிதக் கூட்டம் தவிர வேறு யாரையும் வேண்டாமென்று சொல்ல வரவில்லை.
யாருக்காவது அசெளகரியம் உண்மையில் இருக்குமானால் அதை
நேர் செய்ய வேண்டியது அவசியமேயாகும். ஆனால், வீண் சாக்கு போக்கு
களுக்கு பதில் சொல்ல நம்மால் முடியாது. அதற்காக ஏதும் செய்ய வேண்டியதும் இல்லை. எத்தனையோ செல்வவான்களும், “மேல் ஜாதி”க்காரர்களும் அரசாங்க உத்தியோகஸ்தர்களும், இந்து, கிறிஸ்து, முகமதியர்களும் நம்முடன் இன்றும் இருக்கிறார்கள்.
ஆதலால் திட்டம் காரணம் என்று யாரும் விலகிப்போகும்படி நம்மிடம் ஒன்றும் இல்லை. ஆனால் பலருக்கு பல அசெளகரியங்கள் இருக்கலாம். உண்மையைச் சொல்ல தைரியமில்லாமல் திட்டத்தின் மீது குறை கூறலாம். அதற்கு நாம் என்ன செய்யக் கூடும்
இன்றும் நாம் தயாராய் இருக்கின்றோம். யாரையும் ஒத்துழைக்கக் கேட்டுக் கொள்ளுகிறோம். யாருடனும் ஒத்துப்போக ஆசைப்படுகின்றோம்.
குறிப்பாக இந்த ஜில்லாவாசிகளைப் பொருத்தவரை எவ்வித அசெளகரியமும் இருப்பதாக நான் கருதவில்லை. ஆகையால் நமது இயக்கப் பிரசாரத்தை இந்த ஜில்லாவில் தாராளமாய் நடத்தி வழி காட்ட ஆசைப்படுகிறேன்.
குறிப்பு: தஞ்சை கிருஷ்ணலீலா கொட்டகையில் ஜனவரி 19, 20 ஆகிய நாட்களில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட 4 ஆவது சுயமரியாதை மாநாட்டில் மாநாட்டைத் திறந்து வைத்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 27.01.1935
குடி அரசு- 1935 (1) 58
முட்டான்களுக்கு வரி
- சித்திரபுத்திரன்
முட்டாள்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்கின்ற ஆசையின் மீதே நமது அரசாங்கத்தார் லாட்டரி கீட்டுகளையும், போட்டிப் பரிசுகளையும், குதிரைப் பந்தயங்களையும் அனுமதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தரும தேவதை சொற்பனம் அருளுகிறது இதை மிகவும் சரி என்றே சொல்ல வேண்டும் உதாரணமாக ஒரு தாசி தன் தாயாரை நோக்கி எனக்கு இன்பம் கொடுக்கும் ஆடவர்கள் எனக்குப் பணத்தையும் கொடுத்து என்னை வணங்குவதும் ஏன் என்று கேட்டபோது அந்த தாசியின் தாயாரானவள் மகளைப் பார்த்து, நல்ல காரியத்துக்கு தங்கள் பணத்தைச் செலவு செய்யாத அயோக்கியர்கள் பணம் செலவாவதற்காக வேசிகளாகிய நம்மையும், கள்ளு சாறாயத்தையும், சூது ஆட்டங்களையும் கடவுள் அனுமதித்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னாளாம்
அதற்கு ஒரு பாட்டும் உண்டு. அன்னையே அனையதோழி அறந்தனை வளர்க்கும்மாதே, உன்னையோர் உண்மை
கேட்ப்பேன், உரை
தெரிந்துரைத்தல் வேண்டும், என்னையே வேண்டுவோர்கள்'
எனக்கும் ஓர் இன்பம் நல்கி, பொன்னையும் தந்து
பாதப் போதினில் வீழ்வதேனோ? (அம்மா)
பொம்மெனப்புடைத்து விம்மி
போர்மதன் மயங்கி வீழும், கொம்மை சேர்முலையினாளே கூறுவேன் ஒன்று கேளாய், ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
செம்மையில் அறஞ்செய்யாதார்
திரவியம் சிதர வேண்டி,
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்த வாறே.
அதுபோல் பகுத்தறிவில்லாத முட்டாள்களுக்கு வரி போடுவதற்காக அரசாங்கத்தார் கருதி போட்டிப் பரிசு பத்திரிகைகள், லாட்டரிச் சீட்டுகள், குதிரைப் பந்தயங்கள், எலக்ஷன்கள், சர்விஸ் கமீஷனுக்கு உத்தியோகத்துக்காக விண்ணப்பங்கள், 1ரூ 15 அணாவுக்கு ஒரு கெடிகாரமும், 125 சாமான்களும் என்கின்ற விளம்பரங்கள், மூன்று வேளை மருந்தில் முப்பது ஸ்திரீகளை கெஞ்சும்படி செய்யத்தக்க மன்மத சிந்தாமணி, வீரியவிர்த்தி, தாதுபுஷ்டி லேகிய விளம்பரங்கள், தாயத்து விளம்பரங்கள் ஆகியவைகளை அரசாங்கத்தார் அனுமதித்து வருகிறார்கள்.
இதனால் போட்டிப் பத்திரிகை மீதாவது, விளம்பரக்காரர்கள் மீதாவது “சத்தியமாய்” நாம் சிறிதுகூட குற்றம் சொல்ல வரவில்லை. ஏனென்றால்
நம் நாட்டு முட்டாள்கள் எத்தனை பேர்கள் என்று கணக்கெடுக்க இது ஒரு பதிவு (ரிஜீஸ்ட்டர்) புஸ்த்தகமாகும். ஆதலால் இது நடக்க வேண்டியதுதான்.
இதுபோலவே அறிவாளிகளுக்கு வரி போடவும், அறிவாளிகளைக் கணக்கெடுக்கவும் சில காரியங்கள் இருக்கின்றன. அவற்றைப் பின்னால்
தெரிவிக்கலாம். இப்போது ஒன்றும் அவசரமில்லை.
குடி அரசு - கட்டுரை - 27.01.1935
குடி அரசு- 1935 (1) 60
உயிரைக் காத்ததற்கு உபகாரம்
1932ம் வருஷத்தில் காந்தியாரின் உயிரைக் காப்பாற்றின வீரர்கள். ஆதிதிராவிட தோழர்களாகும்.
பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்ட 200 வருஷகாலங்களுக்குப் பிறகே ஆதிதிராவிடர்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் பெற வசதி அளித்தார்கள்.
இந்த வசதியும் இந்திய மக்களின் பிரதிநிதி ஸ்தாபனம் என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரசும், அக்காங்கிரசிற்கு சர்வாதிகாரி என்று சொல்லப்பட்டவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்ய வசதி அளிக்காவிட்டால் பட்டினிகிடந்து உயிரை விடுவேன் என்று சொன்னவர், தீண்டாமை ஒழிக்கப்பட்டால் அல்லாது தீண்டப்படாதார் என்பவர்களுக்கு மற்ற இந்து மக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டாலல்லாது இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிடைக்காதென்றும், கிடைத்தாலும் நிலைக்காதென்றும் சொன்னவர் ஆன தோழர் காந்தியாரால் “தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசியலில் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்தால் என் உயிரைக் கொடுத்தாவது எதிர்ப்பேனே ஒழிய என் உயிர் போமளவும் சம்மதிக்கமாட்டேன்” என்று சொன்ன பிறகே தான் அரசாங்கத்தார் கருணைவைத்து தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்தார்கள்.
அதுவும் கூட ஏன்? எப்படி? கொடுத்தார்கள் என்று யோசிப்போமே யானால் சைமன் கமிஷன் இந்தியாவுக்கு முதலில் வந்த பொழுது, இந்திய அரசியல் ஸ்தாபனங்கள் முழுவதும் ஜஸ்டிஸ்கட்சி உள்பட எதிர்த்து பஹிஷ்காரம் செய்த காலத்தில் சுயமரியாதை இயக்கம் ஒன்று மாத்திரமே அதை வரவேற்று தீண்டப்படாதவர்கள் என்று சமூக வாழ்வில் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்கும் 7 கோடி மக்களின் நிலைமையையும், இந்தியப் பெண்கள் நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்றும்; அதற்காகவே வரவேற்கிறோம் என்றும், தெரிவித்த பின்பு சைமன் கமிஷன் தீண்டாமை தத்துவத்தையும், தீண்டப்படாதவர்களின். நிலமையையும், பெண்கள் நிலமையையும் தெரிந்து கொண்டு போய் கடைசியாக தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்தார்கள். வட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அந்த தனிப்பிரதிநிதித்துவத்தை ஒழிக்கக் கருதி தோழர் காந்தியார் “தனிப்பிரதிநிதித்துவத்தை அரசாங்கத்தார் திருப்பிப் பெற்றுக் கொண்டால் ஒழிய உயிர் தரிக்க மாட்டேன். நான் தற்கொலை செய்து கொள்ளுவேன்" என்று சபதங்கூறி பட்டினி கிடந்தார்.
அந்தப்பட்டினியில் 'கிருஷ்ணபரமாத்மா” செய்த கபட நாடகத்தை விட அதிகமாக “இதோ காந்தி சாகப் போகிறார்.அதோ காந்தி சாகப் போகிறார்”
என்று சில வைத்தியர்களும், மாளவ்யாஜி போன்ற பல வருணாச்சிரம எத்தர்களும் அதுவும் பட்டினி ஆரம்பித்த 4, 5 நாள்களுக்குள்ளாகவே கூப்பாடு போட்டு மிரட்டி தீண்டாதவர்களுக்கு குளத்தைத் திறந்து விடுகிறோம். கோவிலைத் திறக்கிறோம். பள்ளிக்கூடத்தைத் திறக்கிறோம். அதுமாத்திரமல்லாமல் எல்லாப் பொதுத் தேர்தல்களிலும் உங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கிறோம்” என்று ஆசைகாட்டி ஏமாற்றியும் தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் வாயினாலேயே எங்களுக்குத் தனித் தொகுதிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்று சொல்லும்படியாகச் செய்து காந்தியின் உயிரைக் காப்பாற்றினார்கள்.
இதனால் தீண்டப்படாத மக்களின் தயவாலேயே அவர்களது பெரும் தியாகத்தாலேயே காந்தியாரின் உயிர் காக்கப்பட்டது என்றோ காந்தியாருக்கு உயிர் பிச்சையும், அவரது மனைவியாருக்கு “மாங்கல்யப் பிச்சை"யும் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லப்படுமானால் அதில் நல்ல உண்மை இல்லை என்று எந்த நன்றி கெட்ட மனிதரும் சொல்லத்துணியார். அப்படி யிருக்க அந்த ஒரு பெரிய உதவிக்காக அவர்களுக்கு கோயிலைத் திறந்து விடுவதாக ஒரு மசோதாவை இந்திய சட்ட சபையில் ஒருபார்ப்பனரைக் கொண்டு வரச்செய்து அதை ஆசை காட்டி மக்களிடமிருந்து தீண்டாமை விலக்குப் பண்டுக்காக பல லட்ச ரூபாய்களை வசூல்செய்து கொண்டு அந்தப் பணத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாதார் என்று சொல்லப்படுபவர்களாகிய ஐயர் ஐயங்கார் சாஸ்திரி முதலியவர்களின் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்குச் சிலவழிக்கப்பட்டு அவர்களை அங்கத்தினர்களாக்கினதோடு ஷி மசோதாவையும் கொலை செய்து விட்டு இதுவரை நடந்த எந்தப் பொதுத் தொகுதியிலும் எந்தத் தேர்தலிலும் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து விட்டார்கள். அதோடு மாத்திரம் அல்லாமல் பார்லிமெண்டரி போர்டு என்பதின் மூலம் எந்தத் தொகுதிக்கும் அந்த வகுப்பில் ஒரு ஆளையாவது நிறுத்தினவர்களுமல்ல.
அது மாத்திரமல்லாமல் சென்ற வாரம் சென்னையில் நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலுக்குத் தானாக வேறு எந்தக் கட்சியையும் சேராமல் தனித்து நின்ற ஆதிதிராவிட வகுப்புத் தோழராகிய ஜீ. முனிசாமிபிள்ளையையும், அவருக்கு எதிராக காங்கிரசின் பேராலேயே ஒரு பார்ப்பனரை நிறுத்தி தோற்கடித்து விட்டார்கள்.
குடி அரசு- 1935 (1) 62
ஆகவே இந்தப் பார்ப்பனர்கள், உயிரைக் காப்பாற்றியவர்களுக்குச் செய்யும் பிரதி உபகாரம் என்ன என்பதும், அவர்களது நன்றிகெட்ட தன்மை எவ்வளவு என்பதும் தேசிய நாணையம் எப்படிப்பட்டது என்பதும் இதிலிருந்தே ஒருவாறு உணரலாம்.
அது மாத்திரமல்லாமல் இதில் மற்றொரு விஷயம் மிகவும் கவனிக்கத்தக்கதாகும். அதாவது:-
பூனா ஒப்பந்தம் நிறைவேறிய மறுதினம் (25-9-32) பம்பாயில்
அந்த ஒப்பந்தத்தை ஊர்ஜ்ஜிதப்படுத்த ஒரு பெரிய மகாநாடு கூடிற்று அதில் அடியில் கண்ட தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது:-
“இனி இந்துக்கள் எவரும் பிறப்பினால் தீண்டப்படாதவர்கள் என்று
கருதக்கூடாது
பொதுக் கிணறுகள், பொதுப் பள்ளிக்கூடங்கள், பொது ரஸ்தாக்கள், இன்னும் இதர பொது ஸ்தாபனங்களானவைகளை உபயோகிப்பதில் மற்ற இந்துக்களுக்குள்ள எல்லா உரிமையும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கும் உண்டு
இச் சீர்திருத்தம் இப்பொழுது முதலே அமுலுக்கு வராவிட்டால். ஸ்வராஜ்யப் பார்லிமெண்ட் ஏற்பட்டதும் சட்டங்கள் ஏற்படுத்துவதில் இதுவே முதலாவதாக இருக்கும்.
தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மீது ஜாதி இந்துக்கள் என்பவர்கள் தற்போது வழக்கம் என்னும் பெயரால் சுமத்தி வரும் எல்லா சமூகத் தடைகளையும், அசெளகரியங்களையும், கோயில்
களுக்கு அவர்களை அனுமதிக்க மறுத்து வரும் கொடுமை உள்பட எல்லாவற்றையும் அவசரமாக நீக்க இந்து தலைவர்கள் சாந்த பூர்வமாக எல்லா வழிகளையும் கைக்கொள்ள வேண்டும்”
என்று தீர்மானித்து ஆசை காட்டி பூனா தீர்மானத்தை ஊர்ஜ்ஜிதம் செய்து அரசாங்கத்துக்குத் தெரிவித்து தீண்டப்படாதவர்களுக்கு அரசாங்கத்தாரால் அளிக்கப்பட்ட தனித் தொகுதி பிரதிநிதித்துவத்தையும் தள்ளும்படி செய்துவிட்டார்கள்
இப்படி இருக்க இந்தத் தீர்மானத்துக்காக இதுவரை இந்தப் பார்ப்பனர்களோ அல்லது அந்தக் காந்தியாரோ ஏதாவது செய்திருக்கிறார்களா. என்று பார்த்தால் பொது ஜனங்கள் தயாராக இல்லை! ஆதலால் சட்டம் வேண்டாமென்று காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாரும் அறிக்கை வெளியிட்டு சட்டத்தை வாப்பீசு பெரும்படி செய்து விட்டார்கள்.
கோயில் பிரவேசத்துக்கு சாந்த பூர்வமான வழியில் பட்டினி கிடந்தவர்களையும், சத்தியாக்கிரகம் செய்தவர்களையும் வேண்டாமென்று
சொல்லிவிட்டார்கள். ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இவ்வளவும் தவிர காங்கிரசில் பார்லிமெண்டரி போர்டு ஏற்படுத்திய பிறகும் ஒரு தீண்டப்படாதாரையாவது இந்திய சட்டசபைக்கு நிறுத்தவே இல்லை. தானாக நின்றவர்களுக்கும் எதிர்ப்பு செய்து தோற்கடித்தார்கள். இவ்வளவு மாத்திரந்தானா என்றால் இன்னொரு முக்கியமான நாணையக் குறைவான காரியம் ஒன்று, அதாவது பார்லிமெண்டரி போர்டு எலக்ஷன் பிரசாரத்தில் “தீண்டாமை விலக்க சட்டம் செய்ய அனுமதிப்ப தில்லை கோவில் பிரவேசத்துக்கு சட்டம் செய்வதுமில்லை சட்டம் செய்ய அனுமதிப்பதுமில்லை; சமூக சம்பந்தமான எவ்வித தீர்மானங்களோ சட்டங்களோ இந்திய சட்டசபையில் நாங்கள் கொண்டு வருவதில்லை. பிரத்தியார் கொண்டு வந்தாலும் நாங்கள் அதை அனுமதிப்பதில்லை”
என்று திட்டம் போட்டுக்கொண்டு அந்தப்படி ஜாதி இந்துக்களுக்கு வாக்குக்கொடுத்து இந்திய பார்லிமெண்ட் சபையென்று சொல்லப்படும் இந்திய சட்ட சபைக்குப் போயிருக்கிறார்கள். அங்குபோய் மூதல் சட்டம் என்ன செய்தார்கள் என்பதை கவனித்தால் இவர்களது யோக்கியதை இன்னும் நன்றாக விளங்கிவிடும் ஆகவே காந்தியாருக்கு ஆபத்து சமயத்தில் உயிரைக் கொடுத்து காப்பாற்றிய மக்களுக்கு காங்கிரஸ்காரர்களோ, காந்தியாரோ, செய்த பிரதி உபகாரம் என்ன என்பதையும் அவர்களுடைய யோக்கியதையும் இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளும்படி பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.01.1935
குடி அரசு- 1935 (1) 64
“பகுத்தறிவு”
மாதப்பதிப்பு
பகுத்தறிவு என்னும் பேரால் ஒரு மாதப்பத்திரிகை பகுத்தறிவு நூற்பதிப்புக்கழக ஆதரவில் குடி அரசு பதிப்பகத்தில் இருந்து வெளியிடப்
படும். பொறுப்பாசிரியர் ஈ.வெ. கிருஷ்ணசாமி, அதன் பிரதான ஆசிரியர்: பண்டிதர் சாமி சிதம்பரனார். மற்றும் தோழர்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ.ராமசாமி, கைவல்ய சாமியார், M. சிங்காரவேலு BABL, ஐ சிதம்பரம் BABL, 5. லட்சிமிரதன் பாரதி MABL., KM. பாலசுப்பிரமணியம் BA.B.L. 8. குருசாமி, 8. குஞ்சிதம் அம்மாள், நீலாவதி அம்மாள், இந்திராணியம்மாள், KAP. விஸ்வநாதம், அ. இராகவன், 6. சுப்பையா B.A., பிரமச்சாரி MALT, பாரதிதாசன், ஜீவானந்தம், “சித்திரபுத்திரன்” முதலிய 50 அறிஞர்கள் சந்தர்ப்பம்போல் கட்டுரைகள் எழுதுவார்கள். அனேக:
சர்க்கார் உத்தியோகஸ்தர்களும், மதத் தலைவர்களும், புனைப்பெயருடன். எழுதுவார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா முதலிய தேசங்கள்,
பகுத்தறிவு முதலிய சங்கத்தார்களின் வெளியீடுகளுடையவும், அபிப்பிராயங் களினுடையவும், மொழிபெயர்ப்புகளும், சுகாதாரம், வைத்தியம், சட்டம் முதலியவைகளும், சிறுகதைகளும், ஹாஸ்யங்களும், வாக்குவாதங்களும், பாட்டுகளும், நாடகங்களும், உலக அதிசய சேதிகளும் வரும் ஆரம்பத்தில் 64-பக்கமாக இருந்தாலும் சீக்கிரத்தில் 100 - பக்கங்களுடன் வெளிவந்தாலும் வரும்
டிம்மி 1-க்கு 8-ல் 64-பக்கம் கொண்டது வருட சந்தா ரூ.1
தனிப்பிரதி அணா 1. பைசா 6
தயவுசெய்து ஒவ்வொரு தோழரும் சந்தாதாரர்களாக ஆகி பகுத்தறிவுக்கு ஆதரவளித்து மக்களைப் பகுத்தறிவு மயமாக்கவேண்டும் என்பதே முக்கிய வேண்டுகோள்.
குடி அரசு - அறிவிப்பு - 27.01.1935
ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்தியா சட்டசபைக்கு ஒரு பாரபக்ஷமற்ற சுவேச்சையுன்ள தலைவர்
சர். அப்துர் ரஹிம் அவர்களை இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்த அங்கத்தினர்களை நாம் மனமாறப் பாராட்டுகிறோம். சர். அப்துர் ரஹிம் அவர்கள் பாரபக்ஷமற்ற ஒரு திறமை வாய்ந்த சுயேச்சையான நீதிபதியாக நமது சென்னையில் இருந்து வந்தவர் என்பது யாவரும் அறிந்ததாகும். அத்தகையார் தற்போது இந்தியா சட்டசபைக்கு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்துக்குத் தகுதியான முறையில் நீதிவழங்கத் தலைமைப்பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஷி பதவி கிடைக்காமல் இருக்கவேண்டுமென்று தேசபக்தப் பெருமையில் மிகுதி யடைந்ததாகச் சொல்லிக் கொள்ளுபவர்களால் சில இடையூறுகளும் சூழ்ச்சிகளும் நேரிலிருந்து செய்யப்பட்டிருந்தாலும்கூட மற்ற அங்கத்தினர்கள். அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் கடமையை நிறைவேற்றினமைக்கு நாம் மகிழ்ச்சிப்பெருக்கடைகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.01.1935
குடி அரசு- 1935 (1) 66
குடி அரசு ஆபீஸ் சோதனை
20-1-35ந் தேதி ஞாயிற்றுக் கிழமை பகல் ஒரு மணி சுமாருக்கு சென்னை அரசாங்கத்தாரால் அனுப்பப்பட்ட ஒரு CLD. போலீஸ் அதிகாரி, உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இரண்டு மூன்று ஹெட்கான்ஸ்டேபிள்கள் பத்துப் பனிரண்டு கான்ஸ்டேபிள்களுடன் குடி அரசு
ஆபீசுக்குள் புகுந்து ஆபீசைச் சுற்றியும், ஆபீசுக்குள் இருந்த ஆளுகளுக்கும் காவல் போட்டு விட்டு ஒவ்வொரு அரையையும் ஒவ்வொரு ரிகார்டுகளையும் பரிசோதித்தார்கள். அங்கு ஒன்றும் அவர்கள் இஷ்டப்படி கிடைக்காததால்
பகுத்தறிவு நூற்பதிப்புக்கழக நிலயத்துக்குள் புகுந்து அங்கும் அதுபோலவே பதினாயிரக்கணக்கான புத்தகங்களையும், புத்தகக்கட்டுகளையும் கலைத்து விட்டார்கள். அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை.
பிறகு தோழர் ஈ.வெ.கி. அவர்கள் வீட்டிற்குச் சென்று அங்கும் பல புத்தக அலமாரிகளைத் திறந்தும் மற்ற இடங்களையும் சுற்றிச் சுற்றி சோதனை போட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாக பகத்சிங்கைப் பாராட்டி தோழர் ஈ.வெ.ராவால் எழுதப் பட்ட ஒரு கட்டுரை அடங்கிய குடி அரசு மலர் ஒன்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள். 1 மணி முதல் 4 மணி வரை சோதனைகள் நடந்தன.
“நீ செய்திருக்கா விட்டாலும் உன் பாட்டனார் செய்திருப்பார்” என்கின்ற
நீதி கொண்டாவது தோழர் ஈ.வெ.ராவையும் குடியரசு பத்திரிகையையும் ஒழிக்கவேண்டியது நமது அரசாங்கத்துக்கு அவசியமேற்பட்டு விட்டதாகத் தெரிகிறது. நடக்கிறபடி நடக்கட்டும். எல்லாம் அ... செயல்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.01.1935
ஏட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தோழர் சிவராஜ் தீர்மானமும்
சுவாமி! சகஜானந்தம் வேஷமும்
- தாழ்த்தப்பட்டோன்
பூனா ஒப்பந்தமானது, தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாதகத்தை உண்டாக்கி விட்டதென்பதையும், அதைத் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதரிக்க வில்லை என்பதையும் தெரிவிப்பதற்காகச் சென்னை சட்டசபையில் தோழர் சிவராஜ் அவர்களால் கொண்டு வரப்பட்ட பூனா ஒப்பந்தக் கண்டனத் தீர்மானம் பெரும்பான்மையோரின் ஆதரவு பெற்று நிறைவேறிவிட்டது
அத் தீர்மானத்திற்கு, ஜாதி இந்துக்களின் வால் பிடித்துத் திரியும் நமது வைதீகத் தோழர் சுவாமி சகஜானந்தம் அவர்களும் சாதகமாகவே ஓட்டுக் கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறுகின்றன. ஆனால், தீர்மானம் முடிந்து வெளியில் வந்தவுடன் அவர் மனதில் என்ன தோன்றியதோ என்னமோ பூனா ஒப்பந்தத்தைக் கண்டித்த தோழர்கள் சிவராஜ், ஜகநாதன் முதலியவர்கள். செய்கையைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். உள்ளொன்று செய்துவிட்டுப் புறமொன்று வெளியிடும் செய்கையை நமது சுவாமிகள் எதற்காகச் செய்தார் என்று கேட்கின்றோம்
பிரிட்டிஷ் முதன்மந்திரி தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சென்னை சட்டசபையில் 18 ஸ்தானங்களே அளித்திருந்தார். ஆனால் “மகாத்மா” காந்தியின் முயற்சியால் 30 ஸ்தானங்கள் கிடைத்தன என்று கூறுகின்றார். ஜாதி இந்துக்களின் தயவில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டசபைக்குச் செல்லும் பிரதிநிதிகள் உண்மையாகச் சமூக நன்மைக்குப் பாடுபட முடியுமா? அல்லது ஜாதி இந்துக்களின் தயவினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபைக்குச் செல்லும் பிரதிநிதிகள் உண்மையாகத் தமது சமூகத்திற்குப் பாடுபட முடியுமா? என்னும் விஷயத்தை நமது சுவாமிகள் யோசித்துப் பார்த்தாரா?
தோழர் காந்திதான் தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான நண்பர் என்று சுவாமி சகஜானந்தம் கூறுகிறார். காந்தியாராலும், அவருடைய சகாக்களாலும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இது வரையிலும் எதைச் சாதிக்க முடிந்தது என்று யோசித்துப் பார்த்தாரா? பொது ஜன அபிப்பிராயத்திற்கு இணங்கித்தான் எல்லாக் காரியங்களையும் செய்ய
குடி அரசு- 1935 (1) 68
வேண்டும் என்று ஆலய பிரவேச விஷயத்திற்கு மாத்திரம் நொண்டிச்
சாக்குக் கூறுகின்ற காந்தி கூட்டத்தாரால் தமது சமூகத்திற்கு என்ன நன்மை கிடைக்குமென்று எதிர்பார்க்கிறார்? ஆலயப் பிரவேச விஷயம் கைவிடப் பட்டது இவருக்குத் தெரியாதா? சுவாமி சகஜானந்தம் அவர்களே காங்கிரசின் சார்பாகப் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுச் சட்டசபைக்குச் சென்றாலும் என்ன செய்ய முடியும்? காங்கிரஸ்காரர்கள். சொல்கிறபடி உட்காரவும், எழுந்திருக்கவும் செய்ய வேண்டுமேயன்றி வேறு என்ன செய்ய முடியும்?
ஜாதி இந்துக்களையும், காங்கிரசையும், காந்தியையும் லட்சியம் செய்யாத, சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின். பிரதிநிதியான சட்டசபை உறுப்பினர்களைவிட காந்தியையும், காங்கிரசையும், வைதீகத்தையும் கொண்டாடும் சர்க்காரால் நியமனம் பெற்ற உறுப்பினராகிய நமது சாமிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதை அதிகமாகச் சாதித்துவிட்டார் என்று கேட்கின்றோம்
வைதீகப் பித்தை ஒழித்த தன்மையும், ஜாதி இந்துக்களை லட்சியம் பண்ணாத தன்மையுமுள்ளவர்களே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலைக்கு உண்மையாகப் பாடுபட முடியும் என்பதை நமது சுவாமிகள் மறந்துவிட்டு அடிக்கடி வைதீகத்திற்கும், ஜாதி இந்துக்களுக்கும், காங்கிரசுக்கும், காந்திக்கும் வக்காலத்து வாங்கப் புறப்பட்டு விடுகிறார். தோழர் சிவராஜின் தீர்மானத்தை வெளியில் வந்து கண்டிக்கும் இவரை வருணாச்சிரம தருமத்திற்கு வக்காலத்து வாங்கும் பார்ப்பனப் பத்திரிகைகள் “பலே பேஷ்” என்று தட்டிக் கொடுத்துப் புகழ்கின்றன. இவர் செய்கை, தன்னைப் பொருத்தவரையும், பத்திரிகை விளம்பரமும், தேசாபிமானப் பட்டமும், பார்ப்பனர்களின் தயவும் கிடைப்பதாயிருந்தாலும், உண்மையில் தாழ்த்தப்பட்டவர் சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதே யாகுமென்றே சொல்லுவோம். பல வகையிலும் விடுதலை பெற வேண்டிய தாழ்த்தப்பட்ட சமூக இளங் குழந்தைகளின் மண்டையில் மூட நம்பிக்கைகளையும், அடிமைத் தன்மையைப் போதிக்கும் மதப்பித்தையும் நுழைத்துக் கொண்டிருக்கும் வேலையோடு இவர் நின்று விட்டால் போதும். சாம்பலைப் பட்டையடித்துக் கொண்டு “அரகரா, சிவசிவா”வென்று சொல்லிக் கொண்டு ஜாதி இந்துக்களின். தயவுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும், அதைப் பற்றி நாம் கவலைப் படவில்லை. வீணாக அரசியல் விஷயத்திலும் புகுந்து ஜாதி இந்துக்கள் மெச்சுவதற்காகக் குளற வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 03.02.1935
© ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
காந்தியும் காங்கிரசும்
காங்கிரசு ஜெயித்தது என்று மகிழ்ந்த தோழர்களே!
காங்கிரசுக்கு வேலை செய்த தேசாபிமானத் தோழர்களே!
இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?
தோழர் காந்தி அவர்கள் காங்கிரசை விட்டு விலகி விட்டதாகப் பொது ஜனங்கள் கருதும்படியாய் எவ்வளவு சடங்குகளும், விளம்பரங்களும் செய்து மக்களை நம்பும்படியாக நமது “தேசபக்த கூட்டத்தார்கள் செய்து வந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
ஆனால், அவற்றைப் பற்றி நாம் அது உண்மை அல்லவென்றும், ஒரு நாளும் காந்தி விலக முடியாது என்றும், நமது பார்ப்பனர்களும் அவரை ஒரு நிமிடமும் விட்டு பிரிய மாட்டார்கள் என்றும், ஆனால் தற்சமயம் நாட்டில் ஏற்பட்ட நிலைமையானது அதாவது காந்தியாரின் கொள்கைகள் பெரும்பாலும் தோல்வி அடைந்துவிட்டதாலும் காங்கிரசின் பேராலேயே அக்கொள்கைகள் தோற்றுப் போய் விட்டது என்றும், அவற்றைக் கைவிட்டுவிட வேண்டுமானாலும் முடிவு செய்து விட்டதாலும், “குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்கின்ற பழமொழிப்படி “காங்கிரஸ் தோற்றுவிட்டதே ஒழிய காந்தியார் தோல்வி அடையவில்லை'' என்று சொல்லி பாமர மக்களை ஏய்த்து காந்தியாரின் பொய் மரியாதையைக் காப்பாற்றி அவரை உபயோகித்துக் கொள்வதற்காகவே “காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட்டார்” என்று ஒரு பொய்ப் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது என்பது விளங்கும்படி எழுதி இருந்தோம்
அதுபோலவே இப்போது சிறிது காலத்துக்குள்ளாகவே இலை மறைவு, தலை மறைவு என்பதுகூட இல்லாமல் பட்டவர்த்தனமாய் காந்தியார் வெட்டவெளிக்கு வந்து காங்கிரசில் சர்வாதிகாரத் தலைவர். காரியத்தை மறுபடியும் தைரியமாய் நடத்தி வருகிறார்.
அந்தப்படி நடத்துவதிலும் சிறிதுகூட முன்பின் யோசிக்காமலும் தனது வாக்குத் தத்தங்களை லட்சியம் செய்யாமலும் சர்வாதிகாரத்தை நடத்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது
ஏனெனில் ஜனவரி மாதம் 27ந் தேதி டெல்லியில் இந்திய சட்டசபை அங்கத்தினர்களுக்கு அளித்த கட்டளையில் “இந்திய சட்டசபையில்
குடி அரசு- 1935 (1) 70
ஆலயப் பிரவேசத்துக்காக சட்டம் கொண்டு வரக் கூடாது” என்றும் “சட்டம் செய்வதற்கு சட்டசபையில் நல்லதொரு மெஜாரிட்டி இருந்தாலும் கூட நீங்கள் சட்டம் செய்யாதீர்கள்!” என்றும் அடக்குமுறை போட்டு
அறிவுறுத்தி இருக்கிறார். காங்கிரசை விட்டு வெளியேறிய காந்தியார் காங்கிரசின் பேரால் சட்டசபைக்குச் சென்ற சட்டசபை அங்கத்தினர்களை நீங்கள் அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யுங்களென்று சொல்லி அவர்கள் செய்யக்கூடிய வேலைகளையும் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்ய வேண்டா மென்று எதற்காக சொல்லுகிறார் - எந்த உரிமையில் சொல்லுகிறார். என்பது நமக்கு விளங்கவில்லை
இந்திய சட்டசபையில் இந்திய மக்களுக்காக செய்யக் கூடிய வேலை ஏதாவது இருக்குமானால் அது முக்கியமாய் மக்களுக்கு சமுதாய சம்மந்தமாய் இருக்கும் இழிவுகளையும் கொடுமைகளையும், உரிமையற்ற தன்மையையும் ஒழிப்பதற்காக எந்தெந்த வகையில் சட்ட மூலம் தடைகள் இருக்கின்னவோ அத்தடைகளை நீக்குவதும் எந்தெந்த மாதிரி சட்டங்கள் வேண்டுமோ அம்மாதிரி சட்டங்கள் செய்யப்பட வேண்டியதும் அவசியமான கடமை யாகும். அதை விட்டு விட்டு செய்பவர்களையும் செய்ய வேண்டாமென்று சொல்லுவதானால் நமக்கு சட்டசபைகள் எதற்கு என்று கேட்கின்றோம்
சட்டசபையின் மூலம் சட்டசபைக்காக இந்திய ஏழை மக்களின் வரி எவ்வளவு செலவாகின்றது என்று பார்த்தால் மக்களின் ரத்தம் கொதிக்கும்படியாக இருக்கும். இவ்வளவு பெரிய செலவுகள் செய்யப்பட்டும் மற்றும் எவ்வளவோ கஷ்டப்பட்டு சட்டம் செய்து கொள்ளும் அதிகாரமாகிய சீர்திருத்தங்கள் பெற்றும், அதற்கேற்ற சமயம் கிடைத்தும் கடைசியில் சமயம் வரும்போது அதுவும் “நாங்கள் தான். இந்திய ஏழை மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய ஜனங்களின் பிரதிநிதிகள், மற்றவர்கள் எல்லோரும் சர்க்கார் கூலிகள்” என்று பேசிய தேச பக்தர்கள் சட்டசபைக்குப் போயிருக்கிற காலத்தில் தாழ்த்தப்பட்டவர் களின் உரிமைக்காக சட்டம் செய்யாதீர்கள் என்று காங்கிரஸ் சர்வாதிகாரி கட்டளை இட்டுவிட்டால் மற்றபடி இந்தக் காரியத்தை வேறு யார் எப்போது செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை. ஒரே அடியாக ஆதி திராவிடர்களுக்குக் கோவில் பிரவேசம் வேண்டியதில்லை என்று தோழர் காந்தியாரோ காங்கிரஸ்காரரோ முடிவு செய்திருந்தால் இப்பொழுது சட்டம் செய்வது என்பதைப் பற்றி யெவரும் கவலைபட மாட்டார்கள்.
ஆதி திராவிடர்களுக்குக் கோவில் பிரவேசம் வேண்டுமென்றும் அதனால் தீண்டாமை ஒழியும் என்றும் சொல்லி மற்றும் அவர்களுக்குப் பல காரியங்கள் செய்வதற்கு இப்போது இந்த அன்னிய ஆட்சியில் சவுகரியமில்லை என்றும், சுயராஜ்ஜியம் வந்தால் செய்து விடலாம் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றி சுயராஜ்ய முயற்சிக்காக எவ்வளவோ பண
ர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நஷ்டமும் சரீர கஷ்டமும் அடையும்படியாகவும் செய்து விட்டு சட்டம் செய்ய அதிகாரமும் செய்து கொள்ளக் கூடிய சவுகரியமும் அதற்கு ஏற்ற மெஜாரிட்டியும் இருக்கும்போது சட்டம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் பிறகு சுயராஜ்யம் என்பது எதற்காக கேட்கப்படுகின்றது என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்
மக்களுக்கு நன்மை செய்ய அதிகாரமில்லை என்பதும் அதிகாரம் இருந்தால் பொது ஜன சம்மதம் இல்லை என்பதும், பொது ஜன சம்மதம் பெற்ற பிரதிநிதிகள் இருந்தால் சுயராஜ்ஜியம் இல்லை என்பதும், இது சமயமல்ல என்பதும் ஆகிய இப்படிப்பட்ட சாக்குகளின் மூலம் மக்களை இனியும் எத்தனை நாட்களுக்கு ஏமாற்றக்கூடும் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய காரியமாகும்
தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்துக்கு ஜனப் பிரதிநிதித்துவ சபையாகிய காங்கிரசும், காங்கிரசு சர்வாதிகாரியாகிய காந்தியாரும் இனி இதற்கு மேல் எவ்வித துரோகமும் செய்ய முடியாது என்பது நமது கெட்டியான அபிப்பிராயமாகும்.
இந்தச் சம்பவத்தை நினைக்கும்போது லண்டன் வட்டமேஜை மகாநாட்டில் தோழர் காந்தியாரைப் பார்த்து, தோழர் அம்பட்கார் அவர்கள் “ஓ காந்தியாரே, நீங்கள் எங்கள் பிரதிநிதிகள் அல்லவென்றும் உங்களை நாங்கள் நம்புவதில்லை என்றும் அனேக தடவைகளில் நாங்கள் வெட்ட வெளிச்சமாய் சொல்லி இருந்தும் சிறிதும் வெட்கமில்லாமல் இனியும் நீங்கள் எங்களுடைய பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வது மிகவும் அவமானகரமான காரியம்” என்று சொன்ன வார்த்தை நமது ஞாபகத்துக்கு வருவதோடு அது முற்றும் சத்தியமான வார்த்தை என்றே இப்போது தோன்றுகின்றது
தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு சர்க்காரார் படிப்பு சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு உத்தியோகம் கொடுப்பது என்று தீர்மானித்து அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்கிறார்கள். எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், எல்லாத் தெருக்களிலும் அவர்களை நடக்க விடவேண்டும் என்றும், கிணறு குளங்களிலும் கூட விடவேண்டும் என்றும், தடுத்தால் தண்டனை என்றும்கூட உத்திரவு போட்டிருக்கிறார்கள். இவ்வளவும் தவிர சட்டசபை முதல் கிராமப் பஞ்சாயத்து போர்டு வரை ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் தீண்டப்படாதவர்களுக்கு இடம் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். இவ்வளவு காரியமும் காங்கிரசோ காந்தியாரோ வருணாச்சிரமக் காரர்களோ அல்லது ஏதாவது ஒரு பார்ப்பனர்களோ சர்க்காரை கேட்டுக் கொண்டதின் மீது சர்க்கார் செய்த காரியம் அல்ல என்பதோடு மேல்கண்ட இக் கூட்டத்தார் பெரிதும் தடுத்தும்கூட அதை நிராகரித்து விட்டு செய்து இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
குடி அரசு- 1935 (1) 72
இவ்வளவு மாத்திரம் அல்லாமல் இந்தியாவில் இன்று இருக்கும் எல்லா அய்ரோப்பியர்களும் ஒவ்வொருவர் வீட்டுக்கும் தீண்டப்படாதவர். களையே ஒன்று முதல் 10 பேர் வரையில் வேலையாளாகச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்குச் சுத்தம் சுகாதாரம் மனிதத் தன்மை பிரஜா உரிமை ஆகியவைகளை அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட இந்த நிலையில் காங்கிரஸ்காரர்களோ மற்றவர்களோ தீண்டப்படாதார் என்பவர்களுக்குச் செய்யக்கூடிய காரியமோ செய்ய வேண்டிய காரியமோ வேறு என்ன இருக்கின்றது என்று கேட்கின்றோம்.
தீண்டப்படாதவர்களுக்கு இந்திய மக்கள் ஏதாவது செய்யக் கூடியது இருக்குமானால் தன்னை இந்து என்று மானமில்லாமல் சொல்லிக் கொள்ளும்
காழ்த்தப்பட்ட ஜாதியார் விஷயத்தில் அந்த இந்துமத சம்பந்தமாக இருந்து வரும் இழிவுகள் கொடுமைகள் ஆகியவைகளைப் பொருத்தவரை ஏதாவது செய்யலாம். அதுவும் ஏன் காங்கிரஸ்காரர்களோ இந்துக்களோ தான் செய்ய வேண்டும்? என்று கேட்கப்படுமானால் “மத விஷயத்தில் அரணங்கத்தார் பிரவேசிக்கிறதில்லை” என்றும் “சமூக விஷயத்தில் பழய பழக்கவழக்கங்களில் எவ்வித மாறுதலையும் அரசாங்கத்தார் செய்யக் கூடாது” என்றும் அரசாங்க வாக்குத் தத்தமும் காங்கிரஸ் திட்டமும் இருப்பதாய் சொல்லி இவ்விஷயத்தில் எதையும் செய்ய விடாமல் அரசாங்கத்தைத் தடுப்பதால் இன்று இந்துக்களோ, காங்கிரசோ இதை மாத்திரம் செய்தால் போதும் என்று சொல்ல வேண்டி இருக்கிறது
தீண்டப்படாதார் விஷயத்தில் அரசாங்கத்தைக் குற்றம் சொல்லி சகல குற்றங்களையும் அரசாங்கத்தின் மீது சுமத்தி தீண்டப்படாதார்களை அரசாங்கத்தின் மீது உசுப்படுத்திவிட்டு ஏமாற்றி விடலாம் என்று காங்கிரசோ, காந்தியோ, பார்ப்பனர்களோ நினைப்பார்களானால் அந்தப் பித்தலாட்டமும், ஏமாற்றமும், மோசமும் இனி நடக்காது என்பதை எச்சரிக்கை செய்வதோடு இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடமையாகும்
காங்கிரஸ் ஏற்பட்டு 50 வருஷ காலமாயிற்று. மகாத்மா பட்டம் பெற்ற காந்தியார் காங்கிரசுக்கு சர்வாதிகாரப் பட்டம் பெற்று 15 வருஷம் ஆயிற்று. இதுவரை இந்தத் தீண்டப்படாதாருக்காக காங்கிரசும் காந்தியும் செய்த காரியம் என்ன என்பதை ஒரு விரலாவது விடும்படியாக எடுத்துக் காட்டட்டும் என்று அறைகூவி அழைக்கின்றோம்
இந்த நாட்டில் தீண்டத்தகாதவர்கள் என்கின்ற நிபந்தனையுடன். உயிர் வாழும் ஜனங்கள் 7 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
இது இந்துக்களில் 3-ல் ஒரு பாகமும் மொத்த ஜனத்தொகையில்
5 இல் ஒரு பாகமும் ஆகின்றது. சிறிது கணக்குப் பிசகு இருந்தாலும் இருக்கலாம். ஆனால், தீண்டப்படாதார் என்பவர்கள் எண்ணிக்கை பெருத்த B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
எண்ணிக்கை என்பதில் ஆக்ஷேபணை இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஜன சமூகத்துக்கு 50 வருஷ காலமாக காங்கிரசும், இந்து தலைவர்கள் என்பவர்களும் ஒரு காரியமும் செய்யவில்லை என்பதோடு செய்யக் கூடியதையெல்லாம் தடுத்தும் வந்திருக்கிறார்கள் என்றால் இந்த நாட்டின் அரசியல் கிளர்ச்சியுடையவும் சமூகக் கிளர்ச்சியுடையவும், போலித் தனத்துக்கும் நாணையமும் நேர்மையும் அற்ற தனத்துக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டுமென்று கேட்கின்றோம்
சமீப காலத்தில் சென்னை சட்டசபையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு
சர்க்கார் பதில் அளிக்கையில் சென்னை மாகாணத்தில் உள்ள சுமார் 300-400 போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்களில் ஒரு இன்ஸ்பெக்டர்கூட தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் இல்லாமலும், சுமார் 700-800 சப் இன்ஸ்பெக்டர்களில் 1 ஒரே ஒரு சப் இன்ஸ்பெக்டர் மாத்திரம் நியமிக்கப் பட்டிருக்கிறார் என்றால், அதுவும் இந்த 15 வருஷகாலமாக போலீஸ் இலாகா இந்தியப் பிரதிநிதியாகிய இந்தியனிடம் இருந்து வந்தும் இந்த கெதி ஆயிருக்கின்றது என்றால் மற்ற போலீஸ் மேல் இலாகா உத்தியோகங்களைப் பற்றியும் இதர உத்தியோகங்களில் அவர்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதைப் பற்றி நாம் அதிகம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
மத சம்மந்தமான நமது அபிப்பிராயம் ஒரு விதமாக இருந்தாலும்கூட தாழ்த்தப்பட்ட மக்களைப் பொருத்த வரை அவர்கள் மனிதத் தன்மை பெறவும், அரசியலில் விகிதாச்சார உரிமை பெறவும், வாழ்க்கையில் சம உரிமை பெறவும் இந்து மதத்தை விட்டு விட்டு கிறிஸ்தவர்களாகவோ முக்கியமாய் இஸ்லாமியர்களாகவோ ஆகிவிடுங்கள் என்று பல தடவை வற்புறுத்தி வந்ததை அச்சமூகம் லட்சியம் செய்யவே இல்லை.
இதற்குக் காரணம் நம் சென்னை மாகாணத்தைப் பொருத்தவரை: தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுடைய மதப் பற்றேதான் காரணம் என்பதாக நாம் சிறிதும் நினைக்கவில்லை. மற்றென்னவென்றால் சென்னை மாகாணத்தில் உள்ள வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையின். பயனாய் சில பெரிய பதவிகளும் உத்தியோகங்களும் தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்கள் என்பவர்களுக்குக் கிடைக்கக் கூடுமாதலால் அதில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆசையானது இந்துக்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக துறையிலும், அரசியல் துறையிலும் செய்து வரும் எவ்வளவோ இழிவுகளையும் இன்னல்களையும் சகித்துக் கொண்டு சிறிதும் சுயமரியாதை இல்லாதவர்களாகி தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு உயிர் வாழ வேண்டி இருக்கின்றதே தவிர வேறு காரணம் இருக்க நியாயமில்லை என்றே படுகின்றது
என்றாலும் தேதி 29.1.35 சென்னை சட்டசபைக் கூட்டத்தில் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பற்றிய விவகாரத்தின்போது தோழர்
குடி அரசு- 1935 (1) 74
என். சிவராஜ் அவர்கள் தெரிவித்த அபிப்பிராயத்தில் பெரும் பாகத்தை
நாம் மனப்பூர்வமாய் ஆதரிக்கின்றோம். அதாவது,
“பூனா ஒப்பந்த காலத்தில் காந்தியார் தம் உயிரைக் கொடுத்தாவது தீண்டாமையை ஒழித்து விடுவதாக உறுதி கூறினார். ஆனால் நேற்று பத்திரிக்கைகளில் ஆலயப் பிரவேச மசோதாவை சட்டசபைக்குக் கொண்டு போகாதீர்கள் என்று உத்திரவு போட்டு இருக்கிறார். இது எந்த விதத்தில் நாணையமான காரியமாகும்?
ஆலயப் பிரவேசத்துக்கு பட்டினி கிடந்து உயிர்விடுவதாக வாக்களித்ததெல்லாம் இப்போது என்னவாயிற்று? அவரும் அவரது சகாக்களும் எவ்வளவு உண்மையானவர்கள் என்பது இப்போது தெரிந்துவிட வில்லையா?
இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட சமூகம் அவ்வளவு பேரும் ஒரே மனதாக தனித் தொகுதி கேட்டார்கள். ஆனால் காந்தியார் பட்டினி
கிடந்து சாவதாக பயமுறுத்தி ஏமாற்றி இந்த பூனா ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டார் என்றாலும், ஆலயப் பிரவேசமும், அரிஜன இயக்கமும் இப்பூனா ஒப்பந்தத்தின் அம்சங்களாகும்
ஜாதி இந்துக்கள் இதற்கு இணங்காவிடில் மறுபடியும் பட்டினி கிடப்பதாக வாக்குறுதி கூறினார். இப்போது மிக சாதாரணமான மக்கள் கூறுவதுபோல் “ஜனங்கள் தயாராய் யில்லை” என்கிற சாக்கைச் சொல்லி அந்தக் காரியம் செய்யாதீர்கள் என்று உத்திரவிட்டார்.
இது நம்பிக்கை மோசமும் பெரியதொரு துரோகமுமாகும்.
பூனா ஓப்பந்தத்தில் உன்ன தொல்லைகள்
“தேர்தலில் வேறு எந்தத் தொகுதியாருக்கும் இல்லாத இரட்டைத் தேர்தல் கஷ்டம் எங்களுக்கு மாத்திரம் இருக்கிறது
பூர்வாங்கத் தேர்தல் முறை மிகவும் அநீதியானது
இரண்டாவது தேர்தலோ தாழ்த்தப்பட்டவர்களின் உண்மையான பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுவதை மிகவும் அருமையாக்குகிறது இதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு எங்கே? என்பது
ஒருபுறமிருக்க, இதனால் சர்க்காரார் தயவும் இல்லாமல் போய்விட்டது
முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களுமாவது தயவு செய்து தங்களுக்கு இருப்பது போலவே தனித் தொகுதி கிடைக்க எங்களுக்கு உதவி 75௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
புரிய வேண்டும். வெள்ளை மெம்பர்களும் எங்கள் விஷயத்தில் தங்களுடைய வழக்கமான அனுதாபத்தைக் காட்ட வேண்டும்.
இனிகாந்தியாரை நாங்கள் நம்புவதில்லை. அவருக்கு ஸ்திரபுத்தி கிடையாது. அவரது சகாக்களுக்கு நாணயம் கிடையாது
பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொருத்த வரையாவது ரத்து செய்யப்பட வேண்டும்
வெள்ளையர்களும் பிரிட்டிஷ் சர்க்காரும் தாழ்த்தப்பட்டவர். களைக் காப்பாற்றியாக வேண்டும்”
என்பதாகப் பேசி இருக்கிறார். மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக பிரதிநிதியான தோழர் எச்.எம். ஜகநாதம் அவர்கள் பேசுகையிலும், காங்கிரசோ காந்தியாரோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே ஏதும் செய்யவில்லை. இரட்டைத் தேர்தல் முறையைவிட சமூக அபிப்பிராயம் கேட்டு சர்க்கார் நியமிக்கும் நியமனமே மேல்” என்று பேசி இருக்கிறார். இவை ஒருபுறமிருக்கக் கூட்டுக் கமிட்டி அறிக்கையைப் பற்றி விவாதித்த எல்லாக் கட்சி அங்கத்தினர்களும் தங்கள் அதிகாரம் என்ன?
சர்க்கார் அதிகாரம் என்ன? என்பதைப் பற்றி அர்த்தமற்ற முறையில் கூப்பாடு போட்டார்களே தவிர ஒருவராவது தாழ்த்தப்பட்ட சமூக நிலையைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
கிறிஸ்தவர்கள் தங்கள் பிரதிநிதித்துவத்தைப் பற்றியும் மகமதியர்
தங்கள் பிரதிநிதித்துவத்தைப் பற்றியும், இந்துக்கள் மற்றவர்களுக்கு சர்க்கார் தனி பிரதிநிதித்துவம் வழங்கப் போகின்றார்களே என்கின்ற ஆத்திரத்தை மனதில் வைத்துக் கொண்டும் போகாத ஊருக்கு வழி கேட்பது போல் வீண் இடக்கு முடக்கும் பேசினார்களே ஒழிய உண்மையாய் யாரும் நடந்து கொள்ளவே இல்லை.
இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க சென்னை சட்டசபைக்கு ஒரு ஆதி திராவிடரைக்கூட காங்கிரஸ் நிறுத்தவே இல்லை என்பதையும் தானாக எந்தக் கட்சியையும் சேராமல் நின்றவர்களையும் ஆதரிக்காமல்
எதிர்த்து தோற்கடித்தார்கள் என்பதையும் முன்னமே எழுதி இருக்கிறோம். ஆகவே காங்கிரசுக்காரர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது சட்ட சபைக்கு நின்ற ஆதி திராவிடரை காங்கிரஸ் திட்டத்தில் கையொப்பமிடும் படியாக யாராவது கேட்டு அவர் மறுத்தாரா?
அல்லது அவர் மறுத்திருந்தாலும் வேறு ஆதி திராவிடர் கிடைக்க வில்லையா?
குடி அரசு- 1935 (1) 76
அப்படியானால் காங்கிரசில் ஒரு ஆதி திராவிடர்கூட இல்லை என்று தானே அருத்தம். ஒரு மெம்பர்கூட இல்லாத சமூகத்துக்கு தாங்கள்தான். பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளுவது நேர்மையாகுமா?
இந்த ஒரு காரணமே தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் நலனுக்கு சர்க்காரையும் காங்கிரசுக்காரர்கள் அல்லாதவர்களையும் எதிர்பார்ப்பது நியாயம் என்பதற்கு போதுமானதல்லவா? என்பதாகும் ஆகவே காந்தியார் காங்கிரசை விட்டு விலகிய யோக்கியதையையும் பூனா ஒப்பந்தத்தை காந்தியாரும், காங்கிரஸ்காரரும் நிறைவேற்றி வைத்த நாணயத்தையும், காங்கிரசே இந்திய மக்கள் எல்லோருக்கும் பிரதிநிதித்துவ சபை என்கின்ற புரட்டையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுவதோடு காங்கிரசுக்கு உழைத்த பார்ப்பனரல்லாத தேசபக்தர்களை இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்கின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 03.02.1935
77௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
SIR. கம்பெணியார் கவனிப்பார்களா?
ஈரோடு தாலூக்கா சுற்றுப் பக்கங்களில் கன்று காலிகளுக்கு தீவனப் பஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால் ஈரோட்டு முனிசிபாலிட்டியில் உள்ள கால்நடைகளுக்குத் தீவனத்துக்காக தஞ்சை ஜில்லா நீடாமங்கலம், திருவாரூர் முதலிய இடங்களிலிருந்து தீவனம் (வைக்கோல்) தருவிக்கலாம் என்ற யோசனை மீது விஷயங்களை விசாரணை செய்து பார்த்ததில் வைக்கோல் ஈரோட்டு விலையைவிட பகுதி பங்கு சகாயமாய் இருந்தாலும்
ரயில் சார்ஜ்ஜானது அதிகமாய் இருப்பதால் கட்டுபடி இல்லாமல் இருந்து வருவதால் தருவிக்க முடியவில்லை.
அதனால் ஈரோடு முனிசிபல் கமிஷனர் அவர்கள் தென்னிந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு வைக்கோலைப் பொருத்தவரை சகாய ரேட்டு ஏதாவது ஏற்படுமானால் ஏராளமான அளவு தருவிக்கக் கூடும் என்று தெரிவித்து வேண்டிக் கொண்டிருக்கிறார்.
மாடு கன்றுகளுடைய நன்மையை உத்தேசித்தும், தஞ்சை ஜில்லாவில் உள்ள வைக்கோல்கள் பெரிதும் செலவு இல்லாமல் வீணாய் போகாமலும், விவசாயிகளுக்கு வைக்கோல் மூலம் ஏதோ சிறிது பணம் கிடைத்து அவர்களுக்குச் சவுகரியம் ஏற்படும்படியும் தீவனப் பஞ்சமுள்ள இடங்களில் செளகரியம் ஏற்படும்படியும் கவனித்து மனது வைத்து ஏதாவது சிறிது ரயில் சார்ஜ்ஜில் குறைவுபடுத்திக் கொடுப்பார்களானால் அது மிக நல்ல காரியமாகவும் புத்திசாலித்தனமான காரியமாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.02.1935
குடி அரசு- 1935 (1) 78
காங்கிரசின் குலைவு
நெல்லூர் ஜில்லாவைச் சேர்ந்த தோழர்கள் பனகா கனகம்மா, வென்னலகண்டி ராகவய்யா இருவரும் ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிவிட்டார்கள். தோழர் ராகவய்யா உள்ளூர் ஜில்லாக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்தும் விலகி விட்டார்.
வெ.முரு. லெக்ஷ்மய்யா ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியில் இருந்து விலகினார். எம். கோபால் ராவ் நகர காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி பதவியிலிருந்து விலகினார்.
தோழர்கள் ராகவய்யா, லெட்சுமய்யா, கோபால்ராவ் ஆகியவர்கள் தங்களுடைய ராஜினாமாக் கடிதத்தில் காங்கிரசானது பணக்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பாடுபடுகிறது என்றும், தொழிலாளர்களின் முன்னேற்றத்தைக் கவனிக்காமல் அலட்சியம் செய்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதைப் போன்ற காரணத்தாலேயே வடநாட்டி லிருந்தும் பலர் காங்கிரசிலிருந்து விலகியிருக்கிறார்கள் என்பதையும் ஞாபகப்படுத்துகிறோம். இதிலிருந்து காங்கிரசின் உண்மையான போக்கு இன்னதென்று நன்றாகப் பொது ஜனங்களுக்கு விளங்குமென்று நம்புகிறோம். காங்கிரஸ் ஒன்றே ஏழை மக்களுடைய நன்மைக்கும், தொழிலாளிகளின் உரிமைகளுக்கும் பாடுபடுகிறது என்று சொல்வது பெரும் புரட்டென்று தெரிந்து கொள்ளலாம். ஏற்கனவே காங்கிரஸ் ஏழை மக்களுடைய பிரதிநிதி அல்லவென்பதை வெளிப்படுத்துவதற்காக, காங்கிரசிற்குள்ளேயே சமதர்மக் கட்சி என்று ஏற்பட்டிருப்பதும் காங்கிரசின். வண்டவாளத்தை வெளிப்படுத்துவதாகும். புதுச் சீர்திருத்தம் அமுலுக்கு வருவதற்கு முன்னேயே, காங்கிரசின் கட்டுப்பாடு எப்படி குலைந்து சிதறுகின்றதென்பதைக் கவனித்துக்கொள்ளும்படி பொதுஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 03.02.1935
9௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மூன்று பிரபல பிராமணர்கள் முடிவு
பார்ப்பனர்களுக்கு நெருக்கடியான காலத்தில் உதவி புரிந்து வந்த தோழர் எல்.ஏ. கோவிந்தராகவ ஐயர், தோழர் எம்.கே. ஆச்சாரியார், டாக்டர் மல்லைய்யா ஆகிய மூன்று பார்ப்பன பிரபலஸ்தர்கள் இந்த வாரத்தில் மரணமடைந்து விட்டார்கள்.
தோழர் கோவிந்தராகவய்யர் பிரபல வக்கீலாய் இருந்தவர். தோழர் எம்.கே.ஆச்சாரியார் இன்னாட்டுப் பார்ப்பனர்களின் உள்ளத்தைப் பளிங்குபோல் வெளிக்காட்டிவந்தவர். தோழர் மல்லய்யாஅவர்கள் பார்ப்பனக் கட்சிக்கு உழைத்தவர். ஆகவே இவர்களது முடிவு வருந்தத்தக்கதாகும்
குடி அரசு - இரங்கற் செய்தி - 03.02.1935
குடி அரசு - 1935 (1) 80.
“பகுத்தறிவு? திருத்தம்
சென்றவாரக் (27-1-35) குடி அரசு இதழில் பகுத்தறிவு மாதப்
பதிப்புக்குத் தோழர் சாமி சிதம்பரனார் பிரதான ஆசிரியராக இருப்பார் என்று எழுதி இருக்கிறது. அவர் உடம்பு அசவுகரியமாய் இருப்பதால் சவுகரியம்
ஏற்படும் வரையில், தற்பொழுது பிரதான ஆசிரியராக ஈ.வெ. ராமசாமி இருந்து வருவார் என்பதையும், முடிந்த வரையிலும் கட்டுரைகள் மாத்திரம் எழுதி வருவார் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - அறிவிப்பு - 03.02.1935
81 ௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
“பகுத்தறிவுக்கு 2000 ரூபாய் ஜாமீன்
வாரப் பத்திரிகையாக நடத்தி வந்ததும் இனி மாதப் பத்திரிகை யாகவும், காலணா தினப் பதிப்புப் பத்திரிகையாகவும் நடத்த உத்தேசித்து சகல ஏற்பாடுகளும் செய்து வந்ததுமான “பகுத்தறிவு” பத்திரிகைக்கும் உண்மை விளக்கம் பிரசுக்கும் அரசாங்கத்தார் 29-1-35ல் 2000 ரூ-ஜாமீன் கேட்டிருக்கிறார்கள். ஜாமின் கட்டி ஷி பத்திரிகைகளை நடத்துவதற்கு யோசனைகள் நடந்து வருகின்றன.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 03.02.1935
குடி அரசு - 1935 (1) 82
19430 ப்ர 10 ரசு 3 ey குடிஅரசு. அக்கிப் பதை க்க B ளா Do twp-w கலந மை: சல் எக் காட்ட சே. 3705, 103560 சப்ரவரி-னீ 10a oo கொலையிற். இன்ச் கட்டட கள் தன சணைசமிலம் இருங்க கூட்டுறவு மற்திரி கவலிப்பாரா? ந
தாபன. இர்ணடகளின் அப்டுழிவ். தக்
ளு L g X KT v Kl ந oo irimies சண்ட மின்னு SmB Al பசை அத் 'வெப்லம இலாக் நன
P % அன் மனப்பட்டன p ஷ் கடம் தங்கள போய் தன்வசம் சச et By சர்கம் அ அததிராசம்னா) எங்கு. கல்வ. சைக்றுககைகிச் சைப்பறாம். வைல போ தய்ப இராதா. 'ரக்து வைகல் தெரிவது இத்தச்கொன்கைல்கு கினா அன் 03 வது எந்தம் சரியும் அலன் வக ந அணா i A L தடு வ
- a? s v i ம சொற் உடனாக
அயனம். i) பொழுதும் dr o, க்கும் ஹா கு அக்க o T கணைய போக்கஸ் சொல் என்
கூட்டுறவு மந்திரி கவணிப்பாரா?
ஸ்தாபன நிர்வாகிகவின் அட்டூழியம்
எந்த எந்தக் காரியங்கள் ஒழுங்காகவும், திறமையாகவும், நாணய மாகவும் நடக்க வேண்டும் என்கின்ற கவலை அரசாங்கத்துக்கு இல்லையோ, அந்தக் காரியங்களைப் பொது ஜனங்கள் தலையில் போட்டுவிட்டு அவை பொது ஜனங்களால் ஊழலாய் நடத்தப்படுவதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பது நமது சர்க்காரின் திருவிளையாடலாய் இருந்து வருகிறதே என்று நாம் அனேக முறை சந்தேகிப்பதுண்டு. சில சமயங்களில் உறுதி கொள்வதுமுண்டு
உதாரணமாக ஸ்தல ஸ்தாபனங்கள் விஷயத்தில் அதாவது ஜில்லா, தாலூக்கா போர்ட், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து ஆகிய விஷயங்களில் பொது ஜனங்களும், ஓட்டர்களும், பிரதிநிதிகளும் நடந்து கொள்ளும் மாதிரியும், அதனால் பொது ஜனங்களின் செல்வமும், நலமும் கொள்ளை போய் பாழாவது பற்றியும் நாம் சுமார் 15 @ காலமாகவே வறட்டுக் கூப்பாடு போட்டும், சர்க்காராரும் அனேக விஷயங்களில் கைப்பிடியாய் பிடித்து கண்ணாடியில் தெரிவதுபோல் உண்மைகள் கண்டும், கட்சி அபிமானம் காரணமாகவும் ஜாதி அபிமானம் காரணமாகவும் அதைப் பற்றியதொரு நடவடிக்கையும் திருத்தப்பாடும் செய்யாமல் இருந்து விட்டு இப்பொழுதுதான் அதுவும் காங்கிரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களை அரசியல் கிளர்ச்சிக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்தி பாழாக்கி விடுவார்கள் என்கின்ற பயம் வந்தவுடன் ஒரு அளவுக்கு அவற்றை ஒழுங்காக நடைபெறும்படி முயற்சித்து வருகிறார்கள்.
இன்னும் அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்கள் அனேகம் இருக்கின்றன.
அதாவது சிப்பந்திகளை சர்வீஸ் கமிஷனிலேயே நியமிக்கச் செய்ய வேண்டியதும்,
கண்ட்ராக்டுகள் கொடுக்கும் விஷயத்திலும் பொது ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களுக்குச் சிறிதும் சம்மந்தமில்லாமலும்,
மாகாணம் பூராவுக்கும் ஒரே மாதிரியான, சிப்பந்திகள், சம்பளங்கள், வேலை பங்கீடுகள் ஆகியவை இருக்கும்படியாகவும், குறைந்த அளவு 85— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அந்தந்த ஜில்லாவுக்குள் உள்ள ஜில்லா போர்ட், முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து ஆகிய ஸ்தாபனங்களுக்குள்ளாவது சிப்பந்திகளை 2
வருஷத்துக்குஒரு முறையாவது மாற்றிவிடும்படியாகவும் ஆன ஏற்பாடுகளும், திட்டங்களும் இருந்து வந்தால் இப்பொழுது நடைபெற்று வரும் அக்கிரமங்களிலும் பகுதிக்கு மேல் குறைந்துவிட வழி ஏற்படும்
அரசாங்கத்தாருக்குப் பொறுப்புள்ள மற்ற எல்லா இலாக்காக்களிலும் அரசாங்கத்தார் இப்படித்தான் நடந்து வருகிறார்கள்.
ஆனால் சுயாட்சி கொடுக்கப்பட்டது என்று சொல்லப்பட்ட சில இலாக்காக்களில் மாத்திரம் மக்கள் சுயராஜ்யத்துக்கு லாயக்கில்லை
என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவோ, அல்லது தங்களுடைய பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவோ அல்லது வேறு எந்தக் காரியத்துக்காகவோ இவ்வளவு முக்கியமான விஷயத்தில் அதாவது கல்வி, சுகாதாரம் முதலாகிய காரியத்தில் இவ்வளவு கோளாறும் ஊழலும் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருப்பது விளங்கவில்லை. ஆனாலும் இது கண்டிக்கக்கூடாத விஷயம் என்று சொல்ல முடியாது
முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு ஆகியவைகளிடம் போலீசு இலாக்கா, மது இலாக்கா முதலியவைகளையும் ஒப்புவித்துவிட வேண்டும் என்பது நமது அபிப்பிராயமாகும். அதற்கு வேண்டிய அபிப்பிராயம் சொல்லும் பொறுப்பில் பெரும்பாகம் பொது ஜனங்களுக்கு கொடுப்பதில் நமக்கு ஆக்ஷ்பணை இல்லை. ஆனால் நிர்வாக நடத்துதலான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அதிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும், பொது ஜனங்களை சண்டையிட்டுக் கொள்ளும்படி ஸ்தல ஸ்தாபன யந்திரத்தை அமைப்பதும் நேர்மையாகாது என்று சொல்லாமல்
இருக்க முடியவில்லை.
கூட்டுறவு இலாக்கா
கூட்டுறவு இலாக்கா என்பது ஸ்தல சுயாட்சி என்பதைப் போன்ற மற்றொரு முக்கிய விஷயமாகும். இது பெரிதும் ஏழை மக்களைப் பொறுத்த விஷயம் என்பதோடு மாத்திரமல்லாமல் செல்வவான்கள், பெரிய மிராசுதார்கள், வன்நெஞ்ச வட்டிக் கடைக்காரர்கள், வழிப்பறி வியாபாரிகள் முதலிய கூட்டத்தார்களிடமிருந்து ஏழை மக்களையும், ஏழை விவசாயி களையும் காப்பாற்றுவதற்கான ஸ்தாபனங்கள் கொண்ட இலாக்காவாகும்
இப்படிப்பட்ட அருமையானதும், சமூக வாழ்வுக்கு இன்றியமை யாததுமான இலாக்காவானது மூத்த தாரத்துப் பிள்ளையை இளயாள் கவனிப்பது போல் கவனிக்கப்பட்டு வருகிறது.
குடி அரசு - 1935 (1) 86
அதாவது மூத்த தாரத்துப் பிள்ளையிடம் இளையாள் தனக்கு வேண்டிய வேலைகளை யெல்லாம் வாங்கிக் கொள்ளுவதும் அதற்கு வேண்டிய சவுகரியத்தில் கவலையே இல்லாமலிருப்பதுமான தன்மையில்
இருந்து வருகின்றது நமது மாகாணத்தில் கூட்டுறவு ஸ்தாபனங்கள் இரண்டொரு
ஜில்லாக்கள் தவிர மற்ற இடங்களில் வெகுமோசமான நிலையில் இருக்கின்றன.
ஜெயில்கள் தோறும் கூட்டுறவு ஸ்தாபனங்களில் நிர்வாகம் பார்த்து மோசம் செய்த கைதிகள் இருப்பதை நேரில் கண்டோம். மற்றும் கூட்டுறவு இலாகா ஊழல்கள் அதாவது மேற்பார்வை இலாக்கா அதிகாரிகள் கவனிக்க. வேண்டியது அல்லாததும், கண்டுபிடிக்க முடியாததுமான நிலையில் எவ்வளவு ஊழல்கள் ஆங்காங்கு இருக்கின்றது என்பது இதில் எழுதி முடியாத அளவினதாகும்
ஏழைகள் நலனுக்கு என்று சொல்லப்பட்டும் இந்த இலாக்கா நிர்வாகம் முழுவதும் செல்வவான்கள் கையிலும், மேல்ஜாதிக்காரர்கள் கையிலும், அரசியலின் மூலம் தங்கள் அந்தஸ்தையும், வாழ்க்கையையும் உயர்த்திக் கொள்ளவும், நிலைநாட்டிக் கொள்ளவும், நினைத்துக் கொண்டிருக்கும் நேர்மையும், யோக்கியப் பொறுப்பும் நாணையமும் அற்றவர்கள் கையிலும் இருந்து வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை இன்றைய தினம் கூட்டுறவு இலாக்கா நிர்வாகத்தில் இருந்து வரும் ஆட்கள் பெரும்பாகம் அந் நிர்வாக சலுகைகளைத் தங்கள் சொந்தக் காரியங் களுக்கும் அரசியல் லாபத்துக்கும் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். என்பதற்கு அனேக ஆதாரங்கள் நம் கையில் இருந்து வருகின்றன.
கோவாப்ரேட்டிவ் ஸ்தாபனங்களில் தங்களுக்கு உள்ள செல்வாக்கைக் கொண்டே சட்டசபை, ஜில்லாபோர்ட், முனிசிபாலிட்டி ஆகிய ஸ்தாபனங் களுக்கு அபேக்ஷகராய் நின்று வெற்றி பெற பலர் காத்திருக்கிறார்கள்.
கூட்டுறவு ஸ்தாபன சிப்பந்திகளைத் தங்கள் எலக்க்ஷன்களுக்கு வேலை செய்யும் தரகர்களாக நியமித்துப் பயனடைகிறார்கள்.
தங்களுக்கு வேலை செய்யாதவர்களையோ தங்கள் பந்துமித்திரர். களுக்கு வேலை செய்யாதவர்களையோ தண்டிப்பதற்கும் புத்தி கற்பிப்பதற்கும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்
இதுபோலவே தங்களுக்கு வேண்டிய சிப்பந்திகளுக்கு ''ஊரார் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே” என்பது போல் கண்ணை மூடிக் கொண்டு அவர்கள் எவ்வளவு திறமை இன்மையும், இழி குணமும் படைத்தவர்களானாலும், சம்பளங்களை ஒன்றுக்கு இரண்டாய், மூன்றாய், நான்காய்கூட உயர்த்திக் கொடுப்பதும், தங்களுடைய சுய நலனுக்குவேலை ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
செய்யாதவராகவோ, சரிவரக் கவனிக்காதவர்களாகவோ இருந்தால் அந்த சிப்பந்திக்கு சம்பளம் குறைப்பதும், நீக்குவதும் அசெளகரியமான இடத்திற்கு மாற்றுவதுமான அக்கிரமங்கள் செய்து வருகிறார்கள்.
கடன் கொடுத்தல், திருப்பி வாங்குதல் ஆகிய காரியங்களிலும், அரசியல் தன்மைகளையும் எலக்ஷன் தன்மையையும் குறி வைத்து, கொடுக்கக் கூடாதவனுக்குக் கொடுப்பதும், கொடுக்கக் கூடியவனுக்கு மறுப்பதுமான காரியங்கள் செய்வதும்,
இவ்வளவும் போதாமல் நிர்வாகம் தப்பித் தவறி பார்ப்பன அதிக்கத்துக்குப்போய் விட்டால் அங்குஜாதி வித்தியாசம் தாண்டவமாடுவதும், ஸ்தாபனம் பூரா பார்ப்பன அக்கிரகாரமாக்குவதும்,
கடன் கொடுத்ததில் 100க்கு 90 கடன்கள் சோம்பேறி கூட்ட நன்மைக்குப் பயன்படுவதும், பாடுபடும் ஏழை மக்கள் விஷயம் அலட்சியப்படுத்தப்படுவதும், மற்றும் அந்த நிர்வாகத்தில் தாங்களே சிரஞ்கீவியாய் இருப்பதற்குத் தகுந்தபடி பங்குக்காரர்களை, ஓட்டர்களைக் கற்பித்துக் கொள்ளுவதும், தங்களுடைய சுயநலத்துக்கு பயன்பட மாட்டான் என்று தெரிந்தால் அவனை ஸ்தாபனத்துக்குப் பக்கத்தில் வரவொட்டாமல் துரத்தி அடிப்பதும்,
இலாக்கா மேற்பார்வை அதிகாரிகளைக் கைவசப்படுத்திக் கொண்டு, அல்லது வேறு செல்வாக்கில் மிரட்டி தங்களுக்கு வேண்டியபடி (பைலாக்கள்) சட்டம் செய்து கொள்ளுவதும்,
கடன் அவசியமிருக்கிறவர்களும், கூட்டுறவு இலாக்காவின் முக்கிய தத்துவமும் அலட்சியம் செய்யப்பட்டு அவசியமில்லாத செல்வவான்களுக்குப் பெருங்கடன்கள் கொடுப்பதும்,
நிர்வாகத் தலைமையில் வக்கீலோ, பாங்கிக்காரரோ, பெரிய
மிராசுதாரோ அமர்ந்து கொண்டு வக்கீல் கட்சிக்காரனுக்குக் கடன் கொடுத்து
பீசு பெறவும், பாங்கிக்காரன் தன்னிடம் கடன் வாங்கி தவணை:
தப்பியவனுக்குக் கடன் கொடுத்து வராக் கடனை வசூலிப்பதும்,
மிராசுதாரன் தான் பூமியைக் குத்தகைக்குக் கொடுத்த சிறு விவசாயியின்.
குத்தகை பாக்கிக்காரனுக்குக் கடன் கொடுத்து வசூலிக்க முடியாத குத்தகை
பாக்கியையும் லிமிட்டேஷன் ஆன பாக்கிகளையும் வசூல் செய்து கொள்ளுபவர்களுக்குமே இன்று கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஆளாகி வருவதை யாரும் மறுக்க முடியாது.
பூமி அடமான கடன் பாங்கி
பூமி அடமானக் கடன் பாங்கி என்பது யாருக்கும் ஜவாப்தாரியாய் இருக்க வேண்டாத நிலையில் பொது ஜனப் பிரதிநிதி என்பவர்களிடம்
குடி அரசு- 1935 (1) 88
ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் பொறுப்பற்ற அல்லது தங்கள். பொறுப்பை உணராதஒரு அரசாங்கத்தின் முறை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்த ஸ்தாபனம் கடன்பட்ட விவசாயிகளின் கஷ்டத்தை நிவர்த்தி செய்ய ஏற்பட்டது. அதுவும் எதிர்பாராத அசவுகரியங்களால், சம்பவங்களால், விளைவில்லாததால், பஞ்சத்தால், விலை இல்லாதது முதலிய காரியங்களால் கடன்பட்டுப்போன விவசாயிகள் மிராசுதார்கள். ஆகியவர்களின் கஷ்டத்தை ஒரு அளவுக்கு நிவர்த்திக்க ஏற்பட்டஸ்தாபனமே ஒழிய பூமி எங்கிருக்கிறது, எப்படி விளைகின்றது, குத்தகைக்காரன் எப்படி நடந்து கொண்டான் என்பவை போன்றவைகளைச் சிறிதும் கூட கவனியாமல் மோட்டார் வைத்துக் கொண்டு தாசி வீட்டிலும், சீமைச் சாராயக் கடையிலும், சூதாட்டக் கிளப்புகளிலும் 24 மணி நேரத்தையும் கழித்துக் கொண்டு எலக்ஷன்களுக்கு 10 ஆயிரம் 20 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து கொண்டு கடன்காரர்களான மிராசுதாரர்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும், பட்டக்காரர்களுக்கும் கடன் கொடுத்து ஏழை விவசாயிகளை மேலுமேலும் கொடுமைப்படுத்துகிறதற்காக ஏற்பட்ட ஸ்தாபனங்கள் அல்ல என்பது யாவரும் அறிந்ததாகும்
அப்படி இருந்த போதிலும் அதன் நிர்வாகங்கள் பெரிதும் பொறுப்பற்றவர்கள் கையிலேயே கொடுக்கப்பட்டும், இருந்து வரவும் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது
சர்க்கார் குடியானவர்களுக்குக் கடன் கொடுப்பதிலாவது ஒரு
பொறுப்பு இருக்கிறது அதாவது சர்க்கார் லோன் என்பதில் ஒருவனுடைய பூமியையும் அவனுடைய தேவையையும் கவனித்து கடன் கொடுக்கவும், அதை கிரமப்படி நிர்பந்தமாய் வசூலிக்கவும் ஆன பொறுப்பு இருந்து வருகின்றது
சர்க்கார் லோன் (கடன்) கொடுக்கும் முறையில் பூராப் பணமும் குடியானவனுக்குப் போய்ச் சேராவிட்டாலும் (அதாவது அனேக இடங்களில் 100-க்கு 15 ரூபாய் வீதம் கமிஷன் எடுக்கப்பட்டு 7Y% ரூபாய் தாசில்தாருக்கும் 3 ரூபாய் ரிவினியூ இனிஸ்பெக்டருக்கும், 2% ரூ கணக்குப் பிள்ளைக்கும், 2 ரூபாய் மணியகாரனுக்குமாக பங்கிட்டுக் கொள்வதானாலும் (இது சத்திய கீர்த்திகளாக ஷெ அதிகாரிகள் இருந்தால்
மாத்திரம் இல்லாவிட்டால் சில சமயங்களில் 100க்கு 25 வீதம்கூட ஈரவாசி
குறைந்துவிடும்.) இந்த அதிகாரிகளுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் லேண்ட் மார்ட்டிகேஜ் பாங் என்று சொல்லப்படும் நில அடமானக் கடன் பாங்கி நிர்வாகத்திற்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. ஹட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்த லேண்ட் மார்டிகேஜ் பாங்கிகளுக்குக் கொடுக்கப்படும் பணம் முழுவதும் சர்க்கார் பொறுப்பேற்று வட்டிக்கும் சர்க்கார் பொறுப்பேற்றுப் பிறத்தியாரிடமிருந்து வாங்கிக் கொடுக்கப்படும் பணமாகும்
இந்த பாங்கிக்கு அசல் ரூபா குடி போய் விட்டாலும், வட்டி வருவாய் குறைந்து விட்டாலும் பாங்கி நிர்வாகிகளுக்கு எவ்வித பொறுப்பும் கிடையாது. சம்மந்தப்பட்ட பொது ஜனங்களுக்குப் பொறுப்புக் கிடையாது. அந்த நஷ்டம் பூராவையும் சர்க்காரே பொறுத்துக் கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட நிலையில் அதன் நிர்வாகம் பொறுப்பில்லாத வக்கீல் களிடத்திலும், வட்டிக்கடைக்காரர்களிடத்திலும் சிறு மீன்களைத் தின்னும் பெரிய மீன்களான மிராசுதார்களிடத்திலும் இருப்பதென்றால் இதில் சர்க்காரால் பொறுப்பும், கவலையும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறதா? என்பது நமக்குப் புரியவில்லை
இந்த உண்மைகளை ஆட்சேபிக்கும் தோழர்கள் யாராவது இருந்தால் அவர்கள் நாம் எழுதி இருக்கும் குறைகள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கேட்பார்களானால் புள்ளி விபரங்களோடு காட்டுவதற்குத் தயாராய் இருக்கிறோம்.
ஆகவே அரசாங்கத்தால் இந்த கூட்டுறவு பாங்கு ஸ்தாபனம், நில அடமான பாங்கி ஸ்தாபனம் ஆகியவைகளின் மேல் பார்வை மாத்திரமல்லாமல். நிர்வாகத்தையே முனிசிபாலிட்டிபோல் ஒரு சர்க்கார் அதிகாரியை (கோவாப்ரேட்டிவ் கமிஷனர்) வைத்து நிர்வாகம் செய்வார்களானால் அது மிகவும் பயன்படுவதோடு இந்தக் கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலம் மக்களுக்குப் பிரயோசனப்படக்கூடிய வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலிய அனேக காரியங்களைச் செய்யவும் கூடும். வேலை இல்லாத மக்களுக்கு பதினாயிரக்கணக்கான பேர்களுக்கு வேலை கொடுக்கலாம். கூட்டுப் பண்ணையம் (Collective farm) செய்வதன் மூலம் பூமி திருத்தத்தையும், விவசாயத்தில் யந்திரங்கள் பயன்படுத்தக் கூடியதையும், அதிக விளை பொருள்களையும், நல்ல சத்துள்ள பொருள்களையும் உற்பத்தி செய்வதும் ஆன காரியங்கள் செய்யலாம் ஆகவே நமது மாகாண கூட்டுறவு இலாக்கா மந்திரியவர்கள் இந்தக் காரியங்களைக் கவனித்து இதற்கு ஏற்ற முறையில் இலாக்காவைத் திருத்தி அமைக்கும்படியும் வேண்டுவதோடு சுயநலம் இல்லாத சட்டசபை மெம்பர்கள் இதை வலியுருத்தி அமுலுக்கு வரும்படி செய்யக் கோருகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.02.1935
குடி அரசு- 1935 (1) 9
புத்தக வியாபாரிகள் கொள்ளை
கல்வி மந்திமி கவனிப்பாரா?
தற்காலம் பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட்டு வரும் படிப்பின். பிரயோஜனம் அற்ற தன்மையைப் பற்றிக் கல்வி நிபுணர்களும், கல்வியதிகாரி களும், அரசியல்வாதிகளும், சீர்திருத்தக்காரர்களும் ஏகமனதாய் ஒப்புக் கொண்டு வெகு காலமாகவே சீர்திருத்தம் பண்ண வேண்டும் என்று கூச்சலிட்டு வருகிறார்கள். நாமும் பல கூட்டங்களில் தற்காலக் கல்வி முறையைக் கண்டித்துப் பேசி வருவதோடுங்கூட பல மகாநாடுகளில் கல்வியைச் சீர்திருத்த வேண்டும் என்றும், மக்களுடைய மூடநம்பிக்கைகள். ஒழியவும், அவர்களுடைய அறிவு விளக்கமுறவும் தகுந்த பாடப் புத்தகங்கள் வெளிவர வேண்டுமென்றும் இந்தப் பத்து வருஷ காலமாகவே தீர்மானங்கள் மூலம் வெளியிட்டிருக்கின்றோம்
இப்பொழுது பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் பெரும் பாலும், ஜாதி உயர்வுகளையும் மதச் சண்டைகளையும் தூண்டிவிடக்கூடிய ஒன்றுக்கொன்று முரண்பட்ட மத விஷயங்களையும், அறிவுக்கும் அனுபோகத்துக்கும் ஒத்துவராததும் மக்களுடைய வாழ்க்கையைத் துன்மார்க்க வழியில் செலுத்துவதற்குத் தூண்டக் கூடியதும் ஆகிய புராணக் கதைகளையும் போதிப்பதாகவே இருக்கின்றன என்பதை பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளே சொல்லிக் காட்டுகின்றார்கள். இதற்கு ஏற்றாற்போல் பள்ளிக் கூட ஆசிரியர்களும் மேற்கூறிய மூடக் கொள்கைகளை மாணவர்களின். மண்டைகளில் செலுத்துவதற்கென்றே பயிற்சியளிக்கப்பட்டுப் பள்ளிக்கூடங் களில் உபாத்தியாயர்களாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட பிரயோஜனமில்லாத படிப்பிற்கு, பிரயோஜன இல்லாமற் போனாலும் சிறுவர்களின் பிற்கால வாழ்க்கையைத் தவறான வழியில் திரும்பாமலாவது இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியும் இல்லாமல் அவர்களுடைய பிற்கால வாழ்வைச் சுயமரியாதை அற்ற அவமரியாதை வாழ்வாக்கக்கூடிய படிப்பிற்கு ஆகும் செலவு ஏராளமாக இருக்கின்றது. குறைந்த அளவு படிப்பாகக் கருதப்படும் S.S.L.C. வரையிலும் ஒருவன் படிக்க வேண்டுமானால், ஆரம்ப முதல் S.S.L.C. வரைக்கும் சம்பளம் மாத்திரம் 400 ரூபாயாவது ஆகிறது. வீட்டில் ஒரு வாத்தியார் வைக்க ஆரம்பித்தால் அதற்கும் 400, 500 ரூபாயாகி விடுகிறது ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இதற்கு மேல் புத்தகங்களுக்காகவும், நோட்டுகளுக்காகவும், உபாயத்தியாயர்களால் அவ்வப்பொழுது விதிக்கப்படும் வரிகளுக்காகவும் ஆகும் செலவு அளவில்லால் சம்பளத்திற்கு மேல் போய் விடுகிறது என்பதைப் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கும் பெற்றோர்கள் நன்றாய் அறிவார்கள். எல்லாவற்றையும் விட பாடபுத்தகங்களின் மூலம், பெற்றோர் களிடமிருந்து அடித்துப் பறிக்கப்படும் பொருள்களே மிகவும் அதிகமாகும்.
பெரும்பாலும், ஜில்லாக்கல்வி அதிகாரிகள், டிப்டி இன்ஸ்பெக்டர்கள், சூப்பர்வைசர்கள் முதலான கல்வி அதிகாரிகளும், பள்ளிக் கூட தலைமை - உதவி உபாத்திமார்களும், ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளும், முனிசிபல் சேர்மன்களும், கமிஷனர்களும், தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பள்ளிக்கூடங் களையெல்லாம் புத்தக வியாபாரம் பண்ணிப் பணம் சம்பாதிக்கும் ஒரு வியாபார ஸ்தலமாக எண்ணி நடத்தி வருகிறார்களே ஒழிய, உண்மையாகப் பொது ஜன நன்மைக்கான படிப்பைப் போதிக்கும் கல்விச் சாலைகளாக நினைக்கவில்லை என்றே நாம் கருதுகிறோம். எங்கோ சில பேர் இதற்கு விலக்காக இருப்பார்களானால் அதைக் கொண்டு நாம் கூறுவது தவறு என்று ஏற்பட்டுவிடாது.
எந்தக் காரணத்தைக் கொண்டு பள்ளிக்கூடங்களையெல்லாம் வியாபார ஸ்தலங்களென்று சொல்லுகிறோம் என்பதையும் விளக்கிவிட
விரும்புகிறோம்.
தாராளமாக ஒரு அணா அல்லது ஒன்றரை அணா விலை பெறக்கூடிய புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் என்ற பெயரினால் 10 அணா, 12 அணா,
1 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்கப்படுகின்றன. இம்மாதிரியான. புத்தகங்களை ஏராளமாக விற்பனை செய்து பொது ஜனங்களுடைய பணங்களைக் கொள்ளையடிக்கப் பல புத்தக வியாபாரிகள் ஆயிரம் பதினாயிரம் ரூபாய் செலவழித்து கல்வியதிகாரிகள், ஜில்லா போர்டு பிரசிடெண்டுகள், முனிசிபல் சேர்மன்கள், கமிஷனர்கள், உபாத்திமார்கள் ஆகியவர்களைத் தங்கள் கைக்குள் போட்டுக் கொள்ளுகிறார்கள். இவர்
களுக்குத் தாராளமாக லெஞ்சங்களும், கமிஷன்களும்கூட புத்தக வியாபாரி களால் கொடுக்கப்படுகின்றன. புத்தக வியாபாரிகளாக இருப்பவர்கள், புத்தகம் எழுதிக் கொடுப்பவர்களுக்குக் கொடுக்கும் பணம் புத்தகங்களை அச்சிடுவதற்குச் செலவு செய்யும் பணம், அதை பாடப் புத்தகச் சங்கத்தார் அங்கீகரிப்பதற்காகச் செலவு செய்யும் பணம், தங்களிடம் புத்தகம் வாங்கி விற்பவர்களுக்குக் கமிஷன் கொடுக்கும் பணம் புத்தகங்களைப் பள்ளிக் கூடங்களில் பாடமாக வைப்பதற்காகப் பள்ளிகூட நிர்வாகஸ்தர் களுக்குக் கொடுக்கவேண்டியலெஞ்சம், இந்தப் புத்ததவியாபாரக்கொள்ளையை இன்னும் பலப்படுத்துவதற்காகவே அவர்கள் அரசியல் கட்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு, முனிசிபல் கெளன்சிலர்களாகவும், சேர்மன்களாகவும், ஜில்லா போர்டு மெம்பர்களாகவும், பிரசிடெண்டுகளாகவும், எம்.எல்.சி.களாகவும்,
குடி அரசு- 1935 (1) 92
யூனிவர்சிட்டி மெம்பர்களாகவும், எஜுகேஷன் கவுன்சில் மெம்பர்களாகவும், பிரசிடெண்ட்களாகவும் ஆவதற்குச் செலவு செய்யும் பணம் ஆகிய எல்லாப் பணங்களையும் பள்ளிக்கூடப் புத்தகங்களின் தலையில் வைத்துக் கல்வியின் பேரால் பொது ஜனங்களிடமிருந்துவசூலிக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். இதற்காகவே புத்தக வியாபாரிகளின் முயற்சியினால் பள்ளிக்கூடங் களில் ஒவ்வொரு வருஷமும் பாட புத்தகங்கள் அனாவசியமாய் மாற்றப்பட்டு வருகின்றன. ஒரு வகுப்பிற்கு இந்த வருஷத்திற்குப் பாடமாக வைக்கப்பட்ட புஸ்தகம் அடுத்த வருஷம் வைக்கப்படுவதில்லை. ஒரு வருஷத்தில் வைக்கப் பட்ட புஸ்தகமே அடுத்த வருஷமும் வைக்கப்படுமானால் ஒருவாறு புஸ்தகம் வாங்கப்படும் செலவிலாவது கொஞ்சம் குறைவு ஏற்படும் என்று சொல்லலாம்.
கீழ் வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்கு வரும் பிள்ளைகளிடமுள்ள பழைய புத்தகங்களை ஏழை மக்கள் அரை விலைக்கோ, கால் விலைக்கோ வாங்கிக் கொள்ளலாம். ஒரு வகுப்பிலேயே இரண்டு வருஷங்கள் தங்கிப் படிக்க நேரிடுகின்ற பிள்ளைகளுக்குப் புத்தகம் வாங்க வேண்டிய செலவே இல்லாமற் போய்விடும்
ஆனால் புத்தக வியாபாரிகளைப் பொறுத்த வரையில் புத்தக விற்பனை அதிகமாவதற்குஇடமில்லாமற்போய்விடுகின்றது. அவர்களிடமிருந்து லெஞ்சம் வாங்கும் கூட்டத்தார்க்கும் கிடைக்கக்கூடிய லாபத் தொகையின் வீதம் குறைந்து போய் விடும். இந்தக் காரணத்தாலேயே புத்தக வியாபாரிகளும் மற்றவர் களும் சேர்ந்து கொண்டு ஒவ்வொரு வருஷமும், பள்ளிகூட பாடப்புத்தகங் களைமாற்றிக் கொண்டு வருகிறார்களென்பதில் அனுமானிக்க இடமே இல்லை.
தமது பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பள்ளிக்கூடம் அனுப்பும் பெற்றோர்களுக்கு இவ்வாறு மறைமுகமாக வரி விதிக்கும் கொடுமையைத் தடுக்க வேண்டியது அரசாங்கத்தாரின் கடமையாகும். அடிக்கடி பாடப் புத்தகங்களை மாற்றமாலிருப்பதன் மூலம், சிறிதளவு பெற்றோர்களின். செலவைக் குறைக்கலாம். ஆதலால், இத்தனை வருஷத்திற்குப் பிறகு தான், அவசியமிருந்தால் புத்தகங்களை மாற்றலாம் என்று அரசாங்கத்தாரே ஒரு நிர்பந்தமான நிபந்தனையை ஏற்படுத்த வேண்டுமென்று சில கல்வியதி காரிகளே தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்தார்கள். இதன் பயனாக அரசாங்கத்தார், “ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை தான் பாடப் புத்தகங்களை மாற்ற வேண்டும்” என்று ஒரு உத்திரவு பிறப்பிக்க
உத்தேசித்திருப்பதாகத் தெரிகிறது. இவ்விஷயம் தெரிந்தவுடன், புத்தக வியாபாரிகள் பலர், தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்துக்கு ஆபத்து வந்துவிட்டதென்று அறிந்து அவ்வாறு அரசாங்கத்தார் உத்திரவிடக் கூடா தென்று கூச்சலிடத் தொடங்கிவிட்டார்கள். இவர்களுடைய எதிர்ப்பையோ, வேண்டுகோளையோ, செல்வாக்கையோ, தயவவையோ லட்சியம் செய்யாமல், அரசாங்கத்தார் தாம் செய்ய உத்தேசித்துக் கொண்டிருக்கும் காரியத்தைச் செய்து முடிப்பதனாலும் அதனால் முழுப் பிரயோஜனமும் ஏற்பட்டு விடாதென்றே நாம் கூறுவோம் ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
உண்மையில் அரசாங்கத்தாரும், கல்வி மந்திரியும், கல்வி விஷயத்தில் பொது ஜனங்களுக்கு ஏதாவது நன்மையோ, அல்லது செலவு குறையும் படியோ செய்யும் எண்ணமுடையவர்களானால் பாடப் புத்தகங்களை
எல்லாம் எழுதுவித்து அச்சாக்கி வெளியிடும் வேலையைத் தாங்களே மேற்கொள்ள வேண்டுமென்றே நாம் அபிப்பிராயப்படுகிறோம் தற்பொழுது 5.8.1.0. வகுப்புக்கும் அதற்கு மேற்பட்ட காலேஜ் வகுப்பு களுக்கும், அரசாங்கத்தாரே புத்தகங்களை வெளியிட்டும், ஏற்படுத்தியும் வருவது போலவே 5.5.1.6.க்கும் கீழ்ப்பட்ட எல்லா வகுப்புக்களுக்கும் வேண்டிய புத்தகங்களை யெல்லாம் வெளியிட்டு வருவதால் ஒன்றும் நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடப் போவதில்லை. இக்காரியம் மக்களுக்கு பேருபகாரமாய் இருக்கும்.
தனிப்பட்ட மனிதர்கள் பாடப் புத்தகங்களை வெளியிட்டுப் பொது ஜனங்களின் பொருளைக் கொள்ளையாய்க் கொண்டு முதலாளிகளாகி ஏழைப் பெற்றோர்களைக் கஷ்டப்படுத்துவதற்கு இடங்கொடாமல், அரசாங்கமே இந்தப் புத்தக வெளியீட்டு வேலையை மேற்கொள்ளு மானால், அதனால் சில நன்மைகள் உண்டாகவும் இடமிருக்கிறது
முதலாவது ஓரளவாவது மதச்சண்டை, சாதிச்சண்டைகளை உண்டாக்காததும், மக்களுடைய மூடநம்பிக்கைகளைப் போக்கி அறிவை யுண்டாக்கக் கூடியதுமான விஞ்ஞானம் முதலிய அவசியமான விஷயங் களடங்கிய புத்தகங்களை வெளியிட முயற்சிக்கலாம்
இரண்டாவது, இக்காரியத்தை மேற்கொள்வதனால், புத்தகங்கள் எழுதுவது, செலக்ஷன் செய்வது, அச்சிடுவது, விற்பனை செய்வது ஆகிய காரியங்களின் மூலம், படித்து விட்டு வேலை இல்லாமல்யிருக்கின்றவர்.
களில் சிலருக்கும், தொழிலாளர்களில் சிலருக்கும் வேலை கொடுக்கக்கூடிய வசதி ஏற்படுகிறது மூன்றாவதாக இந்தப் புத்தக வெளியீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தை கல்விக்கே செலவு செய்து, பொது ஜனங்கள் கல்விக்காகச் செலவு செய்யும் அதிகச் செலவில் கொஞ்சம் குறையச் செய்வதன் மூலம் தேசத்தில் கல்வி அறிவைக் கொஞ்சம் அதிகமாகவே பரவும்படியும் செய்யலாம்.
ஆதலால், ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்க விரும்புவோர் களின் கூச்சலைச்சிறிதும் பொருட்படுத்தாமல், அரசாங்கத்தார் இக்காரியத்தைச் செய்ய தைரியத்தோடு முன்வர வேண்டியது மிகவும் அவசியமாகும்
கல்வி மந்திரி இந்தக் காரியத்தை கவனிப்பாரா அல்லது புஸ்தக வியாபாரிகளுக்குப் பயந்து நாள்களை எண்ணிக் கொண்டு இருப்பாரா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.02.1935
குடி அரசு- 1935 (1) 04
ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டம்
ஜஸ்டிஸ் கட்சி தலைவர் பொப்பிலிராஜா அவர்களும் மற்றும் சில ஜஸ்டிஸ் கட்சி பிரமுகத் தலைவர்களும், தோழர்கள் ஆர்.கே. ஷண்முகம், ஈ.வெ.ராமசாமி, WPA. செளந்திரபாண்டியன் ஆகிய சுயமரியாதை இயக்கப் பிரமுகர்களும் சென்ற வாரம் மூன்று நான்கு நாள் தொடர்ந்து பொப்பிலிராஜா வீட்டில் ஜஸ்டிஸ் கட்சி வேலைத் திட்டத்தைப் பற்றியும், பத்திரிகைகளைப் பற்றியும், தோழர் ஈ.வெ. ராமசாமி கொடுத்திருந்த வேலைத் திட்டத்தைப்பற்றியும், சுயமரியாதை இயக்கத்துக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும் உள்ள சம்பந்தா சம்பந்தத்தைப் பற்றியும் கலந்து ஆலோசித்தார்கள்.
சில வாசக திருத்தத்தோடு தோழர் ஈ.வெ.ரா. தீர்மானங்களை ஒப்புக் கொண்டு நிர்வாக கமிட்டிக்கு வைப்பதாக முடிவு செய்திருக்கிறது. அடுத்த மாதம் முதல் மாதம் ஒரு ஜில்லா மகாநாடு கூட்டுவதென்றும், ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டத்தையும் அதற்குள்ளாகவே முடிவு செய்து அம்மகாநாடுகளில் பிரசாரம் செய்து தீர்மானிக்கச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.
தோழர் ஈ.வெ.ராமசாமி தெரிவித்தது போல் தமிழ் தெலுங்கு முதலிய சுய பாஷை பத்திரிகைகள் ஆரம்பிக்க திட்டம் போடப்பட்டது. மத்திய ஸ்தாபனமும் பிரசார வேலையும் ஏற்படுத்தவும், செய்யவும் யோசிக்கப்பட்டது.
இங்கிலீஷ் பத்திரிகையையும் புதிய முறையில் சுலப விலையில் வெளிப்படுத்த உத்தேசிக்கப்பட்டது
ஈ.வெ.ரா. தீர்மானம்
வாசகங்களைப் பொறுத்தவரை சில திருத்தங்களைச் செய்ததோடு. அத் திட்டங்களை மூன்று தலைப்பாகப் பிரித்து அதாவது பொருளியல், சமுதாய இயல், அரசியல் என்பதாகப் பிரித்து அவைகள் தனித்தனி தலைப்பின் கீழ் திருத்தி அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது:-
பொருவியல்
1. விவசாயிகளைக் கடன் தொல்லையில் இருந்து விடுவிக்கவும், மேலால் கடனால் கஷ்டப்படாமலிருக்கவும் ஆன காரியங்களை கடனுக்காக பூமியை கடன்காரர் கைப்பற்றாதிருக்கச் செய்வது முதலிய 05 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மார்க்கங்களை கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதையெல்லாம் செய்ய வேண்டும்
2. அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகளுக்குக் கஷ்டம் நேரிடாமல் இருக்கும்படி கோவாப்ரேட்டிங் பாங்கிகளையும், லேண்ட் மார்ட்டிகேஜ் (பூமி அடமான) பாங்கிகளையும் விஸ்தரிக்க வேண்டும். இந்தப் பாங்கிகளின் நிர்வாகம் சர்க்கார் அதிகாரிகளாலேயே நடைபெறச் செய்ய வேண்டும்
3. விவகாரங்களைக் குறைப்பதற்காக முக்கியமாய் சொத்துக்கள் விஷயத்தில் சர்க்காரே தெளிவான ரிக்கார்டுகள் வைக்க வேண்டும். இப்பொழுது அமுலில் இருந்து வரும் “நிமித்திய மாத்திரம் எழுதி வைக்கப்பட்டது! என்கின்ற (Benami) வாதத்தை சர்க்கார் கோர்ட்டுகளில் இனி செல்லுபடியற்றதாக்க வேண்டும்
4. விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும்
தரகர் மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளை பொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத் தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும்
5. பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே,
தந்தி - தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட்ரிசிடி முதலியவைகளை
சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படி செய்ய வேண்டும்
6. இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத்திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபிசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்ய வேண்டும்
சமுதாய இயல்
1. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எல்லா மக்களுக்கும் படிப்பு ஏற்படும்படி செய்துவிட வேண்டும்.
2. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுபானம் ஒழியும்படி சட்ட மூலமாகவே செய்ய வேண்டும்
3. தீண்டாமைக்குச் சட்டத்திலாவது அரசியல் நிர்வாகத்திலாவது இடமே இருக்கக் கூடாது
4. பெண்களுக்கு அரசியல் நிர்வாகத்தில் ஆண்களைப் போலவே உத்தியோகமும் பிரதிநிதித்துவமும் வகிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.
குடி அரசு- 1935 (1) 96
5. தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதோடு அவர்களுடைய சவுகரியங்களைத் தாராளமாய் கவனித்து அவற்றிக்குக் குறையாத வரும்படி கிடைக்கும்படி நிர்ணயப்படுத்திவிட வேண்டும்
அரசியல்
1. உத்தியோகங்களில் நமது மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களையும் அவர்களது எண்ணிக்கையையும் கவனித்து தக்கபடி பிரதிநிதித்துவமும் உத்தியோகமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்
2. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டியதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்
3. வரிப்பளுவை மக்களுக்குச் சம பாகமாக, பங்கிடுவதற்கு நில வருமானத்தையும், பொருள் சம்பாதனையையும் பொறுத்து வரி விதிப்பதில் ஒரு படிப்படியான விகிதாச்சார முறையை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும்
ஒரு குறிப்பிட்ட குறைந்த வரும்படி உள்ளவர்கள் விஷயத்தில் நில வரியையும் ரொக்க வருமான வரியையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
4. முனிசிபாலிட்டி, லோக்கல் போர்ட், கோவாப்ரேட்டிவ் முதலிய ஸ்தாபனங்களுக்கு இன்னும் அதிகமான வேலைகளைச் செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அதன் நிர்வாகங்கள் ஸ்டேட் உத்தியோகஸ்தர்களாலேயே நடைபெற வேண்டும்
5. இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக் கொள்கைகளை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும்
இந்தப்படியான வாசகங்களால் திருத்தி அமைக்கப்பட்டு தோழர்கள், ஆர்.கே.ஷண்முகம், WPA. சவுந்தரபாண்டியன் முதலிய சுயமரியாதை இயக்கத் தலைவர்களுடையவும் மற்றும் பல ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுடையவும் சம்மதத்தைப் பெற்று கட்சித் திட்டமாய் ஒப்புக் கொள்ள சிபார்சு செய்து நிர்வாக சபைக்கு வைக்கப்பட்டு விட்டது
குடி அரசு - தீர்மானங்கள் - 10.02.1935
ஏட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
சேலம் ஜில்லா பன்னர் சமூக
மகாநாடு
தோழர்களே!
ஜாதி வகுப்பு சம்பந்தமான இம்மாதிரி மகாநாடுகள் கூட்டப்படுவது தேசாபிமானத்திற்கு விரோதமானதென்று சில தேசீயவாதிகளும், தேசபக்தர்களும் குறை கூறுகிறார்கள். நான் அவர்களை ஒன்று ஞானமில்லாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது தேசீயத்தின் பேரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பழமை விரும்பி, சோம்பேறிக் கூட்டத்தினராக இருக்க வேண்டும் என்றே கூறுவேன். இன்று இந்நாட்டில் நூற்றுக்கணக்கான ஜாதிகள் இருப்பதும், அவர்களுக்குள் ஒன்றுக்கொன்று மலையும் மடுவும் போன்ற வித்தியாசங்களும் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்துவதும், ஒருவர் உழைப்பில் ஒருவர் வாழ்வதுமான அக்கிரமங்கள் இன்று இருந்து வருகின்றது என்பதையும் மறைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இக் கொடுமைகள் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது. இதையொழிக்க இது வரையில் யார் முன்வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் வேறு ஜாதி நீங்கள் வேறு ஜாதி; தங்களுக்கு வேறு உரிமை, வேஷம் என்று எண்ணாத தேசபக்தர்களோ, மகாத்மாக்களோ. யாராவது இருக்கின்றார்களா என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்நிலையில் அவரவர்களது கஷ்டங்களுக்கு அவரவர்கள் பரிகாரம் தேடிக் கொள்ளாமல் வேறு என்ன செய்ய மூடியும். இக்கொடுமைகள் ஒழிக்கப்பட கஷ்டப்படும் மக்கள் சுகப்படும் ஆள்களையும், கீழ்ஜாதிக் காரரென்னும் மக்கள் மேல் ஜாதிக்காரரென்னும் ஆளுகளையும் நம்பி எதிர்பார்த்து, வணங்கி, பக்தி செலுத்தி, அவர்கள் சொற்படிக் கேட்டு நடந்து, பல விதத்திலும் பார்த்தாய்விட்டது. அப்படியிருக்க ஜாதிமத வகுப்புகள் மகாநாடு கூடுவது தேச நலத்திற்கு விரோதம் என்றால் “பழையபடி இருங்கள்'' என்றுதானே அர்த்தம். ஆகவே நீங்கள் தேசாபிமானம் என்று சொல்லிக் கொண்டு பழையபடியே இருப்பதா? அல்லது தேசத் துரோகம் என்று சொன்னாலும் அதை லட்சியம் செய்யாமல் உங்கள் ஜாதி வகுப்பு மகாநாடுகள் கூடி உங்களுடைய கஷ்டங்களிலும், இழிவுகளிலும் இருந்து விடுதலை பெறுவதா என்பதுதான் உங்களுடைய முக்கிய பிரச்சினையாக இருக்க வேண்டும். ஜாதி மதம் வகுப்பு ஆகிய பிரிவுகள் எல்லாம் ஒழிந்து
குடி அரசு- 1935 (1) o8
மக்கள் யாவரும் சமம் என்கிற நிலைமை சட்டபூர்வமாய் ஏற்படும் வரை: கஷ்டப்படும், இழிவுபடும் ஜாதி மத வகுப்புக்காரர்கள் தங்கள் தங்கள் சமூக மகாநாடுகள் கூட்டி கஷ்டங்களினின்றும் இழிவுகளினின்றும் விடுபட வேண்டியது இன்றியமையாததாகும். உயர்ந்த ஜாதியார்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் தங்களுடைய உயர்வும், ஆதிக்கமும் குறையாதிருப்பதற்கு சதா மகாநாடுகள் கூட்டி மற்றவர்களை தாங்கள் இழிவுபடுத்துவதையும், மற்றவர்கள் போல் தாங்கள் ஆதிக்கம்
செலுத்துவதையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறார்கள். ஆதலால் அதிலிருந்து தப்புவதற்கு இம்மாதிரியான மகாநாடுகள் கூட்டப்பட வேண்டுமென்பதே எனது அபிப்பிராயமாகும். நானோ ஜாதி மதம், அவற்றிற்காதாரமான கடவுள்கள் என்பவைகள் எல்லாம் ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறவன். அப்படிப்பட்டவன் இந்த ஜாதி மகாநாட்டிற்கு எப்படி வரக்கூடும் என்று சிலர் கேட்கலாம். ஜாதி மதக் கொடுமைகளையும், அவற்றிற்காதாரமான கடவுள்களையும், புரட்டுகளையும் உங்களுக்கு விளக்கி அவ்வித கட்டுப்பாடுகளிலும், மூட நம்பிக்கைகளிலும், குருட்டு பழக்க வழக்கங்களிலிருந்தும் விடுபடச் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையின் பேரிலேயே வந்திருக்கிறேனே ஒழிய வேறில்லை. தேசபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்" காரர் என்பவர்கள் உங்களை காங்கிரஸில் சேரும்படி அழைக் கிறார்கள். உங்களில் பல தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசாபிமானம் இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் தைரியமாக தேசாபிமானிகள் அல்ல. என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். காங்கிரசுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்திவிட வேண்டும். இத் தேசத்தில் உங்கட்கு அடிமை உரிமை தவிர, இழிவு நிலைமை தவிர, உழைத்து மற்றவர்களுக்குப் போட வேண்டுமென்கிற மத உரிமை தவிர, வேறொன்றும் கிடையாது
அப்படிப்பட்ட தேசத்தினிடம் நீங்கள் அபிமானம் காட்டுவதோ, பக்தி காட்டுவதோ நீங்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் என்பதையும் சுயமரியாதையற்ற மக்கள் என்பதையும் காட்டுவது தவிர வேறில்லை உங்கள் தேசாபிமானம் உங்களை மிருகக் கூட்டங்களில் தான் சேர்க்கும் உங்களுக்கு இன்று ராஜாபிமானந்தான், ராஜ பக்திதான், ராஜ விஸ்வாசம்தான் ராஜாங்கத்திற்கு நன்றி செலுத்தும் அறிவு தான் முக்கியமாய் வேண்டியதாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களுக்கு பல நன்மைகளைச் செய்து மேல் ஜாதிக்காரர்களுடையவும், மதங்களினுடையவும், கடவுள் கட்டளைகளினுடையவும் கொடுமையிலிருந்து உங்களை விலக்கி மனித சமூகத்தில் சேர்த்து வருகிறவர்கள், மேல் ஜாதிக்காரர்களால் வெறுக்கப்படும், ஒழிக்க முயற்சிக்கப்படும் அன்னிய அரசாங்கம் 0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
என்பதேயாகும். ஆகவே அப்படிப்பட்டவர்களை இனியும் நம்பியிருக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். நான் ராஜத் துரோகியாக இருக்கலாம். எனக்கு இந்த கவர்ன்மெண்ட் முறைகள் பிடித்தமில்லாமல். இருக்கலாம். மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றி உங்கட்கு கவலை வேண்டாம். அரசாங்கமும் நானும் எனது சொந்த முறையில் எப்படியோ நடந்து கொள்ளுகிறோம்
உங்களைப் பொருத்த வரையில் உங்கட்கு ஒரு மதம் தேவையானால் இராஜ விஸ்வாசத்தையே மதமாய்க் கொள்ளுங்கள். உங்கட்கு ஒரு கடவுள் பக்தி வேண்டுமானால் வெள்ளைக்காரர்களையே கடவுளாகக் கொண்டு பக்தி செலுத்துங்கள். கொஞ்ச காலத்திற்கு மூன் இம்மாதிரியான இராஜ விஸ்வாசமும், இராஜ பக்தியும் காட்டின பார்ப்பனர்களும், படித்தவர்களும், முதலாளி ஜமீன் கூட்டங்களும்தான் இன்று மேல் ஜாதிக்காரராகி, பெரிய உத்யோகஸ்தர்களாகி கொழுத்து, பருத்து தேச பக்தர்கள் என்றும், அன்னியாட்சியை ஒழிக்கும் ராஜ துவேஷிகள் என்றும் மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள். அக் கூட்டத்திற்கு இன்று யாதொரு குறைவும் இல்லை யாதலால் இராஜ விஸ்வாசம் காட்ட வேண்டிய யாதொரு அவசியமும் இல்லாமல் போய்விட்டது. தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து வராமல்: இருப்பதற்கு மாத்திரம் கொஞ்சம் கொஞ்சம் காட்டி அரசாங்கத்தை மிரட்டி வருகிறார்கள் என்றாலும் இன்றைய தேசாபிமானிகள் எல்லோரும் ராஜத் துவேஷ குற்றத்திற்கு சிறை சென்றவர்கள் முதல் மகாத்மாக்கள் வரை ராஜ விசுவாசம் மாத்திரம் அல்லாமல், ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்து கொண்டும், செய்ய அநுமதித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.
உலகம் போற்றும் உத்தமர் என்பவரான காந்தி மற்ற உலகம் போற்றும் “தேச பக்தர்" என்கின்ற சத்தியமூர்த்தியவர்கட்கு ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்ய அநுமதி கொடுத்து தேசப் பக்திக்கே உருவானவரும், தேசாபிமானமே மதமாய்க் கொண்டவரும், பிரிட்டிஷ் ராஜாங்கத்தை ஒழித்து மனுதர்ம ராஜியத்தை நிலைநாட்ட கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவருமானவர் என்று சொல்லப்பட்ட தோழர் சத்தியமூர்த்தி யவர்கள், கல்லுப் போன்ற ராஜா விசுவாசப் பிரமாணம் செய்திருக்கிறார் என்றால் உங்களைப் போன்றவர்கள் அழுகிப் புழுத்த மலத்தினும் கேடாக மதிக்கப்படுபவர்கள் ராஜா விசுவாசிகளாக இருப்பதிலோ ராஜ பக்தி காட்டுவதிலோ, நன்றி விசுவாசம் காட்டுவதிலோ ஏதும் கெடுதி இருப்பதாக நானும் நினைக்கவில்லை. ஒரு சமயம் காந்தியாரும், சத்தியமூர்த்தியும் முறையே பொய்ப் பிரமாணம்தான் செய்வேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அப்படிப்பட்டகேவல நிலை உங்களுக்கு வேண்டாம் நான் உங்களை மெய்ப் பிரமாணமே செய்து மெய்யர்களாகவே இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
குடி அரசு - 1935 (1) 100
அதனால் ஏற்படும் பாவத்திற்கு நான் அஞ்சவில்லை; நீங்களும் அஞ்ச வேண்டியதில்லை; நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரசுடனோ, தேசாபிமானக் கூட்டத்துடனோ, தேச பக்தர் தொண்டர் களுடனோ கண்டிப்பாய் சேரக் கூடாது
உங்கள் நலன் பாதிக்கப்பட வேண்டுமானால் உங்களுடைய இழிவு நிலை நிறுத்தப்பட வேண்டுமானால் நீங்கள் காங்கிரஸுடன் சேருங்கள். உதாரணமாக “பூனா ஒப்பந்தத்தில் உங்கள் தலைவர்கள் காங்கிரஸ்காரர் களுடன் சேர்ந்ததின் கதி என்னவாயிற்று? அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட உங்களுடைய உயிர் போன்ற நன்மை பறிக்கப்பட்டுவிட்டது
காங்கிரஸ்காரர்களால், மகாத்மாக்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும், ஒப்பந்தமும் தவறப்பட்டுவிட்டது. காங்கிரஸ்காரரும் காந்தியாரும் “கையை வளையுங்கள் பார்ப்போம்” என்று வீரம் பேசுகிறார்கள். உங்கள் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்போதுதான் புத்தி வந்து தாங்கள் செய்த தவறுதலான காரியத்துக்கு வருந்துகிறார்கள். பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் இன்று என்னைக்கண்டால் வெட்கப்படுகிறார்கள்.
நான் ஐரோப்பாவிலிருந்து தோழர் அம்பேத்காருக்கு 6, 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிடக் கேவலமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள்!” என்று தந்தி கொடுத்திருந்தேன். அதை வாங்கிப் பார்த்துக் கொண்டே மகாத்மாவின் ' பொக்கவாய்ச் சிரிப்பில்” மயங்கியும் மாளவியாஜி, ராஜகோபாலாச்சாரியார்ஜி போன்ற பிரகஸ்பதிகளின் ஆசீர்வாதத்திற்கு ஏமாந்தும், கையெழுத்துப் போட்டதும், உங்கள் விடுதலையை பாழாக்கி விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை!” “சாமி கொடுத்ததை பூசாரி மோசம் செய்து விட்டார்". இப்பொழுது புத்திவந்து என்ன பயன் என்பது எனக்கு விளங்கவில்லை.
எல்லாப் பள்ளிக் கூடங்களிலும், உங்கள் பிள்ளைகளைச் சேர்த்து கல்வி கற்பிக்க வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு போட்டும் பார்ப்பன. ஆதிக்கத்திலும், பார்ப்பன உபாத்தியாயர்களும் இருந்து வரும் பள்ளிக் கூடங்களில் பெரும்பாலும் ஆதி திராவிட பிள்ளைகளைச் சேர்க்கப்படாமலே இருந்து வருகிறது. சர்க்காரால் ஆதி திராவிடப் பிள்ளைகளை சேர்க்காத பள்ளிக் கூடங்களுக்கு கிராண்டு (Grant) இல்லை என உத்திரவு போடப்பட்டு வருகிறது. அப்படி யிருந்தும் சரிவர பிள்ளைகள் சேர்க்கப்படவில்லை. ஆதி திராவிட உபாத்தியாயர்கள் இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு கிராண்ட் (Grant) கொடுக்கக் கூடாதென்று அவ்வுத்தரவைத் திருத்த வேண்டுமாய் அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதை ஆதரிப்பீர்களென்று கருதுகிறேன். சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது இந்தியா பூராவும் அதை எதிர்த்தும் உங்களுடைய நலனை 0 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
உத்தேசித்தும் தான் சைமன் கமிஷனை வரவேற்று பாமர மக்களாலும், பார்ப்பனர்களாலும் தேசத் துரோகப் பட்டம் பெற்றேன். அப்படியிருந்தும் அதனால் ஏற்பட்ட பலனை நீங்களே கெடுத்துக் கொண்டு உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டீர்கள். இனிமேலாவது நீங்கள் பூனா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி செய்து அது முடியாவிட்டால் உங்கட்கு இருக்கும் 30 ஸ்தானங்களையும் பகுதியாகவாவது தனித் தொகுதி தேர்தலுக்கு விடும்படி கேட்டுப் பாருங்கள்.
அதுவும் முடியவில்லையானால் பொதுத் தொகுதியைவிடசர்க்கார். நியமனத்தின் மூலம் பெறும்படியாகவாவது செய்து கொள்ளுங்கள். இப்போது இதுவே உங்கள் முன்னாலிருக்கும் அவசர வேலையாகும் உங்களைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பொது ஜனங்களிடை கொடுக்கப்பட்டிருக்கிறதென்பது எலிகளைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பூனைகளிடம் கொடுத்தது போலவே இருக்கும். ஆலயப் பிரவேசம் உங்கட்கு இல்லாமல் இருப்பது மிகவும் நன்மை என்பதே எனது அபிப்பிராயம். பூனா ஒப்பந்தத்தின் யோக்கியதையை உங்கட்கு வெளிப் படுத்தவும், காங்கிரஸ்காரர்கள் காந்தியார் அவர்களது யோக்கியதையை வெளிப்படுத்தவும் நான் அதைப் பற்றி பேசுகிறேனே ஒழிய மற்றபடி ஆலயத்திலும், அங்குள்ள சாமி என்பதிலும், அதனால் ஏற்படும் நன்மை என்பதிலும் நம்பிக்கைக் கொண்டல்ல. ஆதலால் சாமி, கோயில், குளம், உற்சவம் என்கின்ற பைத்தியத்தை விட்டு விடுங்கள். உங்கள் சமூகத்தார். இந்த ஊரில் சுமார் 10 வருட காலமாய் மதுபானம் செய்வதில்லை என்று கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அதற்குக் காரணமாய் இருந்த உங்கள் பிரமுகர்களையும், சமூகத்தாரையும் போற்றுகிறேன். உங்கள். மாகாணத் தலைவராக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும், இந்தியத் தலைவராக அம்பேத்கார் போன்றவர்களையும் நம்புங்கள். எனக்கும், அவர்கட்கும் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களே மேலானவர்கள். சென்னை சட்டசபையில் தோழர் சிவராஜ் அவர்கள் பேசியதை தோழர் சகஜானந்தம் அவர்கள் கண்டித்திருப்பதை நான் பேப்பர்களில் பார்த்தேன். அது உங்கள் சமூகத்தை காட்டிக் கொடுத்ததாகத்தான் இருக்கிறது. இதுபோல் பல தடவை தோழர் சகஜானந்தம் நடந்து கொண்டு வந்திருக்கிறார். ஆகையால் நீங்கள் தோழர் சிவராஜ் அவர்களின் பேச்சையும் தீர்மானத்தையும் ஆதரிப்பதாகவும், தோழர் சகஜானந்தம் அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்றும் தைரியமாய் சொல்லிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர் இனிமேலாவது பார்ப்பனர் தயவுக்கு ஏமாராமலும் உங்கள் நலனைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமலும் இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன். தோழர் சகஜானந்தம் அவர்கள் அபிப்பிராயத்தை 'சுதேசமித்திரன்'' முதலிய பார்ப்பனப்
குடி அரசு - 1935 (1) 102.
பத்திரிகைகள் உபயோகப்படுத்திக் கொண்டு உங்களுடைய நலன் பாதிக்கப்பட விஷமப் பிரசாரம் செய்திருக்கிறது. இது எவ்வளவு நஷ்டம் என்பதை யோசியுங்கள்.
உங்களுக்காக இவ்வளவு பரிந்து பேசும் காங்கிரஸ்காரர்களும், காந்தியார்களும், இது வரையிலும் என்ன செய்தார்கள் என்பது ஒரு பக்கம்
இருந்தாலும் இப்பொழுது சென்ற வாரத்தில் காலஞ்சென்ற மல்லையா அவர்கள் ஸ்தானத்தில் ஒரு ஆதித் திராவிடரை நிறுத்துவார்களா என்று கேட்கிறேன். இந்தியா சட்டசபைக்கு ஆதித் திராவிடர்களை நிறுத்தாததின் காரணம் அங்கு நடக்கும் போராட்டத்திற்கும், ஆதித் திராவிட தன்மைக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் சென்னை சட்டசபைக்கோ அம்மாதிரி சொல்ல முடியாது என்றாலும் முன்பே 4, 5 பேர்கள்
இருக்கிறார்கள்; போதாதா என்று சொல்லி விடுவார்களென்றே நினைக்கிறேன்.
தேசத்திற்கும், ஆதித் திராவிடர்களுக்கும், காங்கிரஸ்காரர்களும், காந்தி கூட்டத்தார்களும் பிரதிநிதிகளா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள. வேண்டுமென்பதற்காகப் பேசினேனே தவிர வேறில்லை. முடிவாக ஒரு வார்த்தை; அரசாங்கத்தாராலும் சுயமரியாதைக் கிளர்ச்சியாலும் இது வரையில் உங்களுக்கு ஏற்பட்ட சிறிது நன்மைகளையாவது பாழாக்கி கொள்ள வேண்டு மானால் நீங்கள் காங்கிரஸ்காரர்களுடனோ, காந்திக் கூட்டத்தாருடனோ தேசபக்த கோஷ்டியுடனோ சேருங்கள்; இல்லையானால் ஜாக்கிரதையாக உங்கள் முன்னேற்றத்தைக் கருதுங்கள்.
ஜஸ்டிஸ் முதலான மற்ற கட்சிக்காரர்கள் கூட உங்கட்கு செய்ய வேண்டிய அளவு செய்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது. உத்தியோக விஷயங்களில் பல விஷயங்கள் அவர்கள் கையிலிருந்தும் சர்க்காரை நிர்ப்பந்தப்படுத்தக் கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் உங்கட்கு போதிய அளவு உத்தியோகங்கள் கொடுக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சமீபத்தில் சென்னை சட்டசபையில் வெளியிட்ட கணக்கில் கீழ்த்தர உத்தியோகமாகிய இன்ஸ்பெக்டர் உத்தியோகம்கூட கொடுக்கப்பட வில்லை. இதுவரையில் ஒரே ஒரு சப் இன்ஸ்பெக்டர் வேலைதான் உங்கட்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஆகையால் உத்தியோகங்களில் உங்கட்கு வீதாச்சாரம் கிடைக்க வேண்டும் என்பது உங்களது முதல் கவலையாக இருக்க வேண்டும். அது என்று சரிப்பட்டு வருகிறதோ அன்றுதான் இந்நாடு “சமதர்ம - சுதந்திர நாடென்று சொல்லிக் கொள்ள முடியும்"
குறிப்பு: 02.02.1935 அன்று மோகனூரில் நடைபெற்ற சேலம் மாவட்டம் நாமக்கல் வட்ட பள்ளர்சமூக மாநாடு - தேவேந்திரகுல மாநாட்டில் "தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 10.02.1935
13 ய... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
காங்கிரஸ் வாக்குறுதிகள் என்கே?
வகுப்பு தீர்ப்புக்கு ஆதரவு
சமஷ்டி அரசாட்சி வேண்டாம்
இந்திய சட்டசபையில் பார்லிமென்ட் கமிட்டி அறிக்கையைப் பற்றி மூன்று தினங்கள் தொடர்ந்து விவாதம் நடந்தது. காங்கிரசின் சார்பில் ஷி அறிக்கையை ஒப்புக் கொள்ள முடியாதென்று கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும், வகுப்புத் தீர்ப்பில் நடுநிலமை வகிப்பதாகக் கொண்டு வந்த
திருத்தத் தீர்மானமும் ஏராளமான ஓட்டுக்களால் தோற்கடிக்கப்பட்டன.
வகுப்புத் தீர்ப்பை அங்கீகரிப்பதாகவும், மாகாண சுயாட்சித் திட்டத்தைத் திருத்தி அமைப்பதோடு சமஷ்டி சர்க்கார் முறையை விட்டுவிட்டு இந்திய சர்க்காரில் பொறுப்பாட்சியை ஏற்படுத்த வேண்டு மென்பதாகவும் தோழர் ஜின்னா அவர்களால் கொண்டு வரப்பட்ட திருத்தத் தீர்மானங்கள் ஏராளமான ஓட்டுக்களால் வெற்றி பெற்றன. ஜனநாயக சபை கூட்டி இந்திய சுயாட்சியைப் பற்றித் தீர்மானம் செய்யப் போவதாகத் தேர்தல் காலத்தில் சரமாரியாக வாக்குறுதி கூறிய காங்கிரஸ்காரர் ஒருவரேனும், இந்த விவாதத்தின்போது ஜனநாயக சபை கூட்டும் விஷயமாக ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்கவில்லை.
பார்லிமெண்ட் கமிட்டி அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், தங்களுடைய திருத்தத் தீர்மானத்தில் “நிராகரிப்பு” என்ற வார்த்தையில் ஒரு எழுத்தைக்கூட சேர்க்கவில்லை.
இதுபற்றி நமது அபிப்பிராயம் அடுத்த வாரம் விரிவாக வெளிவரும் எதிர்பாருங்கள்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 10.02.1935
குடி அரசு - 1935 (1) 104
ஏழைகளை வஞ்சிப்பதே
காங்கிரஸ் தொண்டு.
சென்னை மாகாணத்து மிராசுதாரர்களுக்கு பூமி வியாபாரத்தில் ஆதாயமில்லாமல் போய்விட்டதாம். அதனால் மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் நில வரியைக் குறைக்க வேண்டும் என்று “மகாநாடுகள்”” கூட்டி சர்க்காரைக் கேட்கிறார்கள்.
சர்க்காராருக்கு தாங்கள் வைத்துக் காப்பாற்றும் உத்தியோகஸ்தர்
களுக்குச் சம்பளம் கொடுக்கப் பணம் வேண்டும். ஆதலால் நிலவரியைக் குறைக்க முடியாது என்கின்றார்கள். இது விஷயமாய் ஒரு போலி யுத்தம்
சுமார் 2, 3 வருஷகாலமாகவே நடந்து வருகின்றது.
காங்கிரசுக்காரர் என்பவர்கள் இப்போது இந்திய சட்டசபையில்
சிறிது “ஆதிக்கம்” பெற்றவுடன் இதற்கு ஒரு மத்தியஸ்தர் வழியைக் கண்டுபிடித்து மிராசுதாரர்களுக்கு அதிக லாபம் வரும்படியாகவும் சர்க்காருக்கு தங்கள் உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தைக் குறைக்காமல் இருக்கவும், வேண்டுமானால் இன்னும் அதிக சம்பளம் கொடுக்கக்கூட வசதி இருக்கும்படியாகவும் செய்து இருக்கிறார்கள்.
அது என்னவென்றால் - அதுதான் தொழிலாளிகள், கூலிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் வாயிலும், வயிற்றிலும் மண்ணைப் போட்டு, அவர்களுடைய பட்டினியால் மிராசுதாரர்கள் நஷ்டத்தையும், சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் நஷ்டத்தையும் சரிக்கட்டும் படியான மார்க்கமாகிய அரிசி அதாவது உணவுப் பொருளுக்கு வரி விதிப்பது என்கின்ற காரியமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உணவுப் பொருளாகிய அரிசி, அரிசிக் குருணை (நொய் அரிசி) ஆகிய தானியங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குச் சிறப்பாகச் சென்னை மாகாணத்துக்கு இறக்குமதியாகி வருவதால் உள்நாட்டு அரிசி விலை குறைந்து விட்டதாம். இதனால் மிராசுதாரர்களுக்கு விவசாய வியாபாரத்தில் இலாபம் குறைந்து விட்டதாம். அதற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி யாகும் அரிசி, குருணை ஆகிய தானியத்தை அடியோடு நிறுத்தியோ, அல்லது அவ்வரிசிக்கும், குருணைக்கும் இறக்குமதி வரி போட்டு அரிசி
15 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
விலையை உயரும்படியாகவோ சர்க்காரார் செய்துவிட்டால் மிராசுதாரர்களின். நெல்லுக்கு அதிகவிலை கிடைத்து விடுமாம். இதனால் மிராசுதார்கள் கஷ்டம் ஒழிந்து வரியைச் செலுத்தி விடுவார்களாம். ஆகவே பெரிய, பெரிய சம்பளமாகிய 100, 500, 1000, 5000 ரூபாய்கள் வீதம் மாதச் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் சர்க்கார் சிப்பந்திகளின் சம்பளத்தில் ஒரு அம்மன் காசுகூட குறைக்க வேண்டிய கஷ்டமும் சர்க்காருக்கு ஏற்படாதாம். இதுதான் காங்கிரஸ்காரர்களின் புதிய மத்தியஸ்த மார்க்கமாகும்
ஆகவே நமது காங்கிரஸ்காரர்கள் ஏழைக்கூலி, தொழிலாளி ஆகிய மக்களுக்குப் பிரதிநிதிகளா? அல்லது மிராசுதாரர்கள், சர்க்கார் உத்தி யோகஸ்தர்கள் ஆகிய பிரபுக்கள் சமூகத்துக்கு பிரதிநிதிகளா? என்பதை இதிலிருந்து யோசித்துப்பார்க்கும்படிவாசகர்களை வேண்டிக்கொள்ளுகிறோம்
நிற்க, மிராசுதாரர்களுக்கு உண்மையிலேயே நெல் விவசாயத்தில் போதிய விளைவில்லையா? கட்டுபடி இல்லையா? இதனால் ஆதாயம் இல்லையா? அவர்களுக்கு வரி கொடுக்கத்தக்க வரும்படி இல்லையா? என்பது போன்ற காரியங்களை முதலில் யோசிக்க வேண்டும்
நமது மாகாணத்தில் இரண்டொரு ஜில்லாக்களைத் தவிர மற்ற எல்லா. ஜில்லாக்களிலும் சிறிய விவசாயிகள் அதாவது பூமியைத் தாங்களே உழுது
பயிரிடும் விவசாயிகள் தங்களுக்குக் கட்டுப்படி இல்லை என்றோ வரி கட்டுவது கஷ்டமாயிருக்கிறது என்றோ கூச்சலிடுபவர்களைக் காண
முடியவில்லை. சர்க்காராவது ஒரு கமிட்டியை நியமித்து ஒரு பூமியின் விளைவு எவ்வளவு? அதற்கு முட்டுவழிச் செலவு எவ்வளவு? அதன் கிறயம் எவ்வளவு? உழுது பயிரிடுபவர்கள் ஜீவனத்துக்கு போதவில்லையா? என்பனவாதியவைகளை நிர்ணயமாயும் உண்மையாயும் கண்டுபிடிக்கச் செய்ய வேண்டும் என்பதை யாரும் கவனிப்பதில்லை. ஆனால் மிராசுதாரர்களுடைய கூச்சலும் அவர்களிடம் கூலி வாங்கிப் பிழைக்கும் பத்திரிக்கைகாரர்களுடைய கூப்பாடுகளும், மிராசுதார்கள் தயவால் சட்டசபைக்குச் சென்ற (மிராசுதாரர்களின் பிரதிநிதிகளாகிய) சட்டசபை அங்கத்தினர்கள் கூச்சலுமேதான் இன்று (ஏழை மக்களை பட்டினியிலும் துன்பத்திலும் ஆழ்த்தும்படியான) அரிசி விலை ஏறும்படி செய்ய வேண்டும் என்கின்ற கூச்சலாய் இருக்கின்றதே தவிர மற்றபடி உண்மையிலேயே விலை உயர்த்தப்படவேண்டுமா? அது மக்களுக்கு நன்மை பயக்குமா? என்பதை அறிய யாதொரு ஆதாரத்தையும் காண முடியவில்லை.
பூமிகள் எல்லாம் சர்க்காரை சேர்ந்ததாகும் என்பதும், சர்க்காரார்
அந்தப் பூமிகளை பிரஜைகளுக்கு உழுது பயிரிட்டுக் கொண்டு, தாங்கள்.
செய்த பயிர்ச் செலவுக்கும், பட்ட தேகப் பிரயாசைக்கும் ஒரு பாகத்தை
குடி அரசு - 1935 (1) 106
எடுத்துக் கொண்டு மீதியை சர்க்காருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பதுமே நம் நாட்டு பூமிகளுக்கும், பிரஜைகளுக்கும் உள்ள சம்பந்தமாகும்.
இதுதான் உண்மையான ஜனப் பிரதிநிதித்துவம் கொண்ட யோக்கியமான ஆட்சியின் தன்மையுமாகும்
அந்த முறையிலேயேதான் இன்று பூமி சம்பந்தமான சர்க்கார் ரிக்கார்டுகளும் இருந்து வருகின்றன.
ஆனபோதிலும் சர்க்கார் தங்கள் பொறுப்பைச் சரியாய் உணராத தன்மையினாலோ பூமிகளை அடமானம் செய்யும்போது ஒருவன் உண்மையாய் உழுது பயிரிடுபவனா? அல்லவா? என்பதை உணராமலும்
ஒருவன் நேரில் தானே உழுது பயிரிடுவதற்கு எவ்வளவு பூமி வேண்டுமோ, அதற்கு மேல் ஏன் கொடுக்க வேண்டும் என்பதை லட்சியம் செய்யாமலும், நேரில் தானே உழுது பயிர் செய்யாமல் இருக்கும் குடியானவனுக்கே அதிக
பூமி சேரும்படியாக அனுமதித்தும், நேரில் உழுது பயிரிட்டு வந்த விவசாயி களின் பூமிகள் நாளாவட்டத்திலும் உழுது பயிரிடாத கூட்டத்துக்கே போய்ச் சேரும்படியானதுமான பல பொறுப்பும், பொருத்தமுமற்றதுமான முறைகளால் இன்று இப்பிரச்சினை தோன்றி இருக்கின்றதே ஒழிய மற்றபடி இன்று விவசாயிக்கு நஷ்டம் ஏற்படுகின்றதென்றோ கஷ்டம் ஏற்படு கின்றதென்றோ சொல்லுவதற்கு யாதொரு காரணமும் இல்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்
புதிய புதிய அணைகள், நீர்த் தேக்கங்கள் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் காலங்களில் எல்லாம் சர்க்கார் அந்நீர்த் தேக்கங்களால் பயனடையும் (நஞ்சையாகும்) பூமிகளை சாதாரண விலை கொடுத்தாவது
வாங்கிக் கொண்டு பிறகு அந்தப் பூமிகளை நேரில் உழுது பயிரிடுபவர் களைப் பார்த்து அடமானம் செய்யப்பட்டிருக்குமானாலும்கூட இன்று இருந்து வரும் மிராசுதாரர்களின் தொல்லை அடியோடு இல்லாமல் இருந்திருக்கும்
இன்று அரசாங்கத்தார் விவசாய சம்பந்தமாகவும், பூமி சம்பந்தமாகவும், நீர்பாசன சம்பந்தமாகவும் செய்யப்படும் சகல காரியங்களும், பெரிதும் மிராசுதாரர்களுக்கே பயன்படக் கூடியதாக இருக்கின்றனவே யொழிய
பயிரிடும் குடியானவனுக்கு யாதொரு பலனும் ஏற்பட முடியாமலே போய்விடுகின்றன. அப்படி இருந்தும் மிராசுதாரர்கள் கூச்சல் வானத்தைப் பிளக்கின்றது
இதற்குக் காரணம் நமது ஆட்சி முறையில் உள்ள கோளாறு என்றுதான் சொல்ல வேண்டுமே யொழிய, அகவிலை அறிய முடியாதவர்
களும் அதன் பலாபலனை அறிய முடியாதவர்களுமான (மாம்ச பிண்டங்கள் என்று சொல்லத்தக்க) மிராசுதாரர்கள் மீது பழி சுமத்துவது அதர்மம் என்று
கூட சொல்லலாம்
17 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, இன்றைய நிலையில் அரிசி விலை இப்பொழுது இருப்பதைவிட உயர்வாகும்படி செய்யலாமா? அதனால் மக்கள் கஷ்டப்பட மாட்டார்களா? வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் அரிசி, நெல் ஆகிய தானியங்களைத் தடுத்து விட்டால் இந்த நாட்டு மக்களுக்குப் போதுமான அளவு அரிசி கிடைத்து விடுமா? என்கின்ற விஷயங்களை யோசிக்க வேண்டியது அரிசி இறக்குமதியை தடைப்படுத்த வேண்டுமென்கின்றவர்களின் கடமையாகும்.
இன்று அரிசி பட்டணம் படி 50 கொண்ட மூட்டை ஒன்றுக்கு 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை இருந்து வருகின்றது. இது ரூ.1க்கு பட்டணம்படியில் 5 படி முதல் 4 படி வரை கிடைப்பதாக ஆகும். மட்ட அரிசி ஒரு சமயம் 6 படியும் கிடைக்கலாம். வெளிநாட்டில் இருந்து சென்ற ஒரு வருஷத்தில் 57194 டன் அரிசி அதாவது 571940 அய்ந்தே மூக்கால் லட்சம் மூட்டை அரிசி இறக்குமதி ஆகியும் ரூ.1-க்கு 4 படி 5 படி வீதமே அரிசி விற்கின்றதென்றால், இனி இதைக் கட்டுப்படுத்திவிட்டால் ரூ.1-க்கு எத்தனை படியாகக் குறைந்துவிடும் என்பதையும், இந்த நாட்டு மக்களுக்குப் போதுமான அரிசி கிடைத்துவிடுமா என்பதையும் யோசிக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்
அன்றியும் இப்போது ரூபாய் ஒன்றுக்கு 4 படி, 5 படி, 6 படி அரிசி விற்பதென்பது மிகக் குறைவான விலையா என்றும் கேட்கின்றோம்
அரிசி விலை ஏறும்படியாகச் செய்ய வேண்டும் என்றால் அதை வாங்கிச் சாப்பிடும் ஏழை மக்கள் தலையில் வரி ஏற்படுத்த வேண்டும் என்பது தானே அதன் பொருளாகும்
இந்த நாட்டு மக்களுக்குப் போதிய அரிசி இந்த நாட்டில் விளை கின்றது என்று அரசாங்கத்துப் புள்ளி விபர நிபுணர்கள் கணக்கிலிருந்து விளங்குவதாகச் சொல்லுகிறார்கள்.
இந்தக் கணக்கை நம்புவது “காளை மாடு கன்று போட்டது" என்று சொன்ன உடன் “பிடித்து கொட்டத்தில் கட்டு” என்று சொல்வதுபோல தான் ஆகுமேயொழிய உண்மை கண்டு கொண்டதாக ஆகிவிடாது. அரிசி விஷயமாய் கணக்குப் போட்ட நிபுணர்கள் கவனித்ததெல்லாம், இந்த நாட்டில் வெளிநாட்டு அரிசி இறக்குமதி இல்லாதபோது எவ்வளவு நெல் விளைந்ததோ அவ்வளவு நெல் இப்பொழுதும் விளைந்து இருக்கிறது என்பதேயாகும். நெல் விளைந்த கணக்குச் சரியாய் இருக்கும் என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால், வெளிநாட்டு அரிசி இறக்குமதி ஆகாத காலத்தில் அரிசி சாப்பிட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இப்போது அரிசி சாப்பிடும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இந்த குத்துப் புள்ளி நிபுணர்கள் கவனித்தார்களா அல்லது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் காங்கிரஸ்காரர்களாவது கவனித்தார்களா என்பதை கவனிக்க வேண்டும்
குடி அரசு - 1935 (1) 108
இந்த பத்து வருஷ காலத்தில் அரிசி சாப்பிடும் ஜனங்கள் 100க்கு 200 வீதம் அதிகமாகி இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
10 வருஷத்துக்கு முன் கிராமங்களில் 3 ஆம் தர விவசாயக் கூலிகள். முழுவதும் மற்றும் கல் வேலைக்காரர்கள், கட்டட வேலைக்காரர்கள், எடுபிடி ஆளுகள், ரோட்டு கூலிகள் முதலிய எல்லோரும் கேப்பை, கம்பு, தினை, சோளம், சாமை ஆகிய கருந் தானியங்களைச் சாப்பிட்டு வந்தார்கள்.
கரைவழி ஓரம் என்று சொல்லப்பட்ட நஞ்சை பூமியுள்ள இடங்கள் தவிர, மற்ற மேட்டாங்காட்டுப் (புஞ்சை தேசம்) பூமியுள்ள இடத்தில் உள்ளவர்கள் மிராசுதாரர்கள் உள்பட 100க்கு 75-80 பேர்கள் முன்பு கருந் தானியமே சாப்பிட்டு வந்தார்கள். இப்பொழுது அவர்கள் அத்தனை பேரும் அரிசியே சாப்பிட்டுப் பழகிவிட்டார்கள். பட்டணங்களில் உள்ள மக்கள் 100க்கு 100 பேரும் முனிசிபல் தோட்டிகள் முதல் எல்லோருமே அரிசி தான்யமே தான் சாப்பிட்டுப் பழகி விட்டார்கள்.
கேப்பை, சோளம், கம்பு சாப்பிடுவதை எல்லோரும் குறைவாகவும், ஏழ்மையாகவும் கருதுகிறார்கள் என்றால் மற்றபடி வேறு சமாதானம் என்ன. வேண்டும் என்பது விளங்கவில்லை.
ஆகவே அரிசி சாப்பிடும் ஜனத்தொகை இந்த 10 வருஷ காலங்களில் அதிலும் இந்த நான்கைந்து வருஷ காலங்களில் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக சில இடங்களில் நான்காகவும் பெருகிவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது
ஆனால் கூலி அதற்கு ஏற்றாற்போல் இந்த 10 வருஷத்தில் பெருகி விடவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த 10 வருஷமாக சிறப்பாக இந்த நாலைந்து வருஷமாக பணமுடை காரணமாய் கூலிக் காரர்களுக்குக் கூலி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்திருப்பதோடு வியாபார மந்தம் என்னும் காரணத்தால் வேலையில்லாத் திண்டாட்டமும் நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வந்து இப்போது கூலிபோதாமலும் குடும்பத்தோடு வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிற ஜனங்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகின்றது.
பார்ப்பனர்கள், ஆங்கிலம் கற்றவர்கள், உத்தியோகஸ்தர்கள், மிராசுதாரர்கள், ஜமீன்தார்கள், லேவாதேவிக்காரர்கள், வியாபாரிகள், வீட்டு வாடகைக்காரர்கள் என்று சொல்லப்பட்ட கூட்டங்களாகிய மொத்த ஜனத் தொகையில் 100க்கு 10 அல்லது 15 பேர்கள் போக, பாக்கி 85 விகிதம் பேர்கள் இந்த நாட்டில் ஏற்கனவே கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
109 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
இவர்கள் தலையில் வரிப்பளு ஏற்படும்படி அரிசி விலையை இன்னமும் உயரும் படியாகச் செய்வதென்றால் இது ஏழை மக்களுக்குத்
திமிர் வரி (பியூனிடி போலீஸ் வரி) போடுவதுபோல் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்
காங்கிரசுக்காரர்கள் ஏழைகளிடம் சென்று ஓட்டு கேட்கும்போது அரிசி விலை ஏறினதற்கு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்தான் பொறுப்பாளிகள் என்று அயோக்கியத்தனமானதும், போக்கிரித்தனமானதுமான பிரசாரத்தைச் செய்து ஓட்டுப் பெற்றுவிட்டு இன்று (ஜஸ்டிஸ் கட்சியாரின் ஆட்சி
காலத்தில்) அரிசி விலை மிகக் குறைவாய் இருப்பதால் அதை உயர்த்தி விற்க வேண்டுமென்று இதே காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் போய் பேசுகின்றார்கள் என்றால் இவர்கள் ஏழைகள் பிரதிநிதிகளா? பணக்கார மிராசுதாரர்களுடைய பிரதிநிதிகளா என்று கேட்கின்றோம்.
சென்னை மாகாணத்தில் சிறப்பாக கோயம்முத்தூர், சேலம், வடஆற்காடு ஜில்லாக்களின் பிரதிநிதியாகச் சென்ற கோவை தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் என்பவர் சிறிதாவது நெஞ்சில் ஈவு இரக்க
மில்லாமல் “சென்னை மாகாணத்தில் அரிசி விலை அதிகமாகக் குறைந்து விட்டது. அன்னிய நாட்டு அரிசி இறக்குமதியைத் தடுத்து (அரிசி விலை ஏறும்படியாக) உடனே கவர்மெண்டார் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்"
என்று தனது முதலாளித் தன்மையை காட்டி டெல்லி சட்டசபையில் பேசி
இருக்கிறார். இந்தப் பிரபு காங்கிரசுக்காரர்களால் அனுப்பப்பட்டவர்.
கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு ஜில்லாவில் மொத்த விஸ்தீரணத்தில் 100-ல் ஒரு பங்கு பூமியாவது நெல் விளைகின்றதா என்று கேட்பதுடன் மொத்த ஜனத்தொகையில் 100-ல் ஒரு பாகம் ஜனங்களாவது கேப்பை (கேழ்வரகு), கம்பு, சோளம் சாப்பிடுகின்றவர்கள் இன்று உண்டா என்று கேட்கின்றோம் அதோடு இன்று கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்களில் பட்டணம்படி 50 கொண்ட அரிசி மூட்டை 10 ரூபாய் முதல் 12% ரூபாய் வரை விலை இல்லையா என்று கேட்கின்றோம்
இந்த மூன்று ஜில்லாக்களிலும்தானே இத் தமிழ்நாட்டில் வேறு
எங்கும் இல்லாத அளவு குறைந்த கூலி அதாவது ''நாள் ஒன்றுக்கு ஒரு அணா கிடைத்தாலும் போதும் என்று கருதி கிராமக் கூலிகள் கதர் நூற்க வருகிறவர்கள் இருக்கிறார்கள்" என்று சொல்லப்படவில்லையா என்றும் கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட ஜில்லாக்களில் இப்படிப்பட்ட மக்களின் பிரதிநிதியாய்ச் சென்ற முதலாளி ஒருவர் தைரியமாய் “எங்கள் நாட்டில் அரிசி விலை குறைந்து விட்டது!” என்றும் “சர்க்கார் அதை உயரும்படி செய்ய வேண்டும்”
குடி அரசு - 1935 (1) 110
என்றும் சொல்லுகிறார் என்றால், நமது மக்கள் பிரதிநிதிகளை அனுப்பும் யோக்கியதையும், பிரதிநிதிகளாய் போகின்றவர்களின் பிரதிநிதித்துவ யோக்கியதையும் எப்படிப்பட்டது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம்
இதுபோலவே கொல்லங்கோடு ராஜா அவர்களும், ஆந்திர நாட்டுத்
தோழர் என்.ஜி. ரங்கா அவர்களும் பேசியிருப்பதாகத் தெரிய வருகின்றது இவர்கள் ஏழைகள் பிரதிநிதிகளா? இவற்றை நினைக்கும்போது வயிறு பற்றி எரிகிறது. இந்தக் கூட்டத்தாரைவிட பிரிட்டிஷ் சர்க்கார் 1000 மடங்கு யோக்கியமும், நாணையமும், ஏழைகள் விஷயத்தில் கவலையு முள்ளவர். களாவார்கள். கள்ளுக்கு வரி, உப்புக்கு வரி, கட்டும் துணிக்கு வரி, குடிக்கும் தண்ணீருக்கு வரி ஒருபுறம் இருக்க இனி சாப்பிடும் அரிசிக்குக் கூடவா வரி விதிக்க வேண்டும் என்றும் கேட்கின்றோம். அதுவும் ஏழைப் பங்காளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் தானா இந்த வரியை விதிக்க வேண்டும் என்றும் கேட்கின்றோம்
இது இப்படி இருக்க நமது சர்க்கார் இந்த “ஏழை பங்காளர்"களாகிய காங்கிரசுக்காரர்களுக்குப் பதில் சொல்லும் முறையில் தாங்கள் யோசிக்கப் போவதாகவும், சில அறிக்கைகள் விட்ட பிறகு அதைப் பார்த்துக் கொண்டு அரிசி வரவைத் தடுக்கப் போவதாகவும் கருத்துக் கொண்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது
அந்தப்படி ஏதாவது அரசாங்கத்தார் செய்வார்களானால் அது மிகவும் அநீதியான காரியம் என்றே சொல்லுவோம். 50 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளங்களை 100க்கு 25 வீதமும், 100 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளங்களை 100க்கு 50 வீதமும், 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளங்களை 100க்கு 75 வீதமும் குறைத்துக் கணக்குப் போட்டுப் பார்ப்பார்களேயானால் அரிசி விலை மிகக் குறைந்து விட்டது என்பதை சர்க்காரார் உணர்ந்தவர்களாவார்கள். அப்படிக்கில்லாமல் ரூ. ஒன்றுக்கு 2 படி, 2% படி அரிசி விற்கும் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சம்பளங்களை அப்படியே வைத்துக் கொண்டும், கொடுத்துக் கொண்டும் இருந்து கொண்டு, அரிசி விலை, அகவிலை குறைந்து விட்டது. ஆதலால் அரிசிக்கும், நொய்க்கும் வரி போட்டு விலையை உயர்த்த வேண்டும் என்று சொன்னால் இந்த அரசாங்கம் பொருளாதாரத்தை ஆதாரமாய்க் கொண்டு நடைபெறுகின்றதா அல்லது பணக்காரர்கள் கூச்சலை ஆதாரமாகக் கொண்டு நடைபெறுகின்றதா என்றுதான் யோசிக்க வேண்டியிருக்கிறது
குடி அரசு - தலையங்கம் - 17.02.1935
படட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
காங்கிரஸ் கூத்து
வாக்குறுதிகள் தேர்தல் சூழ்ச்சியா?
இனியும் பொது ஜனங்கள் ஏமாறப் போகிறார்களா?
தேர்தல் காலத்தில் காங்கிரஸ்காரர்கள் வானத்தை வில்லாக வளைக்கிறோம், மணலைக் கயிறாகத் திரிக்கிறோம், வெள்ளைக்கார அரசாங்கத்தை அப்படியே மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேற்றி விட்டுத் தோழர் ராஜகோபாலாச்சாரியாரை கவர்னர் ஜெனரலாகவும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்களைக் கவர்னர்களாகவும் நியமிக்கப் போகிறோம் என்றெல்லாம் உளறிக் கொட்டினார்கள். (Constitutional Assembly) அதாவது ஜனநாயக சபை கூட்டிஅதன் மூலம் இந்திய சுயராஜ்யத் திட்டத்தை ஏற்படுத்தப் போவதாகவும், தற்பொழுது பார்லிமெண்டாரால் கொடுக்கப் போகும் சீர்திருத்தத்தை அடியோடு நிராகரிக்கப் போவதாகவும் வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் மாத்திரம் நடுநிலமை வகிக்கப் போவதாகவும் பொது ஜனங் களிடம் கூறி ஓட்டு வாங்கினார்கள். அரசியல் சீர்திருத்தத்தை நிராகரிப்பதும், ஜனநாயக சபை கூட்டுவதும் தவிர வேறு காரியங்களில் காங்கிரஸ்காரர்கள். தற்பொழுதைய சட்டசபையில் தலையிடப் போவதில்லை என்றுகூடக் கூறினார்கள். ஆனால் சென்ற 5, 6, 7-ந் தேதிகளில் இந்திய சட்டசபையில் நடந்த விவாதங்களிலிருந்தும், 7 ந் தேதி காங்கிரஸ்காரர்களின் திருத்தத் தீர்மானங் களுக்கு ஏற்பட்ட கெதியிலிருந்தும், காங்கிரஸ்காரர்களின் ஆர்ப்பாட்டங் களெல்லாம் “புஸ்” என்று புகைந்து போன சங்கதி தெரிந்துவிட்டது காங்கிரஸ்காரர்கள் அரசியல் திட்டத்தை நிராகரிப்பதாகக் கூறுவதும், ஜனநாயக சபையைக் கூட்டப் போவதாகக் கூறுவதும், வகுப்புத் தீர்ப்பு விஷயத்தில் பேடிகளாக இருப்போம் என்று கூறுவதும், சுத்த ஹம்பக்கான விஷயங்களென்றும், இவைகள் நடைபெறாத விஷயங்களென்று தெரிந்துங் கூடப் பொது ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுவதற்காகவே ஜாலம் பண்ணுகிறார்களென்றும் தேர்தல் காலத்திலேயே பலர் பல தடவை எடுத்துக் கூறியிருக்கின்றனர். இப்பொழுது அவ்விஷயம் சர்ச் லைட்டு போல் வெளியாகிவிட்டது.
சென்ற மூன்று நாட்களும் நடைபெற்ற இந்திய சட்டபை விவாதத்தில், ஒரு காங்கிரஸ்காரராவது, மறந்துகூட, நாக்குத் தடுமாறிக் கூட ஜனநாயக
குடி அரசு - 1935 (1) 112
சபை கூட்டும் விஷயத்தைப் பற்றிய ஒரு எழுத்தைக்கூட உச்சரிக்கவில்லை என்பதை அறியலாம். இதைப் பற்றி உள்நாட்டு மந்திரி சர். ஹென்ரி கிரெயிக் பேசும்போது,
தேர்தல் காலத்தில் காங்கிரஸ்வாதிகள், அரசியல் விஷயமாக, ஜனநாயக சபையைக் கூட்டப் போவதாகக் கூறினார்கள். ஆனால் சென்ற இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ்காரர் அல்லாத ஒருவரைத் தவிர மற்ற எவரும், (அதாவது ஒரு காங்கிரஸ்காரர்கூட) ஜனநாயக சபை கூட்டும் விஷயத்தைப் பற்றிக் கூறவே இல்லை. இதிலிருந்து நிலை நிற்காமல் மறைந்து போகும் நிழல் போன்ற ஒரு கொள்கையைக் காங்கிரஸ்காரர்கள் பின்பற்றாமல் விட்டுவிட்டார்களென்று தெரிகிறது
என்று பேசியிருப்பதன் மூலம் காங்கிரஸ்காரர் தங்கள் வாக்குறுதியை காற்றுவாக்கில் விட்டுவிட்ட சங்கதியை வெளிப்படுத்தியிருக்கிறார். உள்நாட்டு மந்திரி இவ்வாறு கூறும்போது சில காங்கிரஸ்காரர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஏதோ தாங்களே முணுமுணுத்துக் கொண்டார்களாம். பாவம்!
இவ்வாறு ஜனநாயக சபை கூட்டும் விஷயந்தான் அழுவார் அற்ற பிணமாகி விட்டதென்றால் அடுத்த இரண்டு விஷயங்களும் அடைந்த
கதியும் பரிதவிக்கத் தகுந்ததே யாகும். பார்லிமெண்டு கமிட்டி அறிக்கையை ஒப்புக்கொள்ள முடியாதெனக் காங்கிரஸ் சார்பில் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும், சமூகத் தீர்ப்பு விஷயத்தில் நடுநிலமை வகிக்க வேண்டுமென காங்கிரஸ் சார்பில் கொண்டு வந்த திருத்தத் தீர்மானமும் பெருவாரியான ஓட்டுகளால் நிராகரிக்கப்பட்டன. காங்கிரஸ்காரர்கள் எவற்றைச் சாதிக்கப் போவதாகப் பிதற்றிவிட்டுச் சட்டசபைக்குச் சென்றார்களோ அவற்றில் முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் உட்காரும் மாதிரியான தோல்வியை அடைந்தார்கள். இனி அவர்களுடைய திட்டம் என்ன? என்று பொது ஜனங்கள் கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது
அன்றியும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ்காரர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும், மனக் கசப்புகளும், அபிப்பிராயங்களும் பலவாகும். அவற்றைப் பற்றிய செய்திகள் ஒவ்வொரு நாளும், பத்திரிகை நிருபர்களால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
கூட்டுக் கமிட்டி அறிக்கையை நிராகரிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் காரர்களுக்குள்ளேயே ஏகப்பட்ட தகராறுகள் இருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெரும்பான்மையான காங்கிரஸ் மெம்பர்கள் நிராகரிப்புக்கு எதிராக இருக்கின்றார்களாம். ஒரு சிலர், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை மீறக் கூடாது என்று அபிப்பிராயப் படுகின்றார்களாம். சீர்திருத்தத்தை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்கும்,
W ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
பெரும்பாலான காங்கிரஸ் மெம்பர்கள் சாதகமாகவும்,ஒரு சிலரே பாதகமாகவும் இருப்பதாக வெளிப்படுகிறது. இவ்வாறு வெளிப்பட்டிருக்கும் செய்திகள் முற்றும் உண்மை என்பதற்கு, காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் கொண்டு வந்த "பார்லிமெண்டு கமிட்டி அறிக்கையை ஒப்புக் கொள்ளுவ தில்லை” என்ற திருத்தத் தீர்மானமே போதுமான அத்தாட்சியாகும் உண்மையில் பா.மெ.க. அறிக்கையை நிராகரிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் மெம்பர்களுக்குள் ஏகோபித்த அபிப்பிராயம் இருந்தால் இத்தகைய திருத்தம் வந்திருக்க முடியுமா? பா.மெ.க. அறிக்கையை அடியோடு நிராகரிப்பதாக ஒரு திட்டமான திருத்தத்தை தைரியமாகக் கொண்டு வந்து தங்களுடைய ஆண்மையைக் காட்டித் தேர்தல் காலத்தில் பொது ஜனங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்க மாட்டார்களா? இவ்விஷயத்தைச் சட்ட மந்திரியான, சர்.என்.என்.சர்க்கார் அவர்களும்
புதிய அரசியல் திட்டத்தை ஏற்று நடத்த முடியாது என்று ஒரு தீர்மானத்தைத் திட்டமாக வெளியிட்டிருந்தால் அது சுயமரியாதைக்கு அழகாகும். ஆனால் காங்கிரஸ்காரர்கள் அவ்விதம் செய்யவில்லை. காங்கிரஸ் அங்கத்தினர்களில் ஒருவராவது புதிய அரசியலை ஏற்று நடத்த முடியாது என்று சொல்லவும் இல்லை. அப்படியிருக்க வீரத்துடன் பிரயோஜனம் இல்லாத் தீர்மானங்களைப் பிரரேபிக்க வேண்டிய அவசியம் என்ன?
என்று எடுத்துக்காட்டி காங்கிரஸ்காரரின் குட்டை வெளியாக்கிவிட்டார். ஆகவே காங்கிரஸ் தேர்தல் காலத்தில் கூறியது என்ன? சட்டசபைக்குப் போனதும் நடந்து கொண்டது என்ன? என்பதைப்பற்றிச் சென்ற வாரம் இந்தியா சட்டசபையில் நடந்த நாடகங்களைக் கொண்டு நன்றாகப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ்காரர்கள் தாங்கள் கூறும் வாக்குறுதிகளையெல்லாம் ஏமாற்றும் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே கருதியிருக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்
இனித் தோழர் ஜின்னா அவர்களின் தீர்மானங்களைப் பற்றி
மாத்திரம் கூறி நிறுத்துகின்றோம்.
பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் அளிக்கப்பட்டிருக்கும் சமூகத் தீர்ப்பை ஆதரிப்பதாக தோழர் ஜின்னா அவர்கள் கொண்டுவந்த திருத்தத் தீர்மானம் பெருவாரியான ஓட்டுகளால் நிறைவேறியது. 15 பேர்கள் தான் இதை எதிர்த்திருக்கின்றார்கள். தீர்மானத்தை ஆதரித்தவர்கள் 68 பேர். நடுநிலமை வகித்த காங்கிரஸ்காரர் 43 பேர்.
நம்மைப் பொறுத்தவரையிலும், நமது நாட்டில் வகுப்பு வேற்றுமைகள் நிலைத்திருக்கும் வரையிலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் இருந்துதான் தீரவேண்டும் என்பதே முடிவான அபிப்பிராயமாகும் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் ஆகும்
குடி அரசு - 1935 (1) 114
உண்மையில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தினால், நன்மையடை கின்றவர்கள், மைனாரிட்டி வகுப்பினர்கள் என்பதை மறுக்க முடியாது ஆனால், இது வரையிலும் சிறு மீன்களெல்லாம் பெரிய மீன்களுக்கு இரையாவது போல, மைனாரிட்டி வகுப்பினர்களின் உரிமைகளையும் தாங்களே ஏகபோகமாக ஆண்டு அநுபவித்து வந்த மெஜாரிட்டி
வகுப்பினர்க்கு அதாவது அவர்களுடைய சுயநலத்திற்கு கொஞ்சம் ஆபத்து ஏற்படுகிறதென்பதும் உண்மை தான். இதனால்தான் மெஜாரிட்டி வகுப்பினருடைய ஸ்தாபனமான இந்து மகாசபை வகுப்புத் தீர்ப்பை பலமாகக் கண்டிக்கிறது. அதற்கு அண்ணனாக இருக்கிற காங்கிரஸ் தன்னோடு சில முஸ்லீம்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதனால் வகுப்புத் தீர்ப்பை வெளிப்படையாகக் கண்டிக்க ஆண்மையில்லாமல் நடு நிலமை வகிப்பதாகப் பாசாங்கு பண்ணுகிறது. ஆனால் காங்கிரசைச் சேர்ந்த எல்லா. இந்து அங்கத்தினர்களும், வகுப்புத் தீர்ப்பைப் பலமாக கண்டிக்கிறார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இதுபோலவே காங்கிரசைச் சேர்ந்த முஸ்லீம் அங்கத்தினர்கள் வகுப்புத் தீர்ப்பைப் பலமாக ஆதரிக்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இக்காரணத்தாலேயே காங்கிரஸ்காரர் பண்டிட் மாளவியாவிடம், வகுப்புத் தீர்ப்பை ஆதரிக்கும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதாகக் கூறியிருந்தும் நடுநிலைமை வகிக்கும்படி நேர்ந்தது
இந்த நிலையில் சட்டசபையில் வகுப்புத் தீர்ப்பை எதிர்த்து ஓட்டுக் கொடுத்த 15 பேர்கள் யார் என்பதைப் பற்றியும், இவ்விஷயத்தில் நடுநிலமை வகித்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றியும் நாம் இன்னும்
விரித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்
அடுத்தபடியாக, “ஐக்கிய சர்க்கார் ஏற்படுத்தும் முறையை விட்டு இந்திய சர்க்காரில் பூரண பொறுப்பாட்சியளிக்க வேண்டும்” என்று தோழர் ஜின்னாவால் கொண்டுவந்த திருத்தத் தீர்மானமும் பெருவாரியான ஓட்டுகளால் நிறைவேற்றப்பட்டிருப்பதும் நம்மால் கவனிக்கக் கூடியதாகும்.
ஐக்கிய ஆட்சி, அதாவது சுதேச சமஸ்தான மன்னர்களும், இந்திய முதலாளிகளும் சேர்ந்து ஏழை மக்களை அடக்கி ஒடுக்கி ஆளக் கூடிய ஆட்சியானது, இந்திய முதலாளிகளால் மாத்திரம் ஆளக் கூடியதாக அமையும் பூரண பொறுப்பாட்சியைக் காட்டிலும் பெருத்த ஆபத்தான தென்றே ஆரம்ப முதல் கூறி வருகிறோம். இந்திய சமஸ்தானங்களே இல்லாமல் ஒழிந்தால்தான் இந்தியாவிற்கு இந்திய ஏழை மக்களுக்கு விடுதலை பெற வழியுண்டு என்னும் உறுதியான அபிப்பிராயம் உடைய
நாம் எப்படி பெடரல் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படுகின்ற ஐக்கிய ஆட்சியை ஒப்புக் கொள்ள முடியும் என்று கேட்கின்றோம்
தோழர் காந்தியும், காங்கிரசும் சமஸ்தானமன்னர்களும், அவர்களுடைய பிரதிநிதிகளும், பிரிட்டிஷ் இந்தியப் பொது ஜனங்களின் மேல் அதிகாரம் s வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
செலுத்தக்கூடிய ஐக்கிய ஆட்சியை ஆரம்ப காலத்தில் ஒப்புக் கொண்டதி லிருந்து அவர்கள் ஏழை மக்களின் விடுதலைக்கு நேர் விரோதிகள் என்றும், இந்தியாவில் முதலாளிகளின் ஆதிக்கமே பரம்பரையாக நிலைத்திருக்கப் பாடுபடுகின்றவர்களென்றும் நாம் கூறிக் கண்டித்து வருகின்றோம். ஆகவே இந்தியாவிலுள்ள ஏழை மக்களின் விடுதலைக்குப் பாதகமான ஐக்கிய அரசாட்சி ஏற்படுவதைக் கண்டித்துச் செய்த தீர்மானத்தைப் பொறுத்த வரையிலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்
இனி காங்கிரஸ்காரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும், சமஸ்தான மன்னர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசி வந்த தோழர் காந்தியவர்கள் என்ன செய்யப் போகின்றார் என்பதையும் அறிய ஆசைப் படுகிறோம். ஆகவே அவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி மாறிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றன என்பதையும் அவர்கள் இது வரையிலும் எவ்வளவு கரணங்கள் போட்டிருக்கிறார்கள், போடப் போகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொண்டு வருமாறு பொது ஜனங்களுக்கு நினைப்பூட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.02.1935
குடி அரசு - 1935 (1) 116
அணியாயம்! அணியாயம்!!
அரிசிக்கு வரி போடுவது
அணியாயம்!!1
காங்கிரஸ்காரர்கள் கூப்பாட்டுக்கு பயந்து இந்திய சர்க்கார் அரிசிக்கு வரி போடப்போகிறார்களாம். இதைத் தொழிலாளிகளும், சம. சங்கங்களும் கண்டித்து அரிசிக்கு வரி கூடாதென்று தீர்மானித்து வைசிராய்க்கு அனுப்பவேண்டுகிறோம்
குடி அரசு - பெட்டிச் செய்தி - 17.02.1935
ப்ர ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது
ஆரியர்கள் இந் நாட்டுக்கு வந்து குடியேறுவதற்கு முன் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையைப் பற்றியும், அவர்களது மதம், தெய்வ வழிபாடு என்பவைகளின் மாதிரியைப் பற்றியும், பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றபடி பார்ப்போமானால் தமிழ் மக்களின். அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை எல்லாம் பெரிதும் இஸ்லாம் மதத்தையும், ஒரு சில கொள்கை மட்டும் கிறிஸ்தவ மதத்தையுமே ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம்
இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வருவதாகக் காணப்படும் கோஷா முறை என்னும்படியான பெண்களுக்கு மூடி இடும் கொடுமை இல்லாமல் அவர்கள் தாராளமாய் ஆண்களைப் போல் வெளியில் ஊசலாடவும், உலக விவகாரத்தில் ஆண்களைப்போல் கலந்து கொள்ளவுமான முறை இருந்திருக்குமானால் இன்றைய “வைதீகத்” தமிழ் மக்கள் வேண்டும் சீர்திருத்தங்கள் உள்பட சகல அபிலாகைகளுக்கும் இஸ்லாம் மார்க்கத்தில் இடம் இருக்கின்றன என்று சொல்லலாம்
சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதில் பெரிதும் இல்லையானாலும் இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாராளமாய் இடமிருக்கின்றது
இந்துக்கள் என்கின்றவர்கள் இஸ்லாமியர்களைத் தாழ்ந்த சாதியாகக்
கருதி, மிலேச்சர் என்று பெயரிட்டு அவர்களுடன் எந்த காரணத்தை முன்னிட்டும் நெருங்குவதற்கு இல்லாமல் செய்து விட்டதாலும், இஸ்லாமியர்களும் தற்காப்புக்காகவும், தங்கள் சுயமரியாதைக்காகவும்,
தங்கள் சமூக லட்சியத்தையே பிரதானமாய்க் கருத வேண்டியவர்களாய் இருந்து விட்டதாலும் இருவர் பழக்க வழக்கமும் நாகரீகமும் கலப்பதற்கு
இடம் இல்லாமல் தனித்தனியே பிரிந்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு ஒருவரிடம் ஒருவருக்கு அவநம்பிக்கையும், பொறாமையும், துவேஷமும் உண்டாகவும் இடமேற்பட்டுவிட்டது
குடி அரசு - 1935 (1) 118
ஆனால், பழக்க வழக்கங்களில் ஆரியர்களுக்கும், தமிழர்களுக்கும்
இருக்கும் வித்தியாசங்களிலும், வேற்றுமைகளிலும், பிரிவினைகளிலும், 100-ல் ஒரு பாகம்கூட இஸ்லாமியர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இல்லை என்றே சொல்லி விடலாம்.
பழந்தமிழர் கொள்கை என்பவைகளுக்கு முகமது நபிகளின் கொள்கைகள் என்பவை எவ்வெவ் விஷயத்தில் மாற்றமாயிருக்கின்றன. என்று கேட்கப்படுமானால் தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பழந் திராவிடர்கள் வரை: உள்ள தமிழ் மக்கள் என்ன பதில் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்
முகமதுநபி கொள்கையும், திராவிடர் கொள்கையும், கடவுள் என்னும் விஷயத்தில் ஒரு மாதிரியான கருத்துத்தான் கொண்டு இருக்கிறது என்றாலும் கண்டிப்பாய் பேசப் போனால் முகமது நபி கடவுளைவிட பழந் திராவிடர்கள் கடவுள் ஒரு படி சீர்திருத்தம் கொண்ட கடவுள் என்று கூடச் சொல்லலாம். முகமது நபி மக்கள் யாவரையும் எல்லாத் துறையிலும் சமம் என்றும் சகோதரர்கள் என்றும் எப்படி கருதுகிறாரோ அப்படியே தான். பழந்தமிழ் மக்களும் கருதியிருப்பதாய் பண்டிதர்கள் சொல்லுகின்றார்.
மண விஷயத்தில் ஆரிய மதக் கொடுமையில் 100-ல் ஒரு பங்குகூட இஸ்லாம் மதத்தில் இருப்பதாய்ச் சொல்ல முடியாது. ஏனெனில் மணமக்கள் இஷ்டப்பட்ட பெண்ணையும் இஷ்டப்பட்ட மாப்பிள்ளையுமேதான் இருபாலும் மணக்க முடியும் என்று முஸ்லீம்கள் சொல்லுகிறார்கள். ஆனால் கோஷா முறை இருக்கையில் இஷ்டப்படுவதற்கும், இஷ்டப்படாமல் இருப்பதற்கும் எதை ஆதாரமாய்க் கொள்ளுவது என்பது நமக்கு விளங்கவில்லை என்றாலும் கோஷா முறை ஒழியுமானால் அக் கொள்கைகள். அனுபவத்தில் வருவதற்கு தாராளமாக இடமுண்டு.
முஸ்லீம்கள் ஆட்சி உள்ள மற்ற தேசங்களில் பெரும்பாலும் தம்பதிகள் இஷ்டப்படியே தான் திருமணங்கள் நடந்து வருகின்றன. இவ்விஷயங்களில் கிறிஸ்தவ மதக் கொள்கை ஒரு அளவுக்கு ஒத்து வருகின்றது என்றாலும், ஆரிய உணர்ச்சியும், சம்பிரதாயங்களும் மதக் கொள்கைகள் விஷயங்களிலும் வழிபாட்டு விஷயங்களிலும் பெரிதும் கலந்திருக்கின்றன. கிறிஸ்தவ மதக் கொள்கையானது ஆரிய மதத்திலிருந்து ஒரு சிறிது சீர்திருத்தப்பட்டவை ஆனதினால் அதில் ஆரிய சம்பிரதாயமும் வழிபாடு முறைகளும் கலந்திருப்பதில் ஆச்சரியமில்லை.
முகமது நபி கொள்கையானது கிறிஸ்தவ மதத்திலிருந்து சீர்திருத்தம் செய்யப்பட்டது என்று சொல்லப்பட்டாலும் மறைந்து போக இடமேற் பட்டிருப்பதுடன் கூடிய வரை தாராள நோக்கம் காண்பிக்கப்பட்டிருக்கிறது
1500 வருடங்களுக்கு முன் உலக நிலையையும், மக்களின் பிராயத்தையும் அறிந்த ஒருவனுக்கு முகமது நபியின் கொள்கை
9 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
அப்போதைய நிலைக்கு எவ்வளவு புரட்சிகரமானது என்பதும் எவ்வளவு துணிவுடனும், வீரத்துடனும் செய்யப்பட்டது என்பதும் விளங்கும்
முகமது நபியின் கொள்கைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கமானது
15 நூற்றாண்டையே ஆயுளாகக்கொண்டிருந்தாலும்அது தாராள நோக்கத்தோடு இருந்திருக்குமானால் இன்று உலகம் பூராவையும் அதாவது 200 கோடி மக்களையும் அது தன்னுள் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டியதாகும்
ஆனால் இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத ஒரு அபிப்பிராயத்தைப் புகுத்தி அதைக் கட்டுப்படுத்திவிட்டதால் போதிய வளர்ச்சியில்லாமல் போய்விட்டது
அதாவது “1500 வருஷத்திற்கு முன் சொன்னது எதுவோ அதுதான். இன்னமும், லக்ஷத்து ஐம்பதினாயிரம் வருஷம் பொறுத்தும் இருக்க வேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறு மாறுதல் கூட செய்ய முடியாது என்பதோடு செய்ய இடம் கொடுக்கப்பட மாட்டாது” என்றும் சொல்லி வருகின்ற முரட்டுப் பிடிவாதமே மக்களை அதன் பெருமையை உணர முடியாமல் செய்து விட்டது
கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி ஒத்துப் போவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் இடமில்லை என்றால் அப்படிச் சொல்கின்றவர்கள் எவ்வளவு பக்திவான்௧ளானாலும் முகமது நபிக்கு நீதி செய்தவர்களோ அவருக்கு பெருமையளித்தவர்களோ ஆக மாட்டார்கள் என்றே சொல்லுவோம்
சர்வ வல்லமை சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்பவரை நம்பும் ஒரு வெறி பிடித்த ஆஸ்திகர்கூட “கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தார். மனிதன் அதை உபயோகித்து நல்வழியில் நடக்க வேண்டியது மனிதனுடைய கடமை'' என்று எப்படிச் சொல்லுகிறானோ - இப்படிச் சொல்வதால் அவன் எப்படி கடவுள் சக்திக்கு குறை கூறினவன் ஆவதில்லையோஅதுபோல் எவ்வளவு வெறிபிடித்த இஸ்லாமியனானாலும் முகம்மது நபி அவர்கள் மக்களுக்கு ஒளியைக் கொடுத்தார். பழய கட்டுப்பாடுகளை, கொடுமைகளை உடைத்து சுதந்திரமாக்கினார். அதிலிருந்து மனிதன் எதற்கும் அடிமையாகாமல் காலத்துக்கு ஏற்றப்படி சுதந்திரமாய் நடந்து கொள்ள வேண்டும்'' என்று சொன்னால் அவன் முகமது நபிக்கோ அல்லது இஸ்லாம் மார்க்கத்துக்கோ நம்பிக்கையற்றவன் ஆகிவிடுவானா என்று கேட்கின்றோம்.
இன்று கிருஸ்தவ மதத்துக்கு உள்ள செல்வாக்கெல்லாம் கிருஸ்து எப்படி சொல்லி இருந்தாலும் பைபிளில் எப்படி இருந்தாலும் கால தேசவர்த்தமானங்களுக்கும் சமய சந்தர்ப்பங்களுக்கும் தக்கபடி துணிவோடு நடந்து கொண்டு தங்களை கிருஸ்தவர்கள் என்றும் பைபிளைக் கொள்கை யாகக் கொண்டவர்கள் சொல்லிக் கொள்ளுவதினாலேயேயாகும்
குடி அரசு - 1935 (1) 120
மற்றும்கிருஸ்தவர்களில் பெரும்பான்மைமக்கள் தங்கள் வாழ்க்கையில், நடவடிக்கைகளில், மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் தன்மைகளில், தங்களது வேஷங்களில் எதற்கும் கிருஸ்துவையாவது பைபிளையாவது கொண்டு வந்து போட்டுக் கொண்டு கஷ்டப்படுவதே கிடையாது.
மேற்கண்ட இந்தநடவடிக்கைகளுக்கும், கிருஸ்துவுக்கும், பைபிளுக்கும் சம்மந்தமில்லை என்று கருதுவதோடு தங்களின் பகுத்தறிவையும், சமய சந்தர்ப்பங்களையுமே பிரதானமாய்க் கருதி அதன்படி நடந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஆரியர்களும் அதுபோலவே தங்கள் வேதங்களோ, சாஸ்திரங்களோ மற்ற மதக் கொள்கைகளோ எப்படி இருந்தாலும் ஒரு அளவு வேஷத்தில் காட்டிக் கொள்வதைத் தவிர மற்ற எந்தக் காரியங்களுக்கும் அவற்றை சிறிதுகூட லட்சியம் செய்யாமல் காரியத்திலே கண்ணாய் இருப்பதால் அவர்கள் சிறிதுகூட அஸ்திவாரமும் பகுத்தறிவுக்கு பொருத்தமும் இல்லாத கொள்கைகளின் பேரால் இவ்வளவு ஆதிக்கம் பெற்று வருகிறார்கள்.
இந்தக் குணம் முஸ்லீம் சமூகத்தில் இருந்துவிடுமானால் இன்று உலகில் முஸ்லீம் சமூகத்தைவிட வேறு சமூகம் இருப்பதற்கு இடமில்லாமல் போவதோடு 200 கோடி மக்களையும் இஸ்லாம் மார்க்கமே அரசியல், சமூகவியல், பொருளாதார இயல் ஆகிய எல்லாவற்றிலும் ஆதிக்கம் பெற்று இருக்கும் என்றும் சொல்லலாம்.
உலக முழுவதிலும் உள்ள மக்கள் சமூகம் எல்லாம் ஒரே கூட்டத்துக்குள் வரவேண்டும் என்பதில் ஆரியர்கள் மதம் என்பது ஒன்றைத் தவிர உலகில் உள்ள வேறு எந்த மதக்காரருக்கும் ஆக்ஷேபணை இருக்கும் என்று நாம் கருதவில்லை.
ஒவ்வொரு மதக்காரர்களும், உலக மக்கள் எல்லோரையும் தங்கள் மதக்காரர்களாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்பதிலும் எல்லோரையும் சமமாய்ப் பாவிக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். என்பதிலும் சிறிதும் ஆக்ஷபணை இருக்காது என்றே கருதுகின்றோம்.
இன்று எந்த மதக்காரனும் அவனவன் இஷ்டப்பட்டதைச் சாப்பிடு கிறான். அவனவன் இஷ்டப்பட்டவர்களைப் புணருகிறான். என்றாலும் ஒரு மதக்காரன்கூட மனிதனை மனிதன் அடித்துத் தின்பது என்பதை செய்வ தில்லை. ஒரு மதக்காரனும் தங்களைப் பெற்றத் தாயாரையும், தன்னுடன் பிறந்த சகோதரியையும், தான் பெற்ற பெண்ணையும் பெண்டாய்க் கொள்ள வேண்டும் என்றும் சொல்லுவதில்லை. சாதாரணமாய் செய்வதும் இல்லை என்றும் சொல்லி விடலாம். மற்றப்படி உலக நடப்புக்கும், தோற்றத்துக்கும், தங்களுக்குத் தெரியாத அல்லது தாங்கள் அறியமுடியாத ஏதோ ஒரு சக்தியோ அல்லது சக்தி பொருந்திய இயற்கைத் தன்மையோ இருக்கின்றது என்பதை எல்லா மதக்காரர்களும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். மட்ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
ஆகவே உலகில் மக்கள் சமூகத்தில் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்குள்ளாகவே மதம் காரணமாய் 1008 பிரிவினைகள். ஏன்இருக்கவேண்டும்என்பது நமக்குவிளங்கவில்லை. அதுவும், பிரிவினைக்கு முக்கிய காரணங்களாக அவ்வவ் மதக்காரர்களின் தெய்வங்களும், வழிபாடு முறைகளும், அத் தெய்வங்களின் கட்டளைகளும், அத் தெய்வ தூதர்களும், அத் தூதர்களின் உபதேசங்களும் ஆகியவைகளின் பேராலேயே ஆதாரங்கள் இருக்குமானால் ஆஸ்தீக மதங்களுக்கும், ஆஸ்திக மக்களுக்கும் இதைவிட வேறு என்ன கேவலமும் அவமானமும் முட்டாள்தனமும் வேண்டும் என்பது நமக்குப் புலப்படவில்லை என்பதோடு இம் மதங்கள். உண்மையானவைகள் அல்ல என்பதற்கும், பெரிதும் கற்பனைகள் என்பதற்கும் வேறு ஆதாரங்கள் வேண்டுமா என்றும் கேட்கின்றோம்
மதமும் வழிபாடும் மனித சமூக சாந்திக்கும் சுதந்திரத்துக்கும் முட்டுக்கட்டையாய் இருப்பதாகக் கருதும் ஒருவன்கூட அம்மதமும் வழிபாடும் ஒழிந்து தொலைய வேண்டும் என்று கருதுவதற்கு உரிமை அற்றவன் என்று சொல்லப்படுமானாலும் உலகம் பூராவுக்கும், ஒரே மதமும் ஒரே வழிப்படு பொருளும் இருக்க வேண்டும் என்று கருதுவதற்காவது உரிமை யில்லையா என்று கேட்பதோடு.
மதக்காரர்கள் இந்த அளவுக்காவது இணங்கி வர வேண்டியது அவர்களுடைய மத நம்பிக்கைக்கும் வழிபடு பொருள் நம்பிக்கைக்கும் அத்தாட்சியல்லவா என்று கேட்கின்றோம்
வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு வாயில் வந்ததைப் பேசிக் கொண்டு வாழ்நாள் கழிப்பதே மதக்காரர்கள் - ஆஸ்திகர்கள் ஆகியவர்களின் கடமையாய்
இருந்தால் இதற்கு மதமும், ஆஸ்திகமும் அவசியமா என்று கேட்கின்றோம் ஆகவே இயற்கை மதம் என்றும், பகுத்தறிவு மதம் என்றும் சொல்லிக் கொள்ளும் சமீபகால சீர்திருத்த மதக்காரர்களாகிய முஸ்லீம்கள் உலக மக்கள் பூராவையும் ஒரு மதக் குடையின் கீழ் கொண்டு வருவதற்குத் தக்க வண்ணம் இணங்கி கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றப்படி நடந்து கொள்ள. உரிமையுள்ளபடி முகமது நபியின் உபதேசத்துக்கு வியாக்கியானம் தந்து சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டார்களானால் ஒரு அளவுக்காவது வெற்றி பெறக் கூடும் என்றும், பழந்தமிழ் மக்களும் தங்கள் மதம் வேறு, முஸ்லீம்
மதம் வேறு என்று சொல்லிக் கொள்வதற்கு இடமில்லாத நிலைமையில் கலந்து கொள்ளக்கூடும் என்றும், இதன் பபனாகவாவது தங்கள் மீது சுமத்தி தங்களை இழிவுபடுத்திக் கொடுமைக்குள்ளாக்கி இருக்கும் ஆரிய மத விலங்கிலிருந்து விடுபடக்கூடும் என்றும் கருதுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 24.02.1935
குடி அரசு - 1935 (1) 122
அன்ணிய அரிசிக்கு வரி விதிப்பது அணியாயம்
அன்னிய அரிசிக்கு வரி போடுவதனால், அரிசி விலை உயர்ந்து விடும் என்றும், அதனால் ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் கஷ்டம் ஏற்படும் என்றும், நாம் சென்ற வாரம் விரிவாக எழுதியிருந்தோம் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கப் போகிறார்கள் என்ற விஷயம் தெரிந்தவுடனேயே அரிசியின் விலை மூட்டைக்கு 2 ரூபாய் ஏறி விட்டது தொழிலாளிகளுக்கும் ஏழைகளுக்கும் இப்பொழுதே கஷ்ட காலம் ஆரம்பித்துவிட்டது
21.2.35-ல் சென்னையில், இந்திய அலுமினியம் சங்கத் தொழிலாளர்கள் ஆதரவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னிய அரிசிக்கு
வரி விதிக்கக் கூடாதென்றும் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும்படி இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் பணக்காரர்களின் நன்மையை மாத்திரம் கருதி அரிசிக்கு வரி விதித்து இறக்குமதியைத் தடுக்க வேண்டும் என்று நிறைவேற்றிய தீர்மானத்தைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.
20.2.35-ல் கூடிய சென்னை மாகாணத் தொழிற் கட்சியின் கமிட்டிக் கூட்டத்திலும் அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
மற்ற இடங்களில் உள்ள தொழிலாளர்களும், சுயமரியாதைக்காரர் களும், ஏழைகளின் மேல் இரக்கம் உள்ளவர்களும், உடனே கூட்டம் போட்டு அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றி வைசிராய்க்கு அனுப்பும்படி வேண்டுகின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.02.1935
மந ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
சம்பளத்தைப் பற்றி சர்க்காருக்கு ஏன் இவ்வளவு கவலை
வரி கட்ட முடியவில்லை என்கின்ற கூச்சல் பொதுவாக எல்லா வகுப்பு மக்களிடமிருந்தும் கிளம்பிக் கொண்டே இருக்கிறது
இந்திய சட்டசபையிலும் மாகாண சட்டசபையிலும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்கள் சகல வித வரிகளையும் குறைக்க வேண்டும் என்று கூப்பாடு போட்ட வண்ணமாய் இருக்கிறார்கள். சர்க்காராரும், “ஒவ்வொன்றையும் அனுதாபத்தோடு கவனித்துத் தக்கது செய்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே வருகிறார்கள். சில இனத்தில் குறைப்பதாகவும் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க மற்றொரு புறத்தில் செலவுக்குப் பணம் போதவில்லை என்று நெருப்புப் பெட்டி போன்றவைகளுக்குப் புதிய
வரிகளும் போடுகிறார்கள். காலணா கார்டை முக்காலணாவும், அரையணா கவர் ஒன்றே காலணாவும் ஆக்கினார்கள். இதுவும் தவிர விளை பொருள்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்கின்றது என்பதை சர்க்காரே ஒப்புக்கொண்டு உணவுப் பொருள்கள் மீதும் வரி போட வேண்டுமென்று கருதுகின்றார்கள்.
இவ்வளவும் அல்லாமல் மக்கள் நலனுக்காக செய்ய வேண்டிய சுகாதாரம், கல்வி, போக்கு வரவு சாதனங்கள், நீதி இலாக்கா ஆகியவை களுக்கு செய்ய வேண்டிய இன்றியமையாத காரியங்களைக்கூடச் செய்வதற்கு பணம் இல்லை என்று சர்க்காரும் மந்திரிமார்களும் ஒப்பாரி வைத்து அழுகின்றார்கள்.
இப்படிப்பட்ட இந்த நிலையில் சர்க்கார் சிப்பந்திகள் அதாவது மாதம் 100, 500, 1000, 4000, 5000 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தில் ரூபாய்க்கு ஒரு காசு கூடக் குறைக்கக் கூடாது என்றும், முன்னால் எப்பவோ குறைத்ததைக்கூட இப்போது இப்படிப்பட்ட கஷ்ட காலத்தில் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுவதானால் இந்த சர்க்கார் கொள்கையின் மனப்பான்மையைப் பற்றி என்ன சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை.
குடி அரசு - 1935 (1) 124
சர்க்காரின் இப்படிப்பட்ட மனப்பான்மையைக் கண்டித்து பஞ்சாப் மாகாண இந்திய வர்த்தக சங்கத்தார் சர்க்காருக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாகத் தெரிய வருகின்றது. இவ்வளவு இருந்தும் சர்க்கார் ஒன்றுக்கும் அஞ்சாமல் வரிப் பணத்தை சர்க்கார் சிப்பந்திகளுக்கு அள்ளிக் கொடுப்பதில் இவ்வளவு தாராளமாகவும், துணிகரமாகவும் இருப்பதற்குக் காரணம் இந்த நாட்டு மக்கள் மீது சர்க்காருக்கு நம்பிக்கை இல்லாததுதான் என்று நினைக்க வேண்டி யிருக்கிறது
நம்நாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் காங்கிரசின் பேரால் பொறுப்பற்றதனமாய் கூப்பாடு போட்டதும் போக்கிரித்தன. மாகவும், காலித்தனமாகவும் நடந்து கொண்டதுமான நடவடிக்கைகளே சர்க்காரின் இப்படிப்பட்ட சகிக்க முடியாத விஷயத்தை நியாயமாக்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
சர்க்காரார் எங்கெங்கு மக்களுக்கு சீர்த்திருத்தத்தின் பேரால் சுதந்திரமும், செளக்கியமும் கொடுத்து வைத்திருந்தார்களோ அங்கெல்லாம் அவைகளை பார்ப்பனர்கள் துர்வினியோகமும், துஷ்பிரயோகமும் செய்ததாலேயும் அவர்கள் பேச்சை பாமர மூடமக்கள் கேட்டு அறிவில்லாமல் ஆடினதாலேயும் மக்களுக்கு திமிர் வரி போடுவது போல் வரி விதித்து உத்தியோகஸ்தர் சம்பளங்களை ஏராளமாய் இருக்கும்படி கொடுத்து அவர்களையே நம்பிக் கொண்டு ராஜியப் பிரசாரம் செய்ய வேண்டியதாகி விட்டது. இதை தப்பு என்று எப்படி சொல்லுவது
முன்பெல்லாம் சர்க்காருக்கு போலீசுக்கும், பட்டாளத்துக்கும் மாத்திரம் அன்பும் விசுவாசமும் காட்டினால் போதுமானதாய் இருந்தது ஆனால் 1920-ம் வருஷத்து சீர்திருத்தத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடத்திக் காண்பித்த யோக்கியதையின் பலனாய் (முட்டுக்கட்டை போட முயன்றதனால்) தோட்டி முதல் மந்திரிகள் வரை உள்ள எல்லா சிப்பந்தி களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் சர்க்கார் அன்பும் விசுவாசமும் காட்ட வேண்டியதாய் போய்விட்டது. ஆதலால் சம்பளத்தில் ஒரு தூசிகூட குறையக் கூடாது என்கின்ற பிடிவாதமும் துணிச்சலும் சர்க்காருக்கு ஏற்பட வேண்டியதாயிற்று
பார்ப்பனத் தொல்லையும் அவர்கள் காலை நக்கிப் பிழைக்க வேண்டிய அவசியமுமுள்ள பார்ப்பனரல்லாதார் நிலையும் மாறுபடும்வரை இந்திய ஏழை மக்கள், இது மாத்திரமல்ல இன்னும் எவ்வளவு கஷ்டம் அடைய வேண்டியது பாக்கி இருக்கிறதோ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
குடி அரசு - கட்டுரை - 24.02.1935 25— வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
சிவில் கடனுக்கு ஜெயிலா?
ஆண்பின்னை பட்ட கடனுக்கு
பெண்டுபின்ளை பட்டினி கிடப்பதா?
கடன்பட்டு கொடுக்க முடியாமல் போய்விட்டவர்களை சிவில் ஜெயிலில் வைக்கும் முறை அனாகரீகமானதும், மிக்க அனியாயமானதுமான. காரியம் என்று இதற்கு முன் பலமுறை எழுதி இருக்கிறோம்
ஜெயில் என்று சொல்லப்படுவது ஏதாவது ஒரு குற்றம் செய்து தண்டனை அடைந்தவர்களுக்கே உரியதாகும். அப்படிக்கின்றி உலக வாழ்க்கையில் வியாபாரம், விவசாயம், தொழில் முறை முதலிய காரியங்களுக்கு இருதரத்தாரும் லாபத்தை உத்தேசித்து செய்யப்படும் வரவு செலவுகளில் துண்டு விழுந்து கடன் கொடுக்காமல் போய்விட்டால் அதற்காக ஒருவனை ஜெயிலில் வைப்பது என்பது எந்த விதத்தில் நியாயமானது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்து முஸ்லீம் சமூகத்தில், ஏன் ஜர்மனி ஆரிய சமூகத்திலும், ஆண் பிள்ளை வெளியில் சென்று பாடுபட்டு பணம் கொண்டுவர வேண்டியதும், பெண் பிள்ளை சமையலறையையும், படுக்கை வீட்டையும் அலங்கரித்துக் கொண்டிருந்து புருஷனுடன் கூடி பிள்ளைகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருக்க வேண்டியதும்தான் தர்மம் என்றும், சில வகுப்புப் பெண்கள். வாசற்படி கடந்தாலும் கற்பு ஒழுகி விடும் என்றும் சொல்லி அந்தப்படி இருந்து வரும் குடும்பங்களின் தலைவனை - புருஷனை ஏதோ ஒரு கடனுக்காக ஜெயிலுக்கு கொண்டு போய் ஆறு வாரம், ஆறு மாதம் அடைத்து வைத்து விட்டால் இந்தக் குடும்பத்தின் பெண்டு பிள்ளைகள் போகும் கதி என்னஎன்று கேட்கின்றோம். புருஷன்கடன்பட்டால் அவன்பெண்டு பிள்ளைகள் பட்டினி கிடந்து சாக வேண்டுமா? என்று கேட்கின்றோம்
பகுத்தறிவுள்ள மனித சமூகம் என்பதில் இப்படிப்பட்ட முறை இருப்பது கொடிது! கொடிது!! மகா கொடியது!!! என்றுதான் சொல்ல வேண்டும்
அரசாங்கத்துக்காவது பச்சாதாபம் இருக்குமானால் ஜெயிலுக்கு அனுப்பப்படும் சிவில் கைதிக்கு படிகட்டும்படி கேட்பதுடன் அவனது குடும்ப நடப்புக்கு அவசியமான இன்றியமையாத செலவையும் சேர்த்துக் கட்டும்படி டிக்கிரிதாரனுக்கு உத்திரவு செய்யும்படியான விதியை ஏற்படுத்த
குடி அரசு - 1935 (1) 126
வேண்டும். அப்படிக்கில்லாமல் ஒரு சமூக நன்மைக்கு ஏற்றவிதமாகவே விதிகள் செய்து ஜன சமூகத்தில் ஒரு சிறு பகுதி லாபம் சம்பாதிப்பதற்காக
சரி பகுதிக்கு மேற்பட்ட குழந்தைகள் ஆகிய சமூகம் துன்பப்படும்படி விட்டு வைத்துக் கொண்டு இருப்பது நேர்மையான ஆட்சிக்கு தர்மமாகாது
ஆதலால் நமது நாகரீக அரசாங்கம் என்ன காரணத்தினால் இவ்வளவு நாள் கவனிக்காமல் விட்டு இருந்தாலும் அதைப் பற்றி லட்சியம் செய்யாமல் இனி உடனே சிவில் ஜெயில் முறையை ஒழித்துவிட வேண்டியது அவசியமாகும். இதைப் பற்றி ஜனப் பிரதிநிதிகள் ஏதாவது முயர்ச்சி முன்பே எடுத்துக் கொண்டிருக்க வேண்டியது யோக்கியமான. ஜனப்பிரதிநிதிகளின் கடமையாகும். இதுவரை யாரும் சரியானபடி எடுத்துக் கொள்ளவில்லை யாதலால் அரசாங்கத்தாரே ஏதோ ஏழை மக்கள் மீது கருணை வைத்து சென்ற வாரத்திய டில்லி சட்டசபைக் கூட்டத்தில் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். அதை பொது ஜனங்கள் பாராட்ட வேண்டியதாகும்
ஜனப் பிரதிநிதி என்பவர்களும் இதுவரை தாங்கள் கொண்டு வராதிருந்ததற்கு வெட்கப்படுவதோடு அரசாங்கத்தார் கொண்டு வந்திருக்கும் மசோதாவை முழு பலத்துடன் பின் தாங்கி ஆதரித்து சீக்கிரம் சட்டமாக்கி சிவில் ஜெயில்களை ஒழிப்பார்களாக
இதை உத்தேசித்தே இந்த சிவில் ஜெயில் முறையை கண்டிப்பதற்கு அறிகுறியாகவே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ள ஒரு சிறு தொகைக்காக சிவில் ஜெயிலுக்குச் சென்று வந்ததும் வாசகர்
களுக்கு நினைவிருக்கலாம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.02.1935
மர ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
இந்தியாவுக்கு ஆங்கிலம்
““வரப்பிரசாதம்??
தேசீய வாதிகளுக்குப் புத்தி முளைக்கிறது
ஹிந்தி பக்தர்கள் எண்ண செய்யப் போகிறார்கள்
மிஸஸ் சரோஜினி தேவியின் பேச்சு
- தேசீயத் துரோகி
இந்தியாவுக்குப் பொதுப் பாஷையாக ஆங்கிலம் வழங்கி வருகிறது. ஆங்கில அரசாங்கத்தார் செய்த நன்மையில் இதுவொன்று. அவர்கள் நமது நாட்டிற்கு வந்திராவிட்டால் இது பொதுப் பாஷையாக ஆகி இருக்க மாட்டாது. ஆங்கிலங் கற்றதினால் நமது சமுதாயத்திலே சில மாறுபாடுகள் தோன்றின. ஜாதிப் பைத்தியம் - வேற்றுமை கொஞ்சம் அகலத் தொடங்கியது. மூடநம்பிக்கைகளின் பயனாய் வயிறு வளர்க்கும் கூட்டம் தவிர மற்றவர். களிடையில் கொஞ்சம் கொஞ்சம் மூடநம்பிக்கை ஒழிய ஆரம்பித்தன. பழக்க வழக்கங்கள் சிறிது சிறிது மாற ஆரம்பித்தன. சகோதரத்துவத்தைப்
பற்றி வாயளவிலாவது பேசும்படியான நிலை ஏற்பட்டது. நடை உடை பாவனைகளிலும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு வந்தது
அன்றியும் மக்களுக்குள் சுதந்திர உணர்ச்சி தோன்றவும், தாழ்த்தப் பட்டவர்கள் விழித்தெழவும், பெண் மக்கள் கர்ஜனை செய்யவும், பல துறைகளிலும், சீர்திருத்தக்காரர்கள் தோன்றவும், இந்திய சமுதாயத்தையே மாற்றி புதியதொரு சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற உணர்ச்சி
மக்களுக்குள் எழவும், அதற்காக சிலராவது உழைக்கவும், இதன் பொருட்டு ஆங்காங்கே சில சங்கங்கள் தோன்றவும், புற்றீசல் போல் பத்திரிகைகள் புறப்படவும், இங்கிலீஷ் பாஷையினால் தான் என்றால் நியாயபுத்தி உள்ளவர்கள், மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்டநிலையில் முளைத்ததையா! தேசீயம்; பாழும் தேசீயம்! குறுகிய மனப்பான்மை கொண்ட தேசியம் - பிற்போக்கான தேசீயம் - சமுதாய மாறுபாட்டை விரும்பாத தேசீயம் தோன்றி, நூறு வருஷ உழைப்பைப் பத்து வருஷத்தில் பாழாக்கிற்று. 50 வருஷத்தில் அடைய வேண்டிய அபிவிருத்தியை 500 வருஷத்திற்குத் தள்ளி வைத்தது. மறைந்து போன வைதீகம் தலையெடுக்க ஆரம்பித்தது
குடி அரசு - 1935 (1) 128
கிராப்பு வைத்திருந்தவர்கள் தேசீயத்தின் பெயரைச் சொல்லி உச்சிக் குடுமி வைத்துக் கொண்டனர். காற்சட்டை மேற்சட்டை அணிந்தவர்கள், முழங்காலுக்கு மேல் துணி கட்டவும் 12 முழத் துணியில் பஞ்சகச்சம் கட்டி மேலாடையின்றி முண்டமாகத் திரிந்தனர். பட்டை நாமத்தையும், சாம்பற் பூச்சையும் விட்டவர்கள் திரும்பவும் அவைகளை குழைத்துத் தீட்டத் தொடங்கினர். மறந்து போன புராணக் கதைகள் திரும்பவும் படிக்கப் பட்டன. இவையெல்லாம் பாழும் தேசீயம் செய்த வேலை. இந்தத் தேசியத்திற்கு மூல கர்த்தா யார் என்று சொல்ல வேண்டியதில்லை. அவர்.
தான் அந்த வைதீக காந்தியார்.
தேசீயம் என்றால், அரசியலில் மாத்திரமா தேசீயம்! படிப்பில் தேசீயம்!
நடிப்பில் தேசீயம்! பாஷையில் தேசீயம்! ஆடையில் தேசீயம்! எங்கும் தேசீயம் என்பதே பேச்சாக இருந்தது. கூச்சலுக்குத் தகுந்த காரியம் நடக்க வில்லை என்பது உண்மைதான். ஆனாலும் சிலரை ரொம்பவும் பிற்போக்கான. மனுஷாளாக - அதாவது, சுமார் நாலாயிரம் - ஐயாயிரம் வருஷங்களுக்கு முந்திய மனுஷர்களாக ஆக்கிவிட்டது. இதில் சந்தேகம் இல்லை
நாம் ஆரம்பித்திலிருந்து தேசீயத்தைக் கண்டித்து வந்தோம். அது நம்மை மிருகப் பிராயத்திற்குத் திருப்பி இழுத்துக் கொண்டு போகும் என்று சொன்னோம். அதிலும் தேசீயத்தின் சின்னமாகிய கதரை மிக அழுத்தமாகக் கண்டித்தோம். அதனால் சமுதாய நன்மை - சர்வதேச சகோதரத்துவம் பாதிக்கப்படும் என்று கூறினோம். இப்பொழுது இது அனேகருக்கு வெறுப்பாக இருந்தாலும், ஆத்திரமாக இருந்தாலும் இப்பொழுது உண்மை, தேசீயவாதிகள் அனேகருக்குப் புரிந்துவிட்டது. ஆயினும் அதை விட்டுவிட தைரியமில்லாமல் கண்டிக்க ஆண்மையில்லாமல் - கும்பலோடு கோவிந்தா. போடுகின்றனர்.
அடுத்த தேசீயப் பாஷையைப் பற்றியது. ஆங்கில பாஷை தேசீய உணர்ச்சிக்கு ஏற்றதல்ல; அந்நிய பாஷை; அடிமைப் புத்தியை உண்டாக்குவது; ஆகையால் அதை ஒழிக்க வேண்டும்; ஹிந்தியைத் தேசீய பாஷையாக்க வேண்டும்; இந்தியாவுக்கு பொது மொழியாக இருக்க வேண்டும்” என்று தேசீயவாதிகள் கூச்சல் கிளப்பினார்கள். எங்கும் ஹிந்தியைப் பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்கள். இப்பொழுதும் நடை பெறுகின்றது; அது தான் அராசங்க பாஷையாக வரப் போகிறதென்று கூறிப் பிரசாரம் பண்ணுகிறார்கள்.
நாம் இந்தியைப் பொது மொழியாக ஒப்புக் கொள்ள மாட்டோ மென்றோம். அது பொது பாஷையாக ஆவதற்கு யோக்கியதை இல்லாதது என்றோம். அதனைப் பொது மொழியாக ஏற்படுத்தினால் மீண்டும் நாம் பிற்போக்கான வழியில் செல்ல வேண்டியவர்கள் ஆவோம் என்றோம்
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
ஆங்கிலத்தில் தான் உலக வாழ்வுக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் பரவியிருக்கின்றன. இந்தியில் அவ்வாறு இல்லை. ஆங்கிலம் இப்பொழுதே பெரும்பாலும் இந்தியா முழுதும் பரவி இருக்கிறது; இந்தி அப்படி இல்லை. ஆங்கிலம் உலகில் எப்பாகத்திலும் இருந்து வருகிறது. இந்தி அப்படி இல்லை; இந்தியாவில் மாத்திரம் கொஞ்சம் பரவி இருக்கிறது. ஆங்கிலம் உலக பாஷையாக ஆனாலும் ஆகிவிடக் கூடும். இந்தி ஒரு நாளும் அப்படி ஆக முடியவே முடியாது. ஆங்கிலத்தில் மக்களுக்கு வேண்டிய சீர்த்திருத்த இலக்கியங்கள் நிறைந்திருக்கின்றன. இந்தியில் துளசிதாசர் இராமாயணந்தான் பெரிய இலக்கியமாக இருக்கிறது. ஆங்கிலம் சர்வதேசசகோதரத்துவத்தையும், உலக நாகரீகத்தையும் ஒன்றுபடுத்தும். இந்தி மக்களைப் பிரித்து வைக்கும், மிருக நாகரிகத்தை வலியுறுத்தும். ஆங்கிலம் மெல்லிய ஓசையுடைய பாஷை; மனிதரின் இருதயத்தைப் புண்படுத்தாது; இந்தி கடின சப்தங்களையுடைய முரட்டு மொழி; மனிதர் இருதயத்தைத் தொலைத்துப் புண்ணாக்கி விடும் என்றெல்லாம் கூறினோம். நாம் கூறிய காரணங்களை எவரும் ஆதாரத்துடன் மறுத்துக் கூறவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா? நம் மீது சீறி விழுந்தார்கள்! உறுமினார்கள்! குலைத்தார்கள்! தேசத் துரோகி என்றார்கள்! சண்டாளன் என்றார்கள்! பாவி என்றார்கள்! அவற்றையெல்லாம் நாம் சிறிதும் லட்சியம் பண்ணவில்லை; இனி பண்ணப் போவதுமில்லை. ஆனால் அப்பொழுதே நமக்குத் தெரியும். அதென்னவென்றால், இப்பொழுது இவர்களுடைய மூளை மடிப்புகளில் ஓட்டை விழுந்து விட்டன. ஆகையால் என்னென்னவோ சொல்லுகிறார்கள். பிற்காலத்திலாவது, சில வருஷங் கழித்தாவது இவர்: களுடைய மூளை சரிப்பட்டு விடும்; அதன் பிறகு அறிவு முளைத்து விடும்; உண்மையை அறிந்து கொள்ளுவார்கள். நமது வழிக்குத் திரும்பி விடுவார்கள். என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். உண்மையாகவே நம்பியும் இருந்தோம். இப்பொழுது அந்த நிலை வந்து கொண்டிருக்கின்றது
நமது உலக கவியாகிய சரோஜினி அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். பெரும் தேசீயவாதியாக விளங்குகிறார்; காந்தியார் சொல்வதைச் சில சமயங்களில் மறுப்பது போலப் பேசினாலும், மறுபடி உடனே சரணாகதியடைந்துவிடக் கூடியவர். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். பார்ப்பனர்களாலும், தேசீயவாதிகளாலும், ஹிந்திப் பிரச்சாரகர்களாலும் பெரிதும் கொண்டாடப்படுகிறவர். அவர் இப்பொழுது, ஆங்கிலத்திலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறார். ஆங்கில பாஷையில் கல்வி போதிக்க ஆரம்பித்தது இந்திய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதத்தை ஒத்ததாகும் என்று சொல்லுகிறார். ஆங்கிலத்தினால்தான்
நாம் உண்மைச் சுதந்திரத்தை அறிய முடிந்தது என்கிறார். சமூக வேற்றுமை ஒழிய ஆங்கிலமே சிறந்தது என்று முழங்குகிறார். ஆங்கிலத்தை ஒழித்து விட்டு இந்தி பாஷையைப் படிக்க வேண்டும் என்னும் குறுகிய தேசீயத்தில்
குடி அரசு - 1935 (1) 130
தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறார். இவ்வளவு ஏன்? அவருடைய - அதாவது அந்தப் பழுத்த - அகில உலக - இந்திய தேசீயவாதி யாகிய கவியரசி சரோஜினி தேவியவர்கள் சென்ற 16.2.35-ல் லாகூரில் நடைபெற்ற பாஞ்சால மாணவர் மகாநாட்டில் இரண்டாம் நாள் தலைமை வகித்த போது பேசியுள்ள பேச்சைப் படித்துப் பாருங்கள்! நாம் சொல்லுவது விளங்கும். அந்தப் பேச்சாவது-
ஆங்கிலப் பாஷையைப் போதிக்க ஏற்பாடு செய்ததானது இந்திய மக்களுக்குச் சிறந்த வரப்பிரசாதத்தைப் போன்றதாகும் ஆங்கிலத்தைப் போதிக்க ஏற்பாடு செய்த மெக்காலே (Macaulay) என்பவர் நமக்கு பெரிய நன்மையைச் செய்திருக்கிறார். ஆங்கிலத்தினாலேயே சுதந்திரத்தின் உண்மை லட்சியம் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டோம். சமூக வித்தியாசங்கள் ஒழிவதற்கு ஆங்கிலம் பொதுப் பாஷையாக இருப்பதுதான் ஏற்றதாகும். பிஷாவாரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் நாம் நமது அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கு பொதுப்பாஷையாகிய ஆங்கிலமே துணையாக இருக்கின்றது. குறுகிய தேசீயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. குறுகிய தேசீயமானது நமது முன்னேற்ற வழிகளுக்குத் தடையாக இருக்கும். இவ் விஷயத்தில் அரசாங்கத்தார் மேல் குற்றஞ் சொல்ல முடியாது. இந்தியர்கள் ஆங்கில பாஷையையே விரும்புகின்றனர். அதனை நிராகரிக்க விரும்பவில்லை.
என்பது அந்தப் படே அம்மாளின் பேச்சு. இனி அந்த அம்மாளை இந்தி பக்தர்கள் என்ன சொல்லி அழைக்கப் போகிறார்கள்? நாம் அந்த நாள் முதல், இந்த நாள் வரையில் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் புரிகிறதா? இனியாவது புரியுமா?
குடி அரசு - கட்டுரை - 24.02.1935
Bl வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
காங்கிரஸ் ஒழிந்து விட்டதா?
ஏன் அபேட்சகரை நிறுத்தவில்லை
ஜஸ்டிஸ் கட்சியில் காலியான இரண்டொரு சென்னை சட்டசபை ஸ்தானங்களுக்கு அபேட்சகரை நிறுத்தாததால் ஜஸ்டிஸ் கட்சி ஒழிந்து போய் விட்டதென்றும் அதற்கு நாட்டில் சிறிதும் செல்வாக்கில்லை என்றும் காங்கிரஸ்காரர்களும் காங்கிரசின் பேரால் வாழும் பத்திரிகைகளும் செய்த
விஷமப் பிரசாரத்துக்கு எல்லை இல்லை.
சில பாமர மக்கள் இதை நம்பிக் கொண்டும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது 'பகுத்தறிவு' அதற்குத் தக்க
பதில் புள்ளி விபரத்தோடு எழுதியிருந்தது ஐயோ பாவம்! இந்த விஷமப் பிரசாரம் நடந்து 8 நாள் கூடஆகவில்லை. இப்போது காங்கிரஸ் ஒழிந்து விட்டதா? நாட்டில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய காலம் வந்துவிட்டது. என்னவென்றால் சமீபத்தில் காலியாகும் சென்னை நகரசபை ஸ்தானங்களுக்கு காங்கிரஸ் அபேட்சகர்களை நிறுத்துவதில்லை என்று தீர்மானம் செய்துவிட்டதாம். இது எல்லா பார்ப்பனப் பத்திரிகைகளிலும் காணப்படுகிறது. ஆகவே எந்த ஸ்தாபனமும் சமய சந்தர்ப்பம் செளகரியம் ஆகியவை களை கவனித்துத் தான் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கும் அபேட்சகர்களை நிறுத்த முயற்சிக்குமே ஒழிய கண் மூடிக் கொண்டு ஒவ்வொரு ஸ்தானத்துக்கும் சடங்குமாதிரி ஆள்களை நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அந்தப்படி நிறுத்தப்படாததாலேயே அந்தக் கட்சி ஒழிந்து போய்விட்டது, செல்வாக்கு அற்றுப் போய்விட்டது என்று சொல்வதும் முட்டாள்தனமேயாகும்
குடி அரசு - கட்டுரை - 24.02.1935
குடி அரசு - 1935 (1) 132.
வைசு. ஷண்முகம் பட்டினி விரதம்
கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்களை நமது தோழர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
அவர் நாட்டுக்கோட்டை நகரத்து வகுப்பைச் சேர்ந்தவர். இந்நாட்டில் காந்தி கிளர்ச்சி கிளம்புவதற்கு முன்பாகவே அதாவது சுமார் 20 வருஷத்திற்கு முன்பே செட்டிநாட்டில் சமூக சீர்திருத்தம் என்னும் பேரால் ஒரு பெருங் கிளர்ச்சியை கிளப்பி விட்டு அதில் முனைந்து வேலை செய்து கொண்டிருந்த இளம் வாலிபர்களில் தோழர் வைசு. ஷண்முகம் முதன்மை யானவரும், முக்கியமானவருமாய் இருந்தவர். அவரது முயற்சியாலும் அவரது தோழர்களது முயற்சியாலும் செட்டிநாட்டில் சமூகத் துறையில் ஓரளவு சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்பதோடு இன்று அச்சமூகத்தில் கலப்பு விவாகம், விதவைகளை மணத்தல், கல்யாண ரத்து விவாகம், பெண்கள் விவாக விஷயத்தில் தங்கள் பெற்றோருக்கு அடிமையாகாமல் தங்கள் இஷ்டப்படி கணவர்களைத் தெரிந்தெடுத்துக் கொள்ளுதல், இஷ்டப்படாத கணவரிடம் இருந்து பிரிந்து விடுதல் ஆகிய காரியங்கள் ஏற்பட்டதும், ஆடம்பரச் செலவுகள் குறைக்கப்பட்டு சிக்கனங்கள் கையாடும் மனப்பான்மை ஏற்பட்டதும், லட்சம் 10 லட்சக் கணக்கில் ரூபாய்களை கல்லுக்கும், மண்ணுக்குமாகக் காசைக் கொட்டி, கோயில், கோபுரங்கள் ஆகியவைகளுக்காக என்று பாழாக்குவதும், வேத பாட சாலை, பிராமண சமாராதனை, பிராமணர்களுக்கு அன்ன சத்திரம் என்றும் பல வகையில், பாழாக்கப்பட்டும் வந்த பணங்கள் இப்போது பள்ளிக்கூடம், தீண்டாதார். ஆச்சிரமம் ஆகியவைகளில் செலவழிக்க மனந் திரும்பும்படி செய்ததும் முதலாகிய காரியங்களுக்கு இக் கூட்டத்தார் முயற்சிகளே தூண்டுகோல்
என்று சொல்லலாம்.
மற்றும் காங்கிரஸ் - காந்தி கிளர்ச்சி ஏற்பட்ட போதும் அக்
கிளர்ச்சியில் தோழர் ஷண்முகம் முழு மனதோடு இறங்கி வேலை
செய்ததல்லாமல் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் உதவி இருப்பதும்
யாரும் அறியாததல்ல.
தோழர் வ.வெ.சு. அய்யர் அவர்கள் ஆச்சிரமம் வைப்பதாகச்
சொன்னதும் ரூ.3000 கொடுத்து இடம் வாங்கிக் கொடுத்தார். 133 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
காந்தியார் செட்டிநாட்டுக்குச் சென்ற காலத்தில் ரூ.1000 கொடுத்தார். மற்றும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற முயற்சிக்கும் திராவிடன் பத்திரிகைக்கும் 1000, 1000 மாய் பல தடவை உதவி யிருக்கிறார்.
இப்படிப்பட்ட தாராளமும், தயாளத்துவமும், உண்மையான பொது நல சேவை ஊக்கமும் தங்கு தடை அற்ற சீர்திருத்த உணர்ச்சியும் கொண்ட இத் தோழர், தனது குடும்ப சம்மந்தமான ஒரு விவகாரத்தில் ஈடுபட்டு சுமார்
3 லக்ஷ ரூபாய் வரை தனது சொந்த முதலும் செலவு செய்து வெளியில்
சுமார் ஒரு லக்ஷ ரூபாய் போல் கடன் வாங்கியும் செலவு செய்து கடைசியாக விவகாரம் பிரிவி கவுன்சிலுக்குப் போய் அங்கு 9 லக்ஷ ரூபாய்க்கு இவருக்கு அனுகூலமாக டிக்கிரி கிடைத்து இருக்கிறது. என்றாலும் அதை வசூல் செய்ய இன்னமும் சுமார் லக்ஷ ரூபாய் போல் தேவை. கொஞ்சம் நாள் பிடிக்கும்படியான தாமதமும் டிக்கிரியில் ஏற்பட்டு விட்டது
விவகாரத்தில் கையில் இருந்த பொருள் எல்லாம் போய்விட்ட
தாலும், டிக்கிரியை நிறைவேற்ற கையில் பணமில்லாததாலும், நிலைமை நெருக்கடியானது ஒருபுறம் இருக்கவிவகாரத்துக்கு செலவுக்குப் பணம் கொடுத்த கடன்காரர்கள் அவசரப்பட்டு நடவடிக்கைகள் நடத்தி வைசு. ஷண்முகம் அவர்களை இன்சால்வெண்டாக்க விண்ணப்பம் கொடுத்து விட்டார்கள்.
தோழர் ஷண்முகம் சொந்த ரூ.300000 இழந்தும், 900000 ரூ டிக்கிரியை நிறைவேற்றி வசூல் செய்ய சவுகரியம் இல்லாமல் போயும், குடும்பம் நடைபெறும் விஷயமும் ஒரு பெரிய விடுகதை போல் ஆகியும், கடன்காரர்தொல்லைஇவ்வளவுக்கும் மேல் பட்டுதன்னைஇன்சால்வெண்டாக்க முன் வந்துவிட்டதால் அதை ஒழிப்பதற்கு கடன்காரர்களிடம் தனக்கு
இருக்கும் பூஸ்திகளைக் காட்டி, அதற்கு ஒரு பஞ்சாயத்து ஏற்படுத்தி இன்சால்வெண்டாக இல்லாமல் நேரில் பைசல் செய்து கொள்ளும்படி பல தடவை கடன்காரர்களைக் கெஞ்சியும் அவர்களில் சிலர் வழிக்கு வராததால் இன்சால்வெண்டாகி உயிர் வாழ்வதற்கு இஷ்டப்படாமல் பட்டினி கிடப்பதன் மூலம் கடன்காரர்கள் மனதை இளகச் செய்து இன்சால்வெண்டிலிருந்து தப்பி
9 லட்ச ரூபாய் டிக்கிரி கடனை வசூல் செய்ய ஏதாவது மார்க்கம் ஏற்பாடு செய்யலாம் என்கின்ற எண்ணத்துடன் 21 ந் தேதி வெள்ளிக்கிழமை முதல் பட்டினி விரதம் ஆரம்பித்து இருக்கிறார் என்பதாக தெரிய வருகிறது. அவரால் கடன்காரர்களுக்கு காட்டப்பட்டிருக்கும் சொத்துக்கள் கடன் தொக்கு சரிசமமாகக் காணப்பட்டாலும் கடன்காரர்களுக்கு ரூபாய் 1-க்கு
8 அணாவுக்குக் குறைபடாமல் 12 அணாவுக்கு அதிகப்படாமல் கிடைக்கக் கூடிய அளவுக்கு இருக்கிறதென்றே தெரிய வருகிறது இவை அல்லாமல் இன்சால்வெண்ட் இல்லாமல் தோழர் ஷண்முகம் விடுதலை அடைவாரானால் டிக்கிரி பணம் வசூல் செய்யவும், அந்த வசூலி லிருந்து ஒரு பாகம் இந்த கடன்காரர்களின் பாக்கிக்கு ஏதாவது மறுபடியும்
குடி அரசு - 1935 (1) 134
வகை செய்யவும் கூடும் என்கின்ற நம்பிக்கை தோழர் ஷண்முகத்துக்கு இருப்பதால் இன்சால்வெண்டு ஆகாமல் இருக்க முயற்சிப்பதாய் தெரிகிறது
ஆகையால் இந்த நிலையில் தோழர் வைசு. ஷண்முகம் அவர்களது பட்டினி விரதம் வெற்றி பெறுமானால் அவருக்கும் நன்மை; கடன்காரர்களும் நன்மை அடைவதோடு கடன்காரர்களின் நிர்ப்பந்தத்தால் ஷண்முகம் நிலை இப்படி ஆயிற்று என்கின்ற ஒரு மறு இல்லாமலும் இருக்கும். இல்லா விட்டால் அதாவது கடன் கொடுத்தவர்கள் பிடிவாதமாகவோ, பழி வாங்கும் தன்மையாகவோ இருப்பார்களானால் தோழர் வைசு. ஷண்முகத்துக்கு உலக வழக்கில் ஒரு நல்ல பேர் ஏற்படுவதோடு பல தொல்லைகள் இருந்து
விலகி முடிவடைந்தவராவார்.
குடி அரசு - கட்டுரை - 24.02.1935
135 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
வெற்றியின் யோக்கியதை
ஓட்டர்களுக்கு இனியாவது புத்தி வருமா?
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்து விட்டதைப் பற்றி இந்தியா பூராவிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்தன.
அது மாத்திரமல்லாமல் வெற்றி பெற்ற காங்கிரஸ் வீரர்கள் இந்திய சட்டசபையில் செய்த - செய்கின்ற வேலைகளோ “சர்க்காருக்குத் தோல்விக்குமேல் தோல்வியும் காங்கிரசுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியும்" என்பதாக பிலாக் கொட்டை போன்ற எழுத்தில் போட்டு பத்திரிகைகள். பக்கங்களை நிரப்புகின்றன.
இதன் பயன் என்ன என்று பார்த்தால் அரிசிக்கு விலை ஏற்ற
வேண்டும். அதற்காக அயல் நாட்டிலிருந்து வரும் நெல்லுக்கும் அரிசிக்கும் நொய்க் குருணைக்கும் வரி போட வேண்டும் என்று சாக்காரைக் கெஞ்சுவதும் தான் வெகு தடபுடலாக அடிபடுகின்றதே ஒழிய மற்றபடியான காரியம் என்ன என்று பார்த்தால் பெரியதொரு சைபர் தான். “சர்க்கார் தோல்வியடைந்தார்கள்'' என்பதனால் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது மக்களுக்கு ஏற்படும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? அல்லது வாயினாலாவது சொல்ல முடியுமா? என்று பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டும்
ஆனால், இந்த மாதிரி, 'சர்க்காருக்குத் தோல்வி மேல் தோல்வி” என்று ஏற்படுவதால் கழுகைப் பார்த்து, 'கிருஷ்ணா கிருஷ்ணா! என்று கன்னம் கன்னமாய் போட்டுக் கொள்வது போல தோல்வி மேல் தோல்வி என்பதை பிலாக் கொட்டை எழுத்தில் பார்த்துப் பல்லைச் சிறிது இளித்து மந்தகாசத் தலையசைப்பு அசைத்துக் கொள்ள முடியும் என்பதைத் தவிர வேறு ஒரு பலனும் உண்டாவதில்லை என்பதோடு இந்தியர்கள் சுயாட்சிக்கு அருகதையுடையவர்கள் அல்ல என்று கல்லின் மேல் எழுத்துப் போன்ற ஒரு நிரந்தர ஆதரவும் சர்க்காருக்கு ஏற்பட அனுகூலமாகும்
இவ்வளவு தான் கண்ட பலன். சர்க்காரின் இஷ்டத்துக்கு விரோதமாக என்ன தீர்மானங்கள் இந்திய சட்டசபையில் நிறைவேறினாலும் வைசிராய்
பிரபு அவர்கள் இந்திய பிரதிநிதிகளுக்குப் புத்தியில்லை. அவர்களுடைய தீர்மானங்களை மதித்தால் தேச நிர்வாகம் கெட்டு போய்விடும் என்று எழுதி
குடி அரசு - 1935 (1) 136
அத் தீர்மானங்களை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தன் இஷ்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய (சர்ட்டிபை செய்து) அனுமதி அளித்து விடுவார். அந்தப்படியே செய்தும் வருகிறார். ஆகவே "வெற்றி மேல் வெற்றி” என்பதற்கு என்ன அர்த்தம் என்பது நமக்கு விளங்கவில்லை.
இதன் பயனாக என்ன ஏற்படும் என்றால் “இந்தியப் பிரதிநிதிகள். செய்யும் இப்படிப்பட்ட முட்டாள்தனமான காரியங்களால் இந்திய நிர்வாகம் கெட்டுப் போய் ஜனங்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்காக வைசிராய்களுக்கும், கவர்னர்களுக்கும் பாதுகாப்பும் தனி அதிகாரமும் இருக்க வேண்டியது அவசியம்'' என்பது உறுதி ஆகிவிடும்
மக்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்கள் விஷமாய் சர்க்காரால் கொடுக்கப்பட்ட அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதனால் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்கள் இழிவாகவும் நாணையக் குறைவாகவும் நடந்து கடைசியில் தாலூகா போர்டுகளை எடுத்து விட்டு முனிசிபாலிட்டிகளுக்கு கமிஷனர்கள் நியமனமாகி ஜில்லா போர்டுகளையும் பிரித்து அவற்றிற்கும் நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் எப்படி வந்து சேர்ந்ததோ அதே போல் மாகாண சட்டசபைகள் இந்திய சபை ஆகியவை பொறுப்பற்ற தன்மையில் அதன் அதிகாரங்கள் துஷ்பிரயோகங்கள். செய்யப்பட்டதால் சர்க்காருக்கு பாதுகாப்பு அதிகாரம் இல்லாவிட்டால் காரியம் நடக்காது என்கின்ற உண்மை ஏற்பட்டதுடன் முனிசிபல் விஷயங்
களில் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டது போல் சட்டசபை விஷயங்களுக்கும் கமிஷனர்கள் போல வைசிராய்களுக்கும் கவர்னர்களுக்கும் அதிகாரங்கள். கொடுத்து பார்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டியது அரசாங்கத்துக்கு அவசியமாகிவிட்டது
இதைக் கருமத்தின் பலன் என்று சொல்லி நாம் வெட்கப்பட வேண்டுமே தவிர அல்லது இனிமேலாவது இப்படிப்பட்ட காரியம் செய்வதற்கு இல்லாத புத்தி வரும்படி நடந்து கொள்ள வேண்டியதைத் தவிர
இதில் விசனப்படவோ சர்க்காரைக் குற்றம் சொல்லவோ சிறிதுகூட இடமில்லை என்றுதான் சொல்லுவோம்
தோழர் காந்தியாருடைய அகம்பாவமும் அவரது செல்வாக்கைத் துஷ்பிரயோகம் செய்த முட்டாள்தனமுமே இன்றைய சீர்திருத்தம் என்பது பெரிதும் பாதுகாப்பு என்னும் குழந்தையையே பெற்று இருக்கிறது
காந்தியாரின் ஆதிக்கம் என்றய தினம் ஒழியுமோ அன்றுதான் பாதுகாப்பு என்கின்ற குழந்தைக்கு உளமாந்தை வந்தால் வரக்கூடுமே தவிர அவருக்கு செல்வாக்கு உள்ள வரை பாதுகாப்பு என்னும் குழந்தை வளர்ந்து வலிமை பெற்று பெரிய வஸ்த்தாது ஆனாலும் ஆகுமே தவிர ஒரு நாளும் இளைக்கப் போவதில்லை என்பது உறுதியான விஷயமாகும்
மர ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
காந்தியின் செல்வாக்கு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும் அவரது அஹம்பாவத்திற்கும் நாம் உதாரணம் காட்ட வேண்டியதில்லை என்றே கருதுகிறோம். யாராவது உதாரணம் வேண்டுமென்று கருதுவார். களானால் அவர்களுக்கு ஒரு சிறு உதாரணம் மாத்திரம் காட்டுகின்றோம்
அதாவது காங்கிரசின் பேரால் இந்திய சட்டசபைக்கு அபேட்சகர்களாக நிறுத்தப்பட்டு, காந்தியின் பேரால் ஓட்டு கேட்கப்பட்டு காந்தியாரின் ஆசீர்வாதம் பெறப்பட்டு பொது மக்களையும் ஓட்டுச் செய்யும்படி காந்தியாரால் கேட்டுக் கொள்ளப்பட்ட நபர்களின் யோக்கியதைகளைப் பற்றி யோசித்துப் பார்த்தாலே காந்தியாரின் செல்வாக்கு எவ்வளவு துஷ்பிரயோகப்படுத்தப்பட்டது என்பதும் காந்தியாரின் “தான்' என்ற ஆணவம் எவ்வளவு மிளிர்ந்தது என்பதும் நன்றாய் விளங்கும்
தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியாரை எடுத்துக் கொள்ளுவோம். அவரது நாணையம் எவ்வளவு? தேசாபிமானம் எவ்வளவு? சமத்துவ உணர்ச்சி எவ்வளவு? மற்றவைகள் எவ்வளவு? இவை தோழர் காந்தியாருக்குத் தெரியாது என்று அவர் “சத்தியம்” செய்வாரா? தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்காவது தெரியாதென்று அவருக்குச் சத்தியத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சும்மாவாயினாலாவது சொல்வாரா? இதுபோலவே மற்ற அபேக்ஷ்கர்களைப்
பற்றியும் காந்தியாரும் ராஜகோபாலாச்சாரியாரும் யோசித்துப் பார்க்கட்டும் இந்தியசட்டபை என்பதைஎவ்வளவு பொறுப்பு வாய்ந்ததாகக்கருதவேண்டும்?'
அப்படி இருக்க அதை மீன்கடை கள்ளுக்கடையைவிட கீழாக மதித்து அபேக்ஷகர்களை நியமித்து வெற்றி பெற்றார்கள் என்றால் இந்த ஓட்டர்களையும் இந்த தலைவர்களையும் இந்த (காங்கிரஸ்) ஸ்தாபனங் களையும் நம்பி சர்க்கார் பாதுகாப்பு இல்லாமல் சும்மா திறந்துவிட்டு விடுவார்களா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம். அந்தப்படி சர்க்கார் யாதொரு பந்தோபஸ்துமில்லாமல் திறந்து விடுவார்களானால் அவர்கள் பொறுப்புள்ள சர்க்கார் ஆவார்களா என்று கேட்கின்றோம்
ஓட்டர்களைப் பற்றி சில வார்த்தைகளாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது சென்ற 50 வருஷ காலமாக இந்தியாவில் அரசியல் கிளர்ச்சி நடந்தது என்றாலும் அதன் பயனெல்லாம் பாமர மக்களை நாளுக்கு நாள் மூடர்களாகவும், செய்ய பொறுப்பற்றவர்களாகவும் முடிந்திருப்பதோடு இவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நபர்களுக்கு நாணயமும் மானமும் இல்லாமல் செய்து பித்தலாட்டமும், புரட்டும், சுயநலமும், பொறுப்பற்ற தன்மையுமே ஆபரணங்களாகவும் இன்றியமையாத யோக்கியதைகளாகவும் ஆக்கிவிட்டது.
உதாரணமாக இந்திய சட்டசபை தேர்தலின்போது கிளிப்பிள்ளைக்குச் சொல்லுகின்ற மாதிரி ஓட்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர்களின் யோக்கியதையையும் அபேட்சகர்களின் யோக்கியதையையும் அவர்களது
குடி அரசு - 1935 (1) 138
பிரசாரங்களின் இழி தன்மைகளையும் புட்டுப்புட்டு களிமண் உருண்டைக்கும் விளங்கும்படியாக எடுத்துச் சொன்னோம். யார் கேட்டார்கள்? “இப்பொழுது எங்களுக்குப் புத்தி வந்தது, நாங்கள் மோசம் போனோம், எங்கள் பொறுப்பற்ற தன்மைக்கும், முட்டாள்தனத்துக்கும் வெட்கப்படுகிறோம்'” என்றெல்லாம் ஓட்டர்கள் இப்போது சொல்வதில் என்ன பிரயோஜனம்
காந்திக்காக ஓட்டுப் போடுகிறோமே ஒழிய தோழர்கள் சத்திய
மூர்த்திக்கும், சாமிக்கும், முத்துரங்கத்துக்கும், அவனாசிலிங்கத்துக்கும் அதுபோன்ற மற்றவர்களுக்கும் ஓட்டுப் போடவில்லை” என்று ஓட்டர்கள் சொன்னார்களே, அப்படிப்பட்டவர்களில் யாராவது சட்டசபையில் உட்கார்ந்து பேசப் போகின்றவர்கள் காந்தியாரல்ல என்பதையும் மேல் குறிப்பிட்ட தோழர்கள்தான் சட்டசபையில் உட்காரப் போகிறார்கள்.
என்பதையும் உணராதவர்கள் என்று சொல்ல முடியுமா?
அந்த அபேக்ஷகர்கள் அப்போது அளித்த வாக்குதத்தம் என்ன? இப்போது நடந்து கொள்ளும் மாதிரி என்ன? என்பதை ஓட்டர்கள் எதிர்பார்த்தவர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம் ஆகவே இந்த 50 வருஷத்திய அரசியல் கிளர்ச்சியும் சிறப்பாக 15 வருஷத்திய காந்தியாரின் கிளர்ச்சியும் ஓட்டர்களுக்கு கடுகளவு அரசியல் ஞானத்தையும் பிரதிநிதித்துவப் பொறுப்பையும் கூர்ந்து பார்க்கும் ஞானத்தையும் உண்டாக்கவில்லை என்பதோடு அரசியல் கிளர்ச்சிக் காரர்கள் காந்தியாருள்பட எவரும் பாமர மக்களை இவற்றை உணரும்படி செய்ய முயர்ச்சிக்காமல் சுலபத்தில் ஏமாறத்தக்க மாதிரியான பாமரத்
தன்மையில் வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல. வேண்டியிருக்கிறது
இதுவரையில் நமது மாகாணத்தில் இருந்து இந்திய சட்டசபைக்குச் சென்றவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ எப்படி இருந்தாலும் சட்ட சபைக்குஒரு ஆபரணமாக, முக்கிய புருஷராக, சட்டசபை ஞானமுள்ளவர்களாக, விஷயம் தெரிந்தவர்களாக, எழுந்து பேசினால் மற்ற அங்கத்தினர்களாலும்,
சர்க்கார் அங்கத்தினர்களாலும், சர்க்காராலும் மதிக்கத் தகுந்தவர்களாக, பாராட்டத்தகுந்தவர்களாகவும் இருந்து வந்தார்கள்.
இன்று இந்திய சட்டசபையில் சென்னை மாகாணத்திலிருந்து போனவர்களிலானாலும் சரி மற்றபடி இந்தியா முழுவதிலுமிருந்து போனவர்களானாலும் சரி, ஒரு ஆளாவது மேற்கண்டபடி மதிக்கத் தகுந்தவர்களாய் இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்
தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரி அவர்களைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் பனங்கொட்டை எழுத்தில் விளம்பரம் போட்டாலும் அவர் பேசியது என்ன? அந்த சபையார் மதித்ததென்ன? அரசாங்கத்தார் கவனித்த B வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
தென்ன? என்பதைப் பார்த்தால் அவரைத் தெரிந்தெடுத்த ஓட்டர்களின் ஞானம் எவ்வளவு என்பதை பளிங்குபோல் காட்டக் கூடியதாகும்.
தோழர் சத்தியமூர்த்தியாரை ஏன் என்று சட்டை பண்ணுகின்றவர்கள் அங்கு யாரும் இல்லை என்றாலும் அவர் சாதித்ததுதான் என்ன என்று பார்த்தால் ஓட்டர்களைத் தவிர மற்ற யார் மீதும் குற்றம் சொல்ல இடமிராது
சட்டசபை பிரதிநிதித்துவம் என்பதும், சட்டசபை ஞானம் என்பதும் தெருக்களில் பேரிச்சம்பழ மாற்றுப் பண்டமாக மதிக்கப்பட்டு விட்டால் பிறகு சீர்திருத்தத்திற்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டால் இந்திய ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கதி என்ன ஆவது என்றுதான் கேட்கின்றோம். இந்த தேர்தலால் சென்னை மாகாணத்தின் யோக்கியதை அடியோடு புதைக்கப்பட்டுப் போய்விட்டது ஆகவே ஓட்டர்கள் இனி வரப்போகும் தேர்தல்களிலாவது தங்களுடைய ஆராய்ந்து பார்க்கும் ஞானத்தைப் பயன்படுத்தி இந்தியர்கள் அரசியல் பிரதிநிதித்துவங்களுக்கு அருகதை உடையவர்கள் என்பதைக்
காட்டிக் கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 03.03.1935
குடி அரசு - 1935 (1) 140
சாரதா சட்டம்
பலன் தர வேண்டுமானால்?
பெண்களை இளம் வயதில் மணம் செய்து கொடுக்கும் இந்துக்களின், அறிவீனமான கொடுமையான செய்கையைத் தடுப்பதற்காகச் சீர்திருத்த வாதியாகிய ஹரிவிலாச சாரதா அவர்களால் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டிருக்கும் பால்ய விவாகத்தடைச் சட்டம் தற்சமயம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமலே இருந்து வருகிறது என்பதை நாம் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கிறோம். அச்சட்டத்தை நிறைவேற்ற இந்திய சீர்திருத்தக்காரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் தோழர் காந்தியார், காலஞ்சென்ற பண்டித மோதிலால் நேரு முதலிய காங்கிரஸ்வாதிகளாகிய வைதீகர்களால்கூட பலமாக ஆதரிக்கப்பட்டும், பொது ஜனங்களின் அபிப்பிராயந் தெரிவதற்கென லெட்சக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து சுற்றுப்பிராயணக் கமிட்டி நியமித்து விசாரணை செய்தும், கடைசியில் உயிரற்ற ஒரு வெறுஞ் சட்டமாகவே நிறைவேறியது. அச் சட்டத்தின்படி தொடுக்கப்படும் வழக்குகளில்கூட வைதீகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சியோ, அல்லதுஅரசாங்கத்தின் அலட்சிய புத்தியினாலோ, சாரதா சட்டத்தை மதிக்காதவர்கள் பயப்படுவதற்கு வழியில்லாத மிகச் சாதாரணமான அபராதமும், தண்டனைகளுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வைதீகர்கள், சாரதா சட்டத்தைச் சிறிதும் லட்சியம் பண்ணாமல், தங்கள். இஷ்டப்படியே சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் மிகத் தாராளமாக மணம் செய்து கொண்டு வருகிறார்கள்.
இத்தகைய அடாத செய்கையைத் தடுத்துச் சாரதா சட்டத்தைப் பலன்தரத்தக்க ஒரு நல்ல சட்டமானதாகச் செய்ய வேண்டுமானால் அதில் சில அவசியமான சீர்திருத்தங்களைச் செய்தே தீரவேண்டும் என்பதைச் சீர்திருத்த ஆர்வமுள்ளவர்கள் யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.
சாரதா சட்டத்தை மீறுவதான முறையில் மணம் நடைபெறப் போவதாகத் தெரிந்தால், உடனே அதைத் தடுக்கும் அதிகாரம் அவ் வழக்கை விசாரிக்கும் அதிகாரமுள்ள கோர்ட்டாருக்கு இருக்க வேண்டும். படட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
சட்டத்தை மீறி நடக்கும் கல்யாணங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மேல் வழக்குத் தொடுக்கும் உரிமை போலீஸ்காரர்களுக்கும் பொது ஜனங்களுக்கும் தாராளமாக இருக்க வேண்டும்.
வழக்குத் தொடுக்க முன்வரும் வாதிகள் ஜாமின் கட்ட வேண்டும் என்னும் நியதி இருக்கக் கூடாது
பொது ஜனங்களால் தொடுக்கப்படும் வழக்குகளையும் சர்க்கார் கேசாகவே எடுத்துக் கொண்டு பொது ஜனங்களுக்குச் சவுகரியமாக வழக்கு நடத்த வேண்டும்
தண்டனைகளும் அபராதங்களும் இப்பொழுது போல் இல்லாமல் இன்னும் கடுமையாகவும், தயவுதாட்சண்யம் இல்லாமலும் விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான முறையில் சாரதா சட்டம் திருத்தப்படுமானால் திருத்தப்பட்ட சட்டமும், வைதீகர்களின் குரைப்புக்குப் பயப்படாமல் கண்டிப்பாக அமுல்நடத்தப்படுமானால் தான், அச்சட்டத்தினால் என்ன பலனை எதிர்பார்க்கிறோமோ அந்தப் பலன் உண்டாகக்கூடும். இன்றேல் அது வெறும் காகிதச் சட்டமாகவே தான் இருக்க முடியுமே ஒழிய வேறு ஒரு இம்மியளவும் பயன்தரப் போவதில்லை என்பதில் கடுகளவுகூடச் சந்தேகம் இல்லை. ஏறக்குறைய நாம் கூறும் இந்த அபிப்பிராயத்திற்கு இணங்கிய மாதிரியிலும் பால்ய விவாகங்களை இப்பொழுதுபோல் இல்லாமல் கூடிய வரையிலும் தடுக்கக்கூடிய முறையிலும் சாரதா சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தியா சட்டசபையின் அங்கத்தவரான, தோழர் பி.தாஸ் என்பவர் சில திருத்தங்களைக் குறிப்பிட்டு அவைகளை வைசிராய் பிரபுவின் அனுமதி பெற வேண்டி அனுப்பியிருக்கிறார். அத்திருத்தங்களாவது2-
சாரதா சட்ட வழக்குகளை விசாரிக்க அதிகாரம் பெற்றுள்ள
கோர்ட்டார் உசிதமென்று தோன்றுகிறபோது அச்சட்டத்திற்கு விரோதமாக நடைபெறும் மணங்களுக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை ஏற்படுத்தல்.
அச்சட்டத்தின் கீழ் கோர்ட்டுகள் தாங்களாகவே வழக்கு நடத்தலாம், வாதி பாண்டோ, ஜாமீனோ கொடுக்க வேண்டியதில்லை யென்று விதித்தல்.
குழந்தையை மணந்து கொண்ட புருஷன் அவன் மைனரா யிருந்தால், அவனுடைய கார்டியன் அப்பெண்ணைத் தனியே வைத்துக் காப்பாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும், சட்டத்தில் கண்டுள்ள வயது வரும் வரையிலோ,
குடி அரசு - 1935 (1) 142
அவசியமானால் மேற்கொண்டு சில காலம் வரையிலோ, சாந்தி முகூர்த்தம் செய்யக் கூடாது என்று தடைப்படுத்தவும் கோர்ட்டாருக்கு அதிகாரம் அளித்தல். என்பவைகளே திருத்தங்களாகும். இத்திருத்தங்களின் நோக்கத்தையும், அவரே குறிப்பிட்டிருப்பது வருமாறு
“ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பம்பாய் சிவில் கோர்ட்டுகள், சட்டத்திற்கு விரோதமாக ஏற்பாடு செய்திருந்த மணங்களுக்குத் தடை உத்திரவு பிறப்பித்திருக்கின்றன. மற்ற மாகாணங்களில் இவ்விதம் நடந்ததா. வென்று தெரியவில்லை. இவ்விதம் செய்வதற்குச் சட்டம் இடங் கொடுக்கிறதாவென்பதைப் பற்றி சந்தேகங்கள் எழும்புகின்றன. அவற்றை நிவர்த்திக்க மசோதா முயற்சிக்கிறது. சட்ட விரோதமாக நடக்கும் மணங்களுக்கு விதிக்கும் அபராதத்தை மேற்படி தடையுத்திரவை மீறுபவர் களுக்கு விதிக்க வேண்டுமென்று மசோதா கூறுகிறது. ஏனெனில் கோர்ட்டு தடையுத்திரவை மீறுவது கோர்ட்டை அவமதிப்பதாகும்
மேலும், இப்போதுள்ள சட்டப்படி, புகார் செய்பவர் விளம்பரத்திற்கு உட்பட வேண்டியது அவசியமாகிறது. கோர்ட்டு விரும்பினால் பாண்டு எழுதித் தர வேண்டும். அதிற் கண்டுள்ள தொகையை இழந்துவிட வேண்டியதாகலாம். இவற்றின் காரணமாக மேற்படி சட்டம் சரியாக அமுல் நடப்பது கஷ்டமாகிறது. தனிப்பட்ட முறையில் கோர்ட்டாருக்குத் தகவல் கிடைத்ததும், அதன் உண்மையைக் கண்டறிந்து கொண்டு வழக்கு நடத்தும் அதிகாரத்தை திருத்த மசோதா அளிக்கிறது. இப்போதுள்ள விதிப்படி சட்டத்தை மீறியவர்களைத் தண்டித்த போதிலும், அகால ஆண் சேர்க்கையி லிருந்து சிறுமிகளைக் காப்பாற்ற முடியாது. வழக்குத் தொடர்ந்ததின். காரணமாக சிறுமியை புருஷனோ, புருஷன் வீட்டாரோ துன்புறுத்தக் கூடும். இவற்றை முன்னிட்டு சிறுமியின் நலத்தில் கவலை கொண்டவர்கள்கூட சட்டப்படி வழக்குத் தொடர தயங்குகிறார்கள். அதை நிவர்த்திப்பது மசோதாவின் நோக்கமாகும்.”
இப்படிப்பட்ட அவசியமான திருத்தத்திற்கு வைசிராய் பிரபுவின். அனுமதி நிச்சயம் கிடைக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவ்விஷயத்தில், தோழர் சத்தியமூர்த்தி போன்ற வைதீகர்களும் மற்ற காங்கிரஸ்காரர்களும் என்ன செய்யப் போகிறார்களென்று பார்ப்போம் அவர்களுடைய உண்மையான தேசாபிமானத்தையும், ஜன சமூக ஊழியத்தையும் அறிய இதுவும் ஒரு தகுந்த சந்தர்ப்பமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.03.1935
ய ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
பார்ப்பனர் சூழ்ச்சி
சாமிநாதய்யர் ஜெயசிந்தி
ஜாதி அகங்காரத்திலும், தாங்கள் தான் எல்லோரையும்விட புத்திசாலிகள் என்னும் ஆணவத்திலும், தாங்கள் தான் எந்தக் காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிக்கக் கூடியவர்கள் என்கின்ற மமதையிலும் பார்ப்பனர்களுக்கு ஈடாக யாரும் இல்லை என்பது நாம் வெகுகாலமாக அறுபவத்தில் அறிந்து பொது ஜனங்களுக்குக் கூறி வரும் விஷயமாகும்
இந்த அகங்கார புத்தி கொண்டே பார்ப்பனர்கள் இன்று அரசியல்
துறை, சமுதாயத் துறை, சமயத் துறை, பாஷைத் துறை, சங்கீதத் துறை, நாடகத் துறை, வைத்தியத் துறை, பத்திரிகைத் துறை, உத்தியோகத் துறை, வியாபாரத் துறை, காப்பி கிளப்புத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும்
புகுந்து அவைகளில் பார்ப்பனரல்லாதாரை முன்னேற விடாமல் அமிழ்த்தி வருகிறார்கள். இவ்வுண்மை பார்ப்பனர்களாலும், பார்ப்பனர்களின் செல்வாக்காலும் நடத்தப்படும் பத்திரிகைகளில் இன்று நடைபெறும் கட்டுப்பாடான பிரசாரத்தைக் கவனித்து வரும் சுயமரியாதையும், ரோஷமும், பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல்லாதார்க்கு விளங்காமற் போகாது உதாரணமாக, அரசியல் துறையை எடுத்துக் கொண்டால் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார், பாஷியம் அய்யங்கார் போன்ற பார்ப்பனர்களுக்குத் தேசீயப் பத்திரிகைகளின் மூலம் கொடுக்கப் படும் விளம்பரத்தில் நூற்றில் ஒரு பங்காவது அவர்களுடைய சொற்களின்படி, அவர்களுடைய நோக்கத்திற்கு விரோதமில்லாமல், போடு தோப்புக்கரணம் என்றால் இதோ எண்ணிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் மாதிரியில் நடந்து வரும் பார்ப்பனரல்லாத தோழர்களான முத்துரங்க முதலியார், பக்தவச்சலம், அவனாசிலிங்கம், குமாரசாமிராஜா, சாமி வெங்கடாசலம் போன்றவர்களுக்கு கொடுக்கப்படுகின்றதா என்று பாருங்கள்!
சமயத் துறையில் எடுத்துக் கொண்டால், பார்ப்பனர்களுடைய செல்வாக்கை நிலை நிறுத்துவதற்குப் பாடுபடும் சங்கராச்சாரியார் போன்றவர்களுக்குக் கொடுக்கப்படும் பத்திரிகை விளம்பரத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காவது மற்ற பார்ப்பனரல்லாத மடாதிபதிகளுக்கு அவர்களுடைய பொருளைப் பறித்து உயிர் வாழுகின்ற பார்ப்பனர்களாலோ, அவர்களுடைய பத்திரிகைகளாலோ கொடுக்கப்படுகின்றதா என்று பாருங்கள்.
குடி அரசு - 1935 (1) 144
வக்கீல்களில் எடுத்துக் கொண்டால், தோழர்களான எஸ். சீனிவாசய் யங்கார், ஜெயராமய்யர், வெங்கட்டராம சாஸ்திரியார், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், ரங்காச்சாரியார் போன்றவர்களுக்குக் கொடுக்கப் படும் விளம்பரத்தில் பதினாயிரத்தில் ஒரு மடங்காவது தோழர்கள் எதிராஜலு, எஸ். மூத்தைய முதலியார், வெங்கிட்டரமணராவ் நாயுடு, ஜியார்ஜ் ஜோசப் போன்ற பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குக் கொடுக்கப் படுகிறதா என்று பாருங்கள். இதுபோலவே உத்தியோகங்களிலும் சர்.கே. சீனிவாச அய்யங்கார்,
வீ. கிருஷ்ணசாமி அய்யங்கார், சர்.சி.பி. ராமசாமி அய்யர் போன்றவர்கள் இருந்த காலத்தில் அவர்களை பார்ப்பனர்கள் என்பதற்காக எவ்வளவு பிரபலப்படுத்தினார்கள் என்பதையும், பிறகு அந்த ஸ்தானங்களில் பார்ப்பனரல்லாதவர்கள் வந்தவுடன் அவர்களை எவ்வளவு தூற்றுகிறார்கள் என்பதையும் தேசீயத்தைக் கொண்டாடும் பத்திரிகைகளைக் கவனிப்போர். தெரிந்து கொள்ளலாம்
இன்னும் சங்கீத விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவ்வகையில் தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனரல்லாதார்கூட கெட்டிக்காரர்களாக இல்லை என்று பாமரர்கள் நினைக்கும்படியும், சங்கீதத்திற்கென்றுதான் பார்ப்பனர்களே பிறந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் மாதிரியிலும், இன்று பார்ப்பனப் பத்திரிகைகள் பிரசாரம் பண்ணி வருவதை யாரும் அறியாமல் இல்லை கழுதைக்கும் கேடு கெட்ட முறையில் பாட்டுப் பாடும் பிச்சைக்காரப் பார்ப்பனர்களை யெல்லாம் பெரிய சங்கீத சாகித்ய சிகாமணிகள் என்றும், சங்கீத கலா விற்பன்னர்களென்றும், சங்கீத சரப பூஜியர்கள் என்றும், சங்கீத வித்வ ரத்நாகர பூஷணங்கள் என்றும் விளம்பரம் பண்ணி, அவர்களுடைய படம் போட்டு, அவர்களைப் பற்றிப் புத்தகங்கள் பிரசுரித்து, அவர்களுக்குப் பண முடிப்பும் கொடுத்து பிரபலப்படுத்தி வைப்பதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் உண்மையான நல்ல சங்கீத ஞானமுள்ள பார்ப்பனர்களையெல்லாம் எடுத்து விழுங்கி ஏப்பம்விடத் தகுந்த திறமையுடைய பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்௧ள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களுடைய பெயர்கள்கூட பொது ஜனங்களுக்குத் தெரியாமல் இருக்கும்படியும், பார்ப்பனர்களுக்கே பேரும் புகழும் சம்பாதனையும் ஏற்படும்படியும் இந்த பார்ப்பனர்கள் கட்டுப்பாடாகத் தங்கள் பத்திரிகைகளில் பிரசாரம் பண்ணி வருவதை நாம் அறிந்தே வருகின்றோம்
இன்று தமிழ் பாஷை விஷயத்தில் உழைப்பவர்களும், அதில் தேர்ந்த விற்பன்னர்களும் பார்ப்பனரல்லாத மக்களிலேயே ஏராளமாக நிரம்பி இருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாததல்ல. தோழர்களான சுவாமி வேதாசலம், எஸ்.சோமசுந்தர பாரதியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், கா. நமசிவாய முதலியார் போன்ற எவ்வளவோ சிறந்த படட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
புலவர்கள் இருந்தும் அவர்களையெல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் மனதினால் நினைப்பதுகூடப் பாவமென்று நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் தோழர்கள் உ.வே.சாமிநாதய்யர், ராகவையங்கார், ராமாநுஜாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களுக்கே தமிழ் பாஷையின் பெயரினால் பெரிய விளம்பரமும் அவர்களால் தான் தமிழ் பாஷையே நிலைத்திருக்கிறது என்ற பிரசாரமும் செய்து வருகிறார்கள்
சில வருஷங்களுக்கு முன், சமஸ்கிருதத்தில் உள்ள வியாச பாரதத்தை தமிழில் மொழி பெயர்த்தார் என்பதைச் சாக்கிட்டு கும்பகோணம் பண்டிதரான ராமாநுஜாச்சாரியார் அவர்களுக்குப் பத்திரிகைகளின் மூலம் பெரிய விளம்பரமும் பணமுடிப்பும் சேகரித்துக் கொடுத்தார்கள். ஜனங்களுக்கு மூடநம்பிக்கைகளையும் வருணாச்சிரம தருமங்களையும் சாதி வித்தியா சத்தையும் போதிக்கும் பாரதத்தை வெளியிட்டதற்காக இவ்வளவு பிரமாதப் படுத்திய இந்தப் பார்ப்பனர்களின் நோக்கம் என்னவாயிருக்க வேண்டும் என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த வாரத்தில் சென்னையில், மகா மகோபாத்தியாயர் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களின் எண்பத்தோராம் வருஷம் பிறந்த நாட் கொண்டாட்டம் சம்மந்தமாகப் பார்ப்பனர்கள் கட்டுப்படாகச் செய்த விளம்பரத்தையும், பிரசாரத்தையும், முயற்சியையும் கவனித்தால் இதன் உண்மையை கடுகளவு புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் மானமிருந்தால் தெரிந்து கொள்வார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை.
டாக்டர் சாமிநாத அய்யர் அவர்கள், அவருக்கு முன்னிருந்த சில புலவர்களாலும், சென்னைச் சர்வகலா சங்கத்தாராலும், சில புத்தகங்களின்.
மூல பாடங்களும், சில புத்தகங்களின் ஒவ்வொரு பகுதியும் உரைகளும் வெளியிடப்பட்டிருந்த சங்க இலக்கியங்களையும், முழுப்பாகமும் வெளியிடப்படாமலேயிருந்த சில புத்தகங்களையும், பெரும்பாலும் பார்ப்பனரல்லாதாரின் துணை கொண்டு தேடிப் பிடித்து ராமநாதபுரம் அரசர், திருவாவடுதுறை மடத்தார் போன்றவர்களின் உதவி பெற்று அவைகளை அச்சிட்டு வெளிப்படுத்தி, அதன் மூலம் பிரயாசைப்பட்டதற்கு ஏற்ற பொருள் லாபமும் பெற்றிருந்தாலுங்கூட, விடா முயற்சியுடன் தமிழ்ப் புத்தகங்களை, அதிலும் பழய சங்க இலக்கியங்கள் என்பன பலவற்றை ஒழுங்கான முறையில் சீர்திருத்தி வெளியிட்டமைக்காகத் தமிழபிமானிகள் அவருக்கு நன்றி பாராட்ட வேண்டும் என்பதை நாமும் மனப்பூர்வமாக ஆதரிக்கின்றோம்.
ஆனால் நேற்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் போன்ற அரசியல் பார்ப்பனர் முதல் தமிழ் என்னும் வார்த்தையை உச்சரித்தாலே “சூத்திர பாஷை" யைச் சொன்ன பாவம் வந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற உஞ்சிவிருத்திக்கார வைதீகப் பார்ப்பனர் வரை எல்லோரும்,
குடி அரசு - 1935 (1) 146
டாக்டர் அய்யர் அவர்களைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து, மகா மகோபாத்தியாயர், தக்ஷிணாத்ய கலாநிதி, டாக்டர் என ஏற்கனவே அவருக்குக் கிடைத்திருக்கும் பட்டங்களைப் பாராட்டியதோடு, “தமிழ் வியாசர்” என்னும் புதியதொரு பட்டத்தையும் சூட்டுவதாகப் பத்திரிகைகளில் விளம்பரம் பண்ணினார்கள். இவருடைய புகழ்ச்சிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பத்திரிகைகளில் அநுபந்தங்களும், புகழ் மாலைகளும் வெளியிட்டார்கள். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பனர்களின் வால்பிடித்துத் திரியும் தேசீயக் கூச்சல் போடும் பத்திரிகைகளும் நாலைந்து தினங்கள் சர்வம் சாமிநாதய்யர் மயமாகவே விளங்கும்படி செய்தார்கள். இவ்வாறு செய்தமைக்காக நாம் பொறாமையோ, துவேஷமோ, வயிற்றெரிச்சலோ ஒரு சிறிதும் அடையவில்லை. பார்ப்பனர் களால் “சூத்திர பாஷை” என்று அலட்சியம் செய்யப்படுகின்ற தமிழ் பாஷையின் மூலம் ஒரு பிராமணர் கெளரவிக்கப்பட்டதற்காகச் சந்தோஷமே அடைகிறோம்
பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம். உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர்களானால் இந்தடாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ, இவர்கள் அய்யர் அவர்களுக்குச் செய்த நன்றியை எடுத்துக் காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை
அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்பாருக்கு உதவியளிப்பாரும், இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படி செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?
தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?
147 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தற்பொழுது கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணி வரும் தோழர் உமாமகேசுரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட பாதகஞ் செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறதுண்டா?
உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும் தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அல்லது யாராயிருந்தாலும் பார்ப்பனர்களுக்கே பெருமையும் விளம்பரமும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதா என்பதை இது வரையிலும் சொல்லி வந்ததைக் கொண்டும் மேலே நாம் எடுத்துக் காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சி எடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்
இன்னும் பார்ப்பனர்கள், தங்களுடைய விளம்பரத்திற்காக பார்ப்பன. ரல்லாதாரை உபயோகித்துக் கொள்ளுவதிலும் வெகு தந்திரமாகவே நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும் டாக்டர் சாமிநாதய்யரின் பாராட்டுக் கூட்டத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அய்யரவர்களுக்குக் கொடுப் பதற்காகச் சேகரித்த பண மூடிப்புக்கு உதவினவர்களில் நூற்றுக்கு தொண்ணூறுபேர் பார்ப்பனர்களாகவேயிருந்தும் இந்த காரியத்தை ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமையிலும் ஒரு முஸ்லீம் தலைமையிலுமே நடத்தியிருக்கிறார்கள். மந்திரி கனம் பி.டி. ராஜனவர்கள் பாராட்டுக் கமிட்டித் தலைவராகவும், சர். மகமது உஸ்மான் அவர்கள் பாராட்டுப் பொதுக் கூட்டத் தலைவராகவும் இருக்கும்படி செய்திருக்கிறார்கள். எல்லாக் காரியங்களையும் பார்ப்பனர்களே செய்துவிட்டு இந்த இரண்டு பேரை தலைவர்களாக இருப்பதற்கு மாத்திரம் வைத்துக் கொண்டதன் நோக்கம், தமிழ்நாட்டிலுள்ள முஸ்லீம்கள், பார்ப்பனரல்லாதார்கள் ஆகிய எல்லோரும், டாக்டர் அய்யர் அவர்களைவிடத் தமிழில் பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்கள் என்பதற்காகவே தான் என்று சொல்வது குற்றமாகுமா?
இந்த மாதிரியே எந்தத் துறையில் எடுத்துக் கொண்டாலும், பார்ப்பனர்களே விளம்பரமும், அதன் மூலம் ஆதிக்கமும், அதன் மூலம் பணலாபமும் பெற்று வருவதையும், எந்தத் துறையிலும் பார்ப்பனரல்லாதார் இழிவுபடுத்தப்பட்டும், அழுத்தப்பட்டும் மதிப்புக் குலைந்து வருவதையும், இவைகளுக்கெல்லாம் தேசீயப் பார்ப்பனர்களே முக்கிய காரணமாயிருந்து வருவதையும் பலகாலமாகப் பார்த்துக் கொண்டேதான் வருகிறோம் பார்ப்பனர்களின் கட்டுப்பாடான சூழ்ச்சியும், செய்கையும் இப்படியிருக்க, இன்னும் பார்ப்பனரல்லாதார்கள் மான ஈனமின்றிப் பார்ப்பனர்களுக்குத் தடுக்குப் போட்டுக் கொண்டும், அவர்கள் சொல்லுக்கு தாளம் போட்டுக்
குடி அரசு - 1935 (1) 148
கொண்டும் அவர்கள் வால் பிடித்துத் திரிந்து கொண்டும் இருப்பார் களானால் பார்ப்பனரல்லாதார் சமூகம் எவ்வளவு காலம் ஏமாந்து கிடப்பது, என்ன கெதியடைவது என்று கேட்கின்றோம்.
சில வருஷங்களாக அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் பார்ப்பனரல்லாதார் இடம் பெற்று வருவதனாலும், பார்ப்பனருக்கு மூன். போல அப்பதவிகளில் ஏகபோக உரிமை பெறுவதற்கு இடமில்லாமற் போனதாலும் உத்தியோகப் பார்ப்பனர், அரசியல் பார்ப்பனர், வைதீகப் பார்ப்பனர், சீர்திருத்தக்காரப் பார்ப்பனர், உஞ்சிவிருத்திப் பார்ப்பனர், பத்திரிகைப் பார்ப்பனர் ஆகிய எல்லா பார்ப்பனர்களும் இப்பொழுது ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதாரை ஒரு துறையிலும் தலையெடுக்க வொட்டாமல் செய்ய முயற்சிக்கிறார்கள். இதற்காகவே அவர்கள் காங்கிரஸ் போர்வை, தேசீயப் போர்வை, தீண்டாமை விலக்குப் போர்வை, கிராமப் பிரச்சாரப் போர்வை, சங்கீதப் போர்வை, ஹிந்தி பிரச்சாரப் போர்வை, தமிழ் பாஷைப் போர்வை முதலிய பலவகையான போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சூழ்ச்சிப் பிரச்சாரம் பண்ணப் புறப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் பார்ப்பனரல்லாதார் சமூகமானது மானத்தோடும் சுதந்திரத்தோடும் சுயமரியாதையோடும் வாழ வேண்டுமென்று கருதுகின்ற சுத்த ரத்தமும், பகுத்தறிவும் உள்ள பார்ப்பனரல்லாதார் ஒவ்வொருவரும் இந்தப் பார்ப்பனர்களுடைய சூழ்ச்சிக்கு கொஞ்சமும் ஏமாறாமல் எச்சரிக்கையாய் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.03.1935
Mo வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
சுயமமியாதை இயக்கம்
தோழர் ஈ.வே. ராமசாமி அறிக்கை
சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி அதன் சமுதாய சம்மந்தமான. கொள்கைகளின் எதிரிகளால் கிளப்பிவிடப்பட்ட பலவிதமான கற்பனைச் சேதிகளாலும் விஷமப் பிரசாரங்களாலும் பொது மக்களுக்குள் சில தப்பு அபிப்பிராயங்கள் பரவி வருவதாகத் தெரிகின்றது
இதைப்பற்றி பல சமயங்களில் நாம் பொது ஜனங்களுக்கு விளக்கி
இருந்தும் சில பகுதிகளில் அவ்வித தப்பு அபிப்பிராயங்கள் மாறியதாகத் தெரியவில்லை. ஆதலால் மூன்பு விளக்கியவைகளையே மறுபடியும் விளக்க வேண்டியிருக்கிறது
சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான கருத்தெல்லாம் தாழ்த்தப்
பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும், ஏழை மக்களுக்கும் நன்மை செய்வதற்கு உழைப்பதேயாகும். அதாவது அவர்களை தற்போது இருக்கும் கஷ்டமான நிலையிலிருந்து விடுவித்து சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் சமத்துவமாக வாழச் செய்ய வேண்டும் என்பதே.
இந்தக் கருத்து வெற்றி பெற வேண்டுமானால் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல் ஆகிய மூன்று துறைகளிலும் கவலை எடுத்து உழைத்து வந்தாலொழிய பயனேற்படாது. ஆதலால், சுயமரியாதை இயக்கமானது முக்கியமாய் இத் துறைகளில் உழைத்து வரவேண்டியதாகிறது. எனவே, இம் மூன்று துறை உழைப்பிலும் இயக்கத்தின் திட்டம் என்ன. என்பதை ஒருவாறு பொது ஜனங்களுக்கும், அரசாங்கத்திற்கும், இயக்கத்தைக் குறை கூறுகின்ற நண்பர்களுக்கும் விளங்குவதற்காக கீழே விவரிக்கின்றேன்.
அரசியல்
சுயமரியாதை இயக்கம் ஆரம்ப காலத்தில் அரசியல் துறையில் பிரவேசிக்கக் கூடாது என்கின்ற ஒரு அபிப்பிராயத்தைக் கொண்டிருந்த போதிலும், அரசியலின் பெயரால் காங்கிரஸ் என்னும் ஒரு ஸ்தாபனத்தை பார்ப்பனர்கள் கைப்பற்றி அதைத் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு வந்து இந்நாட்டில் எவ்விதமான சமுதாய சீர்திருத்தமும், பொருளாதார சீர்திருத்தமும் ஏற்பட முடியாமல் அவ்விரண்டுக்கும் முட்டுக்கட்டையாகவே இருந்து வந்ததால், குறிப்பாகவும்,
குடி அரசு - 1935 (1) 150
தெளிவாகவும் சொல்ல வேண்டுமானால் காங்கிரசை சுயமரியாதைக் கொள்கைகள் முழுவதற்குமே விரோதமாக வேலை செய்வதற்கே பயன்படுத்தி வந்ததால், அப்படிப்பட்ட காங்கிரசை எதிர்க்க வேண்டியதும், அதன் ஆதிக்கம் குறைக்கப்பட வேண்டியதற்கு எவ்வித முறையையும் கையாள வேண்டியதும் அவசியம் என்னும் தன்மையில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது அவசியமானால் அந்தப்படியும் செய்வது என்றும் கருதி வந்திருக்கிறது என்பதோடு இனியும் அந்தக் கருத்தையே கொண்டிருக்கிறது.
ஆதலால் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிரவேசிக்கிறது என்று சொல்லப்படுமானால், பார்ப்பன ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் காங்கிரசை பார்ப்பனர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு விரோதமாய் உபயோகப்படுத்தி பயன் பெறாமல் இருப்பதற்காகவுமே ஒழிய மற்றபடி அரசாங்க சட்டதிட்டங்களை எதிர்க்கவோ அவற்றிற்கு மாறாக நடக்கவோ என்பதற்காக அல்லவென்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதே அபிப்பிரா யத்தை இதற்கு முன்னும் பல தடவை தெரியப்படுத்தியுமிருக்கிறோம்
அன்றியும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பல அமுலுக்கு வர வேண்டுமானால் அரசாங்கத்தின் மூலம் பல சட்டத்திட்டங்கள் ஏற்பட வேண்டி இருப்பதால் அதை உத்தேசித்தும் அரசியலில் தலையிட வேண்டியது அவசியமாகிறது ஆகவே சுயமரியாதை இயக்கம் ஏதாவது எப்போதாவது அரசியலில். தலையிட்டது என்று சொல்ல வேண்டிவருமானால் அரசாங்க சட்ட திட்டங்களை மீறவோ, அவைகளுக்கு இடையூறு உண்டாக்கவோ அல்ல என்பதை அறிய வேண்டுகிறேன்.
பொருவியல்
நாட்டு மக்களின் பொது நலத்துக்கும், ஏழை மக்களின் வாழ்க்கை உயர்வுக்கும் பொருளாதார நிலையை விருத்தி செய்து அது எல்லா மக்களுக்கும் ஒரு அளவுக்காவது சமமாய் பரவப்படும்படியாயும் ஒரே கையில் ஏராளமாய் குவியாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியமானதும் அவசியமானதுமான காரியமாகும். ஆதலால் அந்த அளவுக்கு பயன் ஏற்படும்படி செய்ய வியாபாரம், லேவாதேவி, விவசாயம் முதலிய துறைகளில் சில மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என்பது யாவரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாகும்.
அப்படிச் செய்வதிலும் பலாத்காரம் செய்வதோ திடீரென்று தலைகீழ் புரட்சியான காரியங்களால் மனித சமூகத்தில் பயமும், அதிருப்தியும், சமாதான பங்கமும் ஏற்படும்படி செய்து, சட்டம், சமாதானம் சீர்குலையும்படி செய்வதோ ஆகிய காரியங்கள் இல்லாமல் பொதுஜன உபயோககரமான தொழில் சாலைகள், வியாபாரங்கள், லேவாதேவி முதலான காரியங்களை 151 வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
அரசாங்க நிருவாகத்திற்குள்ளாகவே கொண்டு வரும்படி செய்வதும், அரசாங்க நேர்பார்வை நிர்வாகத்திற்குட்பட்ட கூட்டுறவு முறையின் கீழ் அவை நடைபெறும்படி செய்து லாப நஷ்டங்கள் எல்லா மக்களுக்கும் சமமாய் இருக்கும்படி செய்வது முதலான சமதர்மக் கொள்கையே இயக்கத்தின் பொருளாதாரத் தத்துவமாகும்
சமூக இயல்
மக்கள் அரசியலிலாகட்டும், பொருள் இயலிலாகட்டும் கீழ்மைப்பட்டும், இழிவுபடுத்தப்பட்டும் கிடப்பதற்கு சமுதாயத்துறையிலுள்ள பழக்க வழக்கங்களும், மதத் துறையிலுள்ள பேத உணர்ச்சிகளும், பிரிவினைகளும் பெரியதொரு அளவுக்குக் காரணமாய் இருப்பதால் ஜாதி மத சம்பந்தமான மூடக்கட்டுப்பாடுகளும் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிக்கப்பட வேண்டியது
மிகவும் அவசியமாகும். இதை சுயமரியாதை இயக்கம் ஆதியிலிருந்தே
வற்புறுத்தி வந்திருக்கிறது ஆகவே இந்தக் காரியங்கள் செய்வதற்கு வகுப்பு பேதங்கள், ஜாதி பேதங்கள் ஆகியவைகளை அறவே ஒழிக்க முயற்சிப்பதும், ஜாதி வகுப்பு முதலியவைகளுக்கு ஆக்கமளிக்கும் மதங்களின் தன்மைகளை வெளிப் படுத்துவதும், நியாயமான முறைகளில் ஜாதி, வகுப்பு, மதம் ஆகியவைகளின் தத்துவங்களைக் கண்டிப்பதுமான காரியங்கள் செய்ய வேண்டியது அவசியமென்றும் கருதுகிறது
இப்படிச் செய்வதில் ஜாதி வகுப்புத் துவேஷங்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதோ, எந்த ஜாதி, எந்த மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர். களுக்குள்துவேஷமோ, மனவருத்தமோ உண்டாகும்படி செய்வதோ அல்லது வேண்டுமென்றே அவமானப்படுத்துவது என்பதோ சிறிதும் லட்சியமல்ல என்பதோடு அதை ஒரு நாளும் இயக்கம் ஒப்புக் கொள்ளுவதும் இல்லை.
முடிவு
எனவே சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கையானது பார்ப்பன ஆதிக்கக் காங்கிரசை எதிர்ப்பதும் அதற்காக எவ்வளவு அவசியப் பட்டாலும் அவ்வளவு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதும் சமுதாய இயலில் ஜாதிமத பேதங்களை அகற்றுவதும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதும் பொருளியலில் சமதர்மமுமேயாகும். இவைகளைப் பற்றிய விஷயங்களை மக்களிடை பிரசாரம் செய்யவும், அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவுமான காரியங்கள் நடைபெற வேண்டுமானால் காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியேமேலானது என்பது என்னுடைய வெகுநாளைய அபிப்பிராயமாகும்.
- ஈ.வெ. ராமசாமி
குடி அரசு - அறிக்கை - 10.03.1935
குடி அரசு - 1935 (1) 152.
மடங்களுக்கு ஆபத்தா?
சுயநலக்காரர்கவின் எதிர்ப்பு
நமது நாட்டில் சமயங்களைப் பாதுகாப்பதற்கு என்னும் பெயரோடு உள்ள மடங்களைப் பற்றியும், அந்த மடங்களின் அதிபர்களாக இருக்கின்ற ஆச்சாரியர்கள், தம்பிரான்கள், ஜீயர்கள் போன்ற அதிபதிகளைப் பற்றியும், அவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்கும் சொத்துக்களை எந்தெந்தக் காரியங்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் மதத்தின் பெயரால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்குகளை எந்தெந்த சுயநலமுள்ள காரியங்களுக்காகத் துஷ்பிரயோகம் பண்ணி வருகிறார்கள் என்பதைப் பற்றியும் நாம் அதிகமாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம்.
இன்று, இந்த மடங்களும், அவற்றின் பணமும், செல்வாக்கும், நமது
நாட்டில், சாதிச் சண்டைகளையும், மதச் சண்டைகளையும் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பல மடங்கு அதிகமாக வளர்த்துப் பலப்படுத்தவே உபயோகப்படுகின்றன. இந்தச் சண்டைகளைப் பலப்படுத்துவதன் மூலம் தங்களை உயர்ந்த சாதியினராகவும், உயர்ந்த மத ஒழுக்கமுடையவராகவும் பாமரர்களாகிய பொதுஜனங்களுக்குக் காட்டி, அவர்கள் ஏமாறும்படி செய்து பணம் பறித்து வாழ்கின்ற பார்ப்பனர்களுக்கு இன்னும் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும், பணத்தையும் அதிகப்படுத்திக் கொழுக்க வைப்பதற்குமே இந்த மடங்களின் சொத்துக்களை உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும் பலர் அறிந்தே யிருக்கிறார்கள்.
மதத்தின் பெயரால் பொதுஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்கும் இந்தச் சோம்பேறி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் மடத்தலைவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய அதிகாரத்திலுள்ள சொத்துக்களை குடிக்கும், விபசாரத்துக்கும், அடிதடி கொலை சம்பந்தமான கோர்ட்டு வழக்குகளுக்கும் இன்னும் தங்களுடைய ஆடம்பர வாழ்க்கைச் செலவுகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து வருவது மடத்துச் சிஷ்யகோடிகளுக்கும் பொது ஜனங்களுக்கும் தெரியாத விஷயமல்ல
மடம் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ஆத்ம வித்தை பயிலும் இடம் என்பதே அர்த்தம் என்றும், மடாதிபதிகள் தலைவர்களாய் இருந்துகொண்டு
13 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
சிஷ்யர்களுக்கு ஆத்ம வித்தையை கற்பிக்க வேண்டுவதே அவர்களுடைய கடமையென்றும், மடச்சிஷ்யர்களும், மட அபிமானிகளும் சொல்லியும் ஒப்புக் கொண்டும் வருகிறார்கள். இவர்கள் கூறுகிறபடி மடாதிபதிகளின் இந்தக் காரியம் ஒழுங்காக நடைபெற்று வருகிறதா என்றால், இன்று மடத் தலைவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசும் எல்லோரும், பதில் கூற வாயில்லாமல் தலைகுனிய வேண்டியதுதான். ஒரு சமயம் தைரியமான
பதில் கூற வேண்டுமானால் ஏதாவது தப்பு சால்சாப்புகள் சொல்லித் தொலைக்க வேண்டுமேயொழிய உண்மையாக திருப்தியான பதில்
ஒன்றையும் கூற முடியாது உண்மை என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் இந்த மடங்களின். சொத்துக்கள் யாவும், பொது ஜனக் கல்வி அபிவிருத்தியை உத்தேசித்து முற்காலத்திலிருந்த ராஜாக்களாலும், செல்வவான்களாலும், சிஷ்யர்களாலும் கொடுக்கப்பட்டவைகளே என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தச் சொத்துக் களை இப்பொழுது இவர்கள் பொது ஜன நன்மைக்காக ஒரு கடுகளவாவது செலவழித்து வருகிறார்களா என்று யாராவது சொல்ல முடியுமா?
எந்தக் காரியத்திற்காக இந்த மடாதிபதிகளிடம் சொத்தும் அதிகாரமும் ஒப்படைக்கப் பட்டனவோ, அந்தக் காரியத்தை அவர்கள் சரியாகச் செய்து வராவிட்டால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சொத்துக்களையும், அதிகாரங்களையும் அவர்களைவிட்டு மாற்றுவதற்கு முயற்சி செய்வதே நேர்மையான முறையாகும். அப்படியில்லாமல், அவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தையும், சொத்துக்களையும் அவைகள் கிடைத்த நோக்கத்திற்கு மாறாகத் தங்கள்இஷ்டப்படி துஷ்பிரயோகம் செய்வார்களானால் அதை அரசாங்கமும், சிஷ்யர்களும், பொது ஜனங்களும் கவனிக்காமல் கண்ணை
மூடிக் கொண்டோ, அல்லது கவனித்தாலும் ஒன்றும் பேசாமலும் சும்மா அவர்கள் இஷ்டப்படி விட்டுக் கொண்டோ இருப்பது நியாயமாகுமா என்று யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம்
பொது ஜனங்கள் பல வருஷங்களாகவே மடங்களின் நிர்வாகங்களைச்
சீர்திருத்தி, மடாதிபதிகள் செய்து வரும் மத ஒழுக்கத்திற்கு விரோதமான. அக்கிரமங்களை ஒழித்து அவைகளின் நிர்வாகத்தை ஒழுங்காக நடைபெறச் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். இதற்காகச் சில மடங்களின் மேல் அந்த மடங்களின் சிஷ்யர்கள் என்பவர்களால் கோர்ட்டுகளில், “ஸ்கீம் சூட்டுகள்' கொடுக்கப்பட்டு வழக்குகள் நடத்தப் பட்டதும் பொது ஜனங்களுக்குத் தெரிந்த விஷயமாகும்
இப்பொழுது இருக்கும் இந்து தரும பரிபாலனச் சட்டத்தின்படி, மடங்களில் நடைபெறும் ஊழல்களையும், அந்த மடாதிபதிகளால் தங்களுடைய சரீர சுகத்தைக் கருதியும், அதற்கு உதவி செய்பவர்களின் தயவைக் கருதியும் அக்கிரமமான வழியில் சொத்துக்களை வீணாக்கும்
குடி அரசு - 1935 (1) 154
செய்கையைத் தடுக்க வழியில்லை. ஆகையால் மடங்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி, அவைகளின் சொத்துக்களையும் நாசமாகாமற் காப்பாற்று வதற்காகச் சென்னைச் சட்டசபையில் புதிய மசோதா ஒன்று கொண்டு வரப்பட்டு அது இப்பொழுது சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிக்கமிட்டியின் ஆலோசனையில் இருந்து வருகிறது
மடங்களின் நிர்வாக விஷயம் ஒழுங்குபடுவதற்காக ஒவ்வொரு மடங்களுக்கும் தனித்தனியே “மடத்தின் லெளகீக விஷயங்களைக் கவனிக்க!” ஒரு நிர்வாக உத்தியோகஸ்தரை நியமிக்க வேண்டுமென்பதும், (இதனால் மத விஷயங்களில் மடாதிபதிகளின் அதிகாரம் சிறிதும் குறைவுபடாது. ஆனால் மற்ற நிர்வாக விஷயங்களிலும் அவர்களுக்குச் செல்வாக்கு உண்டு.) மடத்தின் சிஷ்யர்களைக் கொண்ட ஆலோசனை சபையொன்று ஏற்படுத்தி, அச்சபை நிர்வாக உத்தியோகஸ்தருக்கும், மடாதிபதிக்கும் ஆலோசனை கூறக் கூடியதாக இருக்க வேண்டுமென்பதும், இந்த ஆலோசனைகள் கவனிக்கப்படுகிறதா என்பதை இந்து தரும பரிபாலன போர்டார் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்பதுமே தற்பொழுது தனிக் கமிட்டி ஆலோசனையில் இருக்கும் மசோதாவில் அடங்கியிருக்கும் முக்கியமான விஷயங்களாகும்
இந்த மசோதாவை மடாதிபதிகளுக்கும், பிரபலஸ்தர்களுக்கும், அவர்களுடைய அபிப்பிராயம் இவ்விஷயத்தில் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக கமிட்டியார்கள் சுற்றறிக்கையாக அனுப்பி யிருக்கிறார்கள். சிலர் இந்த மசோதாவின் முக்கியத்தையும், அவசியத்தையும் இதனால் ஏற்படும் நன்மையையும் உணர்ந்து இதற்குச் சாதகமான அபிப்பிராயங் கொடுத்து வருகிறார்கள். ஆனால் தங்கள் சுகபோகச் சுயநல. வாழ்வுக்கு ஆபத்து வரும் என்று கருதும் மடாதிபதிகளும் அந்த மடாதிபதிகளுக்குப் பல வகையில் கையாட்களாக இருந்து வயிறு பிழைக்கும் கூலிகளும், தரகர்களும், மடத்துப் பணங்களை இதுவரையிலும் கொள்ளையிட்டது போதாமல், இன்னும் கொள்ளையடிக்க வேண்டுமென்று இருக்கின்ற பார்ப்பன வக்கீல் கூட்டங்களும் இந்த மசோதாவை ஆட்சேபித்துப் பலமாகப் பிரசாரம் பண்ணி வருகிறார்கள். இந்த மசோதாவை நிறைவேற்றிச் சட்டமாக்கினால், மடங்கள் அழிந்து விடும் என்றும், மதத்திற்கு ஆபத்து வருமென்றும் சென்னை அரசாங்கமும், சட்டசபையும், மந்திரிமார்களும் இம்மசோதாவுக்கு ஆதரவு அளிக்காமல் கைவிட்டுவிடவேண்டுமென்றும் கூறி வருகிறார்கள். காலஞ்சென்ற பனகால் அரசர் இந்து தரும பரிபாலன மசோதாவைக் கொண்டு வந்தபோது, இந்த வைதீகர்களும், கோயில் பணத்தைக் கொள்ளையடித்து வாழ்ந்து கொண்டிருந்த கூட்டத்தாரும் எவ்வளவு கூப்பாடு போட்டார்களோ அந்தக் கூப்பாட்டை மறுபடியும் இந்த மட பரிபாலன மசோதா விஷயத்தில 155 வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
கிளப்பியிருக்கிறார்கள். மடங்களின் செல்வம், அக்கிரமமான வழியில் செலவாகாமல், ஒழுங்கான வழியில் செலவாவதற்காகச் செய்யப்படும் இந்த முயற்சியினால் மதம் எப்படி அழிந்து விடும் என்பதும், மடங்கள் எப்படிப் பாழ்பட்டு விடும் என்பதும், மடாதிபதிகளின் செல்வாக்கு, அதாவது அவர்களுக்கு மதத்தின் பேரால் உள்ள மதச் செல்வாக்கு எப்படிக் குறைந்துவிடும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
உண்மையில் மடாதிபதிகள் ஆத்ம போதனை செய்வதற்கென்றும், ஜன சமூகத்திற்கு நல்லொழுக்க போதனை செய்வதற்கென்றும் ஏற்பட்டிருப்
பார்களானால் அவர்களுக்கு இந்தச் சொத்து நிர்வாகத்தைப் பற்றியும், அந்த
நிர்வாகத்தின் மேல் அதிகாரம் செலுத்துவதைப் பற்றியும் ஏன் கவலை உண்டாக வேண்டும் என்று கேட்கிறோம், ஆத்ம ஞானியாகவே யிருந்து, ஆத்ம ஞானத்தைப் போதிக்கின்ற ஒருவனுக்கு, ஆத்ம ஞானமும் ஆத்ம ஞான போதனையும் நாசமாகும்படியான உலக விவகாரத்தில் அதிக தொடர்பும் ஆசையும் வளரும்படியான சொத்து, வம்பு வழக்கு சம்பந்தமான லெளகீகத் தொல்லை இருக்குமானால் அவன் எப்படி உண்மையான ஆத்ம ஞானியாக இருக்க முடியும்? ஆத்ம ஞானத்தைப் போதிக்க முடியும் என்று இப்பொழுது கூச்சல் போடும் மடாபிமானிகளைக் கேட்கிறோம்.
ஆகவே, தற்பொழுது ஆலோசனையில் இருந்து வரும் மசோதாவைச் சட்டமாக்குவதனால், மடங்களுக்கோ, மடாதிபதிகளுக்கோ, அவர்களுடைய ஆத்மஞான'ங்களுக்கோ, ஆத்ம ஞான போதனை''களுக்கோ, மதங்களுக்கோ எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை என்பது உறுதி. ஆதலால் உண்மையான வழியில் நடக்க விரும்பும் மடாதிபதிகளும், அவர்களுடைய சிஷ்யர்களும் இந்த மசோதாவை முழுமனதோடு வரவேற்க வேண்டுமே ஒழிய, கண்டிக்கவோ, அரசாங்கத்தார். மதத்தில் தலையிடுகிறார்கள் என்று வீண் கூச்சல் போடவோ சிறிதும் நியாயமில்லை. இது இப்பொழுது இம்மசோதாவைக் கண்டிக்கும் கூட்டத்தார்க்குத் தெரியாத விஷயமும் அல்ல. ஆனாலும் சுயநல வயிற்றுப் பிழைப்புக் கூட்டத்தார்கள் மதங்களின் பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்ட இந்த நல்ல மசோதாவை பலமாக கண்டிப்பதற்குக் காரணம் சுயநலமும் வயிற்றுப் பிழைப்புமே என்பதே தவிர வேறு எதாக இருக்க முடியும் என்று யோசித்து பார்த்தும்கூட நமக்கு ஒன்றும் விளங்கவில்லை.
நம்மை பொறுத்த வரையிலும் இந்த மடங்களைப் பற்றியோ, இவர்களுடைய மதப் பிரசாரத்தைப் பற்றியோ, “ஆத்ம ஞான போதனை”யைப் பற்றியோ எவ்வித கவலையும் இல்லையென்பதோடு. இந்த மடங்களெல்லாம், அடியோடு நாசமானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டோம். ஆனால் தேச பொது ஜனங்களால் ஏற்பாடு செய்து வைக்கப்பட்ட இந்த மடங்களின் சொத்துக்கள் ஒருசில கூட்டத்தாரால்
குடி அரசு - 1935 (1) 156
மட்டிலும் கொள்ளையடித்துக் கொண்டும் யாருக்கும் பிரயோஜனமில்லாத வீண் வழிகளில் செலவாகிக் கொண்டும் வருவதைத் தடுத்து அவைகளை நல்ல வழிகளில் தேச மக்களுக்குப் பயன்படுமாறு செலவாகும்படி செய்ய வேண்டும் என்பதற்காகவே இம்மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஆதலால் சட்டசபை அங்கத்தினர்களும், உண்மையில் மடங்களின் நிர்வாக விஷயத்தில் கவலையுடையவர்களாயிருந்தால், யாருடைய எதிர்ப்புக்கும் அஞ்சாது இதை நிறைவேற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.03.1935
157 வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
இது தர்மம் ஆகுமா?
இப்படிப்பட்ட ஹிந்து மதம் யாருக்கு நன்மை தரும்?
மநு தர்ம சாஸ்திரம்” என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும், எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிடசமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள “இந்து” மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மநுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்
1. “பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன்
நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது'
- அத்தியாயம் 8. சுலோகம் 20
2. சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்'
- ௮.8. ௬.22
3. 'சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி' - ௮.8௯. 22
4. ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை' - ௮.8. 5.112
5. நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும் பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும்.
குடி அரசு - 1935 (1) 158
சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர். போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர
வேண்டும்' - ௮. 8. & 113-115
சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்' - ௮.8, ௬. 270
'சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய
எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்' - ௮.8. &.271.
'பிராமணனைப் பார்த்து, 'நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்' - ௮.8. 5272
சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்' - ௮.8. ௬.281
'பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை - ௮.8. ௬.349.
10
சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."
11
பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்.' - ௮.8. &.380.
'அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்.” - அ. 8. ௬.410
12
13
பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால்
சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்' - அ. 8. 5.413
"பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம் ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்' - ௮. 8. சு.417
14
'சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது'
15
- ௮. 9. சு.416
'பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை! - அ. 8. ௯.155
16
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
159
17. “பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன்
தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்.' - ௮.9. 5.248
18. “பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்' - ௮. 9. & 317
19. “பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." - அ. 9. 5319
20. 'பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்.” - ௮.9 ௯. - 320
21. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு.” - ௮.11. ௬.12
22. “சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்.
- ௮.11. ௬.13
23. “யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது. - அ.11. ௬.20
24. பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - ௮.11. ௬.66
25. ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.” - ௮.11. &131
25(அ). அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது. - ௮.11. 5132
26. க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்.” - ௮.11 ௬.285
27. சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்.” - ௮.10. ௬.75
குடி அரசு - 1935 (1) 160
28. “பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.” - ௮.10. ௬.96
29. “சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ
வேண்டும்.” - ௮.10. ௬.96
30. “பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரறுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்.” - ௮.10. &.125
31. சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - ௮.10. ௬.129
32. மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்.” - ௮.2. ௬.7.
இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் “பிராமணன்” என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில். யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை 'மனுதர்மம்'' என்று கூறுவதா? அல்லது “மனு அதர்மம்” என்று கூறுவதா? சற்று யோஜித்து முடிவு செய்யுங்கள்.
குடி அரசு - கட்டுரை - 10.03.1935
61— வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
அன்ணிய அமிசிக்குத் தடையா?
தோழர்களே!
இந்திய சட்டசபையில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. அதைப் பற்றி பொது ஜனங்கட்கு கூற வேண்டுமென்றும், அதனால் ஏழைகட்கு ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் இது போன்ற சங்கங்களால் தீர்மானங்கள் செய்து சர்க்காருக்கு அனுப்ப வேண்டு மென்றும் குடிஅரசில் இதற்கு முன் எழுதப்பட்டிருந்தன. அதன்படியே கோவை, திருச்சி, சென்னை முதலிய பல இடங்களில் தொழிலாளர்களால் அன்னிய அரிசிக்கு வரி விதித்தால் எங்கட்கு மிகுந்த கஷ்டமேற்படும் என்று தீர்மானித்து அரசாங்கத்தாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஏழை மக்களை உத்தேசித்து வேண்டுமென்றேதான் அரசாங்கத்தார். அன்னிய அரிசிக்கு வரி விதிக்க முன்வரவில்லை. ஆனால் நமது பிரதிநிதிகளாக இந்திய சட்டசபைக்குச் சென்றிருப்பவர்கள் தான் அதற்குக் கவலை எடுத்துக் கொண்டு வரிவிதிக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை நாம் கண்டிக்க வேண்டாமா? நமது உண்மையான நிலையை சர்க்காருக்கு எடுத்துக்காட்ட வேண்டாமா? இதை இப்படியே விட்டுவிட்டால் இனி என்னென்ன செய்வார்கள். என்பதை எடுத்துக் கூற வேண்டியதில்லை. அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டுமென்பதற்குக் காங்கிரஸ்காரர்கள் சொல்லும் காரணங்களைக் கவனிக்க வேண்டும். நம் நாட்டு அரிசியின் விலை குறைந்துவிட்டதாம். அதனால் நமது மிராசுதார்கள் மிக சங்கடமான நிலமையில் இருக்கிறார் களாம். அச் சங்கடமான நிலைமையைத் தடுக்க வேண்டுமானால் அன்னிய அரிசியைத் தடுத்து நம் நாட்டு அரிசி அதிக விலைக்கு விற்கும்படி செய்ய வேண்டுமாம். இதன் யோக்கியதையைப் பாருங்கள்.
கந்தாயம் குறைக்க வேண்டுமென்று நம் மிராசுதார்கள் கூறுகிறார்கள். குறைத்துக் கொண்டு போகட்டும். நாம் அதற்குத் தடை கூறவில்லை.
இன்று அரிசி பட்டணம்படி 50 கொண்ட மூட்டை ஒன்றுக்கு ரூபா
10 முதல் 12% வரையும், சின்னப்படிக்கு படி இரண்டணா வீதமும் விற்கிறது. இது சல்லிசான விலை என்றால் உயர்ந்த விலை என்று எதைச்
குடி அரசு - 1935 (1) 162.
சொல்லுவது. வெளிநாட்டிலிருந்து இந்த வருஷம் 5% லட்சம் மூட்டை அரிசி இறக்குமதியாக்கி இருக்கிறது. அப்படி இருந்தும், ரூபாய்க்கு பட்டணம் படியில் 4 படி அரிசிதான் விற்றிருக்கிறது. அந்த அரிசி வராவிட்டால் நமது கதி என்ன ஆகியிருக்கும். இந்த நிலையில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும் பட்சம் மிராசுதார்கட்கு லாபமும் குடியானவர் களான ஏழைகட்கு நஷ்டமும், பெருங்கஷ்டமும் ஏற்படும் என்பதை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது என்று நீங்கள் கருதுகின்றீர்களா? இந்த
பத்து வருடகாலத்திற்கு மூன் அரிசி சாப்பிட்டவர்களை விட இப்பொழுது பத்து மடங்கு அதிகமாக அரிசி சாப்பாடு சாப்பிடுகிறார்கள்.
முன் கம்பு, கேப்பை, சோளம், திணை முதலிய தானிய வகைகளை வாங்கிச் சாப்பிட்டவர்கள் இப்போது அரிசி சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஏன்? என்றால் அரிசி சாப்பிடுவதைசிலர் நாகரீகமென்று கருதி இருக்கிறார்கள்.
சிலர் தானியம் சாப்பிட்டால் கேவலம் என்று நினைக்கிறார்கள். சிலர் தாங்கள் பணக்காரர்கள் என்பதற்கு அரிசி சாப்பிடுவது ஒரு அடையாளம் என்று நினைத்து அரிசி சாப்பாடு சாப்பிட்டு வருகிறார்கள். கோவை ஜில்லாவில் 20 லட்சம் ஜனத்தில் 15 லட்சம் ஜனங்கள் கொஞ்ச காலத்திற்கு முன் தானிய சாப்பாடு சாப்பிட்டார்களென்று சொல்லலாம். இப்போது 15 லட்சம் பேர்கள் அரிசி சாப்பாடும், 5 லட்சம் பேராவது தானியச் சாப்பாடும் சாப்பிடுகிறார்களா? என்று சொல்ல முடியாது. இந்தப்படிகணக்குப் பார்த்தால்,
நம் நாட்டில் விளையும் அரிசி நம் நாட்டு ஜனங்கட்குப் போதாது, வெளிநாட்டிலிருந்தும் அரிசி வந்தால் தான் நம் நாட்டில் அரிசி பஞ்சமில்லாமல் சவுக்கியமாக இருக்க முடியும். வெகு காலமாகவே நமக்கு ரங்கூன் அரிசி வந்து கொண்டுதான் இருந்தது. முன் நமக்கு செளகரியம் இல்லாததால் இங்கிருந்து வெளிநாட்டிற்கு சாமான்கள் ஏற்றுமதி ஆகாததால் இங்கு விளையும் சாமான்களை இங்கேயே செலவு செய்தார்கள். மீதி இருந்ததை குழியில் போட்டு மூடி பஞ்சத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
முன் நமது நாட்டில் அடிக்கடி பஞ்சம் ஏற்படும். இப்போது எங்கு பார்த்தாலும் ரயில்வே போக்குவரத்து ஏற்பட்டிருப்பதால் பஞ்சமில்லாது விளைந்த இடத்திலிருந்து விளைவில்லாத இடத்துக்கு சரக்குகள் அனுப்பப்பட்டு ஒரு அளவு பஞ்சம் இல்லாமலிருக்கிறது. போக்குவரவு சாதனம் ஏற்பட்டிருப்பதே இதற்காகத்தான். அப்படியிருக்க அன்னிய அரிசியை, ஆகாரசாமானைத் தடுக்க வேண்டுமென்று சொல்லுவது ஞாயமா? ஒழுங்கா? என்று ஏழைகள் கவனிக்க வேண்டுகிறேன்.
இப்போதுஅன்னிய அரிசியைத்தடுக்க வேண்டுமென்பது அரசாங்கமா? அல்லது ஏழைகளுக்காக பாடுபடுவதற்காக இந்திய சட்டசபைக்குச் செல்லு கிறோம் என்று கூறிச்சென்ற நமது பிரதிநிதிகளா என்று உங்களைக் கேட்கிறேன். ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
இந்த அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதால் ஏழைகளுக்குத்தான். கஷ்டம். பணக்காரர்களுக்குக் கஷ்டம் இல்லை. இன்று இந்திய சட்டசபையில் இருக்கும் பிரதிநிதிகள் யார் என்று உங்களைக் கேட்கின்றேன். பணக்காரர் களின் தரகர்கள்தான் இன்று இந்திய சட்டசபையில் இருக்கிறார்கள். அங்கு சென்றுள்ள பிரதிநிதிகள் ஏழை மக்களின் கஷ்டத்தை நீக்கவே நாங்கள் வந்திருக்கிறோம் என்று கூறுவார்கள். இது பித்தலாட்டம். சர்க்கார் ஓடுகின்ற மாட்டின் வாலை பிடிப்பவர்கள்; ஏனெனில் அங்கு சென்றுள்ள பிரதிநிதிகள் சொல்லுகின்றபடி அவர்கள் செய்துவிட்டு நாம் கேட்டால் உங்கள் பிரதிநிதிகள்தான் அன்னிய அரிசிக்கு வரி விதிக்கும்படி செய்தார்கள் என்று
கூறி விடுவார்கள். அன்னிய அரிசிக்கு வரி விதித்து தடையேற்பட்டு நமது நாட்டு அரிசிக்கு விலையேறி விடுமானால் இன்று சர்க்காரைக் கண்டிக்கும் மிராசுதாரர்களும், அவர்கள் தரகர்களாகிய இந்திய சட்டசபை பிரதிநிதிகளும் சர்க்காரைப் பாராட்டுவார்கள். இன்று அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டுமென்று கூறுகின்ற இவர்கள் சிகரெட்டுக்கும், வைரம், கெம்பு, பட்டு, மோட்டார் முதலியவைகட்கும் இன்னும் இரட்டிப்பு வரி விதிக்கட்டுமே. இன்று ஏழைகள் கஷ்டமின்றி சாப்பிடுகின்றார்களா? எவ்வளவு பேருக்கு வேலை இல்லை? இந்நிலையில் அரிசிக்கு வரியா?
இன்று சர்க்கார் 5000 சம்பளம் கொடுப்பவருக்கு 2000மும், 2000 கொடுப்பவருக்கு 1000மும், 1000 கொடுப்பவர்கட்கு 500ம், 500 கொடுப்பவர்கட்கு 20௦0ம், 200 கொடுப்பவர்கட்கு 100-ம் 100 கொடுப்பவர்கட்கு 50 கொடுக்கட்டுமே. ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு ரூ.30 போதும். ஒரு கூட்டத்தாருக்குச் சம்பளம் மூன்று சைபர், நாலு சைபர் கொடுத்து வருகிறார்கள். இதைக் குறைக்க எந்தப் பிரதிநிதிகளும் பாடுபட்டதாகத் தெரியவில்லை. அன்னிய அரிசியை மட்டும் குறைத்து விடுவதால் மாத்திரம் இன்று உள்ள கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமா?
இதைப் பற்றி “ஏழைகளுக்காக பாடுபடுகின்றோம்; தேசத்திற்காகப் பாடுபடுகின்றோம்'” என்று கூறிக் கொண்டு திரியும் ஒரு தேசீயப் பத்திரிகையாவது, காங்கிரஸ் பத்திரிகையாவது, பார்ப்பன பத்திரிகையாவது எழுதிற்றா? குடிஅரசு பத்திரிக்கை ஒன்று தான் அன்னிய அரிசிக்கு வரி விதிப்பதால் ஏழை மக்களுக்கும், கூலிக்காரர்களுக்கும் கஷ்டம் என்று கூறி
வந்தது. கோவை, வட ஆற்காடு, சேலம் ஜில்லாக்களின் பிரதிநிதியாக சென்றிருப்பவர் கொஞ்சமும் நெஞ்சில் ஈவு இரக்கமின்றி, “சென்னை மாகாணத்தில் அரிசி விலை சல்லீசாய் விட்டது, அன்னிய நாட்டு அரிசி இறக்குமதியைத் தடுத்து (அரிசி விலை ஏறும்படியாக) உடனே கவர்மெண்டு தக்க ஏற்பாடு செய்ய வேண்டு' மென்று சட்டசபையில் பேசியிருக்கின்றார். இந்த பிரபுதான் காங்கிரஸ்காரர்களால் அனுப்பப்பட்டவர். நான் கேட்கின்றேன். கோவை, சேலம், வடாற்காடு ஜில்லாவில் மொத்த விஸ்தீரணத்தில் 100-ல் 1 பங்கு பூமியாவது நெல் விளைகின்றதா என்று
குடி அரசு - 1935 (1) 164
கேட்பதுடன், மொத்த ஜனத் தொகையில் 100-ல் ஒரு பாகம் ஜனங்களாவது கேப்பை, (கேழ்வரகு) கம்பு, சோளம், திணை இன்று சாப்பிடுகின்றார்களா? தஞ்சை ஜில்லா மிராசுதாரர்கள் தான் அன்னிய அரிசி இறக்குமதியால் கஷ்டப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆடம்பரச் செலவிற்கும், தாசி வீட்டுக்குச் செல்லும் செலவிற்கும் எலக்ஷன்களுக்கு 20 ஆயிரம் 30 ஆயிரம் செலவுக்கும் பணம் கிடைக்காது கஷ்டப்படுகிறார் களேயொழிய இவர்கள் கூறுவது போல அவர்கட்கு சாப்பாட்டுக்கு கஷ்டமா? வரிக்கு கஷ்டமா? கலம் 2ரூ 3ரூ காலத்தில் குவிந்த பணமெல்லாம் எங்கு போயிற்று? அன்னிய அரிசிக்கு வரி விதித்து அரிசி விலை இன்னும் உயரும்படி செய்தால் இது ஏழை மக்கட்கு திமிர் வரி விதிப்பது போலல்லாமல் வேறென்ன என்று கேட்கிறேன். இதை நாம் சர்க்காருக்கு எடுத்துக் கூற வேண்டும். எடுத்துக் கூறவில்லையானால் நாம் ஒப்புக் கொண்டவர்கள் ஆவோம். சர்க்காருக்கு அரிசிக்கு வரிவிதித்து ஆக வேண்டும் என்கின்ற எண்ணம் இல்லை நம்மவர்கள் தான் உள்ளே புகுந்து குடைகின்றார்கள். ஆதலால் சட்ட சபையில் உள்ளவர்கள் நமது பிரதிநிதிகள் அல்லவென்றும் அவர்கள் பணத்துக்கும் மிராசுக்கும் பிரதிநிதிகள் என்றும் சொல்ல வேண்டும் என்பதாகவும், இன்னும் வாலிபர்கள் கடமையைப் பற்றியும், வாலிபர்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் மிக விளக்கமாகப் பேசினார்.
குறிப்பு: ஈரோடு மகாஜன வாசக சாலையில் 24.02.1935 இல் “அன்னிய அரிசிக்குத் தடையா?” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 10.03.1935
ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்
கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதன் நோக்கம், தனது கடன்காரர்கள் எல்லோருக்கும் நஷ்டமில்லாமல் ரூபாய் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இன்சால்வெண்டாவதால் தனக்குக் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது; கடன்காரர்களுக்கும் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும்தான் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறோம்
அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்து சுமார் 16 தினங்களாகியும் அவருடைய ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்துச் செய்ய வேண்டிய கடன்காரர்கள் வீணாகத் தவணை கூறிக் காலதாமதம் செய்து கொண்டே வருகிறார்கள். தோழர் ஷண்முகத்தின் நண்பர்களும், உறவினர்களும், கடன்காரர்களின் கையெழுத்து வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தும்
இன்னும் முழுதும் முடிந்தபாடில்லை. தோழர் ஷண்முகம் எந்த நோக்கத்தோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற உண்மையைக் கடன்காரர்கள் இன்னும் உணரவில்லை. அவர்கள் இதை உணராமல் இருக்கும்படி செய்வதற்காகவே சிலரால் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. கடன்காரர்கள் உண்மையை உணர்வார்களானால் ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திடப் பின் தாங்க மாட்டார்கள். வீணாகத் தவணை சொல்லிக் கொண்டு காலங் கடத்தவும் மாட்டார்கள்.
இந்நிலையில், தோழர் ஷண்முகம் அவர்களும், மிகவும் மனோ உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றாலும் நாலைந்து தினங்களாக மயக்கமும், வயிற்றுப் புரட்டலும், தளர்ச்சியும், நா வறட்சியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. அவருடைய நண்பர்களும், உறவினர்களும் இன்னும் பிடிவாதமாக உண்ணாவிரதமிருப்பதனால் வீணாக குடும்பத்திற்கும், உயிருக்கும் நஷ்டம் உண்டாகுமேயன்றி வேறு பயன் உண்டாகாது என்று கூறி, உண்ணா விரதத்தை விட்டு விடும்படியும், கடனைத் தீர்ப்பதற்கு வேறு வழிகளில் முயற்சி செய்யும்படியும் வற்புறுத்தி வருகிறார்கள்.
குடி அரசு - 1935 (1) 166
வார்தாவிலிருந்து மகாத்மா காந்தியவர்களும் உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறார்.
தோழர் ஈ.வெ. ராமசாமியவர்களும் விரதத்தை நிறுத்தி வைக்கும்படி மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் வெளியூரில் உள்ள பல நண்பர்களும் உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்கும்படி வற்புறுத்தி அளவற்ற கடிதங்களை எழுதி வருகிறார்கள்.
இந்நிலையில் தோழர் ஷண்முகம் அவர்கள்; நண்பர்கள், உறவினர்கள் ஆகியவர்களை திருப்தி செய்விக்க வேண்டியாவது தமது உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க வேண்டியதே அவசியமாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். என்னதான் கஷ்டப்பட்டாலும், உயிர் போவதானாலும் லேவாதேவிக்காரர்களின் மனம் இளகுவது முயற்கொம்பாகும் என்பதை தோழர் ஷண்முகம் அவர்களுக்குத் தெரியாததல்ல. ஆகையால் இச்சமயம் விரதத்தை நிறுத்தி வைத்து கடன் விஷயமாகவும் டிக்கிரியாகியிருக்கும் 9 லட்சரூபாயை வசூல் செய்யும் விஷயமாகவும் வேறு தக்க முயற்சியெடுத்துக் கொள்ள வேண்டுமென்று மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறோம்
குடி அரசு - வேண்டுகோள் - 10.03.1935
எட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
பெண்கள் நாடு
ஆண்களுக்கு வேலையில்லை
பாலித்தீவு என்பது கிழக்கிந்திய தீவுகளில் ஒன்றாகும். அந்த நாட்டின் நடவடிக்கை மிகவும் ஆச்சரியப்படத்தக்கதாகும். பெண்கள் எந்த வேலைக்கும் லாயக்கற்றவர்கள்; சமையல் செய்வதற்கும், பிள்ளை பெறுவதற்கும் தான் லாயக்கானவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் முழு மூடர்களுக்கு வெட்கத்தை யுண்டாக்கத்தக்க நாடாகும்
அந்தத் தீவில், பெண்மக்களுக்கே எல்லாச் சுதந்திரமும் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஆண் மக்களுக்கு இருக்கின்ற எல்லா உரிமையும் அந்நாட்டில் பெண் மக்களுக்கு இருக்கின்றது.
அத்தீவில், வயலில் கலப்பை பிடித்து உழுவதும் பெண்மக்கள். பிறர். வயல்களில் பண்ணையாளாக இருந்து வேலை செய்வதும் பெண்மக்கள். இவ்வாறு பயிர்த்தொழில் வேலை முழுவதையும் பெண்மக்களே செய்கிறார்கள்.
தானியங்களைச் சந்தைகளுக்கு எடுத்துக் கொண்டுபோய் விற்பனை செய்துஅதன் மூலம் வரும்பணத்தைவரவுசெலவு செய்வதும் பெண்மக்கள்தான். இந்த வேலைகளுடன், புருஷன் மார்களையும், குழந்தைமார்களையும் வைத்துப் பாதுகாத்து வருகின்ற வேலையையும் பெண்மக்களே செய்து வருகிறார்கள்.
இன்னும் தென்னைமரம் ஏறுதல், சந்தைகளிலும் கடைகளிலும் வியாபாரம் செய்தல்ஆகிய எல்லாவற்றையும் பெண்களே செய்துவருகிறார்கள்.
இவ்வாறு எல்லா வேலைகளையும் பெண்மக்களே செய்து வரும்போது ஆண்மக்களால் அந்த நாட்டில் என்ன வேலை நடைபெறுகிறது என்று பார்த்தால், குழந்தைகளை உண்டாக்கும் சிருஷ்டித் தொழில் ஒன்று மாத்திரமே நடைபெறுகிறது, இதற்காகவே பெண்களும் அவர்களை ஆதரித்து வருகிறார்கள்.
எப்படி இருந்தாலும் பெண்கள் உடல் அமைப்பிலேயே பலவீன: மானவர்கள்; அவர் ஆண் மக்களால் செய்யப்படும் எல்லா வேலைகளையும் செய்ய முடியாது. ஆகையால் பெண்மக்களுக்கு ஆண்கள் செய்கின்ற எல்லா வேலைகளிலும் பயிற்சியளிப்பது கூடாது என்று சொல்லுபவர்கள். இதற்கு என்ன சொல்லக்கூடும் என்று கேட்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 10.03.1935
குடி அரசு - 1935 (1) 168
நம்பிக்கையில்லாத் தீர்மானமும் 70000 ரூபாயும்
பார்ப்பன சூழ்ச்சிக்குச் சாவு மணி:
சென்னை ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மூன்று மாத காலமாக தெருத் தெருவாய் திரிந்து அலைந்து கட்டாதவர்கள் கால்களையெல்லாம் கட்டியும், கெஞ்சாதவர்கள் கைகளை இழுத்தெல்லாம் கெஞ்சியும், தொடக்கூடாதவர்கள் என்று கருதியிருந்தவர்களின் கால் தூகிகளையெலாம் பஞ்சாட்சரமாக நெற்றியில் தானே அணியும்படி செய்தும், போடாத கரணமெல்லாம் போட்டும், செய்யக்கூடாத அயோக்கியத் தனங்களை எல்லாம் செய்தும், காசு பெறாத அயோக்கியர்களையெல்லாம் ஆப்த நண்பர்களாகக் கொண்டு அலைந்தும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத தீர்மானமானது கடைசியில் கொண்டு வந்தவர்களையே நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் நம்பிக்கையில்லாதவர்களாக ஆக்கிவிட்டது
“குரங்கு தான் கெட்டதுமல்லாமல் வனத்தையும் கெடுத்தது
என்று சொல்லும் பழமொழிபோல், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்த தோழர் முத்தைய செட்டியார், தான் கெட்டதுமல்லாமல் தோழர் சுப்பராயன் அவர்களையும் இழிவுபடுத்தி, அவருக்குக் கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையையும் கெடுத்து அவரை இன்னும் வெகு நாளைக்குத் தலைதூக்க முடியாமலும் செய்து விட்டார். ஐயோ பாவம்! உன்னால் நான் கெட்டேன் - உன்னால் நான் கெட்டேன் என்று ஒருவருக்கொருவர் பாடும்படி செய்துவிட்டார். இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் பலனாய் பணத்தினால் எதுவும் செய்து விடலாம் என்னும் அயோக்கியத்தனத்துக்குத் தோல்வி ஏற்பட்டதோடு சமயத்துக்குத் தகுந்தபடி கரணம் போடுவதன் மூலம் எதையும் சாதித்துக் கொள்ளலாம் என்கின்ற இழி குணத்துக்கும் பக்கா தோல்வி ஏற்பட்டு விட்டது அதோடு மாத்திரமல்லாமல் உள்ளுக்குள்ளிருந்தே காட்டிக் கொடுத்துக் குடியைக் கெடுத்துக் குச்சு முறித்துவிட்டு நாட்டை பாழாக்கித் தங்கள் கூட்டத்தின் சுயநலத்தையே பெரிதாகக் கருதி வந்த பார்ப்பனீய நாடு மாறித் தனத்துக்கும் சரியான சாவுகுறி கண்டுவிட்டது
ரல ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
தோழர் நாட்டுக்கோட்டை முத்தைய செட்டியார், தாம் ஜஸ்டிஸ் கட்சிக்குச் செய்த துரோகத்துக்காக என்று தம்மை அக்கட்சியார் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து விலக்கி விட்டதற்கு உண்மையான பரிகாரம் தேட வேண்டுமென்று யோக்கியமாய்க் கருதியிருப்பாரானால் அவர் அப்போதிருந்த தன்னுடைய நெருக்கடியான நிலைமையை ஜஸ்டிஸ் கட்சிக்கு எடுத்துச் சொல்லி, தான் இனிமேல் யோக்கியமாக நடந்து கொள்வதாக வாக்களித்து, இப்போது செலவு செய்த தொகையில் ஒரு பகுதியையாவது அக்கட்சி பண்டுக்கு அபராதமாகக் கொடுத்து யாருக்கும் தெரியாமல் பழயபடி “நல்ல பிள்ளை'' போலவே ஆகியிருக்கலாம் அதை விட்டுவிட்டு கொஞ்சமாவது, தானும் தன் குடும்பமும் இந்த யோக்கியதைக்கு வந்ததற்குக் காரணம் என்ன?
தங்களுக்குப் பட்டம் பரிவட்டம் அதிகாரம் பதவியெல்லாம் எப்படி கிடைத்தது?
வட்டிக்கடை வைத்திருந்தவர் பரம்பரை ராஜா பட்டம் பெற எப்படி
முடிந்தது? அது மாத்திரம் அல்லாமல் தனக்கும் சென்னைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாத ஒரு பெரிய பட்டணத்திற்கு நகரசபைத் தலைவராகிற பதவி எப்படிக் கிடைக்க முடிந்தது?
இன்னும் எவ்வளவோ காரியம் செய்து விட்டும் தப்பித்துக் கொண்டு “பெரிய மனிதர்” கூட்டத்திலேயே இருக்க எப்படி சாத்தியமாயிற்று என்பவைகளையெல்லாம் சிறிதும் யோசியாமல் சரீரத்தில் உள்ள
நன்றியறிதல் என்கின்ற அவயவத்தையே அடியோடு அறுத்து எறிந்து விட்டது போல் அடியோடு மறந்துவிட்டு, மறந்தது மாத்திரம் அல்லாமல் தங்கள் பெருமைக் கெல்லாம் ஆதரவாயிருந்த கட்சியையே 4 கோடி மக்களுடைய சமூக நன்மைக்கே ஆபத்துண்டாகும்படி குழி தோண்டிப் புதைக்க முனைந்தா ரென்றால் இதற்கு என்ன பெயர் சொல்லுவது என்பது நமக்கே விளங்க வில்லை. அகராதியிலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தோழர் ஷண்முகம் செட்டியார் தேர்தலில், தோழர் முத்தையா செட்டியார் அவர்கள் நடந்து கொண்டதை சுத்தமான பார்ப்பனரல்லாத
ரத்தம் ஓடுகிற ஒருவன் எப்படி மறந்துவிட முடியும்? இந்த நடவடிக்கைக்கும்
வீட்டில் படுத்திருந்த ஒருவன் கழுத்தை அறுத்து அவன் மடியில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அவனைப் புறக்கடையில் புதைத்து விட்ட காரியத்துக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கக் கூடும்? அதை நினைக்கும்போது இப்படிப்பட்ட ஒரு குற்றத்தை மன்னிப்பதைவிட நாமிறந்து போவதே மேல் என்றுதான் தோன்றுகிறதே தவிர ஐயோ பாவம்! என்று நினைக்க கொஞ்சம்கூட மனம் வருவதில்லை
குடி அரசு - 1935 (1) 170
தோழர் ஷண்முகம் அவர்கள் இந்த மாதிரியான சதிமோசங்களால்
எல்லாம் அசைக்கப்படக் கூடியவர் அல்லாதவராயிருந்ததனாலேயே, இவ்வளவு பெரிய சதியும் அவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை அன்றியும், இவர் சதியினால் பார்ப்பனரல்லாத சமூகமும் ஒன்றும் அடியோடு அழிந்து போகும்படியான நிலையும் ஏற்பட்டுவிடவுமில்லை. ஆனால் தோழர் முத்தைய செட்டியார் அவர்களுடைய எண்ணத்தையும், எதிரிகளுக்கு உள் உளவாய் இருந்த குணத்தையும் நினைக்கிறபோது வயிறு
பற்றி எரிகிறது. நெஞ்சம் குமுறுகிறது. இன்னும் என்னென்னமோ எழுத நம்மையும் மீறிக் கொண்டு கை ஓடுகிறது
இந்த நிலையில் இதை மக்கள் சீக்கிரம் மறந்துவிடும்படியாக தோழர். முத்தைய செட்டியார் அவர்கள் முயலாமல், மேலும் மேலும் பெருக்கிக் காட்டும்படியாக எண்ணெய்யை விட்டு எரித்து நெருப்பை வளர்த்துக் கொண்டிருப்பது தோழர் முத்தைய செட்டியாரின் யோசித்துப் பார்க்காத தன்மை என்று சொல்லுவதற்கு வருந்துகிறோம்
இந்தக் காலத்தில் பரம்பரை ராஜாக்கள் ஜமீன்தார்கள் ஆகியவர் களுடைய ஆட்சியே ஒழிய வேண்டும் என்று ஜனங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு வட்டிக் கடைக்காரர், அதிலும் சிறிதும் நெஞ்சிரக்கமற்ற வஞ்சகர்களாகிய சில பார்ப்பனர்களுடைய அடிமையும், அடிமையாய் இருந்தாலொழிய வாழ முடியாத நிலைமையும் கொண்ட வட்டிக் கடைக்காரர் ஆட்சியை ஜனங்கள் விரும்புவார்களென்று தோழர் முத்தைய செட்டியார் அவர்கள் எதிர்பார்த்தது மிகமிக பைத்தியக்காரத்தன. மென்று தான் நாம் சொல்லுவோம். இந்த மாதிரியான மக்கள் கையில் நம் நாட்டு ஆட்சி முறையின் தலையெழுத்து இருக்குமானால் இதைவிட
வெள்ளைக்காரர்கள் - ஐரோப்பியர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் - ஆங்கிலேயர்கள். கையில் நமது ஆட்சியின் தலையெழுத்து இருப்பது மேல் என்று ஆயிரந் தடவை சிறிது கூட வெட்கமில்லாமல் சொல்லுவோம். தேசீயப் பத்திரிகைக் காரர்களும், பார்ப்பனர்களும் வேண்டுமானால் வட்டிக்கடைக்காரர். ஆட்சியை விரும்பட்டும், வாழ்த்தட்டும், யாகம் செய்யட்டும்.
சுதந்திரம் வேண்டும், பணக்காரர் ஆட்சி ஒழிய வேண்டும், சோம்பேறிகள் ஆட்சி அழிய வேண்டும் என்பவைகளில் நமக்குச் சிறிதுகூட சந்தேகமோ, தயவு தாட்சண்யமோ இல்லை. ஆனால் தோழர்களான. ராஜகோபாலாச்சாரியார் கவர்னராகவும், முத்தைய செட்டியார் மந்திரி யாகவும், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் சீப் செக்ரட்டரியாகவும் இருக்கும் அல்லது இருக்கப் போகும் ஒரு ஆட்சியின் கீழ் இருப்பதைவிட கடும் புலி வாழும் காடு மேல் என்றே நினைக்கின்றோம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன் ஒரு வார காலமாக தோழர் ராஜகோபாலாச்சாரியாருடையவும் மற்றும் பார்ப்பன படட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
வக்கீல்களுடையவும் மூளைகளுமே, தோழர் முத்தைய செட்டியார் அவர்களுடைய வீட்டில் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தன என்று சொன்னால், தமிழ் மக்கள் இனி முத்தைய செட்டியாரை எப்படி நம்ப முடியும் - எப்படி மதிக்க முடியும் என்பதை அவர்களுக்கே விட்டுவிட்டு தீர்மானத்தைப் பற்றிச் சில வார்த்தைக் கூறி முடிக்கிறோம்
பொப்பிலி ராஜா அல்லது அவரது மந்திரிக் கட்சியின் மீது ஏற்பட்ட குற்றம் என்ன? அவர் நாட்டுக்கு ஏதாவது கெடுதியான காரியங்கள் செய்தாரா? கட்சிக்கு ஏதாவது துரோகமான காரியம் செய்தாரா? ஏழை மக்களுக்குக் கெடுதியான காரியம் ஏதாவது செய்தாரா? சுயநலத்துக்காக ஏதாவது சூழ்ச்சியோ, மற்றவர்களுக்குத் துரோகமோ செய்தாரா? அல்லது அவருடைய கூட்டு மந்திரிகள் ஏதாவது குறைவோ, குற்றமோ செய்திருக் கிறார்களா? என்பதைப் பற்றி நம்பிக்கை யில்லாத தீர்மானம் கொண்டு வந்தவர்களால் ஒரு வார்த்தைகூட எடுத்துச் சொல்லப்படவில்லை.
பொப்பிலி ராஜா மந்திரி ஸ்தானம் பெற்றது முதல் நாளது வரையில்
பார்ப்பனர்கள் உட்பட எதிர்க்கட்சியார் என்று சொல்லப்படுபவர்கள் உட்பட பொப்பிலியின் நிர்வாகத்தைப் புகழ்ந்தும், அவருடைய வீரத்தையும், தீரத்தையும், உறுதியையும் பாராட்டியும் பேசியிருக்கிறார்களே ஒழிய ஒரு குற்றமும் ஒரு குறையும் இதுவரை யாரும் சொல்லி வந்ததேயில்லை. இரண்டாவது பொப்பிலி ராஜா அவர்கள் பணம் சம்பாதிப்பதற் காகவோ, பெருமை சம்பாதிப்பதற்காகவோ அல்லது அவருடைய ஏதாவதொரு கஷ்டமான நிலைமையிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற் காகவோ மந்திரி வேலைக்கு வந்திருக்கிறார் என்றாவது இதுவரை யாரும் சொல்லவுமில்லை.
அல்லது ஜஸ்டிஸ் கட்சியினுடைய கொள்கைக்கோ, மற்றபடி பொப்பிலியினுடைய கொள்கைக்கோ அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த கட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர் களுடைய கொள்கைக்கோ ஏதாவது வித்தியாசம் இருக்கிறது என்றோ அதன் தாரதம்மியம் இன்னதென்றோ ஏற்பட்டுவிடவுமில்லை. ஆகவே,
தோழர் முத்தைய செட்டியாருக்கு எதற்காக ஒரு தனிக்கட்சி? அந்தக் கட்சிக்கு என்ன கொள்கை? அவருடைய கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள்
யார்? அவர்கள் எப்படி என்ன காரணத்தினால் இவருடைய கட்சியில் சேர்க்கப் பட்டார்கள்? அவர்களிடத்தில் ஜனங்களுக்குள்ள மதிப்பு என்ன? என்பதும், அதுபோலவே தோழர் சுப்பராயன் அவர்களுக்கு எதற்காக ஒரு தனிக்கட்சி? அவர் கட்சிக்கு என்ன கொள்கை? அவருடைய கட்சியில் சேர்ந்திருக்கும் அங்கத்தினர்கள் யார்? அவர்கள் எப்படி என்ன காரணத்தினால் இவருடைய கட்சியில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்? அவர்களிடத்தில் ஜனங்களுக்கு உள்ள மதிப்பு என்ன? என்பதும்,
குடி அரசு - 1935 (1) 172
மற்றும் இவர்களை முன்னே தள்ளித் தூண்டிவிட்டு உள்ளே இருந்து விஷமஞ் செய்து விட்ட பார்ப்பனர்கள், காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் கட்சி என்ன? அவர்களது லட்சியமும், கொள்கையும் என்ன? எதற்கு இந்த கூட்டம் தேசீய நாடகம் நடிக்கின்றது. இவர்களது முன்பின் நடவடிக்கை என்ன? நாணையம் என்ன? இவர்களை நம்பினவர்கள் யாராவது முன்னுக்கு வந்து இருக்கிறார்களா? என்பதும்,
மற்றும் இந்த கூட்டத்தாரை ஆதரிக்கும் இந்து, சுதேசமித்திரன், தினமணி, ஜெயபாரதி, இந்தியன் எக்ஸ்பிரஸ் முதலிய தேசீய பத்திரிகைக் காரர்களின் யோக்கியதை என்ன? அவர்களின் கொள்கை என்ன? அந்த பத்திரிகைக்காரர்களின் அந்தஸ்து என்ன? அவர்களுடைய லட்சியம் என்ன? அவர்களது பத்திரிகைகளின் ஜீவனம் எப்படி நடந்து வருகிறது? இந்த பத்திரிகைக்காரர்கள் இதுவரையிலும் எப்படி நடந்து வந்திருக்கிறார்கள்? என்கின்றவைகளையெல்லாம் ஒரு அறிவாளி பார்த்தால் இன்றைய மந்திரிசபையின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து ஒரு சமயம் அது நிறைவேறி, இப்பொழுது இருக்கும் மந்திரிசபை கலைத்து வேறு மந்திரிகள் நியமிப்பதாயிருந்தால் நம் மக்கள் கதி என்னவா யிருக்கும்? என்பது நாம் சொல்லாமலே விளங்கும் என்று நினைக்கிறோம்
மந்திரி சபையைக் கலைப்பதற்குச் செலவழித்த பணங்களும், அதற்கு ஆள் சேர்ப்பதற்காக ஒவ்வொருவருக்கும் வாக்களித்த வாக்குத் தத்தங்களும், எதிலிருந்து எப்படிப்பட்ட முறையில் பரிகாரம் செய்யப்படும் என்பதையும் நினைத்தால் இப்படிப்பட்ட பிரதிநிதித்துவ ஆட்சியின் கீழ் இருப்பதற்கும், பழய கால ஆட்சி என்று சொல்லப்படும் பாளையக்காரர், கொள்ளைக்காரர், மலைவாசிகள், காட்டுமிராண்டிகள் என்பவர்களின். ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்பது நமக்கு விளங்கவில்லை.
நமது ஓட்டர் ஜனங்கள் மிகவும் பாமர மக்களாயிருப்பதால் பத்திரிகைக்காரர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காகவும் கூலி களுக்காகவும் தங்கள் பிள்ளை குட்டிகள் குடும்பத்தார்கள் முதலியவர்களின். உத்தியோகங்களுக்காகவும் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான காரியங்களை ஆதரித்து எழுதி ஜனங்களை மயக்கி நாட்டைப் பாழ்படுத்தி வருகிறார்கள். இந்த உண்மையை என்று ஜனங்கள் உணருகிறார்களோ அன்று தான் ஒரு யோக்கியமான ஆட்சிக்கு ஏற்ற பிரதிநிதித்துவம் ஏற்படவும், ஏழைகளுடையவும், தாழ்த்தப்பட்ட மக்களுடையவும் கஷ்டங்கள் நீங்கவும் வழி ஏற்படுமே தவிர வேறு இல்லை.
நிற்க, பொப்பிலி ராஜா அவர்கள் இவற்றையெல்லாம் சிறிதும் லட்சியம் செய்யாமலும், மந்திரிப் பதவியை சிறிதாவது மதிக்காமலும், எப்படிப்பட்டவர்களுடைய கூப்பாட்டுக்கும், மிரட்டலுக்கும், சூழ்ச்சிக்கும்,
பந ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
துரோகத்துக்கும் அஞ்சாமலும், தனக்குச் சரி என்று தோன்றியதை தைரியமாய்ச் செய்துவருவதனால் தான் இது சமயம் கட்சியானது இவ்வளவு பெருமையில் இருந்து வர முடிகின்றது
மந்திரி சபையின் மீது பொறாமை கொண்ட கனவான்கள் பலரும் தங்களுக்கு மந்திரி ஸ்தானம் கிடைக்கவில்லையென்ற நியாயமான ஏமாற்றமடைந்த சிலரும் எதிர்க்கட்சியில் சேராததற்குக் காரணம் என்னவென்றால், இந்த மந்திரி சபை கலைந்தால் வேறு யார் மந்திரியாய் வருவார்கள் என்ற கவலையாலும், பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்குத் தலைவர் என்று சொல்லுவதற்கு யோக்கியமான ஒருவர் வேறு யார் கிடைப்பார் என்கின்ற கவலையாலும், இந்த இரண்டு வருஷ காலத்தில் பொப்பிலி ஆதிக்கத்தில் யாதொரு நியாயமான தவறுதல்களும் இல்லையே என்கின்ற திடமான அபிப்பிராயத்தாலுமே தவிர மற்றபடி எதிர்க்கட்சியாரைப் போல் ஓட்டு ஒன்றுக்கு 4000, 5000 விலை கொடுத்து வாங்கியதினால் அல்ல என்பது நமக்கு நன்றாய் தெரியும்
எதிர்க்கட்சிக்கு ஆள் சேர்ப்பதற்குத் தோழர்கள் முத்தையாச் செட்டியார், ராஜகோபாலாச்சாரியார், சுப்பராயன் முதலியவர்கள் பணம்,
தந்திரம், சூழ்ச்சி, விஷமப் பிரசாரம் ஆகியவைகளுடன் இரவும் பகலுமாய் ஒரு வாரம் அலைந்து கொண்டு இருக்கும் போது, பொப்பிலி அவர்கள் தைரியமாக சுருட்டை பிடித்துக் கொண்டு, பங்காவின் கீழ் உட்கார்ந்து ரேடியோ, கிராமப்போன் கேட்டானந்தித்துக் கொண்டிருந்தாராம். அது சமயம் ஒரு தோழர் ராஜாவைப்பார்த்து, “என்ன உங்கள் கட்சி கொள்ளை போகிறதே, நீங்கள் ஒன்றும் கவனிப்பதில்லையா” என்று கேட்டதற்கு, “நான் கட்சியில் உள்ள நாணையக் குறைவுகளையும், அயோக்கியத் தனங்களையும் ஒழித்துப் பரிசுத்தமாக்குவதற்கு இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டிருக்கிறேன். போகிறவர்கள் போகட்டும். மந்திரி பதவிகள் போவதாயிருந்தாலும் போகட்டும் நாணயமான - யோக்கியமான யாரோ நாலு பேரை வைத்துக் கொண்டு என்னால் கூடியதைக் கட்சிக்கும் பொது ஜனங்களுக்கும் செய்யக் காத்திருக்கிறேன். ஆதலால் நான் இப்பொழுது ஆள் பிடிக்கவோ கவலைப்படவோ அவசியம் இல்லை'' என்று சுருட்டைப் பிடித்துக் கொண்டே சொன்னாராம்
அதற்கு ஏற்றது போலவே அனேகர்கள், இது சமயம் எதிர்க்கட்சியார் களுடைய பணத்தை லட்சியம் செய்யாமல் தங்கள் நாணயத்தைக் காப்பாற்றி பொப்பிலிக்குத் தைரியத்தையும், உற்சாகத்தையும் ஊட்டியதை
நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆகவே ஜஸ்டிஸ் கட்சி, பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஆகியவை தோற்றுப் போய் விட்டதென்றும், சீர்குலைந்து விட்டதென்றும், சபையின்
குடி அரசு - 1935 (1) 174
நம்பிக்கை இழந்துவிட்டதென்றும், பொது ஜனங்களின் ஆதரவு இல்லை யென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்து காங்கிரஸ் பார்ப்பனர்கள், எல்லாப் பத்திரிகைகள், பார்ப்பனரல்லாதாரில் பெரும் பணக்காரர்கள், ஜமீன்தார்கள், மந்திரிகளாக இருந்தவர்கள் என்கின்ற கூட்டத்தார் எல்லோரும் ஒன்று சேர்ந்து லட்சக்கணக்கான ரூபாய்களுடன் சகலவித தந்திரங்களையும் செலவு செய்து பாடுபட்டும் கடைசியாக ஜஸ்டிஸ் ககஷிக்கு 80 ஓட்டும் எதிரிகளுக்கு - பார்ப்பனர்களுக்கு 42 ஓட்டும் என்கின்ற முறையில் பெரிய தோல்வியை அடைந்து, இந்த எதிரிகளெல்லோரும் முக்காடு போட்டுக் கொண்டு வீடு போய்ச் சேரத்தான் முடிந்தது.
பணத் திமிருக்கும், பார்ப்பன சூழ்ச்சிக்கும் “நாளை சாகப்போகும் ஜஸ்டிஸ் கட்சி” என்று கொட்டை எழுத்துக்களில் போட்டுக் குதூகலித்த பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும் இனியாவது நல்ல புத்தியும், மானமும் வராதா? என்று எதிர்பார்க்கிறோம்
முடிவாய் நம்பிக்கையில்லாத் தீர்மானம் விஷயமாக தோழர்கள் ஆர்.கே.ஷண்முகம் அவர்களும், சி.எஸ். ரத்தினகபாபதி முதலியார் அவர்களும்,
டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்களும் மற்றும் இரண்டொரு தோழர்களும் எடுத்துக் கொண்ட முயற்சியும் நடந்து கொண்ட மாதிரியும்
தமிழ் மக்களால் மிகவும் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத் தக்கதுமாகும்
குடி அரசு - தலையங்கம் - 17.03.1935
15— வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
கொச்சி பிரஜைகளுக்கு ஜே!
சம். சண்முகம்
நமது இயக்கத் தலைவராகிய சர்.ஆர்.கே. சண்முகம் KCLE. அவர்கள் பார்ப்பன விஷமத்தின் பயனாய் கொச்சி திவானாக நியமனம் பெற்றிருப்பது கேட்டு மகிழ்ச்சியடைகிறோம்
தெளிந்த அரசியல் ஞானமும், நிர்வாகத் திறமையும், பேச்சு வன்மையும், பொருளாதார நிபுணத்துவமும், சமதர்ம உணர்ச்சியும் அமையப்பெற்றவர்களில் நமது சண்முகம் அவர்களுக்கு மேம்பட்டவர் இந்தியாவில் வேறு எவரும் இல்லை யென்பது நமது விரோதிகளாலும் மறுக்க முடியாததாகும்
ஒரு மாகாணத்தின் கவர்னர் பதவியை வகிக்கக்கூடிய யோக்கியதையும் திறமையும் உடைய அவர் ஒரு சமஸ்தானமாகிய கொச்சிக்கு திவானாக ஆனது பற்றிக் கொச்சி சமஸ்தானம் சந்தோஷம் அடைய வேண்டுமே ஒழிய தோழர் சண்முகமோ நாமோ ஒரு பெரிய பாக்கியமாகக் கருதி சந்தோஷமடைவதற்கில்லை
ஆயினும், வைதீகம் நிறைந்த சமஸ்தானமாகிய அதில் பாழும் வைதீகக் கொடுமையில் பரம்பரையாகக் கஷ்டப்பட்டு வரும் ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், தாராள மனப்பான்மையும், சமரச நோக்கமும் உடைய சர். சண்முகம் அவர்களின் ஆட்சி காலத்தில் விமோசனம் ஏற்படக்கூடும் என்று கருதியே கொச்சி சமஸ்தான மக்களைப் பாராட்டுகிறோம். இத்தகைய உயர்ந்த நோக்கத்துடனேயே தோழர் சண்முகம் அவர்கள் இப்பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறுவோம்.
கொச்சி சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலையைப் பற்றியும் அங்குள்ள பார்ப்பன ஆதிக்கத்தைப் பற்றியும் உத்தியோகங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் சமீபத்தில் நாம் ஒரு ஸ்டேட்மெண்ட்டும் வெளியிட்டிருக்கிறோம். நிற்க,
கொச்சி சமஸ்தானத்தில் புதிய அரசியல் திட்டம் ஒன்று தற்சமயம் அமுலுக்கு வருவதாக இருக்கிறது. அன்றியும் இனி இந்தியாவில் ஏற்படப்போகும் ஐக்கிய சர்க்காருக்கும் சுதேச மன்னர்களுக்கும் அரசியல் சம்பந்தங்கள் ஏற்படவும் போகின்றது. இப்படிப்பட்ட முக்கியமான
குடி அரசு - 1935 (1) 176
சமயத்தில், சர். சண்முகம் அவர்கள் கொச்சியின் திவானாக அமைந்தது சமஸ்தான அரசியலுக்கும், குடிகளுக்கும் இனி ஏற்படப்போகும் முன்னேற்றத்
திற்கும், நன்மைக்கும் ஒரு நல்ல அறிகுறியென்றே கூறுவோம்
அந்தச் சமஸ்தானத்தில் இவர்தான் முதல் முதல் திவான் பதவி பெற்ற பிராமணரல்லாதார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதுவரை
யிலும் ஒன்றுக்கும் உதவாத சாதாரண வைதீகப் பிராமண திவான்களின் ஆட்சியினாலேயே சமூக விடுதலை பெறாமல் கட்டுண்டு கிடந்த அச்சமஸ்தானக் குடிமக்களுக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கக்கூடியதென்பதை நாம் அளவிட்டுக் கூற முடியாது.
இந்த நியமனத்தைக் கண்டு சில பார்ப்பனப் பத்திரிகைகள்,
சர். ஷண்முகம் எல்லா வகையிலும் நிபுணராயிருந்தாலும் கூட அவர் இது வரையில் நேராக அரசியல் நிர்வாகத்தை வகித்திராததால் அவ்வேலைக்கு லாயக்கற்றவர் என்று அர்த்தப்படும் படியும், கொச்சி வாசிகளிலேயே ஒருவரை நியமிக்காமல் வெளியார் ஒருவரை நியமித்ததற்காக சமஸ்தான வாசிகள் அதிருப்தியடைவார்கள் என்றும் விஷமத்தனமாக எழுதியிருக் கின்றன. இவ்வாறு எழுதியது பார்ப்பனீய விஷமத்தனமா அல்லவா என்பதைக் கீழே கூறும் விஷயங்களைக் கொண்டு முடிவு செய்யும்படி விட்டுவிடுகிறோம்.
தோழர் ஷண்முகம் அவர்கள் இரண்டு வருஷங்களாகச் சட்டசபைத் தலைவராக இருந்து, உலகம் புகழுமாறு சபையை நிர்வகித்து வந்திருக்கிறார்.
மற்றும், பல முக்கிய அரசாங்கக் கமிட்டிகளில் சம்பந்தமுடையவராக இருந்திருக்கிறார். ஆஸ்ரேலியா சென்றதும், ஆட்டவா மகாநாட்டில் கலந்து கொண்டதும் உலகம் அறியாததல்ல. அன்றியும் கொச்சி சமஸ்தானத்திற்கு குறையாத அளவுள்ளதானது என்று சொல்லக்கூடிய தனது சொந்த எஸ்டேட்டு சம்பந்தமான விஷயங்களை கவனித்து வரும் அனுபவம் ஒன்றே அவருடைய நிர்வாகப் பழக்கத்திற்குப் போதிய அனுபவ மாகும் என்பதை அவரைப் பற்றியும், அவருடைய வேலைகளைப் பற்றியும் நேரே அறிந்தவர்கள் நன்றாய் அறிவார்கள்.
ஆதலால் அவருக்கு நிர்வாகத் திறமை போதாது என்பது பார்ப்பனரல்லாதாருக்கு இப்பதவி கிடைத்து விட்டதே என்ற பொறாமையைத் தவிர வேறொன்று மில்லையென்பது உண்மையாகும்
மற்றும் தோழர்கள் சர். டி மாதவராவ், வி.டி. மாதவராவ், சுப்பிரமணிய அய்யர், ஆர். ரகுநாதராவ், ரங்கய்யங்கார், வி.டி கிருஷ்ணமாச்சாரி போன்ற உஞ்சிவிருத்திப் பார்ப்பனர்கள் ஆட்சியைவிட 3, 4 தலைமுறையாகவே சீமானாயும், தக்க அந்தஸ்துடையவராகவும் சிறு வயது முதலே கித்தியும், பெருமையும், ஞானமும் பெற்றவராகவும் விளங்கும் சர். ஷண்முகம் அவர்களின் ஆட்சி எந்த விதத்தில் குறைந்து விடக்கூடியதாகுமென்று கேட்கின்றோம்
177 ௨... 96பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தோழர்கள் வி.டி. கிருஷ்ணமாச்சாரியார் பரோடா திவானாகச் சென்ற போதும், திருவாங்கூரில் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் பெயரில்லாத உத்தியோகத்தின் மூலம் ஆயிரக்கணக்கான சம்பளம் வாங்கிக்கொண்டிருப்பதையும் இன்னும் கொச்சி, திருவாங்கூர், மைசூர் முதலிய சமஸ்தானங்களில் சென்னை மாகாணப் பார்ப்பனர்கள் திவான். பதவிகள் வகித்து வந்த காலத்திலும் எந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளாவது, அந்தச் சமஸ்தான வாசிகளின் உரிமைகளை அலட்சியம் செய்து விட்டு வெளியாரைத் திவான்களாக நியமித்ததனால் சமஸ்தான வாசிகள் அதிருப்தி அடைகிறார் என்று பிரசாரம் பண்ணியதுண்டா என்று கேட்கிறோம்.
ஒரு பார்ப்பனரல்லாதார் திவானாக நியமிக்கப்பட்ட பிறகுதான் இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்கு அந்தச் சமஸ்தான வாசிகளின். அதிருப்தி தெரிந்தது போலும், இதைவிட பார்ப்பனர்களின் பொய்ப் பிரசாரத்திற்கும், விஷமப் பிரசாரத்திற்கும், துவேஷப்பிரசாரத்துக்கும் வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கிறோம்
குடி அரசு - கட்டுரை - 17.03.1935
குடி அரசு - 1935 (1) 178
விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு
விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா ஜஸ்டிஸ் முதலாவது மகாநாடு இம்மாதம் 30, 31-ந் தேதிகளில் சென்னை திவான் பகதூர் எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் கூடப் போகிறது. இந்த மகாநாடானது ஜஸ்டிஸ் கட்சிக்கு இந்திய சட்டசபைத் தேர்தலில் ஒரு பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகும் அதைக் காரணமாக வைத்து ஜஸ்டிஸ் கட்சியின் எதிரிகள் ஜஸ்டிஸ் கட்சியை அடியோடு ஒழித்துவிடச் செய்த சூழ்ச்சியாகிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துப் பெரியதொரு வெற்றி ஏற்பட்ட பின்னும், பொது ஜனங்கள் யாவரும் ஜஸ்டிஸ் கட்சியில் இனி என்ன நடக்கப் போகிறது பார்ப்போம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற
நிலையில், விருதுநகரில், முனிசிபல் சேர்மன் தோழர் வி.வி.ராமசாமி அவர்களுடைய பெரியதொரு முயற்சியில் அவரையே வரவேற்புத்
தலைவராய்க் கொண்டு, முதல் முதலாக ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடாகக் கூடுகிறது. இது பெயருக்கு ஜில்லா மகாநாடு ஆனாலும் பெரியதொரு பொது மகாநாடு என்றே சொல்ல வேண்டும் ஆகவே இதை நாம் வரவேற்கிறோம். தோழர் வி.வி. ராமசாமி அவர்களையும் பாராட்டுகிறோம்
இதுவரையில் அனேகமாய் நடந்த ஜஸ்டிஸ் மகாநாடுகள் என்பது அடுத்தாற்போல் யார் தலைவராய் வருவது? யார் மந்திரியாக வருவது?
மற்றும் இது போன்ற விஷயங்களையே குறி வைத்து குறிப்பிட்டவர்கள் நன்மையைக் கருதி அதற்காக மகாநாடுகள் கூட்டப்படுவதும், அதன் மூலம் பெரியதொரு கட்சித் தகராறுகள் நடைபெறுவதும், அதன் பயனாய் கட்சி வெகுதூரம் பாதிக்கப்பட்டு சிரிப்பாய்ச் சிரிக்கப்படுவதும், கட்சி வேலைகளும் பெரிதும் பாதிக்கப்படுவதும், நமது எதிரிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு கட்சிக்கு விரோதமாய் எதிர்ப் பிரசாரம் செய்து கட்சியை அழிக்க முயற்சிப்பதும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது என்று சொன்னால் அதைஅடியோடு ஆட்சேபிக்க முடியாது என்றே சொல்லுவோம். ஆனால் இதை யாரும் அப்படிப்பட்ட மகாநாடுகளில் ஒன்றாகச் சேர்க்க முடியாது என்பதில் நமக்கு நம்பிக்கை யிருக்கிறது. 19 வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
ஜஸ்டிஸ் கட்சியானது நல்ல செல்வாக்கோடு இருந்து பல நல்ல காரியங்களைச் செய்து கொண்டிருந்த சமயத்தில் நெல்லூரில் கூட்டப்பட்ட மாகாண மகாநாடு பெரியதொரு பிளவை யுண்டாக்கிவிட்டதென்பது யாவரும் அறிந்த விஷயமே.
இதன் பயனாய் ஒரு பலம் பொருந்திய மந்திரிசபையை அமைக்க முடியாமல் போய், அதன் பயனாய் உருப்படியான காரியம் ஒன்றும் செய்வதற்கில்லாமல் மந்திரிசபையைக் காப்பாற்றுகிற வேலையிலேயே ஜஸ்டிஸ் கட்சியானது ஈடுபட்டிருக்க வேண்டியதாயிருந்தது என்று சொல்லுவதற்கு வெட்கமாயிருந்தாலும் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்
ஜஸ்டிஸ் கட்சியின் பிரதான லட்சியமாகிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படியே, அரசாங்க உத்தியோகங்களில் எல்லாம், எல்லா வகுப்பாருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்ய வேண்டியதான முக்கியமான காரியத்திலும்கூட எதிரிகளின் கூப்பாட்டுக்கும், வசவுக்கும் பயந்து அலட்சியமாகவே இருந்து வந்திருக்கிறார்கள். அரசாங்க உத்தியோகஸ்தர் ஜாபிதாப்படி இப்பொழுதும் உத்தியோகங்களில் எந்த வகுப்பினர் அதிகமாக இருந்து வருகிறார்களென்பதைப் பார்க்கும்பொழுது இவ்வளவு வருஷங்களாக ஜஸ்டிஸ் கட்சியானது அதிகாரப் பதவியில் இருந்துங்கூட இன்னும் பெரும்பாலும் எல்லா இலாக்காக்களிலும் பார்ப்பனர்களே அதிகமாக உத்தியோகப் பதவிகளை வகித்து வருகிறார். களென்றால் இது ஜஸ்டிஸ் கட்சிக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும், தலைவர். களுக்கும் மிகவும் அவமானத்தை உண்டாக்கக்கூடிய விஷயமேயாகும். இவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியின் ஜீவாதாரக் கொள்கைகளில் முக்கியமான தொன்றையே அலட்சியம் பண்ணி வந்ததற்குக் காரணம் மேற் கூறியபடி கட்சிக்குள்ளிருந்த ஊழல்களேயாகும் என்பதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா?
நல்ல சம்பவமாய் தஞ்சாவூர் மகாநாட்டில் பொப்பிலி அரசர் தலைவராகக் கிடைத்து அதன்பின் ஏதோ சில நல்ல காரியங்களாவது செய்ய முடிந்தது என்றாலும், அதற்கும் கட்சிக்குள்ளாகவே உள்ள பல சுயநலக் காரர்களாலும், பார்ப்பனர்களாலும் தொல்லை விளைவிக்கப்பட்டே
வந்திருக்கிறது ஆகவே இப்பொழுது விருதுநகரில் கூடுகிற மகாநாடு அடுத்த தலைவர் யார்? மந்திரிகள் யார்? மகாநாடு கூட்டினவர்களுக்கு என்ன
பிரதிப் பிரயோஜனம்? மற்ற சின்ன உத்தியோகங்களில் யார் யாருக்கு என்ன என்ன உத்தியோகங்களைப் பிரித்துக் கொடுப்பது என்பது போன்ற தனிப்பட்ட நபர்களின் அபிலாசைக்காக என்று இல்லாமல், இந்த மந்திரி சபையின் காலமாகிய பாக்கி இருக்கும் இன்னும் ஒன்றரை வருஷ காலத்துக்குள் என்னென்ன காரியங்கள் செய்வது? கட்சியின் திட்டமான
குடி அரசு - 1935 (1) 180
கொள்கை இனி எப்படி இருக்க வேண்டும்? அதற்கேற்ற வேலைத் திட்டங்கள் என்ன? அவைகளை எப்படிக் காரியத்தில் நிறைவேற்றி வைப்பது என்பன போன்ற விஷயங்களை நிர்ணயம் செய்து, பாக்கியுள்ள காலத்துக்குள் குறைந்தபட்சம் இன்னின்ன விஷயங்களையாவது நிறைவேற்றி வைப்பது என்று முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கூட்டப்படுகின்றது என்று நம்புகிறோம்
இது மாத்திரம் அல்லாமல் மற்றொரு முக்கிய விஷயம் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். அதாவது டாக்டர் சுப்பராயன், குமாரராஜா முத்தையா செட்டியார் போன்ற கட்சியிலிருந்து பிரிந்து நின்று கட்சிக்குத் தொல்லை கொடுத்து வரும் கனவான்களையும் உள்ளே இழுத்துப் போட்டுப் பார்ப்பனர் அல்லாதாரிடையில் மதிக்கத்தகுந்த பிரிவினை யில்லை; கட்சி பேதம் இல்லை என்பதான ஒரு நிலையையும் மகாநாட்டில் ஏற்படுத்த முயல வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு வரவேற்புத் தலைவர் தோழர் ராமசாமி அவர்கள் முயற்சித்து அதன் பெருமையை அடைவார் என்றும் நம்புகிறோம்
அதிகாரமும், பட்டமும், பெரும் சம்பளங்களும், பொறுப்பைவிட பெருமையும், போக போக்கியமும் அதிகமுள்ள ஸ்தானங்களை அடைவதற்கு வசதியுமிருந்தால் எப்படிப்பட்ட கூட்டத்திலும் உள் சண்டையும் கட்சியும், பொறாமையும், துவேஷமும், சூழ்ச்சியும் இல்லாமல் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. இதைப் பெரும்பான்மையான மனித சுபாவத்தை ஆதாரமாக வைத்தே சொல்லுகிறோம். ஆதலால் இப்படி யெல்லாம் இருக்கக்கூடிய ஒரு கட்சியை கேவலமான கட்சியென்றும் உருப்படாத கட்சி என்றும் சுலபத்தில் சொல்லிவிட முடியாது
கேவலம் காங்கிரசின் யோக்கியதையை எடுத்துப் பார்த்தாலும் அதில் இப்பேர்ப்பட்டயோக்கியதைகள் இல்லையென்று யாரும் சொல்லிவிட முடியாது. அதிலும் சதா சர்வகாலமும் உள் கலகங்கள் இருந்து கொண்டுதான். வந்திருக்கிறது. ஆனால் அது அதிகம் கண்ணில் படாமல் இருப்பதற்குக் காரணம் காங்கிரஸ் கூட்டமானது நமது மாகாணத்தில் இப்பொழுது அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஒரே கண்ணாய் இருப்பதாலும் அவர்களைக் கவிழ்க்க வேண்டியதே தங்களுடைய முக்கிய முதல் கடமை என்று எண்ணியிருப்பதாலும் தங்களுக்குள் பெரும் பதவி பட்டத்துக்கு இடமில்லாமல் இருப்பதாலும், தங்களுக்குள்ளாக உள் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் காட்டிக் கொள்ளச் சவுகரியம் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆதலால் ஏதாவது ஜனங்களுக்கு உருப்படியான காரியங்கள் செய்ய வேண்டும் என்று கருதினால் அதைச் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனத்தில் மக்களை மயக்கும்படியானதும் சுயநலத்திற்கு ஏற்றதுமான. பெரிய லாபங்கள் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டும் ரய... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
ஆதலால் அதற்கு முதலாவதாக மந்திரிகளுடைய சம்பளம் பெருந் தொகையாயிருப்பதை ஒன்றா சிறு தொகையாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது பெருந்தொகையில் ஒரு சிறு தொகையை மாத்திரம் மந்திரிகள் சொந்த செலவுக்கென்று எடுத்துக் கொண்டு பாக்கியை கட்சியின். அல்லது ஸ்தாபனத்தின் நன்மைக்காகச் சேர்ப்பித்துவிட வேண்டும்.
இந்தப்படி செய்யப்படாத வரையில் எந்தக் கட்சி மந்திரி சபையும் தொல்லையில்லாமல் இருந்து எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியாது. மந்திரிகளாக வருபவர்களும் எதற்காக எதன் பேரால் மந்திரிகளானார்களோ அதை அடியோடு மறந்து விட்டு எப்படி நடந்து
மந்திரிப் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாமோ என்கின்ற கவலையிலேயே கொள்கைகளைக் கைவிட்டுவிட வேண்டியதாக வரும். ஆகையால் அந்தக் காரியங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்
தவிர, ஜஸ்டிஸ் கட்சியின் தற்கால வேலைத் திட்டம் என்பதாக தோழர் ஈ.வெ. ராமசாமியால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை மகாநாட்டில் பரிசீலனை செய்து அதை ஒப்புக் கொள்வதோடு அவற்றுள் கூடுமானவற்றை உடனே அமுலுக்குக் கொண்டு வரவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அதற்கும் முறைகள் வகுக்க வேண்டும்
மகாநாட்டுக்குப் பின் கட்சித் தலைவர் ஜில்லாக்கள் தோறும் சுற்றுப் பிரயாணம் செய்து ஆங்காங்குள்ள பிரமுகர்களை நேரில் கண்டு கட்சியின். சம்பந்தமாய் அவரவர்களுக்குள்ள நியாயமான குறைகளைக் கேட்டு அவற்றுக்குச் சமாதானம் சொல்லி அவர்களை எல்லாம் கட்சியில் சேர்க்க வேண்டும்.
கிட்டப் போனால் தனக்கொரு மந்திரி வேலை கேட்பானே என்கின்ற பயத்தை அடியோடு விட்டுவிட வேண்டும். மந்திரி வேலைக்கு சூழ்ச்சிக்
காரர்களும், கலகக்காரர்களும், தொல்லைக்காரர்களும், பெரும் ஜமீன்தாரர்களும், பணக்காரர்களும் தான் தகுதியானவர்கள் என்கின்ற நிலைமையை அடியோடு மாற்றி ஏதாவதொரு தகுதியையோ முறையையோ வைத்து அதன்படி நியமனம் அடையும்படியாகச் செய்ய வேண்டும். கடைசியாக சுயமரியாதை இயக்கம் ஆரம்பமான கால முதல் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் கூடிய உதவி புரிந்தும் வந்திருக்கிறது என்பதை ஜஸ்டிஸ் கட்சியார் மறுத்துவிட முடியாது. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும், மந்திரிகளும் (காலஞ்சென்ற முனுசாமி நாயுடு ஒருவரைத் தவிர) சுயமரியாதை இயக்கத்தைப் பாராட்டி வந்திருக்கிறார்கள் என்பதும் மிகையாகாது. பிரபல தோழர்களும் ஜஸ்டிஸ் கட்சியிலும் சுயமரியாதை இயக்கத்திலும் கலந்தும் மூக்கியஸ்தர்களாகவும் இருந்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாது. சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம்
குடி அரசு - 1935 (1) 182
என்பதாகக் குறிப்பிட்டு வந்த திட்டங்கள் எல்லாம் சட்ட வரம்புக்கு உட்பட்ட முறையிலேயே நடத்துவது என்கின்ற நிபந்தனையின் மீதே வெளிப்படுத்தப்பட்டு வந்திருப்பதும் யாவரும் அறிந்ததே யாகும் ஆகவே ஜஸ்டிஸ் கட்சியானது சுயமரியாதை இயக்கத்தைத் தனது நிர்மாண ஸ்தாபனமாகவும் பிரச்சார ஸ்தாபனமாகவும் வைத்து அதன் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் இணங்கி அதைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புத்திசாலித்தனமான காரியம் ஆகும் என்பதை ஞாபகப்படுத்துகிறோம்.
நிர்மாணம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல் பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரசாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் வெற்றி பெறுவதென்பது கஷ்டமான. காரியமேயாகும்
ஆகவே விருதுநகர் மகாநாடானது இந்த விஷயங்களை யெல்லாம் கவனித்து தகுந்தபடி நடந்து கொள்ளுமென்று எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.03.1935
18— வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்
இந்த வாரம் கராச்சியில் நடந்த கலகத்தைப் பற்றிய செய்தி முழுவதையும் தினசரிப் பத்திரிகைகளில் அநேகர் படித்திருக்கலாம். இக் கலகத்தினால் நிரபராதியான மக்களில் 40 பேர்கள் வரையில் போலீசார் சுட்டதன் பயனாக மாண்டதோடு சுமார் 100 பேர் வரையில் காயம் அடையும் படியும் நேர்ந்துவிட்டது
இது நேரடியான இந்து முஸ்லீம் கலகமில்லாமல் போலீசாருக்கும், முஸ்லீம்களுக்கும் உண்டான கலகமானாலும் இதற்குக் காரணம் இந்து முஸ்லீம் மதவெறி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது
நாதுராம் என்னும் இந்து ஒருவர், முஸ்லீம் மார்க்கத்தைத் தூஷித்து எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவரை அப்துல்காயம் என்னும் முஸ்லீம் ஒருவர் நடுக்கோர்ட்டிலேயே கொலை செய்த குற்றத்துக்காக வேண்டி அப்துல் காயத்திற்குக் கோர்ட்டாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே கலகத்திற்கு அடிப்படையான காரணமாகும்
இதற்கு முன் பல தடவைகளில் வடநாட்டில் நடந்த கலகங்களுக்கு எல்லாம் மத சம்பந்தமே காரணமாக இருந்திருக்கிறது என்பதும் நேயர்கள் அறியாதது அல்ல
ஜனங்கள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு என்று ஒரு மதமும், ஜனங்கள் ஒன்றுபடாமல் தனித்தனியாகப் பிரிவுபட்டு வாழ்வதற்கென்று ஒரு மதமும், வீரத்தோடு வாழ்வதற்கென்று ஒரு மதமும், பேடிகளாய் வாழ்வதற்கு என்று ஒரு மதமும், தாங்கள் எப்பொழுதும் உயர்ந்த சாதியாராகவே யிருந்து கொண்டு மற்றவர்களைத் தமக்குக் கீழாக்கி அவர்களை யெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருப்பதற்கென்றே ஒரு மதமும், தாம் எப்பொழுதும் அடிமையாகவே யிருந்துகொண்டு பிற சமூகத்தினரின் கொடுமையைச்சகித்துக் கொண்டு மானமற்று உயிர் வாழ்வதற்கென்றே ஒரு மதமும் இருக்குமானால் இத்தகைய கொள்கைகளையுடைய மதங்களையே அந்தந்த மதத்தை அனுசரிக்கும் மக்கள் பிடிவாதமாகக் கைப்பற்றி நடப்பதே தமது கடமையென்று நினைத்திருப்பார்களானால், ஒரு தேசத்தில் எப்படி ஒற்றுமையும், சமாதானமும், மனிதத் தன்மையும் சுயமரியாதையும் குடி கொண்டிருக்கும் என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1935 (1) 184
இந் நிலை மாற வேண்டுமானால் எல்லா மக்களுக்குள்ளும் சகோதர உணர்ச்சியை உண்டாக்கத்தக்க ஒரு மதத்தில் மற்ற மதத்தினர் அனைவரும்
சேர்ந்து விடுவதன் மூலமாகவோ அல்லது எல்லா மதங்களையும் அடியோடு. ஒழித்து மதத் தொல்லைகளின்றி வாழ்வதன் மூலமாகவோதான் தேசத்தில் ஜன சமூகச் சச்சரவு உண்டாகாதபடி சமாதானமும் ஒற்றுமையும் உள்ள வாழ்க்கை நடத்த முடியுமே ஒழிய வேறு எந்த விதத்தினால் சமாதான வாழ்க்கை நடத்த முடியும் என்பதை யோசித்துப் பதில் சொல்லும்படி மத பக்தர் களையும், மதப் பாதுகாப்பு கோரும் தேசீயவாதிகளையும் கேட்கிறோம்.
இந்த விஷயத்தைப் பற்றி ஒரு சிறிதும் லட்சியம் பண்ணாததோடு சமாதான பங்கத்திற்குக் காரணமாக இருக்கின்ற எல்லா மதங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாப்போடு கூடிய சுயராச்சியம் தான் வேண்டும் என்று கூச்சலிடுவதும், அது தான் தேசீயம், தேசாபிமானம், பாரத மாதாவுக்குச் செய்யும் ஊழியம், தேச பக்தர்களின் கடமை என்பதும், இதற்கு மாறாக இருப்பவர்களையெல்லாம் அதாவது ஜனசமூகத்தை ஒன்றுபடுத்த வேண்டும், ஒன்றுபடுவதற்கு விரோதமாக இருப்பவைகளையெல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்பவர்களையெல்லாம் தேசத் துரோகிகள், நாஸ்திகர்கள், மதத் துரோகிகள் என்றும் கூறித் தூற்றுவதெல்லாம் சுத்த முட்டாள்தனமானதும், விஷமத்தனமானதும் ஆகும் என்று சொல்லுவது குற்றமாகுமா? இந்த நிலையில் கேட்கப்படும் சுயராச்சியம் என்பது, ஒரு கையினால் எழுதி மறு கையினால் அழித்துவிடுவதைப் போன்றதல்லவா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.03.1935
நட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
கிருஷ்ணசாமி - ஜீவானந்தம் விடுதலை
நமது ஆசிரியர் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் மீதும் தோழர் பி. ஜீவானந்தம் அவர்கள் மீதும் தொடரப்பட்டு இருந்த ராஜத் துவேஷவழக்கு மூன் குறிப்பிட்டிருந்தபடி 18.3.35 -ந் தேதியில் விசாரணை நடைபெறவில்லை. அன்று ஜில்லா மாஜிஸ்ரேட் அவர்கள் தான் இன்னும் வழக்கு சம்பந்தமான ரிக்கார்டுகள் முழுவதையும் படித்துப் பார்க்கவில்லை. யென்று கூறி 23.3.35-ந் தேதிக்கு வாயிதா போட்டிருந்தார்.
23.3.35-ந் தேதியில் தோழர்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமியும் ஜீவானந்தமும் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததனால் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த ஸ்டேட்மெண்டில்,
“நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்'' என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட
கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் ''பீபிள்ஸ்'' பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்தும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது
குடி அரசு - செய்தித் துணுக்கு - 24.03.1935
குடி அரசு - 1935 (1) 186
கோயிலுக்குள் போகலாம்
திருச்செந்தூர் கோவில் பிரவேச வழக்கில் ஹைக்கோர்ட்டுத் தீர்ப்பு
19.3.88-ல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ் இருவர்களும் இருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கெளன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் “எண்ணெய் வாணியர்!” என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு.
வழக்கின் வரலாறு
இருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல்ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப் கோர்ட்டில் நடந்தது.
ஆக்ஷேபம்
பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட இந்த வகுப்பினர் வருவதற்கு உரிமை கிடையாது. 1877-ல் இதைப் பற்றி வியாஜ்ஜியம் நடந்திருக்கிறது. வாணியர் களுக்கு இந்தக் கோயிலில் பிரவேச உரிமை இல்லையென்று அப்போது தீர்ப்பு கூறப்பட்டிருப்பதால், இப்போது கொண்டுவரப் படும் வழக்கு “முன் வழக்கால் பாதிக்கப்படுகிறது'' என்று அவர்கள் விவாதித்தார்கள்.
1 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம் தொகுதி - 20
சப் கோர்ட்டு தீர்ப்பு
வாணியர்கள் “வைசியர்கள்!” என்று குசுவாகாவிட்டாலும் அவர்கள் சூத்திரர்களுக்கு குறைவானவர்களல்ல. முன் வியாஜ்யம் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியமல்ல. ஆகையால் இப்போது வரும் பிரதிநிதித்துவ வியாஜ்ஜியத்தை முன் தீர்ப்பு பாதிக்காது என்று சப்கோர்ட்டு கருதியது. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்று தர்ப்புக்கூறப்பட்டது.
பிரதிவாதிகள் ஹைக்கோர்ட்டில் அப்பீல்
இதன் மீது ஹைக்கோர்ட்டில் தர்ம கர்த்தாக்களும் ஸ்தலத்தாரும் அப்பீல் செய்தனர். முன் தீர்ப்பினால் பாதகம் தான் என்று சொல்லி, ஹைக்கோர்ட்டு வாணியர்களுக்கு விரோதமாக தீர்ப்புக் கொடுத்தது.
பிரிவி கவுன்சிலில் மாறியது
முன் வழக்கால் பாதகம் ஏற்பட்டதா என்பதைப் பற்றி வாணியர்கள் பிரிவி கவுன்லில் அப்பீல் செய்தார்கள். பாதகமில்லை பென்று பிரிவி கவுன்சில் சொல்லிவிட்டதோடு, இந்த வழக்கின் உள் விஷயங்களையும் கவனித்து இர்ப்புக் கூறும்படி உத்திரவிட்டது.
கடைசியாக இப்பொழுது ஹைக்கோர்ட்டில் வழக்கு வந்தது.
வாணியர்கள் எக்காலமும் பிரவேச உரிமையை அனுபவிக்க வில்லை யென்பதை ரசுச் செய்வது பிரதிவாதிகள் பொறுப்பு; ஏனென்றால் வாணியர்கள் வைசியர்களைவிட தாழ்ந்த படியிலிருப் பவர்களல்ல. பிரதிவாதிகள் முன் அனுஷ்டானத்தை ரசுச் செய்ய வில்லை. 1862-க்கு முன் வாணியர்களுக்கு பிரவேச உரிமை இருக்க வில்லையென்று ருசுவாகவில்லை.
ஆகையால் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதாவது சப்கோர்ட்டின் தர்ப்பு உறுதி. வாணியர்களுக்கு உரிமையுண்டு என்பதே இப்போது ஏற்பட்டுள்ள தர்ப்பு.
இந்த வழக்கில் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.எல். வெங்கடராமய்யர், வி. சம்பந்தம் செட்டிஆகியோர் வாணியர் கட்சிக்கும், டி.ஆர். வெங்கடராமய்யர், கே.எஸ். சங்கரய்யர்,
டு. நல்லசிவம்பிள்ளை தர்மகர்த்தாக்களுக்காகவும் ஆஜரானார்கள். (தினமணி)
குறிப்பு பிரிட்டிஷ் ஆட்சி நம் நாட்டில் இல்லாமல், பார்ப்பனர் களுடைய வருணாச்சிரம தர்ம சுயராஜ்ய ஆட்சி இருந்திருக்குமானால்,
குடி அரசு - 1935 (1) 188
இத்தகைய தீர்ப்பு ஏற்பட்டிருக்க முடியுமா? இத்தகைய வழக்கு தொடர்ந்ததையே அதிகப் பிரசங்கித்தனமானதென்று கருதி அதற்காக வாதிகளுக்கு கடுந்தண்டனை கொடுத்திருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம். வருணாச்சிரம தர்ம ஆட்சிக்காரப் பார்ப்பனர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிபவர்கள் இதைக் கவனிப்பார்களா?
போர்
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 24.03.1935
ஜட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
காங்கிரசின் வெற்றி
பார்ப்பனர்கள் வெற்றி!
ஜஸ்டிஸ் கட்சி வெற்றி
பார்ப்பணரல்லாதார் வெற்றி!!
அதிகாரத்துக்கு வந்துவிட்டால் உன்ள பதவிகளை இரு கட்சியாரும் அனுபவிப்பார்களே ஓழிய ஒருவரும் வேண்டியதில்லை என்று சொல்லி விடமாட்டார்கள்!!!
ஆனால் காங்கிரஸ் ஆதிக்கத்திற்கு வந்தால் பதவி - உத்தியோகம் எல்லாம் பார்ப்பனர்களுக்கே போய் விடும். இதற்கு ஆதாரம் வேண்டு மானால் காங்கிரஸ் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் (ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்) உள்ள பதவிகளையும், உத்தியோகங்களையும் யார் அனுபவித்தார்கள் என்பதை உத்தியோக ஜாபிதாவை எடுத்துப் பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் பார்ப்பனரல்லாதார் பதவிக்கு வருவார்கள். உத்தியோகங்களும் கொஞ்சமாவது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்குக் கிடைக்கும்
பார்ப்பன சூழ்ச்சியில் பட்டால் அடியோடு பார்ப்பனரல்லாதார் சமூகமே பாழாய்ப் போய்விடும்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 24.03.1935
குடி அரசு - 1935 (1) 190
இந்தியாவைப் பற்றி பிரசாரம்
அமெரிக்காவில் 15 வருஷங்கள் இருந்துவிட்டு இந்தியாவிற்குத் இரும்பியிருக்கும் ஆசரியர் டாக்டர் ஆங்கில்ஸேரியா இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் படங்கள், நாடகங்கள், ரேடியோ, பொதுக் கூட்டம், பத்திரிகைக் கட்டுரைகள் முதலியவைகளின் மூலம் செய்யப்படும் பிரசாரத்தைப் பற்றி ஒருஅறிக்கை வெளியிட்டிருக்கொர். அதன் சாரம் வருமாறு
“இந்தியா பேசுகிறது!” என்ற படம் 1833-ம் வருஷம் மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் தயாரிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் அதைப் பார்த்தோம். அமெரிக்க ஜனங்கள் இந்தியாவைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்வதற்காகவே இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அபிப்பிராயப்பட்டோம். உடனே. நகரசயைக்குப் புகார் செய்து கொண்டோம். ஆனால் படத்தைத்தடை செய்யுமுன் ஒரு வாரம் காட்டப்பட்டுவிட்டது. வேண்டிய இங்கு மிழைத்துவிட்டது. ஆகையால் இந்தப் படத்தை நான் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மற்றொரு வாரத்திற்குக் காண்பித்து காட்சியின் முடிவிலும் படம் எவ்வளவு பிற்போக்கானதென்பதைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தேன். படம் தயாரித்தவர்கள் இந்திய விஷயங்களைப் பொய்ப் பிரசாரம் செய்திருக்கின்றனர் என்று நான் ரூபிப்பதாகச் சொல்லி அவர்களை ஒரு விவாதத்திற்கும் அழைத்தேன். ஆனால் அவர்கள். விவாதத்திற்கு வர மறுத்து விட்டனர். அமெரிக்கப் பத்திரிகைகள் என் விஷயத்தில் அதிக உதவி அளித்தன. 1989-ம் வருஷத்தில் மிஸ். மேயோ எழுதிய “இந்தியத்தாய்!' என்ற புத்தகம் வெளி வந்தவுடன் அதையே படமாகத்தயாரிக்க வேண்டுமென்ற எண்ணம் படம் தயாரிப்போருக்கு இருந்தது. அதனால் தான் இந்தப் படமும் தயாரிக்கப்பட்டது.
“இந்தியத் தாய்!” என்ற புஸ்தகத்தை நாடக ரூபமாகவும் நடித்துக் காட்டவும் முயற் செய்தனர். பிரபல நாட்டியக்காரியான. நாஸிமோவா என்பவர் இதில் நடித்தார். அவரை நானும் எனது நண்பர்களும் அணுகி உண்மையைச் சொல்லி நாடகத்திலிருந்து விலூக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டோம். நாடகத்தில்
191 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நடிப்பதே அவர் ஜீவனமாக விருப்பதாயும், ஆகையால் அதை விட முடியாதென்றும் அவர்கூறிவிட்டார். அமெரிக்கபிரிட்டிஷ்ஸ்தானீகரிடம் சென்று எனது குறைகளைத் தெரிவித்துக் கொண்டேன். ஆனால் இவ்விஷயம் கவனிக்கப்படவே யில்லை.
படம் எடுத்தவர் கூறும் விவரம்
இது சம்பந்தமாக பஞ்சாப் பிலிம் கம்பெனியின் காமிராமேன் தோழர் பிரஹ்லாத தத்தர் கூறியிருப்பதன் சாராம்சம் வருமாறு “இந்தியா பேசுநெது?” என்ற படத்தின் லெ பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. அவைகளை நான் தயாரித்தேன். நான் தயாரித்த பாகங்கள் வரையில் படத்தில் இந்தியாவை இகழ்ந்து பேசக்கூடிய காட்சிகள் ஒன்றும் இல்லை. ஆனால் படம் தயாரிப்பில் பல ஆச்சரியமான வேலைகள் செய்யலாம், ஜலத்திலிருக்கும் மினை ஆகாயத்தில் பறப்பதுபோல் காட்டலாம். அதுபோல் இந்தப் படத்தையும் செய்து விட்டார்கள் போலிருக்கின்றது.
என் நண்பர் சதீச் சந்திர சிங்கும் மற்றும் சல இந்தியர்களும் ஹோலிவுட்டில் வேலை செய்து கொண்டிருந்தனராம். நான் இந்தியாவில் படமெடுத்த காட்கெளுடன் கல பொய்க் காட்கெளைச் சேர்ப்பதற்கு முயற்சி செய்யப்பட்டவுடன் என் நண்பரும் மற்ற இந்தியர்களும் ஸ்டுடியோவிலிருந்து விலகக் கொண்டு விட்டதாக 584 சந்திரசிங் என்னிடம் சொன்னார்.
தோழர் சத்தியமூர்த்தியின் அறிக்கை
தோழர் எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் இந்தப்பட சம்பந்தமாக வெலியிட்டுள்ள அறிக்கை யொன்றில் இந்தியர்களின் பழக்க வழக்கங்களைத் தப்பாக எடுத்துக் காட்டி இந்தியாவின் நற்பெயர் கெட்டுவிடும்படி செய்கின்றனரென்றும், தோழர் சுபாஷ் சந்திரபோஸ் இதைக் கவனிக்கும்படி கூறியிருப்பதாயும் இந்த விஷயத்திலாவது இந்தியா கவர்ன்மெண்ட் இந்தியா மந்திரியின் சம்மதமன்னியில் தக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாமென்று நினைப்பதாயும் இந்திய சட்டசபை படக்காட்சியினர் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமென்றும், தாமும் ஒத்துழைப்பதாயும் கூறியிருக்கொர்.
(க.மி.)
தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு
ஐயா! சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்களே. தங்களுக்கு ஏன் ஆத்திரம், இல்லாததையா அவர்கள் படத்தில் காட்டுகிறார்கள்? இந்தியாவில்
குடி அரசு - 1935 (1) 192.
உண்மையாகவே பரம்பரையாக இருந்துவரும் ஊழல்களைத் தானே காட்டுகிறார்கள்? அதை மூடி வைப்பதினால் என்ன பிரயோசனம்? இந்திய சமூகத்தில் ஊழல் நிறைந்திருக்கிறது என்பது அமெரிக்கா போன்ற அந்நிய தேசத்தார்க்குத் தெரிந்தால் அது இந்தியர்களுக்கு அவமானம் என்று நீங்கள் உண்மையாகவே நினைத்தால் அந்த ஊழல்களைப் போக்க ஏன் முயற்சியெடுத்துக் கொள்ளக்கூடாது? அப்படியில்லாமல், ஊழல்களை யெல்லாம் மதத்தின் பேராலும், வருணாச்சிரம தருமத்தின் பேராலும் பரிசுத்தமானவை என்று ஒப்புக் கொள்ளும் நீங்கள் ஏன் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?
போர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 24.03.1935
193 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
ஜஸ்டிஸ் கட்சிக்குன் ஒற்றுமை
ஜஸ்டிஸ் ஜனநாயகக் கட்சியையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மீண்டும் ஒன்று சேர்க்க மும்முரமான முயற்சி நடைபெற்று வருகின்றன. 22.3.35 மாலை 2 மணிக்குக் கூடிய ஜஸ்டிஸ் கவுன்சில் கட்சி இவ்விஷயமாக யோசித்து ஓர் சமரசக் கமிட்டியை நியமிப்பதென்று தீர்மானித்து, ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மெம்பர்களும், ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து 5 மெம்பர்களும் அக்கமிட்டியில் அங்கம் வகிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 24.03.1935
குடி அரசு - 1935 (1) 194.
எனது அறிக்கையின் விளக்கம்
உண்மைவிளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரானதோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன். பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷுக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும்
அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி.,
ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.
இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி
சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.
அன்றியும் நான் ரஷியாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு அதிக கவலை எடுத்து எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களை எல்லாம், 105 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
வருவதையும், போவதையும், இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று ஒருசி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டரும் என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும், நான் செல்லுமிடங்களிலெல்லாம் என் பின். தொடர்ந்து எனது போக்குவரத்தை கவனிக்கசில போலீஸ் கான்ஸ்டேபிள்கள்.
பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன - இன்னமும் இருந்து வருகின்றன.
இவை தவிர பல தடவை ஆபீசும், வீடுகளும் சோதனை இடப் பட்டதுடன் என்னுடன் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் இம்மாதிரி கவனிப்பும் அவர்களது தபால்களை உடைத்துப் பார்த்தல் ஆகிய காரியங்களும் நடந்து வந்தன.
உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்களுடைய தபால்களைக்கூட சி.ஐ.டி. போலீசார் உடைத்துப் பார்த்து வந்திருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார் 175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை செய்து வந்ததை, சர்க்கார் C.LD. இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள் பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும் இருக்கவும் நேர்ந்துவிட்டது
இயக்க சம்மந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும், சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும், சங்கத்திலிருந்தும் விலகிக் கொள்ளவும் பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு “சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்க" மென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்
இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்து கொண்டு. இருந்த தொண்டர்களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால் தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்த்த போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமான காரியங்களும் எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும் என் தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடே செய்ததாக எண்ணும்படி பலவழக்குகள் தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம்.
குடி அரசு - 1935 (1) 196
இதனால் எல்லாம் நம்முடய விரோதிகள் பலரும் இயக்கத்தில் பொறுப்பில்லாமல் கலந்து விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம் “பேஷ் பேஷ்'' என்று நம்மை உற்சாகப்படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய மற்றபடி இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும் சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொருப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு உள்ளானேன்.
அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியாவுக்கும் பணப்போக்குவரத்தோ, பிரசார சம்பந்தமோ ஏதும் இல்லை என்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு இயக்கமல்லவென்றும், சர்க்காரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம், தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகிறதென்றும் விளக்கிக் காட்டினேன்.
மற்றும்சட்ட விரோதமாக அல்லது ராஜத்துவேஷமுண்டு பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்குப் பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும்
ஒப்புக் கொண்டேன்.
இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்மந்தப்பட்ட விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதிகாரிகளும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள். ஆகவே இந்த சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக்குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பட்டது என்பதை
தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.
நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமூகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள 197 வரியாரின் எழுத்தும் பேச்சம்ப தொகுதி - 20
பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம் என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணருகிறேன்.
இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.
ஆனால் ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரசாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராத பக்ஷம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும் முயற்சிகளும் நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான். சொல்ல வேண்டும்.
சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும்
நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன். சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட வரம்புக்கு உட்பட்டு பிரசாரம் செய்கிறவர்கள். என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கட்சி வேலைத் திட்டத்திலேயே கடசி பாராவில் தெளிவாய்க் காட்டி இருக்கிறோம்.
செங்கல்பட்டு மகாநாட்டின்போதும் இயக்க நோக்கம் வகுத்த போதும் நம் இயக்கம் சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம் என்றே குறிப்பு
காட்டி இருக்கிறோம். மத்தியிலும் பல தடவையிலும் எனது வழக்கு ஸ்டேட்மெண்டிலும் குறிப்பு காட்டி இருக்கிறேன். மற்றும் ஆரம்ப முதல் காங்கிரஸை எதிர்த்து வந்திருப்பதோடு தென்னாட்டில் காங்கிரசின் ஆதிக்கத்தை சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை பாராட்டிக் கொண்டே வந்திருக்கிறோம்.
இனியும் நாம் காங்கிரசை பார்ப்பனர் கோட்டையென்றும், அதன் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாய் கருதிக் கொண்டும் இருக்கிறோம்.
குடி அரசு - 1935 (1) 198
இன்றும் அன்றாடம் நித்திய நடவடிக்கைகளில் காங்கிரசின் பேரால் நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு ஆத்திரம் காட்டி அவ்வப்போது கண்டித்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம்
சுயராஜ்ஜியம் என்பது அர்த்தமற்றதும் பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்த்தை என்றும், தேசாபிமானம் என்பதும் தேசீயமென்பதும் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு நாடகம் என்றும், யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றும் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம் இந்தியா பூராவுமே” பகிஷ்கரித்த சைமன் கமிஷனைக்கூட வரவேற்கச் செய்து அக் கமிஷனுக்கு உண்மை தெரியச் செய்தோம்
இந்தக் காரியங்களால் ஒரு கூட்டத்தாரால் நாம் “தேசத் துரோகி",
சர்க்கார் தாசர்' என்ற பெயரைக்கூட வாங்கினோம்
இதனால் எல்லாம் கெட்டுப் போகாத அழிந்து போகாத சுயமரியாதை இயக்கமும் அதன் பிரமுகர்களும் அதில் கலந்திருந்த தொண்டர்களும் இந்த அறிக்கையினாலோ சர்க்காருடன் சமாதானம் செய்து கொண்டதாலோ அழிந்து போகும் என்று யாராவது நினைப்பார்களானால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி கொண்டு நேரத்தைக் கெடுத்துக் கொள்வதை விடசற்று பொறுமையாய் இருந்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது புத்திசாலித் தனமான காரியமாகுமென்றே நினைக்கிறேன்.
சுதந்திர எண்ணம் தோன்றிய வாலிபர்கள் என்பவர்கள் என்னுடைய இந்த அபிப்பிராயத்துக்காக வெட்கப்படுவதாகக்கூடச் சொல்லலாம் இயக்கத்தில் இருப்பதே தங்கள் சுயமரியாதைக்கு அழகல்லவென்றும் சொல்லலாம். இதைப் பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்றும் பலர் சொல்லலாம். பலர் இயக்கத்தை விட்டுப் போய் விடுவதாகவும் சொல்லலாம். இவை எல்லாம் எந்த - எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் இயற்கையேயாகும். பழைய வாலிபர்கள், ஆட்கள் கழிதலும் புதிய வாலிபர்கள் ஆட்கள் புகுதலும் குற்றமல்ல, கால இயற்கையேயாகும்
அது மாத்திரமல்லாமல் இயக்கத்தில் முக்கியஸ்தர்களாக கருதப் பட்டு வந்தவர்களே இயக்கத்தையும் இயக்கத்தில் முக்கியமாய் வேலை செய்து கொண்டு இருப்பவர்களையும் குற்றம் சொல்லுவதும் இயற்கையேயாகும்
எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இது விளங்கும் ஜஸ்டிஸ் கட்சியில் தாசானு தாசர்களாய் இருந்தவர்கள் இன்று அந்தக் கட்சியை வைது கொண்டு அழிக்க முற்பட்டுக் கொண்டு திரிவது நமக்குத் தெரியவில்லையா? காங்கிரசில் தாசானுதாசர்களாய் - காந்தியாருக்குத் தாசானுதாசர்களாய் - இருந்தவர்கள் காங்கிரசை வைதுகொண்டும், காந்தியாரை வைதுகொண்டும் இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்கு க்ஷேமமில்லை என்று சொல்லுகின்றவர்களையும் நாம் பார்க்கவில்லையா?
19 ட... வரியாரின் எழுத்தும் பேச்சம்: தொகுதி - 20
பெசண்டு அம்மையாரை குருவாகவும், ''தெய்வமாகவும்'', அந்த ஸ்தாபனத்தைத் “தெய்வீக” ஸ்தாபனமாகவும் கொண்டாடியவர்கள் இன்று அந்த அம்மையாரையும், அந்த ஸ்தாபனத்தையும் பயனற்றது என்றும் ஹம்பக் என்றும் சொல்லுகின்றதை நாம் பார்க்கவில்லையா?
மற்றும் சைவன் சைவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், வைணவன் வைணவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், முஸ்லீம் முஸ்லீம் மதத்தையே வைவதும் விட்டுப் போவதும் இவற்றிற் கெல்லாம் புது ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டு இருப்பதும் ஆன காரியங்களை “தெய்வத் தன்மை பொருந்திய" மத விஷயங்களில்கூட நாம் தாராளமாய் தினமும் பார்த்துவர வில்லையா? ஆகவே இவற்றாலெல்லாம் ஸ்தாபனங்கள் ஆடிப்போகும் என்று கருதுவது அனுபவ ஆராய்ச்சி இன்மையே ஆகும். எவ்வித மாறுதலும், இறக்கமும், ஏற்றமும் பிற்போக்கும் முற்போக்குமான விஷயமாய் இருந்தாலும் திடமான மனதுடன் உண்மையான முடிவுடன் ஏற்பட்டதானால் ஒற்றை ஆளாயிருந்தாலும்கூட
ஒரு நாளும் ஆடிப் போகாது என்பது உறுதி
ஆனால் ஊரார் என்ன சொல்லுவார்கள் எதிரிகள் என்ன சொல்லு
வார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து, அதற்கு அடிமையாகி மாற்றங்கள் செய்வதனால் மாத்திரம் அவற்றிற்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருத முடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில் எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன். ஆகவே இயக்க சம்மந்தமாகவும் திட்டங்கள் சம்மந்தமாகவும், வழக்கு சம்மந்தமாகவும் சர்க்கார் நிலைமை சம்மந்தமாகவும் ஏற்பட்டுள்ள. நிலைமயையும் அவசியத்தையும் விளக்கவே இதை எழுதுகிறேன்.
- ஈ.வெ. ராமசாமி
குடி அரசு - தலையங்கம் - 31.03.1935
குடி அரசு - 1935 (1) 200.
கல்வி மந்திரிக்கு ஜே!
பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை ஆண்: பள்ளிக் கூடமாயின் ஜில்லாக் கல்வி உத்தியோகஸ்தர்களின் உத்திரவின்றியும், பெண் பள்ளிக்கூடமாயின் இன்ஸ்பெக்டர்சுகளின் உத்திரவின்றியும் 5 வருஷத்திற்கு முன்னதாக மாற்றக்கூடாதென்று உத்திரவு பிறப்பித்ததற்காகக் கல்வி மந்திரியைப் பாராட்டுகிறோம்
இவ்வுத்திரவுப்படி கல்வி விஷயத்தில் நாம் எதிர்பார்க்கும் முழுப் பலனும் கிடைத்து விடாதென்பது நிச்சயமாயினும் நாம் சென்ற 10.2.35-ல் நமது பத்திரிகையின் உப தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அரசாங்கத்தார் இந்த உத்திரவையாவது பிறப்பித்ததற்காகச் சிறிது சந்தோஷம் அடைகின்றோம்
பாடப் புத்தகங்களை மாற்றும் அதிகாரத்தைக் கல்வி யதிகாரிகளுக்கு ஒப்பித்திருப்பதைப் புத்தக வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளுவார்கள் என்பது மறுக்க முடியாததாகும். புத்தக வியாபாரிகள் தங்களுடைய பணத்தைக் கொண்டும், மேல் உத்தியோகஸ்தர். களின் சிபார்சுகளைக் கொண்டும், கட்சி செல்வாக்குகளைக் கொண்டும், 5 வருஷங்களுக்கு முன்னதாகவே ஏதோ நொண்டிச் சமாதானங்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை மாற்றச் செய்து தங்களுடைய புத்தகங்களை திணித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள் என்பதிலும் இந்த முயற்சியில் வெற்றியடைவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
ஆகையால் உண்மையில் புத்தகங்கள் விஷயமாகப் படிப்பவர்களுக்குக் கஷ்டமும் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு பொருள் நஷ்டமும் உண்டாகாமல் இருக்க வேண்டுமாயின் பாடப் புத்தகங்களை எழுதி அச்சிட்டு விற்பனை செய்வதையும் அரசாங்கத்தாரே மேற்கொள்வதுதான் பொது ஜனங்களுக்கு நன்மை செய்வதாகும்
இக்காரியத்தைச் செய்வதினால் சர்க்காருக்கு எவ்வகையிலும் நஷ்டமேற்படாது என்பதையும் இதனால் லாபமே ஏற்படுமென்பதையும், அந்த லாபத்தையும் கல்வி அபிவிருத்திக்குச் செலவு செய்வதனால் தேசத்தில் இன்னும் அதிகமாக கல்வியைப் பரவச் செய்யலாம் என்பதையும் முன்பே விளக்கிக் கூறியிருக்கிறோம்
00 ட... ஸரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
ஆகையால், கல்வி மந்திரி கனம் குமாரசாமி ரெட்டியார் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக ஏதாவது ஒரு நிலையான காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுபவராயிருந்தால் இந்தக் காரியத்தை புத்தக வியாபாரிகளின் கூப்பாடுகளுக்கும் சிபாரிசுகளுக்கும் பயப்படாமல் தைரியமாகச் செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.03.1935
குடி அரசு - 1935 (1)
N 5
தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை
குட்டு வெவிப்பட்டது
இந்தியா சட்டசபை அங்கத்தினர்களின் அந்தஸ்து அரசியல் வேலைகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று மாகாண அரசாங்கங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு இந்திய அரசாங்கத்தாரால் தயாரிக்கப்பட்டு அச்சிட்டு சர்க்கார் அங்கத்தினர் களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு இந்திய அரசாங்க ஹோம் மெம்பர் கொடுத்த பதிலும் வருமாறு:
சத்இயமூர்த்திச என்னைப் பற்றி அந்தப் புத்தகத்தில் என்ன தகவல் கொடுத்திருக்நொர்கள்?
சர் ஹென்றி இரெயிக்? நான் நினைத்திருப்பதைக் காட்டிலும் கனம் மெம்பர்தன்னைப் பற்றி பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக் இறொர் போலிருக்கிறது. உண்மையாகவே, நான் கனம் மெம்பரைப் பற்றிய தகவல்களை வாசிக்கவில்லை. (சபையில் பலத்த சிரிப்பு)
சத்தியமூர்த்தி: அத்தகவல்களைவாசிக்காதபட்சத்தில், வரிசெலுத்து வோரின் பணத்தை வீணாகச் செலவழித்து அதை அச்சடிப்பானேன்?
சர். ஹென்றி இரெயிக்: அப்புத்தகத்தில் சில அம்சங்களை நான் வாசித்தேன். ஆனால்கனம் மெம்பரைப் பற்றிய (சத்தியமூர்த்தி) தகவல் களை மாத்திரம் வாசிக்கவில்லை. (மீண்டும் சபையில் பெருஞ் சிரிப்பு)
நமது குறிப்பு ஐயோ! பரிதாபம். தோழர் சத்தியமூர்த்தி தன்னைப் பற்றி எவ்வளவு பெரிய மனுஷராக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதும், ஆனால் அவரை சர்க்கார் மெம்பர்களும், மற்றவர்களும் கொஞ்சங்கூட லட்சியம் பண்ணுவதில்லையென்பதும் விளங்கிவிட்டதே. இதிலிருந்து சத்தியமூர்த்திக்கும், அவர் பேச்சுக்கும் எவ்வளவு மதிப்பு இருக்கிறதென்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 31.03.1935
203 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தெரிந்ததா பார்ப்பனர் சங்கதி?
சென்ற 27-3-35-ந்தேதி மாலையில் சென்னையில் நடந்த காங்கிரஸ் தேர்தல் கூட்டத்தில் தோழர் டி. பிரகாசம்:-
ஜஸ்டிஸ் கட்சியினரைக் காட்டிலும் ஆங்கிலேயர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள், வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் பெற அது (ஜஸ்டிஸ் கட்சி) பாடுபட்டு வந்திருக்கிறது. ஆனால் காங்கிரசின் நோக்கம் இதை ஒழிக்க வேண்டுமென்பதே என்று
பேசியிருக்கின்றார்.
இதைக் கொண்டாவது காங்கிரஸ் பார்ப்பனர்களின் உண்மை எண்ணம் என்ன என்று தெரிந்து கொண்டீர்களா?
'“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை முக்கிய கொள்கையாகக் கொண்ட ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்தில் இருந்ததனால் பார்ப்பனரல்லாத வகுப்பினர்கள் உத்தியோகத்திற்கு வந்து விட்டார்கள். இக்கட்சியில்லா. விட்டால் எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்றி ஏகபோகமாக ஆளலாம். ஆதலால் பார்ப்பனரல்லாதார் கட்சியை அடியோடு
ஒழித்து விட்டால் எந்த வழியிலாவது ஆங்கிலேயர்களை மயக்கி எல்லா உத்தியோகங்களையும் பார்ப்பனர்களே வாங்கிக்கொள்ளலாம்.” இதுவே காங்கிரஸ் பார்ப்பனர்களுடைய அந்தரங்க நோக்கம் என்பதையும், இதற்காகவே ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க மான ஈனமின்றிப் பொய்யும் புரட்டும் கூறிப் பொதுஜனங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும் இனியாவது தெரிந்து கொள்ளுவீர்களா? மாட்டீர்களா?
குடி அரசு - கட்டுரை - 31.03.1935
குடி அரசு - 1935 (1) 204
விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு
விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடு சென்ற மார்ச் மாதம் 30, 31 தேதிகளில் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார். அவர்கள் தலைமையில் நடந்த விபரங்கள் மற்ற பக்கங்களில் காணலாம்
1929-ம் வருஷம் நெல்லூரில் ஜஸ்டிஸ் மாகாண மகாநாடு கூடிய பின்புதஞ்சையில் தலைவர் தேர்தலுக்காக என்று ஒரு மகாநாடு கூட்டப்பட்டு,
அதிலும் தலைவர் நியமனம் தவிர வேறு ஒரு காரியமும் நடைபெறாமல் கலைக்கப்பட்ட பிறகு ஜஸ்டிஸ் மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு இப்போதுதான் முதன்முதலாக விருதுநகரில் கூடியது என்று சொல்லலாம்
அன்றியும் விருதுநகர் மகாநாடானது மற்ற மகாநாடுகளைப் போல் தலைவர் ஸ்தானத்துப் போட்டிச் சண்டை மகாநாடாகக் கூடிக் கலையாமல் தக்கதொரு வேலைத் திட்டத்தை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டுவர முடிவு செய்து கொண்டு இனிது முடிந்த மகாநாடு என்று சொல்லத்தக்க
மாதிரியில் கூடிக் கலைந்திருக்கிறது.
மகாநாட்டுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விஜயம் செய்து குதூகலத்துடனும், தீவிர கவலையுடனும் கலந்து கொண்டு உற்சாகத்தோடு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது அக்கட்சியின்.
நல் வாழ்வைக் காட்டுகிறது
மகாநாட்டில் வரவேற்புத் தலைவர் உபன்யாசமும், தலைவர் உபன்யாசமும் ஒவ்வொருவரும் கூர்ந்து படிக்கத் தகுந்ததும், அதிலிருந்து அநேக விஷயங்கள் தெரிந்து கொண்டு இனி மேலால் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தெளிவாய் எடுத்துக்காட்டுவதுமாகும்.
ஜஸ்டிஸ் கட்சி என்பது தென்னிந்தியாவில் 100-க்கு 97 பேர்களாய் எண்ணிக்கை கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் சமுதாயக் கொடுமையின் பயனாய் பார்ப்பனர்களால் வெகுகாலமாய் அமுக்கப்பட்டுக் கிடந்ததையும், அதனால் அடைந்திருந்த பிற்போக்கையும், இழிவையும் நீக்கிக் கொள்வதற் கென்றே தன்னல மறுப்பும் தியாக புத்தியும் கொண்ட பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது என்பது உலகறிந்த விஷயமாகும். அதை ஏற்படுத்திய பெரியோர்கள் அவர்களது வாழ்நாள் முழுதும் தங்களுக்கென யாதொரு பயனையும் அடைய ஆசைப்படாமல் வாழ்நாள் முழுதும் கட்சிக்காகவே
205 ௨... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
உழைத்து அவர்களது உடல், பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்து விட்டு ஓட்டாண்டிகளாக காலம் சென்றது யாவரும் அறிந்ததும், கட்சியின் எதிரிகளும் ஒப்புக் கொள்ளக் கூடியதுமான உண்மையும் ஆகும் ஆகவே ஜஸ்டிஸ் கட்சியின் முக்கிய நோக்கமும் வேலையும் சமுதாயத் துறையில் மக்களை மனிதத் தன்மை அடையச் செய்து எல்லோருக்கும் சமதர்மமும், சமநீதியையும் வழங்குவதேயாகும் என்பது
நாம் சொல்லாமலே விளங்கும்.
“இந்தியா விடுதலை அடைய வேண்டுமானால் இந்திய மக்களுக்குள். சமுதாயத் துறையில் இருந்து வரும் அநீதிகளை முதலில் நீக்கி ஆக வேண்டும்” என்பதாக விவேகானந்தர் முதல், அவருக்கு முன்னால் இருந்தும் பின்னாலும் வெகுகாலமாகவே அனேக பெரியார்களும் தீர்க்க தரிசிகளும் சொல்லிவரும் ஆப்த வாக்கியமாகும். எனவே இந்தியாவைப் பொருத்த வரையில் எந்தக் கட்சியானாலும்
எந்த ஸ்தாபனமானாலும் அல்லது எந்த ஒரு தனிப்பட்ட மனிதனானாலும் சமுதாயக் கொடுமைகளையும், அநீதிகளையும் நீக்க பாடுபடுவதானது இந்திய மக்கள் விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் பாடுபடுவதேயாகும் என்பதை யோக்கியவர்கள் எவரும் மறுக்கமாட்டார்கள்.
ஜஸ்டிஸ் கட்சியானது ஏற்பட்டு இன்றைக்கு சுமார் 18 வருடகாலமே ஆகி இருந்தாலும்கூட அது எதற்காக ஏற்பட்டதோ, அத் துறையில் ஒரு அளவுக்கு தக்கதொரு புரட்சியை ஏற்படுத்தி வெற்றி பெற்று வருகிற தென்றே சொல்லலாம். இந்திய மக்கள் பல ஜாதி மத வகுப்புகளை கொண்டவராகி இருப்பதால் சமூக வாழ்வில் ஒவ்வொரு ஜாதிமத
வகுப்புக்காரர்களும் ஒவ்வொருவர் ஒவ்வொரு வித வாழ்க்கை நிலையில் இருந்து கொண்டு உயர்வு தாழ்வாய் பேதப்பட்டு, கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பதால் எல்லா ஜாதிமத வகுப்புக்காரர்களும் ஒற்றுமைப்பட சமநிலை அடையவேண்டுமென்பதும் அரசியலிலும் எல்லா வகுப்பாருக்கும் சமசந்தர்ப்பமும், சம பிரதிநிதித்துவமும் இருக்கவேண்டு மென்பதும் யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடியதொன்றாம். அன்றியும் இந்தக் கொள்கையை ஒப்புக் கொள்ளாத ஸ்தாபனம் இந்தியாவில் ஏதும் இல்லை என்றும் சொல்லலாம். அரசாங்கத்தாராகட்டும், காங்கிரஸாகட்டும், முஸ்லீம், கிறிஸ்து, பார்சி, சீக்கியர் முதலிய சமூகங்களாகட்டும் எல்லோருங்கூட தங்கள். தங்கள் ஸ்தாபனத்தின் மூலமாகவே இது ஒப்புக்கொண்ட விஷயமும் ஆகும்.
காங்கிரசிலும், அரசாங்கசீர்திருத்தங்களிலும் 10, 15 வருடகாலத்திற்கு மேலாகவே காரியத்தில் அனுபவத்தில் இருந்து வரும் காரியமும் ஆகும்
அன்றியும் ஒவ்வொருகட்சியும்இந்தக்கொள்கைகளை நடவடிக்கையில் அனுபவிப்பதற்கு அரசாங்கத்தின் உதவியைக் கோரி அவர்களோடு ஒத்துழைத்து சட்ட மூலமாகவும் பெற்றதாகும்
குடி அரசு - 1935 (1) 206
இப்படி இருக்க ஜஸ்டிஸ் கட்சியானது இக் காரியத்திற்காக பாடுபட்டு
ஒரு அளவு பயன் உண்டாக்கியதனாலும் அதற்காக அரசாங்கத்தாரோடு. ஒத்துழைத்ததனாலும் மற்றப்படி சட்ட மறுப்பு செய்யாததினாலோ, மந்திரி பதவிகளை ஏற்க மறுக்காததினாலேயோ ஜஸ்டிஸ் கட்சி மோசமான கட்சி என்றோ, பிற்போக்கான கட்சி என்றோ ஆகி விடாது
இந்தியா பூராவிலும் உள்ள மக்களில் பெரும்பாலோரால் காங்கிரஸ் காரரின் கொள்கைகளும், செய்கைகளும் ஆதரிக்கப்படாமல், சிறப்பாக பகிஷ்காரத்தையும் ஒத்துழையாமையையும் முட்டாள்தனமான காரிய மென்றும், அனுபவத்தில் சாத்தியப்படாத காரியமென்றும் சொல்லப்பட்டு விட்டதோடு 100-க்கு 99% மக்கள் அவற்றிற்கு எதிரிடையாகவும் நடந்திருக்கிறார்களென்பதோடல்லாமல் இதைக் கண்டு காங்கிரஸ்காரர்களே கடைசியாக அறிவு பெற்று இந்த முடிவுக்கே வந்து பகிஷ்காரத்தையும், சட்ட மறுப்பையும் ஒத்துழையாமையையும் கைவிட்டுவிட்டு இவர்களாலேயே பிற்போக்கான காரியமென சொல்லப்பட்ட சட்டசபையையும் மந்திரி சபையையும் கைப்பற்றி எழுந்து நின்று ராஜவிசுவாசப் பிரமாணம் செய்துவிட்டு மற்ற கட்சிக்காரர்களைப் போலவே அரசாங்கக் கோட்டைக்குள். வந்து புகுந்துகொண்டு பாடுபடுகிறார்கள் என்பது பிரத்தியட்சமான காட்சியாகும். இந்நிலையில் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கொள்கையைப் பற்றியும் சட்டசபை பிரவேசம் மந்திரி பதவிகளை ஏற்றல் ஆகிய விஷயங் களைப் பற்றியும் இன்று யார்தான் எப்படித்தான் குறை கூற முடியும்
நிற்க, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்ற பார்ப்பனரும் ஆந்திர நாட்டுக் காங்கிரஸ் தலைவர் தோழர் பிரகாசம் பந்துலு என்ற பார்ப்பனரும் தங்கள் சிஷ்ய குழாங்களோடு தென்னாடு மாத்திரமல்லாமல் இந்தியா முழுவதிலும் சுற்றிச் சுற்றி ஜஸ்டிஸ் கட்சியை குற்றம் சொல்லி குறை கூறி வருவது யாவரும் அறிந்ததாகும். அவர்கள் குற்றம் சொல்வதற்குமுக்கியமாய் எடுத்துக் கூறும்காரணங்கள் இரண்டே யாகும். ஒன்று ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை கையாளு கிறார்கள் என்பதும், இரண்டாவதாக ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரி பதவியை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கிறார்களென்பதுமாகும்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவமென்பது ஜஸ்டிஸ் கட்சியாரால்தான் ஏற்பட்டது என்று சொல்லுவது அநீதியான காரியமாகும். ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்னதாகவே முஸ்லீம்கள் காங்கிரசில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்டு காங்கிரசும் அதற்கு ஒப்புக்கொண்டு தனிப்பிரதி நிதித்துவம் கொடுத்துவிட்ட விஷயம் யாவரும் உணர்ந்ததாகும். அன்றியும் பத்து பதினைந்து வருட காலமாகவே காங்கிரஸ் ஸ்தாபனங்களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவமுறை ஜாதிமத வகுப்பு என்கிற காரணத்திற்காக பிரதிநிதித்துவம் அளித்து வருவது காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்ததே யாகும். மற்றும் 1932ல் இந்தியா பூராவுக்குமே தீண்டப்படாத வகுப்பார்
207 ட... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
என்பவர்களுக்கு காங்கிரஸ் வகுப்பு பிரதிநிதித்துவம் அளித்து அதை அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று இரு கூட்டத்தாரும் கையொப்பமிட்டு விண்ணப்பம் செய்து கொண்டது, காங்கிரஸ் தலைவர் களுட்பட எவருமறியாததல்ல. ஆகவே வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கொண்டதினாலேயே ஜஸ்டிஸ் கட்சி பிற்போக்கான கட்சி, தேசத்துரோகமான கட்சி என்று சொல்லப்படுமானால் சொல்லுகிறவர்களின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதையும் எதற்காக அப்படி சொல்லப் படுகிறது என்பதையும் வாசகர்களையே தெரிந்துகொள்ள விட்டுவிடுகிறோம்
மந்திரி பதவிகள் எல்லா மாகாணங்களிலும் ஜனப் பிரதிநிதி மக்களால் ஒப்புக் கொண்டு அவரவர்கள் சக்தி அனுசாரம் ஆங்காங்கு சர்க்காரோடு ஒத்துழைத்தும் வேலை செய்யப்பட்டு வந்திருக்கிறது.
ஒரு மாகாணமும் மந்திரி பதவிகள் ஒப்புக் கொள்ளப்படாமலோ, சர்க்காரோடு ஒத்துழையாமலோ காலியாயிருந்து அரசாங்கம் ஸ்தம்பித்து போனதாக எவரும் சொல்ல முடியாது
அப்படி இருக்க ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் நமது பார்ப்பனர்கள் குற்றம் சொல்வதும், ஜஸ்டிஸ் கட்சியைத் தவிர இந்தியாவிலுள்ள மற்ற எல்லா வகுப்பாருடன் ராஜி பேசிக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்று சொல்லுவதும் ஜஸ்டிஸ் கட்சியாரைவிட ஆங்கிலேயர்களும், ஆங்கிலேய அரசாங்கமும் ஆயிரம் மடங்கு மேல் என்று சொல்லுவதுமான காரியங்கள் எதற்காக என்பதுவும் என்ன கருத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள் இப்படி செய்கிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ள வாசகர்களுக்கே விட்டு விடுகிறோம்.
நிற்க விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி சிறிது ஆராய்வோம். மகாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தாலும் அவைகளில் தோழர் ஈ.வெ.ராமசாமியால் பிரரேபிக்கப்பட்டு ஏகமனதாய் ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள்* குறிப்பிடத்தக்கவை களாகும். அவை பெரிதும் சமதர்ம கொள்கையை அடிப்படையாகக் கொண்டே கொண்டு வரப்பட்டதாகும். விவசாயிகளைக் கடன் தொல்லையி லிருந்து நீக்கவும், பூமியை கடன் கொடுத்தவர்கள் பிடுங்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும், விவசாயிகளுக்கு வேண்டிய கடன் சுலப வட்டியில் அதிகச் செலவு இல்லாமல் கிடைக்கும்படியும், விவகாரங்களால் குடும்பங்கள். கெட்டுப் போகாமல் இருக்கவும், வீண் வழக்குகளை கற்பனை செய்வதற்கு வக்கீல்களுக்கு வசதியில்லாமலிருக்கவும், விவசாயிகளை தரகர்கள், வியாபாரிகள் கொள்ளை கொள்ளாமல் இருக்கவும், தனிப்பட்ட முதலாளிகள் வியாபாரம், தொழில்சாலைகள் மூலம் பெரும் லாபமடைந்து செல்வம் எல்லாம் சிலர் கையிலேயே போய் சேராமல் இருக்கவும், எல்லா ஜனங்களுக்கும் பத்து வருடத்திற்குள் கல்வி ஏற்படவும், மதுபானத்தை ஒழிக்கவும், தீண்டாமை அடியோடு இல்லாமல் செய்யவும், பெண்களுக்கு
குடி அரசு - 1935 (1) 208
ஆண்களைப் போலவே பிரதிநிதித்துவமும் உத்தியோகமும் வழங்கவும், மக்களின் வாழ்க்கை நிலையை வுயர்த்தி அதிக வரும்படி அடையச் செய்யவும், அரசாங்க உத்தியோக பெரும் சம்பளங்களைக் குறைத்து இந்திய பொருளாதார நிலைமைக்குத் தகுந்த மாதிரி செய்யவும், நிலவரி விஷயத்தில் பணக்காரர்களுக்கு அதிக வரியும், ஏழைகளுக்குக் குறைந்த வரியும் இருக்கும்படியாகவும் ஜனப் பிரதிநிதித்துவ ஸ்தாபனங்கள் என்பவைகள் நாணயமாகவும், ஒழுங்காகவும் நடைபெறும் படியும், நில அடமான பாங்கு, கூட்டுறவு பாங்கு முதலியவைகள் சர்க்காராலேயே நடத்தப்பட வேண்டு மென்றும், இப்படியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இவை ஜஸ்டிஸ் கட்சியின் வேலைத் திட்டமாக நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. இந்த தீர்மானங்களைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் தாறுமாறாக உளறி கொட்டுவதின் மூலம் தங்களுடைய ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ளுகின்றன.
சுதேசமித்திரன் பத்திரிகையானது பகட்டான தீர்மானம் என்று தலைப்பு கொடுத்து இருக்கிறது. மற்றொரு பார்ப்பனப் பத்திரிக்கை காங்கிரஸ் தீர்மானங்களில் இருந்து திருடிக் கொண்டதாக எழுதி இருக்கிறது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சுயமரியாதைக்காரர்களுக்குப் பயந்து கொண்டு அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக இத்திட்டத்தை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் என்று பரிகாசமாக எழுதி இருக்கிறார். ஆனால் அவர் இத்திட்டங்கள் அபேத திட்டமென்றும், அதை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக் கொள்ள வேண்டுமென்பதற்காக ராஜபக்த அபேதவாதத் திட்டமாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லி இவ்வளவு பெரிய காரியங்களை அக்கட்சியார் செய்ய முனைந்திருப்பதை பொது ஜனங்கள் தெரிந்து அக்கட்சியை ஆதரித்து விடுவார்கள் என்று பயங்கொண்டு அத்திட்டங்களை பரிகாசமாக்கியும் அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு கெட்ட எண்ணங் கற்பித்தும் ஒரு பெரிய அறிக்கை விட்டிருக்கிறார். அதைப் பற்றி பின்னால் எழுதுவோம்
ஒன்று மாத்திரம் இப்போது குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த பதினைந்து வருஷக்காலமாக காங்கிரஸ்காரர்கள் அவர்கள் கூட்டங்களில் தீர்மானித்துக் கொண்ட எந்தத் தீர்மானத்தையும் அவர்கள்
அமுலுக்குக் கொண்டு வரவில்லை என்றும், அதன்படி நிலையாய் நிற்கவில்லை என்றும் பணம் வசூலிக்கவும், பார்ப்பனப் பிரசாரம் செய்து பார்ப்பனர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய பயன்படுத்தவுமான காரியம் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவோம்
ஜஸ்டிஸ் கட்சியார் இதுவரையில் போட்ட தீர்மானப்படி நடந்திருக் கிறார்கள் என்பதையும் புள்ளி விவரங்களோடு சொல்ல முடியும்
209 ௨... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பார்ப்பனர்களுக்கு மக்களை ஏமாற்றிப் பிழைப்பதைத் தவிர வேறு தொழில் “சாஸ்திரத்திலேயே" விதிக்கப்படாததால் அவர்கள் நம்மவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து நம்மவர்களிலேயே கூலி ஆட்கள் பிடித்து நமக்கு விரோதமாய் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
நம்மவர்கள் கண் விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெறும் வரை: இந்த புரட்டும், இழி தன்மையான காரியங்களும் நடந்துதான் வரும் முடிவாக விருதுநகரில் மகாநாட்டைக் கூட்டி ஜனங்களுக்கு உற்சாகமளித்த விருதுநகர் தோழர்கள் ராவ் சாகிப் செந்திக்குமாரர், சேர்மன் வி.வி.ராமசாமி, ஊ.பு.ஆ. செளந்திரபாண்டியன் வரவேற்புக் கழகத்தார்கள் ஆகியவர்களின் முயற்சியையும், பரோபகாரத்தையும் பாராட்டுவதோடு பார்ப்பனரல்லாதார்கள். சார்பாக நன்றி செலுத்துகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.04.1935
* தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்
1. விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், அவர்கள் மேலால் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்கள் பூமியை கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும்
2. அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாக பெருக்கவேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும்.
3. சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களைக் குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களைக் குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை.
சர்க்காரார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும் மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு
வாதாடும் (Benami) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு. அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிட வேண்டும்
குடி அரசு - 1935 (1) 210
விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர் - மத்திய வியாபாரிகள் ஆகியவர்களை விலக்குதல் செய்து விளைபொருள் சாமான்களை வாங்குபவர்களுடன் நேரில் கலந்து கொள்ளத்தக்க ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி நல்ல விலையை விவசாயிகளே பெறும்படியாக செய்ய வேண்டும் பொது ஜனங்களுடைய உபயோகத்துக்காக இருந்து வரும் ரயில்வே, தந்தி - தபால், தண்ணீர் சப்ளை, எலக்ட்ரிசிட்டி முதலியவைகளை சர்க்கார் எப்படி நிர்வகித்து வருகிறார்களோ, அந்த முறையே இனியும் மற்ற காரியங்களுக்கும் உபயோகப்படுத்தி எப்போதும் சர்க்காராலேயே நடந்து வரும்படிச் செய்ய வேண்டும்
இன்ஷுரன்ஸ் விஷயத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு சர்க்கார் செய்து கொடுத்திருக்கும் சவுகரியத்தை அதாவது போஸ்ட் ஆபீசைப் போல் மற்ற ஜனங்களும் அடையும்படியாகச் செய்ய வேண்டும்
தேசப் பொது மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதற்கேற்ற வரும்படி கிடைக்கும்படி வரும்படி விகிதத்தை நிர்ணயிக்கவும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்
10 வருஷ காலத்துக்குள் சகல மக்களுக்கும் ஆரம்பப் படிப்பு ஏற்படும்படி செய்து விட வேண்டும்
மதுபானம் ஒழியும்படியாக கூடிய முயற்சிகளையும், சட்டங்களையும் செய்துவிட வேண்டும்
மனித சமூகத்தில் இருந்து வரும் தீண்டாமையையும், பிறவிக் காரணமாக உள்ள வித்தியாசக்கொடுமைகளையும் அடியோடு ஒழித்துவிடவேண்டும்.
பெண்களுக்கு அரசியலில் ஆண்களைப் போல் எல்லா உத்தியோகங் களையும் அடைய சுதந்திரமும் கவுரவ ஸ்தாபனங்களில் சரி பிரதிநிதித் துவமும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்
அரசியல் உத்தியோகங்கள் இந்த மாகாணத்தில் உள்ள எல்லா வகுப்பார் களுக்கும் அவரவர்கள் ஜனத்துகை பெருக்கத்துக்குத் தக்கபடியும் அரசியல் லக்ஷியத்துக்குத் தக்கபடியும் கிடைக்கும்படியாக செய்ய வேண்டும்
12
பூமி வரி விதிக்கும் முறையானது எல்லா மக்களுக்கும் சமமான வரிப் பளுவாய் இருக்கும்படியாகவும், அவசியமான இடங்களில் விலக்கு செய்யும்படியானதாகவும் மாற்றி அமைக்க வேண்டும். (அதாவது ஏழைக் குடியானவர்களுக்கு கொஞ்ச விகிதமும் இருக்க வேண்டும்.)
13
முனிசிபாலிட்டிகளுக்கும், கூட்டுறவு ஸ்தாபனங்களுக்கும், ஜனங் களுக்கும் இன்னும் அதிகமான காரியங்கள் செய்யும்படியான சுதந்திரங்கள் கொடுத்து அவைகளை சர்க்கார் அதிகாரிகளின் மேல் பார்வையில் நடைபெறச் செய்ய வேண்டும்
14.
௨௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
15. தற்கால நிர்வாக முறையானது மக்களுக்கு மிகவும் பாரமாக இருப்பதால் நியாயமான செலவில் திறமையான நிர்வாகத்தை அமைக்க முயல வேண்டியதோடு சம்பளங்களை இந்தியர் சராசரி வாழ்க்கையையும் இந்திய பொருளாதார நிலைமையையும் கவனித்து ஏற்படுத்த வேண்டும்
16. இந்தக் காரியங்கள் நடைபெறும் பொருட்டு அவசியமான இடத்தில் சட்டம் செய்வதோடு இக் கொள்கைகளை பொது ஜனங்களுக்கு விளங்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும்
17. ஜில்லா போர்டார்களும், முனிசிபாலிட்டியாராலும் நியமிக்கப்படும் எல்லா உத்தியோகங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் முறைப்படியே நியமிக்க வேண்டுமென்ற சட்டசபை தீர்மானத்தை இம்மகாநாடு ஆதரிக்கிறது
18. இது சம்பந்தமாக மந்திரியாரால் ஏற்பாடு செய்து வெளியிட்டிருக்கிற விதிகளை உறுதியாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்ளுகிறது
19. மற்றும் நீதி இலாக்காவிலும், குறிப்பாக ஐகோட்டாரால் நியமிக்கப் படும் உத்தியோகங்களிலும், நீதி ஸ்தலங்கள் மூலம் ஏற்படுத்தும் உத்தியோகங்களிலும் கோர்ட்டாவ்வாட்ஸ் (அரசாங்கத்தாரால் நிர்வாகம் செய்யப்படும் சமஸ்தானங்களிலும்) கவர்ன்மெண்டார் ஏற்கனவே ஒப்புக் கொண்டு இருக்கிற வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை அநுட்டிக்க வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கிறது
20. இந்த மாகாணத்தில் இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை இந்தியா கவர்ன்மெண்டும் செக்ரட்டரி of ஸ்டேட் (சீமையில் இருக்கும் இந்திய செக்ரட்டரியின் ஆபீசும்) ஏற்றுக் கொண்டு அந்த முறையையே எல்லா இந்திய உத்தியோகங்களிலும் நியமிக்கப்படும் விஷயங்களிலும் அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாக அரசாங்கத்தார்,
புது சீர்திருத்தத்தில் ஏற்பாடு செய்து இருக்கும் புதிய விதிகளில் இந்த முறையையும் சேர்த்து திருத்த வேண்டுமென்றும் இந்த மாகாணத்திற்கு நியமிக்கப்படும் எல்லா இந்திய உத்தியோக விஷயங்களில் வகுப்புவாரி கொள்கையை முக்கியமாய் கவனிக்க வேண்டுமென்று அபிப்பிராயப்படுகிறது இவை தோழர் ஈ.வெ. ராமசாமியால் பிரரேபிக்கப்பட்டு தோழர்கள் பொன்னம்பலம், சி.டி. நாயகம் ஆகியவர்களால் ஆதரிக்கப்பட்டது.
குடி அரசு - 1935 (1) 21
ப்
ஒருவன் யோக்கியதை
அவன் விரோதியினால் தெரியும்
தலைவரவர்களே! தோழர்களே!
விருதுநகர் மகாநாடானது ஒரு குறிப்பிடத் தகுந்த மகாநாடாகும் 1926-ம் வருஷம் ஜஸ்டிஸ் கட்சியானது மாகாண சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தோழர் எம்.டி. சுப்பிரமணிய முதலியார் அவர்கள். முயற்சியால் மதுரையில் மகாநாடு கூட்டி மக்களுக்கு உற்சாகமூட்டியது போல் இப்போது இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி “தோல்வி அடைந்த சமயத்தில் தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் முயற்சியால் விருதுநகரில் மகாநாடு கூட்டி மக்களுக்கு!” உற்சாகமளித்ததாகும்
1926-ல் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தது என்று சொன்னாலும் அதன் பயனாய் பெற்ற உற்சாகத்தால் இழந்துவிட்ட மந்திரிசபையைக் கைப்பற்றியதோடு மாத்திரமல்லாமல் கேபிநட் (அரசாங்க கவுன்சில் மெம்பர் ஸ்தானங்கள்) சபையையும் கைப்பற்றிவிட்டது. அதுபோலவே இந்திய சட்டசபை ஸ்தானங்களை இழந்ததின் பயனால் பெற்ற ஊக்கமானது இந்திய அரசாங்க மந்திரி சபையிலும் ஆதிக்கம் செலுத்தத் தகுந்த சக்தியைப் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை.
நிற்க, இன்று காலை வரவேற்புக் கழகத் தலைவர் சொற்பொழிவிலும் எனக்கு வாசித்துக் கொடுத்த வரவேற்புப் பத்திரத்திலும் ஜஸ்டிஸ் கட்சியில் ஒழுங்கான கட்டுப்பாடு இல்லை என்றும், தலைவர்கள் என்பவர்களுக்குள். ஒற்றுமை இல்லை என்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டது
இதைப் பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. எப்படிப்பட்ட கட்சியிலும் இது இயற்கையேயாகும். அதுவும் செல்வாக்குப் பெற்று அதிகாரத்திலும், ஆதிக்கத்திலும் இருந்து வரும் கக்ஷியில் கண்டிப்பாய் அபிப்பிராய பேதம், ஒற்றுமைக் குறைவு என்பது இல்லாமல் இருக்கமுடியாது.
காங்கிரசில் உள்ள அபிப்பிராய பேதமும், ஒற்றுமைக் குறைவும் நம்மில் பலருக்குத் தெரியாது. ஏனென்றால் காங்கிரஸ்கார்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) அதை வெளியில் தெரியும்படியாகக் காட்டிக் கொள்ளுவதற்கு நேரமில்லை. மழட... வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
மற்றும் அவர்கள்தாங்களே ஏகபோகமாய் அனுபவித்த ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் இழந்துவிட்டோமே என்கின்ற கவலையின் பேரிலும் அவற்றை நம் மக்கள் (பார்ப்பனரல்லாதார்கள்) அனுபவிக்கிறார்களே என்கின்ற பொறாமையின் பேரிலும், வயிற்றெரிச்சல் கொண்டு ஆத்திரத்தோடு நம்மை எதிர்ப்பதையும் நம் இயக்கத்தை தோல்வியடையச் செய்து அழிப்பதிலுமே அவர்களுடைய முழுக் கவலையும் நோக்கமும் பிரசாரமும் இருந்து வருவதால் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளவோ, அதை வெளியில் காட்டிக் கொள்ளவோ அவசியமும் நேரமும் இல்லை.
காங்கிரசுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு அதன் பயனாய் ஏதாவது ஒரு பதவியோ, அதிகாரமோ அடையத்தக்க யோக்கியதை அவர்களுக்கு வந்துவிடுமானால் அப்போது பாருங்கள் அவர்களுக்குள் ஏற்படும் கலகங்களையும், ஒற்றுமைக் குறைவையும். அதில் உள்ள ஆட்கள் சில சமயங்களில் பதவி கிடைக்கவில்லை என்று கலகம் செய்து கொண்டு வந்து நம்மோடு சேர்வதாகக்கூட வந்து கெஞ்சவில்லையா.
ஜஸ்டிஸ் கட்சியும்கூட அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் இழந்துவிடக் கூடுமானால் அப்பொழுது உலகில் உள்ள எல்லாக் கட்சிகளையும்விட கட்டுப்பாடாகவும், ஒற்றுமையாகவும் பாடுபடும் என்பதோடு, உலகுக்கே ஒற்றுமைக்கு வழிகாட்டியாகக்கூட இருக்கும் என்று சொல்லலாம்.
ஆகவே அரசியல் முறையின் காரணமாகவும், ஜஸ்டிஸ் கட்சியின். உண்மைக் கொள்கையின் காரணமாகவும் அது செல்வாக்குப் பெற்று ஆதிக்கத்துக்கு வந்து அதிகாரம், பதவி வகிக்க நேரிட்டதில் ஏமாற்றமடைந் தவர்களால் முணுமுணுப்போ, அதிருப்தியோ காட்ட முடியாமல் இருக்கு மென்று யார்தான் எதிர்பார்க்ககூடும்? ஜஸ்டிஸ் கட்சியார் யெல்லோரும்
துறவிகள் என்றோ ஆசைப் பற்று அற்ற ஞானிகள் என்றோ கருத முடியுமா?
நாளைய தினம் காங்கிரசுக்கு பதவி வகிக்கும் யோக்கியதை ஏற்பட்டு. விட்டால் தோழர்கள் சத்தியமூர்த்தியும், ராஜகோபாலாச்சாரியாரும் குடுமியைப் பிடித்துக் கொள்வதை நேரில் பார்க்கலாம். அவர்களுக்குள். இருக்கும் அபிப்பிராயபேதமும், அசூயையும் ஒருவரைப் பற்றி ஒருவர். கொண்டுள்ள அபிப்பிராயமும் உள்ளது உள்ளபடி எழுத அகராதியில் வார்த்தைகள் கிடையாது
ஆதலால் கட்சியில் தலைவர்கள் அபிப்பிராய பேதத்தைப் பற்றி
நாம் கவலைப்பட வேண்டியதில்லை. கொள்கைகளை ஒழுக விடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் முக்கிய கவலையும் கடமையுமாகும்
ஜஸ்டிஸ் கட்சியார் அனுபவிக்கும் பதவி, சம்பளம் இவற்றைப் பற்றியே அதன் எதிரிகள் இன்று அதிகமாகக் கூப்பாடு போடுகிறார்கள்.
குடி அரசு - 1935 (1) 214
இன்றைய பதவிகளும், சம்பளங்களும், ஜஸ்டிஸ் கட்சியார் உண்டாக்கிக் கொண்டவைகள் அல்ல. காங்கிரசானது (பார்ப்பனர்கள்) இப்பதவிகள் தங்களுக்கே கிடைக்கும் என்கின்ற எண்ணத்தின் மீது 40 வருஷகாலமாய் “ஏழை மக்களுக்கு ஆக பாடுபட்டு தேசாபிமானத்தின். பேராலும், தேசபக்தியின் பேராலும் ஏற்படுத்தின பதவியையும், சம்பளத்தையும் தான் இன் நாட்டு மக்கள் (பார்ப்பனரல்லாதார்) அனுபவிக்கிறார்களே ஒழிய வேறில்லை. இந்தப்படி பார்ப்பனப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
அன்றியும் இவை காங்கிரஸ்காரர்களால் வெறுத்துத் தள்ளிவிட்ட ஸ்தானங்களும் அல்ல. அவர்களும் அடைய இன்று ஆகாயத்துக்கும், பூமிக்குமாக தாளம் போடும் ஸ்தானங்களே ஒழிய மற்றபடி “தேசத் துரோகிகளுக்கு ஆக ஒதுக்கப்பட்டதல்ல.
இந்த ஸ்தானங்களுக்குப் பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் நாக்கில் தண்ணீர் ஊறும்படி நடத்துகிறார்கள் என்பதற்கு உங்களுக்கு உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்லுகிறேன்.
அதாவது நமது பார்ப்பனர்கள் இந்திய சட்டசபைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும்போது ஈரோட்டில் ஒரு கூட்டத்தில் தோழர். சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் 'ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கவர்னராகவும், நான் சீப் செக்கரட்டரியாகவும் மற்றவர் மந்திரிகளாகவும் வரப்போகின்றோம்” என்று சொன்னதின் அருத்தம் என்ன என்று பாருங்கள். சத்தியமூர்த்தி அவர்களின் மனதில் பல காலமாய் ஊறிக் கிடக்கும் அபிப்ராயம் அவரை அறியாமல் வெளியாயிற்று என்று தானே சொல்ல வேண்டும். பக்கத்தில் இருந்த ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தனக்கு வேண்டாமென்றாவது தான் வரப்போவதில்லை என்றாவது சொன்னாரா?
ஆகவே உத்தியோகப் பொறாமையால் ஆத்திரத்தில் உளறுவதை
நாம் கவனிக்க வேண்டியதில்லை.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு அரசியல் துறையில் மற்ற மாகாணங் களையெல்லாம் விடநம் மாகாணம் முற்போக்கடைந்திருப்பதோடு சமூகத் துறையில் எந்த மாகாணமும் நினைப்பதற்குக்கூட தைரியப்படாத பெருங்காரியங்களைச் சாதித்திருக்கின்றது என்பதை உணருங்கள். அதற்கு உதாரணம் வேண்டுமானால் சமூகத் துறையில் கடுகளவு முற்போக்குக்கும் இடம் கொடுக்காதவர்களான - பிறவி எதிரிகளாய் இருக்கும் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை வைவதும், தூற்றுவதும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவதுமான காரியங்களே போதுமானதாகும்.
ஒருவனுடைய யோக்யதையை தெரியவேண்டுமானால், அவனுடைய சினேகிதனைப் பாருங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் நான். வேறு விதமாகச் சொல்லுகிறேன். A5 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
“ஒருவனுடைய யோக்யதையைப் பார்க்க வேண்டுமானால் அவனுடைய விரோதியைப் பாருங்கள்'' என்று சொல்லுகிறேன். ஏனெனில் நல்லவர்களுடன் சினேகமாக இருப்பது சுலபமான காரியம். அதனால் எவனும் வீரனாகிவிட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும், உண்மையான தொண்டனுமாவான். ஆகவே இன்று தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் தூக்கத்திலும், வாழ்விலும், கல்வியிலும், ஜபத்திலும், தபத்திலும், வேள்வியிலும், யாகங்களிலும் இடைவிடாமல் கோரும் காரியம் என்ன என்று பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சி ஒழிய வேண்டும், பொப்பிலி ராஜா ஒழிய வேண்டும், சுயமரியாதை கட்சி ஒழிய வேண்டும்” என்பது போன்ற எண்ணம் அல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன். உலகிலே காங்கிரஸ் கொள்கைக்கு முரணானது - பிற்போக்கானது என்று காங்கிரஸ்காரர்களால் சொல்லப்படுகிற கட்சிகள் பல இருந்தும், அதாவது முஸ்லிம் கட்சி, கிறிஸ்தவர் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்கள் கட்சி, மிதவாதிகள் கட்சி, இன்னும் பல வகுப்புவாதக் கட்சிகள் இருந்தும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவங்கள் பெற்றும் இருக்க அவைகளையெல்லாம் விட்டுவிட்டு நம் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் வெட்டிப் புதைக்க வேண்டும் என்று ஆசைப் படுவதின் அர்த்தம் என்ன என்று பாருங்கள்.
சென்ற வாரத்தில் தோழர் பிரகாசம் பந்துலு ஒரு கூட்டத்தில் எவ்வளவு தைரியமாய் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டார் பாருங்கள்.
''ஜஸ்டிஸ் கட்சியாரைவிட ஆங்கிலேயர்களும், ஆங்கிலேய ஆட்சியும் மேலானது என்று சொன்னாரே அதன் அபிப்பிராயம் என்ன? ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியால் இந்த இருநூறு வருஷகாலமாய் செய்யாததையும் செய்ய முடியாததையும் ஜஸ்டிஸ் கட்சியார் செய்து விட்டார்கள் என்று தானே அருத்தம்.
அது என்ன என்பதை தோழர் பிரகாசம் அவர்களே அடுத்த வரியில் சொல்லிவிட்டார். அதாவது ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஆதலால் அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். பல ஜாதி வகுப்புகள் இருக்கிற (இருந்தே தீர வேண்டும் என்று காந்தியார் முதல், பல மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் வற்புருத்துகிற) நாட்டில் ஒரு அரசியல் கட்சியார் ஆதிக்கத்துக்கு வந்ததின் காரணமாக பல ஜாதி வகுப்புகளுக்கும் அரசியலில் சிறிதாவது பிரதிநிதித்துவம் ஏற்படும்படி செய்ததற்காக அக்கட்சியைத் தேசத் துரோகக் கட்சியென்றும், ஒழிக்கப்பட வேண்டிய கட்சியென்றும் (இன்று எல்லாத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால்) சொல்லுவார்.
குடி அரசு - 1935 (1) 216
களானால் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும், பார்த்துக் கொண்டும் இருக்கிற ஒருவன் உண்மையாகவோ, யோக்கியனாகவோ இந்த தேச மக்களிடம் பற்றுக் கொண்டவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே ஜஸ்டிஸ் கட்சியார் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ள மாபெரும் எதிரிகளான பார்ப்பனர்களின் எதிர்ப்பையும் சூட்சிகளையும் வென்று எல்லா ஜாதி வகுப்பு மக்களுக்கும் அரசியலில் பிரதிநிதித்துவம் பெற மார்க்கம் செய்து விட்டார்கள் என்றால் இது ஒரு பெரிய சமூகப் புரட்சியா அல்லவா என்று கேட்கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியார் பெரிய உத்தியோகம் பார்க்கிறார்கள், பெரிய பதவி அனுபவிக்கிறார்கள் என்று பொறாமைபடும் பார்ப்பனரல்லாத பொறுப்பற்ற அறிவிலிகள் இதற்கென்ன பதில் சொல்லுகிறார்கள் என்று கேட்கின்றேன்.
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்துவிட்டால் பிறகு அரசியல் அதிகாரத்துக்கும், பதவிக்கும் யார் வருவார்கள் - யார் வரக்கூடும் என்று கேட்கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியை வைகின்றவர்களுக்கு வெகுசுலபத்தில் நமது பார்ப்பனர்கள் தேசாபிமானப் பட்டம் கொடுத்து விடுவதால் அப்பட்டத்துக்கு ஆசைப்பட்ட சோம்பேரிகளுக்கு இது அவசியமாய்ப் போய்விட்டது
இந்திய நாட்டு சமூகக் கொடுமைகள் நீங்கும் வரை ஜஸ்டிஸ் கட்சி இருந்து தான் ஆக வேண்டும். அக்கட்சியாருக்கு பதவி, பட்டம், அதிகாரம் ஆகியவை வரும்படி செய்து தானாக வேண்டும்
அதன் தலைவர்களின் நடத்தைப் பிசகு இருந்தால், நாணையக் குறைவு இருந்தால் தனிப்பட்ட நபர்களை வெளிப்படுத்துவதோ, புத்தி கற்பிப்பதோ தப்பாய்விடாது.
ஆனால் கட்சியைப் பற்றி கொள்கையைப் பற்றி குறை கூறுவது எதிரிக்கு உளவாய் இருப்பது போன்ற இழிகுணமேயாகும்
தீர்மானங்கள்
இம்மகாநாட்டில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக் கிறோம். எல்லா தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டதாகும்
இன்னும் பல தீர்மானங்கள் நிறைவேற்ற நானும் மற்றும் சிலரும் ஆசைக் கொண்டிருந்தோமானாலும் மந்திரிகள் முன்னிலையில் அதாவது அத்தீர்மானங்களில் பெரும்பான்மையானவைகளை நிறைவேற்றி வைக்கும் பொருப்புகளை உடையவர்கள் முன்னிலையில் அவர்களது சம்மதம் பெற்று நிறைவேற்ற சந்தர்ப்பம் இருந்தபடியால் அவர்களால் 07 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
நிறைவேற்ற முடியாதென்றதும் ஒரே அடியாய் அதிக கஷ்டத்துக்கும் எதிரிகளாகிய பார்ப்பனர்களின் கூப்பாட்டிற்கும் இடமில்லாமல் இருக்க வேண்டுமென்றதுமான பல தீர்மானங்கள் நிறுத்திக் கொள்ளப்பட்டன. ஆனாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சாமன்யமானவைகள் அல்ல. அவை அமுலுக்கு வரும் என்றே நம்பி இருக்கிறேன்.
காங்கிரஸ்காரர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும், ஜஸ்டிஸ்
காரர்கள் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கும் பொருப்பு விஷயத்தில் அதிக வித்தியாசம் உண்டு.
காங்கிரஸ்காரர்கள் எதையும் எழுதி கூட்டத்தில் நிறைவேற்றி வைக்கலாம். ஏனெனில் அவர்கள் சுலபத்தில் பதவிக்கு வரப்போவதில்லை. என்பது அவர்களுக்கே தெரியும். தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டால்,
ஏன் நடத்திக் கொடுக்கவில்லை என்று கேழ்ப்பதற்கு அங்கு யாரும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று சொல்லிவிடலாம்.
ஆனால் ஜஸ்டிஸ்காரருக்கு பொருப்பு இருக்கிறது. அவர்கள் பதவியில் இருக்கிறார்கள் - தீர்மானங்களை ஏன் நடத்திக் கொடுக்கவில்லை என்று யாரும் கேழ்ப்பார்கள். பொருப்பு இருக்கிறது, நாணையம் இருக்கிறது. ஆதலால் கடுதாசித் தீர்மானம் தானே என்று கருதி எதையும் செய்துவிட முடியாது என்பதோடு போதிய பலமில்லாத கட்சியாய் இருப்பதால் பல பேருடைய லட்சியங்களையும் கவனிக்க வேண்டி யிருப்பதால் “இப்போதைக்கு இவ்வளவு போதும்” என்று தலைவரும், மற்ற மந்திரிகளும் சொன்னதை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று
ஸ்தல ஸ்தாபனங்களிலும், ஸ்தல ஸ்தாபன பள்ளிக்கூடங் களிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையை உடனே ஏற்படுத்துவ
தாகவும், ஏற்கனவே அதற்கு ஏற்பாடு செய்து வருவதாகவும் முதல்
மந்திரியார் வாக்குக் கொடுத்துத் தெரிவித்ததால் அத்தீர்மானத்தை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.
இதற்காக நாம் எல்லோரும் பிரத்தியேகமாக முதல் மந்திரியை பாராட்ட வேண்டும்
மற்றும் 4வது வகுப்பு வரை பள்ளிக்கூட உபாத்தியார் வேலைக்குப் பெண்களை நியமிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தையும் கல்வி மந்திரியார் ஏற்கனவே அந்தப்படி செய்திருப்பதாகவும், அதை அமுலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்ததின் பேரில் அதை வாப்பீசு வாங்கிக் கொண்டேன். இதற்காகவும் கல்வி மந்திரியாரைப் பாராட்ட வேண்டும்
குடி அரசு - 1935 (1) 218
மற்றபடி நான் ஜஸ்டிஸ் கக்ஷி வேலைத் திட்டமாக இருக்க வேண்டும் என்று ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டில் ஆஜர்படுத்திய தீர்மானங்கள் சில வாசகத் திருத்தங்களுடன் தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றது அவைகள் அபிப்பிராயபேதமின்றி நிறைவேறப்பட சில வாசகத் திருத்தங்கள் செய்திருக்கிறது என்றாலும் அதன் தத்துவங்கள் எதுவும் அசைக்கப்படவில்லை ஆகவே இனி மந்திரிகளின் பொருப்பு சிறிது கஷ்டமானது என்பதையும், அவர்கள் வாக்குக் கொடுத்தபடி இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இவர்கள் ஆதிக்கத்திற்குள் உள்ளவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக ஒரு விஷயம் சொல்லுகின்றேன். கோவாப்பரேட்டிவ் ஸ்தாபனங்களுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும், ஜில்லா போர்டுக்கும் அதிகமான சுதந்திரம் கொடுத்து சர்க்கார் உத்தியோகஸ்தர்களை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் ஜில்லா போர்டை எடுத்துவிடும்படி மகாநாட்டுத் தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனால் முதல் மந்திரியார் கனம் பொப்பிலிராஜா தனக்கு அது இருப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொண்டு இருப்பதாகவும் கட்சி அங்கத்தினர்கள் வேண்டாம் என்றால் தான். கட்டாயப்படுத்த போவதில்லை என்றும் சொன்னார்.
ஆனால் முனிசிபாலிட்டிக்கு கமிஷனர்கள் போட்டதாலேயே கட்சி மெம்பர்கள் பலர் கோவித்துக் கொண்டதாகவும், ஜில்லா போர்டுக்குக் கமிஷனர்கள் போட்டால் இன்னும் பலர் கோபத்துக்கு கட்சி ஆளாக வேண்டிவரும் என்றும் இதனால் கொஞ்சநஞ்சம் செய்யக் கூடியதும் கெட்டுப் போகும் என்றும் மகாநாட்டுத் தலைவர் தெரிவித்தார். ஆதலால் அந்த வார்த்தை நீக்கப்பட்டு விட்டதே ஒழிய வேறில்லை. கட்சித்தலைவர் பொப்பிலி ராஜா அவர்கள் ஒரு சர்வாதிகாரியாய் இருக்கத் தகுந்தவர். அவருக்கு ஸ்டாலினைப் போலவும் கமால்பாஷாவைப் போலும் அனேக முற்போக்கான - அவசியமான காரியங்களை செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. அவரைச் சுற்றியும் சமயோசிதவாசிகள் காவல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அதிகமாக ஒன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை. என்றாலும் முனிசிபாலிடிக்கு கமிஷனர் போட்டதின். பயனாய் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன.
இன்னும் அனேக நன்மைகள் ஏற்பட வசதிகள் உண்டு. ஆனால் நாணையமும், துணிவும், கண்ணியமும் உள்ள கமிஷனர்களைப் போட்டால் முனிசிபாலிட்டிகளுக்கு 100க்கு 50 பர்சென்ட் பண லாபமும் நல்ல நீதியும் ஏற்படுமென்று உறுதியாய்ச் சொல்லுவேன். ஆனால் சில A0 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
முனிசிபாலிட்டிகளுக்கு ரிவினியு இலாக்காவில் நாணையக் குறைவானவர் என்று சந்தேகிக்கப்பட்ட ஆளுகளைப் போட்டு கமிஷனர் ஸ்தானத்துக்கு பங்கம் வரும்படி செய்திருக்கிறார்கள்.
சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கத் தோழர்கள் சிலருக்கு ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. அதற்குக் காரணம் சிலருக்கு தேசீயம், தேசாபிமான சுயராஜ்யம் என்கின்ற கற்பனை (அர்த்தமற்ற) வார்த்தைகளில் உள்ள மயக்கமும், சிலருக்கு மந்திரிமார்களின் ஆடம்பர வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதும், அது பணக்காரர் இயக்கம் என்பதும், சிலருக்கு மந்திரிகள் சுயமரியாதை இயக்கத்தை லட்சியம் செய்யவில்லை என்பதும், சிலருக்கு ஜஸ்டிஸ் கட்சியை வைவது ஒரு நாகரீகமாய்விட்டதும் இப்படிப் பல காரணங்கள் உண்டு. இவைகள் எல்லாம் இயற்கைதான். கால தேச வர்த்தமானத்தில் எந்தக் கட்சிக்கும் இம்மாதிரி அப்பிராயபேதக்காரர்கள். இருந்தே இருப்பார்கள். இவற்றையெல்லாம் லட்சியம் செய்தால் குதிரையும், தகப்பனும், மகனும் என்கின்ற கதையாகத்தான் முடியும்
இவர்கள் வேறு எந்தக் கட்சியை ஆதரிக்கக் கூடும் என்பது எனக்கு விளங்கவில்லை.
சுயமரியாதை அறிக்கை
சுயமரியாதை இயக்க விஷயமாக சமீபத்தில் வெளியான அறிக்கையைப் பற்றி சிலர் முணுமுணுத்ததாகத் தெரிய வந்தது
அவ்வறிக்கையில் எந்த வாசகத்தைப் பற்றி குறை கூறுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. அதில் முக்கியமாய் காணப்படுவ தெல்லாம் நாம் ஒத்துழையாமைக்காரர் அல்லவென்றும், சட்டத்தை மீறுகிறவர்கள் அல்ல என்றும், சமாதானத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் அல்லவென்றும் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் நமது சமுதாய இயலில் ஜாதி மதக் குறைகளையும் கொடுமைகளையும் வித்தியாசங்களையும் கண்டிப்பதும் ஒழிப்பதும் என்றும் பொருளாதாரத் துறையில் சமதர்ம முறையை அனுஷ்டிப்பதென்றும் தெளிவுபடுத்தி இருக்கிறேன். இன்றைய நிலையில் இதற்கு மேல் வேலை செய்ய வேண்டுமென்று கருதுகிறவர்கள் நன்றாய்ச் செய்யட்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை நமது இயக்கத்துக்கு இன்று இது போதும் என்று கருதுகின்றேன்.
இதைக் காங்கிரஸ்காரர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா? தென்னாட்டுப் பார்ப்பனர், காங்கிரஸ்காரராவது ஒப்புக் கொள்ளுகின்றார்களா? என்று கேட்கின்றேன்.
குடி அரசு - 1935 (1) 220
வீணாக எதிரிகளின் பேச்சைக் கேட்டு கூப்பாடு போடுவதில் யாதொரு பயனும் விளையப் போவதில்லை. மற்றபடி ஏதாவதொரு குறைகூறி விட்டு ஓடிப்போக நினைக்கும் சோம்பேறிகளின் போலி வீரர்களின் கூப்பாட்டிற்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை.
ஆதலால் ஏதாவது உண்மையான தொண்டு செய்ய வேண்டுமென்று இருப்பவர்களுக்கு இது போதும். இந்த அபிப்பிராயத்திற்கு மாறுபட்டவர்கள் அவர்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்களே தவிர நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டியவர்கள் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: 30.03.1935, 31.03.1935 இருநாள்கள் விருதுநகரில் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட முதலாவது ஜஸ்டிஸ் மாநாட்டில் 30.03.1935 இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 07.04.1935
2 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
ஏழைகளை வதைக்கும்
காங்கிரஸ்காரர்கள்
உப்பு வரியும் அமிசி வமியும்
இப்பொழுது உப்பு வரி மணங்குக்கு ஒரு ரூபாய் நாலு அணாவாகும். இதைப் பனிரண்டு அணாவாகக் குறைக்கும்படி காங்கிரஸ்காரர்கள் இந்தியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இத்தீர்மானம் அரசாங்கத்தாரால் ஒப்புக் கொள்ளப்படுகிறதா? அல்லது வைசிராய் பிரபுவின் 'வீட்டோ'' அதிகாரத்தினால் தள்ளப்படுகிறதா? என்பது வேறு விஷயம். அதைப் பற்றி நாம் இப்பொழுது முடிவு கட்டப் போவதில்லை.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றியவுடன், காங்கிரசுக்கு ஜே போட்டு வயிறு பிழைக்கும் பத்திரிக்கைகளுக்குத் தலைக்கனம் தாங்க முடியவில்லை. தலைகால் தெரியாமல் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் காங்கிரஸ் வாலாக்களின் வீரப்பிரதாபங்களை புகழ்ந்து துள்ளிக் குதிக்கின்றன. இதனால் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் பத்திரிகைகள் ஏழைகளின் பொருளாதார நிலையை விருத்தி செய்து அவர்களைக் ''குபேரர்கள்'” ஆக்கிவிட்டதாகக் கும்மாளம் போடுகின்றன. பொது ஜனங்களை எந்த விஷயத்தைச் சொன்னாலும் உண்மையென்று நம்பக்கூடிய “சோணகிரிகள்” என்று உறுதியாக நம்பி இருப்பதனாலேயே இவைகள் இம்மாதிரி செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை
காங்கிரஸ் ஏழை மக்களுக்குச் செய்த பெருந் துரோகத்தை எந்த தேசியப் பத்திரிகையும் கண்டிக்க முன்வரவில்லை. அது தான் அரிசிக்கு வரி போட்ட விஷயமாகும். அரிசிக்கு வரி போடுவதனால் பணக்காரர்
களுக்குக் கொழுத்த லாபமும், ஏழை மக்களுக்குச் சோறு கிடைக்காத திண்டாட்டமும் ஏற்படும் என்ற விஷயத்தை நமது குடிஅரசு அப்பொழுதே அப்பட்டமாக விளக்கியெழுதி இருந்தது. பல தொழிலாளர் சங்கங்களும் சுயமரியாதைச்சங்கங்களும் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருந்தன.
உப்புக்கு ஒரு மணங்குக்கு 8 அணா குறைந்ததினால் ஏழை மக்களுக்கு எவ்வளவு லாபம் ஏற்படும். அரிசிக்கு வரி போட்டதின். பயனாய் மூட்டை 2 ரூபாய் 3 ரூபாய் ஏறியதனால் ஏழை மக்களுக்கு ஆள்
குடி அரசு - 1935 (1) 222
1-க்கு எவ்வளவு நஷ்டம்? என்ற கணக்கைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் காங்கிரஸ்காரர்கள் பணக்காரர்களின் கூலிகள் என்பதும் அவர்களது மாயாஜாலங்களும் நன்றாய் விளங்கிவிடும்
அந்தக் கணக்கைக் கொஞ்சம் கவனியுங்கள். 6 பேருக்கு ஒரு வருஷத்துக்குச் சுமார் ஒரு மணங்கு உப்புதான் செலவாகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கணக்குப் போட்டிருக்கிறார்கள். இந்த ஒரு மணங்குக்கு 8 அணா குறைவதால், ஆள் 1க்கு வருஷம் 1க்கு 1 அணா 4பை லாபமாகிறது. ஆனால் அரிசிக்கு அதிகவரி போட்டதினால் குறைந்தபடியாக
ஆள் ஒன்றுக்கு வருஷம் ஒன்றுக்கு குறைந்த பக்ஷம் 6 ரூபாயாவது அதிகசெலவு ஏற்படும் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஆள் 1-க்கு வருஷத்துக்கு 6
ரூபாய் அதிகச் செலவு. அதாவது அதிக வரி போடும்படி செய்துவிட்டு, வருஷம் 1க்கு 1 அணா 4 பை செலவு. அதாவது வரி குறையும்படி செய்துவிட்டு நாங்கள்தான் ஏழைகளின் பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களைப் பற்றி என்ன சொல்லுவதென்றே நமக்கு விளங்கவில்லை.
இந்த யோக்கியர்கள் தங்களைப் பொருளாதார நிபுணர்களென்றும்
கூறிக் கொள்கின்றார்கள். உண்மையில் இவர்களுக்குப் பொருளாதார சாஸ்திரம் தெரியவில்லையா? அல்லது ஏழை மக்கள் பொருளாதார சாஸ்திரம் அறியாதவர்கள் என்ற தைரியத்தினால் அவர்களை ஏமாற்று கிறார்களா என்று கேட்கின்றோம்
பணக்காரர்களின் கைக்கூலிகளாக இருந்து இந்தக் காங்கிரஸ் யோக்கியர்கள் ஏழை மக்களின் ஜீவாதாரமான உணவுப் பொருளான அரிசிக்கு வரி விதித்து விலை உயரும்படி செய்து விட்டு, உப்புக்கு வரி குறைக்கும்படி செய்து விட்டோம் என்று வெட்கமில்லாமல் கூறுவது எவ்வளவு யோக்கியப் பொறுப்பற்ற தன்மை என்பதை யோசித்துப் பார்க்கும்படி கூறுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 07.04.1935
23 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
குல்லூக பட்டரின் குயுக்தி வாதம்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் வக்கீல் தொழிலை விட்டுவிட்டாலும், அவருடைய அரசியல் வாதங்களில் எல்லாம், வக்கீல் போலவே நடந்து வருகிறார் என்பது வெளிப்படை. அவருடைய வாதங்கள் எல்லாம் குயுக்தி வாதங்களும், குதர்க்க வாதங்களுமாகவே இருப்பது வழக்கம். பொது ஜனங்களை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமான புளுகுகளுடன் கூடிய வரட்டு வாதஞ் செய்வதில் அசகாய சூரர் என்பது புதிதல்ல. உதாரணமாக ஆலயப் பிரவேச மசோதா விஷயமாக அவர் கூறும் வாதத்தைக் கவனித்தால் உண்மை விளங்கும்.
பொப்பிலி ராஜா அவர்கள், தமது தேர்தல் பிரசங்கத்தில் ஆலயப் பிரவேச மசோதா பாழானதற்குக் காங்கிரசே காரணம் என்று உண்மையை உரைத்தார். அதற்கு தோழர் சி.ஆர்.சொல்லியிருக்கும் பதில் மிகமிக விசித்திரமானது. “ஆலயப் பிரவேசம் சம்பந்தமான ஒரு வழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு அகில இந்திய சட்டந்தான் தேவை என்ற கஷ்டமான. நிலைமையை ஏற்படுத்தியதற்குப் பிரதம மந்திரியும் அவர் கட்சியும் தான் பொறுப்பாளி” என்று குற்றஞ்சாட்டுகிறார்.
இதன் உண்மையை ஆராய்வோம். ஆலயப் பிரவேச மசோதாவுக்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்று டாக்டர் சுப்பராயன் சென்னைச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் ஜெனரல் இது எல்லா இந்தியா விஷயம் என்று சொல்லி தீர்மானத்தை அனுமதிக்க மறுத்து விட்டார்.
பிறகு இந்திய சட்டசபையில் காங்கிரஸ்காரர்களின் முயற்சியினாலும், தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் அதி தீவிர பிரயாசையினாலும், தோழர் சி.எஸ். ரங்கய்யர் அவர்களால் ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. கடைசியில் அத்தீர்மானம், காங்கிரஸ் காரரின் எதிர்ப்பினாலேயே அதுவும் தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் அறிக்கை காரணமாகவே வாப்பீஸ் வாங்கிக் கொள்ளப்பட்டது இவ்விஷயத்தை தோழர் சி.எஸ். ரங்கய்யர் அவர்களே தமது பிரசங்கத்தில் சட்டசபையில் எடுத்துக் காட்டியிருக்கிறார். காங்கிரசின் துரோகத்தி னாலேயே தான் வாப்பீஸ் வாங்கிக் கொள்ளுவதாகக் கூறியிருக்கிறார். ஆகவே யார் ஆலயப் பிரவேச மசோதா குட்டிச்சுவர் ஆனதற்குக் காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குடி அரசு - 1935 (1) 224
அன்றியும், இவ்விஷயம் அகில இந்தியாவைப் பொறுத்ததென்பதில் என்ன சந்தேகம்? சென்னையில் மாத்திரம் கோயிலுக்குள் தீண்டாதார் போகலாம் என்று தீர்மானம் செய்துவிட்டால் இந்தியா முழுவதிலும் உள்ள தீண்டாதார்க்கு எப்படி விமோசனம் ஏற்பட முடியுமா? சென்னையிலிருந்து வெளி மாகாணத்திற்குச் செல்லும் ஒரு தீண்டாதார் அங்குள்ள ஆலயங்களில் நுழைய முடியாதல்லவா? ஆதலால் இது அகில இந்தியாவையும் பொறுத்த விஷயம் என்று கவர்னர் ஜெனரல் கூறிய பதிலில் என்ன தவறு? அந்த முடிவின் பிறகு ஜஸ்டிஸ் கட்சியினர் பேசாமல் இருந்ததில் என்ன குற்றம்? இக்கொள்கை சரியென்று ஒப்புக் கொண்டுதானே அப்பொழுது நமது ஆச்சாரியார் இந்தியச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப் பகீரதப் பிரயத்தனம் பண்ணினார்?
அப்பொழுது செய்ததற்கும், இப்பொழுது பேசுவதற்கும் என்ன சம்பந்தம்? இதிலிருந்தே அவரது வாதங்களும், அரசியல் போக்கும், எப்படிப்பட்டது என்பது விளங்குகிறதல்லவா?
குடி அரசு - கட்டுரை - 07.04.1935
25 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
சென்னைத் தேர்தலும்
பார்ப்பனர் உத்தியோகமும்
சென்னையில் இம்மாதம் 9ந் தேதி நடந்த சென்னை சட்டசபை உபதேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்ட தோழர் ரங்கராமானுஜம் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தோற்கடிக்கப் பட்டுப் போனார்.
இந்தத் தோல்வி இந்திய சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி போலவே குறிப்பிடத் தகுந்ததொரு தோல்வியாகும்.
இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதற்கு என்னென்ன காரணங்களிருந்தனவோ, அவை பெரும்பாலும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் இருந்து இருக்கிறது. இந்தக் குறைபாடுகள் இப்படியே இருக்குமானால் இனியும் ஏற்படப் போகும் எல்லாத் தேர்தலுக்கும் இதே மாதிரி பலன் தான் எதிர்பார்க்க முடியும்.
எதிரிகளின் விஷமப் பிரசாரமே தோல்விக்குக் காரணமாய் இருந்தாலும் எதிரிகளை “தயவு செய்து இனிமேல் விஷமப் பிரசாரம் செய்யாதீர்கள்'' என்று நாம் அவர்களைக் கேட்டுக் கொள்ள முடியுமா? அல்லது எதிரிகளின் விஷமப் பிரசாரம் இன்று நேற்றுத்தான் ஆரம்பிக்கப் பட்டதா? நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே ஏன் பல நூற்றுக்கணக்கான. வருஷங்களாகவே நமது எதிரிகள் (பார்ப்பனர்கள்) செய்து வந்த சூழ்ச்சிகளாலும் விஷமப் பிரசாரத்தாலும் ஏற்பட்ட கெடுதிகளை நிவர்த்தித்துக் கொள்வதற்கு என்றுதானே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதாகும். ஆதலால் அது பார்ப்பன சூழ்ச்சிக்கும் அதன் விஷமப் பிரசாரத்துக்கும் தலை கொடுக்கவும் பதில் செய்யவும் சக்தியும், முயற்சியும் இருந்தால். மாத்திரம்தான் விடுதலை பெற முடியுமே ஒழிய எதிரிகளை “தயவுசெய்து விஷமப் பிரசாரம் செய்யாதீர்கள்!” என்று கேட்டுக் கொள்ளுவதால் ஒரு
பயனும் அடைய முடியாது.
இந்திய சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து கிட்டத்தட்ட 4 மாதகாலம் ஆகின்றது. வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் எதிரிகளின். விஷமப் பிரசாரத்தாலேயே தோல்வி ஏற்பட்டது என்கின்ற முடிவுக்கு
குடி அரசு - 1935 (1) 226
வந்தோம். அப்படி இருக்க அவ்விஷமப் பிரசாரத்தை சமாளிக்க நாம் என்ன. காரியம் செய்தோம் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையைப் பேச வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியானது சென்னை சட்டசபை உபதேர்தலுக்கு ஸ்லிப்பு போடும் கடைசி தினம் பகல்
11 மணி வரையில் யாரை நிறுத்துவது என்கின்ற ஒரு முடிவோ சரியான கவலையோ இல்லாமல் இருந்து இருந்திருக்கிறது
அது மாத்திரமல்லாமல் அந்த 11வது மணியிலும்கூட கட்சிப் பிரமுகர்கள் ஆளுக்கு ஒரு நபரை தலைவருக்கு சிபார்சு செய்தார்கள் அந்தச் சமயத்தில் யாரைப் போட்டால் அனேகமாய் வெற்றி பெறலாம் என்பதுகூட அபேக்ஷ்கர்களை பொறுக்குவதில் பிரச்சினையாக இல்லாமல்
யார் சிபார்சை ஏற்றுக் கொள்ளுவது என்பது தான் முக்கிய பிரச்சினையாக ஆகிவிட்டது. ஒருவர் சிபார்சை ஏற்றுக் கொண்டவுடன் மற்றப் பிரமுகர்கள் சிபார்சு ஏற்றுக் கொள்ளப்படாததால் மற்றப் பிரமுகர்கள் ஒப்புக்கு இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். இது இயற்கைதான் என்றாலும் தோல்வியைக் கொடுப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகிவிட்டது
நம் தோல்விகளுக்குக் காரணங்கள் இல்லாமல் போகவில்லை என்கின்ற சமாதானமே எப்போதும் நமக்குப் போதுமானால் தேர்தலில் கலந்து பிரயாசைப்பட்டு பணத்தையும் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு “இத்தனை தோல்வி ஏற்பட்டது” என்று கணக்குக் கூட்டுவது ஒரு நாளும் புத்தசாலித்தனமாகி விடாது என்பதோடு அது கேட்டையும் விளைவிக்கும் என்று கூசாமல் சொல்லுவோம்
தோல்வி ஏற்பட்டதனால் நமது கொள்கைகள், திட்டங்கள், இதுவரை நாம் செய்து வந்த வேலைகள் தப்பு என்பதாக நமக்கு சிறிதும் தோன்ற வில்லை. அவ்விஷயத்தில் கடுகளவு சந்தேகமும் நமக்கு இல்லை. எந்தக் கொள்கையுடன், எந்தத் திட்டத்துடன் இதுவரை இந்த வேலையைச் செய்து வந்தோமோ அந்தக் கொள்கையுடனும் திட்டத்துடனும் அதே வேலையைச் செய்யத்தான் நாம் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைபடு கின்றோமே ஒழிய அவற்றிலிருந்து கடுகளவும் பின்னால் போகக் கருதியதல்ல. ஆகையால் நமது திட்ட விஷயத்தில் பின்னடையாமல் இருக்கிறோ மென்றாலும் அதற்கான முயற்சியில் நாம் பின்னடைந்திருக்கிறோம் என்பது மாத்திரமல்லாமல் தேர்தல் விஷயத்தில் தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறோம். தகுந்தபடியான பிரசாரம் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்பது இனியாவது முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டும். “அனேக போலிங் ஆபீசில் ஏஜண்டுகளே இல்லை'' என்று சொல்லப்பட்டது. இது உண்மையானால் நமது முயற்சியில் எவ்வளவு தீவிரமும் உண்மையும் இருக்கிறது என்பது இதனாலேயே விளங்கி விடவில்லையா?
227 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தேர்தலை ஒரு சடங்கு மாதிரியோ அல்லது ஒரு கடன் மாதிரியோ நினைத்தால் வெற்றி ஏற்படுமா? எதிரிகள் தேர்தலை தங்கள் உயிர் போவது வருவது போல் கருதுகிறார்கள். உயிர் போகும் தருவாயில் இருப்பவன் எப்படி எது செய்தாவது எதைப் பிடித்தாவது உயிரைக் காப்பாற்ற நினைப்பானோ அதுபோல் பார்ப்பனர்கள் தேர்தல் விஷயத்தில் எது செய்தும் யாரை வசப்படுத்தியும் வெற்றிபெறப் பார்ப்பார்கள். நாம் அதைக்
குற்றம் சொல்லிக் கொண்டும், பரிகாசம் செய்து கொண்டும் இருந்தால் மாத்திரம் போதாது
பொய்க்குப் பொய்யும் கோளுக்குக் கோளும் பதிலுக்குப் பதிலும் செய்வதை பாபமென்றோ ஒழுக்கக் குறைவென்றோ வேதாந்தம் பேசுவது தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியே ஒழிய வேறல்ல
ஏனெனில் நமது சமுதாய வாழ்வுத் திட்டம் அப்படி இருக்கிறது. தோற்றுப் போனதற்காக நம்மிடம் தப்பான கொள்கை இருக்கின்றதோ என்னவோ என்று நாம் சிறிதும் மயங்க வேண்டியதில்லை. தப்பான காரியங்கள் செய்யாததினால் தான் தோற்றுப் போய் விட்டோம் என்று தான்
இன்று கருத வேண்டியிருக்கிறது உயிருடன் இருக்கின்றவர்கள் எல்லோரும் இருக்கத் தகுந்த யோக்கியர்கள் என்றோ இறந்து போனவர்கள் எல்லாம் சாகத் தகுந்த அயோக்கியர்கள் என்றோ உலகுக்கு வேண்டாதவர்கள் என்றோ முடிவு கட்டிவிட முடியாது. அப்படிப் போல வெற்றி பெறாததினாலும் தோல்வி அடைந்ததினாலும் ஒரு கட்சியின் யோக்கியா அயோக்கியங்களை நிர்ணயித்துவிட முடியாது என்றாலும், தோல்வி மேல் தோல்வி என்றால்
அதன் காரணத்தை அறிந்து அதற்குத் தக்கது செய்து பார்த்துவிட வேண்டியது புத்திசாலித்தனமாகும்.
வகுப்பு வாதம்
ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி எதிரிகள் செய்த விஷமப் பிரசாரம், பொய்ப் பிரசாரம் பல இருந்தாலும் அவர்கள் இரண்டு உண்மைகளையும் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். அதாவது ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாதக் கட்சி
என்பது ஒன்று
மற்றொன்று ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக “வேட்டைக் கட்சி என்பது இரண்டு
இந்த இரண்டையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்
இந்த இரண்டையும் பிரதானமாய் கருதியே ஜஸ்டிஸ் கட்சி இருந்து வருகிறது, வேலை செய்தும் வருகிறது என்பதை ஓரளவுக்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
குடி அரசு - 1935 (1)
ப ப் 8
ஆனால் அந்தக் கொள்கைக்கு பாமர மக்களிடம் செல்வாக்கு இல்லாமல் நம் எதிரிகள் செய்து இருக்கிறார்கள். அதை மறுத்து பாமர மக்களிடம் செல்வாக்குண்டாகும்படியாக ஜஸ்டிஸ் கட்சி செய்யவும் இல்லை. கவலை எடுத்துக் கொள்ளவும் இல்லை. அந்தக் காரியத்தை முக்கியமாக செய்ய வேண்டியது ஜஸ்டிஸ் கட்சியின் கடமையாகும். அது செய்யாமல் வெற்றியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே உண்டாகும்
காங்கிரஸ்:
காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை சர்க்காருடன் உத்தியோகத்துக்கு போராடவும் உத்தியோகங்களை கற்பனை செய்யவும் அவைகள் எல்லாவற்றையும் (உத்தியோகங்கள் இந்திய மயமாக்க வேண்டும் என்னும் பேரால்) தென்னாட்டில் பார்ப்பனர்களே அடையவுமான. காரியத்திற்காகத் தான் பாடுபட்டு வந்தது என்பதை இன்று யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
அது மாத்திரமல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் தென்னாட்டிலும் மற்ற பல இடங்களிலும் காங்கிரஸ் கூடிக் கலைந்து ஒரு வருஷமாவதற்குள் ஹைக்கோர்ட்டு ஜட்ஜி நிர்வாக சபை மெம்பர் முதலிய வேலைகளை வேட்டையாடிப் பெறுவதும், மாகாண காங்கிரஸ் தலைவர் களானவர்கள் அடுத்த வருஷம் வருவதற்குள் ஜில்லா ஜட்ஜி சப் ஜட்ஜி உத்தியோகம் பெறுவதும் இவர்களின் பிள்ளை குட்டிகள் சுற்றத்தார்கள் உத்தியோகம் பெறுவதுமான காரியங்கள் நடந்து வந்திருப்பதானது இந்த 40 வருஷத்து காங்கிரஸ் தலைவர்களின் (பார்ப்பனர்களின்) கொடிவழிப் பட்டியைப் பார்த்தால் கண்ணாடியில் தெரிவது போல் விளங்கும்.
உத்தியேோகமே பிரதானம்
உத்தியோகத்தால் தான் ஒவ்வொரு சமூகமும் முற்போக்கடைந்து வந்திருக்கிறதே ஒழிய மற்றபடி தேசீயத்தாலோ தேசாபிமானத்தாலோ சீர்திருத்தத்தாலோ ஏதாவது ஒரு சமூகம் முற்போக்கடைந்தது என்று சொல்ல முடியவே முடியாது சாதாரணமாக சங்கரநாயர் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜி ஆன பிறகு அன்று முதல் இன்று வரை மலையாளிகளின் நிலைமை எவ்வளவு முற்போக்கும் நாகரீகமும் அடைந்து வந்திருக்கின்றது என்பதை கவனித்துப் பார்த்தால் தெரியவரும். தென்னாட்டில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் மலையாளிகளே எல்லாத் துறையிலும் மேம்பட்டு இருக்கிறார்கள், அதுபோலவே பார்ப்பனர்கள் நிலையானது இன்றைக்கு 50, 60 வருஷங்களுக்கு முன் எப்படி இருந்து வந்தது என்பதையும் முத்துசாமி அய்யர், மணி அய்யர், சதாசிவ அய்யர், கிருஷ்ணசாமி அய்யர், சிவசாமி அப்பர் ராமசாமி அய்யர்முதலிய “காங்கிரஸ் தலைவர்கள்” “தேசாபிமானிகள்" 20 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
உத்தியோக வேட்டையாடி ஹைக்கோர்ட் ஜட்ஜிகளாகவும் நிர்வாக சபை மெம்பர்களாவும் ஆன பின்பு பார்ப்பன சமூகம் எப்படி எல்லாத் துறையிலும் முற்போக்கும் மேன்மையும் செல்வாக்கும் அடைந்து பார்ப்பனரல்லாத சமூகமாகிய பழம் பெருங்குடி மக்கள் கேவலமடைந்து வந்திருக்கிறார்கள் என்பதும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும்
சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை மிகச் சுருக்கமான எண்ணிக்கை என்றும் அதைப் பிரதானமாய்க் கருதுவது தேசத் துரோக மென்றும்சில பார்ப்பனப் பத்திரிக்கைகள் இதோபதேசம் செய்து வருகின்றன. இதை நாம் வடிகட்டின வஞ்சகச் செய்கை என்று சொல்லுவதைவிட வேறு
ஒன்றும் சொல்ல முடியாது
விபூதி பார்ப்பனர்கள் - நாமப் பார்ப்பனர்கன்
இந்த மாகாணத்தில் 20 வருஷங்களுக்கு முன் பெரும் உத்தியோகங்கள் விபூதி பூசும் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்து வந்ததால் சில்லரை உத்தியோகங்கள் வக்கீல்கள் ஆகியவை எல்லாவற்றிலும் அவர்களே நிறையப்பட்டிருந்தார்கள். பரீக்ஷையில் பாஸ் செய்வதும் அவர்களாகவே இருந்து வந்தார்கள். அதற்குக் காரணம் அரசியல் விபூதிப் பார்ப்பனர்கள் கையில் இருந்ததே யாகும் அதனாலேயே பெசண்டம்மையும் விபூதிப் பார்ப்பனர்கள் கையாளாகி பெருமை பெற்று அதன் பலனை விபூதிப் பார்ப்பன சமூகத்துக்கே உதவி
வந்தார். ஏறக்குறைய 1918ம் வருஷம் வரையில் சென்னை மாகாணம் பெரிதும் இந்திய அரசாங்கம் ஒரு அளவும் விபூதிப் பார்ப்பனர் ஆட்சி யாலேயே இருந்தது. இதன் காரணமாகவே தோழர் சி. விஜயராகவாச்சாரியார்
கூட ஒரு மூலையில் ஒதுக்கித் தள்ளப்பட்டார்.
சி. ராஜகோபாலாச்சாரியார் இதன் சூழ்ச்சியை தெரிந்து இதை அடியோடு கவிழ்க்க வேண்டுமென்று கருதி கங்கணம் கட்டி அரசியலில். நுழைந்து தோழர் வரதராஜுலு, ராமசாமி, ஆதிநாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப் முதலிய பார்ப்பனரல்லாதாரை நன்றாய் உபயோகப்படுத்திக் கொண்டு இவர்களுடன் கூடின முதல் இரகசியக் கூட்டத்திலேயே பெசண்டம்மாளை அரசியலில் விட்டு விரட்டி அடிப்பது என்கின்ற தீர்மானத்தையே முதல் தீர்மானமாக திருச்சி சீரங்கத்தில் விஜயராகவாச்சாரியார் தலைமையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதற்கு அதிதீவிரக் கொள்கைகளை வைத்து கூப்பாடு போட்டார்கள், அதற்கு டாக்டர் ராஜன்,
கே.வி. ரங்கசாமி ஐயங்கார் முதலாகிய பிரபல பல ஐயங்கார்களும் ஊக்கமளித்தார்கள். இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகளும் ஐயங்கார் பார்ப்பனர்கள் கையில் இருந்தன. அதனால் காந்தியை மகாத்மாவாக் கினார்கள். அவரைக் கையாளாகக் கொண்டு பிறகு ஒரே அடியாய் விபூதிப்
குடி அரசு - 1935 (1) 230
பார்ப்பனர்கள் கையில் இருந்த அரசியல் ஆதிக்கம் பிடுங்கப்பட்டு விட்டது தோழர் சத்தியமூர்த்தி ஐயர் விபூதி பார்ப்பனராய் இருந்தாலும் அவரைத் தோழர்கள் கஸ்தூரி ரங்கய்யங்காரும், &. ரங்கசாமி அய்யங்காரும்,
5. சீனிவாசய்யங்காரும், விலைக்கு வாங்கி தோழர்கள் பெசண்ட், 62 ராமசாமி அய்யர், VS. சீனிவாச சாஸ்திரியார் முதலிய ஆளுகளை வைது அரசியலில் இருந்தே அவர்களை விரட்ட ஆயுதமாக்கிக் கொண்டார்கள்.
இதன் பயனாய் இந்திய அரசியலே நாமக்காரப் பார்ப்பனர்களாகிய அய்யங்கார் பார்ப்பனர்கள் கைக்கு வந்துவிட்டது. அதன் பிறகுதான் சி.விஜயராகவாச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் தலைவராக முடிந்தது அன்று முதல் இன்று வரை அரசாங்க உத்தியோகத்திலும் ஹைகோர்ட் ஐட்ஜி முதல் வக்கீல் கூட்டம் குமாஸ்தா கூட்டம் வரை கிட்டத்தட்ட 100க்கு 50 விகிதம் நாமக்கார பார்ப்பனர்கள் கைக்கு வந்து விட்டது
ஜஸ்டிஸ் கட்சியின் பயனாகத்தான் நாமக்கார பார்ப்பனர்களும், விபூதிப் பார்ப்பனர்களும் சண்டை போட்டுக் கொள்ள முடியாமல் இருவரும் ஒற்றுமையாய் இருப்பதுபோல் காட்டிக் கொண்டு வருகிறார்களே ஒழிய அவர்களுக்குள் பொறாமை விரோதம் இல்லாமல் இல்லை. ஆகவே உத்தியோகம் ஒரு சமூக முன்னேற்றத்துக்கு பயன்படாது என்று சொல்லப்படுமானால் அதை முட்டாள்தனமென்றோ - அல்லது அயோக்கியத்தனமென்றோ தான் சொல்ல வேண்டும்
அரசியல் தேசாபிமானம் என்பதே உத்தியோகங்களையும் அதிகாரங் களையும் கைபற்றுவது என்பதல்லாமல் - வேறு என்ன என்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் அல்லது ஜஸ்டிஸ் கட்சி என்பது உத்தியோகத்தைக் கைப்பற்றுவது என்கின்ற ஒரு கொள்கையைக் கொண்டு இருக்காவிட்டால் இந்த 15 வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாத சமூகம் சமுதாயத் துறையில் இன்றைய நிலைமையை அடைந்திருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
காங்கிரசு ஏற்படுவதற்கு முன் 100க்கு 50 வக்கீல்கள் முனிசீப்புகள் பார்ப்பனரல்லாதாராய் இருந்தவர்கள் காங்கிரஸ் ஏற்பட்டு அரசியல். ஆதிக்கம் அவர்கள் கைக்கு போன பின்பு 100க்கு 3, 4 மூனிசீப்புகளும் 3,
4 வக்கீல்களாக ஆகிவிட்டது நமக்கு நன்றாய் தெரியும். முனிசீப்பும் வக்கீலும் பார்ப்பனர்களாக ஆகிவிட்டதால் பார்ப்பனரல்லாத சமூகம் ஜமீனாய் இருந்தாலும் - பாளையக்காரர்கள் - பெரிய முதலாளி - பெரிய
மிராசுதாரனாய் இருந்தாலும் எஜமானே, எஜமானே, சுவாமிகளே, சாமிகளே என்று நாய் மாதிரி கோர்ட்டு குமாஸ்தா பார்ப்பனர்களுடையவும், பார்ப்பன.
வக்கீல் குமாஸ்தாக்களுடையவும் வீட்டுவாசலில் காத்துக் கொண்டிருந்ததும் அவர்களை நீ - நான் - அடே என்று மரியாதை வைத்து பார்ப்பனர்கள் B வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
அழைத்ததும் யாராவது தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். இது உத்தியோகம் கைப்பற்றியதின் பயனாய் இந்த மனித சமூகத்துக்கு ஏற்பட்ட சுதந்திரமும் சுயமரியாதையும் அல்லவா என்று கேட்கின்றோம். உண்மையான சுயமரியாதைக்காரனாய் ஒருவன் இருப்பானே யானால் தன் சமூகத்துக்கு சுயமரியாதை ஏற்பட இந்தக் காரியத்தை அதாவது உத்தியோகம் கைப்பற்றுவதைச் செய்ய வில்லையானால் அவன் சுயமரியாதையின் தத்துவம் அறியாதவன் என்றோ அல்லது பார்ப்பனர்களின் கூலிகள் என்றோதான் சொல்ல வேண்டும் உத்தியோக செல்வாக்கால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமம் பார்ப்பனரல்லாதாருக்குத் தெரியவில்லை என்றால் அது சுத்த முட்டாள் தனமான காரியமேயாகும்
ஈரோடு.
சாதாரணமாக ஈரோட்டை எடுத்துக் கொண்டால் ஈரோட்டில் எல்லா உத்தியோகமும் பார்ப்பனர்கள் கையிலேயே இருக்கிறது.
டிப்டி கலைக்டர் பார்ப்பனர் - தாசில்தார் பார்ப்பனர் - மாஜிஸ்திரேட்
பார்ப்பனர் - போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் பார்ப்பனர் - சப் இன்ஸ்பெக்டர்
பார்ப்பனர் - மூனிசீப்பு பார்ப்பனர், பாங்கி ஏஜெண்டு பார்ப்பனர், இஞ்சினீர் பார்ப்பனர், ஓவர்சியர் பார்ப்பனர், ரிஜிஸ்ட்ரார் பார்ப்பனர், போஸ்ட் மாஸ்டர் பார்ப்பனர், கலெக்டர் ஆபிசில் 100க்கு 90 குமாஸ்தா, தாலூக்காபீசில் 100-க்கு 95 குமாஸ்தா பார்ப்பனர்கள், போஸ்டாபீசில் 100க்கு 99 பார்ப்பனர்கள், மூன்சீப்பு கோர்ட்டில் 100க்கு 100 பார்ப்பன குமாஸ்தாக்கள், 100க்கு 90 பார்ப்பன வக்கீல்கள். மீதி 100க்கு 10 பார்ப்பனரல்லாத வக்கீல்களும், பார்ப்பன - முனிசிப் பூட்சுக்குப் பாலீஷ் போட்டுக் கொடுப்பவர்களாகவே அனேகமாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆகவே இந்தக் கூட்டத்தார் தான் நம்மை உத்தியோக
வேட்டைக் கூட்டம் என்கிறார்கள்.
இம்மாதிரி ஈரோடு மாத்திரமல்லாமல் ஜில்லா பூராவும், ஏன். மாகாணம் பூராவும் பார்ப்பன மயமாக இருந்தால் ஒரு மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையாய் இருந்தாலும் ஜஸ்டிஸ் கட்சி கவர்னராயிருந்தாலும் ஒரு சிகரட் பீடிக் கடைக்காரனுடைய ஓட்டாவது பார்ப்பனரல்லாதாருக்கு விழ முடியுமா என்று கேட்கின்றோம். சென்னைத் தேர்தல்கள் பெரிதும் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள் ஓட்டுகளாலும் அவர்கள் முயற்சியாலுமே பாதிக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாத அதிகாரி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து எங்காவது பேசத் தொடங்கிவிட்டானேயானால் எல்லாப்
குடி அரசு - 1935 (1) 232.
பார்ப்பன அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து பொய் சாட்சிகளை விலைக்கு வாங்கி பார்ப்பனரல்லாத அதிகாரிகளின் மேல் குற்றங்கள் ஜோடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்நிலையில் பொது ஜனங்கள் எப்படித் தங்கள் ஓட்டுகளை நடுநிலைமையில் உபயோகிக்க முடியும் என்று கேட்கின்றோம்
வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களை எப்படி கைக்குள் போடுவது என்பது பார்ப்பனர்களுக்குத் தெரிந்த அளவில் 100க்கு 10 வீதம்கூட பார்ப்பனரல்லாதாருக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அந்தப்படி செய்ய அவர்கள் சம்மதிப்பதில்லை. இதன் காரணமாகவே வெள்ளைக்காரர்கள் நியாயம்கூட சில சமயங்களில் அசல் அநியாயம் என்றால் அப்பீலில் அதுவே காயம் என்று ஆகிவிடுகின்றது
போஸ்டாபீஸ், பாங்கு, போலீசு, முனிசீப் கோர்ட்டு, மேஜிஸ்திரேட் ஆகிய துறைகள் பார்ப்பன மயமாய் இருந்தால் அந்த விஸ்தீரணத்தில்
வாழும் பார்ப்பனரல்லாத மக்கள் நிலை முழுதும் சுயமரியாதையற்ற தன்மை ஆகிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒன்றுக்கு மேம்பட்ட தடவை மேலதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தும் இதுவரை யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் இருப்பதானது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
இந்நிலையில் உத்தியோகம் பிரதானமா? தேசீயம் பிரதானமா? என்று கேட்கப்படுமானால் இதை மறுபடியும் முட்டாள்தனமான கேள்வி அல்லது வடிகட்டின அயோக்கியத்தனமான கேள்வி என்றுதான் சொல்ல வேண்டும்
அடுத்த தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் உத்தியோகங்கள் பார்ப்பன அக்கிராரமாய் இருப்பதைக் கலைத்து விடாத பக்ஷம் தோல்வி அடைவது நிச்சயம் நிச்சயம் என்றே சொல்லுவோம்
இந்த உண்மைகளை அரசாங்கமும், மந்திரிகளும் இனியாவது உணர்ந்து தக்கது செய்வார்களா?
குடி அரசு - தலையங்கம் - 14.04.1935
8 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
விருதுநகர் தீர்மானங்கள்
ஜஸ்டிஸ் கட்சியார் விருதுநகரில் தங்கள் வேலைத் திட்டமாய் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பற்றி தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அவை சமதர்மத் திட்டங்கள் என்றும், பொதுவுடைமைத் திட்டங்கள் என்றும் இவை ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒத்துக் கொள்ளா தென்றும் அக்கட்சி அதை ஜீரணம் செய்ய முடியாதென்றும் எழுதினார்.
மறுபடியும் அதே மூச்சில் அவர் ராஜ பக்தியோடு கூடிய பொது உடமைத் திட்டம் என்றும் எழுதிவிட்டார். இவை எப்படியோ அர்த்தமில்லாமல் தேர்தல் வெறியால் உளருவதாகக் காணப்பட்டாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தத் தீர்மானங்கள் எல்லாம் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவை என்று
எழுதி இருக்கின்றன. இவைகளின் கருத்தெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பொது மக்கள் கேவலமாய் நினைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை எவரும் அறிவார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தேர்தல் அவசியத்துக்காக எதையும் சொல்லலாம் என்கின்ற நியாயத்தின் மீது ஏதோ உளறிக் கொட்டினார் என்பது நமக்கு நன்றாயத் தெரியும். இனி அவர் கொஞ்ச நாளைக்கு ஒன்றும் பேச மாட்டார். சமயம் வரும்போதுதான் வந்து மறுபடியும் தலைகாட்டுவார். ஆகையால் இப்போது நாம் என்ன எழுதினாலும் அதற்கு அவரிடமிருந்து பதில் எதிர்பார்க்க முடியாது ஆதலால் அவருக்கு பதில் எழுத நாம் முற்படவில்லை
ஆனால் அவர் விருதுநகர் தீர்மானத்தை சமதர்மப் பொதுவுடைமைத் தீர்மானம் என்று குறிப்பிட்டதைப் பொருத்த வரையிலும் ஒரு விஷயம் வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதாவது சுயமரியாதைக்காரர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டுவந்து ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் புகுத்துகிறார்கள் என்று சர்க்காருக்கு சாடி சொல்லுவதற்கு ஆகவே அவர் இதில் பாடுபட்டு இருக்கிறார் என்பது ஒரு புறமும் மற்றொரு புறம் பொது ஜனங்கள் அதை ஒரு சமயம் தீவிரக் கொள்கை என்று கருதி அதை எங்கு மதித்து விடுவார்களோ என்கின்ற பயமும் பொறாமையும் இரண்டும் சேர்ந்த அவைகளை “ராஜபக்தி கொண்ட பொதுவுடைமைத் தீர்மானங்கள்"
குடி அரசு - 1935 (1) 234
என்றும் சொல்ல வேண்டியவரானார் என்பதை மாத்திரம் வெளிப்படுத்தி விட்டு மற்றதைப்பற்றி அவசியம் நேரிடும்போது எழுதுவோம்
மற்றபடி இத்தீர்மானங்கள் கராச்சித் தீர்மானங்களில் இருந்து திருடியது என்று பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதியதற்கு சமாதானம் சொல்ல ஆசைப்படுகின்றோம் அதாவது காங்கிரசிலிருந்து திருடியதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்கள் அப்படிச் சொல்லுவதிலிருந்து ஜஸ்டிஸ்காரர்கள் தீர்மானங்கள் காங்கிரஸ்காரர்கள் தீர்மானங்களுக்கு சமமாக இருக்கிறதே ஓழிய குறைவானது அல்லவே என்றும் அல்லது காங்கிரஸ் தீர்மானங்களை ஜஸ்டிஸ்காரர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாவது அர்த்தம் படும்படி இருக்கிறதா இல்லையா என்றும் கேட்கின்றோம்
நிற்க இத்தீர்மானங்கள் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவைகளா அல்லது கராச்சி தீர்மானங்கள் பல சுயமரியாதைத் தீர்மானங்களில் இருந்து திருடியவைகளா என்பதை கராச்சி காங்கிரசுக்கு முன் நடந்த ஈரோடு சுயமரியாதை மாகாண மகாநாட்டுத் தீர்மானங் களையும் பல ஜில்லா சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களையும் கவளித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்
கராச்சி காங்கிரசில் சென்னைக் காங்கிரசையும் சென்னைப் பத்திரிக்கைகாரர்களையும் காங்கிரஸ் செக்ரட்டரி ஜவகர்லால் அவர்கள். நன்றாகக் கண்டித்து “சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வேலை சரியாய் நடக்கவில்லை" என்று வருஷாந்திர ரிப்போர்ட்டில் எழுதி வைத்ததின் காரணமாய் “சுயமரியாதைக்காரர்கள் அதி தீவிர தீர்மானங்கள் செய்து கொண்டு வேலை செய்து வருகிறதால் காங்கிரஸ்காரர்கள் அம்மாதிரி தீர்மானங்கள் போடாவிட்டால் தென்னாட்டில் ஒரு காரியமும் நடக்காது என்று சுயமரியாதைக்காரர்கள் உபன்யாசங்களையும் தீர்மானங்களையும் எடுத்துக்காட்டி அதிலிருந்த வாசகங்களை தீர்மானங்களாகப் போட்டார்களா இல்லையா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.
மற்றும் காங்கிரசை சுயமரியாதை இயக்கத்துக்கும் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு பதில் சொல்லும் முறையில் சதுரங்கம் போல் நடத்தி வருவது எல்லா அறிவாளிகளும் அறிந்ததென்றும் சொல்லுவோம்.
இவ்வளவும் செய்துவிட்டு கராச்சியில் சமூகத் துறையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கும் எதிராக மிக்க மோசமும் பிற்போக்கும் கொண்ட தீர்மானம் ஒன்றும் போட்டுக் கொள்ளப்பட்டதைப் பற்றி அப்போதே “பிராமணா உன் வாக்குப் பலித்தது என்கின்ற தலைப்பிலும்
“கராச்சி தீர்மானங்கள்” என்ற தலைப்பிலும் குடிஅரசில் எழுதி இருக்கிறோம். அப்போது எடுத்துப் போட்டு எழுதிய கராச்சி தீர்மானத்தையே இப்பொழுதும் இதன் கீழ் எடுத்துப் போடுகிறோம். அதாவது :-
235 ட... ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
கராச்சித் தீர்மானங்கவின் சமதர்ம யோக்கியதை
1. 10௦ article in the constitution relating to Fundamental Rights, shall
include a guarantee to the communities concerned of protection of
their culture, languages, scripts, education, profession, practice,
religion and religious endowments.
2. Personal laws shall be protected by specific provision to be embodied
in the Constitution.
1. சுயராஜ்ய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரீகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாதமளிக்கப்படும்
2. ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும்படியான திட்டத்தையும் சேர்க்கப்படும்.
இந்தத் தீர்மானங்கள் போட்ட பிறகு பார்ப்பனர்களின் எந்தவித சுயராஜ்யத்திலாவது வேறு எந்தத் துறையிலாவது கடுகளவு முற்போக்கோ சுயமரியாதையோ ஏற்பட இடமிருக்கிறதா என்று கேட்கிறோம் ஆகவே கராச்சித் தீர்மானங்கள் சமதர்மத் திட்டங்கள் கொண்டதா? பார்ப்பன தர்மத் திட்டங்கள் கொண்டதா என்பதையும் அதையா விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு திருடி காப்பி அடித்திருக்கிறது? என்பதையும் உணர்ந்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
கராச்சி தீர்மானத்தின் தத்துவமெல்லாம்உ இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் எவ்வகையிலும் சிறிதுகூட கை வைக்கப்பட மாட்டாது என்ற கருத்தடங்கிய ஒரு பந்தோபஸ்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இத் தீர்மானம் போட்ட பிறகே ஜனங்கள் எங்கு இதைக் கண்டு ஆத்திரப்பட்டு விடுவார் களோ என சந்தேகப்பட்டு அவர்களை ஏமாற்ற சுயமரியாதைக்காரர்கள் தீர்மானங்களை முதலில் போட்டுக் கொண்டு கடசியில் அவைகள் எல்லாம் பயனற்றுப் போகும்படி இந்த தீர்மானமும் போட்டுக் கொண்டதாகும் இதைப் பற்றி நன்றாய் அப்பொழுதே எழுதி இருக்கிறோம். ஆகவே சிறிதுகூட பயமோ வெட்கமோ இல்லாமல் கராச்சித் தீர்மானத்தின். பெருமையைப் பற்றி பேசுவதும் அதிலிருந்து திருடினதாக எழுதுவதும் மிகவும் கேவலமான செய்கை என்றுதான் சொல்லுவோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.04.1935
குடி அரசு - 1935 (1) 236
1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது
குடி அரசு ஆபீசு உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட “பாதிரிகளின் பிரமச்சரிய லக்ஷணம்" என்னும் புத்தகங்கள் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டு 1550 புத்தகங்கள் போலீசாரால் கைப்பற்றி இரசீது கொடுக்கப்பட்டது
இனி அப்புத்தகம் குடிஅரசு பதிப்பகத்திலோ, பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகத்திலோ கிடைக்காது
குடி அரசு - அறிவிப்பு - 14.04.1935
% ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
ஆச்சாரியாருக்கு ஆப்பு
- சம்மட்டி
பொப்பிலி ராஜா மீதும் ஜஸ்டிஸ் கட்சியார் மீதும் குற்றம் சாட்டி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கும் ஒரு நீண்ட அறிக்கையைப் பல முறை படித்துப் பார்த்தேன். அந்த அறிக்கை முழுதும் வக்கீல் நியாயங்களும், குதற்க வாதங்களும், குறும்பு குறிப்புகளும் நிறைந்து இருக்கின்றனவே ஒழிய உண்மை பசை எள்ளளவேனும் காணவில்லை
தமிழ்நாட்டுச் சக்ரவர்த்தியான தாம் கூறும் புளுகுகளையெல்லாம் தமிழ்நாட்டார் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவர் அவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று தோற்றுகிறது
அவ்வறிக்கையில் முதன் முதலாக அவர் கூறுவதாவது.
ஜஸ்டிஸ் கட்சியார், ஹரிஜனங்களுக்குச் சேவை செய்வதற்கென்று ஒரு ஸ்தாபனம் வைத்திருந்து பன்னிரண்டு மாத காலத்தில் தாமாகவே வசூலித்த பணத்திலிருந்து பள்ளிக்கூடங்களுக்காக எழுபத்தாறாயிர ரூபாயும், ஹரிஜன ஆஸ்டல்களுக்காக இருபத்தொன்பதினாயிர ரூபாயும் செலவழித்து, குழந்தைகளுக்கு ஐம்பதினாயிர ரூபாய்க்குப் புத்தகங்களும், துணி மணிகளும் வாங்கிக் கொடுத்து இவ்வாறு ஒரு வருடத்தில் “தீண்டாமை” வகுப்பினருக்கு நான்கு லக்ஷ ரூபாய் வரை செலவிட்டிருந்தால், இத்தனை செலவும் தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலித்துச் செலவு செய்திருந்தால் ஜஸ்டிஸ் அதைப் பற்றி பெருமை பாராட்டிக் கொண்டிருக்காதா என்று ஆச்சாரியார் கேட்கிறார்.
அதாவது மேலே கூறிய காரியங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியார். சாதித்து இருக்கிறார்கள் என்றும், எனவே காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருமை பாராட்ட உரிமை உண்டென்றும் ஆச்சாரியார் அபிப்பிராயப் படுகிறார். இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை ஆச்சாரியாருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். பகட்டான ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி பொது ஜனங்களிட மிருந்து பண வசூல் செய்து ஒரு பகுதியை பொது ஜன சேவைக்கு செலவு
குடி அரசு - 1935 (1) 238
செய்துவிட்டு மீதத்தை வாயில்போட்டுக் கொள்வது ஜஸ்டிஸ் கட்சியார் வாடிக்கையல்ல; ஏனெனில் காங்கிரஸ் பேராலோ, சுயராஜ்யத்தின் பேராலோ வயிறு வளர்ப்பவர்களல்ல ஜஸ்டிஸ் கட்சியார். அப்பால் ஹரிஜனங்களுக்காக காங்கிரஸ்காரர் சாதித்துள்ளதை பரிகீலனை செய்து பார்ப்போம். பன்னிரண்டு மாத காலத்தில் பள்ளிக்கூடங்களுக்காக எழுபத்திரெண்டாயிர ரூபாயும் ஆஸ்டல்களுக்காக இருபத்தி ஒன்பதினாயிரம் ரூபாயும் குழந்தைகளின் புத்தகங்களுக்காக ஐம்பதினாயிரம் ரூபாயும் காங்கிரஸ் செலவு செய்து இருப்பதாக ஆச்சாரியார் பெருமைப் பாராட்டிக் கொள்கிறார். அவர் கூறுவதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் இதனால் ஹரிசனங்களுக்கு என்ன சாஸ்வத நன்மை உண்டாயிற்றென்று கேட்கிறேன்.
ஆறு கோடி ஒடுக்கப்பட்டவர்களைக் கரையேற்ற ஆச்சாரியார். செலவு செய்த நான்கு லக்ஷ ரூபாய் போதுமா? ஹரிசன பள்ளிக்கூடங் களுக்காக எழுபத்திரெண்டாயிர ரூபாய் செலவு செய்ததினால் ஹரிஜனங்கள்.
எல்லாம் கலா வல்லவர்களாகிவிட்டார்களா.
புத்தகங்களுக்காக பத்தொம்பதினாயிரம் ரூபாய் செலவு செய்ததினால் ஹரிஜனங்களின் கல்வி பூர்த்தியாகிவிட்டதா? இப்பொழுது எத்தனை ஹரிஜன பள்ளிக்கூடங்களும், ஆஸ்டல்களும் நடைபெறுகின்றன? எத்தனை மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்? காங்கிரஸ்காரர் வாங்கிக் கொடுத்த ஐம்பதினாயிர ரூபாய் புத்தகத்தில் எத்தனை புத்தகங்கள் இப்பொழுதும் தீராமல் உபயோகத்திலிருக்கின்றன?
அப்புத்தகங்கள் சீரழிந்திருந்தால் மேற்கொண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க ஆச்சாரியார் என்ன ஏற்பாடு செய்யப் போகிறார்? இந்த கேள்விகளுக்கு விடையளிக்க ஆச்சாரியார் முன் வருவாரா?
வாஸ்தவத்தில் நடந்திருப்பதென்ன? ஹரிஜனங்கள் பேரால் பள்ளிக்கூடங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கென்றும், ஆஸ்டல்களுக்கென்றும், புத்தகங்களுக்கென்றும் செலவான பணத்தில் பெரும் பகுதி காங்கிரஸ்காரரான பிராமணர்கள் செலவுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. காலம் சென்ற தென்பாதி கனகசபை தஞ்சை, திருச்சி ஜில்லாக்களில் ஹரிஜன நிதி பாழாக்கப்படும் அநியாயத்தை விளக்கி “தமிழ்நாடு” பத்திரிகையில் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதை படித்தவர்கள் ஹரிஜன நிதியை காங்கிரஸ் பார்ப்பனர்கள் எவ்வாறு செலவு செய்து வருகின்றார்கள் என்ற ரகசியம் தெரிந்திருக்கும்.
அப்பால் ஆலய மசோதாவை ஒழித்தது ஜஸ்டிஸ் கட்சியாரே என்று ஆச்சாரியார் குற்றம் சாட்டுகிறார். அதற்காக அவர் பல வக்கீல் நியாயங்கள் கூறுகின்றாராயினும் முடிவு அவரது கூற்றுக்கு விரோதமாகவே இருக்கின்றது B0 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
"டாக்டர் சுப்பராயனின் ஆலயப் பிரவேசப் பிரரேபணை சென்னை சட்டசபையில் மிகவும் பெரும்பான்மை ஓட்டுகளால் நிறைவேறியது” என்று கூறும் ஆச்சாரியார் ஆலய மசோதாவை ஒழித்தது ஜஸ்டிஸ் கட்சியார் என்று கூறுவது குறும்புத்தனமல்லவா. ஆலயப் பிரவேசப் பிரரேபணையை டாக்டர் சுப்பராயன் சென்னை சட்டசபையில் கொண்டு வந்தபோதிலும், இன்றும் சென்னை சட்டசபையில் மெஜார்டி கட்சியாராய் இருப்பது ஜஸ்டிஸ் கட்சி என்பது உலகமறிந்த உண்மை
ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவில்லாமல் எந்த பிரரேபணையும் நிறைவேறவே செய்யாது. டாக்டர் சுப்பராயனின் ஆலயப் பிரவேச பிரரேபணை பெரும்பான்மை ஓட்டுகளால் நிறைவேறியதற்கு ஜஸ்டிஸ் கட்சியாரேகாரணம். டாக்டர் சுப்பராயனுக்கு சொந்த கட்சி பலமும் இல்லை. உண்மை இப்படி இருக்க ஆலயப் பிரவேச மசோதா ஒழிந்ததற்கு ஜஸ்டிஸ் கட்சியாரே காரணமென்றால் பொருந்துமா? மற்றுமொருவிடத்தில் ஆலயப் பிரவேச மசோதா சென்னை சட்டசபையில் வந்திருந்தால் கட்டாயம் நிறைவேறியிருக்கும்'' என்று மீண்டும் ஆச்சாரியார் கூறியிருக்
கிறார். அது வாஸ்தவமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியின்றி அது நிறைவேறி இருக்க முடியாதல்லவா? ஆகவே ஜஸ்டிஸ் கட்சியாரை குறை கூறுவது விஷமத்தனந்தானே?
மேலும், ''இந்திய சட்டசபையில் சிலரது அறிவின்மையும் கால தாமதமும் சீர்திருத்தத்தை எதிர்ப்போர்க்கு உபயோகமாக இருந்தது'' என்று ஆச்சாரியார் கூறுகிறார்.
அந்தசிலர் யார்? அவர்கள் காட்டிய அறிவின்மை என்ன? காலதாமதம் எவ்வாறு நேர்ந்தது. இந்த கேள்விக்கு ஆச்சாரியார் விடையளிக்க முன் வந்தால் காங்கிரஸ்காரரே ஆலயப் பிரவேச மசோதா ஒழிந்ததற்குக் காரணம் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும்.
போனதெல்லாம் போகட்டும் தோழர் எம்.சி.ராஜா இப்பொழுது ஒரு மசோதா கொண்டுவர அனுமதி கோரியிருக்கிறாராம். சர்க்கார் அனுமதி யளித்தால் அந்த மசோதாவை காங்கிரஸ் மெம்பர்கள் ஆதரிப்பார்களா? அந்த மசோதாவை ஆதரிக்கும்படி காங்கிரஸ் மெம்பர்களுக்கு சக்கரவர்த்தி ராஜகோபால் ஆச்சாரியார் சிபார்சு செய்வாரா? தோழர் ராஜாவின் மசோதாவுக்கு சர்க்கார் அனுமதியளிக்கும் பட்சத்தில் ஆலயப் பிரவேச மசோதாவுக்குத் தடையாயிருப்பது காங்கிரஸ்காரரா? ஜஸ்டிஸ் கட்சியாரா? என்பது பகிரங்கமாய்விடும். கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம்
குடி அரசு - கட்டுரை - 14.04.1935
குடி அரசு - 1935 (1) 240
கராச்சி தீர்மானத்தின் யோக்கியதை
1931 ஜுலை 19 இல் வெளியான குடி அரசில் “இன்னும் என்ன சந்தேகம்? பிராமணா! உன் வாக்குப் பலித்தது” என்ற தலைப் பெயருடன் வெளியான தலையங்கத்தில் கராச்சி காங்கிரசின் தீர்மானங்களைப் பற்றி எழுதியிருப்பதிலிருந்து சிலவற்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறோம் இதைப்பார்த்த பிறகாவது காங்கிரஸ் தீர்மானத்திலிருந்து நாம் திருடிக் கொண்டோமா? அல்லது நமது கொள்கைகளிலிருந்து காங்கிரஸ்காரர்கள்
திருடிக் கொண்டிருக்கிறார்களா என்பது விளங்கும்.
1931 ஜுலை 19 தேதி தலையங்கக் குறிப்புகள்:-
காங்கிரஸ் காரியக் கமிட்டியும், தோழர் காந்தியும் சேர்ந்து 27-7-31ந் தேதி செய்த பிரஜா உரிமை தீர்மானமானது நாம் காங்கிரசையும் அதன். தலைவர்கள் என்பவர்களையும் பற்றி, அவர்கள் எப்படிப்பட்ட அபிப்பிராயக்காரர்கள் என்று குற்றம் சொல்லி வந்தோமோ? அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும் வேறு எவ்வித வியாக்கியானமும், தத்துவார்த்தமும் செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந் திருத்தமாய் சொல்லப்பட்டு விட்டது
“ராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது” என்று வாய்த்தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த “ஹம்பக்' என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களின். கூற்று என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கி இருக்கு மென்றே கருதுகின்றோம்.
பம்பாய் காரியக்கமிட்டியின் உத்தரவாத தீர்மானத்தைக் கொண்டு காங்கிரசின் உண்மையான தன்மையை ஒருவரியில் கூறவேண்டுமானால் “காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண் பட்ட ஸ்தாபனம்” என்று சொல்லுவதை விட வேறு என்ன சொல்ல மூடியும்?
இவை எப்படி இருந்த போதிலும் ''இன்றய தினம் இந்த நாட்டில் இருந்துவரும் ஜாதி மத பேதங்களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்களும், மததர்ம சொத்துக்களும் காப்பாற்றுவதற்காக நமக்கு சுயராஜியம் வேண்டும் என்ற கருத்தின் மீதுதான் இன்றைய “தேசீயக் கிளர்ச்சி” நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்று சொன்னவர்களின் M வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
வார்த்தைகளில் எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். அப்போது
தமிழ்நாடு எழுதியிருப்பது:-
“இந்திய தேரீய காங்கிரசுக்கு தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின்றோம்”
“காங்கிரசின் தேசீய லக்ஷியம் இப்போது பின்னடையும்படி நேர்ந்து விட்டது”
“பிரதி வகுப்பாரின் பாஷை, எழுத்து, கல்வி, ஆசார அனுஷ்டானம், மதம், தர்ம சொத்துக்கள் ஆகிய விஷயங்களுக்குத் தக்க பாதுகாப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை"
“மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரியாதை, மனிதத் தன்மை ஆகியவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ்டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக்கமிட்டி கூறி இருந்தால் அதன் பொருள் தெளிவாக ஏற்பட்டிருக்கும்”
“இந்தியாவில் சமதர்மத்தை நிலை நிறுத்துவதற்கு காரியக் கமிட்டியின் முடிவு முட்டுக்கட்டையாக அமையுமென்று அஞ்சுகின்றோம்"
குடி அரசு - கட்டுரை - 14.04.1935
குடி அரசு - 1935 (1)
ட்
ய்
காங்கிரஸ் ஒரு வியாதி
இந்திய தேசீய காங்கிரஸ் என்பது இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒரு வியாதியேயாகும். அது ஆரம்பித்த காலம் முதல் மனித சமூக முற்போக்கைத் தடை செய்து கொண்டே வருகிறது. அது ஏற்பட்ட இந்த 50 வருஷ காலத்தில் இந்திய நாடு பிற்போக்கடைந்திருக்கிறது என்று கூட சொல்ல வேண்டும்
முதலில் காங்கிரசை ஏற்படுத்தியவர்களது நோக்கம் படித்தவர் களுக்குப் பெரிய பெரிய உத்தியோகம் வேண்டும் என்பதாக இருந்தது என்றாலும் அது நாளாவட்டத்தில் சமூகத் துறையில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கமும் மேன்மையும் குறையாமல் காப்பாற்றப்படவே பயன்படுத்தப்பட்டு வருகிறது
உதாரணம் வேண்டுமானால் இந்த 50 வருஷ காலத்தில் காங்கிரசினால். ஏதாவது ஒரு சமூக சம்பந்தமான காரியம் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் நன்றாய் விளங்கும்
அது மாத்திரமல்லாமல் சமூக சீர்திருத்த சம்பந்தமாக வந்த தீர்மானங்களை யெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படும் படியான தோழர் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும், காங்கிரஸ்
தேசீயப் பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும்
எதிர்த்தும் வந்திருக்கின்றன என்பதை யாராவது மறுக்க முடியுமா?
ஆனால் காங்கிரசின் செலவுக்காக - சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும் காரியத்துக்கு ஆக, தீண்டாமையை ஒழிக்கின்றோம், கள்ளை நிறுத்துகின்றோம், ஏழைகளைக் காப்பாற்றுகின்றோம், இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒற்றுமைப்படுத்துகின்றோம் என்கின்ற பெயர்களைச் சொல்லி இந்த 15 வருஷகாலமாக கோடிக்கணக்கான ரூபாய்களை இந்திய மக்களிடம் இருந்து வசூல் செய்து பார்ப்பன பிரசாரமும், சமூக சீர்திருத்த முட்டுக்கட்டைப் பிரசாரமும் செய்ததல்லாமல் வேறு ஏதாவது செய்யப்பட்டது என்று யாராவது சொல்ல முடியுமா? அல்லது ஏதாவது ஒரு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? என்று கேட்கின்றோம் கள்ளை நிறுத்தும் வேலைக்கு வசூல் செய்த பணம் எவ்வளவு? ஜெயிலுக்குப் போய் துன்பப்படும்படி அனுப்பப்பட்ட வாலிபர்களின். M3 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
எண்ணிக்கை எவ்வளவு? இவ்வளவும் செய்த பிறகு ஒரு கால்படி கள்ளாவது குடிப்பதையோ செலவாவதையோ உண்மையில் நிறுத்தினார்களா? என்றுதான் கேட்கின்றோம். காங்கிரஸ் மதுவிலக்கு நாடகம் ஆட ஆரம்பித்து அதன் பேரால் மக்களை மோசம் செய்து, பண வசூல் ஆரம்பித்த காலம் முதல் நாளது வரை நடந்து வந்த கள்ளு வியாபாரம் - குடி ஆகிய விஷயங்களை கவனித்துப் பார்த்தால் இந்த பித்தலாட்ட நாடகம் நடிப்பதற்கு முன் எவ்வளவுக்கு கள் உற்பத்தியாயிற்றோ - எவ்வளவு பேர் குடித்தார்களோ - எவ்வளவு ரூபாயிற்கு கள் விற்றதோ அதற்கும் குறிப்பிடத்
தகுந்த அளவு மேலாகவே ஒவ்வொரு துறையிலும் அதிகப்பட்டிருக்கிறதே ஒழிய சிறிதுகூட குறையவே இல்லை என்று பந்தயம் கட்டிப் புள்ளி விபரங்களோடு கூறுவோம்.
அது போலவே இந்து முஸ்லீம் ஒற்றுமை பேசிப் பேசி இரு சமூகத் தாரையும் பார்ப்பன ஆதிக்கத்துக்காக ஏமாற்றியதின் யோக்கியதை யெல்லாம் முன் இருந்ததைவிட இன்று இந்து முஸ்லீம்களுக்குள் பிளவும் அவ நம்பிக்கையும் அதிகமாய் இருந்து வருகின்றதே தவிர எந்தத் துறையிலாவது சிறிதளவாவது குறைந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா என்றும் கேட்கின்றோம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காங்கிரசின் சூழ்ச்சியினாலும் பேராசைக் குணத்தினாலும் முஸ்லீம்களுக்கு இந்துக்களிடம் அடியோடு நம்பிக்கை குறைந்து போய் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக ஒன்றுக்கு இரண்டாய் பலன் பெறவும் இந்துக்களை வெறுத்த வரையிலும் அவநம்பிக்கை பட்ட வரையிலும் அவர்களோடு சேராமல் பிரிந்து இருக்கும் வரையிலும் அதிக லாபம் என்று சொல்லக்கூடிய நிலைமையும் ஏற்பட்டுவிட்டது
இனி காங்கிரசானது ஏழைகளுக்கு நன்மை செய்யும் காரியத்தை கவனிப்போமேயானால் அதுவும் அது போலவே கதர் என்கின்ற
தந்திரத்தினால் வருஷத்தில் ஒரு இருபது முப்பது ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்துவிட்டு அதற்காக லட்சக்கணக்கான ரூபாய்களை இந்திய மக்களிடம் இருந்து வசூல் செய்து பார்ப்பனர்களையே நிர்வாகிகளாக
ஆக்கி அவர்களுக்கே பெரும்பாகம் செலவு செய்து அவர்களைப் பார்ப்பனப் பிரசாரம் செய்யச் செய்து விட்டு இவ்வளவும் செய்து கடைசியாகக் கணக்குப் பார்த்தால் 15 வருஷ காலம் பொறுத்தும் 2 அணா பெறும்படியான துணிக்கு எட்டு அணா கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தான் கதர் இருக்கிறதே தவிர அதுவும் நாளுக்கு நாள் மறைந்து போக வேண்டிய காரியமாகத்தான் ஆயிற்றே தவிர, அதனால் எவ்வித
சீர்திருத்தத்திற்கும் பயன் இல்லாமல் போய்விட்டது என்பது குருடர்களும் அறிந்த காரியமாகும்
குடி அரசு - 1935 (1) 244
இனி தீண்டாமை விலக்கு விஷயத்தைப் பார்த்தாலோ அது பரிசுத்தமான ஹம்பக்கென்று சொல்லும்படியான நிலைமையில்தான் இருக்கின்றது. காங்கிரஸ் தீண்டாமைப் பிரசாரம் என்பதனால் தீண்டாதவர்கள் என்பவர்களுக்குள் இருந்து வந்த தீண்டாமை என்பதுகூட அதிகமாக்கப் பட்டதே தவிர மற்றபடி காரியத்தில் அவர்களுக்கு சமூகத்திலோ, அரசியலிலோ, பொருளாதாரத்திலோ கடுகளவு முற்போக்குக்கூட காங்கிரசினால் ஏற்படவே இல்லை
சமீபகாலத்தில் தீண்டாமையின் பேரால் இந்திய மக்களிடம் இருந்து
வசூலிக்கப்பட்ட 20, 30 லக்ஷக்கணக்கான ரூபாய்களை பார்ப்பன எலக்ஷன்.
பிரசாரம் செய்யத் தகுந்த ஆளுகளை கூலிகளாகப் பிடித்து பத்திரிக்கைகளை
கூலிக்கு அமர்த்தி தீண்டாமை விலக்கு சங்கம் என்கின்ற நாணையமில்லாத
பெயரின் பேரில் செலவு எழுதி வந்து கடைசியாக எல்லாவற்றையும் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் எலக்ஷனுக்கே உபயோகப்படுத்திக் கொண்டு வந்து அந்த எலக்ஷனில் வெற்றி பெற்ற ஆளுகளையும் “சட்டசபையில் தீண்டாமை சம்பந்தமான வேலையில் பிரவேசிக்கக்கூடாது'' என்று திட்டப்படுத்தி கட்டுப்படுத்ததான் முடிந்ததே ஒழிய மற்றப்படி இத்துறைகளில் காரியத்தில் ஏதாவது நடந்ததா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது ஜனங்களை வேண்டுகின்றோம்
இந்த நிலையில் இருந்து வரும் ஒரு வெளிப் பகட்டும் உள் வஞ்சகமுமான ஸ்தாபனமாகிய காங்கிரசை யாரோ ஒருவர் பார்ப்பனர்கள். ஸ்தாபன மென்றும், முதலாளிகள் ஸ்தாபனமென்றும், தொழில் செய்து
பிழைக்கும் மக்களுக்கு அது ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லி விட்டதால் முத்து சிந்திப் போய்விட்டதாம்.
காங்கிரஸ் வஞ்சகர்கள் ஸ்தாபனமென்றும் வருணாச்சிரமக்காரர் ஸ்தாபனமென்றும் முதலாளிகளின் கூலிகளின் ஸ்தாபனமென்றும் தோழர். ஈ.வெ. ராமசாமி மாத்திரமோ அல்லது இவ்வாரம் சென்னை காங்கிரஸ் மாளிகையில் நடந்த கூட்டத்தில் மாத்திரமோ 2 பேர் பேசி விட்டார்கள், கேள்வி கேட்டுவிட்டார்கள் என்று சில பார்ப்பன பத்திரிகைகள் மாய்மாலக் கண்ணீர் விடுகின்றன. இதை ஊரை ஏமாற்றும் தந்திரமென்றுதான். சொல்லுவோம்
காங்கிரசை முதலாளி ஸ்தாபனமென்றும், வஞ்சக ஸ்தாபனமென்றும் கராச்சி காங்கிரசின்போது அதே கொட்டகையில் கூடிய பாரத நவவீரர்
மகாநாட்டில் அதன் தலைவர் தோழர் சுபாஷ் சந்திர போஸ் கூறியிருக்
கிறார். அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் தோழர் கோவிந்தானந்தர் கூறியிருக்கிறார். இவர்கள் என்ன கூறி இருக்கிறார்கள் என்றால் ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
சுபாஷ் சந்திர போஸ்
காங்கிரஸ் கொள்கைகள் பயனற்றது, அதன் தலைவர்கள் நாணைய மற்றவர்கள். ஒன்றைச் சொல்லி ஒன்றைச் செய்து கொள்கிறார்கள் அவர்களுடைய உள் எண்ணமெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதே. அவர்கள் லட்சியங்கள் ஜமீன்தாரனுக்கும், பணக்காரனுக்கும் மேல் ஜாதிக்காரனுக்கும் நல்ல பிள்ளையாய் நடக்கவேண்டும் என்பதே அதே மூச்சில் மற்றவர்களுக்கும் நல்ல பிள்ளைபோல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதே. உண்மையான சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுக்க காங்கிரஸ்காரர்களால் முடியாது. அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்தியா சுதந்திரமடைய வேண்டுமானால் வேறு ஸ்தாபனத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.
தோழர் கோவிந்தானந்தர் இதைவிடப் பச்சையாய் “காங்கிரசினால்
ஒரு நாளும் ஏழைத் தொழிலாளி மக்களுக்கு பயன் ஏற்படாது. ஏழைகளை பலி கொடுத்து அரசியல்வாதிகளான சிலர் வாழ்ந்து வருகிறார்கள்'' என்றும் பேசி இருக்கிறார். தொழிலாளிகள் நன்மைக்கென்றே உழைத்துவரும் தோழர் சக்லத்வாலா அவர்கள் “காந்தியும் காங்கிரசும் தொழிலாளிகளையும் ஏழைக் குடியானவர்களையும் மோசம் செய்து வஞ்சித்து வந்திருக்கிறார்கள். இவ்விரண்டும் ஒழிந்தாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை'' என்றும் பேசி இருக்கிறார்
ஜவகர்லால் நேரு அவர்கள் 'காங்கிரசானது ஏழைத் தொழிலாளிகள் நலத்தையும் விவசாயிகள் நலத்தையும் புறக்கணித்துவிட்டு பணக்காரர்கள், ஜமீன்தார்கள் முதலிய கூட்டத்தாருக்கு நன்மை செய்து வந்திருக்கிறது" என்று சொல்லி இருக்கிறார்.
காங்கிரசின் யோக்கியதை இவ்வளவு தானா? என்றால் இனியும்
உண்டு. அதாவது :-
“பம்பாய் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் ஜம்நாதாஸ் மேதா அவர்கள் பம்பாயில் ஒரு கூட்டத்தில் காங்கிரசில் உள்ள பூர்ஷ்வா கூட்டம் அழிந்தால் ஒழிய காங்கிரசால் மக்களுக்கு நன்மை ஏற்படாது” என்று சொல்லி இருக்கிறார்.
பம்பாய் தொழிலாளர்களும் கிர்ணி காம்கர் சங்கத்தார்களும், “காங்கிரஸ் ஒழிக”, 'காந்தி ஒழிக'”, “காங்கிரசும் காந்தியும் முதலாளி
களின் கூலிகள்”, “காந்தியே திரும்பிப்போ” என்று கருப்புக் கொடியுடன் கூப்பாடு போடவில்லையா?
கராச்சி காங்கிரஸ் ஊர்வலத்தில் காந்தியாரை வழி மறித்து,
குடி அரசு - 1935 (1) 246
“ஓ காந்தியாரே நீங்கள் முதலாளிகளுடைய கூலி, எங்களுக்கு வேண்டாம்; திரும்பிப் போங்கள்'' என்று சொல்லவில்லையா?
சர்க்காமிடம் சரணாகதி
மற்றும் சர்க்காருடன் காந்தியார் செய்து கொண்ட “ஒப்பந்தத்தை” காங்கிரசின் சரணாகதி என்று சுபாஷ் போஸ் முதல் ஜவர்லால் வரையில் சொல்லவில்லையா?
இந்த சரணாகதியை ஜவர்லால் ஒப்புக் கொண்டதற்காகவே உலக சமதர்ம சங்கத்தில் (அதாவது ஆண்டி இம்பீரியலிஸ்ட் லீக்கில்) உப தலைவராய் இருந்த ஸ்தானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு அவர்கள் நீக்கப்பட்டு விடவில்லையா? ஆகவே இந்தப்படி காங்கிரசையும் காங்கிரஸ் தலைவர்களையும் காந்தியாரையும் முதலாளிகள் கூலிகள் என்றும் வஞ்சகர்கள் என்றும் சர்க்காரிடம் சரணாகதி அடைந்தவர்கள் என்றும் சொன்ன ஆசாமிகள் சுலபத்தில் மார்ட்டின் லூதராகவும் லெனினாகவும் ஆக வேண்டும் என்கின்ற
புகழ் ஆசைப் பிடித்த பைத்தியக்காரர்களா? என்று கேட்கின்றோம்
அன்றியும் இவர்களெல்லாம் “காங்கிரசின் “அரிய வேலையை அறிய யோக்கியதை இல்லாத தேசத்துரோகி”களா என்றும் கேட்கின்றோம்
மற்றும் சுயமரியாதைக்காரர்கள் இனி சர்க்காருக்கு விரோதமாக எழுதுவதில்லை என்று சொன்னது. ஒரு மானங்கெட்ட செய்கை என்று எழுதி ஒரு ௯லிப் பத்திரிகை பரிகாசம் செய்கின்றது. அப்படியானால் -
காங்கிரஸ் வெகு வீரமாய் அதுவும் சுயராஜ்யம் பெற்றாலொழிய
திரும்புவதில்லை என்று சபதம் கூறி ஆயிரக்கணக்காய் ஜெயிலுக்குள்
புகுந்து பிறகு,
“புத்தி வந்தது நாங்கள் இனிமேல் பிரிட்டிஷ் சர்க்கார் சட்டத்தை மீறுவதில்லை. எங்களை வெளியே விட்டுவிடுங்கள்''
என்று எழுதி கொடுத்து கையெழுத்துப் போட்டு விட்டு வெளியில் வந்த மானங்கெட்ட யோக்கியர்கள் இப்போது காங்கிரஸ் பேச்சையும், சுயராஜ்ய பேச்சையும் பேசுவது மானங்கெட்ட வாழ்வு மாத்திரமல்லாமல் இழி தன்மையான வாழ்வும் அல்லவா என்று கேட்கின்றோம்
காங்கிரஸ் ஸ்தாபனம்கூட இனி சட்டத்தை மீறுவதில்லை என்றும் வாக்குக் கொடுத்து விட்டுத் தானே இன்று காங்கிரசே சபைகளை உயிர்வாழச் செய்திருக்கிறது.
காங்கிரசை சட்ட விரோதமான இயக்கம் என்று தீர்மானம் செய்த பிறகு மறுபடி எப்படி சட்டத்துக்கு கீழ்ப்பட்டு நடக்கும் ஸ்தாபனமாயிற்று
ர ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
என்று யோசித்தால் மானங்கெட்ட தன்மை சரணாகதித் தன்மை இன்னது என்றும் அது யாரிடம் இருக்கின்றது என்றும் நன்றாய் விளங்கிவிடும்
இவ்வளவும் தவிர கடைசியாய் ஒன்று கூறி இதை முடிக்கிறோம். அதாவது,
காங்கிரசுக்குள் இருந்த சமதர்மவாதிகள் காங்கிரஸ் ஸ்தாபனம் சமதர்மத்துக்கு ஏற்றதல்ல வென்றும் காங்கிரஸ் சமதர்மக் கொள்கைகளை எதிர்க்கின்ற ஸ்தாபனம் என்றும் வெளிப்படையாகச் சொல்லி காங்கிரசை கண்டித்து அவர்களது நிர்வாக ஸ்தாபனங்களையும் ராஜினாமா செய்து இருக்கிறார்கள்.
இன்னும் ரஷியா, ஜர்மனி, ஜினிவா, இங்கிலாந்து முதலிய தேசங்களில் உள்ள சமதர்மக்காரர்களின் இந்திய தேசிய காங்கிரசைப் பற்றிய எண்ணம் என்ன என்று வெளிப்படையாய் நல்ல பாஷையில் ஒருவர் தெரிய வேண்டுமானால் அது பிரிட்டிஷ் கவர்ன்மெண்டை ரகசியமாக தாங்குவதே என்பதும், காந்தியார் பணக்கார ஆட்சிக்கு ஒற்றர். என்பதும் இந்திய தேசீய காங்கிரசின் தத்துவம் என்றும், காங்கிரஸ் அழிக்கப்படாமல் பிரிட்டிஷ் ஆட்சியில் எவ்வித சரியான மாறுதலும் ஏற்பட முடியாது என்பதுமாகும்.
மற்றும் இத்தேசங்களுக்குச் செல்லும் இந்தியன் ஒருவன்தான், இந்திய தேசிய காங்கிரசுக்கு விரோதி என்று சொல்லிவிட்ட மாத்திரத்திலேயே அவனுக்கு சகலவித தொழிலாளர் சங்கத்திலும், சமதர்மிகள் சங்கத்திலும் தாராளமான வரவேற்பும் செல்வாக்கும் அனுமதியும் இருந்து வருகின்றது.
ஆகவே இந்த நிலையில் உள்ள காங்கிரஸ்காரர்களும் அவர்களது
கூலிகளும் யாரோ ஒருவன் காங்கிரசைக் குற்றம் சொல்லுகிறான் என்றும்,
அதற்கு ஆக பெரிய நோப்பாளம் வந்து விட்டது என்றும் காட்டிக் கொள்ளுகிறது. இதை யார் மதிக்கக் கூடும் என்று கேழ்க்கின்றோம். பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல் எழுதி விட்டால்
காங்கிரசைப் பற்றி உலகம் சிரிப்பது யாருக்கும் தெரியாமல் போய்விடுமா?
இன்றைய தினம் காங்கிரஸ்காரர்கள் பலபொய் வாக்குத் தத்தங்கள்.
பேராலும் ஏமாற்றுதல் பேராலும் மற்றும் தந்திரங்களாலும் சில
பணக்காரர்களிடமிருந்து பல லட்சக்கணக்கான ரூபாய்கள் கவர்ந்து அதை மாகாணம் தோறும் பங்கிட்டுக் கொண்டு கூலி ஆட்களைப் பிடித்து விஷமப் பிரசாரம் செய்வதாலும், மக்களின் முட்டாள்தனத்தினாலும் இன்று ஏதோ இரண்டொரு வெற்றி என்பது ஏற்பட்டுவிட்டதாலேயே அவர்களுக்கு
மதிப்பு வந்துவிடும் என்றோ அதுவும் தென் இந்தியாவில் யோக்கியதையோ: ஆதிக்கமோ வந்து விடுமென்றோ நினைத்தால் அது கனவில் கண்ட
குடி அரசு - 1935 (1) 248
காக்ஷியாகவும் நாடகத்தில் போட்ட ராஜா வேஷம் போலவும் தான் முடியுமே தவிர மற்றபடி காதொடிந்த ஊசியளவு பயனும் அடைய முடியாதென்றும் கூறுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள உண்மையான சமதர்மவாதிகள் யாரானாலும் அவர்கள் எவ்விதத் தியாகத்தைச் செய்தாவது யாருடன் சேர்ந்தாவது காங்கிரசை அழிப்பதையே தங்களது வாழ்க்கையில் லக்ஷியமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த கூலிகளின் வேஷக் கூச்சலாகிய தேசத் துரோகப் பூச்சாண்டிக்கு பயப்படப் போவதில்லை என்பதையும் துணிவுடனும் உறுதியுடனும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 21.04.1935
M9 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநல சேவைக்கு லாயக்கானவர்களா?
இந்திய நாட்டில் பொதுநல சேவை, ஜனப் பிரதிநிதித்துவம் என்பவை எல்லாம் 100க்கு 99 பாகம் வக்கீல் தொழில் செய்கின்றவர்களிடமும் பண: லேவாதேவிக்காரர்களிடமும் தான் இருந்து வருகின்றன.
வக்கீல்கள் என்பவர்கள் தம் தொழிலை நாணையம் ஒழுக்கம் என்பவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படி நடந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற முறையையே முதலாக வைத்து வாழ்க்கை நடத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கும், விர்த்தி அடைவதற்கும் ஆகவே இவர்கள் பொதுநல சேவை என்கின்ற வேஷத்தை கையாள வேண்டியவர்களாகிறார்கள். இவர்களில் யாருக்காவது தற்செயலாக
வக்கீல் தொழிலில் கிடைக்கும் ஊதியத்தைவிட இந்தப் பொதுநல சேவை வேஷத்திலேயே முழு நேரத்தையும் செலவழிப்பதின் மூலம் அதிக ஆதாயம் கிடைப்பதாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் வக்கீல் தொழிலை விட்டு
விட்டு “பொதுநல சேவைக்காரர்களாகவே'' ஆகி விடுகிறார்கள். ஆன போதிலும் இவர்களது வக்கீல் தொழிலுக்காக தங்களை தகுதியாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்ட யோக்கியதைகள் இவர்கள் பொதுநல சேவை வேஷம் போட்டுக் கொண்ட போதும் இவர்கள் கூடவே இருந்து வருகின்றனவே ஒழிய இவர்களை விட்டு விலகுவதற்கு அவசியம் ஏற்படுவதே இல்லை. ஏனெனில் நம் நாட்டுப் பொதுநல சேவைகள் என்பவை பெரிதும் அம்மாதிரி குணங்களையே அஸ்திவாரமாகக் கொண்டதும், அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்காகவே ஏற்படுத்திக் கொண்டதுமாகும்
ஒரு கசாப்புக் கடைக்காரனுக்கு எப்படி ஜீவகாருண்யம் என்பது அதனுடைய உண்மையான அர்த்தத்தில் இருக்க முடியாமல் ஜீவ வதை செய்து வாழவேண்டியவனாகிறானோ, அப்படிப் போலத்தான் ஒரு வக்கீல் வேலையில் இருப்பவனுக்கு பொது நன்மை என்கின்ற குணம் உண்மையான அருத்தத்தில் இருக்க முடியாமல் பொது ஜனங்களை இம்சித்து துன்புறுத்துவதின் மூலமே அவன் வாழ வேண்டியவனாகின்றான்.
குடி அரசு - 1935 (1) 250
அதேமாதிரியாகவே வட்டிக்கடைக்காரன், அல்லது லேவாதேலிக்காரன். என்பவனும் அன்னியர்களுடைய செளகரியத்தை அறிவது, அல்லது அத் தொழிலில் ஈவு இரக்கத்தை உபயோகிப்பது என்பதில்லாமல் எதிரியின் அவசரத்தையும், நிலைமையும் அறிந்து அவனிடமிருந்து எவ்வளவு தூரம் சுரண்டலாமோ அவ்வளவையும் வன் நெஞ்சுடன் கவருவதே தொழில் முறையாகவும் அந்த குணத்தையே கை முதலாகவும் வைத்து தொழில் நடத்த வேண்டியவனாகின்றான். தனியாக வட்டித் தொழிலே செய்கின்றவர்கள் மாத்திரமல்லாமல் லேவாதேவியின் மூலம் செல்வத்தைப் பெருக்கும் குணம் கொண்டவர்களிலும் பெரிதும் இக் கூட்டத்தில் சேர்ந்தவர்களேயாவார்கள்.
இந்த இரு கூட்டத்தாராலேயேதான் எல்லாச் செல்வமும் ஜன சமூகத்தினிடத்தில் சமமாகப் பிரிந்திருக்க வேண்டிய தன்மை மாறி சிலரிடமே பெருகும்படியாகவும் அதிலும் வக்கீல் தொழில்காரனுக்கும் வட்டி தொழில்காரனுக்குமே போய்ச் சேரும்படியாகவும் ஆகி விடுகின்றது
இவர்களாலேயே தான் ஜன சமூகத்தில் அனேகம்பேர் பாப்பர்களாகவும், ஓட்டாண்டிகளாகவும் ஆகி பாடுபட்டுச் சம்பாதிக்கவும் யோக்கியதை இல்லாமல் அகத்திலேயே மடிந்து போகிறார்கள்.
ஆகவே இவ்விரு தொழில்காரர்கள் பொதுநல சேவையில் அமரும் படியான தன்மை கொண்ட அரசியலும் பிரதிநிதித்துவ ஸ்தாபனங்களும் ஒருநாளும் யோக்கியமானதாகவோ, உண்மையானதாகவோ இருக்க முடியவே முடியாது. ஏனெனில் ஈவு இரக்கம் நீதி நாணையம் ஒழுக்கம் ஆகிய நாணையங்கள் என்பவைகள் கண்டிப்பாய் ஒத்துக் கொள்ள முடியாததான மனப்பான்மையைக் கொண்டவர்களால் செய்யப்படும் சேவை எப்படி மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்க முடியும்?
உண்மையிலேயே மக்களை ஒரு யோக்கியமான அதாவது பிரஜைகளின் நன்மையையும் பத்திரத்தையும் கோரின ஒரு ஆட்சி ஒன்று உலகில் இருக்கின்றது என்று சொல்லப்படுமானால் அவ்வாட்சியானது மனித சமூகத்தை வக்கீல் கூட்டத்தாரிடமிருந்தும் வட்டி சம்பாதிக்கும் கூட்டத்தாரிடமிருந்து விலகிக் காப்பாற்றும் ஆட்சியாய் இருக்க வேண்டும் அந்த ஆட்சிதான் சரியான ஆட்சியாகும். அப்படிப்பட்ட அரசனைத்தான் காவலன் என்று சொல்லத் தகும்
அப்படிக்கு இல்லாமல் நம் நாட்டு ஆட்சி மாத்திரமல்லாமல் மற்றும்
சில ஆட்சிகளும் மக்கள் வக்கீல்களாலும் வட்டிக்காரர்களாலும் தொல்லை. அடைய தாராளமாய் வழிவிடப்பட்டிருக்கின்றன.
ஆட்சி நிர்வாகங்களை கையாளும் யோக்கியதையும் அப்படிப் பட்டவர்கள் கைக்கே போகும்படியாய் இருந்தால் அதை எப்படி ராஜரீகம் என்று சொல்ல முடியும் தட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
மற்றொரு தொல்லை
மனித சமூகத்துக்கு இந்த இரண்டு தொல்லைகள் மாத்திரம் அல்லாமல் மற்றொரு மூன்றாவது தொல்லை என்னவென்றால் ஏர் உழுதல் பாவம் என்ற அதாவது சரீரத்தினால் பாடுபடுவது பாவம் என்ற கொள்கை உடைய ஒரு சமூகத்தார் பாடுபடாமல் ஊரார் உழைப்பிலேயே வயிறு வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மற்றெல்லோரையும்விட மேலான பிறவிக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு உயர்நிலையிலேயே இருந்து வாழ வேண்டும் என்கின்ற கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் பொதுநல சேவைக்காரர்களாகவும், ஜனப் பிரதிநிதிகளாகவும் ஆட்சி நிர்வாகத்தை கையாளுகிறவர்களாகவும் இருக்கக்கூடிய ஆட்சியில் இருக்கும் பிரஜைகளை எப்படி நல்லாட்சியில் இருப்பதாக சொல்ல முடியும்? அவர்கள் எப்படிமுன்னுக்கு வர முடியும் அல்லது சுகமாக இருக்க முடியும்?
ஒரு அரசன் எவ்வளவு வரி வாங்கின போதிலும் சரி, வரியினால் எந்தக் குடியும் கெட்டுப் போகாது
ஆனால் அந்த வரியையும், மக்கள் உழைப்பின் பயனையும் வக்கீல், வட்டிக் கடைக்காரன், பார்ப்பான் ஆகிய இந்த மூன்று கூட்டத்தாரே அனுபவிக்கும்படியான ஆட்சி முறைதான் மக்களுக்கு கஷயரோகம் போன்றது என்று சொல்ல வேண்டியிருக்கின்றது
நீதி இலாக்கா யந்திரத்தை நல்லபடியாகத் திருத்தி அமைக்கும் பட்சத்தில் நல்ல நீதி பெறுவதற்கு இந்த மாதிரியான வக்கீல்கள் இருக்க வேண்டி ஏற்படுமா என்று கேட்கின்றோம். பேதி, அம்மை, விஷக் காய்ச்சல், பிளேக்கு முதலிய விஷ நோய்கள் ஒரு காலத்தில் வந்து ஏதோ சில ஜீவன்களை கொள்ளை கொண்டுவிட்டு அடியோடு மறைந்து போகின்றன. ஆனால் இன்றைய வக்கீல் கூட்டமும், வட்டிக் கடைக் கூட்டமும், பார்ப்பனீயக் கூட்டமும் மனித சமூகத்துக்கு நிலையான விஷ நோய்களாய் இருந்து கொண்டு மக்களை உயிருடன் வதைத்து துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இக் கூட்டங்கள் இல்லாமல் இருக்குமானால் அரசனுக்கும் எவ்வித கவலையும், தொல்லையும் இருக்க முடியாது என்பதோடு ஜனசமூகத்துக்கு இதைவிட சுகமும், கவலையற்றதுமானநிலை வேறொன்றும் இருக்க முடியாது.
மக்களுக்கு சுயராஜ்யம் அதாவது சுதந்திரமும், சுயமரியாதையும் கொண்ட வாழ்க்கை நிலை வேண்டுமானால், இக் கூட்டத்தாருக்கும், மனித சமூகத்துக்கும் சம்பந்தமில்லாமலும் இக் கூட்டத்தார் அரசியல் நிர்வாகஸ்தர் களாகவோ ஜனப் பிரதிநிதிகளாகவோ இல்லாமலும் இருக்கும்படியான
ஆட்சி முறை இருத்தலேயாகும்
ஒரு நாட்டின் நாணய நிலையும், ஒழுக்க நிலையும், ரட்சிப்பு நிலையும் அடியோடு பாழடைந்து போய்விட்டது என்பதற்கு அறிகுறி என்னவென்றால்
குடி அரசு - 1935 (1) 252
அந்நாட்டில் வக்கீல்களும் வட்டிப் பிழைப்புக்காரர்களும் பார்ப்பனர்களும் மதிக்கப்படுகின்றவர்களாய் இருக்கிறார்கள் என்பதேயாகும்.
இந்த உண்மையை ஜனசமூகம் அறியுமானால் அந்த நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்பது சிறந்து விளங்கவே விளங்காது. ஆனால் தங்களுக்குள்ளாகவே ஒரு சமூகத்தை மற்றொரு சமூகம் கொள்ளை கொள்ளும் - கொடுமைப்படுத்தும் - முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கிளர்ச்சி தான் நடைபெறும்
பாமர ஜனங்கள் பெரிதும் மதத்தின் பேரால் பகுத்தறிவு அற்றவர். களாகவும், சமூகத்தின் பேரால் சுயமரியாதை அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுவிட்டதால் வாழ்க்கை நிலையில் கஷ்டமும் இழிவும் உணரப்படாமலும் ஒருவாறு உணரப்பட்டாலும் அதை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்கு மார்க்கமும், முயற்சிகளும் அற்றவர்களாயுமிருக்கிறார்கள்.
எந்த அரசாங்கமானது தனது பொருப்புகளை மக்கள் மீதோ, மக்கள் பிரதிநிதிகள் மீதோ போட முனைந்து நிற்கின்றதோ அந்த அரசாங்க மெல்லாம் தனது பொருப்பிலிருந்து தப்பித்துக் கொண்டதோடு தனது கடமையிலிருந்தும் நழுவிக் கொண்ட குற்றத்துக்கு பாத்தியப் படத்தக்க அரசாங்கமேயாகும்
ஏனெனில் ஒரு அரசாங்கம் உண்மையாகவே ஆட்சி முறையோ ஆட்சி நிர்வாகத்தையோ உண்மையில் ஜனங்கள் பொருப்புக்கு விட்டு விட்டதாய் இருந்தால் அது வக்கீல் கைக்கும், வட்டிக்காரன் கைக்கும், பார்ப்பான் கைக்கும் வந்து சேரும்படியானதாக இருக்க முடியுமா? என்று யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்காமல் போகாது?
இந்த மூன்று கூட்டத்தினரும் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு விரோதிகள் என்பதும் பாடுபடும் மக்களே ஜன சமூகத்தில் 100க்கு 90 பேர்களாய் இருக்கும் பிரஜைகள் என்பதும் எந்த அரசாங்கமாவது உணர்ந்திருக்காது என்று நாம் நம்ப முடியுமா? ஆதலால் அரசாங்கமானது, ஜனங்களின் ரட்சிப்புக்கு தானே நேரிட்ட ஜவாப்தாரியாய் இருப்பதாய் இருந்தால் இருக்கட்டும்; அல்லாமல் அதிலிருந்து நழுவிக் கொள்ள ஆசைப்படுவதாயிருந்தால் மேற்கண்ட மூன்று கூட்டத்தார் ஜனப்பிரதிநிதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ வர முடியாத நிலையில் தாங்கள். பொறுப்பிலிருந்து நழுவிக் கொள்ளட்டும் என்பதற்கு ஆகவே இதைக் குறிப்பிடுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.04.1935
233 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
ஜாதியை ஒழிப்பதால்
மதம் அழிந்து விடுமா?
- ஓர் சமதர்மி
இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப்போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
இந்து வேதத்தில் பிராம்மணன் பிராமணரல்லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப்படுகின்றது. ரக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு சாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமே யானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர்களைச் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யுகள் என்ற ஒரு சமூகம் அந்த பிராமணர்களுக்கு விரோதமாய் இருந்து அவர்களைத் துன்பப்படுத்துவதாகவும் அவர்கள் பிராமணர்களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்பதாகவும், ஆதலால் அந்த தஸ்யூகளை அழிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும் வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்குகின்றது. ஆகவே ஜாதிப் பிரிவுகளுக்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமானால் அவை மனுதர்ம சாஸ்திரம் பராசர் ஸ்மிருதி ஆகிய பார்ப்பனர்களால் செய்யப்பட்ட ஆதாரங்களே முற்பட்டவை என்னலாம்.
அவற்றிலும்கூட பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் அதாவது குரு, அரசன், முதலாளி, தொழிலாளி என்னப்பட்ட நான்கு ஜாதிகள்தான் காணப்படுகின்றனவே தவிர இன்றுள்ள ஆயிரக்கணக்கான ஜாதிகளுக்கு மனு தர்ம சாஸ்திரத்திலும் ஸ்மிருதியிலும் ஆதாரங்கள் காணக்கிடைப்பதில்லை.
குடி அரசு - 1935 (1) 254
அவைகளில் வேறு சில ஜாதிப் பிரிவுகளும் காணப்படுகின்றனவே என்று சொல்லப்படுமானால் அவை முற்கூறிய பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்கின்றதான 4 பிரிவுகளும் கலந்து போகாமல் இருப்பதற்கும் கட்டுப்பாடாக இருப்பதற்கும், கலப்படம் ஏற்படுத்துவதையும், ஏற்படுவதையும் மக்கள் வெறுக்கவும் ஆன பந்தோபஸ்துக்காக கலப்படத்தினால் பிறந்த மக்களுக்கு பலவகை இழிவான பெயர்கள் கற்பிக்க ஏற்படுத்தின முறையில் வேறு சில ஜாதிப் பெயர்கள் காணப்படலாம்.
ஆனால், அவற்றிற்கும் இன்றுள்ள ஜாதிப் பிரிவுகளுக்கும் சம்மந்த மில்லை. இது தவிர வேறு ஜாதிகள் இருப்பதாகக் காணப்படுமானால் அவை தேசம் நிலம் பாஷை ஆகியவைகளைக் குறிக்கும் முறையில் இருக்கலாமே ஒழிய பிறவியைக் குறிக்கும் முறையில் காணப்படுவது அதிசயமாகவே இருக்கும்.
மற்றப்படி இன்று பிரத்தியட்சத்தில் பழக்கத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளுக்கு எங்காவது ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்போமானால் அவை புராணங்களில் தான் காணப்படுகின்றன.
புராணங்கள் என்று சொல்லப்பட்டவைகள் பெரிதும் கற்பனைகள் என்பதும் அவை ஏற்படுத்தப்பட்டதின் கருத்தெல்லாம் பார்ப்பனர்களுக்கு உயர்வைக் கற்பிக்கவும் அவர்களுக்கு மற்ற மக்கள் மீது எப்பொழுதும் ஆதிக்கம் இருந்து வரவும் பொருளாதாரத் துறையில் பார்ப்பனர்களுக்கு பாடுபடாமல் செல்வம் வந்து சேரவுமான மார்க்கம் ஏற்படவும் கருத்துக் கொண்டேயாகும்
இந்தக் கருத்துக்கள் புராணக் கற்பனையில் மாத்திரமல்லாமல்
ஸ்மிருதிகள் ஏற்படுத்துவதிலும் இருந்திருக்கின்றன என்பதற்கு மனு நூலில் ஏராளமான அத்தாட்சிகள் இருக்கின்றன.
உதாரணமாக “பிராமணன் கொலைக் குற்றம் செய்தால் அவன் தலை மயிரை மாத்திரம் சிரைத்து விட வேண்டுமே ஒழிய வேறு தண்டனை எதுவும் விதிக்கக் கூடாது. ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைக் கொன்று
விட்டால் அதற்கு ஒரு தவதளையையோ ஒரு காகத்தையோ கொன்று விட்டதற்குச் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் செய்தால் போதும்..."
பிராமணன் ஞானியாய் இருந்தாலும் மூடனாய் இருந்தாலும் அவன் மேலான தெய்வத்திற் கொப்பாவான். பிராமணன் அயோக்கியனாய் இருந்தாலும் அவன் பூஜிக்கப்பட வேண்டியவன்."
“எவ்வளவு துராசாரமுள்ள பிராமணனாய் இருந்தாலும் அவன் அரசனுக்குச் சமமானவனுடன் அரசன் செய்ய வேண்டிய தீர்ப்புகளை
யெல்லாம் செய்யலாம்.” 55 ஏரரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
சூத்திரன் விலை கொடுத்து வாங்கப்பட்டவனாகையாலும் அவன் எப்பொழுதும் பிராமணனுக்கு அடிமையாகையால் அவர்களிடம்
பிராமணர் கூலி கொடாமலே வேலை வாங்கலாம்.”
ஏனெனில் கடவுள் பிராமணனுக்கு வேலை செய்வதற்காகவே சூத்திரனை படைத்திருக்கிறார்.”'
பசூத்திரறுடைய பொருள்களை பிராமணன் தைரியமாகப் பற்றிக் கொள்ளலாம். சூத்திரன் அடிமையாதலால் அடிமைக்கு சொத்து வைத்திருக்க பாத்தியமில்லை.”
“சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவன் நாக்கை துண்டித்துவிட வேண்டும்.”
“சூத்திரன் பிராமணனுடைய பெயரையாவது ஜாதியையாவது
குற்றம் சொன்னால் அவன் வாயில் 10 விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பை செலுத்த வேண்டும். சூத்திரன் பிராமணனை அடிக்க கை தூக்கினால். கையை வெட்டிவிட வேண்டும்.”
“கால் தூக்கினால் காலை வெட்டிவிட வேண்டும்.”
“சூத்திரன் பிராமணர்களுக்கு அவர்களுடைய கடமையை போதிக்க வந்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணையைக் காய்ச்சி ஊற்றி விட வேண்டும்.”
சூத்திரன் பிராமணனோடு சமமாக உட்கார எத்தனித்தால் இடுப்புக்கு கீழ் சூடு போட்டு தேசத்தை விட்டுத் துரத்திவிட வேண்டும். அல்லது அவனுடைய பின் பாகத்தை வெட்டி விட வேண்டும்.” இந்தப்படியான விதிகளும், இன்னும் இது போன்ற ஆயிரக் கணக்கான விதிகளும் பிராமணனுக்கு உயர்வைக் கொடுத்தும் மற்ற ஜாதிக்கு தாழ்மையுடன் இழிவையும் கொடுத்து விதிகள் உண்டாக்கி “தர்மநூல்' எழுதப்பட்டிருக்கின்றன.
புராணங்களில் இதைவிட மோசமாக பறையன், சக்கிலியன், பள்ளன் முதலிய ஜாதிகளை கற்பித்தும் அவர்களைத் தொடக் கூடாது என்றும், பார்க்கக்கூடாது என்றும், நிழல் படக் கூடாது என்றும் வரிசைக் கிரமமாக ஒன்றுக்கொன்று மேல் கீழ் என்கின்ற முறையில் பல ஜாதிகளைக் கற்பித்தும்
மற்றும் திருடுவதற்கு ஒரு ஜாதியும் விவசாரிதனத்துக்கு ஒரு ஜாதியும், கொலைத் தொழில் செய்ய ஒரு ஜாதியும் இப்படியாக பல ஜாதிகளும் இன்னும் அனேக ஜாதிகளையும் கற்பிக்க ஆதாரமாய் இருந்தது புராணங்களேயாகும், இன்றைய நிலையில் மக்கள் பெரும் பகுதியோர் புராணங்களை கற்பனை என்றும் அவைகளை நம்பக் கூடாது என்றும் சொல்லி வருவதும், அந்தப் பிடிகளினின்றும் விடுபட்டு வருவதும் வெகு சாதாரணமான
குடி அரசு - 1935 (1) 256
காலமாகவும் ஆகிவிட்டது. இதை இனி யாராலும் தடுக்க முடியாதென்பதும் நிரூபிக்கப்பட்டும் வருகின்றது. ஆகவே இந்தக்கற்பனையான இடைக்காலத்தில் தோன்றிய ஜாதி அழிந்து போவதனால் உண்மையான மதத்திற்கு எந்த ஆபத்தும் வந்துவிடப் போவதில்லை என்று துணிந்து சொல்லலாம்.
ஆனால் பார்ப்பனர்கள் சனாதனிகள், ஜாதி வகுப்புக் கிரமங்களில் கை வைத்தால் மதம் அடியோடு ஒழிந்துவிடும் என்றும் ஜாதியில் கை வைப்பது மதத்தில் கை வைப்பதாகும் என்றும், மகாராணியார் அளித்த வாக்குத் தத்தத்தை மீறியதாகும் என்றும் கூப்பாடு போடுவதெல்லாம் தங்களுடைய சோம்பேறி வாழ்க்கைக்கும் ஊரார் உழைப்பில் உண்டுகளிக்கும் மானங்கெட்ட வாழ்க்கைக்கும் ஆபத்து வந்துவிடுமே என்கின்ற பேராசைச் சுயநலம் காரணமே அல்லாமல் மற்றபடி மதத்துக்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை என்பது நமது அபிப்பிராயமாகும்.
ஜாதிப்பாகுபாடுகள் இந்திய நாட்டின் மேன்மைக்கும்சுயமரியாதைக்கும் மாத்திரம் கேடாயிருப்பதல்லாமல் மனித சமூகத்தின் சமாதானத்துக்கும் சாந்திக்குமே விரோதமாய் இருக்கிறது. ஜாதிக் கொடுமையானது இந்த நாட்டிலுள்ள பார்ப்பானைத் தவிர மற்ற ஒவ்வொரு மனிதனையும் கவலைக்கும் இழிவுக்கும் உள்ளாக்கி இம்சித்து வருகிறது
கிறிஸ்தவர்களும், துருக்கர்களும் இந்துக்கள் அல்லவானாலும் அவர்களும் தீண்டத்தகாதவர்களாகவே அநேக இந்துக்களால் சிறப்பாக சனாதனிகளால் மதிக்கப்படுகிறார்கள்.
ஆதலால் இந்த மாதிரியான கொடுமையும் அறிவீனமும் ஆபாசமுமான ஜாதி பாகுபாட்டை அழித்தெறிய வேண்டியது சமதர்மவாதிகளின் முதற் கடமையாகும்
குடி அரசு - கட்டுரை - 21.04.1935
37 ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
வேண்டுகோள்
சுயமரியாதை இயக்க கிளைச் சங்கத்தாரும், தென் இந்திய நல உரிமைச் சங்க கிளைச் சங்கத்தாரும் தயவு செய்து அந்தந்த முக்கிய பட்டணங்களிலுள்ள நீதி நிர்வாகப் போலீசு, போஸ்டாபீசு முதலிய எல்லா உத்தியோகஸ்தர்களிலும், குமஸ்தாக்களிலும் பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பேர் இருந்து வருகிறார்கள் என்பதையும் வக்கீல்கள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பற்றிய லிஸ்டு ஒன்றை குடி அரசு பத்திரிகைக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை தயவு செய்து கவனிக்க வேண்டுகிறோம்
குடி அரசு - வேண்டுகோள் -21.04.1935
குடி அரசு - 1935 (1) 258
கடனுக்காக சிறையில்லை?
கடனுக்காக சிறைக்கனுப்பும் முறையை ரத்து செய்வதற்காக மைசூர்சுட்டசபைமெம்பர்ஒருவர்ஒருமசோதாகொண்டு வந்திருக்றொர்: இருவாங்கூர்சமஸ்தான கெஜட்டில் விவசாயிகள் பாதுகாப்புக்காக சர்க்கார் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று பிரசரிக்கப்பட்டிருக்றெது. அதன்சாரமாவது2- இந்தஅறிக்கையானது3மாத காலத்திற்கு அனுஷ்டானத்தலிருந்து வரும். இதன்படி பந்தக டிக்ரிகளையாவது, அல்லது விவசாயிகள் மீது ஏற்பட்டுள்ளவேறு டிக்ரிகளையாவது 2 மாதகாலத்திற்குநிறைவேற்றி வைக்கக் கூடாதென்று கவர்ன்மெண்டார் சொல்லியிருக்கொர்கள். ஆனால், 6 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டுள்ளடிக்ரிகளைநிறைவேற்றி வைப்பதாவது, அல்லது விவசாயிகளின் ஜங்கம சொத்துக்களை ஐப்தி செய்வதையாவது இது பாதிக்காது. அதனுடன் காலாவதிக் கணக்கில் இந்தக் காலம் சேராதென்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். விளைபொருள்களின் விலைவாசி மிகவும் குறைவாக இருக்கும் இந்தக் காலத்தில் விவசாயிகளுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலத்திற்கு கொண்டு வருவதையோ, அல்லது அவர்களை வாரண்டில் பிடிப்பதையோ தடுக்க வேண்டுமென்பதே இந்த விளம்பரத்தின் நோக்கமாகக் காண்து.
குறிப்பு நமது சட்டசபைகளில் பொது ஜன நன்மைக்காக என்று எந்த மசோதா வந்தாலும், அவ் விஷயத்தில் அரசாங்கத்துக்கு இஷ்டமில்லா விட்டால், பொதுஜன அபிப்பிராயத்திற்கு விடுவதாகவும் கமிட்டிகள் நியமிப்பதாகவும் கூறிக் காலங்கடத்துவதே வழக்கமாக இருந்து வருகிறது
ஆனால், சமஸ்தானங்கள் இது போன்ற காரியங்களில் உடனே நடவடிக்கை யெடுத்துக் கொள்ள முயற்சிப்பதைப் பாராட்டுகிறோம் இனியாவது நமது அரசாங்கமும் சமஸ்தானங்களைப் பார்த்தாவது இது போன்ற விஷயங்களில் கவலையெடுத்துக் கொள்ளுமென்று நம்புகின்றோம்.
- பேர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 21.04.1935 60 ஏரரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
யார் மாறிவிட்டார்கள்?
யார் இழி மக்கன்?
சுயராஜ்யம் சூட்சியேயாகும்
சென்ற வாரம் குடியரசில் “காங்கிரஸ் ஒரு வியாதி” என்பதாகப்
பெயர் கொடுத்து ஒரு தலையங்கம் எழுதி காங்கிரசானது ஆரம்ப கால
முதல் இது வரையிலும் சிறப்பாக காந்தி அயனத்திலும் மக்களை எப்படி ஏமாற்றமடையச்செய்து வந்திருக்கிறது என்பதையும் அதனால் இதுவரையில் யாதொரு நன்மையும் நாட்டுக்கோ, மனித சமூகத்துக்கோ ஏற்படவில்லை என்பதையும் அவ்வளவோடு அல்லாமல் கிரமமாகவும், இயற்கையாகவும் ஏற்பட வேண்டிய முற்போக்குகளுக்கெல்லாம்கூட முட்டுக்கட்டையாய் இருந்து வந்திருப்பதுடன் உலக நாகரிகத்தில் நாட்டை ஒரு கால். நூற்றாண்டுக்குப் பின் தள்ளி விட்டது என்பதும் விளங்க எழுதி இருந்தோம்.
மற்றும் அதே தலையங்கத்திலேயே காங்கிரஸ் பாமர மக்களை வஞ்சித்ததைப் பற்றியும், அது பணக்காரர்களுக்கும், படித்துவிட்டுப் பட்டம் பதவி பெற ஆசைப்படும் அரசியல் வேஷக்காரருக்கும், சோம்பேறியாய் இருந்து கொண்டே ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்து வாழ்க்கை நடத்த இருக்கும் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு தூரம் கையாளாக இருந்து துணை
புரிந்து வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் இந்த 10 வருஷ காலமாகவே சொல்லி வந்தவைகளையெல்லாம் ஆமோதிக்கும் மாதிரியில் சிறந்த தேசபக்தர்கள், தேசீய வீரர்கள் என காங்கிரஸ்காரர்களாலேயே அபிப்பிராய பேதமில்லாமல் கருதும் தோழர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, கோவிந்தானந்தர், சக்லத்வாலா, ஜமனாதாஸ் மேத்தா முதலிய ஆசாமிகளின் அபிப்பிராயத்தை அவர்களது வாக்கியப்படியே பார்ப்பனர்கள் பத்திரிகையில் அவ்வப்போது வெளியானதையே எடுத்துப் போட்டு விளக்கியும் இருந்தோம்
இப்போது இதை விளக்க நேர்ந்த அவசியமெல்லாம் சில பார்ப்பன
கூலிகளும், கூலிப் பத்திரிகைகளும்
“காங்கிரசின் அரிய வேலையை அறிய முடியாத அறிவீனர்களும், தேசத் துரோகிகளும் லெனின் என்றும், மார்டின் என்றும் புகழ் பெற
குடி அரசு - 1935 (1) 260
ஆசைப்பட்ட ஈ.வெ. ராமசாமியும் மற்றும் சமதர்ம வேஷக்காரர்களான சுயமரியாதைக்காரர்களும் காங்கிரசை குற்றம் சொல்லுகிறார்கள்”
என்பதாக இழிமுறையில் தாக்கியதால் அவர்களது யோக்கியதையும், காங்கிரசின் வண்டவாளமும் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றே
எழுதினோம். ஆனால் இப்படி எழுதியவையெல்லாம் இன்று நேற்று அல்லாமல் இந்த பத்து வருஷ காலமாகவே எடுத்துக் காட்டி எழுதியும் பேசியும் வந்திருக்கின்றோம் என்பதைப் பற்றி இப்போது நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
ஆன போதிலும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் காங்கிரசிலிருந்து வெளிவந்து “சர்க்கார் தாசர்”, “வகுப்புவாதி”, “பணக்காரர் அடிமை” என்ற நிலைக்குப் போய்விட்ட பின்பு தான் இந்த அபிப்பிராயம் கொண்டவரா? அல்லது நேற்று, இன்று ஏதோ “சுயநலம் கொண்டு” திடீரென்று மாறிவிட்டாரா? அல்லது காங்கிரஸ் ஸ்தாபனத்துக்கு தலைவராக இருந்த காலத்திலேயே இதே அபிப்பிராயம் கொண்டிருந்தாரா? என்பதை விளக்க சென்னை மாகாண காங்கிரஸ் ஸ்தாபன பிரதான காரியதரிசியாய் இருக்கும் போதும் அதன் தலைவராய் இருக்கும் போதும் சென்னை மாகாண காங்கிரசின் மாகாண கான்பரன்சில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையிலும் 1924ம் வருஷத்திலேயே காங்கிரசைப் பற்றியும், தேசீயத்தைப் பற்றியும், சுயராஜ்யத்தைப் பற்றியும் என்ன பேசியிருக்கிறார். என்பதையும் அப்படியே எடுத்துப் பிரசுரிக்கிறோம். அதாவது,
1924ம் வருஷம் நவம்பர் மாதம் 15, 16 தேதிகளில் திருவண்ணா மலையில் கூடிய தமிழ்நாடு மாகாண மகாநாட்டில் தலைமை வகித்து நிகழ்த்திய தலைமைப் பேருரையில் குறிப்பிட்டிருப்பதாவது-
சுயராஜ்யம்
“சுயராஜ்யம் என்பதின் உண்மைப் பொருளை உள்ளம் கொண்டு நோக்குவோமாயின் உலகில் இன்று எந்த தேசமும் சுயராஜ்யம் பெற்றிருப்பதாய் தெரியவில்லை”
“ஒரு தேசம் அன்னியர்களால் ஆளப்படாமல் தன்னைத் தானே ஆண்டு கொள்வது தான் சுயராஜ்யம் என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”
“ரஷியாவில் சார்காலத்தில் நடைபெற்ற ஆட்சி அன்னிய ஆட்சியா?”
“பிரான்ஸில் நடைபெறும் ஆட்சியைக்கூட குடி ஆட்சி என்று தானே. சொல்லப்படுகின்றது. அப்படியிருக்க அவ்வாட்சி ரூர் பிரதேசத்தில் பொது 61— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
உடமைக்காரர்களை சிறைப்படுத்துவானேன்? ஒவ்வொரு சுயாட்சி என்பதிலும் ஒவ்வொரு கூட்டத்தார்தான் ஆக்கம் பெருவார்கள். மற்ற கூட்டத்தார் விருப்பம் நிறைவேறுவது அறிதாகவே முடியும்.”
“தில தேசங்களில் பணக்காரர்கள் சுயராஜ்யம் அனுபவிக்கிறாாகள்.
சில தேசங்களில் படித்த கூட்டத்தார் அனுபவிக்கிறார்கள்.
சில தேசங்களில் உயர்ந்த ஜாதியார் அனுபவிக்கிறார்கள். சில விடங்களில் தந்திரக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்."
எல்லோரும் சுயராஜ்ய இன்பம் அனுபவிக்கும் தேசம் எங்கே இருக்கிறது? அன்னிய ஆட்சியை அகற்றுவது என்பதே சுயராஜ்யமாகாது.”
எல்லோரும் சுயராஜ்யம் அனுபவிப்பதற்கு ஏற்ற இயல்புகள் தேசத்தில் செப்பம் செய்யாமல் நடைமுறையில் இருக்கும் ஆட்சியை தகர்ப்பதால் தேசத்தில்கொலை, கொள்ளை, கொடுமைகள் ஆகியவைகள்தான்
ஆட்சி புரியும்.”
இந்து முஸ்லீம் ஒற்றுமை என்ற ஒன்றை செயலில் கொண்டு வர
நம்மால் முடியவில்லை. அதற்குப் பதிலாக மாறுபட்ட காரியங்களே
நம்மவரால் செய்யப்பட்டன."
“தலைவர்கள் மேடையில் பேசுவதும், பத்திரிக்கைகளில் எழுதுவதும் ஒருபுறம் கிடக்கட்டும்
மக்கள் சுயராஜ்ஜியத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள்?
இந்துக்களை முஸ்லீம்கள் நம்புவதில்லை. முஸ்லீம்களை இந்துக்கள்
நம்புவதில்லை.
ஆதிதிராவிடர்களுக்குள்ளஅச்சமும், ஐயமும் அளவிடக் கூடியதில்லை.
ராஜ தந்திரிகள் இதற்கு அன்னிய ஆட்சி காரணம் என்கிறார்கள்.
அன்னிய ஆட்சிக்கு இந்தியா இடந்தந்த காரணங்களும், அன்னிய ஆட்சியை இந்தியா கூவி அழைத்த காரணங்களும் இன்றும் இந்தியாவில் இருக்கின்றனவா இல்லையா?”
“அவைகளை ஒழிக்க முயற்சிக்காமல் சுயராஜ்யப் பேச்சு
பேசுவதும், எழுதுவதும் சிலருடைய சுயநல சூழ்ச்சியேயாகும்.”'
காங்கிரசில் சுயராஜ்யமிருக்கிறதா என்றால் இருப்பதாக தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை எனக்குற்ற அனுபவத்தைக் கொண்டே சொல்லுகின்றேன்.”
குடி அரசு - 1935 (1) 26:
2
“சுயராஜ்யம் வேண்டுமென்றால் செல்வர் இறுமாப்பும், ஏழைகள் இழிவும், இந்து முஸ்லீம் அச்சமும், ஐயமும், உயர்ந்த வகுப்பாரின் ஆதிக்கமும், தாழ்ந்த வகுப்பார் கஷ்டங்களும் ஓழியுமாறு முயல வேண்டும். அதுவே சுயராஜ்யப் போராகும்”. அதே சமயம்
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்பது பற்றி பேசியதாவது:
“காங்கிரஸ்வாதியாய் இருந்த டாக்டர் நாயர் திடீரென வேறு ஒரு கட்சியை தோற்றுவிக்க காரணங்களாக நின்றவை எவையோ அவை இன்றும் இருக்கின்றனவா இல்லையா? அவை அழிந்துபட்டால் ஒழிய வடநாட்டில் இந்து முஸ்லீம்கள் நிலை போலவே தென்னாட்டில் பிராமணர், பிராமணரல்லாதார் நிலை ஏற்பட்டு விடும்.”
“தேச சேவையில் ஈடுபட்டு தமிழ்நாட்டுக் காங்கிரஸ் காரியதரிசி
யாகவும், தலைவனாகவும் இருந்த அனுபவத்தைக் கொண்டே நான் இங்கு பேசுகிறேன்.”
தமிழ்நாட்டிலுள்ள காங்கிரஸ் பிராமணரல்லாத தலைவர்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு தொண்டு செய்து வருகிறார் களாதலால் எக் குறை முறையீடும் வெளிக் கிளம்பாது கிடக்கிறது."
“மகாத்மா காந்திக்கு தமிழ்நாட்டின் உண்மை நிலை தெரிந்தால் எத்தனை நாள் உண்ணாவிரதம் கொள்வாரோ தெரியாது. வெள்ளம் வரும் முன்னரே அணை கோலுவது நலம்."
“தமிழ்நாட்டில் சாதிச் சமய சண்டைக்கு காரணமாய் நிற்கும் எவ்வியக்கத்தையும் ஒழிக்க வேண்டுமென்பது எனது விரதம். ஆனால், பிராமணர் மனம் மாற பிராமணரல்லாதாரை நேசிக்க வேண்டும். உதட்டு நேசம் உள் நேசமாகாது..” தீண்டாமை விஷயத்தில் பேசியிருப்பதாவது- “தீண்டாமை சுயராஜ்ஜியத்துக்கு முட்டுக் கட்டையாய் இருக்கிறது. ஆனால் ஒரு கூட்டத்தார் தேசமழிந்தாலும் சரி, மதம் அழிந்தாலும் சரி தீண்டாமையை விடமாட்டோம் என்று சொல்லுகிறார்கள்." “இவர்கள் தங்கள் ஆதிக்கம் குன்றிவிடுமே என்று அஞ்சுகிறார்கள்."
எச்சமிக்கை
“தேச முன்னேற்றத்துக்கு இந்துமதம் தடையாய் இருக்கிறது என்ற பெயரை இந்துக்கள் சம்பாதித்துக் கொள்ளாதிருக்குமாறு அவர்களை எச்சரிக்கை செய்கிறேன்.”
இந்தப்படி பேசி இருக்கிறார்.
2 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
குறிப்பு:
இந்த உபன்யாசம் சென்னையில் தோழர் திரு.வி. கலியாணசுந்திர முதலியாரவர்களது சாது அச்சுக்கூடத்தில் அச்சடிக்கப்பட்டதாகும். இன்றும் அங்கு சென்று பார்த்துக் கொள்ளலாம்
ஆகவே அந்தக் காலத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் "பார்ப்பனத் துவேஷியாகவோ" இருந்து கொண்டு இப்படிப் பேசினார் என்று எந்த மூடனும் கருத முடியாது அல்லவா? ஏனெனில் அப்படி இருந்திருந்தால் அவர் இரண்டு தடவை மாகாண காங்கிரஸ் கமிட்டிக்குக் காரியதரிசியாகவும், 2 தடவை மாகாண
“தேசத் துரோகியாகவோ'', “சர்க்கார் தாசராகவோ"
காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும் மற்றும் 1005 கணக்கான ஜில்லா, தாலூக்கா, கிராம மகாநாட்டுக்குத் தலைவராகவும் பார்ப்பனர்களாலேயே தெரிந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார். அப்பொழுது அவருக்குக் காங்கிரசைப்
பற்றி ஏற்பட்ட அபிப்பிராயம் காரணமாகவே காங்கிரஸ் திருத்தப்பட முடியாதது என முடிவுசெய்து கொண்டு காங்கிரசில் இருந்து விலகி காங்கிரசின் யோக்கியதையை அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரி வெளிப்படுத்தி வருகிறார். அவரைப் பின்பற்றியது போலவே தென்னாட்டுத் திலகர் என்று பார்ப்பனர்களாலேயே கூறப்பட்டவரும், பல தரம் சிறை சென்றவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவும், காந்தியடிகளின் உண்மை சிஷ்யர் என்று பார்ப்பனர்களாலேயே அழைக்கப்பட்ட தோழர் திரு.வி.கலியாணசுந்திர முதலியாரும், திலகரின் நண்பரும், உண்மை சிஷ்யருமாகிய V.0. சிதம்பிர பிள்ளை அவர்களும், டாக்டர் சுரேந்திரநாத் ஆரியா, எம்.ஏ., அவர்களும் மற்றும் அந்தக் காலத்தில் காங்கிரசில் செல்வாக்காய், ஜில்லா தலைவர்களாய் இருந்த பார்ப்பனரல்லாதார்கள் தோழர்கள் சிங்காரவேலு செட்டியார், சக்கரை செட்டியார், ராமச்சந்திரஞ்
செட்டியார், சுப்பிரமணிய நாயனார், திரிகூட சுந்திரம் பிள்ளை போன்ற முதிர்ந்த செல்வாக்கும், சுயமரியாதையும், சாப்பாட்டுக்கு மார்க்கமும் உடைய ஆசாமிகளும், காங்கிரசை விட்டு விலகி அதன் யோக்யதையையும், அதன் சூட்சியையும், அதை பார்ப்பனர்கள் தங்கள் ஆயுதமாகக் கொண்டு தங்கள் ஆதிக்கத்தை உயர்த்திக் கொண்டு வரும் வஞ்சகத்தையும் அவ்வப்போது நன்றாய், பச்சையாய், வெள்ளை பாஷையில் எடுத்துச் சொல்லி இருக்கும் விஷயங்களையே தான் இன்று சுயமரியாதைக்
காரர்களும், சமதர்மக்காரர்களும் பேசியும், எழுதியும் வருகிறார்களே ஒழிய இன்று மாத்திரம் புதிதாக எடுத்துச் சொல்லும் விஷயம் எதுவும் சொல்லி விடவில்லை, எழுதி விடவும் இல்லை. மூன் தெரிவித்திருக்கிறபடி ஏதோ பொது ஜனங்களின் முட்டாள்தனத்தினாலும் சில சமூகத் துரோகிகளின் இழி குணத்தாலும், வேறு வழியில் பிழைக்க முடியாத சில இழி மக்களின் அடிமைத் தன்மையாலும் சமீப தேர்தலில் சில வெற்றிகள் என்பது ஏற்பட்டு.
குடி அரசு - 1935 (1) 264
விட்டதாலேயே தலைகால் தெரியாமல் கிறுகிறுத்துப் போய் உளருவதென்றால் அது மதிக்கப்பட்டு விடும் என்று கருதுவது முட்டாள்தனமேயாகும்
எப்படி இருந்துவந்த போதிலும் நாம் சொல்லியும், எழுதியும் வரும் விஷயங்கள் “தீர்க்கதரிசனமாய் விளங்குகிறது'' என்பதற்கு மேலும் மேலும் ஏற்பட்டு வரும் ஆதாரத்தை விளக்கும் முறையில் இவ்வாரத்தில் பம்பாய் பத்திரிகை ஒன்றிலும், தோழர் ஜவகர்லால் அவர்கள் கடிதம் ஒன்றிலும் காணப்படும் விஷயங்களை எடுத்துக் காட்டுவோம்
அதாவது காங்கிரசிலிருந்து முன்்பல தலைவர்கள் விலகி இருந்தாலும் இப்போது காந்தியார், டாக்டர் அன்சாரியார், தோழர் ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் விலகுவதன் காரணம் என்ன என்பதையும் பற்றி அப்பத்திரிகையானது (சென்டினல்)
“மற்றும் பல தலைவர்கள் விலகலாம்” என்னும் தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருப்பதாவது:-
“டாக்டர் யம்.எ. அன்சாரி காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்தும், பார்லிமெண்டரி போர்டிலிருந்தும் விலகுவதற்குக் காரணம் அவருடைய
சரீர அசெளகரியம் காரணமல்ல.
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்க்கையை விட்டுவிட்டு கீதை பாராயணம் செய்யப் புறப்பட்டுவிட்டார்.”
“இன்னும் சில தலைவர்கள் விலகிவிடுவார்கள் எனத் தெரிகின்றது.
“தலைவர்களிடம் செல்வாக்குள்ள இந்திய சட்டசபை அங்கத்தினர்கள்
புதிய சீர்திருத்தத்தை அமுலுக்கு கொண்டு வந்து உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் எனத் தெரிகிறது."
“புதிய அரசியலை சீர்குலைத்து விடுவது என காங்கிரஸ் செய்த தீர்மானத்துக்கு இவர்கள் முரண்பாடாக நடக்கிறார்கள்.
“தோழர் காந்தியார் முன்னமே விலகிவிட்டார்.”
இப்படித் தலைவர்கள் ஒவ்வொருவராய் விலகி வருவது எதிர்பாராத விஷயமல்ல.”
இர்வின் பிரபுவின் ராஜதந்திரத்தின் பயனாக சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும்படி ஏற்பட்டதும், காந்தியார் லண்டன் மகாநாட்டுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், அங்கிருந்து அவர் வெருங்கையுடன் புறப்பட்டு வந்ததும், அதன் பிறகும் சட்டமறுப்பு இயக்கத்தை ஆரம்பித்ததும் ஆகிய காரணங்களால் காங்கிரசின் செல்வாக்குக் குறைய தலைப்பட்டது.'"
பண்டிதர் ஜவஹர்லால் சிறைபட்டார். 65— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
காந்தியார் லார்ட் வில்லிங்டனைக் கண்டு பேசுவதற்கு ஆகச் செய்யப்பட்ட முயற்சியில் தோல்வியுற்றார். காங்கிரஸ் சமதர்மக்காரர்கள் காந்தியாரின் சட்ட மறுப்பை வீண் மெனக்கெடு என்றார்கள்.
கதர் திட்டத்தை எதிர்த்தார்கள். மற்றும் அவர்கள் பழய தலைவர்களுக்கு விரோதமாகவும், அத்தலைவர்கள் சர்க்காருடன் நடத்தும் காரியங்களுக்கு விரோதமாகவும் கிளம்பிவிட்டார்கள்.
மற்றும் ஒரு சாரார் தங்கள் ஜீவனத்துக்கு தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பிரமாதமாய்க் கருதி இருந்தவர்கள் தங்கள் கீர்த்திக்கும், புகழுக்கும், சுயநலத்துக்குமே காங்கிரசை வந்து அடைந்தார்கள்.
இதன் பயனாய் சட்டமறுப்பு நிறுத்தப்பட வேண்டும்; சட்ட வரம்பிற்கு கட்டுப்பட வேண்டும் என்கின்ற உணர்ச்சி நாட்டு மக்களுக்கு ஏற்பட்டு அந்தப்படியே காங்கிரஸ் கமிட்டி தீர்மானித்தது.
டாக்டர் அன்சாரியும், சட்டவரம்பிற்கு கட்டுப்பட்டு நடக்கும் முறையை கையாள ஒரு கூட்டம் கூட்டினார். உத்தியோகம் முதலியனவைகளில் நுழைய ஆசைப்பட்டவர்கள் இதில் கலந்தார்கள்.
பண்டிதர் ஜவஹர்லால் நேருக்கும், காந்தியாருக்கும், காரிய கமிட்டிக்கும் சமதர்மக் கொள்கை விஷயமாய் அபிப்பிராய பேதம் ஏற்பட்டது
இவற்றையெல்லாம் பார்த்தும் காங்கிரஸ் ஸ்தாபனத்தில் யோக்கியப் பொறுப்பற்ற தன்மை ஏற்பட்டு நிலவி வருவதையும், தமது கொள்கைகள் எதிர்க்கப்படுவதையும் தம்முடைய செல்வாக்கு குறைந்து வருவதையும் கண்டு காந்தியார் காங்கிரசிலிருந்து விலக வேண்டியவரானார்"
காங்கிரஸ் பிரபலஸ்தர்கவின் தந்திரம்
“தேசீயப் பத்திரிகைக்காரர்களுடன் காங்கிரஸ்காரர்கள் ரகசிய ஒப்பந்தம் அதாவது தாங்கள் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாகவும், ஓட்டர்களுக்கு அளித்த தங்களுடைய வாக்குறுதிகளுக்கு விரோதமாகவும், புதியஅரசியலை நடத்திக் கொடுக்கசர்க்காருடன் ஒத்துழைத்து உத்தியோகங்கள் ஏற்றுக் கொள்வதை ஆதரிக்க வேண்டுமென்றும், ஆதரிக்காவிட்டால் எதிர்க்கவாவது கூடாது என்றும் ஒப்பந்தம் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரசானது 1886 ம் வருஷத்திய நிலைக்கு தேசம் பின் செல்லக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது
ஹதம் செய்து விடுவது என வீர கர்ஜனை செய்தவர்கள் இப்போது அதை (அரசியலை) நடத்திக் கொடுக்கவும், உத்தியோகம் சம்பாதிக்கவும் அடிமையாகிவிட்டார்கள். இதுதான் இன்று திரைமறைவில் நடக்கும் காங்கிரஸ் நாடகமாகும். இதற்கு தாங்களும் சம்மதித்தவர்கள் என்று
குடி அரசு - 1935 (1) 266
பொதுஜனங்கள் நினைத்து தங்களையும் கேவலமாய் மதிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காக சில தலைவர்கள் விலகியதோடு அல்லாமல் இன்னும்
சில தலைவர்களும் விலகப் போவதில் ஆச்சரியமில்லை'' என்பதாக
எழுதியிருக்கிறது ஆகவே இப்போது காங்கிரசின் அரிய வேலையை தெரிய முடியாத மூடர்கள் யார்? அல்லது அதன் சூட்சிகளையும், தந்திரங்களையும் அறிய முடியாத மடையர்கள் யார்? தேசத்துரோகிகள்யார்? பித்தலாட்டக்காரர்கள் யார்? சர்க்காரை சரணாகதி அடைந்த மானங்கெட்டவர்கள் யார்? அயோக்கியர்கள்.
யார்? இழி மக்கள் யார்? கூலிகள் யார்? கோடாரிக்காம்புகள் யார்? என்பதை வாசகர்களே தயவுசெய்து யோக்கியமாய் உணர்ந்து கொள்ளுங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 28.04.1935
67— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
பெண்கள் நிலையம்
பெண்கள் நிலையம் என்பது பற்றி தோழர் இராகவன் அவர்கள் ஒரு அறிக்கை குடி அரசில் வெளியிட்டிருந்தார்.
அதைப் பற்றி பல தோழர்கள் நம்மை நேரிலும், கடித மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பல கேள்விகள் கேட்டு இருப்பதோடு தங்கள்.
தங்கள் அபிப்பிராயங்களையும், ஆதரவுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம்
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் பெண்கள் விடுதலையும், பெண்கள் முன்னேற்றமும் ஒன்று என்பது இயக்கத்தை
அறிந்த தோழர்கள் யாவரும் உணர்ந்ததேயாகும்
இயக்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் இதை தெரிவித்தே வந்திருக்கிறோம்
இந்திய நாட்டில் பெண்கள் சகல துறையிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் கஷ்டத்தையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.
இக்கொடுமைகளாலும், குறைபாடுகளாலும் பெண்கள் சமூகத்துக்கு ஏற்படும் கெடுதியைவிட ஆண்கள் சமூகத்துக்கே அதிகக் கெடுதி ஏற்பட்டு
வருகின்றது பெண்களை அடிமையாக வைத்து இழிவாய் நடத்துவதின் பயனாய் ஆண்களுக்கு ஒரு அளவு நன்மை இருக்கின்றது என்று மேலெழுந்தவாரியாய் தெரிகின்றதே தவிர, உண்மையாக ஆண்களுக்கு அதனால் அநேக பொருப்புகளும் கவலைகளும் அதிகமாகி வாழ்க்கையில் நிம்மதி என்பது இல்லாமலும், ஆண்கள், மக்கள் பிராயத்தில் அடைய வேண்டிய அறிவு, கல்வி, வீரம் முதலியவைகளை அடைவதற்கில்லாமலும் வளர்க்கப்பட வேண்டியவர்களாகி விடுகிறார்கள்.
மேல்நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் முதலிய குணங்களுக்கும், நம் நாட்டு ஆண் மக்களுக்கு இருக்கும் அறிவு, கல்வி, வீரம் ஆகிய குணங்களுக்கும் உள்ள வித்தியாசங்களுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் மேல் நாட்டு ஆண் மக்கள் அடிமையாய் வைத்து
குடி அரசு - 1935 (1) 268
இழிவாய் நடத்தப்படாத பெண்மணிகளால் - உலக அனுபவமும் கல்வி, அறிவு, சதந்திர உணர்ச்சியும் உள்ள பெண்மணிகளால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்.
நம் நாட்டு ஆண் மக்கள் என்பவர்கள் அடிமையாகவும், இழிவாகவும் நடத்தப்படும் பெண் யந்திரங்களால் - கல்வி - அறிவு - சுதந்திரம் ஆகியவை அடியோடு அற்ற பெண் உருவங்களால் பெற்று வளர்க்கப்படுகிறார்கள்.
இந்த தாரதம்மியமானது பெண்களை அடிமை கொண்டு நடத்துவதால் ஆண்களுக்கு எவ்வளவு லாபமும், சுயநலமும் இருந்தாலும் அவற்றிற் கெல்லாம் எத்தனையோ பங்கு அதிகமாய் நஷ்டமும் கெடுதியும் உண்டாகி
வருகின்றது அன்றியும்ஆண்கள் பெண்களை அடிமையாய் - அறிவற்றவர்களாய் வைத்திருப்பதனால் ஆண்களுக்கு பெண்களைக் காப்பாற்ற வேண்டிய பொருப்பும், பாதுகாக்க வேண்டிய பொருப்பும் அவர்களால் தாங்கள் “சுயமரியாதை”க்குக் கேடும் வராமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கவலையும், அவர்கள் மூலம் பெறப்பட்ட பிள்ளை குட்டிகளின் வளர்ப்பையும், கல்வியையும், செளகரியத்தையும், தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொருப்பும் அதிகமாவதோடு பொருளாதாரத் துறையில் சகல பாரமும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டியதுமாகி விடுகின்றது ஆகவே பெண்களை அடிமை கொண்டு இழிவாய் நடத்தித் திருப்தி அடைவதோ, லாபம் அடைவதோ என்பது ஒரு மூடநம்பிக்கையிலும், மூடப் பழக்க வழக்கங்களிலும் பட்டதே தவிர உண்மையில் அதனால் எவ்விதத் திருப்தியையோ, சாந்தியையோ, லாபத்தையோ ஆண்கள் அடைவதாக நமக்குத் தோன்றவில்லை.
கல்வி அறிவு, சுதந்திர உணர்ச்சி இல்லாத பெண்களிடம் அதாவது அடிமை கொண்ட பேதைப் பெண்ணிடம் அனுபவிக்கும் இன்பத்துக்கும், கூட்டு வாழ்க்கைக்கும், சுதந்திர உணர்ச்சியும், கல்வி அறிவும் உள்ள பெண்ணிடம் அனுபவிக்கும் இன்பத்துக்கும், கூட்டு வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் உண்டு. ஆதலால் பெண் மக்களை அடிமைத் தன்மையில் இருந்து விலக்கி அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியும், உலக ஞானமும், கல்வி அறிவும், கூட்டு வாழ்வில் சம பொருப்பும் ஏற்படும்படி செய்து விட்டோமேயானால் மனித சமூகத்தின் நன்மைக்கு செய்ய வேண்டிய காரியங்களில் பெரும் பாகத்தைச் செய்தவர்களாவோம். இதனாலேதான் ௬.ம. இயக்கம் இதுவரையில் பெண்கள் விஷயத்தில வெகு அதி தீவிரமான திட்டங்களை வலியுறுத்தி
வந்திருக்கின்றது; வருகிறது ஆகவே பெண்கள் விஷயத்தில் செய்கையில் செய்ய வேண்டியதற்கு அநேக காரியங்கள் இருக்கின்றன. இது வரையில் நாம் ஏதோ அங்கொன்றும், ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இங்கொன்றுமாக செய்து வந்திருக்கின்றோமே ஒழிய ஒரு நிலையான நிர்மாணமான காரியம் செய்து விட்டதாக சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றோம்
அந்தப்படி அவ்வளவு பெரிய மாறுதலான காரியத்தை நிலையான தாகவும், நிர்மாணமானதாகவும் நம்மால் செய்து விட முடியுமா என்று சிலர்
கேட்கலாம். நமக்கு ஒரு சமயம் அவ்வளவு பெரிய சக்தி இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், சிறிது செய்வதாயிருந்தாலும் சுயமரியாதைக் காரர்களாகிய நம்மால் தான் இது செய்ய முடியுமே ஒழிய மற்றபடி வேறு எவராலும் செய்ய முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது ஏனெனில் பெண்கள் விடுதலை விஷயத்தில் சுதந்திர விஷயத்தில் கல்வி ஞானம் சுதந்திரம் கொடுக்க வேண்டிய அளவு விஷயத்தில் நமது திட்டத்தில் ஒரு சிறு பாகமாவது ஒப்புக் கொள்ளுகின்றவர்களிடத்தில் தானே ஏதாவது கொஞ்சமாவது நாம் எதிர்பார்க்கலாம். அப்படிக்கில்லாமல். அதற்கு எதிரிகளாய் உள்ளவர்களிடத்தில் எதை எதிர்பார்க்க முடியும்? ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்கள் பெண்களுக்கு முழு
சுதந்திரம் கொடுக்க ஒப்புக் கொள்வதைக் காண முடியவில்லை எனவே இவ்விஷயத்தில் கவலை எடுத்துக்கொள்ளவேண்டியவர்களும், சிறிதாவது செய்யக் கூடியவர்களும் நாமாகவே இருப்பதால் நம்மால் முடியுமோ முடியாதோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும், முடிக்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லை என்கின்ற காரணத்தால் அந்த பொருப்பை எப்படியாவது நாம் தான் தலையில் போட்டுக் கொண்டு கூடிய அளவாவது செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இதைப் பற்றி
4, 5 வருஷகாலமாகவே சுயமரியாதைத் தோழர்களுடன் பல சந்தர்ப்பங்
களில் கலந்து பேசி வந்திருக்கின்றேன்.
1929 ம் ஆண்டில் எமது வீட்டில் ஒரு சங்கம் ஏற்படுத்தி வாரா வாரம் பெண்களுக்கு ஒருவிதப் பயிற்சிக் கொடுத்தும் வந்தேன். சில காரணங்களால் அது அடைபட்டுப் போயிற்று. ஆன போதிலும் மறுபடியும் அது விஷயமாய்க் கவலையுடன் யோசித்தே வந்திருக்கிறேன்.
பெண்களுக்கென்று ஒரு நிலையம் இருக்க வேண்டும் என்பதும், அவர்களில் ஒரு கூட்டத்தைப் பிரசாரத்துக்கு தர்ப்பித்தி செய்ய வேண்டும் என்பதும் அவசியம் செய்து தீர வேண்டிய காரியம் என்பதில் எனக்கு யாதொரு ஆக்ஷேபனையும் கிடையாது. ஆனால் அதற்கு தக்க நிர்வாகமும் வேண்டிய சாதனங்களும் மிகவும் அவசியமானது. அதற்கு இது வரையில் சந்தர்ப்பமும், செளகரியமும் இல்லாமலே இருந்து வந்திருக்கிறது என்னைப் பொருத்த வரை பத்திரிகை பொருப்பும் பிரசார காரியமும் எதிரிகளோடு மாரடிக்க வேண்டிய தொல்லை, விஷமப் பிரச்சாரத்துக்கு மார்பைக் கொடுக்கவேண்டிய கஷ்டமும் பகுத்தறிவு நூற்பதிப்பு மேல் பார்வையும் ஆகிய காரியங்கள் போதுமானதாகவே இருந்து வருகின்றது
குடி அரசு - 1935 (1) 270
பொருளாதாரவிஷயத்தில் யாரிடமும் எவ்வித உதவியும் எதிர்பாராமலே. இவ்வளவு காரியமும் இந்த 10, 15 வருஷ காலமாய் செய்யப்பட்டும்
வந்திருக்கிறது. இந்நிலையில் புரோகித மறுப்புச் சங்கம் என்னும் பேரால் ஏதோ ஒரு அளவுக்கு திருச்சியில் ஒரு ஸ்தாபனம் வேலை செய்து கொண்டும் வருகின்றது. அதுபோலவே இந்த ஸ்தாபனத்தையும், அதாவது தமிழ் நாட்டு பெண்கள் நிலையத்தின் முக்கிய பொருப்பையும் யாராவது ஏற்று
நிர்வகிப்பதாயிருந்தால் மற்றப்படி என்னால் கூடிய உதவியை செய்யத்
தயாராய் இருக்கிறேன்.
பெண்கள் நிலையமானதாலும் தீவிரமான திட்டங்களோடு நடத்தப்பட வேண்டியதானதினாலும் மிக மிக ஜாக்கிரதையுடனும், பொருப்புடனும் நடத்தப்பட வேண்டிய காரியமாகும்
ஆரம்பத்தில் எதிரிகளின் விஷமப் பிரசாரங்களுக்குக் கூடுமான வரை இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும்.
சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் பலரின் மனோ நிலை நாம் அறிந்திருக்கிறோம். ஆனதினாலேயே எதிரிகளுக்கு இடங் கொடுக்காமல். இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
பிறத்தியார் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று சொல்லுவார்கள் என்று நினைப்பவர்களால் ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது ஒரு அறிவு வாக்கியம் தான். ஆனால் அந்த வாக்கியம் பிறத்தியாருடைய மனதில் சில அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் ஏற்ற வேண்டிய சந்தர்ப்பத்திலும் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பது எனது அபிப்பிராயம்
ஆதலால் மிகவும் பொருப்புடனும், கவலையுடனும் இந்தக் காரியம்
ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அப்படிப்பட்ட ஒரு நிலையத்தை வெகு ஆர்வத்தோடு வரவேற்கிறேன்.
குடி அரசு - கட்டுரை - 28.04.1935
M வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
100-க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?
திருநெல்வேலி ஹிந்து காலேஜ்க்கு மதுரைத் தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லக்ஷரூபாய் தர்மமாகக் கொடுக்க முன்வந்து இருக்கிறார்.
இது அந்தக் காலேஜ் சாகுந் தருவாயில் இருப்பதைக் காப்பாற்ற இந்தச் சமயம் உயிர்ப் பிச்சை கொடுப்பதுபோல் ஆகும்.
இந்தப் பேருதவிக்கு தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரே ஒரு தயவைத்தான் நிர்வாகிகள் இடமிருந்து மாத்திரம் எதிர்பார்க்கிறார். அதாவது பள்ளி உபாத்தியாயர்களில் பகுதிப் பேர் பிரின்சுபால் உள்பட பார்ப்பனரல்லாதாராய் இருக்க வேண்டும் என்பதே. இதை தேசீயப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு வாழும் பத்திரிகைகள் ஆக்ஷேபிக்கின்றன. ஆனால் இவை மனப்பூர்வமாக ஆட்சேபிப்பதாக நாம் நம்பவில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயந்தே ஆட்சேபிக்கின்றன போலும்
தோழர்கள் சிவசாமி அய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பல பார்ப்பனர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் எத்தனை பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த பத்திரிகைக்காரர்களுக்கு தெரியாதா என்று கேட்கின்றோம் யாதொரு காரணமும் இல்லாமல் சிவசாமி அய்யர் பள்ளிக்கூடத்தி லிருந்து குஞ்சிதம், பி.ஏ., எல்.டி. அம்மாளை வீட்டுக்குப் போகும்படி சொல்லி விடவில்லையா? என்று கேட்கின்றோம். அவர்கள் ஒரு வருஷ காலமாய் உத்தியோகம் இல்லாமல் திண்டாட வில்லையா என்று கேட்கின்றோம். இன்று பள்ளிக்கூட உபாத்தியாயர்களில் 100க்கு 10 பேராவது தாழ்த்தப்பட்ட வகுப்பார் முஸ்லீம்கள் உள்பட பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களாய் இருக்கிறார்களா? என்று கேட்கின்றோம். இன்று எத்தனை பார்ப்பனர் அல்லாத உபாத்தியார்கள் சாப்பாட்டுக்குத் திண்டாடு கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியாதா?
மற்றும் பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் இருக்கும் எந்தப் பள்ளிக் கூடத்திலாவது பார்ப்பனரல்லாத உபாத்தியார்களை வைத்திருக்கிறார்களா. என்று கேட்கின்றோம்
குடி அரசு - 1935 (1) 27:
ய்
காலேஜ்களில் வாத்தியார் வேலை என்பது இந்தக் காலத்தில் வருஷத்தில் 125 நாள்கள் தினம் 5 மணி நேரம் “பாடு'பட்டுவிட்டு யாதொரு பொருப்பும் இல்லாமல் பாப்பாத்தி அம்மா மாடு வந்ததா? என்று கேட்டுவிட்டுப் போவது போல் ஆஜர் கைராஜர் பட்டியலில் கையெழுத்திட்டு மாதம் 70, 80, 100, 150, 300, 500 ரூபா சம்பளம் வாங்கும் வேலை அல்லாமல் பிள்ளைகள் படிப்புக்கு ஏதாவது பொருப்பு உண்டா? 100க்கு
5 பிள்ளைகளாவது சர்க்கார் பரீட்சையில் பாசாக்க பொருப்பு உண்டா?
இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகள் பெற்றோர்கள் 3ல் 2 பாகம் பேர் பார்ப்பனரல்லாதார்கள் நெற்றி வேர்வை நீராகக் கொட்ட பாடுபட்ட பணத்தைக் கொடுத்து தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறவர்கள் அல்லவா என்று கேட்கின்றோம். பிள்ளைகள் படிக்க வைக்கப்படுவது அறிவுக்கும் சுதந்திரத்துக்கும் அஸ்திவாரத்துக்குத் தானே ஒழிய அடிமைக்கும் மூடப் பழக்கத்துக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?
பார்ப்பனன் ஒருவன் தன்னை பிராமணர் என்று சொல்லிக் கொள்ள உரிமை வேண்டியவனாய் இருந்தால் அவன் சாஸ்திரப்படி பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தால் சண்டாளனாய் விடுகிறான் என்ற முடிவைக் கொண்டவனாகவே இருப்பான். அதுவே இந்து மத சாஸ்திர முடிவு. அப்படிப்பட்ட பார்ப்பனர் பள்ளிக்கூட உபாத்தியாயர் வேலைக்கு வருகிறானென்றால் வயிற்றுக் கொடுமைக்காக பணம் சம்பாதிக்கவும் சாஸ்திரப்படி நடப்பதின் மூலம் உண்மையாக பாடுபடாமல் ஏமாற்றி நேரம் போக்கவுமே ஒழிய யோக்கியமான பார்ப்பனர் எவனும் படித்துக் கொடுக்கவே கூடாது. படித்துக் கொடுக்கவும் மாட்டான்.
இப்படி இருக்கும்போது 100க்கு 50 பேர்களாவது பார்ப்பனர் அல்லாத உபாத்தியாராய் இருக்க வேண்டும் என்றால் இதில் யாருக்கு எங்கே மாட்டிக் கொண்டது என்பது நமக்கு விளங்கவில்லை
விருதுநகர் மகாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவை ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் அமுலில் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்ததும், அதை ஸ்தல ஸ்தாபனம் மந்திரி ஒப்புக் கொண்டதும், அந்தப்படி ஸ்தல ஸ்தாபனங்களுக்கு உத்திரவு போட்டிருப்பது பற்றி இந்த தேசீயப் பத்திரிகைகள் ஏன் ஆட்சேபிக்கவில்லை என்று கேட்கின்றோம்
ஸ்தல ஸ்தாபனங்களில் வகுப்புவாரி உத்திரவு என்றால் அது ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்கள், ஹைஸ்கூல்கள், காலேஜுகள் எல்லாம் சேர்ந்து தானே ஒழிய இவைகள் நீங்கிய மற்றவைகள் என்றல்ல. ஆகையால் பள்ளிக் கூட உபாத்தியாயர்கள் மாத்திரமல்லாமல் பள்ளிக்கூடப் பிள்ளைகள்கூட வகுப்புவாரி எண்ணிக்கைப்படிதான் படிக்க வைக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். அப்பொழுதுதான் கல்வியில் சமதர்மம் வழங்கியதாகும். 73 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
விருதுநகர் மகாநாட்டில் ஸ்தல ஸ்தாபன பள்ளிக் கூடங்கள் தவிர சர்க்காரால் அனுமதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கும், சர்க்கார் உதவித் தொகை: பெரும் பள்ளிக் கூடங்களுக்கும் வகுப்புவாரி கிரமப்படி உபாத்தியாயர்கள். போடப்பட வேண்டும் என்றும் அந்தப்படி போடப்படாத பள்ளிக்கூடங்களுக்கு பொது ஜனங்கள் வரியில் இருந்து கிராண்டுகள் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கல்வி மந்திரியும், மகாநாட்டுத் தலைவரும் தற்சமயத்துக்கு நிருத்தி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால் பின் வாப்பீஸ் வாங்கிக் கொள்ளப்பட்டது
இவ்விஷயம் விருதுநகர் நடவடிக்கையிலும் ஈ.வெ.ரா. விருதுநகர். உபன்யாசத்திலும் பார்க்கலாம்
பார்ப்பனரல்லாதார் கட்சி - ஜஸ்டிஸ் கட்சி என்பது உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்கு முக்கியமான அவசியமே சகல துறையிலும் வகுப்பு உரிமையும் வகுப்பு நிதியும் வகுப்பு பிரதிநிதித்துவமும் வழங்க வேண்டும் என்பதேயாகும்
அந்தக் கொள்கை ஜீவாதாரமானதாக இல்லையானால் ஜஸ்டிஸ்
கட்சி ஒழிந்து போவதில் நமக்கு கவலை யில்லை.
இதற்கு ஆக தான் அக்கட்சியை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டும், கூலிவாங்கிக் கொண்டும் பிழைக்கும் ஆளுகளாகிய காங்கிரஸ்காரர்களுடனும், தேசீயவாதிகளுடனும் தென் இந்திய பார்ப்பனர்கள் உடனும் இந்த 12 வருஷ காலமாய் தோழர் ஈ.வெ.ரா.வும் சுயமரியாதை இயக்கமும் போர்
புரிந்து வந்தது. இனியும் போர் புரிவதற்கும் முக்கிய காரணமுமாகும்
இந்தப்படி போர் புரிந்தே தான் கடைசியாக ஒரு அளவுக்கு
வெற்றியும் பெற்று தீர்ந்தது
இன்றும் காங்கிரசுக்கு தென்னாட்டில் உள்ள வேலையும் இந்தியாவில் அது உயிருடன் இருப்பதற்கு அந்தரங்க காரணமும், அது அதி தீவிர கொள்கை வேஷம் போட வேண்டிய அவசியமும் இந்த வகுப்புவாரி உரிமையை ஒழித்து பார்ப்பன சர்வாதிகார ஏகபோக ஆதிக்கம் இருக்கச் செய்ய வேண்டும் என்கின்ற ஒரே ஒரு எண்ணமல்லாமல் வேறு ஒன்றுமே இல்லை என்று எங்கிருந்து வேண்டுமானாலும் கூறுவோம்
சர்க்காருடன் “ஒத்துழைப்பதோ'' மந்திரிகளுடன் “குலாவுவதோ” 'ஆளுவோரிடம் சரணாகதி அடைவதோ'' என்பனவாகியவைகள் எல்லாம் இந்த வகுப்புவாரி உரிமையை சரிவர நடத்தி வைக்கவும் இதன் எதிரிகளின்
சூட்சிகளிலிருந்து தப்புவித்து அதை நிலை நிறுத்தவும் முக்கிய கருத்துக் கொண்டே ஒழிய வேறில்லை.
ஏனெனில் வகுப்பு நியாயத்தையோ சமதர்ம மார்க்கமாகவும், பொதுவுடமைக்கு அஸ்திவாரமாகவும் கொண்டு இருக்கிறோம்.
குடி அரசு - 1935 (1) 274
ஆகையால் தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் இந்த நிபந்தனையுடன். தனது ஒரு லட்ச ரூபாயை செலவிடுவது அண்ணாமலை சர்வ கலா சாலையார் 30 லட்ச ரூபாய் செலவிட்டதற்கு எத்தனை பங்கு மேலான பிரயோஜனமுள்ள செலவாகும் என்று சொல்லுவதோடு பணம் படைத்த மற்ற பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் திரவியம் பிள்ளை புத்தியில்
16-ல் ஒரு பங்காவது வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.04.1935
75 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்
தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து சென்னைக்குப் பிழைக்க வந்தவர். சரோஜினி அம்மையார் தலைமையில் நடந்த காஞ்சிபுரம் அரசியல் மகாநாட்டில் பெசண்டம்மையாரை வைததின் மூலம் முதல்முதலாக தலைகாட்டப்பட்டவர். அவரது வசவின்' பெருமையை அறிந்து 'இந்து' 'சுதேசமித்திரன்' பத்திராபதிபர்களால் விலைக்கு வாங்கப்பட்டு அப்பத்திரிகைகளின் மூலம் தூக்கிவிடப்பட்டு பிரபலமடைந்தவர். அய்யர் - அய்யங்கார் சண்டையில் அய்யங்கார்களின். ஆயுதமாக இருந்து தோழர்கள் சி.பி. அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என். சர்மா, இந்தியன் ரிவ்யூ நடேசன் ஆகியவர்களை வைது ஐயங்கார்களால் பணமுடிப்பு முதலியவை பெற்று பெரிய அரசியல்வாதியாகி அப்புரம் ஒத்துழையாமையையும், நிர்மாணத் திட்டத்தையும் காரியத்தில் நடை பெருவதை ஒழிக்க இந்து, மித்திரன் பத்திராதிபர்கள், சத்தியமூர்த்தியை உபயோகித்துக் கொண்டதின் மூலம் அவர் எல்லா இந்திய அரசியல்வாதியாக விளம்பரம் பெற்று சுயராஜ்ஜியக் கட்சியால் அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு, இப்போது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் முதல் வரிசையில் “முதல்” ஆளாக தன்னை செய்து கொண்டு விளம்பரமும் பெற்று இருக்கிறார்.
இந்திய சட்டசபை மெம்பரானதின் மூலம் அவரே தமிழ்நாட்டுத் தலைவராகவும் ஆகி விட்டார். ராஜகோபாலாச்சாரியார் துரவு நாடகத்தின் பயனாய் தலைவர் (வேஷம்) இவருக்கே வரப் போகிறது
இப்படிப்பட்ட பெரியார் டெல்லியில் இருக்கும்போது சென்னை மேயர் முத்தையா செட்டியாருக்கு டெல்லியில் ஒரு விருந்தும் நடத்தினார். இதில் ஆச்சரியம் எதுவும் இருக்க முடியாதல்லவா?
ஆகவே இருவரும் டெல்லியில் இருந்து வந்தவுடன் அண்ணாமலை யுணிவர்சிட்டிக்கு தோழர் மேயர் முத்தையா செட்டியாரால் தோழர். சத்தியமூர்த்தியார் வைஸ்சேன்சலராக நியமிக்கப்பட்டு இப்போது அந்த யுனிவர்சிட்டிக்கு ஒரு ஒப்பற்ற ஆபரணமாய் இருந்து அதை அலங்கரிக்கிறாராம்.
ஆகவே தோழர் சத்தியமூர்த்திக்கு அடித்த பிரைஸ் இது வரையிலும் தமிழ்நாட்டில் ஒருவருக்கும் அடித்ததாக நமக்கு ஞாபகமில்லை
குடி அரசு - 1935 (1) 276
கூடிய சீக்கிரத்தில் சத்தியமூர்த்தியாருக்கு அந்த யுனிவர்சிட்டியில் டாக்டர் பட்டமும் கிடைக்கக் கூடும் என்பதாக நிழல் தெரிகிறது. இனி அவர் மந்திரி ஆகப் போகும் விஷயமும் 100-க்கு 50 பங்கு உறுதியாய் விட்டது எப்படி எனில் சத்தியமூர்த்தியார் ஏற்றுக் கொள்ள சம்மதித்து விட்டார்.
குடி அரசு - கட்டுரை - 28.04.1935
277௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மே தினக் கொண்டாட்டம்
சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும் - மேமாதம் 1ம் தேதியை “தொழிலாளர் தின”மாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள்.
பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப்
படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (Ergotacracy) அதாவது தொழிலாளர் குடிஅர (Proletarian democracy) சாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது
இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் மூதல் தேதி கொண்டாடப்பட்டது
பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21-ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது
சம. வீரர்களே! சம தர்மிகளே! தொழிலாளர்களே! தொழிலாளிகளின். தோழர்களே! இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன்.
தேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இங்ஙனம்,
ஈ.வெ. ராமசாமி.
குடி அரசு - அறிக்கை - 28.04.1935
குடி அரசு - 1935 (1) 278
புதிய “தேசத் துரோகிகள்?
நேற்று வரை காங்கிரசின் சர்வாதிகாரியாய் இருந்த தோழர் ராஜேந்திர பிரசாத்திடம் சார்ஜ் ஒப்புக் கொடுத்த தோழர் ஆனே அவர்கள் இன்று தேசத் துரோகக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டார். அதாவது ஜயகருடன் சேர்ந்து விட்டாராம். அது மாத்திரமல்லாமல் ஆனே அவர்கள் வைசிராய் பிரபுவின் விருந்துக்குச் சென்று விட்டாராம். கடைசியாக ஒத்துழைக்கவும் போகிறாராம். இந்தக் காரணங்களால் அவர் தேசத் துரோகியாகி விட்டார்.
தேசத் துரோகிகளுக்கு சன்னதுகள் நமது காங்கிரஸ்காரர்களிடம் தான் இருக்கிறது போலும். காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் சென்று உத்தியோகம் ஏற்று சீர்திருத்தங்களை நடத்திக் கொடுப்பது என்பது ஒத்துழைப்பு அல்லவாம். சரணாகதி அல்லவாம். ஏனெனில் ஒத்துழைப்புக்கு அர்த்தம் சொல்லும் அகராதி காங்கிரஸ்காரர்களுடையது. அதிலும் சென்னைப் பார்ப்பனர்களுடையவும், அவர்களுடையபத்திரிகைகளுடையவும் அவர்களது கூலிகளுடையதுமாய் இருப்பதால் அவர்கள் பார்த்து எதை வேண்டுமானாலும் ஒத்துழைப்பு என்று சொல்லி விடலாம் - எதை வேண்டுமானாலும் ஒத்துழையாமை என்றும் சொல்லி விடலாம்.
ஆகவே தேசத் துரோகிகளுக்கு முத்திரை இடும் அதிகாரம் இப்போது அவர்களுடையதாகிவிட்டது போலும்
குடி அரசு - செய்தி விமர்சனம் - 28.04.1935
79 ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
காரைக்குடியில் சு.ம. திருமணம்
பெண்கள் நிலையம் அவசியம்
தோழர்களே!
திருமணத்திற்கு பிறகு திருமணத்தை பாராட்டிப் பேசிய அநேகர் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லி இருப்பதோடு அவற்றிலிருந்து பல புதிய விஷயங்களும் வெளியாகியிருக்கின்றன. இத் திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கு அநேக இடையூறுகளும் பல தொந்தரவுகளும் ஏற்பட்டிருப் பதாகத் தெரிகிறது
பெண் ஒரு மாத காலமாக தோழர் நீலாவதி அம்மாள் வீட்டில் இருந்திருக்கிறது என்பதும், பெண்ணைச் சேர்ந்தவர்கள் பெண்ணை திருப்பிக் கொண்டு போவதற்கு பலவிதமான தொந்தரவுகள் செய்து இருப்பதாகவும் பிறகு அங்கிருந்து பெண் வேறு இடத்திற்கு கொண்டு போகப்பட்டு ஒரு வாரம் வரையிலும் மறைத்து வைக்க வேண்டியிருந்தது என்பதும், தோழர் ராம சுப்பிரமணியம் பேசியதிலிருந்து தெரிய வந்தது அதுபோலவே மணமகன் விஷயத்தில் மணமகனைச் சேர்ந்தவர்கள் திருமணம் நடக்கவொட்டாமல் செய்வதற்காக வேண்டிய முயற்சிகள் செய்யக் கருதி அதற்காக கோர்ட்டு நடவடிக்கைகள் நடத்தவும் தடையுத்தரவு வாங்கவும் முயற்சித்தார்கள் என்பதும் ஒன்றும் முடியாது போனதும், அதன் பிறகு மாப்பிள்ளையை சுமார் 15 நாள் வரை மறைத்து வைத்திருந்ததாகவும் தோழர் வக்கீல் ஈப்பன் அவர்கள் பேசியதிலிருந்து தெரிய வந்தது.
இத் திருமணத்துக்கு மணமகனுக்கு உதவியாய் இருந்து இவ்வளவு தூரம் நடந்தேர தைரியம் கொடுத்தவரும் ஒரு அளவுக்கு ஆதிகாரணஸ்தராய் இருந்தவரும் தோழர் வக்கீல் லட்சுமிதரன் பாரதியார் என்றும் தெரிய
வருகிறது
இன்னும் பல விஷயங்களும் தெரிய வருகிறது
ஆனால் இவ்வளவு பெரிய கஷ்டங்கள் ஏற்பட இத்திருமணம் என்ன அவ்வளவு தப்பிதமான காரியம் என்பது நமக்கு விளங்கவில்லை.
கலப்புமணம் செய்து கொள்ளுகிறார்களே என்பதற்கு ஆகவா அல்லது விதவை திருமணம் நடக்கின்றதே என்பதற்கு ஆகவா என்பது எனக்கு விளங்கவில்லை
குடி அரசு - 1935 (1) 280
கலப்பு மணம் என்பது இந்திய நாட்டில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதும், வேத புராண காலங்களில்
இருந்தும் ஸ்மிருதி, சுருதி ஆகியவைகளால் அனுமதிக்கப்பட்டும் நடந்து வருகின்ற காரியம் தானே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் மாத்திரம்
ஆரம்பித்து நடத்துவதாகச் சொல்லிவிட முடியாது ஆகையால் கலப்பு மணம் என்பதை எந்த மதக்காரர்களும் ஆக்ஷபிப்பதர்க்கு இடமில்லை.
அன்றியும் இன்று பிரதியக்ஷ அனுபவத்திலும், மதவாதிகளுக் குள்ளாகவே கலப்பு மணங்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டு வருகின்றதை நாம் பார்க்கின்றோம்
டாக்டர் பி.சுப்பராயன் முதல் மந்திரியாய் இருந்தவர் ஒரு வேளாளர். அவர் சுமார் 20 வருஷங்களுக்கு முன்பே ஒரு பார்ப்பனப் பெண்ணை மணந்திருக்கிறார்.
சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் என்கின்ற பார்ப்பனர் சர்க்காரில் லோக்கல் முனிசிபல் மந்திரியாய் இருந்தவர். அவரும் 20 வருஷத்துக்கு முந்தியே ஒரு நாயர் பெண்ணை மணந்தார்.
ஒரு ரெட்டியார் சென்னையில் வேறு ஜாதி முத்துலெக்ஷிமி அம்மாளை மணந்திருக்கிறார்.
சென்னையில் 2, 3 நாள் ஹோம் மெம்பராய் இருந்த வெங்கட்ராம சாஸ்திரியர் குமாரர் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணை நல்லமுத்தம்மாளை மணந்திருக்கிறார்.
சென்னையில் இந்துமத பரிபாலன போர்ட் தலைவர் சூரியராவ்
நாயுடு புதல்வி ஆர். லக்ஷிமி தேவி அம்மாள், பி.ஏ. சென்னை போலீஸ்
டிப்டி கமிஷனர் ஜயநுதீன் சாயபு, பி.ஏ. (முஸ்லீமை) மணந்திருக்கிறார்.
நெல்லூரில் ஒரு அய்யங்கார் பெண் ஒரு சாயபுவை மணந்திருக்கிறார்.
சென்னையில் நீலகண்ட சாஸ்திரியார் பெண் ருக்மணி அம்மாள் ஒரு ஐரோப்பியரை மணந்திருக்கிறார்.
சரோஜினி தேவி பார்ப்பனப் பெண் 35 வருஷங்களுக்கு முன்பே ஒரு டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடுவை மணந்திருக்கிறார்.
இப்படியாக “பெரிய இடங்களிலேயே அனேகம் கலப்பு மணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் சுயமரியாதைக்காரர்கள் என்றோ நாஸ்திகர்கள் என்றோ சொல்லிவிட முடியாது
இந்துக் கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகள்கூட முஸ்லீம் பெண்ணையும், தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களையும் மணந்திருப்பதாக ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
ஆஸ்திகர்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மற்றும் அவர்களுடைய ரிஷிகள், முனிவர்கள் 100க்கு 100 கலப்புமணக்காரர்களாகவே இருந்திருக் கிறார்கள். அப்படி யெல்லாம் இருக்க கலப்பு மணத்தைப் பற்றி அதிசயப் படுவதோஆகேடிப்பிப்பதோ உலகனுபவம் தெரியாததும் அறிவில்லாததுமான செய்கை என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர மற்றபடி அதில் எவ்வித கெடுதியோ ஆக்ஷ்பணையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை
ஒரு சமயம் விதவா விவாகள் செய்து கொண்டது குற்றம் என்று சொல்லப்படுமானால் அதுவும் அறியாமை என்றுதான் சொல்ல வேண்டும்.
உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இந்து மதத்திலும் விதவை மணம் ஒப்புக் கொள்ளப்படுகின்றது.
இந்தியாவிலும் இந்து மதத்திலும்கூட அநேக ஜாதிகளில் விதவை மணம் அனுமதிக்கப்பட்டும் நடந்தும் வருகின்றது
சில ஜாதிகளில் வழக்கமில்லையென்றாலும் தோழர் ஆ. ராம சொக்கலிங்கம் செட்டியார் அவர்கள் பேசியதில் தங்கள் வகுப்பில். வெளிப்படையாய் விதவை மணம் இல்லையே ஒழிய விதவைப் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மாத்திரம் தெரியும்படி ஆயிரக்கணக்கான மணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன என்று சொன்னார். இந்த மாதிரி மணம் அந்த வகுப்பில் மாத்திரம் என்றும் சொல்லிவிட முடியாது விதவைகளாக இருக்க அனுமதிக்கப்பட்ட எந்த வகுப்பிலும், விதவை மணம் அனுமதிக்கப்படாத எந்த வகுப்பிலும் சர்வசாதாரணமாய் “கண்டாலும் காணவில்லை” என்றும் “கண்டுதோ காணலையோ' என்றும் சொல்லும் முறையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை யாரும் தப்பு என்று சொல்லிவிட முடியாது. இது இயற்கையின். ஆட்சியேயாகும்
தோழர் நித்தியானந்தமவர்கள் பேசியதில் இந்தக் காரைக்குடி நகரில் 2400 இரண்டாயிரத்து நானூறு விவசாரிகள் இருப்பதாக சர்க்கார் கணக்கில் இருப்பதாய் ஒரு பெரிய சர்க்கார் அதிகாரி சொன்னதாக சொன்னார்.
இந்த 2400 பெண் விவசாரிகளும் எந்த சாமி பேருக்காவது பொட்டுக் கட்டி விவசாரிகளாக ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா?
காரைக்குடி ஜனசங்கியை 20000 ஆனால் இதில் 10000 தான் பெண்கள் இருக்க முடியும். அந்தப் பெண்களிலும் சரி பகுதிப் பேராவது குழந்தைகளாக கிழவிகளாய் இருக்கக் கூடும். மீதி 5000 பெண்கள் உள்ள காரைக்குடியில் 2400 பெண்கள் விவசாரிகள் என்றால் இவர்களில் குறைந்தது 3ல் 2 பாகம் 1600 பேராவது முதலில் விதவைகளாக இருந்து இரகசிய மணம் செய்து பிறகு அம்பலத்துக்கு வந்து விவசாரிகள் ஆயிருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்
குடி அரசு - 1935 (1) 28
&
மற்றும் தோழர்ஜீவானந்தம் அவர்கள் பேசியதில் ஊரணிக்கேணியில்
வாரத்துக்கு 4 குழந்தை 5 குழந்தை செத்து மிதக்குகின்றது என்று சொன்னார்.
இதுவும் பார்ப்பனர்களே சுற்றியிருக்கிற சென்னை பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்திலும் மற்றும் அநேக புண்ணிய தீர்த்தங்கள் என்பவைகளிலும் காணக்கூடிய காட்சியே யாகும்
தோழர் பொன்னம்பலம் பேசுகையில் அனேக சமூகங்களில் கலப்பு மணம் செய்து கொள்ளுவதற்கு இருக்கும் கஷ்டம் விவசாரித்தனம் (வெளிப்படையாய்) செய்வதற்கு இல்லை என்றும் விவசாரித்தனம் என்பதை வெகு சாதாரணமாய் அனுமதிக்கப்படுகிறது என்றும் ஓடிப்போன விதவைப் பெண்களைக் கூட்டி வந்து ஜோடியாகக் கூட வசிக்கவே அனுமதிக்கிறார்கள் என்பதோடு செலவுக்கும் கொடுக்க சம்மதிக்கிறார்களே ஒழிய அதற்கு கல்யாணம் செய்வதென்றால் அது பெரிய தவறான காரியம் என்று மதிக்கிறார்கள் என்றும் சொன்னார். ஆகவே இவைகளையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் விதவையாய் இருக்கும் எந்தப் பெண்ணும் விதவைப் பெண்களை வைத்து இருக்கும் எந்த வீட்டுக்காரரும் எந்தசமூகத்தாரும் வெட்கப்பட வேண்டுமே ஒழிய வேறில்லை.
எதற்காக ஒரு பெண் விதவையாக இருப்பது என்பது எனக்கு விளங்கவில்லை. விதவைத் தன்மை என்பதை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்பது எனது வெகு நாளைய அபிப்பிராயமாகும். ஏனெனில்,
விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விவசாரித்தனத்தை தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்ல வேண்டும் அனேக விதவைகள் தங்களுக்கு போக்கிடமில்லாமல் சித்திரவதை போன்ற துன்பம் அனுபவிக்கின்றார்கள்
பெண்கள் நிலையம்
ஆதலால் சுயமரியாதை இயக்கக்காரர்களாகிய நாம் அங்கொரு விதவை மணம், இங்கொரு விதவை மணம் வீதம் செய்வதாலேயே விதவைக் கொடுமைகள் ஒழிந்து விடாது
தோழர்கள் ஆ. ராம. சொக்கலிங்கம் செட்டியார், ஜீவானந்தம், நீலாவதி ஆகியவர்கள் சொன்னது போல் ஒரு பெண்கள் நிலையம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு விதவைகள் விஷயத்தில் அனுதாபம் இருக்கின்ற மக்கள் பலவிதத்திலும் உதவி புரிய வேண்டும் வயது சென்ற பல விதவைப் பெண்கள் அந்நிலையத்து மேல் பார்வைக்கு வரவேண்டும். பெரும் குடும்பங்களில் அவஸ்தைப்படும் 83— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
விதவைப் பெண்களை தாட்டிக் கொண்டு வரவேண்டும். அவர்களுக்கு கல்வி, தொழில் முதலியவைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் கலியாணம் வேண்டியவர்களுக்கு கலியாணம் செய்து வைக்க வேண்டும். கல்யாணம் வேண்டாதவர்களைப் பிரசாரத்துக்கு பழக்கி பிரசாரம் செய்யச் செய்ய வேண்டும். இந்தக் காரியங்கள் சுயமரியாதைக்காரர்கள் செய்தால் தான் உண்டு. மற்றவர்கள் செய்யவே மாட்டார்கள். ஆதலால் கூடுமானவரை செய்வதற்கு உடனே முயற்சிக்க வேண்டும். தோழர்கள் நீலாவதி, வைசு. ஷண்முகம், மு. அருணாசலம், ஆ, ராம. சொக்கலிங்கம் முதலியவர்கள். இவ்விஷயத்தில் மிக ஆர்வமாய் இருக்கிறார்கள்.ஆதலால் அவர்கள் செய்யும் முயற்சிக்கு மற்றவர்கள் கூடுமான உதவி செய்ய வேணுமாய் கோருகிறேன்.
குறிப்பு: 19.04.1935 ஆம் நாள் காரைக்குடி முத்துப்பட்டணத்தில் திறாச்சி புரோகித மறுப்பு சங்கத்தின் சார்பாய் நடைபெற்ற தோழர்கள் நாராயணசாமி - ரெங்கநாயகி விதவா விவாக திருமணத்தில் தலைமைவகித்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 28.04.1935
குடி அரசு - 1935 (1) 284
“@ynm” நவமி!
ஸ்ரீராம நவமி உர்ச்சவத்தில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஸ்ரீராம நவமி என்பது ராமன் பிறந்ததை கொண்டாடுவதாலும்,
ராமன் பிரவியைப் பற்றி நாம் இப்போது ஏதும் பேச வரவில்லை:
ராமன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கதையின் யோக்கியதை என்ன? அவன் எப்படிப்பட்டவன்? அவனுக்கும் தமிழ் மக்களாகிய திராவிட மக்களுக்கும் இருந்து வந்த சம்பந்தம் என்ன? என்பவைகளைப் பற்றி தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்
இவ்வாரம் 22-ந் தேதி தமிழ்நாடு பத்திரிகைகளில் காணப்படும் சேதிகளில் ஒன்று தோழர் ஐவார்லால் நேருவும் ராமாயணத்தைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பாகும். அதில் ராமன் ஆரியன் என்றும், ராமாயணத்தில் வானரர்என்று சொல்லப்படுபவர்கள் திராவிடமக்கள் என்றும் எழுதி இருக்கிறார்.
ராமன் திராவிடப் பெண்ணாகிய தாடகையை பெண் என்று கூட பாராமல் கொன்றவன். ராவணன் தங்கையாகிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சூர்ப்பநகையை மூக்கையும், காதையும் அறுக்கச் செய்த யோக்கியன்.
ராவணனைக் கொல்ல சதி செய்ததில் ராவணன் தம்பியையும், வாலி தம்பியையும் சுவாதினம் செய்து அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, உளவரிந்து ராவணனைக் கொன்றவன். இதனால் ராவணன், ராக்ஷசனானான். அவன் தம்பி விபூஷணன் ஆழ்வாரானான்.
அது போலவே வாலி வானரமானான்; தம்பி சுக்ரீவன் சுக்ரீவ ஆழ்வாரானான்.
“குரங்காகிய'” அனுமார் சிரஞ்சீவியாகவும், ஆரியர் வணங்கும் தெய்வமாகவும் ஆனான். ராமன் ஆரியன் என்றும், ராவணன் திராவிட மன்னன் என்றும், திராவிட மக்களைத்தான் வானரர்கள், குரங்குகள் என்றும் பெயர் வைத்து ஆரியர்கள் ராமாயண கதை எழுதி இருக்கிறார்கள் என்றும் நூத்துக்கணக்கான பாடப் புத்தகங்கள் (இந்து தேச சரித்திர முதல்) பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்டவைகள் இன்னும் பள்ளிக்கூடங்களில். பாடமாக இருக்கின்றன. 85— ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இந்த நிலையில் ஸ்ரீராம நவமி பண்டிகையை திராவிட மக்கள் ஆரியரல்லாதவர்கள் கொண்டாடுவது என்பது சுயமரியாதையற்ற மானங் கெட்டத்தனமா அல்லவா என்று கேட்கின்றோம்.
இந்துக்களுடைய ஒவ்வொரு பண்டிகை என்பதும் பார்ப்பனப் பிரசாரமேயாகும்.
இம்மாதிரி பிரசாரங்களே தான் இம்மாதிரி பண்டிகைகளைக் கொண்டாடுவதே தான் இன்று பார்ப்பன ஆதிக்கத்துக்கு முக்கிய காரணங்களாய்
இருந்து வருகின்றன.
இந்தக் காரணங்களே தான் பார்ப்பனர்களுக்கு ஓட்டு கிடைக்கவும் சாதகமாய் இருக்கின்றன.
எலக்ஷனுக்காக வெளியிட்ட சுவரொட்டி விளம்பரத்தில்கூட அனுமாரைப் போட்டதும், எலக்ஷன் கூட்டங்களில் உதாரணங்கள் மூலம் புராணப் பிரசாரங்கள் நடத்தினதும் இன்றும் நாளையும் பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பன கூலிப் பத்திரிகைகளும் புராணப் பிரசாரங்கள் செய்வதும் எல்லாம் தமிழ் மக்கள் ஸ்தாபனங்கள் சுயமரியாதை இழந்து பார்ப்பனர்களுக்கும், விபூஷணர், சுக்ரீவன், அனுமான் போன்ற பார்ப்பனரடிமைகளுக்கும், ஓட்டுப் போடவுமே தானே ஒழிய வேறில்லை. ஆகையால் தமிழ் மக்களே ஸ்ரீராம நவமி கொண்டாடுகிறீர்களே வெட்கமில்லையா?
குடி அரசு - கட்டுரை - 28.04.1935
குடி அரசு - 1935 (1) 286
அனு தவளி
eason Reg. No. 3066. 1985.G மோனி 1-௨ வெளியாக
விஷய அட்டவணை,
வேண்டுகோள்.
ந்ததிவுர்சங்கங் காவாகச்சேர்வதோ
செர்த்து அப்பும்படி கேட்டுக் கொள்ளுவோம்,
“REASON”
This is the only Rationalist monthly Magazine in Tamil Nadu.
மாதகவெனியிடு,
- 100 வருட சத்தா . வெள் தாக o உல ளிய o உட e s CINACLENE M NN லவ BN SR N இறுகக் Pristod ஊர் Pobiehsd by B. V. Krishavny வங்க கவ் விபட Press, Beode.
பகுத்தறிவு.
பகுத்தறிவு நாற்பஇப்புக் கழகத்தினின்று
வெளிவரும் ஓர் மாத வெளியீடு, —_—
அறிவுடையர்ர். எல்லாம உடையரர்; அறிவிலார் என் உடையரேணும் இலர், (@par)
மலர் 1. | ஈரோடு 1985 மே 1, | இதழ் 1,
பருத்தறிவின் மாட்சி,
(இராகம்--வரானி, தாளம்-- இ.)
பல்லவி,
பசடுவேோசமே--துன்னிப்--பாடுவேோசமே பருத்தறி வுணர்ச்சியைப் பெற்று விட்டோமென்று [பாடுவோமே]
சரணங்கள்,
1. மூடுபணி போன்றமதச்
காட்சி கண்டோம்-- உண்மை நன்னர் விஞ்ஞான மாட்சி கண்டோம் [பாடுவோமே]
3. சாநியழிச் தோடுகன்த காலம் வச்ததே--செட்ட சமயமழிச் தோடுள்த காலம் வர்ததே
நமது பத்தியிகை
குடி அரசுப் பதிப்பகத்தினின்று “பகுத்தறிவு” என்ற பெயரால் ஒரு மாதப் பத்திரிகை வெளியிட வேண்டுமென்ற அபிப்பிராயம் 6, 7 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது. காலஞ்சென்ற ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் 1928ம் ஆண்டிலேயே அரசாங்கத்தில் ரிஜிஸ்டர் செய்து “பகுத்தறிவு” மாதப் பத்திரிகையைப் பிரசுரஞ் செய்ய அனுமதியும் பெற்றிருந்தார்கள் என்பதைக் “குடிஅரசு” வாசகர்கள் நன்கறிவர். ஆனால் பலப்பல காரணங் களால் அம்மையாரின் முயற்சி தடைப்பட்டுப் போய்விட்டது.
தமிழ் மக்களிடையே அதிதீவிரமாக அறிவியல் கொள்கைகளைப் பரப்பவேண்டுமென்றும், அவ்வாறு பரப்புவதற்கு ஓர் தனிப் பத்திரிகை, வேறு எவ்வித நோக்கமுமின்றி அறிவியற் கொள்கைகளைப் பரப்பும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஓர் நல்ல ஸ்தாபனத்தினின்று பிரசுரிக்கப்பட்டு தொண்டாற்றி வரவேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு மட்டுமல்ல - பல அறிஞர்களுக்குமிருந்து வந்தது. எனவே 1935-ம் ஆண்டு மே-மாதம் “பகுத்தறிவை” நமது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தினின்று வெளியிட வேண்டு மென்று தீர்மானிக்கப் பெற்று அவ்வாறே இப்பொழுது வெளி வந்திருக்கின்றது. “பகுத்தறிவு தமிழ் மக்களிடையே அறிவியல் கொள்கைகளை அதிதீவிரமாகப் பரப்ப முயற்சி செய்யும்; விஞ்ஞான மேம்பாட்டை விளக்கமாக எடுத்துக்காட்டும்; மேனாட்டு மெஞ்ஞானப் புலவர்கள் கண்ட அரிய பெரிய அற்புதங்களை யெல்லாம் தெள்ளிதில் விளக்கும்; மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் - பழக்க வழக்கங்களையும், புரோகிதப் பித்தலாட்டங்களையும், சாதி சமய சாத்திரப் புரட்டுகளையும் புட்டுப்புட்டுக் காட்டும். சுருங்கக்கூறின் அறிவுக்கு மாறுபட்ட அனைத்தையும் நிர்த்தூளி பண்ணி யாண்டும் அறிவின் ஜோதி ஜொலிக்கத் தன்னாலான எல்லாத் தொண்டினையும் செய்து தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்பகரமாகச் செய்வதையே தனது கடனாக கொண்டு வேலை செய்ய முனைந்து பகுத்தறிவு இன்று உங்கள் முன் வந்துளது. நேயர்கள் நல்வரவேற்று பகுத்தறிவு வளர முயற்சி செய்வார்களென்று பெரிதும் நம்புகிறோம்.
இதன் வருடசந்தா இதைவிடமிகக்குறைவாக இருக்கவேண்டுமென்று கருதியிருந்தோமாயினும் பெரிய அளவில் பல அரிய கட்டுரைகளுடனும்
2 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அதிகப் பக்கங்களுடனும் அழகிய முறையிலும் நடத்தவேண்டுமென்ற நோக்கத்தினால் இதைவிடக் குறைக்க முடியாமல் வருடசந்தா நவ 1, ஏற்படுத்தி யிருக்கின்றோம்
தமிழ் மக்கள் 'பகுத்தறிவை'' உல்லங்கனம் செய்து விடாது உவகையுடன் வரவேற்று ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்
- பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தார்
பகுத்தறிவு (மா.இ.) - பதிப்புரை - மே 1935
குடி அரசு - 1935 (1) 290.
அறிவின் பயன்
இப்படி மதிக்கப்படுவது சரியா தப்பா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனாயிருப்பதின் காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூட சொல்லவேண்டியது இருக்கிறது ஆனால் இதைச் சரியென்று யாராவது ஒப்புக்கொள்ளமுடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்கு சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும் பிரத்தியக்ஷத்தில். அப்படித்தான் காணப்படுகின்றது ஆகவே இதற்கு ஏதாவது காரணம் இருந்தாகவேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியானபடி பயன்படுத்தாமலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன். ஏற்றுக்கொள்வதாலும் மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது
மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக்கொண்டு, மனிதஜன்மமே ககமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது “சாகரம் “துக்கம்” என்று கருதுவதன் மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து வருகிறான்.
இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும், எண்ணங்களுமே மனித சமூக துக்கத்துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து வருகிறது என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கும் பகுத்தறிவைச் சுதந்தரத்தோடும் துணிவோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்
இந்தப்படி சுதந்தரத்தோடும், துணிவோடும் பகுத்தறிவு என்பதை பயன்படுத்தக்கூடாது என்கின்ற நிபந்தனைகள் வாழ்க்கையிலும் சமூதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக்கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும் என்றாலும் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது என்று தீர்மானித்துவிடுதல் கூடாது 01 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இப்பொழுதுகூட மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தியும், தன்னைச்
சூழ்ந்தும் தனக்குள் புகுத்தப்பட்டும் இருக்கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கிவிட்டுத் தனியாக, சுதந்தர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும் நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத் துணிவோடு உபயோகப்படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக்கூடிய உண்மையையும், பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது
இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக் கொண்டிருப்பவைகளில். முக்கியமானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன்ஜன்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற உபதேசங்களே யாகும். இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின் பயனான இயற்கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக்கொண்டு சந்தோஷமும், திருப்தியும் அடையும் பேற்றை எவனும் அடையவே முடியாது. ஆதலால் ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும் திருப்தியுமான வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தப்படிபயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத்தையும், நிர்வாணமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக்கொண்டு பார்க்கவேண்டும்
இந்த நிலைமையையும், தன்மையையும் ஒவ்வொரு மனிதனும் அடையவே “பகுத்தறிவு” உலகில் உலவிவந்து மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - மே 1935
குடி அரசு - 1935 (1)
ப பி
சந்தேகக் கேள்விகள் சரியான விடைகள்
- சித்திரபுத்திரன்
வினா:- கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி? விடை ஒருகெடுதியும்இல்லை;ஆணல் மதத்தின் பெயரால் குடிக்காதே
வினா:- மகம்மதியனாவதில் என்ன கெடுதி?
விடை:- ஒருகெடுதியும் இல்லை; ஆனால்பெண்களுக்கு மூடிபோடாதே.
வினா:- உண்மையான கற்பு எது?
விடை:- தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கியிருப்பதே உண்மையான கற்பு
வினா:- போலிக் கற்பு என்றால் என்ன?
விடை:- ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாத போது இணங்கியிருப்பதே போலிக் கற்பு
வினா:- மதம் என்றால் என்ன?
விடை:- இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்து வதுந்தான் மதம்
வினா:- பண்டிகை நாட்களில் உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர். களுக்கும் ஏன் “லீவ் கொடுக்கப்படுகிறது?
விடை:- பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் மீதி வைக்காமல் பாழாக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான்.
வினா- பெண்களைப் படிக்கக்கூடாதென்று ஏன் கட்டுப்படுத்தினார்கள்?
விடை:- அவர்களுக்கு அறிவு இல்லை; சாமர்த்தியமில்லை என்று சொல்லிச் சுதந்தரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே
29 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வினா :- ஒரு மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
விடை:- பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்குக் கல்வியறிவும், முழுச் சுதந்தரமும் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அனேக தொல்லைகள்
ஒழியும்
வினா:- பெண்களுக்கு வேலை நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
விடை:- தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்
வினா:- பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
விடை:- அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு. விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி
மார்புச் சீலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்.)
வினா:- பெரிய மூடன் யார்? விடை:- தனது புத்திக்கும் பிரத்தியட்ச அனுபவத்துக்கும் தோன்றுவதை நம்பாமல், எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.
வினா:- ஒழுக்கம் என்பது என்ன?
விடை:- ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்துகொள்ளுவதாகும்
வினா:- சமயக்கட்டுப்பாடு, ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?
விடை:- மனிதனைத் தன் மனச்சாட்சிப்படியும், உண்மைப்படியும் நேராய் நடக்கவிடாமல் கட்டுப்படுத்துவதுதான் ஜாதி, சமயக் கட்டுப்பாடுகள்.
வினா:- உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?
விடை:- கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக் காக்கப் பிரயத்தினம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
வினா:- ஜனநாயக ஆட்சி யென்றால் என்ன?
விடை:- தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி
குடி அரசு - 1935 (1) 294.
வினா:- இந்தியாவில் நல்ல திடகாத்திரம் உள்ள ஜனசங்கியை பெருகவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
விடை:- சிறு பெண்களுக்கு மணம் செய்வதையும், அதிகமாகப் பிள்ளை பெறுவதையும் நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரம் உள்ள ஜன சங்கியை பெருகும்
வினா:- இந்தியா சீர்பட என்ன வேண்டும்? விடை:- இந்தியா சீர்பட்டு, இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும், நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்
வினா:- இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?
விடை:- இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுளுமே முக்கிய காரணமாகும்
வினா:- பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு
வர முடிந்தது? விடை:- மத விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால், அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகிவிடுவார்கள்
பகுத்தறிவு (மா.இ.) - வினா விடை - மே 1935
05 ஏரரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஏண்டா Ulg 5865916065060 9
ஆசிரியர்- அடே! கண்ணப்பா! ஏண்டா பாடம் படித்துக்கொண்டு வரவில்லை?
மாணவன்:- நீங்கள் நேற்று சொன்னபடிதான் சார் நான் செய்தேன்.
ஆசிரியர்:- என்னடா சொன்னேன்?
மாணவன்:- நேற்று சொல்லிக்கொடுத்த பாட்டில் உள்ளபடி நடந்து கொண்டேன்.
ஆசிரியர்:- என்ன பாட்டு?
மாணவன்:- பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா!
என்றுச்சொல்லிக் கொடுத்தீர்கள். அதன்படிராத்திரி, பால், தேன், சர்க்கரைப்பாகு, முந்திரிப்பருப்பு எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துப்படைத்தேன். ஆகையால் பாடம் வராதது என் குற்றம் அல்ல சார்!
ஆசிரியர்:- அடா முட்டாள் பயலே ! இது மாத்திரம் போதுமாடா? புஸ்தகத்தைப் பார்த்துப் படித்தால்தாண்டா பாடம் வரும்.
மாணவன்:- புஸ்தகத்தைப் படித்தால்தான் பாடம் வரும் என்றால், பிள்ளையாரை ஏன் சார் கும்பிடவேண்டும்? அவரை வணங்கினால் ஆகாத காரியம் எல்லாம் ஆய்விடும் என்று சொன்னீர்களே! அதெல்லாம் பொய்தானே!
ஆசிரியர்:- சீ அதிகப்பிரசங்கி உட்காரு கீழே.
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - மே 1935
குடி அரசு - 1985 (1) 296
IR IO ORI TN O LI M'fis பகுத்தறிவு வெளியில கள்.
¢
¢ ண்பன் அடிமையானான் 2 அடகு. 0 2] பிசு இவசசம் ன . 0304 குடி அரசுக் சலம்பகம் அண] 0 அறிஞர் சார்ல்ஸ் T, கோர்; ஹாம் எழுதியது த் முன்னேற்றத்திற்றா மதம் முட்டுக்கட்டை படு 90 11௦. பெர்ட்டிரணட் ரசல் எழுதியவை, 3 சான் ஏன் நிஸ்தவனல்ல ? 4, 03 ம
தோழர் 7. லெ. 0, எழுதிய வ.
மதம் மக்களுக்குச் செய்த கன்மையென்ன? .. , 0807 2 a» இங்கர்சால்: எழுதியவை. | மதம் என்றால் என்ன 2 . , 030% 3u_qav o e » 05 Og
கான் ௪: சயலாதியானதேன் 7 030 ப்ப 0402
3 அறிஞர் பிரமச்சாரி ம. டட டு எத்யலை $
ட மதமும் விஞ்ஞானமும் o , 0307 பிரபஞ்ச உற்பத்தி ... ர் 309 அறிஞர் ஜோப் மெக்கேபி கழித்த. ¢ மதபபுசட்சி க கத 011 3 3095" செனிக்யூ எழுதியது. 5 பாதிரிகளும் பெண்களும் பசவ மன்னிப்பும்... 03 1 தோழர் M சிங்காரவேஷு b A, b L, எழுதியவை 2 மெஞ்ஜான முறையும் மூட சர்மிங்கைவும் |-ம் பாசம் 06 0₹ 11ம் பகம் 05 03 3 நித ஜீள் மென்லியர் எழுதியது H Cumgsda or கத்தோலிக் குருவின் மாண சாசனம் 04 09 தோழர் ௮, இராகவன் எழுதியது. பெண்ணுரிமையும் மதமும் ட. , 030 2
5 அறிஞர் சிவானந்த கல்வி எழுதியது ஞானசூரியன் [*கன்காம் பதிப்பு”) கைத 08 ஷ் காலிக்கோ பயிண்டு 050 மாணத்திற்குப் மின் ஜீவனுண்டா? (ல. மீ தூபி), 04 08
3 பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் 1ல். ரோடு. மமைமைமையமைமைமைமையலை! Fdited Printed and Published by. B.. V. Krisinosancy for the Rational Books Publisking Society Ltd. at the Unmaivilakam Press, Erode,
உத்து கத்த க 1Y
R. No. M. 2041 “KUDLARASU" தனிப்பட விலை ஒரு அணா
1924-& வதாகிபப்பட்டது.
ம டது வத்துலிட்டன! வர்அவிட்ட அ!
பகுத்தறிவு மாதவெனியிடு மெ மாதம் 1-ம் தேதி வெளிவரத் விட்டத!!!
உள்நாடு சத்தா: ஒரெ ரூபாய் தான்.
எல்லா பருத்ததிவுச் சங்கங்களும், சமநர்மாங்கங்களும் சத்தாவாகப் பஇவு செய்வதோடுவசானமான சத்தாதார்களைச்சேர்ச் அ அணுப்புவார்களென்னு: எதிர்பார்க்க றோம்..
வெளிநாடு ரூ. 1 தனிப்பிரஇவிங டர், பகுத்தறிவு நாற்பதிப்புக்கழகம் லிமிட்டெட், ஈரோடு
பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பண ஆட்சியா?
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்ஷி ஏற்பட்டு 200 வருஷ காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகள் என்பவை எவ்வளவோ இருந்தாலும் பிரிட்டிஷாரது ஆக்ஷியின் கொள்கைகள் பழய கால ஆரிய அரசர்கள் என்பவர்களின் ஆரிய மத சாஸ்திரங்கள் மனுநீதி தர்மங்கள் ஆகியவைகள் போல் அல்லாமல் “இந்தியாவின் சகல பிரஜைகளையும், சமமாய்ப் பாவித்து நடத்துவது என்கின்ற ஒரு கொள்கையை முக்கியமாய்க் கொண்டிருப்பதாகச் சொன்னது இந்திய மக்களுக்கு “வரப்பிரசாதம்'” போன்றது என்பதை நடுநிலைமைப் புத்தி கொண்ட எந்த மனிதனும் மறுக்க மாட்டான்.
ஆனால் அது காரியத்தில் கிரமமாய் நடந்து வந்திருக்கிறதா என்பதை எந்த நடுநிலைமைக்காரனும் ஒப்புக் கொள்ளத் தயங்கியே தீருவான். அப்படி அக்கொள்கைகாரியத்தில் நடவாததற்குக்காரணம்பிரிட்டிஷாராய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது மேல் ஜாதிக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டு. சகல பிரஜைகளையும் சமமாய் மதிப்பது தோஷமானது, பாவமானது என்கின்ற நீதியை பின்பற்றுகின்ற பார்ப்பனர்களாக இருந்தாலும் இருக்கலாம்
எப்படி இருந்தாலும் சகல பிரஜைகளையும் சமமாய் நடத்துவது, பாவிப்பது என்கின்ற கொள்கை இன்று பிரிட்டிஷ் ஆட்சியில் - இந்தியாவில் அநேக விஷயங்களில் 100க்கு 5, 10 வீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை நாம் தைரியமாய்ச் சொல்வோம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்ஷி ஏற்பட்டதின் பயனாய் ஆக்ஷியின். நன்மைக்கு ஆகவானாலும் சரி பிரஜைகளின் நன்மைக்காகவானாலும் சரி மக்களுக்கு சிறிது கல்வி வசதி ஏற்பட்டது என்பது உண்மையாகும்
ஆனால் அந்தக் கல்வி எல்லா மக்களுக்கும் சரிசமமாய்ப் பரவுவதற் கில்லாமல் போய் யாருடைய கெட்ட எண்ணத்தாலோ அல்லது நல்ல எண்ணத்தாலோ நமது நாட்டில் பார்ப்பனர்கள் மாத்திரமே அதிகமாய்
படிக்க முடிந்தது
இந்தப் படிப்பின் பயனாய்த்தான் ஆக்ஷி நிர்வாகத்தில் பிரிட்டிஷாரிட மிறாந்து இந்தியர்களுக்கு என்று ஒரு பங்கு கேழ்க்க வேண்டியதாயிற்று 00 ஏரரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
என்பதோடு அதற்கு ஆக கிளர்ச்சி செய்ததிலும் பாமர மக்கள் பேராலேயே அக்கிளர்ச்சி செய்யப்பட்டு நிர்வாகத்தில் ஒரு அளவு பங்கு பெறவும் முடிந்தது.
இப்பொழுது பிரதிநிதித்துவம் அல்லது சுயாக்வி கேழ்ப்பது எப்படி. ஆக்வி நிருவாகத்தில் பங்கு கேழ்ப்பதாக மதிக்கப்படுகின்றதோ அதுபோல். தான் சுமார் 25, 30, 40, 50 வருஷங்களுக்கு முன் பெரும் சம்பள உத்தியோகத்தில் பங்கு கேழ்ப்பது நிருவாகத்தில் பங்கு கேழ்ப்பது போலவும், குடிகள் ஆக்ஷி கேழ்ப்பது போலவும் மதிக்கப்பட்டது.
இந்தத் தேவை அல்லது வேண்டுகோள் ஒரு அளவுக்கு கை கூடியதும், எல்லா ஜனங்களும் எங்கு அந்த உத்தியோகத்தில் பங்கு போட வந்து விடுவார்களோ என்னவோ என்று நமது பார்ப்பனர்கள் பயந்து உத்தியோகங்களுக்குப் படிப்பு நிபந்தனைகளை அதிகப்படுத்தி அந்த அதிகப்படுத்திய நிபந்தனைகளையும் தங்களைத் தவிர மற்றவர்களால். நிறைவேற்ற முடியாத அளவு கஷ்டமுண்டாக்க கல்வியின் ஆதிக்கம் பூராவும் தங்கள் கைக்கே வரும்படியாகச் செய்து கொண்டு ஆட்சியில் பங்கு என்று சொல்லப்பட்ட நிருவாக உத்தியோகங்கள், குமாஸ்தா உத்தியோகங்கள். கவுரவ உத்தியோகங்கள் பூராவும் என்று சொல்லத்தக்க மாதிரியில் பார்ப்பனர்கள் தாங்களே அடையும்படியான மார்க்கத்தைச் செய்து கொண்டு பிரிட்டிஷார் சக்ராதிபத்தியத்தில் பார்ப்பனர்கள் ஆட்சி என்பதாக ஏற்படுத்திக் கொண்டு அதையே “பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பங்கு" என்றும் சுயாட்சிக்கு மார்க்கம் என்றும் பெயர் கொடுத்துக் கொண்டார்கள்.
சுமார் 15, 20 வருஷ காலமாக இந்தச் சூக்ஷியை அறிந்த சில பார்ப்பனரல்லாத மக்கள் இதை வெளியாக்கி பிரிட்டிஷ் ஆட்சியில் சகல பிரஜைகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் சகல பிரஜைகளுக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கையைக் காரியத்தில் கொண்டுவர பிரிட்டிஷாரை நிர்ப்பந்தப்படுத்தி அதற்காக வேண்டிய கிளர்ச்சிகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இதன் பயனாய் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அடைந்த சுயஆட்சி (உத்தியோக பங்கில் ஒரு சில அதுவும் சிந்தினதும் சிதரினதும் பார்ப்பன. ரல்லாதாருக்குக் கிடைக்கும் படியாக ஏற்பட்டது என்றாலும் அதுவும் பெரும் பாகம் மகம்மதியருக்கும் கிருஸ்தவருக்கும் மலையாளிகளுக்கும் தான். கிடைக்கும்படியாக ஆயிற்றே ஒழிய தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்) மக்களுக்கும் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் (மற்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் அனுபவிக்கும் போது) பகுதியோ நாலில் ஒரு பங்குக்கோ 8-ல் ஒரு பங்குக்கோ கூட மார்க்கமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போதே இந்த சிறு முயற்சியைக்கூட பார்ப்பனர்களும் சில பார்ப்பனப் படுபாவிப் பத்திரிக்கைகளும் கொஞ்சம்கூட நாணயம், யோக்கியதை, மானம், அவமானம் இல்லாமல் இம்முயற்சிகளைத் தேசத் துரோக முயற்சி என்றும், சர்க்கார் தாசர் முயற்சி என்றும் குலாம்கள் முயற்சி என்றும் வெட்கம் கெட்ட முயற்சி என்றும் பேசியும் எழுதியும் வருகின்றன.
குடி அரசு - 1935 (1) 300
இந்த போக்கிரித்தனமான பிரசாரத்தை நம்பி பார்ப்பனரல்லாதார்.
களில் சில மடையர்களும் அயோக்கியர்களும் எது செய்தும் வயிறு வளர்க்க ஆசைப்படும் மானங்கெட்ட கூலி - இழி மக்களும் பார்ப்பனர்கள். சாப்பிட்டு வீதியில் எரிந்த எச்சியிலையை நக்கிப் பிழைக்கும் ஊர்: சுற்றிகளும் இந்த பார்ப்பனர்கள் விஷமத்தை ஆமோதிப்பதுடன் ஆதரித்துக் கூத்தாடுவதுடன் உலக மக்களுக்குத் தப்பபிப்பிராயம் உண்டாகும்படி ஊளை இட்டுக் கொண்டும் திரிகின்றனர்.
இப்படிப்பட்ட அயோக்கியர்களின் யோக்கியதையை வெளியாக்கி பாமர மக்கள் அம் முயற்சிக்குப் பாடுபடும் மக்கள் மீதும், அதை ஆதரிக்கும்
நம் மீதும் தப்பபிப்பிராயம் கொள்ளாதிருக்கவும் கேவலமாய் மதித்து அம் முயற்சிக்கு இடையூறு செய்யாமல் இருக்கவும் சில உண்மைகளை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி விட்டோம்.
இன்று உண்மையில் உத்தியோகம் பார்ப்பதையும் உத்தியோகம் சம்பாதிக்க முயற்சிப்பதையும் குலாம் என்றும் பிரிட்டிஷாருக்கு “குலாம்"களாய் “அடிமைகளாய்” “காலை நக்கிப் பிழைக்கின்றவர்களாய்'” கோடாலிக்காம்புகளாய்"” இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுமானால் அந்தக் காரியத்தில் எந்தக் கூட்டத்தார் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள் என்பதைத் தயவு செய்து பாமர மக்கள் உணரும்படி சில கணக்குகள். வெளியிடுகிறோம்.
இந்நாட்டில் வெள்ளைக்காரர்கள் பார்த்த உத்தியோகங்களை இந்தியர்கள் பார்க்க வேண்டும் என்றும், இந்தியர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக 1.6.8. உத்தியோகத்தில்கூட இந்தியர்களை நியமிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டதின் பயனாய் அந்த 1.0.8. உத்தியோகம் அதாவது மாதம் 3000 ரூபா வரை சம்பளமுள்ள உத்தியோகம்கூட இந்தியனுக்குக் கொடுக்கப்பட்டது. அதுபோலவே மற்ற உத்தியோகங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் அவைகளை யார் அனுபவிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
1. 1.0.5.
இந்தச் சென்னை மாகாணத்தில் இன்று 70 - இந்தியர்கள் 1.0.5. உத்தியோகத்தில் இருக்கிறார்கள். அதில் 40 உத்தியோகம், 100-க்கு 3 வீத ஜனத் தொகையுள்ள பார்ப்பனர்கள் அடைந்திருக்கிறார்கள்.
10 - உத்தியோகம் மலையாளிகள் அடைந்திருக்கிறார்கள்.
7 - உத்தியோகம் கிருஸ்தவர்கள் அடைந்திருக்கிறார்கள்.
6 - உத்தியோகம் மகமதியர்கள் அடைந்திருக்கிறார்கள்.
பார்ப்பனரல்லாத தமிழர்கள் 7 ஏழே ஏழு உத்தியோகம்தான் அடைந்திருக்கிறார்கள்.
301 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஆகவே யார் குலாம்கள் யார் அடிமைகள் யார் நக்கிப் பொறுக்கிகள் என்பதைப் பொது ஜனங்கள் உணர வேண்டுகிறோம். இது போலவே
2. ஹைகோர்ட் ஜட்ஜ்
இந்தியர் பார்க்கும் ஹைகோர்ட் ஜட்ஜு ஸ்தானம் 8-ல் பார்ப்பனர்கள்
4 ஸ்தானம், மலையாளிகள் 2 ஸ்தானம்
பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் 2 இரண்டே இரண்டு ஸ்தானம்தான் அடைந்திருக்கிறார்கள்.
3. போர்ட் மெம்பர்
போர்ட் மெம்பர் முதலிய 1250 முதல் 2500 ரூபாய் வரை சம்பளமுள்ள இந்தியர் பார்க்கும் உத்தியோகங்கள் 8-ல் பார்ப்பனர்கள் 4 ஸ்தானம், மலையாளி 1, மகமதியர் 1, கிருஸ்தவர் 1
பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் 1 ஒரே ஒரு உத்தியோகம்.
4. டடிப்டி கலக்டர்கள்
மாதம் 500 ரூபா முதல் 800 ரூபாய் சம்பளம் வரை பெறும்படியான இந்தியர் பார்க்கும் டிப்டி கலெக்டர்கள் உத்தியோகம் 115-ல்
பார்ப்பனர்கள் 45, மகமதியர்கள் 22, கிறிஸ்தவர் 12, மலையாளி 9
பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் 27. இது தவிர,
5. சர்வே இலாக்கா
சர்வே அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் வேலை இந்தியர்கள் பார்க்கும் மாதம் 800 ரூபா சம்பளமுள்ள 4 ஸ்தானங்களும் பார்ப்பனர்களே பார்த்து வருகிறார்கள்.
பார்ப்பனரல்லாதார் யாருக்கும் ஒன்றுகூட இல்லை.
6. எக்ஸைஸ்
சால்ட் அசிஸ்டெண்ட் கமிஷனர் வேலை 4-ல்
பார்ப்பனர் 3, மலையாளி 1.
பார்ப்பனரல்லாதார் ௦ தான்.
7. எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர்
சால்ட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் முதல், இரண்டாவது கிரேட் உத்தியோகம் இந்தியர் பார்ப்பது 17-ல்
குடி அரசு - 1935 (1) 302
பார்ப்பனர்கள் 9, மகமதியர் 5, கிருஸ்தவர் 1
பார்ப்பனரல்லாதார் இரண்டே இரண்டு தான்.
மூன்றாவது கிரேடில் 12-ல் பார்ப்பனர் 5, மலையாளியும் தமிழரும்
5, மகமதியர் 1, கிருஸ்தவர் 1
வெ நான்காவது கிரேடில் 31 உத்தியோகத்தில், பார்ப்பனர் 16,
மலையாளியும், பார்ப்பனரல்லாத தமிழனும் 10, மகமதியர் 2, கிருஸ்தவர் 3
9. ஹைகோர்ட்டிலுள்ள பெரிய உத்தியோகங்கள்
9-ல் பார்ப்பனர்கள் 7; மலையாளி 1, பார்ப்பனரல்லாத தமிழர் 1.
10. லா ஆபீசர்கன் வேலை
7-ல் பார்ப்பனர்கள் 6; பார்ப்பனரல்லாத தமிழன் 1.
11. சபார்டிணேட் ஜட்ஜுகன்
காயம் ஜட்ஜுகள் 30; ஆக்டிங் ஜட்ஜுகள் 41 ஆக 71 ஜட்ஜிகளில், பார்ப்பனர் 51; மலையாளிகள் 11; மகமதியர் & கிருஸ்தவர் 1
பார்ப்பனரல்லாதார் காயம் 1, ஆக்டிங் 3. ஆக 4 நாலே நான்கு ஸ்தானங்கள் தான்.
12. டீஸ்டிமிக்ட் ஜட்ஜுகன்
இந்தியர்கள் பார்க்கும் ஸ்தானங்கள் 21-ல் பார்ப்பனர்கள் 11, மலையாளிகள் 4, மகமதியர்கள் 3
பார்ப்பனரல்லாத தமிழர் 3.
13. ஜில்லா முனிசீப்கன்
ஸ்தானங்கள் பர்மெனண்ட் - 126-ல், பார்ப்பனர் 80, மலையாளி
12, மகமதியர் 7, கிருஸ்தவர் 4
பார்ப்பனரல்லாதார் தமிழர் 23.
ஆக்டிங் முனிசீப் 59-ல் பார்ப்பனர் 35, மலையாளி 5, மகமதியர் 3, கிருஸ்தவர்கள் 2
பார்ப்பனரல்லாதார் தமிழர் 13.
14. ஜில்லா சூப்ரண்ட் வேலை
ஜில்லா சூப்ரண்ட் வேலைகள் 9-ல் பார்ப்பனர் 4, மலையாளி 2, மகமதியர் 1, பார்ப்பனரல்லாத தமிழர் 2.
இதில் அசிஸ்டென்ட் பிரபேஷனரி சேர்க்கவில்லை
303 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
15. டிப்டி சூப்ரண்ட்
டிப்டி சூப்ரண்ட் வேலை இந்தியர்கள் பார்ப்பது 42-ல் பார்ப்பனர் 16, மகமதியர் 9, கிருஸ்தவர் 5, மலையாளியும், பார்ப்பனரல்லாதார் தமிழரும் 12
16. கல்வி இலாக்கா
எஜுகேஷனல் சர்வீஸ் பெரிய உத்தியோகங்கள் இந்தியர்கள் பார்ப்பது - 12ல் பார்ப்பனர் 6, மகமதியர் 1, கிருஸ்தவர் 3
பார்ப்பனரல்லாத தமிழர் 2.
17. ஜில்லாக் கல்வி அதிகாமிகள்
1.௩.௦. வேலை 37-ல் பார்ப்பனர் 10, மலையாளி 3, மகமதியர் 6, கிருஸ்தவர் 7
பார்ப்பனரல்லாத தமிழர் 11.
19. காலேஜ் உத்தியோகம்
காலேஜ்களில் பிரின்ஸ்பாலாகவும் புரபசர்களாகவும் மற்றும் பெரிய வேலைக்காரர்களாகவும் உள்ள உத்தியோகம் 45-ல்,
பார்ப்பனர்கள் 32, மலையாளி 4, மகமதியர் 1, கிருஸ்தவர் 1, பார்ப்பனரல்லாத தமிழர்கள் 7.
20. வைத்தியம்
ராணுவப் பட்டம் உள்ள பெரிய டாக்டர்கள் இந்தியர் பார்க்கும் வேலை 10-ல் பார்ப்பனர் 8, மலையாளி 1, மகமதியர் 1, பார்ப்பனரல்லாத
தமிழர் - 0
21. 500 முதல் 900 வரை சம்பனமுன்ன
இந்திய டாக்டர்கள் - 43-ல்
பார்ப்பனர் 24, மலையாளி 5, கிறிஸ்தவர் 4, பார்ப்பனரல்லாத
தமிழர் 10.
22. அசிஸ்டெண்ட் சர்ஜன்
500 ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட இந்திய டாக்டர்கள் 221-ல்
பார்ப்பனர் 100, மலையாளி 20, மகமதியர் 5, கிருஸ்தவர் 43
பார்ப்பனரல்லாத தமிழர் 48.
குடி அரசு - 1935 (1) 304
22. சுகாதார அதிகாரிகள்
ஹெல்த் ஆபீசர்கள் 60ல் பார்ப்பனர் 38, கிருஸ்தவர் 9, பார்ப்பன
ரல்லாதவர்கள் மலையாளி உட்பட 13.
23. ஜில்லா போர்டு இஞ்சிணீ்கள்
இந்திய டிஸ்ட்ரிக்ட் போர்டு இஞ்சினீர்கள் வேலை 20-ல்
பார்ப்பனர் 15, மலையாளி 1, கிருஸ்தவர் 1, பார்ப்பனரல்லாத தமிழர்கள் 3.
இஞ்சினீர் இலாக்கா சப் ரிஜிஸ்டர் இலாக்காக்களுக்கும், மற்றும் உபாத்தியாயர், குமாஸ்தா, கீழ்த்தர உத்தியோகம், ரிவனியு இன்ஸ்பெக்டர், மேஜிஸ்ட்ரேட், தாசில்தார், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் முதலிய வேலைகளையும் பற்றி கணக்குப் பார்த்தால் எவ்வளவு மோசமாய் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட வேண்டுமா? அவற்றைப் பின்னால் தெரிவிப்போம்
ஏனெனில் இந்த மேல்கண்ட பெரிய உத்தியோகஸ்தர்களால் தானே. கீழ்க்கண்ட கீழ்த்தர உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆகவே
மேல் உத்தியோகங்களில் பார்ப்பனர்களே அதிகமாயிருந்திருக்கிறபோது அவர்கள் தங்களுக்குக் கீழ் யாரை நியமித்து இருப்பார்கள் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும்
நாம் இரண்டு வாரத்துக்கு முன் பார்ப்பன ஆக்ஷி ஒவ்வொரு ஊரிலும் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு ஈரோட்டின் நிலையை எடுத்துக்காட்டிவிட்டு மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பன உத்தியோக எண்ணிக்கையை தெரிவிக்கும்படி கேட்டு இருந்தோம். அந்தப்படி சிலர் அனுப்பினார்கள். அதில் பெருந்துரையைப் பற்றிச் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. இவ்வாரம் திருச்செங்கோடு தோழர் விபரமாய் அனுப்பியிருக்கும் கணக்கை இதில் வேறு பக்கம் பிரசுரிக்கிறோம். மற்ற ஊர்கள் விஷயமும் வரவர தெரிவித்துக் கொண்டே வர எண்ணியுள்ளோம்
பார்ப்பனரல்லாதார் தமிழ் மக்கள் இந்தப் பார்ப்பனர்களிடமும், பார்ப்பனக் கூலிகளிடமும் கெட்ட பெயர் வாங்கி உத்தியோகத்தில் ஒரு சிறு பங்கு பெற்றும் அவை பெரிதும் மலையாளிக்கும், கிருஸ்தவருக்கும், மகமதியருக்கும் தான் போய்விட்டதே ஒழிய தமிழ் மக்களுக்கோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ யாதொரு பயன் இல்லை. அப்படி இருந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்கு பயன் ஏற்படாத இந்த உத்தியோக எண்ணிக்கை மொத்தம் கொஞ்சமானாலும் இந்த ஆட்சிகளால் உத்தியோகம் பெற்ற அந்த சமூகத்தார் பயன் அடைவது போலவே பார்ப்பனரல்லாதார் சிறிதாவது அடைந்திருப்பார்களே ஒழிய உத்தியோகம் பார்த்தவர்களேதான் அடைந்தார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது
305 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்த அளவு கூட இப்பொழுது இந்த 20 வருஷ காலமாய் ஜஸ்டிஸ் கட்சியும் சிறப்பாக இந்தப் பத்து வருஷ காலமாய் சுயமரியாதைக் கட்சியும் பாடுபட்டதால் வந்ததா அல்லவா? இதைத் தானே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) பார்ப்பனரல்லாத கூலிகளைப் பிடித்து கைவசப்படுத்திக் கொண்டு பார்ப்பன உத்தியோகம் என்கின்ற வார்த்தைக்கு சுயராஜ்யம் என்றும், பார்ப்பனரல்லாதார் அடைவதை தேசத் துரோகம் என்றும் வேறு வார்த்தைகளைப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்பதை எந்தப் பிரபல பார்ப்பனரல்லாதாராவது தேசீயப் பார்ப்பனரல்லாதாராவது மறுப்பார்களேயானால் அவர்களிடம் பந்தயம் கட்டி அவர்கள் வாயாலேயே முன் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ருஜுப்பிக்க தயாராய் இருக்கிறோம். ஆகவே இன்று இத் தென்னாட்டில் நடைபெறும் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா பார்ப்பன ஆட்சியா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்
இதைப் பற்றி மந்திரிகளும் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவர்களும் கவனித்துப் பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரம் உத்தியோகக் கணக்குக்கு வரும் வரை அவர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதை நிறுத்தியும் மற்ற வகுப்புக்காரர்கள் அவரவர்கள் விகிதாச்சாரம் அடையும்படியாவது கவனித்து உத்தியோகம் அளிக்கும் முறையை திருத்தியும் தக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்
குடி அரசு - தலையங்கம் - 05.05.1935
குடி அரசு - 1935 (1) 306
வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை
மாகாணத் தலைவர்கள் அபிப்பிராயம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர்மானம்
தென்னாட்டு பார்ப்பனரல்லாதார் மக்களை ஏமாற்றுவதற்காக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஜப்பல்பூரில் 24-ந் தேதி கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளப் பார்த்தார். அத் தீர்மானமாவதுஎ
“இந்திய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் பல கஷ்டங் களைச்சமாளித்து வெற்றிகரமாக செய்த வேலைகளைக்கண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திருப்தி அடைகிறது" என்பதாகும். இத் தீர்மானத்தைப் பற்றி பல மெம்பர்கள் பேசுகையில் தெரிவித்த அபிப்பிராயங்களாவன.
சர்தார் சார்தூல் சிங்:
சுயராஜ்ஜியம் பெருவதற்காக காங்கிரஸ் அசெம்பிளிக்குச் செல்லவில்லை” என்று பேசி இருக்கிறார்.
ஆனால் தேர்தலின்போது ஓட்டர்களுக்கு என்ன சொல்லி ஓட்டு வாங்கப்பட்டது என்பதை யோசித்தால் காங்கிரஸ் சட்டசபைக்குப் போனது வீண் என்பது புலப்பட்டுவிடும்
“சுயராஜ்ஜியம் வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யருக்கும், சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கும் ஓட்டு போடுங்கள்" என்று கேட்டார்கள். இப்போது சுயராஜ்ஜியத்துக்கும் அசெம்பிளிக்கும் சம்பந்தமில்லை என்று ஆகிவிட்டது. காங்கிரசின் நாணயம் தங்க எழுத்தில் “எழுதத் தக்கதே"
நிற்க தோழர் மேகர் அலி அவர்கள் காங்கிரஸ் கட்சி ஓட்டர்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகளின்படி நடக்கவில்லை என்றும் பாராட்டுகிறது என்ற வார்த்தைக்குப் பதிலாக கண்டிக்கிறது என்று போட வேண்டும் என்றும் சொன்னார்.
மகாராஷ்டிரா மாகாணத்தைச் சேர்ந்த தோழர் சங்கரரால்தியோ என்பவர் தீர்மானத்தில் “வெற்றிகரமாக'' என்கின்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்து பேசுகையில்
307 ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்களே தவிர காரியத்தில் ஒரு வெற்றியும் பெறவில்லை. தேர்தல் காலத்தில் ஓட்டர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதி விஷயத்திலும் அவர்கள் நிறைவேற்றவோ வெற்றி பெறவோ அனுஷ்டிக்கவோ இல்லை.
ஆதலால் வெற்றிகரமாக என்று சொல்லிக் கொள்ள காங்கிரஸ்
கட்சிக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லிவிட்டார்.
மேகர் அலி அவர்கள் தீர்மானத்தை எதிர்த்து பேசுகையில் காரியக்
கமிட்டி தீர்மானங்களையும் பார்லிமெண்டரி கட்டளைகளையும் மீறி நடந்து கொண்ட காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினர்களைப் பாராட்டுவது பரிகசிக்கத்
தகுந்ததாகும் ராஜகோபாலாச்சாரி போன்றவர்கள் இந்தப்படி காரியம் செய்ய முன்வரலாம். காங்கிரஸ் தீர்மானத்தில் நிராகரிக்கிறோம் என்கின்ற பதமே வரவில்லை.பம்பாய்காங்கிரஸ்கட்டளையை காற்று வாக்கில் விட்டுவிட்டார்கள்.
புதிய சீர்திருத்தத்தை நடத்துவிக்க காங்கிரஸ்காரர்கள் திருட்டுத் தனமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டசபைத் தலைவர்கள் பேச்சை சர்க்காரார் மெச்சிப் பாராட்டி இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தேசத்தார் மெச்சிப் பாராட்டும்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். (சபாஷ்) (ஜனங்களை ஏமாற்றி விட்டார்கள்.) சாதாரண சம்பரதாய விஷயமாகக்கூட காங்கிரஸ் மெம்பர்கள் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் வைசிராய் சட்டசபையில் பேசும்போது காங்கிரஸ் மெம்பர்கள் எழுந்து நின்று இருக்கிறார்கள்.
காங்கிரஸ்காரர்கள் தங்கள் கடமையைச் செய்ய தவறி இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுவது என்பது சரியல்ல, கண்டிக்க வேண்டியதேயாகும்.
வங்காள மெம்பர் - தோழர் ராமச்சந்திர சிங் பேசியதாவது:- “காங்கிரஸ் கட்சியார் பாராட்டும்படியாக நடந்து கொள்ளவில்லை. ஆதலால் பாராட்ட முடியாது."
பீகார் மெம்பர் தோழர் மகாமாய பிரசாத் பேசியதாவது:-
காங்கிரஸ்காரர் சட்டசபையில் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை. ஒன்றுக்கொன்று முரணாக நடந்து கொண்டார்கள். காங்கிரசின் கொள்கையே பிரதிபலிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வரவர ஊழலாகி வருவதற்கு இது
ஒரு அறிகுறியாகும் என்று பேசினார்.
காங்கிரஸ் சமதர்மக் கட்சிக் காரியதரிசி தோழர் ஜெயப்பிரகாசர் பேசியதாவது:- “காங்கிரஸ் அசெம்பிளி வேலைத் திட்டம் மிகவும் அதிருப்திகரமானது” என்று பேசினார்.
அஜ்மீர் தோழர் கெளரி சங்கர் பார்க்கவர் பேசியதாவது:-
குடி அரசு - 1935 (1) 308
அசம்பிளி மூலம் சுயராஜ்யம் வராது. இந்த நிலைமையில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் எல்லாவற்றிற்கும் தந்திர முறையில் சமாதானம் சொன்னார். என்ன சொல்லியும் வெற்றிகரமாக என்ற வார்த்தை தீர்மானத்தி லிருந்து நீக்கப்பட்டே போயிற்று. தோழர் ராஜகோபாலாச்சாரியாரே வெற்றி என்கின்ற வார்த்தையை எடுத்துவிட சம்மதித்து விட்டார்.
தீர்மானம் மொட்டையாகத் தான் நிறைவேற்றப்பட்டது ஆகவே காங்கிரசின் வெற்றிமேல் வெற்றி என்பதின் புரட்டுகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலேயே காங்கிரஸ்காரர்களுக் குள்ளாகவே விளங்கிவிட்டதென்றால் வெற்றி என்கின்ற வார்த்தையே எடுபட்டுவிட்டது என்றால் மற்றபடி வெளி ஜனங்களுக்கு அதில் எவ்வளவு பித்தலாட்டங்கள் இருந்து இருக்கிறது என்பதை விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்
ஆந்திர மாகாணம் விஸ்வநாதன் பேசும்போது தோழர் ராஜ கோபாலாச்சாரியார் சென்னை சட்டசபையைக் கலைத்துவிடவேண்டு மென்று ஆகாயத்துக்கும் பூமிக்கும் கரணம் போடுவதெல்லாம் “சட்டசபை கலைக்கப்பட்டுவிட்டால் தாங்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் பாடுபடுகிறார்கள்'' என்று குறிப்புக்காட்டி இருப்பதுடன், "பதவி
ஏற்கும் நோக்கத்துடன் தான் காங்கிரஸ் புதிய தேர்தலில் ஈடுபடும்” என்று தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அறிக்கை விட்டிருப்பதாகவும் இதிலிருந்து புதிய நிலைமை ஏற்பட்டிருக்கிறதென்றும் கூறுகிறோம்
காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கின்ற தீர்மானத்தை தோற்கடித்து விட்டார்கள். எனவே பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அனுகூலம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
இந்தப்படி செய்து கொள்வதற்கு முக்கிய காரணஸ்தர்களாய் இருந்தவர்கள் தென்னாட்டுப் பார்ப்பனர்களேயாவார்கள்.
அதாவது தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், டி. பிரகாசம், எஸ். சத்தியமூர்த்தி மூவரும் தங்களுக்கும், தங்கள் ஜாதியாருக்கும் அனுகூலமாகக் காங்கிரசைச் செய்து கொண்டார்கள் என்பது அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டிக் கூட்ட நடவடிக்கையில் நன்றாய் விளங்குகிறது
மேலும் மற்றொரு தீர்மானத்திலும் அதாவது யுத்தம் ஏற்பட்டால். இந்தியர்கள் அதில் கலந்து கொள்ளவோ பணம் கொடுக்கவோ உதவி செய்யவோ கூடாது என்பதாகும்
அதை நிறைவேற்றி வைக்க காங்கிரஸ்காரர்கள் பயந்து கொண்டு அதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
309 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஆகவே காங்கிரசின் வீரம் நாணயம் சமதர்மிகளிடத்தில் இருக்கும் விசுவாசம், உத்தியோகமேற்றுக் கொள்ளாத தியாகபுத்தி ஆகிய குணங்கள் எவ்வளவு என்பதை இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை
மூலம் தெரிந்து கொள்ளலாம்
இப்படிப்பட்ட யோக்கியர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியார் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் சுயமரியாதைக் ககஷியார் பணக்காரர்களுக்கு ஆதரவுக் கொடுக்கும் க௯ஷியார் என்றும் தோழர் ஈ.வெ. ராமசாமி பயந்து போய் விட்டார், பிற்போக்காளராகிவிட்டார் என்றும் சொல்லப் புறப்பட்டு விட்டார்கள் என்றால் இந்தக் கூட்டத்தாருக்கு மானம், வெட்கம், நாணயம் இருக்கின்றதா என்று கேட்கின்றோம். யாரோ நான்கு பார்ப்பனர்கள் மந்திரிகளாவதற்கு ஆக இவ்வளவு அயோக்கியத்தனங்களும் இழி முறைகளும் கையாளுவதென்றால் இந்தக் கூட்டத்தை மனித சமூக நலனை உத்தேசித்து என்ன பாடுபட்டாவது பூண்டற்றுப் போகும்படி உழைக்க வேண்டியது ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடையவும் கடமையா அல்லவா என்று கேட்கின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.05.1935
குடி அரசு - 1935 (1) 310
மதம் போய் விடுவதால் கடவுள்
ஓழிந்துவிடாது
- ஓர் சமதர்மி
சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் குடி அரசில் ஜாதிகள் ஒழிக்கப் படுவதினால் மதம் ஒழிந்து விடாது என்பதாக விளக்கி இருந்தேன்.
இவ்வாரம் இக்கட்டுரையில் மதம் போய்விடுவதால் கடவுள் ஒழிந்து விடாது என்பதைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன்.
முதலில் மதம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்
மதம் என்பதைப் பற்றி இருவிதமான அபிப்பிராயங்கள் மக்கள் உலகில் நிலவி வருகின்றன.
ஒன்று:- மதங்கள் என்பவைகள் பெரிதும் கடவுள்களாலும், கடவுளைக் கண்ட பெரியார்களாலும், கடவுள் குமாரர்களாலும், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்களாலும், கடவுள் அவதாரங்களாலும், கடவுள் தன்மை கொண்ட ஆழ்வார்கள் நாயன்மார்களாலும் ஏற்பட்டவை என்றும், அம்மதங்களுக்கு ஆதாரமான வேதங்கள் என்று சொல்லப்பட்டவைகள் அக்கடவுள்களின் வாக்குகள் என்றும், கடவுள்களின் அபிப்பிராயங்கள் என்றும், கடவுள் அருள் பெற்றவர்களால், தீர்க்கதரிசிகளால் சொல்லப் பட்டவைகள் என்றும், கடவுள் கட்டளையின் மீது வெளியாக்கப்பட்டவை
என்றும், அசரீரியாக ஆகாயத்தில் இருந்து சப்த மூலமாக வந்தவைகள்
என்றும், அவை எக்காலத்துக்கும் ஏற்றவைகள் என்றும், அவைகளிலிருந்து
ஒரு எழுத்துக்கூட மாற்றக் கூடியது அல்ல வென்றும், அவைகளிலுள்ள படியே மக்கள் சமூகம் எக்காலத்திலும் நடந்து தீர வேண்டியது அவசியம் என்றும், மதத்தினாலல்லாது - மதம் கண்ட அருளாளர்கள் மூலமாய் அல்லது மனிதனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட மாட்டாது என்றும், கடவுளின் அடியை அடைய முடியாது என்றும், அம் மதக் கட்டளைகள் அம்மத வேத வாக்குகள் மனிதனுடைய அறிவுக்கும் நடப்பிற்கும் மற்றும் விஞ்ஞானத்திற்கும், நிரந்தர உண்மைக்கும் எவ்வளவு தூரம் மாறுபட்டிருந்த போதிலும் மனித சமூக வாழ்க்கை நடப்புக்கும், கூட்டுறவுக்கும் எவ்வளவு
நப ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தூரம் பயன்படாததாகவும் கேட்டை விளைவிக்கக் கூடியதாகவும் இருந்த போதிலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் - ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும் என்றும் - பின்பற்றித்தான் தீர வேண்டும் என்றும் சொல்லப் படுவதும் தான் மதம் என்ற அபிப்பிராயம் பெரும்பாலும் இருந்து வருகின்றது.
இரண்டாவது மதம் என்பது ஒரு கொள்கை என்றும், அது மனித
சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு ஏற்ற திட்டங்களையே பெரிதும் கொள்கையாகக் கொண்டதென்றும், அக் கொள்கைகள் காலக்கிரமங்களில் ஒவ்வொரு அறிஞர்களால் புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு கொள்கையின் கர்த்தாக்கள் பேராலும் அவ்வக்கொள்கைகளையே ஒவ்வொரு மதமாகக் கருதப்படுகின்றன. வென்றும், அக்கொள்கைகளைப் பலப்படுத்தவும் நிலை நிறுத்தவுமே மதங்களோடு கடவுள்களைச் சம்மந்தப்படுத்த வேண்டியதாயிற்று என்றும், நாளாவட்டத்தில் மதப்பிரசாரகர்களின் சுயநல வாழ்க்கையை முன்னிட்டு கொள்கைகளின் தத்துவங்கள் விளக்கப்படாமல் கண்மூடித்தனமாக நம்பிக்கையின் மேல் மக்கள் மதங்களோடு சம்மந்தப்பட வேண்டியதாயிற்று
என்றும், எந்த மதக் கொள்கைகளானாலும் அவை கால தேசவர்த்தமானங் களுக்குத் தகுந்த வண்ணம் மாற்றப்பட வேண்டியதே என்றும், மற்றொரு கூட்டத்தாரால் கருதப்படுகின்றது. இக் கூட்டத்தார் மதத்தோடு கடவுளைச் சம்மந்தப்படுத்துவதில்லை.
மற்றொரு மூன்றாவது கூட்டத்தார் மதசம்மந்தமான எந்தக் கொள்கையும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஒத்து இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுபவர்கள். மேல் காட்டிக் கொண்டு மதக் கொள்கைகள் என்பவைகள். அறிவுக்கும், உண்மைக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவைகள்தான் என்றும், அவைகளை அறியவும், உணரவும் சில மனிதர்களுக்குப் போதிய அறிவில்லை என்றும், சாமானியர்களுக்கு அவை விளங்காதென்றும் இப்படியாகச் சொல்லுபவர்களும் உண்டு
இரண்டாவது கொள்கைக்காரர்களுக்கு நான் சமாதானம் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் மதத்தோடு கடவுளை சம்மந்தப்
படுத்துவதில்லை என்று சொல்லி விடுகிறார்கள். ஆதலால் பிரஸ்தாப
விஷயத்திற்கும், அவர்களுக்கும் சம்மந்தமில்லை.
முதலாவது மூன்றாவது கொள்கைக்காரர்களுக்குச் சமாதானம் சொல்ல வேண்டியது அவசியமாகும்
இன்று உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. பல்வேறு மத ஆதாரங்களாகிய வேதங்களும் இருக்கின்றன. அவற்றின் கட்டளைகள் வெவ்வேறாகவும் இருக்கின்றன. அவ்வளவோடல்லாமல் ஒன்றுக்கொன்று மாற்றமுடையவைகளாகவும், எதிர்மறைக் கருத்துக்கள் கொண்டதாகவும்
குடி அரசு - 1935 (1) 312
இருக்கின்றன. ஒரே கடவுள் இவ்வளவு மதங்களுக்கும் இவ்வளவு மத ஆதாரங்களாகிய வேதங்களுக்கும் கர்த்தாவாக இருந்திருப்பார் என்று யாராவது சொல்ல முடியுமா?
பல கடவுள்கள் இருப்பதாக எந்த மதக்காரர்களும் ஒப்புக் கொள்ளுவதுமில்லை. ஆனால் ஒவ்வொரு மதக்காரர்கள் கடவுள்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான குணங்கள் செய்கைகள் கற்பிக்கப்படுவதோடு, ஒவ்வொரு ஆதாரங்களும் பெரிதும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவைகளாகவும் இருக்கின்றன.
ஒருவர் கடவுளையும், ஒரு வேதத்தையும் மற்றொரு மதக்காரன் ஒப்புக் கொள்வதில்லை என்பதோடு ஒவ்வொரு மதக்காரனும் என் கடவுள்தான் உண்மையாக எல்லோருக்கும் ஆதாரமான கடவுள் என்றும், தனது மத வேதம்தான் உண்மையானது - உண்மையான கடவுளால் சொல்லப்பட்டதுமாகும் என்றும் வாதாடுவதோடு மற்றக் கடவுள்களையும் வேதங்களையும் பரிகசிக்கிறார்கள், வெறுக்கவும் செய்கிறார்கள்.
ஆகவே எல்லா மதக்கடவுள்களும் உண்மையாய் இருக்க முடியாது என்றாலும், எல்லா வேதங்களும் கடவுள்களால் சொல்லப்பட்டிருக்காது
என்றாலும் ஏதாவது ஒரு மதக்காரனுடைய கடவுளையாவது ஏதாவது ஒரு மத (வேத)த்தையாவது (விவகாரத்துக்காக) உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அம்மதத்துக்கு உண்மையிலேயே கடவுள் சம்மதமிருந்து அந்த வேதம் உண்மையிலேயே கடவுளால் அல்லது கடவுள் சம்மதத்தின்
மீது அல்லது கடவுள் அருளால் வெளியாக்கப்பட்டிருக்குமானால் அது எல்லா மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததாய் இருக்க முடியுமா? அல்லது அதை எந்த மனிதனாவது ஆட்சேபிக்க முடியுமா?
மனித சமூக நன்மைக்காக கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மதம், கடவுளால் வெளியாக்கப்பட்ட வேதம் ஆகியவைகளை மக்கள் ஒப்புக் கொள்ளும்படியும் செய்வது எந்தக் கடவுளுக்கும் கஷ்டமான காரியமாகி விடுமா? அல்லது கடவுளே ஏற்படுத்திவிட்டு கடவுளே அவைகளை மனிதனை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் எதிர்த்துப் பேசும்படியும் செய்து அப்படிப்பட்டவனை தண்டனைக்குள்ளாக்குவது என்பது கடவுளின் வேலையாய் இருக்க முடியுமா? அப்படிக்கு இல்லையானால் கடவுள் வாக்கையும், கடவுள் கட்டளைகளையும் கடவுளால் அனுப்பப்பட்டவர்களின். உத்திரவுகளையும் மீறி நடக்கும்படியான சக்தி இந்த சாதாரண மனிதர்களுக்கு இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா?
அல்லது மூன்றாவது கூட்டத்தார்கள் சொல்லும் அபிப்பிராயப்படி கடவுள் தத்துவங்களையும், வேதங்களின் உண்மைகளையும் பற்றி அவை
பகுத்தறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துத்தான் இருக்கிறது. ஆனால்
நத ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அதைப் பற்றி அறிய மனிதனுக்கு சக்தி இல்லை என்பது வாஸ்தவமாய் இருக்குமானால் இன்று இவ்வுலகில் உள்ள 200 கோடி மக்களில் ஒருவராவது அறியக்கூடியவர்கள் இருக்க வேண்டாமா? அந்தப்படி இருந்தால் அவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி மெய்ப்பித்து ஒப்புக் கொள்ளச் செய்திருக்க வேண்டாமா? அப்படியும் இல்லையானால் மனிதனால் தெரிந்து கொள்ள முடியாத உண்மைகளை நம்பி உலகம் நடப்பதனால் நீதி விளங்குமா?
எவ்வளவோ அற்புதங்களைக் கண்டுபிடித்து மக்கள் அறிவுக்கும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் மெய்பித்துக் காட்டி பயன்படச் செய்து இருக்கையில் அப்படிப்பட்ட மக்களாலும் இந்த மத விஷயமான காரியம் அதுவும் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் உள்ள கடவுளால் கடவுளுக்காக அதாவது கடவுளை அறிவதற்காக மனிதனுடைய நன்மைக்கென்றே ஏற்பட்ட மதமும், வேதமும் மனிதனுக்கு அதுவும் ஆறு அறிவு படைத்து கடவுளை உள்ளத்தில் கொண்ட மனிதனுக்கு விளங்கும்படி செய்ய முடியவில்லை என்றால் இம் மதங்களும் வேதங்களும் கடவுளால் ஏற்பட்டதென்றோ கடவுள் சம்பந்தமுடையதென்றோ கடவுளை அடைவதற் கென்றோ ஏற்பட்டதென்று ஞானமுள்ள எவனாவது சொல்ல முடியுமா?
இன்று மதம் மனதாரவே விவகாரத்திற்கிடமில்லாமல் ஒவ்வொரு வருக்கும் மனதிற்கும் புத்திக்கும் அனுபவத்திற்கும் தெரியும்படியாகவே மனித சமூகத்தைப் பிரித்திருக்கிறது என்பதும், மதம் காரணமாகவே மனித சமூகத்தில் பல இயலிலும் வேறுபாடு நிலவி வருகின்றதென்பதும் மனிதப் பிறவியில் மனிதன், மற்ற ஜீவப் பிராணிகளைவிட மேலான அறிவையும் நிலையையும் பெற்றவன் என்பதை அடியோடு அழித்து சகல ஜீவப் பிராணி களைவிடக்கேடானவன்என்று சொல்லத்தகுந்த அளவும், குறைவும், கவலையும் அனுபவித்துக் கொண்டே வந்திருக்கிறான் என்பதும் தெரியவில்லையா?
இப்படிப்பட்ட காரியங்கள் மாற்றமடைந்து மனித சமூகம் உண்மை யிலேயே மேம்பாடு அடைவதற்கு இம்மதங்கள் ஒழிக்கப்படுவதாய் இருந்தால் ஒழிந்து போவதற்காகவே இருந்தால் இந்தக் காரணத்தினாலேயே கடவுள் ஒழிந்து விடுமா? அல்லது மறைந்துவிடுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். சர்வ வல்லமை சர்வ சக்தி உள்ள கடவுளைக் காப்பாற்ற ஒரு
மதம் வேண்டியதாயிருக்குமானால் அல்லது ஒரு வேதம் வேண்டியதாய் இருக்குமானால் அக் கடவுளை நாம் சர்வசக்தி சர்வ வியாபகம் உள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்
கடவுள் உருவம், குணம், விருப்பு, வெறுப்பு அற்றவர் என்றும்,
யாராலும் அறியப்படாதவர் என்றும், அவர் ஆதி அந்தமில்லாமல் எக்காலத்திலும் இருப்பவர் என்றும் சொல்லப்பட்ட பிறகு,
குடி அரசு - 1935 (1) 314
கோலம்
தலைவிரிகோலமாய் உள்ள மதம் என்பது போய்விட்டதினாலேயே ஒழிந்து போவார் என்று யாராவது நினைப்பார்களேயானால் அவர்கள் கடவுளை, சர்வசக்தி, சர்வவியாபகம் உள்ளவர் என்று கருதியிருப்பவர் களாவார்களா? இருந்தால் அப்படிப்பட்டவர்களை நாஸ்திகர்கள், கடவுள் தன்மை அறியாத கசடர்கள் என்று தானே சொல்ல வேண்டும்? ஆகவே எப்படிப்பட்ட ஆஸ்திகர்களும், மதம் ஒழிந்து போவதால், கடவுள் ஒழிந்து போய் விடுவார் என்று கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 05.05.1935
நத ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அறிக்கை
நமது பத்திரிகையில் ஒவ்வொரு ஊரிலுள்ள பார்ப்பன, பார்ப்பன. ரல்லாத உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையைக் கேட்டிருந்தோம். அதன்படி கோபி, திருச்சங்கோடு, சூலூர் முதலிய இன்னும் பல ஊர்களிலிருந்து எண்ணிக்கை லிஸ்டு வந்து இருக்கிறது. இவ்வாரம் திருச்செங்கோட்டிலிருந்து வந்த செய்தியை மட்டும் பிரசுரித்திருக்கிறோம். அடுத்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக மற்ற ஊர் செய்திகளைப் பிரசுரிக்கப்படும்.
- பார்,
குடி அரசு - அறிக்கை - 05.05.1935
குடி அரசு - 1935 (1) 316
மே விழாவும் ஜூபிலி விழாவும்
மேமாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும், மே மாதம்
6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில்
பரக்கக் காணலாம்
மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும்
ஜூப்பிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப் பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும் இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைபட்டும் கொண்டாடியதாகும்
இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும் இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான. மனப்பான்மையைக் கொண்டது
எப்படியெனில் முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு ஜாதிகள் பிறவியின். பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான பிரிட்டிஷ் ஆட்சி கூடாது என்றும் சொல்லும்படியான கொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்டதென்று சொல்லிக் கொள்ளும் ஸ்தாபனமாகும்
ஆனால் இந்திய மக்கள்இந்த இரண்டுகொள்கைகளைக் குறிக்கோளாகக் கொண்ட காங்கிரசை சிறிதும் மதிக்கவில்லை என்பதை இந்த இரண்டு விழாவும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டி விட்டது.
காங்கிரசானது வெளிப்படையாக இந்த இரண்டு விழாக்களையும் எதிர்க்க யோக்கியதை இல்லையானாலும் மனதிற்குள் தனக்கு உள்ள அதிர்ப்தியை பல வகைகளில் காட்டியது போலவே நடித்துக் கொண்டது ஒரு பயங்கொள்ளித் தீர்மானத்தையும் போட்டு விளம்பரப்படுத்திற்று என்ன செய்தும் ஜபம் சாயவில்லை.
இந்த இரண்டு விழாவும் இது வரை நடந்ததைவிட பல மடங்கு அதிகமாகவே கொண்டாடப்பட்டுவிட்டது.
317 ௨... பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்த நாட்டில் தேசீய அபிலாசைகளுக்கு சர்வாதிகாரிகளாகவும், ஒரே பாஸ்யக்காரர்களாகவும், இருந்து வந்தவை இந்து, சுதேசமித்திரன் பத்திரிக்கைகள்
அவைகள் தங்களுக்கு இஷ்டப்பட்டபோது அரசரை விஷ்ணுவின். அம்சம் என்று பூஜிப்பதும் தங்களுக்கு இஷ்டமில்லாதபோது அரசர் மாளிகைக்குள் யாராவது சென்று வந்தால் அவர்களை தேசத் துரோகிகள் என்றும், தேசத்தைக் காட்டி கொடுப்பவர்கள் என்றும் சொல்லுவதுமாய் மக்களை ஏய்த்து ஆட்சியையும் மக்களையும் தங்களுக்கு அடிமைப்படுத்தி
ஆதிக்கம் செலுத்தி வந்தன.
இந்த இந்து, சுதேசமித்திரன் சூட்சிகளையும் அவர்கள் கூட்டத்தினர். களின் மோசங்களையும் கண்டபின் இந்திய மக்கள் பெரும்பான்மையோர். அன்னியர் ஆட்சியாலேயேதான் இக்கூட்டத்தாரின் சூட்சிகளிலும் கொடுமை களிலிருந்தும் விடுதலை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொண்டார்கள். இதை உணர்ந்த இந்து, சுதேசமித்திரன் கூட்டம் இப்பொழுது ராஜபக்திக்குப் போட்டி போட ஆரம்பித்து விட்டன. அதாவது கொஞ்சகாலத்துக்கு முன்பு இந்நாட்டுக்கு விஜயம் செய்த இளவரசர் அவர்களை என்னன்னமோ பொருத்தமில்லாத வீம்புகளையும், வீரியங்களையும் எடுத்துச் சொல்லி பஹிஷ்காரம் செய்யத் தூண்டிய கூட்டம் இன்று நொண்டிச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு நிபந்தனையற்ற சரணாகதி போல் வாழ்த்துப் பாடி இருக்கின்றன. அதாவது “மாட்சிமை” தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் அரசர், வெள்ளி விழா கொண்டாடும் இந்த சுபதினத்தில் மன்னர் பிரானை
நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுவதோடு அவர் ஆரோக்கியமாக திடகாத்தரராக
நீடூழி வாழ்ந்துவர வேண்டுமென்று நாம் பிரார்த்திக்கிறோம்" அவருடைய இந்தியப் பிரஜைகளுக்கு அவரிடத்தில் பூரண நல்லுணர்ச்சி இருந்து வருமென்பதில் சந்தேகமில்லை" மனமார வாழ்த்துக் கூறுகிறோம்" என்று எழுதி இருக்கின்றன.
இந்த வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் நாம் ஆக்ஷ்பிக்க வரவில்லை. இந்தியா ஓட்டுக்குமே பஹிஷ்காரம் செய்த சைமன் கமிசனை வரவேற்று உண்மையை எடுத்துரைத்தவர்களுக்கு அரசரிடத்தில் மனஸ்தாபம் கொள்ள எவ்வித காரணமும் இருக்காதல்லவா. ஆனால் தேசீயப் பித்தலாட்டத்தின் யோக்கியதையை வெளிப்படுத்த இதை எழுதுகிறோம்
நிற்க, இன்று இந்தியாவில் பிரிட்டிஷ் அரசராலோ, அரசாங்கத்தாராலோ ஏதாவது காரியங்கள் ஆக வேண்டி இருக்குமானால் அது பழய அரசர்களைப் போல் பிராமணர்களைக் காப்பாற்றுவதோ சுதேச அரசர்களுக்கும்
குடி அரசு - 1935 (1) 318
ஜமீன்தாரர்களுக்கும் பாதுகாப்புகள் அளிப்பதோ வியாபாரிகளுக்கும் வட்டிக் கடைக்காரர்களுக்கும் கொள்ளை லாபம் உண்டாகும்படி நீதி செலுத்துவதோ அல்ல. இந்தக் கூட்டங்கள் ஏற்கனவே உச்ச ஸ்தானத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு சுபீக்ஷமாக ஒன்று பத்தாக அக்ஷயமாக வாழ்ந்து வருகின்றன. எனவே அரசர் கருணையும் அரசாங்க நீதியும் ஏழை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் ஏதாவது விமோசனம் செய்வதற்குப் பயன்பட வேண்டியதே முக்கியமாகும்.
இந்தத் துறைகளில் இதுவரை இந்த ஆட்சி ஏழை மக்களுக்கு ஒரு விதாயமும் செய்ததாகத் தெரியவில்லையானாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பெண் மக்களுக்கும் இதுவரை இந்தியாவில் இருந்த எந்த அரசும் ஆட்சியும் செய்திராத காரியத்தை ஒரு அளவுக்காவது செய்திருக்கிறது என்பதை நாம் தைரியமாய்ச் சொல்லுவோம்
மற்றும் வேறு யாராவது குறை சொல்வதாய் இருந்தாலும் இத்துறைகளில் இதுவரை செய்தது போதாது என்றுதான் சொல்ல முடியுமே யொழிய ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லிவிட முடியாது
ஆதலால் நமதுமன்னர் அவர்களும் அவரது ஆட்சியும்பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களால் பாராட்டக் கூடியதே என்பதோடு இந்த ஆட்சியை
நீடூழி காலம் நிலவ வேண்டும் என்றும் அவர்களால் வேண்டப்படுவதுமாகும். ஏழை மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு என்பது மாயத்தி னாலும் மந்திரத்தினாலும் சாத்தியப்படக் கூடியதல்ல.
பலர் ஊரைக் கொள்ளையடித்து குதிரில் கொட்டிக் கொண்டு 10 மூட்டை அரிசியை வேக வைத்து நொண்டி, முடம், கூன், குருடு, சோம்பேறி களுக்குப் போட்டுவிட்டால் ஏழை மக்களுக்குப் பெரிய உபகாரம் செய்துவிட்டதாக நினைக்கிறார்கள். இந்த முறை இந்த ஜூபிலியிலும் மே விழாவிலும் கூட பல இடங்களில் கையாளப்பட்டிருக்கிறது
சிலர் சத்திரமும் சாவடியும் கட்டி சோம்பேறிகளுக்கும் சோதாக்களுக்கும் அன்னமளித்து உறங்க இடம் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். இது ஏழை மக்களை ஏமாற்றுவதேயாகும். இதனால் யாதொரு பலனும் ஏற்படப் போவதில்லை. சோம்பேறிகளும் காலிகளும் தான் இன்னமும்
அதிகமாவார்கள்.
சிலர் பார்ப்பனர்களுக்குச் சாப்பாடு, கல்வி, கல்யாணம், சாந்தி முகூர்த்தம் செய்வித்தல் ஆகியவைகளைச் செய்து விட்டால் அதுவே ஏழைகளுக்குச் செய்ய வேண்டிய, பெரிய தருமம் செய்து விட்டதாக எண்ணுகிறார்கள். இவர்களைப் போல கண்காட்சிக்கு அனுப்பக் கூடிய ஞான சூனியர்களைக் காண்பது அரிது என்றுதான் சொல்ல வேண்டும். 30— வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
எனவே ஏழைகளுக்கு உதவி செய்வது என்பது ஏழ்மைத் தன்மை மனித சமூகத்தில் இல்லாமல் இருக்கும்படி செய்வதே ஒழிய இங்கொரு வனுக்கு அங்கொருவனுக்கு சோறு போடுவதால் அல்ல என்பதே நமது
அபிப்பிராயம்.
ஏழ்மைத் தன்மை என்பது மனித சமூகம் ஒட்டுக்கே அவர்களது
சாந்தமான வாழ்க்கைக்கே ஒரு பெரும் தொல்லையும் அசெளகரியமுமான: காரியம் ஆகும்
ஆதலால் மன்னர்பிரான் இந்த ஏழ்மைத் தன்மையை அடியோடு ஒழிப்பதற்கு சென்ற 25 ஆண்டு மாத்திரம் அல்லாமல் இன்னும் 50 ஆண்டும் அல்லாமல் 100 ஆண்டு ஆள வேண்டும் என்றும் ஆசைப்படு கின்றோம். அவரது வெள்ளி விழா, மே விழாவை ஒட்டி வந்திருப்பதாலும், மே விழா வெள்ளி விழாவை விட உலக முழுவதும் சுதந்திரத்தோடும் குதூகலத்தோடும் உணர்ச்சியோடும் கொண்டாடப் பெற்றிருப்பதாலும் இதுவே உலக பாட்டாளி மக்களின் அபிலாசையைக் காட்ட ஒரு சாதனமாய் இருப்பதாலும் அடுத்த விழா அதாவது அரசரின் தங்க விழா சமதர்ம விழாவாக மக்கள் எச்சாதியினராயினும், எம்மதத்தினராயினும், எத்தேசத்தவராயினும் பேதமற்று ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் எங்கும் இல்லாமல் இருக்கும்படியாகச் செய்த தினத்தைக் கொண்டாடும் விழாவாக கொண்டாடப்பட வேண்டும் என்பதே நமதபிப்பிராயமும் ஆசையுமாகும்.
மே திருவிழா விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் நாம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே நடந்து காட்டியதற்கு மகிழ்ச்சியோடு பாராட்டுவதுடன் இனி கொண்டாடப் போகும் மே விழாக்கள் மற்றவர்களைப்போல் நாம் ஆக வேண்டுமென்று ஆசைப்படும் திருவிழாக்களாக இல்லாமல் நம்மைப் பார்த்துப் பிறர் பின்பற்ற வேண்டும் என்று ஆசைப்படும் திருவிழாவாக நடைபெற வேண்டுமென்றும் ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.05.1935
குடி அரசு - 1935 (1) 320
சொர்க்கம்
- சித்திரபுத்திரன்
கேள்வி: சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா இரண்டில் ஒன்று சொல்லு
பதில்: இவ்வளவு அவசரப்பட்டால் நம்மால் பதில் சொல்ல
முடியாது. பந்தியில் உட்காரவே அனுமதி இல்லை என்றால் ஓட்டை இலை என்று சொல்லுவதில் பயன் என்ன?
சொர்க்கலோகம் என்பது எந்தப் பூகோளத்தில் இருக்கிறது? கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் மேலே பதினாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மைல்களுக்கும் வானசாஸ்திரிகள் விவரம் கண்டுபிடித்து விட்டார்கள். எங்கும் சொர்க்கலோகம் இருப்பதாகக்கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே சொர்க்கலோகமே சந்தேகத்தில் இருக்கும்போது சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறாரா என்றால் என்ன பதில் சொல்லுவது?
கே. அப்படியானால் மேல்லோகம், வைகுந்தம், கைலாயம், பரமண்டலம் முதலிய எதுவுமே இல்லை என்கின்றாயா?'
பதில்: நான் இவைகளையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து இல்லை என்று சொல்ல வரவில்லை. பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம் ஆகிய எதற்கும் இந்த லோகங்களில் எதுவுமே தென்படவில்லையே என்றுதான் மயங்குகிறேன்.
கே. அப்படியானால் அண்ட, பிண்ட, சராசரம், அதள, சுதள, பாதாளம் முதலிய கீழேழுலோகம், மேலேழுலோகம் என்பவைகளைக்கூட
நீ ஒப்புக் கொள்ளுவதில்லை என்று தானே அர்த்தம்
பதில்: இதுவும் முன்னைய கேள்வி போல் தானிருக்கிறது. மேலே
ஒரு லோகத்தைப் பற்றியே சந்தேகத்தில் இருக்கும்போது மேலும், கீழும் பதினாலு லோகத்தை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா? என்றால் இதற்கு என்ன பதில் சொல்லுவது?
கே. மேல்லோகங்களை நம்பாத நீ கடவுளை நம்புகின்றது என்பது முடியாத காரியம் தான். ஆகவே நீ நாஸ்திகன் தானே? நட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பதில்: என்னமோ சொல்லிக் கொள்ளப்பா. நமக்குத் தெரியாத சங்கதியைப் பற்றி தெரியும் என்று சொல்லிவிட்டு அப்புறம் உன்னிடம் விழிக்க நம்மால் ஆகாது
கே. விழிக்கிறதென்ன இருக்கிறது?
பதில் சொர்க்கலோகம் ஒன்று இருக்கிறது என்றே சொல்லி விட்டேன் என்று வைத்துக் கொள். அப்புறம் “அது எப்படி இருக்கிறது” “அது உனக்கு எப்படித் தெரியும்" “நீ பார்த்தாயா?" “அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள்" என்றெல்லாம் கேட்பாய். அப்புறம் அங்கு கடவுள் இருக்கிறாரா என்பாய் - இருக்கிறார் என்று சொன்னால் அது உனக்கு எப்படித் தெரியும், அவர் எப்படி இருக்கிறார். உட்கார்ந்து கொண்டா,
படுத்துக் கொண்டா, நின்று கொண்டா இருக்கிறார்? என்பாய். அவருக்கு கைகால் உண்டா, கண் மூக்கு உண்டா, ஜல உபாதை, மல உபாதை உண்டா என்பாய், இன்னும் என்ன என்னமோ கேட்பாய். இந்த எழவுக்கெல்லாம்
பதில் சொல்ல முடியாது. நீ நாஸ்திகன் என்றாலும் சரி, வேற என்ன சொன்னாலும் சரி, அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நமக்குத் தெரியாததைச் சொல்லிவிட்டு உம்மிடம் சிக்கிக் கொண்டு விழிப்பதைவிட நாஸ்திகன் என்கின்ற பெயரே மிகவும் யோக்கியமானதும், நாணயமானதும் ஆகும் என்று கருதுகிறேன்.
கே. நாஸ்திகனைக் கடவுள் எப்படித் தண்டிப்பார் தெரியுமா?
பதில்? தெரியும் தெரியும். அப்புறம் நான் அந்தக் கடவுளை சும்மா விட்டுவிடுவேனாக்கும்
கே. என்ன செய்வாய்?
பதில்? அந்தக் கடவுளுடைய சிண்டைப் பிடித்துக் கொண்டு நன்றாய் கேட்பேன். அதாவது நீ இருப்பதை என் கண்ணுக்கும் தெரிவிக்கவில்லை. மனதுக்கும் தெரிவிக்கவில்லை. உன்னுடைய லோகத்தையும் நமக்கு காட்டவில்லை. பூகோள படத்திலுமில்லை. எந்த சர்வேயிலும், எந்த
ஆராய்ச்சியிலும் கிடைக்கவும் இல்லை. இந்த மாதிரி நான் அறிய முடியாத காரியத்தை நீயே செய்துவிட்டு என்னைத் தண்டிப்பது என்றால் அப்புறம் தெரியுமா என்று கேட்டுவிடுவேன்.
கே. இப்படியெல்லாம் பேசாதே. மகா தோஷமாக்கும். கடவுள்: எதை மன்னித்தாலும் மன்னிப்பார். திருடினாலும், கொலை செய்தாலும், நம்பிக்கைத் துரோகம் செய்தாலும் ஊரான் உழைப்பில் சோம்பேறியாய் இருந்து தொப்பைப் போட்டாலும் சரி, இன்னமும் பண்ணாத காரியம் எது
குடி அரசு - 1935 (1) 322
செய்தாலும் சரி கடவுள் மன்னித்து விடுவார். ஆனால் அவர் விஷயத்தில் கொஞ்சமாவது நம்பிக்கைக் குறைவோ சந்தேகமோ அடைந்தால் அதற்கு மன்னிப்பே கிடையாது. நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்.
பதில்? சரி சரி ரொம்ப யோக்கியம் தான். கடவுள் ஒரு யோக்கியன் நீஒருமகாயோக்கியன். நான் நாஸ்திகன்தான். உங்களாலானதைப் பாருங்கள்.
குடி அரசு - உரையாடல் - 12.05.1935
23 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
கோவில் பிரவேசம் பொதுவுடமைத் தத்துவமாம்
கோவில் பிரவேசத்தைப் பற்றி ஒரு கெட்டிக்கார பேர் போன வக்கீல் ஒருவர் நம்மிடம் பேசும் போது “கோவில் பிரவேசம் கேட்பது பொதுவுடமைத் தத்துவமேயாகும்'” என்றார்.
எப்படி என்று கேட்டதற்கு அவர் பதிலளித்ததாவது£-
ஒருவனுக்கு அல்லது ஒரு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஆதாரப் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும், பழக்க வழக்கமாகவும், இருந்து வரும் ஒரு சொத்து அல்லது ஒரு கட்டிடம் ஒரு குறிப்பிட்ட இடம் முதலியவை களில் மற்றொருவனோ அல்லது மற்றொரு கூட்டத்தார் என்பவர்களோ. உரிமை வேண்டும் என்பதும் பொதுவுடமைக் கொள்கையேயாகும்
ஆதலால் ஒரு கோவிலுக்குள் அனுபவபாத்தியமில்லாத ஒருவன் போக வேண்டுமென்பது அதாவது ஒரு கூட்டத்தார் மாத்திரம் போகலா. மென்றோ ஒரு கூட்டத்தார் மாத்திரம் தான் உபயோகித்துக் கொள்ளலாம் என்றோ உள்ள நிபந்தனையில் சட்டப்படிக்கு உள்ள காலாவதிக்கு மேற்பட்ட காலமாய் பழக்கத்திலும் அனுபோகத்திலும் இருந்து வந்த இடங்களில் (கோவில், சத்திரம் முதலிய இடங்களில்) அக்கூட்டத்தாருக்கு வேறுபட்டவர்களும் வேறுபட்டவர்களாய்க் கருதப்பட்டவர்களும் அனுபவ பாத்தியம் இல்லாதவர்களும் பிரவேசிக்க உரிமை கேட்பது நியாயமாகாது. அதற்காக சட்டம் செய்வது என்பதும் கூடாததாகும்.
மீறி சட்டம் செய்யப்படுமானால் அது பொதுவுடமைத் தத்துவப்படி செய்யப்படுவதாவதோடு மக்களின் சொத்து, சுதந்திரம், பாத்தியம் ஆகியவைகளுக்கு இனி பந்தோபஸ்து இல்லை என்றும் தான் கருத வேண்டியதாகும்
அரசாங்கம் இதில் சம்மந்தப்படுமானால் அவர்கள் வாக்களித்த வாக்குறுதிகளுக்கு விரோதமாய் நடந்தவர்களாவார்கள் என்பதோடு தனி உடமை முறையை ஒழிக்க கால் நட்டவர்களுமாவார்கள்.
கோவில்கள், கடவுள் உணர்ச்சிகள் ஆகியவை எல்லாம் பொதுவுடமைத் தத்துவத்துக்கு விரோதமானதாகும். தனிப்பட்டவர்கள் சொத்துக்கள் உரிமைகள் ஆகியவைகளைக் காக்கவே அவைகள் இருக்கின்றன.
குடி அரசு - 1935 (1) 324
ஆதலால் அவை சம்பந்தமான காரியங்கள் எதுவும் எந்தவிதத்திலும் அரசியலில் சம்மந்தப்படவும் சட்டம் செய்யவும் இடம் தரக் கூடாது என்று சொன்னார்.
மற்றும் இதைக் காந்தியாருக்கும் எடுத்துச் சொன்னாராம். அவரும் இந்த வாதத்தை ஒப்புக் கொண்டாராம். அதனால் தான் அவர் கோவில் பிரவேசத்துக்கு சட்டம் செய்வதால் பயனில்லை என்றும், இந்துக்கள் எல்லோரும் கோவில் பிரவேசத்தை ஒப்புக் கொண்ட பிறகுதான் சட்டம் செய்ய வேண்டும் என்று சொல்லி மசோதாவை வாபீஸ் பெறும்படி செய்துவிட்டதோடு அது சம்மந்தமான காரியத்தை காங்கிரஸ் சட்டசபைக் கட்சியார் செய்யக் கூடாது என்றும் கட்டளை இட்டாராம்
குடி அரசு - கட்டுரை - 12.05.1935
05 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மே தினம் என்றால் என்ன?
இந்தியாவுக்கு ஏற்ற மே தினம்
தோழர்களே!
மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.
மேதினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை.
ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை
ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது
இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொருத்ததாகும்
இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதன் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்
எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட
குடி அரசு - 1935 (1) 326
அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.
அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்
ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.
மேல் நாடுகளில் இருக்கும் ஓடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள். அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி யென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்தியாவில்
ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப் படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஓடுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால். தொழிலாளி முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி
புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்
ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும் அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.
நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்
ஐந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன். 27 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமைமேல்ஜாதியானுக்குஉண்டு.அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.
இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக்
கூடுமானாலும் ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.
பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100க்கு 99% பேர்கள் இன்று அடிமையாக இழி மக்களாக நடத்தப்பட வில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப்படுவது மாத்திரமல்லாமல் ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளி களாகவும், ஏவலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றார்களா இல்லையா என்று பாருங்கள்.
மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீரப் பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும் சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா என்றும் பாருங்கள்.
இந்தியாவில் தொழிலாளி முதலாளி அல்லது எஜமான் அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால். இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான் சூத்திரன் பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில் தான் பெரியதொரு கிளர்ச்சியும் புரட்சியும் ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாட வேண்டியதாகும்
இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் ஒரு ஜாதியார் 1005@ 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளியாகவும், அடிமையாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்றவர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப்பட்ட ஜாதிப்பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு
அழிக்காமல் வேறுவிதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.
குடி அரசு - 1935 (1) 328
இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி அந்தஸ்துடன். வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும்
தான் முறையே சொல்லுகின்றோம்
ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு ஆக தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆக பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க வில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.
ஏதாவது ஒரு தொழில்சாலையில் நித்திய கூலிக்கோ மாதச் சம்பளத்துக்கோ பாடுபடுகின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசி விடுவதினாலேயே அல்லது அத் தொழிலாளிகள் விஷயமாய்ப் பேசி விடுவதினாலேயே அல்லது அவர்களுக்கு தலைமை வகிக்கும் பெருமையை
சம்பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளி களுக்குப் பாடுபட்டவர்களாகக் கருதிவிடக் கூடாது. அவர்களெல்லாம் அரசியல் தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்துகின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டியவர்களாவார்கள்.
இந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத் திற்கும், இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகின்றேன்.
இந்த முதலாளி தொழிலாளி நிலைமைக்கு வெள்ளையர் கருப்பர்கள். என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது ஏனெனில் தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்கு கொண்டு வந்தவர்களே வெள்ளையர்களேயாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும். ஆகையால் இதில் வெள்ளையர் கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது
39 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும் மதத்தையும் காப்பாற்று வதையே முக்கியமாய்க் கொண்டிருப்பதினால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன்.
இன்று நம் நாட்டில் உள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற
கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின்்பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.
இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.
இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லுகிறார்கள். பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார்களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற நிபந்தனைகளைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம் வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப் பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்
நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண் பெண்: கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும் தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி
இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள் நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்
இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும் பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
நிற்க, இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில் நமது பண்டிகைகளில் அனேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப்படுத்துவதேயாகும். தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மைகளையும் கொண்டாடுவதைத்
குடி அரசு - 1935 (1) 330
தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர் கூடி இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.
பெண்களையும் வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.
தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல் பெண்: ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம் பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில்விட சம்மதிக்கிறார்கள் உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படிஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படுவதையும் பார்த்துக்கூட
சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்மந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும் ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும்
சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.
குறிப்பு: 01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றிய முடிவுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1935
B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தேவக்கோட்டையில்
மே தினம்
(ஈ.வெ. ராமசாமிஅவர்கள்) மேதினம்என்பது பற்றியும் சீர்திருத்தத் இருமணம் என்பது பற்றியும் யாகம் என்பது பற்றியும் பேசினார்.
கூட்டத்தில் இரண்டொரு பார்ப்பனவக்கீல்கள்வந்து யாகத்தைப் பற்றி பேசக் கூடாது என்று ஆட்சேபித்தார்கள். அவர்களை ஜனங்கள் ஆதரிக்காமல் தடுத்துப் பேசினார்கள். தோழர் ஈ.வெ.ரா. ஜனங்களை அமைதிப்படுத்தி வக்கீலை நன்றாய்ப் பேசுவதற்கு இடம் கொடுத்து அவர் பேச்சைக் கேட்கச் செய்தார். தலைவர்அவரை மேடைக்கு வந்து பேசும்படி பல தடவை கூப்பிட்டும் அவர் வரவில்லை என்றாலும் அவர் பேச்சு முழுவதும் இடையூறு இல்லாமல் கேழ்க்கச் செய்தார். பிறகு ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னார்.
அய்யருடைய வாதமெல்லாம் யாகம்ரிஷிகளால் சொல்லப்பட்ட தென்றும் யாகத்தில் செய்யப்படும் ஜீவ இம்சையும் கொலையும் இம்சையும் கொலையுமாகாதென்றும் யாகத்தில் கொல்லப்பட்ட ஜீவன் மோட்சத்தை அடைகிறதென்றும் அதைப்பற்றிப் பார்ப்பன ரல்லாதார் பேசுவதற்குப் பாத்தியமில்லை என்றும் குறிப்பாக ராமசாமி, சாஸ்திரம் படிக்காதவர் ஆனதால் அவர் இதைப்பற்றிப்
பேசச் சிறிதும் அருகதை அற்றவர் என்றும் சொன்னார்.
தோழர் ராமசாமி இதற்குப் பதில் சொல்லுகையில், புத்தர் சமணர்கள் எல்லாம் பார்ப்பனரல்லாதார்கள்தான் என்றும், அவர்கள் யாகத்தைக் கண்டித்து இருக்கிறார்கள் என்றும் இராவணன் தாடகை எல்லாம் பார்ப்பனரல்லாதார்கள்தான் என்றும் அவர்களும் யாகத்தைக் கண்டித்து இருக்கிறார்கள் என்றும் பார்ப்பனர்கள் யாரைக் கொன்றாலும் அவர்கள் தான் மோட்சத்துக்கு போவதாகத்தான் ஐதீகம் சொல்லுவார்கள் என்றும் சாஸ்திரங்கள் பார்ப்பனரல்லாதார் படித்ததாகச் சொன்னாலும் பார்ப்பனர்கள்.
ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும், மிருகங்களை ஒரு சொட்டு ரத்தம்
சிந்தச் செய்யாமலும், அறுக்காமலும், வெட்டாமலும் சாகடிப்பதாய் இருந்தால் அதற்கு இம்சை இருக்காது என்று சொன்னால் இதை யாராவது நம்ப முடியுமா என்றும், ஆடு மோட்சம் போவதும், நரகம் போவதும் இவருக்கு எப்படித் தெரியும் என்றும், நம்ம பெற்றோர்களை மோட்சத்துக்கு
குடி அரசு - 1935 (1) 332
அனுப்புவதாய் நம்மிடம் காய் கறி அரிசி பருப்பு மாடு தானம் வாங்குவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றும் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நம்புகிறார்கள் என்று சொல்ல முடியாதென்றும் பார்ப்பனரல்லாத மக்களை ஏய்க்கவும், மிரட்டவுமே யாகம் முக்கியம் ஜபம் தபம் என்கின்ற வார்த்தைகளையும், சடங்குகளையும் உபயோகிக்கிறார்கள் என்றும் யாகம் என்பது பொதுவாகவே ஒருவித பார்ப்பனீய பிரச்சாரமென்றும், இதில் நம்பிக்கை ஏற்படும்படி பிரசாரம் செய்ய அவர்களுக்கு உரிமை இருந்தால். நம்பிக்கை இல்லாமல் இருக்கும்படி பிரசாரம் செய்ய நமக்கு உரிமை உண்டு என்றும் அரை மணி நேரம் பதில் சொன்னார். கூட்டத்திலுள்ள ஜனங்கள்
சிரி சிரி என்று சிரித்த வண்ணமாய் இருந்தார்கள்.
குறிப்பு: 02.05.1935 ஆம் நாள் தேவகோட்டையில் நடைபெற்ற பொதுக்
கூட்டத்தில் மே தினம் குறித்தும் சீர்திருத்தத் திருமணம் குறித்தும் ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1935
3 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நீடாமங்கலத்தில் சுயமரியாதைத் திருமணம்
சுயமரியாதைத் திருமணம் என்பது சீர்திருத்தத் திருமணமே ஒழிய மற்றபடி வேறு அல்ல என்பதாக பல மேற்கோள்களுடன் சிறிது நேரம் பேசினார். அதில் 40 வருஷத்துக்கு முன்னால் நடந்த தனது திருமணமும் இந்த மாதிரி தன் தகப்பனாருக்கு இஷ்டமில்லாமல் நடந்ததாகவும் தனது மனைவியை மணக்க திருமணத்தின் போது தந்தை தனக்கு இஷ்டமில்லை என்று சொன்னதாகவும், அதனால் தந்தையார் சாப்பாடு இடத்திலேயே இருந்தாரே ஒழிய மணக் கொட்டகைக்கு வரவில்லை என்றும், மற்றபடி செலவு விஷயத்தில் அவர் ஏதும் குறுக்கிடவில்லை என்றும், ஐரோப்பியர் வந்தபோது மாத்திரம் வரவேற்க வந்ததைத் தவிர மற்றபடி எந்த காரியத்தையும் கவனிக்கவில்லை என்றும், பிறகு தன் மனைவி விஷயத்தில்
தன் தகப்பனார் மிக பட்சமாக இருந்தார் என்றும் ஒவ்வொன்றுக்கும் மனைவிக்காக சிபார்சுக்கு வந்து தன்னைக் கண்டித்தாரென்றும் சொல்லி அதுபோலவே இப்போது மணமகன் தந்தையாருக்கு ஏதோ சிறிது அதிருப்தி இருந்தாலும் அது சீக்கிரம் சரிப்பட்டுப் போகும் என்றும் சொன்னார்.
குறிப்பு: 05.05.1935 ஆம் நாள் நீடாமங்கலத்தில் நடைபெற்ற தோழர்கள் இரத்தினசபாபதி - தனலட்சுமி ஆகியோர் திருமணத்தில் ஆற்றிய
உரையின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 12.05.1935
குடி அரசு - 1935 (1) 334
கடவுள்
- சித்திரபுத்திரன்
கேள்விஉ கடவுள் நன்மையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு
பதில்உ நல்ல காற்று, நல்ல தண்ணீர், வாசனை உள்ள புஷ்பம், ருசியுள்ள ஆகாரம், சத்துள்ள பழ வகை, மழை, நதி, நந்தவனம், பால், பசு, நல்ல பெண்கள், சந்திரன், சூரியன் முதலிய அனேக அருமையான வஸ்துக்களை உற்பத்தி செய்து நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆதலால்
கடவுள் நன்மையே உருவாகக் கொண்டவர்.
கேள்வி: கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர் என்பதற்கு உதாரணம் சொல்லு
பதில் கெட்ட காற்று, விஷப் புகை, நோய்க் கிருமிகள் உள்ள தண்ணீர், துர்வாடையுள்ள மலம், கசப்பான ஆகாரம், உபயோகமற்றதும் நோயை உண்டாக்குவதுமான பழம், துஷ்டமிருகங்கள், விஷஜந்துக்கள், கொடிய வியாதி, கடும் வெய்யில், இடி, பூகம்பம், மூரட்டு வெள்ளம், இருட்டு, நோய் உள்ள பெண்கள், தரித்திரம், முள்ளுள்ள புதர்க்காடுகள் முதலானவைகளை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்திருக்கிறார். ஆதலால் கடவுள் கெடுதியையே உருவாய்க் கொண்டவர்.
கேள்வி? இந்தக் கெடுதிகளையெல்லாம், கடவுள் தான் உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ௬ஜு?
பதில்: முன் சொல்லப்பட்ட நன்மைகளை எல்லாம் கடவுள் தான்: உற்பத்தி செய்தார் என்பதற்கு என்ன ருஜுவோ அந்த ருஜுவைத்தான் கெடுதிகளையும் கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்லுவதற்கும் ருஜுவாக ஏற்றுக் கொள்ளக் கோருகிறேன்.
கடவுள்
படைத்தான் படைப்பெல்லாம் மனிதனுக்காகவே மனிதனைப் படைத்தான் தன்னை வணங்க என்று ஒரு மதம் சொல்லுகின்றது. B35 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஆகவே கடவுளை வணங்குவதற்கு என்று கடவுளாலேயே மனிதன் படைக்கப்பட்டிருப்பானேயானால் கடவுளின் இழி தன்மைக்கு வேறு என்ன. சாட்சியம் வேண்டும்?
தன்னை வேறு ஒரு மனிதன் வணங்க வேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தானேயானால், அவனை நாம் எவ்வளவு அயோக்கியன் என்றும், ஆணவக்காரனென்றும், இழிகுணம் படைத்தவனென்றும் ஈனன் என்றும் சொல்லுகின்றோமா இல்லையா?
அப்படியிருக்க, ஒரு கடவுள் என்று சொல்லப்பட்டவர் தன்னை வணங்குவதற்கு என்று பலகோடி மக்களைப் படைப்பித்து அவர்களை பலவிதமான கஷ்டங்களும் குறைகளும் அனுபவிக்க விட்டு வேடிக்கை பார்த்தால் அப்படிப்பட்ட கடவுள் நல்லவர், பெருந்தன்மை உள்ளவர், தயாபரர், கருணாமூர்த்தி, விருப்பு, வெருப்பு, தற்பெருமை இல்லாதவர். என்றெல்லாம் அறிவுள்ள மனிதனால் சொல்லமுடியுமா?
அன்றியும் கடவுள் மனிதனைப் படைத்தது உண்மையாய் இருக்குமானால் அந்த ஒரு காரியமே பெரியதொரு அயோக்கியத்தனமும் அக்கிரமுமானதென்று தான் சொல்ல வேண்டும்
ஏனெனில் மனிதனால் மற்ற மனிதர்களுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் எவ்வளவு துன்பங்கள் நிகழ்கின்றன?
மனிதன் எவராவது யோக்கியமாய் இருக்க முடிகின்றதா?
இவைகளெல்லாம் மனிதனைப் படைப்பதற்கு முன் கடவுளுக்குத் தெரியாதா?
மனிதனுக்குக் கொடுத்திருக்கும் புத்தி அறிவு என்பதை அவன் எப்படி உபயோகிப்பான் என்பதைகடவுளுக்கு ஆரம்பத்தில் அறிய முடியவில்லையா? அல்லது அறியும் சக்தி இருந்தும் கவலையீனமாய் இருந்து விட்டாரா?
இவைகளெல்லாம் பார்த்தால் கடவுளின் யோக்கியதையும் அவர் இருக்கும் லக்ஷணமும் நன்றாய் விளங்க வில்லையா?
குடி அரசு - உரையாடல் - 12.05.1935
குடி அரசு - 1935 (1) 336
நாஸ்திகம் எது?
உலக நடவடிக்கைகள் சகலத்தையும் நடத்திக்கொண்டும், வணக்கத்திற்கும், பிரார்த்தனைகளுக்கும் பிரதி பயன் அளித்துக் கொண்டும் இருக்கும்படியான ஒரு கடவுளை நம்பவில்லை யென்று சொல்லுவது நாஸ்திகமானால் அந்த நாஸ்திகப் பட்டத்தை ஏற்றுக் கொள்ள எந்தப் பகுத்தறிவு வாதியும் வெட்கப்பட மாட்டான்.
குடி அரசு - பெட்டிச் செய்தி - 12.05.1935
நர ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஏன் ஜூப்பிலியை?
காங்கிரஸ்காரர்கள் ஜூப்பிலியை ஏன் பகிஷ்கரிக்கவில்லை என்றா
கேட்கிறீர்கள்.
அவர்கள் தான் சட்டசபைக்குச் சென்று அரசரிடமும் அரசரின் பின். வார்சுகளிடமும் பக்தியாய் விசுவாசமாய் இருப்பதாக சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தவர்களாயிற்றே. அப்படியிருக்க அவர்கள் பொது ஜனங்களிடம் சத்தியம், நாணையம், யோக்கியம் தவரி நடந்து அவர்களை எப்படி மோசம் செய்தாலும் சர்க்காரிடத்தில் மாத்திரம் எப்போதும் சத்தியம் தவர மாட்டார்கள்.
ஏன் என்றா கேட்கிறீர்கள்?
சர்க்காரிடம் சும்மா தவரினாலோ அவர்களுக்கு நன்றாய் புத்தி கற்பிக்க தெரியும். அப்படிப்பட்ட சர்க்காரார் சத்தியம் தவரினாலும் இவர்களை சும்மாவா விட்டு விடுவார்கள். திம்மு திம்மென்று திம்மி இன்னொரு தடவை நிமிர்த்தி விட்டுவிட மாட்டார்களா?
சூடுகண்ட பூனைகள் ஆயிற்றே காங்கிரஸ்காரர்கள். இனியுமா அவர்களுக்குப் புத்தி வந்திருக்காதென்று நினைக்கிறீர்கள்
எந்த தேசியப் பத்திரிகையாவது மூச்சு விட்டதா?
எந்த தேசியத் தலைவராவது கீச்சு மூச்சுக் காட்டினார்களா?
தலைவர் முதலா வாலர் வரையில் குந்தினாயே குரங்கே என்று ஆகிவிடவில்லையா?
குடி அரசு - செய்தி விமர்சனம் - 12.05.1935
குடி அரசு - 1935 (1) 338
அரசாங்க [கேபிநட் ] மெம்பர்கள் கவனிப்பார்களா?
சென்னை அரசாங்கத்தில் உத்தியோகஸ்தர்களை அமைக்கும் பொறுப்பும் அதிகாரமும் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுமானாலும் அவை பெரிதும் கவர்னர் பிரபுவின். ஆலோசனைச் சபை அங்கத்தினர்களான போலீஸ், லா, ரிவினியூ ஆகிய இலாக்கா தலைவர்களுக்கே நேரிட்ட பொறுப்பும், மேல் பார்வையும்,
அதிகாரமும் இருந்து வருகின்றன.
மந்திரிமார்களோ உத்தியோக நியமன விஷயங்களில் யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்து வருகிறார்கள். மந்திரிமார்கள் கையில் உள்ள உத்தியோகங்களோ மிகச் சிலவேயாகும். அதுவும் ஸ்தல ஸ்தாபன. இலாக்கா சம்மந்தப்பட்ட வரையில்தான் அவர்களது அதிகாரம் செல்லலாம். எனினும் இந்த இலாக்காவிற்கும் செக்ரட்டரிகள் என்னும் ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் குறுக்கிட்டு, அவற்றை மந்திரிகள் இஷ்ட்டப்படி நடை பெறாமல் செய்யவும் இடம் வைக்கப்பட்டிருக்கின்றபடியால் அந்த அதிகாரமும் பலனற்றது என்றே சொல்ல வேண்டும்
மற்றபடி போலீஸ்-லா-ரிவின்யூ இலாக்காக்களுக்கு முன்னைய மந்திரிசபையின் பயனாய் ஒரு அளவுக்கு பல வகுப்புகளையும் கவனித்து நியமனம் செய்யும்படியான வகுப்புவாரி முறை புகுத்தப்பட்டிருந்தும் மேற்படி இலாக்காத் தலைவர்களின் லட்சியக் குறைவால் அம்முறையாலும் தக்க பயன் ஏற்படாமல் பழயபடியே அரசியல் உத்தியோகம் ஒரு வகுப்பாரின் கைக்கே அதாவது பார்ப்பனர் கைக்கே போகும்படியாய்
இருந்து வருகின்றது இதை நாம் துவேஷத்தின் மீதோ, பொறாமையின் மீதோ சொல்ல வரவில்லை. உண்மை நிலையைக் கண்டு புள்ளி விபரங்களைக் காட்டியே சொல்லுகிறோம்.
அன்றியும் சுமார் ஒரு நூறு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு பிரஞ்சு பாதிரியாகிய ஆபேடூபாய் என்பவர் இந்திய அரசாங்க உத்தியோகத்தைப் 30 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பற்றியும், பார்ப்பனர்களின் யோக்கியதையைப் பற்றியும் கூறி இருப்பதைப் பார்த்தால் இன்றைய நிலைமையைப் பற்றி நாம் எடுத்துச் சொல்வதை எவரும் துவேஷம் என்று சொல்லிவிட முடியாது
அவர் குறிப்பிடுவதாவது?
“பார்ப்பனர்களை நம்புவது ஆபத்து?
இந்தியாவைத் தற்பொழுது ஆண்டு வரும் ஐரோப்பியர்களை பார்ப்பனர்கள் வெகு சாமர்த்தியமாக தம் வசப்படுத்திக் கொண்டார்கள். பல ஜில்லாக்களிலுமுள்ள சர்க்கார் உத்தியோகங்களில் உயர்ந்தவைகளையும், அதிக வருமானம் வரக் கூடியவைகளையும், நீதி இலாக்காக்களையும்,
மற்றும் சகல பதவிகளையும், பார்ப்பனர்களே கைப்பற்றி இருக்கிறார்கள். உண்மையில் சர்க்கார் உத்தியோகங்கள் எதுவும் அவர்கள் இல்லாவிட்டால் நடவாது என்கின்ற தன்மையை உண்டாக்கிக் கொண்டார்கள்"
மேலும் சப் கலக்டர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும், கஜான்சிகளாகவும் மற்ற சிப்பந்திகளாகவும்
பெரும்பாலும் பார்ப்பனர்கள் நிரம்பி இருக்கிறார்கள். இவர்கள் உதவியில்லாமல் எதையும் செய்வது கஷ்டமான காரியமாக அவர்கள்.
சாமர்த்தியத்தால் செய்து கொண்டார்கள்.”
மேலும் இந்நாட்டு மக்களின் அபிப்பிராயத்தையும் அதைத் திருப்புவதற்குள்ள வழிகளையும் பார்ப்பனர்கள் நன்கறிந்திருப்பதும் பிறப்பினால் பார்ப்பனர்களுக்கேற்பட்ட உயரிய அந்தஸ்தும் பார்ப்பனர் களுக்கு எளிதில் உத்தியோகங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்கு அனுகூலமாக இருந்து வருகின்றது."
“மற்ற ஜாதியார் பார்ப்பனர்களுக்கு மதிப்பையும், கவுரவத்தையும்
கொடுப்பதனால் இவர்களை உத்தியோகத்துக்கு நியமிப்பதால் அரசாங்கக்
காரியம்பெருமையாக நடக்கும் என்ற அபிப்பிராயம் ஏற்பட இடமுண்டாயிற்று.”
இப்பார்ப்பனர்களின் தன்மையை ஊன்றிக் கவனிக்காமல் அவர்கள் மீது பூரண நம்பிக்கை வைப்பதால் ஐரோப்பியர்கள் இடர்ப்படப் போகிறார்கள் என்பதில் அய்யம் இல்லை. இவ்வளவு தூரம் பார்ப்பனர். களுக்கு ஐரோப்பியர்கள் இடம் கொடுப்பதால் தங்கள் உத்தியோகங்களுக்கு ஆபத்துத் தேடிக் கொண்டவர்களாகி தாங்கள் உத்தியோகங்களை இழக்கக்கூடிய நிலைமைக்கு வரப் போகின்றார்கள்.”
(என்று 1816 ம் வருஷத்திலேயே பிரஞ்சு பாதிரியாரான ஆபேடுபாய்
எழுதி இருக்கிறார்கள். இது ஆலயப் பிரவேச உரிமை 8-ம் அத்தியாயம் 52-வது பக்கம்)
குடி அரசு - 1935 (1) 340
இவை போதாமல் சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள் 6, 7 வருஷங் களுக்கு முன் லா மெம்பராகவும், போலீஸ் மெம்பராகவும் இருந்த காலத்தில் அந்த இரண்டு இலாக்காவையும் பரிசுத்தமான அக்கிரகாரமாகவே ஆக்கி விட்டுப் போனார். ரிவினியூ இலாக்காவில் ஐரோப்பியர் இருந்து வந்தும் அந்த இலாக்கா முக்காலே மூன்று வீசம் அக்கிரகாரமாகவே ஆக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணம் பெரிதும் செக்கரடரியேட்டில் உள்ள. பார்ப்பன ஆதிக்கமும் சூட்சியும் என்று சொல்லப்பட்டாலும் மந்திரிமார்கள் எவரும் இதை பற்றிக் கவனிக்காத குற்றம் ஒரு அளவுக்குக் காரணம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஆறு ஏழு வருஷ காலம் சர். கிருஷ்ணன் நாயர் லா மெம்பராய் இருந்தார். ஏழு எட்டு வருஷ காலம் சர். மகமத் உஸ்மான் சாயபு அவர்கள் போலீஸ் மெம்பராகவும், ஹோம் மெம்பராகவும் இருந்தார். இவர்கள்.
சர்.பி.சி. ராமசாமி ஐயர் கட்டிவிட்டுப் போன அக்கிரகாரக் கோட்டை அஸ்திவாரத்தை கடுகளவிலாவது அசைத்தார்கள் என்று சொல்லுவதற்கு யோக்கியதை இல்லாமலே ஆள் ஒன்றுக்கு 3 லட்சம் 5 லட்சம் என்பதாக ரூபாய்களை சேர்த்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார்கள்.
லா மெம்பர்
சர்.கே.வி. ரெட்டி நாயுடு லா மெம்பராகி ஒரு வருஷத்திற்கு மேலாகின்றது. போகிற இடங்களில் எல்லாம் வகுப்பு, நீதி, ராஜ பக்தி ஆகியவைகளைப் பற்றி பேசுவதில் சிறிதும் குறைவில்லை. ஆனால் இந்த
ஒரு வருஷ காலத்தில் நீதி இலாக்காவில் எங்கும் அக்கிரகாரமயமாய் இருப்பதை மாற்ற ஒரு கடுகளவு முயற்சியாவது எடுத்ததாகத் தெரியவில்லை.
முன்பெல்லாம் சப் ஜட்ஜிகளாகவும், ஜில்லா ஜட்ஜிகளாகவும், ஹைகோர்ட்டு ஜட்ஜிகளாகவும் வக்கீல் கூட்டங்கள் இருந்து நேரடியாக நினைத்தபடி பார்ப்பனர்களே நியமிக்கப்படவில்லையா?
மாதம் 200, 300 ரூபாய்கள் கூட வரும்படி இல்லாத வக்கீல்கள்
பார்ப்பனர் என்கின்ற காரணத்தைத் தவிர வேறு எவ்வித யோக்கியதையும்
இல்லாமல் இருந்தும் ஜில்லா ஜட்ஜாகி இன்று ஹைகோர்ட் ஜட்ஜாக
ஆக்கப்பட்டு விடவில்லையா?
இன்று லா டிபார்ட்மெண்டில் நீதி இலக்காவில் ஜில்லா ஜட்ஜுக்கள் இந்துக்கள் 18 பேர்களில் 11 பேர்கள் பார்ப்பனர்கள், 4 மலையாளிகள், 3 பார்ப்பனரல்லாத தமிழர்களே இருப்பதும்,
சப் ஜட்ஜுகள், இந்துக்கள் 66 பேர்களில் 51 பார்ப்பனர்களும், 11
மலையாளிகளும் 4 பேர்களே பார்ப்பனரல்லாத தமிழ் மக்களாக இருப்பதுவும்,
ந ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
169 இந்து முனிசீப்புகளில் 115 பார்ப்பனர்கள் 17 மலையாளிகள். போக 37 பேர்களே தான் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களாய் இருப்பதுவும்
பார்த்தால்,
வகுப்பு நீதிக்காக உத்தியோகம் பார்க்கும் மெம்பர் வெட்கப்பட வேண்டிய காரியமா அல்லவா என்று கேட்கின்றோம்.
லா மெம்பர் தோழர் சர் கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் 5 வருஷம் மந்திரியாகவும், 3 வருஷம் சவுத் ஆப்பிரிக்கா ஏஜண்டாகவும் மற்றும் இப்போது இன்னும் 2, 3 வருஷங்களுக்கு மாதம் 5333-5-4 சம்பளம் வாங்கும் லா மெம்பராகவும் இருந்தும் இவரால் இந்த சமூகம் அடைந்திருக்கும் நிலைமை இதுவானால் “பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லப்படுவதானது அச்சமூகத்தில் ஏதோ இரண்டொருவர் தொப்பை நிரப்புவதற்குத் தான் பயன்படுத்தப்படுகிறது'' என்று சொல்லு பவர்களின் கூற்றை எப்படி மறுக்க முடியும் என்று கேட்கின்றோம்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சமீப காலத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் 100-க்கு 97 பேர்கள் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவே (காங்கிரசுக்கே) வேலை செய்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது
பார்ப்பனர்களின் உள் எண்ணமும் காங்கிரசின் சூட்சித் தன்மையும் நாணயக் குறைவான தன்மையும் பார்ப்பனர்களுக்கு வேலை செய்த பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லிவிட முடியாது. அந்தப்படி யாராவது சொன்னால் அது பார்ப்பனரல்லாத வக்கீல்களை மூடர்கள் என்று சொல்வதற்கு ஒப்பாகும். மற்றப்படி இவர்கள்.
ஏன் பார்ப்பனர்களுக்குக் கூலிகளாக இருந்தார்கள் என்பதற்கு நாம் காரணம் சொல்ல வேண்டியதில்லை.
எனவே, லா மெம்பர் பார்ப்பனரல்லாத கட்சியின் நன்மையைக் கருதினவர் என்று சொல்லப்படுமானால் இந்த சர்வ வல்லமை உள்ள நீதி இலாக்காவில் பார்ப்பனரல்லாதார்களுக்கு நீதி வழங்கினால் ஒழிய மற்றபடி எப்படி அந்த வார்த்தை உண்மையாகும் என்று கேட்கின்றோம் ஆகவே கனம் லா மெம்பர் அவர்கள், குறைந்தது ஒரு 50 சப் ஜட்ஜ்களையும் 10 ஜில்லா ஜட்ஜிகளையுமாவது நேரே தெரிந்தெடுக்கும் படியான ஒரு சட்டத்தைச் செய்து பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்கு சுதந்திர புத்தியை உபயோகிக்க இடம் கொடுக்காத வரையில் அடுத்த பொதுத் தேர்தலின் தோல்விக்கு கனம் லா மெம்பர் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களே முக்கிய காரணஸ்தராகி விடுவார் என்பதை இப்பொழுதே எச்சரிக்கை செய்து விடுகிறோம்.
குடி அரசு - 1935 (1) 342
போலீஸ் மெம்பர்
அது போலவே போலீஸ் மெம்பர் கனம் பன்னீர்ச்செல்வம் அவர்கள் போலீஸ் மெம்பர் ஆனதும் அனேக தோழர்கள் அவர் அந்த இலாக்காவில் ஏதோ பிரமாதமாய் சாதித்து விடுவார் என்று எதிர்பார்த்தார்கள்.
ஏனெனில் அவர் தஞ்சை ஜில்லா போர்ட் பிரசிடெண்டாய் இருந்த காலத்தில் வேறு எந்தப் பிரசிடெண்டும் செய்ய முடியாத அவ்வளவு பெரிய காரியங்களில் பார்ப்பனரல்லாதார்களுக்கு நீதி செய்திருக்கிறார். தஞ்சை ஜில்லா பார்ப்பன ஆதிக்கம் உள்ளது என்பதோடு அநேக தர்ம சொத்துக் களைப் பார்ப்பனர்களே ஏகபோகமாய் வெகுகாலமாக அனுபவித்து வந்ததுமாகும். அச்சில்லா இந்த மாகாணப் பார்ப்பனர்களுக்கே ஒரு கோட்டையாகவும் இருந்தது. அப்படிப்பட்ட ஜில்லாவில் கனம் செல்வம் அவர்கள் பெரிய மாறுதல்கள் செய்து ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு மனிதத் தன்மையை உண்டாக்கினார். இதை யாரும் மறுக்க முடியாது
சுயமரியாதை இயக்கம் கிறிஸ்துவ மதத்தைப் பற்றிப் பேசாதிருந்த வரையில் அச்சங்கத்துக்கு உபதலைவராகவும் இருந்தார். இவைகளை யெல்லாம் உத்தேசித்தே அவர் போலீஸ் இலாக்காத் தலைவர் ஆனவுடன் ரொம்ப காரியம் செய்து விடுவார் என்று கருதினார்கள். ஆனால் அவர் வந்து சுமார் 10 மாத காலமாகியும் இனி கொஞ்சகாலமே ஆயுள் இருப்பதை உணர்ந்தும் போலீஸ் இலாக்கா பலமான ஒரு அக்கிரகாரமாகவே மேலும் மேலும் ஆகிக்கொண்டு வருவதைத்தான் பார்க்க முடிகின்றதே ஒழிய
சிறிதாவது ஞாயத்துக்கு ஒத்து இருக்கிறது என்று சொல்லுவதற்கே இடம் ஏற்படவில்லை.
வரவர “ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத்தாட்பாள்'” என்பதுபோல அதாவது ஒரு ஊரில் டிப்டி சூப்ரண்ட் பார்ப்பனர், இன்ஸ்பெக்டர் பார்ப்பனர், சப் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர் என்பதாகி மும்மூர்த்திகளும் அவர்களாகவே ஆகிக்கொண்டு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர்கள் உத்தியோகம் சிறிதேயாயினும் அவர்களுக்கு இந்த வகுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டால் அவர்களால் எவ்வளவு விஷமங்கள் செய்யக் கூடும் என்பதை நினைத்துப் பார்த்தால் எவருக்கும் அதன். தொல்லைகள் நன்றாய் விளங்கும்.
இந்த இலாக்கா ஒரு சாயபு இடம், அதுவும் வேறு எவ்வித யோக்கியதையும் முக்கியமாய் இல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர் என்கின்ற ஒரு யோக்கியதையை முன்னிட்டே அடைந்த ஒரு சாயபு இடம் 6, 7 வருஷ காலம் இருந்து வந்தும் இன்று இவ்வளவு மோசமான யோக்கியதையில் அந்த இலாக்கா இருக்குமானால் அக்கட்சி உருப்படாததற்கு இவர்கள் போன்றவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும் என்றும் கேட்கின்றோம் 3 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பொது ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் சர்க்காராரும் ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்டுப்பாடில்லாத (டீமாரலைஸ்) கட்சி என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்ததற்குக் காரணமும் இந்தக் கனம் மெம்பர்களேயாவர்கள்
பார்ப்பனர்கள் ஒரு சிறிய உத்தியோகத்தில் இருந்தாலும் ஊசி விரியன் பாம்பு போல் தங்கள் விஷத்தைப் பரப்பி, காரியத்தை சாதித்துத் தங்கள் கக்ஷியை பலப்படுத்திக் கொள்ளுகிறார்கள். பார்ப்பனரல்லாதவர். களோ மலைப் பாம்புகள் போல் இரை பொருக்க மாத்திரம்தான் கவலையே ஒழிய எதிரிகளைப் பற்றிய காரியத்தில் கவலையே கிடையாது
அவர்கள் வயிறு நன்றாக நிரம்பிவிட்டபடியால் மற்றவர்கள் பசியைப் பற்றிகவலையே இல்லாமல் அஜீரணத்தோடு வீடு போய்ச் சேர்ந்து விடுகிறார்கள்.
தோழர் கனம் பன்னீர்ச்செல்வத்தின் காரியம் அப்படி இருக்காது என்றும் எதாவது செய்வார் என்றும் பார்ப்பனரல்லாதாரில் அவருடைய எதிரிகள் கூட நினைத்தார்கள். இப்படி ஆகிவிட்டது வருந்தத்தக்கதாகும்.
மிவின்யூ மெம்பர்
ரிவினியூ மெம்பர் என்று சொல்லப்படும் ஐரோப்பிய மெம்பர்களோ ராஜதந்திர முறைப்படி தங்கள் காரியம் தவிர அதாவது சர்க்காருக்கு எவ்வித கஷ்டமும் அசெளகரியமும் இல்லாமல் எப்படி நடக்க வேண்டுமோ? அதைத் தவிர மற்றபடி ஜனங்களின் கஷ்டநிலைமை அவர்களுக்கு முக்கிய லட்சியமாக இருப்பதில்லை.
உதாரணமாக ஐ.சி.எஸ். கலக்டர்கள் உத்தியோகம் 57 இந்துக்கள் பார்ப்பதில் 40 பார்ப்பனர்களும், 10 மலையாளிகளும் போக ஏழே 7 பேர்கள் தான் பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்.
அது போலவே டிப்டி கலக்டர்களிலும் 81 உத்தியோகங்கள் இந்துக்கள் பார்க்கிறார்கள் என்றால் அவற்றில் 45 பேர்கள் பார்ப்பனர்களாகவும், 9 பேர்கள் மலையாளிகளாகவும், போக 27 பேர்களேதான் பார்ப்பனரல்லாத தமிழர்களாக இருக்கிறார்கள். மற்றும் இந்த இரண்டு உத்தியோகமும் பொது ஜனங்கள் மீது எவ்வளவு ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொள்ள மூடியும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
இந்தப்படி ரிவினியூ இலாக்கா தலைமை ஸ்தானங்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள். ஆனால், அந்த இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்? கணக்குப்பிள்ளை, மணியக்காரர்கள் எந்த ஜாதியாராலும் பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக்கொடுப்பார்கள். ஆகவே இந்த மூன்று மெம்பர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சி யுடையவும் கிளர்ச்சியினுடையவும் ஆதரவிலும் ஆமோதிப்பிலும் இருந்து
குடி அரசு - 1935 (1) 344
கொண்டு அந்த சமூக விஷயத்தில் இவ்வளவு அலட்சிய புத்தியுடன்
இருந்தால் இந்நாட்டில் ஜஸ்டிஸுக்கும், நீதிக்கும், சுதந்திரத்துக்கும் எப்படி இடமேற்படும்
மத விஷயத்தில் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று “ஊசி மேல்” நின்று தவஞ்செய்யும் இந்தியாவானது பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகுகூட அரசியல் விஷயத்திலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாகும்படியாக ஏற்பட்டால் மக்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை இந்த மெம்பர்களே யோசித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஆகவேகனம் ரிவினியூ மெம்பர் குறைந்தது ஒரு 50 பேர்களையாவது பார்ப்பனரல்லாதாரிலிருந்தே நேராக டிப்டிக் கலெக்டர்களாகவும், 100 பேர்களாவது தாசீல்தார்களாகவும் தெரிந்தெடுத்து தற்சமயம் உள்ள குறைகளையாவது உடனே சரிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்
நிற்க, மூன்று மெம்பர்களும் ஒன்று சேர்ந்து அவரவர்கள் இலாகா உத்தியோகங்களுக்கு ஒரு ஜாப்தா தயாரித்து ஒவ்வொரு டிவிஷனிலும் தலைநகரங்களிலும் எல்லா உத்தியோகமும் ஒரே வகுப்பாய் இல்லாமல், உதாரணமாக டிப்டி கலக்டர் பார்ப்பனராய் இருந்தால் தாசீல், மேஜிஸ்ட்ரேட் ஆகிய வேலைகளில் பார்ப்பனரல்லாதாராயும், பார்ப்பனர் போலீஸ் டிப்டி சூப்ரண்டாய் இருந்தால் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பார்ப்பரனல்லாதாராகவும் மற்ற இலாக்காவும் இதுபோல் கலந்து இருக்கும்படியும், வகுப்பு எண்ணிக்கையை அனுசரித்தும் சரியானபடி பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்ய வேண்டியது அவசரமானதும் முக்கியமானதுமான கடமையாகும்
பல ஊர்களில் இருந்து வரும் உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை விவர ஜாப்தாக்களில் நமக்கு வந்திருக்கும் கணக்குகளைப் பார்த்தால்
சரீரத்தால் பாடுபடுகின்ற உத்தியோகங்கள் போக பாக்கி எழுத்து வேலை, மூளை வேலை முதலிய ஜனங்களிடம் செல்வாக்குப் பெறும் உத்தியோகங் களில் 100க்கு 25 கூட பார்ப்பனரல்லாதார்களுக்கு இல்லை என்று சொல்லும்படியான நிலையில் இருக்கின்றன. இதைக் கவனித்துப் பார்த்தால்
பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு மூளை இல்லை என்றோ அல்லது பார்ப்பனரல்லாதாரை நம்பக் கூடாதென்றோ கருதி இருக்கிறார்களா என்ன என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது.
பார்ப்பனரல்லாத சில பெரிய பதவிக்காரர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் அவர்கள் சமூகத்துக்கு விஸ்வாசமில்லாத துரோகிகளாய் ஆகிவிட்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே M5 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஒழிய மூளை இல்லை என்று நம்புவதற்கு இல்லை என்றும் ஒழுக்கமில்லை. என்றும் சொல்லும்படி பார்ப்பனர்களைவிட அதிகமாக இதுவரை எவரும் நடந்து கொள்ளவில்லை
அரசாங்கத்தாரும் மெம்பர்களும் இதைக் கவனித்து தக்கது செய்ய வில்லையானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வேறு வழியில் திரும்ப வேண்டி வரும் என்பதை எச்சரிக்கை செய்கின்றோம்
மந்திரிமார்களும் இதை கவனித்து தக்கது செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
குடி அரசு - தலையங்கம் - 19.05.1935
குடி அரசு - 1935 (1) 346
ஆச்சாரியார் ஓய்வு
தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் அரசியல் வாழ்விலிருந்து தற்காலிகமாகவோ அல்லது வேறு எப்படியோ விலகிக் கொண்டதாக சடங்குகள் நடைபெற்று அவர் ஸ்தானத்துக்குத் தோழர் சத்தியமூர்த்தி
அய்யர் நியமிக்கப்பட்டு விட்டார்.
ராஜகோபாலாச்சாரியார் விஷயத்தில் நமக்குள்ள மரியாதையும்
பக்தியும் குறையவில்லை. குறையுமென்று நம்பவுமில்லை. அவர் தன் சுயநலமில்லாதவர்; தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்று ஏதும் செய்து கொள்ளவில்லை
தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் தியாகம் செய்த பார்ப்பனர்களில் இவரே முதன்மையானவர். இரண்டாவதானவராக யாரைச் சொல்லுவது என்பது நமக்குத் தெரியவில்லை.
அவர்இதுவரை வக்கீலாய் இருந்திருந்தால் தோழர்கள் அல்லாடியையும்
எஸ். சீனிவாசயங்காரையும் சுண்டு விரலில் கட்டி ஆட்டி இருப்பார். பணமும் ஏராளமாய்ச் சம்பாதித்திருப்பார். ஹைகோர்ட் ஜட்ஜி பதவி அடைவது அவருக்கு கேவலம் என்றுகூட சொல்லத்தக்க நிலைக்கு வந்திருப்பார். இவ்வளவு சக்தியும் புத்தியும் தியாகமும் எல்லாம் சேர்ந்து பார்ப்பனர் வாழ்வுக்கு மனித சமூக உண்மை விடுதலையையும் சுயமரியாதையையும் அடமானம் வைக்கப் பயன்பட்டதுடன் மநுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்துப் பேசும்படியும் ஆய்விட்டது என்பது நமது மனதில் பதிந்து போன எண்ணமாகும்
தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கு பார்ப்பனரல்லாதார்களில் எவரிடமும் நம்பிக்கை கிடையாது. நம்பிக்கையில்லாத காரணம் மாத்திர மல்லாமல் எல்லாரிடமும் பயம் கொண்டே இருந்தார்.
அவருக்கு ஏற்பட்ட பார்ப்பன அபிமானமே பார்ப்பனரல்லாதாரில். பலருக்கு பார்ப்பனரல்லாதார் அபிமானத்தை வளர்த்து உறுதியாக்கி விட்ட துடன் ஒருவருக்கொருவர் நீங்காச் சந்தேகிகளாய் இருக்கவும் செய்து விட்டது.
அவரால் பார்ப்பன சமூகத்திற்கு நெருக்கடியான சமயத்தில் அளவிட முடியாத “நன்மை” ஏற்பட்டது. சங்கராச்சாரி, ராமானுஜாச்சாரி ஆகியவர்
347 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
களால் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட நன்மையைவிட இந்த சமயத்தில் ராஜகோபாலாச்சாரியாரால் பார்ப்பனர்களுக்கு அதிக நன்மை ஏற்பட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இவை எல்லாம் தற்கால நன்மையே ஒழிய நிரந்தரமானதல்ல.
இந்திய காங்கிரசை பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக எப்படியெல்லாம் ஆட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் ஆட்டுவித்தார்.
பைத்தியக்காரர் கூட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய காந்தியாரை: மகாத்மாவாக ஆக்கிய பெருமை ராஜகோபாலாச்சாரியாருக்கே உண்டு
மற்ற பார்ப்பனர்கள் கூடவே கோவிந்தா போட்டு அது விஷயத்தில் ஆச்சாரியாரை ஆதரித்தார்களானாலும் இந்த எண்ணம் ஆரம்பத்தில் கொண்டவர் ஆச்சாரியாராகும்
இந்து, மித்திரன் கூட்டம் திலகரையும், திலகருக்குப் பின்
எஸ். சீனிவாசய்யங்காரையும் மகான் ஆக்க முயற்சித்தார்கள். ஆச்சாரியார். அது பயன்படாது எனக் கருதி காந்தியாரை களி மண்ணில் பொம்மை செய்வதுபோல் செய்து பெரிய மகாத்மா ஆக்கி அதனால் பார்ப்பனருக்காக அனேக பலனை உண்டாக்கினார்.
ஆனால் ஆச்சாரியார் தனது கூர்மையான புத்தி யுக்தி காரணமாகவே இந்தியாவெங்கும் அரசியல்வாதிகள் அனேகருக்குப் பிடித்தமில்லாத வரானார். என்றாலும் நமக்கு எப்படியோ அவரிடத்தில் விஸ்வாசமும்,
பக்தியும் பரிதாபமும்தான் இருந்து வருகிறது
எதையும் லட்சியம் செய்யாமல் தான் பிடித்த காரியத்தையெல்லாம் பலவித உபாயத்தால் சாதித்தே வந்தார். எல்லாம் சேர்ந்து ஏதோ பார்ப்பன ஆதிக்கத்தை இன்னும் கொஞ்ச காலத்துக்கு நிலைநிறுத்தினார் என்பதைத் தவிர பயன்படத்தக்க காரியமோ, நிலையான காரியமோ எதுவும் செய்யப்பட்டதாக கூறுவதற்கில்லை.
இதை நினைத்தால் அதாவது அவ்வளவு பெரிய தியாகமும், அறிவும் விஷய ஞானமும் ஒன்றுக்கும் பயன்படாமல் போயிற்றே என்று நினைக்கும்போது நமது மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. நாம் ஏதாவது முட்டுக்கட்டையாக இருந்தோமா என்கின்ற சந்தேகம்கூட நம்மைச் சில வேளைகளில் வருத்துவது உண்டு
நம்பிக்கையும், விஸ்வாசமும் நன்றியும் இல்லாத மக்களுடன் கூடி பல காலம் உழைத்ததின் பதிலாக ஆச்சாரியாருடன் ஒத்துழைக்க ஏற்பட்ட சந்தர்ப்பம் விலகாமல் இருந்து இருக்குமானால் அது நமது மனதுக்கு எவ்வளவோ இன்பத்தையும் சாந்தியையும் கொடுத்திருக்கும். ஆனாலும் எப்படிப்பட்டவருடன் நாம் ஒத்துழைத்திருந்தாலும்கூட ஒன்றும் பயன்
குடி அரசு - 1935 (1) 348
ஏற்படவில்லை என்று சொல்லத்தக்க மாதிரியில் நாம் ஏமாற்றமடைய வில்லை. ஆச்சாரியாரைப் போல் மனம் உடைந்து போகாமல் ஒரு அளவுக்கு உற்சாகத்தோடவேதான் இருந்து வருகின்றோம்
ஆச்சாரியாருக்கு ஒன்று விண்ணப்பித்துக் கொள்ள ஆசைப்படு
கின்றோம். அதாவது2-
வகுப்புநீதியை- வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை மனப்பூர்வமாய்
ஒப்புக் கொள்ளுங்கள்
என்பதுதான். மற்றபடி அரசியல் சமூக இயல் திட்டத்தை எவ்வளவுக்கு நீட்டினாலும் சரி; குறுக்கினாலும் சரி அதைப் பற்றி கவலையில்லாமல். ஒத்துழைக்க இடமேற்பட்டுவிடும். ஏனெனில் தகுதி உள்ள அளவுக்குத் தானே வந்து விடும் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. நம்மிடம் அவர் இனியும் 5 வருஷங்களுக்குக் குறையாமல் வேலை வாங்கிக் கொள்ளலாம்
அன்றியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை தடுத்துவிட இனி எவராலும் முடியவே முடியாது. தடுக்கத் தடுக்கப் பலப்பட்டுக் கொண்டுதான் வரும்: துவேஷம் வளர்ந்து கொண்டுதான் வரும். இதை தடுத்துக் கொண்டிருப்பதால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் யார் யாருக்காக கேட்கின்றோமோ அவர்களிலும் யார் யாருக்காக ஆச்சாரியார் தடுக்கின்றாரோ அவர்களிலும் தகுதி அற்ற ஆட்களே பெரிதும் பபனடைகிறார்கள்.
இந்தக் கலகத்தால் மனித சமூகத்துக்கு நன்மை செய்ய வேண்டிய ஆட்கள் பதவியில் இருந்து வேலை செய்ய வேண்டியது போக, சுயநலமே உருக்கொண்ட நன்றியும் விசுவாசமும் அற்ற ஆட்களே சுயநலம் அடைந்து வருகிறார்கள். இதனாலேயே இந்தச் சண்டை போடுகிறவர்கள் மக்கள் நன்மைக்கு இடையூறு செய்தவர்களாகவில்லையா என்று கேட்கின்றோம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகும். தேசீயவாதிகள் சங்கத்திலும் ஒப்புக் கொள்ளப்பட்ட தாகும். ஆதலால் இப்போது ஆச்சாரியார் போன்றவர்கள் ஒப்புக் கொள்ளுவதால் குற்றம் ஏற்பட்டுவிடாது. மற்றபடி ஆச்சாரியார் ஓய்வு வெற்றியடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.05.1935
M0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இனி என்ன குறை?
ஆச்சாரியார் ஓய்வானது தோழர் சத்தியமூர்த்தியை தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவராக ஆக்கிவிட்டது
ஆச்சாரியாருக்கு மற்றவர்களிடமிருந்து சந்தேகமும் காங்கிரஸ் பார்ப்பனர் கையிலேயே இருக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் சத்தியமூர்த்தியையே பிடித்துத் தலைவராகச் செய்து விட்டது
ஆச்சாரியார் எப்பொழுதும் எதிலிருந்து விலகினாலும் அந்த ஸ்தானத்தில் பார்ப்பனரைத் தான் வைத்து விட்டு விலகுவது வழக்கம்
அந்த வழக்கப்படி சத்தியமூர்த்தி தலைவரானார் என்று சென்ற வாரத்தில் “முடிவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா'' என்று ஒரு குறிப்பு*
எழுதி இருந்தோம். அதுபோலவே எல்லாரும் எதிர்பார்த்தபடியே ஆகிவிட்டது. சத்தியமூர்த்திக்கு திட்டம் போட்டுக் கொண்டு சூக்வி செய்யத் தெரியாது. மக்களை ஏமாற்றவும் சக்தி போதாது. ஆகவே ஒரு அளவுக்கு காங்கிரசின் தொல்லை ஒழிந்ததென்று நினைக்கலாம்
நிற்க காங்கிரஸ் என்பதை இந்திய மக்களின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பிரதிநிதித்துவ சபைக்கு 2%
கோடி மக்களுக்கு, தமிழ்நாட்டுக்குத் தோழர் சத்தியமூர்த்தி பிரதிநிதித்துவ தலைவராகிவிட்டார் என்றால் அவர் புத்தியையும் குணத்தையும் தியாகத்தையும் உத்தேசித்துப் பார்க்கும் போது சத்தியமூர்த்தி பெரும் பதவிக்கு வந்து விட்டாரே என்று பொறாமைப்படுவதா? அல்லது காங்கிரசுக்கு இப்படிப்பட்டநிலை ஏற்பட்டு விட்டதே என்று பரிதாபப்படுவதா? என்பது நமக்கு விளங்கவில்லை
இது எப்படி இருந்தாலும் இந்த நிலைமையானது மக்களின். விழிப்பை நன்றாகக் காட்டுவதுடன் மக்கள் காங்கிரசை நன்றாய் உணர்ந்து கொண்டார்கள் என்பதும் விளங்கிவிட்டது. இதோடு மாத்திரமல்லாமல் தோழர் சத்தியமூர்த்தி இதை எதிர்பார்த்தே கும்பகோணத்தில் தான் முதல் மந்திரி ஆகப் போவதாய்
கூறிக் கொண்டார் போலும். காங்கிரசின் நிலைமை போலவே அரசாங்கத்தின்
குடி அரசு - 1935 (1) 350
நிலைமையும் பரிதபிக்கதக்க நிலைமைக்கு வருவதானால் சத்தியமூர்த்தி முதல்மந்திரி ஆவதில் ஆச்சரியம் எதுவும் இருக்க நியாயமில்லை இன்றைய தினம் மதம் சம்பந்தமான ஸ்தாபனங்களில் இருக்கும் சங்கராச்சாரிகள், மடாதிபதிகள், பாதிரிகள் என்னப்பட்டவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதைப் பார்ப்போமானால் அவர்களது சிஷ்யர் களாகிய அதே மக்களுக்கு அரசியலில் சத்தியமூர்த்தி போன்றவர் ஏன். கவர்னராகவோ, மந்திரியாகவோ வர முடியாது? என்று கேட்கின்றோம் ஆகவே தமிழ்நாட்டுக்கு மாத்திரமல்லாமல் சென்னை மாகாணத்துக்கே “இனி என்ன குறை” என்பது நமக்கு விளங்கவில்லை
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.05.1935
* முடிவைப் பற்றி சொல்ல வேண்டுமா?
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் தோழர் இராஜகோபாலாச்சாரியார் ஸ்தானத்திற்கு தோழர்கள் எஸ். சத்தியமூர்த்தி, வேதாரண்யம் வேதரத்தினம், ருக்குமணி ஸக்ஷிமிபதி மூதலியவர்கள் அபேட்சகர்களாய் நிற்பார்களெனத் தெரிகிறது
- தமிழ்நாடு”
- குடி அரசு 12.05.1935 பக்கம் 18.
நட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
கல்வி இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம்
விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. அவர்களும் சர்க்கார் உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் உபாத்தியாயர் நியமனம் செய்யப்படும் விஷயங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையைக் கையாளும்படி சர்க்கார் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அந்தப்படி நியமனம் செய்யாத பள்ளிகூடங்களுக்குச்
சர்க்கார் உதவித் தொகை கொடுக்கக் கூடாது என்றும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை கல்வி மந்திரி அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் மகாநாட்டுத் தலைவர் தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் பேரிலும் வாப்பீஸ் பெற்றுக் கொள்ளப்பட்டது
ஆனால் இன்று பார்ப்பனர்கள் ஆதிக்கம் உள்ள பள்ளிக் கூடங்களில் அநேகமாக பியூன், வாசல்கூட்டி தவிர மற்றெல்லோரும் பார்ப்பனர் களாகவே நியமிக்கப்பட்டிருப்பதும், பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள பள்ளிக் கூடங்களிலும் 100க்கு 75, 95 பார்ப்பனர்களாக நியமிக்கப் பட்டிருப்பதும் யாரும் மறுக்க முடியாது.
சென்னையில் பார்ப்பன பிரமுகர்களான தோழர்கள் சர். சிவசாமி அய்யர், சர். சி.பி. ராமசாமி அய்யர், சர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், வெங்கிட்டராம சாஸ்திரியார், சீனிவாச சாஸ்திரியார் ஆகியவர்கள் நிர்வாகஸ்தராய் இருக்கும் பள்ளிக்கூடங்களிலேயே பார்ப்பனரல்லாதார் என்கின்ற காரணத்துக்காகவே தோழர் எஸ். குஞ்சிதம், பி.எ.எல்.டி.யை வேலையில் இருந்து எடுத்துவிட்டதும் மற்றும் இரண்டு பார்ப்பனரல்லாத பெண்களை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டதும் அவைகளுக்குப் பதிலாக பார்ப்பனர்களை நியமித்துக் கொண்டதுமான காரியங்கள் நடந்தது என்றால் மற்ற பள்ளிக்கூடங்களில் பார்ப்பனரல்லாத உபாத்திமார்களுக்கு இருந்துவரும் தொல்லைகளைக் குறிப்பிட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
இது ஒருபுறமிருக்க சென்ற வாரம் கோபிசெட்டிபாளையம் டைமெண்ட் ஜுப்பிளி ஹைஸ்க்கூல் நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிந்திருக்கலாம்
அந்தப் பள்ளிக்கூடம் பெரிதும் பார்ப்பனரல்லாதார் பணத்திலேயே கட்டப்பட்டதாகும். அதன் ஆஸ்டலும் 100க்கு 60 பாகம் பார்ப்பனரல்லாதார்.
குடி அரசு - 1935 (1) 352
பணமாகும். அதில் படிக்கின்றவர்கள் 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் ஆகும். அப்படி இருந்தும் அதன் உபாத்தியார்கள் 16
பேர்களில் 14 பேர்கள் பார்ப்பனர்கள்.
இந்தநிலையில் ஒரு எல்.டி. உபாத்தியார்வேலைக்கு அந்த ஊர்க்காரரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தவரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் 100க்கு 75 பேர்களாக படிக்கும் வேளாளக் கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவரும் அந்தப் பள்ளிக்கூடத்தின் மூலமாகவே எல்.டி. பரீக்ஷைக்கு அனுப்பப் பட்டவருமான ஒருவர் ஒரு விண்ணப்பம் போட்டிருந்தார். மற்றும் ஒரு பார்ப்பனரும் விண்ணப்பம் போட்டிருந்தார். இந்நிலையில் சர்க்கார் அதிகாரிகளுடைய பிரவேசத்தின் பயனாய் அந்த உத்தியோகம் ஒரு பார்ப்பனருக்கே போய்விட்டது.
சம்பளமும் பேனா போன வரையில் நீட்டி 80 ஆக்கி அங்கேயே காயமும் செய்யப்பட்டு விட்டது.
பார்ப்பனரல்லாத வக்கீல் ஒருவர் பார்ப்பன மூனிசீப்புக்கு பயந்து கொண்டு மீட்டிங்கிக்கே வரவில்லையாம். இரண்டொரு பார்ப்பனரல்லாத மெம்பர்கள் அதிகாரிகளுக்குப் பயந்து கொண்டு பார்ப்பன உபாத்தியாயருக்கே அனுகூலமாய் இருந்தார்களாம்.
ஒரு பார்ப்பனரல்லாத மெம்பரும் பொது உலகில் பிரபலஸ்தருமான தோழர் ஒருவர் இது என்ன பார்ப்பன ஆதிக்கமா? என்று கூப்பாடு போட்டும், ஒன்றையும் லட்சியம் செய்யாமல் அதிகார செல்வாக்கினாலேயே காரியத்தை சாதித்துக் கொண்டார்களாம்
இனியும் எத்தனையோ பள்ளிக்கூடங்களில் இதைவிட மோசமாக எவ்வளவோ காரியங்கள் நடைபெறுகின்றன. ஆகவே படிப்பு விஷயத்தில் நேர்மை வேண்டும் என்று கருதினால் கண்டிப்பாக உபாத்தியாயர்கள் விஷயத்தில் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற வகுப்புவாரி கணக்குப்படி உபாத்தியாயர் நியமனம் செய்தாக வேண்டும்
அந்தப்படி இல்லாத வரை சர்க்கார் கிராண்டை நிறுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியிருக்கிறது
ஈரோடு ஹைஸ்கூல் சமீபகாலம் வரை 50, 60 வருஷ காலமாகவே பார்ப்பன ஆதிக்கமாய் இருந்து ஏதோ சமீப காலத்தில் 2, 4 பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் நியமிக்கப்பட நேர்ந்தும் கல்வி இலாக்காவில் உள்ள பார்ப்பனஅதிகாரிகளால்எவ்வளவோகஷ்டத்துக்கு உள்ளாக வேண்டி இருந்தது
பள்ளிக்கூட ரிக்கக்நேஷனை வித்திட்றா செய்து கொள்ளுவதாகக் கூட அதிகார தோரணையில் உத்திரவுகள் அனுப்பப்பட்டது
அவ்வளவோடு அல்லாமல் நீதி இலாகாவிலும் பார்ப்பன நீதிபதிகளால் பார்ப்பன உபாத்தியாயர்களுக்கு நஷ்டம் கொடுக்க தீர்ப்புக் கூறப்பட்டது o வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பள்ளிக்கூட உதவித் தொகைகள் நியாயமாய் கொடுக்கப்படாமல் மறுக்கப்பட்டது. இன்னும் நடந்த கஷ்டங்கள் சொல்லி முடியாது கடைசியாக நிர்வாகத்திலும் கட்சிப் பிரதிக் கட்சிகள் உண்டாக்கப்பட்டது.
இவ்வளவு கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகிக் கொண்டு ஒன்று இரண்டு பார்ப்பனரல்லாதாரை நியமிக்கக் கூடியதாய் இருந்தால், மற்றபடி இவ்வளவு கஷ்டத்தையும் சகித்துக் கொள்ள.
யார் சம்மதிப்பார்கள் என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும்
பள்ளிக்கூடக் கமிட்டி மெம்பர் சாதாரண வியாபாரிகள், கிராம மிராசுதாரர்கள் ஆகியவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் ஒரு முனிசீப்புக்கும் ஒரு டிப்டி கலெக்டருக்கும் ஒரு வக்கீலுக்கும் பயப்படாமல் இருக்கும்படியான நிலையில் இன்று ஆட்சி நிருவாகம் இல்லை
ஒரு சாதாரண போலீஸ் இனிஸ்பெக்ட்டர், சப் இன்ஸ்பெக்ட்டர் எவ்வளவோ காரியத்தைச் செய்து, எப்படிப்பட்டவர்களுக்கும் தொல்லையை விளைவித்து விடுகிறார்கள் என்றால் பெரிய அதிகாரிகள் மனஸ்தாபத்துக்கு இந்த ஆசாமிகள் எப்படி பாத்திரமாக முடியும்?
மதுரை தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லக்ஷம் ரூபாய் தானமாகக் கொடுத்து 100க்கு 50 உபாத்தியாயர்களாவது பார்ப்பனரல்லா தாராய் இருக்கட்டும் என்று கெஞ்சினார். அதற்கே சம்மதிக்காத வன்நெஞ்சர்
கூட்டம் சும்மா ஒரு வாத்தியாரை நியமிக்க சம்மதிக்கக் கூடும் என்று எந்த
பைத்தியக்காரனும் நினைக்க முடியாது என்பதோடு காரியத்தில் சுலபத்தில்
நடக்கக்கூடிய காரியமும் அல்ல என்போம்.
ஆதலால் தனிப்பட்டவர்கள் நிர்வாகத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உபாத்தியாயர்கள் நியமனம் செய்யப்படும்படியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்
நிற்க எல்.டி. டிரெய்னிங்குக்கு உபாத்தியாயர்களை எடுப்பதில் 4, 5 வருஷங்களுக்காவது பார்ப்பனர்களுக்கு இடமில்லாமல் செய்து பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்களையே சேர்க்கும்படி செய்ய வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாத பெண்களுக்குத் தாராளமாய் இடம் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகிறோம். இந்தப்படி செய்ய முடியாவிட்டால்
எல்.டி. வகுப்புக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைப்படியாவது அமர, அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.05.1935
குடி அரசு - 1935 (1) 354
உண்மையைக் கக்கி விட்டார்
சட்டசபைக்குக் காங்கிரஸ்காரர்கள் செல்வதற்கு காரணஸ்தராயும் சட்டசபைக்குப் போவதற்கும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்துவதற்கும் காரணஸ்தராயும் இருந்தது சில பேர்வழிகள் உண்டென்றாலும் அதில் தென்னாட்டைப் பொருத்தவரையில் அதிகப் பங்கெடுத்துக் கொண்டு அதற்கு வேண்டிய எல்லாவித முயற்சிகளும் செய்தது நம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களாவார். இது எதற்கு உண்மையில் தேசியத்திற்காகவா? தேசாபிமானத்திற்காகவா? இல்லை. தங்கள் சமூகத்தார் எல்லாவித உயர்ந்த பலவித உத்தியோகமும் தாங்கள் பெரிய பெரிய கெளரவ பதவியும் அடைய மனதில் கொண்டுள்ள ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேதான் காங்கிரஸ் பேரினால் சட்டசபைக்குப் போகவும் பார்லிமெண்டு போர்டு ஏற்படுத்தவும் இவ்வளவு அதிகமாக முயற்சி செய்ததாகும். இவர் சட்டமறுப்புக் காலத்தில் பதுங்கி இருந்து கடைசியாக லேசான சட்டமறுப்பு செய்துவிட்டு ஜெயிலுக்குச் சென்றவராச்சே! இப்பொழுது மாத்திரம் இவ்வளவு தடபுடலாக சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் மணலைக் கயிராகத் திரித்தோம்! வானத்தை வில்லாக வளைத்தோம் என்று போகிற இடத்திலெல்லாம் பேசுகிறாரே என்று கேட்டு விடாதீர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா? தங்கள் சமூகத்தார், அதிலும் தானே உயர்ந்த பதவி வகிக்க வேண்டுமென்ற ஆசையால் இவ்வளவு பிரமாதமாக சட்டசபையில் பெரிய காரியம் செய்து விட்டோம் என்று பாமர ஜனங்களிடம் ஒன்றுக்குப் பத்தாக அளந்தால் தானே மறுபடியும் ஏதாவது ஏமாந்த மக்கள் மூலமாய் கொஞ்சமாவது வெளியில் தலைகாட்ட முடியும். அதற்குத் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார் பாவம்
இந்த மாகாணத்தில் பார்ப்பனரல்லாத மக்கள் மந்திரிகளாகவும் சட்ட மெம்பர்களாகவும் இந்த மாகாணம் பூராவும் ஜஸ்டிஸ் கட்சிகாரர்கள் (பார்ப்பனரல்லாதார்) ஆட்சியாகவும் இருப்பதால் தாங்கள் நேரே நேரிய முறையில் (பார்ப்பனர்கள்) போட்டியில் வெற்றி பெற முடியாதென்று தெரிந்தும் தென்னாட்டில் தங்கள் புரட்டுகளை சுயமரியாதைக்காரர்கள் வெட்ட வெளிச்சமாய் செய்து விட்டதால் தாங்கள் இந்தக் காங்கிரஸ், காந்தி, தேசியம், தேசாபிமானம் என்றால் தான் கொஞ்சமாவது வெளியில் தலைகாட்ட மூடியும் என்று தெரிந்திருக்கிறார்கள். அப்படிச்சொல்லிக் கொண்டாலும் தாங்கள் மனதில் கொண்ட உத்தியோகம் வகிக்கும் 35 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவேயாகும். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் கும்பகோண நகரசபையில் உருவச் சிலைத் திறப்பு விழா சொற்பொழிவாற்றுவதற்கு வந்த தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் நான் கவர்மெண்டின் பிரதம காரியதரிசியாக இருக்க விரும்பவில்லை. நான் ஏன் முதல் மந்திரியாக இருக்கக் கூடாதென்றும் எனக்கு மூளை இல்லையா என்றும் பேசியிருக்கிறார். இதிலிருந்து காங்கிரஸ்காரர்களுக்கு அதிலும் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு உத்தியோக வேட்டை தாகம் வந்துவிட்டதென்பதை நாம் சொல்ல வேண்டுவதில்லை. காங்கிரஸ் (பார்ப்பனர்கள்) சில மாதங்களாகத் தாங்கள் உத்தியோகம் ஏற்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் அவர்கள் நடையுடை பாவனையிலிருந்தே உங்களுக்குத் தெரியவில்லையா? முன்னமே ஒரு தடவை ஈரோட்டில் நான் கவர்ன்மெண்டின் பிரதம காரியதரிசியாக ஆகுவேன் என்றதிலிருந்தும் உண்மை விளங்கவில்லையா?
தோழர் ராஜகோபால் ஆச்சாரியார் அவர்கள் ஜஸ்டிஸ் மந்திரிகளை ராஜிநாமா செய்யும்படியும் - உடனே சட்டசபையை கலைக்கும்படிகவர்னர் அவர்களுக்கு யோசனை கூறியதோடு தங்களை மந்திரியாக்கினால் சர்க்காருக்குக் கட்டுப்பட்டு மிகுந்த ராஜபக்தியோடு யோசனை கூறி சர்க்கார் இஷ்டப்படி ஒத்துழைக்கின்றோம் என்றும் நேரில் கண்டு கெஞ்சி கூத்தாடி விட்டு வரவில்லையா? இதைத் தான் ஜபல்பூர் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஆந்திர தேச தோழர் விசுவநாதம் அவர்கள் “நீங்கள் பதவி வகிக்கத்தானே சென்னை மாகாண ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை ராஜிநாமா செய்யச் சொல்லுகிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஏதோ உண்மையல்லாத சமாதானம் சொல்லி விட்டார். இதிலிருந்து தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களுடையவும் தேசியத் தலைவர்களுடையவும் உள் எண்ணங்கள் தெரியவில்லையா?
தாங்கள் எப்படியாவது பார்ப்பனரல்லாதார் கையிலிருக்கும் எல்லா. உயர்ந்த பதவிகளையும் காங்கிரஸ் தேசியம், காந்தி, தேசாபிமானம், தீண்டாமை விலக்கு, கிராமப் புணருத்தாரணம் என்ற ஏமாற்றுச் செய்கையால் கைப்பற்றி பதவி வகிக்க வேண்டுமென்ற எண்ணமுடையவர்களாக இருக்கிறார்களா இல்லையா? என்பதையும் அதற்காக அவர்கள் காங்கிரஸ் தேசியம் - காந்தி - தேசத் தொண்டு என்பன போன்ற பலவான எந்த செய்கையுடனும் எந்த வேஷத்துடனும் சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்பது விளங்கவில்லையா? இதிலிருந்தாவது அவர்கள் சூழ்ச்சிகளை நாம் கண்டு ஏமாறாமல் இருப்போமாக
குடி அரசு - கட்டுரை - 19.05.1935
குடி அரசு - 1935 (1) 356
பெண்கள் வீட்டுக்குள் இருக்கவேண்டுமாம்!
பாய் பரமாநந்தமிண் பிற்போக்கு
அமிர்தசரசில் பாய்பரமானந்தர் தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் இந்து மகாசபை மகாநாட்டிற்குத் தலைமைவகித்த, பொங்கி உத்தமர் பேசும்போது “அரசியல் அடிமைத்தனத்தைப்போல சமூக அடிமைத் தனத்தையும் நான் எதிர்க்கிறேன். முக்கியமாகப் பெண்களுக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் சுதந்தரம் இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இந்து மகாசபையின் நிரந்தரத் தலைவரான பாய்பரமானந்தர் இக்கொள்கையை மறுத்து “இந்துப் பெண்களை காலிகள் துராக்கிரகம் செய்து அவமானப்படுத்துகின்றனர். இந்து சகோதரர்கள் தங்கள் சகோதரி களின் மானத்தையும் சரீரத்தையும் காப்பாற்றும்படி போதிய பலம் பெறுகிறவரையில் அவர்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து கல்வியில்லாம லிருப்பது நலம்” என்று கூறியிருக்கிறார். பரமாநந்தருடைய இத்தகைய பிற்போக்கான அபிப்பிராயத்தினால் இன்னும் எத்தனை யுகம் சென்றாலும் இந்து சமூகம் முன்னேற்றம் அடைய முடியுமா? என்று கேட்கின்றோம். இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிற எந்தச் சமூகமாவது அபிவிருத்தியடையுமா?
இந்து சமூகத்தில் ஒரு பாதியாக இருக்கின்ற பெண் சமூகம், எப்பொழுதும் ஆண்மக்களால் காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலேயே இருக்குமானால் அந்தச் சமூகம் உருப்பட முடியுமா? தம்மைத் தாம் காப்பாற்றிக் கொள்ளச் சக்தி படைத்த மக்களே இவ்வுலகத்தில், மற்ற மக்களுக்குச் சமத்துவமான வாழ்க்கையையும், சுதந்தரமான வாழ்க்கையையும், இன்ப வாழ்வையும் அடைய முடியும். இது ஆராய்ச்சியும் அறிவும், அனுபவமும் உள்ளவர்களால் மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.
இப்படிப்பட்ட தற்பாதுகாப்புக்கான அறிவையும், ஆற்றலையும், மனோ தைரியத்தையும் பெண் மக்கள் பெற வேண்டுமானால் அவர்களை வீட்டுக்குள் அடைத்து வைத்துக் கொள்வதனால் ஆகிவிடுமா? கல்வியறிவு கொடுக்காமல் முழு மூடர்களாக வைத்துக் கொண்டிருந்தால் ஆகிவிடுமா? அவர்களை வெறும் பிள்ளை பெறும் யந்திரங்களாக மட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால் முடிந்து விடுமா?
357 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இதையெல்லாம் ஆலோசித்துப் பாராமல் குறுகிய மனப்பான்மையுடன், மூடர்கள் பெண்களை அவமானப்படுத்திவிடுவார்கள் என்ற பேச்சை ஒரு சாக்காக வைத்துக்கொண்டுஅவர்களை மிருகங்களாக்கி வைத்துக் கொண்டிருக்க நினைப்பது எவ்வளவு விபரீத புத்தி! நினைப்பதோடு மாத்திரம் அல்லாமல். அதைப் பொதுக்கூட்டங்களில் பிரசாரம் செய்யப் புறப்பட்டு விடுவது எவ்வளவு அவசரப்புத்தி!
பெண்கள் காலிகளால் துராக்கிரகம் செய்யப்படுவதையும் அவமானப் படுத்தப்படுவதையும் வீரமுள்ள எந்த ஆண் மகனும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்பதிலும், எந்தச் சமூகத்தைச் சேர்ந்த அறிஞர்களும் இதை வெறுப்பார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் பெண்களைக் காப்பாற்றுகின்ற வீரத்தன்மை ஆண்மக்களுக்கு வருகின்றவரையிலும் பெண் மக்களுக்கு எந்தச் சுதந்தரமும் கொடுக்கக்கூடாது என்பது எவ்வளவோ. மோசமானதும், கடுகளவு புத்தியுள்ளவர்களாலும் ஒப்புக்கொள்ளக் கூடாததும், நமது சமூகத்தை இன்னும் கோழைகளாகச் செய்வதும் ஆகிய அபிப்பிராயமாகும் என்பதை ஆலோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்
அறிவும், ஆற்றலும், உலக நாகரீகமும், சுதந்தரமும் உள்ள தாய்மார் களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் எந்த விதத்தில் எடுத்துக் கொண்டாலும் சுதந்தரமற்று, அறிவற்று மூலையில் பதுங்கிக் கிடக்கும் பெண்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை விடச் சிறந்தவர்களாயிருப்பார்கள். என்பதில் சந்தேகமில்லை ஆகவே பெண்மக்களுக்குக் கல்வியும் சுதந்தரமும் அளிப்பதன் மூலம் ஆண்மக்களுடைய அறிவும், வீரமும், மான உணர்ச்சியும் பெருகுமே யொழிய மற்றபடி யாதொரு தீமையும் நேர்ந்து விடாது
இந்துக்களுக்கு தங்கள் சமூகப் பெண்களின் மானத்தைக் காப்பாற்று
வதற்குத் தற்பொழுது போதிய பலமில்லை என்பதை பரமாநந்தர் ஒப்புக் கொள்ளுகிறார். ஏன் பலமில்லை என்று கேட்கின்றோம். இந்துக்கள் ஒரே சமூகமாக இருப்பார்களானால் அவர்களை யாராவது எதிர்க்க முடியுமா? இந்தியாவில் மற்ற சமூகங்களைக் காட்டிலும் பெருவாரியான ஜனத் தொகையைக் கொண்ட ஒரு சமூகம் தங்களுக்குப் பலமில்லை - அதுவும் தங்கள் பெண் மக்கள் மானத்தைக் காப்பதற்குக் கூட பலமில்லை என்று சொல்லிக் கொள்ளுவதை விட வேறு என்ன மானக்கேடு வேண்டும். இந்து சமூகம் ஒன்றுபட்டிருந்தால் இப்பலம் இல்லாமல் போய்விடுமா?
இந்து சமூகம் ஒன்றுபட முடியாமல் இருப்பதற்கு அடிப்படையான காரணங்கள் என்ன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார்களானால், சிந்தித்து உண்மை அறிவார்களானால் அந்தத் தடைகளை நீக்க முன் வராமல் இருப்பார்களா என்று கேட்கின்றோம்
குடி அரசு - 1935 (1) 358
எண்ணில்லாத ஜாதி வேற்றுமைகள்; ஜாதி வேற்றுமைகளை நிலைக்க வைத்துக்கொண்டிருக்கும் பல வேறுமாதிரியான புரோகிதச் சடங்குகள்; இந்துக்களுக்குள்ளிருக்கும் பல வேறு உள் மதப் பிரிவினைகள்; இம்மதப் பிரிவினை காரணமாகக் கொண்டு உண்டாகியிருக்கும் சாமிகள், சாஸ்திரங்கள், புராணங்கள், கோயில்கள், திருவிழாக்கள் முதலியன; இவை காரணமாக உண்டாகும் சண்டை சச்சரவுகள், ஜாதி உயர்வு தாழ்வின் மூலம் உண்டான தீண்டாமை, பார்க்காமை, பேசாமை முதலிய கொடுமைகள் ஆகிய இவைகளே இன்று இந்து சமூகத்தை ஒன்று சேரவிடாமல் நெல்லிக்காய் மூட்டைகளாய் வைத்திருக்கின்றன என்பதை அறியாமல், இவைகளை
ஒழித்து இந்து சமூகத்தை ஒரே சமூகமாக்க முயலாமல் இந்துக்கள் ஒன்று சேரவேண்டும், ஒற்றுமைப்பட வேண்டும் என்றும் வீண் வாய் வேதாந்தம் பேசுவதனால் என்ன பலனுண்டாகப் போகிறது?
இந்துக்கள் ஆண்மையற்று, ஒற்றுமை யற்று வாழ்வதற்கு அடிப் படையாக உள்ள தடைகளை நீக்க முயற்சிக்காமல் பெண்களை அடிமைப் படுத்தி வைக்க வேண்டும் என்பது மிகவும் பிற்போக்கானதும், இந்து சமூகத்தை இன்னும் அடிமைப் படுகுழியில் தள்ளிக் கோழைகளாக்கி வைக்க வேண்டும் என்பதற்குச் செய்யும் முயற்சியுமேயாகும் என்பதில்
சிறிதும் ஐயமில்லை.
ஆகையால் யாரும் பாய் பரமானந்தர் போன்ற வகுப்பு வாதிகளின். பேச்சைக்கேட்டு ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
மற்றும் பிரபல காங்கிரஸ் வாதியாகத் திகழ்கின்ற சர்தார் பட்டேலும் இவரைப் போன்றே “பெண்களுக்குச் சுதந்தரம் கொடுப்பது தவறு பிள்ளைகளைப் பெறுவதும், வளர்ப்பதுந்தான் அவர்கள் வேலை'' என்று முன்பு ஒரு தடவை பேசி இருக்கிறார். இத்தகையவர்கள் தாம் - இவர்கள் போன்ற பிற்போக்காளர்கள் தாம் இன்று நமது நாட்டு அரசியல் - சமூகத் தலைவர்களாக விளங்கி வரும்போது நமது சமூகம் விடுதலை பெறுவது எப்பொழுது? பெண் மக்கள் சுதந்தரம் பெறுவது எக்காலம்? என்று யாரும்
பின் வாங்க வேண்டாம். காலச் சக்கரத்தை யாரும் தடுக்க முடியாது அது சுழன்று மாறுதல் உண்டாக்கிக் கொண்டுதான் இருக்கும். ஆதலால் யாரும் இந்தக் குறுகிய நோக்கமுடைய சொற்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 19.05.1935
[0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வகுப்பு வாதம்
இந்திய மக்களின் முன்னேற்றமும், சீர்திருத்தமும் அதன் எதிரிகளுக்கு வகுப்புவாதமாய் விளங்குகிறது.
மற்றொரு புறத்தில் "இந்தியாவின் முற்போக்குக்கும், சீர்திருத்தத் திற்கும் வகுப்புகளும், மதங்களும் மூட்டுக்கட்டையாய் இருக்கின்றன” என்கிற விஷயம் இந்தியா மாத்திரமல்லாமல் உலக மக்கள் பெரும்பாலோரால்
ஒப்புக் கொள்ளப்படுகிறது
இந்திய சரித்திரம் ஏற்பட்ட காலம் முதல் இந்தியா வகுப்பு வாதங்களால் தொல்லைப்பட்டு வந்ததும் வகுப்புக் கலவரங்களால் மக்கள் உயிரிழந்தது முதல் அடிக்கடி ஏற்பட்ட அரசியல் மாறுதல் வரை அநேக கஷ்டங்கள் நடந்து வந்திருப்பதை எந்த சரித்திர ஆசிரியரினாலும் மறுக்க
முடியாததாகும் வகுப்புவாதத்தால் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கிறது என்று மாத்திரம் தான் சொல்லலாமே ஒழிய வகுப்பு வாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை. உதாரணமாக ராமாயணம், கந்தபுராணம், பெரிய புராணம் முதலிய வைணவ சைவ மத ஆதாரங்களின் சரித்திரம் முழுவதும் வகுப்புவாதமாகவே இருந்து வருகின்றதைப் பார்க்கலாம்.
ராமாயணத்தில் தேவர்கள், ராக்ஷதர்கள் என்கின்ற வகுப்புகளும், தேவர்கள், வானரங்கள் என்கின்ற வகுப்புகளும் இந்திய மனித சமூகத்தில் உள்ளவைகளேயாகும். இவை இரண்டு வகுப்புகளையே அதாவது ஆரியர், திராவிடர்கள் என்கின்ற வகுப்புகளையே குறிக்கின்றன என்பது ஆராய்ச்சி யாளர்களின் முடிவாக ஆகிவிட்டது.
நாமறிய சுமார் 50 வருஷகாலமாகவே இராமாயணக் கதை ஆரியர் திராவிடர் வகுப்புக் கலவரங்களை எடுத்துக் காட்டுவது என்பதாக அனேக அறிஞர்கள் பல ஆதாரங்களுடன் எழுதியும், வாதப் பிரதிவாதங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள் என்றாலும் 20-வது நூற்றாண்டில் அது வெட்டவெளிச்சமாய் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது
அரசாங்கப் பள்ளிக்கூட புத்தகங்களில் தேச சரித்திர சம்பந்தமான. புத்தகங்களில் எல்லாம் இராமாயணமானது ஆரியர்களுக்கும், தென்னாட்டு
குடி அரசு - 1935 (1) 360
திராவிடர்களுக்கும் நிகழ்ந்த யுத்தங்கள் என்பதாக தெளிவாக எழுதப் பட்டிருக்கின்றதை இன்றும் பார்க்கலாம். இராமாயண ராமனைவருணிப்பதில். ராமன் ஆரியன் என்று தாராளமாய் பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது
நிற்க தேவர்கள், ராட்சதர்கள், சுரர்கள், அசுரர்கள் என்கின்ற பெயரையுடையவர்கள் இந்தியாவில் இந்த லோகத்தில் இருந்து கொண்டுதான் வழக்காடியதாக சரித்திரங்கள் இருக்கின்றனவே ஒழிய வேறு லோகங்களில் இருந்து கொண்டு வழக்காடியதாக கருத ஆதாரமில்லை.
ஆதலால் ராம ராவண யுத்தம் மாத்திரமில்லாமல் பாரத யுத்தம், இரணிய யுத்தம் முதலிய அனேக யுத்தங்கள் வகுப்புவாதங் காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன.
மற்றும் உண்மைச் சரித்திரங்களிலும் இந்தியாவில் சுமார்2, 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்னிட்டதாகக் கூறப்படும் சரித்திரங்களிலும் எல்லா யுத்தங்களும் பெரிதும் வகுப்புவாதங் காரணமாகவே நடந்து வந்திருக்கின்றன.
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது எப்போதாவது இந்தியா வகுப்புவாதம் இல்லாமல் இருந்ததாகக் குறிப்பிடுவதற்கு ஆதாரமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அரசாட்சி என்பதுகூட பெரிதும் வகுப்பை ஆதாரமாய்க் கொண்டே நடந்திருக்கின்றன. ஏதாவது ஒரு மதம் அல்லது ஒரு ஜாதி அல்லது ஒரு தேசம் என்கின்ற காரணத்தால் மக்கள் பிரிக்கப்பட்டு விட்டபடியால் வகுப்புவாதத்திற்கு அப்பிரிவினைகளே காரணமாய் இருப்பதால் அப்பிரிவினைகள் மாற்றமடைந்தாலொழிய வகுப்புவாதம் மறைவுபடும் என்று சொல்லிவிட முடியவே முடியாது
ஆனால் வகுப்புவாதத்தின் பயனாய் ஆதிக்கம் செலுத்துகிறவர்கள் வேண்டுமானால் மற்றவர்களைப் பார்த்து அதாவது வகுப்புவாதத்தின் பயனாய் அடக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டவர்களைப் பார்த்து அவர்களது விடுதலை முயற்சியை வகுப்புவாதம் என்று சொல்லி அடக்கி விடப் பார்க்கலாமே ஒழிய வகுப்புவாதம் உண்மையில் அடக்கப்பட முடியவே முடியாது
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார்கள் - தீண்டப்படாதவர் தீண்டப்படக் கூடியவர் - என்கின்ற வகுப்புப் பேதங்களும், வாதங்களும் தீர்ந்து விட்டதி னாலேயே வகுப்புவாதம் ஒழிந்து விடும் என்று நாம் கருதிவிட முடியாது
எந்த உருவத்தைக் கொண்டாவது பேதங்கள் உள்ள வரை வாதங்கள் இருந்துதான் வரும். அதற்கு ஓய்வு கொடுக்க எவராலும் முடியவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும் இன்றைய அரசியலில் வெளிப்படையாகவும் உள் எண்ணமாகவும் வகுப்பு வாதங்கள் தலை விரித்தாடுவதை யார்தான் மறுக்க முடியும்? நட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வெளிப்படையாக இந்தியர் பிரிட்டிஷார் என்கின்ற (உள் எண்ண) வகுப்புவாத உணர்ச்சி சுயராஜ்யம் அன்னிய ராஜ்யம் என்ற பெயரால். வெளிப்படையா யிருந்து வருகிறது அதுபோலவே இந்துக்கள் ஆதிக்கமா முஸ்லீம்கள் ஆதிக்கமா என்கின்ற (உள் எண்ண) வகுப்புவாத உணர்ச்சி இந்து முஸ்லீம் உரிமை என்கின்ற பெயரால் வெளிப்படையாய் இருந்து வருகின்றது அதுபோலவே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் வகுப்புவாதமும் பார்ப்பனர் தீண்டப்படாதார் வகுப்புவாத உணர்ச்சியும் வகுப்பு உரிமை என்னும் பேரால் இருந்து வருகின்றன.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் வகுப்புக்கு வகுப்பு அவநம்பிக்கை, துவேஷம் ஆகியவைகளாலும் வகுப்பை வகுப்பு அடக்கி ஆள வேண்டும் என்கின்ற எண்ணத்தாலும் ஏதோ ஒரு காலத்தில் எந்தக் காரணத்தாலோ கிடைத்துவிட்ட ஆதிக்கத்தையும் அதிக உரிமையையும் எப்படி விட்டுக் கொடுப்பது என்கின்ற கெட்ட எண்ணத்தாலும் முட்டாள் பிடிவாதத்தாலும் வகுப்புவாதம் நாளுக்கு நாள் வளர்ந்து உரம் பெற்று வருகின்றதை சென்ற 30 வருஷ காலமாக நேரில் பார்த்து வருகின்றோம்.
வகுப்பு உணர்ச்சியைக் குறை கூறி அதை அடக்கப் பார்க்கின்றவர்கள் மக்களை பழி சுமத்தி பயப்படுத்தி ஏமாற்றி அடக்கப் பார்க்கின்றார்களே ஒழிய ஒருவராவது அதன் உள் தத்துவத்தை உணர்ந்து அதை அடியோடு. தலை எடுக்க வொட்டாமல் செய்வதற்கு யாரும் முயற்சிப்பதில்லை.
உதாரணமாக “இந்திய அரசியல் சீர்திருத்தத்திற்கு அல்லது இந்திய
சுயராஜ்யத்திற்கு, இந்தியாவில் உள்ள இந்து முஸ்லீம் ஒற்றுமையையும் கீழ் ஜாதி மேல் ஜாதிக் கொடுமையும் (தீண்டாமையும்) தடை கல்லாய்
இருக்கிறது''. அதாவது மத பேதம், ஜாதி பேதம் தடையாய் இருக்கிறது என்பது 1920ம் வருஷத்தில் தோழர் காந்தியாரால் எடுத்துக் காட்டப்பட்டு இவ்விரண்டும் நீங்கினால் ஒழிய “சுயராஜ்யம்” கிடைக்காதென்று அரசியல் ஸ்தாபனங்களில் தீர்மானிக்கப்பட்டு அதையே கொள்கையாகவும் திட்டமாகவும் வைத்து 16 வருஷ காலம் இந்தியாவில் “சுயராஜ்யப் போர்" செய்தாகிவிட்டது
ஆனால் ஆரம்ப முதல் இன்று வரை அவை மேலும் மேலும் பெருகி வளம் பெற்று வலிவடைந்து வருகின்றது என்பதல்லாமல் சிறிதாவது மறைந்ததாகவோ குறைந்ததாகவோ காணப்படவில்லை.
1931ல் தோழர் காந்தியார் வட்ட மேஜை மகாநாட்டுக்குச் சென்ற காலத்தில் வட்ட மேஜையில் இந்து முஸ்லீம் ஒற்றுமையின்மையாலும், கீழ்ஜாதி மேல்ஜாதி ஒற்றுமை யின்மையாலும், பார்ப்பனர், பார்ப்பன
ரல்லாதார் ஒற்றுமையின்மையாலும் வட்ட மேஜை முறிந்து அஷ்டகோணல்
குடி அரசு - 1935 (1) 362
மேஜையாகி தமது இந்தியப் பிரதிநிதித்துவம் தோல்வி அடைந்து வெறுங்கையுடன் திரும்பி வந்தது யாவரும் உணர்ந்ததேயாகும்.
முஸ்லீம் பிரதிநிதியாக தோழர் ஜின்னாவும், தீண்டாதவர்கள் பிரதிநிதியாகத் தோழர் அம்பெட்காரும், பார்ப்பனரல்லாதார் பிரதிநிதியாகத் தோழர் பாத்ரோவும் வட்டமேஜையில் இருந்து கொண்டு முறையே ஒருவர் காங்கிரஸ் இந்துக்கள் ஸ்தாபனமென்றும், மற்றவர், காங்கிரஸ் மேல் ஜாதிக்காரர் ஸ்தாபனமென்றும், அடுத்தவர் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஸ்தாபனமென்றும் இம் மூன்று சமூகத்தாருக்கும் காந்தியாரின் காங்கிரசு பிரதிநிதித்துவ ஸ்தாபனம் ஆகாதென்றும் வலியுறுத்தியதோடு மாத்திர மல்லாமல் தங்கள் தங்கள் சமூகத்தைப் பிரிட்டிஷாரே காப்பாற்ற வேண்டுமென்றும் தங்கள் தங்கள் சமூகத்திற்கு உரிமை அளிக்க வேண்டும்
என்றும் விண்ணப்பித்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
காங்கிரஸ் பிரதிநிதியான காந்தியாரும் காந்தியார் பின் சென்ற தோழர்கள் மாளவியா, ரங்கசாமி ஐயங்கார் ஆகிய பார்ப்பனர்களும் வெட்கப்பட்டு வெறுங்கையுடன் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார்கள் என்பது ஒரு அளவுகூட இரகசியமான காரியமல்ல:
இது மாத்திரமல்லாமல் தீண்டப்படாதவர்களையும், பார்ப்பனரல்லா தாரையும் வஞ்சிக்க தோழர் காந்தியார் முஸ்லீம்களுடன் இரகசிய ஒப்பந்தம் பேசி சூழ்ச்சி செய்தார் என்கின்ற கெட்ட பெயருடனும் திரும்பி
வந்தார் என்றுகூட சொல்லலாம்
இதன் பயனாகவெல்லாம் இந்திய அரசியல் ஸ்தாபனத்துக்குத் தான்தான் இந்தியப் பிரதிநிதித்துவ ஸ்தாபனம் என்று சொல்லுவதற்குச் சிறிதுகூட யோக்கியதை இல்லாமல் போனதோடு அது 1920ம் வருடம் முதல் 1934 ம் வருஷம் வரை செய்து வந்த வேலைகளையும் முயற்சி களையும் தப்பிதமான காரியம் என்றும், முட்டாள்தனமான காரியம் என்றும்
கருதி (காங்கிரஸ் ஆனது) 1919ம் வருஷத்திற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பிப் போக வேண்டியதாகி விட்டது
இந்த 15 வருஷ காலமாய் காங்கிரசின் முன்னணியில் இருந்தவர்கள் ஒவ்வொருவராய் காங்கிரசின் கெட்ட பெயரை சமாளிக்க முடியாமல் காங்கிரசை விட்டு விலகி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது
வகுப்புவாதம் என்னும் “கொடிய விஷப்பாம்பால்'' காங்கிரஸ் தலைவர்கள் கடிபட்டு மூர்ச்சையாகிக் கிடக்க நேரிட்டுவிட்டது
இந்தியா இன்று இந்த நிலைமைக்கு வந்தும் யாரோ சில 4வது 5வது வகுப்பு ஆளுகளும் அனாமதேயங்களும் வகுப்பு வாதத்தை ஒழித்துவிடப் போவதாக வீரம் பேசி பழய பாட்டைப் படிப்பதால் என்ன பயன் அடைந்து விட முடியும்? காந்தியார், ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களின் சூட்சிகளை ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
விட சத்தியமூர்த்தியார், சோமாசியார் போன்ற விபீஷணர்களின் சூழ்ச்சி களால் என்ன காரியம் சாதித்துவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
வகுப்புவாதம் காரணமாக காங்கிரசுக்காரர் இவ்வளவு பெரிய தோல்வியும் நஷ்டமும் ஏமாற்றமும் அடைந்து வந்ததோடு உலகம் சிரிக்கத் தகுந்த அவமானம் ஏற்பட்டும் கூட வகுப்புவாதத்தை ஏதாவது ஒரு வழியில் அடக்கவோ, குறைக்கவோ சிறிதாவது பாடுபட்டார்கள் என்று சொல்லுவதற்கு இடமில்லாமலே இருந்து வருகிறார்கள்.
வகுப்புவாதத்துக்கு பதில் சொல்லும் முறையில் ஒவ்வொரு வகுப்பாரும் மனந் துணிந்து தைரியமாய் வெளிப்படையாய் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு நற்சாக்ஷிப் பத்திரமளித்து அதை அபயம் கொள்ளுவதையே கொள்கையாய்க் கொள்ள வேண்டியவர்களாகிவிட்டார்கள். வகுப்புவாதத்துக்கு ஆக எதைவேண்டுமானாலும் தியாகம் செய்ய தகுந்த தியாகமூர்த்திகளாகி விட்டார்கள் என்பதைத் தவிர வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வித முயற்சியும் கவலையும் கொண்டார்கள் என்று சொல்லுவதற்கில்லை உதாரணமாக முஸ்லீம் சமூகமானது தங்களுடைய உரிமைகளை நிர்த்தாரணம் செய்து தங்களுடைய தேவைகளை ஒப்புக் கொள்ளாதபட்சம் (இந்துக்கள் ஆட்சியை விட சுயராஜ்யத்தைவிட) பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்று கூறி விட்டார்கள். தீண்டப்படாத மக்கள் என்பவர்களும் தங்கள் உரிமைகளை சட்டபூர்வமாய் ஏற்றுக் கொண்டு தங்கள் குறைகளை
பூர்த்தி செய்யாதவரை (மேல் ஜாதிக்காரர்கள் ஆட்சியைவிட) 'சுயராஜியத்தை” விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானதென்றும் அது கடவுளால் அனுப்பப் பட்டதென்றும் சொல்லி விட்டார்கள். பார்ப்பனரல்லாதார்களும் சகல வகுப்புகளுக்கும் நீதி வழங்கும் முறையை சட்டப்பூர்வமாய் ஒப்புக் கொண்டு தங்கள் இழிவுகளை நீக்க இடம் தராத வரை (பார்ப்பனர். சூழ்ச்சியைவிட) “'சுயராஜ்யத்தை' விட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்று கூறி விட்டார்கள். இவ்வளவு மாத்திரம் தானா என்று பார்த்தால் இவர்களது உரிமை களையும் தேவைகளையும் மறுத்து குறைகளை நீக்க ஒப்புக் கொள்ளாத காங்கிரசுக்காரர்கள் (பார்ப்பனர்கள்) இதுபோலவே “பார்ப்பனரல்லாதார். குறைகளை தேவைகளை ஒப்புக்கொள்ளுவதைவிட முஸ்லீம்கள் குறைகளை தேவைகளை ஒப்புக் கொள்ளுவதைவிட தீண்டப்படாதார் குறைகளை தேவைகளை ஒப்புக் கொள்ளுவதைவிட பிரிட்டிஷ் ஆட்சியே நிலைத்திருக்
கட்டும். அதைப் பற்றிக் கவலை இல்லை" என்று தாராளமாய் சொல்லி விட்டதோடு உயிரை விட்டாலும் விடலாமே தவிர அவர்களுடைய குறைகளையும் தேவைகளையும் ஒப்புக் கொள்ளவே முடியாது என்று சொல்லி விட்டார்கள். காங்கிரஸ் தலைவர் சர்வாதிகாரியான காந்தியார் அவர்களது தேவைகளைஒப்புக்கொள்ளுவதைவிட உயிர்விடுவதே மேல் என்று பட்டினி கிடந்து தற்கொலை புரிந்துக் கொள்ளும் வேலையில் இறங்கி விட்டார்.
குடி அரசு - 1935 (1) 364
இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் தென்னாட்டு காங்கிரஸ் தலைவர்கள், தோழர்கள் பிரகாசம் அய்யர், சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் தைரியமாயும், பச்சையாயும் பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) கக்ஷியார் ஆக்ஷியைவிட பிரிட்டிஷார் ஆக்ஷியே மேலானதென்று கூறி விட்டார்கள். ஆகவே காங்கிரசுக்காரர்கள் உள்பட எல்லாக் கட்சியாரும் வகுப்புவாதத்துக்குச் சமாதானம் சொல்லுவதைவிட வகுப்புவாதம் இல்லாமல் இருக்கும்படி செய்வதைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேலானது என்று கருதுவதாய் இருக்கின்றதே தவிர தோழர் காந்தியார் முதல் சத்தியமூர்த்தியார் ஈறாகவுள்ள அரசியல்வாதிகளுக்கு வகுப்புக்காரர்களுடன். சமரசம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் போய்விட்டது.
தோழர் காந்தியார் பல தடவை லார்ட் வில்லிங்டன் துரையை காண விண்ணப்பம் போட்டார்களே ஒழிய “வகுப்புவாதிகளை''க் கலந்து பேசவோ சமாதானம் செய்யவோ கடுகளவாவது முயற்சித்தவர்கள் அல்ல.
தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் சென்னை கவர்னர் பிரபு வீட்டுக்குப் பல தடவை யாத்திரை போனாரே ஒழிய வகுப்புவாதத்துக்கு சிறிதாவது பரிகாரம் செய்ய வந்தவர் அல்ல.
ஆகவே இந்தியஅரசியல் இன்றைய நிலையில் பிரிட்டிஷ்ஆக்ஷியாகிய 'அன்னிய ஆக்ஷி என்பதே மேலானது என்று தாராளமாக ஒப்புக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் செய்துவிட்டது ஆகவே இன்னிலையில் இன்று ஒவ்வொரு வகுப்பாரும் அவரவர்கள் தங்கள் தங்கள் வகுப்பு நலனுக்கு ஏற்ற காரியங்களை இந்த
பிரிட்டிஷ் ஆக்ஷியில் அடைய முயற்சிப்பதைக் குற்றம் என்றோ, இழிவு என்றோ யாராலாவது சொல்லப்படுமானால் அப்படிப்பட்டவர்கள் நிர்மூடர்கள் என்றோ, மடையர்கள் என்றோ அல்லது மற்ற வகுப்பாரை ஏமாற்றி தங்கள் வகுப்பாரே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கின்ற வஞ்சக அயோக்கியச் சூழ்ச்சிக்காரர்கள் என்றோதான் சொல்லித் தீர வேண்டியதாய் இருக்கின்றது
வகுப்புவாதம் என்கின்ற வார்த்தையைக் கண்டு மிரளுவதோ பழிப்பதோ ஆன காரியம்கூட கோழைத்தனமும் முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆன காரியம் ஆகுமே தவிர மற்றபடி உண்மையாக பயப்படவும் வெறுக்கவும் அதில் ஒன்றும் இல்லை என்றே சொல்லுவோம்
குடி அரசு - தலையங்கம் - 26.05.1935
ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
திண்டிவனம் பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழா
“பகுத்தறிவால் மனிதன் தொல்லைப்படுகிறான்??
தோழர்களே!
திண்டிவனம் தாலூக்கா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனேயாவேன். அதோடு தாங்கள் அன்பாய் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல்லவானாலும் என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்பதையும் எனது கொள்கைகளையும், ஆசைகளையும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற்கு இது ஒரு அளவு கருவியாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்தனத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன்.
இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண்களும், பெண்களும் பல ஜாதி மத வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை
நமது பகுத்தறிவுக்கு விரோதமான கூட்டத்தார்கள் மனித சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் சுயநலத்தின் காரணமாக முட்டுக்கட்டையாய் இருக்கும் வகுப்பார்கள் நம்மைப் பற்றியும் நமது இயக்கக் கொள்கைகளைப் பற்றியும் விஷமப் பிரசாரம் செய்தும், திரித்தும், பழித்தும் கூறி வந்தும் இந்த ஊரில் இன்று இவ்வளவு பேர் இங்கு இந்த ஆண்டு விழாவுக்குக் கூடி இருப்பதென்றால் எனக்கு பெருத்த ஆனந்தத்தையும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்கின்றது
பகுத்தறிவு
பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் தலைவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது பேசுவதாய் இருந்தால் பகுத்தறிவு என்பதைப் பற்றி விளக்கிச் சில வார்த்தைகள் பேசுவது பொருத்த முடையதாகுமென்றே கருதுகிறேன்.
குடி அரசு - 1935 (1) 366
பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு
என்று சொல்லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனிதனுடைய
சிந்திக்கும் தன்மைக்கும் சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது
உலகில் உள்ள பல கோடி ஜீவராசிகளில் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும் ஒன்று என்பது மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமாகும். மரம், புல், பூண்டு, செடி, கொடிஆகியவைகளும்ஜீவ வர்க்கத்தில் சேர்ந்தவைகள் என்பது நவீன ஆராய்ச்சியால் ஆராய்ச்சி நிபுணர்களால் சொல்லப்பட்டு அறிஞர்களுக்கு மெய்ப்பித்தும் காட்டப்பட்டுவிட்டது
வங்காள மாகாணத்தைச் சேர்ந்தவரும், உலகம் போற்றுபவருமான ரசாயன சாஸ்திரியார் டாக்டர் போஸ் அவர்கள் தாவர வர்க்கங்களுக்கு ஜீவன் உண்டு என்பதை மெய்பித்துக் காட்டி செடிகளில் ஒரு சிறு கிளையை துண்டித்த போதிலும் அச்செடி துடிதுடிப்பதை ரஜுப்பித்துக் காட்டி இருக்கிறார்.
மற்றும் மண், கல், மலை ஆகிய அசேதனப் பொருள்கள்கூட வளருவதும், சேதிக்கப்பட்டால் வளர்ச்சி தடைப்படுவதும் முதலிய காரணங்களால் அவைகளின் இயங்குதல்கள் விளங்குகின்றன.
இப்படிப்பட்ட காரியங்கள் மனிதன் நேரே காண முடியாமலும், மிக மிக மந்த கதியிலும் இயந்திரங்கள் மூலமல்லாமல் அறிய முடியாததாகவும் இருப்பதால் மக்கள் அதை சுலபத்தில் ஒப்புக் கொள்ள முடியாதவர்களாக
இருந்து வருகிறார்கள். ஆன போதிலும் ஒரு அளவுக்கு அதாவது ஜீவப் பிராணிகள்
இன்னின்னதுதான் என்றுஒப்புக்கொண்டஅளவுக்குஅதனதனின்இயங்குதலை
அறிந்து அதற்கேற்றபடி அவற்றின் அறிவை ஒப்புக் கொள்ளுகிறார்கள்.
அவ்வறிவின் மேலான தன்மைக்குப் பகுத்தறிவு என்ற பெயர் கொடுத்து அது மனிதனுக்கே உரித்தானது என்றும், அதனாலேயே மனிதன் ஜீவப் பிராணிகளிலெல்லாம் உயர்ந்தவன் என்றும் சொல்லுகிறார்கள்.
அறிவின் தன்மையும், அவற்றின் படிகளும் எப்படி இருந்தாலும் பரிணாம வாதக் கொள்கைப்படி (அதாவது ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டிருப்பது) பிரபஞ்சத் தோற்றங்கள் எல்லாம் ஒவ்வொன்று வஸ்துவின் ஆரம்பதோற்றமுமே இன்றிருப்பது போன்றல்ல. ஒன்று மற்றொன்றாக மாறி மாறி வருவதாலேயே பல்வேறு தோற்றங்கள் காணப்பட்டு நாளடைவில் ஜீவப் பிராணிகள் என்று சொல்லப்படுவனவாக காணப்படுகின்றன.
ந ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
எப்படி இருந்த போதிலும் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும், அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும் இருந்த வஸ்துக்களில் இருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கிறானே ஒழிய வேறில்லை
உலகம் எப்பொழுது உற்பத்தி ஆயிற்று என்பதற்கு எவ்வளவு வருஷ
காலம் தான் ஆயுள் சொல்லுவதாய் இருந்தாலும் பலலட்ச லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு அணுக்களாய் அணுக் கிருமிகளாய் இருந்து வந்த பொருள்கள் தான் இன்று மனித ரூபமாய் இருக்கும் (பகுத்தறிவு பெற்ற ஜீவன் என்று சொல்லப்படும்) மனிதனாவான் என்பது அறிஞர்களும், தத்துவ சாஸ்திரிகளும் விஞ்ஞான விற்பன்னர்களும் ஏற்றுக் கொண்ட விஷயமாகும்.
ஓவ்வொன்றில் ஒவ்வொன்று மேம்பட்டது
இது இவ்வாறாக மனிதன் பகுத்தறிவு உடையவனாவான் என்பத னாலேயே பகுத்தறிவு இல்லாத ஜீவ ராசிகள் என்பனவற்றைவிட மனிதன் மேம்பட்டவன் என்று சொல்லிவிட முடியாது
ஜீவராசிகளில் ஊர்வனவற்றில் பாம்புக்கு இல்லாத கால்கள் எப்படி பல்லி, ஓணான், பாம்பரணை முதலியவைகளுக்கு இருக்கின்னனவோ அது
போலும்நாய், கழுதைகளுக்குஇல்லாதகைசவுகரியங்கள், விரல்கள் முதலியவை எப்படி குரங்கு தேவாங்கு முதலிய ஜாதிகளுக்கு இருக்கின்னனவோ அதுபோல் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு அளவு அறிவின் சிந்தனா சக்தி மனிதனுக்கு இருக்கின்றது என்கின்ற அளவு வித்தியாசம் மாத்திரம்தான். உண்டே தவிர மற்றபடி தனிப்பட்ட மேன்மை ஏதும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் மனிதனுக்கு இல்லாத பல சக்திகள் விக்ஷ குணங்கள் முதலியவை மற்ற ஜீவராசிகளிடத்தில் இருப்பதையும் காணலாம் அதுபோலவே மற்ற ஜீவராசிகளிடம் இல்லாதகில கெட்டகுணங்களும், பல அசவுகரியங்களும், துன்பங்களும், கவலைகளும், திருப்தி அற்ற தன்மைகளும் பகுத்தறிவுடைய மனிதனிடத்தில் இருப்பதையும் காணலாம். உதாரணமாக மனிதனுடைய ஆசைக்கும், மற்ற ஜீவராசிகளுடைய ஆசைக்கும் எவ்வளவோ வித்தியாசமுண்டு
மனிதனுடைய ஆசை எல்லையற்றது. அவசியமில்லாதது, வெறும் கற்பனையையும், மூடநம்பிக்கையையும் பொறாமையையும் பலவீனத்தையும் அஸ்திரவாரமாகக் கொண்டதுமாகும். தனது தேவைக்கு மேலும் எவ்வளவு இருந்தாலும் தனது பின் சந்ததியையும் தான் இறந்த பிறகு மோட்ச லோகம் என்பதில் பயன்படவும் வேண்டும் என்கின்ற அவிவிவேகமான ஆசையாகும். உதாரணமாக நாடு பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதுகிறவனுக்கு எவ்வளவு நாடு இருந்தாலும் உலகமே அவனது ஏக
குடி அரசு - 1935 (1) 368
சக்ராதிபத்திய சர்வாதிகாரத் தன்மைக்குக் கீழ் வந்து விட்டாலும்கூட மேல்லோகமும் கீழ்லோகமும் தனது ஆட்சிக்குள் வந்தால் நல்லது என்று முட்டாள்தனமான கற்பனைக்கு அடிமையாகி திருப்தியற்றவனாகிறான். எவ்வளவு பூமி இருந்தாலும் சமுத்திரப் பரப்பெல்லாம் பூமியாகி அதற்கும் தானே மிராசுதாரனாக இருந்தால் நல்லது என்கின்ற ஆசைக்கு அடிமையாகி குறைபாட்டுக்குக் கட்டுப்பட்டவனாகிறான்.
அதுபோலவே செல்வம் எவ்வளவுதான் கோடிக்கணக்காக இருந்தாலும் எண்ணிக்கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ அதுபோல் எவ்வளவு பெருகினாலும் மேலும் மேலும் சொத்து சேர வேண்டும், வருவாய் பெருக வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்து விலக முடியாதவனாகி போத வில்லையே போதவில்லையே என்கின்ற தரித்திரத்துக்கு அடிமை ஆகிறான்.
இந்த குணங்கள் பகுத்தறிவில்லாத ஜீவராசிகள் என்பவைகளிடம் காணக் கிடையாது.
தன் பிள்ளைக்குட்டி, பேத்து, பிதுர் ஆகிய பின் சந்ததிகளைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய பகுத்தறிவில்லாதவைகளுக்கு இல்லை. அனேக ஜீவராசிகள் தன் பிள்ளை குட்டிகளைக் கவனிப்பதே இல்லை. அனேகஜீவராசிகள் தன் பிள்ளை
குட்டிகள் தனியே இரை தேடிக் கொள்ளும் பருவம் வந்தவுடன் வெறுத்துத் தள்ளிவிடுகின்றன. எவையும் அவைகளைப் பற்றிகதாகவலைப்படுகிறதில்லை.
பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வ தில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை. தன் இனத்தின் உழைப் பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின் மீது சவ்வாரி செய்வதில்லை
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்ப்படுத்துகிறான், வருத்துகிறான், வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாய்
இருந்து, தன் இனத்தின் உழைப்பிலேயே வாழுகிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் பயனனுபவிக்க ஒரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.
உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கின்ற “இழிவான'' மிருகக் கூட்டத்தில் பார்ப்பன ஜாதி, பறை ஜாதி, நாயுடு ஜாதி, முதலி ஜாதி என்கின்ற
பிரிவு கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து
இழிவுபடுத்தப்படுகின்றது.
மனிதன் மீது மனிதன் சவ்வாரி செய்கிறான். மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்ளுகிறான். மனிதனை மனிதன் வஞ்சிக்கிறான்.
பகுத்தறிவின்பயன்இதுவாயிருக்கும்போது பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்?
ஹஜ ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மனிதன் வாழ்க்கை நிலை பொதுவாகவே மனித வாழ்க்கையின் தன்மை மிக்க குறைபாடும், கவலையும், அதிருப்தியும் கொண்டதாகவே இருக்கிறது. இந்த குணம் எல்லா தேசத்திலும், எல்லா மனிதர்களிடையும் அரசன், குடிகள், பணக்காரன், ஏழை-மேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரன், முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதங்களாக தாராதம்மியங்களாக இல்லாமல் எல்லா மக்களிடமுமே இருந்து வருகின்றது.
அறிவில்லாததால் கஷ்டப்படுகிறான் என்று சொல்லுவதற்கு இல்லாமல் பகுத்தறிவு என்பது இருந்தும் மனிதன் ஏன் இத் தன்மையில் இருக்க வேண்டும்? மனிதன் காட்டுமிராண்டியாயும் சமூக வாழ்க்கை இல்லாமலும் காட்டில் தனித்தனியாய் திரியும்போது இல்லாத கஷ்டங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லாம் சமூக வாழ்க்கைக்கு வந்த பின்பு அனுபவிக் கின்றவனாகவும், உடையவனாகவும் இருந்து வருகிறான்.
மனிதன் காட்டுமிராண்டித் தனி வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்க்கையில் ஒருவனுக்கொருவன் உதவி செய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே ஒழிய மற்ற மனிதனைக் கொடுமைப்படுத்தி, இழிவுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அதன் பயனாய் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படி கருதி இருந்தால் சமூக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது
பரஸ்பர உதவிக்காக ஏற்பட்ட சமூக வாழ்க்கை பரஸ்பர தொல்லைக்கும், உபத்திரவத்துக்கும் ஆளாக ஏற்பட்டுவிட்டது.
சமுதாயத் துறையில் இன்று உள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய
காலக் கொடுமையாலேயோ கடவுள் தன்மையாலோ அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது
ஏனெனில் சமூக வாழ்க்கையின் சரித்திர ஆரம்ப காலம் எதுவோ.
அக்காலத்திலிருந்தே இக் குணங்கள் மனித சமூகத்தில் இருந்து வந்திருப்பதை சரித்திர ஆதாரங்களில் பரக்கக் காணலாம்.
கடவுள் தன்மை என்பதிலும், எப்படிப்பட்ட கடவுள் காலத்திலும், அவதாரங்களின் காலத்திலும் கடவுள் தன்மை பெற்ற தூதர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், சமய குறவர்கள் என்பவர்கள் காலத்திலும் இக் கொடுமைகளும், குறைவுகளும், இழி குணங்களும் நிலவி வந்திருக்கின்றன. அதுபோலவே அரசாங்க விஷயத்திலும் இன்றுள்ள அன்னியர் வெள்ளைக்காரர்” “வியாபார உணர்ச்சியோடும், பொருப்பில்லாமலும்
குடி அரசு - 1935 (1) 370
ஆளுகின்ற ஆட்சி'' என்பன மாத்திரம் அல்லாமல் கடவுள் அவதார ஆட்சி, கடவுள் அருள்பெற்ற ஆட்சி, தர்ம தேவதைகள் ஆட்சி, மனு நீதி ஆட்சி, மற்றும் சேர சோழ பாண்டியன், பார்ப்பனர், நாயக்கர், மகமதியர் ஆகிய எல்லா ஆட்சி காலத்திலும் இருந்து வந்த குறைகளேதான் இன்று காணப்படுகின்றன.
எந்தக் காலத்திலும் எப்படிப்பட்ட கடவுளாலும் யாருடைய ஆட்சியிலும் இக் குறைபாடுகள் நீங்கி இருந்ததாகவோ, நீக்கப்பட்டதாகவோ காண முடியவில்லை. ஆகவே இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதாய் இருந்தால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
ஒன்று மனிதனுக்கு பகுத்தறிவு ஏற்பட்ட காரணத்தினாலேயே மனிதன் இத்யாதி கொடுமைக்கும், துக்கத்துக்கும், இழிவுக்கும் ஆளானான் என்று சொல்ல வேண்டும். இதை அறிஞர் ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாது. மற்றென்ன வென்றால் மனிதன் அறிவை தப்பாய் பயன்படுத்தி இயற்கையையும் மனித சுபாவத்தையும் மனிதன் தவறுதலாய் கற்பித்துக் கொண்டு மனித ஜன்மமே அளவற்ற ஆசைக்கு அடிமைப்பட்டதென்றும், மனித ஜன்மமே துக்கம் அனுபவிக்கவும், கவலையால் மூழ்கவும் ஏற்பட்டதென்றும் மனிதன் சமூக வாழ்க்கையே (சம்சாரம் சாகரம்) துக்கம் என்றும் கருதி அதையே இயற்கை: யாக்கிவிட்டதால் இந்நிலையில் இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மனித வாழ்க்கைநிலை முழுவதையும் கட்டுப்படுத்திக் கட்டுப்பாட்டுக்கு அடிமைப்படுத்திக் கொண்டான். மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையுங் கூட கட்டுப்படுத்திவிட்டான். இயற்கைக்கு மாறாக இன்னின்னபடிதான். நடக்க வேண்டும் இன்ன இன்னபடிதான் சிந்திக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டுக்கும் கூட ஆளாகி விட்டான். மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை என்பவைகள் முதலியவைகள் எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுபவத்திற்கு முடியாததாகவுமே
கற்பித்துக் கொண்டான்.
இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல் மனித சமூகத்தையே தேசம், பாஷை, மதம், ஜாதி என்பவைகளால் பிரித்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான். அதோடு நிற்காமல் பல மதம், பல கடவுள், பல வேதம் என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவை சுதந்திரமாய் பயன்படுத்த உரிமை இல்லாதவனாகி விட்டான். வஸ்துக்களை உனது எனது என்று பிரித்துக் கொண்டான். மனிதனின் ஓய்வு எல்லாம் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி அடிமைத்தனத்திற்குப் போவதற்கே பயன்பட்டதே தவிர பகுத்தறிவால் பயன்படவோ, மேன்மை அடையவோ முடியவில்லை.
நட ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மனித சமூக நன்மைக்காக, அதாவது மக்கள் சமூகம் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றபடவும், அதிக பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள். ஆதிக்கத்திற்கு ஆளாகி உழைப்பாளி, பாட்டாளிகட்கும் பட்டினியாக பயன்படுத்தப்படுகின்றதோ, அதுபோலவே மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும் கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தீர வேண்டிய பகுத்தறிவானது சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி மக்களுக்கு துக்கத் தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகின்றது
இவற்றாலும் இன்னும் இவை போன்ற காரணங்களாலேயும் மனிதன்.
பகுத்தறிவு பெற்றதால் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையும்,
கவலையும், குறைவும், அதிருப்தியும், தரித்திரமூம் அடையக் காரணஸ்தனாகி
விட்டான் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
எனவே மனிதன் இப்படிப்பட்ட கீழ்மை நிலையில் இருந்து மேம்பாடு. அடைய வேண்டுமானால் முதலாவதாக தன்னம்பிக்கை உடையவனாகவும் தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும்
இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னைத்தான். நடத்துவதாக அவன் நினைப்பதில்லை. தனது காரியத்துக்குத்தான். பொருப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும் கடவுள் சித்தாந்தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.
அதோடு மாத்திரமல்லாமல் தனது செளகரியத்துக்கு ஏற்றப்படி
யெல்லாம் மாற்றிக் கொள்ளுகிறான். பெரிதும் சோம்பேறி வாழ்க்கைக்கே கடவுளை பயன்படுத்திக் கொள்ளுகிறான். இவ்வளவோடு அல்லாமல்
தலைவிதி, முன் ஜன்ம கர்ம பலன் என்பவைகளை கற்பித்துக் கொண்டு தனது
முட்டாள்தனத்துக்கும், அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கிக் கொண்டான்.
மனிதன் முதல் முதல் தவறிப் போன இடம் இதுவேயாகும். கடவுளும் கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பகுத்தறிவற்ற ஜீவராசிகளைவிட கேவலமாக்கி இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும், கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டது.
பகுத்தறிவுக்குக் கடவுளும் கருமமும் நேர் விரோதிகளாகும் ஏனெனில் கடவுளுக்கும், சருமத்துக்கும் அடிமைப்பட்டவனிடம் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன் மரக்கட்டை தண்ணீர் அலையில் அலைவது போன்றவனேயாவான்.
ஆதலால் இந்த உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதே பகுத்தறிவின். வெற்றிக்கு முதல் படியாகும்.
குடி அரசு - 1935 (1) 372
இந்தப்படி சொல்லுவதை மக்கள் நாஸ்திகம் என்கின்றார்கள் இதனாலேயே பகுத்தறிவுவாதிகள் நாஸ்திகர்கள் என்று உலகமெங்கும் பழிக்கப்படுகிறார்கள். பகுத்தறிவு மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கமானது நாஸ்திகப் பழிப்புக்கு பயப்படக் கூடாது. மற்ற விபரம் நாளை பிரசங்கத்தில் பேச இருக்கிறேன்.
குறிப்பு: 18.05.1935 ஆம் நாள் திண்டிவனம் இராஜாகுளம் வடகநைத் திடலில் நடைபெற்ற திண்டிவனம் வட்ட பகுத்தறிவுக் கழகத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை யேற்று ஆற்றிய தலைமை முன்னுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 26.05.1935
நந ட... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இளம் விதவையின் காட்சி
திண்டிவனம் பகுத்தறிவுக் கழகத்தின் சார்பில் 19.5.35 மாலை 5 மணிக்கு இவ்வூர் ராஜாங்குளம் வடகரைத் திடலில் பாண்டிச்சேரி தோழர்
லகாஸ் அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முதல்
நாள் ஆண்டுவிழாவிற்கு வந்த ஜனங்களைவிட அதிகமான ஜனங்கள் ஆண்களும் - பெண்களுமாக வந்து கூடிவிட்டார்கள்.
தலைவர் முன்னுரைக்குப் பிறகு தோழர்கள் மஞ்சுளாபாய், ராஜவேல், நம்பிக்கைமரி, அ. பொன்னம்பலம், ப. ஜீவானந்தம் ஆகியவர்கள் கீதங்கள் பாடினார்கள்
தோழர்கள் ப. ஜீவானந்தம், அ. பொன்னம்பலம், நம்பிக்கைமரி, மஞ்சளாபாய், ஈ.வெ. ராமசாமி ஆகியவர்கள் “சமூக முன்னேற்றம் - மதமும் மக்களும் - பெண்கள் உரிமை - விதவையின் துயரம் - சமூகச் சடங்கு” என்பது பற்றிப் பேசினார்கள்.
தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் இறுதியாகப் பேசி, முடிக்கப் போகும் சமயத்தில் இக்கூட்டத்திற்கு வந்திருந்த மிகவும் அழகுள்ள 14 வயதுள்ள சரோஜினி என்ற பெயருள்ள ரெட்டியார் ஜாதியைச் சேர்ந்த ஒரு விதவைப் பெண் சமீபத்தில் 8 மாதத்திற்கு முன் புருடனை இழந்த காரணத்திற்காக சமூகம் அப் பெண்ணை விதவைக் கோலம் பூண்டு மறு மண உரிமையைத் தடை செய்து உயிருடன் வதைக்கும் கொடுமையை
எடுத்துக் கூறி அப்பெண்ணை தம் பக்கத்தில் அழைத்து பொது ஜனங்கட்கு அறிமுகப்படுத்தி வைத்து அப்பெண்ணின் மண உரிமையைத் தடுக்கும் மதக் கொடுமையையும், சாதிக் கொடுமையையும், சமூகக் கட்டுப்பாடையும், கேட்போர் மனம் பதைக்கும்படி மிகவும் ஆவேசத்துடன் கூறினார். இப்பெண்ணின் பெற்றோர்கள் யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் இப் பெண்ணை மறுமணம் செய்து கொடுக்க வேண்டுமென்றும் - பெற்றோர்கள் தயங்கினால் அவ்விதவைப் பெண்ணே துணிவுடன் முன் வந்து ஒரு புருடனைக் கல்யாணம் செய்து கொண்டு பகிரங்கமாக வாழ்க்கை நடத்த வேண்டுமென்றும் கூறினார். அப் பெண்ணின் பெற்றோர்களும் விரைவில்
குடி அரசு - 1935 (1) 374
மறுமணம் செய்து கொள்ளத்தக்க ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களை அதற்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்கள். அவ்விதவைப் பெண்ணை அழைத்து கூட்டத்தில் காட்டியபோது கூட்டத்திலிருந்த ஆண்களும் பெண்களும் பலர் கண்கலங்கி அழுதார்கள். அக்காட்சி எழுதும் தரமன்று!
குடி அரசு - செய்தி விமர்சனம் - 26.05.1935
35 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அவிப்பிரதி விலை அணா 0—1—6
Reg: 14௦ M. 50௦66 1935-godr-1. PAHUTHARIVI
இப்ப
£ பகுத்தறிவு தாற்பதிப்புக் கழகம், (Ltd.)
ஈரோடு.
“விதண்டா வாதம்:
இந்துக்களின் வேதம் கடவுளால் சொல்லப்பட்டது என்றால். கிருஸ்தவர்கள் வேதம், முகம்மதியர்கள் வேதம் முதலிய வேதங்கள் யாரால் சொல்லப்பட்டன?
பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியவர்களைத்தான் கடவுள் பிரம்மாவின் தலை, தோள், இடுப்பு ஆகியவைகளில் இருந்து உற்பத்தி செய்தார் என்றால், கிருஸ்தவர், மகம்மதியர், ஜப்பானியர், (பெளத்தர்) நீக்கிரோவர் முதலாகியவர்களை யார் எதில் எதில் இருந்து
உண்டாக்கினார்கள்?
ஏசுகிருஸ்து, மகம்மது, சங்கரர், ராமனுஜர் முதலியவர்களை ஜனங்கள் நன்மைக்காக கடவுள் உலகத்துக்கு அனுப்பினார் என்றால், இவர்களை மறுக்கும் ராமசாமி, ராகவன், சிங்காரவேலு, சிதம்பரனார், ஜீவாநந்தம் முதலியவர்களை எதற்காக யார் அனுப்பினார்கள்?
பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் என்றால் ஆதிசேஷனை யார். தாங்குகிறார்கள்?
சுப்பரமணியக் கடவுளுக்கு ஆறு தலைகள் என்றால் அவன் படுத்துத் தூங்கும்போது தன் தலைகளை எந்தப்பக்கம் எப்படி வைத்து தூங்குவான்?
மகாவிஷ்ணுவினுடைய வாகனமாகிய கருட பக்ஷியைக் கண்ட மாத்திரத்தில் கும்பிட்டு வணக்கம் செலுத்தும் மக்கள் மகா கணபதி வாகனமாகிய பெருக்கானைக் (பெருச்சாளி) கண்டால் ஏன் உடனே தடியெடுத்துக்கொண்டு அடித்துக் கொல்லுவதற்காக ஓடுகிறார்கள்? அவதார புருஷர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், நபிமார்கள், ஆண்டவனால் அனுப்பப்பட்டார்கள் என்றால் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், விசுவாசத் துரோகிகள் முதலியவர்கள் யாரால் அனுப்பப்
பட்டவர்கள்?
உலகமும் உலகத்திலுள்ள ஒவ்வொரு தனிப்பொருளும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்கிறார்கள். மதவாதிகள் இதை ஒப்புக்கொள்ளா. தவர்களை நாஸ்திகர்கள் என்கிறார்கள். அப்படியே வைத்துக் கொள்ளுவோம்! கடவுளால் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது?
377 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மனுதர்ம சாஸ்திரத்தில் மனுதேவர் சொல்லியிருக்கின்றபடியா?
கிருஸ்துநாதர் பைபிளில் சொல்லி இருக்கின்றபடியா?
முகம்மதுநபி கொரானில் சொல்லி இருக்கின்றபடியா?
எந்த முறைப்படி?
பகுத்தறிவு (மா.இ.) - வினா விடை - ஜுன் 1935
குடி அரசு - 1935 (1) 378
எல்லாம் சுயமரியாதையால் தான்
அர்ச்சகர், ஜோசியம் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
காலம்:- மாலை நேரம்
இடம்:- தெப்பக்குளத்து ஓரம் கல்லுக்கட்டு மண்டபம்
பாத்திரங்கள்:- அர்ச்சகருக்கும், ஜோசியருக்கும் சம்பாஷணை.
விஷயம்:- “பிழைப்புக்கு ஆபத்து வந்துவிட்டதே-எல்லாம் இந்த சுயமரியாதையால் தான்'' என்பது
ஜோரர்:- ஆ! ஆ! வாருங்கள், வாருங்கள்! அர்ச்சகர்வாள்! ஏளணும்!
ஏளணும்!! எங்கே உமை ரொம்ப காலமாக சந்திக்கவே முடியவில்லை? கோவில்களில் ரொம்ப ஜோலியாக்கும்.
அ-ர்- நாசமாய்ப் போச்சுது, கோவிலாவது ஜோலியாவது, சுடுகாடாவது.
ஜோரர்:- ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்ன? கோவிலில் வேலை இல்லை என்கிறீர்களா?
அரர்:- எங்கே ஜோசியர்வாள்! முன்போல ஆளுகள் கோவிலுக்கு வருகிறார்களா? பகுதிப்பேராவது வருகிறார்களா? குடும்பம் பெருத்து விட்டது; வரும்படி சுத்தமாய் பூஜ்யமாய்விட்டது. வேளா வேளைக்குத் திறக்கவும் பூட்டவும் தான் வேலை இருக்கிறதே ஒழிய யாத்திரை வாசிகளோ, உள்ளூர்க்காரர்களோ யாரும் வருவதில்லை.
ஜோரர்:- என்ன காரணம்?
அ-ர்- எல்லாம் இந்த எழவெடுத்த சுயமரியாதை தான் காரணம்.
ஜோர்- அப்படியென்றால் என்ன? சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை, பூதமில்லை, பேய் இல்லை, கோவிலுக்குப் போவதில் பயனில்லை. என்று ஊர் ஊராய் பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?
அ-ர்- இல்லை, இல்லை அதனாலெல்லாம் நாம் பயப்பட வேண்டியதில்லை. அவர்கள் இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், சாமியையே புரட்டிக் கீழே வேண்டுமானாலும்
379 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
தள்ளட்டும், கோயிலைக்கூட இடிக்கவேண்டுமென்று சொல்லட்டும், இதனால் எல்லாம் நமக்கு ஒன்றும் முழுகிப்போய் விடாது
ஜோரர்:- பின்னை ஏன் சுயமரியாதைக்காரர்கள் மீது குற்றம் சொல்கிறீர்கள்?
அரர்:- கோவிலுக்கு வழக்கமாக வரும் தேவடியாள்களை நிறுத்தி விட்டார்களல்லவா? அவர்களது கைங்கரியத்தைப்பற்றி கண்டபடி பேசி அதற்கொரு சட்டமும் செய்யச் செய்துவிட்டார்கள். அதுமாத்திரமல்லாமல். கோவில் கைங்கரியத்துக்குத் தாசிகள் இல்லாமல் செய்ததோடு, தாசித் தொழிலைக்கூட செய்யக்கூடாது என்று சட்டம் செய்து தினப்படி கோவிலுக்கு வந்துகொண்டிருந்த விபசாரிகளையும் ஊரை விட்டு விரட்டி அடித்து விட்டார்கள். இந்த இரண்டு கூட்டமும் கோவிலுக்கு வரவில்லை யானால் அப்புறம் எந்தக் கழுதை கோவிலுக்கு வரும்? தாங்கள்தான் சொல்லுங்களேன்?
ஜோடர்- என்னஅர்ச்சுகர்வாள்! தாசிகளும், விபச்சாரிகளும்கோவிலுக்கு வருவதற்கும் பக்தர்கள், யாத்திரைக்காரர்கள் கோவிலுக்கு வருவதற்கும் என்ன சம்பந்தம்? அவர்கள் வராவிட்டால் இவர்கள் ஏன் வரக்கூடாது?
அ௱ர்:- ஜோசியர்வாள்! தாங்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்கள் போல் பேசுகிறீர்கள்! நம்முடைய பெரியவாள் எல்லாம் என்ன முட்டாள்கள். என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு முக்கியமான கோவில்களையும், ஸ்தலங்களையும் பாருங்கள்! கோவில் கட்டும்போதே அர்ச்சகர்களுக்கும், தாசிகளுக்கும் வீடுகள், மான்யங்கள் எல்லாம் ஏற்பாடு செய்திருப்பதுடன் அர்ச்சகர் ஒருவர் இருவர் என்றால் தாசிகள் 8 பேர் 10 பேர் வீதம் நியமனம் செய்திருக்கிறார்களே, ஏன் தங்களுக்குத் தெரியாதா?
ஜனங்களைக் கோவிலுக்கு வரும்படியாகத் தூண்டவும் கோவில் பைத்தியம் உண்டாகவும் தானே தாசிகளை கோவில்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கோவிலுக்கு வருகின்றவர்கள் எல்லாம் பக்திக்காகவா: வருகின்றார்கள்?
ஜோ-ர்- அதென்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? பக்தி இல்லாமல் கோவிலில் வேலை என்ன?
அ-ர்:- பக்தி கோவிலுக்கு வந்துதான் காட்டவேண்டும்!
முதலில் தாசியைப் பார்க்க என்று 4-பயல்கள் ஜோராய் பக்தி வேஷம் போட்டுக்கொண்டு கோவிலுக்கு வருவார்கள். பிறகு இந்த ஷோக் ஆசாமிகளைப் பார்க்க என்று நான்கு குடும்ப ஸ்திரீகள் என்பவர்கள் அலங்கரித்து ஷோக் நடை நடந்து கொண்டு கோவிலுக்கு வருவார்கள். அப்புறம் இவர்களைப் பார்க்க என்று பல பேர்வழிகள் வருவார்கள். இப்படியே ஒன்றுக்கு ஆக ஒன்று என்றும் ஒன்றை ஒன்று ஆதரிக்கும் கூட்டம்
குடி அரசு - 1935 (1) 380
சரியாய் இருக்கும். இதன் பயனாய் நமக்கும் வேலை இரண்டுவிதத்திலும் சரியாய் இருக்கும். வரும்படிக்கும் குறைவு இருக்காது. நமக்கும் தாசி, நம்ம பையனுக்கும் தாசி வீட்டிலுள்ளவர்களுக்கும் அப்படி, இப்படி. அப்புறம் சொல்லவேண்டுமா?
ஜோரர்:- இதனாலா இப்போது கோவிலுக்கு ஆள்கள் வருவதில்லை என்கிறீர்? எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. அது சரி, இரண்டுவிதத்தில் வரும்படி என்றீர்களே மற்றொரு விதம் என்ன?
அ-ர்- அதுவா? தங்களிடம் சொல்வதற்கு என்ன வெட்கம்! “தாசியை
ஒளித்த சூலா'' தாசிகளைப் பார்க்க ஆண்கள் வருவார்கள் என்று சொன்னேன். ஆண்களைப்பார்க்க மற்ற குடும்பப் பெண்களிலும் சிலர் வருவார்கள் என்று சொன்னேன். இவர்கள் எல்லாம் பூஜை அர்ச்சனை என்கின்ற வகைகளில் காணிக்கை, கட்டளைப் பணம் ஆகியவைகளுக்கு கொடுப்பதில் லாபம் ஒன்று, மற்றொன்று இவர்களைச் சேர்த்து வைத்ததில் இணைப்புத் தரகு என்கின்ற வகையில் ஏராளமாய்க் கிடைக்கும். பிரபுக்களும் பிரபுக்கள் வீட்டுச் சில பெண்களும் இதற்குத்தான் ஏராளமாய்க் கொடுப்பார்கள். அநேக விஷயங்களில் அவர்கள் வீடு நம்ம வீடு என்கின்ற வித்தியாசமே கிடையாது. இதனால் தான் வீடு வாசல் எல்லாம் கட்டமுடிந்தது. தாராளமாய்ப் பிழைக்கவும் முடிந்தது. மற்றபடி கோவில் சம்பளமாகிய மீ” 1-12-0 ரூ சம்பளத்தாலா நம்ம குடும்ப மக்கள் வாழ முடிகின்றது?
ஜோரர்:- அப்படியா சங்கதி? சுயமரியாதைக்காரன்கள் இதில் எல்லாமா மண்ணைப்போட்டு விட்டான்கள்? அப்படியானால் நாம் வேறு வழியில் கோவில்களுக்குப் பழய நிலையை உண்டாக்கி விடமுடியாதா?
அரர்- என்ன செய்வது? தாங்களாவது ஒரு வழி சொல்லுங்களேன்.
ஜோரர்:- அர்ச்சகர்கள் எல்லோரும் ஒன்று சேருவது. ஒரு மகாநாடு. கூட்டுவது. எல்லோரும் உண்மையானசம்சாரம் என்பதற்கு ஆக ஒவ்வொரு பெண்களைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா? அது தவிர இந்த கோவில் கைங்கரியத்துக்கு என்பதாக மறுபடியும் ஆளுக்கு ஒன்று இரண்டு கல்யாணம் பொய்க் கல்யாணம் செய்து கொள்ளுவது. வெளியாருக்கு மாத்திரம் கல்யாணம் என்று தெரியட்டும். நாம் செய்யும்போதே இந்தக் காரியத்துக்கு என்று செய்து கொள்ளுவது. பிறகு சவுகரியப்படி செய்து கொள்ளுவது. நம்ம சொந்த சங்கதியை வேண்டுமானால் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுவது. இப்படியெல்லாம் செய்தால் தான் சுயமரியாதையை வெல்ல முடியும்
அ-ர்- யோசனை நல்ல யோசனைதான். காரியத்தில் அது சாத்தியமாக வேண்டாமா? ஒருவன் இரண்டு மூன்று பெண்களைக் கட்டுவதென்றால் B வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அதற்குச் செலவு, நகை, துணி மணி, அதற்கேற்ற வீடு வாசல், தட்டு முட்டு இவையெல்லாம் லேசான காரியமா? பணத்திற்கு எங்குபோவது?
ஜோரர்:- என்னமோ கஷ்டகாலம்தான்; இது அர்ச்சகர்களை மாத்திரமா பிடித்திருக்கிறது? தாங்கள் சொல்லுவதைச் சொல்லட்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். நம்ம சங்கதியும் அப்படித்தான் இருக்கிறது
அ-ற்- தங்களுக்கு என்ன சுவாமிகளே குறைவு! கோவில்களுக்குத்தான். தாசிகள் விபச்சாரிகள் இல்லாததால் கெட்டுவிட்டது. ஜோசியம், வாழ்க்கைச் சடங்குகள், கல்யாணபொருத்தம், புரோகிதம் ஆகியவைகளுக்குக் கெடுதிவர ஒரு காரியமும் ஏற்பட்டுவிடவில்லையே?
ஜோடர்- அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்கள்? இந்த சுயமரியாதைக்காரப் பயல்களால் ஜோசியம் கேட்பது என்பதே கேலியாய்ப் போய்விட்டது. ஒருவன் இருவனுக்கு நாம் வலியப்போய்ச் சொல்வதா யிருந்தாலும், இரகசியமாய் இருட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறான். கொடுக்கிறதோ பூஜ்ஜியமாய்விட்டது. அவன் கொடுத்தாலும்
சரி கொடுக்காவிட்டாலும் சரி அந்தப் பிழைப்புக்கு அடியோடு ஆபத்து வரக்கூடாதே என்று ஏதோ வேஷம் போட்டுக்கொண்டு திரிகிறேன். வீதியில் நடந்தால் சுயமரியாதை வெடி குட்டிகள், கொள்ளையில் போனதுகள் நம்மைப் பார்த்து பரிகாசம் பண்ணுகின்றதுகள்.
ஒரு நாள் ஒரு தகப்பன் அவன் தகப்பனுக்கு திதி கொடுத்தான். நான் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டேன். அவன் மகன் 7-வயதுப் பையன்: நன்றாய்ப் பேசக்கூட தெரியவில்லை. ஒரு காகிதத்தில் என்னமோ எழுதிப் படித்து என்னிடம் கொண்டுவந்து மூட்டையைக் கையால் பிடித்துக் கொண்டு இந்த சாமான்களை எங்கள் தாத்தாவுக்குத்தானே கொண்டு போகிறீர்கள்? இந்தக் காகிதத்தை முதலில் எங்கள் தாத்தாவிடம் நான் கொடுத்ததாகச் சொல்லிக் கொடுத்து பதில் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பிறகு இந்த மூட்டையையும், இன்னும் அவருக்கு என்னென்ன வேண்டுமோ அந்த சாமான்களையும் வாங்கிக்கொண்டு போங்கள் என்று பிடிவாதம் பேசி ஏளனம் செய்தான். எல்லோரும் சிரித்தார்கள். இனி இந்தப் பிழைப்பு பிழைப்பதைவிட எச்சில் இலை பொறுக்கிச் சாப்பிடலாம் என்று கூடத் தோன்றிவிட்டது. கழுதைக்கும் மனிதனுக்கும் பொருத்தம் கேட்கின்றார்கள். ஆணுக்கும் ஆணுக்கும் பொருத்தம் கேட்கின்றார்கள். செத்துப்போனவர்களுக்கும், இருக்கிறவர் களுக்கும் பொருத்தம் கேட்கிறார்கள். தாய்க்கும், மகனுக்கும் பொருத்தம் கேட்கிறார்கள். எல்லாம் சரியான ஜாதகங்களை அதாவது பிறந்த கால நேரங்களைக் கொடுத்தே பொருத்தம் கேட்கிறார்கள். இதையெல்லாம் நாம் எப்படிக் கண்டுபிடித்துக்கொள்ள முடியும்? பொருத்தம் இருக்கிறது என்று சொன்னால் சிரிக்கிறார்கள். தலையைத் தட்டுகிறார்கள். ஜோசிய விஷயமோ
குடி அரசு - 1935 (1) 382
செத்துப்போனவர்கள் ஜாதகத்துக்கு ஆயுள் எவ்வளவு என்று கேட்கிறார்கள். அப்பப்பா! இந்தச் சுயமரியாதைப் பையன்களிடம் சிக்கிக்கொண்டு வெகு தொல்லையாய் இருக்கிறது. என்ன செய்வது?
அடர்:- ஏன் பொருத்தங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் கூட பார்ப்பதில்லையா?
ஜோரர்:- ஜோசியம் பொருத்தம் இவைகளில் நம்பிக்கை உள்ள வீடுகளில் பெரியவர்கள் பொருத்தம் கிருத்தம் பார்க்கிறார்களா என்றால் அந்தந்த வீட்டுப்பெண்ணும் மாப்பிள்ளையுமே பார்த்துக்கொள்ளுகின்றன. தகப்பனார் தாயாருக்குக்கட அந்த வேலை இல்லாமல் போய்விட்டது அப்புறம் நம்மை யார் பொருத்தம் கேட்பார்கள்?
அடர்:- இதுகள் தான் இந்தக் கதியானால் கிரகதோஷம், சாந்தி முதலியவைகளில் உள்ள கிறாக்கிகள் தங்களுக்கு இருக்குமே
ஜோரர்:- அது நாசமாய்ப் போய் வெகுகாலமாச்சுது. காயலா, தலைவலி, கால் வலி என்றால் வருவதற்கு முன்னமேயே டாக்டர்களிடம் ஓடுகின்றார்களே ஒழிய நம்மிடம் எவன் வந்து கிரகதோஷம் பார்க்கிறான்? எவன் சாந்தி செய்யச் சொல்லுகிறான்?
நான் ஒரு பெரியவர் காயலாவுக்குப்போய் பார்த்து கிரக தோஷம் சொல்லி சாந்திசெய்ய லிஸ்ட்டு போட்டுக்கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன். காயலாக்காரர் வைத்தியமும் பார்த்தால் தேவலாம் என்று நினைத்து வழக்கம்போல் டாக்டருக்குச் சொல்லி அனுப்பினார். டாக்டரும் வந்துவிட்டார். அவர் பேரன் ஒரு 12-வயது பய்யன் வாசல்படியில் நின்றுகொண்டு “டாக்டருக்கு இந்த வீட்டில் வேலை இல்லை; காயலாவுக்குக் காரணம் கிரக தோஷம் என்று இதோ இந்த சாஸ்திரியால் கண்டுபிடிக்கப்பட்டு அதற்காகச் சாந்தி செய்ய லிஸ்ட்டு போட்டாய் விட்டது. ஆதலால் அனாவசியமாக இரட்டைச்செலவு வேண்டாம். ஒன்று ஜோசியரை நம்ப வேண்டும், இல்லா விட்டால் டாக்டரை நம்பவேண்டும். இந்த இரண்டுங்கெட்ட புத்தி கூடாது” என்று சொல்லி, கடைசியாக ஜோசியர் வெளியில் போனால் தான் டாக்டரை உள்ளே விடுவேன் என்று வழிமறித்துவிட்டான்.
கடைசியாக சாந்திக்குப் போட்ட லிஸ்ட்டு கிழித்தெரியப்பட்ட பிறகு டாக்டர் உள்ளே வந்தார். நான் “ஆடு திருடின குறவன்” போல் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு மரியாதையாய் வெளியேறிவிட்டேன். இப்படி இருக்கிறது என் பிழைப்பு: என்ன செய்வது?
அ-ர்- எப்படியாவது சுயமரியாதைக்காரன்களை ஒழித்தாக வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கும் நமக்கும் மாத்திரமல்ல நம்ம சமூகத்தின் கூவாழ்வுக்கே ஆபத்து வந்துவிடும். ஆகவே இதற்கு ஒருவழி சொல்லுங்கள். 8 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஜோரர்:- என்ன வழி LC.S. நம்மிடவாள், 610. நம்மிடவாள், ஜட்ஜிகள் முனிசீபுகள் நம்மிடவாள், போலீசுகளில் நம்மிடவாள், மேஜிஸ்ட் ரேட் டிப்டி மேஜிஸ்ட்ரேட் சப் மேஜிஸ்ட்ரேட் நம்மிடவாள், வக்கீல்கள் நம்மிடவாள், வெள்ளைக்காரர்களையும் ஏறக்குறைய நம்மிடவாளாகவே ஆக்கிக் கொண்டிருக்கிறோம்
இந்தக் காலத்தில் இந்தச் சுயமரியாதை அழிக்கப்படவில்லையானால் இனி எப்போது அழிக்கப்படப்போகிறது? ராவணன் இரணியன் காலத்தில் தப்பிக்கொண்டோம். புத்தர் காலத்தில் தப்பிக்கொண்டோம். மகமது காலத்தில் தப்பிக்கொண்டோம். இந்தக்காலம் தானே கொஞ்சம் தொல்லையாய் இருக்கிறது? உத்தியோகத்திலும் தொல்லைப்படுத்துவான்கள், வைதீகத்திலும் தொல்லைப் படுத்துவான்கள். இவன்களை எப்படித்தான் தொலைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை
அ௱ர்:- இப்பொழுது ஆங்காங்கு சத்துரு சங்கார யாகம், வாஜ்பேய யாகம் முதலிய யாகங்கள் நடக்கின்றனவே. அதுகள் மூலம் இவன்கள் ஒழிக்கப்படமாட்டார்களா!
ஜோரர்:- யாகமாவது மோகமாவது? அப்படி யாகத்தில் காரியங்கள். ஆகிவிடுமானால் ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யாக்காரன்கள் எல்லாம் இங்கு இருக்கும் பிராமணர்களை எல்லாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போய் யாகம் செய்யச் செய்து ஒருவனை ஒருவன் ஜெயித்துவிட மாட்டான்௧ளா? துப்பாக்கி என்னத்துக்கு? பீரங்கிஎன்னத்துக்கு? ஆகாயக்கப்பல், வெடிகுண்டுகள், விஷப்புகை இவைகளெல்லாம் என்னத்திற்கு? யாகத்தில் சத்து இருந்தால் சயன்ஸ்காரன்கள் விட்டு விடுவான்களா? சும்மா முட்டாள் பயல்களை ஏமாற்றவும் அவன்களுக்கு மூட நம்பிக்கையில் மோகம் வரவும் செய்யப்படுகின்ற ஒரு சூழ்ச்சிப் பிரசாரமே ஒழிய வேறென்ன? அதை நம்பினால் ஆபத்துதான். வேறு ஏதாவது செய்ய வேண்டும் யாரோ சுயமரியாதைக்காரன்கள் வருகிறான்கள் போல் இருக்கிறது. பின்னால் மற்றொரு சமயம் பேசிக்கொள்ளுவோம். மூக்கைப் பிடித்து ஜபம் பண்ணுகின்றவர்கள்போல் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொள்வோம்
அ-ர்:- சரி அப்படியே செய்வோம்
பகுத்தறிவு (மா.இ.) - உரையாடல் - ஜுன் 1935
குடி அரசு - 1935 (1) 384
மத ஆட்சி
ஓ! அறிவு கெட்ட மனிதனே! இன்றைய மனிதசமூகத்தை ஆட்சி
புரியும் மதங்களை யார் உற்பத்தி செய்தார்கள்?
மக்கள் மதத்துக்காக ஒரு மகாநாடு கூட்டி, மத உண்மைகளையும், அதன் நன்மை தீமைகளையும், அவற்றின் முன்பின் யோக்கியதைகளையும், பலாபலன்களையும், அவசியத்தையும் பற்றி நன்றாகப்பேசி வாதப் பிரதி வாதங்கள் செய்து தீர்மான மூலமாக நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டு வந்தார்களா? ஏதோ ஒருவன் தீர்மானித்து விட்டதை, செம்மறியாடுகள் ஒன்றின்
பின் ஒன்று தலை குனிந்து செல்வதுபோல், தலைமுறை தலை முறையாய்ப்
பின் வார்சுகளுக்குக் குழந்தைப்பருவத்தில் பாலுடனும் நீருடனும் ஊட்டி வருவதன் மூலம் உயிர் வாழுபவைகள் தானே இன்று மதங்களாய் விளங்குகின்றன?
இதற்கு இத்தனை அதிகாரமா? ஆர்ப்பாட்டமா? செலவா? நேரக்கேடா? இவ்வளவும் தவிர அதற்கு கொடுங்கோல் ஏகச்சக்ராதிபத்திய ஆட்சி கூடவா?
என்ன அனியாயம்! மதத்தை ஏற்றுக்கொள்ளும் யாராவது, ஏற்றுக் கொள்ளுமுன் இவைகளைப்பற்றி சிறிதாவது சிந்திக்கிறார்களா? குழந்தைப் பருவத்தில் பிடித்த மதச் சனியன் சுடுகாட்டில் கூட ஒழிவதில்லையே!
இவ்வளவு தானா? கடவுள்கள் சங்கதி இதைவிட மோசமாகவல்லவா: இருக்கிறது? இதைப்பற்றிப் பின்னால் விசாரிப்போம்
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜுன் 1935
8 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நாஸ்திகம்
நாஸ்திகம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வது என்பதாக இங்கு ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். எல்லா ஜனங்களுக்கும்
நாஸ்திகம் என்று சொன்ன உடனேயே அந்த அருத்தம் தான் முதலில் தோன்றுகின்றது
ஆனால் நாஸ்திகம் என்பதற்குப் பல அருத்தங்கள் சொல்லப்படுகின்றன.
ஒரு மதக்காரனை மற்ற மதக்காரன் நாஸ்திகன் என்று சொல்லுவதும்
வழக்கத்தில் இருக்கிறது ஒரு மதக்காரனின் ஆதாரத்தை மற்ற மதக்காரனோ அல்லது அதே மதக்காரனோ தர்க்கிப்பதும், விவகரிப்பதும், சந்தேகப்படுவதும், சந்தேகம் தெளிய முயற்சிப்பதும் எல்லாம் நாஸ்திகம் என்று சொல்லப்பட்டு விடுகின்றது.
ஆதாரங்களைப்பற்றி தர்க்கிப்பது முதலியவைகளே நாஸ்திகமாய் விட்டால் கடவுளைப்பற்றிய தர்க்கம் விவகாரம் முதலியவை நாஸ்திகம் என்கின்ற தலைப்பின் கீழ் வருவது பெரிய காரியமாகி விடுமா? ஆகவே நாஸ்திகம் என்பதும் ஒரு கடிவாளமில்லாத குதிரை என்றே சொல்லிவிடலாம்.
நாம் இங்கு நாஸ்திகம் என்பதை ஒரு சர்வ சக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் என்கின்ற ஒருவர் இருந்துகொண்டு, சிருஷ்டிஸ்திதி சம்மார, அதாவது ஆக்கல் காத்தல் அழித்தல் என்கின்ற முத்தொழில்களையும் செய்து கொண்டும், உலக இயங்குதலுக்குக் காரண பூதராகவும் கர்த்தராகவும் இருந்து வருகிறார் என்பதை மறுப்பதையே நாஸ்திகம் என்று வைத்துக் கொண்டு பேசுவோம்
இப்படிப்பட்ட இந்த நாஸ்திகம் என்பது கடவுள் என்கின்ற வார்த்தை என்று உண்டாயிற்றோ அன்று முதலே கடவுள் இல்லை என்கின்ற வாதமான நாஸ்திகம் என்பது இருந்துகொண்டே வந்திருக்கிறது.
இந்த நாஸ்திகமானது இன்ன ஊர், இன்ன தேசம், இன்ன கண்டம் என்று இல்லாமல், உலகில் கடவுள் உண்டு என்று சொல்லக்கூடிய இடங்களில் எல்லாம் இருந்தே வருகின்றது. அது மாத்திரமல்லாமல் கடவுள் கற்பிக்கப் படுவதற்கு முன் இருந்த நிலையைக்கூட நாஸ்திக நிலை என்றுதான் சொல்ல
குடி அரசு - 1935 (1) 386
வேண்டும். அன்றியும் மனித ஜீவனைப்பொறுத்த வரையில் கூட கடவுள் ஒருவர் உண்டு என்பதை ஊட்டுவிப்பதற்கு மூன் நாஸ்திகத்தன்மையில் தான் இருந்து வருகின்றது என்று சொல்லவேண்டும்.
அப்படிப்பட்ட கடவுளைப்பற்றிய நம்பிக்கை இல்லை என்னும் நாஸ்திகம் இந்தியாவில் வெகுகாலமாகவே இருந்து வருகிறது. அதாவது உலகாயுதம், சாருவாகம், சூனியவாதம், மாயாவாதம், பெளத்தம் முதலாகிய பல பிரிவுகள் மத ரூபமாகவே நாஸ்திகமாய் இருந்து வந்திருக்கின்றன.
இப்படிப்பட்ட பிரிவுகள் இந்தியாவில் ஏற்பட்டது பற்றியும், இருந்து வருவது பற்றியும் நமக்கு ஆச்சரியமில்லை.
ஏனெனில் இந்துக்கள் கடவுள் தன்மை அவ்வளவு மோசமானதாக
கற்பிக்கப்பட்டிருக்கிறது
எப்படி எனில் பல கடவுள்கள்; அதிலும் ஒரு கடவுளாவது முழுவதும் தெய்லீகத்தன்மையுடன் இருந்ததாகச் சொல்ல முடியாமல் மானுஷீகத்தில் இருந்து சிறிது முதிர்ச்சியடைந்து கடவுளாக ஆக்கப்பட்டதாகவும், கடவுளுக்கும் மனிதனுக்கும் முத்தொழில்களில், அதாவது ஆகாரம் நித்திரை புணர்ச்சி ஆகியவைகளில் வித்தியாசமில்லாமலும், சுக துக்கங்களுக்கு அதீதப்பட்டதாக இல்லாமலும், பிறப்பு இறப்புகள் கூட உடையனவாகவும், காமக்குரோதாதி குணங்களுக்கு ஆட்பட்டதாகவும், விருப்பு வெறுப்புக்கு அடிமைப்பட்டதாகவும், பிரார்த்தனை புகழ்ச்சி மன்னிப்பு ஆகியவைகளுக்கு இணங்கியதாகவும், மற்றும் பல மனிதகுணங்களோடு இருக்கும்படியான தாகவும் கற்பிக்கப்பட்ட கடவுள் உள்ள தேசத்தில் நாஸ்திகவாதம் ஏற்படுவது என்பது ஒரு அதிசயமான காரியம் அல்ல
ஆனால் மேல்நாடுகளில்- கடவுளை மிக ஜாக்கிரதையாக கற்பனை செய்து மிக சுனாயுதமாக அநுபவித்து வரும் நாடுகளில்-செல்வத் தன்மையையும் மேல் கீழ்த்தன்மையையும் காப்பதற்கென்றே கடவுளைக் காப்பாற்றி வரும் நாடுகளான மேல்நாடுகளில்-எங்கும் இன்று நாஸ்திகவாதம், நாஸ்திகப்பிரசாரம் என்பவைகள் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன என்பதோடு அவை நாளுக்கு நாள் செல்வாக்கும் பெற்று மக்களின் ஆதரவும் ஆமோதிப்பும் பெற்று வருகின்றன. நாஸ்திகவாதத்தைத் தொழிலாளி மக்களோ ஏழை மக்களோ தான் செய்து வருகிறார்கள் என்பதற்கில்லாமல் செல்வவான்கள் கூட்டத்திலேயே மிகவும் மலிந்துகிடக்கின்றன. இங்கிலாந்து தேசத்தில் உள்ள பகுத்தறிவுச் சங்கமானது மதங்களை அழிக்க முயற்சிப்பதோடு நாஸ்திகத்தையே பெரிதும் பிரசாரம் செய்கின்ற சங்கமாகும். இச்சங்கம் பெரிதும் செல்வவான்களாலும் பெரிய பண்டிதர்களாலும் விஞ்ஞானிகளாலும் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் உள்ளவர்களை சமதர்மத்துக்கும் பொது உடமைக்கும் விரோதிகள் என்று கூடச் சொல்லலாம் 8 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மற்றும் உலகத்திலேயே செல்வம் கொழிக்கும் தேசமாகிய அமெரிக்கா
தேசத்தில் நாஸ்திகப் பிரசாரமானது வெகுகாலமாகவே பிரக்கியாதியாகவும் ஊக்கமாகவும் செய்யப்பட்டு வருகின்றது.
அவர்கள் தாங்கள் ஏன் நாஸ்திகரானார்கள் என்பதையும், நாஸ்திகத்தை
ஏன் பரப்புகின்றோம் என்பதையும், அவர்களது சங்கத்திற்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொள்கைகளையும் பற்றித் துண்டு பிரசுரங்கள். வெளியிட்டு உலகமெங்கும் இலவசமாய் அனுப்பி வருகிறார்கள்.
நேயர்கள் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அத்துண்டுப் பிரசுரத்தைக் கீழே குறிக்கின்றோம்
“நாங்கள் நாஸ்திகர்கள் தான் ஏன் என்றால்'' என்று ஆரம்பித்து 10-காரணங்கள் காட்டி இருக்கிறார்கள். அவையாவன.
1. “கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதற்குப் போதிய ௬ஜு இல்லை.
2. அ:- உலகுக்கு ஒரு கடவுள் இருக்க வேண்டும் என்பதற்கு எவ்வித
அவசியமும் காணப்படவில்லை.
ஆ:- கடவுளால் எவ்வித பிரயோஜனமாவது இருப்பதாக நாங்கள் கருதுவதில்லை.
இ:- கடவுள் இல்லாவிட்டால் இன்றுள்ள நிலையில் என்ன மாறுதல். ஏற்பட்டிருக்கும் என்பதும் விளங்கவில்லை:
3. ஒரு நல்ல கடவுள் என்பவர் சர்வ சக்தி, சர்வ வியாபகம் என்பதின் உண்மைப் பொருள் கொண்டகுணங்களையுடையவராக இல்லாவிட்டால் அவர் பிரயோஜனமில்லாதவரும், லக்ஷியம் செய்யப்படவேண்டியவர் அல்லாதவருமேயாவார்.
4. சர்வ சக்தி, சர்வ வியாபகமுள்ள கடவுள் நல்லவராக-நன்மையையே செய்பவராக இல்லாவிட்டால் அவர் வணக்கத்திற்கு உரிய வராகமாட்டார்.
5. சர்வ சக்திவாய்ந்த ஒரு நல்ல கடவுள் இல்லவே இல்லை. அப்படி ஒரு கடவுள் இருக்குமானால், எல்லாம் தோஷமற்றதாகவும், நன்மையையே தரத்தக்கதாகவும், இனிச் செய்யவேண்டிய காரியங்கள் பாக்கியிருக்கின்றன என்று இல்லாமல் சகலமும் பூரணத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அந்தப்படி இல்லை; ஆதலால் அப்படிப்பட்ட கடவுள்
இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளுவதில்லை.
6. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகங்களில் இந்த உலகமே மேலான தென்பதனால் மோக்ஷ உலகக் கதைகள் மெய்யாயிருக்க முடியாது
7. மனிதனின் உணர்ச்சியும், முயற்சியும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும், விடுதலையிலும், முற்போக்கிலும் தூண்டப்பட்டுக்கொண்டே
குடி அரசு - 1935 (1) 388
இருப்பதால் கடவுளின் சர்வ சக்திக் கொள்கை விவகாரத்துக்கு உட்பட்டுவிடுவதுடன், அப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியும் குறைந்து கொண்டு வருகின்றது.
8. மனிதர்கள் ஆதியில் சிறிதும் அறிவு விளக்கம் பெறாமல் மெளடகத்தில் ஆழ்ந்திருந்த காலத்தில், தனக்குத் தெரியாத விஷயங்களை எல்லாம் கடவுள் சக்தி, கடவுள் செயல் என்று கூறித் திருப்தியடைய ஒரு கடவுளைக் கற்பித்துக்கொள்ள வேண்டியதாயிற்று
ஆதிகால மனிதர்களுடைய அபிப்பிராயங்களும், வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொன்றும் தவறுதலானவை என்றும் கூறிவிட்டுக் கடவுளைப்பற்றியும், ஜீவனைப்பற்றியும் மாத்திரம் அவர்கள். அறிந்திருந்தார்கள் என்று சொல்லுவது பொருத்தமானதல்ல
9. கடவுள் சக்தி என்று கருதப்பட்டு வந்தவைகள் பெரிதும் இன்று விஞ்ஞான சக்தி மூலம் ஆக்கப்பட்டு அவை மனித சக்திக்கு அடக்கப் பட்டு விட்டன. இதனால் அநேக விஷயங்களில் கடவுள் சக்திக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது
10. குற்றம், கொடுமை, பொறாமை, பகைமை, அசூயை, காமம், வன்னெஞ்சம், முரண்பாடு, முதலாகிய அநேக கெட்ட குணங்கள் என்று சொல்லப்படுபவைகள் கடவுள் தன்மையாக இருந்து வருகின்றன. அகவே கடவுளை நாங்கள் நம்புவதோ போற்றுவதோ பிரார்த்திப்பதோ இல்லை. கைலாசத்திலோ அல்லது வைகுண்டத்திலோ அல்லது பரலோகத்திலோ ஒரு வித கடவுளும் இல்லை.
தாய், தந்தையற்ற குழந்தைகளையும், திக்கற்றவர்களையும் மனிதர்கள் தான் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள். கடவுள் காப்பாற்றுவார் என்பது வீண் வார்த்தை
நமது பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கக்கூடிய ஒரு கடவுள் இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!
மனிதர்களே மனிதர்களின் அபயக் குரலோசைகளுக்கு செவிசாய்த்து அவர்களுக்கு உதவிபுரிய வேண்டும்
நரகமென்பது கிடையாது.
நாம் பயப்படக்கூடிய அல்லது பின்பற்றக்கூடிய, பழிக்குப்பழி வாங்கவேண்டுமென்கிற துர் எண்ணங்கொண்ட கடவுளாவது, அல்லது பூதமாவது எங்குமில்லை.
நம்பிக்கையினால் மன்னிப்பாவது அல்லது மோட்சமாவது ஏற்படமாட்டாது. 0 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நம்முடைய செய்கைகளுக்கேற்ற பலாபலன்களை நாம் தைரியமாக எதிர்நோக்கி இருக்க வேண்டும்
இயற்கையில் ஏக திருஷ்டியுள்ள உபகாரத்தன்மையாவது அல்லது துவேஷமாவது கிடையாது.
தடுக்கக் கூடியதும், தடுக்கக்கூடாததுமான துன்பங்களிலிருந்து தங்களைத் தாங்களே காப்பற்றிக்கொள்ளப் போராடுவதுதான் ஜீவிய வாழ்க்கையின் தன்மையா யிருக்கின்றது. உலகம் விருத்தியடைய வேண்டியதவசியமானால் மனிதர்களின் ஒத்துழைப்பு மிக்க அவசியமாக வேண்டியிருக்கின்றது
நாம் இறந்தபிறகு “நமது பாக்கி வேலையை”ப் புரிவதற்குச்
சந்தர்ப்பம் வாய்க்காது.
செய்தால் இப்பொழுதே நாம் செய்ய வேண்டும்; இல்லையானால் எப்பொழுதுமே செய்யமாட்டோம்.
உண்மை, தயை, அழகு, சுதந்தரம் ஆகியவைகளுக்கும் தெய்வீகத் தன்மை யென்பதற்கும் சம்பந்தம் கிடையாது. இவைகள் யாவும் மனிதத்தன்மையின் இலக்ஷணங்களாகையால் மனிதர்கள் இவைகளைப் பாதுகாத்துக் காப்பாற்றிக் கொண்டேதான். வரவேண்டும். இல்லாவிட்டால் மனிதர்கள் பூமியில் இல்லாமலே நாசமாய்ப் போய்விடுவார்கள்”
என்று லக்ஷக்கணக்காகத் துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு வினியோகித் திருக்கிறார்கள். இதுபோல் இன்னும் பல எழுதிப் பிரசுரித்து வருகிறார்கள்.
பகுத்தறிவு (மா.இ.) - கட்டுரை - ஜுன் 1935
குடி அரசு - 1935 (1) 390.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
ஸ்தல ஸ்தாபன மந்திமி உத்திரவு
விருதுநகர் மகாநாட்டில் ஸ்தல ஸ்தாபன மந்திரி வாக்களித்த பிரகாரம் அதாவது ஸ்தல ஸ்தாபனங்களில் கீழ் இருந்து வரும் உத்தியோகங்கள் விஷயத்திலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும்படியாக ஏற்பாடு செய்வதாய் வாக்களித்த பிரகாரம் இப்போது ஒரு உத்திரவு எல்லா. ஜில்லா போர்டுகளுக்கும் அமுலில் கொண்டு வரும்படியாக வெளி
யிட்டிருக்கிறார். இது கூடிய சீக்கிரத்தில் அமுலுக்கு வந்துவிடுமென்றே எதிர்பார்க்கிறோம். ஆனால் இவ் வுத்திரவு டிஸ்டிரிக் போர்டுகளைப் பொருத்தவரை தான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றதே ஒழிய முனிசிபாலிட்டி, யூனியன், பஞ்சாயத்து முதலியவைகளைப் பற்றி குறிப்பிடவில்லை.
இந்த மாகாணத்தில் ஜில்லா போர்டுகள் சுமார் 25 இருக்குமானால், முனிசிபாலிட்டிகள் சுமார் 100க்குக் குறையாமலிருக்கலாம்.
இவைகளிலும் ஆயிரக்கணக்காக உத்தியோகஸ்தர்களும், உபாத்திமார். களும் இருந்து வருகிறார்கள்.
ஆதலால் மந்திரியார் கூடிய சீக்கிரம் அதாவது உடனே முனிசிபாலிட்டி களுக்கும் இந்த ஏற்பாடு செய்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.
நிற்க இந்த உத்திரவைப் பார்த்தவுடன் பார்ப்பனப் பத்திரிகைகள்.
ஒப்பாரி வைத்து ஓலமிட ஆரம்பித்துவிட்டன. இப்படிப்பட்ட ஒவ்வொரு
சமயத்திலும் இந்தப் பத்திரிகைகள் ஓலமிடுவது என்பது தலைமுறை தலைமுறையான வழக்கமாகவே இருந்து வருகின்றது
இப்படிப்பட்ட ஓலங்களை பார்ப்பனரல்லாத மூடங்களும் நம்பிக் கொண்டு பார்ப்பனப் பத்திரிகைகளுக்குக் கூலிகளாய் இருப்பதுதான். நமக்கு மிகுதியும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடிய காரியமாய் இருக் கின்றனவே ஒழிய மற்றப்படி பார்ப்பனப் பத்திரிகைகளுடைய ஓலங்களைப்
பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்திரவானது இன்னும் அனேக இலாக்காக்களுக்குப் போட வேண்டியது அவசரமும், அவசியமுமான o1 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
காரியம் என்பது ஒருபுறமிருக்க இப்போது இருந்து வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ விகிதம்கூட மாற்றப்பட வேண்டியது எல்லாவற்றையும்விட மிகவும் அவசியமான காரியமாகும்.
இன்றுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ விகிதம் ஜன சமூகத்தில் 100க்கு 3 வீதம் உள்ள பார்ப்பனர்களுக்கு உத்தியோகத்தில் 100க்கு 16%
வீதம் விகிதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
பார்ப்பனரல்லாத ஹிந்து என்பவர்களுக்கு 100க்கு 40 வீதமே விகிதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு 100க்கு 8 வீதமே விகிதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சமூகத்தாருக்கும் அதாவது பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் அவர்கள் ஜன சமூக எண்ணிக்கைப்படி கிடைக்க வேண்டிய விகிதாச்சாரங்களை மோசம் செய்து அவற்றை பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் பயனாய் இந்த இரண்டு சமூகமும் தாழ்ந்த நிலையிலேயே இருப்பதோடு பார்ப்பன ஆதிக்கம் வளர்ந்து கொண்டே போகின்றது. இதை இன்றைய மந்திரிகள் சிறிதுகூட கவனியாமல் தங்கள் வாழ்க்கையும் தங்கள் சம்பளங்களையுமே பிரதானமாய்க் கருதிவருவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும்.
இந்த மந்திரி சபையானது (பார்ப்பனரல்லாத ஜஸ்டிஸ் மந்திரிசபை என்பதானது) எதற்காக இருக்க வேண்டும் என்றும் இன்னம் வெகு காலத்துக்கு இருந்து வர வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றோம் என்றால் இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை யோக்கியமாய் நிறைவேற்றி நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறொரு காரணமும் இல்லை
இன்று இந்தக் காரியம் செய்ய ஜஸ்டிஸ் மந்திரி சபை தவிர வேறு எந்தக் கட்சியும் தகுதி இல்லை என்பதோடு வேறு எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் உள்ளதையும் கெடுத்து விட்டுப் போய்விடுவார்கள் என்பதில்
சிறிதும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
இந்த மந்திரிசபை என்ன சாதித்தது என்று யாராவது கேட்பார்களே யானால் பதினைந்து வருஷ காலமாய் பார்ப்பனர்களுடைய தொல்லையை சமாளித்து நின்ற பெருமை ஒன்று
பார்ப்பனர்களின் ஒற்றர்களாகவும் கூலிகளாகவும் அமர்ந்து போன பார்ப்பனரல்லாத இனத் துரோகிகளின் உபத்திரவத்தை சமாளித்துக் கொண்டிருந்தது இரண்டு. இந்த இரண்டு கூட்டத்தாராலும் ஏமாற்றி வஞ்சிக்கப்பட்ட பார்ப்பன. ரல்லாத பாமர மக்களின் முட்டாள்தனமான பழிகளை தாங்கி நின்றது மூன்று
குடி அரசு - 1935 (1) 392
இம் மூன்று கூட்டத்தாரின் இவ்வித தொல்லைகளுக்கும், உபத்திரவங் களுக்கும், பழிகளுக்கும் இடையில் இருந்து கொண்டு இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை பார்லிமெண்டு வரை கவனித்து சிறிது அளவாவது அமுலில் இருக்கும்படி செய்தது நான்கு
இந்தக் காரியங்களே அது இருந்தாக வேண்டியது என்பதற்கு ஆதாரங்களாகும். நம்மைப் பொறுத்தவரை காங்கிரசை விட்டு விலகி தனியாக நின்றும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் அதன் ஆதரவு பெற்றும் இந்த 10 வருஷ காலமாக உழைத்து வந்ததின் காரணமே இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவகொள்கைக்கு ஆகத்தான் என்பது எவரும் அறியாதவிஷயமல்ல.
இதற்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சியையும் மந்திரி சபையையும்
யார் எந்தக் காரணத்துக்காகப் பழித்தாலும், இழித்தாலும், அதை மறுத்து ஆதரித்து வருவதுமாகும். பொது ஜனங்களில் பலரும் பார்ப்பனரல்லாத சில பிரமுகர்களும்கூட ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி குறை கூறி வருகிறார்கள் என்பது நமக்குத்
தெரியும். அப்படிப்பட்டவர்கள் காங்கிரசிலிருப்பவர்களானாலும் சரி வேறு எந்தக் கட்சியில் இயக்கத்தில் இருப்பவர்களானாலும் சரி, தனிப்பட்டவர். களாய் இருப்பவர்களானாலும் சரி அவர்கள் தங்களுடைய பழய “ஜாதகத்தை” அதாவது ஜஸ்டிஸ் ஏற்படுவதற்கும் அல்லது தாங்கள் அதில் கலந்து கொள்வதற்கும் மூன் தங்களுடைய நிலை எப்படி இருந்தது? இப்போதும் என்ன லட்சியம் வைத்து அக்கட்சியை பழித்து இழித்துக் கூறி வருகிறார்கள்? என்பதை சிந்தித்துப் பார்த்தால் அக்கட்சி சாதித்தது கண்ணாடியில் தெரிவதுபோல் தெரியும்
அதோடு அக்கட்சி செய்திருக்க வேண்டிய அனேக வேலைகளை செய்ய முடியாதபடி இவர்கள் போன்ற பச்சை சுயநலவாதிகளும், அறியாத மக்களும் முட்டுக்கட்டையாய் இருந்திருப்பதும் விளங்கும்.
இவை ஒரு புறமிருக்க இந்த பிரஸ்தாப வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவைப் பற்றி ஒரு பார்ப்பன பத்திரிகையானது “அக்கிரமம்!” என்கின்ற தலைப்புக் கொடுத்து எழுதிய உபதலையங்கத்தில் “பிறப்பினால் ஏற்பட்ட ஜாதி பாகுபாடுகளின்படி உத்தியோகம் வழங்க வேண்டும் என்ற முறையை ஜஸ்டிஸ் கட்சியார் விஸ்தாரமாக்கி இருப்பது அவர்கள் எவ்வளவு தூரம் மதி கெட்டவர்கள் என்பதை ருசுப்படுத்துகிறது'” என்று எழுதி இருக்கிறது
அடுத்த வாக்கியத்தில்,
“பிராமணர்கள் உத்தியோகங்களையெல்லாம் தங்களுடைய ஏகபோக
மாக்கிக் கொண்டு விடுவார்களோ என்று பயப்பட ஆதாரமிருக்கலாம்” என்றும்
எழுதி ஒரு அளவுக்கு அப்படிச் செய்ய வேண்டியதின் அவசியத்தை ஒப்புக் கொள்கிறது. ஆதலால் இதற்கு அதிக சமாதானம் சொல்லத் தேவையில்லை.
மற்றொரு பார்ப்பன பத்திரிகை (சுதேசமித்திரன்) 03 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
“வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஏற்பாடானது பல சமூகத்தினரும் தங்களை அபிவிர்த்தி செய்து கொள்ளுவதற்கு ஊக்கத்தை அளிப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு இருந்து வரக் கூடிய சிரத்தையையும் குறைத்து விடுமென்பதே நமது அபிப்பிராயம்'” என்று பரிதாபப்படுகின்றது
இது பகையாளி வீடு வேகிறதே என்று அவசரப்பட்டு தண்ணீர் இறைக்கப் போவதுபோல் போய் தோண்டியையும், கயிற்றையும் கிணற்றில். போட்டுவிட்டு மாரடித்துக்கொண்டு அழுகின்றதை ஒத்து இருக்கின்றது. ஆனால் அதே பத்திரிகை தெரிந்தோ தெரியாமலோ உண்மையைக் கக்கி இருக்கிறது
“எல்லா சமூகங்களுக்கும் கவர்மெண்டு உத்தியோகங்களில் போதிய
பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டியது நியாயமும் அவசியமும் ஆகும்."
“உத்தியோக விஷயங்களில் இந்த ஏற்பாடு இருந்து வருகிறதால். வரிசைக் கிரமப்படி பல சமூகத்தினரும் நியமிக்கப்பட்டதன் மூலம் அதிக பிரதிநிதித்துவத்தை உத்தியோகங்களில் பெற்று இருக்கலாம்'”
என்பதாக எழுதி அந்த உண்மையையும் ஒப்புக் கொண்டு விட்டதால் அதற்கும் நாம் பதில் எழுத வேண்டியதில்லை. ஆனால் ஒரு விஷயத்திற்கு பதில் சொல்ல ஆசைப்படுகிறோம்
இந்தியர்களுக்கு இன்ன இன்ன உத்தியோகம் கொடுப்பது என்றும் அதற்கு ஒரு எண்ணிக்கை விகிதமும் வைத்ததால் இன்று இந்தியர்களின் சிரத்தை குறைந்து விட்டதா? அல்லது நிர்வாகத்தின் திறமை குறைந்து விட்டதா? ஐ.சி.எஸ். உத்தியோகம் இன்று ஐரோப்பியர் இந்து என்கின்ற வகுப்புப்படி கொடுப்பதில் என்ன யோக்கியதை குறைந்து விட்டது? இத்தனை விகிதம் இந்தியருக்கு கொடுக்க வேண்டும் என்று நாமாக கேட்கவில்லையா?
தவிர உத்தியோகங்களுக்கு ஒரு அளவு யோக்கியதையை நிர்ணயம் செய்து கொண்டு தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகங்கள். கொடுக்கப்படுகிறதே தவிர வெறும் ஜாதியை மாத்திரம் கவனித்து அல்ல என்பதை இப்பத்திரிகைகள் தெரிந்திருந்தும் “திறமை கெட்டுவிடும்" என்று சொல்லுவது போக்கிரித்தனமும், அசம்பாவமுமான கருத்தேயாகும் ஏனெனில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்குத் திறமை இல்லை என்பதாக நினைத்துக் கொண்டுதான் இவைகள் இப்படி எழுதுகின்றனவே ஒழிய மற்றபடி யோக்கியமான எண்ணத்துடன் இவை எழுதப்பட்டதல்ல. இல்லாவிட்டால் திறமை குறைந்து போகும் என்பதற்கு காரணம் காட்டி இருக்க வேண்டும்
நிற்க, பிறவியின் காரணத்தை வைத்து உத்தியோகம் பிரிப்பது மதி கெட்டதனம் என்றால் பிறவியின் காரணம் வைத்து மனித சமூக பொது உரிமையில் பிரிவினை செய்து இருப்பது மதியீனம் மாத்திரம் அல்லாமல்:
குடி அரசு - 1935 (1) 394
அது எவ்வளவு அயோக்கியத்தனமாய் இருந்திருக்க வேண்டும். பிறவியின் காரணமாய் ஜாதி பிரித்து கோவிலுக்குள் போவதைக்கூட தடுப்பதும் ஒப்புக் கொள்ளாததுமான ஒரு ஜாதி - ஒரு சமூகம் - ஒரு ஸ்தாபனம் பிறவி காரணமாகவே பிரிக்கப்பட்டிருக்கிற பிரிவுகளுக்கு உத்தியோகத்தில் சம உரிமை கொடுப்பதை எப்படி குற்றமாகச் சொல்லலாம்.
பிறவி காரணமான சலுகையும் வஞ்சனையும், சூதும் சூழ்ச்சியும் இதுவரை நடந்து வந்திராவிட்டால் இன்று எப்படி ஜன சங்கை 100க்கு 3 வீதமுள்ள, பிச்சை எடுத்துக் கொண்டு பாடுபடாமல் ஊரை ஏமாற்றிப் பிழைத்து வந்தக் கூட்டம் இன்று 100க்கு 60, 70, 80, 90, 100 வீதம் உத்தியோகங்களையும், பதவிகளையும் கொள்ளையிட முடிந்தது என்று நாம் கேட்கின்றோம். அவனவன் புத்தியால் வரமுடிந்தது என்றால் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் ஏற்பட்ட பிறகு இந்தக் கொள்ளையும், சூதும், வஞ்சனையும், சூழ்ச்சியும் எப்படி மாறி எல்லா வகுப்பிலும் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்பது வெளியாக முடிந்தது? இன்றைய தினம் ஆங்காங்கு இருந்து வரும் சர்க்கார் உத்தியோக லிஸ்டைப் பார்த்தால் எல்லாம் பார்ப்பன மயமாய் இருப்பதானது புள்ளி விவரங்களுடன் விளங்குவது தெரிந்தும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மதியீனம் என்றும் திறமைக் குறைவு என்றும் சொல்லுவதை அறியாமல் சொல்லுவதாக நம்மால் கருத முடியவில்லை. மற்றபடி இதை அயோக்கியத் தனம் அல்லது மற்றவர்கள் பிழைக்கக்கூடாது என்கிற அற்பத்தனம் கொண்டு அந்தப்படி சொல்லுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது
பார்ப்பனர்கள் தாங்கள் கையில் கிடைக்கும் அதிகாரத்தை பயன்: படுத்துவதில் சிறிதுகூட ஈவு இரக்கமில்லாமல் நியாயம் அநியாயம் இல்லாமல் உபயோகப்படுத்தி விடுகிறார்கள். அதைப் பற்றி கேள்வி கேட்பாடே கிடையாது. ஆனால் பார்ப்பனரல்லாதார் ஒரு சிறு காரியம் செய்யும் போதும் இவ்விதமான விஷமப் பிரசாரம் செய்கிறார்கள் என்றால் இத் தொல்லைகளை எப்படி சகித்துக் கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
பள்ளிக்கூட விஷயமாக ஆங்காங்கு இருந்து நமக்கு வந்து இருக்கும் புள்ளி விவரங்களைப் பார்த்தால் இவ்வளவு கூச்சல் போடுகின்ற காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் எப்படி தைரியமாய் வெளிப்படையாய் ஆணவமாய் இந்தப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. சாதாரணமாக சாகப் போகும் தருவாயிலிருக்கும் திருநெல்வேலி
இந்து காலேஜுக்கு ஒரு லக்ஷம் ரூ. கொடுத்து அதை நிலை நிறுத்த முன்: வந்த ஒரு பார்ப்பனரல்லாத பெரியார் உபாத்தியாயர்களில் 100க்கு 50 வீதம் பார்ப்பனரல்லாதாராய் இருக்க வேண்டுமென்கிற நிபந்தனை 05 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
கேட்டதற்கு அதை தேசீய பார்ப்பனப் பத்திரிகைகள் என்பவைகள் குறை கூறுகின்றன. ஆனால் பள்ளிக்கூட விஷயங்களில் அநேகப் பள்ளிக் கூடங்கள், பியூன்கள் தவிர மற்றவர்கள் நிர்வாகிகள் உள்பட பார்ப்பனர்களாகவே இருப்பதும் மைலாப்பூரில் சில பள்ளிக்கூடங்களில் உபாத்தியாயர்களும் பியூன்களும் கூட எல்லாம் பார்ப்பனர்களாய் இருப்பதும் இன்றும் உணரலாம். ஆகவே இவர்களுக்கு திறமைசாலியான பார்ப்பனரல்லாதார் கிடைக்க வில்லையா அல்லது பார்ர்ப்பனரல்லாத பூண்டுகளுக்கு உத்தியோகம் அளிக்கப்படாது என்கின்ற கெட்ட எண்ணமா? என்று கேட்கின்றோம்
மதுரை
மதுரை காலேஜ் ஹைஸ்கூலை எடுத்துக் கொள்வோம். அந்தப் பள்ளிக்கூடம் வெகுகாலமாக இருந்து வருகிறது
அதற்கு சட்டசபை மெம்பரும் பொது வாழ்வில் வெகுகாலம் ஈடுபட்டிருக்கிறவரும் இன்று மதுரை சேர்மென்னாய் இருப்பவரும்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கையை அடியோடு எதிர்ப்பவருமான. தோழர் கே.ஆர். வெங்கட்டராமய்யர் செக்ரட்டரியாவார்.
இவர் ஆதிக்கத்தில் உள்ள அப்பள்ளிக்கூடத்தின் போர்ட்மெம்பர்கள்
40 பேர்களில் ராஜா சர். அண்ணாமலை, சேத்தூர் ஜமீன்தார் இருவர் தவிர மற்ற 37 மெம்பர்களும் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, சாஸ்திரி ஆகியவர்களே ஆவார்கள்.
நிர்வாக சபை மெம்பர்களோ 10 பேர்களில் 10 பேரும் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி ஆகியவர்களே ஆவார்கள். உபாத்தியாயர்களோ 46 பேர்களில், தமிழ்ப் பண்டிதர் திருமலைசாமி முதலியார், உருது பண்டிதர் சையத்குலாம் ரசூல் சாயபு ஆகிய இருவர்கள். போக பாக்கி 44 பேர்களும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, ஆச்சாரியார், ராவ்ஜீ ஆகிய பார்ப்பனர்களேயாகும். மூன்று எட்மாஸ்டர்களும் பார்ப்பனர்கள்.
குமாஸ்தாக்கள் லைப்ரேரியன் ஆகிய மூன்று உத்தியோகஸ்தர்களும்
பார்ப்பனர்களே.
பார்ப்பனரல்லாத ஆர்டினரி போர்ட்டு மெம்பர்கள் 2, 3 பேர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் இந்தப் பார்ப்பனர்கள் எவ்வளவு பணம் கவர்ந்து கொண்டு இந்த ஜாப்தாவில் பெயரளவுக்கு மாத்திரம் ஊமை மெம்பராய் சேர்த்திருப்பார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆகவே பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் உள்ள ஸ்தாபனங்களும் அதிகாரங்களும் கடுகளவாவது பார்ப்பனரல்லாதார் என்கின்ற ஒரு சமூகம் இருக்கிறதாகவாவது அல்லது அவர்களும் நம்ம சமூகம் போல படித்து
குடி அரசு - 1935 (1) 396
விட்டு காத்திருக்கிறார்களே என்றாவது பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளாலும் பெற்றோர்களாலும் சர்க்காராலும் கொடுக்கப்படுகின்ற பணத்தைக் கொண்டு தானே இந்தப் பள்ளிக்கூடம் நடந்து வருகின்றது என்றாவது உள்ள எண்ணம் கடுகளவாவது இந்தப் பார்ப்பனக் கூட்டத்தில் யாராவது ஒருவருக்கு இருந்து வருகிறதா என்று யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
சமீப காலத்தில் அதாவது சென்ற மாதம் எஸ்.ஐ.ஆர். ரயில்வே உத்தியோகங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன்போர்ட் என்று ஒன்று வைத்து அதன் மூலம் ரயில்வே உத்தியோகங்களுக்கு ஆள்களை தெரிந்தெடுத்ததில் மொத்த எண்ணிக்கையில் பார்ப்பனர்களைவிட பார்ப்பனரல்லாதார் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதால் இப்போது அந்த போர்டையே கலைத்துவிட வேண்டும் என்று சூழ்ச்சிகள் நடப்பதாகத் தெரிகின்றது
சமீபத்தில் தோழர் கலிபுல்லா சாகிப் அவர்கள் தலைமையில் திருச்சியில் ஒரு கூட்டம் கூடி இச் சூழ்ச்சியை கண்டித்து இருப்பதாகவும் தெரிகிறது
இந்தப்படி பல துறைகளிலும் பார்ப்பனர்கள் முட்டுக்கட்டையாய் இருந்து கொண்டு பல ஆயிரம் வருஷங்களாக தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப்பட்டு கிடந்த சமூகம் ஒரு சிறிதாவது தலை எடுப்பதை அழுத்திக் கொண்டே வந்தால் வேறு என்னதான் கதி மோக்ஷம் என்பது நமக்கு விளங்கவில்லை ஆகையால் ஸ்தல ஸ்தாபன மந்திரியார் டிஸ்ட்ரிக் போர்டுக்கு போட்ட உத்திரவுமல்லாமல் மூனிசிபாலிட்டிக்கும் இந்த உத்திரவு போடுவதோடு பிரைவேட் மேனேஜ்மெண்டில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிக் கூடங்களிலும் எதற்கு சர்க்கார் கிராண்டு கொடுக்கப்பட்டிருக் கிறதோ அவற்றிற்கும் வகுப்புவாரி உத்திரவுப்படி உபாத்தியாயர்கள் நியமிக்கும்படி உத்திரவு போட வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 02.06.1935
7 வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
சுயமமியாதை மாகாண மகாநாடு
4-வது சுயமரியாதை மாகாண மகாநாடு நடத்துவது பற்றி நிர்வாக சபைக் கூட்ட நிகழ்ச்சியும், மகாநாடு நாகப்பட்டிணத்தில் நடத்த முடிவு செய்து வேண்டிய ஏற்பாடுகளை தோழர் காயாரோகணம் பிள்ளை அவர்கள். ஏற்று நடத்தும் விஷயமும், மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கும் சேதியில்
இருந்து அறியலாம்.
பல காரணங்களால் 2, 3 வருஷமாய்த் தவக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை
ஆனாலும், ஜில்லா, தாலூகா என்னும் பேர்களால் அனேக மகாநாடுகள் நடந்து வந்திருப்பதோடு, பிரசாரம் என்னும் பேரால் நூற்றுக்கணக்கான
கூட்டங்கள் 1000, 2000, 3000 பேர் கொண்ட கூட்டங்களாகக் கூட்டப்பட்டு காரியங்கள் நடைபெற்றே வந்திருக்கின்றனவே ஒழிய, மற்றபடி இயக்க வேலை என்பது ஒன்றும் தவக்கப்பட்டுவிடவில்லை.
இயக்கத்தின் பேரால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் மதக் கலப்பு, ஜாதிக் கலப்பு, விதவை மணம், காதல் மணம் என்கின்ற பேர்களால் நடந்து வந்திருக்கின்றன; நடந்தும் வருகின்றன.
இயக்கப் பிரசாரமானது சமூக சம்பந்தமான சமத்துவ பிரசார மாத்திர மல்லாமல், பொருளாதார சம்பந்தமான விஷயங்களிலும் சமத்துவத்துக்கு ஒரு அளவு பிரசாரம் செய்து வந்திருக்கிறது
ஜாதி, மதம், கடவுள்கள் ஆகியவை சம்பந்தமான உணர்ச்சிகளால் ஏற்பட்டிருக்கும் கெடுதிகளை விளக்கி, அவைகளில் இருந்து மக்களை மீளும்படி செய்ய வேண்டிய பிரசாரத்தில், சாதாரணமாக இன்றைய நிலையில் எவ்வளவு தூரம் போக முடியுமோ, அதற்கு மேலாகவே மக்கள் மனதில் பதியும்படியான பிரசாரம் தமிழ்நாட்டிலும் மலையாள நாட்டிலும் நடைபெற்று வந்திருக்கிறதுடன், மக்கள் மனதிலும் படியும்படி செய்யப் பட்டுமிருக்கிறது
இவற்றின் பலனாக இந்த இயக்கம் ஒரு அளவுக்கு பாமர மக்கள் இயக்கமாக ஆகி இருக்கிறது என்பதுடன், இத் துறையில் இன்னும் வேலை செய்ய வேண்டும் என்பவர்களுக்கும் ஒழுங்காகவும், பத்திரமானதாகவும் வழி திறக்கப்பட்டுவிட்டது
குடி அரசு - 1935 (1) 398
ஆகவே, இப்பேர்ப்பட்ட நிலையில் உள்ளதும், இவ்வளவு பிரயோஜனகரமானதுமான இந்த இயக்கத்துக்கு 4வது மகாநாடு என்னும் பேரால், நாகையில் கூடப்போகும் ஒரு மகாநாடு மிகவும் முக்கியமான. மகாநாடு என்று நாம் சொல்ல வேண்டியதில்லை.
இதற்கு முன் கூட்டப்பட்ட மகாநாடுகள் மூன்றும் ஒன்றுக்கொன்று விசேஷமாகவே கூட்டப்பட்டு வந்திருப்பதுடன், கொள்கைகளிலும் முன்னேற்றமாகவே இருந்து வந்திருக்கின்றன.
இவைகளுக்குக் காரணம் மகாநாட்டைக் கூட்டியவர்களும், இயக்கப் பிரமுகர்களும் மாத்திரமல்லாமல், பொது ஜனங்களும் சிறப்பாக ஆங்காங்குள்ள உணர்ச்சிமிக்க வாலிபர்களுமாவார்கள். ஆகவே இம்மகாநாட்டைச் சீரும் சிறப்புடன் நடத்திக் கொடுத்து, மக்களுக்கு உணர்ச்சியும் ஊக்கமும் உண்டாக்குவது நாகப்பட்டினம் வரவேற்புக் கமிட்டியாருடையவும், சிறப்பாக தோழர்கள் காயாரோகணம் பிள்ளை (சேர்மென்), சாமியப்ப முதலியார் (ஜில்லா போர்ட் பிரசிடெண்ட்) முதலியவர்களுடைய கடமை என்று இருந்தாலும், ஜில்லா வாலிபர்கள் அவர்களுக்குப் பக்கபலமாய் இருந்து நடத்திக் கொடுக்க வேண்டியதாகும் என்று கேட்டுக் கொள்ளுவதுடன் மற்ற ஜில்லா வாலிபர்களும் மாகாணம் எங்கும் இருந்து பதினாயிரம் பிரதிநிதிகளுக்கு கம்மி இல்லாமல் வரும்படியாக ஆங்காங்கு வேலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1935
399 ௨... வரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அருப்புக்கோட்டை, திண்டிவனம்,
விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம் முதலிய இடங்கவில் செய்த பிரசங்கம்
தோழர்களே!
இன்று பொதுவாகவே மனித சமூகத்துக்கு உள்ள கஷ்டங்களையும், குறைபாடுகளையும் பற்றி உங்களுக்கு நான் விளக்க வேண்டியதில்லை.
குறிப்பாக நமது நாட்டு மக்களிடை உள்ள குறைபாடுகள் மற்ற நாட்டு மக்கள் குறைபாடுகளைவிட அதிகமாகவே இருந்து வருகின்றன. நமது குறைகளுக்கு நிவாரணம் அரசியல் மாறுதலால்தான் முடியும் என்பது சிலருடைய அபிப்பிராயம். ஆனால் சுயமரியாதை இயக்கம் இதை ஒப்புக் கொள்ளுவதில்லை.
அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கட்டளைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல். மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டுவிடும் என்று நாம் கனவுகூடக் காண முடியாது
அரசியல் கொள்கைகளை சமூகம் தான் நிர்ணயிக்க வேண்டும் சமூகத்துக்கு ஆதாரம், முன் குறிப்பிட்ட சமுதாய பழக்க வழக்கங்களும், ஜாதி மதக் கட்டளைகளுமே ஆகும்
எந்த நாட்டிலும் அரசாங்க ஆட்சித் திட்டம் சமுதாய ஜாதி மத பழக்க வழக்கங்களின் மீதே இருந்து வருகின்றன. ஏதோ இரண்டொரு அற்ப விஷயங்களே இதிலிருந்து விலக்கு பெற்றதாக இருக்கலாம்
நம் நாட்டு அரசியல் சீர்திருத்தம் என்பதில், அரசாங்கத்தாராவது சமூக மக்களாவது ஜாதி மதப் பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்யச் சிறிதும் சம்மதிப்பதில்லை
நமது இன்றைய அரசாங்கமோ, இந்நாட்டு மக்களிடம் ஜாதி மத பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொடுப்பதாக உத்திரவாதம் கொடுத்து
குடி அரசு - 1935 (1) 400
விட்டு, ஆட்சி புரிகின்றது என்பது நாம் அறியாததா? இன்றைய நமது அரசியல் கிளர்ச்சியும் சுயராஜ்ஜிய முயற்சியும்கூட ஜாதி மத பழக்க வழக்கங்களுக்கு உத்திரவாதம் கொடுத்துவிட்டே (கிளர்ச்சியும், முயற்சியும்) நடைபெறுகின்றது இன்றைய தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியாரால் எடுத்துக் காட்டப்படும் கராச்சித்திட்டத்தில் இந்த ஜவாப்புதாரித்தனமான உத்தரவாதம் கல்லுபோல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது
காங்கிரசு முயற்சி செய்யும் கயராஜ்ஜியத்தில்
1) 10௦ article in the constitution relating 1௦ Fundamental Rights, shall include a guarantee to the communities concerned of protection of
their culture, languages, scripts, education, profession, practice of
religion and religious endowments.
2) Personal Laws shall be protected by specific provision to be embodied in
the constitution.
1) சுயராஜ்ய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரீகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி உத்திரவாதமளிக்கப்படும்
2) ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும்படியான திட்டத்தையும் சேர்க்கப்படும்
என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதுதான் கராச்சித் திட்டம் என்பது
அன்னிய அரசாகிய பிரிட்டிஷ் ஆட்சியின் வாக்குறுதிகளின் பயனாகவே, சமூக வாழ்வில் ஜாதிமதக் கொடுமையில் ஒரு கடுகளவு மாறுதல்கூட செய்வது கஷ்டமாய் இருந்து வருகிறது
சாரதா சட்டம் கூட அதனாலேயே சுயமரியாதையற்று பிணமாகக்
கிடக்கிறது. இப்படியிருக்கும்போது இனி வரப்போகும் சுயராஜ்ஜியத்திலும் சமூகப் பழக்க வழக்கம், ஜாதி ஆகியவைகளுக்கு ஜவாப்புதாரித்தனமும், உத்தரவாதமும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருக்கும் போது அவை களில் ஒரு சிறு மாறுதலாவது செய்யப்படக்கூடும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா? ஆகவே இன்று இந்நாட்டு மக்களுக்கு உள்ள குறைபாடுகள் நீக்கப்படுவதற்கு, இன்றைய அரசியல் மாறுபட்டுவிடுவதாலேயே ஏதாவது பலன் ஏற்பட்டுவிடும் என்பது வெறும் கனவாகத்தான் முடியும் W0 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இன்றுள்ள குறைபாடுகள் எல்லாம் இந்தியாவில் சுயராஜ்ஜியம்
இருந்த காலத்திலும் இருந்து வந்தது தானே ஒழிய, மகமதியர் ஆட்சியிலோ பிரிட்டிஷார் ஆட்சியிலோ ஏற்பட்டு விட்டதாகச் சொல்லிவிட முடியாது
மனிதனை மனிதன் இழிவுபடுத்தி அடிமைப்படுத்தும் குணமும், மனிதன் உழைப்பை மனிதன் அபகரித்துப் பொருள் சேர்த்து உழைப்பாளியை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய குணமும், ராமராஜ்யம் முதல் தர்ம தேவதை ராஜ்ஜியம் இடையாக, பிரிட்டிஷ் ராஜ்யம் வரை ஒரு மாதிரி
யாகத்தான் இருந்து வருகின்றது உண்மையை யோக்கியமாய் - வீரமாய்ப் பேச வேண்டுமானால், முகமதிய ஆட்சியிலும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஓளவு பழய கொடுமை
களும் இழிவுகளும் குறைவுகளும் குறைந்திருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் காட்டலாம்
இந்த நாட்டில் ஜாதியால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100க்கு 97 பேர்களாகும்
ஜாதியில் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் 100க்கு 25 பேர்களாகும். மதத்தால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் 100க்கு 100 பேர் என்றுகூட சொல்லலாம். ஒவ்வொரு மதக்காரனும் மற்ற மதக்காரனை இழிவாய்த்தான் கருதுகிறான். ஒவ்வொரு ஜாதியானும் மற்ற ஜாதியானை இழிவாய்த்தான் கருதுகிறான்.
பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் கீழ்ஜாதி என்பது இந்து மதச் சம்பிரதாயம். இப்படிப்பட்ட இந்த இழிவான நிலை மாற வேண்டுமானால் இன்றைய பிரிட்டிஷ் அரசியல் மாறுவதால் முடியுமா?
பெரும்பான்மையான மக்களின் பொருளாதாரக் கொடுமைக்கும், அவர்களது வாழ்க்கை நிலை இழிவுக்கும், ஜாதியும் மதமும் காரணமாய் இருக்கின்றதை யாராவது மறுக்க முடியுமா? எங்காவது பார்ப்பான் பட்டினி கிடக்கின்றானா? எங்காவது பார்ப்பான் சரீரப் பாடுபடுகின்றானா? கூலிக்கு மூட்டை தூக்குகின்றானா? நடவு நட்டுத் தண்ணீர் கட்டுகிறானா?அது போலவே பறையர் பள்ளர் போன்ற கூட்டத்தினர் வாழ்க்கை எங்கும் எப்படி இருக்கிறது பாருங்கள். பாடுபட்டும் இக் கூட்டத்தாரின் நிலைமை எவ்வளவு பரிதாபகரமானதாய் இருக்கின்றது. இதற்கு ஜாதிமதம் அல்லாமல் வேறு காரணம் என்ன? ஆகவே ஜாதி மதத்தின் காரணமாய் சிலருக்கு மாத்திரம் உயர்வும், செல்வமும் அநேகருக்கு இழிவும் தரித்திரமும் மக்களிடம் நிலவுகின்றதே தவிர பாடுபடாததாலும், பாடுபடுவதாலும் அன்னிய அரசராலும் சுயராஜ்ஜியத்தாலுமா நிலவுகின்றது என்பதைத் தயவுசெய்து யோக்கியமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1935 (1) 402
கராச்சித் தீர்மானப்படி ஆட்சிப் புரியப் போகும் சுயராஜ்ஜியம்
நமக்குக் கிடைத்தால், இந்தியா இந்த விஷயங்களில் இன்றுள்ள நிலையைவிட, கேடான நிலையையே அடையும் என்பதை உறுதியாய்க் கூறுவேன். மனிதனுடைய அவமானத்தையும் இழிவையும் போக்குவதற்கு
ஒப்புக் கொள்ளாத சுயராஜ்ஜியம் பித்தலாட்டச் சூட்சி ராஜ்ஜியமாகுமே ஒழிய யோக்கியமான ராஜ்ஜியம் ஆகாது
கேவலம் ஒரு தீண்டாமை விலக்கு என்கின்ற சாதனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இது வரை காங்கிரசால் இந்தக் காரியத்துக்கு என்ன பயன் ஏற்பட்டது. இந்தக் காரியத்தின் பேரால் காங்கிரஸ் பணம் வசூல் செய்து அதனால் ஓட்டுப் பெற்றது. மற்றப்படி தீண்டாமை விலக்குக்கு என்ன திட்டம் காங்கிரசினிடம் இருக்கிறது
தீண்டாமை விலக்குக்கு “பாடுபடாமல் உயிர் வாழ முடியாது'' என்று சொல்லி பட்டினி கிடந்து ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்த காந்தியார் என்ன சாதித்தார்?
இந்தியச் சட்டசபைக்கு காங்கிரஸ்காரர்கள் மெஜாரிட்டியாக வந்து விட்டார்கள் என்பதைக் கேட்டவுடன், காந்தியார், “சட்டசபைக்கு சமூதாய சம்மந்தமான தீர்மானங்களைக் கொண்டு போகாதீர்கள்'' என்று உத்திரவு போட்டுவிடவில்லையா? காங்கிரஸ் தீண்டாமை விலக்கு விஷயத்தில் நடந்துகொள்ளும் நாணயத்துக்குஇதைவிடவேறு என்னஅத்தாக்வி வேண்டும்? ஆகவே இந்த சட்டசபையில் காங்கிரஸ்காரர்கள் இருந்தாலென்ன?
சர்க்கார் நியமனக்காரர்களே இருந்தால் என்ன? என்று யோசித்துப் பாருங்கள். கராச்சி காங்கிரஸ் தீர்மானப்படி நடக்கும் சந்தர்ப்பம் கிடைத்த காங்கிரஸ்காரர்கள், தீண்டாமை விஷயத்தில் தான் இப்படி நடந்து கொண்டார்கள் என்றால், பொருளாதார விஷயத்தில் எவ்வளவு யோக்கியமாய் நடந்து கொண்டார்கள் என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள்.
மீ 1-க்கு 500 ரூக்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை என்ற காங்கிரஸ்காரர்கள், ஒரு ஒற்றை ஆளுக்கு நாள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் சர்க்காரிடமிருந்து படி வாங்கினார்கள். இதில் ஒரு அளவு காங்கிரஸ் பண்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் உத்திரவு போட்டார். யார் இதற்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்?
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் தென்னாட்டுக் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் தலைவர் என்கின்ற ஹோதாவில், அதை மறுத்து ஒரு தம்பிடி கூட கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார். தனது (ஒண்டி ஆள்) செலவுக்கு நாள். ஒன்றுக்கு 20 ரூபாயே போதாது என்று சொல்லி, ஒரு காசு கூட குறைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள். இந்த யோக்கியர்கள் நாளை சுயராஜ்ஜியம் பெற்ற பிறகு மாத்திரம் பொருளாதாரத்தில் எப்படி யோக்கியமாய் நடந்து கொள்ள முடியும்?
403 ட... ஸரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஒரு காசு கூட சர்க்காருக்கு இன்கம்டாக்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத தோழர் சத்தியமூர்த்திக்கு, தன் சாப்பாட்டுச் செலவுக்கு மாத்திரம் தினம் ஒன்றுக்கு 20 ரூ. போதவில்லை என்றால் மற்றபடி மற்றவர்களுக்கு எவ்வளவு அதாவது “செல்வத்தில் பிறந்து செல்வத்தில் வளர்ந்து வந்த” கோடீஸ்வரர்களுக்கு, தினம் எவ்வளவு ரூபாய் வேண்டியிருக்கும் என்பதைப் பார்த்தால் தோழர் சத்தியமூர்த்திக்கோ மற்ற காங்கிரஸ்காரர்களுக்கோ இன்றையச் சம்பளம் அதிகம் என்றும், ஜனங்களால் தாங்க முடியாதது என்றும் சொல்லுவதற்கு யோக்கியதை உண்டா என்பதோடு, இவர்கள் ஆதிக்கத்துக்கு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுவார்களா என்றும் கேட்கின்றோம்.
நிற்க ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்ய காங்கிரஸ்காரர்கள் சம்மதிக்கவில்லையானால் வேறு எந்த விதத்தில் இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்? பிராமணன், சூத்திரன், பறையன், சண்டாளன் என்கின்ற பெயர்களும் பிரிவுகளும் ஜாதி காரணம் மாத்திரமல்லாமல் மதங்காரண மாகவும் இருந்து வருகின்றன.
மதம் காரண மாத்திரமல்லாமல், தெய்வம் காரணமாகவும் இருந்து வருவதாக இந்தியா பூராவும் உள்ள இந்து மக்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக்கு இந்து மதமும், மனு தர்ம சாஸ்திரமும் காரண பூதம் என்றாலும், அதற்கும் மேல்பட்டு கடவுளும் காரணமாய் இருந்து வருகிறது.
கடவுளுடைய முகம், தோள், துடை, கால் ஆகியவைகளில் இருந்து நான்கு ஜாதிகள் தோன்றின என்பது இந்து சனாதன மதக்காரர்கள் மாத்திர மல்லாமல், இந்து ஆஸ்திகர்கள் பெரும்பாலோரும் நம்புகின்ற கொள்கையாகும்.
பறையன், சக்கிலி, பள்ளன் முதலிய சூத்திரர்கள் அல்லாத ஜாதியார் என்பவர்கள் எதிலிருந்து பிறந்தார்கள் என்பதும் இந்தியா தவிர மற்ற தேசத்திலுள்ள மக்களான கிறிஸ்தவர், மகமதியர், பெளத்தர்கள் முதலிய 180 கோடி மக்கள் எதிலிருந்து யாரால் பிறப்புவிக்கப்பட்டார்கள் என்பதும் கேள்விக்கு இடமான காரியமாய் இருந்தாலும், நான்கு வருணத்தையும் மறுக்க எந்த ஒரு இந்துவும் துணிவதில்லை. ஏதோ சில பேர்கள் சூத்திரர்கள் என்கின்ற அவமானம் பொறுக்க மாட்டாதவர்களாய் இருப்பதால் நான்கு வருணத்தை ஒப்புக் கொள்ளுவதில்லை என்று ஒரு புறம் சொன்னாலும் மற்றொரு புறம் அக் கொள்கைக்கு அடிமையாகியே தீருகிறார்கள்.
எப்படி எனில் ராமாயணக் கதைக்கு வேறு வியாக்கியானம்
செய்கின்றவர்களும், பாரதக் கதையை நம்பாதவர்களும், அக்கதைகளில் வரும் பாத்திரங்களான ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் கொண்டாடாமல் இருப்பதில்லை. அது மாத்திரமல்லாமல் பாரதக் கதையில்
குடி அரசு - 1935 (1) 404
ஒரு சிறு சந்தர்ப்பத்தில் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கும் கிருஷ்ணன், அர்ச்சுனன் சம்பாஷணை என்னும் கீதையைப் பிரமாதமாக மதிக்கிறார்கள்.
கீதையை மறுக்க இன்று இந்துக்களில் பதினாயிரத்தில் ஒருவனுக்குத் தைரியம் வருமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட கீதையில் கிருஷ்ணன். “நான்கு வருணங்களை நான் தான் சிருஷ்டி செய்தேன்" என்று சொன்னதாக வாசகம் இருக்கிறது ஆகவே கீதையை தங்களுடைய மதத்துக்கு ஒரு ஆதாரமாகவும் கிருஷ்ணனை ஒரு கடவுளாகவும் கொண்டிருக்கிற ஒருவன், சூத்திரன் என்கின்ற பட்டம் ஒழிய வேண்டும் என்றோ, ஜாதிப் பிரிவுகள் ஒழிய வேண்டும் என்றோ எப்படிச் சொல்ல முடியும்
ஜாதிப் பிரிவுக்குப் பார்ப்பனன் தான் காரணம் என்று சொல்லுவது இனி பயனற்ற காரியம் என்பதே எனது அபிப்பிராயம்
ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதிகாசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன். முதலிய கடவுள்களும், காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ அவன்தான் வருணபேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியமுடையவனாவான்.
காங்கிரசுக்காரர்கள் 100க்கு 99%பேர் கீதை பாராயணம் செய்கின்றவர்கள் கீதையை நெருப்பிலிடவோ, கிருஷ்ண பகவானை மறுக்கவோ ஒப்புக் கொள்ளாதவர்கள்.
காங்கிரசுக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் “நான்கு வருணம் கூடாது" என்கின்ற ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள்கூட கீதையையும், கிருஷ்ணனையும் ஒழிக்க சம்மதிக்க மாட்டார்கள். ஒரு அளவுக்கு மனுதர்ம சாஸ்திரத்தின் மீது பார்ப்பனர் உள்பட பலருக்கு வெறுப்பும் அலட்சியமும் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், கீதையின் மீதும், கிருஷ்ணன் மீதும் வெறுப்பும் அலட்சியமும் அவநம்பிக்கையும் மக்களிடமிருக்கும் அந் நம்பிக்கையை ஒழிக்கும் தைரியமும் ஏற்படுவது என்பது சுலபத்தில் எதிர்பார்க்க முடியாத காரியம் இந்தக் காரணங்களாலேயே இந்த நாட்டில் பல ஆயிர வருஷங்களாக இந்த இழிவும், முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் நிலவி வந்திருக்கின்றன. திருவள்ளுவர் குறளை மெச்சுகிறார்களே ஒழிய, காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர் விரோதமாக கீதையைப் போற்றுகிறார்கள்.
இந்த முட்டாள்தனமான காரியம் பார்ப்பனர்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. சைவன்கள், வைணவன்கள் கீதையை கிருஷ்ணனை பிரம்மாவை மறுக்கவே மாட்டார்கள். அவநம்பிக்கைப்படவும் மாட்டார்கள்.
405 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
ஆனால் தங்களுக்குள் ஜாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள், ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால்
காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில் எப்படி ஜாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஜாதியை உற்பத்தி செய்தவர்களை நாம் கேவலமாய் நினைத்து, அவர்கள் மீது மாத்திரம் ஆத்திரப்படுவதின் மூலமே நமது முயற்சிகள் இதுவரை நாசமாகிக் கொண்டே வந்துவிட்டது.
பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும் கிருஷ்ணனும், கீதையும் உள்ளவரை ஜாதி வருணம் ஒழியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இது தெரிந்துதான் ராஜகோபாலாச்சாரியார் உள்பட பக்கா பார்ப்பனர்கள் ஜாதி போக வேண்டும்; ஜாதி போக வேண்டுமென்று நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தாப் போடுகிறார்கள். நம்ம வீட்டிலும் பறையன் என்கிறவன் வீட்டிலும் சாப்பிடுகிறார்கள். ஆனால் கீதையை வெகு பத்திரமாகக் காப்பாற்றுகிறார்கள். கிருஷ்ணனுக்கு பதினாயிரக்கணக்கான கோவில்கள் கட்டி கோடிக்கணக்கான மக்கள்களை கும்பிடும்படி செய்து மூடர்களாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வருகிறார்கள்.
இதனால் அவர்களுக்கு நம் வீட்டில் சாப்பிடுவதன் மூலம் ஆகாரச் செலவு மீதி ஆவதுடன், அவர்களிடம் மக்களுக்கு துவேஷம் இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விடுகின்றதே தவிர, மற்றப்படி ஜாதி பிரிவுக்கு சிறிதுகூட ஆட்டம் ஏற்பட்டுவிடுவதில்லை
நமக்கு இன்று வேண்டிய சுய ஆட்சி என்பதானது ஜாதிக் கொடுமைகளையும் ஜாதிப் பிரிவுகளையும் ஜாதிச் சலுகைகளையும் அழிக்கும்படியாகவும், ஒழிக்கும்படியாகவும் இருக்கத்தக்கதாய் இருந்தால், நமக்குஅதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்பதோடு மனப்பூர்வமாய் வரவேற்கவும் ஆசைப்படுகிறேன்.
கோவில் நுழைவு என்பதைப் பற்றிக் கராச்சி காங்கிரஸ் திட்டத்தில்
ஒரு வார்த்தைகூட இல்லை. அதற்கு மாறாக பழக்கவழக்கங்களைக் காப்பாற்றுவதாகவே வாக்குறுதியும் உத்திரவாதமும் இருக்கிறது
சமீபத்தில் சத்தியமூர்த்தி தலைவர், கோவில் நுழைவைப் பற்றி, தான் ஒப்ப முடியாது என்று சொல்லிவிட்டார். ரோட்டு, குளம், பள்ளிக்கூடம் இவைகளுக்கு மாத்திரம் அனுமதி கொடுப்பதாய் கருணை வைத்து அருள்
புரிந்து இருக்கிறார். இதையே கராச்சிக் காங்கிரஸ் கூறுகிறது
இதற்குச் சத்தியமூர்த்தியுடையவும், கராச்சி காங்கிரசினுடையவும், காந்தியாரினுடையவும் தயவு எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை:
குடி அரசு - 1935 (1) 406
ரோட்டும், பள்ளிக்கூடமும், குளமும் சர்க்கார் பாதுகாப்பில் இருப்பவை அவை தினமும் சர்க்கார் உதவியால் நடந்து வருபவை. ஆதலால் அதை ரயில், தந்தி, தபால் போல் எல்லா மக்களுக்கும் கிறிஸ்தவர் முகமதியர் உட்பட சம சுதந்திரமாய் அனுபவிக்க கட்டுப்பட வேண்டியவர்களாகிறார்கள்:
கோவில் மதத்தைச் சேர்ந்ததானதினாலும், மதத்துக்கு மத ஜனங்களே பிரதிநிதிகளானதினாலும், ஜனங்களுக்குக் காந்தியாரும், சத்திய மூர்த்தியாரும் “பிரதிநிதிகளாக” ஆகிவிட்டதாலும் கோவில் பிரவேசம் என்பது ஜனப்பிரதிநிதிகளையும், ஜனப்பிரதிநிதி சபையான காங்கிரசையும் சேர்ந்தது என்று சொல்ல வேண்டி யிருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் காந்தியாருக்கும் இஷ்டமில்லையானால், சத்தியமூர்த்தியாருக்கும் இஷ்டமில்லையானால், காங்கிரசுக்கும் இஷ்ட மில்லையானால், பிறகு இந்த அரசியல் பிரிட்டிஷ் அரசாங்கம் மாறி காங்கிரஸ் ஆட்சியோ, காந்தி ஆட்சியோ, சத்தியமூர்த்தி ஆட்சியோ ஆகிவிடுவதால் என்ன லாபம் என்று கேட்கின்றேன்.
நிறபேதம் மாறுவதால் அதாவது வெள்ளை நிறக்காரர் ஆட்சி மாறி பழுப்பு நிறக்காரர் ஆட்சி வந்தவுடன் ஜனங்களுக்கு இன்றுள்ள இழிவு மாறிவிடும் என்று கருதுவது போன்ற முட்டாள்தனம் வேறு ஒன்றுமே இல்லை.
கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். அதை மாற்றுவதற்கு ஒப்புகிறவர்கள் கைக்கே ஆட்சி வர வேண்டும். அது வர முடியவில்லை யானால் பொது மக்களிடம் இன்னும் 10 வருஷத்துக்கோ, 100 வருஷத்துக்கோ பிரசாரம் செய்ய வேண்டும்
அதில்லாமல் ஜஸ்டிஸ் மந்திரிகள் உள்ள ஸ்தானத்தில், சத்தியமூர்த்தி, பிரகாசம் மற்றும் இவர்கள் அடிமைகள் போய் உட்கார்ந்தால், ஒரு மாறுதலையும் கண்டுவிட முடியாது. ஆகவே வீண் சூழ்ச்சிப் பிரசாரங் களையும், துவேஷப் பிரசாரங்களையும் சுயநலப் பிரசாரங்களையும் கண்டு மக்கள் யாவரும் ஏமாந்துவிடாதீர்கள்.
குறிப்பு: 17.05.1935 இல் அருப்புக்கோட்டை, 19.05.1935 இல் திண்டிவனம், 20.05.1938 இல் விழுப்புரம், 21.05.1935 இல் சேலம், 26.05.1935 இல் நாகப்பட்டணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் ஆற்றிய உரைகளின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 02.06.1935
407 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
சத்தியமூர்த்தி திருவிளையாடல்
தோழர் 'சத்தியமூர்த்தியின் நாக்குக்கு நரம்பு கிடையாது. அவர். பேச்சுக்கும் மதிப்பு கிடையாது” என்று ஒரு பழமொழி உண்டு. தோழர் சத்தியமூர்த்தி அய்யர் பொது வாழ்வில் விளம்பரம் பெற்ற பிறகு, சுமார். ஒரு ஆயிரந் தடவைக்குக் குறையாமலாவது, தான் பேசியவைகளுக்கும் நடந்து கொண்டவைகளுக்கும் மன்னிப்பு கேட்டிருப்பார்.
ஒரு இரண்டாயிந் தடவைக்கு குறையாமலாவது, தான் வெளிப்படுத்திய அபிப்பிராயங்களுக்குத் தத்துவார்த்தமும், சந்தர்ப்ப அருத்தமும், மாற்று கேறிகளும் வெளியிட்டிருப்பார்.
சந்தையும் அவருடையது; அதில் அடிக்கும் கொள்ளையும் அவருடையது என்பது போல், சத்தியமூர்த்தியும் பார்ப்பனராகவும், அவர் செய்கைகளையும், பேச்சுக்களையும், மன்னிப்புகளையும், மறுப்பு வியாக்கியானங்களையும் வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் பார்ப்பனர். களாகவும் ஆகிவிட்டதாலும், அவற்றைக் கேட்கும் படிக்கும் மக்களும் ஏறக்குறைய 100க்கு 90 பேர், மூடர்களாகவும் பாமரர்களாகவும் ஆக்கப் பட்டு வருவதாலும் சத்தியமூர்த்தி அய்யரின் திருவிளையாடல்கள் செலாவணி ஆகிக் கொண்டு வருவதற்கு இடமேற்பட்டுவிட்டது
தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கொஞ்ச நாளைக்கு முன்பு, ஒரு
முனிசீப்பு வேலையோ அல்லது ஒரு சப் ஜட்ஜ் வேலையோ கொடுக்கப் பட்டிருக்குமானால் இந்தியாவில் ராஜபக்திக்கு அவர் ஒரு வெளிப்படையான உருவாரமாய் இருந்திருப்பார்.
நாளைக்கும் அவருக்கு மாகாணச் சட்டசபையில் ஒரு டிப்டி பிரசிடெண்டு வேலை கொடுப்பதாய் இருந்தால்கூட அவருடைய எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்கச் சிறிதும் தயங்க மாட்டார்.
அப்படிப்பட்டவர் இந்திய சட்டசபை மெம்பர் ஆன உடன், சதா சர்வகாலம் மந்திரி பதவியைப் பற்றிய பேச்சும், எண்ணமும் கனவுமாகவே இருந்து வருகிறார். அவர் பேச்சில் 100க்கு 90 பாகம் மந்திரி பேச்சாகவே இருக்கிறது. அவர் போகும் ஊர்களிலெல்லாம் மக்களிடம் தான் மந்திரியாக வரப் போவதாகவும், தனக்கு மந்திரி பதவி வகிக்கக் கூடிய அறிவோ, யோக்கியதையோ இல்லையா என்கின்ற சந்தேகத்தைத் தெளிவு செய்து கொள்வது என்பதையுமே பேசிக் கொட்டி குவித்துவிட்டு வருகிறார்.
குடி அரசு - 1935 (1) 408
இந்தப் பயித்தியம் முத்தி விட்டதின் பயனாய், இச் செய்திகள் மாகாணமெங்கும் பரவியதோடல்லாமல் இந்தியா தேசமெங்கும் பரவிவிட்டது. இதனால் காங்கிரசில் சரியாகவோ, தவறாகவோ, யோக்கியர்கள் என்று பெயர் வாங்கியிருந்த சிலருடைய நிலைமை மிகஆபத்தாகப் போய்விட்டது.
ஏனெனில் காங்கிரசுக்காரர்கள் உத்தியோகம் பெறுவதில்லை சர்க்காருடன் ஒத்துழைப்பதில்லை என்றெல்லாம் சொல்லி ஓட்டு வாங்கி இருக்கும்போது ஒரு 2, 3 மாதத்துக்குள்ளாகவே அந்த வாக்குறுதிக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்தால், அவர்களது மரியாதை கெட்டுப் போவதுடன், மேலால் ஜனங்கள் நம்ப மாட்டார்களே; அடுத்த எலக்ஷன். வரையாவது வாயை மூடிக் கொண்டிருக்கக் கூடாதா என்கின்ற கஷ்டம் வந்து விட்டதால், காங்கிரசை விட்டு விலகிவிட்டதாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவர்கள் தவிர மற்றவர்களுக்கு மிகச் சங்கடமாகிவிட்டது
ஆதலால், அவர்கள் சத்தியமூர்த்தியாரைக் கண்டிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதன் பலனாய் சத்தியமூர்த்தியார் ஒரு பல்டி அடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அப் பல்டியில் ஒரு மாபெரும் புளுகு புளுகி இருப்பது மிகவும் கவனித்துப் பெரியதொரு சிரிப்புச் சிரிக்கக்கூடியதான வார்த்தையாக இருக்கிறது
அதாவது, தான்மந்திரி ஆகவேண்டுமென்று இருந்தால் 15 வருஷத்துக்கு முன்பே மந்திரி ஆகி இருப்பாராம்.
எப்படி ஆகியிருப்பார்; ஏன் ஆகவில்லை என்பது ஜனங்களுக்குத் தெரிய வேண்டிய ஒரு முக்கிய காரியமல்லவா.
ஏனென்றால் 15 வருஷமாக மந்திரி பதவியை வெறுத்து உதைத்துத் தள்ளிய மாபெரும் தியாகியின் விஷயத்தை ஜனங்கள் அறிய ஆசைப்பட வேண்டியதோ, அல்லது ஜனங்கள் அறியும்படி செய்வதோ மிகவும் சரியான காரியமாகும். பார்ப்பனரல்லாத மக்களின் மாபெருந் தலைவரான தோழர் சர்.பி. தியாகராஜ பெருமான் கூட 5 வருஷ காலம் தான் மந்திரி பதவியை வெறுத்து உதைத்துத் தள்ளிவிட்டு அச் சமூகத்துக்கு அரிய தொண்டு செய்து விட்டு இறந்து போனார். சத்தியமூர்த்தியார் 15 வருஷம் எப்படி மந்திரி பதவியை வெறுத்துத் தள்ளினார் என்பது பற்றி யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது உண்மை! உண்மை!! முக்காலும் உண்மை!!! என்றே விளங்கும். எப்படி எனில், தோழர் சத்தியமூர்த்தியார் நாடகப்
பிரியர் என்பது உலகம் அறிந்த விஷயம். அவர் கொஞ்ச காலமாக சுகுண விலாச நாடக சபையிலும் ஒரு குறிப்பிட்ட மெம்பராய் இருந்து வருகிறார்.
அதற்குமுன்பல நாடகக் கூட்டத்திலும் சம்பந்தம் வைத்துவந்திருக்கிறார்.
409 ட... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஆகவே நாடகத்தில் மந்திரி வேஷம் போடும் சந்தர்ப்பம் இவருக்கு பல தடவை கிடைத்து இருக்கலாம். அதிலும் இவர் அரசியலில் இறங்கி விளம்பரம் பெற்ற பிறகு இவரது மந்திரி நடிப்புக்கு அதிக கிராக்கிகூட ஏற்பட்டிருக்கலாம். அதைச் சத்தியமூர்த்தியார் தமது கவரவத்துக்கு குறைவானது என்று கருதி மறுத்தும் இருக்கலாம். அல்லது தனக்குள்ள தகுதியை திருப்தியைக் கருதி வேறு வேஷம் போட ஆசைப்பட்டும் அடைந்துமிருக்கலாம்
இந்த விஷயங்கள் எல்லாம் மூர்த்தியாருடைய நாடக தோழர்களைக் கேட்டால் இன்னும் நன்றாய் தெரிந்து கொள்ளக் கூடும். ஆகவே அய்யர்வாள் மந்திரி பதவியை வேண்டாம் என்று சொன்னதானது நாடகத்தில் வேஷம் போடும் மந்திரி பதவியே ஒழிய சென்னை அரசாங்கத்தின் நிர்வாகத்துக்கு பொறுப்பாய் இருக்கும் மந்திரி பதவி அல்ல என்பதை வாசகர்கள் அறிய வேண்டுமாய்க் கோருகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.06.1935
குடி அரசு - 1935 (1) 410
10 வருஷ உத்தியோக வேட்டை
பார்ப்பனரல்லாத மந்திரிகளும், பார்ப்பனரல்லாத இயக்கமும் இந்தப் பத்து வருஷ காலத்தில் பார்ப்பனர்களிடத்திலும், அவர்கள் மாய்கையில் சிக்குண்ட பாமர மக்களிடத்திலும் மற்றும் பொறுப்பும் கவலையுமற்ற சுயநல பார்ப்பனரல்லாத மக்கள் சிலரிடத்திலும், எவ்வளவோ கெட்ட பெயரும் பழிகளும் பெற்றும் உத்தியோக விஷயத்தில் பார்ப்பனர். களுக்கு என்ன கெடுதி செய்திருக்கிறார்கள்? பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு தான் நன்மை செய்ய முடிந்திருக்கிறது? என்கின்ற விபரத்தைப்
புள்ளி விபரங்களைக் கொண்டு பார்ப்போமேயானால் இந்த10வருஷகாலத்தில். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்ற கூச்சல் பலமாய் கிளம்பி அந்தப்படி கொடுக்க வேண்டுமென்ற முறை கையாளப்பட்டு வந்த காலம் முதற் கொண்டு நாளது வரையிலும், அதைக் கையாண்டு வந்த முறையினால் எவ்வளவு உத்தியோகங்கள் பார்ப்பனர்களுக்கு முன்னிருந்ததைவிட குறைந்துபோய் விட்டது என்பதும், இதனால் பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு உத்தியோகங்கள். அதிகமாய்க் கொடுக்கப்பட்டுவிட்டதென்பதும் நன்றாய் விளங்கும்
மற்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கைக்குப் பொது ஜனங்களுடையவும், சர்க்காருடையவும் ஆதரவு எவ்வளவோ இருந்தும், வெகுசிறிய சமூகத்தாரான பார்ப்பனர்கள் அதற்கு முட்டுக்கட்டையாயிருந்து தேசியத்தின் பேராலும், திறமையின் பேராலும், தந்திரங்களும் சூழ்ச்சிகளும் செய்து பார்ப்பனரல்லாதாரிலேயே சில கூலிகளையும், சுயநலத் துரோகிகளையும் கொண்டு விஷமப் பிரசாரஞ் செய்து அவ்வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை எவ்வளவு தூரம் பயன் பெற முடியாமல் செய்திருக்கிறார்கள் என்பதும் விளங்கும்.
அதற்காகவே இதனடியில் சில புள்ளி விபரங்களைத் தருகிறோம்
அவற்றில் முறையே ஜுடிஷியல் இலாக்காவென்னும் நீதி இலாக்காவிலும், ரெவினியூ இலாக்காவென்னும் நிர்வாக இலாக்காவிலும்,
கல்வி இலாக்காவிலும், போலீஸ் இலாக்காவென்னும் நிர்வாக இலாக்காவிலும், வைத்திய இலாக்காவிலும், விவசாய கால்நடை இலாக்கா விலும், இஞ்சினியரிங் இலாக்காவிலும், லோக்கல் பண்டு ஆடிட் இலாக்காவிலும், 1924-ல் எவ்வளவு பார்ப்பன உத்தியோகஸ்தர்களிருந்தார்கள்? 1934-ல் A வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
எவ்வளவு இருந்தார்கள்? மொத்தத்தில் எவ்வளவு குறைந்து போய் விட்டது? என்பவற்றைக் கீழ்க்கண்ட புள்ளி விபரங்கள் விளக்குவதாகும்
ஜுடிஷவியல்
இந்த இலாக்காவானது பொது மக்களில் எல்லா வகுப்பாரிடத்திலும் மிகவும் செல்வாக்குள்ளதாகும். இதை பெரும்பாலும் வெகு காலமாகவே எப்படியோ பார்ப்பனர்களே கைப்பற்றி அதன் மூலமே மற்ற சகலவிதமான ஆதிக்கங்களிலும் உத்தியோகங்களிலும் வக்கீல், டாக்டர் முதலிய தொழில்களிலும், சமூகத் துறையிலும், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மக்களை அடக்கி அடிமைப்படுத்தி ஆண்டு வருகிறார்கள். மந்திரிகள். எவ்வளவு வேட்டை ஆடியும் இந்த நீதி இலாக்காத் துறையில் பார்ப்பன ரல்லாதார் முன்னேறுவதற்கில்லாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்
குறிப்பு: கெஸட்டட் உத்தியோகமென்பது நிர்வாக அதிகாரங் கொண்டது. இது பெரும்பாலும் ரூ.300க்கு மேற்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமுடையது
நான் கெஸட்டட் முதல் வகுப்பு என்பது மேற்படி நிர்வாக அதிகாரி களுக்கு மந்திரிகளாயிருந்து காரியாலய நிர்வாகம் பார்ப்பது. இதற்கு மாதம் ரூ.100க்கு மேற்பட்டு ரூ.500 வரையிலும் சம்பளமுண்டு.
நான் கெஸட்டட் இரண்டாந்தர வகுப்பென்பது ரூ.35க்கு மேற்பட்டு ரூ.100 வரையில் சம்பளமுடையது
1. ஜுடிஷியல்
ஹைக்கோர்ட்டு கெஸட்டட் உத்தியோகம்.
வருஷம் பார்ப்பனர்
1924ல் ஆக்டிங் உள்பட 180
1934-ல் 175
நான் கெஸட்டட் உத்தியோகம் முதல் தர வகுப்பு
வருஷம் உத்தியோகம் பார்ப்பனர்
1924 157க்கு 106
1934 130க்கு 95
நான் கெஸட்டட் இரண்டாந்தர வகுப்பு
1924-ல் 82 பேர்
1934-ல் 92 பேர்
குடி அரசு - 1935 (1) 412
ஜில்லா கோர்ட்டு உத்தியோகங்கள்
நான் கெஸட்டட் முதல் தரம்
1924-ல் 97 பேர்
1934-ல் 108
இவர்களெல்லாம் சிரஸ்தார்களும், ஹெட் கிளார்க்குகளுமாவார்கள். இவர்கள் பேனா முனையில் தான் அமீனாக்கள், சேவகர்கள், குமாஸ்தாக்கள்
இருந்து வருகின்றனர். ஜில்லாக்கள் தோறும் நான் கெஸட்டட் ஆபீசர்கள் முதல் தர உத்தியோகத்தில்
பார்ப்பனர்
திருச்சியில் 1924-ல் 3
" 1934-ல் 5
திருநெல்வேலி 1924-ல் 1
- 1934-ல் ய
மேல் தஞ்சை 1924-ல் 4
" 1934-ல் 5
கிழக்கு கோதாவரி 1924-ல் 2
" 1934-ல் 8 "
மேல் கோதாவரி 1924-ல் 4
1934-ல் 6
குண்டூர் 1924-ல் 6
" 1934-ல் 6
கிருஷ்ணா 1924-ல் 7
1934-ல் 6
மதுரை 1924-ல் 5"
1934-ல் 5
கடப்பை 1924-ல் 3
1934-ல் 4
பல்லாரி 1924-ல் 2
1934-ல் 3
413 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
சேலம் இராமநாதபுரம் 1924-ல் 16 வட கனரா
1934-ல் 16"
இப்படிப்பட்ட உத்தியோகங்கள், அதாவது சிறு உத்தியோகஸ்தர் மீதில் ஆதிக்கள் செலுத்தும் உத்தியோகங்கள் எல்லாம் பார்ப்பனர் கையிலேயே இருந்திருக்குமேயானால் பார்ப்பனரல்லாத சிறு உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு பாடுபடுவார்களென்பதையும், அவர்கள் எப்படி அடிக்கடி குற்றவாளி களாக்கப்பட்டு ஒழிக்கப்படுவார்களென்பதையும் நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை
ரூ.35 முதல் ரூ.100 சம்பளமுள்ள 2-ந்தர உத்தியோகங்கள் சென்னை மாகாணத்தில்
1924-ல் 1912 பார்ப்பனர்
1934-ல் 1780
10 வருஷ காலத்தில் சின்ன உத்தியோகங்களில் 132 உத்தியோகங்கள் தான் (அதுவும் குமாஸ்தாக்கள் உத்தியோகங்கள்தான் பார்ப்பனர்களிடமிருந்து வருஷத்துக்கு 10 வீதம்) வேட்டை ஆடப்பட்டு
வந்திருக்கிறது
2. ரெவின்றபூ இலாக்கா
கெஸட்டட் ஆபீசர்கள் - ரெவின்யூ போர்டு, லார்டு ரெவின்யூ கலெக்டர், டிவிஷனல் ஆபீசர்கள்
வருஷம் பார்ப்பனர்
1924ல் 77
பிறகு இந்த இலாகாவில் மொத்தத்தில் 42 உத்தியோகங்குறைந்தும்
1934ல் 80 பார்ப்பனர்:
நான் கெ.ஆ. முதல் தரம்
1924-ல் 334 பார்ப்பனர்
1934-ல் 482
நான் கெ. ஆ. 2ந் தரம்
பார்ப்பனர்
1924-ல் 3964
1934-ல் 3527
குடி அரசு - 1935 (1) 414
10 வருட காலத்தில் 435 உத்தியோகங்கள் அதுவும் குமாஸ்தா வேலைகள் தான் வருஷத்திற்கு 40 அதாவது ஜில்லாவிற்கு ஒன்றரை
வீதந்தான் கைப்பற்ற முடிந்திருக்கிறது ஜில்லா வாரியாக ரூ.100க்கு மேற்பட்ட சம்பளம்
பார்ப்பனர்
அனந்தப்பூர் 38க்கு 27 " வட ஆற்காடு 48-31
செங்கற்பட்டு 37-25
சென்னை 42-28
குண்டூர் 35-23
கோயம்புத்தூர். 35-20
கடப்பை 38 - 26
கஞ்சம் 37-27
கீழ் கோதாவரி 39-21
மேல் கோதாவரி 34-24
மதுரை 38-23
தஞ்சாவூர். 49-23
ஜில்லா வாரியாக ரூ.35 முதல் 100 வரை சம்பளம் உள்ள இரண்டாந்தர வகுப்பு
பார்ப்பனர்
அனந்தப்பூர் 253க்கு 153
வட ஆற்காடு 316 - 157
தென்னாற்காடு 253 - 163
குண்டூர் 199 - 101
கோயம்புத்தூர். 304 - 204
கடப்பை 241-133
கஞ்சம் 274 - 162
கீழ் கோதாவரி 316 - 153
குண்டூர் 297 - 184
தஞ்சை 355 - 205
415 ௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
திருச்சி 269 - 155
சேலம் 315 - 190
3. போலீஸ் இலாக்கா
சென்னை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேற்பார்வையில்
கெஸட்டர் ஆபீசர்
1924-ல் 17 பார்ப்பனர்
1934-ல் 20
நான் கெஸட்டட் முதல் தரம்
1924-ல் 722 பார்ப்பனர்
1934ல் 678
ஜில்லா போலீஸ் இலாக்கா
கெஸட்டட் ஆபீசர்
1924-ல் 33 பார்ப்பனர்:
1934-ல் 45
ரூ.100க்கு மேல் சம்பளமுள்ள நான்கெஸட்டட் உத்தியோகங்களில்
அனந்தப்பூர், நெல்லூர், குண்டூர், இராமநாதபுரம், தென் கன்னடம், சேலம், கிருஷ்ணா, தஞ்சாவூர், மதுரை முதலிய ஜில்லாக்களில் எல்லோரும் பார்ப்பனர்களே
நான் கெஸட்டட் 2ந் தரம்
1924ல் 283 பார்ப்பனர்
1934ல் 264
செக்ரட்டிரியேட்
கெஜட்டட் உத்தியோகம்
1924ல் 6 பார்ப்பனர்
1934ல் 8
நான் கெஜட்டட் முதல் தரம்
1924ல் 70 பார்ப்பனர்:
1934ல் 79
குடி அரசு - 1935 (1) 416
இரண்டாந்தர வகுப்பு
1924ல் 40 பார்ப்பனர்
1934ல் 46
ஜெயில் இலாக்கா
கெஜட்டட் ஆபீசர்
1924ல் 1 பார்ப்பனர்
1934ல் 2
நான் கெஜட்டட் ஆபீசர்
முதல் தரம்
1924ல் 22 பார்ப்பனர்
1934ல் 24
2ந் தர வகுப்பு
1924ல் 37 பார்ப்பனர்
1934ல் 44
எக்ஸைஸ் சங்க இலாக்கா
கெஜட்டட் ஆபீஸர்
1924ல் 29 பார்ப்பனர்
1934ல் 24
நான் கெஜட்டட் ஆபீஸர்
ரூ.100க்கு மேல் சம்பளம்
1924ல் 17 பார்ப்பனர்
1934ல் 30
நான் கெஜட்டட்
ரூ.35 - 100 வரை சம்பளமுள்ள உத்தியோகங்கள்.
1924ல் 456 பார்ப்பனர்
1934ல் 426
10 வருஷங்களில் 30 தான் குறைந்திருக்கிறது 417௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
4. கல்வி இலாக்கா நான் கெஜட்டட் உத்தியோகஸ்தர்கள் சம்பளம் ரூ.35-100
கல்வி டைரக்டர் ஆதிக்கத்தின் கீழுள்ள கெஜட்டட் ஆபீஸர்கள் 1924ல் 78 பார்ப்பனர்.
1924ல் 41 பார்ப்பனர் 1934ல் 140
1934ல் 48 v பொதுஜன சுகாதார இலாக்கா கெஜட்டட் ஆபீஸர்கள்
ரூ.100க்கு மேற்பட்ட 1924ல் 2 பார்ப்பனர்
நான் கெஜட்டட் முதல்தர வகுப்பு ஆபீஸர்கள் 1934ல் 17
1924ல் 433 பார்ப்பனர் நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகஸ்தர்
1934ல் 459 சம்பளம் ரூ.100க்கு மேல்
2-நீ தர வகுப்பு 1924ல் 196 பார்ப்பனர்
1924ல் 57 பார்ப்பனர் 19346 187
1934ல் 118 நான் கெஜட்டட் 2-ம் வகுப்பு கல்வி இலாக்காவில் ஜில்லா அதிகாரிகள் அதிகாரத்திலுள்ள
i ந 19246 12 பார்ப்பனர் உத்தியோகங்கள். 19344 26 சம்பளம் ரூ.35-100 @
1924ல் 629 பார்ப்பனர் 6. விவசாய இலாக்கா
1934ல் 798 கெஜட்டட் உத்தியோகம்
ஆக 169 பேர் அதிகம் ஏப்ரல் 1924ல் 10 பார்ப்பனர்
5. வைத்திய இலாக்கா 1934ல் 2L ெட்டட் உத்தியோகஸ்தர்கள் நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம் 2
1924ல் 95 பார்ப்பனர் 1924ல் 68 பார்ப்பனர்
1934ல் 137 1934ல் 174
நான் கெஸட்டட் ஆபிஸர்கள் நான் கெஜட்டட் இரண்டாம் வகுப்பு உத்தியோகம்
1924-ல் 360 பார்ப்பனர் 1924ல் 128 பார்ப்பனர்
1934-ல் 262 1934ல் 148
ஜில்லா உத்தியோகஸ்தர் ஆதிக்கத்தில் ரூ.100க்கு மேல் 7. கால்நடை இலாக்கா சம்பளமுள்ள நான் கெஜட்டட் ஆபீஸர்கள் கெஜட்டட் உத்தியோகம்
1924ல் 17 பார்ப்பனர் 1924ல் 3 பார்ப்பனர்
1934ல் 2 19346 s
குடி அரசு - 1935 (1) 418 49 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்
1924ல் 107 பார்ப்பனர்
1934ல் 130 பார்ப்பனர்
நான் ஜெகட்டட் இரண்டாம் வகுப்பு உத்தியோகம்
1924ல் 11 பார்ப்பனர்
1934ல் 32
8. இன்ஜினியரிங் இலாக்கா
கெஜட்டட் உத்தியோகம்
1924ல் 72 பார்ப்பனர்
1934ல் 105
நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்
சம்பளம் ரூ.100க்கு மேல்
1924ல் 315 பார்ப்பனர்
1934ல் 510
நான் கெஜட்டட் இரண்டாம் வகுப்பு உத்தியோகம்
1924ல் 457 பார்ப்பனர்
1934ல் 459
9. லோக்கல் பண்டு ஆடிட் இலாக்கா
கெஜட்டட் உத்தியோகம்
1924ல் 4க்கு 3 பார்ப்பனர்
1934ல் 3க்கு 2
ரூ.100க்கு மேற்பட்ட நான் கெஜட்டட் உத்தியோகம்
1924ல் 1485 48 பார்ப்பனர்
1934ல் 120க்கு 93
10.மொத்தத்தில் சென்னை கவர்ண்மெண்டில் உன்ன
உத்தியோகங்கவின் எண்ணிக்கை விவரம் சாஸ்வதமான கெறுட்டட் உத்தியோகம்
1924ல் 566 பார்ப்பனர்
1934ல் 647
குடி அரசு - 1935 (1)
10 வருஷத்தில் 81 பேர் அதிகப்பட்டிருக்கின்றனர்.
நான் கெஜட்டட் முதல் வகுப்பு உத்தியோகம்
சம்பளம் 100க்கு மேல்.
1924ல் 3648 பார்ப்பனர்
1934ல் 3965
10 வருஷத்தில் 317 பேர் அதிகம்
நான் கெஜட்டட் 2வது வகுப்பு உத்தியோகம் ரூ.35-100
1924ல் 10,342 பார்ப்பனர்
1934ல் 9828
10 வருஷத்தில் குமாஸ்தாக்கள் உத்தியோகங்களில் மாத்திரம் 514
ஸ்தானம் குறைக்க முடிந்திருக்கிறது எல்லா இலாக்காக்களிலும் 35 ரூபாய் சம்பளத்துக்கு மேல் ரூ.100க்குள்பட்ட உத்தியோகத்தில் இருக்கும் பார்ப்பனர்களின் எண்ணிக்கை
பார்ப்பனர்:
1924ல் 14,516
1934ல் 14,440 »
10 வருஷத்தில் 70 பேர்களே தான் குறைவுபட்டிருக்கிறார்கள். வருஷா வருஷம் பர்மனன்ட் உத்தியோகங்களில் இருந்து பார்ப்பனர். குறைந்து கொண்டு வருகிறார்களென சிலர் நினைக்கக் கூடும். அப்படி எண்ணுவது சரியல்ல. ஏனெனில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுவதற்கு முன்னமேயே அவர்கள் பர்மனன்ட்டானவர்கள்.
கெஜட்டட் ஆக்டிங் உத்தியோகங்கள்
1934ல் பார்ப்பனர் மட்டும் 186
1934ல் பார்ப்பனரல்லாதார்,
தாழ்த்தப்பட்டவர், முஸ்லீம், இந்து, கிறிஸ்துவர் மற்றுமுள்ளவர்கள். எல்லோரும் சேர்ந்து 191 ஆகவே பார்ப்பனர்கள் தென்னிந்தியாவில் மற்ற எல்லா சமூகத்தார். களையும்விட 5 பேர்தான் எண்ணிக்கையில் குறைந்து இருக்கிறார்கள்.
பரிதாபம்!
நான் கெஜட்டட் உத்தியோகம் ஆக்டிங் டெம்பரரி உத்தியோகம் சம்பளம் ரூ.100க்கு மேல் 2 வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
பார்ப்பனர் மட்டும் 597,
இதர சமூகத்தினர் எல்லாரும் சேர்ந்து 690
நான் கெஜட்டட் உத்தியோகம் சம்பளம் ரூ.35க்கு மேற்பட்டும், 100க்கு குறைவும்
பார்ப்பனர் மட்டும் 2414
பார்ப்பனரல்லாதார்,
முஸ்லீம்,
தாழ்த்தப்பட்டோர்,
கிறிஸ்தவர் மற்றுமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து - 3682
இந்தப்படியான உத்தியோகங்களின் மொத்த சம்பளம் ரூ.332
லட்சத்தில் 1008 3 வீதம் உள்ள பார்ப்பனர் மாத்திரம் வருஷம் 159 லட்ச ரூபாய் அடைகிறார்கள். மற்ற வகுப்பார் இந்து, கிறிஸ்தவர்,
முஸ்லீம், தாழ்த்தப்பட்டவர்கள் முதலிய எல்லோரும் சேர்ந்து 10௦க்கு
49 வீதம் உள்ள மக்கள் 163 லட்ச ரூபாயே பெறுகிறார்கள்.
இந்தப் புள்ளி விபரங்கள் சிறிதாவது தவறானதென்றோ அதிகப் படுத்திக் கூறுவதென்றோ யாரும் கருதிவிடக் கூடாது என்றும் சர்க்கார் கணக்கு புள்ளி விபரங்களையே பார்த்து அதிலுள்ளபடியே குறிப்பிடப் பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
இன்று இந்நாட்டில் செல்வவானாய் இருந்தாலும், ஏழையாய் இருந்தாலும் ஜமீன்தாரராகவும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சாதாரண தொழிலாளியாகவோ, கூலிக்காரனாகவோ
இருந்தாலும் ஒவ்வொருவனும் அவனுடைய வாழ்க்கைக்கு உத்தியோகத்தையே முதலில் எதிர்நோக்குகிறான் என்பதையும் அதை மனதில் வைத்தே அவனவன் பிள்ளையை படிக்க வைக்கிறான் என்பதையும், படித்தஉடன் அவன் படிப்புக்குத் தக்கபடியும், அதற்கு மேற்பட்டும் உத்தியோகத்தையே தேடித் திரிகிறான் என்பதையும் மக்கள் நிலையை அறிந்தவர் எவரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம்
அப்படி இருக்கும் போது ஒரு தனி மனிதனோ ஒரு தனி வகுப்போ உத்தியோகத்தை தேடித் திரிவதையோ உத்தியோக வேட்டை ஆடுவதையோ,
யாரும் தப்பு என்று சொல்லிவிட முடியாது என்பதே நமதபிப்பிராயமாகும்
அதிலும் சர்க்கார் உத்தியோகம் என்பது பொது ஜனங்களுடைய பொது சொத்தாகும். பொது ஜன நன்மைக்கு என்று பொது ஜனங்களுடைய
வரிப் பணத்தால் இவ்வுத்தியோகங்கள் நடந்து வருகின்றனவே ஒழிய வேறில்லை. ஆகவே பொதுஜன நன்மையைக் கோருகின்றவர்கள்
குடி அரசு - 1935 (1) 422
என்பவர்களும் வரி கொடுக்கும் ஒவ்வொருவரும் உத்தியோகங்களை அனுபவிக்கவும் ஆசைப்படவும் எப்படியாவது அதை அடைய முயற்சிக்கவும் அருகதை உடையவர்களேயாவார்கள்.
ஜனங்களுக்குப் போதிய அறிவில்லாதபோது இதைப் பற்றி யாரும் கவலைப்படாமல் இருந்தும் ஏதோ பிரைஸ் சீட்டு கிடைத்ததுபோல் அதுவும் சிலருக்கே கிடைக்கும்படி செய்து ஒரு வகுப்பாரே அனுபவித்து வந்ததைக் கண்டும் அதை யோகம் என்றும், பாக்கியம் என்றும், முன் ஜன்ம பூஜா பலன். என்றும் சொல்லப்படுவதை நம்பி, மக்கள் முட்டாள்தனமாய் அலக்ஷியமாய் இருந்து வந்தார்கள். அதனால் பார்ப்பனர்களே எல்லா பெரிய உத்தியோகங் களையும் கைப்பற்றி அதன் பயனை தங்கள் சமூகத்தாரே அடையும்படி
செய்ய முடிந்தது. ஆனால் இப்போது ஜனங்கள் பலவழிகளிலும் கண் விழித்துக் கொண்டு வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள் அனுபவித்து வந்த உத்தியோகங்களை இந்தியர்கள் அனுபவிக்க வேண்டும் என்று கேட்பது எப்படி நியாயமாகவும் கண்விழிப்பதாகவும் ஆய்விட்டதோ, அது போலவே பார்ப்பனர்கள் என்கின்ற ஒரே ஜாதியார் அனுபவித்து வந்த உத்தியோகங்களை பார்ப்பனரல்லாதார் திராவிடர்கள் என்பவர்களும் அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதும் நியாயமாகவும் கண்விழிப்பாகவும் ஆகிவிட்டது
அதனாலேயே இதுவரை உத்தியோகம் அனுபவிக்காதவர்களும் இனி அனுபவிக்க ஆசைப்படுபவர்களும் அதையே தங்கள் நோக்கமாக வைத்து ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்களின் தொல்லைக்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இதைச் சமாளிக்க எப்படிப்பட்ட 'பழிபாவங்கள்'' சுமத்தப்பட்ட போதிலும் அந்தப் பழி பாவங்களுக்கு சிறிதும் அஞ்சாமல் நடந்து தீர வேண்டியதாய் இருக்கிறது இதை அவமானம் என்றோ, தேசத் துரோகம் என்றோ, குலாம்தன. மென்றோ கருதுகிறவன் எவனானாலும் அவனை மூடன் என்றும், பொறுப்பை அறியாதவன் என்றும், கோழை என்றும்தான் சொல்லுவோம்
இந்த உணர்ச்சியைக் கிளப்பிவிட்ட டாக்டர் நாயர் அவர்களையும்
சர். தியாகராயர் அவர்களையும் இதே பார்ப்பனர்கள் எவ்வளவு பழித்து இழித்துக் கூறியும் உண்மையான பார்ப்பனரல்லாதார் ரத்தம் ஓடும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும் இன்று வீட்டில் அவர்களது படங்களை வைத்துக்கூட போற்றித்தான் வருகிறார்களே ஒழிய யாரும் அவர்களை தேசத் துரோகி என்றோ மானம் இழந்தவர்கள் என்றோ குலாம்கள் என்றோ.
கூறத் துணியவில்லை.
அவர்களுக்குப் பின் அவர்களைப் பின்பற்ற வந்தவர்களின் கவலை குறைவாலும், சுயநலத்தாலும் யோக்கியப் பொருப்பற்ற குணத்தாலும் 2 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
மற்றும் நமது பிறவி எதிரிகளாகிய பார்ப்பனர்களின் விஷமங்களாலும்,
சூழ்ச்சிகளாலும் அம்முயற்சி சரியான பலன் அளிக்காமல் போய்விட்டது என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய, அதைத் தவறு என்று சொல்ல
சிறிதும் நியாயமும், ஆதாரமும் இல்லை.
எது எப்படி இருந்தாலும் தேசத்தைப் பொருத்ததானாலும், சமூகத்தைப் பொறுத்ததானாலும் பொருள் இயலைப் பொறுத்ததானாலும் எந்தக் காரியம் செய்யவேண்டியிருந்தாலும் பார்ப்பனர்கள் கையில் இந்தப்படி ஏகபோகமாய் இருந்து வரும் அதிகாரங்களை ஒழித்து அவர்களது விகிதாச்சாரத்துக்குமேல். அனுபவிக்க முடியாமல் செய்தாலொழிய சுலபத்தில் சாத்தியப்படக் கூடிய தல்ல என்பதை எவரும் ஒப்புக் கொள்வார்கள் என்றே நினைக்கிறோம் ஆகவே பார்ப்பனரல்லாதாரின் இந்தப் பத்து வருஷ காலத்திய உழைப்பானது "உத்தியோக வேட்டை”, “உத்தியோக வேட்டை'' என்று பெயர் வாங்கிக் கொள்ளத்தான் முடிந்திருக்கிறதே தவிர பார்ப்பனர்களின் வேட்டையை ஒரு சிறிதுகூட தடுக்க முடியவில்லை என்பதும், உத்தியோகத்தில் பார்ப்பன ஆதிக்கம் முன்னையவிட பலப்பட்டுக் கொண்டுதான் வருகிறது என்பதும் இப்புள்ளி விவரங்களில் இருந்து வாசகர்கள் உணருவார்கள் என்றே நம்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.06.1935
குடி அரசு - 1935 (1) 424
ஒரு நற்செய்தி “விடுதலை?
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து,
தமிழ் பத்திரிகை ஒன்று விடுதலை என்னும் பேரால், வாரம் இருமுறையாக சென்னையில் இருந்து வெளியாகி இரண்டு இதழ்கள் நமது பார்வைக்கு வந்தன. அதைப்பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
ஏனெனின் 2, 3 வருஷங்களாகவே பரிசுத்த வீர ரத்த ஓட்டமுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், இரவும் பகலுமாய் தமிழ் பத்திரிகை!
தமிழ் பத்திரிகை!! தமிழ் பத்திரிகை!!! என்கின்ற தாகத்துடன் அலைந்து கொண்டிருந்ததும், அதை எந்தத் தலைவர்களும் கவனியாமல் அலட்சியமாய் இருந்ததும், அதன் பயன்களை சமீபகாலத்தில் ஏற்பட்ட பல தேர்தல்களின் மூலம் அனுபவித்ததும், மறுபடியும் புதிய முறையில் முன்னிலும் அதிகமாக இரண்டு பங்கு சப்தத்துடன் தமிழ் பத்திரிகை! தமிழ் பத்திரிகை! தமிழ் பத்திரிகை!!! என்று மக்கள் கூப்பாடு போட்டதுமான விஷயம் யாரும் அறியாததல்ல. அப்படிப்பட்ட நிலையில் “விடுதலை” என்னும் பேரால் ஒரு பத்திரிகை வெளியாய் இருப்பதைப் பார்த்து எந்தப் பார்ப்பனரல்லதாரும் தங்களுக்கு ஏதோ ஒரு “பாக்கியம்” கிடைத்ததாக மகிழ்ச்சியடைவார்களே ஒழிய, இதற்கு மதிப்புரை வருகின்றதா? அது எப்படி வருகின்றது? என்று யாரும் கவனிக்க மாட்டார்கள்.
ஆதலால் நாம் மதிப்புரை எழுதும் வீண் வேலையில் பிரவேசிக்காமல், “வந்துவிட்டது! தமிழ் பத்திரிகை!” என்று விளம்பரம் செய்யவே ஆசைப்படுகின்றோம்.
'“விடுதலை'' பத்திரிகை இன்று வாரம் இரு முறையாக வெளி வந்தாலும், கூடிய சீக்கிரம் தமிழ் மக்கள் ஆதரவுக்கு ஏற்ப தினசரி ஆகும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
பத்திரிகையானது நல்ல மாதிரியில் பார்ப்பன விஷமப் பிரச்சாரங் களுக்கு மார்பைக் காட்டும் முறையில் சரியான விஷயங்களைக் கொண்டு வெளியாகி வருவதால் அதை ஆதரிக்க வேண்டிய அவசியம் எந்த
விதத்திலும் குறைவாக காணப்படவில்லை என்றே சொல்லுவோம்
495 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இப்பத்திரிகைக்கு உள்ள கஷ்டம், எதிர்ப்பு, சூழ்ச்சி, தொல்லை ஆகிய விஷயங்களைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை
இப்படிப்பட்ட தொல்லைகளுக்கு இடையே ஒரு பத்திரிகை வாழ்வதென்றால் மிகவும் ஆச்சரியமான காரியமாகும். இதுவரை பார்ப்பனர்களுக்கு விரோதமானது என்று காணப்பட்ட பத்திரிகைகள் எதுவும் நமது நாட்டில் வாழவே இல்லை எவ்வளவோவீரமாக ஆரம்பித்த பத்திரிகைகள் எல்லாம் வருடாந்திரம் ஆவதற்குள் ஒன்றா பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டியது, அல்லது மறைந்து போக வேண்டியது என்கின்ற நிலையில் தான் இருந்து வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் குடி அரசு ஏதோ பாஷாணத்தில் புழுத்த புழுப்போல் உயிர் வைத்துக் கொண்டு வருகின்றது என்றாலும், அதுவும் இதுவரை அடையாத கஷ்டமோ, தொல்லையோ இனி புதிதாக ஒன்று இருப்பதாகத் தோன்றவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் ''விடுதலை'' தோன்றி இருக்கின்றது என்பது ஒரு விதத்தில் சந்தோஷம் என்றாலும், மற்றொரு விஷயத்தில் எந்த நிமிஷத்தில் அதற்கு ஆபத்து வரப் போகின்றதோ என்று பயப்பட வேண்டியதாகவே இருக்கிறது எப்படியோ ஒரு விதத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்த்தபடி தமிழ் பத்திரிகை ஒன்று வந்து விட்டது. அதை ஆதரித்து தினசரியாக்கி நிலை
நிறுத்த வேண்டியது தமிழ் மக்கள் கடமையே ஒழிய, இனி தலைவர்களைக்
குற்றம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அதன் நோக்கம், அதன் தொண்டு ஆகியவைகளைப் பற்றி யாரும் சந்தேகப்பட வேண்டிய காரணமே யாருக்கும் கிடையாது. ஆகையால் அதைப்பற்றி கவலைப்படாமலும், அதற்கு யாரும் புத்தி புகட்டும் வேலையில் இறங்காமலும், ஒவ்வொருவரும் சந்தாதாரர்களாக சேர்ந்துவிட வேண்டும். சந்தா தொகை வாரம் இருமுறைக்கு வருஷம் 3-10-0 ஆகும். இதைவிடக் குறைந்த தொகைக்கு தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ ஒரு வாரம் இருமுறை 10 பக்கம் விஷயம் கொண்ட பத்திரிகை ஒன்று இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ரூ.3-10-0நாளையே மணியார்டர் அனுப்பிவிட வேண்டியது அவசியமான காரியம் ஆகும். 3 மாதத்திற்குள் 2000 சந்தாவாவது சேர்ந்தால் “விடுதலை” தினசரி ஆகிவிடலாம் என்பதில் சந்தேகமில்லை. அதன் பத்திராதிபர் தோழர்
டி.எ.வி. நாதன் அவர்கள்; ஜஸ்டிஸ் பத்திரிகையை நடத்தி வந்தவர் - ஆனதால் அப்பேர்ப்பட்ட அறிவாளியால் நடக்கும் பத்திரிகை நீடூழி வாழ்ந்து பாமர மக்களுக்கும் பண்டிதர்களுக்கும் பயன்பட்டு உலக மக்களுக்கு உண்மை விடுதலையைக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.06.1935
குடி அரசு - 1935 (1) 426
கடவுள் கருணை
சென்ற ஆண்டில் பீகாரில் நடந்த பூகம்பத்தின் அதிர்ச்சி இன்னும் நமது மனதைத் திடுக்கிடச் செய்து கொண்டிருக்கின்றது; அதனால் ஏற்பட்ட கஷ்டங்களினின்றும் மக்கள் இன்னும் விடுபடவில்லை; நஷ்டங்கள். இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.
இதற்குள் திடீரென்று சென்ற 31.5.35 காலை நாலு மணிக்கு மக்கள். அயர்ந்து உறங்குகின்ற சமயத்தில் பலுஜிஸ்தானத்தைச் சேர்ந்த குவெட்டா நகரத்திலும் அதைத் சுற்றியுள்ள கிராமங்களிலும் பூமி அதிர்ச்சி உண்டாகி ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் பெண்டு, பிள்ளை, தாய், தந்தை, சோதர சோதரி, உறவினர், வீடு, சேர்த்து வைத்திருந்த சொத்து முதலியவை
களுடன் விழுங்கி விட்டது
பூகம்பத்தின் போதும் அதன் பின்னும் மக்கள் பட்ட அவதிகளை
நினைக்கும் போது எத்தகைய கல் மனதும் உருகாமற் போகாது
சென்ற ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தைக் “கடவுள் சித்தம்” என்று தோழர் காந்தியாருள்ளிட்ட சிலர் கூறினார்கள். வைதீக பிண்டங்களும் தலையசைத்தார்கள். இவ்வாண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தை யாருடைய
சித்தம் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை
கடவுள்!” சித்தத்தால் உண்டான இந்தப் பூகம்பத்தில் மக்கள் மாத்திரம் மடிந்து போகவில்லை; அவர்கள் சொத்துச் சுதந்திரங்கள் மாத்திரம் அழியவில்லை; அந்தக் கடவுளின் இருப்பிடம் என்று கருதப்படுகின்ற கோயில்கள் இடிந்தன; சர்ச்சுகள் தகர்ந்தன; மசூதிகள் விழுந்தன; ஆதலால் எந்தக் கடவுளின் கோபத்தால் இந்தப் பூகம்பம் நிகழ்ந்ததென்று தெரியவில்லை; இந்துக்கள் மடிந்தனர்; முஸ்லீம்கள் மடிந்தனர்; கிறிஸ்தவர்கள் மடிந்தனர்; வெள்ளையர்கள் மடிந்தனர்; பார்சிகள் மடிந்தனர். இன்னும் எந்தெந்த மதத்தினர்கள் அங்கு இருந்தார்களோ அவர்கள் எல்லோரும் மடிந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயம் பட்டனர்; காலொடிந்தனர்; கையிழந்தனர்; கண்ணிழந்தனர்; மூளை சிதறினர் - இவ்வாறாக எல்லா மதத்தைச் சேர்ந்த மக்களுக்கும், எல்லா மதக் கடவுளும் சேர்ந்து துன்பத்தைக் கொடுத்தார்களா? ஏன் அந்தக் கடவுள்களுக்கு இவ்வளவு கோபம்? அங்கிருந்த மக்கள் எல்லோரும் நம்மைப் போல கடவுள்களுக்கு விரோதமான சுயமரியாதைக்காரர்களா? இல்லையே!
427 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
ஆனால் பூகம்பம் எப்படி ஏற்படுகிறது என்பதை அறிந்தவர்கள். இந்தக் “கடவுள் சித்தம்” என்று சொல்லி மக்களை மூடர்களாக ஆக்க இதையும் ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்திக் கொள்ளுவதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பூகம்பத்தைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவதை கவனிப்போம்
பூமியின் அடியில் நெருப்புக் குழம்பு இருந்து கொண்டிருக்கின்றது.
அதில் குளிர்ச்சி பட்டால் உடனே கொதிப்பு உண்டாகிறது. சாதாரணமாக
எரியும் விளக்கில் சிறிது தண்ணீர்த் துளி தெறித்தால் அவ்விளக்கின். ஜ்வாலை எப்படி குதிக்கிறதோ அது போலவே இக் கொதிப்பும் உண்டாகிறது. இவ்வாறு கொதிப்பு உண்டானவுடன், அதனால் பூமியின் மேல் உள்ள மலைகள் அசைய ஆரம்பிக்கின்றன. இந்த அசைவினாலேயே பூகம்பம் உண்டாகின்றது. பூமியின் அடியில் நெருப்புக் குழம்பின் கொதிப்பு அதிகப்பட்டால், பூமி வெடித்து அதன் வழியே நெருப்புக் குழம்பு மேலே வருவதும் உண்டு. இதுதான் எரிமலை என்று சொல்லப்படுவது ஆகவே பூகம்பம், எரிமலை முதலியவைகள் தோன்றுவதற்கு உண்மைக் காரணங்கள் இதுவேயாகும். இதே இயற்கை நிகழ்ச்சி யாருடைய சித்தத்தினாலும் உண்டாவதல்ல, யாருடைய கருணை
யினாலும் நிறுத்தப்படுவதல்ல.
இயற்கையின் வேறுபாடே பூகம்பம் போன்ற தீமைகள் நேருவதற்குக் காரணமாக இருக்கின்றது. இப்படிப்பட்ட இயற்கையின் கோளாறினாலேயே
சென்ற ஆண்டில் பீகார் பூகம்பம் நிகழ்ந்தது. இப்பொழுதும் குவெட்டாவில்
நடந்திருக்கின்றது. அதனால் உண்டான முழுச் சேதத்தையும் பற்றி வேறு
ஓரிடத்தில் பிரசுரித்திருப்பதைப் படித்தால் உண்மை விளங்கும்
ஆதலால் இயற்கையில் நிகழ்ந்த இந்தப் பூகம்பத்தை யாரும் “கடவுள்!” என்ற அர்த்தமற்ற சொல்லின் மேல் பழி போட்டுச் சும்மாவிருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறோம். கடவுளால் நிகழ்ந்ததென்றால், அதனால் உண்டான கஷ்ட நஷ்டங்களை நிவர்த்திப்பதற்கு நமக்கு எப்படி முடியும்? அந்தக் கடவுள் தானே நிவர்த்திக்க முன்வர வேண்டும்? கடவுள் கஷ்டத்தை நிவர்த்தி செய்து விடுவாரென்று நாம் சும்மாவிருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. மக்கள் இன்னும் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். ஆதலால் இந்த முட்டாள்தனத்தைக் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்து விட்டுக் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து காப்பாற்றுவதற்கு முன் வருவது மனிதாபிமானமுள்ள மக்களின் கடமையாகும்.
இறந்து போனவர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில் பயனில்லை. 35 கோடி மக்களில் - அதுவும் அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், சதா கஷ்டத்தையே அனுபவிப்பவர்களாகவும் மனதிருப்தியற்ற வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருக்கின்ற மக்களில் ஒரு அறுபதினாயிரம் மக்கள் இறந்தார்களென்றால் - அறுபதினாயிரம் மக்கள் விடுதலைப் பெற்றுக்
குடி அரசு - 1935 (1) 428
கஷ்டத்தினின்றும் நீங்கினார்கள் என்றுதான் நாம் நினைத்துச் சந்தோஷப்பட வேண்டுமேயொழிய துக்கப்பட வேண்டுமென்று நமக்குத் தோன்றவில்லை. இவ்வாறு கஷ்டப்படுகின்ற மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு இறக்கின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு லாபந்தான். நமது வருத்தமெல்லாம், இப்பொழுது குவெட்டாவில் இறந்து போகாமல் உயிருடன் இருப்பவர்களைப் பற்றியதுதான். அவர்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, தங்க இடமின்றி அங்கஹீணர்களாய், உதவியற்றவர்களாய்ப் பரிதவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதே நமது கடமையாகும்
நமது அரசாங்கம் முழு மனது வைக்குமாயின், வறுமைப்பட்டுத் தவிக்கும் மக்களை இன்னும் வறுமைப்பட விடாமல் தாங்களே முன் வந்து இக்கஷ்டத்தை நிவர்த்தி செய்து விட முடியுமாயினும், அவர்கள் அவ்வாறு உதவி செய்யப் போவதில்லை. அத்தகைய முறையிலும் நமது அரசாங்க அமைப்பு இல்லை. ஆதலால் ஓரளவாவது அரசாங்கத்தார் செய்வதற்கு முன்வரும் உதவியைப் பாராட்டிப் பொது ஜனங்களுக்கும் குவெட்டாவில் உள்ள மக்களின் கஷ்டத்தை நீக்குவதற்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்ளுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 09.06.1935
499 ட... ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
சங்கராச்சாரியின் சங்கடம்
கொள்ளையடித்த பணம் கொன்ளை போயிற்று
- யோசிப்போன்
தற்சமயம் காசியில் தங்கியிருக்கும் ஸ்மார்த்த பிராமணக் கூட்டத்தின். தலைவரான ''லோக குரு'' சங்கராச்சாரியாரிடம் இருந்த ஏராளமான சொத்துக்கள் திருட்டு போய்விட்டன. அவருடைய பூஜையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 விக்கிரகங் களும், 2% தோலா தங்கம் வைத்துக் கட்டப்பட்டிருந்த பெரிய சங்கு ஒன்றும் திருட்டுப் போய்விட்டனவாம். இவற்றின் விலை பல ஆயிரக்கணக்கான. ரூபாய் பெறுமானமுள்ளதென்று கூறுகிறார்கள்.
பூஜையில் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்களுக்கோ அல்லது லோக குரு” என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றித் திரிகின்ற சங்கராச்சாரியாருக்கோ ஏதாவது “சக்தி” யென்பது இருந்தால், திருடர்கள் அவைகளை எடுத்துக் கொண்டு போயிருக்க முடியுமா? என்று இப்பொழுது தான் மூடஜனங்கள் யோசித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒன்றுந் தெரியாத பாமர மக்களையும், பார்ப்பனர்களின் தயவு பெற அவர்கள் காலை வருடிக் கொண்டு கிடக்கும் பார்ப்பனரல்லாத பணக்காரர் களையும் ஏமாற்றிப் பாத காணிக்கையென்னும் பேரால் பகிரங்கப் பகற் கொள்ளை போல் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பொருள் நிஜமாகவே கொள்ளை போனதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்ன இருக்கிறது? என்று உண்மை தெரிந்தவர்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்.
திருடர்களைக் கண்டுபிடிக்க போலீசாரும் அதி தீவிர முயற்சி செய்து வருகிறார்களாம்!
ஐயோ! பரிதாபம்! சங்கராச்சாரியார் அவர்களே! சங்கடப்பட வேண்டாம்! தேசத்தில் இன்னும் எவ்வளவோ முட்டாள்களிருக்கிறார்கள். மற்றொரு சுற்றுப் பிரயாணத்தை தடபுடலாக விளம்பரத்துடன் நடத்தினால் இழந்த பொருளையும், அதற்கு மேலான பொருளையும் சம்பாதித்துக் கொள்ளலாம். முட்டாள்கள் இருக்கும் வரையில் தங்களுக்கு ஏன் கவலை? ஆகையால் கவலைப்படாதீர்கள் என்று ஆருதல் சொல்லுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 09.06.1935
குடி அரசு - 1935 (1) 430
தவறுதல்
ஜூன் மாதப் பகுத்தறிவுப் பத்திரிகையின் மேல் அட்டை, பறிமுதலுக்கு முன்பாகவே அச்சாகி விட்டதால் புத்தக விளம்பரத்தில் 'பாதிரியும், பெண்களும், பாவ மன்னிப்பும்” என்ற புத்தக விளம்பரம் எடுக்க முடியாமல் போய் விட்டது. அப்புத்தகம் நம்மிடம் கிடைக்கா தென்றும் எல்லாப் புத்தகமும் சர்க்கார் வசம் ஒப்புவிக்கப்பட்டாய் விட்டதென்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
- போர்)
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 09.06.1935
B வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
பாராட்டுகிறோம்
மற்ற பாகத்தையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்
17-12-39ந் தேதி கூடிய ஈரோடு முனிசிபல் கூட்டத்தில் முனிசிபல் கெளன்கிலர் தோழர்கள் எஸ்.ஆர் கண்ணம்மாள், கேசவலால் சேட் அகியவர்கள் முனிசிபல் அதிகாரத்திற்குட்பட்ட உத்தியோங்களில், பெண்களையும் நியமிக்க வேண்டுமென்று தீர்மானங்கள் கொண்டுவந்ததும் அத்தீர்மானங்கள் கில திருத்தங்களுடன் நிறைவேறியதும் வாசகர்கள் அறிந்திருக்கலாம்
அத்தீர்மானங்களின்படி முதலாவதாக அம்மைகுத்தும் வேலைக்கு ஒரு பெண்மணியையும், ஆண் பாடசாலைகளுக்கு பல பெண் உபாத்தியாயனிகளையும், ஆண் பிள்ளைகளையும், பெண் பிள்ளைகளையும் ஒன்றாகச் சேர்த்தும், அவற்றிற்கும் பெண் உபாத்தியாயனிகளையும் ஆண்: உபாத்தியாயர்களும் சேர்ந்து கற்பிக்கும்படியும் உத்திரவிட்டிருக்கிறார்கள். இதற்காக நாம் முனிசிபல் கவுன்சிலையும், சிறப்பாக கமிஷனரையும் பாராட்டுவதுடன், தீர்மானத்தின்படி மற்ற உத்தியோகங்களுக்கும் பெண்களை நியமிக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்
நிறைவேறிய தீர்மானங்கள்
1. 01004௦ 462 நம்பரின் தீர்மானமாவது
2. பெண்களுக்கு உத்தியோகம் கொடுக்கும் விஷயத்தில் மரணஜனன பதிவு செய்தல், அம்மை வைத்தல், ஷராவ், டைப்படித்தல், ஆபீஸ் பியூன் வேலை, மற்றும் அநேக விதமான உத்தியோகங்களைப் பெண்களுக்கு வீதாச்சாரப்படி ஒதுக்குவதுடன் அவைகளில் அவர்களை நியமனஞ் செய்யவேண்டும்
3. மேலே கண்ட உத்தியோகங்களுக்கு விசேஷமான பரீகை்ஷ, அல்லது தேர்ச்சி வேண்டுவதாயிருந்தால், கூடியவரையில் வேண்டிய உதவியைக் கவுன்சிலர்கள் செய்ய வேண்டியது.
4. பெண்பிள்ளைகள் பாடசாலைகளிலுள்ள உபாத்தியாயனிகளைத் தவிர்த்து ஆண்பிள்ளைகள் பாடசாலைகளிலும், பெண் உபாத்திமார் களை நியமனஞ் செய்யவேண்டும் ஏகமனதாய் நிறைவேறிற்று
குடி அரசு - கட்டுரை - 09.06.1935
குடி அரசு - 1935 (1) 432.
சீர்திருத்தப் பிரசங்கம்
தோழர்களே!
சுயமரியாதைக் கல்யாணம் என்பது சில புதிய முறைகளைக் கொண்ட
ஒருவித சீர்திருத்தத் திருமணமேயாகும் சனாதன திருமணத்துக்கும், சீர்திருத்தத் திருமணத்துக்கும் என்ன பிரமாத வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.
சனாதனத் திருமணம் - வைதீகத் திருமணம் - சாஸ்திரியத் திருமணம் என்பவைகள் எல்லாம், இப்போது எவருடைய முயற்சியும் விருப்பமும் இல்லாமலே நாளுக்கு நாள் தானாகவே மாறிக் கொண்டு வருகின்றன. ஒரு
நாள் கல்யாணம், இப்பொழுது பெருத்த நாகரீகமாய்ப் போய்விட்டது
கலப்பு மணம் என்பது பெரியதொரு சீர்திருத்தமாய் பாவிக்கப்பட்டு விட்டது. சட்டம், சமூகம், சாஸ்திரம், மதம் எல்லாம் வரவர நாகரீகத்
திருமணத்தையும், சீர்திருத்தத் திருமணத்தையும் அனுமதித்து விட்டது ஆதலால் அதைப் பற்றி இப்போது ஏதும் பேச வேண்டிய அவசிய மிருப்பதாய்த் தெரியவில்லை
நாயுடு மாப்பிள்ளையும், வேளாளப் பெண்ணுமாய் சேர்ந்து விவாகம் செய்து கொள்வது என்பது சர்வ சாதாரண விஷயம் என்பதில் சேர்ந்ததாகும்.
இதனால் மனுதர்ம சாஸ்திரப்படிக்கும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
ஆனால் பார்ப்பனப் பெண்ணும் வேளாள மாப்பிள்ளையும்,
பார்ப்பனப் பெண்ணும் நாயுடு மாப்பிள்ளையும்,
பார்ப்பனப் பெண்ணும் துலுக்க மாப்பிள்ளையும்,
பார்ப்பனப் பெண்ணும் குஜராத்தி சேட் மாப்பிள்ளையும்,
பார்ப்பனப் பெண்ணும் வெள்ளைக்கார மாப்பிள்ளையும்
இப்படி மதக் கலப்பும் “கீழ் மேல் ஜாதி” கலப்புமான - மனுதர்ம சாஸ்திரத்துக்கு விரோதமான திருமணங்கள் “பெரிய இடங்களில்” எல்லாம் எவ்வளவோ நடந்தாகி விட்டது. B ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இந்தத் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று மனுதர்ம சாஸ்திரத்தையோ, வருணசங்கிரகத்தையோ பார்ப்போமானால் அவர்கள் சண்டாள ஜாதியைவிட கீழான ஜாதிகளாய் மதிக்கப்படுவதைக் காணலாம்
அப்படிப்பட்ட தாழ்வான நிபந்தனைகளையெல்லாம் லக்ஷியம் செய்யாமல் கற்றவர்கள், செல்வவான்கள், மேல்ஜாதிக்காரர்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியார்கள் என்கின்றவர்களே துணிந்து நடத்துகிறார்கள் என்றால் “சமஜாதி”க் கல்யாணமாகிய வேளாளன்-நாயுடு, ரெட்டி-நாயுடு கலப்பு மணம் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
கல்யாணம் என்றால் எண்ண
திருமண விஷயங்களில் ஜாதி, மதம், சடங்கு, சாஸ்திரம் ஆகியவை
களைப் பார்க்கும் விஷயங்களைப் பற்றி பேசும் முன்பு, கல்யாணம்
என்றால் என்ன என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்
பாமர ஜனங்கள் கல்யாணம் என்பதை வீட்டு வேலைக்கு ஒரு ஆள். (வேலைக்காரியை) வைப்பது போலவே கருதுகிறார்கள்.
புருஷனும் அப்படியே கருதுகிறான். புருஷன் வீட்டாரும் அது போலவே தங்கள் வீட்டு வேலைக்கு ஒரு பெண் கொண்டு வருவதாகவே கருதுகிறார்கள். இது மாத்திரமா! பெண் வீட்டாரும் தங்கள் பெண்ணை வீட்டு வேலைக்கே தயார் செய்து விற்றுக் கொடுக்கிறார்கள்.
பெண்ணும் தான் ஒரு வீட்டுக்கு வேலை செய்யப் போவதாக
கருதுகிறாள்.
பெண்ணின் கடமையும், சமையல் செய்வது, பாத்திரம் விளக்குவது, வீடு வாசல் கூட்டி மெழுகி சுத்தம் செய்வது இதுகளோடு பிள்ளையையும் பெற்றுக் கொண்டு அதையும் வளர்ப்பது ஆகியவைகளையே முக்கியமாய்க் கொண்டதாக இருக்கிறது
மதமும் சாஸ்திரங்களும் கல்யாணத்தைப் பற்றி என்ன சொல்லுகின்றன என்று பார்த்தால் பெண் சுதந்திரமற்றவள், அவள் காவலில் வைக்கப்பட வேண்டியவள் என்பது ஒருபுறமிருக்க, கல்யாணம் செய்வதானது மனிதன்,
“புத்' என்னும் நரகத்துக்குப் போகாமல் இருப்பதற்கு ஆக ஒரு பெண்ணை பெறுவதற்கு ஆகவும் பெற்றோர்களுக்கு இறுதிக் கடன் திதி முதலியவைகள் செய்ய ஒரு பிள்ளையைப் பெறவும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறுகின்றன.
ஆகவே கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நுகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர்
குடி அரசு - 1935 (1) 434
வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம்
தீர்த்துக் கொள்ளவுமே ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதை பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை
இக்கல்யாணம் பொருத்தம் பார்க்க வேண்டிய பொருப்பு மணமக்களுக்கே உண்டு என்பதையும் கருதுவதே இல்லை. கல்யாணம் மணமக்கள் எத்தனத்தினாலேயே ஆக வேண்டியது என்பதையும் ஒப்புக் கொள்ளுவதே இல்லை.
கல்யாணம் என்றால் அது தெய்வீகமானது தெய்வ எத்தனமானது, தெய்வமே பொருத்தி வைக்க வேண்டியது என்று கருதுவதும், கல்யாணத்தில் எப்படிப்பட்ட பொருத்தம் பொருந்தாப் பொருத்தமானாலும் அதனால் எப்படிப்பட்ட துன்பமும் தொல்லையும் அனுபவமானதும் கண்கூடான பிரத்தியக்ஷ அனுபவமாய் இருந்தாலும் அதைத் தெய்வ எத்தனம் தெய்வ
சித்தம் என்கின்ற பெயரால் அனுபவிப்பதும் அந்தப்படி நினைத்து திருப்தியடைவதுமாய் இருக்கின்றது
இவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதும் இப்படிப்பட்ட துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் மணமக்கள் கல்யாணத்தினால் ஆளாகாமல் இருக்க வேண்டுமென்பதற்கு ஆகவே கல்யாணத்தில் சீர்திருத்தம் அல்லது முறையில் மாறுதல் என்பது அவசியம் வேண்டும் என்கிறோம்
கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை, சமத்துவ வாழ்க்கை என்று இருக்க வேண்டுமே ஒழிய, அடிமை வாழ்க்கை, மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக் கூடாதென்பதே எங்களது ஆசை
நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பெண்ணை அடிமையாகவே, ஒருவனுடைய சொத்தாகவே கருதுகிறோம் என்பதோடு, பெண் ஜாதியை நமது போகப் பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிரும் மனமும் இருப்பதாகக் கருதுவதில்லை. இது இன்று உலக சித்தாந்தமாயிருக்கிறது குறிப்பிட்ட ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு பெண் ஜாதியாய் இல்லாத கல்யாணமில்லாத பெண்ணுக்கு மாத்திரம் சுதந்திரம் என்பது சிறிதாவது உண்டு என்று சொல்லலாமே தவிர மற்றபடி கல்யாணமான பெண்கள் என்றால் அடிமைகளாகவே மதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக நமது சக்கரவர்த்தி திருமகனாரான இளவரசர் நேற்றைய தினம் தன்னை ஒருவர் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை
என்று கேட்டதற்கு அவர் ''ஒரு பெண்ணை அடிமையாக்க எனக்கு இஷ்டமில்லாததால் நான் கல்யாணத்தை விரும்புவதில்லை! என்று
சொல்லியிருக்கிறார். இதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கிறதென்பதை
சிந்தித்துப் பாருங்கள்.
435 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்தல் அடைந்து கொண்டே வருகின்றது
தாயின் குணம், தாயின் தன்மை பெரிதும் பிள்ளைக்கு பிறவியிலேயே வருகின்றது என்பதை யார் மறுக்க முடியும். மக்களின் குணம் 100க்கு 90 பாகம் சரீர அமைப்பை பொருத்ததேயாகும். சரீர அமைப்புக்கு தாய் தகப்பன் சரீர அமைப்பே பெரும் பாகம் காரணமாகும். ஆகையால் இந்த அடிமைப் பெண், சுதந்திர உணர்ச்சியுள்ள பிள்ளையைப் பெறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
கல்வி, அறிவு, செல்வம் ஆகியவைகள் இல்லாத தாயானவள் நல்ல தாராள புத்தியும் சமத்துவ ஞானமும் திருப்தி ஆன மனமும் உள்ள பிள்ளைகளை எப்படி பெற முடியும்? என்பதை உணர்ந்தோமேயானால் மனித சமூகம் சுதந்திரமாக கவலையற்று திருப்தியாய் ஏன் வாழவில்லை என்பதற்குத் தானாகவே காரணம் விளங்கும்.
ஒழுக்கம்
மற்றும் வாழ்க்கையில், ஒழுக்கத்தில் புருஷனுக்கு வேறு சட்டம் பெண்ணுக்கு வேறு சட்டம் வைத்திருக்கிறோம்.
ஆனால் ஒழுக்கத்தைப் பற்றி சதா பேசுகிறோம் - ஒழுக்கம் என்பதை
எழுத்தில் சப்தத்தில் பார்க்கின்றோமே ஒழிய காரியத்தில் பார்ப்பதே இல்லை.
விபசாரித்தனம் என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம் - அதற்கு எவ்வளவோ நிபந்தனைகள் நிர்ப்பந்தங்கள் சட்ட மூலமாய் - சமூக
மூலமாய் - சாஸ்திர மூலமாய் - இயற்கை மூலமாய் எல்லாம் வைத்திருக் கிறோம். அப்படி எல்லாம் இருந்தும் அதை இருவருக்கும் சமமாய் வைக்க வில்லை. ஆண் விபசாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி
இருந்தாலும் அதற்குப் பெயர் பலக் குறைவு Weakness என்று சொல்லி விடுகிறோம். பெண் விபசாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத்தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத் தக்கது என்றெல்லாம் சொல்லுகிறோம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் விபசாரமாகுமே தவிர ஒரு பெண்ணும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து விபசாரம் செய்துவிட முடியாது. அதை யாரும் விபசாரமென்று சொல்லவு மாட்டார்கள்
ஒருவருக்கொரு நீதி என்கின்ற முறையாலே தான் உலகில் பெரிதும் விபசாரமிருந்து வருகிறதே தவிர, பெண்களின் கெட்ட குணங்களால்
இருந்து வருவதாகச் சொல்லிவிட முடியாது
குடி அரசு - 1935 (1) 436
அன்றியும் இவ்வளவு தூரம் மதத்தாலும், சட்டத்தாலும், சமூகத்தாலும் நிபந்தனையாலும் வெறுக்கப்பட்ட விபசாரம் என்பது ஏன் இன்று உலகில் சர்வசாதாரணமாய் இருந்து வருகின்றது? இதற்கு என்ன காரணம் என்பதை யாராவது யோசிக்கிறார்களா?
ஒவ்வொருவரும் விவசார தோஷத்துக்கு ஆளாகிவிட்டே மற்றவர் களைக் குறை கூறுகிறார்கள் என்பது அவரவர்கள் நெஞ்சில் கையை வைத்து குழந்தை பருவ முதல் தாங்கள் நினைத்தது, செய்தது ஆகிய காரியங்களை ஞாபகப்படுத்திப் பார்த்தால் விளங்கும் நம்முடைய கடவுள்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, விஷ்ணு, சிவன் முதலியவைகள்கூடவிபசார தோஷத்தில் இருந்து விலக்கப்பட்டிருப்ப
தாகத் தெரியவில்லை. அவர்களுடைய பெண்ஜாதிமார்களைக் கூட விபசார தோஷத்தில் இருந்து விலக்கவில்லை.
ஏன் இப்படி இருக்க வேண்டும்? விபசாரம் மக்களுக்கு இயற்கையா
என்று பாருங்கள். ஒரு நாளும் அல்லவே அல்ல. செயற்கை குணங் களாலேயே விபசாரம் நடக்கின்றன. அதாவது கல்யாணங்களே பெரிதும் விவசாரத்துக்கு சமானமானவையாகும்
விபசாரம் என்றால் என்ன?
தனக்கு இஷ்டமில்லாமல், காதல் இல்லாமல் பணம் காசு சொத்து வேறுவித நிர்ப்பந்தம் ஆகியவைகளுக்குஆக இணங்குவதேவிபசாரம் ஆகும்.
நமது மணமக்கள் பெரும்பாலோர் தாய் தகப்பன்மார்கள் தங்களை ஜோடி சேர்த்து விட்டார்களே என்பதற்காகவே இணங்கி இருக்கிறார்கள். மற்றும் பலர் தங்களுக்குள் வேற்றுமை உணர்ச்சியும் (அன்பு) ஆசை இன்மையும் ஏற்பட்டும் பிரிந்து கொள்ள முடியவில்லையே என்பதற்கு ஆகவே இணங்கி இருப்பது போல் இருக்கிறார்கள். இது போன்றவைகள் எல்லாம் நிர்ப்பந்த விபசாரங்களேயாகும். மற்றும் பலர் செல்வத்தையே பிரதானமாய்க் கருதி இன்ப உணர்ச்சியை பறி கொடுத்து இணங்கி இருக்கிறார்கள். இது போன்றவை காசு, பணம், சொத்துகளுக்காகச் செய்யப்படும் விபசாரங்களேயாகும் இவை ஒருபுறமிருக்க இன்று உலக வழக்கில் இருக்கின்ற விபசாரத் தன்மைகள்தான் ஆகட்டும் ஏன் ஏற்படவேண்டும் என்று யோசித்துப் பாருங்கள். பால்ய மணங்களை ஒழித்து காதல் மணம், கல்யாண ரத்து, விதவை மணம், சம உரிமை ஆகியவைகள் ஒரு சமூகத்தில் இருக்குமானால் இன்றுள்ள விபசாரங்களில் 100க்கு 90 பாகம் மறைந்து போகும் என்றே சொல்லுவேன். அதோடு பெண் மக்களை நன்றாக படிக்க வைத்து அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சியை ஊட்டி சொத்து உரிமையையும் வழங்கி விடுவோமேயானால் விவசாரம் என்பது எப்படி நேரும் என்பதை யோசித்துப் பாருங்கள். B ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
விதவைத் தனம்
விதவைத் தன்மையே தான் விவசாரம் என்கின்ற பிள்ளையை
பெறுகிறது பிறகு “ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம். எவ்வளவு பெண் ஜாதிகளை வேண்டுமானாலும் மணக்கலாம்” என்கின்ற முறையே விபசாரம் என்னும் (அந்தப்) பிள்ளையை வளர்க்கின்றது கல்யாண ரத்து இல்லை என்கின்ற முறையானது விவசாரத்தை நீடூழி வாழச் செய்கின்றது. இவற்றிற்கு எல்லாம் பரிகாரம் செய்யாமல் விபசாரத்தைப்
பற்றிப் பேசுவது என்பது பயனற்ற காரியமேயாகும்
விதவைத் தன்மை என்பது நமது நாட்டில் மிக்க கொடுமையான முறையில் இருந்து வருகின்றது. இதை எந்த சீர்த்திருத்த வாதியும் கவனிப்பதே இல்லை. விதவைகள் வாழ்க்கை ஒரு சிறைக்கூட வாழ்க்கையை ஒக்கும். ஒரு கைதிக்குள்ள நிர்ப்பந்தம் ஒவ்வொரு விதவைக்கும் இருந்து வருகின்றது. எப்படி ஒரு கைதியானவன் சிறைக்கூட விதியை மீற வேண்டும் என்கின்ற ஆசைக்கும், அவசியத்துக்கும் உள்ளாகிறானோ, அதுபோலவேதான். ஒவ்வொரு விதவையும் விதவைச் சட்டத்தை மீற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிக் கஷ்டப்படுகிறாள். இந்தக் கொடுமை ஒரு நிரபராதியான பெண்ணுக்கு ஏன் ஏற்பட வேண்டும் என்று கேட்டால் இதற்கு என்ன மறுமொழி இருக்கிறது? இந்த 20வது நூற்றாண்டில் தலைவிதி என்றும், கடவுள் செயல் என்றும் சொல்லி மக்களை ஏய்க்க முடியுமா?
விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாய் இருந்தால், பார்ப்பனர்கள் நிறைந்த பார்த்தசாரதி கோவில் தெருவு தெப்பக்குளத்தில் தினம் ஒரு குழந்தை எப்படி மிதக்க முடியும்? ஊர்கள் தோறும் குப்பைத் தொட்டிகளும், ஓடை புறம் போக்குகளும், கள்ளி மேடும், சுள்ளி மேடும், ஊரணிகளும் எப்படிப் பிள்ளைகளைப் பெற முடியும்? ஆகவே மனித சமூகத்துக்கு கடுகளவாவது புத்தியும், நேர்மையும் இருக்கின்றது என்று சொல்லப்படவேண்டுமானால் இந்த விதவைக் கொடுமை முதலில் ஒழிக்கப்பட்டாக வேண்டாமா? இந்தக்கொடுமை
பகுத்தறிவுள்ள மனித சமூகத்தில் இருக்கிறது என்றால் பகுத்தறிவுக்கு இழிவு கற்பிக்க இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்று கேட்கின்றேன்.
அதோடு கல்யாண ரத்து என்கின்ற ஒரு முறையும் ஏற்படுத்தி ஆக வேண்டும். ஏனெனில் கல்யாண ரத்துக்கு இடமில்லாத காரணத்தினாலேயே ஆண்கள் மனைவிமார்களிடத்தில் மனிதத்தன்மையோடு நடந்து கொள்ளாமல் மிருகத்தனமாய் நடக்கத் தூண்டப்படுகிறார்கள்.
ஆண்கள் மனைவிமார்கள் தங்களுக்கு பிடிக்க வில்லையானால் மறுபடியும் மணம் செய்து கொள்ளுகிறார்கள்.
குடி அரசு - 1935 (1) 438
மணமில்லாமல் வைப்பு முறையிலும் வேறு ஸ்திரிகளை சேர்த்துக் கொள்ளவும் செய்கிறார்கள். மற்றும் தங்களுக்கு இஷ்டமானபடியெல்லாம் நடந்து கொண்டு பெண்களை இம்சிக்கிறார்கள்.
இவ்வளவுக்கும் தைரியம் வந்ததற்குக் காரணம் ஆண்கள் எப்படி நடந்து கொண்டாலும் மனைவிமார்களுக்கு ஜீவனாம்சம் கேட்கும் பாத்தியம் தவிர வேறு எவ்வித உரிமையும் இல்லாததேயாகும்
பெண்களுக்கு தங்கள் புருஷன் பிடிக்கவில்லையானால் சகித்துக் கொண்டு தலைவிதி என்பதாகச் சொல்லி திருப்தியுடன் இருக்க வேண்டி
யதைத் தவிர வேறு ஒரு கதியும் இல்லை. குரூர குணமுள்ள புருஷன், குடிகாரப் புருஷன், குஷ்டரோகியான புருஷன் முதலிய எப்படிப் பட்டவனாய் இருந்தாலும் அவனுடைய கொடுமைகளை சகித்துக் கொண்டு அவனுடன் கூட வாழ வேண்டி இருக்கிறது. இது ஜீவகாருண்யமாகுமா என்று கேட்கின்றேன். எனவே தோழர்களே!
சமூக வாழ்க்கையில் முக்கியமாக ஆண் பெண் தன்மையில் செய்ய வேண்டிய சீர்திருத்தம் எவ்வளவு இருக்கின்றது என்று பாருங்கள் இவைகளைப் பற்றி எந்தத் தலைவர்களாவது மகாத்மாக்களாவது எந்த சர்க்காராவது கவனிக்கிறதா?
பெண்களுக்கு சொத்துரிமையும் இல்லை; கல்வி வசதியும் இல்லை. இதுவும் மிகக் கொடுமையான காரியமேயாகும். பெண்கள் சொத்துரிமை விஷயத்தில் இந்து மதக் கொள்கை மிகவும் அக்கிரமமானதாகும் பெண்கள் எப்போதும் சொத்தை சர்வ சுதந்தரமாய் அநுபவிக்க மார்க்கமில்லை. விபசாரியாய்ப் போன பெண், தேவடியாத்தொழில் செய்யும் பெண் ஆகியவர்களுக்கே இந்து சமூகத்தில் சொத்துரிமை இருக்கிறது என்றால் இந்து சமூகத்தின் ஈனத் தன்மைக்கு மடத்தன்மைக்கு வேறு என்ன அத்தாக்ஷி வேண்டும்
ஒரு விதவை விபசாரியாய்ப் போய்விட்டால்தான் புருஷன் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அந்த விதவை மறுமணம் செய்து கொண்டால் புருஷன் சொத்துக்களில் ஒரு சிறு தம்பிடி கூட அனுபவிக்க உரிமை இல்லை. புருஷனுடைய வார்சுகள் அவர்கள் எப்படிப்பட்டவர்
களாய் இருந்தாலும் அனுபவிக்கலாம் என்பதாக இந்து லா கூறுகிறது
கல்வி விஷயத்திலும் பெண்கள் கல்வியைப் பற்றி யாரும் கவலை எடுத்துக் கொள்ளுவதில்லை. ஏதோ பெயருக்கு மாத்திரம் தான் பெண்: கல்வி விஷயம் நடைபெறுகின்றன.
100க்கு ஒரு பெண்கூட படித்த பெண் இல்லாமல் இருக்கிறது இந்து சமூகம்
Bo ஏரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
கிறிஸ்தவப் பெண்கள் அனேகமாய் 100க்கு 10, 20 பேர்கள் படித்திருக்கிறார்கள். முகம்மதிய பெண்களும், அப்படியே பார்ப்பன பெண்களோ 109க்கு 60, 70 பேர்கள் படித்து இருக்கிறார்கள். மற்றப்படி இந்துப் பெண்கள் என்கின்றவர்கள் சராசரி 100க்கு ஒருவர் வீதம் கூட இல்லை. பெண்களுக்கு ஹைஸ்கூல், மிடில் ஸ்கூல் முதலியவை ஒரு ஜில்லாவுக்கு ஒன்று இரண்டு காணப்படுவது கூட அதிசயமாய் இருக்கிறது. பெண்களுக்கு மேல் படிப்புக்கு சம்பளமில்லாமல் சொல்லி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் பெண்களை நன்றாய் படிக்க வைக்க வேண்டும். சுதந்திரக்காரனுக்கு பெண்களை தக்கவர்களாக இருக்கும்படியான தொழில் கல்வி ஆகியவைகள் தேடிக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமையாகும். இம்மாதிரியான காரியங்கள் கல்யாண விஷயத்திலும் பெண்கள் விஷயத்திலும் முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 10.06.1935 இல் கீழையூரில் நடைபெற்ற தோழர்கள் வேலு - தனபாக்கியம் திருமணத்திலும் 12.06.1935 இல் திருபுவனத்தில் நடைபெற்ற தோழர்கள்நாராயணசமி - இரங்கநாயகி திருமணத்திலும் 13.06.1935 இல் திருக்சியில் நடைபெற்ற தோழர்கள் சக்கரபாணி - மீனாட்சி திருமணத்திலும் ஆற்றிய உரையின் சுருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 16.06.1935
குடி அரசு - 1935 (1) 440
o gl F e i ஆபிசம் s o arn, பதான். கட்சிகைப்பாப்பச் தூம் பண: அம் காச்கவால் இருந்தான் இரும் தேரில். போட்டி கனமே ஒழிய s s வெம்: ஸ். வேட்ட பேர்கிட்ட.
பகனக இடன் கடுக்கக்க 80 இட்மொனாம் சென்னை, o தவை எண்தான் த
இதல் நகல்கள் ன்ன நன் எ கழுகை 0Bl garer எ ண கன்ன வே இததைல் இதுதானாம் பா கற்களின் எய்த ன்னா அவைதான் சிரைப்யோள்
உ வல் - B பாருக்கு அளக _ அளவை ஒர விவக படக பத G s எலமஸ்த தான் அனா வம் அ ks தெர்தகன் பாப் o e
தகம்
ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு
ஜஸ்டிஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்வதற்காக கோயமுத்தூரில் ஜூன் 15, 16 தேதிகளில் தென் ஜில்லாக்களிலுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரரின் ஆயத்த மகாநாடு ஒன்று கூடும். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் திரளாக அந்த மகாநாட்டுக்கு வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்” என்று “விடுதலை”
பத்திரிகையில் ஒரு விளம்பரம் வெளியாகி இருக்கிறது.
இக் கூட்டத்தைக் கூட்ட கோவை பிரபல வியாபாரியும் தனவந்தரும் பொதுநல சேவையில் ஈடுபட்டு மிகுதியும் ஊக்கமாய் உழைத்து வரும் பெரியாரும் கோவை முனிசிபல் சேர்மெனுமான ராவ்சாகிப் எஸ்.என். பொன்னையா அவர்கள் முயற்சித்து, தன் பேரால் பொது
மக்களுக்கு பத்திரிகை மூலம் ஒரு பொது அழைப்பும் அனுப்பியிருக்கிறார். இதை நாம் பெரிதும் பாராட்டுகிறோம் உண்மையை ஒளிக்காமல் பேச வேண்டுமானால் சமீப இந்திய சட்டசபைத் தேர்தல் பலனைக் கண்ட பிறகும், சென்னை சட்டசபை உபதேர்தலின் பலனைக் கண்ட பின்பும், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களுக்கு அதாவது அக்கட்சியின் பேரால் அதிகாரம் பதவி பட்டம் முதலியவைகள் அடைந்து அதன் மூலம் பொதுநலத் தொண்டு செய்யலாம் என்று கருதி இருந்த - இருக்கிற மக்களுக்கு பெரியதொரு திகில் ஏற்பட்டு விட்டது பலருக்கு காங்கிரசில் சேர்ந்து கொள்ளலாமா என்கின்ற எண்ணமும் தோன்றி எலும்பை உருக்கி வருகின்றது. பலருக்கு அடுத்து வரும் தேர்தல் வரையில் நாம் ஒரு கட்சியிலும் சேராமல் எல்லோருக்கும் நல்ல பிள்ளைகள்.
போல் நடந்து பிறகு சமயம் போல் நடந்து கொள்ளலாம் என்கின்ற யுத்தியும் அவர்களது உள்ளத்தில் தாண்டவமாடுகின்றது.
பொது ஜனங்களுக்குள்ளும், பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளாகவே உத்தியோகஸ்தர்கள், உபாத்தியாயர்கள், வக்கீல்கள் ஆகிய கூட்டத்தார். களுக்குள்ளாகவே அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிடும் என்கின்ற எண்ணம் பலமாய் ஏற்பட்டு அவர்களது வாழ்க்கை கட்சியின் ஆதரவாலேயே இருப்பதாய் இருந்தாலும் தாமரை இலையின் நீரதைப்போல தங்களுக்கும் கட்சிக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதாய் இருக்கிறது.
குடி அரசு - 1935 (1) 442
பாமரர்களுக்குள்ளாக என்றாலோ ''ஐஸ்டிஸ் கட்சி செத்துப் போய்விட்டது, இனி தலையெடுக்கப் போவதில்லை" என்கின்ற பிரசாரம் பலமாய் புகுந்து விட்டது
ஒரு வேலையும் பொறுப்பும் இல்லாமல் கட்சியின் பேரைச் சொல்லி பதவி, எலக்ஷன், கமிஷன், கான்ட்ராக்ட் முதலியன பெற்று வயிறு வளர்த்து வந்த தானாவதிக் கூட்டங்கள் “சாகப் போகின்ற கட்சிக்கு என்ன தான் வைத்தியம் பார்த்தாலும் என்ன பிரயோஜனம்" என்றும் சொல்லும்படியான நிலைமையில் இருந்து வருகின்றது
தலைவர்கள், கட்சி மூளைகள் என்பவர்களைப் பற்றி இப்பொழுதே பொது ஜனங்களும் எதிரிகளும் சுமத்தும் பழிகள் ஏராளமாய் தாங்க முடியாததாய் இருப்பதால் அவர்களைப் பற்றி நாமும் பழி கூறவோ குற்றங் குறைகளைப் பெரிதாக்கி பிரசாரம் செய்யவோ, இப்பொழுது நமக்குச்
சிறிதும் இஷ்டமில்லை. ஆதலால் அதை விட்டு விட்டு மற்றதையோசிப்போம்.
முதலாவது ஒரு விஷயத்தைச் சொல்லிவிடுகின்றோம். அதாவது அடுத்த தேர்தலில் பார்ப்பனர்கள் இன்றைய நிலைமையைவிட கடுகளவாவது அதிகமாக வந்துவிடுவார்களோ என்கின்ற சந்தேகம் எவருக்கும் வேண்டியதில்லை.
இன்றுள்ள விகிதாச்சாரத்தில் பகுதி அளவு பங்கு ஓட்டுகள் கூட வரப்போகும் சட்டசபைத் தேர்தல்களில் பார்ப்பனர்களுக்கு இருக்கப் போவதில்லை.
மேலும் பத்து ஆயிரம் இருபது ஆயிரம் ரூபாய்களைச் செலவு செய்யும் தைரியத்துடனும், பணத்துடனும் தேர்தலில் போட்டி போடப் போகும் பார்ப்பனர்களும் மிக மிக சுருக்கமாகும்.
ஆதலால் பார்ப்பனர்கள் அதிகமாக வந்துவிடுவார்களே என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை.
இந்த மாகாணத்தில் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்கக்கூடிய இடமெல்லாம் சென்னை, தஞ்சை, மதுரை, ராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களேயாகும். “சென்னை பார்ப்பனரல்லாத பிரமுகர்களுக்கு கொள்கையில்லை'' என்பது ஒரு பழமொழியானாலும், பொறுப்பும் பொது
நலக் கவலையும் கிடையாது என்பதோடு தன்னலத்துக்கு எதையும் தியாகம் செய்து விடுகிறவர்கள் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. உதாரணத்துக்கு
ஒரு வார்த்தை சொல்லிவிடுகின்றோம். அதாவது சென்னையில் எந்த தேர்தலுக்கும் தன் சொந்தப் பணத்தைச் செலவு செய்து தன் சொந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி தேர்தலுக்கு நிற்கக் கூடியவர்களோ தேர்தலில்
443 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
வெற்றி பெறக் கூடியவர்களோ மிக அருமை என்றே சொல்ல வேண்டும். ஆதலாலேயே அங்கு பார்ப்பனர்களுக்கு ஆதிக்கம் இருப்பதிலும், ஏற்படுவதிலும் ஆச்சரியமொன்று மில்லை.
தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் ஜில்லாக்கள் பெரிதும் பார்ப்பன. ஆதிக்கத்தில் இருந்து வருவதாலும், தங்கள் தங்கள் சுயநலங்களுக்கு பார்ப்பனர்கள் தயவையும் எதிர்பார்க்க வேண்டிய நிலையில் பல பிரமுகர்கள் இருப்பதாலும் அச்சில்லாக்களிலும் பார்ப்பனர்கள் வெற்றி
பெற்று விடுவதிலும் அதிசயமில்லை.
மற்ற ஜில்லாக்களில் பார்ப்பனர்களுக்கு ஆதிக்கமில்லை என்பது ஒருபுறமிருந்தாலும், உள்நாட்டுக் கலகம் என்று சொல்லக்கூடிய விதத்தில் ஜில்லா பிரமுகர்களுக்குள் இருந்து வரும் சுயநலப் போட்டியானது காங்கிரசில் சேரலாமா? தனிப்பட இருக்கலாமா? பார்ப்பனர்களுக்கு உள்உளவாய் இருந்து கொண்டு வெளிப் பார்வைக்கு ஜஸ்டிஸ் கட்சியாய் இருக்கலாமா, அல்லது சுவரின் மேல் பூனையாக எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கலாமா என்கின்றதான கஷ்ட நிலையில் இருக்கும் படியாக ஆகிவிட்டது
இவைகளுக்கெல்லாம் ஏதாவது ஒரு பரிகாரம் செய்வது என்பதுதான் கட்சியைப் பலப்படுத்தும் காரியமாய் இருந்தால் இருக்கலாமே ஒழிய மற்றபடி வெறும் கூட்டம் போட்டு பேசிவிட்டுப் போவது பயனற்றதாகவே ஆகிவிடும். பிரசாரத்துக்காக மகாநாடு போடுவதாய் இருந்தால் வெறும்
பேச்சும் மனதைக் கவரும் தீர்மானங்களுமே போதுமானதாகும்.
இப்பொழுது ஜஸ்டிஸ் கொள்கையைப் பற்றி யாருக்கும் எடுத்துக்
காட்ட வேண்டியதில்லை. ஜஸ்டிஸ் கொள்கை உலகமே ஒப்புக் கொண்ட கொள்கை. உண்மையான சமதர்மக் கொள்கை.
ஆதலால் அதைப் பற்றி கவலைப்படாமல் இப்போது இயற்கை யாகவே இருந்து வரும் உத்தியோகம் பதவி பட்டம் ஆகியவைகள். சம்மந்தப்பட்ட போட்டிக்கு ஒரு விவஸ்தையும், முறையும் ஏற்படுத்த வேண்டும். அதுவே முக்கிய காரியமாகும்
முக்கியமாக மந்திரிகள் சம்பளத்தில் பெரும்பாகம் குறைக்க
வேண்டும். அல்லது அதில் 100க்கு 75 பாகம் கட்சிக்குப் பயன்படுத்த
வேண்டும். இந்தப்படி செய்துவிட்டால் பணத்தாசை பிடித்தவர்களுடைய தொல்லை பெரும்பாகம் ஒழியும்.
கட்சித் தலைவருக்குக் கீழ் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமே ஒழிய அவரவர்கள் சுயேச்சையாய் ஒன்றும் செய்யக் கூடாது என்கின்ற நிபந்தனைகள் மந்திரிகளுக்கு இருக்கும்படியாய் செய்து மந்திரிகளை
குடி அரசு - 1935 (1) 444
நடத்த ஒரு தலைவரும் அவருக்கு யோசனை சொல்ல ஒரு கமிட்டியும் இருக்க வேண்டும். இப்படிச் செய்துவிட்டால் அதிகார வெறி கொண்டவர் களுடையவும், அகம்பாவம் கொண்டவர்களுடையவும், தொல்லை பெரும்பாகம் ஒழியும்
இவ்விஷயத்தை தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் நெல்லூர் மகா நாட்டிலேயே பிரேரேபித்தார். ஆனால் தாங்கள் தலைவர்களாவோம் என்றும் தாங்கள் மந்திரிகளாவோம் என்றும் தங்களுக்கு செல்வாக்கில்லாமல் போய்விடுமே என்று நினைத்துக் கொண்டவர்களின் எதிர்ப்பாலும் முயற்சியாலும் அத் தீர்மானம் பின் வாங்கிக் கொள்ள வேண்டியதாயிற்று
அது எப்படியோ போனாலும் இனி இந்தக் காரியங்களால்தான் கட்சி பலப்படக்கூடும் என்பதோடு கட்சி நேர்மையாகவும் சுதந்திரமாகவும்
நிலைத்தும் இருக்க முடியும் மற்றப்படி கட்சியின் வேலைத் திட்டத்தைப் பற்றி இனி அதிகம் பேச வேண்டிய அவசியமில்லாத நிலையிலேயே ஜஸ்டிஸ் கட்சி இருந்து வருகின்றது. இதை நம் எதிரிகளான காங்கிரஸ்காரர்களே ஒப்புக் கொண்டு பொறாமையையும் காட்டி விட்டார்கள்.
அதாவது கட்சி வேலைத் திட்டத்தைப் பற்றிக் கூறும்போது “ஜஸ்டிஸ் கட்சி தன்னால் சாதிக்க முடியாத அவ்வளவு பெரிய சமதர்மத் திட்டத்தைக் கைகொண்டுவிட்டது'' என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் உட்பட பார்ப்பனப் பத்திரிகைக்காரர்களும் தாராளமாய் வெளியிட்டுவிட்டார்கள்
மற்றும் அவர்களது பொறாமையைக் காட்டும் முறையில் கட்சி வேலைத் திட்டத்தை “ராஜ பக்தி கொண்ட சமதர்மத் திட்டம்” என்றும், “ராமசாமி நாயக்கரை திருப்திப் படுத்த வேண்டிய சமதர்மத் திட்டம்"
என்றும் சொல்லி சமதர்மத் திட்டம் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
ஆகையால் இத் திட்டங்களே போதுமானவை. இனி அவைகளை நிறைவேற்ற வேண்டியதுதான் கட்சியின் கடமையாகும்
ஆதலால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் இப்போது எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.
வரும் தேர்தலில் கண்டிப்பாய் ஜஸ்டிஸ் கட்சியே வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நாம் முன் சொன்னபடி உத்தியோகம், பதவி ஆகிய போட்டிகள் ஏற்படாமல் இருப்பதற்கு, ஏதாவது வழி கண்டு
பிடிக்க வேண்டியது இக்கூட்டத்தின் முக்கிய வேலையாய் இருக்க வேண்டும் என்பதோடு, கையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றும் முறையில் இனி பாக்கி இருக்கும் 1% வருஷ காலத்துக்குள் தக்க வேலை செய்ய ஏற்பாடும் செய்ய வேண்டும் என்றும் ஞாபகப்படுத்த ஆசைப்படுகின்றோம்
445 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
கட்சித் தலைவரும் மூதல் மந்திரியுமான பொப்பிலி ராஜா அவர்களுக்கு பணம், பட்டம், பதவி ஆகிய ஆசைகள் இல்லை என்பதையும் தனது பணத்தையும் பதவியையும் கட்சிக்காக செலவழிக்கிறார் என்பதையும் எவரும் மறுக்க மாட்டார்கள். அவர்கள் சமதர்மக் கொள்கையில் அதி தீவிரப் பற்றுடையவர் என்பதிலும் அவருக்கு அத் திட்டத்தில் அதிக வேலை செய்ய ஆசை இருக்கிறது என்பதிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதுபோலவே மற்ற மந்திரிகளுக்கும் ஆசை இருக்கலாம். ஆனால் அவர்கள் தைரியமாய் வெளியில் காட்டிக் கொள்ள அஞ்சுகிறார்கள் என்றாவது சொல்ல வேண்டி இருக்கிறது
கூட்டுறவு இலாக்காவில் 2வது மந்திரிக்கு ஆதிக்கம் இருந்தும், தக்க திட்டங்கள் கட்சித் திட்டமாக இருந்தும், குறிப்பிடத்தக்க காரியம் எதையும் செய்ய பயப்படுகிறார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது
விவசாயம், வியாபாரம், லேவாதேவி ஆகிய துறைகளில் இதுவரை எவ்வித மாறுதலும் அவர் செய்ததாகத் தெரியவில்லை
கூட்டுப்பண்ணை முறையும், கூட்டுறவுஸ்தாபனம்பாங்கிஆகியவைகள் நிர்வாகத்துக்கு சர்க்கார் சிப்பந்திகளை நியமிக்கும் வேலையும் செய்து விடுவாரேயானால் அது பிறகு அந்த இலாக்காவை நாணயமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் செய்துவிடும் என்பதும் சந்தேகமில்லை
இப்போது ஐக்கிய நாணய சங்கம் என்பதில் நாணயமும் இல்லை; பயனும் ஏற்படுவது இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறோம்
அதுபோலவே கல்வி மந்திரியாரும் பெண்கள் கல்விக்கும், பாட புத்தகங்கள் விஷயத்திலும் எவ்வித முன்னேற்றமோ, மாறுதலோ குறிப்பிடத்தக்கதாய் ஏற்படுத்தி இருப்பதாய்த் தெரியவில்லை.
பெண்களுக்கு கல்வி பசி ஏற்படுத்தி விட்டோம். குறைந்தது 3வது பாரம் வரையாவது படிக்கும்படி தாலூகாவுக்கு ஒரு பள்ளிக்கூடமாவது இருந்தால் அவர்கள் நிலை எவ்வளவோ மேம்பாடடைந்துவிடும்
பள்ளிக்கூடங்களுக்கு 5வது கிளாஸ் வரையிலும் உபாத்தியாயர் களாக பெண்களையே நியமிக்க வேண்டும் என்கிற விதி வைத்து விட்டால் பெண்கள் வாழ்க்கையும் ஒரு அளவுக்குச் சுதந்திர வாழ்க்கையாக ஆகிவிடும்.
பாட புத்தகங்கள் சர்க்காரிலேயே அச்சுபோடும்படியாகவும், அதற்கு கல்வி மந்திரியே பொறுப்புள்ளவராகவும் இருக்கும்படி செய்துவிட்டால், பிள்ளைகளுக்கு பணச் செலவு குறைவது மாத்திரமல்லாமல், அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற கல்வியும் கற்றுக் கொடுக்க முடியும்
குடி அரசு - 1935 (1) 446
ஆகையால் கட்சியை பலப்படுத்துவது, பிற்கால வேலைத் திட்டம் அமைப்பது, எல்லோரையும் ஒற்றுமைப்படுத்துவது என்கின்றதான காரியங்கள் செய்யும்போது இவற்றைப் பற்றிச் சிறிதாவது யோசிக்கும் படியாய் வேண்டிக் கொள்ளுகிறோம்
மற்றப்படிஅக்கூட்டம்சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடக்கவேண்டும் என்றும் ஆசைப்படுவதோடு இக்கூட்டத்தைக் கூட்ட முயற்சித்த தோழர் களுக்கும், சிறப்பாய் தோழர்கள் பொன்னையா, செளந்திரபாண்டியன். முதலியவர்களுக்கும் நன்றி செலுத்திப் பாராட்டுகிறோம்
குடி அரசு - தலையங்கம் - 16.06.1935
447 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
கோடி சமூகச் சீர்திருத்த சங்கத்தில்
பிரசங்கம்
காங்கிரஸ் சமூக சீர்திருத்தத்தை ஓப்புக்கொள்ளாது
தோழர்களே!
சமூகச் சீர்திருத்தம் என்பது நமது நாட்டில் மிகவும் சாதாரணமாய்க்
கருதிக் கொண்டிருக்கும் விஷயமாகும். சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தை பாமர மக்கள் சரியானபடி அறிந்திருக்க வில்லை. படித்தவர்களும், அறிஞர் களுமே சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தையும், அதன் தத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள் என்றாலும், அவர்களே உண்மையான சமூகச்
சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையாய் இருந்து அதன் பிரதான தத்துவத்தை மக்கள் உணராமல் இருக்கும்படி செய்து வருகிறார்கள்.
நமது நாட்டில் இன்று முதன்மையாய் நடைபெற வேண்டியது சமூகச் சீர்திருத்தமேயாகும். ஆனால் அதற்கு இன்று நாட்டில் செல்வாக்கில்லை: உண்மையான சமூக சீர்திருத்தக்காரர் ஒருவர் இருவர் இருந்தாலும், அவர்களுக்கும் நாட்டில் செல்வாக்கில்லாமல் மக்களின் எதிர்ப்புக்கும், வெறுப்புக்குமே ஆளாகிறார்கள் பெரும்பான்மையான மக்களுக்கும் மனித சமூகத்தில் சமூகக் கட்டுப்பாட்டின் பயனாய் வெகுகாலமாய் தொடர்ந்து துன்பமனுபவித்து வரும் பாமர மக்களுக்கும், பயனற்றதான அரசியல் சீர்திருத்தம் என்னும் விஷயத்திற்கே இன்று நாட்டில் செல்வாக்கு ஏற்படுத்தப்பட்டு விட்டது
மக்கள் கவனமும் பெரிதும் அதிலேயே இழுக்கடிக்கப்பட்டிருக்கிறது
ஜனங்கள் அரசியல் கிளர்ச்சி மாய்கையில் இருந்து என்று விடுபடு கிறார்களோ, அன்று தான் சமூகச் சீர்திருத்தத்தின் அவசியத்தையும், உண்மையையும் அறிய முடியும். மற்றபடி அது வரையில் போலி சமூகச்
சீர்திருத்த ஏமாற்றந்தான் நடைபெறும்
அதுவும் அரசியல் சீர்திருத்தக்காரர்கள் தங்களுக்கு அனுகூலம் செய்து கொள்ளுவதற்காக மக்களை ஏமாற்ற வேண்டிச் செய்யும் ஏமாற்றுப் பிரசாரமேயாகும்.
குடி அரசு - 1935 (1) 448
உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை இன்று எந்த அரசியல்வாதியும் பொருளியல்வாதியும் ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். நம்நாடு மாத்திரமல்லாமல் இன்று உலகில் எங்கு பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல்
சீர்திருத்தக் கிளர்ச்சிதான் நடந்து வருகின்றது
அதன் பயனாய் அநேக ராஜ்யங்களின் அரசியலில் பலவித மாறுதல் ஏற்பட்டும் இருக்கின்றன. இன்றும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
என்றாலும் இவற்றால் எல்லாம் பெரும்பாலான மனித சமூகத்துக்கு எவ்வித நன்மையும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லுவதற்கில்லை.
இங்கிலாந்து தேசம் அரசியலில் எவ்வளவோ பெரிய யுத்தங்களை
யெல்லாம் சமாளித்து, ஜனநாயக முறைப்படி பார்லிமெண்டு அமைத்து, அந்தப் பார்லிமெண்டுக்கு மந்திரிகளையும், அரசரையும் கட்டுப்படுத்தி, உலகத்திலேயே முதல்தரமான அரசியல் முறை என்றும் சொல்லும்படியான அரசியலைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது
இதன் பயனாய் தந்திரபுத்தி உள்ளவர்களும், பிரபுக்களும், முதலாளி
களும்தான் பயனடைந்து வருகிறார்களே ஒழிய, பாமர மக்களுக்கு ஒரு நன்மையும் உண்டாகவில்லை. அங்கு இன்று 20, 30 லட்சம் மக்கள் செய்வதற்கு வேலை இல்லாமலும் ஜீவனத்துக்கு வேறு மார்க்கமில்லாமலும் திண்டாடத்தான் செய்கிறார்கள்.
அமெரிக்கா தேசம் உலகத்திலேயே பெரும் செல்வம் பொருந்தியதாய் இருந்தும், குடி அரசு ஆட்சியாய் இருந்தும், அங்கு கூட பிரபுக்களும், வியாபாரிகளும் அறிவுக் கூட்டத்தாரும் தான் மேன்மையாய் வாழ்கின்றார் களேஒழிய, பாமர மக்கள் கோடிக்கணக்காய் வேலை இல்லாமல் ஜீவனத்துக்கு மார்க்க மில்லாமல், வீடு வாசலற்றுத் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்கள் யாவருக்கும் பிறவியில் சமத்துவமும், சம சுதந்திரமும் இருக்குபடியானாலும் அரசியல் சீர்திருத்தத்தில் உச்ச நிலையை அடைந்ததுமான ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளிலேயே இப்படி இருக்கின்ற
தென்றால், நம் நாடு அதாவது பிறவியிலேயே கீழ் மேல் நிலையும் பிறவி காரணமாக அடிமைத்தன்மையும் இருந்து வரும் நாட்டின் நிலையைப் பற்றி, நான் உங்களுக்கு விவரிக்க வேண்டுமா என்று கேட்கின்றேன்.
நம் நாட்டில் சுமார் 30, 40 வருஷகாலமாய் அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சி இருந்து வந்ததை மக்கள் அறிந்தே, அதனால் ஒரு கூட்டத்தார் மாத்திரம் பயனடைந்து வந்ததையும் உணர்ந்தே, சமூகத் துறையில் சீர்திருத்தங்கள் ஏற்பட வேண்டும் என்று இரண்டொருவர் உணர்ந்து நீதிக்
449 ௨ ௦பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
(ஜஸ்டிஸ்) கட்சி என்பதாக ஒரு கட்சியை ஆரம்பித்தார்கள். அது எதிரிகளின். தொல்லையில் சிக்கி அரசியல் சருக்கலில் நடக்க வேண்டியதாகிவிட்டது அதற்கும் திண்டாட்டம் வந்த காலத்தில் சமூக சீர்திருத்தத்தையே முக்கிய நோக்கமாய்க் கொண்டு சுமயரியாதை இயக்கம் என்பதாக ஒன்று ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. இந்த இயக்கமும் எதிரிகளால் படும் தொல்லை ஒரு பக்கமும், படித்த கூட்டத்தாரால் படுகின்ற தொல்லை ஒரு பக்கமும் இருந்து கொண்டு தொல்லைப் படுத்தப்படுகிறது. என்றாலும் சமூகச் சீர்திருத்தம் என்பதேஅதன் முக்கிய கொள்கை என்பதைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல்
இருந்து வருகின்றது
சுமார் 10 வருஷ காலமாக, அது தன்னால் ஆன மட்டும் உழைத்து வந்திருப்பதுடன், சமூகச் சீர்திருத்தத்தின் முக்கியத்தை மக்கள் ஒரு அளவுக்காவது உணரும்படி செய்திருக்கிறது.
மனித சமூகமானது பாமர மக்களை ஜாதி, மதம், பழக்கம், வழக்கம், பழய சாஸ்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்னும் பேரால் கட்டுப்படுத்தப் பட்டு, அவர்களது வாழ்க்கையையே மிருக வாழ்க்கையைவிட மிகக் கீழானதாகவும், அடிமை வாழ்க்கையாகவும் ஆக்கி வந்திருக்கிறது நம்முடைய அரசியல் மாத்திரமல்லாமல், உலகில் எந்த அரசியலும் இப்படிப்பட்ட சமூகக் கொள்கைகளை அஸ்திவாரமாகக் கொண்டே கட்டப்பட்டிருக்கிறது. இந்தச் சமூகக் கொடுமைக்கு அஸ்திவாரமான மதம், ஜாதி, பழக்கம், வழக்கம், சாஸ்திரங்கள், கடவுள் கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது
இன்று பிரபுக்களுக்கும், படித்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும், புரோகிதக் கூட்டத்தாருக்கும் ஜாதி, மதம், பழக்க வழக்கம், சாஸ்திரம், கடவுள் கட்டளை ஆகியவற்றின் பேரால், யாதொரு கெடுதியும் இல்லை; கஷ்டமோ நஷ்டமோ எதுவுமே இல்லை; அவர்கள் எல்லாம் இவற்றின் பயனாய் லாபமும் மேன்மையுமே அடைந்து வருகிறார்கள். அதனாலேயே பெரியதொரு அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் தீவிரக் கொள்கைக்காரர்கள். என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் என்கின்றவர். களுடன் அதன் கர்த்தாக்களாய் இருக்கின்ற படித்த கூட்டத்தாரும், பணக்காரர்களும் சேர்ந்து புதிய அரசியலுக்கு திட்டம் வகுக்கும்போது வெகு ஜாக்கிரதையாய் புதிய அரசியலில் ஜாதி, மதம், பழக்க வழக்கம், சாஸ்திரங்கள் முதலியவைகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்றும், வேறொருவர் அந்தப்படி செய்யவும் விடுவதில்லை என்கின்றதுமான ஒரு காவல் தீர்மானத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் பயனாகவே இன்று இந்நாட்டில் இந்து - முஸ்லீம் தகராறும், இந்து - கிறிஸ்தவத் தகராறும், பார்ப்பன - பார்ப்பனரல்லாதார் தகராறும்,
குடி அரசு - 1935 (1) 450
மேல்ஜாதி - கீழ்ஜாதித் தகராறும் பலமடைய நேரிட்டு விட்டது. அது
காட்டுத் தீ போல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டும் வருகிறது
காங்கிரசுக்காரர்கள் பூனைக் கண்ணை மூடிக் கொண்டு பால்
குடித்தால், உலகமே இருண்டிருக்கும் என்று கருதுவது” போல், அதைத் தங்கள் பிரசாரத்திலும், தங்கள் பத்திரிகைகளிலும் மறைத்து வைத்து ஏமாற்றுகிறார்கள். இவர்கள் அதை மறைக்க மறைக்க அந்த விஷயம் இன்று உலகமே தெரிந்து சிரிப்பாய்ச் சிரிக்கிற நிலைக்கு வந்துவிட்டது.
வட்டமேஜை மகாநாட்டில் என்ன நடந்தது? அரசியல் சீர்திருத்தச் சண்டையா? சமூகச் சீர்திருத்தச் சண்டையா? காங்கிரசை முகமதியர்கள். ஒப்புக் கொண்டார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக் கொண்டார்களா? 'தீண்டப் படாதவர்கள்' ஒப்புக் கொண்டார்களா? தென் இந்திய பார்ப்பனரல்லா தவர்கள் ஒப்புக் கொண்டார்களா? காந்தியார் உள்பட என்ன சொல்ல நேர்ந்தது?
முகமதியர்கள், இந்து ராஜ்யத்தைவிட பிரிட்டிஷார் ராஜ்ஜியம் மேல்
என்றார்கள்.
இந்துக்கள், முகமதியர் ராஜ்ஜியத்தை விட பிரிட்டிஷார் ராஜ்ஜியமே
மேல் என்றார்கள்.
பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ் கட்சியார்) பார்ப்பன ராஜ்ஜியத்தைவிட
பிரிட்டிஷ் ராஜ்ஜியமே மேல் என்றார்கள். பார்ப்பனர் (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனரல்லாதார் (ஜஸ்டிஸ்) ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே மேல்
என்றார்கள்.
காந்தியார், தீண்டப்படாதார் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சியே
மேல் என்பதாக சொல்லிவிட்டார். அதாவது சுயராஜ்யம் இல்லாவிட்டாலும்
சரி; சீர்திருத்தம் இல்லாவிட்டாலும் சரி; தீண்டப்படாதவர்களுக்கு வகுப்பு உரிமை வழங்க முடியாது என்று சொன்னது மாத்திரமல்லாமல் உயிரைக்கூட விட்டு விடுவேன் என்ற சொன்னார்கள். வங்காளத்துக்காரர்களும் இப்படியே சொல்லுகிறார்கள். பஞ்சாப்காரர்களும் இப்படியே சொல்லு
கிறார்கள், எல்லைப் புரத்துக்காரர்களும் இப்படியே சொல்லுகிறார்கள்.
இந்தப்படி சொல்லுவது இன்று நேற்று என்று சொல்லிவிட முடியுமா? இந்து தேச சரித்திரத்தைக் கண்டால் ஆயிரக்கணக்கான வருஷங்களாக இப்படி வகுப்புக்கு வகுப்பு விரோதமும், கலகமும் நடந்து கொண்டு
வந்திருப்பதைச் சுலபத்தில் அறியலாம்
இதற்கு யார் இதுவரையில் என்ன பரிகாரம் செய்தார்கள்? “தீண்டப் படாதவர்களுக்கு, உயிர் போனாலும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க s வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
மாட்டேன்'' என்று சொன்ன காந்தியார், அதைக் கெடுத்ததல்லாமல் அவர் களுக்கு ஆக என்ன செய்தார்? அவர்கள் பேரால் பணம் வசூல் செய்தார். அதைக் கொண்டு காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் வெற்றி பெறும்படிசெய்தார்.
பிறகு என்ன செய்தார்? காங்கிரஸ்காரர்கள் இந்திய சட்டசபையில். தீண்டாமை ஒழியும்படியான சட்டங்கள் கொண்டு வரக்கூடாது என்று உத்திரவு போட்டார். தீண்டாமை விஷயமாய் ஏற்கனவே இருந்த மசோதாவையும் காந்தியாரும் ஆச்சாரியாரும் கொலை செய்தார்கள்.
இவைகளையெல்லாம் நான் சொல்லவில்லை. ஆதார மூலமாய்ப் பத்திரிக்கைகளில் வந்ததையே சொல்லுகிறேன். இதைக் காந்தியாரும், ஆச்சாரியாரும் ஒப்புக் கொண்டுமிருக்கிறார்கள்.
அதாவது “பொது ஜனங்கள் சம்மதமில்லாமல், சமூக சம்பந்தமான. தீர்மானங்கள் கொண்டு வரக் கூடாது'' என்று சொல்லி விட்டார்கள்.
தீண்டாமை ஒழிக்கப்படாமல், இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்ஜியம் வராது என்று சொன்ன காந்தியாரும், ஆச்சாரியாரும் இன்று என்ன செய்கிறார்கள்?
முஸ்லீம்களை ஏமாற்றி, சுவாதீனம் செய்து கொண்டு தீண்டப்படா தாரையும், பார்ப்பனரல்லாதாரையும் ஒழிக்கப் பார்த்துவிட்டு இப்போது ஒன்றும் முடியாமல் போய்விட்டதால் திரைமறைவிலிருந்து சூட்சிகள் செய்ய “ஓய்வு” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் என்ன காரியம் சாதிக்க முடியும்? தங்களையே தாங்கள் ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் என்றுதான் சொல்ல முடியும்
இன்றையக் காங்கிரஸ் பிரசாரம் ஐஸ்டிஸ் கட்சியை வைவதல்லாமல், அதை ஒழிக்க முயற்சிப்பதல்லாமல் எப்படியாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஒழித்து, நாட்டை பார்ப்பன ஆதிக்கத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்பதல்லாமல் வேறு என்ன கொள்கையையும், திட்டத்தையும் கொண்டிருக்கிறது?
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் செல்லுமிடங்களிலெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை நன்றாய் வைகிறார். அதற்குத் தகுந்தபடி நல்ல அவமானமும் அடைகிறார். அப்படியிருந்தும் இன்று பார்ப்பனப் பத்திரிகைகள் அதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றன. இந்தப்படி இருந்தால் நாட்டில் என்ன காரியம் நடக்கும்?
சமூகசம்பந்தமாகவும், ஜாதி மதசம்பந்தமாகவும் உள்ள தகராறுகளையும், அவநம்பிக்கைகளையும் ஒழிக்க யார் என்ன பிரயத்தனம் செய்கிறார்கள்?
வெள்ளைக்கார அரசாங்கத்தைவைவதும், முஸ்லீம்கள் இயக்கத்தையும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் அழிக்கச் சூட்சி செய்வதுமே
குடி அரசு - 1935 (1) 452
காங்கிரஸ் வேலையானால், இந்தக் காங்கிரசினால் மக்களுக்கு என்ன பலன். ஏற்பட்டுவிடும்? முதலில் வர்ணங்களையும், ஜாதிகளையும் பிறவியில் உயர்வு தாழ்வுகளையும் ஒழிக்காமல் எப்படி மனிதனுக்கு மனிதன்
ஒற்றுமையும் அன்பும் ஏற்பட முடியும்?
ஒரு பெருங்கூட்ட மக்கள் இன்று சமூக வாழ்வில் தீண்டப்படாதவர் களாகவும், மற்றொரு பெருங்கூட்ட மக்கள் சமூக வாழ்வில் சூத்திரர்கள், அடிமைகள், கூலிகள், தாசி மக்கள், இழிமக்கள் என்கின்ற பெயருடனும் இருந்து வருகிறார்கள் என்றால், இது மாறுவதற்கு அருகதை இல்லாத சுயராஜ்யம் யாருக்கு வேண்டும்? இது மாறுவதற்கு இல்லாத மதமும், சாஸ்திரமும், கடவுளும் யாருக்கு வேண்டும்? ஆகவே இந்தக்கொடுமை ஒழிக்கப்படுவது சுயராஜ்யமா? அல்லது வெள்ளைக்காரனை ஒழிப்பதே சுயராஜ்யமா? என்று கேட்கின்றேன்.
மேற்கண்ட கொடுமைகளை ஒழிக்கும் மூயற்சிக்கு எங்காவது வெள்ளைக்காரன் குறுக்கே வருகிறானா? இவைகள் ஒழியக் கூடாதென்று எங்காவது, எப்போதாவது வெள்ளைக்காரன் கூப்பாடு போடுகின்றானா?
மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாகவும், சுதந்திரத்துக்கு எதிரியாகவும் இருப்பது இன்று நமது மதம், ஜாதி, சாஸ்திரம், கடவுள் ஆகியவைகளா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? எந்தத் தனிப்பட்ட ஆங்கிலேயனாவது இன்று இந்தக் காரியங்களுக்கு எதிரியாய் வருகிறானா? வெள்ளைக்காரனை வைவதின் மூலம் மக்களை ஏமாற்றி அடிமையாகவும் மானமற்றவர்களாகவும் நிரந்தரமாய் வைத்திருக்கச் செய்யும் சூட்சியே இன்றையக் காங்கிரசின் யோக்கியதையாகும் இம்மாதிரியான கொடுமைகளுக்கு நான் பார்ப்பனர்களை மாத்திரமே
குற்றம் சொல்ல வரவில்லை.
ஏனெனில் பார்ப்பனர்கள் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகக்
குற்றம் சொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள். இதன் பயனாய் அவர்கள் சிறிதுகூட அசைக்கப்படவே இல்லை. அறிவாளிகள் எல்லோரும் பார்ப்பனர்களை வைதுதான் இருக்கிறார்கள். சமீப காலத்தில் விவேகானந்தர், நாயர், லஜபதிராய், தாஸ், ராய் முதலிய அனேகர், எவ்வளவோ கடினமாகப் பார்ப்பனர்கள் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். என்ன பலன் கண்டு விட்டோம்? பார்ப்பனர்களை வைகின்றோமே ஒழிய, அவர்களுடைய சூட்சிகளுக்கு நாம் நிபந்தனையில்லாத அடிமைகளாய் இருந்து வருகிறோம்.
பார்ப்பனனுடைய மதத்தை நாம் ஒப்புக் கொண்டிருக்கிறோம் அவன் சாஸ்திரங்களுக்கு அடிமையாய் இருந்து வருகிறோம்; அவன் கடவுளுக்குப் பக்தி செலுத்தி வருகின்றோம். இவற்றையெல்லாம் செய்து கொண்டு பார்ப்பனனை வைவதால் என்ன பயன்? 43 ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
இன்றுள்ள பார்ப்பனர்களை எல்லாம் நீங்கள் ஒரு சிறு பூண்டுகூட
இல்லாமல் ஒழித்துவிட்ட போதிலும், அவன் மதமும், சாஸ்திரமும், கடவுளும் உள்ள வரையில் ஒன்றுக்கு ஆயிரமாய்ப் பார்ப்பனர்களும் அவர்களது ஆதிக்கமும் பெருகிக் கொண்டுதான் இருக்கும்.
தீண்டத்தகாத மனிதனை இந்துமதமல்லவா சிருஷ்டித்தது?
நாலு வருணம், சூத்திரன் என்பது கீதையிலேயே இருக்கிறதே.
“நாலு வருணத்தையும் நான்தான் சிருஷ்டித்தேன்" என்று 'பகவானே'
கீதையில் திருவாய் மலர்ந்தருளுகிறாரே.
ஆகவே இந்து மதத்தையும், பகவத் கீதையையும், கிருஷ்ண பகவானையும் உண்மை என நம்பிக் கொண்டு இருக்கும் ஒருவன், தீண்டாமையையும்; சூத்திரப் பட்டத்தையும் பாதத்தில் இருந்து உற்பத்தியான. வருணத்தையும் எப்படி ஒழிக்க முடியும் என்று கேட்கிறேன்.
இன்று காந்தியார் முதல் கொண்டு, சத்தியமூர்த்தியார் ஈறாக உள்ள எந்த அரசியல்வாதியாவது இதை ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேட்கின்றேன்?
அதுபோலவே ஜஸ்டிஸ் கட்சியிலும் பொப்பிலிராஜா முதல், ஏ. ராமசாமி முதலியார் ஈறாக உள்ள தலைவர்கள் இவற்றை ஒப்புக் கொள்ளுவார்களா என்று கேட்கின்றேன்.
இதற்காகவே தான் சுயமரியாதை இயக்கம் இருந்து தீர வேண்டி யிருக்கிறது. இன்று இந்தியாவிலேயே சுயமரியாதை இயக்கம் ஒன்றுதான், ஜாதி மத பேதத்தால் ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கு அஸ்திவாரமான மதங்களையும், சாஸ்திரங்களையும், கடவுள்களையும், அழிக்கவும் ஒழிக்கவும் தைரியமாய் வேலை செய்து வருகின்றது. இதனாலேயே, இது இன்று இந்தியாவில் எவருடைய ஆதரவையும் பெற முடியாமல் தன். காலிலேயே நின்று தள்ளாடிக் கொண்டிருக்க வேண்டியதாகின்றது
சுயமரியாதைக்காரர்கள் ஏன் ஜாதி, மதம், சாஸ்திரம், கடவுள் ஆகியவற்றின் மீது “மிருகப் பாய்ச்சல்" பாய்கிறார்கள் என்பதற்குக் காரணம் இன்னது என்று இப்போதாவது உணருங்கள்.
காந்தியாருக்கு, கீதையே வழிகாட்டியாய் இருந்து வருகிறதாம் ஆச்சாரியார், கீதை பாராயணத்துக்கு ஆகவே, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாராம். சத்தியமூர்த்தியார், கீதையைக் காப்பாற்றுவதற்கே சுயராஜ்ஜியம் கேட்கின்றோம் என்கிறாராம். இப்படிப்பட்ட “தலைவர்களின்” கை ஆயுதமாய் இருக்கும் காங்கிரசினுடன் சுயமரியாதைக்காரர்கள் எப்படிக் கலக்க முடியும்?
குடி அரசு - 1935 (1) 454
இப்படிப்பட்ட காங்கிரசில் சேர்ந்து உழைப்பதன் மூலம், ஜாதி மதக் கொடுமைகளும், சாஸ்திரம், கடவுள் சம்பந்தமான மூடநம்பிக்கைகளும் அவற்றால் ஏற்படும் ஏழ்மைகளும், இழிவுகளும் எப்படி ஒழிக்கப்பட முடியும்?
ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் மக்கள் எல்லோரும் பிறவியில் சமம் என்பதையும், எல்லோருக்கும் சம சந்தர்ப்பமும், சம விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் கொடுக்க வேண்டும் என்பதையாவது ஒப்புக் கொள்ளுகிறார்கள்
இப்படிப்பட்ட ஜாதி, மதம், சாஸ்திரம், பழக்க வழக்கம் ஆகியவை களை அரசியல் மூலம் காப்பாற்றுகிறோம் என்று அவர்கள் உத்திரவாதமும் கொடுப்பதில்லை. ஆகவே ஜாதி, மதக் கொடுமையிலும், பழக்க வழக்க கொடுமை யிலும், சாஸ்திரம் கடவுள்கள் என்கின்ற கொடுமையிலும் துன்பமும்
இழிவும் அடைந்து வருகின்றவர்கள், அதிலிருந்து விடுதலை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே உணர்ந்து பாருங்கள்.
குறிப்பு: 16.06.1935 ஆம் நாள் கோபிச்செட்டிப்பாளையத்தில் சமூகச் சீர்திருத்தச் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 23.06.1935
455 ஏரரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
S.ILR-60
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
பாராட்டுகிறோம்
இன்றைய அரசியல் கிளர்ச்சியானது “சுயராஜ்ஜியம் சம்பாதிக்க" என்று சொல்லிக் கொண்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்கவே பாடுபடுகின்றது என்பதை, நாம் எவ்வளவோ தடவை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது
அதி தீவிர காங்கிரஸ் வாதியாகவும், அதி தீவிர தேசீய வாதியாகவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி. தியாகராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ்டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும்
அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தியோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற்பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால், அதற்குப் பார்ப்பன ரல்லாதார்கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று
இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித்துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத்துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய்வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத்துக்கும், விஷமப் பிரசாரத் துக்கும் ஆளாக வேண்டி இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூட்சியானது, பார்ப்பனரல்லாதாருக்குள்ளும் பிரிவினையையும், கட்சி பேதங்களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.
எது எப்படி இருந்த போதிலும், பல காரணங்களால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இன்று சென்னை அரசாங்கத்தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப்பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங்கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்துவிட்டது
குடி அரசு - 1935 (1) 456
இந்த நிலையானது, இனி எப்போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும்கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள். ஆனதால் அக்கொள்கை இனி மாற்றப்படுவது என்பது
சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகிவிட்டது
பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோகங்களிலும் இன்று இருந்து வரும் விகிதாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் போராததாய் இருக்கின்றது என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியேயாகும்
அந்த முறை இந்திய கவர்ன்மெண்டிலும், ஐ.சி.எஸ். முதலிய பெரிய இந்திய உத்தியோகத்திலும் கையாளப்பட வேண்டும் என்கின்ற கிளர்ச்சியும், இப்பொழுது வழுவடைந்து அது அரசாங்கத்தாரால் கவனிக்கப்படப் போகின்றது என்கின்ற சேதியும் மகிழ்ச்சியைத் தரத் தக்கதாகும்
ஆனால் நமது மாகாணத்துக்குள்ளாகவே இருந்து வரும் ஜுடிஷியல் இலாக்கா அதாவது மூனிசீப்பு, ஜட்ஜி முதலிய உத்தியோகங்களில் இந்த முறையானது சரியாய்க் கவனிக்கப்படாமலும் நமது மாகாணத்தில் உள்ள ரயில்வே இலாக்காக்களில் இதுவரை சிறிதும் கவனிக்கப்படாமலும் இருந்து வந்தது ஒரு பெருங் குறையாகவும், மிகுதியும் வருந்தத்தக்க விஷயமாகவும்
இருந்து வந்தது ஹைகோர்ட்டு ஆட்சிக்குள்பட்ட இலாக்காக்களில், வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவ முறை அனுஷ்டிக்கப்படாததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையேயாகும்.
ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ளதாக இருந்து அக்கட்சித் தலைவர்கள். பொது நலத்தைவிட, சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர்களாய் இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்களேயானால் 4, 5 வருஷங்களுக்கு முன்பாகவே, ஹைக்கோர்ட் இலாக்காவிலும் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவ முறை அமுலுக்கு வந்திருக்கும்
கட்சிக்குப் பலமும், ஒற்றுமையும் இல்லாதிருந்ததால், ஹைகோர்ட்டாரை வகுப்புவாரி முறையைக்கையாளும்படி கட்டாயப்படுத்தத் தைரியமில்லாமல் போய்விட்டது
என்றாலும் இப்போது பொது ஜனங்களுடைய உணர்ச்சியானது அது விஷயத்தில் பலப்பட்டுவிட்டதாலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாதமாதிரியில் செல்வாக்குப் பெற்றுவிட்டதாலும், இனி அது யாராலும் அசைக்க முடியாது என்கின்ற நிலைபெற்று விட்டதாலும்,
457 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
இப்போது ஹைகோர்ட்டாரையும் இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டு வந்து விட்டுவிட்டது.
இவ்வளவோடு நின்றுவிடாமல், இப்போது தென்னிந்திய ரயில்வே கம்பெனியாரையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைக் கையாண்டு தீரும்படியான நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டது
இந்தக் காரியத்துக்கு ஜஸ்டிஸ் கட்சி உட்பட சுயமரியாதை இயக்கமும் அதன் தலைவர் சர்.ஆர்.கே. சண்முகம், K.C.LE., போன்றவர்களும் எவ்வளவு தூரம் பொருப்பாளிகள் என்பதை பொது ஜனங்களில் அனேகர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
தென் இந்தியப் பார்ப்பனர்கள், தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் உள்பட ஒவ்வொருவருக்கும் சர். ஷண்முகத்தின் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும், ஜஸ்டிஸ் கட்சி மீதும் இவ்வளவு ஆத்திரமும், துவேஷமும் வரக் காரணம் என்ன என்பதைக் கூர்மையாகப் பார்த்தால், அவை செய்துள்ள காரியம் எவ்வளவு என்பது விளங்காமல் போகாது ஆகவே இன்று 8188 ரயில்வே கம்பெனியார், தங்கள் கம்பெனி உத்தியோகத்துக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை முறையை அனுஷ்டித்து, அந்தப்படி உத்தியோகம் வழங்க ஆரம்பித்து விட்டார்கள். இரண்டொரு மாதத்துக்குமுன் எஸ்.ஐ.ஆர். கம்பெனிக்குச் சுமார் 250 உத்தியோகம் தேவை இருந்ததில், சுமார் 150 உத்தியோகம் வரை பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கும், மற்றவை பெரிதும் முகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக்கும் வழங்கிவிட்டு சுமார் 20 உத்தியோகங்களுக்கும் குறைவாகவே பார்ப்பனர்களுக்கும் வழங்கி இருக்கிறார்கள்.
இதன் பயனாய் பார்ப்பனர் பெரியதொரு கிளர்ச்சியையும்,
சூட்சியையும் செய்து, இந்த முறையை ஒழிக்கும்படியும், இதற்கு ஆக அதாவது உத்தியோகம் தெரிந்தெடுப்பதற்கு ஆக, ரயில்வே கம்பெனி டைரக்டர்களால் ஏற்படுத்தி இருக்கும் ஸ்டாப் செலக்ஷன் போர்ட் என்பதை கலைத்து விடும் படிக்கும் பெரியதொரு முயற்சி செய்தார்கள். பெரிய அதிகாரிகளை பல வழிகளில் சுவாதினப்படுத்தி வெற்றி பெறப் பார்த்தார்கள்.
அதற்கு எதிர்ப்பாக திருச்சி தோழர்கள் டி.எம். நாராயணசாமி பிள்ளை, கலிப்புல்லா சாயபு, பள்ளத்தூர் அருணாச்சலம், டி.பி. வேதாச்சலம் முதலியவர்கள் அம்முயற்சியைக் கண்டித்து கண்டனக் கூட்டம் போட்டு தீர்மானங்கள் அனுப்பி கிளர்ச்சி செய்ததும் பத்திரிகையில் பார்த்திருக்கலாம் இதன் பயனாய் பார்ப்பன முயற்சி வெற்றி பெறாமல் போய், கடைசியாக ஒன்றும் முடியாமல் நாம் விரும்பும் வகுப்புவாரி முறை நிலைத்துவிட்டதோடு.
குடி அரசு - 1935 (1) 458
மாத்திரமல்லாமல், இனவாரியாக இன்ன இன்ன வகுப்பில், இவ்வளவு இவ்வளவு எண்ணிக்கை வேண்டும் என்பதாக, ரயில்வே மேல் அதிகாரிகள் விளம்பரமும் செய்யத் தொடங்கி விட்டார்கள். அதாவது “தென் இந்திய ரயில்வே நிர்வாகத்திற்கு 84 கிளார்க்குகள் வேண்டியிருக்கிறது
அவற்றுள் பார்ப்பனரல்லாதார். 42
முகமதியர் 17
இந்திய கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் ஆகியவர்கள் 17
தீண்டப்படாத வகுப்பார் உள்பட மற்ற வகுப்பார் 8
84 ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியிருக்கிறது'' என்று விளம்பரம் செய்திருக்கிறராகள். (இது 11.06.35-ந் தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் இருக்கிறது)
“ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுமயரியாதை இயக்கம் என்ன. செய்தது" என்று கேட்பவர்கள், இதைச் சிறிது கவளித்துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டும் என்று ஆசைப்படுகின்றோம்
இந்த நாட்டில் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி தங்களது சகல சவுகரியத்தையும் தியாகம் செய்து, தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்தும் படிக்க வைத்த பிள்ளைகள், பார்ப்பனரல்லாதார், முகமதியர், கிறிஸ்தவர் முதலிய வகுப்புகளில் எத்தனை பிள்ளைகள் இன்று வேலை இல்லாமல், குடும்பத்தோடு சோற்றுக்குத் திண்டாடும் நிலையில் இருந்து வருகிறார்கள் என்பதும், அவர்கள் வாசல்படிகள் தோறும் வீடு தவறாமல் நுழைந்து தங்கள் காலக்ஷேபத்துக்கு வேலை வேண்டுமென்று எந்தெந்த மாதிரியில் யார் யாரை, எப்படி எப்படிப் பல்லைக் கெஞ்சுகிறார்கள். என்பதும், யாராவது உணர்ந்தால், அவர்கள் அத்தனை பேர்களையும் இந்த மாதிரியான ஏற்பாடுகளை நன்றி அறிதலோடு வரவேற்கச் சொல்லுமே தவிர நன்றி விசுவாசம் யோக்கியப் பொருப்பு இல்லாமல் அதற்கு ஆக வேலை செய்யும் தலைவர்களை இழித்தன்மையாய்க் கருதாமலும், பேசாமலும் இருக்கும்படியும் செய்யும்.
அதில்லாமல், தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்.
களுக்கு அடிமையாகி, அயோக்கியத்தனமான தேசாபிமானப் பட்டம் பெற்று மானத்தையும், தங்கள் சமூகத்தையும் விற்று, சமூக இளைஞர்களை பலி கொடுத்து வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டங்களுக்குஇதன் அருமை தெரியாது என்பதோடு, தெரிந்திருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்திற்குப் B9 ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
பயந்து அவர்களோடு சேர்ந்து கொண்டே “தேசம் பெரிதா, உத்தியோகம் பெரிதா?” என்று அர்த்தமற்றதும், முட்டாள்தனமானதும், சூட்சியும், விஷமமும் நிறைந்ததுமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு திரியத்தான் முடியும் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை ஆகவே எஸ்.ஐ.ஆர். ரயில்வே உத்தியோகத்தில், இவ்வித வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மேற்பட்டதை நாம் மகிழ்ச்சியோடு பாராட்டுவதோடு, அதற்கு ஆதரவாய் இருந்த பிரமுகர்களையும் ரயில்வே இலாக்காவிலேயே இருந்து கொண்டு இதற்காகப் பெரிதும் பாடுபட்டு எவ்வளவோ தொல்லைகளைச் சமாளித்துக் கொண்டு இந்த வெற்றியை உண்டாக்கிய பெரியார்களையும், சிறப்பாகவும், குறிப்பாகவும் ஸ்டாப் செலக்ஷன் போர்டு செக்ரட்டரி தோழர் பி.கோவிந்தராஜ் அவர்களையும் ரயில்வே கம்பெனி ஏஜெண்டையும், டைரக்டர்களையும், மனமார - வாயார - கையார
ஏற்றிப் போற்றி வாழ்த்துகின்றோம்
குடி அரசு - தலையங்கம் - 23.06.1935
குடி அரசு - 1935 (1) 460
மற்றொரு புத்தகம் பறிமுதல்
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் குடி அரசுக் கலம்பகம் என்ற புத்தகம் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்
கிறதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. இதற்கு முன் மூன்று புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் விஷயம் நேயர்கள் அறிந்ததே. இது நான்காவது புத்தகமாகும். இனியும் பல புத்தகங்கள் பறிமுதல் செய்யப் படலாம் என்று கருதினால் அது முற்றிலும் ஆதாரமற்றதாகாது
குடி அரசு - செய்தித் துணுக்கு - 23.06.1935
61— வரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
கொச்சி திவானின் சமதர்மத் தீர்ப்பு
கொச்சி சமஸ்தானம் திருச்சூரில் ஒரு குளம் சம்பந்தமாக மேல் ஜாதிக்காரர் என்பவர்களுக்கும், கீழ் ஜாதிக்காரர் என்பவர்களுக்கும் ஏற்பட்ட பிரவேசத் தகராரில், திவான் சர். RK. ஷண்முகம் அவர்கள், அக்குளம் சர்க்கார் பராமரிப்பில் இருப்பதால் மகாராஜாவின் பிரஜைகள் எல்லோருக்கும் அதை உபயோகித்துக் கொள்ள சரிசமமான உரிமை உண்டு என்று தீர்ப்புக் கூறிவிட்டார்.
இது சம்பந்தமாக மேல் ஜாதிக்காரர்கள் இது “வழக்கத்துக்கு விரோதமாயிருக்கிறது'' என்று எவ்வளவோ கிளர்ச்சி செய்தும் தூதுகள் நடந்தும் ஒன்றும் பயன்படவில்லை.
திவான் அவர்கள், தூதுக் கோஷ்டிக்குச் சமாதானம் சொல்லுகையில், வழக்கத்தையே பிரதானமாக வைத்துப் பார்த்தால், நான்கூட இங்கு திவானாய் இருக்கக் கூடாது என்று தான் ஏற்படும்” என்று சொன்னாராம். பிறகு, இப்போது அதைப் பற்றி எவ்வித பிரஸ்தாபமும் இல்லாமல் அக் குளத்தில் எல்லோரும் சமமாய்ப் புழங்குகிறார்கள்.
குடி அரசு - செய்தித் துணுக்கு - 23.06.1935
குடி அரசு - 1935 (1) 462
இராமனாதபுரம் ஜில்லா சிவில் கோர்ட்டுகவில் பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்
பிராமணரல்லாதாருக்கே வேலை கொடுக்க வேண்டுமென்றும், பிராமணர்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாதென்றும் ஹைகோர்ட் சர்க்குலர்களும், கவர்ன்மெண்டு ஆர்டர்களும் இருந்தும், அவைகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை
திருச்சி, தஞ்சாவூர் ஜில்லாக்களிலிருந்து இந்த ஜில்லாவிற்கு இறக்குமதி செய்து வருகிறார்கள். சமீபமாக ஏற்பட்ட வகுப்புவாரி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற ஜி.ஓ.வை குயுக்தியாக அர்த்தம் பண்ணி, தங்கள் டிபார்ட்மெண்டுக்கு அமுலுக்கு வரவில்லையெனச் சொல்லி விட்டார்கள்
வருஷத்தில் பெயரளவில் சில பிராமணரல்லாதாருக்கு, ஒரு மாச இரண்டு மாசத்தில் வேலை போட்டு விரட்டிவிட்டு, நீடித்த பதிலையும் பெர்மனெண்டு வேலைகளையும் பிராமணர்களுக்கே போட்டு தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
8 வருஷம் 10 வருஷங்களுக்கு முன்னதாகவே இந்த டிபார்ட்மெண்டில் நிலைத்து ஆக்டிங் பார்த்து வரும் பார்ப்பனரல்லாதாரின் சர்வீசைக் கவனித்தால், 2 அல்லது 3 வருஷம் தானிருக்கும். ஏனெனில் வருஷத்தில்
4 மாசம் தான் பதில் போட்டிருப்பார்கள். சமீப காலத்தில் வந்த பிராமணன், துடர்ச்சியாக 2 அல்லது 3 வருஷம் பதில் பார்த்துவிட்டு, பிராமணரல்லாதாருக்கு சீனியர் என வந்து விடுவான். இப்பிராமணர்களுக்கே வேலைகளும் பெர்மனன்டாகிவிடும். ஆதலால் பிராமணரல்லாத ஒருவன் 10 வருஷங் களுக்கு முன்பு இருந்து ஆக்டிங் பார்த்து வந்தாலும், சீனியராக மதிக்கப்பட மாட்டான். தொடர்ச்சியாக ஆக்டிங் வேலையும் கிடைக்காது. காயமான உத்தியோகம் கிடைப்பதரிது. சிலருக்கு இந்த ஆக்டிங் வேலையும்கூடப் போடுவதில்லை. சீனியர் பிரகாரம் சர்வீசைக் கவனித்து வேலை போடுவதாகச் சொல்லுவார்கள். திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத புதிய பிராமணர்களுக்கு பெர்மனென்டாக உத்தியோகங்கள் போட்டுவிடுவார்கள் இவ்விதமே இதுவரை எத்தனையோ புதிய புதிய பார்ப்பனர்களுக்கு வேலை போட்டுக் கொண்டு வருகிறார்கள். அப்பொழுது சீனியாரிட்டி என்பதையே மறந்து விடுவார்கள். இவர்கள் செய்யும் அநீதியை மேல்
4 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
உத்தியோகஸ்தர்களுக்குத் தெரிவித்தால், அவர்களுக்கு வேண்டிய கெடுதியைச் செய்வார்கள். "பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடு'' என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் “பிராமணர்களுக்கு மட்டும் உத்தியோகம்” என கோர்ட்டு வாசல்களில் போர்டுதான் போடாத
குற்றம். போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லாதாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள். சுயமரியாதையுள்ள எந்த மனிதனும் இதைச் சகிக்க முடியுமா!
சென்ற 10 வருஷங்களாக எத்தனை பிராமணரல்லாதாருக்கும், பிராமணர்களுக்கும் பெர்மனென்டாக வேலை போட்டிருக்கிறார்கள். சென்ற 10 வருஷங்களாக இந்த ஜில்லாவில் ஜட்ஜுகளும், சிரஸ்தார்களும் மற்ற உத்தியோகஸ்தர்களும் பிராமணர்களாகவே இருந்து வருகிறார்கள். சென்ற மாசம் இராமனாதபுரம் ஜில்லாக் கோர்ட்டிலும், சிவகங்கை சப் கோர்ட்டிலும் திடீரென ஒருமாசம்கூடசர்வீஸ் இல்லாத 2 பார்ப்பனர்களுக்குபெர்மனென்டாக அமினா வேலை போட்டிருக்கிறார்கள். 8 வருஷம் 10 வருஷங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆகிறது. ஷி நியமுகங்களை ரத்துச் செய்து பிராமணரல்லாதாருக்குப் போடும்படியாக ஹைகோர்ட்டாரையும் கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்கிறோம்
இப்பொழுது இந்தஜில்லாவில் 4,5அமினா வேலைகள்பெர்மனென்டாக காலியாயிருக்கிறது. இவைகளையாவது பிராமணரல்லா தாருக்குக் கொடுப்பார்களா? அல்லது அக்கிரகாரத்திலுள்ளவர்கள் தான் உரித்தானவர். களெனச் சொல்லப் போகிறார்களா?
கவர்ன்மெண்டாரும் ஹைகோர்ட்டாரும் கிருபை செய்து பிராமண ரல்லாதாரின் குறைகளை நீக்கி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைச் சீக்கிரமாக அமுலுக்குக் கொண்டுவந்து உதவியற்றுத் தவிக்கும் பிராமணரல்லாதாரை ரட்சிக்கும் படியாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்
குடி அரசு - கட்டுரை - 23.06.1935
குடி அரசு - 1935 (1) 464
யார் கெட்டிக்காரர்கள்?
சந்திரலோகத்தைக் கண்டுவிட முடியும்
இந்தப் பூலோகத்துக்கும், சந்திரலோகத்துக்கும் 250000 இரண்டு லட்சத்து அய்ம்பது ஆயிரம் மைல் தூரம் இருக்கிறது இதை மணி ஒன்றுக்கு 2500 இரண்டாயிரத்து அய்ந்நூறு மயில் வேகம் போகக் கூடிய ஒரு பறக்கும் யந்திரத்தின் மூலம் 100 நிமிஷ நேரத்தில் பூலோகத்தில் இருந்து சந்திரமண்டலத்துக்குப் போய் விடலாம் என்று அமெரிக்க சங்கத்தார் உத்தேச திட்டம் போட்டிருக்கிறார்கள்.
இந்தத்திட்டத்தை நமது இந்திய மகாத்மாக்களும், சங்கராச்சாரிகளும், பண்டார சன்னதிகளும் ஆகிய ஞானிகள் ஆகாயக் கோட்டை யென்றோ, வீண் கனவென்றோ தான் சொல்லுவார்கள்
ஆனால் மணி ஒன்றுக்கு 700 மையில் வேகம் போகக் கூடிய ஆகாய விமானம் செய்து பார்த்தாய் விட்டது
இனியும் இதிலிருந்து பல அபிவிருத்திகள் நடந்து வேகத்தைப் பெருக்க வசதி இருக்கிறது என்பதைக் கண்டு வருகிறார்கள். ஆகவே மேல்நாட்டு மக்களுடைய ஆசையும், முயற்சியும் இந்த மாதிரியான துறைகளில் சென்று கொண்டிருக்கின்றன. நம்முடைய முயற்சிகள் கிருஷ்ணன் மனிதனா - கடவுளா?
ராமாவதாரம் முந்தியா - கிருஷ்ணாவதாரம் முந்தியா?
பூமியை ஆதிசேஷன் தாங்கினால், ஆதிசேஷனை யார் தாங்குகிறார்?
உலகத்தை இரணியாக்ஷதன் பாயாய்ச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத் துக்குள் புகுந்து கொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எங்கு? எதன்
மேல் இருந்தது? மகாவிஷ்ணு பன்றி அவதாரமெடுத்தபோது என்ன ஆகாரம் சாப்பிட்டார்?
சிவனும் விஷ்ணுவும் (ஆணும் ஆணும்) சேர்ந்தால் பிள்ளை எப்படி பிறந்திருக்கும்? இந்திரியத்தை வாய் வழி உட்கொண்டால் பிள்ளை பிறக்குமா?
அப்படியானால், இப்போது ஏன் அப்படிப்பட்ட எவருக்கும் பிள்ளை பிறப்பதில்லை?
465 ௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
என்பது போன்ற 'முட்டாள்தனமானதும்' 'போக்கிரித்தனமானதுமான' பிரச்சினையில் நமது சாஸ்திரிகளுடைய ஆராய்ச்சிகள் சென்று கொண்டிருக்கின்றன இவ்வளவோடு நின்று விடுகின்றோமா?
“சந்திரலோகத்தைப் பார்க்கஇப்போதுதான் நமது வெள்ளைக்காரர்கள். நினைத்து இருக்கிறார்கள். நம்முடைய பெரியவர்கள் எத்தனையோ காலத்துக்கு மூன் சந்திரனைப் பார்த்தாகிவிட்டதென்றும், நம்முடைய குருவின்மார் மனைவிகள் சந்திரனைப் புணர்ந்து புதனைப் பெற்று இருக்கிறார்கள் என்றும், அதற்காகப் புருஷர்கள் அந்தச் சந்திரன் மீது கோபித்து அவனை மாதத்திற்கு ஒரு முறை தேயவும், வளரவும் செய்து விட்டார்கள் என்றும், அது மாத்திரமல்லாமல் சந்திரனையும் அவனுக்கு
வெகுதூரத்தில் இருக்கும் சூரியனையும், சராசரி வருஷத்துக்கு ஒருமுறை யாவது (ராகு) கடிக்கச் செய்து அந்த விஷமிறங்க நம்ம சாஸ்திரிகள் ஜபம் செய்கிறார்கள்! என்றும் சொல்லி விடுகிறோம். ஆகவே வெள்ளைக்காரர்களுடைய அறிவிற்கும், நம் சாஸ்திரி களுடைய அறிவுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதையும்,
யார் கெட்டிக்காரர்கள் புத்திசாலிகள் என்பதையும் நீங்களே கண்டுபிடியுங்கள்.
குடி அரசு - கட்டுரை - 30.06.1935
குடி அரசு - 1935 (1) 466
யார் வெட்கங்கெட்ட மடையர்கள்?
ராமசாமி முதலியாரா?
“காங்கிரஸ் தலைவர்களா???
தோழர் எ. ராமசாமி முதலியார் அவர்கள் கோவையில் 16.6.35 தேதி மாலை டவுன்ஹால் கட்டடத்தில் ஒரு உபன்யாசம் செய்தார். அதில் முக்கியமாக காங்கிரசால் இந்திய முற்போக்குக்கும், விடுதலைக்கும் ஏற்பட்ட முட்டுக்கட்டையைப் பற்றியும், அதனால் தேசம் அடைந்த சீர்கேட்டைப் பற்றியும் ஜஸ்டிஸ் கட்சி செய்துள்ள நன்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்கினார். அது தமிழ்நாடு, விடுதலை முதலிய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. இவ்வார குடி அரசிலும் அதன் முக்கிய பாகங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றிற்குச் சமாதானம் சொல்லி மறுக்க வேண்டும் என்கின்ற ஆசை மீது, கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள், ஒரு வாரம் பொறுத்து அதே யிடத்தில் ஒரு கூட்டம் போட்டுப் பேசி யிருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. அதை ஆதாரமாய் வைத்து “கோவையில் சவுக்கடி” என்ற தலைப்பு
கொடுத்து ஒரு பார்ப்பனப் பத்திரிகை ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது அதில் அப் பத்திரிகை பல இழி மொழிகளை பிரயோகித்துத் தனது இயற்கைக் குணத்தைக் காட்டி இருக்கிறது
அதாவது, தோழர் ராமசாமி முதலியார், கோவையில் “தேனபிமானமும் சுயமரியாதையும் இல்லாமல் பேசினார்” என்றும் “வெட்கமில்லாமல் பேசினார்” என்றும் 'மடத்தனமாகும்”” என்றும் மற்றும் இம்மாதிரியான
முறையில் எழுதி இருக்கிறது அதை அனுசரித்தே கோவை காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் பேசியிருக்கிறார்கள். ஆகவே யார் “வெட்கங்கெட்டவர்கள்'' என்றும், யார் “மடையர்கள்”
என்றும், யார் “சுயமரியாதை அற்றவர்கள்” என்றும், யார் 'தேசத்துக்குத் துரோகம் செய்தவர்கள்” என்றும் பொது ஜனங்கள் அறியும்படி செய்ய வேண்டியது இப்போது நமது கடமையாகப் போய்விட்டது. ஏனெனில்
467 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நமது நாட்டில் தேசாபிமானம், தேச பக்தி என்பவைகளின் பேரால் வயிறு வளர்க்கும் ஒரு சோம்பேறிக் கூட்டம், எதிரிகளை ஈனத்தனமாய்ப் பேசுவதிலும், அற்பத்தனமாய் வைவதிலும், உண்மைக்கு விரோதமாய்ப் பொய்யும், விஷமத்தனமும் கொண்ட சேதிகளால் பிரசாரம் செய்வதிலுமே தங்கள் வாழ்நாள் கழிவும், வெற்றியும் இருப்பதாகக் கருதிக் கொண்டு அந்த வழிகளிலே பாமர மக்களை ஏய்த்து வருகிறார்கள்.
இந்தக் கேவலமானநிலைமை என்று இந்நாட்டைவிட்டு ஒழிகின்றதோ அன்று தான் நாட்டு மக்களுக்கு மனிதத் தன்மை ஏற்படக்கூடும் அதுவரையில் இக் கூட்டத்தார்களுடைய தொல்லையில்தான் மக்கள் சிக்கி அவதிப்பட வேண்டியிருக்கும். ஆகவே விஷயத்தைக் கவனிப்போம்.
தோழர் A. ராமசாமி முதலியார் கோவையில் நன்றாய்ப் பட்டவர்த் தனமாக “காங்கிரஸ் நடந்து கொண்ட மாதிரியின் பயனாக, இந்திய அரசியல் திட்டம் மிகப் பிற்போக்கானதாகவும், குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும் ஏற்பட்டுவிட்டது”
என்று அனேக மேற்கோள்களுடன், யாருக்கும் விளங்கும்படி
எடுத்துரைத்து இருக்கிறார். இதைக் கோவைக் காங்கிரஸ் தலைவர் என்பவர் தோழர் 1.5. அவனாசிலிங்கம் செட்டியார், B.A, B.L, பட்டம் பெற்றவர், தனது மறுப்பு உபன்யாசத்தில் நன்றாய், வெள்ளைத் தமிழில் நிபந்தனை அற்ற முறையில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதாவது, “பாதுகாப்புகள் காங்கிரஸ்காரர்களால் தான் ஏற்பட்டன என்று ராமசாமி முதலியார் கூறியதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன்'” என்று கூறி இருக்கிறார்.
அதற்கடுத்தாப்போல், “சீர்திருத்தத்தில் பாதுகாப்புகள் வேண்டு மென்று வெள்ளையர் கூறுவார்களேயானால், அது நாட்டில் காங்கிரஸ் கொள்கை பரலி வருகிறது என்பதையே காட்டுகிறது” என்று சொல்லி முன் கூறியதை மிகவும் வலிமையுடன் பின் தாங்கி நிற்கிறார்
மற்ற விவகாரங்கள் எப்படி இருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பட்டதற்கு காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் கொள்கையும் தான் காரணம் என்பதை காங்கிரஸ்காரர்களே, ஏன் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களே ஒப்புக் கொண்டார்கள் என்பதில் இனி யாருக்கும் சந்தேக மிருக்க நியாயமில்லை. அப்படிக்கு இருக்க, இதில் ராமசாமி முதலியாரின். மடத்தனமோ, வெட்கம் கெட்டத்தனமோ, சுயமரியாதை அற்ற தனமோ, தோத் துரோகத்தனமோ என்ன இருக்கின்றது என்று கேட்கின்றோம்
நிற்க, “அரசாங்கத்தார் பாதுகாப்பு ஏற்படுத்தினதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்களும், அதன் கொள்கையும் என்பது வாஸ்தவமானாலும்,
குடி அரசு - 1935 (1) 468
இதிலிருந்து காங்கிரசுக்குச் சர்க்கார் பயந்து கொண்டார்கள் என்பது விளங்கவில்லையா?” என்பது ஆக தோழர் அவனாசிலிங்கம், B.A., B.L., கேட்கின்றார். இது காங்கிரசுக்கு ஒரு ஆண்மையா? என்று கேட்கின்றோம்
இதில் இருக்கும் புத்திசாலித்தனம் நமக்கு விளங்கவில்லை தெருவில் போகும் கவர்னர் வண்டி மீது, ஒரு சோம்பேறிப் பையன் ஒரு சிறு கல்லை எறிந்தானேயானால், அடுத்த நாள் கவர்னர் அவ்வீதி வழிப் போகும் போது, அந்த வீதியில் யாரையும் நடக்க விடாமல் பந்தோபஸ்து செய்து விட்டு அதில் போவார். இதனால் “அந்த சோம்பேறிப் பையனைப் பார்த்து கவர்னர் பயந்து கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தினார்!” என்று அந்தப் பையனைப் பாராட்டி, அவனுடைய ஆண்மையை மெச்சுவதா? அல்லது “அந்தப் பையனுடைய முட்டாள்த்தனமான செய்கையில் அந்த வீதியில் நடக்கும் மற்றவர்களுக்கும் இடையூறும் துன்பமும் நேரிட்டதே'' என்று வருந்தி அந்தப் பையனுக்குப் புத்தி கற்பிப்பதா? என்று கோவைக் காங்கிரஸ் தலைவரான 28.&.,.1., பட்டதாரியையும் தேசியப் பத்திரிகைக் காரர்களையும் கேட்கிறோம்
தோழர் காந்தியாரின் நடவடிக்கை முட்டாள்த்தனமானது என்றும், அதனால் தேசத்துக்கும், தேச மக்களுக்கும் கேடு சூழ்ந்து வருகிறது என்றும், சுமார் 10 வருஷ காலமாகவே நாம் கூப்பாடு போட்டுக் கொண்டு வருவதும், நாளுக்கு நாள் மக்கள் அதை உணர்ந்து வருவதும், இதைத் தோழர் காந்தியாரே உணர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டதும், நடுநிலைமை அறிவோடு கூடிய, தன்னம்பிக்கை கொண்டமக்கள் யாவரும் அறிந்ததேயாகும்.
தோழர் காந்தியார், வட்டமேஜை மகாநாட்டுக்குச் செல்லாமல் இருந்திருப்பாரானால், சீர்திருத்தத் திட்டத்தின் யோக்கியதை, பாதுகாப்பு களின் தன்மை ஆகியவை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் தோழர் காந்தியாருக்குத் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள தைரியமில்லாததால், உப்பு சத்தியாக்கிரகத்தினால் சிறை சென்றவர்களை விடுவிப்பதற்காக, அதற்கு விலையாக வட்டமேஜை மகாநாட்டுக்குத் தான் போவதாய்ச் சர்க்காரிடம் ஒப்புக் கொண்டே விடுவிக்க வேண்டியதாகிவிட்டது ஆகவே இதில் அடங்கியுள்ள ஆண்மையும், வீரமும் பற்றி தோழர் அவனாசிலிங்கம் செட்டியார்தான் கண்டு அனுபவிக்க முடியுமே ஒழிய, மற்றவர்களுக்கு அவ்வளவு “சூக்ஷம புத்தி” இல்லை என்றுதான் சொல்லுவார். வட்டமேஜை மகாநாட்டில் காந்தியார் நடந்து கொண்ட மாதிரியானது, புத்திசாலித்தனமானது என்று கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று இப்போது கேட்கின்றோம்
காங்கிரசின் யோக்கியதையை சித்தரிக்கும் ஒரு நல்ல சித்திரக்காரர் போல் காந்தியார் வட்டமேஜையில் நடந்து கொண்டார். அதன் மூலம்
4 ட... ரியாரின் எழுத்தும் பேச்சும் தொகுதி - 20
காங்கிரசை ஒரு காலித்தனமான ஸ்தாபனம் என்று அரசாங்கத்தார் கருதி நேர்மையான ராஜ்ஜியபாரம் நடக்க என்னென்ன பாதுகாப்புகள் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் நினைத்தார்களோ, அந்தப்படி யெல்லாம் பாதுகாப்புகளை அரசியல் திட்டத்தில் செய்து கொண்டார்கள்.
மறுத்துச் சொன்ன இந்தியாப் பிரமுகர்களுக்கு சர்க்காரார் காங்கிரசுக் காரர்களின் நடத்தைகளையும், பேச்சுகளையும், யோக்கியதைகளையும் எடுத்துக்காட்டிச் சமாதானம் செய்துவிட்டார்கள். எனவே, இந்திய மக்கள். இப்படிப்பட்ட காங்கிரசை, இந்த நாட்டில் வளர விட்டதற்கு வெட்கப் படுவதா - அல்லது அதற்காக சர்க்கார் ஏற்படுத்தின பாதுகாப்புகளுக்குத் துக்கப்படுவதா? என்று காங்கிரஸ் தலைவர்களை கேட்கின்றோம்.
காங்கிரசில் காந்தியார் ஆதிக்கம் ஏற்பட்டதின் காலம் முதற்கொண்டு, அரசாங்கம் ஒவ்வொரு துறையிலும் பாதுகாப்புகளை பெருக்கிக் கொண்டுதான் வருகிறதே ஒழிய ஒரு விதத்திலும் தளர்த்தவில்லை என்று
புள்ளி விவரங்களோடு சொல்லுவோம்.
மற்றும் நமது அரசாங்கமானது, புதிதாக ஏற்படுத்தின பாதுகாப்பு மாத்திரமல்லாமல், பழைமையாக இருந்து வந்த சுதந்திரங்களையும் காங்கிரஸ்காரர்களின் நடத்தையால் பிடுங்கிக் கொண்டு, அவற்றிலும் பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டார்கள். இதற்கும் அனேக உதாரணங்களை
எடுத்துக் காட்டலாம். ஸ்தல ஸ்தாபனங்களின் பாதுகாப்பு யோக்கியதை இன்று என்னமாக இருந்து வருகிறது? என்பதைப் பார்த்தாலே போதுமானதாகும்.
காங்கிரசுக்காரர்கள் அதில் கால் வைக்க ஆரம்பித்த காலம் முதல், ஸ்தல ஸ்தாபன அதிகாரங்கள் ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டுப் போய் விட்டதுடன், ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதையும் சரியென்று சொல்லக்கூடிய நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள். இதைக்கூட கோவை காங்கிரஸ் தலைவர் “ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்களின் ஆண்மையும் வீரமும் கண்டு சர்க்கார் பயந்து கொண்டு பாதுகாப்புகள் ஏற்படுத்தினார்கள்'' என்று தான் சொல்லுவார்களே தவிர, ஸ்தல ஸ்தாபன மெம்பர்கள் நடந்து கொண்ட விதம் எப்படிப்பட்டது என்று கவனிக்கவும் மாட்டார்கள். அதற்காக வெட்கப்படவும் மாட்டார்கள். என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.
இன்னும், அரசாங்கத்தார் உத்தியோகங்களுக்குக்கூட, பல பாதுகாப்புகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மற்றும் பல விஷயங்களுக்கும் பாதுகாப்புகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாமும்கூட சில விஷயங்களில் பாதுகாப்புகள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் யாரை உத்தேசித்துப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகிறதோ, அவர்களுடைய ஆண்மையும் வீரமுமா? அல்லது அவர்களுடைய யோக்கியமற்ற நடவடிக்கையா? என்று
சிந்தித்துப் பார்க்கும்படி கோவைத் தலைவர்களுக்கு ஞாகப்படுத்துகிறோம்.
குடி அரசு - 1935 (1) 470
இந்தப் பாதுகாப்புகள் எல்லாம் கோவைத் தலைவருக்கும், காங்கிரஸ் பத்திரிகைக்கும் தங்களது ஆண்மையையும் வீரத்தையும் காட்டும் அறிகுறியாய் இருந்து வரலாம். ஆனால் கடுகளவு சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள மற்ற மக்களுக்கு மானக்கேடாய் இருக்கிறது என்பதும், யாரோ செய்த “ஆண்மையும் விஷமத்தனமுமான காரியம்” என்பதற்காக யார்? எந்த தேசம்? துன்பமும், இழிவும் அடைவது என்பதைக் கோவைத் தலைவர்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.
மற்றும் கோவையில் தோழர் ராமசாமி முதலியார் கூறியவற்றில்,
எந்தப் பாகத்தை - எந்த வாக்கியத்தை - எந்த வரியை கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபிக்கிறார்கள் என்று பந்தயங் கட்டிக் கேட்கின்றோம்.
“தேர்தலில் தோற்றுவிட்டவர் சொல்லும் சங்கதியைப் பற்றி யாரும் கவனிக்கக் கூடாது” என்று சொல்லுகின்ற சமாதானமே, தோழர் ராமசாமி முதலியாரின் பாணங்களுக்குக் காப்பாய் விடாது
எத்தனையோ யோக்கியர்களும், கெட்டிக்காரர்களும், பெருந்தன்மை வாய்ந்தவர்களும் தேர்தலில் தோற்றுப் போவதையும், எத்தனையோ. அயோக்கியர்களும், மடையர்களும், ஈனர்களும் தேர்தலில் வெற்றி பெறுவதையும் வண்டி வண்டியாக எடுத்தக் காட்டக் கூடும்
தேர்தலின் வெற்றி தோல்விக்கும், அவரவர்கள் பேசும் வார்த்தைக்கும் சம்மந்தப்படுத்துவது அறிவுடைமை ஆகாது என்பதுடன், அது தக்க சமாதானம் சொல்ல முடியாத குற்றவாளிகளும், கோழைகளும் உபயோகித்துக் கொள்ளும் ஆயுதம் என்றும்தான் சொல்லுவோம்
யோக்கியர்களும், கெட்டிக்காரர்களும், உறுதியாய்த் தேர்தலில். வெற்றி பெறும் காலம் வந்து விட்டதானால், நமது நாட்டில் அரசியல் குறை இல்லாமல் போவதோடு, இப்படிப்பட்டவயிற்றுப் பிழைப்புக் காங்கிரசுக்கும்
நாட்டில் சிறிதுகூட இடம் இல்லாமல் போகும் என்றும் முடிவு கட்டி விடலாம்.
அன்றியும் இன்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றவர்களை
யெல்லாம், கோவை காங்கிரஸ் தலைவர்கள் யோக்கியர்கள் என்றும்,
கெட்டிக்காரர்கள் என்றும் ஒப்புக் கொள்வார்களா? என்பதோடு அவர்கள்.
வார்த்தைக்கு சிரம் வணங்கவும் தயாராய் இருக்கிறார்களா? என்றும்
கேட்கின்றோம்
பழங்காலத்து பெண் மக்கள் குணம் ஏதோ, அதை இக்காலத்து ஆண்
மக்கள் தங்களுக்கு வேறு சமாதானம் சொல்ல வகையில்லாத காலத்து கையாளுவது ஆச்சரியமா? அல்லது அவர்களது நிலை அப்படி ஆகிவிட்டதா?
என்று அறிய வேண்டியிருக்கிறது 47௨ பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
அன்றியும் அப்பத்திரிகையானது, தனது முடிவு வாக்கியத்தில் உரிமைகளைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்படுத்தினால், உண்மை இந்தியன் தன் திக்கற்ற நிலைமையைக் கண்டு தலைகுனிவான். ராமசாமி முதலியாரிடம் அந்த உணர்ச்சி காணவில்லை”
என்று எழுதி தனது தலையங்கத்தை முடிக்கின்றது. தோழர் ராமசாமி முதலியாரிடம் அந்தக் குணம் இருக்கிறதா? இல்லையா என்பதைப் பிறகு யோசிப்போம்
கோவைக் காங்கிரஸ் தலைவர்களும், பத்திராதிபரும் தாங்கள் செய்த காரியத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொண்டும்கூட, தலைகுனியாமல் வீரியமும், ஆண்மையும் பேசுவதோடு, அதன் காரணத்துக்குச் கிறிதும் சம்பந்தமில்லாத தோழர் ராமசாமி முதலியாரை, சுயமரியாதை அற்றவர், மடையர், வெட்கங் கெட்டவர் என்று சொல்வதென்றால் இவர்கள் உண்மை இந்தியர்களா? என்று கேட்பதோடு, இந்த வார்த்தைகளுக்கு எவ்வளவு வீதம் வட்டி சேர்த்துக் கோவை காங்கிரஸ் தலைவர்களுக்கும் பத்திராதிபருக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றோம்
சில ஜனங்கள் பேசுவது, எழுதுவது என்பதைக் கிள்ளுக்கீரை மாதிரி மதிக்கிறார்கள். ஆனால் மானமும் பொருப்புமிருந்தால், அல்லது திரும்பிச் சொல்லுவார்களே என்பதற்காக வருத்தப்படும்படியான நல்ல ரத்த ஓட்டமாவது இருந்தால், இப்படிப்பட்ட அசட்டு வார்த்தைகளும், ஞானமற்ற எழுத்துக்களும் ஏற்படவே ஏற்படாது என்பதைக் கூறி இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.06.1935
குடி அரசு - 1935 (1) 472
எல்லாம் ஒன்றே
இந்தியாவில் 4 கோடி வேலையில்லாதார்
முடி அரசாகிய பிரிட்டிஷ் ராஜ்யத்தில் 70 ஆயிரம் பேர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். குடி அரசாகிய அமெரிக்காவில் 2 கோடி பேர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்.
வேற்றரசு ஆகிய இந்தியாவில் 4 கோடி பேர்கள் வேலையில்லாமல். திண்டாடுகிறார்கள் ஆகவே ஜன எண்ணிக்கைப்படி கணக்குப் பார்த்தால் விகிதாச்சாரத்தில். ஒன்றும் மோசமாக இல்லை. சற்றேரக்குறைய சரியாகத்தானிருக்கின்றது ஆகவே வேலை இல்லாத காரணத்துக்கு முதலாளி அரசு காரணமே ஒழிய,
முடி அரசோ, வேற்றரசோ காரணம் அல்ல என்பதை உணர வேண்டுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 30.06.1935
473 ௨... 9பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
மற்றொரு பண்டு வசூல்
ஜாக்கிரதை - ஜாக்கிரதை
சுயராஜ்ஜிய பண்டு:
தோழர் காந்தியார் அவர்கள் பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆக 1920, 216 காங்கிரசின் பேரால் அதாவது சுயராஜ்ஜிய நிதி என்று ஒரு கோடி ரூபாய் வசூல் செய்ததும், அது பெரும்பான்மை பார்ப்பனர் கையிலேயே கொடுக்கப்பட்டுச் செலவானதும் யாவரும் அறிந்ததேயாகும்
கதர்ப்பண்டு.
அதன் பிறகு 1926, 27ல் கதரின் பேரால் கதர்பண்டு என்று சுமார் 30 லட்ச ரூபாய் வரை வசூல் செய்தார். அதுவும் பெரிதும் பார்ப்பன ஆதிக்கத்துக்காகவே பார்ப்பனர்கள் கையாலேயே செலவு செய்யப்பட்டது.
ஹமிஜன பண்டு
மறுபடி 1934ல் ஹரிஜன பண்டு என்ற பேரால், தீண்டப்படாதவர் களுக்கு ஆக என்று 20, 30 லட்ச ரூபாய் வரை வசூல் செய்து, அதுவும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஆகவே பார்ப்பனர் வசம் கொடுக்கப்பட்டு அவர்களாலேயே செலவழிக்கப்பட்டும் வந்து, அதன் பயனால் இந்திய சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டாய் விட்டது
முடிவாக சுயராஜ்ஜியம் என்ன ஆயிற்று என்பதைப்பற்றி நாம் யாரையும் கேட்க வேண்டியதில்லை. எப்படியாவது தோழர் சத்தியமூர்த்தி ஐயர் ஒரு நாளைக்காவது முதல் மந்திரி உத்தியோகம் பார்த்துவிட்டுப் போய்விட வேண்டியது என்பதிலும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதிலும் வந்து முடிந்து விட்டதுடன், அரசியல் திட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்புகளுக்கெல்லாம் “நாங்களும், எங்கள் கொள்கைகளுமேதான் காரணம்” என்று காங்கிரஸ்காரர்கள் பெருமை பேசிக் கொள்ளுவதிலும் வந்து நிற்கிறது.
இனி, சமீபத்தில் புதிய அரசியல் திட்டத்தின்படி ஏற்படப்போகும் சட்டசபைத் தேர்தலுக்குச் சில புதிய கொள்கைளின் பேரால் 10, 20 லட்ச ரூபாயாவது புதிய பணமாக வேண்டி இருக்கிறது.
குடி அரசு - 1935 (1) 474
அதை அரசியல் சம்பந்தமில்லாதது என்று சொல்லிக்கொண்டு, அதன் பேரால் வசூல் செய்யவேண்டியுமிருக்கிறது
கூடிய சீக்கிரம் அந்த ரகசியமும், முயற்சியும் வெளியாகப் போகிறது.
அது என்னவென்றால், அதுதான் கிராமப்புனருத்தாரணமாம். அதற்கு ஆக வேறு பண்டு வசூலிக்க வேண்டும் என்பதாகும்.
அதற்கு ஆக காந்தியார் அடுத்த மாதத்தில் இருந்தே சற்றுப்பிரயாணம் புறப்படப் போகிறாராம்
தேர்தலில் ஓட்டு வாங்கிக்கொடுக்கிறோம் என்று காங்கிரஸ் பக்தர்கள் இப்பொழுதிருந்தே தேர்தல் ஆசை பிடித்தவர்களிடமும், ஏமாந்த சோணகிரி களிடமும் பணம் வசூல்செய்ய அஸ்திவாரம் போட்டு வருகிறார்கள்.
கிராமப்புனருத்தாரணப் பண்டுக்கு வசூலாகும் தொகை சுயராஜ்ய பண்டு, கதர் பண்டு, தீண்டாமைப்பண்டு ஆகிய பண்டுகள் அடைந்த கதிதான். அடையப் போகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டியதில்லை.
கதர் இன்று என்ன நிலையில் இருக்கின்றது? இத்தனை நாள் பொருத்து இப்போதுதான் காந்தியார், தான் யந்திரத்துக்கு விரோதி இல்லை யென்றும், ராட்டினமும் ஒரு யந்திரம் தான் என்றும், மனித வாழ்க்கைக்கு உபயோகமான எல்லா யந்திரத்தையும் ஆதரிப்பேன் என்றும் சொல்லி விட்டார். எனவே கை ராட்டினம், கை நெசவு எல்லாம் இனி பறக்க வேண்டியது
தான். இதுவே இன்றையக் கதரின் நிலையாகும்
தீண்டாதார்களுக்கு ஆக இதுவரை என்ன காரியம் நடந்தது? என்று பார்த்தால், தீண்டாமை விலக்குக்கு இப்போது சட்டம் கொண்டுவரக்
கூடாது என்பதோடு முடிந்தது. ஆகவே கிராமப்புனருத்தாரணம், கைக்குத்து அரிசியும், கையாலை வெல்லமும் சாப்பிட வேண்டும் என்ற பிரசாரத்தோடு முடியப்போகிறது
இந்நிலையில் இதற்காக ஒரு பண்டு தேவையா என்று கேட்கின்றோம்
போனதுபோகட்டும் என்றாலும் 4-வது பண்டு வசூல் விஷயத்திலாவது உஷாராய் இருங்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.06.1935
478௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
திருவாங்கூறில் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம்
கம்மாளர், நாடார், தீயர், புலையர்
தாழ்ந்த ஜாதி இந்துக்களாம்
திருவாங்கூர் அரசாங்கம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஒப்புக்கொண்டு, அந்தப்படி கவனித்து உத்தியோகம் நியமிக்க ஒரு பப்ளிக் சர்விஸ் கமிஷன் என்ற இலாக்காவையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அந்தக் கமிஷனுக்கு கொடுத்த அதிகாரப் பத்திரத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்னும் மூன்று மத வகுப்புகளும், இந்துக்களில் மேல் ஜாதி இந்துக்கள், கீழ்ஜாதி இந்துக்கள் என்று இரண்டு ஜாதி வகுப்பு களும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அப்படி ஏற்படுத்திய ஜாதி வகுப்புகளில் பார்ப்பனர்களையும், நாயர். களையும் மேல் ஜாதி இந்து வகுப்பிலும், கம்மாளர், நாடார், ஈழவர் புலையர் என்பவர்களைக் கீழ் ஜாதி இந்து வகுப்பிலும் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த அக்கிரமம் ஒரு சுதேச அரசர் ஆட்சிபுரியும் நாட்டில் இருந்து வருகின்றது. இந்தக் கொடுமையான இழிவை ஒழிக்காமல், ஒழிக்க முயற்சிக் காமல் என்ன சுயராஜ்ஜியம்வேண்டி இருக்கிறது என்பது நமக்குப் புரியவில்லை.
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் விஸ்வப்பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் கம்மாளர் வகுப்பார்களும், க்ஷத்திரியர் என்று சொல்லிக்கொள்ளும் நாடார் வகுப்பாரும், சுதேசச் சமஸ்தானத்தில் தீண்டப்படாதவர்களாய்க் கருதப்படுவது மிக மிக அக்கிரமமான காரியம் என்றே சொல்லுவோம்.
இதுமாத்திரமல்லாமல், இந்தக் காரணத்துக்காக இவர்களுக்கு சில உத்தியோகங்களும் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் திருவாங்கூர் சட்டசபை அங்கத்தினர்கள் இந்தக் கொடுமையை நீக்கி, கிரமமான முறையில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யமுன் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.06.1935
குடி அரசு - 1935 (1) 476
குடி அரசு தேசத்திலும் அடக்குமுறை
ஸ்பெயின் தேசமானது, குடி அரசை ஒழித்து முடி அரசு ஆக்கிக்கொண்ட
நாடாகும். அங்கு குடி அரசு இருந்தும் அடக்குமுறை தாண்டவமாடுகின்றது ஒரு அரசியல் குழப்பத்தின்போது 65 பேர்களை குற்றம் சுமற்றி விசாரித்து அதில் 4 பேருக்குத் தூக்குத்தண்டனையும், 36 பேருக்கு ஜன்ம தண்டனையும்,
7 பேருக்கு 12 வருஷத் தண்டனையும் விதித்து, 18 பேர்களை விடுதலை செய்து விட்டார்களாம். அக்குழப்பத்தில் 3500 பேர் மாண்டார்களாம் எனவே அன்னிய ஆட்சி ஒழிந்து, சுயராஜ்ஜியம் வந்து விட்டால் தர்ம ராஜ்ஜியம் ஆகிவிடும் என்று கருதுவது வடிகட்டின அறியாமையே ஆகும். அரசியல் மாற்றத்திலோ, கிளர்ச்சியிலோ யோக்கியமானதொரு கொள்கையை விரும்புவது தான் அறிவுடைமையாகுமே ஒழிய, ஒரு ஜாதியையோ, ஒரு தோத்தையோ விரும்புவதும், வெருப்பதும் பழயகால கையில் வலுத்தவன். கொள்ளை அடிக்கப் பார்க்கும் சூட்சி என்றுதான் சொல்லவேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 30.06.1935
477௨ பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
கடவுள் கருணை
- சந்தேகவாதி
சென்ற வருஷம் பீகார் பூகம்பத்தால் ஏற்பட்ட சொத்து நஷ்டமும், உயிர் நஷ்டமும் ஒருபுறமிருக்க, இவ்வருஷம் குவெட்டா பூகம்பத்தால் அதைவிட பல மடங்கு அதிகமான ஐம்பது அறுபது ஆயிரம் மக்கள் உயிர் நஷ்டமும் பல கோடிரூ. பொருள் நஷ்டமும் நடந்தது. மற்றொருபுறமிருக்க, இம்மாதத்தில் பெஷாவரில் தீ விபத்து ஏற்பட்டு 2500 வீடுகளும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறும்படியான பொருள்களும் சாம்ப லாயினவாம். உயிர்ச் சேதமும் தாராளமாய் இருக்கலாம். எனவே கடவுள் நன்மையையே குணமாய்க் கொண்டு அன்பையும் ஜீவகாருண்யத்தையும், கருணையையுமே ஆபரணமாய்க் கொண்டவர் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணத்தை ஆஸ்திகர்கள் காட்டுவார்களோ தெரியவில்லை.
குடி அரசு - செய்தி விமர்சனம் - 30.06.1935
குடி அரசு - 1935 (1) 478
அருஞ்சொல் பொருள்
தவச விலை
அகவிலை
அசரமாகவும்
அசைவில்லாதது
உயிரற்றப் பொருள்கள்.
அசேதனப் பொருள்கள்
ரூபாயில் 320 இல் 1 பங்கு மதிப்புள்ள காசு
அம்மன் காசு
காலம்
அயனம்
குறைவு படாது
அக்ஷயமாக
எழுத்துக்கள்
அக்ஷரங்கள்
அரிசிப் பிச்சையெடுத்து நடத்தும் வாழ்க்கை
உஞ்சிவிருத்தி
நிந்தை, அவமதிப்பு கடுநோய், உட்புண்:
உல்லஙகனம்
உளமாந்தை
எத்தனம்
முயற்சி
கஜான்சி
கருவூல அதிகாரி
சிவப்பு இரத்தினக்கல்
கெம்பு
சம்மார
அழிவு
பட்டம், விருது
சன்னது
வெட்டப்பட்டால்
சேதிக்கப்பட்டால்
சுனாயுதமாக
வருத்தமின்றி வாக்குவாதம் செய்தல்
தர்க்கிப்பது
பயிற்சி
தர்ப்பித்து தவக்கப்பட்டு
தாமதப்பட்டு
கைவிடப்பட்டு
தவறப்பட்டு
பொருள்
தாற்பரியம்
நிர்த்தாரணம்
நிலையிடுகை
நிர்த்தூளி
முற்றும் அழித்தல்
479
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 20
நோப்பாளம்
சினம்
ரூபாய்
பட விசிறி (தலைக்கு மேல் தொங்கும்
பங்கா
நீண்ட துணியை ஒருவர் இருபுறமும் அசையுமாறு இழுத்து காற்றமைப்பை ஏற்படுத்தும் பொறியமைப்பு.)
வழிகாட்டும் நூல், ஒழுங்கு, சொற்பொருள்
பத்ததி பந்தக டிக்ரி
சொத்தைப் பிணைத்து பிறப்பிக்கப்படும் நீதிமன்ற ஆணை
புனருத்தாரணம்
மறு சீரமைப்பு
சொத்து
பூஸ்தி
முட்டுவழிச் செலவு
பயிரிட்டு அறுவடை வரையிலும் செய்யும்
செலவு
முற்றத்துக்கு
முத்தத்துக்கு வருண சங்கிரகம்
சாதிக் கலப்பு
விதாயம்
உதவி ஏற்பாடு அசையா சொத்துக்கள்
ஜங்கம சொத்துக்கள்
அழித்தல்
ஹதம்
குடி அரசு - 1935 (1)
480