Kudi Arasu — 1934, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
(பகுத்தறிவு)
1934-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 19
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு (பகுத்தறிவு) 1934-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 360
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
“குடி அரசு? வெளிவராத ஆண்டு.
“இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்ற தலையங்கத்துக்காக 'அரசு வெறுப்புக் குற்றத்தின் கீழ் பெரியார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதியோடு 'குடி அரசு' நிறுத்தப்படுகிறது. 1934 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 26
ஆம் தேதியிலிருந்து 'பகுத்தறிவு' வார ஏடு வெளி வரத் தொடங்குகிறது எனவே இத்தொகுதியில் பகுத்தறிவு வார ஏட்டில் இடம் பெற்றிருந்த கட்டுரைகளே தொகுக்கப் பெற்றுள்ளதை வாசகர்களுக்கு சுட்டிக் காட்டுகிறோம். பகுத்தறிவின் முதல் தலையங்கமே -
“முடிவாய் கூறுமிடத்து, பகுத்தறிவு மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழி நடத்திச் செல்லுமே தவிர எக்காரணம் கொண்டும் மக்கள்
பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது” என்று
அறிவிக்கிறது
ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து டிசம்பர் முடிய “பகுத்தறிவு” தாங்கி வந்த ஆழமான சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள் - தலையங்கங்கள் - இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தீண்டப்படாத மக்களுக்கு தனித் தொகுதியை எதிர்த்த காந்தியார் அவர்களை கோயிலுக்குள். அனுமதிக்கும் மசோதாவைக் கொண்டும் வந்து, தீண்டப்படாத மக்களை மகிழ்விக்க முயற்சிக்கிறார். அதற்கும், காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். "மேல் ஜாதி இந்துக்கள் சம்மதமில்லாமல் மத சம்பந்தமான பழக்க வழக்கங்களையோ, சடங்குகளையோ தொடக் கூடாது” என்ற ராஜகோபலாச்சாரி அறிக்கை வெளியிடுகிறார். மதன் மோகன் மாளவியா என்ற பார்ப்பன காங்கிரஸ் தலைவரோ இந்த முயற்சிக்கே எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரசை விட்டு விலகியதோடு மட்டுமல்ல; காங்கிரசை தீவிரமாக எதிர்க்கவும் தொடங்கினார். இதே ஆண்டு நவம்பரில் இந்திய சட்டசபைக்கான தேர்தலில் போட்டியிட்ட நீதிக்கட்சி தோல்வியைத் தழுவியது. தேர்தல் தொடர்பாக காங்கிரசுக்கு எதிராக பெரியார் முன் வைத்த கருத்துகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. நீதிக்கட்சியை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் பெரியார், அதே நேரத்தில் தோல்வியால் விரக்கியடைந்த கட்சியை உற்சாகப்படுத்தி பல தலையங்கங்கள் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
பெரியார் காங்கிரசில் சேரப் போகிறார் என்று பரப்பப்பட்ட கருத்துக்கு பதிலளித்த பெரியார் செத்துக் கொண்டிருக்கும் காங்கிரசிடம் தன்னால் எப்படி நேசம் கொள்ள முடியும் என்று கேட்டார்.
தனது கையெழுத்தோடு வெளியிட்ட அறிக்கையில் பெரியார், தனது அரசியல் நிலைப்பாட்டை இவ்வாறு விளக்குகிறார்:
“மனித சமூக நன்மையை அதிலும் தாழ்த்தப்பட்ட ஏழ்மைப்பட்ட பாமர மக்களின் நன்மைக்காக காங்கரசு மாத்திரமல்ல, இன்னும் எக்கட்சியின் நேசம் கொண்டாலும் கொள்வேனே தவிர மற்றபடி எனது ஜீவனோபாயத்துக்கோ வாழ்க்கை உபாயத்துக்கோ எக்கட்சியிலும்
சேர மாட்டேன் என்றும், சேர வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, மே தினம் கொண்டாடுவதைப் போல் 'பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள்: என்பதாக ஆண்டுக்கு ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற கருத்தை பெரியார் மூன் வைக்கிறார். குஞ்சிதம் குருசாமி அம்மையார் - பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார் என்ற ஒரே குற்றத்துக்காக - அவர் ஆசிரியராக பணியாற்றிய பார்ப்பன பள்ளி நிர்வாகம் - அவரை பதவி நீக்கம் செய்ததை - பெரியார் எடுத்துக் காட்டி, கண்டித்துள்ளார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதி, சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடத்தப்பட்ட 'இரணியன்' நாடகத்துக்கு தலைமை ஏற்று, பெரியார் நிகழ்த்திய உரை நாடகம் பற்றிய அவரது ஆழமான பார்வையை முன் வைக்கிறது.
மனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கிடும் “மனித உற்பவம்: என்ற நூல் - இந்திய மொழிகளிலே முதன்முதலாக தமிழில் வெளிவரும்
நூல் மதிப்பீடு - ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது
சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டுக்கு பெரியார் அனுப்பிய வேலைத் திட்டம் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது
சுயமரியாதை இயக்கத்தின் மீது கருத்து மாறுபாடுகளை மூன் வைத்து தோழர் ஒருவர் எழுதிய கடிதத்துக்கு பெரியார் தந்த பதில் ஆழமான சிந்தனைக்குரியதாகும். பெரியாரியத்தின் மய்யமான கருதியலை துல்லியமாக தொட்டுக் காட்டுகிறது, இக்கட்டுரை.
நீதிக்கட்சியில் பார்ப்பனர்களை சில நிபந்தனைகளோடு சேர்க்கலாம் என்று பனகல் அரசர் உள்ளிட்ட சில தலைவர்கள் வலியுறுத்தியபோது, பெரியார் அதை எதிர்த்தார். பிறகு - பார்ப்பனர்களை சேர்ப்பதன் விளைவுகளை அவர்களே உணர்ந்து கொள்ளட்டும் என்று கருதி,
பெரியார் தனது எதிர்ப்பை கைவிட்டார். பார்ப்பனர்களை விலக்கி வைப்பதும் - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோருவதும் ஒற்றுமை - சமத்துவம் உருவாகும் காலம் வரையில் தானே ஒழிய உலகம் உள்ளவரை தொடர வேண்டும் என்பதல்ல என்று விளக்கமளிக்கிறார்.
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை திசை திருப்புவதற்கு ஆந்திரர் - தமிழர் 'மோதலை' முன்னிறுத்தும் முயற்சிகளை பார்ப்பனர்கள் தொடங்கிய போது, அதற்கு பெரியார் பதிலளித்திருக்கிறார்.
விருதுநகரில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எதிர்ப்பாளர்கள் கல் வீசியதாக 'ஜஸ்டிஸ்' பத்திரிகையில் வந்த செய்தியைப் பார்த்து கொதிப்படைந்த பெரியார், சுயமரியாதைக்காரர்கள், இதில் ஈடுபட்டிருந்தால், மிகவும் இழிவானது என்று வன்மையாகக் கண்டித்து எழுதியதோடு, பொது நிகழ்ச்சிகளில் (யார் நடத்தினாலும்) காலித்தனமோ, கூச்சலோ, குழப்பமோ செய்வதை வன்மையாக கண்டிக்கிறார்.
மதம், ஜனநாயகம், தேர்தல் மோசடிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பெரியாரின் அரிய கருத்துகளை வெளிப்படுத்தும் சிந்தனைக் களஞ்சியமாக மிளிருகிறது இத்தொகுப்பு!
- பதிப்பாளர்
பொருளடக்கம்
13
“பகுத்தறிவு” இனியாவது புத்தி வருமா? மாளவியா
14
17
தேர்தல் பிரசாரம் என்னும் ஏமாற்றுப் பிரசாரமும் வயிற்றுப் பிழைப்பு வசவுகளும்
18
எதிர் பாருங்கள்! எதிர் பாருங்கள்! எதிர் பாருங்கள்!!!
23
சர். ஆர்.கே. ஷண்முகம்
24
தோழர் திரு.வி.க. முதலியார் ஆலயப்பிரவேச மசோதா கருவிலேயே கருகிவிட்டது
30
31
33
“கர்ம பலன்”
மண் குதிரையை நம்பின பலன்
35
லார்ட் வில்லிங்டனின் வீர முழக்கம் வட நாட்டுத் தலைவர்கள்" பூலாபாய் தேசாய் &
37
சர்தார் சாதூல்சிங்
39
நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்.
44
வைசிராய் பேச்சு
45
இதற்கு என்ன சமாதானம்? ஹிட்லரே மனித உற்பவம்” ஏழைகள் துயரம் நீங்க வழி ஈரோடு முன்சிபல் எலக்ஷன் ஈரோடு முன்சிபாலிட்டிக்கு பாராட்டு
47
48
50
52
54
மதம் ஏன் ஒழிய வேண்டும்
57
காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
67
வேலையில்லாத் திண்டாட்டம்
68
இது தானா தேசியம்?
70
75
காங்கிரசின் வீரம் வெட்கம்! வெட்கம்!! வெட்கம்!!!
நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
78
இந்திய சட்டசபைத் தேர்தல்
26.
82
இரணியன் நாடகத்தில் தோழர் ஈ.வெ.ரா சுயமரியாதைத் திருமணங்கள். விஷமத்துக்கு விஷமமா? அல்லது உண்மையா? சென்னை (S.IL.E) பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு தோழர் ஈ.வெ.ராமசாமி அனுப்பியிருக்கும் தீர்மானங்கள்
27
88
28,
91
29
92
30.
93
காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம் ஷண்முகமும் ஒட்டவாவும்
31
96
32
101
இந்திய சட்டசபை
33,
105
ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
34
108
மார்க்கட்டு நிலவரம்
35.
109
நான்
36.
111
பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும் ஜன நாயகமா? பண நாயகமா?
37.
113
38,
115
பார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்
39
120
சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா? பட்டேலின் "ஸ்ரீ முகம்” ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்
40
124
41.
127
நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனரல்லாதார் மகாநாடும்
42
129
கோவையில் சுயமரியாதைத் திருமணம்
43
135
44
141
சென்னை கடற்கரையில் 5000 பேர் கூட்டம் இரண்டு மகாநாடுகள்.
45
145
பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?
46,
150
47.
154
சென்னை கடற்கரையில் 5000 பேர் கூட்டம்
புதுக்கோட்டையில் தோழர் ஈ.வெ.ரா
48
157
ஸ்தல ஸ்தாபனச் சீர்கேடு “ஷண்முகத்தின் அஹம்பாவம்”
49
162
50.
166
51
கோவையில் தோழர்கள் Dr. வரதராஜுலு
- ஈ.வெ. ராமசாமி
170
தேர்தல் ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா? பித்தலாட்ட வியாபாரத்திற்கா?
52
180
தேர்தல் பிரசார போக்கு
53
187
ஏமாற்றுந் திருவிழா வெங்கிட்ட ரமணா “கோவிந்தாஆ கோஜவிந்தா'' வெங்கிடாசலபதிக்கு தர்மம் செய்யுங்கள்”
54
189
55
193
முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?
56
196
இந்திய சட்டசபைத் தேர்தலில் தோழர். சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கு சென்னை ஓட்டர்களின் பகிரங்கக் கேள்விகள் சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை
57
197
58
200
விளம்பரப் பிரசாரம்
59
202
சர். ஷண்முகம் வெற்றி சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கக்ஷியும் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் ராமசாமியின் முழக்கம்
60
209
61
211
62
212
காந்தியின் புதிய திட்டம் மக்களைக் காட்டுமிராண்டி
63
வாழ்க்கைக்குத் திருப்புதல் இனியாவது உணருவாரா?
219
64
226
மற்றுமொரு தொல்லை தோல்வி ஆனால் நன்மைக்கே
65
229
66
231
சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
67
247
தோழர் ஜே.என். இராமநாதன். குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
68
248
69
249
கமிஷனர் அவர்கள் கவனிக்க வேண்டுகிறோம்
70
253
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை
71
255
தோழர் வரதராஜுலு கொள்கை இல்லாதவர்களுக்கு வெற்றி கோவை முனிசிபாலிட்டி
72
258
73
260
74
267
75
அதுவும் சொல்லுவார்கள் இன்னமும் அனேகம் சொல்லுவார்கள்
269
1.0.5. செங்கோடையன் முடிவெய்தினார்.
76
272
“இன்னமும் பார்ப்பனர் - அல்லாதார் பிரச்சினை ஏன்?
77
273
வகுப்புவாதம் கூடாது ஆனால் 100-க்கு 50- நமக்கே வேண்டும்” வருணாச்சிரமும் சுயமரியாதையும்
78,
275
79
277
வகுப்புவாதிகளே வெற்றியடைந்தார்கள். இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள்
80
280
81.
284
தரகர்கள் ஒழிப்பு பொது தொகுதியின் யோக்கியதை
82
286
83
290
முடிந்து போன விஷயமாம்
84.
291
85.
ஜஸ்டிஸ் கட்சியின் புனருத்தாரணம்
292
ஒரு தோழரின் கடிதத்திற்கு ஈ.வெ.ராமசாமி பதில்
86.
295
தோழர் சத்தியமூர்த்தி அய்யர்.
87.
302
வேஷம் விளங்கி விட்டது சென்னை சட்டசபை உப தேர்தல்
88,
307
89
311
ஆந்திரர் - தமிழர் என்று பிரிக்கப்பார்ப்பது
90.
312
பொப்பிலியும் செட்டிநாடும்
91.
317
92
ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கு ஒரே வார்த்தை
323
நிர்வாக சபையை ஏன் கூட்டவில்லை
93
325
மோதிரம் மாற்றுவது மூட நம்பிக்கை
94
326
95.
தற்கால அரசியல் நிலைமை
328
ஜஸ்டிஸ் கட்சி
96.
332
கான் அப்துல் கபூர்கான்.
97.
337
ராமராஜ்யம் திரும்பி வருகிறது
98
338
ஆசிரியர்கள் மகாநாடு
99.
339
திருச்சி நகரத்தின் பெருமை
100
340
விருதுநகரில் காலித்தனம்
101
342
ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப் பத்திரிகைகளும் சுயமரியாதை மகாநாடுகள்
102
344
103
348
பார்ப்பன விஷமம்
104
351
105
355
குடி அரசு தோழர் சிவலிங்கம் மரணம்
106
356
எழுத்தில் சீர்திருத்தம் அருஞ்சொல் பொருள்
107
357
108
359
௩.௨ எதபிபாயவணயா சனிப்பிபி வி ஒரு அனு பகுத்தறிவு
R கேனில் அகுடாய்கா உள் தாடு 00 கர்வ உல சிரங்கள். ய ணி ழத$ ர,
வட ] சது அணு அலையா 11 உட | -t WA அவ்வ
.
ழ் சழ்தாபதாசர்களும்கு இ இமை! - இனம்! அருமையான புத்தகங்கள் இளம!
நம்து el R பற்நிர்கம் GOl 1உவிளி ரூத்து அக்டொபர்!-உக்குள் முன்பணம். பணியார்டசில் அப்பி வதாக Y நாதாரசாய்சி செருதெல்களும்கு 0 அனு வங ன க் அரவில்கண்ட
புண்தகங்கணின் எது இஷ்டமோ அனத இலவசயாய்ட |ம்பொஸ்டில் நத A T
கைவல்யம் 0.80 இத்தியானின் குதைபா. படட இரவயண ஆராய்பி (சனோகிவாலனபபு0 டப் ல் ர பெண்டீக்கள் பெருமை 0-8-0
ப்பு
படர
மானே, “பருத்குலிவு”, ஈரோடு.
“பகுத்தறிவு?
“பகுத்தறிவு” வாரப் பத்திரிகையின் முதல் மாலை முதல் மலர் 26.8.34 உஞாயிறு வெளியாகின்றது என்றாலும், அதன் கொள்கைகளைப் பற்றி “குடி அரசு” “ரிவோல்ட்” “புரட்சி” “பகுத்தறிவு” (தினசரி) ஆகிய பத்திரிகைகளின்:
அபிமானிகளுக்கும் வாசகர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டியதில்லை.
சுருக்கமாக ஒரு வாக்கியத்தில் சொல்லித் தீர வேண்டுமானால் “பகுத்தறிவு” தோன்றலானது, இன்றைய உலக வழக்கில் இருந்து வரும் காரியங்களில் பெரும்பான்மை மக்களால் முதன்மையானதாகவும் இன்றியமையாதனவாகவும் கருதப்படும்
“எங்கும் நிறைந்த இறைவனை” வழுத்தவோ,
“எல்லாம் வல்ல மன்னனை” வாழ்த்தவோ,
“யாதினும் மேம்பட்ட வேதியனை” வணங்கவோ,
“ஏதும் செய்ய வல்ல செல்வவானை” வாழிய செப்பவோ கருதி அல்ல வென்பதே யாகும்.
மேலும் மனித சமூகத்தில் மெளட்டீயத்தால் ஏற்பட்ட துரபிமானங் களாகிய கடவுள், ஜாதி, மதம், தேசம், நான், எனது என்பன போன்ற அபிமானங்களை அறவே ஒழித்து மனித சமூக ஜீவாபிமானத்தையும் ஒற்றுமை யையும் பிரதானமாய்க் கருதி உழைத்து வரும் என்றும் சொல்லுவோம்
இத்தொண்டாற்றுவதில் “பகுத்தறிவு” வேதத்திற்கோ, விமலத்திற்கோ, சரித்திரத்திற்கோ, சாத்திரத்திற்கோ, பழக்கத்திற்கோ, வழக்கத்திற்கோ, பழமைக்கோ, புதுமைக்கோ அடிமையாகாமல் கொள்வன கொண்டு தள்வன தள்ளி தானே சுதந்தரமாய் தன்னையே நம்பி தனது அறிவையும், ஆற்றலையுமே துணைக் கொண்டு தன்னாலான தொண்டாற்றி வரும்
முடிவாய்க் கூறுமிடத்து “பகுத்தறிவு” மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை நடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்
பகுத்தறிவு - தலையங்கம் - 26.08.1934
இனியாவது புத்தி வருமா?
தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு ஆலயப் பிரவேசம், என்னும் பேரில் காங்கிரஸ் செய்து வந்த கிளர்ச்சியை அப்போதே நாம் கண்டித்து எழுதி வந்ததுடன், உலகில் கோவில்களே இருக்கக் கூடாதென்றும், அதற்கு எவருரையும் சொல்லிவிடக்கூடாதென்றும், சொல்லியும் எழுதியும் வந்தது யாவரும் அறிந்ததாகும்.
மற்றும் கோவில்களை கள்ளர் குகையென்று கிறிஸ்துவும், கோவில்கள். இடித்து நொறுக்கித் தள்ளப்பட வேண்டியது என்று முகம்மதுவும், கோவில்கள் விபசாரிகள் விடுதி என்று காந்தியும் சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததாகும்
தோழர் காந்தியார் கோவில்களை விபசார விடுதி என்று ஒரு சமயத்தில் சொல்லியிருந்தாலும், இப்போது இரண்டொரு வருஷ காலமாய் அவ்விபசார விடுதிக்கு ஆள் பிடித்து விடும் வேலையை விவரமாய் செய்து வந்ததுடன் அதற்காகப் பத்து லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் திரட்டி வந்ததும் யாவரும் அறிந்ததாகும்
தீண்டப்படாதாருக்கு அரசாங்கத்தார் அரசியலிலும், உத்தியோகத்
திலும் தனித்தொகுதி பிரதிநிதித்துவம் கொடுத்த பிறகு அதை ஒழிக்கக் கருதிய காந்தியார், தீண்டாதாருக்கு நல்ல பிள்ளையாகக் கருதி அவர்களுக்கு கோவில் பிரவேசம் ஏற்பாடு செய்து கொடுப்பதாய் வாக்குக் கொடுத்து அதற்காக ஒரு சட்டம் செய்ய வேண்டும் என்ற சட்டசபை அங்கத்தினர்களுக்கு உபதேசம் செய்து ஒரு மசோதாவும் கொண்டு வரக் கருதிச் செய்து அதை மற்ற மெம்பர்கள் ஆதரிக்க வேண்டுமென்றும் செய்வதாகவும் சொல்லி, அந்தப்படி ஒரு மசோதா கொண்டு வரப்பட்டதும் யாவரும் அறிந்ததாகும்! அம்மசோதா பொதுஜன அபிப்பிராயத்துக்கு சர்க்காரால் அனுப்பப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பண்டித மாளவியா முதற்கொண்டு ஐடராஜன், சத்தியமூர்த்தி இருதியாக உள்ளவர்கள் “அம்மசோதா இந்து மதத்துக்கு விரோதம்" என்று சிலரும், “அதன் கருத்து ஒப்புக்கொள்ளப்படுவதாய் இருந்தாலும் சட்டம் செய்வது கூடாது'' என்று சிலரும் அபிப்பிராயங்கள் கொடுத்து பிரசாரமும் செய்து வந்ததல்லாமல்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ 1
கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஒரு அறிக்கை வெளியிட்டு அதை காந்தியாரையும் ஒப்பச் செய்து அம்மசோதாவின் தலையில் ஒரு
அடி அடித்து அதை கச கசவென்று நசுக்கி தள்ளிவிட்டார்கள். அவ்வறிக்கை
சாரம் என்னவென்றால்:-
“நண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரஸ் எவ்வித அபிப்பிராயங் கொண்டிருந்த போதிலும் ஆலயப்பிரவேச விஷயத்தில் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1. இந்துக்களல்லாதார் கலந்து ஓட்டு பெற்று மசோதா நிறை வேறுவதை காந்திஜீயும் காங்கிரஸ்காரரும் விரும்பவில்லை
2. மேல் ஜாதி இந்துக்கள் சம்மதமில்லாமல் மத சம்மந்தமான பழக்க வழக்கங்களையோ சடங்குகளையோ தொடக் கூடாது
3. காங்கிரசுக்காரர்கள் இம்மசோதாவுக்கு இப்போது எவ்வித அபிப்பிராயமும் கொடுக்கக் கூடாது. இதைப்பற்றி நன்றாய் தீர்க்காலோசனை செய்ய வேண்டியிருக்கிறது.”'
என்பது ஆகும்
இதைக் கண்ட பின்பும் மாளவியா எதிர் கக்ஷி ஆரம்பித்ததைப் பார்த்த பிறகும், தோழர்கள் சத்தியமூர்த்தி, ராஜன் முதலியோர்கள் சட்டம் செய்யக்கூடாது என்று பிரசாரம் செய்த பின்பும், சர்க்கார் இம் மசோதா விஷயத்தில் அலக்ஷியம் காட்ட ஆரம்பித்ததும், பொது ஜன அபிப்பிராயம் சாதகமாயில்லை என்று சொல்ல வேண்டி இருந்ததும், கடைசியாக இதை இந்து சமூகம் ஆதரிக்காததால், சர்க்கார் எதிர்க்க வேண்டியவர்களாகி விட்டார்கள் என்று சொன்னதும், ராஜபகதூர் கிருஷ்ணமாச்சாரியார் தீண்டப்படாதாருக்கு மத விஷயங்களில் சமத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொன்னதும் ஆன காரியங்கள் அதிசயமான விஷயமாகாது. காங்கிரசுத் தலைவர்கள் கருப்பு (திருட்டு) பாஷையில் பேசினார்கள். சர்க்காரும் ராஜபகதூரும் வெள்ளையான பாஷையில் பேசினார்கள் என்பதை விட இதில் பிரமாத வித்தியாசமெதுவும் இல்லை.
கடைசியாக தோழர் ராஜகோபாலாச்சாரியாரின் சமாதானமானது “குதிரை கீழே தள்ளினதுமல்லாமல் புதைக்கக் குழியும் பரித்து” என்பது போல் “இந்த அறிக்கை காந்தியாரின் சம்மதம் பெற்றதாகும்” என்றும் சொல்லிவிட்டார். இதிலிருந்து காந்தியார் முதல் சத்தியமூர்த்தி வரை: தீண்டாதார் விஷயத்தில், சமூக சீர்திருத்த விஷயத்தில், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயம் என்னதென்பதை ஜனங்கள் அறிந்து கொள்ள நல்லதொரு சமயம் ஏற்பட்டது என்றுதான். கருத வேண்டும்.
15 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
எனவே இனியாவது தீண்டப்படாதவர்களாகவும், தீண்டப் படாதவர்களாய்க் கருதப்படுபவர்களாகவும், தீண்டப்படாதார் என்று ஆதாரங்களிலும் சர்க்கார் தீர்ப்புகளிலும் தீர்மானிக்கப் பட்டிருக்கிறவர் களாகவும், இருந்து வரும் மக்களுக்கு புத்தி வருமா? அல்லது இன்னமும் “காங்கிரசு” “காங்கிரசு” “காந்தி” “காந்தி” என்று கட்டி அழுது ஈன
ஜாதிக்காரர்கள் என்று உலகோர் கருதவும் கல் மேலெழுதவும் அனுகூலமாய் நடந்து கொள்ளுவதையே கருமமாய் கருதுவார்களா? என்பதே நமது கேள்வி.
பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 1௦
மாளவியா
பழங் காங்கிரஸ்வாதி என்று சொல்லப்படும் பண்டித மாளவியா அவர்கள் காங்கிரசின் ஜாதிமத வகுப்பு சம்மதமாய், சம சந்தர்ப்பம் வழங்கும் கொள்கையில் அதிருப்தி கொண்டு அதன் நிறுவாகத்தில் இருந்து விலகி தேர்தலில் காங்கிரசுடன் போட்டி போடவும், ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸ் அபேக்ஷகருக்கு எதிர் ஆளை நிறுத்தி எதிர்ப்பிரசாரம் செய்யவும் தீர்மானித்து எதிர்கக்ஷி அமைத்துவிட்டார். இதற்கு காங்கிரஸ் சர்வாதிகாரியாய் இருந்து தோழர் ஆனேயும் சம்மதித்தப் பண்டிதருடன். சேர்ந்து காங்கிரசை எதிர்த்து வருகிறார்.
இதைப் பார்த்த எந்த பார்ப்பனரும், பார்ப்பனரல்லாத கூலி பக்தரும், மாளவியாவை தேசத் துரோகி யென்றும், காங்கிரஸ் துரோகி என்று கூறவும் இல்லை. இனியும் தேசபக்தர் என்றேதான் அவர்கள் அழைக்கப் படுகிறார்கள். ஆகவே தேசபக்தர் என்றால் யார் என்பதும் தேசத் துரோகி என்றால் யார் என்பதும் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்
பார்ப்பன அடிமைகளுக்கும், பார்ப்பனரல்லாத கூலி பிரசாரகர்களுக்கும், பத்திராதிபர்களுக்கும், எலும்புத்துண்டு போடுகின்றவர்களுக்குந்தான் தேசபக்தர்கள், காங்கிரஸ்வாதிகள், தேசாபிமானிகள் ஆகிவிடுவார்கள்.
மற்றவர்கள் தேசத் துரோகி, காங்கிரஸ் எதிரி ஆகிவிடுவார்கள். என்பதுதான் அரசியல் அகராதி அருத்தம் போலும்
பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934
17 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தேர்தல் பிரசாரம் என்னும் ஏமாற்றுப்
பிரசாரமும் வயிற்றுப்பிழைப்பு வசவுகளும்
- சித்திரபுத்திரன்
சித்திரபுத்திரனுக்குப் பழய பாடம் படிக்க நேர்ந்துவிட்டது. இது இஷ்டமில்லாத காரியமானாலும் அது இன்றியமையாததாய் போய்
விட்டது! கர்மபலன் யாரை விட்டது?
இந்திய சட்ட சபைத் தேர்தல் ஆரம்பமாகி விட்டது. இது வேலையில்லா வாலிபர்களின் கஷ்டத்தை ஒருவாறு குறைக்க அனுகூலமாயிருக்கிறது என்று சொல்லலாம். அது போலவே கொள்கையோ, விஷயமோ இல்லாத பத்திரிக்கைகாரர்களுக்கும் ஒரு அளவு கஷ்டம் நீங்கிற்று என்றும் சொல்லலாம். நாட்டுக்கோ, நகரத்துக்கோ, ஏழைப் பாட்டாளி மக்களுக்கோ இதனால் ஏதாவது பயன் உண்டா என்று பார்ப்போமானால் தேர்தல்களுடையவும், தேர்தல் முடிவுகளுடையவும் பயன் கடைசியாக பிச்சை போடாவிட்டாலும் பரவாயில்லை நாயைப் பிடித்துக் கட்டுங்கள்” என்கின்ற மாதிரிக்குத் தான் அதாவது நன்மை ஏற்படா விட்டாலும் கெடுதியாவது இல்லாமல் இருந்தால் போதும் என்று பிறார்த்திக்க வேண்டிய அளவில்தான் வந்து முடியப் போகின்றதே ஒழிய வேறில்லை என்பது உறுதி
காங்கிரசும், சுயராஜ்ஜியக் கிளர்ச்சியும், சீர்திருத்த முயற்சியும் ஆதியில் நம் நாட்டில் எப்படி ஏற்பட்டது என்பதை வாசகர்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வக்கீல்கள் தங்களது தொழில்களை விருத்தி செய்து கொள்ளு வதற்காகத் தங்களைப்பற்றி விளம்பரம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் பொதுமக்களுக்குத் தங்களைத் தெரியும்படியான மாதிரியில் ஏதாவது கூட்டங்கள் கூட்டுவது, அல்லது கூட்டப்பட்ட கூட்டங்களில் கலந்து கொள்ளுவது அல்லது சற்று பொது ஜன உணர்ச்சியுள்ள வழக்குகளில் தங்கள் பெயர்கள் வரப் பார்ப்பது அல்லது பத்திரிகைகளில் ஏதாவது விஷயங்களைப்பற்றி எழுதுவது அல்லது பத்திராதிபர்கள் தயவை விலைக்கு வாங்கி தங்கள் பெயரை அடிக்கடி அவற்றில் வரும்படியாக
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 15
செய்வது முதலாகிய காரியங்கள் வக்கீல் தொழில் விருத்திக்கு இன்றியமையாதனவாக இருந்து வந்ததுடன் இன்றும் இருந்து வருவதையும் காணலாம் தானாகவே நல்ல வரும்படி வரக்கூடியவர்கள் சிலர் இப்படிப்பட்ட காரியங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பதையும் பார்க்கின்றோம் என்றாலும், பெரும்பான்மையான வக்கீல்கள் இந்த முறையை அனுசரிக்கின்றார்கள் என்று சொல்வது மிகையாகாது. நமக்குத் தெரிய பல பெற்றோர்கள் தங்கள் குமாரர்களான வக்கீல்களுக்கு இதை உபதேசம் செய்வதையும் பார்த்திருக்கிறோம்
இந்த உண்மையில் இருந்து இன்றைய எப்படிப்பட்ட வக்கீல், பொது நல ஊழியர், தேசியவாதி ஆகியவர்களும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த முயற்சியில் இருந்துதான் பெரிதும் அரசியல் விஷயங்களும், சீர்திருத்த விஷயங்களும் புறப்பட்டனவே ஒழிய வேறில்லை.
இதன் பயனாக அரசியல் காரியங்களில் அரசாங்கத்தோடு கலந்து கொள்வதற்கு வக்கீல்களுக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்து வந்திருக் கின்றன. அவற்றுள் சிலதான் ஸ்தல ஸ்தாபனங்கள், சட்டசபைகள், அரசாங்க உத்தியோகங்கள், மந்திரி பதவிகள் முதலியனவாகும் அரசியல் முயற்சிகளுக்கு இன்று ஏதாவது நாட்டில் உணர்ச்சி இருந்து வருகின்றது என்று சொல்லப்படுமானால், அது மேல் கண்டவைகளான தேர்தல்கள், உத்தியோகங்கள், பதவிகள், பெரும் பண வருவாய்கள் ஆகியவைகள் காரணமாகத்தானே ஒழிய பரோபகாரத்திற்காகவே மனிதன் வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் காரணத்தால் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லலாம். இப்படிப்பட்ட பதவிகளில் ஒன்றுதான். இப்போது நடைபெறும் இந்திய சட்டசபைத் தேர்தல் கோஷமாகும்
இந்தத் தேர்தல் இப்போது வந்தவுடன் உலகத்தை வெறுத்த “துறவிகள்”, “சந்யாசிகள்”” எல்லாம் வெளியில் வந்து விட்டார்கள்.
“சட்டசபை மாய்கை'” என்றும் “அது ஒன்றுக்கும் உதவாதது'' என்றும் “போதிய அதிகாரமும் பொருப்பாக்ஷியும் ஏற்பட்டா லொழிய அதனால் யாதொரு பயனும் இல்லை” என்றும் இன்னும் பலவாராகச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது “காங்கிரசின் கெளரவமும், தேசத்தின் சுயமரியாதையும் காந்தியாரின் பெருமையும்” அதில்தான். (அதாவது இந்திய சட்டசபைத் தேர்தலில்தான்) இருக்கின்றது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்டது
ஜஸ்டிஸ் ககடி என்னும் ஜனநாயகக் கக்ஷியார் தங்களுடையதுதான். என்று சொல்லிக் கொள்ளும் கக்ஷியும், தங்களுடைய கெளரவமும் தாங்கள் தான் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள் என்பதும் இதில்தான். அடங்கி இருக்கின்றது என்று சொல்ல வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.
19 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்த நிலையில் இந்த இரண்டு sedub ஜனப்பிரதிநிதி க்ஷி அல்ல வென்று உண்மையிலேயே கருதும் சிலர் தனிப்பட்ட முறையிலோ, அல்லது ஏதோ ஒரு பெயரைக் கொண்ட க௯ஷி முறையிலோ இந்திய சட்ட சபையின்
மூலம் தொண்டாற்றலாம் என்றுகருத வேண்டியவர்களாகவும் ஆகிவிட்டார்கள்.
இவற்றையெல்லாம் குற்றம் சொல்லுவதற்காக சித்திரபுத்திரன் இந்த வியாசம் எழுதவில்லை.
மனிதன் இன்றைய உலக வாழ்வில் மேலும் மேலும் மேன்மையும், பதவியும், பணமும், புகழும் அடையவேண்டும் என்று ஆசைப்படுவது சகஜமேயாகும்.
விவசாயம், வியாபாரம், லேவாதேவி, வக்கீல், வைத்தியம், சம்பள உத்தியோகம் முதலிய தொழில்களில் இருக்கும் நாணையக் குறைவை விட- அவற்றால் மற்ற மக்களுக்கு இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் ஏமாற்றங்கள். ஆகியவைகளை விட, அவற்றில் நடைபெறும் போட்டிகளின் யோக்கியதைகள், ஒழுக்கக் குறைவுகள், நாணயக் குறைவுகள் ஆகிய எல்லாவற்றையும்
விட, அரசியல் பட்டம், பதவி, உத்தியோகம் மூதலியன சம்பாதிப்பதிலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக முயற்சிப்பதிலும் காங்கிரஸ் பக்தனாவதிலும் தேசீயம் பேசுவதிலும், அதிகமான நாணையக் குறைவோ, குற்றமோ இருப்பதாகவோ இவற்றில் ஏற்படும் போட்டிகளில்
நடக்கும் ஒழுக்க ஈனம் முதலிய காரியங்கள் அதிகமென்றோ மிகவும் தப்பிதமென்றோ நாம் சொல்ல வரவில்லை. வியாபாரிக்கு உள்ள புரோக்கர்களும், வக்கீல்களுக்கு உள்ள டவுட்டுகள் (புரோக்கர்களும்), மற்றவர்களுக்கு உள்ள கூட்டிவிடுகின்றவர்களும் எவ்வளவு உண்மையானவர்கள் - நாணையமுள்ளவர்கள் சுயநலமில்லாதவர்கள் என்று சொல்லக் கூடுமோ அதைவிட தேர்தல் புரோக்கர்கள் எவ்விதத்திலும் மோசமானவர்கள் அல்ல என்றே சொல்லுவோம். ஆனால் முன்னயதைவிட பின்னயதில் மக்கள் சுலபத்தில் ஏமாந்து விடக்கூடும் என்று மாத்திரம் சொல்லலாம் என்றாலும், சக்தி இல்லாதவர்கள் தோற்றுப்போவது எவ்வளவு ஞாயமோ அதுபோல் தான் அறிவில்லாதவர்கள் ஏமாந்து போவதும் நியாயமேயாகும். ஆதலால் அதையும் நாம் குற்றம் சொல்லுவதற்கு இல்லை.
மக்கள் ஏமாந்து போகின்றார்களே என்கின்ற பரிதாபம் யாருக்காவது
இருக்குமானால் அப்படிப்பட்டவர்கள் மக்கள் ஏமாறுவதற்கு ஆதாரமாய்
இருக்கும் காரியங்களை, முயற்சிகளை தைரியமாய் வெளியாக்க
முயற்சிக்கலாம். இதைத் தவிர யாரையும் சொந்தத்தில் தனிப்பட்ட
முறையில் குற்றம் சொல்லுவது நியாயமல்ல என்பதே நமது அபிப்பிராயம்.
அந்த முறையில்தான் தேர்தல் தந்திரங்களைப் பற்றி சில எழுத ஆசைப்படுகின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 70
தேர்தல் முறை இந்நாட்டில் ஏற்படுவதற்கு மூன் பட்டம் பதவி உத்தியோகம் முதலியவற்றில் ஆசை உள்ளவர்களுக்கு மக்களைப்
பற்றிக் கவலை இல்லாமல் அரசாங்கத்திற்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளுவதை மாத்திரமே அனுசரிக்க வேண்டிய - போதுமான யோக்கியதாம்சமாய் இருந்து வந்தது. அதற்கு செளகரியமில்லாதவர்கள் மக்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து காட்டி மக்களிடம் அரசாங்க நிர்வாக முறையில் உள்ள தவறுதல்கள் பலவற்றைத் திரித்தும் பெருக்கியும் தங்கள் இஷ்டத்துக்கு அணுகுணமாய் கற்பித்தும் காட்டி மக்களை ஏமாற்றி அவர்களது நம்பிக்கையைப் பெற்று ஜனப்பிரதிநிதித் துவத்திற்கும் பட்டம், பதவி, அதிகாரம், உத்தியோகம், பெருமை முதலியவற்றில் ஒரு பங்கு கிடைக்கும்படி செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால் பிந்திய கூட்டத்தாருக்கு எப்படியாவது மக்களை ஏமாற்றுவதற்கு சாதனம் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது என்பதில் அதிசயமில்லை.
நம் நாட்டு நிலைமையானது ஒட்டு மொத்த மக்களின் 100க்கு 7 அல்லது 8 பேரே படித்தவர்கள் என்று சொல்லக் கூடியவர்களாய் இருப்ப
தாலும், அதிலும் 109க்கு ஒருவர் இருவரே நன்றாய்ப் படிக்கவும், எழுதவும், யோசிக்கவும் உண்மையைக் கண்டுபிடிக்க செளகரியமும் உள்ளவர். களாய் இருப்பதாலும் இம்மக்களை ஏமாற்ற அதிக கஷ்டமான மார்க்கம் ஏதுமே தேடவேண்டிய அவசியமில்லாமலும் போய்விட்டது. இதானது இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பெரிய அனுகூலமாய் ஏற்பட்டு விட்டது
இந்தக் காரணத்தால் தேர்தல்களில் பிரவேசிக்கின்றவர்கள் தங்கள் சொல்லும், எழுத்தும், கொள்கைகளும் உண்மையும் நாணையமும், யோக்கியப் பொருப்பும், நன்மையும் சிறிது கலந்ததாகவாவது இருக்கின்றதா என்கின்ற கவலையும், பயமும் இல்லாமல் என்ன வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும் பேசவும் எழுதவும் நடக்கவும் ஆன காரியங்கள் செய்ய துணிவுள்ளவர்களாகி விட்டார்கள்.
இதோடு மாத்திரமல்லாமல் இந்நாட்டின் பொருளாதாரத்திட்டமும், வாழ்க்கைத் திட்டமும் மக்களுக்கு எவ்வித பொருப்பும் ஜவாப்தாரித்தனமும் ஒழுக்கமும் அற்றதாகி, எப்படியாவது வயிறு வளர்க்க வேண்டியதே மனித ஜீவனின் கடமை என்று இருந்து வருகின்றபடியால் மேற்கூறப் பட்ட கூட்டத்தாருக்கு வெகு எளிதில் கூலிகள் கிடைத்துவிடுகிறார்கள் அவர்கள் மூலமும் மக்களை ஏமாற்றக் கருதி தங்கள் தங்களுக்கு அனுகூலமாக எப்படி வேண்டுமானாலும் உண்மைகளைத் திருத்தியும், அபாண்டங்களைக் கற்பித்தும் அகாரணமாய் வைதும், பேசவும், எழுதவும் கூடிய கூலிகளை நியமிக்க வேண்டியவர்களாவதுடன் இப்படிப்பட்ட பலர் கூலிக்கு அமர வேண்டியவர்களாகவும் ஆகிறார்கள்.
21 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்த இரு கூட்டத்தாரும் மக்களின் அறியாமையும், பாமரத் தன்மையையும் நன்றாய் அறிந்து கொண்டதால் தாங்கள் பேசுவதும், எழுதுவதும் 100க்கு 100 பொய்யாகவும் அயோக்கியத்தனமாகவும் ஏமாற்றலாகவும் இருக்கின்றது என்பதை உணர்ந்தும் இப்பவோ பின்னையோ இன்னும் அரை வினாடியிலோ உண்மை வெளியாகிவிடக் கூடியதாய் இருந்தாலும், இதற்கு முன் தாங்கள் பேசியதும், எழுதியதும் அடியோடு பொய்த்துப் போய் பலதரம் மக்களை ஏமாற்றி இருக்கின்றோமே என்பதை உணர்ந்திருந்தாலும், சிறிதும் பயமில்லாமல். தங்கள் காரியங்களை நடத்திச் செல்லுகின்றார்கள்.
இவைகள் எல்லாம் இப்போதைய வாழ்க்கைத் திட்டத்தின்படி
குற்றம் என்று சொல்ல நம்மால் முடியவில்லை. ஏனெனில் இந்தப்படி எல்லாம் நடந்தால் தான் இன்று மனிதன் மகாத்மாவாகலாம், பிரபலஸ்தராகலாம், கீர்த்தியும் புகழும் பெறலாம், பட்டம் பதவியும் அடையலாம், அதிகாரம் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம், பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு கழுவலாம் மற்றும் அவற்றிற்கேற்ற தேசாபிமானி, தேசீய வீரர், தேசியப் பத்திராதிபர் ஆகியோர்கள் ஆகலாம் என்கின்ற நிலையில் வாழ்க்கைத்
திட்டம் இருந்து வரு கின்றது. இது இன்று நேற்று அல்லாமல் வெகு காலமாகவே இருந்தும் வந்திருக்கின்றது.
ஆதலால் இப்படிப்பட்ட செய்கைகளைக் கண்டு யாவரும் வருந்தக் கூடாது என்றும், யாவரையும் குற்றம் கூறக்கூடாது என்றும் சொல்வதோடு முன் சொல்லியபடி அவைகளையெல்லாம் அப்புரட்டுகளை யெல்லாம் தைரியமாய் வெளிப்படுத்த வேண்டியது ஒவ்வொரு யோக்கியமானவனுடையவும், பட்டம் அதிகாரம் பெருமை புகழ் ஆகியவற்றில் ஆசையில்லாத பொது நல ஊழியத்திற்கு உயிர் வாழ்பவர்களுடையவும் கடமை என்று சொல்லிவிட்டு அடுத்த அத்தியாயத்தில் பிரவேசிப்போம். (தொடரலாம்)
பகுத்தறிவு - கட்டுரை - 26.08.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2)
ப 3
எதிர் பாருங்கள்! எதிர் பாருங்கள்!
எதிர் பாருங்கள்!!!
காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கக்ஷிக்காரர்கள் முன் ஒரு காலத்தில் இந்திய சட்டசபையில் செல்வாக்காய் இருந்தபோது அங்கு நடந்து கொண்ட மாதிரியும், அவர்கள் சட்டசபை அங்கத்தினர் பதவியை உபயோகித்து பணம் சம்பாதித்த மாதிரியும், தலைவர்கள் என்பவர்கள்
சிலர் அந்தப் பணத்தில் பெரும்பாகம் தங்கள் சொந்தத்திற்கு ஸ்வஹா செய்து கொண்ட கதைகளும் பகுத்தறிவில் வரும் நாளை எதிர் பாருங்கள்.
மற்றும் இன்றைய காங்கிரஸ் அபேக்ஷகர்களில் சிலரின் யோக்கியதையையும் அவர்களின் வாழ்க்கையையும் யாருடைய செலவில் அவர்கள் அபேக்ஷகறாய் இருக்கிறார்கள் என்பதும் வெளியாகலாம்.
ஏனெனில் காங்கிரஸ் க௯9ி தவிர மற்றக் கக்ஷி கழுதைக்கு சமானம் என்றும் காங்கிரசின் பேரால் கழுதை நின்றாலும் அதற்குத்தான்.
ஓட்டுச் செய்ய வேண்டுமென்றும், சுயமரியாதைக் கக்ஷி சர்க்கார் அடிமைக் கக்ஷி என்றும், தேசத் துரோகக் கக்ஷி என்றும் சொல்லுவதற்குப் பதில் சொல்லுமுகத்தான் அவை வெளியாகும்.
பகுத்தறிவு - அறிவிப்பு - 26.08.1934
23 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சர்.ஆர்.கே. ஷண்முகம்
தோழர் ஷண்முகம் அவர்கள் சமீபத்தில் வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேச்ஷ்கராக நிற்கின்றார். அவர் சென்னை மாகாண வர்த்தக தொகுதிக்கு அபேசஷ்கராய் நிற்க உத்தேசித்திருப்பதாய் தெரிகின்றது. அவர் இப்போது பொது (கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்கள்) தொகுதியின் பிரதிநிதியாய் இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு அவரது மேன்மையாலும் தகுதியாலும் இந்திய சட்டசபைக்கே தலைவராய், அதாவது கெளரதையில் வைஸ்றாய் பிரபுவுக்கு அடுத்தபடியாய் விளங்குகிறார்.
அவர் காங்கிரசில் பலகாலம் இருந்தவர். சமீப காலத்தில் அதாவது 1925, 26-ம் வருடங்களில் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் காங்கிரசின் பேரால் தனித்து நின்று மேடையேறுவதற்கு தகுதி இல்லாமல் முறியடிக்கப்பட்ட காலத்தில் (தோழர்கள் 8. சீனிவாசய்யங்கார், சி.ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி முதலியவர்கள்) தோழர் சண்முகம் அவர்களை முன்னிலையில் நிறுத்தி அவரது நிழலில் மறைந்து கொண்டு மேடைகளில் ஆள் அடையாளம் தெரியாமல் உட்கார்ந்திருந்ததை இதற்குள் அவர்களும் மறந்திருக்க மாட்டார்கள். பொது ஜனங்களும் மறந்திருக்க மாட்டார்கள். தோழர் ஷண்முகமும் மறந்திருக்க மாட்டார் என்றே நம்புகின்றோம்
மற்றும் இந்திய சட்டசபையில் தோழர் நேரு, பட்டேல் முதலிய மாபெருந் தலைவர்கள்'' இருந்து வந்த காலத்திலேயே தோழர் ஷண்முகம் அவர்கள் இந்திய சட்டசபை காங்கிரஸ் கட்சி கொறடாவாக அதாவது கக்ஷியின் கெளரவத்தைக் காப்பாற்றும் பொருப்பாளியாக
இருந்து வந்ததும் அது இன்றைய காங்கிரஸ் சரித்திரத்தில் “சுந்திர காண்டமாக' இருந்து வருவதும், யாவருக்கும் தெரிந்ததும் ஒருவராலும் மறுக்க முடியாததுமாகும். அதே தகுதியும், பெருமையும், சாமர்த்தியமும் அவரை இன்று இந்திய சட்டசபைத் தலைவராக ஆக்கிவிட்டதுடன் இன்னமும் மேலான பெரும்பதவியும் அவரை மணந்து மணம் பெற காத்திருக்கின்றது இப்படிப்பட்ட நிலைமையில் தோழர் ஷண்முகத்தின் கெளரவமும் சாமர்த்தியமும் கீர்த்திப் பிரதாபமும் இந்தியாவெங்கும் பரவி
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ 04
இருப்பதுடன் வெளி தேசங்களில் தானாக பரவத் தலைப்பட்டதில் அதிசயமொன்றுமில்லை. இதை ஒடுக்கவும், மறைக்கவும் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிக்கைகளும் மற்றும் வெளி மாகாணங்களில் உள்ள பார்ப்பனர்களும் செய்து வந்த விஷமப் பிரசாரங்களும் திண்ணைப் பிரசாரங்களும் கணக்கு வழக்குக்கு
மீறியதாய் இருந்து வந்ததும் தோழர் ஷண்முகத்துக்கும் தோழர் ஸ்ரீனிவாசய்யங்காருக்கும் நடந்து வந்த வாதப் பிரதிவாதங்களும் 1926, 27 வருஷத்திய குடி அரசைப் பார்ப்பவர்களுக்கு கண்ணாடி போல் விளங்கும்.
அக்காலங்களில் காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் பிரசாரங் களுக்கு வெளியில் சென்று மேடையேறினால் இவர்களது யோக்கிய தைகளை உணர்ந்தவர்களான ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார்கள். இவர்களை கேழ்விகள் கேட்டு திணற வைத்து விடுவார்கள். இப்படி இரண்டு மூன்று இடத்தில் நடந்தும் பிறகு தோழர் ஷண்முகத்தை முன்னால் நிருத்தி சரமாறியான கேள்வி அம்புகளுக்கெல்லாம் பதில் சொல்லும்படி செய்வார்கள். அப் பதில்கள் எவ்வளவு மழுப்பலானதாக இருந்தாலும் கூட தோழர் ஷண்முகம் பார்ப்பனரல்லாதார் என்பதற்காக கவனியாமல் விட்டு விடுவார்கள். இப்படியே சுற்றுப் பிரயாணம் நடக்கும். உண்மைகள் இப்படி இருந்த போதிலும் பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் மாத்திரம் “சரமாரியான கேள்விகளுக்கு ஆணித்தரமான பதில்களை தோழர் சத்தியமூர்த்தி அய்யர் கொடுத்து வாயடக்கி விட்டார்” என்று சிறிது கூட மானம் வெட்கம் உண்மை இல்லாத சேதிகள் வெளிவரும்.
மற்றும் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் மேடையேறியதும் பலவித மரியாதைகள் நடந்த உடனே இறங்கி விடுவார். பிறகு தோழர் சண்முகம் 1 மணி 1.30 மணி நேரம் பேசுவார். ஆனால் பத்திரிகைகளில் தோழர் சத்தியமூர்த்தி பேசியதாக 3 % கலமும் தோழர் ஷண்முகத்துக்கு 2% வரியும்தான் சேதிகள் வரும். இவைகள் யெல்லாம் அப்போதே எப்போதே? தோழர் ஷண்முகம் தேசபக்தராய், காங்கிரஸ் வாதியாய் தேசீய கட்சி கொறடாவாய், பண்டிட் மோதிலால் நேரு அவர்களின். வலக்கையாய், தென்னாட்டு அரசியல் பிரசாரப் பார்ப்பனர்களின் காப்பாளராய் இருந்த காலத்தில் நடந்த சங்கதிகள் என்றால் இப்போது! எப்போது? தென்னாட்டுப் பார்ப்பனர்கள் கண்ணுக்கும் மனத்திற்கும் வயிற்றிற்கும் பெரு நெருப்பாய் இருக்கின்ற காலத்தில் இந்தப் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும், மற்றும் பச்சகானாக்களும், அரை டிக்கட்டுகளும், பார்ப்பனர்களுக்கு கவிபாடி வயிர் வளர்க்கும் வயிற்றுப் பிழைப்புப் பத்திரிக்கைகளும் என்னதான் பேசாது எதைத்தான். எழுதாது என்பதைப் பற்றி நாம் அறிவாளிகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
25 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கொஞ்ச காலத்திற்கு மூன் ஒரு பார்ப்பன போட்டிப் பரிசுப் பத்திரிகை விகட வேஷம் போட்டுக் கொண்டு ஷண்முகம் அவர்களின். ஜாதியைக் குறிப்பிட்டுப் போக்கிரித்தனமாகவும், விஷமத்தனமாகவும் படம் போட்டுக் கேவலப்படுத்தி இருந்ததும், அதை சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகள் கண்டித்துப் பல கேள்விகள் கேட்டதும், கேட்ட கேள்விகளுக்கு நாளது வரை பதில் சொல்லாமல் சுய பாஷியம் கூற வந்ததும் யாவருக்கும்
தெரியும். மற்றும் பல பார்ப்பனர்களும் அதே முறையில் அதை ஒட்டியே தங்கள் விஷத்தை கக்கிக் கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததாகும். இவை ஒருபுரமிருக்க இன்று தோழர் ஷண்முகம் இந்திய சட்ட சபைக்கு அங்கத்தினராய் மறுபடியும் நிற்பதைப் பற்றி பார்ப்பனர்களும், அவர்களது பத்திரிக்கைகளும் எறிகின்ற நெருப்பில் எண்ணை விட்டது போல் வயற்றெரிச்சல் படுவது சகஜமேயாகும். ஏனெனில் தமிழ்நாட்டுப்
பார்ப்பனர் அல்லாதார் ஒருவர் பார்ப்பனர் எவரும் அடையாத பெருமையை அடைந்து விட்டார்; இனியும் அடையப் போகிறார் என்பதை கண்டவர்களும், கேட்டவர்களும் பார்ப்பனராயிருந்தால் ஆத்திரப்படாமல் - ஏன்? - தற்கொலை கூடச் செய்து கொள்ள முயற்சியாமல். இருக்க முடியுமா? ஆனால் பார்ப்பனரல்லாதார்களுள் தங்களைப் பார்ப்பன கூலிகள் என்று சொல்லிக் கொள்ளவோ பிறர் சொல்லுவதைப் பொருத்துக் கொள்ளவோ சகிக்காதார்களும் ஏன் ஆத்திரப்படவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
அவரது குற்றம் எண்ன?
தோழர் சண்முகம் பேரில் இன்று பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும் சொல்லும் குற்றங்கள் இரண்டே இரண்டு. அவைகளில் ஒன்று "ஒட்டாவா காரியத்தில் கலந்திருந்தது. இரண்டு ஷண்முகம் தனது தொகுதியாகிய கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்களின்
தொகுதிகளில் நிற்காதது
இவற்றில் 'ஒட்டாவா' விஷயமோ அது ஒரு பாட்டி கதை. அது
முடிவு பெற்று அமுலுக்கு வந்து அவற்றின் பலனை ஜனப்பிரதிநிதித்துவ இந்திய சட்டசபை சரி என்று ஒப்புக் கொண்டுவிட்டது. மற்றும் தோழர் ஷண்முகம் அவர்கள் அந்த காலங்களிலேயே அது சம்பந்தமான: பிரச்சினைகளுக்குத் தக்க பதிலும் அளித்து இருக்கிறார்.
இன்றும் அந்தத் கொள்கை அதாவது ஓட்டாவா விஷயத்தில்
தான் நடந்து கொண்டதானது சரியா, தப்பா என்பதைப் பந்தயம் போட்டு நிரூபிப்பதற்காகவே விவசாயக்காரர்களைப் பெரும் பகுதியாய் கொண்ட தொகுதியை விட்டுவிட்டு பொருளாதார வர்த்தகத் தொகுதியில் தைரியமாய் அபேட்சகராக நிற்கிறார். அந்தக் கதைகளைப் பற்றி இனியும் பேசுவோமானால் பழய குப்பையைக் கிளருவதாகும்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 2௦
'ஒட்டாவா' ஒப்பந்தம் என்பது இந்தியாவின் பணக்காரர்கள் வியாபாரிகள் ஆகியவர்களாகிய நூற்றுக்குப் பத்து பேர்கள் கூட அல்லாதாரைப் பொறுத்த விஷயமே தவிர மனித சமூகத்தில் 100க்கு 90 பேர்களாகிய ஏழைகள் அதாவது வயற்றுக்கு பற்றாத கூலிக்கு உழைக்கும் பாட்டாளிகள், தீண்டப்படாதவர்கள், கீழ் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் முதலாகிய கூட்டத்தார்களைப் பொறுத்ததல்ல. 'ஒட்டாவா' ஒப்பந்தத்தால் இந்திய வியாபாரம் பாதிக்கப்படுவதாக வைத்துக் கொள்ளலாம். அதில் பணக்காரர்களின் பணம்தான் கொள்ளை போகலாமே தவிர- பணக்காரர்களுக்கு அவர்களுடைய ஆடம்பர அட்டூழியங்களுக்கேற்ற லாபம் தான் கொள்ளை போகலாமே தவிர ஏழைகள் பணம் கொள்ளை போவதில்லை. அப்படித்தான் மீறி இன்றைய நிலையில் ஏழைகள் பணம் கொள்ளை போவதாய் இருந்து, இன்னமும் அவர்கள் பட்டினி கிடந்து சாகும்படியான நிலைமை வருமானால் கூட நாம் அதற்காக கலங்க மாட்டோம். ஏன்? சீக்கிரத்தில் ஏழைகளுக்குப் புத்தி வந்து அவர்கள் கஷ்டங்களுக்கு விமோசனம் ஏற்படக் கூடிய நிலைமை வருமென்று கருதி வரவேற்போம். அந்தப்படி ஏற்பட்ட நாடுகளில் தான் ஏழை மக்களுக்கு
சீக்கிரம் விமோசனம் ஏற்பட்டு பொருளாதார விஷயத்தில் உள்நாட்டான். அடிக்கும் கொள்ளையும் வெளிநாட்டான் அடிக்கும் கொள்ளையும் நின்று இருக்கின்றது என்பதை அறிவோம். இன்நிலையில், இன்று இந்நாட்டு மக்களை வெளி நாட்டார் பட்டினி போடுவதும் ஒன்றுதான், உள் நாட்டான் பட்டினி போடுவதும் ஒன்றுதான்.
மற்றபடி தேசாபிமானத்தைப் பற்றி பேசுவதென்றாலோ, அது இதை விட மோசமான காரியம். அதன் வண்டவாளங்களைப் பற்றி, பின்னால் மற்றொரு சமயம் பேசுவோம்.
நிற்க, தீண்டாமை விஷயங்களிலும் ஜாதி உயர்வு தாழ்வு விஷயங்களிலும் இன்றைய மற்ற அபேக்ஷகர்கள் - காங்கிரஸ் தலைவர்கள். என்பவர்கள் நடந்து கொண்ட யோக்கியதையை விட தோழர் ஷண்முகம் நடந்து கொண்டது மேலா கீழா என்பதை யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம் கோடிக்கணக்கான மக்கள், அதுவும் பாடுபட்டு உழைக்கும் மக்கள் இந்நாட்டில் தீண்டாதாரைக் கீழ் ஜாதியாராய் பட்டம் பெற்றிருப்பது கொடுமையா அல்லது பணக்கார முதலாளிக்கு லாபம் குறைந்து போவது கொடுமையா என்பதை யோசித்தால் “ஒட்டாவா! கூப்பாட்டின். யோக்கியதை விளங்காமல் போகாது
குருகுலப் போராட்டத்தில் - மக்கள், அதுவும் குழந்தைகள் யாவரும் சமமாய் பாவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியதும் காங்கிரஸ் கமிட்டியில் ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடின வீரர்கள் இன்று தலைவர்களாகவும், அபேக்ஷகர்களாகவும்
27 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இல்லையா? பொட்டுக் கட்டுவதை - பார்ப்பனரல்லாத பெண்களில் ஒரு சாரார் மீது சுமத்தப்பட்ட விபசாரத்தன்மையை ஒழிக்கக் கூடாது என்ற
வீரர் ஒருவர் இன்று அபேக்ஷகராக இல்லையா? ஜாதி மதங்களை ஒழிக்கக் கூடாது என்று வாதம் புரியும் வீரர் ஒருவர் இன்று அபேக்ஷகராக இல்லையா? இப்படிப்பட்ட இவர்கள் மனித சமூகத்திற்கே வேண்டாதவர்களாயிருக்க, மனிதர்களின் பிரதிநிதிகளாய் தலைவர்களாய் இருக்க யோக்கியதை உடையவர்களானால் தோழர் ஷண்முகம் பிரதிநிதியாய் இருப்பதில் யாருக்கு என்ன முழுகிப் போகும்? எந்த விதத்தில் இந் நாட்டு மக்களுக்கு கேடோ, அவமானமோ ஏற்பட்டு விடும்? என்று கேட்கிறோம். இரண்டாவது தோழர் ஷண்முகம் தனது தொகுதியில் நிற்கவில்லை என்பது.
தோழர் ஷண்முகத்தை அவரது தொகுதி என்பது இன்றும் கைகாட்டி அழைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தோழர் ஷண்முகம் இதுவரை அதற்கு இணங்காததானது இந்தப் பார்ப் பனர்களும் அவர்களது கூலிகளும் தன்னைப் பொருளாதார விஷயத்தில் இந்திய வர்த்தகத்துக்கு கெடுதி செய்து விட்டதாகச் செய்து வரும் விஷமப் பிரசாரத்தைப் பொய்ப்பித்து, அவர்களது முகத்தில் கரியைத் தடவி அவர்களின் யோக்கியதையைத் தமிழ் மக்களுக்கு விளக்கிக் காட்டுவதற்காகவே வியாபாரிகள் பொருளாதார நிபுணர்கள் ஆகியவர்களுடைய தொகுதியிலேயே நிற்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே ஒழிய வேறில்லை என்றே நினைக்கிறோம்
இன்னும் நாம் தோழர் ஷண்முகத்திற்கு ஒரு யோசனை சொல்லுவோம். அதாவது சேலம், கோயமுத்தூர், வட ஆர்க்காடு தொகுதியில் நிற்க வேண்டுமென்றே சொல்லுவோம். இது கிராம வாசிகள் விவசாயிகள் ஆகியவர்களையே பெரிதும் கொண்ட தொகுதியானாலும் அவர்களைக் கூட இந்தப் பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் ஏமாற்றி விடமுடியாது என்று நாம் கோபுரத்தின் மீதிருந்து கூவுவோம்
மேலும் கோவை, சேலம், வட ஆர்க்காடு ஜில்லாக்கள் சேர்ந்த இந்திய சட்டசபைத் தொகுதியில் இன்னொரு இன்று இருபதாயிரம் ஓட்டர்கள் இருப்பார்களானால் அதில் பகுதி முனிசிபல் டவுன் ஓட்டர்கள் ஆவார்கள். அவர்கள் கிராமவாசிகளை விட விஷயங்கள் தெரிந்தவர் களாயிருப்பார்களே தவிர மோசமானவர்களாக இருக்க மாட்டார்கள். இந்தத் தொகுதியில் உள்ள எல்லா மூனிசிபாலிடிகளும் தோழர் ஷண்முகத்துக்கு வரவேற்பு கூறி பாராட்டி இருப்பது இரண்டு கண்ணும் அற்ற குருடன் கூட அறிவான். கோவை ஜில்லா போர்டு தவிர மற்ற எல்லா ஜில்லா போர்டுகளும் தோழர் ஷண்முகத்தை வரவேற்றுப் பாராட்டி இருப்பதும் யாவரும் அறிந்ததாகும். கோவை ஜில்லா போர்டிலும் கூட குறுகிய நோக்கம் கொண்ட சிலரின் பொறாமை
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) ———— 5
காரணமாகவும், பார்ப்பனர்களுக்கு உள்பட்டிருந்தாலொழிய தாங்கள். மேன்மை பெற முடியாது என்று சந்தேகப்பட்டவர்கள் காரணமாகவும் அது பாக்கி இருக்கின்றது என்று கொள்ளலாமே தவிர வேறு காரணம் இல்லை. அப்படி இருந்தாலும் கோவை ஜில்லாவில் உள்ள நாயக்கர்மார்கள் 100க்கு 90 பேர்களும் ஒக்கிலிய கவுண்டர்கள் 100க்கு 99 பேர்களும் பட்டக்காரர் போன்ற தக்க செல்வாக்குள்ள பிரமுகர்களும், மற்றும் ஏழைக் குடியான சகோதரர்களும் 100க்கு 99 வியாபாரிகளும் தோழர் ஷண்முகத்தை தங்கள் பிரதிநிதியாகக் கொள்ளும் கெளரவத்தை அடைய ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தைரியமாயும் வலிமையாயும் சொல்லுவோம்
இவை ஒரு புரமிருந்தாலும், சேலம் கோயமுத்தூர் வட ஆற்காடு தொகுதியில் இந்திய சட்டசபைக்கு தோழர் ஷண்முகம் அவர்களிடம் ஆதரவைப் பெற்றவர்கள்தான் இப்போதும் வெற்றி பெற முடியுமே தவிர அவரை வைது விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் பார்ப்பனத் திருக்கூட்டத்தின் ஆதரவு பெற்றவர்கள் வெற்றி பெறுகின்றார்களா என்பதை சற்று பொருமையாய் இருந்து வேடிக்கை பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்
நிற்க, தேர்தல் பிரசார நாடகம் இங்கனமிருக்க “காங்கிரசில் சேராதவன், பாவி, தேசத் துரோகி'' என்றும் “காங்கிரசு குதிரைக்கு சமானம் மற்ற கக்ஷி கழுதைக்குச் சமானம்” என்றும் பேசுவதும் எழுதுவதும்
“காங்கிரசின் பேரால் ஒரு கழுதை நின்றாலும் அதற்குத்தான் ஓட்டு செய்ய வேண்டுமே ஒழிய மற்றபடி யார் எவ்வளவு பெரிய யோக்கியனாகவும், சாமார்த்தியசாலியாயும் இருந்தாலும் அவர்களுக்கு
ஓட்டுச் செய்யக் கூடாது!” என்று சொல்லுவதும், வெளி நாட்டிலிருந்து சுய அறிவும், முன் பின் யோசனையும் அற்ற ஆட்களைக் கூட்டி வந்து அவர்களை உசுப்படுத்தி “ஜஸ்டிஸ் கக்ஷியும் சுயமரியாதைக் கக்ஷியும் தேசத்துரோகக் க௯ஷி" சர்க்காருக்கு அடிமைக் க்ஷி என்றெல்லாம் பேசும்படி செய்வதுமான இழிவான காரியங்களைப் பற்றி மறு முறை எழுதுவோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 26.08.1934
29 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் திரு.வி.க. முதலியார்
தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் திருச்சிக்கும், ராசீபுரத்துக்கும் வருவதாக பத்திரிகையிலும், துண்டுப் பிரசுரங்களிலும் வெளியானபடி அவர் வரவில்லை. ஆதலால் பார்ப்பனக் கூலிப் பத்திரிகைகள் கல்யாணசுந்திர முதலியார் வரமாட்டார். அவர் பெயரை வேண்டுமென்றே தப்பிதமாய் உபயோகித்துக்கொள்ளுகிறார்கள் என்று எழுதிய வாசகம் உண்மையாய் இருக்கலாம் என்று சிலர் கருதக்கூடும் ஆதலால் நடந்த விபரங்களை எழுதுகின்றோம். ஒரு சுற்றுப்பிரபாணம் ஏற்படுத்த வேண்டுமென்றும், தானும் அதில் கலந்து கொள்ளுவதாகவும் தோழர் முதலியார் அவர்களே பிரஸ்தாபித்ததை ஒட்டித்தான் சுற்றுப்பிரயாணம் பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும், அவருடைய சம்மதத்தின் பேரிலேயேதான் பத்திரிக்கைகளிலும், துண்டு பிரசுரங்களிலும் பிரஸ்தாபிக்கப்பட்டதென்றும்
நாம் நமது தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன், அதை நம்பியே தோழர் ஈ.வெ.ரா. ஒவ்வொரு ஊருக்கும் சென்றார் என்றும் தெரிவித்துக் கொள்வதோடு தோழர் முதலியார் அவர்கள் இரண்டு இடத்திற்கும் விஜயம் செய்யாத காரணம் திருச்சிக்கு மூலவியாதி தொந்திரவால் வரவில்லை என்றும், ராசீபுரத்துக்கு வறாதது அவரது நெருங்கிய பந்து ஒருவரின் மரணம் காரணம் என்றும் சேதி வந்திருப்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்
தோழர் முதலியார் அவர்கள் 2-9-34ந்தேதி ஈரோட்டிற்கு அழைக்கப் பட்டிருக்கிறார். அநேகமாய் வரக்கூடும் என்றும் கருதுகிறோம்
பகுத்தறிவு - செய்திக் குறிப்பு - 26.08.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 30
ஆலயப்பிரவேச மசோதா கருவிலேயே கருகிவிட்டது
இந்திய சட்டசபையில் இருந்த ஆலயப்பிரவேச மசோதா 23ந்தேதி இந்திய சட்டசபை கூட்டத்துக்கு வந்து பொதுஜன அபிப்பிராயம் விரோதமாய் இருக்கின்றது என்கின்ற காரணத்தால். சர்க்காராரால் வாப்பீசு வாங்கிக்கொள்ளும்படி கேழ்க்கப்பட்டு அது வாப்பீசு வாங்கிக் கொள்ளப்பட்டதால் அது கருவிலேயே கருகி விட்டது
பகுத்தறிவு - செய்திக் குறிப்பு - 26.08.1934
31 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
= nddoy e TR A TR A R AR குட அரசு பகிப்பக 1
் வெனியிடுகள்.
பனி மணைலிவு அனை சுட்
அந்ந வலமக
ாய்சிம் ஸ்க்ளு் இராமலிங்க கவிகள் யாடல் அம் அவமரியான தப் யரிடன் i 5 e ey க spigp மம்பிக்சை [இல்லில்
4 கவமசியாதை தாலாட்ட
" e வுழ்தனயல் சரோ, - S T ற அனவ ரணை i I 1 நகை வ 111 கவை வக ரர ர
கர்ம பலன்?
தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் அவர்களுக்கு விபரம் தெரிந்த காலம் முதல் இன்று வரை இன்னமும் தேசீய பல்லவி பாடிக் கொண்டிருந்தது யாவருக்கும் தெரிந்ததாகும். அதோடு கூடவே, இந்த சர்க்காரை, அதன் அன்னிய ஆக்ஷியை ஒழித்து சுயராஜ்ஜியம் ஏற்படுத்த வேண்டும் என்ற அனுபல்லவியையும் பாடி வந்ததும், வருவதும் யாவருக்கும் தெரியும்.
தேசீயம் என்பது வயிற்று பிழைப்பு நாடகம் என்றும், அன்னிய ஆக்ஷி, சுய ஆக்ஷி, சுயராஜ்ஜியம் என்பவைகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கும், பணக்காரர்களுக்கும் பாடுபாடும் சோம்பேறி நாடகம் என்று நாம் சொல்லி வருகிறோம். இதை பபநாயுடு அவர்கள்
எதிர்த்துப் பழித்து தூஷித்தும் வந்திருக்கிறார் என்றாலும் இந்தப் பிரசாரத்தின் பலனை இவர் என்றைக்காவது ஒரு நாளைக்கு அதாவது அனுபவிப்பார் என்றே கருதி அதை லக்ஷியம் செய்யாமல் இருந்து வந்தோம். எனினும் “கர்மத்தின் பலனை” இன்று அவர் அடைய நேர்ந்ததை அவரே மறுக்க மாட்டார் என்று கருதுகிறோம். அதாவது
இந்த நாட்டுக்கு, இந்திய தேசியத்துக்கு, சுயராஜ்ஜியத்துக்கு, அன்னிய ஆகஷியை ஒழிப்பதற்கு தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தகுதியுடையவர் என்றும் Dr. நாயுடு தேசத்துரோகியாகவும், சுயராஜ்ஜிய எதிரியாகவும் ஆகிவிட்டார் என்றும் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகிறார்கள். இது நாயுடு செய்து வந்த காரியத்துக்கு தக்க பயன் என்றே சொல்லுவோம்.
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் யார் என்பதை நாம் யாவருக்கும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. அவரது ஒழுக்கம், சமுதாய விஷயத்தில் உள்ள கொள்கை, பொருளாதாரத்தில் உள்ள நாணயம், அனுபவம் முதலியவைகளும் அரசியல் பொது ஜனப் பிரதிநிதித்துவ முறையில் முன்பின் அவர் நடந்து கொண்ட மாதிரியும் அறிந்த இந்த நாட்டு மக்களுக்கு நாம் அதிகம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. காங்கிரசுக்கும் தோழர் ராஜகோபாலாச்சாரியாருக்கும் இவைகள் தெரியாது என்று எந்த மூடனாலும் சொல்ல முடியாது. இந்த உண்மைகளையெல்லாம் அறிந்தே தான் தோழர் ராஜகோபாலாச்சாரியார். அவர்கள் தனது தேர்தல் பிரசாரத்தில் எங்கு பேசினாலும் “காங்கிரசு சார்பாய் நிற்கின்றவர்கள் யோக்கியர்களா அயோக்கியர்களா என்று 3B ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பார்க்காதீர்கள். எவ்வளவு அயோக்கியர்களானாலும் காங்கிரசில் அங்கத்தினரானால் யோக்கியர்களாகி விடுவார்கள். ஆதலால் காங்கிரசின் பேரால் எவ்வளவு அயோக்கியர்கள், நாணையமற்றவர்கள்,
ஒழுக்கங் கெட்டவர்கள் நின்றாலும் அவர்களுக்கே ஓட்டுக் கொடுங்கள் என்று சொல்லி வருகிறார் என்றே கருதுகின்றோம். இதிலிருந்து காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட சரக்குகளை ஒருவாறு மதிப்பிடலாம்.
நிற்க, இந்த நாட்டில் காங்கிரஸ் ஏற்பட்டு காங்கிரசு கணக்குப்படியே 50 வருஷங்கள் ஆகின்றன. அநேகப் பேர்கள் காங்கிரசில் பல வருஷங்களாய் இருந்து வந்திருக்கின்றார்கள், இன்றும் இருக்கின்றார்கள். ஆதலால். இவர்கள் எல்லோரும் யோக்கியர்களும், நாணையஸ்தர்களும் தானா என்று கேள்க்கிறோம். அன்றியும் பலகாலம் அதாவது 10 @ 20 @ காங்கிரசில் இருந்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தால் இன்று மாத்திரம், இவ்வருஷம் மாத்திரம் காங்கிரசில் இல்லாதிருந்தால் அவர்கள் யோக்கியர்களாகி இருக்க மாட்டார்களா என்று கேள்க்கின்றோம். மேலும் நேற்றுவரை அயோக்கியர்களாக இருந்துவிட்டு இன்று நாலணா கொடுத்து காங்கிரஸில் கையெழுத்து போட்டவுடன் யோக்கியர்களாகி விடுவார்களா என்று கேள்க்கின்றோம்
அன்றியும் தேர்தல் ஆன பிறகோ, அல்லது மறுநாளோ நான். காங்கிரஸ்வாதி அல்லவென்று சொல்லிவிட்டால் உடனே அவர்கள். பழைய அயோக்கியர்களாகி விடுவார்களா என்று கேள்க்கின்றோம்
கேவலம் எப்படியாவது தேர்தலில் பார்ப்பனர் ஆதிக்கம் ஏற்பட்டால் போதுமென்ற கருத்தினால், கிடைத்த ஆட்களை யெல்லாம் சேர்த்துக் கொண்டு, பொது ஜனங்களுக்கு சமாதானம் சொல்லுவதற்காக இப்படி யெல்லாம் பேசினால் இது புத்திசாலித்தனத்தைக் காட்டுமா அவி விவேகத்தைக் காட்டுமா? என்பதோடு இம் மாதிரி நடவடிக்கைகள். வெற்றியளிக்குமா என்றும் வினவுகின்றோம்.
கடைசியாக தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாருக்கு இப்படிப்பட்ட ஒரு கஷ்டமான நிலை ஏற்பட்டதே என்பதற்காக நாம் பரிதாபப்படுவதோடு
“கர்ம பலன்” அவரையும் விடவில்லை என்றே கருதுகின்றோம்
பகுத்தறிவு - கட்டுரை - 02.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ 3
மண் குதிரையை நம்பின பலன்
கருப்புக் கொடியும், தடீ அடியும் வெடிகுண்டும்
தோழர் காந்தியாருக்கும், காங்கிரசுக்கும் அரசியல் வாய்ப்பூட்டு ஏற்பட்டு விட்டதின் பிறகு ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கா விட்டால் தங்களை உலகம் மறந்து விடுமோ என்று பயந்து சமுதாயத் துறையில் வேலை செய்ய எண்ணங்கொண்டு ஹரிஜன சேவை, ஆலயப் பிரவேசம் என்னும் பெயர்களால் சுற்றுப்பிரயாணம் செய்ததும், பணம் தண்டினதும் யாவரும் அறிந்ததாகும். இதை மெய்யென்று நம்பின சில அரசியல் பிழைப்புக்காரர்கள் ஆலயப் பிரவசே மசோதா, தீண்டாமை விலக்கு மசோதா முதலியவைகள் கொண்டு வந்து விளம்பரம் செய்து கொண்டதும் இந்தியர்கள் அறிவார்கள்.
பிறகு என்ன ஏற்பட்டது? மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின. பலன்தான் ஏற்பட்டது. ஏன் ஏற்பட்டது என்றால் தோழர் காந்தியார் தமது பரிவாரங்களுடனும் சுற்றுப் பிரயாணம் செல்லுகையில் அவருக்கு ஏற்பட்ட கருப்புக் கொடி, தடியடி, வெடிகுண்டு ஆகியவைகள் பிரயோகமும், காந்தி கூட்டத்தார் மற்றவர்கள் மீது பிரயோகித்த தடியடி பிரசாரமும் சேர்ந்து காந்தியாரைப் பயப்படுத்தி விட்டது. இதன் பயனாக தோழர் ராஜகோபாலாச்சாரியார் மூலம் ஓர் அறிக்கை வெளியிட வேண்டியதாய் விட்டது. அந்த அறிக்கையானது காங்கிரசும் காந்தியாரும் சமூகத் துறையில் கொண்டுள்ள உள் எண்ணத்தை நிர்வாணப் படுத்திக் காட்டிவிட்டது என்றுதான் சொல்லுவோம். “சும்மா கிடக்கும் சங்கை ஊதி கெடுத்தான். ஆண்டி” என்கின்ற பழமொழி போல் ஆலயப் பிரவேசம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றும், அரசியல் உரிமைகளும், பொருளாதார முன்னேற்றமும் கிடைத்தால் போதும் என்றும் கருதி, அதற்காக அரசாங்கத்தினிடம் கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருந்த தீண்டப்படாதார் என்னும் மக்களைச் சாதிப்பதாக வேஷம் போட்டு “அங்கேண்டி மகளே ஆலாப் பரக்கின்றாய், இங்கு வா காற்றாய்ப் பறக்கலாம்” என்ற மாதிரியில் அழைத்து அவர்களை (தீண்டாதவர்கள்) ஏமாற்றியாகிவிட்டது. “ஹரிஜன. வேலை செய்யாமல் ஹரிஜனங்களுக்காக பாடுபடாமல் உயிர் வைத்து இருக்க முடியாது. அதற்காகப் பட்டினி கிடந்து சாகப்போகிறேன்” என்று சொல்லி விடுதலை பெற்று வந்ததின் பயன் இன்று விளங்கி விட்டது
35 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்திய தேசீய சபையின் சர்வாதிகாரியும் ஏகப் பிரதிநிதியும் என்று சொல்லப்பட்ட தோழர் காந்தியாரின் முயற்சியும் ஹரிஜன சேவையும் தீண்டப்படாதவர்களுக்கு இந்தப் பயனைக் கெடுத்திருக்குமானால், இனி அவர்களுக்கு தேனபிமானத்தால், இந்திய மக்களை நம்புவதால் என்ன பயன் கிடைக்கக் கூடும் என்பதைப் பற்றி நாம் ஜோசியம் கூற வேண்டியதில்லை.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தீண்டப்படாதாருக்கு சம சுதந்திரம் கொடுக்க இஷ்டப்படவில்லை என்று முடிவு ஏற்பட்டு விட்டால். அதுவும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாய் மனித உரிமை, சுதந்திரம் கூட கொடுக்க இஷ்டமில்லை என்று ஏற்பட்டு விட்டால் அவர்களை இனியும் இந்த தேச மக்களையும், சுதந்திரம் கொடுக்க சம்மதியாத மதத்தையும், சாஸ்திரத்தையும் நம்பிக் கொண்டு அவர்களுடன் கூட இருக்க வேண்டுமா என்று கேட்கின்றோம். ஆலயப் பிரவேச பேச்சும், வார்த்தையும் எல்லாம் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட அரசியலில் தனித் தொகுதி தேர்தல் உரிமையையும், உத்தியோகத்தில் தனி பிரதிநிதித்துவத்தையும் பாழாக்குவதற்காக ஏற்பட்ட சூக்ஷி தவிர வேறில்லை என்பது இப்போதாவது தீண்டப்படாத மக்களுக்கும், கீழ் ஜாதியராய் கருதப்படும் மக்களுக்கும் நன்றாய் விளங்கிற்றா இல்லையா என்று கேட்கின்றோம்.
இன்று தேர்தலுக்காக என்று வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் கொள்கை திட்டங்களிலும் நன்றாய் வெளிச்சமாய் மதக் கொள்கைகளில். நடு நிலைமை வகிப்பதாகவும், மத சம்பந்தமான பழக்க வழக்கங்களில் பிரவேசிப்பதில்லை என்றும், அவற்றை காப்பாற்றுவதாக வாக்குறுதி கொடுப்பதாகவும் கண்டிருப்பதை யாரும் காணலாம். இந்த நிலையில். மதத்தால், சாஸ்திரங்களால், பழக்க வழக்கங்களால், கீழ்ப்பட்டு இழிவு படுத்தப்பட்டு தீண்டாதாராய், கிட்ட வரக்கூடாதவராய், பாவிகளாய் கருதப்பட்டு அந்தப்படி நடத்தப்பட்டு வரும் மக்கள் இனியும் காங்கிரசையும், காந்தியாரையும் நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில். இறங்குவது போல் ஆகாதா என்று கேள்ப்பதோடு, எப்பாடு பட்டாவது, என்ன தியாகம் செய்தாவது தனித் தொகுதி முறையையே அரசாங்கத்தினிடம் வற்புறுத்தி அடைவதற்கு முயற்சிக்க வேண்டியது தாழ்த்தப்பட்ட மக்களின். கடமை என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
பகுத்தறிவு - கட்டுரை - 02.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 3௦
லார்ட் வில்லிங்டனின் வீர முழக்கம்
ஜோசியம் பலித்ததாம்
லார்டு வில்லிங்டன் பிரபு இந்திய சட்டசபையில் பேசும்போது சட்ட
மறுப்பு இயக்கத் தலைவர்கள் தங்களுடைய பயனற்ற தடை வேலைகளை சீக்கிரத்தில் கைவிட்டு விடுவார்கள் என்று முன்னமே ஜோசியம் சொன்னதாகவும் கொஞ்ச நாளைக்கு முன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் செத்துப்போய் விட்டதென்றும் இதை பல காங்கிரஸ் தலைவர்கள் கூட அப்போதே சொன்னார்கள் என்றும், இனி அது எந்தக் காலத்திலும் தலை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இப்போது காங்கிரஸ் ஸ்தாபனங்களின் மீதுள்ள. தடையை நீக்கிவிட்டோம் என்றும் சட்டமறுப்பு இயக்கம் அடியோடு செத்துப் போய்விட்டதென்று தான் நம்புவதாகவும், இது விஷயமாய் தான் கையாண்ட முறைகள் எல்லாம் வெற்றி அளித்து விட்டதென்றும், அவை வெற்றியளித்ததற்கு காரணம் பொது ஜனங்களுக்கு நல்ல புத்தி வந்து சட்ட மறுப்பைக் கைவிட்டதே காரணமென்றும் சொல்லி கடைசியாக இந்த அளவுக்கு வில்லிங்டன் பிரபு ஜோசியம் பலித்துவிட்டது என்பதோடு இந்த ஜோசியம் வில்லிங்டன் பிரபு மாத்திரம் கூறவில்லை என்பதோடு, சுய அறிவுள்ள மக்கள் 100-க்கு 99 - பேர் வில்லிங்டன். பிரபுவின் பெயர் இந்திய வைசிராய் பதவிக்கு அடிபடுவதற்கு முன்பே சொன்ன ஜோசியமே தவிர வேறில்லை என்றும் சொல்லுகிறோம்
ஆனால் ஒரு காலத்தில் அவர் ஜோசியம் பலித்து விட்டதாக சொல்ல. முடியாது. என்னவென்றால் மறுபடியும் சட்ட மறுப்பு தலையெடுக்காது என்பது. தேர்தல்கள் முடிந்து காங்கிரஸ்காரர்களும் பார்ப்பனர்களும் அதிகாரத்துக்கும் பதவிக்கும் வராமல் போக நேருமானால் அடுத்த தேர்தலுக்குள்ளாக மறுபடியும் செல்வாக்கு உண்டாக்கிக் கொள்ள ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்துத்தான் தீருவார்கள். அப்போது அவர்கள் கைவசம் வசூலித்த பணமும் வேலையில்லாத திண்டாட்டத்தினால் கஷ்டப்படும் வாலிபர்களும் மிகுந்திருப்பார்களானால் மறுபடியும் ஒரு மூச்சு கிளம்பி ஊசிப்பட்டாசு கட்டுடன் வெடிப்பது போல் சடபுடவென்று வெடித்து அடங்கி அதன் பயனாய் சிலருக்கு ஓட்டு வாங்கிக் கொடுத்துவிட்டு அப்புறம் தான் அடங்குவார்கள். இது பொது ஜனங்களிடத்தில் உண்மையான செல்வாக்குப் பெற யோக்கியதை இல்லாத கூட்டத்தார்களுக்கு ஏற்பட்ட
37 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தர்மமேயாகும். ஆதலால் அதை வில்லிங்டன் பிரபு அடக்கிவிட்டதாக. நினைப்பது போலி கெளரவமேயாகும். வில்லிங்டன் பிரபுவின் வைசிராய் ஆயுள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். ஆதலால் அவர் எப்போதும் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட்டேன் என்று சொல்வது ஆயுளை கழித்துப் பார்க்காமல் பேசிய பேச்சென்றே கருதுகின்றோம். ஏனெனில் இதற்குமுன் இருந்த வைசிராய் பிரபுக்கள் ஒவ்வொருவரும் இப்படித்தான் பேசிப் போய் இருக்கிறார்கள் சட்டமறுப்பு இந்த 14 வருஷமாய் இருந்து கொண்டுதான் வருகிறது ஆதலால் வைகிராய் பிரபுக்கு சட்டமறுப்பு அடியோடு இந்தியாவை விட்டு மறைந்து போகவேண்டும் என்கின்ற எண்ணம் உண்மையில் இருக்குமானால், மக்களின் வேலை இல்லாக் கஷ்டத்தையும் தரித்திரத்தையும் நீக்க வழி கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக் கிழமை வருவது போலும், வருஷத்துக்கொரு முறை ஜனவரி மாதம் வருவது போலும், எலக்ஷன்கள் தோரும் சீர்திருத்தங்கள் தோரும் சட்ட மறுப்பு வந்து கொண்டுதான் இருக்கும். சட்ட மறுப்பு மறைந்து போனதாகச் சொல்லுவதும் திங்கட்கிழமை விடிந்த உடன் ஞாயிற்றுக் கிழமை மறைந்தது போலவும் பிப்ரவரி பிறந்தவுடன் ஜனவரி மறைந்ததாகவும் நினைப்பது போல்தான் முடியும்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 02.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 5
வடநாட்டுத் “தலைவர்கள்??
பூலாபாய் தேசாய் & சர்தார் சாதூல் சின்
தோழர் பூலாபாய் தேசாய் அவர்கள் சென்ற மாதம் சென்னை மாகாணத்திற்குத் தருவிக்கப்பட்டு, பல இடங்களில் சொற் பொழி வாற்றும்படி செய்யப்பட்டதில் அவர் சொற்பொழிவிலிருந்து மிக மோசமான. வாக்கியங்கள் காணப்பட்டதை வாசகர்கள் பல பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம்
அவற்றில் கவனிக்கத்தக்க ஒரு வாக்கியம் என்னவென்றால் “சென்னை மாகாணத்தில் சர்க்காரை ஆதரிக்க சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று இருந்து வருகின்றது” என்பது
அதே மாதிரி தமிழ்நாட்டுக்கு வந்த மற்றொரு தோழர் சர்தார் சாதூல்சிங் என்பவர் “காங்கிரஸ் குதிரை போன்றது, மற்ற ஜஸ்டிஸ் கக்ஷி முதலியவைகள் கழுதை போன்றது” என்றும் பேசிவிட்டு போயிருக்கிறார். இவர்களைப் பற்றி நாம் பரிதாபப்படுகின்றோம். ஏனெனில் இவர்கள் தமிழ்நாட்டைப் பற்றியோ, ஜஸ்டிஸ் கக்ியைப் பற்றியோ, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியோ ஒன்றும் அறியாதவர்கள்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் சர்க்கிஸ் மாஸ்டர்கள் மாதிரி வடநாட்டு ஆசாமிகளை சர்க்கிஸ் வளையத்துக்குள் ஆட்டுவிக்கும் மிருகங்களைப் போலப் பிடித்துக் கொண்டு வந்து ஆட்டுவிப்பதன் பயனாய் இம்மாதிரி அவர்கள் சரியாய் ஜீரணமாகாத ஆகாரங்கள் வாந்தி எடுக்கப்படுவது போல் கக்கிவிட்டுப் போக நேரிட்டதே ஒழிய, மற்றபடி வடநாட்டுத் “தலைவர்கள்” தங்கள் சுயபுத்தியுடனும் சுய அனுபவத்துடனும் சுயமரியாதையில் லக்ஷியம் வைத்தும் பேசின பேச்சுக்கள் என்று சொல்ல முடியாது
இது போலவே முன் ஒரு தடவை தோழர் சர்தார் பட்டேல் என்று சொல்லப்படும் வல்லபாய் பட்டேலும், மற்றும் தோழர்கள் தாஸ், மாளவியா, லஜபதிறாய் முதலியோர்களும் நமது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காலத்தில் ஞானமில்லாமல் உளரிக்கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை நாம் வாசகர்களுக்கு மறுபடியும் ஞாபகமூட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்
39 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குத் தங்கள் சொந்த போர்வை யுடனானாலும் சரி, காங்கிரஸ் போர்வையுடனானாலும் சரி பொது ஜனங்களிடத்தில் செல்வாக்கில்லாமல் மூறியடிக்கப்பட்டும், தங்களது நயவஞ்சக தன்மைகளையும் சுயநலப் பித்தலாட்டங்களையும் பாமர மக்கள் அறிந்து அவர்கள் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் காலங் களிலும் மற்றும் வேறு இயக்கம் தோன்றி பார்ப்பனர்களின் சோம்பேறி வாழ்வுக்கு ஆபத்து வரும்படியான நிலை ஏற்படும் போதும் இப்படிப்பட்ட வடநாட்டு சோனகிரிகளைக் கூலிக்கு பிடித்துக் கொண்டு வந்து ஆட்டுவிப்பது அவர்களது பரம்பரை வழக்கமேயாகும்.
இவர்களில் சிலர் தென்னாட்டுக்கு வந்துபோன பின்பு பூர்வஞானம் ஏற்பட்டு தங்களது தப்பிதத்தை உணர்ந்து வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பதோடு தென்னாட்டு பார்ப்பனர்களையும் அளவுக்கு மீறிக் கண்டித்தும் இருக்கிறார்கள்.
தென்னாட்டுப் பார்ப்பனர்களைப் பற்றி வடநாட்டுத் தலைவர்கள் இங்கு வந்து போனபிறகு கொண்ட அபிப்பிராயங்களை நாம் முன் பல தடவை எடுத்துக்காட்டி இருக்கின்றோம். ஆனாலும் இப்போதும் ஒரு தடவை எடுத்துக் காட்டுவது குற்றமல்ல என்றே நினைத்து சில குறிப்பிடுகின்றோம்
விவேகானந்தர் கூறியதின் சுருக்கம் “பார்ப்பனர்கள் விஷப் பாம்பு போன்றவர்கள். அவர்கள் விஷத்தினால் பார்ப்பனரல்லாதார் அழிந்து போகுந் தருவாயிலிருக்கிறார்கள். இவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் பார்ப்பனர்கள் கக்கிய விஷத்தை தாங்களாகவே உருஞ்சிக் கொள்ள வேண்டும்” என்பதாக சொல்லி இருக்கிறார்.
தோழர் சர்.பி.சி. ரேய் அவர்கள் “பார்ப்பனர்களை வங்காளக் குடாக் கடலில் போடவேண்டும்” என்றும் சொன்னார்.
தோழர் 03தாஸ் அவர்கள் “எனக்கு சுயராஜ்ஜியம் கிடைத்து விட்டால் முதலில் இந்தப் பார்ப்பனர்களையும், பரிகாரிகளையும் ஒன்று படுத்திவிடுவேன்' என்றும் சொன்னதோடு, தான் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும், தலைவரையும் பற்றி பேசின சில வார்த்தைகளுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
லாலா லஜிபதிராய் அவர்கள் தென்னாட்டுக்கு வந்து போன உடன் தனது தவரை உணர்ந்து “சமூகத்தில் உள்ள ஆபாசங்களுக் கெல்லாம் மதமே காரணம்” என்றும் “கோவில்களுக்குள் மனிதத் தன்மை என்பதே கிடையாது” என்றும், “தமிழ்நாட்டைப் பொருத்தவரை தைரியமும், மன உறுதியும் கொண்ட எதற்கும் அஞ்சாத ஒரு சீர்திருத்தவாதி அவசரமாய் தேவை” என்றும் சொல்லியிருக்கிறார்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 10
தென்னாட்டைப் பற்றி ௮, ஆ கூட தெரியாத தோழர் காந்தியும் கூட பார்ப்பனரல்லாதாரைப் பற்றி கண்டபடி உளரிவிட்டு கடைசியாகத் தன்னை கன்னியாகுமரி கோவிலுக்குள் விட மறுத்த பிறகே “கோவில்கள்.
குச்சுக்காரிகள் குடிசை” என்று சொன்னதுடன் “பிராமணர்கள் செய்த அக்கிரமங்களுக்கு அதன் பயனை அனுபவிக்க வேண்டியது அவசியம் தான்” என்று சொன்னார்.
பண்டித மாளவியாவும் தமிழ்நாட்டுக்கு வந்தவுடன் கோவிலுக்குள்
பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் ஆகியவர்களுக்குத் தனி தனி இடம், அதாவது கோவிலுக்குள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி இடம்
ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்குத்
தனிக் கோவிலே, அதாவது கோவில் விஷயத்தில் தனித் தொகுதியே
இருக்க வேண்டும் என்றும், இதனால் எல்லாம் தேசியம் கெட்டுப்
போகாதென்றும் சொன்னதோடு, ஜாதி உயர்வு தாழ்வு இருந்தாக
வேண்டும் என்றும் அதை அழிக்க இதற்கு முன் எத்தனையோ பேர் எவ்வளவோ பாடுபட்டும் ஜாதி இன்னமும் உயிருடனிருந்து
வருகின்றதென்றும், அது யாராலும் அசைக்க முடியாதென்றும் சொல்லிவிட்டுக் கடைசியாக தென்னிந்தியாவில் ஜாதியை ஒழிப்பதற்கு
மாத்திரமல்லாமல் கடவுளைக் கூட அழிக்க ஒரு இயக்கம் தோன்றி
இருக்கின்றதென்றும் பரிகாசமாய் பேசிவிட்டுப் போனார்.
போகும்போது இங்கு அவருக்கு நடந்த மரியாதைகளைப் பார்த்த
பின்னர், அங்கு போன பிறகு தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்களைப்
பற்றி நீலிக் கண்ணீர் வடித்துப் பேசவும் அவர்களுக்குக் கோவில். பிரவேச உரிமை விஷயத்தில் வழவழ என்று பேசவும் வேண்டிய தவசியம் ஏற்பட்டு விட்டது
அது போலவே தோழர்கள் பூலாபாய் தேசாயும், சர்தார் சிங்கும்
சீக்கிரத்தில் தங்கள் தப்பிதத்தை அறிந்து திருத்திக் கொள்வார்கள். என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் அவர்கள் இங்கு வந்த சமயம் உண்மைகளை எடுத்துக்காட்ட சந்தர்ப்பமில்லாமல் போனது விசனிக்கத்தக்கதே யாகும். என்றாலும் பொருப்பும், சுயமரியாதையும் உள்ள மக்களாய் இருந்தால் இந்தப்படி தங்களுக்கு பரீக்ஷ இல்லாத ஒரு இடத்திற்கு வந்து பார்ப்பனர்களின் கையாளாகவும், ஆயுதங்களாகவும் இருந்து கிளிப்பிள்ளைகள் போல் சொல்லிக் கொடுத்ததைக் கக்கிவிட்டும் போயிருக்க மாட்டார்கள். இதிலிருந்தே காங்கிரசில் இருக்கும் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களுடைய யோக்கியதையும், நாணையப் பொருப்பும், சுயமரியாதையும் எவ்வளவு - எப்படிப்பட்டது
என்பதை உணரலாம்
41 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
உண்மையிலேயே சுயமரியாதை இயக்கம் சர்க்கார் ஆதரவு பெற்ற இயக்கமா என்பதை அறிவும், நாணையமும், நடுநிலைமையும் உள்ள ஒவ்வொருவரையும் சிந்தித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம்
ஏதாவது ஒரு இயக்கமோ, ஒரு கொள்கையோ பார்ப்பனர்
களுக்கு விறோதமாகவோ அவர்களுடைய சோம்பேறிப் பிழைப்புக்
குக் கெடுதியாகவோ இருந்தால் அதை யோக்கியமான முறையில் சமாளிக்க அவர்களுக்கு யோக்கிய சக்தி இல்லாமலிருந்தால் அவைகளை ஒழிக்க அவர்களுக்கு ஒரே ஆயுதம்தான் உண்டு. அதாவது “தேசத் துரோகம், தேசியத்துக்கு விரோதம், மதத் துரோகம், சர்க்காருக்கு அடிமை" என்பன போன்ற பெயர்களைச் சொல்லி அழிக்கப் பார்ப்பதுதான். இன்றைய சர்க்காரில் இந்தியாவில் சிறப்பாக சென்னை மாகாணத்தில் தேசத்துரோகமாய், தேசீயத்துக்கு விரோதமாய், சர்காருக்கு அடிமையாய், அதுவும் பரம்பரை அடிமையாய் இருந்து மக்களையும், நாட்டையும், நாட்டு செல்வங்களையும் பாழாக்கி வாழ்ந்து வருவது 100-க்கு 90 பேர் பார்ப்பனர்களேயாகும்
இன்றைய எந்த காங்கிரஸ்வாதி, தேசியவாதி, தேசத் தலைவர் ஆகியவர்களை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் சந்ததியார், -பெண்டு, பிள்ளை, பெற்றோர் 100-க்கு 95 பேர் சர்க்கார் அடிமையாய் இருந்து மக்களைக் காட்டிக்கொடுத்து, தேசியத்தைக் காட்டிக் கொடுத்து தேச செல்வத்தை கொள்ளை கொண்டு வயிறு வளர்த்து வாழ்ந்து வருவதை யாரும் பார்க்கலாம்
வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு கூட்டம் தேசாபிமானமும், மற்றொரு கூட்டம் சர்க்கார் அபிமானமுமான தொழில்களில் ஈடுபட்டு வாழ்ந்து வருவதை உணரவேண்டுமானால் ஒவ்வொரு பார்ப்பனரும் அவரவர்கள். முன்பின் சந்ததிகளை கவனித்து அவர்கள் வாழ்க்கையைக் கவனித்தால் அவர்களே அறிந்து கொள்வார்கள். சர்க்கார் அடிமைக்கு விண்ணப்பம் போட்டு முயற்சித்து ஆகாயத்திற்கும், பூமிக்குமாகப் பாடுபட்டுப்
பார்த்துக் கிடைக்காததாலும், திருப்தியடைய வழியில்லாததாலும்தான்.
பார்ப்பனர்கள் “தேசியவாதிகள்'' "தேசிய பத்திராதிபர்கள்” “தேசாபிமானிகள்'” ஆனார்களே ஒழிய, வேறு எப்படி தேசாபிமானிகள் ஆனார்கள் என்று அவர்கள் ஒவ்வொருவருடைய சரித்திரத்தையும் பார்த்தால் கண்ணாடியில் விளங்குவது போல் யாரும் எளிதில் அறிந்த கொள்ளலாம்.
இப்படிப்பட்ட யோக்கியர்கள் சுயமரியாதை இயக்கம், சர்க்கார் அடிமை இயக்கம், சர்க்கார் ஆதரவு பெற்ற இயக்கம் என்று சொல்லுவதற்கு சரியான பதில் சொல்ல அகராதியில் வார்த்தை இல்லையே என்றுதான் நாம் வருந்துகிறோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ 42
பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை வையவும், தூற்றவும் பழிக்கவும், இழிவுபடுத்தவும் வேண்டுமானால் தாங்கள் யோக்கியர்கள் போல் மிதமான வார்த்தைகளால் விஷமத்தனமான விஷயங்களை எழுதிவிட்டு, பார்ப்பனரல்லாத கூலிகளைப் படித்து அவர்களுக்குக் கூலி கொடுத்து இழிவான முறையில் வையவும், எழுதவும் செய்து வருவதும் அவர்களது பரம்பரை வழக்கம் என்று இதற்கு முன் பல தடவை சொல்லி வந்திருக்கிறோம். இராமாயணம் முதலிய கதைகளையும் ஆதாரமாக எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம் உதாரணமாக சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்கவும், தோழர் ராமசாமியை வைது அவரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்யவும், காங்கிரசில் இருந்து பார்ப்பனரல்லாதாருக்கு 2000ரூ. கொடுத்து “தேசபந்து என்னும் பத்திரிகையையும் ஆதரித்து வந்ததை யாரும்
மறந்திருக்க மாட்டார்கள்.
அது போலவே இப்போதும் தென்னாட்டில் பார்ப்பனரல்லா. தாருடைய சில பத்திரிகைகளைப் பிடித்து 1000, 500 கூலியாகவும், லஞ்சமாகவும் கொடுத்து விஷமப் பிரசாரம் செய்யச் செய்து வருவது
யாரும் அறியாததல்ல.
சுயமரியாதை இயக்கமானது இவைகளையெல்லாம் ஆரம்பத்திலேயே
எதிர்பார்த்துதான் இரண்டில் ஒன்றுக்கு துணிந்து நிற்கின்றதே ஒழிய பயந்து நிற்கவில்லை என்றும், அது சுயமரியாதைக்காக - மனித சமூக சுதந்திரத்துக்காக - சர்க்காருக்கு மாத்திரமல்ல - இன்னமும் இக்காலத்தில் ஒழுக்க விறோதம், நியாய விறோதம், தேசத் துரோகம் முதலிய பல காரியங்களுக்கும் அடிமை யாகத் தயாறாய் இருக்கிறது என்றும், இப்படிப்பட்ட சோம்பேறிகளும், சுயநலமிகளும், கூலிகளும், எதைச் சொன்னாலும் எப்படித் தூற்றினாலும் கவலையில்லை என்கின்ற நிலைமையில் தான் இருக்கின்றது என்றும் வினயத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 02.09.1934
43 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
நமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்
நமது நாட்டில் பெண்கள் சமயலுக்கும், படுக்கைக்கும் மாத்திரம் பயன்படக்கூடியவர்கள் என்கின்ற எண்ணம் வைதீகர்களுக்குள்ளும், வயோதிகர்களுக்குள்ளும் இருந்து வருவதோடு பல பெண்களும் அப்படியே நினைத்துக்கொண்டுமிருக்கிறார்கள்.
சில பெண்கள் இந்த இரண்டு வேலைகளுக்கும் இடையூறு இல்லாமல் ஏதாவது வேலை கிடைத்தால் மாத்திரம் செய்யலாமே தவிர மற்றபடி பெண்கள் ஆண்களைப் போல் வேலை பார்ப்பது பாவமென்றும் கருதி இருக்கிறார்கள். சில பெண்கள் சட்டசபையில் இருந்தவர்களும், இருக்க பாக்கியம் பெற்றவர்களும் கூட பெண்களுக்கு கும்மி, கோலாட்டம், கோலம், தையலில் பூப்போடுதல் ஆகிய வேலைகள் சம்மந்தமான கல்வி கற்றால் போதும் என்றும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
நம்முடைய தேசத்து தேசியத்தலைவர்களும், மகாத்மாக்கள். என்போர்களுக்கும் பெண்கள் சந்திரமதி போலும், சீதை போலும், நளாயினிபோலும் இருக்க வேண்டும் என்று சொல்லி அதற்குத் தகுந்த பிரசாரமும் செய்து வருகின்றார்கள். இப்படிப்பட்ட கஷ்டமான நிலையில்
நம் தென் இந்தியாவில் சென்னையில் பெண்கள் பி.ஏ., பி.எல்., படித்து வக்கீல்களாகி, அட்வகேட்டுகளும் ஆகி இருக்கின்றார்கள் என்றால் பெண்களை எல்லாத் துறையிலும் ஆண்களைப் போலவே பார்க்கவேண்டும் என்கிற ஆசை உள்ளவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் என்பதை
நாம் எழுதிக் காட்டவேண்டியதில்லை. அப்பெண் வக்கீல்களில் இருவர்கள் தோழர் எம்.எ.கிருஷ்ணம்மாள், எம்.எ.ஏதுகிரியம்மாள் ஆகியவர்களாவார்கள். இவர்களது மூத்த சகோதரியாரும் கொஞ்சகாலத்துக்கு முன்தான் பரிக்ஷயில். தேரி அட்வகேட்டாகி இருக்கிறார்கள். சில வருஷங்களுக்கு முன். மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜி தோழர் தேவதாஸ் அவர்கள் குமார்த்தியும்
வக்கீல் பரிக்ஷயில் தேறி அட்வகேட்டாகி கோயமுத்தூரில் தொழில் நடத்தி வருகிறார்கள்.
தங்களைப் பெண்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு வெட்கமில்லாமல் கும்மியும், கோலாட்டமும், கோலமும், தையலும் தான் பெண்கள் கற்க வேண்டுமென்று சொல்லுகின்றார்களே அப்படிப்பட்ட பெண்களுக்கு இனியாவது புத்தி வருமா? என்று நினைக்கின்றோம்.
பகுத்தறிவு - செய்தி விளக்கம் - 02.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ ய
வைசிராய் பேச்சு
சட்டமறுப்பு இயக்கம் செத்தது
சட்ட மறுப்பு
காலகிரமத்தில் சட்ட மறுப்பு இயக்கத் தலைவர்கள் பயனற்ற. தடை வேலை, நாசவேலை ஆகியவைகளைக் கைவிட்டு விடுவார்கள் என்று ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். நான் முன் ஒரு தடவை அதைப் பற்றிப் பேசியபோது சட்ட மறுப்பு உயிருக்கு ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. மகா ஜனங்கள் அதை வேண்டவில்லை யென்பது தெளிவுபட ஆரம்பித்துவிட்டது. சென்ற 12 மாத காலத்திய சம்பவங்களிலிருந்து, அவ்வுணர்ச்சி இன்னும் வலுத்து, கடைசியாக சென்ற ஏப்ரல் மாதம் அப்புரட்சி இயக்கத்தின் மூல புருஷரே சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்தி வைக்கும்படி எல்லா காங்கிரஸ்காரர் களுக்கும் யோசனை சொல்லப் புறப்பட்டார். ஸ்வராஜ்யத்திற்காக சட்டமறுப்புச் செய்வதை நிறுத்தும்படி அவர் சொன்னார். இப்பால் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, அதை ஊர்ஞ்ஜிதம் செய்ததுடன், சட்ட சபைப் பிரவேசம் செய்யவேண்டுமென்றும்
முடிவு செய்தது. ஒரு காலத்தில் அது பயனற்ற முறையென்று பல காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தது ஞாபகமிருக்கும். இவ் விஷயங்களைப்பற்றி சமீப காலத்தில் விவாதங்கள் நடந்து முடிவு செய்யப்பட்டபோது நான். இந்தியாவில் இல்லை. ஆனால் 1934 ஜூன் 6ந் தேதி இந்தியா கவர்ன்மெண்டார் தங்களுடைய முறை இன்னதென்று வெளியிட்ட அறிக்கை எனது பூரணமான சம்மதத்தைப் பெற்றிருந்தது. அரை மனதாகவும், பெருந்தன்மை யில்லாமலும் அவ்வறிக்கை வெளியிடப்பட்டதாக சிலர் கண்டித்திருக்கிறார்கள். ஆனால் 1932ல் நான் சொல்லியது போல் சட்ட மறுப்பை ஒருவிதமாக முடிவுக்குக் கொண்டுவர நம்மாலானதைச் செய்யாவிடில் நமது கடமையில் தவறியவர்களாவோம். அவ் வியக்கம் திரும்பவும் தலையெடுக்க விடக்கூடாது. இப்போது காங்கிரஸ் ஸ்தாபனங்கள் மீதுள்ள தடையை நீக்கி விட்டோம்.
சட்டமறுப்பு இயக்கம் முடிவாக நின்றுவிட்டதாகவே நான் நம்புகிறேன். 1932-ல் நான் கையாளப் போவதாக வெளியிட்ட முறை பயனளித்து விட்டது. கவர்ன்மெண்டு மாத்திரம் இந்த சந்தோஷமான முடிவுக்குக் காரணமல்ல; நீங்கள் யாருடைய அபிப்பிராயங்களை இங்கு
45 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வந்து தெரிவிக்கிறீர்களோ! அம் மகாஜனங்களின் நல்ல புத்தியும், உறுதியுமே அதற்கு வெகுதூரம் காரணமாகும். புரட்சித் தனமாகவும், அர்த்தமில்லாத பயனற்ற வழியிலும் அதிகாரிகளுடன் போராடுவதால் அபிவிருத்தியுண்டாக்கி விடாதென்று ஜனங்கள் உணர்ந்துவிட்டார்கள். பலவந்தம், அல்லது பெருவாரியான மகாஜன இயக்கம் சரியான முறையல்ல வென்ற உண்மை நாடெங்கும் ஜனங்களுக்குப் புலப்பட்டுவிட்டது. இது பற்றியே நான் சட்ட மறுப்பு இயக்கம் இனிப் பிளைக்காது, தலையெடுக்க முடியாது என்று நம்புகிறேன். நாம் கவனிக்க வேண்டியிருக்கிற சமூக ராஜீயப் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவிருப்பதால், எல்லா வகையான ராஜீய வாதிகளும் நேசபாவத்துடன் ஒத்துழைத்தால் தான் அக் கஷ்டமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்
பகுத்தறிவு - கட்டுரை - 02.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 4௦
இதற்கு என்ன சமாதானம்?
ஹிட்லரே
ஜர்மனியின் மொத்த ஜனத்தொகை 66000000 ஆறுகோடியே அருபது லக்ஷம். இதில் 3 கோடியே 21 லக்ஷம் ஆண்கள். பெண்கள் 3 கோடியே 39 லக்ஷம். ஆகவே பெண்கள் ஆண்களை விட 18 லட்சம் பேர்கள் அதிகமாய் இருக்கிறார்கள். பெண்கள் அடுப்பங்கரைக்கும், படுக்கை அரைக்குத்தான் லாயக்கென்று சொல்லி இந்தியப் பெண்களைக் கூட அந்தப்படி நினைக்கும்படி செய்துவிட்ட ஹிட்லரே இந்த 18 லக்ஷம் பெண்களைப் பாதிரியாகச் சொல்லுகின்றீர்களா? அல்லது சங்கறாச்சாரி களாகவும், மடாதிபதி, தம்பிரான்களாகவும் ஆகச் சொல்லுகிறீர்களா? அல்லது ஆளுக்கு 60,000 பெண்களை கலியாணம் செய்துகொண்ட தசரத மகாராஜாவைப்போல் ஒரு ஐம்பது தசரத மகாராஜாவை சிருஸ்டிக்கிறீரா? என்ன செய்யப்போகிறீர். மற்றும் இந்தப் பெண்கள்
சராசரி 4 வருஷத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெற்றாலும் வருஷம் 4% லக்ஷம் பிரஜைகள் அதிகமாகுமே. ஆதலால் அதை தடுக்க என்று கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்வதற்காக இவர்களை கன்னியா மாடத்துக்காவது அனுப்ப உத்தேசித்து இருக்கிறீரா?
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 02.09.1934
47 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
“மனித உற்பவம்?
இந்நூல் செப்டம்பர் முதலில் வெளிவரும். தமிழ் பாஷையிலும்,
மற்றும் எந்த இந்திய பாஷையிலும், இதுகாரும் எழுதிராத நூல் இதுவொன்றே. இந் நூல் நாட்டில் 30-35 கோடி மக்களுக்கு, மனிதன் உலகில் எவ்விதம் உற்பத்தியானான் என்ற விஷயம் தெரியாமலே
இருந்து வருகிறது. இந்தியாவில், தற்போது வாழ்ந்து வரும் முதியோருக்கும் இளைஞருக்கும் மனிதன் எவ்விதமாக உலகில் தோன்றி இருக்கக்கூடுமென்று சிந்திக்கக் கூடாமலே இருக்கின்றது. ஏனெனில் மதங்களாலும், ஜாதிகளாலும் கட்டுண்ட நமது இந்திய மக்களுக்கு, எங்கே மனித உற்பவ உண்மையைத் தெரிந்துகொண்டால், மதங்கள் பேரிலும், ஜாதிகள் பேரிலும் பற்று ஒழிந்து போகுமோ என்ற மோச எண்ணத்தால், மனித உற்பவத்தியைப் பற்றி விஞ்ஞானம் கூறும் உண்மையை, நமது பாமர மக்களுக்கு எடுத்துறைக்காமலே இதுகாரும் நமது அறிஞர்களும் இருந்து வந்திருக்கின்றனர். இந்த மோசடியைப் போக்கவும், மதங்களிலுள்ள பற்று ஒழியவும் ஏற்பட்டதாகும் இந்நூல். இதனை வாசித்து, நமது பாமர மக்களுக்கு மனிதனுடைய உண்மை வரலாற்றைத் தெரிவிக்க, ஒவ்வொரு சமதர்மியும், சுயமரியாதையாரும் கடமைப்பட்டுள்ளார்கள். இதில் மனித உற்பவம், பிரபஞ்ச உற்பவம், மனித பரம்பரை முதலிய அறிய விஷயங்களை படங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விலையை சாமான்ய மக்கள் வாங்கிப் படிக்குமாறு குறைக்கப்பட்டுள்ளது. மனிதன் உலகில் தோன்றி சுமார் 5
லட்ச வருஷமாயினும் இவனது பரம்பரை, உலக ஆரம்ப முதல் புல்லாய், பூண்டாய், புழுவாய், மீனாய், மிருகமாய் மாறி வந்து, கடந்த
5 லட்ச வருஷத்திற்கு முன்பே தனது மனித உருவத்தைப் பெற்றுள்ளார். என்ற அறிய மெஞ்ஞானத்தை எடுத்துக்காட்டும் இந்நூலொன்றே தமிழ் நாட்டில் வரைந்துள்ளது.
பகுத்தறிவு - நூல் மதிப்புரை - 02.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) — 18
உன் நாடு வநட சந்தா ஆ. B0 கரவ “PAHUTHARIVU" மலைய்த எலு அரு பகுத்தறிவு
சினம், பந்தி அளிய =) | ண்
i | இனம்] அலை அருமையான புத்தகங். புததகங்கள் இனாம்!
B ISP AT R VT AR அ
இரிககல்கு சேய்டம்பம் மாதலி 1-கயிலி g
ஸ்னுப்பிவு த் 8 சு B அணு ன அஷவில்கண்ட அதை இலவரமாய்புக்போஸடில் அனு 8
அகவல்வள். ப வின் லி - B O it 4050 'மாதர் அத்தர் ஏ பெண்மக்கள் பேருலை 0.8.0 வெனில், மறறும் அக பொறுவுடமைத்றந்துவம் ட 1) 080 Tunidpasi முறை னு!
ல gyl அணா க! சோஷியலிரம் w B இவங்கை உபந்வாசம் வயு 9390 சமதர்ம உபழ்வாசம் 8]
e, “பருத்தறிவு”, ஈசோடு,
ஏழைகள் துயரம் நீங்க வழி
தோழர்களே!
இந்த தேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஜன சமூக அமைப்பின். அஸ்திவாரமே சரியாய் இல்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின்.
மீது கட்டக் கூடிய எந்த அமைப்பும், ஜன சமூகத்திற்கு நன்மையளிக்கக் கூடியதல்ல. ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச்
சம அந்தஸ்தும், சம உரிமையும் உண்டோ அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான். மக்கள் சுகமாக வாழ முடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன். கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதுதான்; மற்றொருவன் சுகத்தை அனுபவிக்க பாத்தியதை யுடையவன் தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபட வேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணாகாது. ஜனங்களின். மனோபாவமும், வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய வேறொரு முறையாலும் நன்மை உண்டாகாது என்பது திண்ணம் தற்போதிருக்கும் நிலைமையில் சுயராஜ்ஜியம் வந்தால் குருட்டு நம்பிக்கையும், வைதீகமும் தான் வலுக்கும். தற்போது சுயராஜ்யம் அனுபவிக்கும் தேசங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏழைகள் நிலைமை அங்கே எப்படி இருக்கிறது? அமெரிக்கா ஜனநாயக ஆட்சியுடையதாகத்தான். இருக்கிறது. அங்கே லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றார்கள். அமெரிக்கா உலகில் செல்வத்திற்கே இருப்பிடமா
யிருந்தும் அங்கே ஏழைகள் நிற்க நிழலின்றி, உறங்க இடமின்றித் தவிக்கிறார்கள். ஜர்மனியின் நிலைமை இன்று எவ்விதமாக இருக்கிற தென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தையுடையதென்று சொல்லும் இங்கிலாந்தும் சுயராஜ்ய தேசமேயாகும். உலகத்தில் பல நாடுகள் இங்கிலாந்தின் ஆளுகைக் குட்பட்டிருக்கின்னன. ஆனால் அங்கு ஏழைகள் படும் துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. சுயராஜ்யமுள்ள ஒவ்வொரு தேசமும், இப்படித்தான் இருக்கிறது. சுயராஜ்யமோ அன்னிய ராஜ்யமோ, குடிஅரசோ, முடி அரசோ எந்தவிதமான முறையிலும் மக்கள் சுகம் பெற முடியாத நிலைமையில் உலகம் இன்று இருந்து வருகிறது.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 5
ஆகையால் ஏழைகள் துயரத்தைப் போக்க இந்திய சுயராஜ்யம் இப்போது சிலரால் கருதப்படும் முறையில் யாதொரு நன்மையும் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம். சமதர்மத்தையும், பொதுவுடமையையும் அஸ்திவாரமாகக் கொண்ட ராஜாங்க அமைப்பொன்றே மக்கள் சுகவாழ்க்கைக்குரிய வழியாகும். இதற்காக ஏன் நாம் தியாகம் செய்யத் தயாராயிருக்கக் கூடாதென்று கேட்கிறேன். உலகத்தில் பலவகையில் ஜீவராசிகள் மரணமடைகின்றன. பல நோய்களால் இறக்கிறவர்களின் தொகை சாதாரணமல்ல. மதத்தின் பெயரால் யாதொரு விவேகமுமில்லாமல் ஒருவருக்கொருவர் சண்டை இட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இன்னும் பல வழிகளில் மரண: மடையும்போது மக்களின் உன்னத வாழ்க்கை அமைப்பை உத்தேசித்துச் சிலரோ, பலரோ உயிரைத் தியாகம் செய்வது கூட பெரிய காரியமாகுமோவென்று கேட்கிறேன். மனிதனுக்கு மனிதன் எதற்காக வித்தியாசங்கள் காண்பிக்கப்பட வேண்டும்? அறிவுள்ள எவரும் இனி இந்நிலைமையைச் சகித்துக் கொண்டு ஒரு க்ஷணமாவது வாழ முடியாது பலாத்காரம் கூடாது. இம் முறைகளை மாற்ற பலாத்காரம் ஒரு பொழுதும் வெற்றியடைய முடியாது. பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறைந்துவிடும். ஆகையால் ஜனங்களுடைய மனதை மாற்றப் பாடுபடவேண்டியது தான் முறையேயொழிய, பலாத்காரத்தினால் சாதித்து விடலாமென்று எண்ணுவது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமாகும். இந்த தேசத்தில் முன்னேற்றமுள்ளவர்களொன்று, பிற்போக்கானவர்கள் மற்றொன்றாக இரண்டு கட்சிகளே இருக்க முடியும். இப்படி பிரிக்கப்பட்டாலொழிய மக்கள் அபிவிருத்தியடைய மார்க்கமில்லை. நமது மக்களுக்கு விஷயத்தை அறியக்கூடிய பகுத்தறிவு விருத்தியடைந்தாலொழிய மற்றெந்த ராஜீய முறையாலும் ஒரு நன்மையும் விளைந்து விடப் போவதில்லை.
குறிப்பு: 08.07.1934 இல் கும்பகோணத்தில் ஆற்றிய சொற்பொழிவு.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 09.09.1934
51 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஈரோடு முனிசிபல் எலக்ஷன்
ஈரோடு முனிசிபாலிட்டிக்கு எலக்ஷன்கள் நடக்க தேதிகள் குறிப்பிட்டாய் விட்டன. செப்டம்பர் மாதம் 15ந் தேதி நியமன் சீட்டுகள். (நாமினேஷன் ஸ்லிப்பு) தாக்கல் செய்ய வேண்டுமென்றும், 17ந் தேதி அவை பரிசீலனை செய்யப்படும் என்றும், 275 தேதி எலக்ஷன் நடைபெறுமென்றும், 28ந் தேதி முடிவு தெரிவிக்கப்படுமென்றும் குறிப்பிடப்பட்டு வெளிப்படுத்தியாய் விட்டது. இதன் பிறகு ஈரோட்டில் தேர்தல் பேச்சுகளும் பிரசாரங்களும் வெகு தடபுடலாய் நடக்கின்றன.
யார் வருவதைப் பற்றியும், யார் போவதைப் பற்றியும் நாம் கவலைப்படவோ யாருக்கும் யோசனை சொல்லவோ வரவில்லை. ஆனால் கக்ஷிகள் - இயக்கங்கள், பெயர்களைச் சொல்லிக் கொண்டு, தனிப்பட்ட மக்களின் யோக்கியதாம்சங்களைப் பற்றி கவனிக்காமல் நடத்தும் சூழ்ச்சிப் பிரசாரம் மாத்திரம் வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். எல்லா வகுப்பாருக்கும் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதும், கை பலமும் பண பலமுமே ஒரு மனிதனுடைய தேர்தலுக்கு யோக்கியதாபக்ஷமாய் இருந்து வரக்கூடாது என்பதும் நமது விருப்பமாகும். எப்படி இருந்தாலும் இதுவரை கிடைத்த செய்திகளில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வார்டுகளில் பணம் புளியங் கொட்டைகள் போல் நடமாடக் கூடும் என்பதாகத் தெரிகின்றது. இருவர். போட்டி போட்டு எவ்வளவு பணம் செலவழித்தாலும் ஒருவர் தான். தேர்ந்தெடுக்கக் கூடுமே ஒழிய, ஒரு ஸ்தானத்துக்கு இருவர் தேர்ந்தெடுக்க முடியாது. ஆகையால் பணச்செருக்கு கொண்டவர்கள் பணச் செலவில் ஒருவருக்கொருவர் இளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டி சூதாடுவது போல் “வந்தால் வரட்டும், போனால் போகட்டும்” என்று கருதி வீணாக்காமல் 4 “பெரிய மனிதர்கள் என்பவர்களை வைத்துக் கொண்டு கவுன்சில் ஸ்தானத்தை ஏலம் போட்டு அதிக தொகை செலவில்
யார் எந்த பொதுக் காரியத்தைச் செய்து முடிக்க ஒத்துக்கொள்கிறார்களோ, அவர்களுக்கு விட்டு விடுவதாய் ஏற்பாடு செய்தால் அதனால் பொது நன்மை உண்டு. அப்படிக்கில்லாமல் வீணாக வாரி இறைப்பதில் பயனில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். முனிசிபாலிடிகளுக்குக் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு விட்டபடியாலும், ஈரோட்டிற்கும் சீக்கிரம் ஒரு மாதத்திற்குள் வந்துவிடக் கூடுமாதலாலும் வரும்படியையும்,
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 5
அதிகாரத்தையும் உத்தேசித்து கவுன்சிலர்களாக நிற்கின்றவர்கள் ஏமாற்றமடைய நேரிடும் என்பதையும், சுதந்திர எண்ணமும், சொந்த செல்வாக்கும் இல்லாதவர்கள் கவுன்சிலர்களாக நினைத்து வீண்: செலவிடுவதும் பயனற்றதுடன் கவுன்சிலர்களாக ஆனாலும் அவர்கள் கவுன்சில் கூட்டங்களில் ஒதுக்கித்தள்ளப்பட்டு விடுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
சிலர் முன் ஜாக்கிரதையுடன் ஓட்டுகள் சேர்த்து வைத்திருப்பதால் எப்படியும் தங்களுக்கு ஆகிவிடுமென்று தைரியம் பேசலாம். ஆனால்
அடுத்த தேர்தல் வருவதற்குள் அந்த அக்கிரமங்களும் ஒழிந்து போகும் என்று நினைக்கின்றோம். எப்படியெனில் அடுத்த தேர்தலுக்குள் 21 வயது வந்த ஆண் பெண் அத்தனை பேர்களுக்கும், ஓட்டு இருக்கும்படி செய்வதன் மூலம் இந்த காரியங்களை ஒழிக்கக் கூடும். அப்பொழுதுதான். ஏழைகள் பிரதிநிதி வரக்கூடும். இப்போது பெரிதும் வீடுவாசல், சொத்து, குறிப்பிட்ட வரும்படி உள்ளவர்களுக்கே இன்றைய தினம் அருகதையும்
ஓட்டு உரிமையும் இருந்து வருகின்றது. ஆதலால் சொத்தில்லாதவர்களும்
குறைந்த, அதாவது தினம் ஒரு ரூபாய் வரும்படிக்கு குறைந்த வரும்படி உள்ளவர்களும் இன்று மனிதர்களாய் பாவிக்கப்படுவதில்லை என்று சொல்வதோடு, பணக்காரர்கள் முனிசிபாலிட்டி, பணக்காரர்கள் ஜில்லா போர்டு, பணக்காரர்கள் சட்டசபை, பணக்கார மந்திரி, பணக்கார சர்க்கார் என்று சொல்லும் நிலையை மாற்றி ஏழைகள் முனிசிபாலிட்டி, ஏழைகள்
சர்க்கார் என்பதாகச் சொல்லக் கூடிய நிலைமை ஏற்படத்தக்க மாதிரியில் அதற்குத் தக்க அபேக்ஷகர்களுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்றும் பணம் வாங்கக் கூடாது என்றும் ஓட்டர்களையும் கேட்டுக்கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - கட்டுரை - 09.09.1934
53 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஈரோடு முனிசிபாலிட்டிக்குப் பாராட்டு
ஈரோடு முனிசிபாலிட்டியானது ஒரு பத்து வருஷ காலம் பொருப்பும், நாணையமும் இல்லாமல் லஞ்சம், திருட்டு, புரட்டு, பொய், போர்ஜரி முதலிய குணங்களை அணிகலமாகக் கொண்டு நடந்து வந்ததும், அதன் பயனாக நிர்வாகமும், செல்வ நிலையும் மிகக் கேவலமாய் இருந்து வந்ததும், அவ்வப்போது, வெளியான விஷயங்களில் இருந்தும், சர்க்கார் கணக்குப் பரிசோதகர்கள் அறிக்கைகளில் இருந்தும், அரசாங்கத்தார் நிர்வாக அறிக்கைக் குறிப்புகளிலிருந்தும், பொது ஜனங்களும் சிறப்பாக ஈரோடு வாசிகளும் உணர்ந்திருக்கலாம்
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இந்த 10, 15 வருஷ காலமாய் அரசாங்கத்தார் முனிசிபாலிட்டிக்குள்ள அதிகாரங்களையும், கவுன்சிலர்களுக்கும், சேர்மென்களுக்கும் உள்ள அதிகாரங்களையும் நாளுக்கு நாள் குறைத்து வந்ததோடு, சில அதிகாரங்களை அடியோடு
பறித்துக் கொண்டதற்கும் முக்கியமாக ஈரோடு முனிசிபாலிட்டியின். நடத்தையே காரணமென்று சொல்லலாம் அவை மாத்திரல்லாமல் முனிசிபல் ஆபிஸ் நிர்வாகங்கள். சேர்மென்கள் கையிலிருந்தவைகளையும் பிடுங்கிக் கொண்டு அவற்றை நிர்வகிப்பதற்கு மாதம் 60, 70, 100, 150 ரூபாய் சம்பளமுள்ள சாதாரண சிப்பந்திகளை நிர்வாக உத்தியோகஸ்தர்களாக நியமித்து, அவர்கள் வசம் நிர்வாகங்களை ஒப்படைக்க நேர்ந்ததற்கும் ஈரோடு முனிசிபாலிட்டியின் நடத்தையே முதல் காரணம் என்றும் சொல்லலாம் இவை மாத்திரமல்லாமல் ஈரோடு டவுனுக்கு மின்சார விசை- விளக்கு சப்ளை திட்டத்தை ஈரோடு முனிசிபாலிட்டிக்கு கொடுக்காமல் சர்க்காரார் ஒரு பிரைவேட் வியாபாரக் கம்பெனிக்கு லைசென்சு கொடுக்க நேர்ந்ததும் “ஈரோடு முனிசிபாலிட்டியாரின் நடத்தையே காரணம்” என்று சுமார் 3 வருஷங்களுக்கு முன் முதல் மந்திரி ஈரோட்டிற்கு வந்திருந்தபோது சொன்னதும் யாவரும் அறிந்திருக்கலாம்
இவ்வளவு கேவல நிலையிலும் இழிவான நிலையிலும் இருந்து வந்த முனிசிபாலிட்டியானது கொஞ்சகாலமாய், சிறப்பாய் தோழர் KA. ஷேக் தாவுத் சாயபு அவர்களை சேர்மெனாக அமைத்த காலம் முதல் கொண்டு அதன் மோசமான நிலைகள் எல்லாம் மாறி நாளுக்கு நாள் கெளன்சிலில்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ 54
ஒற்றுமையும், கூட்டுறவும் ஏற்பட்டு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து இன்றைய தினம் சென்னை மாகாணத்திலேயே சிறப்பாகவும், முதன்மையாகவும், திறமையாகவும் இருந்து வரும் வெகுசில அதாவது
ஒரு நாலைந்து மூனிசிபாலிட்டிகளில் ஒன்றாக இருந்து வருவது அரசாங்க நிர்வாக அறிக்கையிலிருந்து அறியலாம்.
இந்த 3, 4 வருஷங்களாகவே அரசாங்கத்தார் ஈரோடு முனிசிபல் நிர்வாக அறிக்கையின் மீது தங்கள் அபிப்பிராயங்களை எழுதி வருவதில் ஒவ்வொரு வருஷமும் “முன்னேற்றம் அடைந்து வருகின்றது” என்றும் “வெகு திருப்தியாய் இருக்கின்றது” என்றும் “மகிழ்ச்சி அடையத்தக்க நல்ல நிர்வாகம்" என்றும் எழுதி வந்திருப்பதுடன் கடைசியாக சென்ற வருஷத்ய மாகாண எல்லா முனிசிபாலிட்டிகளின் நிர்வாகங்களைப்
பற்றியும், அரசாங்கத்தார் எழுதிய பொது நிர்வாக அறிக்கை மீதும் ஒவ்வொரு முனிசிபாலிட்டியைப் பற்றியும் குறிப்பிடுகையில் கோயமுத்தூர், கொடைக்கானல், குன்னூர், ஒட்டகமண்ட் ஆகிய 4 மூனிசிபாலிட்டிகள்தான். இந்த மாகாணத்தில் பாராட்டுதற்குரிய விதமாய் எல்லாத் துறையிலும்
முன்னணியில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இந்த வருஷத்தில் மேற்கூறிய நான்கு முனிசிபாலிட்டிகளுடன் ஈரோடும் சேர்ந்திருப்ப தானது, அதாவது எல்லாத் துறைகளிலும், மேன்மையாயும், திறமையாயும் ஈரோடு முனிசிபல் நிர்வாகம் நடந்து அவைகளோடு சேர்க்கத் தகுதி பெற்றிருப்பதானது அரசாங்கத்தாருக்கு மிகுதியும் மகிழ்ச்சியளிக்கின்றது என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது எவ்வளவோ மோசமாகவும், கெட்ட பெயருடனும் இருந்து வந்த முனிசிபாலிட்டியானது இவ்வளவு மேன்மையும், நல்ல பெயரும் அடைந்திருப்பதற்குக் காரணம், அதற்குக் கிடைக்கப் பெற்ற தலைவர். தோழர் KA. ஷேக் தாவுத் சாயபு அவர்களின் ராஜதந்திர புத்தியும், நிர்வாகத் திறமையும் காரணம் என்று சொல்வதோடு, இவர் காலத்தில் முனிசிபாலிட்டிக்குக் கிடைத்த கவுன்சிலர்களுடைய மதிக்கத் தகுந்த கூட்டுறவும், ஆலோசனையும், ஒத்துழைப்பும் காரணம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த முனிசிபாலிட்டியில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் விஷயத்தில் கூடுமானவரை சலுகை காட்டிவரப்பட்டிருப்பதுடன், பெண்கள் விஷயத்திலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படும் வகுப்பைச் சேர்ந்திருந்த ஒரு பெண்ணுக்கு வாக்ஸ் நேட்டர் (அம்மை குத்தும்) வேலை கொடுக்கப்பட்டிருக்கின்ற காரியமானது இம்மாகாண மூனிசிபாலிட்டிகள்.
எதிலும் செய்யாத காரியம் என்றே சொல்லலாம்
55 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
முடிவாக இவற்றோடு ஒரு நல்ல முனிசிபாலிட்டி செய்ய வேண்டிய எல்லா வேலைகளும் செய்யப்பட்டுவிட்டதாக நாம் சொல்லிவிட முடியாது. இன்னமும் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருந்து வருகின்றன. முக்கியமாய் சுகாதார விஷயமும், தாழ்த்தப்பட்ட மக்களாகிய தீண்டப்படாதார், பெண்கள், குழந்தைகள் ஆகியவர்களின் வைத்தியம், மருத்துவம், பிள்ளை வளர்ப்பு முதலாகிய துறைகளில் செலுத்தப்படவேண்டிய கவனம் இன்னும் அதிகம் பாக்கி இருக்கின்றது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
கவுன்சிலர்களுடைய கூட்டுறவும், உறுதியான எண்ணமுமிருந்தால் இன்னும் அநேக காரியங்கள் செய்து இந்த மாகாண முனிசிபாலிட்டி களுக்கும், ஜில்லா போர்டுகளுக்கும் வழிகாட்டியாக நமது ஈரோடு முனிசிபாலிட்டி இருந்து வரக்கூடும் என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.
பகுத்தறிவு - கட்டுரை - 09.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 56
மதம் ஏன் ஓழிய வேண்டும்?
மதம் என்பதைப் பற்றி இதற்கு மூன் “குடி அரசு” , “புரட்சி” முதலிய பத்திரிகைகளில் அநேக வியாசங்கள் பல தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.
மதமானது இன்று உலகில் மனித சமூகத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி, ஒற்றுமையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.
“தேசிய சிங்கங்'களான அலி சகோதரர்கள் ஒரு காலத்தில் “நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள்” அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், “உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா" காந்தி “நானே இந்து மதத்தின் உருவம்! நான். மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!! நான் உண்பதும்
உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான்.
சுயராஜ்யம் கேட்கின்றேன்!!! அதாவது இந்து மதம் தான் எனக்கு முதலும் கடைசியும்” என்றும், “பழைய காங்கிரஸ்வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி!” என்று சொல்லப்பட்ட பண்டித மதன். மோகன மாளவியா ''எனது மதத்தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை'' என்றும், அதாவது வருணாச்சிரமத்தைக் காக்கத்தான் நான் தேசியவாதி என்றும் சொல்லும்படி செய்துவிட்டது என்றால் மதத்தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்
பெருத்த தேசாபிமானிகள், தேசத்துக்காகச் சகலத்தையும் தியாகம்
செய்தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத்
தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற்காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து
வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர
மற்றொன்றும் அறியாத பாமர மக்களின் யோக்கியதையைப் பற்றி நாம்
விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்
57 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வட்ட மேஜை மகாநாடு உடைந்துபோனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போனதும், இந்து முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேள்ப்பதற்கும்,
கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேள்ப்பதற்கும், மக்களை மக்கள் தீண்டப்படாதாராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேழ்க்கின்றோம்.
மற்றும் மனித சமூக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவைகளில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமுலுக்குக் கொண்டுவரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாக சொல்லப்படுகின்றதா இல்லையா என்று கேள்க்கின்றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக்கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து, பலவித மேல் உலகங்களையும் மோக்ஷ நரகங்களையும் கற்பித்து அவரவர்கள் கடவுள்களுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர்கள் மேல் உலகங்களுக்கு தனிப்பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோக்ஷ நரகங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை, ஒழுக்கம், நடத்தை என்பவைகளும் அவரவர். மதத்துக்கு ஒவ்வொரு விதமாய் கற்பிக்கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?
இப்படிப்பட்ட மதத்தை மக்களுக்குள் பிரசாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், மூல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச்சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும் பெயர்கள் வைத்துக்கொண்டு, உலக செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி
மக்களுக்கு போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவிவேகமான: காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது
இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என்றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர்களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 5
1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள்
என்று சொல்லப்படுமானாலும்,
2. அல்லது மதம் என்பது இவ்வுலகில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற ஒழுங்கு முறைகளை'க் கொண்டது என்று சொல்லப்படுமானாலும்,
3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுமானாலும் அவைகளைப் பற்றியெல்லாம் நாம் அதிகக் கவலை கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவதில்லை
அப்படிக்கெல்லாம் அல்லாமல்,
1. மதமானது மனிதனுடைய ஐட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின “ஆத்மாவைப் பொறுத்ததென்றும்,
2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தை துச்சமாக மதித்துவிட்டு மேலுலக வாழ்வை முக்கியமாகப் பொருத்ததென்றும்,
3. மதமானது “கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்குவதைப் பொருத்ததென்றும்,
4. மதமானது பஞ்சேந்திரியங்களுக்கு விளங்கக்கூடிய வஸ்து என்ற தத்துவத்தைவிட்டு பஞ்சேந்திரியங்களாலும் உணர முடியாத “ஆத்மார்த்தம்” ஆவித் தத்துவத்தை, அசரீரியை அடிப்படையாகக் கொண்டது என்றும்,
5. மதமானது உலக போக போக்கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலக்ஷியம் செய்து “கடவுளின்” பாதார விந்தத்தை அடையவும், “மோக்ஷ சாம்ராஜ்யத்தைப் பெறவும் ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மத தத்துவங்களையும் பற்றியே நாம் பேசுகின்றோம் என்றாலும் மூதலில் கூறப்பட்ட அதாவது,
மதம் மானிட வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்குமுறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சேபனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா. என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங்களுக்காக மக்கள் செலவில் நடைபெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும், அவைகளை நிறைவேற்ற நியாயஸ்தலம், தண்டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவைகள் அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?
அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை கண்டனை இல்லாமல் மனித சமூகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு
59 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல்கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும்.
இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரமும் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்க சட்டதிட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே மதத்தின் காப்பும், நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும்.
மதம் “எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது'' என்று மதக்காரர்கள் சொல்லக்
கூடும். ஆனால் மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றிக் கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா? அல்லது அரசாங்க சட்டதிட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அதற்காகத் தண்டனையை அடைகின்றான்.
ஆதலால் மதம் எங்கே பொதுவான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்
மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங் களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்
மனிதனுக்கும், மற்ற ஜீவ வர்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறையிலானாலும் அறிய வேண்டுமானால் பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மத சம்மந்தம் இல்லாமலே அவைகளைத் தெரிந்து கொள்ளலாம். அப்படிக்கில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக்கிடமாகத்தான்.
இருந்து வருகின்றன.
மதம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் கற்பிக்கின்றது மிருகங்களை, பக்ஷிகளை, பூச்சிகளை, புல் பூண்டுகளை மனிதனை விட உயர்வாய் மதிக்கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தைத் தாழ்வாய் கற்பிக்கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாஸ்திரமே முக்கியமானதும் சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக்கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத் தனமானதும், முட்டாள் தனமானதுமென்றே சொல்லுவோம்.
மேற்கண்ட 1,2,3 விஷயங்களைப் பற்றிய வரையிலாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த்தாலும் கூட அதுவும் அறிவுக்குப் பொருத்தமற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக்களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக்காரனும் தன்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ ல
தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கைகளுமே எந்த தேசத்துக்கும்
எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக்கோடு கூட மாறக்கூடாது என்றும், தன் தன்:
மதத்துக்கு தலைவன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும், முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமூக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது ஆகவே மனித சமூக கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களை விட அரசாங்க சட்டதிட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான் அறிவுடமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனுபவத்தில் இருக்கின்றது என்றும் சொல்லுவோம் ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும் ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது. அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கிவிடுகின்றது. எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியக்ஷ மனித வாழ்வு சம்மந்தப்பட்ட இந்த விஷயங்களே மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி “மேலுலக!” மனிதனுடைய கண்ணுக்கும், மனதுக்கும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போதனைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேள்க்கின்றோம்.
மற்றபடி “மதம் சட்ட சம்மந்தத்தை விட்டு விட்டு ஆத்மாவைப் பொருத்தது என்று சொல்லப்படுவதைப் பற்றியோதென்றால் இந்தக் காரணத்துக்காகவே மதங்களை எல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்
ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அருத்தத்தோடு உருதிப்படுத்தவேயில்லை.
“4௨ 3 - 19” என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவகரித்துக்கொண்டிருக்கிறது போலவே, அதாவது 10ஐ யார் யாருக்கு எப்படி எப்படி பங்கிடுவது, எங்கு எங்கு வைப்பது என்று வேண்டுமானால் பேசு, அதற்குமேல் 453 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக் கூடாது
என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது அதாவது ஆத்மா என்றால் என்ன? அது எப்படி சரீரம் பெற்றது? அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று? அதன் நடத்தைக்குக் காரணம் என்ன? அது எப்படி, “மோக்ஷம்” போகின்றது? அது எப்படி மறுபடியும் சரீரம்
61 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பெற்று எழுகின்றது? மனித ஆத்மா, மிருக ஆத்மா, பக்ஷி ஆத்மா, புழு
பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன? என்பன. ஆகியவைகளைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம், வால்யம் வால்யமாக புஸ்தகம் எழுதலாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன? அது எப்படிப் பட்டது? அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாஸ்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாஸ்திரம் இடம் கொடுக்கின்றதா? என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா. இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்... என்று சொல்லி விடுவதும், “ஆத்மாவை நம்பாதவன் கடவுளை நம்பாத நாஸ்திகனை விட, கேடானவன், மடையன், மட்டி” என்றும் “கடவுளை நம்பாவிட்டாலும் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும்” என்று சொல்லிவிடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.
இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத, வஸ்து தத்துவமில்லாத
- மனதுக்கு புரியாத விஷயத்துக்காக இவ்வுலக பிரத்தியக்ஷ வாழ்க்கையையும், அடையும் இன்ப துன்பங்களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக் கவலையை விட “ஆத்மா கவலையே பிரதானமென்றோ, பெரிதென்றோ சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்
நிற்க “மதமானது மேல் உலக வாழ்வுக்கு ஆதாரமானது! என்று சொல்லப்படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்
பூகோள சாஸ்திர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லக்ஷக் கணக்கான மைல்
- (ஏன்)? கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும்
ஒரு நிபுணத்துவர்கள் என்கின்ற நிலைமையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவிகளின் உதவியைக் கொண்டு கண்டுபிடித்துச் சொன்ன பிரத்தியக்ஷ அனுபவ - ருஜுப்பிக்கக்
கூடிய உண்மைகளே ஒழிய “ஞான திருஷ்டி” அதாவது ஒரு மனிதனுடைய
புத்திக்குத் திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப்பட்டதல்ல. அன்றியும் பள்ளிக்கூடங்களில் அல்லது பூகோள புஸ்தகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப்படாததுமான. விஷயங்களுமல்ல.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ ௨
அப்படியிருக்கும் போது இந்த பிரத்தியக்ஷ உலக விஷயத்தை விட்டு விட்டு மேல் உலக விஷயத்தைப் பற்றி பேசுவது என்றால் அதில் அடங்கியிருக்கும் மெளடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை
இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டு பிடித்தான்? அதன் விஸ்தீரணம், தன்மை என்ன? என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் “முதலில் மேல் உலகத்தை நம்பு, பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோக்ஷம் எப்படிப்பட்டது? நரகம் எப்படிப்பட்டது? தண்டனை எப்படிப்பட்டது? அது யாருக்குச் சொந்தம்? பரம பிதாவா, அல்லாவா, வைகுண்டநாதரா? கைலாச வாசரா? யார் அதற்கு எஜமான்? என்பதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய்" என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை அல்லது அறிவுடைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்
அதுபோலவே மதம் “கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது என்று சொல்லப்படும் வார்த்தையும் அர்த்தமற்றதாகவே இருக்கிறது
கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப்
பற்றி இதுவரை ஒரு ஆஸ்தீகனாவது, அல்லது கடவுள் தன்மைகள் பெற்ற பெரியார்களாவது விளக்கினவர்களே அல்ல.
கடவுள் என்றால் “கண்ணுக்கும் மனதுக்கும் எட்டாதது, ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லுகின்றவர்களே அந்தக் கருத்தை நம்பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங்களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவாய் இருந்து வந்திருக்கின்றன.
மனதுக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரியத்தினால் உணர்ந்தான். என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வஸ்துக்கு செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை - தீமை, துன்பம் - இன்பம், மேல் - கீழ்,
சுகம் - துக்கம், மோக்ஷம் - நரகம் எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. “அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும் நம்பாதவன் நாஸ்திகன், நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை - ஆஸ்தீகர்கள் கண்டனை கிடைக்கும்” என்று மிறட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக்கமே இல்லை.
63 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சர்வ சக்தியுள்ள சர்வ வியாபகமுள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட
நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை? ஏன் கடவுளை இல்லை?
என்று சொல்லுகிறேன் என்று ஒருவன் கேட்டால், அது உன்னுடைய அகம்பாவம்; உன்னுடைய மடமை; உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லி கடவுளை விட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதா யிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.
இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள். வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேள்கின்றோம்.
மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது
கிறிஸ்துவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்கு குடி அரசு பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று
இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்குச் சேஷ்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர்களாக கொண்ட போலீஸ் இலாக்கா, போஸ்டல் இலாக்கா, ரயில்வே இலாக்கா, நீதி இலாக்கா, நிர்வாகம் மற்றும் அநேக: துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட்டு நிர்வாக சபை வரையில். ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து
வரும் கஷ்டம் சித்திரவதைக்கொப்பாக இருந்து வருகின்றது
நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள். கோடிக்கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள். என்பதும் நமக்குத் தெரியும்
மதமானது பணக்காரத் தன்மையை பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக்கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால் அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை
ஆதலாலேயேதான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித
சமூகத்துக்கு ஒற்றுமையும், சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ ல
சென்ற வாரத்தில் சென்னை கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்திவிட்டானாம். முஸ்லீமூம் அதனால் செத்துவிட்டான். நாளைய
தினம் “ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மைக் கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான் என்றாலோ அதில் அதிசயமில்லை. ஒரு கிறிஸ்தவன் முகமது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகமதியர்களுக்கு ஆத்திரம் வருகின்றதும், ஒரு முகமதியன் கிறிஸ்துவைப்
பற்றி எழுதி விட்டால் கிறிஸ்தவனுக்கு ஆத்திரம் வருவதும், இது போலவே இந்துக்களுக்கும், கிறிஸ்து முகமதியர்களுக்கும் நேருவதும் அதற்காக கொலை, கொள்ளை, கொடுமைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் ஐரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங்களிலும் நடந்து வருகின்றது என்றால்
மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க்கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும், வாழ்க்கை ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்று கேழ்க்கின்றோம்.
மதங்கவில் உள்ள ஓழுக்கங்கள்
இந்து மதமும், இஸ்லாம் மதமும் ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பதில் ஒன்றுக்கொன்று தானே சிறந்த ஒழுக்கத்தை யுடையது என்று போட்டி போடுகின்றன. ஒழுக்கயீனங்களில் எல்லாம் மிகக் கேடானதாக, குற்றங்களில் எல்லாம் மிக இழிவான குற்றமாகவும் கருதப்படும் குற்றமாகிய பெண்களைப் பலாத்காரம் செய்து கற்பழித்தல், மானபங்கம் செய்தல் என்னும் குற்ற விஷயத்தில் இரு மதஸ்தர்களும் வங்காள மாகாணத்தில் எப்படி நடந்து இருக்கின்றார்கள் என்பதைக் காட்ட “மாடர்ன் ரிவியூ” பத்திரிகையில் வெளியாகி உள்ள ஒரு புள்ளி விபரத்தை இங்கு குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம்
இஸ்லாம் மூற்கர்களால் செய்யப்பட்ட பலாத்கார விபரம்
வருஷம் | இந்து பெண்கள் முஸ்லீம் பெண்கள் | மொத்தம்
1926 113 481 594 1927 122 576 698 1928 104 460 564 1929 114 676 790 1930 104 531 635 1931 125 573 698
65 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்து மூற்கர்களால் செய்யப்பட்ட பலாத்கார விபரம்
வருஷம் | இந்து பெண்கள் முஸ்லீம் பெண்கள் | மொத்தம்
1926 194 9 203 1927 201 3 204 1928 198 10 208
1929 236 8 244 1930 234 6 240
1931 197 3 200
மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு முறையை, மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கிறோம்
பகுத்தறிவு - தலையங்கம் - 09.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ 66
காங்கிரஸ்காரர்கவிண்
தேர்தல் பிரசார யோக்கியதை
தோழர் வரதராஜுலு நாயுடு MLA க்கு நிற்பதில்லை என்றும் தோழர் ஸர்.ஆர்.கே.ஷண்முகம் வர்த்தகத் தொகுதிக்கு நிற்பதில்லை என்றும் தெரிய வருவதாகக் காங்கிரஸ் - தேசியப் பத்திரிகைகள் எழுதுகின்றன. தோழர் வரதராஜுலு இதை மறுக்கிறார். எனவே இதை விடக் கேவலமான முறை கொண்ட ஒரு பிரசாரம் வேறு யாரும் எப்படிப்பட்ட மோசமான வாழ்க்கைக்காரரும் செய்ய முடியாதென்றே சொல்லுவோம்
சத்தியம், தர்மம், நீதி, ஒழுங்கு, நாணையம் ஆகியவைகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு இருக்கும் ஸ்தாபனங்கள், கொள்கைகள் ஆகியவைகளைச் சேர்ந்தவர்களாலேயே இவ்வித பிரசாரங்கள் நடக்குமானால், சாதாரண வாழ்வில் இருப்பவர்களால் இனியும் என்ன என்ன காரியம் நடக்காது என்று கேழ்க்கின்றோம். தேர்தல் முறை என்ன. என்பது பற்றியும் தேர்தலில் ஒருவருக் கொருவர் பேசிக் கொள்வதிலும், எழுதிக் கொள்வதிலும் எவ்வளவு நாணையமும், உண்மையும் இருக்கக் கூடும் என்பதைப் பற்றியும் பொது மக்கள் தெரிந்து கொள்ள இந்த ஒரு உதாரணம் போதாதா என்று மாத்திரம் கேட்டுவிட்டு இதை முடிக்கிறோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 09.09.1934
67 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வேலையில்லாத் திண்டாட்டம்
செல்வம் பொழியும் அமரிக்கர் தேசத்தில் இன்று கோடிக்கணக்கான மக்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுவதுடன், 10 லக்ஷக்கணக்கான.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து பெருத்த கலவரம் ஏற்பட்டு.
இருக்கிறது
இந்நிலையில் அமரிக்க குடி அரசு தலைவர் வேலையில்லாதவர்
களுக்கு வேலை கொடுப்பதற்காக ஒரு காரியம் செய்து வருகிறார். அதாவது தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைத்து அதிக தொழிலாளிகளுக்கு வேலை ஏற்படும்படி செய்து வருகிறார். எப்படியெனில்
ஒரு தொழில்சாலையில் ஒரு தொழிலாளி வாரத்துக்கு 40 மணி நேரம் வேலை செய்து வந்ததை இப்போது மாற்றி வாரம் ஒன்றுக்கு ஒரு தொழிலாளி 36 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்றும், பழய கூலியே கொடுக்கப்பட வேண்டும் என்றும் உத்திர விட்டுவிட்டார்.
அதன் பயனாக ஒரு மாகாணத்தில் பருத்தி இயந்திரத் தொழில் இலாக்காவில் மாத்திரம் 10000 பதிறாயிரம் பேருக்கு புதிதாக வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. இது போல் இன்னும் அநேக இலாக்காவில் ஏற்பாடு செய்வதன் மூலம் பல லக்ஷக்கணக்கான பேர்களுக்கு வேலை ஏற்பட்டு விடுமாம்
ஆனால் நமது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க கதர் திட்டம் போடப்பட்டு பொது ஜனங்கள் பணத்தைக் கோடிக்கணக்காக வசூலித்து பாழாக்கப்படுகிறது. இதுவரை வசூலித்த
சுமார் 2 கோடி ரூபாய்களைக் கொண்டு குறைந்த அளவு சுமார் 50 மில்லுகளாவது கட்டப்பட்டிருக்குமானால் அதைக் கொண்டு ஒரு லக்ஷம் பேருக்கு நிரந்தர வேலை கொடுத்து இருக்கலாம் என்பதோடு அவற்றின் லாபத்தால் வருஷம் 2மில்கள் கட்டப்பட்டு அதிலும், வருஷ வருஷா வருஷம் 2000, 3000 பேருக்கு வேலை கொடுத்துக் கொண்டே வந்திருக்கலாம். இதனால் வேலை இல்லாப் பஞ்சம் நீங்குவதோடு 12 மணி நேரம் நூல் நூற்றால் 12 தம்பிடி வரும்படி வரக்கூடிய கேவலத்தன்மை
நீக்கிக் குறைந்த அளவு மாதம் 1-க்கு 10 ரூபாய்க்கு குறையாத வரும்படியையும், தொழிலாளிகள் அடைந்து வரலாம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௯
இந்தப்படி செய்தால் பணக்கார முதலாளிகளினுடையவும், பார்ப்பனர்களுடையவும் ஆதரவு தோழர் காந்தியாருக்கோ காங்கிரசுக்கோ இல்லாமல் போய் விடும். ஆதலால் “காந்தியும் காங்கிரசும்” உள்ளவரை வேலை இல்லாத் திண்டாட்டம் நீங்கி விடும் என்று எண்ணுவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்ளுவது போலவே முடியும்
பகுத்தறிவு - கட்டுரை - 09.09.1934
69 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இது தானா CsAWDH?
மத விஷயங்களிலுள்ள குற்றங்களும், கொடுமைகளும், ஒழுக்கக் குறைவுகளும் தேசிய விஷயத்தில் இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது. பொதுவாகவே தேசியம் என்னும் வார்த்தையை அர்த்தமற்றது என்றும், மோசக் கருத்துக் கொண்டது என்றும், அதில் பணக்காரத் தன்மை பிரதிபலிப்பதோடு, அது பணக்காரத் தன்மையை ஆதரிப்பதற்கென்று கற்பிக்கப்பட்டதென்றும் பல தடவை கூறி வந்திருக்கிறோம்
நாம் மாத்திரமல்லாமல் பல மேல்நாட்டு அறிஞர்களும் தேசியத்தின் தன்மையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜான்சன் என்கின்ற ஒரு மேதாவி “தேசியம் (தேசாபிமானம்) என்பது வடிகட்டின அயோக்கியத்தனம்” என்று அதாவது “பிழைப்புக்கு வழியில்லாதவர்களின் கடைசியான இழி பிழைப்புக்கு மார்க்கமானது'' என்று கூறி இருக்கிறார்.
இந்த அபிப்பிராயம் முதல் முதல் தேசியம், தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகள் எங்கு உண்டானதோ, அங்கு ஏற்பட்ட அபிப்ராயமே தவிர இந்தியாவில் ''தேசிய விரோதிகள்'' “தேசத் துரோகிகள்! “சர்க்கார் குலாம்கள்” என்று “தேசாபிமானி” களால் கருதப்படுகின்றவர்களால் சொல்லப்பட்டதல்ல. இது எப்படியோ இருக்கட்டும் என்று வைத்துக் கொள்ளுவோம்
இன்று இந்திய தேசியவாதிகள், தேசாபிமானிகள் தேசியத்துக்கும், தேசாபிமானத்துக்கும் பத்திரிகை நடத்தும் பத்திராதிபர்கள், தேசாபிமானத்தில் வயிறு வளர்க்கும் பிறவி - வாழ்க்கை தேச பக்தர்கள் என்பவர்களைப்
பற்றிச் சற்று கவனிப்போம். இன்று இந்தியாவில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல்கள் நடக்கின்றன. இது ஒரு அரசியல் விஷயம்.
இந்திய சட்டசபை அரசியல் மூலம் ஜாதீய சம்மந்தமான- மனித சமூக வாழ்வு சீர்திருத்த சம்பந்தமான அதாவது ஜாதி, மத, பழக்க வழக்க சம்பந்தமாக ஒரு காரியமும் செய்ய முடியாது. மூடியும் என்றாலும் தேசியவாதிகள், தேசாபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்கள் இது விஷயங் களைசட்டசபைகளில் பேசவோ, சட்டம் செய்யவோ ஒப்புக் கொள்ளுவதில்லை.
ஒப்புக் கொள்வதானாலும் தேசமெல்லாம் ஒரே அபிப்பிராயமாய் அந்தந்த மத ஜாதிக்காரர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தக்கதாய் இருக்க வேண்டும் என்கின்றதான ஆகாத நிபந்தனைகளையெல்லாம் சொல்லுகின்றவர்கள்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 70
இந்திய தேசாபிமானம் என்பதே இன்று இந்த தேசப் பணக்காரர்களுடைய செளகரியங்களைக் குறிப்பாய்க் கொண்டதும், பணக்காரர்கள் பண வருவாய் முறையை சிறிதும் மாற்ற முடியாததும், பணக்காரர்களுக்குப் பணம் பெருகிக் கொண்டு, வளர்ந்து கொண்டு போவதைத் தடுக்க முடியாததும், தேச செல்வம் எல்லாம் ஒருவன். கைக்கே போவதானாலும் ஆட்சேபிக்க முடியாததுமான கொள்கைதான். (தேசாபிமானத்தில்) இருந்து வருகிறதே தவிர, தேசம் தேச மக்களுக்குப் பொது - தேசத்தின் செல்வம், விளைபொருள், வர்த்தகம், போக்குவரத்து தொழிற்சாலை ஆகியவைகளின் பலன்கள் இந்த தேசத்து எல்லா மக்களுக்கும் பொது என்று சொல்லக்கூடிய காரியங்கள் தேசாபிமானத்தில். இல்லவும் இல்லை. அதை அதில் சேர்த்துக் கொள்ள மகாத்மாக்கள் என்பவர்கள் முதல் எந்த தேச பக்தர்களும் சம்மதிப்பதும் இல்லை. இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள நபர்கள் தாங்கள் சேர்ந்துள்ள ஸ்தாபனத்தையும், தாங்கள் சொல்லும் கொள்கைகளையும், தேசாபிமானம் என்று சொல்லிக்கொண்டு இருப்பதாலேயே தங்களை தேசாபிமானிகள் என்றும், தங்களோடு சேராதவர்கள் எல்லாம் தேசாபிமானிகள் அல்ல என்றும், தேசத் துரோகிகள் என்றும், தங்கள் ஸ்தாபனம்தான் குதிரைக்கு சமானமானது என்றும், மற்றவை
கழுதைக்குச் சமானமானது என்றும் சொல்லுகிறார்கள். இதனாலேயே தேசாபிமானம் என்பது வடிகட்டிய அயோக்கியதனம் என்றும் அதில் வாழ்கின்றவர்கள் உலகிலுள்ள பிழைப்புகளில் எல்லாம் மிக இழிவான பிழைப்பில் பிழைக்கின்றவர் களாவார்கள் என்றும் சொன்ன சொல்லைப் பொன்னே போல் போற்றி பொன் எழுத்தில் எழுதி சொன்னவரை பொன்னே போல் வாழ்த்த வேண்டாமா என்று கேள்க்கின்றோம்.
இன்று சிறப்பாக இந்த நாட்டில் தன்னை ஒருவன் தேசாபிமானி என்று சொல்லிக் கொண்டாலோ, அல்லது அந்த ஸ்தாபனத்தில் சேர்ந்து கொண்டாலோ, அல்லது வேறு வழியில்லாமல் அதன் பயனாய் வாழ்வை நடத்த ஆரம்பித்து விட்டாலோ, அவன் எவ்வளவு அயோக்கியனாய், இழி பிறப்பாய், ஒழுக்கங் கெட்டவனாய் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் மேடை ஏறவும், வாயில் வந்ததைப் பேசவும், மனதில் நினைத்ததை எழுதவும், பொய் பித்தலாட்டம் போக்கிரித்தனங்கள் செய்யவும் யோக்கியதைகள் ஏற்பட்டு விடுவது என்றால் இப்படிப்பட்ட தேசாபிமானத்தையும், தேசியத்தையும், தேச பக்தியையும் வெட்டிப் புதைக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்
அதற்காக உயிர் போகுமளவும் பாடுபட்டு அதற்காக உயிர் விட நேரிடுவதைப் பெரியதொரு கிடைத்தற்கரியதொரு காரியம் என்று கருத வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் நமது பாராட்டுதலுக்குரியவர் என்றே கருதுகிறோம். (நமது பாராட்டுதலை அவர் லக்ஷியம் செய்யா
71 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
திருந்தாலும் இருக்கலாம்) அவரை உண்மைத் தியாகிகளில் ஒருவராகவே கொள்ளலாம். அவரது நிலைமையைப் பார்த்தும் அவர் தேசாபிமானத்தால் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர் என்றே கூறுவோம் அதோடு கூடவே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருதும் வழியில் தொண்டாற்ற, தியாகம் செய்ய, உயிர்விட அவரவருக்கு உரிமை உண்டு என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்
என்றாலும் “காங்கிரஸ் ஒன்றுதான் தேசாபிமான ஸ்தாபனம். காங்கிரஸ்காரர்கள்தான் தேசாபிமானிகள்'” என்று சொல்லுவதும் “எவ்வளவுதான் ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் சொந்த வாழ்வில், எவ்வளவு அயோக்கியனாய், ஈனனாய் இருந்தாலும் அவன் காங்கிரசில் சேர்ந்து விட்டால் அவன் யோக்கியனாய் விடுவான்” என்றும், “அவனை யோக்கியனாகக் கருத வேண்டும்” என்றும் சொல்ல மூன் வந்துவிட்டாரானால் பிறகு இவரைப் பற்றி என்ன சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை
ஒரு சிட்டிகைச் சாம்பலை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டால் பெற்ற தாயாரைப் புணர்ந்த பாபம் நாசமாகி சிவனுடைய பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளலாம் என்றும், “ஒரு தடவை ராமா என்றால் பல 'ஜன்ம' பாபங்கள் தீர்ந்து வைகுண்டம் சேரலாம்" என்றும் சொல்லும் வாக்கியங்களுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று கேழ்க்கின்றோம். இதனால்தான் இத்தேசத்தில் உள்ள அயோக்கியர்கள், இழி தொழிலாளிகள் ஆகிய எல்லோரும் தாங்கள் யோக்கியர்களாகக் கருதப்படலாம் என்று காங்கிரசில் வந்து சேருகிறார்கள் போலும் நாலணா கொடுத்துக் காங்கிரசில் சேர்ந்து விடுவதினால் ஒரு மனிதன் யோக்கியனாகி விடலாம் என்று ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் வாயினால் சொல்லப்பட்டு விடுமானால், மனிதன் அயோக்கியனாக, ஒழுக்க ஈனனாக, நாணையமற்றவனாக, இழி வாழ்க்கைக்காரனாக வாழப் பயப்படுவானா? என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை வணக்கமாக கேள்க்கின்றோம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தொண்டும், நமது தொண்டும் பார்ப்பனர் நன்மை, பார்ப்பனரல்லாதார். நன்மை என்கின்ற தத்துவங்களின் போட்டித் தொண்டு என்று மாத்திரம் நாம் கண்ணியமாய் எண்ணி இருந்த எண்ணம், இப்போது அயோக்கியர் - யோக்கியர் என்கின்ற விஷயத்திலும், போட்டித் தொண்டு என்று சொல்ல வேண்டியதாகின்றது என்றால் இதற்கு நாம் விசனப்பட வேண்டியதுதான்.
உலகம் எவ்வளவுதான் தந்திரங்களுக்கு அடிமைப்பட்டு விட்டது என்றாலும், இன்றைய நிலையில் நாணையத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அதாவது நானையம் ஒழுக்கம் என்கின்ற வார்த்தைகளுக்கு மதிப்பு
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 7
இருக்கின்றது என்றே கருதுகின்றோம். ஆதலால் நாணையம் இல்லாதவனும், ஒழுக்கம் இல்லாதவனும் காங்கிரசில் சேர்ந்தால் ஒழுக்கமும், நாணையமும் ஏற்பட்டு விடும் என்கின்ற வார்த்தையின். பயனாய் (அறிவுள்ள சமூகத்தில்) பிரதிகூலம் தான் ஏற்படுமே தவிர அனுகூலம் ஏற்படாதென்றே சொல்லுகின்றோம். அன்றியும் மனிதனின்
முன் பின் நிலை, தியாகம், ஒழுக்கம், நாணையம் முதலியவை ஒன்றும் கவனிக்கப்படாமல் வெரும் தேசாபிமானத்தையும், தேசாபி அந்த மானத்துக்கும் தாங்கள் சொல்லுவதையே அர்த்தமாக வைத்துக்கொண்டு “காங்கிரஸ் காந்தி ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்” என்று சொல்லுவ தென்றால் அதன் தைரியத்தைப் பார்க்கும்போது தங்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் முழுமூடர்கள், கபோதிகள், களிமண் உருண்டைத் தலைகள் என்று கருதி இருப்பதாகத்தான் நினைக்க வேண்டி இருக்கிறது
இன்றையத் தினம் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை
நாம் ஒரு கேழ்வி கேள்கின்றோம்.
அதாவது தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கும், ராமசாமி முதலியாருக்கும் எந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் என்பவருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் குமாரசாமி ராஜா என்பவருக்கும் விருதுநகர் வி.வி ராமசாமி அவர்களுக்கும் எந்த விஷயத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் அவர்களுக்கும், சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்களுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம்?
தோழர் முத்துரங்க முதலியார் அவர்களுக்கும், தோழர் நடராஜ முதலியார் அவர்களுக்கும் எந்த விதத்தில் என்ன வித்தியாசம் சொல்லக் கூடும் என்று கேழ்க்கின்றோம்
5 ஸ்தானங்களுக்கு காங்கிரசின் பேரால் 5 பேரை நிறுத்தி போட்டி போட்டுக்கொண்டு, காங்கிரசின் பேரால் என்று போடப்பட்ட ஆட்களைப் பற்றியோ, அவர்களின் யோக்கியதைகளைப் பற்றியோ ஒரு வார்த்தைகளைகூட எடுத்துப் பேச யோக்கியதை இல்லாத நிலையில் இருந்து கொண்டு “காங்கிரசு, காந்தி, காங்கிரசில் சேராதவன் தேசத்துரோகி, ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்” என்றும் “காங்கிரசுக்கும், காந்திக்கும் போர் நடக்கின்றது ஆதலால் ஓட்டுச் செய்யுங்கள்" என்றும் சொல்லுகின்றதினாலேயே இவர்களை எப்படி ஜெயித்து விடுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்ட கனவான்கள் என்பவர்கள் ஜாதி மதங்களைக் காப்பாற்றும் வருணாச்சிரமவாதிகளா? அல்லவா? என்று கேட்கின்றோம்
73 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஒருவர் இருவர் ஒரு சமயம் அரை வருணாச்சிரமவாதிகளாய்
இருக்கலாம். அல்லது வெளியில் சொல்லப் பயப்படுபவர்களாய் இருக்கலாம். வேறு விதத்தில் மற்றவர்களை விடக் காங்கிரஸ்காரர்கள் எப்படி உயர்ந்தவர்கள் என்று கேட்கின்றோம்.
தமிழ் நாட்டுக் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் என்பதைத் தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும், சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதி களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். (ஆனால் ஏன் பார்ப்பனரல்லாதாரில் தகுந்த ஆட்கள் வரக்கூடாது என்று கேட்கின்றார்கள். அது வேறு விஷயம்)
இந்தப் பார்ப்பனர்களின் கருத்து தமிழ் நாட்டில் எந்தப் பார்ப்பனரல்லாதாரும் தலை எடுக்கக் கூடாது என்பதைத் தவிர வேறு இல்லை என்பது காந்தியார், ஜவகர்லால் வரையில் எட்டிய உண்மையாகும்.
இந்தத் தேர்தலில் இவர்களுடைய நோக்கம் எல்லாம் பார்ப்பனரல்லாத சுயபுத்தி உள்ளவர்கள் இந்திய சட்டசபைக்குப் போகக் கூடாது என்பதைத் தவிர சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தோழர்கள் ஆர்.கே.ஷண்முகம், பி.வரதராஜலு, ஏ.ராமசாமி முதலியார் போன்றவர்கள் கண்டிப்பாகப் போகக் கூடாது என்பதைத் தவிர வேறு இல்லை என்று உறுதியாகச் சொல்லுவோம்
இம்மூவரும் சென்றால், தமிழ்நாட்டில் பார்ப்பனர்களை விட ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள் பார்ப்பனரல்லாதாரிலும் இருக்கிறார்கள் என்பது உலகத்துக்கு விளங்கிவிடும். இதனால் தாங்கள் (பார்ப்பனர்கள்) இதுகால வரையில் பார்ப்பனரல்லாதாரைத் தமிழ்நாட்டை விட்டு வெளிமாகாணங்களுக்குத் தெரியாதபடி பத்திரிகை மூலமும் விஷமப் பிரசாரம் மூலமும் அடக்கி வைத்திருந்ததின் பயன் வீணாகப் போவதுடன் தங்கள் யோக்கியதைகளும் வெளியாகி விடுமே என்கின்ற நடுக்கமே அல்லாமல் வேறு ஒரு காரணமும் அல்ல எனவே இந்தக் கருத்தை முக்கியமாய் வைத்துக் கொண்டுதான். ஞானமற்ற - சுயநலக்கார - வேலையில்லாக் கஷ்டத்தால் துன்பப்படுகிற - பொறாமைப் பேய்க்கு அடிமைப்பட்ட பூதக் கண்ணாடியை வைத்துக் கண்டுபிடிக்கத்தக்க யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார்களை சுவாதினம் செய்து கொண்டு காந்தி, காங்கிரஸ், தேசாபிமானம் என்று சொல்லிக் கொண்டு இப்படிப்பட்ட சூக்ஷியையும், பித்தலாட்டங்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்பனரல்லாத சுயமரியாதையுள்ள மக்கள் உணரவேண்டும் என்று ஆசைபடுகின்றோம்
பகுத்தறிவு - கட்டுரை - 09.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௨ 74
காங்கிரசின் வீரம் வெட்கம்! வெட்கம்!! வெட்கம்!!!
காங்கிரசுக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம் சிற்சில ஊர்களில் இருந்து கொண்டு காலித்தனம் செய்து வருவதைப்
பற்றி இதற்கு முன் பல தடவை “குடி அரசு”, புரட்சி” பத்திரிக்கைகளில் எழுதப்பட்டிருந்தது வாசகர்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறோம்.
இந்தக் கூட்டங்களுக்கு ஏற்பட்ட வேலையெல்லாம் காங்கிரஸ் பேரால் வயிறு வளர்ப்பதும், அதற்குக் கூலியாகக் காங்கிரஸ் காரர்களல்லாதார் என்பவர்கள் போடும் கூட்டங்களில் போய் காலித்தனம் செய்வதும், சரிசமமான காலித்தனத்தையோ, போலீசாரையோ கண்டால் ஓட்டமெடுப்பதும் வழக்கமாயிருந்து வருகிறது
தேசியப் பத்திரிக்கை என்று சொல்லிக் கொள்ளும் சில, அதாவது காலித்தனத்தில் பிரியமும், ஆசையும் உள்ள சில பத்திரிக்கைகள் “போலீசார். பந்தோபஸ்தில் கூட்டம் நடந்தது” என்றும் “கூட்டத்தில் கலவரம், குழப்பம்” என்றும் எழுதி அவற்றை ஆதரிப்பதுமாய் இருந்து வருவதும், காங்கிரசுக்கும், தேசியத்துக்கும் வெட்கக் கேடு என்பதுடன் தங்களுடைய யோக்கியதையானது வெளியாகக் கூடாத அவ்வளவு இழிவானது என்று அவர்களே கருதி காலித்தனத்தின் மூலம் எதிரிகளின் கூட்டத்தைக் கலைக்க நினைக்கிறார்கள் என்றும் கருதக் கூடியதாகவே இருக்கிறது
தோழர் வரதராஜுலு நாயுடு வேலூரில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அக் கூட்டத்தில் அக்கூட்ட நடவடிக்கைகளுக்குச் சம்மந்தமில்லாத கூச்சல்களை சிலர் கிளப்பினார்களாம். அதாவது காந்திக்கு ஜே! அவனாசிலிங்கம் செட்டியாருக்கு ஜே! என்று கூப்பாடு போட்டார்களாம். போலீசார் வந்த பிறகு ஓட்டம் பிடித்தார்களாம். (இந்த விஷயம் “இந்தியா” “தமிழ்நாடு! “சமதர்மம்” முதலிய பத்திரிக்கைகளில் காணப்படுகின்றது.)
பிறகு தோழர் வரதராஜுலு அவர்கள் சொல்ல வேண்டியது முழுவதையும் சொல்லி முடித்த பின்பே கூட்டம் முடிந்ததாம். இம் மாதிரி காலித்தனமும், இதைவிட மோசமான காலித்தனமும் வேலூரில்
இதற்கு முன் இரண்டொரு தடவையும் நடந்திருக்கின்றது. இதன்.
75 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பயனாய் ஏற்பட்ட பலன் என்ன? அதாவது வேலூருக்கு போகின்றவர்கள் அங்குள்ள சில காலிகளுக்குப் புத்தி கற்பிக்கத்தக்க அளவு அதிகமான காலித்தனத்துடன் செல்ல வேண்டும். அல்லது போலீசுக்காரர்களை அவர்கள் கடமையைச் செய்ய எதிர்பார்க்க வேண்டும் என்ற பலன் தானே ஏற்படுகின்றது. காலித்தனங்களின் பயனாய் கூடிய சீக்கிரத்தில் பேச்சு சுதந்திரம் கூட நிறுத்தப்பட வேண்டியதாய் ஏற்பட்டுவிடும் என்றே பயப்படுகின்றோம்
வேறு சில அரசாங்கங்களில் பொதுக்கூட்டங்கள் போட வேண்டுமானால் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே அதிகாரிகளுக்கு எழுதி உத்திரவும், பந்தோபஸ்துக்கு உதவியும் பெற வேண்டும்
என்கின்ற ஒரு முறை இருந்து வருகின்றது. ஆனால் நமது பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அந்த தொல்லை இல்லை. இனிமேல் அது போலவே தான் இங்கும் ஏற்பட வேண்டிவரும் என்றே நினைக்கிறோம்
காங்கிரசு ஏற்பட்ட பிறகு அனேக சுதந்தரங்கள் பறிக்கப்பட்டுப் போய்விட்டன. அதற்கு காங்கிரசின் இப்படிப்பட்ட நடத்தையே ஒரு அளவுக்கு ஜவாப்தாரி என்று தயங்காமல் கூறுவோம்
கூப்பாடு போட்டவர்கள் - கலகமும், காலித்தனமும் செய்தவர்கள் - அவை அவசியமென்றும், தங்களின் யோக்கியதையான கடமை என்றும் கருதி இருப்பார்களே ஆனால் போலீசார் வந்த பிறகும் “காந்திக்கு ஜே” சொல்லிக் கொண்டு அங்கு நின்று இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உண்மையான வீரர்கள் ஆவார்கள். அப்படிக்கில்லாமல் சிகப்புக் குல்லாயைக் கண்டவுடன் ஓட்டமெடுக்கும் காங்கிரசு எவ்வளவு வீரமும் மானமும் உடையது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.
இதைப் பற்றி சில பத்திரிக்கைகள் பெருக்கி எழுதி மகிழ்கின்றன. இப்பத்திரிக்கைகளுக்கு பொறுப்போ, “தேசிய” மானமோ இருக்குமானால் கண்டிப்பாய் இவ்வித நடவடிக்கைகளுக்கு வெட்கப்பட்டு அப்படிப்பட்ட காலிகளுக்கும் புத்தி சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த முயற்சித்து இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் இவர்களை உசுப்படுத்துகிற மாதிரி எழுதுவதால், குட்டி குலைத்து நாய்க்கு ஆபத்து ஏற்பட்டது என்பது போல் இப்படிப்பட்ட பத்திரிக்கைக்காரர்களுடையவும், காலிகளுடையவும் செய்கைகளால், “போலீஸ் நிர்வாகம் இந்தியர்கள் கையில் கொடுப்பதற்கு இந்தியாவுக்கு யோக்கியதை இல்லை வெள்ளைக்காரனிடம் தான் இருக்க வேண்டும்” என்று சொல்லும்படியாய் ஏற்பட்டு வருகின்றது. இப்படிப்பட்ட ஆட்களையும், பத்திரிகைக்காரர்களையும் தன்னைப் பின்பற்று கின்றவர்களாய்க் கொண்ட தோழர் காந்தி “இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் வந்தால் பட்டாளம், ராணுவம் இல்லாமல் ராஜ்ஜிய பாரம் நடைபெறும்” என்று சொன்னார் என்றால் இதில்
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 7௦
சிறிதாவது உண்மையோ, அறிவுடமையோ இருந்திருக்க முடியுமா என்றும், இவர்கள் உண்மையில் நாணையத்தில் அஹிம்சைவாதிகள் என்று சொல்லிக் கொள்ளத் தகுந்தவர்களா என்றும் கேட்கின்றோம்
சுயமரியாதைக்காரர்களால் இப்படிப்பட்ட காலித்தனம் எங்காவது நடந்ததாகத் தெரிய வந்த சமயத்தில் நாம் வெட்கப்பட்டும், கண்டித்தும் இருக்கிறோமே ஒழிய எதிரி போலீசு பந்தோபஸ்தில் இருந்து பேச வேண்டியிருந்ததற்கு வெட்கப்படாமலோ அதைப் பற்றிப் பெருமையாய் பேசிக்கொண்டோ இருந்ததில்லை
கேள்விகள் கேட்டால் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியதுதான். இஷ்டமில்லையானால் இப்போது சொல்ல செளகரியமில்லை என்று சொன்னால், கேள்வி கேட்பவர்கள் திருப்தி அடைய வேண்டியது தான். அல்லது சொன்ன பதிலை வைத்துக் கொண்டு தான் வேறு ஒரு கூட்டம் கூட்டி அதில் உள்ள தவறுதல்களை வெளிப்படுத்த வேண்டியதுதான். அப்படிக்கெல்லாம் இல்லாமல் கலகம், காலித்தனம் செய்வதும் பிறர் பேசுவது காது கேட்காமல் இருப்பதற்காக “காந்திக்கு ஜே” என்பது போல் கூவுவதுமான இழிவான செயல்களை ஒழிக்க வேண்டியது தான் என்பதை பலமுறை வற்புறுத்தி வந்திருக்கிறோம்.
இது எழுதினது காங்கிரசுக்காரருக்கு மட்டும் என்று நாம் எழுதவில்லை. சுயமரியாதைக்காரர் என்பவர்கள் எங்காவது இப்படிப்பட்ட காலித்தனம் செய்திருந்த போதிலும் அவர்களுக்கும் சேர்த்துத்தான் எழுதுகின்றோம். 40000, 50000 பேர் உள்ள கூட்டங்களில் அவ்வளவு பேருக்கும் மாறுதலான - எவ்வளவோ எதிரிடையான அபிப்பிராயங்களைப் பற்றிப் பேசின போதிலும் ஜனங்கள் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த பிறகு தங்களுக்கு இஷ்டமான கேள்விகளை அதுவும் பேசிய விஷயத்தைப் பொருத்த கேள்விகளையே கேட்பதும் உபன்யாசகர் பதில் உரைப்பதும், உரைத்த பதிலை மரியாதையுடன் கேட்ப்பதுமான காரியங்களை மேல் நாடுகளில் பார்த்திருக்கிறோம்
அப்படிக்கெல்லாம் இல்லாமல் இம்மாதிரி கோழைத்தனமாக காலித்தனம் செய்வதைக் காங்கிரஸ் - தேசிய பக்தர்கள் பெரிதும் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டிருப்பதும், அதை காங்கிரசு - தேசியப் பத்திரிகைகள் ஆதரிப்பதும் வெட்கம்! வெட்கம்! வெட்கம்!!! என்று மும்முறை கூறி இனியாவது புத்தி வரட்டும் என்று ஆசைப்படுகிறோம்
பகுத்தறிவு - கட்டுரை - 16.09.1934
77 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
நாம் எப்பாட நடந்துகொள்ள வேண்டும்
வரப்போகும் இந்திய சட்டசபைத் தேர்தலில் சுயமரியாதைக் காரர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், மேலால் நடக்க வேண்டிய பிரசாரங்களைப் பற்றியும் எனக்குப் பல கடிதங்களும், கேள்விகளும் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுள். தோழர் C.D.prwshd அவர்களுடைய கடிதம் முக்கியமானது சுயமரியாதைக்காரர்களுக்குத் தேர்தல் விஷயத்தில் இன்ன கட்சியைத் தான் ஆதரிப்பது என்கின்ற எவ்வித நிபந்தனையும் இது வரை ஏற்படவில்லை என்பது யாவரும் அறிந்ததே. தேர்தல்களில் பார்ப்பனர்.
- பார்ப்பனரல்லாதார் என்கின்ற தன்மையை மாத்திரம் தான் இதுவரை சு.ம.காரர்கள் கவனித்து வருகிறார்கள். சுயமரியாதைக்காரர்கள் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிப்பது என்கின்ற நிலை ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற கொள்கைக்குப் பாதகமில்லாமல் நமது குறைந்த பட்சக் கொள்கையை ஒப்புக் கொள்ளக் கூடிய கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டி வரும்
ஜஸ்டிஸ் கட்சியோ! பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளப் போகின்றது. அதற்கேற்றாப் போல் சுயமரியாதைக்காரர் பலருக்கும் காங்கிரசில் சேரலாமா என்கின்ற எண்ணம் இருந்து வருகின்றது சுயமரியாதைக்காரர்களுக்கு ஜஸ்டிஸ் கக்ஷியானது பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டு, வகுப்புவாரிப் பிரதிநிதித் திட்ட கொள்கையையும் அது வழவழா செய்துவிட்டு, பார்ப்பனரல்லாத தொழிலாளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிய ஏழை மக்கள் விஷயத்தில் தக்க மாறுதலுக்கு ஏற்பாடு செய்து அவர்களை முன்னுக்குக் கொண்டு வரத்தக்க கொள்கையும், திட்டமும் கொண்டதாக இல்லையானால் சுயமரியாதைக்காரர்களில் பலர்
காங்கிரசில் சேருவதை நாம் ஆகஷ்பிக்க முடியாது
காங்கிரஸ் பார்ப்பனர் ஆதிக்க ஸ்தாபனம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் ஜஸ்டிஸ் ககடி இன்று பணக்காரர்கள் ஆதிக்க ஸ்தாபனம் என்று சொல்லத்தக்க நிலையில் இருப்பதை யாராவது மறுக்க முடியுமா? என்று கேட்கிறோம். “புழுத்ததின் மீது நாய் விட்டை இட்டது" என்பது போல், ஜஸ்டிஸ் கக்ஷி இந்நிலைமையில் பார்ப்பனர்களையும்
சேர்த்துக் கொள்வது என்கின்ற முடிவுக்கு வந்து விட்டால் பிறகு காங்கிரசுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம் என்பது நமக்கு விளங்கவில்லை?
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 7௦
ஜஸ்டிஸ் கட்சி, பார்ப்பனர்களை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும் என்றாலும் அதன் பிறகு செய்யப்போகும் காரியம் என்ன. என்பதை மக்களுக்கு விளக்க வேண்டாமா? என்று தான் கேட்கின்றோம்
சமுதாய விஷயத்தில் காங்கிரஸ் பெரிதும் பிற்போக்கான புத்தியுடையது என்பதையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு முட்டுக் கட்டை போடுகின்றது என்பதையும், பார்ப்பன ஆதிக்கத்தைத்தான் சுயராஜ்யம் என்று சொல்லப்படுகின்றது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்
அது போலவே ஜஸ்டிஸ் கட்சியும் உண்மையான வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்துக்கு இடையூராக ஆகிக் கொண்டு வருவதுடன் சமுதாய விஷயத்திலும், பொருளாதாரத் துறையிலும் மிகவும் பிற்போக்கான தன்மையில் போய்க் கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டி
இருக்கின்றது
காங்கிரஸ் ஸ்தாபனங்களில் பார்ப்பனர் எண்ணிக்கை அதிகமாய் இருப்பது போலவே, ஜஸ்டிஸ் ஸ்தாபனங்களில் பணக்காரர்களுடைய எண்ணிக்கையே அதிகமாய் இருக்கின்றது
காங்கிரசில் எப்படி பார்ப்பனக் கூலிகளே பெரிதும் “பார்ப்பனரல்லாதாராய்?” விளங்குகின்றார்களோ, அது போலவே பணக்காரர்களின் கூலிகளே பெரிதும் “ஏழை மக்களாகவும், தாழ்த்தப் பட்ட மக்களாகவும்” விளங்குகின்றார்களே ஒழிய, உண்மையான ஏழைகள், தொழிலாளிகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களுக்கு அதில் இடமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது
சுயமரியாதை இயக்கம் உண்மையான சமத்துவ நோக்கம் கொண்டது என்று ஒரு நடு நிலைமை நியாயாதிபதியின் தீர்ப்பைப் பெற வேண்டுமானால், இன்றைய ஜஸ்டிஸ் கட்சியையும் காங்கிரசையும் ஒன்று போல இல்லாவிட்டாலும், ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசம் கொண்டதல்ல என்றுதான் கருதியாக வேண்டும் என்கின்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது
சுயமரியாதை இயக்கமானது காங்கிரசினால் அதன் முழு பலத்தோடு எதிர்க்கப்பட்டு வந்தது உண்மை என்றாலும், அதனால். யாதொரு கெடுதியும் சு.ம. இயக்கத்திற்கு ஏற்பட்டுவிடவில்லை என்று
தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதோடு சுயமரியாதை இயக்கம் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் சிறிதும் தயவு தாட்சண்யமின்றி சமய சந்தர்ப்பமின்றியும் நண்பர் நண்பரல்லாதவர்கள் என்பதையும் கவனியாமல் வெளியாக்கியும் எதிர்த்தும் வந்திருக்கின்றது
ஆனால் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியை சமய சந்தர்ப்பம் இல்லாமல் ஆதரித்தும், நல்லவர் யார், கெட்டவர் யார்?
79 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பொது நலத் தலைவர் யார், சுயநலத் தலைவர் யார்? என்பதைக் கவனிக்காமலும் எல்லாச் சமயத்திலும் அவர்களது எல்லாக் காரியத்தையும்
ஆதரித்து வந்திருக்கிறது
இவற்றின் பயன் என்னவாய் முடிந்தது என்றால் காங்கிரசினால் சுயமரியாதை இயக்கத்துக்கு எவ்வித கெடுதலும் செய்ய முடியவில்லை என்பதோடு காங்கிரஸ்காரருக்கு சுயமரியாதை இயக்கத்தை தழுவ வேண்டும் என்கின்ற எண்ணம் சில காங்கிரஸ்காரர்களிடமாவது வந்து
இருக்கிறது
ஜஸ்டிஸ் கட்சிக்கோ பல நன்மைகள் செய்யக் கூடிய சந்தர்ப்பமிருந்தும் அது சுயமரியாதை இயக்கத்துக்கு யாதொரு நன்மையும் செய்யவில்லை என்பதோடு, சுயமரியாதை இயக்கத்தை ஒடுக்க ஜஸ்டிஸ் கட்சியார் முயற்சிக்கிறார்கள் என்று பொது ஜனங்கள் நினைக்க வேண்டிய அளவுக்கும் தைரியமாய் நடந்து கொண்டதான பலன் தான் ஏற்பட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவிக்க வேண்டி இருக்கிறது
எப்படி இருந்தபோதிலும் சுயமரியாதைக்காரர்கள் சமூக வாழ்வு
விஷயத்திலும், பொருளாதார விஷயத்திலும் தாழ்த்தப்பட்டு ஜீவனத்துக்குக் கஷ்டப்படும் - இழி மக்களாய்க் கருதப்படும் பார்ப்பனரல்லாதார். முன்னேற்ற விஷயத்தைத் தங்களது முக்கிய நோக்கங்களில் ஒன்றாய்க் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள முடியாது
சுயமரியாதைக்காரர்கள் பொருளாதார விஷயத்தையே முக்கியமாய் கருதுவதா? அல்லது ஜாதி, மத மூடநம்பிக்கை ஆகியவைகளின். கொடுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் வேலையையே முக்கியமாய் கருதுவதா என்பதை இப்போது ஒரு முக்கிய பிரச்சினையாக சில & o தோழர்கள் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதை சீக்கிரத்தில் முடிவு கட்டித்தான் தீர வேண்டும்.
சமுதாய விஷயத்திலேயே உழைப்பதென்றாலும் ஜாதி, மத மூட
நம்பிக்கை விஷயத்தில் உழைப்பதானாலும் பொருளாதாரப் பிரச்சினை:
அதிலிருந்து விலகியதாகாது. எவ்விதப் பிரசாரமும், சட்டத்திற்கும், சமாதான தன்மைக்கும் கட்டுப்பட்டு செய்வதென்பதுதான் சுயமரியாதைக்
காரர்கள் கொள்கை என்பதை நாம் மறுபடியும் ஒருதரம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு செய்யப்படும் பிரசாரம் என்பதில்
ஜாதி மத பொருளாதார மூடநம்பிக்கைகளை ஒழித்தலும், உயர்வு தாழ்வை அகற்றலுமான கொள்கை சேர்ந்ததல்ல என்று அரசாங்கத்தார் கருதுவார்களானால் அது விஷயத்திலும் நாம்- சுயமரியாதைக்காரர்
சீக்கிரத்தில் ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறோம்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௦
எனவே இந்த விஷயங்கள் எல்லாம் சமீபத்தில் நடைபெறப் போகும் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடும், காங்கிரஸ் மகாநாடும், மாகாண மகாநாடும் நடந்தவுடன் சுயமரியாதை மகாநாடோ, அல்லது சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் மகாநாடோ ஒன்று கூட்டி அதில் முடிவு செய்து கொள்ள வேண்டியவர்களாயிருப்பதால் அது வரையில் எல்லாத் துறையிலும் நம் தோழர்கள் பொருத்து இருக்க வேண்டும் என்றும், அதை எதிர்பார்த்தே நானும் பொருத்து இருக்கிறேன். என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். சுயமரியாதைச் சங்கத் தலைவர் என்கின்ற முறையில் தோழர் RK ஷண்முகம் அவர்களது அபிப்பிராயமும் இதில் கலந்து இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
- ஈ.வெ.ராமசாமி
பகுத்தறிவு - தலையங்கம் - 16.09.1934
81 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்திய சட்டசபைத் தேர்தல்
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் போட்டி போட முடிவு செய்து ஆங்காங்கு மாகாணம் தோறும் காங்கிரசின் சார்பாய் அபேட்சகர்களை நிறுத்திப் போட்டி போடுகிறார்கள். காங்கிரஸ்காரர்களுக்குள்ளாகவே இவ்விஷயத்தில் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுத் தேர்தலில் பிரவேசிக்கக் கூடாது என்று சொல்லி ஒரு கூட்டத்தார் விலகிக் கொண்டார்கள்: மற்றொரு கூட்டத்தார் தாங்கள் நேரே தேர்தலில் நிற்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்து “காங்கிரசின் கெளரவத்தைக் காப்பாற்று கின்றோம்” என்று அபேட்சகர்களாக நிற்பதில் இருந்து விலகி இருக்கிறார்கள். மற்றொரு கூட்டத்தாரோ! காங்கிரஸ் அபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக்கொண்ட போதிலும் கூட காங்கிரஸ் கொள்கைகள் சில தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், அக்கொள்கைகளுக்கு மாறாகத் தாங்கள் நடக்க வேண்டி இருக்கிறதென்றும் சொல்லி கட்டுப்பாட்டிலிருந்து விலகி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாய் நடக்கத் தீர்மானித்து எதிர்ப்பு முறையில் ஒரு கட்சி ஏற்படுத்தி அதன் பெயரால் காங்கிரசோடு போட்டி போட முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு கூட்டமோ! காங்கிரசுவாதியாய் இருந்து காங்கிரசை அதரித்து வந்து தீவிர தேசியவாதி என்று சொல்லிக் கொண்டிருந்து காங்கிரசின் சில கொள்கைகள் பிடிக்காததினால் காங்கிரஸ்வாதி என்று சொல்லிக் கொள்ள இஷ்டமில்லாமல் தேசியவாதி என்னும் பெயரால் தனித்த ஹோதாவில் காங்கிரஸ் அபேட்சகர்களோடு போட்டி போட தேர்தலில் நிற்கிறார்கள்.
இவர்கள் தவிர ஆங்காங்கு காங்கிரஸ் கூட்டங்களில் அடிதடி கலகம், குழப்பம் ஆகியவை காங்கிரஸ்காரர்களுக்குள்ளாக நடந்தும் வருகிறது
இந்த நிலையில் தோழர் காந்தியார் காங்கிரசுக்காரர்கள் சிலரின். நடத்தை நாணையமானதாக இல்லையென்றும், அதற்காகப் பிராயச்சித்தம் செய்து கொள்வதாய் ஒரு தடவைக்கு மேல் பட்டினி இருந்தும், தனக்கு
திருப்தி ஏற்படாமல் இப்போது தானே காங்கிரசிலிருந்தே விலகி தனிப்பட்ட முறையில் வேறு வழியில் தொண்டாற்றப் போவதாய் யோசனை செய்து கொண்டிருப்பதாகவும், எப்படியாவது அவரை இந்திய
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ 2
சட்டசபைத் தேர்தல் வரை இருக்கும்படி பலர் கேட்டுக் கொள்வதாகவும் குறைந்த அளவு பம்பாய் காங்கிரஸ் வரையிலாவது இருக்க வேண்டும் என்று சிலர் கேட்டுக் கொள்வதாகவும், அதற்கும் கூட காந்தியார் சம்மதம் கொடுக்கவில்லை என்றும் பத்திரிகைகளில் உண்மையான செய்திகள் பறக்கின்றன. இவைகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்த போதிலும் காங்கிரசுக்காரர்கள் இப்போது எதற்காக இந்திய சட்ட சபைக்குச் செல்லுகிறார்கள் என்பது மாத்திரம் இன்னமும் சரியான முறையில் வெளியாகவே இல்லை.
காங்கிரஸ்காரர்கள் தோழர் தாஸ், நேரு உள்பட முன்பு ஒரு முறை இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு தக்க ஆதரவுகள் இருந்தும் ஒரு காரியமும் செய்யமுடியவில்லை என்று சொல்லிக் கொண்டு எழுந்து வந்து விட்டது யாவருக்கும் தெரியும்.
அன்று முதல் இன்று வரை சட்டசபை சம்மந்தமாக சர்க்காரில் எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை என்பதோடு காங்கிரஸ்காரர்களும் சட்டசபையில் போய் செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிய கொள்கைகளில் எவ்வித மாற்றமும் செய்து கொள்ளவும் இல்லை.
தேசத்தின் நிலைமையும் அன்று இருந்த நிலைமையை விட தேச மக்களின் உணர்ச்சியும் சுதந்திரமும் பிற்போக்கடைந்து ஒத்துழையாமை இயக்கம் இந்தியாவில் ஏற்படுவதற்கு முன் என்ன நிலையில் இருந்ததோ அதைவிட பிற்போக்காகவும் இருப்பதோடு அரசாங்கமும் ஒத்துழையாமை இயக்கம் தோன்றுவதற்கு மூன் எந்த நிலையில் இருந்ததோ அதைவிட ஆதிக்கத்தில் முற்போக்காகவும், எதேச்சாதிகாரமாகவும் தான் இருந்து வருகின்றது என்றுதான் சொல்லியாக வேண்டும். உதாரணமாக இந்திய ஸ்தல ஸ்தாபன சுயாட்சியின் பெருமையும், சுயமரியாதையும், சுதந்திரமும் பெரும்பாகம் பிடுங்கப்பட்டுப் போய் விட்டது. மனித சுதந்திரத்துக்கும், சுயமரியாதைக்கும் பொருந்தாத சட்டங்கள் அடக்குமுறைகள் நாளுக்கு நாள் துடர் வட்டியுடன் பெருகிக் கொண்டு வருகின்றன.
ஒத்துழையாமைக்குப் பின் அநேக விஷயங்களில் ஏழைகளுக்கு 100க்கு 25,30 பங்கு வரிகளும், சில விஷயங்களில் 100க்கு 100 பங்கு வீதம் வரிகளும் உயர்ந்திருக்கிறது
சுருக்கமாகவும், பொதுவாகவும் சொல்ல வேண்டுமானால் இந்த 15 வருஷத்திய வேலையின் பயனால் தேசம் 30 வருஷத்துக்கு மூன் இருந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டதே ஒழிய கடுகளவும் முற்போக்கடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
இந்த நிலையில் காங்கிரஸ் இந்திய சட்டசபைக்குப் போய் செய்யக் கூடிய காரியமென்ன? என்பதை திரும்பவும் கேட் கின்றோம்
83 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்திய மக்களிடம் காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் கவலையும், ஜீவகாருண்யமும் நமக்கு இல்லையென்று யாரும் சொல்லும்படியாக நாம் ஒரு போதும் நடந்து கொண்டதில்லை என்கின்ற தைரியத்தின் மீதுதான் காங்கிரஸ் சட்டசபைக்குப் போய் மற்றவர்கள் செய்யக் கூடாத காரியம் என்ன செய்யக் கூடும் என்று கேட்கின்றோம்
காங்கிரசுக்கு ஏதோ அபார சக்தி இருக்கின்றது என்பதாக (மூட நம்பிக்கை முறையில்- நம்பித்தான் ஆக வேண்டும் என்கின்ற தத்துவத்தில்) நம்பிக் கொண்டே சில விஷயங்களைக் கவனிக்க வேண்டுகிறோம் இதை வாசகர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டுமாயும் கேட்டுக் கொள்ளுகிறோம் அதாவது முதலாவதாக காங்கிரசுக்காரர்கள் சட்டசபையில் மெஜாரட்டியாக இருக்க முடியுமா என்று பார்ப்போம்.
சட்டசபை ஸ்தானங்கன் விபரம்
இந்திய சட்டசபைக்கு மொத்த ஸ்தானங்கள் 144
இவற்றுள் நாமினேஷன் (சர்க்காரால் நியமிக்கப்படுவது) 40 ஸ்தானங்கள்.
மிகுதியுள்ள 104 ஸ்தானங்களில் மகமதியர்களுக்கு 30 ஸ்தானங்கள், ஐரோப்பியர்களுக்கு 8, வியாபாரிகளுக்கு 4, நிலச்சுவான் ஜமின்தாரர்களுக்கு 7, சீக்கியர்களுக்கு 2 ஆக 51 ஸ்தானங்கள் போக
மீதி உள்ளது 53 ஸ்தானங்கள்தான்.
இந்த 53 ஸ்தானங்கள்தான் பொது தேர்தலுக்கு விடப்பட்டிருக்கின்றன. இந்த 53 ஸ்தானங்களும்
மதராசுக்கு 10
பம்பாய்க்கு வங்காளத்துக்கு
உலக லல ஓவ
ஐக்கிய மாகாணத்துக்கு
பஞ்சாபுக்கு
பீஹார் ஒரிசாவுக்கு
மத்திய மாகாணத்துக்கு
அஸ்ஸாமுக்கு
டில்லிக்கு
பர்மாவுக்கு
அஜ்மீருக்கு
என்று மாகாண வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௨௨ ய
இந்த நிலையில் காங்கிரஸ்காரர்கள் இந்த 53-ல் பகுதியாவது கைப்பற்ற முடியுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம் ஏனெனில் மிதவாதிகள், ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள், சுதந்திரவாதிகள், தேசியவாதிகள், வருணாச்சிரமவாதிகள், மாளவியா ககஷிக்காரர்கள் முதலாகிய ககஷிக்காரர்கள் எத்தனையோ பேர்கள் காங்கிரசுடன் போட்டி போடுகிறார்கள். மற்றும் ஒதுக்கி வைத்த ஸ்தானங்களில் காங்கிரசுக்கு ஒன்று இரண்டு கிடைக்கும் என்று கூட நம்ப முடியாது என்பதோடு நாமினேஷன் ஸ்தானங்களில் ஒன்று கூட எதிர்பார்ப்பது கவர்ன்மெண்டை நாம் சுத்த முட்டாள் என்று கருதுவதற்கே ஒப்பாகும்.
இந்த நிலையில் காங்கிரஸ்காரர்கள் ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்து ஸ்தானமாவது பெறுவார்களேயானால் அதுவும் “அமாவாசை அன்றைய தினம் பூரண சந்திரனைப் பார்த்தேன்” என்று சொல்லக் கூடிய நிலையில் தான் இருக்கும்
இப்படிப்பட்ட இந்த நிலை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாது என்று எந்த மூடனும் நம்ப முடியாது. அப்படி இருக்கும் போது காங்கிரஸ் இந்திய சட்டசபையைக் கைப்பற்றி சர்க்காருக்கு புத்தி கற்பிக்கப் போகிறது என்பதும், சர்க்கார் பெரிதா, காந்தீயம் பெரிதா என்பதை உலகத்துக்கு மெய்பிக்கப் போகின்றது என்பதும், சர்க்காருக்கும், காங்கிரசுக்கும் போர் நடக்கின்றது என்பதும், சட்டசபை மூலம் சர்க்காரை அடக்கி விடலாம் என்பதும், வெள்ளை அறிக்கையை விரட்டி அடிக்கப் போகிறோம் என்பதுமான விஷயங்கள் தமிழில் சொன்னால் பிள்ளைத் தமிழ் என்றும், இங்கிலீஷில் சொன்னால் பிள்ளை இங்கிலீஷ் என்றுந்தான் சொல்ல வேண்டியதேயல்லாமல் இவற்றில் ஏதாவது அனுபவம் வாய்ந்த அல்லது உண்மை பேசுகின்ற மக்களின் உரை என்று சொல்லத்தக்க வார்த்தை ஒன்றாவது இருக்கின்றதா என்று கேட்கிறோம்
லார்ட் வில்லிங்டன் துரையின் ஆட்சி ஆயுள் “அனுமாருக்கு வால் வளர்ந்தது” என்பது போல் வளர்ந்து கொண்டே போகின்றது அவருடைய தந்திரமும் மனப்பான்மையும் காங்கிரசுக்காரருடைய தந்திரத்துக்கும் மனப்பான்மைக்கும் சற்றும் குறைந்தது என்று சொல்லிவிட முடியாது
காந்தியாரைக் காங்கிரசிலிருந்து மாத்திரமல்ல, பொது வாழ்விலிருந்தே விலக்கி இமயமலைக்கு தபசுக்கு அனுப்புகின்ற வரை வில்லிங்டனார். தூங்கப் போவதில்லை என்பது அவருடைய வீர முழக்கங்களிலிருந்து குருடனும், செவிடனும் கூட உணரலாம்.
விஷயங்கள் இப்படி இருக்க, சென்னை மாகாணத்தில் தோழர்கள் ஷண்முகம் மீதும், வரதராஜுலு மீதும் இரண்டொரு பார்ப்பனர்களுக்கும்,
85 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அவர்களது பக்தர்களுக்கும் உள்ள ஆத்திரத்தை யும் பொறாமையையும் காட்ட இந்த மாதிரியான வேஷமெல்லாம் போட்டால் காரியம் கைகூடுமா என்று கேட்கின்றோம்.
நம்நாட்டுப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும் அதன் பயனையும் யாராவது இந்த 15 வருஷ காலமாகக் கவனித்து வந்திருப்பார்களானால் பார்ப்பனர்கள் ஒவ்வொரு துறையிலும் தோல்வி அடைந்து வந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பார்ப்பனர்கள் தற்கால சாந்திக்கு ஏதோ தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கின்றார்களே தவிர, நிரந்தர நன்மை ஏற்படும்படி புத்திசாலித்தனமாய் நடந்துகொள்ளத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
இன்னமும் சொல்லுகின்றோம், தோழர் ராஜகோபாலாச்சாரியார். போன்ற உண்மையான தியாகிகளும், பாமர மக்களை ஏமாற்றிக் காரியம் கொண்டு போகத்தக்க மாதிரியில் எழுதுவதும் பேசுவதுமாய்த் தான் இருக்கிறார்களே தவிர அறிவாளிகளை ஏமாற்றும் நிலையில் ஒரு காரியமும் செய்யத் தெரியவில்லையென்றுதான் சொல்லுவோம்
பாமர மக்களை ஏமாற்றும் தந்திரம் எப்போதுமே பயனளிக்காது என்பதை நாம் நன்றாய் அனுபவத்தில் அறிந்து விட்டோம். அது வட்டியுடன் கெடுதியைத் தான் கொடுத்துத் தீரும் உதாரணமாக, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்கின்ற உணர்ச்சி
நம் போன்றவர்களுக்கு ஏற்பட்ட காலத்தில் அதற்கு ஏதாவது ஒரு வழி செய்திருப்பார்களானால் இன்று இந்தியாவில் காங்கிரசு தவிர வேறு ஒரு ஸ்தாபனமும் ஏற்பட்டிருக்காது என்பதுடன் இந்திய மக்கள் எல்லோரும் காங்கிரசில் சேராமல் இருப்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்றும் நாம் கருதுகிறோம். மகமதியர், கிறிஸ்தவர்கள், பறையர், பள்ளர், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் முதலிய பிரிவினைகள்
பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் காணமுடியாததாய் இருக்கும் என்று கூடச் சொல்லுவோம்.
ஜாதி உள்ளவரை மதம் உள்ளவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அழித்து விடலாம் என்று சொல்லுவது காந்தியாரை மகாத்மா என்று சொல்வது போல்தான் முடியும். ஜாதி மத பேதங்களை அழித்து மக்களை
ஒன்றுபடுத்துவதுதான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை அழிப்பதாகும் அப்படிக்கில்லாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொன்னவுடன் அது தேசத்துரோகம், சர்க்கார் குலாம்... என்றெல்லாம் பேசி அடக்கப் பார்த்ததின் பயன் இன்று “சர்வம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ மயம் ஜெகத்” என்று சொல்லும்படியாக ஏற்பட்டுவிட்டது.
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) ௦
இந்த நிலைக்கு தோழர் காந்தியாரே காரணம் என்பதோடு அந்த விளக்குக்கு எண்ணையாய் இருந்தவர் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்றே சொல்லுவோம்.
இன்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் காங்கிரசுக்காரர் அதாவது ராஜகோபாலாச்சாரியார் ஒப்புக் கொள்ளுவாரானால் ஜஸ்டிஸ் ககஷியோ, முஸ்லீம் லீக்கோ, மாளவியா கவியோ ஆகிய ஏதாவது ஒரு கக்ஷிக்கு இந்தியாவில் பாம்புக்கு பயந்தாவது ஒண்ட இடம் கிடைக்குமா என்று கேட்கின்றோம்.
தோழர்கள் ஷண்முகம், வரதராஜுலு போன்றவர்கள் கூட காங்கிரசை விட்டு வெளியில் இருக்க முடியுமா என்று கேட்கின்றோம் ஆகவே தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சமீபத்தில் நடக்கப் போகும் பம்பாய் காங்கிரசிலும், கோவை கான்பரன்சிலும் இதற்கு ஒரு வழி செய்து விடுவார்களேயானால் இந்தியர்களுக்குள் பிரிவினையோ அரசியல் சமுதாய விஷயங்களில் அபிப்பிராய பேதமோ காணுவதற்கில்லாமல் ஒரு கொடியின் கீழ் இந்திய மக்கள் எல்லோரையும் காணலாம் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்
அப்படிக்கு இல்லாமல் இப்பொழுது நடக்கின்ற விஷயமே நடக்கட்டும் பார்ப்போம் என்று சொல்லப்படுமானால் செக்குமாடு சுற்றுவது போல் 10 வருடத்துக்கு ஒரு முறை பழய இடத்துக்கே அதாவது எங்கு தவறு செய்தோமோ அந்த இடத்திற்கே தான் திரும்பவும் திரும்பவும் வந்துகொண்டே இருக்கவேண்டுமே ஒழிய வேறு எவ்வித பலனையும் காணமுடியாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 16.09.1934
87 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இரணியன் நாடகத்தில்
தோழர் ஈ.வெ.ரா.
தோழர்களே!
சென்னை சீர்திருத்த நாடக சங்கத்தாரால் நடிக்கப்பட்ட இந்த முதல் நாடகத்துக்குத் தலைமை வகிக்கும் பெருமை எனக்களித்ததற்கு
நன்றி செலுத்துகிறேன்.
நாடகம் என்பது ஒரு விஷயத்தை தத்ரூபமாய் நடித்துக் காட்டுவது என்பதோடு, அதைப் பெரிதும் மக்களின் நடத்தைக்கு வழி காட்டியாகவும், ஒழுக்கங்கள் கற்பிக்கப்படுவதற்கும் பயன் படுத்தப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது
ஆனால் அது அந்தப்படி தத்ரூபமாய் நடத்திக் காட்டப்படுவதும் இல்லை. மக்கள் ஒழுக்கத்துக்கும், நடப்புக்கும் வழிகாட்டியாய் நடப்பிப்பதும் இல்லை என்று சொல்லுவதற்கு நாடக அபிமானிகள் மன்னிக்க வேண்டுகிறேன்.
தத்ரூபம் என்பதில் விஷயங்களின் ரசபாவங்களும், உண்மை
யாய் நடந்திருக்கும் என்று நினைக்கும்படியான எண்ணமும் ஜனங்களுக்கு விளங்க வேண்டும்.
அந்தப்படி இல்லாமல் நமது நாடகங்கள் பெரிதும் சங்கீதக் கச்சேரி போலவும், காலக்ஷப சபை போலவும், விகட சபை போலவும், நகைகள் உடுப்புகள் காக்ஷி சாலைகள் போலவும், விஷயங்களுக்குப் பொருத்தமில்லாத பேச்சுக்களை அடுக்கி பேசும் பேச்சுவாத சபை போலவும் விளங்குகின்றது என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது நாடகங்களுக்கு நடிப்புகளில் மிக விஷேச சமயங்களில் அல்லது அசல். விஷயத்திலேயே பாட்டு வரும் சந்தர்ப்பங்களில் தவிர மற்ற சமயங்களில் பாட்டுகள் பொருத்தமற்றது என்பது நமது அபிப்பிராயம். உதாரணமாக நெருப்பு பிடித்துவிட்ட சமயத்தைக் காட்ட நடிக்க வேண்டியவர் தடபுடலாய் ஆத்திரப்பட்டு குளருபடியாய் இருப்பது போல் நடிக்க வேண்டுமா? அல்லது தாளம், சுதி, ராகம் முதலியவை களைக் கவனித்து சங்கீத லட்சியத்தில் திரும்பி ஜனங்களுடைய கவனத்தையும் சங்கீதத்தில் திரும்ப விட்டு விட்டால் நடிப்பு சரியானதாக
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 88
இருக்க முடியுமா என்று கேட்கின்றேன். அதுபோலவே நடிப்புக்குப் பொருத்தமற்ற உடை, நடை, நகை முதலியவைகளுடன் விளங்கினால் விஷயம் நடந்ததாகத் தத்ரூபமாய் கருதப்பட முடியுமா?
மேல்நாடுகளில் ரசபாவங்களுக்காகவும் தத்ரூபமாய் நடந்ததாகக் காட்டப்படும் நடப்புக்காகவும் நடத்தப்படும் ட்றாமாக்களில் பாட்டு என்பதே மிக மிக அருமையாய்த்தான் இருக்கும். சங்கீதத்துக்காக நடக்கும் விஷயத்தை அங்கு ஆப்ரா என்று சொல்லப்படுமே தவிர, ட்றாமா என்று சொல்லமாட்டார்கள். இங்கு சங்கீத வித்வான்௧ளே நாடக மேடையைக் கைப்பற்றிக் கொண்டதானது நாடகக் கலையைச் சங்கீதம் அழித்துவிட்டது என்றும், மக்களது நாடகாபிமானமும் சங்கீதத்தில். திருப்பப்பட்டு விட்டது என்றும் தான் கருத வேண்டும்
நாடகம் நடிக்கப்படும் கதைகள். விஷயமும் தற்கால உணர்ச்சிக்கும், தேவைக்கும், சீர்திருத்த முறைக்கும் ஏற்றதாயில்லாமல் பழமையைப் பிரசாரம் செய்யவும், மூடநம்பிக்கை, வர்ணாச்சிரமம், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு, பெண் அடிமை, பணக்காரத் தன்மை முதலிய விஷயங்களைப் பலப்படுத்தவும், அவைகளைப் பாதுகாக்கவும் தான் நடிக்கப்படுகின்றதே ஒழிய வேறில்லை. அரிச்சந்திரன் கதை, நந்தனார் கதை முதலாகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அரிச்சந்திரன் கதையில் சத்தியம் பிரதானம் என்று சொல்லப்பட்டாலும் சத்திய அசத்திய விஷயம் நடக்காமல் கதையில் அலட்சியமாய் இருக்கிறது ஜாதி வித்தியாசம், தீண்டாமை, பெண் அடிமை, பார்ப்பன ஆதிக்கம், பணக்காரத் தன்மை, எஜமானத் தன்மை ஆகியவைகள் தான் தலைதூக்கி இருக்கிறது. அது போலவே நந்தன் கதையிலும், ஆள் நெருப்பில் விழுந்து வெந்து போனதுதான் மிளிர்கின்றதே தவிர, உயிருடன் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக இல்லவே இல்லை. ராமாயணமும் கீதையை படுத்தின. பாடு பெண் ஒரு சொத்து போல் பாவிக்கப்படுகிறதும் விளங்கும்
இப்படிப்பட்ட கதைகள் ஒழிக்கப்பட வேண்டும். சுயமரியா தையும், சீர்திருத்த வேட்கையுமுள்ளவர்கள் அதை நடிக்கக் கூடாது இரணியன் கதையில் வீர ரசம், சூட்சித்திரம், சுயமரியாதை ஆகியவைகள் விளங்கினதோடு பகுத்தறிவுக்கு நல்ல உணவாகவும்
இருந்தது. ஆனால் சில விஷயங்களில் தலைகீழ் மாறுதலாகவும், கடின. வார்த்தையாகவும் காணலாம். சீர்திருத்த நாடகம் என்றாலே மாறுதல் இருந்துதான் தீரும். மாறுதலுக்கு அவசியமானதும் பதிலுக்கு பதிலானதுமான வார்த்தைகள் இருந்தால்தான் பழமை மாற சந்தர்ப்பம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக்காது. ஆரியப் புராணங்களில் ஆரியர்களல்லாதவர்களை, குரங்கு, அசுரன், ராக்ஷதன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில்
89 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில். அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகம் தான்.
நிற்க இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார். இன்னமும் இதுபோல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்கு கற்பித்த தஞ்சை தோழர் டி.என். நடறாஜன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது. அவர் 20 வருஷமாய் பொதுநலச் சேவையில் இருந்து வருகிறவர். ஜெயிலுக்கும் சென்றவர். அவர்கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களைச் சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன்.
நாடகத்துக்கு உதவி செய்த தோழர்கள் சி.டி.நாயகம், எஸ்.எஸ்.ஆனந்தம், அழகப்பா முதலியவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். சிறப்பாக தோழர் மாசிலாமணி முதலியவர்கள் இந்நாடகத்துக்கு விளம்பரம், அச்சுவேலை, காகிதம் முதலிய விஷயங்களில் திரேகப் பிரயாசை, பொருள் செலவு முதலியவைகள் செய்ததுடன் இவ்வளவு சிறப்புக்குக் காரணமாய் இருந்ததாகவும் கேட்டு மிகவும் மகிழ்வதோடும் அவரையும் பாராட்டி நன்றி செலுத்துகிறேன்.
இந்த புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கெளரவித்ததற்கும், நாடக பாத்திரர்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி செலுத்துகிறேன்.
குறிப்பு: சென்னை சீர்திருத்த நாடக சபையார் 09.09.1934 மாலை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடித்துக் காட்டிய நாடகத்தின். இடையில் சீர்திருத்த நாடகத்தின் தேவை குறித்து பேசியது.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 16.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௦0
சுயமரியாதைத் திருமணங்கள்
பெளனாம்பான் - அழகப்பா திருமணம்
தோழர்களே! இன்று மணமகனாக வீற்றிருக்கும் எம்.கே. அழகப்பா “நாட்டுக்கோட்டை செட்டிமார்” வம்சத்தைச் சேர்ந்தவர். மணமகள் பெளனாம்பாள் “வேளாள வம்சத்தைச் சார்ந்தவர். இந்த மணம் புரோகிதச்சடங்கு முதலிய அனாச்சார வழக்கங்களின்றி நடைபெறுகிறது மணமக்கள் இருவரும் தாங்களே மனமொத்து மண ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்தது பாராட்டத்தக்கது. வைதீகர்கள் பழைய
சாஸ்திரத்தை அனுசரித்து அறிவுக்கும், ஞாயத்திற்கும் பொருந்தாத முறையில் நூற்றுக்கு 90 கல்யாணங்களைச் செய்து விடுகின்றனர். அது கடைசியில் யாதொரு பிரயோஜனத்தையும் அளிக்காமல் கஷ்டத்தையே விளைவிக்கின்றது. யெப்படியாவது கல்யாணம் ஆனால் போதுமென்று முயர்ச்சிக்கின்றனர். தாங்களே தங்களுக்கு இஷ்டமானவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள மணமக்களுக்கு சுதந்தரம் கிடையாது. பெண்: கொள்வதை சந்தையில் மாடுவாங்குவதாக நினைத்து செய்து விடுகின்றனர். பொருத்தம் பார்ப்பதில் மணமக்களுக்கு இருக்க வேண்டிய மனப் பொருத்தம் பார்க்கப் படுவதில்லை.
வழியே போகும் ஒரு பார்ப்பானையோ, வள்ளுவனையோ கூப்பிட்டுப் பொருத்தம் பார்க்கச் சொல்லி மணத்தை நடத்தி
விடுகின்றனர். மாப்பிள்ளை 7% அடியும் பெண் 2% அடியுமாக இருந்தாலும் பரவாயில்லை பார்ப்பான் சொல்லிவிட்டால் போதும் போன உடனேயே அறுத்துவிட்டு வந்து விட்டால் தலைவிதியென்று சொல்லிவிடுவார்கள். பெண்களும் அவ்வாறே நினைத்துக் கொண்டு முக்கி முணகி மூலையில் கிடக்க வேண்டியது தான். இந்த அனியாயத்தை பொருத்துக் கொண்டிருக்கக் கூடாது. கூடிய சீக்கிரம் பகுத்தறிவு பெற்று விவாக தம்பதிகளான அழகப்பா பெளனாம்பாளைப் பின்பற்றி நடப்பீர்களாக
குறிப்பு: 16.09.1934 திருச்சி தமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்கத்தின் அகரவில் பெளணாம்பாள்- அழகப்பாதிருமணத்திற்கு தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவு,
பகுத்தறிவு - சொற்பொழிவு - 23.09.1934
91 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
விஷமத்துக்கு விஷமமா? அல்லது உண்மையா?
திருச்சி “நகர தூதன் பத்திரிக்கையில் தோழர் அவனாசிலிங்கம் நிற்கவில்லை என்கின்ற தலைப்பின் கீழ் “கோயமுத்தூர், சேலம், வடாற்காடு ஜில்லாக்களின் இந்திய சட்டசபைத் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பாக அபேட்சகராய் நிறுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தோழர். அவனாசிலிங்கம் செட்டியார் கடைசிவரை அபேக்ஷகராய் நிற்க மாட்டாராம். காங்கிரசின் பெயரால் தோழர் அவனாகிலிங்கம் செட்டியாரை முன் நிறுத்தி அத்தொகுதியைப் பண்படுத்தி முடிந்ததும் கடைசியில் இருக்கக் கூடிய நிலைமையை அனுசரித்து இறுதியாகத் தோழர் இராஜகோபாலாச்சாரியாரே அதில் அபேட்சகராக நின்றுவிட ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து தெரியவருகிறது" என்று ஒரு சிறு குறிப்புக் காணப்படுகிறது
பொய்க்கு பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம் செய்யத் தகுதி உள்ளவனுக்குத்தான் உலகில் இடமுண்டு” என்கின்ற ஒரு ஆப்த வாக்கியம் உண்டு.
நகர தூதனில் காணப்படும் இந்தக் குறிப்பானது நகர தூதனுக்கு
நம்பத் தகுந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் இருக்கலாம் என்றாலும் அந்த நம்பத் தகுந்த இடத்துக்கு, நம்பத்தகுந்த இடத்திலிருந்து வந்தது உண்மையாயிருக்குமா அல்லது மேல்கண்ட ஆப்த வாக்கியத்தை ஒட்டியதாக இருக்குமா என்பதை உறுதி கூற நம்மால் முடியவில்லை. ஆகவே தோழர் அவனாசிலிங்கம் அவர்கள் நிற்கப் போவதில்லை என்பது உண்மையாயிருந்தாலும் இருக்கலாம். அல்லது ''பொய்க்குப் பொய், கோளுக்குக் கோள், விஷமத்துக்கு விஷமம்” என்கின்ற மனுதர்ம சாஸ்திரத்தை அனுசரித்து இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.
பகுத்தறிவு - செய்தி விளக்கக் குறிப்பு - 23.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ ௦
சென்னை (S.LLF) பார்ப்பணரல்லாதார் மகாநாட்டுக்கு தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் அனுப்பியிருக்கும் தீர்மானங்கள்
இம்மாதக் கடைசியில் சென்னையில் நடக்கும் தென்னிந்திய நலவுரிமைச்சங்க மகாநாட்டிற்கு தோழர் ஈ.வெ. ராமாசாமி அவர்கள் குறைந்தபட்ச வேலைத்திட்டம் எனக் கருதிக் கொண்டு ஒரு வேலைத்திட்டத்தை அம்மகாநாட்டு வரவேற்புக் கமிட்டிக்கு ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பியிருக்கிறார்.
அது முதலாவது விஷயாலோசனைக் கமிட்டிக்கு வைக்கப்படுமா என்னும் விஷயத்திலேயே தைரியம் கொள்ளுவதற்கில்லை என்றால், இந்நிலையில் அது அக்கூட்டத்தாரால் ஒப்புக் கொள்ளப்படுமா என்னும் விஷயத்தில் என்ன அபிப்பிராயம் கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.
அக்கட்சிக்குத் தலைவரான பொப்பிலி ராஜா அவர்கள் ஒரு பெரிய ஜமீன்தார், ராஜகுமாரர், மிக்க செல்வவந்தர் என்றாலும் கூட, அவரைப் பொருத்தவரையில் அவ்வேலைத்திட்ட விஷயத்தில் பெருத்த ஆக்ஷேபனை இருப்பதாகச் சொல்ல முடியாது. அவரது மனப்பான்மை சமதர்மத்தைத் தழுவினதேயாகும். ஆனால் அவரது பழக்க வழக்கம்,
பிரபுத் தன்மையில் ஈடுபட்டு வந்திருப்பதால் திடீரென்று பெருத்த மாறுதலை எதிர்பார்க்க முடியாது என்றாலும், அவரது வாழ்வு சமதர்மத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அவர் இக்கட்சியால் எவ்வித லாபமும் அடைய ஆசைப்படவில்லை. கட்சிக்காக இதுவரையில்: பெருத்த நஷ்டத்தையும் பல அசெளகரியங்களையும் அடைந்திருக்கிறார்.
ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறவனுக்கு மரக்கிளை அகப்பட்டது போல் அக்கட்சி ஒழிந்து போகும் சமயத்தில் பொப்பிலி ராஜா அவர்கள் அக்கட்சிக்குக் கிடைத்தார் என்று தான் சொல்ல வேண்டும். அக்கட்சியின் மற்ற பிரமுகர்கள் இத் தீர்மானங்களைக் கேட்டதும், பார்த்ததும் காதையும், கண்ணையும் பெ க் கொள்ளுவார்களோ
93 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
என்று பயப்படுகின்றோம். ஆனாலும் நமது கடமையைச் செய்து பார்த்துவிட வேண்டும் என்கின்ற தன்மையில் அனுப்பியிருக்கிறோம்
ஆனால் மற்றபடி பார்ப்பனரல்லாதாருக்காக என்று உழைத்து வந்து பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைந்து வந்திருக்கும் அக்கட்சியில் உள்ள தியாகிகள் பலர் இத் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பொது மக்களில் பெரும்பான்மையோர் இத் தீர்மானத்துக்கு ஆதரவாயிருந்தாலும் கட்சிப் பிரமுகர்களின் “ஆத்ம” பலத்தின் மூன் இந்த ஆதரவு எந்நிலை அடையுமோ தெரியாது ஆகையால் பொறுத்திருந்து பார்ப்போம்
வேலைத் திட்டமாவது
1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்த தன்மையைக் கெடுக்கக் கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும்,
இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிகமிக தாங்க முடியாததாகவும் இருப்பதால் அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும், மீத்துப் பெருக்கி வைப்பதற்கு லாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும் பொதுஜன தேவைக்கும் செளகரியத்துக்கும் நன்மைக்கும் அவசிய மென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற் சாலைகள், இயந்திர சாலைகள், போக்குவரவு சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படி செய்ய வேண்டும்
ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள். ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப்பதுடன் இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்
குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் குறிப்பிட்ட ஒரு அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழியும்படியாகவும், ஒரு அளவுக்கு உத்தியோகங்கள் எல்லா ஜாதி மதக்காரர்களுக்கும் சரிசமமாய் இருக்கும்படிக்கும் உடனே ஏற்பாடுகள் செய்வதுடன் இவை நடந்து வருகின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்து, தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨௨ 04
மதங்கள் என்பவைகள் எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படி செய்வதுடன், அரசியலில் - அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்மந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாடுவதோ ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை
கண்டிப்பாய் இருக்கக் கூடாது கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ, அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ, வரிப்பளுவே இல்லாமலும் மனித வாழ்க்கைக்கு சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக்கும் வருமானவரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்தப்படவேண்டும்
லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாபிரேட்டிவ் இலாகா ஆகியவைகளுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிர்வாகம் செய்ய வசதிகள் செய்து தக்க பொருப்பும், நாணையமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை
நிர்வாகம் செய்யச் செய்ய வேண்டும்
விவகாரங்களையும் சட்ட சிக்கல்களையும் குறைப்பதுடன் சாவு வரி விதிக்கப்படவேண்டும்
மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டு வரக்கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள். செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்
10
பகுத்தறிவு - அறிக்கை - 23.09.1934
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19.
95
காங்கிரசை விட்டு காந்தியார் விலகுகிறாராம்
வழ வழா அறிக்கை
தோழர் காந்தி அவர்கள் “காங்கிரசை விட்டு நான் விலகப் போவதாக ஏற்பட்ட செய்தி உண்மைதான்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட அறிக்கை விடுத்திருக்கிறார்.
அதில் அவர் “என் இஷ்டப்படி காங்கிரசுக்காரர்கள் நடக்க வில்லை.
காங்கிரஸ்காரர்கள் பலரிடத்தில் நாணையமில்லை.
என் கொள்கையில் நம்பிக்கை யில்லாமலே பல முக்கிய காங்கிரஸ்வாதிகள் என்னைப் பின்பற்றுவதாய் நடித்திருக்கிறார்கள்.
மற்றும் பலர் அஹிம்சையிலும் சத்தியத்திலும் நம்பிக்கை இல்லாமல் அது இருப்பது போல வேஷம் போடுகிறார்கள்.
அஹிம்சையையும், சத்தியத்தையும் தற்சமயத்துக்கு ஒரு வேலைத் திட்டமாய்க் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்கு அவை ஒரு வாழ்க்கைச் சாதனமாக இல்லை.
கதரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதரைக் கட்டிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். சிலர் சமயத்துக்குக் கட்டிக் கொள்ளுகிறார்களே தவிர உண்மையில் கட்டுவதில்லை
என்னை உபயோகித்துக் கொள்ளுகிறதற்காகவே என்னிடம் பக்தி விசுவாம் காட்டுகிறார்கள்.”
என்றெல்லாம் குறிப்புக் காட்டிவிட்டு “நான் சில தீர்மானங்களை வரப்போகும் காங்கிரசில் பிரேரேபித்துவிட்டு அவை ஒப்புக் கொள்ளப்படவில்லையானால் காட்டுக்குப் போய்விடுவேன்" என்று
சொல்லி அவ்வறிக்கையை முடித்திருக்கிறார்.
அத்தீர்மானங்களோ பழைய தீர்மானங்களே அல்லாமல் புதியது
ஒன்றும் இல்லை.
அதாவது:-
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) ௦
1. “சுயராஜ்யம்” பெற சட்டரீதியானதும் சமாதானமானதுமான வழியில் உழைக்க வேண்டும்” என்கின்ற வார்த்தைகளை மாற்றி “சத்தியமும், அஹிம்சையுமான' வழியில் உழைக்க வேண்டும்” என்கின்ற வார்த்தையைப் புகுத்த வேண்டும்.
2. காங்கிரசுக்குச் சந்தாவாக ஒவ்வொருவரும் 4 அணாவுக்குப் பதிலாக தாமே நூற்ற 8,000 அடி நூல் செலுத்த வேண்டும்.
3. 6 மாத காலம் காங்கிரஸ் அங்கத்தினராய் இருந்தவருக்கே ஓட்டுரிமை உண்டு.
4. “காங்கிரசுக்கு பிரதிநிதிகள் 1000 பேர்கள் தான் இருக்க வேண்டும்” என்பவைகளாகும்.
இவைகளில் புதிய கொள்கைகளோ, புதிய நோக்கமோ ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அஹிம்சை, சத்தியம் என்பது மோக்ஷ நரகம் என்பது போன்ற ஒரு கற்பனைச் சொல்லே தவிர விளக்கமான
அர்த்தம் உள்ள மூலச்சொல் அல்லவென்பதே நமது அபிப்பிராயம்.
உலகில் மனிதன் நிலைமைக்குத் தக்கபடி தன்னைச் சரிப்படுத்திக் கொள்வதுதான் இயற்கையே தவிர, இஷ்டத்துக்கும், செளகரியத்துக்கும் விரோதமாக நிர்ப்பந்தத்தில் வாழ்வது இயற்கையல்ல
இவ்வார்த்தைகள் கற்பு, ஒழுக்கம் என்னும் வார்த்தைகளால், வலுத்தவன், இளைத்தவனை ஏமாற்றி அடிமைப்படுத்தி அடக்கி ஆள்வதுபோல் அஹிம்சை, சத்தியம் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி, பாமர மக்களை ஏமாற்றி அடக்கி ஆளும் சூட்சியேயாகும்
சத்தியத்தைப் பேசவேண்டுமானால் அஹிம்சையோடு வாழ வேண்டுமானால் மார்க்ஸால், லெனினால் சிருஷ்டிக்கப்பட்ட உலக மக்களுக்கு ஒரு சமயம் சாத்தியமாய் இருக்கலாம். மற்றபடி “கடவுளாலோ'' காந்தீயத்தாலோ உண்டாக்கப்பட்ட உலகுக்கு சத்தியம், அஹிம்சை என்பது ஹம்பக்கே தவிர அந்த வார்த்தைகளிலும் பிரயோகத்திலும் கூட சத்தியம், அஹிம்சை என்பனவற்றின் வாடையே இல்லையென்று தூக்குமேடையில் இருந்து கூடச் சொல்ல முடியும்
கோவில் பிரவேசம் என்று கூப்பாடு போடுவது ஒரு எட்டில், மறு எட்டில் இப்போது தேசம் தயாராயில்லை, பெரும்பான்மை ஜனங்கள் அதற்கு அனுகூலமாயில்லை, ஆதலால் அதை நழுவ விட்டுவிட வேண்டுமென்பது, மறு எட்டில் என்றால் சத்தியம் எங்கே இருக்கிறது? மகாராஜாக்கள் அப்படியே இருக்க வேண்டும், ஏழைகள் செருப்புத் தைக்க வேண்டும், மாடு மேய்க்க வேண்டும், கல்லுடைக்க வேண்டும், கதர் நூற்க வேண்டும் என்றால் சத்தியம் அஹிம்சை எங்கே இருக்கிறது? எப்படி இருந்தாலும் இந்த பிரேரேபணை காங்கிரசில்
97 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
நிறைவேறித்தான் தீரும். ஏனென்றால் எவ்வளவு அயோக்கியனும் “சத்தியம்
கூடாது அஹிம்சை கூடாது என்று சொல்ல ஒருபோதும் முன்வரமாட்டான்.
இத்தீர்மானம் நிறைவேறிவிட்டால் சட்ட ரீதியும், அமைதியும் என்கின்ற வார்த்தைகள் என்ன கதியாவது என்பது நமக்கு விளங்கவில்லை.
சட்டரீதி அல்லாத - அமைதி அல்லாத காரியங்கள் சத்தியமான தாகவும் அஹிம்சையானதாகவும் இருந்தால் எதையும் செய்யலாமா என்று கேட்கின்றோம்
இத்தீர்மானம் நிறைவேறி விட்டதாகவே வைத்துக் கொள்ளு வோம். அப்போது அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்தவர்கள் எல்லாம் தோழர் சத்தியமூர்த்தி உட்பட சத்தியமாகவும், அஹிம்சை யாகவும் நடப்பார்கள் என்று தோழர் காந்தியார் நம்பிக் கொண்டு தான் மறுபடியும் காங்கிரசில் இருக்கப் போகிறாரா? என்று கேட்கின்றோம் இதுவரை நிறைவேறின அனேக தீர்மானங்கள் விஷயத்தில் முக்கிய காங்கிரஸ்வாதிகளும், மேன்மையான காங்கிரஸ்வாதிகளுமே கட்டுப்பட்டு உண்மையாய், நாணையமாய் நடக்கவில்லை என்று காந்தியாரே ஒப்புக்கொள்ளும்போது, இந்த தீர்மானங்கள் விஷயத்தில் மாத்திரம் இனிமேல் அவரது சிஷ்யர்களும், ஆதரவாளர்களும் மற்றும் 10 லக்ஷம்” காங்கிரஸ் மெம்பர்களும் உண்மையாய் நடந்து கொள்வார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறோம்.
இனிமேல் பொய்ச் சத்தியம் செய்வதில்லை என்று ஒருவன் புதுச் சத்தியம் செய்தால், அது பழய சத்தியத்தில் சேர்ந்தது அல்ல என்பதற்கு என்ன பரீகைஷ என்றும் கேட்கின்றோம்
நாட்டில் காங்கிரசுக்கு மரியாதை போய், காங்கிரசின் நாணையத்தில் ஜனங்களுக்கு சிறிதும் நம்பிக்கையற்று, காங்கிரசுக் காரர்களுக்கு மதிப்பே இல்லாமல் அதன் கொள்கைகளும், போக்கும் சிரிப்பாய்ச் சிரிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதை அறிந்து ஒரு புதிய கரணம் போட்டு அவற்றை மறுபடியும் நிலைநிறுத்தச் செய்யப்படும் தந்திரமே ஒழிய இதில் புதிய தத்துவமோ, அனுகூலமோ ஏதும் இருப்பதாகவோ, ஏற்படப்போவதாகவோ நம்மால் நம்ப முடியவில்லை.
கதர் தீர்மானத்தை எடுத்துக் கொண்ட போதிலும் இதுவும் பழைய கருப்பனே அல்லாமல் புதுச் சங்கதி என்ன இருக்கிறது என்று கேட்கின்றோம்
15ம் நெம்பர் நூல் 8000 அடி நீளம் தன் கையால் நூற்று மாதந்தோறும் கதர் டிப்போவுக்கு அனுப்ப வேண்டும் என்று 1924ம் வருஷத்திலேயே தீர்மானித்து இருக்கிறது. ஆதலால் இப்போதும் பம்பாய் காங்கிரசில் அது நிறைவேறி விடுவதில் அதிசயமில்லை. ஆனால் கைதூக்கினவர்கள் நூற்பார்களா? இது சாத்தியமா? இதனால்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௦
நாட்டுக்கு ஏதாவது பயன் உண்டா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். கோடிக்கணக்கான ரூபாய்கள் நூல் நூற்பதற்கும், கதருக்கும் பிரசாரத்தில் மாத்திரம் செலவாகிவிட்டது. அப்படி இருந்தும் ராட்டினம் கண்காட்சி சாலையில் மாத்திரம் பார்க்கலாம். அல்லது காட்டுமிராண்டிப் பருவமுள்ள மக்களிடத்தில் மாத்திரம் பார்க்கலாம் என்கின்ற நிலை வந்து கொண்டிருக்கின்றது. மாதம் 100, 150 ரூபாய் வீதம் கதர் இலாக்காவில் பணம் அடைகிறவர்கள் “பண்டாரச் சந்நிதியும், சங்கராச்சாரியும், விபூதி உருத்திராக்ஷம் தரித்திருப்பது போல்தான் ராட்டினம் சுற்ற வேண்டியதாய் இருக்கிறது” என்று சொல்லக்கூடிய நிலைக்கு நூல் நூற்கும் தன்மை வந்துவிட்டதென்றால், இந்தத் தீர்மானம் பாசாகித்தான் என்ன காரியம் சாதித்துவிட மூடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அப்படியே எல்லோரும் நூற்பதாய் இருந்தாலும் 34 கோடி பேருக்கும் கதர் துணி வேண்டுமானால் வேலைக்கு லாயக்குள்ள இந்திய மக்கள் எல்லோரும் எப்போதுமே நூற்றாலும் முடியாது என்றுதான் சொல்லுவோம்
மற்றும் காங்கிரசில் உள்ள ஊழல்கள், காங்கிரஸ்காரர்களிடத்தில் உள்ள நாணையக் குறைவுகள், அவர்களது சுயநலங்கள், சூழ்ச்சிகள், வஞ்சகங்கள் ஆகிய காரியங்களைக் காந்தியும் இன்றுதான் அறிந்தவர் போல் குறிப்பிடுவது நமக்கு எல்லாவற்றையும் விட ஆச்சரியமாய் இருக்கிறது. இதைப்பற்றி விவரிக்காமல் விட்டுவிடுவதே நலம் என்று கருதுகிறோம். கடைசியாக ஒன்று கேட்கின்றோம்.
அதாவது சத்தியம், அஹிம்சை, நூல்சந்தா, கதர், பிரதிநிதிகள் குறைப்பு ஆகியவைகள் பாசாகி அந்தப்படியே ஜனங்கள் நடக்கின்றார்கள் என்றே வைத்துக்கொண்டாலும், அதற்கு மேல் செய்கின்ற வேலை என்ன? என்பது நமக்கு விளங்கவில்லை.
தனது சுயராஜ்யத்துக்கு தனக்கே அர்த்தம் தெரியவில்லை என்று காந்தியார் சொல்லியாகிவிட்டது. மேலும் சத்தியாக்கிரகத்துக்காகவே உயிர் வாழ்வதாகவும், சத்திய சோதனைக்காகவே அரசியலில் நுழைந்ததாகவும் சொல்கிறார். இந்து மதமே உருவாரமாக வந்ததாகவும் அதற்காகவே மூச்சு விடுவதாகவும் சொல்லுகிறார். ஆனால் சத்தியம் எது? அசத்தியம் எது? சத்திய சோதனை என்றால் என்ன? என்பனவற்றை எங்கும் விளக்கி இருப்பதாகத் தெரியவில்லை:
சுயராஜ்யத்துக்கு எப்படி விளக்கம் கூற முடியவில்லையோ, அதுபோல்தான் இவைகளுக்கும் விளக்கம் கூறமுடியாதவைகளாய் போய்விட்டன. இதற்காக மக்கள் தியாகம் செய்யவேண்டும்; அடிபட வேண்டும், சிறை செல்ல வேண்டும், சட்டமறுப்பு செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசினால், இவை மக்களுக்கு புரிகின்றதா என்று
99 ———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கேட்கின்றோம். ஆகையால் காந்தியாரின் அறிக்கையானது வழ வழா கொழ கொழா என்று யாருக்கும் அருத்தமாகாத முறையில் எவ்வித
பிடியும் இல்லாத மாதிரியில் இருக்கின்றது என்பதோடு, காங்கிரசில் இருக்கும் பழைய ஆசாமிகளுக்கும் படித்த கூட்டத்தாருக்கும், பார்ப்பனர்களுக்கும் மாத்திரம் பயனளிக்கக் கூடியதாக இருக்கின்றதே ஒழிய வேறில்லை என்பதே நமது முடிவு
பகுத்தறிவு - தலையங்கம் - 23.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 100
ஷண்முகமும் ஓட்டவாவும்
தோழர் ஷண்முகம் அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பொறாமைப்பட்டு இந்த சுமார் இரண்டு வருஷ காலமாகச் செய்து வரும் விஷமப் பிரசாரத்திற்கு முக்கிய ஆஸ்பதமாய் கொண்டது ஒட்டவா ஒப்பந்தத்தில் தோழர் ஷண்முகம் கலந்திருந்தார் என்பதே.
இந்த ஒட்டவா ஒப்பந்தம் என்கின்ற ஓலமே 'கீழ்” முதல் “மேல்” வரையில் தங்களது விஷமத்தனத்துக்கும், இழி பிரசாரத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றாலும், அந்த ஒட்டவா ஓலம்தான். என்ன என்று பார்ப்போம்.
இழவு வீடுகளில் துக்கத்துக்குச் சிறிதும் சம்பந்தப்படாத பெண்கள். கூலிக்கு மார்பு வீங்கும்படி மாரடித்துக் கொண்டு புரளுவது போல் “ஒட்டவா விஷயம் என்றால் என்ன? அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்கின்ற விஷயங்களே தெரியாமல் ஒரே கூப்பாடாக
கத்திக் கொண்டு “ஒட்டவா வீரர்" “ஒட்டவா வீரர்” என்று எழுதி வருகின்றனர்.
ஒருவன் “எல்லா வகுப்பு மக்களுக்கும் சம சுதந்திரம் வேண்டுமென்று” கேட்டால் அவனை வகுப்புவாதி என்பதும், “உங்கள் சுயராஜ்யத்துக்கு அர்த்தமென்ன' என்று கேட்டால் அவனை தேசத்துரோகி என்பதும்,
ஜாதித் திமிர்களைப் பற்றி பேசினால் பிராமணத் துவேஷி என்பதும், தீண்டாமைக் கொடுமையைப் பற்றிப் பேசினால் மதத்துரோகி என்பதும் - எப்படி பார்ப்பனர்களுக்கும் அவர்களது கூலிகளுக்கும் உரிமையோ, அது போல் ஒருவன் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது
கூலிகளுக்கும் புரியாத காரியத்தையோ, அல்லது இவர்களது நன்மைக்கு விரோதமான காரியத்தையோ செய்துவிட்டால், அவனை ஒரே அடியாக சர்க்கார்தாசன் என்று கூப்பாடு போடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது.
தோழர் ஷண்முகம் அவர்களைச் சுமார் ஒன்றரை வருஷத்துக்கு முன்பு அதாவது அவர் சட்டசபை பிரசிடெண்ட் ஆவதற்கு முன்பு ஒட்டவா விஷயமாய் தங்களை நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களே பலர் கேட்டபோது, “நீங்கள் தயவு செய்து பொருளாதார விஷயமாய் A B C D கற்றுக் கொண்டு வந்து என்னிடம் பேசுங்கள்'' என்று சொன்னது யாவருக்கும் ஞாபகமிருக்கும். அவர்கள். அதற்குப் பொருளாதார பிரச்சினைப்படி யாதொரு பதிலும் சொல்லாமல்
191 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இருந்துவிட்டு, தட்டிப் பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன் என்பது போல் இப்போது மறுபடியும் ஒட்டவா ஒட்டவா என்று கூப்பாடு போடுகிறார்கள்
பொருளாதார விஷயத்தில் ஒட்டவாவைப் பற்றி மிக பரிதாபப்படும் காங்கிரஸ் பிரசாரகர்கள், எலக்ஷன் கூலிகள், பார்ப்பன சிஷ்யர்கள்,
தேசீயத் தலைவர்கள் என்பவர்களை யெல்லாம் விட ஒருபடி அதிகமாகத் தெரிந்தவரும், அதே தொழிலில் இருந்தவரும், இப்போதும் அதே வேலையில் இருப்பவருமான தோழர் வித்தியாசாகர பாண்டியா அவர்கள் தான் இந்திய சட்டசபையில் இருப்பதைவிட தோழர் ஷண்முகம் 'ஒட்டவா
வீரர் இருப்பது மேல் என்றும் அதிக நன்மை பயக்கும் என்றும் கருதி, தான் விலகிக் கொண்டு அவருக்கு இடம் கொடுத்துவிட்டார்.
வியாபார அரசர் என்று சொல்லப்படும் வியாபார நிபுணரும், கோடீஸ்வர வியாபாரியுமாகிய தோழர் ஜமால் மகம்மது சாயபு அவர்கள், தான் அந்த ஸ்தானத்தில் இருந்தும், மறுபடியும் தனக்கு அந்த ஸ்தானம் காலடியில் இருக்கக் கூடிய நிலைமை இருந்தும், தான் இருப்பதைவிட தோழர் ஷண்முகம் இருப்பதே வியாபாரத்தின் நன்மைக்கும், நாட்டின் நன்மைக்கும் பயன்படும் என்று கருதி தோழர் ஷண்முகம் அவர்களுக்கு விட்டுக் கொடுத்ததுடன் அவருக்கு ஆதரவும் கொடுத்து வருகிறார்.
நாணையமாற்று, பேங்கிங், ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆகிய துறைகளில் நிபுணர்களும் அதே தொழில்காரர்களும் ஆகியவர்களே தோழர் ஷண்முகத்துக்காக விட்டுக் கொடுத்துவிட்டு ஆதரவும் அளித்து வருகிறார்கள் என்றால், இந்தக் கூப்பாடு போடும் தற்குறி ஆசாமிகளுக்கு என்ன யோக்கியதை, என்ன அவசியம், என்ன ஞானம் என்பது நமக்கு விளங்கவில்லை.
இவைகள் எப்படியோ இருந்தாலும் தோழர் ஷண்முகம் அவர்கள். விருதுநகரில் இந்த ஒட்டவா கூப்பாடு வீரர்களுக்கு அளித்த பதிலை (மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருப்பதை) படித்துப் பார்க்கும்படி எல்லோரையும் கேட்டுக் கொள்ளுகிறோம். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது.
நான் வேறு தொகுதிக்கு போனதை ஒரு காரணமாக வைத்து, விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். ஆனாலும் நான் இந்த விஷமப் பிரசாரக்காரர்களுடன் பந்தயம் போடவே - அதாவது நான் செய்தது சரியா? தப்பா? என்பதை பாமர மக்களுக்கு மெய்ப்பித்துக் காட்டுவதற்காகவே - குடியானவர்கள் தொகுதியையும், இரண்டொரு ஜில்லா மாத்திரம் சம்மந்தப்பட்ட தொகுதியையும் விட்டு விட்டு, ஒட்டவா ஒப்பந்தத்தின் பயனை அனுபவிக்கும் வியாபாரிகள் தொகுதிக்கும் அதாவது 26 ஜில்லாக்காரரும் தெரிந்தெடுக்க வேண்டிய
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 29௨ 10
மாகாணத் தொகுதிக்கும் நின்று இருக்கிறேன். ஒட்டவா கூப்பாடு வீரர்கள் உண்மையானவர்களும் சக்தி உடையவர்களுமானால் ஒரு கை பார்க்கட்டும் என்று அறைகூவி அழைக்கிறார்.
இதற்கு இந்த வீரர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். என்று கேட்கின்றோம். “கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரிந்து போகும்” என்பது போலும் “பேச்சுப் பேச்சென்னும் பெரும் பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி” என்பது போலும் ஒட்டவா கூப்பாடு வீரர்களுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டதைக் காணலாம் தோழர் ஷண்முகம் அவர்கள் கோவை, சேலம், வட ஆற்காடு ஜில்லாக்களிலும் கூட உள்ள வர்த்தகத் தொகுதி மெம்பர்களிடம் 100க்கு 75 ஓட்டுகளுக்கு மேலாகவே வாங்கப் போகிறேன். இதற்கும் யார். வேண்டுமானாலும், ராஜகோபாலாச்சாரியார் உள்பட பந்தயங்கட்டி பார்க்கட்டும் என்றும் கர்ஜிக்கிறார். நிற்க,
மற்றொரு பந்தயம்
“நான் இந்த மேடையில் ஒரு பந்தயம் கூறுகிறேன். ஓட்டவா ஒப்பந்தம் எந்த வகையில் இந்தியாவுக்கு கெடுதி என்று தோழர் ராஜகோபாலாச்சாரியாராவது தோழர் சாமி வெங்கடாசலம் செட்டியாராவது புள்ளி விபரங்களுடன் (ஆதாரங்களுடன்) கூற முடியுமா என்று கேட்கின்றேன்” என்று கூறுகிறார். அதோடு மாத்திரமல்லாமல் ஒட்டவா ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நன்மைகளையும், லாபத்தையும் புள்ளி விபரத்தோடு எடுத்துக் கூறியும் இருக்கிறார்
மற்றும் “நான். மாத்திரமல்லாமல் இந்திய சட்டசபை பிரதிநிதிகளில் வியாபார அனுபவமுள்ளவர்கள் அடங்கிய கமிட்டியும் ஒட்டவா ஒப்பந்தத்தை பரிசீலனை செய்து அதை அங்கீரித்து இருக்கிறது” என்கின்றார். தோழர் இராஜகோபாலாச்சாரியாரும், அவர்களது சிஷ்யர்களும், கூலிகளும் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று கேட்கின்றோம்.
இந்த “நிபுணர்கள்” தோழர்கள் ஷண்முகத்தை விட, ஜமால் மகம்மதை விட, வித்தியாசாகர பாண்டியாவை விட, இந்திய சட்ட சபையில் இதற்கென்று நிலையாக உள்ள பிரதிநிதி கமிட்டியாரை விட எவ்வளவு தூரம் வியாபார அனுபவம், பொருளாதார சாஸ்திர விற்பத்தி, லாப நஷ்டம் அடைந்த சொந்த அனுபவத் திறமை கொண்டவர்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. காங்கிரஸ் தேசாபிமானம் என்னும் பெயரால் எதையும் சாதித்துவிடலாம் என்கின்ற அகம்பாவத்தையும், ஆணவத்தையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்கின்ற ஆவலே நம்மை இவற்றை யெல்லாம் பற்றி கவனிக்கச் சொல்லுகின்றதே ஒழிய
103 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வேறில்லை. அன்றியும் இவ்விஷயத்தில் பார்ப்பனர்கள் ஊளை இடுவதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. பார்ப்பனரல்லாதார் கூடவே கோவிந்தா போடுவதுதான் நம்மை மார்பில் குத்துவது போல் உறுத்துகின்றது
நிற்க, பொருளாதார புரொபசர் தோழர் பேசினாக் என்பவர். பொருளாதார விஷயத்தில் பட்டம் பெற்ற நிபுணர் - உலகப் பொருளாதார நிபுணர்களில் ஒருவராய் மதிக்கப்படுபவர் பிரிட்டிஷார் அல்லாதார் மாத்திரமல்லாமல் பிரிட்டிஷார் மீது விரோத பாவம் கொண்டுள்ள ஜர்மனி தேசத்தைச் சேர்ந்தவர். இப்படிப்பட்ட இவர் '“ஒட்டவா ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு நன்மை என்பது மாத்திரமல்லாமல் இந்திய வியாபார விருத்திக்கு ஒட்டவா ஒப்பந்தம் அவசியமானது” என்று தக்க ஆதாரங்களுடன் “இந்து” பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறார். இவர் வார்த்தையை நம்புகிறீர்களா அல்லது “எவ்வளவு அயோக்கியனானாலும் நாலணா கொடுத்து காங்கிரசில் சேர்ந்தவுடன் யோக்கியனாய் விடுவான்” என்று சொல்லும் வியாபார வாசனை அற்ற தோழர் ராஜகோபாலாச்சாரி யாருடையவும் அவரது கோஷ்டியாரினுடையவும் வார்த்தையை ஒப்புக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்கிறார்.
மற்றும் அனேக புள்ளி விபரங்களைக் காட்டி ஒட்டாவா ஒப்பந்தத்தின் நன்மையை விளக்கியிருக்கிறார். ஆகவே வாசகர்கள் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்ற விஷயத்தில் பார்ப்பனர்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்கிறார்கள் - எவ்வளவு அபாண்டங்களைக் கற்பிக்கிறார்கள் - தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகவும், தங்களுக்கு சிறிதும் புலப்படாத விஷயமாகவும் மனதாரப் பொய் என்று தெரியக் கூடிய விஷயங்களையும் ஆயுதமாகக் கொண்டு எவ்வளவு மனந்துணிந்த கொலை பாதகத்துக்கு ஒப்பான கெடுதியைச் செய்கிறார்கள் என்பதையும், மற்றவர்களைக் கொண்டு செய்விக்கத் துணிகிறார்கள் என்பதையும், வாசகர்கள் உணர வேணுமாய் விரும்புகிறோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 23.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 0
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் 2.சுப்பராயன் அவர்கள். லண்டனுக்குச் சென்றிருந்தவர் வந்து விட்டார். அவரது மனைவியார். தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு
ஒரு அபேக்ஷகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்நாட்டில் இந்திய சட்டசபைத் தேர்தல்
விஷயத்தில் ஒரு மாற்றம் ஏற்படலாம்.
அதாவது கோவை ஜில்லாவிலும், சேலம் ஜில்லாவிலும் கொங்கு வேளாள சமூகம் அதிகமாக உண்டு. இந்த இரண்டு ஜில்லாவில் உள்ள வேளாள சமூகம் ஒரு வேளாள சமூக அபேக்ஷகரைத்தான் ஆதரிப்பார்கள். வேளாள சமூகத்தில் ஒரு அபேக்ஷ்கர் இல்லை என்கின்ற காரணத்தினாலேயே கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்டு தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டர் தனது ஜில்லா போர்டு ஸ்தாபனத்தின் பயனாய் உள்ள செல்வாக்கைத் தோழர் அவனாசிலிங்கத்துக்காகப் பயன்படுத்துவதாகவும், கோவை ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்டும், கொங்கு வேளாள குலத் தலைவரும், மடாதிபதியுமான பழய கோட்டைப் பட்டக்காரர் அவர்கள் தனது செல்வாக்கை டாக்டர் வரதராஜுலு அவர்களுக்குப் பயன்படுத்துவ தாகவும் வாக்களித்து இருந்தார்கள். இதன் பயனாக கோவை, சேலம் ஜில்லா வேளாள சமூக ஓட்டுகள் இவ்விருவருக்குமே சற்றேறக்குறைய சரிசமமாகப் பிரிந்து போகக் கூடிய நிலையில் இருந்து வந்தது
இப்போது டாக்டர் சுப்பராயன் அவர்கள் சீமையிலிருந்து வந்து தோழர் ராதாபாய் அம்மாளின் அபேக்ஷக ஸ்தானத்தை உறுதிப்படுத்தி மேல்கண்ட இரண்டு கனவான்களையும் சென்று பார்த்ததில் தோழர். வெள்ளியங்கிரிக் கவுண்டரும், பட்டக்காரர் அவர்களும் தோழர். ராதாபாய் அவர்களை ஆதரிப்பதைப் பற்றி டாக்டர் சுப்பராயனுக்குத்
தைரியம் சொல்லிவிட்டதாகத் தெரிகின்றது
இது மாத்திரமல்லாமல் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டர். அவர்கள், தோழர்கள் அவனாசிலிங்கம் செட்டியாருக்கும், ராஜகோபாலாச்சாரியாருக்கும் இது விஷயத்தைத் தெரிவிக்கப் போவதாகவும், பட்டக்காரரவர்களும் டாக்டர் நாயுடு அவர்களுக்கு எழுதி
105 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
விடுவதாகவும் டாக்டர் சுப்பராயன் அவர்களிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதன் பயனாய் தேர்தல் நிலைமை மாற்றமடைந்தே தீரும். இதன் பயனாகத் தோழர்கள் அவனாசிலிங்கமும், நாயுடுவும் தங்கள் அபேக்ஷகர் ஸ்தானத்திலிருந்து விலகிக் கொள்ளுவார்களோ அல்லது நடந்தது நடக்கட்டும் என்று துணிந்து நிற்பார்களோ தெரியாது
டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தத் தொகுதியை ஒரு பெண்: அபேக்ஷகருக்காக எல்லா கட்சியார்களும் போட்டி இல்லாமல் விட்டுவிட வேண்டும் என்றும் இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு பெண்தான் இந்திய சட்டசபைக்கு நிற்க சகல விதத்திலும் தகுதியோடு முன் வந்திருப்பதாகவும், இதன் பயனாய் காங்கிரஸ் பெண்கள் விஷயத்தில் கொண்டுள்ள கொள்கையைக் காட்ட ஒரு சந்தர்ப்ப மேற்பட்டிருக்கிறதென்றும், தோழர் ராஜகோபாலாச் சாரியாருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது இதனாலெல்லாம் தான் அபேக்ஷகர்கள் தன்மையே மாறுபட்டாலும் மாறுபடக்கூடும் என்று எதிர்பார்க்க இடமேற்படுகின்றது.
மற்றும் ஒரு விஷயம், அதென்னவெனில் டாக்டர் நாயுடுவை
திருச்சி பொதுக்கூட்டத்தில் “டாக்டர் சுப்பராயன் மனைவியார் கோவைத் தொகுதிக்கு ஒரு அபேக்ஷகராய் நின்றால் அப்போது உங்கள் நிலை என்ன?” என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு பதிலளிக்கையில் “தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் நிற்பதாய் இருந்தால் எனக்கும், அந்தம்மாளுக்கும் போட்டி இல்லாமல். இருக்கும்படியாக நடந்து கொள்ள முயற்சிப்பேன். எங்களுக்குள் போட்டிப் பிரசாரம் நடக்க இடம் வைத்துக்கொள்ள இஷ்டமில்லை” என்று சொல்லி இருப்பதாகத் தெரிகிறது.
ஒரு சமயம் தோழர் ராதாபாயம்மாள் விஷயத்தில் நாயுடு ஒப்புக் கொண்டு காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லையானால், ராதாபாயம்மாள் வேறு தொகுதியில் நின்று கொண்டு கோவை, சேலம் ஜில்லா வேளாள சமூக ஓட்டுகளை டாக்டர் நாயுடுவுக்கு அனுகூலமாய்த் திருப்ப முயர்ச்சி செய்யப் போவதாயும் தெரிய வருகின்றது.
தோழர் ராதாபாயம்மாளுடன் போட்டி போட விரும்பவில்லை என்று எப்படி டாக்டர் நினைக்கிறாரோ, அது போலவே செங்கல்பட்டு தென்னாற்காடு ஜில்லா தொகுதியில் அபேட்சகராய் இருக்கும் திவான்பகதூர் எம்.கே. ரெட்டியாரும் ராதாபாயம்மாள் நிற்பதாயிருந்தால். போட்டி போட விரும்பவில்லை என்பதாய் தெரிகிறது. அப்படியானால் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகரும் அம்மாள் விஷயத்தில் போட்டி போட
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 10
மாட்டார்கள். இவர்கள் இருவரும் போட்டி போட முன் வரவில்லையானால் மிஞ்சுவது தோழர் மூத்துரங்க முதலியாரே ஆவார்கள். அவர் நிற்பதும்
ஒன்றுதான் உட்காருவதும் ஒன்றுதான். ஆதலால் அந்த தொகுதியிலும் ராதாபாயம்மாளுக்கு சுலபமாக ஆகக் கூடும்
இப்படியும் ஒரு உத்தேசம் இருப்பதாகவும் தெரிகிறது. எனவே ஏதோ ஒரு விதத்தில் அசம்பளி தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படக்
கூடும் என்று தெரிகிறது
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 23.09.1934
1097 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
ஜஸ்டிஸ் பத்திரிகைக்காக இதுவரை சுமார் 4, 5 லக்ஷ ரூபாய் வரையில் பொதுமக்களிடமிருந்து உதவித் தொகையாகவும் மந்திரிகள் சம்பளத்திலிருந்து பார்ட்டி (கக்ஷி) உதவித் தொகையாகவும் பெற்றிருக்கலாம். இது தவிர இன்றும் பொப்பிலி ராஜா அவர்களால் மீ 2000, 3000 கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு இருந்தும் அப்பத்திரிகை ஒரு தடவை “இன்சால்வெண்டு'' கொடுத்தாய் விட்டது பலரது கடனுக்கு நாமம் சாத்தியுமாய்விட்டது. மறுபடியும் பொப்பிலி ராஜா சுமார் 50 ஆயிரம் ரூபாய் போல் செலவழித்துமாய்விட்டது. இந்த நிலையில் பத்திரிகை எவ்வளவு போகின்றது என்று சொல்ல நமக்கே வெட்கமாய் இருக்கிறது. இவ்வளவு யோக்கியதையில் அது பிரசுரிக்கிற முறையும் சிரிப்புக்கிடமானது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது
தோழர் சர். ஷண்முகம் அவர்களுடைய பிரசங்கங்களையும், நடவடிக்கைகளையும் கூட சரிவரப் பிரசுரிப்பதில்லை. சுயமரியாதைக்காரரின். சமூக சம்மந்தமான வேலைகளைக் கூட சரிவர பிரசுரிப்பதும் இல்லை. இன்னும் அதன் யோக்கியதை சொல்வதென்றால் நமது பல்லைக் குத்தி நாமே முகர்ந்து பார்ப்பது போல் இருக்குமாதலால் விட்டு விடுகிறோம்
மாதம் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஜஸ்டிஸ் பத்திரிகையின் பேரால் பாழாக்கும் பொப்பிலி ராஜா அவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமோ? தெரியாதோ? என்று சந்தேகிக்கின்றோம். இதைப் பற்றி பல தடவை ஞாபகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் இதுவே முதல் தடவையாகவும் கடைசித் தடவையாகவும் இருக்க வேண்டும் என்கின்ற ஆசையின் பேரில் இதை எழுதுகிறோம்.
பகுத்தறிவு - செய்தி விளக்கக் குறிப்பு - 23.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 105
மார்க்கட்டு நிலவரம்
- சித்திரபுத்திரன்
தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப்படுத்தி வெகுநாள் ஆகிவிட்டதால் இதுசமயம் இரண்டொரு சரக்குகளுக்கு மாத்திரம்
நிலவரம் எழுதுகிறோம்.
பெண்கள்
செட்டிநாட்டில் ஒரு பெண்ணுக்கு (மூன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது இப்போது சவுத்துப்போய் ஒரு சைபருக்கே மோசமேற்பட்டு 4000, 5000 ம் விலையில் அசல் செட்டி நாட்டுப் பெண்கள் தாராளமாய் கிடைக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. காரணம் சுயமரியாதை தேசத்திலிருந்து ஏராளமான சரக்குகள் (பெண்கள்) வந்து இறங்கத் தலைப்பட்டு விட்டன. ஆதலால் வெளிநாட்டுச் சரக்குகளை (சுயமரியாதைப் பெண்களை) செட்டி நாட்டுக்குள் வராதபடி வெளிநாட்டுச் சரக்குகளுக்கு வரி போட வேண்டுமாய் செட்டிமார்களுள் சர்க்காருக்கு (சமூகத்தாருக்கு) விண்ணப்பம் போட்டிருக்கிறார்கள். அப்படி அரசாங்கத்தார் (சமூகத்தார்) வரி போடுவார்களானால் பெண்கள் இருக்கிற நாட்டுக்கே, குடிபோய்விடுவதாக பெண் வாங்குவோர்கள் கூடிப் பேசி முடிவு செய்து தீர்மானத்தை அரசாங்கத்துக்கு (தங்கள் சமூகத்தாருக்கு) தெரிவித்து
இருப்பதாகத் தெரிகிறது.
ஓட்டுகள்
முனிசிபல் ஓட்டர்களுக்கு இது சமயம் கிராக்கி அதிகம் பொப்பிலி ராஜாவின் ஒரு அறிக்கையின் பயனாய் முனிசிபல்
ஓட்டுகளுக்குக் கிராக்கியற்று சில இடங்களில் அவ்வளவையும் சமுத்திரத்தில் கொட்ட வேண்டி வருமோ என்று விவசாயிகள் (ஓட்டர்கள்) கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாய் அந்த உத்திரவு வரவில்லை. எல்லா முனிசிபாலிட்டிகளுக்கும் தேர்தல்
இந்த வருஷத்திலேயே அதுவும் இந்த மாதத்திலேயே நடக்க வேண்டுமென்று கட்டளையிட்டு விட்டதால் ஓட்டர்கள் நிலவரம் வெகு கிராக்கியாகிவிட்டது.
199 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஈரோடு.
குறிப்பாக ஈரோட்டில் சில வார்டுகளில் ஓட்டுச் சிலவே இல்லாமல் போய்விட்டது. சில வார்டுகளில் மொத்தத்தில் எதிர் அபேக்ஷகருக்கு 250 முதல் 500 ரூபாய் வரை ஆகிவிட்டது
சில வார்டுகளில் அதாவது குடியானவர்களே சம்பந்தப்பட்ட வார்டுகளில் ஓட்டு ஒன்று 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை: சில வார்டுகளில் அதாவது வியாபாரிகள் சம்பந்தப்பட்ட வார்டில் ஓட்டு ஒன்றுக்கு 10
ரூபாய் முதல் 15 ரூபாய், 20 ரூபாய் கூட ஆகிவிட்டது என தெரிகிறது.
சில வார்டில் அதாவது காங்கிரசு சம்பந்தப்பட்ட வார்டு என்று சொல்லப்படுவதில் ஓட்டு ஒன்றுக்கு 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலும், சில ஓட்டுகள் விஷயத்தில் 40, 50 ரூபாய் வரையில் கூட விலை ஏறிவிட்டது.
சுமார் 300 ஓட்டர்கள் உள்ள ஒரு வார்டுக்கு ஒரு அபேக்ஷகர். 3000ரூ எடுத்து வைத்திருப்பதாகத் தெரிகின்றது. மற்றொரு அபேக்ஷகர். 5000 ரூ எடுத்து வைத்து எலக்ஷன் இன்னும் 10 நாள் இருக்கும் போதே 2000 ரூபாய்க்கு மேல் செலவழித்து விட்டதாகவும் தெரிகின்றது. அதிகப் பணம் செலவு செய்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது பார்வதிக்கு பரமசிவன் சொன்ன உறுதி மொழியாகும். ஆகவே இந்த எலக்ஷன் முறை, ஏழை ஓட்டர்கள் பிழைக்க அரசாங்கத்தார் செய்த தர்மமாகும். ஆதலால் ஓட்டர்கள் பணம் கொடுப்பவர்களை வாழ்த்துவதை விட, இப்படிப்பட்ட தேர்தல் முறையைக் கற்பித்த அரசாங்கத்தார் நீடூழி காலம் சிரஞ்சீவியாய் - எப்படிப்பட்ட சிரஞ்சீவியாய்? மார்க்கண்டன், அனுமார், விபூஷணன் போன்ற சிரஞ்சீவியாய் அல்ல - சூரியன், சந்திரன் போன்ற சிரஞ்சீவியாயும் அல்ல. அவைகள் கூட ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும். மற்றெப்படிப்பட்ட சிரஞ்சீவியாய் என்றால் - கல்லும், காவேரியைப் போல் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டுமென்று வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறார்கள்.
சில கடவுள்களும் இந்த அரசாங்கத்துக்கு சிரஞ்சீவிப் பட்டம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றனர்.
ஏனெனில் ஓட்டுக்கு விலையாக ஓட்டர்களுக்குப் பணம் கொடுப்பது மாத்திரமல்லாமல் கோவில் கட்ட, மசூதி கட்ட, சர்ச் கட்ட என்று 100, 500, 1000 கணக்காய் ரூபாய் கொடுக்க வேண்டி யிருப்பதால், அந்த அந்த மதக் கடவுள்கள் இப்படிப்பட்ட எலக்ஷனை உண்டாக்கிய அரசாங்கத்தை ஆசிர்வதிக்க கடமைப் பட்டிருக்கின்றன.
நல்ல வேளையாக ஈரோட்டைப் பொறுத்தவரை ஓட்டுகளுக்கு ஜாதி சண்டைகளை விலையாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. அதன் பெருமை சேர்மெனுக்கே சேர வேண்டியது
பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 110
நான்
நான் காங்கிரசில் சேர்ந்து விடப் போகிறேன் என்பதாக பலர். எனக்குப் பரிகாசக் கடிதங்களும், சில துர் எண்ணங்கள் கற்பிக்கிற கடிதங்களும் எழுதி வருகிறார்கள். நான் காங்கிரசில் சேருவதாக வைத்துக் கொண்டு பார்த்தாலும், காங்கிரசுக்கு மகத்தான செல்வாக்கும், பெருமையும் இருக்கின்ற காலத்தில் நான் அதில் சேருவதானால் எனக்கு
உள் எண்ணம் ஏதாவது கற்பித்தால் அதற்கு அர்த்தமுண்டு.
இன்று அப்படி ஒன்றும் இல்லை. அது எப்படி இருக்கின்றது என்றால் ஜஸ்டிஸ் கட்சியானது 1926ம் ணா முடிவில் எப்படி கடைசி
மூச்சு வாங்கும் நிலையில் ஜீவநாடிகள் எல்லாம் விழுந்து போய்
எடுத்துப் புதைப்பதற்கும் ஆளில்லாத ஸ்திதியில் இருந்ததோ, அந்த நிலையில் அதைவிட மோசமான நிலையில் கொள்கையற்று, தலைவர்களற்று, மானமற்று, நாணையமற்று, அழுவாரற்று சாகும் தருவாயில் இருக்கும் காங்கிரசில் நான் போய் சேருவதாய் இருந்தால் அதில் எனக்கு என்ன லாபம் அல்லது உள் எண்ணம் இருக்க முடியும் என்று எனது தோழர்களைக் கேட்கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கும் போது கூட எனக்குப் பலவித
துர் எண்ணம் கற்பித்தார்கள். ஜஸ்டிஸ் கக்ஷி உச்சஸ்தானத்தில் சுயமரியாதையோடு உயர் நிலையில் வாழ்ந்த காலத்திலும் அதன். தலைவர்களும் அரசாங்க (கேப்நிட்) மெம்பர்கள் முதல் மந்திரிகள் வரை என்னிடத்தில் “மரியாதையும், பக்தியும்” இருப்பதாய் காட்டிக் கொண்டிருந்த காலத்திலும் கூட அக்கக்ஷியால் ஒரு காதொடிந்த ஊசி கூட நான் எனது சொந்தத்திற்கு எதிர் பார்க்கவில்லை. பெறவும் இல்லை: அதனால் நான் எவ்வித பெருமையும் அடைந்து விடவுமில்லை என்பது எனது எதிரிகளுக்கும் தெரியும் என்று நினைத்திருக்கிறேன். (டாக்டர். சுப்பராயன் அவர்கள் காலத்திலாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ விஷயமாயும் தீண்டாமை விஷயமாயும் சில காரியங்கள் சாதித்துக் கொள்ள முடிந்தது என்னலாம்) மேலும் நான் என் சொந்த முறையில் அவர்களுக்காக பட்ட கஷ்டமும், நஷ்டமும் எனது நண்பர்களுக்குத்
தெரியும் என்றும் நினைக்கிறேன்.
நம ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அப்படி இருக்க காங்கிரசில், அதுவும் உயிருக்கு மாத்திரமல்லாமல் அது செத்தால் சுடுவதற்கும் இடமில்லாமல் மயானத்துக்கும் ஊசலாடும் இக்காலத்தில் காங்கிரசினிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்துக் கொண்டு அதனிடம் நேசம் கொள்ள முடியும் என்பது எனக்கே விளங்கவில்லை. மனித சமூக நன்மையை அதிலும் தாழ்த்தப்பட்ட, ஏழ்மைப்பட்ட பாமரமக்களின் நன்மைக்காக காங்கிரசு மாத்திரமல்ல, இன்னும் எக்கட்சியின் நேசம் கொண்டாலும் கொள்வேனே ஒழிய மற்றபடி எனது ஜீவனோபாயத்துக்கோ வாழ்க்கை உபாயத்துக்கோ எக்கட்சியிலும் சேரமாட்டேன் என்றும், சேரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ஈ.வெ.ரா.
பகுத்தறிவு - அறிக்கை - 23.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 11?
பார்ப்பன பத்தியிகைகளும்
சர். ஷண்முகமும்
தோழர் ஆர்.கே. ஷண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்படத்தக்கது என்பதில் யாருக்கும் ஆக்ஷ்பனை இருக்காது பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரது நடவடிக்கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிது கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். ஷண்முகம் அவர்கள் இந்திய சட்ட சபையில் ராணுவ சம்மந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.
தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.
இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்த தைரியம் இல்லாவிட்டால் இத்தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்
ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள் தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்
1 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனீயத்தைப் பிரசாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும்
சுத்த ரத்த ஓட்டமில்லாத - சுயமரியாதை அற்ற - பணமே பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார். ஆதரவளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம் என்பதோடு 10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை" என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தைவிட தங்கள் சுயநல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லாதாரைக் கண்டு இரங்குகின்றோம்.
பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் “நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு” என்று சொன்னது போல், ஒரு மனிதனின் பிழைப்பிற்காக மானத்தை - தனது சமூகத்தை விற்று ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்
பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௨ 114
ஜன நாயகமா? பண நாயகமா?
உலகில் ஜனநாயகம் என்னும் வார்த்தை மிகவும் செல்வாக்குப் பெற்றது என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது
செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் எல்லாம் உண்மையானதும், நேர்மையானதும் என்று சொல்லிவிட முடியாது
செல்வாக்குப் பெற்ற வார்த்தைகள் பெரும்பான்மையும் சில சுயநலங்கொண்ட மக்களால் உள் எண்ணத்தோடு கற்பிக்கப்பட்டு பாமர மக்களுக்குள் பிரசாரம் செய்யப்பட்டதின் பபனாகவே செல்வாக்கடைய முடிந்ததாக இருக்குமே தவிர உண்மையில் அதன் யோக்கியதையால் - ஏற்படும் பயன்களால் செல்வாக்கு ஏற்பட்டதென்று சொல்லிவிடவும் முடியாது.
புண்ணியம், சத்தியம், அஹிம்சை, ஜீவகாருண்யம், ஒழுக்கம்,
கற்பு என்பன போன்ற வார்த்தைகளுக்கு நாட்டில் மதிப்பும் செல்வாக்கும் இருந்து வருகின்றது என்றாலும் அவைகள் உபயோகப்படும் மாதிரியும் காரியத்தில் அனுஷ்டிக்கப்படும் தன்மையும் எப்படி இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இவை பெரும்பாலும் வலுத்தவன் இளைத்தவனை அடக்கியாளும் காரியத்திற்கும் தன் தன். சுயநலத்துக்குமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது கண்கூடு.
இம்மாதிரியிலேயே தான் ஜனநாயகம் என்கின்ற வார்த்தையும், பணநாயகத்துக்கு அடிமை அதாவது பாமர மக்களையும், ஏழை மக்களையும் அடக்கியாள, படித்த - பணக்கார மக்களால் கற்பிக்கப்பட்டதும், பயன்படுத்தத் தக்கதுமான வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது
உலகிலே எந்தெந்த நாட்டில் ஏழை மக்கள் கண் விழித்தார்களோ அங்கெல்லாம் ஜனநாயகத்தின் புரட்டு வெளியாகிக் கொண்டுதான் வருகின்றது. ஜனநாயக அரசாங்கம் - ஜனநாயக ஸ்தாபனங்கள் - ஜனநாயக முயற்சிகள் என்பவைகளைப் பற்றிய அனுபவம் இந்திய மக்களுக்குச் சுமார் 50, 60 வருஷ காலமாக இருந்து வருகின்றது என்று எண்ணுகின்றோம். இந்த ஐம்பது, அறுபது வருஷகால அனுபவத்தில் ஜனநாயகத்தின் பலன் என்ன என்பதைப் பார்த்தால் பிறகு ஜனநாயகம் என்பதில் அதன் வார்த்தைக்கேற்ற தத்துவம் இருக்கின்றதா? அல்லது ஜனநாயகம் என்பது பணநாயகத்தின் அடிமையா என்பது விளக்கும் 15— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்தியாவில் ஜனநாயக ஸ்தாபனம் என்னும் காங்கிரசு ஏற்பட்டு
சுமார் 50 வருஷங்களுக்கு மேலாகின்றது. ஜனநாயக தத்துவம் என்னும் முனிசிபாலிட்டிகள், ஜில்லா தாலூகா போர்டுகள் முதலியவை ஏற்பட்டும் 50, 60 வருஷங்களாகின்றன.
சட்டசபைகள், நிர்வாக சபைகளில் பெரும்பாகம் முதலியவைகளும் ஜனநாயகத்துக்கு வந்து 20 வருஷங்கள் முதல் 40 வருஷங்கள்வரை ஆகின்றன. இவைகளால் பொது மக்களுக்கு ஜனநாயக தத்துவ நன்மை என்ன ஏற்பட்டது? அல்லது ஜனநாயக உரிமை என்ன ஒழுங்காய் பயன்படுத்தப்பட்டது? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். ஜனநாயக சட்டசபையையும், நிர்வாக சபையையும் எடுத்துக் கொள்ளுவோம். ஜனநாயக ஸ்தாபனங்களின் பேரால் நடக்கும் புரட்டுகள் எவ்வளவு? என்பதில் காங்கிரசைப் பற்றி நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை என்றே எண்ணுகின்றோம். பொதுவாகப் பேசுவோமானால் இன்று ஜனநாயகம் பணநாயகத்தின் அடிமையா அல்லவா என்பதை முதலில் யோசிப்போம். நமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டால் ஒரு இரண்டு மூன்று ஜமீன்தார்களோ, பணக்கார லேவாதேவிக்காரரோ முதலாளிகளோ ஒன்று சேர்ந்து 3 அல்லது 4 லக்ஷ ரூபாய் முதல் வைத்து ஜனநாயகத்தை விலைக்கு வாங்கும் கூட்டாளிகளாகி ஒரு கூட்டு வியாபாரம் ஆரம்பித்தால் 26 ஜில்லாக்களிலும் குறைந்த அளவாக மெஜாரிட்டி சட்டசபை மெம்பர்களையாவது தங்கள் இஷ்டப்படி ஆடக் கூடியவர்களாக சம்பாதித்து விட முடியுமா முடியாதா என்று யோசித்துப் பாருங்கள். இன்னமும் கொஞ்சம் பணம் செலவு செய்தால் அரசாங்க நியமன மெம்பர்களையும் சுவாதீனம் செய்து கொள்ள முடியுமா இல்லையா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் எந்த தேர்தலை எடுத்தாலும் ஸ்தல ஸ்தாபன தேர்தலுக்கு 2000ரூ செலவு, 5000ரூ செலவு, 10000ரூ செலவு என்று சொல்லப்படுவதும் சட்டசபை முதலிய தேர்தல்களுக்கு பத்து ஆயிர ரூபாய் செலவு, இருபது ஆயிர ரூபாய் செலவு, ஐம்பது ஆயிர ரூபாய் செலவு என்று சொல்லப்படுகின்றதும் உண்மையா அல்லவா என்று கேட்கின்றோம்
100க்கு 90 மக்களை ஏழை விவசாயிகளாகவும், ஏழைத் தொழிலாளிகளாகவும் எழுத்து வாசனை அற்ற பாமர மக்களாகவும் சராசரி வாழ்க்கைக்கு போதுமான செளகரியமில்லாத மக்களாகவும் கொண்ட இந்த நாட்டில் மேல் கண்டபடி ஆயிரம், பதினாயிரம் லக்ஷம் கணக்காக ரூபாய்களைச் செலவு செய்தால் தான் ஜனநாயகப் பிரதிநிதித் தத்துவத்தை அடையலாம் என்கின்றதான ஜனநாயகம் அல்லது கலப்பற்ற உண்மையான ஜனநாயகமா? பணநாயகமா? என்று கேட்பதல்லாமல். இத்தேர்தல்களின் பயனாய் ஏற்படும் கலகம், காலித்தனம், மனஸ்தாபம்,
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 11௦
கடி, பிரதிக்ககடி மனப்பான்மை ஆகியவைகள் ஒரு கூட்ட மக்களை முடிநாயகத்துக்கு நிபந்தனை அற்ற அடிமைகளாகச் செய்து வருகின்றதா இல்லையா என்றும் கேட்கின்றோம்.
அரசாங்கம் தன்னை ஜனங்களுக்காக ஜனங்கள் அபிப்பிராயப்படி நடக்கும் ஜனநாயக அரசாங்கம் என்று சொல்லிக் கொள்ளுவதை நாம் புரட்டு என்று சொல்லுவதை விட அவர்களால் கொடுக்கப்பட்ட ஜனநாயகத் தத்துவத்தை கையாளும் ஜனங்கள் உண்மையாய் யோக்கியமாய் அனுபவிக்கத் தகுதி உடையவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதானது இன்னும் ஆயிரம் பங்கு முழுப் புறட்டு என்றுதான் சொல்லப்பட வேண்டியதாகும்.
ஜனநாயகம் கொடுக்கப்பட்ட எல்லாத் துறைகளிலும் பணம் உள்ளவன், பூமி உள்ளவன், வீடு வாசல் உள்ளவன், இந்திய மக்களின். சராசரி வரும்படிக்கு மேல் 10 பங்கு 100 பங்கு அதிக வரும்படி உள்ளவன் ஆகியவர்களுக்குத்தான் ஓட்டுரிமை இருகின்றதே தவிர, கைகால் உறமாய் இருந்து அவனவன் கைப்பட உழைத்து உண்ணும் பாட்டாளி மக்களுக்கு ஓட்டுச் சுதந்திரம் கிடையவே கிடையாது. மற்றும்
தன் உழைப்பின் பயனாய் வருஷம் ஒன்றுக்கு 350 ரூபாய் வரையில் கூலியோ, சம்பளமோ, பெறுகின்றவனாய் இருந்தாலும் அவனுக்கும் ஓட்டுரிமை கிடையாது என்கின்ற முறையில்தான் ஜனநாயக ஓட்டுரிமை இருக்கின்றது என்றால் இப்படிப்பட்ட ஏழைப்பாட்டாளி மக்களுக்கு ஜனநாயகப் பிரதிநிதித்துவம் எப்படி கிடைக்குமென்று கேட்கின்றோம்
ஓட்டு அருகதை, பிரதிநிதி அருகதை இப்படியாக இருந்தாலும் பிரதிநிதித்துவத்தைப் பெறும் முறை முன் குறிப்பிட்டபடி ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் ரூபாய் செலவிட வேண்டியதாய் இருக்கின்ற தென்றால் ஏதோ ஒரு சில பணக்காரர்கள் மாத்திரம் அல்லாமல் பொதுமக்கள் இதை நினைக்கத்தான் யோக்கியதை யுடையவர்களாவார்களா. என்றும் தேர்தல் கூச்சல் போடுகிறவர்களைக் கேட்கின்றோம். இந்த மாதம்
பூராவும் ஜனநாயகத் தேர்தல் கூச்சலாகவே இருக்கிறது. இந்திய சட்டஃபைத் தேர்தல், டவுன் முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்கள் ஆகியவைகளின் பேச்சுக்களாகவே இருக்கின்றன. இந்திய சட்டசபைத் தேர்தல் சம்மந்தமாய் லக்ஷக்கணக்கான செல்வம் உள்ளவர்களும், லக்ஷக்கணக்கான செல்வந்தர்களை தங்கள் கைக்குள் அடக்கிக் கொண்டிருக்கின்றவர்களும்
தவிர, மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்பது வெளிப்படை பணச்செலவு இல்லாமல் ஏமாற்றலாம் என்று கருதுகின்றவர்கள் ஜனநாயக ஸ்தாபனங்களின் புரட்டுகளையும் அயோக்கியத்தனங்களையும் ஆதாரமாய்க் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே இரண்டுக்கும் யோக்கியதையற்ற வெகுபேர் “சீ அந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
117 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இது நிற்க, முனிசிபல் டவுன் தேர்தல்களை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு ஓட்டுக்கு 10 ரூபாயில் இருந்து 15 ஆகி 20 ஆகி, 25 ஆகி, 35 ஆகி, 50 ரூபாய் ஆகி விட்டதுடன் சில ஓட்டுகளுக்கு அதாவது சிறிது சாமார்த்தியவாளியாய் இருந்து வாங்கின பணத்தைத் திரும்பக் கொடுப்பதாய் பாசாங்கு செய்தவர்களுடைய ஓட்டுகளுக்கு 100 ரூபாய் விலையும் ஆகிவிட்டது. இதில் எதுவும் இரகசியமிருப்பதாய் சொல்ல முடியாது. சர்க்கார் சேவகர்கள், குமாஸ்தாக்கள் ஓட்டுகளும் கூட இந்த விலைக்குத்தான் வாங்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்க வேண்டியிருக் கின்றது. சிலர் பணம் வாங்காமல் ஓட்டுப் போட்டிருக்கலாம் என்றாலும், அதற்குத் தகுந்த பிரதிப் பிரயோஜனமாவது அடையக் கருதியே ஓட்டுச் செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இவற்றோடு மாத்திரமல்லாமல் ஜனநாயகத்தைப் பணநாயகம் என்று மாத்திரம் சொல்வதோடல்லாமல் காலித்தன நாயகம் என்று கூட சொல்ல வேண்டிய நிலைமையில் சில ஊர்களில் தேர்தல்கள். நடைபெற்றதாகச் செய்திகள் எட்டுகின்றன.
இன்றைய தினம் இருக்கும் பண நெருக்கடியில் 20m, 30ரூ, 100ரூ. போல ஒரு காக்காப்புள்ளி X போடுவதற்குப் பணம் கிடைப்ப தாயிருந்தால் அதை வேண்டாமென்று சொன்னவர்களை முட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் “பொது ஜனங்கள்'' கேட்ட ஜனநாயகத் தத்துவத்தில் புரட்டு இல்லை என்று சொல்ல எவராலும் முடியாது. அரசாங்கத்தார் வழங்கிய ஜனநாயகத் தத்துவத்தில் ஏமாற்றமும், புரட்டும் இல்லையென்று யாராலும் சொல்ல முடியாது இதை ஏற்றுக்கொண்டு ஜனநாயகப் பிரதிநிதிகளாய் நிற்கும் அபேட்சகர்களிடத்தில் புரட்டும், ஏமாற்றமும், பித்தலாட்டமும் மாத்திரம் அல்லாமல் நாணையக் குறைவும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையும் அடியோடு இல்லை என்று சிறிது கூட சொல்லிவிட முடியாது இப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓட்டர் இப்படிப்பட்ட காரியத்திற்கு இப்படிப்பட்ட ஆட்களிடம் பத்தோ, இருபதோ, ஐம்பதோ, நூறோ வாங்கிக்கொண்டு ஓட்டுச் செய்தால் அது எப்படி குற்றமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை
எப்படி ஒரு பெண் கற்பு இழந்தால் அந்த பெண்ணுக்கும், அதற்குச் சரிபங்கு பொறுப்பாளியாய் இருந்த ஆணுக்கும் சரிசமமான பாவம் என்று சொல்லுகின்றோமோ, அது போலவேதான் ஒரு ஓட்டர் பணம் வாங்கினால் அந்த ஓட்டருக்கும், அவருக்குப் பணம் கொடுத்த அபேட்சகருக்கும் அதற்கு இவ்வளவு தாராளமாய் இடமளித்த அரசாங்கத்துக்கும் சமமான பாவம், குற்றப் பொருப்பு இருக்கின்றது என்று தான் சொல்லுவோம். இன்றைய சட்டத்தில் இதற்கு வேறு
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 115
மாதிரியான அபிப்பிராயம் இருக்கலாம். ஆனால் தீர்ப்பு நாள் சட்டமிருக்கின்றதாகச் சொல்லுகின்றார்களே, அந்தச் சட்டத்தில் அதாவது ஒவ்வொருவருடைய பகுத்தறிவையும் உபயோகித்து நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மையில் மூன்று பேரும் அதாவது ஓட்டரும், அபேட்சகரும், தேர்தல் முறைகளும் மூன்றும் குற்றவாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத் தத்துவம் பணக்காரத் தன்மையது என்பது யாரும் மறுக்கக் கூடியதல்ல. ஏனெனில் பணக்காரனுக்குத்தான். ஓட்டு என்பதோடு அதிகப் பணம் செலவு செய்யத் தகுந்தவன் தான். வெற்றி பெறக்கூடிய நிலையில் இன்று பெரும்பான்மையான எல்லா
தேர்தலும் இருந்து வருவதையும் அந்தப்படியே நடந்து வருவதையும் அரசாங்கம் தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது
போட்டி போடும் இரண்டு அபேட்சகர்களும் இந்த மாதிரி நடந்து கொள்வதால் அரசாங்கத்தாரிடம் பிராது கொடுக்க எவனும் வருவதில்லையே ஒழிய அதாவது சூதாடிகள் சூதுக் குற்றத்துக்காக எப்படி அவர்களே பிராதுக்கு வராமல் இருக்கிறார்களோ அதுபோல் இருவரும் வருவதில்லை.
ஆனால் அரசாங்கம் இந்தக் குற்றத்துக்கு ஜவாப்தாரியல்ல என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் மற்றக் காரியங்களுக்கு எப்படிப் புலன் விசாரித்து நடவடிக்கை நடத்துகிறார்களோ அதுபோல் நடத்தி இக்காரியங்களை ஒழித்து இருக்கலாம். ஆதலால் அரசாங்கம் இதில் பங்கு பெறாமல் தப்பித்துக் கொள்ள முடியாது
இந்தக் காரணங்களால் தான் ஜனநாயகம் என்று சொல்லப்படுவது ஏமாற்றம் என்றும், அது பணநாயகத்தின் லைசென்ஸ் பெற்ற கூலி என்றும், அதைப் பொது மக்கள் இந்த மாதிரி பணம் வாங்கிக் கொண்டு
ஓட்டுச் செய்யலாம் என்கின்ற காரியத்திற்கு அல்லாமல் வேறு காரியத்திற்கு உதவும் என்று எண்ண இடமில்லை என்றும் சொல்லுகிறோம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 30.09.1934
19 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பார்ப்பணீப ஜழிப்புத் திருநான்
சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின். பயனாய் பார்ப்பனியம் ஒருஅளவுக்காவது ஆட்டம் கொடுத்துவிட்ட விஷயம் நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம். ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனீயம் எவ்வளவு பகிஷ்கரிக்கப்பட்டிருக்கின்றதோ, அதில் 8ல் ஒரு பங்கு கூட அரசியல் விஷயத்தில் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.
அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமாய் வேலை செய்வது என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் தலைவர்கள். என்பவர்கள் பலர், தனிப்பட்ட முறையில் தங்கள் சுயநலத்திற்காக எதையும்
விற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தோழர் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் திட்டம் அரசாங்க உத்திரவு மூலம் போட்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் அவரை ஒழிக்கச் செய்த சதியில் சில ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் உள் உளவாய் இருந்ததோடு, பார்ப்பனரல்லாதார். கட்சியின் பயனாய் முதல் மந்திரி ஸ்தானம் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருந்து வந்ததுடன் தனது ஸ்தானத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையையும் அடைந்தார். அதன் பயனையும் அடைந்தார் என்றாலும், இப்போது ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறது
இது எப்படியோ இருக்கட்டும். தோழர் முத்தையா முதலியார் அவர்கள் ஏற்படுத்திய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்திரவை ஜஸ்டிஸ் க௬ஷி அரசாங்கம் இப்போது மறுபடியும் பிரசரித்திருப்பது போற்றத்தக்கதேயாகும் இன்றைய தினம் எந்த ஊரில், டவுனில் எடுத்துக் கொண்டாலும் வாசல் கூட்டி, பியூன் ஆகியவர்கள் போன்ற உத்தியோகம் போக பாக்கி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள்தான் 100க்கு 80 பேர், 90 பேர்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் நீதி இலாக்காவாகிய முனிச்ீப்பு, சப் ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜ் முதலியவைகளும், நிர்வாக இலாக்காவாகிய போலீஸ் டிப்டி சூப்பிரண்டெண்ட், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியவைகளிலும் பார்ப்பன ஆதிக்கமே தலைசிறந்து நிற்பதுடன்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 100
பார்ப்பனரல்லாதார் முயற்சியையும், முன்னேற்றத்தையும் ஒழிக்கவும், தடுக்கவும் அவைகளின் மூலம் எவ்வளவு காரியம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காரியங்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் வன்னெஞ்சத்துடன் ஆங்காங்கு செய்யப்பட்டு வருகின்றதானது எவரும் அறியாததல்ல.
அரசாங்கத்தார் ஒவ்வொரு இடத்திலும் உத்தியோகங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமை சரிவரக் காக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளைக் குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட இடமிருக்கும்படி
பார்த்துக் கொள்ள வேண்டும் உதாரணமாக ஒரு ஊரில் டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருந்தால் தாசில்தார் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும்படியும், சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனராயிருந்தால் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்ப்பனரல்லாதாராயும், ஜில்லா ஜட்ஜ் பார்ப்பனராயிருந்தால் சப் ஜட்ஜ் பார்ப்பனரல்லாதாராயும்
மற்றும் இதுபோல் அதிகாரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்
அப்படி யில்லாதவரை, அரசியலிலானாலும், தேசியத்திலானாலும், வகுப்பு உணர்ச்சி தாண்டவமாடும் இக்காலத்தில் பல வகுப்பு மக்களுக்கு பந்தோபஸ்து இருக்குமென்று கருதமுடியாது அரசாங்கம் சம்மந்தமில்லாத வேறு பல விஷயங்களில் கூடியவரை பார்ப்பனரல்லாதார்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். உதாரணமாக இப்போது நடைபெற்று வரும் முனிசிபல் எலக்ஷன்களில் பார்ப்பனக் கோட்டைகளாயிருந்த சேலம், திருப்பூர் முதலிய இடங்களில் ஒரு பார்ப்பனர் கூட வரமுடியாமல் போனதைப் பார்த்தால் அங்குள்ள காங்கிரஸ் ஆதிக்கமும், பார்ப்பன ஆதிக்கமும் எவ்வளவு என்பது விளங்கும்.
பெண்களும், ஆதிதிராவிடர்களும் ஒவ்வொரு மூனிசிபாலிட்டியிலும் ஸ்தானம் பெற்றார்கள் என்றால், அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பெருமையாலேயே அல்லாமல் ஜனங்களுக்கு சமரச உணர்ச்சி ஏற்பட்டல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்
ஈரோடு அர்பன் பாங்கி சமீபகாலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில்
இருந்தது என்றாலும் இந்த வருஷம் ஷி பாங்கு தேர்தலில் ஒரு பார்ப்பனருக்குக் கூட இடம் இல்லாமல் போய் விட்டது என்பதோடு ஒரு பெண் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதானது மகிழ்ச்சிக்குரியதாகும். இவ்வளவு இருந்தாலும் சில இடங்களில் ஸ்தானங்கள் பெறப் பார்ப்பனர்கள் கையில் ஆகவில்லை என்றாலும்
சிலர் சில பார்ப்பனரல்லாதாரைப் பல வழிகளில் தங்கள் வழிப்படுத்திக் கொண்டு கட்சிகள் தகரார்கள் உற்பத்தி செய்து தாங்கள் ஸ்தானத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதுபோல் செய்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.
11 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
நாட்டில் வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக் கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில், தாழ்ந்த ஜாதிக்காரர்களாய் கருதப்படுகிறவர்கள். துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமானது
உதாரணமாக ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன்: என்பவன் துவேஷமாயிருக்கிறான் என்பது ஒரு நாளும் ஆச்சரியமான காரியம் ஆகாது. மற்றெது ஆச்சரியமான காரியம் ஆகுமென்றால் ஒரு பிராமணன் என்பவனிடம் கூட ஒரு சூத்திரன் என்று அழைக்கப்படுகின்றவன், தீண்டப்படாதவன் என்று அழைக்கப்படுகிறவன் துவேஷமில்லாமல், வெறுப்பு இல்லாமல் இருந்து வருவதுதான் ஆச்சரியப்படத்தக்கதாகும்.
ஆதலால் ஜாதிப்பிரிவு சம்பந்தமான உயர்வு, தாழ்வு இருக்கும் வரை நாட்டில் துவேஷம், வெறுப்பு, வகுப்பு உணர்ச்சி ஆகிய காரியங்களும் ஒரு வகுப்பாரால் ஒரு வகுப்பு கஷ்டமடையும் காரியங்களும் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும்
உதாரணம்
இதற்கும் ஒரு உதாரணம் கூறிவிட்டு இதை முடிக்கின்றோம் தோழர் எஸ். குஞ்சிதம் குருசாமி அம்மாளை யாவருக்கும் தெரியும் அந்தம்மாள் பி.ஏ. எல்.டி, பாஸ் செய்தவர்கள்.அதிலும் யோக்கியதாபக்ஷத்தோடு உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள். அவர்களின் கல்வித் திறமை, போதிக்கும் திறமை, பிள்ளைகளிடம் அன்பாயிருக்கும் திறமை, சரீராப்பியாச விளையாட்டுகளில் உள்ள திறமை முதலியவைகள் அந்தம்மாள் வேலை செய்த பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரின் நற்சாகஷிப் பத்திரத்தில் காணலாம். இப்படிப்பட்ட அம்மாள் மைலாப்பூரில் ஒரு பார்ப்பன ஆதிக்கமுள்ள பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக மாதம் 70 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தார்.
அந்தம்மாள் யாதொரு தப்பிதமும் செய்துவிடவில்லை இரண்டொரு இடங்களில் பகுத்தறிவு பிரசங்கங்கள் செய்தது தவிர யாதொரு பாவத்தையும் அறியார். அப்படிப்பட்டவர்களைத் தோழர்கள் பி.எஸ். சிவசாமி அய்யர், டி.ஆர்.வெங்கிட்ட ராமசாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், அல்லாடிக் கிருஷ்ணசாமி அய்யர் ஆகியவர்கள் போன்றவர்கள் நிர்வாக கமிட்டியாய் இருக்கும் பள்ளிக்கூடத்தில், அந்தம்மாளுக்கு இனி வேலை இல்லை என்று நோட்டீஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றால், வகுப்பு உணர்ச்சியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 122
இந்தப்படி ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள ஸ்தாபனங்களில்
இருந்து, தகுந்த ஒழுக்கக் குறைவுள்பட ஒரு குற்றத்துக்காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால் அக்கிரகாரம் முதல் கொண்டு சர்க்கார் அதிகாரிகள் - ஹைகோர்ட்டு வரை அந்த ஸ்தாபனத்தின் மீது பழி வாங்க நினைக்கிறார்கள். “பிராமணத் துவேஷம்” பிராமணத் துவேஷமென்று கூப்பாடு போடுகிறார்கள்.
பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற எந்த ஸ்தாபனங் களிலாவது 100க்கு 10 வீதமாவது பார்ப்பனரல்லா தார்களுக்கு வேலை கொடுக்கிறார்களா? எனப் பார்த்தால் வகுப்பு துவேஷம் யாரிடத்தில் இருக்கிறது என்பது விளங்கும்.
ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இனியாகிலும் இவ்விஷயங்களை
உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள முயற்சிப்பதுடன் காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள், ஏகாதிபத்திய ஒழிப்பு நாள், மே டே என்பது போன்ற நாள்களை வருஷத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது போல் “பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள்” என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதை அடுத்து வரும் தீபாவளிக்கு அடுத்த நாளோ, அல்லது முந்திய நாளோ வைத்துக் கொள்வது நல்லது என்றும் அபிப்பிராயப்படுகின்றோம்.
இத்தினங்களில் ஆங்காங்கு கூட்டம் போட்டு பார்ப்பன ஆதிக்கக் கொடுமை, சமுதாயத்திலும், அரசியலிலும் இருப்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி தீர்மானங்களை நிறைவேற்றி, அரசாங்கத்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்ப வேண்டிய வேலையை அத்திருநாள். கொண்டாட்ட வேலையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படு கின்றோம். இன்ன நாள் என்பதைப் பின்னால் உறுதிப்படுத்துகிறோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 30.09.1934
123 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சர்க்கார் காங்கிரசைவிட மோசமானதா?
பட்டேலின் “ஸ்ரீ முகம்?*
தோழர் வல்லபாய் பட்டேல் அவர்கள் சென்னை மாகாண காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் முனைந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதாகவும், சென்னை மாகாணக்காரர்கள் காங்கிரஸ்காரருக்கே ஓட்டு செய்ய வேண்டும் என்றும் அதற்கு காரணம் அடக்கு முறையைக் கண்டிக்க வேண்டியும், வெள்ளை அறிக்கையை நிராகரிக்க வேண்டியும் காங்கிரஸ்காரர்களே தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறார்.
மற்றும் காங்கிரஸ்வாதி அல்லாத மற்றவருக்குக் கொடுக்கும் ஓட்டு சர்க்காருக்கு கொடுத்தது போல் ஆகுமென்றும் சொல்லுகிறார். முதல் விஷயத்தை ஒப்புக்கொண்டாலும் இரண்டாவது விஷயம் ஒப்புக் கொள்ளப்படாதது என்பதுடன், அதில் நாணையமும் நியாயமும் இல்லை என்றும் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்,
ஏனெனில் இந்த நாட்டிலுள்ள சுமார் 35 கோடி மக்களில் காங்கிரசில் அங்கத்தினர்களாய் இருக்கிற சுமார் ஒரு பத்தாயிரம் அல்லது இருபதாயிரம் மக்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் சர்க்காரைச் சேர்ந்தவர்கள், தேசத்துரோகிகள் என்பது தோழர் பட்டேல் அவர்களின்
ஸ்ரீமுகத்தின் கருத்தாகிறது
தோழர் ஷண்முகம் அவர்கள் விருதுநகரில் தெரிவித்தது போல் தேசபக்தி என்பது தோழர்கள் பட்டேல், ஆச்சாரியார் ஆகியவர்களின் பிதுரார்ஜ்ஜித சொத்துப் போலவும் அந்தக் கூட்டத்தில் இவர்களுடைய
சிஷ்யர்களும், அடிமைகளும் தவிர மற்றவர்களுக்கு இடம் கிடையாது போலவும் இவர்களுடைய ஆதிக்கம் இருந்து வருகிறது
அந்த சிஷ்யர்களும், அடிமைகளும் கூட தங்கள் தேசபக்தியைக் காட்டவேண்டுமானால் ஒரு முறைக்கு நாலுமுறை சிறை சென்று இருந்தாலும் போராது. பத்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொண்ட தங்கள். வரும்படிகளையும் துறந்து கை முதல்களையும் இழந்து ராஜபோகத்தையும் விடுத்து, சன்னியாசியாய் கடன்காரனாய் தெருவில் நின்று தவிப்பவனாய் இருந்தாலும் போராது. மற்றபடி எவ்வளவு அயோக்கியனாய்,
குடிகாரனாய், ஜாதி ஆணவம் பிடித்தவனாய், தாசி லோலனாய், ஊரை ஏமாற்றி கொள்ளையடிப்பவனாய், சர்க்காருக்கு சி.ஐ.டீ.யாய் ஒரு மணி
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 14
நேர வேலைக்கு 100 ரூபாய், 500 ரூபாய், 1000ரூபாய் வீதம் மக்களிடம் இருந்து கறந்து போகபோக்கியங்கள் அனுபவிப்பவனாய் இருந்து கொண்டு, கதர் துணியை கட்டுபவனாகவும், ராட்டினத்தில் நூற்பவனாகவும் காந்திக்கும், பட்டேலுக்கும், ஆச்சாரிக்கும் ஜே போட்டு மகாத்மா என்று கூப்பிடுபவனாகவும் இருந்தால், பெரிதும் அவன்தான் தேசபக்தன்,
சர்க்கார் மனிதன் அல்லாதவன், பாமர மக்கள் ஓட்டைப் பெறத் தகுதி உடையவன் என்றால் இது யோக்கியமா என்று கேட்கின்றோம்
மத விஷயத்தில் “பழி தொழிலும் இழிகுலமும் படைத்தாரேனும் அரவணையாய் என்பாராகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் அடிகள் (கடவுள்) ஆவார்” என்றும் “சாதியால் ஒழுக்கத்தால் தக்கோரேனும் - பொன்னரங்கம் போற்றாதார் புலையர் ஆவார்” என்றும் சொல்லப்படுவது போலவே, ஆச்சாரியாரையும் பட்டேலையும் போற்றாதார் எவ்வளவு ஒழுக்கம் உள்ளவராய் இருந்தாலும் தேசத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தவர்களானாலும் தேசத்துரோகிகள் ஆவார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதற்குக் காரணம் காங்கிரஸ் தேசபக்தி என்பவைகளின் பேரால் ஏராளமான பணங்களைப் பாமர மக்களிடமிருந்து கொள்ளை கொண்டு அதன் பயனாய் உடல் உழைக்க சோம்பேரித்தனம் கொண்ட மக்களை கூலிகளாய் அமர்த்தி அவர்களை விட்டு கூலிப் பிரசாரம் செய்து வருவதால் இவ்வளவு தைரியமாகப் பேச இவர்களுக்கு இடமேற்பட்டுவிட்டது
1917 முதல் 1922 வரையில் தோழர் வரதராஜுலு அவர்கள் இந்தப் பார்ப்பனர்களுக்கு சங்கராச்சாரி போலவும், ஜீயர் போலவும் விளங்கியதை யாராவது மறுக்கமுடியுமா என்று கேட்கின்றோம். அதற்குப் பிறகு எவ்வளவோ தரம் சிறை சென்றும் 10 ஆயிரக் கணக்காக காசு பணம் செலவு செய்தும் தேசியம் தேசாபிமானம் என்று கோடிக்கணக்கான. தடவை உருச்செபித்து குடும்பசகிதம் கதரையே உடுத்தி வந்தும், இன்று அவர் தேச பக்தர்கள் கூட்டத்தில் சேர்க்கப்படாமல் தேசத் துரோகிகள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டதின் காரணம் என்ன என்பதை யோசித்தால் தோழர் ஆச்சாரியார் பேரிலும், பட்டேல் பேரிலும் ஸ்தோத்திரம் தாண்டகம் முதலிய பிரபந்தம் பாடாதது தான் காரணம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை:
தவிரவும் “காங்கிரஸ்காரருக்குக் கொடுக்காத ஓட்டு சர்க்காருக்குக் கொடுத்ததாகப் பாவிக்கப்படும்” என்று அடிக்கடி பல்லவி பாடுவதின். யோக்கியதையைச் சற்று விளக்கிப் பார்ப்போம் இன்றைய தினம் காங்கிரசைவிட சர்க்கார் எந்த விதத்தில் யோக்கியதைக் குறைவானது என்பது நமக்கு விளங்கவில்லை
சர்க்காரில் அண்ணன் இருந்தால், காங்கிரசில் தம்பி இருக்கிறான். காங்கிரசில் மகன் இருந்தால், சர்க்காரில் தகப்பன் இருக்கிறான். மத... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
காங்கிரசில் மாமனார் இருந்தால், சர்க்காரில் மருமகன் இருக்கிறான். காங்கிரசில் அண்ணன் மகன் இருந்தால், சர்க்காரில் சிற்றப்பன் இருக்கிறான். காங்கிரசையும் சர்க்காரையும் ஒரு ஜீவனோபாயமாய்க் கொண்டவர்களே இந்த இரண்டு ஸ்தாபனங்களிலும் மிகுந்து இருக்கிறார்கள். இரண்டு கூட்டமும் பெரிதும் பொது ஜனங்கள் பணத்திலேயே வாழுகின்றார்கள்.
சர்க்கார் அடக்குமுறைச் சட்டங்கள் போலவே காங்கிரசிலும் அடக்குமுறைச் சட்டங்கள் இருந்து கொண்டுதான் வருகின்றன. சர்க்கார் உத்தியோகஸ்தர்கள், அதிகாரிகள் ஆகியவர்களிடத்தில் இருக்கும் நாணையக் குறைவு, புரட்டு, பித்தலாட்டம், சமயத்துக்கு ஏற்ற வேஷம், வாக்குத்தத்தம் தவறுதல். ஆகியவைகள் காங்கிரசிலும் இருந்துதான் வருகின்றன. சர்க்கார் எதேச்சாதிகாரத்தைப் போலவே காங்கிரசிலும் எதேச்சாதிகாரம்
இருந்துதான் வருகிறது
சர்க்காரில் இருக்கும் பொய் ஜனநாயகத் தத்துவமே ஏன்? அதைவிட மோசமான ஜனநாயகத் தத்துவமே காங்கிரசிலும் இருந்து வருகின்றது. சர்க்கார் தங்களுக்கு இஷ்டமில்லாதவர்களை தங்கள் அடிமை அல்லாதவர்களை ராஜத் துரோகியென்று கூப்பிட்டால், காங்கிரஸ் தங்களுக்கு அடிமைகள் அல்லாதவர்களை தேசத் துரோகி என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். எந்த விதத்தில் காங்கிரஸ், சர்க்காரை விட யோக்கியதை உடையது என்று கேட்கின்றோம் ஆகவே பாமர மக்கள் இனியாவது இந்தப் பொய் மிரட்டலை உணர்ந்து, தங்களுடைய பகுத்தறிவுக்கு சரியென்று தோன்றிய மார்க்கத்தில் நடந்து கொள்ள வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 30.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1௦
ஈரோடு அர்பன் பாங்கி தேர்தல்
ஈரோடு அர்பன் பாங்கியைப் பற்றியும், அதன் நிர்வாகத்தைப்
பற்றியும் "குடி அரசு” பத்திரிகையில் ஒரு குறிப்பு வந்திருந்ததை வாசகர்கள் கவனித்திருக்கலாம்
ஈரோடு அர்பன் பாங்கி வெகு காலம் பார்ப்பனர் ஆதிக்கத்திலிருந்து வந்ததும், அது பார்ப்பனர் பாங்காகவே இருந்து வந்ததும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன சிஷ்யர்களுக்கும், அடிமைகளுக்கும் மாத்திரமல்லாமல் மற்றவர்களுக்கு அதில் இடம் கிடைப்பதே கஷ்டமாய் இருந்ததைப்பற்றி அவ்வப்போது பல குறிப்புகள் குடி அரசில் வந்து கொண்டிருந்ததும் யாவருக்கும் தெரியும்
இப்போது சுமார் 4,5 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கத்தின் பயனாய் பார்ப்பனரல்லாத மக்கள் விழிப்பெய்தி பலதுறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருவது போலவே இந்த அர்பன் பாங்கி விஷயத்திலும் கண் விழித்தும் முன்னேற்றமடைந்து பாங்கியின் பயனை: பார்ப்பனரல்லாத மக்களும் பங்கு வீதம் இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த அளவுக்காவது அடைந்து வருகிறார்கள் என்பதைக் கேட்க பார்ப்பனரல்லாதார் எல்லோருமே மகிழ்ச்சி அடையக்கூடும். நிற்க
சமீபகாலமாய் அதாவது 2,3 வருஷ காலமாய் ஈரோடு அர்பன் பாங்கி டைரக்டறேடானது ஒரு பார்ப்பனரல்லாதாரை பிரசிடெண்டாகக் கொண்டு நிர்வாகம் நடைபெற்று வந்ததைப் பற்றி அதன் எதிரிகள். பலவிதமாகக் குற்றங்களைக் கூறி விஷமப் பிரசாரங்கள் செய்து வந்ததோடு சிவில் கிரிமினல் விவகாரங்களும், தொல்லைகளும் நடந்து வந்ததோடு அந்த டைரக்ட்டர் சபை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள். முதலியவைகள் கூட கொண்டு வர முயற்சிகள் நடந்து வந்ததும் யாவருக்கும் தெரிந்ததாகும்
இதன் பயனாய் கடைசியில் ஏற்பட்ட பலன் என்னவென்றால் டைரக்ட்டர்களின் உத்தியோக ஆயுள் காலம் மறுபடியும் ஒரு வருஷம் வளர்ந்து வந்தது என்பதுடன் இம்மாதம் 22-ந்தேதி நடந்த அர்பன். பாங்கி தேர்தலில் பழைய டைரக்ட்டர்களே அபரிமிதமான ஓட்டுகளுடன் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுதான்.
127 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
22,9345 தேதி காலை முதல் மாலை வரை 400-பேர்கள் வரை ஓட்டர்கள் விஜயம் செய்து தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தார்கள். 5-இடங்களில் போலிங் நடந்தது. 11 பேர் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய 11ஸ்தானங்களுக்கு 24பேர்களுக்கு ஓட்டர்கள் ஓட்டுப் போட்டார்கள். கடைசியாக அடியில் கண்ட தோழர்களுக்கு அதிகமாக ஓட்டுகள். விழுந்ததால் அவர்களே தெரிந்தெடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது.
1. M சிக்கையா 376
2. 2.5. கோவிந்தசாமி நாயுடு 373
3. SR கண்ணம்மாள் 370
4. நா.மு. ஷண்முகசுந்தர முதலியார் 367
5. உராமசாமி நாயக்கர் 364
6. VVCV பெரியசாமி முதலியார் 363
7. ந உமார் நவாஸ்கான் சாயபு 363
8. ர சீனிவாசம் பிள்ளை 360
9. காதர் சாயபு 359
10. ௩:60 முருகேச முதலியார் 358
11. ஈவெங்கிடசாமி ரவுத்து 356
இதில் பத்து தோழர்கள் முன்னமேயே டைரக்ட்டராய் இருந்தவர்கள். தோழர் கண்ணம்மாள் மாத்திரம் புதிதாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.
அடுத்த நாள் 23ந்தேதி காலையில் டைரக்ட்டர்கள் கூட்டம் கூடி தோழர் M. சிக்கையா அவர்களையே மறுபடியும் பிரசிடெண்டாகவும் தோழர் VV.C. பெரியசாமி முதலியார் அவர்களை மறுபடியும் வைஸ் பிரசிடெண்டாகவும் தெரிந்தெடுத்தார்கள். தோழர் உப்புமண்டி காதர்சாயபு அவர்கள் தனது மகன் தோழர் அப்துல் ரஜாக்சாயபுக்காக ராஜினாமா செய்ததால் அந்த ஸ்தானத்துக்கு தோழர் அப்துல் ரஜாக் சாயபு அவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டார்.
வரப்போகும் 3-வருஷ காலமும் டைரக்ட்டர்களும், பிரசிடெண்டும் ஒத்துழைத்து பாங்கியின் முற்போக்குக்கு உழைப்பதோடு மகாஜனங் களுக்கு நன்மை உண்டாகும் முறையில் தொண்டாற்றுவார்கள் என்று நம்புகிறோம். கடைசியாக அர்பன் பாங்கி டைரக்ட்ரேட்டுக்கு பெண்: டைரக்ட்டரை தெரிந்தெடுத்த ஓட்டர்களை பாராட்டுவதுடன் அடுத்த எலக்ஷனிலாவது ஒரு தாழ்த்தப்பட்ட தோழரை தெரிந்தெடுக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு - கட்டுரை - 30.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 125
நமது தலைவர் ஈ.வெ.ராவும் சென்னை பார்ப்பனல்லாதார் மகாநாடும்
“புரட்சி நின்று போவதற்கு சற்று முன், நமது தலைவர் ஈ.வெ.ரா. அவர்கள், ஐஸ்டிஸ் (ustice) கட்சியோடு சரச சல்லாபம் காட்டுவதாக பாவித்து, அது, சமதர்மிகளுக்குப் பொருந்தாது என்று,
ஒரு சிறு கட்டுரை எழுதி இருந்தேன். அதைப் பிரசுரிப்பதற்கு முன் “புரட்சி” நின்று விட்டது. அதனை பிறகு வந்த ''பகுத்தறிவில்”* அதை அச்சிட்டார்களோ, அது எனக்குத் தெரியவில்லை. அந்தக் கட்டுரையில், நமது நாட்டிலுள்ள பலவித அரசியல் கட்சிகள் சம்பந்தமாக, நாமாகய சமதர்மிகள் நடந்து கொள்ளும் முறையைப் பற்றியும் எழுதியதாகவும் ஞாபகமிருக்றெது. இது நிற்க, சுயமரியாதை சமதர்மியர், தற்காலம் நடந்து வரும் தேர்தல்களில் நடந்து கொள்ள வேண்டிய முறையையும், ஜோலார்ப்பேட்டை சமதர்மம்” என்ற பத்திரிகையிலும் குறிப்பாக எடுத்துக் காட்டியுள்ளேன். இதனை அச்சஞ்சிகையில் பிரசுரித்தார்களோ அதுவும் தெரியவில்லை.
எந்தக் கட்சியினர்களாயினும் அவர்களுக்கு ஓர் இட்டம் இருக்க வேண்டும்.அந்தத்திட்டத்திற்குள்தான் அவரவர்கள் நடந்து தீரவேண்டும். வேண்டுமானால் ஒருதிட்டத்திலிருந்து மற்றொரு இட்டத்திற்கு மாறலாம். அதுதான் பகுத்தறிவின் முதல் லட்சணம். தங்கள் பகுத்தறிவுக்கு குறிப்பிட்ட திட்டந்தான் பொருத்தமுளதென்று தோன்றுங்காலை
அந்தத் இட்டத்திற்குள்ளிருந்தே நடந்து கொள்வதே ஞாயம். சமதர்மிகளாகிய நமக்கு ஈரோட்டில் ஒரு இட்டம் 1938ல் வகுக்கப்பட்டுளது. அதனை அமுலுக்குக் கொண்டு வர வேண்டியது நமது கடமை. சுயமரியாதை இயக்கத்தில் தனியாக அரசியல் கட்சி ஒன்றை ஏற்படுத்தியது அந்த ஈரோட்டுத் திட்ட மூலமாகவே. ஈரோட்டில் நமது தென்னாடு சுயமரியாதையோரில் பிரபல அங்கத்தினர்கள், சுமார் 300 பேர்களுக்கு மேலாக ஏகமனதாக ஒத்துக் கொண்ட சமதர்ம திட்டமதுவே. அந்தத் இட்டத்திற்கு முன்னால் எந்த ஏனைய கட்சிகளும் நில்லா என்பது உலகம் தெரிந்த விஷயம். அதாவது உலகிலுள்ள எந்தக்கட்சியாயினும்; சுத்த அரசியல்
129 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கட்சியாயினும், குடி அரசு கட்சியாயினும்; முதலாளி கட்சியாயினும், தொழிலாழி கட்சியாயினும்; எந்தக் கட்சிக்கும், உலகை அல்லது நாட்டைச் சீர்திருத்த ஒரே மார்க்கந்தான் உளது. அதுதான் சமதர்ம
மார்க்கம் (Socialism)
இதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், தற்கால உலக நிலையைச் சற்று நோக்கிப் பாருங்கள். சமதர்ம நாடு ஒன்றைத் தவிர, மற்ற நாடுகள் எல்லாவற்றிலும், வேலை இல்லாமை கோடான கோடி மக்களை வதைத்து வருவதே போதுமானது. எந்த
அரசும் அதனதன் மக்களுக்கு உணவு, ஆடை, குடி இருப்பு வசதி சரிசமத்துவமாக உதவவேண்டுமாயின், சமதர்ம மூலமாகத்தான்
முடியும். இதற்குத் திருஷ்டாந்தம் வேண்டுமாயின் உலக முழுமையும்
சமதர்மக் கொள்கைகளைக் கையாள முயற்சி செய்வதே அறிகுறியாகும். ஆனால் அந்தந்த அரசுகள் சமதர்மக் கொள்கைகளைக் கையாண்டு
பார்க்க எத்தனித்தும், ஏன் தோல்வியுறுகின்றார்களென்றால் அவர்கள். பெரும்பான்மையும் கொண்டுள்ள திட்டத்திற்கும், சமதர்மத்
இட்டத்திற்கும் பொருத்தமில்லாமையே முதற்காரணமாகும்.
நமது நாட்டில் உள்ள கட்சிகள் யாவும் (ஒன்றைத்தவிர) முதலாளி இட்டத்தில் மூழ்கி கிடக்கின்றவைகளே. முதலாளித் இட்டத்தை வைத்துக் கொண்டு, எந்த நல்லெண்ணத்தோடு சமதர்மக் கொள்கைகளை அனுஷ்டிக்க முயன்றாலும் அது கைகூடி வரமுடியாது. காங்ரெஸ் சமதர்மக் கட்சயொயினும், ஜஸ்டிஸ் சமதர்மக் கட்யொயினும், அல்லது மாளவியா, கெல்கார், மூஞ்சே, முஸ்லிம் சமதர்மக் கட்சியாயினும், அல்லது இந்து மத சனாதன சமதர்மக்கட்சியாயினும், எந்தக் கட்சயொயினும், ராமராஜ்ய முதல் நிகழ்ந்து வரும் முதலாளித் இட்டத்தை ஆதரித்துக் கொண்டு, “சமதர்மம்” பேசுவார்களாயின், அது பல்லாண்டு கோடி பாமர மக்களை ஏமாற்றுவதாகுமென: அறிக. அவ்விதம் பேசும் கட்சியினரை நம்புவதும், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதெனவும் அறிக. எதுவும் செய்யமுடியாத கட்சியினரை, அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று அவர்களுக்கு உபதேப்பதும், வீணான வீண் வேலையென உணர்க.
நமது தலைவர் பார்ப்பனரல்லாதார். மகாநாட்டுக்கு (பார்ப்பனரல்லாதார் என்ற சொல்லை கொட்டை எழுத்தில் போடாததற்கு மன்னிக்க வேண்டும்) விடுத்துள்ள பத்துக் கட்டளை வேலைத் திட்டத்தைப் பரிசோதிப்போம். இந்த வேலைத்திட்டங்களை, ஜஸ்டிஸ் கட்சியிலுள்ள இயாககள் (என்ன இயாகம் பிராமணரல்லா தாருக்குச் செய்தனரோ(?) அது நமக்கு விளங்காததைக் குறித்து
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 130
விசனிக்கின்றோம்[) ஆதரவு அளிப்பதாகவே எண்ணிக் கொள்வோம். கனம். பொப்லிராஜாவும், சர்.ஆர். கே.ஷண்முகமும், நமது தலைவர் விடுத்துள்ள வேலைத்திட்டத்தை மனமாற இராஜாங்க சபையில் ஆதரிப்பதாகவும் வைத்துக் கொள்ளுவோம். இந்த வேலைத் இட்டங்களை, ஒன்றையாடலும் சட்டசபையில் கொண்டு வர முடியுமா என்று பார்ப்போம்.
1. அரசியல் உத்தியோக சம்பளங்களைக் குறைக்க வேண்டுமாம்! இதைப் போன்ற (Platitudes) சாமான்ய இட்டங்களை, நமது சத்தியமூர்த்தியும் அடிக்கடி மேடையினின்று வழங்குவது முண்டு! பெருத்த உத்தியோகஸ்தர்களின் சம்பளங்கள், முதலாளி அரசியல் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளது. அதனை எள்ளளவேனும் குறைக்க நமது இந்திய சட்டசபைகளுக்கு
அதிகாரம் கிடையா. அவை, ஆங்கில பார்விமெண்டரி சட்டங்களால் இருஷ்டிக்கப் பட்டவை நமது இந்திய கவர்ன்மெண்டறாலேயே குறைக்க முடியாதென்றால்! சத்தியமூர்த்திகளும், ஷண்முகங்களும், பொப்லிகளும் என்ன செய்ய முடியும்? அரசியல் இட்ட மொன்றாக இருக்க அதனை மாற்றாமல், அந்த திட்டத்திற்கு உட்பட்டிருக்கும் விபரங்களை எப்படி மாற்ற முடியும். ஆதலின் இவ்வித சீர்திருத்தங்களைச் செய்யவேண்டு மென்பதும் வியர்த்தம். செய்யலாமென்று எண்ணுவதும் மோசடி. செய்கின்றேனென்று சொல்வதும் Cant அதாவது பாசாங்கே!
2. பழைய சமதர்மக் கொள்கைகளில் ஒன்று, கவர்ன்மெண்டே தொழிற்சாலை நடத்த வேண்டுமென்பது இந்த இட்டத்தை கையாள வேண்டுமென்று எந்த முதலாளிக்கட்சிக்காரன் முன் வருவான்? இதனைச் சொன்ன மாத்திரத்தில் ஒரு வோட் இடைக்குமா? கடந்த 20-வருஷமாக எந்த ஜஸ்டிஸ் பெரியோராவது, இதனை சொல்மாத்திர அளவுக்காயிலும் திட்டம் வகுத்தனரா? நமது ஜஸ்டிஸ் கட்சியினரை இந்த இட்டத்தை ஆதரிக்கக் கேட்டுக் கொள்வது செவிடன் காதில் சங்கூதியதேயாகும்!/
3. உண்பண்டம், இன்பண்டங்களைக் கூட்டுறவு மூலமாகவே வினியோகிக்க அரசாங்கத்தாராலேயே முடியுமா என்று கேட்கின்றோம். அவர்கள் இட்டம், தனி உடைமைத் இட்டம். தனி உடைமை இருந்தால் தான் முதலாளி அரசு நடைபெரும்.
எந்த அரசாவது தன் தலையில், தானே மண்ணைப் போட்டுக் கொள்ளுமா? 0௦- (Common wealth) ஐ நிலச்சுவான்களுமா? தொழிற்சாலை சொந்தக்காரர்களுமா? மாபெரும் வர்த்தகர்களுமா?
131 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அவர்களால் சிருஷ்டிக்கப்பட்ட அஸ்ஸம்பிலி மெம்பர்களுமா? அங்கீகரிக்கப் போகின்றனர்? தங்கள் கனவிலும் சிந்திக்க மாட்டார்களே!
4. விவசாயிகளின் கடன் நிவர்த்தி, யார் செய்யத் துணிவார்கள்? இந்த கடன் சுமார் 1000 கோடி என்று ஒரு கணக்குண்டு. சிலர் 500 கோடி என்பார்கள். இந்த மாபெரும் கடனால் பிழைக்கும் முதலாளிகளால், நமது ஏ. ராமசாமிகளும், சத்தியமூர்த்திகளும் சண்முகங்களும் தேர்ந் தெடுக்கப்படப் போ௫ன்றனர். அவர்களுக்குள்ள முதலாளி செல்வாக்கை, வெறுஞ்சொல்லால் தொலைக்கப் பார்ப்பார்களா? இது வீண் பேச்சு.
8. சர்வ கல்வி, சர்வ குடியாமைகளுக்கு, இட்டங்கள் வகுக்கக் கூடும். சத்தியமூர்த்தியும் சர்வ கல்விக்கு 10 வருஷ இட்டம் வேண்டுமென்இன்றார்! ஆனால், சர்வ கல்விக்கு வேண்டிய பண உதவி, சர்வ குடியாமையால் நேரிடும் நஷ்டம், எந்த முதலாளி அரசாங்கம் தாங்க முடியும்2 பெரிய மந்திரிகள் தங்கள் சம்பளத்தை அறைப் பங்கு குறைத்துக் கொள்வார்களா? அவர்கள் மேல் வகுக்கப்பட்டிருக்கும் வருமான வரியை இரட்டித்துக் கொள்வார்களா? இவர்கள் நிழலில் நிற்கின்றவர்களா, சர்வ கல்வியை சட்டசபைகளில் ஆதரிக்கப் போகின்றனர். எத்தனை ஆயிரம் பிராமணரல்லாத மாணவருக்கு சம்பள மில்லாமையும், Scholarships களும், எந்த ராஜ விஸ்வாசி செய்து வைத்தார் என்று கேட்கின்றோம்?
லார்டு ஓபார்ட் கவர்ன்மெண்டிலாகிலும் அகல மகமதிய மாணவர்களுக்கு அரைச் சம்பளம் விதிக்கப்பட்டது! ஆனால் உண்மையை உரைக்கவேண்டுமானால், பிராமணரல்லாத கட்சியால், சிற்சில முதலாளி பிள்ளைகளுக்கே சிற்சில உத்தியோகங்களும், செல்வாக்கும் இிடைத்தனவே ஒழிய, மற்றபடி “பள்ளு பறை பதினெட்டென்று'' கூறும் கோடான கோடி பிராமணரல்லாத பாமர மக்களுக்கு ஒரு இரணமேனும் உதவி உண்டாகவில்லை. பாபம், ஜஸ்டிஸ் கட்சி தான் என்ன செய்யும்! இவர்களும் முதலாளிகள் இவர்களை அதரிக்கின்றவர். களும் முதலாளிகள்! இவ்விருவருடைய செல்வாக்கையா போக்கிக் கொள்வார்கள்?
6. அவரவர் மதங்களை, ஆதரிக்கப்படுமென்று மத பாதுகாப்புகள் உண்டாயிருக்க, மதங்களை அரசியல் ஆதரவிலிருந்து, யாரால் எடுக்க முடியும், புதிய இட்டத்தை மாற்றிணாலன்றோ மதங்களின்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 13?
செல்வாக்கு விலக்கப்படும்? கோயில்கள் பாதுகாப்பென்று, மத ஸ்தாபன இட்டத்தை உண்டாக்கிய கட்சியா, அல்லது கூட்டமா, மதங்களை அரசாங்க ஆதரவிலிருந்து நீக்குவார்கள்2
முதலாளி இட்டம் எதுவாயினும் அதனை ஆதரிக்கும் கட்சிகளால் பாமர ஜனங்களுக்கு உண்ணவும், உடுக்கவும், இருக்கவும் சலூகைகள் இடைக்கப் போவதில்லை. அதே இட்டத்தில் இன்று செய்து வரும் அமெரிக்கா, என்.ஆர்.எ.பிரசண்ட எர்திருத்தத்தால் பத்துக்கோடி மக்களுடைய வேலை இல்லாமையை போக்க முடியாமற் போயிற்றென்றால், நிலச் சுவான்களும், பெரும் வர்த்தகர்களும், தொழிற்சாலை சொந்தக்காரர்களும், மகாத்மாக்களும், மெளலானாக்களும், அதே இட்டத்திலிருந்து கொண்டு அதன் ஊழல்களை எப்படி எடுத்தெரிய முடியும். தற்கால சட்டசயைகளில் முழுப்பங்கு முதலாளி அங்கத்தினர்களாயிருக்க, அவர்கள் முன் காங்கிரசாயினும் - ஜஸ்டிஸ் கட்சயொயினும் மற்று வேறு எந்த கட்சியாயினும் - என்ன செய்ய முடியும்? இந்த விஷயங்களை விளையாடும் பிள்ளைகளும் அறிந்தது தான்!
நாம் செய்ய வேண்டிய வேலை என்னவென்று கேட்கலாம்? பல கட்டுரைகளில் நமது கடமையைப் பற்றியும், நாம் செய்து வரவேண்டிய வேலையைப் பற்றியும் எழுதியுள்ளோம். ஈரோட்டில்
2 வருஷங்களுக்கு முன் வகுக்கப்பட்ட இட்டங்களும் இருக்கின்றன. அந்த இட்டங்களை அமுலுக்குக் கொண்டு வராமல் அந்த இட்டங்களை கனவிலும் நினையாத கட்சிக்காரரோடு சரச சல்லாப வார்த்தைகளைப் பேசுவதால் யாது பயனென்று கேட்கின்றோம்? நாம் நல்ல பிள்ளையென்று பெயரெடுக்க வேண்டுமானால் அது வெகு களுவில் அடையலாம்!
மகாத்மாக்களையும், மெளலானாக்களையும் நல்ல பிள்ளைகளென்று யார் தான் சொல்லமாட்டார்கள்!
எல்லா இயக்கங்களும் ஆரம்பிக்கும் போது உயர்வான நோக்கங்களைத் தான் வெளியிடுகிறார்கள். அனுஷ்டானத்தில் யாதொன்றும் பயன்படுவதாகக் காணோம்! ஒவ்வொரு கட்சிகளிலும் சுயநலம் அதிகரித்து அந்தந்தக் கட்சிகளின் கோரிக்கைகளை (46415) நிறைவேறச் செய்ய முடியாமற்போ௫ன்றது. பிராமணரல்லாதாரை காக்க வேண்டி வந்த இரண்டொரு காட்சிகள் அரசியல் துறையில் நுழைந்தவுடன்! தங்கள் இனத்தாரில் இரண்டொருவருக்குப் பட்டம் பதவியுடன் நின்றுவிட்டன. இத்யாதி முடிவு உலக முழுமையும் நிறைந்துள. கருங்கக் கூறுமிடத்து, முதலாளிக் கூட்டத்தில் அடங்கிய கட்சிகள் யாவும் ஒன்றுக்கொன்று தாறுமாறாக நடக்கும்.
133 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அதனதன் இயற்கை லக்ஷணங் களைப் பாமர ஜனங்கள் அறியும்படி உழைப்பதும், உழைத்து வருவதும் தான் உண்மையான சமதர்மிகளின் கடமை என்று எண்ணுகிறோம்.
- தோழர் ம. சிங்காரவேலு பி.ஏ., பி.எல்.
குறிப்பு:- சரியாகவோ தப்பாகவோ ஜஸ்டிஸ் கட்சி சம்மந்தம் 6,7 வருஷ காலமாக இருந்து வருகிறது. அதோடு ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசை விட மோசமானது என்று எனக்கு எந்தத் துறையிலும் தோன்றவில்லை. காங்கிரஸ் ஜாதி ஆதிக்கம் வேண்டுமென்கிறது. ஜஸ்டிஸ் பண ஆதிக்கம் வேண்டுமென்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படித் தங்கள் பூணூலைக் கழட்டி எறிய முடியவில்லையோ அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்குப் பணத்தை வீசி எறியவோ பணம் சம்பாதிப்பதை தியாகம் செய்யவோ முடியவில்லை. நான் என்னைப் பொருத்த வரை பணக்கொடுமையை விட, பூணூல் கொடுமையே பலமானதும், மோசமானதுமென எண்ணுகிறேன்.
மற்றபலவிஷயங்களில் தோழர்சிங்காரவேலு அவர்கள் அபிப்பிராயுந்தான். அநேகமாக நானும் கொள்ளுகிறேன். தீர்மானங்களின் மூலம் ஜஸ்டிஸ் கட்சியாரின் மனப்பான்மை வெளியாகட்டும் என்பதும் ஒரு ஆசையாகும். பொப்பிலி ராஜா பெரிய பணக்காரர். தோழர் ஷண்மூகம் பெரிய பதவிக்காரர். இருவரும் இன்னமும் பணமும், பதவியும் பெற ஆசைப்படலாம் என்றே முடிவு செய்து கொள்ளுவோம். ஏனெனில் அவர்கள் இருவரும் துறவிகள் அல்ல. பணமும், பதவியும் ஆசைப்படுவது: இன்றைய உலக வாழ்க்கை முறையில் பாதகமான காரியமும் அல்ல. ஆனால் இவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியவாதிகள், கத்தியாக்கிரகிகள், அஹிம்சைவாதிகள் என்பவர்களைவிட மோசக்காரர்களா? சூட்சிக்காரர்களா? ஏமாற்றுக்காரர்களா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி பிரார்த்திக்கிறோம். எனது பிரேரேபணைகள் ஜஸ்டிஸ் கட்சி வேலைத்திட்டத்திற்கே ஒழிய சுயமரியாதைக்கட்சி வேலைத் திட்டத்திற்கல்ல. இக்கொள்கைகளை ஜஸ்டிஸ் கட்சி ஓப்புக்கொள்ளா விட்டால் நமக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. இதை அவர்கள் ஒப்புக் கொண்டால் மேலால் நடக்கவேண்டிய விஷயங்களைப் பற்றி நாம் எல்லோரும் யோசிப்போம். இதனால் சுயமரியாதை இயக்கத்திற்கு வகுத்த திட்டங்கள் பாதிக்கப்பட்டுவிடாது. சுயமரியாதை இயக்கத் திட்டத்தில் கண்டபடியே தான் இத்திட்டத்திலும். சட்டத்திற்குக் கட்டுப்பட்டு என்று எழுதி இருப்பதுடன் நமக்கு அதிகாரம். இல்லாத விஷயங்களில் கிளர்ச்சி செய்து அதிகாரம் பெறுவது என்றும் குறிப்பிட்டிருக்கிறதே ஒழிய வேறில்லை. எந்த இயக்கத்தின் மூலம் எந்தத் திட்டம் வகுக்கப்பட்டாலும் இன்று இந்த முறையில் தான் வகுக்கக் கூடும்.
- ஈ.வெ.ரா.
பகுத்தறிவு - ஆசிரியர் குறிப்பு - 30.09.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 134
கோவையில் சுயமரியாதைத் திருமணம்
ச.ம. திருமணமும் - பு.ம. திருமணமும்
தோழர்களே!
இன்று இங்கு நடக்கும் இத்திருமணத்திற்கு சுயமரியாதைத் திருமணமென்றும் சீர்திருத்தத் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது சுயமரியாதைத் திருமணம் என்றால் சிலருக்குப் பிடித்தமில்லாமல் இருக்கலாம் என்று சீர்திருத்தத் திருமணம் எனச் சொல்லப்படுகிறது
சீர்திருத்தம்?
எப்படி இருந்தாலும் ஒன்றுதான். சீர்திருத்தம் என்றால் என்ன? இருக்கின்ற நிலைமையில் இருந்து மாற்றம் செய்வதையே சீர்திருத்தம் என்றும், நாகரீகமென்றும் சொல்லுகிறோம் என்றாலும், இந்த சீர்திருத்தமும், நாகரீகமும் வெறும் மாறுதலுக்காகவே ஏற்படுவதும் உண்டு. மற்றும் பல விஷயங்களில் செளகரியத்தையும், நன்மையையும், அவசியத்தையும், பகுத்தறிவையும் உத்தேசித்து மாற்றப்படுவதும் உண்டு. மாறுதலும் சீர்திருத்தமும் மக்களுக்கும் உலகத்துக்கும் புதிதல்ல.
உலகம் தோன்றிய நாள் முதல் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு மாறுதல் அடைந்து வந்திருக்கிறது என்பதை சரித்திரங்களையும், பழைய சின்னங்களையும் பார்த்து வந்தால் நன்றாய் விளங்கும். அது போலவே மனித சமூகமும் சகலத் துறைகளிலும் எவ்வளவு மாறுதல் அடைந்து வந்திருக்கின்றது என்பதும் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள். அடைந்து வந்திருக்கின்றது என்பதும் நம் குறைந்த கால ஆயுளின் அனுபவத்தைப் பார்த்தாலே தெரியவரும்
மாறுதல்
மாறுதல் என்பது இயற்கையேயாகும். மாறுதல் இல்லாமல் எந்த
நாடும், எந்த சமூகமும், எந்த வஸ்துவும் இருக்க முடியாது.
இந்தக் கல்யாணம் சுயமரியாதைக் கலியாணம் என்றும், இதில் பழக்க வழக்கங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் ஒன்றும் கவனிக்கப்படுவதில்லை என்றும், இதை புராண மரியாதைக்காரர்களும், வைதீகர்கள் என்பவர்களும் குற்றம் சொல்லலாம்.
135 ————————————— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வைதீகம் சாதாரணமாக இந்நாட்டில் நடைபெறும் வைதீகக் கல்யாணம் புராண முறைப்படி நடக்கும் கல்யாணம் ஆகியவைகளைப் பற்றியே சிந்தித்துப் பாருங்கள். வைதீகப் பிரசாரத்துக்கும், வைதீகத்துக்குமாகவே உயிர் வாழ்வதாய் சொல்லிக்கொள்ளும் பார்ப்பன சமூகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய கல்யாணங்களில் இப்போது எவ்வளவு சீர்திருத்தம், எவ்வளவு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை நீங்கள் கவனித்துப்பாருங்கள். காலை 7-மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு தூரத்தில் உள்ள கோவில்களுக்குப் போய் அங்கு கலியாணம் செய்து கொண்டு பகல் சாப்பாடு சாப்பிட்டு விட்டு மாலை
6 மணிக்கு புறப்பட்டு வீடுவந்து சேர்ந்து விடுகிறார்கள். 3-நாள், 5-நாள், 7-நாள் அவ்பாசனங்கள், சடங்குகள் என்பவைகள் எல்லாம் எங்கே போய்விட்டன? பெரும் செலவுகள் ஆடம்பரங்கள், பலவகைப்பட்ட விருந்துகள் எல்லாம் எங்கே போய்விட்டன?
சென்னை
மற்றும் குருட்டு நம்பிக்கையும், மூட பக்தியும் பிறந்த ஊராகிய சென்னை முதலிய இடங்களில் நாயுடு, முதலியார், செட்டியார் என்று சொல்லப்படும் ஜாதிகளும், வைதீக சிகாமணிகளும் சடங்குகளினாலும், வேஷங்களினாலும் தங்களைப் பெரிய ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்களுமான மக்கள் இன்று தங்கள் தங்கள் வீட்டிலேயே, ஒரே நாளில், ஒரு பகலில், ஒரு விருந்தில் கல்யாணங்களை முடித்து விடுகின்றார்கள். இவைகள் எல்லாம் மாறுதல் அல்லவா? சீர்திருத்தம் அல்லவா என்று யோசித்துப் பாருங்கள். மனிதனில் எவனும் மாறுதலுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது
காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் நடந்து போனால்தான் புண்ணியம் என்று நம்பின மனிதன் இன்று காளை வண்டியில் போய், குதிரை வண்டியில் போய், ரயிலில் போய், மோட்டாரில் போய், ஆகாயக்கப்பலில் மணிக்கு 300 மைல் வேகம் போகக்கூடிய நிலைமையை அடைந்து விட்டான். இவனிடம் புராணத்தையும், வைதீகத்தையும் பேசினால் செல்லுமா என்றும் யோசித்துப் பாருங்கள். அது போலவே சக்கி முக்கிக் கல்லின் மூலம் விளக்கு வெளிச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்த மனிதன் விளக்காகி, பந்தமாகி, பவர் லைட்டாகி, கியாஸ் லைட்டாகி, இன்று எலக்டிரிக் லைட் அதாவது ஒரு பொத்தானை அமுக்கினால்
லக்ஷம் விளக்கின் வெளிச்சம் போன்ற பிரகாசத்தைக் கண்டுபிடித்து அனுபவித்து வருகிறான். இந்தக் காரியங்களையெல்லாம் புராணமும், வைதீகமும் தடுத்துவிடக் கூடுமா என்று பாருங்கள்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 136
திருமணம்
அதுபோலவே இந்தத் திருமணம் என்னும் விஷயத்திலும் முற்போக்கு ஏற்பட்டுத்தான் தீரும். அதை நீங்கள் தடுத்துவிட முடியாது திருமணத்துக்கு 1000 சாஸ்திரமும், புராணமும் இருந்தாலும் அதை இனி மக்கள் நம்பிக் கொண்டும், ஏற்றுக் கொண்டும் இருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. காலதேச வர்த்தமானத்துக்குத் தகுந்தபடி மாறிக்கொண்டுதான் வரும். அநேக தேசங்களில் கல்யாணம் என்கின்ற பேச்சே இப்போது அமுலில் இல்லை. ஆணும் பெண்ணும் ஒன்றாகக் கூடித்தான் வாழ வேண்டும் அல்லது வாழ்க்கை நடத்தவேண்டும் என்கின்ற முறையும் இல்லை. இஷ்டப்பட்டால் இரண்டு பேர் கூட்டு வியாபாரம் செய்வது போல் சேர்ந்து ஒரு குடும்பத்தை நடத்துகிறார்கள். இஷ்டம் இல்லாவிட்டால் தனித்தனியாக குடும்பத்தை நடத்துகிறார்கள்
மேலும் குடும்பம் என்கின்ற தொல்லையே இல்லாமல் சுதந்திர மக்களாகவே இருக்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து அனுபவிக்கும் இன்பத்தையும், உணர்ச்சி பரிகாரத்தையும், இரு சினேகிதர்கள் அனுபவிக்கும் சிநேக இன்பத்தைப் போலவும் இயற்கைக் கூட்டுப் போலவும் கருதி வாழுகின்றார்கள். இவைகள் எல்லாம் மனிதன் அனுபவத்தினாலும்,
நாளுக்கு நாள் மனிதனுடைய கஷ்டமும், கவலையும், தொல்லையும் குறைக்கப்பட்டு வர வேண்டும் என்கின்ற முயற்சியினாலும் தத்துவ விசாரத்தினாலும் ஏற்படும் காரியங்களேயாகும்
சுயமமியாதை
ஆதலால் சுயமரியாதை என்கின்ற வார்த்தையைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. மனிதனுடைய பகுத்தறிவுக்கு மரியாதை கொடுப்பது தான் சுயமரியாதையின் முக்கிய தத்துவம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். உங்கள் பகுத்தறிவினாலும் உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு ஒன்று தோன்ற உலக பழக்க வழக்கத்துக்கு - சாஸ்திரத்துக்கு
- மதக்கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால் அதைத்தான். சுயமரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகிறோம். அதைத்தான். அடிமைத்தனம், சுதந்திரமற்றதனம் என்று சொல்லுகின்றோம்
ஆதலால் எந்தக் காரியத்தையும் உங்கள் பகுத்தறிவையும் அனுபவ பலனையும் அனுசரித்துப் பார்த்து நடக்க வேண்டும் என்கின்ற முறையிலேதான் இந்த சுயமரியாதைக் கல்யாணம் என்பதும் ஆங்காங்கு செய்யப்பட்டும், பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றதே ஒழிய வெறும் மாறுதலுக்காக என்று செய்யப்படவில்லை.
137 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
புராண மமியாதை உங்களுடைய புராண மரியாதைக் கல்யாணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். பு.ம. கல்யாணத்தின் முதல் தத்துவமே பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் - சுதந்திரமற்றவர்கள் - மனிதத் தன்மைக்கு அருகதையற்றவர்கள் என்பவைகளை நிலைநிறுத்துவதற்காகச் செய்யப்படும் சடங்கு, அல்லது காரியம் என்பது எனது அபிப்பிராயம். உதாரணமாக கன்னிகாதானம், பெண் கொடுத்தல், பெண் வாங்குதல், தாலி கட்டுதல் முதலிய வார்த்தைகளாலும் புருஷனுக்கு கொண்டவன், கொண்டான் என்று சொல்லப்படுகின்ற வார்த்தைகளாலும் பெண் அடிமையாகப் பாவிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.
இந்தச் சுயமரியாதைக் கல்யாணம் என்பதின் முக்கிய தத்துவம் கூட்டு வாழ்க்கையில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமோ, உயர்வோ, தாழ்வோ இல்லையென்பதம் சகல துறைகளிலும் சம சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுமேயாகும்.
மற்றும் வைதீகப் புராண முறைக் கல்யாணத்தில் மதம், ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் முதலியவைகளைக் கவனிப்பதே முக்கியமாய் இருப்பதால் ஆண், பெண் பொருத்தம் சரியாய் ஏற்படுவதில்லை. “குலத்தில் ஒரு குரங்கைக் கொள்ளு", "பாத்திரமறிந்து பிச்சை கொடு", “கோத்திரமறிந்து பெண்ணைக் கொடு'' என்னும் பழமொழிகளைப் பார்த்தாலே குலம், கோத்திரம், ஜாதி, வகுப்பு முதலியவைகளுக்குள்ள நிர்ப்பந்தங்கள் நன்றாய்த் தெரியும். இதன் பயனாய் அனேக கல்யாணங்களில் பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளை. இல்லாமலும், மாப்பிள்ளைக்கு ஏற்ற பெண் இல்லாமலும், நாயும், பூனையும் போல் ஜோடிகள் சேர்ந்து விடுகின்றன.
சுயமரியாதைக் கல்யாணத்தில் ஜாதி, வகுப்பு, குலம், கோத்திரம் என்பனவைகள் கவனிக்கப்படாமல் மணமக்களுடைய யோக்கிய தாம்சங்களையே கவளித்துப் பார்க்கப்படுகின்றது
வைதீகக் கல்யாணத்தில் வயதுக்கிரமங்களை தக்க பருவங்களை முக்கியமாய் கவனிப்பதில்லை. தக்க பருவம் வருவதற்கு முன்பு பெண்களுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்து வருகின்றது. உதாரணமாக “10 வயது வந்தால் ஒரு பறையனுக்குப் பிடித்துக் கொடு” என்று சொல்லும் பழமொழியைப் பார்த்தால் விளங்கும். 50, 60 வயதான ஆண் கிழத்துக்கு 10, 12 வயது பெண்: குழந்தையைப் பிடித்து தாலிகட்டி விடுகிறார்கள். கல்யாண விஷயத்தில் ஆண்களுக்கு கிழம் என்பதே இல்லையாம்
இந்த விஷயத்திலும் சுயமரியாதைக் கல்யாணம் தக்க சரிசமமான. வயதுப் பொருத்தம் பார்த்தே செய்யப்படும்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 135
மற்றபடி புராணக் கல்யாணங்களில் நாள் பார்ப்பது, கோள். பார்ப்பது, சடங்குகள் செய்வது, அதிகச் செலவுகள் செய்வது முதலிய காரியங்களால் கல்யாணக்காரர்களுக்கு தாங்க முடியாததும், விலக்க முடியாததுமான பல அசெளகரியங்கள், செலவுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாகப் புரோகிதன் அதிகாலையில் 4% மணி, 5 மணி, 6 மணிக்கு “முகூர்த்தம்” வைத்துக் கொடுத்து விடுகிறான். இதனால் இரவெல்லாம் தூக்கமில்லாமல் கல்யாணத்துக்கு வந்த ஜனங்கள் அவஸ்தைப்படுகிறார்கள். பல்லு விளக்காமல், கால், கை கழுவாமல், வெளிக்கும் போகாமல், நித்தியக் கடன்களை காலா காலத்தில் கழிக்க முடியாமல் மக்கள் அவஸ்தைப்படுவதும் மற்றும் பழக்கவழக்கமென்னும், சடங்கு, ஆடம்பரம் முதலியவைகளால் கல்யாணக்காரர்களுக்கு சகிக்க முடியாத தொல்லைகளும், தாங்க முடியாத கடன்களும் ஏற்பட்டு அக்குடும்பங்கள் ஒன்று, இரண்டு வருஷங்களுக்கும் சில சமயங்களில் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி வேதனைப்படுவதுமாக இருந்து வருகின்றது
சுயமரியாதைக் கல்யாணத்தில் எல்லோருக்கும் செளகரியமான நேரமும், மிகவும் சுருக்கமான செலவும் கொண்டு நடத்தப்படுவதோடு அனாவசியமான - அர்த்தமற்ற சடங்குகளையும் ஒழித்து நடத்தப்பட வேண்டுமென்று கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் எல்லாம் கல்யாணத்திற்கு ஏதாவது பலக்குறைவோ, கெடுதலோ ஏற்பட்டுவிடும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை. கல்யாணத்துக்கும், ஜாதி, மதம், சடங்கு, நேரம், காலம், குலம், கோத்திரம் ஆகியவைகளுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.
பு.ம. வால் என்ன பலன்
நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம் சடங்குக்கிரமம் முதலியவைகள் கவனித்தே 100க்கு 99 கல்யாணங்கள் செய்யப்படுகின்றன. இப்படியெல்லாம் செய்தும் இன்று அவற்றின். பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களானால் ஒட்டு மொத்தம் பெண் சமூகத்தில் 100க்கு 20 பெண்கள் விதவைகளாய் இருக்கிறார்கள். இந்த விதவைகளுள் 100க்கு 25 பேர்கள் 20 வயதுக்குக் கீழ்ப்பட்ட விதவைகள் என்றால் அவர்களின் கஷ்டத்தையும், அனுபவிக்கும் வேதனைகளையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நாள், கோள் பார்த்து சாஸ்திரப்படி சடங்குகள் செய்யப்பெற்ற தெய்வீகக் கல்யாணங்களில் பெண்கள் 100க்கு 20 பேர் ஏன் விதவைகளாய் இருக்க வேண்டும். அவர்களில் 100க்கு 25 பெண்கள் 20 வயதுக்குட்பட்டவர்கள் விரக வேதனையில் ஏன் அழுந்திக் கொண்டிருக்க வேண்டும். இது “தெய்வீக மணத்தின்” பலனா? அல்லது “அசுர மணத்தின் “பிசாச” மணத்தின் பலனா என்று யோசித்துப்
139 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பாருங்கள். தெய்வீகம், பழக்கம், வழக்கம், சாஸ்திரம் என்கின்ற
வார்த்தைகள் முன்னேற்றத்துக்கும், பகுத்தறிவுக்கும், சுதந்திரத்துக்கும், ஜன்ம விரோதியான வார்த்தைகளாகும். ஆதலால் சுயமரியாதைக் கலியாணம் என்பதில் மேற்படி முன்னேற்ற விரோதிகளுக்கும், சுதந்திர விரோதிகளுக்கும் இட மில்லை. இந்தக் காரணங்களால்தான், பழமை விரும்பிகள், வைதீகர்கள், பகுத்தறிவற்ற கோழைகள், சுயமரியாதை இயக்கம் என்றாலும், சுயமரியாதைக் கல்யாணம் என்றாலும் முகத்தைச் சுளித்து கண்களை மூடி விழிப்பார்கள். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கூட்டங்களுக்கு மரியாதைக் கொடுத்த எந்த தேசமோ, சமூகமோ விடுதலை பெற்றதாக யாரும் சொல்ல முடியாது
ஆகையால் தான் இந்தப் பிரசாரம் செய்து வருகின்றோம். மற்றபடி இந்தக் கலியாணத்தில் என் போன்றாருக்கு யாதொரு வேலையும் இல்லை. புரோகிதத்துக்காக எவரும் இங்கு வரவும் இல்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நீங்கள் எல்லோரும் இதனை, கவனித்து நன்றாய் சிந்தித்துப் பாருங்கள். நன்மையை கைக்கொண்டு பகுத்தறிவு வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் உதவி புரியுங்கள் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் சார்பாக மணமக்களை தங்கள் ஓப்பந்தங்களைக் கூறி ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டிக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 22.09.1934 கோவை சுயமரியாதை சங்கத்தின் ஆதரவில் தோழர்
என். கிருஷ்ணசாமிக்கும் வி. லட்சுமிக்கும் கோவை முனிசிபல் உயர்நிலைப்பள்ளி கட்டடத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரை.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 10
சென்னை கடற்கரையில் 5000 பேர் கூட்டம்
வரப்போகும் தேர்தல்
தோழர்களே! இன்று இங்கு எலக்ஷன் சம்மந்தமாகப் பேசுவதற் கென்றே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக எனக்குத் தெரிகின்றது
கட்சி கிடையாது
எனக்கு எலக்ஷனில் கக்ஷிப் பிரச்சனை கிடையாது. கட்சிகள் என்பது கொள்கைகளைப் பொருத்ததாக இருப்பது இயல்பு. ஆனால்
நம் நாட்டில் எந்தக் கட்சியையும் கொள்கையை ஆதாரமாய்க் கொண்டதாக ஒப்புக்கொள்ள முடியவில்லை.
நமது மாகாணத்தில் வெகுகாலமாகவே கட்சிகள் உத்தியோக ஆசைக்கும், வகுப்பு ஆதிக்கத்துக்குமாகவே இருந்து வருகின்றனவே ஒழிய, பொது ஜன நலக் கொள்கைக்காக இருந்து வரவில்லை
முதலில் உத்தியோக ஆசையை முன்னிட்டு ஏற்பட்ட கட்சியின் பயனாய் பல கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும், அதிகாரங்களும் நமது மக்களுக்குக் கிடைக்க செளகரியமானவுடன் இப்போது இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், தீண்டாதவர், பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார். என்கின்ற வகுப்பு நலத்தைப் பிரதானமாய்க் கொண்ட கக்ஷிகள் தலை விரித்தாடுகின்றன. ஒவ்வொரு வகுப்புக் கக்ஷியும் மற்ற வகுப்பை ஏமாற்றுவதற்கு அனுகூலமான விஷயங்களைத் தான் கக்ஷிக் கொள்கைகளாய்க் கொண்டிருக்கின்னனவே ஒழிய வேறில்லை.
வகுப்பு வாதம் தான் கட்சி. இன்றைய அகில இந்திய கக்ஷியை எடுத்துக்கொள்ளுங்கள் முஸ்லீம்கள் காங்கிரசை ஒப்புக்கொள்ளாமல் தனியாக தங்கள் வகுப்புக்கு ஒரு க்ஷி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்திய தேசிய காங்கிரஸ் என்பதை வகுப்பு (இந்துக்கள்) க்ஷி என்றும் சொல்லுகிறார்கள். அது போலவே கிறிஸ்தவரும் மற்றவர்களும் சொல்லுகிறார்கள்.
Ul ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஆனால் இந்துக்களோ, காங்கிரஸ்தான் பொதுக்கக்ஷி என்றும், மற்றவைகள் எல்லாம் வகுப்புக் ககூஷிகள் என்றும் சொல்லுகிறார்கள்.
இந்தத் தத்துவமே தான் இன்று பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். உணர்ச்சி ஏற்பட்டிருப்பதும், பார்ப்பனர் ஜஸ்டிஸ் கட்சியை வகுப்பு வாதக் கட்சி என்பதும், பார்ப்பனரல்லாதார் காங்கிரசை வகுப்பு வாதக் கட்சி என்று சொல்லுவதும் ஆகியவற்றிற்குக் காரணமாய் இருக்கின்றது கட்சிகளின் போக்கும் இந்த உள்கருத்தை ஆதாரமாகக் கொண்டதாகவே இருந்து வருகின்றன. இதுவரை இந்தப் பேராட்டம் அதாவது பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் போராட்டம் நமது மாகாணத்துக்குள்பட்ட விஷயங்களைப் பொருத்தவரையில் இருந்து வந்தது
பொறாமையால் வந்த விணை
பல காரணங்களால் தோழர்கள் ஆர்.கே. ஷண்முகம், ஏ. ராமசாமி முதலியார் ஆகியவர்கள் எப்படியோ இந்திய சட்டசபைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து இப்போது இந்தியா பூராவுக்கும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி பரவ வேண்டியதாய் விட்டது. அவர்கள் இந்திய சட்டசபைக்குப் போனதின் பயனாய் அங்கிருந்து வந்த பார்ப்பன ஆதிக்கத்தக்குச் சாவு மணி அடித்து விட்டது. ஆர்.கே.எஸ்., எ.ஆர். ஆகிய இவர்களின் மேன்மையும், திறமையும் அங்கு தாண்டவமாடத் தலைப்பட்டுவிட்டது. இதிலிருந்து பார்ப்பனர்கள் தோழர்கள் ஷண்முகம், A. ராமசாமி ஆகியவர்கள்.
விஷயத்தில் அதிக கவலை எடுத்து அவர்களை அங்கு செல்லவொட்டாமல் தடுக்க வேண்டியவர்களாய் விட்டார்கள். அதோடு தோழர் ஷண்முகத்திற்கு இந்திய சட்டகபைத் தலைவர் பதவி கிடைத்தவுடன் சில பார்ப்பனர்களின் பொறாமையும், சதியும் ஒன்றுக்குப் பத்து, நூறு, ஆயிரமாய் வளர்ந்து விட்டது. எப்படியானாலும் கூடிய சீக்கிரத்தில் இவர்கள் இருவரும் இன்னும் பெரும் பதவிகளுக்கு வரப் போகின்றார்கள் என்பது பார்ப்பனருக்குத் தெரியும். ஆதலால் பார்ப்பனர் இதுவே கடைசி முயற்சி என்கின்ற வேகத்தில் எவ்வளவோ தடைகள் செய்து வருகிறார்கள்.
தலைவராகவில்லை என்றால் போட்டியில்லை
உதாரணமாக தோழர் ஷண்முகம் அவர்கள், தான் மறுபடியும் தலைவர் பதவிக்கு நிற்பதில்லை என்று சொல்லிவிட்டால், தென் இந்தியாவில் இந்திய சட்டசபைத் தேர்தல்களில் எதற்கும் காங்கிரசு போட்டி போடாது என்பது உறுதி என்று நீங்கள் நம்பலாம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 10
ஒரு சமயம் அவர் கண்டிப்பாய் நிற்பதானாலும் தோழர்கள் எ.ராமசாமி முதலியார் அவர்களும், டாக்டர் வரதராஜுலு அவர்களும் தாங்கள் இந்திய சட்ட சபைக்குச் சென்ற பிறகு பிரசிடெண்ட் எலக்ஷனில் தோழர் ஷண்முகத்துக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று வாக்குக் கொடுத்துவிட்டால் தோழர்கள் சத்தியமூர்த்தி, அவனாசிலிங்கம் செட்டியார், குமாரசாமி ராஜா, முத்துரங்க முதலியார் ஆகியவர்கள் உடனே 'வித்ட்றா' செய்து கொள்ளுவதில் ஆக்ஷபனை இல்லை ஆகவே இன்று நடக்கும் இந்திய சட்டசபைத் தேர்தல் சொந்த புத்தியுள்ள பார்ப்பனரல்லாதாரும் பார்ப்பனர்களுக்கு அடிமையா யில்லாத பார்ப்பனரல்லாதாரும் இந்திய சட்டசபைக்குப் போகக் கூடாது என்பதைத் தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்று தைரியமாய்ச் சொல்லுவேன்.
தோழர் ஷண்முகம் அவர்கள் இந்திய சட்டசபையில் தலைவரான பிறகு, அவரது பெருமை இந்தியாவில் எங்கும் பேசப்பட்டு வருவதானது நம்நாட்டு பார்ப்பனர்களுக்குப் பெருத்த ஆத்திரத்தை மூட்டிவிட்டது. எப்படியாவது அவரைத் தடுத்துவிட வேண்டும் என்பதே காங்கிரஸ்காரர்களுடைய எலக்ஷன் பிரச்சினையாகிவிட்டது
செய்த கெடுதி என்ன?
மற்றபடி காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் சொல்லும் காரணங்கள். ஒரு காசுக்கும் பயன்படாது என்று சொல்வேன்.
அரசியல் விஷயத்தில் தோழர் ஷண்முகம் என்ன கெடுதி செய்தார் என்று யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன். அவர் வெகுகாலம் காங்கிரசிலிருந்தவர், அவருடைய திறமையையும், அறிவையும் கண்ட பார்ப்பனர் காங்கிரசில் அவரைத் தலையெடுக்க வொட்டாதபடி சூட்சி செய்ததால் காங்கிரசை விட்டார். தன் காலிலேயே நின்றார். தோழர் எ.ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்களைப் போலவே அவரும் பல விஷயங்களுக்கு அரசாங்கப் பிரதிநிதியாய் நியமிக்கப்பட்டார்; வெளி தேசத்துக்கும் சென்றார். அவர் திறமையால் ஜனப் பிரதிநிதிகள் கொண்ட சட்டசபைக்குத் தலைவரானார். அவர் அங்கு நடந்து கொண்ட திறமையால் மறுபடியும் அவர் தலைவராகப் போகிறார் என்பது உறுதி. அவர் மீது ஆத்திரப்படும் பார்ப்பனர்கள் அவர் தலைவராய் இருந்தபோது ஏதாவது தவருதலாய் நடந்துகொண்டார் என்பதைக் காட்டி ஆக்ஷேபித்தால் அது ஆண்மையாகும்
தோழர் ஷண்முகம் இந்திய சட்டசபைத் தலைவர் என்கின்ற ஹோதாவில் ஒரு சமயத்தில் சட்டசபைக்குள் வைசிராய்க்கு காவலாக இருந்த சுமார் 100 போலீஸ்காரர்களை வெளியில் போகும்படி சொன்னார். யார் சொல்லியும் கேட்கவில்லை. மற்றொரு சமயம் ராணுவ
143 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சம்பந்தமான விஷயத்தில் அரசாங்கத்துக்கு நேர் விரோதமாக தீர்ப்புக் கொடுத்தார். இந்த இரண்டையும் இந்தியா முழுவதுமே பாராட்டிற்று ஆனால் பார்ப்பனப் பத்திரிக்கைகளும், அவர்களது கூலிப் பத்திரிக்கைகளும் மாத்திரம் சிறிது கூட மனிதத் தன்மை, நியாயம் ஆகியவையில்லாமல் அவற்றை மறைத்தும், திரித்தும் கூறின.
வரதராஜுலுக்கு ஏன் போட்டி?
தோழர் வரதராஜுலுவுக்கு விரோதமாய் இந்தப் பார்ப்பனர்களும், அவர்கள் கூலிகளும் ஏன் இவ்வளவு விஷமப் பிரசாரம் செய்ய வேண்டும்? அவர் என்ன செய்தார்? அவர் கிராமம் கிராமமாக தன் கைப் பணத்தைச் செலவு செய்து கொண்டு பிரசாரம் செய்தவர். அவர் காங்கிரசில் மாகாணத் தலைவராகவும், எல்லா இந்திய காரியக் கமிட்டி அங்கத்தினராகவும் இருந்தவர்.
இந்தப் பார்ப்பனர்கள்தான், தோழர் வரதராஜுலுவை தென்னாட்டுத் திலகரெனவும், தோழர் ராஜகோபாலாச்சாரியாரைத் தென்னாட்டுக் காந்தி எனவும் பெயரிட்டார்கள். அதற்குப் பிறகு தேசத்துக்கு விரோதமாயாவது, சர்க்காருக்கு அனுகூலமாயாவது என்ன காரியம் செய்து விட்டார் என்று யாராவது சொல்லட்டும்
4 அணா கொடுத்து காங்கிரசில் சேரவில்லை. ஆதலால் அவர் தேசத்துரோகி” என்று சொல்லுவதானால் இதை மற்றவர்கள் சகிக்க முடியுமா?
தோழர் ராமசாமி முதலியார் அவர்களுக்கு விரோதமாய் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
(தொடர்ச்சி 14.10.1934 குடி அரசு)
குறிப்பு: 28.09.1934 இல் சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் “வரப்போகும் தேர்தல்' என்பது பற்றி ஆற்றிய சொற்பொழிவு.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1
இரண்டு மகாநாடுகள்
சென்ற மாதம் கடைசி வாரத்தில் தமிழ் நாட்டில் இரண்டு மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. ஒன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாடு. மற்றொன்று கோவையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மகாநாடு. முன்னையதற்கு பொப்பிலி ராஜா தலைவர். பின்னையதற்கு தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் தலைவர். இருவர். களுடைய பேச்சுச் சுருக்கமும் வேறு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
ஜஸ்டிஸ் மகாநாட்டில் ஒரு பெரிய மாறுதல். அதாவது அது தன்: அஸ்திவாரத்திலிருந்தே ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்திக்கொண்டது இனி அதைப் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்றோ, வகுப்புவாதிகள் மகாநாடு என்றோ, பார்ப்பனத் துவேஷிகள் மகாநாடு என்றோ ஒருவராலும் சொல்ல முடியாதபடி செய்து கொண்டதுடன் எவ்வித வகுப்பு நிபந்தனையும் இல்லாமல் எல்லா வகுப்புகளுக்கும் சம சுதந்திரமும், சம சந்தர்ப்பமும், சம நீதியும் வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இருக்கிறது
இதற்குக் காரணம் “வகுப்பு வாதம்” என்று பார்ப்பனர்கள் போட்ட கூச்சலாயிருந்தாலும் இருக்கலாம். அல்லது பிரிட்டன் அதிகார வர்க்கத்துக்கோ, அல்லது அரசாங்க வர்க்கத்துக்கோ ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று இருந்த நிபந்தனையின் காரணம் இன்னது என்று விளங்காமல் இருந்தானும்
இருக்கலாம். எப்படியிருந்தாலும் ஜஸ்டிஸ் கட்சி இப்பொழுது ஒரு அரசியல் கட்சி என்கின்ற “பெருமையை” அடைந்துவிட்டது
இந்த மாறுதலுக்கு அஸ்திவாரமாயிருந்தவர் தோழர் சர். ஷண்முகம் என்பது நமது அபிப்பிராயம். மற்ற ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஷண்முகம் ஆட்டத்துக்குத் தாளம் போட்டவர்களேயாவார்கள் என்பதும் நமது அபிப்பிராயம்.
சமூக வாழ்விலுள்ள உயர்வு தாழ்வை ஒழிக்கவும், தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களுக்கு சமத்துவமும், சமசந்தர்ப்பமும் அளிக்கவும் ஜஸ்டிஸ் கட்சியை ஒரு உப கருவியாக உபயோகித்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தின் மீது தான் சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கக்வியை அனுசரித்து அதில் சிறிது கலந்து வந்ததே ஒழிய அதுவே சர்வ வியாதிக்கும் சஞ்சீவி என்று கருதியல்ல.
145 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இதன் பயனாய் சில நன்மைகள் ஏற்பட்டன என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அக்கக்வியானது நாதனற்று சிலருடைய வாழ்வுக்கும், பெருமைக்கும், பணம், பதவி சம்பாதிப்பதற்கும் மாத்திரம் பயன்படத்தக்கது என்று உலகோர் இகழும்படியாகக் கூட 4,5 வருஷகாலம் கஷ்டப்பட்டுவிட்டது என்பதானது, நாம் மறைத்ததாலேயே மறைந்துவிடும் என்று நம்பமுடியாது இப்போது அக்கக்ஷி ஒரு முக்கிய கொள்கையையே தியாகம் செய்து விட்டது என்பதோடு மாத்திரமல்லாமல் ஒரு தகுதியான தலைவரையும் பெற்றுவிட்டது. ஆதலால் வரப்போகும் அரசியல்
சரித்திரத்தில் (சமூக சரித்திரத்தில் அல்ல) ஒரு நல்ல ஸ்தானத்தைப் பெற்று சென்னை மாகாணத்தை இந்திய மாகாண வரிசையில் முதல் ஸ்தானத்தில் இருத்தி வைக்கும் என்பது நமது நம்பிக்கை
அதன் இன்றைய தலைவர் செல்வந்தரேயானாலும், சிறு வயதினரேயானாலும், அக்கக்ஷியில் இருந்து வரும் வேலைத் திட்டத்துக்கு மிகப் பொருத்தமானவரும், மிக மிக அவசியமானவரும் இன்றியமையாதவரும் ஆவார் என்று சொல்லலாம்.
அவர் 1932-ல் ஜஸ்டிஸ் கக்ஷிக்குத் தலைவராவதற்குப் பலாத்கார உதவியும் தேவை இருந்தது என்று நாம் கேள்விப்பட்டோம். ஆனால் இப்போது ஜஸ்டிஸ் கக்ஷித் தலைமை ஸ்தானம் என்கின்ற கிரீடம் வேறு எவர் தலைக்கும் பிடித்தமும் பொருத்தமும் இல்லாததாகி, அதுவாகவே அவரைப் போய் அடைந்து விட்டது.
இதற்குக் காரணம் இந்த இரண்டு வருஷ காலத்திய அவருடைய நிர்வாகமானது அவருடைய சொந்த எதிரிகளும், ஜஸ்டிஸ் கக்ஷியின் பிறவி எதிரிகளும் கூட குறைகூற முடியாதவாறு நடந்திருக்கிறதே. அவரது இந்த இரண்டு வருஷத்திய சம்பளம் சுமார் லக்ஷ ரூபாயையும் கக்ஷி நன்மைக்கே பயன்படுத்தியுள்ளார். அது மாத்திரம் அல்லாமல் தன் சொந்தப் பணத்தையும், லக்ஷக் கணக்கில் கட்சிக்காகவென்று செலவு செய்திருக்கிறார்.
இதிலிருந்து பணத்தாசையால் இவர் இந்தப் பதவிக்கு வந்ததாக யாரும் சொல்ல முடியாது. அன்றியும் பதவி ஆசை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் இவர்களது பாட்டனார் காலத்திலேயே அதாவது மந்திரிப் பதவிக்குக் குண்டு போடும்படியான அவ்வளவு மதிப்பும், பெருமையும் இருந்த காலத்திலேயே வேண்டாம் என்று உறுதிப்படத் தள்ளிவிடப்பட்டிருக்கிறது
தேசிங்கு ராஜன், நெப்போலியன் ஆகியவர்கள் சரித்திரம், கதைப் பிரசங்கங்கள் ஆகியவை போல் இன்று ஆந்திர தேசத்தில் கூத்து, பாட்டு முதலியவை மூலம் பொப்பிலி ராஜ்யத்தைப் பற்றி நடக்கின்றன.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 14௦
ஆதலால் சரித்திர கால முதல், இன்றைய பண உலகம் வரை அவரது மேன்மைக் குணம் காரணமாகவே தலைமை பதவி அவரைப் போய் அடைந்திருக்கிறது
செல்வம், செல்வாக்கு, பதவி, பெருமை ஆகியவைகள் உள்ள ஒருவன் செல்வத்தை, செல்வாக்கை, பெருமையைத் தியாகம் செய்வதுதான். உண்மையான தியாகமே ஒழிய, ஒன்றும் இல்லாதவன் தான். எல்லாவற்றையும் பிறக்கும்போதே தியாகம் செய்து விட்டேன் என்று சொல்வதில் எவ்வளவு தியாகம் இருக்கக் கூடும்?
சரீரத்தில் பலமும், தக்க ஆயுதமும் உள்ளவன் சகிப்புத்தான் அஹிம்சா தர்மத்தை அனுசரித்ததாகலாமே ஒழிய பலவீனர், பயங்காளி, ஆயுதமற்றவர்களின் சகிப்பு அஹிம்சாதர்ம சகிப்பு ஆகாது அதுபோல்தான் பொப்பிலி ராஜாவின் தியாகம், தாராளம் முதலியவைகள். தலைமைக்கு ஏற்றது என்கிறோம். இவ்வளவும் இருப்பதுடன் அவர். தலைமை தாங்கும் கட்சிக்கு ஒரு கொள்கை, அல்லது ஒரு வேலைத்திட்டம் இல்லாவிட்டால் ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைத்தது போல்தான் முடியும் அக்கட்சியில் அவரைச் சுற்றியுள்ளவர்கள் பெரும்பாலும் கட்சிக்கொள்கைக்குச் சம்மந்தமில்லாமலும், வயிற்றுப் பிழைப்பையே பிரதானமாய்க் கொண்டவர்களும், வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் விற்கும் “தியாகி” களாகவுமே இருக்கிறார்கள். பலர் தங்களை ஜஸ்டிஸ் கட்சியார் என்று சொல்லிக் கொண்டு தியாகராய மண்டபத்தைச் சுற்றிக் கொண்டு திரியாவிட்டால் உப்புக்குக் கூட வகையில்லாமல் திண்டாடக் கூடியவர்களாகவுமிருக்கிறார்கள். நாமினேஷன்கள் வேண்டும் எலெக்ஷன்களுக்குப் பணம் வேண்டும். பிள்ளைகளுக்கு உத்தியோகம் வேண்டும். பட்டங்கள் வேண்டும். பதவிகள் வேண்டும். ஆனால் கட்சிக்காக இந்த 17 வருஷ காலமாக ஜஸ்டிஸ் பத்திரிக்கைக்கு ஒரு மீ” சந்தா கூட கொடுத்தறியார்கள். இப்படிப்பட்டவர்கள் சென்னை மாத்திரமல்லாமல், மாகாணம் பூராவும் இருக்கிறார்கள் என்று சொல்லுவதால் சென்னை வாசிகளுக்கு ஒரு ஆருதல் ஏற்படலாம். இன்றைய தினமும் சொல்லுகிறோம். சுருக்கமாகச் சொன்னால்
நாயர் பெருமானுக்குப் பிறகு, தியாகராயருக்குப் பிறகு தோழர் பொப்பிலி ராஜாவே தகுந்த தலைவர் என்று கூறலாம். அவர், அவருடைய சுற்று வட்டக் கூட்டத்தாரால் ஏமாற்றப்படாமல் அவர்களுக்கு அடிமையாகாமல் கட்சிக்குத் தக்கதொரு வேலைத் திட்டத்தை ஏற்படுத்தி சர்வாதிகாரியாக நடந்து நாட்டுக்கு ஏதாவது பயன் உண்டாகும்படியான காரியம் செய்து
புகழ் பெற்றால் பெறட்டும். இல்லாவிட்டால் எத்தனையோ கோடான கோடி ஜீவராசிகள் பிறந்து வயிற்றை நிரப்பி வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மாண்டு மடிந்துமண்ணாகின்ற கூட்டத்தில் ஒருவராய் இருந்தால் இருக்கட்டும்
147 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
முடிவாகச் சொல்வதென்னவென்றால், தோழர் ஈ.வெ. ராமசாமியால் ஜஸ்டிஸ் மகாநாட்டுக்கு அக்கட்சி வேலைத் திட்டமாக சில தீர்மானங்கள் அனுப்பப்பட்டன. அவற்றை மகாநாட்டில் வைப்பதற்கே சில “ஜஸ்டிஸ்வாதிகள்' ஆக்ஷபித்தார்கள் என்றாலும், இத் தீர்மானங்கள் பொப்பிலி ராஜாவின் சம்மதத்தின் பேரிலேயே அனுப்பப்பட்டதால் மகாநாட்டு மேஜைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடைசியாக அத் தீர்மானங்கள் மகாநாட்டு யோசனைக்குக் கொண்டு வரப்படவில்லை. பல தோழர்களின் கிளர்ச்சியின் பயனாய் டிசம்பர் மாதத்தில் கூடும் நிர்வாகக் கமிட்டியில் பைசல் செய்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது என்பதோடு பொப்பிலி ராஜா அவர்கள் அத் தீர்மானங்களைச் சில வார்த்தைத் திருத்தங்களோடு ஒப்புக் கொள்ளுவதில் தனக்கு ஆக்ஷ்பனை இல்லை என்றும் சொல்லியிருக்கிற தைரியத்தால், டிசம்பர் கூட்டத்திற்கு இத் தீர்மானங்கள் கொண்டு வருவதைத் தோழர் ராமசாமியும் ஒப்புக் கொண்டார். அப்பொழுது என்ன செய்வார்கள் என்பது பற்றிப் பலருக்கு இப்போதே ஜோசியம் தெரிகிறது என்றாலும், டிசம்பர் வரை பொறுத்து இருப்பதால் ஒன்றும் மூழுகிப் போய்விடாதென்றே கருதுகிறோம்.
கோவை மகாநாடு. கோவை மகாநாட்டிற்கு தோழர் சி.ஆர். ஆச்சாரியார் தலைமை வகித்தார்.
ஜஸ்டிஸ் கக்ஷியில் பலரைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்ததற்கு நேர் விரோதமாய் கோவை மகாநாட்டில் காங்கிரசில் இருந்து பலரைத் தள்ளி விடவும், சிலரை வந்து சேராமல் இருக்கத் தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ராட்டினம் சுற்றுவதும், நூல் சந்தா கொடுப்பதும், கதரையே கட்டுவதும் முதலாகிய காரியங்கள் அரசியல் சமூக இயல் ஆகியவற்றில். தீவிர எண்ணம் இருக்கின்றவர்களுக்கும், சொந்த புத்திக்கு மதிப்பு கொடுப்பவர்களுக்கும் காங்கிரசில் இடமில்லாமல் செய்து விட்டது காங்கிரசின் மூலம் சுயநலம் அனுபவிக்கக் கூடியவர்களுக்கே காங்கிரசில் வழி கதவு திறக்கப்பட்டு விட்டது. எப்படியிருந்தாலும் தலைவர் ஆச்சாரியார் அவர்கள் நல்ல தியாகம் செய்தவர். காங்கிரசினால் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர். மற்ற காங்கிரஸ்காரர்களைப் போல் அவரும் இன்று தனது வக்கீல் வேலைக்குச் செல்வாரானால் மீ 4000, 5000 ரூபாய் மாத்திரமல்லாமல் தோழர்கள் அல்லாடி எத்திராஜ் முதலியவர்களைப் போல் B 10 ஆயிரம் 20 ஆயிரம் சம்பாதிக்கக்
கூடிய நிலைமை கூட ஏற்படலாம். ஆதலால் அவருடைய தியாகத்தில் யாருக்கும் விவகாரம் இல்லை என்றே கருதுகின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 148
ஆனால் பார்ப்பனர்கள் மண்வெட்டி எடுப்பதை அவர் விரும்புவ தில்லை. இந்த ஒரு எண்ணம் அவரது தியாகத்தைப் பயனற்றதாக்கிவிட்டது அவரது பார்ப்பன அபிமானத்தைக் கூட நாம் ஆட்சேபிப்பதில்லை அதற்காக, பழமையை ஆதரிப்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியவில்லை அவருக்கு அபார மூளை சக்தி உண்டு. அதற்கு யாவரையும் மயங்கச் செய்து விடும் வல்லமையும் உண்டு. ஆனால் அதைப் பழமையில் இறக்கிவிட்டதுதான் நமக்கு பயனற்றதாகக் காணப்படுகின்றது. கேவலம் ஒரு இந்திய சட்டசபைத் தேர்தலில் அவர் இரங்கியதின் பயனாய் அவர்.
சறுக்கிவிடப்பட்டுவிட்டார். அவர் வெற்றி பெற்றாலும் கூட, மேலால் அடையப்
போகும் பலன் என்ன என்பது வெட்ட வெளிச்சமாய்த் தெரிந்ததேயாகும்.
இது நிற்க, “சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசுக்கு வர ஆசைப்படு கிறார்கள். ஆனதால் அவர்களை வரவேற்க வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். ஆசைப்படுவதாகவே வைத்துக் கொண்டு, இதற்காக நன்றி செலுத்துகின்றோம். ஆனால் பேச்சளவில் வரவேற்பதாய்ச் சொல்லிவிட்டுக் காரிய அளவில் கதவைச் சாத்திவிட்டார். அதாவது ராட்டினம் சுற்றி நூல் நூற்று கதர் கட்டிக் கொண்டு வரட்டும் என்கிறார். மதக்காரர்கள் கூட இப்படித்தான் சொல்லுகின்றார்கள். எப்படி யிருந்தாலும் ஜஸ்டிஸ் கக்ஷியில். பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பிறகு, காங்கிரசில். சேருவதை எந்தப் பார்ப்பனரல்லாதாருடைய கொள்கையும் ஆட்சேபிக்காது என்றே கருதுகிறோம்
ஒரு மனிதன் ஜஸ்டிஸ் கட்சியிலும் காங்கிரசிலும் அங்கத்தினராய் இருப்பதை எந்தக் கொள்கையும் இப்போது தடுத்து விடுவதில்லை. இப்போது வகுப்புத் தீர்ப்பும் ஊமையாய் இருக்கிறது. எலக்ஷன் காலத்தில் மாத்திரம் சிறிது கஷ்டம் ஏற்படலாம். என்றாலும், தோழர் மாளவியாவைப் போல் நடந்து கொள்ளுவதின் மூலம் அக்கஷ்டத்தையும்
நீக்கிக் கொள்ளலாம்.
ஆதலால் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தில் இருக்கும் ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்கள் வரும்போது, பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் காங்கிரசில் பார்ப்பனரல்லாதார் போய்ச் சேருவது என்பதில் விசேஷ குற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. காந்தியார் காங்கிரசை விட்டு விலகுவது வெறும் மிரட்டலாய் இல்லாமல் உண்மையாய் இருக்குமானால், காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம் குறைந்தாலும் குறையலாம்
சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும் தீவிர மாறுதல் ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆதலால் பம்பாய் காங்கிரசுக்குப் பிறகு காங்கிரசைப் பற்றிய நமது அபிப்பிராயத்தைத் தெரிவிப்போம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 07.10.1934
1499 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?
தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளலாமா? என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர். களைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக்கலாமா என்றும், பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும், மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆக்ஷபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்
ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்பதாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆக்ஷேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.
இது போலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927 ல் எழுந்தது. நான். ஆக்ஷ்பித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர். பாத்ரோ முதலியவர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆக்ஷ்பனை கூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீதுதான் தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன்கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்னையை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கக்ஷியார் எதிர்க்க
நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக்கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 150
கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்த தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்ததாகச் சொல்லு
கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம்
நான் துவேஷமாய் இருந்தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களையெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்தமாகும்
நான் சென்ற வாரப் பத்திரிகையில் “பார்ப்பனீய ஒழிப்புக் கொண்டாட்ட
நாள்'' என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக்கின்றேன். இவை நிற்க, பொதுவாக விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும்
விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள். மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள். என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களை சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச்
சேர்க்கக் கூடாதென்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்
எப்படியெனில் ஒரு வியாதியை செளக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச
மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட
நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி செளக்கியமாய் விடுகின்றது.
அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில்
பார்ப்பனீயம் ஒழிந்து விடுகின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து
151 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது
இந்த நிலை ஏற்படும் வரையில்தான் நாம் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனித சமூகம் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும்
நாம் கருதி ஏற்படுத்தவில்லை
இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசியமானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என்னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.
“பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது” என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலைவர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். ஷண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்களே ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன். பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது ஆதலால் நான் குறுக்கே நிற்பதில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்கு சந்தோஷமே
இப்போது எனக்கும் மற்றும் பல எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல.
பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப்போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் தான் நாங்கள். ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம்
இருந்து வருகின்றது அதைத்தான் நாங்கள் முக்கியமாய்க் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பியிருக்கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும் பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத்துக்குத்தான் பயன் உண்டாகலாம்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 15
நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில்தான், இந்த தேசப் பொது மக்களின் “தலையெழுத்து” நிர்ணயிக்கப்படப் போகின்றது
ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.
குறிப்பு: 29, 30.09.1934 இரு நாள்கள் சென்னையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்ற தீர்மானத்தை யொட்டி ஆற்றிய உரை.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
153 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சென்னை கடற்கரையில் 5000 பேர்
கூட்டம்
தோழர் எ. ராமசாமி முதலியார் அவர்களுக்கு விரோதமாய் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் நிறுத்தப்பட்டிருக்கிறார். முன்னவரை விட பின்னவர் எந்த விதத்தில் யோக்கியதை உடையவர் என்று நான். கேட்கின்றேன். தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் 4000 ஓட்டிலிருந்து எண்ணப் போகிறேன். என்று சொல்லுகிறாராம். ஏனென்றால் சென்னையில் 4000 பார்ப்பனர்கள் ஓட்டுகள் இருக்கின்றனவாம் அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் சத்தியமூர்த்திக்கே ஓட்டு செய்யப் போகிறார்களாம். இதை ஒரு பெருமையாகப் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும் பேசிக் கொள்ளுகிறார்கள்.
அப்படியானால் தோழர் ராமசாமி முதலியார் அவருடைய ஓட்டுகள் 11000த்தில் இருந்து எண்ணக் கூடும் என்று ஏன் சொல்லக் கூடாது? 4000 பார்ப்பனர்கள் ஓட்டிருப்பதால் 4000த்தில் இருந்து எண்ணுவதானால் 11000 பார்ப்பனர் அல்லாதார் ஓட்டர்கள் இருப்பதால் ராமசாமி முதலியார் ஏன் 11000த்தில் இருந்து எண்ணக் கூடாது என்று நான் கேட்கின்றேன். மொத்தம் 15 ஆயிரம் ஓட்டல்லவா?
பார்ப்பனருக்கு இருக்கும் புத்தியும், ஜாதி அபிமானமும், சுயமரியாதை உணர்ச்சியும், பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை என்று கருதுகின்றவர்கள்தான் 4000 பார்ப்பன ஓட்டுகள் இருக்கின்றதே என்று பயப்பட வேண்டுமே ஒழிய பார்ப்பனரல்லாதாருக்கு அறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் இருக்கின்றது என்று எண்ணுகின்றவர்கள் பயப்பட வேண்டியதில்லை.
தேசாபிமானம்
பார்ப்பனர்கள் தேசாபிமானம் என்கின்ற ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டே பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறப் பார்க்கிறார்கள். தேசாபிமானம் என்பது வயிற்றுப் பிழைப்பு மந்திரம் என்று நான் வெகு நாளாகச் சொல்லி வருகிறேன்.
ஒரு தேசத்தில் ஏழை, பணக்காரன், மேல்ஜாதிக்காரன், கீழ்ஜாதிக்காரன் இவர்கள் எல்லோரிடமும் அபிமானம் வைப்பது முட்டாள் தனமேயாகும்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௨ 1
ஏழை மக்களிடமும், தாழ்த்தப்படட மக்களிடமும் அபிமானம் இருப்பதுதான் நியாயமானதும், பயனுள்ளதுமான காரியமாகும்
இன்று தேசாபிமானத்தின் பேரால் ஆதிக்கம் பெற்ற நாடுகள் எல்லாம் கொடுங்கோன்மையால் வறுமையால் துன்பப்படுகின்றன.
அது குடி அரசு நாடானாலும் சரி, ஜனநாயக நாடானாலும் சரி,
சுயராஜ்யம் பெற்ற நாடானாலும் சரி எல்லாம் இந்தியாவைப் போலும்
இன்னம் மோசமாயுந்தான் இருந்து வருகின்றன.
சட்ட சபையில் செய்வதென்ன?
இந்திய சட்டசபையில் காட்டப்போகும் தேசாபிமானம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. வெள்ளை அறிக்கையைத் தள்ளிவிடப் போகிறார்களாம். காங்கிரசுக்காரர்களால் இது முடியக் கூடிய காரியமா? என்று யோசித்துப் பாருங்கள்.
தோட்டத்தில் முக்கால் பாகம் கிணறு
இந்திய சட்டசபையில் 144 பேர்கள் அங்கத்தினர்கள் என்றால் 40 பேர் நியமிக்கப்பட்டவர்களும், 30 முஸ்லீம்களும், 8 ஐரோப்பியர்
களும், 4 வியாபாரிகளும், 7 ஜமீன்தார்களும், 2 சீக்கியர்களும் இருக்கிறார்கள். இவை போக பொதுத் தேர்தல் 53 தான். இதில் காங்கிரசுக்காரர்கள் 35 அல்லது 40 பேர்கள் வரலாம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தோட்டத்தில் முக்கால் பாகம் விஸ்தீரணம் கிணறாக இருந்தால் அதில் என்ன வெள்ளாண்மை எடுக்கக் கூடும்? அது போல் இந்த 30, 40 பேர்கள் என்ன சாதித்து விட முடியும். தோழர்கள் தாஸ், நேரு போன்ற “வீராதி வீரர்கள்” இருந்த காலத்திலேயே முதுகைக்
காட்டிக் கொண்டு ஓடி வந்து விட்டார்கள் என்றால் இந்த தோழர்கள் சத்தியமூர்த்தி, முத்துரங்கம், அவனாசிலிங்கம், வெங்கிடாசலம் ஆகியவர்கள் என்ன சாதித்து விட முடியும் என்று எண்ணுகிறீர்கள்
பல்ட்டி
இதற்கு முன் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு போனவர்கள் எத்தனை பேர்கள் பல்ட்டி அடித்துவிட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் முட்டுக்கட்டை போடுவதாகச் சொல்லி அங்கு போய் டாக்டர் சுப்பராயனை மந்திரியாக்கி அவருக்கு பிரைவேட் செக்ரட்ரியாய் இருந்து வரவில்லையா?
தோழர் சாமி வெங்கிடாசலம் அவர்கள் காங்கிரசுக்காரர்களை போன மாதத்தில் கூடக் கண்டபடி வைது கொண்டிருக்கவில்லையா? மற்ற ஆட்களைப் பற்றி சொல்ல வேண்டுமா? வீணாகப் பத்திரிகைகளின்.
155 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பொய்ப் பிரசாரத்தையும் கூலிகளின் விஷமப் பிரசாரங்களையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள். காங்கிரசுக்காரர்கள் பணத்தில் பல பத்திரிகைகள் நடக்கின்றன. காங்கிரசுக்கும், கதருக்கும், தீண்டாமை விலக்குக்கும் வசூல். செய்த பணங்கள் வசவுப் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆதலால் நீங்கள் இவற்றை எதையும் கவனியாமல் உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி உங்களுக்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதன்படி நடவுங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 28.09.1934 சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் “வரப்போகும் தேர்தல்! என்பதுபற்றி ஆற்றிய சொற்பொழிவின். தொடர்ச்சி.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 14.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 156
புதுக்கோட்டையில் தோழர் ஈ.வெ.ரா.
ஆஸ்திகம் - நாஸ்திகம்
தலைவரவர்களே, தோழர்களே!
இந்தப் புதுக்கோட்டையில் எங்களுக்காக நடத்தப்பட்ட ஆடம்பர வரவேற்புகளுக்கும், விருந்துகளுக்கும் இங்கு நடைபெறுகிற நடவடிக்கை களுக்கும் நான் நன்றி செலுத்துவதுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தோழர்கள் ரங்கம்மாள் - சிதம்பரம் தம்பதிகள் சீர்திருத்த முறையில் விவாகம் செய்து கொண்டவர்களாதலால், அவர்கள் பாராட்டுதலுக்கும், வரவேற்புக்கும் உரியவர்கள் ஆவார்கள். ஆனால் எனக்கு எதற்காக இந்த ஆடம்பர வரவேற்புகள் என்பது எனக்கே விளங்கவில்லை.
இந்த ராஜ்யம் ஒரு சுதேச சமஸ்தானமாதலால் இங்கு நமது இயக்கத்தைப் பிரசாரம் செய்வதற்கு சமஸ்தானத்திலோ, அல்லது வேறு வகையிலோ ஏதாவது இடையூறு ஏற்படுமோ எனக் கருதி, இந்த முறையில் ஏதாவது வகை செய்யக் கருதி தோழர் வல்லத்தரசும் அவர்களது தோழர்கள் முரு. தேனப்பன், அ.செ.சு. சாமிநாதன், லெ. சோமசுந்தரம், கா.ச. சடையணன், சி.பெ.க. பெரிய கருப்பன் முதலியவர் களும் இந்த ஏற்பாடு செய்தார்களோ என்று எண்ணுகிறேன். (சிரிப்பு)
இந்த இரகசிய ஏற்பாட்டிற்கு இவ்வளவு பேர்கள் வந்து கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருப்பதோடு, இந்த வரவேற்புப் பத்திரத்தில் கண்ட வாக்கியங்களைக் கவனிக்கும் போது சுயமரியாதை இயக்க சீர்திருத்தத் துறையில் இந்த ராஜ்யம் உச்சஸ்தான விருப்பம் கொண்டதாகவே தெரிகின்றது. வரவேற்புப் பத்திரத்தில் என்னைப் பற்றி புகழ்ந்திருக்கும் விஷயங்களை நான் ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் அதில் கண்டுள்ள அதி தீவிர வாக்கியங்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு அதற்காக நன்றி செலுத்த வேண்டியவனாயிருக்கிறேன்.
இந்த வரவேற்பு ஆடம்பரங்கள் புதுக்கோட்டை சமஸ்தான இளைஞர் சங்கத்தின் பேரால் இருப்பதால், இளைஞர்களைப் பற்றி இரண்டொரு வார்த்தை பேசிவிட்டுப் பிறகு பத்திரத்திற்குப் பதில் சொல்லுகிறேன்.
இளைஞர்கள் என்பவர்கள் தூய்மையான மனதையுடையவர்கள் அவர்கள் உலக வாழ்க்கை வியாபாரத்தில் நுழையாதவர்களாதலால் அவர்கள் எண்ணமும், காரியமும் ஒன்றாய் இருப்பதற்குச் செளகரியம் உண்டு.
157 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஆனால் அவர்களுக்குப் போதிய உலக அனுபவம் ஏற்படக்
காலம் இல்லை. ஆதலால் இளைஞர்கள் திடீரென்று எந்தக் காரியத்திலும் பிரவேசித்துவிடக் கூடாது. விஷயங்களை ஆலோசித்துப் பார்க்க வேண்டும். தங்கள் எண்ணங்களுக்கும், செய்கைகளுக்கும் அனுபவ பலன் என்ன? அது எப்படிப்பட்டது? என்பதை நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து சரித்திரங்களையும் சம்பவங்களையும் அறிந்தே ஒரு துறையில் இறங்க வேண்டும்
இளைஞர்கள் முதலில் சமூக வாழ்விலுள்ள கஷ்டங்களை ஒழிக்கப் பாடுபட வேண்டும். திடீரென்று அரசியலில் குதிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அரசியல் என்பது சூதாட்டம் போன்ற காரியமானதால் இளைஞர்கள் சுலபத்தில் ஏமாந்து போகக் கூடும். அதைப் பெரியவர்களுக்கு விட்டு விட்டு மனித வாழ்க்கையைச் சுலபமாகவும், செளக்கியமாகவும் இருக்கும்படி பார்க்க வேண்டும். இந்தப் பலனால்தான் ஒரு தேசத்தின்
- சமூகத்தின் பெருமை இருக்கின்றதே ஒழிய அரசியலிலேயே இருப்பதாகச் சொல்ல முடியாது.
நிற்க, சீர்திருத்தத் துறையில் நான் பெரிய மாறுதல் செய்திருப்பதாகப்
புகழுகிறீர்கள்.
சீர்திருத்தம் என்பது ஒரு பிரமாதமான காரியமல்ல. மக்கள் தாங்கள் இருக்கும் நிலையிலிருந்து முற்போக்கடைய எண்ணுவதும் மாறுதல் அடைய ஆசைப்படுவதும் இயற்கையேயாகும்.
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மனிதனும் அவனவன் வாழ்வில் முற்போக்கும், மாறுதலும் அடைந்துகொண்டே வருகிறான். இதற்காகத் தனி லட்சியம் தேவையில்லை. மரக்கட்டை போல் உணர்ச்சியற்றவனாய் இருந்தாலும் அவன் கூட காலப்போக்கில் தானாகவே மாறுதலும், முற்போக்கும் அடைந்துதான் தீருவான்.
ஆனால் அப்படிப்பட்ட விஷயங்களில் நம் போன்றவர்கள் செய்யும் விசேஷ காரியம் என்னவென்றால் எப்படிப்பட்ட மாறுதல், எப்படிப்பட்ட முற்போக்கு அவசியம் என்பதில் செலுத்தும் கவனமேயாகும்.
தானாகப் போய்க்கொண்டிருக்கும் முற்போக்குக்கும், மாறுதலுக்கும் தடையாயிருந்து அவற்றை வேறு வழியில் திருப்புவதினால் சில சமயங்களில் பெருத்த கிளர்ச்சி ஏற்பட்டு விடுகின்றது. அதற்கு
எதிர்ப்பும், பழிப்பும் பலமாய் ஏற்பட்டு விடுகின்றது. இப்படிப்பட்ட சமயங்களில் சிலர் பழமையை- எதாஸ்திதியை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டு உபத்திரவப்படுகிறார்கள். தொல்லைகளை விளைவிக்கிறார்கள். இத்தொல்லையும் உபத்திரவமும் தங்கள். அறியாமையால் செய்வதும் உண்டு. சிலர் தங்கள் சுயநலங்களுக்கு ஹானி ஏற்படுமே என்ற கெட்ட எண்ணத்தின் மீது செய்வதும் உண்டு.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 155
எப்படியிருந்தாலும் அபாயமான வழியில் - கெடுதி உண்டாக்கும் வழியில் மாறுதலும், முற்போக்கும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்கள் கடமையாகும். மாறுதல் வரும் போது அதைக் கையாளுபவர்கள் துன்பத்துக்கும், பழிப்புக்கும் ஆளாவது என்பதில் புதிதல்ல. சரித்திரகால இயற்கையாகும். சாக்ரடீஸ், புத்தர், கிறிஸ்து, மகம்மது ஆகிய பெரியார்கள் இன்று எவ்வளவோ மக்களின் வணக்கத்துக்கும், மதிப்புக்கும் உரியவர்களானாலும் அவர்கள் காலத்தில் எவ்வளவோ தொல்லைக்கும், இழிவுக்கும், பழிப்புக்கும் ஆளானதாகச் சரித்திரங்கள் சொல்லுகின்றன.
அதுபோலவே சில மாறுதல்கள் தற்கால மக்களுக்குக் கசப்பாயிருந் தாலும் பிற்கால மக்களால் மதிப்பும், பெருமையும் பெறும் என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின் பேரில் தான் நாம் எந்த மாறுதலையும் திருத்தத்தையும் செய்யத் துணிய வேண்டுமே ஒழிய, நாம் இன்றே பாராட்டப்பட வேண்டும் என்று கருதிக் கொண்டு செய்வது பயன்படாது
கல்யாணம், இழவு, வாழ்வு முதலிய துறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் சுயமரியாதை இயக்கம்தான் என்று இங்கு பேசியவர்கள் சொன்னார்கள். அதை முழுவதையும் நான் ஒப்புக்கொள்ள வில்லை. காலதேசவர்த்தமானம் மக்களை அப்படிச் செய்யச் செய்கின்றது. அதில் சிலவற்றிக்கு சம. இயக்கம் துணைபுரிந்தது என்று சொல்லலாம்
குறிப்பாக மனித சமூகத்தில் பெண்கள் விஷயத்தில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட வேண்டியது அவசியம். இது தீண்டாமையை ஒழிப்பதை விட அவசரமாய்ச் செய்ய வேண்டிய காரியம் என்பது எனது அபிப்பிராயம். அதிலும் விதவைக் கொடுமை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அது மனித தர்மத்துக்கு மாத்திரமல்லாமல், ஜீவ தர்மத்துக்கே விரோதமானதாகும். விதவைகளைப் பற்றி நினைக்கும் போது எனக்கு ராஜாராம் மோகன்ராயைப் பற்றித்தான் ஞாபகம் வருகின்றது. இன்றைய விதவைகளின் கொடுமைக்கு அவர்தான். காரணம் என்று சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறேன்.
ஏனெனில் இந்து சாஸ்திர முறைப்படி புருஷன் இறந்தவுடன் பெண்ஜாதியை கட்டையில் பலாத்காரமாயாவது வைத்து புருஷனுடன் கட்டி நெருப்பை வைத்து சுட்டுவிடும் முறை இன்று இருக்குமானால் இன்று உலகில் விதவைகளே இருக்க மாட்டார்கள். விதவைக் கொடுமையும் இருக்காது விதவைகளை சுடக்கூடாது என்று சொன்னவர் அவ்விதவைகளுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதில்லாமல் இன்று இந்தியாவில் மாத்திரம் குழந்தைகள் உள்பட பெண்களில் 100க்கு 25 பேர் விதவைகளாய் இருக்கிறார்கள் என்றால் இது கொடுமை அல்லவா?
159 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இதை ஒழிப்பதைவிட வேறு ஜீவகாருண்ய வேலையோ, சீர்திருத்த வேலையோ இருக்கின்றதா என்று கேட்கின்றேன். அதுபோலவே பெண்கள் சுதந்திர விஷயமும் மோசமாகவே இருக்கின்றது. பெண்கள் விலைப் பொருளாக மதிக்கப்படுகின்றனர். மற்றும் அடிமைப் பொருளாகவும் மதிக்கப்படுகின்றனர். குழந்தைப் பருவம், இளமைப் பருவம், கல்யாணப் பருவம், வாழ்க்கைப் பருவம், முதுமைப் பருவம் ஆகிய எல்லாப் பருவங்களிலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இவைகளைப் பற்றி நான் சொல்லுவது பழமை விரும்பிகளுக்கு கஷ்டமாய்த் தோன்றலாம். ஆனால் அப்படிப் பட்டவர்கள் பெண்களாயிருந்து அனுபவித்துப் பார்த்தால் தெரியும்
ஆஸ்திக நாஸ்திகம்
முடிவாக ஆஸ்திக நாஸ்திகத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறீர்கள் இது ஒரு பயனற்ற விஷயம். ஏனெனில் ஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள், பழக்கவழக்கங்கள், பிறர். சொல்லிக் கொடுப்பதால் சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய ஒரு இயற்கை உணர்ச்சி அல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவைகளைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணமும் அல்ல. அதைப்பற்றி மனிதன் கவலைப்பட வேண்டியதே இல்லை. அது இன்று ஒரு ஆராய்ச்சி விஷயமாகி, நாகரீக விஷயமாகவும் பேசப்பட்டு வருகின்றது. மனிதனுக்கு கட்டும், காவலும், சட்டமும், போலீசுமாய்த்தான் இருக்கின்றனவே ஒழிய கடவுளோ, நரகமோ, சாஸ்திரமோ, ஒழுக்கமோ கட்டிக் காப்பாற்றி விடவில்லை. அனுபவத்திலும் எவனும் அவற்றின் மீது எவ்வித பொறுப்பையும் சுமத்துவதும் இல்லை.
ஆதலால் ஆஸ்திகம் நாஸ்திகம் என்பது ஒரு பயனற்ற பிரச்சினையாகும். மற்றும் அது அவனவனுடைய சொந்த புத்தி, யோசனையைப் பொருத்ததாகும்.
ஆதலால் நமது வாழ்வில் ஏற்பட வேண்டிய இன்ப, துன்பங்களுக்கும், முற்போக்குக்கும், மாறுதலுக்கும் ஆஸ்திக நாஸ்திகத்தைக் கொண்டு வந்து குறுக்கே போட்டுக்கொண்டு யாரும் கஷ்டப்பட வேண்டியதில்லை.
நம்மைப் பொருத்தவரையில் எந்த அளவில் ஆஸ்திகத்தில் பிரவேசிக்கின்றோம் என்று நினைப்பீர்களானால் வாழ்க்கையின் நலங்களைக் கடவுளின் மீது பொறுப்பேற்றுவதும், கடவுளுக்காகச் செல்வங்களை - மக்கள் வாழ்க்கைக்குரிய பொருள்களைப் பாழாக்குவதையும் பொருத்த அளவில் தான் பிரவேசிக்கின்றோம். மற்றபடி எவன் எத்தனை கடவுளை எந்த விதமாக நினைத்துக் கொண்டாலும், வணங்கினாலும், அவற்றோடு பேசினாலும் அதுவே ஆய்விட்டாலும் நமக்கு அக்கரையில்லை (சிரிப்பு)
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1௦
உலகத்தைப் பொது என்றும் உலகப் பொருள் போக போக்கியங்கள் யாவருக்கும் சமம் என்றும் எண்ண வேண்டும். இதற்குக் கடவுள். குறுக்கிடாமல் இருந்தால் கடவுளைப்பற்றிய வேலை நமக்கு இல்லை: அதைப் பற்றிய கவலையும் இல்லை. ஆகையால் அதை ஒரு பெரிய பிரச்சினையாக வைத்துக் கொண்டு எவரும் கஷ்டப்பட வேண்டியதில்லை மற்றொரு சமயம் இந்த ஊருக்கு வந்து இன்னும் பல விஷயங்களைப் பற்றிப் பேச ஆசைப்படுகிறேன். கடைசியாக உங்கள். வரவேற்புக்கும், புகழ்மொழிகளுக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் சிறப்பாக தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: 07.10.1934இல் புதுக்கோட்டை டவுன்ஹாலில் நடைபெற்ற கோட்டையூர் தோழர் சிதம்பரம் - தோழர் ரங்கம்மாள் ஆகியோருக்குத் திருச்சியில் நடந்த விதவைக் கலப்பு மண: பாராட்டுவிழாவில் ஆற்றிய உரை.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 14.10.1934
11 ௨ ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஸ்தல ஸ்தாபனச் சீர்கேடு
ஸ்தல ஸ்தாபனங்கள் என்று சொல்லப்படும் ஜில்லா, தாலூக்கா போர்டுகள், முனிசிபாலிட்டி, யூனியன், கிராம பஞ்சாயத்து ஆகிய ஸ்தாபனங் களைப் பற்றி நம்முடைய அபிப்பிராயம் யாவரும் அறிந்ததேயாகும் இவைகளைப் பற்றி சுமார் 20, 25 வருஷகாலமாகவே நமக்கு நேரிட்ட அனுபோகம் உண்டு என்பதையும், அதன் பயனாகவே ஸ்தல ஸ்தாபனங்களில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களுக்குள்ள அதிகாரங்களையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டு பொறுப்புள்ள சம்பள ஆட்களிடம் அவைகளை ஒப்புவிக்க வேண்டுமென்றும் பேசியும்,
எழுதியும் வந்ததோடு இப்போதும் அது போலவே பல காரியங்கள்
நடந்தும் வந்திருக்கின்றன. தாலூகா போர்டுகள் ஏற்பட்டு விட்டன. முனிசிபாலிட்டிகளில் சேர்மென்களின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு அவர்களை நகரும் யந்திரங்களாக ஆக்கப்பட்டு விட்டனர். சட்டத்தில் சேர்மன் என்று இருந்த இடங்களிலெல்லாம் கமிஷனர் என்று போட்டாய் விட்டது. சில கமிஷனர்கள் யோக்கியப் பொறுப்பற்றவர்களா யிருக்கலாம். சில சமயங்களில் தவறுதல்கள் செய்து விடலாமென்று வைத்துக் கொண்டாலும் 10 கமிஷனர்களின் யோக்கியப் பொறுப்பற்ற தன்மையையும், 10 கமிஷனர்களின் ஒழுங்குத் தவறுதலான காரியங்களும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு சேர்மெனின் யோக்கியப் பொறுப்பற்ற தன்மைக்கும்,
ஒரு சேர்மெனின் ஒழுங்குத் தவறுதலான காரியங்களுக்கும், இணையாகாதென்பது இன்னமும், இன்றும் நமது அபிப்பிராயமாகும்
ஒரு முனிசிபாலிட்டி சிப்பந்திகள் 32 கெளன்சிலர்களுக்கும், ஒரு சேர்மெனுக்கும் அடிமையாயிருந்து தவறுதல் செய்வதைவிட ஒரு ஸ்பெஷலாபீசருக்கு அடிமையாயிருந்து தவறுதல் செய்து விடுவதால், முனிசிபல் நிர்வாகம் அதிகமாய்க் கெட்டுவிடாது என்றுதான் சொல்லுவோம்.
அது போலவே ஒரு சேர்மெனும், 19 கவுன்சிலர்களும் சேர்ந்து கொள்ளையடிப்பதின் மூலம் ஒரு முனிசிபாலிட்டியின் சொத்து கொள்ளை போவதை விட, ஒரு ஸ்பெஷல் ஆபீசர் கொள்ளை அடிப்பதில் முனிசிபல் சொத்து அதிகம் கொள்ளை போய்விடாது என்றே சொல்லுவோம். கமிஷனர்கள் புதியவர்களானதாலும் சிலருக்கு அவர்களது தகுதிக்கு
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ 1௦2
மேற்பட்ட அதிகாரம் வகித்துப் பழக்கமில்லாத தாலும் சில தவறுதல்கள் தற்காலம் ஏற்படக்கூடும் என்றாலும் பொது நோக்குடைய கவுன்சிலர்களும், சேர்மென்களும் அவர்களைத் திருத்தி ஒழுங்கான முறையில் நடத்தி ஸ்பெஷல் ஆபீசர்களின் தன்மையை வெற்றிபெற உதவி செய்வது கடமையாகும். “ஸ்பெஷல் ஆபீசர்களுடன் கலகங்கள் ஏற்படுமாகில் கவுன்சிலுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் பறிக்கப்பட்டு விடுமேயொழிய ஸ்பெஷல் ஆபீசர்கள் பதவி குறைந்தது இன்னம் 10,
15 வருஷ காலங்களுக்கு மாற்றப்பட முடியாது” என்று கூறுவோம்
இது நிற்க, இன்றைய ஜில்லா போர்டுகளின் யோக்கியதைகளைப் பற்றி
சிலது குறிப்பிடவேண்டியது அவசியமாய்ப் போய்விட்டதற்கு வருத்துகிறோம்.
முனிசிபாலிட்டிகளின் நிருவாகம், ஆயிரக்கணக்கில் ஒன்று, இரண்டு லக்ஷக்கணக்கில் ரூபாய்களை வரும்படியாகக் கொண்டது ஜில்லா போர்டுகள் அப்படிக்கில்லாமல் 10 லக்ஷம் 20 லக்ஷம் கணக்கில் வரவு செலவுகளைக் கொண்டவைகளாகும்.
தாலூகா போர்டை எடுத்துவிட்டு முனிசிபாலிட்டிகளுக்குக் கமிஷனர்களை நியமித்த அரசாங்கம் புத்திச்சாலித்தனமுடையதாய் இருந்தால், முதல் முதல் ஜில்லா பேடுகளை எடுத்திருக்க வேண்டும். அல்லது அவைகளுக்கு கமிஷனர்களைப் போட்டிருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல் ஜில்லா போர்டுகளில் லக்ஷக்கணக்கான ரூபாய்கள் பாழாக இடம் தாராளமாய் விட்டு விட்டு, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குப் பாதுகாப்பு அளித்திருப்பது எருமை போவது தெரியாமல் விட்டு விட்டு எறும்பு போவதைக் கண்டுபிடித்த வீரனுக்கே ஒப்பாகும்
ஜில்லா போர்டு தேர்தல் காலங்களில் நாம் முரசடிப்பது போல் கூப்பாடு போட்டோம். ஜில்லா போர்டு மெம்பர் ஸ்தானங்களுக்கு 5000, 10000 செலவு செய்கிறார்கள் என்றும், பிரசிடெண்டு ஸ்தானங்களுக்கு 40 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம் ரூபாய்கள் கூட செலவு செய்கிறார்கள் என்றும் கூப்பாடு போட்டோம். இதை அறிந்த அரசாங்கத்தார் இப்படிச் செலவு செய்கின்றவர்களைப் பயித்தியக்காரர்கள் என்று நினைத்து “அவர்கள் செலவு செய்தால் நமக்கென்ன” என்று இருந்து விட்டார்கள். இருந்தும் வருகிறார்கள்:
இப்படி நினைத்தது சுத்த வடிகட்டின முட்டாள்தனம் என்பதை
சர்க்காருக்கு சில ஜில்லா போர்டுகள் நன்றாய் அறிவறுத்திவிட்டதென்றாலும்,
சர்க்கார் தெரியாதது போல் கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கின்றது
இன்று சென்னை மாகாணத்தில் 100க்கு 75 ஜில்லா போர்டு கண்ட்றாக்டுகள் ஜில்லா போர்டு பிரசிடெண்டுகளுக்கும், மெம்பர் களுக்கும், அவர்கள் சிப்பந்திகளுக்கும், சொந்தக்காரர்கள் பேராலும், கினேகிதர்கள் பேராலும் இருந்து வருவது உலகமறிந்த ரகசியமாகும்
163 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பல கண்ட்றாக்டுகள் லக்ஷம், ஐம்பதினாயிரம் ரூபாய்கள் எஸ்டிமேட்டுகள் உள்ளது. 100க்கு 10 விகிதமும் 15 விகிதமும் குறைவாய் டெண்டர்கள். கொடுத்திருந்தும், அவர்கள் பெரிதும் பரம்பரை அனுபோகம் பெற்ற கண்ட்றாக்டர்களாய் இருந்தும், பணப் பொறுப்புள்ளவர்களாய் இருந்தும், அப்படிப்பட்டவர்களுக்குக் கண்ட்றாக்டு கொடுக்கப்படாமல் புதுக் கண்ட்றாக்ட் தாரர்களுக்கு ஜில்லா போர்டு பிரசிடெண்டு வேலைக்காரரின் சொந்தக்காரர்களுக்கு மெம்பர் வேலைக்காரர்களின் சொந்தக்காரர்களுக்கு பொருளாதார நிலைமையில் திருப்தி யில்லாதவர்களுக்கு எஸ்டிமேட் தொகைக்கு மேல் 100க்கு 10, 15 ரூபாய் வீதம் அதிகம் சேர்த்துக் கண்ட்றாக்ட் கொடுக்கப்படுகிறதென்றால் இதற்கு என்ன பேரிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்தப் பணங்களை யார் அடைந்தார்கள்? இதை மெம்பர்கள், பிரசிடெண்டுகள் அடைந்தார்களா? என்பது விவகாரத்துக்கு இடமாயிருந்தாலும், ஒரு சமயம் ௬ஜு விட முடியாததாய் இருந்தாலும், இந்தப் பணங்கள் ஜில்லா போர்டுக்கு நஷ்டமாகிவிட்டதென்று சொல்வதில் ஏதாவது விவகாரமோ, ருஜுச் செய்ய வேண்டிய பொறுப்போ இருக்கின்றதா என்று கேட்கின்றோம்
மதுரை ஜில்லா போர்டைப் பற்றி மெம்பர்கள் பெரியதொரு மகஜர் அனுப்பினார்கள்; பல ஊழல்களை எடுத்துக்காட்டினார்கள் கடைசியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. கவர்ன்மெண்டும் இனிமேல் அப்படி வேறு பிரசிடெண்டுகள் நடக்கக் கூடாமல் இருக்கும்படி செய்யவு மில்லை. மற்றும் சில ஸ்தல ஸ்தாபன விஷயங்களில் கைப்பிடியாய்ப்
பிடித்துக் கொடுத்தார்கள். அதற்கும் ஒன்றும் செய்யவில்லை:
திருச்சி முனிசிபாலிட்டியில் கவுன்சிலர்கள் கையாடினார்கள். என்றோ, சேர்மென் கையாடினாரென்றோ கண்டுபிடிக்கவும் இல்லை: முனிசிபல் பணம் இம்மாதிரி ஏதாவது சந்தேகத்துக்கு இடமாயாவது வீணாக்கப்பட்டதா என்றும் தீர்ப்புக் கூறவுமில்லை. ஏதோ சர்க்கார். மரியாதையைக் காப்பாற்ற வேண்டியென்று அடியோடு கலைக்கப்பட்டு விட்டது. அதைப்பற்றி நாம் பரிதாபங்கூடக் காட்ட வரவில்லை. இன்னும் கடினமுறை எடுத்துக் கொண்டாலும் சரி, எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்தான் என்று கூடச் சொல்லுவோம். ஆனால் அதை விட மோசமான ஸ்தல ஸ்தாபனங்களை ஏன் விட்டுக் கொண்டிருக்க வேண்டு மென்பதுதான் நமது கேள்வி
ஆடிட்டர்கள் ரிபோர்டுகளின் மீது கடினமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். மேல் கண்ட மாதிரி 10, 15 பெர்சண்டு கம்மியாய் கேட்ட கண்ட்றாக்டுகளை 10, 15 பெர்செண்டு அதிகம் கூட்டி அதாவது 100க்கு 30 ரூபாய் பிரத்தியார் கேட்டதற்கு மேல்
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 164
அதிகம் கூட்டிக் கொடுக்கும் கண்ட்றாக்டுகளைப் பற்றி இஞ்சீனியர்கள் ஏன் கவர்ன்மெண்டுக்குத் தெரியப்படுத்தாமலும் உள் உளவாயும் இருந்தார்கள் என்பதைப் பற்றி இஞ்சீனியர்கள் மீது நடவடிக்கை நடத்தவும் தக்க பொருப்புகள் இருக்கும்படி செய்யவும் வேண்டும்
ஸ்தல ஸ்தாபன சுயாட்சியென்று பேர் வைத்துச் சில அதிகாரங்கள் கொடுத்து அதை இந்தப்படி கேவலமாகவும், பண நஷ்டமாகவும் கையாடுதல் செய்யவும் முதலிய காரியங்களுக்கும் தலைமறைவாய் இடம்கொடுத்து அதற்காக ஊரில் உள்ள பணக்காரர்களையெல்லாம் வியாபாரம் போல் போட்டி போடவிட்டுக் ககஷி பிரதிகக்ஷிகள் ஏற்பட்டு இதன் பயனாய் சர்க்கார் முறையைத் திருத்த எவரையும் நெருங்க
லாயக்கில்லாமல் ஆக்குவதில் குடிகளுக்கு என்ன லாபமென்று கேட்கின்றோம். பொப்பிலி ராஜா சர்க்கார் நாணையமானது, கண்டிப்பானது என்பதில் நமக்கு இதுவரை சந்தேகம் கூட ஏற்பட்டதில்லை. ஆகையால் ஸ்தல ஸ்தாபன விஷயத்தில் இது சமயம் நமது நாட்டிலிருந்து வரும் ஊழல்களை யொழிக்க ஜர்மன் ஹிட்லரைப் போல். சிறிது ஹிட்லரிசத்தைப் பயன்படுத்தினாலல்லது முடியா தென்றே
தெரிவித்துக் கொள்ளுகிறோம்
எது எப்படியிருந்தாலும் இந்த வருஷக் கடைசிக்குள்ளாகவாவது ஜில்லா போர்டுகளுக்கும் கமிஷனர்களை நியமித்து விடுவது அனேக ஜில்லா போர்டுகளுக்கு லக்ஷக் கணக்கில் ரூபாய்கள் லாபமென்று நினைக்கின்றோம். தாலூக்கா போர்டுகளை எடுத்து விட்டதின் பயனாய் ஏதாவது நன்மையேற்படக் கூடுமென்றிருந்து வந்த எண்ணம் கனவாகி தாலூக்கா போர்டு தவறுதல்களும் சேர்ந்து ஜில்லா போர்டுகளில் நடந்து வருவதாயிருக்கிறது. ஆதலால், இப்போது நமக்குத் தோன்றுவதென்ன. வென்றால் இந்திய மக்கள் இன்னம் கொஞ்சம் காலத்துக்காவது “சுயாட்சி”க்கு லாயக்கில்லை யென்று முடிவு செய்துவிட்டு இப்போது இரண்டு தாலூக்காக்களை ஒரு ரிவினியூ டிவிஷனாக்கி அவற்றிற்கு ஒவ்வொரு ரிவின்யு டிவிஷனல் ஆபீசர் (டிப்டி கலைக்ட்டர்கள்) போட்டிருப்பதை
மாற்றி ஒரு தாலூக்காவுக்கு ஒரு டிப்டி கலைக்டர் வீதம் போட்டு அவர்கள் வசமே இந்த முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து, தாலூக்கா ஜில்லா போர்டு இலாக்காக்களை விட்டு விடுவது மேலென்று தோன்றுகின்றது இதனால் சர்க்காருக்கு லாபமிருக்காதென்றாலும் ஏழை மக்களுக்கும், வரிப் பணங்களுக்கும் இப்போது இருப்பதை விடப் பலமடங்கு நன்மையும், லாபமும் உண்டென்று சொல்லுவோம். குறைந்த அளவு ஒரு ஜில்லாவில் பரீக்ஷார்த்தமாய் ஒரு மூன்று வருஷ காலத்துக்காவது செய்து பார்த்தால் போதுமென்று கூடத் தெரிவித்துக் கொள்கின்றோம்
பகுத்தறிவு - தலையங்கம் - 14.10.1934
168 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
'ஷண்முகத்தின் அஹம்பாவம்:??
தோழர் ஷண்முகம் அவர்கள் தனது தேர்தல் சம்மந்தமாய் ஆங்காங்கு பிரசங்கம் செய்து வருவது யாவரும் அறிந்ததாகும் அவருடைய எதிரிகளாகிய காங்கிரஸ்காரர்கள் - தேசிய பத்திரிகைக்காரர்கள்.
- பார்ப்பனர் ஆகியவர்கள் ஷண்முகத்தை வைவதற்கும் அவர்மீது பழி சுமத்தி விஷமப் பிரசாரம் செய்வதற்கும் ஆட்டவா ஒப்பந்தத்தையும், சட்டசபைத் தலைவர் பதவியில் “அவர் வில்லிங்டன் பிரபுக்கு அடிமையாய் இருந்தார்” என்றும், இனியும் அடிமையாய் இருக்கப் போகிறார் என்றும், காங்கிரசுக்கு துரோகியென்றும், வியாபாரிகளுக்கு துரோகியென்றும் சொல்லி அவற்றைப் பல்லவியாய் வைத்து எதிர்ப் பிரசாரம் செய்து வந்தார்கள். இவற்றிற்கெல்லாம் தக்க பதில் சொல்லப்பட்டவுடன் இப்போது அந்தப் பல்லவிகளை உபயோகிக்க முடியாமல் போய்விட்டதால் ஷண்முகம் பிரசங்கத்தில் “அப்படிச் சொன்னார்" “இப்படிச் சொன்னார் “இது அகம்பாவம்” “இது தலைவர்க் கழகல்ல'' “இப்படிப்பட்டவர் தலைவராகக் கூடாது''. இவர் தெரிந்தெடுக்கப்பட்டால் எப்படியும் தலைவராகி விடுவார். ஆதலால் தெரிந்தெடுக்கக் கூடாது'' என்று புதிய முறையில் இப்போது விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் உள்ள காங்கிரஸ்வாதிகள் அனேகர் தேசிய பத்திரிகைக்காரர்கள், காங்கிரஸ் பத்திரிகைக்காரர்கள், ஆகியவர்கள் பெரிதும் யோக்கியப் பொறுப்பு, நடுநிலைமை என்கின்ற விஷயங்களை சுயநலத்துக்கு தியாகம் செய்த வீரர்களாக இருப்பதாலும், அதோடு மானாபிமானத்தையும் வந்த விலைக்கு விற்கத் துணிந்திருப்பதாலும், அவர்களுக்கு உண்மை, ஒழுங்கு, மனிதத் தன்மை என்பவைகள் கண்களுக்கே தென்படாமல் போய் விடுகின்றன. அப்படிக்கில்லாமல் இருந்தால் தோழர் ஷண்முகம் என்ன பேசினார்? ஏன் பேசினார்? என்பவைகளையும் முழுவதும் எடுத்துச் சொல்லி மேல் கொண்டு தங்கள் காரியங்களை நடத்தி இருக்கலாம். அவற்றை விட்டு விட்டு எங்கோ இரண்டொரு வார்த்தைகளைப் பொருக்கிக் கொண்டு அதை ஆதியாய் வைத்து வெறிகொண்டவர்களைப் போல கண்டபடி உளரிக் கொட்டி வருகின்றனர். இதன் பயனாய் காங்கிரஸ்காரர்கள் யோக்கியதையும் தேசிய பத்திரிக்கைகளின் யோக்கியதையும் உலகமறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே ஒழிய சர். ஷண்முகத்தை சிறிதாவது அசைக்க முடிந்தது என்று சொல்லிவிட முடியவில்லை.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1
ஷண்முகம் அசம்பளிக்கு பிரசிடெண்டாக இருந்ததால் அவரை பிரசிடெண்ட் என்று மதித்தவர்கள், அல்லது அவரை பிரசிடெண்டு முறையில் குறை கூறுகிறவர்கள் யோக்கியர்களாய் இருந்தால் அவருக்குப் போட்டி போட்டிருக்கக் கூடாது, அல்லது பிரசிடெண்டாய் இருந்தபோது அவர் செய்த குற்றம் ஏதாவது இருந்தால் அதை மரியாதையுடன் எடுத்துக் காட்டி இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல். “ஷண்முகம் பிரசிடெண்டாய் இருந்தாலும் அவருக்கு போட்டி போடக்
கூடாது என்கின்ற ஒழுங்கை அடிமை தேசத்திலுள்ள அடிமை மக்கள் பின்பற்ற முடியாது” என்றும் “காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் இல்லாத காலத்தில் அவர் பிரசிடெண்ட் ஆனதினால் அவருக்கு காங்கிரஸ் காரர்கள் பிரசிடெண்ட் யோக்கியதையை கொடுக்க முடியாது” என்றும் சொல்லி அவரை ஒரு சாதாரண மனிதனாகவே கருதி போட்டி போட்டுக் கண்டபடி மேடைகளில் ஏறி, காலிகள் முதல், சத்தியாக்கிரகிகள் என்கின்றவர்கள் வரை பூதக்கண்ணாடி வைத்துக் கண்டுபிடிப்பதற்குக் கூட உண்மையோ, யோக்கியதையோ இல்லாமல் பேசி, எழுதி விஷமப் பிரசாரம் செய்தால் தோழர் ஷண்முகம் தனது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொள்ள வேண்டுமென்று எந்தப் பயங்காளியாவது சொல்ல முன்வருவானா என்று கேட்கின்றோம்
எதிர் பிரசாரத்தின் யோக்கியதையைப் பற்றிச் சொல்ல ஒன்று இரண்டு விஷயங்களே போதுமென்று நினைக்கின்றோம்
முதலாவது அவரை செக்கு ஓட்டுகிற மாதிரியாகப் படம் போட்டு அதற்குச் சிறிது கூடப் பொருத்தமில்லாத விஷயத்தைச் சொல்லி அற்பத்தனமாய், போக்கிரித்தனப் பிரசாரம் செய்தார்கள்.
இரண்டாவது அதைவிட இழிவான முறையில் “தோழர் ஷண்முகம் தனது தொகுதியை விட்டு பயந்து கொண்டு ஓடிவிட்டார்” என்று கேவலப் பிரசாரம் செய்தார்கள்.
மூன்றாவது “அவர் சட்டசபைக்குப் போனால் பிரசிடெண்டாகி விடுவார். பிரசிடெண்டானால் வைசிராய் பிரபுவுக்கு அடிமையாகி விடுவார். ஆதலால் அவருக்கு ஓட்டுக் கொடுக்கக்கூடாது” என்று விஷமப் பிரசாரம் செய்தார்கள்.
இவைகள் தவிர "அப்படிக் கெடுதி செய்து தேசத்தைக் காட்டிக் கொடுத்தார்! “இப்படிக் கெடுதி செய்து தேசத் துரோகியானார்” என்றும் பிரசாரம் செய்தார்கள்.
இவ்வளவு காரியங்கள் நடந்த பிறகு தோழர் ஷண்முகம் மேடையேறாமல் இருக்க முடியுமா என்று பார்லிமெண்டு ஒழுங்கு தெரிந்த மேதாவிகளைக் கேட்கின்றோம்.
1679 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஆண்மையோடு, வீரத்தோடு போர்புரிபவர்களே, யுத்த முறையைப்
பற்றிப் பேச யோக்கியதை உடையவர்களாவர்கள். சண்டித்தனமான:
போர் முறையில் யுத்த முறையைப் பற்றிப் பேசுவது தோல்வியை
ஒப்பு கொண்டதாகுமே ஒழிய வேறில்லை. ஷண்முகத்தை இந்தப் பார்ப்பனர்கள் வம்புக்கிழுக்கிறார்களா? அல்லது அவரே வம்புக்கு வந்தாரா? என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
வேட்டைக்குப் போன ஒரு வேடன் ஒரு மிருகத்தைச் சுடக் குறி பார்க்கிறபோது, அந்த மிருகம் வேடனைப் பாய வந்தால் வேடன் “ஐயோ மிருகம் பாய வருகிறதே” என்று அதன் மீது பழி கூறுவது எவ்வளவு நியாயமும் வீரமும் ஆகுமோ, அதுபோல் சும்மா இருக்கும் ஷண்முகத்தை வம்புக்கிழுத்து விட்டு விட்டு “ஐயோ ஷண்முகம் இப்படிப் பேசினாரே! அப்படி ஏசினாரே!! அவர் அகம்பாவம் எவ்வளவு” என்று பேசுவதில் ஆண்மை எங்கே, வீரம் எங்கே, நீதி
எங்கே, உண்மை எங்கே என்று கேட்கின்றோம்.
“ஷண்முகம் ஒரு பதவியில் இருப்பவர், அவர் பெரிய மனிதர், ஆதலால் இப்படிப் பேசக் கூடாது” என்று தர்ம உபதேசம் செய்கிறார்கள்
சிலர். சிறிதும் வெட்கமில்லாமல் ஷண்முகம் பெரிய மனிதர், இவர்கள். அது அல்லாதவர்கள், ஆதலால் இவர்கள் என்ன பேசினாலும் அவர் ஒன்றும் பேசக் கூடாது என்பதை இவர்களே ஒப்புக்கொள்வது போல்தான் ஆகின்றது
“நாய் கடித்தால் நாயைத் திருப்பிக் கடிக்கக் கூடாது” என்பது சரியான நீதிவாக்கியந்தான். ஆனால் அதை அடிக்காமல் இருக்க முடியுமா என்று தான் கேட்கின்றோம்
காங்கிரஸ் துரோகி, தேசத் துரோகி என்று சொன்ன பிறகே அவர், தான் துரோகி அல்ல என்று பதில் சொல்ல வந்தால் எலக்ஷன் போட்டியில் அவர் அஹம்பாவமாய் பேசினார் என்று சொல்லுவது அர்த்தமற்ற வார்த்தையே ஆகும்.
இப்போதும் அவர் அதே வார்த்தையைத் தான் சொல்லுகிறார். “காங்கிரஸ்காரர்கள் என்னை எவ்வளவு தேசத் துரோகி என்று சொல்லி விஷமப் பிரசாரம் செய்தாலும், நான் வெற்றி பெறத்தான் போகின்றேன். பொது ஜனங்களுக்குச் சொந்த புத்தி உண்டு. ஆதலால் அதோடு மாத்திரமல்ல நான் இந்திய சட்டசபைத் தலைவருமாகத்தான். போகின்றேன்” என்று சொல்லுகின்றார். அதில் என்ன தப்பு? அதற்காக அவரை என்ன செய்யமுடியும்? என்றுதான் கேட்கின்றோம்
இந்த வார்த்தைக்கு அகம்பாவம் காரணமா? அல்லது அவரைத் தெரிந்தெடுக்கப்போகும் ஓட்டர்களின் ஞானமும், வாக்குறுதியும், நாணயமும் காரணமா என்று கேட்கின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1
தோழர் பனகால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என்று எப்படி எல்லாப் பார்ப்பனர்களும் டிங் - டங் - டாங் என்று சுதேசமித்திரன். முதல் கொண்டு தோழர்கள் சீனிவாச ஐயங்கார், அல்லாடி ஐயர், சி.பி ராமசாமி ஐயர் முதல் கொண்டு ஆகாயத்துக்கும், பூமிக்குமாக குதித்தார்களோ, அது போலவே இப்போதும் சர். ஷண்முகம் வெற்றிபெறக் கூடாதென்று அந்த அண்ணாத்தைகள் உள்பட மகாத்மாக்களை'' உபயோகித்துக் கொள்வது உள்பட காரியங்கள் நடக்கின்றன. நடந்தால் நடக்கட்டும் என்றேதான் சொல்லுகின்றாரே ஒழிய இதற்குப் பயப்படவில்லை. ஷண்முகம் தோற்றுவிட்டாலும் முழுகிப்போவது ஒன்றும் இல்லை. மேலால் நடக்கப் போவது என்ன: என்றுதான் கேட்கின்றோம்
1926-ல் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதுதான் மந்திரி சபையிலும், நிர்வாக சபையிலும் பார்ப்பனப் பூண்டுக்கு இடமில்லாமல் போனதற்குக் காரணமாய் எற்பட்டதே ஒழிய வேறில்லை.
பார்ப்பனரல்லாதாருக்கு அவர்கள் வீதாச்சாரத்துக்கு வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவம் கூட கொடுக்கக் கூடாது என்று சொல்லி மிரட்டியதின். மூலமாய் ஏமாற்றிய காரணம் தான் இன்று பார்ப்பனர்களைத் தங்கள். வகுப்புக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்கச் செய்ததும் சில இடங்களில் அடியோடு இல்லாமல் போக நேரிட்டதுமாகும்.
அது போலவே ஷண்முகத்தின் விஷயமும் (தோல்வி ஏற்படாது) ஏற்பட்டாலும் அது ஒரு சமயம் ஷண்முகத்தின் சுயநலத்துக்கு விரோதமாகலாமாயினும் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு இரட்டை லாபம் என்பதோடு பார்ப்பனர் நிலைமை கடுகளவு கூட முற்போக்கு அடையக் கூடியதாய் இராது என்பதையும் தைரியமாய் சொல்லுவோம் ஆகையால் இன்றைய பார்ப்பனர்களால் பிறர் கண்டுபிடிக்க முடியாமலும், தோல்வி அடையாமலும் இருக்கும்படியாக எவ்வித பித்தலாட்டமும், விஷமப் பிரசாரமும் செய்ய முடியாது என்பதும், அந்தக்காலம் மலையேறி விட்டது என்பதும் நமது அபிப்பிராயமாகும்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 14.10.1934
19 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கோவையில் தோழர்கள் Dr. வரதராஜுலு ஈ.வெ. ராமசாமி
6000-7000 ஜனங்கன் பிரம்மாண்டமான கூட்டம்
தோழர்களே! இன்று இந்தியாவெங்கும் பல தரங்களில் கிளர்ச்சிகளும், முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் இப்போது மிகவும் விளம்பரமாய்க் காணப்படுவது இந்திய சட்ட சபைத் தேர்தல்களாகும். அது விஷயமாய் பல கட்சிக்காரர்களும் பலவித அபிப்பிராயக்காரர்களும் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்பதால் அவரவர்கள் அபிப்பிராயங்களைப் பொது ஜனங்களுக்குச் சொல்லி ஓட்டுகள் கேட்கவோ அல்லது எந்தப்படி சொன்னால் பொது ஜனங்கள் ஓட்டுகள் தங்களுக்குக் கிடைக்குமென்று கருதி அதன்படி பேசி ஓட்டுக் கேட்கவோ ஆன காரியங்களை அபேக்ஷகர்கள் செய்து வருகிறார்கள்
இந்த நிலையில் எப்படிப்பட்ட நியாயமான, யோக்கியமான கொள்கைகள் கொண்ட அபேசுஷ்கரும் ஜனங்களிடையில் வந்து தங்கள் அபிப்பிராயங்களையும், நிலைமைகளையும் சொல்லித் தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. அதனாலேயே தோழர் வரதராஜுலு அவர்கள் இன்று இங்கு இந்திய சட்டசபைத் தேர்தலுக்குத் தான் நிற்பதைப் பற்றியும், உங்கள் எல்லோருடைய ஆதரவும் தனக்கு வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிவித்துக் கொள்வார். விஷயங்களைப் பொறுமையுடன் கேட்டு நடுநிலைமையிலிருந்து யோசித்துப் பார்த்து தங்களுக்குத் தோன்று கின்றபடி செய்யுங்கள்
குறிப்பு: கூட்டத்தின் காரணத்தையும் அவசியத்தையும் எடுத்துக்கூறி பேசியது.
அக்கிராசனர் முடிவுரையாக தோழர்களே! நான் ஒரு தேசாபிமானியல்ல. அது மாத்திரமல்லாமல் தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்றும் சொல்லியும், எழுதியும் வரும் “தேசத் துரோகி”யாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாயிருந்து பல முறை சிறை
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 170
சென்றும் வந்து தான் அதன் அனுபவத்தைச் சொல்லுகிறேனே ஒழிய வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை.
தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது
இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும், பழிப்புக்கும் கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான்
மாற்றிக் கொள்ள முடியவில்லை.
“நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல்லுச்
சுமக்கும் வேலை போகாது'' என்பது தான் தேசாபிமானிகளின் - மகாத் மாக்களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதை விட இப்போது இருக்கும் பர ராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து இன்றைய பர ராஜ்யத்தில் தோட்டி புல்லுச் சுமக்கும் வேலையைவிட்டு
மந்திரி வேலை செய்தாலும் செய்யக்கூடும் ஆனால் அவனவன்ஜாதித்தொழிலையும், பரம்பரைப் பெருமையையும், பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் காங்கிரஸ்சுயராஜ்யத்தில், தோட்டிக்குப்
புல்லுச் சுமப்பதை விட வேறு தொழில் ஏற்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் காரணத்தினால் தான் நான் தேசத்துரோகியாக இருக்கிறேன், சுயராஜ்யத்துக்கும் விரோதியாக இருக்கிறேன். ஆனால் பார்ப்பார ஜாதியையும், பறை ஜாதியையும் அழித்து எல்லோரும் சரிசமமான மனிதர்கள் என்று ஆக்கும் தேசாபிமானத்துக்கும், சுயராஜ்யத்துக்கும் நான். விரோதியுமல்ல - துரோகியுமல்ல என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்து விடாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும், சுயராஜ்யங்களையும் கண்டும், தெரிந்தும் தான் பேசுகிறேனே ஒழிய, கிணற்றுத் தவளையாய் இருந்தோ, வயிற்றுச் சோற்றுச் சுயநல தேசபக்தனாயிருந்தோ நான் பேச வரவில்லை:
எந்தத் தேசத்திலும் எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலும், குடியரசு
நாட்டிலும் ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகின்றது. நம் நாட்டில் இவை மாத்திரமல்லாமல் பார்ப்பான்
- பறையன், மேல்ஜாதி - கீழ்ஜாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான. வித்தியாசங்களும் அதிகப்படியாய் இருந்து வருகின்றன. இவைகளை ஒழிக்கவோ, அழிக்கவோ இன்றைய தேசாபி மானத்திலும், சுயராஜ்யத்திலும் கடுகளாவாவது யோக்கியமான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக் கேட்கின்றேன். உலகத்திலேயே மேம்பட்ட செல்வச் செருக்குள்ள நாடான அமெரிக்க நாட்டிலேயே 2 கோடி பேர்களின் குடும்பங்கள் வேலையில்லாமல்
171 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
திண்டாடுகின்றன வென்றால் - உலகத்தில் சூரிய அஸ்தனமில்லாத பிரிட்டிஷ் சுயராஜ்ய இங்கிலாந்தில் 20 லட்சம் பேர்களின் குடும்பங்கள் வேலையில்லாமல். பட்டினி கிடக்கின்றன வென்றால் சுயராஜ்ய ஜனநாயக ஆட்சிக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும். பிரான்சு குடியரசின் யோக்கியதைக்குப் புதுச்சேரியைப்
பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய மக்களுக்குள்ள குறைகள் அங்கும் உண்டு.
சுயராஜ்யமுள்ள சுதேச சமஸ்தானங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஸ் இந்தியா சின்னக் கருப்பனானால் சுதேச சமஸ்தான இந்தியா பெரிய கருப்பனாய் இருக்கிறது.
இப்படிப்பட்ட தேசாபிமானம், சுயராஜ்ய அபிமானம் என்கின்ற சூட்சி களையும், தந்திரங்களையும் விட்டு விட்டு மனித ஜீவ அபிமானமென்கின்ற தலைப்பின் கீழும், கொள்கையின் கீழும் எல்லோரும் ஒன்று சேருகின்ற வரையில் நான் “தேசத் துரோகி“யாயிருந்து தேசாபிமானப் புரட்டையும், சுயராஜ்யப் புரட்டையும் வெளியாக்காமல் இருக்க முடியாது
காங்கிரஸ்:
காங்கிரசைப் பற்றிப் பிரமாதமாகப் பேசப்படுகின்றது
காங்கிரசின் பயனாய் இந்த 50 வருஷகாலமாய் பாமர மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டதென்று விரல் விட்டுச் சொல்ல முடியுமா என்று கேட்கின்றேன்.
முதலாவது காங்கிரஸ் எல்லா ஜனங்களுக்கும் பிரதிநிதியாய் இருக்கின்றதாவென்றும் கேட்கின்றேன்.
வடநாட்டில் முஸ்லீம்கள் காங்கிரசுக்கு விரோதமாய் முஸ்லீம்
லீக் வைத்து காங்கிரசைக் கண்டித்து வருகிறார்கள். பெரும்பான்மையான 100க்கு 90 முஸ்லீம்கள் காங்கிரசில் இல்லை:
தோழர் வரதராஜுலு காங்கிரசை முஸ்லீம் சமூகம் ஒப்புக்கொள்ளவில்லை என்றதற்கு ஒரு வாலிபர், தோழர்கள் டாக்டர் அன்சாரி, கிச்சுலு, அபூல்கலாம் ஆசாத் ஆகியவர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னார். இவர்கள் பேச்சைக் கேட்கும் முஸ்லீம்கள் யார்?
அப்படியானால் காந்தியார் சென்ற வட்ட மேஜை மகாநாட்டின். யோக்கிதை இந்து முஸ்லீம் விஷயத்தில் சிரிப்பாய்ச் சிரிப்பானேன்? வகுப்புத் தீர்ப்பு விஷயமாய் இன்னமும் காங்கிரசுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரு முடிவு ஏற்படாமல் காங்கிரசுக்குள்ளாகவே பிளவு ஏன்?
டாக்டர் அம்பேத்காரைத் தீண்டப்படாதவர்கள் பிரதிநிதியல்லவென்ற காந்தியார் அவரோடு ராஜி செய்து கொள்ளப் பட்டினி கிடந்து அவர் கையெழுத்தைப் பெறுவானேன்?
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 17
தென் நாட்டில் உள்ள பார்ப்பனரல்லாதார் 100க்கு 95 பேர்கள் காங்கிரசை விட்டு வெளியேறித் தனி ஸ்தாபனம் ஏற்படுத்தி சர்க்காரிடம் தங்கள் உரிமையைப் பெற முயற்சிப்பானேன்? சட்டசபையிலும், மந்திரி சபையிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் பார்ப்பனரல்லாதார் கட்சியாரே நிறைந்து இருப்பானேன்?
காங்கிரஸ்கொள்கையை ஒப்புக்கொள்ளாதவன் தேசத்துரோகியென்றால். பண்டித மாளவியா, மூஞ்சே, பாய் பரமானந்தா, ஆனே ஆகியவர்கள் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாய் பிரசாரம் செய்து தேர்தல்களில் போட்டிபோடுவானேன்?
தேசியவாதிகள் என்று சொல்லக்கூடிய முஸ்லீம்கள் கூட சர். அப்துல்.
ரஹீம் போன்றவர்கள் ஏன் காங்கிரசில் இல்லை? இவர்கள் எல்லாம்
காங்கிரஸ் கொள்கைகளைப் பெரிதும் ஆதரிப்பதில்லை யென்பது
உங்களுக்குத் தெரியவில்லையா?
வகுப்புணர்ச்சி.
வகுப்புத் தீர்ப்பை மூடிவைத்துப் பேசுவது முஸ்லீம்களை ஏமாற்றவா அல்லவாவென்று கேட்கின்றேன்.
காங்கிரஸ்காரர்கள் உண்மையான தேசாபிமானிகளாய் எல்லா மக்களுக்கும் பிரதிநிதிகளாய் இருப்பார்களேயானால், எல்லா வகுப்பு மக்களையும் கூட்டி வைத்துப் பேசி ஒரு முடிவு செய்வதற்கு முயற்சிக்காமல். ஒவ்வொரு வகுப்பிலும் ஏதோ இரண்டொரு சோனகிரிகளைச் சேர்த்துக் கொண்டு மற்றவர்கள் எல்லோரையும், வகுப்புவாதி, தேசத்துரோகியென்று வையவிடுவதால் தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது ஏமாற்றத்தைத் தான் தருமே யொழிய வேறில்லை
வகுப்புவாமிப் பிரதிநிதித்துவம்
20 வருஷங்களுக்கு முன்பே முஸ்லீம்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுத்ததுபோல் பார்ப்பனரல்லாதார் கேட்ட பிரதிநிதித்துவம் அப்போதே கொடுத்திருக்கும் பக்ஷத்தில் இந்நாட்டில். பார்ப்பனரல்லாதார் க்ஷி தோன்ற இடமே இருந்திருக்காது. அல்லது நான் கேட்ட காலத்திலாவது பார்ப்பனர்கள் செவி சாய்த்திருப்பார் களானால் நானும் காங்கிரசை விட்டு ஓடி வந்திருக்கமாட்டேன்.
பார்ப்பனர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் இவைகளை யடக்கி விட்டதாகக் கனவு கண்டார்கள். இன்று வட்டியும் முதலுமாய் தலைதூக்கி நிற்கின்றது. தந்திரத்தினால் இவைகளையும் அடக்கி விடலாமென்பதாகக்
கருதாதீர்கள். மூடி வைத்த சிலந்திப் புண் அழுகிப் புழுத்து நாறுவது போல் இன்னமும் அதிகமாய் நாறப்போகின்றது என்பது உறுதி
1793 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார், இந்து - முஸ்லீம், தாழ்த்தப்பட்டவர்கள்- மேல் ஜாதிக்காரர்கள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்காமலும், அவரவர்கள் நன்மைக்குத் தனித்தனியே பிரிந்து அரசாங்கத்தை நத்தும்படியாகவும் செய்துவிட்டு வெறும் தேசாபிமானப் பேச்சைப் பேசிக் கொண்டு தேர்தலுக்கு நின்றால் உலகை ஏமாற்றி விட முடியுமா? என்று கேட்கின்றேன்.
சட்டசபைக்குப் போய் “ஜாதி வித்தியாசங்களை யொழித்து தீண்டாமையையொழித்து எல்லோருக்கும் கோவில், குளங்கள், சத்திரம், பள்ளிகூடம் ஆகியவைகளில் பிரவேச உரிமை வாங்கித் தருகின்றோம்" என்று பார்ப்பனரல்லாத மக்களிடத்திலும், தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலும் சொல்லி ஓட்டுக் கேட்பதும், சட்டசபைக்குப் போனால் “சமூக சீர்திருத்தமோ கோவில் பிரவேசமோ, ஜாதி வித்தியாச ஒழிப்போ, கோவில் குளம், நுழைவோ ஆகிய இவைகள் சம்பந்தமானகாரியம் ஒன்றும் நாங்கள் இந்திய சட்டசபையில். செய்யமாட்டோம். இதற்குச் சட்டமும் கொண்டு வரமாட்டோம்” என்று பார்ப்பனர்களிடமும், சனாதனிகளிடமும் சொல்லி ஓட்டுக் கேட்பதுமாய் இன்று
தேர்தல் தந்திரப் பிரசாரம் நடைபெற்று வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இந்தப்படி தோழர்கள் .ராஜகோபலாச்சாரியார், டாக்டர் ராஜன்,
8. சத்தியமூர்த்தி முதலிய தலைவர்களென்போர்கள் பேசி வருகிறார்களா இல்லையா? என்று கேட்கின்றேன்.
பட்டினியின் யோக்கியதை
கோவில்பிரவேசம் வாங்கித் தருகிறேன் என்று டாக்டர் அம்பேத்காரிடம் சொல்லி ஏமாற்றிப் பட்டினி கிடந்து தனித் தொகுதியை குழி வெட்டிப் புதைத்து
விட்டு இப்போது “பொது ஜனங்கள் ஆதரவில்லாததால் ஆலயப் பிரவேச மசோதாவை வற்புறுத்தக்கூடாது' என்று சொல்லுவதும், இனியும் சட்டசபையில் அப்படிப்பட்ட தீர்மானங்கள் கொண்டு வருவதில்லையென்று வாக்குக் கொடுப்பதும் எவ்வளவு நாணையமும், யோக்கியமும், சத்தியமுமான நடவடிக்கை என்று பாருங்கள். இவர்கள் தான் சத்தியாக்கிரகிகளாம். சத்திய சோதனை செய்கின்றவர்களாம், சத்தியத்திற்காகப் பட்டினி கிடப்பவர்களாம்.
இந்தத் தேர்தலை எதிர்பார்த்தே வருணாச்சிரமிகளுடைய ஆதரவு இல்லாமல் போய்விடுமென்று பயந்தே, ஆலயப்பிரவேச மசோதா கொலை செய்யப்பட்டு விட்டது என்பது எனது அபிப்பிராயம். சூட்சியும், தந்திரமும் எவ்வித நன்மையையும் செய்துவிட முடியாது
கேள்விகளும் பதில்களும்
காங்கிரஸ்காரர்:- நீங்கள் ஆதரிக்கும் ஷண்முகம் செட்டியார் மாதம் 4000 ரூபாய் சம்பளம் வாங்குகிறாரா இல்லையா?
ஈ.வெ.ரா:- ஆம் மேளதாளத்தோடு வாங்குகிறார்.
காங்கிரஸ்காரர் :- அதற்காகத்தானே அவர் சட்டசபைக்குப் போகப் பார்க்கிறார்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௨ 174
ஈ.வெரா:- ஆம், அதற்கும், அதற்கு மேற்பட்ட பதவிக்கும் போகத்தான் போகிறார். இதில் என்ன தப்பு இருக்கிறது? தோழர் பட்டேல் காங்கிரஸ்காரராய், ஒத்துழையாதாராய் இருந்து இந்திய சட்டசபைக்குப் போய் முட்டுக்கட்டைப் போட்டுச் சர்க்காரை உடைத்து விடுவதாக பொது ஜனங்களிடம் சொல்லி சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ஓட்டு வாங்கி அங்கு போன பிறகு மாதம் 4000 ரூபாய் சம்பளத்துக்கு அடிமையாகி சர்க்காரை முட்டுக்கட்டை போடுவதற்குப் பதிலாய் ஒழுங்காக நடத்திக் கொடுப்பதாகவும், ராஜ விஸ்வாசத்துடன் ராஜபக்தி உள்ளவராய் இருப்பதாகவும் சத்தியம் செய்து கொடுத்து மாதம் 4000 ரூ. சம்பளம் வாங்கினாரா இல்லையா? ஆனால் தோழர்ஷண்முகம் அப்படிச்செய்யவில்லை. “நான் முட்டுகட்டை போடுகிறேன்" என்று சொல்லி ஓட்டுக் கேட்கவில்லை. “தேசபக்தர்” “தேசீயவீரர்" “தேசாபிமான. சிங்கம்" என்கின்ற தோழர் பட்டேல் வாங்கிய சம்பளத்திற்கு மேல் ஒரு காசும் அதிகம் வாங்கவுமில்லை. இப்பொழுதாவது காங்கிரஸ்காரர்கள் தங்கள் இந்திய சட்டபைக்குப் போனால் பிரசிடெண்டு ஸ்தானம் (கிடைப்பதானால்) ஆசைப் படுவதில்லை யென்றோ தாங்கள் பிரசிடெண்டுக்கு யாருக்கும் ஓட்டுச் செய்வதில்லை யென்றோ சொல்ல முடியுமா வென்று கேட்கின்றேன். (சிரிப்பு, கைத்தட்டலுடன் சிரிப்பு)
ஈ.வெ.ரா:- தோழர்களே! சிரிக்காதீர்கள், இன்னமும் இவர்கள். கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப் போகிறேன். அவை உங்களுக்கு ஒரு அறிவு விருந்தாகும். அதைக் கேட்டால் உங்களுக்கு பசி கூட ஏற்படாது.
காங்கிரஸ்காரர்:- ஜஸ்டிஸ்கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியாயிற்றே அதை நீங்கள் ஆதரிக்கலாமா?
ஈ.வெ.ரா:- ஆம். ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சிதான். ஆனால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரஸ்காரர்கள் 30, 40 வருஷகாலமாய் ஆடி வந்த உத்தியோக வேட்டையைத்தான் வேட்டையாடிப் பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. ஆனால் காங்கிரஸ் காரியதரிசிகள், காங்கிரஸ் பிரமுகர்கள், தேசாபிமானிகள் ஆகிய
சர்.சி.பி.ராமசாமி அய்யர், கே.சீனிவாசய்யங்கார், வி.கிருஷ்ணசாமி
அய்யர், சர்.பி.எஸ். சிவசாமி அய்யர், மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள். முதலியவர்கள் ஆடிய வேட்டைகளைத்தான் ஆடுகிறார்களே ஒழிய - அவர்கள் வாங்கின சம்பளத்தைத் தான் வாங்குகிறார்களே ஒழிய புதிய வேட்டை யொன்றுமில்லை. அதிக சம்பளம் ஒன்றுமில்லை
மற்றும் காங்கிரஸ் தேசாபிமானிகள் தங்கள் ஜாதிக்கு மாத்திரமே உத்தியோக வேட்டையாடினார்கள். ஜஸ்டிஸ் தேசாபிமானிகள் தங்களுக்கும் பார்ப்பனர்களுள்பட எல்லா மக்களுக்குமாக வேட்டையாடு கிறார்கள். வேட்டையை இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப்பட்டவர். எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். பழைய காங்கிரஸ்
175 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வேட்டைக்காரர்கள் இப்போது தங்களுக்கு வேட்டை கிடைக்கவில்லை யென்கின்ற காரணத்தால் வேட்டையைப் பரிகாசம் பண்ணுகிறார்கள். இப்போதும் பல காங்கிரஸ்காரர்களை எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் அண்ணன் தம்பிகளையும், சிற்றப்பன் பெரியப்பனையும், மாமன் மச்சானையும் உத்தியோக வேட்டையாட விட்டு விட்டு தாங்களும் முயற்சி செய்து பார்த்த வேட்டைக்கு லாயக் கில்லாதவர்களே பெரிதும் ஜெயிலுக்குப் போய்விட்டு வந்து இங்கு தேசாபிமானிகளாயிருப்பது எனக்குத் தெரியும்
காங்கிரஸ்காரர்:- ஜஸ்டிஸ் கக்ஷி என்ன சாதித்தது?
ஈ.வே.ரா:- ஜஸ்டிஸ் கட்சியானது தோழர் சி.பி. சுப்பையாவை மாகாண காங்கிரஸ் காரியதரிசி யாக்கிற்று. இதைவிட வேறு என்ன வேண்டும். தோழர் வரதராஜுலுவைத் தென்னாட்டுத் திலகராக்கிற்று என்னை மாகாண காங்கிரஸ் காரியதரிசியாகவும், பிரசிடெண்டாகவும் ஆக்கிற்று. இவை தவிர இதுவரை காங்கிரஸ் சாதித்ததை யெல்லாம்
ஜஸ்டிஸ் ககஷியும் சாதித்து வருகின்றது
காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கே உத்தியோகம், படிப்பு முதலியவை இருக்கும்படி காங்கிரஸ் பார்த்து வந்தது. ஜஸ்டிஸ் க௬ஷி பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இருக்கும்படி பார்த்து வருகிறது.
எல்லா உத்தியோகங்களுக்கும் எல்லாப் பதவிகளுக்கும் பார்ப்பனரல்லாதாரும் லாயக்கும், உரிமையும் உடையவர்களே என்று செய்து காட்டி மெய்ப்பித்து வருகின்றது
உத்தியோக வேட்டையில் எல்லோருடைய சீட்டையும் ஒன்றாய் போட்டு குலுக்குகின்றது. இன்னம் என்ன வேண்டும்?
காங்கிரஸ்காரர் கேள்வி:- உத்தியோகம்தான் பெரிதா?
ஈ.வெ.ரா.:- ஆம், இது வரை தேசாபிமானிகள், காங்கிரஸ்காரர்கள், தேசீய வீரர்கள் என்பவர்கள் பெரிதும் உத்தியோகத்தை லக்ஷியமாகக் கொண்டுதான் உழைத்து வந்திருக்கிறார்கள். இப்போது பார்ப்பனரல்லாதார். அந்தக் கொள்கையைத் தேசாபிமானமாகக் கொண்டவுடன் பார்ப்பனர்கள் அதை தேசத் துரோகமென்று சொல்ல வந்து விட்டார்கள். பார்ப்பனர் அனுபவித்த காலம் எவ்வளவோ, அவ்வளவு காலமும் அந்த விகிதாச்சார எண்ணிக்கைக்குத் தக்கபடியும், அவ்வளவு பணமும் பார்ப்பனரல்லாதாரும் அனுபவிக்கும் காலம் வந்து விட்டால் பிறகு ஜஸ்டிஸ் கக்ஷியே நம் நாட்டிற்கு வேண்டா மென்று நானே சொல்லுவேன்.
தவிரவும், உத்தியோகங்களை வேண்டாமென்று சொல்லக் கூடாது
அதன் சம்பளங்களைக் குறைக்கும்படி சொல்ல வேண்டும்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1௦
உத்தியோகத்தின் மூலம்தான் அரசாங்கம் நடைபெற வேண்டும் அதைப்பெற ஒவ்வொரு பிரஜைக்கும் எந்தக் கட்சியானாலும் - ஜாதியானாலும் உரிமையுண்டு.
எலக்ஷன்களிலும், உத்தியோகங்களிலும் ஒரு யோக்கியமான முறை இல்லாத காரணத்தால்தான் எலக்ஷன்கள் வரும்போதும், உத்தியோகங்கள் வரும்போதும், நாட்டில் கலவரம், க்ஷி பிரதி கக்ஷிச் சண்டைகள் நடந்து கொண்டு வருகின்றன.
எப்படியானாலும் வகுப்புச் சமரசமில்லாமல் நடைபெறும் தேசாபிமான வேலைகள் காந்தியார் நடத்துவதானாலும், யார் நடத்துவதானாலும், நாணையமாயும், நியாயமாயும், உண்மையாயும் நடத்த முடியாது. அது ஏற்படுகின்ற வரையில்நான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்பட்டமக்களுக்கும் உத்தியோகத்தில் குறைந்திருக்கும் மக்களுக்கும் அனுகூலமாய்த்தான்.
இருப்பேன். அதற்காக ஆயிரம் தேசத் துரோகி கூட ஆவேன். வகுப்பு நியாயம் தான் எனக்கு எல்லாவற்றையும் விடப் பெரியது.
ஒருவன் பாடுபட்டும் பட்டினியாய்க் கிடப்பதும், ஒருவன் பாடுபடாமல்
வயிறு புடைக்கத் தின்று புரளுவதும், ஒருவன் பல வேலையைக் கைப்பற்றித் தனது தேவைக்கு மேல் பயனடைந்து பாழாக்க, ஒருவன் செய்வதற்குக்
கூட வேலையில்லாமல் திண்டாடி தெருவில் தியங்க இவைகளுக்கு வகுப்பு ஆதிக்கமும், வகுப்பு வித்தியாசமும் காரணமாய் இருப்பதென்றால் இவற்றை எப்படிச் சகித்துக் கொண்டு வகுப்பைப் பற்றியே கவலையில்லாத தேசாபி மானத்தை ஒரு மனிதன் ஆதரிக்க முடியுமென்று கேட்கின்றேன்.
ஜஸ்டிஸ் கட்சியை நான் ஆதரிப்பதைக் கண்டு நீங்கள் வயிற்றெரிச்சல் படுவதில் பயனொன்றுமில்லை. அது தைரியமாய் வகுப்பு நியாயத்தையும், வகுப்பு வித்தியாசங்களையும் உயர்வு தாழ்வுகளையும் ஒழிக்கச் சட்டம் செய்வதையும், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை அமுல் நடத்துவதையும் கொள்கையாய்க் கொண்டு வேலை செய்து வருகின்றது
அதன் பயனாய் இன்று இந்த நாட்டில் எல்லா ஜாதியாரும் உத்தியோகம் அனுபவிக்கிறார்கள்.
கடைசியாக உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். அக்கட்சி மீது பொறாமைப்பட்டு பிரயோஜனமொன்றுமில்லை. இன்றைய நிலையில் அதை உங்களால் அசைக்க முடியாது. அதற்குக் கெடுதி செய்ய எண்ண எண்ண அது தேசமெல்லாம் வேரூன்றப் போகின்றது. அதன் பலக் குறைவு குற்றம் எங்கிருக்கிற தென்பது எனக்குத் தெரியும். அதைச் சரிப்படுத்த நானும் முயற்சிக்கிறேனே யொழிய, சும்மா இருக்கவில்லை. ஆனால் அது காங்கிரசிலில்லையென்று கருதி விடாதீர்கள்.
177 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
எனது ஒரு கேள்வி. உங்களை ஒன்று கேட்கின்றேன். இந்த மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி யிருந்து அது இந்த 20 வருஷகாலமாகச் செய்து வந்த அரசியல் - சமுதாய வேலையை விட ஜஸ்டிஸ் கட்சி யில்லாத வேறு மாகாணங்கள் அதிகமாகச் செய்த ஒரு காரியத்தைச் சொல்லுங்கள் பார்ப்போம். மற்ற மாகாணங்களிலில்லாத கெடுதி இங்கு ஏதாவது இருக்கின்றதா சொல்லுங்கள் பார்ப்போம். மற்ற மாகாண மந்திரிகள், இந்திய கவர்னர்கள் எல்லோரும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களா?
அங்கெல்லாம் ஜஸ்டிஸ் கட்சி யில்லாததால் கவர்ன்மெண்டு ஒழிந்து போய்விட்டதா? உத்தியோகங்கள், சட்டசபைகள், நிர்வாக சபைகள், காலியாகக் கிடக்கின்றனவா? தயவு செய்து யோசித்து பதில் கூறுங்கள். வீணாக இப்படி இந்தச் சூட்சிகளும், விஷமங்களும், துவேசுமும், வலுக்க வலுக்க பார்ப்பனப் பூண்டுகள் உத்தியோகங்களில் குறைந்து போவதோடு மாத்திரமல்லாமல் மறைந்து போகவும் நேரிடும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.
கம்பவி போட்டு உட்காருவோம்
காங்கிரசின் யோக்கியதையும்; ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் நாணையமாய் வெளியாக வேண்டுமானால் கம்பளி போட்டு எல்லோரும் உட்கார்ந்து ஒரு பொது நியாயாதிபதியை வைத்து இருவரும் பேசுவோம் ஜஸ்டிஸ் கட்சியின் அக்கிரமங்களையும், நாணையத் தவறுதல்களை நீங்கள்
சொல்லுங்கள். காங்கிரஸ் - பார்ப்பனர் அக்கிரமங்களை, மோசங்களை, நாணையத் தவறுதல்களை நானும் சொல்லுகிறேன். யார் சொல்லுவது
சரி யென்று முடிவு செய்யட்டும். இந்த நாட்டுப் பார்ப்பனர்களுடையவும், பார்ப்பனீயத்தினுடையவும், காங்கிரசினுடையவும், அரசியலினுடையவும், தேசாபிமானத்தினுடையவும், 30, 40 வருஷத்திய வண்டவாளமும், கொடி வழிப்பட்டியும் என்னிடமிருக்கிறதேயொழிய நான் வெறும் ஆள் மாத்திரம் தானென்று கருதி கூப்பாடு போட்டு மிரட்டியோட்டி விடலாமென்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்.
நான் மொட்டை மரம் என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்குக் கிடையாது. உத்தியோகமோ, பணமோ, வயிற்றுச் சோற்றுக்கு வழியோ, ஒரு பெருமையோ, கவுரவமோ எதிர்பார்த்துப் பொதுச் சேவையில் இறங்கவில்லை. 6,7 தடவை ஐயில் பார்த்தாய் விட்டது. சிவில், கிரிமினல் இரண்டும் பார்த்தாய்விட்டது. பார்ப்பனர்கள் தொல்லைகளையும் அவர்களால் கூடிய மட்டிலும் செய்து பார்த்தாய் விட்டதை அனுபவித்துமாய்விட்டது. காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கின்றது. நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாருமில்லை. என்னால் காப்பாற்றப் பட
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1௦
வேண்டியவர்களும் யாருமில்லை. நான் ஒற்றையாள், “நின்ற நாளைக்கு நெடும் சுவர், விழுந்தால் குட்டிச் சுவர்" முழுகிப் போவது ஒன்றுமில்லை:
எலக்ஷன் முடிந்த எட்டாம் நாள் நான் அரசாங்க விருந்தாளியாய் போகப் போகிறேன்.
காங்கிரஸ்காரர் கேள்வி:- அப்படியானால் நீங்கள் ஏன் காங்கிரசில் சேரக்கூடாது?
ஈ.வெ.ரா: சேருவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். இந்தப் பம்பாய் காங்கிரசில் தோழர் காந்தி அவர்கள் விலகி போய்விடுவதாகச் சொல்லுகிறாராம்.
அந்தப்படி அவர் விலகி விடுவாரானாலும் - எனது திட்டங்களை ஜஸ்டிஸ் க௬ஷி ஒப்புக்கொள்ளவில்லையானாலும் நான் காங்கிரசில் சேர்ந்து எனது திட்டத்தை நடத்த முயற்சிக்க உத்தேசித்திருக்கிறேன்.
இனியும் கேட்கலாம்
இன்று 8 மணிக்குக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வருவதாக ஒரு பெரிய விருந்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறேன. மணி 8 ¥ ஆகிவிட்டது இனியும் கேள்வியிருந்தால் கேட்கலாம். இன்னும் 15 நிமிஷம் இங்கு இருக்க ஆக்ஷ்பணையில்லையென்று சொல்லிச் சிறிது நேரம் சும்மா நின்று கொண்டிருந்தார். யாரும் எவ்வித கேள்வியும் இல்லாததால் கூட்டத்தை முடித்து விடுகிறேன் என்று சொன்னார்.
மறுநாள் காங்கிரசில் ஒரு கூட்டம் கூட்டப்படுமென்று ஒருவர் சொன்னார். அதற்குத் தோழர் ஈ.வெ.ரா. யாவரும் அங்கு போகலாமென்றும் அங்கு ஒரு கலாட்டாவும், குழப்பமும், கேள்வி கேட்பதும் என்பது கூட சு.ம.காரர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு கூட்டத்தை முடித்ததாகச் சொல்லிவிட்டு விருந்துக்குப் புறப்பட்டார். காந்திக்கு ஜே என்று ஒருவர் கூப்பாடு போட்டார். ஈ.வெ.ராமசாமிக்கு ஜே என்று ஒரு கூட்டம் கூப்பாடு போட்டது. தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “காந்திக்கு மாத்திரம் ஜே போட்டால் போதும். அவர் நிலை இன்று பயணம் சொல்லிக் கொள்வதில் இருப்பதால் அவருக்குத்தான் மரியாதை செய்ய வேண்டும். நான் இன்னம் கொஞ்ச நாளைக்கு இருக்கிறவன். ஆதலால் எனக்கு வேண்டியதில்லை” என்று சொல்லி வண்டியேறினார்.
குறிப்பு: கோவை டவுன்ஹால் மைதானத்தில் 12,10.1934இல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று சட்டசபைத் தேர்தல்' என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 21.10.1934
19 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தேர்தல் ஜனப்பிரதிநிதித்துவத்திற்கா? பித்தலாட்ட வியாபாரத்திற்கா?
நாட்டில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்திய சட்டசபை ஸ்தானங்களுக்குத் தேர்தல் பிரசாரம் தொடங்கி விட்டது. சட்டசபைகள். மாய்கையென்றும், அங்கு சென்று மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்ய முடியாதென்றும் சட்டசபைகள் அரசாங்கம் தங்களுடைய பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கிற அரண்களென்றும், சட்டசபையில் சர்க்காருடைய வலுவு பிரதிநிதிகள் வலுவைவிட எவ்வளவோ மடங்கு மேல்பட்டதென்றும் அரசாங்கத்தின் வலுவைச் சட்டசபை மூலம் சிறிதாவது அசைக்கக் கூட முடியாதென்றும் தோழர்கள் காந்தியார், தாஸ், நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்கள் மாத்திர மில்லாமல் இன்று சட்டசபைக்குக் காங்கிரஸ் மாறலாய் நிற்கும் அபேட்சர்களுள்பட எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த அபிப்பிராயமானது சட்டசபைக்கு வெளியிலிருந்து கொண்டு. சொன்னதென்று எண்ணிவிட முடியாதபடி காங்கிரஸ் தலைவர்கள், தியாகிகள், மேதாவிகள் பலர் சட்டசபைக்குள் தக்க பலத்துடன் சென்று, ஒரு கை பார்த்துவிட்டு வெளியில் வரும்போதும், வந்த பின்பும் சொன்னது என்பதை நாம் வாசகர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியதில்லை.
அன்றியும் சட்டசபைகளும், அதற்குள் சென்று நாம் செய்யக்கூடிய காரியங்களும் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட தென்பதும், அங்கு செல்பவர்கள் அதற்குள்ள அதிகார வரம்புக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து தீர வேண்டுமென்பதும், அப்படிக் கட்டுப்பட்டு அடங்கி நடப்பதின் மூலம் கூட அதனால் அடையக் கூடிய அளவு அதாவது அதிகாரம் இருக்கும் அளவு முழுவதையும் கூட அடைய முடியாதென்பதும், அவற்றிற்கு மேற்பட்டு. ஒரு காரியம் கூடச் செய்யச் சட்டப்படி இடமில்லாமல் தடுக்கப் பட்டிருக்கிறதென்பதும் பகுத்தறிவுள்ள வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை இவையெல்லாம் பளிங்கு போல் ஏற்கனவே தெரிந்துதான் அதன் பலாபலன்களைப் பற்றி அனுபோகஸ்தர்கள் அப்போதே சொல்லி அதையணுகாமலிருந்தார்களென்று சொல்லலாம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 10
இந்த நிலையில் அதாவது காங்கிரஸ்காரர்கள் பஹிஷ்கரித்த பிறகு, அதை விட்டு வந்த பிறகு, வெளியேறின பிறகு அந்தச் சட்டசபைகள் இப்போது ஏதாவது மாறுதலடைந்து விட்டதா? அல்லது ஏதாவது அங்கு போய்ச் சாதிப்பதற்குத் தகுந்த மாதிரி திருத்தியமைக்கப்பட்டுவிட்டதா என்பவைகளைக் கவனித்தாலும் அந்தப்படி ஒன்றும் நடந்து விடவில்லையென்பதும் நன்றாய் விளங்கும்
அப்படியிருக்க இப்பொழுது திடீரென்று சட்டசபைகளுக்கு அந்தப்படியெல்லாம் பேசிய காங்கிரஸ்காரர்கள் செல்ல வேண்டு மென்று சொல்வதற்கும் அபேக்ஷகர்களாய் நிற்பதற்கும் என்ன காரணமென்பதைப் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டக் கடமைப்பட்டவர்களாவார்கள். ஆகவே நாளது வரையும் காங்கிரஸ்காரர்கள் இந்தப் பிரச்சினைக்கு எந்தக் காரணங்களையும் சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் தோழர் காந்தியவர்கள் இம்மாதம் 155 தேதி தான் காங்கிரசை விட்டு விலகி விடத் தீர்மானித்திருப்பது சம்மந்தமாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் சட்ட சபைக்குக் காங்கிரஸ்காரர்கள் போக வேண்டிய அவசியத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள வாக்கியத்தில் “சட்டசபைப் பிரவேச விஷயமாக நான் இதற்கு முன் என்ன சொல்லியிருந்த போதிலும் சரி, காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போக வேண்டியது அவசியமென்று இப்போது கருதுகிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதனால் நாம் தெரிந்து கொள்ளக் கூடியதென்னவென்று பார்ப்போமானால் “அப்பொழுது எனக்கு இஷ்டமில்லை. இப்போது எனக்கு இஷ்டம்'' என்று சொல்லுகிறாரென்பதைத் தவிர வேறொன்றும் காணப்படவில்லை. ஆகவே தோழர் காந்தி அவர்கள் ஊரார் செலவில் ஊரார் கஷ்டத்தில் அரசியல் ABCD படித்து அனுபவம் பெற்று வருகிறாரென்றுதான் இதிலிருந்து கருத வேண்டியிருக்கிறது. இந்தப்படி காங்கிரஸ்காரர்கள் சட்ட சபைக்குப் போக வேண்டுமென்பதிலும் அங்கு போய்ச் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களை நிர்ணயிக்காமலும், சமூக சீர்திருத்தமான விஷயங்களில் பிரவேசிப்பதுமில்லை அவைகளுக்கு இடம் கொடுப்பதுமில்லை என்று முடிவு செய்து கொண்டும் போகும்படி செய்வதும் அந்தப்படி காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போன பின்பும் அவர்கள் சட்டசபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். எப்படி நடந்துகொள்ளுகிறார்கள் என்பதைக் கூடத் தான் இருந்து நடத்தாமலும், கவனிக்காமலும், இப்போதே காங்கிரஸிலிருந்து காந்தியார் விலகிக் கொள்ளப் போவதுமாய்ச் சொல்லுவதுமாகிய காரியங்களில் ஏதாவது புத்திசாலித்தனமோ, பொறுப்போ இருக்கின்றதா என்பதையும், இப்படிப்பட்ட கூட்டத்தாரைச் சட்டசபைக்குப் போக விடுவது பொறுப்பான காரியமோ புத்திசாலித்னமோ ஆகுமா வென்பதையும் யோசித்துப் பார்க்கும்படி பொறுப்புள்ள ஓட்டர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்
18l ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்த லக்ஷணத்தில் மற்றொரு விஷயம் மிகவும் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதாகுமென்பது நமது அபிப்பிராயம். அதாவது:-
“சட்டசபைத் தேர்தல்களில் அபேக்ஷகர்களாய் நிற்கும் ஆசாமிகளைப் பற்றி யாரும் கவனிக்காதீர்கள். அவர்கள் நிற்கும் கக்ஷிகளைப் பற்றிக் கவனியுங்கள்'' என்கின்ற பல்லவியின் மீது எலக்ஷன் பிரசாரம் நடத்துவதும், க்ஷி சம்மந்தமான விஷயங்களில் விவகாரம் வரும் பொழுது ''கக்ஷிகளைக் கவனிக்காதீர்கள் மகாத்மா காந்தியைக் கவனியுங்கள். கஷியைப் பற்றியோ, நபரைப் பற்றியோ கவனிக்காதீர்கள்" என்பதும், காந்தியார் இன்ன இன்னபடி நடந்து கொண்டு இன்ன இன்னபடி சொன்னவராயிற்றே. ஆதலால் அவரைக் கவனித்து ஓட்டுக் கொடுக்க முடியுமா? என்ற பிரச்சினை வரும்போது சட்டசபைக்கு நாங்கள் போனால் இன்ன இன்ன விஷயங்கள் செய்ய மாட்டோமென்று தனிப்பட்ட முறையில் காந்தியார் கொள்கை என்பவைகளுக்கு விரோதமாக வாக்குக் கொடுப்பதுமாகிய காரியங்கள் இன்று காங்கிரஸ் எலக்ஷன் பிரசாரமாய்ச் செய்யப்பட்டு வருகின்றன. இவை தக்க பொறுப்புள்ள ஆட்களாலேயே நடைபெற்று வருகின்றன. ஆகவே இந்த நிலையில் காங்கிரஸுக்கு எந்த ஆதாரத்தின் மீது
எந்தக் கொள்கைகளை வைத்து எந்த வேலைத் திட்டத்தை எதிர்பார்த்து யாரிடம் நம்பிக்கை கொண்டு ஓட்டர்கள் ஓட்டுச் செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை இவை ஒருபுறமிருக்க மற்றும் ஒரு சில பிரசாரக்காரர் “காங்கிரஸ்காரர். களாகிய நாங்கள் சட்டசபைக்குப் போய் வெள்ளையறிக்கையை நிராகரித்து விடுவோம். அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய்துவிடுவோம்” என்று சொல்லுவதாகத் தெரிகிறது. இதையாவது உண்மையா? சரியா? என்று யோசிப்போமேயானால் இதுவும் அர்த்தமற்ற பேச்சு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது
வெள்ளையறிக்கைக்கு இன்னமும் முழு ரூபமும் ஏற்பட்டு விடவில்லை. அது அமுலுக்கு வர அதற்கு இன்னமும் எத்தனையோ
சடங்குகள் நடைபெற வேண்டியிருக்கின்றன. அப்படியிருந்தாலும் அதை நிராகரிக்கத் தகுந்த மெஜாரிட்டியைச் சட்டசபையில் பெற்று விட முடியுமா? முஸ்லீம்களின் 30 ஸ்தானங்களில் பத்திலொரு பாகமாவது காங்கிரஸ்காரர்களுக்கு அனுகூலமாக விருக்கும்படி காங்கிரஸ் நடந்துகொண்டிருக்கின்றதா? வகுப்புத் தீர்ப்பைப் பற்றிச் சுவர்மேல். பூனையாய் இந்துக்களுக்குத் தலையையும், முஸ்லீம்களுக்கு வாலையும் காட்டி வரும்வரையிலும் பண்டித மாளவியா போன்றவர்கள் அதைக் கூட எதிர்க்கக் க௯ஷி சேர்த்துக் கொண்டிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள். எல்லோரும் காங்கிரஸுக்கு சரணாகதி அடையக் கூடியவர்களென்று, நாம் அவர்களை அவ்வளவு பைத்தியக்காரர்களாக எண்ணி விட முடியுமா?
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29௨ 15
ஒவ்வொரு முஸ்லீமும், “நான் முதலில் முஸ்லீம் அப்புறம்தான். இந்தியன்” என்று செய்த கர்ச்சனைகளை மறந்துவிட்டு அவர்கள் சமூகத்துக்கு துரோகமாகக் காங்கிஸுக்கு வந்து அடிமையாவார்களென்று நினைப்பது முட்டாள்தனமாகாதா? என்றும் கேட்கிறோம்
இந்திய சட்டசபையில் நாமினேஷன்காரர்கள் 40 பேர்,
முஸ்லீம்கள் 30 பேர், வெள்ளைக்காரர்கள் 8 பேர், வியாபாரிகள் 4
பேர், மிராஸ்தாரர்கள் 7 பேர், வகுப்புத் தீர்ப்பை யொழிக்காதவரையில்
பிரிட்டிஷ் அரசாங்கமே மேலென்று சொல்லுகின்ற சீக்கியர்கள் 2 பேர், ஆக 91 ஒதுக்கப்பட்ட ஸ்தானங்கள் போய்விட்டால் மீதி 53 ஸ்தானங்களும் காங்கிரஸுக்கே கிடைக்குமா? இந்த 53ல் குறைவுபடும் ஸ்தானங்களாவது மேல்கண்ட ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களில் கிடைக்குமா: என்பனவாகியவைகளைக் கவனித்தால், இந்திய சட்டசபையில் மெஜாரிட்டி கிடைக்குமென்று எண்ண இடமிருக்கிறதா என்று ஓட்டர்கள் கவனிக்க மாட்டார்களா என்று கேட்கின்றோம் இரண்டாவதாக, அடக்குமுறைச் சட்டங்களை யொழித்து விடுகின்றோமென்று சொல்வதும் அர்த்தமற்ற வார்த்தையென்று எப்படிச் சொல்லுகின்றோமென்றால், இன்று அடக்குமுறைச் சட்டங்களுக்கு நாட்டு மக்களிடத்தில் அதாவது காங்கிரஸ்காரர்களிடத்தில் வேலையேயில்லை. சிறப்பாக காங்கிரஸ்காரர்கள் பெரிதும் சத்தியாக்கிரகம் பயனளிக்க வில்லை. சட்ட மறுப்புத் தோற்றுவிட்டது என்கின்ற முடிவுக்கு வந்த பின்னும் காங்கிரஸும் காந்தியாரும் தேசம் இது சமயம் இந்த
இரண்டுக்கும் தயாராயில்லை, ஆதலால் அவை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதென்று சொல்லிவிட்டதற்குப் பிறகும், இனி எதற்காகச் சர்க்கார். அடக்கு முறைகளை தேச மக்கள் மீது பிரயோகிக்கப் போகிறார்களென்று இந்தக் காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை. சத்தியாக்கிரகமும், சட்டமறுப்பும் செத்தவுடன். (தற்காலீகமாகச் செத்திருந்தாலும் சரி) அடக்கு முறையும் செத்துவிட்டது என்பதில் சந்தேகம் ஏன்? அன்றியும் சர்க்கார், அதுவும் காங்கிரஸ்காரர். சட்டமறுப்பைச் சத்தியாக்கிரகத்தை விட்டு விட்டுச் சர்க்காருக்கு நல்ல பிள்ளையாக நடக்க ஆசைப்பட்டு முன்பு உதரித் தள்ளிவிட்ட சட்டசபைக்கு மீண்டும் போய் ராஜபக்தி - ராஜவிசுவாசம் - சட்டத்துக்குக்
கட்டுப்பட்டு ஒழுங்காய் நடந்து கொள்ளுகின்ற ஒழுக்க விசுவாசம் ஆகிய சத்தியங்கள் செய்து கொடுத்துவிட்டு சர்க்கார் கட்டிடத்தைச்
சுற்றிச் சுற்றி வணங்கி வரும் மக்கள் மீது அடக்குமுறைச் சட்டம் எதற்காகப் பிரயோகிக்கப் போகிறார்களென்பது நமக்கு விளங்கவில்லை: ஆகையால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்கப் போகின்றோ மென்பது செத்த பாம்பை அடிக்கப் போகின்றோ மென்று சொல்வது போலாகுமேயொழிய வேறில்லை
183 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஒரு சமயம் காங்கிரஸ்காரர்களல்லாத மற்றவர்கள் மீது அடக்கு முறைகளை உபயோகிக்கிறார்களே, அதைக் காங்கிரஸ்காரர்கள் நிறுத்தக் கூடுமென்று சிலர் நினைக்கக் கூடாதாவென்று கேட்கக் கூடும்
அதுவும் அர்த்தமற்ற வார்த்தையேயாகும். ஏனெனில் காங்கிரஸ்காரர்கள் தவிர மற்றவர்களின் மீது பிரயோகிக்கப்படும் அடக்கு முறைகளுக்கும், கொடிய சட்டப் பிரயோகங்களுக்கும், சட்டங்களின் துஷ்பிரயோகங்களுக்கும் காங்கிரஸ்காரர்கள் அனுகூலிகளாகவே இதுவரை இருந்து வருகிறார்கள். உதாரணமாகத் தோழர் காந்தியார் அவர்கள் தான் சொல்லும் காரியங்கள் தவிர வேறு எந்தக் காரியத்தை யார் செய்தாலும், வேறு எந்தக் காரியத்துக்கு சத்தியாக்கிரகம்
செய்தாலும், சட்டமறுப்பு செய்தாலும் அவற்றையெல்லாம் பெரும் பாலும், ஒரே அடியாக பலாத்காரம் என்று சொல்லி வந்திருக்கிறார். இந்த மாதிரி செய்கைகளின் மீது அடக்குமுறைகளை உபயோகிப்பதில்
காந்தியாரின் ஆதரவையும், ஆமோதிப்பையும் வைத்துக் கொண்டே
சர்க்காரார் உபயோகித்து வருகிறார்களென்பது தொக்கி இருக்க வில்லையா?
சமதர்ம இயக்கங்கள் சட்ட விரோதமான இயக்கங்களாகப் பாவிக்கப்படுமென்று ஒரு அடக்குமுறை உத்திரவைச் சமீபத்தில்தான்.
சர்க்கார் பிறப்பித்தார்கள். இதற்கு எந்த மகாத்மாவாவது, காங்கிரஸ் வாதியாவது தேசீய பத்திரிகையாவது மூச்சு கூடக் காட்டவில்லை. சுயமரியாதை இயக்க ஸ்தாபனங்கள் சட்ட விரோதமான இயக்கமென்று சர்க்கார் தீர்மானிக்கப் போகிறார்களென்பது வெளிப்படையான ரகசியம். அதன் பிரமுகர்களை ஒடுக்கி வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றனவென்பதும் யாவரும் அறிந்த விஷயம், இவைகளைப் பற்றியெல்லாம் காங்கிரஸுக்கு எவ்வளவு ஆசை (அதாவது சீக்கிரம், சீக்கிரம் நடக்க வேண்டு மென்கின்ற ஆசை) இருக்கின்றதென்பதும் யாவரும் அறிந்ததேயாகும்.
காங்கிரஸுக்குள்ளிருக்கும் சமதர்மக் கொள்கையே பலாத்காரம் கொண்டதென்று சொல்லிவிட்ட பிறகு இனி அடக்குமுறையைக் காங்கிரஸ் எந்த முகத்தைக் கொண்டு ஆக்ஷ்பிக்க முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை. இவை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட யோக்கியதையில் சட்ட சபைக்குப் போகப் பிரயத்தனப்படும் காங்கிரஸ்காரர்கள் எதிர் அபேக்ஷகர்கள் மீது கற்பனையானதும், பொய்யானதும் திருத்தலானதுமான பழிகளைச் சுமத்திப் பிரசாரம் செய்வது தங்களை சத்தியாக்கிரகிகளென்றும், சத்தியசீலர்களென்றும் சொல்லிக் கொள்ளும் யோக்கியர்களுக்குத் தகுதியானதா என்பதையும் இந்தத் தந்திரத்தின் பலனாகவே ஒரு சமயம் இவர்கள் ஜெயித்துவிட்டாலும் இவர்கள் சரியான ஜனப்பிரதிநிதிகள். ஆகிவிடுவார்களாவென்றும் கேட்கின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 184
வில்லிங்டன் துரை மகனார் “காங்கிரசில் யோக்கியர்களும், நாணையவாதிகளும் பொறுப்புள்ளவர்களும் மலிந்தில்லை. காலிகளும், கூலிகளும், நாணையமும் மானமரியாதையும் இல்லாத ஆட்களும்தான்.
மிகுந்திருக்கிறார்கள். ஆனதால் அந்த ஸ்தாபனங்களையோ, அந்த நபர்களையோ அவர்கள் வார்த்தைகளையோ மதிக்கக் கூடாது என்றும் இந்த ஆட்களை ஜனப்பிரதிநிதிகளென்றோ, நாணையமாய் நடந்து சட்ட சபைக்கு வந்தவர்களென்றோ கருதக் கூடாது” என்றும் சொன்னார். என்றால் சொல்லப்போகிறார் என்றால் சொல்லுவதானால் அதில் கடுகளவாவது தப்பு இருக்கக் கூடுமா என்று கேட்கின்றோம்
இந்த யோக்கியதையில் இருக்கும் காங்கிரஸ்காரர் “வில்லிங்டன்.
பிரபு காங்கிரஸ்காரர்களை மதிக்கவில்லை. காங்கிரஸ்காரர்கள் ராஜிக்கு இரண்டு கையையும் நீட்டிக் கொண்டு போயும் கூட அவர்களை லட்சியம் செய்யவில்லை. ஆகவே வில்லிங்டன் பிரபுவின் அகம்பாவம் எவ்வளவு" என்று சொல்லி தேசீயப் பத்திரிகைகளெல்லாம் இந்தப்படி கூப்பாடு போட்டால் இதில் உண்மையோ நியாயமோ ஏதாவது இருக்கின்றதா - இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்
சென்னையில் ஒரு காங்கிரஸ்காரர் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு திரிபவர், மேலே துணிக் கூட போடாமல் காந்தி போலவே வேஷம் போட்டுக் கொண்டு நடப்பவர், பொது மக்கள் பணத்தைக் காங்கிரசின் பேரால் மாதம் நூற்றுக் கணக்காய்ப் பெற்று வாழ்பவர், தோழர் சத்தியமூர்த்திக்காக தேர்தல் பிரசாரம் செய்யும் போது கோவில்களை இடிக்க வேண்டுமென்று சொல்லுகின்ற ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஓட்டுப் போடுகிறீர்களா?” என்று கேட்டாராம் இதிலிருக்கும் அயோக்கியத்தனத்துக்கு அளவு எவ்வளவு என்று கேட்பதோடு இந்த ஆட்கள் யோக்கியதையே இப்படி இருந்தால் மற்றபடி எவ்வளவு சிறிய வுதவிக்கும் எந்தக் காரியத்தையும் செய்யத் தயாராய் இருக்கும் சாதாரண ஆட்களிடம் எந்தக் காரியத்தைத்தான் எதிர்பார்க்கக் கூடாது என்று கேட்கின்றோம்
கோயில்களின் பேரால் பொறுக்கித் தின்று வயிறு வளர்க்கும் கூட்டங்கள் தங்களுடைய ஆதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள, மூட ஜனங்களை ஆயுதமாகக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் எப்படிப்பட்ட முக்கியமான விஷயத்தில் கேவலமான காரியங்களைச் செய்யத் துணிகின்றார்கள் என்பதைக் காண இந்த ஒரு உதாரணம் போதாதாவென்று கேட்கின்றோம்
தோழர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் பெரிய அழுக்கு மூட்டை (வைதீகர்) என்று சொல்லலாம். அவர் காலம், நேரம், சகுணம், சாமி யுத்திரவு, சாஸ்திரம் ஆகியவை பார்க்காமல் ஒரு வேலையும் செய்வதில்லை. ஒரு நொடிக்கு 100 தரம் கடவுளைக் கூப்பிடுகிறார்.
185 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அப்படிப்பட்டவர் விஷயத்தில் “கோவிலை இடிக்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுகின்றீர்களா?'' என்று கேட்ட ஆசாமிகள், வேறு எந்தவிதமான கொலை பாதகச் செயலைச் செய்ய அஞ்சுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை கோவிலை இடித்தால் இவர்கள் அப்பன் தேடிக் கட்டி வைத்த முதல் என்ன போய்விடுமென்பதும் நமக்கு விளங்கவில்லை கோவில்களை இடித்த ரஷியா தேசம் - இந்த மாதிரிக் கோவில்களின். பேரால் வயிறு வளர்த்த கூட்டங்களின் கையில் மண் வெட்டியையும், கோடாலியையும் கொடுத்த ரஷியா தேசம் இன்று “குபேர' செல்வம் படைத்த நாடாக விளங்குகின்றதே யொழிய பூகம்பத்தால் அழிந்துபோய் பூகம்ப கஷ்ட நிவாரண வேலை செய்ய இந்த சோம்பேரிக் கூட்டங்களைக் கூப்பிட்டு அதன் பேரால் வயிறு வளர்க்க விடவில்லையென்று இடித்துக் காட்டுகிறோம். மற்றபடி இப்படிப்பட்ட கூட்டத்தின் பேரால் அதாவது காங்கிரசின் பேரால் தேர்தலுக்கு நிற்கும் ஆட்களின் யோக்கியதையை யாராவது அறிய வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு உதாரணம் காட்டுவோம்.
என்னவென்றால், இன்றைய தேர்தல் பிரசாரத்தில் ஒருவராவது ஒரு அபேட்சகரைப் பற்றியாவது வெளியில் எடுத்துச் சொல்லி ஓட்டுக் கேட்காமல் “ஆசாமி எப்படியிருந்தாலும் அவர்களைப் பற்றிக் கவனிக்காமல் காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள். காங்கிரஸுக்காக ஓட்டுப் போடுங்கள்" என்று கேட்பதே போதுமானதாகும். சோம்பேறிகள், கயாவளிகள், உடம்பில் பட்டை பட்டையாக நாமம் போட்டுக் கொண்டு கையில் மஞ்சள் துணி சுற்றின செம்பை வைத்துக்கொண்டு “திருப்பதி வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள், ஏழுமலையானுக்குத் தர்மம் செய்யுங்கள்!” என்று கேட்பதற்கும், “ஆட்களைக் கவனிக்காதீர்கள். காங்கிரஸுக்கு ஓட்டுச் செய்யுங்கள், காந்திக்கு ஓட்டுச் செய்யுங்கள்” என்பதற்கும் என்ன வித்தியாசமென்று கேட்கின்றோம் ஆகவே ஓட்டர்களாகிய தோழர்களே! தேர்தல் புரட்டுகளையும் வெட்கமற்ற - மானமற்ற - யோக்கியமற்ற - நாணையமற்ற பிரசாரங்களையும் கண்டும் கேட்டும் ஏமாற்றமடைந்து விடாமல், மனிதர்கள், அவர்கள் முன்பின் நடவடிக்கைகள், அவர்கள் நடந்து கொள்ளப் போகும் முறைகள், அவர்களது கொள்கைகள், வேலைத் திட்டங்கள் ஆகியவைகளைக் கவனித்து ஓட்டுச் செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - தலையங்கம் - 21.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1
தேர்தல் பிரசார போக்கு
தோழர் சத்தியமூர்த்தி பொய்ப் புகார்களுக்குப் பதில்
தேர்தலில் போட்டி அபேட்சகர்கள் ஒருவரையொருவர் இகழ்வதும், எதிர் அபேட்சகர் மீது வாக்காளர்களுக்கு அவ நம்பிக்கை ஏற்படும்படி செய்வதும் உலகம் முழுதும் சகஜமாகி விட்டது. ஆனால் அவ்விதம் செய்வதற்கும் ஓர் எல்லையுண்டு. இப்போது சென்னை நகர் சம்பந்தப்பட்ட வரையில், காங்கிரஸ் பெயரைக் கூறிக்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். 'அபேட்சகராக நிற்கும் ஆளை கவனிக்காதீர்கள். மகாத்மா காந்திக்காக ஓட்டுப் போடுங்கள்! எனக் கூறுகிறார்கள். இது நாமம் போட்ட சோம்பேரிகள் திருப்பதி வெங்கிடாசலபதிக்கு உண்டியல் பிச்சை கேட்பது போலாகும். ஆனால் நான் அவ்விதம் எதுவும் கூற விரும்பவில்லை. சென்னை மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பார்ப்பனர் - அல்லாதார் ஜாதியை ஆதாரமாகக் கொண்டே தேர்தல் இயக்கம் நடந்து வருகிறது. நீங்களெல்லோரும் சென்னை நகரத்துக்கு அபேட்சகராக நிற்கும் தோழர் ராமசாமி முதலியாரின் அந்தஸ்தையும், யோக்கியதாம்சங்களையும் தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதாம்சத்தையுமே கவனிக்க வேண்டும். அபேட்சகர்களில் யார் செய்வது சரி, யார் செய்வது தப்பு என்பதைப் பகுத்தறிந்து, உங்களிஷ்டம் போல் ஒருவருக்கு ஓட்டுப் போடும் உரிமை உங்களுக்கு உண்டு. எனவே, வீண் புரட்டுகளைக் கேட்டு நீங்கள் ஏமாறமாட்டீர்களென்பது நிச்சயம். காங்கிரஸ் பெயரால் நடந்து வரும் பிரசாரத்தை நீங்கள் கவனிக்கக்கூடாது. காங்கிரஸ் அரசியலில் இன்னும் சிறிது காலத்தில் மிகுந்த மாறுதலேற்படலாம் ஏனெனில் காந்தியார் காங்கிரசிலிருந்து விலகிவிட உத்தேசித்துள்ளார். அப்படியிருந்தும் காங்கிரஸ்வாதிகள் தேர்தலுக்காக மகாத்மா பெயரை உபயோகித்து வருகிறார்கள். தோழர் சத்தியமூர்த்திக்கு 4000 பிராமணரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கிறதென்றும், அதற்கு மேல்தான் அவர் இப்போது கணக்கிட வேண்டுமென்றும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர். அப்படியாயின், தோழர் ராமசாமி முதலியாருக்கு 11,000 பிராமணரல்லாதாரின் ஓட்டுகள் நிச்சயமாக இருக்கின்றனவென்று நீங்கள் தைரியமாகக் கூற வேண்டும். இப்போது நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் தோழர் சத்தியமூர்த்தி, தோழர் முதலியாருக்கு விரோதமாக
187 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பல பொய்யான விஷயங்களைக் கூறியிருக்கிறார். அவைகளால் பொதுஜன அபிப்பிராயம் மாறக்கூடுமோவென்றே, இப்போது தோழர் முதலியார் அவைகளுக்கு பதில் கூற வேண்டியிருக்கிறது
குறிப்பு: 20.10.1934 மாலை சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தோழர் சத்தியமூர்த்தியைப் புகழ்ந்தும் திவான்பகதூர் ஏ. ராமசாமி முதலியாரை இகழ்ந்தும் சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாரும், ஆந்திர ஜில்லா காங்கிரஸ் கமிட்டியாராம் வெளியிட்டிருந்த துண்டு பிரசுரத்திற்கு பதில் கூறுவதற்காக கூட்டப்பட்ட கூட்டத்திற்கு தலைமைதாங்கி பேசியது.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 28.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 15
ஏமாற்றுந் திருவிழா காங்கிரஸ் கூத்து
காங்கிரஸ் கூட்டங்களைப் பற்றியும், அதன் மகாநாடுகளைப் பற்றியும் அவையெல்லாம் ஏமாற்றுத் திருவிழா என்று நாம் அவ்வப்போது எழுதி வந்திருப்பதை நேயர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அது போலவே காங்கிரஸ் நேயர்கள் பலருக்கும் இவ்விஷயம் இப்போது வரவர உண்மையாகி வந்து காங்கிரசின் பேரால் தங்கள் பிழைப்பை நிர்த்தாரணம் செய்து கொண்டவர்கள் தவிர, மற்றபடி தாங்கள் சொந்தத்தில் பாடுபடவும், வேறுவழியில் அரை வயிற்றுக்காவது சம்பாதித்துக் கொள்ள மார்க்கமிருக்கிறதென்று தைரியம் கொள்ளவும் உறுதியும் ஊக்கமும் உடையவர்கள் பெரும்பாலும் காங்கிரசிலிருந்து விலகி வந்து விட்டதும், வந்து கொண்டிருப்பதும் எவரும் அறியாததல்ல. கடைசியாக பழம்பெரும் காங்கிரஸ்வாதி என்றும், காங்கிரசிற்கே தனது வாழ்நாள் முழுவதையும் ஒப்படைத்த தியாகி என்றும் காங்கிரஸ் காரர்களாலும், பார்ப்பனர்களாலும் சொல்லப்பட்டு வந்த தோழர் மாளவியா அவர்களும் கூட காங்கிரஸ் கொள்கைகள் தந்திரமானது என்னும் காரணத்தால் காங்கிரசோடு போட்டி போடத் துணிந்துவிட்டார்.
இது அவ்வளவு முக்கிய விஷயமல்லவென்று சொல்லி விடலாம்
என்றாலும் தோழர் காந்தியவர்களே இன்று காங்கிரசை விட்டு விலகி விட்டார். விலகும்போது அவர் என்ன சொல்லிக் கொண்டு விலகுகிறார் என்பதுதான் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயமாகும் 'காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் - எனது சிஷ்யர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் - பொது ஜனங்களை ஏமாற்றுவதோடல்லாமல் என்னையும் ஏமாற்றுகிறார்கள். ஆதலால் நான். விலகிக் கொள்ள வேண்டியதாய் இருக்கின்றது” என்று வெள்ளையாக அருத்தமாகும்படியே சொல்லிக் கொண்டு விலகிவிட்டார். இதிலிருந்தாவது இதுவரை காங்கிரஸ்காரர்கள் நடத்தி வந்த நாடகங்களை நாம் ஏமாற்றும் திருவிழா என்று சொல்லி வந்தது உண்மையா அல்லவா என்பதை யோசித்துப் பார்க்கும்படி நடுநிலைமை வாதிகளையும், பகுத்தறிவுவாதிகளையும் வேண்டிக் கொள்ளுகிறோம்
19 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் காந்தியார் தான் விலகிக் கொள்ளப் போகும் காரியத்துக்கு எவ்வளவு விளம்பரம் கொடுத்து அதை எவ்வளவு பிரமாதமாக்க வேண்டுமோ அவ்வளவு பிரமாதமாக்கினார் என்றாலும் 'காந்திக்கு ஜே” என்னும் பேரால் வயிறு வளர்க்கும் ஒரு கூட்டத்திற்கு, அவர் விலகி விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று தோன்றியதால் அவர்கள் அதை எவ்வளவு மறைக்க வேண்டுமோ அவ்வளவு மறைத்துப் பார்த்தார்கள்.
என்றாலும் காங்கிரசிலுள்ள சமதர்மவாதிகள் என்னும் கூட்டத்தார்கள் இதை லக்ஷியம் செய்யாமல், “இன்று நாட்டுக்கு வேண்டியது காந்தியார் இருப்பதா, போவதா என்கின்ற பிரச்சினையல்ல. அவர் இருந்தாலும்
சரி, போனாலும் சரி, அதைப் பற்றி சிறிதும் கவலைப்படவேண்டியதில்லை. கோடிக்கணக்கான ஏழை பாமர மக்களை ஒரு சில சுயநலக்கார மூடர்கள். தாங்கள் மேல் ஜாதியாரென்றும், பணக்காரர்கள் என்றும் சொல்லி இழிவுபடுத்திக் கொடுமை செய்கிறார்களே! அதை எப்படி ஒழிப்பது, எப்படி அழிப்பது என்பதுதான் எங்கள் பிரச்சினை” என்று கூறிவிட்டார்கள்.
இதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் அந்தப் பிரச்சினையை மறக்கடிப்பதற்கு “காந்தியார் போய் விட்டாரே! காந்தியார் போய் விட்டாரே” என்று வேஷ அழுகை அழுது நீலிக் கண்ணீர் வடித்து மக்களை மறுபடியும் ஏய்க்கப் பார்க்கிறார்கள்
எனவே இது ஏமாற்றுந் திருவிழாவா அல்லவா என்று கேட்கின்றோம்.
தோழர் காந்தியார் தான் காங்கிரசிலிருந்து விலகிக் கொள்வதற்கு இதற்கு முன் சொன்ன காரணங்களைவிட காங்கிரஸ் கூட்டத்திலேயே ஒரு முக்கிய காரணத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார்.
“நான் காங்கிரசிலிருப்பதை விட வெளியிலிருப்பதால் மக்களுக்கு நன்மையான காரியங்கள் அதிகமாகச் செய்யக் கூடும் என்றும் எண்ணுகிறேன்" என்றும்
“காங்கிரசில் உள்ளவர்கள் வெளி வேஷங்களையும் ஊழல்களையும், அகம்பாவங்களையும் ஒழித்து, பரிசுத்தர்களாகாத வரையில் நான் காங்கிரசிலிருந்து விலக வேண்டி இருக்குமென்று வங்காளத்தில் கூறி இருக்கிறேன். அதற்கு முன் கூட பல சமயங்களில் குறிப்புக் காட்டி இருக்கிறேன். நான் காங்கிரசிலிருந்து விலகுவதன் இரகசியம் இதுதான்”
என்றும் சொல்லி இருக்கிறார் என்றால் காந்தியார் விலகுவதற்கு இந்தப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிக்கைகளும் தத்துவார்த்தம் செய்வது என்பது மற்றொரு ஏமாற்றுந் திருவிழாவா அல்லவா என்று மறுபடியும் கேட்கின்றோம்.
அன்றியும் தோழர் காந்தியார் ஜெயிலில் இருந்து வந்த பிறகும், ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு ஒன்று இரண்டு தடவையும் கூட, காங்கிரசில் இருப்பவர்களின் அயோக்கியத்தனத்திற்காகவும்,
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (29) 1௦0
பித்தலாட்டங்களுக்காகவும், அவரது சிஷ்யர்கள் என்பவர்களே செய்த சூட்சிகளுக்காகவும் என்று சொல்லியே பட்டினி இருந்து வந்திருப்பது எவரும் அறியாததா என்றும் கேட்கின்றோம்
இவ்வளவும் ஒரு புறம் இருந்தாலும், உண்மையிலேயே தோழர் காந்தியவர்களே தமது நடவடிக்கையிலும் பேச்சிலும் முன்னுக்குப் பின். முரணாகவும் எவ்வளவு தடவை பேசியும், எழுதியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பதை நாம் ஞாபகமூட்ட வேண்டியதில்லை காந்தியார் ஓரளவுக்காவது பரிசுத்த தன்மை அடைவதையும், அவரது முயற்சி ஒரு அளவுக்காவது வெற்றி பெறுவதையும் பாழாக்கி உலகத்தின் முன்பு அறிவாளிகள் என்போர்களால் அவரைப் பற்றி சிரிக்கும்படி செய்ததும், இந்தப் பரிகாசங்களையும் தோல்விகளையும் தாங்க முடியாமல் ஓடும்படி செய்ததும் நமது தென்னாட்டுப் பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்! பார்ப்பனர்கள்!!! தான் என்று நாம் உறுதியாகச் சொல்லுவோம்
காங்கிரசில் ஏற்பட்ட பலன்களையெல்லாம் பார்ப்பனர்களே அடையும்படியாகவும், தலைமைப் பதவிகளிளெல்லாம் பார்ப்பனர்களே இருக்கும்படியாகவும், தியாகத்தின் மூலமோ, வீரத்தின் மூலமோ ஏற்பட்ட பெருமைகள் எல்லாம் பார்ப்பனர்களுக்கே இருக்கும்படியாகவும் இங்குள்ள பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் செய்து வந்த சூட்சியே இன்று காங்கிரசையும், காந்தியாரையும் உலகத்தின் முன் சிரிப்புக்கிடமாக்கி வைத்து விட்டது என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவோம்.
நம் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் இந்தக் குணங்களை மாற்றிக்கொள்ளாத வரை இன்னமும் எவ்வளவு தந்திரம் செய்தாலும், காங்கிரசின் பேரால் யார் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் கவர்ன்மெண்டையே கைப்பற்றினாலும் (ஒரு நாளும் ஆகப் போவதில்லை) பார்ப்பனர்களது நிலைமை இன்னமும் மோசம்தான் ஆகுமே தவிர கடுகளாவாவது முன்னேற்றமடைய முடியும் என்பதை கனவிலும் கருத வேண்டாமென்றே பார்ப்பனத் தலைவர்களுக்கும், பார்ப்பனப் பத்திரிக்கைகளுக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்
தோழர் காந்தியார் காங்கிரசை விட்டு விலகி விட்டதினாலேயே அவர்
தந்திரங்களையும், சூட்சிகளையும், பித்தலாட்டங்களையும், அயோக்கியத்தனங் களையும் வெறுக்கின்றார் என்று நாம் சொல்லிவிட முடியாது.
அவர், தான் அயோக்கியத்தனங்களையும், ஒழுக்க ஈனங்களையும், ஊழல்களையும் வெறுப்பதாக ஜனங்கள் நினைக்க வேண்டுமென்றும், இதுவரை நடந்து வந்த அப்படிப்பட்ட காரியங்களுக்கு, தான் சம்பந்தப்படவில்லை என்பதாக பொது ஜனங்கள் அறிய வேண்டு
19] ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
மென்றும், தான் இன்று காந்தியார் விலகும் நாடகம் நடிக்கப்படுகின்றதே தவிர வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம் என்பதை வாசகர்கள் அறிய விரும்புகிறோம்
எப்படியானாலும் காந்தியார் விலகிவிட்டாரென்பது உறுதியாகிவிடு. மானால் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசில் சேருவதற்குக் காலம் வந்துவிட்டது என்பது கூட நமது அபிப்பிராயமாகும்
காந்தியார் இல்லாத காங்கிரசைக் கைப்பற்றினால் பார்ப்பனீயத்தை ஒருகை பார்த்து விடலாம் என்கின்ற எண்ணம் சரியாகவோ தப்பாகவோ:
சிறிது காலமாகச் சிலருக்கு இருந்து வருகின்றது என்றாலும், காங்கிரசில் வடநாட்டுக்காரர்களுக்குள் காங்கிரஸ் சமதர்மக்கட்சி என்று ஒன்று இருப்பதுபோல் தென்னாட்டில் காங்கிரஸுக்குள் பார்ப்பனரல்லாதார். கட்சி என்பது ஒன்று இருக்க வேண்டியதாகத்தான் இருக்கும்
அந்தப்படி இல்லாமல் இருக்கும்படி பார்ப்பனர்கள் நடந்து கொள்ளுவார்களானால் எல்லோருக்கும் நன்மைதான்.
முடிவாக, காந்தியாருக்கும் பார்ப்பனர்களுக்கும் இருந்த சம்மந்தம் எவ்வளவு - காந்தியார் விலகிவிட்டதற்குப் பார்ப்பனர்கள் எதை உத்தேசித்துத் துக்கப்பட்டார்கள் என்பதை அறிய ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தி இதை முடிக்கின்றோம். அதாவது, ''காந்தியார் விலகி விட்டாரே தென்னாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் தோல்வி ஆகிவிடுமே" என்றுதான் இந்தப் பார்ப்பனர்கள் ஓலமிட்டார்களே தவிர வேறு
ஒன்றுக்கும் ஓலமிடவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளக்கூடியது என்னவென்றால் தேர்தல் முதலிய காரியங்களில் பொது ஜனங்களை ஏமாற்ற காந்தியார் ஒரு ஆயுதமாக இருந்தது, இப்போது இல்லாமல் போய்விட்டதே என்கின்ற விசனம் தவிர காந்தியாரிடத்தில் இப்போது இந்தப் பார்ப்பனர்களுக்கு எவ்வித உள் அன்பும் விசுவாசமும் பிடித்தமூம் இல்லை என்பதுதான். ஆகவே, இதுவரையில் பார்ப்பனர்கள் நடத்தி வந்த ஏமாற்றுந் திருவிழாவுக்கு ஒரு அளவுக்கு சாவுமணி அடித்தாய்விட்டது.
பகுத்தறிவு - தலையங்கம் - 28.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 29௨ 1௦
வெங்கிட்டரமணா ““கோவிந்தாஆ கோஜவிந்தா?? *வெங்கிடாசலபதிக்குத் தர்மம் செய்யுங்கள்?
மானங்கெட்ட பிழைப்பு
காங்கிரசின் பேரால் எலக்ஷன் நடத்துகின்றவர்கள் தங்களுடைய (அதாவது அபேட்சகர்களாக நிற்கும் ஆசாமிகள் தனிப்பட்ட முறையில் தங்களுடைய) யோக்கியதைகள் தேசத்தார்கள் அறிந்திருப்பதால் தங்களுக்குச் சொந்தத்தில் ஓட்டு கிடைக்காது என்று தீர்மானம் செய்து கொண்டு “காந்திக்கு ஓட்டுச் செய்யுங்கள்” என்று கேட்டு மக்களை ஏமாற்றி வருவது ஒரு புறமிருக்க, இவ்வேமாற்றுதலை ஜஸ்டிஸ் கட்சியார் வெளியாக்கும் முறையில் காந்தியார் காங்கிரசை விட்டுப் போய் விடுகிறேனென்று சொல்லுவதையும் அந்தப்படி காங்கிரசை விட்டு அவர் வெளியேறுவதற்கு உண்டான காரணங்களை அவர் எடுத்துச் சொன்னபடியே வெளியிடுவதையும் பார்த்த காங்கிரஸ்காரர்களும், பார்ப்பனப் பத்திரிக்கைகளும் அடக்க முடியாத ஆத்திரம் கொண்டு வாயில் வந்தபடி எல்லாம் இழிதகமையில் வைகின்றனர். இதை நாம் ஒரு வெட்கம் கெட்ட ஆத்திரம் என்றும், மானங்கெட்ட பிரசாரம் என்றும் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
காந்தியார் வெட்ட வெளிச்சமாக முழு முட்டாள்களுக்கும், புரியும் மாதிரியில் தான் விலகும் காரணங்களை விளக்கியிருக்கிறார்.
1. என்னைத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் என்: இஷ்டப்படி நடப்பதில்லை. ஆனால் என்னை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள்.
2. காங்கிரஸ்காரர்கள் பலரிடத்தில் நாணையமில்லை.
3. என்னை உபயோகித்துப் பயன் பெறுவதற்காகவே என்னிடம் பக்தி விசுவாசம் உள்ளவர்கள் போல் நடிக்கிறார்கள்.
4. கதரில் நம்பிக்கை இல்லாதவர்கள் கதரைக் கட்டி ஏமாற்றுகிறார்கள்.
5. சத்தியத்திலும், அஹிம்சையிலும் நம்பிக்கையில்லாதவர்கள் சத்தியவான்கள் போல வேஷம் போட்டு ஏமாற்றுகிறார்கள் என்றும் சொன்னதோடு, இன்னமும் காங்கிரஸ்காரர் என்பவர்களின்
193 ௨. ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வண்டவாளங்களையும் நாணையக்குறைவுகளையும் அவர் நன்றாய் எடுத்துக் காட்டிவிட்டு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் தான் இனிமேல் காங்கிரசில் இருக்க முடியாது என்று முடிவாய் சொல்லியும் விட்டார்.
இப்படி இருந்தும் எலக்ஷனில் நிற்பவர்கள் “காந்தியாருக்காக ஓட்டுப் போடுங்கள் நிற்கும் ஆசாமிகளைக் கவனிக்காதீர்கள்” என்று கேட்டால் இதில் கடுகளவாவது நாணையமோ, மானம் வெட்கமோ இருக்கின்றதா என்றுதான் கேட்கின்றோம்
ஓட்டர்கள் எப்படி வேண்டுமானாலும் ஓட்டுச் செய்யட்டும் நமக்கு அதைப் பற்றிக் கவலையில்லை. இன்று நம்நாட்டு மக்கள் 100க்கு 92 பேர்கள் தற்குறிகள். அதிலும் விஷயம் தெரிய கவலையுள்ளவர்கள் நூற்றுக்கு ஒருவர் இருவர் கூட இருக்க மாட்டார்கள். இவர்களிலும் உண்மையான விஷயம் தெரிந்து கொள்ளக் கூடியவர்களும் தெரிந்து கொள்ள செளகரியமுடையவர்களும் 1000ல் இரண்டொருவர் கூட இருக்க முடியுமா? என்பது சந்தேகம்
மேலும் பார்ப்பனர் பிரசாரமும், பார்ப்பனக் கூலிகள் பிரசாரமுமேதான். நடைபெற சாத்தியமாகின்றது. அவர்கள் தங்கள் வாழ்வுக்கும், ஆதிக்கத்துக்கும் மற்றவர்களை அடக்கி ஆண்டு எல்லா உத்தியோகங்களையும் பதவிகளையும் தாங்களே அனுபவிக்கவும் அனுகூலமாகவே தங்கள். பிரசாரங்கள் நடக்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கு பார்ப்பனரல்லாதாரிடமே பெரிதும் பணம் பரித்து பார்ப்பனரல்லாதாரிலே கூலிகளைப் பிடித்து பிரசாரம் நடத்தி வருகிறார்கள். பத்திரிக்கைகளும் பெரிதும் பார்ப்பனர்களே நடத்துகிறார்கள் என்பதோடு பத்திரிகை நிருபர்களும் எல்லோரும் பார்ப்பனர்களாகவே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களுடைய ஏதாவது ஒரு புரட்டை பார்ப்பனரல்லாதார் வெளிப்படுத்தினால் அதற்கு இவ்வளவு ஆத்திரப்படுவ தென்றால் மனம் போனபடி வைவதென்றால், இதை ஏன் மானங்கெட்ட ஆத்திரம் என்று சொல்லக்கூடாது என்று மறுபடியும் கேட்கின்றோம்.
தெருவில் திரியும் சோம்பேரிகள், நாணையமாய் பிழைக்க மார்க்கமில்லாத அயோக்கியர்கள் ஆகியவர்கள் தங்கள் நிஜ வேஷத்தோடு போனால் பிச்சை போடாமல் உதைத்து அனுப்புவார்கள் எனப் பயந்து மேலெல்லாம் பட்டை நாமங்களையும், உருத்திராட்ச விபூதிகளையும் அணிந்து கொண்டு “வெங்கடாசலபதிக்கு கோவிந்தா - வெங்கடாசலபதிக்கு தர்மம் போடுங்கள்” “பழனியாண்டவனுக்கு அரோகரா - முருகனுக்கு தர்மம் செய்யுங்கள்” என்று கூப்பாடு போட்டு பிச்சை கேட்பதற்கும், இந்த தேர்தல் ஆட்கள் “மகாத்மா காந்திக்கு ஜே
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 194
- காந்தியாருக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று கூப்பாடு போட்டு ஓட்டுக் கேட்பதற்கும் என்ன வித்தியாசம் என்றுதான் தெரிய ஆசைப்படுகிறோம்
அதுவும் தோழர் காந்தியாரே இந்த விஷயம் தெரிந்து “காங்கிரஸ்காரர்கள் என்னிடம் பக்தி விசுவாசம் இருப்பதாக வேஷம் போட்டுக் காட்டி பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆதலால் நான். காங்கிரசை விட்டு வெளியேறுகிறேன்” என்று சொன்ன பிறகும் கூட மறுபடியும் இந்தப் பாடம் படித்து ஓட்டுப் பிச்சை கேட்கிறார்கள் என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றுதான் மானம் வெட்கம் நாணையம் வரும் என்று கேட்கின்றோம்.
இந்த நிலையில் “ஜஸ்டிஸ் கட்சியார் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்" என்றும் “தோழர் ராமசாமி முதலியார் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்'' என்றும் பார்ப்பனப் பத்திரிகைகளும், கூலிகளும் எழுதுவதின் யோக்கியதை நமக்கு விளங்கவில்லை. கடவுள் பெயரைச் சொல்லி பல சோம்பேரிகளும் அயோக்கியர்களும் பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காகவே உலகில் கடவுள் ஒழிப்புச் சங்கங்கள். தோன்றி வேலை செய்து ஒரு அளவு வெற்றி பெறுவது போலவே பார்ப்பனீய ஒழிப்புச் சங்கங்கள் தோன்றி வேலை செய்து ஒரு அளவுக்கு வெற்றி பெற்று வருகின்றன என்றாலும் இன்னமும் பலமான வேலைகள். செய்ய இம் மானங்கெட்ட செய்கைகள் தூண்டுகின்றன. நல்ல வேளையாக தோழர் காந்தியாரே இந்த விஷயம் தெரிந்துதானே காங்கிரசை விட்டு. ஒழிந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டதால், இனி காந்தி ஒழிப்புச் சங்கங்களுக்கு வேலை குறைந்ததென்றே மகிழ்ச்சி அடைகின்றோம்
மற்றுமொரு போக்கிறித்தனம் என்னவென்றால், பம்பாய்க்குப் போன பார்ப்பனர்கள் அங்கிருந்து கொண்டு சர். ஷண்முகத்திற்கு ஓட்டு இல்லையென்று பத்திரிகைகளுக்குச் சேதி அனுப்புகிறார்களென்றால் இதை விட சூட்சிக்கு வேறு ஆதாரம் என்ன?
முடிவாக வரப்போகும் தேர்தல்களில் வாக்காளர்கள் இந்தப் புரட்டுகளுக்கு ஏமாந்து போகாமல் அபேட்சகர்களின் யோக்கியதையையும், செய்யப் போகும் வேலையையும் நன்றாய் அறிந்து தங்கள் இஷ்டப்படி நடக்க வேண்டும் என்றே வேண்டிக் கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 28.10.1934
195 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
முதல் மந்திரியார் சீக்கிரம் கவணிப்பாரா?
கோயம்புத்தூர் ஜில்லா போர்டு பிரசிடெண்டு மீது சுமார் 30 மெம்பர்கள் சேர்ந்து “நிர்வாக ஊழல்"களைப் பற்றியும், போர்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைப் பற்றியும் ஒரு பிராது தயாரித்து கையொப்பமிட்டு சர்க்காருக்கு அனுப்பிய விஷயமும், மற்றும் பிரசிடெண்ட் கனம் வி.சி வெள்ளியங்கிரிக் கவுண்டர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பட்டக்கார கனவான்கள் முதலியவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்த விஷயமும் நேயர்கள் அறிந்ததாகும்.
பிறகு உடனே கனம் பட்டக்காரர்களுக்கும், சில மெம்பர்களுக்கும், கனம் கவுண்டர் அவர்களுக்கும் ஒரு வித சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், அதன் பயனாய் அப்பிராதில் கையெழுத்து செய்திருந்த கனவான்களில் ஒரு
சிலர் தங்கள் கையெழுத்துக்களை வித்ட்றா செய்து கொண்டதாகவும் தெரிய வருகிறதோடு சமாதானத்தில் ஒரு நிபந்தனை, கனம் கவுண்டர் அவர்கள். பிரசிடெண்டு ஸ்தானத்தை ராஜீனாமா செய்து விடுவதாகப் பெரிய இடத்தில் ஒப்புக் கொண்டிருப்பதாயும் சொல்லிக் கொள்ளப்படுகிறது இதன்உண்மை எப்படி இருந்தாலும் அதைப்பற்றி பொது ஜனங்களுக்கு அக்கரை இருக்காது. ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களில் கண்ட்றாக்ட்டு வேலை களும், சிப்பந்திகள் நியமிக்கும் வேலைகளும் பிரசிடெண்டுகளுக்கும் சேர்மென்களுக்கும் இருப்பதினாலேயே போர்டுகளிலும், கவுன்சில்களிலும் தகரார்கள் ஏற்படுவதற்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வருவதற்கும் பெரிதும்அவசியம் ஏற்பட்டு விடுகின்றன. இதைப் பற்றி நாம் பல தடவைகளில். எழுதி வந்த பிரகாரம் போர்டுகளின் தலைவர்களிடமிருந்து அந்த அதிகாரங் களைப் பரித்துவிட்டால் பிறகு சேர்மென்களும், பிரசிடெண்டுகளும், கவுன்சிலர்களுக்கும் மெம்பர்களுக்கும் யோக்கியர்களாகவும், சினேகிதர். களாகவும் ஆகிவிடுவார்கள். தகராருக்கும் சிறிதும் இடம் இருக்காது
ஒரு சமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதாய் இருந்தாலும் கமிஷனர்கள் மீதுதான் வரக்கூடுமே ஒழிய வேறில்லை. அதனால் கமிஷனர்களுக்கும் நஷ்டம் இருக்காது. அவர்கள் வேறு ஊருக்கு மாற்றப்பட்டுவிடலாம். மெம்பர்களுக்கும் அவசியமான காரியங்கள் கவனிக்க செளகரியமேற்படும். ஆகவே முதல் மந்திரியார் சீக்கிரம் கவனிப்பாரா?
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 28.10.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1௦%
இந்திய சட்டசபைத் தேர்தலில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கு சென்னை ஜஓட்டர்கவின்
பகிரங்கக் கேள்விகள்
1. தாங்கள் சிறை சென்ற “தியாகத் தைப் பற்றி ‘T வகுப்புக் கைதியாகப் போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டதும், பிறகு அதிலும் பிறரைவிட அதிக வசதிகள் வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டதும், பிறகு ஜஸ்டிஸ் கட்சியாரைக் கொண்டு சிபார்சு செய்து ஆஸ்பத்திரிக்கு வந்ததும், பிறகு அதை விட்டு
குறித்த காலத்திற்கு முந்தி விடுதலையாவதற்கு ஜஸ்டிஸ் கட்சியார் சிபார்சு செய்ததுமான விஷயங்கள் இருக்கும்போது, ஜஸ்டிஸ் கட்சியைத் தூற்றுவதும் “தியாகம்” என்று சொல்லிக் கொள்வதும், யோக்யமான செயலாகுமா?
2. பெண்களில் ஒரு கூட்டத்தாராகிய தேவதாசிகளை கோவிலில் ஆடவிட்டால்தான் இந்து மதம் நிலைக்குமென்று சொல்லி பெண் சமூகத்தை இழிவுபடுத்திய தங்கட்கு பெண்களுடைய ஓட்டுகளைக் கேட்க வெட்கமில்லையா?
3. ஜஸ்டிஸ் கட்சியை 'வகுப்புவாதக்' கட்சியென்று கூறும் தாங்கள், உங்களுடைய இனத்தார்களாகிய பிராமணர்களின் வீடுகளில்
100க்கு 99ல் 1௦ let for Brahmins ர (பிராமணர்களுக்கு மட்டும் வாடகைக்கு விடப்படும்) என்று போர்டுகள் போடப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் சொல்லுகிறீர்கள்?
4. “வகுப்பு வாதக் கட்சி” என்று நீங்கள் கூறும் ஜஸ்டிஸ் கட்சியின் பிரமுகர்களால் நடத்தப்படும் பச்சையப்பன் காலேஜ், தொண்டை மண்டலம் ஹைஸ்கூல் முதலிய பள்ளிக்கூடங்களிலுள்ள உபாத்தியாயர் களில் 100க்கு சுமார் 65 பேருக்கு மேல் பிராம்மணராயிருக்க, வகுப்புவாதமே கடுகளவும் இல்லாததாக வேஷம் போடும் தங்கள். இனத்தாரால் (பிராம்மணரால்) நடத்தப்படும் மயிலாப்பூர் 25. ஹைஸ்கூல், திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூல் (Hindu High
School) முதலிய பள்ளிகளில் 100க்கு 2 பேர் கூட பிராம்மணரல்லாத உபாத்தியாயர்கள் இல்லாதிருப்பதற்குக் காரணமென்ன?
197 ௨ ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
5. இந்திய சட்ட சபையில் மொத்த அங்கத்தினர்கள் 145, இதில் 40 பேர் சர்க்காரால் (நாமினேஷன்) நியமிக்கப்படும் சர்க்கார் “தாஸர்கள்”,
9 பேர் ஐரோப்பியர்கள், 7 பேர் நிலச் சுவான்தார்கள், 30 பேர் முஸ்லீம்கள்;
4 பேர் வர்த்தகத் தொகுதியைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் சீக்கியர்கள் ஆக மொத்தம் 92 போக பாக்கி 53. இதில் காங்கிரஸ்காரர்கள் எத்தனை
பேர் வர முடியும்? அப்படியே 53ம் வந்தாலும் 92 பேருக்கு எதிரிடையாக எதைச் சாதிக்க முடியும் என்பதை விளக்க முடியுமா?
6. அப்படியே ஒரு வேளை தங்களுடைய “பேச்சு வன்மையால்” இதர 144 பேரையும் தங்கள் கொள்கைக்குத் திருப்ப முடிந்தாலும், வைசிராயினுடைய (060111௦81௦) சர்டிபிகேஷன் அதிகாரம் இருக்கும் வரையில் தங்களால் என்ன செய்ய முடியும்
7. பெண்கள் உரிமை, தீண்டாமை ஒழித்தல் முதலிய சகல சமுதாய சீர்திருத்தத் துறைகளிலும், விரோதமான கொள்கையைக் கொண்ட தங்களையும், தங்களுடைய கட்சிக்காரர்களையும் சட்டசபைக்கு அனுப்புவதால் ஜன சமூகத்திற்கு என்ன பிரயோஜனமிருக்கிறது?
8. சென்றசட்டமறுப்புசமயத்தில்திரு. பக்தவத்சல முதலியார், திரு. முத்துரங்க முதலியார் போன்ற பல பிரமுகர்களும், இன்னும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் போலீசாரால் எவ்வளவோ அடிபட்டிருக்க திரு. பாஷ்யமய்யங்கார் அவர்கள் அடிபட்டதற்கு மாத்திரம் சென்னை சட்ட சபையில் ஒத்திவைக்கும் தீர்மானம்; இந்திய சட்டசபையில் கேள்விகள்; பார்லிமெண்டில் கேள்வி; இவ்வளவும் போதாமல், திரு. காந்தியவர்கள் இர்வினுக்கு எழுதிய கடிதத்திலும் இதைப் பற்றிய குறிப்பு “இவ்வளவும் செய்ததிலிருந்து காங்கிரஸ் ஸ்தாபனமானது பார்ப்பனர்களுடைய கோட்டை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
9. திரு. காந்தியவர்கள் வந்தபோது மாத்திரம்ஹரிஜன சேவை என்ற பெயரில் சேரியைக் கூட்டியதும், சேரிக் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினுமானநாடகமெல்லாம் “ஹரிஜனங்களின்” பெயரால் பணம் திரட்டியதோடு சரியாய்ப் போய்விட்டதா? அந்தப் பணம் என்னவாயிற்று?
10. சோம்பேறிப் பிச்சைக்காரர்கள் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்காக திருப்பதி “வெங்கடாசலபதியையும்,” “பழனிமுருகனையும்” சொல்லி பணம் கேட்பதுமாதிரி தங்களுக்குசொந்தயோக்கியதை இருந்தால் “மகாத்மா"வின். பெயரையும் “காங்கிரஸ்” பெயரையும் சொல்லி ஓட்டுக் கேட்பீர்களா?
11. சென்ற சட்டமறுப்பில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அடிபட்டிருக்கும் போது, தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் மாத்திரம் வாடகை மோட்டாரில் சொகுசாகப் போய் துண்டு நோட்டீஸ் கொடுத்து கைதியாகி விட்டு, இப்போது அடிபட்ட பார்ப்பனரல்லாத தொண்டர்கள் பெயரால் ஓட்டுக் கேட்டது யோக்கியமான செயலாகுமா?
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 1௦
12. காங்கிரஸ் பெயரினால் ஒரு பெண்ணைக்கூட தேர்தலுக்கு நிறுத்தாது மன்றி சுயேச்சையாக நிற்கிறேன் என்று சொன்ன தேசீயவாதியான ஸ்ரீமதி ராதாபாய் சுப்பராயன் அவர்களை போட்டியின்றி நிற்பதற்கு இடமும் கொடாமல் செய்த காங்கிரசின் பிரதிநிதியான தங்களுக்குப் பெண்மக்கள் ஓட்டுக் கொடுப்பார்கள் என்று நீங்கள் கனவிலும்
கருத முடியுமா?
13. ஜஸ்டிஸ் கட்சியில் பிராமணர் உட்பட எல்லோரும் சேர உரிமையுண்டு என்று சமீபத்தில் நடந்த மகாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றி, அதன்படி விதிகளைத் திருத்தம் செய்த பிறகும் கூட வகுப்புவாதக் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்று தாங்களும், திரு. ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் பிற பிரசாரகர்களும் சொல்லி வருவதன் காரணம், உங்களுடைய அறியாமையா? அல்லது வேண்டுமென்றே செய்யும் சூழ்ச்சியா? அல்லது பார்ப்பனத் தந்திரமா?
14. காங்கிரஸ் தனது நிர்மாணத் திட்டங்களாகிய கீழ்க்கண்ட வேலைகளில் இது வரை எது எதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பது தயவு செய்து சொல்வீர்களா?
a) கள்ளுக்கடை மறியல்.
b) அன்னியத் துணிக்கடை மறியல்.
6) நீல் சிலை சத்தியாக்கிரகம்
4) காலேஜ்களை அடைத்து விடுதல்.
6) வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போவதை நிறுத்துதல்
D உப்பு சத்தியாக்கிரகம்
ஜி தக்ளியினாலேயே நூல் நூற்றுக் கொண்டிருத்தல்.
ந) சட்டசபைகளில் சென்று “சிங்கத்தை அதன் குகையில்
எதிர்த்தல்"
1) “ஹரிஜனங்களுக்கு”'க் கோவில்களைத் திறந்து விடுதல்.
1) வீட்டுக்கு வீடு ராட்டினத்தில் நூல் நூற்கும்படி செய்தல்.
k) சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தல்
) 'Census ஜன கணிதம் கொடுக்கக் கூடாது என்று 1931ல்
பிரசாரம் செய்தது.
முதலியவைகளில் எதைச் சாதித்தது?
இப்படிக்கு, சென்னை அலெஸம்ப்ளி ஓட்டர்கள்.
பகுத்தறிவு - கட்டுரை - 28.10.1934
19 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை
சென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும், அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவிகளும் பெரும்பான்மையாகக் கொண்டதாக - ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.
இந்த நாட்டுப் பணக்காரர்கள் ஜமீன்தார்கள் ஆகியவர்களுக்கு எப்படி உண்மையான விடுதலை தேவை இல்லையோ அதேபோல் இந்த பெண்களுக்கும் உண்மையான விடுதலை தேவை இல்லை என்பதோடு தெரிவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்கள்
இந்த லக்ஷணத்தில் இவர்கள் அரசியல் துறையில் பிரவேசித்து தோழர் சத்தியமூர்த்தியை ஆதரிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றால் பெண்கள் சமூகத்துக்கு அதைவிட வெட்கக் கேடு வேறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆண்களும் பெண்களும் சரிசமானமான சுதந்திரத்துக்கு அருகதையுடையவர்கள் என்பதையே ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பெண்களுக்குள்ள இழிவையும், தாழ்வையும் அப்படியே நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.
உதாரணமாக தேவதாசித் தொழிலை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தேவதாசித் தொழிலை ஆதரித்தார். தேவதாசிகள் இல்லாவிட்டால் தெய்வங்களுக்கு சக்தி குறைந்துவிடும் என்றும், ஆகமங்கள் கெட்டு விடும் என்றும் பேசினார்.
இரண்டாவதாக:- குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்யக்கூடாது
என்றும், குழந்தைப் பருவத்திலேயே பிள்ளை பெற விடக்கூடாது என்றும் கொள்கையுள்ள சாரதா சட்டத்தை &. ராமசாமி முதலியார்
ஆதரித்து இந்தியா முழுவதும் சுற்றி அபிப்பிராயம் தெரிந்து வரும் காலத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் “குழந்தைக் கலியாணம் கூடாது” என்று சட்டம் செய்தால் நான் அந்த சட்டத்தை மீறி என்:
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 00
மகனுக்கு கல்யாணம் செய்து சிறைசெல்லுவேன் என்று தைரியம் சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத் தூண்டினார்.
இப்படிப்பட்டவருக்குப் பெண்கள் சங்கம் ஆதரவு கொடுப்பதென்றால் அச்சங்கம் பெண்கள் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் பொருந்தியதா என்பதை கவனிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - கட்டுரை - 04.11.1934
201 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
விளம்பரப் பிரசாரம்
காங்கிரஸ் திருவிழா கூடிக் கலைந்துவிட்டது. அதன் கொள்கையினால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் அதன் நிர்வாக விதிகளில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்ற ஒரு மாற்றம் செய்யலாமா? வேண்டாமா? என்பதே ஒரு முக்கிய பிரச்சினையாய் இருந்து அதன் பேரிலேயே எல்லா விவாதமும் நடந்து எப்படி அம்மகாநாடு முடிந்ததோ அது போலவே காங்கிரசிலும் அதன் நிர்வாக வேலைத் திட்டத்தில் அஹிம்சை, சத்தியம், ராட்டினம், கதர் என்பன போன்ற பயனற்ற வார்த்தைகளைப் பேசுவதிலும், இயற்கைக்கு விரோதமான - அனுபவ சாத்தியமில்லாத தத்துவங்களை வலியுறுத்துவதிலுமே
5, 6 நாள்கள் செலவழிக்கப்பட்டு கடைசியாக பெரும்பான்மையான ஜனங்களுக்குப் புரியாத ஏதோ சில தீர்மானங்களுடன் முடிவு பெற்றது என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கிறது.
இதற்குப் பொது மக்களின் பணம் சுமார் 2, 3 லட்ச ரூபாய்க்கு மேலாகவே செலவாகி இருக்கலாம். பதினாயிரக்கணக்கான மக்களுக்கு
4, 5 நாளாவது வேலை கெட்டு இந்தத் திருவிழாவில் காலங் கடத்தப்பட்டு இருக்கலாம்.
இதன் பயனாய் ஒரு சிலருக்கு விளம்பரமும், சிலருக்கு தேர்தலில் ஓட்டுப் பெறுவதற்குச் சில தந்திரங்களும்தான் பெற ஏற்பட்டது என்பதல்லாமல் மற்றபடி தேசத்துக்கோ, மக்களுக்கோ ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் ஏற்பட்டதில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.
சில பத்திரிக்கைகள் 50000 ஜனங்கள் 80000 ஜனங்கள் வேடிக்கை பார்த்தவர்கள் உள்பட காங்கிரசுக்கு வந்தார்கள்'' என்பதைக் காட்டி காங்கிரஸ் ஒரு பெரிய ஸ்தாபனம் மதிப்புக்குரிய ஸ்தாபனம் என்று எழுதி மகிழ்கிறார்கள். ஜனக்கூட்டத்தை மதித்து மக்கள் ஏமாந்த
காலம் மலையேறிப் போய்விட்டது
வெறும் அழுக்கையும், சேற்றையும் அள்ளிப் பூசிக் கொள்ளும் திருவிழாவாகிய மாமாங்கத்துக்கு 3 லட்சம் 4 லட்சம் ஜனங்கள் வந்திருந்தார்கள் என்றால், ஆண்களும், பெண்களும் தங்கள் தங்கள். மர்ம ஸ்தானம்” அரைவாசி, முக்கால்வாசி தெரியும்படியாக வேப்பிலையைக் கட்டிக் கொண்டு காட்டு மிராண்டிகள் போல் திரியும்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2)—————— 20
S
பெரியபாளையத்து அம்மன் திருவிழாவுக்கு 50000 பேர் லட்சம் பேர் பெண்டு பிள்ளைகளுடன் ஆண்களும் பெண்களுமாய் கூடி நசுக்கப்படுகிறார்கள், உரசப்படுகிறார்கள் என்றால் அதுவும் நல்ல “கல்வி அறிவு” உள்ளவர்களும், பி.ஏ., எம்.ஏ., படித்தவர்களும், ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் என்பவர்களும் இந்த ஆபாசங்களில் பெண்டுபிள்ளைகளுடன் பங்கு எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்றால் இந்த பம்பாய் பட்டணத்துக்கு இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கான பத்திரிக்கைகளும், பதினாயிரக்கணக்கான கூலிப் பிரசாரகர்களும் சேர்ந்து 100க்கு 92 பேர்கள் தற்குறிகளாக உள்ள ஜனங்களிடத்தில் புராணப் புளுகுகள் போல் பொய்ப் பிரசாரம் செய்து ஒரு கூட்டம் கூடியதில் பதினாயிரக்கணக்கில் ஆட்கள் சேர்ந்ததாலேயே இதை ஒரு அதிசயமென்றோ, அந்தத் திருவிழாவுக்கு ஒரு தனிப்பட்ட மதிப்போ, உயர்வோ இருப்பதாகவோ அறிவாளிகள் மதித்துவிடுவார்களா என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
அங்கு நடந்த விஷேஷம் என்ன? அதனால் ஏற்பட்ட பலனென்ன? என்பதுதான் இங்கு முக்கிய கேள்வியாகும்.
அங்கு நடந்ததெல்லாம் காந்தியாரின் பெருமையையும், “மகிமையையும் பற்றிய விளம்பரம் அல்லாமல் வேறு என்ன நடந்தது என்பதே நமது கேள்வி
“காந்தியார் பொக்கவாய்ச் சிரிப்பு ஒரு மோகனாஸ்திரம் போல் எல்லோரையும் மயக்கிவிட்டது.”
“காந்தியார் தமாஷ் பேசி எல்லோரும் சிரித்தார்கள்” “மொட்டைத்தலைக் குல்லாயை எடுத்து வழுக்கைத் தலையில் வைத்தார்” “பெண்களை ஆண்களுக்கு இணங்க வேண்டாம் என்று சொன்னார். யாவரும் சிரித்தார்கள்.” “காந்தியாரின் ஆத்ம சக்தி எல்லோரையும் மயக்கிவிட்டது” என்பது போன்ற அர்த்தமற்றதும், அநாகரீகமானதுமான வார்த்தை களாலும், கருத்துக்களாலுமே காந்திஜி விளம்பரம் நடந்ததே தவிர கடுகளவாவது அறிவுக்கு ஏற்றதோ, அனுபவத்துக்கு ஒத்ததோ, மக்களுக்கு ஏற்றதோ, மனித சமூகத்துக்குப் பயன்தரத்தக்கதோ ஆகிய வழியில் ஒரு காரியமும் நடக்கவில்லை என்பதோடு அதற்காக எவ்வித முயற்சியும் செய்யப்படவுமில்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது
மூடப் பக்தியும், குருட்டு நம்பிக்கையும், மக்களுக்குப் பிரபலமாக என்னனென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து தலைவர்கள் எனப்படுவோர்களும், காந்தியாரும் “வெற்றி” பெற்றார்கள் என்பதை வெட்கமில்லாமல் பாராட்டிக் கொள்ளுவதைப் பார்க்கும்போது மனித சமூகத்தில் பொது வாழ்வில் இன்னமும் எவ்வளவு அறிவீனம் இருந்து வருகிறது என்று துக்கப்படாமல் இருக்க முடியவில்லை.
203 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்தக் காங்கிரசின் வெற்றியின் யோக்கியதையை விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மக்களை ஏமாற்றி, காந்தியாரும், அவர்களது இரண்டொரு முக்கிய சிஷ்யர்களும் தங்களை விளம்பரம் செய்து கொள்ளப் பாடுபட்டு வெற்றியடைந்தார்கள் என்பதல்லாமல் வேறு
ஒன்றும் சொல்ல நமக்குத் தோன்றவில்லை.
காந்தி விலகிய இரகசியம்
காங்கிரஸ் பெருமை இவ்வாறாக இனி காந்தியார். விலகிய இரகசியத்தைப் பற்றி சிறிது ஆராய்வோம்
காந்தியார், தான் முக்கியமாய்க் கருதிய இரண்டு விஷயங்களில் அதாவது சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு என்பவைகளில் காங்கிரசின் மூலம் தோல்வியடைந்து விட்டதையும் அவற்றில் பொது ஜனங்களுக்கும் தனது அத்தியந்த சிஷ்யர்களுக்கும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார்.
ஆனால் சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு ஆகிய இரண்டும் தன். மட்டில் தோல்வியடையவில்லை என்று இன்னமும் கருதிக்கொண்டிருப்பதாய் காட்டிக் கொள்ளுகிறார்.
இந்த நிலைமையில் காந்தியார் ஒன்றா சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகம் ஆகியவைகளை தான் கைவிட்டு விட்டதாகச் சொல்லி காங்கிரசில் இருக்க வேண்டும். அல்லது சட்டமறுப்பிலும், சத்தியாக்கிரகத்திலும் நம்பிக்கையில்லாத காங்கிரசிலிருந்து தான் விலகிவிட வேண்டும். இந்த இரண்டிலொரு நிர்பந்தத்தில் காங்கிரஸ்காரர்கள் காந்தியாரைக் கொண்டு வந்து வைத்து விட்டதால் அவர் விலகிவிட்டேன் என்று சொல்லித் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது
அன்றியும் லார்ட் வில்லிங்டன் அவர்களும் “சட்ட மறுப்பை அடியோடு கைவிட்டுவிட்டோம். இனி சட்டத்திற்கு அடங்கி நடக்கின்றோம் என்று சொல்லாதவரை காங்கிரஸ்காரர்களுடன் எவ்வித சம்மந்தமும் வைத்துக்கொள்ள முடியாது என்றும், அடக்குமுறைச் சட்டங்களை நீக்க (கேன்சில் செய்ய) முடியாது என்றும், கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டதால் காங்கிரஸ்காரர்கள் உத்தியோகம், பதவி, பட்டம் முதலியவைகள் பெறுவதற்கு முடியாமல் இருந்து வருகிறதாதலால் “சட்ட மறுப்பில் நம்பிக்கையுள்ள காந்தியார் காங்கிரசிலிருந்து விலகி விட்டார். இனி காங்கிரசு சட்டத்துக்கு உட்பட்ட சபை ஆகி விட்டது நாங்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டோம். ஆதலால் நாங்கள் அதிகாரம், பதவி, பட்டம், உத்தியோகம் ஆகியவைகள் பெறுவதற்கும், அடைவதற்கும் தகுதி உடையவர்கள் ஆகிவிட்டோம்” என்று சொல்வதற்கு சவுகரியம் அளிப்பதற்கும் காந்தியார் விலகித் தீர வேண்டியதாய் இருந்தது.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 0
இந்தக் காரணங்கள் அல்லாமல் காந்தியாரின் உள்துறைச் சிஷ்யர்களின் சிஷ்யர்கள் இரண்டொருவர் சொல்லும் காரணம் மற்றொன்று என்னவென்றால், தோழர் காந்தியார் காங்கிரசில் சர்வாதிகாரியாய் இருந்து வந்ததின் பயனாய் இந்தியாவுக்குள் சமதர்மக் கொள்கையும், பொதுவுடமைக் கொள்கையும் பரவாமல் காத்து வந்தாகவும், அதன் நன்றி விசுவாசத்தை இந்த அரசாங்கம் அறியாமல் காந்தியாரைச் சர்க்கார் அவமானப்படுத்திவிட்டதால் அவர் கோபித்துக் கொண்டு விலகிவிட்டதாகவும், இதனால் இனி இந்தியாவில் சமதர்மமும், பொதுவுடைமையும் பரவிவிடும் என்றும், அப்போது அரசாங்கத்தார். தமது தவறை உணர்ந்து மறுபடியும் காந்தியாரைத் தாம்பூலம் வைத்து அழைப்பார்கள் என்றும் சொல்லி திருப்தி அடைகிறார்கள். இவை எப்படி இருந்தாலும் சரி, காந்தியாரின் வாய் மொழியாகவே “காங்கிரசைப் பலப்படுத்த வேண்டும், பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று சொல்லி அதற்காகத்தான் அவர் விலகினார்” என்று காந்தியார் பண உதவியும், ஆதரவும் பெற்று நடக்கும் பத்திரிகைகளே கூப்பாடு போடுகின்றன. ஆகவே இதிலிருந்து காங்கிரஸ் பலமுள்ளதாக இல்லை என்பதும் பரிசுத்தமுள்ளதாக இல்லை என்பதும் விவகாரத்துக்கு இடமில்லாத விஷயங்களாகும்
கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்தும் “லக்ஷக்” கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்பியும், ஆயிரக்கணக்கானவர்கள் ராஜபோகங்களைத் துறந்து சந்நியாசிகளாகியும், நூற்றுக்கணக்கானவர்கள் ஆவி விட்டும் “உலகம் போற்றும் மகாத்மா”வினால் சர்வாதிகாரப் பதவி ஏற்கப்பட்டும் நடத்தப்பட்ட காங்கிரஸ் தோல்வியுற்றும், அதன் கொள்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுமிருப்பதை கெளரவமாய், கண்ணியமாய் ஒப்புக்கொண்டு அதன் முட்டாள்தனமான கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் “காங்கிரசில் உள்ளவர்களிடம் நாணயமில்லை. அவர்கள். வேஷக்காரர்கள், சுயநலக்காரர்கள்' என்றெல்லாம் பாடுபட்ட ஆட்கள்.
மீது பழி போட்டுவிட்டு 'காங்கிரசைப் பலப்படுத்தவும், பரி சுத்தப்படுத்தவும் நான் காங்கிரசை விட்டுப் போகிறேன்" என்றால் இனி வேறு எந்த வழியில் தோழர் காந்தி பலப்படுத்தி பரிசுத்தப்படுத்தப் போகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரசை விட்டுப் போகும் காந்தியாரது சிஷ்யர்கள் “மச்சான் செத்தால் நல்லதாச்சு அவருடைய கம்பளி நமக்காச்சு” என்று சொல்வது போல் காந்தியார் போனால் போகட்டும் ஆசிர்வாதம் செய்து அனுப்பலாம். அவருடைய பெயரால் ஓட்டுப் பெற்றுப் பதவி பெறலாம் - அதிகாரத்துக்குப் போகலாம் என்கின்ற கருத்திலேயே ஒவ்வொருவரும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்களே தவிர, வேறு ஒரு வேலைத்திட்டமோ, வேலை மாற்றமோ ஏற்படுத்தும் விஷயத்தில் கவலைப்படவேயில்லை.
205 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இன்றைய தினம் பம்பாய் காங்கிரசுக்குச் சென்று வந்த ஒருவரை அணுகி காங்கிரசில் என்ன விசேஷம் நடந்தது? என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்லக் கூடும்? “பெரிய கூட்டம்” “காந்தியார் விலகிப் பயணம் சொல்லிக் கொண்ட காட்சி மிகப் பரிதாபமாய் இருந்தது" “காங்கிரஸ் பிரசிடெண்ட் ராஜேந்திர பிரசாதே காந்தியார் கால்தொட்டுக் கும்பிட்டார்” “இந்தச் சமயத்தில் எல்லோரும் கண்ணீர் விட்டார்கள்” என்பன போன்ற பாட்டிமார்கள் வர்ணிக்கும் அணி இலக்கணப்படிதான் வர்ணிப்பார்களேதவிர வேறு என்ன சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
ஒரு பெரிய தேசத்தின் இரண்டு நாளைக்கு ஒரு தடவை கூட சமையல் செய்து சாப்பிட வகையில்லாத கோடிக்கணக்கான மக்களையுடைய தேசத்தில் - முக்காலேயரைக்கால்வாசி ஜன சமூகம் ஆகிய சுமார் 30 கோடி மக்களை எழுத்து வாசனை இல்லாமல் பல்லாண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் தேசத்தில் - தேசத்தின் செல்வமெல்லாம் கல்லுக்கும், கூத்திக்கும், கள்ளுக்கும், சாராயத்துக்கும், விவகாரங்களுக்கும், வில்லங்கங்களுக்கும் பாழாக்கிக் கொண்டு, பாடுபடும் மக்கள் பட்டினியாயும், தற்குறிகளாயும், நோயாளிகளாயும் வீடு வாசல் அற்ற லம்பாடிக் கூட்டம் போல் நிழலில் கிடப்பவர்களாயும்
இருக்கும் தேசத்தில் - இப்படிப்பட்ட இந்த தேசத்துக்கும், இந்த ஜன சமூகத்துக்கும் தாங்கள்தான் பிரதிநிதிகள், தாங்கள்தான் தர்மகர்த்தாக்கள், தாங்கள்தான் தேசாபிமானிகள், தாங்கள்தான் தேச பக்தர்கள், தங்கள் ஸ்தாபனம் தான் பிரதிநிதி ஸ்தாபனம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தார்களின் நடவடிக்கையும், முயற்சியும் இந்த யோக்கியத்தில் இருக்குமானால் இனி இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் என்றுதான் விமோசனம் ஏற்படப் போகிறது? என்று கேட்கின்றோம்.
கிராம வேலையின் மூலம் சுயராஜ்யம்
நிற்க, 1921ல் ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் நிர்மாணத் திட்டத்தின் மூலமேதான் சுயராஜ்யம் அடைய முடியுமென்று தோழர் காந்தியார் சொன்னதை நம்பி எவ்வளவு காரியம் செய்யப்பட்டது என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அதாவது கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஆகிய நான்கு காரியங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. லக்ஷம் மெம்பர்கள் சேர்க்கப்பட்டது. 50, 60 ஆயிரம் பேர்கள் ஜெயிலுக்குச் சென்று மூத்திரம் பெய்யும் கலயத்தில் தண்ணீர் சாப்பிடும்படியான கஷ்டங்கள் அனுபவிக்கப்பட்டன.
இந்த சம்பவங்களில் “ஒரு வருஷத்தில் சுயராஜ்யம், 6 மாதத்தில் சுயராஜ்யம், இதோ கண்ணுக்குத் தெரிகிறது சுயராஜ்யம், அதோ கண்ணுக்குத் தெரிகிறது சுயராஜ்யம்" என்றெல்லாம் சொல்லப்பட்டு ஒரு
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 20
பயனும் ஏற்படாமல் போய் கடைசியாக நிர்மாண திட்டத்துக்கு ஜெயிலுக்குப் போகும் வேலை நிறுத்தப்பட்டு பிரசாரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதற்குப் பின் கதர் ஒன்றினாலேயே சுயராஜ்யம் வரும் என்று சொல்லப்பட்டு அதற்காகப் பல லக்ஷம் ரூபாய்கள் வசூல் செய்யப்பட்டு அப்போதும், இதோ சுயராஜ்யம், அதோ சுயராஜ்யம், லங்காஷயரில் பஞ்சம் வந்து விட்டது, மான்செஸ்டரில் பட்டினி ஏற்பட்டுவிட்டது, வெள்ளைக்காரர்கள் மண்டி போட்டு சுயராஜ்யங் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டது
பிறகு அதுவும் நடக்காமல் போகவே, உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து சுயராஜ்யம் பெறாமல் வீடு திரும்புவதில்லை என்று சபதம் செய்து அதற்காக ஒரு பெரிய சட்டமறுப்பும் ஆரம்பிக்கப்பட்டது இதற்கும் 40 ஆயிரம் 50 ஆயிரம் பேர்கள் சிறை செல்லவும், அடிபடவும், கைகால் மூறியவும், உயிர் துறக்கவுமான கஷ்டங்கள் ஏற்பட்டு கடைசியாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பை நிறுத்திவிடுவதாக வாக்குக் கொடுத்து விடுதலை பெற்று, பின்னும் எவ்வளவோ பட்டினி கிடந்தும் ராஜிக்குப் போயும் ஒன்றும் முடியாமல் இந்த காங்கிரஸ் கூட்டி இதிலிருந்து காந்தியார் விலகும் திருவிழா நடத்தப்பட்டது என்பதோடு அத்தியாயம் முடிந்தது என்றாலும் தோழர் காந்தியார் இப்போது ''கிராம சீர்திருத்த வேலை மூலம் சுயராஜ்யம் வாங்கப் போகிறேன்” என்று புதியதொரு வாக்குத்தத்தம் அல்லது வழி சொல்லுகிறார்.
இனி இதற்கு ஒரு ஸ்தாபனம் ஏற்படலாம். இதன் பேராலும், பல
லட்சம் ரூபாய்கள் வசூல் செய்யலாம். பல வேலையில்லாத ஆட்களுக்கும், சோம்பேரிகளுக்கும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த இருக்கிறவர்.
களுக்கும் வேலையும் நல்ல ஊதியமும் கிடைக்கலாம். இதன் அனுபவம் ஜனங்களுக்குத் தெரிந்து இதுவும் பயன்படவில்லை என்பதை உணர்ந்து இந்த வேலைத்திட்டத்தை வெறுக்கவும், இந்த ஸ்தாபனத்தை அலக்ஷியமாய் கருதவும் சில வருஷங்கள் பிடிக்கலாம். அதன் பிறகு காந்தியார் யார் மீதாவது குற்றம் கூறிவிட்டு அதை விடுத்து வேறு ஸ்தாபனம் ஆரம்பிக்கலாம். அதிலும் இதே கதி அடையலாம். அப்புறம் யாராவது கேட்டால், அதாவது இந்தப்படி ஜனங்களை ஏமாற்றி மோசவார்த்தை கூறி பல லக்ஷம் வசூலித்து இப்போது இப்படி ஆகிவிட்டதே இது யோக்கியமா என்று கேட்கக் கூடிய நிலைமை ஏற்பட்டால் அதற்கும் ஒரே பதிலாக “பணக்காரர்களிடம் உள்ள பணங்களை வசூல் செய்து ஏழைகளுக்குக் கொடுத்து உதவி செய்தேனே ஒழிய வேறில்லை'' என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம். இதுதான் முடியப் போகும் காரியமாகும் என்பதை இப்போதே சொல்லி விடுகின்றோம்.
207 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஆனால் இந்த 14 வருஷ காலமாய் காந்தியாரின் இந்த திருவிளையாடல்களால் இந்தியா ஒரு கடுகளவாவது பொருளாதார இயல், சமுதாய இயல், அறிவியல், தொழிலியல் ஆகிய துறைகளில் முற்போக்கில்லாமல் தேங்கி இருந்து மற்ற நாடுகளைவிட எவ்வளவோ பின்னால் தள்ளப்பட்டுப் போய்விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது
மேல் நாட்டார்கள் இந்தியாவை பரிகசிப்பதற்கு ஒரு வார்த்தை உபயோகித்து வருகிறார்கள். அது என்னவென்றால் உலகில் மற்ற தேசம் பொருளாதாரத்தை பிரதானமாகக் கருதி உலகாயுதத் துறையில் முன்னேறிக் கொண்டு போகின்றதேயொழிய இந்தியாவைப் போல ஆத்மீகத்துரையில் சிறிதும் முன்னேறவில்லை” என்று சொல்லுகிறார்கள். இது இந்தியா இன்னமும் காட்டுமிராண்டித் தன்மையில் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றது என்று சொல்லுவதற்கு வேறு பாஷைப் பிரயோகமேயாகும் ஆதலால் தோழர் காந்தியார் இந்தத் தடவையாவது இந்தக் காரியத்திலாவது அதாவது தான் “காங்கிரசை விட்டு விலகிவிட்டேன்” என்று சொல்லும் காரியத்திலாவது உண்மையாயிருந்து நாணயத்தைக் காப்பாற்றினாரேயானால், இந்தியாவுக்கு சிறப்பாக ஏழை மக்களை சோம்பேரிக் கூட்டத்தார் ஏமாற்றி வஞ்சித்து வாழும் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பேற்றை அடையச் செய்யலாம். உலக பந்தயத்தில் மற்ற நாடுகளோடு இந்தியாவையும் சேர்த்து ஓட வைக்கலாம். அப்படிக் கில்லாமல் காங்கிரசுக்குத் தோல்வி என்றவுடன் ஓடிவிட்டு அதற்கு செல்வாக்கு ஏற்படும்போது (கண்டிப்பாக காங்கிரசு கொஞ்சகாலத்துக்குள் செல்வாக்குப் பெறத்தான் போகின்றது என்பதும் அப்போது இன்றைய தினம் காங்கிரசைப் புகழ்ந்து புராணம் பாடி இருக்கும் பார்ப்பனர்களே காங்கிரசை வசை புராணம் பாடப் போகிறார்கள் என்பதோடு) “தேசத்தைக் காப்பதற்காக காங்கிரசுக்கு மறுபடியும் வந்து காப்பாற்ற வேண்டு” மென்று காந்தியாரை அழைக்கப் போகிறார்கள் என்பதும் உறுதியான காரியமேயாகும். மறுபடியும் உள்ளே வந்து புகுந்து கொள்ளுவதுமான காரியங்கள் பொது நலத்துக்கு யாதொரு காரியத்தையும் செய்துவிடாது என்பதோடு கடைசியாக ஒரு நாளைக்கு
இந்தத் தந்திரங்களும், சூதுகளும் காந்தியாருக்குத் தற்கொலை செய்து கொள்ளுவதற்குத்தான் காரணமாக இருக்குமே ஒழிய வேறொன்றுக்கும் சிறிதும் பயன்படாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்
பகுத்தறிவு - தலையங்கம் - 04.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 205
சர். ஷண்முகம் வெற்றி.
தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகம் தேர்தல் விஷயத்தில் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களும், காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும் மனதறிந்த பொய்யை தைரியமாய் பேசியும், எழுதியும் வருவதானது காங்கிரசின். யோக்கியதையையும் அதிலுள்ளவர்களின் நாணையத்தையும் தெரிந்துகொள்ள
ஒரு சாதனமாகும்.
பாக்கி இருக்கும் தேர்தல்களில் தங்களுக்கு தோல்வி ஏற்படாமல்
இருப்பதற்காகச் சில பொய்கள் சொல்லலாம் என்பது ஒரு அளவுக்கு அனுமதிக்கப்பட்டதானாலும் சத்தியமும், நீதியும் அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் என்பதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் அந்த ஒரு அளவையும் தாண்டி மனதறிந்த பொய்யைப் பரப்ப முயற்சிப்பது என்பது மிகவும் வெறுக்கத் தகுந்த காரியமேயாகும்
நிருபர்கள் என்கின்ற பெயரால் எதையும் எழுதிக் கொள்வதற்கு பத்திரிகை உலகில் பழக்கம் இருந்து வருகின்றது என்றாலும் ஒரு வாரத்தில் பொய்யாகப் போகும் விஷயங்களைக் கூட எழுதுவது என்பது
கீக்கிரத்தில் பொது ஜனங்களிடம் மதிப்பை இழப்பதற்குத் தான் பயன்படுமே தவிர காரிய சித்திக்கு அனுகூலமாகாதென்றே சொல்லுவோம்
கடசித் தடவை நடந்த சென்னை சட்டசபைத் தேர்தலில், பனக்கால்.
அரசர் தொகுதியில் இதே மாதிரியாகவே அரசருக்குப் போட்டியாய் நின்ற தோழர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யருக்கு ஜெயம் கிடைத்து விட்டது என்று பொய் ஆரவாரம் செய்து மக்களை ஏமாற்றினார்கள். “ஜஸ்டிஸ்
கட்சி மாண்டு விட்டது” என்று பார்ப்பனர்கள் புகையிலை வழங்கினார்கள். டிங்-டாங்-டிங் என்று தலையங்கமிட்டு சாவோலை பாடினார்கள்.
இதற்கு எல்லாப் பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிக்கைகளும்
அஸ்திவாரமாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள். பொய்பிரசாரத்தின் பயனாய் மற்ற தொகுதி தேர்தல்கள்கூட பாதிக்கப்பட்டுவிட்டன.
என்றாலும், இவற்றாலெல்லாம் பார்ப்பனர்கள் அடைந்த பலன் என்ன என்று பார்ப்போமானால், முன்னைய நிலைமையை விட மோச நிலைமையையே அடைந்தார்கள் என்பதோடு தாங்களாகவே தங்கள் தலையை மறைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தார்கள். பிறகு
209 ௨ ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
காந்தியார் உப்பு சத்தியாக்கிரக நாடகம் ஆரம்பித்த பின்னரே சிலருக்காவது வெளியில் தலை நீட்டக்கூடிய யோக்கியதை ஏற்பட்டது
இப்போதும் இந்த சூட்சிகளினாலெல்லாம் அந்த நிலைதான் இன்னும் அதைவிட வலுவான அஸ்திவாரத்தின் மீது ஏற்படுமே அல்லாமல் பார்ப்பனரல்லாதாருக்கு ஏதும் மோசம் ஏற்பட்டு விடும் என்றோ சிறிதும் கருதவேண்டியதில்லை.
தோழர் ஷண்முகம் முன்னுக்கு வருகிறார், இன்னும் வரப்போகிறார். என்கின்ற பொறாமையே இன்று பார்ப்பனர்களை இவ்வளவு தூரம் அவருக்கு விரோதம் செய்யத் தூண்டுகிறதே ஒழிய மற்றபடி ஷண்முகம் செய்த குற்றம் இன்னது என்று சொல்ல எவரும் முன்வரவே இல்லை.
தோழர் ஷண்முகம் உறுதியாய் நம்பி இருந்த ஓட்டுகள் சிலது மாறிவிட்டது உண்மையாய் இருக்கலாம். அதற்குக் காரணம் சென்னை முதலிய இடங்களில் உள்ள வக்கீல் பார்ப்பனர்களுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிலர் வேறு மார்க்கமில்லாமல் - தங்களுடைய ஜீவாதாரங்கள் சில வக்கீல்கள் கையில் சிக்கி இருக்கிற காரணத்தால் பயந்து அவர்களுக்கு அடிமைப்பட வேண்டியதாயிற்று
என்றாலும், அதனால் தோழர் ஷண்முகத்துக்கு எதிர்பார்த்ததிலிருந்து சில ஓட்டுகள் குறைந்து விட்டது என்று சொல்லுவதுதான் யோக்கியமாகுமே ஒழிய, ஷண்முகம் தோற்றுவிட்டார் தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார் 200 ஓட்டுகள் அதிகத்தில் வெற்றி பெற்று விட்டார் என்று சொல்லுவது மனதார துணிந்து கற்பனை செய்து சொல்லும் பொய்யே தவிர வேறு ஒன்றும் இல்லை.
செட்டி நாட்டில் சில ஓட்டுகள் தவறிவிட்டது என்றாலும் ஆந்திர நாட்டில் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைத்து அந்தக் குறைவை பூர்த்தி செய்து தக்கதொரு வெற்றி ஏற்பட்டிருக்கிறது என்பதை தைரியமாய் சொல்லுவோம்.
இந்தப் பொய்ப் பிரசாரப் பத்திரிக்கைகளுக்கும் விஷமப் பிரசாரக் கூலிகளுக்கும் வெட்கம் வரத்தக்க நிலையில் - புத்தி கற்பிக்கத் தக்க நிலையில் ஷண்முகத்தின் வெற்றிச் சேதி வெளியாகப் போகின்றது என்கின்ற விஷயத்தில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 10
சுயமமியாதை இயக்கமும்
ஜஸ்டிஸ் கக்ஷியும்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த கால முதல்கொண்டு பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதைக்காக உழைத்து வருவதும் ஜஸ்டிஸ் கடிக்கு உதவி புரிந்து வருவதும், ஜஸ்டிஸ் கக்ஷிப் பிரமுகர்களுடைய அதரவு பெற்று வந்ததுமான காரியம் எதுவும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள எவரும் அறியாததல்ல. ஜஸ்டிஸ் கக்ஷியானது சென்ற தேர்தலில் நின்ற காலத்தில் சுயமரியாதை இயக்கம் அதற்கு உதவி புரிந்து வந்திருக்கிறது
செங்கல்பட்டில் கூடின சுயமரியாதை மாகாண கான்பரன்ஸ் என்பது முழுதும் ஜஸ்டிஸ் கக்ஷி பிரமுகர் ஆதரவிலும், பிரசன்னத்திலும் நடந்ததும், மற்றும் ஜஸ்டிஸ் கக்ஷியைச் சேர்ந்த இளைஞர், முதியோர் ஆகியவர்கள். பெரிதும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்ததும் சுயமரியாதை இயக்கத்திலுள்ள முதியோர், இளைஞர் ஆகியவர்கள் பெரிதும் இன்னும்
ஜஸ்டிஸ் கக்ஷியில் இருந்து வருவதும் ஒருவரும் அறியாததல்ல.
மற்றும் சுயமரியாதை இயக்கம் அதனுடைய சமதர்மக் கொள்கையைக் கூட பார்ப்பனரல்லாத சமூகம் சமூகத்துறையில் சமதர்மம் அடைய வேண்டும் என்பதை முதன்மையாகக் கொண்டது என்பதை அநேக சுயமரியாதைக்காரர் ஒத்துக்கொண்டும், அதை அமுலில் நடத்த முயற்சித்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள். இன்னும் வருகிறார்கள் என்பது சிறிது கூட புதிதானது என்றோ, ரகசியமானது என்றோ யாரும் சொல்லிவிட முடியாது. எனவே பார்ப்பனரல்லாதார் சமூக முன்னேற்றம் என்பதைக் கருதி ஜஸ்டிஸ் கக்ஷியாருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டிய சமயம் ஏற்பட்டால் அதைச் செய்ய ஆசைப்படுகின்றவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் வெட்கப்படவோ, வருத்தப்படவோ அவசியமில்லை என்பதை சுயமரியாதை இயக்க இளைஞர்களுக்கும், வாலிபர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 04.11.1934
2... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் ராமசாமியின் முழக்கம்
A. ராமசாமி! முதலியாருக்கு ஆதரவு
இன்று தோழர் ஷண்முகம் இக்கூட்டத்திற்கு வந்து பேச வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அவருக்குத் தேக அசெளக்கியமேற்பட்டிருப்பதை முன்னிட்டு அவரால் வரமுடியவில்லை நமது தேர்தல் விஷயமாக கவலைப்பட வேண்டாமென்று பலர் பலவிதமாக பத்திரிகைகளில் எழுதி வருவதை நம்ப வேண்டாமென்றும், தாம் வெற்றி பெறுவது நிச்சயமென்று அவர் உங்களுக்குத் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார். (பலத்த கரகோஷம்)
இன்று தொண்டர்களைக் கூட்டி அவர்கள் தேர்தலில் எப்படி நடந்து கொள்வதென்பது பற்றி அறிவுறுத்துவதே இக்கூட்டத்தின் நோக்கமாகும். ஆனால் இப் பெரிய கூட்டத்தில் அது சாத்தியமல்ல வாகையால் தொண்டர்களாகச் சேர விரும்புவோரெல்லாம் ஞாயிற்றுக் கிழமை மாலை தியாகராய மெமோரியல் ஹாலுக்கு வந்தால் அவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறையையும் இதர விவரங்களையும் தெரிவிப்போம்.
தேர்தல் பிரசாரப் போக்கு
தோழர் ராமசாமி முதலியார் தேர்தல் விஷயத்தில் மிக்க ஊக்கமுள்ள ஏராளமான வாலிபர்கள் இங்கே கூடியிருப்பது நல்ல அறிகுறியாகும். தேர்தல் பிரசாரத்தின் போக்கு உங்களுக்கு நன்றாகத்
தெரியும். புதிதாக கூற வேண்டியது ஒன்றுமில்லை என்று நினைக்கின்றேன். போட்டி ஏற்பட்டு விட்டாலேயே அபேட்சகர்களும் அவர்களது கோஷ்டியினரும் ஒருவர் மீது மற்றவர் தூஷணையாகப் பேசி வெற்றிபெற தம்மால் இயன்றவரையில் முயற்சி செய்வதென்பது வழக்கமாகவிருக்கிறது. நமது எதிர்கட்சியினர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனரென்பது பற்றியும் ஆபாசமான விஷயங்களைப் பறை சாற்றி வருகின்றனரென்பது பற்றியும் நீங்கள் வருந்தக் கூடாது. தேர்தல் பிரசார முறை அப்படியிருக்கிறது. உண்மையைத் தெரிந்து கொண்டு ஓட்டுப் போடவேண்டுமென்ற நோக்கம் நம் ஜனங்களில் பெரும்பான்மையோருக்கு இல்லை. பெரும்பான்மையோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 212
அவர்கள் ஏதாகிலும் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் புரோகிதர்கள், வக்கீல்கள் முதலியோர் மூலமே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நமது தேச மக்கள் அறிவாளிகளென்று நாம் பெருமை பாராட்டிக் கொண்டபோதிலும் 100-க்கு 2 விழுக்காடு பேர்களே படித்தவர்களாக விருக்கின்றனர். உயர் ஜாதியினர், பணக்காரர்கள், உத்தியோகஸ்தர்கள் இவர்களது புதல்வர்களே படிக்கின்றனர். விவசாயிகள். முதலிய பெரும்பான்மையோருக்கு எழுத்து வாசனையே இல்லை. இந்நிலைமையில் ஜனங்கள் உண்மையைத் தெரிந்து கொள்வது எப்படி?
யாருக்கு அதிகமாகப் புளுகத் தெரிகிறேதோ, யாருக்கு தூஷணம்
செய்யத் தைரியமிருக்கிறதோ அவரே தேர்தலில் வெற்றி பெறுவது சகஜமாக விருக்கிறது
சென்னை மக்களது நிலைமை அப்படி அல்லவென்று நான். கருதுகின்றேன். இந்நகரிலுள்ளவர்கள் படித்தவர்கள்; விஷயம் தெரிந்தவர்கள். ஆனால் இவர்களிடம் பெரும் குறை ஒன்று உண்டு. கிராமவாசிகள் ஆபத்தென்றால் எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். படித்ததின் பலனாக நகர வாசிகள் அவ்விதம் ஒன்று சேருவதே கிடையாது
தங்களுக்கு அநுகூலமுண்டாவென்பதையே முக்கியமாகக் கவனித்து விட்டு, ஊர் வம்பில் தலையிடக் கூடாதென்று சும்மாயிருந்து விடுவார்கள். சிறுபான்மையோர் தங்கள் சமுதாய நன்மையைப் பொறுத்த விஷயத்தில் சிரத்தை கொண்டு ஒத்துழைக்கிறார்கள். பெரும்பான்மையோர். அவ்விதம் சிரத்தை கொள்வதேயில்லை. இதனால் முடிவில் சுயமரியாதையை இழக்கவும் நேரிடுகிறது. இதனை எதற்காக கூறுகிறேனென்றால் தோழர் சத்தியமூர்த்தி கோஷ்டியினர் பிராமண வாக்காளர்களது ஆதரவு நிச்சயமென்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கும்போது பெரும்பான்மையோரான பிராமணரல்லாதார். தங்களிடம் பதின்மடங்கு அதிக ஓட்டுகளிருந்தும், சிரத்தையும் தைரியமும் கொள்ளாமலிருக்கின்றனரென்பது பற்றியே தேர்தலில் கட்சி குண தோஷங்களைப் பிரசாரஞ் செய்த போதிலும் போட்டியானது சமூக விரோதத்தையும் ஜாதி வித்தியாசத்தையுமே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. இதுவரையில் சமூக உயர்வு தாழ்வு, அனுகூலம் இவைகளையே குறியாகக் கொண்டே தேர்தல் நடந்து வந்துள்ளது அவ்வப்போது பெயர்கள் மாறி வந்த போதிலும், அடிப்படைத் தத்துவம் சம்பந்தமாக வித்தியாசமே இல்லை. பிராமணர் பிராமணரல்லாதாரை நசுக்கிவிட்டு, உத்தியோகம் முதல் எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் பெற தேர்தலைச். சாதனமாக உபயோகித்து வந்துள்ளனர் வெளிப்படையாக எதையும் சொல்லுவோர் காரியத்தில் கண்ணாக இருப்பதில்லை. பிராமணரோ அப்படியல்ல. அவர்கள் வாய் பேசாமல் காரிய சித்தியிலேயே கருத்துடையவர்களாக விருக்கின்றனர். 23— பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
காங்கிரஸ் பிரசாரப் போக்கு
இந்நகரில் தோழர் சத்தியமூர்த்தி காங்கிரசின் பெயரால் அபேட்சகராக நிற்கின்றார். தோழர் முதலியார் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் அபேட்சகராக நிற்கிறார். காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் எப்படி நடந்து வருகிறெதென்பதைக் கவனிப்போம். ஜஸ்டிஸ் கட்சி தேசத்துரோகக் கட்சியென்றும், தோழர் ராமசாமி முதலியார் தேசத் துரோகி என்றும், காங்கிரஸ் மகாசபையே ஜனப்பிரதிநிதித்துவம் வாய்ந்த சபை யென்றும், தேச மக்களுக்காகப் பாடுபடுகிறதென்றும், ஆகவே காங்கிரஸ் அபேட்சகருக்கு ஓட்டுப் போட வேண்டுமென்றும் பிரசாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ்வாதிகள் மட்டுமே தேசபக்தியும், தேசாபிமானமும் உடையவர்களென்றும் கூறி ஓட்டுக் கேட்கின்றனர்.
காங்கிரஸ் சாதித்ததென்ன?
காங்கிரஸ் பிரசாரகர்கள் கூறுவது எவ்வளவு தூரம் உண்மை யென்பதை நாம் ஆராய்ச்சி செய்வோம். சமீபத்தில் பம்பாயில் காங்கிரஸ் மகாநாடு நடந்ததென்றும், பலத்த விவாதம் நடந்ததென்றும், மகாநாடு வெற்றிகரமாக மூடிந்ததென்றும், செய்திகளை நாம் பத்திரிகைகளில் படித்தோம். ஆனால் அம் மகாநாட்டில் என்ன நடந்ததென்பதைச் சுருக்கமாகக் கூற இயலுமாவென்று நான் கேட்கின்றேன். என்ன தீர்மானம் நிறைவேற்றினார்கள்? நாட்டுக்கு அம் மகாநாட்டில் என்ன நன்மை ஏற்பட்டது? ஒருவரையொருவர் பாராட்டிக் கொண்டார்களே தவிர வேறு நடந்ததென்ன? இரண்டொருவருக்குப் பெரும் புகழ் ஏற்படுமாறு ஏற்பாடு. செய்தனர். மற்றவர்கள் காங்கிரஸ் பிரவேசிக்காதபடி பந்தோபஸ்து செய்து கொண்டார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாதனங்கள் சிலவற்றைத் தேடிக் கொண்டனர். அம்மகாநாட்டில் நடந்ததென்ன வென்றால் மகாத்மா காந்தி காங்கிரசிலிருந்து விலகியது தான். இதற்காக ஒரு பெரிய மகாநாடு. லட்சக்கணக்கில் செலவு. காங்கிரசின் யோக்கியதை என்னவென்று காட்டவே நான் இதைக் குறிப்பிடுகின்றேன். இந் நாட்டில் காங்கிரஸ்தான் பிரதானமான சபையென்ற சமாதானம் மட்டும் போதுமா? அதனால் என்ன நன்மை ஏற்பட்டது. அது சாதித்ததென்ன? இவைகளைக் கவனிக்க வேண்டுமல்லவா?
**எனது அனுபவம்?
நான் காங்கிரசில் சேர்ந்து கண்ட அனுபவங்களையே எடுத்துக் கூறுகின்றேன், காங்கிரசிலிருந்த போது அதன் விதிகளையெல்லாம்
முற்றிலும் அனுசரித்தவன். அப்போதே நாலைந்து தடவை சிறைப் பட்டிருக்கின்றேன். அநுபவப்பட்டு அதன் (காங்கிரஸின்) குண தோஷங்களைச் சொல்ல வந்தவனே தவிர வேறல்ல. சிறைபடும் போது
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 214
நான் வெறும் ஆளாக இருக்கவில்லை. அப்பொழுது வியாபாரத்தில் மாத்திரம் நான் ரூ.800 வருமான வரி செலுத்திக் கொண்டிருந்தவன். இதர வரிகள் பலவும் 3000 ரூபாய் செலுத்தினேன். காங்கிரஸ் வேலைத்திட்டத்தை அனுசரித்தால் தேசத்துக்கு நன்மை ஏற்படுமென நம்பித் தொழிலை விட்டேன். கோர்ட்டுகளைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்று வாயினால் மட்டும் பேசிவிட்டு நான் சும்மாயிருக்கவில்லை. ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதையும் லட்சியம் செய்யாமல் நான். கோர்ட்டுகளைப் பகிஷ்கரித்து வந்தேன். நான் ஒரு பத்திரத்தில் ரூபாய் 28000 வசூல் செய்யாமல் விட்ட விஷயம் பழந் தேசபக்தரான தோழர் விஜயராகவாச்சாரியாருக்குத் தெரியும். அவர்தாம் எனது சார்பில் வக்கீலாக ஆஜாராகி அப் பணத்தை வசூல் செய்வதாக எனது அனுமதி கேட்டார். அப்பணம் வீணாக விடாமல் வசூல் செய்து காங்கிரஸிற்காகவாவது உபயோகிக்கலாமென்றும் கேட்டார். மேற்கொண்ட கொள்கையைக் கடைசிவரையில் அநுசரித்தே தீரவேண்டுமென்ற உறுதியால் நான் அதற்கு உடன்படவில்லை. அது பற்றி தோழர் விஜயராகவாச்சாரியார் என்னை பைத்தியக்காரனென்று கூறினார். வெளி வேஷத்திற்காகவோ அதில் சம்பாதிக்கவோ நான் காங்கிரஸ்வாதியாக விருக்கவில்லை. இப்பொழுது என் மீது குறை கூறுவோர்களிடமிருந் தெல்லாம், நான் அப்பொழுது உயர்ந்த நற்சாட்சி பத்திரங்கள் வாங்கியிருக்கிறேன். நான் இந்த காங்கிரஸ்வாதிகளுக்கு அடிமை போலவும் அவர்களது சொல்லைத் தவராமலும் நடந்து, பலன் உண்டாவென்பதை பரிட்சித்துப் பார்த்தவன். காங்கிரஸ் நிர்வாகம் ஒரு சமூகத்தாரின் நன்மையைக் குறித்தே நடக்கிறதென்பதை உணர்ந்தே நான். அதிலிருந்து விலகினேன். எனக்கு அதில் மதிப்போ யோக்கியதையோ இல்லையென்று நான் விலகவில்லை. காங்கிரசுக்கு அதிகாரம் ஏற்படுமானால் பொது ஜனங்களுக்கு என்ன பங்கு ஏற்படுமென்பதைத் திட்டப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று காஞ்சீபுரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் நான் தீர்மானம் கொண்டு வரவே இடமில்லாதபடி செய்தனர். காங்கிரசில் நியாயத்திற்கு இடமில்லை என்றும் தந்திரத்திற்கே இடமுண்டென்றும் உணர்ந்து நான் ஆரியா முதலியவர்களுடன் மகாநாட்டிலிருந்து வெளியேறினேன் . அதன். பிறகுதான் காங்கிரசையே தொலைக்க வேண்டுமென்ற ஊக்கம் ஏற்பட்டது. ஆனால் தற்போது காந்தியார். காங்கிரசிலிருந்து விலகிவிட்டதனால் காங்கிரசைத் தொலைக்க வேண்டுமென்ற விருப்பமே எனக்கில்லை. ஏனென்றால் இனி பார்ப்பனருக்கு சிபார்சுக்கு அங்கு ஆளில்லை. காஞ்சிபுரம் மகாநாட்டிலிருந்து விலகிய பிறகு நான். ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தேன். இந்த கட்சி வகுப்பு வாரி
பிரதிநிதித்துவத்தை ஆதரிக்கிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவமே கூடாதென்று காங்கிரஸ் மகாசபை கங்கணம் கட்டிக் கொண்டதால்தான்.
215... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அது தற்போது சீர்குலைந்து விட்டது. சிறுபான்மையோருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு அவர்கள் விலக வேண்டியதாயிற்று. அதுவே காங்கிரசின் பலக் குறைவுக்குக் காரணம். எல்லா வகுப்பாருக்கும் சமநீதி வழங்க காங்கிரஸ் ஒருப்படுமானால் தனிப்பட்ட சமூக ஸ்தாபனங்களே தோன்றியிருக்காது. வண்டிக்கு முன்பாரம் அதிகமானால் பின்புறம் கற்களைத் தூக்கிவைப்பது போலவே பிராமணரல்லாதாரில் சிலரை உபயோகித்து வருகின்றனர். (கரகோஷம்) ஒரு ஸ்தாபனத்தின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்கும் போது, அந்த ஸ்தாபனத்தால் தேச மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்கள் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுவது அவசியமென்பது பற்றியே நான் இதைக் கூறுகிறேன்.
பிரசாரம் செய்யாத குறை
ஜஸ்டிஸ் கட்சி தனது நோக்கங்களையும், வேலைத் திட்டத்தையும் சரியான பிரசாரத்தின் மூலம் ஜனங்களுக்கு அறிவிக்காததாலேயே இப்பொழுது ஜஸ்டிஸ் கட்சியைத் தேசத்துரோகக் கட்சியென்று பிராமணர்கள் குறை கூறுகின்றனர்.
ஜஸ்டிஸ் கட்சி வேலை
ஜஸ்டிஸ் கட்சி செய்துள்ள வேலை போல அக்கட்சி இல்லாத இதர மாகாணங்களில் வேலை நடந்திருக்கிறதாவென்று கேட்கிறேன். ஜஸ்டிஸ் கட்சி இம்மாகாண மந்திரி சபையை ஏற்று அரசியல், சமூதாய அபிவிருத்திக்காகப் பாடுபட்டுள்ளது. புரோகித ஆதிக்கம் ஒழிந்து விவசாயிகள், பெண்கள் அரசியலில் கலந்து கொள்ள முடிந்தது சென்னையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவற்றில் ஸ்தானமுண்டு. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையும் அமுலிலிருக்கிறது. இதர மாகாணங்களில் இத்தகைய அபிவிருத்திகள் ஏற்படவே இல்லை. ஜஸ்டிஸ் கட்சி செய்த பிரதிகூலம் என்னவென்று நான் கேட்கின்றேன்.
தொண்டர்களுக்கு தடியடி
ஜஸ்டிஸ் கட்சி மந்திரிசபை யிருந்ததாலேயே சட்ட மறுப்பு
இயக்கம் நடந்த போது இம்மாகாணத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு
தடியடி, சிறைவாசம் ஏற்பட்டதென்று காங்கிரஸ் பிரசாரகர்கள்
குறைகூறுகின்றனர். ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளில்லாத இதர மாகாணங்களில் தொண்டர்களுக்கு அதிகாரிகள் தேங்காய் பழம் கொடுத்தார்களா அல்லது கலியாணம் செய்து வைத்தார்களாவென்று நான் கேட்கின்றேன். (சிரிப்பு) கைதிகளுக்கு மோர் கொடுக்க வில்லையாதலால் ஜஸ்டிஸ் கட்சி நாசமாகப் போக வேண்டுமென்று கூறுகிறார்கள். வேறு எந்த மாகாணத்திலாகிலும் சட்ட மறுப்பு கைதிகளுக்கு ஆடைத்தயிராக
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௦
கொடுத்தார்களாவென்று நான் கேட்கின்றேன். ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த திவான் பகதூர் முதலியாரால் நெருப்பு பெட்டிக்கு வரி ஏற்பட்டதென்று கூறுவது எவ்வளவு இழிவான தென்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் சில பெண்கள் அற்பத்தனமாக சச்சரவிடுவது போலல்லவா இருக்கிறது காங்கிரஸ் தேர்தல் பிரசாரம்
காங்கிரசின் சார்பில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் சிறைபட்டதால் கண்ட பலன் என்ன? அம் முறை தப்பான தென்று கண்டு பிடித்ததைத் தவிர வேறென்ன? இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு. காந்தியார் தமது முயற்சி பிரயோஜனமற்றதென்று உணர்ந்து
புது முயற்சியில் ஈடுபட உத்தேசித்திருப்பதைப் பாராட்டி சுதேசமித்திரன் பத்திரிகை தலையங்கம் எழுதியுள்ளது. காந்தியார் தமது கொள்கைகளை நம்பாமலே காங்கிரஸ்வாதிகள் வாசா கைங்கரியமாக நடந்து வருகின்றனரென்றும் காங்கிரஸிற்குப் பலமும் பரிசுத்தமும் ஏற்படும் பொருட்டு அதிலிருந்து விலகியதாகவும் கூறுகின்றார். உள்ளேயிருந்து காரியத்தைச் சாதிக்காமல் வெளியே இருந்து எப்படி காரியத்தைச் சாதிக்கக் கூடுமென்று நான் கேட்கின்றேன்.
தேசத்துரோகி பட்டம்
காங்கிரஸிலிருந்து விலகிய என்னை தேசத் துரோகி என்று கூறுகின்றனர். காந்தியார் காங்கிரஸிலிருந்து விலகி விட்டாரே, அவரை தேசத்துரோகி என்று கூறாமல் அவர் பேரால் ஓட்டுக் கேட்கிறார்கள் காங்கிரஸ் பரிசுத்தமாக வேண்டுமென்று நானுந்தான் விரும்புகின்றேன். காங்கிரஸைச் சேராதவர்களெல்லாம் தேசத் துரோகிகளென்பது அயோக்கியத்தனமான வார்த்தையேயாகும்
காங்கிரஸ் வேலைத் திட்டத்தை ஜனங்கள் நம்பி அநுசரித்தனர். உப்பு சத்யாக்கிரகத்திலும் சேர்ந்து சிறைப்பட்டனர். இதனால் கண்ட பலன் என்ன? சிறைபட்டவர்களை விடுதலை செய்ய ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதே தவிர வேறு இல்லை. இதற்காக ஜனங்கள் மீது குறை கூறிவிட்டு காந்தியார் வெளியேறியது நாணையமாகாது
கோயிலை இடிப்பவன்!
தோழர் ராமசாமி முதலியார், காங்கிரஸ் வாதிகள் கூறியதற்கெல்லாம் தக்க பதில் கூறிய பிறகு காங்கிரஸ்வாதிகள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நான் கோயிலை இடிக்க வேண்டுமென்று பிரசாரம் செய்கிறவனென்றும், அத்தகையவன் உதவியை நாடும் தோழர் முதலியாருக்கு ஓட்டுபோட வேண்டாமென்றும் கூறுகின்றனர். கோயிலை இடிப்பதால் கடவுளுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். அக்கோயில்களால் வயிறு வளர்க்கும் கூட்டத்தார் வாயில் மண் விழுமே தவிர வேறில்லை 217... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
(சிரிப்பு) ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கோடிக்கணக்கில் ஆடம்பரச் செலவு செய்வதை மிக்க பிரயோஜனகரமான முறையில் உபயோகிக்கலா மென்பதே எனது கவலை.
உணர்ச்சி வேண்டும்
உங்களுக்கு உணர்ச்சி வேண்டும். தோழர் முதலியார் பிராமணரல்லாதார். அவருக்கு ஏற்படும் பெருமை உங்களுக்கும் உரியதாகும். நமக்கு ஏதாகிலும் காரியம் நிறைவேற வேண்டுமானால், இத்தகையவர்களாலேதான் அது சாத்தியமாக வேண்டும்.
சமூக சீர்திருத்தத்திண் அவசியம்
நமது சமுதாயத்தில் ஆபாசங்கள் நிறைந்திருக்கின்றன. சீர்திருத்தமே பிரதானமாகும். அதற்குச் சாதகமாக வேலை செய்வோரை ஆதரிக்க வேண்டுவது நமது கடமை. சமுதாயத்தில் உயர்வு தாழ்வு அகல வேண்டும். வெள்ளையர் ஆட்சி மட்டும் சீரழிந்தால் போதாது சமத்துவம் ஏற்பட வேண்டும்
தாலி அறுத்ததாக பழி.
காங்கிரஸ் பிரசாரகர்கள் நாணயமற்றவர்களாக விருக்கின்றனர் காங்கிரஸ் போர்வையை உடுத்திக் கொண்டவர்களுக்கு பொய் பித்தலாட்டம் செய்ய லைசென்ஸ் ஏற்பட்டுள்ளது. சத்யாக்கிரகம் செய்த ஒரு பெண்ணின் தாலியை தோழர் ராமசாமி முதலியார் அறுத்தாரென்றும் வீண்பழி கூறுகின்றனர். பாமர ஜனங்களை இவ்விதம் ஏமாற்றி ஓட்டு பெற விரும்புகின்றனர். காங்கிரஸ்வாதிகன் புரட்டுக்குப் பிராமணரல்லாதார் அஞ்சாமல் வேலை செய்து வெற்றி பெற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன். ( கரகோஷம்)
குறிப்பு: 02.11.1934 இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் சென்னை தொகுதியில் இந்திய சட்டசபைக்கு நிற்கும் ஏ.ராமசாமி முதலியாரை ஆதரிக்கும் கூட்டத்தில் பேசியது.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 11.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 5
காந்தியின் புதிய திட்டம்
மக்களைக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத்
திருப்புதல்
தோழர் காந்தி காங்கிரசை விட்டு விலகியது பொது ஜனங்களுக்கும், தேசத்துக்கும் பெரியதொரு லாபகரமான காரியமானாலும், வேறு வழியில் அவர் செய்யப் புகுந்திருக்கும் காரியம் மனித சமூகத்துக்கே மிகவும் பிற்போக்கான காரியமே ஆகும்
எப்படி எனில் தனது கொள்கையில் காங்கிரசில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது ஒரு புறமிருக்க, தான் (காந்தியார்) இனி செய்யப்போகும் காரியங்களை அவர்கள் தடைசெய்யக்கூடும் என்கின்ற எண்ணத்தின் மீதே விலகினாரானாலும் இனி அவர் விலகிச் செய்யப் போகும் காரியம் என்பது பெயர் மாத்திரத்தில் காதுக்கு இனிமையானதாக இருக்கின்றதே ஒழிய, காரியத்தில் முழு மோசமானதென்றே சொல்ல வேண்டி இருக்கிறது அதாவது, கிராம புனருத்தாரணம் என்றும், கிராம கைத்தொழில் சங்கமென்றும் சொல்லிக் கொண்டு பணம் வசூல் செய்ய ஆரம்பித்து விட்டார். டில்லியில் ஏதோ ஒரு கோடீஸ்வரர் 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாக பத்திரிகைகளில் சேதி வெளியாய் இருக்கின்றது. ஆனால் காந்தியார் அதை மறுக்கிறார் என்றாலும். ஏதோ சில ஆயிரக்கணக்கில் தான் வசூலாயிருக்கிறதென்றும், பின்னால் வசூலாகுமென்ற நம்பிக்கை இருக்கிறதென்றும், தொண்டர்கள் தான் அதிகம் வேண்டுமென்றும், தொண்டர்கள் சேர்ந்தால் பணம் தாராளமாய் கிடைக்குமென்றும் சொல்லுகிறார்.
இந்தச் சேதியைப் பார்த்த சோம்பேரிக் கூட்டத்தாருக்கு நாக்கில். தண்ணீர் சொட்ட ஆரம்பித்துவிட்டது. வேலை இல்லாமல் திண்டாடி ஒரு வேளைச் சோற்றுக்கு எதையும் விற்கும் மனோ தைரியமுடைய “வீரர்களுக்கு அந்தப்படி செய்ய தைரியமும் உற்சாகமும் ஏற்பட்டுவிட்டது.
எலக்ஷன் சமயத்தில் இப்படி ஒரு சேதியைப் பரப்பிவிட்டால் வயிற்றுச் சோற்றுத் தொண்டர்கள் ஏராளமாய் வந்து சொன்னபடி கேட்பார்கள் என்கின்ற எண்ணத்தின் மீதே “20 லக்ஷ ரூபாய் வசூலாகி விட்டது. அதற்கு தொண்டர்கள் வேண்டும்” என்று ஒரு சேதியும் “ரூபாய்
219 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வேண்டிய அளவு கிடைத்துவிடும். ஆட்கள் தான் வேண்டும் என்று ஒரு சேதியும் கட்டி விடப்பட்டுவிட்டதால் தேர்தலுக்கு தொண்டர்கள் ஏராளமாய் கிடைத்து விட்டார்கள். என்றாலும் இதனால் சாதித்துக் கொள்ளக் கூடியது இன்னது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்தத் தந்திரங்களால் தேர்தல் வெற்றி தோல்வி ஒரு புறமிருந்தாலும் பொது ஜனங்களுக்குள் இவ்வித தந்திரங்களையும் சூட்சிகளையும் வெளியாக்க நல்லதொரு சமயமும், தேவையும் அதற்கான சவுகரியமும், சரக்கும் ஏராளமாய் கிடைத்தது என்கின்ற அளவில் நாம் சந்தோஷப் படாமல் இருக்க முடியவில்லை:
அரசியல் க௯ஷியானாலும், வகுப்புக் கக்ஷியானாலும், பெயரளவில் வித்தியாசமே ஒழிய கொள்கையளலில் வித்தியாசமில்லை என்பதோடு
தேசீயக் கக்ஷியானாலும் சரி, தேசத்துரோகக் கக்வியானாலும் சரி, அல்லது சத்தியம் நீதி இவைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியானாலும் அவை இல்லாத கட்சியானாலும் சரி, எல்லாம் பெயர்கள் மாத்திரம் வித்தியாசமே ஒழிய கொள்கையில் வித்தியாசமே இல்லை என்றும் பல தடவை சொல்லி வந்ததை இந்தத் தந்திரங்களும் சூட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
மதத்தின் மூலமாகவும், ஜாதிகள் மூலமாகவும், உத்தியோகத்தின் மூலமாகவும் பார்ப்பனர்களுக்கு இந்திய நாட்டில் இருந்த செல்வாக்கானது ஜஸ்டிஸ் கட்சி சுயமரியாதைக் கட்சி என்பவை ஏற்பட்ட காலம் முதல் கொண்டு சிறிது சிறிதாய் குறைந்து வந்ததுடன் பார்ப்பனர்கள் என்றாலே அவர்கள்மீது ஒரு வித அசூயை தோன்றும்படியான அளவுக்கு அவர்களது விஷயம் வெளியாகிவிட்டதனால், உடனே அவர்கள் தேசியம், தேசபக்தி என்கின்ற ஒரு புது மதத்தைச் சிருஷ்டித்து அதற்கு காந்தி என்கின்ற ஒரு மனிதரைத் தெய்வத்தன்மை உடையவராக ஏன்? தெய்வ அவதாரமாகவே ஆக்கி அவருக்குப் பூஜை புனஸ்காரம் நைவேத்தியம் உற்சவம் பஜனை செய்வதன் மூலமாகவே பஜனை செய்து பிழைக்க முடியுமான நிலைமைக்கு வந்துவிட வேண்டியவர்களாகி விட்டார்கள்.
இன்று இந்தியாவில் குறிப்பாக தென்னாட்டில் சிறப்பாகத் தமிழ்நாட்டில் காந்தி, காங்கிரஸ் என்று சொல்லாமல் பார்ப்பனர்களால் பிழைக்க முடியவில்லை என்பதோடு பார்ப்பனர்கள் போல் நோகாமல் பாடுபடாமல் வயிறு வளர்க்கலாம் எனக் கருதிப் படித்துவிட்டுத் திண்டாடும் மற்ற ஆட்களுடைய நிலைமையும் அது போலவே வந்து சேர்ந்துவிட்டது
இந்தக் கூட்டத்தார் இந்த நாட்டில் உள்ளவரை சோம்பேரி மடமான. காங்கிரசுக்கும் அதன் மடாதிபதியான காந்தியாருக்கும் பெருமை இல்லாமல் போக முடியாது. காங்கிரசும் காந்தியாரும் இதுவரை எப்படி
நடந்து வந்திருந்த போதிலும் எவ்வளவு தவறுதல் மாறுதல் புரட்டுகள்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 20
தந்திரங்கள் முதலிய குணங்கள் நிறைந்தவர்களாய் இருந்தாலும் அவை வெளியாகவோ மக்களால் வெறுக்கப்படவோ கூடிய நிலைமை சுலபத்தில் ஏற்படுவதென்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கலாம்.
ஆனாலும் இன்று உலகில் பொதுவாக தோன்றியிருக்கும் ஒருவித புத்துணர்ச்சியானது சுலபத்தில் வெளியாக்கி வெறுக்கப்படச் செய்யச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை
சுயராஜ்யத்திற்கு புதிய வழி
நிற்க, காந்தியாரின் புதிய கொள்கையாகிய "கிராம சீர்த்திருத்தத்தின். மூலம் சுயராஜ்யம் சம்பாதிக்கப் போகிறேன்" என்னும் விஷயத்தைப் பற்றி சிறிது யோசிப்போம். இதைத்தான் சுயராஜ்யம் என்று காந்தியார் இதுவரை சொல்லி வந்த மார்க்கங்களை விட மோசமான மார்க்கமென்று
நாம் சொன்னோம்.
ஏனென்றால் கிராம புனருத்தாரணத்துக்கு தோழர் காந்தியார் 4 திட்டங்கள் சொல்லுகிறார். அவற்றில்.
ஒன்று:- ஆதரவற்று அழிந்து போகக் கூடிய நிலைமையில்
இருக்கும் கைத்தொழில்களை ஆதரித்துப் புனருத்தாரணம் செய்வது.
இரண்டு:- அந்த கைத்தொழில்கள் மூலம் செய்யப்பட்ட சாமான்களை ஜனங்கள் வாங்கும்படி செய்வது என்பனவாகும்
இந்த இரண்டு காரியங்களினுடையவும் முடிவு என்ன ஆகும் என்பதை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இந்த 20-வது நூற்றாண்டில் உள்ள மக்களைக் காட்டுமிராண்டிப் பருவத்துக்கு அழைத்துச் செல்வது என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
ஏழைகள் ரக்ஷிப்பு என்கின்ற பெயரால் எப்படி ஒன்றுக்கு மூன்று பங்கு பஞ்சைப் பாழாக்கி பெலமற்றதும், பார்வையற்றதும் பிடித்த மில்லாததுமான. துணியை உண்டாக்கி அதை ஒன்றுக்கு மூன்று பங்கு விலை கொடுத்து மக்களை வாங்கும்படிச் செய்து நூற்ற ஆட்களுக்கு மணிக்கு ஒரு காசு கொடுத்துவிட்டு பிரசாரத்துக்காக என்று பொதுமக்களிடம் பல லட்சக்கணக்கில் வசூலித்த பணத்தில் ஆள் ஒன்றுக்கு 50, 60, 100, 200 என்பது போன்ற மாதச் சம்பளமும் காங்கிரஸ் ஆட்களுக்கு கதர் இலாக்காவின் பேரால் கொடுத்தும் வருவது போலவே, இந்த கிராம புனருத்தாரணத்தில்
சீமை ஊசிக்குப் பதிலாக கையினால் செய்த ஊசியும் அதுவும் காசுக்கு மூன்று ஊசி வாங்குவதற்குப் பதிலாக ஏழைகள் பிழைக்க என்ற பிரசாரத்தால் ஊசி ஒன்று காலணா வீதம் வாங்கும்படியாகவும் நேரிடலாம்
மற்றும் இது போலவே காஸ் லைட்டுக்குப் பதிலாக குத்து விளக்கும், கடிதாசிக்குப் பதிலாக ஓலையும், பவுண்டன் பேனாவுக்குப்
21 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பதிலாக நாணல் தட்டுப் பேனாவும் ஆகியவை போன்ற காரியங்களைச் செய்யும்படி மக்களைத் தூண்டலாம். அதை வாங்கும்படி பிரசாரம் செய்யலாம். இதற்கும் அதாவது இந்த இலாக்கா நிர்வாகத்துக்கும் ஆயிரக்கணக்கான மக்களை 50, 60, 100, 200 ரூபாய் சம்பளங்களில் பார்ப்பனர்களையும் அவர்கள் அடிமைகளையும் நியமித்து அவர்களைக் கொண்டு பார்ப்பனப் பிரசாரமும் செய்யலாம்
இதிலிருந்து தோழர் காந்தி இப்போதுள்ள மகாத்மா காந்தி என்னும் பட்டத்திற்கு மேல் அவதார புருஷர் காந்தி என்கின்ற பட்டத்தையும் அடையலாம். அறிவில்லாத ஜனங்களும் ஆலோசனை இல்லாத ஜனங்களும் காந்தியார் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதோடல்லாமல் கோவில் கட்டி கல் விக்கிரகம் வைத்துப் பூஜையும் செய்யலாம்
ஆனால் இவற்றால் எல்லாம் ஏற்படும் பயன், முன் சொன்னது போல் நாகரிக உலகம் என்பதில் இருந்து காட்டுமிராண்டி உலக வாழ்க்கைக்குப் போவது என்பதைத் தவிர வேறு ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி
இந்த யோக்கியதையில் தோழர் காந்தியார் கிராமப் புனருத்தாரண: வேலைக்கு நிதி வசூலிக்கச் சுற்றுப்பிரயாணம் புறப்படப் போகிறாரென்றும், அதற்காக அந்தந்த மாகாணத்தில் சுற்றுப் பிரயாணத் திட்டம் போடப்படுகிறது என்றும் சொல்லிக் கொள்ளப்படுகிறது. இதுவும் ஒரு சமயம் “இன்று” ஆதாரமற்ற வதந்தியாக இருந்தாலும் கூடிய கீக்கிரத்தில் நடக்கப் போகின்றது என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. இந்த நிலையில் உள்ள தலைவர்களையும், கொள்கைகளையும், அதைப்பின்பற்றும் மக்களையும் வைத்துக் கொண்டு இந்தியாவில் முற்போக்கும், மாறுதலும், விடுதலையும், சுதந்திரமும், கவலையற்ற தன்மையும், இன்பமும் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்பட்டால் அது எப்படி முடியுமென்று நமக்கு விளங்கவில்லை
தோழர் காந்தியவர்கள் இந்தக் கிராமப்புனருத்தாரணத்துக்கு தற்காலீகமாக ஒரு வேலைத் திட்டம் ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது
“மில்லில் நெல் அரைக்காமல் கையால் அரிசி குத்தி உமி போக்குவது,
இயந்திரமின்றிக் கோதுமையை மாவாக்குவது,
நாட்டுச் சர்க்கரையை உபயோகிப்பது ஆகிய இந்த மூன்று காரியங்கள் இப்போது செய்வதற்குத் தொண்டர்கள் வேண்டுமென்றும் தெரிவித்து மறுபடியும் வார்தாவில் இருந்து நவம்பர் 8ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது சாத்தியமாகுமா? அப்படிச் சாத்தியமானாலும் மக்களுக்குக்
கஷ்டம் ஒழிவதோஅல்லது பொருளாதார நிலைமை சமரசமடைவதோ அல்லது மேம்பாடடைவதோ ஆகிய காரியங்கள் ஏற்படுமா என்று கேட்கின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2)
ப ப் 3
அரிசி கையினால் குத்துவது என்பதைத் தோழர் காந்தியார் ஆரஞ்சிப் பழம் ரசமாகப் பிழிந்து 2 கிளாஸ் சாப்பிடுவது போலவும், நல்ல வெள்ளாட்டுப்பால் 1 படியை Y% படியாகக் காய்ச்சி பனங் கல்கண்டு போட்டுச் சாப்பிடுவது போலவும், இரட்டை மெத்தையில் துயிலுவது போலவும் அவ்வளவு சுலபமான காரியம் என்று கருதிக் கொண்டிருக்கிறாரா என்பது நமக்கு விளங்கவில்லை:
நெல்லுக் குத்துவது என்றால் ஒரு பெண் காலை 5 மணிக்கு உலக்கை எடுத்தால் பகல் 10 மணி வரை இயந்திரம் குத்துவது போல் நின்று உலக்கை பிடித்து உ௯., ௨௯ என்று குத்தினால் பட்டணம் படியில் காலே அரைக்கால்படி அல்லது அரைப்படி அரிசி அதுவும் குறு நொய்யும் பதரரிசியும் கொண்டதாகக் கிடைக்கும். அவ்வளவு மோசமான கூலி கொடுத்தாலும் கூட யந்திரத்தில் அரைக்கின்ற அரிசியுடன் போட்டி போட்டு விற்க முடியாது என்பதோடு பெருத்த நட்டம் ஏற்படும் என்றும் சொல்லித்தான் ஆக வேண்டும். இது ஒரு புறமிருந்தாலும் பெண்மக்களிடம் இப்படிப்பட்ட வேலை வாங்குவதும், அவர்களை இந்தப்படி இம்சிப்பதும் ஜீவகாருண்ய வேலையாகுமா என்று கேட்கின்றோம்
நூல் நூற்கும் விஷயத்திலேயும் பெண்களை மணிக்கு ஒரு காசு
கூலி பெறும் இயந்திரங்களாக ஆக்குவதோடு இப்போது நெல்லுக்குத்துகின்ற வேலைக்கு மறுபடியும் அவர்களை அனுப்புவது என்றால் இது எவ்வளவு தூரம் கைத்தொழில் அபிவிருத்தி என்பதை நாம் மக்களுக்கு
எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
அன்றியும் இன்று ஒவ்வொரு முக்கிய கிராமத்திலும் ஒவ்வொரு நெல் அரைக்கும் மிஷின் ஏற்பட்டிருப்பதும், ஒவ்வொரு முக்கிய டவுனிலும் 4,5 மிஷின்கள் ஏற்பட்டிருப்பதும் எவரும் அறியாததல்ல இந்தியாவில் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான மூட்டைகள். நெல்லாகவோ, அரிசியாகவோ வந்து குவிந்து இந்திய விவசாயிகளுக்குக் கட்டுபடி இல்லாமல் வரிகொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போதும், நெல் அழியாமல் இருக்கும் போதும் கையில் குத்த வேண்டும் என்று ஆரம்பித்தால், கட்டுபடி விஷயம் மாத்திரமல்லாமல் நமது பெண்கள் இனி பழைய படி நெல் குத்தும் வேலைக்குப் போகவும்
கையில் உலக்கை எடுக்கவும் சம்மதிப்பார்களா என்றும் கேட்கின்றோம்
பெண்கள் படிக்க வேண்டும்; குழந்தைகளைப் படிப்பிக்க வேண்டும்; சுகாதாரமாய் வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்; அவர்கள். ஆண்களைப் போலவே சகல துறைகளிலும் மூன்னேற்றம் அடைய வேண்டும்; உத்தியோகங்கள் பார்க்க வேண்டும்; புருஷர்களிடம் தங்களை சரிசமத்துவமாக நடத்துதலை எதிர்பார்க்க வேண்டும்
223 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் மற்ற நாடுகளில் பெண்கள் மோட்டார் ஓட்டுவது, ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் டிராம் ஓட்டுவது, ஜட்ஜி வேலை வக்கீல் வேலை பார்ப்பது முதலிய பல காரியங்களில் ஆண்களுடன் போட்டி போடுவதும் சில. விஷயங்களில் ஆண்களுக்கு மேலாகவும் சக்தியும் அறிவும் உடையவர்களாக இருக்கும் விஷயமும் தெரிந்திருந்தும் இந்தியப் பெண்களை நெல்லுக்குத்தவும் மாவரைக்கவும் திட்டம் போட்டுக் கொண்டு அதிலிருந்து “சுயராஜ்யம் சம்பாதித்துக் கொடுக்கிறேன் பணம் கொடுங்கள், தொண்டர்கள் வாருங்கள்” என்றால் இது அறிவுடைமையான காரியமா அல்லது பயித்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகத் தகுதியான காரியமா என்று கேட்கின்றோம்
இவை ஒரு புறமிருக்க இன்று நெல்லுக் குத்துவதும் மாவு அரைப்பதும் போன்ற காரியங்களையெல்லாம் கையினால் செய்ய வேண்டும் என்றும், நூல்களையெல்லாம் கையினால் நூற்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்து, கையினால் குத்திய அரிசியையும் கையினால் அரைத்த மாவையும் தான் சாப்பிட வேண்டும் என்றும், கையினால் நெய்த துணியைத் தான் கட்ட வேண்டும் என்றும் உத்தரவு போட்டு விடுவோமேயானால் இந்திய மக்களுக்கு வேண்டிய அரிசியும் மாவும் துணியும் மாத்திரம் தயார் செய்ய இந்திய மக்கள் முழுவதும் அவர்கள் ஆயுள் காலம் முழுவதும் ஈடுபட்டிருக்க வேண்டியதோடு வெளிநாட்டிலிருந்தும் மக்கள் வந்து நெல்லுக்குத்தி மாவரைத்து நூல்
நூற்றுக் கொடுத்து விட்டுப் போக வேண்டி வரும் என்பதைப் புள்ளி விவரங்களோடு நிரூபிக்கத் தயாராயிருக்கிறோம்
பிறகு நெல்லு, பஞ்சுக்கான பருத்தி விவசாயம் செய்யவும், வீடுவாசல். கட்டவும், நிர்வாகம் செய்யவுமான பல காரியம் பார்க்க ஆட்களுக்கு எங்கு போவது என்று தோழர் காந்தியாரை வணக்கத்துடன் கேட்கின்றோம்.
குழந்தை குட்டி கிழடு கிண்டு ஆகியவர்களை நீக்கிவிட்டு வேலை செய்யத் தகுதியுள்ள மக்களை மாத்திரம் எடுத்துக் கொண்டால்மொத்த ஜனத் தொகையில் 3-ல் ஒரு பாகம் மக்கள் கூட வேலை செய்ய லாயக்குள்ளவர்கள் இருக்கமாட்டார்கள். இவர்களில் “பாடுபடுவது பாவம்” என்று இருக்கிற பார்ப்பனர்கள் அவர்களைப் போல் காப்பி அடிக்கும் “இந்து சட்டைக்காரர்” (வெள்ளையர் கலப்பால் பிறந்தவர்களை வெள்ளைச் சட்டைக்காரர்கள் என்பது போலப் பார்ப்பனர்களின் நடையுடை பாவனைகளைக் கொண்ட பார்ப்பன தாசர்கள்) என்கின்ற கூட்டத்தாரையும் நீக்கி விட்டால் மீதி இருப்பவர்களிடமிருந்து செய்யப்படும் கைக்குத்து அரிசியும் கை ராட்டினத் துணியும் கிடைக்காமல் வெகுபேர் பட்டினியாயும் நிர்வாணமாயும்தான் இருக்க நேரிடும் என்பது கல்லுப் போன்ற உறுதியாகும்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 224
ஆகவே தோழர் காந்தியார், தான் ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உலகம் அறியும்படியாக ஏதாவது ஒரு காரியமும், ஒருவித விளம்பரமும் இருக்க வேண்டும் என்பதைத் தவிர மற்றபடி இந்தத் திட்டங்களால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ஆகவே, 'தகுதியுள்ளவன்தான் அடைவான்” என்கின்ற ஞான மொழிக்கு ஏற்ப இந்திய மக்களுக்கு என்றைய தினம் இம்மாதிரி சூட்சி களையும், அறியாமையையும் அறியும்படியான பகுத்தறிவு ஏற்படுகின்றதோ அன்றுதான் அவர்கள் மனிதத் தன்மையை அடைய முடியும் என்பதோடு அதுவரையில் தகுதி உள்ளவனுக்கு அடிமையாய் இருக்க வேண்டியது தான் இயற்கை விதி என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறாம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 11.11.1934
த... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இனியாவது உணருவாரா?
காங்கிரஸ்காரர் என்பவர்கள் 100-க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேரும் பொய், புரட்டு, சூட்சி, தந்திரம், சமயத்துக்குத் தகுந்தபடி சரணம் போட்டுக் கொள்வது ஆகிய குணங்களையே கொள்கையாகவும், திட்டமாகவும் வைத்து அதற்கு நீதியும், சத்தியமூம் என்று பெயர்கொடுத்து காங்கிரஸ் காரியத்தை அதாவது தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் என்கின்ற அபிப்பிராயமானது நமக்கு நாளுக்கு நாள் பலப்படுவதுடன் வளர்ந்து கொண்டே வருகிறது.
பாமர மக்களை ஏமாற்றுவதற்கென்று செய்யப்படும் சூட்சிகளை இன்றைய காங்கிரஸ் பிரசாரத்தின் பயனாய் மக்கள் அறிய முடியாமல். இருந்தாலும் கூட அதற்கும் ஒரு அளவோ, மானம் வெட்கமோ, மனிதத் தன்மையோ இல்லாமல்போய் விட்டதை வெளியாக்காமல் இருக்க முடியவில்லை.
இந்த 5, 6 மாத காலத்தில் தமிழ்நாட்டில் ஸ்தல ஸ்தாபனங் களுக்குப் பல தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அவற்றிற்காக ஒவ்வொரு ஊரிலும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்றும், காங்கிரஸ்காரர் - காங்கிரசுக்காரரல்லாதார் என்றும் சொல்லப்பட்ட பிரிவுகளின் பேரால் தேர்தல்கள் நடந்தன. அவற்றுள் ஜெயித்தால் “காங்கிரசுக்கு ஜெயம்” என்ற கொட்டை எழுத்தில் போட்டுக் கொள்ளுவதும், “தோற்றால் உப்புக் கண்டம் (காய்ந்த மாமிசத் துண்டு) பறி கொடுத்த பார்ப்பனத்தி” போல் வாயடைத்துக் கொள்ளுவதுமான காரியங்களைச் செய்து வந்தது யாவரும் அறிந்ததாகும் உதாரணமாக சிறிது நாட்களுக்கு முன் சென்னையில் தோழர்கள்
ஒரு கோயங்கா அவர்களுக்கும், ஒரு நாயுடு அவர்களுக்கும் நடந்த தேர்தலில் கோயங்காவை காங்கிரஸ்காரராக்கி நாயுடுவை ஐஸ்டிஸ் கட்சியாராக்கி காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், பாஷியம் அய்யங்கார், கிருஷ்ணசாமி சாஸ்திரியார் என்பவர்கள் உள்பட, 'இந்து', சுதேசமித்திரன் உள்பட எல்லா பார்ப்பனர்களும் தோழர் கோயங்கா காங்கிரஸ் அபேட்சகர். என்று ஜனங்களை நம்பும்படி செய்து பிரசாரம் செய்தார்கள்.
கடைசியில் கோயங்கா அவர்கள் பதினாயிரக்கணக்கான ரூபாய் நஷ்டப்பட்டும் தோல்வி அடைந்ததும் தோழர் கோயங்கா காங்கிரஸ்காரர்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 72௦
அல்ல என்று சொல்லிவிட்டார்கள். இது போல் பல காரியங்கள் செய்து வந்தும் சமீபத்தில் - இந்த வாரத்தில் நவம்பர் 9ந் தேதி சேலத்தில் நடந்த முனிசிபல் எலக்ஷனில் தோழர் வெங்கிடப்ப செட்டியார் அபேட்சகர் ஸ்தானமானது காங்கிரசின் பேரால் நிறுத்தப்பட்டு தோழர் அய்யாசாமி செட்டியார் பார்ப்பனர் அல்லாதார் சார்பாய் (ஜஸ்டிஸ் கட்சி சார்பாய்) நிறுத்தப்பட்டு காங்கிரஸ்காரர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட அன்று கேலத்துக்கு வந்து வெங்கிடப்ப செட்டியாருக்காக எவ்வளவோ பாடுபட்டும் வெங்கிடப்ப செட்டியாருக்கு 8 ஓட்டும், அய்யாசாமி செட்டியாருக்கு 25 ஓட்டும் கிடைத்து பாதாள தோல்வி அடைந்து விட்டார் என்கின்ற சேதி தெரிந்ததும் “வெங்கிடப்ப செட்டியார் காங்கிரஸ் அபேட்சகரல்ல"' என்று தோழர் ராஜகோபாலாச்சாரியார் முதல் கொண்டு எல்லா பார்ப்பனப் பத்திரிக்கைக்காரர்களும் சொல்லிவிட்டார்கள் என்றால் இவர்களது
பல்ட்டிக்கும், சமயத்துக்குத் தகுந்தபடி நடந்து கொள்ளுவதற்கும் வேறு என்ன சாட்சி வேண்டும் என்று கேட்கின்றோம்
தோழர்கள் வெங்கிடப்ப செட்டியார், சடகோப முதலியார் ஆகிய இரு அபேட்சகர்களை காங்கிரஸ் அபேட்சகர்களாக வைத்து காங்கிரஸ்காரர்கள் “அது அல்லாத" பார்ப்பனர்கள் என்பவர்களுள்பட பெரிய கூட்டம் கூடி ரகசிய ஓட்டெடுத்து காங்கிரசு சார்பாகவும், பார்ப்பனர்கள் சார்பாகவும் தோழர் வெங்கிடப்ப செட்டியாரை நிறுத்தி காங்கிரசின் பேரால், காந்தியின் பேரால், கவுன்சிலர்களிடம் முழங்கால் முறிய நடந்து கடைசியில் பாதாள தோல்வி ஏற்பட்டதும் வெங்கிடப்ப செட்டியார் காங்கிரசுக்காரர் அல்ல என்று சொல்லிவிட்டால் காங்கிரசுக்கு இருக்கும் நேர்மை, சத்தியம், நீதி ஆகிய குணங்களுக்கு வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை. தோழர் வெங்கிடப்ப செட்டியார் அவர்கள் காங்கிரசில் 15 வருஷ காலமாய் இருந்து வருபவர். அவர் கதர் உடுத்தி வருபவர். பார்ப்பனர்கள் பூதேவர்கள் என்பதை ஒப்புக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களையும் ஜஸ்டிஸ் கட்சியாரையும் இணையில்லாக் கேவலமாய் பேசி வந்தவர் - வருகிறவர். பார்ப்பன நாகரீகம், ஆச்சார அனுஷ்டானங்கள், கோயில், குளம், பக்தி பிராமண விஸ்வாசம் ஆகியவைகளில் இணையற்றவர். இப்படி இருந்தும் அவருக்குத் தோல்வி ஏற்பட்டவுடன் அடியோடு அவரை ஜனங்கள் கேவலமாய் நினைக்கும்படியும் அவர் தோல்விக்கு சிலராவது பரிதாபப்படாமல் இருக்கும்படிக்கும் “காங்கிரசுக்காரர் அல்லாததால் அவர் தோல்வி அடைந்தது சரிதான் என்று நினைக்கும்படிக்கும் சொல்லும்படிக்கும் செய்து விட்டார்கள் என்றால் இந்தப் பார்ப்பனரை நம்புவோர்கள் சமயத்தில் கைவிடப்பட்டு விடுவார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாக்ஷி வேண்டும் என்று கேட்கின்றோம்
227 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வெற்றி தோல்வி இயற்கை. பணச்செலவும் சூட்சியும் நேர்மையற்ற காரியங்களும் காலித்தனமும் செய்தவர்களுக்கே பெரிதும் வெற்றி ஏற்படுவது என்பது சகஜம்
வெற்றி தோல்வியில் மனிதனுடையவோ, கட்சியுடையவோ, மேன்மையோ, நாணையமோ பாதிக்கப்பட்டு விடுவதில்லை.
இதுவரை பல கட்சி தோல்வியடைந்தும், பல கட்சி வெற்றியடைந்தும் வந்திருக்கின்றது என்றாலும் அதனாலேயே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு விடவும் இல்லை. எந்தக் கட்சியும் முழுகிப் போய் விடவுமில்லை.
ஆனால் கண்ணியமாய் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இந்தப்படி உடனுக்குடன் அந்தர் அடிப்பதென்றால் இவர்களுள் நாணையமும் சுயமரியாதையும் உள்ள மக்கள் எப்படி நெருங்குகிறார்கள் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இனியாவது தோழர் வெங்கிடப்ப செட்டியார் அவர்கள் பார்ப்பனர்களுடையவும், காங்கிரசுக்காரர்கள் என்பவர்களுடையவும் யோக்கியதையை உணர வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 11.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2)
ப ப் 8
மற்றுமொரு தொல்லை
மதங்களின் பெயரால்- கடவுளின் பெயரால்- ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில்- ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிக்கல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக்கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்மந்தமான - தெய்வ சம்மந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம் தோறும் வந்து கொண்டுள்ளன. தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்த பாடில்லை. முதலாளிகளின் கோடியாடைகளின்னும் மழுங்கவில்லை. பலகார பக்ஷணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.
மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்ட கடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.
இந்த லக்ஷணத்தில் “கார்த்திகை தீபம்” என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது. தீபாவளித் தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களைப் பிடித்தாட்டி விட்டு போய்விட்டது
இதுவோ ( அண்ணாமலை தீபமோ) கடவுளே ( சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறாரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான. ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா, சிவசிவா
என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும் குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும் ஜவுளிகளையும் குடங்குடமாக மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாக்கி திருப்தியடைவதுமான களியாட்டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் "கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும் அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20-ம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய
229 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத்தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான். விமோசனமென்பது விளங்கவில்லை.
மனிதன் முதல்முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில், அக்காலக். காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்
நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத்தானைத் தட்டினால். லக்ஷ்தீபம் போல் அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்துவரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து அத்தகைய காட்டுமிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக் காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம், சொக்கப்பான் கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்
பகுத்தறிவு - கட்டுரை - 11.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 30
தோல்வி ஆனால் நன்மைக்கே
சென்ற வாரம் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் இயக்க சார்பாய் நிறுத்தப்பட்ட அபேக்ஷகர்களும் - பார்ப்பனரல்லாதார் இயக்கப் பிரமுகர்களால் ஆதரிக்கப்பட்ட அபேக்ஷகர்களும் அனேகமாக எல்லோரும் தோல்வி என்பதை அடைந்துவிட்டார்கள். தோல்வி என்றால் நல்ல பரிசுத்தமான - பாதாளத்துக்குக் கொண்டு போகும்படியான தோல்வி என்று சொல்லத்தக்க வண்ணம் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
பார்ப்பனரல்லாதார் சார்பாய் வெற்றி , வெற்றி, வெற்றி என்று
வீரம் பேசிய நமது வாயும் கையும் வெட்கப்படத் தக்க தோல்வி என்று சொன்னால் தலைகுனிந்து பொருத்துக் கொள்ள வேண்டியது தான். அதற்குக் காரணமும் சமாதானமும் பதினாயிரம் இருந்தாலும் தேர்தல் முடிவு தோல்வி தான் என்பதில் சிறிதும் ஆக்ஷபனையோ, விவகாரத்துக்கு இடமோ இல்லை என்பதே நமதபிப்பிராயம். அதுவே
நம் வீரத்துக்கு அறிகுறியாகும். எனவே நல்ல தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தக்க தைரியம் நம் எல்லோருக்கும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஆனால் இத் தோல்வியின் பயன் நாம் வெற்றி அடைந்தால் எவ்வளவு நன்மை ஏற்படுமோ அதை விடப் பல மடங்கு அதிகமான நன்மை ஏற்படப் போகின்றது என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. இன்று ஒரு சமயம் நமக்கு வெற்றி கிடைத்திருந்தால் கூட பின்னால் பெரியதொரு தீமை ஏற்பட்டாலும் ஏற்படலாம்
ஏனெனில் நம்முடைய மமதையும், அலக்ஷியபுத்தியும், அளவுக்கு மீறிய முரட்டுத் தைரியமும் வெகு காலத்துக்குத் தலைதூக்க முடியாத பாதாளத்தில் நம்மைக் கொண்டு போய் அழுத்தும்படி செய்தாலும் செய்யக் கூடும். ஆதலால் இந்தத் தோல்வியால் முழுகிப் போன காரியம்
ஒன்றும் இல்லை. பின்னால் லாபமே இருக்கிறது
தோழர் ஷண்முகத்திற்கு ஏற்படப்போகும் முற்போக்கும், அவரால். மக்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படக்கூடிய நன்மையும் பெருமையும் அவருக்கு இந்த இந்திய சட்டசபைத் தேர்தல் முடிவையே பொருத்திருக்கவில்லை.
231 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தேர்தல் என்பது சூதாட்டத்திற்கு ஒப்பானது. சூதில் ஏற்படும் வெற்றியும், தோல்வியும் மனிதனுடைய பெருமையையோ புத்திசாலித் தனத்தையோ, சக்தியையோ பொருத்ததல்ல. “வெற்றியா”, “தோல்வியா” என்கின்ற வெறும் உச்சரிப்பை மாத்திரமே பொறுத்ததாகும்.
இந்தத் தேர்தல் சூதில் சூட்சியையும், வஞ்சகர் செயலின். சதிகளையும் தாண்டி ஒருவர் வெற்றி பெறாவிட்டால் அவருடைய யோக்கியதையே போய்விடுமென்றால் அப்படிப்பட்ட அவரால் மக்களுக்கும் நாட்டிற்கும் ஏற்படக் கூடிய நன்மையே போய்விடுமென்றால் அப்படிப்பட்டவர் இருப்பதும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான். ஆதலால் தோழர் ஷண்முகம் தோல்வியானது வெட்கப்படுவதற்குத் தகுதியானது (ஆனால் படிப்பினைக்கு இன்றியமையாதது) என்று சொல்லிக் கொள்ளலாமே ஒழிய விசனப்படத்தக்கதல்ல என்பதோடு பிற்கால வாழ்வுக்கு பெரிதும் நம்பிக்கை கொள்ளத்தக்க அளவு பயன்படக் கூடியது என்றும் சொல்லலாம்
தோழர்எ.ராமசாமி முதலியாரின் தோல்வியும் அதுபோலவே தோழர் ராமசாமி முதலியார் மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத்தக்க மாதிரியான தோல்வியே ஒழிய எவரும் சிறிதும் விசனப் படத்தக்க தோல்வி அல்ல என்பதே நமது பளிங்கு போன்ற அபிப்பிராயம்
1926-ம் வருஷத்திய சென்னை சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நெஞ்சம் திகீர் திகீர் என்று திடுக்கிடும்படியான தோல்வி சப்தங்கள் காது செவிடுபடும்படியாகவும், வானமளாவி இடரும்படியாகவும் தோல்விகள் ஏற்பட்டன.
காங்கிரசுக்காரர்களை கவர்னர் பிரபு கூப்பிட்டு மந்திரி சபை அமைக்கும்படி கேட்கத் தகுந்த வெற்றிகள் காங்கிரசுக்கு ஏற்பட்டன. இன்றைய நம் தோல்விக்கு பார்ப்பனர் நடந்து கொண்டது போலவே அன்றைய தோல்விக்கும் மக்களுக்கு புகையிலை வழங்கினார்கள். அதுவும் உண்மையிலேயே அதுசமயம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தாரும், மற்றும் வெளியிலுள்ள பார்ப்பனரல்லாதாரும் வெட்கப்படத்தக்க தோல்விதான். ஆனால் அதனால் - அப்படிப்பட்ட தோல்வியால் பார்ப்பனரல்லாத சமூக மக்களுக்கும் - அவர்கள் இயக்கத்துக்கும் ஏற்பட்ட கெடுதி என்ன? பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும் இயக்கத்துக்கும் பிறவி எதிரிகளாய் பார்ப்பனர்களுக்கும் அவர்களது இயக்கத்துக்கும் ஏற்பட்ட நன்மை என்ன? என்பதைக் கொண்டு இன்றைய தோல்வியின் பயனை கணித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
அரசாங்கத்தாரின் சம்பள சேவகம், அடிமை உத்தியோகம், அவற்றில் மேல்பதவிகள் என்பவை போன்ற “பெருமை”கள் அல்லாமல் ஜனப்பிரதிநிதித்துவம் (பொது ஜனங்களுக்காகப் பதவி வகித்தல்) என்பது
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 232
போன்ற காரியங்களில் ஒரு பார்ப்பனராவது தலை காட்ட முடிந்ததா. என்று பார்த்தால் அவர்கள் வெற்றி பெற்றதின் யோக்கியதை விளங்கிவிடும்.
1915, 16 வருஷத்திய டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் ஆகியவர்கள் தோல்வி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை உண்டு பண்ணிற்று
1926 - ம் வருஷத்திய தோல்வியால் தான் அரசாங்க உத்தியோகத்திலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் அரசியலிலும் மற்றும் காங்கிரஸ் உள்பட பொதுஜன ஸ்தாபனம் என்பவைகளிலும் பார்ப்பனரல்லாதார் - இந்து, முஸ்லீம், தீண்டப்படாதார் முதலிய சமூகம் உள்பட எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
1926 - ம் வருஷத்திய தோல்வி தான் சாரதா சட்டம், பெண்கள்
பிரதிநிதித்துவம் முதலியவைகளைக் கொடுத்தது. சென்னை அரசாங்க நிர்வாக சபை பார்ப்பனரல்லாதார் வசமாயிற்று. ஜனப் பிரதிநிதித்துவம் என்னும் பேரால் பார்ப்பனர் கைப்பற்றி இருந்த அனேகம் பதவிகளிலிருந்து பார்ப்பனர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். ஜனநாயகத்துவம் என்னும் ஸ்தல ஸ்தாபனங்களிலிருந்து அறவே 100-க்கு 90 பங்காய் பார்ப்பனர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனக் கோட்டை, பார்ப்பன ஆதிக்க ஸ்தலம் என்கின்ற சென்னை, தஞ்சை ஆகிய இரண்டொரு இடங்கள் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்திய சட்டசபைக்குக் கூட இன்று ஒரு மொண்டியோ முடமோ கூனோ குருடோ பார்ப்பனரல்லாதாராகத்தான் பார்த்து நிறுத்த வேண்டிய நிலை பார்ப்பனர்களுக்கே ஏற்பட்டது
இவைகள் எல்லாம் எதனால்? 1926-ம் வருஷத்திய “மகத்தான தோல்வியால்” அல்லவா என்று கேட்கின்றோம்
ஆதலால் இந்தத் தோல்விக்காக ஏன் விசனப்பட வேண்டும்? “ஓட்டத்தில் களைத்துப் போனவன் பந்தயத்தில் தோற்றவனாவானே ஒழிய வாழ்க்கைக்கு உதவாதவனாகிவிட மாட்டான்."
இந்த 10, 15 வருஷ காலமாய் பார்ப்பனர்கள் அடைந்து வந்த தோல்வியும் அதிலிருந்து அவர்கள் பெற்று வந்த படிப்பினையும், வெற்றிக்காக அவர்கள் இந்த 10 வருஷ காலமாய் செய்து வந்த முயற்சிகளும், தந்திரங்களும், பிளான்களும் இந்த பிரச்சினையின் மீதே தங்கள் சமூகத்தை ஒற்றுமையாக்கிப் பலப்படுத்தி செய்து வந்த கட்டுப்பாடான பிரசாரங்களும் இந்த அளவு வெற்றியையாவது அவர்கள். இன்று கண்டு தீர வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது
இது வரையிலும் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குள் கோள் ஏற்றிச் சண்டை மூட்டி விட்டு அந்தச் சண்டையைப் பார்த்தே திருப்தியாக மகிழ்ச்சி அடைந்து வந்த பார்ப்பனர்கள் இன்று கண்ட வெற்றிக்கு அதுவும் தோழர் ஷண்முகம் தோற்றுப் போனதைக் கண்ட பார்ப்பனர்கள்
233 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடாமலிருக்க முடியுமா என்பதை யோசித்தால் அவர்களது கொண்டாட்டம் மிகவும் சரியானதேயாகும் ஆகவே அவர்கள் கொண்டாட்டத்திலிருந்து நமக்கு வேண்டிய படிப்பினையை மாத்திரம் மிக ஜாக்கிரதையாய் எடுத்துக் கொண்டு மற்றதை லட்சியம் செய்யாமல் விட்டுவிட்டு இனி ஆக வேண்டிய விஷயங்களைக் கவனிக்க வேண்டியதே பொறுப்புள்ளவர்களின் கடமையாகும்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் பற்றுக் கொண்டவர்களும் அம்மக்கள். முன்னேற்றத்தில் கவலை கொண்டவர்களும் இதுவரை எப்படி இருந்து வந்தாலும் இனிமேல்தான் அவர்கள் தங்களை இக்கட்சியின் பேரால் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். அக்கட்சி நன்றாய், பெருமையாய், செல்வாக்காய் இருந்த காலத்தில் தன்னை அக்கட்சித் தூண் என்றும், பிரமுகர் என்றும் சொல்லிக் கொண்டிருந்து விட்டு இன்று அதற்குத் தோல்வி ஏற்பட்டவுடன்- ஏற்படும் என்று தோன்றியவுடன் “எனக்கும் அக்கட்சிக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லிக் கொண்டு எதிரிகளோடு சேர்ந்து தானும் ஒரு கல்லெடுத்துப் போடுவது என்பது மகா இழிவானதும் பயங்காளித்தனமானதுமான காரியம் என்று வன்மையாய்ச் சொல்லுவோம்
எதிரிகளிடம் கூலி வாங்கிக் கொண்டு வைபவர்களைப் பற்றியோ அல்லது பார்ப்பனரல்லாதார் கட்சியில் இருப்பதால் தனது வாழ்வுக்கோ பெருமைக்கோ பயனில்லை என்று கருதி எதிரிகளைத் தஞ்சமடைந்தவர்களைப் பற்றியோ நாம் இப்போது கவலைப்படவில்லை. நமது கட்சியை வைததின் பேரால், நமக்கு துரோகம் செய்ததின் பேரால் அவர்கள் பெற்ற கூலிக்காகவும், அவர்கள் அடைந்த பதவிக்காகவும் நாம் அவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.
ஆனால் உண்மையில் பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தில் கவலையாய் இருந்தவர்கள், அல்லது இனிமேல் இருக்கிறவர்கள் வீரமுள்ளவர்களாய் இருந்தால் இப்பொழுது தான் அவர்கள் தாங்கள் பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும். அவர்களது வீரத்துக்கும் உண்மை அபிமானத்துக்கும் இதுதான் அறிகுறியாகும்.
வெற்றி ஏற்படும்போது தங்களைப் பார்ப்பனரல்லாதார் கட்சிக்காரர் என்று மார் தட்டுவதும், தோல்வி ஏற்படும்போது எதிரிகள் கூட்டத்திற்குள். புகுந்து கொண்டு கோவிந்தா போடுவதும், கட்சியைக் குறை கூறி வீம்பு பேசுவதும் கீழ்மக்கள் செய்கையே யாகும்என்று மறுமுறையும் சொல்லுகிறோம்.
அன்றியும் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் தன்னை மனித சமூகத்தில் ஒரு கூட்டத்தாருக்கு கீழானவனாய் மதிக்கப்படு கின்றவன் என்று நாணையமாய் நினைக்கின்ற ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாதார். கட்சிக்கு கடமைப்பட்டவன் என்பதோடு அக்கட்சியின் உயிர் வாழ்க்கைக்கும், மேன்மைக்கும் உயிரைக் கொடுக்க வேண்டியவனே ஆவான்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 234
ஓன்று கேட்கின்றோம்
நிற்க ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரையும்- காங்கிரசில் கூலி பெற்றோ, பெருமை பெற்றோ, பார்ப்பனர்களால் பூஜிக்கப் பெற்றோ இன்று உயிர் வாழும் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரையும் - மற்றும் ஸ்தல ஸ்தாபனங்களில் சட்டசபைகளில் அங்கத்தவர், பிரசிடெண்ட், சேர்மென் முதலிய பதவிகளிலும், உத்தியோகத்திலும், வக்கீல் வேலையிலும் டாக்டர் வேலையிலும் இருந்து கெளரவமும், செல்வமும் அடைந்துவரும் பார்ப்பனரல்லாதார்களையும் -
சர்க்கார் உத்தியோகத்தில் மந்திரி முதல் குமாஸ்தா வரையில் உள்ள பார்ப்பனரல்லாதார்களையும் - பத்திரிகை ஆபீசுகளில் பத்திராதிபர்கள் முதல் பத்திரிக்கை விற்பவர்கள் வரை உள்ள பார்ப்பனரல்லாதார்களையும் - மற்றும் தெருக்களில் திரிந்து கொண்டு இங்கத்திய சேதியை அங்கும், அங்கத்திய சேதியை இங்குமாய் சொல்லிக் கொண்டு உல்லாச உடை உடுத்தி சோம்பேரிகளாய்த் திரியும் அண்ணாத்தைகளையும் ஒன்று கேட்கின்றோம்
பார்ப்பனரல்லாதார் ( ஜஸ்டிஸ்) கட்சி என்பதாக ஒரு கட்சி தென்னிந்தியாவில் சுமார் 15 வருஷ காலத்துக்கு முன் தோன்றி இருக்கா விட்டால் அதை ஆரம்பித்தவர்கள் கல்லடி, செருப்படி, மண்ணடி, பேச்சடி பட்டு தங்கள் குடும்பச் செல்வங்களையும், போக போக்கியங்களையும், தொழில்களையும் துறந்து பார்ப்பனர்களுடைய “சாபத்து "க்கும் அவர்களது பத்திரிகைகளின் விஷமப் பிரசாரத்துக்கும் தலை கொடுத்து அவற்றின் கெடுதிகளை அடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டும் சிலராவது உழைத்திருக்காவிட்டால் மேல் கண்ட பார்ப்பனரல்லாத ஆட்கள் இன்று இந்த நிலைமையில் இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஒருவன் ஜஸ்டிஸ் கட்சிக்குத் துரோகம் செய்வதும், அதை இகழ்வதும், பழிப்பதும் எதற்கு ஒப்பிடலாம் என்றால், தன்னைப் பெற்று சீராட்டிப் பாராட்டி பாலூட்டி வளர்த்த தன் தாயை - தன் வாழ்க்கையில் கவலை கொண்ட வாழ்க்கைத் துணைவியை - உயிர் அனைய காதலியை பிறர் பழிக்கப் பழி கூறுவதையும், தன் சுயநலத்துக்கு அவர்களைத் துர்வினியோகப் படுத்துவதையும் தான்
ஒப்பிட முடியும் ஜஸ்டிஸ் கட்சியில் இன்று பெரும்பாலும் அயோக்கியர்களும் சுயநலக்காரர்களும் இருக்கலாம்
நாணையமில்லாதவர்களும் யோக்கியப் பொறுப்பு இல்லாதவர்களும், சுயநலத்துக்குக்கட்சியைப் பயன்படுத்தி விற்று வாழ்கின்றவர்களும் இருக்கலாம்.
காரி உமிழ்வதற்குக் கூட லாயக்கில்லாத இழி மக்களும், ஈனர்களும் இருக்கலாம். காட்டிக் கொடுத்தவர்களும் துரோகிகளும் இருக்கலாம்
ஒரு யோக்கியமான அரசாங்கத்தின் நியாய விசாரணையின் மூலம் நடுத் தெருவில் நிறுத்தி ஆளுக்கொரு கல்லால் அடித்துக் கொல்ல
235 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வேண்டும் என்று தீர்ப்புப் பெறுவதற்குத் தகுதியான துரோகிகளும்,
சதிகாரர்களும் இருக்கலாம். அவர்களுக்காக வெல்லாம் வாதாடி விடுதலை பெறச் செய்ய நாம் இங்கு (இக்கட்டுரையில்) ஆசைப்படவில்லை. ஏனெனில் எங்கும் அப்படிப்பட்டவர்கள் இருக்கக்கூடும். ஆனால் 3 கோடி மக்களின் சுயமரியாதைக்காகப் பாடுபட என்றே ஏற்படுத்திய ஒரு ஸ்தாபனத்தை அதிலுள்ள இப்படிப்பட்ட சிலர் நடந்து கொள்ளும் காரியத்துக்காக மற்ற யோக்கியமானவர்கள் நன்றி விசுவாசத்தை மறந்து எதிரிகளுடன் சேர்ந்து கொள்ளுவதா என்று தான் கேட்கின்றோம்
இன்று தென்னிந்தியாவில் காங்கிரசில் ஏதோ சில கிறிஸ்தவர்கள் இருந்தாலும் சரி, சில முஸ்லிம்கள் இருந்தாலும் சரி, சில தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தாலும் சரி, சில ஜாதி இந்துக்கள் முதலிய நாடார்கள், வாணியச் செட்டியார்கள், நாயக்கர்கள், முதலியார்கள் போன்ற கூட்டத்தார்கள். இருந்தாலும் சரி, அவர்களில் பெரும்பாலோருக்கு காங்கிரசில் என்ன சலுகையின் பேரில் இடமும் யோக்கியதையும் விளம்பரமும் வாழ்க்கை ஊதியமும் கிடைத்து வருகின்றது என்பதை ஒவ்வொருவரையும் பரிசுத்தமான மனதுடன் உணர்ந்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.
மதிப்பு இல்லாமல், சுயமரியாதை இல்லாமல், மனிதத் தன்மை இல்லாமல், கெளரவ வாழ்க்கை வேலையில்லாமல் செய்யப்பட்டு பல நூற்றாண்டாக வாழ்ந்து வந்த மக்களின் விடுதலைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டு அதன்மூலம் கெளரவமும், பதவியும், மரியாதையும், வேலையும் வாழ்க்கை ஊதியமும் அடையக்கூடிய நிலை ஏற்பட்டால் அதற்கு அந்த சமூகத்திலேயே எவ்வளவு போட்டி இருக்கக் கூடும் என்பதை நாம் அளவிட்டுச் சொல்ல முடியுமா? இன்றைய நிலையில் இப்படிப்பட்ட போட்டியில் இழுக்கப்பட்ட ஜனங்களில் 100-க்கு ஒருவர் இருவரே வெற்றியடையக்கூடும் என்பதும், பாக்கி 98, 99 பேர்களுக்கு அந்த ஸ்தாபனத்தின் மீதும், அதன் நிர்வாகத்தில் உள்ள ஆட்கள் மீதும் அதிருப்தியும் விரோதமும் குறோதமும் பழிவாங்கும் சதிக்குணமும் இருந்து வருவதும் ஆச்சரியப்படத்தக்கதாகாது.
ஆதலால் அப்படிப்பட்டவர்களால் ஏற்படும் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் தலை கொடுத்து அதன் பயனை அடையத் தயாராய் தைரியத்துடன் இருந்தால்தான் அக்கட்சி நிலைக்கவும் அது யாருக்காக எந்த மக்களுக்காக ஏற்பட்டதோ அச்சமூகத்துக்கு அம்மக்களுக்கு பயனளிக்கவும் முடியுமே ஒழிய மற்றபடி ''கட்சி தோற்று விட்டது!” இளைத்து விட்டது என்றவுடன் எதிர் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு வையத் துடங்கினோமேயானால் யாதொரு பலனையும் அடைய முடியாது என்பதோடு, நம்மை நாமே இழிவு செய்து கொள்ளும் மூடவேலையில் - மானமற்ற வேலையில் இரங்கினோம் என்ற முடிவுதான் பெறக்கூடும்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 36
ஆதலால் நாம் செய்ய வேண்டிய வேலை
தோழர் ராமசாமி முதலியார் தோற்றதற்குக் காரணமும், தோழர் ஷண்முகம் தோற்றதற்குக் காரணமும் கட்சியில் உள்ளவர்களின் கொலை பாதகச் செயலுக்கு ஒப்பான வஞ்சகமும், சதியுமே காரணம் என்று ஜஸ்டிஸ் பத்திரிகை கூறுகின்றது
ஜஸ்டிஸ் பத்திரிகையானது இரு தோழர்களும் தோல்வியடைந்த
பிறகு இதைக் கூறுகின்றது. ஆனால் இதைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்கள் நியமிக்கப்படும் மூன்பே கட்சித் தலைவர்களுக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும் சிலர் ஆதாரத்தோடு விளக்கிக் காட்டினார்கள். அதைக் கேட்டு பொப்பிலி ராஜா அவர்கள் சிரித்தாராம்
அது மாத்திரமல்லாமல் தோழர் ஷண்முகம் அவர்களிடம் இச்சங்கதியைப் பலர் தெரிவித்து அவர் நம்பியிருந்த ஆட்களைப் பற்றிய நிலையை எடுத்துச் சொல்லி “அவர்களை நம்பாதீர்கள்” என்று சிலர் எடுத்துச் சொன்னார்களாம். அதைக்கேட்டு தோழர் ஷண்முகம் கோபித்து “அப்படியெல்லாம் பார்த்தால் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது" என்று சொன்னாராம்
அது மாத்திரமல்லாமல் தோழர் ஷண்முகத்துக்கு டெல்லிக்குத்
தந்தி கொடுத்து அந்தத் தொகுதியை மாற்றிக்கொள்ளச் சொல்லிப் பல தோழர்கள் கேட்டுக் கொண்டார்களாம். அதற்கும் தோழர் ஷண்முகம் அவர்கள் சென்னைக்கு வந்து சமாதானம் சொல்லுவதாய்த் தெரிவித்து விட்டு அலட்சியமாய் இருந்துவிட்டாராம்.
இவ்வளவும் தவிர தோழர் ஷண்முகம் மீது தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மாத்திரமல்லாமல் வடநாட்டுப் பார்ப்பனர்கள் அத்தனை
பேரும் பெறாமை கொண்டிருப்பதும், அவர் ஒரு பெரிய அந்தஸ்துக்கு வரப்போகிறார் என்று வயிறெரிந்து கொண்டு இருப்பதும் தோழர். ஷண்முகத்துக்குத் தெரியாததல்ல. இவ்வளவு இருக்கும் போது பாமர மக்களுக்குள் நெருங்கிப் பழகி அனுபோகமுள்ளவர்கள் வார்த்தைகளைத் தோழர் ஷண்முகம் அவர்கள் அலட்சியம் செய்துவிட்டு எதிரியை பஞ்சாங்கம் கேட்டுக் கொண்டிருந்ததே தோல்வியைப் பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்பதற்குத் தக்க ஆதாரமாகும்
தோழர் ஷண்முகம் அவர்கள் வியாபாரிகளிடத்தில் மெஜாரிட்டி ஓட்டு பெற்றிருந்தாலும் கூட லேவாதேவிக்காரர்களால் ஏமாற்றமடைந்து விட்டார் என்பது அவரது தேர்தலில் வேலை செய்த அத்தனை பேருக்கும் நன்றாய் தெரிந்த விஷயம்
லேவாதேவிக்காரர்கள் சார்பாக தென்னிந்தியாவிலேயே லேவாதேவிக்காரர் தலைவராகிய செட்டி நாட்டு அரசர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களையே மலை போல் நம்பி இருந்தார்.
237 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ராஜா சர் அவர்களுக்கு இருந்த நெருக்கடியான நிலையை உணர்ந்த எவரும் ராஜா சர் மீது இவ்வளவு பொருப்பும் இவ்வளவு நம்பிக்கையும் வைக்கச் சம்மதிக்கமாட்டார்கள்.
ஏனென்றால் ராஜா சர் அவர்கள் ஒரு பெரிய கேசில் சிக்கிக்கொண்டு. அவஸ்தைப்படுகிறார். அந்த கேசுக்கு ஜட்ஜி ஒரு பார்ப்பனர், வக்கீல்கள் பல பார்ப்பனர்கள், வீட்டு வேலை ஆள்கள் கேஸ்காரியம் பார்க்கும் நிர்வாக ஏஜண்டுகள் பார்ப்பனர்கள், அக்கேசுக்கு சாட்சியாக வரும் குட்டி
செட்டிமார்களின் வக்கீல்கள் காரியஸ்தர்கள் பார்ப்பனர்கள் செளகரியம்
போல் சர்டிபிகேட் கொடுக்கும் டாக்டர்கள் பார்ப்பனர்கள். ராஜாசர் அவர்களின். மந்திரிமார்கள் பார்ப்பனர்கள், அவர் ராஜா சர் ஆவதற்கு விஷமம் செய்யாமல் விட்டு விட்டவர்கள் பார்ப்பனர்கள். இவையெல்லாம் தவிர செட்டி
நாட்டில் ராஜாசர் மீது பொறாமை கொண்ட செட்டிமார்கள் பலர். ராஜா சர் மீது சில்லரைக் கேசுகள் பல. இவைகளோடு ராஜா சர் அவர்களுக்கு மோகூஷத்துக்கு வழிகாட்டும் புரோகிதர்களும் எப்படி பார்ப்பனர்களோ, அதே போல் அவரது வாழ்க்கையில் கெளதையைத் தேடிக்கொடுக்க அவருக்கு வழிகாட்டிகள், அல்லது ராஜா சர் அவர்களால் அக்காரியத்துக்கு நம்பி இருக்கப்பட்டவர்கள் பார்ப்பனர்கள். இந்த நிலையில் ராஜா சர் அவர்களால் ஷண்முகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவியாவது எதிர்பார்த்தால் எதிர்பார்த்தவர்கள். முட்டாள்களா அல்லது ராஜா சர் அவர்கள் சதி செய்தவர்களாவர்களா? என்பதை ஆலோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம். எனவே தோழர் ஷண்முகம் அவர்கள் செட்டி நாடு ராஜா சர் அண்ணாமலை அவர்களை நம்பியதால் மோசம் போய்விட்டார் என்று சொல்லப்படுவதில் இயற்கைக்கு முரண் ஒன்றும் காணோம். அதுபோலவே தோழர் ராமசாமி முதலியார் அவர்கள் தனது
தேர்தலுக்கு ராஜா சர் அண்ணாமலையார் குமாரர் குமாரராஜா முத்தையா அவர்களை மலை போல் நம்பினார். ஆனால் குமாரராஜா முத்தையா அவர்களுக்கு சென்னை மேயர் பதவி மோகம் இருந்தது யாவரும் அறிந்ததேயாகும். அதற்கு தோழர் டாக்டர் நடேச முதலியாரும் ஆசைப்பட்டார். இந்தப் போட்டி பார்ப்பனர்களுக்கு ஒரு நல்ல வேட்டையாகி விட்டது. மேயர் பதவியை விலை பேசி தோழர் சத்தியமூர்த்தி அய்யர் தேர்தல் செலவு முழுவதையும் தோழர் குமாரராஜா தலையிலேயே போடப் பார்த்தார்களாம். இந்த நெருக்கடியில் அகப்பட்ட குமாரராஜா அவர்கள் பகுதி செலவுக்கு ஒப்புக் கொண்டு இரண்டொரு
கார் வாங்கிக் கொடுத்து தன் செலவில் தன் தயவில் கார்ப்பரேஷனுக்கு கவுன்சிலர்களாக வந்த 4,5 கனவான்களை மாத்திரம் தங்கள் தங்கள். வார்டுகளில் தோழர் சத்தியமூர்த்திக்கு அந்தரங்கத்தில் உதவி செய்யச் செய்வதாக ஒப்புக் கொண்டார்களாம். இது உண்மையாய் இருந்தால் இதற்கு யாரை நோவது?
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 238
ராஜா சர். அவர்களுக்கு கேசு அனுகூலமாவதும் குமாரராஜாவுக்கு மேயர் பதவி கிடைப்பதும் முக்கியமான காரியமா? அல்லது சர். ஷண்முகத்துக்கும், திவான்பகதூர் ராமசாமி முதலியாருக்கும் இந்திய சட்ட சபை மெம்பர் பதவி கிடைப்பது முக்கியமா? என்பதை சர். அண்ணாமலை, குமாரராஜா இவர்கள் நிலையில் இருந்து யோசனை செய்து பார்க்க வேண்டுமாய் சர். ஷண்முகம், ராமசாமி முதலியார். ஆகியவர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
இந்த லட்சணத்தில் தோழர் ராமசாமி முதலியார் அவர்கள். ஜஸ்டிஸ் கட்சி மீட்டிங் தேர்தலில் குமாரராஜாவுக்கு எதிரிடையாக டாக்டர் நடேச முதலியாருக்கு ஓட்டுச் செய்து விட்டாராம். அதோடு பார்ப்பனர்கள் குமாரராஜாவுக்கு விரோதமாக மேயராய் நிறுத்துவதற்குத் தோழர் கிரிதாரிதாஸ் என்கின்ற ஒரு சேட்டை கையில் வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்களாம். அந்தச் சேட்டும் ஒரு பிரபுவானதால் அவர் 30, 40 ஆயிரம் ரூபாய் வரை மேயர் பதவிக்கு செலவு செய்யக் கூடும் என்று பார்ப்பனர்கள் கட்டி விட்டுவிட்டார்களாம் பட்டணத்து வக்கீல்கள் குமாரராஜாவுக்கு 60.12. கள் போல் இருந்து தோழர் ராமசாமி முதலியாருடன் குமாரராஜாவை பேசுவதற்கு கூட நேரம் இல்லாமல் செய்துவிட்டார்களாம். இந்த நிலையில் அவர்கள் மீது இரண்டு எலக்ஷன் பொருப்புகளையும் போடுவது என்றால் இப்படிப்பட்ட தோல்வியைத் தவிர வேறு என்ன முடிவு எதிர்பார்க்கக்கூடும் என்று கேட்டுவிட்டு வேறு விஷயத்திற்குச் செல்லுவோம்
பார்ப்பனர்கள் யாரையாவது முண்னேறவிட்டிருக்கிறார்களா?
நமது பார்ப்பனோத்தமர்கள் தென்னிந்தியாவில் பொதுவாகச் சரித்திரம் தோன்றிய காலம் முதல் இதுவரை எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது (காந்தியாரைத் தவிர) முன்னேற விட்டிருக்கிறார்களா என்பதை கவனித்துப் பார்த்தால், தோழர் ஷண்முகம் அவர்களின் காலைத் தட்டி விட்டது ஒரு ஆச்சரியமான காரியமாகாது. (காந்தியாரும் பார்ப்பனர் கைக்குரங்காயிருந்த காரணத்தினாலல்லாது சுதந்திர புத்தியோடு இருந்ததினாலல்ல என்பது எவருக்கும் தெரிந்ததாகும்) தோழர்கள் அனந்தாச்சாரியார், மாதவராவ், ராமய்யங்கார், ரங்கையங்கார், ரகுநாதராவ், கிருஷ்ணசாமி ஐயர், மணி ஐயர், சிவசாமி ஐயர், சீனிவாச சாஸ்திரி,
சி.பி. ராமசாமி, அல்லாடி கிருஷ்ணசாமி, வெங்கிட்டராம சாஸ்திரி, விஜயராகவாச்சாரியார் என்பவர்கள் போன்ற பல பொதுவாழ்வு ஆட்களும் ராமச்சந்திரராவ், வி.டி. கிருஷ்ணமாச்சாரி, ராகவையர், டி விஜயராகவாச்சாரி, கோபால்சாமி அய்யங்கார் போன்ற சர்க்கார் சம்பள உத்தியோக ஆட்களுமாய் சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னேறி பெருத்த பதவி, பெருத்த பட்டம், பெருத்த பணம் அவர்களது பிள்ளை
2399 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
குட்டிகள் சுற்றத்தார் ஆகியவர்களுக்கு நல்ல நிலையில் வாழ்க்கை ஆகியவை அடைந்து வந்திருக்கிறார்கள் - வருகிறார்கள் என்பது கண்கூடு.
ஆனால் இந்த நிலையில் நமக்குத் தெரிந்த இந்த ஐம்பது வருஷகாலமாய் எந்தப் பார்ப்பனரல்லாதாராவது இருந்திருக்கிறார்களா, இருக்கிறார்களா என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்களில் சிறந்தவர்களாகிய சர். சங்கர நாயர், கேசவபிள்ளை, T.M. நாயர், தியாகராஜ செட்டியார் முதலியவர்கள் முடிவில் என்ன கதி அடைந்தார்கள்? தேசத் துரோகியானார்கள். தோழர் தியாகராய செட்டியார் குடும்பத்துக்கு இன்று சோற்றுக்கே திண்டாட்டம் என்று சொல்லப்படுகிறது. TM. நாயர் அவர்கள், அழுவாரற்ற பிணமாய்ச் செத்தார், கேசவபிள்ளை அவர்கள் கடைசி காலத்தில் கெட்ட பேர் வாங்கினவர் என்று சொல்லப்பட்டார், சங்கரநாயர் அவர்கள் எவ்வளவு பெரிய “தேசீயவாதி” எவ்வளவு பெரிய 'சீர்திருத்தவாதி: எவ்வளவு பெரிய மூளை சக்தி உடையவர். கடைசியில் ஒரு சாதாரண மனிதராகவே செத்தார். V. கிருஷ்ணசாமி அய்யருக்கு ஞாபகச்சிலை இருக்கிறது. சங்கர நாயருக்கு அவரைப் பற்றி நினைக்க ஒரு காரியத்தையும் காணவில்லை
பார்ப்பனரல்லாதாரில் சர்வ சக்தியும் உடையவர்கள் இருந்தாலும் அவர்கள் முன்னுக்கு வருவதோ பிரபலம் பெறுவதோ என்கின்ற காரியத்திற்கு இந்தப் பார்ப்பனர்கள் ஒருவரை கூட விட்டதே இல்லை, விடுவதும் இல்லை.
ஆதலால் அவர்கள் சர்.ஷண்முகத்தையும், ராமசாமி முதலியாரையும் காலை வாரிவிட்டதில் அதிசயம் இல்லை. இது முதலாவது காரியமுமல்ல என்று சொல்லுவோம். இன்றைய தினம் பார்ப்பனர்களுக்கு பின் தாளம் போடும் தோழர். 0. ரெட்டி எவ்வளவு கெட்டிக்காரர். அவருடைய கதி இன்று பார்ப்பனர்களுக்கு விளக்கு பிடிக்கும்படியாக ஆகிவிட்டது. தோழர் சுப்பராயன் அவர்கள் பணம், புத்தி, தகுதி எல்லாம் இருந்தும் அவரும் இந்தப் பார்ப்பனர்களாலேயே கால் வாரிவிடப்பட்டு பார்ப்பனதாசராகி அவரும் சி.ஆர். ரெட்டியும் இருவரும் சேர்ந்து சர். ஷண்முகத்துக்கு தங்களாலான கெடுதியைச் செய்து தோற்கடிப்பதற்கு உதவி செய்ய வேண்டியவர்களானார்கள் என்றால் இன்னும் இதற்கு யாரை உதாரணம் சொல்லுவது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்த தேர்தல்கள் விஷயத்தில் சென்னை ஓட்டர்களில் பார்ப்பன ஓட்டர்கள் 4000 பேர்கள் என்றால் அதில் சுமார் 2500 க்கு அதிகமாக பார்ப்பன ஓட்டர்கள். சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கும் இந்த 2500 உத்தியோகப் பார்ப்பனர்கள் ஓட்டில் ஒன்று இரண்டு ஓட்டுகளாவது சத்தியமூர்த்திக்கு விழுகாமல் இருந்திருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். அவ்வளவு உத்தியோகஸ்தர்களும் சர்க்கார் மனிதர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு சர்க்கார் ஊதியம் பெற்றுக் கொண்டு
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 340
காங்கிரசுக்கு என்று சொல்லிக் கொண்டு சத்தியமூர்த்திக்கே தான் ஓட்டு செய்திருக்கிறார்களே தவிர அவருக்கு விரோதமாக யாரும் செய்துவிடவில்லை. ஆகவே பார்ப்பனர்கள் வகுப்பு வாதத்தால் வெற்றி பெற்றார்கள் பார்ப்பனரல்லாதார் அது இல்லாததால் தோல்வி பெற்றார்கள் என்றுதான். சொல்ல வேண்டும்
இவைகள் எல்லாம் எப்படியோ போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில் நாம் இரண்டொரு விஷயம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
“ஜஸ்டிஸ் கட்சி தோற்றதற்கு காரணம் அதற்கு இந்தியா முழுவதையும் பொருத்த ஒரு வேலைத் திட்டமில்லை. ஆதலால் தோற்றுவிட்டது'' என்று மெயில் பத்திரிகை எழுதி இருக்கிறது. மற்றப் பார்ப்பனப் பத்திரிகைகள் “ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு வாதக் கட்சி ஆதலால் தோற்றுவிட்டது” என்றும் “சர்க்கார் தாசர் கட்சி அதனால் தோற்றுவிட்டது” என்றும் சொல்லுகின்றன. பாமர ஜனங்களிடையும் இப்படியே பிரசாரங்கள் நடந்திருக்கின்றன. இதை எப்போதாவது ஜஸ்டிஸ் கட்சி மறுத்துப் பிரசாரம் செய்திருக்கின்றதா என்று கேட்கின்றோம்.
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 7-6-34 ௨ யில் சென்னையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக மேற்கண்ட மாதிரியான பிரசாரம் பார்ப்பனர்களாலும்,
அவர்கள் பத்திரிகைகளாலும், அவர்களது கூலிகளாலும் பலமாய் நடந்து வருகின்றது என்றும் அதற்கு சமாதானம் சொல்லி ஆகாவிட்டால் ஜஸ்டிஸ் கட்சி அடுத்த தேர்தலில் கண்டிப்பாய் தோற்றுவிடும் என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறார். (அதை இன்று 15-ம் பக்கத்தில் அப்படியே பிரசரித்திருக்கிறோம்*) அதை யார் லக்ஷியம் செய்தார்கள். 4, 5 வருஷ காலமாய் தலைவர் ஸ்தானத்துக்கு போட்டி, ஒருவருக்கொருவர் அபிப்பிராய பேதம் முதலியவைகளால் பிரசாரமே இல்லாமல் இருந்தால் நம் பாமரமக்கள் எதிரிகளின் புரட்டுகளை எப்படி அறியக் கூடும்?
ஜஸ்டிஸ் பத்திரிகை (ஒன்றே ஒன்று) ஆங்கிலத்தில் நடை பெறுகின்றது எதிரிகள் பத்திரிகைகள் அனேகம் தமிழிலும் இங்கிலீசிலும் நடைபெருகின்றன.
பாமர மக்களுக்கோ தமிழ் கூடத் தெரியாது. இந்த நிலையில் எவ்வளவு சத்தியவானாய் இருந்தாலும், பலனளிக்கக் கூடியவனாய் இருந்தாலும் எப்படி வெற்றி பெற முடியும்? பூமிக்குள் இருக்கும் புதையலின் மீது யாராவது கடன் கொடுப்பார்களா? அது போல் நமது கொள்கைகள், நாம் செய்த வேலைகள், அதனால் ஏற்பட்ட பலன்கள் பாமர ஜனங்களுக்கு அறிவிக்கப்படாமல் அவர்களது ஓட்டுகளைப் பெற நாம் எப்படி அருகதை உடையவர்கள் ஆவோம் என்பது நமக்கு விளங்கவில்லை.
24 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தேர்தல் 2 மாதம் இருக்கும் போது கூட கட்சிக்கு தோழர். ஈ.வெ.ராமசாமியால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் ஒத்திப் போடப்பட்டு விட்டது என்றால், கட்சியின் பேரால் கெளரதை, உத்தியோகம், ஊதியம் பெற்று வாழுபவர்கள் பரிகாசம் செய்தார்கள் என்றால் ஓட்டுப் போட்டதற்காக பாமர மக்கள் மீது குற்றம் சொல்லுவதில் பயன் என்ன என்று கேட்கின்றோம். நம்மிடம் எதிரிகள் புரட்டை கண்டிக்கவோ, வெளியாக்கவோ ஆயுதம் இல்லாமல் நிராயுத பாணிகளாய் இருப்பதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டால் அது அவர்கள் குற்றமாகுமா? என்று கேட்கின்றோம். சென்றதைப் பற்றி கவலை வேண்டாம்
அடுத்த தேர்தல்களில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் ஜஸ்டிஸ் பேப்பரையும், ராஜா சர்.களையும், குமாரராஜாக்களையும், மந்திரிமார்
களையும் நம்பினால் - அவர்களை எதிர்பார்த்தால் அதோ கதிதான்.
தோழர்கள் முனிசாமி நாயுடு அவர்களாகட்டும், மற்ற இரண்டாவது மூன்றாவது மந்திரிகளாகட்டும், பரம்பரை ராஜ பட்டம் பெற்ற ராஜா
சர். ஆகட்டும், குமாரராஜா ஆகட்டும் இவர்களும் இவர் போன்றவர்களும் கட்சி பிரசாரத்துக்கு நாளது வரை என்ன செய்தார்கள் என்று யோசித்துப் பார்க்கட்டும்
இவர்களது சம்பளங்களும் கட்சிச் செல்வாக்கால் - கட்சியைக்
காட்டிக் கொடுத்ததால் வெற்றி பெற்ற கேசுகளின் வருமானங்களும் எவ்வளவு லட்ச ரூபாய்களாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கட்டும். இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் பேர்களால் ஏற்பட்ட கவுரவம், பட்டம், பதவி, செல்வம் அல்லவா? அப்படிப்பட்ட பட்டம், பதவி, அதிகாரம், பணம் ஆகியவை அந்த சமூக பாமர மக்கள் உண்மை அறிவதற்காவது பயன்பட வேண்டாமா என்று எதிர்பார்க்க நமக்கு உரிமை இல்லையா என்று கேட்கின்றோம் போனது போகட்டும் இனியாவது ஜஸ்டிஸ் பத்திரிகையை வாரப் பத்திரிகையாகவாவது ஆக்கிவிட்டு தெலுங்கிலும், தமிழிலும், மலையாளத்திலும் மூன்று காலணா தினசரிப் பத்திரிகைகளும் 25 ஜில்லாவுக்கும் பிரசாரகர்களை ஏற்படுத்தி கட்சிக் கொள்கையை திட்டங்களையும் பார்ப்பனர்களின் சூட்சிகளையும் காங்கிரசின் புரட்டுகளையும் வெளியாக்கும் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்தால், இப்பொழுது பார்ப்பனர்கள் நிறுத்திய மாதிரிகூட அல்லாமல் நாம் இன்னமும் அதைவிட மோசமான ஆட்களை தேர்தலுக்கு நிருத்தினாலும் இன்று பார்ப்பனர்கள் அடைந்த வெற்றி போல் நாம் அடையலாம்
இந்தக் காரியங்களுக்கு பத்திரிகைகளுக்கு மாத்திரம் குறைந்தது மாதம்
10 ஆயிரம் ரூபாய் வேண்டும். 5 மந்திரிமார்களுக்கு மாதம் ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் கொடுத்தால் போதும். ஜஸ்டிஸ் கட்சி தலைமை
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 242
காரியாலயத்தை சென்னையை விட்டு கிளப்பி விட வேண்டும். திருச்சியிலோ, கோவையிலோ அல்லது வேறு தகுதியான இடத்திலோ வைக்க வேண்டும்.
ஜில்லா பிரசார சங்கம் தஞ்சை ஜில்லாவில் வைத்து அதற்காக மாதம் 4000 ரூபாய் வீதம் ஒரு வருஷத்துக்கு 50000 ரூபாய் செட்டி நாட்டு ராஜாவும், குமாரராஜாவும் கொடுக்க வேண்டும். தோழர் ஈ.வெ. ராமசாமி சமர்ப்பித்த திட்டத்தை கட்சி திட்டமாக ஏற்றுக் கொண்டு இன்றைய அதிகாரத்தில் எவ்வளவுசெய்யக்கூடுமோஅவ்வளவும் மக்களுக்கு செய்து காட்ட வேண்டும்
இந்தக் காரியங்கள் செய்யாவிட்டால் இந்த தேர்தலில் புகையிலை வழங்கிய பார்ப்பனர்கள் சென்னை சட்டசபை தேர்தலுக்கு சுருட்டு வழங்கத் தகுதியுடையவர்களாகி விடுவார்கள் என்பது உறுதி. ஆகையால் இத் தேர்தல் முடிவைப் பற்றி யாரும் கலங்க வேண்டியதில்லை. வாலிபர்கள் மனம் தளர வேண்டியதில்லை. வகுப்பு வாதம் என்று எதிரி சொல்வதைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை
வகுப்பு கஷ்டங்களை ஒழிப்பதுதான் நமது கொள்கை. வகுப்புகள் உள்ளவரைவகுப்புவாதம்பேசித்தான்எல்லாவகுப்புக்கும் நீதி வழங்க முடியும். எனவே பார்ப்பனரல்லாத வாலிபர்களே! உங்கள் வீரத்தையும் ஊக்கத்தையும் இந்த தோல்வி என்னும் உலையில் வைத்துக் காய்ச்சி தட்டி தீட்டிக் கூர்மையாக்குங்கள். வகுப்பு வாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள். இத் தோல்வியால் ஒன்றும் முழுகிப் போவதில்லை. அதை வரவேற்றுக் கொண்டு பார்ப்பனர்கள் நம்மைத் தட்டி எழுப்பி விட்டதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள் எல்லாம் நன்மைக்கே என்றெண்ணுங்கள். எல்லாவற்றையும் நன்மைக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள். ஜெயம்! ஜெயம்!! ஜெயம்!!!
குறிப்பு: பொப்பிலி அரசர் வீட்டில் கூடிய ஜஸ்டிஸ் பிரமுகர்கள் கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் செய்த எச்சரிக்கை உரை 10.6.1934
புரட்சி இதழில் வெளிவந்தது. மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
பகுத்தறிவு - தலையங்கம் - 18.11.1934
* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி
6 மாதத்திற்கு முன் செய்த எச்சமிக்கை தலைவரவர்களே! தோழர்களே! | தலைவரவர்கள் தெரிவித்த விஷயங்கள் இயக்கநலனைக் கருதி அவயம் கவனிக்கத் தக்கதாகும். எல்லா விஷயத்தையும் விட நமது கொள்கை என்ன? இட்டம் என்ன? என்பதைப் பொது
243 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஜனங்கள் அறியும்படி செய்ய வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்றால் மாதம் 4000 ரூ. சம்பளத்துக்கும் மந்திரி பதவிக்கும் ஊர் இரிக்கச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் என்று இனியும் பாமர ஜனங்கள் சொல்லும்படி நாம் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. காங்கிரசுக்காரர்கள் என்பவர்களின் உள் எண்ணமும், நாணையமும் எப்படியிருந்தாலும் அவர்கள் ஏதோ இரண்டொரு கொள்கைகளைச் சொல்லி, அதைப் பெரிதாக்கிக் காட்டி அதற்காக அடியும், உதையும், நஷ்டமும், கஷ்டமும், சிறைவாசமும் பெற்றவர்கள் என்கின்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு இப்பொழுது இடீரென்று போட்டி போடுவதென்றால் அதுவும் ஒரு விளக்கமான - யாவருக்கும் தெரியும்படியான ஒரு கொள்கையும், இட்டமும் இல்லாமல் போட்டி போடுவதென்றால் சுலபமான காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். கட்சிக்கு கொள்கை இருந்தாலும் இல்லா விட்டாலும் பணமும், “அதிகாரமும் செல்வாக்கும் இருந்தால் எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம்” என்கின்ற தைரியம் சிலருக்கு உண்டு என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அந்த தைரியம் தனிப்பட்டவர்களின் நன்மைக்குப் பயன்படுமே தவிர ஒரு இயக்கத்துக்கு - பொது ஜன நன்மைக்குப் பயன்படாது. சமீப காலமாக ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் அதிகாரத்திலும், பதவியிலும் இருக்கிறவர்கள் கட்சி கொள்கை விஷயத்தில் போதிய லக்ஷியம் எடுத்துக் கொள்ளவில்லை யென்றும் தங்கள் சுயநலத்தை விட மற்றொன்றையும் சிறிதும் கவனிக்க வில்லையென்றும் கட்சிக் கொள்கைக்கு விரோதமாகக் கூட பல காரியங்கள் செய்யப்பட்டுவிட்டன என்றும் கட்சி ஜனங்களுக்குள்ளாகவே சொல்லிக் கொள்ளப்படுகறதுடன் மற்றும் பலவிதமான புகார்களும் சொல்லிக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்படிச் சொல்லிக் கொள்ளப்படுவதற்கும் புகார்களுக்கும் ஆதாரமில்லை என்று கூறலாம். ஆதாரமில்லை என்பதைப் பொது ஜனங்களுக்கு மெய்ப்பிக்க வேண்டாமா? மற்றும் நமது எதிரிகள். இப்படிப்பட்ட விஷயங்களைத்தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாமா? நமது சொந்த செல்வத்தையும் செல்வாக்கையுமே எல்லாவற்றிற்குமே சமாதானமாக ஆக்கிக் கொள்ளலாம் என்று சிலர் நினைத்தால் கட்சியில் உள்ள செல்வமும், செல்வாக்கும் இல்லாத மக்களின் கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு ஒரு கொள்கையோ, இவர்கள் மீது கூறப்படும் புகார்களுக்கும்
குற்றங்களுக்கும் பதில் கூறுவதற்குத் தகுந்த உண்மையான ஆதாரங்களோ இல்லாவிட்டால் இவர்களுக்கெல்லாம் கட்சியில் இடமோ கட்சியின் பேரால் வெற்றியோ எப்படி கிடைக்கும்?
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 244
ஜஸ்டிஸ் கட்சி என்றால் ஜமின்தார்கள், முதலாளிமார்கள் கட்சியே தவிர பொது மக்கள் கட்சியல்ல என்று சொல்லப்படுவது இப்போது மிகமிக சகஜமாகவிட்டது. இதை நாம் பொய்யாக்கி காட்டாவிட்டால் கட்சியில் உள்ள உண்மை உழைப்பாளிகளுக்கு இதைவிட வேறு அவமானம் வேண்டியதில்லை.
ஆதலால் தகுந்த வேலைத் இட்டமுறைகள் ஏற்படுத்தி பாமர ஜனங்களுக்கு நன்றாய் பிரசாரம் செய்து நமது எதிரிகளின் விஷமப்பிரசாரத்தை தகர்ப்பதுடன் ஏழைப் பொதுமக்களுக்கு பயன்படத்தக்க முறையில் உழைத்தாக வேண்டும். வெறும் ஸ்தாபனங்கள் பெரிதும் சுயநலக்காரர்களின் விளம்பரத்துக்கு ஒரு சாதனமாகும். உழைப்பும் வேலை செய்து காட்டு வதுமேதான் நமது எதிரிகளைத் தோற்கடித்து நமக்கு வெற்றியைக் கொடுக்கும்.
இந்திய சட்டசபைத் தேர்தல் அடுத்தபடியாக இந்திய சட்டசபைத் தேர்தலைப்பற்றி பேசப் பட்டது. இந்த சமயத்தில் இது ஒரு முக்கியமான விஷயம் என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். நமது கட்சிக்கு ஒரு கெட்ட பெயருண்டு. அதைப் பொய் என்று மறுக்கவும் என்னிடம் போதிய ஆகாரமில்லை. என்ன வென்றால் “ஜஸ்டிஸ் கட்சிக்காரருடைய நாட்டமெல்லாம் மாகாண சட்ட சபையிலேயே ஒழிய, இந்திய சட்டசபையைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை" என்று சொல்லப்படுவதாகும். இதற்கு என்ன விதமான உள் எண்ணம் கற்பிக்கப்படுநிறது என்றால் “மாகாண கவுன்சிலில் இருந்தால் மந்திரி வேலை பெறலாம் அல்லது மந்திரிகளுக்குத் துணைபுரிந்து நமது வாழ்க்கை நலத்துக்கு ஏதாவது பயன் அடையலாம் என்று கருதி இப்படி அலக்ஷியமாய் இருப்பதாக உள் எண்ணம் கற்பிக்கப்படுநெது. இந்தப்படி சொல்லுபவர்களுக்கு அனு கூலமாகவே சம்பவங்களும் இருந்து வருகின்றன. இதன் பயனாகவே தென்னிந்தியாவைப் பற்றியும், தென்னிந்திய மக்களைப் பற்றியும் வடஇந்தியர்கள் கேவலமாய் மதக்கும்படியும், தென்னிந்திய பார்ப்பனர்கள்தான் தென்னிந்திய பொது நல ஊழியர்கள் என்றும், அவர்களே தேச பக்தர்கள் என்றும் கருதும்படி செய்யப்பட்டதுடன் பார்ப்பனரல்லாதார் என்றால் தேசத் துரோகிகள் என்றும் அன்னிய ஆட்சிக்கும் அதன் கொடுங்கோல் தன்மை என்பதற்கும் துணைபுரிந்து சுயநலம் தேடுவறவர்கள் என்றும் கருதும்படியாக நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பலரால் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. பல காரணங்களால் சிலர் உழைத்து வந்ததின் பயனாக நம்மவர்களில் சிலர் சிறப்பாகவும்
249 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
குறிப்பாகவும் தோழர்கள் ஆர். கே.ஷண்முகம், ஏ.இராமசாமி ஆஇயவர்கள் இந்திய சட்டசபைக்கு போக நேர்ந்ததில் அவர்களுக்கும், மற்றும் தென்னிந்திய பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எவ்வளவு அந்தஸ்தும் பெருமையும் ஏற்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். தோற்றுப் போனவர்கள் கூப்பாடு போடுவதைப் பற்றியும் அப்படிப் பட்டவர்கள் அழுவதைப் பற்றியும், நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. அது போலவே இன்னமும் சிலர் இந்திய சட்ட சபைக்கு நம்மவர்கள் போக நேர்ந்தால் தேசத்துரோகிகள் யார்ர தேசிய வியாபாரத்தில் வயிறு வளர்ப்பவர்கள் யார்? என்பதை உலகம் அறியச் செய்துவிடலாம். தோழர் ஷண்முகத்தைப் போலவே எல்லாத் தொகுதிக்கும் ஆள் இடைக்குமா என்று கேட்பீர்கள். அதைப் பற்றி எனக்கு லக்ஷியமில்லை. நமது நன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் பிறவி எதிரிகளாய் இருப்பவர்களை நமது பிரதிநிதிகளாய் தெரிந்தெடுத்து வருகிறோம் என்இன்ற இழிவும், முட்டாள்தனமுமாவது நமக்கு இல்லாமல் போகுமல்லவா? அதோடு மாத்திரமல்லாமல் நமது எதிரிகள் இந்திய சட்டசபைக்குப் போய் நமக்குக் கெடுதி செய்யும் காரியமாவது நிறுத்தப்பட்டதாக ஆகுமார இல்லையா? தீண்டாமை விலக்குக்கு விரோதமாக இன்று இந்திய சட்டசபையில் இருப்பவர்கள் யார் என்று யோசித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாத கட்சிக்கு நாங்கள்தான் தூண்கள் என்று பெருமை பேசி பயன் பெற்றுவரும் தஞ்சை - இருச்சி ஜில்லா தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்ற பச்சை வர்ணாச்சிரம வாதியா? அல்லவா? என்று கேட்டன்றேன். இப்படிப்பட்ட நிலையில் இனியும் நமக்கு அப்படிப்பட்ட இழிவும், சங்கடமும் வந்து சேராமல் இருப்பதற்கு நாம் அந்த தேர்தலில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். அத்தொகுதிக்கு கட்சியின் பேரால் பணம் வசூலித்துக் கொடுத்தாவது தக்க அபேக்ஷகர்களை நாம் தெரிந்தெடுக்கச் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் முன்போல் இனி அலக்ஷியமாய் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்திக்கூற ஆசைப்படுகின்றேன்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 4௦
சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
தோழர் சத்தியமூர்த்தி: அவர்கள் தேர்தலில் வெற்றியடைந்த ஆனந்த லாகியியில் மெய் மறந்து பேசிய பேச்சு.
“எனக்குள் சில சமயங்களில் பிராமணர் - பிராமணரல்லாதார். என்கின்ற உணர்ச்சி வந்தது. ஆனால் இப்போது அது மறந்து போயிற்று.”
“பிராமணரல்லாதார் எனக்குச் செய்த இந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.”
“என் சரீரத் தோலை உரித்து பிராமணரல்லாதாருக்கு செருப்பாய்
தைத்துப் போட்டாலும் கூட அது சரியான நன்றியாகாது'' என்று பேசி யிருக்கிறார். லாகிரி தீர்ந்தால் என்ன பேசுவார் என்று எழுத வேண்டுமா?
பகுத்தறிவு - செய்திக் குறிப்பு - 18.11.1934
247 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர். ஜே.என்.இராமநாதன்
பார்ப்பனரல்லாத மக்களின் நலத்திற்காக உழைத்து வந்த தோழர் ஜே.என். இராமநாதன் அவர்கள் 15.11.34 - ல் சென்னையில் மரணமடைந்தாரென்பதையறிந்து வருந்துகிறோம். நமது அனுதாபத்தை அவர் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கிறேம்.
பகுத்தறிவு - இரங்கல் செய்தி - 18.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 248
குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
நமது நாட்டு மக்களில் 100-க்கு 95 பேர் சுகாதாரத்தின் பயனை: யறியாதவர்களாயும் அதையறிந்து கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள். காரணம் படிப்பின்மையும், பழக்க வழக்கமுமேயாகும். இதையனுசரித்தே மேல் நாட்டார் நம்மை சுகாதாரமற்றவர்கள் என்றும், நாகரிகமற்றவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நம் நாட்டிலும் மேல் ஜாதிக்காரர்கள் என்போர் தங்களை நாகரிகஸ்தர் என்றும், சுகாதாரமுடையவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, மற்றவர்களை சுகாதாரமற்றவர்கள் என்றும் நாகரிகமற்றவர்கள் என்றும் தாழ்ந்த ஜாதியார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுகாதாரமின்மையாலேயே ஒரு கூட்டத்தாரைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று காரணமும் தத்துவார்த்தமும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுகாதாரத்தைக் கைக் கொள்ளாத தாழ்த்தப்பட்ட மக்களை சுகாதாரத்தைக் கைக் கொள்ள முடியாமல் கிணறு, குளம், நல்ல வாழ்க்கை முதலியவைகளை கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் தடைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது
நம்மில் அத்தகைய இழிவும் தடையும் கற்பிக்கும் மக்களின் கெட்ட எண்ணத்தையும், அதன் பயனாய் சுகாதார வசதியை அனுபவிக்க முடியாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களின். பரிதாப நிலைமையையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் “சுகாதாரம்” என்பதற்கு ஏற்பட்டுள்ள பெரும் தடையை
ஒழிக்க சுகாதார இலாகா அதிகாரிகளும், அரசாங்கமும் தக்க சிரத்தை
எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்
மேல் நாட்டினர் தங்கள் வாழ்க்கையில் சுகாதாரத்தை அடிப் படையாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் உடை, உணவு, வீடு, வாசல், பானம், நல்ல காற்று, சுத்தமான தேகம் ஆகியவைகளில் கண்ணுங்கருத்துமா யிருப்பார்கள். எனது ஐரோப்பா யாத்திரையில் லண்டனிலிருந்து 270 மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு தொழிலாளி வீட்டில் ஒரு நாள் தங்கினேன். நான். தங்கியிருந்த வீட்டில் ஒரு சிறுபையன் இருந்தான். அவனுடைய அம்மாளும் அக்காளும் ஆக மூவரும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பையன் வெளியில் ஓடினான். பிறகு
249 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வெகுநேரம் வரவில்லை. பிறகு பையன் எங்கே என்று நான் கேட்டேன். உடனே அவன் அக்காள் வெளியில் சென்று அவனைத் தேடி பிடித்து
வந்தாள். பேசிக் கொண்டிருக்க இருக்கத் திடீரென்று வெளியில் போன. காரணம் என்ன என்று கேட்டதற்கு “நான் நல்ல காற்று உட்கொள்ள வெளியில் போய் உலாவி வந்தேன்” என்று பதில் சொன்னான். இது அவன் ஒரு சாக்குக்காக சொல்லி இருக்கலாம் என்றாலும் 5 வயது பையன் நல்ல காற்று கெட்ட காற்று என்பதை உணர்ந்திருக்கிறான். என்பது கவனிக்கத்தக்கதாகும். எந்த வேலையிருந்தாலும், காலா காலங்களில் சுகாதாரத்தைக் கைகொள்ளுவதில் மேல் நாட்டில் சிறுவர்கள்.
முதல் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பது இதனால் தெரிகிறது நம்நாட்டுப் படிப்பில் சுகாதார வாசமே இல்லை. நம்நாட்டிற்கு ஆண் பெண் அடங்கலும் அனேகர் சுகாதாரம் இன்னதென்பதையறியாமலும், கொஞ்ச நஞ்சம் கேள்விப் பட்டாலும் அதை பொருட்படுத்தாமலுமே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வீதிகளில் பெரும் அசுத்தம் செய்கின்றனர். கொஞ்சம் படித்த பெண்களும் கூட தங்கள் வீடு வாசல்களைச் சுகாதார முறைப்படி சுத்தமாய் வைத்துக் கொள்வதில்லை.
பொதுவாகவே மேல் நாட்டினர் தங்கள் வாழ்க்கையில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றபடி நடந்து வருவதனால் வியாதிகளின் தொல்லைக்காளாகாமலும், சுகஜீவிகளாகவும் உலகில் அதிக நாள் வாழ்கிறார்கள். நம் நாட்டு ஜனங்களோ, வியாதி ஏற்படுவதும், மரணம் சம்பவிப்பதும் தங்கள் தங்கள் தலை விதியென்றும், அவரவர் கேட்டு வந்த வரம் என்றும் நினைத்துக் கொண்டு, தங்கள் அஜாக்கிரதையினாலும் சுகாதாரமின்மையினாலும் ஏற்படும் வியாதிகட்குத் தகுந்த வைத்திய சிகிச்சையும் செய்யாமல் கடவுளுக்குக் காணிக்கை எடுத்து முடிந்து வைப்பதும், விபூதி மந்திரித்துப் போடுவதும் இன்னும் பல வேண்டுதலைச் செய்து கொள்ளுவதும் கடைசியில் மரணம் ஏற்பட்டால் அவ்வளவு தான் அவனுக்கு ஆயுசு என்று முடிவு கட்டியும் விடுகிறார்கள். அஜீரணத்தினால். ஏற்படும் காலரா வியாதியை மகாமாரி என்று கொண்டாடுகிறார்கள். அதோடு நம் நாட்டில் பண்டிகைகளும், உற்சவங்களும் அநேகம் அதைப் பார்க்கச் செல்லும் ஜனக் கூட்டமும் ஏராளம். உற்சவம் நடக்குமிடங்களில் தான் வியாதிகள் உற்பத்தியாகின்றன. பிறகு அவைகள் அங்கிருந்து பல ஜனங்களின் மூலம் பல ஊர்களுக்குப் பரவுகிறது. இவ்வித மூடநம்பிக்கையும் அறியாமையும் உடைய ஜனங்கள் வியாதி வராமல் தடுக்க சுகாதாரத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றால் அது இம்மாதிரி ஒரு நாள் இரண்டு நாளில் நடக்கும் கொண்டாட்டத்தினால் கொஞ்சமும் பலனளிக்காது. இந்தக் கொண்டாட்டத்தோடு ச்காதாரப் பிரசாரம் பூர்த்தியடைந்து விட்டதெனக்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 50
கருதக் கூடாது. நகர சபையார் ஜனங்களின் மனப்பான்மைக் கொத்தபடி முக்கியமாய் பெண்களுக்குப் பெண்டிர்களைக் கொண்டும், பெண் போதகர்களைக் கொண்டும் அடிக்கடி சுகாதார போதனை செய்து வரவேண்டும். சாதாரண ஜனங்கள் இதுவும் ஒரு சர்க்கார் பண்டிகை என்றே நினைப்பார்கள். இந்தக் கொண்டாட்டம் தீர்ந்தவுடன் நான். எதிர்பார்க்கும் புதிய முறைச் சுகாதாரப் பிரசாரம் நடத்தி வரவும், பொதுவாக தெருக்களிலும் பொது ஜாகாக்களிலும், குழாய் ஸ்தலங்களிலும் எந்தவித அசுத்தமும் நேராதபடி புதிய திட்டத்தில் முனிசிபல் கமிஷனர். சுகாதாரத்தை அமுலுக்குக் கொண்டு வருவார் என்று ஆசையுடன் எதிர்பார்க்கிறேன். அந்தப்படி செய்வதில் சில பணக்காரர் சுயநலக்காரரின். வருத்தம் ஏற்படலாம். அவற்றை லக்ஷியம் செய்யாமல் ஊர் பொது நன்மையே பெரிது எனப் பாவித்து நடுநிலைமையில் நல்ல ஏற்பாடு நடைபெறும் என்று நம்பி எதிர்பார்க்கிறேன்.
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் கவலையே கிடையாது. குழந்தை வளர்ப்பு விஷயத்தில் அந்தந்த தாய் தகப்பன்மார்களைவிட அரசாங்கம் அதிக அக்கரை யெடுத்துக்கொள்ள வேண்டும். மேல்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் குழந்தை வளர்ப்புக்கென பொதுவிடங்கள் அமைத்து அங்கு சில ஆயிமார்களை நியமித்து சுகாதார முறைப்படி குழந்தைகள் வளர்க்கப்படு கின்றன. மற்றும் சில குடும்பத்தார்கள் தங்கள் தங்கள் சொந்த பொறுப்பிலும் ஆய்மார்களை நியமித்து குழந்தைகளை மிகவும் தேகாரோக்கியமாக வளர்க்கின்றனர். சுருங்கக் கூறில் மேல்நாட்டில் ஏழை முதல் எல்லாப் பணக்காரர் வீட்டுக் குழந்தைகளும் ஆய்மார்கள் மூலமாகவே வளர்கின்றன. மேல்நாட்டில் நான் பார்த்த ஒரு சாதாரண
குடும்பத்தில் ஒரு குழந்தையின் தாய் தன் குழந்தையை வேறு ஒரு ஆயா வசம் வளர்க்க ஒப்புவித்துவிட்டுத் தான் வேறு ஒரு வீட்டுக் குழந்தையை வளர்க்கும் வேலையில் அமர்ந்திருந்தாள். இதற்குக் காரணம் என்ன வென்று கேட்டதில் தன் குழந்தையை வளர்க்கத் தான். மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், தான் வளர்க்கும் குழந்தையின் பெற்றோர் தனக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் அந்த அம்மாள் சொன்னார். இந்தப்படி மேல் நாட்டார்கள் குழந்தைகளை ஆய்மார்கள் மூலம் வளர்ப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியே சுகாதாரமும் தேகாரோக்யமும் நல்ல வாழ்வும் ஏற்படுகின்றன. நம் நாட்டிலோ அந்த வழக்கமில்லை. நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகள் பெறும் விஷயத்திலும், வளர்க்கும் விஷயத்திலும் இன்னும் மிருகப் பிராயத்திலேயே இருந்து 2... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வருகிறார்கள். மற்ற விஷயங்களைவிட இந்தக் குழந்தை பிரசவ விஷயமும், பின் குழந்தைகள் வளர்ப்பு விஷயமும் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதாகும். அதோடு பிரசவ பெண்கள் பிரசவத்துக்கு முன்னும் பின்னும், பிரசவ காலத்திலும் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு நாம் நன்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குறிப்பு: 20.11.1934-ல் ஈரோடு வள்ளுவர் புது வீதி முனிசிபல் சிசு பரிபாலன விடுதி முன் நடந்த ஈரோடு சுகாதார கல்வி வாரக் கொண்டாட்ட நிகழ்வில் ஆற்றிய உரை.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 25.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2)
ப O ப்
கமிஷனர் அவர்கள் கவணிக்க வேண்டுகிறோம்
ஈரோடு முனிசிபாலிட்டிக்கு கமிஷனர் ஏற்பட்டு சுமார் 2 மாத காலமே ஆன போதிலும் இதற்குள் பல துரைகளிலும் சீர்திருத்தங்கள்
நடந்து வருகின்றதானது மகிழ்ச்சியடையக் கூடிய காரியமேயாகும்
என்றாலும் சுகாதார விஷயத்திலும் தெருக்கள் ஆக்கிரமிப்பு விஷயத்திலும் இன்னும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்
தெருக்கள்
தெருக்கள் அதாவது ஜனங்கள் குடி இருக்கும் பாக வீதிகள் பெரிதும் கக்கூசாகவே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
குழந்தைகளை பகல் காலங்களில் தாய்மார்கள் தாராளமாக
தெருக்களில் மலஜலம் கழிக்க விடுகின்றார்கள். இரவு நேரங்களில் பெரியவர்களே தெருக்களை கக்கூசாக உபயோகிக்கிறார்கள்
குழாய்கள்
தெருக்குழாய்களின் பக்கத்தில் பாத்திரம், மாடு கன்றுகள்
கழுவுகின்றார்கள். தெருக்குழாய்களில் துணிகள் துவைக்கிறார்கள்.
தெருக்குழாய்களில் ஸ்நானம் செய்கின்றார்கள்.
இக்காரியங்கள் பெரிதும் மேல் ஜாதிக்காரர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர்கள் குடி இருக்கும் வீதிகளிலேயே அதிகமாய் நடக்கின்றன.
சில சந்து பொந்துகள், நடக்க யோக்கியதையற்றவைகளாகவே காணப்படுகின்றன.
தெருக்களில் குப்பைத் தொட்டிகள் அல்லாத இடங்களில் குப்பைகள், அசிங்கங்கள் போடப்பட்டு வருகின்றன.
கடை வீதிகள் இவைகள் ஒரு புறமிருக்க கடை வீதிகளில் குறுகிய தெருக்களாக இருக்கும் இடங்களிலும் கூட வீதியில் கால்கள் நிறுத்தி தட்டி போட்டுக்
283 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கொண்டு தெருவின் அகலத்தைக் குறைத்துக் கொள்ளுவதும், தெருவில் டிச்சுகளின் மீதும், தெரு ஓரங்களிலும் பெட்டிகள் போட்டுக் கொள்ளுவதும், கால்கள் நட்டு பலகைகள் போட்டு உட்கார்ந்து கொள்ளுவது, வியாபார சாமான்களை வீதியில் அடுக்கி வைப்பது ஆகிய காரியங்களாலும் தெருக்கள் அதிக குறுகலாக்கப்படுகின்றன.
லார்டு நேபியர் வீதியில் கோர்ட் வீதி ஜங்ஷனிலிருந்து அக்றார வீதி ஜங்ஷன் வரையில் நடக்கும் அக்கிரமம் சொல்லத்தரமல்ல வாடகைக்கு இருப்பவர்கள் முனிசிபாலிட்டி இடத்தை உபயோகப்படுத்திக் கொண்டு ஜனங்களுக்கு இடைஞ்சல் செய்து விட்டு கடைக்காரர்களுக்கு வாடகை கொடுக்கின்றார்கள் என்றால் ஜனங்களுக்கு அனுகூலம் செய்வதற்காக இருக்கும் முனிசிபாலிட்டி இதைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது.
படிக்கட்டுகள் கூட தெருவில் இருக்க இடமில்லாமல் செய்தால்தான் அந்த வீதி வண்டிப் போக்குவரத்துக்கு லாயக்காகுமே ஒழிய மற்றபடி அதை இந்த மாதிரி கடைக்காரர்களுக்கு கொள்ளை போக விட்டுவிட்டு வண்டிகளை அதில் விடுவது மகா கொடுமையான காரியமாகும்.
சமீபத்தில் ஒன்று இரண்டு வாரத்தில் 2, 3 ஆபத்துகள் ஏற்பட்டிருக் கின்றன. மோட்டார்கள் பலமாக தாக்கப்பட்டு காயமடைந்ததை நேரிலேயே பார்க்க நேர்ந்ததாலேயே இதை எழுதுகிறோம்.
இந்த குறைபாடுகள் ஈரோடு முனிசிபாலிட்டியில் வெகு நாளாய்
இருந்து வருகிறது என்றாலும் அவைகள் பெரிதும் ஜனநாயக
தத்துவத்தால் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத கெடுதி என்று கருதித்தான் ஒவ்வொரு கெளன்சிலுக்கும் கமிஷனர்கள் வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது சுதந்திர எண்ணங்களை தாராளமாய் உபயோகிக்கத் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்றும் அறிஞர்கள் ஆசைப்பட்டதாகும். ஆதலால் கமிஷனர் அவர்கள் தயவு செய்து இக்காரியங்களில் சிறிது கவனம் செலுத்தி பொது ஜன சவுகரியத்துக்கு உதவிபுரிய வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
இந்தக் காரியங்கள் ஆரம்பத்தில் சிலருக்கு அசெளகரியமாகத் தோன்றலாம். பழக்கமாகிவிட்டால் பிறகு சரியாய்ப் போய்விடும் என்று கருதுகின்றோம். அன்றியும் சிலருக்கு அசெளகரியம் என்பதற்காக பொது ஜனங்கள் கஷ்டப்படுவது என்பது நாகரிகத்துக்கும் நீதிக்கும் ஒத்ததாகாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மற்ற விஷயங்கள் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.
பகுத்தறிவு - செய்தி விளக்கக் குறிப்பு - 25.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 254
ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை
இந்திய சட்டசபை தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டது தேர்தலில் அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எப்பொழுதும் பலம் குறைவு என்பதையும், எதிர்கட்சியில் இருப்பவர்களுக்கு பலம் அதிகம் என்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் தேர்தல் வந்தால் எதிரிகளை விட அதிகாரத்தில் இருப்பவர்கள் இரண்டு பங்கு பலமுடையவர்களாக இருக்கக் கணக்குப் போட்டுக் கொண்டால்தான் தேர்தலில் முகம் கொடுக்க முடியும்
இன்றைய ஜஸ்டிஸ் கட்சியார் தங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள். என்று சொல்லுவதற்கே மூடியாத நிலையில் இருக்கிறார்கள்.மந்திரிகள் வக்கிரமாகவே இருக்கிறார்கள். ஒரு சமயம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றாலும் அடுத்த மந்திரி பதவியும் தங்களுக்கே வரும் என்றால்தான். ஒற்றுமை என்று காட்டிக் கொள்வார்களே தவிர மற்றபடி ஒருவரை ஒருவர் கவிழ்க்கவே தபஞ் செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதற்கு வருந்துகிறோம்
வெளியில் ஒவ்வொரு ஜில்லா தாலூக்காக்களில் உள்ள ஜில்லா. போர்டு பிரசிடெண்டு சேர்மன் முதலியவர்கள் அடுத்த தடவையும் பிரசிடெண்டு சேர்மன் ஆவதற்கு யாருடைய தயவு வேண்டுமோ அவருடைய கட்சிதானே தவிர மற்றபடி இன்று அவர்களுக்கு அதாவது பிரசிடெண்டுகள் சேர்மன்கள் என்பவர்களுக்கு எந்த கட்சியும் இல்லை எவ்வித அபிமானமும், கொள்கையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது
மற்றபடி சட்டசபை மெம்பர்கள் யோக்கியதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி எப்படி ஜெயிக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்
தோழர் சுப்பராயன் அவர்களுக்கு ஒரு “கட்சி” இருக்கிறது அவர்களுடைய கொள்கை எல்லாம் சுப்பராயன் அவர்களுக்குத் தானே எப்படியாவது மறுபடியும் மந்திரியாக வேண்டும் என்பதும், சுப்பராயன் அவர்களைப் பின்பற்றுவோர்களுக்கு அதனால் தாங்கள் ஏதாவது பயன் அடைய வேண்டும் என்பதுமேயாகும். அது போலவே தோழர் முனிசாமி நாயுடு அவர்களுக்கும் ஒரு ''கட்சி'' இருக்கிறது. அவர்களது
255 —————————————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கொள்கையும் மேல் குறிப்பிட்டது போலதான். இதை நாம் இன்று குற்றமாக சொல்லவில்லை. ஏனெனில் காங்கிரசின் யோக்கியதையும் அப்படியே, சுதந்திரக் கட்சியின் யோக்கியதையும் அப்படியே. ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது ஆகவே மந்திரியாவதற்கும், ஒருவரை மந்திரியாக்கி வைத்து அதனால் ஏதாவது உதவி மற்றவர்கள் பெறுவதற்கும் என்பதாக இன்று அரசியல் உலகத்தில் கட்சிகள் இருப்பது இன்றைய முறையில் குற்றம்
என்று நாம் சொல்ல வரவில்லை.
தோழர் சுப்பராயன் மந்திரி தன்மையை கவிழ்த்ததற்கு பார்ப்பனர்கள் அஸ்திவாரமாக இருந்தார்கள் என்றாலும் பார்ப்பன ரல்லாதார்கள் அதற்கு உதவியாய் இருந்து அவரை ஒழித்தது அக்கிரமமேயாகும். அவர் மந்திரி சபை செய்த காரியங்களில் 10ல் ஒரு பாகம் கூட இன்று வந்த மந்திரிகள்.
சாதித்து விட முடியவில்லை. அதை ஒழித்த தோழர் முனிசாமி நாயுடு மந்திரிசபை சிரிப்புக்கு இடமாய் இருந்தது. அதாவது அவர் காலத்தில்தான் மந்திரிகள் உத்தியோகத்துக்காக எதையும் செய்வார்கள். என்று சொல்லக்கூடியவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பிறகு ஏற்பட்ட மந்திரிசபையும் உள்ளுக்குள் கரையான் அரிக்கின்ற மாதிரியாகவே கக்ஷிக் கட்டுப்பாடு இருந்து வந்தாலும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இல்லாதிருந்தால் என்ன கதி ஆகி இருக்குமென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம்.
அடுத்த தேர்தலில் பொப்பிலி ஜெயிப்பார் என்று % அணா: பந்தயம் கட்டச் சொன்னாலும் கட்டுபவர்கள் கிடைப்பது அறிதாகத்தான். காணப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு பயம் ஏற்பட்டுவிட்டது அப்படியானால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?
இந்த நிலையில் ஒரு கட்சியை வைத்திருப்பது என்பது அக்கட்சிக்கு மிகவும் அபாயகரமான காரியமாகும்
ஆதலால் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இந்த சமயத்தில் துணிவாக ஒரு காரியம் செய்யவேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அதென்னவென்றால் முதலில் கட்சியை உருப்படுத்திக் கொள்ள வேண்டும்
தோழர்கள் சுப்பராயனையும் முனிசாமிநாயுடு அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஆக்கிக் கொள்ளவேண்டும். இது விஷயத்தில் கவலை இல்லாமல் இருப்பது புத்திசாலித்தனமாகாது
அடுத்த சீர்திருத்தத்தில் 7,8 மந்திரி ஸ்தானங்கள் வரப் போகின்றன. ஆளுக்கொரு மந்திரி எடுத்துக் கொண்டு தொலையட்டும் என்று தைரியமாய் இடம் கொடுக்க வேண்டும். சம்பளத்தில் பகுதியைக் கட்சிப் பண்டுக்கு உபயோகிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 56
சீர்திருத்த மந்திரி சம்பளங்களையும் ஒரு அளவுக்காவது குறைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இவைகளைச் செய்ய முன்வராமல் அதைவிட்டு விட்டுத் தனி அறைக்குள் இருந்து கொண்டு பொருப்பற்ற ஆட்களுடனும் எப்படியாவது தன் காரியம் ஆனால் போதும் என்று வாழ்கின்ற ஆட்களுடனும் கூடிப் பேசி முடிவு செய்து கொண்டு தைரியமாய் இருந்தால் அடியோடு நசுங்கிப் போக வேண்டிவரும் என்று இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்
பின்னால் வரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தல் முடிவைப் பற்றி நாம் எழுத நேரிடும்போது இந்த வியாசத்தை எடுத்துப்போட்டு
காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையே ஒழிய வேறில்லை. எனவே அடுத்த மாத முதல் வாரத்தில் ஒரு மீட்டிங்கி போட்டு வேலைத் திட்டங்களைப் பற்றி ஒரு முடிவு செய்து கொண்டு தோழர்கள். சுப்பராயன், முனிசாமி நாயுடு ஆகியவர்களையும் கலந்து ஏதாவது ஒரு கட்டுப்பாடு உண்டாக்கிக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
இந்திய சட்டசபைத் தேர்தல் தோற்றுப்போனது நமக்கு ஒரு பெரும் வெற்றி அளிக்கக் கூடியதாய் முடிய வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டியது அறிஞர் கடமையாகும்
பகுத்தறிவு - தலையங்கம் - 25.11.1934
257... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் வரதராஜுலு
தோழர் வரதராஜுலு அவர்கள் தோற்றுவிட்டார் என்பதில் நாம் சிறிதும் ஆக்ஷேபிக்காமலும் ஆக்ஷேபிப்பதும் முடியாத காரியம் என்றும் பலமான தோல்விதான் என்பதையும் ஒப்புக் கொள்ளுகிறோம். அவருக்கு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் உள்பட அநேகர் ஆதரவளித்தார்கள் என்றாலும் தோல்வியே ஏற்பட்டது என்பது உண்மைதான்.
ஆனால் தோழர் ஷண்முகம் அவர்கள் தேர்தலுக்கும் தோழர் எ.ராமசாமி முதலியார் அவர்கள் தேர்தலுக்கும் நடந்த காரியங்கள் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தேர்தலுக்கும் நடந்ததா இல்லையா என்றால் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் நன்றாய் நடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தோழர் வரதராஜுலு அவர்கள் தேர்தலுக்கு நிற்கும் விஷயத்தைப் பற்றி தானே முடிவு செய்து கொள்ளாமல் தன்னையொத்த இரண்டொரு பார்ப்பனரல்லாத காங்கிரஸ்வாதி, தேசபக்தர்கள் என்று சொல்லப்படுகின்றவர்களை கலந்து ஆலோரித்தார். அதில் சிலர் அவரை நிற்கச் சொல்லிகட்டாயப்படுத்தியதோடு தாங்கள் ஊர் ஊராய், கிராமம் கிராமமாய் தன் சொந்தத்தில் போய்க்கூட நாயுடுவுக்காக பிரசாரம் செய்வதாய் ஒப்புக் கொண்டு அவருக்கு உற்சாகமூட்டினார்கள். இதை நம்பியே தோழர் நாயுடு அரைகுறையாய் இருந்த மனதை கெட்டிப்படுத்திக் கொண்டார். அதோடு காங்கிரஸ் தலைவர்கள் என்னும் தென்னாட்டுப் பார்ப்பனர்களை தாராளமாக எதிர்ப்பதாகவும், அவர்களுடைய சூட்சிகளை வெளிப்படுத்துவதாகவும் ஒப்புக் கொண்டார்கள். கடைசியாக வெற்றி தோல்வியைப் பற்றிக் கூடத் தான் கவலைப்படுவதில்லை என்றும், பார்ப்பன சூட்சியை வெளிப்படுத்த தன்னுடன் கூட ஒத்துழைத்தால் போதும் என்றும் சொல்லிக் கொண்டார். அதற்கெல்லாம் சம்மதம் கொடுத்து அவரை உற்சாகமூட்டிவிட்ட தோழர்கள் இரண்டொருவர்கள் பார்ப்பனர்களின் அடக்கு முறைக்கு பயந்து கொண்டு டாக்டர் நாயுடுவை காலை வாரி விட்டு விட்டார்கள். வெளிப்படையாய் எதிரிகளாகவோ, பொறாமைக்காரர்களாகவோ இருந்தவர்கள் செய்யும் காரியங்களைப் பற்றியோ, வையும் வசவுகளைப் பற்றியோ குறை கூறுவது பயங்காளித்தனமாகும். அதற்கு மார்பைக் காட்ட வேண்டியதே ஆண்மையாகும். ஆனால் இந்த மாதிரி நம்பச் செய்து கழுத்தை அறுப்பது என்பது வெளிப்படுத்தத் தீரவேண்டிய
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 55
காரியம் என்பதோடு பின்னால் மற்ற மக்களுக்கும் ஒரு படிப்பினைக்கு இதை பயன்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டியதும் அவசியமாகும்
நிற்க தோழர் வரதராஜுலுவின் யோக்கியதையை - தகுதியை நிர்ணயிக்க இந்த தேர்தலே ஒரு அளவு கருவியாகி விடாது
ஜர்மனியில் ஹிட்லர் ஜெயித்துவிட்டார். இன்றும் 100 தேர்தல் வைத்தாலும் அவரேதான் ஜெயிப்பார். அதனாலேயே அவர் ஜர்மனி ஜனப்பிரதிநிதியென்றோ, அதற்குத் தகுதியானவரோ யோக்கியரோ என்றோ சொல்லிவிட முடியுமா? ஹிட்லரிசம் மிரட்டி ஓட்டு வாங்கினால் காந்தீயம் (ண்னும் பார்ப்பனீயம்) புரட்டு பித்தலாட்டங்கள் செய்து ஓட்டுப் பெறுகிறது இதனால் (வெற்றி தோல்வியில்) மனிதர்களை அளந்து விட முடியாது.
இந்த நாட்டு மக்களின் இன்றைய அறிவின் அளவுக்கு சாமிகள் தாசி வீட்டுக்குப் போகும் உற்சவத்தை நிறுத்துவதற்கு என்று ஓட்டு கேட்டால் ஆயிரத்துக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்க மாட்டாது. அது போலவே கடவுள் பெண்களை நிர்வாணப்படுத்தி வேடிக்கை பார்க்கும் உற்சவத்தை நிறுத்த 10,000 க்கு ஒரு ஓட்டு வீதம் கூட கிடைக்காது. கட்டின பணம் பறிமுதல் செய்யப்படுவதுடன் பிரேரேபித்தவர்களும் ஆமோதித்தவர் களுமாவது ஓட்டுப் போடுவார்களா என்பதும் சந்தேகம்தான்.
இந்த மாதிரி ஜனங்களிடம் ஓட்டுப் பெறாததினால் தோழர் வரதராஜுலுவின் யோக்கியதை போய்விட்டது என்று சொல்லப்படுமானால், வரதராஜுலு அவர்களைப் பற்றி எவரும் கவலைப்பட வேண்டியதில்லை. அவரவர்களுக்கு உள்ள யோக்கியதை தேர்தலைப் பொருத்து அல்லவென்றும், தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் பொதுநலத் தொண்டாற்ற வேண்டிய அளவு தாராளமாய் இடம் இருக்கின்றது என்றும் இதனால் யாரும் மூலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஆனால் கட்சி நிலையைப் பொருத்துப் பார்ப்பதானால் அடுத்து வரும் தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கட்சி ஜெயித்து ஆக வேண்டும் காங்கிரஸ் ஜெயித்தால் கண்டிப்பாக பார்ப்பனீயம் வெற்றி பெற்றது என்றும் பார்ப்பனரல்லாத மக்கள் நிலை அதோ கதி ஆயிற்று என்றும்
தான் முடிவு ஏற்படும் ஆதலால் தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஆதிக்க ஸ்தாபனம் என்பதை உண்மையாய் உணருவார்களானால் தைரியமாய் அதை இன்னும் வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்றும், பார்ப்பனீயத்தை வெளியாக்கி அதை ஒழிப்பதே தேச பக்தி என்றும் ஜீவகாருண்யம் என்றும் கருத வேண்டுமென்றும் தெரிவித்துக் கொள்கிறோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 25.11.1934
259 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
கொள்கை இல்லாதவர்களுக்கு வெற்றி
இந்திய சட்டசபைத் தேர்தல் இந்தியா முழுவதிலும் அனேகமாக நடந்தாகிவிட்டது.
இவற்றுள் சென்னையே பார்ப்பனர்களுக்கு பெருமித வெற்றி அளித்து எங்கு பார்த்தாலும் பார்ப்பன வெற்றிக் கொண்டாட்டத் திருநாள்கள் நடைபெறச் செய்திருக்கிறது. இத்திருநாள்களை புராணத் திருநாள்கள் அதாவது “நரகாசூரன் தோற்ற நாள்!” (அல்லது) “நரகாசூரனைக் கொன்ற நாள்” என்று தீபாவளி கொண்டாடுவது போல் “பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோற்ற நாள் (அல்லது) ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைத்த நாள்” என்று இப்போது ஊர் ஊராய் கொண்டாடப் புறப்பட்டு விட்டார்கள் நம் பார்ப்பனர்கள். இத்திருநாள் இனி வருஷா வருஷம் (காந்தி ஜயந்தி முதலியவை போல்) கொண்டாடப்படலாம். இதில் பார்ப்பனரல்லாதாரும் பெருமிதமாய் கலந்து கொண்டு எண்ணெய் ஸ்நானம் செய்து புதுவேஷ்டி அணிந்து பலகாரம் செய்து சாப்பிடலாம். என்றாலும் இத்திருநாள் கொண்டாட்டத்தின். பயனாய் ஏற்பட்ட லாபம் என்ன என்று பார்ப்போமானால் தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், டாக்டர் ராஜ அய்யங்கார் இன்னும் ஏதோ இரண்டொரு சாஸ்திரியார்கள், ராவுஜீக்கள் ஆகியவர்கள் சேர்ந்து ஊர்ஊராய்ச் செல்வதும், இவர்களுக்கு எவ்வித ஆபத்தும் வராமல் இவர்களைக் காப்பாற்ற ஆங்காங்கு சில ரெட்டியார், முதலியார், கவுண்டர், செட்டியார், பிள்ளை, சாயபு ஆகிய கூட்டத்தைச் சேர்ந்த ஆசாமிகள் “ராமர் பின்னால் அனுமார்கள் (குரங்குகள்) சென்றன” என்பது போல் பயபக்தியுடன் சென்று காவல் காப்பதும், இந்த ஐயர், ஆச்சாரியார், அய்யங்கார், சாஸ்திரி, ராவுஜி ஆகிய கூட்டங்கள் மேடைகளிலும், பத்திரிகைகளிலும், “கொடுங்கோலரக்கன் ஷண்முகம் இமயமலை போல் வீழ்ந்தான், கொடிய ராட்சதன், பொப்பிலி ஒழிந்தான், அடிமைக் குலாம் கட்சியாகிய ஜஸ்டிஸ் கட்சி வெட்டிப் புதைக்கப்பட்டுவிட்டது”, “வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவோம் வாருங்கள் வாருங்கள்” என்று கூவுவதற்கு தைரியம் ஏற்பட்டு விட்டதேயாகும்.
நமது மாகாணத்தில் எங்கெங்கு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார். உணர்ச்சி இல்லையோ அங்கும், எங்கு பார்ப்பன ஆதிக்கம் அதிகமோ அங்கும், எங்கு முழு மூடர்களும், துரோகிகளும் மலிந்திருக்கிறார்களோ
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 0௦
அங்கும் பார்ப்பனர்களையே தேர்தல்களுக்கு நிறுத்துவதும், எங்கு பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி இருக்கின்றதோ அங்கெல்லாம் முதல்தர சோணகிரிகளாகவும், பிறவி அடிமைகள் என்று மதிக்கக் கூடியவர்களாகவும், தங்கள் சுயநலத்துக்கு எதையும் விற்கக் கூடியவர்களாகவும் பார்த்து பார்ப்பனரல்லாதார்களை நிறுத்துவதும், அவர்களை வெற்றி பெறச் செய்வதும், பிறகு அவர்களைப் பின்னால் இழுத்துக்கொண்டு “ஜஸ்டிஸ் கட்சி வெட்டிப் புதைக்கப்பட்டது குலாம்கள் ஒழிந்தார்கள்'' என்று கூப்பாடு போடுவதும் ஆகிய காரியம்தான் இன்றைய காங்கிரஸ் வெற்றியாய் கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லலாம்
பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியும், பகுத்தறிவும் இல்லை யென்றால், பார்ப்பனர்கள் இவ்வித வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவதிலும், “பார்ப்பனரல்லாதார் கட்சியை வெட்டிப் புதைத்து விட்டோம்” என்று அவர்கள் பறை அடிப்பதிலும் யாதொரு குற்றமும் இல்லை.
மடையர்கள் சுமக்க வேண்டியதும், தந்திரக்காரர்கள் ஏறிச் சவாரி செய்ய வேண்டியதும் இயற்கையேயாகும். அந்த இயற்கை தத்துவத்தின்படிதான் இன்று இந்த நாட்டில் 100-க்கு 97 மக்களாய் இருக்கக் கூடிய ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், முதலாளிமார்கள், பண்டிதர்கள் சகல காரியத்துக்கும் பாடுபடும் பாட்டாளி மக்கள் ஆகிய கூட்டத்தார்கள் தீண்டக் கூடாதாராய், பறையராய், சக்கிலியராய், சூத்திரராய், கீழ் ஜாதியராய், பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாய், அடிமைகளாய், பார்ப்பனர்கள் காலைக் கழுவிக் குடிப்பவர்களாய், தாசிகளாய், தாசி மக்களாய் இருந்து வருவதும் 100க்கு மூன்றே பேராய் இருந்து வரும் மக்கள் பிச்சை எடுத்து வாழும் மக்கள், உலகிலுள்ள சகல இழிதொழிலுக்கும் முன்னின்று அச்சக்காரம் (அட்வான்ஸ்) வாங்கும் மக்களாயிருந்தாலும் அவர்கள் இன்று பூதேவர்களாயும், பிராமணர்களாயும், ஆச்சாரிமார்களாயும், சுவாமிகளாயும், அய்யர்களாயும், மண்வெட்டியும் கோடாலியும் கையில் தொடுவது தோஷம் என்று சொல்லிக் கொண்டு ஒரு சொட்டு வேர்வை கூட நிலத்தில் விழுகாமலும்,
ஒரு கடுகளவு கவலையோ விசாரமோ கைமுதலோ இல்லாமல் வாழ்வு நடத்தக் கூடியவர்களாயுமிருந்து ஆதிக்கங்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதே இயற்கைத் தத்துவம் தான், இந்தியாவில் உள்ள 35 கோடி மக்களையும், இவ்வளவு விஸ்தீரணமுள்ள நாட்டையும் ஆயிரத்துக்கு ஒன்று வீதமுள்ள எண்ணிக்கைகூட இல்லாத அளவு வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு சர்க்கஸ்காரன் மிருகங்களை நடத்துவது
போல் நடத்தி ஆட்சி புரிந்து வர முடிகின்றது
மற்றும் இந்த இயற்கை தத்துவம்தான் உழைக்கின்ற மக்கள் வயிற்றுக்கும், வயித்தியத்துக்கும் கூட போறாமல் பட்டினியினாலும்,
2] ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
நோயினாலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு கஷ்டப்படுவதும், பாடுபடாத சோம்பேரிகள் அப்பாட்டின் பலனையெல்லாம் தாங்களே அனுபவிப்பதும், மீதியை தாருமாறாய் பாழ்படுத்தி வருவதுமான கேடுகள் நடந்து வருகின்றன.
இந்த இயற்கைத் தத்துவம் தான், இன்றும் 20-ம் நூற்றாண்டு மக்களைக் காட்டுமிராண்டி வாழ்க்கைக்குக் கொண்டுபோக முனைந்து நிற்கிறவரும், முதலாளிமார்களுடையவும், சோம்பேரி வாழ்க்கைக்காரர் களுடையவும், அடிமையுமான காந்தியாரை மகாத்துமாவாக்கியதுமாகும்.
இப்படிப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் “பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தைக் குலைத்து அவர்களது ஸ்தாபனத்தை வெட்டிப் புதைத்து விட்டோம்” என்று சொல்லுவதில் இயற்கைக்கு விறோதமோ, அதிசயமோ ஏதும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை.
பார்ப்பனருக்கு ஆட்கள் கிடைக்கின்றன பணங்கள் கிடைக்கின்றன. ஏனென்றால் பார்ப்பனரல்லாத மடையர்களே ஏழைகளை வருத்தி சித்திரவதை செய்து கொள்ளை கொண்ட பணத்தை மானம், வெட்கம், அறிவு சிறிதும் இல்லாமல் மோட்சத்தின் பேரால், புண்ணியத்தின். பேரால், தேசத்தின் பேரால், தேசாபிமானத்தின் பேரால், கதரின் பேரால் தீண்டாமை விலக்கின் பேரால் கொட்டிக் கொட்டிக் கொடுத்து பார்ப்பனர்கள் பையை நிரப்பினால், பின்பு அவர்களுக்கு வேலை செய்ய - உழைக்க - மானத்தையும் மரியாதையையும் விற்க, சமூகத் துரோகத்தைச் செய்ய ஏன் ஆட்கள் கிடைக்காது என்று யோசிண்த்துப் பார்க்க வேண்டுகிறோம் வெறிகொண்ட மிருகங்கள் நீக்குப் போக்கு இல்லாமல் குலைப்பது போலும், கடிப்பது போலும் தோழர்கள் ஷண்முகம், வரதராஜுலு, ஏ. ராமசாமி ஆகியவர்கள் மீது பாய்ந்து அவர்களை ஒரு கூட்டம் வைகின்றது. இந்த வசவுகளையே பார்ப்பனர்களிடம் கூலி பெற்றுக் கொண்டு பார்ப்பனரல்லாதார்களே கூட சிலர் வைகிறார்கள், எழுதுகிறார்கள் என்றால் பார்ப்பனரல்லாத சமூகம் ஏன் அழியாது? அல்லது ஏன் இன்னமும் இழிவான நிலைக்குப் போகாது? அல்லது பார்ப்பனரல்லாதார்
சூத்திரர் என்றும் பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்கள் என்றும் எழுதிவைத்த சாஸ்திரங்களை மாற்றி இன்றைய தினம் ஒவ்வொரு பார்ப்பனரல்லாதாரும், அவனது பெண்டு பிள்ளைகளை கொண்டு வந்து பார்ப்பனர்களுக்கு தங்கள் செலவில் விட்டுப்போக வில்லையானால் அவன் நரகத்துக்குபற் போவதோடு பெரியதொரு தேசத்துரோகியாகவும்,
சர்க்கார் குலாமாகவும் மதிக்கப்படுபவன் என்று கூட ஏன் எழுதி வைக்கமாட்டார்கள் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகின்றோம்
பார்ப்பனர்கள் முன்காலத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கும், இப்போது நடந்து கொள்கின்ற மாதிரிக்கும் கடுகளவாவது மானம், வெட்கம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 262
இருந்தால் அவர்கள் பின் வைப்பாட்டி மக்கள் போல் திரிய யாருக்காவது
எந்தப் பார்ப்பனரல்லாதாருக்காவது மனம் வருமா என்று கேழ்க்கின்றோம்.
பார்ப்பனரல்லாதார்க்கு இனியாவது மானம், ரோஷம் வந்து தங்கள் சமூக நலனுக்குழைக்க வேண்டும் என்றுதான் நாம் இந்தப்படி எழுதுகின்றோமே ஒழிய துவேஷத்துக்காக அல்ல.
பார்ப்பனரல்லாதார் அல்லது தோழர்கள் ஷண்முகம், வரதராஜுலு,
ஏ. ராமசாமி முதலியார் ஆகியவர்கள் தேசத்துக்கு அல்லது தனிப்பட்ட நபருக்குச் செய்த மோசம், துரோகம் அல்லது இழிவான காரியம் என்ன என்று எந்த பார்ப்பனரல்லாதாராவது சொல்ல மூன் வரட்டும்.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுடைய யோக்கியதையை விட தோழர்கள் ராஜன், ராஜகோபாலாச்சாரி ஆகியவர்களுடைய யோக்கியதையைவிட, ஷண்முகம், வரதராஜுலு, ராமசாமி முதலியார் ஆகியவர்கள் எந்தவிதத்தில் குறைந்தவர்கள் என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்
தோழர்கள் சத்தியமூர்த்தியும் ரஜகோபாலாக்சாரியாரும் என்றைக்காவது தங்கள் ஜாதி அபிமானத்தை விட்டுக்கொடுத்து நடந்திருக்கிறார்களா?
தோழர் சத்தியமூர்த்தியை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பனரல்லாதார்கள் தங்கள் உடலில் பார்ப்பனரல்லாதார். ரத்தமோ அல்லது நாணையம், ஒழுக்கம் என்கின்ற தத்துவமோ கடுகளவு இருக்கிறது என்று சொல்லிக்கொள்ள அருகதை உடையவர்களாயிருந்தால் தோழர்கள் ஷண்முகம், வரதராஜுலு, ராமசாமி முதலியார் இவர்களை விட தோழர் சத்தியமூர்த்தி எந்தவிதத்தில் யோக்கியர் என்பதை மெய்ப்பிக்கட்டும் என்று கேழ்க்கின்றோம்
எதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கும் மீறுவது என்றால் அதை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டிய நிலை என்றுதான் சொல்லுவதோடு வைவதும், காலித்தனம் செய்வதும், பார்ப்பனருக்கும் காங்கிரசின். பெயரால் பிழைக்கின்றவர்களுக்கும் தான் ஏகபோக உரிமை என்பதை எப்படியாவது ஒழித்தாக வேண்டிய நிலை என்றுதான் சொல்லுவோம்
காங்கிரசுக்கும், கதருக்கும் சம்மந்தமில்லை என்று கதரின் பேரால். வசூலித்த பணம், தேர்தல்களுக்கு செலவு செய்யப்பட்டது யாரும் அறியார்களா? கதரின் பெயரால் மாதம் 100, 200 பணம் வாங்கிப் பிழைக்கும் ஆட்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கவில்லையா? தீண்டாமை விலக்கின் பேரால் வசூலித்த பணத்தில் மாதம் 40, 50, 100 சம்பளமாகவும் வேறு எடுபிடி செலவுக்காகவும் என்று வாங்கிப் பிழைக்கும் ஆட்கள் தேர்தலில் பிரசாரம் செய்யவில்லையா? இதெல்லாம் நாணையமான, யோக்கியமான காரியமா என்று கேழ்க்கின்றோம்
263 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்திய சட்டசபையில் கோவில் பிரவேச மசோதா கொண்டுவரச் செய்து ஜனங்களைத் தீண்டாமை விலக்கின் பேரால் ஏமாற்றி பார்ப்பனரல்லாதாரிடம் ஏராளமாய் பணம் வசூல் செய்து கொண்டபிறகு அந்த மசோதாவை வாப்பீஸ் பெறும்படி செய்துவிட்டு இந்திய சட்டசபைத் தேர்தல்களின்போது இனிமேல் அந்த மாதிரியான மசோதா கொண்டு வருவதில்லை என்றும் வேறு யாராவது கொண்டுவருவதா யிருந்தாலும் ஓட்டுக் கொடுப்பதில்லை என்றும் சொல்லி பார்ப்பனர்களுக்கு வாக்குக் கொடுத்து தேர்தல் பிரசாரம் செய்து வெற்றி பெற்று விட்டு மானமில்லாமல் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவதென்றால் இதற்கு எதை சமானமாகச் சொல்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
வெற்றி கொண்டாட்டம் என்று சொல்லுவதெல்லாம் காங்கிரசின் நாணையக் குறைவும் பார்ப்பனர்களின் சூட்சியும் ஜெயித்துவிட்டது என்று சொல்லுவதை விட வேறு என்ன என்று கேட்கின்றோம்.
தோழர் சத்தியமூர்த்தி யோக்கியதை நமக்குத் தெரியாதென்று நினைத்துக் கொண்டு அவரைத் தோளின் மீது தூக்கி வைத்துக் கொண்டு திரிகின்றவர்கள் இந்தக் கும்மாளம் போடுகின்றார்களா? அல்லது தெரியும் என்று நினைத்துக் கொண்டே பசி வெட்கமறியாது என்பது போல் கூலிக்காசைப்பட்டு இம்மாதிரி அவரைப் புகழ்கின்றார்களா என்றும் கேழ்க்கின்றோம்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் இதுவரை நடந்து வந்ததும் அவரது உள் எண்ணமும் இந்தியா பூராவும் உள்ள அறிஞர்கள் அவரைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும் நமக்குத் தெரியாது என்று இவர்கள் கருதுகின்றார்களா என்று கேட்கின்றோம். தோழர் ராஜன். அவர்களின் யோக்கியதைதான் என்ன? இவர்கள் எல்லோரும் வருணாச்சிரம ராஜாபகதூரை விட எந்த விதத்தில் மேலானவர்கள் என்று
பார்ப்பனக் கூலிகளையே கேழ்க்கின்றோம்.
குருகுலப் போராட்டம் வந்த காலத்தில் தோழர் வரதராஜுலு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்ததுடன் காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிய “சீர்திருத்தக் காரர்கள்" தான். என்பதை உலகம் அறியாது என்று கருதிக் கொண்டிருக்கிறார்களா என்று கேழ்ப்பதோடு, இந்தச் சீர்திருத்தவாதிகள் இரவும் பகலும் புராணப் பிரசங்கம் செய்துகொண்டு எப்படி எப்படி பார்ப்பனரல்லாதார் குடியைக் கெடுப்பது என்று பிளான் போட்டுக் கொண்டு இருக்கிறதே அல்லாமல் இவர்கள் தேசத்துக்கும் சமூகத்துக்கும் நாளது வரை செய்த ஒரு காரியமோ, பயனோ இன்னது என்று எடுத்துக்காட்ட முடியுமா என்று கேழ்க்கின்றோம்
தோழர் சாமி வெங்கிடாசலம் செட்டியார்தான் ஆகட்டும் எதைச் சாதித்தவராய் இருப்பார்? அல்லது ஷண்முகத்துக்கு மேலாக இவர் எத்தனை தடவை ஜெயிலுக்குப் போயிருப்பார்? கைப்பிசகாய் இவருடைய பெயர் ஓட்டர்லிஸ்டில்பதிக்கப்பட்டுவிட்டது என்பதைத்தவிர இவர் உண்மையிலேயே அந்த தொகுதி ஓட்டருக்கு லாயக்குள்ளவரா? என்றும் கேட்கின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 264
செத்துப்போனவர்கள் எத்தனை பேர் எழுந்து வந்து தோழர் சாமி வெங்கிடாசலத்துக்கு ஓட்டுப் போட்டுவிட்டுப் போனார்கள் என்பதைக் கவனிக்கப்போனால் எலக்ஷன் நிலைக்குமா? என்று கேட்கின்றோம்
மற்றும் சமீப காலம் வரை ஜஸ்டிஸ் கட்சியை தொங்கிக் கொண்டிருந்ததும் அபேட்சகராய் தெரிந்தெடுக்கப்படும் வரையில் காங்கிரசையே வைது கொண்டிருந்ததும் யாருக்கும் தெரியாதா என்று கேட்கின்றோம். இவை எப்படியோ போகட்டும் என்றாலும் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு நின்று வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அவர்களுக்கு உழைத்த வீரர்களுக்கும் வெற்றியின் பேரால் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடும் வீரர்களுக்கும் என்ன கொள்கை இருக்கின்றது? சட்டசபையில் போய் இவர்கள் செய்யப்போகும் காரியம்தான் என்ன? என்பதைப்பற்றி ஒரு வார்த்தையாவது சொல்லக் கூடுமா என்று கேட்கின்றோம். “ஜஸ்டிஸ் கட்சிக்கு கொள்கையில்லை'' என்று சொல்லும் இவர்களை (காங்கிரசுக்காரர்களை) உங்கள் கொள்கை: என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்லக் கூடும்? எலக்ஷனில் யாதொரு கொள்கையும் சொல்லாமல் காந்தியாருக்கு ஓட்டுப் போடுங்கள், காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்பதும், காந்திக்கும் காங்கிரசுக்கும் எதற்காக ஓட்டுப் போடுவது என்று கேட்டால், ஜெயிலுக்குப் போனதற்காகவும், அடிபட்டதற்காகவும் ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதும், ஜெயிலுக்கு போனதினாலும், அடிபட்டதினாலும் ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்டால், ஜெயிலுக்கு போனதும் அடிபட்டதும் முட்டாள்தனம் என்று கண்டுபிடிக்கப்பட்டு இப்போது சட்டசபைக்குப் போகவேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறோமே அதுதான் என்று சொன்னதும் அல்லாமல் - வேறு கொள்கை என்ன என்று இப்போதும் கேட்கின்றோம்.
வெள்ளை அறிக்கையை நிராகரிக்கப் போகின்றோம் என்று சொன்ன சிலர் வெள்ளை அறிக்கையை நிராகரிக்க முயற்சித்து தீர்மானம் தோல்வி அடைந்த பின்போ அல்லது வெற்றிபெற்ற பின்போ அப்புறம் என்ன செய்யப்போகின்றீர்கள் என்றும் நீங்கள் செய்த தீர்மானத்திற்கு எவ்வளவு யோக்கியதை உண்டு என்றும் கேட்ட கேள்விக்கு நாளது வரை என்ன பதில் சொல்லப்பட்டது என்று கேட்கின்றோம் யாதொரு கொள்கையும் இல்லாமல் மக்களின் முட்டாள்தனத்தையே முதலாக வைத்து செய்த ஏமாற்று வியாபாரத்தில் வெற்றி பெற்றுவிட்டதால் அதற்காக இம்மாதிரி குடிகாரன் வெறிகாரன் போல். எல்லோரையும் வாயில் வந்தபடி கீழ்மக்கள் போல் வைது கொண்டுதான். வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடுவதா என்று கேட்கின்றோம். இது எதை நிரூபிக்கின்றது என்றால் பார்ப்பனர்களின் சூட்சியிலிருந்து இந்திய மக்களை விடுவிக்க வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமான 28... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
காரியம் என்பதையும் பாமர மக்களுக்கு தனித் தொகுதியே அவசியமான தென்பதையும் நிரூபிக்கிறது என்றுதான் சொல்லுவோம்.
தகப்பன் வீட்டுப் பெருமையை தமையனிடம் சொல்லும் தங்கச்சிபோல் பஞ்சத்துக்காக வந்து காங்கிரசிற்குள் புகுந்து கொண்ட இந்த பச்சகானா கூட்டம் தோழர் வரதராஜுலு நாயுடுவுக்கும், சர். ஷண்முகத்துக்கும் காங்கிரஸ் பெருமையைப் பற்றி போதிப்பதென்றால் அதில் எவ்வளவு ஞானம் இருக்கின்றது என்றுதான் கேட்கின்றோம். ஏறக்குறைய இந்த 15 வருஷ அனுபோகத்தில் யார் யார் காங்கிரசை விட்டு வெளியில் போனால் தாங்கள் சொந்தத்தில் வாழ முடியுமோ பிழைக்க முடியுமோ அவர்கள் எல்லோருமே சற்றேறக் குறைய காங்கிரசை விட்டு வெளியேறித்தான் இருக்கிறார்கள். மற்றும் சிலரும் வெளியேறிப் பார்த்து அங்கும் வாழ்வுக்கு வழியில்லாமல் போனதினாலேயே திரும்பவும் போய் புகுந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இது யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றோம்
ஜீவனத்துக்கு வேறு எந்த வழியும் இல்லாத ஆட்கள் பலர் இந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு சமாதானத்துக்குப் பங்கம் ஏற்படும் படியாகவும், காதில் கேட்பதற்கே அசிங்கமாயிருக்கும் படியாகவும் பலர் கத்துவது நம் காதுக்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான ஆட்கள் சிலரைப் பிடித்து அவரது ஜீவிதம் எப்படி நடக்கின்றது என்று விசாரித்தால் நல்ல நடவடிக்கைக்கு ஜாமீன் வாங்க வேண்டியதைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய வழி இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட பலர்
மீது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டிய அதிகாரிகள் ஜாதி அபிமானம் காரணமாக விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. இந்த யோக்கியதையில் உள்ள காங்கிரசுதான் நீதியும், சத்தியமும், அகிம்சையும் கொண்ட முறையில் சுயராஜ்யம் பெருவது என்பதைக் கொள்கையாகக் கொண்டிருக்கின்றதாம். என்ன பித்தலாட்டம், எவ்வளவு நாணையக் குறைவு என்று பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
வெகு காலமாகவே நாம் காங்கிரசுக்காரர்கள் கூட்டத்தில் சென்று யாரும் கலகம் செய்யக் கூடாது என்றும் சொல்லி வந்ததானது காலித் தனத்தை காங்கிரசுக்கே சொந்தமாக்கிவிட்டது போல் காணுகின்றது
காங்கிரசுக்காரர்கள் தடபுடலையும், அவர்களது வசவையும், காலித்தனத்தையும் கண்ட பலர் பயந்து கொண்டு மெல்ல மெல்ல காங்கிரஸ் கூட்டத்தோடு தங்களைக் கலக்கிக் கொள்ள பலர் ஆசைப்படுவதைப் பார்க்க நமக்குச் சிரிப்பாக இருக்கின்றது. இருந்தாலும் இப்படிப்பட்ட கூட்டத்தார் மறுபடியும் 8 நாளில் கண்டிப்பாய் திரும்பவும் ஓடிவந்துவிடப்போகிறார்கள் என்று இப்போதே ஜோசியம் கூறுவோம்.
பகுத்தறிவு - கட்டுரை - 25.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) — ௦
கோவை முனிசிபாலிட்டி
கோயமுத்தூர் முனிசிபாலிட்டியில் திவான்பகதூர் C.S. ரத்தினைபாபதி முதலியார் அவர்கள் சுமார் 15 வருஷ காலமாக சேர்மனாக இருந்து வந்ததும், கோவை முனிசிபல் நிருவாகம் சென்னை மாகாண முனிசிபாலிட்டிகளில் எல்லாம் தலைசிறந்து விளங்கியதும், அந்த நிர்வாகத்தைப் பற்றி அரசாங்க யாதாஸ்தில் கோயமுத்தூர் முனிசிபல் நிர்வாகம் முதல்தர நிர்வாகத்தில் முதன்மையானதாக கருதப்படக் கூடியது என்று பல வருஷங்களாகக் குறித்து வந்ததும் யாவரும் அறிந்ததாகும்
அப்படிப்பட்ட தோழர் C.S.R. அவர்கள் சென்ற மூன்று வருஷத்திய நிருவாகத்தின் கடைசி மீட்டிங்கில் கவுன்சிலர்கள் அவரைப் பாராட்டிப் பேசியதற்குப் பதிலளிக்கையில், தான் இதுவரை சேர்மன் அலுவல் பார்த்ததற்கும், அதற்காக தன்னை கவுன்சிலர்கள் பாராட்டியதற்கும்
எல்லாம் கவுன்சிலர்களுடைய ஒத்துழைப்பே காரணம் என்று சொன்னதோடு தான் இனி சேர்மென் பதவியில் இருந்து விலகி விடுவதற்கு கவுன்சிலர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும், வேறு தக்கவரை தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தானும் ஒத்துழைத்து தன்னால் கூடியதை கவுன்சிலர் என்கின்ற முறையிலேயே செய்து வருவதாயும் தெரிவித்துக் கொண்டார்.
கவுன்சிலில் இருந்த காங்கிரசுக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இரண்டொருவர் இந்த சங்கதியை தங்களுக்கு ஒரு ஆதாரமாய் வைத்துக் கொண்டு கலகத்தை மற்ற கவுன்சிலர்களுக்குள் உண்டாக்க முயற்சித்தார்கள். என்னவென்றால் வேறு யார் வந்தாலும் வரட்டும், தோழர் றாவ்சாசிப் S.N. பொன்னைய கவுண்டர் மாத்திரம் சேர்மனாய் வரக்கூடாது என்றும் அதற்குக் காரணம் என்னவென்றால் தோழர் பொன்னைய கவுண்டர் அவர்கள் பேருக்கு பல சாராயக் கடைகள் கள்ளுக்கடைகள் இருக்கின்றதென்றும், அவர்கள் காங்கிரசை எப்போதும் தூஷித்து எதிர்பிரசாரம் செய்கின்றவர் என்றும், அவர் வைஸ் சேர்மெனாய் வருவது கூட தங்களுக்கு அவமானம் என்றும் வீரம் பேசி அதன் மூலமாய் ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள ஒவ்வொருவரையும் போய் நீங்கள் சேர்மெனாய் இருங்கள் நீங்கள் சேர்மனாய் இருங்கள் என்று கோள்களும் குண்டுணிகளும் செய்து பார்த்தார்கள். இதைக் கண்ட தோழர் 0.8. ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் இவ்வளவு ஆன பிறகு
2679 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் பொன்னையா அவர்களே சேர்மெனாய் வர வேண்டும் என்றும் காங்கிரஸ்காரர்கள் தங்களால் கூறியதை செய்து பார்த்துக்கொள்ளலாம் என்றும், அவர்களுடைய கோள்களுக்கும் குண்டுணித்தனத்துக்கும் அடிமைப்பட்ட சிலர் தமது கட்சியில் இருந்து விலகிவிட்டாலும் சரி என்றும் சொல்லி ஒரே பிடிவாதமாய் தோழர் பொன்னையா அவர்களையே சேர்மன் பதவிக்கு நிறுத்தினார்.
காங்கிரசுக்காரர்களுடைய விஷமம் பலிக்காமல் போகவே கடைசியாக தாங்கள் தோழர் பொன்னையா அவர்களைப் பற்றி பேசியது தவறு என்பதை உணர்ந்து, அவர்களாகவே பொன்னையா அவர்களை ஆதரிப்பதாகவும் அவரோடு ஒத்துழைப்பதாகவும் அதற்கு கூலியாக தங்களுக்கு வைஸ் சேர்மென் வேலை கொடுக்க வேண்டும் என்றும் கெஞ்ச ஆரம்பித்தார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள சிலருக்கு இந்த மாதிரி நடவடிக்கை பிடிக்கவில்லை யானாலும் தோழர் பொன்னையா எப்படியானாலும் வரக்கூடாது என்றும், அவர் உள்ள கவுன்சிலில் தாங்கள். இருப்பது அவமானம் என்றும் பேசிய வீரர்கள் அவர் தலைமையின்
கீழ் அவருக்கு உபமாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டால் அவர்களுடைய யோக்கியதையை வெளியார் அறிவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாய் இருக்கட்டும் என்று மற்ற கவுன்சிலர்களுக்கு சமாதானம் சொன்னார். அந்தப்படியே முன் வீரம் பேசிய காங்கிரஸ்காரர் என்பவர்கள் பேசாமல் மூச்சுவிடாமல் மரியாதையாக தாங்களாகவே தோழர் பொன்னையா அவர்களை ஆதரித்தார்கள். தங்களுக்கு ஒரு ஸ்தானம் எறியப்பட்டவுடன் கள்ளுக்கடை சாராயக்கடை வியாபாரம் எங்கேயோ பறந்து போய் விட்டது போலும்
இதன் பயனாய் ஒரு பார்ப்பனர்தான் வைஸ் சேர்மனாய் வரக்கூடும் என்பதாகவும் தெரிகிறது. ஆகவே காங்கிரஸ்காரர்கள். என்பவர்களின் யோக்கியதையும் அவர்களுடைய திட்டங்களும் அவர்கள் அதை எதற்கு உபயோகிக்கிறார்கள் என்பதும் கடைசியாகக் காங்கிரஸ் வெற்றி என்பதெல்லாம் எப்படி பார்ப்பனர்களையே போய்ச் சேருகிறது என்பதும் இதிலிருந்தாவது கோவைவாசிகளும், மற்ற ஊர் வாசிகளும் உணர்வார்களென்று கருதுகிறோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 25.11.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 0
அதுவும் சொல்லுவார்கள் இன்னமும் அனேகம் சொல்லுவார்கள்
இந்திய சட்டசபைத் தேர்தல் நடந்துவிட்டன.
இந்த மாகாணத்தின் பொது தொகுதியில் பத்து ஸ்தானங்களில் ஐந்து ஸ்தானங்கள் பார்ப்பனர்கள் கைப்பற்றி விட்டார்கள்.
அதாவது தோழர்கள் s-
1. 8. சத்தியமூர்த்தி அய்யர்.
2. 16.நாகேஸ்வரராவ் பந்துலு
5. டாக்டர் ராஜன் அய்யங்கார்
4. நு கிரி பந்துலு
5. T.N. அநந்தசயனம் அய்யங்கார்
ஆகிய 5 பேர் போக பாக்கி ஸ்தானங்களில் தோழர் N.G ரங்கா அவர்கள் பார்ப்பனரா அல்லாதவரா என்பது நமக்குத் தகவலில்லை. மற்ற நான்கு ஸ்தானங்களில் ஒன்று கிருஸ்தவர் ஆனாலும் அந்த கிருஸ்தவர் சுவற்று மேல் பூனையாய் இருந்தாலும் அவரையும் தோழர் ரங்கா அவர்களையும் பார்ப்பனரல்லாதார் கூட்டத்திலேயே சேர்த்துக் கொண்டு கணக்குப் பார்த்தாலும் கூட 100-க்கு 3 பேர்களாய் உள்ள வகுப்பினர்கள் 100க்கு 50 ஸ்தானங்கள் கைப்பற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் வாயில் பேசும்போது மாத்திரம், தாங்கள் வகுப்புவாதிகள் அல்லவென்றும் தகுதியானவர்கள் கிடைத்தால் எல்லா ஸ்தானங்களையும் பார்ப்பனரல்லாதார்களுக்கே கொடுத்து விடுகிறோம் என்றும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் காந்தியார் உள்பட எல்லாப் பார்ப்பனர்களும் பேசுகின்றார்கள்.
அப்படியாவது தகுதி உள்ள பார்ப்பனரல்லாதார்களுக்கு பகுதியோ அல்லது மூன்றில் ஒரு பங்கோ, நான்கில் ஒரு பங்கோ ஆவது கொடுக்கிறார்களா என்று பார்த்தால், பார்ப்பனர்கள் கண்களுக்கு
29 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர்கள் மூத்துரங்க முதலியார், அவனாசிலிங்கம் செட்டியார், குமாரசாமி ராஜா ஆகியவர்கள்தான் தகுதி உள்ளவர்கள் என்று தோன்றுவதாய் சொல்லுகின்றார்கள்
தகுதி என்பதற்கு அருத்தம் என்ன என்றால் தங்களுக்கு தகுதி உள்ளவர்கள் என்றும் தங்கள் மூலமாய் தங்கள் தாசர்களாய் இல்லாத எவரும் எப்படிப்பட்டவரும் தகுதி இல்லாதவர்கள் என்றுமே ஹிட்லரிசம் பேசுகிறார்கள். இந்த லக்ஷணத்தில் தோழர் அன்சாரி அவர்கள் சென்னை தேர்தலில்வகுப்புவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று மகிழ்ச்சி அடைகின்றார்.
தோழர் காந்தியார், சத்தியம் வெற்றி பெற்றுவிட்டது என்றும் பந்தயம் ஜெயித்து விட்டது என்றும் தந்தி அடிக்கிறார்.
வகுப்புவாதத்திற்கும், சத்தியத்திற்கும் இவ்விரு பெரியார்களின் பாஷ்யம் என்ன என்பதைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம். சென்னைப் பார்ப்பனர்கள் தோழர் ராஜகோபாலாச்சாரியார் உள்பட தேர்தல் விஷயத்தில் செய்த பிரசாரத்தைக்கண்ட ஒருவர் அல்லது தெரிந்த ஒருவர் சத்தியம் வெற்றி பெற்றுவிட்டது என்று சொல்லப்படுவதை ஒப்புக்கொள்ள வேண்டுமானால் அவர் யோக்கியராய் இருந்தால் சத்தியம் என்கின்ற வார்த்தை எந்த பாஷையிலும் எந்த அகராதியிலும் எப்படிப்பட்ட மாறுபெயரிலும் உச்சரிப்பிலும் கூடவே கூடாது என்றுதான் சொல்லுவார்.
நிற்க நம் கையே நம் கண்ணைக் குத்த முனைந்திருக்குமானால் பிறகு எந்த அவயவத்தைக் கொண்டு அதைத் தடுப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்திய சட்டசபைத் தேர்தல்கள் என்றாலே நம் மாகாண பார்ப்பனரல்லாதார்களுக்கு மிக அலக்ஷியமான காரியமாகும். ஏனெனில் அதன் மூலம் யாரும் மந்திரியாக முடியாது என்பதுடன், ஜில்லா போர்ட் பிரசிடெண்ட், சேர்மென் முதலிய பதவிகளும் பெற முடியாது. வேறு வித உத்தியோக சிபார்சு முதலிய காரியங்களோ மந்திரிகள் தபவோ அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தயபவோ பெறவும் முடியாது. ஆகையால் அதைப்பற்றி யாரும் லக்ஷியம் செய்வதில்லை என்பதோடு இப்படிப்பட்ட “அனாவசியமான '' காரியத்துக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்யவும் எவரும் துணிவதில்லை.
இந்தத் தேர்தலில் தோழர் நாகேசுவரராவுக்கு 40 ஆயிர ரூ. செலவும்
டாக்டர் ராஜனுக்கு 20 ஆயிரம் ரூ. செலவும் ஆயிருப்பதாக சொல்லுகிறார்கள்.
பார்ப்பனர்களுக்கு பல வழிகளிலும் ஊரார் பணங்கள் தாராளமாய் இருந்திருக்கின்றது. வட நாட்டு செல்வவான்களை ஏமாற்றி தருவித்த
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 70
பணங்களும், கதர் மதுவிலக்கு தீண்டாமை விலக்கு ஆகியவைகளுக்கு சேகரித்த பணமும் அவற்றிற்காக அமைத்திருந்த ஆட்களும் தாராளமாய் வேலைக்கு உதவி இருக்கின்றன.
அதுவுமல்லாமல் இந்திய சட்டசபைக்கு ஒரு நபர் போனால் அது அவருடைய சொந்த நன்மைக்கு தான் பயன்படுமே தவிர அதனால் மற்றபடி அவரை ஆதரிக்கின்றவர்களுக்கு எவ்வித பயனும் அளிப்பதில்லை என்கின்ற ஒரு எண்ணமும் மக்கள் ஒன்று சேர்ந்து அபேட்சகரை ஆதரிக்கச் செய்யாமல் செய்து விடுகின்றது. ஆகவே பல “சரியான காரணங்கள்” இந்திய சட்டசபைக்கு பார்ப்பனர்களையும், அவர்கள் கண்களுக்குத் தக்க ஆட்கள் என்பவர்களையும் மாத்திரமே வெற்றி பெறச் செய்தது என்றால் இதில் அதிசயமெதுவும் இல்லை.
தோழர் ஷண்முகம் தோல்விக்கு இந்த சமாதானங்கள் போதாது என்று சொல்லப்படுமானாலும் போதுமான சமாதானங்கள் முன்னமேயே சொல்லப்பட்டுவிட்டது என்றே கருதுகின்றோம்
சிங்கார ரசத்தில் “கண்டிதா நாயகி” மற்றொரு பரகிய நாயகியைப்
பார்த்து அதுவும் சொல்லுவாள், இன்னமும் அனேகம் சொல்லுவாள், அவள் மீதிற் குற்றமென்னடி” என்று சொன்ன பாட்டைப் போல் இந்த நிலையில் நம் பார்ப்பனர்களும் ஆச்சாரிகளும் காந்திகளும் சூதுப் பந்தயத்தில் தாங்கள் வெற்றி பெற்று விட்டதைப் பற்றி அவர்கள் அதுவும் சொல்லுவார்கள் இன்னமும் அனேகம் சொல்லுவார்கள் அவர்கள் மீது குற்றமென்னய்யா என்றுதான் கூறியாக வேண்டும்
பகுத்தறிவு - கட்டுரை - 02.12.1984
ந... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
1.0.5. செங்கோடையன் முடிவெய்தினார்
ஐ.சி.எஸ். செங்கோடையன் அவர்கள் ஒரு சிறு பருவில் காயம் பட்டதின் காரணமாக இரத்தம் விஷமாகி 29 ந் தேதி சென்னையில் காலமானதாகக் கேட்டு மிகவும் வருந்துகிறோம்
அவர் ஈரோட்டிற்கு 6-வது மைலில் உள்ளநஞ்சை ஊத்துக்குளி என்னும்
கிராமத்தில் உள்ள ஒரு கொங்குவேளாள குலத்தில் பிறந்து வளர்ந்து, ஈரோட்டிலும் கரூரிலும் கல்வி கற்று அவரது திறமையினால் நமது சர்க்காரால் லண்டனுக்கு ஐ.சி.எஸ். பரீட்கைஷக்கு அனுப்பப்பட்டு அதில் தேறி கலெக்ட்டராக ஆனவர். கோயமுத்தூரில் பிரபல குடும்பஸ்தராய் இருக்கும் தோழர் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்களது வீட்டில் அவரது சகோதரர் தோழர் பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களது குமாரத்தியை மணந்தவர். சமிபத்தில் அவர் அனந்தப்பூர் ஜில்லாவுக்கு கலெக்ட்டராக மாற்றப்பட்டதாகக் கேள்வி.
மிகவும் வருணாச்சிரமச் சார்பான வீட்டில் பெண் கொண்டிருந்தாலும் கூட தோழர் செங்கோடையன் அவர்கள் சீர்திருத்தத் துறையில் மிகுதியும் ஆர்வமுடையவர்.
அவர் முதல் முதல் 1919ல் ஐ.சி.எஸ். பாஸ் செய்துவிட்டு 1920ல் இங்கு வந்த சமயம் அவருக்காக சிலர் ஈரோடு முனிசிபல் ஆபிசில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தின சமயத்தில் ஒரு பெருங் கூட்டத்தில் அவர் பதிலளிக்கும் போது “இந்தியாவில் என்றைய தினம் ஜாதி ஆணவம் மறைவு படுகின்றதோ அன்றுதான் இந்தியா விடுதலை பெற்று ஒரு சுதந்திர நாடாக உலகத்தில் விளங்க முடியும் என்று சொன்னவர்.
அப்படிப்பட்ட ஒரு சீர்திருத்த வாதியும், இன்னமும் எவ்வளவோ முன்னுக்கு வரக் கூடியவரும், தமிழ்நாடு - கொங்கு வேளாள சமூகத்துக்கு
திலகமாய் இருந்தவரும். நமது தாலூக்காவாசியும், நமது அயலாரும் (பக்கத்து
பூமிக்காரரும்) ஆகிய தோழர் செங்கோட்டையா முடிவெய்தியது கோவை ஜில்லாவுக்கே பெரியதொரு நஷ்டம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு. அவர்களது குடும்பத்தாருக்கும் தோழர் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்களது குடும்பத்தாருக்கும் நமது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றோம். அவருக்கு இப்போது வயது 39. ஒரு பெண் குழந்தையும், மனைவியும், 65 வயதுடைய தாயாரும், 45 வயதுடைய ஒரு தமயனும் இருக்கிறார்கள்.
பகுத்தறிவு - இரங்கல் கட்டுரை - 02.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 9௨?
*“ இன்னமும் பார்ப்பனர் - அல்லாதார் பிரச்சினை ஏன்?
பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வது என்று தீர்மானம் செய்து கொண்ட பிறகு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினை ஏன் தேர்தலில் உபயோகப்படுத்தப்பட்டது?'' என்று சிலர் கேழ்வி கேட்கிறார்கள்.
இதற்கும் சமாதானம் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற பிரச்சினை வந்த காலங்களில் அதாவது ஜஸ்டிஸ் கட்சியாரின் ஒரு சாதாரண கூட்டத்திலும், ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு கூட்டத்திலும் தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் எதற்காக சேர்த்துக் கொள்ளப்படுகின்றது என்றும், எப்படிப்பட்டவர்களை சேர்த்துக் கொள்வது என்றும், இதுவரை ஏன் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதைப் பற்றியும், சேர்த்துக் கொண்ட பிறகும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப்பற்றியும் விபரமாய் பேசியிருக்கின்றார். அதை ஒரு தரமாவது படித்துப் பார்ப்பவர்களுக்கு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை அடியோடு போய்விட வேண்டியது தானா அல்லது இன்னமும் இருக்க வேண்டியது தானா என்பது நன்றாய் விளங்கும்.
ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்பதில் ஒரு முக்கியமான நிபந்தனை இருக்கின்றது என்பதை யாவரும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது மக்களுக்கு சமுதாயத்துறையில் சகல வகுப்புகளுக்கும் சம சுதந்திரமும், அரசியலில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் அளிக்க சம்மதப்படும் பார்ப்பனர்களைத்தான் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை இருக்கிறது. இதையே பார்ப்பனர்களுக்காக இப்போது சிபார்சு பேசும் தர்மவான்கள் மறந்து விட்டதாகத் தெரிகின்றது. எல்லோரையும் காங்கிரசில் சேர்த்துக் கொள்வது என்று காங்கிரசுக்காரர்கள் தீர்மானம் செய்து கொண்ட பிறகு ஏன் இந்தப் பார்ப்பனர்கள் காங்கிரசின் பெயரால் ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்றும், பார்ப்பனரல்லாதார். கட்சியை 23— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஒழிக்கவேண்டும் என்றும் பேசுகிறார்கள் - கருதி இருக்கின்றார்கள்? என்று கேட்டால் இந்தப் பார்ப்பனர்களுக்காக சிபார்சு பேசும் மேதாவிகள் என்ன பதில் சொல்லுவார்களோ அதைத்தான் “பார்ப்பனர்களை சேர்த்துக் கொண்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் பார்ப்பனர் - அல்லாதார் என்பதைப் பற்றி ஏன் பேசுகின்றார்கள்” என்று கேட்கின்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது
சகல வகுப்பாருக்கும் சமுதாயத் துறையில் சமசுதந்திரம் கொடுக்கவும் சகல வகுப்பாருக்கும் அரசியல் துரையில் வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவம் கொடுக்கவும் சம்மதித்து ஒரு பார்ப்பனராவது இதுவரையில் ஜஸ்டிஸ் கட்சியில் வந்து சேர்ந்திருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்
காங்கிரசை ஒப்புக் கொள்ளாத பார்ப்பனர்களோ அல்லது மிதவாதம் பேசும் பார்ப்பனர்களோ அல்லது சர்க்காரை ஆதரிக்கும் பார்ப்பனர்களோ யாராவது ஒரு பார்ப்பனராவது இதுவரை வந்து சேர்ந்து இருக்கின்றார்களா என்று பார்த்தால், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். பிரச்சினை பார்ப்பனர்களிடத்திலேயே இருக்கின்றதா அல்லது போய் விட்டதா என்று கேட்கின்றோம் ஆகவே பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்த்துக்கொள்ளுவது என்பது ஒரு நிபந்தனையின் பேரில் என்றும், அந்த நிபந்தனையை இதுவரை எந்தப் பார்ப்பனரும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், நிபந்தனையில் பற்றுள்ளவர்கள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினையை அடியோடு கைவிட்டுவிட முடியாதென்றும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பகுத்தறிவு - கட்டுரை - 02.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2)
ப 5 2
“வகுப்பு வாதம் கூடாது ஆனால் 100-க்கு 50- நமக்கே வேண்டும்?
சென்னை மாகாண சார்பாய் இந்திய சட்டசபை பொதுத் தொகுதிக்கு 10 ஸ்தானங்களுக்கும் தேர்தல் நடந்துவிட்டது. அவற்றின் முடிவு
சென்னை நகரத்திற்கு
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் (பார்ப்பனர்)
தஞ்சை - திருச்சிக்கு தோழர் நடராஜ அய்யங்கார் (பார்ப்பனர்)
கிருஷ்ணா - கோதாவரி
தோழர் நாகேஸ்வரராவ் பந்துலு (பார்ப்பனர்)
சித்தூர்
தோழர் யம்.அனந்தசயன அய்யங்கார் (பார்ப்பனர்)
கஞ்சம் விசாகபட்டணம்
தோழர் வி.வி.கிரி பந்துலு (பார்ப்பனர்)
குண்டூர் - நெல்லூர்
தோழர் யன்.ஜீ.ரங்கா (தெரியாது)
மலையாளம்
தோழர் சாமுவேல் ஆரன் (கிருஸ்தவர்)
கோவை, சேலம், வடஆற்காடு
தோழர் டி.எஸ்.அவணாசிலிங்கம் செட்டியார் (பார்ப்பனரல்லாதார்)
செங்கல்பட்டு தென் ஆற்காடு
தோழர் சி.என்.முத்துரங்க முதலியார் (பார்ப்பனரல்லாதார்)
மதுரை - ராமநாதபுரம்
தோழர் பி.எஸ்.குமாரசாமி ராஜா ( பார்ப்பனரல்லாதார்)
———————— ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ப 5 B
ஆகவே மேற்படி பத்து ஸ்தானங்களில் 5 - பார்ப்பனர்களும், 1 கிருஸ்தவரும், 1 - நமக்கு விபரம் தெரியாதவரும், 3 - பார்ப்பனரல்லாதாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே பார்ப்பனர்களே பார்ப்பனரல்லாதார். களைவிட மெஜாரிட்டியாய் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வகுப்பு வாதம் கூடாது. வகுப்பு பிரிதிநிதித்துவம் கூடாது என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போட்டு தங்கள் வகுப்பை உயர்த்திக் கொள்ளும் வகுப்பு வாதமும் தங்கள் வகுப்புக்கு அதிக ஸ்தானம் பெற்றுக் கொள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் அடைவதை இப்போதாவது வகுப்புவாதம் கூடாது என்று சொல்லும் பார்ப்பனரல்லாத “வீரர்"கள் (துரோகிகள்) உணர்வார்களாக,.
பகுத்தறிவு - செய்திக் குறிப்பு - 02.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 7௦
வருணாச்சிரமமும் சுயமரியாதையும்
இந்திய சட்டசபைத் தேர்தலில் வருணாச்சிரமக்காரர்களைச் சுயமரியாதைக்காரர்கள் ஆதரித்ததாகவும் அதனால் சுயமரியாதைக் காரர்களுக்கு யாதொரு கொள்கையும் இல்லை என்றும் சில பத்திரிக்கைகள்.
எழுதி வருகின்றன.
அது மாத்திரமல்லாமல் சில தோழர்களும் அந்தப்படியே பேசி வருகின்றார்கள்
இதற்கு நம்மை சமாதானம் சொல்ல வேண்டுமென்று இரண்டொரு நண்பர்கள் எழுதியும் இருக்கிறார்கள்.
சுயமரியாதைக்காரர்கள் அந்தப்படி செய்தார்களா இல்லையா என்பது ஒரு புறமிருந்தாலும், எலக்ஷன் பிரச்சினை இன்னதென்றும் ஒவ்வொருவரும் என்ன பிரச்சினையின் மீது பிரசாரம் செய்தார்கள் என்றும் தெரிந்து கொண்டால் பிறகு யார் யார் யாருடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டியதென்பதையும் யார் யார் யாருக்கு உதவி செய்ய வேண்டியது நியாயம் என்பதையும் ஒருவாறு முடிவு செய்து கொள்ளலாம்.
காங்கிரசுக்காரருடைய பிரச்சினையெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்பதும், அரசியலில் பார்ப்பனரல்லாதார் பெற்றிருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அழித்துவிடவேண்டும் என்பதும், மற்றும் பல துறைகளில் பார்ப்பனரல்லாதார்.
அடைந்திருக்கும் சிறிது முன்னேற்றத்தையும் கெடுத்து சகல துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுமேயாகும்
இந்தக் கொள்கைகளை பிரச்சினையாக வைத்தே தென்னாட்டில் உள்ள சகல பார்ப்பனரும் அதாவது உத்தியோகப் பார்ப்பனர், ஹைக்கோர்ட் ஜட்ஜி முதல் பெஞ்சு கோர்ட் வரை உள்ள அதிகாரிப் பார்ப்பனர்கள், சகல வக்கீல் பார்ப்பனர்கள், டாக்டர் பார்ப்பனர்கள். உபாதானம், சவுண்டி, புரோகிதம், மாமா பார்ப்பனர்கள் எல்லோரும் மற்றும் காப்பிக்கடை, வக்கீல் குமாஸ்தா , ஓட்டல் பார்ப்பனர்கள். யாவரும், பள்ளிப் பார்ப்பனர் உள்பட ஒன்று சேர்ந்து ஒரே மூச்சாக காங்கிரசை ஆதரித்து இருக்கிறார்கள். அநேக பார்ப்பனர்கள் தங்கள் வருணாச்சிரமத்தை அனுசரிக்கின்றவர்களாயிருந்தும், காங்கிரசை -
277 ய... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அனுசரிக்காதவர்களாயிருந்தும் எலக்ஷன் பிரச்சினையானது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற பிரச்சினையாகவே இருக்கின்றது என்று தெரிந்ததினாலேயே காங்கிரஸ் காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டு. காங்கிரசில் கலந்து வேலை செய்து இருக்கிறார்கள். தென்னாட்டு பார்ப்பனர்கள் காங்கிரஸ் போர்வைக்குள் இருந்திருந்தாலும் கூட அவர்களுடைய கவலை எல்லாம் எப்படியாவது சர். ஷண்முகம் சட்டசபை மெம்பர் ஆகக்கூடாது என்பதும், ஒரு சமயம் சர். ஷண்முகம் சட்டசபை மெம்பர் ஆகிவிட்டாலும் கூட இந்திய சட்டசபையில் அவர். பிரசிடெண்டாக ஆகக்கூடாது என்றும் கவலை வைத்தே ஒவ்வொரு தொகுதிக்கும் வேலை செய்திருக்கிறார்கள்.
வருணாச்சிரமக்காரர்களோ காங்கிரசை எதிர்த்து காங்கிரசுக்காரரை தோற்கடிக்க வேண்டும் என்பதையே இந்தத் தேர்தலைப் பொருத்தமட்டில் முக்கிய கருத்தாய்க் கொண்டவர்களே தவிர ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைக்க வேண்டும் என்கின்ற பிரச்சினையையோ சர். ஷண்முகம் பிரசிடெண்டு ஆகக் கூடாது என்கின்ற பிரச்சினையையோ தேர்தல் பிரசாரமாகக் கொண்டவர்கள் அல்ல என்பது நமதபிப்பிராயம்
அன்றியும், வருணாச்சிரமக்காரர் இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதாருக்கோ அல்லது சீர்திருத்தக்காரருக்கோ, காங்கிரசுக்காரரை: விட அதிகமான கெடுதி ஒன்றும் செய்து விடமுடியாது
ஏனென்றால் காங்கிரசுக்காரர் சமூக சீர்திருத்த சம்மந்தமான. எவ்வித மசோதாவையும் கொண்டு வருவதில்லை என்றும், வேறு யாராவது கொண்டு வந்தாலும் அதை ஆதரிப்பதில்லை என்றும் எதிர்ப்பதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வருணாச்சிரமக்காரர்கள் இந்திய சட்ட சபையில் என்ன கெடுதி செய்துவிட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
அன்றியும் கொல்லங்கோடு ராஜா, ராஜாபகதூர், கிருஷ்ணமாச்சாரி முதலியவர்கள் தோழர் ஷண்முகத்தை ஆதரிப்பதாகவும் ஜஸ்டிஸ் கட்சியிடம் தங்களுக்கு விரோதமோ துவேஷமோ இல்லையென்றும் வெளிப்படையாகச் சொல்லி இருப்பதுடன் சில சமயங்களில் சர்.ஷண்முகத்தை ஆதரித்தும் இருக்கிறார்கள்.
வருணாச்சிரமம், சீர்திருத்தம் என்பவை இரண்டும் ஒன்றுக் கொன்று முரணான அபிப்பிராயமானாலும் இதில் வஞ்சகம் , சூது, சதி, மோசம், பித்தலாட்டம், ஏமாற்றம், நாணையக் குறைவு ஏதும் இல்லை என்றே கருதுகிறோம்.
ஆனால் காங்கிரசின் போர்வை போர்த்த பார்ப்பனர்களே இவை சகலத்தையும் அஸ்திவாரமாக வைத்தே ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 278
புதைப்பது, பார்ப்பனரல்லாதார். இயக்கத்தை ஒழிப்பது, சர் ஷண்முகத்தைக் கவிழ்ப்பது என்கின்ற பிரச்சினையை வைத்து வேலை செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அறிவுள்ள ஒருவன் காங்கிரசை ஆதரிப்பதா எப்படியாவது காங்கிரசை எதிர்ப்பதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம்
காங்கிரசுக்காரர்கள் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் பேசிய பேச்சில் இருந்தே நாம் கூறுவது சரி என்று நன்றாய் விளங்கி இருக்கலாம். தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரியார், டாக்டர். ராஜம் அய்யங்கார் ஆகியவர்கள் தாங்கள் வெற்றி பெற்றதன் மூலம் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆளத்தில் வெட்டிப் புதைக்கப்பட்டு விட்டதாகவும், வகுப்பு வாதம் என்னும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்னும் விஷயம் அடியோடு ஒழிந்துவிட்டது என்றும் பேசி மகிழ்ந்து இருக்கிறார்கள்.
சுயமரியாதைக்காரர்கள் தாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் எவ்வித சம்மந்தமும் வைத்துக் கொண்டிருக்கவில்லை என்றோ அல்லது தங்களுக்கு இப்போது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயமே இல்லை என்றோ சொல்லிக் கொள்ளுவதானால் அவர்கள் தங்களைப் பொருத்தவரை எலக்ஷனில் கலந்து கொள்ளாதிருந்தது ஞாயம் என்று கருதிக் கொள்ளலாம்
மற்றபடி சுயமரியாதைக்காரர்கள் என்பவர்கள் காங்கிரசுக்கு எதிராக இருந்ததோ அல்லது காங்கிரசுக்கு எதிராக இருந்தவர்களை ஆதரித்ததோ ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததோ எவ்விதத்திலும் தப்பிதம் என்று சொல்லிவிட முடியாது ஆகவே சுயமரியாதைக்காரர்கள் எலக்ஷனில் நடந்து கொண்டது எலக்ஷனில் நின்ற ஒவ்வொரு கட்சிக்காரரும் அவரவர்கள் என்ன பிரச்சினையின் மீது எலக்ஷன் பிரசாரம் செய்தார்களோ அந்தப் பிரச்சினையைப் பொருத்ததே ஒழிய மற்றபடி வேறு விதமான காரியங்களைக் குறித்து அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு - கட்டுரை - 02.12.1984
279 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வகுப்புவாதிகளே வெற்றியடைந்தார்கள்
சென்னை மாகாணத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற வீரர்கள் “வகுப்பு வாதம் தோற்றுவிட்டது” என்றும் “வகுப்பு வாதத்தை ஜனங்கள் விரும்பவில்லை” என்றும் பேசி மக்களை மனதார ஏய்க்கின்றார்கள். ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் கடுகளவு அறிவுள்ள எவனும் வகுப்பு வாதம் வெற்றி பெற்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்
இன்று இந்த நாட்டில் உள்ள ஜஸ்டிஸ் கட்சி ஆகட்டும் அல்லது சுயமரியாதைக் கட்சி யாகட்டும் உண்மையில் வகுப்பு வித்தியாசங்கள், வகுப்பு உயர்வு தாழ்வுகள், வகுப்புப் பிரிவுகள் ஆகியவை ஒழிய வேண்டுமென்று பாடுபடுகின்றனவா அல்லது இருக்கவேண்டுமென்று பாடுபடுகின்றனவா என்று கேழ்க்கின்றோம். யாரைக் கேழ்க்கின்றோம் என்றால் ஜஸ்டிஸ் கட்சியும், சுயமரியாதைக் கட்சியும் வகுப்புவாதக் கட்சி என்று யார் யார் சொல்லுகின்றார்களோ அவர்கள் ஒவ்வொருவரையுமே கேழ்க்கின்றோம்
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஆகட்டும், தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள்தானாகட்டும் உண்மையில் இந்தியாவில் மக்களிடையில் ஜாதியின் பேராலோ, சமையத்தின் பேராலோ, உள்வகுப்பின் பேராலோ எவ்வித பாகுபாடு - பிரிவினை - வித்தியாசம் ஆகியவை இருக்கக்கூடாது என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்களா என்று கேழ்க்கின்றோம். இவ்விருவர்களது பூணூல், உச்சிக்குடுமி, நாமம், விபூதி, நித்திய கர்மம், ஆகியவைகளின் பேதங்கள் மனிதத் தன்மையில் எவ்வளவு மாறுதல்களைக் காட்டுகிறது என்பதும், இதுபோலேவே மற்ற மக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் - பேதங்கள் - மாறுதல்கள் இருந்து வருகின்றன என்பதையும் யோசித்துப் பார்க்கும்போது வகுப்பு வாதத்துக்கும் வகுப்புப் பிரிவினைக்கும் இவர்கள் உட்பட்டவர்களா இல்லையா என்று கேழ்க்கின்றோம்.
இவற்றை ஒரு சமயம் வெகு சாதாரணமாய் கருதிவிடலாம்.
வற்றால் எல்லாம் ஒன்றும் கிப் போய்விடவில்லை என்று சொல்லி ற்ற ஒன்றும் முழு. று விடலாம். ஆனால் ஒன்று கேழ்க்கின்றோம். அதென்ன வென்றால் நாம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 280
மேலே குறிப்பிட்ட வகுப்புவாதமும், பேதமும், பிரிவினையும் இந்நாட்டு மக்களைச் சமூக வாழ்விலும் அரசியலிலும் கூட பேதப்படுத்தி பிரித்து உயர்வு தாழ்வாக்கி வைத்திருக்கின்றதா இல்லையா என்பதுதான்.
வகுப்பு காரணமாகவே சமூக வாழ்வில் வித்தியாசம் ஏற்படுவதும், சமூக வாழ்வில் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஏற்பட்டதின் காரணமாகவே அரசியலிலும், அரசியல் பிரதிநிதித்துவத்திலும், அரசியல் உத்தியோகத்திலும், பதவியிலும், பொருளாதாரத்திலும் கூட அது பிரதிபலித்து மக்களைப் பாதிக்கின்றதா இல்லையா என்றும் கேழ்க்கின்றோம்
அவ்வித வித்தியாசங்களைப் போக்குவதற்கும், போக்குவதற்கு அனுகூலமாக வகுப்புகளின் நிலைமைகளை அனுசரித்து வகுப்புகளுக்கு தக்கபடி கவனிப்பதற்கும், வகுப்பு வாதம் என்று சொல்லுவதா அல்லது அந்தப்படி எதையும் செய்யவொட்டாமல் தடுத்து முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு “இருக்கிறபடி இருக்கவேண்டும்” என்பதற்கு வகுப்பு வாதம் என்று சொல்லுவதா என்றுதான் கேழ்க்கின்றோம்
மற்றும் ஒரு வகுப்புக்கும், மற்றொரு வகுப்புக்கும் வித்தியாசமும்
- உயர்வு தாழ்வு தன்மைகளும் நிலைத்து இருக்கும்படி செய்வதும், இப்போது இருப்பதை ஆதரிப்பதும் வகுப்புவாதமா அல்லது வகுப்புக்கு வகுப்பு எவ்வித வித்தியாசமும் கூடாது என்பதும், அது எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது என்று சொல்லுவதும் வகுப்புவாதமா என்று கேழ்க்கின்றோம்.
பாமர மக்கள் பெரும்பாலும் மூடர்களாய் - மடையர்களாய் இருக்கும் காரணத்தைப் பயன்படுத்திக் கொண்டு நமது பார்ப்பனர்கள், வெகு தைரியமாக ஜஸ்டிஸ் கட்சியையும் சுயமரியாதைக் கட்சியையும், அவை வகுப்புப் பிரிவும், வகுப்பு வித்தியாசமும் கண்டிப்பாய் கூடவே கூடாது என்பதற்காக அவைகளை வகுப்பு வாதக்கட்சிகள் என்று சொல்லுவதும் தாங்கள் வகுப்பு வித்தியாசமும் பிரிவும் இருந்தே ஆகவேண்டும் என்றும் அவைகளை சிறிதுகூட அழிக்கக்கூடாது என்றும் சொல்லும் வகுப்பு வாதத்தை வகுப்புவாதமில்லாத கட்சி என்றும் சொல்லி மக்களை நம்பச் செய்வது என்றால் அதை நம்பும் மக்கள் மடையர்களா அல்லது அந்தப்படி நம்பச் செய்யும் ஆட்கள் அபார தந்திரக்காரர்களா என்று கேட்கின்றோம்.
வகுப்பு பேதம் இருக்கக் கூடாது என்பவர்கள் தோற்றுப் போய் வகுப்பு பேதம் இருக்க வேண்டும் என்பவர்கள் வெற்றி பெற்றால் வகுப்பு வாதம் தோற்றதா அல்லது வகுப்பு வாதம் வெற்றி பெற்றதா என்றுதான் கேட்கின்றோம்.
சுமார் இந்த 10 வருஷ காலமாகக் காங்கிரசின் பேராலும் பல மகாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. சுயமரியாதை இயக்கத்தின்
28] ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பேராலும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் பேராலும் பல மகாநாடுகள் நடைபெற்று இருக்கின்றன. இருகட்சி மகாநாடுகளிலும் நூறுபேர்கள் முதல் கொண்டு பதினாயிரம் பேர்கள் வரை கூடி சாப்பிட்டும் இருக்கலாம்.
காங்கிரஸ் சம்மந்தமான கூட்டங்களில் எல்லாம் பார்ப்பனர்களே சமைத்து இருப்பார்கள் அல்லது பார்ப்பனருக்கு வேறு சமையல் மற்றவர்களுக்கு வேறு சமையல்கள்தான் நடந்திருக்கும். அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களுக்கு வேறு சாப்பாட்டு இடமும் பார்ப்பனரல்லாதாருக்கு வேறு சாப்பாட்டு இடமும் பார்ப்பனர்களே பரிமாறுகின்றது என்கின்ற முறையும்தான் நடந்திருக்கும்
ஆனால் சுயமரியாதை மகாநாடோ, பார்ப்பனரல்லாதார். மகாநாடோ ஆகியவைகளில் பார்ப்பனர் தவிர மற்ற ஏனைய பல பிரிவுக்காரர்கள் சைவர்கள் முதல் எத்தனையோ பிரிவுக்காரர்கள் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்று யார் யாரைக் கருதுகின்றோமோ அவர்கள் முதல் பல வகுப்புக்காரர்களும் சேர்ந்தே ஒரே சமையல் செய்வதும், ஒரே பந்தியில் யாவரும் உட்கார்ந்து உண்பதும், சகல: வகுப்பாரும் சகல சமையஸ்தர்களும் பரிமாறுவதுமான காரியங்கள்தான்
இன்றும் நடந்து வருகின்றன. இப்படியெல்லாம் இருந்தும் சுயமரியாதைக்காரர்களும், பார்ப்பனரல்லாத கட்சியார்களும் தான் வகுப்புவாதிகளாம் காங்கிரஸ்காரர்கள் வகுப்புவாதிகள் அல்லவாம்.
எனவே இது கேட்பவர்களின் முட்டாள்தனமா, அல்லது இந்தப்படி சொல்லுகின்றவர்களின் அயோக்கியத்தனமா என்று கேட்க வேண்டியிருப்பதற்கு வருந்துகின்றோம்
இன்று ஓட்டல் தெருக்கள் வழி நடந்தால் பிராமணாள் ஓட்டல் என்றும், அதற்குள் பிராமணர்களுக்கு வேறு இடம் என்றும், பிராமணர்கள் அல்லாதாருக்கு வேறு இடம் என்றும், கிறிஸ்தவர், முகமதியர், பஞ்சமர் ஆகியவர்களுக்கு இடமில்லை என்றும் எழுதி வைத்திருக்கும் காப்பி ஓட்டல்காரப் பார்ப்பனர் தங்களை வகுப்பு வாதிகள் அல்லவென்றும், இந்தப்படி உள்ள முறையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுபவர்களை வகுப்பு வாதிகள் என்றும் சொல்வது என்றால், இதைக்கேட்டுக் கொள்ளுகின்றவர்கள் முட்டாள்தனமா அல்லது சொல்லுகின்றவர்கள் அயோக்கியத்தனமா என்று கேட்கின்றோம்
சாப்பாட்டு ஓட்டல்களில் “பிராமணர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடப்படும் என்று போர்டுகள் வெளிப்படையாய் எழுதிக் தொங்க விட்டுக் கொண்டு மற்றவர்களைத் தெருத் திண்ணை மீதுகூட இருக்க வொட்டாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள், தங்களை
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 282
வகுப்பு வாதிகள் அல்லவென்று சொல்லுவதும், இந்த முறை இருக்கக் கூடாது என்று பாடுபடுகின்றவர்களை வகுப்புவாதிகள் என்று சொல்லுவதுமாய் இருந்தால் இதைக் கேட்டுக் கொள்ளுகின்றவர்கள். முட்டாள்களா அல்லது சொல்லுகின்றவர்கள் அயோக்கியர்களா என்று மறுபடியும் கேட்கின்றோம்
நடை, உடை, பாவனை, மற்றவர்களை நடத்துதல் ஆகிய சகல காரியங்களிலும் , கோலில், சத்திரம், சாவடி முதலிய சகல இடங்களிலும் பேதமும், பிரிவினையும் வைத்து அதன் மூலமே மக்களின் இழிவையும் சிறுமையையும் நிலைநிறுத்தி ஒருவனுக்கு ஒருவனை கீழ்மைப்படுத்தி வைத்திருக்கும் முறைகளை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும், அதற்கு ஆதரவளிப்பவர்களை அடக்க வேண்டும் என்றும், சொன்னால். அதை வகுப்புவாதம் என்று சொல்லுவதும், அந்தப்படியான பேத்தையும் இழிவையும் சிறுமைகளையும் நிலைநிறுத்த வேண்டுமென்று சொல்லுவதையும் வகுப்புவாதம் அல்ல என்றும் சொல்லப்படுமானால் சொல்லுகின்றவர்கள் அயோக்கியர்களா அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் முட்டாள்களா என்று கேட்கின்றோம்
வகுப்புவாதம் என்பது வகுப்பு பேதத்தில் இருந்தும், வகுப்புப் பிரிவினையில் இருந்தும்தான் உண்டானதே தவிர மற்றபடி அது ஆகாயத்தில் இருந்து தொப்பென்று குதித்தது என்று யாரும் சொல்ல முடியாது. எப்படி இருந்த போதிலும் வகுப்பு வாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் வகுப்பு பேதமும் வகுப்பு பிரிவும் கூடாது என்று சொல்லுகின்றார்களா அல்லது வகுப்பு பிரிவும் பேதமும் இருக்கவேண்டும் என்று சொல்லுகின்றார்களா என்பதைத்தான் மக்கள் கவனித்துப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றோமே ஒழிய வேறில்லை.
அதுபோலவே தங்களை வகுப்பு வாதிகள் அல்ல என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்கள், வகுப்பு உயர்வு தாழ்வு பேதமும் பிரிவும் இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இவ்வளவு பாடுபடுகின்றார்களா. அல்லது அவைகள் ஒழிந்து போக சம்மதித்து இவ்வளவு பாடும் படுகின்றார்களா என்பதையும் நடுநிலையில் இருந்து சுய அறிவோடு யோசனை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்
இந்தப் படியான நடுநிலை ஆராய்ச்சியின் மீது உண்மை கண்டுபிடிக்கப்பட்டால் அவ்வுண்மையை வைத்துக்கொண்டு இன்றைய இந்திய சட்டசபைத் தேர்தலில் வகுப்புவாதிகள் வெற்றி பெற்றார்களா அது இல்லாதவர்கள் வெற்றி பெற்றார்களா என்றால் வகுப்புவாதிகள் வெற்றி பெற்றார்கள் என்கின்ற முடிவைத்தான் அடையக்கூடும்
பகுத்தறிவு - தலையங்கம் - 02.12.1934
283 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இதை நீங்கள் தயவு செய்து கவனியுங்கள்
எதற்காக தெரியுமா?
நீங்கள் ஒவ்வொருவரும் எப்படியாவது கஷ்டப்பட்டு இரண்டு அல்லது ஒரு சந்தாதாரரையாவது சேர்த்து 8 அணாவாவது அட்வான்ஸ் வாங்கி விலாசத்துடன் நமக்கு அனுப்பிக் கொடுங்கள்
ஏன்?
பகுத்தறிவு ஒரு தனி மனிதனுடைய சுயநலத்துக்கோ ஒரு தனி வகுப்பாருடைய நன்மைக்கோ நடைபெறுவதல்ல.
ஆனால் இன்று ஆதிக்கத்திலிருக்கும் வகுப்பாருடைய விஷமமும்
சூழ்ச்சியும் நிறைந்த எவ்வளவோ எதிர்ப்புகளையும் தொல்லைகளையும் சமாளித்துக் கொண்டு இழிவுபடுத்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழ்மைப்படுத்தப் பட்ட மக்களுக்காகவும் பின்தள்ளப்பட்ட மக்களுக்காகவும் நடைபெறுகின்றது.
இந்த வருஷத்தில் மாத்திரம் 3 தடவை பத்திரிகை நிறுத்தப்பட்டு விட்டதாலும் 2,3 தடவை ஜாமீன் கட்டும்படி உத்திரவு செய்யப்பட்டதாலும், பத்திரிகை விஷயமாய் 3 கேசுகள் ஏற்பட்டு அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டதாலும், கேசுகளை எதிர்வழக்காடியதாலும் 5000 ரூபாய்க்கு மேற்பட்ட நஷ்டங்களேற் பட்டதோடு பத்திரிகை சந்தா. எண்ணிக்கையும் குறையத் தலைப்பட்டு விட்டது. ஏஜண்டுகள் பெரும்பாலோர் அதாவது இயக்கத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால் - இயக்கத்தில் உள்ளவர்களால் - இயக்க நன்மைக்காகப் பாடுபட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் எங்கெங்கு ஏஜண்டாயிருந்தார்களோ. அவர்களது பாக்கிகள் 100க்கு 90 ரூபாய் வீதம் வசூலாகாமல் போய்விட்டதுடன் கண்டித்து கேட்கப் பட்டதினால் அவர்களது விரோதத்துக்கும் ஆளாக நேரிட்டுவிட்டது. மற்ற பொது ஏஜண்டுகளும்
சிலர் ஒழுங்காய் நடந்து கொள்ளாததால் எலக்ஷனுக்குப் பிறகு பத்திரிகை: அனுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டியதாகி விட்டது
ஆதலால் “பகுத்தறிவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கருதுகின்ற ஒவ்வொரு தோழர்களும் தயவு செய்து இரண்டு
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 284
சந்தாதாரர்களையாவது சேர்த்துக் கொடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட வேண்டியவர்களாகி விட்டார்கள். இதைச் சிறிது முக்கியமானதாகக் கருத வேண்டுமாய் வேண்டுகிறோம்
பத்திராதிபர்.
குறிப்பு: உதவி செய்தவர்கள் பெயர்கள் பிரசரிக்கப்படும்.
“பகுத்தறிவு காரியாலயம் மானேஜர் அவர்களுக்கு, ஐயா அடியில் கண்ட விலாசப்படிக்கு ஒரு வருஷத்துக்கு பகுத்தறிவு பத்திரிகை அனுப்பி வைக்கக் கோறுகிறேன். சந்தா ரூபாய் 3 இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.
கையெழுத்து
போஸ்டாபீஸ்....
பகுத்தறிவு - அறிவிப்பு - 02.12.1934
285 ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தரகர்கள் ஒழிப்பு
தரகர்கள் என்பது பெரும்பாலும் வியாபாரிகள் என்பதையே குறிக்கும்.
வியாபாரிகள் என்பவர்கள் அனேகமாக சரக்குகளை உற்பத்தி செய்யும் விவசாயக்காரர்கள், தொழிலாளர்கள் ஆகியவர்களுக்கும் அச் சரக்குகளை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்கள் என்பவர்களுக்கும் இடையில் இருந்து கொண்டு குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிப்பவர்களே ஆவார்கள்.
பணம் சம்பாதித்து முதலாளிகளாக ஆவது என்பதற்குஅல்லாமல் வேறு எந்தக் காரியத்திற்கும் இந்தக்கூட்டத்தார்கள் உலகிற்கு தேவையே இல்லை. இவர்களாலேயே தான் வெள்ளாமை செய்யும் விவசாயியும், சாமான்கள் செய்யும் தொழிலாளியும் என்றென்றைக்கும் ஏழைகளாயும்
தரித்திரர்களாகவும் இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்த இரு தரத்தாருமே தான் உலகம் நடைபெறுவதற்கு ஆதாரமாய் இருந்து வருகின்றார்கள். அப்படி இருந்தும் இவர்களது குறைந்த அளவு தேவைகளையோ, நலனையோ கூட கவனிக்க உலகில் எந்த மதமும், எந்த அரசாங்கமும் நாளது வரை கவலை எடுத்துக் கொண்டதே இல்லை.
மனிதன் எப்பொழுது இயற்கைக்கு விரோதமாக வாழ்க்கை நடத்த நினைத்தானோ அல்லது இணங்கினானோ அன்று முதல் மனிதன் பாடுபட வேண்டியவனானான். ஆதலால் மனிதன் பாடுபடுவதைப் பற்றி
நாம் பரிதாபப்படவில்லை. ஆனால் அந்தப் பாட்டின் - உழைப்பின் பயனை அந்த உழைப்பாளி அடையாமல் சும்மா இருக்கும் (உழைக்காத) சோம்பேரி அடைவதென்றால் இது எந்த முறையில் நியாயமாகும்?
இங்கு இந்த சாக்கில் பொதுஉடமையைப் பற்றிப் பேசவோ, சமதர்மத்தைப் பற்றிப் பேசவோ நாம் வரவில்லை. நீதி, நியாயம் என்பது வேண்டாமா என்று தான் கேழ்க்கின்றோம்.
உழைப்பாளிக்கும், விவசாயிக்கும், பண்டங்களைச் செய்யும் பாட்டாளிக்கும் வீடில்லை, கல்வி இல்லை, சரீர செளக்கியமில்லை, உடலில் வலிவு இல்லை, அறிவும் இல்லை என்றால் அவர்கள் உலகத்தில் ஏன் இருக்கவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை. விளை பொருள்கள் 100க்கு 100 பங்கு விலை அதிகம் விற்று கொள்ளை லாபம் வந்தாலும் விவசாயக் கூலியானவன் பஞ்சகாலத்தில்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 72%
வாழ்வதைப் போல் வாழவேண்டி இருக்கின்றதைப் பார்க்கின்றோம் அது போலவே உற்பத்தி செய்த சாமான்கள் 100க்கு 100 பங்கு லாபத்துக்கு விற்று லாபம் பெற்றாலும் தொழிலாளி கைக்கும் வாய்க்கும் கணக்கு சரியாகும்படி தான் வாழ்கிறான். இவை கவனிக்கப்பட வேண்டியதுதான். அரசியல்வாதிகள், சமுதாய இயல் வாதிகள் கடமை என்பதோடு ஒரு நல்ல அரசாங்கத்தினுடையவும், ஒரு உண்மையும் யோக்கியமும் பொருந்திய மதத்தினுடையவும் கடமையாகும் என்பது நமதபிப்பிராயம் அதை விட்டுவிட்டு இதெல்லாம் கடவுள் செயல் என்று சொல்லிவிட்டு இதற்காக யாதொரு காரியமும் செய்ய வேண்டியதில்லை என்றும் சொல்லப்படுமானால், தூக்கு மரங்களையும், சிறைக் கூடங்களையும் பெயர்த்து அழித்துவிட்டு கொலைகளையும், திருட்டுகளையும் பற்றி யாதொரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளாமல் அவைகளையும் கடவுள் செயல் என்று ஏன் சொல்லிவிடக் கூடாது என்று கேட்கின்றோம்
இந்த கஷ்டத்தை நிவர்த்திப்பதற்காக நாம் பிரமாதமான முறை எதையும் சொல்ல வரவில்லை. உண்மையிலேயே விவசாயிகள், பூமிக்கு சொந்தக்காரர்களாய் இருக்கின்றவர்கள் முதல் கொண்டு, வாரத்துக்கு குத்தகைக்கு உழுகிறவர்கள் உள்பட விவசாயக் கூலிகள் வரையில் கடன்காரர்களாகவே தரகர்களுக்கும், லேவாதேவிக்காரர்களுக்கும் உழைத்து உழைத்துப் போட்டு விட்டு பட்டினி கிடப்பவர்களாகவே
இருக்கிறார்கள். இவர்கள் ஏன்இந்தப்படி இருக்கவேண்டும்? தொழிலா:
ஏன் இப்படியே இருக்க வேண்டும்? என்பதைச் சிறிது கவலையுடன் யோசித்து தக்கது செய்யுங்கள் என்று தான் சொல்ல வருகின்றோம்
அதற்கு நாம் சொல்லும் மார்க்கம் மிகமிக சுருக்கமானதும், சுல்பமானதுமாகும்தான். இதில் பலாத்காரமோ, சமாதான பங்கமோ இருக்கவோ ஏற்படவோ இடமும் இல்லை
அதாவது விவசாயக்காரன் சர்க்காரிலேயோ, அல்லது கூட்டுறவு ஸ்தாபனங்களிலேயோ தவிரவேறு எங்கும் கடன் வாங்க மார்க்கமில்லாமலும் அவனுக்கு வேறு தனிப்பட்ட நபர் யாரும் கடன் கொடுக்காமலும் செய்ய வேண்டியது முதன்மையான காரியமாகும். அதோடு விவசாயத்தில் ஈடுபட்ட கூலி ஆட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்
பிறகு விளைபொருள்கள், அதாவது ஆகார சாமான்கள், கூட்டுறவு பண்ட சாலைகளே விலைக்கு வாங்கி, அதாவது விவசாயிக்கு கட்டும்படியான விலைக்கு வாங்கி அக்கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலமாகவே வாங்குபவர்களுக்குக் குறைந்த லாபத்தில் விற்பனை செய்ய வேண்டும். இதனால் யாருக்கும் கஷ்டம் ஏற்படாது. அதிக லாபம்
287 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
வைத்து விற்பதானாலும் அந்த லாபம் சாமான் விற்ற விவசாயிகளுக்கும் வாங்குகின்ற ஜனங்களுக்கும் பிரயோஜனப்படும்படியே செய்ய வேண்டும்.
இந்தப்படி செய்வதாயிருந்தால் மிடில்மேன் அதாவது தரகன் அல்லது வியாபாரி என்கின்ற கூட்டத்திற்கு நாட்டில் தேவையே ஏற்படாமல் போய்விடும். அப்போது அனாவசியமாக ஏராளமான பணக்காரர்கள் உற்பத்தி ஆகமாட்டார்கள் என்பது மாத்திரமல்லாமல் உண்மையிலேயே விவசாயக்காரர்களுக்கு நஷ்டமும் கஷ்டமும் இல்லாமல் போவதுடன் மனிதத் தன்மைக்கு வேண்டிய சகல காரியங்களும் விகிதாச்சாரம் அவனும் அடைய சவுகரிய மேற்பட்டுவிடும்.
தொழிலாளிகள் விஷயத்திலும் மனித சமூகத்துக்கு வேண்டிய அனுபவ சாமான்கள் யாவும் இக்கூட்டுறவு முறையினாலேயே செய்யப்பட்டு அக்கூட்டுறவு முறையினாலேயே வினியோகிக்கப் படுமானால், மில் முதலாளிகள் என்கின்ற கூட்டம் எப்படி உற்பத்தியாகும்? அவர்களுக்கு வேலைதான் ஏது? ஒரு வஸ்த்துவின் லாபத்தை அந்த வஸ்துவை பாடுபட்டு செய்தவனாவது அல்லது பாடுபட்ட பணத்தைக் கொடுத்து வாங்குபவனாவது அனுபவிக்க வேண்டுமே அல்லாமல் சும்மாயிருக்கும் சோம்பேறி தரகன் ஏன் அனுபவிக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றோமே ஒழிய யாரையும் நாம் தூக்கில் போடும்படியோ, சிறையில் வைக்கும்படியோ சொல்ல வரவில்லை.
பிறகு தொழிலாளிகள் இருக்கும் இடங்களில் குறைந்தது 5 மைல் சுற்றளவு தூரத்துக்காவது கள்ளுக்கடைகளோ, மார்வாடிகளோ, நாட்டுக்கோட்டையார்களோ இல்லாமல் இருக்கும்படி செய்துவிட்டு அவர்களுக்கு தேவையான பணத்தைத் தொழிற்சாலை நிர்வாகிகளிடமே வாங்கிக்கொள்ளும்படி செய்து விட்டு லாபத்தில் ஒரு பகுதியோ அல்லது அத்தொழிலாளிக்குப் போதிய அளவு தாராளமான கூலியைக் கொடுத்து அக்கூலியை சாமான் மீது வைத்து விற்கும்படியாகவோ செய்து விட்டால் தொழிலாளிகளைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது
இந்த இரண்டு காரியங்கள், அதாவது விவசாயி விஷயமும் சாமான்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளி விஷயமும் இந்த முறையில் முடிவு செய்யப்பட்டுவிட்டால் உலகில் வேறு எவ்விதமான நெருக்கடிகளும் இருக்காது என்பதோடு அரசியல் நிர்வாகத்துக்கும் இவ்வளவு கஷ்டமும் பளுவும் இருக்க நியாயமும் இல்லாமல் போய்விடும்
இதற்காக இப்போது நமது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையெல்லாம் சமீபத்தில் ஜர்மனி சர்க்கார் செய்திருப்பது போல் கூட்டுறவு ஸ்தாபனங்களை பலப்படுத்தி அவைகளை இன்னமும் சற்று அதிகமான சர்க்கார் மேல் பார்வை பார்த்து நிர்வகிப்பது என்ற ஒன்றே போதுமானது என்று சொல்லுவோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 288
இன்று இந்த நாட்டில் 5.5.1... BAMA., படித்து விட்டு மக்கள். ஆயிரம், பதினாயிரம் கணக்காய் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றதை
நேரில் பார்க்கின்றோம்
இவர்களில் அனேகர் போலீஸ் கான்ஸ்டேபிள் வேலைக்குக் கூட
வரத் தயாராய் இருக்கிறார்கள். மாதம் 15 ரூபாய் 20 ரூபாய்க்கு குமாஸ்தா.
- மேஸ்திரி வேலைக்குக் கூட வர கெஞ்சுகின்றார்கள்.
இவர்களுக்கு ஒரு ஏற்பாடு செய்யாமல் எத்தனை நாளைக்கு விட்டு வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை:
மேலும் இந்த நாட்டில் ஏதாவது அரசியல் கிளர்ச்சி உண்மையில் இருக்கின்றது என்று சொல்லப்படுமானால் இந்த மாதிரி வேலையில்லாத ஆட்களுடைய கஷ்டமே அப்படிப்பட்ட அரசியல் கிளர்ச் காரணமாகும் ஆதலால் அப்படிப்பட்ட தொல்லைகளும், ஒருவாறு ஒழிந்து ஜனங்கள். சமாதானத்தோடு வாழுவதற்கும் அனுகூலமாயிருக்கும் என்பது நமதபிப்பிராயம்
இன்று நடக்கும் கூட்டுறவு ஸ்தாபனங்கள் என்பவை இந்த மாகாணத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை கிரிமினலுக்கு இடமில்லாமல் நடைபெறுகிறது என்பது ஒரு அளவுக்கு திருப்தி ஆனாலும் ஆந்திர தேசத்தில் பெரும்பாலும் மோசடியாகவே நடைபெற்ற அனேக கேசுகள் கிரிமினலுக்கு போவதாகக் கேழ்விப்பட்டோம்
ஆதலால் கூட்டுறவு ஸ்தாபனங்கள் இலாக்கா சற்று விரிவடைந்து இன்னமும் அநேக துறைகளில் பிரவேசித்து தக்க மேற்பார்வையுடனும் உண்மையான நல்ல எண்ணத்துடனும் ஏழை மக்களுக்கும், பாடுபடும் உழைப்பாளி மக்களுக்கும் உதவும் படியாகவும் நடைபெறச் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையினாலே இதை எழுதுகின்றோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 02.12.1934
289 ௨. ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பொது தொகுதியின் யோக்கியதை
இந்திய சட்ட௪பைப் பொதுத் தொகுதியின் பொது ஓட்டர் தொகுதியில் ஒரு கிருஸ்தவர் வெற்றி பெற்றுவிட்டதற்காகப் பார்ப்பனர்கள் வகுப்புவாரி ஓட்டர் தொகுதி இனி வேண்டியதில்லை என்றும், பொதுத் தொகுதியே போதும் என்றும், அதிலும் கிருஸ்தவர்களுக்கு என்று ஸ்தானம் ஒதுக்கி வைக்கக்கூட வேண்டியதில்லை என்றும் இப்போது முன்னிலும் அதிகமாக கூப்பாடு போடுகிறார்கள்.
ஆனால் எப்படிப்பட்ட கிருஸ்தவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்கள் சமூக முடிவுக்கு விரோதமான கருத்துடைய கிருஸ்தவர்தான் பொதுத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறாரே தவிர, கிருஸ்தவ சமூக நலனுக்கு ஏற்பட்ட கருத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் கிருஸ்தவர் வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்பதும், வெள்ளை அறிக்கையை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதும், காங்கிரசினுடன் கூட்டுறவு கொள்ளவேண்டும் என்பதும், காங்கிரசு கிருஸ்தவ சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் உடையது என்பதும், பெரும்பான்மையான அல்லது 100 க்கு 99 பேர்களான கிருஸ்தவர் களுடைய எண்ணமா? அவர்களுடைய சமூக சங்கத்தினுடைய முடிவா? என்பதை உணர்ந்து பார்த்தால் தங்கள் சமூக மக்களில் 100 க்கு 99 பேர்களுக்கு விரோதமான அபிப்பிராயம் உடையவரும், சமூக சங்க முடிவுக்கு எதிரிடையான அபிப்பிராயம் உடையவருமான ஒருவர் எதிரிகளின் கையாளாகி அவர்களுடைய இஷ்டப்படி சம்மதித்த ஒருவர்தான் அல்லது தமது சமூக உரிமைகள் கோரிக்கைகள் என்பதற்கு துரோகம் செய்ய சக்தி வாய்ந்த ஒருவர்தான் பொதுத்தொகுதியில் தெரிந்தெடுக்கப்பட முடிகின்றது. ஆகவே இதுதான் இன்று பொதுத் தொகுதியாய் கருதப்படுகின்றது எனவே இந்த பொதுத் தொகுதியை கிருஸ்தவ சமூகம் ஒப்புக் கொள்ளுகின்றதா என்று கேட்கின்றோம்.
பகுத்தறிவு - கட்டுரை - 02.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 70௦0
முடிந்து போன விஷயமாம்
கும்பகோணத்தில் தேர்தல் கொண்டாட்டம் கொண்டாட வந்த தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களை கூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டார்கள்.
அதாவது “இந்திய சட்டசபை மெம்பர் ஆகிவிட்டதற்காக இவ்வளவு பிரமாதமான வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடு கின்றீர்களே! நீங்கள் எல்லோரும் அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று
கேட்டார்கள். அதற்க ராஜகோபாலாச்சாரியார் ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விட்டார்.
அதாவது ''இது முடிந்து போன விஷயம். எப்படியோ ஒரு விதத்தில் நாங்கள் ஜெயித்து விட்டோமாகையால் முடிந்து போன விஷயத்துக்கு இனி கேள்வி கேட்கவோ பதிலளிக்கவோ இடமில்லை'” என்று சொல்லிவிட்டாராம். எந்த விதத்திலோ காரியம் கைகூடின பிறகு வெற்றி பெற்றவர்கள் சொல்ல வேண்டிய பதில் இதுதான். அவர்களது தைரியத்தைக் கண்டு நாம் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.
பகுத்தறிவு - செய்தி விளக்கக் குறிப்பு - 02.12.1934
ஹு... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஜஸ்டிஸ் கட்சியின் புனருத்தாரணம்
ஜஸ்டிஸ் கட்சியில் சட்டசபை நடவடிக்கைகளைப் பொருத்தவரை கவனிப்பதற்கு என்று கவுன்சில் பார்ட்டி என்பதாக ஒரு பிரிவு இருந்து வரும் விஷயம் யாவரும் அறிந்ததாகும். அந்தப் பிரிவுக்கு முக்கிய கொரடாவாக - அதாவது சட்டசபையைப் பொருத்தவரையில் மெம்பர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கட்சி சார்பாய் தெரிவிப்பதற்காக தெரிந்தெடுக்கப்பட்டவரை கொரடா என்று சொல்லுவது. அந்த ஸ்தானத்தில் தோழர் குமாரராஜா முத்தய்யா அவர்கள்
இருந்து வருகிறார்.
சமீபத்தில் இந்திய சட்டசபைக்கு நடந்த தேர்தல்கள் விஷயமாய் தோழர் ஷண்முகம் அவர்களுக்கும் தோழர் ராமசாமி முதலியார் அவர்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம், தோழர் குமாரராஜா முத்தய்யா செட்டியார் அவர்கள் சரியானபடி நடந்துகொள்ளாததே என்ற ஒரு அபிப்பிராயம் கட்சிப் பிரமுகர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது
மேற்படி தோல்விகளானது தமிழ் நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் நிலைமையை பாதிக்கக் கூடியதாய் போய்விட்டதால், அந்த வருத்தத்தை உத்தேசித்தும் மேலால் இந்தப்படி நேராமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் சில மூன் ஜாக்கிரதையான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டது
ஆனபோதிலும், கட்சிப் பிரமுகர்களில் ஒருவரைப் பற்றியே இந்தப்படி நினைக்க வேண்டி ஏற்பட்டதானது சரியாய் இருந்தாலும், தப்பாய் இருந்தாலும் கட்சிக்கு மிகவும் நெருக்கடியான நிலைமை என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் நெல்லூர் மகாநாட்டில் நடந்து கொண்ட போக்கானது கட்சியை எவ்வளவு கேவல நிலைக்குக் கொண்டு வர வேண்டுமோ அவ்வளவு கேவல நிலைக்குக் கொண்டு போய்விட்டது.
அதன் பிறகு தஞ்சாவூர் மகாநாடானது உலகமே சிறிக்கும் படியான நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது என்றாலும், பொப்பிலி ராஜா அவர்கள் கட்சித்தலைவர் ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டதின் பயனாய் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நான்கு பேர் மதிக்கவோ அதைப் பற்றி நினைக்கவோ ஆகிய நிலைமையாவது இருந்து வந்தது.
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 29
ப்
ஆனால் இப்போது இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவின். பயனாய் மறுபடியும் கேவல நிலைமைக்குப் போய்விடுமோ என்கின்ற பயமும் அதைரியமும் கட்சியில் அனுதாபமுடைய சுயநலமில்லாத ஒவ்வொருவருடைய மனதிலும் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையானது கட்சியின் பிரவி எதிரிகளாகிய பார்ப்பனர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தி விட்டது. ஆகவே இந்த சமயத்தில் கட்சிப் பிரமுகர்கள் ஒன்று கூடி ஏதாவது ஒரு பந்தோபஸ்தானதும் நிர்மாணமானதுமான காரியத்தைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமே யாகும். அதைப் பற்றி நமக்கும் பல தீர்மானங்களும் வியாசங்களும் வந்திருக்கின்றன.
தோழர் குமாரராஜா முத்தய்யா அவர்களும் ராஜா சர் அண்ணாமலை அவர்களும் கட்சிக்காக தாராளமாக பணம் உதவியும், செலவு செய்தும் இருப்பார்கள் என்பதில் ஆட்சேபணை இல்லை ஆனால் அதற்கு தகுந்ததற்கும் மேலான பலன்களை அவர்களும் அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் மறுக்கவில்லை. யாதொரு சுயநலத்தையும் கருதாமல் கட்சிக்கு வேலை செய்தவர்கள்
யார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும். கண்டுபிடிக்கப்பட்டாலும் கட்சி “பிரமுகர்கள்” அதை ஒப்புக் கொள்ளவுமாட்டார்கள். ஆதலால் அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை.
இப்போது 11-ந் தேதியில் நடக்கப்போகும் கவுன்சில் பார்ட்டி மீட்டிங்கினால் கக்ஷியில் பிளவு ஏற்படாமல் படிக்கும் இனியும் இந்த மாதிரியான காரியங்கள் நிகழாமல் படிக்கும் இருக்கும் படியான ஒரு
முடிவுக்கு வரவேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும்
அதுவே ராஜ தந்திரமுமாகும். தோழர் பனக்கால் அரசர் இப்போது இருப்பாரேயானால் இந்த மாதிரி ஒரு மீட்டிங்கு போடாமலே இரண்டாம் பேருக்கு தெரியாமல் என்ன என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிடுவார். ஆனால் இப்போது வெளிப்படையாகவே எல்லாம் செய்ய வேண்டியதாகி விட்டது. கட்சிகள் ஏற்பட்ட இந்த நிலையானது இன்று பார்ப்பனருக்கு மாத்திரமல்லாமல் அவர்கள் மூதாதைகளான அரசாங்கத்துக்கும் கொண்டாட்டமாய் விடும். ஏனெனில் இப்பிளவால் அரசாங்கம் ஜஸ்டிஸ் கக்ஷியை தங்கள் கை ஆயுதமாக உபயோகித்துக் கொள்ள கருதிவிடுவார்கள். எப்படி என்றால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமல்லவா?
ஆகையால் சம ஒழுங்கு விதி சம்பந்தமான முறையில் இல்லாமல் தலைவர் தன் சொந்த முறையில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி அவர்கள் மூலம் உண்மையைக் கண்டுபிடித்து தகுதி அற்றவர்களிடம் ராஜினாமா. பெற்றுக் கொள்ளுவது நல்ல காரியமாகுமென்று நமக்குத் தோன்றுகின்றது
293 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அப்படிக்கில்லையானால், ஜஸ்டிஸ் க்ஷி கவுன்சில் பார்ட்டி மீட்டிங்கு மாத்திரமல்லாமல் தென் இந்திய நல உரிமைச் சங்க நிர்வாக சபை மீட்டிங்கும், ஜஸ்டிஸ் கக்ஷி கார்ப்பரேஷன் (முனிசிபல் ) பார்ட்டி மீட்டிங்கும் இப்படியே இன்னும் பலதுகள் போட வேண்டி வரும். பிறகு அவற்றில் இருந்து கக்ஷிகள் முளைக்கும். இந்த நிலையானது கொள்கை இல்லாமலும் கக்ஷிக்கு யாதொரு பயனும் இல்லாமலும், கட்சியின்: பெயரைக் கொண்டும் பிழைத்து வருகின்ற கூட்டத்துக்கு ஒரு பெரிய வெள்ளாமையாக முடிந்து அவர்களது தொல்லைக்கும் விஷமத்துக்கும் கட்சி ஆளாக வேண்டி வரும் என்று பயப்படுகின்றோம்
ஜஸ்டிஸ் கட்சியானது பணக்காரர் ஜமீன்தார்கள் ஆகியவர்கள்
ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் இந்த மாகாணத்தில் உள்ள எந்த ஜஸ்டிஸ் கட்சியாரையும் விட நாம் முன்னணியிலேயே இருக்கிறோம்
இன்றைய நிலைமையைக் கூட அதற்கு அனுகூலமாகத்தான் நாம் கொள்ளுகின்றோம்.
ஆனால் சொந்த குரோதங்களுக்கும், பிளவுகளுக்கும், வீண்: தொல்லைகளுக்கும் இடமில்லாமல் எவ்வளவு செய்து கொள்ள வேண்டுமோ. அவற்றை செய்து கொள்ள வேண்டியது புத்திசாலித் தனமாகும்
எதற்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்க நிர்வாக மீட்டிங் ஒன்று முதலில் கூட்டி அதிலிருந்து ஒரு முடிவை முதலில் செய்து கொள்வது மிக்க பலந் தருவதாகும் என்று அபிப்பிராயப் படுகின்றோம்.
இது சம்மந்தமாக வந்த பல பல தீர்மானங்களையும் சேதிகளையும் வெளியிடாமல் அவர்களுக்கெல்லாம் நமது அபிப்பிராயத்தை தெரிவித்து விடவே இதை எழுதினோம். ஆதலால் அவ்விஷயங்களை பிரசுரிக்காததற்காக நேயர்கள் மன்னிப்பார்களாக
பகுத்தறிவு - கட்டுரை - 09.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 294
ஒரு தோழரின் கடிதத்திற்கு ஈ.வெ.ராமசாமி பதில்
தோழரமின் கடிதம் 3 “அன்புடைய ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கட்கு க்ஷேமம். க்ஷேமத்துக்கு எழுதுங்கள். வெகு நாளாகக் கடிதப்போக்கு வரத்தில்லை, நானும் உங்களுக்குச் சில விஷயங்கள் பற்றிக் கடிதம் எழுத வேண்டும் என எண்ணியெண்ணி முடியாது போயிற்று.
நான் சொல்ல விரும்பும் விஷயம் சிலவுண்டு. உங்கள் இயக்கம் உயர்வானது. அவ்வியக்கம் பலப்பட்டு எல்லா வகுப்பாருடைய உதவியும் பெறவேண்டுமானால் நீங்கள்தற்காலம் அனுஷ்டித்து வரும் முறை சரியல்லவென்பது எனது உண்மையான எண்ணம். உங்கள் இயக்கத்தில் எனக்கு ஆர்வமுண்டு. 10, 15 வருஷ காலமாக இவ்வியக்கத்தின் கொள்கை காரணமாய் நான் இந்தியாவில் நடைபெறும் ஒரு இயக்கத்திலும் நேர்முகமாய்க் கலந்து கொள்ளாது. இருந்து வந்திருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு இயக்கத்திலும், இற்லெ நல்ல அம்சங்களிருக்கின்றன பல கெட்ட அம்சங்களும் உண்டு.
சமதர்மக் கொள்கையை ரஷ்யாவில் கொண்டாடும் முறையில் இந்தியாவில் புகுத்துவது முடியாது. அவர்களது பழைய கொள்கைகளையே மாற்றிக் கொண்டு வருநொர்கள்.
நீங்கள் செய்துவரும் பிரசாரத்தில் தற்காலம் இந்தியாவில் இருக்கும் ஒரு இயக்கத்துடனும் சேர்ந்திருப்பது சரியல்ல. அப்பொழுது உங்கள் இயக்கம் நாளுக்கு நாள் பலஹினப்படும்; விரோதிகளும், போலி இிநேநெர்களும் ஏற்படுவார்கள்,
சமதர்மக் கொள்கைக்கு வேலை செய்ய முன்வருபவர்கள் யாதொரு விதமான வருமானத்தையும் எதிர்பார்த்தவர்களாயிருக்க முடியாது. ஏனெனில் இது ஏழைகளது இயக்கம். நமது நாட்டில் தோன்றியுள்ள காங்கிரஸ், ஜஸ்டிஸ், மற்றய இயக்கங்கள் எல்லாம் முதலாளிகளுடையவும் நிலச்சுவான்தார் களுடையவும் இயக்கமாகும். இவ்வியக்கத்தில் ஜஸ்டிஸ் இயக்கம் ஜாதி வித்தியாசம் பாராதது என்று எண்ணமுடியவில்லை. அதிலும்
2 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
முதலியார், நாயக்கர் சண்டை இருக்கிறது. காங்கிரஸும் அப்படித்தான். நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி இயக்கத்தில் சென்னையில் சேர்ந்து பிராமணர், பிராமணர் அல்லாதார் பிரச்னையைக் இளப்பிப் பேசினீர்கள். உங்கள் கொள்கைக்கு அப்பிரச்சினையே ஏது? அப்பிரச்ச/னையொன்றிருப்பதாக எண்ணியும் இருக்கக்கூடாது. அதைப்பற்றிப் பேசியுமிருக்கக் கூடாது. அவ்வாறு பேசியதிலிருந்து உங்கள்சமதர்மக்கொள்கையில் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இன்னம் ஏற்படவில்லையென்றோ அல்லதுஅதனை நீங்கள்அறியவில்லையென்றோ என்போலுள்ளவர்கள் நினைக்க வேண்டியேற்படுகிறது.
நான் இவ்விதம் எழுதுவதால் என் பேரில் வருத்தமடைய மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. இப்பொழுது காங்கிரஸ் அசெம்பிளித் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டது. இவர்கள் சாதிக்கப் போவதொன்றுமில்லை. யாருக்குச் செளகரியம் ஏற்பட வேண்டுமோ அவர்கட்கு ஏற்படப் போவதில்லை யென்பது எனது முடிவு. ஏன்ற அது முதலாளிகளால், கருப்பு முதலாளிகளால் வெள்ளை முதலாளிகளுக்கு விரோதமாய் ஏற்பட்ட இயக்கமாய் விட்டது. அதனைத் இருத்தியமைக்க மாட்டாமல் மகாத்மாவும் அவ்வியக்கத்தை விட்டு கிராம புனருத்தாரணத் இட்டத்திற்கு ஆயத்தம் செய்கிறார். இவ்வியக்கத்தைக் கவனிக்கையில் உள்நாட்டு முதலாளிகளின் செளகரியத்திற்காக ஏழைகள் உழைக்கவேண்டிய காலமும் வரும் எனத் தெரிநெது. இவர்களினின்றும் தப்பிக்க வேண்டி மறுபடியும் ஏழைகள் போராட வேண்டி வரும். ஆகவே சமதர்மக் கொள்கையென்று அறியக்கூடாத முறையில் எல்லா இயக்கத்தவர்களும் நமக்கு உதவி செய்யக்கூடிய நிலையில்
ஓர் திட்டம் செய்து வேலை யாரம்பிக்க வேண்டும். அதற்கான வேலையைத் தமிழ் ஜில்லாக்களில் ஆரம்பிப்பது அவசியம். நீங்கள் செய்து கொண்டு வரும் முறையில் மாறுதல் செய்ய வேண்டியது அவசியம் என்பதையாவது உணர்கிறீர்களா? நான் சொல்வது தவறுதல் எனக் கண்டால் அதையாவது தெரிவியுங்கள்.
பிறபின்......"” என்று எழுதியிருக்கிறார். இதை அனுசரித்து இன்னும் சிலரிடமிருந்து பல கடிதங்களும் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் எல்லோருமே பார்ப்பன நண்பர்கள் ஆதலால் அவற்றிற்கெல்லாம் இந்த பதில் பயன் படுமென்று எண்ணுகிறேன்.
ஈ.வெ.ரா. பதில்
அன்புள்ள தோழர் அவர்களுக்கு வணக்கம்
தங்கள் 24.11.34-ந் தேதி கடிதம் கிடைத்தது. அதைக் கவனித்துப்
பார்த்தேன். அதில் “எனது இயக்கத்தைப் பற்றி புகழ்ந்திருப்பது குறித்து
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 22%
மகிழ்கிறேன். ஆனால் நான் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்ததும் பிராமணர்
- அல்லாதார் என்கின்ற பிரச்சினையைக் கிளப்பினதும் தங்களுடைய சம்மதத்தைப் பெறவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் தாங்கள் சமதர்மத்தை மனப்பூர்வமாய் ஆதரிப்பவர்கள் என்றும் அதிலிருந்து தெரிகிறது
நான் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினையை இன்று நேற்று அல்லாமல் இந்த 10 வருஷ காலமாகவே “கிளப்பி விட்டு” அதற்காக வேலை செய்து வருவது தாங்கள் அறிந்ததாகும்
இந்த நாட்டில் பாமர மக்களுக்காகவோ ஏழை மக்களுக்காகவோ ஒருவன் வேலை செய்ய வேண்டுமானால் அவன் உண்மையான தொண்டனாய் இருப்பானானால், அவனுக்கு முதலில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற பிரச்னைதான் முன்நிற்கும். ஏனெனில் அப்பிரச்சினையை கிளப்பி விட்டு அதன் மீது மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி உண்டாகச் செய்து விட்டால்தான் அத்தொண்டினது வேலை சிறிதாவது பயன்படக் கூடியதாகும்
மற்றும் நமது பாமர மக்களின் குறைவு என்ன? அவர்களது தேவை என்ன? என்பதை ஒருவன் ஜாதி மத செல்வ அபிமானம் இல்லாமல் பார்ப்பானேயானால் அவனுடைய நேர்மையான நாட்டம் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கின்ற பிரச்சினையில் தான் கொண்டு போய்விடும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். ஒரு சமயம் நான் பார்ப்பனரல்லாதாராய் இருக்கிறேன். என்பதினால் எனக்கு இந்த அபிப்பிராயம் தோன்றிற்றோ என்பது சம்சயத்துக்கு இடமுண்டாகக்
கூடியதாய் இருந்தாலும் இருக்கலாம்
பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இன்றைய தினம்
பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆட்களைப் பொருத்ததோ, அல்லது பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்லிக் கொள்ளும் சில ஆட்களையும் பொருத்ததோ அல்ல என்பதையும், ஆனால் அது இன்று
ஒரு பார்ப்பனன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளுகின்றவன் அவன்:
உணர்ச்சியில், ஒழுக்கத்தில் எப்படிப்பட்டனவாய் இருந்தாலும் அதற்காக கவலைப்படாமல் தனக்கு என்ன என்ன உரிமை எதிர்பார்க்கிறான்- என்ன. என்ன உரிமை அனுபவிக்கிறான் என்பதையும், அதே மாதிரியாகவே தன்னை ஒரு பார்ப்பனரல்லாதான் என்று கருதிக் கொண்டிருப்பவனோ சொல்லப்படுகின்றவனோ ஆன ஒருவன், தனக்கு என்ன உரிமை உண்டு என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் என்பதோடு, வாழ்க்கையில் என்ன. உரிமை அனுபவிக்கிறான் என்பதையும் மற்றும் பார்ப்பனன் என்று தன்னை சொல்லிக் கொள்ளுபவனால் அல்லாதவனுக்கு என்ன என்ன உரிமை - நிலைமை உண்டு என்று எழுதி வைத்த ஆதாரத்தையும், அமுலில் 297... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இருக்கும் அனுபவத்தையும் பொருத்ததே ஒழிய வேறில்லை என்பதை தங்கள் ஞாபகத்துக்குக் கொண்டுவர நான் பணிவாய் ஆசைப்படுகின்றேன்.
ஆதலால் நான் பார்ப்பனர் - அல்லாதார் பிரச்சினையில் எனது காலத்தைச் செலவழிப்பது குற்றம் என்று என்னால் கருத முடியவில்லை:
ஒரு மனிதன் சமதர்மக் கொள்கைக்காரனாய் இருப்பானானால் அவன் தனது உள்ளத்தில் மற்றொரு மனிதனை தனக்கு சமமாகவும், மற்றொரு மனிதனுக்கு தான் சமமானவனென்றும் கருதும்படியான ஒரு உணர்ச்சியைக் கொள்ளவில்லையானால் அல்லது கொள்ளும்படி செய்யவில்லையானால் சமதர்மத்தைப்பற்றி பேசும் பேச்சு எதற்கு என்பதும், அதற்காக பாடுபடுவது எதற்கு என்பதும் என் சிறிய புத்திக்கு விளங்கவில்லை.
ஜஸ்டிஸ் கட்சியிலிருப்பவர்கள் அயோக்கியர்களாக இருக்கலாம் காங்கிரசில் இருப்பவர்கள் யோக்கியர்களாக இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்
ஆனால் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகள் மனித சமூகத்தின் சமுதாய வாழ்க்கையைப் பொருத்தவரையிலும் சமதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு பார்ப்பனரல்லாதார் உரிமை என்பதை ஆதரிக்கின்றது என்பதும், அந்தப்படி ஆதரிக்கவில்லை என்றாலும் எதிர்க்கவில்லை என்பதும் எனது அபிப்பிராயம்
அது போலவே காங்கிரசைப் பற்றியும், அதன் கொள்கைகள் மனித சமூகத்தைப் பொருத்த வரையிலும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே முதலாளிகளுடையவும், நிலச்சுவான்களுடையவும் நன்மைக்கு ஏற்பட்டது என்பதோடு பார்ப்பனீயத்துக்கும் (அதாவது நான் எந்த
பார்ப்பனீயம் என்று மேலே சொன்னேனோ அதற்கும்) முழு ஆதரவும்
பலத்தையும் கொடுத்து வருகின்றது - அதற்கு ஆகவே பெரிதும் பாடுபடுகின்றது என்பதும் எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்
மேலும் தாங்கள் குறிப்பிட்டது போல் நான் சமதர்மக் கொள்கையை அறியாதவனாக இருந்தாலும் இருக்கலாம் அல்லது அறிந்திருந்தும் அதில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும் இருக்கலாம்.
ஆனால் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற விஷயங்களில் உள்ள குறைகளும் ஏற்பட வேண்டிய மாறுதலும் என்ன என்று நான் கருதிக் கொண்டிருக்கின்றேனோ அவற்றில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு அவ்வெண்ணம் நாளுக்கு நாள் பலப்பட்டும் வருகின்றது
நிற்க மற்றொரு விஷயம். ஏழை பணக்காரன் என்பதில் தாங்கள். கொண்டுள்ள கருத்துக்கும் நான் கொண்டுள்ள கருத்துக்கும் வித்தியாச
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 298
மிருக்கும் போல் தோன்றுகின்றது. இந்தியாவில் ஏழை பணக்காரத் தன்மை ஜாதியைப் பொருத்தே அனேகமாய் 100-க்கு 95 பங்காய்
இருந்து வருகின்றது
பணக்காரன் ஏழை என்பது இந்தியாவில் பெரிதும் பிறவியினால் ஏற்பட்ட ஜாதியினாலேயே ஏற்பட்டிருக்கிறது
பணக்காரன் ஏழை என்பதற்கு நான் கொண்டிருக்கும் அருத்தம் பாடுபடாமல் சரீரத்தால் உழைக்காமல் வாழ்கின்றவன் பணக்காரன்
என்றும் அதாவது சரீரத்தினால் உழைப்பது பாவம், அல்லது தோஷம் என்று எந்த எந்த ஜாதியானுக்கு உரிமை இருக்கின்றதோ அவனெல்லாம் செல்வவான் கூட்டத்தில் சேர்ந்தவன் என்றும், எவனெவன் உழைக்கக் கட்டுப்பட்டவன் என்றும் மற்றவனுக்கு உழைத்துப் போட வேண்டியவன்
என்றும் உரிமையோடும் இருக்கிறானோ அவனையும், எவனெவன் உழைத்துக் கஷ்டப்பட்டும் போதிய சுகமில்லாமல் இருக்கிறானோ அவனையும் ஏழை என்றும் நான் கருதிக்கொண்டிருக்கின்றேன்.
இந்த விஷயத்தை வாக்கு சாமர்த்தியத்தாலும் அல்லது “இதை விட முக்கியமானது வேறு ஒரு காரியம்” என்று காட்டுவதாலும் எதிர்க்கலாம் என்றாலும் இதை மாற்ற வேண்டியதே பிரதானம் என்றும், சமதர்மத்தில் இதுவும் ஒரு கடுகளவாவது சேர்ந்தாய் இருக்கலாம்
என்றும் நான் கருதுகின்றேன். அதோடு ரஷியாவில் இருக்கிற மாதிரியான சமதர்மக் கொள்கையை இங்கும் புகுத்த வேண்டும்" என்பது எனது கருத்தல்ல என்பதோடு அது சரியா தப்பா என்பதைப் பற்றியும் நான் இப்போது வாதம் செய்யவும் விரும்பவில்லை.
ஆதலால் நமது பிரச்னைகளில் ருஷியாவை மறந்துவிட்டு நம் கண்ணெதிரில் நமது அனுபவத்தில் உள்ள விஷயங்களையும் நமது
புத்திக்கு சரி என்று தோன்றும் விஷயங்களையும் பற்றியே பேசுவோம் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஜஸ்டிஸ் கடியில் உள்ள முதலியார், நாயக்கர் சண்டை ஜாதியைப் பொருத்ததல்ல. ஆனால் உத்தியோகங்களுக்குப் பெரிய சம்பளமும் கெளரவமும் இருப்பதால் அதை பெருவதற்கான முயற்சிகள் நாயக்கர் முதலியார் செட்டியாராக இருந்து வருகின்றதே ஒழிய வேறில்லை.
பார்ப்பனர்களைப் பார்த்து அவர்களைப் பின் பற்றுகின்றது என்கின்ற முறையில் ஏதாவது சிறிது உயர்வு தாழ்வு கொண்டாடும் உணர்ச்சி இருந்தாலும் இருக்கலாம் என்றாலும் அதை வெளிப்படையாய் கவனிக்க வேண்டிய அளவு நான் காண முடியவில்லை. ஆதலால்
29 ௨... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அதைப்பற்றி நான் கஷ்டப்படவில்லை. ஏனெனில் உத்தியோக சம்பளம் குறைந்து அதற்கு சரியான பொருப்பும் நிர்ணயமும் ஏற்படும்போது இந்த சண்டைகள் மறைந்துவிடும் என்பது உறுதி. மற்ற பெயர்களுடன் இருக்கும் அரசியல் கக்ஷிகளும் மறைந்து விடும். ஆனால் பிரவிப் பெருமைக்காகவும் உரிமைக்காகவும் இருந்து வரும் சண்டைகள். அப்பெருமையும் உரிமையும் ஒழிந்தாலல்லது ஒரு நாளும் மறைந்து விடாது என்றே கருதுகின்றேன்.
அசம்பளி தேர்தல் விஷயத்தைப்பற்றி தாங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான் என்றாலும் இந்த வெற்றி காந்தியாருக்கு மிக மிக ஆனந்தமாய் விட்டது.
நிற்க காங்கிரசின் போக்கையோ, கொள்கையையோ திருத்தி அமைக்கமாட்டாமல் “மகாத்மா”வும் அதை விட்டு விலகி விட்டார் என்றும் அவர் கிராமப்புனருத்தாரண வேலைக்குப் போயிருக்கிறார். என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் காங்கிரசிலிருந்தாலும் சரி கிராமப்புனருத்தாரணத்தில் இருந்தாலும் சரி அவர் ஜீவன் உள்ளவரையில் பார்ப்பனர்களுக்கோ மற்றும் வெள்ளை அல்லது கருப்பு முதலாளிகளுக்கோ இரும்புக் கூடு போன்ற காவலாளியாய் இருப்பாரே ஒழிய மற்றபடி அவரால் ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படப் போவதில்லை. அவரது கிராமப் புனருத்தாரணம் என்பது வருணாச்சிரமப் புனருத்தாரணம் தான் என்பதை தயவு செய்து ஞாபகத்தில் வைத்து பலனை கவனித்து வரும்படி கோருகிறேன்.
கிராமப் புனருத்தாரணத்தின் பேரால் அவர் செய்யப் போவதாய் வெளிப்படுத்தி இருக்கும் திட்டங்கள் ஏழை மக்களுக்கும் இழிவுபடுத்தப் பட்ட மக்களுக்கும் என்ன பலனைக் கொடுக்கக் கூடும் என்பது எனக்கு விளங்குவது போலவே தங்களுக்கும் விளங்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
முடிவாக தாங்கள் குறிப்பிட்டபடி நான் செய்துகொண்டு வரும் வேலை முறையில் மாறுதல் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். லக்ஷியத்தில் மாறுதலில்லாமல் வேலை முறையில் அடிக்கடி மாறுதல் செய்ய வேண்டியதும் செய்து வருவதும் குற்றமாகாது. லக்ஷியம்கூட சில சமயங்களில் திருத்தவேண்டிய அவசியத்துக்கு உட்பட்டு விடுகின்றதும் உண்டு. ஆனாலும் இப்போதைக்கு லக்ஷியத்தை மாற்ற வேண்டிய அவசியமிருப்பதாக தோன்றவில்லை. முறைகளில் தாங்கள் எழுதியபடியே கூடிய சீக்கிரம்
மற்ற தோழர்கள் பலரையும் கலந்து ஏதாவது மாறுதல் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
எப்படி இருந்தாலும் காயம் அசைவில் இருக்கும்வரை ஏதோ
ஒரு வேலை செய்தாக வேண்டுமல்லவா? அந்த வேலையானது
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 300
மற்றொருவருக்கு அடிமைப்பட்டதாகவோ அல்லது மற்றொருவருடைய அபிப்பிராயத்துக்கு அடிமைப்பட்டதாகவோ இல்லாமல் கூடியவரை தன்
தன் புத்திக்கு சரியென்று தோன்றிய லக்ஷியத்துடன் நடந்து செல்ல வேண்டியதைத்தான் நான் சுயமரியாதையோடு கூடிய வாழ்வு என்று கருதி இருக்கிறேன். ஆதலால் நான் எனது உண்மை அபிப்பிராயங்களை தங்களுக்கு தெரிவித்திருக்கின்றேன் என்ற அளவிலாவது தாங்கள் நம்பிக்கை வைப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
தங்கள் பக்ஷம் மறவாத தோழர்,
ஈ.வெ. ராமசாமி
பகுத்தறிவு - கடிதம் - 09.12.1934.
31 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் சத்தியமூர்த்தி அய்யர்
“யாருக்காவது பயித்தியம் பிடிக்கச் செய்ய வேண்டுமானால் அவருடைய யோக்கியதைக்கு மீறிய பவுசு வரும்படி செய்து விட்டால் போதும்" என்று ஒரு பழமொழி உண்டு.
அதுபோல் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கு அவர். யோக்கியதைக்கு மீறின (அதாவது 8-பங்கு 10-பங்கு அதிகமான) பவுசு ஏற்பட்டவுடன் இப்போது அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில். வைக்கப்பட வேண்டிய அளவுக்கு வந்து விட்டார். தலைகால். தெரியாமல் தாண்டவமாடுகிறார்.
இந்திய சட்டசபைக்கு சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் மெம்பராய் விட்டார் என்று சொல்லப்பட்டவுடன் அவர் பேச வாயைத் திறந்ததும் சென்னை கவர்னர் பிரபுவுக்கு ஒரு உத்திரவு போட்டார். அதாவது “இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று விட்டதால் கவர்னர் மாகாண சட்டசபையை கலைத்து மந்திரிகளை வீட்டுக்கு ஓட்டி விடவேண்டும்” என்று சொல்லி விட்டார்.
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர் ஜெயித்ததற்கும், மாகாண சட்டசபைக்கும், என்ன சம்மந்தம் என்பது தோழர் சத்தியமூர்த்திக்கு சுய அறிவு இருந்தால் புரியாமல் இருக்குமா என்று கேட்கின்றோம்,
இந்திய சட்டசபைக்கு இதற்கு மூன்பும்கூட வெகுகாலமாக பார்ப்பனர்களாகவே தான் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். அங்கு எல்லோரும் பார்ப்பனர்களாக இருந்த அந்தக் காலத்தில் தான் ஜஸ்டிஸ் மந்திரிகள் உச்சஸ்தானத்தில் இருந்தார்கள். அப்போதெல்லாம் சென்னை சட்டசபை கலைக்கப்பட ஏற்படாத அவசியம் இப்போது என்ன ஏற்பட்டு விட்டது என்பது நமக்குப் புரியவில்லை.
ஆவணியாவிட்டத்திற்கும் அப்துல் காதர் சாயபுக்கும் பொருத்தம் வைப்பது போல இந்திய சட்டசபைத் தேர்தலுக்கும் மாகாண சட்டசபை மந்திரிகளுக்கும் பொருத்தம் வைத்து அர்த்தராத்திரியில் குடை பிடிக்கிறார் நமது சத்தியமூர்த்தி அய்யர்.
அதோடு நிற்காமல் அதற்கு அடுத்த இரண்டொரு நாளைக்குள்
சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களை சட்ட மெம்பர் வேலையை ராஜிணமாச்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 30
செய்து காலி செய்யும்படி கேழ்க்கச் சொல்லி கவர்னருக்கு மற்றொரு உத்திரவு போட்டிருக்கின்றார். இதிலிருந்து தோழர் சத்தியமூர்த்தி அய்யருக்கு தலைதிருகிப் போய்விட்டது என்பது நன்றாய் தெரிகின்றது. இனி 2,3 நாளையில் ஹோம் மெம்பரைப் பற்றியும் ஒரு உத்திரவு போட்டுவிடுவார்.
தோழர்கள் சி.பி.ராமசாமிஅய்யர், கே.சீனிவாசய்யங்கார் முதலிய பார்ப்பனர்கள் இந்த உத்தியோகங்களில் இருந்து போது சர்.கே.வி.ரெட்டி
நாயுடு அவர்கள் பேசியதையும், செய்ததையும் போல் பல பங்கு அதிகமாய் பேசியும் செய்தும் இருக்கிறார். அப்பொழுது தோழர் சத்தியமூர்த்திக்காவது, வேறு பார்ப்பனர்களுக்காவது இந்த யோசனைகள் தோன்றவில்லை.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் கவர்னருக்கு உத்திரவு போட்ட விஷயங்களில் நியாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதில் அறிவுடைமை இருந்தாலும், முட்டாள்தனம் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு காரியம் மாத்திரம் நன்றாய் விளங்குகின்றது
அதென்னவென்றால் சத்தியமூர்த்தி அய்யருடைய ஞாபகமும், அவர் ஜாதியாருடைய ஞாபகமும் சதாகாலம் பார்ப்பனரல்லாத மந்திரிகள்
மீதும், பார்ப்பனரல்லாத நிர்வாகசபை மெம்பர்கள் மீதும் இருந்து கொண்டு இவர்களை எப்பொழுது ஒழிப்பது என்கின்ற கவலையிலேயே
இருந்து வந்திருக்கின்றது என்பதேயாகும். இந்த ஒரு முக்கியமான எண்ணமும், கவலையும் தான் இந்திய சட்டசபை எலக்ஷனில் எல்லாப் பார்ப்பனர்களையும் ஒன்று சேர்த்து ஒரே மூச்சாய் பாடுபட்டு ஒரு கை பார்த்து விடும்படியாகச் செய்து விட்டது என்பது இப்போதாவது நமது மக்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றோம்.
தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியவர்கள் மிதவாதிகள் என்று பெயர். கனம் சீனிவாச சாஸ்திரி என்பவர் சர்க்கார்
ஜி, ஐ.சி.எஸ்.ஆபீசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய பார்ப்பனர்களுக்கும் தாசர் என்று பெயர். மற்றும் பல பார்ப்பனர்கள் ஐக்கோர்ட்டு ஐ
சர்க்கார் ஊழியர்கள் என்று பெயர். இப்படி எல்லாம் இருந்தும் அவர்கள் எல்லோரும் உயிரைக் கொடுத்து சத்தியமூர்த்தி ஜெயிக்கும்படி பாடுபட்டு அவருக்கு வாழ்த்தும் கூறி இருக்கிறார்கள் என்றால் மந்திரி பதவியும் சட்டமெம்பர், போலீசு மெம்பர் பதவியும் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கண் உருத்தலாய் இருந்திருக்கும் என்பது தானாகவே விளங்கவில்லையா?
தோழர் சத்தியமூர்த்திக்கோ அல்லது அவருடைய ஜாதியாருக்கோ ஒரு சமயம் இன்று சென்னை கவர்னர் வேலை கிடைத்திருக்குமேயானால் அவர் பதவிக்கு வந்தவுடன் சட்டசபையைக் கலைத்து மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பி சட்டமெம்பரையும், ஹோம் மெம்பரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டுத்தானே மலஜலம் கழிப்பார்கள் என்பதும் இதிலிருந்து விளங்குகின்றதா இல்லையா? என்று கேட்கின்றோம்
303 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் பேச்சு எவ்வளவு முட்டாள் தனமானதாயிருந்தாலும், குரோத எண்ணம் கொண்டதாயிருந்தாலும் இந்திய சட்டசபைத் தேர்தல் போலவே சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலும் முடியுமானால் இன்று உத்தியோகங்களில் உள்ள பார்ப்பனரல்லாத மக்களின். நிலைமை என்னஆவது என்பதையும் உணர்ந்து பார்க்கும்படி வேண்டுகிறோம்
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஒரு வெறும் புரோகித சாஸ்திரி என்கின்ற முறையில் அவர் அப்படிப் பேசியதாக யாரும் நினைத்து விடக்கூடாது. இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் பிரதிநிதியாய் மாத்திரம்
இருந்து பேசினார் என்றும் நினைத்துவிடக்கூடாது. இந்திய தேசியக்
காங்கிரசின் தலைவர்களில் ஒரு முக்கிய தலைவராயும், சட்டசபை, பஞ்சாயத்து போர்டு காரியதரிசி என்கின்ற பதவியிலிருந்து கொண்டும், சென்னை மாகாண காங்கிரஸ் சர்வாதிகாரி என்கின்ற முறையிலும் காந்தியாரால் புகழ்ந்து கொண்டாடப்பட்ட தூய்மையான தேசபக்தர். என்கின்ற முறையிலும் தான் பேசியிருக்கிறார் என்பதை சுயமரியாதை உள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத மக்களும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
இந்த நாட்டு மக்கள் சிறப்பாக சென்னை மாகாண மக்கள் இப்படிப்பட்ட தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களைத் தங்கள் மாகாண பிரதிநிதியாகவும், இந்திய மக்களின் தலைவர்களில் முக்கியமானவராகவும் கொள்ளத் தக்க நிலைமை இன்று இருக்குமானால் இந்திய மக்களின் யோக்கியதைக்கும் காங்கிரசின் தேசியத்துக்கும் பிரதிநிதித்துவத்தின் நாணையத்துக்கும், மேன்மைக்கும் எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரஸ் சார்பாய் பார்ப்பனர்களின் தேசியம் என்ன என்பது பற்றி நாம் இந்த பத்து வருஷகாலமாய் கூப்பாடு போட்டு வந்ததானது, தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் இந்திய சட்டசபை மெம்பரான எட்டு நாளையில் உண்மையாக ஆகிவிட்டதா? இல்லையா? என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
இந்திய சட்டசபைத்தேர்தல்கள் முடிந்தவுடன் தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கவர்னர் பிரபுவைப் போய் பார்த்து விட்டு வந்திருக்கிறார்.
அவரும் சட்டசபையைக் கலைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி கவர்னருக்கு சட்டம் எடுத்துக்காட்டி இருக்கலாம். அதுமாத்திரமல்லாமல் சென்னை மாகாண உத்தியோகத்தில் இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைக்கு உலை வைக்க சூட்சி செய்துவிட்டு வந்திருக்கலாம்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 304
இவை எப்படியோ இருக்கட்டும். மற்றொரு முக்கியமான. விஷயமென்ன வென்றால் இந்திய சட்டசபையின் பரிதாபகரமான நிலையைப் பற்றி சிறிது கவனிப்போம்
தோழர்கள் சி.ஆர். தாஸ் என்ன, பண்டித மோதிலால் நேரு என்ன இப்படிப்பட்டவர்கள் காங்கிரசின் சார்பாய் இருந்து வந்த ஸ்தானத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் போய் கட்சிப் பிரமுகராக இருக்கப் போகிறார் என்றால் அது மாத்திரமல்லாமல் இன்றைய இந்திய மக்களின் பிரதிநிதியாகப் போய் உட்காரப் போகின்றார் என்றால் இந்திய சட்டசபையின் கஷ்டகாலத்துக்கும் இவரைப் பிரதிநிதியாகக் கொண்ட மக்களின் சுயமரியாதைக்கும் எதை உதாரணம் காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்த லக்ஷணத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஜாதியைச் சேர்ந்த பத்திரிக்கைகளும் ஆசாமிகளும் தோழர் ஷண்முகமவர்கள். சட்டசபையில் இருந்ததை குறை கூறி “பட்டேல் என்கின்ற சிங்கம்
இருந்த இடத்தில் ஷண்முகம் என்கின்ற. இருக்கிறது நியாயமா'”
என்று எழுதியும், பேசியும் இருக்கிறார்கள்.
ஆனால் தாஸ், நேரு என்கின்ற மேதாவிகள் மாதம் 40-ஆயிரம் 50-ஆயிரம் வரும்படியைத் துறந்து விட்டுவந்த தியாகமூர்த்திகள் என்று சொல்லப்பட்ட சிங்கங்கள் இருந்து வந்த இடத்தில் சத்தியமூர்த்தி அய்யர். என்கின்ற. இருப்பது நியாயமா? என்று எழுதினால் அந்தப் பார்ப்பனர்கள் இந்த காலி இடத்தில் என்ன எழுதி பூர்த்தி செய்து என்ன பதில் சொல்லுவார்கள் என்று கேட்கின்றோம் ஆகவே இப்படிப்பட்ட இவரைக் கொண்ட இந்திய சட்டசபை எப்படிப் பரிமளிக்கப் போகிறது என்பதும், எப்படி மதிக்கப்படப்போகிறது என்பதும், மானமுள்ள சுயமரியாதையுள்ள மக்கள் அவரது தலைமையில் எப்படி வீற்றிருக்கப் போகின்றார்கள் என்பதும் நமக்கே பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கின்றது. இன்றைய இந்திய சட்டசபைக்குக் காங்கிரஸ் சார்பாகவே யாரைத் தலைவராகப் போடுவது என்பது காங்கிரஸ்காரர்களுக்கே ஒரு பெரிய பிரச்சினையாகி விட்டதாகத் தெரிகின்றது. ஏனெனில் தோழர் காந்தியாரே இந்தப் பிரச்சினையில் கவலை செலுத்திப் பார்த்து அவரது நண்பர்களுடன் கலந்த பிறகுதான் தோழர் பண்டிதர் மாளவியா அவர்களை எப்படியாவது இந்திய சட்டசபைக்குக் கொண்டுவர வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இதிலிருந்தே இன்றைய காங்கிரசில் பொருப்பும் யோக்கியமுமான ஆட்கள் இல்லை என்றும் இருப்பவர்களுக்குள் சத்தியமூர்த்தியை மேலானவர் என்று மதிக்க வேண்டியதாகி விட்டதென்றும் விளங்கிவிட்டது.
305 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
அதனாலேயே தோழர் மாளவியா காங்கிரசின் இன்றைய முக்கிய கொள்கையாகிய வகுப்புத் திட்டத்தில் எதிரான அபிப்பிராயமுடையவரா யிருந்தாலும் இந்திய சட்டசபையின் கெளரவத்தைக் காப்பாற்ற (யாருடைய கெளரவத்தை? பார்ப்பனர்களின் கெளரவத்தைக் காப்பாற்ற) வேண்டுமே என்கின்ற கவலை கொண்டு கொள்கையைகூட கவனியாமல் மாளவியாஜியைக் கப்பிடுகிறார்கள். இதிலிருந்து காங்கிரசின் வகுப்புத் தீர்ப்பின் சம்மந்தமாக நாணையம் என்ன என்பதையும்கூட ஒருபுறம்
அறிந்து கொள்ளலாம்
இன்று இந்தியா முழுவதற்கும் இந்திய சட்டசபைக்குக் காங்கிரஸ்காரரே வெற்றி பெற்றுவிட்டார்களானாலும் இந்திய சட்டசபையில் அரசாங்கம் மதிக்கக் கூடிய நபரோ, பொதுஜனங்கள். மதிப்பு வைத்து கவனிக்கக்கூடிய நபரோ இல்லை என்று காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாருமே உணரும்படி ஆகிவிட்டதென்றால் வெற்றியின் யோக்கியதை வெட்கப்படவேண்டியதாக ஆகி விட்டது என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 09.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 30
வேஷம் விளங்கி விட்டது
வெள்ளை அறிக்கையை பஹிஷ்காரம் செய்கின்றோம்.” “வைசிராய் வந்தவுடன் வெளியில் எழுந்து வந்து விடுகின்றோம்.” என்றெல்லாம் கூறி ஓட்டு வாங்கி சட்டசபைக்குச் சென்று இருக்கும் நமது காங்கிரஸ் வீரர்கள் இப்போது மெள்ள மெள்ள தங்கள் திரையை
நீக்கிக் கொண்டு வெளியில் வர ஆரம்பித்து விட்டார்கள்.
அதாவது வெள்ளை அறிக்கையின் பயனாய் கிடைக்கக் கூடிய பதவிகளையும், உத்தியோகங்களையும், சம்பளங்களையும் கைப்பற்ற வேண்டுமென்றும், அந்தப்படி செய்யாவிட்டால் பிற்போக்காளர்கள். (காங்கிரஸ்காரர்கள் அல்லாதார்கள்) அதை அனுபவித்து விடுவார்களென்றும் சொல்லி இப்போதே பழய பாடம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
முன்பு ஒரு தடவையும் கூட இந்தப்படியே அதாவது காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் சென்றால் மந்திரி வேலையை ஒப்புக்கொள்ளக்கூடாது என்றும், மந்திரிகளை ஆதரிக்கக் கூடாதென்றும் செய்திருந்த காங்கிரஸ் தீர்மானத்துக்கு விரோதமாய் மந்திரி உத்தியோகம் பெற ஆசைப்பட்டு அது செளகரியப்படாமல் போகவே தங்கள். இஷ்டப்படி மந்திரிகளை ஆதரிக்கத் தொடங்கி மந்திரிகளின் கையாள்களாகவும்
இருந்து வந்தார்கள். அதை மற்ற மாகாண காங்கிரஸ்வாதிகள் கண்டித்து சமாதானம் கேட்டபோது சென்னை காங்கிரஸ்வாதிகள் இதே பதில் தான் சொன்னார்கள். என்னவென்றால் “மந்திரி பதவிகளை காங்கிரஸ் ஆதிக்கத்தில் வைத்திருக்கா விட்டால் பிற்போக்காளர்கள் (ஜஸ்டிஸ் கட்சியார்கள்) கைப்பற்றி விடுவார்கள். ஆதலால் காங்கிரஸ்காரர்கள் மந்திரிகளை: ஆதரிக்க வேண்டியவர்களானார்கள்” என்று சொன்னார்கள்.
ஆதலால் காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வெப்பொழுது சட்டசபைக்குள்.
செல்ல முடியாதோ அப்பொழுதெல்லாம் சட்டசபையை பஹிவஷ்கரிப்பதும், எவ்வெப்பொழுது மந்திரி பதவி கிடைக்காதோ அப்பொழுதெல்லாம் மந்திரி பதவி ஒப்புக்கொள்ளக்கூடாது என்று தீர்மானிப்பதும், எவ்வெப்பொழுது சாத்தியப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம்
3097 ௨. ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தேசத்துரோகிகளும், பிற்போக்காளர்களும் பிரவேசியாமலும், மந்திரி ஆகாமலும் பார்த்துக் கொள்ளுவதற்காக" என்று பிரவேசிப்பதும் வழக்கமாக இருந்து வருகின்றது
அதை இந்த வருஷ தேர்தலிலும் பட்டவர்த்தனமாய் காட்டி தங்களது உள்வேஷத்தை விளக்கிவிட்டார்கள். இதை 5-12-34ந் தேதி பாட்னாவில் கூடிய காங்கிரஸ் காரியக்கமிட்டியும், சட்டசபைப் பஞ்சாயத்துபோர்டும் சேர்ந்து நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்தால் அறியலாம். அதாவது,
“கூட்டுக்கமிட்டி அறிக்கையை நிராகரித்து விட வேண்டும்
நிராகரிப்பு என்றால் இப்போது இருந்து வரும் அரசியலின் கீழ் இருந்து கொண்டு கஷ்டப்படவேண்டும். இது சகிக்க முடியாததாய் இருந்தாலும் அரசியல் நிர்ணய சபையாரால் வகுக்கப்படும் ஒரு அரசியல் கிடைக்கும் வரை இப்பொழுதிருக்கும் அரசியலின் கீழ் இருக்க வேண்டும். ஆகவே 'சீர்திருத்தத்திட்டத்தை நிராகரிக்கும்படி அசம்பளி மெம்பர்களை கேட்டுக் கொள்ளுகிறது. காங்கிரஸ் செய்வதை பொதுஜனங்கள் ஆதரிக்க வேண்டும்” என்று தீர்மானித்து இருக்கிறார்களாம்
இதிலிருந்து விளங்குவது யாவருக்கும் தெரிந்ததே. சட்டசபை மெம்பர் பதவியையும் மந்திரி பதவியையும் அடைவது என்னும் “கஷ்டத்தை சகித்துக் கொண்டும், சம்பளம் வாங்கி எண்ணி எண்ணி பெட்டியில் போடுவது என்னும் “துன்பத்தை” அனுபவித்துக் கொண்டும் சீர்திருத்தங்களை எதிர்க்கவோ நிராகரிக்கவோ ஆன காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதே அல்லாமல் வேறு இரகசியம் எதுவும் இத் தீர்மானத்தில் இல்லை
ஒரு புருஷன் தனது மனைவியை விபசாரி என்று கருதி விலக்கி வைக்க வேண்டும் என்று தீர்மானித்து அத் தீர்மானத்தை எப்படி நிறைவேற்றினான். என்றால் அவளோடு வாழ்ந்து கொண்டும், பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டும் இருந்துகொண்டே அவளை விலக்கி விடுவது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதோடு அதற்கு சமாதானமும் “தான் அந்தப்படி செய்யாவிட்டால் தன் மனைவி வேறு ஒருவனுக்கு பிள்ளை பெற்றுவிடுவாள் என்று சொன்னானாம். அது போலவே அரசியலின் கீழ் இருந்து கொண்டே அந்த பதவியையும் சம்பளத்தையும் அனுபவித்துக் கொண்டு அந்த அரசியலை பகிஷ்கரிப்பது என்று முடிவு செய்து விட்டார்கள் நமது காங்கிரஸ்காரர்கள். அப்பாடா இது எவ்வளவு பெரிய தியாகம்! எவ்வளவு பெரிய வீரம்!! வேறு யாராவது இந்தப்படி செய்ய முடியுமா!!! என்று யோசித்தால் அதன் பெருமை விளங்கிவிடும்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 305
அறிவில்லாத பாமர மட ஜனங்கள் இவற்றை நம்பி ஏமாந்து போகின்றார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க அரசியலை நிராகரிப்பது
என்றால் என்ன அருத்தம் அது எப்படி முடியும் என்பது பற்றி ஒரு அறிஞனும் யோசித்துப் பார்த்ததே கிடையாது. பார்ப்பனர்கள் என்ன வியாக்கியானம் சொல்லுகிறார்களோ அதையே நம்பி கங்காதரா மாண்டாயோ என்று அழுவதை தவிர நமது மக்களுக்கு சொந்தபுத்தி
சிறிது கூட இல்லை. அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் ஒரு சிறிய ஸ்தானத்தைப் பெற்றுக் கொண்டாலும் அதற்குள்ள நிபந்தனைப்படி
நடந்து ஆகவேண்டுமே ஒழிய வேறு வழியில்லை. ஒருவன் ஓட்டு. செய்தபோதே அரசியலுக்கு அடிமை ஆகிவிட்டான் என்றால் சீர்திருத்த சட்ட சபைக்குள் நுழைந்து விட்ட பிறகு என்ன ஆவான் என்று சொல்லவேண்டுமா? அவன் சீர்திருத்தப்படி நடக்க வேண்டியதைத் தவிர வேறு ஒரு காரியமும் செய்ய முடியாது. அங்கு நிராகரிப்பது என்பதற்கு
ஒரு காரியமும் கிடையாது என்றும், செய்யமுடியாது என்றும், அந்த வார்த்தைக்கு அருத்தமில்லை என்றும் சொல்லுவோம்
யார் எழுந்து வந்தாலும் யார் ராஜீனாமா கொடுத்தாலும் அரசியல் சீர்திருத்தம் என்பது சிறிது கூட அசைவு பெற்று விடாது
தோழர்கள் தாஸ், நேரு ஆகியவர்கள் பல தடவை வெளியேறினார்கள், ராஜீனாமா'' கொடுத்தார்கள், ரப்பர் பந்துமாதிரி எகிரி எகிரி பேசினார்கள் முடிவில் என்ன ஆச்சுது?
தோழர்கள் ஆரோக்கியசாமி முதலியார், ரங்கநாத முதலியார், முத்துலக்ஷிமி ரெட்டியார். “ராஜினாமா” கொடுத்தார்கள் என்ன ஆச்சுது மறுபடியும் அதே பதவிக்கு தொங்குகிறார்களே ஒழிய சீர்திருத்தத்தை கடுகளவு கூட அசைத்து விடவில்லை
இந்த இரகசியம் தோழர்கள் ராஜகோபாலாச்சாரிக்கோ, காந்தியாருக்கோ, அல்லது சத்தியமூர்த்தி அய்யருக்கோ தெரியாது என்று நாம் இதை எடுத்துக்காட்ட வரவில்லை. இதை இவர்கள் தெரிந்தே மக்களை இந்தப்படி பேசி ஏமாற்றுகின்றார்கள் என்பதைக் காட்டவே இதை எழுதுகின்றோம்
சீர்திருத்தம் யார் தடுத்தாலும் யார் நிராகரித்தாலும் யார் பஹிஷ்கரித்தாலும் வரத்தான் போகின்றது, வந்தும் ஆய் விட்டது. அதை ஆதரித்து பதவிகளை ஏற்று நடத்திக் கொடுத்து பணம் பெற பாட்னாவில் தீர்மானமும் 6 மாதத்துக்கு முன்பே செய்தும் ஆய்விட்டது.
“மத்திய அரசாங்கத்தில் சுயாட்சி இல்லாமல் மாகாண சுயாட்சி வேண்டியதில்லை” என்று கூப்பாடு போட்ட வீரர்கள் தான் இன்று மத்திய அரசாங்கத்தை நடத்திக் கொடுக்கும் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள். மாகாண சுயாட்சியை நடத்திக் கொடுப்பதற்கும்,
399 ௨ ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
மந்திரிகளை விரட்டி விட்டு அந்தப் பதவியை எங்களுக்குக் கொடுங்கள் என்று கவர்னரை கெஞ்சுகிறார்கள். அந்த தேர்தலிலும் வெற்றி பெற இப்போது இருந்தே முயற்சி செய்து வருவதும், சூட்சிகள் செய்வதும், கவர்னர்களை போய்ப் பார்ப்பதும் யாரும் அறியாததல்ல.
காங்கிரஸ் சட்டசபைகளையும் உத்தியோகங்களையும் பஹிஷ்கரித்
திருந்த காலத்திலேயே சட்டசபைத் தலைவர் பதவியையும், கமிட்டி ஸ்தானங்களையும், அவற்றின் வருவாய்களையும் அனுபவித்து வந்த வீரர்கள் இப்போது காங்கிரசே சட்டசபை ஸ்தானத்தை ஏற்றுக் கொள்ள தீர்மானித்து விட்டு உத்தியோகங்களை யேற்றுக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டும் இருக்கும்போது இனி பஹிஷ்காரம், நிராகரிப்பு என்பவைகள் எல்லாம் மக்களை ஏமாற்றச் செய்யும் பழய பாடங்களே ஒழிய இதில் புதியது ஒன்றுமே இல்லை என்பதே நமது அபிப்பிராயம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 09.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 310
சென்னை சட்டசபை உப தேர்தல்
சென்னை சட்ட சபைக்கு சாமி வெங்கடாசலம் செட்டியார் அவர்களால் காலி செய்த ஸ்தானமானது பூர்த்தி செய்யப்படுவதற்கு காங்கிரசுக்காரர்கள் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் வெற்றியைப் பார்த்த பிறகு அதற்கும் பார்ப்பனர்களாகவே பார்த்து நிருத்த முயற்சித்து வருகிறார்கள். தோழர் லக்ஷிமிபதி அம்மாள் அவர்கள் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டது. பிறகு தோழர் டி. பிரகாசம் பந்துலு அவர்கள் பெயர் பிரஸ்தாபிக்கப்படுகிறது. அவர்கள் பெயர் ஓட்டர் லிஸ்டில் காணப்படவில்லை என்றும் சொல்லிக் கொள்ளப்படுகிறது என்றாலும் மறுபடியும் ஒரு அரைப்பார்ப்பனரையாவது அந்த ஸ்தானத்துக்கு போட பார்க்கின்றார்களே ஒழிய தோழர் கத்தே ரங்கய்ய நாயுடு அவர்கள் காங்கிரசுக்காக என்று எவ்வளவோ உழைத்து வந்தும் அவர். பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால் அவர் பெயரை பிரஸ்தாபிப்பாரையே காணோம். அவர் எந்தக் காரணத்தினால் பிடித்தமில்லை ஆனாலும் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாரையாவது போடலாம்
ஆகவே இந்த சந்தர்ப்பத்திலேயே எவ்வளவு பார்ப்பனர்களை புகுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு பெயர்களையும் புகுத்திக் கொள்ள முடிவு
செய்து தோழர் டாக்டர் மல்லப்பா அவர்களை நமது பார்ப்பனர்கள்
காங்கிரசின் பேரால் சட்டசபைக்கு சென்னை நகரத் தொகுதியில் நிருத்த
தீர்மானித்து இருக்கிறார்கள். இதற்கு பாட்னாவில் இருந்து உத்திரவு
வந்தது போல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற பார்லிமெண்டரி
போர்ட் தீர்மானம் செய்து விட்டது என்று தந்தி அடித்து விட்டார்கள்
ஆகவே காங்கிரசின் வெற்றி பார்ப்பனர் வெற்றி என்பதும் காங்கிரஸ் தேர்தல் பார்ப்பனர் தேர்தல் என்பதும் காங்கிரஸ் கட்சி ஜஸ்டிஸ் கட்சி என்பதும் பார்ப்பனர் கட்சி அல்லாதார் கட்சி என்பது தான் என்பதும் இதிலிருந்தாவது பார்ப்பனரல்லாத புல்லுருவிகள் உணர்வார்களாக
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 09.12.1934
3... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஆந்திரர் - தமிழர் என்று பிமிக்கப்பார்ப்பது
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் காரணமாய் வெளியேறி விட்ட தோழர் குமாரராஜா அவர்களுக்காக குமாரராஜா அவர்களை ஆதரிக்க ஆசைப்பட்டவர்களோ அல்லது அவரிடம் கூலிபெற்றவர்களோ ஜஸ்டிஸ் கட்சியைத் தாக்க இதுசமயம் தங்களுக்கு வேறு எவ்வித கதியும் இல்லாமல் நிற்கதியாயிருப்பதை முன்னிட்டு மிக இழிவான மார்க்கத்தைக் கைக்கொள்ளத் துணிந்து விட்டார்கள். “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்'' என்கின்ற பழமொழிப்படி ஏதாவது ஒரு விஷயத்தில் பசி ஏற்பட்டு விட்டால்
மானம், குலம், கல்வி, அறிவு ஆகியவைகளை அவர்களில் பலர்: வந்த விலைக்கு விற்று விட்டு மிக இழிவான காரியங்களில் சிலர் இறங்கி விட்டதானது மிகவும் வெறுக்கத்தக்கதும், பரிதாபப்படத் தக்கதுமான விஷயமாக ஆகிவிட்டது
தோழர் குமாரராஜா அவர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதாரமான பிரஸ்தாப விஷயம் தோழர் ஆர்.கே.ஷண்முகம் அவர்களுடைய இந்திய சட்டசபைத் தேர்தலில் செட்டிநாடு ராஜா சர்.அண்ணாமலையார் அவர்களும், அவர்களது குமாரரான முத்தையா அவர்களும் நம்பிக்கைக் குறைவாய் நடந்து கொண்டார்கள் என்பது காரணமாகும். இவ்விஷயம் ஒரு சாதாரணமான விஷயமா என்றால் பார்ப்பனர்களைத் தவிர அவர்களது கூலிகளைத் தவிர வேறு எந்தத் தமிழ் மக்களும் ஆம் என்று சொல்லத் துணிய மாட்டார்.
தோழர் ஷண்முகம் அவர்கள் வியாபாரிகளுடைய தொகுதியில் நிற்பதற்கு காரணம் செட்டிநாடு ராஜா சர், அவர்களுடைய வாக்குறுதியே தவிர வேறொன்றும் அவ்வளவு பிரதானமாய் இருக்கவில்லை. அந்த வாக்குறுதியானது செட்டிநாடு ராஜா - குமாரராஜா அவர்களால் தோழர் ஷண்முகத்துக்கு மாத்திரமல்லாமல் கட்சித் தலைவரான பொப்பிலி ராஜா அவர்களுக்கும், மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பலருக்கும் நிபந்தனை இல்லாமல் கொடுத்ததொரு வாக்குறுதியாகும். அது மாத்திரமல்லாமல் அவ்வாக்குறுதியானது தோழர் ஷண்முகம் அவர்களை உறுதியாக நம்பிக்கை கொள்ளச் செய்ததுடன் செட்டிமார் சமூகத்தைப் பொருத்தவரை
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 31
ஓட்டுக்கு வேறு எவ்வித பிரயத்தனமோ முயற்சியோ எடுத்துக் கொள்வதற்கு இல்லாமலும், சந்தேகமோ கவலையோ படுவதற்கு இல்லாமலும் செய்து விட்டது என்பதில் சிறிதும் விவகாரத்திற்கு இடமில்லை.
ஆனால் தோழர் சர். ஷண்மும் அவர்கள் தேர்தல் தோற்றுப் போய் விட்டது என்பதும் செட்டிநாட்டைப் பொருத்தவரை பகுதிக்கும் குறைவான. ஓட்டுகளே சர். ஷண்முகத்துக்குக் கிடைத்திருக்கிறது என்பதும் செட்டிநாட்டு ராஜாவும், அவரது குமாரரவர்களும் ஒப்புக்கொள்ளுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க தேர்தலின் முக்கிய சமயத்தில் குமாரராஜா: அவர்கள் சென்னையிலேயே இருந்து விட்டதும் ராஜா சர் அவர்கள் தேவகோட்டையிலேயே யிருந்து விட்டதும் அவர்களே ஒப்புக்கொள்ளக்கூடிய காரியங்களாகும்
இந்நிலையில் செட்டிநாடு ராஜா அவர்கள் தேர்தலுக்காக அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு அனுகூலமாய் ருஜுவிடும் விஷயம் இரண்டு அதாவது -
சர்.ஷண்முகம் தேர்தலுக்கு செட்டி நாட்டைப் பொருத்தவரை ஏற்பட்ட செலவை தான் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தனது மறுமகனார். அவர்களை ஓட்டுச் சேகரிக்க அனுப்பினதாகவும் சொல்லப்படும் விஷயங்களேயாகும் மூன்றாவதோ தோழர் சர். ஷண்முகம் அவர்கள் செட்டி நாடு ராஜா
சர் அவர்களுக்கும், அவரது மருமகனாருக்கும் எழுதிய நன்றியறிதல் கடிதங்களாகும்.
இவற்றைத் தவிர வேறு வழியில் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றியிருப்பதற்கு எவ்வித சாதகமான சமாதானத்தையும் சொல்லவேயில்லை. சொன்னதாக தெரியவும் இல்லை. ஆதலால் சர் ஷண்முகம் அவர்களும் கட்சித் தலைவர்களும் மற்ற பிரமுகர்களும் கொண்டுள்ள “வாக்குறுதிப்படி நடந்து கொள்ளாததால் மேலால் நம்புவதற்கு முடியாமல் இருக்கின்றது என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
இதற்காக ஏதாவது ஒரு வழியில் பொது ஜனங்களை உத்தேசித்தாவது சமாதானம் சொல்ல மூயர்ச்சிக்காமல் ஆந்திரர் தமிழர் என்கின்ற அடிப்படையின் மேல் கட்சி கட்ட ஆரம்பித்தால் அது யோக்கியமான காரியமாகுமா? என்பதையும், அது வெற்றி பெருமா என்பதையும் குமாரராஜா அவர்களும் ராஜா சர் அவர்களும் ஆழ்ந்த யோசனை செய்து அதை கைவிட்டு வேறு முயற்சியில் ஈடுபட வேண்டுமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்
ராஜா சர் அவர்கள் கட்சிக்காக பணம் கொடுத்திருப்பதை அப்படியே ஒப்புக்கொள்ளுவோம் என்றாலும் தோழர் ராமசாமி 313... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
முதலியார் அவர்கள் தேர்தலில் பொப்பிலி ராஜாவுக்கு தன் கையில் இருந்து 10000ரூபாயுக்கு மேற்பட்ட செலவு ஏற்பட்டிருக்க குமாரராஜா அவர்கள் 2500 ரூபாய் தான் கொடுத்திருக்கிறார்கள்.
இது அவரது அறிக்கையிலேயே விளங்குகின்றது. இந்த 2500ரூ ராஜா சர் அவர்களும் குமாரராஜா அவர்களும் இந்தக் கட்சிக்காக இந்த பெரிய முக்கிய பிரச்சினைக்கு உதவியது மாபெரும் காரியம் என்றே வைத்துக் கொண்டாலும் இந்த 2500 விட எத்தனையோ பங்கு அதிகமான தொகையை தோழர் ராமசாமி முதலியாரின் எதிர் அபேட்சகர் விஷயத்திலும் மனமுவந்து ராஜா சர் உதவி இருப்பதாக சொல்லப்படுவதும் அதனால் பொப்பிலி ராஜா அவர்கள் கொடுத்த 10000 ரூபாயும் வேறு சிலர் கொடுத்த ரூபாயும் அனேகர் உழைப்பும் வீணாய் போய் விட்டது என்று பஹிரங்கமாக சிறு குழந்தைகள் முதல் சென்னையில் சொல்லிக் கொள்ளப்பட்டு வரும் விஷயத்திற்கு என்ன சமாதானம் என்று தெரிய மக்கள் ஆசைப்படமாட்டார்களா என்று கேட்கின்றோம். மொத்தத்தில் ராஜா சர் அண்ணாமலையார் குடும்பம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்காகவோ அல்லது நன்மைக்காகவோ என்று இதுவரை எவ்வளவு ரூபாய் உதவி இருக்கிறார்கள் என்று
அவர்கள் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொண்டாலும் அதை விட. எத்தனை 10 மடங்கு அதிகமாய் கட்சிக்கு விறோதமானவர்கள் வஞ்சகமானவர்கள் என்னப்பட்ட எதிரிகளான பார்ப்பனர்களுக்கும் அவர்களது சமூகத்துக்கும் அவர்களது இயக்கங்களுக்கும் கொடுத்திருக் கிறார்கள் கொடுத்து வந்து இருக்கிறார்கள் கொடுத்தும் வருகிறார்கள். என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகின்றோம்
பார்ப்பனர்கள் - பார்ப்பனர் அல்லாதார்கள் என்கின்ற பிரிவுகளையே மிக இழிவானது - வெறுக்கத் தக்கது என்று சொல்லி வந்த பார்ப்பனர்கள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காக வெட்டி புதைப்பதற்கு ஆக தைரியமாய் ஆந்திரர்கள்-தமிழர்கள் என்கின்ற பிரிவினையை ஏற்படுத்தி விட்டு அந்த சாக்கில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியும், முயற்சியும் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்றால் அது அச்சமூகத்துக்கு எவ்வளவு இழிவானதும் துணிச்சலானதுமான காரியம் என்று யோசிக்கும்படி வேண்டுகின்றோம்
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டபிறகு தமிழர்களை விட ஆந்திரர்கள் ஒன்றும் அதிகமாக சாதித்துக் கொண்டதாகச் சொல்லிவிட முடியாது. உதாரணமாக ஆந்திரர் என்கின்ற முறையில் பனகால் ராஜாவுக்கு பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருந்தால் தமிழர் என்கிற முறையில் செட்டிநாட்டு ராஜாவுக்கு பரம்பரை ராஜா பட்டம் கிடைத்திருக்கிறது. ஒரு ஆந்திர பனகால் முதல் மந்திரி ஆனால் ஒரு தமிழர் டாக்டர். சுப்பராயன் முதல் மந்திரி ஆனார்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 314
மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த 1. ஒரு பனகால், 2. ஒரு சர்.பாத்ரோ, 3. ஒரு சர்.கே.வி.ரெட்டி, 4. ஒரு முனிசாமி நாயுடு, 5. ஒரு பொப்பிலி ஆகிய ஐந்து பேர் மந்திரி ஆகியிருந்தால் தமிழர்களில் 1 ஒரு சுப்பராயலு ரெட்டியார், 2. ஒரு சர்.சிவஞானம் பிள்ளை, 3. ஒரு டாக்டர் சுப்பராயன், 4. ஒரு முத்தைய முதலியார், 5. ஒரு சேதுரத்தினம்
ஐயர், 6. ஒரு பி.டி.ராஜன் 7. ஒரு குமாரசாமி ரெட்டியார் ஆகிய ஏழு பேர்கள் மந்திரிகளாகி இருக்கிறார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்ட பிறகு நிர்வாக சபை கவுன்சில் மெம்பர்களில் கூட ஆந்திரர் என்கின்ற முறையில் ஒரு சர்.கே.வி. ரெட்டியார் லா மெம்பராயிருந்தால் தமிழர்களில் 1. ஒரு கே. சீனிவாசய்யங்கார், 2. ஒரு
சர். உஸ்மான், 3. ஒரு சர்.சிஃபி.ராமசாமி ஐயர், 4. ஒரு கே.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரி, 5. ஒரு கிருஷ்ணநாயர், 6. ஒரு பன்னீர்செல்வம் ஆக 6 பேர்கள் தமிழர்கள் நிர்வாக சபை மெம்பராயிருக்கிறார்கள்.
ஹைக்கோர்ட் ஜட்ஜிகளை எடுத்துக் கொண்டாலும் சரி சர்விஸ் கமிஷனை எடுத்துக் கொண்டாலும் சரி மற்றும் சர்க்காரால் நியமிக்கப்பட்ட சகல பதவிகள் உத்தியோகங்கள் ஆகியவற்றில் தமிழர்களை எந்தத் துறையிலும் ஆந்திரக்காரர்கள் மிஞ்சிவிட வில்லை என்பதை எவ்வளவு மூடனும் சுலபமாய் உணர முடியும்
அன்றியும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் இதுவரை ஒரு ஆந்திரர் கூட கார்பரேஷன் பிரசிடெண்டாகவோ மேயராகவோ ஆனதில்லை:
மேலும் இன்று எந்த தமிழனாவது மனம் துணிந்து தைரியமாய் தோழர் பொப்பிலிராஜா அவர்கள் ஆந்திராக்காரர் என்றாலும் இந்த மந்திரி பதவியினால் பணம் சம்பாதிக்கவோ, அல்லது தனது குடும்பத்துக்கோ, எஸ்டேட்டுக்கோ, தனது சொந்தத்துக்கோ, ஏதாவது அனுகூலமோ நன்மையோ செய்து கொள்ளவோ வந்திருக்கிறார் என்று சொல்லக்கூடுமா என்று கேட்கின்றோம்.
சுயமரியாதைக் கொள்கையைப் பொருத்தவரையில் கூட டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஒன்று ராஜா பொப்பிலி இரண்டு ஆகிய இரண்டு மந்திரிகள் தான் அவ்வியக்கத்தில் கலந்து கொண்டதை தெரிவிக்கவோ அல்லது சில கொள்கைகளையாவது ஒப்புக் கொள்ளுகின்றோம் என்று சொல்லவோ தைரியமாய் முன்வந்தார்களே ஒழிய மற்ற எந்த மந்திரியாவது ராஜாவாவது வாயினால் உச்சரிக்கவாவது இணங்கினார்களா என்று கேட்கின்றோம் கடப்பாரையை விழுங்கி விட்டு அதை ஜீரணம் செய்ய சுக்குக் கஷாயம் சாப்பிடுவது போல் மகத்தான கெடுதியும், துரோகமும் ஏற்பட்டு விட்டது என்று குற்றம் சாட்ட வந்தால் அதற்கு சரியான சமாதானம் சொல்லுவதை விட்டுவிட்டு ஆந்திரர் தமிழர் என்கின்ற கலகத்தையுண்டாக்கி
315 —————————————— ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
விட்டு அதை அடக்கி விடலாம் என்று பார்ப்பது காட்டு வெள்ளத்தைத்
தடுப்பதற்கு முரத்தை ஏந்திக்கொண்டு எதிரே நின்றதுபோல ஆகுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இதற்கு மூன் கூட ஒன்று இரண்டு தடவை இந்த முயற்சி பார்ப்பனர்களால் கிளப்பி விடப்பட்டு கடைசியாக பார்ப்பனர்கள் முழுத் தோல்வி அடைந்தார்கள்.
அதாவது குருகுல போராட்டம் என்பதில் சேரமாதேவி ஆச்சிரமத்தில் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு உள்ளே சாப்பாடும் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகளுக்கு வெளியே வைத்துச் சாப்பாடும் போட்டு பொதுப் பணத்தில் நடத்தி வந்த குரு குல ஆச்சிரமத்தைப் பற்றி தோழர்கள் வரதராஜுலுவும், ஈ.வெ.ராமசாமியும் கிளர்ச்சி செய்து
வந்த காலத்தில் “தமிழ் நாட்டு விஷயத்தைப் பற்றி ஆந்திர தேசத்தாரான ஒரு நாயுடுவும், கர்நாடக தேசத்தாரான ஒரு நாயக்கரும் கிளர்ச்சி செய்வது நமக்கு வெட்கமாக இல்லையா? ஆதலால் அவர்களது கிளர்ச்சியை ஆதரிக்கக் கூடாது” என்று காலஞ்சென்ற தேச பக்தர் வி.வி.எஸ்.அய்யர் அவர்களே கிளப்பி விட்டார்கள்
காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் இக்கிளர்ச்சிக்கு உதவியும் செய்தார்கள். இவ்விஷயம் தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களுக்கு நன்றாய்த் தெரியும் அப்படி இருந்தும் குருகுலம் அடியோடு அழிந்ததே தவிர ஆந்திரர் தமிழர் பிரச்னை சிறிது கூட பயன்படவில்லை. அது போலவே மற்றொரு சமயமும் காங்கிரஸ் கமிட்டியில் கிளப்பப்பட்டு தோழர் திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் அவர்களே அதைக் கண்டித்து வெற்றி பெற்றார்.
ஆகையால் தமிழ் மக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்கிறவர்கள் இம்மாதிரியான பயனற்றதும் விஷமத்தனமானதுமான ஆந்திரர் தமிழர் என்ற தேசாபிமானப் புரட்டின் மேல் தங்கள் வெற்றிக்கு வழி தேடி அவமானமடையாமல் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற விஷயத்திலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து அதில் வெற்றி பெற உழைக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
பகுத்தறிவு - கட்டுரை - 16.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 31௦
பொப்பிலியும் - செட்டிநாடும்
செட்டிநாட்டு கோடீஸ்வரரும், பரம்பரை ராஜா பட்டம் பெற்றவரும், தர்மப்பிரபுவுமான ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் குமாரர் சென்னை கார்ப்பரேஷன் மேயர் குமாரராஜா என்றழைக்கப்படும் முத்தையா செட்டியார் அவர்கள் மீது ஜஸ்டிஸ் கட்சியார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றத் துணிந்து அவரிடம் அதாவது முத்தையா செட்டியார் அவர்களிடம் சென்னை சட்டசபைக் கொரடா பதவியையும், ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாக சபையின் தலைவர். பதவியையும் ராஜிநாமா பெற்றுவிட்டார்கள்.
இந்தக் காரியமானது இந்தியாவின் சரித்திரத்திலேயே - ஏன் உலக சரித்திரத்திலேயே புதுமையானதும், இதற்குமுன் எவரும் செய்யத் துணியாததும், பார்த்திராததும், கேட்டிராததுமான காரியமென்றே சொல்ல வேண்டும்
செட்டிநாட்டுப் பிரபுவுக்கு அதிகாரம், பதவி, பட்டம், பணம், செல்வாக்கு ஆகியவை எல்லாம் நிறைந்து இருந்தும் கட்சி முறை, கொள்கை முறை, சிநேக முறை என்பவைகள் அல்லாமல் தனிப்பட்ட முறையிலும், செல்வ முறையிலும், பின்பற்றுவோர் முறையிலும் ஏராளமான பலமும், சாய்காலும் இருந்தும் ஒன்றும் பயன்படாமல் கோழிக்குஞ்சை ராஜாளி தூக்கிக் கொண்டு போவதுபோல் ஒரு நொடிக்குள் வேலை ஒப்பேறி விட்டது. அதாவது இரண்டு முக்கியமான பதவியும் காலி செய்யப்படவேண்டியதாய் விட்டது
இனிமேல் ராஜா சர். அவர்களும் குமாரராஜா அவர்களும் அவர்களது ஆட்களும், அவர்களது பத்திரிகைகளும் பொப்பிலிராஜாவைத் தூக்கிலிடுவதானாலும் சரி இன்னமும் என்ன செய்து கொள்ளுவதானாலும்
சரி “நினைத்தார் காரியத்தை முடித்தார்” என்பது போல் ஒரு காரியத்தை அதாவது செட்டிநாட்டு பிரபுக்கள் விஷயத்தை கொசுவை நசுக்குவது போன்ற சுலப முயற்சியில் பொப்பிலி ராஜா முடிவு செய்து விட்டார்.
இதற்காக அவர் ஒரு பிரயாசையும் படவில்லை என்பதோடு ஒருவர் தயவையும் எதிர்பாராமல் செட்டிநாட்டை ஆதரிக்கும் பத்திரிக்கைகளையும், ஆட்களையும் லட்சியம் செய்யாமல் “ஒன்றா கட்சியை விட்டு செட்டிநாடு வெளியேற்றப்பட வேண்டும், இல்லாவிட்டால் பொப்பிலி வெளியேறி விடவேண்டும்” என்கின்ற முடிவின் வலிவையே ஆயுதமாகக் கொண்டு செட்டிநாட்டுக்கு மங்களம் பாடிவிட்டார். 37... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
எவ்வளவு தந்திகள், எவ்வளவு கடிதங்கள், எவ்வளவு மிரட்டல்கள், எவ்வளவு சிபார்சுகள் ஒன்றையும் கவனிக்காமல் வைரக்குன்று போல்
நின்று நினைத்த காரியத்தை முடித்தார்.
இவற்றிற்கெல்லாம் காரணமாய் இருந்தது பொப்பிலி அவர்கள் தன்னை அண்டிநிற்கும் கட்சியின் தலைமை (சர்வாதிகாரி) பதவியை சுண்டுவிரல் நுனியில் வைத்துக் கொண்டு எந்த நிமிஷத்தில் வேண்டுமானாலும் உதரி எறிவதற்கு தைரியத்துடன் தயாராய் இருந்ததும், கட்சித்தலைவர் பதவியால் தான் எவ்வித பெருமையோ, எவ்வித சுயநலமோ அடையாமல் கட்சிக்கு தன்னால் பெருமை அளிக்கப்பட்டதுடன் தனது செல்வத்தையும், செல்வாக்கையும் கட்சிக்கு உதவி வந்த தன்மையுமே இவ்வளவு பெரியதொரு மகத்தான காரியத்தை வெகு அலட்சியமாகவும், சுலபமாகவும் முடித்து விட முடிந்தது
இந்த முயற்சியில் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் தோற்று இருந்தாலும் கூட வீரராகவே விளங்கி இருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை. முதல் மந்திரி பதவியையும் கூட அவர் அவ்வளவு அலக்ஷியமாகவே கருதி இருப்பதாலேயே உத்தியோக தோரணையிலும் பல காரியங்கள் உறுதியோடு செய்யப்படுகின்றதே யொழிய மந்திரி பதவியை கடுகளவாவது லக்ஷியம் செய்து கொண்டு இருந்திருப்பாரேயானால் நாட்களையும், பணங்களையும் எண்ணிக் கொண்டிருப்பதைத் தவிர அவரால் வேறு ஒரு காரியமும் செய்து இருக்க முடியாது.
நிற்க இந்தக் காரியத்தின் பயனாய் இப்போது பெரியதொரு யுத்த
முஸ்தீப்புகள் தயாராகிக் கொண்டிருக்கிறதாக தெரிய வருகின்றது
தோழர் ராஜா சர் அண்ணாமலையார் அவர்கள் மூன்று லக்ஷ ரூபாய் முதல், ஐந்து லக்ஷ ரூபாய் வரையிலும் செலவு செய்யத் துணிந்து துகையை எடுத்து வேறாக மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக் கொண்டு பொப்பிலி ராஜாவை ஒழிப்பதற்கு அல்லது ஒரு கை பார்ப்பதற்கு யுத்தம் தொடங்க பிளானும், எஸ்டிமேட்டும் போட ஆரம்பித்து அடையார் அரண்மனையில் யுத்த ஆபீசு திறந்தாய் விட்டது. மைலாப்பூர் இஞ்சினீர்” (பார்ப்பன மேதாவி வக்கீல்)களும், சென்னைநகர் “கண்ட்ராக்டர்” (பத்திரிக்கைக்காரர்) களும் செட்டி நாட்டு அடையார் அரண்மனைக்குள் புகுந்து நிரம்பி விட்டார்கள். படைகளுக்கு ஆள்களாக காங்கிரசு தொண்டர்களும், சுயமரியாதைத் தொண்டர்களில் சிலரும், ''மூலபலம்” போல் அரண்மனையைச் சுற்றி அணிவகுத்து நின்ற வண்ணமாய் இருக்கின்றார்கள். மகாயுத்தம் போல் ஒரு பெரிய யுத்தம் நடந்து தான் தீரும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால் இதில்
யார் வெற்றி பெறுவார் யார் தோல்வி அடைவார் என்பதை இப்போது சுலபத்தில் சொல்லி விட முடியாது. ஏனெனில் ராஜா சர் அவர்கள்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 315
பணத்தை வாரி இரைக்கின்றார். தேசீய - சத்தியாக்கிரக பத்திரிக்கைக்காரர்களை. யெல்லாம் ஐந்து நிமிஷத்தில் சரிக்கட்டி அடிமை கொண்டு கால் பெருவிரல் அடியில் வைத்துக் கொண்டு விட்டார்.
அது மாத்திரமல்லாமல் பத்திரிக்கைக்காரர்கள் பெரிதும் பார்ப்பனர்களாய் இருப்பதால் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சொன்னதுபோல் “ஜஸ்டிஸ் கட்சியை 500 கஜ ஆழத்தில் புதைத்து விட வேண்டும் என்பதற்கு இணங்க பார்ப்பனர்களுக்குச் சொந்தத்திலேயே ஜஸ்டிஸ் கட்சியை ஒழித்து விட வேண்டும் என்கின்ற ஆசையிருப்பதோடு “நல்ல வேட்டை” “கொழுத்த ஆடு” என்பது போல் பெரியதொரு ஆசாமியான ராஜா சர் தங்களுக்குக் கிடைத்து இருப்பதுடன் அவரால் பணமும் கிடைக்கக் கூடியதாய் இருந்தால் அவர்கள் (பத்திரிக்கைக்காரர்கள்) எவ்வளவு ஆனந்தத்தோடு “பழம் நழுவிப் பாலில் விழுந்தது அதுவும் நழுவி அவர்கள் வாயில் விழுந்தது” போல் ஆனந்தங்கொண்டு இருப்பதில் ஆச்சரியப்பட வேண்டியது ஒன்றுமே இல்லை.
ஆகவே ராஜா சர் அவர்களுக்கு பணம், பத்திரிகை, ஏராளமான பார்ப்பனர்களின் சேவை, மேதாவிப் பார்ப்பனர்களது மூளை ஆகியவைகள் இருப்பதால் அவருடைய தாக்குதலை அவ்வளவு சாதாரணமாக மதித்து விட முடியாது. இவை ஒரு புறமிருக்க “இனம் இனத்துடன் சேரும்” என்பது போல் தோழர் ராஜா சர் அவர்களைப் போல் இதற்கு மூன் ஜஸ்டிஸ்
கட்சியில் இருந்து விலக்கப்பட்டோ, அல்லது அலட்சியமாய் கருதப்பட்டோ, அல்லது கட்சியால் தங்கள் இஷ்டப்பட்ட காரியம் கைகூடாமல் போய் மனச்சலிப்போடு கோபமாயோ இருக்கக்கூடிய மற்றும் பல தோழர்களும்
இந்த சமயம் ராஜா சர். அண்ணாமலை அவர்களுக்கு சம்மன் இல்லாமலே உதவி செய்யவும், ராஜா சர். அவர்கள் பணத்திலும், முயற்சியிலும் தாங்கள் பழியைத் தீர்த்துக் கொள்ளவும் கருதி ராஜா சர். அவர்களுடன் Alliance ஆய் சேர வெகு பேர் காத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இது சம்பந்தமாய் நெகோசேஷன் தூதுகள் நடந்து கொண்டும் இருக்கின்றன.
மற்றும் இச்சந்தர்ப்பத்தை மாதம் மும்மாரி பெய்து விளைந்த நல்லதொரு வெள்ளாமை போல் கருதி தக்கபடி அறுப்பு அறுத்து பத்தாயத்தில் கொட்டிக் கொள்ளலாம் என்கின்ற கனவு கண்டு கொண்டிருக்கும் பல பைகாட் அண்ணாத்தை மக்களின் உதவிகளும் செட்டி நாட்டு ராஜாவுக்கு போட்டி மேல் போட்டியாக வலுவில் வந்து கொண்டிருக்கும்
தோழர் பொப்பிலி ராஜா அவர்களுக்கோ 'பொப்பிலி ராஜா அவர்கள் தரிசனமே அமாவாசையையும், பெளர்ணமியையும் ஒரே நாளில் பார்க்க ஆசைப்பட்டவன் கதி போல் இருக்கின்றது என்பாரும்
39 ௨... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
“பார்க்கக் கிடைத்தாலும் ஒன்று இரண்டு பேச்சுக்கு மேல் பேச சந்தர்ப்பம் கிடைப்பது அதைவிட அரிதான காரியம்'' என்பாரும், “பொப்பிலி எவரையும் மதிக்காத, லட்சியம் செய்யாத ஆணவம் படைத்தவர்” என்பாரும் ஆக பலவிதமாய்க் குறை கூறுவோர்களும், சுலபத்தில் பொப்பிலியை நெருங்கித் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முடியாது என்று கருதிக்கொண்டிருப்பாருமே அவருடன் மிகுதியாயிருக்கிறார்கள்.
பொப்பிலியின் மீது பொறாமை கொண்டவர்களும், துவேஷம் கொண்டவர்களும் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்களும் நல்லதொரு சமயம் கிடைக்கவில்லையே என்று பதுங்கிக் கொண்டு இருக்கின்றவர்களும், கூட இருந்தே குளிர் காய்ந்து விடுவோம் என்று அவரை ஒவ்வொரு நிமிஷமும் கிட்ட இருந்து கொண்டே மோசம் செய்யக் கருதிக் கொண்டு இருக்கிறவர்களும் மலிந்தும் இருக்கிறார்கள். என்றாலும் சில உண்மையாளர் உண்டு.
இப்படிப்பட்ட கூட்டத்தை துணையாகவும், சகாயமாகவும் கொண்டு தான் பொப்பிலி அவர்கள் ராஜா சர் அவர்களது தாக்குதலுக்கு மார்பைக் காட்ட வேண்டியவராய் இருக்கிறார் என்றாலும் பொப்பிலிக்கு இருக்கும் பெரியதொரு பின் பலம் என்னவென்றால் வெற்றி தோல்வியின் பயனானது வெற்றியானாலும், தோல்வியானாலும் பொப்பிலிக்கும் செட்டி நாட்டுக்கும் இரண்டு பேருக்கும் ஒன்று போல் பாவிக்க முடியாததும், இரண்டு பேரும் ஒன்று போல் பலன் அனுபவிக்கக் கூடாததுமான நிலையில் இருவர்களும் இருப்பதே பொப்பிலிக்கு பின்பலமாகும். அதாவது பொப்பிலி தோற்றுப் போனார் என்று வைத்துக் கொண்டாலும், நல்லதொரு தோல்வியே ஏற்பட்டு விட்டது என்று வைத்துக் கொண்டாலும் பொப்பிலிக்கு முழுகிப் போவதோ, கடுகளவு நஷ்டமோ, கவலையோ ஏற்படக் கூடியதோ ஆன காரியம் ஒன்றுமே இல்லை. பொது வாழ்வின் பேரால் பொப்பிலிக்கு இனி ஆக வேண்டிய காரியம் எதுவுமே இல்லை, அவருக்கு இன்று தன் சொந்தத்தில் சுயநலத்துக்கு என்று ஆசைப்படவேண்டிய காரியமோ, லட்சியமோ கூட எதுவும் இல்லை என்பதாகும்.
ஆதலால் அவரது தோல்வியானது அவருக்கு எவ்வித பாதகத்தையோ, சங்கடத்தையோ விளைவிக்க முடியாது
ஆனால் தோழர் செட்டிநாடு ராஜா சர். அவர்கள் நிலைமை அப்படியில்லை. ராஜா சர். அவர்களது செல்வம், செல்வாக்கு, புகழ், மனநிம்மதி முதலிய மனித வாழ்வு சாதனங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு பொது வாழ்வில் உள்ள வெற்றியையும், மதிப்பையும் பொருத்ததாகவே இருக்கின்றது. அவரைச் சுற்றித் திரிபவர்கள்,
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 320
உதவியாளர்கள், ஆப்த நண்பர்கள் ஒவ்வொருவரும் செட்டிநாட்டு ராஜாவால் பிழைப்பதற்கும், அவரை உபயோகப்படுத்திக் கொள்வதற்குமே உள்ளவர்களே பெரும்பான்மையானவர்களாய் இருக்கின்றார்களே ஒழிய ராஜா சர். இடம் அனுதாபமோ, உண்மையான பற்றுதலோ, சுகதுக்கங்களில் பங்குண்டென்று நினைப்பவர்களோ மிகமிக அறிது ஆகவே பொப்பிலி ராஜா அவர்களது படை 'சிறியது” ஆனாலும் அவை சொந்தப்படை. பொப்பிலிக்காக உயிர்விடத் துணிந்த உத்தமப்படை சுயநலம் கருதாமல் ஒத்துழைக்கக்கூடிய படை. செட்டிநாடு அவர்களின் படைகளோ “பெரும்” படையானாலும் அது 100 க்கு 99- கூலிப்படை தன் தன் சொந்தக் காரியத்துக்கு ஆக செட்டிநாட்டு ராஜாவை நத்திக் கொண்டு சூழ்ந்திருக்கும் சுய காரியப்படை நல்ல சமயத்தில் வீசம் கூலி அதிகமாய்க் கிடைப்பதாயிருந்தால் தலைவனையே கழுத்தறுக்கத் தகுந்த “உதாரகுணமுள்ள” துரோகப்படை.
செட்டிமார் நாட்டிலேயே செட்டிநாட்டு ராஜா சர் அவர்களுக்கு தாட்சண்ணியமும்-பயமும் வேறு கதியில்லாமலும் இருக்கின்ற செட்டிமார்கள் “உதவி” அல்லாமல் உண்மையானவர்கள், சுதந்திரமாயுள்ளவர்கள்.
நல்லெண்ணத்தின் மீதும் உதவிக்கு வரும் படை மிக மிக அறிதாகும்
இவைகள் எல்லாவற்றையும் விட செட்டி நாட்டுக்கு உதவி
பார்ப்பன மூளை, பொப்பிலி ராஜாவுக்கு உதவி அரசாங்க மூளை. பார்ப்பனர்களை நம்பிக் கெட்டவர்களும், பார்ப்பனர்களால் கெட்டவர்களும் ஆன குடிகளும் ராஜாங்கமும் இவ்வளவு என்று உலகத்துக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
ஆனால் அரசாங்கமோ இவ்விஷயத்தில் வெகு சுளுவில்
யாரையும் கை விட்டு விடாமல் நடுநிலைமையாய் நடந்து கொள்வார்கள்.
மற்றொன்று என்னவென்றால் பொப்பிலி செய்த காரியம் சரியோ, தப்போ எப்படி இருந்தாலும் அது ஜஸ்டிஸ் சுக்ஷிக்காக, பார்ப்பனரல்லாதார். மக்கள் நலத்துக்காக என்கின்ற கவசத்தை கொண்டிருக்கின்றது செட்டிநாடு ராஜாவால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் காரியம் சரியோ, தப்போ உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் அது கட்சிக்கு ஆபத்து ஏற்படத்தக்க-பார்ப்பனர் நன்மைக்காக, பார்ப்பனரல்லாதாரைக் காட்டிக் கொடுத்து செய்த இமயமலை போன்ற துரோகம் என்ற கவசத்தைக் கொண்டிருக்கிறது
பார்ப்பனப் பத்திரிக்கைகள் இப்போது செட்டிநாட்டை ஆதரிப்பதற்காக இந்த ஒரு வாரத்துக்குள் போட்ட காரணங்களே பொப்பிலி ராஜாவின் கூற்றுக்களை மெய்பிக்க தகுந்த கல்லுப்போன்ற ஆதாரங்களாக விளங்குகின்றன. 31... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்த நிலையில் பொப்பிலியை செட்டிநாடு வலுவில் தாக்க யுத்த முஸ்திபுகளைத் தயார் செய்து வருவது அவ்வளவு போற்றத்தக்கதும், புத்திசாலித்தனமானதுமான காரியம் என்று சொல்ல நம்மால் முடியவில்லை. பார்ப்பனர்களை நம்பிய - பார்ப்பனப் பத்திரிகைகளை நம்பிய - காங்கிரசுப் பார்ப்பனர்களையோ, மிதவாதப் பார்ப்பனர்களையோ நம்பிய பார்ப்பனரல்லாதார் எவரும் இந்த 50 வருஷ காலத்தில் முன்னுக்கு வந்ததாகச் சரித்திரமும் இல்லை சம்பவமும் இல்லை என்பதை செட்டி நாட்டுக்கு வணக்கத்துடன் எச்சரிக்கை செய்கின்றோம். ஆதலால் செட்டிநாட்டு ராஜா சர். அவர்களும், குமாரராஜா அவர்களும் நடந்து போன விஷயத்தையும், யுத்த ஆத்திரத்தையும் மறந்து சில முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தை கூட்டி இனி நடக்க வேண்டியது என்ன? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து ஒரே கட்சியில் உறுதியாய் நிற்க முடிவு செய்து கொள்வதே தக்க காரியம் என்பதை விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 16.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 322
ஜஸ்டிஸ் கட்சி தவைவர்களுக்கு ஒரே வார்த்தை
ஜஸ்டிஸ் கட்சி இந்திய சட்டசபை தேர்தல் அடைந்த தோல்வியால் “குதிரை கீழே தள்ளியது மல்லாமல் குளியும் பரித்தது” என்று சொல்லும் பழமொழி போல் தோல்வி அடைந்ததோடு கட்சிக்கே ஆட்டம் வரும் நிலைமையையும் ஏற்படுத்திக் கொண்டது.
அதாவது கட்சிக்கு உள்ளுக்குள்ளாகவே மகத்தான எதிர்ப்பு ஏற்பட்டு விட்டது. தக்கதொரு பணக்காரரை கட்சியில் இருந்து விரட்டிவிட்டதால் பணக்காரர்களை நம்பி வாழும் தொண்டர்களையும் கட்சியில் இருந்து விரட்டிவிட்டதாகத்தான் அருத்தம்
“கொள்கை” “கொள்கை” என்று மாத்திரம் கூப்பாடு போடுவது பயனற்ற பேச்சாகும். பணமும், பிரசாரமும், தந்திரமும் உள்ளவர்கள் தான் வெற்றி பெருவார்களே தவிர வெறும் கொள்கைகளே வெற்றி யளித்து விடாது
ஆகவே இனி நடக்கப்போகும் காரியத்துக்கு நல்லதொரு கொள்கையும், அதற்குத் தகுந்த பணமும், பிரசாரமும் இல்லாமல் ராஜா
சர் அண்ணாமலையாரையும் குமாரராஜாவையும் விரட்டியடித்து விட்ட பெருமையை நினைத்து மகிழ்ந்து கொண்டே இருப்போமானால் அழிப்பாரில்லாமல் கட்சி அழிந்து போகும் என்பது உறுதி
இன்று சென்னை சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ்காரர்களுடன். போட்டிபோட ஒரு ஆளை நிருத்த ஜஸ்டிஸ் கட்சிக்கு யோக்கியதை இல்லாமல் போய் விட்டது என்றால் கட்சியின் எதிர்கால நிலைமைக்கு யாரையாவது ஜோசியம் கேட்க வேண்டுமா என்று கட்சித்தலைவரை கேட்கின்றோம்
தோழர் ஈ.வெ.ராமசாமியால் கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் 4, 5 மாத காலமாக தள்ளி வைத்துக் கொண்டே வரப்படுகிறது. இன்னமும் தேதி போடாமலும் தள்ளி வைத்து விடலாம் இதனால் ஈ.வெ. ராமசாமியை ஏமாற்றலாம். ஆனால் உலகத்தை ஏமாற்றி விட முடியாது.
இன்றைய தினம் ஜஸ்டிஸ் கட்சியின் தேர்தலுக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லுவதை மறுக்க முடியவில்லை.
393 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இதுவரையில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனரல்லாதார் கட்சியாய் இருந்தது. இப்போது அந்தக் “கெட்ட” பெயரையும் நீக்கிக் கொண்டது. இனிமேல் ஓட்டர்களிடம் என்ன சொல்லி ஓட்டுக் கேட்பது என்பதை உணர வேண்டாமா? பணம் ஜஸ்டிஸ் காரரிடம் எவ்வளவு இருக்கின்றதோ அவ்வளவு எதிரிகளிடமும், காங்கிரசினிடமும் இருக்கிறது
பிரசாரம் ஐஸ்டிஸ்காரரிடம் கிடையவே கிடையாது காங்கிரசுக்காரரிடமும், எதிரிகளிடமும் ஏராளமாய் இருக்கிறது தந்திரங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.
டிசம்பர் மாதம் 30ந் தேதிக்குள் தோழர் ஈ.வெ.ராமசாமியின் திட்டங்களைப் பற்றி ஒரு முடிவு ஏற்படவில்லையானால் தோழர் ராமசாமி ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பது அவருக்கே வெட்கக்கேடான காரியமாகும். அவர்களது தோழர்களும் இவரை இனி மதிக்கவும் மாட்டார்கள் என்பதை ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் உணர்வார்களாக, ஆகவே ஜஸ்டிஸ் கட்சியின் வீரமும், வாழ்வும் செட்டிநாட்டை முறியடித்து விட்டோம் என்பது அல்லவே அல்ல. அது இனியும் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றது என்பதையே பொருத்திருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 16.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1984 (2) 324
நிர்வாக சபையை ஏன் கூட்டவில்லை
தோழர் குமாரராஜா அவர்கள் மீது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் கவுன்சில் பார்ட்டி மீட்டிங்கில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மான விஷயமாய் “முதலில் நிர்வாக சபைக் கூட்டம் கூட்டி அதில் ஒரு முடிவு செய்து கொண்டு பின்பு கவுன்சில் பார்ட்டி கூட்டம்
கூட்டலாம்'' என்று அநேக தந்திகளும், கடிதங்களும் அனுப்பப்பட்டன. அவைகள் எதையும் கவனிக்காமல் கவுன்சில் பார்ட்டியில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விட்டது” என்பதாகச் சிலர் குறை கூறுகிறார்கள். இதற்கு சமாதானம் சொல்ல கட்சி கடமைப்பட்டிருக்கிறது
அச்சமாதானம் என்னவென்றால் ஜஸ்டிஸ் கட்சி நிருவாக சபைக்கு அக்கிராசனர் குமாரராஜா முத்தய்ய செட்டியார் அவர்கள் அல்ல. என்பதையும் கவுன்சில் பார்ட்டி (சட்டசபைக் கட்சி கொரடா) அறிவிப்புதான் சேர்மென் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டுமாய் கோருகிறோம்
ஏனெனில் தோழர் குமாரராஜா அவர்கள் கவுன்சில் பார்ட்டி கொரடா என்கின்ற முறையில் தான் நிர்வாக சபைக்கு தலைமை வகிக்கின்றார். ஆதலால் நிர்வாக சபையில் தோழர் முத்தைய செட்டியார் அவர்களுக்கு சொந்த முறையில் அக்கிராசனர் பதவி இல்லை
அதனால் அவர் சொந்த முறையில் எந்த சபையில் பிராதனப்பட்டவரோ அந்த சபை மூலம் அவரது விஷயம் கவனிக்கப்பட வேண்டியதாயிற்றே ஒழிய அது தான் சட்ட ரீதியான ஒழுங்கு முறையான நியாயமே ஒழிய மற்றபடி நிர்வாக சபையில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தோற்றுப் போகும் என்றோ சட்டசபைக் கமிட்டியில் சுலபமாய் பாசாகி விடலாம் என்றோ கருதி குறுகிய நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அல்ல என்பதே சமாதானமாகும்
பகுத்தறிவு - செய்தி விளக்கம் - 16.12.1934
395 QURwaRdT எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
மோதிரம் மாற்றுவது மூடநம்பிக்கை
லண்டன் நகரத்தில் சமீபத்தில் நடந்த இரண்டொரு கல்யாணங்களில். மணமகன் மோதிரம் மாற்றிக் கொள்வது கூட மூடநம்பிக்கையில்
சேர்ந்தது என்று கருதி மணவினையின் போது மணமகன் மோதிரம் மாற்றிக் கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராம்
நாங்கள் ஒருவரை ஒருவர் வாழ்க்கைத் துணைவர்களாக ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லி இருவரும் கையொப்பமிட்டு பிறகு மோதிரம் மாற்றிக் கொள்வது எதற்காக" என்று மணமக்கள் கல்யாணப் பதிவு ரிஜிஸ்டராரை கேட்டார்கள். அதன் மேல் கல்யாணப்பதிவு ரிஜிஸ்டராரும் பாதிரியும் ஒன்றும் பேசாமல் கல்யாணத்தை பதிந்து கொண்டார்களாம். இந்த விஷயம் சென்ற வாரத்திய கிராணிக்கல் வாரப்பத்திரிகையில் காணப்படுவதுடன் தம்பதிகளின் உருவப் படங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. நமது நாட்டில் நடத்தும் சுயமரியாதைத் திருமணங்களில் தாலி கட்டவில்லையே என்று அழுவாரும், விளக்குப் பற்ற வைக்கவில்லையே என்று அழுவாரும், சாணி உருண்டை பிடித்து வைத்து தேங்காய் பழம் உடைக்கவில்லையே என்று அழுவாரும், பார்ப்பான் காலில் விழுந்து அம்மிக்கல்லில் மூட்டிக் கொள்ளவில்லையே என்று அழுவாரும் இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்று அறிய ஆசைப்படுகின்றோம் ஆகவே இனி கல்யாணம் என்றால் ஒவ்வொருவரும் ரிஜிஸ்டர். செய்து கொள்ள வேண்டியதை தான் முக்கிய காரியமாய் கருத வேண்டும். இதை விட ஜாக்கிரதையான முறையில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமானால் மணமக்கள் இருவருக்கும் டாக்டர் சர்டிகேட் பெற வேண்டும் ஆகிய இந்த இரண்டு காரியங்களைத் தவிர கல்யாணக் காரியத்தில் வேறு எந்தக் காரியமும் கலந்து கொள்ளாமல் இருக்கும்படி
பார்த்துக் கொள்ளுவது தான் தற்கால நிலைமைக்கு ஏற்ற சுயமரியாதைக் கல்யாணமாகும்
அந்தப்படி சகிக்காமல் “ அதாவது வேண்டாமா? இதாவது வேண்டாமா?” என்று சொல்லிக் கொண்டு செய்யப்படும் கல்யாணங்கள். எதுவும் அஞ்ஞானக் கல்யாணமும், புராண மரியாதைக் கலியாணமுமேயாகும் என்பது நமது அபிப்பிராயம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 32௦
பந்துக்களையோ நண்பர்களையோ அழைப்பதும், அவர்களுக்கு மரியாதை செய்வதும் வீண் செலவு என்று சொல்லுகின்றோமே தவிர அவற்றை மூடநம்பிக்கை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும் அது ஆடம்பரங்களில் கொண்டு வந்து விட்டு கடைசியாக பணச்செலவு, திரேகப்பிரயாசை காலக்கேடு முதலியவைகளுக்கு அடிமையாக்கி வைத்து விடுகின்றதுடன் இந்த ஆடம்பரங்கள் மக்களை போட்டியில் கொண்டு வந்து விட்டு விடுகின்றது என்றே பயப்படுகின்றோம்,
பகுத்தறிவு - கட்டுரை - 16.12.1934
397... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தற்கால அரசியல் நிலைமை
தொழிலாள சோதரர்களின் க்ஷேமத்திற்கு இவ்வூரில் மாதம் ஒரு முறை பூர்ண ஓய்வு ஏற்படுத்தி இருப்பது போற்றத்தக்கதாகும் இவ்விழாவைக் கண்டு நான் பெரிதும் சந்தோஷம் கொண்டேன். அவர்களுடைய நாளில் அவர்களைப் பற்றியே பேச நான் விரும்பி
வந்தேன். ஆனால் இங்கு வந்த பின்னர் விருதுநகர் வாசிகள் 'தற்கால
அரசியல் நிலைமை' ஜஸ்டிஸ் கட்சி ஆகியவைகளைப் பற்றியும் எடுத்துக்
கூறும்படி கேட்பதால் அதைக்கூற வேண்டியவனாய் இருக்கிறேன். இந்த
சமயத்தில் இவைகள் எவ்வளவு முக்கியமானவைகளாக இருக்கின்றதோ, அவ்வளவு குழப்பமான விஷயங்களாகவும் இருக்கின்றன.
*அரசியல் என்பது மக்களை ஏமாற்றும் இழிவான சூட்சி?
அரசியலின் பெயரால் இன்று உலகில் எங்கும் திருட்டு, புரட்டு, கொள்ளை, கொலை, பாமர மக்களை ஏமாற்றுதல் முதலாகிய இழிகாரியங்கள் எல்லாம் நடக்கின்றன. கலகங்கள் கூட சிலவிடங்களில். நடக்கின்றன. எப்படி என்றால் அரசியல் சம்பந்தமான பிரசார கூட்டங்களில் கலகம் ஏற்பட்டு விடுகின்றது. மதத்தின் பெயரால் ஷி திருட்டு, புரட்டு சகலமும் நடந்த காலத்தில் மக்கள் குருட்டு நம்பிக்கையிலிருந்தார்கள். மக்களுக்கு பகுத்தறிவு ஏற்பட்டு சரி தப்பு என அறியும் யோக்கியதை வந்தபிறகு சோம்பேரி சுயநலக் கூட்டத்தார்களால் மக்களை ஏமாற்ற வேறுவித தந்திரம் பண்ணவேண்டுமென்ற நோக்கத்துடன் செய்யப்பட்டு அரசியலின் பெயரால் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். ஒருவன் மதபக்தியின் யோக்கியதையை விளக்கினால் எப்படி மதத்துரோகி என அழைக்கப்பட்டானோ அது போலவே இன்று தேசபக்தியின் யோக்கியதையை விளக்கினால் தேசத் துரோகி என நாமம் சூட்டப் பெறுகின்றான். ஜாதி, மதம் என்று முன்தெரியாத காலத்தில் ஏமாற்றிய கூட்டம் இன்று அதை விட்டு விட்டு தேசம், சுயராஜ்யம் என்று ஏமாற்றுகிறார்கள். இன்றைய அரசியலில். விளம்பரத்திற்கு அளவில்லை. அதைப்பற்றி ஜனங்களுக்குச் செய்யப்படும் மோசப் பிரசாரத்திற்கும் குறைவில்லை. இந்நாடு அரசியல் என்னும் வார்த்தையின் கீழ் சுயராஜ்ய வேலை என்பது செய்ய தகுதியுடையதா? என்பதைக் கவனிக்க வேண்டும். வெளிதேசக்காரர் எப்படி நடுநிலைமையா யிருந்து கவனிப்பாரோ அவ்வாறு கவனித்தால்தான் உண்மை விளங்கும்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 32
இங்குள்ள பிரிவுகளைப் பாருங்கள். இதை மறந்துவிட முடியாது மதப்பிரிவின் தன்மை எப்படி இருக்கின்றது? காந்தியார்கூட 'நான் ஹிந்து மதத்திற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன்' எனக்கூறி உள்ளார். முஸ்லீம் வீரர்கள் அலி சகோதரர்கள் பேசுகையில் தாங்கள் முதலில் முஸ்லீம் என்றும் இரண்டாவது தான் இந்தியன் என்றும் பேசுகிறார்கள். கிறிஸ்தவன் தங்கள் தங்கள் வேத கட்டளை தான் பிரதானமென்றும், முதலில் கிறிஸ்துவன் என்றும், இரண்டாவதுதான் இந்தியன் என்றும் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்கள்.
இது போலவே நமது தேசீயப் பார்ப்பனர்களும் தாங்கள் முதலில் வருணாச்சிரமப் பிராமணர்கள் பிறகுதான் இந்தியர் என்கிறார்கள் - இந்தியன் எனும் ஒரு தலைப்பின் கீழ் யாவரும் வருவதற்குள் தங்கள் தங்கள் மதத்திற்கு பந்தோபஸ்து செய்யப்பார்க்கின்றார்கள். காந்தியார் முதல் அதையே தான் சுயராஜ்யம் என்கின்றார்கள். நான் இவ்விடத்தில் மிகைப்படுத்தி கூறுவதாக எண்ணக்கூடாது. இந்தியர் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய லண்டன் மகாநாடுகளில் என்ன தாண்டவமாடிற்று? மத விஷயங்களேதான்.
ஒருக்கால் இந்தியர்கள் இப்படி சண்டை போடட்டுமென அப்படிப்பட்டவர்களை சர்க்கார் அழைத்ததாய்க் கூறலாம். ஆனால் மத சம்பந்தமுடையவர்களைக் கூப்பிடாவிட்டால் நாஸ்திகர்களையா கூப்பிடுவது? பிறகு அது புகார் செய்யப்படுமல்லவா? முஸ்லீம் லீக் ஏற்படுத்தப்பட்டு உழைத்துவருகின்றது. கிறிஸ்தவர்கள் தாங்கள் சொற்ப தொகையினர் என்று கூறி தங்கள் விகிதாச்சாரம் பற்றி பேசுகின்றார்கள். பார்ப்பனர்கள் வருணாச்சிரமம்; வருணாச்சிரம சுயராஜ்ய சங்கம், இந்து மகாசபை முதலியவை ஏற்படுத்தி வேலை செய்துவருகிறார்கள். வகுப்பு சம்பந்தமாய் வந்த தீர்ப்பு விஷயமாய் நடைபெறும் விஷயம் யாவரும் அறிந்ததே. மாளாவியாஜியும் அது காரணமாகவே விலகிக் கொண்டார்.
பிராமணரல்லாதார் இயக்கம்
ஹிந்துக்களில் தென்னாட்டில் சென்ற 18 வருட காலமாய் பிராமணர் - பிராமணரல்லதார் விவகாரம் நடந்து வருகின்றது. அரசியல் கிளர்ச்சி சம்பந்தமாய் நம் மக்களுக்கு பெருத்த பதவிகள், பட்டங்கள், (ராஜா, பரம்பரை ராஜா பட்டங்கள்) கிடைக்கும் படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் ஏழை மக்கள் கஞ்சிக்குத் திண்டாடுகிறார்கள். தொடக் கூடாத -கிட்ட வரக்கூடாத பறையர்கள், சூத்திரர்கள் இன்னும் இருந்துதான் வருகிறார்கள். அவர்களின் பிரதிநிதியாய் சென்று இருப்பவருக்கு மாதம் 5000, 6000 சம்பளம் கிடைக்கின்றது வருணாச்சிரமமும் ஜெயித்து விட்டது. நாட்டிற்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் தொழில் போகாது! என்னும் பழைய காலப்
329 ௨... ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பாட்டி மொழிபோல் தோட்டிக்கு இன்றும் இன்னும் வரப்போகும் (ராமராஜ்ய) சுயராஜீயத்தாலும் புல் சுமக்கும் வேலையும், கக்கூசு அள்ளும் வேலையும் தான் இருக்கப் போகின்றது. தோட்டிக்கும், பார்ப்பானுக்கும் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை, ஏற்படப் போவதுமில்லை.
நம் பணத்தை வெளி நாட்டிற்குப் போகாமல் தடுத்து உள்நாட்டில் விட்டு வைத்தால், உள்நாட்டு முதலாளிகளும், வக்கீல்களும், டாக்டர்களும், வியாபாரிகளும், புரோகிதர்களும் சுகமடையலாம். பகல் முழுவதும் உழைத்தும், பலராலும், இழிவுபடுகின்ற - கஷ்டமடைகின்ற அவனுக்கு விடுதலை உண்டாகும்படியான திட்டம் அதில் என்ன என்று பாருங்கள்.
சுயராஜ்யம் என்றால் என்ன?
சுயாட்சி என்பதற்கு அடிமைத் தனத்தை நீக்கி, நாட்டை நாமே ஆள்வது என பொருள் வைத்துக் கொள்வோம். அயல் நாட்டார் போய்விடுகின்றார்கள். பின்னர் யார் கையில் நாடு இருக்கும்? நம்நாட்டு முதலாளிகள், ஜமீன்தார்கள், டாக்டர்கள், வக்கீல்கள், புரோகிதர்கள் ஆகியவர்களிடமேதான் இருக்கும். அதனால் ஏழைகளுக்கு லாபமென்ன?
அவ்வாறு அயலானிடம் ராஜ்யமில்லாமல் தன்கையில் ராஜ்யத்தை வைத்திருக்கும் இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொள்வோம். அங்கு 4% கோடி மக்கள் இருக்கின்றார்கள். ஒருவரும் அங்கு போய் சுரண்டவில்லை. அவர்கள்தான் வெளி இடங்களிலிருந்து சுரண்டி போய் கொட்டுகின்றார்கள். அவர்கள் பணம் வெளியே போவதில்லை. அந்த தேச ராஜாவே, பார்லிமெண்டு மெம்பர்களே ஆளுகிறார்கள். அப்படி இருந்தும் அங்கு கஷ்டமடைகின்றவனுக்கு சுபிட்சம் ஏற்படவில்லை. 70 லக்ஷ மக்கள் உடல் வலி இருந்தும் வேலையற்று உணவில்லாது திண்டாடுகின்றார்கள். அதை ராஜா ஆள்கின்றார் எனக் கூறலாம். முடி மன்னர்களை துரத்தியடித்து “குடிகளே ஆளும் குடி அரசு” நாடுகளைப் பாருங்கள். கெய்சர் சக்கரவர்த்தியை விரட்டி அடித்த ஜெர்மனியில் தெருக்களில் உணவு கிடைக்காமல் பலர் திரிகின்றார்கள். வேலைக்குத் தக்க கூலியும் கிடையாது. ஆனால் அது யுத்தத்தினால் கடன்பட்டு கஷ்டப்படுகின்றதென்று வாதிக்கலாம். உலகத்தில் குபேர நாடு என மதிக்கப்படும் அமெரிக்க குடியரசு நாட்டைப் பாருங்கள். அது அன்னிய நாட்டு ஆட்சியை ஒழித்து அந்நாட்டுக் குடிகளால் கோடிக்கணக்கில் ஓட்டுப் பெற்ற குடிஅரசு பிரசிடெண்டேதான் இருந்து ஆட்சி நடத்துகிறார். அந்நாட்டு வியாபாரிகள் மணிக்கு ஆயிரக்கணக்கில் டாலர்கள் சம்பாதிக்கின்றார்கள். அந்நாட்டு நிலச்சுவான்தாரர்கள் விளைவில் ஏக்கராவுக்கு 500 ரூ. 600 ரூ. வெள்ளாமை அனுபவிக்கிறார்கள். 50, 60 மாடி உள்ள வீடுகளில் முதலாளிகள் வசிக்கின்றனர். 10, 15 மாடி வீடுகளை ஒரு தெருவிலிருந்தும் மற்றொரு தெருவிற்கு ரதம் போல்
நகர்த்திக் கொண்டு போகின்றார்கள். பெரிய ரசாயன நிபுணர்கள்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 330
வாழ்கின்றார்கள். அங்கும் 2 கோடி மக்கள் வேலையில்லாது திண்டாடு கின்றார்கள். 1 ஜதை உடுப்புடன் 6, 7 பேர்களைக் கொண்ட குடும்பம் காலம் தள்ளுகின்றது. மக்கள் படுக்க இடமின்றித் தவிக்கின்றனர் அன்னார்களுக்காக என்ன நடக்கிறது? வேலை நேரத்தைக் குறைத்து அதன் மூலம் சிலருக்கு வேலை கொடுக்கின்றனர். தொழிலாளர்களுக்கு சர்க்காரே சம்பளம் நிர்ணயம் செய்கின்றது. எப்படி இருந்தும் அவர்கள் கஷ்டம் நீங்கினபாடில்லை. இங்கு சுயராஜ்யம் வந்தாலும், குடிஅரசு ஆனாலும் யார் வந்தாலும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு என்ன பயன் ஏற்படும்? ஒரு உதாரணம் பாருங்கள். படிப்பு இலாகா நம் கையிலிருந்து சென்ற 40 வருடத்தில் 100க்கு 6 என்பது 8 ஆக உயர்ந்துள்ளது. நம் மாகாணத்தில் தான் ஜஸ்டிஸ் கட்சி இருக்கின்றது. அது துரோகக்கட்சி ஆதலால் ஒன்றும் செய்யவில்லை யென்று வைத்துக் கொள்வோம் பம்பாய் ஐக்கிய மாகாணம் கல்கத்தா ஆகிய மாகாணங்களின் நிலைமை என்ன? இங்கு கல்வி மந்திரியாய் “ஜஸ்டிஸ் தேசத் துரோக” தோழர் குமாரசாமி ரெட்டியார் இருந்தார். ஆனால் பம்பாயில் தேசபிரியர் தான் இருந்தார்களே என்ன ஆச்சுது? அரசியல் கஷ்டப்படுகிறவர்கள் ஏழைகள் தான், உயிர் விடுபவர்களும் ஏழைகள் தான்; அனுபவிப்பவர்கள் கோடீஸ்வரர்களும், புரோகிதர்களுந்தான்.
என்ன சொல்லி ஜெயித்தார்கள்?
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்வாதிகள் ஜெயித்தார்கள் என்ன சொல்லி வாக்கு கேட்டார்கள். “சமூக சம்மந்தமாய் சபையில் ஏதாவது தீர்மானம் வந்தால் ஆதரிப்பதில்லை. அப்படி மசோதா கொண்டு வருவதுமில்லை”” என்றும் “ஒடுக்கப்பட்டவர்கள், ஜாதி, தீண்டாமை, உயர்ஜாதி, யோக்கியம் ஆகியவைகள் நிரந்தரமாயிருக்க பந்தோபஸ்தும்”” கூறினர். தோற்ற ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி சொல்லுவதில் எனக்கு அனுதாபமுண்டு. சுயமரியாதை இயக்கத்துக்கு அவர்கள், சென்ற 8 வருடங்களாக ஆதரவு அளித்து வந்திருக்கின்றார்கள். முதலில் பெண்கள் ஓட்டுரிமை பற்றி கேட்டவர்கள் ஜஸ்டிஸ் கட்சியார்களே. ஏழைகளுக்குக் கட்டாயப் படிப்பு கொடுக்க ஏற்பாடு செய்தவர்கள் ஜஸ்டிஸ்காரர்களே. எல்லா ஜாதி மதத்திற்கும் அரசியல் சமசுதந்திரம் கொடுத்தது ஜஸ்டிஸ் கட்சி. அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி துரோகக் கட்சி எனக் கூறி விஷமப்பிரசாரம் செய்து தேர்தலில் ஜெயித்தார்கள்.
குறிப்பு: 09.12.1934 இல் விருதுநகர் வெயிலு காத்தம்மன் கோயிலுக்கு முன்புறம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
பகுத்தறிவு - சொற்பொழிவு - 23.12.1934
331... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஜஸ்டிஸ் கட்சி
ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பார்ப்பனர்கள் குறை கூறி வருவதையும், அதை “வெட்டி 500 கஜ ஆழத்தில் புதைத்துவிட வேண்டுமென்று தோழர்கள் சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சொல்லுவதையும் நமது பார்ப்பனரல்லாத மூடப் பாமர ஜனங்கள் நம்பிவிடுகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாதாரிலேயே படித்த பகுத்தறிவுள்ள மக்கள் என்பவர்களும் கூட அப்பார்ப்பனர்களுடன்.
கூடிக் கொண்டு குலத்துரோகிகளாய் நடித்து வருவதைப் பார்த்து வருகிறோம்.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருஷ காலமே ஆயிருந்தாலும் கூட அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100-க்கு 97 பேர்களாய் உள்ள பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கும், சிறப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும், அவர்களுக்கு உதவி
செய்யும் மூடர்களுடையவும் கூலிகளுடையவும், குலத்துரோகிகளுடையவும் யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது
இதற்குச் சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை சின்ன உதாரணமாகக் காட்ட ஆசைப்படுகின்றோம்.
அதாவது இவ்வருஷம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் உத்தியோகத்துக்கு 87 பேர்கள் சர்க்காருக்கு தேவை இருந்ததால் அதை பூர்த்தி செய்ததில் பார்ப்பனர்களுக்கு 16 ஸ்தானங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டு விட்டு பாக்கி 71 ஸ்தானங்கள் பார்ப்பனரல்லதார்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது அந்த 71 ஸ்தானங்களிலும் ஆங்கிலோ இந்தியருக்கு 1, தாழ்த்தப்பட்ட வர்களுக்கு 11, கிறிஸ்தவர்களுக்கு 13, முகமதியர்களுக்கு 15 ஸ்தானம் வழங்கப்பட்டு மற்ற “ஜாதி இந்துக்கள்” என்போர்களுக்கு 31 ஸ்தானமும் வழங்கப்பட்டிருக்கிறது ஜனகணித விகிதாச்சாரப்படி பார்த்தால் பார்ப்பனர்களுக்கு அவ்வளவு (16) ஸ்தானங்கள் வழங்குவது மிகமிக அதிகமானாலும் ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு “உத்தியோக வேட்டைக் கட்சி இல்லா திருக்குமானால் இந்த 87 ஸ்தானங்களும் அந்த திருக்கூட்டத்தாருக்கே போயிருக்குக் கூடும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா” என்று கேட்கின்றோம்.
சப் இன்ஸ்பெக்டர் வேலை என்பது விளையாட்டான உத்தியோகம் என்று யாரும் மதித்துவிட முடியாது
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 33
தென்னிந்தியாவில் போலீஸ் இலாக்காவிலும், முனிசீப்பு இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாதிருந்து இருக்குமானால் நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இந்தப்படி ஆயிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒரு புறமிருக்க இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார். நிலை இந்த 20-ம் நூற்றாண்டிலும், சூத்திரர்களாயும், சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே கப்பலுக்கு சுங்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல் மக்களை நடத்துவதற்கு போலீசும் முனிசீப்பும் சுங்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானதாகும்
அப்படிப்பட்ட பதவியாகிய போலீசில் இந்நாட்டில் ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்து வந்தது என்பதும், இன்று எல்லா மத - வகுப்புக்காரர்களுக்கும் இடம் கிடைக்கும்படி செய்தது ஜஸ்டிஸ் கட்சியா அல்லது காங்கிரசா என்பதும் யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும்
ஆனால் “உத்தியோகம் தான் பெரிதா தேசம் பெரிதா” என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்து கேள்விகள் கேட்பார்கள். பார்ப்பனர்களது கூலிகளும் அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள்.
உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் பேசிவரும் இரகசியம் பார்ப்பனரல்லாத “தேசாபிமானிகள்” பலருக்குத் தெரியாது என்பதோடு பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறுவிதி இல்லாமல் பின்பாட்டுப் பாடுகிறார்கள் என்றே நினைக்கிறோம்.
இன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லா தேசபக்த பார்ப்பனர்களையும் எடுத்துக் கொண்டால் அவர்களது பிள்ளை குட்டிகள் பேத்துபிதுர்கள். எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று - வாழுகின்றார்கள் - வளர்க்கப்படு கின்றார்கள். S.SL.C., FA,BA,MA, BL., ML. முதலிய படிப்புகள் படிப்பிக்கப்படுகின்றார்கள் என்பவைகளைக் கவனித்தால் பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகவா அல்லது உத்தியோகத்தைப் பிரதானமாகவா கருதியிருக்கிறார்கள் என்ற இந்த சூட்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள் சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும், நம்பி இருக்காமலும் வெறும் புத்திக்காகவும், அறிவுக்காகவும், தேசபக்திக்காகவுமே படிக்கிறார்கள் என்று இந்த நாட்டில் இன்று எந்த முட்டாளாவது கருதி இருக்கிறாரா என்று கேட்கின்றோம் ஆகவே உத்தியோகத்தையே பூராவும் நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் - உத்தியோகத்திலேயே 100 -க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விடவொட்டாமல் சூட்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் - அதற்காகவே தங்கள்
333 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
பிள்ளைக்குட்டி பேத்து பிதுர்களை தர்பித்து செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எல்லாவித இழி தொழிலையும் கையாடும்
ஒரு கூட்டம்
“உத்தியோகம் பெரிசா தேசம் பெரிசா! என்று உத்தியோகத்தில் 100- க்கு 25 வீதம் கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால் இதில் யோக்கியப் பொறுப்போ, நாணையமோ கடுகளவாவது இருக்க முடியுமா என்று கேட்பதோடு இதை கடுகளவு அறிவாவது இருக்கும் மனிதன் நம்பமுடியுமா என்றும் கேட்கின்றோம்.
இந்த சூட்சிகளை வெகு காலமாக அனுபவத்தில் தெரிந்து அனுபவித்து வந்த சர். தியாகராயர், டாக்டர் நாயர் போன்ற மேதாவி - அறிஞர்கள் தான் உத்தியோகத்தில் விகிதாச்சாரம் கிடைக்க வேண்டும் என்கின்ற கொள்கையோடு இந்த ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பித்தார்களே ஒழிய, மற்றபடி வெள்ளைக்காரர்களே எல்லா உத்தியோகத்திலும் இருக்க வேண்டும் என்றோ, இந்த நாட்டை என்றென்றைக்கும் வேறு நாட்டாரே ஆள வேண்டும் என்றோ கருதி அல்ல என்பது நமது அபிப்பிராயம்
இந்த இயக்கத்தின் பயனாய் பார்ப்பனர்களின் ஏக போக, (உத்தியோக)அனுபவிப்பு குறைந்த பிறகு தான் பார்ப்பனர்கள் ''உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு'' என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், காரியதரிசிகளும், ஹைக்கோர்ட் ஜட்ஜு களாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்
ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு தீண்டப்படாதார் நிலை எப்படி இருந்தது என்பது இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் சில பச்சகானா தேசபக்தர்களுக்கும், அரை டிக்கட் தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும், ஒரு 40 வயதுக்கு மேல்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத “தேசபக்தர்” எவரும் அறிந்ததேயாகும். அப்படிப்பட்ட கூட்டத்திற்கு இன்று போலீஸ் இலாகாவில் சப் இன்ஸ்பெக்டர் பதவியில் 87-க்கு 11 ஸ்தானங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என்றால் அந்த சமூகத்துக்கு காங்கிரஸ் சமுதாயத் துறையிலோ, உத்தியோகத் துறையிலோ சாதித்தது என்ன என்பது நமக்கு விளங்கவில்லை.
சர்க்காருடையவும், ஜஸ்டிஸ் கட்சியாருடையவும் ஆதிக்கத்தில் உள்ள ஸ்தலங்களாகிய உத்தியோகம், சட்டசபை, ஸ்தல ஸ்தாபனம், ரயில் வண்டி, கச்சேரிகள், ரோட்டுகள் பள்ளிக்கூடங்கள் முதலாகிய இடங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்கி அவர்களது சுயமரியாதை காப்பாற்றப்பட்டிருப்பதை எவறாவது இன்று மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 354
ஆனால் பொது ஜனங்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசினுடையவும், பார்ப்பனர்களினுடையவும் ஆதிக்கத்தில் இருந்து வரும் கோவில், குளம், சத்திரம், சாவடி முதலிய இடங்களில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை ஒருசிறு விரல் விட்டு சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்
எந்தப் பார்ப்பனர் பள்ளிக்கூடத்திலாவது ஒரு ஆதிதிராவிடருக்கு வாத்தியார் வேலையாவது கொடுத்தார்களா, மாணாக்கனாகவாவது சேர்த்துக் கொண்டார்களா? “சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்தான். பண்டாரம்” என்பது போல் கோவில்களைப் பற்றி லட்சியமே இல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தாரிடையில் புராணப் பிரசங்கம் செய்வதின் மூலம் அவர்களுக்கு கோவில் வெறியை உண்டாக்கி, அதன் பெயரைச் சொல்லி கோவில் பிரவேசத்துக்கு சத்தியாக்கிரகம் செய்வதாயும், பட்டினி கிடப்பதாயும் சொல்லி மக்களை ஏமாற்றி 10 லட்சக் கணக்கில் பொருள் பரித்து கடசியாக “பொது ஜனங்கள் பக்குவமாக இல்லை ஆதலால் கோவில் பிரவேசம் கூடாது” என்று சொல்லி விட்டதைத் தவிர, அந்தப் பணத்தில் சட்ட சபைக்குப் போக செளகரியம் செய்து கொண்டது தவிர, வேறு என்ன செய்ய முடிந்தது என்று கேட்கின்றோம்
காங்கிரஸ் பார்ப்பனர்கள் உத்தியோகத்துக்குத்தான், “உத்தியோகம் பெரிதா தேசம் பெரிதா" என்று கேட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் அதே பார்ப்பனர்களை ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் “தேசம் பெரிதா கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்வது பெரிதா” என்று கேட்டால் அப்போது என்ன சொல்லுவார்கள் என்பது விளங்கவில்லை. ஆனால் அதற்கும் ஒரு தந்திரமான பதில் சொன்னாலும் சொல்லுவார்கள். அதென்னவென்றால் “கோவிலுக்குள் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் சுயராஜ்யம் வந்தால் தான் முடியும் இல்லாவிட்டால் முடியாது” என்று சொல்லி ஏமாற்றி விடுவார்கள். அதையும் நம்ம சோணகிரிகள் நம்பி விடக்கூடும் இவை எப்படியோ போய்த் தொலைந்தாலும், இன்று தாழ்த்தப்பட்ட சமூகம் 10௦0ல் 13 ஸ்தானங்கள் வீதம் போலீசில் இடம் பெற்றதும், முகமதிய சமூகம் 100இல் 17 ஸ்தானங்கள் பெற்றதும் ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் ஒரு நாளாவது முடிந்து இருக்குமா என்பதே நமது கேள்வி.
மற்ற ஜாதி இந்துக்கள் 100 -ல் 35 ஸ்தானங்களும் பெற்று இருக்கிறார்கள் என்றாலும் 100க்கு 3 வீதம் ஜனத் தொகை (13 லட்சம் ஜனத் தொகை) உள்ள பார்ப்பன சமூகம் 10௦0ல் 18 ஸ்தானங்கள் (லட்சம் ஜனங்களுக்கு 1% வீதம்) பெற்று இருப்பதும் (100க்கு 70 வீதம்) 325 இலட்சம் ஜனத்தை உள்ள பார்ப்பனரல்லாதார் சமூகம் (9 லட்சம்
335 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஜனங்களுக்கு 1 வீதம்) 35 ஸ்தானங்களே பெற்று இருப்பதும் இப்படி இவ்வளவு வித்தியாசத்தில் இருந்தும் ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக வேட்டைக் கட்சியென்று பார்ப்பனர்கள் கூப்பாடு போடுவதும், இதற்கு சில பார்ப்பனரல்லாத கூலிகள் பின்தாளம் போடுவதும் என்றால் இதற்கு என்ன பெயர் சொல்லுவது என்பது நமக்குப் புரியவில்லை. ஆகவே நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது ஜனத்தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெரும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே நமது அபிப்ராயமாகும்.
அது “தேசத் துரோகக்'' கட்சியினாலும் சரி, “சர்க்கார் தாசர்கள். குலாம்கள்” கட்சி ஆயினும் சரி அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமே தவிர அதை விட்டு விட்டு பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு “எங்களுக்கு வகுப்புவாரித்திட்டம் வேண்டியதில்லை. யாரோ ஒருவர் இருவருக்கு
மந்திரி பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோக பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள் தான்” என்றால் அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லை என்றுதான் சொல்லுவோம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 23.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 336
கான் அப்துல் கழூர்கான்
எல்லைப்புறக் காந்தி என்று பட்டம் சூட்டப்பட்ட தோழர் அப்துல்கபூர்கான் அவர்கள் ராஜத்துவேஷ குற்றத்துக்காக இரண்டு வருஷம் தண்டிக்கப்பட்டுவிட்டார்.
தான் செய்த காரியத்துக்காகவோ, பேசிய பேச்சுக்காகவோ வருத்தம் தெரிவிப்பதன் மூலம் மன்னிப்புக் கேட்டும் அரசாங்கம் மனமிரங்காமல் இரண்டு வருஷம் தண்டித்துவிட்டது
வெள்ளை அறிக்கையையும், பார்லிமெண்டு கூட்டுக் கமிட்டி அறிக்கையையும் நிராகரிக்கிறது என்கின்ற காங்கிரஸ் திட்டத்தில் அரசாங்கத்தை மன்னிப்புக் கேட்டுக் கொள்வது என்பதும் ஒரு பிரிவு போல் காணப்படுகின்றது. ஐயோ பாவம் காங்கிரசே! நீ இன்னமும் என்ன கதிக்கு ஆளாகப் போகின்றனையோ!! உனது வீரமே வீரம்!!!
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 23.12.1934
337... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ராமராஜ்யம் திரும்பி வருகிறது
பலாத்கார உடன்கட்டை
வடநாட்டில் தாமோ என்ற தாலூகாவைச் சேர்ந்த நோஹ்டோ என்ற கிராமத்தில் ஒரு புருஷன் காயலாவாக இருந்து இறந்து போனார். அவரது மனைவியை உடன்கட்டை ஏறும்படி அவரின் உறவினர்கள் கட்டாயப்படுத்தி நெறுப்புக்குள் பிடித்து தள்ளிவிட்டார்களாம். மனைவி தப்பி ஓட எவ்வளவோ முயற்சித்தும் பயன் இல்லாமல் சாம்பலாகிவிட்டதாக அசோசியேட் பிரஸ் கூறுகிறது
இந்து மதத்தின் பெருமையும், ராமராஜியத்தின் அருமையும் சுயராஜியத்துக்கு எவ்வளவு தகுதி உடையது என்பதை இந்தியர்கள் உணர்வார்களாக.
பகுத்தறிவு - செய்தி விமர்சனம் - 23.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 338
ஆசிமியர்கள் மகாநாடு
பின்ளைகளைப்பற்றிய கவலை இல்லை
எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் மகாநாடுகள் கூட்டப்படுவதும், ஆசிரியர்களின் சம்பளங்கள் போதாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும், மந்திரிகள் முதலிய பெரிய சம்பளக்காரர்களும், செல்வவான்களும் ஆசிரியர்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பதுமாகவே இருந்து வருகின்றதே ஒழிய, பிள்ளைகள் சம்பளம் கொடுக்கச் சக்தி இல்லாமல் பள்ளிக்குப் போக முடியாமல் கல்விப் பட்டினியாய் இருந்து தற்குறிகளாகி 100-க்கு 92 பேர் எழுத்து வாசனை அற்ற குருடர்களாக இருந்து இந்திய நாட்டை “அலங்கரித்து”க் கொண்டிருக்கின்றார்களே என்ற கவலை ஒருவரிடத்திலாவது இருந்ததாகவோ, இதற்காக ஒரு மகாநாடாவது கூட்டப்பட்டதாகவோ, ஒரு மந்திரியாவது, ஒரு பிரபுவாவது, ஒரு ஆச்சாரிய ஸ்வாமிகளாவது கவலைப்பட்டதாகவோ தெரியவேயில்லை. இந்தக் காலம் செல்வவான்கள் காலமானதால் பணம் சம்பாதிப்பதைப் பற்றியே உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதும், செலவிடவேண்டியவர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் ஆன காரியம் நடக்கின்றது. இதற்காக யார் என்ன செய்யக்கூடும்?
“எல்லாம் பகவான் செயல் அல்லவா?
பகுத்தறிவு - செய்தி விளக்கம் - 23.12.1934
3399 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
திருச்சி நகரத்தின் பெருமை
திருச்சிக்காரர்கள் தாங்களே ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் என்று ஜம்பம் அடித்துக் கொள்வதோடு ஜஸ்டிஸ் கட்சிக்கு தாங்களே கோட்டை காவலர்கள் என்றும் பெருமை பேசிக் கொண்டு அடிக்கடி அக்கட்சியின் மீது அதிகாரம் செய்யும் விஷயத்திலும் சிறிதும் பின்வாங்குவதில்லை என்பதோடு எல்லோருக்கும் முன்னணியில் வந்தும் நின்று கொள்ளுவார்கள்.
ஆனால் காரியத்திலோ என்றால் லொட்டையையே தான் காண முடிகின்றது. நாம் இப்படிச் சொல்வதற்குக் கூட கோபித்துக் கொண்டு நமக்கும் புத்தி சொல்ல வந்துவிடுவார்கள். அதனால் உள்ள நிலைமையை மறைத்துவிடமுடியாது
புதிய சீர்திருத்தம் ஏற்பட்ட காலம் முதல் ஒரு ஆசாமியையாவது திருச்சி தொகுதியானது இந்திய சட்டசபைக்கு நிறுத்தியதும் கிடையாது, அனுப்பியதும் கிடையாது என்ற பெருமை திருச்சிக்கு உண்டு என்று சொல்வதற்கு யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.
அது மாத்திரமல்லாமல் இந்த 10 வருஷ காலமாய் சென்னை சட்டசபைக்கு கூட ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் ஒருவரையாவது அனுப்ப அவர்களுக்கு முடியவில்லை என்று சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளமாட்டார்கள் என்றே நினைக்கிறோம். அது மாத்திரமல்லாமல் திருச்சி நகர் தொகுதிக்குக் கூட ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக இல்லாவிட்டாலும் இந்த 10 வருஷ காலமாக ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூட அனுப்ப முடியாமல் போய்விட்டதையும் கோபிக்காமல் ஒப்புக் கொள்ளுவார்கள் என்றே கருதுகின்றோம்
திருச்சி ஜஸ்டிஸ் கட்சி வீரர்கள் ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் யாரையும் அனுப்ப முடியாமல் போய்விட்டதோடு மாத்திரமல்லாமல் இப்போது ஒரு படி பிரமோஷனாகி முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது
அதாவது திருச்சி ஜஸ்டிஸ் கட்சியே தான், தான் என்று கருதிக் கொண்டிருந்தவரும், தமது தோளின் பேரிலேயே அக்கட்சியின் தலை
எழுத்து இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தவருமான தோழர் பி.ஆர். தேவர் அவர்கள் இன்று காங்கிரஸ் வாக்குறுதியில்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 340
கையொப்பமிட்டு காங்கிரஸ் கேண்டிடேட்டாய் நிற்கத் துணிந்துவிட்டார். ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிரிகளான பார்ப்பனர்களும் அவரை ஏற்றுக் கொண்டு ஞான ஸ்நானம் கொடுத்துவிட்டார்கள். ஆகவே இனி திருச்சிக்கும் திருச்சி ஜஸ்டிஸ் கட்சிக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கும் ஜஸ்டிஸ் சரித்திரத்தில் முதல் அத்தியாயத்தை ஒதுக்க வேண்டியதுதான் பாக்கி என நினைக்கிறோம்
ஏதாவது கொள்கை வித்தியாசத்தால் கட்சியை குலைக்கவோ, அல்லது விட்டுப் போகவோ ஆசைப்படுகின்றவர்களைப் பற்றி நாம்
ஒன்றும் குறை கூற வரவில்லை.
ஆனால் தங்கள் சொந்த சவுகரியங்களிலோ, அல்லது இஷ்டங்களிலோ ஏதோ இரண்டொரு விஷயம் ஒத்து வரவில்லையானால், தனிப்பட்டவருக்கு தன் இஷ்டப்படி நடக்க முடியவில்லையானால், எதிர்கட்சிக்கு போய்விடுவது என்பதானது எப்படி பொது நன்மைக் காரியமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை
தோழர்கள் சி.நடேச முதலியார், திவான் பகதூர் பி.டி. குமாரசாமி செட்டியார் ஆகியவர்களும் கூட மற்றும் அவர்களைப் போல ஜஸ்டிஸ் கட்சியாரால் அலட்சியமாய் கருதப்பட்டும் கட்சியின் தொல்லைக்குள்பட்டும் உள்ள இன்னும்சிலரும் கூட அக்கட்சியை விட்டுப் போகாமல் இருக்கிறார்கள் என்றால், திருச்சி வீரர்கள் கட்சியை ஒழிப்பதற்கும், எதிரிகளுக்குத் துணையாய் இருப்பதற்கும் துணிந்தது அதிசயமேயாகும். இதைப் பற்றி திருச்சி ஜில்லா பல பாகங்களில் இருந்தும், திருச்சி நகரத்தில் இருந்தும்
சில தீர்மானங்களும், வியாசங்களும் வந்ததை நாம் வெளியிட வில்லை. ஏனெனில் அவை சிறிது கடினமான பதங்கள் என்று நாம் கருதியதால் பிரசுரிக்கவில்லை. நேயர்கள் வருத்தப்படாமல் இருப்பார்களாக
பகுத்தறிவு - செய்தி விளக்கம் - 23.12.1934
3... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
விருதுநகரில் காலித்தனம்
காங்கிரஸ் பிரமுகர்கள் விருதுநகர் சென்றிருந்த சமயம் ஊர்வலத்தில் செருப்பு வீசி எறியப்பட்டதாகவும், பொதுக் கூட்டத்தில் கற்கள் வீசி எறியப்பட்டதாகவும் தமிழ்நாடு, ஜஸ்டிஸ் முதலிய பத்திரிக்கைகளில் காணப்பட்டது. இது உண்மையாய் இருக்குமானால் அதை ஒரு பக்காகாலித்தனம் என்றும், இதற்கு ஆதரவாய் இருந்த விருதுநகர் தோழர்களுக்கு இது ஒரு பெரிய அவமானகரமான காரியமென்றும் வலிமையாய்க் கூறுகிறோம்.
நம் நாட்டு அரசியல் வாழ்க்கை என்பது எவ்வளவு கேவல மானதாக இருந்தாலும் அது பெரிதும் வகுப்பு போராட்டத்தன்மையை உட்கருத்தாய்க் கொண்டு வெளிப்படையான போட்டி முறையில் நடந்து வருகின்றது என்பதை எவரும் மறுக்க முடியாது
இந்நிலையில் இருபுறமும் போட்டியில் கலந்து கொள்ள எவருக்கும் உரிமை இருக்கின்றது என்பதை நாம் மறுக்க வரவில்லை
அப்போட்டிகளில் பல சூட்சிகள், பொய், புரட்டுகள் உபகருவிகளாய் பயன்படுத்தப்பட்டு வருவதும் சகஜமான காரியமாய் இருந்து வருகிறது கால நிலையில் இவைகள் எல்லாம் அனுமதிக்கத்தக்கதாக இருந்து வந்தாலும் காலித்தனங்கள் என்பவைகளைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை. கூட்டத்தில் கல்லெறிவது, செருப்பு எறிவது, கூச்சல் போட்டுக் குழப்பங்கள் செய்வது ஆகிய காரியங்களை இழிதொழில் என்றே சொல்லுவோம். இதைப் பற்றி பல தடவைகளில் எழுதியும் வந்திருக்கிறோம். அப்படி இருக்க விருதுநகர் தோழர்கள் யாராயிருந்தாலும் இதைக் கைக்கொண்டது மிகவும் வருந்தத்தக்க காரியம் என்பதோடு, சுயமரியாதைக்காரர்கள் யாராவது இதில் கலந்திருப்பார்களானால் அதற்காக மிகுதியும் வெட்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறோம் காங்கிரஸ்காரர்கள் பல இடங்களில் இப்படி நடந்திருக்கிறார்கள். என்பதோடு மாத்திரம் அல்லாமல் கூட்டங்களில் குறிப்பிட்ட மக்களை மிக இழிவாகவும், கேவலமாகவும் பேசி வருகிறார்கள் என்பதையும் அறிவோம். அப்படிப்பட்ட காரியங்களைக் காங்கிரஸ் பத்திரிக்கைகள் பெருமையாய்க் கொண்டாடி அதிக விளம்பரம் செய்து மகிழ்வதையும் பார்த்து இருக்கிறோம்
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 3
ஆனால் காங்கிரஸ்காரர்கள் அல்லாதவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களும் இம்மாதிரி காலித்தனத்தில் பங்கு கொள்வது என்றால் காலித்தனம் காங்கிரசுக்கே சொந்தமாயிருந்து வந்தது என்பது மாறி, இப்போது எல்லோருக்கும் சொந்தமாய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறதுடன் இம்மாதிரி காரியம் இழிவு, இழிவு, மிக இழிவு ஆனது என்பதை வலியுறுத்துகிறோம்
நிற்க தோழர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் ஒரு கொள்கையைத் தாக்கிப் பேசுவதைப் பற்றியோ, ஒரு சமூக அல்லது கட்சி நடப்பைக் கண்டிப்பதைப் பற்றியோ நாம் தடுக்க வரவில்லை. கூடுமானால் தக்க பதில் மரியாதையுடன் அளிக்கவே ஆசைப்படுவோம்
ஆனால் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் மேடைகளில் நின்று பேசும்போது தனக்குப் பிடிக்காதவர்களை மரியாதைக் கிரமமின்றி பேசுவதோடு மாத்திரம் அல்லாமல், அவன் இவன் என்கின்ற மதுபானக்கடை பாஷையில் பேசுவது என்பது மிகவும் வெறுக்கத்தக்கதாகும்
சமீபத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் ஈரோட்டிற்கு வந்திருந்தபோது ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தோழர்கள் ஷண்முகம், பொப்பிலி ராஜா ஆகியவர்களை அவன் இவன் என்று ஒறுமையிலேயே பேசியே வைதார். உடனே சில தோழர்கள் வந்து அவருக்கு மரியாதை கற்பிக்க அனுமதி கேட்டார்கள். அப்பொழுது சில தோழர்கள் அதைத் தடுத்து கூட்டத்தில் எவ்வித சிறு கூச்சலும் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்தார்களே ஒழிய வேறு ஒன்றும் செய்யவில்லை. காலித்தனமோ கூச்சலோ குழப்பமோ செய்வது என்பது மிக எளிதான காரியம். அதனால் பலன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. கருப்புக்கொடி பிடிப்பது கூட அவசியமில்லாத காரியம் என்றுதான். நமக்கு இப்போது தோன்றுகின்றது. அதையும் சுயமரியாதைக்காரர்கள் வெறுக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசை ஆகையால் இனி இப்படிப்பட்ட காரியம் எங்கும் எவராலும் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதாக நாம் ஆசைப்படுகின்றோம் என்பதோடு, பொருப்புள்ள தலைவர்களாகவோ, பத்திரிக்கைகாரர்களாகவோ இருக்கிறவர்கள் இதுகளுக்கு ஆதரவோ உர்சாகமே அளிக்காமல் தங்கள் வெறுப்புகளை காட்டுவதின் மூலம் எங்கும் நடைபெறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்களாக,.
பகுத்தறிவு - கட்டுரை - 30.12.1934
343 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப் பத்தியிகைகளும்
விருதுநகமில் தவைவர்கன் மகாநாடு.
ஜஸ்டிஸ் கட்சி இந்திய சட்ட சபைத் தேர்தலில் தோல்விஅடைந்து விட்டது
அதற்குக் காரணம் இருவகைப்படும். ஒன்று ஜஸ்டிஸ் கட்சிக்கு எல்லா இந்திய அரசியல் கிளர்ச்சியில் விசேஷ கவனம் செலுத்த அவசியமில்லை. அது செலுத்தவும் முடியாது. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சிக்கு எல்லா இந்திய ஸ்தாபனம் என்பதாக ஒரு ஸ்தாபனம் இல்லை என்பதோடு ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுத்தப் பட்டதற்குக் காரணமே தென் இந்திய பார்ப்பனர்களின் கொடுமையைத் தாங்க மாட்டாமல் அதிலிருந்து
தப்பி ஒருவாறு விடுதலை பெற வேண்டிய அவசியமேயாகும்
ஆனால் அதன் எதிரிகளாகிய பார்ப்பனர்கள் அக்கட்சியை ஒழிக்க அரசியல் போர்வையை போத்திக் கொண்டு அதற்குள் இருந்து எதிர்த்து வந்ததால், ஜஸ்டிஸ் கட்சியும் தனது லட்சியத்திற்கு அரசியல் சம்மந்தமும் வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று என்றாலும் பார்ப்பனர்களுடைய அரசியல் வேஷம் எல்லா இந்தியாவைப் பொருத்ததாகவும், ஜஸ்டிஸ் கட்சியாருடைய அரசியல் சம்பந்தம் சென்னை மாகாணத்தை மாத்திரம் பொருத்ததாகவும் இருந்ததால் அரசியலில் பார்ப்பனர்களோடு சரியாய்ப் போட்டிபோட முடியாமலும், போட்டிபோட வேண்டிய அவசியமில்லாமலும் போய்விட்டது. ஆயினும் எல்லா இந்திய அரசியல் என்னும் பேச்சின் பேரால் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்யாமல் இருப்பதற்காகவும் இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களால் கெடுதி ஏற்படாமல் இருப்பதற்காகவும் ஒருவர் இருவர் அதிலும் கலந்திருந்தால் நலமாய் இருக்கும் என்று கருதி சிலர் அதில் கலந்திருந்தார்கள்.
ஆனால் அதில் பார்ப்பனர்களுக்கு இருந்த அளவு ஊக்கமும், முயற்சியும் ஜஸ்டிஸ் கட்சியாருக்கு இருந்தது என்று சொல்ல முடியாது
இருந்தபோதிலும், கிடைத்த அளவு கிடைக்கட்டும் என்கின்ற அலட்சிய புத்தி மீதும் போதிய முஸ்தீபுகள் இருக்கின்றதா இல்லையா என்கின்ற கவலை இல்லாமலும் அதில் பிரவேசித்தார்கள்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 344
இரண்டொரு ஸ்தான விஷயத்தில் சிறிது கவலை கொண்டார்களா
னாலும், அந்தக் கவலைக்குத் தக்க அளவு நம்பிக்கை மோசத்துக்கு ஆளாகிவிட்டதால் இத்தோல்வி கட்சியின் எதிரிகளாகிய பார்ப்பனர்களுக்கு
அதிகமாய்ப் பரிகசிக்க இடம் கொடுத்துவிட்டது
இரண்டாவது காரணம்
ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டதால் பொது ஜனங்கள் அதைத் தப்பாக உணர்ந்து ஜஸ்டிஸ் கட்சிக்கும், மற்ற
கட்சிக்கும் வித்தியாசமில்லை ஆதலால் முதலில் வந்து கேட்டவர்களுக்கும், வந்து கூப்பிட்டவர்களுக்கும் ஓட்டுப் போட்டால் போகிறது என்று நினைத்திருந்த காரணம். (பார்ப்பனரைச் சேர்த்துக் கொண்ட காரணத்தையும், என்ன நிபந்தனையின் மீது சேர்த்துக் கொள்வது என்பதையும் மக்களுக்குச் சரியாய் விளக்கிக் காட்டாததால் இது ஏற்பட்டது) இவற்றால் எல்லாம் ஏதும் முழுகிப் போய்விடவில்லை என்பது ஒருபுறமிருக்க, நம்பிக்கை மோசம் என்பதற்காக எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் கட்சிக்கு சிறிது தொல்லை ஏற்பட இடமுண்டாகிவிட்டது. பார்ப்பனர்கள் பரிகசிப்பதற்கு இதுவும் ஒரு அனுகூல சம்பவமாய் விட்டதால் மேடைகளிலும், பத்திரிகைகளிலும், திண்ணைகளிலும், அவர்களது ஆதிக்கத்திலிருக்கும் கோர்ட்டுகளிலும் இதே பேச்சாகவும் கட்சிக்கு பெரியதொரு சங்கடமான நிலைமை வந்துவிட்டதாகவும், கட்சியே ஒழிந்து போய்விடும் என்றும் பேசி பலவித கற்பனைகள் செய்து விஷமப் பிரசாரமும் செய்து வருகிறார்கள்
நம்பிக்கை மோசம் என்ற காரணத்துக்காக வெளியேற வேண்டிய அவசியத்துக்குள்ளான செட்டிநாடு (குடும்பம் ஏராளமான செல்வமுடைய குடும்பமானதால்) கட்சிக்கு விரோதமாகப் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு செல்வத்தை வாரி இறைப்பதன் பயனாய் கட்சியானது மேலும்
சிறிது தொல்லைக்கு ஆளாக வேண்டி ஏற்பட்டுவிட்டது
இதனால் எல்லாம் கட்சியே ஒழிந்து போகும் என்றோ, கட்சியே ஒழிந்துபோனாலும் கட்சிக் கொள்கைகள் மறைந்து போகும் என்றோ நாம் பயப்படவில்லை.
பெருமாள் போய்விட்டால் பெரிய பெருமாளாய் வருவான். என்கின்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
ஏனெனில் அக்கட்சியின் அடிப்படையான கொள்கை அவ்வளவு முக்கியமானதும், அவசியமானதும் என்பதும் நமது அபிப்பிராயம் ஆதலால் அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை
ஆனால் இந்திய சட்ட சபைத் தேர்தல் முடிவு தெரியப்பட்ட கால முதல், நாளது வரை சுமார் இரண்டு மாத காலமாக கட்சியின் எதிர்கால
348 ௨. ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
நிலைமையைப் பற்றி கவலை எடுத்துக் கொள்ளும்படியும், கொள்கைகள் வெற்றி பெறத்தக்க திட்டங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் பல தோழர்கள் கூப்பாடு போட்டு வந்தும் அதைப் பற்றி சிறிதும் கவனித்ததாகக் காணப்படாமல் இருப்பதை உத்தேசித்தே கட்சிப் பிரமுகர்களின் கவலையீனத்துக்கு வருந்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்
இதைப் பற்றியே விருதுநகர் சேர்மென் தோழர். வி.வி.ராமசாமி அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அது மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்
அதன் சாரம்
இந்திய சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த ஒரு மாத காலமாக கட்சியைச் சேர்ந்த அனேகர் கொதிப்பும், பரபரப்பும், உணர்ச்சியும் கொண்டு எவ்வளவு முயற்சி செய்தும் சென்னையில் உள்ள தலைவர்கள் முன்வராதது பொருப்பற்ற காரியமாகும் என்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மற்றும் நமது கட்சிக்கு ஒரு தாய்மொழி தினசரியும் மத்திய பிரசார சபையும் ஏற்படுத்த வேண்டும் என்றும், சீக்கிரத்தில் ஒரு விசேஷ மகாநாடு கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். கடைசியாக இதைச் செய்யாவிட்டால் ஜனங்களுக்குக் கட்சியின் மீதுள்ள நம்பிக்கை சிதறுண்டு போய் கொள்கையையும் பரப்ப இடமே இல்லாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கை செய்கிறார்.
இந்த அபிப்பிராயமேதான் தமிழ்நாட்டு மக்களின் உண்மையானதும், சரியானதுமான அபிப்பிராயமாகும் என்பது நமது கருத்து
இதற்குத் தக்க ஏற்பாடு செய்யப் படவேண்டியது தோழர்கள் பொப்பிலி ராஜா, சர். ஷண்முகம் ஆகியவர்களின் கடமையாகும்.
தோழர் பொப்பிலிக்கு மந்திரி பதவி போய்விட்டாலும் ராஜா பதவி போய்விடாது என்கின்ற தைரியம் அவருக்கு உண்டு என்பதும் தோழர் ஷண்முகத்துக்கு இந்திய சட்டசபை மெம்பர் பதவி போய்விட்டாலும் நிர்வாக சபை மெம்பர் பதவியோ கவர்னர் பதவியோ போய்விடாது என்கின்ற தைரியம் உண்டு என்பதும் நமக்குத் தெரியும்
ஆனால் இந்த நிலையில் தக்கதொரு முயற்சி எடுத்துக் கொள்ளாவிட்டால், அதோடு கூடவே நல்ல கொள்கையுடைய கட்சியை குலைத்து மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு போய்விட்டார்கள் என்கின்ற பழமொழியும் இவர்களை விட்டுப்போகாது என்பதையும் உணர வேண்டுகிறோம்
முடிவாக விருதுநகர் தோழர் ராமசாமி அவர்கள் மேற்கண்ட விஷயமாய் ஆராய்ந்து முடிவு செய்யவும், பல தலைவர்களையும் ஒன்று
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 34௦
சேர்க்கவும் விருதுநகரில் ஒரு தலைவர்கள் மகாநாடு கூட்டலாமா என்று யோசிப்பதற்காக விருதுநகர் தென்னிந்திய நல உரிமைச் சங்க சார்பாக ஒரு முன் ஏற்பாடு கூட்டம் கூட்டப் போவதாகவும் தெரிவித்து இருக்கிறார். அக்கூட்டம் வெற்றி பெற்று அதன் பயனாய் விருதுநகரில் பெரியதொரு கூட்டம் கூட்டி ஏதாவது ஒரு நன்முடிவுக்கு வர வேண்டுமென்றே நாம் ஆசைப்படுகின்றோம்
பகுத்தறிவு - கட்டுரை - 30.12.1934
347... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
சுயமரியாதை மகாநாடுகள்
சுயமரியாதை மகாநாடுகள் தமிழ்நாட்டில் ஜில்லாக்கள்,
தாலூக்காகள் தோறும் வாரம் தவறாமல் அடுத்துஅடுத்து நடந்து வந்தது நேயர்கள் அறிந்ததாகும்
தோழர் ஈ.வெ. ராமசாமி ராஜத் துவேஷக் குற்றத்திற்காக சிறைசென்ற பின் சுயமரியாதை சங்க நிர்வாகக் கமிட்டியார் கூடி மகாநாடுகள் கூட்டக்கூடாது என்று கண்டிப்பான உத்திரவு போட்டதான தீர்மானம் நிறைவேற்றியதையே காரணமாய் வைத்து, 5, 6 மாத காலமாக மகாநாடுகளே எங்கும் நடக்காமல் போய்விட்டது என்பது ஒரு காரணமாய் இருந்தாலும் அந்தத் தீர்மானம் திருச்சி நிர்வாக சபைக் கூட்டத்தில் ஓரளவு தளர்த்தப்பட்டு இருந்தும் வேறு பல காரணங்களால் தீர்மானம் தளர்த்தப்பட்டதை வெளியிடாமலும், பல இடங்களில் இருந்து மகாநாடு நடத்தவேண்டும் என்று முயற்சித்த முயற்சிகளையும் உற்சாகப் படுத்தாமல் இருந்து வந்திருக்கிறது. அதாவது சுமார் நான்கு மாதங்களுக்கு
முன் பகுத்தறிவு 3-வது மலரின் தலையங்கமொன்றில் “நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்'' என்கின்ற தலைப்பு கொண்ட தலையங்கத்தில் “சமீபத்தில் நடைபெறப் போகும் ஜஸ்டிஸ் கட்சி மகாநாடும், காங்கிரஸ் மகாநாடும், காங்கிரஸ் மாகாண மகாநாடும் நடந்த உடன் சுயமரியாதை மகாநாடோ அல்லது சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் மகாநாடோ ஒன்று கூட்டி அதில் முடிவு செய்து கொள்ள வேண்டியவர்களாய் இருப்பதால் அது வரையில் நம் தோழர்கள் எல்லாத் துரையிலும் பொருத்து இருக்கவேண்டும் என்பதோடு அதை எதிர்பார்த்தே நானும் பொறுத்து இருக்கிறேன்” என்று தோழர் ஈ.வெ.ரா. தனது சொந்த கையொப்பத்துடன் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்ததாகும்.
இப்போது மேற்குறிப்பிட்ட எல்லா மகாநாடுகளும் நடந்தாய் விட்டதால் மேல் குறிப்பிட்டபடி சுயமரியாதை மாகாண மகாநாடோ அல்லது சு.ம. இயக்கத் தொண்டர்கள் மகாநாடோ ஒன்று கூட்ட வேண்டியது அவசியமான காரியம் என்பது நமது அபிப்பிராயம். இதை அனுசரித்து சுமார் 10,20 இடங்களில் இருந்து மகாநாடு கூட்டவேண்டுமென்று தீர்மானங்களும், வேண்டுகோள்களும் வந்திருப்பதோடு சில இடங்களில் தாங்களாகவே ஜில்லா, தாலூக்கா
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 34%
மகாநாடுகள் கூட்டுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாகதஞ்சை ஜில்லா மகாநாடு கூட்டதஞ்சை சு.ம. சங்கக் காரியதரிசி தோழர் ஏகாம்பரம் அவர்கள் ஏற்பாடு செய்து காரியாதிகளும் நடந்து வருவதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் ஜஸ்டிஸ் கட்சியில் சில எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டதால், எதற்காக “ஜஸ்டிஸ் கட்சி மகாநாடு, காங்கிரஸ் மகாநாடு, மாகாண காங்கிரஸ் மகாநாடு ஆகியவைகள் நடந்தபிறகு'” என்று குறிப்பிடப்பட்டதோ அக்காரியம் முடிவு பெற்றதாகக் கருதமுடியாமல் போய்விட்டது என்றாலும் இனியும் கால தாமதம் செய்து கொண்டு போவதில் பயனில்லை. எப்படியாவது ஜனவரி மாதத்தில் நாம் சுயமரியாதை மாகாண மகாநாடு கூட்டவோ, அல்லது தொண்டர்கள் மகாநாடு கூட்டி மாகாண மகாநாட்டுக்கு வேண்டிய ஏற்பாடு செய்யவோ வேண்டியது மிக அவசியமான காரியம் என்றே கருதுகிறோம்.
தொண்டர் மகாநாடு என்று ஒன்று தனியாகக் கூட்டுவதைப்
பார்க்கிலும் ஜனவரி மாதத்தில் நடக்க ஏற்பாடாகிவரும் தஞ்சை ஜில்லா மகாநாட்டுடனேயோ அல்லது அதற்குச் சகல தொண்டர்களும் வரும்படியான ஏற்பாடு செய்தோ அதில் முடிவு செய்வதும் பொருத்தமான காரியம் என்றே கருதுகிறோம். எப்படியாவது ஜனவரி மாதத்தில் சுயமரியாதை இயக்கம் தனது வேலைத்திட்டத்தைப் புதுப்பித்து காங்கிரசினுடையவோ, ஜஸ்டிஸ் கட்சியினுடையவோ, அல்லது இரண்டினுடைய கூட்டுறவுடனேயோ அல்லது இரண்டின் கூட்டுறவும் இல்லாமல் தனித்து நின்றோ தொண்டாற்ற முற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்
காங்கிரசானது சட்டமறுப்பு தத்துவங்களை அடியோடு விட்டுவிட்டு சட்ட முறைகளுக்குக் கட்டுப்பட்டு சர்க்காருடன் ஒத்துழைத்துத் தொண்டாற்ற முன் வந்தபிறகு, அந்தப்படி இல்லாத வேறு எந்த இயக்கங்களையும் அரசாங்கம் அடியோடு நசுக்கப் பார்க்கும் என்பதில் யாதொரு ஆக்ஷேபணையும் இல்லை.
காங்கிரசானது தனது சட்டமறுப்பு எண்ணங்களைக் கைவிட்டுவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டவுடன் சர்க்காருக்குக் காங்கிரசைத் தோற்கடிக்கச் செய்துவிட்டோம் என்கின்ற மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டதும் அம்மகிழ்ச்சியின் வேகம் சுயமரியாதை இயக்கத்தில் பாய்ந்து சுயமரியாதைச் சங்கங்களை ஒழிக்கப் பார்த்ததும் யாரும் அறியாததல்ல:
சுயமரியாதை இயக்கத்தில் எந்தக் காரியத்துக்கும் சட்ட மறுப்பு செய்வதோ, “சத்தியாக்கிரகம்” செய்வதோ, பலாத்காரம் ஏற்படும்படியான
எந்தக் காரியங்களையாவது செய்வதோ ஆகிய திட்டங்களோ உணர்ச்சிகளோ இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும்
349 ௨. ஓரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
ஆனால் சமுதாயத் துறையில் பழமை என்னும் பேராலும், வழக்கம் என்னும் பேராலும் இருந்து வரும் அனேக முறைகளில் பெரியதொரு மாற்றம்ஏற்பட வேண்டும் என்று கருதுகின்றது என்பதை நாம் மறைக்கவில்லை. ஆதலால் சீக்கிரத்தில் அதன் வேலைத்திட்டங்களை விளக்கி திருத்தியோ, புதுப்பித்தோ, மகாநாடுகள் கூட்டுவதன் மூலம் பிரசாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரச் செய்ய வேண்டியதே அவசர வேலையாய் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பகுத்தறிவு - தலையங்கம் - 30.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 350
பார்ப்பன விஷமம்
ஜஸ்டிஸ் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையா?
இந்திய சட்டசபைத் தேர்தலில் பார்ப்பனர்கள் காங்கிரஸ், காந்தி என்கின்ற பேர்களால் செய்யப்பட்ட ஏமாற்றுப் பிரசாரத்தின் பயனாயும், இந்திய சட்டசபை ஸ்தானத்தைப் பற்றி ஜஸ்டிஸ் கக்ஷியார் தக்கபடி கவலைப்படாத காரணத்தாலும் பார்ப்பனர்கள் தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்கின்ற ஆணவத்தால் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள்.
தோழர் சத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் மேடையில் வாயைத் திறந்தால் யாரையும் அவன், இவன், அயோக்கியன் என்று இழி தன்மையாய்ப் பேசுவதும், ஹோம் மெம்பரை ராஜீனாமா செய்ய செய்ய வேண்டு மென்றும், லாமெம்பரை ராஜீனாமாச் செய்யச் செய்ய வேண்டுமென்றும் கவர்னரை உத்திரவு போடச் சொல்லுவதும், சட்டசபைகளைக் கலைக்க வேண்டுமென்பதும் தோழர் ராஜகோபாலாச்சாரி கவர்னராகவும், தான் சீப் செகரட்டரியாகவும் (பிரதானக் காரியதரிசியாகவும்) வரப் போகிறோம் என்பதுமான தலை கிருகிருத்த பேச்சுகளாகவே பேசி வருகிறார்.
இதற்கும் சில பார்ப்பனக் கூலிகள் பின் பாட்டு பாடுவதும் கை தாளம் போடுவதுமான மானங்கெட்ட செய்கைகளுக்கு உட்பட்டு வயிறு வளர்க்கிறார்கள். பல கூலிப் பத்திரிகைகளும் இதை விளம்பரப்படுத்திக் கொண்டு வாழ்கின்றன.
எப்படி இருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் இந்த கிருகிருப்பும் ஆணவமும் அடங்கப் போகிறது என்பதில் நமக்குச் சந்தேகமில்லை
பலம் குறைந்து விட்டதா?
நிற்க, சமீபத்தில் சென்னையிலும், திருச்சியிலும் நடந்த சென்னை சட்டசபை உபதேர்தலில் ஜஸ்டிஸ் கக்ஷியார் அபேட்சகர்களை நிறுத்தாததால் ஜஸ்டிஸ் கக்ஷியின் பலம் குறைந்து விட்டதாகவும் அந்த இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் ஜெயித்து விட்டதாகவும், ஆதலால். காங்கிரசுக்கே நாட்டில் செல்வாக்கு இருக்கிறதென்றும் ஆதலால்
351... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
மந்திரிசபையை ஒழித்து காலி செய்து காங்கிரசின் வசம் ஒப்புவிக்க வேண்டுமென்றும் பார்ப்பனர்கள் பேசி பாமர மக்களை ஏமாற்றி ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறார்கள்.
ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய எல்லா பத்திரிகைகளும் இதே கூப்பாடு போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன.
ஆனால் உண்மையில் உபதேர்தல்களில் காங்கிரசு வெற்றி பெற்றதா?
நாட்டில் மற்ற பாமர மக்கள் காங்கிரசையே எல்லாத் தேர்தல்களிலும் ஆதரித்து இருக்கிறார்களா? என்பவைகளைப் பற்றி சிறிது யோசிப்போம்
ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிசபை புதிதாய் ஏற்பட்ட இந்த 3, 4 வருஷத்துக்குள்ளும், சிறப்பாக சென்ற சில மாதங்களுக்குள்ளாகவும் ஏழு, எட்டு ஸ்தானங்கள் சென்னை சட்டசபையில் காலியாகி மறுதேர்தல்கள் நடந்திருக்கின்றன.
ஜஸ்டிஸ் கக்ஷிக்குப் போட்டியாக எத்தனையோ ககஷிகள் இருந்து வந்திருப்பதோடு காங்கிரசும் அவைகளுடன் போட்டி போடுவதும் ஜஸ்டிஸின் எதிர்க்கக்ஷிகளுக்கு ஆதரவு கொடுப்பதுமான காரியங்கள் செய்து கொண்டும் வந்திருக்கின்றன. அப்படி யெல்லாம் இருந்தும் சகல தேர்தல்களிலும் ஜஸ்டிஸ் கக்ஷியே அனேகங்களில் போட்டியே இல்லாமலும் வெற்றி பெற்றிருக்கின்றன. உதாரணமாக வடஆற்காட்டில் தோழர் குப்புராவ் ஸ்தானம் காலியானதும் தோழர் ரங்கசாமி ரெட்டியார் ஜஸ்டிஸ் கக்ஷி சார்பாகவே நின்று வெற்றி பெற்றார். சென்னை தோழர் ஆரோக்கியசாமி முதலியார் ஸ்தானம் காலியானதும் தோழர் அப்பாதுரை பிள்ளை ஜஸ்டிஸ் கக்ஷியின் பேராலேயே நின்று வெற்றி பெற்றார்
தஞ்சையில் தோழர் பன்னீர் செல்வம் ஸ்தானம் காலியானதில் தோழர் சந்தனக் கவுண்டர் ஜஸ்டிஸ் கக்ஷியின் பேராலேயே நின்று வெற்றி பெற்றார்.
நெல்லூரில் தோழர் யாகியா ஆலி சாயபு ஸ்தானம் காலியானதில் தோழர் யாகியா ஆலி அவர்களே ஜஸ்டிஸ் கக்ஷியின் பேராலேயே நின்று வெற்றி பெற்றார்.
திருநெல்வேலியில் தோழர் எட்டியாபுரம் ராஜா ஸ்தானம் காலியானதும் தோழர் ஐ.சி.ஈஸ்வரம் பிள்ளை ஜஸ்டிஸ் கட்சியின் பேராலேயே நின்று வெற்றி பெற்றார்.
அநந்தபூர் தோழர் லட்சுமணரெட்டி ஸ்தானம் காலியானதும் தோழர். ரங்கைய்யா ஜஸ்டிஸ் கட்சியின் பேராலேயே நின்று வெற்றி பெற்றார்.
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 35
இந்த தேர்தல்கள் சற்றேரக் குறைய 16 ஜில்லாக்களை சம்மந்தப்பட்ட தேர்தல்களாகும் என்பதோடு எதிர்கட்சியார் ஸ்தானம் இரண்டு அதிகமாகவே கைப்பற்றப்பட்டிருக்கின்றது.
இவற்றில் ஒன்றிலாவது காங்கிரஸ்காரர்களோ, பார்ப்பனர்களோ , தலைகாட்டவோ, உச்சரிக்கவோ, நினைக்கவோ முடியவில்லை. வடஆற்காடு, திருச்சி ஆகிய இரண்டு ஜில்லாவில் இருந்த பார்ப்பனர் ஸ்தானங்கள் பார்ப்பனரல்லாதார் கைக்கு வந்துவிட்டன.
நிற்க சமீபத்தில் நடந்த இரண்டு தேர்தல் அதாவது சென்னை, திருச்சி இரண்டும் ஜஸ்டிஸ் கட்சி ஸ்தானங்கள் அல்ல என்பது யாவரும் அறிந்ததாகும்
சென்னை ஸ்தானம் காங்கிரசின் ஸ்தானமாகும். அதற்கு காங்கிரஸ் ஆளே வந்ததாக வைத்துக் கொள்ளலாம்
திருச்சி ஸ்தானமும் காங்கிரசின் சார்பாக ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிராக இருந்த கட்சியின் ஸ்தானமாகும். அதுவும் பார்ப்பனர் ஒருவர் இருந்த ஸ்தானமாகும். அந்த ஸ்தானத்துக்கு ஜஸ்டிஸ்காரர் வரவில்லை யானாலும் தேர்தல் அபேக்ஷகராகும் வரை, ஜஸ்டிஸ் கட்சிக்காரராய் ஜனங்கள் மதித்தவரும் பார்ப்பனர்களுக்கு எதிரியாக இருப்பதாய் சொல்லிக் கொண்டிருந்தவரும், ஜஸ்டிஸ் கட்சி சார்பாய் நிறுத்த யோசித்துக் கொண்டிருந்தவரும், தேர்தலில் பார்ப்பனத் தொல்லை இல்லாமல் இருப்பதற்காக பயந்து கையெழுத்து போட்டவரும்தான் - கொள்கையோ, அரசியல் காரணங்களோ பிரச்சினையாக இல்லாமல் சொந்த காரணங்களை முன்னிட்டு ஏற்பட்ட மனத்தாங்கலின் பலனாய் சுவாதீனம் செய்து கொள்ளப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாதார் தான் வெற்றி பெற்றிருக்கிறாரே ஒழிய, ஒரு நிஜமான காங்கிரஸ்வாதியோ, அல்லது ஒரு பார்ப்பனரோ வந்து விட்டதாகச் சொல்ல முடியாது
அன்றியும் இந்த மூன்று நான்கு மாதமாய் நடந்து வந்த மற்ற அதாவது ஜில்லா போர்ட், முனிசிபாலிட்டி, கிராமப் பஞ்சாயத்து, அர்பன் பாங்கு முதலிய பல தேர்தல்களில் கூட அனேகவற்றில் காங்கிரஸ்காரர்கள். 100 க்கு 100 வீதம் முறியடிக்கப்பட்டிருப்பதும் பார்ப்பனர்கள். வாசனையே இல்லாமல் செய்யப்பட்டிருப்பதுமான பெருவாரியான தேர்தல் முடிவுகள் யாரும் அறியாததா என்று கேழ்க்கின்றோம்
ஏதோ உள்சண்டைகளினாலும் சிலரின் முக்கியமாக சுயநலத்துக்காக செய்யப்பட்ட துரோகங்களினாலும், வஞ்சனை சூட்சி ஆகியவைகளி னாலும் ஒரு சமயத்தில் வெற்றி என்பது கிடைத்துவிட்டால் அதற்காக இவ்வளவு தலைக்கொழுப்பும், ஆணவமும் காட்டப்படுவது என்பது இவ்வித சிறு வெற்றிக்கும் கூட காங்கிரஸ்காரர்களோ, பார்ப்பனர்களோ சிறிதும் யோக்கியதை உடையவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறதே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. 353... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இந்த வெற்றியினால் பார்ப்பனரல்லாத சமூகத்துக்குக் கடுகளவாவது கெடுதி ஏற்பட்டு விடுமென்றோ, ஜஸ்டிஸ் கொள்கைக்கு ஏதாவது மோசம் வந்து விடுமென்றோ யாரும் பயப்பட வேண்டியதில்லை என்பதோடு இனி மேலால் நடக்க வேண்டிய காரியங்களுக்கும் மெத்த அனுகூலம் ஏற்பட வழி ஏற்பட்டது என்றே கூறுவோம்
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 30.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 354
குடி அரசு
அடுத்த வாரம் அதாவது ஜனவரி மாதம் 6 ந் தேதி வெளியாகும் பத்திரிகை குடி அரசு' என்னும் பேரால் (அது நின்று போன 9-வது மாலை 22-வது மலரிலிருந்து 23-வது மலராக) வெளியிடலாம் என்று
கருதி இருக்கிறோம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அவசரமாய் நடைபெறுகின்றன. தபால் அதிகாரிகள் அனுமதி அவசரமாய் எதிர்பார்க்கப்படுகிறது
பகுத்தறிவு - அறிவிப்பு - 30.12.1934
358 _ QURwaRdT எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
தோழர் சிவலிங்கம் மரணம்
நமது நண்பரும், சுயமரியாதை இயக்க பிரமுகருமான ஜலகண்டாபுரம் தோழர் சி.கு.சிவலிங்கம் அவர்கள் 22-12-34ந் தேதி தமது 58 - வது வயதில் காலஞ் சென்றாரென்ற செய்தி கேட்டதும் திடுக்கிட்டுப் போனோம்
தோழர் சிவலிங்கம் அவர்கள் வயது சென்றவராயிருந்தாலும் அங்குள்ள சுயமரியாதை தோழர்கட்கு ஊக்கமளித்து சுயமரியாதை பிரசாரம் செய்து வந்தார். இவர் ஜலகண்டாபுரம் யூனியன் போர்டிற்கு ஆறாண்டு தலைவராகவிருந்து பல அரிய வேலைகள் செய்து வந்தார். இப்படிப்பட்ட பெரியார் காலஞ் சென்றதற்கு வருந்துவதுடன் நமது அனுதாபத்தை அவரது குடும்பத்தாருக்கும் அவருடைய நண்பர்கட்கும்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்
பகுத்தறிவு - இரங்கல் செய்தி - 30.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 356
எழுத்தில் சீர்திருத்தம்
தமிழ்பாஷை எழுத்துக்கள் வெகு காலமாகவே எவ்வித
மாறுதலும் இல்லாமல் இருந்து வருகின்றன.
உலகில் உள்ள பாஷைகள் பெரிதும் சப்தம் , குறி, வடிவம்,
எழுத்துக்கள் குறைப்பு, அவசியமான எழுத்துக்கள் சேர்ப்பு ஆகிய காரியங்களால் மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன.
கால வர்த்தமானங்களுக்கு ஏற்ப பாஷைகளும், சப்தங்களும், உச்சரிப்புகளும், வடிவங்களும் மாறுவது இயல்பே யாகும்
வார்த்தைகள் கருத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்டவைகள் என்பது போலவே எழுத்துக்கள் சப்தத்தை உணர்த்த ஏற்பட்டவைகளேயாகும்
ஆனால் நம் பண்டிதர்களுக்கு தாராளமாய் அறிவைச் செலுத்த இடமில்லாமல் மதம் பழக்க வழக்கம் ஆகியவைகள் குறுக்கிட்டு விட்டதால் எழுத்துக்களுக்கும், அதன் கோடுகளுக்கும், வடிவங்களுக்கும் தத்துவார்த்தம் கற்பிக்க வேண்டிய அவசிய மேற்பட்டு எழுத்துக்களையே தெய்வமாகவும் தெய்வ வடிவமாகவும் கருத வேண்டிய நிலை நம்
நாட்டில் ஏற்பட்டு விட்டது
தற்காலம் எத்தனையோ புதிய வார்த்தைகள் வந்து நமது தமிழ் பாஷையில் புகுந்து கொண்டன. அவைகளை இனி விலக்க முடியவே முடியாது. விலக்குவதும் புத்திசாலித்தனமாகாது. அப்பேர்ப்பட்ட வார்த்தைகளை சரியானபடி உச்சரிக்க நமக்குப் பழக்கத்தில் எழுத்துக்கள். இல்லாமல் பாஷையையும், உச்சரிப்பு அழகையும் கொலை செய்கின்றோம். விஷ்ணு என்பதை விட்டுணு என்றும், விண்டு என்றும் உச்சரிப்பதில் பெருமை அடைகின்றோம். பாஷாபிமானப் பட்டமும் பெறுகின்றோம். அதற்கு இலக்கணம் இருக்கிறது என்கின்றோம் அதோடு சப்தங்கள் மாறி விடுவதால் கருத்தும், அருத்தமும் மாறுவதில்லை என்றும் கருதுகிறோம். அது போலவே சில எழுத்துக்கள். பழைய பழக்கம் வழக்கம் என்பதற்காக மாற்றக் கூடாது என்று இல்லாமல். செளகரியத்துக்காக மாற்ற வேண்டியது அவசியம் என்றால் அறிஞர்கள்
அதற்கு இடம் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
சுமார் 70, 80 வருஷ காலத்துக்கு முந்திய பதிப்புகளிலும், எழுத்துக்களிலும் ஈ என்கின்ற எழுத்தானது இ எழுத்தையே மேலே
சுழித்த வட்ட வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது 357... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19
இன்னும் 400, 500 வருஷங்களுக்கு முந்தின கல் எழுத்துக்கள். அனேகம் வேறு வடிவத்தில் இருந்திருக்கிறது. இப்பொழுது அவைகளை மாற்றமடைந்ததற்கு காரணங்கள் கேட்ப்பாரும் இல்லை, சொல்லுவாரும் இல்லை. அதனால் சப்தமோ, அருத்தமோ, பாஷையின் அழகோ கெட்டுப் போனதாகக் குறை கூறுவாரும் காணப்படவில்லை.
அது போலவே இப்போதும் சில எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டியதும், சில எழுத்துக்களை குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசியம் என்றும் அனுகூலம் என்றும்
பட்டால் அதைச் செய்ய வேண்டியது தான் அறிவுடமையே ஒழிய அதன் தத்துவார்த்தத்துக்கு ஆபத்து வருகின்றதே என்பது அறிவுடமையாகாது
என்பது நமது கருத்து ஆகவே இப்போது ணா, @ னா, ஆகிய எழுத்துக்களும் ணை, லை, ளை,
னை, ஆகிய எழுத்துக்களும் மற்ற கா, நா, ரா, முதலாகிய எழுத்துக்களைப் போலும் டை, நை, ழை, முதலிய எழுத்துக்களைப் போலும் ஆகாரத்துக்கு T குறியையும் ஐகாரத்துக்குை குறியையும் பெறாமல் தனி வடிவத்தைக் கொண்டு இருப்பதை மாற்றி ணா, றா, னா, ணை, லை, ளை, னை போல உபயோகித்து பிரசுரிக்கலாம் என்று கருதியிருக்கின்றோம். இதன் பயனாய் அச்சு கோர்ப்பதற்கு எழுத்துக் கேசுகளில் (அறைகளில்) 7 கேசுகள் (அறைகள்) குறைகின்றன என்பதோடு பிள்ளைகளுக்கும் இந்த ஏழு எழுத்துக்களுக்கு தனிவடிவம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும் சவுகரியம் ஏற்படுகின்றது.
இன்னமும் தமிழ் பாஷை எழுத்துக்களில் அனேக மாறுதல்கள். செய்ய வேண்டி இருந்தாலும், இப்போதைக்கு இந்த சிறு மாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியாகவே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல் பிரசுரிக்கப் போகும் “குடி அரசு" பத்திரிகையைப் பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம். இதை வாசகர்களும் மற்றும் தமிழ் பாஷை பத்திரிகைக்காரர்களும், தமிழ் பண்டிதர்களும் ஆதரிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்.
பகுத்தறிவு - துணைத் தலையங்கம் - 30.12.1934
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) 355
அருஞ்சொல் பொருள்
- பொறாமை, அவதூறு
அசூயை
அத்தியந்தம்
- மிகவும்
- தலைகீழாய் பாயும் செயல்
அந்தர்
- தன்வினை பற்றி வரும் துன்பம்
ஆத்மீகம்
- இடம், பற்றுக்கோடு
ஆஸ்பதம்
இத்யாதி உதார குணம்
- இவை போன்ற
- பெருங்கொடைத் தன்மை
- இரண்டாவதாக
உபமாக
- தோன்றுதல், பிறப்பித்தல்
உற்பவித்தல்
ஒரு அம்மன்:
காசு அளவு
- புதுக்கோட்டை அரசர்கால நாணய வகை: 320 அம்மன் காசு- 1 ரூபாய்
- மறுப்பு
கண்டனை
கல்லுக்கும்
- இரத்தினத்துக்கும்
- உடல்
காயம்
குண்டுணி
- கலகமூட்டுகை
- அய்யம், சந்தேகம்
சம்சயம்
- உடற்பயிற்சி
சரீராப்பியாசம்
- விலைபடாமலிருத்தல்
சவுத்தல்
- செல்வாக்கு
சாய்கால் சாவோலை
- இழவோலை (சாவை அறிவிக்கும் மடல்)
- கப்பல் திருப்பும் கருவி
சுங்கான்
தர்பித்தல்
- நிலைபெறச் செய்தல், பிரதிட்டை செய்தல், பயிற்சி கொடுத்தல்
- எடுத்துக்காட்டு
திருஷ்டாந்தம்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 19.
359
தியங்க - கலங்க
திரேகப்பிரபாசை - உடலுழைப்பு
துரபிமானம் - வீண்செருக்கு, வெறுப்பு
தூஷணம் - பழிப்பு
நாதனற்று - தலைவர் இல்லாமல்
நிர்த்தாரணம் - நிலையிடுகை, அழிதல், சிதைதல்
பச்சகானாக்கள். - கூத்தாட்டுச் சிறார்கள்
பஞ்சேந்திரியம் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் அய்ம்பொறிகள்.
பரகிய - பிறனுக்கு உரியவள்
பரிமளிக்க - சிறக்க
பாதாரவிந்தம் - பாதத் தாமரை
பாஷியம் - விளக்கவுரை
பிதுரார்ஜ்ஜிதம் - முன்னோர் தேட்டை
பிரசன்னம் - மகிழ்ச்சி
புழுத்தம் - புழு
புனருத்தாரணம் - மீண்டும் நிலை நிறுத்துகை
யாதாஸ்து - அறிக்கை
யோக்கியதாபக்ஷமாய் - தகுதி பற்றிய மதிப்பு
ராஜாளி - கழுகு (பெரிய வகை)
லாகிரி - போதை
லொட்டை - தாழ்ந்தது
வாக்குத்தத்தம் - உறுதிமொழி கூறல் வாசா கைங்கரியம் - வெறும் பேச்சு
விசனித்தல் - துயருறுதல் விமலம் - சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று
வியர்த்தம் - வெளிப்படை
விவகரித்தல் - விரித்துக் கூறுதல், வழக்காடல்.
விரக வேதனை - காதலர்க்குப் பிரிவாலுண்டாகும் துன்பம் ஹானி - கேடு
குடி அரசு (பகுத்தறிவு) - 1934 (2) ௦