Kudi Arasu — 1934, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
(புரட்சி)
1934-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 18
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1934-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 224
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
ராஜதுரோக குற்றம்: பெரியாமின் ஸ்டேட்மெண்ட்
1934 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் வரையிலான முதல் தொகுதி இதுவாகும். அடக்கு முறைக்கு உள்ளான 'குடி அரசு' 1933 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டதால், இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள தலையங்கங்கள் - பெரியாரின் உரைகள் அனைத்தும் “புரட்சி” வார இதழில் இடம் பெற்றவையாகும் 1933 டிசம்பர் 30 இல் “இராஜ துரோக' குற்றத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு, சிறையிலிருந்த காலகட்டமும் இதுதான். சென்னை மாகாணத்தில் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி ஆட்சியின் பதவிக்
காலம் இந்த ஆண்டோடு முடிவுக்கு வர இருந்தாலும் - அன்றைய பல்வேறு அரசியல் நிகழ்வுகளினால் அதன் ஆயுட்காலம் 1937 வரை நீடிக்கப்பட்டது. அப்போது பொப்பிலி அரசர் மாகாண முதலமைச்சர்.
தன் மீது சுமத்தப்பட்ட 'இராஜ துவேஷ' வழக்கினையொட்டி, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி. டபிள்யூ வெல்ஸ், அய்.சி.எஸ். மூன் பெரியார் தாக்கல் செய்த “ஸ்டேட்மென்ட்” இந்தத் தொகுதியில்தான் இடம் பெற்றுள்ளன. ஒரு கொள்கையைப் பரப்பும்போது அதற்கு இடையூறு விளைவிப்பவர்களால் அடக்குமுறைக்கு உள்ளாக வேண்டியது அவசியம் தான் என்று கூறும் பெரியார், இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு தனது தோழர்களுக்கு விளக்கிட கிடைத்த சந்தர்ப்பமாகவே இதைக் கருதி மகிழ்வதாக அதில் குறிப்பிடுகிறார்.
கோவையிலும், பிறகு ராஜமகேந்திரபுரம் சிறையிலும் அடைக்கப்பட்ட பெரியார் இதே ஆண்டு மே 15 ஆம் தேதி, விடுதலையானார். விடுதலையான பிறகு, பெரியார் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்த்திய உரை, இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. தனது சிறை அனுபவங்களை விளக்கி பெரியார், விடுதலையான அடுத்த இரு நாட்களில் ஈரோட்டில் நிகழ்த்திய உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
குடி அரசு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும், சப்பையானதுமான வியாசத்திற்காகத்தான் நான் சிறைக்குப் போக நேரிட்டதே தவிர, மற்றபடி செய்யத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு, சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் குடி அரசுப்
பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால், என்னை வருடக்கணக்காய் தண்டிக்கக் கூடியதும், நாடு கடத்தக் கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காக தென்படலாம். ஆனால், அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை. அதற்குக் காரணம் சுயமரியாதைக் கொள்கையை மக்கள் ஆதரிக்கத் தொடங்கி விட்டதுதான்" என்று குறிப்பிடுகிறார். தமது சிறைவாசத்துக்கு தியாக முத்திரை பதிக்க விரும்பாத பெரியார், பாமர மக்கள் வேண்டுமானால்
பாராட்டலாம். ஆனால் அறிவாளிகள் பாராட்ட ஏதுமில்லை என்று கூறுகிறார்.
இக்காலகட்டத்தில் சுயமரியாதை சமதர்ம சங்கங்களும், சமதர்ம பிரச்சாரங்களும் வேகமாகப் பரவின. சென்னையில் தோழர் சிங்காரவேலு தலைமையில் நாத்திகர் மாநாடு நடத்தப்பட்டது. மாகாணம் முழுதும் 110 சுயமரியாதை சமதர்ம சங்கங்கள் உருவாகியதாக “புரட்சி”யின். தலையங்கம் கூறுகிறது. மே நாள் பற்றிய விரிவான தலையங்கம் எழுதி, கிராமங்கள், நகரங்கள் தோறும் மே தினக் கொண்டாட்டங்களை
நடத்துமாறு 'புரட்சி' அழைப்பு விடுத்தது ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்ற காந்தியார், சட்டமறுப்பு இயக்கத்தையும், 'கடவுள் தம்மிடம்' கூறியதாகக் கூறி நிறுத்திக் கொண்டதை விமர்சித்தும் காங்கிரஸ் - சுயராஜ்யக் கட்சிகளின் சந்தர்ப்ப வாதங்களை விரிவாக அலசியும் பல தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. வட்டமேசை மாநாட்டில் காங்கிரசின் குழப்பங்களையும், தீண்டப்படாத மக்களுக்கு எதிராக நடத்திய சதியையும் 'சுயராஜ்யக் கட்சி” என்று தலையங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது
சிறையிலிருந்து விடுதலையான பெரியார், ஜஸ்டிஸ் கட்சி கூட்டம் ஒன்றில் பேசுகையில் - “அக்கட்சி பொது மக்கள் கட்சியாக இல்லாமல், ஜமீன்தார்கள் - முதலாளிகள் கட்சியாகிவிட்டது'' என்று இடித்துக் காட்டியதோடு, இதை பொய்யாக்கிக் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதே உரையில், “வெறும் ஸ்தாபனங்கள் அமைப்பதால் ஒரு பயனும் ஏற்பட்டுவிடாது. ஸ்தாபனங்கள் பெரிதும் சுயநலக்காரர்களின் விளம்பரத்துக்கு ஒரு சாதனமாகும். உழைப்பும் வேலை செய்து காட்டுவதுமேதான், நமது எதிரிகளைத் தோற்கடித்து, நமக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும்” என்று குறிப்பிட்டிருப்பது அமைப்புகளைப் பற்றிய பெரியாரின் பார்வையை தெளிவுபடுத்துகிறது
பால்ய விவாகத்தை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு உரிமைச் சட்டங்கள் இந்திய சட்டசபையில் வரவிருந்த சூழலில் இவற்றை தடுப்பதற்கு பார்ப்பனர்கள். கும்பகோணம் உட்பட பல ஊர்களில் யாகங்களை நடத்தினர். ஆடுகளின் பீஜத்தை! (உயிர் உறுப்புகள்) நசுக்கி, சித்திரவதை செய்து “மோட்சத்துக்கு: அனுப்பும் சித்திரவதை யாகத்தைக் கண்டித்து “ஜீவரக்ஷா பிரச்சார சபை!
எனும் அமைப்பு ஆரணிக்கு அருகே உள்ள கடலாடி எனும் கிராமத்தில்
கூட்டம் ஒன்றை நடத்தியது. திரு.வி.க. தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் 'ஜீவகாருண்யம்' எனும் தலைப்பில் பெரியார் நிகழ்த்திய சிறப்பான உரை இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது
'ஜீவகாருண்யம்' என்ற சொல்லுக்கு கூறப்படும் பொதுவான. கருத்துக்கு எதிர் சிந்தனை கொண்டவர் பெரியார் என்றாலும், 'அந்த ஜீவகாருண்யம்' என்ற சொல்லாடலை சமூகப் பார்வையில் மக்களிடம் பெரியார் எடுத்துரைத்த அணுகுமுறை பெரியாரியலாளர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகும்
சுமார் ஒரு மாத காலம் நாளேடாக வெளிவந்த 'பகுத்தறிவு' நிறுத்தப்படுகிறது இதற்கான அறிவிப்பை 'புரட்சி' பதிவு செய்கிறது.
அக்காலத்தில் பிரபல சைவ சொற்பொழிவாளரான கோவை சி.கே.சுப்ரமணிய முதலியார், “தமிழ்நாடு” பத்திரிகையில் சுயமரியாதைக்காரர்
களும் 'நல்ல நாள், ராகுகாலம்' பார்ப்பவர்கள் என்ற ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு சரியான பதிலாக சைவர்கள் மனப்பான்மை' என்ற தலைப்பில் வெளிவந்த தலையங்கமும், தீண்டப்படாத மக்களை கோவிலுக்குள். அனுமதிப்பது, வர்ணாஸ்ரமத்துக்கு எதிரானது என்று பூரி சங்கராச்சாரி தேவகோட்டையில் பேசியதற்கான கண்டனமும், இத்தொகுப்பில் குறிப்பிடத்தக்கவையாகும்
இந்திய சட்டசபைத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சித் தலைவர் எஸ்.சத்திய மூர்த்தி சாஸ்திரி போட்டியிட முயலுவதைக் குறித்து விடுதலைக்குப் பின் பெரியார் எழுதிய தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்
“சத்தியமூர்த்தி சாஸ்திரியைவிட மேலான யோக்கியதையும் அந்தஸ்தும் உடையவர்கள் பார்ப்பனரல்லாதாரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சுயநலத்துக்காக வகுப்பு நலனை மிக குறைந்த விலையில் விற்கக் கூடியவர்கள் என்று சொல்லலாம் என்பது நமதுகருத்து. ஆனால், நமது சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ. எந்தக் காலத்திலாவது எவ்வளவு நெருக்கடியான சொந்த அசெளகரியத்திலாவது பார்ப்பனியத்தையோ, பார்ப்பன ஆதிக்கத்தையோ ஒரு கடுகளவுகூட விட்டுக் கொடுத்தார் என்று சொல்ல முடியாது. இந்த வழக்கமும், யோக்கியதையும் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியிடம் மாத்திரமல்ல, 100க்கு 99 1/16 பார்ப்பனர்களிடத்திலும் காணலாம். இதுவே தான் இந்நாட்டில் பார்ப்பனீயம் நிலைத்திருப்பதற்கு காரணம் என்பதோடு, இந்தக் குணம் பார்ப்பனரல்லாதாரிடம் இல்லாததாலேயே அவர்களது முயற்சிகள் அடிக்கடி கவிழ்க்கப்பட்டுவிடுவதற்கும் காரணம் என்று சொல்லலாம்.”
இது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய சாசனமாகும்
- பதிப்பாளர்.
பொருளடக்கம்
நாஸ்திகர் மகாநாடு
11
வருந்துகிறோம்
15
தாலூகா போர்டுகளின் அழிவு
17
தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு
20
23
சைவர்களின் மனப்பான்மை
தோழர் 0.0. சீனிவாசன் மறைவு
27
ஈ.வெ. ராமசாமிக்கும் கரா. கண்ணம்மாளுக்கும் “ஜே”
29
தோழர் K. ராமசாமி
32
தற்காலம் நமக்கு வேண்டியதென்ன?
33
36
வருத்தம் பரோடா பெண்கள் முன்னேற்றம்
37
துணுக்குகள்
39
மதத்தைத் தூஷிக்கும் மாபெருங் குற்றத்திற் கேற்பட்டுள்ள 295 ஏ-பிரிவுக்குள்ள வியாக்கியானத்தின் விமர்சனமும் புத்தி நுட்பமும்
45
பத்திரிகாசிரியர் ஏ. ரங்கசாமி ஐயங்கார் மரணம்
47
தோழர் சே. நரசிம்மன்
49
தோழர் சி.பி. ராஜகோபால் பாரதி
50
தோழர் சிவப்பிரகாசம்
51
இக்காலத்திலுமா பண்டை நாகரீகப் பெருமை
52
யாருக்கு? பாதுகாப்பு மன்னர்களுக்கா?
55
பட்டினிகளுக்கா?
சாம்பியன் திட்டம் சாகடிக்கப்படுமா?
20
61
மன்னார்குடி மகாநாடு
21
66
சர்வ ஜன வாக்கா?
22
68
23
69
3 லக்ஷ்மா?
மீண்டும் சுயராஜ்ய கக்ஷியா?
24
70
துணுக்குகள் சைவ மகாநாடு
25
74
26
75
முதலாளிகள் ஆதிக்கம் உஷார்!
27
76
ஜெர்மன்சர்வாதிகாரியும் வேலையில்லாத் திண்டாட்டமும்
28
78
சர்.கே.வி. ரெட்டி
29
79
மீண்டும் பார்ப்பனீயமா?
30
80
நாகபட்டினம் சுயமரியாதைச் சங்கம்
31
85
நமது நாகரீகம்
32
87
துணுக்குகள்
33
91
உணவுக்கு வரி
34
95
காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி
35
99
காந்தியின் கடைசி காலம்
36
103
நல்ல சந்தர்ப்பம்
37
109
38
111
தோழர் ஜவஹர்லாலும் சர்.சி.பி.யும்
சீர்திருத்தக் காந்தி
39
113
திருச்சி தேவருக்கு துணை
40
114
நமது கடமை மே தின விசேஷ அறிக்கை
41
117
42
120
மே தினம்
43
121
தொழிலாளிக்கு லாபத்தில் பங்கா?
44
காந்தி - ஏமாறாதீர்கள்
122
ரஷ்யாவின் மேம்பாடு
45
124
மே தினம்
46
126
பம்பாயில் பயரங்கர வேலை நிறுத்தம்
47
130
பகுத்தறிவு காளியப்பன்.
48
131
49
132
50
தொழிலாளர்
133
காங்கிரஸ் சென்னை கார்பரேஷனில் படை எடுப்பா?
51.
134
52.
135
அன்சாரியும் அபேதவாதமும்
53.
137
சுயராஜ்யக் கட்சி
54.
143
முஸ்லீமும் பிராமணரும் ஒன்றா?
55.
148
56.
150
காங்கிரஸ் நிலை.
தோழர் ஈ.வெ.ரா. விடுதலை
57.
156
தோழர் ஈ.வெ.ரா. ஈரோடு விஜயம்
58.
158
சுயராஜ்யக் ககஷி செத்தது அது நீடூழி வாழ்க
59.
163
60.
164
பகுத்தறிவு சித்ரவதை 23 ஆண்டுகள் சித்ரவதை
61.
168
இந்திய சட்டசபைத் தேர்தலும் RKS.b
62.
173
மத நம்பிக்கையின் விளைவு
63.
176
மரணம்
64.
177
ஸ்தல ஸ்தாபனங்கள்
65.
178
ஜஸ்டிஸ் கட்சி
66.
183
யாகப் புரட்டு
67.
185
சென்னையில் ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டம்
68.
194
இந்திய சட்டசபைத் தேர்தல்
69.
199
திருப்பூர் செங்குந்த மகாஜன சங்க மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ரா.
70.
204
சம்பளக் கொள்ளைக் கொடுமை
71.
208
சுயமரியாதை திருமணம் என்றால் என்ன?
72.
215
அருஞ்சொல் பொருள்
73.
221
பஃ்பீதில்டர் தெ. M. 2902,
சனிப்பிடதி வி ஒரு னன
JL ச.
ல்சதோனும் வெளிவரும், வியி வெ வகுஷ்ணாம்.
எது பரிருகதஹ் N மவ =]
ஏன் சவமரியாதை இயக்கத்தில் செசவேண்டும்1
தை ஹரிப்பநாகும்,
1. அதி ஒன்றின் sk அ
1 ஒரம் சாபா தரல
காதிஇயரர் பார்ப்பனரின் யால்.
காந்தத்தை ஒழிப்பா வள்ளற்
தமை ந ற்காக
b அத உண்டென உடன் உளப் ளி கனி என்பு போன்ற விரக B னை என்ன
நாஸ்திகர் மகாநாடு
சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக்கூடியதுமாகும்
நாஸ்திகமானது தற்காலம் இன்னாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக நம்மவர்களின் புராண இதிகாசங்களால் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இராமாயண காலத்திலும் நாஸ்திகம், கதாநாயகனான: ராமனுக்கு உபதேசிக்கப்பட்டதாகவும், அவன் மறுத்துவிட்டதையறிந்த உபதேசிகள் அதற்கு அவனின் இளமைப் பருவந்தான் காரணமென்றறிந்து பிறகு கொஞ்ச காலஞ் சென்று வாசிட்டம் என்கிற முறையில் உபதேசிக்கப் பட்டதாகவும், அவனும் அதை மறுக்காமல் ஒப்புக்கொண்டதாகவும் ஒரு அத்தாட்சி காணப்படுகிறது
மற்றொரு உதாரணம் என்னவென்றால் தேவேந்திரனானவன் தனது லெளகீக அலுவல்களை விட்டு விட்டு வைதீக மார்க்கத்தை அநுஷ்டித்து வந்த சமயத்தில் அவனது நாடும், நாட்டுக் காரியங்களும் குன்றி வருகிறதைக் கவனித்து வந்த அவன் குருவாகிய வியாழன் (பிரகஸ்பதி) என்போன் தனது சீடனான இந்திரனுக்கு நாஸ்திகத்தை உபதேசித்து அவனது ராஜ்யத்தையும், ராஜ்ய காரியாதிகளையும் சீரும் சிறப்புடன் நடத்தி வரச்செய்ததாகவும் காணப்படுகிறது.
ஆகையால், இது வெகுகாலமாக ஒரு சிறு சுயநலக் கூட்டத்தவர்களால்:
தங்களின் வாழ்க்கை நலன்களுக்காக மறைத்து வைத்து, அதற்குப் பதிலாகத் தங்களுக்கே பலன் தரத்தக்க முறைகளுக்குட்பட்ட வகுப்பு வேறுபாடுகளுக்கும், மத வேறுபாடுகளுக்கும், ஏழை பணக்கார வித்தியாசங்கள் முதலியவை களுக்கும் வேண்டிய வகைகளைக் கொண்ட ஆஸ்திக தத்துவத்தைக்
கூறும் நூல்களைக் கற்பித்து அப்போதிருந்த அரசர்களைத் தங்கள் வசப்படுத்தி சட்டங்களையும் அதுகளுக்கு அநுசரணையாக ஏற்படுத்தி நமது மக்களை அடக்கி ஆண்டு வந்திருக்கிற காரணங்களின் முதிர்ச்சியினால்தான் இது புதுமையென்பதில் ஆச்சரியமேயில்லை.
இம்மகாநாட்டிற்கு விஜயம் செய்திருந்த மக்களில் பெரும்பான்மை யோர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் தமிழில் பண்டிதத் திறமை
வாய்ந்தவர்களேயாகும். பண்டிதத் திறமையை இதிற் குறிப்பிடவேண்டிய தெதற்காகவென்றால், தற்போதுள்ள தமிழ் பாண்டித்யத்தில் தான் மதம், ஜாதி, கடவுள் என்கின்ற குறைபடா நம்பிக்கையை அலசாமல் முழுசு முழுசாகப் புகுத்தப்பட்டிருக்கிற காரணத்தால் அவைகளைத் தங்கள்பால் மணம் மாறிய சிறு வயது முதல் கொண்டு 20 - 30 வருடம் வரையாவது
படித்துப் படித்து தங்கள் தங்கள் மனதிலும் (இன்னம் சொல்லுங்கால்)
ரத்தம், நாடி, நரம்பு, எலும்பு, தசை, தோல் முதலியவைகளிலும் கூடப்
புகுத்திப் பதிய வைத்திருப்பவர்களின் கூட்டத்தில் தேர்ச்சியடைந்தவர்களின். தன்மையைத்தான் பண்டிதத் திறமை என்பார்கள். இத்தகைய திறமை வாய்ந்தவர்களே இம்மகாநாட்டில் முக்கியமாக கூடியிருந்ததும் பங்கெடுத்துக்கொண்டதும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இதைக்காட்டிலும் மற்றொரு விசேடம் என்னவென்றால் பெண்மக்கள் விஷயம், இவர்களிலும் பண்டிதைகளானவர்களே பெரும்பான்மையானவர்கள் என்றால் இந்த மகாநாட்டின் முன்னேற்றங்களில் இதைவிட வேறு என்ன முற்போக்கான அறிகுறி வேண்டும்? இம்மகாநாட்டை கூட்டியதினின்று மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் புத்துணர்ச்சியின் காரணமாக இது முதற்கொண்டாவது தங்கள் தங்கள் வாழ்நாட்களை அழித்து வரும் மூட நம்பிக்கைகளையும், அடிமைப் புத்தியையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து தன்னம்பிக்கையையும், தன்மதிப்பையும், தன் முயற்சியையும் பெற்று தன்னைப்போல் பிறரையும் நேசித்து,
சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும், சுதந்தரத்துடனும் வாழ இடமுண்டாவதுடன் பொருளாதார விஷயத்திலும் அனாவசியமாக நேரங்களையும், பணங்களையும், ஊக்கங்களையும், உழைப்புகளையும் விரயமாக்காமல் மக்கள் வாழ்க்கைக்குப் பலன் தரும் வழிகளில் உபயோகப்படுத்தி வாழ்வார்களென்று நம்புவதற்கு அறிகுறிகளான ஷி மகாநாட்டின் தீர்மானங்களே போதிய சான்றாகும். அதாவது முதல் தீர்மானத்தில் மனித ஒற்றுமைக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாகவிருப்பது கடவுள் நம்பிக்கையும் அதிலிருந்து ஏற்படுகிற மத சம்பிரதாயங்களுந்தான் என்று இம்மகாநாடு நிச்சயமாக உணர்வதால் மனிதர் தன்நம்பிக்கையோடும், தன் முயற்சியோடும் முன்னேற்றமடைய வேண்டில், கடவுள் நம்பிக்கையை பூரணமாக ஒழிக்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது என்பதாகும் இத்தீர்மானமானது நடைமுறைக்கு வரும்போது மனிதற்களுக்குள் ஒற்றுமை நிலவிவரும். அப்போது சமூகமானது முன்னேற்றமடையும் என்பதும் இவைகளைத் தடுத்துவருவது “கடவுள்” நம்பிக்கை என்பதும் காணப்படுகிறது. அக்கடவுளின் நம்பிக்கை அமையவேண்டி மத சம்பிரதாயங்கள் வேண்டியிருக்கிறதென்றும் ஏற்படுகிறது. எப்படியென்றால் கடவுள் என்கிற ஒரு கற்பனைக்கு ஆசைப்படும்படியாகவும், ஆதாரமாகவும் காட்டப்படுகிற நியாயங்களாகிற மறுஜன்மம், மோக்ஷம், சுவர்க்கம், நரக
குடி அரசு (புரட்சி)-7994/]) அ 1
முதலியவைகளோடு சாஸ்திர புராண இதிகாசங்களாகிற நூல்களால் ஏற்படுகிற சம்பிரதாயங்களே காரணமாகிறபடியாலும், அப்படிப்பட்ட மத சம்பிரதாயங்களே காரணமாகிறபடியாலும், அப்படிப்பட்ட மத சம்பிரதாயங்களே மக்களுக்குள் உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதால் ஒற்றுமைக்கு வழியற்று வேற்றுமைகளைக் கிளப்பிவிடுவதால் வேற்றுமைப்பட்ட பிறகு மனிதர்கள் முன்னேற்றமும் சிதைவுறுவதாலும்தான். இப்படிப்பட்ட கெடுதல்களுக்கு மூலகாரணமாகிற “கடவுள்” நம்பிக்கை ஒழிய வேண்டுமென முதல் தீர்மானம் வற்புறுத்துகிறது. இது இடைவிடாது நிலவி நீடித்து மக்களுக்குப் பயனளித்தல் வேண்டுமென்கிற ஆர்வத்துடனேயே தான் அதற்குத் தகுதியுடைய இளைஞர்களுக்குள் இத்தீர்மானம் முதிர்ச்சியுற வேண்டுமென்றும் அதற்கிடையூறுகளாக, தாத்காலிக பள்ளிப்பாடப் புத்தகங்களில் ஷி இன்னல்களைப் புகுத்தாவண்ணம்
பிரசாரம் செய்யவேண்டுமென்றும் இரண்டாவது தீர்மானம் கூறுகிறது இவைகளுக்கெல்லாம் விரோதமாக நடந்து வரும் காந்தீயத்தை மூன்றாவது தீர்மானத்தால் கண்டித்து, இவைகளைப் பின்வரும் மக்களும்
அனுஷ்டித்து ஒழுகுமாறு ஒரு சங்கத்தை ஸ்தாபித்து நடத்திவர வேண்டுமென்று நான்காவது தீர்மானத்தினால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது
இன்னமும் இதைக் குறித்துச் சொல்லப் புகுங்கால் இம்மகாநாட்டைக்
கூட்டியவர்கள், இதைத் திறந்துவைத்த திறப்பாளர், இதை நடத்திவைத்த தலைவர், தீர்மானங்களைக் கொண்டுவந்தவர்கள் முதலியோர்களின் தன்மை முதலியவைகளைக் கவனித்தால் இம் மகாநாட்டின் ஏற்றம் இப்படிப்பட்டதென விளங்கும் அதாவது இம் மகாநாட்டை கூட்டுவிக்க முயற்சி எடுத்துக் கொண்டவர்களான தோழர் அ. பொன்னம்பலம், தோழர் ப. ஜீவானந்தம் ஆகிய இருவரும் மேற்படி மகாநாட்டுக்குக் காரியதரிசிகளாக அமைந்து எடுத்துக்கொண்ட முயற்சிக்கும், சிரமத்துக்கும் அளவே இல்லை இவ்விருவரும் தமக்கு எல்லாவற்றையும்விட மக்கள் முன்னேறுவதே பெரும் பயனாகக் கருதி, அதற்காகவே தங்கள் மனதும், வாக்கும், உழைப்பும் பயன்படல் வேண்டுமென்கிற ஒரே ஒரு உட்கருத்துக்கொண்டு தன்னலம் சிறிதும் பாராமல் முக்காலங்களிலும் உழைத்து வரவேண்டுமென்கிற விரதம் கைக்கொண்டொழுகும் குணமும், ஆசையும், சக்தியும், உழைப்பும் வாய்க்கப் பெற்றவர்கள் ஆவார்கள் என்பதை நமது சுயமரியாதை உலகம் நன்கறிந்திருக்குமென்றால் நாம் வேறு சொல்லவேண்டியதென்ன இருக்கிறது.
அடுத்தபடியாக மகாநாட்டைத் திறந்து வைத்தவர் யாரெனில் தோழர் நீலாவதி அம்மையார். இவரின் பெருமையும், வீரமும், தன்மையும், சொல் வன்மையும், தன்னலங் கருதா உழைப்பும், இன்னம் மற்ற அவரது குணாதிசயங்களும் நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கக்கூடிய பெருமை வாய்ந்தவர்களாவார்கள். இம் மாநாட்டுக்குத் B ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தலைமை வகித்து இம் மகாநாட்டை வெற்றிகரமாக நடத்திவைத்த பெரியார் தோழர் ம. சிங்காரவேலு அவர்களைப் பற்றியோவெனில் அவர் ஆராய்ச்சியிலும், அனுபவத்திலும், வயதிலும் முதியவர்
என்றாலும் ஆராய்ச்சியின் பலன்களையும், அனுபவத்தின் பலன்களையும் மற்ற உயரிய விஷயங்களையும் மக்களுக்குப் பயன்படுமாறு செய்விப்பதிலும் களைப்பு, சலிப்பு, பயம், பின் தாங்கல் முதலியவைகளைக் கனவிலும் கண்டிராத ஒரு இளைஞரை ஒத்தவராவார். இப்படிப்பட்டவர்களால் நடத்தப்பெற்ற மகாநாட்டின் சிறப்பும், பலன்களும் எப்படி அமைந்திருக்கும் என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஆகையால் சாதாரணமாக
உலகில் கடவுள் உண்டாயிருந்தாலும் இல்லாதிருந்தாலும் நாஸ்திகம் என்கிற சொல் உச்சரிக்கும் போதே ஜனங்களுக்கு ஒரு விதமான வெறுப்பும், கோணுதலும் ஆன மனப்பான்மை உண்டாவது வழக்கமாக இருந்து வந்ததை, இம் மகாநாட்டைக் கூட்டுவித்து நடத்திவைத்துக் கொடுத்தவர்களால் மனித முன்னேற்றத்துக்கு எதிர்தட்டான எவையும் ஒழித்தாக வேண்டும் என்பதும் அப்படிச் செய்வது நீடித்துவரும் வகையை ஊக்கத்துடன் தெரிந்து நடத்தப்படவேண்டும் என்றும் அது மக்களைவிட இளைஞர்களுக்குத்தான் முக்கியமானதாகக் கருதி அவர்களுக்கு பாட புத்தகமூலம் ஏற்படுகிற இன்னல்களைக் களையும் வண்ணம் பிரசாரம் செய்யப்பட வேண்டுமென்றும் இத்தகையவைகளுக்கு விரோத வர்க்கமான காந்தீயத்தை ஒழிக்க வேண்டுமென்கிற கருத்துக்கொண்டதும் மக்களின் முன்னேற்றமே பலனாகவும் கொண்ட
இம் மகாநாட்டின் கருத்துக்களால் மாற்றிவிடப்பட்டதென்றே சொல்லுவோம் மேலும் நாஸ்திகம் என்கிற சத்தத்தைக் கேட்டபோதே ஜனங்கள் தங்களை பொய், களவு, சூது, கொலை முதலிய குற்றங்களுக்கு மேல் செய்துவிட்டவன் வருந்துவதுபோல் கஷ்டப்படுபவர்களான நம் மக்கள் இம் மகாநாட்டின்போது கலந்துகொண்டு தாங்களும் அங்கத்தவர்களாகச் சேர்ந்து உழைக்க முன்வந்துள்ளவர்கள் எனில் அதற்கு மூல காரணம் இன்னதென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமற் போகாது. ஆகவே இத்தகைய மகாநாடுகள் நமது நாட்டில் ஆங்காங்கு நிறுவி மக்களின் அறியாமையைப் போக்கி மக்களுக்குப் பயன்பட்டு வரும் முறைகளில் வேண்டியவைகளை அறிவித்தும், தீர்மானித்தும், நடைமுறையில் நடந்தேறும் வண்ணம் செய்வித்தும் வருவது அத்தியாவசியமாகும்
- ௩.வெ.கி.
புரட்சி - தலையங்கம் - 07.01.1934
குடி அரசு (புரட்சி)- 7994) ஆட்டு
வருந்துகிறோம்
ஜோலார்ப்பேட்டை பிரபல கண்டிராக்டர் தோழர் வரதராஜலு (முதலியார்) அவர்கள் 5-1-34ல் காலமானார் என்ற செய்தி கேட்டு
வருந்துகிறோம். இவர் வயோதிக வாழ்க்கையினரானாலும் ஐதீகத்தையே பின்பற்றிவிடாது காலப்போக்கின் உயரிய தன்மையை உணர்ந்து நமது 'சமதர்மம்' போன்ற லக்ஷ்யங்களைப் போற்றியதோடு அதற்காக நின்று தொண்டாற்றிய தோழர்களைப் பெரிதும் ஊக்கமூட்டிப் பேராதரவு நல்கியவராவார். மற்றும் நமது இயக்கத்திற்கு உறுதுணையாக நின்று
சீரிய ஊழியம் செய்ய தோழர் வி. பார்த்தசாரதி அவர்களை நமக்கு 'தத்தம்' செய்துள்ள சிறப்பாளருமாவார். இத்தகைய பெரியார் மறைந்ததற்காக இயற்கையை செவ்வனே உணர்ந்த தோழர் வி. பார்த்தசாரதி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எவ்வித ஆறுதலும் தேவையில்லை என்றே நம்புகிறோம்
புரட்சி - இரங்கலுரை - 07.01.1934
[த ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ப புரட்சி படக்கு e e
குடி அசசு ' பநப்பக புஸ்தகங்கள். B Lt மும், Gt , e P வல்து shun-m. பேண் என் ypsmster 2y o
மகாதாட்டுர் சேற்பொ, இன் ட்ப தபரிய அல்வதுமுரண பின் அங்கதம் அல்லு பாம்ப்பனக்யொடுவை ரன
த்தியாம்ன்கள சண்முத்தனமா? e it யின் et இணை 2243
பகுந்ததிவு அற்பதிப்புச்சழகம் விமிட்டெட், ல |
என்றள் அள்வு — == வத் AT Ak டர்
கயரிவாதைப்பாடல்,
வதை இபப R
செலினட்குகது ஆடக dmni கண்டனமும் எர.
தாஜூகா போர்டுகவின் அழிவு
நமக்கு சர்க்காரால் அளிக்கப்பட்ட ஸ்தல ஸ்தாபன அதிகாரங்களில். தாலூகா போர்டு நிர்வாகம் என்பதும் ஒன்றாகும். இதானது துவக்கப்பட்டு நம்மவர்களால் நடத்தப்பட்டு வரும் கொஞ்ச காலத்திற்குள்ளாகவே இதை நிர்வகித்து வரும் அங்கத்தவர்களாலேயே “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்றதற்கொத்த நடைமுறையில் அதன் ஒழுக்கக் குறைவாலும், சுயநல முதிர்ச்சியினாலும், ஒழுக்கபீனமான நடைமுறைகளாலும், சிவில், கிரிமினல் வியாஜ்ய விவகாரங்களாலும் நடத்தப்பட்டு வந்ததாக ஏற்பட்டதோடு பொருளாதார முறையிலும் மிக நெருக்கடியான தன்மையிலும் அமைக்கப்பெற்று விட்டதால் இந்த சொல்ப நன்மையும் கூட நம்மவர்களின் அந்தஸ்திற்கு கெட்டதாக மாறி விட்டதானது மிகவும் விசனிக்கத்தக்கதாகும். இதுகளைக் குறித்து பல தடவைகளிலும் நமது
“குடி அரசு” வாயிலாகவும், நமதியக்கத் தோழர்களால் சொற்பொழிவுகளின் வாயிலாகவும், நமது இயக்க மகாநாடுகளின் தீர்மான மூலமாகவும் எடுத்துக் காட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.
மேலும் இதை நடத்தி வருபவர்கள் இதை ஒரு பொதுநல சேவைக்கான ஸ்தாபனம் என்றும், இது மக்களின் நம்மைக்கே அமைக்கப்பட்டிருக்கிறதென்கிற நினைவேயில்லாமல் இது ஒரு தனிப்பட்ட மனிதரின் சுயநலத்திற்கும், செளகரியத்திற்கும், கெளரவத்திற்கும், அதிகார தோரணைக்கும் தங்கள் தங்கள் செல்வாக்குக்கும் ஏற்பட்டதாகக் கருதி அதற்காக எத்தனை பணம் செலவானாலும், எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும், யார் யார் விரோதம் வந்தாலும், வேறு என்ன வந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்கிற நினைவோடு இத்தகைய ஸ்தாபனங்களில் அதிகார ஆதிக்யம், கெளரவம், செல்வாக்கு முதலியவைகளை இச்சித்தே பெரும்பான்மையோர் இவற்றில் நுழைந்து நிர்வாகம் செய்து வந்ததின் காரணமே இன்று இத்தகையவைகள் நம்மவர்களுக்குப் பொறுத்தமற்றதென: நிரூபித்து விட்டதுடன் இவைகளுக்கு ஆதாரமாயுள்ள ஸ்தாபனங்களை நடத்துவதில் பணக்கஷ்டமதிகரிப்பதால் அவற்றை எடுத்துவிட வேண்டுமென்று சர்க்காரும் நினைத்துவிட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டதென்றால் இதைவிட அவமானம் வேறு வேண்டுமா? தவிரவும் இந்த ஸ்தாபனங்களை நிர்வகிக்க வருபவர்களால் மக்களுக்கு ஏற்பட வேண்டிய நன்மைகள்தான் இவ்வாறாகப் பிரயோகிக்கப்
ர ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி -
பட்டதெனில் ஷி நிர்வாகத்தில் காரியம் நடத்தி வரும் சிப்பந்திகள், உபாத்திமார்கள், உபாத்தினிமார்கள் முதலியவர்களாவது இவர்களால் நன்மையைப் பெறாவிட்டாலும் துன்பமாவது இல்லாதிருக்குமாவெனில் அது சம்பந்தமான ஊழல்கள், அவைகளைக் குறித்து நாம் சொல்லாமலே விளங்கக் கூடியவைகளாகும். இத்தகைய பரிதாபகரமான நிலைமையை பொதுப் பணங்களையும், பொது அதிகாரங்களையும் பொதுமக்களுக்கே உபயோகமாகும்படி இனிமேலாவது அவைகளைப் பொதுமக்களுக்காக எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை உத்தேசித்து நமது காருண்ய கவர்ன்மெண்டார் தற்போது வந்திருக்கும் ஒரு ஒப்பற்ற முடிவைப்பற்றி நாம் அவர்களைப் பாராட்டாமலிருக்க முடியாது
அதாவது தாலூகா போர்டுகளை ஒழித்துவிட வேண்டும் என்று சென்னை சர்க்கார் தீர்மானித்திருப்பதேயாகும். இது சில சுயநலக்காரர்களுக்கு மட்டும் நஷ்டத்தையும், ஏமாற்றத்தையும் உண்டு பண்ணினாலும் பெரும்பான்மையாக பொது ஜனங்களுக்கு நன்மையை அளிக்கக்கூடியதாக இருக்கிறபடியால் இத்தீர்மானம் பொதுவாக எல்லோராலும் போற்றத்தக்க காரியமென்பதில் நமக்கு சிறிதளவும் ஐயமில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம். மேலும் தாலூகா போர்டுகள், கிராம பஞ்சாயத்துக்களின் நிலைமையைப் பொருத்த விஷயங்களில் குறைபாடு உள்ளவைகளையும் கூட இனி பஞ்சாயத்துக்களை சீர்திருத்த முறைகளில் அதிகப்படுத்தி வைக்கப்படும் என்கிற ஏற்பாட்டின் மூலம் நிவர்த்திக்கப்படுமெனவும் நம்புகிறோம். எப்படியெனில் நிலவரியின் பகுதியிலிருந்து ஜில்லா போர்டுக்கும், தாலூகா போர்டுகளுக்கும், பஞ்சாயத்துக்களுக்கும் ஆகிய ஸ்தாபனங் களுக்கும் பிரித்துக் கொடுத்து வந்ததானது இனி தாலூக்கா. போர்டுகள் ஒழியப்போவதாலும் டி துகைகளிலிருந்து ஜில்லா போர்டுக்கும், பஞ்சாயத்துக்கும் செலவழிக்க நேருவதாலும் பஞ்சாயத்துக்களை இன்னமும் அதிகப்படுத்தி சீர்திருத்த முறையில் விமர்சனமாக நடைபெறவைக்க இடமேற்படுவதாலும் சில எதிர்பாராத நன்மை கிராமத்தவர்களுக்கு அதிகமாக ஏற்படக்கூடும். பட்டினவாசிகளைவிட கிராமவாசிகள்தான் அதிகமான சீர்திருத்தத்திற்கும் முற்போக்குக்கும் லாயக்குள்ளவர்களாகையால் மேற்படி நன்மைகள் அவர்கள் விஷயத்தில் இன்னம் கொஞ்சம் அதிகமாக உபயோகப்படும் என்கிறோம் எப்படியெனில் கிராமாந்திரங்களில்தான், உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடுகளின் ஆதிக்யமும் அவைகளால் ஏழை மக்களுக்குள்ள கஷ்ட நஷ்டங்களும் அதிகரித்து, துன்புறுத்தி வருகின்றனவாதலால் இத்தகைய பஞ்சாயத்துக்களின் அதிகரிப்பினாலும் அதன் விமர்சனமான நடைமுறையினாலும் கஷ்ட நஷ்டங்களுக்கு அடிப்படையான அறியாமையும் விலகி ஒருவாறு முற்போக்கடைவார்களென்று
நம்பவும் இடந்தருகிறது
குடி அரசு (புரட்சி)-794()) — ப
இன்னமும், சொல்லப் புகுங்கால் தாலூகா போர்டுகளின் தேர்தல் காலங்களின் போது மக்களுக்கு ஏற்படுகிற கஷ்டங்களும், நாணயக் குறைவுகளும், பணச் செலவுகளும், விரோதங்களும், வேலை மினக்கேடுகளும், அலைச்சல், கெஞ்சுதல், பயமுறுத்தல், ஓட்டுக்கு விலைபேசுதல் முதலிய விஷயங்களால் ஏற்படுகிற கஷ்டங்களும் தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஞாயமானதா? தப்பானதா? எனத் தெரிந்து கொள்ள அவைகளால் ஏற்படுகிற கோர்ட்டுச் சிலவு, ரெயில்,
கார் முதலிய போக்குவரத்துச் சிலவுகள், சாக்ஷிப்படி, வக்கீல் பீசு முதலிய விரயங்களும் தாலூக்கா போர்டுகளை அழிப்பதால் ஒழிந்து
விடக்கூடும் என்றும் சொல்லலாம்.
தவிர, ஒவ்வொரு தாலூக்கா போர்டுகளிலும் 100-க்கு மேற்பட்டு 250 கிராமங்கள் வரை ஒன்று சேர்த்து நிர்வகித்து வந்ததான நிர்வாகத்துக்கு 10 மூதல் 25 மெம்பர்கள் அமைக்கப்பட்டிருந்ததைப் பஞ்சாயத்து போர்டுகள் அதிகரிக்கும் போது அந்தந்த போர்டுகளுக்கும் மெம்பர்களின் விகிதாசாரம் வரும்போது மெம்பர்களாகிய நிர்வாகிகள் அதிகரிப்பார்கள். அப்போது சொல்ப துகையினர்களால் நிர்வகிக்கப்பட்ட ஸ்தலமானது பஞ்சாயத்து போர்டு அதிகரிப்பினால் ஆயிரக்கணக்கான. ஜனங்களால் நிர்வகிக்கப்படலாம். அப்பொழுது நிர்வாகமானது ஒன்றுக்கொன்று மேன்மையுற நடத்த எத்தனமும் ஊக்கமும் உண்டாகி நல்ல முறையில் நடத்தப்படலாமெனவும் நம்ப இடமேற்படுகிறது இதனால் ஜனநாயகத்வ முறையை அமுலுக்குக் கொண்டு வர இதுவும்
ஒரு நல்ல சந்தர்ப்பமென்பதில் ஆக்ஷ்பணை இல்லை.
ஆகையால், இது போலவே சர்க்காரால் நமக்கு வழங்கப்பட்டிருக்கிற பல பொது ஸ்தாபனங்களில் நம்மவர்களால் ஏற்பட்டிருக்கிற பல. ஊழல்களையும், இன்னல்களையும் கவனித்து அததுகளுக்கேற்றவாறு அப்போதைக்கப்போது காலதாமதமாக்காமல் தக்க பரிகாரங்களைத் தேடி மறுபடி இன்னல்களும், ஊழல்களும் பிரயத்தனப்பட்டாலும் கூட யாராலும் ஏற்பட முடியாத முறையில் கவர்ன்மெண்டார் அமைத்து வைப்பார்களென நம்புகிறோம்
புரட்சி - தலையங்கம் - 14.01.1934
9 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு
சமதர்மப் பிரசார உண்மை விளக்கம்
இ.பி.கோ. 124-A செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள “பொதுவுடைமை” பிரசாரத்திற்காகவும் “இராஜ நிந்தனை” என்பதற்காகவுமுள்ள வழக்கு கோவையில் 12-௨ ஆரம்பிக்கப்பட்ட போது தோழர் ஈ.வெ. இராமசாமி
அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் GW. வெல்ஸ் 1.0.5. அவர்கள்.
முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-
என் பேரில் இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது
2. வழக்குக்கு அஸ்திவாரமான 29-10-33 தேதி “குடி அரசின்” தலையங்கத்தை இப்போது பலதரம் படித்துப் பார்த்தேன். அதை
நான் எழுதினேன் என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன்.
3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.
4. என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்தி விடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. வியாசத்தின் விஷயத்திலாவது, பதங்களிலாவது, நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது
5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச்செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவதில்லை யென்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ செளகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் லாபம் பெரும் பணக்காரர்களும், அதிகார
குடி அரசு (புரட்சி)- 1994) — 0
வர்க்கத்தாரும் உத்தியோகஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.
நான் 7,8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரசாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள். யாவரும் சமத்துவமாய் வாழவேண்டுமென்பது அப்பிரசாரத்தின். முக்கிய தத்துவமாகும்
நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்கவேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக்காக செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்
அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ, பிரசாரத்திலோ, அதற்காக நடைபெறும் “குடி அரசு”ப் பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று
இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாக்கா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கைகளையும்,
சுமார் பத்து வருஷத்திய “குடி அரசு” பத்திரிகையின் வியாசங்களையும்
சர்க்கார் கவனித்து வந்தும் என்மேல் இத்தகைய வழக்கு இதற்கு முன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும், அரசாங்கமானது முதலாளித் தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உதவி செய்து தீர வேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை
10
பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும்
11
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தியாகி செளக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.
12. இப்படிப்பட்ட ஒரு மாருதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது
13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரசாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக் கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்கு முறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய் கஷ்டத்தைக் கோறி எடுத்துக் கொள்ளக் கூடாது என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக் கூடாது. இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள். இருப்பதாக கற்பனை செய்து தீர வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என் மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர்களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை
மறுத்து உண்மையை விளக்கி விட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.
14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு. அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்கு பலமேற்படக் கூடுமாதலால் என் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்து விட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.
15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி அல்லது இந்த பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லக்ஷியம் செய்து வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி இப்படிப்பட்ட அடக்கு முறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழிகாட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி
மகிழ்ச்சி அடைகிறேன்.
புரட்சி - அறிக்கை - 21.01.1934
குடி அரசு (புரட்சி) - 1934 (1)
ப 3
சைவர்களின் மனப்பான்மை
சைவர்கள் என்பவர் சிவனை முழுமுதற் கடவுளாக எண்ணி வழிபடுபவர்களாவார்கள். சிவ என்னும் சொல் மங்களகரம் என்றும் அன்பே உருவாகக் கொண்டது என்பது முதலாக பல பொருள்களையும் குறிக்கத்தக்கதாகும். இப்படிப் பொருள்படும் வாக்கியத்தின் வாச்சியனை வழிபடுபவர்கள்தான் சைவர்கள் என்று கூறுகிறார்கள். இத்தகையோர்களின். இலக்கணங்கள் எப்படியிருக்கவேண்டுமென்பதைக் குறித்து சைவாகமங்களில். விசேடமாகக் கூறப்பட்டிருக்கிறது. அவைகளை விரிக்கிற் பெருகுமென முக்கியமானவற்றை மட்டில் இங்கு குறிப்பிடுகிறோம்
மன மொழி காயங்களால் தன்னைப் போற் பிறரை நேசித் தொழுகல் என்பன போன்றவைகளாகும். இத்தகைய அரிய குண சமூகத்தோடு கூடிய சைவப் பெரியார்களில் தானும் ஒருவராக எண்ணிக் கொண்டு அநேக சைவக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி வரும் கோவை சேக்கிழார் நிலையம் தோழர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் .ஃ. அவர்கள் ஜனவரி மாதம் 18 ௨ “தமிழ்நாடு” பத்திரிகையில் “அரை குறை சாஸ்திர ஞானம் கூடாது" “சோதிட சாஸ்திர ஆராய்ச்சி" “நவக்கிரகங்களுடன். என்ன சம்பந்தம்” என்கின்ற தலைப்புகளின் கீழ் எழுதிய கட்டுரையின். துவக்கத்தில் “கிழிந்த பஞ்சாங்கத்தையும் தற்பைப் புல்லையும் நம்பாதே" என்று சொல்லுபவர் சுயமரியாதைக்காரர் என்றும், “சுயமரியாதைக் கொடியை ஏற்றியிருப்பவர்கள்கூட நல்ல நாளும் இராகு காலமும் பார்த்தே தீருகிறார்கள்'' என்றும், அதை நான் பார்த்திருக்கிறேன் என்றும்,
மற்றும் பல விஷயங்களையும் எழுதி, கடைசியாக திருஞான சம்பந்த நாயனார் சரித்திரத்தைப் பற்றி சொல்லும் போது பெரிய புராணமானது “அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல் ஓரை எழத்திருக்கிளரும் ஆதிரை நாள்”
அவர் அவதரித்த காலம் என்று சொல்லுகிறார். அதாவது “அவர் அவதரித்த காலத்திலே ஒன்பது கிரகங்களும் உச்சம், நல்ல லக்கினம், நக்ஷத்திரம் திருவாதிரை இப்படி ஒரு சாதகம் போட்டுப் பார்த்து சோதிடர்கள் பலன் சொல்லுவார்களேயானால் சுவாமிகள் சரித்திரத்திற்கு ஒத்தே இருக்கும்” என்றும் மேற்படி பத்திரிகையில் காணப்படுகிறது. சோதிட சாஸ்திரமானது வான சாஸ்திர சம்பந்தமுடையது. இது கணிதத்தையே ஆதாரமாகக் கொண்டது என்பது மறுக்கப்படத்தக்கதல்லவென்றாலும் B மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
அது தற்போது மக்களிடம் புழங்கி வருகின்ற மாதிரியையும், அதனால் மக்கள் எத்தகைய துன்பத்திற்காளாகி ஏமாற்றமடைந்து துன்புற்று வருகிறார்கள் என்பதையும் கவனிக்கும்போது, மக்களின் வாழ்க்கையில் அது தன்முயற்சிக்கும் தன் மதிப்புக்கும் தன் நம்பிக்கைக்கும் முற்றும் முறண்பட்டதாகவே காணப்படுவதுடன் அதை மக்களுக்குப் போதித்துப் பலன்களைச் சொல்லி ஏமாற்றி சாந்தி, கிரகப் பிழை என்பவைகளால் ஒரு கூட்டத்தினர் காசு பறித்து நோகாமல் வயறு வளர்க்கப் போதிய சாதனங்களாகவிருக்கிறது என்கிற முறையில் அது மிகவும் கண்டிக்கத் தக்கதாகவே இருக்கிறது. தற்கால விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் எந்த நவக்கிரகங்களின் பலா பலன்களைத் தெரிந்து அவற்றின் மூலமாக உலகுக்கு மிகவும் உபயோகப்படும் படியான சாதனங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு உதவினார்களென்று தோழர். சி.கே.சுப்பிரமணிய முதலியார் சொல்ல முற்படுவாராவென்று கேட்கின்றோம்.
தவிர, சுயமரியாதைக்காரர்கள் எந்த மகாநாட்டில் எந்தக் கொடியேற்று விழாவில் ராகுகாலம் நல்ல நாள் பார்த்து ஆற்றினார்களென்பதையாவது விளக்குவாரா? எந்தச் சோதிட சாஸ்திரம் தேவை என்கின்றாரோ அதே சாஸ்திரம் சொல்லி வந்த ரிஷிக் கூட்டங்களில் சேர்ந்த 'மனோஜயந்து மாண்டவ்ய' என்ற “மாண்டவ்யர்” என்பவரின் உறுதி மொழியை தோழர் சி.கே. சுப்பிரமணியம் அறியார் போலும். அதாவது நாள்கள் சமயங்களைப் பார்த்துச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைக் காட்டிலும் மனமானது திடப்பட்ட காலத்திலேயே செய்தல் நலமென்று சொல்லிய மாண்டவ்ய மகரிஷியின் வாக்கியங்களைக் கவனித்திருப்பாரேயானால், அவலை நினைத்து உரலை இடித்தற்கொப்பாக சோதிடத்தை நினைத்துச் சுயமரியாதைக்காரரை இடித்தெழுதித் தாக்கி இருக்க மாட்டார். மேலும் இவருக்காவது சோதிட ஆராய்ச்சி இருந்திருக்குமானால் திருஞான: சம்பந்தர் பிறந்ததைச் சொல்லும் பெரிய புராணச் செய்யுளின் பிரகாரமும் அதன் கீழ் வரைந்துள்ள பொருளின் பிரகாரமும் யோசித்து பார்த்திருந்தால், அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென எழுதியிருக்கமாட்டாரென நினைக்க வேண்டி இருக்கிறது. எப்படி எனில் திருஞான சம்பந்தர்
பிறந்த காலம் ஒன்பது கிரகங்களும் உச்சம் என்றும் நல்ல லக்கினம் என்றும் நக்ஷத்திரம் திருவாதிரை என்றும் காணப்படுகிறது. ஒன்பது கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகும். சூரியன் உச்சம் பெற்றான் என்றால் அவன்
உச்ச வீடாகிய மேட ராசியிலிருக்க வேண்டுமென்பதாகும். அதுபோல் சந்திரன் உச்சம் பெற்றான் என்றால் அவன் இடப ராசியிலிருக்க வேண்டும். சந்திரன் 2% இரண்டேகால் நக்ஷத்திரத்திற்கு ஒரு ராசி வீதம் அஸ்வனி நக்ஷத்திரம் முதல் கார்த்திகை கால்பாகம் வரை மேஷ ராசி கார்த்திகைபின் முக்காலும் ரோகணியும் மிருகசீர்ஷம் முன்னரையும்
குடி அரசு (புரட்சி) - 1984] அ 34
சேரும்வரை சந்திரன் இடப ராசியிலிருப்பான். பிறகு மிருகசீர்ஷம் பின்னரையும் திருவாதிரையும் புனர்பூசம் முன்முக்காலும் சேர்ந்து சந்திரன் மிதுன. ராசியிலிருப்பான் என்பது சோதிட அரிச்சுவடியின் பாடம். திருவாதிரை
நக்ஷத்திரத்தில் திருஞானசம்பந்தர் பிறந்திருப்பாரே யானால் சந்திரனுக்கு உச்சம் எப்படி ஏற்படும்? சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசியாயிற்றே! இப்படி இருக்க கிரகம் 9ல் சந்திரனும் ஒருவனாகும்போது அவனுக்கும் உச்சமெங்கே? சோதிட சாஸ்திர ஆராய்ச்சியில் அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென்றால் யாருக்குக் கூடாதென்பதுதான் தெரியவில்லை. ஒருக்கால் திருஞானசம்பந்தர் சரித்திரத்தைச் சொன்ன பெரியபுராண: கர்த்தாவுக்கா? அல்லது அதை வசனமாக மொழி பெயர்த்தவருக்கா? அல்லது அவைகளைச் சொல்லி திரிகிற சைவப் பெரியார்களில் ஒருவரெனவும் தமிழ்ப் பண்டிதர்களில் ஒருவரெனவும் நடித்துத் திரியும் தோழர் சி.கே. சுப்பரமண்ய முதலியார் பி.ஏ. அவர்களுக்கா? அல்லது சாஸ்திர ஞானத்தில் அரை குறை கூடாதென இவரெழுதும் வியாசத்தின் காரணமாக வம்புக்கிழுக்கப்பட்ட சுயமரியாதைக்காரருக்கா? என்பதுதான்
நமக்குப் புலப்படவில்லை. உலகமானது கிருஸ்துவர், மகம்மதியர்,
புத்தர், சமணர் முதலிய பல்வேறு மதத்தையும் இயக்கத்தையும் கொண்ட சமூகங்களை அடக்கிக் கொண்டிருக்கும்போது சோதிடத்தை ஒப்புக் கொள்ளாத சுமார் 100க்கு 95க்கு மேல்ப்பட்ட மக்கள் இவ்வுலகப் பரப்பிலிருக்கிறார்கள் என்பதாக ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், தன் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும், தன் மதிப்பாலும் அனேக நூதன. விஷயங்களையும் சாதனங்களையும் விஞ்ஞான சாஸ்திர மூலம் மக்களுக்குப் பயன்படுத்துமாறு கண்டுபிடித்து மக்களுக்கு உதவி வரும்
இக்காலத்தில், மதம் மக்களுக்கு அபின் என்று கண்டுகொண்டு அவைகளை உதறித் தள்ளிவரும் இக்காலத்தில், மூடப்பழக்க வழக்கங்களும் ஜாதி சமயங்களும் மக்களுக்கு அடிமைப் புத்தியையும் அறியாமையையும் உண்டாக்கி பாழ்படுத்தி வருகிறதென்றறிந்து அவைகளை வேறுடன். களைந்தெறியும் இக்காலத்தில், மாண்டவர்களை எப்படிப் பிழைப்பிப்பதென. ஆராய்ச்சி செய்து அத்துறைகளிலும் வெற்றிகரமான முடிவுகளையும் அநுகூலங்களையும் அடைந்து வரும் இக்காலத்தில், மக்கள் இன்னமும் எப்படி சுகித்துவரச் செய்யலாம் என்று ரஷ்யாவின் தலைவர் யோசித்துத் திட்டங்களைக் கற்பித்து வருமிக்காலத்தில், இதைப்பார்த்து அமெரிக்காவின் தலைவர் தம் நாட்டு மக்களின் பொருளாதார சங்கடத்தையும் மற்ற வேலையில்லாத சங்கடங்களையும் தொலைத்து சுகவாழ்வு ஏற்படுத்த எந்தெந்த திட்டங்களை உபயோகிக்கலாமென யோசித்து வரும் இக்காலத்தில், இதைப் போன்றே மற்ற நாடுகளில் சிலதுகளும் யோசித்து வரும் இக்காலத்தில், இவ்வித சோதிட சாஸ்திர வீண் ஆராய்ச்சிகளுக்கும், புரட்டுகளுக்கும் இடமேயில்லை என்று இங்கே குறிப்பிட விரும்புகிறோம் நமது தோழர் சி.கே. சுப்ரமணிய முதலியார் பி.ஏ. அவர்கள் “அரைகுறை B ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சாஸ்திர ஞானம் கூடா "தென்னும் கட்டுரை மூலம் சுயமரியாதைக்காரர்களைத் தாக்க நினைத்து எழுதியவற்றை ஆராயும் தோறும் அவர் விஷயத்தில் மணற் சோற்றில் கல்லாராய்வது'” போன்ற பாமர விஷயங்கள் காணப்படுமாயின் இவரது ஆங்கில பி.ஏ. பட்டத்துக்கும், தமிழ் புலமைக்கும், சமயப் பற்றிற்கும், சாஸ்திர ஞானத்திற்கும் என்ன மதிப்பேற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆயினும் இனிமேலாவது நமது இயக்கத்தவர்களை நமது முதலியாரவர்கள் தோழமை கொண்டு அவர்களிடமிருக்கும் உயர்ந்த தன்மைகளாகிற தன்னலங்கருதாமை, பிறருழைப்பில் வாழாமை, மக்கள் நலத்துக்காகவே தங்கள் உடல், பொருள், ஆவிகளைத் தத்தம் செய்துழைத்தல் முதலிய பொதுநலச் சேவைகளையும், தூக்கு மேடையிலும் கூட சுயமரியாதைக்காரர்கள் இல்லாதவைகளைச் சொல்லி இவரைப் போல் தற்பெருமைக்கு இச்சிக்கமாட்டார்கள் என்பவைகளையும் உள்ளபடி அறிந்து தமது பட்டம் பதவிகளுக்குத் தகுதியாகவும் சைவர் என்பதற்குத் தகுதியாகவும் தமது மனப்பான்மைகளை மாற்றிக் கொண்டு ஒழுகுவார் என்னும் நம்பிக்கையில் இதைப்பற்றி விரிக்காமல் இத்துடன் விட்டனம்.
புரட்சி - தலையங்கம் - 21.01.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 29
தோழர் 0.0. சீனிவாசன் மறைவு
கொச்சி ஈழுவ சமுதாய வீரரும் பிராமணரல்லாதார் இயக்கத்தின் உயரிய மேம்பாட்டிற்கு ஆரம்ப கால முதல் பெரிதும் உழைத்தவரும் சமதர்ம லட்சியத்தில் தீவிர பற்றுடையவருமாகத் திகழ்ந்த சென்னை தோழர் 0.0. சீனிவாசன் அவர்கள் 18-1-34ல் பஸ் விபத்தால் அகோர மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். தோழர் 0.0. கனிவாசன் அவர்கள் பாழான வர்ணாச்சிரம தர்மத்தையும் அதைப் போன்றதான இன்றைய முதலாளி - தொழிலாளி, பணக்காரன் - ஏழை என்ற கொடுமைகளையும் அறவே அகற்றப் பெரிதும் துணிவோடு தொண்டாற்றிய வாலிப வீரராவார். வாலிப உலகம் ஆண்மை, தியாகம் என்ற இரு குணங்களையும் பின்பற்றுவதற்கு அவர் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர். உதாரணமாகச் சென்ற மூன்று வருஷங்களுக்கு முன்பு கொச்சி சமஸ்தான 834.13.2. யோகத்தில் தலைமை தாங்கி மதப் பிரசாரத்தையும் உயர்வு தாழ்வுக்கான பொல்லாத வர்ணாஸ்ரமத்தையும் பற்றி வடநாட்டு பெருத்த பழுத்த வைதீகப் பண்டித மதன் மோகன மாளவியா அவர்கள் நெஞ்சில் மான ஈனமில்லாது பேசியகாலையில் நமது அருங்குணங்களமைந்த
வீரர் ஆண்மையோடு தீப்பொறி பறக்கத் தனது தொப்பியை (10 அவர் முகத்திற்கு நேரே வீசி அவரது பிரச்சாரம் சிறிதும் செலாவணியாக விடாமல் மாளவியை உடனே மலையாள நாட்டை விட்டு விரட்டிய பேராற்றல் மிக்கவரில் குறிப்பிடத்தக்க முக்கியஸ்தராவர்.
நாற்பது ஆண்டுகளே நிறைந்த வீர சீனிவாசனை வாலிப உலகம் இழக்கப் பெரிதும் துயருறுகிறது என்பதில் ஐயமில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஆசார சீர்திருத்த மகாநாட்டில்தான். தமிழர்களின் உயரிய வாழ்க்கைக்கு வீரகர்ஜனை செய்து மைலாப்பூர் பார்ப்பனீயத்திற்குக் குழி தோண்டிப் புதைத்து, தமிழர்களின் ஆண்மைக்கு ஆக்கம் தேடிக் கொடுத்த சீரியராவார். இப்பேர்க்கொத்த நமது தோழர் சீனிவாசன் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோமெனினும் இயற்கையின். போக்கை உணர்ந்த நாம் அதன் மூலமே ஆறுதலுறுவதோடு அவரது அருமை மனைவியாரும், குடும்பத்தாரும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகின்றோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 21.01.1934
27 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சீழ்ஸ்டர் தெ. 14, 20D, “பவறு அளிப்பதில் ஒரு அள ரட்ச
L வெளியும், கற்பவை அவெ By e, சகட T ———) | அம
என் அவமரியாதை இயக்யத்நில் செரவேண்டும்1
காழ்தியக்ரை ஒழிப்பு வர்ணுபிசொம்கை ஓழிப்ப தானாம்,
‘e PR ஒணாதுமாிஸ னள grmary g ) Sk e @i, gy ணம g pE g ey, wmbiyard,,
ரின் கையாண்ட காந்தாரி.
ஈ.வெ. ராமசாமிக்கும்
௪.ரா. கண்ணம்மாளுக்கும் “ஜே?
நமதியக்கங் கண்ட தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் மீதும், தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்கள் மீதும் சென்ற அக்டோபர் மாதம்
29-ந் தேதியில் “குடி அரசி”ல் எழுதிய இன்றைய ஆக்வி ஏன் ஒழிய வேண்டும்” என்கிற தலையங்கத்தின் காரணமாக சர்க்காரால் துடரப்பட்ட ராஜநிந்தனை வழக்கை விசாரித்து வந்த கோவை ஜில்லா நீதிவான். ஆகிய தோழர் ஜி.டபள்யூ. வெல்ஸ், ஐ.சி.எஸ். அவர்கள் சென்ற ஜனவரி
மாதம் 24-ந் தேதியன்று கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு 6- மாதம் வெறுங் காவல் தண்டனையும் 300 ரூபாய் அபராதமும் தோழர் சா.ரா. கண்ணம்மாள் அவர்களுக்கு 3-மாதம் வெறுங் காவல் தண்டணையும் 300 ரூபாய் அபராதமும், ஷி அபராதத் துகை செலுத்தாத பக்ஷம் மேற்கொண்டு தலா ஒவ்வொருமாதத் தண்டனையென்றும் தீர்ப்பளிக்கப்பட்டு காவலிலிருந்து வருகிறார்கள். எழுதப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது, தண்டிக்கப்பட்ட விஷயம் தப்போ, சரியோ என்றாவது தற்போது
நாம் கூற முன்வரவில்லை. ஏனெனில் அவைகளை வாசகர்களே நன்கறிந்திருக்கலாமென்கிற நம்பிக்கையேயாகும்.
ஆயினும் நமதியக்கத்தவர்களும் நமதியக்கத்தில் அபிமானமும், அனுதாபமும் கொண்டவர்களும் இனி என்ன செய்ய வேண்டுமென்பது தான் தற்போது எழ வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். இவ்விதப் பிரச்சினையைத் தீர்க்கத் தற்சமயத்தில் நாம் ஆராய்ந்து அதற்கேற்றபடி நடத்த வேண்டிய பொறுப்புக்குட்பட்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. அதாவது நமது தமிழ்நாட்டில் நமதியக்கத்தின் பேரால் நிறுவப்பட்டிருக்கும் சங்கங்களின் எண்ணிக்கையானது நமது காரியாலயத்திற்கு இதுகாறும் கிடைத்திருக்கும் தகவல்களிலிருந்து அறியக் கூடியது சுமார் நூத்திப்பத்து என்பதாகும். நமது தோழர்கள் சிறைப்பட்டதிலிருந்து இனிமேல் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் நமதியக்கச் சங்கங்கள் நிறுவப்பட்டு அவைகளுக்குத் தலைமையாக ஒரு சங்கம் அவைகளின். தாலூக்கா தலைநகரில் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படுகிற தாலூக்காக்களின் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கமாக தாலூக்காக்களின் ஜில்லாக்களின். 2 ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தலைநகர்களில் தலைமைச் சங்கங்களாக நிறுவப்பட்டு, ஒவ்வொரு சங்கங்களிலும் அங்கத்தினர்களை ஏராளமாகச் சேர்க்கப்பட்டும் பிரசாரங்களை முன்னிலும் அதிகமாக மக்களுக்கு சமதர்ம உணர்ச்சியுண்டாகும் படியாகவும்
சர்க்கார் மீது எவ்வித துவேஷ உணர்ச்சி உண்டாக்காமலும் நமதியக்க உணர்ச்சியையே முன்னிலுமதிக ஊக்கங்களுடன் முன்னேறும்படி உண்டாகுமாறு பிரசாரம் செய்து வரவேண்டும். அதனால் மக்களுக்குள் ஒருவித வித்தியாசமற்ற ஒற்றுமையை உண்டாக்கி, அறியாமையையும் அடிமைப் புத்தியையும், மூடப்பழக்க வழக்கங்களையும் வேரோடு களையும்படியான திறன் உண்டாகும்படிக்கும் பிரசாரங்கள் நடைபெற வேண்டியதே முக்கியமான கடமையாகும்
அப்பொழுதுதான் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் சர்க்கார் உள்ளபடி அறிந்து தாம் (சர்க்கார்) நமதியக்கத்தின் பேரில் கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ளவும் நம்முடன் சேர்ந்துழைத்து நமது இயக்கத்திற்கேற்ற சட்டங்களையும், திட்டங்களையும் உண்டாக்க முற்படவும் எத்தனிப்பார்கள். நமது நாட்டு மக்களுக்கு ஒரு விதப் புத்துணர்ச்சியும் உண்டாகலாம். நமதியக்கத்தின் கொள்கைகளையும் தத்துவங்களையும் நம் மக்களிடையில் பரப்பி வருவதில் செய்ய வேண்டிய பிரசாரத்தின் மூலமும், எழுத வேண்டிய கட்டுரைகள் முதலியவைகளின் மூலமும் நமக்கேற்படுகிற அனேகமாயிரக்கணக்கான எதிர்ப்புகளுக்கும், முட்டுக்கட்டைகளுக்கும் சர்க்கார் தண்டனை முதலிய இன்னல்களுக்கும் எதிர்பார்த்துத் தயாராகவுள்ள தியாகத்தோடுள்ளவர்களுக்கேதான் அவைகள் கைகூடிவரும் என்பது ஒவ்வொரு இயக்கத்தின் ஸ்தாபகர்களுடைய சரித்திர வாயில்களால் நன்கறிந்தவைகளானபடியால் அதை நாம் இங்கு சொல்லத் தேவை இராதென்றே நினைக்கிறோம். ஆகையால் நமதியக்கத் தத்துவங்களையும், கொள்கைகளையும் நம்நாட்டு மக்களிடையில் பரப்பி அவர்கள் யாவரும் மற்ற நாட்டு சமதர்ம இயக்கத்தவர்களுடன் சமமாக பசி, தரித்திரம், அறியாமை, அடிமைத்தன்மை முதலிய பிணிகள் அணுகாமல் சுகமாக அதாவது செல்வவான்களுக்கொப்ப தங்கள் வாழ்க்கையை நடத்தி சுகம் பெற்று வாழ்ந்து வரவேண்டுமென்கிற ஒரு கருத்து கொண்டுதான், தமது உடல், பொருள், ஆவிகளைத் துறந்து மனமொழி காயங்களால் இராப்பகலன்றி உழைத்து வந்தவர்கள், இன்று அதே காரணத்திற்காக சிறையிலிருக்க நேர்ந்திருக்கிறது என்றால், எந்த இயக்கத்திற்காகவும், எந்தக் கொள்கைக்காகவும், எந்த எண்ணத்திற்காகவும், எந்த நலன்களுக்காகவும் சிறைப்பட்டார்களோ அந்தந்த கொள்கையும், எண்ணமும், நலன்களும் நம்நாட்டு மக்களுக்கு உண்டாகி வாழவேண்டும் என்கிற எண்ணமுடைய ஒவ்வொருவரும் இனிச் செய்ய வேண்டிய தென்னவென்பதில் தங்கள் தங்கள் கருத்தைச் செலுத்திப் பார்த்தால் எவ்வித முன்னேற்றங்களுக்கும் சங்கங்களும், பிரசாரங்களுமே உற்ற துணையாகும். ஆகையால் அவைகளை முன் தெருவித்துக் கொண்டபடி
குடி அரசு (புரட்சி)- 1994) — 130
நிறுவி பிரசார மூலம் நமது மக்களுக்கு விடுதலையளிக்குமாறு நமதியக்கத் தோழர்களையும், நமதியக்கத்தில் அனுதாபமும், அபிமானமும் உள்ள தோழர்களையும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகிறோம்
மற்றும் நமது கொள்கை சமதர்மமும், சமத்துவமுமானதற் கேற்றபடி நமதியக்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் சமானமானவர் களேயாவர்கள். நமது ஈ.வெ.ரா. உடனும் சா.ரா.க.வுடனும் மற்றுமுள்ள இயக்கத்தவர்களும் சமமேயாவார்களாகையால் தற்பொழுது நமதியக்கப் பிரசாரங்களிலும் மற்ற நிர்மாண வேலைத் திட்டங்களிலும் ஒரு ஈ.வெ.ரா.வும், சா.ரா.க.வும் இல்லாதபோது நமதியக்கத்திலுள்ள அனைவர்களும் அவர்களைப் போலராகி அவர்கள் தற்போது நம்மிடையில்லாத குறையை நிவர்த்திக்க முற்படுவார்களென்றே நம்புகிறோம்
- ஈ.வெ.கி.
புரட்சி - தலையங்கம் - 28.01.1934
3 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தோழர் K. ராமசாமி
நமது ஈரோடு முனிசிபல் கவுன்சில் செகரிடரி தோழர் K. ராமசாமி (முதலியார்) அவர்கள் அடுத்த பிப்ரவரி மாத முதல் வேலூர் முனிசிபாலிட்டிக்குக் கமிஷனராக சென்னை சர்க்காரால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் சந்தோஷமடைகிறோம். தோழர் 16 ராமசாமி அவர்கள் சென்ற 10 வருஷங்களாக நமது ஈரோடு. முனிசிபாலிட்டியில் நல்ல தேர்ந்த அனுபவம் பெற்றவர். ஈரோடு நகரின் உயரிய மேம்பாட்டிற்கும், தண்ணீர் வசதிக்கும், சுகாதார நலனுக்கும், உல்லாசகாலப் போக்குக்கான வசதிகளுக்கும் தகுந்த நிர்மான வேலைகளைச் செய்தவராவார். இவர் கீழ்தர முனிசிபல் ஊழியர்களின் மேம்பாட்டிற்கு அரும்பாடுபடுபவர். முனிசிபல் போன்ற ஸ்தல ஸ்தாபன கீழ்தர ஊழியர்களுடைய உத்தியோகத்துக்கும் சந்தோஷ வாழ்வுக்கும் சர்க்காரின் உத்தரவாதம் அவசியம் வேண்டற்பாலது என்ற உயரிய கிளர்ச்சியில் ஈடுபட்டவராவர். இவர் ஈரோடு நகர மக்களின் நன்மதிப்பையும், முனிசிபல் கவுன்சிலின் முழு நம்பிக்கையையும் பெற்றவர்.ஆகவே இப்பேர்ப்பட்டதோழர் K. ராமசாமி அவர்கள் நமது ஈரோடு முனிசிபாலிட்டியை
விட்டுப் பிரிகிறார் என்ற முறையில் வருந்துகிறோமென்றாலும் அவர் வேலூர் முனிசிபாலிட்டியின் கமிஷனர் பதவிக்குச் சென்னை சர்க்காரால் உயர்த்தப்படுகிறார் என்ற முறையில் நாம் சந்தோஷப்படுவதோடு அவர். மென்மேலும் நல்ல பதவிகள் பெற்று நாட்டு மக்களுக்கு ஸ்தல ஸ்தாபன இலாகாவில் நலன் பல செய்ய இச்சிக்கின்றோம்.
புரட்சி - துணைத் தலையங்கம் - 28.01.1934
குடி அரசு (புரட்சி)- 1994) அட 1
தற்காலம் நமக்கு வேண்டியதென்ன?
தற்காலம் நமது நாட்டுக்கு வேண்டியது வர்ணாஸ்ரமமாகிற (மக்களுக்குள் ஆண்டானடிமை, உயர்ந்தோன், தாழ்ந்தோன் வேறுபாட்டுகளை
விர்த்தி செய்கிற) வெறியைக் கிளப்ப மக்களுக்குள் பரப்பி வர வேண்டுமா? அல்லது மக்கள் யாவரும் பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை என்கிற சமத்வக் கொள்கைகளைக் கிளப்பி அவைகளை மக்களுக்குள் பரப்பி வரவேண்டுமா? ஆகிய இந்த இரண்டு கேள்விகளைப் பற்றியும் நமது மக்களிருக்கும் நிலைமையையும், அந்தஸ்தையும் பற்றியும் யோசித்து தற்காலம் இவ்வித வேறுபாடுகளை ஒழித்து வந்திருக்கிற அந்நிய நாட்டு
மக்கள் நிலைமையையும் அந்தஸ்தையும் கவனித்துப் பார்த்தால் நம்
நாட்டின் மக்களுக்கு இத்தருணத்திற்கு வேண்டியது எது என்பது விளங்காமற் போகாது. ஆகையால் வர்ணாஸ்ரம மொழிந்த சமத்வக் கொள்கையாகிற நன்மருந்தே இன்றியமையாத சாதனமாகும். ஏனெனில்
நம் நாட்டு மக்களை வெகு காலமாகப் பீடித்து அடிமை, அறியாமையாகிய கொடிய நோய்வாய்ப்படுத்தி உருவழித்து வரும் சமயம், சாதி, ஆச்சிரமம் முதலியவைகளுக்கு தாத்காலிகத்திற்கேற்ப உய்விக்கக் கூடியது அம்மருந்தேயாகும் உதாரணமாக வர்ணாச்சிரப் பேதமில்லாத (பிறப்பினால் உயர்வு தாழ்வில்லாத) கிருஸ்துவ, முஹம்மதிய, புத்த என்கிறவைகளுக்குட்பட்ட ஜன சமூகஸ்தர் இன்றைக்கும் அரசாட்க்ஷி புரிந்து வருவதும் வேற்றுமைக்குட்பட்ட நம்மவர்கள் வேற்றுமைக்குட்படாத மூன் சொன்னவர்களால் ஆளப்படுவோர்களாக வாழ்விலும், பேச்சிலும்,
எழுத்திலும், நடத்தை அநுபவம் முதலியவைகளிலும் சுதந்திரங்களை:
இழந்து அடிமைகளாகவும் அறியாமையால் சூழப்பட்டவர்களாகவுமே வாழ்ந்து வருவது நிதர்சனமாகப் பார்த்து வருகிறோம். இன்னமும் சொல்லப்
புக்கால் உலகத்தில் சிறந்து மேம்பாடடைந்து வரும் வளர்ச்சிக்கு ஆதாரமாயுள்ள நாகரீக முதிர்ச்சியின் பயனாய் ஏற்பட்டிருக்கிற மதமொழிப்பு என்னுங் கொள்கையினால் மதமென்பதேயில்லாத ஒரு தேசத்தில் (ரஷ்யாவில்) பார்த்தால் மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வில்லை என்பதோடு ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடுகூட ஒழிந்து யாவரும் சமமென்பதைக் காண்கிறோம் B ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இப்படியாக மேன்மேலும் நாகரீகம் விர்த்தியாகி அதன் மூலம் மக்கள் விடுதலையடைந்து சமூகம் விருத்தியடைந்து வரும் இக்காலத்திலும் அவ்வித விருத்திகளுக்கு முள்வேலி இட்டது போலுள்ளதற்கேற்றபடியாகிற வர்ணாச்சிரம தர்மம் இருக்க வேண்டுமென்றும் அதன் பயனாக ஒரு
சிலர் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு விட்டார்கள், அவர்களை உத்தரிக்க மீண்டும் அவ்வித வர்ணாஸ்ரமத்துக்குட்பட்ட ரீதியாக ஆதரிக்க வேண்டும், அதற்காக நிதி திரட்ட வேண்டுமென்றும், அந்நிதிக்கு எவரும் தங்களாலியன்றவைகளை என்னிடம் தாருங்கள் என்றும் சொல்லி சர்வ வல்லமையுள்ள வஸ்துவென்று சொல்லப்படுகிறதே உருவெடுத்து வந்தது என்று வைத்துக் கொண்டாலும் அப்படிப்பட்ட ஒரு பெரியார் எவராயினும் அவரை நம்நாடு தற்போதிருக்குமிவ்வித நிலைமைகளிலும் வரவேற்கலாமா? அல்லது பஹிஸ்கரிக்கலாமா? வென்பதை நமது நேயர்களுக்கே யோசித்துப் பார்க்கும்படி விட்டுவிடுகிறோம்
இன்னமும் நாம்தான் இவ்விதம் யோசிக்கிறோமாவென்றால் வர்ணாக்சிரமங்களை நிலை நாட்டி வைப்பதற்கென்றே பரம்பரையாக இருந்து வருபவர்களுக்கெல்லாம் குரு அதாவது ஜகத்குரு சங்கராச்சாரியாரும் கூட இத்தகைய பெரியாரின் தன்மையைக் கண்டித்து வருகிறார். உதாரணமாக, பூரி சங்கராச்சாரியார், தேவகோட்டையில் சில வாரங்களுக்கு முன்பு பேசியிருப்பதை வாசகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.
அதாவது “காந்தி ஒரு ஹிந்துவாக இருந்து கொண்டு தீண்டாமை யொழிப்பு பேச உரிமையில்லையென்று வேதங்களில் 259 ஆதாரங்கள் இருப்பதாகவும், விக்கிரக ஆராதனையொழிப்புக்காரரான ஆர்ய சமாஜத்தாரையும் அவர் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
என்றும், வடஇந்தியாவில் ஆரிய சமாஜிகள் ஆதிதிராவிடர்களுக்கு ஆலயப்பிரவேசம்வேண்டுமென பலத்தபிரளாரம் செய்கிறார்களென்றும், மத்தியில் ஏதும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் நான் சொல்லுகிறேன் என் அபிப்பிராயம் அப்படித்தான் செய்ய வேண்டுமென்பதுதான் வீரர்கள் வழக்கமென்றும், இயேசுக் கிறிஸ்து, மகம்மது முதலியவர்கள் அப்படித்தான் செய்தார்களென்றும், ஆனால் காந்தியோ “வருணாச்சிரமம் உண்டு, ஆதிதிராவிடருக்கு கோவில் பிரவேச உரிமையும் வேண்டும்” என்று சொல்லுவது
வீரர் வாழ்க்கை யாகாதென்றும், அவர் சூழ்ச்சி செய்து மக்களை
ஏய்க்கப் பார்க்கிறார் என்றும், அதற்கு ஏமாறக்கூடாதென்றும் கூறி, மேலும் குறிப்பிட்டதாவது நாஸ்திகத் தலைவர்கள் பலரை எனக்கு நேரில் தெரியும். அவர்களுக்கு வேதத்தில் நம்பிக்கை யில்லை யென்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொள்கையை பிரசாரம் செய்கிறார்கள். அவர்கள் நேர்மையை நான் போற்றுகிறேன். ஆனால் காந்தியோ சூழ்ச்சி செய்கிறார்"
குடி அரசு (புரட்சி)- 194) ஆட 31
என்பதாகும். மற்றும் இப்பெரியார் யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு உத்தரிக்கப்போகிறார்களோ, அத்திருக்குலத்தடியார்களாகிற ஹரிஜனங்களென்று சொல்லப்பட்டவர்கள்கூட சென்னையிலும், கொச்சி, திருவாங்கூர் முதலிய மலையாள நாடுகளிலும் விருதுநகர் போன்ற இடங்களிலும் இன்னும் மற்ற பிரதேசங்களிலுள்ளவர்கள் ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகச் சேர்ந்து எங்களை உத்தரிக்க தாங்கள் வேண்டுவதில்லை என: ஆயிரம், பதினாயிரம், லக்ஷம் கையெழுத்திட்ட அறிக்கைப் பத்திரங்களையும் அப்பெரியார் முன் சமர்ப்பிக்கப்பட்டும் வந்திருக்கிறது
இது மட்டுமல்ல இன்னும் இப்பெரியாருக்கு இவர் செல்லு மிடங்களிலெல்லாம் பகிஷ்காரங்களும் நிகழுமென்பதற்கு அநேக அறிகுறிகளும் காணப்படுகின்றன.
நம் நாட்டிற்கு இவ்விதமாக அவசியப்பட்டிருக்கிற இப்பெரியார்
பின் எதற்காக இங்கெல்லாம் விஜயம் செய்கிறார்? யார் யார் பெயரால் யார் யாரைப் பிழைக்க வைக்கப் பார்க்கிறார்? இவ்வித சுற்றுப் பிரயாணங்களாலும் நிதி திரட்டல், முடிச்சு வாங்கல்களாலும் யாருடைய முன்னேற்றம் விருத்தி? யாருடைய முன்னேற்றம் பாழ்? லாபம் யாருக்கு? நஷ்டம் யாருக்கு? என்பவைகளும் நம் நாட்டு மக்களுக்கு நிலைமைக்கு வேண்டுவது யாது? என்பவைகளைச் சிந்தித்து ஏற்ற வழிகளில் அவரவர்கள் கடமைகளைச் செய்ய முற்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்
புரட்சி - தலையங்கம் - 04.02.1934
3 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
வருத்தம்
நமது இயக்க பிரபல தோழர்களில் முக்கியஸ்றான தோழர் ஏ.பொன்னம்பலனார் அவர்களின் சகோதரர் மாணிக்கம் அவர்கள் நேற்று இரந்தார் என்பதையறிந்து விசனிக்கிறோம். சென்ற ஆண்டு தங்கையையும், இவ்வாண்டு தம்பியையும் பிரிந்த தோழர் பொன்னம்பலனாருக்கு நாம் ஆறுதல் கூற விரும்பவில்லை என்றாலும் வயோதிகர்களான அவரின் தாய் தந்தையர்களுக்கு ஆறுதல் கூற ஆசைப்படுகிறோம்
புரட்சி - இரங்கல் செய்தி - 04.02.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 196
பரோடா பெண்கள் முன்னேற்றம்
புதிய சட்ட விபரம்
பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இந்து சமுதாயச் சட்டத்தை பின்வருமாறு திருத்தி புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். திருத்தப்பட்ட அந்தப் புதிய சட்டப்படி ஒரு இந்து பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனால் அவருடைய விதவை அந்தக் குடும்பத்தில் ஒரு பங்காளி ஆகிவிடுகிறாள். விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஓர் பெரிய மாறுதலை உண்டுபண்ணி விட்டிருக்கிறதென்று சொல்லலாம். முந்தியெல்லாம் ஒரு விதவைக்கு அவள் புருஷன் குடும்பத்திலே சோறும், உடையும்தான். கிடைக்கும். வேறு எவ்வித உரிமையும் கிடையாது. இந்தச் சட்டப்படி ஒரு விதவையானவள் தன் புருஷன் குடும்பத்தின் மற்ற நபர்களைப்போல் ஒரு சம பங்காளி ஆகிவிடுகிறாள். சொத்தில் தனக்குள்ள பாகத்தைப் பிரித்துக்கொடுக்கும்படி கேட்பதற்குக் கூட இந்தச் சட்டத்தினால் உரிமை
ஏற்பட்டிருக்கிறது புருஷனுடைய சொத்து அவர் தானே சம்பாதித்த தனி சொத்தாயிருந்தால் பழய சட்டப்படி அவருடைய மகனுக்கும், பேரனுக்கும், பேரன் மகனுக்கும்தான் கிடைக்கும். இந்த வார்சுகள் இல்லாமலிருந்தால் மாத்திரம் விதவைக்குக் கிடைக்கும். இப்போது இந்தப்புதிய சட்டத்தினால் மகன், பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணும் சமபாகம் கிடைக்க உரிமை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. விதவையான ஒரு
மருமகளுக்கும், தாய்க் கிழவிக்கு அதாவது மாமியாருக்கு அடுத்தபடியான
அந்தஸ்து ஏற்படுகிறது இதற்கு முன்னெல்லாம் ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து கொடுத்துவிட்டால் அதன்பின் அவளுடைய தகப்பன் குடும்பத்தில் அவளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. புருஷன் வீட்டில் சாப்பாட்டுக்கு கஷ்டமாயிருந்தாலும் கூட அவளுடைய தகப்பன் குடும்பத்திலிருந்து சம்ரட்சனை பெற அவளுக்கு உரிமை இருந்ததில்லை. இதனால் பல பெண்கள் கஷ்டம் அனுபவிக்க நேரிட்டிருந்தது
இந்தப் புதிய சட்டப்படி இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது எப்படியெனில் புருஷன் இறந்தபின் ஒரு பெண் தன் தகப்பன் வீட்டிலேயே
37 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
வசித்து வருவாளானால், அவளுடைய மாமனார் வீட்டில் அவளுக்கு சம்ரட்சனை செலவு கொடுக்க வழியில்லாமல் இருக்கும்போதும் தகப்பனுக்கு அவளை வைத்துக் காப்பாற்ற சக்தி இருக்கும்போதும் தகப்பன் குடும்பத்தாரே அவளுடைய ஜீவனத்துக்கு பணம் கொடுக்கவேண்டும்
என்று இந்த புதிய சட்டம் கூறுகிறது கலியாண மாகாத பெண்ணுக்கு இதுவரையில் சம்ரட்சணையும் கலியாணச் செலவும் தான் கொடுக்கப்பட்டு வந்தது. சொத்து பாகப் பிரிவினை காலத்தில் இவ்விரண்டுக்கும் பதிலாக சகோதரனுடைய பங்கில் நாளில் ஒரு பாகம் கொடுக்கப்படுவதும் உண்டு. ஆனால் சொத்து பங்கு போட்டுக்கொடுக்கும்படி கேட்க உரிமை கிடையாது
இந்தப் புதிய சட்டப்படி அவள் தன் பாகத்தைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடும்படி கேட்கலாம். இதனால் கலியாண மாகாத பெண்களுக்கு அதிக சுதந்தரமும், சுயாதீனமும் ஏற்பட்டிருக்கிறது கீதன விஷயமான பாத்தியதையைப்பற்றி பழய சட்டத்திலிருந்த சில சிக்கல்களும் நீக்கப்பட்டிருக்கின்றன.
முந்தின சட்டப்படி பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துக்களை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம் - விற்பனை செய்ய முடியாது இப்போது பெண்கள் 12,000 ரூபாய் வரையில் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, அல்லது வேறு விதமாக வினியோகிக்கவோ ஷி புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது. இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும், மற்ற சமஸ்தானங்களிலும், இந்து சட்டம் திருத்தப்படுமாயின் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும்
புரட்சி - கட்டுரை - 04.02.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 199
துணுக்குகள்
ஆதிதிராவிடர் இல்லையோ?
அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில்
யார்? உட்கார்வது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி
சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது. வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான “சுதேசமித்திரன்” ஒரு ஐயங்கார், அல்லது ஐயர். கனவான் பெயரை சிபார்சு செய்வதுடன், முன்பு பனகால் காலத்தில் காபினெட்டில் ஓர் பிராமணர் இருக்க வேண்டுமென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று
ஓர் பிராமணர் அவசியம் என்று கூறுகிறது
இதுவரை பெரிய உத்தியோகங்களில் ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லீம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்துவிட்டார்கள் என்று நமது சகவர்த்தமானிக்கு இவைகளைக் கூறுகிறோம். ஆனால் இதுவரை
இந் நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தினரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இதுவரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதிதிராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி
இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!
நமது மாகாண ஆதிதிராவிட சமூகத்தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட்டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளது போன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படுகிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.
விதவையிலும் பணக்காரணீயமா?
நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் ஐஸ்ஹவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் 9 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார். அத்துடன் அவ் விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர்களென்றும் கூறியுள்ளார்.
விதவைகள் மணத்தை எதிற்கும் வைதீகம், வைதீகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம் விதவைகளில் கூடவா பணக்காரனீயமும், பார்ப்பனீயமும் இருக்க வேண்டும். இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஓர் பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும்பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டிருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பல முறை செய்தி வந்திருக்கிறது. கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப் போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறுகிறோம்
கேள்வி முறை ஏது?
சென்ற சட்டசபையில் கூட்டத்தில் “இனாம்தார்கள் குடிகள்" சம்பந்தமாக
ஓர் மசோதா செய்யப்பட்டதை எல்லா விடங்களிலும் கண்டித்து தீர்மானங்கள். அனுப்பப்படுகிறது. பத்திரிக்கையின் செல்வாக்கு இனாம்தார்களின் குடிகள் நன்மையைவிட, இனாம்தார்கள் நன்மை கோரியே பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. சர்கார் இம்மசோதாவுக்கு ஆதரவு காட்டியபோதிலும் அதை பயன்படாதடிக்க செய்யப்படும் முயற்சி மிக அதிகமாகும். இதற்குக் காரணம் இனாம்தார்கள்தான் பெரும்பாலும் பத்திரிக்கையைப் படிக்கும், ஆதறிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள், இனாம்தார்கள் குடிகளில் பெறும்பான்மையானவர்களுக்கு தங்களுக்கெல்லாம் நன்மையை கொடுக்கக்கூடிய திட்டம் ஒன்று வந்திருக்கிறதென்பதே தெரியாத விஷயமாகும். இனாம்தார்களின் குடிகள் அவர்களின் நலம் கருதி செய்யப்பட்ட மசோதாவின் செய்தியை அரியும்படிச் செய்ய
சர்க்கார் விளம்பர அதிகாரிகளாவது முயல வேண்டும்
எல்லாம் பொதுவுடமையா?
இனாம்தார்கள் குடி விஷயமாய் விவாதம் நமது சட்டசபையில் நடக்கும்போது ஓர் சட்ட நிபுணர் கூறினார். இனாம்தார்களுக்கு சொந்தமானதை பரிமுதல் செய்யும் உரிமை இச்சட்டத்துக்கு இருக்கிறது இது பொதுவுடமை தத்துவம் என்றார். மற்றோர் பிரபலஸ்தர் கூறினார் இச்சட்டம் செய்தல் ரஷ்ய பொதுவுடமையை வரவேற்பது போலாகுமென்றார் இதற்கு பதிலளித்த கனம் மந்திரியாரோ! இவ்விதம் சட்டம் செய்யாதிருத்தலானது ரஷ்யப் பொதுஉடமையை இங்கு கூப்பிட
குடி அரசு (புரட்சி)- 794) — 40
இடமுண்டாகுமென்றார். இவ்விதம் தொட்டதெல்லாம் பொதுவுடமையாக தோன்றுகிறது. இதைப்போன்றே ஐக்கிய மாகாணத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயிகள் கஷ்ட நிவாரண மசோதாவை, அம்மாகாண பேங்கர்கள் சங்கத்தார் தெரிந்து கவர்னருக்கு அனுப்பியுள்ள ஓர் மகஜரில் - பொதுவுடமைக்கொள்கையை இம் மசோதா மூலியம் ஒப்புக்கொள்வது போலாகிறது என்று காட்டியிருக்கிறது. இவ்விதம் பிரபுக்கள் சர்க்கார் செய்யும் ஒவ்வொன்றையும் - பொதுவுடமை என்று சொல்கிறார்களே! இதற்காக இவர்கள்மீது சர்கார் ஏதும் நடவடிக்கை எடுக்காதா?
பொக்கிஷமெம்பர் பொய்யரா?
நாட்டில் மிராசுதாரர்கள் துயரச் சத்தம் மிகவும் பலமாகப் போய்விட்டது. நிலவரி மட்டுமல்ல, தண்ணீர் வரியையும் சேர்த்து நூற்றுக்கு 25 விகிதம் குறைக்க வேண்டுமென்று நேற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்வாதத்தில் மிராசுதார்களோ வரி கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்கிறார்கள். கவர்ன்மெண்டு பொக்கிஷ மெம்பர் அவர்களோ மிராசுதார் கூச்சல் வெறுங் கூச்சல் என்கிறார். இருக்கும் ரிசர்வு பண்டைக் காலி செய்வதற்காகவே நிலவரி குறைக்கவேண்டுமென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். இவ்விரண்டில் எது உண்மை என்பதும், உண்மையாகவே கஷ்ட நிலையிலுள்ள விவசாயிகளை சர்க்கார் கவனிக்கிறார்களா? இல்லையா? என்பதும் நம்முடைய விவாதமல்ல. பொக்கிஷ மெம்பர் சொல்வதில் சிறிது உண்மையுண்டு. அத்துடன் மிராசுதார்களுக்கே இவ்வளவு கஷ்டமானால், மிராசுதார்களிடம் வேலை செய்யும் சோகமுடைய விவசாயக்கூலிகளின் நிலைமை என்ன? என்பதை சிந்திக்க மிராசுதார்கள் தவறமாட்டார்கள் அல்லவா? அவர்கள் குறைகளை சொல்ல எந்த சட்டசபை இருக்கிறது!
தேர்தல் நாடகமா?
தாலூகா போர்டுகளை ஒழித்து விடுவதா? இல்லையா? என்று கடைசி முறையாக சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. கனம் முதல் மந்திரியார் இன்றுள்ள 208 தாலூகா போர்டுகளில் பாதி போர்டுகள். தங்கள் செலவுக்குக்கூட வழி தேடிக்கொள்ள முடிவதில்லை என்கிறார். ஆதலால் 208 போர்டுகளையும் இழுத்துப் பூட்டிவிட வேண்டுமென்கிறார். இது இன்றைய மந்திரி மூயற்சிமட்டுமல்ல. சென்ற ஏழு வருடமாக இருந்த மூன்று மந்திரி சபையும் ஆதரித்த முயற்சியே யாகும். ஆனால் முன்பு மந்திரி கட்சியமைத்தவர்களே இன்று இதை எதிர்க்கிறார்கள். எதிர்ப்புக்குத் தோதாகப் பல நியாயங்களைக் கூறுகிறார்கள். ஏழு வருடங்களில் 500-க்கு மேற்பட்ட பஞ்சாயித்து சபைகள் உண்டாகிவிட்டது. தாலூகா போர்டுகளின் வருமானத்தில் பாதி பாகத்தை அது விழுங்கி AN ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
விடுகிறது. இதற்கு பஞ்சாயித்து போர்டுகளை கலைக்க வேண்டியதுதானா? 208 போர்டுகளுக்கு பயப்படுகிறவர்கள் 500 போர்டுகளுக்கு அதிகம் பயப்படுவார்கள். அடுத்த தேர்தலில் தாலூகா போர்டுகளைக் காப்பாற்றிய சலுகையைக்காட்டி, தங்கள் கட்சிக்கு தாலூகா போர்டுகளின் செல்வாக்கை உபயோகப்படுத்திக் கொள்ளவே சிலர் இன்று எண்ணுகிறார்கள். இன்றைய சட்ட சபையின் நிலைமையைதான் இவ்விவாதம் காட்டக்கூடியதாக இருக்கிறது.
புரட்சி - துணுக்குகள் - 04.02.1934
குடி அரசு (புரட்சி)- 1934 (1)) அ 43
20 புட்டி விழக வசிய ட ளி rr——— 1 பதிப்பக புஸ்ககா பருத்ததிவு அற்படப்வுச்கழக 1, வெளியிடு வதமும் பு - ளை
கைவற்யம் அல்கு க&ம்யொனம், பேண் என் அடையானால் பொறுவுடலைத்தத்துலல்கள் அல்கல் எக்கிக் இரமாயண ஆளா வு ்னுள்கள்ற களும் o dumb-Mn. ௨௫ நர்கோக்க்த
லிய புத்தகம் 1ல் அவ்வ ன ள் ௨௦ ன ல்ும்வகை கலே இராமரின்
மகாநாட்டுச் வத் ட
ம், சக்க பங்கஜம் அல்லது பா பார்ப்பன்கோடுக கற்றது வெங்கா? பல்லா?” இரக வீட கணட
[N ey e எங்கணும், நான் ஏன் இநில்தலனல்வி
அகர்தியர் ஆன்ற சஷ்பாலைப் பற்றி பெர்னுட்லு
கடவுவள: தித்திக்கும் அள் வாச்
கடவுளாம்,
Pt L புற்கள் வேண்டுவார் புறத் நல்கல் றக் ணு பாம வயாக பைப், o
நரன் வீல் களு டட, சத்தியால் சண்டுத்தமை?
கண்யாதப்பாடல் ட
P et ண்ட த உட
அங்கக் ம்
குடி அச புத்தகாலயம், ஈரோடு,
கனை கணை அத R TR வன்
மதத்தைத் தூஷிக்கும் மாபெருங் குற்றத்திற்கேற்பட்டுள்ன 295 ஏ- பிமிவுக்குன்ன வியாக்கியானத்தின்
விமர்சனமும் புத்தி நுட்பமும்
“நீசன்! என்னும் ஆங்கிலப் பத்திரிகையானது. ரோமன் கத்தோலிக்கர்களையும் முஸ்லீம்களையும் தாக்கி அன்னோர் மதங்களைப் புண்படுத்தக் கூடியதான கட்டுரைகளை எழுதி பிரசுரித்ததாக டாக்டர் ஸி.எல். டிவாய்ன் மீது கொண்டு வரப்பட்ட வழக்கைப் பொம்பாயில் மாகாணப் பிரதம நீதிவான் ஸர். ஹோர் மூஸ்டியர் தாஸ்துர் அவர்கள் விளாரித்துத் தமது சட்ட ஆராய்ச்சியின் நிபுணத்துவமான அறிவு நுட்பத்தால் பாரபக்ஷமற்ற நடுநிலைமையான தீர்ப்பளித்திருக்கிறார்.
தீர்ப்பிண் விபரமாவது:-
டாக்டர் சட்டத்தில் சொன்ன செய்கைகள் எண்ணங்கள் என்கிற பாகுபாடுகளின் தன்மைகளை அனுசரித்துத்தான் எந்தச் சட்டங்களும்,
பிரிவுகளும் அவைகளுக்குப் பலன்களும் அமைக்கப்பட்டிருப்பதை இது விவகாரத்தை விசாரித்த நீதிவான் உணர்ந்தவராதலால் இவரின் தீர்ப்பில் செய்கையைவிட எண்ணத்துக்கே மதிப்பளித்துத் தீர்ப்புக் கூறியிருக்கிறார்.
இத்தகைய நீதிவான்௧ளின் பாரபக்ஷமற்ற நடுநிலைமையாலும், சட்ட நிபுணத்வத்தாலும், விசாரித்தறியும் புத்தி நுட்பத்தாலுமே தான். “அரசாக்ஷி' என்னும் பதத்தின் உண்மையான பொருள்களால் மக்களுக்குள்ள இன்னல்களாகிற “சிறியதைப் பெரியது நலிதல்” முதலியன விலகி சமாதான முறையில் வாழ்விக்க முடியுமேயல்லாது நோக்கம்போலும் ஆளைப்போலும் தீர்ப்பளித்தால் அவர்களால் மக்கள் என்ன பலனை அடையமுடியும்? ஆகையால் இவ்விதத் தீர்ப்பை நாம் மனமார வாழ்த்துகிறோம்
அதாவது டாக்டர் டிவாய்னி “மூடநம்பிக்கையின்றிப் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்டு விஷயங்களைத் தீர்மானம் செய்யும் ஆற்றலுடையவர் என்கிற ஹோதாவில் அவர் மத சமுதாய சம்பந்தமான சில நம்பிக்கைகளைக் கண்டித்து கட்டுரைகளை எழுதி இருக்கிறாரே ஒழிய மற்றவர்களுடைய மத உணர்ச்சியைப் புண்படுத்த வேண்டுமென்கிற
45 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
உத்தேசத்தோடு எழுதவில்லை" என கூறியிருப்பதே மேற்படி வியாக்கியானத்தின் விமர்சனமாகும். மற்றும் “பகுத்தறிவற்ற மூடநம்பிக்கைகளை ஒழிக்க முற்பட்டுள்ள ஒரு ஸ்தாபனமானது சிற்சில. மதங்களின் சிற்சில நம்பிக்கைகளைக் கண்டித்துத்தான் தீரும். அவ்விதம் கண்டிப்பது அத்தகைய நம்பிக்கையுள்ள சிலருக்கு மனோ வேதனையைக் கொடுக்காமலிருக்காது என்பதே அந்த நியாயாதிபதியின் புத்தி நுட்பமாகும்
புரட்சி - தலையங்கம் - 11.02.1934
குடி அரசு (புரட்சி)- 194) ஆட 196
பத்திமிகாசியியர்
ஏ. ரங்கசாமி ஐயங்கார் மரணம்
ஏ. ரங்கசாமி ஐயங்கார் நீண்ட நாள் பத்திரிகை ஆசிரியராகவிருந்து
வந்ததின் பயனாக தென்னாட்டில் தமிழ் பத்திரிகையாகிய “சுதேசமித்திரன்” வாயிலாகவும், ஆங்கிலப் பத்திரிகையாகிய ''இந்து'' பத்திரிகை
வாயிலாகவும் மக்களுக்கு அரசியல் துறைகளை ஒருவாறு புகட்டிவருவதில்: முன்னேற்ற மடைந்தவராவார். அவர் மக்கள் விடுதலைக்கு போராடும்
வழிகளிலும் அவரது வர்ணாசிரம தத்துவங்களுக்கு எவ்வித உபாதைகளும் உண்டாக்காமல் பாடுபட்டு வருபவர்களில் தலைசிறந்து விளங்கினார்.
காங்கிரஸில் அவர் மிக்க ஊக்கத்துடனும், முயற்சியுடனும்
உழைத்துத் தன்வசமாக்கி தனது கருத்துக்கிசைந்த முறைகளில் தொண்டாற்றி
வந்தவராவார். எந்த காரியத்தில் ஆனாலும் தமக்கு வேண்டியதை எப்படியும் பிரவேசித்து செய்து முடிக்குந் திறமை வாய்ந்தவர்.
வர்ணாச்சிரமத்தை வெறுப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அவர்
எப்போதும் விரோதியாக இருந்துவந்தவரே அல்லர். அத்துடன் அவர்களை:
தமது பத்திரிகைகளிலும் மிகுந்த சலுகைகளுக்கு பாத்திரர்களாக்கியும் வைப்பார்.
பத்திரிகையை முன்னேற்றமடையச் செய்து அதைப் பெரும்பான்மையோரான மக்களிடம் பரவி வரவேண்டுமென்கின்ற விஷயத்தில் அவரெடுத்துக்கொண்ட சிரமமும், முயற்சியும் அளவிடற் பாலதன்று. இத்தகைய குணசமூகங்களோடு வாழ்ந்து வந்து தமது பகுதி வயதினில் நோய்வாய்ப்பட்டு தமது ஆருயிர்க் காதலி, காதலர்களையும், துணைவரையும் இஷ்டமித்திரர் பந்து ஜன சமூகங்களையும் விட்டுப் பிரிந்ததானது மிகவும் துக்ககரமானதாகும். அன்றியும் பத்திரிகை உலகத்திற்கும் மற்றுமுள்ள நண்பர்களுக்கும் ஒரு ஈடுசெய்யக் கூடாத நஷ்ட்டமேயாகும். இன்னமும் அவருடைய விரோதிகளுக்கும்கூட அவர். பிரிவானது அவ்விரோதிகளின் புத்தி கூர்மையையும் ஊக்கத்தையும் கொள்ளைகொண்டு விட்டதென்றே சொல்லலாம். நமது ஐயங்கார். ஆருயிர் துறந்தார் என்பதைக் கேழ்கும்போதே மனம் திடுக்கிட்டுவிட்டது
47 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இனிச் செய்வதென்ன இருக்கிறது. உலகம் இயற்கையின் வழிசென்று கொண்டிருக்கும்போது அதையேதான் சமாதானமாகக் கொள்ள வேண்டியவர்களாகிறோம்.
அவர் குடும்பத்தவர்களுக்கு நமது மனமாழ்ந்த துக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 11.02.1934
குடி அரசு (புரட்சி)- 194) அட 1
தோழர் சே. நரசிம்மன்
மாயனூர் கிராம சீரமைப்பு நிலையத்தின் தோழர் சே. நரசிம்மன் எம்.ஏ. அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டார் என்று அறிய பெரிதும்
துக்கிக்கிறோம். சமீபகாலமாக நமது “குடி அரசு”, “புரட்சி” வார இதழ்களில் அவர் எழுதிவந்த பாலும், தேனும் கலந்த கட்டுரைகளை வாசித்துப் புதிய உத்வேகத்தையும், இன்பத்தையும் பெற்றிருந்த நமது வாசகர்களுக்குப் பெரிதும் துக்கமேற்படுமென்பதிலும் ஐயமில்லை.
தோழர் நரசிம்மன் அவர்கள் பிறவியினால் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லிக்கொள்ளக்கூடியவரானாலும் அவர் பாழான பழைய வர்ணாஸ்ரம தர்மத்தையும், இன்றைய முதலாளி, தொழிலாளி என்பதான. வேறுபாட்டையும் எவ்வளவு தூரம் மனப்பூர்வமாக வெறுத்து அதை ஒழிப்பதற்காகவே இந்தியர் ஊழியர் சங்கத்தின் சார்பாகவும் நமது பத்திரிகைகளின் மூலமாகவும் தொண்டாற்றியுள்ளார் என்பதை நாம்
விரிக்க வேண்டுவதில்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு நமது கொள்கைகளை வலியுறுத்தி எழுதுவதில் மிகத் திறமைபெற்றிருந்த நமது அருமை நண்பரை நாம் இழந்தது ஒரு விதத்தில் பெரிய நஷ்டமேயாகும் அதிலும் வாலிப உலகத்திற்கு அவரது ஆண்மையும், தீவிர உணர்ச்சியும் பெரிதும் வேண்டற்பாலதான இந் நல்ல சந்தர்ப்பத்தில் நாம் அவரை இழக்க ஏற்பட்டது சமீபத்தில் ஈடுசெய்ய முடியாத நஷ்டமுமாகும் என்றாலும் துயரத்தால் வருந்தும் நம் தோழர் சே. நரசிம்மன் அவர்கள். குடும்பத்தாருக்கும், மாயனூர் கிராம சீரமைப்பு நிலையத்தாருக்கும் நமது துக்கத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 11.02.1934
9 மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தோழர் சி.பி. ராஜகோபால் பாரதி
பிற்போக்கான சமூகத்தார்களின் மேம்பாட்டிற்காகவும் நமது பெண்கள் சமூக விடுதலைக்காகவும் குறிப்பாக விதவைகளின் துயரத்தைப் போக்குவதற்காகவும் கடந்த பல வருஷங்களாக தளராது நல்ல ஊழியம்செய்து வந்த திருச்சி தோழர் சி.பி. ராஜகோபால் பாரதியார் அவர்கள் மரணமானைற்கு வருந்துகிறோம்
பெண்கள் முன்னேற்றத்திற்காக நல்ல அரிய நூல்களை எழுதி தமிழ் நாட்டிற்குத் தந்து உதவியதும் நாயுடு சமூக ஒற்றுமைக்காகவும் பெரிதும் பாடுபட்டு அகில இந்திய நாயுடுகள் மகாநாட்டை கோவையில் கூட்டுவித்து செய்த தொண்டையும், திருச்சி ஜில்லா விதவா விவாக சங்கத்தின் அமைப்பாளராகவும் தலைவராகவும் இருந்து செய்த அரிய ஊழியத்தையும் எளிதில் யாரும் மறத்தற்கியலாது. இப்பேர்க்கொத்தவர் தனது மிக வயோதிக திசையில் மரணமானது இயற்கையே யென்போம். அவரைப் பிரிந்த குடும்பத்தார்களுக்கு நமது அனுதாபம் உரித்தாகுக
புரட்சி - துணைத் தலையங்கம் - 11.02.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 90
தோழர் சிவப்பிரகாசம்
ஜஸ்டிஸ் கக்ஷியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும் செல்வாக்கு மிகுந்த வக்கீலும், சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலருமான தோழர் சிவப்பிரகாசம் முதலியார் அவர்கள் 2-2-34ல் திடீரென்று இறந்து போனதைக் கேட்டு வருந்துகிறோம். நல்ல அருங்குணங்களும் பொதுஜன. சேவை நோக்கம் மிகுந்தவருமாகத் திகழ்ந்த தோழர் சிவப்பிரகாசம் அவர்களின் மரணத்திற்கும் துயருறுவதோடு அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறோம்.
புரட்சி - துணைத் தலையங்கம் - 11.02.1934
ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இக்காலத்திலுமா பண்டை நாகரீகப் பெருமை?
பண்டைக்காலத்தில் நமது பாரதநாட்டில் தமிழர்களின் நாகரீகம் எப்படி இருந்தது என்னும் விஷயத்திலும் பாஷையானது எப்படி தனித்து விளங்கி வந்தது? என்னும் விஷயத்திலும் மக்கள் எப்படி வாழ்ந்து வந்தார்கள் என்னும் விஷயத்திலும் இன்னும் பலவாறான விஷயத்திலும் நமது வித்வ சிகாமணிகளும், பண்டிதமணிகளும் பேசித் தங்கள் அரிய காலத்தையும், புத்தியையும் செலுத்தி தற்போதைய மக்கள் நிலைமைக்குத் தங்களால் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தவர்களாக நினைத்துக் காலங்கடத்தி வருகிறார்கள். இது இந்தக் காலத்தில் நம்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முற்போக்கையுண்டு பண்ணுமென்பதையும் நம் மக்களுக்குத் தற்காலத்தில் எவ்விதமான உணர்ச்சியும், ஊக்கமும், நினைவும் வேண்டியிருக்கிறது? என்பதையும் யோசித்தால் நமக்கு வேண்டியது இதுவா? என்பது விளங்காமல் போகாது.
நம் நாட்டாரும் மற்ற நாட்டாரோடு சம வாழ்வு, சம அந்தஸ்து, சம உரிமை இல்லாமல் உழன்று பசி, தரித்திரம், நோய், அற்பமான வருவாய், சுதந்திரமற்ற அடிமை வாழ்வு முதலிய கொடும் வியாதிகளின்
மிகுதியால் அவதிப்பட்டு அல்லலுற்று வாழ்ந்து வரும் இந்நெருக்கடியான சந்தர்ப்பத்தில் என்ன செய்யவேண்டுமென்பதும், இத்தகைய இழிந்த நிலைமைகளுக்கு அடிப்படையான மூல காரணமென்னவென்பதைச்
சிந்தித்து ஊன்றி யோசிப்பார்களேயானால், இவ்விதமான பண்டைப் பெருமைகளால் வீண்காலக்ஷேபம் செய்யமாட்டார்கள் என்றே நினைக்கிறோம்.
ஏனெனில் தற்சமயம் நமது மக்களுக்கு மற்ற நாட்டு மக்களுக்கு அமைந்துள்ள வாழ்க்கைகளுக்குச் சமமாகவேனும் நமது மக்களின் வாழ்க்கைகள் அமையவேண்டுமாயின் முதலில் நமக்குள் சமத்துவத்தைப்
பரப்பி வரவேண்டியதே இன்றியமையாத தாகுமென்பதை யாவரும் மறுக்கத்தகாதவைகளில் முதன்மையாகு மென்பது நமது உறுதியாகும் அத்தகைய சமத்துவத்திற்கு நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் முதலிய வேறுபாடுகளை வேருடன் கில்லி எறிந்து தீரவேண்டும். இவைகளுக்குப் போதிய அறிவு வளர்ச்சிக்கேற்ற விஷயங்களைக் கல்வியின் மூலமாகவாவது அது துரிதத்தில் முடியாமற்போகுமாயினும் பிரசார மூலமாகவேனும்
குடி அரசு (புரட்சி)- 194) அட 9
சந்தர்ப்பத்திற்கேற்றபடி சாத்தியமான முறைப்படியாவது நமது மக்களுக்குப் புகட்டி வரவேண்டுமென்பதையாவது யாவரும் செய்து வரவேண்டிய கடமைக்குட்பட்டிருக்க நமது பண்டைத் தமிழிலும், நாகரீகத்திலுமா இன்று நமது ராஜதானியில் சிறுபான்மைத் தொகுதியோரான. ஒரு முகமதிய கவர்னரும், மைசூர், திருவாங்கூராகிய இரண்டு பெரிய சுதேச ராஜ்யங்களுக்கு இரு முகமதிய திவான்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை யோசித்தால் விளங்காமற் போகாது. நமது சமூகம் பெரும் பான்மையான எண்ணிக்கையிருந்தும் நமக்குள்ள ஜாதி, மத வேறுபாடுகளின் முக்கிய காரணத்தாலன்றோ நமது கவர்ன்மெண்டாரும் நம்மை ஒரு சமூகமென்று அழைக்கவும் கூட மறுத்த நம்மை மகமதியரல்லாதார்.
என்று ஒரு அனாமதேயப் பேர் வழிகளைப்போல் அழைக்கவும் அந்தப் பெருமை அழியாதிருக்க அவர்கள் சட்டம் முதலிய தேர்தல் தஸ்தாவேஜுகளிலும் அழியாமல் பதித்தும் வைத்திருக்கிறார்கள். நம்மீது நமது கவர்ன்மெண்டாருக்கும் மற்றுமுள்ளவர்களுக்குமுள்ள மதிப்பைக் காட்டுவதற்கு அதுவே போதுமான அத்தாக்ஷியாகும். இப்படி நமது பெரும்பாலான மக்களின் உழைப்பிலும் நமது வரிப்பணத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற சர்க்காரும் அன்னிய மதத்தினரும் இன்னும் சொல்லப்புக்கால் அந்நிய நாட்டினரும்கூட நம்மைக் கேவலமாக எண்ணி, மதித்து ஏளனம் செய்து புறக்கணித்துவரும் இந்த சமயத்திலும் கூடவா நமது பண்டைத்
தமிழும், நாகரீகமும் நம்மை அத்தகைய இழிதன்மையிலிருந்து உத்தரித்து விடப்போகிற தென்பதை மறுமுறையும் சிந்தித்துப்பார்க்க வேண்டுகிறோம். இங்கு மகம்மதியர்களில் ஒருவரை நமது ராஜதானிக்கு கவர்னராகவும், மற்றுமிரு ராஜ்யங்களினுடைய திவான் பதவியைக் காட்டி இருப்பது பொறாமைக்காகக் கூறியதாக பாவிக்காமல் அவர்கள். மதத்தில் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை என்கின்ற கொள்கையின் முதிர்ச்சியால் அத்தகைய பெறுதற்கரிய ஸ்தானங்களை அடைந்தார்கள் என்று அவர்கள் கொள்கைகளைப் பாராட்டவே கூறியதாகுமே ஒழிய வேறுவிதமாக அல்ல வென்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
நமது பண்டைத் தமிழும் நமது பண்டை நாகரீகமும் சொல்லிக் கொண்டு வருவதின் போக்கைச் சிந்திக்கும்போது பள்ளிப் பிள்ளைகளின். பழய பெருமைகளைப் பேசிக்களிக்கும் சம்பிரதாயத்தை ஒக்குமே ஒழிய வேறல்ல. அதாவது ஒரு தனவந்தன் வீட்டுப்பையன் குதிரையின் மீது சவாரி செய்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கும்போது, ஒரு கிழிந்ததும் அழுக்கடைந்துள்ளதுமான ஆடையைத் தரித்துக் கொண்டிருக்கும் ஒரு ஏழைப்பையன் ஷி தனவந்தரின் பையனைப் பார்த்துவிட்டு எங்கள். தாத்தாகூட இதைவிட ஒரு உயர்ந்த குதிரை மீதுதான் எப்போதும் சவாரி செய்வாரென்று சொல்லி மகிழ்வதையொக்கும். தாத்தா குதிரை சவாரி செய்த இருப்பிடத்தில் ஏற்படக்கூடிய காய்ப்புகூட இவனிருப்பிடத்தில் உண்டா என்றால் அதுவுமிராது. இம்மாதிரியான பிரயோசனமற்ற B3 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
விஷயங்களால் மக்களுக்கு ஏற்படும் பயன் யென்னவென்பதே நமது கேள்வி. இந்த வித்வ சிகாமணிகளும் பண்டிதமணிகளும் இப்படியாக பழந்தமிழின் நாகரீகத்தையும் பண்டைத் தமிழின் மாண்பையும் பற்றி ஒரு பக்கம் பேசி வருகையில் மற்றொரு பக்கம் சனாதனிகள் கூட்டம் போட்டுக் கொண்டு ராஜப்பிரதிநிதியவர்களிடம் எங்கள் ஜாதி மத வேறுபாடுகளில் சர்க்கார் தலையிடக் கூடாதென கேட்டுக் கொள்ளப்போவதும் அத்தகையக் கூட்டங்களுக்கு துணைப்படையாக நமது ஜில்லா போர்டு தலைவரும் வைசிராய் சட்டசபை மெம்பருமான ஒரு செல்வாக்குள்ள தமிழ் மக்களின் மாபெரும் தலைவரெனப்படுவோரும் சென்று வந்தவுடன் ஷி சனாதனிகள் கூடி கோவையில் கூட்டிய ஒரு சனாதனிகள் கூட்டத்திற்கும் தாம் வரமுடியாமைக்கு வருந்துவதாகவும் ஷி கூட்டத்தில் தமக்கிருக்கும் ஆர்வத்திற்கும் அபிமானத்திற்கும் அறிகுறியான வாழ்த்துக் கடிதமும் விடுத்திருப்பதும் நடை முறைகளில் காணப்படுகிறது மற்றொரு பக்கம் தோழர் காந்தியார் வருணாச்சிரம தர்மத்துக்குள். புகுத்தப்பட்ட ஹரிஜன சேவையின் பேரால் அவர்களை ஷெ கட்டுத் திட்டங்களிலிருந்து மீளாதபடி முன்னேற்றப் பணம் திரட்ட திக்விஜயம் செய்து வருவதுமாக நிகழ்ந்து வருகிறது.
இவ்வித நிகழ்ச்சியால் மக்கள் சமத்துவத்திற்கு வழி ஏற்படாதென்றும், ஆகையால் தங்கள் வரவு இத்தருணம் இம்முறையில் நல்வரவாகாது என அதைப் பகிஷ்கரிக்க நாங்கள் உறுதிகொண்டு மூன் வந்திருக்கிறோம். அதன் அறிகுறிக்காக எங்கள் கையில் இதோ கருப்புக்கொடி பிடித்துக் கொண்டிருக்கிறோ மென்பதை மூடப்பழக்கங்களிலாழ்ந்து உழலும் மக்கள் மனதிற்படும்படியாக நமதியக்கத்தவர்கள் முன்வந்தால், அதுவும்கூட சமாதானக் குறைவை உண்டாக்கும் என்கிற பாணத்தைப் பிரயோகிக்கும்படி சர்க்காரைத் தூண்டிவிட சிற்சில சுயநலக் கூட்டங்களும் அக்கூட்டங்களின். முறைகளால் தாங்களும் முன்னேற முயலும் சில தமிழர்களும் அதில் பங்கெடுத்துக் கொள்ள முயலுகிற இக்காலத்திலும் கூட நாம் மக்களுக்குள் வேற்றுமைகளை உண்டு பண்ணக்கூடிய முறைகளை கண்டிக்காமலிருக்க முடியாதென்பதைச் சொல்லப் பின் வாங்கமாட்டோம். ஆகையால் இத்தகைய நெருக்கடியான சந்தர்ப்பத்தில்தான் நமது சுயமரியாதை இயக்கத்தவர்கள் நமது முழு மனதையும், சக்தியையும் காலத்தையும் வினியோகித்து நமது லக்ஷியத்தையும் கொள்கைகளையும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தோங்கி வளர்த்து மக்களுக்குள் பயன்படத் தக்க மாதிரியில் நடைமுறையில் வெற்றிகரமாக நடத்திக் காட்டும் வண்ணம் திட்டங்கள் வகுக்க ஏற்படுத்தப்பட்ட காலத்தில் ஷி இடத்துக்கு விஜயம் செய்து காரியங்களை நடத்தி வைக்க வேணுமாகக் கேட்டுக் கொள்கிறோம்.
புரட்சி - தலையங்கம் - 18.02.1934
குடி அரசு (புரட்சி)- 794) ஆட வு
யாருக்கு? பாதுகாப்பு
மன்னர்களுக்கா? பட்டினிகளுக்கா?
நமது இந்திய சட்டசபையான எங் பார்லிமெண்டில் மாமூல் கூட்டங்கள் நடக்கும். இக்கூட்டகாலங்களில் பல தீர்மானங்களைப் பற்றி விவாதிக்கப்படும். சில தீர்மானம் கொண்டு வரப்பட அனுமதி கோரப்படும். பல தீர்மானங்கள் நீண்ட நேரம் பேசி ஓட் எடுக்க நேரமில்லை என்ற காரணம் காட்டி விட்டு விடப்படுவதுமுண்டு. இதில் சில சமயங்களில்
தப்பித் தவறி பொது மக்களுக்கு நல்ல பலனை விளைவிக்கக்கூடிய தீர்மானங்களைப் பற்றியும் பேசப்படுவதுண்டு. இவைகளில் இரண்டொன்று அதன் ஆதி உருவைவிடப் பலமற்றதாகச் செய்யப்பட்டு, பெயருக்கு நன்மையானதென்றும் கவனிக்கப்படுகின்றதென்றும் சொல்லுகிற நிலைமையிலாவது நிறைவேற்றி வைக்கப்படும். ஆனால் இதுவரையில்
மில் தொழிலுக்குப் பாதுகாப்பு, “கமிட்டி மெம்பர்களுக்குச் செலவுக்குப் பணம்'” ஜமீன்தார்கள் உரிமைகளுக்கு வேலி, ராஜாக்களின் அந்தஸ்துக்குப் பாதுகாப்பு என்பது போன்றவைகளுக்கு வரும் தீர்மானங்கள் நிராகரிக்கப் பட்டதாகவோ, நீண்ட காலம் வீண் கால தாமதம் செய்யப்பட்டதாகவோ யாரும் கூற முடியாது
இந்த முறையிலேதான் இப்பொழுது நடைபெறும் கூட்டத்திலும் முக்கியமான பல தீர்மானங்கள் பிரேரேபணை செய்ய வேண்டியவர்கள். ஆசனத்தில் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாபத்துகளில் தவறி
ஓர் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அது வேலையில்லாதவர்களுக்குப் பரிகாரம் தேடப்படுதல் என்பதேயாகும். இதற்கடுத்தாற்போல் இந்திய மன்னர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஓர் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற வேண்டிய நிலையில் இருக்கிறது. இவ்விரண்டு தீர்மானங்களும் முறையில் ஒன்றேயாயினும், போக்கிலும், லட்சியத்திலும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாச முடையதாகும். இவ்விரு தீர்மானங்களும் விவாதத்திற்கு வந்த காலத்தில் மன்னர் பாதுகாப்பு மசோதாவைப்பற்றி விவாதம் நடந்தபோது காட்டப்பட்ட உற்சாகமும், ஆர்ப்பாட்டமும் வேலையற்றவர்களுக்குப் பாதுகாப்பளிக்க விவாதம் நடந்த காலத்தில் காட்டப்படவில்லை. பெயருக்கு ஓர் சட்டமென்கிற முறையிலேயே வேலையற்றவர்கள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது
55 QuRwaREr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இந்திய மன்னர்களுக்குப் பாதுகாப்பளிக்கப்பட வேண்டுமென்று இன்று
பத்து வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டது. அதே காலத்தில் தான் இந்நாட்டில் வேலையில்லாமல் மடியும் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பளிக்கப்பட வேண்டுமென்பதற்கு ஓர் கமிட்டியும் நியமித்து மாகாண வாரியாக இதற்கு மார்க்கம் கண்டுபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது
மாகாணச் சர்க்கார்களோ மத்திய சர்க்காரிடம் பழி போட்டார்கள். கடைசியாக தீர்மானம் மூலியமாக வரும்போது அதன் பெயருக்கும் அத்தீர்மானத்தின் வார்த்தைகளுக்கும் வெகு தாரதம்மியம் உண்டாகிவிட்டது ஆனால் இந்திய மன்னர்களுக்குப் பாதுகாப்பு அல்லது இந்திய மன்னர்களின் அந்தஸ்துக்குப் பாதுகாப்பு பரிபூரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது இந்திய மன்னர்கள் எத்தகையவர்கள் என்பது பற்றியும் அவர்களுக்கு அவர்கள் அந்தஸ்துக்குப் பாதுகாப்பு என்றதின் பேரால் இந்திய சமஸ்தானக் குடிகள் இன்னம் எவ்வளவு காலத்துக்கு கொடுமையாக நடத்தப்படப் போகிறார்கள் என்பது பற்றியும் பன்முறை எடுத்துக் கூறியிருக்கிறோம். இப்பாதுகாப்பை காட்டி இந்திய மன்னர்கள். பரிபூரணமாக தங்களை நம்பும்படி செய்வதற்காகவே இந்திய சர்க்கார் இதைச் செய்தாலும் செய்திருக்கலாம்.
சமஷ்டி அரசியல் முறையை காந்தி ஆதரித்த போதிலும் அவர் சிஷ்யர்கள் ஆதரித்த போதிலும் இந்திய சமஸ்தானத்தில் உள்ள 8 கோடி மக்களும் அப்படியே கண்டிக்கிறார்கள் என்பது சர்க்காருக்கும் மன்னர்களுக்கும் நன்கு தெரியாததல்ல. அதைப் போன்றே பிரிட்டீஷ் இந்தியாவில் உள்ள பொதுமக்கள், ராஜாக்களின் கூட்டுறவை கொண்டதாக உள்ள சீர்திருத்தத்தை வெருக்கிறார்கள் என்றும், இங்குள்ள குட்டிப்பணக்காரர்கள் ஜமீன்தார்கள் இவர்களின் கொடுமையிலிருந்து தப்பமுடியாது தவிக்கிறார்கள் என்றும், எந்த ஸ்தாபனங்களும் அவர்களாலேயே பெரிதும் பணச் செல்வாக்கால் கைப்பற்றப்படுகிறது என்றும் ஓலமிடுகிறார்களென்பதும் தெரியாததல்ல. இச்சிறு பிரபுக்களின் எதேச்சாதிகாரமே இப்படி இருக்கும்போது, இவர்கள் அண்ணனான பெரிய பணக்காரர்கள் மகாராஜாக்கள் இவர்கள் கொடுமையில் சிக்க தாமே சம்மதிப்பது மகத்தான ஆபத்தென்பதை உணர்ந்திருப்பதும் சமஷ்டி முறையை மறுப்பதும் சர்க்கார் உணராததல்ல.
இந்திய சர்க்கார், மன்னர்கள் தங்களைப் பரிபூரணமாக நம்பியிருக்கச் செய்ய இச்சட்டம் அவசியமென்று கருதி கொண்டு வந்திருக்கலாம். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் பிரிட்டீஷ் இந்திய பிரஜைகளின் உரிமைக்கும் சமஸ்தான இந்திய பிரஜைகளின் உரிமைக்கும், தடை ஏற்படுமேயாயினும் ஒரு முறையில் இது நிறைவேற்றப்படுவதால் கொடுமை முதிர்ந்து பொங்கிப் பெரிதாகுமென்றும், அதனால் பரிகாரம் கிடைக்கப்
புது நிலமை ஏற்படுமென்றும்கூட சிலர் நம்பலாம். எப்படியாயினும்
குடி அரசு (புரட்சி)- 194) — 98
இதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் இந்திய சர்க்காரும் சட்டசபை மெம்பர்களும் ஏழைப்பட்டவர்கள் பாதுகாப்பில் ஊக்கம் காட்டாது போனதைக் கண்டுதான் நாம் வருந்த வேண்டியவர்களாக இருக்கிறோம் “வேலை இல்லாத கஷ்டத்திலிருந்தும், சம்பளக் குறைவிலிருந்தும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு அநுபவ சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்”
என்று ஓர் தீர்மானம் தோழர் ஜோஷியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்தே இந்நாட்டிலுள்ள ஏழை எளியவர்கள் பரிபூரண காப்பு பெற்று விடுவார்கள் என்று நாம் நம்பவில்லை. ஆனால் இவ்விரு தீர்மானங்களும் சட்டசபையில் விவாதிக்கப்பட்ட நடைமுறையிலிருந்து இந்நாட்டுப் பொது மக்கள். சட்டசபைக்கு யார் யார் எதிர்காலத்தில் சென்றால் பயனுண்டு என்பதை
உணரவும், வாசாகோசரமாகப் பேசிவிட்டு தீர்மானங்களின் உயிர் வாங்கப்பட்டு செத்த நிலையிலாவது அத்தீர்மானத்தை நிறைவேற்றி ஓர் விளம்பரம் பெற பெரிதாக எண்ணமுடையவர்கள் செல்வதால் யாருக்காவது பலனுண்டா என்பதையும் உணர இடமேற்படுமென்று நம்புகிறோம்
இதனால் சட்டசபைக்குதான் மதிப்புண்டா? அல்லது அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்களுக்குத்தான் பலனுண்டா? அல்லது இவர்கள் யாவரும் வாழும் நாட்டுக்காவது கெளரவம் உண்டா என்பதை வாசகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இதை விளக்கிக்
கூற விரும்புகிறோம்
இந்நாட்டில் எதிர்கால சுயராஜ்ய ஆட்சிக்குப் பூர்வாங்கமானது இந்திய சட்டசபையென்று சொல்லப்படுகிறது. அதாவது எங் பார்லிமெண்டு என்கிறார்கள். இந்த எங் பார்லிமெண்டில் பத்து வருட காலமாகப் பட்டினி கிடந்து மாள்பவர்களுக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டுமென்று தொடர்ச்சியாய்க் கத்தப்பட்டு பத்தாவது வருடத்தில் பதில் கிடைத்தது என்ன? அனுபவ சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பதில் கிட்டியிருக்கிறது
ஆனால் எங் பார்லிமெண்டின் தலைமை இடமான தாய்ப்பீடமான. இங்கிலாந்து பார்லிமெண்டிலோ?
பட்டினி கிடக்கிறார்கள் - மடிகிறார்கள் என்ற சப்தம் உண்டாகி இருக்குமேயானால் இதற்குப் பரிகாரம் பத்து நிமிடத்தில் கிடைக்கிறதேயன்றி பத்து வருடங் கழித்து சாத்தியமான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதாகக் கூறியிருக்க முடியுமா?
இந்தியப் பார்லிமெண்டான இந்தியா சட்டசபையில் தோழர் ராமகிருஷ்ணன் (ரெட்டியார்) இந்தியாவில் 400 லக்ஷம் பேருக்கு
57 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஒருவேளைச் சாப்பாட்டுக்குத் தகராறாக இருக்கிறது என்று கூறியபோது அது அங்குள்ளவர்களில் எவரையும் திடுக்கிடச் செய்யவில்லை. உலகில்.
எந்த நாட்டிலும் வேலையற்றவர்கள் தொகை பத்து அல்லது இருபது லட்சத்துக்கு மேல் இல்லையே. இங்கு நானூறு லக்ஷம் பேர் பட்டினி ஜாதியாராக இருக்க வேண்டுமாவென்று கேட்கப்பட்ட போதுகூட எந்த மெம்பரும் இதற்காக வெட்கப்படவில்லை. அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டின் மக்கள். அவர்கள் யார் பேரால் பிரதிநிதித்துவம் பெற்று சட்டபையை அலங்கரித்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட சிந்திக்க அவர்களுக்கு அவகாசமில்லை. இதற்குக் காரணம் என்ன?
பட்டினி என்பதை இன்னதெனத் தெரியாதவர்கள், பட்டினியைப் பற்றி பேசப்படும் போது பதறி எழவில்லை என்று கூறுவது ஆச்சரியமல்ல.
இங்கிலாந்தில் உள்ள வேலையற்றவர்களுக்கு உணவளிக்கச் செலவிடப்படும் தொகை இந்நாட்டில் தினமும் வரியின் பேரால் இங்கு வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்நாட்டின் ஜன சங்கையில் 8ல் ஒரு பகுதியினர் வேலையற்று, உணவற்று, இடமற்றுத் தவிக்கிறார்கள் என்றால் இதற்கு “அநுபவ சாத்தியமான” என்று பதில் கூறப்படுகிறது. நமது சட்டசபை தோழர்கள். இந்நாட்டில் உள்ள 260 மன்னர்களின் மதிப்பை, கெளரவத்தை காப்பாற்றுவதில் செலவிடப்படும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் 4-கோடி மக்கள் பட்டினியால் மடிகிறார்கள் என்பதில் காட்ட முடியாமற் போனது உண்மையில் மிக்கக் கேடானதாகவே தோன்றுகிறது
இச்சட்டசபையில் பட்டினி கிடக்கும் ஜாதியில் 4 பேர் பிரதிநிதியாக இருந்திருப்பார்களேயானால் அனுபவ சாத்தியமான” என்று சொல்லியிருக்க
முடியுமா?
இந்நாட்டில் வேலையற்றவர்கள் என்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள். என்று சட்டசபை மெம்பர்களே கூறியிருக்கிறார்கள். இவர்களில் நூற்றுக்கு 72 பேர்கள் விவசாயத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகின்றது இவர்களை மாகாண விகிதம் கணக்கெடுத்து அவர்களின் பட்டினிக்குப் பரிகாரம் தேட வேண்டிய பொறுப்பு இந்திய சட்டசபையினுடையதாகும். ஆனால் இந்திய நாட்டில் விவசாயிகளைப் பற்றி கவனிப்பவர்கள் எத்தனை பேர்? இவர்களின் அன்றாடக் கஞ்சிக்கு வழியென்ன? என்பதில் கவனம் செலுத்த சட்டசபை மெம்பர்களும், சட்டசபையும் முற்படாவிட்டாலும், எதிர் காலத்தில் வேலை செய்யவாவது வழிவிட்டதற்கு
நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் இந்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சேர்ப்பதோ பட்டினி கிடப்பவர்களுக்கு
பரிகாரம் தேடுவதோ அல்லது பட்டினி கிடக்கிறார்களே என்று சொல்வதே சட்ட விரோதமானதாகுமென்று அஞ்சுகிறார்கள். இப்பயம் நீங்க பம்பாய் உத்தியோக மெம்பர் மிஸ்டர் செ.பி.சிலேடன் அவர்கள் “விவசாயத்தில்
குடி அரசு (புரட்சி)- 194) அட 8
ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு சங்கமோ, கட்டுப்பாடோ இல்லை" என்றும், சட்டசபையிலும் அவர்களுக்கென்று பிரதிநிதித்துவம் கிடையாதென்றும், இவைகள் உண்டாக முயல வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். எங்கும் விவசாய தொழிலாள சங்கங்களை ஏற்படுத்தி வேலையற்றவர்களுக்கு பரிகாரம் தேடுவதில் சகலரும் முயலுதல் இன்றியமையாதனவாகும்.
அடுத்தார்போல் பட்டினி கிடப்பவர்களைப் பற்றி எங்கும் எடுத்துச் சொல்லலும், அதற்கு பரிகாரம் தேடுதலும் அதுவும் சாத்தியமான பரிகாரம் தேடுவதிலும் சர்க்காருக்கு கோபமிருக்குமோ என்ற பயத்தில்
பலர் இன்று இங்கிருக்கிறார்கள். அதைப் போலவே பட்டினி கிடப்பவர்களும் தாங்கள் எலும்பும் தோலுமாய் ஆகிவருவதற்குப் பட்டினியே காரணமென்றும், இப்பட்டினியை எடுத்துச் சொல்லி அதற்கு அவர்கள் சாத்தியமான பரிகாரம் தேடிக் கொள்வது தப்பல்ல என்றும் பட்டினி கிடப்பவர்கள் உணரவும் இடமேற்பட்டுவிட்டது. இனி அவர்கள் பட்டினி கிடப்போர் பரிகாரமடைய முயல இச்சட்டம் இடம் கொடுத்ததற்குத்தான் நாம் இதைப் பாராட்டுகிறோம்.
சமஸ்தானப் பாதுகாப்பு மசோதா சர்க்காராலேயே கொண்டு வரப்பட்டதாகும். இந்திய மன்னர்களில் ஹத்து மீறிப் போகின்றவர்களை அவ்வப்போது சர்க்கார் தலையிட்டு மன்னர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஸ்பெஷல் உத்தியோகஸ்தர்கள் மூலம் பரிபாலித்து வருவதை
நாம் மறந்துவிடவில்லை. சில எதேச்சாதிகார மன்னர்கள் சர்க்காரின் நல்லெண்ணத்தில் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும்; அக்சந்தேகத்தை நிவர்த்திக்கவே சர்க்காரார் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு. வருகிறார்கள் என்றும் கூட நாம் நினைக்க ஏதுவிருக்கிறதேயாயினும் இவ்விருவர்கள் நட்புக்காக சமஸ்தான பிரஜைகளின் மூலாதாரமான உரிமைகளைக் கட்டுப்படுத்திக்கூட தாங்கள் மன்னர்கள் ஆதரிக்கும் கருத்தை நிறைவேற்ற சர்க்கார் முயலுகிறார்கள் என்றும் சந்தேகப்படாமல் இருக்க முடியாது. இவ்வளவும் செய்வது நமக்குத் தீதேயாயினும் நாம் கண்டிக்கும் சமஷ்டியல் அரசியல் முறைக்குப் பாதுகாப்பேயாயினும் சட்ட மெம்பர் மன்னர்கள் ஹத்து மீறிப் போனால் சர்வாதிகாரப் பீடம் உடனே தலையிடத் தயங்காது” என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பு உதயபுரி, இந்தூர், நாபா, ஆள்வார், தேவாஷ், காஷ்மீரம், ராம்பூர் முதலிய பல சமஸ்தான விஷயங்களில் இதுவரையில் இவ்விதம் நடந்து வந்திருக்கிறார்களேயானாலும் நாம் உறுதிமொழியைப்பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் பரிதாபப்படுகிறோம்
பிரபல பேரறிஞர் மிஸ்டர் பிரடரிக் அதர்ட்டன் “இந்தியாவிலுள்ள முன்னூற்று சொச்சம் சிற்றரசர்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும் இறுதி காலம் கிட்டிவிட்டதென்று நன்கு உணர்ந்து கொண்டார்கள். இங்கிலாந்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன் எதேச்சாதிகாரம் செலுத்திய பிரபுக்கள்.
9 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
எக்கதிக்கு இலக்கானார்களோ அக்கதிக்கே இவர்களும் காலக் கிரமத்தில் இலக்காகி விடுவார்கள் என்பது உறுதி. இன்னும் சில வருடங்களில் இவர்களுடைய நாட்டுப் பங்களாக்களில் தனியே சுககாலம் கழிப்பதைக் காணலாம். முன்னூற்றுச் சொச்சம் பேர்களில் இருநூற்று முப்பது பேர்கள் மாக்ஷிமை தங்கிய மகாராஜாக்கள்.” இவர்கள் தங்களை நோக்கி விரைந்து வரும் வெள்ளத்தினின்று எப்படி தப்பிப் பிழைப்பது என்று சிந்தை கலங்கி இருக்கிறார்கள்!” என்று எழுதுகிறார்.
மன்னர் பாதுகாப்பு சட்டமோ கேவலம் 260 தனி நபர்களின் நன்மையைப் பொறுத்தது. வேலையற்றவர்கள் பாதுகாப்போ இந்நாட்டில் கணக்கில் கிட்டிய 4-கோடி பேர்களையும், கிட்டாத பலகோடி மக்களின் நன்மையை, உரிமையை இவைகளைப் பற்றி மட்டுமல்ல கோடிக் கணக்கான மக்களின் பட்டினி வயிறுகளுக்கு பரிகாரம் தேடுவதையும் பொறுத்ததாகும். ஆதலால் அடுத்தாற் போல் வரும் கூட்டத்தில் இந்நாட்டு ஏழைத் தொழிலாளர் பாதுகாப்பைப் பற்றி சற்று கவனம் செலுத்தி மன்னர்களை மட்டும் சர்க்காரார் காப்பாற்ற வில்லை, நமக்கும் பாதுகாப்பளிக்க சர்க்காரார் தவறுவதில்லை என்ற நம்பிக்கை பொது மக்களுக்கு உண்டாகுமாறு சர்க்காரும், இந்திய சட்டசபை மெம்பர்களும் முயற்சிக்கக் கோறுகிறோம்
புரட்சி - தலையங்கம் - 25.02.1934
குடி அரசு (புரட்சி)-794()) — ல
சாம்பியன் திட்டம் சாகடிக்கப்படுமா£
வழக்கம் போலவே இவ்வருடமும் நமது மாகாண சட்டசபையின் முன் இவ்வாண்டின் 34, 35 வருட வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. சட்ட சபையிலுள்ள எதிர் கக்ஷிகளின் பிரசங்கிகளும், அதிகாரத்திலுள்ள கக்ஷியின் அங்கத்தினர்களில் அதிர்ப்தியுற்றோர்களென்போர் சகலரும் வரவு செலவு திட்டத்தைப்பற்றி பேசித் தீர்த்தார்கள். மூன்று நாள் இதற்காக வென்றே ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கத்தினர்களின் அபிப்பிராயங்களறிதல், ஆலோசனைகளை கேட்டல் என்கின்ற முறையில்தான் எதிர் கக்ஷியினர் விவாதங்களுக்கு இடமும் நேரமும் ஒதுக்கப்படுவது வழக்கம். இம்மாமூல் சடங்கிற்கு பின்போ மாகாண
சர்க்கார் நடைமுறை முக்கிய உருப்பினர்களான நிர்வாகக் கமிட்டி மெம்பர்கள், அதாவது மந்திரிகள், லா மெம்பர், ஹோம் மெம்பர், பொக்கிஷ மெம்பர் என்ற ஆறு கனவான்களும் முதல் இரண்டு தினங்களிலும், நடந்த பிரசங்கத்தைத் தோற்கடித்து விடக் கூடிய மாதிரியில், ஏன் இன்னும் அதிகமாகக் கூடவே பேசினார்கள். இத்துடன் இவ்வருட வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது
இதில் நமது வாசகர்களுக்கு விசேஷ கவனம் செல்ல வேண்டுமென்பது அவசியமல்ல. அப்படியாயினும் இதை மேல் வாரியாகவேனும் கவனியாது நாம் இருந்துவிடுவதற்கில்லை. நமது மாகாண கல்வி மந்திரியான திவான் பகதூர் கனம் எஸ். குமாரசாமி (ரெட்டியார்) அவர்கள் தனது இலாகா சம்பந்தமாக சகோதர அங்கத்தினர்கள் செய்த உபன்னியாசங்கட்கு - அபிப்பிராயங்கட்கு பதில் சொல்லும் முறையில் முதலில் (தமது) இலாகாவைப் பற்றி அங்கத்தினர்கள் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்பதை எடுத்துக்காட்டி - வேடிக்கையாக அல்ல - சகோதர அங்கத்தினர்கள் நிலவரி விஷயமாக விசேஷ ஊக்கம் காட்டப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் எடுத்துரைத்திருக்கிறார். கல்வி சம்பந்தமாகவும், தமிழ் வளர்ச்சி சம்பந்தமாகவும் ஏதேனும் புது வாக்குறுதிகள், நோக்கங்கள் எடுத்துறைக்கக் கூடுமென்று எதிர்பார்த்தோர். பெரிதும் ஏமாற்றமடைந்தார்கள் என்று சொன்னபோதிலும், கனம் எஸ்.குமாரசாமி அவர்களின் சமாதானப் பிரசங்கத்தின் முற்பகுதியில் பெரும்பாகம் இந்நாட்டுப் பக்திமான்களுக்கு செலவிடப்பட்டதைக் ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
கண்டு திடுக்கிட்டுப் போனோம். இன்று பல வருடங்களாக நமது மாகாணத்தில் ஆரம்பக் கல்வியைச் சீர்திருத்தி அமைக்கப் பல முயற்சிகள் செய்யப்பட்டதில் மிஸ்டர் சாம்பியன் அவர்களின் ஆரம்பக் கல்வித் திட்டம் மிக முக்கியமானதாகும். இத்திட்டத்தில் சில மாறுதலை நாம் விரும்புவதுண்டெனினும், இத்திட்டம் முழுதும் அலக்ஷியப்படுத்தக் கூடியது அல்லது நிறுத்தி வைக்க வேண்டியது என்று சொல்ல எவரும் துணியார். ஆனால் கனம் கல்வி மந்திரியவர்கள் “சாம்பியன் திட்டமானது இன்னும் ஸ்தல ஸ்தாபனங்களில் அபிப்பிராயம் கேட்பதிலேயே
இருக்கிறது. இது கிடைத்த பின்னரே கவர்ன்மெண்டார் முடிவு செய்வதாக இருக்கின்றனர்" என்று கூறிவிட்டார்.
இப்பதிலானது ஆரம்பக் கல்வியைப் பற்றியும், மிஸ்டர் சாம்பியன் திட்டத்தினால் சீர்திருத்த முறையில் அறிவாளிகளாக வெளிவரும் இளைஞர்களையுடையதாக எதிர்காலம் இருக்க முடியுமா? என்பதில்
நம்பிக்கை வைத்த நம்மை ஏமாறச் செய்து விட்டது
மிஸ்டர் சாம்பியன் அவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்பக் கல்வித் திட்டத்தை அத்திட்டம் வெளியான தினத்திலேயே கண்டனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இக்கண்டனம் ரோமாபுரியைக் கூட எட்டியது எனலாம் இக்கண்டனம் செய்த ஒரு கூட்டத்தாரின் செளகரியத்துக்காக ஓர் உயரிய திட்டத்தைக் கைவிடுவது தவறு என்பதுடன் அத்திட்டம் தயாரிக்க முதலில் இடமளித்த எந்திரத்தையும், அத்திட்டம் தயாரிக்கப்பட்ட காலத்தில், அதில். சாக்ஷியம் கொடுத்த எண்ணற்ற பொறுப்பேற்றவர்களின் முயற்சியையும் அலக்ஷியப்படுத்துவதுபோல் கூட கனம் மந்திரியவர்கள் சமாதானம் இருக்கிறது என்பதையும் நாம் எடுத்துக்காட்டாமல் இருப்பதற்கில்லை.
இந்நாட்டில் உள்ள ஜனசமூகம் என்றால்அது ஒரு சில வைதீகர்களையோ, அவர்களைப் பாராட்டி வரவேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவர்களையோ
குறிப்பிடுவதல்ல. எதிர்த்தவர்களான அறிவிற் பெரியோர்கள் சொல்லும் காரணங்கள்தான் என்ன? சுருக்கமாக சொன்னால் எக்காரணத்தினாலோ,
எடுத்ததற்கெல்லாம் கண்டனம் செய்வதற்காக இப்போது இம்மாகாணத்தில்:
சிலர் கிளம்பி இருக்கிறார்கள். இவர்களின் செல்வாக்கு, கூட்டுறவு ஆகியவைகளுக்காக பயந்து நமது மாகாண கல்வி மந்திரியவர்கள் தமது காலத்திலேயே இத்திட்டத்திலுள்ள உயரிய முறைகள் பலதை இல்லாவிட்டாலும், சிலதையாவது, செய்யாமல் போகப் போவதில்லை
யானாலும் இச்சமயத்தில் இதை எடுத்துக் காட்டாமலிருக்க முடியவில்லை.
சாம்பியன் திட்டம் அமுலுக்கு வரக்கூடாது என்று கண்டித்தும் சர்க்காரை மிறட்டியும் இதுவரையில் வெளிவந்த சகல செய்திகளையும்
நாம் பார்த்தோம். அதில் அறிவின் வளர்ச்சிக்கு, ஜனசமூக வாழ்க்கையின் நன்மைக்கு, முரணானதாகவோ, புறம்பானதாகவோ, எதுவும் திட்டத்தில்
குடி அரசு (புரட்சி)-7994/]) அ 62
இருப்பதாக எடுத்துக்காட்டுவதான கண்டனம் இல்லை. இந்நாட்டு எல்லா மக்களும் தங்களை ஆதரிப்பதாக பிரமாண்டமான பொய் மூட்டை மீதே கண்டனக் கோட்டைகள் கட்டப்பட்டிருக்கிறது. இதற்காகவா நமது கனம் கல்வி மந்திரியவர்கள் மலைக்கப் போகிறார்கள்? இதைவிடத் திடுக்கிடக் கூடிய பல கண்டனங்கள் தோன்றிய போதெல்லாம் சமாளித்த மந்திரியாரிடம்
நமக்கு நம்பிக்கை இல்லாமலில்லை. வீண்கூச்சல் எதற்கு என்று அலக்ஷியமாக பிரஸ்தாப பதில் கூறப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் தன் கடமையைத் திறம்படச் செய்ய கனம் மந்திரியவர்கள் தவறாது இருப்பாராக
கண்டனக்காரர்கள் சொல்லும் காரணங்களில் பிர்மாண்டமான
காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
1. இன்று கல்விக்காக செலவிடப்படும் பணத்தைவிட மூன்று மடங்கு பணச்செலவாகும் என்பது.
பணச்செலவு அதிகமென்பதில் இவர்கள் விடும் கண்ணீர் வாஸ்தவமானால் தங்கள் தர்ம ஸ்தாபனங்களுக்கு என்று வருடா வருடம் வாங்கும் இலக்ஷக்கணக்கான ரூபாயிலிருந்து சிறிது குறைத்து இக்கல்வித் திட்டத்துக்குப் போட்டுவிடப் போகிறார்களா? என்று பார்த்தால் அது இன்று நடக்கக் கூடியதல்ல என்பதுடன் கண்டனக்காரர்கள் தங்கள் மதப்பிரசாரத்துக்கு எதையும் கையாளும் தந்திர முறையிலேயே முதலில் பணச் செலவு என்ற பேரால் கண்டனம் என்றார்கள் என்று சொல்லலாம்
2. பிறப்பினால் உயர்வு தாழ்வு, மதத்தினால் உள்ள வித்தியாசம்,
மதத்தினால் உள்ள சலுகை இவைகளுக்கு தீங்கிழைப்பதாக இருக்கிறதாம்.
இவர்கள் சொல்லும் “தீங்கிழைப்பதாக இருக்கிறது'' என்பவைகள் எத்தனை இலக்ஷம் ஏழை எளியச் சிறுவர்கள் ஆரம்பக் கல்வியைப் பெற முடியாது தடுக்கிறது என்பதையும், கல்விக்காகக் கொடுக்கப்படும்
பணம் - அவர்கள் பேரால் சர்க்காரால் தாறாளமாக செலவிடப்பட்ட போதிலும் அவை முழுதும் அவர்களுக்குப் போகவே மிஸ்டர் சாம்பியன் திட்டம் உதவி செய்யத் தூண்டுகிறது என்பதிலும், இவர்கள் காட்டும் கண்டனம் நியாயமுடையதாக இருக்க இயலுமா?
3. ஆரம்பப் பள்ளிக் கூடங்களில் ஆண், பெண் இருபாலரும்
ஒன்றாகப் படிப்பது தவறு
நமது மாகாண முதல் மந்திரியாக இருந்தவர்களில் இருவர்கள்.
மிஸ்டர் சாம்பியன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தும், பின்பும் இம்முறையை ஆதரித்து இருக்கிறார்கள் என்றும் இதற்காக மந்திரிகளை: மகாஜனங்கள் பாராட்டியிருக்கிறார்கள் என்றும் சொல்வதுடன் ஒரு முதன்மந்திரியார் ஆரம்பக் கல்விச் சாலைகளில் மட்டுமல்ல உயர்தர பட்டம் 6B ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
பெறும் சர்வகலா சாலைகளிலும் இம்முறை கையாளப் படவேண்டும் என்றும் இன்றுள்ள முறை மாறி, புது முறையில் படிப்பும், பள்ளியும் பாடமும் வருகிற காலத்தில் உபாத்தினிகளாகவே சகலரும் நிறைந்திருக்க வேண்டும் என்றும் கூட சொல்லியிருப்பதை மட்டும் இங்கு ஞாபகமூட்டுகிறோம்.
இன்றுள்ள கிறிஸ்துவ கலா சாலையில் முக்கிய வகுப்புகளிலும், வைத்திய கலா சாலையில் பல வகுப்புகளிலும், நகரங்களில் பெண்கள். ஹைஸ்கூல்கள் இல்லாத இடங்களிலும், கிராமங்களில் பெண் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களிலும் கிராமங்களிலுள்ள கிறிஸ்துவ பாடசாலைகளுக்குச் சென்றால் பெண்கள் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற பயமுள்ள இடங்களிலுமுள்ள கல்விச் சாலைகளில் பெண்கள்- சிறுமிகள் சென்று கல்வி கற்று வருகிறார்களா? இல்லையா? என்று மட்டும் வினவுகிறோம்.
4. ஜனக்குறைவால் ஒரு மதத்தார் தற்காலம் ஒரு சிறிய பாடசாலையை ஸ்தாபித்து, பின்னர் ஜனங்கள் அதிகரிக்கும்போது பாட சாலையை மென்மேலும் விருத்தியாக்க மேல் வகுப்புகளுக்குச் சர்க்கார். அங்கீகாரம் கிடைக்க இடமில்லை என்பது
இதில் பள்ளிக் கூடங்கள் ஏற்படுவது என்பது மக்களின் கல்விக் குறையை நிரப்புவதற்காகவா? அல்லது ஜனக்குறைவாக உள்ள மதக்காரர்கள் பள்ளிக்கூடம் வைத்து அது மூலியமாக மதத்தை வளர்க்க
பள்ளிக் கூடங்களா?
எம்மதம் குறைய ஆரம்பிக்கிறதோ அவர்கள் பணத்தைக் கொண்டே குறைவுபட்ட எண்ணிக்கையுள்ள மதம் பெருக வேண்டுமென்ற எண்ணமா? தனி முறையில் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள பல சிறு - மதப்பிரசார ஆரம்பக் கல்விச் சாலைகளில் மதமாறுதல், அதனால் குழப்பம், கலகம் உண்டாவதாலும், கிராமங்களிலிருப்போர் பயந்து பள்ளிக்கு சிறுவர்களை அனுப்ப மறுக்கிறார்கள் என்ற குறையை நிவர்த்திக்கவே சாம்பியன் திட்டமானது புது மாறுதலை செய்ய ஏற்பட்டது.
முன் சொன்ன நொண்டிக் காரணங்களைக் காட்டி மிரட்டும் மதக் கிறுக்கர்களின் கண்டனத்தை பொறுட்படுத்தாது, விரைவில் ஆரம்பக் கல்வி முறையில் தங்கள் கடமையைச் செய்ய மாகாண கல்வி இயந்திரம் தயங்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். ஸ்தல ஸ்தாபனங்கள்
மீது பழியைப் போட்டு அதன் மறைவில் எவரும் மறைய ஆசைப்படுவது நியாயமாகாது. மதக் கிறுக்கர்களின் கண்டனத்தை மட்டும் சர்க்கார் பெரிதுபடுத்தினதாக பொது ஜனங்கள் உணர்ந்தால் அவர்களும் தங்கள் கண்டனங்களைச் சர்க்காருக்கு எடுத்துச் சொல்லி சர்க்கார் கடமையைச் செய்தொழிக்குமாறு சர்க்காரை கேட்டுக்கொள்ள பொது ஜனங்களுக்குத்
குடி அரசு (புரட்சி)-7994/]) அ 64
தெரியுமேயாயினும் சர்க்கார் அது வரையில் இதை வளரவிடக்கூடாதென்றும் எடுத்ததற்கெல்லாம் மதமிருப்பதாகக் கூறும் பரிதாபத்துக்குறியவர்களிடம் கோபம் கொள்ளாமலும் அவர்கள் கண்டனத்தைக் கண்டு அஞ்சாமலும், தாங்கள் நியமித்த கமிட்டி, தாங்கள் விரும்பிய அறிக்கை இவைகளுக்காக செலவான பணம், இவைகள் அத்தனையையும் அலட்சியப்படுத்திய வைதீகர்களிடம் அலட்சியத்தைக் காட்டி ஆரம்பக் கல்வி திட்டத்தில்
சர்க்கார் தங்கள் கடமையைச் செய்ய தவறாதென்ற எண்ணம் எங்கும் உண்டாகச் செய்ய கேட்டுக்கொள்ளுகிறோம்
புரட்சி - தலையங்கம் - 04.03.1934
ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மன்னார்குடி மகாநாடு
நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4 - தேதி ஞாயிரன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்ம தோழர் எம் சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசெளக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3 - தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை. ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது
4-தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எஸ்.ராமநாதன் எம்.ஏ.பி.எல்., அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார். முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல்., அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித்திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எஸ். இராமநாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனர் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது. பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயாலோசனை கமிட்டிக் கூட்டம் தோழர்
எஸ். ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோசனைக்: கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.
தோழர் எஸ்.ராமநாதன் அவர்கள் வழக்கம்போல் வேலைத் திட்டத்தை
எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்குப் பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக்
கூட்டம் முடிந்தது மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு
குடி அரசு (புரட்சி)- 794) — ல
மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களிலிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களிலிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட
பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்
சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓறாண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டுகிறோம்.
சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லையென்றும் வீண் புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்கப் பதிலளிக்கப் போதுமானதாகும். அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சமதர்ம
திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்கு பலன் இல்லை என்பதற்கு தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.
வரவேற்பு கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லா வாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஸ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசரித்திருக்கிறோம். மன்னார்குடியில்வரவேற்புக்கமிட்டியார்எதிர்பார்த்ததைவிட ஏராளமான. பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்க விதம் செளகரியங்கள். அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாறாட்டுவது போல் காரியதரிசிகளையும் பாறாட்டுகிறோம். மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாறாட்டுகிறோம்.
நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடுகளும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரசாரக்காரர்களுக்கு தக்க பதிலாக இருக்குமென்று நம்புகிறோம்
தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களை கவனித்து அநுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.
புரட்சி - தலையங்கம் - 11.03.1934 67 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சர்வ ஜன வாக்கா?
தொட்டதற்கெல்லாம் சர்க்கார் பொது ஜன அபிப்பிராயம் அறிந்து, அது சாதகமாக இருந்தால்தான் தாங்கள் செய்வதாக சொல்லுகிறார்கள். அத்துடன் மட்டுமல்ல, ஒன்றைப் பற்றி யோசிக்கக் கூட சர்வஜன வாக்கு கேட்கிறார்கள். நாம் உணர்ந்த வரையில் என்றும் சர்க்கார் சர்வஜன வாக்குப்படி
நடந்ததாக கூறமுடியாது. சென்ற பத்து ஆண்டுக்கு முன்பு பத்து வயது பெண்களை இடுப்பொடிக்கக் கூடாது, பொட்டுக் கட்டக் கூடாது என்று பிரச்சினை உண்டான காலத்தில் கூட சர்வஜன வாக்கு எடுக்க வேண்டு மென்றார்கள்; எடுத்தார்கள். சிறு பெண்களுக்குப் பொட்டு கட்டுவதை ஆதரிப்பதாக கூறினார்கள். பொது ஜனங்களுக்கு விரோதமாகவே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பல சீர்திருத்த தீர்மானங்களிலும் பொதுஜன வாக்கு விரோதமாக இருந்தும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது ஆனால் சர்க்கார் அவைகளை நிறைவேற்ற உட்பட்டதற்கு காரணம் ஜனசமூக நன்மை என்பதற்கும் பொது ஜன வாக்கு என்று இவர்கள் எடுப்பதற்கும் சம்மந்தமில்லை என்பது நன்கு உணர்ந்ததேயாகும்
இந்நிலையில் இரண்டு மாதம் காந்தி பாபு ஆலயப் பிரவேசத்துக்கு ஆதி திராவிடர்கட்கு இடமளிக்க வேண்டுமென்று இம்மாகாண முழுதும் பிரசாரம் செய்த பின் பொது ஜன அபிப்பிராயம் அறிந்தும் அது விரோதமாக இருப்பதாக கூறுகிறார்கள். காந்தியடிகளின் நேரான பிரசாரத்திற்கு பின்பும், லக்ஷக்கணக்கான மக்கள் வரவேற்ற பின்பும், இரண்டு லக்ஷ ரூபாய் பாத காணிக்கைக்குப் பின்பும் காந்தி சொன்ன ஆலயப் பிரவேச ஆதரவுக்கும் கை தட்டுதலுக்குப் பின்பும் ஓட்டு எடுப்பதில் விரோதம் என்றால் இதற்கு சரியான சமாதானம் சொல்ல நமக்குத் தெரியவில்லை. போகட்டும். இத்தீர்மானத்துக்கு வந்த கெதியானது, நாளைய ஜுன் மாதம் வரவிருக்கும் தீண்டாமை விலக்கு மனோதாவுக்கும் வந்துவிடாதிருக்க சர்க்காரும் ஆதிதிராவிட சகோதரர்களும் முயலுவார்களாக. ஆலயங் கட்ட ஹரிஜன நிதியை உபயோகிக்க கூடாதென்ற நமது மாகாண ஹரிஜன கமிட்டியும் தனது சக்தியை தீண்டாமை விலக்கு மசோதாவுக்கு சாதகமாக வேலை செய்வார்கள் என்று நம்புகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 11.03.1934
குடி அரசு (புரட்சி)-794()) — ல
3 லகூஷமா?
ரஷிய நாட்டில் தீக்கிரையாக்கப்பட்டது போக மிஞ்சிய சில
புத்தகங்களில் புறாதன காலத்து கையெழுத்து பிரதியான “பைபிள்'' ஒன்று பிரிட்டீஷ் பொது ஜனங்கள் 3 லக்ஷ ரூபாய் கொடுத்து வாங்கினார்களாம். இது அங்குள்ள மதத்தின் பேரால் உள்ள செல்வ செறுக்கை காட்டுகிறது. அதே தினத்தில் தான் பதினாயிரக்கணக்கான. வேலையற்றோர் ஊர்வலக் காக்ஷியும் அங்கு நேர்ந்தது. பைபிளுக்கு கொடுத்த பணம் பட்டினிக்கு கொடுத்தால் சோறாகும். பட்டினிகாரர்களுக்கு பைபிள் ஒருக்கால் இனி சோறு போடுமா? என்று பார்க்கலாம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 11.03.1934
ஜட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மீண்டும் சுயராஜ்ய கக்ஷியா?
காங்கிரஸ் ஒழிந்து விட்டதென்றும் அதனால் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு இதுவரையில் விமோசனம் ஏற்படவில்லை என்றும், அதை இன்னும் உயிரோடு வைத்துப் பார்ப்பதில் யாதொரு சிறிய நன்மையும் பெற முடியாதென்றும், ஆனால் காங்கிரசை உயிர்ப்பிக்க காந்தி பக்தர்கள் முயற்சிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுவதாகுமென்பதோடு, அது பெரும் முட்டாள்தனமும் தற்கொலைக்குச் சமானமானதாகுமென்றும், இந்திய மக்களில் சகலரும் இன்று உணர்ந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சில காங்கிரஸ் தலைவர்கள் சமீபத்தில் டில்லியில்
கூடி, சட்டசபைகளைக் கைப்பற்றுவதா? இல்லையா? என்பதைக் குறித்து, தக்க முடிவிற்கு வர முயன்றார்கள். ஆனால் இன்றைய தினம் காங்கிரஸ் கக்ஷியில் எந்த இருவர்களுடைய அபிப்பிராயமும் ஒரே விஷயத்தைக் குறித்துங்கூட முழுதும் ஒன்றாக பரிணமிப்பதில்லை என்கிற இரகசியம்
நாம் அறிந்ததேயாததால், அவர்கள் எந்த முடிவிற்கும் வராமல் கலைந்து போய் விட்டார்கள் என்பதில் நாம் சிறிதும் ஆச்சரியப்படவில்லை.
வர்ணாசிரம தர்மத்திற்கு முலாம் பூசி, அது வேண்டுமென்று நம்பிக்கை கொண்டிருப்போரும், பழைய “ராம” ராஜ்யங்களை சிருஷ்டித்து அதுவே குடிஆட்சி என்று நிலை நிறுத்தக் கங்கணங் கட்டிக் கொண்டிருப்போரும் ஜாதிப் பாகுபாடுகள், தொழில் வேற்றுமைகள் இவைகளை அறவே ஒழிக்கப் பயனுள்ள வேலைகளைச் செய்யாது, இவைகளையே இன்னும் நீடித்து வைத்திருக்க விரும்புவோரும், தீண்டாமை ஒழிய வேண்டும், ஆனால் ஹரிஜனம் என்பதின் பேரால் தீண்டாதார்கள், சூத்திரர்களாகவே மதிக்கப்படவேண்டுமென்போரும், மன்னர்கள் சமஸ்தானாதிபதிகள் முதலியோர் சாஸ்வதமாக ஆதிக்கமே
செலுத்தி அரசுரிமை செய்யட்டுமென்போரும், பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் முக்கிய பாதுகாப்புகள் இருக்கட்டுமென்போருமான காங்கிரஸ்காரர்கள் இன்று சுயராஜ்ய கட்சிப் போர்வையைப் போத்திக் கொண்டு, சட்டசபை ஸ்தாபனங்களைக் கைப்பற்ற, “தங்களின் பூர்வ கால சம்பவங்களை” மறந்து விட்டு வெளி வந்து விட்டார்கள்.
குடி அரசு (புரட்சி)- 194) அ 70
உதாரணமாக நமது மாகாண தேசீயவாதியான சத்தியமூர்த்தி தனது வடநாட்டுச் சுற்றுப் பிரயாணத்திற்கப்பால் கீழ்கண்ட செய்தியை பத்திரிகை நிருபருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதாவது “ஜனங்களிடையே கட்டுப்பாடு ஏற்படுத்தி மூன்று கோடி 60 லக்ஷம் ஓட்டர்களுக்கும் ராஜீய ஞானம் உண்டு பண்ணி, அவர்களை ஒன்று திரட்டுவதே நாம் செய்யக் கூடிய வேலை. காங்கிரஸ் மகாசபை ஜனங்களின் உண்மையான பிரதிநிதி சபையென்பது வாஸ்தவமாயின், ஓட்டர்களின் ஆதரவைப் பெற்று அவர்களுடைய பிரதிநிதிகளாக இருந்து காங்கிரஸ்காரர்கள் வேலை செய்ய வேண்டும். யார் தங்களுக்கு தெளிவான ஒரு வழியைக் காட்டப் போகிறார்கள் என்று மகாஜனங்கள் ஆவலாய் இருக்கிறார்கள்.” தோழர்களே! சத்தியமூர்த்தி போன்றவர்களின் ஆதிக்கத் தாண்டவத்திற்கு இடங்கொடுக்கப் போகின்றீர்களா? இவர்கள் மூன்.
இருந்து சாதித்தது நாம் அறிந்தது தானே! மற்றும் இப்பேர்க் கொத்தவர்களின் சிறிய எண்ணமுங்கூட நம் நாட்டிற்கு எவ்வளவு அபாயகரமானதென்பதை விளக்கிக் கூறத் தேவையில்லை.
நமது இந்திய சட்டசபை - மாகாண சட்டசபைகள் - ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவைகள் இந்திய பொதுஜன பிரதிநிதித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது உண்மை. ஆனால் பொது ஜனங்களுடைய பிரதிநிதிகள் மாத்திரம் அங்கு இல்லை. அங்குள்ளவர்களில் 100-க்கு 98 பேர்கள் தங்களுக்கு மாத்திரமே தாங்களே பிரதிநிதிகளென்னும் பணக்காரக் கூட்டத்தார், செல்வவந்தர் கூட்டத்தார், வகை துகை அறியாத படித்த கூட்டத்தார் முதலானவர்களாவார்கள்.
இதைப் பார்த்து இன்றையதினம் நம்நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழை மகனும், கூலிக்காரனும், தொழிலாளியும், விவசாயியும் கஷ்டப்பட்டு அவதிப்படுபவனுமாகியவர்கள், அதிருப்திப்பட்டு ஆத்திரமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல மார்க்கம் ஏற்பட வேண்டியது பெரிதும் அவசியமே.
ஆனால் இந்த நிலையில் சுயராஜ்யக் கட்சியாரின் சட்டசபைப் பிரவேசம், கஷ்டப்பட்டு அவதிப்பட்டு கொடுமைப்படுபவருக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்ற கொடுமையாகுமேயன்றி, வேறு எந்த சிறு குண்டூசி நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பது பகிரங்க ரகசியம் இன்றைய மக்களின் விழிப்பிற்குக் காரணம், அவர்களின் சுயமரியாதை உணர்ச்சியேயாகும். இந்த விழிப்பானது நமது தமிழ்நாட்டில் மாத்திரம்
நின்றுவிடாது. அகில இந்தியா முழுதும் ஏற்பட்டிருக்கிறது. சமதர்ம சோஷியலிஸ்ட் அபிப்பிராயங்களைக் கொண்டு கேரளத்திலும், பஞ்சாபிலும், பம்பாயிலும், மத்திய மாகாணத்திலும்,
ரட்ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
கான்பூரிலும் இன்னும் சில இடங்களிலும் தக்க இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு நல்ல வேலைகள் செய்து வருகின்றனர். இன்றைய தினம் இந்தியாவில் நிலைபெற்றுள்ள எல்லா விஷயங்களிலுமுள்ள அதிருப்தியை ஆங்காங்கு வெளிக்காட்டி வருகிறார்கள். அவர்களெல்லோரும் நம் நாட்டில் நிலவும் பல்வேறு விஷயங்களையும், முறைகளையும் அடியோடு மாற்றாமல் நம்முடைய ஜனசமூகத்திற்கு எவ்வித நன்மையையும் கொண்டு வந்து விடுவதென்பது முடியாத காரியமென்பதை உணர்ந்திருக்கிறார்கள். பல மக்கள் கஷ்டப்படுவது, சிலர் சுகம் அனுபவிப்பது என்கிற நிலை எந்த
இடத்தில் எந்த அமைப்பில் இருந்தாலும் அடியோடு அழிக்கவே முயல வேண்டும். முதலாளி தொழிலாளி என்கிற பேதமோ, ஆண்டான். அடிமை என்கிற அமைப்போ, தொண்டமான் தோட்டி என்கிற தொல்லையோ, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமோ இன்றி, எல்லோரும் சரிநிகர் சமமான அந்தஸ்து நிலை எய்த வேண்டுமென்கிற அழுத்தமான அபிப்பிராயம் எங்கும் ஊறிப் போய்விட்டது ஆகையால் சுயமரியாதைத் தோழர்களே! நாட்டின் உத்வேகம்
நம் பக்கமே சார்ந்திருக்கிறதென்பதை உணர்ந்து நமது இயக்க லக்ஷியத்திற்கு விரோதமானவர்களையும் நம் லட்சியத்தை நன்கு உணர சந்தர்ப்பம் கொடுத்து நாமே எங்கும் ஆதிக்கமும், பலமும், செல்வாக்கும் பெற வேண்டுமென்பதில் அதிகக் கவலையும் ஊக்கமுமெடுத்துத் தளராது உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்
நமது தோழர் ம.சிங்காரவேலு அவர்களின் தமிழ் மாகாணச் சமதர்மப் பேருரையில் “சமதர்ம ஞானத்தைப் பொது மேடைகளிலிருந்து தெரிவிப்பதுடன், சட்டசபைகளிலும், மற்ற ஸ்தாபனங்களிலும் நுழைந்து பொது மக்களிடம் நெருங்க வேண்டுமென்று” கூறியிருப்பதை ஒவ்வொருவருக்கும் ஞாபகமூட்டுகிறோம்
இந்தச் சந்தர்ப்பத்தில் சமீபத்தில் 4வது சுயமரியாதை மாகாண: மகாநாட்டை நாளது ஆகஸ்டு மாதத்தில் திருச்சியில் கூட்டுவதென்று நமது சுயமரியாதைச் சங்கத்தின் மத்திய சபைக் கூட்டத்தார் கடந்த
11-ந் தேதி சென்னையில் கூடி தீர்மானித்திருப்பது மிக விசேஷிக்கத்
தக்கது. இதன் விபரம் பிறிதொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம் எனவே, நமது தோழர்கள் யாவரும் நமது இயக்க வளர்ச்சிக்குத் திருச்சியில் ஒன்று கூடி மேற்காட்டிய நல்ல முடிவிற்கு வரக் கோருகிறோம், அதோடு நம்நாட்டின் பழைய வர்ணாஸ்ரம தர்மத்தை யொத்த இன்றைய முதலாளி, தொழிலாளி என்ற முறையையும் புரோகிதர் ஆட்சியையும், வியாபாரிகள் கொள்ளையையும் பணக்காரர்கள், சிற்றரசர்கள் போன்றவர்களின் ஆதிக்கத்தையும் மறைமுகமாகவேனும் ஆதரிக்க ஒருப்படும் எந்தக் கட்சியானாலும் அது தக்கவாறு திருத்தி சமதர்ம லக்ஷியம் பெறச் செய்வதும் நமது கடமையாகும். மற்றும்
குடி அரசு (புரட்சி)- 1934(1)) அ 7
நமது இயக்க வேலைத் திட்டமாகிய பொதுவுடமைத் தத்துவத்தை அதாவது நிலங்கள், தொழிற்சாலைகள், போக்குவரத்து வசதிகள் முதலியனவற்றை பொதுவாக்கி அந்தந்த ஸ்தாபனங்களில் உழைத்துவரும் விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு அதனுடைய வருமானங்கள் யாவற்றையும் உபயோகப்படச் செய்து உழைக்கத்தக்க முன்னணி வேலைத் திட்டத்தை தீவிரப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்
மற்றும் தோழர் C.D. நாயகம் அவர்களின் கட்டுரையை இவ்வாரம் “புரட்சி“யின் 3 -ம் பக்கம் பிரசுரித்திருப்பதை வாசகர்கள் ஊன்றிப் படித்தால் எந்தத் திட்டம் மக்களுக்குப் பயன்படுமென்பது விளங்காமற் போகாது
புரட்சி - தலையங்கம் - 18.03.1934
B ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
துணுக்குகள்
பட்டினிக் குரல் கேட்க வில்லையா?
இவ்வாரத்தில் லண்டனில் லார்டு லெஸ்டியும், சர் எட்மெண்டு லெஸ்டியும் மாதாக் கோவிலுக்குக் கோபுரம் கட்டுவதற்கு இரண்டு லட்சத்து இருபதினாயிரம் பவுன் நன்கொடை அளித்திருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கு பட்டினியின் மிகுதியால் அவதிப்படும் பாட்டாளியின் கூக்குரல் காதில் விழவில்லையா? லண்டன் ஹைடி பார்க்கில் 75000 பட்டினி வீரர்கள் எட்டு மேடைகளில் அலறியதை, அந்த மதப் பித்தம் பிடித்த கடவுள் வெறியர்கள் சிறிது சிந்தித்துப் பார்த்திருந்தால் “இயேசு” கோபித்துக் கொண்டிருப்பாரோ?
பாசிசமா? சோஷியலிசமா?
மேணாடுகளில் “பாசிசம்” “சோஷியலிசம்” என்று அடிக்கடி பேசப்பட்டு வருகிறது. சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தலைமை ஸ்தானமான பிரிட்டனில் இன்று பாசிசம் மூறியடிக்கப்பட்டிருக்கிறது லண்டனில் நிகழும் கவுண்டி கவுன்சில் எலக்ஷன்களே பார்லிமெண்டரி எலக்ஷன்களின் எதிர் காலத்தைக் குறிப்பிடுவதாகும். லண்டன் முனிசிபல் எலெக்ஷன்களான கவுண்டி கவுன்சில் தேர்தலேதான் இன்றைய தினம் பார்லிமெண்டுக்கு அடுத்த முக்கியமானதாகும் இப்பேர்க்கொத்த தேர்தலில் தொழிலாளர்களே முன்னையை விட நன்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள். எலெக்ஷன்களுக்கு முந்தி 34 ஸ்தானங்களே பெற்றிருந்த தொழிலாளர்கள் இன்று 69 ஸ்தானங்களைக் கைப்பற்றி விட்டார்கள். லண்டன் கவுண்டி கவுன்சிலில் தொழிலாளர்கள் பெரும்பான்மையோர் ஸ்தானம் பெற்றது இதுவேதான் முதல் தடவையாகும். இதிலிருந்தே, பாசிசமா? சோஷியலிசமா ? மேனாடுகளில் தலை நிமிரும் என்பதைக் கவனிக்கவும்
புரட்சி - துணுக்குகள் - 18.03.1934
குடி அரசு (புரட்சி)- 794) — 71
சைவ மகாநாடு
தமிழ் பாஷையின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாயிருந்தவர் களும் - தமிழை வளர்த்த சமணர், பெளத்தர் முதலியவர்களைச் சூழ்ச்சியால் கொன்ற சைவர்கள் - இல்லை - வேளாளர்கள் தமிழர்களின். பேரால் திருநெல்வேலியில் மகாநாடு கூட்டுகிறார்கள். தமிழர்களே! ஏமாந்து விடாதீர்கள்.
புரட்சி - அறிவிப்பு - 18.03.1934
75 ௨... ஒரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
முதலாவிகன் ஆதிக்கம் உஷார்!
இந்திய நாட்டின் தொழிலாள வகுப்பார்கள் தங்கள் அடிமைச் சங்கிலிகளை அறவே தகர்த்தெறிய, பரிபூரணமாக இன்னும் முற்படவில்லை என்றாலும், ஓர் அளவிற்கு அவர்கள் சமீப காலத்தில் விழிப்படைந்திருக் கிறார்கள் என்பது மாத்திரம் மறுக்க முடியாத உண்மையாகும் தொழிலாளர்களுடைய விழிப்பிற்குக் காரணம், அவர்களுடைய சகிக்க முடியாத கொடிய துன்பங்களும் கஷ்டங்களுமேயாகும்.
தொழிலாளர்களுக்கு, முதலாளிகளோ அல்லது அரசாங்கத்தாலோ இன்றையத் தினம் 'கிருபா கடாக்ஷம்' காட்டப்படுகிற தென்று சொன்னால், அது அந்த தொழிலாளிகளின் உழைப்பின் பயனாகவே, நியாயமாக கிடைக்க வேண்டிய வரும்படியிலிருந்து கொஞ்சம் கொடுத்து, தொழிலாளர்கள் வயிறு ஒட்டி, வாடி வதங்கி சாகாமலிருக்கச் செய்து, மீண்டும் சாஸ்வதமாக தங்களுக்கே ஊழியம் செய்து கொண்டிருப்பதற்கே தவிர, மற்றப்படி நியாய புத்தியையோ, கருணைப் பிரவாகத்தையோ அல்லது பச்சாதாப இரக்க புதிதியையோ, கொண்டதல்லவென்று துணிந்து கூறுவோம்.
இன்றைய தினம் முதலாளியானவன், ஒரு தொழிலாளியைப் பற்றி எப்பேர்க்கொத்த மனோ நிலையைக் கொண்டிருக்கிறான் என்று முடிவு கட்டுவதற்கு, அவனுடைய நடைமுறை வாழ்க்கையை பரிசீலனை செய்யுங்கள். ஒரு முதலாளிக்கு, அவனுடைய நாய்க்குட்டியோ, மைனாக் கிளியோ, எருமைமாடோ செத்துப் போனால், அதை நஷ்டமாகக் கருதி
துக்கப்படுகிறான். ஆனால், ஒரு தொழிலாளி செத்துப் போனால், அந்தப்படி கூட துக்கப்படுவதைக் காணோம். தொழிலாளர்களுடைய இந்த பரிதாப நிலைமைக்கு யார் என்ன சமாதானம் கூறக்கூடும்
தொழிலாளர்கள் தங்களுடைய நியாயமான உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள, இன்னும் தக்க சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், ஆங்காங்கே தொழிலாள சமூக விழிப்பின் காரணமாக, சில தொழிற்சங்க ஸ்தாபனங்களும், டிரேட் யூனியன் சங்கங்களும் ஸ்தாபிக்கப்பட்டு வந்திருக்கின்றன, வருகின்றன. இவற்றில் சில முதலாளிமார்களின் சூழ்ச்சிக்கு அடங்கியதும், தொழிலாளர்களை வஞ்சித்து துரோகம் செய்வதுமாகும். இது போன்ற ஸ்தாபனங்கள் நாட்டில் புதிய அரசியல் சீர்திருத்தங்கள் வழங்க உத்தேசிக்கப்படும் காலம் முதல், ஒரு சில சுயநலப் பித்தர்களால் உண்டாக்கப்படுவது சர்வ சாதாரணமாகும். இதைத்தக்கவாறு தொழிலாளத்
குடி அரசு (புரட்சி)- 194) — 7௦
தோழர்கள் கவனித்து - பிறர் சூழ்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது (தொழிலாளர்களாகிய) தங்களின் ஆதிக்கத்தையே பரப்பப் பெரிதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டுகிறோம்.
முதலாளி வகுப்பின் ஆதிக்கம் ஒழிந்தாலொழிய தொழிலாளி விடுதலை பெற மார்க்கமில்லை என்பதை இன்றைய தினம் யாரும் ஆட்சேபனையின்றி ஒப்புக் கொள்வர். அதோடு ஜாதி அபிமானத்தாலோ
- மத அபிமானத்தாலோ தேசாபிமானத்தாலோ, கடவுளபிமானத்தாலோ. தொழிலாளர்களுடைய முற்போக்கு கிஞ்சிற்றும் ஏற்படுவதற்கு வழியில்லை என்பதும், சமீப காலத்தில் நாம் அனுபவப் பூர்வமாகக் கூட கண்டறிந்த உண்மையாகும்
உதாரணமாக இந்தத் தத்துவத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடிய அகில இந்திய டிரேட் யூனியன் காங்கிரசானது ஓர் அளவிற்கு நன்கு உணர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களுடைய சரித்திரத்திலேயே மிகவும் சிலாகிக்கத்தக்க ஒரு விசேஷ சம்பவமும் இந்த மகாநாட்டில் நிறைவேறியது. அதாவது “மகாத்மா காந்தி உள்ளிட்ட மாபெரும் தேசீபத் தலைவர்களெல்லாம்" நாட்டின் முற்போக்கிற்கு தீங்கு விளைக்கும் “தேசத் துரோகிகள்" என்று பகிரங்கமாகவும், வன்மையாகவும், ஆத்திரத்தோடும் எடுத்துக்காட்டப்பட்டுக் கண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களுடைய விழிப்பு நிலை. ஒருவாறு இவ் விதமாக இருப்பதால், தொழிலாள தோழர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டுவிட்டு இதனை முடித்து விடுகின்றோம். அதாவது தொழிலாளியின் முன்னேற்றத்திற்கு தொழிலாளிகளையே நம்புங்களென்பதேயாகும்.
புரட்சி - தலையங்கம் - 25.03.1934
77 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஜெர்மன் சர்வாதிகாரியும் வேலையில்லாத் திண்டாட்டமும்
ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாகப் பல லெக்ஷம் ஜனங்கள் தங்கள் வயிற்றுச் சோற்றுக்கே திண்டாட்டமாகி, இருப்பதா இறப்பதா என்ற ஆலோசனையில் ஆழ்ந்து கிடந்தனர். அவர்களது வயிற்றுக்கு உணவு கிடைக்கவும், அவர்களுக்கு வேலை கிடைக்கவும், சில திட்டங்களை வகுத்துக் கோடிக்கணக்கான பொருளை அதற்கென ஜெர்மன் சர்வாதிகாரி
ஹிட்லர் செலவழித்து வேலையில்லாது திண்டாடும் பெரும்பாலோருக்கு வேலை கொடுத்து வருவதாகவும், இது பெரும் மெச்சத் தகுந்த காரியமென்றும் பல முதலாளி அரசாங்கங்கள் பறை சாற்றுகின்றன.
ஆனால் நாம் இது முதலாளி ஆட்சியின் அழிவிற்கு முன்னால் செய்யப்படும் கடைசி முயற்சி என்று கருதுவதுடன், கண்டிப்பாய் இன்று இல்லாவிட்டாலும் இன்னும் பத்து வருடங்களிலாவது இம்முறை சமதர்மத்தில் தான் கொண்டு போய்விடும் என்று பரிபூரணமாக நம்புகிறோம் ஏனெனில் இன்று முதல் ஒரு ஐந்து வருடங்களுக்கோ அல்லது பத்து வருடங்களுக்கோ செய்யக் கூடிய பெரும் வேலைத் திட்டத்தையும் அதற்குப் பொருளையும் ஹிட்லர் உண்டு பண்ணி வேலையற்றவர்களுக்கு வேலை கொடுத்து அவர்களது உயிர் பசியால் உடலை விட்டுப் பிரிய முடியாத அளவிற்கு ஆகாரம் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தலாம். ஆயினும் எத்தனை காலத்திற்கு ரோட்டுகள் போடுவது, காடுகள் சீர்திருத்துவது, கட்டடங்கள் கட்டுவது போன்ற வேலைகள். இருக்கும். இவைகளைச் செய்து முடித்த பின் அந்நாட்டில் அவர்களுக்கு என்ன வேலை கிடைக்கும். அந்த நிலையில் அவர்களது கடைசி முயற்சி என்ன என்பதை வாசகர்களே யோசிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
புரட்சி - துணைத் தலையங்கம் - 25.03.1934
குடி அரசு (புரட்சி)- 194) அட 7௦
சர்.கே.வி. மெட்டி
சமீபத்தில் ஸர்.எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் தமது சட்ட
மந்திரி பதவியிலிருந்து விலகிக் கொள்ளப்போவதாகவும் அந்த ஸ்தானத்திற்கு ஸர். கூர்மா வெங்கிடரெட்டி நாயுடு அவர்கள் நியமிக்கப்படப் போவதாகவும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது உண்மையானால் நாம் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவில்லை யென்றுதான் சொல்ல வேண்டும்
ஸர். ரெட்டி அவர்கள் சென்ற முப்பது வருடங்களாக சமூக சீர்த்திருத்தம் அவசியம் என்பதையும் அதற்கு பார்ப்பனீயம் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறதென்பதையும் உணர்ந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம், பார்ப்பன மத ஆதிக்கத்தினின்று விடுபடுவதுதான். என்பதை எழுத்திலும், பேச்சிலும், செய்கையிலும் காட்டி வரும் ஒரு சீர்திருத்தப் பிரியர். நிற்க நமது மாகாண பார்ப்பனரல்லாதார் கக்ஷியென வழங்கும் ஜஸ்டிஸ் ககஷி, ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுக்கு பல துரோகங்களைச் செய்திருப்பினும், அவர் அதைப் பொருட் படுத்தாது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் இயக்க வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய புனிதர். ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களது திறமையை அறிந்த அவர்களது சகாக்கள் பொறாமையினால் அவரை
ஒதுக்கி வைத்திருந்த போதிலும், அரசாங்கத்தார் அவரது திறமையை உணர்ந்து அவ்வப்போது அவருக்குரிய ஸ்தானத்தை அவருக்கு கொடுத்து வருவதை பாராட்டுகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 25.03.1934
79 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மீண்டும் பார்ப்பணீயமா?
மாகாணப் பார்ப்பனீயம் மீண்டும் அறைகூவி அழைக்கிறது இதற்கு மாகாணப் பார்ப்பனரல்லாதார் அளிக்கப்போகும் பதில் யாது? இன்றைய மாகாணச் சர்க்கார் நமது பார்ப்பனர் அல்லாதார் கட்சியில் நடைபெற்று வருகிறது. சென்ற மாதத்திற்கு மூன் மாகாணச் சட்டசபையில் இனாம்தார்களின் பார்ப்பனப் பணக்காரர்களின் குடிகளுக்கு நியாயம் வழங்க ஓர் சட்டம் நிறைவேறியது. இச்சட்டத்தால் இனாம்குடிகளுக்குப் பரிபூரண நன்மை எதுவும் ஏற்படாவிட்டாலும் ஓர் சாதாரண உரிமையை மட்டும் ஒப்புக்கொள்வதாகவே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைக் கண்டு மாகாணப் பார்ப்பனீயம் ஒன்றுபட்டு எதிர்க்க முயற்சித்தது. முடிவில் மாகாணக் கவர்னர் பெருமானைப் பேட்டிகண்டு நிறைவேற்றப்பட்டுள்ள இனாம் குடிகள் சட்டத்திற்கு ஓர் திருத்தம் கொண்டுவரும்படி இன்றைய பிராமணியம் செய்துவிட்டது. இதற்கு மாகாணப் பார்ப்பனரல்லாதார் கட்சி செய்யப்போகும் பரிகாரம் யாது என்பதுதான் நமது கேள்வியாகும்.
அதிகாரத்தில் உள்ள சட்ட சபையில் மெஜாரிட்டியாகவுள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சர்க்கார் மெம்பர்களுடைய பரிபூரண ஒத்துழைப்பையும் பெற்று இச் சட்டத்தை நிறைவேற்றினார்கள். இச் சட்டத்தால் இனாம்தார்களுக்கு எத்தகைய கஷ்டமோ, நஷ்டமோ நேர்ந்துவிடவில்லை. ஆனால் இம் மாகாணப் பார்ப்பனீயத்திற்கு செல்வாக்கா? அல்லாதார்களியக்கத்திற்கு ஆதரவா? என்பதைப் பரீட்சிப்பதுபோலவே இச்சட்டம் எண்ணப்பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சி மெம்பர்களில் பலரும் இதை ஆதரித்தார்கள். அப்படியிருந்தும் மாகாணப் பார்ப்பனர்கள் தங்களின் ஆதிக்கத்திற்குப் புது உயிர் கொடுக்க இச் சம்பவத்தை உபயோகித்துக்கொள்ள எண்ணியதால் அவர்கள் முழுச் சக்தியும் ஒன்று கூடி மேன்மைதங்கிய கவர்னர் பெருமான் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டது
இந்த நெருக்கடியான நிலைமையில் நமது மாகாணச் சட்டசபையில். உள்ள ஜஸ்டிஸ் கட்சி, அதன் தலைவர்கள் இவர்கள் ஒன்றுபட்டு தங்களின் முந்திய செய்கையை மீண்டும் உறுதிப்படுத்தப்போகிறார்களா? அல்லது கவர்னர் பெருமான் திருத்தம் கொண்டுவர ஆசைப்படுவதால் நாம் மீண்டும் பழைய முறையை வற்புருத்தினால் சர்க்கார் பெரிய மனிதர்களின் கோபம் வந்துவிடும் என்று பயந்து நாளைய நிலைமையைக் கைநழுவவிடப் போகிறார்களா? என்பது தெரிந்துவிடவேண்டும்
குடி அரசு (புரட்சி)-794()) — 80
தாங்கள் செய்த நியாயமான ஓர் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்புங்கூட, மாகாணப் பார்ப்பனர்கள் அத்தனைபேரும் எதிர்த்துத் தோற்கடிக்கச் செய்து விட்டார்களே! என்ற ரோஷம் கடுகளவு நமது அல்லாதார். தலைவர்களுக்கு இருந்துவிட்டால் நாளை வரவிருக்கும் திருத்தமும் தோற்கடிக்கப்படப்போவது நிச்சயம். ஆனால் அவ்விதம் செய்வார்களா?
மே. த. கவர்னர் பெருமான் அடுத்தமாதம் விலகப்போகிறவர். தன்னை வந்து கேட்டுக்கொண்ட பார்ப்பனப் பிரதிநிதிக் கூட்டத்தார்களின். வேண்டுகோளின்படி மீண்டும் ஓர் சான்ஸ் கொடுக்க தாம் சம்மதப்படுவதாக அவர் கூறிவிட்டது ஆச்சரியமல்ல. மே.த. கவர்னருக்குச் சட்டசபையிலுள்ள மெஜாரிட்டி மெம்பர்கள் இச்சட்டத்தை ஆதரிப்பதும், ஆதரித்தும் நன்கு
தெரியும். இச் சட்டம் நிறைவேற்றப்படுவதால் மாகாண க்ஷேமத்துக்கோ, இனாம்தார்கள் க்ஷேமத்துக்கோ, குடிகள் க்ஷமத்துக்கோ பெரும் ஆபத்து வருமென்று மே. த. கவர்னர் நினைத்தால் முன்னமேயே வேறு நிலைமை ஏற்பட்டிருக்கும்; இதை அக்காலத்தில் சர்க்கார் மெம்பர்கள் ஆதரித்து இருக்கவுமாட்டார்கள். ஆனால் சட்ட பூரணமாக நிறைவேற்றப்பட்டபின்பு இம்மாகாணத்தில் ஏற்பட்ட புது நிலைமைதான் இன்று மாகாணச் சட்டசபையை மீண்டும் தன்னால் செய்யப்பட்ட சட்டத்திற்குத் திருத்தம் வரும்படியான நிலைமையை உண்டுபண்ணிக்கொள்ளச் செய்தது. ஆதலால் ஜஸ்டிஸ் கட்சிக்காரர் முதலில் கவர்னர் பெருமான் கோபித்துக்கொள்ளுவாரென்று பட்டிக்காட்டான் சொல்லவிருக்கும் சமாதானத்தைச் சொல்லித் தப்பிக்க முடியாது. திருத்தம் வந்தால் தைரியமாக அதை எதிற்கச் சற்றும் தயங்கக்கூடாது. அப்படித் தயங்கினால் இவர்கள் இனாம்தார்களின் குடிகளிடம் பரிதாபப்படாமல் மாகாணப் பார்ப்பனீயத்துக்கு விரோதமாக க்ஷ£த்திரத்தின்மேல் செய்யப்பட்ட செய்கை என்று மே.த. கவர்னரிடம் பார்ப்பனப் பிரதிநிதிகள் கூறியது உண்மையாகிவிடும்
கவர்னர் பெருமான் இவர்கள் செய்கையை பின்பு கேவலமாக எண்ண இடமேற்பட்டாலும் ஏற்படக் கூடுமாதலால் அதற்கு இஷ்டப்படமாட்டார்கள் என்று நம்புகிறோம். மாகாணச் சட்டசபையில் மைனாரிட்டியாகத் தனது கட்சி இருக்கும்போதும் தனது திறனால், ராஜதந்திரத்தால், சுயநலமின்மையினால் சட்டசபையில் மெஜாரிட்டி கொண்டு வரமுடியும் என்பது காலம் சென்ற பனகால் மன்னனின். முடிவாகும். அவ்விதம் கொண்டுவந்தும் அக்கால மந்திரி கட்சிகளைச்
சிதர அடித்தும் இருக்கிறார். அத்துடன் மட்டுமல்ல, மாகாண எல்லையைத் தாண்டி மத்திய சர்க்காரின் செய்கையிலும் தலையிட்டுத் தனது சமூகமான பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு விரோதமாக இருந்த ஒருவரை சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்களைச் சட்டமெம்பராக வர: முடியாது செய்தார் என்று ஹிந்து பத்திரிகையே எழுதியிருக்கிறது அக்கக்ஷியின் பின் தலைவர்கள் இன்று மத்திய சர்க்காரிடம் தங்கள் ஹட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
செல்வாக்கை உபயோகிக்க வேண்டாம். மாகாண சர்க்கார் பகிரங்கமாக எதிர்க்கும் ஓர் செய்கைக்கும் எதிராக நிற்கவேண்டாம். மாகாண மே. த கவர்னராலும், சர்க்கார் மெம்பர்களாலும், ஒரே மனதாய் ஒப்புக்கொள்ளப்பட்டு, பெரும்பான்மையான ஓட்டுகளினால் மூன்று மாதத்திற்கு மூன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை காற்க வழி இல்லை என்றால் இது மிக
இழிவு போன்றதாகும்
ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களே!
ராஜா பனகால் இறந்ததும், நமது கட்சி சிதர ஆரம்பித்தது. ஹிந்து ஆசிரியர் ஏ. இரங்கசாமி ஐயங்கார் காலமானதும் மாகாண பார்ப்பனர்கள் ஒன்றுபட்டு விட்டார்கள். இது உங்கள் கட்சிக்கு வெட்டப்பட்ட பெறும்பள்ளத்தில் மீண்டும் மண் தோண்டுவதாகும். சர்.சி.பி. கட்சியும், ரைட் ஆனரபில் சாஸ்திரி கட்சியும், வெங்கட்டராம சாஸ்திரிகள் கட்சியுடன் ஒன்றுபட்டு விட்டது. இதை இவர்களின் விரோதிகளாய் இருந்த சீனிவாச ஐயங்கார் கட்சியும், எ. இரங்கசாமி கட்சியும், ஒன்றுபட்டு ஆதரிக்கிறது. இவர்கள் அத்தனை பேருக்கும் நேற்று வரையில் பரம விரோதியாக இருந்த குட்டி காந்தி தோழர் சக்கிரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கட்சி ரிஜிஸ்டர் செய்த கட்சியாக ஒன்றாக்கிவிட்டார். சுருங்கச் சொன்னால் தொழிலாளி பேரால் உள்ள பார்ப்பன தலைவர்கள், மதத்தின் பேரால் உள்ள வைதீகப் பார்ப்பன தலைவர்கள், அரசியலில் பல கட்சி பேரால் தனித்தனி ராஜ்யம் நடத்திய பார்ப்பன தலைவர்கள் இவர்கள் அத்தனை பேரும் ஒன்றாகிவிட்டார்கள். ஓட்டல் பார்ப்பானும் இனாம்தார் சட்டத்தை கண்டிக்கிறான், உத்தியோக பார்ப்பன தலைவரான அல்லாடி அய்யர்வாளும் இனாம்தார் சட்டத்தை கண்டிக்கிறார். இவைகளுக்கு அர்த்தம் இனாம்தார்கள் சட்டத்தால் சிதரி கீறழிந்து கிடந்த - ஐயர் - ஐயங்கார் - சாஸ்திரி - ஆச்சாரி ஆகிய சகல: ஆரியரும் ஒன்றாகி விட்டார்கள் என்பதே அர்த்தமாகும். இதை அகில இந்திய பார்ப்பன - தாஸாதி தாஸனாகவும் - சம்பந்தியாகவும் உள்ள - நமது காந்தி பாபுவும் ஆதரிக்கிறார். மயிலை ஐயங்கார் - வீட்டுக்கு - காந்தி விஜயம் இதைத்தான் காட்டுகிறது. மாகாண முழுவதும் உள்ள சகல பார்ப்பனரும் ஒன்றாக இருப்பதும், இம்மாகாணத்திலுள்ள நான்கு தினசரி ஆங்கில பத்திரிகைகளும், மூன்று தமிழ் தினசரி பத்திரிகைகளும்,
குட்டிப் பத்திரிகைகளும், மாகாண பார்ப்பனீயத்துக்கு ஆதரவு காட்டி எங்கும் இனாம்தார்களுக்கு ஆபத்து என்ற “கெங்காதரா மாண்டாயோ" எனும் கூச்சல் போடுவதும் மே.த. கவர்னருக்கு தெரியும். ஆதலால். அவர் திருத்தத்தை ஆதரித்தார். இதை கண்டு கலங்காது முன் சொன்ன பலத்தைவிட 100க்கு 97 பேர்களாக உள்ள மக்களின் எதிர்ப்பு இனி ஏற்படும் என்பதை ஜஸ்டிஸ் கட்சியார் இன்று சர்க்காருக்கு உணர்த்த வேண்டும். இவ்விதம் உணர்த்துவது சட்டவிரோதமல்ல
குடி அரசு (புரட்சி)-794()) அஆ ஐ
ஜஸ்டிஸ் கட்சியாரால் கொண்டுவரப்பட்ட, நிறைவேற்றப்பட்ட
ஓர் சட்டம், சில பார்ப்பன கனவான்களின் எதிற்புக்கு பயந்து உடைத்து எரியப்படுமானால், அது இனி இம்மாகாணத்தில் பார்ப்பனீயத்தை எதிர்த்து எவனும் வாழ முடியாது என்பதைத்தான் காட்டும். நீங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு பெறும் நன்மை எதுவும் செய்யாவிட்டாலும், உங்களால் தீமை வராது இருக்கும்படியாகவாவது நீங்கள் நடந்து கொள்ளவேண்டும். நாளை வரும் திருத்தம் பெறும் கட்டுப்பாடுடன். எதிர்க்கப்பட்டு, இம்மாகாணப் பார்ப்பனீயத்துக்கு சாவு மணி அடிக்கப்போகின்றீர்களா? அல்லது சிலர் சொல்லுகிறபடி திருத்தம் வரும்போது சண்டப் பிரசண்டமாகப் பேசி விட்டு ஓட்டு எடுக்கும்போது வெளியே சென்றுவிடப் போகிறீர்களா? என்று பார்ப்பனரல்லாத சமூகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. திருத்தத்தை எதிர்க்க முடியாவிட்டாலும், எப்படியும் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்படுமானால் ஜஸ்டிஸ் கட்சி அத்தனை பேரும் சட்டசபையை விட்டு, வீரர்களாக வெளிவர தயாறாக இருக்கிறீர்களா? அப்படி இருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால், இந்நிலை ஏற்பட்டுகூட யிருக்காது. எப்படியோ ஏற்பட்டு விட்டது இனியாவது உங்களை நம்பிய கோடானு கோடி மக்கள் பார்ப்பனர் முன் நிமிர்ந்து நடக்கும்படியாகச் செய்யத் தவரக்கூடாது
நமது முதன் மந்திரி அவர்களுக்கு, கனம் அல்லாடி ஐயர் அவர்கள் இச்சட்டம் போன்றதுகள் வந்தால் - ரஷ்யாவின் பொதுவுடைமை உடனே வந்துவிடும் என்று பொய்க்கதை கூறி உங்களை பயமுறுத்தும் போது அதை ஆண்மையுடன் தாங்கள் மறுத்ததை மாகாணப் பார்ப்பனரல்லாதார் மறந்துவிடவில்லை. அத்துடன் மட்டுமல்ல. ரஷ்யாவில் ஏற்பட்ட கலகம் இங்கு உண்டாகாதிருக்க அதைத் தடுக்கும் பொருட்டு இந்நாட்டு ஏழைக் குடிகளுக்குப் பாதுகாப்பும் நம்பிக்கையும் உண்டாவதற்காகவே இச் சட்டம் கொண்டுவந்ததாகக் கூட தாங்கள் கெம்பீரமாகக் கூறியது இன்னும் கேட்டுக்கொண்டு இருக்கிறது. நாளைய திருத்தம் தோற்கடிக்கப்படாமல் போனால் அது உங்கள் கட்சிக்கு மட்டும் நஷ்டமென்பதல்ல. உங்கள் கட்சியின் பேர் எந்தக் கோடிக்கணக்கான மக்களின் பேரால் இருக்கிறதோ அவர்களுக்கு துரோகம் செய்ததாக ஆகும் என்பதையும் ஞாபகமூட்ட ஆசைப்படுவதுடன் இந்நிலை ஏற்பட ஜஸ்டிஸ் கட்சி இடம் கொடாது என்று சிறிது உள்ள நம்பிக்கையே இதைப்பற்றி வற்புறுத்தத் தூண்டியது நாளை சட்ட மெம்பராக வரவிருக்கும் கனம் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஜஸ்டிஸ்கட்சி முயற்சியால் சிபார்சால் லா மெம்பராக வரவில்லை என்பது பார்ப்பனத் திண்ணைப் பிரசாரமாகும். சர். ரெட்டி நாயுடு அவர்களைவிட தகுந்த ஓர் கனவான் இம் மாகாணத்தில் இல்லை யென்பதைப் பார்ப்பனீயம் ஒப்புக்கொண்டாலும் லா மெம்பர்
8 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
நியமனமானது பார்ப்பன சிபார்சால் வந்ததாக முழுப் பொய் பிரசாரத்தைச் செய்துவருகிறார்கள். இதற்குக் காரணம் ஓர் மாகாணத்தில் மேன்மை தங்கிய கவர்னரிலிருந்து சகல நிர்வாகக் கமிட்டி மெம்பர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சியாகவிருக்கும்போது இதில் ஓர் அய்யருக்கு இடம் கொடுக்கப்படல் நியாயம் என்பது அவர்கள் ஆசையும் முயற்சியுமாகும். அடுத்த காலியாகும் இடத்துக்கு ஓர் அய்யர் பிரபு வருவதற்கு மாகாணப் பார்ப்பனர்கள் இன்றுவரை செய்துவரும் பிரயத்தனம் அளவிட முடியாதனவாகும். வகுப்புவாதத்தை வெறுப்பதாகக் கூறும் தினசரி ஆங்கில தமிழ் பார்ப்பனப் பத்திரிகைகள், அல்லாடி அய்யர்வாள் இருக்க வேண்டுவது அவசியமென்று பறையடிக்கிறது
இனாம்தார் மசோதாவுக்குத் திருத்தம் வந்து அது நிறைவேறிவிடும் பட்சத்தில் அதன்பின் ஜஸ்டிஸ்கட்சி செய்யப்போவது யாது? பார்ப்பனீயம் நிலைநாட்டப்படுமானால் அதன்பின் பார்ப்பனரல்லாதாருக்கு உண்டாக்கப்பட்ட நஷ்டத்துக்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி செய்யப்போகும் பரிகாரம் யாது? இம் மாகாணப் பார்ப்பனர் அல்லாதார் கட்சி செய்யப்போவதென்ன. என்பதை நாம் பொருத்திருந்து பார்ப்போம்.
- நமது அரசியல் நிருபர்
புரட்சி - கட்டுரை - 25.03.1934
குடி அரசு (புரட்சி)- 794) ஆட யு
நாகபட்டினம்
சுயம௰ியாதைச் சங்கம்
18.3.34-5 தேதி மாலை 6.30 மணிக்கு சங்கமெம்பர் கூட்டம் சங்கத் தலைவர் தோழர் எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் கூடியது. அது சமயம். சங்க ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் வரவு சிலவு கணக்குகளை வாசித்து ஒப்புக்கொள்ளப்பட்டது. பின் வருஷாந்திர அறிக்கை தயாரிக்கவும், கணக்குகளைஆடிட் செய்யவும் கமிட்டியொன்று தேர்ந்தெடுக்கப்பட்டபின் சுயமரியாதை சங்க மத்திய சபையின் கூட்ட முடிவைப் பற்றி ஆலோசனைக்கு எடுத்து கொண்டபோது தஞ்சை சுயமரியாதைச் சங்கக் காரியதரிசி தோழர் ஆளவந்தார் அவர்கள் ஜில்லா தாலூகா சங்கங்கள் சரியான முறைப்படி எங்கும் அமைக்கப்படாமலிருப்பதால் எல்லோரும் மாகாண சங்கத்திற்கு வருஷ சந்தா நான்கணா செலுத்தி பதிவு செய்துகெள்ள முடியாதென்றும், மத்திய சங்கத்தில் மெம்பர்களாயில்லாதவர்களுக்கு மாகாண மகாநாட்டில் ஓட்டு கொடுக்க உரிமை கிடையாதென்பதில் ஏதோ சூழ்ச்சியிருப்பதாகவும் கூறினார். அதை ஆதரித்து தோழர்கள் கே.எஸ்.முஜிபுல்லா, வி.சாமிநாதன் ஆகியவர்கள் பேசினார்கள். மத்தியசங்கத்தார் இப்பொழுதாவது மாகாண மகாநாடு கூட்ட முன் வந்தது பற்றி பாராட்டுவதாகவும், கூடிய விரைவில் ஜில்லா சங்கத்தை ஏற்படுத்தி மத்திய சங்கத்தார் தீர்மானப்படி ஜில்லாவுக்கு 1000-அங்கத்தினர்களையாவது சேர்க்க வேண்டுமென்ற தீர்மானத்தை தோழர் டீ.எஸ். மணி பிரரேபிக்க என்.எம். சாமி ஆமோதிக்க மார்ஷல் ஆதரிக்க, ஓட்டுக்கு விடப்பட்டதும் சமத்துவமாக ஓட்டு இருந்ததால் தலைவரின் காஸ்டிங் ஓட்டால் மத்திய சங்கத்தாரின் இர்மானத்தை ஆதரிக்கும் இர்மானம் நிறைவேறியது. முடிவுரையோடு இரவு 11 மணிக்குக் கூட்டம் இனிது கலைந்தது.
பத்திராதிபர் குறிப்பு: விருதுநகரில் நடந்த 3-வது சுயமரியாதை மகாநாட்டில் அமைக்கப்பட்ட கமிட்டி சென்ற 11-3-34 சென்னையில் கூடியது; இவ்வளவு காலம் கழித்தாவது வேலை செய்யும் நோக்கத்தோடு கூடியதையும், கூடி இயக்க வளர்ச்சிக்காக செய்துள்ள தீர்மானத்தையும் பாராட்டுகிறோம் ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
நிற்க நாகை சங்கத்தில் நடந்த விவாதத்தை நோக்கும்போது, அவர்களிடையே உண்டாகியுள்ள ஒரு சில சந்தேகங்களை நீக்க வேண்டி அடியில் கண்டுள்ள விஷயங்களை அவர்களது நினைவிற்குக் கொண்டுவர ஆசைப்படுகிறோம்.
1, செங்கற்பட்டில் கூடிய நமது முதலாவது மகாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள. சங்க அமைப்பு விதிகளின்படி நமது இயக்கத்தில் ஒரு மத்திய
சங்கமும் (மாகாண சங்கம் Central League) மற்ற எல்லா சங்கங்களும் கிளை சங்கங்களாகவும் தான் இருக்க முடியும். ஜில்லா
தாலூக்கா கிராமம் முதலிய சங்கங்கள் கிடையாது
2. அந்தந்த ஊரில் ஏற்படும் சங்கமும் சென்ட்ரல் லீக் என்னும் மாகாணச்
சங்கத்திற்குத் தங்கள் சங்கத்தில் சேர்ந்துள்ள அங்கத்தினர் ஜாபிதாவையும்
அவர்களின் சந்தாத் துகை அணா நாலையும் அனுப்பவேண்டியதும் ஏற்கனவே உள்ள திட்டமேயொழிய புதிய திட்டமல்ல.
3. நான்காவது மகாநாடு கூடும்வரை வசூலாகும் சந்தாப் பணத்தை மாகாணக் கமிட்டிக்குச் செலவழிக்கக்கூடாதென தீர்மானித்திருப்பது ஒன்றுதான் புதிது. இந்தத் தீர்மானம் நமது தோழர்களுக்கு கமிட்டியிடம் நம்பிக்கை ஏற்பட வேண்டியே செய்யப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே மாகாணக் கமிட்டியின் திட்டத்தை நிறைவேற்ற எல்லா கிளைச் சங்கங்களும் முன்வர ஆசைப்படுகிறோம்.
புரட்சி - பத்திராதிபர் குறிப்பு - 25.03.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 8
நமது நாகரீகம்
உலகில், மக்கள் அடைந்துவரும் நிலைமையைக் காட்டு மிராண்டித் தன்மையென்றும், அநாகரீக வாழ்வென்றும், அரை நாகரீக நிலைமை என்றும், நாகரீக நிலைமை என்றும் வகுத்து வருகின்றார்கள். காட்டு மிராண்டித் தன்மையில் மக்கள் விலங்கினங்களைப் போல், வீடுவாசலின்றி நாளைக்கு வேண்டுமென்ற பகுத்தறிவின்றி, மிருகாதிகளைப் போல் அங்கும் இங்கும் இரை தேடி வாழ்ந்து வந்த வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையில், இன்றைக்கும் சில மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இலங்கையிலிருக்கும் வேடர்களும், ஆப்பிரிக்காவில் வாழ்ந்துவரும் காட்டு மனிதர்களும், பிஜீ தீவில் சில காலத்திற்கு மூன் வாழ்ந்து வந்த மக்களும் இன்றைக்கும் காட்டுமிராண்டித் தன்மையிலே இருந்து வருகின்றனர். இந்நிலைமையிலுள்ள மக்களுக்குக் கல்யாணமென்ற கூட்டுறவு கிடையா. பெண்களைச் சட்டி பானைகளைப் போல் ஆண்டு அனுபவித்து வருகின்றார்கள். இதற்கு மேற்பட்ட மக்கள் நிலைமையில் மனித சமூகம் சிறுசிறு கிராமங்களில் வசித்து வரத் தலைப்பட்டனர். கிராம தலைவர்களென்றும் கிராமச் சங்கங்களென்றும், சமூக வாழ்க்கையை உண்டாக்கிக் கொண்டு தத்தம் கிராமங்களில் சில காலம் தங்கியிருந்து, வேறு பிரதேச கிராமங்களைக் கைக்கொண்டு, ஏகதேசமாக நிலங்களையும் பயிர் செய்து வந்த காலம் அநாகரீகக் காலமென்று சொல்லப்படும். ஆண்களையும் பெண்களையும் அடிமைப்படுத்தி வந்த காலமிதுவே. அடுத்தடுத்து ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரோடு போர் புரிந்து வந்த காலமுமிதுவே. இந்த அநாகரீக காலத்தில் அம்பு, வில் ஆயுதங்களும், எலும்பு, தோல் சக்கிமுக்கி கற்களை ஆயுதங்களாகவும் ஆபரணங்களாகவும் தரித்து வந்திருக்கின்றனர். மனிதர் இறந்தால் அவருடைய ஆன்மா உலகில் திரும்ப உலாவுமென்ற எண்ணமும் இக்காலத்தில் தோன்றியதாக ஊகிக்கலாம். அந்த வாழ்க்கையில் பொருளை வாங்குவதும் விற்பதும் கிடையாது. இவ்வித வாழ்க்கையில் அரேபியர், நமது நாட்டில் குறவர், மறவர் இன்னும் அனேக ஆப்பிரிக்க மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அரை நாகரீக வாழ்க்கையில் மக்கள் நகரங்களிலும் பட்டினங்களிலும் சில ஆயிரம் பெயர்கள் தங்கி வாழ ஆரம்பித்தனர். பயிர்த் தொழில் முக்கியமாக உயிர் வாழ்விற்கு அத்தியாவசியமாக ஏற்பட்டது. தலைவனை அரசனென்றும், பாதுகாப்பிற்கு வீரர்களென்றும், மந்திரி பிரதானிகளென்றும் இந்த அரை
87 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
நாகரீக காலத்தில் ஏற்பட்டது. சொத்துரிமையும் இந்தக் காலத்தில் உண்டாகியது போக்குவரத்திற்கு வண்டிகளும், ரதங்களும் ஏற்பட்டன. பண்டைக் காலத்து பண்ட மாற்றுக்குப் பதிலாக நாணய செலாவணி ஏற்பட்டது. பண்டைக்கால அடிமைகளும் இந்த வாழ்க்கையிலிருந்து வந்தனர். பெண்களுக்குச்
சுதந்திரம் ஒன்றுமில்லாமலே புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்ற மனப்பான்மையும், இவ்யுகத்தில் ஏற்பட்டது. கல்விக்கும் கேள்விக்கும் சிற்சில ஸ்தாபனங்களும் உண்டாயின. காட்டு மிராண்டித் தன்மையில் வீட்டிற்கு வீடு கிராமத்திற்குக் கிராமம் சண்டை போட்டுக் கொண்டு வந்தது போய், தேசத்திற்காக சண்டை போடும் நிலைமை உதித்தது சிற்சில பண்டங்களில் வர்த்தகமும் செய்து வந்தார்கள். நாடு நகரங்களில் ஆயிரம் பதினாயிரக்கணக்காக வாழ ஆரம்பித்தனர். மதங்களும், புராணங்களும் உற்பத்தியாயின. குற்றவாளிகள் கொடூரமாக நடத்தப்பட்டு வந்தனர். ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள் மனிதனுக்கு உபயோகப்படும்படியாக பழக்கப்பட்டும் வந்தன. சிற்சில நீதி ஸ்தலங்களும் ஏற்பட்டுள்ளன. அநாகரீக காலத்தில் உண்டான தலைவன் இந்த (செமி) அரை நாகரீகத்தில் அரசனாக மாறினான். அவனுக்கு தெய்வத் தன்மையும் ஏற்பட்டது. மக்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்து வர ஆரம்பித்த காலமிது
இந்தக் காலம், பாரத இராமாயண வாழ்க்கை நடந்து வந்ததாகச் சொல்லும் காலமாகும். தற்போது இந்த அரை நாகரிகத்தில் அப்சீனியர்களும் தென் அமெரிக்க வாசிகளும் சிற்சில பஸ்பிக் தீவிலுள்ள மக்களும் பெரும்பான்மை இந்திய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். பூர்வ
காலத்தில் தமிழர்கள் அடைந்த நாகரீகமும் இந்த அரை நாகரீகமென்றே கருதப்படும். பண்டைக் கால ஈஜிப்ட் தேச நாகரீகமும் அப்சீனியன், கார்டியன், பபிலோனியன் நாகரீகங்களும் இந்த அரை நாகரீகத்தைச் சேர்ந்தவை. மத்திய கால ஐரோப்பிய நாகரீகமும் இந்த அரை நாகரிகத்திலே மூழ்கிக் கிடந்தது. கிரீஸ், ரோமாபுரி நாகரீகமும் இந்த நாகரீக காலத்தைச் சேர்ந்தவை.
இந்த அரை நாகரிகத்திலிருந்து பெறப்பட்ட நாகரீகம் தற்கால நாகரீகமாகும். இதன் முக்கிய இலக்கண மென்னவெனில் லட்சக்கணக்காக மக்கள் நாடு நகரங்களில் வாழ்ந்து வர ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் சண்டை செய்து கொள்ளாமல், நியாய ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் விவாதங்களைத் தீர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். அவரவர்களின் அபிப்பிராயங்களை மூறட்டுத்தனத்தில் அடக்கி ஆள்வதை விட்டு விட்டு விவாத மூலமாக பகுத்தறிவைக் கொண்டு மாற்றிக் கொள்ள ஏற்பட்ட காலமுமிதுவே. பொதுஜன வாக்கென்று ஏற்பட்ட காலமுமிதுவே. அரசுகள் செய்வதெல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாய திட்டத்தை மாற்ற ஏற்பட்ட காலமுமிதுவே உலகிலுள்ள பொருள்கள் சரிசமத்துவமாக உலகில் உழைப்பவர்களுக்கு
குடி அரசு (புரட்சி)- 194) அஆ ஐ
உரியது என்ற எண்ணம் முளைத்ததும் இந்தக் காலமுமாகும். கொடூர தண்டனைகளால் அடக்குவது மிருகத் தன்மையென்ற மனப்பான்மை ஏற்பட்டதும் இந்தக் காலத்தில்தான். சமத்துவம், சகோதரத்துவம்,
சுதந்திரம் உலக மக்கள் யாவருக்கும் உரியது என்ற பேரிறைச்சல்
எழுந்ததும் இக்காலமே. பெண்கள் ஆண்களுடன் உலக வாழ்க்கையில் சரிசமத்துவ உரிமையுடையவர்கள் என்ற மனப்பான்மை உண்டான. காலமுமிந்த நாகரீக காலமே. ஏக தேசமாக சிற்சிலரே சர்வ ஞானத்தைப் பெற்று வந்த காலம் போய், சர்வ மக்களும் பெற வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டு வரும் காலம் இந்த நாகரீக காலமே! எவ்வித அடிமைத் தனமும், மக்கள். வாழ்க்கையினின்றும் நீக்க வேண்டுமென கட்டாயப்படுத்துவதும் இந்த தற்கால நாகரீக காலத்தில்தான்.
தற்கால நாகரீகம், பண்டை கால காட்டுமிராண்டி, அநாகரீக காலங்களிலிருந்து பெறப்பட்டு வந்தமையால், அந்தந்த காலத்து வாழ்க்கை, தற்கால நாகரிகத்திலும் அங்குமிங்கும் நிறைந்து கிடக்கின்றன. அந்தந்தக் காலத்து பழக்கவழக்கங்களும், நீதி நெறிகளும், நம்பிக்கை களும் கோட்பாடுகளும் மாறி வருகின்றன. காலதேச வர்த்தமானப்படி மேற்கண்ட சட்டதிட்டங்களும், விலக்கு விதிகளும் மாறுகின்றன. ஆனால் அப்படி மாறி வந்தும், காலதேச வர்த்தமானங்களுக்கு உதவாத உபயோகமற்ற திட்டங்கள் அடிபட்டுப் போகாமல், தற்கால நாகரிகத்தில் அங்குமிங்கும் நிலைத்து வருகின்றன. தற்கால நாகரீகத்தில் உபயோகமற்ற பலவித கொள்கைகளும், கோட்பாடுகளும் சிதறுண்டு வந்த போதிலும், முழுமையும் நாசமடையவில்லை. அவைகள் நாசமடைய வேண்டில் அவைகள் என்னவையென்று பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவது அரசுகளின் ஏகாதிபத்தியமும், காட்டு மிராண்டியின் வாழ்க்கையினின்றே தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. ஆதிகால காட்டுமிராண்டித் தலைவன், தன்னைச் சேர்ந்த குடும்பத்தவர்களையும், சுற்றியுள்ள மக்களையும்' அடக்கியாண்டு வந்தான். அதைப் போலவே, இன்றைக்கும் ஏகாதிபத்திய அரசுகளும் எல்லா உலக சுக போகங்களை தங்களுடையதென்று கோடானுகோடி மக்களை அடக்கியாண்டு வருகின்றனர்.
காட்டுமிராண்டி, புலித்தோலையும், கோரப் பற்களையும், எலும்புகளையும், மண்டை ஓடுகளையும், அம்பு, விற்களையும் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டு கிராம மக்களை பயப்படுத்தி வந்ததைப் போல, தற்கால அரசுகளும் சேவகர்களையும், சிப்பந்திகளையும், இராணுவத்தையும், இராணுவத் தலைவர்களையும் கொண்டு பல கோடி மக்களை அடக்கி ஆண்டு வருகின்றனர். மந்திரங்களையும், தந்திரங்களையும் கொண்டு காட்டு மிராண்டித் தலைவன் தனது பிரஜைகளைப் பயமுறுத்தி வந்ததைப் போல் இக்காலத்து அரசர்களும் மூட மதங்களையும், புராண 89— ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இதிகாசக் கதைகளையும் கொண்டு பலகோடி மக்களைப் பயமுறுத்தி வருகின்றனர். பண்டைக் காலத்தில் காட்டு மிராண்டிகள், பெண்களையும், பிள்ளைகளையும் கொடூரமாக நடத்தி வந்ததைப் போல இன்றைக்கும் கோடான கோடிப் பெண்களும் சிறுவர்களும் கொடூரமாக நடத்தப்படுகின்றனர்.
அந்தக் காலத்தில் உழைப்பவனுடைய உழைப்பையும் அதன் பயன்களையும், ஆதிகால அநாகரீகத் தலைவன் தனது சுகபோகத்திற்கு விறையமிட்டு வந்ததைப் போல், இன்றைக்கும் முதலாளிகளென்றும்,
நிலச் சுவான்தார்களென்றும் பெயர் படைத்த பல்லாயிரம் பேர், பலகோடி பல்லாயிரம் மக்களின் உழைப்பையும், அதனாற் பெரும் பயனையும், அபகரித்துக் கொண்டு வருகின்றனர். பொது மக்கள், அந்தக் கால
தந்திரத்தையும், சூழ்ச்சியையும் தெரிந்து கொண்டால் தனது ஆதிக்கத்திற்கு அபாயம் வருமென்று அநாகரீகத் தலைவன் எண்ணி வந்ததைப் போல் இன்றைக்கும், நாகரீகமடைந்தவனெனச் சொல்லும் அரசனும், பொது மக்கள் விஞ்ஞானமடைந்ததால் தனது ஆதிக்கத்திற்கே அபாயம் வருமென எண்ணி வருகின்றான். ஆதிகால அடிமைத்தனம் தற்காலத்தில் பல்வேறு ரூபமாக சமூக வாழ்க்கையில் நிறைந்துள்ளது. முக்கியமாக மந்திர தந்திரங்களால் கட்டுண்டு கிடக்கும் மக்களின் அடிமைத்தனம் அறவே ஒழிய வேண்டும். மதங்களும், இதிகாச புராணங்களும் மக்களின் அடிமைத் தனத்தை நீடிக்கச் செய்து வருவது தடை பட வேண்டும். ஏகாதிபத்திய அரசர்களால், அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் கோடான கோடி மக்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுபட வேண்டும். பண்டை கால துற்பழக்க வழக்கங்களால் தாழ்த்தப்பட்ட பலகோடி பெண்மக்கள்,
சரி சமத்துவ சுதந்திரத்தைப் பெற வேண்டும். சொந்தக்காரர்களாலும், நிலச்சுவான்தார்களாலும் அடிமைப்படுத்தப்பட்ட கோடான கோடி குடிமக்கள் நிலத்திலும் நீரிலும் சரிசமத்துவம் பெறவேண்டும் உழைப்பவனுக்கே தனது உழைப்பின் முழுப் பயன் சேர வேண்டும். இதுதான் தற்கால நாகரிகத்தின் சரிசமத்துவ வாழ்க்கை. உலக மக்களில் எவனுக்காகினும் இந்த சரி சமத்துவ சமதர்மம் குறைவுபடுமேயானால், அது காட்டு மிராண்டி அநாகரீக வாழ்க்கையேயொழிய நமது நாகரீகமாகா.
புரட்சி - தலையங்கம் - 01.04.1934
குடி அரசு (புரட்சி)-794()) — 90
துணுக்குகள்
லைடன் மாணவர்கள்
குடியேற்ற நாடுகளில் உள்ள மக்கள், பரிபூரண சுயேச்சையோடு வாழவேண்டுமென்கிற கிளர்ச்சியால், பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு அழிவை உண்டாக்க வேண்டுமென்கிற கோட்பாடு லண்டன் சர்வகலாசாலைகளில் ஏற்பட்டு வருவதானது அங்கு சர்வகலாசாலை அதிகாரிகளிடையே சிறிது பீதியை உண்டாக்கி வருகிறது. 12 இந்தியப் பொதுவுடமை வாதிகளைத் தவிர்த்து கணக்குப்பார்த்தாலும், அங்கு வசித்துவரும் சில ஆயிர இந்திய மாணவர்களும் கிரேட் பிரிட்டனில் ஸ்திரமாக நிலைபெற்றுள்ள சிலரும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு விரோதமான இயக்கத்திலேயே சார்ந்துள்ளனர் என்பது பகிரங்க இரகசியம். அங்கு சர்வகலாசாலை யூனியன்களில் நிகழும் தர்க்க வாதத்தின் போது இரு இந்தியர்கள், பொதுவுடமை தீர்மானத்தை ஆதரித்துப் பேசுவதும், இருபது பேர் தொழிலாளர்களுக்காகவும், சமுதாய ஜனநாயகத்துவ கொள்கைகளுக்காகவும் பரிந்து பேசுவது வாடிக்கையாகும். இந்த மாதத்தின் முதல் வாரத்தில் ருசிகரமான இரண்டு சர்வகலாசாலை மீட்டிங்குகள் நடைபெற்றன. அதில் ஒன்று கேம்பிரிட்ஜ் மாணவர்களின் சோஷியலிஸ்ட் கழகத்தாரால் கேம்பிரிட்ஜில் கூட்டப்பட்டதாகும். இதில் பென் பிராட்லேயும், சக்லத்வாலாவும் முக்கிய
பேச்சுக்காரர்களாவார்கள்.
பிரிஸ்டல் சர்வகலாசாலையில் வருஷாந்திர விழா சனிக்கிழமை (3-3-34) இரவு நடந்தது. சர்வகலாசாலையின் 'இன்டர் நேஷனல் சோஷியலிஸ்டு குரூப்” மீட்டிங்கை ஆரம்பித்தது. அன்று பேச எடுத்துக்கொண்ட விஷயம் “ஜனநாயகத்துவமும் - இந்திய விவசாயிகளும்" என்பதைப் பற்றியதாகும். இந்த விழாவில் பேச லார்டு லாயிட் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் வர முடியாததின் காரணமாக அவர் தனக்குப் பதிலாக சர் லூயிஸ்டு ஆர்ட்டை நியமித்து அனுப்பியிருந்தார். சர்வகலாசாலை மாணவர்களின் சார்பாக இந்திய விவசாயிகளின் ஜனநாயகத்துவ முறைகளுக்குப் பரிந்து பேச, வாலிப இந்திய மாணவரான மிஸ்டர் சிங் நியமிக்கப்பட்டிருந்தார். பிரிட்டிஷ் சோஷியலிஸ்ட் மாணவர்கள் தங்களுக்காகப் பேச ஏகாதிபத்தியத்தின்
ய ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
நேர் எதிர்ப்புவாதியான மிஸ்டர் பிராட்வாலை நிறுத்தியிருந்தார்கள். ஆனால் கடைசி நிமிஷத்தால் அவருடைய பெயரை மாற்றிவிட்டு ஷாபூர்ஜி சக்லத்வாலா பெயரை புகுத்திவிட்டார்கள்.
சர் லூயிஸ்டூ ஆர்ட் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, ஜாக்கிரதையாக தான் எழுதி வைத்திருந்த பேச்சைப் படித்தார். இந்தியர்கள் பன் நெடுங்காலமாக ஒரு மனிதனின் குடைக்கீழ் இருக்க நம்பிக்கைக் கொண்டவர்களென்றும், இந்திய விவசாயிகள் ஒரு மகாராஜாவையோ அல்லது ஒரு நவாபையோ தான் விரும்புகிறார்களென்றும், அவர்கள் எந்த பார்லிமென்ட் தலைவரையும் விரும்பவில்லையென்றும், எவ்வாறு இந்தியாவின் பல ஜாதி பாழை வகுப்பார்களை பெரிய மொகல்களும் பீஷ்வாக்களும் ஆண்டார்களென்றும், வழக்கமான அழகான சம்பிரதாயப் பேச்சில் சித்தரித்துக் காட்டினார். மிஸ்டர் சிங் பேசும் பொழுது இந்தியர்கள்.
4000-கி.மு. காலத்திலேயே “குடி யாட்சியை'' இந்தியாவில் நிறுவி அதனை: ஆண்மையோடு நடத்தியிருக்கின்றார்களென்றும், இன்றையதினம் இந்திய கிராமவாசிகள் அறியாமையில் மூழ்கியிருந்த போதிலும் “பஞ்சாயத்து மூலமாகவே இந்தியாவில் சாந்தியை ஏற்படுத்தலாமென்றும் தக்க ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். சக்லத்வாலா பேசும் பொழுது, சர் லூயிஸ்டு ஆர்ட் பேசியது யோக்கியமானதானாலும், அவருடைய நோக்கம் முற்றிலும் தவறான எண்ணம் கொண்டதென்றும் அவருடைய பரிசீலனை முறைகளும் முடிவுகாணும் தன்மைகளும் முழுதும் தப்பானதென்றும் எடுத்துக்காட்டிப் பேசினார். பின்னால் சக்லத்வாலா பேசிக்கொண்டிருக்கும் பொழுது கன்சர்வேடிவ் கக்ஷியைச் சேர்ந்த பார்லிமெண்டு (பிரிஸ்டல் பிரிவு) அங்கத்தினரான லார்டு ஆப்ஸ்லே இந்தியாவுக்குத் தேவையான ஜனநாயகத்துவத்தைப் பற்றியதில்” குறுக்கு கேள்வி கேட்டார். இதற்கு சக்லத்வாலா பதில் சொல்லும்பொழுது 1918-ணா 'க.கி' எலெக்ஷன் அனுபவத்தினாலாவது அல்லது 1924-ஹு ஜினோவிய்ப் போர்ஜரியாலாவது அல்லது 1931-@ பின்மணி எலக்ஷனைக் கொண்டாவது, இன்றைய பார்லிமெண்டரி முறையானது உண்மையான ஜனநாயகத்துவம் கொண்டது என்று எவர். துணிந்து பேசுவாரானாலும் அந்த இங்கிலீஷ்காரரின் அறியாமைக்கும் அகம்பாவத்திற்கும் தான் பெரிதும் ஆச்சரியப்படுவதாகக் கூறினார்.
மார்க்ஸ் விழா
7-தேதி புதன்கிழமையன்று கார்ல் மார்க்ஸ் இறந்த 51-வது வருஷ விழாவுக்காக லண்டனில் உள்ள புரட்சி தொழிலாளர்கள், மார்க்ஸ் ஞாபகார்த்த வாசகசாலையாரும், தொழிலாளர் பள்ளிக்கூடத்தாரும் குறிப்பிட்டிருந்தவாறு மார்க்ஸ் புதைக்கப்பட்ட ஹைய்கேட் சவக்காட்டில் கூடினார்கள். அன்று பேசியதில் முக்கியஸ்தர் ஆர். பேஜ் ஆர்னாட் என்பவராவர். அவர் பேசும் பொழுது காரல் மார்க்சைப் பற்றியும்
குடி அரசு (புரட்சி)-794()) அஆ 0
அவருடைய உயிர் தோழரான பிரடிரிக் என்ஜல்சைப் பற்றியும் சிலாகித்துப் பேசி, அவருடைய உபதேசங்கள் தடுக்க முடியாத சம்பவங்களாக இன்று நிகழ்ந்துவருவதாகவும், தொழிலாள பாட்டாளி மக்கள் தங்களைத் தாங்களே நன்கு உணர்ந்து தங்களின் விடுதலைக்குப் போராட முனைந்து விட்டார்களென்றும், உலகத்தின் ஆறில் ஒரு பகுதியான ஐக்கிய சோவியத்தில் ஸ்டாலினின் தலைமையின் கீழ் “மார்க்சிசம்” வெற்றிபெற்று விட்டதாகவும், இங்கு (இங்கிலாந்தில்) மார்க்சின் சவத்திற்குமேல் நிற்கும் நாம் உழைப்பாளிகளான பாமரர்களின் சர்வாதிகாரத்தால் அண்மையில் மார்க்ஸிசத்தின் வெற்றியையும், தொழிலாள வகுப்பாரின் விடுதலையையும், குடியேற்ற நாடுகளில் வாழும் மக்களின் சுயேச்சையையும், சோஷியலிசத்தின் ஸ்தாபிதத்தையும் காணுவோமென்று கூறி முடிவாக “எல்லா தேசங்களிலுமுள்ள பாடுபடும் மக்களே ஒன்று சேருங்கள்” என்று பேசி முடித்தார்.
குஜராத்தில் சேோரஷியலிசம்
சமீபத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பம்பாய் சோஷியலிஸ்டு குரூப்பாரின் வேலைத்திட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குஜராத்தி சோஷியலிஸ்ட் பிரிவு ஒன்று வாலிப காங்கிரஸ் ஊழியர்களைக் கொண்டு பரேடாலில் கடந்த மார்ச்சு மாதம் 17 தேதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது சோஷியலிஸ்ட் நோக்கங்கொண்ட குஜராத்தி வாலிபர்கள் அதில் கலந்து கொள்ளும்படி ஓர் அறிக்கையும் வெளியாகி இருக்கிறது
புரட்சி - துணுக்குகள் - 01.04.1934
B ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மீவுட்சகம் இப்
டெர்பி
நக்கிய
விட i தேவை,
ங்கோடு, வல்லவா ட
வேளிவழ்து விட்டது!
சோஸியலிீசம்,
g N N T
விகாசம்: மாப்னனர்,
கூடி அரசு புத்தகாலயம், ஈரசொரி, மரதத சா சா மகன: நம ளன ஜக T
11 The Right வரன் 1
b P chiembarnm உட்பட்ட g Ok 1 ன்ன ல L. Cndy,
§ Gl e e bt ர் e e R P, iy L B
சை ரிஸ்க்கான வ ச பகன் T கக ரன
உணவுக்கு வரி
பண்டைக்கால அரசுகள் முதல், தற்கால அரசுகள் வரையிலும் எல்லா அரசுகளும், உணவுக்கு வேண்டிய பொருள்கள் மேல் வரிகளைச்
சுமத்தி, அவைகளின் விலையை உயர்த்தி வந்திருக்கின்றார்கள். இத்தியாதி வரிகளை நியாயமென்றே எண்ணி வந்திருக்கின்றார்கள். இந்த வரிகளுக்கு நிலத்தீர்வையென்றும், ஜலத்தீர்வையென்றும், சுங்கத்தீர்வையென்றும் அழைக்கின்றார்கள். இவ்வரிகளை விதித்து வரும் தற்கால அரசுகள் இவ்வரிகள் இயற்கையாக நியாயமானவைகளா? அநியாயமானவைகளா? என்று பகுத்தறிவைக்கொண்டு உணர்ந்தாரில்லை. ஏதோ ஆதிகால முதல் உண்பண்டம், தின்பண்டங்களின் மேல் வரி விதித்து வந்திருக்கின்றார்களாகையால், அந்தப் பழக்கத்தைப் போலவே, அந்தந்த சமயங்கட்கு ஏற்றவாறு பற்பல வரிகளை உணவுப் பொருளின் பேரில் விதித்து வருகின்றார்கள்.
தற்கால ஓர் முனிசிபாலிடியை எடுத்துக் கொள்வோம். எந்தெந்தப் பொருள்களுக்கு வரிகளை விதித்து வருகிறார்களென்பதை சற்று கவனிப்போம். பட்டணங்களில் வரி விதிக்கப்படாத உணவுப்பொருள்கள். யாதொன்றுமில்லை. பால்கொடுக்கும் பசுவுக்கு வரி, பதார்த்தங்களை: விற்பதற்கு வரி, அவைகளை விற்கும் தொழிலுக்கு வரி, அவைகளை விற்கும் இடங்களுக்கு வரி, தோசைக் கடை முதல், நெய், சர்க்கரை, மளிகை, உப்பு, வெற்றிலை பாக்கு, சீனி, கற்கண்டு, பிஸ்கட், மிட்டாய், தினைமாவு, தேன் முதலிய சகலவித சொற்ப பண்டங்கட்கெல்லாம் முனிசிபல் வரி விதிக்கப்பட்டு வருகின்றன.
இத்யாதி வரிகளை நேரல்லாத வரிகள் என்று கூறுவார்கள். ஆனால், இவ்வித உண்பண்டம் தின்பண்டங்களின் மேல், நேரல்லாத வரிகளோடு,
முக்கிய உணவுகளின் பேரிலும் வரி விதிக்கப்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, பருப்பு முதலிய தானியங்களின் பேரிலும் பலவித வரிகளைச் சுமத்தி வருகின்றார்கள்.
அரசாங்கத்தாரால் விதிக்கப்படும் இத்யாதி வரிகளும் போதாமல், போக்குவரத்துக்கு வேண்டிய வண்டி, ரயில், கப்பல், தோணி, படகு முதலியவைகட்கு சுமை வரியும் கொடுக்க வேண்டி வருகின்றது. இவ்வரிகளின் அக்கிரமத்திற்கு மேலான ஒரு வரி உண்டு. அவை நிலத்தீர்வை எனப்பெயர். இந்த நிலத்தீர்வை நீர்வரியையும் சேர்ந்தது. 95 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
விளையும் பொருள்களை விளைவிப்போன் ஒருவன். ஆனால், விளைவுக்கு வேண்டிய உழைப்புக்கு யாதொரு சம்மந்தமுமில்லாதவன், இந்நிலத்தீர்வையைக் கைக் கொள்ளுகின்றான். நிலத்தை இவன் கொண்டு
வந்ததில்லை. இந்நிலத்தை ஓரிடமிருந்து, மற்றொரிடத்திற்கு கொண்டு போகவும் முடியாது. கற்ப காலங்களாக, இந்நிலங்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருகின்றன. மனிதன் உலகில் தோன்றுவதற்கு முன்னமே விளை நிலங்களிலிருந்து வருகின்றன. இந்நிலத்தை ஆதிகாலமுதல், தற்காலம் வரையில் மனிதனைத் தவிர மற்றெல்லா ஜீவன்களும் பூமியின் மேல் விளையும் பொருள்களை அந்தந்த உயிர்கட்கு வேண்டிய அளவு வரிவிதியா தொன்றுமின்றி அனுபவித்து வந்திருக்கின்றன. ஆனால் மனிதரில் சிலரே இயற்கைக்கு விரோதமாக விளைபொருள்களை யாதொரு உழைப்புமின்றி அனுபவித்து வருகின்றார்கள். இதுதான் அக்கிரமத்திலும் அக்கிரமமான நிலவரி என்பார்கள். பட்சிகள் யாதொரு சட்ட திட்ட நிபந்தனைகளின்றி, விருட்சங்களில் உண்டாகும் கனிகளை உண்டு வாழ்ந்து வருகின்றன.
புழு, பூச்சி, வண்டு, புல்லினங்கள் யாவும் தத்தமக்கு வேண்டிய பொருள்களை வரிவிதிப்பின்றி, விளையும் பொருள்களை இலவசமாக உண்டு வாழ்ந்து வருகின்றன. கோடான கோடி வருடங்களாக வரி, சுங்கம் இன்னும் பலவித சுமைகளின்றி, கோடான கோடி உயிர்கள் அனுபவித்துவரும் உணவுப் பொருள்களை, நேற்று உலகில் தோன்றிய மனிதன் ஒருவனே, மக்கள் போதுமான வரையிலும் உண்ணுவதற்கு முடியாமல் வரிச்சுமைகளை மேலும் மேலும் விதித்து வருகிறான். இந்தக் கொடுமை மனிதனைத் தவிர யாதொரு உயிர்களிடமுமில்லை. இது மனிதனால் உண்டாக்கப்பட்ட முதல் கொடுமை
இந்தக் கொடுமையை விளைவிக்க வேண்டியதற்கு ஏதாகிலும், இயற்கையிலாகிலும், பகுத்தறிவிற்காகிலும் பொருத்தமுளதாவென்று பார்ப்போம். உணவுப் பொருள்களின் பேரில் வரிகளைச் சுமத்தி, அகவிலைகளையும் உயர்த்தி மக்களின் உழைப்பின் பயனையும் குறைத்து, மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வொட்டாமல் செய்வது என்ன தர்ம நீதியென்று கேட்கின்றோம்? முக்கியமாக இந்த வரிச்சுமைகளால், பெரும்பான்மையான மக்கள் பயனடைந்தாலும் ஒருவாராக ஒத்துக்கொள்ள இடமுண்டு. இவ்வரிகளின் பெரும்பான்மையான பயனை சிலர்களே அனுபவிப்பார்களேயாமாகின், இவை எந்த
யுக்திக்குப் பொருந்தும்? இவ்வரிகளின் முழுப்பயனும் ராணுவத்திற்கும், உயர்தர உத்தியோகஸ்தர்களுக்கும், அனாவசியச் செலவுகளுக்கும் உபயோகப்பட்டு வருமாயின், இது எவ்வித நியாயத்திற்குப் பொருந்துமென்று கேட்கின்றோம்? ஒரு நாட்டுக்கு வரிகளின் மூலம் 160 கோடி வந்தால், அதில் மூன்றிலிரண்டு பங்கு உணவின் பேரில் விதித்த நேரல்லாத வரியுமானால், அவ்வரியில், 50 கோடி இராணுவச்
குடி அரசு (புரட்சி)-7994/]) அ 096
செலவுக்கும் மூன்று கோடி உணவுப் பொருளபிவிருத்திக்கும் சிலவானால், இவ்வாறாகச் செலவழிப்பதை என்ன மதியீனமென்று நினைப்பது?
உணவுப் பொருள்களின் பேரில் வரிவிதிக்காமல், ராணுவத்தை எவ்விதம் காப்பாற்ற முடியுமென்பார்? அதற்கு, நமது நேரான விடை என்னவென்றால், ராணுவத்தால் என்ன நன்மை என்று கேட்கின்றோம்? ராணுவப்படை இல்லாமல் போமாகிற் தேசமாகிலும், உலகமாகிலும் தலை கீழாகக் கவிழ்ந்து விடுமா வென்றும் கேட்கின்றோம்? வேற்றரசர்கள் நாட்டைப் பிடித்துக் கொள்ளுவார்களென்று எவர் சொல்கின்றார்கள். அதனால் பெரும்பான்மை மக்களுக்கு, தற்கால கஷ்டங்களைவிட வேறு அதிகமான கஷ்டம் என்ன நேர்ந்து விடுமெனக் கேட்கிறோம்? அல்லது தற்கால சுகத்தைவிட, பெரும்பான்மை மக்கள் என்ன அதிகமான சுகத்தைப் பெறுவார்களென்றும் கேட்கின்றோம்? வயிற்றுக்கு எட்டாத உணவு கிடைக்காதிருக்கும் வரையில் இராமன் ஆண்டாலென்ன? அல்லது இராவணன் ஆண்டாலுமென்ன வென்றும் கேட்கின்றோம்
ராணுவ முதலிய சிப்பந்திகள் தேச தற்காப்பிற்கு இல்லாமற் போமாகில், உள் நாட்டில் குழப்பம், கொலை, களவு முதலிய சச்சரவுகள். உண்டாகுமென்பார்கள். ஏன்? வயிற்றுக்கு உணவு சரி சமத்துவமாக யாவருக்கும் தத்தம் உழைப்பின் பயனாகக் கிடைக்குமாயின், மக்கள். எதற்காக குழப்பம் செய்வார்கள்? இவ்வளவு இராணுவ, சேவக சிப்பந்திகளிலிருந்தும், கொலை, களவு முதலிய உள்நாட்டுக் குழப்பங்கள். ஏன் உலாவுகின்றன? இந்தக் குழப்பங்களை அடக்க எத்தனை சிவில், கிரிமினல் கோர்ட்டுகள்? எத்தனை ஜட்ஜுகள், மாஜிஸ்டிரேட்டுகள்? எத்தனை வெட்டியான், தலையாரிகள்? இவ்வளவெல்லாமிருந்தும், ஒரு
நாட்டின் ஜெயில்களில் கொடுங் குற்றவாளிகள் ஆயிரம், பதினாயிரம், லட்சக்கணக்காக அடைபட்டுக் கிடப்பானேன்?'
தேச தற்காப்பிற்கு சேனை சிப்பந்திகளும், இராணுவப் படைகளும்,
கோர்ட்டுக் கச்சேரிகளும், ஜெயில் சப்ஜெயில்களும் அத்யாவசியமென வேண்டுமென்போர் கூறும் கூற்று அறியாமையால் கூறும் கூற்றென. அறிக! சண்டையும், போரும், கலகமும், குழப்பமும் உண்டாவதற்கு ஆதி காரணமாக நிற்பது, பொருளாதார வித்தியாசத்தால் என அறிக! ஒருவனுக்கு இருந்து மற்றவனுக்கு இல்லாமையே, எல்லாவித குழப்பங்களுக்கும் காரணகர்த்தாவாக நிற்பதென அறிக! நாட்டிலுள்ள மக்களுக்கெல்லாம் சரி சமத்துவமாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுமாயின், ராணுவ சிப்பந்திகள் ஏன்? கோர்ட்டு கச்சேரிகள் ஏன்? கலக குழப்பங்கள் ஏன்? நாட்டு மக்களது சமூகம் உன்மத்த சமூகமா! ஓரறவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு உடைத்தாயிருக்கும் கீழ்த்தர சீவராசிகள், பல கோடி
நூராயிரம் வருடமாக கோர்ட்டு கச்சேரியின்றி, ஜெயில், சப்ஜெயில்களின்றி தத்தம் வாழ்வுக்கு வேண்டிய உணவைப் புசித்துக் கொண்டு இன்று
97 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
வரை வாழ்ந்து வருகையில், பஞ்சறிவுடைய மனிதன், யாதொரு அடக்கு முறை ஸ்தாபனங்களின்றி தனது சமூக வாழ்க்கையை ஏன் நடத்த மாட்டான்? அதுவல்ல காரணம் பஞ்சறிவுடைய மனித வாழ்க்கையில் ஓர் கொடுங்கோல் திட்டம் புகுந்து கொண்டிருப்பதால் இத்தியாதி கேடும், வினையும் மனித சமூகத்தில் நிறைந்துள! அதுதான் பொருளாதார வித்தியாசத் திட்டமாகும்
அதுதான் ஒருவருக்கிருந்தும், மற்றொருவனுக்கு இல்லாதிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தைக் காப்பதற்கே ஏற்பட்ட சேனை சிப்பந்திகளும்,
கோர்ட்டுக் கச்சேரிகளும், ஜெயில்களும், அடக்குமுறைகளுமேயல்லாமல் தேச தற்காப்பிற்குமல்ல. உள் நாட்டுக் குழப்பங்களையடக்குவதற்குமல்ல. சரிசமத்துவமாக மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குமல்ல.
கோடிக்கணக்காக, கோடி வருடங்களாக புழு, பூச்சி, விலங்கினங்கள் யாவும் உணவுப் பொருள்களைத் தடை யாதொன்றுமின்றி உண்டுகளித்து வருவதால், அடக்கு முறைகளும் அடக்குமுறை ஸ்தாபனங்களுமின்றி நீடூழி காலமாக வாழ்ந்து வருவதைப் போல், மக்களுக்கு வரி, சுங்கம் முதலிய கொடிய சுமைகள் இல்லாவிடில், மக்களும் இன்னும் பல்லாயிரம் கோடி வருடம் சுகித்து வாழ்வார்களென்பதற்குச் சந்தேகமில்லை.
மக்கள் வாழ்க்கையில், காலப் போக்கிற்கொத்தவாறு பற்பல நற்பழக்கங்களும், துற்பழக்கங்களும் உண்டாயின. அவைகளில், உணவுப் பொருள்களின் மேல் சிற்சில கற்பனா காரணங்களால் வரி சுமத்தப்பட்டு நாட்டில் வறுமை விளைய நேர்ந்தது. நாட்டிலுள்ள வறுமையையாகிலும், உலகிலுள்ள வறுமையையாகிலும் போக்க வேண்டுமானால், முதலில் உணவுப் பொருள்களின் மேல் ஏறியுள்ள எல்லா வரிச்சுமைகளும் நீங்க வேண்டும். இந்த நியாயம் இவ்வாறிருக்க தற்கால ராஜ்யங்கள், உணவுப் பொருள்களின்மேல் வரிகளைச் சுமத்துவது உன்மத்தமாகுமே யொழிய மதியாகா!
புரட்சி - தலையங்கம் - 08.04.1934
குடி அரசு (புரட்சி)-194()) — 9
காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி
பழைய காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி, இவ் வருடத்தில் “புனர். ஜன்மம்' எடுத்ததைப் பற்றி, சட்டசபை மோகம் பிடித்தவர்களுக்கு திருப்திகரமாயிருக்குமென்பதைப் பற்றி, யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. காந்தியாரும், இந்த சுயராஜ்யக் கட்சியின், 'புனர் ஜன்மத்தை' வாழ்த்தி வரம் கொடுத்த விஷயத்தைக் குறித்தும், யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இவ்வித உபாயங்கள், முதலாளித் தத்துவத்தைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் உண்டு. இந்த அனுபவத்தை ஒட்டியே, சுயராஜ்யக் கட்சியினர், திரும்பவும் தங்கள் கட்சியைப் புதுப்பிக்க ஆரம்பித்தனர்; காந்தியாரும் முதலாளித் தத்துவத்தில் சன்னது பெற்றவராதலால், சுயராஜ்யக் கட்சிக்கு மங்கள வாழ்த்தும் கூறினார். சுயராஜ்யக் கட்சி இன்று எடுத்த புனர் ஜன்மத்திலாகிலும் அல்லது காந்தியார் அதன்மேல் பன்னீர் தெளித்ததனாலாகிலும், தேசத்தில் பெரும்பான்மையோருக்கு எவ்வித சுதந்திரமாகிலும் நன்மையாகிலும் யாரும் கோர வேண்டியதில்லை. தேசமும், தேசத்து மக்களும், பிறப்பு, பிணி, மூட்பு, சாக்காட்டால் பண்டை கால முதல், கஷ்டப்பட்டு வந்ததைப் போல, இந்தப் 'புனர் ஜன்மத்தைப்' போன்ற ஆயிர மாயிரம்
“புனர் ஜன்மங்கள்' சுயராஜ்யக் கட்சியார் எடுத்த போதிலும், அவ்வித
“புனர் ஜன்மங்களையெல்லாம்' காந்தியார் வாழ்த்தி வந்த போதிலும், தேசம் இந்நிலையில் இருந்து தாழ்வடையாமற் போன போதிலும், இருக்கும் நிலையிலேயே இருக்குமென்பதற்குச் சந்தேகமேயில்லை எவ்வித துக்கமும் நிவர்த்தியாவதற்கு இடமில்லை. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால், தேச விடுதலையை சதாகாலமும் எதிர்த்து வரும் “டெய்லி மெயிலைப்” போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் சுயராஜ்யக் கட்சியின் “புனர் ஜன்மத்தை' ஆவலுடன் வரவேற்று வருவதே போதும்
“சரித்திரம் திரும்பத் திரும்பத் தானே ஒப்பிக்கும்” என்று ஓர். ஆங்கிலப் பழமொழியுண்டு. அப்பழமொழியின்படி சில வேளைகளில் தேச சரித்திரம் தான் பாடிய பல்லவியையே பாடிக்கொண்டு வரும் ஜர்மனியில் ஏகாதிபத்திய சக்கிரவர்த்திக்குப் பின்னால் ஏகாதிபத்திய ஹிட்லர் வந்தான். ரஷ்யாவிலும் ஜார் ஆட்சிக்குப் பதிலாக கெரன்ஸ்கி ஆட்சி வந்தது. இட்டாலியில் அம்போல்ட் இருந்த இடத்தில் முசோலினி வந்தான். ஆங்கில நாட்டிலும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பதிலாக, 9 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
நாஷனலிஸ்ட் கட்சி வந்தது. இம்மாறுதல்களில், சொல்-மாறுதல்களே ஒழிய, நாடு அடையும் பலன் ஒன்றுமில்லை. “அவன் தம்பி அங்குதன்'' என்றவாறு, வெவ்வேறு பெயர்களைப் போத்திக் கொண்டு வந்த அரசாட்சிகளே யொழிய, முதலாளித் திட்டத்தின் மனப்பான்மையும், நோக்கமும், கோரிக்கையும் எந்த விதத்திலும் மாற்றின பாடில்லை: எல்லாம் முதலாளி என்ற சாயத்தில் தோய்ந்தவைகளே. சுயராஜ்யக் கட்சி இதற்கு மாறுபட்டதல்ல. நேற்று பயனற்ற சுயராஜ்யக் கட்சியே இன்று புனர் ஜன்மம்' எடுத்திருக்கிறது. அந்த சுயராஜ்யக் கட்சியின் தலைவர்களே, இன்று 'புனர் ஜன்மம்” எடுத்த சுயராஜ்யக் கட்சியிலும் இருக்கின்றனர். அவர்களும் முதலாளி தத்துவத்திலிருந்து எதையும் விட்டுக் கொடுக்காதவர்கள். தற்கால சுயராஜ்யக் கட்சியினர்களாகிய இவர்களும், ஒன்றும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. அந்த சுயராஜ்யக் கட்சியினர்களும் முதலாளிகள்தான் - இந்த சுயராஜ்யக் கட்சியினர்களும் முதலாளிகள்தான். தேசம் எவ்விதம் உருப்படப் போகின்றது?
முதலில் ஒத்துழையாமையை எதிர்த்து சட்டசபைகளைக் கைப்பற்றி, சட்டசபைகளை நடக்காவண்ணம், முட்டுக் கட்டைகளைப் போட்டு 100-ல் 98 தேசமக்களுக்கு விடுதலை கொண்டுவரப் போகின்றோமென்று தொடை தட்டிய சுயராஜ்யக் கட்சியினர், கடைசியில் அரசாங்கத்து மேஜையினின்று விழும் எலும்புகளைத் தாவிப்பிடித்த அகோர நடவடிக்கையை, தேசம் மறந்துவிடவில்லை. இக்கட்சிக்குத் தலைவரான காலஞ்சென்ற தேசபந்துதாஸ், காந்தியாருக்கு விரோதமாகச் சட்டசபைப் பிரவேசத்தை 'ஞானஸ்னானம்' செய்வித்த போது அதனால் 100-க்கு 98 இந்திய மக்கள் சுபேக்ஷத்துக்காகவே சட்டசபைப் பிரவேசத்தை ஆரம்பித்தோமென்று தேச முழுமையும் திக் விஜயம் செய்து வந்தார். அவர் இறந்த இரண்டொரு வருடத்துக்குள்ளாகவே காலஞ்சென்ற மோதிலால் நேருவின் தலைமையில், சுயராஜ்யக்
கட்சியினர் டாடா கம்பெனியில் வேலை செய்து வந்த பல்லாயிரம் தொழிலாளிகளில் ஒருவருக்கேனும் ஒரு பைசாகூட அவர்கள் கூலியில் உயர்த்த சம்மதிக்காமல், யாதொரு நிபந்தனையுமின்றி பொது மக்கள். உழைப்பின் பயனாக வந்த ஐம்பது லட்ச ரூபாயை தாராளமாக டாடா கம்பெனியாருக்குத் தானமிட்டனர். தேச பந்துவின் தலைமையிலேயே நடந்த கயா காங்கிரஸில், தொழிலாளர் கட்சி என்பதை 1922-ல் ஸ்தாபித்து, அதற்குப் பிரபல அங்கத்தினர்களை ஏற்படுத்திய பிறகு அவர்களில் சிலர் வேலை செய்ய ஆரம்பித்ததும், அவர்கள் தலையில். தண்ணீரை ஊற்றித் தணிக்கச் செய்ததும் அந்தச் சுயராஜ்யக் கட்சியினர்களே. அக்கட்சியினரே இப் புனர் ஜன்ம' மெடுத்த சுயராஜ்யக் கட்சியிலிருந்து வருகிறபடியால், தேசமக்களுக்கு எவ்வித நன்மையும்
இப் புனர் ஜன்மத்தில் கிடைக்கப் போவதில்லை.
குடி அரசு (புரட்சி)-794()) அஆ 00
எவ்வித நல்லெண்ணத்தோடும் எவ்வித இனிப்பான சொல்லோடும், பொது மக்களுக்குத் தாங்கள் சுகப்பேற்றை நாட்டுக்குக் கொண்டுவருவதாகச் சொல்லிய போதிலும், காங்கிரஸ் திட்டம் இவர்களை எந்த நன்மையும்,
சட்ட சபைக்குள்ளாகிலும், அல்லது அதன் வெளியேயாகிலும் செய்துவிடப் போவதில்லை. கராச்சியின் காங்கிரஸ் திட்டம், சுயராஜ்யக் கட்சியினர்களின். கைகளையும், கால்களையும் விலங்கிட்டு ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது தனிவுடைமையை யாரும் அசைக்க முடியாது. பொதுவுடைமையை யாரும் நினைக்கவும் கூடாது. மக்களின் மூட நம்பிக்கை இருந்தவாறே இருக்க வேண்டும். கோவில்களில், கல்லுக்கும் கட்டைக்கும் பஞ்ச கவ்வியத்தால் (தேன், பால், பழம், தயிர், கோமயம்) அபிஷேகம் செய்துகொண்டேயிருக்க வேண்டும். முதலாளிகள் வியர்த்தங்களைத் தடுக்கப்படாது. தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில், விவசாயிகள் தங்கள் நிலங்களில், யாதொரு பொதுச் சுதந்திரமுமின்றிக் கொடுத்த கூலியைப் பெற்று வாழவேண்டும். இவ்வித வரையறைகளில் கட்டுண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சியினர், எந்தப் பேரை வைத்துக் கொண்டு அரசியலை நடத்த முன் வந்த போதிலும், நாட்டிற்கு எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை. மக்களுக்குப் பொதுவுடமையும், பொது ஆதிக்கமும், பொது உரிமையும் எந்த அரசியல் திட்டத்தில் அடையக் கூடுமோ, அந்தத் திட்டம் ஒன்றுதான் தேசத்தைச் சுகப்படுத்துமேயல்லாது, சுயராஜ்யக் கட்சியினர், காங்கிரஸ் பெயரை வகித்த போதிலும், வேறு எந்தக் கட்சியினரின் பெயரை வகித்த போதிலும் சட்டசபைகளில் உள். நுழைந்து முட்டுக் கட்டை போட்ட போதிலும், அல்லது வெளியிலிருந்து சத்யாக்கிரகம் செய்த போதிலும், மக்களுக்கு யாதொரு நன்மையும் விளைவிக்கப் போவதில்லை என்பது நிச்சயம்
காந்தியார் சுயராஜ்யக் கட்சியினரை நேற்று வாழ்த்தியதாகப் பொது வதந்தி ஒன்று நாட்டில் உலாவுகின்றது. இவர் எந்த ஸ்தாபனத்தைத்தான். வாழ்த்தாமலிருந்தார். இவர் ஒத்துழைத்த ஸ்தாபனங்கள் யாவும் முடிவில்
குட்டிச் சுவர்களாகத்தான் முடிந்தது. இவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் யார்தான் கரை ஏறினார்கள்? இவர் ஆதரித்து வந்த எந்த இயக்கமும் சம்பூரணமாக முடிவடைந்ததாகச் சொல்வதற்கில்லை. ஆரம்பித்த ஒவ்வொரு இயக்கத்தையும் நடுவாற்றில் தியங்கவிட்டு, தான் ஒருவரே கரை ஏறினார். போயர் சண்டையைக் குரூக்கரிடம் கலந்திருந்த கொண்டு போயர்களின் விரோதிகளுக்கே உதவி செய்ய ஆரம்பித்தார்! 1906-ம் வருடத்தில், ஜுலூக்களை கிளப்பி விட்டு, அவர்களை நாசமாக்க அவர்களின் விரோதிகட்கே உதவி புரிந்தார்! 1918-ம் வருடத்தில் சிம்லாவில் கூடிய மகாநாட்டில், மகாயுத்தத்தில் இந்தியர்களை: படையினராக அனுப்ப, 'பகீரதப் பிரயத்தனம்' செய்தார். மகாயுத்தம்
முடிந்த பிறகு தான் உதவி செய்த ஆங்கிலேயர்களையே இந்தியர்களைக் கொண்டு எதிர்க்கச் செய்தார்!!! இந்தக் கிளர்ச்சி ஆரம்பித்ததும், எங்கே
நய ய... மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
பொது மக்கள் தமது கட்டுக்கு அடங்காமல் போகின்றார்களொவெனப் பயந்து அவ்வியக்கத்தைப் பர்டோலியில் நிறுத்திவிட்டார்!!! உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்து, “ஒன்று சுயராஜ்யம் வர வேண்டும், அல்லது எனது உடல்
நீரில் மிதக்க வேண்டும்” எனச் சபதமிட்டு, ஆயிரக்கணக்கான சத்தியாக்கிரகிகளை ஜெயிலில் அழுக்கச் செய்து, தான் மாத்திரம் உண்ணாவிரதத்தைப் பூண்டு விடுபட்டார்!!! நேற்று, வட்டமேஜை மகாநாட்டிலிருந்து திரும்பி, பயனற்ற சத்தியாக்கிரகத்தைத் திரும்பவும் ஆரம்பித்து, அதையும் கைவிட்டு, தீண்டாதாருக்கு 'வைகுண்டத்தை'த் திறந்துவிடுவதாக ஊர் பிரதட்சணம் வந்து, அதையும் கைவிட்டுவிட்டு
பூகம்ப சேவையில் தலையிட்டுக் கொண்டார்!!! நாளை அதையும் நடுத்தெருவில் விட்டுவிட்டு, இமய மலைக்குச் சென்று சந்யாசி வேடம்
பூண்டு, தபசு புரிந்தாலும் புரிவார்!!! இவரை நம்பிய தேசம், அதோகதியடையுமென்பதற்கு என்ன சந்தேகம்?
காந்தியார் சட்டசபைப் பிரவேசத்தை ஆதரித்ததாக நாடெங்கும் முழங்குகிறது. சட்டசபையில் நுழைந்து என்ன செய்ய வேண்டுமென்பதைக் குறிப்பிட்டாரில்லை. இந்திய நாட்டு முப்பத்தைந்து கோடி மக்களில், இவர் ஒருவர்தான் சட்டசபையில் நுழையாத உண்மையான சத்தியாக்கிரகியாம்! இந்த வீர மொழியைக் கேட்டு நகைக்காத சிறுவர்கள். யாருமில்லை! இவருடைய ஆதரவின் பேரில் காங்கிரஸ் கட்சியினர்களும், சட்டசபையில் நுழைய உத்திரவு அளிக்க வேண்டுமென, அரசாங்கத்தாரை கைகூப்பி வணங்குகின்ற கேவலக் காட்சியைக் காண, இவ்வளவு கேவலத்திற்கு நமது சுயராஜ்யக் கட்சியினர் இறங்கிய நிலைமை பரிதபிக்கத் தக்கதாயிருக்கிறது. இந்நிலைமைக்குக் கொண்டு வந்தவர் காந்தியார் ஒருவரே. இவர் நாட்டில் அரசியல் துறையில் தலைமை வகித்திருக்கும் வரை, இவர்பால், மூடமக்கள் மூடபக்தி வைத்திருக்கும் வரை, நாடு இன்னும் கேவல நிலைமைக்கு வருமென்பதற்கு ஐயமில்லை. இதனைத் தடுத்து மக்களுக்குப் பகுத்தறிவையூட்டி இந்திய மக்களை அடிமைத்தனத்தினின்றும் மூட மத ஜாதி வித்தியாசத்தினின்றும் விடுவிப்பது சமதர்மிகள் கடமையாகும்
புரட்சி - தலையங்கம் - 15.04.1934
குடி அரசு (புரட்சி அட ம
காந்தியின் கடைசி காலம்
பிரசித்திபெற்ற ஏப்ரல் மாதத்தில்தான் தோழர் காந்தி அன்று தோன்றினார். இன்று பதினைந்து வருடங்களுக்கு முன்பு அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்களுள் கடையராக இருந்த காந்தி, அகில இந்தியத் தலைவராகத் தோன்ற ஆரம்பித்தது ஏப்ரல் மாதச் சத்தியாக்கிரக வாரம் என்பதில்தான். அதே ஏப்ரல் மாதத்தில் மீண்டும் காந்தி இந்நாட்டின். விடுதலைக்குக் காது ஒடிந்த ஊசிக்கும் பயனில்லை என்று சொல்லத்தக்க நிலைக்கு வந்துவிட்டார். ஆனால் வழக்கம்போல் காந்தியின் கடவுள் அவருக்குத் தோன்றித் தனி மனிதரின் சட்டமறுப்பை நிறுத்து என்று சொன்னதாக சொல்லுகிறார். அத்துடன் மட்டுமல்ல, இதுவரையில் இந்திய நாட்டில் அவரின் ''சத்தியாக்கிரகத்தின்' முறையை, தத்துவத்தை, உணர்ந்தவர், அனுஷ்டிக்கக்கூடியவர் ஒருவர் கூட இல்லையென்றும் ஒப்புக்கொண்டுவிட்டார். பதினைந்து வருடங்களுள் மூன்று முறை ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஓய்ந்த காந்தியடிகளையும், மகா அவரது சத்தியத்தையும், அவரது சொந்தக் கடவுளையும் போற்றாவிட்டாலும் தூற்றாமலாவது இருப்போமாக! காந்தியடிகளின் கடைசி தோல்விக்குப்பின்பு அவர் நீண்டகாலமாக விரும்பும் ஹிமய உச்சிக்குச் செல்ல நாம் ஆசைப்படுகிறோம். அவரது ராட்டையும் அங்கு செல்வதாக.
இன்று பதினைந்து வருடங்களுக்கு முன்பு காந்திக்குக் கடவுள் தோன்றி கூறியது எதற்கெனில்: ரெளலட் சட்டம் ஒழிய வேண்டும் கிலாபத் அநீதிக்குப் பரிகாரம் தேடவேண்டுமென்பதாகும். எந்தக் கடவுள் காந்திக்கு இச் செய்தியைக் கூறியதோ அப்பொழுதே காந்தி அக் கடவுளை நோக்கி 33 கோடி மக்களும் இவ்விரண்டு தீங்குகளும் மறையப் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றார். இப் பிரார்த்தனைக்கு ஜாலியன்வாலா பாக்கில் கடவுள் தக்க கூலியைப் பக்தர்களுக்குக் கொடுத்தார்.
நாம் புத்திசாலிகளாக இருந்திருந்தால் அன்றே காந்தியை இவ்வுலகில் கடவுள் பிரார்த்தனையால் மாறுதல் அடைந்த நாடுகளோ, பிரார்த்தனையால் பாதுகாக்கப்பட்ட தேசங்களோ, பிரார்த்தனையால் சுகமடைந்த சமூகமோ உண்டா என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் பிரார்த்தனையினால் கஷ்டமடைந்த தேசத்தையும், பிரார்த்தனையென்ற மூட நம்பிக்கையில் சிக்கி முழு முட்டாள்களான நாடுகளையும் நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு அத்தாட்சி வேண்டுமானால் நாமும் நமது நாடும் முதன்மையானதாகவே எடுத்துக்கொள்ளலாம்.
103 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஐரோப்பிய நோயாளி என்ற துருக்கி, பிரார்த்தனையையும், பிரார்த்தனையின் தலைவனான கலிபாவையும் அடியோடு விரட்டியடித்த
பின்பு தான் உலகிலேயே முதன்மையான நாடுகளுடன் ஒன்றாக இன்று விளங்க ஆரம்பித்தது. புராதன நாகரீகம் பெற்ற ரோம் தலைநகருடைய இத்தாலி உலகக் கிறிஸ்தவர்களின் குருவான போப் அரசரை அடக்கி உட்கார வைத்தபின்புதான் ஐரோப்பிய வல்லரசுகளில் பலம் பொருந்தியவைகளுள் ஒன்றாக மாற ஆரம்பித்தது
வைசூரி, காலரா, மலேரியா இத்தகைய பிணிகளுக்குத் தனித்தனியாக வணங்கும் தெய்வக் கோவில்களை இடித்தெரிந்து அந்தந்த இடங்களில் அந்தந்தத் தெய்வங்கள் பாதுகாத்து வந்ததாகக் கருதப்பட்ட பிணிகளுக்குத் தக்க மருந்துகளைக் கொண்ட வைத்தியசாலையை ஏற்படுத்திய பின்புதான் அமெரிக்காவும் கண்டு அஞ்சும் நிலைமைக்கு, ஐப்பான் வர ஏதுவாயிற்று. இதைப் போன்ற நாடுகள் பல உண்டு. ஆனால் எந்த நாடும் தெய்வ வழிபாட்டினால் ஓர் சிறிது பலனையாவது அடைந்ததை நாம் அனுபவத்தில் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை
பதினைந்து வருடங்களுக்கு முன்பு காந்தியாரோ, கிலாபத் அநீதிக்கும், ரெளலட் சட்டத்துக்கும் பிரார்த்தனை செய்யச் சொன்னார். ஸ்மர்னா நிதிக்கு உதவச் சொன்னார். அங்கோரா கஷ்டத்துக்குப் பரிகாரம் தேடச் சொன்னார். நாம் தோழர் காந்தி சொன்னதுக்கெல்லாம் பிரார்த்தனைகளைச் செய்தோம். நம்மில் ஒருவருக்காவது முதலில் நாம் பிரார்த்தித்துக்கொண்ட “கலிபா” பின்பு நம்மால் கொண்டாடப்பட்டதும், பிரார்த்தனை செய்யப்பட்டதுமான அங்கோராவினால் தூக்கி எறியப்பட்டதைக் கண்டிக்க மனம் வரவில்லை. 40 கோடி முஸ்லீம்களின் மதகுரு! என்று பெயர்படைத்த கலிபாவை வெள்ளைக்காரர்கள் அலகஷியப்படுத்தினார்கள் என்று வெள்ளைக்காரரைக் கண்டித்தோம். ஆனால் பின்னால் நம்மால் கொண்டாடப்பட்ட அங்கோராவால் “கலிபா”
தூக்கி எரியப்பட்ட காலத்தில் “கலிபா” கடலில் விழாமல் இங்கிலாந்தில் காப்பாற்றப்பட்டதிற்காக இங்கிலாந்தை போற்றவுமில்லை. இதை செய்த அங்கோறாவின் அதிபரும், நமது முஸ்தபா கமால் பாக்ஷாவை கண்டிக்கவும் இல்லை. இவை எல்லாம் எதை காட்டுகிறது. நமது இந்திய மக்களின் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கையுமே காட்டுகிறது
காந்தி தனது மகத்தான தவரை உணர்ந்து அதற்கு தக்கபடி அறிக்கை வெளியிடவில்லை. தனது தோல்வியையும், ஏமாற்றத்தையும், கண்ணியமாக எடுத்துச்சொல்லி, தன்னை நம்பிய நாட்டையும், நாட்டு மக்களையும் மகத்தான கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக்கிய பெரும் குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் எதிர்காலத்திலும் இந்நாட்டு மக்களை நிரந்தரமாக மூடராக்கும் எண்ணத்திலேயே எதேதோ, வியாக்யானங்கள் கூறி, சட்டமறுப்பை நிறுத்திவிட்டதாக
குடி அரசு (புரட்சி)- 1994) — பு
கூறுகிறார். நிறுத்திவிட்டேன் என்றால், இதுவரையில் நடந்து வந்ததுதான். என்ன என்பதை பகுத்தறிவுள்ள மக்கள் யோசிக்காமல் போகார்.
ஐரோப்பிய யுத்தத்துக்கு பின் உலகில் சகல தேசங்களும் மகத்தான மாறுதல்களை அடைந்து விட்டது. புதுமாறுதலை அடைந்த தேசங்கள் அதன்பின் தோன்றிய கஷ்ட நஷ்டங்களையும் நிவர்த்திசெய்து நல்ல நிலைமையை அடைந்து வருகிறது. ஆனால் தெய்வீகத்தை நம்பிய நமது நாட்டிலோ ஐரோப்பிய யுத்தத்துக்கு மூன்பு ஏற்பட்ட துயரக்குரல் ஓயாது இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது
காந்தி சட்டமறுப்பை நிறுத்திவிட்டார். இதற்கு முன்பே டெல்லியில். நமது திருவல்லிக்கேணி சாஸ்திரியும், அவர் அண்ணன் டாக்டர் அன்சாரியும், களிமண் மாளவியாவும் சட்டமறுப்பை நிறுத்தி சட்டசபை போக முடிவுசெய்து விட்டார்கள். புதிதாக உயிர் கொடுக்கப்பட்ட சுயராஜ்ய ககஷிக்கு காந்தியும் ஆசீர்வாதம் செய்து விட்டார்.
இனி நாம், சுயராஜ்யக் கக்ஷியின் பேரால் இந்நாட்டில் தோன்ற விருக்கும் ஏமாற்றங்களை களைந்தெரிய வேண்டிய வேலையை மேல்போட்டுக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். இன்று கடவுள் சொன்னதின் பேரால் சட்ட மறுப்பை விட்டு விட்டேன் என்பதற்குப் பதிலாக, கவர்ன்மெண்டார் தலை எடுக்க விடாமல் செய்துவிட்டதால் சட்டமறுப்பை விட்டு விட்டேன் என்று காந்தி சொல்லி இருந்தால் அது நாணயமாக இருந்திருக்கும்.
காந்தி தனது சிஷ்யர்களில் யாரோ ஒருவர், எவரோ ஒருவர், செய்ததாகச் சொன்ன செய்கையை ஆதாரமாகக் கொண்டு, சட்டமறுப்புகளை எல்லாம் விட்டு விட்டேன், எனது குருட்டுத்தனத்தை உணர்ந்தேன். என்பதற்குப் பதிலாக, எனது சிஷ்யர்களில் முட்டாள்கள் போக எஞ்சியவர்கள் சட்டசபைக்கு போக முடிவுசெய்து விட்டதால்தான் சட்ட மறுப்புகளை நிறுத்தி விட்டேன் என்று சொல்லியிருக்கலாம். யாரோ
பெயர் சொல்ல முடியாத ஒருவர் எவரோ, பெயர் சொல்லக்கூடாத ஒருவரின் செய்கைக்காகத்தான், தனது போர்வாளை உரையில் போட்டேன். என்பது நியாய மனமுடையவனுக்குச் சரியாகத்தான் தோன்ற முடியுமா?
வீச்சு நின்றதற்குக் காரணம் வீச்சுக்கு இடமில்லை என்றும், வாள் உரையில் போனதற்குக் காரணம் வீசச் சொன்ன (முதலாளி) காங்கிரஸ் பணக்காரர்களே! என்பதும் இன்று பொதுமக்கள் நன்குணர ஆரம்பித்துவிட்டார்கள் ஆதலால் காந்தியோ, அவர் சிஷ்யர்களோ, இன்னும் நாட்டை ஏமாற்ற எண்ணுவது இவர்களுக்குத் தீங்காகும் என்று அஞ்சுகிறோம்.
சட்டமறுப்புகளில் தீவிரமாக பலமுறை சிறை சென்றவர்களுள், சட்ட மறுப்பை முதல்படியாக வைத்து இந்நாட்டில் மிக பிரம்மாண்டமானதும், பயங்கரமானதுமான பொருளாதார புரட்சியை உண்டாக்க ஓர் கூட்டம்
105 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
வேலைசெய்கிறது என்பதை சர்க்கார் முன்பே எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பயங்கரமான கொள்ளையையும், கொலைகளையும் தொடர்ந்து செய்வதையும் எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். இதை உணர்ந்த
காங்கிரஸ் பிரபுக்களோ முதலில் அலக்ஷியமாக இல்லாவிட்டாலும், எப்படியாவது வெள்ளைக்காரன் பயந்து, இந்தியநாட்டு மில்கார முதலாளிகளுக்கும், காங்கிரஸ் பிரபுக்களுக்கும் சலுகை காட்டட்டும்; கிடைத்தவரையில் லாபம் வரட்டும் என்று முதலில் எண்ணினார்கள். ஆனால் இவர்கள் பணத்தைக்கொண்டு இந்நாட்டில் தோன்றிய சட்ட மறுப்பு இயக்கம், இச்செல்வாக்கைக் கொண்டே, எதிர்காலத்தில் பயங்கரப் புரட்சியை உண்டாக்கி தங்களுக்கே தீங்கிழைக்கப் போவதாகச் சந்தேகித்ததும் பிரபுக்கள் தங்கள் பாதுகாப்பாளரான காந்தியடிகளிடம் கூறினார்கள். உடனே காந்தி சட்டமறுப்பை நிறுத்தி அவ்வாளை உறையில் போட்டுவிட்டார். இப்பதினைந்து வருடங்களில் மூன்று நான்குமுறை, பதினாயிரக்கணக்கான ஆண், பெண்கள் செய்த தியாகம் (முட்டாள் தனமானது) பயனற்றது. இத்தனை லெக்ஷம் சட்ட மறுப்புக்காரர்களில். ஒருவர்கூட அதன் தத்துவத்தை உணரவில்லை என்றும் கர்வமாகக் கூறுகிறார். முதலில் தானே சட்டமறுப்பை கண்டுபிடித்ததால் தானே அதற்கு சர்வாதிகாரி, என்னைவிட நன்கு தெரிந்தவர் எவருமில்லை என்கிறார்.
ஹிந்துமதம் சொல்லுகிறபடி ஒருவன் செய்து மோகஷத்துக்குப் போகிறேன் என்பதற்கும், ஒரு வருடம் சந்தியாவந்தனம் செய்தால் பார்ப்பான் உயிருடன் ஆகாயத்தில் பறக்கலாம் என்பதற்கும், சட்டமறுப்புக்கு நானே சிருஷ்டிகர்த்தா அதை என்ன செய்வது என்பது எனக்கு மட்டுந்தான் தெரியும் என்று காந்தி சொல்லுவதற்கும் நமக்கு வித்தியாசம் தெரியவில்லை. எதிர்காலத்தில் அந்தராத்மா, காந்திக்கு சொல்லப்போவது இன்னும் என்னென்ன என்பது எவருக்கு தெரியும்?
ராயல் கமிஷனாக இருந்து சைமன் கமிஷனாக பெயர்பெற்ற கூட்டத்தில் இந்தியநாட்டு முதலாளி காங்கிரஸ்காரர்களுக்கு இடமில்லை என்று சட்ட மறுப்பு தோன்றியதும், சட்டமறுப்பு செய்ததும், அப்பொழுது தோல்வியை ஒப்புக்கொள்ள பயந்து காந்தி - இர்வின் ஒப்பந்தம் என்ற ஏமாற்று நாடகம் நடந்தது. வட்டமேஜை மகாநாட்டுக்கு காந்தி சென்றும் ஹிந்துமத காங்கிரஸ் பிரபுக்கள் சொல்வதை சர்க்கார் கேட்கவில்லை; இந்நாட்டு எட்டுக்கோடி முஸ்லீம்களுக்கும் 8-கோடி ஆதிதிராவிடர்களுக்கும்
சர்க்கார் இரக்கம் காட்டுவதை கண்டித்தும் பயனில்லாதுபோனதால், மீண்டும் சட்ட மறுப்புப்போர் தொடங்கப்பட்டது. இதை சட்டைசெய்யாது முதன் மந்திரியின் அறிக்கை வெளிவந்ததும் ஆப்பை பிடுங்கிய குரங்கின் கதையை காந்தி அடைந்தார். ஹரிஜனம் பட்டினி என்ற பெயரால் பரிதாபத்துக்குறிய ஆதிதிராவிடர்களெனப் பட்டவர்கள். ஏமாற்றப்பட்டார்கள். பழிக்கு பயந்து முதன் மந்திரியும் காந்தி உயிரைக்
குடி அரசு (புரட்சி)- 194) — 10௦
காப்பாற்றினார். மிகுதியுள்ள 8 கோடி முஸ்லீம்களை மிரட்ட வழி இல்லை. கிடைத்தவரை கிட்டவிருக்கும் சீர்திருத்தத்தில் முஸ்லீம்கள், வெற்றியடையாதிருக்க வழி என்னவென்று பார்த்தார்கள். இன்றுள்ள. நிலைமைக்கு சட்டசபையைக் கைப்பற்றி அதன் பேரால் ஏதாவது செய்து பார்க்கலாமா? என்பது தேசீயப் புலிகளின் திட்டமாகும். இப்புரட்டுகளுக்கு ராஜதந்திர முறையில் காந்தியடிகள் தனி சட்ட மறுப்பையும் நிறுத்தி விட்டார் என்பதேயாகும். அகில இந்திய வர்த்தக சம்மேளனத்தில் தலைவர் தோழர்களின் ரஞ்சன் சர்க்கார் தமது தலைமைப் பிரசங்கத்தில் சட்ட மறுப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சாறார் அவசியமானால் ஓர் சமுதாய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தவே, சட்ட மறுப்பை முதல்படியாக உபயோகிக்க முயலுவதாகத் தெரிகிறது. பலாபலன்களை கவனியாது ஒரே பிடிவாதமுள்ள நோக்கம் கொண்டவர்களின் கைக்கு இவ்வியக்கம் மீறிவிட்டால் நாம் என்ன செய்வது என்பது பற்றியே
சற்று ஆலோசிக்க வேண்டும்? அவ்வித நிலைமை ஏற்படாது என்று யார்தான் கூற முடியும் என்று கேட்கிறார் என்று கூறியதற்கும், காந்தி சட்ட மறுப்பை நிறுத்தியதற்கும் நெருங்கிய சம்பந்தமுண்டு
மதன் மோகன் மாளவியாவோ, வைசிராய் பிரபுவை மீண்டும் கண்டு சமூகத் தீர்ப்பை மாற்றவேண்டுமென்று கேட்கப்போகிறார். பயனில்லையானால் லண்டனுக்கும் சென்று கிளர்ச்சி செய்யப்போகிறார். நமது காந்தி பாபுவோ அந்தரார்த்மா கட்டளைப்படி சட்ட மறுப்பை
நிறுத்தி விட்டதாக அறிக்கை போட்டு விட்டார். உலக சரித்திரத்தில் எந்த விடுதலை வீரனும் கடவுளுடன் பேச்சு வார்த்தை வைத்துக்கொண்டு அடிக்கடி சம்பாஷித்து நாட்டை காப்பாற்றியதாக நமக்குத் தெரியவில்லை. காந்தி இன்னமும் இந்நாட்டு மக்களை மில்காரர்களின் கொடுமைக்கும், பிர்லாக்களும், ஐயங்கார்களும், ஆச்சார்யார்களும் ஏமாற்றி மிதித்து கொழுத்து திரிய வழிதேடவே தனது கடவுள் பல்லவியைப் பாடுகிறார். இந்நாட்டு லெக்ஷக்கணக்கான மக்களின் கஷ்டத்தையும், தியாகத்தையும் வியர்த்தமாக்கி, கஷ்டப்பட்டவர்களின், கஷ்டப்படுபவர்களின் பெரும் கூட்டம் அதன் பலனை அனுபவிக்காதபடி செய்வதைக்கண்டு நாம் கவலையடையாவிட்டாலும், இன்னமும் மதத்தின் பேரால் மக்களை மூடராக்க எண்ணுவதைப்பார்க்கும்போது வாளாய் இருப்பதற்கில்லை. காந்தி சிஷ்யர்கள் பலவித எண்ணங்களை மனதில் வைத்துக்கொண்டு சட்ட மறுப்பை நிறுத்து மறிக்கையை வரவேற்றபோதிலும், அதற்கு நியாயமற்ற காரணங்கள் காட்டுவதைக் கண்டிக்க தைரியமில்லாது இருந்த போதிலும் தோழர் நரிமன் போன்ற இரண்டொருவர் செய்தி நமக்கு ஆறுதலைக் கொடுக்கிறது
சத்தியாக்கிரகமென்பது பரமார்த்திக முறையில் கையாளப்படவேண்டிய ஆயுதமென்றும், சுயராஜ்யத்திற்காக இனி யாரும் கையாளக்கூடாதென்று
197 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
காந்தி சொல்கிறார். காங்கிரசானது சுயராஜ்யத்திற்காக ஏற்பட்டது பரமார்த்திகத் துறையில் சில பரீட்சைகள் செய்து பார்ப்பதற்குக் காங்கிரஸ் சபை ஏற்படவில்லை... காந்தியின் பேச்சுகளும் அறிக்கைகளும் சில. சமயங்களில் சரியாக அர்த்தம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறது. தமக்குள்ளாகவே சிந்தனை செய்து பார்த்ததிலும், பகவானைப் பிரார்த்தித்ததின் மூலமும் ஒரு முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்.
தோழர் புலாபாய் தேசாய்:- மகாத்மாவின் எல்லாச் செயல்களுக்கும் ஆத்மார்த்த ஆதாரமிருக்கிறதென்று ஒப்புக்கொள்ள மனமில்லாதவர்களுக்கு அறிக்கையின் கருத்தை உணர்ந்துகொள்வது கஷ்டம்
இத்தகையவர் இரண்டொருவர் இருந்தபோதிலும், எதிர்காலம் சிறிது நம்பிக்கையை தமக்கு ஊட்டுகிறது. முஸ்லீம்கள் தங்களை பின்பற்றுவதாக கூறுவதற்கே வடநாட்டு சத்திய மூர்த்தியான டாக்டர் அன்சாரியை சுயராஜ்யக் கக்ஷிக்காரர்கள் தலைவராகப் பிடித்துப்போட்டு இருக்கிறார்கள். மீண்டும் முஸ்லீம்களுடன் சமாதான உடன்படிக்கை செய்யப்போவதாக தேசியவாதிகள் கூறுகிறார்கள்
இதில் ஜனாப் ஜின்னாவோ, அவர்தம் சகாக்களோ - ஏமாறுவார்கள்
என்று நாம் கருதவில்லை. அடுத்த மே மீ முதல் தேதியில் அ.இ.கா. கமிட்டி கூடப்போகிறது என்கிறார்கள். அதன் முடிவு என்னவென்பதையும் அதற்குள்
அத்தராத்மாக்கள் சொல்லுவதையும் நாம் அலுப்புறாது பார்ப்போமாக!
தேசீயப் புலிகளின் பரிபூரண சுயேச்சைப் புரட்டும், பிரட்டானியம் நீங்கிய சுயாக்ஷிப் புரட்டும் வெளிப்பட்டுவிட்டது. சட்டசபைப் பிரவேசமே இவர்கள் லெக்ஷிய மென்பதாகிவிட்டது. இவர்கள் சட்டசபையில் புகுந்தால் வெட்டி முறிக்கப்போவது என்னவோ. ஆயினும் காங்கிரஸ் தடபுடலில் சிக்காது சர்க்கார் சற்று புத்திசாலித்தனமாக இந்திய சட்டசபைத் தேர்தலை இன்னும் ஓர் ஆண்டு ஒத்திவைத்துவிட்டால் லார்டுவில்லிங்டன் மிகுந்த ராஜதந்திரியென்பது நிருபணமாகிவிடும். காந்தி அந்தராத்மா, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் பின் சொல்லப்போவது என்ன? ஒத்துழைப்பா? ஒத்துழையாமையா? காந்தி
தன் சிஷ்யர்கள்கூட ஒத்துழையாமை செய்வதைத்தான் பார்க்கமுடியும்
- நமது அரசியல் நிபுணர்
புரட்சி - கட்டுரை - 15.04.1934
குடி அரசு (புரட்சி)- 194) அஆ ப
நல்ல சந்தர்ப்பம்
இந்திய நாட்டின் பரிபூரண விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட காந்தியின் இயக்கங்கள் ஒரு வழியாய் முடிவடைந்துவிட்டன. காந்தியும் அவரது சகாக்களும் பத்து வருடங்களுக்குப் பிறகாவது தங்களது தப்பான வழியை உணர்ந்து
தங்கள் போக்கைத் திருப்பியது மிகவும் போற்றத்தக்கதே. காந்தியின்
உப்பு சத்தியாக்கிரக திருவிளையாடல்களின் பயனாய் ஏற்பட்ட அடக்கு முறையால் இந்திய அரசியல் விடுதலைக் கிளர்ச்சிகள் ஒரு வகையில்
ஸ்தம்பித்துப் போய்விட்டனவென்பதைக் காந்தியே ஒப்புக் கொள்வார்.
இந்தப் பரிதாபகரமான நிலையிலிருந்து தப்பவும் “இந்து மதம்” என்ற போர்வையில் பார்ப்பனர்கள் தங்களது ஆதிக்கத்தை மீண்டும் நடத்தவும் ஒரு வழியையும், சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து வந்தனர் நமது தேசியவாதிகள். இவர்களது திக்கற்ற நிலையை நன்குணர்ந்த லார்டு வெல்லிங்டன் இந்திய சட்டசபையைக் கலைத்து மறு தேர்தல் நடத்தப் போவதாக ஒரு நாடகம் நடித்தார். திக்கு முக்காடி இறக்குந் தருவாயில் தண்ணீரில் தவிக்குமொருவன் தனதெதிரில் வரும் ஒரு துரும்பைக்கூட
கைப்பற்றித் தனது உயிரை நிலைக்க வைக்கப் பார்ப்பது சகஜமே எனவே இந்த நிலையில் காந்தியார், தான் இந்த நாட்டின் அரசியல் இயக்க சர்வாதிகாரி என்று தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டு தனது சட்ட மறுப்பியக்கத்தை வாபீஸ் வாங்கிக் கொள்வதாகவும்,
சுயராஜ்யக் கட்சி என்ற பழைய பார்ப்பனக் கூட்டத்திற்கு சட்ட ரீதியாக அரசியல் கிளர்ச்சி நடத்த இடந்தருவதாகவும் வெளியிட்டுத் தனது கெளரவத்தை நிலை நிறுத்திக் கொள்ள எத்தனித்தார். சமயத்தை
எதிர்பார்த்து வந்த பார்ப்பனர்களும் அகில உலக ராஜீய நாடக நடிகரான
கனம் சாஸ்திரியார் முதல் தேவதா கைங்கர்யப் பிரியர் சத்தியமூர்த்தி வரையில் ஒரே கூட்டமாக திடீரெனக் கிளம்பி இந்த நாட்டை ஒரு
கலக்கு கலக்க எத்தனித்துள்ளனர்.
109 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஆனால் நாட்டின் நிலையையும், நாட்டு மக்களுக்கு இவர்களது எத்தனங்களால் ஏற்படுத்துவதாகப் பிரகடனம் செய்யும் பரிகாரங்களையும் சமதர்மிகளாகிய நாம் கவனிக்குமளவில் இந்த சில்லரைச் சீர்திருத்தங்களால் எவ்வித பயனுமில்லையென்று கருதுவதுடன் இந்த நல்ல சந்தர்ப்பத்தை
இந்தப் பிற்போக்காளரது திட்டங்களால் பொது ஜனங்களுக்கு நன்மை உண்டாவதைவிட தீமையே அதிகரிக்குமென்பதையும் பகிரங்கப்படுத்த உபயோகித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமெனக் கருதுகிறோம்.
புரட்சி - கட்டுரை - 22.04.1934
குடி அரசு (புரட்சி)- 1994) அ 10
தோழர் ஜவஹர்லாலும் சர்.சி.பி.ும்
சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஆதியில் ஆடிய ஆட்டங்களும், அவர் பிரபல தேசீயவாதியாக விளங்கிய கதையும், ஹோம் ரூல் கிளர்ச்சிக்காரராக விளங்கிய கதையும், பனக்கால் அரசர் அவர்களால் அடக்கி விடப்பட்ட கதையும் அகில உலகம் அறிந்த விஷயம்
சர்.சி.பி. சென்னை மயிலாப்பூர் வாசியாக கருதப்பட்ட போதிலும் தஞ்சை ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் மடத்து பழைய ஏஜண்ட் ராமசுவாமி அய்யரின் பெளத்திரர் என்ற முறையில் தஞ்சை ஜில்லாவாசிதான். என்பதை நாம் அறிவோம். இந்தக் கனவான் அரசியல் உலகில் எந்தப் படித்தரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது பொது ஜனங்களுக்கு நன்கு தெரியும். இப்பெருமான் காந்தியின் ஒத்துழையாமை முழு வேகமாய் இருந்து சட்டசபைகளுக்கு அபேக்ஷகர்களாக நிற்பதிற்குக் கூட ஆட்கள் கிடைக்காத காலத்தில், பல்லாரி ஜில்லாவின் பிரதிநிதியாக இந்திய சட்டசபைக்குச் சென்று காந்தியை விடவேண்டுமா வேண்டாமா என்ற பிரச்சினை ஓட்டுக்கு விடப்பட்ட காலத்தில், நடுநிலைமை வகித்து உலக மக்களின் முழு கவனத்தையும் பெற்ற ராவ் பகதூர் ஒருவர். தலைமையில் இந்திய அரசியல் நிலையைப் பற்றி பேச முற்பட்டது வெகு பொருத்தமானதென்றே கருதுகிறோம். தலைமை வகித்த ராவ்பகதூர் சுப்பிரமணிய பந்துலு அவர்களோ, பிரசங்கம் செய்த சர்.சி.பி ராமசாமி ஐயரோ நாட்டிற்குச் செய்துள்ள தொண்டினையும், தோழர் ஜவகர்லால் அவர்கள் செய்துள்ள தொண்டினையும் ஒப்பிட்டுப் பார்ப்போமானால், தோழர் ஜவகர் தலைசிறந்து விளங்குவார். தோழர் ஜவகர்லால் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளை நாட்டில் பரப்புவதாக விஷமப் பிரசாரம் செய்யும் ஐயர், ஜவகர்லால் நேரு அவர்களின் பொது வுடமைக் கொள்கையைக் கண்டு கொண்ட பீதியின் காரணமாகவே எழுந்த பிதற்றலாகக் கருதுகிறோம்
எனினும் தோழர் ஜவகர், காந்தியின் கீழ் நின்று சமதர்மத் திட்டங்களை, எவ்வளவு உயர்த்தி கூப்பாடு போட்டாலும் செயலளவில் பொது ஜனங்களுக்குப் பயன்படாது என நிச்சயமாக நாம் நன்கு அறிந்தபோதிலும், நிச்சயமாக இந்நாட்டில் செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய வேலையை தைரியமாய் வெளிப்படுத்திய காங்கிரஸ்காரர் என்ற முறையில் தோழர்.
m ய... மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஜவகர்லால் அவர்களை போற்றுகிறோம். சாதி சமய சங்கடங்கள் அழிக்கப்பட்டு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களுக்கு அடிப்படையாக இருந்துவரும் பொருளாதார அமைப்புகள் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய தோழர் ஜவஹர்லால் நேருவை சமஸ்தானாதிபதிகளின் அறியாமையை ஆயுதமாக உபயோகித்து சுகபோகங்களை அனுபவித்து வரும் ஐயர் கூட்டத்தார் வெறுப்பது சகஜமே
புரட்சி - செய்தி விளக்கம் - 22.04.1934
குடி அரசு (புரட்சி அட ப்
சீர்திருத்தக் காந்தி
சமரஸமே காந்தியாரின் பாலிஸி. காந்தியாரை சர்வாதிகாரியாகக் கொண்டு காங்கிரஸ் பெருமையடித்துக் கொள்கிறது. காந்தியாரின். தலைமையில் காங்கிரஸ் விவசாயிக்கும் ஜமீன்தாருக்கும், தொழிலாளிக்கும், முதலாளிக்கும், ஓடுக்கப்பட்டவனுக்கும், உயர்ஜாதிக்காரனுக்கும் ஒரே சமயத்தில் ஒத்தாசை செய்ய முயல்கிறது. தற்கால பொருளாதார, சமூக ஸ்தாபனங்களை மாற்றியமைக்காது விவசாயிக்கும், தொழிலாளிக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் நீதி செலுத்த முடியுமென்று காந்தியார் கனவு காண்கிறார். ஏன்? அவர் சீர்திருத்தவாதி; சமதர்மியல்ல.
காந்தியாரின் சீர்திருத்தம் பலிக்காது. அவரைப் போல் முயன்ற. அநேகர் முடிவில் தோல்வியடைந்ததாகச் சரித்திரம் கூறுகிறது எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக நடப்பது உலகத்தில் முடியாத காரியம். காந்தியார் முடியாத காரியத்தை முடிக்க முயன்று காலத்தை வியர்த்தமாக்குகிறார். 'எலியையும் பூனையையும்' ஆட்டுக் குட்டியையும் ஓநாயையும், 'தவளையையும் பாம்பையும்' ஒரே பொழுதில் ஆதரிக்க முடியாது. முதலாளி, ஜமீன்தார், உயர் ஜாதிக்காரர்களைப் பூரணமாய் ஆமோதிக்கவும் காந்தியாருக்கு முடியவில்லை. அவர்களை எதிர்த்து உழைப்பாளிகளோடு சேர்ந்து கொள்ளவும் காந்தியாருக்குத் துணிச்சல் இல்லை. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் ஊஞ்சலாடுகிறார். வாலிபர்களே! சீர்திருத்தக் காந்தியின் மாய வலையிலிருந்து வெளிவந்து சமதர்மத் தொண்டாற்றுங்கள்.
புரட்சி - கட்டுரை - 22.04.1934
யத ய... ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
திருச்சி தேவருக்கு துணை
திருச்சி முனிசிபல் சபைத் தலைவரும் நீலகிரி முனிசிபல் சபைத் தலைவரும் இன்று சர்க்கார் உத்திரவை சந்தித்து இருக்கிறார்கள். நீலகிரி முனிசிபல் சபைத் தலைவரை, அவர் ஏன் ராஜினாமா செய்யக் கூடாதென்பதற்கு சரியான காரணம் காட்டுமாறு நமது மாகாண முதல் மந்திரியான கனம் பொப்பிலி கேட்டு இருக்கிறார். இவ்விதம் கேட்பது தப்பு என்று 'ஹிந்து'கூட கோபித்துக் கொள்கிறது. இதைப் போன்றுதான் திருச்சி நகரசபை தலைவரை கேட்டதும் தப்பு என்று நாம் சொல்கிறோம்.
திருச்சி, நீலகிரி இவ்விரண்டு நகரசபைத் தலைவர்களையும் நாமும் தமிழ் நாட்டாரும் நன்கு அறிவோம். இவர்களை இவ்விதம் விலக்க காரணம் கேட்பதும் நியாயமானது என்று நமக்கு தோன்றவில்லை. நியாயமல்ல என்பதுடன் இவ்வித உத்திரவுகளும் மே.த.க தலையீட்டினாலாவது உடனே வாபீஸ் வாங்கிக் கொள்ளப்படுமென்று நம்புகிறோம். மே.த.க. முன்பு மதுரை ஜில்லா போர்டில் ஜாடையாக
புத்தி மதி கூறி சமரசம் உண்டாக்கினது போல் இதனையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்
நடப்பு
முனிசிபல் சபை சம்பந்தமாக கோர்ட்டுகளில் வந்த வழக்குகள் பலதையும், முனிசிபல் சபை நடவடிக்கைக் காலங்களில் அங்கத்தினர்களுக்குள் நடக்கும் வாக்கு வாதங்களையும் தொடர்ந்து படிப்பவர்கள் திருச்சி, நீலகிரி முனிசிபால்டிகளைப் பற்றி தவறாக எண்ணமாட்டார்கள்.
முனிசிபல் மோட்டார்களுக்கு எண்ணை வாங்கியதாக கணக்கு காட்டிவிட்டு, காலி பெட்ரோல் டின் வாங்கிய எண்ணை அளவுக்கு இல்லையே என்று கேட்கப்பட்ட சபைத் தலைவர், முனிசிபல் எருக்கள் முழுவதையும் தன் வீட்டு நிலத்தில் கொட்டிவிட்டுக் குப்பைகளை ஏன். குத்தகைக்கு விடக்கூடாது என்று கேட்கப்பட்ட காலத்தில் கையை விரித்த முனிசிபல் சபைத் தலைவர்! முனிசிபல் செலவின்படி சேர்மெனால் கையொப்பமிட்டு கிழிக்கப்பட்டு செக்கானது பேங்கில் மாற்றப்பட்டு அச்செலவினம் எங்கு போக வேண்டுமோ அங்கு போகாததால், பாங்கிகாரன் முனிசிபல் சபைக்கு லாயர் நோட்டீஸ் கொடுத்ததும் அதைப்
குடி அரசு (புரட்சி) - 1934(1) ௨ 114
பற்றி கேள்வி கேட்டதும், பேந்த பேந்த விழித்த தலைவர், இதைப் போன்ற வேடிக்கை விநோத நகர சபை தலைவர்கள் நமது மாகாண முனிசிபால்டிகளில் பலர் இருந்தார்கள்; இப்பவும் இருக்கிறார்கள். இவர்களில் எந்த பிரிவையும் சேர்ந்தவர்கள் திருச்சி, நீலகிரி நகரசபைத் தலைவர்கள் அல்ல. அவ்விதம் சர்க்கார் உத்திரவிலும் இல்லை. ஸ்தல. அதிகாரிக்கும் ஸ்தல ஸ்தாபன அதிகாரிக்கும் வந்த சண்டையின் சப்தம் போலவே, உத்திரவின் தொனி தொனிக்கிறது. மிக அற்பமான பிரச்சினையில் முதலில் வருத்தம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது
தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய எந்திரம் எதெது, எந்த குழாய் வழியாக நகரத்துக்குள் தண்ணீர் வந்தது. இஞ்சினீர் சூபரவைசர் இவர்களில் யார் யார் வேலை பார்க்கலாம் என்பது போன்ற மிக அற்பமான. பிரச்சினையிலிருந்து பிறந்த புழுவானது நாக்கு பூச்சியாகி, பல்லியாகி, ஓணானாகி, உடும்பாகி, பாம்பாகி நல்ல பாம்பு ஆச்சப்பா என்ற கதையாக சேர்மெனை ஏன் விலக்கக் கூடாது என்று ஜி.ஓ. கேட்கிறது.
பல்லியாய் இருக்கும் போது அல்லது ஓணானாக மாறின போது நமது கனம் முதல் மந்திரியும் முனிசிபல் சபை முக்கியஸ்தர்களும்
சந்தித்து கலந்து பேசி இருந்தால், இன்று பாம்பாக மாற இடமிருந்திருநதிருக்க முடியாமல் போயிருக்கும். போனது போச்சு, சென்னை சர்க்கார் முக்கியஸ்தர்களும் சட்டப்படிதான் போவதாக எண்ணி நடந்து
இருக்கிறார்கள். இரு நகரசபை தலைவர்களும் சட்ட மீறுதலுக்கு ஆளாகாதுதான் நடந்து இருக்கிறார்கள். முடிவிலோ சர்க்கார் அவர்களுக்குள்ள, அதிகார தோரணையில் எதேச்சாதிகாரமாக நடந்துவிட்டார்கள்:
இதை அவ்விரு நகர மகா ஜனங்களும். தமிழ்நாட்டில், அவ்விரு சபைத் தலைவர்களின் விரோதிகளும்கூட ஒப்புக் கொள்கிறார்கள். இப்பயமுருத்தல் அனாவசியம். இனியும் இக்கடுமையான நிலை, மிகக் கடுமையாகக் கூடாது என்று ஆசைப்படுவதுடன் விரைவில் நல்ல செய்தி கிட்டுமென்பதை எதிர்பார்க்கிறோம்!
பார்ப்பான்தான் உத்தியோகத்துக்கு லாயக்கானவன், பார்ப்பன. கவுன்சிலர் ஜகாவாக இருக்ககூடாது, எப்படியும் பார்ப்பான் அண்டிக் கெடுப்பான் என்று சுயமரியாதைக்காரன் சொல்லும் போது சீறும் மேதாவிகளே மு. தலைவர்களே! இச்சம்பவங்களை உங்களுக்காகவே எடுத்துக் காட்டுகிறோம். இவ்விரு தலைவர்கள் மு.௪. இருந்து விலகினாலும் இவர்கள் நகரத்துக்கு இவர்கள்தான் தலைவர்கள் என்பதை சர்.சி.பி.யோ, சிங்கமய்யங்காரோ, மூர்த்தியோ மறுக்க முடியாது. மறுத்து வால் ஆட்ட முடியாது என்றாலும், பார்ப்பனீயம் எந்தெந்த விதமெல்லாம் பார்ப்பனர் அல்லாதாரை அல்லல் படுத்துகிறது என்று பார்த்தீர்களா? s QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தலைவரே! உமது செய்கை நியாயமானது, நீவிர் தஞ்சையில் செய்த தியாகத்துக்கு இன்று பலன் அனுபவிக்கிறீர். நல்ல பாம்புக்குப்
பால் வார்த்தாலும், அது நல்ல விஷத்தைத் தான் கக்கும். இதைக் கண்டு திடுக்கிடுதல் வீரன் செய்கையன்று. உமது உதவியையும், துணையையும் நொடிக்குள் மறந்து உமது நியாயமான செய்கை மீது
குற்றம் கற்பித்து விடும்படி முதன் மந்திரியை தூண்டியது எது? அவரின் செல்வச் செருக்கும் அர்ப்பனுக்கு வந்த வாழ்வுமா? அல்ல. திருச்சியில் உள்ள சில ஐயர், ஐயங்கார் இவர்களின் உறவு அவசியமென்ற கனம் மந்திரியின் எண்ணமே உம்மை ஏன் ராஜீனாமா செய்யக்கூடாதென்று
கேட்கச் செய்தது வாஸ்தவம். தேவரே நீவிர் தலை நிமிர்ந்து உம்மை இழிவுபடுத்த எண்ணிய மந்திரியை, மாஜி மந்திரியாக ஆகும்படி செய்ய முயல்வீரா? அது உம்மால் முடியாததா?
புரட்சி - கட்டுரை - 22.04.1934
குடி அரசு (புரட்சி)-1994/]) அ 116
நமது கடமை
உலக முழுமையும், அந்தந்த நாடுகளில் அந்தந்த கக்ஷிகள். அரசியலைப் பிடித்து அந்தந்த தேசவாசிகளுக்கு நன்மை புரிகின்றோமென்று சொல்லிக் கொண்டு, பற்பல துவாராக்களில் உழைத்து வருகின்றன. நமது ஆங்கில நாட்டின் நாஷனலிஸ்ட் கட்சி, அதாவது தேசீயக் க்ஷி என்று வழங்கும் ஒரு சார்பார், தோழர் ராம்சே மக்டொனால்டின் தலைமையின்கீழ் ஆங்கில நாட்டு அரசியலை நடத்தி வருகின்றார்கள். இவர்களுடைய முக்கியப் போக்கு என்னவெனில், இருக்கும் சமூகதிட்டத்தை வைத்துக் கொண்டு அங்கோர் சீர்திருத்தம், இங்கோர் சீர்திருத்தத்தைக் காட்டி, ஆண்டு வருவதாகும். பிரான்ஸ் நாட்டிலும், பழைய சேம்பர் ஆவ் டிப்புடிஸ் என்ற பழைய பார்லிமெண்டை வைத்துக் கொண்டு முதலாளி, சிறு முதலாளி இயக்கங்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஜர்மனியில் ஏகாதிபத்திய கெய்சர் ஆட்சியை உடைத்தும், மழை நின்றும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் ஜெர்மனியைப் பிடித்த 'சனியன்'' ஒழியவில்லை. அவ்வுலகில், பெரும்பான்மையோர் தொழிலாளர், விவசாயிகளாக விருக்கின்றனர். ஏகாதிபத்திய அரசில் பட்டு வந்த கஷ்டங்களுக்கு விமோசனமின்றி அத்தேச வாசிகள் தற்போது பாசிஸ்டிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு வருந்துகின்றனர். அமெரிக்க நாடு டிமோக்கிராட்டிக்களென்றும், ரிப்பப்ளிக்கர்களென்றும் இவ்விரு கட்சிகளின் நடுவில் தவித்து தியங்குங்காலை, ரூஸ்வெல்ட் என்னும் பெரியோர் சோஷலிசத்தை முதலாளித் திட்டத்துக்குள் நுழைந்து பார்க்கலாமாவென்று பரிக்ஷித்து
வருகின்றார். மற்ற அமெரிக்க ஐரோப்பிய சிற்றரரசுகளிலும் மேல் போன்ற பெரிய அரசுகள் தட்டித் தடுமாறிக் கொண்டு வருவதைப்போல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த ராஜ்யங்களில் ஒன்றிலேனும்,
சாந்தமாகிலும், சமாதானமாகிலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை ஐரோப்பிய, அமெரிக்க உலக மெங்கும் குழப்பங்களே அதிகரிக்கின்றன. கஷ்டங்களும் அதிகரிக்கின்றன.
ஐரோப்பா, அமெரிக்க உலகம் நிலை குலைந்து வருந்தி வருங்காலை, ஏனைய நாடுகளில் அதனினும் பதின்மடங்கு கேடாயிருப்பதைக் காணலாம். ஜனப்பெருக்கிலும், தரித்திரத்திலும் உயர்ந்த நாடு சீன தேசமெனலாம். அதில் 40 கோடி மக்கள் இரண்டு, மூன்று
W o பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தளகர்த்தராட்சியில் கட்டுண்டு கலகங்களிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அந்நிய அரசுகளால் அந்நாட்டு கக்ஷிகள் தூண்டப்பட்டு, முன்னுக்கு போக வொட்டாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். அந்நாட்டு தேசீயக் கக்ஷியார் மாலுமியற்ற கப்பலைப்போல் தட்டுத் தடுமாறி நிற்கின்றனர். இன்னது வேண்டுமென்ற துணிவும் அற்று, நாற்பது கோடி மக்கள். பற்றில்லாத வாழ்க்கையில் மிதந்து வருகின்றனர். விளையும் நிலங்கள்
தேசமுழுதும் நிறைந்திருந்தும் உலக நதிகளுக்கெல்லாம் பெரிய நதிகள். நிலங்களை நீர்ப்பாய்ச்ச செய்து வந்தும் அடுத்தடுத்து பஞ்சங்களால். கோடிக்கணக்கான மக்கள் பசியால் சாகின்றனர். இந்த பயங்கரமான துர்பாக்கியத்தில் சீனர் இருந்துவந்தும், முதலாளி ஆதிக்கத்தில் கட்டுண்ட ஜப்பான் தேசம், அதன் உள் நாட்டுக் குழப்பத்தையும் வறுமையையும் கவனியாது, சீன தேசத்தைப் படையெடுத்து, சென்னை ராஜதானிக்கொப்பான நீர்வளம், நிலவளம் பொருந்திய மஞ்சூரிய நாட்டைப் பிடித்துக் கொண்டது. தன்னுடைய நாட்டில் உண்டாயிருக்கும் அதிருப்திக்கு பரிகாரம் ஒன்றும் தேடாது, அயல்நாடுகளைப் பிடிக்கும் வண்ணம் தனது போர்த்தலத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக சமாதானத்தை உருவமாக எடுத்திருக்கும் சோவியத் நிலங்களை அபகரிக்கவும் ஜப்பான். பார்க்கிறது. இத்யாதி குழப்பத்தில் உலக பேரரசுகளும் சிற்றரசுகளும் தடுமாறிக் கொண்டிருக்க, நமது இந்திய தேசத்தின் நிலைமை என்ன? இந்த வேதமோதும் நாடாகிலும் சுகப்பட்டு வாழ்கின்றதா?
சுயராஜ்யம் யாருக்கு?” என்ற புத்தகத்தின் முதல் பாகத்தை வாசித்தவர்கள், நமது இந்திய நாட்டின் தற்கால நிலைமையை எளிதில் உணர்ந்திருக்கலாம். பகிர் முகத்தில் விசேஷமொன்று மில்லாமையாகத் தோன்றினபோதிலும் அந்தர் முகத்தில் அதிர்ப்தியே நிறைந்துள்ளது ரயில்கள் ஓடுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கும், குளங்களுக்கும் யாத்திரை செல்கின்றனர். தேரும், திருவிழாக்களும் கோவில்களில் குறைவில்லை. சர்க்கார் வரி வசூலாகி வருகின்றது. சேனை, சிப்பந்திகளும், போலீசும், தத்தம் காபந்துகளைச் செய்து வருகின்றனர். இதன் மத்தியில் மக்கள் வாழ்க்கை பரிதாபகரமாக இருந்து வருவது பார்வையிலேயே தோன்றும். இந்த உள்நாட்டு மக்களின் தீமையை பரிகரிக்க இதுவரை ஆண்டுவந்த அரசியல் திட்டங்களுக்குப் பதிலாக புதியதோர் திட்டம் வருகையை யாவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த திட்டமாவதென்ன? அரசியல் மத்திய சபையில், 100-க்கு 200 பேர் அங்கத்தினர் நியமிக்கப்படப்போகின்றனர். இவர்களை நியமிக்க முப்பது லட்சம் வாக்காளர்கட்குப் பதில், மூன்று கோடி வாக்காளர்கள் வரப்போகின்றார்கள். நிலம், நீர், வீடுவாசல் இல்லாத இருபது கோடி மக்களுக்கு ஓட்டுறிமை இல்லை. மகமதியர்களுக்குச்
சில தனிப்பிரதிநிதிகளும், இந்துக்களுக்குச் சில தனிப் பிரதிநிதிகளும்
குடி அரசு (புரட்சி)- 1994) — 119
சிற்சில மாகாணங்களில் கொடுக்கப்படுகின்றன. முதலாளி வகுப்பைச் சேர்ந்த நிலச்சுவான்தார்களும், வர்த்தகர்களும் சட்டசபைகளில் நிறைந்திருக்கப் போகின்றார்கள். தனிச் சொத்துரிமை, மதப் பாதுகாப்பு, ஜாதிக்காதரவு புதிய திட்டத்திலும் காக்கப்படப் போகின்றன. இனி தேச மக்களுக்கு என்ன வேண்டும்? இந்த பாதுகாப்புகளோடு ஐந்நூற்றம்பத்தாறு சிற்றரசுகளும் ஏகாதிபத்திய ஆட்சியில் கலந்து கொள்ள போகின்றனர். இவர்களுடைய நவரத்தினங்களிழைத்த தலைப்பாகைகளும், வயிர முடிகளும், வயிரத் தோடாக்களும், நவரத்தினமிழைத்த கண்டசரங்களும், காதுகளில் ஜொலிக்கும் வயிரக் கடுக்கன்களும் மகத்தான சட்டசபைகளில் ஜொலிக்கப் போகின்றன. இந்தக் காட்சியைக் காணும் முப்பது கோடி மக்களின் பசி ஆறிவிடுமன்றோ? தீரா வியாதிகளும்
தீர்ந்து விடுமன்றோ? நாடும், நகரமும், தேசம் முழுமையும் பாலும், தேனும், தினைமாவும் நிறைந்தோடுமன்றோ? இந்த முக்கிய அம்சியங்களை எதிர்த்து முட்டுக் கட்டை போடவோ அல்லது ஒத்துழைக்கவோ, காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சி “மறு ஜெனன”மெடுத்துள்ளது. கெல்கர்கள், தங்களது சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துகின்றனர். மூஞ்சேக்களும் இந்து மகாசபைகளை வலுக்கப்பார்க்கின்றார்கள். அரசாங்கமும் இந்தக் கட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கப் போகின்றது. இதன் மத்தியில் நமது அதாவது சோஷியலிஸ்டுகள் வேலை என்ன?
முக்கியமாக நமது பல்வேறுபட்ட, பல பேர்களால் வழங்கப்பட்ட சங்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும். பலவிதக் கொள்கை களையும் அபிப்பிராயங்களையும் ஒரே முகமாக மாற்றி, தேசத்திலுள்ள மக்களுக்கு உணவும், நிலமும், உலக சமாதானமும் அடைய வேண்டி அதற்கு வேண்டிய நடவடிக்கைகளைத் தேட வேண்டும். தற்காலத்திற்கு வேண்டியவை மக்களது உடலும் உயிரும் பொருந்தி வாழவேண்டியதே. இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் ஒருவரே. மற்ற எல்லாவிதக் கட்சியினரும் பயனற்ற வியர்த்தமான காரியங்களை மேல் போற்றிக் கொண்டு, அரசாங்கத்தில் நுழைகின்றார்கள். ஜாதி, மதம், பொருள், செல்வம், செல்வாக்கு, சுகபோகம் இவைகளை நாடுகின்றவர்களால் தற்கால அரசுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சோசியலிஸ்டு களோவெனில் எது வொழிந்தால் மக்கள் சுகப்படுவார்கள். அவர்களைப் பிடித்தாட்டும் தீவினைகள் ஒழியும்? என்ற மனப்பான்மை மேற்கொண்டவர்கள், இந்த மனப்பான்மையை பெருக்க வைப்பதுதான். நமது முக்கிய கடமை.
புரட்சி - தலையங்கம் - 22.04.1934
1 ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மே தின மே தினம் விசேஷ அறிக்கை
அடுத்த வாரம் 29- தேதி வெளிவரும் நமது “புரட்சியில் உலகத் தொழிலாளர் ஒன்றுபடும் நன்னாள், மே தினம் கொண்டாட வேண்டிய விதம் முதலியன விபரமாக இந்தியத் தொழிலாளர்களே! அறிவிக்கப்படும்.
1. மேமாதம் முதல் தேதி செவ்வாய்க்கிழமையன்று சகல நகரங்களிலும்,
சுயமரியாதைச் சங்கங்கள் கிராமங்களிலும் பொதுக்கூட்டங்களிட வேண்டும் ட ) . ஒவ்வொன்றும் மே திருநாள் கொண்டாடுமாக!
2. பிற்பகல் அந்தந்த ஊர் சங்கக் காரியாலயங்களிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு பொதுக் கூட்டமிட வேண்டிய இடத்திற்குச் செல்ல வேண்டும். புரட்சி - அறிவிப்பு - 22.04.1934
3. பொதுக்கூட்டத்தில் உபன்யாச நிகழ்ச்சிகள் நடந்ததும் மே தின அறிக்கை தலைவரால் படிக்கப்பட்டு பொதுக்கூட்டத்தினர் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும்.
4. நாளது 29-ந் தேதி “புரட்சி”யிலும் 30-ந் தேதி “பகுத்தறிவி”லும் மே தின அறிக்கை வெளிவரும்.
புரட்சி - அறிக்கை - 22.04.1934
குடி அரசு (புரட்சி)- 1994) அஆ 10 மட... ரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மே - மாதம் 1 - தேதி தொழிலாளர் பண்டிகை.
மே திருநாள் கொண்டாடத் தவறாதீர்.
தொழிலாவிக்கு லாபத்தில் பங்கா?
காந்தி - ஏமாறாதீர்கள்
பிரஞ்சு இந்தியாவில் கிருஸ்தவர்கள் ஏகபோக உரிமை அநுபவிப்பதை போல, தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஏக போக உரிமைக்காரர்கள். இவர்களைப் போலவே பம்பாய், ஆமதாபாத் மில்கார முதலாளிகளாகும். இந்திய சர்க்கார். ராணுவத்துக்கும், வெள்ளைக்கார மாஜி உத்தியோகஸ்தர்கள் பென்ஷனுக்கும் பணம் ஒதுக்க ஒருக்கால் மறந்தாலும் மறப்பார்கள். நமது வடநாட்டு
மில் முதலாளிகள் தங்கள் சங்கதியை மறப்பதில்லை. கதர் துணிக்கு கதர் பக்தர்கள் வரிப்பணம் கொடுப்பதைப் போலவே மில்கார முதலாளிகளுக்கும், சர்க்காரும் வரி நஷ்டமடைவதைப் போல், மில் துணி, நூல் இவைகளை உபயோகப்படுத்துகிறவர்கள் வரி கொடுக்க வேண்டும்
சில வருடங்களுக்கு முன்பு ஆமதாபாத் மில் தொழிலாளிகளுக்குள்
ஓர் பலமான ஒற்றுமையுண்டாகி பெரும் கிளர்ச்சி செய்து சிறிது பலன் அடைந்தார்கள். இவ்வருடம் ஆமதாபாத் மில் முதலாளிகள் தங்கள் மில்லுகளில் ஆள் குறைப்பு திட்டத்தையும் கூலி குறைவு திட்டத்தையும் கையாள ஆரம்பித்ததும், மில் தொழிலாளிகள் பலமாக விழித்துக் கொண்டார்கள். முன்பு நடந்த ஒப்பந்தத்துக்கு விரோதமாக, மில் முதலாளிகள் செய்வதாக கூறினார்கள். மில் முதலாளிகளோ நஷ்டம் அதிகமாவதால் இம்முறையை கையாள்வதாக கூறினார்கள். இதற்கு தொழிலாள சங்க உத்தியோகஸ்தர்கள் மில்லுகளில் நஷ்டம் என்பது பொய் என்றும், மில் வரவு செலவு கணக்கில் நஷ்டமென்பது உண்மையானால், தாங்கள் இனியும் மில்களில் வேலை செய்து அரை வயிற்று கஞ்சிக்கு கூலி பெற்றுக் கொள்கிறோம், மில் வேலையிலேயே அழுது எலும்பு உருகியவர்கள் எங்கள் கிராமங்களுக்கு செல்கிறோம், கணக்கை காட்டுங்கள் என்று கேட்டார்கள். இதற்கு சரியான நாணயமான
பதில் கூறாது, தொழிலாளி மில் கணக்கை பார்க்க கேட்பதா? கொடுப்பதா? அது மில் முதலாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று வேறு பதில் கூறி காலம் கடத்தி வந்தார்கள்.
கிறாக்கி.
பம்பாய் மாகாணத்தில் பெரிதும் மில் தொழிலாளிகளுக்குள் பொது வேலை நிறுத்தம் நாளை 23-ந் தேதி என்று தெரிந்ததும் இதில் ஆலை
குடி அரசு (புரட்சி அட 02
தொழிலாளர்களுடன் இவர்கள் சேராது பிரிக்க ஓர் தந்திரம் செய்துவிட்டார்கள். காந்தியை பிடித்து சமாதானம் என்று இன்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சென்ற 4 மாதத்துக்குள் ஆறு, ஏழு தடவை தொழிலாள யூனியன் உத்தியோகஸ்தர்கள் சொல்லி வந்ததுக்கெல்லாம், காதுகொடாது வேறு வேலை இருக்கிறது என்று சால்ஜாப்பு சொல்லி வந்த காந்திபாபுவும் இன்று சமாதானத்துக்குப் புறப்பட்டு விட்டாராம். இந்நெருக்கடியில் ஆமதாபாத் மில் தொழிலாளிகள் என்ன செய்யப் போகிறார்கள்.
வாஸ்தவமா
காந்திஜீயின் யோசனைப்படி மில் தொழிலாளிகளும், மில் முதலாளிகளும் ஒரு சமரசத் திட்டம் தயாரித்து வருகிறார்கள்.
1. ஜீவனத்துக்கு இன்றியமையாதனவான, ஓர் குறைந்த பட்சமான சம்பள திட்டம் நிர்ணயிக்கப்படும்
2. கம்பெனியின் பங்குதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம், ஏஜண்டுகளுக்கு கமிஷன், கட்டிடம் சாமான்கள், போதுமான நிதி,
இம் மூன்று வித செலவினங்கள் போக, மிஞ்சி லாபமேற்பட்டால் இன்ன வீதாச்சாரப்படி அதை மில் முதலாளிகளும், தொழிலாளிகளும் பங்கு போட்டுக் கொள்வது என்பது பற்றி வரையருக்கப்படும்
3. பங்குதாரர்களுக்கு 100-க்கு 8 வீத லாபம் கிடைத்தால் போதுமென்றும் ஏஜண்டுகளுக்கு இப்போதைய கமிஷனில் பாதிகொடுத்தால் போது மென்பதும், தொழிலாள சங்க உத்தி யோகஸ்தர்களின் அபிப்பிராயமாகும். போன உடன்படிக்கையின் காலத்தில் காந்தி முன்பு செய்யப்பட்டும், முதலாளிகள் இந்த ஆறு மாத காலமாக காந்தியை அலக்ஷியபடுத்தி இருந்தாலும், அவ் விதம் சொல்வதாக காந்தி தொழிலாளிகளை ஏமாற்றி இருந்தாலும், எதிர்காலம் ஏமாறாமலும், சகோதரத் தொழிலாளிகளை காட்டி கொடாதும் இருப்பார்களா?
புரட்சி - கட்டுரை - 22.04.1934
[23 ய... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ரஷ்யாவின் மேம்பாடு
சமீப காலமாக முதலாளித்துவ நாட்டில் ஏற்பட்டிருக்கும் அளவு கடந்த பொருளாதார நெருக்கடியை வாசகர்கள் நன்கு அறிவார்கள். ஆனால் சோவியத் ருஷ்ய நாடோ சமதர்மத் திட்டத்தால் பொருளாதார முற்போக்குடன் தலைநிமிர்ந்து பிறநாடுகள் வெட்கித் தலைகுனியும்படி, முன்னேறிச் செல்லுகின்றன. ஒவ்வொரு முதலாளித்துவ ராஜ்யத்திலும்
3 கோடி, 4 கோடி பேர்கள் வேலையில்லாமல் திண்டாடி அவதியுறும் போது, ரஷ்யாவோ தங்கள் நாட்டில் ''வேலையில்லாது ஏங்குவோரோ அல்லது நாளைக்கென் செய்வோம் என்று கவலையுறுவோறோ'' இல்லாமல் செய்து விட்டது
ரஷ்யாவைப் பற்றி முதலாளித்துவ நாடுகளும் - அரசுகளும் செய்யும் விஷமப் பிரசாரமானது 1916-18 வருஷங்களின் மகாயுத்தப்
புளுகுகளுக்குச் சமானமாகும்
சோவியத் ரஷ்யர்களின் முதல் 5 வருஷ திட்டத்தின் முக்கிய நோக்கமானது:- பொருள்கள் உற்பத்தி விஷயத்திலும், அதன் அபிவிருத்தி விஷயத்திலும் பழைய ரஷ்யர்கள் கொண்டிருந்த முறையை அடியோடு மாற்றி நவீன முறையால் அதிக மேம்பாட்டிற்கு உழைத்து வெற்றி பெருதல் என்பதாகும். விவசாய விஷயத்தில் கூட்டுப் பண்ணைத் தொழில் முறையையும், இயந்திர நாகரீக முறையையும் கைக்கொள்ளுதல் என்றும் நிர்மாணித்ததுமாகும்
உரிமை பாதுகாப்பு என்பதே 5 வருஷ திட்டத்தின் முக்கிய இரகசியமாகும். இதன்படி எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ரஷ்யத் திட்டம் வெற்றி ஏற்பட வேண்டுமென்பதாகும்
ரஷ்யர்களின் 5 வருஷய திட்ட வெற்றியானது அவர்களுடைய பூர்வாங்க திட்டத்திற்கு மேல் ஒரு மடங்கு அதிகப்பட்டிருக்கிறது ரஷ்யர்களின் உற்பத்திப் பொருள்கள், கைத்தொழில் வளர்ச்சிகள் முதலியன அளவுக்கு மீறி ஏற்பட்டிருக்கின்றன.
தனித்தனி முதலாளிகளாக நாட்டை வசப்படுத்தியிருந்ததை ஐக்கிய அபேதவாத சமதர்மக் குடியரசு நாடானது உலகத்திலேயே ஒன்றுபட்ட ஒரே நிலமாக செய்து அனைவருக்கும் சரிநிகர் பயனையளித்துவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார்.
குடி அரசு (புரட்சி)- 1994) மட பு
ரஷ்யாவில் 10 லக்ஷம் பேர் வேலையில்லாமல் திண்டாடியதை 40 ஆயிரம் பேராகக் குறைக்க வேண்டுமென்ற ஒரு நோக்கமும் முதலாவது
ஐந்து வருடத் திட்டத்தில் இருந்தது. ஆனால் 1930 வருடத்திற்குள் சமதர்ம நாடான ரஷ்யா அடியோடு வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றி விட்டது தொழிலாளர்களுடைய வாழ்க்கையின் உயர்வும் 5 வருஷ திட்டத்தால் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. சம்பளங்கள் தாராளமாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் சதா சந்துஷ்டியாக யிருக்கத் தக்க எல்லா சாதனங்களும் அங்கு சமதர்மிகளால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது
புரட்சி - கட்டுரை - 22.04.1934
25— பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மே தினம்
மே தினம், அதாவது பிரதி வருஷத்திய மே மாத முதல் நாளை உலகமெங்கும் உழைப்பவர்களால் பெரு நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கடைசியில், முதல் அமெரிக்க
தேசத்தில், தொழிலாளர், கிருஷிகர் அடங்கிய மக்கள் 8-மணி நேரத்திற்கு
மேல் தொழிற்சாலைகளிலும், வயல்களிலும், நிலங்களிலும் வேலை செய்வது அநீதி என்றும், அதனை வற்புறுத்துவது அதனினும் அநீதி
என்றும், 8-மணி நேர உழைப்பே போதுமானதென்றும் ஒரு கிளர்ச்சி புறப்பட்டது. அக்கிளர்ச்சியை முதலாளிகள் அடக்க முயன்றனர். அவ்வடக்கு முறை, மே மாதம் முதல் நாள் கொடூரமாக முடிந்ததன் பயனாக, எளிய தொழிலாளர், விவசாயிகளின் இரத்தம் சிந்தியபடியால், அந்நாள். தொழிலாளர்களின் மாபெரும் தியாக ஞாபகார்த்தமாகக் கொண்டு உலக முழுமையும் அத்தினத்தைக் கொண்டாடிக் கொண்டு வருகின்றார்கள்.
தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல். 8-மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10-மணி நேரம், 12 -மணி நேரம், 16- மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர். அனுதினமும் வேகா வெய்யிலிலும், குளிரிலும்
தீக்ஷண்யத்திலும், வயலிலும், பாலைவனத்திலும் உழைத்து வருகின்றவர் யார்? இவ்வளவு கஷ்டமும் தங்கள் வயற்றுக்கு மட்டிலும் தானா? மணிக்கு 100 மைல் ஓடும் எக்ஸ்பிரஸ் வண்டியில் ஆயிரக்கணக்கான. பிரயாணிகளுடைய உயிர் ஒரு சிக்னல் மென் அதாவது, அடையாளம் காட்டும் ஒரு கூலிவயமிடமிருக்கின்றது! அவனைப் பன்னிரண்டு மணி
நேரம் இரவில் விழித்திருக்க வேண்டுமென்றால் இதனினும் கொடுமை
எங்குளது. இவன் 8-மணி நேரம் வேலை செய்வதுதான் உசிதமென்று வாதமிட்டால், அவனை மிஷின் கன்களைக் கொண்டு கொல்லுவதென்றால்
யாரால் பொருக்க முடியும். இத்தியாதி கொடுமைகளைப் போக்கி, உலகத்தில் தொழிலாளருக்கு நியாயத்தை ஸ்தாபிக்க நேர்ந்த தினம் இந்நாளாகும்
குடி அரசு (புரட்சி 1934(1) மட 10௦
சென்னை புளியந்தோப்பில் பன்னீராயிரம் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து மாத காலமாக பசியும் பட்டினியாயும் கிடக்க நேரிட்ட காலையில் அவர்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் கருங்காலிகளை நிறுத்த எத்தனித்த காலையில், அமைதிக்கும் ஒழுங்குக்கும் ஏற்பட்டுள்ள அதிகாரிகள். தொழிலாளர் எழுவரைச் சுட்டுக் கொன்றனர்! இத்தியாகத்தைக் கொண்டாடும் தினமும் மே தினமாகும்.
1905-ம் வருஷத்தில் வீணாக ஜப்பானியர் மேல் படையெடுத்த ஜார். சக்கிரவர்த்தியின் கொடுமையைத் தடுக்க முயன்ற ரஷியத் தொழிலாளிகள், பதினாயிரக்கணக்காக கொல்லப்பட்ட ஞாபக தினமும் இத்தினமாகும்
பிரான்சு தேசம் புரட்சிக்கு பின்பு பிரான்சு நாட்டில், அநீதியும் கொடுமையும் மிகுந்து வந்தபடியால் பிரான்சு தேச தொழிலாளிகளும், விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, பாரீஸ் நகரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை, தீ கம்யூன் என்ற உழைப்பவர்கள் ஆட்சியை ஸ்தாபித்த காலை, முதலாளிகளுடைய தந்திரத்தால் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான பிரான்சுத் தொழிலாளர்களுடைய ஞாபகத்தைக் குறிக்கும்
தினம் இம் மேதினமாகும்
ஆங்கில நாட்டினும் நிலவரியிலும், நிலங்களை இழந்ததாலும்
மனம் பொறாத தொழிலாளர்கள் சார்ட்டிஸ்ட் என்ற இயக்கத்தைக்
கிளப்பியதன் காரணமாக, அக்கூட்டத்தைச் சேர்ந், அனைவரையும்
நாசப்படுத்திய ஞாபகப் படுத்தப்படும் தினம் இத்தினமாகும்.
சீன நாட்டில் சன்யாட்சன் என்ற பெரியோர் ஸ்தாபித்த தேசீயத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பட்ட தொழிற்கட்சியை நாசமாக்கிய ஞாபக
தினமும் இதுவாகும்
நேற்று தென்இந்திய ரயில்வேயில் முப்பதினாயிரம் பேர்கள் வேலை நிறுத்திய காலையில் அவர்களின் தலைவர்கள் நிரபராதிகளாகிய பதினெட்டு பேரை, பத்து வருஷம் சிறை வாசமிட்ட ஞாபக தினமும்
இத்தினமாகும். இவ்விதமாக உலகம் முழுமையும் அந்தந்த நாடுகளின். தொழிலாளர் இயக்கங்கள் தோன்றிய நாள் முதல் பல்லாயிரக்கணக்காக கஷ்டப்பட்டு, மாண்டு மடிந்த உழைப்போர்களுடைய தியாகத்தை ஞாபகார்த்தமாக கொண்டாட இத்தினம் ஏற்பட்டுள்ளது
உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர் களுடன் கலந்தேயிருக்கின்றன. இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும் கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாக வில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின். மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது. முள் கம்பளத்தின் மேல் 127 ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ் என்பார். லோகாயுதத்தின் முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்
உடலுக்கு உணவு வேண்டுமானால், அறிவுக்குக் கல்வி வேண்டுமானால், தியாகம் அன்னியில் எதையுமடைய முடியாது! சுகம்,
துக்கம்; துக்கம், சுகம் வாழ்வில் பிணை கொண்டிருக்கிறபடியால், தியாக மூர்த்திகள் செய்து வரும் தியாகம் உலக ஞாபகத்தில் இருந்து கொண்டேயிருக்கும். இவ்வித தியாக மூர்த்திகளின் ஞாபகத்தைக் கொண்டாடும் தினம் இந்த மே மாதம் முதல் தேதியாகும்
இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.
தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும்
போலும்!! உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன. இத்யாதி வியர்த்தங்களால் உலக மக்கள் இனிவரும் மாபெரும் யுத்தத்தில் மடியப் போகின்றனர் இனிவரும் யுத்தம் உலகில் விளைபொருள் போதாதென்பதற்கல்ல. செய்பொருள் செய்ய முடியவில்லை என்பதற்கல்ல. வல்லரசுகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் விளையப் போகும் மகா பாதகமென அறிக!!! இம்மாபெரும் கேட்டைத் தடுப்பதற்கு உலகில் ஒருவரேயுளர். அவர்களால்தான் ரஷ்ய தேசம், புரட்சிக்குப் பின் நடந்த உள்நாட்டுக் கலகம் அடக்கப்பட்டது. வெளிநாடுகளின் உதவி பயன்படாமல்
குடி அரசு (புரட்சி) - 1934(1) _ 128
போயிற்று. போலண்ட் தேசத்து நெருக்கடியைச் சாக்காக வைத்துக் கொண்டு வல்லரசுகள் சோவியத் அரசை நசுக்கச் செய்த முயற்சி வீணானதாயிற்று. இவர்கள் யாரெனில் அகில உலக தொழிலாளர்களாவர். இவர்கள் தான் உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை கொண்டவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய தொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் தேதியாகும்.
புரட்சி - தலையங்கம் - 29.04.1934
[29 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
பம்பாயில் பயங்கர வேலை நிறுத்தம்
உலக முழுவதும் தொழிலாளர் நிலைமை படுமோசம். இந்தியாவிலோ சொல்ல வேண்டியதில்லை. எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளிகள். பொருளாதார நெருக்கடி சில காலமாக மனித வர்க்கத்தை இறுகப்பிடித்து உலுக்கி வருகிறது. கல்நெஞ்ச முதலாளிகள். ஈவிரக்கமின்றிச் சம்பளக் குறைப்பால் தொழிலாளிகளை உயிரோடு உடம்பை உரிக்கும் சித்திரவதை செய்து வருகிறார்கள். இன்றைய இந்தியத் தொழிலாளர். வாழ்வோ அழுவாரற்ற பிணமாகவும், சீந்துவாரற்ற சவமாகவுங் கிடக்கிறது கடந்த ஒரு வாரமாய்ச் சம்பளத்தைக் குறைத்ததினால் பம்பாய்த் தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். பம்பாய் ஆலைகள் 57-ல் 43 ஆலைகள் மூடப்பட்டுவிட்டன. 8 ஆலைகள் மாத்திரம் திண்டாட்டத்தின் பேரில் வேலை. நடத்தி வருகின்றன. 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். பம்பாயில் துப்பாக்கிப் பிரயோகமும், அடிதடிகளும்,
கல்வீச்சும் நடந்த மயமாயிருக்கிறது. உயிர்ச் சேதமும், படுகாயமூம் கோரக் காட்சியளிக்கிறது. பம்பாய் அமளி துமளியாய்க் கிடக்கிறது
பொறுப்பு வாய்ந்த இந்திய சர்க்கார் தொழிலாளிகளை அனாதைக் குழந்தைகளாய்ப் பாவித்துக் கைவிட்டுவிட்டதாக தெரிகிறது யதேச்சாதிகாரிகளான ஹிட்லரும், முசோலினியுங்கூட தொழிலாளிகளைக் கெளரவித்து ஒத்தாசை புரியும் நிர்பந்தத்திலிருக்கும் இந்நாள் ஜனநாயகத்துவத்தை நீட்டி நீட்டிப் பேசும் பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதியான இந்திய சர்க்கார், பம்பாய்த் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைக் கவனியாது தூங்கிக் கொண்டிருப்பது மானக் கேடாகும். தன் கையே ஆபத்துக்குதவும் என்று தொழிலாளிகளுக்கு எடுத்துக்கூற ஆசைப்படுகிறோம். தொழிலாளர் தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு தொழிலாளர் சங்கங்களை பெயரளவிலன்றி உண்மையாகவே பலப்படுத்தி சக்தியைப் பெருக்க வேண்டிக் கொள்கிறோம். பம்பாய்த் தொழிலாளருக்கு ஆதரவு காட்டும் பொருட்டு 6500 பேர் டில்லியில் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். நாகபுரியிலும் மே 1 -ந் தேதி வேலை நிறுத்தம் ஆரம்பமாகுமென்று தெரியவருகிறது. தென்னாட்டுத் தொழிலாளிகளும், சமதர்மிகளும் பம்பாய்த் தோழர்களுக்கு ஆதரவு காட்டுந் தோரணையில் மே தினத்தன்று தீர்மானங்கள் நிறைவேற்றி ஆவன செய்யக் கோறுகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 29.04.1934
குடி அரசு (புரட்சி)- 1994) — 10
பகுத்தறிவு
நமது “பகுத்தறிவு” தினசரியானது நாம் எதிர்பார்த்ததற்கு அதிகம் வளர்ச்சியடைந்து வருகிறது. நேற்றுடன் ஒவ்வொரு நாளும் 3200 காப்பிகள் வெளிவந்தது. தமிழ்நாட்டில் நமதியக்க சம்பந்தமாக உள்ள சகல செய்திகளும் பிரதி தினமும் தாராளமாக வெளிவர வேண்டு மென்பதற்காகவே இத்தினசரி ஆரம்பிக்கப்பட்டது. தினசரி தனது கடமையை தைரியமாகச் செய்ய ஊக்கம் காட்டிய வெளியூர் சந்தாதாரர்களையும் ஏஜண்டுகளையும் பாராட்டுகிறோம். மூவாயிரத்து இருநூறாக இருப்பது இன்னம் அதிகமாகாததற்கு காரணம் சந்தா அனுப்பாத சந்தாதாரர்களுக்கும் முன்பணம் அனுப்பாத ஏஜண்டுகளுக்கும் நாம் பத்திரிகை அனுப்பாததேயாகும். இன்னும் இரண்டு தினத்துக்குள் சேலம், திருச்சி, திருப்பத்தூர், பொள்ளாச்சி, கோவை இவ்வூர் ஏஜண்டுகள் கேட்டுக் கொண்டபடியால் அன்றாடம் பேப்பர் மாலைக்குள் கிடைக்கும்படி செய்ய ஏற்பாடு செய்யப்படும்
புரட்சி - அறிவிப்பு - 29.04.1934
Bl மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
காளியப்பன்
நாகை தோழர் காளியப்பன் அவர்கள் மலாய் நாடு சுற்றுப் பிரயாணம் இவ்வாரமில்லை. இன்னும் இரண்டு வாரத்திற்குள் அவர் மலாய் நாட்டிற்குப் புறப்படுவார்.
தோழர் காளியப்பனின் “டார்வின்” என்ற குழந்தை இறந்ததென்று தெரிய விசனிக்கிறோம். குழந்தையை இழந்த வருத்தத்திலுள்ள அவருக்கு ஆறுதல் கூறுகிறோம். அடுத்தவாரம் ஈரோட்டிற்கு வருவார்.
புரட்சி - இரங்கல் செய்தி - 29.04.1934
குடி அரசு (புரட்சி 1934 (1) ஆட 1௦
தொழிலாளர்
மாமூல் சம்பளத்தில் பாதிக்குக் குறைவாகக் குறைப்பதை பம்பாய் நெசவு ஆலைத் தொழிலாளர்கள் கண்டிக்கிறார்கள். இதற்கறிகுறியாகவே ஒரு மாத நோட்டீஸ் கொடுத்து நேற்று 23-ந் தேதியிலிருந்து இன்றுடன். ஏழு தினங்கள் பொது வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வேலை நிறுத்தக்காரர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரமேயாகும். இன்றுவரை
சுமார் ஒரு லக்ஷத்துக்கு மேல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்திருக்கிறார்கள். பல தலைவர்கள் கைது செய்யப்பட்டும் இதுவரையில்
மில் முதலாளிகளோ சர்க்காரோ சமாதானம் செய்ய முன் வரவில்லை பம்பாய் கார்ப்பரேஷன் தலைவர் இன்று சமாதானத்துக்கு முயல்கிறார். டெல்லியிலும், நாகபுரியிலும், கராச்சியிலும் உள்ள நெசவுத் தொழிலாளிகள் அனுதாபங் காட்டுகிறார்கள். விரைவில் பரிகாரம் ஒரு முடிவேற்படுமா?
புரட்சி - துணைத் தலையங்கம் - 29.04.1934
133 ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
காங்கிரஸ்
காங்கிரஸ் காரியக்கமிட்டியும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியும் மே மீ 18, 19ந் தேதிகளில்தான், பாட்னாவில் நடைபெறுமாம். அதற்கு
முன்பு 2ந்தேதி ராஞ்சியில் அகில இந்திய சுயராஜ்யக் கக்ஷி கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது. இவ்விரண்டு கூட்டங்களின் ஆரம்ப வேகம் தடைபெற்று விட்டாலும் கூட்டங்கள் என்னமோ, நடைபெறும் காந்தி சொன்னபடி சட்டசபை பிரவேசமும், சட்ட மறுப்பு நிறுத்தத்தீர்மானமும் முதலில் நடைபெறும். எதிர்காலத்தில் இவர்கள் வேலைதிட்டம் என்ன என்பதை கமிட்டி முறையே வெளியிட்டுவிடும். கமிட்டி கூடும் தேதிகளில்
சில தலைவர்கள் அபிப்பிராயப் பேதப்படுவது போலவே, கமிட்டிகளின். வேலைத்திட்டம் தயாரிப்பதில் அபிப்பிராய பேதமிருக்கிறது. புது திட்டம் என்ன சொல்லப்போகிறது என்பதை பார்ப்போம்
எப்போ
அடிமையென்றும் ஆரியனென்றும் அகல வைத்து ஆண்டுவரும் ஆண்மைகொண்ட அர்ப்பப் பயல்களின் அகம்பாவங்கள் அடியோடொழியும் அன்னாள் வருவதெப்போ?
பெண்களெல்லாம் பேதையென்றும், பிள்ளைபெறும் பிண்டமென்றும், பின்புத்திக்காரரென்றும், பிராணன்போக பித்து தரும் பிறவியென்றும் பிராணிகள் போல் பிதற்றிவரும் பிரகஸ்பதிகளின் பேடித்தனம் பிணமாகும் கால மெப்போ?
கடவுளென்றும், கர்த்தரென்றும் காரணமற்ற பெயரைக்காட்டி கஞ்சிக்குக்
காற்றாய் பறக்கும் கபடமற்றவர்களின் காசைப்பரித்து காலாட்டி சோறுதின்னும் கயவர்களின் காசில் இடிகள் மின்னலோடு விழ, காலம் வருவதெப்போ?
உன் உடமை என்னுடமையென்று கன்னத்திலடித்து மண்ணில் பிறந்த மானிடனை கண் தெரியாமல் சின்னா பின்னமாகப் பின்னப்படுத்தி வரும்
காசுத் திமிர் கொண்ட கடுங்கோலனை சின்னப்படுத்தி மண்ணிலுள்ள எப்பொருளும் எல்லாருடையதே என்ற சப்தம் எங்கும் தொனிக்கும் காலம் வருவதெப்போ?
புரட்சி - துணுக்குகள் - 29.04.1934
குடி அரசு (புரட்சி) - 1934(1) ௨௨ 134
சென்னை கார்பரேஷனில் படைஎடுப்பா?
சென்னையில் மே மாதம் கடைசி வாரத்தில் நடக்கும் கார்பரேஷன் கூட்டத்தன்று, சென்னையில் வேலையற்று பசி பட்டினியால் வருந்தி வாடும் தொழிலாளர்களின் கூட்டம் ஒன்று திரண்டு சென்று சென்னைக் கார்பரேஷன் கட்டிட வாயிலில் முற்றுகையிடுமென்று இன்று ஓர் செய்தி கிடைத்திருக்கிறது. இது வாஸ்தவமானால் எந்த எண்ணத்துடன் இது ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இதை வரவேற்கிறோம்
இம்மாகாணத்தின் தலைநகரான சென்னையில் “உயர்தரப் படிப்பு” படித்தவர்கள் மட்டும் வேலையில்லாது 2400க்கு அதிகம் இருப்பதாகவும், இவையன்றி, தங்க இடமோ செய்ய வேலையோ இல்லாது, எச்சல் இலை சோற்றை தின்றுவிட்டு டிராம்வே லையன்களிலும், வால்டோக்ஸ் ரோட்டிலும், சாக்கடை ஓரங்களிலும் படுத்துறங்கி காலம் கழிப்போர். 8000க்கு அதிகம் இருப்பதாகவும், இவைகளன்றி மாமூல் தொழிலற்ற தோழர்களும் உண்டு. உணர்ந்தவர்களுக்கு இச்செய்தி ஆச்சர்யத்தைக் கொடுப்பதிற்கில்லை
ஆனால் இந்த வேலையற்ற தொழிலாளிகளைத் திரட்ட முயலுகிறவர்கள் பெயரைக் கேட்டே சிறிது கவலைப்படுகிறோம். தான் ஏழைகளின் தாதா! என்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு ஏமாந்தவர்களை உனக்கு விரோதமாக தூண்டிவிடுவேன் என்று முதலாளிமாரை பயமுருத்தி, இத்தொல்லையில் இருந்து தப்ப விரும்பும் முதலாளிகளிடம் பணம் பெற்று தங்கள் பெண்டு பிள்ளைகளுடன், சுகமாக வாழும் தலைவர்கள் சென்னையில் பலர் உண்டு. அவர்கள். சொன்னதை நம்பிச் சென்று உதையும் அடியும் பெற்று திரும்பிய,
திரும்பும் தொழிலாளிகளும் பலருண்டு. இத்தகைய கூட்டங்களிலெதும் இக்கார்ப்பரேஷன் முற்றுகையில் தலையிடாது இருப்பார்களேயானால் இப்பட்டினிப்போர் சிறிது பலனை அடையக்கூடும்
சென்னை கார்ப்பரேஷன் தோழர் சத்தியமூர்த்திக்கும், தோழர் வெங்கட்டறாம சாஸ்திரிக்கும் சொந்தமாக இருப்பது போல் அதன் சில நடவடிக்கைகளிலிருந்து உணர இடமிருக்கிறது. மீண்டும் பார்ப்பன 135 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஆகஷியை கார்ப்பரேஷனில் நிலைக்கச் செய்யவும் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனராக ஓர் பார்ப்பனரைக் கொண்டு வரச் செய்யப்படும் முயற்சிகளுக்கு உதவியாக இக்கிளர்ச்சி இருக்காதென எண்ணுகிறோம்.
பம்பாய் கார்ப்பரேஷன் தலைவர் வேலையற்றோர் பிரச்சினையை
தீர்க்க சிறிது உதவி செய்ய ஏற்பாடுகள் செய்வதை அறிவீர்கள். நமது சென்னை கார்ப்பரேஷன் தலைவரும், தனது கடமையைச் செய்ய தவறார் என்றே எண்ணுகிறோம்.
புரட்சி - துணைத் தலையங்கம் - 29.04.1934
குடி அரசு (புரட்சி)- 1994) — 19
அன்சாரியும் அபேதவாதமும்
அளவுக்கு மேற்பட்ட பிரசாரத்துக்குப் பின் அகில இந்திய காங்கிரஸ் காரியக்கமிட்டி அங்கத்தினர்களும், அகில இந்திய சுயராஜ்யக் கட்சியின் தூண்களும் ராஞ்சியில் கூடினார்கள். காந்தியார், ஆச்சாரியார், சரோஜினியார் முதலிய பழைய பிரபல தலைவர்கள் அங்கு விஜயமானார்கள். அந்தரங்கமாகவும், பகிரங்கமாகவும், சம்பாஷணை மூலியமும், பல கூட்டங்கள் நடந்தது. கடைசியாய் சில தீர்மானங்கள் செய்ததாக எல்லா. பத்திரிகைகளுக்கும் கிடைக்கும்படி செய்தி அனுப்பி இருக்கிறார்கள்.
இது வரையில், சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் போய் என்ன செய்யப்போகிறோம் என்பதை பற்றி பல பிரசங்கங்கள் செய்திருக்கிறார்கள். இவையாவும் ஒன்றுக்கொன்று மிகுந்த முரண்பட்டதாகவே இருந்து வந்தது. சீர்திருத்த அறிக்கையை கண்டிப்பது மட்டும் எங்கள் நோக்க மென்பவர்களும், முஸ்லீம்களுக்கு அதிக சலுகை காட்டப்பட்டதை - மட்டும் கண்டித்தவர்களும் சட்ட சபையில் புகுந்து சர்க்காரை திக்கு முக்கலாடச் செய்வதே எங்கள் நோக்கமென்றவர்களும், காந்தி சொன்ன. ஆலயப்பிரவேச தீர்மானத்துக்காகவே சட்ட சபை போகிறோம் என்றவர்களும், சட்ட சபையில் வரும் ஆலயப்பிரவேச மசோதாவை தோற்கடிக்கவே நான் போகிறேன் என்ற மூர்த்தி போன்றோரும், இவ்விதம் பலவிதமான பிரசங்கம் செய்த தலைவர்கள் அங்கு கூடி தீர்மானங்களை தயாரித்து இருக்கிறார்கள்.
இத்தீர்மானங்கள் 18-ந் தேதி கூடவிருக்கும் காங்கிரஸ் கமிட்டி பாட்னா கூட்டத்துக்கு பின்பே உயிருடையதாகுமென்று தெரிவதால், நாம் அதிகம் அதைப்பற்றி பிரஸ்தாபிப்பது பயனற்றதாகவும் இருக்கலாம். இந்த ராஞ்சி கூட்ட தீர்மானங்களை நமது மாகாணப்
பத்திரிகைகளில் ஜஸ்டிஸ் ஒன்று தவிர ஏனைய சகல பத்திரிகைகளும் அப்படியே ஆதரித்து எழுதி வருவதுதான் மிக விசேஷமானதாகும் ஐயர், ஐயங்கார், ஆச்சாரியார், இப்பத்திரிகைகள் தான் இப்படி எழுதுகிறதென்று எண்ணி விடுவதற்கில்லை. நமது அல்லாதார்கள். பத்திரிகைகள் இருக்கிறதே இவைகளும் இக்கூட்ட நடவடிக்கைகளைப்
பற்றி தங்களின் உண்மை நிலையை வெளியிடாதது பெருந்தவறாகும் இவைகள் எதற்காக பயப்படுகிறது என்பதையும், பயப்படவில்லையானால், ராஞ்சி திட்டமானது எந்த முறையில் நாணையமானது என்பதையும் 1B ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஏன் பகிரங்கமாக எழுதக்கூடாது. இவ்விதம் இவர்கள் நடந்தால் தமிழர்கள் கண் விழிக்கும் காலத்தில் தங்களின் இழி செய்கையைப் பார்த்து ஏளனமாக எண்ண மாட்டார்களா? என்பதையும் சிந்தித்து பார்த்த பின்பாவது, ஐயருக்கும், ஐயங்காருக்கும் பயப்படாது தங்கள் கடமையை செய்யுமென நம்புகிறோம்
ராஞ்சியில் கூடிய கூட்டத்தில் செய்யப்பட்ட தீர்மானங்கள்:-
1. அகில இந்திய சுயராஜ்யக் கட்சியை ஏற்படுத்த முடிவு செய்கிறது.
2. அக்கட்சி இந்திய சட்டசபைக்கு அபேக்ஷகர்களை நிறுத்த முயலுதல்.
3. இக்கட்சிக்கு ஓர் வேலைத் திட்டம். இதன் வேறு பெயர் அபேதவாத திட்டமென்பது.
4. சுயநிர்ணய சுதந்திரத்தை யொட்டி தேசத்தின் எதிர்கால அரசியலை நிர்ணயித்துக் கொள்வதற்காக, பிரதிநிதித்வ சபையை இனி கூட்டிவைக்க வேண்டுமென்பது.
5. அரசியல் திருத்த அறிக்கையை நிராகரிக்கிறது. (ஆனால் வகுப்பு பிரச்சினை முடிவில், பிரதிநிதித்வ முறையைப்பற்றி வெளியிடப்பட்டுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்வதைப்பற்றியோ, நிராகரிப்பதைப்பற்றியோ யோசிப்பதற்கு இது ஏற்ற சமயமல்லவென்று கருதுகிறது.)
நமது தேசீயத் தியாகிகள் இன்று பத்து வருடங்களாக இந்நாட்டின் ஏழை மக்களின் நன்மைக்காகச் செய்து வந்துள்ள முயற்சியின் பலனாய் என்ன நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்ற தென்பதையும், இதுவரையில் அவர்கள் பொதுஜனங்களை யேமாற்ற எத்தகைய ஜெகஜாலங்களையெல்லாம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதையும், இவர்கள் உழைப்பின் பயனாய் மக்களின் நித்திய வாழ்க்கையில்; புத்தி களிமண்ணானதுடன், புதிய
சீர்திருத்தத்தினால் அதிக அரசாங்க செலவு இவைகளைத் தவிர வேறெந்த நன்மையையும் இதுவரையில் நாம் கண்டதில்லை. இந்த முறையிலேயே இன்று தங்கள் நலத்திற்காகவே பொதுஜனப் பெயரால்.
ஓர் நாடகம் நடிக்கிறார்களென்பதை நாம் சொல்லாமலிருப்பதற்கில்லை.: உதாரணமாக ராயல் கமிஷன் நியமித்து, அது இந்திய நாட்டில் விசாரணை செய்த பிறகுதான் சீர்திருத்தம் பார்லிமெண்டில் கொண்டுவர வேண்டுமென்றார்கள். சைமன் கமிஷன் நியமனமானதும், அதில் இந்தியரில்லை; ஆதலால் அதை பகிஷ்கரிக்க வேண்டுமென்றார்கள். அதே சமயத்தில் எல்லா இந்தியக் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதில் சுயராஜ்யத் திட்டமென்று நேரு திட்டத்தைத் தயாரித்தார்கள்.
இத் திட்டத்தை எல்லா முஸ்லிம்களும் ஆதி திராவிடர்களும் எதிர்த்தார்கள். சர்வ கட்சி மகாநாட்டைக் கூட்டி நேரு திட்டம் நிறைவேற்றப்படுமென்றார்கள். அதே சமயத்தில் இந் நாட்டுக்கு விஜயஞ்
குடி அரசு (புரட்சி)- 194) அட 19
செய்த கமிஷனிடம் ஹிந்து மகாசபைப் பேராலும், சீர்திருத்தச் சங்கப்
பேராலும், தனித்தனி தலைவர்கள் பேராலும், சைமன் கமிஷனிடம் நேரில் சொல்லாமல் புத்தகம் அடித்துத் தங்கள் கோரிக்கைகளை வெளியிட்டார்கள்.
இக் கமிஷன் அறிக்கையை இங்கிலாந்தில் யோசிக்கும்போது இந்தியப் பிரதிநிதிகளும் இருக்க வேண்டுமென்றார்கள். இதற்குள் இந் நாட்டில் இத் தேசீயத் தலைவர்களின் சமூகத்தாரால் பாதிக்கப்பட்டு நைந்து ஏமாந்திருந்த சமூகங்களான, முஸ்லீம்களும், ஆதிதிராவிடர்களும் தங்கள் குறைகளை கமிஷனிடம் சொல்லியதால், இவைகளுக்கு பரிகாரம் கிடைத்துவிடுமோ என்று இவர்கள் பயந்து உப்புக்காச்ச புரப்பட்டார்கள்.
இங்கிலாந்து வட்டமேஜை மகாநாடானது உண்மை பிரதி நிதித்துவமுள்ளதல்ல வென்றார்கள். டாக்டர் அன்சாரி ஒருவர்தான். முஸ்லீம்களின் உயிர் நாடி; அவர் இல்லாத வட்ட மேஜை மகாநாடு வட்ட மேஜை மகாநாடல்ல; நாலு மூலை மகாநாடு என்றார்கள். அகில இந்திய முஸ்லீம்களின் முயற்சிக்கு எதிரிடையாக டாக்டர் அன்சாரியை பிடித்து தேசீய முஸ்லீம்கள் கட்சி என்று கத்தினார்கள்.
பின் பிரதிநிதித்துவமற்றதென்ற வட்ட மேஜைக்கு காந்தியும், சரோஜினியும், மாளவியாவும், ராதாபாயும், ரெங்கசாமி ஐயங்காரும் சென்றார்கள்.
அங்கு இவர்களுக்கு சகல செளகரியங்களும் செய்து கொடுத்தும் அன்சாரி வராததற்கு வருந்தினார்கள்.
முதன் மந்திரி மெக்டனால்டு “நீங்களெல்லோரும் ஒன்று கூடி
ஓர் திட்டம் தயாரியுங்கள்; அதைப்பற்றி ஆலோசிப்போம்” என்றதற்கு, அது இவர்களால் முடியவில்லை. முஸ்லீம்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் விசேஷ சலுகை காட்டப்பட்டதைக் கண்டித்தார்கள். இங்கு வந்து எல்லா. சட்டங்களையும் மீறு என்றார்கள். இறுதியில் புனா பட்டினியும், ஆதிதிராவிட ஏமாற்றமும் தான் மிஞ்சியது
இந்த நிலைமையில் இதுவரையில் இவர்கள் சொல்லி வந்ததுக்கும், செய்து வந்தவைகளுக்கும், அல்லது தீர்மானித்ததுக்கும் நடந்து கொண்டவைகளுக்கும் ஏதாவது கடுகளவு சம்பந்தமோ, நாணையமோ, யோக்கியதையோ இருக்கிறதா? என்பதை சிந்திக்கக் கோருகிறோம்.
அடுத்தாற்போல் இன்று அபேதவாதத்திட்டமும் மீண்டுமொரு சர்வகட்சி மகாநாடும் என்கிறார்களே! இதிலாவது ஏதாவது உண்மையோ உருப்படியான நன்மையுடைய செய்கையோ இருக்கிறதா? என்பதையும் சிந்தித்துப் பார்ப்பவர் களுக்கு இவைகளெல்லாம், இவர்கள் கண்மூடித்தனமாகச் செய்யவில்லை என்பதும், மனதில் கொண்ட சூழ்ச்சியின் பயனாகவே, அன்சாரியைப்
பிடித்து, அபேதவாதத்திட்டம் தயாரித்து, அகில இந்திய சர்வகட்சி கூட்டம் போடப் போவதாகக் கூறுகிறார்கள் என்பது விளங்காமல் போகாது
139 ய... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இன்று அன்சாரிக்கும் அபேதவாதத்துக்கும், அகில இந்திய கூட்டத்துக்கும் வந்த அவசியமென்ன? இதற்காகவா? இவ்வைந்து வருடமாக சட்ட மறுப்புகள், உப்புப் போர்கள், ஈச்சமரம் வெட்டுதல், பாங்கி மறியல், ஜவுளிக்கடைகள் மறியல் உண்ணாவிரதம் பல ஆயிரம்பேர் சிறைவாசம் என்பதை எல்லாம் யோஜித்தால், இக்கஷ்ட முழுவதையும்
ஓர் கூட்டத்தார் தங்கள் நன்மைக்கு உபயோகப்படுத்திக்கொள்வதிலேயே கருத்துடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிய வரும்.
பாமர மக்களை ஏமாற்ற எந்தெந்த வார்த்தைகளையும், எந்தெந்த பேர்களையும், எப்படி உபயோகிக்க வேண்டுமென்பது நமது தேசீய தியாகிகளுக்கு தெரியாததல்ல.
மெளலானா மகமதிலிக்கும், ஷெளகதலிக்கும் கொடுத்த சிரப்பைவிட,
காலம் சென்ற பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய் அவர்களுக்கு கொடுத்த சிறப்பைவிட, மதிப்பைவிட, விளம்பரத்தைவிட அதிகம் இன்று டாக்டர் அன்சாரிக்கு கொடுத்துவிடவில்லை.
லெக்ஷக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டத்தில் அலி சகோதரர்களது சட்டைப் பைக்குள் என்றவர்கள் முஸ்லீம்கள் நன்மையையும், முஸ்லீம்களை ஏமாற்றும் வடநாட்டு ஹிந்து தலைவர்களின் புரட்டையும் அலி சகோதரர்கள் எடுத்துரைத்ததும் அவர்கள் தேசத்துரோகிகள் என்று தூற்றப்பட்டதையும் யாராவது மறந்துவிட முடியுமா?
சட்டசபையில் முட்டுக்கட்டை போடப்போகிறோம் என்று ஓட் பெற்றுக்கொண்டு இந்திய சட்டசபையில் சர்க்காருடன் ஒத்துழைப்பது அயோக்கியத்தனமானதல்லவா? சர்க்காருடன் முட்டுக்கட்டைபோட எண்ணமில்லையென்றால் கண்ணியமாக சுயராஜ்யக் கட்சிக்காரர்கள் இந்திய சட்டசபையில் இனி ஒத்துழைக்கவே போகிறோமென்று ஏன். சொல்லக்கூடாது? என்று லாலாஜீ கேட்டதும் தேசீயப் புலிகள் கண்ணுக்கு லாலாஜீ தேசத் துரோகியாய் மாறிவிடவில்லையா? இது வடநாட்டுப் பார்ப்பனத் தலைவர்கள் செய்கையென்றால், நமது மாகாணத்தில் “ஜஸ்டிஸ்” கட்சிக்காரர்களை எதிர்த்து தோற்கடிக்கிறவரையில் தோழர்கள் டாக்டர் வரதராஜுலுவும் திரு.வி. கல்யாணசுந்திரமும், நமது தலைவர் ஈ.வெ.ராமசாமியும் இம் மாகாண எல்லாப் பார்ப்பனர்களாலும் கொண்டாடப்பட்டதும், வண்டிகளில் வைத்து இழுக்கப்பட்டதும் இவர்கள் படத்தை எங்கு பார்த்தாலும் திறந்து வைத்து தென்னாட்டுத்
திலகர், தமிழின் மணம், வைக்கம் வீரரென்றெல்லாம் புகழ்மாலை பாடிய நமது தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் இவர்கள் சட்டசபைத் தேர்தல் காலத்தில் இந்திய சட்ட சபைக்குத் தமிழ்நாட்டின் ஆறு ஸ்தானங்களுக்கும் ஆறு ஐயங்கார் பார்ப்பனர்களைத்தானா போடவேண்டுமென்று கேட்டதும் இம்மூவரும் தேசத் துரோகியாகவும், சர்க்கார் தாசர்களாகவும் மாறிவிட்டது யாருக்குத் தெரியாது?
குடி அரசு (புரட்சி) - 19847) ௨ 140
இப்படிப்பட்ட மலைகளெல்லாமே தூளாகிக் கருவேப்பிலையாகி இந்நாட்டு அகில இந்தியப் பார்ப்பனர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததெனில், இவர்களையே தங்கள் வேலை முடிந்ததும் பார்ப்பனர்கள். காலை வாரியெறிந்துவிட்டார்களென்றால் டாக்டர் அன்சாரி விளம்பரப் படுத்தப்படுவதில் ஆச்சர்யமொன்றுமில்லை.
இன்று இவர்களால் ஏமாற்றப்பட வேண்டுவது முஸ்லீம் சமூகமாகும். இதற்கு முன்னதாகவே விளம்பரமாகி இருக்கும் ஓர் முஸ்லீம் கனவானைப் பிடித்து தங்களின் திருவிளையாடல்களைத் தொடங்கி விட்டார்கள். அதுவும் சமூகத் தீர்ப்பைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், அரசியலறிக்கையை கண்டிப்பதில் மட்டும்தான் அன்சாரி
ஒத்து வருகிறார். இவர்கள் எதிர்காலத்தில் கூட்டப்போகும் அகில இந்திய சர்வ கட்சி மகாநாடு இருக்கிறதே அக்காலத்தில் இவர்கள் திட்டத்தை
நாம் பார்த்துக் கொள்ளலாம் அபேதவாதமா? இது மிக உற்சாகமுள்ள பதம் என்பதற்காகவே இதை பிடித்து போட்டார்கள். லாகூரில் கூடிய அ.இ.கா. தீர்மானித்த திட்டமே சுயராஜ்ய திட்டமென்றதுக்கு உள்பட்டே இன்று அபேதவாத சுயராஜ்ய கட்சி வேலைத்திட்டமும் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன். தலைவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். லாகூர் காங்கிரஸ் தீர்மானமான சுயராஜ்ய தீர்மானத்தைப்பற்றி அன்றே நாம் கண்டித்து கூறியிருக்கிறோம். அதிலுள்ள பாதுகாப்புகள் பயனற்ற ஏமாற்ற சொற்கள். என்று எழுதியிருக்கிறோம்
கோவில் நுழைய அநுமதி கிடைக்காதவர்கள் 7 கோடி இருக்கிறார்கள். ஹிந்துக்கள் 18 கோடி என்றால் இதில் 7 கோடி போக மிஞ்சிய 11 கோடியில் ஒரு கோடிக்கு உட்பட்ட பார்ப்பான் பிழைக்கவே அது இருக்கிறதே தவிர, பெரும்பகுதி மக்களுக்கு 18 கோடிபேருக்கு 1. கோடி பார்ப்பானுக்குள்ள சுதந்திரமில்லையே? மதப்பாதுகாப்பு என்றால்
1 கோடிக்கா 18 கோடிக்கா என்று கேட்டோம்
நிலப்பாதுகாப்பு என்றார்கள். இந்நாட்டில் உள்ள 35 கோடி மக்களில் 33 கோடி மக்களுக்கு நிலச் சொந்தம் என்றாலே இன்னதெனத் தெரியாதே!
35 கோடி மக்களுக்காக உள்ள நிலத்தை இரண்டு மூன்று கோடி மக்கள். ஆண்டு அநுபவிக்கிறார்களே? நிலப்பாதுகாப்பு என்றால் 33 கோடி மக்களுக்கா 2 கோடி நிலச் சொந்தக்காரர்களுக்கா என்றும் கேட்கிறோம்
இதைப்போன்றே ஏனையவைகளுமிருக்கிறது. சுயராஜ்யம்” என்றார்கள். “குடியேற்ற நாட்டு சுயராஜ்ய மென்றார்கள், “பரிபூரண சுயராஜ்யம்” என்றார்கள். இம்மூன்றும் பழசாகி விட்டதால், மக்கள் மனதை கவருகிறமாதிரியில் தோழர் இளைய நேரு “பொதுவுடமை திட்டமென்றார்.'' இது சட்ட திட்டத்திற்கு உட்பட்டதா உட்படாததா? W மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
என்று பேசிக்கொண்டார்கள். அதற்குள் சில பிரபுக்களிடம் பணம் பரித்து, பிரபுக்களாக வாழ்பவர்கள் பொதுவுடமை என்றால், காங்கிரஸ் இயக்கத்தில் பணக்காரர்கள் மில் சொந்தக்காரர்கள் இவர்கள் பிரிந்து விடுவார்கள் என்று கண்டிக்க புரப்பட்டதைக் கண்டதும், புதிதாக பணக்காரனையும் பாமர மக்களையும், ஒரே வார்த்தையில் ஏமாற்றுகிற மாதிரியில் அபேதவாதம்' என்ற பெயரைச் சேர்த்து இருக்கிறார்கள்.
ஆதலால் அன்சாரி பேரைப் பார்த்து முஸ்லிம்கள் ஏமாந்துவிடக் கூடாதென்று நாம் சொல்வதைப் போலவே, அபேதவாதம் என்ற பதத்தைப் பார்த்ததும் தமிழ் நாட்டு பொது ஜனங்களும், சிறப்பாக இந்நாட்டின் கஷமத்தில் முழு ஆசை கொண்ட தமிழ் நாட்டு காங்கிரஸ் தோழர்களும், ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம் இனி நமது மாகாண சுயராஜ்ய கக்ஷி பேரால் இப்பொழுதே பார்ப்பன கூலிகள், பார்ப்பன தலைவர்கள், சட்டசபைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டதால், அடுத்த தேர்தலில் இந்திய சட்டசபைக்கு இம்மாகாணப் பிரதிநிதியாக போக யார் யார் தகுதியுடையவர்கள் என்பதை முடிவு செய்வதற்குள் இன்றைய சுயராஜ்யக்கக்ஷி பிரசார கூலிகளின் வீண்கூச்சலில் ஏமாறாது உஷாராக இருக்க வேண்டுமென்று மட்டும் கேட்டுக்கொள்கிறோம்
புரட்சி - தலையங்கம் - 06.05.1934
குடி அரசு (புரட்சி 1934(1) மட ப
சுயராஜ்யக் கட்சி
அடுத்த தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் காங்கிரஸ்காரர்கள் தங்கள் தேர்தல் முழக்கத்தை ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தேர்தல் முழக்கம் அளவு கடந்தது என்று சொல்லத்தக்க நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அத்துடன் மட்டுமல்ல. இவர்கள் இந்நாட்டு மக்களை என்றென்றும் தங்கள் காலின் கீழ் மிதித்தே வாழ்வதற்கு எதைச் செய்ய வேண்டுமோ அதையும் செய்து வருகிறார்கள். இம் முறையானது இவர்கள் ஏழை மக்களை இதுவரை ஏமாற்றியதைவிட கொடுமையானது
சீர்திருத்தத்தில் வரும் பங்குவிகிதங்கள் இந்நாட்டில் இதுவரையில். இல்லாத முறையிலெல்லாம் வரவிருக்கிறது. இதை மக்கள் சாதாரணமாகக் கவனித்தால் தங்களின் தந்திர முறைகளை உணர்ந்து தங்களைத் தட்டிப்
பேசித் தாக்க ஆரம்பிப்பார்கள். இப்படி மக்கள் விழிக்காதிருக்க என்ன. செய்வதென்று யோசித்து அத் துறையில் இறங்கிவிட்டார்கள்
சீர்திருத்தத்தில் தங்களுக்கு வெறுப்பிருப்பது போலவும் வெறுப்புடைய இந்த சீர்திருத்தத்தால் மகத்தான பிளவு இந்நாட்டில் உண்டாகுமென்று தாங்கள் நம்புவதாகவும் இத்தகைய பயனற்றதையும், பிளவு உடையதையும், வெள்ளைக்காரர்கள் தங்கள் மீதும் தங்கள் நாட்டுமீதும் பலவந்தமாக திணிப்பதாகவும், இந்திய தேசபக்தர்கள் இவைகளுக்கு இம்மிகூட சம்பந்தமில்லாது இருந்ததால்தான் இன்று வெள்ளை அறிக்கையை காந்தியும் காங்கிரசும் எதிர்ப்பதாகவும் பாமர மக்கள் எண்ணும்படிசெய்ய வேண்டுமென்பதே இவர்கள் அவாவாகும். இப்படி மக்கள் மனதை வேறுவழியில் திருப்பிவிட்டால் இவர்கள் மாமூல் காரில். மகிழ்ச்சியுடன் சுற்றி வாழலாம் என்பதும் இவர்கள் எண்ணம். இப்படி இவர்கள் சொல்லி விடுவதில் உண்மை கொஞ்சமாவது இருக்கிறதா? என்பதை சிந்திக்கக் கோருகிறோம்
அறிக்கைப் பிரயோஜனமற்றது, எங்களுக்குப் பிடிக்காதது அத்துடன் வகுப்புவாதமும் நிறைந்திருக்கிறது என்பதுவே இவர்களின் முதல் பல்லவியாகும். இந் நாட்டின் சகல மக்களுக்கும் நன்மையுண்டாகக் கூடியமாதிரியில் ஓர் திட்டத்தை தயார் செய்ய ஒரு கூட்டம் இனி கூட்டப் போகிறோம் என்பது அனுபல்லவியாகும். இவைகள் உண்மையா? W ஏரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இந்நாட்டில் 1926-ம் வருடத்திலிருந்து 1931ம் வருடம் வரையில்
கூடிய, அகில இந்திய சம்மேளனங்களெத்தனை, அகில இந்திய காங்கிரஸ்களெத்தனை அகில இந்திய சர்வ கட்சி மகாநாடுகளெத்தனை, அகில இந்திய சமஷ்டியல் மகாநாடுகளெத்தனை, இன்னும் ஞாபகம் கூட இல்லாத எத்தனையோ “பெயரினால்” அகில இந்திய கூட்டங்களை இக்கூட்டத்தார் கூட்டியதையும், நேரு திட்டம் போன்ற வஞ்சனை நிறைந்த பல அரசியல் திட்டங்கள் தயார் செய்ததையும் இவைகள் அத்தனையும் எறிந்து தணலானதையும் பொது மக்கள் மறந்தா? விட்டார்கள்! ஐந்து வருடங்களில் சுமார் 20க்கு உள்பட்ட அகில இந்திய மகாநாடும், 10க்குள்பட்ட அகில இந்திய அரசியல் திட்டங்களும் தயார் செய்யப்பட்டு ஒன்றிலாவது ஒற்றுமையையோ, ஐக்கியத்தையோ காண: முடியாது தானே? லண்டனுக்குச் சென்றார்களென்பதையும், பொது மக்கள் மறந்து விட்டார்கள் என்று இவர்கள் நம்புகிறார்களா?
லண்டன் வட்டமேஜை மகாநாட்டில் 15 - தினங்கள் முதலில் திட்டம் ஒன்றுபட்டு தயாரிப்பதில் வீணாக்கப்பட்டதா? இல்லையா? என்று வினவுகிறோம். 1931-ம் வருடம் 18-ந் தேதியன்று பிரதம மந்திரி அவர்களால் இந்திய பிரதிநிதிகள் ஒன்றுபட்ட மனத்துடன் வருமாறும், ஒரு திட்டம் தயார் செய்யுமாறும் கேட்டுக்கொண்டாறா? இல்லையா? இது நடந்த பதினைந்து தினம் கழித்து ஒவ்வொரு பிரிவிலும் இருவர் வீதம், சிறுபான்மையோர் கமிட்டி நியமிக்கப்பட்டு ஒருவாரம் இராப்பகலாக சிந்திக்க வில்லையா? இக் கூட்டத்துக்குக்கூட காந்தி தலைமை தாங்க வில்லையா? இவ்வளவு முயற்சிகளுக்குப் பின் மீண்டுமொருமுறை முதன் மந்திரியார் இந்திய பிரதிநிதிகளை சமரச முடிவுக்கு வருமாறு வேண்டிக் கொள்ளவில்லையா!
என்றும் கேட்கிறோம். இத்தனைக்கும் பின்பு, காந்தி முஸ்லீம்களையும் கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொண்டு ஆதிதிராவிடர்களை சதி செய்ய முயலவில்லையா என்று கேட்கிறோம். இப்பிரமாண்ட முயற்சிகளுக்குப்
பின் அதாவது, இந்திய நாட்டு பிரதிநிதிகள் தங்களுக்குள்.
1. இன்னின்ன அதிகாரங்களும், உரிமைகளும் எங்களுக்கு இருக்க வேண்டும்
2. அதை இங்குள்ள பிரிவினர்களான நாங்கள் இன்ன விகிதப்படி அனுபவித்துக்கொள்ளுகிறோம் என்பது போன்ற ஓர் திட்டத்தை தயார் செய்ய முடியாமல் போகவில்லையா என்று கேட்கிறோம். இதன் பின்பு தானே! பிரிட்டீஷ் கனம் முதன் மந்திரி கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டார்.
அறிக்கை:
1. இந்தியாவுக்கு மாகாண முழுதும் சுய ஆட்சியும் மத்திய அரசாங்கத்தில் பொறுப்புள்ள ஆட்சியுமே கொடுக்கப்படும்.
குடி அரசு (புரட்சி)-7994/]) அஆ. 144
2. இராணுவ இலாக்காவும், வெளிநாட்டுச் சம்பந்த இலாக்காவும், கவர்னர்ஜெனரல் பொறுப்பில்தான் இருக்கும்
3. சில நிபந்தனைகளும், சில நீதி சம்பந்தமான பொருப்பை மத்திய அரசாங்கத்துக்குக் கொடுக்கப்படும்
4. இந்தியாவின் செல்வ நிலைக்குத் தீங்கு வராத நிலையில் பாதுகாக்கும் பொருப்பு கவர்னர் ஜெனரல் இடமே இருக்கும்.
5. குறைந்த வகுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் கவர்னர்ஜெனரல் இடமே இருக்கும்
6... தேசத்தின் அமைதியைப் பாதுகாக்கும் பொருப்பும் அவருடையதே.
7... உங்களால் இதுவரையில் சிறுபான்மை வகுப்புப் பிரச்சினையைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்ள முடியவில்லை
8. இனியாவது நீங்கள் முயன்று ஓர் முடிவுக்கு வாருங்கள்.
9. இல்லாவிட்டால் நானே முடிவுசெய்து விடுகிறேன்.
19. இந்தியாவிலுள்ள எல்லா வகுப்புகளுக்குள்ளும் சமரசம் ஏற்படாததே பொருப்பாட்சி ஏற்படுத்தத் தடையாக இருக்கிறது. இவைகளை ஒருமுறை ஞாபகப்படுத்திப் பாருங்கள். அன்று பிரிட்டிஷ் முதல் மந்திரியார் தான் தரப் போவதாகச் சொன்ன அதிகார உரிமை எல்லையைவிட இன்று ஏதாவது குறைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறதா, அல்லது அன்று மந்திரியார் சொன்ன அதிகார அளவு இருக்கிறதே அதைப் போதாதென்றும் அதிக மதிகாரம் இருக்க வேண்டுமென்றும் கேட்டவர்கள் யாராவது இன்று இருக்கிறார்களா? அதிகார அளவில், உரிமை அளவில் அன்று முதன் மந்திரி சொன்னதற்கு ஒத்துத் தாளம் போட்டவர்கள்தானே அத்தனை வ.மே.ம.நா. பிரதிநிதிகளும். இதில்:
காந்தி, மாளவியா, சரோஜினி, சாப்ரூ இவர்கள் மாட்டேன் என்றவர்களா? அன்று பார்ப்பவர்களுக்குப் பிரிட்டீஷ் மந்திரியார் கூறிய அதிகார எல்லை. இருக்கிறதே, உரிமை அளவு இருக்கிறதே இதில் எதிர்த்துப் பேசியவர்கள் எவறாவதுண்டா? எதிர்த்துத் தாங்கள் கூறுவதை மந்திரியும் மற்றவர்களும் ஒப்புக்கொள்ளச் செய்தவர்கள் தான் யாரேனும் உண்டா. இவைகளை சிறிது சிந்தித்தாலே சீர்திருத்த அறிக்கையை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்களின் யோக்கியதை நன்கு தெரியும்.
இவ்விதம் உரிமை பெருகுவதில் இதை விட அதிகம் ஒன்றுமில்லை என்று காந்தி உள்பட சகலரும் தலையை ஆட்டி விட்டு இங்கு வந்து திடுக்கிட்டேன் என்றால் இது நாணையமானதா? இதுதான் போகட்டும் மேலே சொன்ன அளவுக்கு கொடுக்கப்போகும் உரிமைகளை பங்கு போடுவது அதாவது இன்னின்ன சமூகத்தாருக்கு இவ்வளவு தான் என்று முடிவு செய்வது இருக்கிறதே! அதிலாகிலும் நாணையமுண்டா!
143 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இன்று கண்டிப்பதைப் பாருங்கள். பஞ்சாப்பிலும், வங்காளத்திலும், எல்லைப்புறத்திலும் முஸ்லீம்களுக்கு அதிக உரிமை கூடாது என்று சொன்னார்கள். இன்றும், சகல இந்து வடநாட்டு பார்ப்பனர்களும் இதைத்தான் சொல்லுகிறார்கள்.
அடுத்தாற்போல் வகுப்பு உரிமை வழங்கப்பட்டது இருக்கிறதே! அது கூடாது என்றார்கள்.
இப்பங்கு விகிதமானது வற்புறுத்திக் கொடுக்கப்பட்டதா? என்பதே இன்றைய முக்கிய கேள்வியாகும். வற்புருத்தியல்ல. நமது காந்தி மாளவியா:
- சரோஜனி உள்பட அத்தனை பிரதிநிதிகளும், எங்கள் நாட்டில், நாங்கள் யார்யார் எவ்வளவு உரிமையை அனுபவிக்க வேண்டும் என்பதைப்பற்றி
முடிவு செய்துகொள்ள முடியவில்லை. ஹே முதன் மந்திரியே! நீங்களே கூறும் முடிவுக்கு நாங்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு ஒத்துப் போகிறோம் என்று சொன்னதுடன் அவ்விதம் எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்து விட்டு வந்த பின்புதானே? முதன் மந்திரியார் பங்கு விகிதாச்சாரத்தை வெளியிட்டார் என்று கேட்கிறோம்
இவர்கள் ஒப்புக்கொள்வதுடன் மட்டுமல்ல உறுதி கூறுவதாகவும் கூட எழுதியிருக்கிறார்களா? இல்லையா? என்றும் கேட்கிறோம். சீக்கியர், ஹிந்து, முஸ்லீம் பிரச்சினையைத் தீர்க்கும்படி கொடுத்த கடிதத்தில்
காந்தி, கையெழுத்து போடவில்லை. ஆனால், மாளவியா, சரோஜினி, ரங்கசாமி ஐயங்கார், பிர்லா, இவர்களும் தர்பங்கா மகாராஜா நரேந்திரநாத், மூஞ்சே, ஜெயக்கர், இவர்களும் ஸர். ஸாப்ரூ, சாஸ்திரி, செத்தல் வாட்பாத்ரோ, சேத்னா, இவர்களும் கையொப்பமிட்டார்களா இல்லையா. என்று கேட்கிறோம். இவைகளை நேரில் காந்தி பார்த்தாரா இல்லையா என்றும் கேட்கிறோம்? மேலேகண்ட கையொப்ப நகல்களின் கருத்துப்படி
ஓர் கடிதம் தனியாகக் காந்தியால் முதன் மந்திரிக்கு கொடுக்கப்பட்டதா. இல்லையா என்று வினவுகிறோம்? அத்துடன் முதன் மந்திரிக்கு காந்தி எழுதிய கடிதத்தில் தான் மாளவியாஜி எழுதிய கடிதத்தில் கையெழுத்து இடாததால், பிரதம மந்திரியின் தீர்ப்பை காங்கிரஸ் எதிர்க்குமென்பது அர்த்தமல்ல என்றும் குறிப்பிட வில்லையா? இவ்விதம் அங்கு நடந்து கொண்டவர்கள், கையெழுத்திட்டவர்கள் இங்கு மீண்டும் ஒவ்வொருவராகக் கிளம்பி கண்டிக்கிறோம் என்பது நாணையமானதாக இருக்க முடியுமா? இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் நேற்று ராஞ்சியில் கூடிய கூட்டத்தில் வகுப்புப் பிரிவினை சம்பந்தமான பிரச்சினையைப்பற்றியொன்றும் சொல்லாமல் ஒதுக்கி வைத்துவிட்டு அரசியலறிக்கையை மட்டும் கண்டிக்கிறோம் என்றார்களே! அதிலும் ஓர் முஸ்லீம் தலைமையில், இதற்கு முன்பு வட்டமேஜை மகாநாட்டிலும் இவ்விதமோர் தீர்மானம் கொண்டு வந்தபோது இது ஏமாற்றும் தீர்மானம். பங்கு விகிதத்தைக் கூறி பின்பு எவ்வளவு வேண்டுமென்பதை முடிவு செய்ய வேண்டுமென்று
குடி அரசு (புரட்சி) - 19847) ௨ 146
தீர்மானிக்கப்படவில்லையா. ஆனால் ராஞ்சியிலோ அத்தகைய பிரதிநிதிகள் பிர்லா மாளிகையில் ஹிந்து மகாசபையார் கூட்டத்தில் தலைவரென்று பேரெடுக்க ஆசை உள்ள ஓர் முஸ்லீம் தலைமையில் நடந்த ஏமாற்றும் நாடகம்தானே இது? வட்டமேஜை மகாநாட்டுக்கு சென்ற ஓர் முஸ்லீம் கனவான் காந்தி மந்திரிக்கு எழுதிய கடிதத்தில், இன்ன நிபந்தனை மீதுதான் காங்கிரஸ் வகுப்புத் தீர்ப்பை ஒப்புக்கொள்ளுமென்று குறிப்பிடவில்லையே என்று கேட்கிறாரே இதற்குத் தான் தேசீய வாதிகள் என்ன சொல்லப்போகிறார்கள். நாளை பாட்னாவில் கூடவிருக்கும் அகில இந்தியக் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் வெள்ளை அறிக்கை கண்டனப் புரட்டு நடக்கும் அத்துடன் அன்சாரியின் அபேதவாதத் திட்டமும் தோழர் மசானியின் அபேதவாதத் திட்டமும் ஆலோசனைக்கு வருகிறது. இக் கூட்டத்திலும் இன்னும் எந்த மாதிரியான நாடகத்தை நடத்துகிறார்கள் என்று பார்ப்போம். நமது தலைவர் சிறையினின்று விடுபட்டு வந்துவிடுவார்.
தமிழ்நாட்டு ஐயர்களும் ஐயங்கார்களும் அசம்பளி தேர்தலுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் இன்று, நமது தலைவர் வெளிவருவது மகிழ்ச்சியூட்டக் கூடியதாகுமென்று நம்புகிறோம்.
தலைவர் தோழர் ஈ.வெ. இராமசாமியே! வருக! நின்வரவு நல்வரவாகுக! தமிழ்நாட்டுக்கு தேவையாகுக! என்று கூறி வரவேற்கிறோம்.
புரட்சி - தலையங்கம் - 13.05.1934
147 ட... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
முஸ்லீமும் பிராமணரும் ஒன்றா?
வீரசிங்கம்பேட்டைக்கலவர வழக்கை விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்காக ஸ்பெஷல் மாஜிஸ்ட்டிரேட்டும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒருவாரமாக விசாரணையும் நடந்துவருகிறது
இவ் வழக்கு நடந்துவருகையில் அப்பிரதேச நிலையைச் சரிப்படுத்தத் தண்டப் போலீசாரைச் சர்க்கார் நியமித்திருக்கிறார்கள். இத் தண்டப் போலீசின் செலவினத்தை இக்கிராமவாசிகளே ஒப்புக்கொள்ள வேண்டுமென்று சர்க்கார் அறிக்கை கூறுகிறது. இதைப்பற்றி நாமெதும் கூற விரும்பவில்லை. ஆனால் இத் தண்டப் போலீசுக்கு ஆகும் செலவீனம் இருக்கிறதே அதைப் பற்றி விபரம் கூறும்போது மேற்படி கிராமவாசிகள் கொடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு மேற்படி கிராமத்திலுள்ள “பிராமணர்கள் முஸ்லீம்கள்! இவர்கள் நீங்கலாக என்று கூறியிருப்பதுதான் நமக்குப் பெரும் சந்தேகத்தை உண்டாக்குகிறது
இன்றைக்கெல்லாம் மாதம் 450 ரூபாய்க்குள்தான் டிவிஷனல் மாஜிஸ்ட்டிரேட் தெண்டச் சிலவு மாதா மாதம் விதிக்கக்கூடும். 300 வீடுகள் அங்கே இருக்கிறதென்று வைத்துக்கொண்டால், வீட்டுக்கு மாதம் ஒன்றரை ரூபாய் வரக்கூடும். ஒரு வருடத்திற்குப் பதினெட்டு அல்லது இருபது ரூபாய்க்கு அதிகம் வருவதற்கில்லை. இது ஓர் பிரமாதமான சிலவென்றுகூட நாம் கருதவில்லை. தெண்ட தீர்வை கொடுக்க வேண்டியவர்களில் முஸ்லீம்களை விலக்கி இருப்பது கூட ஓர் விதத்தில் நியாயம். ஆனால் பார்ப்பனர் நீக்கம் நியாயமானதா? என்று சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்
எந்தவிதம் எண்ணி அல்லது கருதி இவ்விதிவிலக்கு சர்க்காரால். புகுத்தப்பட்டது என்பதை அறிய நாம் ஆவலுருவதைப் போலவே, நமது வாசகர்களும் ஆசைப்படக்கூடும்
சர்க்கார் உத்திரவில் 'கருதுவதால்' என்ற பதம் முஸ்லீம்களைப்பற்றி சொல்வது நியாயம். அவர்கள் மாரியம்மன் என்பதை ஓர் தெய்வமாக அவர்கள் கருதுவதில்லை. இக் கலக வழக்கு சகாப்தத்துக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சர்க்கார் கருதுவது முற்றிலும் நியாயம்.
ஆனால் ஐயரை, பிராமணர்களை விதி விலக்கின் மூலியம் விலக்க கருதுவதுதான் நமக்கு விளங்காததில் ஒன்றாக இருக்கிறது
குடி அரசு (புரட்சி) - 1934(1) —— 145
ஹிந்து” என்ற மதத்தினர்களின் சாமிகளில் ஒன்று மாரியம்மனாகும் ஹிந்து மதத்தில் முதன்மையானவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். பிராமணர்கள். இவர்கள் வீடு அக்கிராமத்தில் 5 அல்லது 6 வீடுகள் இருக்கக்கூடும். ஆறு அய்யர்மார் வீட்டுக்கு தெண்ட வரி விதிக்க வேண்டுமென்று சொல்ல அவ்வளவு குறுகிய மனப்போக்கு நமக்கில்லை.
சர்க்கார் அப்படிச் செய்தால் ஓர் பிராமணரல்லாத தேவரிடமோ, சேர்வையிடமோ, அவர்கள் சென்று, சூத்திரர்களால் பிராமணர்களுக்கு தெண்ட தீர்வை கூட கொடுக்க வேண்டியிருக்கிறது, இந்த பாவம் லேசில் போகாது என்றால், ஐயருக்கு தேவரிடம் இரண்டு மூன்று வருடத்துக்கு கொடுக்கக்கூடிய அளவு பணம் வசூலாகி விடும் என்பதும் நமக்கு தெரியாததல்ல! ஆனால் இச்சிறு உத்திரவினால் மற்றவர்கள் உரிமை, மற்றவர்களின் நியாயமான நிலைமை, இவைகள் சீர் குலைக்கப்பட்டு, சின்னா பின்னமாக இட மேற்பட்டு விடுமோ! என்றுதான் அஞ்சுகிறோம் பண மிச்சத்துடன் மட்டும் பார்ப்பனர்கள் பங்கு இதில் லாபமாய்
விடுகிறது என்று கூற முடியாது.
ஐயர்மாரை விலக்கியது தவறி வந்ததா? சரியானதா? அல்லது ஆங்கில பதப்பிரயோகம் அசந்தர்ப்பத்தால் வீழ்ந்து விட்டதா(!) என்பதை எல்லாம் சிந்திக்க வேண்டுமெனக்கூறி இக் குறிப்பை இத்துடன் நிறுத்துகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 13.05.1934
M ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
காங்கிரஸ் நிலை
அகில இந்திய தேசிய காங்கிரஸ் என்பது தோழர் காந்தியார். அவர்கள் கைப்பிள்ளையான பிறகு, தக்கதொரு விளம்பரமும், மதிப்பும் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்பட்ட நன்மையென்ன என்று பார்ப்போமானால் ஒன்றுமில்லை என்று சொல்லுவதோடு மாத்திரம் நின்று விடுவதற்கில்லாமல், இந்திய மனித
சமூகத்தின் பத்து வருஷத்திய முன்னேற்றத்தைத் தடுத்து விட்டதோடு, இந்தியா தேசத்தை இருபது வருஷ கால தூரம் பின்னால் போகும்படியும் திருப்பிவிட்ட தென்பது நமது அபிப்பிராயம். இது பொது விஷயங்களைப் பற்றியதாகும்
இந்திய அரசியல் விஷயத்தைப் பற்றி கவனிப்போமானால், காங்கிரசின் இன்றைய நிலையானது 1923-24ம் வருஷத்தின் நிலையே
யாகும். எப்படி என்றால் “ஒத்துழையாமை தற்காலீகமாக ஒத்திவைக்கப்பட்டது” என்ற தீர்மானம் அப்போது செய்தவுடன் அது எந்த நிலை அடைந்ததோ அதே நிலையை அதாவது “சட்ட மறுப்பை தற்காலீகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது” என்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றது. இதைத் தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், காங்கிரஸ் 10
வருஷத்திற்கு முன் எந்த இடத்திலிருந்து தவறிவிட்டதோ, அந்த இடத்திற்கே இப்பொழுது (பத்து வருஷகாலம் வழி தெரியாமல் திண்டாடி விட்டு, பழையபடி தான் முதலில் தவறு செய்த இடத்திற்கே) திரும்பி வந்து சேர்ந்திருக்கிறது என்று சொல்லலாம். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ் சரியான வழி கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிற தென்பது ஒரு பக்கமிருந்தாலும், தப்பான வழியில் போய்க் கொண்டிருப்பதை நிறுத்தி சரியான வழியைக் கண்டுபிடிப்பதற்காக தியங்கிக் கொண்டிருக்கிறதென்பதாகும்.
ஆனால் 1924ல் காங்கிரசிற்கு கிடைத்த தப்பான வழிகாட்டிகளையே தான் 1934லிலும் அடைந்துவிட்ட தென்று சொல்லாமல் இருக்க முடியவில்லை, 1924ல் காங்கிரசின் போக்கை கெடுத்து அது செய்த “தியாகத்தை” பயன்படுத்திக் கொண்டு பொது வாழ்க்கையை நாணையக் குறைவாக்கி இழிவு படுத்தின மக்களாகிய சுயராஜ்யக் கட்சியார் என்பவர்களே இப்பொழுதும் அதன் “தியாகத்தை” பயன்படுத்திக் கொண்டு அதை இழிவு படுத்தி பயன் பெற அதற்கு வழிகாட்டிகளாவதற்கு (காங்கிரசை) சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குடி அரசு (புரட்சி)- 1994) அஆ 100
நம்மைப் பொருத்த வரையில் நாம் சுயராஜ்யக் கட்சிக் கொள்கையைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும், கொள்கையினுடையவும் தலைவர்களுடையவும் நாணயங்களைப் பற்றியும் மூன் கொண்டுள்ள அபிப்பிராயங்களை மாற்றிக் கொள்ள யாதொரு காரணமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆதலால் பழைய அபிப்பிராயத்தையே கொண்டு இருக்கிறோம். சுயராஜ்யக் கட்சியின் கொள்கையும் நாணையமும் எவ்வளவோ மோசமாய் இருந்தும் அதற்கு 1924-ல் சிறிது பலம்
இருந்ததற்கு காரணம் தேசபந்து தாஸ் அதில் இருந்ததே யாகும் இப்பொழுது அப்படிப்பட்டவர்கள் யாரும் அதில் இல்லை. ஆதலால் அக்கட்சிக்கு சிறிதாவது யோக்கியதை ஏற்பட்டு விடுமோ என்று எவரும் பயப்பட வேண்டியதில்லை. சுயராஜ்யக் கட்சியில் தேச பந்து தாசின் ஸ்தானத்தை இப்போது தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் பூர்த்தி செய்திருப்பதால் அக்கட்சியைக் கண்டு யாரும் கவலைப்பட வேண்டியதுமில்லை. ஏனெனில் தோழர் சத்தியமூர்த்தி சுயராஜ்யக் கட்சிப் பிரமுகராய் இருப்பதாலேயே அக்கட்சியானது கெடுப்பாறின்றி கெடும் பேற்றை அடைந்து விடும் என்பது உறுதி
சுயராஜ்யக் கட்சியை வளர்த்து வாலிபம் செய்தவர்கள் தாஸ், நேரு போன்ற பெரியார்கள் என்று சொல்லப் பட்டாலும், அதைப் பெற்ற
தாய் தகப்பன்மார்கள் தென்னிந்திய அய்யர், அய்யங்கார் பார்ப்பனர்களாகிய தோழர்கள் சத்தியமூர்த்தி அய்யர், ரெங்கசாமி அய்யங்கார். போன்றவர்களேயாகும். ஆனால் அந்தப்படி அவர்களை செய்து தீரும்படி செய்தது ஜஸ்டிஸ் கட்சியாகிய பார்ப்பனரல்லாதார் கட்சியேயாகும், ஆதலால் இன்றைய தினமும் தென் இந்தியாவில் ஜஸ்டிஸ் கட்சி இருப்பதால் - அதுவும் அதிகாரத்தில் இருப்பதால் இன்றைய தினமும் சுயராஜ்யக் கட்சி ஏற்படுத்த வேண்டியது அய்யர், அய்யங்கார்களுக்கு அவசியமேயாகும்
சுயராஜ்யக் கட்சியின் தலைவர்களுக்கு விவரம் சொன்னது போலவே அதன் கொள்கைக்கும் ஒரு உதாரணம் சொல்ல வேண்டி இருக்கிறது. என்ன வென்றால் காங்கிரஸ் தீர்மானத்திற்கு விரோதமாய் அதன் கட்டளைகளுக்கு மாறாக சுயராஜ்யக் கட்சியார் சென்னை சட்ட சபையில் அங்கம் பெற்று முட்டுக்கட்டை போடுவதற்கு பதிலாக, மந்திரிகளை அழைத்து சட்டசபை நடைபெற உதவி செய்து வந்த குற்றத்தைப்பற்றி காங்கிரஸ்காரர்கள் கேள்வி கேட்ட காலத்தில் சுயராஜ்யக் கட்சியார் சொன்ன சமாதானம் என்ன வென்றால்:
“நாங்கள் அந்தப்படி செய்யாதிருந்தால் ஜஸ்டிஸ் கட்சியார் அந்த ஸ்தானத்தைப் பெற்று தேசத்தைக் கெடுத்து விடுவார்கள். ஆதலால் அப்படிச் செய்ய (மந்திரி சபையை அமைத்து உதவி செய்ய) நேரிட்டது”
என்று சொன்னார்கள். இதை யாரும் இதற்குள் மறந்திருக்க மாட்டார்கள். இன்றைய தினமும் ஜஸ்டிஸ் கட்சி உயிருடன் (அதிகாரத்தில்) 15— மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இருப்பதால் அதை ஒழிக்க காங்கிரஸ் கட்டளையையோ கொள்கைகளையோ சுயராஜ்யக் கட்சி மீறி தான் ஆகவேண்டி இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆதலால் ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் சுயராஜ்யக் கட்சி உண்டாக்கப்படுவதும் அதை காங்கிரசு அனுமதிப்பதுமான காரியங்கள் செய்யப் போகிறதே தவிர வேறில்லை.
இது ஒருபுறமிருக்க இதிலிருந்து வாசகர்கள் நாம் ஜஸ்டிஸ் கட்சியை முழுதும் ஆதரிப்பதாக கருதிவிட மாட்டார்கள் என்றே கருதுகிறோம். சுயராஜ்யக் கட்சி என்பது எப்படி அய்யர் அய்யங்கார்களைக் கொண்ட பார்ப்பனக் கட்சி என்றோமோ அது போலவே ஜஸ்டிஸ் கட்சியும், ஜமீன்தாரர்களையும், முதலாளிமார்களையும் கொண்ட செல்வவான்கள் கட்சி ஆய்விட்டது என்று தைரியமாய்ச் சொல்லுவோம். ஜாதி ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு உண்மையான மனிதன் செல்வ ஆதிக்கத்தையும், ஆணவத்தையும், இல்லாமல் செய்ய வேண்டுமென்று நினைக்காமல் இருக்கவேமாட்டான். மனித சமூகத்துக்கு ஜாதி ஆதிக்கத்தால், ஆணவத்தால் என்ன என்ன குறையும், கொடுமையும், மானக்கேடும் இருக்கிறதோ அவ்வளவும் சில சமயங்களில் அதற்கு மேலாகவும் செல்வ ஆதிக்கத்தாலும், செருக்காலும் மக்களுக்குக் குறையும், கொடுமையும், மானக்கேடும் இருந்தே வருகிறது. ஆதலால் இவையிரண்டும் ஒழிக்கப்பட இந்த இரண்டு கட்சிகளும் அழிக்கப்பட வேண்டியதுதான். இதை எந்த ஆதாரத்தின் மீது சொல்லுகிறோம் என்றால், அவைகளின் கொள்கைகளையும் அவைகளால் மக்களுக்கு ஏற்பட்ட பிரத்தியட்சப் பலன்களையும் அவற்றின் தலைவர்களின் யோக்கியதைகளையும், நாணயங்களையும் ஒருவாறு திருப்திகரமாய் அறிந்த பிறகே சொல்லுகின்றோமே ஒழிய வேறில்லை.
ஆனால் ஜஸ்டிஸ் கட்சியென்பது மனித சமூகத்தில் சகல
மக்களுக்கும் அரசியலைப் பொருத்தவரையிலாவது சம சுதந்திரமும், சம சந்தர்ப்பமும், சம பிரதிநிதித்துவமும் கிடைக்க முயற்சி செய்கிறோம் என்ற கொள்கையை ஒப்புக்கொண்டதால் சுயராஜ்யக் கட்சியை ஒழிக்கவேண்டிய அவசரத்தைப் போல் அவ்வளவு அவசரத்தில் அதை (ஜஸ்டிஸ் கட்சியை) ஒழிக்க முற்படாமல் இருந்ததோடு சில சமயங்களில் ஆதரவு அளித்து அதைப் பயன்படுத்திக்கொள்ளவும் முற்பட்டோமென்பதையும் ஒப்புக்கொள்கிறோம்
இன்று உலகில் இனி இரண்டு கட்சிகள்தான் (மூடிவு காணும் வரை) ஒன்றோடொன்று போர் புரிந்துகொண்டு இருக்க இடமுண்டு. அதாவது ஒன்று சோம்பேறி வாழ்க்கைப் பிரியர்களாகிய மேல் ஜாதிக்காரர்கள், செல்வவான்கள், படித்தவர்கள் என்கிறவர்களைக் கொண்டதாகும் மற்றொன்று பாடுபட்டு உழைப்பவர்களாகிய தொழிலாளிகள், ஏழைமக்கள்.
குடி அரசு (புரட்சி) - 1934(1) ௨ 152
ஆகியவர்களைக் கொண்டதாகும். இவற்றைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம் சைவ சமாஜம், அன்னதான சமாஜம் போன்றதான “மோட்ச”லோகம் போக வேண்டிய பூமி பாரக் கட்சிகளேயாகும்
காங்கிரசானது எவ்வளவுதான் தெய்வீகத் தன்மை, மதத் தன்மை ஆத்மார்த்தீகம் சத்தியம் அகிம்சை என்பன போன்ற வார்த்தைகளின் மறைவில் இதுவரை வாழ்ந்து வந்ததென்றாலும் இப்பொழுது அவ்வளவு காவல்களுமொழிந்து நிராயுதபாணியாய் நின்று கவலைப்பட வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது
இதைப் பற்றி அதாவது காங்கிரசின் யோக்கியதை குறைந்து போனதைப் பற்றி நாம் ஏதும் மகிழ்ச்சியடையவில்லையென்றாலும் தெய்வீகம், ஆத்மார்த்தீகம், மதம், சத்தியம், அகிம்சை என்பவைகளைத் திருகாணி பீரங்கி போன்று மனித சமூகத்திற்குக் கேட்டை விளைவிக்கும் வார்த்தைகளுக்கு யோக்கியதை போய் அவைகளை நிர்வாணமாய்ப் பார்க்கக் கூடிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டதைக் குறித்து மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை
இனி காங்கிரசோ வேறு ஏதாவது ஒரு ஸ்தாபனமோ எல்லா மனித சமூகத்தின் பேரால் இருந்து நாட்டில் வேலை செய்ய வேண்டுமானால், அது சமூகத்தில் உள்ள எல்லா மக்களையும் ஒன்று போல் காண்பதாயும் எல்லா மக்களுக்கும் ஒன்று போல் போக போக்கியம் அளிப்பதாயும் இருக்கத்தக்க கொள்கையை லட்சியமாய்க் கொண்டதாய் இருந்தால்தான். வேலை செய்ய அருகதை உடையதாகும். அப்படிக்கில்லாமல் இருப்பது பயனற்றதும் இருக்க வேண்டிய அவசியமில்லாததுவுமேயாகும் காங்கிரசில் இப்படிப்பட்ட யோக்கியதையாவது இந்த வாசனையாவது இருக்கிறதா என்று பார்ப்பதற்குக் காங்கிரசுக்குக் குடும்பத்துடன் ஈடுபட்டு சகல வித்தியாசங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துக் காங்கிரஸ்காரர்களால் சிறிதும் சந்தேகப்பட இடமில்லாமல் இருந்து வந்தவரும் காங்கிரஸ் காரியதரிசியுமான தோழர் ஜவஹர்லால் அவர்கள் அபிப்பிராயம் காங்கிரஸ்காரர்களால் ஆட்சேபிக்க முடியாததாகும் ஆகவே அப்படிப்பட்டவர் காங்கிரசைப் பற்றி சொன்னதென்னவென்றால் “காங்கிரசானது இதுவரை செல்வவான்களுக்காகவே உழைத்து வந்தது ஏழைகளுக்காக உழைக்கவே இல்லை. காங்கிரசினால் ஏழைகளுக்கு யாதொரு பயனுமேற்படவில்லை'' என்று சொல்லியிருக்கிறார்.
தோழர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் இதுபோலவே ஏன் இதைவிட ஒரு அடி அதிகமாகவே முன்னால் வந்து ''காங்கிரசானது தொழிலாளிகளையும் ஏழை விவசாயிகளையும் வஞ்சித்துப் பொதுஜனங்களை ஏமாற்றி வந்திருக்கிறது. அதிலுள்ள தலைவர்கள் தங்கள் நன்மையையும் கெளரவத்தையும் பிரதானமாய்க் கருதினார்களேயொழியப் பொதுஜன நன்மையை லட்சியம் செய்யவில்லை” யென்று பேசியிருக்கிறார்.
[3 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மற்றபடி, மற்ற பொது ஜனங்களில் பல அறிவாளிகளின் அபிப்பிராயத்தைப் பற்றி நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட நிலையிலுள்ள காங்கிரசானது இப்போது “பைத்தியம் தெளிந்து போய் விட்டது. உலக்கை எடுத்துக்கொண்டு வா, கோமணம் கட்டிக் கொள்ளலாம்” என்று சொல்வது போல் காங்கிரஸ் மேன்மையடைந்துவிட்டது - அதாவது “சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்துவிட்டேன், சுயராஜ்யக் கட்சியை சட்டசபைக்கு அனுப்புகிறேன்” என்று சொல்லுகிறது. இந்த நிலையிலுள்ள காங்கிரசுடன் மனித சமூக நன்மையைக் கருதுகின்றவர்கள் எப்படி ஒத்துழைக்க முடியும் என்பது ஒவ்வொருவரும் யோசிக்கத் தகுந்ததாகும்.
சமீபத்தில் பாட்னாவில் கூடிய காங்கிரஸ்காரர்கள் கூட்டத்தில் சமதர்மக் கொள்கையை சுயராஜ்யக் கட்சிக்காரர் ஒப்புக் கொள்ள முடியாதென்று தோழர் சத்தியமூர்த்தி அய்யர் சொன்னதாகத் தெரிகிறது அவர் வார்த்தைக்கு மதிப்பேது என்று சொல்லப்பட்டதும் தோழர் காந்தியாரும் சமதர்மக் கொள்கையை ஆட்சேபிக்கப் போகிறார் என்ற வதந்தி பலமாய் இருக்கிறதென்று சுதேசமித்திரன் பத்திரிகையில் சூசனை சாட்டப்படுகிறது. எனவே சமதர்மக் கொள்கையைக் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லையானால் மேல் ஜாதிக்காரர்களையும் செல்வவான்களையும் மதக் குருக்கள்களையும் மனுதர்ம சாஸ்திரங்களையும் காப்பாற்ற இனியும் எல்லோரும் சேர்ந்து காங்கிரசில் உழைக்க வேண்டுமா என்று கேட்கிறோம். இதற்காக இனியும் ஒரு ஐம்பது வருஷத்தைப் பாழாக்க வேண்டுமா என்றும் கேட்கிறோம்.
உலகமெங்கும் நமது காங்கிரஸ் போன்ற பணக்கார ஸ்தாபனங்கள் பாழ்பட்டு ஏழைகள் விடுதலை ஸ்தாபனங்கள் பலப்பட்டு வருகிற காலத்தில்
நம் நாட்டில் மாத்திரம் அவற்றிற்கு முட்டுக் கட்டை போடுவது போல் காங்கிரசின் பேரால் சமதர்மத்தை வழி மறிப்பதானது வஞ்சகமும் துரோகமுமான காரியமாகும். இந்த விஷயங்களைப் பாமர மக்கள் அறிய முடியாமலிருக்கும்படி அவர்களை ஏமாற்ற “சட்டசபைக்குப் போய் வெள்ளைக்காகித அறிக்கையை துவம்சம்படுத்தி விடுகிறோம்” என்று
வீரம் பேசி சட்டசபைப் பக்கம் மக்கள் கவனத்தைத் திருப்பப் படுகிறது. இதுவும் வழக்கம் போல் காங்கிரசினுடைய ஒரு சரியான தந்திரமே ஆனாலும் இதனாலெல்லாம் பாமர மக்கள் என்றைக்குமே ஏமாந்திருப்பார்களென்று நினைத்திருப்பதானது நினைக்கிறவர்களுக்கே ஏமாற்றத்தைக் கொடுக்குமே யொழிய வேறில்லை யென்பதோடு இந்தக் கருமத்தின் பலனை அடைந்தே தீரவேண்டி வருமென்பதை எச்சரிக்கை செய்கிறோம்
ஜஸ்டிஸ் கக்ஷியும் மற்றும் சில ஜாதி வகுப்பு சங்கங்களும் எலக்ஷன் வரும்போது தங்கள் மகாநாடுகளைக் கூட்டி தாங்கள் சட்ட சபைக்குப் போகவும், எல்லோரும் தங்களுக்கே ஓட்டு செய்யும்
குடி அரசு (புரட்சி)-7994/]) அஆ 184
தீர்மானங்கள் செய்து கொள்ளுவது போல், சுயராஜ்ய கக்ஷியும் தேர்தல்கள் வரும்போது மகாநாடுகள் கூட்டி, தாங்களே சட்டசபைக்குப் போக வேண்டும் என்றும், தங்களுக்கே ஓட்டு செய்ய வேண்டும் என்றும் தீர்மானங்கள் செய்வது வழக்கமாகிவிட்டது. இப்படிப்பட்ட தீர்மானங்களைக் கொண்டு எலக்ஷனில் வேலை செய்யும் வாலிபவீரர்கள் அநேகர் நாக்கில் ஜலம் சொட்ட வாயைத் திறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதனால் எல்லாம் மனித சமூகத்துக்கு தீமையே ஒழிய நன்மையேதும் உண்டாகப் போவதில்லை என்பது உறுதி. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாட்னா மகாநாட்டின் மற்ற முடிவுகளை தெரிந்த பின்பு, மற்ற விவரங்களைப் பற்றி நாம் இப்போது என்ன செய்ய வேண்டியது என்பதைப் பற்றியும் பின்னால் எழுதுவோம்
புரட்சி - தலையங்கம் - 20.05.1984
15— பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தோழர் ஈ.வெ.ரா. விடுதலை
தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் 15ந் தேதி ராஜமகேந்திரம் ஜெயிலிலிருந்து விடுதலையாகி, 16ந் தேதி சென்னை வந்து அங்கிருந்து அன்றே புறப்பட்டு 17ந் தேதி ஈரோடு வந்து சேர்ந்தார். அரக்கோணம்,
காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் ஆகிய ஸ்டேஷன்களுக்கு ஆங்காங்குள்ள சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள் வந்து
சந்தித்துப் பேசிப் போனார்கள்.
ராஜமகேந்திரம் ஜெயிலில் வெயில் கொடுமையால் சிறிது கருத்தும் இளைத்தும் போயிருக்கிறார். ஆனால் உடல் செளக்கியமாய் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெயில் கொடுமைக்காக எங்காவது குளிர்ச்சியான இடத்துக்குப் போகக் கருதி இருக்கிறார்.
ஜெயிலில் தோழர் ஈ.வெ.ரா.வுக்கு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் முயற்சியில் &-கிலாஸ் செளகரியம் கிடைக்கப்பட்டது
என்றாலும், அந்த ஜெயிலில் கிளாஸ் பிரிவுகளுக்குப் போதிய செளகரியம் இல்லாததால் -கிலாஸ் கைதியாகவே இருந்து வருகிறேன் என்று
ஜெயில் அதிகாரிகளுக்குச் சொல்லிவிட்டு பி.கிளாஸ் கைதியாகவே இருந்து வந்தார். அங்கு சாப்பாடும் ஒரு பத்திரிகையும் தவிர மற்றபடி
C கிளாஸ் கைதி போலவே நடத்தப்பட்டார். சாப்பாடுகூட ரொட்டி,
பால் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. C கிளாஸ் கைதிகளுடனேதான். வைக்கப்பட்டிருந்தார். ஒரு பிளாக்கில் உள்ள 32 அறைகளில் 28 கருப்புக்குல்லாய் கைதிகளுடன் 29 வது கைதியாகவே இருந்து வந்தார். வெராண்டா இல்லாத 7:10 ரூமில் காலை முதல் மாலை வரையில்
வெயிலில் இருக்கும்படியான நிலையில் இருக்க நேர்ந்தது என்பதோடு. அறையை விட்டு வெளியில் வந்தாலும் வெய்யலில் இருக்க வேண்டியதைத் தவிர வேறு மார்க்கமில்லாத ஜெயிலாய் இருந்தது என்பதோடு பிளாக்கை விட்டு வெளியில் போவதற்கில்லாமலும் வேறு யாருடனும் பேசுவதற்கு இல்லாமலும் நிர்ப்பந்தத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தப்படி வைக்க மேல் அதிகாரிகளிடம் இருந்து உத்திரவு வந்ததாகத்
தெரிகிறது. மற்றபடி வேறுவித அசெளகரியமில்லை என்பதாகத்
குடி அரசு (புரட்சி)- 1994) — 196
தெரிகிறது. நிற்க ஈரோடு வந்த பிறகு கோவை, திருச்சி, தஞ்சை, நாகை,
சேலம், திருச்செங்கோடு முதலிய இடங்களிலிருந்து சுமார் 50 தோழர்கள். வரை வந்து இருக்கிறார்கள்.
“புரட்சி? ஆபீஸில் “பகுத்தறிவு?
நிற்க, ஆபிஸ் நிர்வாகம் மூன் போலவே நடைபெற்று வருகிறது பகுத்தறிவு தினப்பதிவு நடைபெற்று வருவது அவருக்கு இஷ்டமில்லை அதைப்பற்றி நண்பர்களுக்குள் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது
புரட்சி - துணைத் தலையங்கம் - 20.05.1934
157 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தோழர் ஈ.வெ.ரா. ஈரோடு விஜயம்
தோழர்களே!
நான் சிறைவாசம் சென்றுவிட்டு வந்ததைப் பாராட்டுவதற்காக என்று இக்கூட்டம் கூட்டப்பட்டு என்னைப்பற்றி பலர் பலவிதமாகப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். இது ஒருவித பழக்க வழக்கத்தை அனுசரித்திருப்பதாக மாத்திரம் நான் கருதுகிறேனே ஒழிய இதில் ஏதாவது நல்ல பொருள் இருப்பதாக நான் கருதவில்லை. முதலாவதாக இப்பொழுது நான் மற்றவர்களைப் போல் சிறை செல்ல வேண்டுமென்று கருதி நானாக சிரைக்குப் போகவில்லை. ஆனால் சிறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டால், அதற்காக பயந்து பின் வாங்காமல் அதையும் ஒரு நன்மையாகவே பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைக் காட்டுவதற்காகவே நான் சிறை செல்ல நேர்ந்தது
அதாவது குடி அரசு பத்திரிகையில் என்னால் எழுதப்பட்ட ஒரு சாதாரணமானதும், சப்பையானதுமான வியாசத்திற்காகத்தான் நான். சிறைக்குப் போக நேரிட்டதே தவிர, மற்றப்படி செல்லத்தக்க ஒரு சரியான காரியம் செய்துவிட்டு சிறைக்குப் போகவில்லை. சர்க்கார் இந்தக் “குடி அரசுப் பத்திரிகையின் பழைய இதழ்களைப் புரட்டிப் பார்த்தால் என்னை வருடக்கணக்காய் தண்டிக்கக்கூடியதும், நாடு கடத்தக்கூடியதுமான வியாசங்கள் நூற்றுக்கணக்காக தென்படலாம். ஆனால் அவர்கள் அந்தக் காலத்திலெல்லாம் கவனித்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள். ஏன் கவனிக்கவில்லை என்பதை இப்போது நான் கவனித்துப் பார்த்தால் காங்கிரசிற்கு பாமர ஜனங்களிடத்தில் இருந்த செல்வாக்கின் பயனாய், நமது வியாசங்களை பொது ஜனங்கள் லட்சியம் செய்யமாட்டார்கள் என்கின்ற தைரியத்தால் சர்க்கார் அப்பொழுது சும்மா இருந்தார்கள்.
என்று தோன்றுகிறது.
ஆனால் இப்பொழுது இப்படிப்பட்ட சிறிய வியாசங்களையும் கண்டு, இவ்வளவு வல்லமை பொருந்திய சர்க்கார் பயப்படும்படியான நிலைமை ஏற்பட்டுவிட்ட தென்பது நன்றாய்த் தெரிகிறது
இதிலிருந்து நாம் என்ன நினைக்க வேண்டி இருக்கிறதென்றால் நமது அபிப்பிராயத்தை மக்கள் மதிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றும்,
குடி அரசு (புரட்சி)- 194) — 19
சுயமரியாதை கொள்கையை ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்றும், சர்க்கார் இப்போது உணர்வதாகத்தெரிகிறது. அன்றியும் மற்றும் பல புதிய புதிய தீவிரக் கொள்கைகளையும் ஜனங்கள் வரவேற்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இதுவரை நமது நாட்டில் இருந்து வந்த அபிப்ராயங்கள் எல்லாம் “வெள்ளைக்காரருக்கு இந்நாட்டில் என்ன வேலை, அவர்களுக்கு ஏன் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம், கருப்பு மனிதனுக்கு ஏன்: நூற்றுக்கணக்கான பத்துக் கணக்கான ரூபாய்கள் சம்பளம்? அவர்களுக்கு ஏன் பெரிய அதிகாரம், நமக்கு ஏன் சின்ன அதிகாரம் என்பது போன்ற பிரச்சினைகளே தேசீயம் என்னும் பேரால் முக்கியமாய் இருந்து வந்தது இதன் பயனாய் அரசாங்கத்தார்களும் இங்குள்ள பணக்காரர் படித்தவர் மேல் ஜாதிக்காரர் ஆகிய ஒரு சிறு கூட்டத்தாருக்கு மாத்திரம் ஏதாவது வாய்ப்பூசி மக்களின் “தேசீய அபிலாஷைகளை” திருப்தி செய்து வந்து கொண்டும் இருந்ததால் பாமர ஜனங்களின் எண்ணம், உணர்ச்சி, ஊக்கம் எல்லாம் அதிலேயே ஈடுபட்டுக் கிடந்தது. ஆனால் இப்பொழுதோ நாட்டில் வரவர அந்த எண்ணங்கள் மறையத் தொடங்கிவிட்டன. அவை வேறு விதமாக பரிணமிக்க ஆரம்பித்து விட்டன.
எப்படிஎன்றால் “வெள்ளையனுக்கு ஏன் 1000, 5000 ரூபாய் சம்பளங்கள், கருப்பனுக்கு 100, 50, 10, 5 ரூபாய் வீதம் சம்பளம் என்பது போய், மனித சமூகத்தில் யாராயிருந்தாலும் ஒருவனுக்கு ஏன்: 5000, 10000 ரூபாய் சம்பளம், மற்றவறுக்கு ஏன் 5 ரூபாய் 10 ரூபாய் சம்பளம் என்கின்ற உணர்ச்சி தோன்றி எல்லா மக்களும் ஜாதி, மதம், தேசம் என்கின்ற பேதமும் பிரிவுமில்லாமல் சகலரும் சமமாய் பாடுபட வேண்டும், பயனை சமமாய் அடைய வேண்டும் என்கின்றதான ஒரு சமதர்ம உணர்ச்சியில் திரும்பி விட்டது. இந்த நிலைமையானது ஆட்சிக்காரருக்கு மாத்திரமோ, அல்லது அரசாங்க உத்தியோகஸ்தருக்கு மாத்திரமோ விரோதமானதென்றோ, அடக்கி விடவேண்டிய தென்றோ தோன்றாமல் நம் நாட்டில் உள்ள எல்லா பணக்காரர்களுக்கும், எல்லா மேல்ஜாதிக்காரர்களுக்கும் (அதாவது பாடுபடாமல் வயிறு வளர்க்கவும், போகபோக்கியம் அனுபவிக்கவும் கருதும் மக்களுக்கும்) படித்தவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் தோன்றிவிட்டதுடன் இவர்களால் வாழ்ந்து வந்த மதப்புரோகிதர்கள் என்பவர்களுக்கும் தோன்றிவிட்டது. ஆதலால் இந்தக் கூட்டத்தார்கள் எல்லோருமே அக்கொள்கைக்கு எதிரிகளாய் இருப்பதில் நான் அதிசயப்படவில்லை என்பதோடு, இதற்காக நான். ஜெயிலுக்குப்போக நேரிட்டதிலும் அதிசயமில்லை
நிற்க இப்பொழுதுள்ள நிலையில் ஜெயிலில் அதிக கஷ்டமில்லை முன்பு சிறிது கஷ்டம் இருந்தது உண்மைதான். 1921ம் வருஷத்தில் நானும், இங்குள்ள தோழர்கள் ஈஸ்வரன், ஜெயா முதலியவர்கள் கைதியாக்கப்பட்டபோது, கையில் குட்டைபோடுவதும், துன்பப்படுத்துவதுமான
159 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தொல்லைகள் மிகுந்திருந்தன. அந்தக்காலத்தில் பட்ட கஷ்டங்கள் இப்பொழுதொன்றுமில்லை. அப்பொழுது இங்குள்ள தோழர் ஜெயாவை ஜெயிலில் இருந்து வண்டியில் போட்டு வெளியில் அழைத்து வரப்பட்டது உயிர் பிழைப்பாரோ என்றுகூட சந்தேகிக்கப்பட்டது. இப்பொழுது ஜெயிலில் கஷ்டமில்லை என்பதோடு, என் போன்றவர்கள் அங்கு வெகு மரியாதையாக சாமி, பாபுஜி என்று உள்ளிருப்பவர்களாலும் அழைக்கப்படுவதோடு கூட, ஜெயில் அதிகாரிகள் பயந்து நடக்கும்படியான நிலைமையிலேயும் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில், நான் பி. வகுப்பில் இருந்தாலும், எனக்கு வெண்ணையும் பாலும், பழமும், சில சமயங்களில் மாமிசமும் கிடைத்துவந்தது. அதுபோல் இங்கு எனக்கு வீட்டில் கூட திரேக நிலைமைக்கு ஏற்ற சாப்பாடு கிடைக்க மாட்டாது. வெய்யிலின். கொடுமைதான் தாங்க முடியவில்லை. ராஜமகேந்திர ஜெயில் எவ்வளவு கேவலமான நிர்வாகமுடையதாய் இருந்தாலும், கஷ்டமான ஜெயில் அல்ல. Habitual Prisoners என்னும் கருப்புக்குல்லாய்க்கார திருடர்கள். ஜெயிலாய் இருந்தபோதிலும், கைதிகள் எவ்வித கேள்வி கேட்பாடு இல்லாமல், இஷ்டப்படி உள்ளே திரியலாம். கைதிகளுக்கு வேலையும் கிடையாது. அங்கும் கஞ்சா குடியும், பீடி, சிகரெட்டு குடிப்பதும், வெத்திலைபாக்கு புகையிலை போட்டு ஆனந்தப்படுவதும் சர்வ சாதாரணம். ஜெயிலுக்குள்ளேயே கைதிகள் கஞ்சா செடி வளர்க்கிறார்கள். அந்த செடியில் ஏதாவது சில பூக்களை சொருகிவைத்து பூச்செடி மாதிரி செய்து விடுகிறார்கள். அதை ஜெயில் சூப்ரண்டு கவனிப்பதில்லை. மற்ற சில்லரை அதிகாரிகள் வழக்கம்போல் அதனால் லாபமடைகின்றார்கள்.
நான் பல ஜெயிலில் பார்த்திருந்தாலும், ராஜமகேந்திரபுரம் ஜெயில்போல் பொருப்பற்றதும், அதிக குற்றங்கள் நடப்பதுமான ஜெயில் பார்த்ததில்லை. சூப்ரண்டு நல்லவர் என்று சொல்லலாம். ஆனால் நிர்வாகத் திறமை போறாது. சிப்பந்திகளுக்கு பணமே பிரதானம். அவர்கள் அடிக்கடி கைதிகளால் அவமானப்படுவதை லக்ஷியம் செய்வதில்லை. அங்குள்ள டாக்டர்களும் அப்படியே. இவற்றைப் பற்றி மற்றொரு சமயம் பேசுகிறேன்.
எனக்கு கோவை சிறையிலிருக்கும்போது காலில் வீக்கம் இருந்தது. அந்த வீக்கம் ராஜமகேந்திர ஜெயிலுக்குபோன பிறகு தானாக வடிந்துபோய்விட்டது
நிற்க சட்ட மறுப்பு இயக்கத்தைப்பற்றி சிலர் பேசினார்கள். அவ்வியக்கம் சர்க்கார் அடக்குமுறையினாலேயே நின்றுவிடவில்லை அந்தக் கொள்கையானது மக்களால் அலக்ஷியப்படுத்தப்பட்டு வெறுத்துத் தள்ளப்பட்டு விட்டதால் அது நிறுத்தப்படவேண்டியதாயிற்று. ஒன்றுக்கு முதவாத கொள்கையை கட்டிக்கொண்டு மாரடிப்பது பைத்தியக்காரத்தனமென்று பொது மக்கள் உணர்ந்துவிட்டார்கள். சட்ட மறுப்பு கட்சியே பொஸ்லென்று
குடி அரசு (புரட்சி)-1994/]) அ ல
போய்விடுமென்றும், அது மக்களுக்கு கஷ்டத்தையே விளைவிக்கும் என்றும் மக்களுக்கு 10 வருஷ காலமாக எச்சரிக்கை செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். அதன் பயனாய் தேச பக்தர்கள், தேசீய வாதிகள் என்பவர்களால் நான் பலமாய்த் தாக்கப்பட்டேன் என்றாலும், முடிவில் சட்ட மறுப்பு பயனற்றதாகவும் பைத்தியக்காரத்தனமாகவுமே முடிந்தது
நான் ஜெயிலுக்குப்போய் கொஞ்ச வருஷங்களாகி விட்டது இதற்குமுன் ராஜத்துவேஷ கேசில் அரஸ்ட் செய்யப்பட்டு இருந்தாலும், சர்க்காரே அவைகளை வாபீஸ் வாங்கிக்கொண்டார்கள். பிறகு சமீபத்தில்
திருச்சியில் கத்தோலிக்க கிருஸ்தவ திருமணத்தின் போது போலீசாரால் அரஸ்ட் செய்யப்பட்டும் முடிவில் வழக்கே தொடராமல் போய்விட்டது
மற்றபடி நான் இப்போது வெளியில் வந்ததில் இந்த இரண்டு நாளிலேயே, ஏன் வந்தோம் என்றே தோன்றுகிறது. இப்பொழுது என்ன. செய்வதென்றே புரியவில்லை. மற்றும் சிவில் விவகாரத்துக்காக அரஸ்ட் செய்யப்பட்டேன். ஆனால் காயலா நிமித்தம் இரண்டு மாதத்திற்குள்ளாகவே விடுதலை செய்யப்பட்டேன் என்றாலும், இவைகள் எல்லாம் “தேசபக்தன்” என்ற பெயர் அடைய முடியவில்லை. ஆனால் இப்பொழுது சர்க்கார் அந்தக் குறையை நிவர்த்தி செய்து விட்டார்கள். இதன் பயனால் அறியாமை மிகுந்த பாமர ஜனங்களால் நான் பாராட்டப்படக்கூடும். மற்றபடி அறிவாளிகள்
நான் ஜெயில் சென்றதைப் பாராட்ட யாதொரு விஷயமுமில்லை. இதில்
எந்த வித்தியாசமும் அடங்கியிருக்கிறதாக சொல்வதற்கும் இடமில்லை. எப்படி இருந்தபோதிலும் அரசியலைப் பற்றி நான் கொண்ட அபிப்பிராயம் இன்று இந்தியா முழுதும் பரவி விட்டது. அது மாத்திரமல்ல. உலகமெங்கும் சட்டமிருக்கிறது. நமது இந்தியாவை எடுத்துக்கொண்டால் நமது அபிப்பிராயங்களைக் கொண்ட கக்ஷிகள் மத்திய மாகாணத்திலும், ஐக்கிய மாகாணத்திலும், பம்பாயிலும், பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் இருந்து வருகிறது. நாம் “முன்னதாக தெரிவித்தது பிசகு' என்று மட்டும் சொல்லலாம். அந்த 'தப்பு' நம்மீது இருந்தாலும் இப்பொழுதுள்ள வாலிப இந்தியா அங்கீகரிக்க முன் வந்ததைப் பார்த்து நாம் பூரிப்படையாமல் இருக்க முடியவில்லை. நமது மாகாணத்தைப் பொருத்தவரை காங்கிரஸ்காரர்களும் நாமும் எப்படியாவது ஒன்று சேர்ந்து வேலை செய்ய வேண்டுமென்று யோசனை கூறப்பட்டது காங்கிரஸ் அதற்குத் தன்னை தகுதி உடையதாக்கிக்கொண்டால் நான். தயாராயிருக்கிறேன்.
நிற்க, சுயராஜ்யக் கக்ஷியின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளவேண்டுமானால், நமது பழைய குடி அரசைப் புரட்டிப் பார்த்தால் தெரியவரும். சுயராஜ்யக் கக்ஷியின் யோக்கியதையை அறிய ஆசையுள்ளவர்கள் ஒரே ஒரு விஷயத்தைக் கொண்டு தெரிந்து
1 ய... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
கொள்ளலாம். அதாவது அதன் தலைவர்கள் பிரமுகர்கள் ஆகியவர்கள்
யார் என்று பார்த்தாலே போதும்! தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களே (1) அதன் முக்கிய தலைவராய் விளங்குகிறார். மற்றபடி நான் அதைப்பற்றி அதிகம் சொல்லவேண்டுவதில்லை. (தொடரும்)
குறிப்பு: 20.10.1933 குடி அரசில் “ஏன் இன்றைய ஆட்சி ஒழிய வேண்டும்' என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியதற்காக 6 மாத சிறை தண்டனைக்குப் பின் 15.05.1934 இல் விடுதலை பெற்று வெளிவந்தபோது 17.05.1934 இல் ஈரோடு சுயமரியாதை வாலிபர் சங்கத்தாரால் நடத்தப்பெற்ற பாராட்டுக் கூட்டத்தில் பாராட்டுக்குப் பதில் அளித்து ஆற்றிய சொற்பொழிவு.
புரட்சி - சொற்பொழிவு - 20.05.1934
குடி அரசு (புரட்சி அட ௦
“சுயராஜ்யக் கக்ஷி. செத்தது அது நீடூழி வாழ்க?”
சுயராஜ்யக் கக்ஷியாரின் யோக்கியதை நாடறிந்ததென்றும் அதற்கு நல்ல பேர் இல்லையென்றும் ஒரு வாரத்திற்குள்ளாகவே அதன் தலைவர்கள் என்போர்கள் தெரிந்து கொண்டு விட்டதால், அதை அது பிறந்த “தீட்டு” வீட்டிற்குள்ளாகவே கழுத்தைத் திருகி கொன்றுவிட்டு காங்கிரசே சட்ட சபைகளுக்கு போட்டி போட வேண்டும்; ஆனால் சுயராஜ்யக் கக்ஷி பிரமுகர்களே சட்ட சபை போட்டி கமிட்டியில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டார்கள். இது மக்களை ஏய்க்கச் செய்த சூழ்ச்சியே ஒழிய, மற்றபடி சட்டசபையில் போய்ச் செய்யப்போகும் காரியத்தில் எவ்வித மாறுதலும் இல்லை என்பதோடு, சட்ட சபைக்கு அபேக்ஷகர்களாக தெரிந்தெடுக்கப் போகும் நபர்களிலும் எவ்வித மாறுதல்களும் ஏற்படப் போவதில்லை.
புரட்சி - துணைத் தலையங்கம் - 27.05.1934
18 ட... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
பகுத்தறிவு
“பகுத்தறிவு பத்திரிகை தொடங்கி சற்று ஏறக்குறைய ஒரு மாத காலமே ஆகின்றது. நடந்த வரை லாபமும் இல்லை நஷ்டமும் வெகு சுருக்கமே ஆகும். இந்தச் சிறிது காலத்தில் சொல்ப நஷ்டத்தில் மக்களுக்கு ஏதோ ஒரு அளவில் குறிப்பிடத்தக்க ஒரு பலனைக் கொடுத்திருக்கின்றது என்று தைரியமாய் சொல்லலாம் என்றாலும், இனியும் இது நடத்தப்பட வேண்டியது அவசியமில்லை என்றே கருதுகிறோம். பத்திரிகைகள் மனித சமூகத்திற்கு அவசியமானது என்பதில் நமக்குச் சிறிதும் அபிப்பிராய பேதமில்லை. ஆனால் அவை இரண்டு காரியங்களுக்கே முக்கியமான தேவையாகும். ஒன்று உலக வர்த்தமானங்களை மக்களுக்கு அறிவித்து
மக்களது அறிவை உலக இயலை உணர்ந்து நடந்து கொள்ளச் செய்வது. இரண்டு புதிய அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி மனித சமூகத்தை முற்போக்கடையச் செய்வதாகும்
ஆனால் இன்றைய பத்திரிகை உலகமானது இந்த இரண்டு காரியங்களின் பேராலேயே பெரிதும் நடத்தப்படுவதாக சொல்லப்படு மானாலும், உண்மையில் பார்க்கப் போனால் வெகு சில பத்திரிகைகளே இக்கொள்கைக்கேற்ப நடத்தப்படுவதாகக் காணப்படும்
பத்திரிகை நடத்துவது என்பது ஒன்று நடத்துபவரின் ஜீவனோபாயத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்டது. இரண்டு, தனது சுயநலத்தையும், கீர்த்தியையும் உத்தேசித்து தம் தம் வாழ்க்கைப் பெருமையையே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்படுவது.
இப்பொழுது நடைபெறும் பத்திரிகைகளில் அனேக பத்திரிகைகளைப் பின் சொல்லப்பட்ட இந்த இரண்டு தலைப்பு களுக்குள்ளாகவே சேர்க்கலாம் என்றாலும், முன் சொல்லப்பட்ட கருத்துக்களுடன் நடைபெறும் பத்திரிகைகள். இல்லை என்று சொல்லிவிட முடியாது.
பரலோகத்தையும் சுவர்க்க லோகத்தையும் காட்டி வயிறு வளர்க்கும் தொழில் புரட்டையும் இழிவையும் விட பத்திரிகை நடத்தி வயிறு வளர்க்கும் தொழில் கேவலம் என்று சொல்லிவிட முடியாது
இன்றைய தினம் அரசியலில் தலையிட்டு சிறிது நாளாவது வேலை செய்து அதன் பயனாய் ஒருவர் தேசபக்தன் என்றோ அல்லது
குடி அரசு (புரட்சி)-7994/]) அ 164
தேசீயத் தலைவர் என்றோ அழைக்கப்பட நேரிட்டு அப்படிப்பட்டவருக்கு தகுதியான ஜீவனோபாயத்திற்கு மார்க்கம் இல்லாதிருக்குமானால் அவர்கள் கண் முன்னும் மனதின் முன்னும் சதா இருந்து கொண்டு இருப்பது “ஒரு பத்திரிகை நடத்த வேண்டும்” என்கின்ற ஆசையும் உற்சாகமுமேயாகும். இதைக் குற்றம் என்று நாம் சொல்ல வரவில்லை. இயற்கையின் ஆட்சி என்றே சொல்லுகிறோம். சில வன்மனம் படைத்தவர்கள் இந்த இயற்கை ஆட்சியில் இருந்து தப்பி இருக்கிறார்கள்.
சிலர் தப்ப முடியாமல் இயற்கையை எய்தி விடுகிறார்கள்.
இதன் பயனாகத்தான் இந்தப் பத்து பதினைந்து வருஷ காலத்தில் ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் தோன்றி மறைய ஏற்பட்டன.
அதில் ஒன்று நமது பகுத்தறிவாய் இருக்கலாமா? என்று யாராவது கேட்டால் இல்லை என்று அடியோடு மறுத்துச் சொல்வதற்குப் போதிய ஆதாரம் இருப்பதாகச் சொல்லமுடியாது
பகுத்தறிவு டிக்களரேஷன் ஐந்து வருஷத்துக்கு முன்னாலேயே
பெற்றிருந்தது. தினசரியாக நடத்துவதற்காக அல்ல. அதை ஒரு மாத வெளியீடாகவும் வருடசந்தா 8 அணாவில் நடத்துவதாகவும் உத்தேசித்து
சிறு புத்தத அளவில் கோர்வையாகத் தொடர்ந்து நடத்த உத்தேசப்பட்டு டிக்களரேஷன் வாங்கப்பட்டு, பல காரணங்களால் நடத்த முடியாமல் போய்விட்டதென்றாலும் அதை பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின். சார்பாக ஒரு மாத வெளியீடாக முயற்சி செய்து சமீப காலத்தில் டிக்களரேஷன் புதிப்பிக்கப்பட்ட தென்றாலும் சில வாலிபர்களின். உள்ளத்தெழுந்த அதிருப்தியும் ஆத்திரமும் இவ்வளவு சடுதியில் திணரியாக நடத்தச் செய்து விட்டது. அதாவது சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி தேவை என்றும் இப்பொழுது நாட்டில் நடமாடும் தினசரிகளில் பெரும்பான்மையானவை சுயமரியாதை இயக்கத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் இடையூறும் பழியும் உண்டாகும்படி செய்யவே முயற்சிக்கின்றன என்றும் நினைத்தது. ஆதலால் “நமக்கென்று ஒன்று இருக்க வேண்டும்” என்ற கருத்தால் ஏற்பட வேண்டியதாயிற்று இக்கருத்து சரியா தப்பா? என்பதைப் பற்றி இப்போது நாம் ஏதும் சொல்ல ஆசைப்படவில்லை. அன்னியர்கள் அதுவும் நமது கருத்துக்கு மாறுபட்டவர்கள், அவ்வளவோடு மாத்திரம் இல்லாமல் தங்கள் தனிப்பட்ட நலனுக்கோ தங்கள் சமூகத்திற்கோ கடும் விரோதி என்று நம்மையும் நமது கொள்கைகளையும் கருதியவர்கள் நம்மால் தவவாகவோ தாக்ஷின்யமாகவோ நடத்தப்படாதவர்கள் நமது கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் இடந்தராததும் பத்திரிகை ஒழுங்கு முறைப்படி நடந்து கொள்ளாததும் குற்றம் என்று நாம் கருதுவோமேயானால் அது முட்டாள்தனமும் சுயமரியாதை அற்ற தனமும் நமது தோல்வியை ஒப்புக்கொண்ட தனமும் ஆகுமே தவிர வேறில்லை.
165 ட... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
அன்றியும் அப்படிப்பட்ட பத்திரிகைகள் நமக்கு எவ்வளவு
கெடுதி செய்தது என்றாலும் அனுகூலம் செய்யவில்லை என்றாலும் நமது கொள்கைகளோ இயக்கமோ ஆரம்பத்திலிருந்து நாளதுவரை முற்போக்கிலும் மேம்பாட்டிலும் இருந்து வருகின்றனவே ஒழிய பிற்பட்டு விடவில்லை. ஆதலால் அன்னியர்கள் மீதும் ஆத்திரம் கொள்ளவும் இடமில்லை. அன்றியும் அவரவர்கள் வாழ்க்கைக்குத் திட்டம் கோலிக்கொள்ள தனி உடமை உலகத்துக்கு சுதந்திரமுண்டு.
சுயமரியாதை இயக்கத்துக்கு இது சமயம் ஒரு பத்திரிகைக்கு மேல் அதுவும் வாரப் பத்திரிகையாக அல்லாமல் மற்றெவ் விதத்திலும் நடத்த நாட்டில் இடம் இல்லை. எப்படி யென்றால் சுயமரியாதை இயக்கத்திற்காக இயக்கச் சார்பாய் என்று இதுவரை சுமார் 20 பத்திரிகைகள் வரையில் தினப்பதிப்பு வாரப்பதிப்பு மாதப்பதிப்பு என்பதாக ஏற்பட்டு அவைகள் பெரிதும் மறைந்து போய் இருக்கின்றன. அதனால் இயக்கத்துக்கும் கெட்டபெயர் ஏற்பட்டும் இருக்கிறது. இந்த உண்மைகளையும் அனுபவங்களையும் கண்டபிறகும் நாம் இனியும் இயக்கத்தின் பேரால். பத்திரிகைகளைப் புதிது புதிதாய் தொடங்குவது என்பது மனதாரத் தெரிந்த தப்பான காரியத்தைச் செய்கின்றோம் என்பதாகும்.
அன்றியும் இது சமயம் பத்திரிகை உலகம் நெருக்கடியில் இருக்கிறது. செல்வாக்குள்ள பத்திரிகைகள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டன. சில 100-க்கு 50 வீதம் சந்தாதாரர்கள் குறைந்துவிட்டன. பத்திரிகைகளின் விலைகளும் சில நூற்றுக்கு ஐம்பது வீதம் குறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் சில பத்திரிகைகள் எவ்வித உற்சாகமும் அவசியமும் இல்லாமல் “ஆரம்பித்து விட்டோமே இனி நிறுத்தினால் அவமானமே'' என்கின்ற
தத்துவத்திற்காகவே நடைபெறுகின்றன. இந்த நிலையில் “பகுத்தறிவு” தினசரி நடத்துவது என்பது வேண்டுமென்றே தொல்லையையும் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்வதாகும் என்று தோன்றுகிறது.
நிற்க, இது சமயம் தமிழ்நாடு பத்திரிகை ஏதோ ஒரு அளவுக்காவது சுயமரியாதை இயக்கச் செய்திகளை பிரசுரித்து வருவதை அறிகிறோம். அது மாத்திரமல்லாமலும் அது மிகக் குறைந்த விலையாகிய ¥ அணாவுக்கு இறக்கப்பட்டும் விட்டது. கொள்கை விஷயத்திலும் சமீப காலமாக அதன் போக்கு நமக்கு விரோதமானது என்று கருதுவதற்கு இல்லாமலும் இருக்கிறது. ஆதலால் நமது கொள்கையைப் பரப்ப புரட்சியையே ஆதாரமாகவும், சேதியை தெரிவிக்க தமிழ்நாடுவின் சகாயத்தையே அனுகூலமாகவும் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்
தமிழ்நாடு பத்திரிக்கை 8 பக்கம், 10 பக்கம், 12 பக்கம் நல்ல வியாசங்களுடனும் தக்க சேதிகளுடனும் தாராளமாய் எங்கும் % அணாவுக்கு கிடைக்கும் படியாக நடைபெறும் போது நாம் Y% அணாவுக்கு தினசரி அதில் 4-ல் ஒரு பாக அளவு பத்திரிக்கை சேதிகள்.
குடி அரசு (புரட்சி)- 194) ஆட 166
அதிகமில்லாமல் நடத்துவது என்றால் எப்படி நடத்தப்பட முடியும் என்கின்ற பயம் ஒருபுரம் இருந்தாலும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையானது Y அணாவுக்கு போடப்பட்டதால் 2 அணா பத்திரிக்கைகளாகிய
“மெயிலும்'' “இந்துவும்” ஒரு அணாவாக விலை குறைக்கப்பட்டுவிட்டது அது போலவே காலணா அரையணாப் பத்திரிக்கைகளாலேயே ஒரு அணாப் பத்திரிக்கைகளும் விலை குறைக்கப்பட வேண்டியதாகிவிட்டது என்று கருத வேண்டி இருப்பதால் அவைகளோடு போட்டி போட்டுக் கொண்டு நமது ஊக்கத்தை வீணாக்குவது நமக்கு அவசியமில்லாத காரியம் என்று நினைத்து, நமக்கு எதிர்ப்பு இல்லாததும் கூடிய வரை: அனுகூலமாயிருப்பதாகக் கருதுவதுமான அத்தமிழ்நாடு பத்திரிக்கையை நமது கொள்கைக்காக இல்லா விட்டாலும் சேதிக்காகவாவது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே “பகுத்தறிவு தினசரி பத்திரிக்கையை இன்று முதல் நிறுத்தி வைக்கலாம் என்று தீர்மானிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்
இதுவரை பகுத்தறிவை ஆதரித்தவர்களுக்கும் அதற்கு உதவி செய்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
புரட்சி - அறிவிப்புக் கட்டுரை - 27.05.1934
167 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சித்ரவதை
23 ஆண்டுகள் சித்ரவதை
மனித சமூகத்திற்காக என்று சில ஒழுக்கங்களையும், சில நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி அவை கிரமமாய் நடந்தேறுவதற்காக பயத்தை உண்டு பண்ணும் படியான நிபந்தனைகளைக் கற்பித்து, அக்கற்பனைகளுக்கு மதக் கொள்கை என்று பெயரிட்டு, அம் மதக் கொள்கைக்கு காப்பளிப்பதற்காக கடவுளை உண்டாக்கி வைக்கப்பட்டிருக்கிறது" என்பதும் மதத்திலும் கடவுளிலும் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் கடவுள் மதக்காப்பாளர்களின் வாதமாகும்.
மேல் குறிப்பிட்ட ஒழுக்கமும் நடவடிக்கைகளும் நியாயமானதா, பொதுவானதா, அவசியமானதா என்பதைப் பற்றிய விவகாரத்தில் இப்போது நாம் தலையிடவில்லை என்றாலும், கடவுளுக்கும், மதத்துக்கும் காப்பளிப்பதற்காக இந்த அறிவாளிகள் சொல்லும் சமாதானம் சரியானதா? விவகாரத்துக்கு நிற்கக் கூடியதா? என்பதைப் பற்றி நாம் இந்த வியாசத்தில் விவரிக்கிறோம்
மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்டவனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றதுமான காரியங்களையே நினைக்கவும்,
பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய “ஒழுக்கம் நடவடிக்கை" என்பவைகள் லக்ஷியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டியதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதை மதவாதிகள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தன்
தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிற
மதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங்களையும் நடவடிக்கைகளையும் பிற மதக்காரன் பின்பற்றி நடக்கின்றானா என்பதையும் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரர்களின் யோக்கியதையும், மற்ற மதக்காரர்களுக்குத் தெரியும். மற்றபடி அவரவர் மதக் குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது
குடி அரசு (புரட்சி)- 194) அஆ ௮
ஒழுக்கம் நடவடிக்கைகள் என்பவை ஒரு மனிதன் உலக வாழ்க்கையில் ஜன சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதனிடத்தில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று எதிர்பார்க்கிறான் என்பவைகளைப் பொருத்ததே ஒழிய வெறும் வேஷம் சடங்கு ஆகியவைகளைப் பொறுத்ததல்ல என்பதாக முடிவு செய்து கொண்டு, பிறகு மேற்சொன்னபடி கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்
இந்தப்படி பார்த்தால் எந்த மூடனுக்கும் மதம் பயனற்றது என்பதும், கடவுளை உண்டாக்கினது வெரும் பைத்தியக்காரத்தன மென்பதும் மிக சுலபத்தில் வெட்ட வெளிச்சம் போல் விளங்கி விடும்.
உதாரணமாக, திருடுவதிலும் பொய் பேசுவதிலும், அன்னியனை வஞ்சிப்பதிலும், ஒரு பெண்ணை பலாத்காரமாய்த் தூக்கிச் சென்று துராக்கிருதப் புணர்ச்சி செய்வதிலும் தாராள நோக்கமுடைய ஒரு முஸ்லீம் என்பவன் ஒரு வேளை தொழுகை தவறிவிடுவதையும்,
மந்திரம் சொல்லி அறுக்காத (ஜீவ வதை செய்யாத) ஜெந்துவின் மாம்சத்தை சாப்பிடுவதையும் பெரிய பாவமாகவும் மத விருத்த (விரோத)மாகவும் கருதுகிறான். சமூகமும் அப்படிப்பட்டவனை முன்னையதைவிட பின்னையதற்கே அதிகமாக வெறுக்கின்றது
அதுபோலவே பொய்யிக்கும் அக்கிரமங்களுக்கும் அனுகூலித்து வாதாடி வயிறு வளர்க்கும் வக்கீல் தொழில் செய்வதையும், லஞ்சம் வாங்கி அநீதி செய்து பொருள் சேர்த்து ஜீவிப்பதையும், பொய், புரட்டு, போர்ஜரி, திருட்டு முதலிய காரியங்கள் செய்வதையும், மது மாம்சம் அருந்தல் முதலிய “இழிவான” காரியங்களைச் செய்வதையும் பற்றி வெட்கப்படாமல் இவற்றில் தீரனென்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு பிராமணன் என்பவன் தான் சிறிது நேரம் பூணூல் இல்லாமல் இருப்பதையும், நெற்றியில் சாம்பலோ மண்ணோ பூசிக் கொள்ளாமல் இருப்பதையும் இறந்து போய் மோட்சலோகத்தில் இருப்பதாய் கருதிக் கொண்டு இருக்கும் தன் தாய் தகப்பன் என்பவர்களுக்கு திதி கொடுக்காததையும் பெரியதொரு பாதகமாகவும் மத விருத்தமாகவும் கருதுகிறான். சமூகமும் அவனை முன்னைய “இழி” தொழிலை விட பின்னைய “தவறு”தல்களுக்கே அதிகமாக வெறுக்கவும் பகிஷ்கரிக்கவும் செய்கின்றது. அதுபோலவே லஞ்சம் வாங்குவதையும், மக்களை வேட்டையாடு வதையும், நிரபராதியான மக்களை ஆயிரக்கணக்காய் எறும்புகளையும், ஈசல்களையும் விடக் கேவலமாய் மதித்து ஒரு வெடியில் 1000, 2000 பேர்களை கொல்வதையும் தன் மதத்திலேயே மனிதனுக்கு மனிதன். கீழானவன், தீண்டத்தகாதவன் என்று எண்ணுவதையும் நடத்துவதைப் பற்றி வெட்கப்படாமல் இருக்கும் ஒரு கிறிஸ்தவன், ஒரு குறிப்பிட்ட வேளை
நஜ ட... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
கோவிலுக்குப் போகாததையும், இரண்டு பெண்டாட்டியை கல்யாணம் செய்து கொள்வதையும், கோவிலுக்கு போய் குருக்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொள்ளாததையும் பெரிய மதக் குற்றமாகவும், கடவுள் விரோதமாகவும் கருதுகிறான். சமூகமும் இப்படிப் பட்டவனை வெறுப்பதில்லை என்பதோடு, சில சமயங்களில் மதிக்கவும் செய்கின்றது. ஆகவே மதங்களின் மூலம் சடங்குகள் மதிக்கப்படுகின்றனவா? ஒழுக்கங்கள் மதிக்கப்படுகின்றனவா? என்பதை உணரலாம் ஆரிய மதமானது ஜீவகாருண்யத்தையும் அஹிம்சையையும் சர்வம் பிரமமயம் என்னும் தத்துவத்தையும் உண்மை அருத்தத்தில் அஸ்திவாரமாகக் கொண்டது என்று ஆரியர்களும் அவர்களது அடிமைகளும் சொல்லுகிறார்கள். ஆனால் அனுபவத்தில் வார்த்தை அளவில்கூட ஜீவகாருண்யமோ, அஹிம்சையோ காண்பது கஷ்டமாய் இருக்கிறது. மனிதர்களை மனிதர்கள் மதிக்கும் தன்மையிலும் நடக்கும் இக்குணங்கள் காணப்படுகின்றனவா என்பதை கவனித்தால், ஆரிய மதத்தின் யோக்கியதை யெவருக்கும் விளங்காமல் போகாது. இவ்வாரியர்களின் மற்ற காரியங்கள் எப்படி இருந்தாலும், மதத்திற்காக மதக் கொள்கைப்படி செய்வதாய் சொல்லப்படும் சில காரியங்களில் எவ்வளவு கொடுமையும் வன்னெஞ்சமும் இருக்கிறது என்பதைக் காட்ட சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த யாகம் என்று சொல்லப்படும் காரியத்தை பற்றி பொதுஜனங்களுக்கு அறிவிக்கவே இதை எழுதுகிறோம்.
இம்மாதம் 22-ந் தேதி கும்பகோணத்தில் ஆரியர்கள் ஒரு யாகம் செய்தார்களாம். அந்த யாகத்தில் 23 ஆடுகள் “மோட்ச” லோகத்திற்கு அனுப்பப்பட்டனவாம். எப்படி அனுப்பப்பட்டன என்றால், உயிருடன் அவ்வாடுகளின் வெதர்களைப் பிடித்து நசுக்கி அவற்றைக் கொன்று அனுப்பப்பட்டனவாம். என்ன அக்கிரமமான காரியம் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றோம். ஐந்துக்களுக்கு பீஜம் அல்லது வெதர் என்பது மிகவும் மெல்லியதும் சிறிது அடிபட்டாலும் அதிக நோயை உண்டாக்குவதென்பதும், ஆரியர்கள் உள்பட யாவரும் உணர்ந்த காரியம் அப்படி இருக்க 23 ஆடுகளை பீஜத்தைப் பிடித்து நசுக்கி அவைகளை சாகடிப்பதென்றால் அந்த 23 ஆடுகளும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமா?
இப்படி சித்திரவதை செய்து கொன்ற இக் கொலை பாதகத்துக்கு
மதம் ஆதாரம் என்றால், மதங்களின் கொடுமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டியிருக்கிறது என்று கேட்கின்றோம்
ஜீவன்களை வதைக்கும் விஷயத்திலும் கொல்லும் விஷயத்திலும் எல்லா மதங்களும் ஒரே தன்மையை உடையதாகக் காணப்படுகின்றனவே ஒழிய, ஒன்றுக்கொன்று வித்தியாசம் கண்டுபிடிப்பது என்பது கஷ்டமான காரியமாகவே தோன்றுகிறது
குடி அரசு (புரட்சி) - 1934(1)) அ 170
இந்த விஷயங்களில் அரசியல் ஆட்சி நிர்வாகமாவது சரியாய் நடந்து கொள்ளுகின்றது என்றுகூட நம்மால் சொல்ல முடியவில்லை. இப்படிச் சொல்வதால் அரசாங்கத்திற்குக் கோபம் வந்தாலும் வரலாம் ஆனால் அப்படிப்பட்ட கோபத்தை, நாம் பொருட்படுத்த வேண்டுமானால் இப்படிப்பட்ட கொலை பாதகங்களை சகித்தாக வேண்டியதாய் இருப்பதால், சர்க்காரின் நிர்வாகத்தை எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை சாதாரணமாக அரசாங்கம் ஜீவகாருண்ய தத்துவத்தை ஒப்புக் கொள்ளுகின்றது என்றுதான் நாம் கருதி இருக்கிறோம். உதாரணமாக ஒரு கோழியை தலைகீழாக காலைப் பிடித்து தூக்கிக் கொண்டு போவதும், ஒரு பன்றியைத் தலைகீழாக கால்களை கட்டித் தூக்கிச்
செல்வதும், ஒரு ஆட்டை கழுத்தில் கயிரு கட்டி தரத்தரவென்று இழுத்துச் செல்வதும், கழுத்துப் புண்ணுடன் ஒரு மாட்டை வண்டியில் கட்டுவதும், வண்டி ஓட்டும் சாட்டைக் குச்சியில் முள்ளைக் குத்தி வைப்பதும், குறிப்பிட்ட பாரத்துக்கு மேல் ஒரு மணுவு இடை அதிகமிருப்பதும் ஆகிய காரியங்கள் எல்லாம் குற்றமாகப் பாவிக்கப்பட்டு அவற்றிற்கு சட்டங்கள் மூலம் தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மாத்திரமல்லாமல் ஒரு மனிதன் தன்னைத் தானே வதை செய்து கொள்வதான, செடில் குத்திக்கொள்வது முதலியவைகளையும் குற்றமெனக் கருதி 144 மூலம் தடை செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. இப்படி எல்லாம் இருக்க, மேல் கண்டபடி யாகத்தின் பேரால் 23 ஆடுகளை வெதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று இருப்பது இந்த சட்டத்தின் கீழ் வராது என்று ஒரு சர்க்கார் நினைத்திருக்குமானால் தங்களை ஜீவகாருண்ய சர்க்கார் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை உண்டா என்று கேழ்க்கின்றோம் இதை மத உரிமை என்று சொல்லப்படுமானால், நரபலியும் நரமேத யாகமும் அதாவது மனிதர்களின் விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று
சுட்டுச் சாப்பிடுவதும் குற்றமில்லை என்றுதானே கொள்ள வேண்டும்
இம்மாதிரி கொலைபாதகங்களைப் பற்றி 1926 முதல் நாம் கூப்பாடு போட்டு வந்தும், அதை அரசாங்கம் சிறிதும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்து வருவதானது அரசாங்கத்தில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.
இந்தப்படியான கொலை பாதகங்களை லக்ஷியம் செய்யாத ஆரியர்கள், மற்றவர்கள் மாம்சம் சாப்பிடுவதாலும், கொலை செய்வதாலும் அவர்களை தாழ்ந்த ஜாதியார் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது என்று சொல்லுகிறார்கள். ஜீவன்களுக்கு, சித்திரவதை இல்லாமல் ஒரே வெட்டில் க்ஷண நேரத்தில் அந்த ஜீவனுக்குக் கூட தெரிவதற்கில்லாமல் கொன்று சாப்பிடுகின்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்களானால், ஜீவன்களைப்
பிடித்து அதன் விதரை (பீஜத்தை) பதரப் பதர துடிக்கத் துடிக்க 7 QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மணிக்கணக்காய் நசுக்கிச் சித்திரவதை செய்து கொண்டு சாப்பிடுகின்றவர்களை எவ்வளவு கீழ் ஜாதி எவ்வளவு வன்னெஞ்ச ஜாதி என்று சொல்லுவது என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டு ஊராரும் உலகத்தாரும் சிறிக்கவும், இகழவும் நடந்து கொண்டு தாங்கள். உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் இவனைத் தொடக்கூடாது, அவனைக் கிட்ட அணுகவிடக் கூடாது, மற்றவனை: கோவிலுக்குள், சத்திரத்திற்குள் நிழலுக்கு ஒண்டக்கூட விடக் கூடாது என்பன போன்ற ஆணவமான கொடுமையான வார்த்தைகளால் இழிவுபடுத்தினால் எப்படி சகிக்க முடியும் என்றும் இப்படிப்பட்டவர்களை எப்படி சராசரி மனித சமூகத்திலாவது சேர்க்க முடியும் என்றும் கேட்கின்றோம்.
இந்த அக்கிரமங்களும் அநியாயங்களும் எப்படியோ போய்த் தொலையட்டும் என்று விட்டு விடலாம் என்றாலும், நாட்டு மக்கள். எல்லோருமே தங்களை இந்தப்படியான ஆரிய மதத்தைச் சேர்ந்தவர். என்று சொல்லிக் கொள்ளும் அறியாமையையும் அநியாயத்தையும் எடுத்துக் காட்டுவதற்காக இவற்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
“ஜீவகாருண்யச்” சைவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
புரட்சி - தலையங்கம் - 27.05.1934
குடி அரசு (புரட்சி 1934(1) மட 7
இந்திய சட்டசபைத் தேர்தலும் RK.S.ID
இப்போது அரசியல் உலகில் இந்திய சட்டசபைத் தேர்தல் பேச்சே எங்கு பார்த்தாலும் பிரமாதமாகப் பேசிக் கொள்ளப்படுகின்றது. கூடிய
கீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலைக்கப்பட்டு இவ்வருஷத்திலேயே புதிய
தேர்தல் நடைபெறப் போகின்றது யாவரும் அறிந்ததே.
இந்திய சட்டசபை ஏற்பட்டு சமீபகாலம் வரை அதாவது சுய மரியாதை இயக்கம் தோன்றும் வரை, நமது மாகாணத்தில் அது (இந்திய சட்டசபை) பார்ப்பனர்களுக்கே ஏகபோக மான்யமாயிருந்தது. இதன். காரணமாகவே தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் என்கின்ற சமூகம் மனிதத் தன்மையுடன் இல்லையென்றும், அறிவிலும் ஆற்றலிலும் மிக பிற்பட்டவர்கள் என்றும் இந்தியா முழுவதும் விஷமப்பிரசாரம் செய்வதற்கு பார்ப்பனர்களுக்கு மிக அனுகூலமுமிருந்து வந்தது. அதற்கேற்றார்ப் போல் இந்திய பத்திரிகை உலகமும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு வகையில் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால் பத்திரிகைகள் மூலமும் அவ்விஷமப் பிரசாரம் வெற்றி பெற அனுகூலமேற்பட்டது
இப்போது தோழர்கள் சர்.ஆர்.கே. ஷண்முகம், ஏ. ராமசாமி முதலியார். முதலியவர்கள் இந்திய சட்டசபைக்குப் போக ஏற்பட்டதால் தென்னிந்தியப் பார்ப்பனரல்லாத மக்களின் தன்மை இன்னதென விளங்க இடமேற்பட்டதுடன். பார்ப்பன மக்களின் நம்மை நடத்தும் யோக்கியதையும் ஒருவாறு வெளியாக இடமேற்பட்டது
இவர்களது (816.5 & AR) கொள்கை என்ன? இவர்களால் மனித சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்ற விவகாரத்தில் இப்போது நாம் பிரவேசிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய பார்ப்பனர்கள் - தேகக்தர்கள் - தேனபிமானிகள் - அரசியல் நிபுணர்கள் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய யோக்கியதைக்கும் நாணயத்திற்கும் திறமைக்கும் இவர்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதை கோபுரத்தின் மீது இருந்து கூறுவோம். இத்துடன் மற்றபடி இதுவரை இந்திய சட்டசபைக்கு பார்ப்பனர்கள் நமது பிரதிநிதிகளாய் போய் உட்கார்ந்து சாதித்ததை விட இவர்கள் ஒன்றும் குறைவாய் சாதித்துவிடவில்லை என்றும் பார்ப்பனர்களால் நமது மக்களுக்கு ஏற்பட்ட கெடுதியைவிட இவர்களால் ஒன்றும் அதிகமாய் ஏற்பட்டுவிடவில்லை என்றும் உறுதியாய் புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவோம். 173 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஆனால் சமீபகாலமாக இந்திய சட்டசபையில் சர். ஷண்முகம் அவர்களின் அறிவு, ராஜதந்திரம், பொருளாதார நிபுணத்துவம் ஆகிய காரியங்கள் இந்தியா முற்றும் உணர்ந்து உலகம் அறிய ஆரம்பித்ததும், தோழர் ராமசாமி முதலியாரின் பேச்சும் விவகார ஞானமும் இந்தியா முழுவதும் தெரிய ஆரம்பித்ததும் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுடைய வயிறு பெட்ரோலில் நெருப்பு பிடித்ததுபோல் எறியத் துடங்கி விட்டதால் எப்படியாவது வரப்போகும் தேர்தலில் இவர்களை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமது பார்ப்பனர்களுக்கு இப்போது ஏற்பட்டு எங்கு பார்த்தாலும் அதே பேச்சாய் இருந்து வருகிறது. கோமணம் கட்டத் தெரியாத பார்ப்பனக் குழந்தை முதல், அய்யர்வாள், சாஸ்திரியார், ஆச்சாரியார் என்று சொல்லப்பட்ட பிரமுகர்கள் வரை “எப்படி ஷண்முகத்தை தோற்கடிப்பது? எப்படி அவருக்கு இந்திய சட்டசபைத் தலைமைப் பதவி இல்லாமல் செய்வது'' என்பதுதான் இப்பொழுது பெரிய கவலையாய் இருப்பதுடன் அதற்காக யாகம், ஜபம், தபம், மந்திரம் முதலியவை ஒவ்வொரு வீட்டிலும், திண்ணையிலும், பள்ளியரையிலும், கோர்ட்டுகளிலும், கிளப்புகளிலும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன.
தோழர் ராமசாமி முதலியாரிடம் கூட பார்ப்பனர்களுக்கு அவ்வளவு அதிகமான ஆத்திரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவரை சமயத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம் அல்லது பயப்படுத்திவிடலாம் என்கின்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு. ஏனெனில் அவரும் சில சமயங்களில், தீண்டாமை, கோயில் பிரவேசம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலிய பல விஷயங்களில் சமயம் போல் நடந்து கொண்ட வரானதால் அவரைப் பற்றி கூட அவர்களுக்கு அதிக கவலையில்லை. ஆனால், தோழர் ஷண்முகம் விஷயத்தில் அதுவும் அவர் இந்திய சட்டசபைத் தலைவர் ஆன பிறகு, அவரைப் பற்றி இமயமலைக்கும் கன்னியாகுமரிக்குமாக ஒரே தொடர்பாய் விஷமப் பிரசாரம் நடந்து வருகின்றது இப்போது பாட்னாவில் ஏற்படுத்தப்பட்ட சட்டசபை விவகார போர்டின் முக்கியமான வேலையே எப்படியாவது சர்.ஆர்.கே. ஷண்முகத்தை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதும், எப்படியாவது அவர் அதற்குத் தலைவராகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும். அதற்காகவே இப்பொழுது காங்கிரசும் காங்கிரஸ் பக்தர்களும் காங்கிரசுக்காக சிறை சென்று “தேச பக்தர்களான தியாகிகளும்” வேலை செய்யப்போகிறார்கள் என்பதும் உறுதியான காரியம். சில பார்ப்பனரல்லாதாரும் புத்தி இல்லாமலோ அல்லது பார்ப்பனர்களுக்கு பயந்தோ, பொறாமையாலோ கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.
இப்படிப்பட்ட சமயத்தில் தோழர் சண்முகம் இன்னமும் தான் என்ன செய்யப்போகிறார், எந்த தொகுதிக்கு நிற்கப் போகின்றார். என்கின்ற விஷயத்தை “சிதம்பர இரகசியம்” போல் வைத்திருப்பது நல்லதல்ல என்பதே நமதபிப்பிராயம்
குடி அரசு (புரட்சி)-7994/]) அஆ 174
இரண்டு தொகுதிகள் அவருக்கு முழு ஆதரவையும் அளிக்கத் தயாராய் இருக்கின்றன என்றே கருதுகின்றோம். அதாவது ஒன்று கோவை, சேலம், வடஆற்காடு ஆகிய ஜில்லாத் தொகுதி, மற்றொன்று இந்திய வியாபாரிகள் சங்கத் தொகுதி. இந்த இரண்டிலும் பூரண வெற்றியை இப்பொழுதே நிச்சயித்துவிடலாம். ஆனாலும் தோழர் ஷண்முகம் தனக்குள்ள பொருளாதார நிபுணத்துவம் வியாபார நிபுணத்துவம் ஆகிய இரண்டையும் உத்தேசித்து இந்திய வியாபாரிகள் பிரதிநிதியாக அங்கம் பெறுவதே சிலாக்கியமானதென்று நாம் கருதுகின்றோம்.
ஏனென்றால் தோழர் ஷண்முகம் அவர்கள் விஷயத்திலும் ரிசர்வு பாங்கி வியாபார விஷயத்திலும் தனது அபிப்பிராயங்களைச் சொல்லவும் அத்துறைகளில் பாடுபடவும் தனக்குள்ள உரிமையை வலியுறுத்த பயன்படும் என்பதோடு தென்இந்திய வியாபாரிகளும் தோழர் ஷண்முகத்தைத் தங்கள் பிரதிநிதியாய் அடையும் கெளரவத்தை பெற இரண்டு கையையும் நீட்டி வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.
அதலால் இவ்வாரத்திலேயே அவரது அபேச்ஷகத்துவத்தையும் இன்ன தொகுதிக்கு என்பதையும் வெளிப்படுத்திவிட வேண்டுமாய் விரும்புகிறோம் இதே சமயத்தில் தோழர் ஷண்முகம் அவர்கள் நமது சுயமரியாதை இயக்க சமதர்மத் திட்டத்திற்கு ஆதரவு கூறி இருக்கிறார் என்பதையும் இவ்விஷயத்தில் அரசியல் விஷயத்தை விட சமூகஇயல் அதாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தை முக்கியமாய் கருதி தோழர். ஷண்முகம் அவர்களை நாம் விரும்புகிறோம் என்பதையும், பார்ப்பனரல்லாத மக்கள் யாவரும் இதை உணர்ந்து அவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்
புரட்சி - துணைத் தலையங்கம் - 27.05.1934
175 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மத நம்பிக்கையின் விளைவு
வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய்வாய்ப்பட்டு
சாகுந் தருவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரியாக இருந்து கணவனுடன் உடன்கட்டை ஏற வேண்டுமென்று கருதி மண்ணெண்ணையை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து போனதாக அ.பி. செய்தி கூறுகின்றது
இது எவ்வளவு பரிதாபகரமான விஷயம்? மத நம்பிக்கையினால் எவ்வளவு கொடுமைகளும், கேடுகளும் விளைகின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாக்ஷியம் வேண்டும்.
இந் நிகழ்ச்சிக்கு மத நம்பிக்கை காரணமல்ல. காதலே காரணம், கற்பே காரணம்!” என்று சிலர் தத்துவார்த்தம் சொல்லி மதத்தைக் காப்பாற்ற இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்டவர்களை ஒன்று கேட்கின்றோம்
காதல் என்றும் கற்பு என்றும் ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொண்டு பார்ப்போமானாலும் இன்று உலகில் புருஷனை சாகக் கொடுத்துவிட்டு விதவையாகவோ அல்லது வேறு ஒருவரை மணந்தோ, இரகசியமாகவோ இயற்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் எல்லோரும் அவரவர்கள் புருஷனிடத்தில் காதலில்லாமல் கற்பு இல்லாமல் இருந்தவர்களா என்று கேட்கின்றோம். மற்றும் இன்று புருஷன் இறந்த உடனோ இறக்கப் போகும் தருவாயிலோ மண்ணெண்ணையை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு சாவதற்கு தயாராயில்லாத பெண்கள். எல்லோரும் காதலும் கற்பும் அற்றவர்களா? என்றும் கேட்கின்றோம். ஆகவே மதத்தின் பெயரால் கல்வி அறிவற்ற ஆண்களும் பெண்களும் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகின்றார்கள் என்பதை அறிந்தும் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது அறியாமையா, மூர்க்கத்தனமா அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா என்பது நமக்கு விளங்கவில்லை.
புரட்சி - துணைத் தலையங்கம் - 27.05.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 109
மரணம்
அநுதாபம்
நமது இயக்க அபிமானியான கோட்டையூர் தோழர் ராம. அள. சிதம்பரம் அவர்களின் புதல்வன் திடீரென்று இறந்த செய்திகேட்டு திடுக்கிட்டோம். இச்செய்தி கேட்ட சில நாட்களுக்குள் அவரது துணைவியாரும் உயிர் துறந்தார் என்ற செய்தி கேட்க பெரிதும் வருந்துகிறோம். “உலகில் தோன்றி மறைவது இயற்கை” என்றாலும், இத்தகைய கஷ்ட நஷ்டத்தைக் கேட்க மனம் வருந்தாமலிருக்க முடியவில்லை. உலக இயற்கையை யுணர்ந்த தோழர் ராம.அள. சிதம்பரம் அவர்கட்கு நாம் ஒன்றும் அதிகம் கூறத் தேவையில்லை. நமது அனுதாபம் மட்டும் அவருக்கு உரித்தாகுக!
புரட்சி - இரங்கல் செய்தி - 27.05.1934
[ரர QuRwaRdr எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஸ்தல ஸ்தாபனங்கள்
ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்று சொல்லப்படும் ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, தாலூகாபோர்டு, கிராமப் பஞ்சாயத்து முதலியவைகள். அரசாங்கத்தின் நேர் பார்வையிலிருந்து “ஜனநாயகத்துவத்”திற்கு மாற்றப்பட்டதின் பயனாக, சுமார் இந்த 30 வருஷ காலத்தில் பொது ஜனங்களுக்கு ஏதாவது பயனேற்பட்டதா அல்லது அரசாங்க மேற்பார்வையின்.
கீழ் இருந்தை விட மோசமான நிலையில் இருக்கின்றனவா என்பது யோசிக்க வேண்டியதும், அதன் உண்மையைப் பாமர மக்கள் அறியும்படி செய்ய வேண்டியதும் அவசியமான காரியமாகும்.
நம்மைப் பொருத்தவரைஸ்தலஸ்தாபன நிர்வாகத்தில் கலந்திருந்ததைக். கொண்டும், சில ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களுக்குத் தலைமை வகித்து நிர்வாகப் பொருப்பை ஏற்றிருந்ததைக் கொண்டும் ஏற்பட்டுள்ள அனுபவத்தையும் மற்றும் அனேக ஸ்தல ஸ்தாபன நிர்வாக விஷயங்களைப் பார்த்தும், கேட்டும் உள்ள அனுபவத்தைக் கொண்டும், ஏதாவது சொல்ல வேண்டுமென்றால், ஸ்தல ஸ்தாபன ஆட்சி என்பது பொதுஜனங்கள் எகையில் இருப்பதைவிட, அரசாங்கத்தின் நேர்ப் பார்வையிலிருந்து வந்ததும், இனியும் அப்படியே இருந்து வருவதும் மேலானது எனக் கூறுவோம்
அரசாங்க நேர்ப்பார்வையினால் முதலாவது அனுகூலம் என்னவென்றால் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் இன்று “ஜனநாயகத்தின்” கீழ்நடைபெறும் செலவுத் தன்மையில் பகுதி செலவிலேயே நடைபெறக்
கூடும் என்பதும், நாணைய விஷயமும் நீதிநிர்வாகப் பாரபக்ஷமற்ற விஷயமும் இன்றுள்ள ஜனநாயக ஆட்சி, நீதி, நிர்வாகம், நாணையம் ஆகியவைகளைவிட பலபங்கு மேலான யோக்கிய முறையில் நடைபெறக்
கூடும் என்றும் சொல்லுவோம்
ஏனெனில் ஸ்தல ஸ்தாபன நிர்வாகப் பொறுப்பிலிருப்பவர்களில் 100-க்கு 90 பேர் அந்நிர்வாகத்தை துஷ்ப்பிரயோகம் செய்தும் மனப்பூர்வமாய்
- மனதாரத் தெரிந்து பொருளாதாரத் துறையில் தாருமாறாகவும், கவலையற்றும் கையாடுதல்கள் உள்பட நாணையக் குறைவாக நடந்தும் வருகின்றார்கள் என்று நாம் எழுதினால் அதை கண்டு நமது தோழர்கள் வெட்கப்பட வேண்டுமே ஒழிய, நம்மை குற்றம் காணமாட்டார்கள். என்றே கருதுகின்றோம். உதாரணமாக ஸ்தல ஸ்தாபன கன்ட்ராக்டுகள்.
குடி அரசு (புரட்சி)- 194) — 1௦
பெரிதும் அதன் கெளரவ நிர்வாகிகளான அதன் தலைவர்கள், அங்கத்தினர்கள். ஆகியவர்களின் சொந்தப் பொருப்பிலும், சுயநல வேட்கையிலுமே நடைபெறுகின்றன என்பது சிறிதுகூட ரகசியமான காரியமல்ல.
ஸ்தல ஸ்தாபன சிப்பந்திகள் விஷயத்திலோ சகிக்க முடியாத அக்கிரமங்கள் நடைபெறுவதை நாம் எடுத்துக்காட்ட வேண்டுமென்று எவரும் விரும்பமாட்டார்கள் என்றே கருதுகின்றோம்
ஏனெனில் அரசாங்க மேற்பார்வை ஸ்தாபன சிப்பந்தி களுக்காவது, வேஷத்திற்காகிலும் ஒருவித யோக்யதாம்சமும், அனுபோகமும் ஒழுங்கு முறையும் கவனிக்கப்படுகின்றது. ஸ்தலஸ்தாபன சிப்பந்திகளுக்கு இவற்றில் எதுவும் சரியாக கவனிக்கப்படுவதில்லை. பி.ஏ.க்கள் மாதம் 20 ரூபாய்க்கு திண்டாடும்போது எஸ்.எஸ்.எல்.சி. ஆள்கள், சில சமயங்களில் பாஸ் பண்ணாத ஆள்கள் இந்தக் காலத்தில் நியமிக்கப்பட்டு மாதம் 100 ரூ. 150 ரூ. சம்பளங்களுக்கு எவ்வித ஒழுங்கு முறையும் கவனிக்கப்படாமல் இஷ்டம் போல் சம்பளங்கள் உயர்த்தப்படுவதையும் பார்த்தால் பொதுஜனங்களின் வரிப்பணம் ஸ்தல ஸ்தாபனங்களின் பேரால் ஜனநாயகத்தில் எவ்வளவு தூரம் பாழாக்கப்படுகின்றது என்பது சுலபமாய் விளங்கும்
மற்றும் சிப்பந்திகள் தேர்தல் (எலக்ஷன்)களில் சம்மந்தப்பட்டதற் காகவும், அங்கத்தினர்கள் தயவிற்காகவும் மற்றும் தலைவர்கள் பலர். தாட்சண்யங்களுக்காகவும் உத்தியோகங்களை உற்பத்தி செய்வதும், அவர்களுக்கு தங்கள் இஷ்டப்படி சம்பளங்கள் அள்ளிக் கொடுப்பதுமாகிய காரியங்களைப் பார்த்தால் அரசாங்க நேர்முக நிர்வாகம் 10 மடங்கு மேலானதென்றே ஏன் சொல்லக் கூடாது
ஸ்தல ஸ்தாபனங்களில் உத்தியோகங்கள் உற்பத்தி செய்யும் போதும், உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கும் போதும், கிரேடுகள் ஏற்படுத்தி உயர்த்தப்படும் போதும், பெரிதும் வரி செலுத்துவோரின் பண விஷயத்தில் தங்களுக்கு கடுகளவாவது பொருப்பு- நாணையம்- கவலை ஆகியவை இருக்க வேண்டாமா என்று கவனிக்கும் அங்கத்தினர்கள், ஸ்தல ஸ்தாபனங்களில் 100-க்கு 5 பேராவது உண்டா என்று கண்டுபிடிப்பது மிக கடினமான காரியமே யாகும். இப்போது உள்ள ஸ்தல ஸ்தாபனங்களுக்குப் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் சிப்பந்திகளை ஏற்படுத்தப்பட்டிருந்தால் இன்றைய செலவில் 3-ல் 1 பாக செலவில் சிப்பந்திகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதோடு இன்றைய ஸ்தல ஸ்தாபன சிப்பந்திகளின் யோக்கியதையையும், நாணையத்தையும் விட பல மடங்கு அதிகமுள்ளவர்களாகவும் இருக்கக்கூடும்
என்பதிலும், நமக்கு சந்தேகமில்லை.
இப்படி யெல்லாம் நாம் எழுதுவதால் அரசாங்க நேர்ப்பார்வையில் உள்ள ஸ்தாபன நிர்வாகங்களும், சிப்பந்திகளும் அவர்களது
[9 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
யோக்கியதைகளும் மேன்மையானதென்றோ, நாணையமானதென்றோ, நீதியானதென்றோ சொல்லுவதாக யாரும் நினைத்துவிடக் கூடாது அரசாங்க நிர்வாக ஊழல்களும், சிப்பந்திகள் யோக்கியதையும், நாணயக் குறைவும் நமக்கு நன்றாய்த் தெரியும். இவ்விஷயத்தில் நமக்கு 30, 40 வருஷ அனுபவமுண்டு என்றாலும் குறிப்பிட்ட இரண்டொரு விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் அட்டெண்டர் முதல் ஹைக்கோர்ட் ஜட்ஜி வரையிலும் இந்தியர்களைவிட ஆங்கிலேயர்கள் நாணையமும், யோக்கியப் பொருப்பும், நடுநிலையுமுள்ளவர்கள் என்பதை நாம் மறைக்க முயலவில்லை. எப்படி யிருந்த போதிலும் அரசாங்க நேர்முக நிர்வாகம் பொது ஜனங்களுக்கு பொருப்புடையதாக இல்லை என்கின்ற ஆதாரத்தைக்காட்டி கிளர்ச்சி செய்து அடைந்த ஜனநாயக ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் அரசாங்க நேர்ப் பார்வை நிர்வாகத்தைவிட கேவலமாக நடைபெறுகின்றது என்பதைக் காட்டுவதற்காகவே இவற்றை எழுதுகிறோம்.
மற்றும் தேர்தல்களில் நடக்கும் நீதிக் கொடுமையும், நாணையக்
குறைவும் ஒருபறமிருக்க, ஸ்தல ஸ்தாபனங்களில் அதன் அங்கத்தினர்களுக்குள் ஏற்படும் கட்சிப் பிரதிகட்சி உபத்திரவங்களால் நிர்வாகம் கெடுதல், நஷ்டமடைதல் முதலாகிய காரியங்கள் அரசாங்க நேர்முக ஆட்சியில் இருக்க முடியாது. சமீபகாலமாக அதாவது சுமார் 20 வருஷ காலமாக அரசாங்க ஸ்தல ஸ்தாபன இலாக்கா “ஜனநாயக'' மந்திரிகள் கைக்கு வந்த பின்பு ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இருந்த - இருக்க வேண்டிய யோக்கியதைகள் அனேகம் அடியோடு குறைந்து போய்விட்டன. சாதாரணமான மீன் கடைகள், கள்ளுக்கடைகள் என்று சொல்லும்படியான இடங்களில் நடக்கும் நடவடிக்கைகள், வார்த்தைப் பிரயோகங்கள் ஆகியவைகள் பெரிதும் பெருகி வருகின்றன. எங்காவது ஒன்று இரண்டு ஸ்தல ஸ்தாபனங்கள் சற்று கெளரவமாய் நடைபெறுகின்றது என்று சொல்லப்படுமானால் அவைபெரிதும் தலைவர் என்று சொல்லும்படியானவரின் ஏதேச்சாதிகாரத்திலும், அத்தலைவருடைய சுயநல லாபத்திற்கும் அனுகூலமாய் நடந்து வருவதாய் இருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு. தனி விசேஷத்துவமாய் இருக்கலாம். நாம் 100-க்கு 90 எண்களைப் பொருத்தே எழுதுகிறோம்.
ஸ்தல ஸ்தாபனங்கள் மந்திரிகள் ஆட்சிக்கு வந்தபின் அதிக மோசமானதற்குக் காரணம் சொல்ல வேண்டுமானால் உண்மையான ஜனநாயகத்துக்கு மக்களை தகுதியாக்காமல் பாமர மக்கள் பெயரால்
ஒரு சிலர் அதிகாரமும், பதவியும் பணமும் அனுபவிக்கத்தக்க மாதிரியான. “ஜனநாயகம்” பெற்றதாலும், அப்படிப் பெற்றவர்கள் “ஐனநாயக ஆட்சியை" தங்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கருத்தில். கட்சிபேரால் நிர்வாகம் செலுத்த வேண்டியதாக ஏற்பட்டதினாலும், அதற்கு கெளரவமும், பிடிப்பும் இல்லாமல் போக நேரிட்டுவிட்டது.
குடி அரசு (புரட்சி)- 1994) — 150
நமக்குத் தெரிய ஸ்தல ஸ்தாபனங்களில் மனதார பணத்தைக் கையாடினவர்களையும் பொய் கணக்கு எழுதி பணத்தை எடுத்துக் கொண்டவர்களையும் கட்சி காரணமாக என்று கேள்வியும் கேட்பாடும் இல்லாமல் விட்டுவிடப்பட்டிருக்கிறது
நிற்க, பொது முறையில் சமீபத்தில் நடந்த கல்கத்தா மூனிசிபல். மேயர் தேர்தல் முதலிய பல தேர்தல்களைப் பார்த்தாலும் ஜனநாயகம் எப்படி இருக்கின்றது என்பதும் ஒருவாறு அறியலாம். ஜனநாயகம் என்பதும், ஜனநாயகத்துவத்திற்கு உட்பட்ட அரசர்கள் ஆட்சி என்பதும், குடியாட்சி என்பதும் ஆகிய ஆட்சிகளெல்லாம் இன்றைய உலகில் கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் மக்களுக்கு ஒரே பலனைத் தான் கொடுத்து வருகின்றன. ஆனால் அளவில் சிறிது வித்தியாசங்கள் இருக்கலாம். பயன் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகின்றது. இக்கஷ்டங்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால் இந்த 10 வருஷ காலமாக எப்படி ஸ்தல ஸ்தாபன அதிகாரங்கள் ''பொது ஜனங்'"களிடம் இருந்து சிறிது சிறிதாக பிடுங்கப்பட்டு விட்டதோ, அது போலவே இப்பொழுது இருக்கும் மற்றும் சில அதிகாரங்களும் கூடிய சீக்கிரத்தில் பிடுங்கப்பட்டு கடைசியாக மற்ற இலாக்காக்களைப் போலவே சகலமும் அரசாங்க நேரடியான ஆதிக்கத்திற்குப் போய் இப்போது இருப்பதுபோன்ற பொது ஜனங்களின் சம்மந்தத்தில் இருப்பதை மாற்றிவிட வேண்டியதே அவசியமாகும்
ஏனெனில் பொது ஜனங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயங்களை ஸ்தல ஸ்தாபனம், ஜனநாயகம் என்னும் பேரால் ஜனநாயகத்துவம் அறியாத - அதற்கு லாயக்கில்லாத மக்களிடம் போய்ச் சேரும்படியான மாதிரியில் ஏற்பாடுகள் செய்து அவர்கள் வசம்விட்டுப் பாமர மக்களை (ஏற்கனவே அரசாங்கம் உருஞ்சுவது ஒரு புறமிருக்க) இவர்கள் ஒருபுறம் உருஞ்சும்படி செய்வது மிகப் பரிதாபகரமான காரியமாகும்.
சமீப காலத்தில் சில மூனிசிபாலிட்டிகளிலும், ஜில்லா போர்டுகளிலும் ஏற்பட்ட சம்பவங்களையும், அது விஷயமாய் ஸ்தல ஸ்தாபன இலாக்கா நடந்து கொண்ட மாதிரியையும், அதனால் பொதுஜனங்கள், பாமர மக்கள் எப்படி எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் உணர்ந்தே நாம் இப்படி எழுதுகின்றோம்
முடிவாக ஒரு விஷயத்தைக் குறித்துவிட்டு இதை முடிக்கின்றோம் அதாவது திருச்சி முனிசிபல் சேர்மனை அரசாங்கம் விரும்பாமல் அவரைப் பதவியில் இருந்து நீக்கியாய்விட்டது. பொது ஜனங்கள் இப்போது அவரையே விரும்பி மீண்டும் தேர்ந்தெடுத்து அரசாங்கத்தை அவமானப் படுத்திவிட்டார்கள். இது அரசாங்க முடிவுக்கு விரோதமாக ஜனங்கள் நடந்து கொண்ட காரியம் என்று அரசாங்கம் சொல்லி விடலாம். ஆனால் பொதுஜனங்கள் விரும்பாமல் மதுரை ஜில்லா 8 மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
போர்டு தலைவரை நீக்கிவிட பெரும்பான்மையோர் சம்மதித்து அபிப்பிராயத்தை முறைப்படி தெரிவித்தார்கள். இதை அரசாங்கம் லட்சியம் செய்யாமல் பொது ஜனங்களை அவமானப்படுத்தி விட்டதுடன் அவருக்கு (அப்படிப்பட்ட மதுரை ஜில்லா போர்டு தலைவருக்கு) ஒரு உத்தியோகத்தை சிருஷ்டித்து பொது ஜனங்களுடைய வரிப்பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டும் வருகின்றது. போறாக் குறைக்கு திருநெல்வேலி, நீலகிரி (ஒத்தை) ஆகிய சேர்மென்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி சேர்மனையே மறுபடியும் பொதுஜனங்கள் தெரிந்தெடுப்பார்கள்
என்பதில் நமக்கு சந்தேகமில்லை. இதனாலும் அரசாங்க ஸ்தல ஸ்தாபன இலாக்கா மற்றொரு தடவை பொது ஜனங்களால் அவமதிக்கப்பட்ட அவமானத்திற்கு ஆளாகலாம். இந்தக் காரியங்கள் நியாயத்தையும் நிர்வாக ஒழுங்கையும் ஆதாரமாகக் கொண்டு நடைபெற்றவைகளா அல்லது கக்ஷி - ஜாதி அபிமானம்- சுயநலம் ஆகியவைகளை லக்ஷியமாக கொண்டு நடை பெற்றவைகளா என்று பார்த்தால் நியாயத்தைவிட ககஷியும் ஜாதி அபிமானமே அதிகமாய் தாண்டவமாடி இருக்கிறது என்பது நமது அபிப்பராயம். ஆனால் நிர்வாகிகளிடம் (ஸ்தல ஸ்தாபன தலைவர்களிடம்) பல ஒழுங்குத் தவருதல்கள் இருந்திருக்கலாம் என்றாலும் அவ்வித ஒழுங்குத் தவருதல்களை விட பலமடங்கு அதிகமான ஒழுங்குத் தவருதல்கள் (நாணையத் தவரான குற்றங்கள்) செய்தவர்களையெல்லாம் சும்மா விட்டு விட்டு ஒருவர்.
இருவர் ஒழுங்குத் தவறுதல்கள் (அதுவும் சட்டத் தவருதல்கள்) செய்ததை மாத்திரம் கவனித்தால் அது வாதத்திற்கு சமாதானமாகுமே ஒழிய நியாயத்திற்குச் சமாதானமாகாது. ஆதலால்தான் ஸ்தல ஸ்தாபன இலாக்காவில் மேற்பார்வை கூட அரசாங்கத்தின் நேரடியான பார்வைக்குள் போய்விட வேண்டுமென்று விரும்புகின்றோம். ஏனெனில் ஸ்தல ஸ்தாபனங்கள் எப்படி சிலருடைய (செல்வவான்கள் படித்தவர்கள். ஆகியவர்களுடைய) நன்மைக்கு பயன்படுகின்னவோ அதுபோலவேதான் ஸ்தல ஸ்தாபன நிர்வாக இலாக்காவும் பிரபுக்கள், ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்தவர் ஆகியவர்களுடைய நன்மைக்காக இருந்து
வருகின்றது. இதுவரையில் இந்த இரண்டு துறையும் அரசாங்க நேரடி மேற்பார்வை, நேரடி நிர்வாகம் என்று சொல்லப்படுவதை விட ஏழை மக்களுக்கு, உழைப்பாளிகளுக்கு எவ்வித நன்மையும் அதிகமாய்ச் செய்துவிடவில்லை என்பதுடன் பல தீமைகளும் செய்யாமல் இருக்கவில்லை என்று விசனத்துடன் கூறி முடிக்கிறோம்
புரட்சி - தலையங்கம் - 03.06.1934
குடி அரசு (புரட்சி 1934(1) அஆ ப
ஜஸ்டிஸ் கட்சி
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் தோழர் பொப்லி ராஜா அவர்களும், தென்னிந்திய நல உரிமைச் சங்க அக்கிராசனர் தோழர் செட்டி நாட்டுக் குமாரராஜா அவர்களும் கக்ஷி சம்மந்தமான சில விஷயங்களைப் பற்றி யோசிப்பதற்காகவென்று இம்மாதம் 7, 8 தேதிகளில் மீட்டிங்குகள் கூட்ட ஏற்பாடு செய்திருப்பதாய் கட்சி அங்கத்தினர்களுக்குத் தனித்தனி அழைப்பு அனுப்பி இருக்கிறார்கள்.
அக்கட்சியானது அதாவது தென்னிந்திய பார்ப்பனரல்லாதார் கட்சியானது அரசியலிலும், சமூக இயலிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், வாழ்க்கைப் போட்டியில். சம சந்தர்ப்பம் இல்லாத மக்களுக்கும் விடுதலையும், சமத்துவமும் அளிப்பதற்காக என்று தோற்றுவிக்கப்பட்டது என்கின்ற உண்மை யாவருமறிந்ததாகும். அப்படிப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியானது இப்போது நாளடைவில் செல்வந்தர்களான முதலாளிமார்கள், ஜமீன்தார்கள் ஆகியவர்கள் ஆதிக்கத்திற்குள்ளாகி அவர்களது நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், பெருக்கிக் கொள்ளவுமான வழிகளுக்கே பயன்படக்கூடிய மார்க்கத்தில் திருப்பப்பட்டு வருகின்றது என்கின்ற விஷயம் பார்ப்பனரல்லாத மக்களில் பெரும்பான்மையோர் அறிந்ததாகும்.
ஆனாலும் அதை பழயபடி தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட
மக்கள் விடுதலைக்கும், சமத்துவத்துக்கும் திருப்ப முடியாது என்று சொல்லிவிடுவதற்கில்லை என்பது இன்னமும் நமது அபிப்பிராயம் பார்ப்பனரல்லாத சாதாரண மக்கள், அதாவது ஜமீன்தார், பிரபுக்கள், முதலாளிகள் அல்லாத மக்கள் ஒரு கட்டுப்பாடாய் இருந்து நெருக்குவார்களானால் அவர்கள் வழிக்கு வந்து கட்சியின் உண்மை நோக்கத்திற்கு உழைக்க முன்வந்தாலும் வரலாம். ஆகையால் கட்சியின். உண்மைத் தத்துவத்தில் அக்கரையுள்ள தோழர்கள் அந்தத் தேதிகளில் சென்னைக்கு வந்து தங்கள் அபிப்பிராயங்களை அதன் தலைவர்கள் என்போர்கள் அறியும்படி செய்ய வேணுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
இப்போது கூட்டம் கூடுவதன் நோக்கம் பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதற்காகவும், வரப்போகும்
183 ய... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
MLA. எலெக்ஷன் விஷயத்தைப் பற்றி யோசிப்பதற்காகவுமே முக்கியமாய் கூட்டப்படுவதாய் இருந்தாலும் பார்ப்பனர்களையும்
சேர்த்துக் கொண்டு செய்யப் போகும் வேலை என்ன? இந்திய சட்டசபையில் நமது கொள்கை என்ன? இதுவரை நாம் என்ன செய்து வந்திருக்கிறோம்? என்பவைகளையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆதலால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தவறாமல் சென்று தைரியமாய் தங்கள் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும்
புரட்சி - துணைத் தலையங்கம் - 03.06.1934
குடி அரசு (புரட்சி)-7994/]) அஆ 184
யாகப் புரட்டு
ஜீவகாருண்யம்
தலைவரவர்களே! தோழர்களே!
ஜீவகாருண்யத்தைப் பற்றி நான் பேச வந்திருப்பது உங்களில் பலருக்கு வேடிக்கையாகக் காணப்படலாம். ஏனெனில், நான் நீங்கள் பெரும்பாலும் கருதி இருக்கிற ஜீவகாருண்யத்தைச் சேர்ந்தவனல்ல என்று நீங்கள் கருதி இருப்பதேயாகும். ஜீவ காருண்யம் என்கின்ற வார்த்தைக்கு ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான அர்த்தம் கொண்டிருக்கிறார்கள். சிலர் மாம்சம் சாப்பிடாமல் இருந்தால் அதுவே பெரிய ஜீவகாருண்யமென்றும், மற்றப்படி ஜீவர்களுக்கு எவ்வித மன வருத்தத்தையும், உடல் வருத்தத்தையும் செய்தால் குற்றமில்லை என்றும் கருதி இருக்கிறார்கள்.
சிலர் ஜீவர்களை ஹிம்சைப்படுத்தாமல் இருந்தால் போதும் என்றும், மாம்சம் சாப்பிடுவதைப் பற்றிக் குற்றமில்லை என்றும் கருதி இருக்கிறார்கள்.
சிலர், சில ஜந்துக்களை மாத்திரம் இம்சைப்படுத்தக் கூடாதென்றும், மற்ற ஜந்துக்களைப் பற்றிக் கவலை இல்லை என்றும் கருதி இருக்கிறார்கள். ஜீவகாருண்யத்திற்கு இந்தப்படி எத்தனையோ விதமான கருத்துக்களும், தத்துவங்களும் இருக்கின்றன.
விவரமாய்ச் சொல்ல வேண்டுமானால் ஜீவகாருண்யம் என்பது ஒவ்வொரு தேசத்துக்கும், ஒவ்வொரு மதத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு விதமாய்க் கருதப்படுகின்றது
இந்துக்கள் என்பவர்கள் பசுவை வணங்குவார்கள். அதனிடத்தில் அளவுக்கு மீறிய மரியாதையும், ஜீவகாருண்யமும் காட்டுவார்கள் யாராவது பசுவைக் கொன்றால் - சாப்பிட்டால் அவர்களிடம் குறோதமும், வெறுப்பும் கொள்ளுவார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்துக்களுக்கு மகமதியர்கள் மீது வெறுப்பும் அசூசையும் இருந்து வருகின்றன. இதனாலேயே பல இடங்களில் இந்து முஸ்லீம் கலகங்களும் கக்ஷிகளும் உண்டாகின்றன. இந்துக்களிலேயே பறையர், சக்கிலியர் என்று அழைக்கப்படும் வகுப்பார், மாட்டு மாம்சம் உண்பதினாலேயே அவர்களைக் கீழ் ஜாதிக்காரர்கள் என்று கருதுவதாகவும் அதனாலேயே அவர்களைத் தொடுவதற்கு அஞ்சுவதாகவும் சொல்லப்படுகின்றன. இதை அனுசரித்து பல சாஸ்திரங்களும் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.
185 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஆனால் இப்படிப்பட்ட இந்துக்கள் பசுமாடுகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்று பார்த்தால் வண்டியிலும் உழவிலும், ஏத்தத்திலும், செக்கிலும் கட்டி அதை சாகும் வரை உபத்திரவிக்கிறார்கள். அதை நல்ல காளைப் பருவத்தில் கட்டிப் போட்டு விதர்களை நசுக்கி கொட்டாப்பிடியால் தட்டிக் கரைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். அதன் பாலை அதன் கன்றுக்குக் கொடுக்காமல் அதற்கு வெறும் புல்லைப் போட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடுகிறார்கள். இப்படி அர்த்தமற்ற ஜீவகாருண்யம் பலப்பல ஜீவர்கள் பெயரால் எத்தனையோ விதத்தில். உலகத்தில் வழங்குகின்றன. பக்ஷி, மிருகம், ஊர்வன ஆகிய விஷயங்களில் காட்டப்படும் ஜீவகாருண்யத்தில் ஒரு சிறு பாகம்கூட மனித ஜீவனிடத்தில் மக்கள் காட்டுவது அருமை என்றே சொல்லலாம்
மக்கள் சமூக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள்? எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள்? என்று பார்த்தால் நடைமுறையில் உள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள் தனமானதென்றே சொல்லலாம்
நான் ஏன் வந்தேன்?
நான் ஏன் இங்கு இந்த ஜீவகாருண்யக் கூட்டத்திற்கு வந்தேன்.
என்று சிலர் கேட்கலாம். உண்மையிலேயே இங்கு கடலாடியில் நடக்கும் யாகத்தில் ஏதோ சில ஐந்தோ - பத்தோ ஆடுகள் கொல்லப்படுவதை நான் பிரமாதமாகக் கருதி இங்கு வரவில்லை. லக்ஷக்கணக்கான ஆடுகள் மாடுகள் மற்றும் சில ஜீவர்கள் தினமும் கொல்லப்படுவது எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட கொலைகளை என் போன்றவர்களால். நிறுத்துவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அப்படி இருக்க,
பின் ஏன் நான் இங்கு வந்தேனென்றால் யாகத்தின் புரட்டையும், அது செய்யப்படுவதின் உள் எண்ணத்தையும் அதனால் ஏற்படும் பலன்களையும் “உயர்ந்த ஜாதியார் அஹிம்சா தர்மமுள்ள அந்தணர்” என்று கர்வமுடன் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டவும் கொல்லப்படும் பிராணிகள் யாகத்தின் பேரால் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பதையும் ஜனங்களுக்கு அறிவித்து இப்படிப்பட்ட கொடுமையான சித்திரவதை இனி நிகழாமல் இருக்கும்படி செய்ய சர்க்காரைத் தூண்டுவதற்காகவுமே
இங்கு வந்திருக்கிறேன். இவற்றில் என் அபிப்பிராயம் தவறுதலாய் இருந்தாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் நான் உண்மையானதென்று அறிந்ததை எவ்வித விருப்பு வெறுப்பு இல்லாமல் பொது நன்மையை உத்தேசித்து சொல்லுகின்றேன். உங்களுக்கு சரியென்று பட்டதை எடுத்துக்கொண்டு அதற்கும் உங்களாலான உதவி செய்யுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
குடி அரசு (புரட்சி)-1994/]) அ 156
கொலைக் கொடுமை
முதலில் கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களில் சிலருக்காவது தெரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். நான் அறிந்த மட்டில் ஆட்டை கால்களைக் கட்டிக் கீழே தள்ளி கொம்பைப் பிடித்து ஒருவர் அமிழ்த்துக் கொண்டு வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க ஒருவர் நன்றாக மூச்சுவிடாமல் கட்டி சத்தம் போடாமல் செய்து ஒருவர் விதர்களை கிட்டி போட்டு நசுக்க, மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்து கிழித்து அதன் சிற்சில உறுப்புகளை தனித் தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப்படுகிறதாம். இது சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக்கூடிய ஜாதியார் செய்யக்கூடியதா? அஹிம்சைக்காரருக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள் மேல் ஜாதிக்காரர்களா? இவர்களுக்குப் பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா? மற்றவர்களைப் பார்த்து கீழ் ஜாதியார் என்றும், ஜீவகாருண்யமில்லாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் பாபிகள் என்றும், பாதகர்களென்றும் அழைக்க இவர்களுக்கு உரிமை உண்டா? யோசித்துப் பாருங்கள். ஆடு கோழியை தலைகீழாகப் பிடிப்பதையும், தர தரவென்று இழுப்பதையும் ஜீவஹிம்சை என்று சட்டஞ்செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார் இவர்களை என்ன செய்ய வேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதை தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள். இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், கதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டு விட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதிதானே மனிதர்களுக்கும் ஏற்படும். மத சம்மந்தத்தில் அரசாங்கம் நுழைவதில்லை என்று சொல்லி அரசாங்கம் சலபமாய் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நாளைக்கு நரமேதயாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைபாதகம் செய்தால் மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்குமா? அதுபோலவே இப்போது கருதி இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சித்திரவதைக் கொலைகளையும், ஹிம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக்கூடாது? பார்ப்பனர்களுக்குப் பயந்தோ, மதத்திற்குப் பயந்தோ தாங்கள் சும்மா இருப்பதாக சொல்லுவார்களானால் இப்படிப்பட்ட கொலையும், சித்திரவதையும் தங்கள் மதத்திற்கு விரோதம் என்று கருதி அதற்காக வேதனைப்படும் ஜயின மதத்தினுடையவும், ஐயினர்களுடையவும் கொள்கையும், மரியாதையும், உணர்ச்சியும் காப்பாற்றப்பட வேண்டாமா என்று கேள்க்கின்றேன்.
இராமாயணம்
தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும்போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது
157 யப... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படுங் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள். இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்த சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமே யாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத்தானே கொல்லப்பட்டிருக்
கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார்தான் துணியமாட்டார்கள்? யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயர்ச்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?
நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆக்ஷி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம்.
சக்தியும் ஆக்ஷி உரிமையும் இருக்குமானால் நாம் தாடகையைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டது மல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்துவிட்டார் என்றும் மிருகங்களையும், பக்ஷிகளையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொருத்தமற்றதும் போக்கிரித்தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள். இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்யம் காரணமாய் ஏற்பட்ட ஆரியர் திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர்களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதற்காக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும் ராம லக்ஷ்மணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட - அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
அக்கதையில் மிருகங்களையும் ஜீவர்களையும் கொல்லும் விஷயங்களிலும், மது மாம்சம் சாப்பிடும் விஷயங்களிலும், சூதுவாது செய்த விஷயங்களிலும் பெண்களை இழிவாய் நடத்திக் கொடுமைப் படுத்தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம லக்ஷ்மணக் கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பதுமல்லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள். அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம லக்ஷ்மணாள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்துவிட்டார்கள். திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்துவிட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராக்ஷதனாம்; ஒருவன் (விபூஷணன்) தேவகணத்தைச் சேர்ந்த(ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப்
குடி அரசு (புரட்சி)- 194) — 19
பாருங்கள். ஒரு பெண்ணின் மூக்கையும் முலையையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்டபடி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகியவர்களின் யோக்கியதைகளை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித்தனத்தையும் எண்ணிப் பாருங்கள்
புண்ணியம், சொர்க்கம்
இது நிற்க, இந்த யாகங்கள் புண்ணிய காரியங்களாம். சுவர்க்கத்திற்குக் காரணமானவைகளாம். புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களை சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாபத்துக்கும் நரகத்துக்கும் காரணமான. காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக் கட்டிப் போட்டு வாயில் மண்ணை அடைத்து விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று போட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்துவிடும்போல் இருக்கிறது. வேண்டுமானால் சில மந்திரங்களையும் சொல்லிவிடலாம். இதில் நமக்கு இரண்டு வித லாபம் போலும் சொர்க்கம் நரகம் என்பவைகள் சோம்பேறிகளின் வயிற்றுப் பிழைப்பு சாதனங்கள் என்று பல தடவை நான் சொல்லி வந்திருக்கிறேன். பாடுபட்டு உழைத்தவன் பொருளைக் கையைத் திருகிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக சொர்க்க நரகங்கள் என்னும் பூச்சாண்டிகளைக் காட்டி பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றன. இப்படிப்பட்ட சொர்க்க நரகத்துக்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால் மனிதனின் மூர்க்க சுவாபமும் பழிவாங்குந் தன்மையும் சொர்க்க நரகம் என்னும் வார்த்தைகளால் கற்பனைகளால் பிரதிபலிக்கின்றது என்பதேயாகும்.
யாகத்தின் கருத்து
இப்படிப்பட்ட சொர்க்க நரகத்தைப் பிரசாரம் செய்யவே யாகங்கள் முதலியன செய்யப்படுகின்றன. யாகத்தில் பிராமணர்களுக்கு நம்பிக்கை இல்லையென்பதே எனது அபிப்பிராயம். மற்றவர்களை மிரட்டவும் ஏமாற்றவும் சிலர் செல்வம் சேர்த்து வயிறு பிளைக்கவுமே இப்போது யாகங்கள் செய்யப்படுகின்றன.
யாக சம்பந்தமான வேத சாஸ்திர ஆதாரங்கள் நமக்குப் பொருத்தமானவைகளாகுமா? நாம் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா? இப்படிப்பட்ட கொடுமைக்கும், கொலை பாதகத்துக்கும், சித்திரவதைக்கும் ஒரு கடவுள் சொர்க்கத்தைக் கொடுப்பதாய் இருந்தால் கடவுளின். தன்மையாகக் கூறப்படும் அன்பு, கருணை என்று சொல்லுவது 189 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
உண்மையாய் இருக்க முடியுமா? கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு ஜீவனை மற்றொரு ஜீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகின்றார் என்றால் ஜீவர்களையெல்லாம் கடவுள் உற்பத்தி செய்தார் என்பது உண்மையாயிருக்க முடியுமா? கடவுள் பேராலேயே இப்பேர்ப்பட்ட காரியங்கள் நடப்பதை ஒரு கடவுளோ, அரைக் கடவுளோ, அணுவளவு கடவுளோ இருந்தால் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா? அல்லது கடவுளுக்கு இது தெரியாது என்று சொல்லி விட முடியுமா? இவைகளெல்லாம் பாமர மக்களை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிப் பிரசாரமேயொழிய வேறில்லை. இப்படிப்பட்ட யாகங்களுக்கு சங்கராச்சாரி சுவாமியார் என்பவரும் அனுமதியளிக்கிறாராம்; பணம் கொடுக்கிறாராம். இதிலிருந்து சங்கராச்சாரிகள் என்பவர்கள் யோக்கியதைகளையும் உணர்ந்து கொள்ளுங்கள்.
யாகம் ஏன் செய்யப்படுகிறது?
இந்த யாகங்கள் இப்பொழுது ஏன் செய்யப்படுகின்றன? என்பது உங்களுக்குத் தெரியுமா? சனாதன தர்மங்கள் கெட்டுப் போய்விட்டனவாம். எதனால் என்று கேட்பீர்களானால் சாரதா சட்டம் செய்யப்பட்டுவிட்டதாம். தீண்டாமை ஒழிப்புச் சட்டமும், கோவில் பிரவேசச் சட்டமும் இப்போது இந்திய சட்டசபையில் இருக்கிறதாம். அவை நிறைவேறிவிடும் பக்ஷத்தில் சனாதன தர்மத்துக்குப் பெரிய ஆபத்து வந்து விடுமாம் ஆதலால் யாகங்கள் செய்வதன் மூலம் அவற்றைத் தடுத்து சனாதன தர்மத்தை நிலை நாட்ட வேண்டுமாம். ஆகவே சனாதன தர்மங்கள் என்பவைகள் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பார்ப்பனர் ஒழிந்த மற்ற மனித சமூகத்துக்கு எவ்வளவு மோசமானதும் கெடுதியானதும் சுயமரியாதைக்கு விரோதமானதுமான காரியம் என்பதை நான் உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
இதிலிருந்து பார்ப்பனப் புரட்டுகளை நீங்கள் தெரிந்து கொள்ளக் கூடும் என்று நினைக்கிறேன். சில பார்ப்பனர்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதும் சில பார்ப்பனர்கள் கோயில் பிரவேசம் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பதும், மற்ற பார்ப்பன குருமார்கள், மடாதிபதிகள், ஜாதித் தலைவர்கள் ஆகிய எல்லோரும் சேர்ந்து சட்டம் ஒழியவும், பிரயத்தனப்படுபவர்கள் ஒழியவும் யாகம் செய்வதும் யாகத்தை ஆதரிப்பதுமாயிருந்தால் இதற்கு என்ன அர்த்தம் சொல்வது என்று உங்களையே கேட்கின்றேன். நான் இங்கு வரப்போவதாய்ப் பத்திரிகையில் தெரிந்தவுடன், இரண்டொரு பார்ப்பன நண்பர்கள் என்னைப் பரிகாசம் செய்தார்கள். அது என்னவென்றால், “நீங்கள் இப்பொழுது உலக மக்கள் பொது விஷயங்களில் சம்மந்தம் வைத்துக் கொண்டிருக்கும் போது எங்கோ இரண்டொரு பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏதோ ஒரு வியாபாரமாய் யாகம் செய்து பிழைக்கிற
குடி அரசு (புரட்சி)- 794) — 0
காரியத்தைப் பிரமாதமாய்க் கருதி அதற்காக நீங்கள் போகலாமா?” என்று கேட்டார்கள். இந்த யாகங்களை யாரோ இரண்டொரு பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் என்று எண்ணிவிட முடியுமா? இதற்கு எல்லாப் பார்ப்பனரும் பணம் கொடுத்திருக்கிறார்கள். சங்கராச்சாரி முதலியவர்கள் ஆதரவளிக்கிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு யாகம் விரோதமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதைய யாகத்தில் அய்யங்கார் பார்ப்பனர்களும் சில மாத்வப் பார்ப்பனர்களும்கூட சேர்ந்து ஆதரவளித்தும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அப்படி இருக்க இரண்டொரு பார்ப்பனர் என்று எப்படி சொல்லிவிட முடியும்?
அப்படியானால் இவ்வளவு கூச்சல் ஏற்பட்ட பிறகாவது சில முக்கியமான பார்ப்பனர்கள் ஏன் ஒன்று கூடி ஒரு அறிக்கையை வெளிப்படுத்தக் கூடாது. “இந்த யாகம் பார்ப்பன சமூகத்தின் சார்பாகவோ: மதத்தின் தத்துவப் பிரகாரமோ நடப்பதல்ல. நாங்கள் அதை ஆதரிப்பதில்லை என்பதோடு வெறுக்கவும் செய்கிறோம்” என்று தோழர்கள் மகாகனம் சாஸ்திரியாரும், சர். சிவசாமி அய்யரும், சர்.சி.பி ராமசாமி அய்யரும், டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியாரும், சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரும் ஒரு அறிக்கை வெளியிடட்டுமே? இவர்களெல்லாம் தங்களைப் பெரிய சீர்திருத்தவாதிகள் என்றும், தாங்களே இந்திய மக்களின் பிரதிநிதிகள் என்றும், எல்லா விஷயங்களுக்கும் தாங்களே அபிப்பிராயம் கொடுப்பவர்கள் என்றும் தாராளமாக விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்ததுடன் போதிய விளம்பரமும் பெற்றிருக்கிறார்கள். ஏன் ? இவர்கள் வாய்திறக்கக் கூடாது என்று கேட்கிறேன். காங்கிரஸ் பார்ப்பனர்களாவது ஏன் அறிக்கை வெளியிடக்கூடாது. தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் முந்திரிக் கொட்டை போல் உலக விஷயங்களுக்கெல்லாம் முன்னால் வந்து அபிப்பிராயங் கொடுப்பவர் இதற்கு ஏன் வாய் மூடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கின்றேன். தீண்டாமை விலக்கு மசோதாவையும், கோவில் பிரவேச மசோதாவையும் காங்கிரசின் சார்புடையவையல்லவா என்றும், தோழர் காந்தியார் இம்மசோதாக்கள் நிறைவேற வேண்டி கவலை எடுத்துக் கொண்டு இந்திய சட்டசபை அங்கத்தினர்களிடம் பிரசாரம் செய்து ஆதரவு தேடி வருகிறார்களா இல்லையா என்றும் கேட்கின்றேன். இப்படிப்பட்ட காங்கிரஸ் அனுமதி பெற்ற காங்கிரஸ் சார்பான மசோதாக்களை ஒழிப்பதற்கு யாகம் செய்தால், காங்கிரஸ்வாதியான தோழர் சத்தியமூர்த்தியின் கடமை என்ன என்று கேட்கின்றோம்?
தோழர் சத்தியமூர்த்தி இந்திய சட்ட சபைத் தேர்தலுக்கு தஞ்சை, திருச்சி ஜில்லா சார்பாக நிற்கப்போவதாய் பிரஸ்தாபம். தஞ்சை ஜில்லா பார்ப்பனர்கள் வருணாச்சிரமக்காரர்கள். அவர்கள் தீண்டாமை விலக்கு ¥ மரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மசோதாவுக்கும் கோவில் பிரவேச மசோதாவுக்கும் எதிராகவும், சாரதா சட்டத்தை ஒழிப்பதற்கும் தகுதி உடையவர்களையும், அந்தப்படி செய்வதாக வாக்களிப்பவர்களையுந்தான் தேர்ந்தெடுப்பவர்கள். அப்படி இருக்க தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் அந்தத் தொகுதியில் நிற்பதென்றால் அவர் எப்படிப்பட்டவராய் இருக்கக் கூடும் என்று யோசித்துப் பாருங்கள். தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இந்த இரண்டு மூன்று மசோதாக்களையும் ஆதரிப்பதாக இதுவரை எங்கும் பிரஸ்தாபிக்கவே இல்லை. அன்றியும் தீண்டாமை விலக்கு, கோவில் பிரவேசம் ஆகிய காரியங்களுக்கு சட்டம் செய்யக்கூடாது என்று தஞ்சை, திருச்சி ஜில்லாவில் பேசியிருக்கிறார். இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தான் காங்கிரஸ் தலைவர்கள் மாத்திரமல்லாமல் தோழர் காந்தியால் பாராட்டப்பட்டவர்களுமாய் இருக்கிறார்கள். இவர்களைப் போன்ற சில பார்ப்பனரல்லாதார்களும் இருக்கிறார்கள். தோழர் முத்துரங்க முதலியார் கூட்டமும் இப்படிப்பட்டதே
யாகும். இவர் இந்திய சட்டசபை போக வேண்டுமாம். இதுமாத்திரமா? தோழர் சீர்காழி சிதம்பரநாத முதலியார், கோவை வெள்ளியங்கிரிக் கவுண்டர் ஆகியவர்கள் சனாதன தர்மத்தை ஆதரித்ததுடன் வைசிராய் பிரபுவைக் காண சனாதன தர்ம பார்ப்பனர்களுடன் டெபுடேஷன். சென்றார்கள் என்று நான் சமீபத்தில் அறிந்தேன். ஆகவே காங்கிரஸ் யோக்கியதையைப்பற்றி நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
தேர்தல் தந்திரம் இந்த யாகத்தை நான் ஒரு தேர்தல் தந்திரமாகவே நினைக்கின்றேன். சனாதன தர்மம் நிலை நிறுத்தப்பட யாகம் செய்தால் அந்த சனாதன தர்மத்துக்கு விரோதமானவர்களுக்குப் பாவமும் கெடுதியும் ஏற்படக்கூடும் என்று பாமர மக்கள் பயப்படக்கூடும் அப்போது பெரும்பாலும் பகுத்தறிவற்ற பாமர ஜனங்களும், தோழர்கள் சிதம்பரநாத முதலியார், வெள்ளியங்கிரிக் கவுண்டர், முத்துரங்க முதலியார் போன்ற செல்வவான்கள் என்பவர்களும், சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவேன் என்பவர்களுக்கே ஓட்டுக் கொடுக்கக் கூடும் என்கின்ற எண்ணத்தின் மீது பாமர மக்களைப் பயப்படுத்தவே இந்த யாகப் பூச்சாண்டி காட்டப்படுகின்றது. யாகத்திற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை. நான் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் இருக்கும் போது எனக்கும் என் மனைவிக்கும் மற்றும் எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் விரோதமாக யாகம் செய்யப்பட்ட இந்த யாகங்களுக்கு மேல் ஜாதிக்காரர்கள், பணக்காரர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் அரசாங்க தேவஸ்தான இலாக்கா ஆகியவர்கள் பலவித உதவி
செய்தார்கள். அது எங்களைக் கொல்ல முடியவில்லை . அது மாத்திரமல்லாமல் அந்த சமஸ்தான ராஜாவை சாகாமல் காப்பாற்றவும் முடியவில்லை. அந்த யாகத்தின் போது நான் 6 மாதம் தண்டனை
குடி அரசு (புரட்சி அட ம
பெற்று திருவனந்தபுரம் சென்டிரல் ஜெயிலில் இருந்தேன். அதே சமயத்தில் அத்தேச அரசர் இறந்து போனார். அதனால் நான் தண்டனை காலம் பூராவும் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டுவிட்டேன். யாகம் முடிந்தும் கூட வைக்கம் சத்தியாக்கிரக விஷயம் வைக்கத்தைப் பொருத்தவரை வெற்றி பெற்றுவிட்டது. ஆகையால் யாகத்துக்கு ஏதோ
சக்தி இருப்பதாகவோ அது நம்மை ஏதாவது செய்து விடுமென்றோ யாரும் பயப்பட்டு விடாதீர்கள். இந்த தந்திரம் எல்லாம் உழைப்பாளிகளின். உழைப்பை சோம்பேறிகள் சாப்பிடுவதற்காகவே ஒழிய வேறில்லை
உழைத்தவன் உழைப்பின் பயனை அடைய வேண்டுமானால் இப்படி யாகம், சாஸ்திரம், வேதம், மோக்ஷம், கர்மம், மூன் ஜன்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது எத்தனையோ வருஷ காலமாய் யாகம் செய்யப்பட்டு வருவதாய் அறிகிறோம். உலகத்தில் என்ன அக்கிரமம் மாறி இருக்கிறது? என்ன கொடுமை நீங்கியிருக்கின்றது? யாகம் எக்கியம் கிரமமாய் செய்யப்பட்டு வந்த தெய்வீக அரசர்களான ராமன், அரிச்சந்திரன் ஆகியவர்கள் காலத்தில் உள்ள அக்கிரமம், அயோக்கியத்தனம், கொலை பாதகம் எல்லாம் இன்னும் இருந்துதான் வருகின்றன. எவ்வித மாறுதலும் ஏற்பட்டு விடவில்லை. ஆகையால் நீங்கள் இப்படிப்பட்ட மிரட்டுதல்களைக் கண்டு பயந்துவிடாதீர்கள்! ஏமாந்து விடாதீர்கள்!!
குறிப்பு: ஆரணிக்குப் பக்கத்தில் கடலாடி என்னும் கிராமத்தில் சென்னை ஜீவரக்ஷா பிரசார சபையாரால் 03-06-1934இல் பார்ப்பனர்கள் நடத்திய யாகத்தைக் கண்டித்து நடத்தப் பெற்ற யாகக் கண்டன. கூட்டத்தில் திறா.வி.கலியாண சுந்தரமுதலியார் தலைமையில் ஆற்றிய சொற்பொழிவு.
புரட்சி - சொற்பொழிவு - 10.06.1934
1935 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சென்னையில் ஐஸ்டிஸ் கட்சிக்
கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே!
தலைவரவர்கள் தெரிவித்த விஷயங்கள் இயக்க நலனைக் கருதி அவசியம் கவனிக்கத்தக்கதாகும். எல்லா விஷயத்தையும்விட நமது கொள்கை என்ன? திட்டம் என்ன? என்பதைப் பொது ஜனங்கள் அறியும்படி செய்ய வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்றால் 154000 ரூபாய் சம்பளத்துக்கும்
மந்திரி பதவிக்கும் ஊர் சிரிக்கச் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் என்று இனியும் பாமர ஜனங்கள் சொல்லும்படி நாம் விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. காங்கிரசுக்காரர்கள் என்பவர்களின் உள். எண்ணமும், நாணையமும் எப்படி இருந்தாலும் அவர்கள் ஏதோ இரண்டொரு கொள்கைகளைச் சொல்லி, அதைப் பெரிதாக்கிக் காட்டி அதற்காக அடியும் உதையும், நஷ்டமும் கஷ்டமும் சிறைவாசமும் பெற்றவர்கள் என்கின்ற பெயரைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு இப்பொழுது திடீரென்று போட்டி போடுவதென்றால் அதுவும் ஒரு விளக்கமான, யாவருக்கும் தெரியும்படியான ஒரு கொள்கையும், திட்டமும் இல்லாமல் போட்டி போடுவதென்றால் சுலபமான காரியமல்ல என்பதே எனது அபிப்பிராயம். “கட்சிக்குக் கொள்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணமும், அதிகாரமும், செல்வாக்கும் இருந்தால், எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம்” என்கின்ற தைரியம் சிலருக்கு உண்டு என்பதையும், அதுவும் ஒரு அளவுக்கு உண்மையென்பதையும்
நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் அந்த தைரியம் தனிப்பட்ட வர்களின் நன்மைக்குப் பயன்படுமே தவிர ஒரு இயக்கத்துக்கு - பொதுஜன நன்மைக்குப் பயன்படாது. சமீபகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின்
பேரால் அதிகாரத்திலும், பதவியிலும் இருக்கிறவர்கள் கட்சி கொள்கை விஷயத்தில் போதிய லக்ஷியம் எடுத்துக் கொள்ளவில்லையென்றும், தங்கள். சுயநலத்தைவிட மற்றொன்றையும் சிறிதும் கவனிக்கவில்லை என்றும், கட்சிக் கொள்கைக்கு விரோதமாகக்கூட பல காரியங்கள் செய்யப்பட்டு விட்டன
என்றும், கட்சி ஜனங்களுக்குள்ளாகவே சொல்லிக் கொள்ளப்படுகிறதுடன்
மற்றும் பலவிதமான புகார்களும் சொல்லிக் கொள்ளப்படுகின்றன.
குடி அரசு (புரட்சி)-1994(]) ௨ 19
ஆனால் இப்படிச் சொல்லிக்கொள்ளப்படுவதற்கும் புகார்களுக்கும் ஆதாரமில்லை என்று கூறலாம். ஆதாரமில்லை என்பதைப் பொது ஜனங்களுக்கு மெய்ப்பிக்க வேண்டாமா? மற்றும் நமது எதிரிகள் இப்படிப்பட்ட விஷயங்களைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாமா? நமது சொந்த செல்வத்தையும், செல்வாக்கையுமே எல்லாவற்றிற்குமே சமாதானமாக ஆக்கிக் கொள்ளலாம் என்று சிலர் நினைத்தால் கட்சியில் உள்ள செல்வமும், செல்வாக்கும் இல்லாத மக்களின் கதி என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இவர்களுக்கு ஒரு கொள்கையோ, இவர்கள் மீது கூறப்படும் புகார்களுக்கும், குற்றங்களுக்கும் பதில் கூறுவதற்கு தகுந்த உண்மையான ஆதாரங்களோ இல்லாவிட்டால் இவர்களுக்கெல்லாம் கட்சியில் இடமோ கட்சியின் பேரால் வெற்றியோ எப்படி கிடைக்கும்?
ஜஸ்டிஸ் கட்சி என்றால் ஜமீன்தார்கள், முதலாளிமார்கள் கட்சியே தவிர பொது மக்கள் கட்சி அல்ல என்று சொல்லப்படுவது இப்போது மிக மிக சகஜமாகிவிட்டது. இதை நாம் பொய்யாக்கிக் காட்டாவிட்டால் கட்சியில் உள்ள உண்மை உழைப்பாளிகளுக்கு இதைவிட வேறு அவமானம் வேண்டியதில்லை. ஆதலால் தகுந்த வேலைத் திட்டமுறைகளை ஏற்படுத்திப் பாமர ஜனங்களுக்கு நன்றாய் பிரசாரம் செய்து, நமது எதிரிகளின் விஷமப் பிரசாரத்தை தகர்ப்பதுடன் ஏழைப் பொது மக்களுக்கு பயன்படத்தக்க முறையில் உழைத்தாக வேண்டும். வெறும் ஸ்தாபனங்கள் அமைப்பதால் ஒரு பயனும் ஏற்பட்டு விடாது ஸ்தாபனங்கள் பெரிதும் சுயநலக்காரர்களின் விளம்பரத்துக்கு ஒரு சாதனமாகும். உழைப்பும் வேலை செய்து காட்டுவதுமேதான் நமது எதிரிகளைத் தோற்கடித்து நமக்கு நல்ல வெற்றியைக் கொடுக்கும்
இந்திய சட்டசபைத் தேர்தல்
அடுத்தபடியாக இந்திய சட்டசபைத் தேர்தலைப் பற்றி பேசப்பட்டது. இந்த சமயத்தில் இது ஒரு முக்கியமான விஷயம் என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். நமது கட்சிக்கு ஒரு கெட்ட பெயருண்டு. அதைப் பொய்யென்று மறுக்கவும் என்னிடம் போதிய ஆதாரமில்லை. என்னவென்றால் “ஜஸ்டிஸ் ககஷிக்காரருடைய நாட்டமெல்லாம் மாகாண சட்டசபையிலேயே ஒழிய, இந்திய சட்டசபையைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை" என்று சொல்லப்படுவதாகும். இதற்கு என்னவிதமான உள் எண்ணம் கற்பிக்கப்படுகின்றதென்றால் “மாகாண கவுன்சிலில் இருந்தால் மந்திரி வேலை பெறலாம் அல்லது மந்திரிகளுக்குத் துணை புரிந்து நமது வாழ்க்கை நலத்துக்கு ஏதாவது பயன் 195 பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
அடையலாம்” என்று கருதி இப்படி அலட்சியமாய் இருப்பதாக உள். எண்ணம் கற்பிக்கப்படுகிறது. இந்தப்படி சொல்லுபவர்களுக்கு அநுகூலமாகவே சம்பவங்களும் இருந்து வருகின்றன.
இதன் பயனாகவே தென்னிந்தியாவைப் பற்றியும், தென்னிந்திய மக்களைப் பற்றியும் வடஇந்தியர்கள் கேவலமாய் மதிக்கும்படியும், தென்னிந்தியப் பார்ப்பனர்கள்தான் தென்னிந்திய பொதுநல ஊழியர்கள்.
என்றும் அவர்களே தேசபக்தர்கள் என்றும் கருதும்படி செய்யப்பட்டதுடன், பார்ப்பனரல்லாதார் என்றால் தேசத் துரோகிகள் என்றும், அன்னிய ஆட்சிக்கும் அதன் கொடுங்கோன் தன்மை என்பதற்கும் துணைபுரிந்து சுய தன்நலம் தேடுகிறவர்கள் என்றும் கருதும்படியாக நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பலரால் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டுவந்தது. பல காரணங்களால் சிலர் உழைத்து வந்ததின் பயனாக நம்மவர்களில் சிலர். சிறப்பாகவும், குறிப்பாகவும் தோழர்கள் ஆர்.கே. ஷண்முகம், ஏ. இராமசாமி ஆகியவர்கள் இந்திய சட்டசபைக்குப் போக நேர்ந்ததில் அவர்களுக்கும்
மற்றும் தென்னிந்திய பார்ப்பனரல்லாத சமூகத்துக்கும் எவ்வளவு அந்தஸ்தும், பெருமையும் ஏற்பட்டது என்று யோசித்துப் பாருங்கள். தோற்றுப் போனவர்கள் கூப்பாடு போடுவதைப் பற்றியும், அப்படிப்பட்டவர்கள் அழுவதைப் பற்றியும் நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. அது போலவே இன்னும் சிலர் இந்திய சட்டசபைக்கு நம்மவர்கள் போக நேர்ந்தால் தேசத்துரோகிகள் யார்? தேசீய வியாபாரத்தில் வயிறு வளர்ப்பவர்கள் யார் என்பதை உலகம் அறியச் செய்துவிடலாம். தோழர் ஷண்முகத்தைப் போலவே எல்லாத் தொகுதிக்கும் ஆள் கிடைக்குமா என்று கேட்பீர்கள். அதைப்பற்றி எனக்கு லக்ஷியமில்லை. நமது நன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் பிறவி எதிரிகளாய் இருப்பவர்களை நமது பிரதிநிதிகளாய் தெரிந்தெடுத்து வருகிறோம் என்கின்ற இழிவும், முட்டாள்தனமுமாவது நமக்கு இல்லாமல் போகுமல்லவா? அதோடு மாத்திரமல்லாமல், நமது எதிரிகள் இந்திய சட்டசபைக்குப் போய் நமக்குக் கெடுதி செய்யும் காரியமாவது நிறுத்தப்பட்டதாக ஆகுமா? இல்லையா? தீண்டாமை விலக்குக்கு விரோதமாக இன்று இந்திய சட்டசபையில் இருப்பவர்கள் யார் என்று யோசித்துப் பாருங்கள். பார்ப்பனரல்லாத கட்சிக்கு நாங்கள்தான் தூண்கள் என்று பெருமைபேசி பயன்பெற்று வரும் தஞ்சை-திருச்சி ஜில்லா தொகுதியில் வெற்றி பெற்றுச் சென்ற பச்சை வர்ணாச்சிரம வாதியா? அல்லவா? என்று கேட்கின்றேன். இப்படிப்பட்ட நிலையில் இனியும் நமக்கு அப்படிப்பட்ட இழிவும், சங்கடமும் வந்து சேராமல். இருப்பதற்கு நாம் அந்த தேர்தலில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். அத்தொகுதிக்கு கட்சியின் பேரால் பணம் வசூலித்துக் கொடுத்தாவது
குடி அரசு (புரட்சி)-1994/]) அ 19
தக்க அபேக்ஷகர்களை நாம் தெரிந்தெடுக்கச் செய்ய வேண்டும்
இவ்விஷயத்தில் முன் போல் இனி அலட்சியமாய் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூற ஆசைப்படுகிறேன்.
பார்ப்பனர் சேர்க்கை
அடுத்தபடியாக இக்கூட்டத்தில் பேசவேண்டியது, பார்ப்பனர்களை தென்இந்திய நலஉரிமைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளலாமா என்னும்
பிரச்சினையாகும். இதுவே இக்கூட்டத்திற்கு முக்கிய பிரச்சினையாக கருதப்படுகின்றது என்று நினைக்கிறேன். இவ்விஷயம் நமது கட்சியில்
சுமார் 8,10 வருஷங்களாய் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவது யாவரும் அறிந்ததே. ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த 7,8 வருஷகாலமாகவே நான் இதை ஆக்ஷ்பித்து வந்திருக்கிறேன். எந்த முறையில் என்றால், பொதுவாழ்வில் பார்ப்பனர்களுடன் கலந்து உழைத்துப் பார்த்து அனுபோகம் பெற்று வந்தவன் என்கின்ற முறையில் ஆகேபித்து வந்திருக்கிறேன். என்ன என்ன காரணங்களைக் கொண்டு என்ன என்ன ஆதாரங்களைக் கூறி ஆக்ஷேபித்து வந்தேனோ அவற்றில்
ஒரு சிறிதும் இன்று மாற்றமடையவில்லை. அப்போதைய அபிப்பிராயங்களை
மாற்றிக் கொள்ள இப்போது பார்ப்பனர்களிடமிருந்து ஒரு மாறுதலையும்
நான் காணமுடியவில்லை. ஆதலால் அந்த அபிப்பிராயம் இன்னமும் எனக்கு பலமாகவே இருக்கிறது. ஆனால் ஒரு மாறுதல் மாத்திரம் ஏற்பட்டுவிட்டதை நான் என் சொந்த ஹோதாவில் தெரிவித்துக் கொள்கிறேன். அது என் தோழர்களையோ, எனது கூட்டு வேலைக்காரர்களையோ யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் சொல்லுகிறேன். அஃதென்னவென்றால், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முன்னணியில் இருந்து அக்கட்சிக்காக வேலை செய்யும் செளகரியம் இப்போது எனக்கு இல்லை. கட்சிக்காக அல்லது கட்சியின் பேரால் கவலை கொண்டு இன்று முன்னணியில் இருந்து வேலைசெய்யும் தலைவர்கள் அல்லது பிரமுகர்கள் கட்சி நன்மையை உத்தேசித்து என்று சொல்லி ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவார்களானால் நான் போய் குறுக்கிட்டு அதை ஆக்ஷ்பித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கின்ற நிலையில் இருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு தடவையும் என்னாலேயே ஆக்ஷ்பிக்கப்பட்டு அவ்வெண்ணம் நிறைவேற்றப்பட முடியாமல் போய்விட்டது என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஒரு அளவுக்கு
அதன் பலாபலன்களுக்கு நானும் பொறுப்பாளியாகவும் அனுபவிக் கிறவனாகவும் இருந்தேன் எனக் கருதினேன். இப்போதைய எனது நிலைமை அப்பயனுக்கும் அனுபவத்திற்கும் முழு பொருப்பாளியாக இருக்க முடியாததாய் இருப்பதால் பொறுப்பாளியாய் இருக்கிறவர்களுக்கு முட்டுக்கட்டையாய் இருக்க வேண்டாம் என்று எனக்கு தோன்றிவிட்டது
[97 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
இது தவறுதலாய் இருக்கலாம். ஆனபோதிலும் இதன் அனுபவமானது பின்னால் நமக்கு ஒரு பெரிய நன்மையையும் படிப்பினையையும் உண்டாக்கினாலும் உண்டாக்கலாம். சமூக விஷயங்களை விட அரசியல் காரியங்களையே பெரியதாகக் கருதி, இந்த பார்ப்பனர்களைச் சேர்க்க வேண்டுமென்ற யோசனைகள் செய்யப்படுவதாகத் தெரிகின்றது எப்படியானாலும் நாம் அதை ஆக்ஷேபிக்க வரவில்லை என்று மாத்திரமே சொல்லுகின்றேன்.
குறிப்பு: சென்னையில் 07.06.1934-இல் பொப்பிலி ராசா அவர் பங்களாவில் கூட்டிய ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை .
புரட்சி - சொற்பொழிவு - 10.06.1934
குடி அரசு (புரட்சி)- 194) — 19
இந்திய சட்டசபைத் தேர்தல்
தோழர் சத்தியமூர்த்தி யாரை ஏமாற்றப்போகிறார்?
தோழர் 8. சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கு இப்போது சிறிது நெருக்கடியான சமயம் என்று சொல்லலாம். ஏனெனில் அவர் எப்படியாவது சமீபத்தில் நடைபெறப் போகும் இந்திய சட்டசபை அங்கத்தினர் பதவிக்கு ஒரு அபேக்ஷகராக நிற்க வேண்டுமென்று கருதி இருக்கிறார். சென்னையில்
நிற்பதற்கு அவருக்குத் தைரியமில்லை, இருக்கவும் நியாயமில்லை ஏனென்றால் சென்னை ஜனங்கள் தோழர் சத்தியமூர்த்தியை நேரில்
அறிவார்கள். இந்திய சட்டசபையின் சென்னைத் தொகுதியானது சென்னை: சட்டசபையின் யுனிவர்சிட்டித் தொகுதி மாதிரி 100-க்கு 95 பேர்கள். பார்ப்பன ஓட்டர்களாய் இருக்கும் தொகுதியல்ல. பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மையோருடைய ஓட்டுகளைப் பெற்றாக வேண்டும் ஆதலால் அங்கு சென்னையில் நின்றால் கட்டின பணம் வாபீஸ் பெறுவது கூட சில சமயங்களில் கஷ்டமாகிவிடும்.
நமது மாகாணத்தில் பொதுவாக பார்ப்பனர்களுக்கு சிறப்பாக வர்ணாச்சிரமப் பார்ப்பனர்களுக்கு தகுதியாய் இருக்கும் தொகுதி தஞ்சை,
திருச்சி ஜில்லாக்களின் தொகுதியாகும். இந்த ஜில்லாக்களின் பார்ப்பனரல்லாதாரே உத்தியோகம் பெறவும் மந்திரியாகவும் ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமைப் பதவி அங்கத்தினர் பதவி பெறவும் அதுவும் பெறும் வரையில் மாத்திரமே பார்ப்பனரல்லாதார் என்கின்ற
பேச்சுப் பேசுபவர்களேயொழிய மற்றப்படி பார்ப்பனரல்லாதாரின் பொது விஷயங்களில் கவலை செலுத்துவதென்பது அருமையிலும் அருமையான காரியமாகும்.
இந்திய சட்டசபைக்கு தஞ்சை திருச்சி ஜில்லா சேர்ந்து ஒரு தொகுதியாக ஆன கால முதல் நாளது பரியந்தம் நமக்குத் தெரிந்த வரையில் அத் தொகுதிக்கு பார்ப்பனர்களே வந்திருக்கிறார்கள். அதுவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை நசுக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட பார்ப்பனர்களும் வர்ணாச்சிரமப் பார்ப்பனர்களும் பார்ப்பன சமூகத் தலைவர்களுமே வந்திருக்கிறார்கள். அதிலும் சென்னை முதலிய வெளியிடங்களில் இருந்தவர்களும் இருப்பவர்களுமான பார்ப்பனர்களே
இங்கு வந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். இதிலிருந்து திருச்சி,
199 ய... பரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
தஞ்சை பார்ப்பனரல்லாதாரின் வீரமும் சுயமரியாதையும் பார்ப்பனரல்லாதார் வகுப்பு அபிமானமும் எவ்வளவு என்று யாரும் சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு தொகுதி இப்போது தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கேள்வி கேப்பாடு இல்லாமல் தாராளமாய் வழி திறக்கப்பட்டு
இருந்தும் அவருக்கு எதிர்பாராத ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. என்னவென்றால்? தஞ்சை, திருச்சி ஜில்லா பார்ப்பனர்கள் தங்கள் தொகுதிக்கு ஏதாவது ஒரு அபேக்ஷகரை ஆதரிக்க வேண்டுமானால் அவ்வபேக்ஷகர் பார்ப்பனராய் மாத்திரம் இருந்தால் போதாது அபேக்ஷகர் சொந்த ஹோதாவில் எவ்வளவு மோசமானவராய் இருந்தாலும் சனாதன தர்மத்தை எவ்விதத்திலும் குலைக்காதவராகவும் அதைக் காப்பவராகவும் இருக்க வேண்டும். இப்போது இந்திய சட்டசபையில் சனாதன தர்மம் என்பதற்கு விரோதமான இரண்டு மசோதாக்கள் இருக்கின்றன. ஒன்று, தீண்டாமை விலக்கு மசோதா. மற்றொன்று கோவில் பிரவேசத் தடை நீக்கும் மசோதா. இவை இரண்டு தவிர மற்றும் விவாகரத்து, பெண்கள் சொத்துரிமை முதலிய மசோதாக்கள் ஆலோசனைக்கு வந்தாலும் வரலாம். சாரதா சட்டத்தை ஒழிக்க மறுபடியும் ஏதாவது சூழ்ச்சிகள் செய்யப்பட்டாலும் படலாம். இதனால்தான் தோழர் சத்தியமூர்த்தியின் நிலை சற்று நெருக்கடி என்று சொன்னோம். ஏனென்றால் தோழர் சத்தியமூர்த்தி இரகசியத்தில் உண்மையில் சனாதன தர்மிகளின் பிரதிநிதியாயும் வெளிப்படையில், வேஷத்தில் சனாதனிகளின் “விரோதியான” காங்கிரஸ் பிரதிநிதியாயும் இருக்க வேண்டி இருக்கிறது. தீண்டாமை விலக்கு மசோதாவும் கோவில் பிரவேசத் தடை விலக்கு மசோதாவும் காங்கிரசால் ஆதரிக்கப்பட்டுவிட்டது. இந்திய சட்டசபையில் சென்ற மூன்று நான்கு கூட்டங்களிலேயே இம்மசோதாக்களை நிறைவேற்றச் செய்வதற்காக தோழர் காந்தியவர்கள் தோழர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் அவர்களை டெல்லிக்கு அனுப்பி ஒவ்வொரு மெம்பரையும் பார்க்கச் செய்து எவ்வளவோ பிரயாசைப் பட்டிருக்கிறார். என்பது யாவரும் அறிந்ததே. அன்றியும், காங்கிரஸ் கொள்கையும் தீண்டாமை விலக்கு என்றும், அதன் தற்கால நிர்மாணத் திட்டம் தீண்டாமை விலக்கும் தீண்டாதவர்களுக்கு சகல கோயில்களும் திறக்கப்படச் செய்ய வேண்டியதென்றும் பொதுஜனங்கள் நம்பும்படி எவ்வளவோ காரியங்கள் செய்தாகிவிட்டது. அதற்காகப் பொது ஜனங்களிடம் ரூ.10 லக்ஷக் கணக்காக பணமும் வசூலித்தாய் விட்டது ஆதலால் காங்கிரசுக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் ஒவ்வொருவரும் இந்த மசோதாக்களை வேஷத்துக்காகிலும் ஆதரிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். காங்கிரசின் நல்ல காலமோ,
குடி அரசு (புரட்சி 1934 (1) அஆ 00
கெட்டகாலமோ, தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இது சமயம் தென் இந்திய காங்கிரசிற்கு பிரதான புருஷ பதவியை சம்பாதித்து விட்டார். அதுமாத்திரமல்ல தேர்தலுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்து தேர்தலையே நடத்த வேண்டிய தலைவர் பதவியையும் பெற்றுவிட்டார். ஒரு வண்டியின் முன் பின் பாரங்கள் எதற்காவது ஆட்களோ சாமான்களோ கிடைக்காவிட்டால் சில சமயங்களில் கல்லுகளை எடுத்து வைத்து பாரத்தைச் சரிப்படுத்திக் கொள்ளுவது வழக்கம். அதுபோல் எந்தக் கமிட்டியிலும் பார்ப்பனரல்லாதார் ஒருவர். இருவரை அதில் போட வேண்டுமே என்கின்ற அவசியத்துக்காக, தக்க ஆட்கள் இல்லாததால் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் போன்றவர்கள் ஒருவர் இருவர் தேர்தல் நியமன அதிகாரக் கமிட்டியில் போடப்பட்டிருந்தாலும் தோழர் சத்தியமூர்த்தியவர்களே பிரதான புருஷரும் தகுதி உடையவரும் சர்வாதிகாரியும் ஆகிய பதவியில் இடம் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்டவர் தானாகவே ஒரு தொகுதிக்கு அதுவும் தஞ்சை, திருச்சி ஆகிய வருணாச்சிரம தொகுதிக்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதில் அவர் என்னதான் தந்திரமும்,
புரட்டும் பொறுப்பற்ற அறிக்கையும் விடக் கூடிய யோக்கியதையும் சுதந்திரமும் உடையவராய் இருந்தாலும், இப்போது வெளிப்படையாய் இரண்டில் ஒன்று சொல்லித் தீரவேண்டி இருக்கிறது. அவர் சொந்த ஹோதாவில் அவருக்கு ஏதாவது ஒரு கொள்கை உண்டு என்று சொல்ல நமக்குத் தைரியம் வரவில்லை. ஆனாலும் பார்ப்பனத் தன்மைக்கும், அதன் உயர்வுக்கும், ஆதிக்கத்துக்கும் சிறிதாவது கெடுதிவர அவர் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டார். எப்போதும் சம்மதித்ததுமில்லை. அவரைவிட மேலான யோக்கியதையும், அந்தஸ்தும் உடையவர்கள் பார்ப்பனரல்லாதாரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களில் பெரும்பாலோர். தங்கள் சுயநலத்துக்காக வகுப்பு நலனை மிகக் குறைந்த விலைக்கு விற்கக் கூடியவர்கள் என்று சொல்லலாம் என்பது நமது கருத்து. ஆனால் நமது சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ, எந்தக் காலத்திலாவது எவ்வளவு நெருக்கடியான சொந்த அசெளகரியத்திலாவது பார்ப்பனீயத்தையோ, பார்ப்பன ஆதிக்கக்தையோ ஒரு கடுகளவுகூட விட்டுக் கொடுத்தார் என்று சொல்ல முடியாது. இந்த வழக்கமும், யோக்கியதையும் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரி இடம் மாத்திரம் அல்ல. 100-க்கு 99 15/16 பார்ப்பனர்களிடத்திலும் காணலாம். இதுவேதான் இந்நாட்டில் பார்ப்பனீயம் நிலைத்திருப்பதற்குக் காரணம் என்பதோடு, இந்தக் குணம் பார்ப்பனரல்லாதாரிடம் இல்லாததாலேயே அவர்களது முயற்சிகள் அடிக்கடி கவிழ்க்கப்பட்டு விடுவதற்கும் காரணம் என்று சொல்லலாம் ஆகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி யாராவது ஒருவரை- அதாவது காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாரையோ
201 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 18
அல்லது வருணாச்சிரமிகளையோ ஏமாற்றியே ஆக வேண்டும். எப்படி
இருந்தாலும் என்ன சொன்னாலும் அது வர்ணாச்சிரமப் பார்ப்பனர்களை ஏமாற்றினதாய் முடிவு பெறாது பார்ப்பனரல்லாதாரைத் தான் ஏமாற்றப்போகிறார் என்பது உறுதி . சமீபத்தில் தஞ்சை ஜில்லாவில் சில பார்ப்பனர்கள் மேற்கண்ட மசோதாக்கள் விஷயமாய்த் தோழர் சத்தியமூர்த்தியின் அபிப்பிராயம் என்ன என்று அவரைக் கேட்டபோது “தீண்டாமை ஒழிய வேண்டியது தான். ஆனால் அதற்கு சட்டம் செய்வது என்பது கூடாத காரியம்” என்று சொன்னாராம்
தீண்டாமை ஒழிப்புக்குச் சட்டம் செய்வதே கூடாத காரியம் என்று சொன்ன இவர், தீண்டாதாருக்குக் கோவில் பிரவேசம் ஏற்படச் சட்டம் செய்வதை எப்படி ஆதரிப்பார் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அது எப்படியோ போகட்டும். இப்போது நம்முடைய கேள்வி எல்லாம் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் காங்கிரசுக்காரர் என்று தன்னை சொல்லிக் கொண்டு “தீண்டாமை விலக்குக்கு சட்டம் செய்வது கூடாது! என்று சொல்லலாமா? என்பதேயாகும். அது மாத்திரமல்ல, தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய சட்டசபைக்குப் போனால் தீண்டாமை விலக்கு மசோதாவை எதிர்ப்பாரா? ஆதரிப்பாரா என்றும் கேட்கின்றோம்
காங்கிரசைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லவோ, குறைகூறவோ யாராவது ஆரம்பித்தால் அவர்களைப் பற்றி தாறுமாறாகப் பேசவும் எழுதவும் நமது நாட்டில் அனேக தேசபக்தர்கள் இருக்கிறார்களே யொழிய, தேசியப் பத்திரிகைகள் இருக்கின்றனவே ஒழிய காங்கிரசின். இப்படிப்பட்ட யோக்கியதைகளைக் கவனித்து தக்கது செய்வது என்பதைக் கவனிக்க எவருமே யில்லை. நமது நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமும் சேர்ந்து இப்படிப்பட்ட தேசபக்தர்களையும், தேசியப் பத்திரிகைகளையும் ஏராளமாக உற்பத்தி செய்துவிட்டது என்று சொல்ல வேண்டுமே யொழிய தேச பக்தர்கள்.
மீது குறைகூறவும் நமக்கு மனம் வரவில்லை.
இந்திய சட்டசபைத் தேர்தல்களைப் பற்றி காங்கிரஸ் எடுத்துக் கொண்ட கவலைக்கும், இந்திய சட்டசபைக்கு நமது மாகாண காங்கிரஸ்காரர்கள். போகவேண்டும் என்று ஆத்திரப்படுவதற்கும் உள்ள உண்மையான இரகசியம் இதிலிருந்து சுலபமாக விளங்கக் கூடும் என்று கருதுகின்றோம்
ஆகையால், பார்ப்பனரல்லாத மக்கள் இந்திய சட்டசபை தேர்தல்களை இத்தனை நாள் அலக்ஷியமாய் விட்டிருந்தது போல் இல்லாமல் தக்கபடி கவலை செலுத்தி சமூக சமத்துவத்திற்கு பிறவி எதிரிகளான பார்ப்பனர்கள் அப்படிப்பட்ட ஸ்தானங்களுக்குப் போய் நமக்கு தொல்லை விளைவிக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள
குடி அரசு (புரட்சி) - 1934(1) _ — — 202
வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தூரம் எழுதுகிறோம். குறிப்பாக தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் தொகுதிக்கு எப்படியாவது ஒரு பார்ப்பனரல்லாதார் நின்று வெற்றி பெரும்படியாக செய்துவிட்டோமேயானால் தென்னிந்திய சமுதாயத் துறையில் ஒரு பெரிய புதிய சகாப்தத்தை உண்டு. பண்ணியவர்களாக ஆகிவிடுவோம் என்பதோடு அந்தப்படி இல்லாமல் தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இந்திய சட்டசபைக்கு போக நேர்ந்தால் பார்ப்பனரல்லாதார் நலனுக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாகுமென்பதையும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்
புரட்சி - தலையங்கம் - 10.06.1934
203 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 18
திருப்பூர் செங்குந்த மகாஜன சங்க மகாநாட்டில் தோழர் ஈ.வெ.ரா.
சமதர்மம்
தோழர்களே! இன்று இக்கூட்டத்தில் “சமதர்மம்” என்னும் பொருள் பற்றிப் பேசும்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான். பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். சமதர்மம் என்பதற்குப் பலவேறு
தேசங்களிலும், சமூகங்களிலும் பலவேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும், சில இடங்களில் கடவுளுக்கும், பிறிதும் சில இடங்களில் பணக்காரனுக்கும், புரோகிதனுக்கும் விரோதம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியூட்டி ஆவலோடு சமதர்மமொன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான்மையை உண்டாக்கி யிருக்கிறது ஆகவே இன்று சமதர்மத்தை உச்சரிப்பது மிக சகஜமாகப் போய்விட்டது. சமீபத்தில் ராஞ்சியிலும் பாட்னாவிலும் கூடிய சமதர்மவாதிகளால் சமதர்ம திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தியாரும் கூட சமதர்மம் ஆக்ஷேபகரமானதல்ல என்கிறார். தோழர் ஜவஹர்லால் தான் சமதர்மவாதி என்றும், மக்கள் சமூக நலனுக்கேற்றது சமதர்மம் ஒன்றே என்றும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். மனித சமூகத்தில் 100-க்கு 90-க்கு மேற்பட்ட பாமர மக்கள், தொழிலாளிகள், பாட்டாளிகள் பூராவும் இன்று இக்கொள்கை வளம் பெறும் நாளை எதிர்நோக்கி நாவூர ஏங்கிக் கோறி நிற்கின்றனர் என்பது வெளிப்படையான உண்மை.
சமதர்மம் என்றால் சாதாரணமாக பாரபக்ஷமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்கீழ்நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து, யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால் மதக்காரர்களுக்கும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழின்றியும் கட்டக் கந்தையின்றியும், குடி
குடி அரசு (புரட்சி)- 1994) மட 204
இருப்பதற்கு ஓட்டைக் குடிசைகூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப்பத்தால் அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, தான் மட்டும் படாடோபமாக டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல. எல்லோரும் கஷ்டப்பட்டு வேலைசெய்து பலனை எல்லோரும் சமமாக அநுபவிக்கலாம் என்று சொன்னால் அது முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டாதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண்: கூக்குரலிடப்படுகிறது. சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள. ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அது போலவே
ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள
பூமியும் பொருளும் எல்லாம் குடும்ப பொதுச்சொத்து போல் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து உண்டு, உடுத்தி, இன்பவாழ்வு வாழ வேண்டுமென்பதுதான் சமதர்மம் மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும் புரியாத காரியமும் இல்லை
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும் பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது: அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற் போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம், அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனிவுரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடமை ஆக்கப்படல் அநீதம், கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக்
கூறமுடியும்? மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அநுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு, அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? “மக்கள். வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல
வசதிகளையும், சாதனங்களும் வேறொருவரும் அனுபவிக்கக் கூடாது; அந்த சாதனங்களினின்றி மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. எனக்கு தேவைக்கு மேலிருந்தாலும் நான் அநுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந்தாலும் அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதானாலும் பிறர் அநுபவிக்க நான் பார்க்கக் கூடாது” என்னும் குறுகிய
புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும் கொண்டவர்களுக்கும், 205 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 18
தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது, ஆனால் பிறமக்கள் உழைப்பதினால் விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறிகளுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ வெறுப்பாகவோ விரோத மாகவோ இருக்குமே தவிர அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாராகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்த கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலையை உயர்த்தவல்ல ஜீவதாது இது என்று தான் கூற வேண்டும். உலக ஜனத்தொகையில் 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கிற இந்தத் தத்துவத்தை ஞான.
புத்தியும் நேர்மையான நோக்கமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத் தான் தீருவார்கள்.
ஏற்றத் தாழ்வுகள் மலிந்த இன்றைய சமூக அமைப்பால், ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ. சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? இல்லாத ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணியில்லை, இருக்க வீடில்லை, ஓய்வில்லை,
பிள்ளைக்குக் கல்வி வசதியில்லை என்பன போன்ற பல ஓயாக் கவலையே கவலையால் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த, பூஸ்திதி படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்க வேண்டும், மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராமல் காப்பாற்ற வேண்டும்
என்னும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன் ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக்காரனாக வேண்டும். பின்னர் கிராம மணியகாரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான். மணிய வேலை கிடைத்தாலும் தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆக வேண்டும், கவர்னர் ஆக வேண்டும், வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும்; இன்னும் இதற்கு மேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆள வேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்ன வென்றால் கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்கு மேற்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கெளரவம் என்றும், தனிமதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு “மூட நம்பிக்கையே'' தவிர வேறில்லை
இந்த மூடநம்பிக்கையின் பயனாய்த்தான், மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது பிறரையும் அநுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய் போல்.
குடி அரசு (புரட்சி) - 1934(1) _ 206
வாழ்கின்றான். இந்தத் தனிவுடமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன் படக்கூடிய பல பொருள்கள். சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன. உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்கு தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அநுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு 3 அல்லது 4 மணி நேரமே மோட்டார் வேண்டியிருக்கும். இந்த 3 அல்லது 4 மணி நேரத் தேவைக்காக உபயோகப்படும் மோட்டார் ஒரு நாளில் 20 மணி நேரம் வீணாக யாதொரு பயனுமின்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் மூடங்கிக்
கிடக்கிறது. இந்த நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக்கொண்டால், பொதுவில் தேவைப்பட்டவர்கள், தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால், வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை. இம் மாதிரியான முறைகளை அநுசரிப்பதால் வீண் விரையங்கள் தடுக்கப்பட்டு, மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்பமயமாக்கும் பல சாதனங்களையும் அநுபவித்துப் பயன்படுத்திக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும். இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும், கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூடநம்பிக்கை ஒழிய வேண்டும் இதில் எத்தகைய ஒரு கவுரவமும் மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்
குறிப்பு: திருப்பூரில் செங்குந்தர் 12ஆவது மாநாடும் செங்குந்தர் 2ஆவது வாலிபர் மாநாடும் 20 27.05.1934 தேதிகளில் நடந்தபோது இரண்டாம் நாள் மாநாட்டில் சமதர்மம்” என்ற தலைப்பில் ஆற்றிய உரை.
புரட்சி - சொற்பொழிவு - 10.06.1934
207 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 18
சம்பளக் கொன்ளைக் கொடுமை
இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசியல் முறை ஏற்பட்ட பின் உண்டான கொடுமைகளில் எல்லாம் தலை சிறந்த கொடுமை சம்பளக் கொள்ளைக் கொடுமையேயாகும். இக்கொடுமைக்குப் பொறுப்பாளிகள் பிரிட்டிஷாரே என்று சொல்லிவிட முடியாது. இந்தியர்களும் சிறப்பாக இந்திய அரசியல் கிளர்ச்சிகளும் மற்றும் இந்திய தேசியமுமேயாகும்
பிரிட்டிஷார் தாங்கள் அன்னியர் என்னும் பிரிவிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், தேசியக் கிளர்ச்சியின் உள் தத்துவம் இன்னதென்று தெரிந்து அதற்கு இணங்கவும் தேசீயவாதிகள் என்பவர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவும் முற்பட்டதே பிரிட்டிஷ் அரசியல் தந்திரத்தால் இந்தியாவுக்கு ஏற்பட்ட கெடுதிகளுக்கெல்லாம் காரணம்
என்று சொல்லலாம்.
இன்றையத்தினம் உலகத்தில் எந்த தேசத்திலும் - எவ்வளவு செல்வம் பொருந்திய தேசத்திலும் உள்ள அரசாங்க உத்தியோகங்களில். இந்தியாவில் இருந்துவரும் சம்பளக்கொள்ளைக் கொடுமை இல்லை என்றே சொல்லுவோம்
இந்திய மக்களில் ஒரு மனிதனுடைய ஒரு நாளைய சராசரி வரும்படி 0-1-6 பை. என்று பொருளாதார நிபுணர்களால் கணக்கிடப் பட்டிருக்கிறது. இது இந்தியப் பொருளாதார நிபுணர்களும் இந்திய தேசீயவாதிகளும் அவர்களது தலைவர்களும் ஆகிய எல்லோராலும் இது ஒப்புக்கொண்ட விஷயமாகும் ஆகவே ஒரு மனிதனுடைய சராசரி வரும்படி மாதம் 1க்கு 2-13-0 அல்லது 3 ரூபாய்க்கு உட்பட்டதேயாகும். மேலும் கூறவேண்டுமானால் இவ்வளவிற்கும் கூட மார்க்கமில்லாமல் இதைவிடக் குறைவான வரும்படி சம்பாதிக்கின்றவர்களும் உண்டு.
இந்தியப் பொருளாதார நிபுணர்கள் என்பவர்களாலும், இந்திய தேசீபத் தலைவர்கள் என்பவர்களாலும் ஆதரிக்கப்படும் தேகீபக் கைத்தொழில் என்பதின் மூலம் இந்திய மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வரும்படி
தினம் 0-1-6 பை. சில சமயங்களில் 0-1-0 அணா, சில சமயங்களில் இதைவிடக் குறைவும் ஆகும்
குடி அரசு (புரட்சி 1934 (1) அஆ 00%
எப்படியெனில் சுயராஜ்யத்துக்கு மார்க்கம் என்று சொல்லப்படும்
கதர் நூல் நூற்பதின் மூலம் நபர் ஒன்றுக்கு தினம் ஒரு அணா, ஒண்ணரை அணாத்தான் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குக் காரணம் என்னவென்றால் “இந்த வரும்படிகூட கிடைப்பதற்கு மார்க்கமில்லாமல் கஷ்டப்படும் - பட்டினி கிடக்கும் மக்கள் கோடிக்கணக்காயிருக்கிறார்களாதலால் இதுவே கிடைத்தால் போதும்” என்று சொல்லப்படுகின்றது
இந்தப்படியான தினம் 0-1-6 பை. வரும்படி என்பதுகூட மாதம் 1000, 10000 ரூபாய்கள் வரும்படி உள்ளவர்களின் சம்பாதனைத் தொகையையும் தினம் கால் அணா, அரை அணா வரும்படி உள்ளவர்களது சம்பாதனைத் தொகையையும் கூட்டி சராசரி வகுத்துவந்த தொகையே மேற்சொன்ன (0-1-6 பை) வரும்படியாகும். இதை அனுசரித்தே ஒரு மனிதனின் நித்திய வாழ்க்கைக்கு இன்றைய நிலைமையில் சராசரி தேவை எவ்வளவு ஆகுமென்று கணக்குப் பார்த்தால் மேற்கண்ட 0-1-6 பையே போதும் என்று சொல்லக்கூடிய அனுபவத்தில்தான் அதிகமான மக்கள் இருந்துவருகிறார்கள். இதைவிடக் குறைந்த அளவிலும் ஜீவித்து வருகின்றவர்கள் கோடிக்கணக்கில் இருந்து வருகிறார்கள் என்பது மிகைபடுத்திச் சொல்வதாக ஆகாது. இதற்குக் காலநிலையும் அனுகூலமாய்த்தான் இருக்கிறது.
இன்று அரிசி ரூபாய் 1க்கு பட்டணம் படியில் 8 படி கிடைக்கின்றது. இந்தியாவுக்குள் எந்த ஊரிலும் ரூபாய் 1க்கு 7 படிக்குக் குறைவில்லாமல் கிடைக்கலாம். ஒரு படி அரிசி போட்டுச் சமைத்தால்
சராசரி மக்கள் 8 பேர் சாப்பிடலாம். இதில் அபிப்பிராய பேதமே இருக்கக் காரணமில்லை. அப்படியானால் ஒவ்வொரு மனிதனின் மூன்று வேளை சாப்பாட்டுக்கும் சேர்த்து அரிசியும் மற்ற ஆகாரச் சாமான்களும் சேர்த்து கணக்குப் பார்த்தால் மேல் குறிப்பிட்டதான தினம் ஒண்ணரையணா.
வரும்படி சராசரி மக்களுக்கு போதுமானதென்றே சொல்லலாம். மற்றபடி துணி, வீடு, வைத்தியம், படிப்பு ஆகியவைகளுக்கு இதில் பணம் மீதியில்லை. ஆனதினால் தான் இந்தியாவில் தரித்திரர்கள், ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதாகும்
இப்படிப்பட்ட நிலை உள்ள இந்த தேசத்தில் அரசியல் உத்தியோகங்களில் சேர்ந்துள்ள ஜனங்களுக்கு 5 1-க்கு 100, 500,
1000, 2000, 5000, 10000, 20000 ரூபாய்கள் என்கின்ற கணக்கில் சம்பளங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்தப்படி கொடுக்கப்படும் பணங்கள் மேல் கண்டபடி தினம் 1க்கு சராசரி ஒண்ணரையணா வரும்படி உள்ள மக்களிடம் வரியாக வசூலித்தே கொடுக்கப்படுகிறது இவ்வளவு அதிகப்படியான சம்பளங்கள் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்குச் சரியான காரணங்கள் எதும் சொல்லப்படவில்லை
209 ௨... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்ப தொகுதி - 18
சொல்லப்படவில்லை என்பது மாத்திரம் அல்லாமல் இந்தப்படி ஏன் கொடுக்கப்படுகின்றது என்று கூட சமீபகாலம் வரை எந்த தேசீய வாதிகளும் - தேசீய கிளர்ச்சிக்காரர்களும் - தேசீயத் தலைவர்களும் - ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும் கவலை கொண்டு கவனித்தவர்களும், கேட்டவர்களும் அல்ல. மேலும் இவர்கள் அதிகச் சம்பளங்களைப்பற்றி கண்டிக்காமல் கவலைப்படாமல் இருந்தார்கள் என்று மாத்திரம் சொல்லுவதற்கில்லாமல் இருக்கிற சம்பளம் போதாதென்றும் இன்னும் அதிகச் சம்பளம் வேண்டுமென்றும் கேட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இருக்கின்றன.
சம்பளக் கொடுமை ஒருபுறமிருக்க மற்றொரு புறம் இப்படிப்பட்ட சம்பளங்கள் உள்ள உத்தியோகங்களும் நாளுக்கு நாள் பெருக்கப்பட்டு வந்து சுமார் 30, 40 வருஷங்களுக்கு மூன் இருந்த சம்பளங்கள் 100-க்கு 100 ரூ. வீதம் உயர்த்தியும், சில உத்தியோகங்களுக்கு 100-க்கு 300
வீதம் உயர்த்தியும் வந்திருப்பதுடன் இப்படிப்பட்ட உத்தியோகங்களின் எண்ணிக்கையும் 100க்கு 100வீதமும், சில விஷயங்களில் 100க்கு 300, 400 வீதமும் உயர்த்தப்பட்டு விட்டது உதாரணமாக மேல் நிலையில் ஹைகோர்ட் ஜட்ஜிகள் 5 பேர் இருந்து வந்ததற்கு பதிலாக இன்று 15, 16 ஹைகோர்ட் ஐட்ஜிகளும், மந்திரிகள் 2 பேர் இருந்து வந்ததற்குப் பதிலாக 7 மந்திரிகளும் இதுபோலவே கீழ் நிலைகளிலும் ஜில்லாவுக்கு 2 மூன்சீப்புகளுக்குப் பதிலாக 6, 7 முன்சீப்புகளும், ஜில்லாவுக்கு 2 டிப்டி கலெக்டர்களுக்குப் பதிலாக 4, 5 டிப்டி கலெக்டர்களும் இப்படியாக ஒவ்வொரு இலாக்காவிலும் சம்பளத் துகையும், உத்தியோக எண்ணிக்கையும் பெருகி ஜனங்களுக்காக அரசாங்க நிர்வாகமும், உத்தியோகமும் சம்பளமும் என்று சொல்லுவதற்கே இல்லாமல் அரசாங்கத்துக்காகவும், உத்தியோகஸ்தர்களுக்காகவும் அவர்களது சம்பளத்துக்காகவும் ஜனங்கள் இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.
இப்படியெல்லாம் அரசாங்க உத்தியோக சம்பளக் கொடுமை ஏற்பட்டும் மக்களுடைய கல்வி, அறிவு, நாணையம், ஒழுக்கம், ஒற்றுமை, கூட்டுறவு முதலிய அவசியமானவைகளில் ஏதாவது விருத்திகள் ஏற்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் ஒரு துறையிலாவது உண்மையான
விருத்திக்கு அறிகுறி கூட இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அது மாத்திரமல்லாமல் முன்பு இருந்ததைவிட அனேக துறைகளில் கீழ்நோக்கி இருக்கின்றது என்று சொல்வதற்குக் கூட பல காரணங்கள் இருந்துவருகின்றன.
இந்தப்படியான உத்தியோகப் பெருக்கமும், சம்பள உயர்வும், சேர்ந்து இன்று நம்நாட்டில் உள்ள எல்லா மக்களையும் தங்கள். வாழ்க்கைக்கு உத்தியோகத்தையே எதிர்பார்க்கும்படிக்கும், செல்வம்
குடி அரசு (புரட்சி) - 1934(1) _ 10
சேர்ப்பதற்கு சம்பளத்தையே ஆதாரமாகக் கொள்ளும்படிக்கும் அதற்கே ஒவ்வொருவரும் தங்களை தயார் செய்துகொள்ளும்படியும் தூண்டி வருகின்றதே ஒழிய பாடுபட்டு வாழ எந்த மனிதனையும் தூண்டச் செய்யவில்லை. இந்திய மக்கள் ஒவ்வொருவரும் இன்று சோம்பேரி வாழ்க்கையில் வாழ ஆசைப்படுவதும் மொத்த ஜனத்தொகையில்
சரீரத்தில் பாடுபட்டு வேலை செய்பவர்களைவிட சோம்பேரிகளே
கணக்கில் மிகுந்திருக்க நேரிட்டதும் இதனாலலேயேதான் என்பது நமது உருதியான அபிப்பிராயமாகும்.
கல்வி இல்லாதவர்கள் எல்லாம் சரீரத்தால் பாடுபடவேண்டியவர்கள்
என்றும் ஏதோ இரண்டு எழுத்துக்கூட்டிப் படிக்கத்தெரிந்தவர்கள் எல்லாம் அறிவினால் வேலை செய்ய வேண்டுமே ஒழிய, சரீரத்தால் பாடுபட முடியாதவர்கள் என்றும் நினைக்கத்தக்க மனப்பான்மை ஏற்பட்டிருக்கின்றது எழுதப்படிக்கத் தெரியாதவர்களே பாடுபட வேண்டியவர்கள் என்பதாக ஆகிவிட்டதால் தொழில்முறை மேன்மையடையாமல் போக ஒரு காரணமாகிவிட்டது. படித்தவர்கள் உத்தியோகத்தையே பிரதானமாகக்
கருதி அதிலேயே பிரவேசித்து விட்டதால் போட்டி அதிகம் ஏற்பட்டு. உத்தியோகத்தின் யோக்கியதை குறைந்ததுடன் அதற்கு வேண்டிய
ஒழுக்கம், நாணையம், நீதி முதலியவைகளும் குறைய நேரிட்டு விட்டன. இதன் பயனாய் ஜனங்களுக்கு இரண்டுவிதக் கெடுதிகள் ஏற்பட்டு விட்டன. ஒன்று அதிகவரிக் கஷ்டம், அதாவது ஏழைகள் பாடுபடுபவர்கள். சம்பாதிக்கும் செல்வம் எல்லாம் இச்சோம்பேரிக் கூட்டங்களுக்கு சம்பளத்திற்காக அழ நேரிட்டு வரிகளாகக் கொடுத்துவருவதும், இரண்டு, அரசாங்க நிர்வாக ஒழுக்கக் குறைவு ஏற்பட்டு ஜனங்களுக்கு நீதி, சமாதானம், பத்திரம் ஆகியவைகள் இல்லாமல் போனதும் ஆகும். ஆக இந்த இரண்டு காரியங்களே இன்று இந்திய மக்களின் வாழ்க்கைக்கு பெருத்த கஷ்டமாக இருந்து வருகின்றன. இவை இரண்டும் சரிப்பட்டு விடுமேயானால் அரசியலில்
இந்தியாவுக்கு எவ்வித குறைவும் இல்லை என்று ஒருவாரு சொல்லலாம். ஆனால் இந்திய அரசியல் கிளர்ச்சியில் இந்த இரு குறைகள் நீங்குவதற்காக இதுவரை எவ்வித கிளர்ச்சியும் செய்ததும் இல்லை, இன்றும் செய்யப்படுவதாகவும் தெரியவில்லை. அது மாத்திரமல்லாமல் இதுவரை நடந்து வந்த அரசியல் கிளர்ச்சியானது பெரிதும் இவ்வித அதிக சம்பளம் பெறவும் யோக்கியமும், நாணையமுமாய் நடந்து கொள்ள முடியாத உத்தியோகங்களைப் பெருக்கி அவற்றைப் பெறவுமே செய்யப்பட்டு வந்திருக்கிறதே ஒழிய வேறில்லை என்பது யாவரும் அறிந்ததாகும்
இந்தியாவில் இன்று பல அரசியல் கக்ஷிகள் இருக்கின்றன. என்றாலும் அவற்றினுடைய முக்கியமானதும் முதன்மையானதும் ஒன்றே A ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
ஆனதுமான உத்தேசமெல்லாம் இப்படிப்பட்ட சம்பளமும் உத்தியோகமும் பெருவதல்லாமல் வேறொன்றும் இல்லை என்பது உண்மையான அபிப்பிராயமாகும்.
நிற்க உலகத்தில் இந்தியாவைப்போல் மற்றும் எத்தனையோ தேசங்கள் இருக்கின்றன. அவற்றில் அரசியல் கிளர்ச்சிகள் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன. அரசாங்கத்தைக் கைப்பற்றி பூரண சுயேச்சை என்னும் பேரால் பொதுஜனங்களால் பல நாடுகளில் அரசாங்கம் நடைபெற்றும் வருகின்றன. அப்படிப்பட்ட தேசங்களின் செல்வ நிலைமைகள் இந்தியாவைவிடப் பல மடங்கு உயர்ந்ததாகவும் இருக்கின்றன. உதாரணமாக இந்தியாவில் ஒரு மனிதனின் சராசரி வரும்படி தினம் ஒன்றுக்கு 0-1-6. ஆனால் இங்கிலாந்து அமெரிக்கா முதலிய நாட்டு மக்களின் சராசரி வருமானம் 1-8-0, 2-0-0 ரூபாய்களாகும். இந்த தேசத்தின் வரி வருமானம் வருஷம் 200 கோடி
ரூ. ஆனால் இங்கிலாந்து தேசத்தின் வருமானம் வருஷம் ஒன்றுக்கு 1200 கோடி ரூபாய்களாகும். அப்படிப்பட்ட தேசங்களில் அரசாங்க உத்தியோகங்களின் சம்பளங்களைப் பார்த்தோமேயானால் நமது நாட்டு சம்பளத்தின் கொள்ளை போகும் முறையும், கொடுமையும் பாடுபடும் ஏழை ஜனங்களை பாடுபடாத சோம்பேரிகள் எப்படி வஞ்சிக்கிறார்கள் என்கின்ற உண்மையும் ஆகியவைகள் எளிதில் புலப்படும். இந்தியா வைசிறாய் என்கின்ற உத்தியோகத்துக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயானால் இந்தியா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்ட்ரேலிய முதலிய பல தேசங்களின் ஆகஷிக்கு மேலதிகாரியாய் இருந்து இந்திய வைசிறாயையும், இன்னும் பல வைசிராய்களையும் நியமிக்கவும் நீக்கவும் அதிகாரமுள்ள பிரிட்டிஷ் தலைமை அதிகாரிக்கு மாதம் 5000
ரூ. சம்பளமேயாகும்
பிரஞ்சு தேசத்து குடி அரசுத் தலைவருக்கு அதாவது அரசர் இல்லாமல் அரசருக்கு பதிலாய் இருந்து அந்த தேசத்துக்கும் மற்றும் அதன் ஆகஷிக்குக் கீழ்ப்பட்ட ஏனைய தேசங்களுக்கும் தலைவராக இருப்பவர்களுக்கு மாதம் 1க்கு 1500 ரூபாய் சம்பளமே கொடுக்கப்பட்டு வருகின்றது. நம் நாட்டு நிர்வாக சபை அங்கத்தினர்கள் மந்திரிகள்
ஆகியவர்கள் சம்பளங்கள் அமெரிக்கா கவர்னர்கள் சம்பளங்களை விட அதிகமாகவும், பிரிட்டிஷ் தலைமை அதிகாரி நிர்வாக சபை அங்கத்தினர்கள் மந்திரிகள் ஆகியவர்கள் சம்பளங்களை விட 100க்கு 100பங்கு 150 பங்கு அதிகமாகவும் இருந்து வருகின்றன. மேல்நாட்டு அரசாங்கங்களின் வரி வரும்படி நம் நாட்டு வரி வரும்படியைவிட 5,
6 மடங்கு அதிகமாகவும், அந்நாட்டு மக்களின் வரும்படி நம் நாட்டு மக்களின் வரும்படியைவிட 20 பங்கு 30 பங்கு அதிகமாகவும் இருக்க
குடி அரசு (புரட்சி)-7994/]) அ 21
ப்
உத்தியோக சம்பளங்கள் மாத்திரம் அந்நாட்டு சம்பளங்களைவிட இந்தியாவில் பலமடங்கு அதிகமாய் இருந்தால் இந்த அரசாங்க நிர்வாகமும் உத்தியோக சம்பளமும் தேசத்தின் நிலைமையும் ஜனங்களுடைய க்ஷேம லாபங்களையும் அனுசரித்து நடத்தப்படுகின்றது என்று எப்படி சொல்லக்கூடும். ஆகவே இன்றைய தினம் நமது நாட்டில் உள்ள எல்லாவித அரசியல் கிளர்ச்சிகளையும் தகர்த்து ஒழித்து எறிந்து விட்டு இந்தக் கொள்ளை போன்ற சம்பளக் கொடுமையை ஒழிப்பதற்கு முயற்சித்தல் அதுவே இந்திய நாட்டு ஏழை மக்களுக்குச் செய்த அளவிட முடியாத நன்மையாகும்
மந்திரிகளுக்கு B 5000 ரூ சம்பளம் என்கின்ற திட்டம் இல்லாதிருக்குமானால் நமது நாட்டு காங்கிரஸ், மிதவாதி சங்கம், ஜஸ்டிஸ் க்ஷி ஆகியவைகளின் ஒழுக்கமும் நாணையமும் இவ்வளவு கேவலமாகவும் இழிவாகவும் போயிருக்காது என்பதுடன் நிர்வாகங்களும் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் ஏற்பட்டிருக்காது. கக்ஷிகளின் மற்றக் கொள்கைகள் எப்படி இருந்தாலும் அரசியல் ஆதிக்கம் கைக்கு வந்தால் தங்கள் அதிகாரத்துக்குள் இருக்கப்பட்ட உத்தியோகங்களின் சம்பளங்களை
நாட்டின் தகுதிக்கு ஏற்ற இன்ன அளவுக்கு குறைத்து விடுகின்றோம் என்றும் தங்கள் அதிகாரத்துக்குள் கட்டுப்படாத சம்பளங்களைக் குறைக்க அதிகாரம் பெருவதற்கு கிளர்ச்சி செய்கின்றோம் என்றும் சொல்லி அந் நிபந்தனையின் மேல் எந்தக் கட்சி புறப்பட்டாலும் அத்துடன் நமக்கு எந்தவிதப் பிணக்கும் இருப்பதற்கில்லை. அன்றியும் அக்கொள்கைகள் ஈடேற அவற்றுடன் ஒத்துழைக்கவும் ஆக்ஷ்பணை இல்லை.
ஜஸ்டிஸ் கட்சி கூட தாங்கள் மறுபடியும் மந்திரிகளாய் வர நேரிட்டால் மந்திரிகள் சம்பளம் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மீ” 1000 ரூபாய்க்கு
மேற் போகாமல் அதற்குள்ளாகவே குறைத்துக்கொள்ளுகிறோம் என்றும் இந்த விகிதமே மற்ற உயர்ந்த சம்பளங்களையும் குறைத்து விடுகிறோம் என்றும் சொல்லி அந்தப்படி நடக்க முன்வருவார்களானால் அதற்காகவே அதை இன்றைய நிலைக்கு தீவிரக்கட்சி என்று கூட சொல்லிவிடலாம் அன்றியும் அது வெற்றி பெரும் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அப்படிக்கில்லாமல் அதாவது சம்பளத்தில் குறைத்துக் கொள்ளாமலும் மற்ற உயர்ந்த சம்பளங்களைக் குறைக்காமலும் இருந்து கொண்டு இவர்கள் ஜனங்களுக்கு எவ்வித நன்மை செய்கிறோம் என்ற சொல்வதாய் இருந்தாலும் இவர்களுக்கு ஜன சமூக ஆதரவு கிடைப்பது கஷ்டமான காரியமேயாகும்
காங்கிரஸ் கட்சிக்கு ஏதாவது நாட்டைப்பற்றி பொருப்பிருந்து உண்மையாய் அது தேசத்து மக்களுக்கு உழைப்பதாயிருக்குமானால் தீண்டாமையை விலக்குவேன் என்பதாலும் தீண்டாத ஜாதியார்களை 2w ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
கோவிலுக்குள் அழைத்துச் செல்கிறேன் என்பதாலும் இந்தியா பூராவும் கதர்மயம் ஆக்கிவிடுவேன் என்பதாலும் ஜனங்களை ஏமாற்றிவிடலாம் என்கின்ற எண்ணத்தை விட்டுவிட்டு இந்தக் கொள்ளையாம் சம்பளக் கொடுமையை அடியோடு ஒழித்துவிடுவோம், நாங்களும் மந்திரிகளாக நேர்ந்தால் மீ” 1000 ரூபாய்க்கு கீழாகவே சம்பளம் பெருவோம் என்று உறுதி கூறிவிட்டு வரப்போகும் தேர்தலில் தலைகாட்டட்டும். அப்படிக் கில்லையானால் அது எவ்விதத்திலும் பபனுள்ளதென்றோ நாணையமானது என்றோ சொல்லிக்கொள்ள சிறிதும் யோக்யத்தை அற்றதாகிவிடும்
ஆதலால் அரசியலின் பேரால் வாழ்க்கை நடத்த எண்ணி இருக்கிறவர்கள் தேர்தலில் நின்று பயனடையக் கருதி இருக்கின்றவர்கள் இதைக் கவனித்து நடந்து கொள்ளுவார்களாக,.
புரட்சி - தலையங்கம் - 17.06.1934
குடி அரசு (புரட்சி 1934(1) மட யு
சுயமரியாதை திருமணம்
என்றால் என்ன?
தோழர்களே! இன்று இங்கு நடைபெறப் போகும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது. மற்ற திருமணங்களுக்கும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் அடிப்படையாக என்ன மாறுதல் இருக்கின்றது என்று பாருங்கள்
அனாவசியமாக சிலர் "சுயமரியாதைத் திருமணமா?!” என்றாலே அதிசயப்படுவதும், ஏதோ முழுகி விட்டது போல் வெறுப்படைவதுமா: யிருக்கின்றதே தவிர, வேறு என்ன மாறுதல் இருக்கின்றது என்பது எனக்கு விளங்கவில்லை.
விவாகம் அல்லது திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையை கூட்டுப் பொருப்பில் நடத்துவதற்குப் பலர் அறிய செய்துகொள்ளும் அல்லது செய்யப்படும் காரியமே ஆகும் இதைச் சிலர் அதாவது பழைய முறைக்காரர் சடங்கு என்கிறார்கள்.
சிலர் அதாவது புதிய முறைக்காரர்கள் ஒப்பந்தம் என்கிறார்கள். சடங்கு என்று சொல்லுகின்றவர்கள் உண்மையிலேயே சடங்காகவே கருதி காரியங்களில் லக்ஷியமில்லாமல் நடத்துகிறார்கள். அதாவது கல்யாணத்தில் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எவ்வித உரிமையும் இல்லை. அதுபோலவே சடங்கிலும் கல்யாணக்காரருக்கும் சடங்குக்கும் யாதொரு உரிமையுமில்லை. எப்படியென்றால் தம்பதிகளின் பெற்றோர்களோ: அல்லது பெற்றோர்களைப் பெற்றோர்களோ அல்லது இந்தப் பெற்றோர்களுக்கு வேண்டியவர்களோ பார்த்து இன்ன பெண்ணுக்கு இன்ன மாப்பிள்ளை அல்லது இன்ன மாப்பிள்ளைக்கு இன்ன பெண் என்று தீர்மானித்து விட்டால் அதைத் தம்பதிகள் மணமக்கள் ஆக்ஷ்பிக்க முடியாது. அது மாத்திரமல்ல இன்னொரு அநியாயம் என்னவென்றால், திருமணம் என்பது நடக்கும் நிமிஷம் வரையில் மாப்பிள்ளை பெண்ணைப் பார்த்திருக்க மாட்டார். பெண் மாப்பிள்ளையைப் பார்த்திருக்க மாட்டார். 100-க்கு 99 திருமணத்தில். பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் சந்தித்துப் பேசி இருக்கவே மாட்டார்கள். 25— ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
அங்க லக்ஷணம், அறிவு லக்ஷணம், யோக்கியதை லக்ஷணம் ஆகிய எதையும் பார்க்காமலும் தெரியாமலும் தான் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் இருவர்கள் விஷயத்தில் ஏதாவது ஒன்று கவனிக்கப்படுகின்றதா என்றால் இருவர் பிறந்த நேரம் என்று சொல்லப்படும் 'அது சரியான நேரமோ, தப்பான நேரமோ என்பதைப்
பற்றி கவலை இல்லாமல்' ஒரு காலத்தைக் குறிப்பில் வைத்து அதன். மூலமாகவே ஒரு பொறுப்பற்ற நபரால் இருவருக்கும் பொருத்தம் உண்டா இல்லையா என்பது முடிவு செய்யப்பட்டு விடும். சில சமயங்களில் பிறந்த காலம், நேரங்கள் கூட கவனிக்கப்படாமல் பெண்ணின் பெயரின் முதலெழுத்தையும் மாப்பிள்ளையின் முதல் எழுத்தையும் ஆதாரமாக வைத்து பொருத்தம் முடிவு செய்யப்பட்டு விடும். மற்றும்
சில சமயங்களில் அதுகூட இல்லாமல் கோவிலில் பூ வைத்து கேட்பது மூலமோ, கருடன் பறப்பது மூலமோ, பல்லி கத்துவது மூலமோ, இருவர். பெயர் எழுதப்பட்ட சீட்டுகளின் மீது ஈ(பறவை) உட்காருவதன் மூலமோ, அல்லது கோவில்களில் ஏதாவது ஒருவன் சாமியாடி வாக்கு சொல்லுவதன் மூலமோ கல்யாணம் தீர்மானிக்கப் பட்டுவிடும். எவ்வளவு காட்டுமிராண்டித்தன வாழ்வில் நமது மக்கள் இருந்து வருகிறார்கள். என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.
இது போலவே சடங்குகள் விஷயத்திலும் இந்தச் சடங்குகள். எதற்காக என்றாவது இந்த சடங்கின் அர்த்தம் என்ன என்றாவது இச்சடங்குகளுக்கு அவசியமோ, ஆதாரமோ, ஆரம்ப காலமோ, பொருத்தமோ என்னவென்றாவது மணமக்களுக்கோ பெற்றோர்களுக்கோ.
மற்றும் பந்து மித்திரர்களுக்கோ யாருக்குமே தெரியாது
ஆனால் சுயமரியாதைக் கல்யாணம் என்பது இந்தப்படிக்கல்ல. மணமக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து தங்களுக்குள்ளாகவே ஒருவரை ஒருவர் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமும், பொருத்தமும், அவசியமும் இல்லாமல் வெறும் சடங்கு பழக்க வழக்கம் என்பதற்காக மாத்திரமே ஒன்றையும் செய்யக்கூடாது என்பதுமேயாகும். இவை மாத்திரமல்லாமல் திருமணம் சம்மந்தமாக செலவு மெனக்கேடு வீண் கஷ்ட நஷ்டம் ஆகியவைகளைப்பற்றி பழைய முறைக் கல்யாணங்களில் லக்ஷியமே செய்யப்படுவதில்லை ஆடம்பரத்துக்காகவே வீண் செலவுகளை தகுதிக்கு அதிகமாக கடன் வாங்கியாவது செய்யப்பட்டு வருகிறது. திருமணத்திற்காக 3 நாள் 4
நாள் 5 நாள் சிலர் 7 நாள் கூட மெனக்கெட்டு அயலூர் பந்து மித்திரர்களையும் தருவித்து மெனக்கெடச்செய்து 5 விருந்து 10 விருந்து என்பதாகச் சாப்பாட்டுச் செலவும், பந்தல் மேளம் சங்கீதம் ஊர்வலம் வாணம் என்பதாக வீண் காரியங்களும் குடிகாரர்கள் குடித்த போதையில்
குடி அரசு (புரட்சி) - 1934(1) _ 216
தாருமாராய் நடப்பது போல் கல்யாண போதையில் சிக்கி பணங்கள், நேரங்கள், கஷ்டங்கள் ஆகியவைகள் தாருமாராக செலவாக்கப்பட்டு வருகின்றன. 2, 3 நாளைக்கு ஆக சிலர் பார்த்து புகழ்வதற்காக என்று செய்யப்படும் இப்படிப்பட்ட தாருமாரான ஆடம்பர சிலவுகள் கல்யாணத் தம்பதிகள் தலையிலோ அல்லது குடும்பத்தார்கள் தலையிலோ விழுந்து கல்யாணக் கடன் பார்வைகளால் வெகு நாளைக்கு அவதிப்பட வேண்டியிருப்பதால் சில குடும்பங்கள் கல்யாணச் செலவாலேயே பாப்பராகி மீளாக் கடன்காரர்களாகக் கூட ஆகவேண்டியதாகி விடுகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகளும் முட்டாள்தனமான காரியங்களும் கூடாது என்பதுதான் சுயமரியாதைக் கல்யாணம் என்பதின் முக்கியாம்சங்களாகும்
மற்றும் கல்யாணம் செய்து கொள்ளும் விஷயத்தில் தம்பதிகளை விட மூன்றாவதவர்களுக்கே சகல சுதந்திரமுமிருந்து வருகிறது. செய்து வைப்பதற்கு ஒரு புரோகிதன் வேண்டும். இன்ன இன்ன மாதிரி செய் என்பதற்குப் பெற்றோர்கள், பந்து மித்திரர்கள் வேண்டும். இவர்கள் சொன்னபடியெல்லாம் தம்பதிகள் நடக்கவேண்டும்
சுயமரியாதைக் கல்யாணம் என்பதில் இந்த முறையில்லை மணமக்கள் தங்கள் ஒப்பந்தங்களை ஒருவருக்கொருவர் சொல்லி சம்மதித்ததற்கு அறிகுறியாக மாலையிட்டுக் கொள்வது என்பதுடன்
முடிவுபெற்று விடுகின்றது.
மற்றும் இவற்றையெல்லாம் விட ஒரு முக்கிய விஷயம் என்வென்றால் கல்யாண விஷயத்தில் மணமக்களின் வாழ்க்கைச் சம்மந்தம் முக்கியமானது லக்ஷியமானது அல்லவென்றும் அதில் ஏதோ ஒரு தெய்வீக சம்மந்தம் இருக்கிறதென்றும் அதுவேதான் திருமணத்தின். லக்ஷியமென்றும் ஆதலால் அப்பெண்ணும், மாப்பிள்ளையும் அத்தெய்வீக சம்மந்தத்துக்காக ஒருவர் குற்றங்களையும் அநீதிகளையும் மற்றவர்கள். பொருத்துக்கொள்ளவேண்டும் என்றும் அதிலும் சிறப்பாக மாப்பிள்ளை செய்யும் கொடுமையையும் அநீதியையும் பெண் பொருத்துக்கொண்டு வாழ்நாள் முழுமையும் மாப்பிள்ளைக்கு பெண் அடிமையாய் பக்தியாய் இருக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.
ஆனால் சுயமரியாதைக் கல்யாணம் என்பதில் அப்படி இல்லை திருமணம் என்பது பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்க்கையை நடத்த ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தமென்றும் அவ்வொப்பந்த விஷயம் பெண்ணையும், ஆணையும் மாத்திரமே பொருத்ததே ஒழிய வேறு எவ்வித தெய்வீகத்துக்கோ அல்லது எவ்வித கட்டுப்பாட்டுக்கோ சம்மந்தபட்டதல்ல என்றே சுயமரியாதைக் கல்யாணத்தின் தத்துவமாகும்
மேலும் பழயமுறை கல்யாணமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணமேற்பட்ட பிறகு தான் ஒருவர் மீது ஒருவர் ஆசைகொள்ளுவதோ A7 ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
காதல் கொள்ளுவதோ ஏற்பட வேண்டுமே ஒழிய அதற்கு (கல்யாணத்துக்கு) முன்னால் ஒருவர் மீது ஒருவருக்கு ஆசையும், “காதலும்” ஏற்படுவது கூடாதென்றும் குற்றமென்றும் அது விபசாரத்துக்கு சமானமானதென்றும் கூறப்படுகின்றது
சுயமரியாதைக் கல்யாணத்திலோ, கல்யாணத்துக்கு முன்பாகவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவருக்கொருவர் ஆசையும் “காதலும்” ஏற்பட்டு அதன் பின்னரே கல்யாணம் நடக்க வேண்டும் என்றும், மற்றபடி கல்யாணம் ஆன பிறகு கல்யாணம் ஆய்விட்டதே என்கின்ற காரணத்திற்காக அங்க ஈனராய் இருந்தாலும் வியாதிக்காரறாய் இருந்தாலும், கொடியவறாய் இருந்தாலும் ஒருவருக்கொருவர் ஆசையும் காதலும் கொண்டுதான் ஆக வேண்டுமென்றும் சொல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ளுவதில்லை.
மற்றும் பழய முறைக் கல்யாணங்கள் ஒருதடவை கல்யாணமாகி விட்டால் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறுபடியும் பிரியக்கூடாதென்றும்
இப்படிக் கூறாவிட்டாலும் ஆணுக்கு பிரித்துவிடவோ பிரிந்துகொள்ளவோ. உரிமை உண்டு, பெண்ணுக்குத்தான் உரிமையில்லை என்றும் பெண்ஜாதி செத்துப்போனால் புருஷன் மறுவிவாகம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்ஜாதி உயிருடன் இருக்கும்போதே புருஷன் மாத்திரம் பல பெண்களை கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றும் பெண்கள் மாத்திரம்
எந்தக் காரணம் கொண்டும் புருஷன் எவ்வளவு கொடியவனாகவும் மனுஷத்தன்மை அற்றவனாகவும் எவ் விஷயத்துக்கும் பொருத்தமில்லாமல் கொடுமையும் சித்திரவதையும் போன்ற கஷ்டத்தையும் கொடுப்பவனாணாலும் புருஷனை விட்டுப் பிரியக் கூடாதென்றும் வேறு கல்யாணம் செய்து கொள்ள கூடாதென்றும் புருஷன் தான் பக்குவமாவதற்கு முன் தனது 5 வது 10வது வயதிலேயே இறந்துபோணாலும் வேறு புருஷனைக் கல்யாணம் செய்துகொள்ளாமல் விதவை என்னும் பெயருடன் உலக சுகபோகங்கள். எல்லாவற்றையும் வெறுத்து மக்கள் கண்ணுக்கும், மனதுக்கும் வெறுப்புத்தோன்றும் தன்மையில் வாழவேண்டும் என்றும் சொல்லுகின்றது.
சுயமரியாதைக் கல்யாணத்தில் இவ்வித அக்கிரமும், அயோக்கியத்தனமும் அறியாமையும் கொடுமையும் மூர்க்கத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் இல்லை. வாழ்க்கைக்கும் மனதுக்கும் ஏற்ற தம்பதிகளானால் கூடி வாழலாம். அவைகளுக்கு ஒவ்வாத வாழ்க்கையே “நரகம்” போன்றதான தம்பதிகளானால் பிரிந்து மனதிற்கு ஏற்றவர்களை மணந்து இன்பசுக வாழ்வு வாழ உரிமை உண்டு என்பதோடு புருஷனோ மனைவியோ யார் இறந்துபோனாலும் மறுவிவாகம் செய்துகொள்ளலாம்
என்று கூறுகிறது பழய முறை கல்யாணப்படி பெண்களுக்கு சொத்து உரிமை இல்லை. வாழ்க்கையில் சரிபங்கு ஆதிக்க உரிமை இல்லை என்று
குடி அரசு (புரட்சி) - 1934(1) _ 718
கூறப்படுகிறது. சுயமரியாதை கல்யாணத்தில் சொத்திலும் வாழ்க்கை ஆதிக்கத்திலும் பெண்ணுக்கு ஆணைப்போலவே சரிபங்கு உரிமை இருக்கின்றது என்பதுடன் இவைகளே கல்யாண ஒப்பந்தத்தின் ஷரத்துக்களாகும். அநேகமாய் கல்யாண தத்துவம் பழயதும் புதியதும் ஒரு மாதிரிதான். எப்படி எனில் இங்கு ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் கல்யாணம் செய்துகொண்டார்களே ஒழிய ஆணும் ஆணும் சேர்ந்தோ, பெண்ணும் பெண்ணும் சேர்ந்தோ கல்யாணம் செய்துகொள்ளவில்லை.
ஆதலால் இவ்வித திருமணத்தைப் பற்றி யாரும் கவலையோ ஆத்திரமோ படவேண்டியதில்லை. பெண் மக்களில் பலருக்கு இவ்விஷயத்தில் ஏதாவது மன சஞ்சலம் இருந்தாலும் இருக்கலாம் ஆண்களில் படித்தவர்கள் வித்வான்கள் என்று சொல்லப்படுபவர்களிலேயே சில அழுக்குமூட்டைகள் இருந்துகொண்டு விஷம பிரசாரம் செய்துவரும்பொழுது பெண்களில் இது விஷயமாய் அதிருப்த்தி உள்ளவர்கள் இருப்பது அதிசயமல்ல. ஏனெனில் பெண்களை நாம் எப்படி வைத்திருக்கின்றோம். அவர்களில் 100-க்கு 99-பேருக்கு அடுப்பங்கரையையும், படுக்கைவீட்டையும் மாத்திரமே காட்டி நகை மாட்டுகின்ற (Stand) ஸ்டேண்டுபோல் நகைகளை மாட்டி இது என் பெண்ஜாதி (அடிமை) இது உன் பெண்ஜாதி என்று கண்காக்ஷி காட்டு கின்றோமே ஒழிய வேறு அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம் என்பதை யோசித்துப்பாருங்கள். வேண்டுமானால் கண்ணைமூடிக்கொண்டு பல்லைக் கடித்துக்கொண்டு கணக்கு வழக்குப் பார்க்காமல் பிள்ளைகளைப் பெறுவார்கள். இதற்கு ஒரு உபாத்தியாயரோ, அறிவோ வேண்டியதில்லை. எவ்வளவுக்கெவ்வளவு மடமை உண்டோ அவ்வளவுக்கு அவ்வளவு பிள்ளைகள் பிறந்து விடும். எவ்வளவுக்கெவ்வளவு அடிமைத்தன்மையில் மோகம் உண்டோ அவ்வளவுக்கவ்வளவு நகைகளை மாட்டிக்கொள்ளுவார்கள். தங்களை விகாரமாய் சிங்காரித்துக் கொள்ளுவார்கள். இவைகளையும், இவை போன்றவைகளையும்தான்.
நாம் அவர்களுக்குத் தாய் தந்தையர்கள் என்கின்ற முறையில் கற்றுக்கொடுத்திருக்கிறோம். ஆகவே இப்படிப்பட்ட பெண்களிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரீக ஞானமும், கெளரவமும் உள்ள
சுற்றத்தார்களுக்குள்ளும் சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும் நிரம்பவும் கர்நாடக முறையில் பட்டிக்காட்டு கிராமவாசப் பெண்களைவிட இளப்பமாய் நடந்து கொள்வதைப் பார்த்தால் நமக்கு எவ்வளவு சங்கடமாயிருந்தது என்பது அவரவர்களுக்கே தெரிந்திருக்கலாம் இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர்களால் வளர்க்கப்பட்டால் அவற்றிற்கு மனிதத்தன்மை எப்படி ஏற்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நமது மக்களுக்கு ஏன்.
20 ய... ஹரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
மனிதத்தன்மை இல்லை, சுயமரியாதை இல்லை என்றால் அவற்றிற்கெல்லாம் முக்கியத்திலும் முக்கியமான காரணம் இப்படிப்பட்ட தாய்மார்களால் பெறப்பட்டு வளர்க்கப்பட்டதேயாகும் கடைசியாக தோழர்களே ஒன்று சொல்லி முடித்துவிடுகிறேன். கல்யாணமானவுடன் பெற்றோர்கள் பிள்ளைகளை எதிர்பார்ப்பார்கள். சுற்றத்தார் எத்தனை ஆயிற்றென்று கணக்குக்கூட்டி வருவார்கள். தம்பதிகள் பிள்ளை பெறுவதினால் படும் கஷ்டம் காயலா அசெளகரியம் வாலிபம் பாழாவது அதிக பிள்ளைகள் பெறுவதினால் தரித்திரம், துன்பம், வியாகூலம், விசாரம், மானங்கெட நேருவது, சுயமரியாதை இழந்தாவது வாழ ஆசைப்படுவது ஆகிய காரியங்களைப் பற்றி யெவரும் சிந்திக்க மாட்டார்கள். யாதொரு பொறுப்பும் அறிவும் அற்று இன்று மணமக்களைப் பார்த்து “16 பிள்ளைகள் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும்” என்று சொல்லுகிறவர்கள் நாளைக்கு ஒரு குழந்தைக்கு அரைச்சங்கு பால் வார்க்கக்கூட சம்மதிக்கமாட்டார்கள். ஏதாவது கஷ்டம் வந்தால்கூட பக்கத்து வீட்டில் குடியிருந்துகொண்டு கணக்குக்கூட்டிப் பார்த்து அசூசையும் வெறுப்பும் அடைவார்களே தவிர சிறிது பரிதாபம்கூட காட்டமாட்டார்கள். ஆதலால் மணமக்கள் குழந்தைகளைப் பெறும் விஷயத்தில் சிறிது ஜாக்கிரதையாகவும் அறிவுடமையாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.
08.06.1934 இல் சென்னை தோழர்கள், கற்பகம் அம்மாள் - கே.கல்யாணசுந்திரம் ஆகியோருக்கு சென்னை சவுகார் பேட்டையில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தில் ஆற்றிய உரை.
குறிப்பு:
புரட்சி - சொற்பொழிவு - 17.06.1934
குடி அரசு (புரட்சி) - 1934 (1)
ப ப் S
அருஞ்சொல் பொருள்
உள்நோக்குகை
அந்தர்முகம்
அந்தரார்த்மா
உள்மனம் நியாயமின்மை
அநீதம்
தீ வேள்வி
ஆகுதி
மிக்க நட்பு
ஆத்மார்த்தம்
விரும்பி
இச்சித்து உத்தரிக்க
மேற்பார்வையிட
ஈடுசெய்தல், கடன் செலுத்துதல், பொறுத்தல்
உத்தரித்தல் உன்மத்தம்
மயக்கம், வெறி, பைத்தியம்
எக்கியம்
வேள்வி
எத்தனம்
முயற்சி, ஆயத்தம் காரணம், கருதுகோள், சான்று
ஏஷ்யம்
கண்டசரம்
கழுத்தணிவகை
காற்க
காக்க
காஸ்டிங் ஓட்டு
ஒரு கூட்ட நடவடிக்கையில் ஆதரவும் எதிர்ப்பும் சமமாக இருக்கும் பொழுது தலைவரின் தீர்மானமான வாக்கு
கிருஷிகள்
விவசாயிகள்
சக்கிமுக்கி கற்கள்
நெருப்புண்டாக்கப் பயன்படும் கற்கள்
சந்தியா வந்தனம்
காலை, மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு
மன நிறைவு
சந்துஷ்டி
சம்ரட்சனை,
காப்பாற்றுகை
சம்ரட்சணை:
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 18
சன்னதம்
ஆவேசம், கோபம், வீறாப்பு
நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை
தத்தம் தியங்கவிட்டு
கலங்கவிட்டு, மயங்கவிட்டு, சோர்வெய்த விட்டு
துக்கித்தல்
துயருறுதல்
துவம்சம்
அழிவு பலவந்தக் கற்பழிப்பு
துராக்கிருத
தேவதா தோதாக
தெய்வம், பேய்
வசதியாக
நரமேத யாகம்
மாந்தரைக் கொன்று செய்யும் வேள்வி கொடுமை
நிஷ்டூரம்
பகிர்
வெடிப்பு
பரமார்த்தம்
உண்மைப் பொருள், மேலான பொருள், கடவுள் தொடர்பான
நீக்க
பரிகரிக்க
பரியந்தம்
எல்லை
மிருகாதி
விலங்கு வகைகள்
கன்னெஞ்சு
வன்மனம்
வாசகத்தின் பொருளை
வாச்சியனை
சொற்கெட்டாதது
வாசா கோசரம்
வாய்ச் செய்தி
வாசிட்டம்
விசாரம்
கவலை
வியர்த்தமாக்கி
பயனற்றதாக்கி, பொருளற்றதாக்கி
வியாகூலம்
துயரம் வழக்கு
வியாஜ்யம்
ஜாபிதா
பட்டியல்
குடி அரசு (புரட்சி) - 1954 (1)
ப 3