Kudi Arasu — 1933, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1933-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 17
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1933-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 312
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
அடக்குமுறை பாய்ந்தது
*குடி அரசு” பொதுவுடைமைக் கொள்கைகளை தீவிரமாக பரப்பிய காலகட்டம். காந்தியாரின் சட்டமறுப்பு இயக்கம், சத்தியாகிரக போராட் டங்களினால் காங்கிரசார், சிறைபடுத்தப்பட்ட நிலையில், இனி போராட் டங்களை நடத்தப் போவதில்லை என்று அரசினரிடம் சமாதானம் பேசி, தொண்டர்களை காந்தி விடுவிக்கச் செய்ததன் மூலம் காந்தியம் பெரும் பின்னடைவை சந்தித்தது. காந்தியம், கதர், தேசியம், எந்திர எதிர்ப்பு போன்ற புரட்டுகளை எதிர்த்தும், சோவியத் நாட்டின் அய்ந்தாண்டு
திட்டம் மற்றும் பொதுவுடைமை கருத்துகளை வலியுறுத்தும் ஆழமான தலையங்கங்களை *குடி அரசு” எழுதியது. “சித்திரபுத்திரன்” என்ற புனைப்பெயரில் பெரியார் எழுதிய எள்ளல் நடை எழுத்துகளும், இத் தொகுதியில் அடங்கி யுள்ளன.
கத்தோலிக்கர்கள் நடத்திய “கத்தோலிக்க லீடர்” ஆங்கில
பத்திரிகை *குடி அரசை” ஒழிக்க நிதி திரட்டியது.
சுயமரியாதை இயக்கம் தொடங்கிய சமதர்ம கட்சியின் சார்பில் சம
தர்மிகள் ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு முனிசிபாலிட்டிகளிலும் பதவிகளைப் பிடித்தனர். திருவிதாங்கூரில் ப. சிதம்பரம், புதுக்கோட்டை
யில் முத்துசாமி வல்லத்தரசு ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாயினர். காங் கிரஸ் தலைவர்களான ஜவகர்லால் நேரு, பட்டேல் ஆகியோரையும் “குடி அரசு” விமர்சனத்துக்கு உட்படுத்தியது. இளைஞர்களிடம் முற் போக்கு முகத்தையும், முதியோரிடம் பிற்போக்கு முகத்தையும் நேரு காட்டுவதை சுட்டிக்காட்டிய குடிஅரசு, பார்ப்பன தாசர் என்று பட்டேலை வர்ணித்து, அவருக்கு “ஆல் இந்தியா சத்தியமூர்த்தி” என்று பெயர் சூட்டியது.
சேலம் மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியை தங்கள் நிர்வாகத்
தின் கீழ் வைத்திருந்த ஜமீன்தார்களை எதிர்த்து, சேலத்தில் ஜமீன்தார்கள் அல்லாதார் மாநாட்டை நடத்தி, ஜமீன்தார் ஆட்சிமுறையையே ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் பெரியார். ராசிபுரம்,
கோவை, சிவகங்கையில் சுயமரியாதை இயக்கத்தின் மாவட்ட மாநாடுகள் நடந்த செய்திகளும், அவற்றில் பெரியாரின் உரைகளும் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன. சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரத்தால் நடுங்கிய மதத் தலைவர்களைக் காப்பாற்ற மதத் தலைவர் பாதுகாப்பு சட்டத்தையும் நாட்டி லுள்ள 562 சுதேச சமஸ்தானங்களைக் காப்பாற்ற சமஸ்தான பாதுகாப்பு சட்டத்தையும் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்தபோது, “குடி அரசு” கடுமையாக எதிர்த்தது. லேவாதேவி சுரண்டலையும் பெரியார் வன்மையாக சாடினார்.
திருநெல்வேலியில் சுயமரியாதை இயக்கம் நடத்திய தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்கு எஸ்.சோமசந்தர பாரதியார், சாவடி கூத்த நயினார். பிள்ளை ஆகிய காங்கிரசாரை தலைமையேற்க பெரியார் அழைத்தி
ருந்தார். மாநாட்டில் அவர்கள் தலைமை உரையின்போது, தோழர்கள் ஜீவா னந்தம், குப்தா, முத்துசாமி வல்லத்தரசு ஆகியோர் குறுக்கிட்டு, கேள்விகள் கேட்டதும், பின்னர் மாநாட்டு உரையில் ஜீவா அவர்களைக் கடுமையாக விமர்சித்ததையும் பெரியார் ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களிடம் நேரிலும், பிறகு “குடி அரசு” வழியாகவும், தனது வருத் தத்தைப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து “குடி அரசில்” சிங்காரவேலர். சமதர்ம எதிர்ப்பாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினார். பொன்னம்பலனார், பொதுவுடைமைக் கொள்கைக்கு அதிக முக்கியத் துவம் தருவதால், பார்ப்பனிய எதிர்ப்பு குறைந்துவிட்டது என்று எழுதி
னார். பெரியார் அதற்கு அளித்த தெளிவான விளக்கங்கள் - இத் தொகுப்
பில் இடம் பெற் றுள்ளன. மாற்றுக் கருத்துகளையும், பதிவு செய்ய “குடி அரசு” தனது பக்கங்களை தாராளமாக ஒதுக்கியதை, இச் சம்பவங்கள். உணர்த்துகின்றன.
சுயமரியாதை இயக்கத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் *தமிழன்பர்கள் மாநாடு” என்ற பெயரில் ஒரு மாநாடு கூட்டியதை கடுமையாக விமர்சித்தது “குடி அரசு”. “தமிழ்ப் பண்டிதர்கள் புத்தியை மதத்துக்குக் கொடுத்துவிட்டு, மதக் கண்ணாடியால் தமிழைப் பார்க்கிற வர்களாகவே இருக்கிறார்கள்” என்று பெரியார் எழுதினார்.
பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு கடும் எதிரியாக செயல்பட்ட அன்னிபெசன்ட் தமது 86 ஆம் வயதில் முடிவெய்தினார். இரங்கல் உரை எழுதிய “குடி அரசு” அம்மையாரின் தலைமைப் பண்பை, பெண்ணியப் பார்வையில் பாராட்டியதோடு, விபூதி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அன்னிபெசன்டுக்கு எதிராக அய்யங்கார் பார்ப்பனர்கள் தீவிரமாக செயல்பட்டதை அம்பலப்படுத்தியது.
கொச்சின் - திருவாங்கூர் பகுதியில் வாழ்ந்த 25 லட்சம் ஈழவர்கள், தோழர்கள் கே. அய்யப்பன் நடத்திய சுயமரியாதை பிரச்சாரத்தால்
குடி அரசு - 1933 (2 4
ஈர்க்கப்பட்டு, தங்களை மதமற்றவர்கள் என்று மாநாடு நடத்தி பறை சாற்றியதை “குடிஅரசு” வரவேற்று சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டது.
“இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?” என்று பெரியாரால் எழுதப்பட்டு, அரசின் “ராஜதுவேஷ குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, பெரியா ருக்கு சிறைத்தண்டனையை பெற்றுத் தந்த கட்டுரை இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார்.
பெரியார் தங்கையும் “குடி அரசு” பதிப்பாளருமான கண்ணம்மாளும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டார். குடி அரசுக்கு ரூ.2000 ஜாமீன் தொகை யை அரசு கேட்டது. அடக்குமுறையால் “குடிஅரசு” நிறுத்தப்பட்டாலும். தொடர்ந்து “புரட்சி” வார ஏடு நவம்பர் 26 முதல் வெளிவரத் தொடங்கி யது. “குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண் டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின், அதாவது பெரும் பான்மை மக்களின் ஆட்சியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லை யானால் புரட்சி தோன்றியேதான் ஆக வேண்டும்” - என்று “புரட்சியின்
முதல் தலையங் கம் கூறியது.
நவம்பர் 11 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை இத் தொகுப்
பில் இடம் பெற்றுள்ளவை அனைத்தும் “புரட்சி” வார ஏட்டில் வெளி வந்தவையே ஆகும்.
- பதிப்பாளர்
5 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
பொருளடக்கம்
கதர்
ன & B கக 4BBRS 9828 IIBBEIBESR
“குடி அரசை” ஒழிக்கபண வசூலாம்
“CAPITAL” (“மூலதனம்”)
காந்தீயத்தின் கதி கத்தோலிக்க மதஸ்தர்கள் யோக்கியதை
ரஷியாவின் வெற்றி
தோழர்களே! கவலைப்படாதி
ஏன் தோற்றார்?
தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார்
சுயமரியாதைக்காரனுக்கும் புராண மரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை
யந்திரத்தின் பெருமை
மீரத்கேஸ் அப்பீல் முடிவு பாராட்டத்தக்கதே
தொழிலாளிகள் தொண்டு
தோழர் பி. சிதம்பரம் மோசம்போனேன்! ஈஸ்வரா!
நாகர் கோவிலில் ஈ.வெ. இராமசாமி
ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு
சேலம் மகாநாடுகள்
“வெடிகுண்டு” மனிதன் ஒரு ஜீவப்பிராணியே
கபடநாடகக் கடவுள்
இந்திய சுதேச சமஸ்தானங்கள்
குடி அரசு - 1933 (2
வம்பனுக்கும்- கம்பனுக்கும் சம்பாஷணை
105
ததத 8 தத தநத த நந 85
கல்யாணக்கஷ்டம்
110
பொது உடமை
114
கடன்பட்டவர்களுக்குச் சிறைவாசம்
120
இரகசிய காரணங்கள்.
122
ரங்கநாதர் லாட்டரி அடிக்கிறார் “ஹரிஜன” இயக்கரகசியம்
125
127
ஸ்தல ஸ்தாபன அலங்கோலம்.
129
வாலிபர் கடமை
132
இன்னுமா காந்தீயம்? பாராட்டுகிறோம்.
133
140
சமதர்ம வெற்றி
142
பட்டேல் ஞானோதயம்
143
கேரளத்தில் சுயமரியாதை இயக்கம்
145
ஜவஹர்லால் - காந்தி பெசண்டம்மையாரின் முடிவு
150
154
ஒரு எச்சரிக்கை
157
சங்கராச்சாரிக்கு அவமரியாதையா?
158
தொழிலாளர் மகாநாடு
159
42.
நமது வருத்தம்
167
மதக்கிறுக்கு
173
முதல் மந்திரி கவனிப்பாரா?
178
தீபாவளி- முட்டாள்தனம்
179
காந்திஜயந்தி
180
சிபடி நாயகம்
185
தோழர்கள் சிங்காரவேலுக்கும் பொன்னம்பலத்துக்கும் சமாதானம்
186
கேள்வியும்- பதிலும்
49.
195
இன்றைய ஆக்ஷி ஏன் ஒழிய வேண்டும்?
196
பட்டேல்பட்டுவிட்டார்.
51.
200
கர்ப்பத்தடை
201
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
மீண்டும் பார்ப்பன சூழ்ச்சி
எது துவேஷம்? அகில கூட்டுறவாளர்கள் தினம் - ரஷ்யாவின் கூட்டுறவு வாழ்க்கை விபரங்கள்
& g ததத தத தந ததத 85 8ததஜய ததத
“கெடுவான் கேடு நினைப்பான்”
ஈரோடு அர்பன் பாங்கு
குடி அரசுக்கு பாணம்
குடி அரசுக்கு நோட்டீஸ்
நாதர்ஷா படுகொலை
தமிழ் அன்பர் மகாநாடு
துறையூர் சப்ரிஜிஸ்டிரார் அமுல்
239
புரட்சி
243 கோவைஜில்லா சுயமரியாதை மகாநாடு - பெண்கள்மகாநாடு 247
லெனின் - நாகம்மாள் உருவப்படத் திறப்புவிழா கோவை ஜில்லா (ஈரோடு) மகாநாடு
இராமநாதபுரம் ஜில்லா சு.ம.மகாநாடு
“தமிழ் அன்பர்”மகாநாடு
நகர பரிபாலன சபை அமைப்பு ஆஸ்திகனா? - நாஸ்திகனா?
இனிப் பலிக்காது
ஜவார்லாலும் பொது உடமையும்
ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?
வடநாட்டில் சுயமரியாதை வெற்றி
தமிழ் அன்பர் மகாநாடு சென்னையில் காந்தி “விஜய” அலங்கோலம்
காந்தி பிரசாரம் பார்ப்பன சூட்சியே
தமிழன்பர் மகாநாடு கோவைச் சிறையில் தோழர் ராமசாமி
நாகரீகமென்றால் என்ன?
அருஞ்சொல் பொருள்
குடி அரசு - 1933 (2
“அப்பிடி வீ ஒறு ௮
ங்கள் ண்கேகளர் The Crux af பய Indlan Problsmg By B 'u-..--uefi.k.na-,
வடட மே டடடு பப கக கடவ
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
குடி அரசு - 1933 (2 10
கதா
கதரைப் பற்றியும், அதை அரசியல் பிழைப்புக்காரர்கள் எப்படி உபயோகித்துக் கொண்டு வருகிறார்கள் என்பதைப் பற்றியும், கதர் புரட்டு என்கின்ற தலைப்பின் கீழ் இதற்கு முன் பல வியாசங்கள் எழுதியும், சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் வந்திருக்கின்றோம். இதன் பயனாய் அரசியல் வாழ்வுக்காரர்களும், அரசியலில் கலந்து கொள்ளுவதன் மூலமாய் மக்களை ஏமாற்றி பயனடையக் கருதும் சில சுய நலக்காரர்களும், தவிர மற்ற மக்கள் யாவரும் கதரை அடியோடு பஹிஞஷ்கரித்து இருப்பதும் யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் இப்போதும் அதைப் பற்றி ஏன் எழுதுகிறோம் என்று சிலர் கருதலாம்.
இது எழுதவேண்டியதற்கு ஏற்பட்ட முக்கிய காரணம் என்னவென்
றால், சுயமரியாதை இயக்கத்தை பழிக்கவும், தூற்றவும், அதன் மீது மூடப் பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாக்கவுமான, இழிதகைப் பிரசாரத்துக்கு அனுகூலமாக சில காங்கிரஸ்காரர் என்று சொல்லிக்கொண்டு சோம்பேரி யாய் இருந்து வயிர்வளர்க்கும் வீணர்கள் “சுயமரியாதைக்காரர்கள் கதரை: வெறுக்கிறார்கள்” என்றும் “ஏழை மக்களைக் காப்பாற்றும் கதருக்கு விரோதமாய் இருந்து ஏழைகளுக்கு துரோகம் செய்கிறார்கள்” என்றும் பொதுக்கூட்டங்களில் விஷமப் பிரசாரமும், திண்ணைப் பிரசாரமும் செய்து வருவதால் கதரின் வண்டவாளத்தை ஏழை மக்களே அறியட்டும் என்கின்ற எண்ணத்தின் மீது கதர் என்ற தலைப்பின் கீழ் மறுபடியும் சில குறிப்புகள் எழுத முன்வந்தோம்.
கதர் என்பது எது என்றால் “பஞ்சை கையினால் அரைத்து, கையினால் கொட்டி, கையினால் நூற்று, கையினால் நெய்த துணிக்கு” கதர். என்று பெயர். இவற்றுள் கையால் பஞ்சை அரைப்பது என்பது இப்போது சாத்தியமற்ற காரியமாகப் போய்விட்டது. யந்திரத்தினால் தான் (ஜின்னிங் செய்ய அரைக்க முடிகின்றது.
கதரைப்பற்றி கதரை ஆரம்பித்த-கண்டு பிடித்த கதர் கர்த்தாக்கள் ஆரம்பத்தில் கதருக்காக சொன்ன காரணங்கள் யாவரும் அறிந்ததேயாகும்.
அதாவது,
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
1. “யந்திரம்” என்பது பேயின் பிரதி பிம்பம் ஆதலால் யந்திர உலகத்தை அழித்து கையினால் வேலை செய்யும் பழய கால வாழ்க் கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமானதால் எல்லோரும் கை ராட்டினத்தில் நூல் நூற்க வேண்டியது என்பதை முக்கிய காரண:
மாகவும்,
2. இரண்டாவதாக அவனவனுக்கு வேண்டிய சாதனங்களை: அவன வனே உற்பத்தி செய்துகொள்ளும் தன்னம்பிக்கை தன்மை யை அடையவேண்டும் என்கின்ற தத்துவத்தில் முதலாவதாக அவன வனுக்கு வேண்டிய துணியை அவனவனே நூற்று அவனவனே நெய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.
3.அதன் பிறகு மூன்றாவதாக இந்தியாவுக்கு வேண்டிய துணியை இந்திய மக்களே நூற்று நெய்து கட்டிக் கொள்வார்களேயானால் இங்கிலாந்து தேசம் வரட்சி அடைந்து தரித்திரம் பொங்கி இந்தியர். களிடம் சரணாகதி அடைந்து “சுயராஜ்ஜியம்” கொடுத்து விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.
4. நான்காவதாக கைராட்டினத்தால் நூல் நூற்பதானால் இந்தியா
வில் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிற ஏழை மக்களுக்கு கதர் ஒரு ஜீவனோபாயமாக இருக்கும் என்றும் அதனால் அனேக ஏழை களுக்கு வேலை கொடுக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
மற்றும் கதர் வேலைத்திட்டமானது இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைக்கும் வரைதான் அமுலில் இருக்குமே தவிர, சுயராஜ்ஜியம் கிடைத்த
பிறகு ஏழைகளுக்கு வேறு தொழில்கள் ஏற்பாடு செய்வதன் மூலம் கதர் திட்டம் எடுத்து விடப்படும் என்றும் சொல்லப்பட்டது. இவைகள் தவிர. இன்னும் எத்தனையோ காரணங்களை கதருக்காக சமயோசிதம் போல் ஆனுக்குத் தகுந்தபடி அவ்வப்போது சமாதானமாகச் சொல்லப்பட்டும் வந்தது. இவ்வளவும் சொன்னவைகள் போராமல் வீர வைணவர்கள் வீர. சைவர்கள் என்பவர்கள் போல் வீர கதர்காரர்கள் தங்களுடைய அதி தீவிர. கதர் பக்தியைக் காட்டுவதற்கு தக்கிளியினால் நூல் நூற்றுக்கொண்டு அதாவது பக்தர்கள் சிறிது ஒழிந்த நேரம் கிடைத்தாலும் சிவசிவ, ராம ராம, என்றும் உரு ஜபிப்பது போல் ஒழிந்த நேரம் எல்லாம் தக்களியினால் நூல்
நூற்றுக் கொண்டே இருப்பதின் மூலம் செய்கையில் காட்டிவந்தார்கள். இன்றும் சிலர் அம்மாதிரி செய்தும் வருகிறார்கள். மற்றும் ராட்டினத்தின் மூலமாகவோ, தக்கிளியின் மூலமாகவோ நூல் நூற்பதை தேசிய தவமாகவும், அது ஒரு ஆத்மார்த்த தத்துவமாகவும் சொல்லப்பட்டது.
இவைகள் தவிர கதர் கட்டாதவர்கள் தேசிய சபையில் அங்கத்தினரா யிருக்க அருகதை அற்றவர் என்றும், மற்றும் ராட்டினத்திலோ,
குடி அரசு - 1933 (2 12
தக்கிளியிலோ நூல் நூற்று தேசிய சபைக்கு நூலையே சந்தாவாகக் கொடுக்க வேண்டு மென்றும் சொல்லப்பட்டது.
இவ்வளவும் தவிர ஒரு முக்கிய விசேஷ மென்ன வென்றால் இந்த பத்து வருஷ காலத்தில் இந்த கதர் திட்டத்திற்காக கதர் இயக்கத்திற்கும் பிரசாரத்துக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ரூபாய்கள் பொது ஜனங்களிடம் வசூல் செய்து செலவழிக்கப்பட்டு வந்திருப்பதாகும்.
இவ்வளவு சக்திகளையும், லட்சியங்களையும், தத்துவார்த்தங்க
ளையும், மகிமைகளையும், பிரசாரச் செலவையும் கொண்ட கதர் நாளதுவரை பொருளாதாரத்திலோ அரசியலிலோ “ஆத்மார்த்தத்திலோ” தொழில் முறை யிலோ ஏழை மக்களுக்கு-இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒரு அம்மன் காசு அளவு (அம்மன் காசு என்பது கால் அணாவுக்கு ஐந்துகொண்ட புதுக் கோட்டை நாணயம்) பலனாவது கொடுத்திருக்கிறதா என்பதை யோசித்துப்
பார்க்க வேண்டியது அறிவுடையோருடையவும், நடு நிலைமையோரு டையவும் கடமையாகும்.
கதருக்கு முதலில் கூறப்பட்ட காரணங்களாகிய யந்திரம் கூடாது என்பதானது இனி உச்சரிப்பதற்கே முடியாத காரியமாய்ப் போய்விட்டது. ஏனெனில் யந்திரம் என்பது அறிவு வளர்ச்சியுடையவும், முற்போக்கு முயற்சியினுடையவும் அறிகுறியாகும். அறிவு வளர்ச்சியும் முற்போக்கு முயர்ச்சியின் பயனும் கூடாது என்று சொல்ல இந்த இருபதாவது நூற்றாண்
டில் பயித்தியக்கார ஆஸ்பத்திரியிலும் கூட மனிதன் இருக்க மாட்டான். அன்றியும் கதர் கர்த்தாவாகிய காந்தியாரே நூல் நூற்பதற்கு அதாவது
குறைந்த நேரத்தில் அதிகமான நூல் உற்பத்தி செய்யத்தகுந்த ஒரு யந்திரம் (ராட்டினம்) கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுப் பதாக விளம்பரம் செய்து இரண்டு வருஷகாலமாய் முயற்சித்து வருகிறார். அந்தப் படி ஒரு ராட்டினம் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டால் அப்போது அதை யந்திரம் என்று சொல்லாமல் என்ன சொல்ல முடியும்? ஒரு சமயம் “சக்ராயுதம்” என்று காந்தியார் பெயரிடக்கூடும். (ஆரியம் (கேப்பை! அரைக்கும் கல்லுக்கும் யந்திரம் என்று தான் பெயர் ஆகவே அந்தப் பருப்பு இனி வேகாது.
அதற்கு அடுத்த காரணங்களாகிய கதர் இங்கிலாந்தை பட்டினி போட்டு விடும் என்று சொல்லுவது. ஒரு தடவை ராமா என்றால் சகல பாவ
மும் போய்விடும் என்பது போன்ற சங்கதிக்குத்தான் சமமாகச் சொல்ல வேண்டுமே ஒழிய மற்றபடி அதில் யாதொரு உண்மையும் இருக்க இட மில்லை. மற்றும் மேலே கூறப்பட்ட மற்ற காரணங்களும் அதுபோலவே பரிகசிக்கத் தக்கதாகத்தான் ஆகிவிடும். நிற்க,
12 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
மற்றபடி அவனவனுக்கு வேண்டியதை எல்லாம் அவனவனே செய்து கொள்ளக்கூடிய சக்தியை ஒவ்வொருவனும் அடைய வேண்டுமென் பதானது ஆதியில் மனித சமூகம் காடுகளிலும், மலைப்பொந்துகளிலும் காட்டு மிராண்டிகளாய், காட்டுமனிதர்களாய் திரிந்தவர்களுக்குத்தான் இது சாத்தியப்பட்டிருக்கக்கூடும். எப்படியெனில் ஒரு மனிதனுடைய தேவை காய், கிளங்கு தவிர வேறொன்றும் இல்லாதிருந்திருக்கும். ஆனால் இப் போதைய காட்டு மிராண்டிக்கும், காட்டு மனிதனுக்கும் கூட இது சாத்திய
மாகக் கூடியதல்ல என்றே சொல்லுவோம்.
மேற்கண்ட கொள்கை மூடமக்கள் காதுக்கு இனிமையானதாகவும், ஞாயமானதாகவும் காணக்கூடும். கருத்துக்கு இதைவிட முட்டாள் தனமான கொள்கை வேறு ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் மனித சமூகம் கூடி வாழவேண்டுமானால் கூட்டுறவும் ஒருவருக்கொருவர்: சேர்ந்து செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் இருக்க முடியவே முடியாது.
ஏழைகளுக்கு பலனுண்டா?
எனவே இப்போது சிறிது செல்வாக்கு இருக்கும் ஒரே ஒரு காரண: மாகிய "கதர் ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கக்கூடியது"' என்பதில் ஏதாவது உண்மையோ, நாணையமோ இருக்கின்றதா? என்று பார்ப்போம்.
கதரைப்பற்றிய நமது ஆராய்ச்சி அனுபவத்தில் நூல் நூற்பது ஒரு வெட்டி வேலை என்பதோடு, அது ஏழைகளை ஏமாற்றி நிரந்தரமாய் ஏழை வகுப்பு என்று ஒன்று இருந்து வருவதற்காகச் செய்யப்படும் சூட்சி என்றே
முடிவேற்பட்டிருக்கிறது.
ஏன் வெட்டி வேலை?
ஏன் ராட்டினத்தில் நூல் நூற்பதை வெட்டி வேலை என்கிறோம். என்றால் ராட்டினத்தால் ஆணோ, ஒரு பெண்ணோ ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நூல் நூற்பதால் ஒரு அணா அல்லது ஒன்றே காலணா கூலி கிடைக்கின்றது என்பது கதர் நிபுணர்கள் கணக்கு. இந்தப்படி கதர் நூலில் கூலி கிடைப்பதில்லை என்றும், நூல் நூற்பதின் மூலம் நூல் நூற்கும் கூலியும் போய் கையிலிருந்தும் பணம் கொஞ்சம் நஷ்டமாகின்றதென்றும்.
நாம் சொல்லுகின்றோம். எப்படியெனில் இதை சற்று வாசகர்கள் கவன மாகவும். நுட்ப அறிவு கொண்டும் கவனித்துப் பார்த்தால் தான் விளங்கிக் கொள்ளக்கூடும். இல்லாத பக்ஷம் “பார்ப்பான் வயிற்றில் கொட்டும். பண்டம்” மேல் லோகத்தில் ஆவி ரூபமாய் இருக்கிற “பெற்றோர்களுக்குப் போய்சேருகின்றது” என்கின்ற மாதிரியில் தான் “கதர் நூற்றால் ஒரு அணா கூலி கிடைக்கின்றது” என்கின்ற பொய் நம்பிக்கை உண்டாகிவிடும்.
குடி அரசு - 1933 (2 14
கதர் விளக்கம்
54, இஞ்சு அகலமுள்ள கதர் துணி 10 கஜம் கொண்டது 4/, ராத்தல் இடை இருக்கும். இதில் சேதாரம், கஞ்சி, கனம் போனால் மீதி 4 ராத்தல் பஞ்சுக்குத் தான் நூற்கப்பட்ட கூலி கொடுக்கப் பட்டிருக்கும். அதாவது
ராத்தல் ஒன்றுக்கு 5 அணா கூலி வீதம் 4 ராத்தலுக்கு 1-4-0 கூலி கொடுக்கப் பட்டிருக்கும்.
ஆனால், இந்த 10 கஜம் கதர் துணி என்ன விலைக்கு விற்கப் படுகின்றது என்று பார்த்தால் இன்று 5-10-0க்கு விற்கப்படுகின்றது. இந்த
54, இஞ்சு அகலம் 10 கஜம் துணி இந்திய மில் நூலால் நெய்யப்பட்ட துணி இன்று ஈரோடு பஜாரில் சலவை செய்தது கஜம் ஒன்றுக்கு 0-3-6 வீதம் (10 கஜத்துக்கு) 2-3-0க்கு தாராளமாய் கிடைக்கின்றது. இது கதரை விட எவ்வளவோ மடங்கு துணி மிகவும் நைசாயும், முருக்காயும், கெட்டியாயும் இருப்பதை யாரும் பார்க்கலாம்.
ஆகவே 2-3-0வுக்கு கிடைக்கும்படியான துணியைவிட மட்ட
மானதும், முருக்கும், கெட்டியும் இல்லாததுமான முரட்டுத் துணியை கதர் என்கின்ற காரணத்தால் 5-10-0 விலை போட்டு வாங்குதன் மூலம் சராத்தல் துணிக்கு 3-7-0 அதிக விலை கொடுத்து வாங்குகிறோம். இந்த 3-7-0 அதிகம் கொடுக்கும் பணத்திலிருந்து தான் நூல் நூற்றவர்களுக்கும் 1-4-0 கொடுக்கப் படுகின்றதே தவிர கதரின்-துணியின் பொருமானத்தில் இருந்து கொடுக்கக் கூடியதல்ல என்பதை புத்தியில் பதியவைக்க வேண்டுகிறோம்.
கதர் நூற்பதால் ஜனங்களுக்கு ஒரு ராத்தல் ஒன்றுக்கு நூற்பவர் களுக்குக் கொடுத்த கூலி போக மேல்கொண்டு 0-8-9 அணா வீதம் நஷ்ட மேற்படுகிறது. இது தவிர 2 ராத்தல் பஞ்சில் நூற்கப்பட வேண்டிய துணிக்குப் பதிலாக 4 ராத்தல் பஞ்சு செலவாகின்றது. இதுவும் தவிர 6
மாதத்திற்கு வரக்கூடிய துணி 4 மாதத்திலேயே கிழிந்து விடுகின்றது. மற்றும் துணி முரடாகவும், உபயோகத்துக்கு அசவுகரியமாகவும் இருந்து வருகின்றது.
இதில் தான் ஏழைக் கூலிகளுக்கு தினம் 10 மணி வேலை செய்தால்
15 பை அதாவது 0-1-3 கூலி கிடைக்கிறது என்று சொல்லி ஏமாற்றுகின் றார்கள். இந்த ஏமாற்றத்தை அறிந்து கொள்ளாத மூடர்கள் தான் கதரால் ஏழைகளுக்கு லாபம் என்று சொல்லலாமே தவிர பொருளாதாரக்கணக்கும், புள்ளி விபரமும் தெரிந்தவன் கதரால் மக்களுக்கு ராத்தல் ஒன்றுக்கு 0-13-9 வீதம் பொது ஜனங்கள் பணம் நாசமாகின்றது என்றும், ஒன்றுக்கு இரண்டாக பஞ்சு வீணாகின்றது என்றும்தான் சொல்லித் தீரவேண்டும். இதிலிருந்து நமக்கு தோன்றுவ தென்னவென்றால் “ஏழைமக்களை' 10 மணி நேரம் உழைக்க செய்து வேலை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு 0-1-3 அணா
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
கூலி கொடுப்பதை விட அவர்களை சும்மா உட்காரவைத்து சாப்பாடு போடுவதானால் மேல்கண்டபடி பொதுஜனங்களை ஏமாற்றி நஷ்டமடையச் செய்யும் பணத்தில் இருந்து இன்னம் இரண்டு பங்கு ஜனங்களுக்கு சாப்பாடு போடலாம் என்று தைரியமாய்ச் சொல்லலாம் என்பதேயாகும்.
அன்றியும் கதர் இலாகாவிலோ, வியாபாரத்திலோ கலந்திருப்ப வர்கள் புண்ணிய கேஷத்திரங்களில் நாமம், விபூதி, உருத்திராட்சம், துளசி மணி விற்பதில் தங்கள் பக்தியைக் காட்டுவது போல் கதர் தொழிலில் ஈடு
பட்டு வயிறு வளர்ப்பதன் மூலமும் பணம் சம்பாதிப்பதன் மூலமும் தங்கள் பக்தியைக் காட்டுகிறார்கள். இதைக் கண்டு பாமர மக்கள் ஏமாந்து பின் பற்றி வருகிறார்கள்.
காந்தியாரின் தத்துவார்த்தமும், காங்கிரசு தயவும், 10 லக்ஷக்கணக்கான
ரூ. செலவு கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரமும் இல்லாவிட்டால்
கதர் விற்பனையாகி “ஏழைகளுக்குப் பயன்படுமா” என்பதை யோசித்துப் பாருங்கள். இந்தப்படி ஒருவர் தயவில் பிழைப்பது தானா “ஏழைகள்” பிழைக்கும் வழி என்றும் இது எத்தனை நாளைக்கு நடக்கும் என்றும் கேட்கின்றோம்.
ஆகவே இந்திய மக்களின் பொது அறிவையும் தேசிய ஞானத்தை
யும் மதிக்க இந்தக் கதர்பக்தி ஒன்றே போதுமானது.
இந்திய தேசிய தலைவர் என்பவர்களின் நாணையத்தையும், யோக்கியப் பொருப்பையும் கவனிக்கவும் இந்த கதர் பிரசாரம் ஒன்றே போதுமானது. இந்திய தேச பக்தர்கள், தேசீய வாதிகள், தேசத்தொண்டர்கள் ஆகியவர்களின் பகுத்தறிவுக்கும், விடுதலை ஞானத்திற்கும் இந்தக் கதர் பிரசாரமே போதுமானது.
இந்திய பாமரமக்களின் மத சம்மந்தமான அறிவுக்கு அவர்களது சடங்கு ஆச்சாரம், ராமாயணம், பாரதம், பெரியபுராணம். திருவிளையாடல் புராணம் ஆகிய விஷயத்தில் உள்ள நம்பிக்கை முதலியவை எப்படி அளவு கருவியாய் இருக்கின்றதோ அது போல்தான் இந்திய மக்களது பொருளாதார ஞானத்துக்கும், அரசியல் ஞானத்துக்கும் ஏழைகள் விடு தலைக்கும் அவர் களது கதர் தத்துவமே அளவு கருவியாய் இருந்து வரு
கின்றது.
கடைசியாக ஏழை மக்களை காப்பாற்றுவது என்பது ஒரு மனிதனி டத்தில் இருந்து 3-7-0வை ஏமாற்றிப் பறித்து ஒரு மனிதனுக்கு 1-4-0 வை கொடுப்பது அல்ல என்றும், ஏழைகள் யார்? அவர்கள் ஏன் ஏழைகளாய் இருக்கிறார்கள்? ஏழைகள் என்கின்ற மக்களே இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை கவனித்து அதற்கு ஏற்றபடி நடப்பதுதான் நாணையமான காரியமாகுமே ஒழிய இந்தமாதிரியான பித்தலாட்டங்களால்
குடி அரசு - 1933 (2 16
ஒருநாளும் ஏழ்மைத் தன்மை நீங்கிவிடா தென்றும் உறுதியாய்ச் சொல்லுகிறோம்.
உதாரணமாக இந்த 10 வருஷ காலமாய் கதர் நூல் நூற்றவர்களுக்கு கொடுத்த கூலியைக் கணக்குப் பார்த்தால் கதர் பிரசாரத்துக்குச் செலவழிக்கப் பட்ட பணத்தைவிட கொஞ்சமாகத் தான் இருக்கும். ஆனால் அவர்கள். பெயரைச் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி அடைந்த பணம் கதர் நூற்ற “ஏழைகளுக்கு” கொடுத்ததைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.
ஆகவே இனிமேலாவது கதர் பக்தர்கள் தங்களுடைய ஆவேசத்
தில் சுயமரியாதைக்காரர்களை வையாமலும், பழிசுமத்தாமலும் வேறு வழியில் தங்கள் வயிற்றுப் பிழைப்பைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.07.1933
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
“குழு அரசை” ஒழிக்க பண வ௯லாம்
“குடி அரசை” எதிர்த்துப் போராட கத்தோலிக்கர்கள் நிதி என்ற பெரிய தலைப்பின் கீழ் “கத்தோலிக் லீடர்” என்ற ஆங்கில பத்திரிகையில் ஒரு முறை யீடு காணப்படுகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரிகள் சு.ம. இயக்கத்தின் மீதும், “குடி அரசின்” மீகும், ஆத்திரங்கொண்டு, அவைகளை அழிப்பது என்கிற முடிவு கொண்டு நிதி வசூல் செய்து வருகிறார்கள். அவர்களின் வேண்டுகோளின் பிரகாரமே இது வரையிலும் ரூ. 250க்கு மேல் பணம் சேர்த்திருப்பதாகவும் நமக்குத் தெரிய வருகிறது. சபாஷ்! கத்தோலிக்கர்களே!! மெச்சினோம்
புத்திசாலித்தனத்தை!!
குடி அரசு - செய்திக் குறிப்பு - 16.07.1933
குடி அரசு - 1933 (2) 18
! குடி அமு கபன்
'ஆடி. அரசுப் பதிப்பக புஸ்தகங்கள். மறதுட, லெனினும், குட்ட கைவல்யம் அல்லு கலைக்கியானம். தத்வம் கபட வவ கொழுத்த Ol வட்டை B வில ஆ எஒஸ்வவன சாண்வண T, » பவுனு டட தண்டல் பாலி v வண்டல் எனு பட்டு சூரியன்,
சஷ்யாவைப் பதி பேர்னுட்வா
| கடவுவர தித்திக்கும். குயவர்கள்
விவ அண 1 கடவுளும், ப ம்ஃ "ச்சு சத்தியரக்னெகமா சண்டித்தனமா? விவ பை. O இசாமசாமியின் இலங்கை உபன்ம > i |
கி மு.தல்யைகளிள் அபாசம் இசி தகம் 180 பக்கம். இதன் லை கனு டட ஈடலெட இராமசாமியின் இர் 05 மகாதாட்டுச் சொற்பொழிவு: இதன் அணு! i may அல்லது புராண ஆ P ,L o ந பானை படா த்த கதைக முணு வெல்லாத பும் தத்த த்தேளிய் கண
இந்தியாவின் குறைபாடுகள், உங்டா வதரி எழுத்து விலை கட 0 A o
" | Crustof ihndian Preblem திக்க எல்
&% ச நாதனுக்கு வில அ
o
இராமலிங்க சுலாமிசன் பாடல் இர விலை மனு
இரன் விவ தணு ட்டே பங்கஜம் அல்ல பார்ப்ட க்கொனெய் இதன் வீலை கன 04— மெய்யா? பொய்ய, நரல் வில அன it சாய்ச்சட
மேயோகூற்
சுபமரியாழைப்பாடல், வல சன
கதர்-மூடதம்பிர்கை து
அக;
=
இதல் வை அனு
மானேஜர் குடி ௮சசு புத்தகாலயம், சரோ, ன்ன எது
ம் B கற்தல் க 348 விழுவொல் கெண்ட b 00
சுயகர்யாமை
ம Bhr சத்துவ தங்கள். வெண்துவ்டம்- பத்த
ந் ள் ன
மான் அக்காவிற்கு கல் e தகதக கச் விளி ஓங்குக ன்ன ண்்வவ்ு i a.-.’;‘.".:',“ பொது உடமை
% வவ () கடல பதனமா "று Works தொணுக! நு
ட்கள் விபி அகட என்.
19 ௨... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
“CAPITAL”
6. உ? (மூதைனம்”)
பொது உடமைக் கொள்கைகளைப் பற்றிய நூல்களில் எல்லாம் தலை சிறந்து விளங்குவதும் அது சம்பந்தமான எவ்வித சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் சமாதானம் காணக் கூடியதுமான ஒரு புத்தகம் எது என்றால் காரல் மார்க்ஸ் அவர்களால் சுமார் 60, 70 வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட (ற) கேப்பிட்டல் என்கின்ற ஆங்கிலப் பெயருடைய புத்தகமே யாகும்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன் இதற்கு வேண்டிய விஷயங்களைத் தொகுக்கவும், மேல் ஆதாரங்களைக் கண்டு பிடிக்கவும் தோழர் காரல் மார்க்ஸ் அவர்கள் 1485 புஸ்தகங்களை வாசித்துப் பார்த்து விபரம் தெரிந்து கொண்ட பிறகு அந்நூலை எழுதி இருக்கிறார்.
ஜெர்மனியில் கென்சிங்டன் என்னுமிடத்திலுள்ள ஒரு கட்டிடத்தின்
ஒரு அரையில் இருந்து கொண்டு இந்த புத்தகம் எழுதி இருக்கிறார்.
கொஞ்ச காலத்துக்கு முன் மாஸ்கோவில் காரல் மார்க்ஸ் இறந்த 51 வது வருடப் பூர்த்திவிழாக் கொண்டாடும்போது மேல்கண்ட கட்டிட அரை: போல் மாஸ்கோவில் ஒரு அரை கட்டி அதில் மேற்குறிப்பிட்ட 1485 புத்தகங் களையும் வைத்து அதை ஒரு புத்தகசாலை மாதிரி செய்து யாவரும் வந்து படிப்பதற்கு அனுகூலமாகச் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்
துக்கு “காரல் மார்க்ஸ் மனை” (மார்க்ஸ் ஹவுஸ்) என்று பெயரிடப்பட்டிருக் கிறது. இன்றும் யார் வேண்டுமானாலும் போய் பார்க்கலாம்.
குடி அரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 23.07.4933
குடி அரசு - 1933 (2 20
காந்தீயத்தின் கதி
தோழர் காந்தியவர்கள் அரசியலில் தலையிட்டு தலைமை ஸ்தா னத்தை அடைந்ததற்கு முக்கிய காரணம் ஒருபுறம் அவர் போட்டுக்கொண்ட மத சம்மந்தமான வேஷமும், கடவுள் சம்மந்தமான பேச்சும் மற்றும் சத்தி
யம், அகிம்சை, சத்தியாக்கிரகம், ஆத்ம சுத்தம், ஆத்ம சக்தி, பரித்தியாகம், தவம் முதலிய வார்த்தைகளும், மற்றொரு புறம் அவரது சிஷ்யர்கள் அரசிய
லின் பேராலும், தேசீயத்தின் பேராலும், தங்கள் வாழ்நாளைக் கழிக்க ஏற்பாடு செய்துகொண்ட தொண்டர்கள், தேசீய வாதிகள், பத்திராதிபர்கள் ஆகிய கூட்டத்தார்கள் காந்தியாரைப்பற்றி அவர் ஒரு ரிஷி என்றும், முனிவர் என்றும், கிறிஸ்து என்றும், நபி என்றும் மகாத்மா என்றும் விஷ்ணுவின் அவதாரமென்றும், சொல்லி பிரசாரம் செய்ததும், இனி ஒருபுறம் காந்தியைக் கடவுளாகவும், விஷ்ணுவாகவும் மற்றும் பலவிதமாகவும் சித்திரங்கள் எழுதி படம் போட்டு விளம்பரம் செய்ததும், மற்றும் லெளகீகத்திலும், வைதீகத் திலும் விளம்பரம் பெறவும் சுயகாரிய சித்தி பெறவும் ஆசைப்பட்ட பணக்
காரர்களும், படித்தவர்களும் முறையே லக்ஷக்கணக்காகத் திரவிய சகாயமும் பிரசாரமும் செய்து வந்ததுமாகிய காரியங்களுமாக எல்லாம் சேர்ந்து அவரை அரசியல் சர்வாதிகாரியாக ஆக்கிவிட்டது.
இதனால் பாமர ஜனங்கள் தங்களது பகுத்தறிவை சிறிதாவது உபயோகப்படுத்தி காந்தத்தை ஆலோசித்துப் பார்க்க கூடாமற் போய் விட்டது. எப்படியெனில் கடவுள் பக்தி, மத பக்தி ஆகியவைகளுக்கு
எப்படி ஒரு மனிதன் அடிமைப்பட்டு “கடவுள்” அற்புதம் மத அற்புதம் ஆகிய பலவைகளைக் கண் மூடித்தனமாய் நம்புகிறானோ அது போலவே காந்தீயத்துக்கும் பகுத்தறிவு பிரயோகமே சிறிது கூட இல்லாமல் செய்து விட்டது.
இந்தியாவின் கல்வியற்ற தன்மையும், பாமரத் தன்மையும், மதக் கற்பனையும் எந்த மனிதனை வேண்டுமானாலும் கடவுள் தன்மை யுடையவனாகவும் மனித சக்திக்கு மீறின மகாத்மாவாகவும் ஆக்குவதற்கு
மிக அனுகூலமாகவே இருந்து வருகின்றன. அன்றியும் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு அதற்கு தெய்வீகப் பூச்சோ, மதப்
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
பூச்சோ சிறிது கொடுத்து விட்டால் சுலபத்தில் யாரையும் நம்பும்படி செய்து விடலாம்.
உதாரணமாக இதுவரை எத்தனை சாதுக்கள், சித்தர்கள், ரிஷிகள், மகாத்மாக்கள், துறவிகள், ஞானிகள் முதலியவர்கள் ஏற்பட்டு எவ்வளவோ அபூர்வ காரியங்கள் செய்ததாகவும், பார்த்ததாகவும் இன்றும் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றன என்பதைக் கவனித்தால் உண்மை விளங்கிவிடும். ஆகையால் இந்திய ஜனங்களினிடையில் காந்தியார் அரசியல் தலைமை ஸ்தானம் பெற்றதில் அதிசயமொன்று மிருக்க ஞாயமில்லை.
தோழர் பெசண்டம்மையாரும் தோழர் காந்தியைப் போலவே பகவத்கீதைப் பிரசாரத்தாலும் கடவுள்களிடத்திலும்,மகாத்மாக்களிடத்திலும் தான் தினம் பேசுவதாகவும், முன் ஜென்மம், பின் ஜென்மம் முதலியவைகள் எல்லாம் தனக்குத் தெரிகின்றதாகவும் சொன்னதாலும் மற்றும் என்னென் னமோ சொல்லிக் கொண்டதாலும், அந்த அம்மாளும் அரசியலில் தலைமை வகிக்கப்பெற்று கொஞ்சகாலம் சர்வாதிகாரியாக இருந்து இந்தியா மாத்திரமல்லாமல் ஒரு காலத்தில் உலக முழுவதுமே விளம்பரம் பெற்றிருந் ததைப் பார்த்தால் காந்தியத்திற்கும், பெசண்டீயத்திற்கும் ஒற்றுமை இருப்ப தைக் காணலாம். ஆதலால் காந்தியாருக்கு இருந்த செல்வாக்குக்கும், மதிப்
புக்கும் அவரை பின்பற்ற ஆட்கள் இருந்துவந்ததற்கும், யாருக்கும் எவ்வித தத்துவார்த்தமும், தனிக்காரணமும் சொல்லவேண்டியதில்லை.
ஆனால் அது இன்று என்ன கெதியில் இருக்கின்றது என்பதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய பாகமாகும்.
பெசண்டீயத்தின் கதியே காந்தீயமும் அடைந்து வருகின்றது. காந்தி
யார் உலகிலுள்ள மற்ற இயக்கங்களையும், மதங்களையும், மத ஆதாரங் களை யும் ஒரு தட்டில்வைத்து தானும் பகவத்கீதையும், இந்துமதமும் ஒரு தட்டில் இருந்துகொண்டு ஞானம்பேசி வந்ததற்கும், அதற்கு இந்தியா இடம் கொடுத்து வந்ததற்கும் காரணம் என்னவென்றால் எடுத்ததற்கெல்லாம். சத்தியம், சத்தியாக்கிரகம், அஹிம்சை, ஆத்மசுத்தம், ஆத்மசக்தி, பமித் தியாகம், கடவுள் கட்டளை ஆகிய அர்த்தமற்ற மொழிகளும், தன் இஷ்டப்படி வியாக்கியானம் செய்வதற்கு இடமுள்ளதும், தந்திரமானதுமான வார்த்தைகளை உபயோகப் படுத்தி வந்ததுமாகும்.
இதுவரையில் அவைகள் எப்படி இருந்தபோதிலும்-இருந்ததாகச் சொல்லப் பட்டபோதிலும் இன்று அக்காந்தீயத்தின் நிலை எப்படி இருக்கின் றது என்று பார்க்க வேண்டியது அறிவுள்ள மனிதனின் கடமையாகும்.
தோழர் காந்தியாரது சத்தியத்திற்கும், சத்தியாக்கிரகத்திற்கும், ஏதாவது யோக்கியதை ஏற்பட்டதா? அல்லது அவரது ஆத்ம சுத்தத்திற்கும்,
குடி அரசு - 1933 (2 22
தியாகத்திற்கும், அஹிம்சைக்கும், கடவுள் செயலுக்கும் ஏதாவது பயன் உண் டாயிற்றா? என்பனபோன்ற காரியங்களைச் சற்று கவனித்துப் பார்ப்போம்.
தோழர் காந்தியார் யாரிடம் இருந்து பயன் பெறுவதற்காக சத்தியமாய் நடந்து சத்தியாக்கிரகம் செய்தாரோ அவர்களிடமிருந்து ஒரு காதொடிந்த ஊசியை பெறுவதற்குக்கூட இவரது சத்தியமும், சத்தியாக்கிரகமும் பயன் படாமல் போனது இன்று யாவருக்கும் தெரிந்த விஷயம். இவரது சத்தியாக்
கிரகத்தின் பயன் எல்லாம் “உடும்பு வேண்டாம் கையை விட்டால்போதும்” என்கின்ற பழமொழிப்படி சத்தியாக்கிரகத்தின் பயனாய் சிறையிலடைக்கப் பட்டவர்களை விடுவிப்பதற்காக சர்க்காரோடு ராஜிபேசி இனிமேல் சத்தியாக்கிரகம் அல்லது சட்டம் மறுப்பு செய்வதில்லை என்று சொல்லி ஒப்பந்தம் பேசி சத்தியாக்கிரகிகளை விடுதலை செய்ய வேண்டியிருந்ததே
யாகும். மறுபடியும் செய்த சத்தியாக்கிரகமானது “சத்தியாக்கிரகி வெளிப் படையாய் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். இல்லா
விட்டால் சிறையி லிருக்க வேண்டும்” என்கின்ற நிலையில் கொண்டுவந்து விட்டுவிட்டது.
ஆத்ம சுத்திக்காகவும், ஆத்ம சக்திக்காகவும் செய்த காரியமெல்லாம் ஆத்ம சுத்தியானவர்களையும், ஆத்ம சக்தி உடையவர்களையும் கண்ணி னால் பார்ப்பதற்கும் பேட்டி கொடுப்பதற்கும் அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று கேட்பதற்கும் கூட வில்லிங்டன் பிரபுவால் அருகதை அற்றவர்களாகச் செய்து விடப்பட்டது. இவைமாத்திரமல்லாமல் நம்பிக்கை. அற்றவர்களாவும் வாக்குத் தத்தப்படி நடவாதவர்களாகவும் நம்பிக்கை துரோகம் செய்தவர்களாகவும், சர்க்கார் சொல்லும் படி செய்துவிட்டது. இனி என்ன செய்யவேண்டியது பாக்கி இருக்கிறது என்பது நமக்கு புலப்பட
வில்லை.
நிற்க சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு முதலாகிய காரியங்கள், அதில் ஈடுபட்டமக்களை எல்லாம் தோல்வியடையச் செய்துவிட்டதென்றும் இனி அத்தகைய விஷயங்களை கைவிட்டுவிட்டு வேறு மார்க்கம் தேடவேண்டும். என்றும், தேசீய வாதிகளும், தேசீயப்பத்திரிக்கைகளுமே கூப்பாடு போட ஆரம்பித்து விட்டன.
மேலும் சத்தியாக்கிரகத்தினுடையவும், சட்டம் மறுப்பினுடையவும்,
உயிர், கடைசி மூச்சில் இருக்கின்றதென்றும், அது எப்படியாவது காந்தியார். தோல்வி அடையவில்லை யென்றும், ராஜி செய்து கொண்டாரென்றும் பொதுமக்கள் நினைக்கும்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதுவே போதும் என்கின்ற ஒரு போலி அபிமானத்திற்காகக் காத்திருக்கிறது என்றும், அப்படிக் காத்திருப்பது சுயமரியாதைக்கும், சத்தியத்துக்கும் ஏற்றதல்ல வென்றும், சத்தியாக்கிரகம் (தோற்றுவிட்டது) செத்துப்போய்விட்டது என்பதை தைரியமாயும், நாணையமாயும் ஒப்புக்கொள்ளவேண்டும்
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
என்றும், தேசீயவாதிகளும், தேசீயப் பத்திரிகைகளுமே கூக்குரல் இட ஆரம்பித்துவிட்டன.
ஆகவே இதிலிருந்து ஆத்ம சுத்தியும், சத்தியாக்கிரமும், சத்தியமும் இதுவரை யாதொரு பலனையும் கொடுக்காமல் இருந்து வந்திருப்பதை யாரும் அறியலாம்,
1921-ம் வருஷ முதல் கள்ளுக்கடை சத்தியாக்கிரகம், அன்னிய ஜவுளிக்கடை சத்தியாக்கிரகம் பள்ளிக்கூட சத்தியாக்கிரகம், உப்புக் காச்சும் சத்தியாக்கிரகம், கோவில் சத்தியாக்கிரகம், முதலிய அனேக சத்தியாக் கிரகங்கள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அஹிம்சையின் பேரால் அனேகர் அடி, உதை முதலியவைகள் அடைந்தும் வந்தார்கள், ஆத்ம சுத்திக்காகவும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகவும், சத்தியாக்கிரகிகளுக்குள் “தப்பான” காரியங்கள் நடந்து விட்டதற்காகவும்.
மற்றும் பல காரியங்களுக்காகவும் பல பட்டினி விரதங்கள் இருந்து மாய் விட்டன. இவ்வளவும் போதாமல் பல தடவைகளில் காந்தியார். கடவுளிடம் பேசியுமாய் விட்டது. அசரீரி மூலம் காந்தியாருக்குப் பல கட்டளை இட்டும் ஆகிவிட்டன. இவ்வளவும் போதாமல் தினம் பிரார்த் தனைகளும், ஜபங்களும், தபசுகளும், மெளன விரதபிரார்த்தனைகளும் முறை தவராமல் நடந்தும் வருகின்றன. இவைகள் எல்லாம் எதற்காக? யாருடைய நன்மைக் காக வெனச் செய்யப்படுகின்னனவோ, அவர்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது? அல்லது யாரிடமிருந்து பெறுவதற்காக, யாருக்கு நல்ல புத்தி வருவதற் காகச் செய்யப்பட்டதோ அவர்களையாவது என்ன செய்து விட்டது? என்று பார்த்தால் ஒன்றும் இல்லையென்பதோடு தோல்வியையும், இழிவையும் கொண்டு வந்து விட்டது என்றும் சொல்லித் தீரவேண்டியது அவசியமாயிருக்கிறது. இதற்கு காந்தியாராகட்டும் மற்றவர்கள் தானாகட்டும் என்ன காரணம் சொல்லக்கூடும்? ஒன்று சத்தியாக் கிரகத்துக்கும் சத்தியத்துக்கும் ஆத்ம சக்திக்கும் கோரிய பலனைக் கொடுக்க கூடிய சக்தி இல்லை என்று சொல்லவேண்டும்; அல்லது காந்தியாரின் சத்தியத்திலோ, சத்தியாக்கிரகத் திலோ, ஆத்ம சக்தியிலோ, தியாகத்திலோ, கடவுளைக்கண்டதிலோ உண்மையில்லை என்றாவது சொல்லியாக வேண்டும்.
பொது ஜனங்கள் பாமரர்களாயிருப்பதாலும், படித்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்களும், பணக்காரர்கள் என்று சொல்லப்படுவர்களும் தேசிய பத்திரிகை பிழைப்புக்காரர்களும் அயோக்கியர்களாகவும், சுயநலக் காரர்களாகவும் பொறுப்பற்றவர்களாகவும் இருப்பதால் இம்மாதிரி பிரச்சினைகளுக்கே இடமில்லாமல் ஜனங்களை ஏமாற்றி விடக்கூடும் என்றாலும் பகுத்தறிவுக்காரர்களுக்கு இவ்விஷயங்கள் தெரியாமல் இருக்
கும்படி செய்துவிட இனி யாராலும் முடியாது.
குடி அரசு - 1933 (2 24
இந்நிலையில் ஒரு விஷயத்தை மாத்திரம் நாம் ஒப்புக் கொள்ள பின் வாங்கவில்லை. அதென்னவென்றால் தோழர் காந்தியுடையவும், அவரு டைய பிரதம சிஷ்யர்களுடையவும் அந்தரங்க எண்ணம் ஒரு அளவுக்குக் கைகூடி வந்திருக்கின்றது என்பதாகும்.
எப்படியெனில், தோழர் காந்தியின் முயற்சியெல்லாம் பார்ப்பனீய
மும், பணக்காரத்தன்மையும் இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டும். என்பதே யாகும். இந்த எண்ணமே தான் அவருடைய பார்ப்பன-பணக்கார
“சிஷ்யர் கள்” நண்பர்கள் உடையதும் ஆகும். இந்த எண்ணம் அவரிடம் இருப்ப தற்கு ருஜுவு என்னவென்றால் (பணக்காரர்கள் பிழைக்க! ஏழை களுக்கு ராட்டினம் கண்டுபிடித்திருப்பதும் பார்ப்பனர்கள் பிழைக்க பகவத் கீதை வருணாச்சிரமம், ஜாதி முறை, தொழில் முறை ஆகியவைகளைக் காப்பாற்றுவதாக சுயராஜ்யத்திட்ட பிரஜா உரிமையில் ஏற்பாடு செய்திருப்
பதும், வட்ட மேஜையில் இந்திய சமஸ்தானாதிபதிகளின் ஆட்சிகளையும் ஜாமீன்தாரர்கள் முதலியவர்களின் நிலைமையும் ஒப்புக்கொண்டதுமே போதிய காரணங்களாகும். நாம் சொல்வதை நம்புவதற்கு இவ்வளவும் வாசகர்களுக்கு போதிய திருப்தியைக் கொடுக்கவில்லை என்றால் மற்றும் ஒரு ஆதாரம் எடுத்துக் காட்டுகிறோம். அதென்னவென்றால் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலத்தில் தோழர் காந்தி அவர்கள் தான் எதற் காக உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார் என்று காரணம் சொல்லும் போது, “நான் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லையானால் தேசத்தில் பொது வுடமைக் கிளர்ச்சி ஏற்பட்டு விடும்” என்று ஒரு காரணம் காட்டியிருக் கிறார். (இதனால் தான் பணக்காரர்கள் காந்தீயத்திற்கு தாராளமாய் பணம் உதவ முன்வர வேண்டியதாயிற்று!
அன்றியும் தாழ்த்தப்பட்டவர்களின் தனிமுறையை ஒழித்து ஹரிஜன இயக்கம் என்று ஒன்று ஆரம்பித்து அதற்கும் பிர்லா போன்ற முதலாளி கூட்டத்தில் இருந்து 10 லக்ஷக்கணக்கான ரூபாய் பெற்று செலவு செய்து தீண்டப்படாதவர்கள் என்பவர்களிலும் சிலரை விலைக்கு வாங்கி கோவில் பிரவேசக் கிளர்ச்சி, புராணப்பிரசாரம் முதலியவைகள் செய்ததன் பலனாய் இந்து சமூகம் என்பதில் பிறருக்கு பாடுபட்டு உழைப்பதற்கு என்று ஒரு பெரிய கூட்டத்தை என்றும் நிலைக்கவைக்க வேண்டிய காரியங்கள் செய்யப்பட்டாய் விட்டது. இந்தக் காரணங்களால் தான் தோழர் காந்தியா
ரின் அந்தரங்க எண்ணம் ஒரு விதத்தில் பலித்து விட்டது என்று சொன் னோம். இதே எண்ணம் கொண்ட அவரது அத்தியந்த நண்பர்களின் எண்ணமும் ஒருவாறு பலித்து விட்டது.
மற்றபடி தோழர் காந்தியவர்கள் எதிர்பார்ப்பதாக வெளிப்படையாய் சொன்ன காரியங்கள் தோல்வியேற்பட்டது என்பதை யாரும் மறுக்க
முடியாது.
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
நம்மைப் பொருத்த வரையில் உப்பு சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்
பித்த காலத்திலேயே இதில் நாணையம் இல்லை என்றும், இது கடைசியில் பொஸ்ணென்றுபோய் விடுமென்றும், இதனால் மக்களுக்கு வீண் தொல் லையே விளையுமென்றும் அதோடு அனேக நல்ல காரியங்கள் செய்யப் படுவதையும் இந்த கிளர்ச்சி தடுத்து விடுமென்றும் பல தலையங்கங்கள் எழுதி யும், பல இடங்களில் பேசியும் வந்திருக்கிறோம். இதற்காக தேசியப் பிழைப் புக்காரரிடம் வசவும், பழிப்பும் அடைந்தும் வந்திருக்கிறோம். ஆனால் முடிவில் நாம் எதிர்ப்பார்த்ததற்கு மேலாகவே காந்தீயத்தின் கதி ஏற்பட்டு விட்டது.
இப்போது காந்தீயத்தின் கவலை யெல்லாம் காந்தீயம் தோற்று விட்டது என்பதில் 100க்கு 95 மக்களுக்கு ஆட்சேபனை இல்லை. என்றாலும் அது தோற்றுவிட்டது என்று ஜனங்கள் சொல்லாமல் இருப்பதற்கு ஒரு மார்க்கம் கண்டு பிடிக்க வேண்டும் என்பதும் வைசிராய் ராஜிக்கு வர: மாட்டேன் என்கிறார் என்ற பெயரை ஏற்படுத்தி விட்டால் சர்க்கார் மீது ஜனங் களுக்கு கொஞ்சம் வெறுப்பு ஏற்பட்டால் அதை உபயோகித்து ஏதாவது செய்யலாமா என்று யோசிப்பதுமாகும். இதை சில காந்தி பக்தர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்னலாம். ஆனால் அவர்களை ஒன்று கேட் கின்றோம். அதாவது காந்தீயம் தோல்வி அடையவில்லை, ஆனாலும் தேசியப் பத்திரிக்கைகள் எழுதுவது போல் காந்தீயமானது நாட்டிற்கு பயன் படாமல் போய் விட்டது என்பதையாவது ஒப்புக் கொள்ளுகின்றார்களா? இல்லையா? என்பதேயாகும். அதையும் ஒரு சமயம் காந்தி பக்தர்கள் ஒப்புக் கொள்ள வில்லையானால் அவர்களை மற்றொரு கேள்வி கேட்கின்றோம். அதென்ன வென்றால்,
ஒரு வாதியானவன் ஒரு பிரதிவாதியின் மீது தாவா போட்டு விசாரணை முடிந்த பிறகு பிரதிவாதியிடம் ராஜியாய் போகிறேன் என்று கேட்கப் போனால் இதற்கு என்ன அருத்தம்? வாதிக்கு விசாரணையின் போக்கிலிருந்து தன் கேசு ஜெயிக்காது என்றும், தோற்றுவிடும் என்றும் தோன்றிவிட்ட காரணமா? அல்லது வாதியின் கண்ணியமும் பெருந் தன்மையும் காரணமா? என்று கேட்கின்றோம்.
நிற்க, இப்போது காங்கிரசுக்காரர்களிலேயே அனேகம் பேர் காந்தீயம் தோற்றுவிட்ட தென்றும், சத்தியாக்கிரகமும், சட்ட மறுப்பும் செத்து விட்ட தென்றும், ஆதலால் இனி சட்டசபைக்கு போக வேண்டும் என்றும் தாரா ளமாய் சொல்ல முன் வந்து விட்டார்கள். எல்லா தேசீயப் பத்திரிக்கை களும் அப்படியே எழுதத் துணிந்தும் விட்டன. தோழர். காந்தி வைஸ் ராயைப் பார்க்க அனுமதி கேட்பது கூட இந்திய தேசீய காங்கிரசுக்கு சுயமரியாதையற்ற தன்மையை உண்டாக்கி விட்டதென்றும் எழுதிவிட்டன.
குடி அரசு - 1933 (2 26
இவற்றுள் ஒரு பிரபல தேசீய பத்திரிகையானது “காந்தியார் தன்னு டைய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக காங்கிரசின் மரியாதையை விற்று விட்டார்” என்றுங்கூட எழுதிவிட்டது.
காந்தியாரைப்பற்றியோ, சட்ட மறுப்பைப் பற்றியோ குறைகூற இனி சொல்ல வேண்டிய பாக்கி ஒன்றும் இல்லாமல் எல்லாம் சொல்லி ஆய் விட்டது. நமக்கு இவைகள் எதுவும் புதுமையாக தோன்றவில்லை. ஏனெனில் இதெல்லாம் நாம் முன் சொன்ன மாதிரி ஆரம்பத்திலேயே எதிர்பார்த்த தாதலால் அதிசய மொன்றும் இல்லை. கடைசியாக ஒன்று கேட்டு விட்டு இதை முடித்து விடுகிறோம். காங்கிரசுத் தொண்டர்கள் என்பவர்கள் இந்த அளவோடாவது ஒரு பாடம் கற்றதாக முடிவு செய்து கொண்டு இனி அப்படிப் பட்ட சூட்சிக் காரியங்களிலும், பயனற்ற காரியங்களிலும் சம்பந்தப்படாமல் தேசம், ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், எஜமான் அடிமை என்பனவாகிய வித்தியாசமில்லாத உண்மையான சமதர்மத்துக்கு உழைக்க வருவார்களா? அல்லது செத்த பாம்பை எடுத்து ஆட்டப்போகும் காந்தீயத் திருவிளை யாடலில் மறுபடியும் போய் சேரப்போகின்றார்களா? என்பதே யாகும்.
குடி அரசு - தலையங்கம் - 23.07.4933
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
கத்தோலிக்க மகஸ்தர்கனள் யோக்கியதை
அமெரிக்க கத்தோலிக்க தினசரியிலிருந்து கீழ்கண்ட செய்தியை நியூயார்க் உண்மை நாடுவோர் (Tuth ன) பத்திரிகை பிரசுரித்திருக்கிறது. அதாவது சிங்சிங் ஜெயிலில் உள்ள பல திறப்பட்ட மதங்களைச் சார்ந்த கைதிகளின் விபரம் கீழ் வருமாறு:-
கத்தோலிக்கர்கள் 855
பிராட்டஸ்டண்ட் 518
யூதர்கள் 177
கிறிஸ்தவ விஞ்ஞானிகள் 20
மகமதியர்கள் 2
புத்தர்கள் 1
மதமற்றவர்கள் 8
1,581
சிங்சிங் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களில் கால்வாசிப் பேர்களே கத்தோலிக்கர்களாக இருந்தும், நாட்டில் குற்றம் செய்து சிறைக்காவலில் அடைபட்டிருக்கும் (அ) யோக்கியர்களின் கணக்கு 100-க்கு 50-க்கு மேல் ஆகின்றது. ஆனால் மதமற்றவர்களின் கணக்கு 12 பர்செண்டேயாகும். மதவெறிக்குத் தகுந்தார்போல் குற்றவாளிகளின் எண்ணிக்கை விபரம் காணப்படுவதை வாசகர்கள் கவனிப்பதோடு, மதம் மக்களை யோக்கியப் பொருப்பற்றவர்களாக்கவே பயன்படுத்துகிறதென்பதையும் இதுசமயம் ஞாபகப் படுத்திக் கொள்ளவும் விழைகின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 23.07.1933.
குடி அரசு - 1933 (2 28
ருஷியாவிண் வற்றி
ஐந்து வருட திட்டத்திண் பண்
ரஷியாவில் 19176 நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர் அந்நாடு உலக. மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக்கொண்டது. சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்
படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன்
குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரசாஞ் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச் செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்.
களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பல சூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சி முறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப்பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பி அந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந் திருக்கின்றனவென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வரு
கின்றனர். ரஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடை முறை
யில் சாத்தியமாகாது என்று புகன்ற ராஜ தந்திரிகளும், ரஷியாவில் தனியு டைமை யொழிந்து பொதுவுடைமை மிளிர்வதால் அங்கு மக்களின் முயற்சி
யும், அறிவும் குன்றி உற்பத்திகள் குறைந்து போய்விடும் என்று தர்க்க ரீதியாய் மொழிந்த பொருள் நூலாசிரியர்களும் தங்கூற்றுத் தவரொன்று தானே இன்று ஒத்துக்கொள்ளும்படி செய்து விட்டதோடு ஐரோப்பிய வல்லரசுகளெல்லாம் ரஷியாவை அலட்சியம் செய்து வாழ முடியாத நிர்பந்தத்திற்குள் வந்து விட்டதென்பதை எவரும் மறுக்க முடியாது.
ரஷிய சமதர்மத் திட்டமோ இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக
மெங்கும் சமதர்ம ஆட்சியாய் விளங்குங் காலத்திலே சமதர்ம ஆட்சியின்
திட்டம் வெற்றி பெறுமென்று கூறலாம். இப்பொழுது ரஷியா உலகத்திலுள்ள முதலாளித்துவத்தோடு போரிட்டுக் கொண்டிருக்கிறதென்றே கூறவேண்டும். அப்போரில் தமது எதிரிகளை நிர்த்தாகஷண்யமாகத் தண்டித்து வருவதை
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
நியாய புத்தியுள்ள எவரும் தவறென்று கூறத் துணியார். ரஷியாவில் மனிதனுக்கு சுதந்தரம் அதிகமில்லையென்று கூறப்படுகிறது. தனிமனிதனு டைய சுதந்திரத்திற்குப் போதிய இடமிருப்பதாகக் கூறப்படும் நாட்டிலுள்ள மக்களைவிட ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டில் அதிக சுதந்திரமும் உரிமையு மிருப்பதோடு ஜார் சக்கரவர்த்தியின் கொடிய ஆட்சியில் உண்ண உணவும், உடுக்க உடையும், ஒண்ட நிழலும், படுக்கப் பாயுமின்றி கோடானுகோடி மக்கள் தவித்து ஆயிரக்கணக்காய்-இல்லை-லட்சக்கணக்காய் பட்டினி
யாலும் நோயாலும் மடிந்த ரஷியா நாட்டிலே பட்டினியென்றால் இன்ன தென்பதை எவருமறியாதபடி, நோய் என்றால் இன்னதென்பதை உணராத படியும் நாளைக்கு உணவிற்கு என்செய்வது, வியாதியால் இரண்டு நாள் படுத்துக்கொண்டால் நமது நிலையென்ன? நமது குடும்பத்தின் கதியென்ன? என்றகவலையே அறியாத மக்களாய் வாழும்படி செய்து நாடெங்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்திருக்கும்படி இச் சுருங்கிய காலத்திற்குள் சோவியத் ஆட்சி செய்து உலகத்திலுள்ள எல்லா முதலாளித்துவ அரசாங்கங் களும் திடுக்கிடச் செய்து விட்டதென்பதை நன்கு அறியலாம்.
ஐந்து ஆண்டு திட்டம்
பஞ்சத்தாலும் கொடுங்கோன்மையினாலும் பொருளாதார நிலையிற்
மிக மிகக் கேவலமாயிருந்த ரஷியாவை உன்னத நிலைக்குக் கொண்டுவர: சோவியத் ஆட்சியினர் 5 வருடத்திட்டமொன்று தயாரித்து ஐந்து ஆண்டு களுக்குள் இன்னின்ன வேலைகளைப் பூர்த்தி செய்துவிட வேண்டுமென்று திட்டம்போட்டுக் கொண்டு வேலை ஆரம்பித்தனர். வேலையற்று, கொள்ளையும் விபசாரமும் புரிந்து வந்த மக்களெல்லாம் தொழில் முறையில் ஈடுபட்டு தங்களின் துற்செயலை ஒழித்து நாட்டின் நலனைக் கோரி உழைக்க ஆரம் பித்து விட்டனர். பொருள் உற்பத்தி ஐந்து வருடத் திட்டத்தில் எதிர். பார்த்ததை விட அதிக வெற்றிபெற்று விட்டது. தங்கள் ஆட்சி முறையைப்
பற்றி பெருமைபேசிக்கொண்டு கர்வம்கொண்ட ஐரோப்பாவும், அமெரிக்கா
வும் உலக வர்த்தகத்தில் ரஷியப் போட்டியை எதிர்த்து போராட முடிய வில்லை. உலகத்து மார்க்கட்டிலெல்லாம் ரஷியக் கோதுமை போய் மோதி உலக பொருளாதார உற்பத்தி ஸ்தானங்களையெல்லாம் திடுகிடுக்கும்படி
செய்து விட்டது.
“பசி வந்திடப் பத்தும் பரந்துபோம்” என்னும் பழமொழியைப் போல் பசியால் வாடும் மக்களிடம் சுதந்திரம், உரிமை முதலியவைகளைப் பற்றி கதை கூறுவதில் பயனென்ன? பட்டினியால் வாழும் மக்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது வயிறு நிறம்பும்படி ஆகாரந் தான் கொடுக்க வேண்டுமென்ற உண்மையை சோவியத் அரசாட்சி அறிந்து கொண்டதோடு தனி சொத்துரிமையை ஒழித்து பொது உடமையை மேற்கொண்ட தங்கள் ஆட்சிக்கு பிற தேசம் உணவுப் பொருளைக் கொடுத்து ஒரு பொழுதும் உதவி செய்யாது என்பதையும் நன்கறிந்து 5 வருடத் திட்டத்தில் உணவுப்
குடி அரசு - 1932 (2) 30
பொருள்களைப் பெருக்குவதைப் பிரதானமாகக் கொண்டனர். ஐந்து வருடத் திற்குள் இத்தனை டன் கோதுமை, இத்தனை டன் பாரம் பருத்தி, இவ்வளவு யந்திரங்கள், இவ்வளவு ஆடுமாடுகள், இவ்வளவு தொழிற்சாலைகள் உற்பத்தியாக வேண்டும், இத்தனை மாணவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்க வேண்டு மென்று திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தார்கள். நான்கு வருடத்திலே ஐந்து வருடத் திட்டத்திற் கண்ட பெரும்பாலானவை
கள் பூர்த்தியாகி விட்ட தால் திட்டத்தை அதிகப்படுத்தி வேலை செய்தனர். இதன் விபரமெல்லாம் அரசாட்சியாரால் வெளியிடப்பட்டிருக்கும் சோவியத் ஆட்சியின் பொருளாதார நிலை என்னும் நூலில் விரிவாய்க் காணலாம். இத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு இத்தகைய திட்டங்களை ஏற்படுத்தி தாங்களும் வேலை செய்யலாம் என்பது பற்றி பற்பல அரசாங்கங்களும் யோசித்து வருகின்றன.
ஒவ்வொரு நாடும் இத்தகைய திட்டம் போட்டு வேலை ஆரம்
பித்தால் உலகிலே தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தியாகி, உற்பத்தி யான பொருள்கள் விலையாகாமல் பலவிதத் தொல்லைகள் ஏற்படுவது
நிட்சயம். இதையே ரஷியாவும் எதிர்பார்க்கின்றது. தேவைக்கு அதிகமான பொருள் உற்பத்தி செய்ய மனிதனுக்கு சக்தி இருக்குமானால் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளி அரை வயிற்றிற்கும் சோறு கிடையாது தவிப்பதன் காரண மென்ன என்பதை ஏழைமக்கள் நினைக்க முற்படுவர். அப்பொழுது
தான் முதலாளிகளும், முதலாளித்துவ அரசாங்கங்களும் தங்களை எப்படி வஞ்சித்து ஏழைகள் பட்டினியினால் தியங்கும்படி செய்கிறார்கள் என்பதின் உண்மை வெள்ளிடை மலையெனத் துலங்கும்.
குஷிய சமுதாய அமைப்பு.
உலகத்திலே இன்று நிகழ்ந்து வரும் முறைகளென்ன? கோடிக்கணக் கான மக்கள் தினசரி 8 மணிநேரம்,10 மணிநேரம் வேலைசெய்து வருகின் றார்கள். இதன் பலனை முதலாளி வர்க்கத்தினர் அனுபவித்து வருகின்றனர். இதனால் பெறும் பொருளை என்ன செய்வதென்று முதலாளிகள் அறியாது மனிதனுக்கு அவசியமில்லாத பல தேவைகளை உண்டாக்கிக்கொண்டு
வருகின்றார்கள். உதாரணமாக ஒரு மனிதன் ஏறிச் செல்ல ஒரு குதிரை: பூட்டிய வண்டி போதுமானது. தன்னிடத்தில் ஏராளமான பணமிருக்கிறது
என்ற திமிறினால் அதே வண்டியில் 2 குதிரை, 4 குதிரை, 6 குதிரை பூட்டி யோடும் படியான வண்டியைச் செய்து அதற்கென்று பல மனிதர்களை குறைந்த சம்பளத்தில் வேலையாளாக வைத்துக் கொள்கிறான். உண்மை யான உணவுப் பொருளை உண்டாக்கவேண்டிய பல மனிதர்களை தனக்காக உபயோகித்துக் கொள்கிறான். இவன் தன் அவசியத்திற்கு மேற்பட்ட குதிரை: களை உபயோகித்துக் கொள்வதால் குதிரை விலை அதிகமாய் விடுகிறது. இவன் பணக்காரனாவதற்கு உழைத்து உழைத்து தன் உடலைக் கெடுத்து,
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
ஒண்ட இடமின்றி தெருவில் கூடுதலால் கஷ்டப்பட்டுக்கொண்டு படுத்
துறங்கும் தொழிலாளி குதிரை வாங்கப் பணமில்லாது மாடு போல் தனது வேலைகளுக்கு தனது வண்டியைத் தானே இழுக்கவேண்டியதிருக்கிறது.. பணக்காரன் வண்டியில் பூட்டிய தேவைக்கு அதிகமான குதிரை ஒன்றை இந்த வண்டியில் பூட்டினால் தொழிலாளிக்கு எவ்வளவு உதவியாயிருக்கும். இதன் நுண் பொருளை ஆய்ந்துதான் ரஷ்ய சமதர்மம் ஆட்சி அமைக்கப் பட்டிருக்கிறது.
பொதுவுடமைத் தத்துவம்
உலகிலேயே உற்பத்தி செய்யும் செல்வத்திலே உற்பத்தி செய்துவரும் தொழிலாளிக்கு சரிசமமான பங்கு கிடைத்திருந்தால் உலகிலே இன்று காணக்கிடக்கும் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லாத் திண்டாட்ட
மும் உண்டாயிராதென்பதே பொது உடமை இயக்கத்தினரின் எண்ணம்.
ரஷிய பொது உடமை முறை உலகிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றி தொழில் உற்பத்தியை அதிகப்படுத்தினால் தொழிலாளியினுடைய உண்மையாண நிலை வெளிப்பட்டுவிடும். உழைப்பதற்கென்று ஒரு வகுப்பும் அதன் பலனை அனுபவிப்பவர் என்றே மற்றொரு வகுப்புமின்றி எல்லோரும் உழைக்க வேண்டுமென்று எல்லா அரசாட்சியாரும் சட்டம் செய்து விட்டால் ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் உழைத்து விட்டு உலகிலே தன் உணவிற்கு வேண்டியதைச் சம்பாதித்துக் கொண்டு இன்பமாய் அமைதியோடு வாழமுடியும்.
பொதுவுடமை என்றால் என்ன?
“எல்லா உயிர்ப் பிராணிகளுக்கும் பொதுவாக வுள்ள இந்த உணவுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் மக்கள் தங்களிடமுள்ள மனிஷீகத் தன்மையை விருத்தி செய்து கொள்ளமுடியும். பொதுவுடமையின் நோக்கமும் இதுவே
யாகும். வருமானத்தை உழைப்பாளிகள் சமமாகப் பங்கிட்டுக் கொள்வ தென்பதே இதன் பொருள். வயிற்றுப் பசிக்கு உணவுதேடுங் காலமும்
தூங்கும் நேரமும் தவிர மீதமுள்ள நேரம் தன் வயிற்றுக்கும் பிறருக்கும் கட்டுப்படாது சுதந்திரமாய் வாழுங்காலம். அது மக்களெல்லோருக்கும் சம மாக இருக்க வேண்டுமென்பதே பொதுவுடமையின் உண்மையான தத்து வம்” என்று ஓரிடத்தில் பேராசிரியர் பெர்னாட்ஷா பெரிதும் வியாக்கியானம்
செய் துள்ளார்.
இந்நிலை அடைய உலகிலுள்ள எல்லா தேசத்தினரும் பொது வுடமைக் கொள்கையை ஒப்புக்கொண்டு நடந்தால் தான் முடியும். இந்தக்
கருத்துடன் தான் இன்றைய ரஷிய ஆட்சி நடந்து வருகிறது. இந் நன்னோக் கம் வெற்றி பெற ஒவ்வொரு நாட்டிலும் எதேச்சாதிகாரமுள்ள தொழிலாளி
யின் பிரதி நிதிகளிருக்க வேண்டுமென்பதே சோவியத் நிபுணர்களின்
குடி அரசு - 1933 (2 32
கருத்தாதலின் ரஷியாவில் அவர்களுக்குத் தகுந்த தற்போதைய அரசியல் முறையை நிறுவியுள்ளார்கள்.
முதலாளிகளென்போர் யார்?
ஐந்து வருடத்தில் தொழிலாளிகளின் உடல் நலம், அறிவு விருத்தி முதலான நலனைப் பெருக்க பெரிதும் திட்டங்கள் ஏற்படுத்தினர். அங்குள்ள உற்பத்திப் பொருள்களை எவ்விதத் தடங்கலுமின்றி சர்க்காரே
பிற நாடுகளில் கொண்டு விற்பனை செய்தனர். சில தொழிலில் லாபமும்,
சில தொழிலில் நஷ்டமும் ஏற்பட்டாலும் சர்க்காரே முதலாளியாக இருப்ப தால் நஷ்டத்தை லாபம் வரக்கூடிய பொருளிலிருந்து ஈடு செய்து கொள்ள
முடிகிறது. உற்பத்தி செலவுகளை யெல்லாம் கழித்து 100க்கு 10 அல்லது 20
பாகம் தொழிலாளி களின் அபிவிருத்திக்காகச் செலவழித்து வருகிறார்கள். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு விளையாடுமிடம், வாசகசாலை, குழந்தைகளுக்குப்பால் கொடுக்கவும், தாலாட்ட அறைகளும், தொட்டிலும், இன்னும் பல வசதிகளும் செய்யப்பட்டிருப்பதோடு, ஆகாய வசனி (ரேடியோ) மூலம் சோவியத் ஆட்சி முறையைப் பற்றி பிரசங்கங்கள்
மூலம் அறிவு விருத்தி செய்யப்பட்டு வருகிறது.
சோவியத் ஆட்சியினர் எதையும் ஆராய்ந்தே செய்வர். ஆய்ந்து நலமென்று கண்டால் இன்னதை இவ்வளவு காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொள்ளுகிறார்கள். உடனே அமலுக்குக் கொண்டு வருகிறார்கள். உற்பத்தி அதிகப்படுத்துவதென்றால் அதன் நோக்கத்தை தொழிலாளர்க்கு விளக்கிக் கூறி அவர்களுக்கு உற்சாக மூட்டி எளிதில் தங்கள் நோக்கத்தில் வெற்றியடைந்து கொள்கிறார்கள்.
விவசாயம்
ரஷியாவில் எல்லா நிலையங்களையும் சர்க்கார் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு மக்களை ஓர் இயந்திரம் போல் பாவித்து வருகிறார்கள் என்பது தவறு. விவசாயத்திற்கு லாயக்கான பூமிகளில் சில பாகம் சர்க்கார். பண்ணைகள்: சில பாகம் பல குடியானவர்கள் கூட்டுறவாகப் பயிரிடும் பண்ணைகள்; மற்றொரு பாகம் தனி விவசாயிகள் தனியாகப் பயிரிடும்
நிலம் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயந்திரக்கலவப்பைகளை உபயோகித்
தால் தான் அதிகமான விளைவை எதிர்பார்க்க முடியும். சிறு சிறு நிலங்களாக. இருந்தால் இயந்திரக் கலப்பையால் உழ முடியாது. எனவே தான் சர்க்கார். பொருளா தாரத்திற்கு அவசியமான இயற்கை மூலங்களும் மூலதனமும் பொதுவாக இருக்கவேண்டுமென்று விதி ஏற்படுத்தியுள்ளார்கள். ஆகவே தான் ஐந்து ஆண்டுத் திட்டம் (1928-1933) ஏற்படுத்தி அதற்குள் நிலத்தில் 100க்கு 20 பாகத்தை கூட்டுறவு விவசாயமாக்கி சிறுசிறு வயல்களாக ஏற்படுத்தியிருந்த வரப்புகளையெல்லாம் வெட்டி ஒரே சமமான பாகமாக்கி
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
இயந்திர விவசாயத்திற்கு ஏற்ற விதமாக்கி விடவேண்டுமென்று திட்டம் போட்டனர். 4 ஆண்டுகளுக்குள் 100க்கு 60 பாகம் கூட்டுறவு விவசாயத் துக்கு முன் வந்துவிட்டது. விவசாயம் விருத்தியாக வேண்டும், விருத்தி யாகவேண்டும் எனக் கூவும் வீண் வெற்றுரைகளை அங்கு காணமுடியாது. இன்ன ஜில்லாவில் இவ்வளவு கோதுமைகளை விளைவிக்க வேண்டும் என்று சர்க்கார் திட்டம் போடுவார்கள். உடனே அதை அமுலுக்கு கொண்டு. வர ஸ்தல சோவியத்துக்கு உத்தரவு கொடுக்கப்படும். அதை உடனே அவர்கள் நடத்த முனைந்து விடுவார்கள். இதன் பயனாக இன்று அங்கு 100க்கு 80பங்கு விவசாயம் சர்க்கார் பண்ணை யாக இயந்திரங்களின் மூலம் நடைபெருகிறது. 40,000 இயந்திர விவசாய கலப்பைகள் அங்கு வேலை செய்து வருகின்றன.
ரஷியா, விவசாயத்தைப் போல் கைத்தொழிலையும் அபிவிருத்தி செய்ய முனைந்து வேலைசெய்து விருத்தி செய்துவருகிறது. அதன் கைத் தொழில் அபிவிருத்தியை கீழ்கண்ட புள்ளிவிபரங்களால் நன்கறியலாம்.
தண்டவாளத்தில ஓடும் கார்கள் 12,000 என்று திட்டம் போட்டார்கள். 1931க்குள்ளாக 20,000 தயாராகி விட்டன.1933 க்குள் 825 ரயில் வண்டிகள் செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார்கள். 1932 க்குள் 812 வண்டிகள் செய்யப்பட்டு விட்டன.1913 ம் வருடத்தில் 170 லட்சம் ஜோடுகள் தயாராயின.
1931 6 768 லட்சம். இது திட்டத்திலிருந்து 167 லட்சம் அதிகம்.1913ல் 94,000 டன் சோப் உற்பத்தி செய்து விட்டனர். 1931ல் 189,000 டன் உற்பத்தி செய்து
விட்டனர்.
ன் னேற்றம்
உலகத்திலுள்ள பெரிய இரும்புத் தொழிற்சாலைகளில் ஒன்று ரஷியா விலிருக்கிறது. அதன் பிரதம அதிகாரியாய் ஒரு இந்தியரே இருந்து வருகிறார். இங்கிலாந்தில் இரும்பு உற்பத்தி 40 லட்சம் டன்னிலிருந்து 95
லட்சம் டன் ஆக 35 வருடமாயிற்று. அமெரிக்காவில் இத்தகைய முன்னேற்றம் அடைய 8 வருடமாயிற்று. ஜெர்மனியில் 10 வருடம் சென்றது. ஆனால் ரஷியா 1 வருடத்தில் இந்த முன்னேற்றத்தை யடைந்து விட்டது. நிலக்கரியில் 530 லட்சம் டன் உற்பத்தியை செய்யத் திட்டம் போட்டு வேலை ஆரம்பித்தது. வெற்றியும் கண்டுவிட்டது. ரஷியாவில் 1930ம் ஆண்டில் புகை ரதங்கள் (மோட்டார்கள்! செய்யப்படவில்லை. 8550 கார்களுக்குத் தனி பாகங்கள் பொருத்தி வண்டியாகச் செய்யப்பட்டன. இப்பொழுது நாள் ஒன்றிற்கு 65 மோட்டார்கள் ரஷியாவிலே உற்பத்தி செய்யப்படுகிறது.
விவசாயத்திலே 100க்கு 20 பாகம் தவிர மற்றவைகள் சர்க்காருக்கே உரியது. சர்க்காரைத் தவிர தனி மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடன்
குடி அரசு - 1933 (2 34
கொடுத்து வாங்கினாலும், வியாபாரஞ் செய்தாலும் கிரிமினல் குற்றமாக ரஷியாவில் கருதப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தி செய்யும் தேசங்களில் ரஷியா இரண்டாவது ஸ்தானத்தையும் இயந்திர உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும் விவசாய இயந்திரக் கருவிகளில் முதலாவதாகவும் இடம்பெற்று விளங்குகின்றது.
தங்க உற்பத்தியின் மதிப்பு அவர்கள் திட்டத்திற்கு ஒன்றரை மடங்கு அதிகமாகக் கிடைத்து விட்டது.
கல்வி
1914 & 70,00,000 குழந்தைகள் கல்வி பயின்றனர்: 1928 ல் 150,00,000 படிக்க வேண்டுமென்றும் 19336 170,00,000 படிக்க வேண்டுமென்று திட்டம் போட்டு வேலை செய்து வெற்றிபெற்று விட்டனர்.
ரஷியாவில் முதியோர்களுக்கும் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928 ல் வாசக சாலை 22,000 இருந்தன. 1933 ல் 34,000 ஆக்கி விட்டார்கள். ஊர் ஊராய்க் கொண்டுபோகும் லைபரெரிகள் 40,000-ஏற்படுத்தி விட்டனர். ரேடியோவின் மூலம் பலவிடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1928 ல் 350000 ஆகாயவசலனிகள் (ரேடியோக்கள்) இருந்தன. 8250 சினிமா நிலையங் களிருந்ததை இப்பொழுது 50,000 மாக அதிகப்படுத்தப் போகின்றார்கள்.
ரஷியாவின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணம் தாங்கள். செய்யப் போகும் காரியத்தை முதலில் திட்டமிட்டுக் கொண்டு அதில் தொழிலாளருக்கு போதிய ஊக்கமும் கொடுக்கும்படி தங்கள் நோக்கத்தைக் கூறி அவர்களுக்கு உற்சாகமாய் விடுவதால் தொழிலாளிகட்கு என்ன கஷ்ட நஷ்டம் போதிலும் ஊக்கங் குன்றாது வேலையையே கருத்தாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்திய நாடு
பிற நாடுகள் இத்தகைய நோக்கங்களை கையாண்டு திட்டத்தைக் கண்டு வெற்றியடைந்து கொண்டு போகும்பொழுது இந்தியா வாளா விருக்கு மேயானால் சீக்கிரத்தில் பொருளாதார நெருக்கடி யென்னும் சூழலில் பட்டு அதோ கதியாய் விடுமென்பது நிட்சயம்.
சில மாதங்களுக்கு முன் ரஷியா தோழர் ஒருவர் கவி. ரவிந்தரநாத்
தாகூருக்கு நிருபம் ஒன்று எழுதியிருந்தாராம். அதில் சோவியத் ஆட்சியில் தொழில் முன்னேற்றமடையக் காரணம் என்னவென்று கருதுகிறீர்கள்? உங்கள் தேசம் அத்தகைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாயிருப் பவை எவைகள்? என்று வினாவியிருந்தார். அதற்கு கவி-தாகூர் “தங்கள்
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
நாட்டில் செல்வப் பெருக்கை தனி மனிதர்களிடமிருந்து எல்லாப் பொது மக்களுமடங்கிய சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்திருப்பதுதான் உங்கள் ரஷிய நாட்டின் வெற்றிக்கு காரணம் சமுதாய விசயங்களில் முயர்ச்சியற்று எல்லாம் இறைவன் செயலென்றிருப்பதே எங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கிறது” என்று பதில் எழுதியிருந்தார்.
குடி அரசு - கட்டுரை - 23.07.1933
குடி அரசு - 1933 (2 36
கோழுர்களே! கவலைப்படாதீர்கன்
காங்கிரஸ் ஸ்தாபனங்கள் மூடப்பட்டது பற்றியும், காந்தீயம் தோற்றுப் போய் விட்டது பற்றியும் பலர் மகா விசனப்படுவதாகத் தெரிய வருகிறது. இன்றைய வரையில் காங்கிரசும், காந்தீயமும் நம் மக்களுக்கு என்ன வித மான பயனை உண்டாக்கிற்று என்பதைப்பற்றி நாம் அதிகம் எழுத வேண்டியதில்லை...
காங்கிரஸ் ஏற்பட்டு ஏறக்குறைய ஐம்பது வருஷ காலமாகின்றது. ஐம்பது வருஷ காலத்தில் அரசாங்கத்தாரால் காங்கிரஸ் கேட்டபடி சீர்திருத் தங்கள் என்னும் பேரால்) எவ்வளவோ அதிகாரங்களும், பதவிகளும் இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்டுமிருக்கின்றன. இதன் பயனாய் நாட்டில் கோடீஸ்வரர்கள் பெருகினார்கள். பதினாயிரக்கணக்கான ஏக்கரா பூமியுடைய ஜமீன்தார்கள், மிராஸ்தாரர்கள் அதிகமானார்கள். மாதம் 1 க்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் பெரும் பதவியாளர்
களும், உத்தியோகஸ்தர்களும் ஏராளமானார்கள். மாதம் 1000, 10000 ரூபாய் வரும்படி சம்பாதிக்கும் வக்கீல்களும், டாக்டர்களும் லக்ஷக்கணக்கில்
பெருகினார்கள்.
தவிர மற்றொருபுரம் பாடுபடாமல் தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு சோம்பேறியாய் இருந்து வாழும் மக்கள் பலர் பெருகினார்கள். அதாவது “வைதீகத்தில்” ஒரு கூட்ட மக்கள், எப்படி குருமார்களென்றும், பாதிரிமார்களென்றும், சன்னியாசிகளென்றும், சாமியார்களென்றும் சொல்லிக் கொண்டு ஊரார் உழைப்பில் வாழ ஆசைப்பட்டு வேஷம் போட்டுத் திரிகின் றார்களோ அதுபோல், காங்கிரசின் பேரால் ஒரு கூட்ட மக்கள், தேசீயத் தலைவர்கள், தேச பக்தர்கள், தேசீயவாதிகள், தேசாபி மானிகள், தேசீயத் தொண்டர்கள் என்பதாகப் பல பெயர்களை வைத்துக் கொண்டு யாதொரு வேலையும் இல்லாமல், எவ்விதப் பொருப்புமில்லாமல் பதவி பெறவும், வயிறு வளர்க்கவும் ஏற்பட்டார்கள்.
இவைகளைத் தவிர காங்கிரசானது ஏழை மக்களுக்கும்-தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், மற்றும் நாள் 1க்கு 14 மணி நேரம் 18 மணி நேரம், மழை
யிலும், வெய்யிலிலும், காடுகளிலும், கழனிகளிலும், மலையிலும், சமுத்திரத்
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
திலும், பட்டரைகளிலும், தொழிற்சாலைகளிலும், வியாபார ஸ்தலங்களிலும் அலைந்து மிருகங்கள் போல் உளைத்து போதிய ஆகாரமில்லாமல், சுகாதாரம், வைத்தியம் முதலிய வசதிகள் இல்லாமல், தங்கள் தங்கள் பிள்ளை
குட்டிகளுக்குப் படிப்பு, உடை முதலியவைகளில்லாமல் ஓட்டைக் குடிசை களில் வதிந்து மடியும் மனித ஜீவன்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்று கேட்கின்றோம்? அல்லது காங்கிரஸ் ஏற்பட்டதற்குப் பின் இவர்கள் விஷயத்தில் என்ன மாறுதல் ஏற்பட்டது என்று கேட்கின்றோம்?
இந்த நிலையில் இப்படிப்பட்ட யோக்கியதையுள்ள காங்கிரசானது மூடப்படுகின்றதே, மறைந்து போகின்றதே, செத்துப்போகின்றதே என்று
சிலர் விசனப்படுவதைப் பார்த்தால் நமக்கு ஆச்சரியமாகவே தோன்று கின்றது.
இந்த 50 வருஷ காலமாய் காங்கிரசினால் நாட்டுக்கு என்ன-என்ன காரியங்கள் ஏற்பட்டதோ-காங்கிரசினால் மக்களுக்கு என்னென்ன உணர்ச்சி கள் ஏற்பட்டதோ அவைகளை யெல்லாம் இன்று அடியோடு அழித்துத்தீர வேண்டிய அவசியத்தில் உலகம் இருக்கும்போது, அப்படிப்பட்ட காங்கிரஸ் ஒழிந்து போவதனால் மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டியதிருக்க எதற்காக விசனப்படுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்திய தேசீயக் காங்கிரஸ் என்பது ஒரு விபசாரித்தனத்திற்கொப் பான ஸ்தாபனமாய் இருந்துவந்தது என்று சொன்னால், சமதர்ம ஞானம் உள்ள எவரும் வாய் பேசாமல் ஒப்புக்கொண்டாக வேண்டும் என்றே சொல்லுவோம். ஏனெனில் ஏழை மக்கள் பெயரையும், பாமர மக்கள் பெயரையும், கஷ்டப் படும் மக்கள் பெயரையும் சொல்லிக்கொண்டு, அந்த ஏழை மக்களுக்கு மேற்கண்ட காங்கிரஸ் ஸ்தாபனம் செய்து வந்த அக்
கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், ஏதாவது எல்லைகட்ட முடியுமா என்று கேட்கின்றோம்?
மக்களுக்கு, அவர்களுடைய மனிதத்தன்மைக்கு அடிப்படை யானதும், மிகவும் முக்கியமானதுமான கல்வி விஷயத்தை எடுத்துக் கொண் டோமேயானால்-முதலாளிகள் குழந்தைகள், ஜமீன்தாரர்கள் குழந்தைகள், உத்தியோகஸ்தர்கள் குழந்தைகள், மேல் ஜாதிக்காரர்கள் குழந்தைகள் ஆகியவர்கள் தவிர மற்றபடி, நாட்டில் 100 க்கு 90 பேர்களா யிருக்கும் சாதாரண மக்களின் குழந்தைகள் படிப்பில் பூஜ்யமாகவே யிருந்து வரு கிறார்கள். கையெழுத்துப் போடக்கூடத் தெரியாதவர்கள் அதிகம் பேர்கள் இருந்து வருகின்றார்கள். சுகாதாரத்தைப்பற்றி எடுத்துக் கொண்டால் அதுவும் மேல் குறிப்பிட்ட வகுப்பார்களைத் தவிர மற்றபடி 100 க்கு 90 மக்கள் சுகாதாரம் அற்று, நோயாளியாகவும் வைத்திய வசதி அற்றவர்களாக
வும் மிக்க மெலிந்த வர்களாகவும் இருந்து அகாலத்தில் மரணமடைந்து வருகிறார்கள்.ஜீவனோ பாய விஷயத்திலும் வயிறார உண்பதற்கும் தங்கள்
குடி அரசு - 1933 (2 38
பிள்ளை குட்டிகளை சாதாரண நிலையிற்கூட போஷிப்பதற்கும் முடியாம
லும் 100 க்கு 75 குழந்தைகள் தங்களது 6 வது 7 வது வயதிலேயே தங்கள் வயிற்றுக்குக் கூலி வேலை செய்து தீர வேண்டிய வர்களாகவும் இருந்து வருகிறார்கள். மனிதனுக்கு வேண்டிய முக்கிய காரியங்களாகிய கல்வி,
சுகாதாரம், ஜீவனம் முதலாகிய விஷயங்களில், ஒரு சிறு மாறுதலைக்கூட செய்ய முடியாத ஸ்தாபனங்கள் இருந்தென்ன? செத் தென்ன? என்பதை நடுநிலையிலிருந்து யோசிக்கும் எந்த அறிவாளியும் கடுகளவுகூட காங்கிரசு செத்துப் போகின்ற தென்று விசனப் படமாட்டான் என்றே சொல்லுவோம்.
கல்வி முதலிய மேற்கண்ட விஷயங்களில் காங்கிரசினால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதற்கு காங்கிரஸ் பக்தர்கள் சர்க்கார் பேரில் குறை கூறலாம். ஆனால் அந்த காங்கிரஸ் பக்தர்களை ஒன்று கேட்கின்றோம். அதென்னவென்றால் பணக்காரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களு டைய கல்வி, சுகாதாரம், ஜீவனோபாயம் முதலிய விஷயங்களிலும் மற்றும்
பெரும் பெரும் சம்பளம், அதிகாரம், பதவி பெறுவதற்குத் தகுதியான கல்வி, சுகாதார ஜீவனோபாய உத்தியோக விஷயத்திலும், இந்த 40, 50 வருஷங் களுக்குள்ளாக காங்கிரசினால் எவ்வளவு சீர்திருத்தங்கள், அனுகூலங்கள் ஏற்பட்டு, அக்கூட்டத்தார்கள் பயன் அடைந்து வருகின்றார்களா? இல் லையா? உதாரணமாக, வக்கீல், வைத்தியம், கணிதம், இஞ்சினீர், ஐ.சி.எஸ்., பி.சி.எஸ். முதலிய படிப்பு விஷயத்தில் எவ்வளவு முற்போக்கு, எவ்வளவு சம்பள உயர்வு, எவ்வளவு உத்தியோக அதிகரிப்பு முதலிய காரியங்கள் நடை பெறவில்லையா? என்று கேட்கின்றோம்.
இவைகள் எல்லாம் எப்படி ஏற்படச் செய்ய முடிந்தது என்று பார்த் தால் காங்கிரஸ் துரோகமும், ஒழுக்க ஈனமும் நன்றாய் விளங்கிவிடும்.
ஆகவே ஒரு நாட்டில் செல்வவான்களுக்கும், மேல் ஜாதிக்காரர்
களுக்கும் மாத்திரம் அனுகூலமாயும், ஏழைகளுக்கும், பாடுபடும் மக்களுக்
கும் பிரதிகூலமும், துரோக சிந்தனையும் உள்ளதாயுமுள்ள ஒரு ஸ்தாபனம். செத்துப்போகுமேயானால் ஜனங்கள் அதற்காக மகிழ்ச்சி யடைவதுடன்
எந்தக் காரணத்தை முன்னிட்டும் அது மறுபடியும் தலை எடுக்காமல் இருக்
கும்படி ஆழக் குழி தோண்டி புதைத்து அதன்மீது குத்துக்கல்களை நட வேண்டியது சமதர்ம அறிஞர்களின் கடமையாகும்.
காங்கிரசின் அயோக்கியத் தனங்களும், துரோகங்களும், பாமர ஜனங் களுக்கு வெளியாகக் கூடிய நல்ல ஒரு சமயத்தில், அதை மறைக்க தோழர்
காந்தியாரைப் பிடித்து அவரை மகாத்மாவாக்கி அவர் மூலம் மத சம்மந்த மான உணர்ச்சிகளை மக்களுக்குள் புகுத்தச் செய்து, காங்கிரஸ் பித்தலாட் டங்களுக்கெல்லாம் வேறுவித பாஷ்யம் கூறி, வருணாசிரமமென்றும், பரம் பரைத் தொழில் முறை என்றும், ஏழ்மைத்தன்மையையும், துன்பத்தையும், கஷ்டத்தையும் அனுபவிப்பதே மேல் என்றும் “தத்துவஞானம் பேசச்
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
செய்து மக்களை ஏமாற்றி மறுபடியும் காங்கிரஸ் படுகுழியில் விழும்படி யான காரியத்தைச் செய்வித்து வந்தார்கள்”. “கெட்டிக்காரன் பொய் எட்டு நாளை யில் தெரிந்துவிடும்” என்பதுபோல் காந்தீயத்தின் யோக்கியதை இப்போது இந்தப் பத்து வருஷத்தில் விளங்கிவிட்டதால் இரண்டும் சேர்ந்து மண் வீடு சரிவதுபோல் காங்கிரசும், காந்தீயமும் ”உன்னால் நான் கெட் டேன், என்னால் நீ கெட்டாய் ” என்று ஒன்றை யொன்று சொல்லிக்கொண்டு மாள வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது.
இந்திய தேசீய காங்கிரசும், காந்தீயமும், அழிந்தொழிந்து போவது என்பது இந்திய ஏழை மக்களுக்கு மாத்திரமல்லாமல், உலக ஏழை மக்கள் இயக்கத்திற்கே அதாவது சமதர்ம உலகத்திற்கே பெரிய லாபகரமான காரியமாகும்.
இந்தியாவில் சமதர்மக்கொள்கை என்றைக்காவது ஒரு நாள் ஏற்படும் என்று நினைப்போமேயானால் அது தேசீய காங்கிரசும், காந்தீய
மும் ஒழிந்த நாளாகத் தான் இருக்குமே தவிர அவை ஒழியாமல் ஏற்படாது என்பது உறுதி.
இந்தியாவைவிட பலமடங்கு அரசியல் கொடுமையும், பணக் காரக்கொடுமையும், பார்ப்பனீய பாதிரித்தன்மைக்கொடுமையும் அநாகரி
கக் கொடுமையும், அடிமைத் தன்மைக்கொடுமையும் இருந்து வந்த ரஷிய தேசத்துக்கு சமதர்ம உணர்ச்சி எப்பொழுது ஏற்பட்டது என்று பார்ப்போமே யானால் அங்கும் டால்ஸ்டாயிசம் என்னும் வைதீகப் புடுங்கலிசம்
(காந்தீயம்) ஒழிந்த பிறகு தான் ஏற்பட்டதே ஒழிய வேறில்லை. ரஷிய மகாத்மாவான டால்ஸ்டாய் என்பவரும், தோழர் காந்தியாரைப் போலவே ஏழ்மை வேஷமும், கடவுளைத் தேடும் தொழிலும், கடவுள் அருளுடன் கலந்திருக்கும் தன்மையையும் கொண்டவராக இருந்துவந்தவர். அவருக்கு செல்வாக்கு இருக்கும்வரை, ரஷியா மக்களுக்கு இந்த உலக வாழ்வு விஷயத்தில் கவலை இல்லாமல் “செத்தபின் வாழும் மேல் உலக வாழ்க்கை யிலேயே கவலை உண்டாகும்படியான உண்ர்ச்சியே வலுத்திருந்தது. ஏழை களுடைய கஷ்டம் இன்னது, தொழிலாளிகளுடைய கஷ்டம் இன்னது என்று உணராமலும், அனுபவ ஞானமில்லாமலும், ஏழ்மைத்தன்மை
யையும், உழைப்பையும் சிலாகித்துப் பேசி மக்களுக்குப் பிரசாரம் செய்து வந்தவராவார்.
அப்படிப்பட்ட டால்ஸ்டாயிசம் ஒழிக்கப்பட்ட பிறகுதான் முன் சொன்னபடி மக்களுக்கு சமதர்ம உணர்ச்சி பரவத்தொடங்கி நாட்டையும்,
புரட்சிக்கு தயாராக்கி முதலாளித் தன்மையையும், பாதிரித்தன்மையையும், ஏகாதிபத்தியத்தன்மையையும் இருந்த இடம் தெரியாமல் செய்து இன்றைய ரஷியக் குழந்தைகளுக்கு “ஒரு காலத்தில் சார் (சக்ரவர்த்தி) என்பவன்
இருந்தான் அவனுக்கு முதலாளி என்ற அடிமைகளும், பாதிரி என்ற தரகர்
குடி அரசு - 1933 (2 40
களும் இருந்தார்கள்” என்று கதை சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது. ஆதலால் அந்த நிலைமை இந்தியாவில் ஏற்படக்கூடிய தின் அறிகுறியாக இருந்த காங்கிரசும், காந்தீயமும் அழிவதானால் நாம் மகிழ்ச்சி அடையவேண்டுமேயல்லாமல் யாரும் அதற்காக கவலைப்பட வேண்டிய தில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
காந்தீயமும், காங்கிரசும் மறைபடவேண்டிய தேற்பட்டதற்கு பணக் காரர்களும், பார்ப்பனர்களும், படித்துவிட்டு உத்தியோகத்துக்கு காத்திருக்
கும் சோம்பேரிகளும் தான் விசனப்படவேண்டுமே தவிர மற்றபடி மனித
சமூகத் தினிடம் அன்பு கொண்டு சமநோக்குடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமே என்று எவரும் பயப்பட வேண்டியதில்லை.
அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத்தொண்டர்களை இரண்டு கையையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்க சமதர்ம இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம் ஜாதி, மதம், வருணம், தேசம் என்கின்ற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம். பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், ஹரிஜனன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும், எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம். ஏழை என்றும், பணக்காரன் என்றும், முதலாளி என்றும், தொழிலாளி என்றும், எஜமான் என்றும், கூலி என்றும், ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும் உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும் நிர்மூலமாக்கி தரைமட்டமாக்கும் இயக்கம். மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரியென்றும், முல்லாவென்றும், முன்ஜன்மம்
பின் ஜன்மமென்றும், கர்ம பலன் என்றும்; அடிமையையும், எஜமான னையும், மேல் ஜாதிக்காரனையும், கீழ்ஜாதிக்காரனையும், முதலாளியையும், தொழிலாளியையும், ஏழையையும், பணக்காரனையும், சக்கரவர்த்தியையும்,
குடிகளையும், மகாத்மாவையும், சாதாரண ஆத்மாவையும், அவனவ னுடைய முன்ஜன்ம கர்மத்தின்படி அல்லது ஈஸ்பரன் தம் கடாக்ஷப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங் கொண்ட சோம்பேரிகளின் கற்பனைகள் எல்லாம் வெட்டித்தகர்த்து சாம்ப
லாக்கி எல்லோருக்கும் எல்லாம் சமம் எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கம். ஜாதி, சமய தேசச் சண்டையற்று உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்ற சாந்தியும், ஒற்றுமையும் அளிக்கும் இயக்கம். இன்று உலகெங்கும் தோன்றி தாண்டவமாடும் இயக்கம். ஆதலால் அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள்! வாருங்கள்!! என்று கவி அழைக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.07.1933
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
ஏன் தோற்றார்?
- சித்திரபுத்திரன்
கேள்வி - தோழர் காந்தியார் ஏன் தோல்வி அடைந்தார்?
பதில் - காந்தியார் அரசியலில் தலையிட்டபோது சமூக சீர்திருத் தத்தைப்பற்றியே பிரதானமாய்ப் பேசி பாமர ஜனங்களிடம் செல்வாக்குப் பெற்றார். அதாவது,
தீண்டாமை ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும், மதுபானம் ஒழியாமல் சுயராஜ்ஜியம் கிடைக்காது என்றும் சொன்னார்.
ஒவ்வொரு வீட்டிலும் ராட்டினம் சுற்றப்பட்டாலொழிய சுயராஜ்ஜியம் கிடைக்காதென்றார்.
நாளாக நாளாக தீண்டாமையை ஒழிப்பதை ஒரு பக்கம் பேசிக் கொண்டு மற்றொருபுரம் வருணாச்சிரம தர்மத்தை ஆதரித்தார். ஜாதிப்பிரிவு முறை ஜாதிப்படி தொழில் முறை அப்படியே இருக்கவேண்டும். ஆனால் ஜாதிகளில் மேல் கீழ் வித்தியாசம் கூடாது என்று சொல்லிப் பூசி மெழு குகிறார்.
பிராமணனாய் பிறந்தாலொழிய பிராமணனாக முடியாது என்று சொன்னார். அப்புரம் சுயராஜ்ஜியம் கிடைத்துவிட்டால் தீண்டாமை தானே ஒழிந்துவிடும் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
கடைசியாக சுயமரியாதைக்காரர்கள் கிளர்ச்சியால் தீண்டப்படாத வர்கள் என்பவர்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைத்து விட்ட பிறகு அதை ஒழிக்க ஹரிஜன இயக்கம் என்று கோவிலுக்குள் விட வேண்டும் என்று ஒன்று ஆரம்பித்து, அவர்களைக் கிளர்ச்சி செய்து, கடைசியாக அக்கிளர்ச்சியையும், பட்டினியில் ஆரம்பித்து சட்டசபையில் கொண்டுபோய் விடப்பட்டாய் விட்டது. இதனால், இனி சட்டம் ஏற்படும் வரை கோவிற்பிரவேசம் முடியாது என்று தீர்மானமாய் விட்டது.
குடி அரசு - 1933 (2 42
இந்து முஸ்லிம் ஒற்றுமைப் பிரச்சினையும் 21-நாள் பட்டினி விரதத் தையும் கடந்து, அதுவும் தீண்டாமை ஒழிப்பைப் போலவே, சுயராஜ்யம் கொடுக்கப்பட்டு விட்டால் இந்து முஸ்லிம் ஒற்றுமையும் தானாக ஏற்பட்டு விடும் என்றும், தோழர் காந்தியாராலேயே சொல்லப்பட்டு விட்டது.
மதுவிலக்குப் பிரச்சினையும் சுயராஜ்யம் கிடைத்தாலொழிய மதுவை விலக்க முடியாது என்று முடிவு கட்டப்பட்டது.
ராட்டின விஷயமும் சில வீடுகளில் மாத்திரம் சிறிது நாளே சுற்றி விட்டு முடிவில் கரையானுக்கும் நெருப்புக்கும் ஆளாயின.
ராட்டின தத்துவமும் மாறிவிட்டது. அதாவது ராட்டினம் வெள்ளைக் காரனுடன் சண்டை போட ஒரு ஆயுதமென்றும், கதர் ஒரு தேசீய உடை யென்றும், தேசீய சின்னமென்றும் சொல்லப்பட்டு விட்டது.
ஆகவே காந்தியாரின் சுயராஜ்ய நிபந்தனைகள் ஒன்றுகூட நிறை வேற்றப் படாமல் போய் விட்டதால் காந்தியார் வாக்குப் படியே சுயராஜ்யம் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் காந்தியார் தோல்வியடைய வேண்டியது நியாயமே ஆயிற்று.
கே: இப்பொழுது, காந்தியார் என்ன செய்யப்போகிறார்?
ப:- ஜெயிலுக்குப் போகப் போகிறார்.
கே - ஏன் ஜெயிலுக்குப் போகிறார்?
ப. வில்லிங்டன் பிரபு பேட்டி அளிக்க மறுத்த பாவத்திற்கு பிராயச் சித்தம் செய்து கொள்ளுவதற்காக ஜெயிலுக்குப் போகிறார். இது வெளிப் படையான அர்த்தம். மற்றொரு தத்துவார்த்தம் என்னவென்றால் அவர். வெளியிலிருந்து கொண்டு என்ன வேலை செய்வது என்பது ஒரு பெரிய
பரிசுப் பிரச்சினையாய் விட்டது. இரண்டாவது காந்தியார் வெளியில் இருந் தால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். ஆதலால் ஜெயிலில் இருக்கும் வரை அவரை இந்தக் கேள்வி கேட்க யாருக்கும் சந்தர்ப்பம் வாய்க்காது. அன்றியும் போர் இன்னும் முடியவில்லை என்கின்ற அருத்தத் தையும் கொடுக்கும். ஆதலால் ஜெயிலில் இருப்பதே உத்தமம் என்று கருதி விட்டார்.
கே:- வில்லிங்டன் பிரபு காந்தியாரை ஜெயிலில் வைத்து விடுவாரா?
ப:- ஜெயிலில் வைக்காவிட்டால் சர்க்கார் தோற்றுப் போய் விட்டார்
கள். என்னை ஜெயிலில் வைக்கவிருந்த சர்க்காருக்கு சக்தியில்லை என்று முன் ஒருதரம் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது காந்தியார் சர்க்காரை: பரிகாசம் செய்ததுபோல இப்போதும் பரிகாசம் செய்வார். அப்போது
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
வில்லிங்டன் பிரபுக்கு ரோஷம் வந்து உடனே ஜெயிலில் வைத்துவிடுர். (வைத்து விட்டார்: பர்!
“யாரைவிட்டது காண் சுயமரியாதை எவரைவிட்டது காண்” என் கின்ற பல்லவிப்படி இன்றைய காந்தி வில்லிங்டன் சண்டை சுயராஜ்யத்
தைப் பொருத்ததல்ல, பின்னை என்னவென்றால் அது முழுச் சுயமரியாதை யைப் பொருத்ததேயாகும். எப்படியெனில் தோற்றுப்போனாலும் பரவா யில்லை. ஊரார் சிரிப்பார்களே! என்பதுதான் கவலை என்று ஒருவர்: சொன்னதுபோல் ரோஷம்தான் பாதிக்கின்றது.
கே:- அதென்ன அப்படிச் சொல்லுகிறீர் சுயராஜ்யம் கிடைக்கவில்லையே என்ற கவலை மக்களுக்கு இருக்காதா?
பதில்:- சுயராஜ்யம் என்றால் என்ன என்று எனக்கும் தெரியாது உமக்கும் தெரியாது. காந்தியாரும் இதுவரை விவரித்ததும் இல்லை; ஒத்துழையாமையின் போது ஒருவர் காந்தியாரை உம்முடைய சயராஜ்யத் துக்கு அர்த்தமென்னவென்று கேட்டார். அதற்கு பதில் காந்தியார் அது இப்போது சொல்லமுடியாது என்று சொல்லிவிட்டார். கடைசியாக காங்கிர
சில் முடிவு செய்யப்பட்ட பூர்ண சுயேட்சை காங்கிரசின் லட்சியம் என்பது தான் சற்று விளக்கமாக ஜனங்களுக்கு தெரிந்தது. அதென்னவென்றால் ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டுப் போய்விட வேண்டியதாகும்.
கேள்வி:- அப்படியானால் அது எப்பொழுது முடியக் கூடிய
காரியம்?
பதில்:- அது காந்தியாரின் மற்றொரு பட்டினி விரதத்துக்குப் பிறகுதான் சொல்லமுடியும்.
கேள்வி:- அதுவரை நாம் என்ன செய்வது?
பதில்- அஹிம்சை, ஆத்மசக்தி, சத்தியம், சத்தியாக்கிரகம் என்கின்ற கடவுள் தன்மைகளில் நம்பிக்கை இல்லாமல் கையில் வலுத்தவன் காரியம் என்பதில் நம்பிக்கை வைத்து, ஜாதி மதம் தேசம் என்கின்ற வித்தியாச மில்லாமல் உலகில் உள்ள ஏழை மக்கள் எல்லோரும் ஒன்று கூடும்படியான மார்க்கத்தை செய்து ஏமாற்றுகின்றவர்களை ஒழிக்க முயற்சி செய்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரே ஒரு கேள்வி 1
காங்கிரசுக்காரன் கேள்வி:-- கடவுள் இல்லை என்று சொல்லுகின்றீர் களே அப்படியானால் ஒரு மனிதன் ஏன் பணக்காரனாய் இருக்கின்றான்?
ஒரு மனிதன் ஏன் ஏழையாய் இருக்கிறான்.
குடி அரசு - 1938 (2) 44
சுயமரியாதைக்காரன் பதில்:- தனி உடமைக்கொள்கையை ஒழித்து பொதுவுடமைக் கொள்கையை ஏற்படுத்தாததால் ஒருவன் பணக்காரனா
கவும், ஒருவன் ஏழையாகவும் இருக்க முடிகின்றது.
குடி அரசு - உரையாடல் - 06.08.4933
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தோழர் காந்தி மறுபமுமும் சிறைப்பட்டார்
தோழர் காந்தியவர்கள் தனது 35-சகாக்களுடன் ஆமதாபாத்தில் வைத்து சிறைப்படுத்தப்பட்டு விட்டார். இதைப்பற்றி சுதேசமித்திரனும்,
தமிழ் நாடும் ஹிந்துவும் எழுதி இருப்பதுபோல் இதில் ஒன்றும் அதிசய மில்லை. ஆனால் அப் பத்திரிகைகளுக்கு காங்கிரசின் குற்றத்தையும், காந்தியார் குற்றத்தையும், அவ்விருவர்களுடைய பயனற்ற வேலைக ளையும், எடுத்துக் காட்ட இப்பொழுதாவது ஓரளவு தைரியத்துடன் வெளி வந்தது ஒரு பெரிய ஆச்சரியமேயாகும்.
இதில் சுதேசமித்திரன் பத்திரிக்கையானது காந்தி அரஸ்டைப் பற்றி தனது ஆகஸ்டு 1-ந் தேதி தலையங்கத்தில் “மரண தண்டனைக்கு உள். பட்டிருக்கையில் ஜனங்களின் மதிப்புக்கு பாத்திரரான தலைவர்கள் காரிய சாத்தியமானவைகளாவும், பலன் தரத்தக்கவைகளாகவுமுள்ள வழிகளை விட்டுவிட்டு தங்களுடைய கொள்கையின் விசேஷத்தை மெய்பிப்பதி லேயேகருத்துடையவர்களாக இருக்கிறார்களென்றும், காங்கிரசை பின்பற்று வோரான சாமான்ய ஜனங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் உடனே - கைதியாகி சிறை செல்லுவதை விட்டுவிட்டு அனுபவ சாத்தியமான காரியங் களை கவனிக்கவேண்டும்” என்பதாகவும் எழுதியிருக்கிறது.
இதன் கருத்து என்னவென்பதை நாம் அதிகம் விளக்க வேண்டிய தில்லை. காங்கிரசின் பேரால் காந்தியார் செய்துவந்த காரியங்கள் சாத்தியப் படக்கூடிய காரியமில்லையென்றும், அனுபவத்தில் எவ்வித பலனையும் தரத்தக்கது அல்லவென்றும், காங்கிரஸ் மரணதண்டனை அடைந்துவிட்ட தென்றும், காந்தியார் அதைக் கவனிக்காமல் பயனற்றதும், சாத்தியமற்றது மான தன்னுடைய கொள்கைக்கு பெருமை உண்டாக்குவதற்காக வேண்டி மறுபடியும் பாடுபடுகிறார் என்றும் ஆதலால் அதையாரும் பின்பற்றக்கூடா தென்றும் அதற்காக ஒருவரும் ஜெயிலுக்கு போகக்கூடாதென்றும் தெளி வாய் விளக்கி எழுதியிருக்கிறது. தமிழ் நாடு பத்திரிகையும், காந்தி தவறு செய்துவிட்டார். காங்கிரஸ் தவறான வழியில் போய்விட்டது என்று குறிப்புக் காட்டிக் கொண்டும் வந்திருக்கிறது. காங்கிரஸ் கலைக்கப்பட்டு, காந்தியாரின் கொள்கைகளுக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்துபோன பிறகு
குடி அரசு - 1933 (2 46
இவ்வளவு தூரம் கண்டித்து எழுதும் “தைரியம்” வாய்ந்த பத்திரிகைகள், காந்தியார் உப்பு சத்தியாக்கிரஹம் ஆரம்பித்த காலத்தில் இம்மாதிரி தைரியம் கொண்டு “காந்தியாரின் கொள்கைகள் பயனற்றது. யாரும் பின்
பற்றக் கூடாது” என்று எழுதி பிரசாரம் செய்து வந்திருந்தால் அதனால் எவ்வளவோ பயன் ஏற்பட்டி ருக்கும். அப்படிக்கில்லாமல் அந்தக் காலத்
தில் கூடவே கோவிந்தா போட்டுக் கொண்டு காந்தியாரைப் பற்றி விகார மான முறையிலும், அருவெறுக்கத்தக்க முறையிலும் விளம்பரப்படுத்திக் கொண்டும், ஒரு சாதாரண மனிதன்கூட செய்வதற்கு வெட்கப்படும்படியான மாதிரியில் அவரைப் புகழ்ந்து கொண்டும், அவருடைய காரியங்களை ஒவ்வொன்றையும் ஜனங்கள் பின்பற்றும்படியான மாதிரியில் பாமர ஜனங் களை ஏமாற்றி உற்சாகப் படுத்திக் கொண்டுமிருந்து விட்டு, இன்றையதினம். தானாய் வெட்டவெளியான பிறகு, தாங்களும் ஆளுக்கு ஒரு கல்லெடுத்துப் போட வந்துவிட்டார்களென்றால் இவர்களின் தைரியத்துக்கு எதை ஒப்பிடு வது? இவ்விஷயத்தின் தமது மாகாணத் தேசீய பத்திரிக்கைகள் என்று சொல்லிக்கொள்பவை மாத்திரமல்லாமல் இந்தியாவிலுள்ள அநேக தேசியப் பத்திரிகைகள் என்பவைகளும் இதே மாதிரியாகவே முன் நடந்து விட்டு, இப்போது காந்தியாரையும், காங்கிரசின் யோக்கியதையும் வன்மை யாகக்
கண்டித்து எழுதுகின்றன.
“மொகுடு சச்சினதரவாத்த முண்டகு புத்தி வச்சினதி” என்று தெலுங்
கில் ஒரு பழமொழியுண்டு. அதற்கு புருஷன் (காந்தீயம்) இறந்தபிறகு “முண்டை”க்கு அதாவது விதவைக்கு (தேசீயப் பத்திரிகைகட்கு) புத்தி வந்தது என்பது அதின் அருத்தம். அதுபோல் காரியங்களெல்லாம் நடந்து விட்ட பிறகும், இயற்கையிலேயே அதன் யோக்கியதைகள் வெளியான பிறகும், அதைப்பற்றி எடுத்துச் சொல்லுவதற்கும் அதிக தைரியம் ஒன்றும். வேண்டியதில்லை. அதனால் விசேஷ பலன்களும் ஏற்பட்டு விடப்போவ தில்லை. ஆனால் இனி மேலாவது தேசிய பத்திரிகைகள் எழுதுவதுதான் “வேதவாக்கு” என்று நினைத்துக் கொண்டிருக்கிற மூடப் பாமர மக்களுக்கு இப்பத்திரிகைகள் என்ன வழி காட்டப்போகின்றன? என்பது தான் அவர். களைப் பற்றிய பிரச்சினைகளாகும். “தமிழ் நாடு பத்திரிகை ஒரு அளவுக்கு
சமதர்மக் கொள்கைகளை பயங்காளி பாஷையிலாவது எழுதிவருவது பற்றி யாவரும் மகிழ்வார்கள்.” “சுதேசமித்திரன்” பத்திரிகையோ உலகம் எப்படி யானாலும் சரி, யார் எக்கேடு கெட்டாலும் சரி, ஸ்தல ஸ்தாபனங்கள், சட்ட சபைகள் முதலியவைகளெல்லாம் முன்போல் பார்ப்பனர்களே கைப்பற்ற வேண்டும். பார்ப்பன ஆதிக்கமே நிலைத்திருக்கவேண்டும். மனிதர்கள் எல்லாம் புராணக் குப்பைகளிலே புரண்டு பார்ப்பனர்களின் காலைக் கழுவின ஜலத்தைச் சாப்பிடுவதன் மூலமாகவே “மோட்சத்திற்குப் போக வேண்டும்” என்கின்ற பிரச்சாரமே செய்து வருகின்றதே தவிர கடுகள வாவது பொது ஜனங்களுடைய நன்மையைப்பற்றின கவலையே இல்லா
மல் நடந்து கொண்டு வருகின்றது. தமிழ் நாட்டு தேசியத் தலைவர்களான
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தோழர் சத்தியமூர்த்தி முதலியோர்களும், காந்தியாரின் தவறுதலைப் பற்றியும், காங்கிரசின் தவறுதலைப் பற்றியும் பேசும்போதெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களையும், சட்டசபைகளையும், கைப்பற்ற காந்தியார் உதவி புரிய வில்லையே என்கின்ற ஒரு காரணத்தைத்தான் பிரதானமாக வைத்துப் பேசு கின்றார்களே தவிர வேறில்லை.
இப்பொழுது சமீபத்தில் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் காந்தி
யாரின் ஆலோசனைப்படி காங்கிரஸ் தலைவரான தோழர் ஆனே அவர்கள்
பிறப்பித்த அறிக்கையை எதிர்த்து வேலை செய்யப்போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சட்டசபை ஆவலுள்ளவர்களும் ஸ்தல ஸ்தாபன ஆவலுள்ளவர்களும் இந்த அறிக்கைக்குச் சாதகமாக ஆதரவளிப் பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
நமது நாட்டைப் பொறுத்தவரையிலும், தேசீயமென்பதன் அர்த்த மெல்லாம் அரசாங்கத்தையும், அதிகாரத்திலிருப்பவர்களையும் யோக்கியப் பொறுப்பற்ற முறையில் வைவதும், அதன் மூலம் மூடப் பாமர மக்களிடம் செல்வாக்குப் பெறுவதும், அதன் பயனாய் சட்டசபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும் பதவிபெறுவதும் அப்பதவியையே தங்களது வாழ்க் கைக்கு ஆதாரமாய் வைத்துக் கொள்ளுவதும் என்பது தான் இன்று நமது நாட்டில் தேசியமாய் விளங்கி வருகிறது. இதற்கு உதாரணம் வேண்டும னால் இந்தியா வெங்கும் “மாசற்ற” தேசீயவாதியெனப் பேர் பெற்ற தோழர்: சத்திய மூர்த்தியவர்களின் வாழ்க்கையையும், “ஜாதகத்தையும்” எடுத்துக் கொண்டு பார்த்தாலே மேலேகண்டபடி நாம் சொல்லுவது சரியா? தப்பா? என்பது யாவருக்கும் சுலபத்தில் விளங்கிவிடும். பிரசித்திப்பெற்ற இப்பெரிய தேசீயவாதியின் போக்கே இப்படியிருக்கும்போது மற்றபடி குட்டி தேசீயவாதிகளான மாகாண, ஜில்லா, தாலூகாக்களில் மாத்திரம் விளம்பரம் பெற்ற தேசீயவாதிகளைப் பற்றி நாம் விவரித்துக் கூறவேண்டியதில்லை.
நிற்க, இந்தியாவிலுள்ள இன்றைய தேசீயத்திற்கு என்ன கொள்கை இருக்கின்றது என்று எவருக்குத் திட்டமாய்ச் சொல்ல முடியும்? என்று யோசித்துப் பார்த்தால் மற்றொரு புரத்தில் காங்கிரஸ் தேசீயத்தின் யோக்கியதை என்ன என்பதும் வெளியாகும். உலகம் பூராவுமுள்ள தேசீயத்
தில் என்ன இருக்கிறதோ அது தான் இந்தியாவிலுள்ள தேசியத்திலுமிருந்து வருகிறது. அது என்னவென்றால் தேசீயம் பேசி, பாமர மக்களை ஏமாற்றி ஒரு கட்சி அதிகாரத்திலிருப்பதும் மற்றொரு கட்சி தோன்றி தேசீயம் பேசி அதிகாரத்திலிருப்பவர்களைத் தள்ளி விட்டு தாங்கள் போய் அதிகாரத் திலிருக்க முயற்சிப்பதும், அப்படி முயற்சிக்கும் கட்சி ஒவ்வொன்றும். தங்களைத் தேசீயக் கட்சி என்று சொல்லிக் கொண்டு அதிகாரத்திலும் பதவியிலுமிருப் பவர்களை சதா வைது கொண்டிருப்பதும் தான் தேசீயக் கட்சி என்பதன் திட்டங்களாயிருந்து வருகின்றன.
குடி அரசு - 1933 (2 48
ஆனால் எல்லா தேசீயக் கட்சியும் பாமர ஜனங்கள் நம்மைக்காகவும் ஏழை ஜனங்கள் நன்மைக்காவும் பாடுபடுவதாகவே சொல்லிக்கொண்டு பாமர ஜனங்களுக்கும், ஏழை ஜனங்களுக்கு முள்ள குறைகளை எடுத்து வர்ணித்து ஏமாற்றுவதையே பிரசாரமாய் கொள்வதாய் இருக்குமானாலும், s ஜெயித்து அதிகாரமும், பதவியும் பெற்று விட்டால் அவர்களுக்காக என்ன செய்வது என்பதற்கே திட்டமில்லாமல், அதன் பயன் முழுவதும்
மேல் நிலையிலுள்ளவர்களும், தனிப்பட்ட நபர்களும் மாத்திரம் பயன் அனுபவிப் பதாய் இருந்து வருவதையேதான் நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.
இந்திய தேசீய காங்கிரசும், காந்தீயமும் இந்தக் கொள்கையிலும், திட்டத்திலிருந்து சிறிது விலகினதல்ல என்பதே நமது முடிபு.
உதாரணமாக, காந்தியாரின் கதர் திட்டத்தைப் பற்றி நாம் அதிகம். விளக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஏழைகளைக் காப்பாற்ற இது தான் வழி என்று அவர் முடிவு செய்து விட்டார். ஆகவே அதன் யோக்கியதை தானாக விளங்கும். தீண்டாமை விலக்கு என்பதின் தத்துவம் எல்லாம் காந்தி யாருக்கு ஹிந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதையே பிரதான மாய்க் கொண்டது என்பது யாரும் அறிந்ததேயொழிய இதில் ரகசியம் ஒன்றுமில்லை.
மதுவிலக்கு என்பது ஏழைக் கூலி ஜனங்களின் செல்வாக்கைப் பெறச் செய்யப்படும் சூழ்ச்சியேயல்லாமல், தோழர் காந்தியார் மதுவிலக்குக்
காகக் கையாளும் முறையால் மதுவிலக்கு ஏற்படாது என்பதும், மதுவை அடியோடு ஒழித்துவிட முடியாது என்பதும் அதுவிஷயத்தில் அவர் இது வரை கையாண்ட முறைகள் எல்லாம் தோல்வியே அடைந்திருக்கிறது என்பதும், அவரே நன்றாய் உணர்ந்ததாகும்.
மற்றப்படி அன்னியத் துணி பகிஷ்காரம் என்பதெல்லாம் ஆலை முதலாளிகளுக்கு லாபம் கொடுத்து வந்திருக்கிறது என்பதைத் தவிர, அதற்குப் பதிலாக முதலாளிகள், பகிஷ்காரப் பிரசாரத்துக்கு ஏராளமாய் பணம் உதவி வருகிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒரு பயனும் கண்டு விடவில்லை.
மற்றும் ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைப் பிரசாரத்தின் தத்துவமும், ஒவ்வொரு மதமும் தன் தன் சுயநலத்தையே பிரதானமாய்க் கருதவும் மதவெறியை அதிகமாக்கவும் ஒன்றுக்கொன்று அவநம்பிக்கை கொண்டு
என்றும் ஒற்றுமையாவதற்கு மார்க்கமில்லாமல் தனித் தனியே தலைவிரித் தாட ஏற்பட்டதல்லாமல் அதிலும் எவ்வித பயனும் ஏற்படுவதற்கில்லை.
இவை ஒரு புரமிருக்க சாத்தான் தன்மைகொண்ட சர்க்காரை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்து அதையொழித்து விடுவது என்று சொல்லிக்
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
கொண்டு, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்களெல்லாம் காந்தியாரைப் பற்றிய ஒரு விளம்பரத்துக்கும் பாமர ஜனங்களிடையே ஒருபோலி - உயிரற்ற கிளர்ச்சி ஏற்பட்டு யேற்றப்பட்டு சோர்வும், அவ நம்பிக்கையும் அடைய வுந்தான் பயன்பட்டதே தவிர ஒரு அளவுக்காவது சாத்தான் அரசாங்கத்தை அசைக்கவோ, அல்லது அது இக்கிளர்ச்சிகளை லட்சியம் செய்யவோ தக்க மாதிரியில் இதுவரை பயன்படவில்லை. ஒரு சமயம் சர்க்கார் ஏதாவது தாங்கள் இதை லட்சியம் செய்ததாக காட்டிக் கொண்டிருப்பார்களே யானால் அது போலித்தனமாய் பாமர மக்கள் ஏமாறு கின்றதற்காக காட்டிக்கொண்டிருக்கக் கூடியதாய் இருக்குமே தவிர. வேறில்லை. ஏனென்றால் இந்த சத்தியாக் கிரகத்தால் தாங்கள் மிகவும் பயந்துவிட்டதாகக் காட்டிக் கொண்டால் தான் கஷ்டப்படும் மக்கள் வேறு வழியில் பிரவேசிக்காமல் இந்தப் பைத்தியக்காரத் தனத்திலேயே முழுகி இருப்பார்கள் என்கின்ற எண்ணத்தைக் கொண்டு அவர்கள் பயந்தவர்கள்.
போல் நடித்திருக்கலாம். அல்லது தங்களை ஆதரித்து நிற்கும் ஜனங்களுக்கு ஒரு போலித் திருப்தியை உண்டாக்க வெண்ணி அப்படி நடந்து இருக்க லாமே ஒழிய ஒரு நாளும் சத்தியாக்கிரகக் கொள்கையோ, தேசீயக் கொள்: கையோ எதுவும் இது வரையில் சர்க்காரை லட்சியம் செய்யும்படி செய்யவே யில்லை என்று தைரியமாய்ச் சொல்லு வோம். அன்றியும் இம்மாதிரி ஒரு போலி இயக்கம் நாட்டில் இருந்துகொண்டு ஜனங்களின் உணர்ச்சிகளையும், ஊக்கத்தையும் கவர்ந்து பாழாக்கிக்கொண்டு வருவதில் சர்க்காருக்கும், முதலாளிமாருக்கும் எவ்வளவோ லாபகரமான காரியம் என்று சொல்ல வேண்டும். ஆனால், இதற்காகக் கஷ்டப்படுவதும், நஷ்டப்படுவதும் பாமர: ஜனங்களே ஒழிய மற்றபடி முதலாளிமார்களோ உத்தியோகஸ்தர்களோ சர்க்காரோ சிறிதுகூட இல்லவே இல்லை.
இந்தப் போலிக் கிளர்ச்சியை அடக்க அரசாங்கத்தார் எடுத்துக் கொள்ளும் போலி முயற்சிக்கு செலவழிக்கப்படும் காரியங்களுக்குச்
செய்யப் படும் செலவுகளுக்கு ஆக ஜனங்களின் வரிப்பணமே செலவழிக் கப்படுகின்றது. இந்த வரியால் பணக்காரர்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் புதிய வரிகளாலும் ஜனங்களுக்குச் சர்க்கார் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைப்பதாலும் ஏழை ஜனங் களும் நடுத்தர ஜனங்களுமே கஷ்டப்படுகிறார்கள்.
ஆதலால் பாமர ஜனங்கள் இது வரை தாங்கள் முட்டாள்தனமாய் ஏமாந்து முதலாளி ஆதிக்கத்துக்கு தூணான தேசீயப் பித்துக்கொண்டு அலைந்த முட்டாள் தனத்தை விட்டுவிட்டு எப்படி நடந்தால் முதலாளி தத்துவம் ஒழிக்கப்படும் என்றும், எப்படி நடந்தால் முதலாளி தத்துவ ஆட்சி அழிக்கப்படும் என்பதையும் கவனித்துப் பார்த்து அதற்கு ஏற்ற கொள்கை: கொண்ட இயக்கத்துக்குப் பாடுபடும்படியும் அதற்குத் தங்களால் கூடிய சர்வ தியாகங்களையும் செய்யும் படியும் வலியுறுத்துகின்றோம்.
குடி அரசு - 1933 (2 50
மற்றபடி ஒரு காதொடிந்த ஊசிக்கும் பயனில்லாமல் காந்தியாருக்கு உலக விளம்பரம் சம்பாதித்துக் கொடுப்பதிலும் சோம்பேறிகளாய் இருந்து ஒரு சிலர் வாழ வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் தேசீயத்துக்கு ஆக்கம்
தேடிக் கொடுப்பதிலும் ஏழைமக்களும் சரீரத்தால் உழைத்து பாடுபட்டுப்
பிழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுவது என்பது தற்கொலையே ஆகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.08.1933
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
சுமமரியாதைக்காறனுக்கும்
புராணமரியாதைக்காறனுக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன் S0 ஒரு மனிதன் உயர்தரப்படிப்பு அதாவது பி.ஏ. எம்.ஏ. ஐ.சி.எஸ் முதலிய படிப்புப் படித்து பட்டதாரியாயிருப்பதற்கும் மற்றும் தொழில் சம்மந்தமான படிப்பில் நிபுணத்துவம் பெற்று இருப்பதற்கும், மற்றொரு மனிதன் அவற்றை அடையாமல் தன் கையெழுத்துப் போடக்கூடத் தகுதியில்லாமல் இருப்பதற்கும் என்ன காரணம் சொல்லுகிறாய்?
பு-ம - அவனுக்குப் போதிய அறிவு இல்லாமல் இருக்கலாம். ஆதலால் அவன் அவற்றை கற்க முடியாமல் போயிருக்கும்.
சு-ம :- அப்படிச் சொல்ல முடியாது. இதோ பார் இந்த மனிதனை, அவன் எவ்வளவு சுருசுருப்பாகவும், புத்திசாலித்தனமாய் பேசக்கூடிய வனாகவும்,மண்வெட்டுவதிலும், பாரம் சுமப்பதிலும், கோடாரியால் விறகை வெட்டுவதிலும் எவ்வளவு புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறான். நாம் நான்கு
பேர் சேர்ந்தால் கூட செய்ய முடியாத வேலையை அவன் ஒருவனே செய் வது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பார். இப்படிப்பட்டவனை புத்தி யில்லாதவன் என்று சொல்லிவிட முடியுமா? ஆதலால் இவனுக்கு அறிவு இருக்கிறதே இவன் ஏன் பட்டதாரியாகவில்லை?
பு-ம :- அப்படியானால் அவன் தாய், தந்தையர்கள் இவனைப் படிக்கப் போதிய கவலை எடுத்துக் கொள்ளாமலிருக்கலாம்.
ச-ம:- இதோ, அவன் தகப்பனார் வந்துவிட்டார். அவரைக் கேட்டுப்
பார். அவர் தன் மகன் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பார்த்ததாக தானே சொல்லுகிறார். அப்படியிருந்தும் ஏன் அவர் குமாரன் படிக்கவில்லை?
பு-ம :- ஒரு சமயம் அவர் குமாரனுக்குப் படிக்கவேண்டுமென்ற கவலையில்லாமலிருந்திருக்கலாம்.
குடி அரசு - 1933 (2 52
சு-ம :- அப்படியும் சொல்ல முடியவில்லையே. அவர் மகனைக் கூப்பிட்டுக் கேட்டுப்பார். அவன் தான் படிக்கவேண்டுமென்று எவ்வளவோ ஆசைப்பட்டு அலைந்து திரிந்து பார்த்ததாகவும், காரியம் கைகூடாமல் போய்விட்டதாகவும் சொல்லுகிறானே இதற்கென்ன சமாதானம் சொல்லு
கிறாய்?
பு-ம :- அப்படியானால் அதாவது மகனும் புத்திசாலியாயிருந்து, தகப்பனுக்கும் தன் மகன் படிக்கவேண்டு மென்கின்ற ஆசையும் இருந்து பிள்ளையும் படிக்க ஆவலுள்ளவனாய் இருந்து படிக்காதவனாயிருக்கிறான். என்றால் ஒரு சமயம் அவன் தகப்பனுக்கு தன் பிள்ளையைப் படிக்க
வைக்கப் பணம் இல்லாமலிருந்திருக்கலாம்.
சு-ம :- இதுதான் சரியான பதிலாகும். அப்படியானால் அவன் தகப்பனுக்கு ஏன் பணமில்லாமல் போய்விட்டது?
பு-ம - இது ஒரு கேள்வியாகுமா? பணம் என்பது அவனவன் பாடுபட்டுச் சம்பாதித்திருக்க வேண்டியதாகும்.
சு-ம:- சரி என்றே ஒப்புக்கொள்ளுகிறேன். இந்த மனிதன் பாடுபடவில்லை என்று நீ சொல்லுகிறாயா? இந்த மனிதன் கல் உடைக்கிறார், இவர் சம்சாரம் விறகு கொண்டு வந்து விற்கிறார், வெளியில் வேலைக்குப் போய் வந்த நேரம் போக மீதி நேரத்தில் பெரிய கட்டைகளை வீட்டில் போட்டு கோடாரி கொண்டு பிளந்து சிறு சிறு சுமையாக அழகாகக் கட்டி வைக்கிறார். போதாக்குறைக்கு இவரின் தாயார் வயது சென்ற கூன் விழுந்த கிழவியம்மாள் புட்டும், முருக்கும் சுட்டு வீட்டுக்கு முன்னால் இருந்து
விற்றுக் கொண்டே யிருக்கிறார்கள். இரவில் 4 மணி நேரம் மாமியும், மருமகளும் தினம் ராட் டினத்தில் நூல் நூற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இப்படியெல்லாம் இருக்க இவர்கள் பாடுபடவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?
பு-ம:- இதெல்லாம் சரிதான். என்ன பாடுபட்டாலும் பணம் சேருவதற்கு பிராப்தம் வேண்டாமா? ஜன்மாந்திர கர்ம பலன் அதற்கு அனு சரணையாக இருக்க வேண்டாமா? பையனுக்கும் அவன் தலையெழுத்து பலமாயிருக்க வேண்டாமா? இவ்வளவும் இருந்தாலும் பகவானுடைய அனுக்கிரகமும் தாராளமாய் இருக்க வேண்டாமா? இவ்வளவு சங்கதிகள். தேவை இருக்கும் போது “பையன் கெட்டிக்காரன், புத்திசாலி, தகப்பனுக்கும் படிப்பிக்க ஆசையிருந்தது, குடும்பத்திலும் பெற்றோர்கள் ஆளுக்கொரு கஷ்டப்பட்டார்களே, இப்படியெல்லாம் இருந்தும் பையன்
ஏன் படிக்க வில்லை” என்றால் இது என்ன கேள்வி? இவை எல்லாம் என்ன நம்முடைய இச்சையா? அப்படியானால் நான் ஆகாயத்தில் பறக்க வேண்டுமென்றால் பறந்துவிட முடியுமா? நான் ராஜா
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
ஆகவேண்டுமென்றால் ஆகிவிட முடியுமா? நான் மகாத்மா ஆகவேணும் என்று ஆசைப்பட்டால் ஆகிவிட முடியுமா? நமக்கெல்லாம் மேலாக ஒன்று. இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றது என்கின்ற ஆஸ்திக ஞானத்தை உணர்ந்தோமேயானால் இப்படிப்பட்ட நாஸ்திக உணர்ச்சிக் கேள்விக்கெல்லாம் இடமே இருக்காது.
சு-ம:- அப்படியா சங்கதி, சரி உன் கடையைக் கட்டு. நான் சொல் வதை சற்று கவனமாய்க் கேள். பிறகு உன்னுடைய ஆஸ்திக ஞானத்தின் யோக்கி யதையைப் பார்ப்போம்.
பு-ம:-சரி சொல்லு பார்க்கலாம்.
சு-ம:- ஒரு ஆயிரம் ஏக்கரா பூமியும், 250 வீடுகளும், 1000 ஜனங்களும் உள்ள ஒரு கிராமத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த பூமியும், அந்த வீடுகளும் அங்குள்ள மற்ற செல்வங்களையும், வியாபாரங் களையும் அந்த ஒரு ஆயிரம் ஜனங்களுக்கும் பொதுவாக்கி விடுவோம். அந்த ஆயிரம் பேர்களுடைய வாழ்க்கைக்கும், அனுபவங்களுக்கும் வேண்டிய சாதனங்கள் என்ன என்ன என்பதாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்து அவைகளை யெல்லாம் அங்கேயே உற்பத்தி செய்ய ஒரு திட்டம் போட்டுக் கொள்ளுவோம். அதற்கு ஏற்ற தொழிற்சாலைகளைக் கட்டி அத் தொழிற்சாலையில் வயது வந்த எல்லா மக்களையும் ஆண், பெண் அடங்க
லும் எவ்வளவு நேரம் வேலை செய்தால் போதுமோ அவ்வளவு நேரம் வேலை செய்தாக வேண்டும் என்று ஒரு ஏற்பாடு செய்து கொள்ளுவோம். அவர்களுடைய குழந்தைகளை எல்லாம் ஒரு இடத்தில் கொண்டு வந்து
சேர்த்து அவர்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாக ஆகாரம், துணி முதலிய வைகள் கொடுத்து ஒரே மாதிரி போஷித்து எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுவரை ஒரே மாதிரியான கல்வியைக் கொடுத்து, கடவுள் செயல், மதம், முன் ஜன்ம பலன், தலைவிதி, தலையெழுத்து முதலிய வார்த்தைகள் அவர்கள் காதில் விழாமலும், அப்படிப்பட்ட எண்ணங்கள் அவர் மனதில் உதிக்காமலும் இருக்கும்படி ஜாக்கிறதையாய் காவல் வைப்
போம். பிறகு அவர்களுக்கு 14 அல்லது 15 வயது ஆனவுடன் அவர்களு டைய இயற்கை ருசிக்கும், மனப்போக்குக்கும் ஏற்ற தொழிலையும்-வித்தை யையும் கற்றுக்கொடுப்போம். அவற்றில் அவர்கள் 18,19 வயதுவரை அனு போகம் பெற்ற பிறகு அவரவர்களுக்கு ஏற்ற வேலை செய்யும்படி தொழிற் சாலைகளுக்கு அனுப்பிக் கொடுப்போம். இதன் பயனாய் உண்டா கும் பயனை அந்தக் கிராமத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் சரி பங்கு கிடைக் கும்படிக்கும், இந்த கொள்கைகொண்ட அந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகம் நடக்கும்படிக்கும் ஏற்பாடு செய்வதோடு ஒவ்வொரு மனிதனும் தன் பங்குக்
குக் கிடைக்கக் கூடிய சாதனத்தை அவனவன் அனுபவித்தே தீரவேண்டுமே ஒழிய எவனும் மீதி வைக்கக்கூடாதென்றும் திட்டம் செய்வோம்.
குடி அரசு - 1933 (2 54
மற்றும் நொண்டி, முடம், வேலைக்கு லாயக்கற்றது, வயது சென்றது ஆகியவர்களைப் போஷிக்க ஒரு திட்டம் போட்டு அதற்கு வேண்டிய அளவுசாதனங்களையும் தனித்தனியாக எடுத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளு வோம். பிறகு இந்தக் கிராமத்தில் உள்ள ஆயிரம் பேருக்கும் ஏதாவது அவசர காலங்களில் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டால் அதை சமாளிக்க பயிற்சி கொடுத்து அது மறந்து போகாமலிருக்கும்படி அடிக்கடி பரீகைஷ செய்து வருவோம். இந்தக் கிராமத்தில் உள்ள 1000 பேருக்கும் வசிப்பதற்கு ஒரே அளவான இடம் கொண்ட வீடுகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கி விடுவோம். இந்த கிராமத்து ஜனங்கள் பூராவும் சந்தோஷம் அனுபவிக்கவும்
நேரப் போக்கு உண்டாகவும், சுகாதார செளக்கியமும், உலாவ நந்தவனமும் முதலிய போகபோக்கியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை கூடியவரையில் பொதுவிலேயே உற்பத்தி செய்து வைத்து இலவசமாகவே அனுபவிக்க உதவுவோம்.
ஆண் பெண் சேர்க்கைத் துணை விஷயங்களுக்கு அவரவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் மாத்திரம், இஷ்டம் உள்ள வரையில் மாத்திரம் துணைவர்களாயிருக்க ஏற்பாடு செய்வோம். ஆக, இவை முதலிய காரியங் களை ஒழுங்காக பாரபக்ஷமில்லாமல் நடத்தி வருவதாயிருந்தால் நீ மேலே சொன்ன பிராப்தம், ஜென்மாந்திர கரும பலன், தலையெழுத்து, பகவா னுடைய அனுக்கிரகம், நமக்கு எல்லாம் மேலாக ஒன்று இருந்து கொண்டு நம்மை நடத்துகிறது என்கின்றதான வார்த்தைகளுக்கும், கொள்கைகளுக்கும், எண்ணங்களுக்கும் இடமுண்டா என்று யோசித்துப்
பார்..
குறிப்பு-இந்தசம்பாஷணையானது தனிவுடமைத் தத்துவத்தில் தான் கடவுள், கடவுள் செயல் முதலியவைகள் உண்டு என்றும், பொது உடமைத் தத்துவத்தில் அவைகளுக்கு வேலையில்லை என்றும், தனிவுடமைத் தத்துவத்தை நிலைநிறுத்தவே மேல்கண்ட கடவுள், கடவுள் செயல் முதலிய கற்பனைகள் ஏற்படுத்தப் பட்டு அது
நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் குறிப்பிடவே எற்பட்டதாகும். மற்றபடி அரசியல் சம்மந்தமாக மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - உரையாடல் - 13.08.1933
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
யந்திரத்தின் வமருமை
யந்திரங்களை எல்லாம் “பேயின்” அம்சம் என்று கூறி வந்த காலம் ஒன்று இருந்தது. அந்தக்காலம் மக்களுக்கு காட்டுமிராண்டி உணர்ச்சியைப் பரப்பப்பட்ட காலம் என்றே சொல்ல வேண்டும். அல்லது முதலாளித் தன்மையின் சூட்சிப் பிரசார காலம் என்றே சொல்ல வேண்டும். சுதந்திர அறிவை உபயோகித்து கூர்மையான ஆராய்ச்சி செய்தபின், எவருக்கும்
பாமரத் தன்மையாலும் சூட்சிப்பிரசாரத்தாலும் ஏற்பட்ட தன்மைகள் மாறி விடும்.
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் இம்மாதிரியான பாமரத்தன்மையும்
சூட்சி ஆதிக்கமும் இருந்து வந்ததெனினும் அவை அறிவுக்கு மதிப்புத் தோன்றிய பிறகு மறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாகம் மறைந்தும் விட்டது.
அதுபோல்தான் நம் இந்தியாவிலும் இன்னும் சில விஷயத்தில் காட்டுமிராண்டித் தன்மையும், பாமரத்தன்மையும்: புத்தியையும் அனுபவ பலன்களையும், உபயோகித்துப் பார்க்காத பல விஷயங்களும் இருந்துவரு கின்றன. அவற்றில் ஒன்றே யந்திரங்களைப் பேயின் தத்துவமென்பதும். இந்தத் தத்துவம் பெரும்பாலும் நீங்கிவிட்டதென்றாலும் சூட்சிப் பிரசாரத்
தின் பயனாய் சிற்சில இடங்களில் இன்னும் சிறிது பேசப்பட்டே வருகின்றது.
யந்திரங்கள் பேயின் தன்மை என்று பலர் சொல்லி பிரசாரத்துக்கு ஆதாரமாய் எடுத்துக்காட்டப்படும் அத்தாட்சி என்னவென்றால் யந்திரமா னது குறைந்த நேரத்தில் அதிகமான சாமான்களை உற்பத்தி செய்து விடு
கின்றதால் வேலை செய்து பிழைத்துத் தீரவேண்டிய ஜனங்களுக்கு வேலை இல்லாமல் போய் விடுகின்றது என்றும் அதனால் பல பேர் பட்டினி கிடக்க நேரிடு கின்றதென்றும் சொல்லப்படுவதாகும்.
இப்படிப்பட்ட கொள்கையை உடையவர்கள் அவ்வளவு பேரும் மனிதரில் ஒரு சாரார் (பெரும்பாலோர் கடவுள் சித்தத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ! தூங்கவேண்டிய நேரம் போக மற்ற வாழ்நாள் அவ்வளவும் பாடுபட்டே சரிரத்தால் கஷ்டப்பட்டே ஜீவித்து வாழ வேண்டியவர்கள் என் கின்ற எண்ணத்தைக் கொண்டே பேசுகின்றவர்களாயிருக்கின்றார்களே ஒழிய வேறில்லை.
குடி அரசு -1933 (5) 56
உலகத்தில் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் பெரும்பாகமான நாடுகள் யந்திரப் பெருக்கு ஏற்பட்டு யந்திரப்பெருக்கு இல்லாத நாட்டின் செல்வங்களைக் கவர்ந்து செல்வம் பொங்கும் நாடுகளாகவே ஆகிவரு கின்றன; என்றாலும் அங்கெல்லாம் கூட ஜனங்களுக்கு வேலையில்லாக் கஷ்டம் இருந்து தான் வருகின்றது என்பதை நாம் ஒப்புக்கொள்ளு கின்றோம்.
ஆனால் மேற்குறிப்பிட்ட மற்ற நாடுகளிலுள்ள மக்கள் தங்களுக்கு வேலையில்லாமல் போனதற்காக யந்திரங்கள் காரணமென்று கருதி அதற்காக யந்திரங்களையெல்லாம் பேயின் தன்மை என்று சொல்லி அப்பேயை ஓட்டுவதற்கு ராட்டினத்தை உடுக்கையாய்க் கொண்ட ஒரு பூசாரியால் யந்திரங்களை உடைத்துக் குப்பையில் போட்டு விட்டு சரீரத்தால் (கைராட்டினத்தால்) பாடுபடும்படியான வழியை யாரும் பின்பற்றவில்லை. பின்னர் என்ன செய் கிறார்கள்-செய்தார்களென்று பார்த்தால் யந்திரங்களின் பெருமைகள் நன்றாய் விளங்கும்.
யந்திரங்கள் ஏற்பட்டதின் பயனாய் ஜனங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் வேலைத் தன்மையை அது ஒழித்ததே தவிர பணவருவாய்த் தன்மையை அது ஒழித்துவிடவில்லை.
ஒரு தேசத்தில் மக்கள் கஷ்டப்பட்டு ஜீவிக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுமேயானால் அதனால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜனங்கள் கஷ்டப்படாமல் வாழவேண்டியதா? அல்லது கஷ்டம் இல்லாத
தால் செத்துப் போகவேண்டியதா? என்பதை யோசித்தால் யந்திரத்தின் தன்மை இன்னது என்பது விளங்கிவிடும்.
ஆகவே யந்திரப்பெருக்கால் கொஞ்ச நேரத்தில் அதிக சாமான் உற்பத்தி ஆகின்றதென்றால் அது தொழிலுக்கு ஏற்பட்ட ஒரு லாபமே ஆனதால் அதனால் ஏற்படும் பயனை தொழிலாளியே அடைய வேண்டியது நியாயம் என்பது யாருக்கும் புலனாகும்.
ஆதலால் வேலையில்லாதவர்களுக்காகப் பரிதாபப்பட்டு மனம்
இறங்கித் துக்கப்படும் மக்கள், தொழிலாளிகளுடைய உரிமையை அவர் களுக்கு வாங்கிக் கொடுக்க முயலாமல் தொழிலாளிகளின் உரிமையைக் கொள்ளைகொண்டு போகின்றவர்களிடம் கருணையும் தயவும் வைத்து அவர்களை (முதலாளியை! சும்மா விட்டு விட்டு அந்த முதலாளியை ஒழிப்ப தற்காக பட்டினி கிடந்து “விரதத்துடன்” விரட்டிக்கொண்டு போகும் தொழிலாளியைத் தடுத்து அவன் கையில் ராட்டினத்தைக் கொடுத்து உட்கார. வைப்பதென்றால் இது தொழிலாளிகளை வஞ்சிப்பதாகுமா? அல்லது அவர்: களுக்கு நன்மை செய்வதாகுமா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம். கூடிய சீக்கிரத்தில் இந்தியாவுக்கு விவசாயத்துறையிலும் யந்திரங்களே பெருகப் போகின்றது என்பது நமது நம்பிக்கையாகும்.
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
விவசாயத்துக்கும் யந்திரமென்றால் விவசாயத்தை ஒரு “கைத் தொழில்” முறை போலவே பாவித்து விவசாயத்தில் உள்ள சகல வேலைக
ளுக்கும், அதாவது உழுதல், விதைத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அருப்பு அறுத்தல், தாம்பு அடித்துத் தான்யமாக்கி மூட்டையில் போட்டுத் தைத்தல் ஆகிய காரியங்களை யந்திரங்கள் மூலமாகவே செய்விப்பதாகும். உழுவதற்கு ஏக்கர்.
1க்கு 2 மாடுகள், ஒரு கலப்பை, ஒரு ஆள்வீதம் நாள் கணக்காய் பாடுபடா
மல், ஆயிரம் ஏக்கர், ஐநூறு ஏக்கர் கொண்ட விஸ்தீரணத்துக்கு ஒரு ஆளைக் கொண்ட ஒரு மோட்டார் கலப்பை டிராக்டர்! வீதம் லக்ஷக்கணக்கான ஏக்கர். விஸ்தீரணமுள்ள பூமிகளை சில நாள்களில் வெகு சில ஆட்களைக் கொண்டே உழவும். அதுபோலவே அறுப்பு அறுக்கவும், தானியமாக்கவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விஸ்தீரணமுள்ள பூமிக்கு ஒரு மோட்டார். (கம்யூன் என்னும் அருப்பு யந்திரத்தைக்கொண்டு சில நாளில் வெகுசில ஆட்களால் செய்யும்படியாகவும் செய்துவிட்டால் முதலில் வேலை செய்து கொண்டிருந்த லக்ஷக்கணக்கான ஆட்களுக்கு வேலைக்கு என்ன மார்க்கம் என்பதையும், அதுபோலவே லக்ஷக்கணக்கான மாடுகளுக்கு என்ன வேலை என்பதையும் பற்றி யந்திரத்தைப் பிசாசு அம்சமென்று சொல்லு கின்ற ராட்டின உடுக்கை கொண்டு யந்திரப்பிசாசுகளை ஓட்டும் பூசாரி களைக் கேட்கின்றோம்?
யந்திரங்களைத் துவேசிக்கின்ற ஒவ்வொருவரும், முதலாளி ஆதிக்
கத்திற்கு அடிமையாகவோ-அல்லது முதலாளித்துவத்தை அறியாத ஞான சூன்யர்களாகவோ இருக்கின்றவர்களே தவிர சிறிதாவது தொழிலாளி (சரீரத்தினால் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் நிலைமையைக் கண்டு இறக்கப்படத் தகுதியுடையவர்களல்லவென்பதே நமது பலமான அபிப்பிராய மாகும்.
ஏனெனில் யந்திரப்பிசாசை ஓட்டும் பூசாரிகள் என்பவர்கள் மனிதனுக் குள்ள கஷ்டத்தை ஓட்டுவதற்குப் பதிலாக அவன்
சுகப்படுவதற்கு அதாவது அவனுடைய கஷ்டத்தை அகற்றுவதற்கு ஏற்பட்ட சாதனத்தை ஓட்டப் பார்க்கிறார்களே தவிர வேறில்லை.
யந்திரம் கூடாதென்றால் மனிதனுக்கு அறிவு விர்த்தி கூடாது என் பதுதான் அதன் அருத்தமாகும். அப்படியானால் யந்திரங்களைப் பேயின் அம்சம் என்று சொல்லுவதைவிட யந்திரங்களைக் கண்டுபிடித்த ஞானவான்
களைப் பேயர்கள் என்றும், கொடுமைக்காரர்கள் என்றும் கொலைக்காரர்கள்' என்றும், அயோக்கியர்கள் என்றும், பாவிகள் என்றும் சொல்லி அவர்களை எல்லாம் தேடிப் பிடித்து ஒழித்துவிடுவதே நாம் கஷ்டப்பட்டு உழைத்து வாழவேண்டிய மக்களுக்கு செய்யும் அருந்தொண்டாகும் என்று
கருதிவிடலாம்..
குடி அரசு - 1933 (2 58
இது சற்றாவது அறிவுடைமையோ அல்லது யோக்கியமுடை மையோ ஆகிய காரியமாகுமா? என்று கேள்கின்றோம். நிற்க உலகில் கைத் தொழில்வகைக்கும் விவசாயத்தொழில்வகைக்கும் யந்திரங்களை உற்பத்தி செய்து யந்திரத்தால் செல்வம் பெருக்கிய, தேசங்களில் முதன்மையான தேசம் அமெரிக்காவேயாகும். அப்படிப்பட்ட அமெரிக்காவில்தான் கோடீஸ்வரர்களான ஆண்களும், பெண்களும் பலர் இருக்கின்றார்கள். மணிக்கு ஆயிரக் கணக்கான ரூபாய் வருமானமுள்ளவர்கள் அங்கு பலருண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்தத் தேசமும் அன்னிய ஆட்சி என்பதிலிருந்து விடுபட்டு குடிகளுடைய ஆட்சி என்னும் குடி அரசு நாடாகவே விளங்கி வருகின்றது. இப்படியெல்லாம் இருந்தும் அந்தத்
தேசத்தில் இன்று 2 கோடி பேர்களுக்குமேல் வேலை இல்லாமல் இருப்ப தாகப் பத்திரிக்கைகளில் காணப்பட்டது. இந்த 2-கோடி பேர்களில் வீடு
வாசல் இல்லாமல் இரவில் முனி சிபல் ரிப்பேர் குழாய்களிலும் ஜலதாரை: டிச்சுவளைவுகளிலும் தூங்கிவிட்டு பகலில் தெருவில் திரிகின்ற மக்களும் உண்டு என்று அமெரிக்கர் மூலமே கேட்டு அறிந்தோம். இப்படி எல்லாம்
இருந்தும் அமெரிக்க வேலையில்லாத் தொழிலாளிகளோ அல்லது அவர் களிடம் அனுதாபமுள்ளவர்களோ ஒரு நாளும் யந்திரங்களை பேயின் அம்சம் என்று சொல்லிக்கொண்டு ராட்டின உடுக்கையின் மூலம் யந்திரப் பிசாசுகளை ஓட்ட முயலவே இல்லை.
பின்னர் என்ன செய்தார்கள் என்றால் வேலையில்லாத ஆட்களும் அவர்களது அனுதாபிகளும் முதலாளிகள் மேல் பாய்ந்தார்கள். சமதர்மக் கொள்கையை நாடுமுற்றும் பிரசாரம் பண்ணினார்கள். முதலாளிகளை துவேஷித்தார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு யந்திரங்கள் உதவி செய்ய ஏற்பட்டும் அதன் பயனை கஷ்டப்படும் மக்கள் அடையாமல் முதலாளிகள் அடைவதை நன்றாய் தொழிலாளிகள் உணர்ந்தார்கள். ஒன்றும் மார்க்கம் ஏற்படவில்லையானால் பொதுஉடைமைக் கொள்கை என்கின்ற ஒரு ஆயுதம் இருக்கின்றது என்பதை முதலாளிகளுக்கு எச்சரிக்கையாகக் காட்டினார்கள். இப்போது யந்திரப்பேய்களை ஓட்டாமல் யந்திரங்களை அழிக்காமல் யந்திரங்களை வெறுக்காமல் வேலையற்ற தொழிலாளிகளுக்கு வேலை கிடைத்துவருகின்றது. தொழிலாளிகளின் குறைகள் ராட்டினம் சுற்றாமலே பஞ்சாய் பறந்துவருகின்றது. ராட்டினம் சுற்றுவதில் ஆத்மசக்தி வளருகிற தென்றும் அது விஷ்ணுசக்கரமென்றும், அது சுற்றும்போது அதில் ஒரு ஓங்கார சக்தி புறப்படுகின்றதென்றும் அது வற்றாத சமுத்திரமென்றும் சொல்லும்படியான இந்த அவிவிவேக ஆபாசக் கற்பனைகள் ஒன்றும் அவர்களுக்கு (அமெரிக்கத் தொழிலாளிகளுக்கு) கற்பிக்காமலே வேலை யில்லாத் திண்டாட்டம் என்னும் “பேய்” “நான் பிழைத்தேன் எங்களப்பன் பிழைத்தான்” என்று சொல்லாமல் ஓடிமறைந்து வருகின்றது. இந்த மூன்று மாதத்தில் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிட்டது. இந்த வருஷ
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
முடிவிற்குள் பாக்கி பேருக்கும் வேலை கிடைக்குமாம். இதன் காரணம் என்ன என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டு மென்பதுதான் நமது நோக்கமாகும்.
அதாவது ஒரே ஒரு காரியத்தால் தான் இவ்வளவு வேலையில்லாத பேர்களுக்கும் வேலை கிடைத்துவிட்டது. அந்தக் காரியம் என்னவென்றால்
நாம் இந்த நான்கு வருஷகாலமாய் “குடி அரசில்” அவ்வப்போது குறிப்பிட்டு வந்த காரியமேயாகும்.
அதுதான் தொழிலாளிகள் செய்துவரும் வேலை நேரங்களை குறைக்க ஏற்பாடு செய்ததேயாகும்.
அமெரிக்க குடிஅரசு தலைவரான பிரசிடென்ட் ரூஸ்வெல்ட்டானவர். தம்தேசத்தில் அனேகருக்கு வேலை இல்லாத காரணத்தால் பொதுவுடமைக் கொள்கை பரவிவிடும் என்ற காரணத்தைக் கொண்டு தொழிற்சாலைகளில் இப்போது வேலை செய்துவரும் நேரத்தில் தினம் ஒன்றுக்கு ஆள் ஒன்றுக்கு
சுமார் 1-மணி நேர வேலையை குறைத்தார். அதாவது ஒரு மனிதன் ஒரு
வாரத்திற்கு 6-நாளைக்கு) சுமார் 45-மணி நேரம் வேலை செய்வதை வாரம் ஒன்றுக்கு 40 மணிநேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்பதாக உத்திரவு போட்டார். ஆள் ஒன்றுக்கு வாரம் ஒன்றுக்கு 5-மணி நேரம் வேலை செய்வதைக் குறைத்ததின் மூலம் இந்த மூன்று மாதத்துக்குள் வேலையில்லாத முப்பது லட்சம் பேருக்கு வேலை கிடைத்துவிடும் என்றும், ஏறக்குறைய இந்த வருஷ முடிவிற்குள் வேலையில்லாத எல்லோருக்கும் வேலை கிடைத்து விடும் என்றும் அறிக்கைவிட்டுவிட்டார். இதற்கு காரணம் தொழிலாளிக ளுடைய கிளர்ச்சியேயாகும். அதோடு தொழிலாளிகள் பிறரை அதாவது சட்டசபைக்கும், ஸ்தல ஸ்தாபனத்துக்கும் போகவேண்டியவர்களும், மந்திரியாக வேண்டியவர்களும், தொழிலாளர்களை படிக்கட்டுகளாய் உப யோகித்துக் கொள்ளுபவர்கள்
மூலம் தங்கள் கிளர்ச்சிகளைச் செய்யாமலும் தொழிலாளிகள் அல்லாத சோம்பேறி வாழ்க்கைக்காரரை தங்களுக்கு தலைவர்களாகவும், வழிகாட்டிகளாகவும் வைத்துக்கொள்ளாமல் பாடுபட்டு வந்ததாலுமே அவர்கள் (அமெரிக்க தொழிலாளிகள்! வெற்றிபெற்றார்கள். நம் நாட்டு தொழிலாளிகளுக்கு முதலாளிகள் அக்கிரமங்களை எடுத்துக் காட்டா மல் கடவுளின் பெருமையையும், மேல்உலக மோட்ச வாழ்க்கையின் அருமை யையும் பிரசாரம் செய்துவரப்படுகிறது. ஆனால் அமெரிக்க தொழிலாளிகள். கடவுளையும், மோட்ச வாழ்க்கையையும், துக்ஷமெனக் கருதி எல்லா
மக்களுக்கும், எல்லாப்பொருளும் எல்லா சுகபோகமும் சமம் என்கின்ற பொதுவுடமைத்தத்துவம் போதிக்கப் பட்டு, அதை அவர்கள் கைக்கொண்டு வெற்றிபெற்றார்கள். இப்பொழுது நமது நாட்டு தொழிலாளிகளும், தொழி லாளர்களிடம் அபிமானமிருக்கும் தர்மப் பிரபுக்களும் பொதுவுடமைக்
குடி அரசு - 1933 (2 60
கொள்கையோ தலைவிதிக்கொள்கையையோ மறுப்பதிலோ பிரசாரம் செய்யாவிட்டாலும் “பிச்சை போடாவிட்டாலும், நாயைப் பிடித்துக்கட்டு” என்பதுபோல் இயந்திரங்கள் பிசாசின் அம்சம் என்கின்ற முதலாளித் தன்மைக்கு அனுகூலமான முட்டாள் பிரசாரத்தையாவது இனிச்செய்யாமல் இருக்கும்படிக்கும் செய்ய இடம் கொடுக்காமல் தொழிலாளிகளைப் பார்த்துக்கொள்ளும் படிக்கும் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.08.4933
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
மீரத்கேஸ் அப்பில் முமுஷ
யாறாட்டத்தக்ககே
மீரத் சதி வழக்கு என்பது பொதுவுடமைக் கொள்கையை பிரசாரம் செய்ததற்காக ஏற்பட்டதென்பதும், அதில் பொதுவுடமைப் பிரசாரம் செய்த தாக ருஜுக்கள் விடப்பட்டிருப்பதோடு சில எதிரிகள் பொதுவுடமைக் கொள்கை தங்களுடைய கொள்கை என்பதாக ஒப்புக்கொண்டிருப்பதும், அவ் வழக்கை சிறிதாவது கவனித்தவர்களுக்கு நன்கு விளங்கும். எதிரிகளின் வக்கீல்கள் சிலரின் வாதங்களிலும் இந்த விஷயங்கள் ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பதாய் காணப்படுவதும் விளங்கும். இப்படி எல்லாம் இருந்தும் பலருக்கு (மெஜாரிட்டியாருக்கு! விடுதலையாகியிருப்பதும், மற்றும் பலருக்கு மாதக்கணக்கிலும், ஒன்று இரண்டு வருஷக்கணக்கிலும் தண்ட னையைக் குறைத்து இருப்பதையும் கவனித்துப்பார்த்தால் பொதுவுடமைக் கொள்கை விஷயமாக நமது மக்கள் பலருக்குள்ள பயமும், நடுக்கமும் நிவர்த்தியாகத் தக்க அம்சங்கள் பல அதில் மிகுந்து இருப்பதை உணரலாம்.
அதென்னவென்றால் ஒரு மனிதன் பொதுவுடமைக் கொள் கையை கொண்டவனாக இருப்பதும் அதை எடுத்து பிறருக்கு விளங்க உரைப்பதும் மற்றவர்களையும் பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும்படி பிரசாரம் செய்வதும் எவ்விதத்தும் குற்றமாகாது என்பது விளங்கும்.
அன்றியும், பொதுவுடமைக் கொள்கைப் பிரசாரமானது மேல் கீழ் லோகம் உண்டு என்பதை மக்களுக்குப் பிரசாரம் செய்வதை விடவும், முன்பின் ஜென்மங்கள் உண்டு என்று பிரசாரம் செய்வதைவிடவும், செத்த
பின் மனிதன் மறுபடியும், அதே சரீரத்தையும், அதே “உயிரை” யும் கொண்டு எழுப்பப்படுவான் என்று பிரசாரம் செய்வதை விடவும், மனிதனுக்கு முன் ஜென்ம கர்ம பலனாலும், கடவுள் அருளாலும் செல்வம் சேருகின்றதும் முன் ஜென்ம கர்மவினையால் தரித்திரனாய் இருக்கிறான் என்று பிரசாரம் செய் வதை விடவும், பெண்கள் ஆண்களுக்கு அடிமை என்றும் அவர்கள் உரை போட்டு மூடிவைக்க வேண்டியவர்கள் என்றும்,
குடி அரசு - 1933 (2 62
அவர்களுக்கு தங்கள் இஷ்டப்பட்ட புருஷனைச் சேர உரிமை இல்லை என்றும் ஆண்களுக்கு தங்களுக்கு இஷ்டப்பட்ட பெண்களைச்சேர- ஒருஅளவு வரையிலோ அல்லது எவ்வளவு பேர் வேண்டுமானாலும் அவ்வளவு பேரையும் சேர உரிமை உண்டு என்றும் பிரசாரம் செய்வதைவிடவும், மனித வகுப்பில் 4 வருணம் உண்டு என்றும், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தொழில் உண்டு என்றும் அது தலைமுறை தலைமுறையாய்ப் பார்த்து வரவேண்டிய தொழில் என்றும், மனித ஜாதியில்- மேல் கீழ் ஜாதி தீண்டாத ஜாதி முதலியவைகள் உண்டு என்றும் பிரசாரம் செய்வதைவிடவும், பொதுவுடமைக்கொள்கை பிரசாரமானது-அதாவது உலகிலுள்ள செல்வங்கள், போகபோக்கியங்கள் மக்களின் தேவைக்கான சாதனங்களுக்காக உழைக்க வேண்டிய உழைப்பு கள், மக்கள் எல்லோருக்கும் பொது என்றும் சரி சமத்துவ பங்கு உண்டு என்றும் பிரசாரம் செய்வது முட்டாள்தனமானதென்றோ, கொடுமையான தென்றோ, அயோக்கியத்தனமானதென்றோ நம்மால் ஒரு நாளும் சொல்ல முடியாது என்பதுடன் எந்த முட்டாள் அரசாங்கத்தாலும், கொடுங்கோன்மை அரசாங்கத்தாலும்கூட பொதுவுடமைக் கொள்கையைக் குற்றமானது என்று சொல்லவும், அதற்காகத் தண்டிக்கவும் முடியாது என்பதும் நமது கெட்டி யான அபிப்பிராயமாகும்.
பொதுவுடமைக்கொள்கை சட்டவிரோதமானதென்றும், நியாய விரோதமான தென்றும், மத விரோதமான தென்றும், கடவுள் உணர்ச்சிக்கு விரோதமான தென்றும், கூப்பாடு போடுகின்றவர்கள் எல்லாம் முதலாளிக் கூட்டமும், சோம்பேறிக்கூட்டமும், அவர்களது கூலிகளுமே தவிர மற்றப்படி சமநோக்கும், சுதந்திர உணர்ச்சியும், நீதி ஆட்சியும், கொண்ட மக்களின் கூப்பாடுகள் அல்ல என்பதே நமது அபிப்பிராயம்.
பொதுவுடமைக் கொள்கையைப் பிரசாரம் செய்வதால் யாதொரு “கெடுதி” யுமே அடியோடு நேர்ந்துவிடாது என்பதாக நாம் சொல்லவர வில்லை. யாதொரு பாடும்படாத சோம்பேறிகளின் ஆதிக்கமும், அவர். களது செல்வப்பெருக்கும் ஒழியலாம். கோயில்கள், சோம்பேறிகளை வளர்க்
கும் அன்னசத்திரங்கள், சோம்பேறிகளின் தலைவர்களான குருக்கள், பண்டாரங்கள் பாதிரிகள் ஆகியவர்களின் மடங்கள் இடிபடலாம். முதலாளி வர்க்கத்தினர்களின் ஆட்சிக்கும், ஏகாதிபத்தியத்தன்மைக்கும் முடிவுகாலம் கிட்டலா மென்பது உறுதியாகும். ஆனால், இதனாலெல்லாம் பொது ஜனங் களுக்கு-அதாவது சரிரத்தினால் கஷ்டப்பட்டு உழைத்து வாழும் ஜனங்களுக்கு என்ன கெடுதி உண்டாகக்கூடும். ஆதலால் பொதுவுடமைப் பிரசாரம் செய்யப்படுவதாலும் அதை மக்கள் கைக்கொண்டு அது பயன் பெறுவதற்கேற்ற முறைகளைக் கையாண்டு வேலை செய்து வெற்றி அடைவதினாலேயும் யாதொரு குற்றமும் இல்லை எனக்கருதியே பொதுவுடமைப் பிரசாரம் செய்ததாகவோ, அதில் சம்மந்தப்பட்டதாகவோ
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
கருதி பல எதிரிகளை விடுதலை செய்திருக்கிறார்கள்.
முதலாளித்துவ ஆட்சியில் இவ்வளவு நியாயமாவது கிடைத்ததற்கு
நாம் நியாயாதிபதிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது.
ஒரு சமயம் இவர்கள்-அதாவது பொதுவுடமைப் பிரசாரம் செய்த மக்கள் விடுதலை ஆகாமல் கடுந்தண்டனை தண்டிக்கப்பட்டார்கள் என்றோ, தூக்கிலிடப் பட்டார்கள் என்றோ வைத்துக் கொள்ளுவோம். 200 கோடி மக்கள் உள்ள உலகத்தில் அல்லது 35 கோடி மக்கள் உள்ள இந்தியா
வில் ஒரு 27 பேர்களையோ அல்லது 270 பேர்களையோ அல்லது 2,700 பேர்களையோ அல்லது 27,000 பேர்களையோ அல்லது 270,000 பேர்களை யோ தூக்கி லிடுவதால் உலகம் மறைந்து போகுமா? அல்லது ஒரு கோடு தாழ்ந்து போகுமா? என்று யோசித்துப்பாருங்கள்.
வருஷம் ஒன்றுக்கு வெள்ளம், புயல்காற்று, பூகம்பம் ஆகியவை
களாலும், காலரா, பிளேக், வைசூரி, க்ஷயம் முதலிய தொத்து வியாதிகளாலும் சாகின்ற மக்கள் எத்தனைபேர்: துஷ்டமிருகங்களாலும், ஜெந்துக்களாலும் சாகின்ற மக்கள் எத்தனைபேர்: இவர்கள் இப்படி சாவதால் உலகுக்கோ, மனித சமூகத்துக்கோ என்ன நன்மை ஏற்படுகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள். பயனற்ற காரியத்துக்கும், வேஷத்துக்கும் தற்பெருமைக்கும், கஷ்டப்பட்டு உயிர்விடுவதைவிட ஒரு புதிய உலகத்தையே சிருஷ்டித்து வைத்து மனித ஜீவர்களின் மனவேதனையையும், சரீர வேதனையையும் நீக்குவதற்காக உயிர்விடும் பேற்றைவிட ஒரு நாட்டுக்கோ, ஒரு மனிதனுக்கோ வேறு பேறு இல்லை என்றே சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.08.4933
குடி அரசு - 1933 (2 64
தொழிரைனிகள் வதாண்டு
இயந்திர ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமானால் இன்றைய நிலையில் தொழிலாளி களுக்கு வேலை நிறுத்தம் செய்யும்படி போதிப்பதிலேயே உண்மையான அனுகூலம் ஏற்பட்டுவிடாது.
தொழிலாளிகளுக்கு, மில் ஏஜண்டுகளும், நிர்வாகிகளும் அடிக்கும் கொள்ளையைப்பற்றி விளக்கிக் காட்டவேண்டும். ஏனென்றால் தொழிற் சாலைகளில் முதல் போட்ட முதலாளிகள் அடையும் லாபத்தைவிட நிர்வாகி களும், உத்தியோகஸ்தர்களும் அடிக்கும் கொள்ளையே அதிகம். நிர்வாக ஏஜெண்டுகளுக்கு பொருப்புக் கிடையாது. உதாரணமாக ஒருவர். துணி நெய்யும் ஆலையையோ, ஒரு நூல் நூற்கும் ஆலையையோ ஏற் படுத்தி விட்டாரேயானால் அதன் நிர்வாக ஏஜெண்டு என்கின்ற முறையில் தனக்கு ஒருசம்பளம், கமிஷன் முதலிய லாபங்களை ஏற்படுத்திக் கொள் ளுகிறார். இவருக்கு இந்தச் சம்பளமும், கமிஷனும் மில்லுக்கு லாபம் வந்தா
லும் நஷ்டம் வந்தாலும் அதைப்பற்றி பொருப்பு இல்லாமல் கிடைத்து வரும்படி ஏற்பாடு செய்துகொள்ளுகிறார். இது தவிர சுயநலமாகவும், நம்பிக்கைத் துரோகமாகவும் மற்ற தனது நண்பர்களுக்கு அல்லது தனக்குப் பலபேர்களில் வேண்டியவர்கள் என்பவர்களுக்கு நன்மை செய்யவேண்டும், தாக்ஷண்யம் காட்ட வேண்டும் என்பதற்காகவும் நடந்துகொள்ளும் முறை
யில் ஆலைக்கு ஏற்படும் நஷ்டம் அதிகமாக ஏற்பட்டுவிடுகின்றது. மில் லின் ஏஜண்டு தொழில் அனுபோகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொழில் பார்ப்பதில் தனக்கு அதிக தொந்திரவு இல்லாமலிருப்பதற்காக வேறு பல நிர்வாகஸ்தர் களை நியமிப்பதில் அதிக சம்பளம் கொடுத்து மில் லுக்கு நஷ்டம் உண்டாக்கி விடுகின்றார். மற்றும் மானேஜர், இஞ்சினீயர். என்பவர்கள் போன்ற உத்தி யோகஸ்தர்களுக்கும் அதிக சம்பளம் கொடுப்
பதில் மில்லுக்கு நஷ்டம் உண்டாக்கி விடுகின்றார். மில் ஏஜண்ட் அதாவது மேனேஜிங் ஏஜண்டு என்பவர் உத்திரவாதம் இல்லாத நிலையில் தனக்கு ஏராளமான வருவாயை உண்டாக்கிக் கொண்டிருப்பதோடு சாயந்தரம் 4- மணிக்கு மோட்டார்காரில் ஆபீசுக்கு வந்து 4, 5 கடிதங்களில் கையெழுத் தைப் போட்டுவிட்டு நேரே அங்கிருந்து கிளப்புக்குப் (42) போய்விடுவார். அங்கு டென்னிஸ், சீட்டு (சூது) ஆட்டம் ஊர்பெரியதன உற்சாகப்பேச்சு
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
மற்றும் சில காரியங்களில் கேளிக்கை முதலிய உல்லாச வாழ்க்கையில் அதிகக் கவலைகொண்டு வாழ்ந்துவருவார்.
மில் சம்மந்தமாகத் தனது சகல காரியங்களை ஆதரிக்கவும், தனது திறமையைப்பற்றி புகழவும் தன் இஷ்டப்படி சில டைரக்டர்களை தெரிந் தெடுத்து அவர்களில் சிலருக்கும் ஏதோ சிறிதளவு மில் ஆலையின் சம்மந்த மாக தாக்ஷண்யம் காட்டிவரவேண்டும். இவ்வளவு அக்கிரமச் செலவுகளும் பொருப்பற்ற காரியங்களும் நிர்வாக துஷ்பிரயோஜனங்களும் தாண்டி மில்லுக்கு பங்கு போட்ட முதலாளிமாருக்குப் போட்டி போட்டுக் கொண்டு லாபம் பங்கிட்டுக் கொடுக்கமுயல வேண்டும். ஆகவே இவைகளுக் கெல்லாம் யார் தலையிலாவது கையைவைத்துத் தீரவேண்டியதாய் நேரிடு கிறது என்பதை விளக்கிக்காட்டி தொழிலாளர்களுக்குப் போதிக்க வேண்டும். தொழிலாளிகளே நேரில் சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவை களுக்குப் போய் அவர்களது நன்மைக்கு ஏற்ற சட்டங்களையும், செளகர். யங்களையும் செய்து கொள்ளக் கற்பிக்கப்படவேண்டும். முதலாளிகளுக் கும்-தொழிலாளிகளுக்கும் மத்தியில் இருக்கும் தரகர்களை ஒழிக்கும்படிக்
கும், சர்க்காருக்கும்-தொழிலாளிகளுக்கும் மத்தியில் இருக்கும் தரகர்களை
யும் ஒழிக்கும்படிக்கும் தொழிலாளிகளுக்கு கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் தங்களுக்கும், தங்களால் செய்யப்பட்ட வேலையின் பயனாய் ஏற்பட்ட சாமான்களை வாங்கி அனுவிப்பவர்களுக்கும் இடையில் உள்ள தரகர்களை ஒழிக்கமுடியும். தொழிலாளர் நன்மை, தொழிலாளர் விடுதலை, தொழிலாளர் சுதந்திரம் என்பதின் ரகசியமெல்லாம் தரகர்களை ஒழிப்பதிலும் அழிப்பதிலுந் தான் இருக்கின்றதே யொழிய வேறு எதிலுமில்லை. இந்த உண்மையை அறிந்த தொழிலாளி தான் தனது உலகத்தை ஆளமுடியும். அப்படிக் கில்லாதவரையில் “சுயராஜ்யத்தில் தான்” அதாவது தேசீய முதலாளிகளின் ஆகஷியில்தான் தொழிலாளியாய் இருக்க முடியும்.
சமூகத்தொண்டு
நாம் ஏதாவது மனித சமூகத்துக்கு தொண்டு செய்யவேண்டுமானால் வைதீகர்களுடைய கொடுமைகளையும், பணக்காரர்களுடைய அக்கிரமங்க ளையும், பொது ஜனங்களுக்குள் (முக்கியமாய் ஏழைப்பாமரக் கூலி ஜனங் களுக்குள்! பிரசாரம் செய்ய வேண்டும்.
இதற்கு சர்க்காரை துவேஷிக்கவேண்டியதோ, அல்லது சட்டம் மீற வேண்டியதோ போன்ற அவசியம் ஒன்றும் இன்று இல்லை.
குறிப்பு:- இவைகளுக்கு உதாரணம் வேண்டுமானால் கீழே தரு கிறோம்.
இங்கிலாந்தில், தொழிலாளிகளுடைய ஆட்சியே உலக ஆட்சியாய் இருக்கவேண்டுமென்கின்ற பொதுவுடமைக் கட்சியார் என்பவர்கள், அங்கு
குடி அரசு - 1933 (2 66
தொழில் கட்சி என்கின்ற அரசியல் கட்சியையும், டிரேட் யூனியன் என்னும் தொழிலாளர் கட்சியையும் முதலில் ஒழிக்கவேண்டும் என்று தான் பாடு படுகிறார்கள். ஏனெனில் இப்போது அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் கொடுமையும், அக்கிரமமும், தொழிலாளிகளுக்கு நேரே தெரிகின்றபடியால் அவர்களுக்கு அதைப்பற்றி எடுத்துச்சொல்லி விளங்கவைக்க வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் அதற்கு எதிர் கட்சியில் இருந்து அந்த அரசாங்கத்தைத் தங்கள் வசப்படுத்தி தாங்கள் ஆதிக்கம் செலுத்த சூழ்ச்சி செய்யும் அதே கூட்டத்தார்களின்-அதாவது இப்பொழுது ஆட்சியில் இருக்கும் கூட்டத்
தைச் சேர்ந்தவர்களுடைய சூழ்ச்சிகளாகிய “தொழிலாளர் இயக்கம்” “டிரேட் யூனியன் இயக்கம்” ஆகியவைகளின் சூழ்ச்சிகளால் தொழிலாளர்கள் ஏமாந்துபோய் விடுகிறார்கள். ஆதலால் அவர்களின் சூழ்ச்சியை வெளிப் படுத்த வேண்டியதாகின்றது என்பது அவர்களது (பொதுவுடமைக்காரர். களது! கருத்து. இந்த வேலையைச் செய்வதில் அரசாங்கத்தாரோடு நேரே விரோ தித்துக் கொண்டாக வேண்டும் என்கின்ற அவசியமில்லை. முதலாளி ஆதிக்கங்கள் ஒழியும்போது அவற்றுள் ஒரு உறுப்பாகிய முதலாளி வர்க்க ஆட்சி ஒழிந்தே தீரும். ஒரு சமயம் அரசாங்கத்தை நேரே தாக்க வேண்டி
இருந்தாலும் அது முதலாளித்துவம் தடுத்துக்கொண்டிருக்கிறது என்கின்ற காரணத்துக்காகவும் ஏகாதிபத்திய தத்துவத்தைக் கொண்டிருக்கின்றது என்
கின்ற காரணத்துக்காகவும், அந்த அளவுக்கு தாக்கவேண்டியதே ஒழிய அது இன்ன தேசத்து ஆட்சி, இன்ன ஜாதி ஆட்சி என்பதற்காக தாக்க வேண்டிய அவசியமே இல்லை.
இந்த விபரங்கள் எல்லாம் தொழிலாளர்கள் அறிந்து அவர்கள் வேலை செய்தாலொழிய தொழிலாளர் துயரம் ஒருநாளும் தீர்ந்துவிடாது.
வெள்ளையர் கையிலிருக்கும் ஆட்சியைப் பிடுங்கி கருப்பர்கள். கையில் கொடுத்துவிடுவதாலும் சாத்தியப்பட்டுவிடாது. இந்தக் கொள்கை
யால் வெள்ளை முதலாளிக்கு பதிலாக கருப்பு முதலாளிதான் ஆட்சி செய்யக்கூடிய நிலைமை வந்துவிடும்.
முதலாளித் தன்மையில் கருப்பு முதலாளியைவிட வெள்ளை முத லாளியே மேலானவன். அவனுக்கு அற்பபுத்தி கிடையாது. எப்படி என்றால் தொழிலாளி பிறவியில் கீழ்ஜாதி என்று கருதமாட்டான். சமமாய் இருக்க உரிமை இல்லை என்று சொல்லமாட்டான். மேலே வேஷ்டி போடக் கூடாது, குழந்தைகளுக்கு கீழ் வேஷ்டி கட்டக்கூடாது என்பதுபோன்ற “வேத” விதிகள் “தர்ம சாஸ்திர” நிபந்தனைகள் வெள்ளையனுக்கு கிடையாது.
ஆகையால் தொழிலாளிகளுக்கு முதலாளி ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்கின்ற ஒரு நோக்கம்தான் இருக்கவேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 13.08.1933
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கதோழுர் பி. சிதம்பாம்
நாகர்கோவில் பிரபல வழக்கறிஞரும், நமது சுயமரியாதை இயக்கத்
திற்கோர் தூண் போன்றவரும், நமது மகாநாடுகள் பலவற்றில் தலைமை
வகித்து அரிய சொற்பொழிவாற்றியவருமான தோழர் பி. சிதம்பரம் பி.ஏ.,
பி. எல். அவர்கள் திருவிதாங்கூர் சட்டசபைக்கு வர்த்தகத் தொகுதியில் அபேட்சகராக நின்று போட்டியின்றித் தெரிந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
தோழர் சிதம்பரம் தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமைமிக்குடையார், சரித்திர ஆராய்ச்சியில் நிபுணத்துவமுடையார், சட்ட ஆராய்ச்சியில் வல்லுநர், சமய ஆராய்ச்சியில் பேரறிஞர். சமதர்மப் பற்றுடையார். இவர். சட்டசபைக் குத் தேர்ந்தெடுக்கப் பெற்றது, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு ஓர் பெரும் வெற்றியென்றே கருதுகிறோம். இவர் தேர்தலால் திருவிதாங்கூரில் வருணாச் சிரம ஆதிக்கம் ஒழிந்து எங்கும் சமத்துவமும், சுயமரியாதையும் பொங்கிப் பொலிந்து மக்களெல்லோரும் சாந்தியும், சமாதானமுமுற்று சமதர்ம நெறியை அடைவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 13.08.1935
குடி அரசு - 1933 (2 68
மோசம்போகணேண்! ஈஸ்ணாா!
- ஒரு தொழிலாளி
உலகில் நடைபெற்றுவரும் சகல காரியங்களும் ஈஸ்வரனாகிய உன்னாலேயே நடத்தப்பட்டு வருவதாக நான் நம்பி மதிமோசம் போனேன்! *அவனன்றி ஓரணுவுமசையாது” என்ற சோம்பேரி வேதாந்தத்தை உண்மை யாக நம்பி இந்தக்கதிக்கு ஆளானேன். நான் பிறந்ததிலிருந்து இதுவரை அரை வயிற்றுக் கஞ்சிக்கு ஆலாய்ப் பறப்பதற்கு, நான் “முன்ஜென்ம” த்தில் செய்த “பாவமே” காரணமென நம்பி என்னை நானே கெடுத்துக் கொண் டேன்! ஒரு சில ஆசாமிகள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் என் போன்ற ஏழைத் தொழிலாளிகளின் உதவிகொண்டு இன்ப வாழ்வு நடாத்தி வருவதற்கு அவர் கள் “முன்ஜன்மத்தில்” செய்த “பூஜா” பலனே காரணம் என நம்பி நான் முழுமூடனானேன்! “கடவுளை நம்பினவர் கைவிடப்படார்” என்றதை மெய்யென நம்பி எனது தற்போதைய இழிந்த நிலைக்கு ஆளானேன்!
நான் சுகவாழ்வை அடையவேண்டுமானால்-என்போன்ற ஏழைத் தொழிலாளிகள் இன்ப வாழ்க்கையை எய்த வேண்டுமானால் முதலில் ஈஸ்வர நம்பிக்கையிலிருந்து விடுவித்துக் கொள்வதன் மூலமே அதை அடைய முடியும் என்ற உண்மையை இப்போதே உணரும் பாக்கியத்தை யடைந்தேன். ஆகவே ஏ! “ஈஸ்வரா” இனி நான் மதிமோசம் போக மாட்டேன்! உன் பெயரைக் கூறி அதன் மூலம் சுயநல முதலாளிக் கூட்டங்
களும், மன்னர் கூட்டங்களும் இனி என்னை-எனது தொழிலாளர் குழுவை- ஒருக்காலும் ஏமாற்றவிடமாட்டேன்! இது நிச்சயம்! இது உறுதி!! இது
சத்தியம்!!!
என்போன்ற ஏழைத்தொழிலாளர்கள் குடிக்கக் கால்வயிற்றுக் கஞ்சிக்கு வழியின்றியும், வசிக்கக் குடிசையின்றியும், கட்டத் துணி யுமின்றியும் கஷ்டப்பட்டு வந்திருப்பதற்கு-வருவதற்கு முக்கிய காரணம் நீயே என்பது பளிச்சென எனக்கு புலனாகிவிட்டது! எனவே எங்கள் கஷ்ட நஷ்டங்களுக்கு ஆதிமூலமாயிருந்து வரும் உன்னை ஒழிக்க நான் முன்வந்து விட்டேன்! உன்னை நினைக்க நினைக்க என்நெஞ்சு
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
பகீரென்கிறது! ஓ! பணக்காரர்களின் பந்துவே! உன் ஜம்பம் இனி என்னிடத்
தில் செல்லாது.
உன்னாலேயே நான் இந்த இழி நிலைக்கு ஆளானேன் என்பதை இப்போது உணர்ந்துகொண்டு விட்டேனாதலால், நான் முக்கால்வாசி விடுதலையை அடைந்துவிட்டேனென்பது மிகையாகாது. ஆம்! இனி முதலாளிகள், அரசர்கள் என்ற சுயநலக்காரர்களிடத்திலிருந்து வெகு சுலப மாக நான் விடுதலையடைந்து விடுவேன்! உனது பேராலேயே சுயநலக் கூட்டத்தார் எங்களை ஏமாற்றி வந்திருக்கிறார்க ளதலால் இப்போது உனது
பேர் எங்களிடம் செல்லுபடியாகப் போவதில்லையாதலால் இனி முதலாளி
கள் பாடு அந்தரத்தில் தான் தொங்கப்போகிறது. உன்னையே நாங்கள் சட்டை செய்யாதபோது முதலாளிக்கூட்டத்தார்தான் எம்மாத்திரம்?
நான் எனது ஐம்பது வருட அனுபவத்தில் நடந்திருப்பவற்றில் இரண்டொரு விஷயங்களைக் கூற ஆசைப்படுகிறேன். எனது ஏழாவது
வயதில் பீடித் தொழிற்சாலையில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்திலமர்ந்தேன். எனது பெற்றோர் பரம்பரை ஏழைகளாதலால் நான் அரைவயிற்று கஞ்சிக்கும் வழியின்றி வாழ்ந்தேன். பதினைந்து வயதுவரையில் பீடித் தொழிற் சாலையில் ஏழு ரூபாய் சம்பளம் பெற்று வந்தேன். அதன்பின் பஞ்சாலை
யில் 11 ரூபாய் வேலையில் அமர்ந்தேன். 25 வயதுவரையில் அதே வேலை யிலிருந்து வந்தேன். எனது பெற்றோர்கள் வேலை செய்யச் சக்தியில்லாத வர்களாக ஆகிவிடவே, குடும்பப் பாரம் என் தலையிலேயே வந்து விழுந்தது. நான் பட்ட பாடு ஒருநாய்கூடப் பட்டிராது! பதினொரு ரூபாயை கொண்டு எப்படி ஜீவிப்பது! நான் தினந்தோறும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்து வந்தபோதெல்லாம் எனது பெற்றோர் “நீ ஏன் வருந்து கிறாய்! கடவுள் நமக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான், இதைக் கொண்டு நாம் திருப்தியடைய வேண்டியது தான்! வீணாக வருத்தப் படாதே” என்பார்கள். எனக்கு இந்தச் சமாதானம் முதலில் சரியானது போலத்தோன்றிவந்ததானாலும் நாளாக ஆக அந்த நம்பிக்கையில் ஆட்டங்கொடுக்கலாயிற்று. கடவுள் சர்வ தயாபரர் என்கிறார்களே எல்லாம் செய்ய வல்லவர் என்கிறார்களே அப்படியிருந்தால் என் போன்றவர்கள் சதா துன்பப்படுவதற்கும், ஒரு சிலர் மட்டும் க்ஷமமாக வாழ்ந்துவருவதற்கும் காரணமில்லையே என்ற ஒரு எண்ணம் ஏற்பட லாயிற்று. இதற்கு அவரவர். கர்மபலனே காரணம் எனச் சிலர் கூறினார்கள். இதையும் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை, ஏனென்றால் எந்த ஒரு மனிதரையும் முதலில் படைத்தவர் கடவுள் என்று ஒரு கூற்றிருந்து வருவதால், கடவுளாலேயே அப்படிச் செய்யப்பட்டு வருவதாக நான் உணர்ந்தேன். முதலிலேயே கடவுள் ஒவ்வொருவரையும் நல்லவர்களாகப் படைக்காமல் சிலரை ஒருவிதமாகவும், வேறு பலரை மற்றொருவிதமாகவும் படைக்கிறார். என்று நினைக்க இடம் ஏற்படுகிற தல்லவா! அப்படியாயின் கடவுள் சர்வ
குடி அரசு - 1933 (2 70
தயாபரர் என்று எப்படி நம்பவோ, ஏற்கவோ கூடும்? இந்த எண்ணம் எனக்கு உண்டாகவே பலத்த குழப்பமாக விருந்தது. கடவுள் இருக்கிறார். என்பது உண்மைதானா? அவர் இருந்தால் அவர் தயாபரர் தானா? அப்படி அவர் ஜீவதயாபரராகவிருந்தால் எல்லாரும் சுகமாக வாழும்படி செய்யாமல் ஒரு சிலர்மட்டும் சுகமாக இருக்கவும் பெரும்பாலர் துக்கக் கடலில் ஆழ்ந் திருக்கவும் அவர் செய்வாரா? என்பதைப் போன்ற கேள்விகள் எனக்குள் ளேயே எழுந்து என்னைச் சுயேச்சை சிந்தாக்கிரந்தனாக்கிற்று. ஆகவே கடவுளாவது மண்ணாங்கட்டியாவது என்ற உண்மையை அடையும் பேறு பெற்றேன்!
ஒரு சில சுயநலக் கூட்டத்தார் தாங்கள் மட்டும் சுகமாக வாழவிரும்பி. அதற்காகக் கற்பிக்கப்பட்ட கற்பனையே கடவுள் என்பது நன்றாக விளங்கி விட்டது. ஆகவே அந்தக் கடவுள் நம்பிக்கையிலிருந்து என்று விடுதலை அடைகிறோமோ அன்றே முக்கால் விடுதலையை அடைந்துவிட்டதாகத்
திட்டமாகக் கூறலாம்.
கடவுள், கர்மபலன், மறுபிறவி என்ற வெற்று வெடிகளால் நாம் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறோம் இவற்றை நாம் உதறித் தள்ளிவிட்டு மேலே நிமிர்ந்து பார்க்க வேண்டும்.நாம் சதா ஈன நிலைமையில் உழல்வதன் காரணங் களைக் கண்டு அதன் அஸ்திவாரத்தில் கைவைக்கவேண்டும். அதுதான் கடவுள் என்ற கற்பனையே என்பது நன்கு விளங்கும். நம்மைச்
சதா இக் கட்டுகளிலும், கஷ்டங்களிலும், இழி நிலைமையிலுமிருக்கச் செய்து வருவது அந்தக் “கடவுளே” யாகும். அவர் தயாபரராகவிருந்தால் நம்மை இப்படித் துன்புறவும், முதலாளிக்கூட்டம் எப்போதும் இன்புறவும் செய்து வருமா? என்பதை நன்கு யோசித்துப்பாருங்கள்! “முன்ஜென்மத்தால் அவரவர் செய்திருக்கும் செயல்களுக்கேற்ப இப்போது நடக்கின்றன” என்றால் முதலில் எல்லோரையும் படைத்தவர் கடவுளே என்கிற படியால், அப்போதே அதாவது முதலிலேயே ஏன் எல்லாரையும் ஒரே மாதிரியாகப் படைத்திருக்கக்கூடாது என்பதை யோசித்துப் பாருங்கள்!
ஆகவே ஏழைகளை ஏணிகளாக உபயோகித்து அதன் மூலம் சிலர். நகத்தில் அழுக்குப்படாமல் வாழ்ந்து வரச்செய்து வைத்திருக்கும் கடவுள். போன்ற கட்டுப்பாடுகளை உடனே உடைத்தெரியுங்கள். நம்மைக் கண் விழிக்கச் செய்து வரும் சுயமரியாதை இயக்கத்தைப் போற்றி, நமது உண்மையான நன்றியையளித்து அந்த இயக்கத்தில் நாமும் இரண்டறக் கலந்து நம்மைக்கெடுத்து வந்திருக்கும் கடவுள், மதம், முடியரசு என்பவை களை அடியோடு ஒழிக்க ஆண்மையோடு முற்படுங்கள். ஆண்டவன் நம்பிக்கை அடியோடு ஒழிக! புரட்சி ஓங்குக!! பொதுவுடமை வாழ்க!!!
குடி அரசு - கட்டுரை - 13.08.1933
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
நாகர்கோவிலில் ஈவை. இராமசாமி
முகவுரை
தோழர்களே! தோழர் பி.சிதம்பரம் அவர்கள் எம்.எல்.ஏ. ஸ்தானம் பெற்றதற்காக ஏற்பட்ட பாராட்டு விழவிற்குத் தலைமை வகிப்பது என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாவேயிருக்கின்றது. இதற்காகவே குற்றாலத்தி லிருந்து தேக அசெளக்கியத்தை கவனிக்காமல் வந்திருக்கின்றேன்.
தோழர் சிதம்பரம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு தூண்: போன்றவர் அவரது எழுத்துக்களும், அபிப்பிராயங்களும் எனக்கு தீவிரமாய் செல்ல படிகள் போல் உதவின. நமது நாட்டில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் களில் தோழர் சிதம்பரம் முக்கியமான ஒருவராவர். அவர் இந்த 6,
7 வருஷ காலமாய் இயக்கத்துக்கு செய்துவந்திருக்கும் தொண்டு மிகவும் போற்றக் குரியதாகும். இயக்கத்தின் பேரால் அவர் யாதொரு பயனையும் அடைந்த தில்லை என்பதையும், இயக்கத்தால் அவருக்கு பல கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டதும் எனக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட ஒருவரை: சுயமரியாதைச் சங்கம் பாராட்ட வேண்டியது கடமையாகும். ஆதலால் தான் நான் இத் தலைமைப் பதவியை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்கவந்தேன் ஆனால் இந்த சமயத்தில் எனது பழய நண்பர் தோழர் சிவதாணுப்பிள்ளை MLA. அவர்கள் என்னை இத்தலைமைப் பதவிக்கு பிரரேபிக்கும் சடங்கை நடத்து கையில் சடங்குகளில் சொல்லப்படுவது போலவே என்னைப்பற்றி என்னென்னமோ புகழ்ந்து கூறினார். அவைகள் பெரிதும் எனக்கு பொருத்த மற்ற தாததால் எனக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை என்று சொல்லுவதை தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்கள் மன்னிப்பார்களாக. ஏதோ என் புத்திக்கு சரியென்று பட்டவகையில் நான் சிறிது தொண்டு செய்து வரு கிறேன். அது எனது கடமை என்று கருதிச் செய்கிறேன். அதற்கு எவ்வளவு புகழ்ச்சி வேண்டிய தவசியமில்லை. அன்று நான் கொண்ட அனேக அபிப்பிராயங் களுக்கு இன்று நான் மாறுபட்ட அபிப்பிராயமுடையவனாய் இருக்கிறேன். இனி நாளை எவ்வித அபிப்பிராயம் ஏற்படும் என்று எனக்கே. தெரியாது. உலகம் மாறிக்கொண்டிருப்பது. மனிதனின் அறிவு சதா நேரமும்
குடி அரசு - 1933 (2 72
படிப்பிலேயே இருக்கிறது. அப் படிப்புக்குத் தக்க அபிப்பிராயங்கள் ஏற்பட்டுக்கொண்டு தானிருக்கும். இந்நிலையில் தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்களுடைய ஒரு அபிப்பிராயத்துக்கு நான் மாறுபட்டிருப்பதற்கும் அவர் மன்னிப்பாராக. அதாவது எனது தீவிரமான சில அபிப்பிராயங்கள் அபிப்பிராய பேதத்துக்கு இடமானதென்றும் அதைப்பற்றி பேச எவருக்கும் உரிமை இல்லை என்றும் சொன்னார். அதை நான் தாழ்மையுடன் பலமாய்
மறுக்கிறேன்.
ஏனெனில் அது எனது கொள்கைக்கு விறோதமானதாகும். ஒருவன் எப்படிப்பட்ட மனிதனாயினும் மனிதத் தன்மைக்கு மேற்பட்டவன் என்று சொல்லப்படுபவனாகிலும் அவனது அபிப்பிராயங்கள் எப்படிப்பட்ட மனி தனாலும் பரிசோதிக்கப்படவும், தர்க்கிக்கப்படவும் தக்கதாகும் என்பதே எனதபிப்பிராயமாகும். யாருடைய அபிப்பிராயத்தையும், எந்த விதமான அபிப்பிராயத்தையும் ஆட்சேபிக்கவும், அடியுடன் மறுத்து எதிர்க்கவும் யாருக்கும் உரிமையுண்டு என்பதும் எனது அபிப்பிராயம். ஆதலால் எனது அபிப்பிராயங்களைப் பற்றி குறைகூறவோ, தர்க்கிக்கவோ, யாரும் தகுதியு டையவர்கள் அல்ல என்று தோழர் சிவதாணுப்பிள்ளை அவர்கள் சொன் னதை நான் ஏற்க முடியாமல் இருக்கிறது.
ஒரு விஷயத்தை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். அதாவது எந்த மனிதனுக்கும் அவனது அபிப்பிராயம் என்னும் பேரால் எதையும் சொல்ல உரிமையுண்டு. அதை தடுப்பது என்பது யோக்கிய மற்ற காரியமாகும்.யார் எதைச் சொன்னாலும் சொல்ல அவகாசமளித்த பிறகுதான் அதை மறுத்துப்பேசவேண்டும் என்று பேசிவிட்டு சுயமரியாதைக்காரர். சட்டசபையில் செய்யக்கூடிய வேலை என்பது பற்றி பேசியதாவது:-
சு.ம. வும் சட்டசபையும்
சுயமரியாதைக்காரர்கள் சட்ட சபைக்கு போக வேண்டுமென்பது சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டமாகும்.
சட்டசபையில் கட்சித்திட்டத்தை நிறைவேற்றிவைக்க முடியுமா? என்று சிலர் கேட்கக்கூடும். எல்லாம் செய்யாவிட்டாலும் பெரும்பான்மை யான விஷயங்களை சட்ட சபை மூலம் செய்விக்கலாம் என்கின்ற நம்பிக்கை உண்டு. அன்றியும் சு.ம.காரர்கள் சட்டசபையைக் கைப்பற்ற வேண்டும் என்று சும. சமதர்மத்திட்டம் வகுத்திருக்கிறது. இவை யெப்படியிருந்தாலும், சம. இயக்கத்தைப் பொருத்த வரையில் அதன் கொள்கைகளைப் பிரசாரம் செய்ய சட்டசபை முதலிய ஸ்தாபனங்களை உபயோகித்துக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. ஏனெனில் சட்டசபையில் செய்யவேண்டிய காரியம் இன்னது என்று இப்போதைய சட்டசபை மெம்பர்களுக்கே தெரி யாது என்றும், ஓட்டர் களுக்கும் தெரியாதென்றும் நான் கூறுவேன். அன்றி
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
யும் அதை வெளியில் பிரசாரம் செய்யவும் கூட சில கூட்டத்தார் இடம் கொடுக்காமல் காலித்தனம் செய்து தடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட காலிக்கூட்டங்களுடன் போராடிக்கொண்டு பிரசாரம் செய்துகொண்டிருப் பதைவிட சட்டசபையில் பிரசாரம் செய்வது மிகவும் பலனளிக்கக் கூடிய
தாய் இருக்கும். சட்டசபை நடவடிக்கைகளில் ஒரு மனிதன் தனது அபிப்பி ராயத்தைத் தாராளமாய் வெளியிட இடமுண்டு. பொருமையுடன் கேட்டாக வேண்டும். பத்திரிக்கைக்காரர்கள் அதையோக்கியமான முறையில் திரித்துக் கூறாமல்) தான் வெளியிட்டாக வேண்டும். சட்டசபை நடவடிக்கை ரிகார்டுகளில் நாணைய மாய் எழுதி வைக்கப்படும். இந்த நிலையுள்ள வரையில் சட்டசபைகள், பிரசாரத்துக்கு ஏற்ற இடமாகும். ஆதலால் அவை
களில் சு.ம.காரர் அமர வேண்டியது அவசியமான காரியம் என்று நான்
கருதுகிறேன்.
தவிர சட்டசபையில் பேசவேண்டிய அநேக விஷயங்கள் சு.ம கொள்கைகாரர்களுக்குத் தான் தெரியும். அவர்கள் தான் தைரியமாய்ச் சொல்ல முடியும் என்று முன் சொன்னேன். உதாரணமாக இன்றைய வியா பாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் என்றால் ஒருவகை திருட்டு என்றும் பலர் செல்வத்தையும், உழைப்பையும் சிலர் அனுபவிப்பது என்பது
தான் சு-ம.காரருடைய அருத்தமாகும்.
விவசாயிகளுக்கும், பொது ஜனங்களுக்கும் இடையில் ஒரு தரகர்
இருக்கக் கூடாது. அதுபோலவே தொழிலாளிகளுக்கும், பொதுஜனங்களுக்
கும் இடையில் தரகர் இருக்கக் கூடாது என்பது சு.ம. காரர்களின் வியாபார: சம்மந்தமான கொள்கையாகும். இதைவேறு எந்த மெம்பராவது தைரியமாய் சொல்ல முடியுமா? சு.ம. மெம்பர்கள் தான் சொல்லுவார்கள்.
அதுபோலவே வரி விஷயங்களில் செல்வவான்களை விட்டு விட்டு இப்போது ஏழை மக்களையே துன்புறுத்துகிறோம்.
உதாரணமாக விவசாயத் துறையில் இன்று உள்ள வரித்திட்டமானது அக்கிரமான முறையில் போடப்பட்டு வருகிறது. அதாவது ஒரு ஏக்ரா காரனுக்கு என்ன விகிதம் வரிபோடுகின்றோமோ அதே திட்டம் தான் 1000 ஏக்கர்காரனுக்கும் வரிபோடப்படுகின்றது. இதை மாற்றியாக வேண்டும். இன்கம்டாக்ஸ் (வருமான வரியைபோல்! இவ்வளவு ஏக்கர் பூமிக்கு மேல் பட்டவர்களுக்குத் தான் வரி என்றும், அதுவும் இத்தனை இத்தனை ஏக்கர். பூமிக்கு மேல் உள்ளவனுக்கு இன்ன இன்ன வீதம் வரி என்றும் திட்டம் செய்யவேண்டும். அப்படிக்கில்லாததால்தான் சிறு விவசாயக்காரர்கள் நாளுக்கு நாள் நசிந்து பெரும் பெரும் நிலச்சுவான்தாரர்கள், ஜமீன்தார்கள். பெருகி வருகிறார்கள். இந்த ஞானம் மற்ற மெம்பர்களிடம் இல்லை, இருந்
தாலும் எடுத்துச்சொல்ல தைரியம் இல்லை.
குடி அரசு - 1933 (2 74
அதுபோலவே கல்வி விஷயத்திலும் பள்ளிக்கூடம் அதிகம் வைக்க வேண்டும் என்பது தான் மற்ற மெம்பர்களுடைய கருத்தேயொழிய எப்படிப் பட்ட படிப்பு யாரைக்கொண்டு படிப்பிப்பது என்பது பற்றிய ஞானமும் மற்ற மெம்பர்களுக்குப் போதாது. முதலாளித் தன்மை ஒழியும் படியான மார்க்கப்
படிப்பும், மூடநம்பிக்கை ஒழியும் படியான படிப்பும் படிப்பிக்கச் செய்யப்
படும் என்கின்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இவை சும. மெம்பர்களால் தான் முடியும். அவர்களுக்குத்தான் தெரியும். ஆகையால் இதுபோன்ற அனேக விஷயங்களை உத்தேசித்தே சு.ம. காரர்கள் சட்ட சபைக்குப்போக சமதர்மத்திட்டம் வகுத்திருக்கிறார்கள். அந்தப்படி இங்கு,
முதல் முதலாக தோழர் சிதம்பரம் அவர்கள் தெரிந்தெடுத்து அதுவும் போட்டியின்றி தெரிந்தெடுக்கப்பட்டது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
முடிவுரை
தோழர்களே! இன்றைய கொண்டாட்டம் இனிது முடிந்தது. ஆனால் தலைவர் முடிவுரை என்ற விஷயம் நிகழ்ச்சிக் குறிப்பில் பாக்கியிருக்கிறது. முடிவுரையாக இரண்டொரு வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். அது உபன்யாசகர்கள் பேசியதைப்பற்றியே பெரிதும் பேசுகிறேன்.
முதலாவது உபன்யாசகர் தோழர் ராமையா அவர்கள் எலக்ஷன் களில் கைக்கூலி (லஞ்சம்) நடைபெறுவதாகச் சொன்னார். லஞ்சம் என்பது
தருமம் என்பது போன்ற சாதாரண பழக்கச் சொல்லாய் வழங்குகிறது. தருமத்தொகை களைவிட லஞ்சத் தொகைகளே அதிகமாக இருந்து வருகிறது. லஞ்சம் கொடுக்கல் வாங்கல்களைப்பற்றி பேசுகிறவர்களும், வருத்தப்படுகின்ற வர்களும் இன்று அநேகமாய் லஞ்சம் கொடுத்து பயன் பெறாமல் ஏமாந்த வர்களும் லஞ்சம் கிடைக்காமல் போனவர்களுமாய்த் தான் இருந்து வருகிறார்கள். நாட்டில் லஞ்சத்துக்கு இழிவு யில்லாமல் போய்
விட்டது. காரியசித்திக்கு அதையே முக்கிய சாதனமாய் பெரும்பான்மை மக்கள் கருதியும் பயன்படுத்தியும் வருகிறார்கள். லஞ்சம் கேவலமானது, இழிவா னது, பாவமானது என்றெல்லாம் சொல்லி வந்தும், சட்டம், சாஸ்திரம், வேதம் ஆகியவைகளிலும் கண்டிருந்தும், ஏன் இன்று வெகு தாராளமாய் நடைபெற்று வருகின்றது என்கின்ற காரணம் சும. காரனுக்குத் தான் தெரியும். மற்றவனுக்குத் தெரியாது. மற்றவனைக் கேட்டால் “காலம் கெட்டுப் போய் விட்டது, தருமம் அழிந்து விட்டது சர்க்கார் லாய்க்கில்லை” என்று பிதற்று வார்கள். எந்தக் காலத்தில் லஞ்சம் இல்லாததை நாம் பார்த்தோம். எந்த தர்மத்தில் லஞ்சம் இல்லை? எந்த அரசாங்கத்தில் லஞ்சம் இல்லாமல் போய் விடும்? என்று நான் அவர்களையே கேட்கின்றேன். இன்றைய அரசாங்கம் ஒழிந்து ஜனங்கள் கோருகிற “பூரண சுயராஜ்யம்” ஏற்பட்டாலாவது லஞ்சம் ஒழிந்துவிடுமா? என்று கேட்கின்றேன். லஞ்சம் என்பது முதலாளி ஆதிக் கத்தின் (இயற்கை) தர்மமாகும். பணம் உள்ளவன் பணமில்லாதவனுக்கும்,
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
பணத்தாசை பிடித்தவனுக்கும் கொடுப்பது என்பது தான் லஞ்சமாக இருந்து வருகிறது.
எலக்ஷன்களில் ஓட்டு வேண்டியவர்கள் ஓட்டு உடையவர்களிடத் திலிருந்து வாங்குவதற்குக் கொடுக்கும் விலையை லஞ்சம் என்கின்றோம், இது இன்று இங்கு மாத்திரம் தானா நடைபெறுகின்றது? இந்தியாவெங்கும் நடைபெறுகின்றது. லஞ்சத்தின் மீதே தான் எல்லாத் தேர்தல்களும், தேர்தல் பிரசாரங்களும், மற்ற பிரசாரங்களும் நடந்து வருகின்றது. பணம் இருக்கிற வன் பணம் இல்லாதவனுக்கு எந்தத் காரணத்தைக் கொண்டு கொடுத்தால் தான் என்ன? பணம் இல்லாதவன் பணம் இருக்கிறவனிடம் எந்தக் காரணத்தைக்கொண்டு கேட்டால்தான் என்ன? பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும்வரை லஞ்சம் பிச்சை முதலானவைகள். ஒழியவே ஒழியாது. இதுதான் அதன் இயற்கை தர்மமாகும். இயற்கையை உணர்ந்தவர்கள் இன்றைய நிலையில் லஞ்சத்தைக் குறை கூறமாட்டார்கள். நமக்குக் கொடுக்கவும் வாங்கவும் சக்தியும் யோக்கியதை இல்லையே என்று கருதுபவர்கள் தான் லஞ்சத்தைக் குற்றம் சொல்லுவார்கள். உலகில் லஞ்சம் ஒழியவேண்டுமானால் தனி உடமைத் தர்மம் அழிந்து ஒழிந்து பொது உடமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுவது மனுதர்மம் பேசுவதேயாகும்.
சட்டசபைக்கு நிற்கும் எவரும் போட்டியேற்பட்டால் லஞ்சம் கொடுக்காமல் 100க்கு 99 தேர்தல்களில் முடியவேமுடியாது. புரட்டு, பித்த
லாட்டம், அயோக்கியத்தனம் செய்யாமல் முடியவே முடியாது. சிலர்: சொல்லுவார்கள் எல்லோருக்கும் ஓட்டு இருந்தால்தான் முடியுமா யென்று கேட்பார்கள். அப்போதும், லஞ்சம் கொடுத்துத்தான் ஆக வேண்டும். கொஞ்சம் ஓட்டு இருக்கும்போது சொந்தமுதலில் லஞ்சம்கொடுத்தால் நிரம்ப ஓட்டு இருக்கும் போது சர்க்கார் முதலில் லஞ்சம் கொடுக்கவேண்டும்.
ஒரு கிராமத்துக்கு கோவில் கட்ட பொருள் கொடுக்கவேண்டும். ஒரு கிராமத்துக்கு சாவடி கட்ட பொருள் கொடுக்கவேண்டும். இப்படிப் பலவிதமாய் லஞ்சம் கேட்பார்கள். கொடுத்துத்தானாய் வேண்டிவரும். எங்கள் ஜில்லாவில் ஒரு எலக்ஷன் வீரர் உண்டு. அவர் விவசாயிகளிடம் சென்று வரிகுறைப்பதாய் சத்தியம் செய்வார். உபாத்தியாயர் மணியக்காரர். கணக்குப் பிள்ளை முதலிய உத்தியோகஸ்தர்களிடம் சென்று சம்பளம் உயர்த்திக் கொடுப்பதாய் கற்பூரத்தை அணைத்து சத்தியம்செய்வார். இது ஒன்றிற் கொன்று முரணானதா இல்லையா? பாருங்கள். சம்பளம் குறைத்தால்தான் வரியைக் குறைக்கமுடியும். வரியை உயர்த்தினால் தான் சம்பளம் உயர்த்த முடியும். ஆதலால் புரட்டுப் பித்தலாட்டம் பேசி இரண்டு
குற்றம் செய்வதை விட லஞ்சம் கொடுப்பதின் மூலம் ஒரு குற்றம் செய்வது மேலானதாகும். எனவே லஞ்சம் ஒழியவேண்டுமானால் இன்றைய
குடி அரசு - 1933 (2 76
பொருளாதார நிலைமை அடியோடு மாற்றியாகவேண்டும். இது மற்ற எந்த மெம்பர்களுக்கும் தெரியாது. சு.ம. காரருக்குத்தான் தெரியும்.
சட்டசபை மெம்பர்கள் அரசாங்கம் என்பதை ஜன சமூக நன்மைக்கு
ஏற்ற ஒரு ஸ்தாபனமாகவும், அதுவும் ஜனசமூக உண்மை பிரதிநிதித்துவம் கொண்ட பஞ்சாயத்தார்களாகத்தான் கருத வேண்டுமே ஒழிய அதை ஒரு அதிகார ஸ்தாபனமாகவோ, யோக்கிய பதவி வகிக்கும் ஸ்தாபனமாகவோ கருதக்கூடாது. நம் நாட்டு அரசாங்கங்களின் நிலைமை என்ன என்று பார்ப்போமானால் அரசனுக்காகவும், அதிகாரிகளுக்காகவும்தான் பிரஜை
களும், பிரஜைகளின் உழைப்புகளும், செல்வங்களும் இருப்பதாய் இருக் கின்றதே ஒழிய ஜனங்களின் செளக்கியத்துக்கும், கவலையற்ற தன்மைக்கும், திருப்திக்கும் அரசாங்கமும், அதிகாரிகளும் இருப்பதாய் சொல்லவே
முடியாது. அரசர்களுடையவும், அதிகாரிகளுடையவும் சம்பளங்களை ஒரு மனிதனுடைய சராசரி வரும்படிக்கு சமமாய் கொண்டு வரப்படாத அரச
னும், அதிகாரமும் ஒரு கொள்ளைக் கூட்டத் தலைவனுக்கும்: கொள்ளைக் கூட்டத்திற்குமே ஒப்பிடப்படுவார்கள்.
“ஒரு மனிதனுக்கு மாதம் 4000, 5000, 10000 ரூபாய் வீதம் சம்பளம் கொடுக்காவிட்டால் அந்த உத்தியோகத்தை அவன் சரியாய் பார்க்க மாட்டான் லஞ்சம் வாங்காமல் இருக்கமாட்டான் பாரபட்சமில்லாமல் இருக்க மாட்டான்” என்று சொல்லப்படுகிறது. இதனால் அந்த உத்தியோகங்கள் பார்ப்பவர்கள் பரம அயோக்கியர்களென்றும், அவர்களை யோக்கியர்களாக இருக்கச் செய்வதற்கு இந்தப்படி லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றுதானே பொருளாகின்றது.ஆகவே அந்த அயோக்கியர்களின் அயோக்கியத்தனம். 5000, 10000 தான் பெரும் என்றும் அதற்குமேல் பெறாதென்றும் நாம் எப்படி நிர்ணயிக்க முடியும். ஏன், மேலும் 5000, 10000 பெறாது அவர்கள் ஏன் ஆசைப்பட மாட்டார்கள். அதற்கு என்ன அளவு கருவி இருக்கின்றது? என்று யோசித்துப்பாருங்கள். ஆகவே யோக்கியமான ஆட்சியினால் ஜனங்களின் ஆட்சியினால் சம்பளங்களின் கொள்ளையையும் லஞ்சத் தையும் ஒழிக்கவேண்டும். இவைகளையெல்லாம்தான் சு.ம. காரர்கள் செய் வார்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பு: 13.08.1933 இல் நாகர்கோவில் மினாம்பிக நாடக மண்டபத்தில் சுயமரியாதை இயக்கத் தலைவரான தோழர் பி.சிதம்பரம் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 20.08.1933
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
மிண்தாரல்லாதார் மகாநாட்மல் சொற்வமாழிவு
தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்கு
மேல் ஜமீன் முறை ஆகஷியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட தானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.
நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின்
முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள்' கூட்டிஅவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான்
பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள். கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங் களில் இம்மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்பார்க்கி
றேன். உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளி
கள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லா தார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக்
காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச்செய்ய வேண்
டியது நமது கடமையாகும்..
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த. எந்த மனிதக் கூட்டங்களால் மனிதசமூகத்திற்கு இடஞ்சல்களும், சமத்துவத்
திற்கும், முற்போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்னனவோ அவைகளெல்லாம் அழிந் தொழிந்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்ய வேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லக்ஷியமாகும்.
மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான் களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால் தரித்திரவான்களே இருக்க
குடி அரசு - 1933 (2 78
மாட்டார்கள். மேல்வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால் தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்ட வேண்டு மென்கின்றோம்.
இன்று ஏன் முதன்முதலாக ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு கூட்டி னோமென்றால் இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்கு முன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே
இருந்தது.
அதற்காகவே நமது இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்
களும், மகாநாடுகளும், வாலிபசங்கங்களும் புதிய முறையில் தோற்றுவித்
தும் கூட்டுவித்தும் பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒரு
வாறு பாமர மக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலைசெய்ததின் பயனால் ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம். ஆனால் அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள் அதற்குப்பதிலாக அதுபோன்ற கொடுமை
யும் மோசமுமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கி தாண்டவமாட ஏற்பட்டு விட்டது. முன்பிருந்த கெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல் ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்து வருகின்றன.
பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரண: மாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படு பவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்துவருகின்றவர்களாவார்கள்.பார்ப்பனர் களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்.
களும், உலக மக்கள் கஷ்டங்களுக் கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமா
வார்கள்.
இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படியிருந்து வரு கின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின் றன? என்பவைகளை யோசித்துப்பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாத வர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
இன்றைய தினம் சாதாரணமாய் ஜமீன்தார்கள் என்றால் என்ன? என்று பார்ப்போமானால் ஒரு விஸ்தீரணமுள்ள பிரதேசத்தை சொந்தமாக உடைய வர்கள் என்றும், அந்த வீஸ்தீரணத்திலுள்ள பூமிகளுக்கு உள்ள வரி கிஸ்தி! இந்த ஜமீன்தார்களுக்கே சேர்ந்தது என்றும் அதில் ஏதோ ஒரு பாகம் சர்க்கா
ருக்குச் செலுத்தி விட்டு பாக்கியை தாங்களே அனுபவிப்பவர்கள் என்றும்
தான் அருத்தமாய் இருந்து வருகின்றது.
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
பொதுவாக பூமிகளுக்குக் கிஸ்தி அதாவது நிலவரிகொடுப்பது என்பது எதற்காக வழக்கத்திலிருந்து வருகின்றது என்றால் பயிரிடும் மக்களின் நன்மைக்கும் பத்திரத்திற்குமான காரியங்களைச் செய்யவே பயிரில் ஒரு பங்கு கொடுக்கப் படுவதாகும். அது போலவே சர்க்கார்.
வாங்கும் நில வரிகளுக்கும் மற்றபடியான வரிகளுக்கும் சரியாகவோ, தப்பாகவோ ஒரு வரவு செலவுத்திட்டம் காட்டி அதன்படி படிப்பு, சுகாதாரம்,
நீதி, பத்திரம், போக்கு வரவு சாதனம் முதலிய காரியங்களுக்குப் பயன் படுத்தி வருவதாய்ச் சொல்லியும், கணக்கு காட்டியும் வருகிறார்கள். ஆனால் இந்த ஜமீன்தார்களால் குடிகளிடமிருந்து வாங்கும் நில வரிக்கும், வாரத்துக்
கும் இது போல் குடி ஜனங்களுக்கு என்ன பிரதிப்பிரயோஜனம் இருந்து வருகின்றது? என்பதை நாம் முக்கியமாய் கவனிக்கவேண்டும். ஜமீன்தார்.
கள் தங்கள் வரும்படியில் சர்க்காருக்கு ஏதோ ஒரு சிறு பாகம் கொடுப்ப தாய்ச் சொல்லப்படுவதெல்லாம் குடிகளிடமிருந்து வரியை எப்படியாவது வசூலிப்பதற்கும், ஜமீன்தார்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் குடிகளால் ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து இல்லாமல் இருப்பதற்கும் கூலியாகவே ஒழிய மற்றபடி ஜமீன் குடி களுடைய நன்மைக்கு என்பதாக எண்ணங் கொண் டல்ல என்பதே என தபிப்பிராயம். இந்த ஜமீன்தாரர்களுக்கு இந்தப் பதவி வந்ததற்குக் காரணம் எல்லாம், ஆதியில் அன்னிய சர்க்கார் இத்தேசத்துக்கு வந்த போது அவர்களுக்கு வேண்டிய செளகரியம் செய்து கொடுத்தும், இங்குள்ள எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்க உதவி செய்ததுமான காட்டிக் கொடுத்த காரியங் களுக்குத்தான் 'சன்மானமாய்' (லஞ்சமாய்) கொடுக்கப் பட்டதேயொழிய வேறில்லை.
இப்படிப்பட்ட இந்த ஜமின்தாரர்களின் யோக்கியதையை நான் உங்களுக்கு அதிகமாய் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர். களுடைய அருங் குணங்களில் எல்லாம் குடிப்பதும், கூத்திமார்கள் வைப் பதும், பந்தய சூது ஆடுவதும் தலை சிறந்த குணங்களாகும். மேலும் இப்பொ ழுது சிறிது காலமாய் அதாவது பார்ப்பன ஆதிக்கம் ஓடுங்க ஆரம்பித்த பின்பு அரசியல் தேர்தல்களை பணத்தின் மூலம் வியாபார முறையில் நடத்தி வெற்றி பெற்று ஆதிக்கமடைந்து பெருமை அடை வதையும், பணம் சம்பாதிப்பதையும் மற்றொரு அருங்குணமாய் கொண்டி ருக்கிறார்கள்.
மற்றபடி இவர்களிடம் என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்களால் தேசத்துக்கோ, மனிதசமூகத்துக்கோ என்ன பயன்? என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பது தெற்றென விளங்கும். இன்றைய ஜமின்முறை நாளடைவில் எல்லா பூமியும் அவர்கள் கைக்கே போய்ச் சேரும்படியானதாகவும், எல்லா அதிகாரமும், பதவியும் அவர்கள் கைக்கே போய்ச் சேரும்படியான மாதிரி
யிலும் தான் இருந்து வருகின்றது.
குடி அரசு - 1933 (2 80
ஏனெனில் வரி கொடுக்க முடியாத பூமிகளும், வரிகொடுக்கவும், செலவுக்கும் வரும்படி போதாமல் இருந்துவரும் குடியானவனுடைய பூமிகள் முழுவதும், பணக்காரர்களாயிருக்கின்ற, ஜமீன்தாரர்களுக்குத் தான் நாளா வட்டத்தில் போய்ச் சேருகின்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தால்
தான், ஒவ்வொரு ஜமீன்தாரர்களுக்கும் லக்ஷக்கணக்கான ஏக்கர் பூமிகள் இருந்து வருகின்றன. இதுபோலவே தேர்தல்களிலும், அது எப்படிப்பட்ட தேர்தலாய் இருந்தாலும். ஜமீன்தார்கள் தாராளமாய் 40000, 50000, ஒரு லட்சம் இரண்டு லட்சம், என்கின்ற கணக்கில் ரூபாய்களை வாரி இறைத்து எலக்ஷன்களில் வெற்றி பெற்றும், மற்றும் வேறு இடங்களில் வெற்றிபெற்ற வர்களுக்கு 1000, 5000 என்கின்ற கணக்கில் ரூபாய்களை கொடுத்து அவர் களை தங்கள் அடிமையாக்கியும், சகல பதவிகளையும், அதிகாரங்களையும் சுவாதீனப் படுத்திக் கொள்ளவும் முடிகின்றது. இந்த மாதிரி விலை கொடுத்து தங்களின் செல்வத்தின் பயனாயும் செல்வாக்கின் பயனாயும் பெற்ற பதவி
யும் அதிகாரமும் ஆதிக்கமும் எந்த வழியில் உபயோகப்படுத்தினாலும் கேள்வி கேப்பாடு இல்லாமல் செலாவாணியாகி வருகின்றதைப் பார்க் கின்றோம்.
ஜமீன்தாரர்களின் நடவடிக்கைகளை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இன்று யாரும் இல்லை என்றே நினைக் கின்றேன்.சில ஜமீன்தார்கள் அவர்கள் எல்லைக்குள்பட்ட விஸ்தீரணத்தில் எந்தப் பெண் ருதுவானாலும் அவர்களே தான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்ய வேண்டும் என்கின்ற (எழுதாத) சட்டம் அமுலில் இருந்து வருவது எனக்குத்தெரியும். இதில் ஒன்றும் அதிசயம் இருப்பதாக யாரும் நினைக்க. வேண்டியதில்லை. இந்தச் சட்டம் சில மதகுருக்கள்மாருக்கும் இருந்து வருவது எனக்குத்தெரியும். இது தவிர தனது குடிஜனங்களிடம் இருக்கும் நல்லபெண், நல்லமாடு, குதிரை முதலியவைகள் ஜமீன்தாரர்களுக்கே சொந்தமானது என்கின்ற முறையும் சில இடங்களில் இருந்துவருவது எனக்குத் தெரியும்.
மற்றும் பல ஜமீன்தாரர்கள் சுகவாசமும், வெளிநாடு சுற்றுப் பிரயா ணமும் 100, 200 கணக்கான மனைவிகளும், வைப்பாட்டிகளும், ஆயிரம் இரண்டாயிரக் கணக்கான தாசிகள் விபசாரிகள் ஆகியவர்கள் சம்மந்தமும் வைத்துக் கொண்டிருப்பதுடன் 40, 50, 100, 200 குதிரைகளும் 10, 20, 30 மோட்டார் கார்களும், 10, 20 அய்யர்கள் என்று பெயர்வழங்கும் மாமாக் களையும் உடையவர்களாக இருந்துகொண்டு நெல்லு, மரத்தில் காய்க் கின்றதா? கொடியில் காய்க்கின்றதா? செடியில் காய்க்கின்றதா? என்றுகூட தெரியாதவர்களும் வேஷ்டிகள் செடியில் காய்க்கின்றதா? அல்லது தரியில் நெய்யப்படுகின்றதா? என்று தெரியாதவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்தே கவனித்தால் பெரும்பாலும் ஒவ்வொருவர்களுடைய யோக்கியதையும்
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
விளங்கும். சாதாரணமாக சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டோ மேயானால் வருஷமொன்றுக்கு ஜமீன்தாரர்களுக்கு குடிகளிடமிருந்து
சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் வரையில் கிஸ்தி (நிலவரி! கிடைக்கின்றது. இதில் அரைக்கோடி ரூபாய் மாத்திரமே இவர்கள் சர்க்காருக்கு செலுத்தி விட்டு பாக்கி இரண்டுகோடி ரூபாய்களை இந்த ஜமீன்தார்கள் அனுபவித்து வருகின்றார்கள். இந்த இரண்டு கோடி ரூபாயில் 100 க்கு 90 பாகம் ரூபாய்கள் நான் மேல் குறிப்பிட்ட வழியிலேயே பாழாக்கப்படுகின்றன
இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூரா
விலும் கிடைக்கும் நிலவரிக்கு 3-ல் ஒருபங்குக்கு மேலான தென்றே சொல்லுவேன். இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அது
வும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக் கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8-மணி முதல் 15- மணி வரையில் வியர்வைப் பிழிந்து சொட்டு சொட்டாய் சேர்த்த ரத்தத்திற்கு சமானமான செல்வத்தை, ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொருப்பும் இல்லாதவர்களுமான ஜமின்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக்கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதரப்பதர வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப்
படிப் பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்கவேண்டுமா? என்றும் இவர் களின் தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம் சுயமரியாதையை உணர்ந்த-ஜனசமூகமாகுமா? என்பதைப் பற்றியும் யோசித்துப்பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். சாதாரண மாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடி யோடு இல்லாமல் இந்த லாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய் களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகிறேன்.
ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன்-குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலைசெய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்ற இச்சிறு வார்த்தைகளோடு இந்தத்தீர்மானத்தை நான் பிரேரே பிக்கிறேன்.
தீர்மானங்கள்
1.உலக செல்வத்தை ஒரேபக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளதார, சமத்துவத்துக்கும் பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ
குடி அரசு - 1933 (2 82
நியாய வழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.
பிரேரேபித்தவர்:- ஈ.வெ.ராமசாமி ஆமோதித்தவர்:-கே.வி.அழகர்சாமி
குறிப்பு:- 20.08.1933 இல் இராசிபுரத்தில் நடைபெற்ற சேலம் ஜில்லா ஜமின்தாரால்லாதார் மாநாட்டில் மாநாட்டின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்து அற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 27.08.1933
“ஜமீன்கள் பெயர் ஜமீன்கள் ஜமீன்கள்
குடிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு வசூலிக்கும் வருட செலுத்தும் மொத்த வரி ரூ வருட வரி ரூ
ரூ.பர்லாக்கிமிடி 498400 79787
விஜயநகரம் 2016269 494816. பொப்பிலி (முதல் மந்திரி) 621313 83453
ஜெய்பூர் 1202018 15988
பிதாபுரம் 597930 262782
தேவகோட்டா 281170 79495
வெங்கடகிரி 1168353 36873
கார்வெட்நகர் 571110 173842 காலாஹாஸ்தி 582550 172982
சிவகங்கை 676937 253451
ராமனாதபுரம் 1169705 292627.
எட்டியாபுரம் 296256 77985
மற்ற ஜமீன்கள் 12630585 2636005
மொத்தம் ரூ. 22312598 4991947
சர்க்கார் வரி போக ஜமீன்தார்கள் வருஷா வருஷம் தங்கள் சொந்தத்தில் அனுபவிக்கும் தொகை ரூ.17320641.
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
சேலம் மகாநா௫கன்
சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு இம்மாதம் 19, 20-தேதிகளில் ராசிபுரத்தில் நடைபெற்றதின் நடவடிக்கை விபரங்களும், மகா நாட்டுத் தலைவர், வரவேற்புத் தலைவர் முதலியவர்கள் உபன்யாசங்களும், தீர்மானங்களும் மற்றொரு பக்கத்தில் காணலாம்.
சென்ற வருஷம் சேலத்தில் நடந்த முதலாவது ஜில்லா சுயமரியாதை
மகாநாட்டிலும், சுமார் 3 வருஷங்களுக்குமுன் ராசிபுரத்தில் நடந்த முத லாவது தாலூக்கா மகாநாட்டிலும் சிலரால் உண்டாக்கப்பட்ட இரண்டொரு அசெளகரியங்களும், இடையூறுகளும் மற்றும் எதிர்ப்பிரசாரங்கள் முதலிய வைகளும், இந்த மகாநாட்டில் சிறிதுகூட தலைகாட்டுவதற்கில்லாமல் மறைந்து போனதும் இச் ஜில்லாவாசிகளுடைய பூரண ஒத்துழைப்பையும்,
ஆதரவையும் தாராள மாய்க் கொண்டிருந்ததல்லாமல் சுமார் 2000 பேர் களுக்கு மேற்பட்ட பிரதி நிதிகள் ஜில்லாவின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் விஜயம் செய்து மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றுதும் இச் ஜில்லாவில்
இந்த இரண்டு வருஷத்திற்குள் பகுத்தறிவு வளர்ச்சியும், சமதர்ம உணர்ச்சியும் மிகத் தாராளமாய் பரவியிருப்பதற்குத் தக்கதோர் சான்றாகும். நிற்க, மற் றொரு விசேஷம் என்ன வென்று பார்ப்போமானால் ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று அங்கு கூட்டப் பட்டதேயாகும். இம்மகாநாடு கூட்டப்பட்ட
தும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் சுயமரியாதை இயக்கத்தின். முக்கிய நோக்கமென்ன? அதன் கொள்கை என்ன? அதற்காக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் என்ன? என்பனவைகளை விளக்குவதாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் லட்சியங்கள், கொள்கைகள் ஆகியவை களைப் பற்றி, யார் பழித்தபோதிலும், யார் திரித்துக்கூறிய போதிலும், யார். அதை தூஷித்து விஷமப் பிரசாரம் செய்த போதிலும், யார் அதை வெளியில் பரவவொட்டாமல் தடுத்த போதிலும், யார் அதை வெகு சிறு-அற்ப லக்ஷியம் என்று கூறிய போதிலும், யார் அதை காரியத்தில் செய்ய முடியாத ஒரு அசாத்தியமான லக்ஷியம் என்று சொன்ன போதிலும் அவைகளை யெல்லாம் ஒரு சிறிதும் லக்ஷியம் செய்யாமல் தனது முடிவான லக்ஷியத்திற்கு ஏற்றபடி நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டே
குடி அரசு - 1933 (2 84
வந்திருப்பதுடன் அதற்கு ஏற்ற கொள்கைகளையும், திட்டங்களையும் அமைத்துப் பரப்புவதில் தீவிரமாய் சென்று கொண்டுதான் இருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி யாகும்.
சாதாரணமாய் ஒரு லக்ஷியம் கைகூடிற்று அல்லது செல்வாக்கும் பெற்று விட்டது என்று சொல்லப்பட வேண்டுமானால் அந்த லட்சியத்தின் எதிரிகளால் செய்யப்படும் சூழ்ச்சிகள் என்னும் பல தத்துவங்களையும் தடை களையும் சமாளித்துத் தாண்டியாக வேண்டும்.
அஅவையாவன:-
1 ஒரு லக்ஷியத்தை அதன் எதிரிகள் ஒழிக்க வேண்டுமானால் அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை தாங்கள் உணராதவர்கள் போலவும், உணர நேர்ந்தாலும் அதை வெகு அலட்சியமாய் கருதுகின்றவர்கள் போலவும் காட்டிக் கொள்வதன் மூலம் அதை ஒழிக்கப் பார்ப்பது.
2 அந்த லக்ஷியம் மேற்கண்ட அலட்சிய நிலையை தாண்டிவிடு மானால் பிறகு அதை வெகுகடினமாய் வெறுப்பது போல் காட்டுவதன் மூலம் ஒழிக்கப் பார்ப்பது.
3.பிறகு அதை திரித்துக்கூறி விஷமப்பிரசாரம் செய்வதன் மூலம் ஒழிக்கப் பார்ப்பது.
4 பிறகு கலகங்களாலும், கலவரங்களாலும் பிரசாரத்தை தடுப்பதன்
மூலம் ஒழிக்கப் பார்ப்பது.
5 இவ்வளவையும் தாண்டி விட்டால் பிறகு அக்கொள்கைகளுக்கு எதிர்ப்பிரசாரம் செய்வதன் மூலம் அதை ஒழிக்கப் பார்ப்பது.
இப்படியாக பல தத்துவங்களையும் (தொல்லைகளையும் துன்பங் களையும், எதிர்ப்புகளையும்) தாண்டி விட்டால்தான் குறைந்த அளவு ஒரு இயக்கம் சொல்வாக்குப் பெற்று விட்டது என்றாகிலும் சொல்லலாம்.
ஆகவே நமது சுயமரியாதை இயக்கம் இந்த தத்துக்களில் எதின் தொல்லைகளுக்கும் ஆளாகாமல் இருந்து தப்பித்துக் கொள்ளாமல், ஒவ் வொன்றிற்கும் ஆளாகி எவ்வளவோ கஷ்டங்கள் நஷ்டங்கள் அடைந்திருப் பதை யாரும் மறுக்க முடியாது. அவை ஒவ்வொன்றையும் பற்றி விளக்க
முயற்சிப்பது பழைய குப்பைகளைக் கிளறுவதேயாகும்.
எது எப்படி இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணமே ஏழை மக்களுடையவும், பாமர மக்களுடையவும் தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு கஷ்டப்படும் மக்களுடையவும் பெரிதும் அவர்
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
களுடைய நன்மைக்கும், சமத்துவத்துக்கும் என்று இருந்தாலும் இப்போது அது எல்லா மக்களுடைய சமத்துவத்துக்கும் சாந்திக்கும் திருப்திக்கும் கவலையற்ற தன்மைக்குமே பாடுபடவேண்டும் என்கின்ற லக்ஷியத்தைக் கொண்டிருக்கிறது.
இந்த லக்ஷியம் உலகத்துக்கு-மனித சமூகத்துக்குக் கேடானதா
னாலும், அற்பமானதானாலும் அசாத்தியமானதானாலும் அதை பற்றிய கவலை யில்லாமல் சுயமரியாதை இயக்கமானது தனது கருத்திலேயே கவலை கொண்டிருக்கிறது.
ஒரு மனிதன் தான் ஒருகாரியத்தைச் சாதித்துவிட்டுப் போக வேண்டும் என்பதற்காக உயிர்வாழவேண்டும் என்கின்ற அவசியத்தைச் சுயமரியாதை இயக்கம் ஒப்புக்கொள்ளுவதில்லை. ஆனால் மற்றென்ன வென்றால் ஒரு மனிதன் உயிர் வாழ்ந்திருப்பதினால் அவ்வுயிர் உள்ள வரையில் காரியம் செய்யவேண்டியது கடமை என்பதற்காக ஒரு காரியத் தைச் செய்ய வேண்டும் என்பதுதான் சுயமரியாதை இயக்கக்காரர்களின்
வாழ்வின் லக்ஷியமாகும். அதாவது:
சுயமரியாதைக்காரர்களின் லக்ஷியம் எல்லாம் அவர்களது வாழ்வு ஒரு நல்லகாரியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். அவர்களது உயிர் சரீரம் இயங்கும் தன்மை) ஒரு அனாவசியமானதும், அறியாததுமான ஒரு நோய்க்கோ, (அபாய! எதிர்பாராதது சம்பவத்துக்கோ ஆளாகி முடிவ டைந்துவிடாமல் ஒரு நல்ல காரியத்தைச் செய்வதில் பயன்பட்டு முடிவ டைந்துவிடவேண்டும் என்பதைத் தவிர வேறில்லை.
காரியம் நல்லதா? கெட்டதா என்பதற்குச் சுயமரியாதைக்காரர்களின் அளவுகருவியெல்லாம் அவர்களது பகுத்தறிவேயல்லாமல் “ஆண்டவன்” கட்டளையோ, “பெரியோர் வாக்கோ” “ரிஷிகள் மகாத்மாக்கள்” என்பவர்
கள் எழுதிவைத்த வேத சாஸ்திர புராண நீதிகளோ அல்ல என்பதும் அவர். களது அபிப்பிராயம்.
ஆதலால் சுயமரியாதைக்காரர்கள் வாழ்வு அவர்களது அறிவுக்குச் சரியென்று பட்டகாரியத்தில் செலவிடப்பட வேண்டியது என்பதைத் தவிர வேறில்லை. சுயமரியாதைக்காரர்கள் மனிதன் செத்துவிட்டானேயானால் (சரீர அசைவு புலன் உணர்ச்சி அடங்கி விடுமேயானால்) பிறகு அவனுக்கு வேறு எவ்வித சம்மந்தமும், தொடர்பும் உலகிலோ வேறெங்கிலுமோ கிடையா தென்பதாக கருதி இருக்கின்றவர்கள். சுருங்கக்கூறில் ஆத்மா என்றோ ஜீவன் என்றோ ஒன்று இருப்பதாகவும் மற்றும் சரீரத்துக்கும், சரீரத் துள்ள உருப்புகள் உருப்புகளின் அமைப்புகள் அமைப்புகளினால் ஏற் படும் செய்கைகள் ஆகியவற்றிற்கு அன்னியதான ஒருவஸ்து இருக்கிறது என்பதாகவும் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆகையால் சரீரம்
குடி அரசு - 1933 (2 86
இயங்கும் தன்மையில் இருக்கும் போது அத்தன்மைக்கு ஏற்ற காரியங் களைச் சாத்தியப்படக்கூடிய அளவு, அவ்வளவையும் பிரயோகித்துச் செய்துவிடுவது என்கின்ற முடிவில் இருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கு கடமையைத்தவிர வேறொன்றையும் பற்றிய லக்ஷியமும் கவலையும் இல்லை. இந்நிலையில்தான் மனிதசமூக நன்மைக்கு மாறான காரியங்களை அழிக்கவேண்டும் என்கின்ற தத்துவத்தில் முதலில் ஜமீன்தார்கள் தன்மை
யும் முறையும் ஒழியவேண்டும் என்பது (முக்கியமானவைகளில்) ஒன்றாகும்.
மனிதசமூக வாழ்வுக்கு ஜமீன்தார்தன்மை ஒரு விஷ ஐந்துக்கு ஒப்பானதாகும். மனிதர்கள் தரித்திரம், பசி முதலிய கஷ்டங்களுக்கு ஆளாகி சுகவாழ்வு இல்லாமல் அடிமை நிலையில் இருப்பதற்கு இந்த ஜமீன்தார்கள். என்னும் விஷ ஜெந்துக்களே காரணமாகும்.
இந்த ஜமீன் முறையானது உலக வாழ்க்கைக்கு அல்லாது எந்த விதத்தில் அவசியமானது என்பது நமக்கு விளங்கவில்லை. இவர்களால் மனித சமூகத்திற்கு என்ன நன்மை என்பதும் விளங்கவில்லை. பெரும் பெரும் பரப்புள்ள பூமிகளை தங்களுடையது என்று செய்து கொள்ளவும் அவற்றை பெரும் எண்ணிக்கை கொண்ட மக்கள் பாடுபட்டு உழுது பயிர்செய்து பாதுகாத்துத் தானியமாக்கி, ஜமீன்தாரர்களுக்குக் கொடுக்கவும், அவர்கள் “தயவு செய்து” “கருணை வைத்து” விளைவில் ஒரு பாகத்தை பயிரிட்ட குடியானவர்களுக்குக் கொடுப்பதும், அது எந்த விதமான
காரியத்துக்கும் பிரதிப் பிரயோஜனமாய் இல்லாமல் வெள்ளாமைக்கு அடுத்த பட்டம் வரும்வரை அந்தக் குடியானவன் செத்துப்போகாமல் உயிர். வைத்து இருந்து மறுபடியும் உழுது பயிர் செய்து தானியமாக்கித் தனது
குதிரில் கொண்டு வந்து கொட்டுவதற்காக வேண்டிமாத்திரம் எவ்வளவு அவசியமோ அவர்களுக்குத் “தருமம்” செய்யவுமாயிருக்கிறார்கள்.
மற்றபடி இந்தப்படியாக இவர்களுக்குக் கிடைத்த செல்வத்தில் மற்றொரு சிறு பாகம் சர்க்காருக்கு “தருமம்” செய்கிறார்கள். அதாவது இந்த செல்வத்தில் பாடு பட்டு உழைத்த குடியானவர்கள் பங்கு கேட்காமல் இருக்க
வும், இந்த குடியானவர்கள் இந்த ஜமீன்தாரர்களின் அக்கிரமங்களுக்கு எவ்வித பரிகாரமும் தேடாமலிருக்கவும் லஞ்சம் என்று சொல்லுவதற்குப் பதிலாக சர்க்கார் கிஸ்து என்ற சொல்லின் பேரால் ஒரு அளவு கொடுக்கிறார்.
கள். மற்றபடி ஒவ்வொரு ஜமீன்தாரர்களுக்கும் மீதியாகும் 10 லக்ஷம் 20 லக்ஷக்கணக்கான ரூபாய்கள் என்ன கதி ஆகின்றன என்று பார்த்தால் அதன் உண்மை நன்கு விளங்கும்.
மற்றும் இதுபோலவே இன்னும் இரண்டொரு கூட்டம் உண்டு- அதாவது லேவாதேவிக்காரர்கள், மில் முதலாளிகள் முதலாகியவர்க ளாவார்கள்.
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
லேவாதேவி என்பது ஒரு கொடுமையான தொழிலாகும். அதற்கு வேறுபெயர் சொல்லவேண்டுமானால் சட்டப்படி கொடுமைப்படுத்திக் கொள்ளை யடிப்பதேயாகும். ஜமீன் தன்மையின் பயனாய் எப்படி உலக நிலங்கள் எல்லாம் நாளாவட்டத்தில் சிலருக்கே சொந்தமாகிவிடுகின்றதோ அதே போல் லேவாதேவி யென்பதும் உலக செல்வங்களையெல்லாம் சிலருக்கே சொந்தமாக்கும் சூட்சியே யாகும். இவர்களாலும் உலகத்திற்கு யாதொரு பயனும் கிடையாது. கேடே அதிகமாகும்.
மற்றும் மில் (யந்திரசாலை) முதலாளிகள் என்பவர்களும் பாடுப்பட்டு உழைக்கும் மக்கள் பயனை அனுபவித்துக்கொண்டு பெரும்பான்மை மக்களை என்றும் ஏழைகளாக-தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருப்ப வர்கள். இந்தக்கூட்டத்தாரும் நாட்டுக்கு அவசியமில்லாதவர்களே
யாவார்கள்.
இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட “சுயராஜ்யம்” “குடியரசு” “குடி ஆட்சி” கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியவே முடியாது. ஏனெனில் மேல்கண்ட கூட்டம் எப்பொழுதும் செல்வம் பெருக்கிக்கொண்ட கூட்டமாகவும், மற்ற கூட்டம் என்றும் ஏழைக் கூட்ட மாகவும் தான் இருக்கும். ஆகவே செல்வவான்கள் ஏழைகளின் வாக்கை (ஓட்டுகளை! விலைக்கு வாங்கி தாங்களே ஆட்சிக்காரர்களாய் வந்து விடக்கூடும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் சென்னை அரசாங்க நிர்வாகத்தையும் சென்னை மாகாண ஸ்தல ஸ்தாபன நிர்வாகத்தையும் பார்த் தால் நன்றாய் விளங்கும். சென்னை மாகாண முதல் மந்திரி ஒரு ஜமீன்தார், சென்னை (நகர) ஸ்தலஸ்தாபன சபைத் தலைவர் ஒரு லேவாதேவிக்காரர் என்பதும் பிரத்தியட்ச உண்மையாகும். வெளி ஜில்லாக்களிலும் இது போலவேதான் ஒரு பெரிய முதலாளியோ, அல்லது லேவாதேவிக்காரரோ, அல்லது ஜமீன்தாரரோதான் தலைவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள். அந்தப் பதவிகளை அடைந்ததற்கு காரணம் எல்லாம் அவர்கள் பண (க்கொழுப்டு) விசேஷமேயொழிய புத்தி (க்கொழுப்ட) விசேஷமல்ல என்பது எந்த மனிதனுக்கும் தெள்ளென விளங்கும் சேதியாகும்.
ஆதலால் இந்தக் கூட்டங்கள்தான் மனிதசமூக நீதிக்கும், சமத்துவத்
துக்கும், சகோதரத்துவ உரிமைக்கும் நரையான் போன்றவர்கள் ஆவார்கள். இந்த உண்மைகளை யெல்லாம் உணர்ந்த சேலம் ஜில்லாக்காரர்கள். சுயமரியாதை மகாநாடுடன் ஜமீன்தாரல்லாதார் மகாநாடு கூட்டினது பாராட்டத்தக்கதாகும். இனி அடுத்து கூடும் மகாநாடுகளில் லேவாதேவிக்
காரர் அல்லாதார் மகாநாடு முதலியவைகளும் கூட்டி இக்கூட்டத்தார்களை' பொதுவாழ்வில் தலைகாட்டாமல் செய்யவேண்டியது சுயமரியாதை இயக்கத்தார்களின் முக்கியக் கடமைகளில் முதன்மையானதென்று
குடி அரசு - 1933 (2 88
தெரிவித்துக் கொள்ளுகிறோம். மற்றும் சேலம் ஜில்லா 2 வது சுயமரியாதை மகாநாட்டை நடத்திக்கொடுத்த வேளுக்குரிச்சி மிட்டாதார் தோழர் சோம
சுந்திரம் அவர்களையும் தோழர் காவேரி அவர்களையும், தோழர் எஸ். வி. லிங்கம் அவர்களையும், மற்றும் சேலம், ராசிபுரம் வாலிப தோழர்களையும், பெரியோர்களையும் பாராட்டுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.08.4933
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
“mm o E”
சுயமரியாதை இயக்கக் கொள்கையை ஆதரித்து மதுரையில் “வெடி குண்டு” என்னும் பத்திரிகை தோன்றி தொண்டாற்றி வருவது யாவரும் அறிந்ததேயாகும். வியாபார முறையை விட்டும், சமயத்திற்கு தகுந்தபடி மாறிக்கொள்வதை விட்டும், தனக்கு என்று ஏதாவது ஒரு கொள்கையும் இல்லாமல் “பரிசுத்தமாய்” இருக்கும் நிலையை விட்டும் நடைபெறும் பத்திரிக்கைகள் நமது நாட்டில் அதாவது பகுத்தறிவற்று பாமரத்தன்மை பூண்டு இருக்கும் ஜனங்கள் மலிந்தநாட்டில், கவலையற்று நடைபெறுவது என்பது மிக மிக கஷ்டமான காரியமாகும். இந்தக் காரணத்தால் இதுசமயம் “வெடிகுண்டு” பத்திரிகை மிக்க நெருக்கடியில் நடைபெறுகிறது என்று நாம் கேள்விப்படுவதில் அதிசயமொன்றுமில்லை. இருந்தபோதிலும் மதுரை சுயமரியாதை சங்கத்துக்கு மிகுதியும் ஆதரவளித்து வருபவரும், முனிசிபல் கெளன்சிலரும் செல்வாக்கும், செல்வமும் பொருந்தியவருமான தோழர் ஆ. அ.ஆறுமுகம் அவர்களது உதவியாலும் ஆதரவாலும் ஒருவாரு நடத்தப் பட்டு வருகிறது என்றாலும் சதா சர்வகாலமும் ஒரு பத்திரிகை ஒருவரின் ஆதரவையும், உதவியையும் கோறி நிற்காமல் தன் காலிலே தைரியமாய் நிற்கவேண்டுமாதலால் சுயமரியாதை இயக்க அன்பர்களும், அபிமானி
களும், அதை ஆதரிப்பது மாத்திரமல்லாமல் அது கிராமங்கள் மூலை முடுக்குகள் தோறும் செல்லும்படியான அளவுக்கு உதவிசெய்ய வேண்டு
மாய் வேண்டுகிறோம்.
குடி அரசு - மதிப்புரை - 27.08.1933
குடி அரசு - 1933 (2 90
மணிதண் ஒரு வீவப்பிராணிடமோ
உருப்புகளின் அமைப்புக்குத் தக்கபழு€யே பகுத்தறிவு
- தோழர் ஈ.வெ.ராமசாமி
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் தன் தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாவே இருந்துவருகின்றன. அந்தச் சரீரப்பற்று என்பது சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கிற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடை யவே கிடையாதெனலாம். ஆனால் எல்லா ஜீவராசிகளும் என்றைக்காவது ஒரு நாள் ஜீவிப்பற்று செத்தே போகும் என்பது மாத்திரம் அனுபவ சித்தாந்தமாகும்.
உலகிலுள்ள மற்ற எல்லா ஜீவராசிகளைப்போலவே மனிதவர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒரு மனிதனும் ஒரு யானையும் ஒரு எறும்பும் ஒருசிறு பேனும் பூதக் கண்ணாடிமூலம் பார்த்தரியத் தக்க அதி நுட்பமான ஒரு கிருமியும் எல்லாம் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவ
ராசிகளாகும்.
ஆனால் அவை தோற்றத்திலும்-செயலிலும் வேறுபட்டிருக்கலாம். அப்படியானால் “மனிதனுக்கும் கழுதைக்கும் வித்தியாசமில்லையா?”' என்று ஒருவர் கேட்கலாம். ஜீவ தத்துவத்தில் வித்தியாசமில்லை என்றுதான்
பதில் சொல்லுவேன். ஏதாவது வித்தியாசம் உண்டு என்று சொல்லவேண்டு மானால், ஒரு நாய் ஜீவனுக்கும் ஒரு கழுதை ஜீவனுக்கும் என்னவிதமான
வித்தி யாசமோ அந்தவிதமான வித்தியாசந்தான் உண்டு என்று சொல்லலாம். ஆனால் அவ்வித்தியாசம் அளவில் டிக்கிரியில் ஜாஸ்தியாகவோ, கம்மி யாகவோ இருக்கலாம் என்று தான் கொள்ளவேண்டும்.
இன்னும் பேசப்போனால் தாவரவர்க்கங்களும் ஜீவவர்க்கங்களுங் கூட தத்துவத்தில், அதாவது உற்பத்தி தத்துவத்திலும், வாழ்வு தத்துவத்திலும், அழிவு தத்துவத்திலும், ஒரே தத்துவத்தை ஆதாரமாய்க் கொண்டு இருந்து வருகின்றன என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
வித்தின்மூலம் எப்படி மரம் செடிகள் புல்பூண்டுகள் உற்பத்தியாகின் றனவோ, அதுபோல ஆண்-பெண் சேர்க்கையில் விந்து மூலம் ஜீவப் பிராணிகள் உற்பத்தியாகின்றன. வித்தில்லாமல் எப்படி சில தாவர வர்க்கங் கள் உற்பத்தியாகின்னனவோ அதுபோல் தான் ஆண் பெண் சேர்க்கை
யில்லாமல் பல ஜீவ வர்க்கங்களும் உற்பத்தியாகின்றன.
தாவர வர்க்கங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசமும், மாறுபட்ட சக்தி
யும் இருப்பதுபோலவே ஜீவவர்க்கத்தினிடமும் ஒன்றுக்கொன்று வித்தியாச
மும், மாறுபட்ட சக்தியும் இருந்துவருகின்றது.
மனித ஜீவவர்க்கத்தினிடமுள்ள சில குணங்கள் எப்படி மற்ற ஜீவராசி களுக்கு இல்லையோ, அதுபோன்றே மற்ற ஜீவராசிகளுக்கு உள்ள சில குணங்கள் மனித ஜீவ வர்க்கத்திற்கு இல்லாமல் இருப்பதை நாம் பார்க் கின்றோம்.
ஒரு கழுதைக்கும், ஒரு குரங்குக்கும் உள்ள வித்தியாசத்தைக் கணக்குப் பார்த்து, ஒரு குரங்குக்கும் ஒரு மனிதனுக்கும் உள்ள வித்தியாசத் துடன் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் பின்கண்ட வித்தியாசத்தின் அளவு அதிகமாய்க் காணமுடியாது.
ஆகவேமனித ஜீவன் ஜீவப்பிராணிகளிலெல்லாம் மேலானதென்றும் -தனிப்பட்டதென்றும் அதற்கு மாத்திரமே சில தனி தத்துவங்களுண்டு
என்றும் கருமம், மதம், மேல்லோக வாழ்வு, கடவுள், கடவுள் தண்டனை, மன்னிப்பு, சன்மானம் ஆகியவை சொந்தமென்றும் மனிதனுக்கே சில உயர்ந்த தத்துவங்கள்-கடமைகள் பிரார்த்தனைகள், முதலியவை உண் டென்றும் சொல்லுவதில் ஏதாவது அர்த்தமிருக்க இடமுண்டா? என்று பார்த்
தால் இவைவெறும் கற்பனைகளென்றே விளங்கும்.மற்றும் “கடவுளுக்கும்” மனிதனுக்கும் இருக்கும் சம்மந்தமும், பொறுப்பும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லை என்று சொல்லமுடியுமா? என்பதும் விளங்கும். அதுபோலவே “பாவமும் புண்ணியமும் சொர்க்கமும் கடவுள் பதத்தை” , அடையக்கூடிய தன்மையும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையென்று சொல்லமுடியுமா? என்பதும் விளங்கும்.
ஒரு பூச்சியின் செய்கைக்கு “பாவம்” “புண்ணியம்” உண்டானால் தான் ஒரு மனிதனின் செய்கைக்கும் பாவம் புண்ணியம் உண்டாகமுடியும்.
மனிதனுக்குள்ள பகுத்தறிவு என்பது கடவுளால் தனிப்பட்ட காரியத் துக்காகக் கொடுக்கப்பட்டது என்றால், ஒரு யானைக்குள்ள தும்பிக்கையை
யும், ஒரு நாரைக்குள்ள நீண்ட மூக்கையும், ஒரு முள்ளம்பன்றிக்கிருக்கும் செதிள் முள்ளுகளையும், தேளுக்குள்ள கொடுக்கையும், பாம்புக்குள்ள விஷத்தையும் போன்றவைகளையெல்லாம் கடவுளால் தனிப்பட்ட
குடி அரசு - 1933 (2 92
காரியங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றுதானே சொல்லவேண்டும். ஆதலால் ஒரு யானைக்குத் தும்பிக்கை விசேஷ உறுப்பாகவும் நீண்ட அவயவமாகவும் இருப்பது போலவே மனிதனுக்கு “பகுத்தறிவு” க்குள்ள நரம்புக்கூட்டும் மூளையின் பரிமாண அதாவது அதிக சிந்தனா சக்திக் குள்ள உறுப்புகள் என்பவை விசேஷ உறுப்பாகவோ, விசேஷ சக்தி யாகவோ இருக்கின்றதென்பதேயல்லாமல் அதற்கு மாத்திரம் ஒரு தனி விசேஷத்துவம் இல்லை என்பதே எனது அபிப்பிராயம்.
உதாரணமாக ஜீவப்பிராணிகளுடைய இந்திரியங்களின் விசே ஷத்தை எடுத்துக் கொள்வோமானால் ஒரு எறும்புக்கு இருக்கும் மூக்கு மோப்பசக்தி ஒரு மனிதனுக்குக் கிடையாது. உதாரணமாக சர்க்கரையோ, பிஸ்கோத்தோ ஒரு பெட்டிக்குள் இருக்குமானால் அதை மனிதனால் மோப்பத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒரு சிறு எறும்பு கண்டுபிடித்துவிடும். அதுபோலவே பகஷிகளின் (கண்! பார்வை சக்தி ஒரு
மனிதனுக்குக் கிடை யாது. உதாரணமாக சமீப தூரத்தில் இருந்தும் மனித னுக்குத் தென்படாத ஒரு வஸ்துவானது பூமிக்குமேல் ஒரு மைல் இரண்டு மைல் உயரத்தில் பறக்கும் பக்ஷியின் மிகச்சிறிய கண்களுக்குத் தென்பட்டு அப் பகஷியால் அது தூக்கிச் செல்லப்படுகின்றது. மீனுக்கு இருக்கும் நீந்தும் சக்தி மனிதனுக்கு இல்லை. உடும்புக்கு இருக்கும் பிடித்துக்கொள்ளும் அவையவ சக்தி மனிதனுக்கு இல்லை.
இதுபோலவேதான் ஒரு விஷயத்தில் மனிதனுக்குள்ள மூளை அவையத்தின் சக்தி மற்ற ஜந்துக்களுக்கு இல்லை என்று சொல்லவேண்டும். இந்த வித்தியாசங்களெல்லாம் அமைப்பில் ஜீவனுக்கு ஜீவன் மாறுபட்டி ருப்பதுபோன்ற ஒரு வித்தியாசமே தவிர, மனிதனுக்கு மாத்திரம் ஏற்பட்ட ஒரு தனித்தத்துவ உயர்குணம் என்று சொல்லிவிட முடியாது.
“பகுத்தறிவு என்பது மனிதனுக்கு மாத்திரந்தான் உண்டு; அது தனிக் காரியத்திற்காகக் கடவுளால் கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படுமா னால் பகுத்தறிவு இருக்கின்றது என்கிற காரணத்திற்காக மனிதன் எந்த விதத்தில் மேலான நிலையில் உள்ளவனாய் இருக்கிறான் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மற்ற “பகுத்தறிவில்லாத ” ஜீவனுக்கு உள்ள என்ன “குறைகள்” பகுத்தறிவுள்ள மனிதனிடம் இல்லாமல் இருக்கிறதைக் காண்கின்றோம்?
ஆகாரம், நித்திரை, ஆண் பெண் சேர்க்கை ஆகிய தேவைகளில்
மற்ற ஜீவன்களிடமுள்ள தேவைகளே மனிதனிடமும் காணப்படுகின்றன; இன்னும் பேசப்போனால் மற்ற ஜீவன்களைவிட அதிகமாகவும் காணப்படு கின்றன. ஆசை என்கிற ஒரு “கெட்ட” குணம் மற்ற ஜீவன்களைவிட மனித ஜீவனிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதிருப்தி என்கிற “கெட்ட”
குணம் மனிதனிடமே அதிகமாய் இருக்கின்றது. கவலை என்கின்ற
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
“கெட்ட” குணமும் மனிதனுக்கே அதிகமாய் உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதைக் கொடுமைப்படுத்திவாழும் *கெட்ட* குணம் மனிதஜீவனிடத்தி லேயே அதிகமாய் இருந்துவருகின்றது. மற்றஜீவன் களுக்கு உள்ளது போன்ற வஞ்சகம் ஏமாற்றம் முதலிய குணங்கள் மனிதனி டத்திலேயே அதிகமாய் இருந்துவருகின்றன. தனக்குத் தெரியாததையும், புரியாததையும் பற்றி நம்புதல், பேசுதல், நம்பச்செய்தல் முதலிய மூடத் தன்மைக்குணம் மனித ஜீவனிடத் திலேயே அதிகமாய் இருந்துவருகின்றது. நம்பிக்கைக்கும், நடவடிக்கைக்கும் சம்மந்தமில்லாத குணம் மனித ஜீவனி டமே இருந்து வரு கின்றது. ஒரே விஷயத்தை இரண்டுவிதமாய் நம்பும் சுயபுத்தியற்ற தன்மையும் மனிதனிடமே இருந்து வருகின்றது.
இதுபோன்ற எத்தனையோ கெட்ட குணங்கள் மனிதஜீவன் தனது பகுத்தறிவின் பயனாகவே உடைத்தாயிருக்கின்றது. ஆகையால் பகுத்தறி
வின் “மேன்மையால்” மனித ஜீவன் சிறந்தது என்று எப்படி சொல்லிக் கொள்ளமுடியும் என்பதே நமது கேள்வியாகும். மேலும், மேற்கண்ட காரணங்களாலும், மற்றும் பல காரணங்களாலும் மனிதஜீவன்களில் பெரும் பான்மை யானவை மற்ற ஜீவராசிகளைவிட இழிவுத்தன்மையுடையது என்பதும் நமது அபிப்பிராயமாகும். “ஜாதியின்” பேரால் உயர்வு தாழ்வு “மதத்தின்” பேரால் வேற்றுமை உணர்ச்சி, “தேசத்தின்” பேரால் குரோதத் தன்மை முதலான இழிகுணங்கள் மனிதனிடமே அதிகமாய் காண்கிறோம். மற்றும் “கடவுளின்” பேரால் மேல்கீழ்நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்லவேண்டுமானால், மேற்கண்ட கெட்ட-தீய- இழிவான அயோக்கியத் தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற “பகுத்தறிவில்லா” ஜீவராசிகளைவிட மனிதஜீவன் மூளை விசேஷம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக்கொண்ட ஜீவன்
என்று சொல்லப்படும். அஃதில்லாத நிலையில் எவ்விடத்திலும் மனிதஜீவன் மற்ற ஜீவபிராணிகளை விட உயர்ந்ததல்ல என்பதோடு பலவிதத்திலும் தாழ்ந்தது என்றும்சொல்ல வேண்டியிருக்கிறது.
நகரதூதன்”)
குடி அரசு - கட்டுரை - 03.09.4933
குடி அரசு - 1933 (2 94
கபடநாடகக் கடவன்
- சித்திரபுத்திரன்
தோழர் காந்தியவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் கட் டளைப்படி செய்வதாகச் சொல்லி வருவது யாவரும் அறிந்ததாகும். பலர். அதை உண்மையென்று நம்பியும் வருகிறார்கள். ஏன் அந்தப்படி இருக்கக் கூடாது என்று வாதமும் பேசுகிறார்கள். தோழர் காந்தியவர்கள் ஏர்வாடா
சிறையில் சென்றவாரம் இருந்தகாலத்தில் ஹரிஜனங்களுக்கு வேலை செய்ய சகல செளகர்யங்களும் சர்க்கார் தனக்கு அளிக்காவிட்டால் பட்டினிகிடக்க வேண்டுமென்று கடவுள் கட்டளை இட்டதாகச் சொல்லி பட்டினி இருந்தார். சர்க்காரை எந்தவிதமான தனி சுதந்திரமும் கடவுள் கேட்க வேண்டாம் என்று சொன்னார் என்று, வேண்டியதில்லை என்றார். பிறகு ஹரிஜன சேவை செய்ய கடவுள் சொல்லுகின்றார் என்று சொல்லி சில சுதந்திரம் கேட்டார். சர்க்கார் சில செளகரியங்கள் கொடுத்திருப்பதாகத் தெரிவித்தவுடன் பட்டினியை நிறுத்தும் படி கடவுள் கட்டளையிட்டதின் பிரகாரம் பட்டி னியை நிறுத்திவிட்டதாக சர்க்காருக்கு வாக்கு கொடுத்துவிட்டார். பிறகு மாலையில் கடவுள் அந்த வாக்கை நிறைவேற்றமுடியாமல் மறுபடியும் காந்தியாரைப் பட்டினி கிடக்கும்படி செய்ததுமாத்திரமல்லாமல் காந்தி யாரை மன்னிப்புக்கேட்கும்படியும் செய்து விட்டார்.
கடவுளின் இந்தமாதிரியான வாக்குத்தவருதலானது அனாவசியமாய் காந்தியார் தலையில் பழிவிழுந்து மன்னிப்பும் கேட்டுக்கொள்ளச் செய்த தென்றால் கடவுளின் யோக்கியப்பொருப்பற்ற தன்மைக்கு வேறு ௬ஜு வேண்டுமா? எது எப்படியானால்தான் என்ன எவ்வளவு வாக்குத் தவறுதல்
கள் ஏற்பட்டால்தான் என்ன யார் எவ்வளவு மன்னிப்புக்கேட்டுக் கொண் டால்தான் என்ன முடிவில் காரியம் கைகூடவேண்டியது தானே புத்தி சாலித்தனமான லட்சியமாகும். ஆதலால் கடவுள் தனது பக்தனாகிய காந்தி யாரை விடுதலை செய்விப்பதற்காக என்ன என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யவேண்டியது தான் கடமையாகும். அதிலும்
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
“கபட நாடக சூஸ்தரதாரி யாகிய கடவுள்” என்னதான் ஏன்தான் செய்ய மாட்டார். “கடவுள் செயலைப் பற்றிப் பேச எவருக்கும் யோக்கியதையும், உரிமையும் இல்லை” ஆதலால் நாம் இதுபேசியதுகூட அதிகப்பிரசங்கித் தனமென்று இப்பொழுது கருதுவ தால் மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
குடி அரசு - கட்டுரை - 03.09.4933
குடி அரசு - 1933 (2 96
இந்திய HBHF சமஸ்காணங்கள்
இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சமஸ்தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர். பெரு மானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ்தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டுவரப் பட்டிக் கிறது.
இந்தச் சட்டம் இப்போது கொண்டுவருவதற்குள்ள அவசியத்தை இந்திய அரசாங்க ஹோம்மெம்பர் எடுத்துச் சொல்லும்போது “இந்தியாவில் அரசர் பெருமானின் சர்வாதிகாரத்திலுள்ள சமஸ்தானங்களின் நிர்வாகத் தைக் கவிழ்க்கவோ, அச்சமஸ்தானங்கள் விஷயமாய் பிறர் துவேஷங் கொள்ளும் படி செய்யவோ செய்யப்படும் முயற்சிகளைத் தடுக்க இச்சட்டம் செய்யப்படுகின்றது” என்று சொல்லியிருக்கிறார்.
சுதேச சமஸ்தானங்கள் என்பவைகள் பிடிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்தகாலம் முதல்கொண்டே இருந்து வருபவையாகும். சில அதற்கு முன்பு இருந்தே - இருந்து வருவனவுமாகும். அப்படியிருக்க இத்தனை காலம் பொருத்து இப்பொழுது அவைகளைக் காப்பாற்ற என்ப தாக புதியசட்டம் ஒன்று ஏன் செய்யப்படவேண்டும் என்பதைக் கவனித்தால் அதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்கவேண்டுமென்பது விளங்காமல் போகாது. இதுபோலவே தான் சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் மதத் தலைவர்களைக் காப்பாற்ற என்று ஒரு சட்டம் செய்யப் பட்டது.மதங்களும், மதத் தலைவர்களும் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருக்கலாம். அப்படியிருக்க 1927ம் வருஷத்தில் மேல்கண்டபடி “மதத் தலைவர்கள் மீது துவேஷம் உண்டாகும்படியோ, ஒரு மதத்தைச் சேர்ந்தவர். களுக்கு மனவருத்தம் உண்டாகும்படியோ செய்யப்படும் காரியங்களைத் தடுக்க” என்பதாக ஒரு சட்டம் செய்து கொண்டார்கள். இது சமஸ்தான ஆதிக்கங்களைக் காப்பது போலவே மத ஆதிக்கத்தைக் காப்பாற்றவே செய்யப்பட்டதாகும். ஆனால் அக்காலத்திலேயே இதைப்பற்றி நாம் மதக் கொள்கைகள் அறிவுக்கும், மனிதனுடைய சுயேச்சைக்கும் விரோதமாய் இருக்குமானால் அதை ஆக்ஷ்பிக்கவோ, கண்டிக்கவோ எவருக்கும்
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
உரிமை இருக்கக்கூடாது என்று சட்டம் செய்வதானது பகுத்தறிவைத் தடுத்து மூடநம்பிக்கையையும், அடிமைத்தனத்தையும் வளரச் செய்வதாகுமென்று சொல்லி பலமாக ஆக்ஷபித்திருந் தோம். அதுசமயம் இந்தியா முழுவ திலுமே நம்மைத்தவிர வேறுயாரும் இவ்விதமான கொடுங்கோன்மை அடக்குமுறைச் சட்டத்தை ஆக்ஷேபித்ததாகத் தெரியவில்லை. இந்திய சட்டசபையில் உள்ள எல்லா அங்கத்தினர்களும் அச்சட்டத்தை ஆதரித்
தார்கள் என்றாலும் நம் ஆக்ஷபணையின் பலனாக ஏதோ சில மாறுதல்கள்: மாத்திரமே செய்யப்பட்டது.
ஒருவரையொருவர் தூஷித்தால். ஒருவர்மேல் ஒருவருக்குத் துவேஷம் உண்டாகும்படி நடந்துகொண்டால் அதைத் தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருந்துவந்தும் திடீரென்று “மதத்தலைவர் பாதுகாப்பு” சட்டத்தை உண்டாக்கிவிட்டார்கள். அந்தப்படி ஒரு சட்டம் செய்யவேண்டு மென்று அந்தக்காலத்தில் சர்க்காருக்கு முதன்முதலில் யோசனை சொன்ன
வர் ஒரு சென்னை மாகாணத்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரேயாகும். சுயமரி யாதை இயக்கத்தின் போக்கைப்பற்றி அநேக பார்ப்பனர்கள் அக் காலத்தில் பத்திரிக்கையில் ஓலமிட்டதைப் பார்த்தே ஒரு சட்ட நிபுணப் பார்ப்பனர்.
ரங்கிலாரசூல் என்ற துண்டுப்பிரசுரத்தை சாக்காக வைத்து இம் மாதிரி யோசனை சொன்னவுடன் அரசாங்கத்தார் இதே சாக்கென்று ஒரு வாரத்தில் சட்டம் கொண்டுவந்து எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற்றிக் கொண்: டார்கள்.
போதாக்குறைக்கு இப்பொழுது இந்திய சுதேச சமஸ்தானங்களைப் பற்றி யாரும் அந்த சமஸ்தானங்கள் மீதோ, சமஸ்தானாதிபதிகள் மீதோ துவேஷம் உண்டாகும்படி பேசவும், எழுதவும்கூடாது என்பதாக ஒரு சட்டம்கொண்டு வந்திருக்கிறார்கள். இதை எந்த தேசீயவாதிகளும் எதிர்த்து சரியாக ஆக்ஷேபிப்பதாகத் தெரியவில்லை.
ஒரு தேசத்தை, அல்லது ஒரு சமூகத்தை ஒருவர் ஆக்ஷி புரிவது என்பது அந்த தேசத்துமக்களின் நன்மைக்காகவே ஒழிய ஆக்ஷி புரிவோ
ரின் நன்மைக்காக அல்லவென்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாய மாகும். அப்படியிருக்க ஒருவருடைய நன்மைக்காக செய்யப்படும் ஆகஷியில் உள்ள குறைகளைத் திருத்தவோ, மாற்றவோ ஒரு தேச மக்க ளுக்கோ, ஒரு சமூக மக்களுக்கோ உரிமை இல்லையென்று சொல்வதானால் அந்த ஆக்ஷியை மனிதத்தன்மை கொண்ட ஆக்ஷி என்று எப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும்? ஒரு ஆட்சியின் குறைகளை, கொடுமைகளை உண்மையாய் உள்ளபடி வன்மையாய் எடுத்துச் சொல்லும்போது குற்ற மிருக்கிறவர்கள் மீது அதாவது குறை ஏற்படும்படியான ஆட்சி செலுத்து பவர்கள் மீது யாருக்கும் அதிர்ப்தியோ, வெறுப்போ, துவேஷமோ உண்டா வது இயற்கையேயாகும். அப்படியிருக்க ஒருவர் மீது துவேஷமுண் டாகும்படி ஒருவர் பேசினால் அது குற்றமென்றால் யார் என்ன செய்தாலும்,
குடி அரசு - 1933 (2 98
எப்படி ஆட்சியை நடத்தினாலும் பேசாமல் சகித்துக்கொண்டு அடங்கி இருக்க வேண்டு மென்பதுதான் அதன் கருத்தாகும். அனாவசியமாய் பொய்யாய் ஒருவர்மீது துவேஷமுண்டாகும்படி ஒருவர் நடந்து கொண் டால் அதற்கு ஏற்கனவே சட்டமிருந்து வருகின்றது என்பதை மேலே காட்டி இருக்கின்றோம். அது போராது என்று இப்போது தனிச்சட்டம் செய்வதானது யோக்கியமான முறை யல்லாமல் அடக்கு முறை மூலம் மக்களை அடக்கி ஆள செளகரியம் செய்து கொள்வதேயல்லாமல் இதை நியாயமென்றோ, நல்ல அரசாட்சி முறை யென்றோ சிறிதும் சொல்லமுடியாது.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சுதேச சமஸ்தானங்களின் யோக்கியதையானது அனேக விஷயங்களில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சியை விட அனேக மடங்கு மோசமானதென்று தைரியமாய்ச் சொல்லு வோம். தெளிவாய்ச் சொல்லவேண்டுமானால் அனேக சுதேச சமஸ்தானங் களின் ஆட்சியானது கொள்ளைக் கூட்டத்தாரின் காட்டு ராஜாங்க ஆட்சி போல் நடந்து வருகின்றன.
குடிகளுக்காக குடிகளின் நன்மைக்காக நாம் ஆட்சி செலுத்து கின்றோம் என்கின்ற உணர்ச்சியேயில்லாமலும், உணர்ச்சி ஏற்படுவதற்கே இடமில்லாமலும், அனேக சமஸ்தானங்கள் இருந்துவருகின்றன.
இந்தியாவில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கு விஸ்தீரணத்துக்கு மேலாகவே சுதேச சமஸ்தான ஆட்சிகளின் கீழ் இருந்து வருகின்றது. அதாவது இந்தியாவின் மொத்தப்பரப்பு (விஸ்தீரணம்) 17.73000 பதினேழு லட்சத்து எழுபத்துமூவாயிரம் சதுரமைலாகும். இதில் 675000 ஆறுலட்சத்து எழுபத்தி ஜயாயிரம் சதுரமைல் விஸ்தீரணமுள்ளதேசம் சுதேச சமஸ்தானங் களின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது.
சுமார் 80000000 எட்டு கோடி இந்திய ஜனங்கள் அவ்வாட்சியில்
இருந்து வருகின்றனர்.
மேல்கண்ட 6/, லட்சம் சதுரமைல் விஸ்தீரணத்தையும், 8கோடி ஜனத்தொகையையும் கொண்டதான பரப்புகள் 562 ராஜ்யங்களாகப் பிரிக்கப் பட்டு அவை 562 சுதேச சமஸ்தானங்களாகி 562 அரசர்களால் ஆளப்பட்டு வருகின்றன. இந்த ராஜ்யங்களில் எல்லாம் பெரியது ஹைதராபாத் ராஜ்ஜிய
மாகும். இதற்கு விஸ்தீரணம் 82700 சதுரமைல். இதன் ஜனத்தொகை 12500000. இதன் மொத்தரிவுனியூ வருமானம் 65000000 ஆரரைக்கோடி ரூபாய். இதில் ராஜாவாகிய ஹைதராபாத் நவாப்பு தன் சொந்த செலவிற்கு என்று எடுத்துக் கொள்ளும் தொகை 5000000 அரைக்கோடி ரூபாயாகும். இதுதவிர அந்த நவாப்புக்கு 400 கோடி ரூபாயுள்ள சொந்த சொத்திலிருந்து வரும் வரும்படி வருஷம் ஒன்றுக்கு ஒருகோடி ரூபாயாகும். ஆகவே வருஷம் ஒன்றுக்கு
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
ஒன்றரைக்கோடி ரூபாயை வரும்படியாக உள்ள ஒருபெரிய முதலாளியால் (யூஷ்வாவால்) ஹைதராபாத் தேசம் ஆளப்பட்டு வருவதாகும்.
மற்ற சமஸ்தானங்களில் சுமார் 40 சமஸ்தானங்கள்தான் வருஷம்
1-க்கு மொத்த ரிவினியூ வருமானம் 10 லட்சரூபாய்க்குமேற்பட்டவை களாகும். மற்றவைகள் எல்லாம் அதைவிட குறைந்த வரும்படியுடையவை களேயாகும். சுமார் 400 சமஸ்தானங்கள் வருஷம் ஒன்றுக்கு ரிவினியூ வருமானம் ஒரு லட்ச ரூபாயைவிட குறைந்த வருமானமுடையவையாகும்.. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இவற்றுள் 15 சமஸ் தானங்கள் ஒரு மைல் விஸ்தீரணத்துக்குக்கூட குறைந்த பரப்புள்ளவைக ளாகும்.மூன்று சமஸ் தானங்களில் ஒவ்வொன்றிலும் 100 பிரஜைகளைவிடக் குறைவாகயிருக்கின்றார்கள். ஐந்து சமஸ்தானங்களுக்கு ஒவ்வொன்றின் வருஷவரும்படி ரூபாய் 100 வீதம்கூட இல்லாமல் இருக்கிறது.
உதாரணமாக அவாச்சார் (Avachar) என்கின்ற சமஸ்தானம் 1-மைல் விஸ்தீரணம் 32 பிரஜைகளும் 72 ரூபாய் வருஷ ரிவினியூ வருமான முடைய தேசமாகும்.
இப்படிப்பட்ட ராஜாக்கள் தங்கள் தேச ரிவினியூ வரும்படியில் 12ல் ஒருபாகம் முதல் சரிபகுதி வரையில் தங்கள் சொந்த செலவுகளுக்கு
எடுத்துக் கொண்டு மீதியையும் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றபடியே பிரஜை களுக்கென்று செலவழித்துக்கொண்டு இருந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு சுதேச சமஸ்தான ராஜாக்களின் யோக்கியதைகளை அதாவது இந்தூர், ஆள்வார், மிஸ்டர் “8” முதலிய ராஜாக்களின் யோக்கிய தையை நினைத்துப் பார்த்தோமேயானால் அவர்களது ஆட்சியின் கீழ் மக்கள் குடிகளாய் வாழ்வதைவிட மானம்கெட்ட வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை என்றே தோன்றும். உலகில் உள்ள கூடா ஒழுக்கங்கள் எல்லாம் ஓருருவாய்த்திரண்டு வந்தது போன்ற அரசர்கள் எத்தனையோபேர்கள் நமது சுதேச சமஸ்தானங்களில் இருந்துவருகிறார்கள் என்பது யாரும் அறியாததா?
இவர்களில் சில அரசர்கள் தங்கள் பெண்ஜாதிகளுக்கு செலவிடும் அளவில் மூன்றில் நான்கில் ஒருபாகம் தொகைகூட தனது பிரஜைகளின் கல்விக்குச் செலவுசெய்யாதவர்களும் தங்களது மோட்டார்கார்களுக்காகச் செலவு செய்யும் தொகையில் பகுதி அல்லது 3-ல் ஒருபாகம்கூட தனது தேசப்பிரஜைகளின் சுகாதாரம், வைத்தியம் ஆகியவைகளுக்குச் செலவு செய்யாதவர்களுமாய் இருக்கிறார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. சுதேச சமஸ்தானப்பிரஜைகளுக்கு அவர்கள் தங்கள் தேச வரும்படியில் இத்தனையில் ஒருபாகம்தான் தன்சொந்த செலவுக்கு
குடி அரசு - 1933 (2 100
எடுத்துக்கொள்ளலாம். இத்தனை பெண்டாட்டிகள் கட்டிக்கொள்ளலாம் என்பதான நிர்ணயமே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.
“இந்தியா சக்கிரவர்த்தியின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ் தானங்கள்! என்றுவெகு பெருமையாய் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சொல்லிக் கொள்ளுகின்றார்களே ஒழிய அந்த சர்வாதிகாரத்தன்மையை ஒரு சிறிதாவது இந்திய சமஸ்தான அரசர்களின் ஒழுக்கத்துக்கோ, அவர்களது வாழ்கை நிலையின் தன்மைக்கோ குடிகளின் க்ஷேமத்தைக் கவனிக்க வேண்டிய அவசியத்துக்கோ செலவழித்ததாகச் சொல்லுவதற்கு இடமே காண முடியாமல் இருந்துவருகின்றது. இந்திய சமஸ்தான அரசர்களில் பெரும்பான்மையானவர்களுடைய நடவடிக்கையும், யோக்கியதையும் அரசாக்ஷிமுறையும் பார்த்த ஒருவன் எந்த விதத்தில் அவர்கள் நிலையை வெளியில் எடுத்துச் சொல்லாமல் இருக்கவோ, அவர்களை ஒழிக்க முயற்சி செய்யாமலிருக்கவோ முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை. 562 பேர்
களில் யாரோ ஒன்று இரண்டு சமஸ்தான அரசர்கள் ஒருசமயம் “யோக்கியர். களாக” இருந்தாலும் இருக்கலாம் அதுவும் “கூரைவீட்டின் மீது இருந்து கொண்டு கொள்ளிக் கட்டையை எடுத்து விளையாடிக்கொண்டிருக்கிறானே அவனே எல்லோரிலும் யோக்கியன்” என்று சொல்லுவது போன்ற யோக்கியமாய் இருந்தாலும் இருக்கலாம். இதற்காக அரசர்பெருமானின் சர்வதிகாரத்துக்கு உள்பட்ட 562 “சமஸ்தான நிர்வாகத்தைப் பற்றி துவேஷங் கொள்ளும்படி யாரும் செய்யக் கூடாது” என்று சட்டம்செய்வது என்றால் லார்ட்வில்லிங்டன்துரை மகனாரின் அடக்குமுறைச் சட்டம் என்பவைகளி லெல்லாம் இதுவே தலைசிறந்த உண்மையான அடக்குமுறைச் சட்டம் என்றே சொல்லவேண்டி இருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் வரிஆள். ஒன்றுக்கு 6 ரூபாய்வீதம் ஆகின்றது என்றால் அனேக சுதேசசமஸ்தானங் களின் வரி ஆள் ஒன்றுக்கு 20ரூ. வீதம் வசூலாக்கப்படுகின்றது. 1-ஆள். ஒன்றுக்கு 6-ரூபாய் வீதம் வரிவசூலிக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் படிப்புக் காக நபர் ஒன்றுக்கு 8 அணாவீதம் செல விழிக்கப்படுகின்றது என்றால் ஆள். ஒன்றுக்கு 20 ரூ. வீதம் வரி வசூலிக்கப்படும். சில சுதேச சமஸ்தானங்கள்.
படிப்பு விஷயத்தில் ஆள் ஒன்றுக்கு 6-அணா வீதமும், 3-அணா வீதமும் தான் செலவு செய்கின்றனர். இவர்கள் பெயரை வேண்டு மானாலும் பொதுநலத்தை உத்தேசித்து வெளியிட நமக்கு ஆக்ஷேபனை யில்லை. ஆதலால் முறையே நவ்நகர், கட்ச்சு முதலாகிய சமஸ்தானங்க ளாகும். இதுபோல் இன்னும் பல சமஸ்தானங்கள் இருந்து வருகின்றன.
தவிர இந்திய சுதேச சமஸ்தானத்தில் உள்ள எல்லா ராஜாக்களுமே தங்கள் சொந்தச் செலவுக்கென்று எடுத்துக்கொள்ளும் தொகையானது ஐரோப்பிய அரசர்களும், சக்கிரவர்த்திகளும் எடுத்துக்கொள்ளும் விகிதாச் சாரத்தை விட 60 பங்கு 70, 100 பங்கு 200, 1000 பங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளு கிறார்கள். உதாரணமாக ஐரோப்பா கண்டத்தில் டென்மார்க்
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தேசத்து அரசருக்கு இருபத்திமூன்றரைக்கோடிரூபாய் வரி வருஷவரு மானம். நமதுபிக்கானியர் சமஸ்தான அரசருக்கு வருஷம் 60 லக்ஷம் ரூபாய் வரி வருமானம் ஆனால் டென்மார்க்குதேசஅரசர் வருஷம் 7 லக்ஷம் ரூபாயே தனது சொந்த செலவுக்கு எடுத்துக்கொள்ளுகிறார். பிக்கானியர். தேசத்து அரசர் வருஷம் பதிமூன்றரை லக்ஷரூபாய் தனது சொந்தசெலவுக்கு எடுத்துக் கொள்ளுகிறார். இதை விகிதாச்சாரம் பார்த்தால் டென்மார்க்கு அரசர் தனது தேச வருமானத் தில் 350ல் ஒருபாகம் எடுத்துக்கொள்ளுகிறார். பிக்கானியர் சமஸ்தான அரசர் தனது தேச வரும்படியில் 4-ல் ஒருபங்கு தனது சொந்தச் செலவுக்கு எடுத்துக்கொள்ளுகிறாரென்று சொல்லவேண்டி யிருக்கிறது.
பொதுவாகப் பார்க்கப்போனால் ஐரோப்பிய அரசர்கள் தங்கள் வரும் படிக்கும், தாங்கள், தங்கள் சொந்தச் செலவுக்கும் எடுத்துக்கொள்ளும் தொகைக்கும், இந்திய சமஸ்தான அரசர்கள் வரும்படிக்கும் அவர்கள் தங்கள் சொந்த செலவுகளுக்கு எடுத்துக்கொள்ளும் தொகைக்கும் வித்தியா சத்தையும், மற்ற விஷயங்களையும் கணக்குப் பார்த்தால் இந்த சமஸ்தானங் களையும், சமஸ்தானாதிபதியும் பாதுகாக்கச் சட்டம் வேண்டுமா அல்லது மாற்றவோ, கவிழ்க்கவோ சட்டம் வேண்டுமா என்பது நன்றாய் விளங்கும்.
அதற்காகவே சில புள்ளிவிபரங்கள் கீழே தருகிறோம். இது சர்க்கார் கணக்கேயாகும். அதாவது:-
தனது தேச மொத்தவரும்படியில் இங்கிலாந்து தேச ஜார்ஜ் அரசர் 1600 6 ஒருபங்கும், பெல்ஜியம் அரசர் 1000 ல் ஒருபங்கும், நார்வே அரசர்.
700ல் ஒருபங்கும், நாதர்லேண்ட் அரசர் 600ல் ஒருபங்கும், இட்டாலி அரசர். 500 ல் ஒருபங்கும், ஜப்பான் சக்கிரவர்த்தி 400 ஒருபங்கும் தான் தங்கள் சொந்த செலவுக்கு பெறுகிறார்கள்.
ஆனால் இந்திய சமஸ்தானாதிபதிகளோ என்றால், தங்களது மொத்த ரெவனியூ வரும்படியில் திருவாங்கூர் மஹாராஜா 17-ல் ஒருபாகமும்,
மைசூர் மகாராஜா 14ல் ஒரு பாகமும், ஹைதராபாத் நவாப் 13ல் ஒருபாகமும் பரோடா மஹாராஜா 12ல் ஒரு பாகமும், காஷ்மீர் மஹராஜா 5-ல் ஒரு
பாகமும், பிக்கானியர் மஹாராஜா 4ல் ஒருபாகமும் இன்னும் சிலர் 3ல் ஒரு பாகமும் சிலர் 2ல் ஒருபாகமும் தங்கள் சொந்தசெலவுக்கு எடுத்துக்கொண்டு அக்கிரமமான போகபோக்கியங்களை அனுபவிக்கிறார்கள். ஆதலால் இந்திய சமஸ்தானா திபதிகளின் ஆட்சிகளென்பவை ஒரு பக்கா முதலாளித் தன்மை ஆட்சி களென்பதில் யாருக்குமே ஆட்சேபனை இருக்காது. இவர் களுக்கு ஏழை மக்கள் சரீரத்தால் கஷ்டப்பட்டுவாழும் தொழிலாளி மக்கள்: ஆகியவர்களின் வாழ்க்கையைப்பற்றியோ அவர்களது மனிதத் தன்மை யைப் பற்றியோ ஒருசிறிது ஞாபகமாவது, கவலையாவது இருக்கவே
இருக்காது. இருக்க இடமுல்லை..
குடி அரசு - 1933 (2 102
இந்த ராஜாக்கள் என்பவர்கள் ஒருவித சுகபோகங்களை அனுபவிக் கவே தோன்றியவர்கள் என்பது அவர்களது பிறப்பும் பதவியும் ஏதோ முன்ஜென்ம கர்மவசத்தால் புண்ணியத்தால் பூஜாபலத்தால் கிடைத்தது என்பதும் தவிர மற்றபடி அவர்களுக்கு ஆட்சியிலிருக்கும் பொறுப்பு என்ன தங்கள் நடவடிக்கைகள் எப்படியிருக்கவேண்டும் என்பனவாகியவைகள் தெரியவே தெரியாது. இந்த லக்ஷணத்தில் இந்த சுதேச சமஸ்தானதிபதிக ளான ராஜாக்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்களென்றும், விஷ்ணு அம்சமே உடகில் அரசனாய் அவதரிக்கின்றது என்றும் சொல்லப்படுவ தோடு ஒவ்வொரு ராஜாங்கமும் ஒவ்வொரு கடவுளுக்குச் சொந்தமான தென்றும், அக்கடவுள்களின் பிரதிநிதிகளாகவோ, தாசர்களாகவோ இருந்து இந்த ராஜ்யங்கள் அரசாளப்படுகின்றன என்றும் சொல்லிக்கொள்ளவும் படுகின்றன.
இந்தப்படியெல்லாம் ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம் பேரிக்கூட்ட பார்ப்பனர்கள் கற்பித்து பிறருக்கும் அந்தப்படி பிரசாரமும் செய்து எப்படிப்பட்ட கொடுங்கோன்மை ஆட்சியிலும் தாங்கள் மாத்திரம் நோகாமல் சரீரத்தால் எவ்விதபாடும் படாமல் சோம்பேரி வாழ்க்கையை
நடத்திக்கொண்டு அவ்வயோக்கிய அரசர்களுக்கு அடுத்தபடியில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
நமது தேச பக்தர்களுக்கோ, தேசீய வாதிகளுக்கோ, தேசீய தலைவர் களுக்கோ இவைகளையெல்லாம்பற்றி ஒரு சிறிதுகூட கவைலையே கிடை யாது. அவர்களுடைய கவலை எல்லாம் “அன்னியன் ஏன் நமது தேசத்தை ஆளுகிறான், வைசிராய்க்கு ஏன் இவ்வளவு சம்பளம், இவ்வளவு அதிகாரமேன்” என்கின்ற பல்லவியும் பேச்சும்தான் தெரியுமேயொழிய வேறு ஒன்றையும் பற்றிய விபரமும் தெரியாது, கவலையே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.தேசிய பத்திரிகைகளோ பெரிதும் இம்மாதிரி ராஜாக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களையும் அவர்களது நிர்வாகத்தையும் புகழ்ந்து எழுதுவதும், பணம் கொடுக்காதவனை வைவதும். தவிர வேறொரு கவலையுமில்லை..
மேற்கண்ட யோக்கியதை கொண்ட ராஜாக்கள் தங்கள் தங்கள் சமஸ் தானங்களைப் பாழாக்கி அந்நாட்டு மக்களை மிருகங்களாகப் பாவித்து அக்கிரம, அனியாய ஆட்சிபுரிவது உலகம் அறிந்திருந்தும் போறாக் குறைக்கு இந்த “தர்ம ராஜாக்களை” பிரிட்டிஷ் இந்திய ஆட்சியிலும் கொண்டுவந்து கலக்கி அதுவும் எப்படி என்றால் அவர்களைப்பற்றியும் அவர்கள் தேசத்தைப்பற்றியும், அவர்கள் நிர்வாகத்தைப்பற்றியும் பேச நமக்கு எவ்வித அதிகாரமில்லாமலும், நம்ம தேசஆட்சியின் தலையில் அவர்கள் வந்து உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தும்படியாகவும் கொள்கைகொண்ட சமஷ்ட்டி (பிடரல்) ஆட்சியைக் காங்கிரசும், அதன் ஏக
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தலைவரான “மகாத்மா”க்களும் ஒப்புக்கொண்டு அதைப்பற்றி ஆக்ஷேபிப் பதில்லை என் கின்ற நிபந்தனையின் மீது வட்டமேஜை மகா நாட்டில் போய் கலந்து கொண்டார்கள் என்றால் தேசீயத்தின் அயோக்கியத்தனத்துக்
கும், சூட்சிக்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்பது நமக்கு தோன்றவில்லை...
பழய பழக்க வழக்கங்களையும், மதக்கொள்கைகளையும், வருணாச் சிரமத்தையும் காப்பாற்றும் விஷயத்தில் வெள்ளைக்கார அரசர்கள் அசார். சமாய் இருந்து விடுவார்கள் என்கின்ற கருத்துக்கொண்டே காங்கிரசுக் காரர்கள் அம்மகாநாட்டுக்குச்சென்றார்கள் என்றும், நமது நாட்டுப் பார்ப் பனர்கள் இந்திய ஆட்சியில் கருப்பு சமஸ்தானாதிபதிகளையும் கொண்டு வந்து கலக்கினதுமான காரியங்கள் செய்தார்கள் என்றும் இந்திய ஏழை
மக்கள், தொழிலாளி மக்கள் ஆகியவர்களின் கிளர்ச்சிகள் வலுத்துவிடுமே யானால் அதை அடக்க அதிக சிரமப்பட்டு நாம் ஏன் கெட்டபேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கருதி கருப்பு சமஸ்தானாதிபதிகள் மூலமே அடக்கச் செய்யலாம் என்கின்ற சூழ்ச்சி மீதே பிரிட்டிஷாரும் இந்த தந்திரம் செய்திருக்கிறார்கள் என்றும்தான் நாம் நினைக்கவேண்டியிருக்கிறது. எப்படியிருந்தபோதிலும் பிரிட்டிஷ் முதலாளித்தன்மைஆட்சியும், அவர்
களது ஏகாதிபத்திய ஆணவமும் ஒழிவதற்கு முன் இந்த இந்திய சமஸ்தான முதலாளித்தன்மை ஆட்சியும், அவர்களது பொருப்பற்ற கொடுங்கோன்மை
கூடா ஒழுக்கஆட்சியும் அழிந்து மறைந்து ஒழிய வேண்டியது அவசரமும் அவசியமுமான காரியமாகும் என்பதே நமதபிப்பிராயம். அப்படி இருக்க இப்போது அவர்களையும் சமஸ்தானங்களையும் காப்பாற்ற புதிதாக ஒரு சட்டம் செய்வது மிகமிகக் கொடுமையான காரியம் என்றே சொல்லு வதுடன் இச்சட்டம் அச்சமஸ்தானாதிபதிகளை இன்னமும் என்ன வேண்டு மானாலும் செய்யுங்கள் என்று சொல்லி லைசென்சு அனுமதிச்சீட்டு கொடுத்
தது போலவும் ஆகிறது என்பதே நமதபிப்பிராயம்.
குடி அரசு - தலையங்கம் - 03.09.4933
குடி அரசு - 1933 (2 104
சம்பாஷணை
வம்பனுக்கும் - கம்பனுக்கம்
- சித்திரபுத்திரன்
வம்பன் என்ன அய்யா கம்பரே! அனாவசியமாக வெள்ளைக் காரர்களையெல்லாம் இந்த நாட்டைவிட்டு வெளியில்போங்கள் என்று சொல்லுகின்றீரே! இது நியாயமா?
கம்பன்:- சொன்னால் என்ன அய்யா முழுகிப்போய்விட்டது. அவர். களுக்கு இங்கு என்ன வேலை? அவர்கள் என்ன நம்ம மதமா? ஜாதியா? ஜனமா? போ என்றால் போகவேண்டியதுதானே?
வம்பன்:- அப்படிச் சொல்லிவிடலாமா திடீரென்று. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே; இந்த நாட்டுக்கு அவர்கள் வந்து சுமார்.
400, 500 வருஷத்துக்கு மேலாகின்றது. அதுமாத்திரமல்ல இந்த நாட்டு அரசாட்சி பெற்று சுமார் 200 வருஷமாகின்றது. அப்படியிருக்க நீ போ வெளியில் என்று சொல்லுவது நியாயமா?
கம்பன்:- 400, 500 வருஷமாய் விட்டதால் ஒருவனுக்குப் பாத்தியம் வந்துவிடுமா? 200 வருஷம் ஆண்டால் அவனுக்கே என்றைக்கும் நிரந்தர:
மாகிவிடுமா? ஆயிரம் வருஷம் ஐந்நூறு வருஷம் இருந்த மரஞ்செடிகளை வெட்டித்தள்ளி காடுகளைத் திருத்துவதில்லையா? 4000 வருஷம் 5000 வருஷமாய் இருக்கிற பாறைக் கல்லுகளையெல்லாம் டைனாமெட்டு வைத்து உடைத்து தூளாக்கி அப்புரப்படுத்துவதில்லையா? ஆதலால் வேண்டாம் என்றால் போய்விட வேண்டியதுதானே.
வம்பன்:- வேண்டாம் என்றால் போக வேண்டியதுதானே என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டாம் என்பதற்கு ஏதாவது சட்டப்படி நியாயம் சொல்லுகின்றீர்களா? அல்லது கை பலத்தைப் பொறுத்து நியாயம் சொல்லு கின்றீர்களா?
கம்பன்: சட்டமென்ன? கைபலமென்ன? இந்த இரண்டும் நமக்குக் கிடையாது. நம் இஷ்டம் தான்.
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வம்பன்:- அப்படியானால் அந்த இஷ்டத்துக்காவது ஒரு காரணம் வேண்டாமா?
கம்பன்:- காரணம் என்ன? காரணம் அவர்களால் இந்த 200 வருஷ மாய் நமக்கு என்ன பிரயோஜனம் என்ன சாதித்தார்கள்? நமது நாட்டுச் செல்வத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போகின்றார்கள். அவர்களிடத்
தில் நியாயம் என்பதில்லை, கருப்பனுக்கு ஒரு நீதி, வெள்ளையனுக்கு ஒரு
நீதி, இது போதாதா? அவர்கள் இந்த தேசத்தை விட்டுப் போக வேண்டிய
தற்குக் காரணம்?
வம்பன்:- அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொன் னால் போதுமா? (இந்த 200 வருஷகாலத்தில் இந்தியா எவ்வளவு நாகரீகம், கல்வி அறிவு பெற்றிருக்கிறது. அவர்கள் வருவதற்கு முன் 100க்கு 99 தற்குறி களாயிருந்தோமே. பார்ப்பான் காலத்தைவிட வெள்ளைக்காரன் காலம் மோசமா? @) பணம் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் யாருடைய பணம்? பாடுபடுபவர்கள் பணத்தை நம்ம பணக்காரனும் கொள்ளை அடித்தான், வெள்ளைக்காரனும் கொள்ளை அடித்தான், பணக்காரன் கொள்ளை அடிக் கும் பணமும், மோட்டார் பெட்ரோல், ரயில், சீப்பு, சோப்பு,
டிரஸ், பிராந்தி, உஸ்கி, பெட்டி, பேழை முதலிய சாமான்கள் வாங்கி எல்லாம் வெளி நாட்டுக் குத்தான் அனுப்பிவிடுகிறான். (3) நீதி விஷயத்திலும், இங்கும்
பார்ப்பானுக்கு ஒரு நீதி, பறையனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, பணக் காரனுக்கு ஒரு நீதி, கோவில், குளம், வீதி, பள்ளிக்கூடத்திலும், மேல் ஜாதிக்கு
ஒரு நீதி, கீழ் ஜாதிக்கு ஒரு நீதி, சம்பளத்திலும் ஒருவனுக்கு மாதம் 6000 ரூபாயும், ஒருவனுக்கு மாதம் 6 ரூபாயும், ஒரு ஜாதி பாடுபடவேண்டும், ஒரு ஜாதி சோம்பேரியாய் இருந்து வாழ வேண்டும். இப்படி அநேக வித்தியாசங்கள் அக்கிரமமாய் இருக்கும்போது வெள்ளைக்காரனை மாத்திரம் ஏன் குற்றம் சொல்லுகிறாய்? அவன்போய்விட்டால் இதெல்லாம் திருத்துப்பாடாகி விடுமா?
- ஆகுதோ இல்லையோ அதைப்பற்றிக் கவலையில்லை.
கம் நாங்கள் எப்படியோ எங்களுக்குள் அடியோ உதையோ போட்டுக் கொள்: ளுகிறோம். வெள்ளைக்காரன் மாத்திரம் இனி அரை நிமிஷமும் வேண்டாம். அவ்வளவுதான் நம்ம சங்கதி.
வம்பன்:- சரி எப்படியோ நடக்கட்டும் எல்லாருக்கும் ஒத்தது எனக்கும் ஆகட்டும். நானும் வேணுமானால் உன்னுடனேயே சேர்ந்து கொள்ளுகிறேன். ஆனால் ஒரு சேதி.
கம்பன்:- என்ன சேதி?
வம்பன்:- இந்தியாவிலிருந்து கொளும்பு, சிங்கப்பூர், பினாங்கு, செய்கோன், கொச்சின், சைனா முதலிய ஊர்களுக்கு நம்ம ஆளுகள் 10-
குடி அரசு - 1933 (2 106
லட்சக்கணக்காகப்போய் அந்த தேசங்களை கொள்ளையடித்து கோடிக் கணக்காக ரூபாய்கள் கொண்டு வந்து இங்கு எத்தனையோ பேர் லட்சாதி
பதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் பிழைக்கிறார்களே! அதுமாத்திரமல்ல இன்னும் வெகுபேர் அந்த தேசங்களில் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்களே! இதற்கு என்ன செய்கின்றது?
கம்பன்:- செய்வது என்ன? அந்த ஊர்க்காரர்கள் பார்த்துப் போ என்று சொன்னால் போய்விடவேண்டியதுதான்.
வம்பன்:- அப்படியானால் சைய்கோன் அரசாங்கம் இந்திய “வெள்ளைக்காரர் களாகிய நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு நோட்
டீஸ் கொடுத்துவிட்டதாமே. இனி அவர்கள் என்ன செய்ய வேண்டும்.
கம்பன்:- செய்வதென்ன இந்த இரண்டு வருஷ சங்கராந்தி நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மேல் தான் வந்திருக்கின்றது. மரியாதையாய் மூட்டை கட்டிக்கொண்டு இந்தியாவுக்கு திரும்பவேண்டியதுதான்.
வம்பன்: அப்படியானால் இப்பொழுது தேசீயவாதிகள் உள்பட எல்லோரும் சேர்ந்து என்னமோ ஆபத்து வந்துவிட்டதாக இதற்குக் கூச்சல் போடுகிறார்களே அது ஏன்? இதற்கு இந்திய சட்டசபையில் அவசரப் பிரேரேபணை எதற்காக? “போ என்றால் போய்விட வேண்டியதுதானே” “இவர்களால் செய்கோனுக்கு என்ன நன்மை” “செய்கோனை கொள்ளை அடித்து பொருள் திரட்டி இந்தியாவுக்கு கொண்டு வருவது நியாயமா?” என்று செய்கோன்காரர்கள் சொல்வதில் என்ன தப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.
கம்பன்:- எதற்கும் எதற்கும் ஒப்பிட்டுப் பேசுகிறீர்? இது உமக்கு ஒரு வெள்ளைக்காரன் சொல்லிக் கொடுத்ததுதானோ? திரைகடலோடியும் திரவியம் தேடு என்று ஒளவை பாடி இருக்கிறாளே திரைகடல் என்றால்
இந்தியாவுக்குள் என்றுதான் அருத்தமோ?
வம்பன்:- சரி அப்படியானால் எல்லோருக்கும் எல்லா தேசத்தாருக்
கும் இந்த உரிமை உண்டா? இல்லையா?
கம்பன்:- என்ன நியாமய்யா நீர் பேசுகிறது. வெரும்வம்பு பேசுகிறீரே நியாயம் அநியாயம் இல்லையா?
வம்பன்:- சரி அப்படி வாருங்கள் நியாயம் பேசலாம். நியாயம் என்றால் என்ன? கம்பன் சொன்னதா? காளிதாசன் சொன்னதா? ராமன் சொன்னதா? கிருஷ்ணன் சொன்னதா? வள்ளுவன் சொன்னதா? புத்தன் சொன்னதா? கிறிஸ்து சொன்னதா? முஹம்மது சொன்னதா அல்லது காந்தி சொல்வதா?
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
சங்கராச்சாரி சொல்வதா? சத்தியமூர்த்தி சொல்வதா? மற்றும் யாராரோ சொல்லுவதா? என்பவைகளை நியாயம் என்று வைத்துப் பேசுவதா னால் உலகம் உள்ளவரை நியாயம் பேசித் தீராது.
கம்பன்:- பின்னை என்னதான் பண்ணித் தொலைக்கச் சொல்லுகிறீர்.
வம்பன்:- தங்களுக்குப் புத்தி இருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளு கிறீர்களா?
கம்பன்:- ஆம் ஒப்புக் கொள்ளுகிறேன்.
வம்பன்:- சரி எனக்கு புத்தியிருக்கின்றது என்று ஒப்புக் கொள்ளு கின்றீரா?
கம்பன்:- சரி ஒப்புக்கொள்ளுகிறேன்.
வம்பன்:- அப்படியானால் நாம் இருவருமே நம் புத்தியை- அறிவைக் கொண்டு பேசுவோம். நம் இருவர் புத்திக்குட்பட்டதை நாம் சரி நியாயம் என்று ஒப்புக்கொள்ளுவோம். இதில் ஒன்றும் தடை இல்லையே.
கம்பன்:- தடை இல்லை.
வம்பன்:- முதலாவது மக்களை மதத்தின்பேரில் பிரிக்கலாமா?' தேசத்தின்பேரால் பிரிக்கலாமா? ஜாதியின்பேரால் பிரிக்கலாமா? அல்லது பாடுபட்டு உழைக்கும் மக்கள் சோம்பேறிகளாய் இருந்து உழைப்பாளிகளை ஏய்த்து வாழுகின்ற மக்கள் என்று இரண்டுவித வகுப்பாய் பிரிக்கலாமா? என்பதை முதலில் முடிவு செய்வோம். ஆகவே எப்படிப் பிரிக்கின்றது சொல்லுங்கள் பார்ப்போம்.
கம்பன்:- இப்படிச் சொன்னால் எனக்கு ஒன்றும் புரியவில்லையே.
வம்பன்:- இது உங்களுக்குப் புரியாதல் என்ன? சற்று தயங்குவதாகத் தெரிகின்றது. நியாயம் என்று தோன்றுவதைச் சொல்லவேண்டியதுதானே.
கம்பன்:- நீர்தான் சொல்லுமே.
வம்பன்:- சொல்லுகிறேன் நன்றாய் யோசித்துப்பாரும். என்ன வென்றால் மனிதர்களைப் பிரிக்கவேண்டுமென்றால் இரண்டு வகையாய்த் தான் பிரிக்கலாம்.
கம்பன்:- எப்படி?
வம்பன்:- பாடுபட்டு உழைக்கும் மக்கள் ஒரு வகுப்பு. அப்படிப் பாடுபட்டு உழைக்கும் மக்களின் உழைப்பின் பலனை பல பலவித
குடி அரசு - 1933 (2 108
வழிகளால் ஏமாற்றி அனுபவிக்கிறவர்கள் ஒரு வகுப்பு ஆக இரண்டு வகுப்பாகத் தான் பிரிக்கலாம்.
கம்பன்:- சரி அப்புறம்.
வம்பன்:- இந்தப்படி ஏமாற்றிவாழும் மக்களைப் பார்த்து நீயும் உன் விகிதாச்சாரம் உழைத்து விகிதாச்சாரம் கூலி எடுத்துக்கொள் என்று சொல்ல வேண்டும்.
கம்பன்:- சரி அப்புறம்.
வம்பன்:- அந்தப்படி நாம் சொல்லுவதை அவர்கள் கேட்கா விட் டால் ஊரைவிட்டு நாட்டைவிட்டு தேசத்தைவிட்டு வெளியில் போகிறாயா இல்லையா? என்று கேட்கவேண்டும்.
கம்பன்:- அவன் போகமாட்டேன் என்றால் என்ன செய்வது.
வம்பன்- வெள்ளைக்காரன் போகமாட்டேன் என்றால் என்னசெய்ய வேண்டுமென்கிறாயோ அதைச்செய்ய வேண்டியதுதான்.
கம்பன்:- இதில் வெள்ளைக்காரனும் சேர்ந்தவன்தானே..
வம்பன்:- அவர்கள் பாட்டன்கூட சேர்ந்தவனேயாவான்.
கம்பன்:- அப்படியானால் சரி.
குடி அரசு - உரையாடல் - 10.09.1933
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
கல்யாணக் கஷ்டம்
நமது நாட்டில் சிறப்பாக இந்து சமூகம் என்பதில் கல்யாணம் என்னும் விஷயம் மிகவும் கஷ்டமும், நஷ்டமும் தரத்தக்க காரியமாயிருந்து வரு கின்றது. ஆனால் கல்யாணம் செய்கின்றவர்களோ, செய்து கொள்ளுகின்ற வர்களோ இந்த கஷ்ட நஷ்டங் களைப் பற்றி கவனியாதவர்கள் போலவும், இது எவ்வளவு கஷ்டமானாலும் நஷ்டமானாலும் அடைந்துதான் தீரவேண்டும் என்றும், இது சமூக வாழ்க்கைக்கு அவசியமாய் அடைந்துதீர வேண்டிய கஷ்ட நஷ்டமென்றும் கருதுகிறார்கள். இது மாத்திரமல்லாமல் இவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகி நடைபெறும் கல்யாணங்கள். நடக்கும் போது ஒருவித சந்தோஷத்தையும், பெருமையையும் கூட அடை
கின்றார்கள். இது பழக்கத்தினாலும் வழக்கத்தினாலுமேயாகும்..
கல்யாண காலங்களில் கல்யாணக்காரருக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைப் போலவே கல்யாணத்துக்கு வரும் மக்களுக்கும் கஷ்ட
நஷ்டம், வேலைக்கேடு முதலிய பல தொல்லைகளும் விளைகின்றன.
100க்கு 90 கல்யாணங்கள் தங்கள் நிலைமையை சிறிதும் லட்சியம் செய்யாமல் கெளரவத்தையும், ஜம்பத்தையுமே பிரதானமாகக் கருதி பிரத்தி யார் பெருமையாய் பேசிக்கொள்ள வேண்டுமே என்கின்ற காரியத்திற் காகவே, கடன் வாங்கியும், நாணையத்தைக் கெடுத்துக் கொண்டும், அன்னி யருக்கு கஷ்டத்தைக் கொடுத்தும் கல்யாணத்தை நடத்துகிறார்கள். விருந்து, நகை, துணிமணி, ஊர்வலம், பந்தல், ஆடல், பாடல் முதலிய அசெளகரி யங்கள் வெறும் பெருமையையும், ஜம்பத்தையும் குறியாகக் கொண்டே நடத்தப்படுகின்றன. எவ்வளவு பணம் செலவு செய்தாலும், எவ்வளவு ஆடம்பரமாய் செய்தாலும் அவையெல்லாம் இரண்டு-மூன்று நாள் தமா ஷாக முடிகின்றதே தவிர அடுத்த வாரத்தில் அதை பற்றிய பெருமை ஒன்று மேயில்லை. ஆனால் அந்தக் கல்யாணச் செலவானது பல குடும்பங்களை: நாசமாக்கிவிடுகின்றதுடன், பல ஏழைக்குடும்பங்களுக்கும் பெரும்பாரமாகி வெகுநாளைக்கு அக்கடன் தொல்லை தீருவதேயில்லை. நம்நாட்டுப் பெண் களுக்கு கல்வி அறிவில்லாததாலும் அடிமை ரத்தம் ஊரிப்போயிருக்கிற
படியாலும், அவர்கள் சிறிதாவது கல்யாணச் செலவாலும் கடன்தொல்லை
யாலும் ஏற்படுகின்ற பலனை லட்சியம் செய்வதே இல்லை..
குடி அரசு - 1933 (2) 110
நாட்டுக்கோட்டை சமூகத்திலும், பார்ப்பன சமூகத்திலும் கல்யாண: சம்மந்தமான செலவும், மெனக்கேடும் சொல்லி முடியாது. இருசமூகமும் சரீரத்தால் சிறிதும் உழைக்காமல் யார் செல்வத்தை அட்டைபோல் உருஞ்சு கின்றவர்களானதால் அவர்களுக்கு இதுசமயம் கஷ்டமில்லாத காரியமா யிருக்கலாம். ஆனால் அவர்களும் சமீப காலத்தில் கஷ்டப்படப் போகின் றார்கள் என்பதிலும் மனவேதனை அடையப்போகின்றார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.
நிற்க, கல்யாணம் என்றால் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் சேர்ந்து வாழ்க்கை நடத்தப் போகிறார்கள் என்பதைவிட வேறு எவ்விதக் கருத்தும்
அதில் பொதிந்திருக்க அவசியமில்லை. இதற்காக செலவும், மெனக்கேடும், கஷ்டமும் எதற்கு என்பது நமக்கு விளங்கவில்லை. சிக்கனக் கல்யாணம் என்றும், சீர்திருத்தக் கல்யாணம் என்றும் சிலர் செய்கிறார்களானாலும் அது பெரிதும் ஒருவித நாகரீகக் கல்யாணமாய் தான் முடிந்து விடுகின்றதே தவிர, சிக்கனமும் நன்மை உண்டாக்கத்தக்க சீர்திருத்தமும் அவைகளில் அதிக
மாய் இருப்பதாகத் தெரியவில்லை...
அயலூரிலிருந்து பந்துக்கள், சிநேகிதர்கள், அறிமுகமானவர்கள் முதலியவர்களை எதற்காக வரவழைக்க வேண்டும் என்பது நமக்கு விளங்க வில்லை. அதற்காக ஒரு விருந்தோ, அல்லது அரை விருந்தோ தான் எதற்காக நடத்த வேண்டும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
கல்யாண ஜோடியின் பிற்கால வாழ்க்கையில் சில சட்ட சம்மந்தமான ஆக்ஷேபணைகள் அநேக காரியங்களில் ஏற்படும் என்பதற்காக அதிலி
ருந்து தப்ப சில சடங்குகளை சாட்சியாக்க செய்யப்படுகின்றன என்று சொல் லப்படுகின்றது. இது அனாவசியமான சமாதானமாகும். ஏனெனில் கல்யா ணங்களுக்காக ஒரு சட்டம் இருக்கிறது. அதாவது சிவில் மேரேஜ் ஆக்டு என்ப தாகும். அந்தப்படி கல்யாணம் செய்வதற்கு மூன்று ரூபாய் தான் செல வாகும். அதாவது ஜில்லா ரிஜிஸ்டரார் முன்னிலையில் ஆணும் பெண்ணும் சென்று கையெழுத்துப் போட்டு விட்டு வருவதேயாகும். இதற்கு இரண்டு சாட்சிகள் தம்பதிகளைத் தெரியும் என்பதற்காகக் கையெழுத்துப் போட்டால் போதும். இந்தக் கல்யாணமானது மிகவும் கெட்டியானதும் பந்தோபஸ் தானதுமான கல்யாணமாகும். எப்படியெனில் சாதாரண வழக்க கல்யாண: மானது எவ்வளவு பணம் செலவு செய்து எவ்வளவு ஆடம்பரமாகச் செய்த போதிலும், விவாகம் வரும்போது இது சட்டப்படி செல்லாது என்றோ, கல்யா ணமே செய்து கொள்ளவில்லை என்றோ, வைப்பாட்டியாக வைத்திருந்தேன் என்றோ வாதாடி சாட்சிவிட்டால் சாக்ஷிகளைப் பொருத்துத்தான் தீர்ப்பா குமே ஒழிய மற்றபடி கல்யாணம் என்று சொன்னதாலேயே செல்லுபடி யானதாக ஆகி விடாது. இப்படிப்பட்ட அநேக கல்யாணங்கள் மேல்கண்ட காரணங்கள் சொல்லி ரத்து செய்து கொள்ளப்பட்டும் குறைந்த பிரதிப் பிரயோஜனத்தோடு முடிவடைந்தும் இருக்கிறது.ஆனால் மேல்குறிப்பிட்ட " பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது எந்த விதத்திலும் மறுக்கக்கூடியதாகாது. அரசாங்கம் உள்ளவரை ஆதாரம் இருந்து வரும்.
அன்றியும் சாதாரண கல்யாணத்தைவிட பத்திரமானதுமாகும்.
சுலபத்தில் ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்து கொள்ளவும் முடியாது. ஆதலால் ரிஜிஸ்டர் கல்யாணம் என்பது மிக சிக்கனமானதும், சுருக்க மானதும், கெட்டியானதும், பந்தோபஸ்தானதுமாகும். பந்துக்களுக்கும், சிநேகிதர்களுக்கும் விஷயம் தெரியவேண்டுமானால் பத்திரிகைகளில் பிரசுரம் செய்து விட்டு ரிஜிஸ்டர் ஆனதும் துண்டு விளம்பரம் வழங்கி விட்டால் நன்றாய் வெளியாகி விடும். ஆதலால் சிக்கணக் கல்யாணம், சீர்திருத்தக்கல்யாணம் என்பவைகளை நடத்த விரும்புவோர் ரிஜிஸ்டர்.
மூலம் செய்து விடுவதே சிறந்த காரியமாகும்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் விருந்து போடுவதும், புதுத் துணிகள் வாங்கி வினியோகிப்பதும், கல்யாணத்துக்கு என்று நகைகள். செய்வதும் அனாவசியமும், பெரு நஷ்டமுமான காரியம் என்றே சொல்லு வோம். செலவு செய்ய தகுதி உள்ள பணங்கள் கடன் வாங்காத சொந்தப் பணமாயிருக்கு மானால், ரிஜிஸ்டர் செய்வதற்கு முன்பு பெண்ணின் பேரால் ஒரு பாங்கியில் போட்டு பெருகச் செய்து பின்னால் பிள்ளைகளை வளர்ப் பதற்கும் அதன் கல்விக்கும் உபயோகித்தால் அது பெருத்த அனுகூலமான
காரியமாய் முடியும்.
நமது நாட்டுப் பணக்காரர்கள் கல்யாணத்துக்கு 1000, 10000 ரூபாய்கள் செலவு செய்வார்களே ஒழிய குழந்தை பெற்றால் குழந்தையை சுகாதார விதிப்படியும், பெற்ற தாயுக்கு தொந்திரவு இல்லாமலும் வளர்க்க வழியும் தெரியாது; இஷ்டமும் இருப்பதில்லை.
பிள்ளை வளர்ப்பு விஷயமாய் தாய்மார்கள் கஷ்டப்படுவதை ஹைக் கோர்டு ஜட்ஜி வேலையில் இருக்கிறவனுக்குக்கூட (இந்தியனுக்கு) தெரிவ தில்லை. ஒரு அன்புள்ள புருஷன் தன் பெண்ஜாதியின் சுகத்திலும், சந்தோஷத்திலும் கவலையுள்ளவனாய் இருக்கிறான் என்றால் அவன் கர்ப்பத் தடை முறையை கையாளுபவனாய் இருக்க வேண்டும். இல்லா விட்டால் குழந்தை பிரசவ விஷயத்திலும் குழந்தையை வளர்க்கும் விஷயத்திலும் தாயிக்குத் தொந்திரவு இல்லாமல் இருக்கும்படி செய்ப வனாய் இருக்க வேண்டும். இந்தக்காரியம் செய்ய கொஞ்சம் பணம் செலவாகும். அதாவது ஒரு தாதியை வைக்க வேண்டும். அத் தாதிக்கு 155 முதல் 10 ரூபாய்வரை கொடுத்தால்போதும். இந்தக்காரியம் செய்ய நமது பணக்காரர்கள் எவருக் குமே தோன்றுவதில்லை. ஆனால் குழந்தைகளுக்கு அனாவசியமான துணி மணிகள் நகைகள் முதலியவைகளில் ஏராளமான பணங்கள் செலவு செய் வார்கள். மற்ற சாதாரண குடும்பக்காரரும் கல்யாணத்
துக்கும் சாந்தி முகூர்த்தத்துக்கும் பிள்ளைப்பேரு சடங்குக்கும் ஏராளமான
குடி அரசு - 1933 (2 112
பணம் செலவு செய்வார்களே ஒழிய, பிள்ளையை ஒழுங்காய் வளர்க்க செளகரியம் செய்ய மாட்டார்கள். ஆதலால் மேல்கண்ட செலவுகளை யெல்லாம் நன்றாய் சுருக்கி சிக்கனம் செய்து தாதிகள் வைத்து பிள்ளைகள் வளர்க்கும் முறைக்குச் செலவிடவேண்டும். தாதிகளைத் தயார் செய்ய ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது பொதுவாகக் குழந்தைகள் வளர்க்கும் இடம் ஏற்படுத்தி அங்கு குழந்தை களைக் கொண்டுபோய்விட்டு சுகாதார ஒழுங்கு முறைப்
படியும், நல்ல பழக்க வழக்கம் குணங்கள் பழகும் ஒழுங்கு முறைப்படிக்கும் வளர்க்கச் செய்ய வேண்டும். இக்காரியங்களால் பெற்றோர்களுக்கு எவ்வளவு லாபமும், சந்தோஷமும் செளக்கியமும் இருக்கின்றது என்பதும், குழந்தைகளுக்கு எவ்வளவு செளக்யமும் நல்ல பழக்கவழக்கங்களும் குணங்களும் ஏற்படு கின்றது என்பதும், யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. ஆதலால் சிக்கன சீர்திருத்தக் கல்யாணம் செய்கின்ற வர்கள் இனிமேல் இவ்விஷயங்களைப் பற்றி கவனம் செலுத்துவார்களாக.
குடி அரசு - கட்டுரை - 10.09.1933
112 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பொது உடமை
பொது உடமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. கொஞ்ச காலத்திற்குமுன் நாஸ்திகம் என்கின்ற வார்த்தையும் இந்தப்படிதான் மக்கள். காதுக்கு ஒரு பெரிய அதிருப்தியானதும், வெறுப்பானதுமான சப்தமாகக்
கருதப்பட்டுவந்தது. என்றாலும் இப்போது, அது ஒரு தர்க்கவாதத்துக்கு ஏற்றதாகவும், சிலர் அதை ஒரு நாகரிகமாகக் கருதவும் சிலர் அவ்வார்த் தையின் கருத்தை, சாதாரண நோக்கத்தோடு கவனித்து “அது அவரவர்கள். அபிப்பிராயம்” என்பதாகவும், சிலர் ஜனசமூக வாழ்க்கைக் கட்டுப்பாட்டிற்கு “அந்தப்படி கடவுள் என்பதான ஒரு அபிப்பிராயம் இருந்தால் நல்லது” என்றும் கருதும் படியாகவும் இருந்துவருகின்றது. நாஸ்திக விஷயத்தில் இப்போது ஆத்திரங்காட்டுபவர்கள் எல்லாம் மதப்பிரசாரத்தினால் வாழ
லாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரசாரத்தை தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர மற்றவர்களுக்கு அதைப்பற்றி.
சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில்
நாஸ்திகத்தைப்பற்றி எந்தக் கூட்டத்திற்காவது சிறிது அதிருப்தி இருக்கும் என்று கருத வேண்டுமானால் அது போதிய கல்வி அறிவு பெறாத சமூகமும், முரட்டுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்துவரும் பிடிவாத சமூகமும், தங்களைத் தவிர வேறு வித உலக அபிப்பிராயம் இருக்கின்றது என்றுகூட உணரமுடியாமல் வைத்திருக்கும் பாமரக்கூட்ட சமூகமும் ஆகியவர்களுக் குள்ளாக இருந்துவரலாம். பொதுவாக 100க்கு 10 அல்லது 12 பேரே படித்த மக்களும், 100க்கு 80, 90 பேர்கள் தற்குரிகளாகவும் இருக்கும் ஒரு தேசத்து மனித சமூகத்தில் நாஸ்திகத்தை வெறுக்கும் ஜனங்கள் சிலராவது இருக்கிறார்.
கள் என்பதில் அதிசயமொன்றுமில்லை. ஏனெனில் நாஸ்திகம் என்பது அறிவு வளர்ச்சியினாலும், ஆராய்ச்சித் திரத்தினாலும், சுதந்திர உணர்ச்சி யாலும் ஏற்பட வேண்டிய விஷயமே ஒழிய; கடவுள் சொன்னார் என்று எழுதப்பட்ட புஸ்தகங்களில் என்ன சொல்லியிருக்கிறது என்றும்; தங்க ளைக் கடவுள் அவதாரமாகவோ, தூதர்களாகவோ குமாரர்களாகவோ சொல்லிக் கொண்டவர்கள் என்ன சொன்னார்கள் என்றும், பெரியோர்கள், ரிஷிகள், நபிமார்கள், நாயன்மார்கள், தீர்க்கத்தரிசிகள், ஆள்வார்கள்,
சித்தர்கள், ஞானிகள், மகாத்மாக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் என்ன
குடி அரசு - 1933 (2 114
சொன்னார்கள் என்றும், அவர்கள் சொன்னதாக ஏற்பாடு செய்த ஏடுகளிலும், புத்தகத்திலும் என்ன எழுதியிருக்கினறது என்றும் கவனித்து அவைகளுக் கெல்லாம் அடிமையாகி இருக்கும் அது விஷயத்தில் சுதந்திரமும், சுய அறிவும் இல்லாத மக்களுக்கு விளங்கக் கூடிய காரியம் அல்ல.
ஆகையால் அறிஞர்கள் அவ்விதமக்களின் கூப்பாடுகளை லட்சியம் செய்யாமல் இருந்துவருவதுடன் ஆராய்ச்சியையும், சுயபுத்தியையும் பற்றி பிரசாரம் செய்துவருகிறார்கள். ஆதலால்தான் இப்போது நாஸ்திகம் என்னும் வார்த்தையானது மிகச் சாதாரண வார்த்தையாகவும், நாகரீக ஆராய்ச்சி அபிப் பிராயமாகவும் கொள்ளப்பட்டு வருகின்றது என்று சொன்னோம்.
அதுபோலவே பொதுஉடமை என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும் சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரசாரங்கள் நடைபெறுவதாலும் பொது ஜனங்களுக்கு பொது உடமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பித மாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடை வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டு வந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இது தானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடமை என்னும் வார்த்தை
யும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா? வரவேற்கப்படு கின்றதா? வெறுக்கப்படாமல் இருக்கின்றதா? என்பவைகளைப்பற்றி கவனிக்காமல் அதுவிஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.
பொது உடமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும் படிகள், தொழில்கள், லாபநஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்
கள், பொருப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல் தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத் திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொது உடமைக் கொள்கையின் கடசி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து. குடும்பமக்கள் உலகமக்கள்! எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் உலகசொத்தில்! சரிபாகம் என்கின்ற கொள்கையேயாம். ஆகவே பொது உடமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathematic Problem) ஆகும்.
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொது உடமைக் கொள் கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரண மும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.
ஆனால் சகோதரனுடைய பங்கை மோசம்செய்து சகோதர துரோகத் தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும், குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொருப்பை தான் ஏற்றுக் கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேரியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போது மான அளவு கூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்ற வேண்டும் என்கின்ற தான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடமைக் கொள்கையை வெறுக்கவும் எதிர்க்கவும் கூடும்.
நிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத்தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில்
பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால், ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்ற தென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறு வித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப் பட்ட வேதாந்
தக் கொள்கைக்கு பொதுவுடமைத் தத்துவம் எவ்விதத்திலும் விறோத
மானதல்ல..
மதக்கொள்கைகளுக்கும், பொதுவுடமைத் தத்துவம் விறோத மானதாக இல்லை. எப்படியெனில் எல்லா மதமும் மக்கள் யாவரும் சகோ தரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்க வேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரே வித செல்வத்தையும் அடையவேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. ஆதலால் பொதுவுடமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விறோதமானது என்று சொல்லிவிடமுடியாது.
மற்றும் பொதுவுடமைத் தத்துவமானது ஆஸ்த்திகம் என்பதற்கும் விறோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்றதென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும் கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா மக்களும்
குடி அரசு - 1933 (2 116
சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்
களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்தி கர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.
மேலும் மகாத்மாக்கள் என்பார்களுக்கும், பொதுவுடமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விறோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவர்களையும் சரிசமமாய்ப்பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும் ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும். ஆதலால் அப்படிப்பட்ட தத்தவமுடைய வர்களுக்கு பொதுவுடமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவைதவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களு டைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோத
ரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும்படியான கொள்கை கொண்ட பொதுவுடமைத் தத்துவம் விறோதமாகவோ, ஆட்சேபிக்கத்தக்க தாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை..
மற்றும் தேசியம் என்பதற்கோ, தேசீயவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் விறோதமானது என்று சொல்லுவதற்கும்
இடமிருக் கக்காரணமில்லை. ஏனெனில் தேசீயவாதிகளுடைய கொள்கை யெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார். ஆளக் கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்ட தான அதாவது ஒருவருடைய உழைப்பின் பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும், ஒருவர்மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்க வேண்டும். எல்லோரும் சமமாய் அடையவேண்டும். எல்லோருக்காக எல்லோரும் ஆட்சிசெலுத்தவேண்டும் என்னும் கொள்கை கொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமூக சேவைக் காரருக்கோ, பொது நல சேவைக் காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவிற்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறான தென்றோ ஆட்சேபிக்கத்தக்கதென்றோ சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.
ஆனால் யாருக்கு விறோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்கதாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம் கொண்ட மக்களாகிய சக்கிரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன் தாரன், மிராசுதாரன், மேல்ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படு பவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சே பனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம்
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
லட்சியம் செய்ய வேண்டியதில்லை...
ஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர் களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்க வேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.
உதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர் களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகால மாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொது ஜனஆட்சி என்றும், குடிகளுடைய ஆட்சி என்றும் சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப்பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும், நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன்முதலாளி முதலியவர்களுடைய கொடுமை களையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம். கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார். களின் யோக்கிய தைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேரிகள் ஆகியவர்களுடைய லைசென்சு பெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர். களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப் தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் கிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொது வுடமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்ன வென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100-க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்து போகும். இதுதவிர அதிர்ப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்து விடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடமைத் தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்லவந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய கயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும்
குடி அரசு - 1933 (2 118
பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை
அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனி மனிதனில் ஆகட்டும், மனித சமூகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்ற
வர்களுக்கும் இருந்துதான் வருகின்றது. அரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ,
மற்றும் பெரும் பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னி யர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர. தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை...
மத சம்மந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்ற தன்மை என்று தான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட்மெத்தையில் சதா தூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப்பட்டாலும் அது புரோகிதர்களு டையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும்
துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.
ஆகவே பொது உடமை என்பது பொது மனித தர்மமென்றும் சகோதரத் தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த
தத்துவத்துக்கும், ஆஸ்திகத்தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசீயத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரிப் புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக்கூடியதென்றும் பொது உடமைத் தத்துவ மேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒரு வாறு சுருக்கமாய் விளக்கிக்காட்டியிருக்கிறோம், இனி பொது உடமைத் தத்து
வம் சாத்தியமா என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அள
வில் இன்று நமது நாட்டிலும் இருந்து வருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்' ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத்தமானதை மகிழ்ச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.09.1933.
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கடண்பட்டவர்களுக்குச் சிறைவாசம்
கடன்பட்டவர்கள் கொடுக்க சக்தி அற்றுப்போவது ஒரு சாதாரண: சம்பவமேயன்றி அது ஒரு குற்ற (கிரிமினல்) நடவடிக்கையாகாது. கடன் கொடுத்து வாங்குவது என்பது ஒரு சூதாடுவது போன்ற காரியம். அதாவது பிரைஸ்சீட்டு போட்டவன் தனக்கு பிரைஸ் லாபம்! எதிர்பார்ப்பது போன்ற காரியமாகும். எப்படியெனில் கடன் கொடுத்து வாங்குவது என்பதில் எவ்வித கருணையும், அன்பும், தரும சிந்தனையும், உபகாரமும் கிடை யவே கிடையாது.வெரும் லாபத்தை வெளிப்படையாய் எதிர்பார்த்துக் கடன் கொடுப்பது தவிர வேறில்லை. பிரைஸ் சீட்டு போடுபவனும், லாபத்தை எதிர்பார்த்தே போடுகிறானே ஒழிய வேறில்லை.
ஆகவே ஒருவனுக்குப் பிரைஸ் வரவில்லையானால் பிரைஸ் சேர்த்தவனை ஜெயிலில் வைக்க முடியுமா? அதுபோல் கடன் கொடுக்கப் பட்டவன் திருப்பிக் கொடுக்க சக்தியற்றுப் போனால் அதை ஒரு குற்றமாகக் கருதுவதும், அதை ஒரு குறைவாகக் கருதுவதும் முதலாளி ஆதிக்கத் தன் மையாகுமே ஒழிய அது சமதர்ம நீதியாகாது. அன்றியும் அது கொடுமை
யானதும், முட்டாள் தனமானதுமான குணமுமாகும்.
கடன் வாங்கினவனிடம் சொத்து இருந்தால் அதை எந்த வகையிலும் வசூலித்துக் கொள்வதுதான் தகுதியாகுமே ஒழிய சிறைப்படுத்துவதும், குற்ற வாளியாகவும், யோக்கியதைக் குறைவாயும் கருதுவது என்பது கூடவே கூடாது.
இதைப்பற்றி சுமார் 4, 5 வருஷங்களுக்குமுன் “குடி அரசுப் பத்திரிகையில் ஒரு வியாசம் எழுதப்பட்டுமிருக்கிறது.
இது நிற்க சமீபத்தில் லண்டனில் வெளியாகும் ஸ்பெக்டேட் என்னும் பத்திரிகை இது விஷயமாய் எழுதியிருப்பதாக “தமிழ்நாடு” பத்திரிகையில் கூறியதாவது:-
“கடன்பட்டோரைச் சிறைக்கு அனுப்புவதென்பது காட்டு மிராண்டித் தனமான கர்நாடகப் பழக்கமாகும். ஒருவர் கடன்
குடி அரசு - 1933 (2 120
கொடுக்க இயற்கையிலேயே சக்தியற்றிருக்கலாம் அல்லது வேலை உண்டாகப் பெறாதவர்களாய் இருக்கலாம். அத்தகை கையாள வேண்டுமேயன்றி, அவர்களைச் சிறைப்படுத்துவதால் யாருக்கும் நன்மையில்லை”
என்று குறிப்பிட்டிருக்கிறது. கொலைசெய்தவர்களுக்குக் கொலை தண்டணை விதிப்பதே அனாகரிகமென்றும், அது ஒழிக்கப்படவேண்டு மென்றும் பகுத்தறிவுள்ள தேசங்களில் கிளர்ச்சி செய்யப்பட்டுவருகின்றது. அப்படியிருக்க கடன்வாங்கித் திருப்பிக் கொடுக்கச் சக்தியற்றவனை ஜெயிலுக்கு அனுப்புவது என்பது முதலாளித்தன்மையின் கொடுமையே யாகும். முதலாளித்தன்மை ஆட்சி ஒழிக்கப்பட்ட நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமைகள் தலைகாட்ட முடியாது.
ஆதலால் இந்திய அரசாங்கத்தார் சீக்கிரத்தில் அறிவுபெற்று கடனுக் காக மக்களைச் சிறைப்படுத்தும் காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தை உடனேயொழித்துவிடுவார்களாக.
அன்றியும் கடன் பாக்கிக்காக ஒரு குறிப்பிட்ட வரும்படியைத் தவிர. வேறு சொத்தோ வரும்படியோ இல்லாமலிருக்குமானால் அந்த வரும்படி அவனுடைய குடும்பச் செலவுக்கு மாத்திரம் போதுமானதாய் இருக்குமா
னால் அம்மாதிரி கடனை வஜா வைத்து விடுவதோடு, டிக்கிரியை நிறை வேற்ற அனுமதியளிக்கவே கூடாது என்பதையும் சட்டமாக்கி விட வேண்:
டும். இந்தப்படி செய்தால்தான் கடன் கொடுப்பவர்களால் எந்தக் குடும்பமும் கெடாமல் இருக்கமுடியும் என்பதும் நமது அபிப்பிராயமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.09.1933
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
காகசிய காரணங்கள்
பரஸ்பர புகழ்ச்சி சங்கம்
- சித்திரபுத்திரன்
கேள்வி:- தோழர் CF. ஆண்ட்ரூஸ் அவர்கள் தோழர் காந்தியாரி டத்தில் அதிக அன்புகாட்டிவருவதன் காரணம் என்ன?
பதில்:- தோழர் காந்தியாருக்கு இந்தியப் பாமர மக்களிடம் அதிக மதிப்பு இருக்கிறது. ஆதலால் வெள்ளைக்காரர் காந்தியாரிடம் அதிக அன்பு இருப்பதாய் காட்டிக் கொண்டால் அந்த வெள்ளைக்காரரிடம் இந்தியர். களுக்கு அன்பு ஏற்படுமல்லவா? இதற்கு உதாரணம் வேண்டுமானாலும் சொல்லுகிறேன். தோழர் காந்தியவர்களை தனக்கு சரிசமமாய் பாவித்து சர்க்காரோடு ராஜிபேசிய தோரணையில் சம்பாஷணை நடத்தி ஒப்பந்தம் செய்து இருவர் கையெழுத்தும் ஒரு ஆதாரத்தில் இருக்கத்தக்க மாதிரியாய் நடந்து காந்தியிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் இருப்பதுபோல் காட்டிக்கொண்ட இர்வின் பிரபு இந்தியர்களின் அன்பையும், மதிப்பையும் பெற்று காந்தியார் வாயிலேயே இர்வின் பிரபுவை மகாத்மா என்று சொல்லும் படியாகக் கூட ஏற்பட்டு விடவில்லையா? ஆதலால் காந்தியாரிடம் மரியா தையும், மதிப்பும், பக்தியும் இருப்பதாக ஆண்ட்ரூஸ் துரை இர்வின் பிரபு போன்றவர்கள் அல்லாமல் ஒரு சாதாரண ஜீவன்-அதாவது வெருப்பாகவும், கேவலமாகவும் கருதப்படும் ஜீவன் நடந்து கொண்டாலும் அது இந்திய
மக்கள் மதிக்கவும், மரியாதை செலுத்தவும், புகழ்ந்து உதவுமான யோக்கியதை யை அடைந்துவிடும்.
கேள்வி:- தோழர்கள் சீனிவாச சாஸ்திரியார் மாளவியா போன்ற பார்ப்பனர்கள் காந்தியாரின் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் காந்தியார் நடவடிக்கைகளை ஆதரிக்காவிட்டாலும் ஏன் காந்தியாரை: புகழ்கின்றார்கள்? அன்றியும் தோழர் சாஸ்திரியார் மாளவியா ஆகியவர்கள். தனது கொள்கையை ஒப்புக் கொள்வதில்லை என்றும், செய்கையை ஆதரிப்பதில்லை யென்றும் தெரிந்தும் கூட காந்தியார் ஏன் இவர்கள் இருவரிடமும் மரியாதையும், மதிப்பும் வைத்து புகழ்கின்றார்?
குடி அரசு - 1933 (2 122
பதில்:- பரஸ்பர புகழ்ச்சி சங்கம் என்பதாக ஸ்தாபனமில்லாத பரம்பரை சங்கம் ஒன்று உண்டு. அதன் கொள்கை ஒருவரை ஒருவர்
புகழ்ந்து கொள்ளுவதின் மூலம் மக்களிடத்தில் மதிப்புப் பெருவது என்பதாகும். காந்தியாரை வெறுக்கும் மக்கள் சாஸ்திரியாரிடத்தில் மதிப் புள்ளவர்களாய் இருப்பார்கள். சாஸ்திரியாரை வெறுக்கும் மக்கள் காந்தி
யாரிடம் மதிப்புள்ளவர்களாயிருப்பார்கள். அது போலவே மாளவியாவை வெருக்கும் மக்கள் காந்தியாரிடம் மதிப்புள்ளவர்களாய் இருப்பார்கள். காந்தியாரை வெருக்கும் மக்கள் மாளவியாவிடம் மதிப்புள்ளவர்களாய் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களெல்லோரும் எல்லா மக்களிடமும் மதிப்
பும், ஆதரவும் பெறவேண்டு மானால் தங்களில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லாமல் ஒருவருக்கொருவர் புகழ்மாலை சூடிக்கொண்டால்தான் முடியும். ஆகவே இந்த மூவர்களுடைய வாழ்க்கையும் பொது ஜனங்கள் பேராலே ஏற்பட்டுவிட்டதால் பரஸ்பர புகழ்ச்சி சங்கத்தில் இம்மூவர்களும் ஆயுள் அங்கத்தினர் ஆகவேண்டியது அவசியமாகிவிட்டது.
சாஸ்திரியார் வெள்ளைக்காரர்களிடத்தில் மதிப்பு உண்டாக்கிக் கொண்டவர் ஆதலால் அவர் காந்தியாரைப் பற்றி வெள்ளைக்காரர் களிடத்
தில் மதிப்பாய் பேசுவார். அதற்காக காந்தியார் சாஸ்திரியாரிடம் அன்பும், மதிப்பும் இருப்பதாய் காட்டு அவரை பஹுமானிக்க வேண்டியதாயிற்று.
மற்றபடி சாஸ்திரியாரால் அவர் வாத்தியாராய் இருந்த காலம் முதல் அவர் மகாகனம் ஆகி நாளதுவரை இந்திய ஜனசமூகத்துக்கு ஏதாவது ஒரு கடுகளவு உபயோகம் ஏற்பட்டதென்று யாராலாவது சொல்லமுடியுமா? அன்றியும் 1920 வருஷத்திய ஒத்துழையாமையின்போது காந்தியாரை: அராஜகம் என்றும் அவரை கைதியாக்கவேண்டும் என்றும் அரசாங்கத் துக்கு சிபார்சு செய்வது போல் பேசியதும் அதன்பின் மகாகனம் பட்டம்
கிடைத்து அனுபவித்து வருவதும் யாரும் அறியாததா? இந்த காந்தியாரே அறியாததா? அப்படி இருக்க காந்தியார் ஏன் சாஸ்திரியாரை புகழ்கின்றார். சாஸ்திரியாருக்கு ஏன் விளம்பரம் கொடுக்கின்றார் என்றால் அதற்கு வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? அதுபோலவே மாளவியா அவர்களும் காந்தியாருக்கு அனேக விஷயங்களில் நேர்மாறான அபிப்பிராயம் கொண்டிருந்தும் ஏன் புகழுகிறார்? ஆகவே இந்தப்படி ஒருவரை ஒருவர். புகழ்ந்து தரவேண்டியது பொது ஜனங்கள் பேரால் வாழவேண்டியவர். களுக்கு அவசியமான காரியமாகும்.
கேள்வி:- பொதுஜனங்கள் பேரால் வாழுகின்றவர்கள் எல்லோரும் இப்படித்தானா?
பதில்:- 100-க்கு 90 பேர்கள் இப்படித்தான்.
கேள்வி:- அப்படியானால் அதை ஏன் எல்லோரும் பின்பற்றக் கூடாது.
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பதில்:- பொதுஜனங்கள் பேரால் வாழ்பவர்களுக்குத்தான் இது அவசியமாகும். பொதுஜனங்களுக்காக வாழ்பவர்களுக்கு இது அவசிய
மற்றதாகும் என்பதோடு இது விரோதமான பலனையும் தரும். ஆதலால் தான் சிலர் அதாவது பொதுஜனங்களுக்காக வாழுகின்றவர்கள் தங்கள் அபிப் பிராயத்துக்கு மாறுபட்டவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை: தங்குதடை இன்றியும், தயவு தாட்சண்யமின்றியும் கண்டித்துப் பேசி கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்வதுடன் விளம்பரம் பெராமலும் போகின்றார்.
கள். இந்தப்படி கெட்டபேர் வாங்கவேண்டியதும் அல்லது கெட்டபேர். வருமே என்று பயப்படாமல் இருக்கவேண்டியதும் பொது ஜனங்களுக்காக வேலை செய்கின்றவர்கள் கடமையாகும். பொதுஜனங்களால் பொதுக் காரியங்கள் என்பவைகளுக்காக பாபி என்று பேர் வாங்குபவர்களாலேயே பொது ஜனங்களுக்கு அனேக நன்மையான காரியங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் ஏதாவது நடக்கவேண்டுமென்றாலும் அப்படிப்பட்டவர்களால்
தான் முடியும். இன்றையதினமும் நான் தைரியமாய் சொல்லுவேன் என்னவென்றால் படித்த வர்களாலும், பார்ப்பனர்களாலும், பாதிரிகளாலும் “தேசீயப் பத்திரிகைக் காரர்களாலும், மதப் பத்திரிகைக்காரர்களாலும் எவன் எவன் எதிரியாய், விரோதியாய், தூற்றப்படுபவனாய், விளம்பரம் தரக் கூடாத வனாய் கருதப் படுகின்றானோ” அப்படிப்பட்டவர்களால்தான் மனித சமூகத்திற்கு நன்மை உண்டாகப்போகின்றது. உண்டாகியும் இருக்கின்றது. ஆதலால் பொது ஜனங்களுக்காக வாழுபவர்கள் பரஸ்பர புகழ்ச்சி சங்கத்தில் அங்கத்தி னர்களாய் இருக்க மாட்டார்கள்.
ஒரு மனிதன் உண்மையாகவே பொதுஜன நன்மைக்கு? (பொதுஜன நன்மையென்றால் கஷ்டப்படும், இழிவுபடும் மக்களுடைய நன்மைக்கு?) அனுகூலமானவராய் இருக்கின்றான் என்று பார்க்கவேண்டுமானால் அதற்குப் பரீட்சை என்னவென்றால், அந்த மனிதன் சுகப்படும் பெருமை அடைந்திருக்கும் மக்களுக்கு விரோதமாய் இருக்கிறானா? அந்த சுகப்படும் மக்களால் விரோதியாய் பாவிக்கப்பட்டு பாமர ஜனங்களுக்குள் பாபி என்று பரப்பப்படுகிறானா? என்பதை அறிந்து பிறகுதான் அப்படிப்பட்டவனை ஏழைமக்களின் தாழ்த்தப்பட்ட மக்களின் நண்பன் என்று எண்ண வேண்டும். அப்படிக்கு இல்லாமல் எவனெவன் சோம்பேறிக் கூட்டப் படிப் பாளிகளாலும் சூட்சிக்கூட்ட பார்ப்பனப் பாதிரிகளாலும் ஏமாற்றி வயிறு வளர்க்கும் தேசீயப் பத்திரிகைக்காரர்களாலும் புகழப்படுகிறானோ விளம்பரப்படுத்தப்படுகி றானோ அவனெல்லாம் ஏழைமக்களின் தாழ்த்தப் பட்ட மக்களின் - பாடுபட்டு உழைக்கும் மக்களின் விரோதிகள் என்றே கருதவேண்டும். இதுதான் அளவு கருவி.
குடி அரசு - கட்டுரை - 17.09.1933
குடி அரசு - 1933 (2 124
ரங்கநாதர் லாட்டரி அழக்கிறார்
- சித்திரபுத்திரன்
ஸ்ரீரங்கம் ரங்கனாதர் குடும்பச் செலவுக்கு இந்தபத்து வருஷகாலமாய் லாட்டரி அடித்துக் கொண்டு வந்திருக்கிறார். இதைப் பார்த்து நான் ஒரு
சிறிதும் வருத்தமோ-அதிசயமோ அடையவில்லை, ஏனெனில் உலகில் சோம்பேறிகள் கஞ்சிக்கே லாட்டரி அடிக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
இந்த ரங்கனாதன் என்னும் ஆசாமி ஒரு பெண்டாட்டிக்கு இரண்டு பெண்டாட்டி கட்டிக்கொண்டு போதாக்குறைக்கு ஒரு கூத்தியாரையும் வைத்துக்கொண்டு இருக்கும் மனிதன். இவன் சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியது சகஜமேயாகும். அதிலும் இந்த பாழும் ரங்கனாதன் யாதொரு வேலையும் செய்யாமல் தினம் ஐந்துவேளை சாப்பிட்டுவிட்டு என்னேரமும். விட்டம்போல் நீட்டி நிமிர்ந்து படுத்துக் கொண்டேயிருந்தால் இப்படிப்பட்ட சோம்பேறிகள் சோத்துக்கு லாட்டரி அடிக்கவேண்டியது அவசியம்தானே.
இதில் அதிசயமென்ன இருக்கின்றது? நமது ஜனங்களுக்கு புத்தி இருக்கு மானால் இந்த ரங்கனாதனை இந்த பூலோகத்தைவிட்டு வைகுண்டத்திற்கே. அனுப்பி இருப்பார்கள். நமது ஜனங்களுக்கோ கடுகளவு புத்தியும் கிடையாது. பிரத்தியார் சொல்லையும் கேழ்ப்பதில்லை. ஆகையால் இந்த ரங்கனாதன் லாட்டரி அடிக்கிறது மாத்திரமல்லாமல் இந்த ரங்கனாதனிடம் பக்திசெலுத்தி வழிபடும் மக்களும் சோத்துக்கும், கஞ்சிக்கும் லாட்டரி அடிச்சால்தான் நமக்குச் சந்தோஷமாய் இருக்கும். ஏன் என்றால் எப்படிப் பட்ட கடவுளை வணங்குகிறார்களோ அப்படிப்பட்ட குணம்தான் வணங்கு பவர்களுக்கும் உண்டாகும் என்பது ஒரு ஆஸ்திகக் கொள்கையாகும்; இது உண்மையானால் இப்படித்தானே இருக்கவேண்டும். இந்தக் கடவுள்கள். ரஷ்யாதேசத்தில் இருக்குமானால் இந்தப்படி சோம்பேறியாய் எந்நேரம் பார்த்தாலும் படுத்துக் கொண்டே ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பதற்கு துப்பாக்கி குந்தாவினால் இடித்து எழுப்பி வேலை வாங்குவார்கள். அந்தப்படி வேலை செய்யா விட்டால் மேல்லோகத்துக்கு அனுப்பிவிட்டு
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பக்தர்களுக்கு “உங்களுடைய கடவுள் சோம்பேறியாய் இருந்ததால் மேல்லோகத்துக்கு அனுப்பப்பட்டு விட்டார். வேண்டுமானால் நீங்களும்
சீக்கிரம் மேல்லோகம் சென்று அவரைச் சந்தித்துக் கொள்ளுங்கள்” என்று கடிதம் எழுதிவிடுவார்கள்.
நம்முடைய நாடு சோம்பேறிகள் அதிகம் உள்ள நாடு ஆனதால் இந்தக் கடவுள்களை இன்னம் வைத்துக் கொண்டு இந்தப்படி லாட்டரி அடிக்கச் செய்ய வேண்டியிருக்கிறது.
ஓரஷ்யக் கொள்கையே! இந்தக் கடவுள்களை ஒழிக்கவாவது சீக்கிரம் இந்தியாவுக்கு வரமாட்டாயா? கஷ்டப்பட்டு உழைக்கும்மக்கள் முப்பது கோடிபேர்கள் இரண்டு கையையும் கூப்பி கூவி அழுது அழைக்கின் றோமே உனக்கு மனம் இளகவில்லையா?'
குடி அரசு - கட்டுரை - 17.09.1933
குடி அரசு - 1933 (2 126
“ஹரினை'” இயக்க ரகசியம்
ஆக்ராவில் கூடிய “ஹரிஜன ” (தீண்டப்படாதார்! மகாநாட்டில் “ஹரிஜனங்களுக்கு பொருளாதார விஷயத்திலும், கல்வி விஷயத்திலும் முன்னேற்றம் ஏற்பாடு செய்வதைவிட ஆலயப்பிரவேசத்தைப் பற்றியே அதிகமாக வற்புறுத்துவது ஒப்புக் கொள்ளத்தக்கதல்ல” என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தோழர் காந்தியவர்கள். “ஹரிஜனம்” பத்திரிகையில் பதில் சொல்லுகையில்,
“ஹரிஜனங்களுக்குப் பொருளாதார முன்னேற்றமும், கல்வி முன் னேற்றமும் ஜாதி இந்துக்கள் தாங்களாகவே செய்யவேண்டிய காரியமாகும். பொருளாதாரம், கல்வி ஆகிய துரைகளில் ஹரிஜனங்கள் உயர்த்தப்பட்டு
விட்டால் மதத்துரையில் அவர்கள் சமத்துவமானவர்களாகி விடமாட்டார்
கள். ஆதலால் ஹரிஜனங்கள் ஆலயப்பிரவேசத்தை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஜாதி இந்துக்கள் தங்களுக்கு எந்த நிபந்தனைகள் மீது கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றனவோ அதே நிபந்தனைகளின் மீது ஹரிஜனங்களுக்கு கோவில்களை திறந்துவிடவேண்டும்” என்பதாக எழுதியிருக்கிறார்.
இதிலிருந்து ஹரிஜன வேலையின் இரகசியம் என்ன என்பதைப்பற்றி
நாம் இதற்கு முன் எழுதிவந்த விஷயம் உண்மை என்பது நன்றாய் விங்கும். “ஹரி” ஜனங்களுக்கு வேண்டியதெல்லாம் ஜாதி இந்துக்களைப் போன்ற கல்வியும், ஆகாரமுமாகும். ஆனால் காங்கிரசும், காந்தியாரும், ஹரிஜனங் களுக்கு கொடுப்பது ஆலயப்பிரவேசமாகும். இதன் இரகசியம் ஹரி ஜனங்கள் பொருளாதாரத் துறையிலும், கல்வியிலும், முன்னேறி விட்டால் ஜாதி ஹிந்துக்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுவார்கள். அப்பொழுது வருணாச்சிரம தர்மம் அழிந்துபோக நேரிடும். ஆதலால் ஹரிஜனங்கள் பொருளாதாரக் கிளர்ச்சியும், கல்விக் கிளர்ச்சியும் செய்வதற் கில்லாமல் செய்வதற்கு அவர்களை கோவிலுக்குள் கொண்டுபோய்த் தள்ளிவிட்டால் கடவுள்மீது பக்தி ஏற்பட்டு தங்கள் கையிலுள்ள காசையும் சாமிக்கு அழுது விட்டு தங்களுக்கு கல்வியும், பணமும் வேண்டுமென்று
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கடவுளையே கேட்டுக்கொண்டு பழயபடியே மூடர்களாக இருக்கச் செய்துவிடலாம் என் கின்ற தந்திரமே ஒழியவேறில்லை..
ஆதலால் ஹரிஜனங்களுக்கு “ஆலயப்பிரவேசம், ஆலயப் பிரவேசம்” என்று சத்தம் போடுவதெல்லாம் அவர்களது பொருளாதார முயற்சிக்கும், கல்வி முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகுமே தவிர வேறொன்றும் அல்ல என்பதே நமது அபிப்பிராயம். இதை ஹரிஜனங்கள். என்பவர்களும் நன்றாய் தெரிந்துகொண்டதற்கு நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆனால் காங்கிரசினிடமிருந்து பணம் பெற்று வயிறு வளர்க்கும் ஹரிஜனங்களும் காங்கிரசின் பிச்சையினால் லஞ்சத்தினால் அல்லாமல் வேறுவழியில் வயிறு வளர்க்கவோ, விளம்பரம் பெறவோ, யோக்கியதை இல்லாத ஹரிஜனங்களும் தங்கள் சமூகத்தை துரோகம் செய்து காங்கிரசின் சூழ்ச்சிக்கு இடம்கொடுத்து வருவதில் நமக்கு ஆச்சரியமில்லை. எந்தக் கூட்டத்திலும் எந்த இயக்கத்திலும் இப்படிப்பட்ட நபர்கள் 100-க்கு
ஒன்று இரண்டு இருந்துகொண்டுதான்வரும். ஆதலால் “ஹரிஜன சமூகத் திலும் இப்படிப்பட்டவர்கள் இருப்பது இயற்கையேயாகும். எனவே சம தர்மக் கொள்கையில் நம்பிக்கையோ, அனுதாபமோ உள்ளவர்கள் இந்த ஆலயப்பிரவேசத்தின் தந்திரத்தை உணர்ந்து பொருளாதார சமத்துவத் திற்கே உழைத்து வருவார்களாக.
குடி அரசு - செய்தி விளக்கம் - 17.09.1933.
குடி அரசு - 1933 (2 128
ஸ்தை ஸ்தாபன அவை்கோலம்
ஈரோடு தாலூகா போர்டு தலைவர் தேர்தல் சம்மந்தமாய் ஏற்பட்ட வழக்குகள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதுசமயம்
1. ஹைகோர்ட்டில் இரண்டு அப்பீல்கள் ஸ்டே புரசீடிங்ஸ் ஆர்டர். களுடன் இருந்து வருகின்றன.
2. ஈரோடு டிஸ்டிரிக்ட் முன்சீப் கோர்ட்டில் இன்ஜங்ஷனுடன் ஒரு
சூட் இருந்து வருகிறது.
3. ஈரோடு ஸ்டேஷனரி சப்மேஜிஸ்டிரேட் கோர்ட்டில் பழய பிரசி டெண்டு மீது சட்டப்படி அதிகாரமில்லாத காலத்தில் பிரசிடெண்டு செய்யவேண்டிய வேலைகளை செய்ததாக ஒரு பிராது, ஆக 3 இடங்களில் விவகாரங்கள் நடக்கின்றன.
ஈரோடு தாலூகா போர்டு பிரசிடெண்டாயிருந்த தோழர் பழைய கோட்டை பட்டக்காரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லா போர்டு வைஸ்பிரசி டெண்டானவுடன் ஈ.தா.போ. பிரசிடெண்டு வேலைகாலியானதினால் அதற்கு முன்பு ஈ.தா.போ. வைஸ்பிரசிடெண்டாயிருந்த தோழர் வி.எஸ். ராஜாக் கவுண்டரும், தோழர் எஸ்.கே. சென்னியப்ப கவுண்டரும் அபேகஷகர்களாயிருந்ததில் தோழர் வி.எஸ்.ராஜாக்கவுண்டர் வெற்றிபெற்
றார். தோல்வி உற்றவர் இந்த எலக்ஷனை மாற்றி தன்னை தெரிந்தெடுத் ததாகக் கருத வேண்டுமென்று ஆக்ஷேபித்து ஒரு விண்ணப்பம் கொடுத்த
தால் எலக்ஷன் (ஓட்டுகள் வெளிப்படையாய் செய்யப்பட்டிருக்கிறபடியால்! செல்லாது என்றும் வேறு எலக்்ஷன் நடைபெறவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இந்த தீர்மானத்தை ஒப்புக்கொள்ளாமல் வாதி, பிரதிவாதிகள் இருவரும் தங்கள் தங்களையே தெரிந்தெடுக்கப்பட்டதாக தீர்மானிக்க வேண்டுமென்று ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருக்கிறார்கள்.
இதன் மத்தியில் இந்த பிரசிடெண்டு எலக்ஷன் ஆனபிறகு அவரது வைஸ்பிரசிடெண்டு வேலை காலிஆகிவிட்டதால் வை.பி.எலக்ஷன் ஆனதில் சித்தோடு தோழர் ராமசாமிக்கவுண்டர் வை.பி. ஆக தேர்ந்தெடுக் கப்பட்டார். ஆனால் பழைய வைஸ்பிரசிடெண்டு தோழர் வி.எஸ்.ராஜாக்
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கவுண்டருக்கு பிரசிடெண்டு எலக்ஷன் கேன்சல் ஆனவுடன் அவர் தானே வைஸ்பிரசிடெண்டு என்பதாக சொல்லி புதியதாய் எலக்ஷனான வைஸ் பிரசிடெண்டு ராமசாமி கவுண்டருக்கு சார்ஜ் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் வைஸ்பிரசிடெண்டு தோழர் ராமசாமி கவுண்டர் டி.மு.கோர்ட்டில் தன்னை வைஸ் பிரசிடெண்டாக கருதவேண்டுமென்று சொல்லி ஒரு தாவா போட்டு தோழர் ராஜாக்கவுண்டர் வைஸ்பிரசிடெண்ட் வேலைபார்க்கக் கூடாது என்று இன்ஜங்ஷன் வாங்கி இப்போது தானே வைஸ் பிரசிடெண் டாய் இருந்து வருவதுடன் பிரசிடெண்டு வேலைகள் பூறாவும் பார்த்து வருவதுடன் பிரசிடெண்டு எலக்ஷனுக்கு (தோழர் ராஜாக்கவுண்டர் தான் வைஸ் பிரசிடெண்ட் என்று கருதி இம்மாதம் 1-ம் தேதி குறிப்பிட்டிருந்ததை மாற்றி தோழர் ராமசாமிக் கவுண்டர் வைஸ் பிரசிடெண்ட் உத்தியோகம் ஏற்றவுடன்! இம் மாதம் 15 தேதி போட்டிருந்தார். தோழர் ராஜாக்கவுண்டர். இதை ஆக்ஷேபித்து ஹைக்கோர்ட்டில் விண்ணப்பம் போட எலக்ஷன் நடைபெறக்கூடாதென்று ஸ்டே புரசீடிங்ஸ் ஆர்டர் பெற்று இருக்கிறார்.
இதன் மத்தியில் ஒரு மெம்பரான தோழர் கே.எஸ்.பெரியசாமிக் கவுண்டரால் தோழர் ராஜாக்கவுண்டர் தனக்கு அதிகாரமில்லாத காலத்தில் தன்னை வைஸ் பிரசிடெண்டு என்று சொல்லிக்கொண்டு வேலை பார்த்தது குற்றம் என்று ஈரோடு சப் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒரு பிராது கொடுத்
திருக்கிறார்.
இப்படியாக 3 கோர்ட்டுகளில் விவகாரங்கள் இருக்கின்றன. யார்.
ஜெயித்தாலும் யார் தோற்றாலும் கடைசியில் இந்த செலவுகளுக்கும் மெனக் கேடுகளுக்கும் பரிகாரம் வெற்றிபெற்று பதவி அனுபவிப்பவர்கள். இந்தப் பதவியின் மூலம் தான் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டிவரும். ஏனெனில் மற்ற போர்டுகளில் அனேகம் இப்படித்தான் நடந்து வருகின்றன.
இன்றையதினம் ஸ்தலஸ்தாபனங்களில் நடக்கும் நாணையக் குறைவான காரியங்களும், யோக்கியப்பொறுப்பற்ற காரியங்களும், போலீசி
லும் இல்லை, வக்கீல்களிடமும் இல்லையென்று தாராளமாய்ச் சொல்லலாம்.
அந்தந்த இடங்களில் இருக்கும் செல்வாக்குள்ள மிராசுதாரர்கள் குடி களைத் துன்பப்படுத்த மணியம் வேலையை ஒரு லைசென்சாய் உபயோகித்து வந்தார்கள். ஆனால் இப்போது அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்தல ஸ்தாபனங்களின் பதவிகள் அரசாங்கத்தினிடமும் பொது ஜனங்களிடமும் பெற்ற பெரிய லைசென்சாக இருந்துவருகின்றன.
இம்மாதிரி ஸ்தாபனங்களுக்கு தலைவர்களையோ, அங்கத்தி னர்களையோ, அரசாங்கத்தார் நியமனம் செய்த காலத்தில் இல்லாத குற்றங் களும், அக்கிரமங்களும் இப்போது ஜனங்கள் தெரிந்தெடுக்கும்போது அதிய மாயும் அனேக விஷயங்கள் புதியதாகவும் இருந்து வருகின்றனவே
குடி அரசு - 1933 (2 130
தவிர இதில் ஒன்றும் குறையவே இல்லை என்று சொல்லலாம்.
அதற்கு உதாரணம் வேண்டுமானால் இந்த இருபது முப்பது வருஷ காலமாய் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு இருந்துவந்த அதிகாரங்களும், நம்பிக் கைகளும் எடுபட்டுப்போய்விட்டது ஒன்றே போதுமானது. இந்தக் காரணங் களாலேயே இப்பொழுது முனிசிபாலிட்டிகளுக்கு நிர்வாக உத்தியோ கஸ்தர்களை சர்க்கார் நியமித்துவிட்டார்கள். அதுபோலவே ஜில்லா போர்டு
களுக்கும், தாலூகாபோர்டுகளுக்கும் நியமிக்கவேண்டியது மிகமிக அவசர
மாகும்.
இதுதவிர ஜில்லாபோர்டையும், தாலூகா போர்டையும் அடியோடு எடுத்துவிட்டு ஜில்லா போர்டு வேலைகளை கலெக்டர்களைக் கொண்டும், தாலூகா போர்டு வேலைகளை டிப்டி கலெக்டர்களைக் கொண்டும் பார்த்து வரும்படி செய்தால் பணம் சரிபங்கு மீதியாகும். ஜனங்களுக்கும் இரண்டு பங்கு நன்மை ஏற்படும்.
இவைகளையெல்லாம்விட மனித சமூகம் கொள்ளை, திருட்டு, புரட்டு அயோக்கியத்தனம், கொலை பாதகத்தனம் ஆகிய “அருங்” குணங் களை கற்றுக்கொள்வதற்கு ஆரம்பப்பாட சாலையாக இடங்கொடுத்து வரும் ஒரு தன்மையும் ஒழிந்து மனிதர்களை நன்னடக்கையுடன் இருக்கச் செய்யும்.
ஏனெனில் செல்வவான்கள் எண்ணம் எப்பொழுதும் மோசத்திலும் அயோக்கியத் தனத்திலுமே ஊருகிறது. அதிலும் கிராமங்களிலுள்ள செல்வ வான்களது எண்ணத்தைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். அதிலும் ஸ்தல ஸ்தாபனப் பதவிகள் என்னும் லைசென்சையும் அவர்கள் கையில் கொடுத்துவிட்டால் அதைப்பற்றி விவரிக்கவும் வேண்டுமா என்று கேட் கின்றோம்.
இம்மாதிரியான காரியங்கள் அரசாங்கத்தின் யோக்கியதையையும் அவர்களது நடவடிக்கையையும் தான் பிரதிபலிக்கின்றது என்று சொல்ல வேண்டியிருக்கிறதே ஒழிய வேறு ஒன்றுமே இல்லை. ஆகையால் யோக்கிய மான ஆட்சியில்தான் யோக்கியமான நடவடிக்கைகளைக் காணமுடியு மென்கின்ற முடிவுப்படி இன்றைய ஆட்சித்தன்மைகளை ஒவ்வொரு துறை யிலும் அடியோடு மாற்றியாக வேண்டியதாய் இருக்கின்றது என்பதையும் அதற்காக வெகு தீவிரமான புரட்சி முறைகளையும், கையாள வேண்டியிருக் கிறதென்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 17.09.1933
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வாலியர் கடமை
வபொதுஷடமைக்கும் ௬ுயாராஸ்யத்துக்கும் ங்மந்கமில்
சுயராஜ்யம் என்பது அரசியலைப் பொருத்தது. அது எந்த தேசத்தை,
யார் ஆளுகிறது என்பதையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமை என்பது பொருளாதாரத்தையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுட மைக் கொள்கையைப்பற்றிய விஷயத்தில் ஆட்சிசெய்பவர்கள் யார் என் பதைப் பற்றியோ, எந்த தேசம் ஆதிக்கமுள்ளதாய் இருக்க வேண்டு மென்று எல்லை கட்டுவதிலோ பிரவேசிக்கவேண்டிய அவசியமே இல்லை. பொது உடமை என்பது மேல் குறிப்பிட்டபடி வெறும் பொருளாதாரப் பிரச்சி னையே ஆகும். அதுவொரு கணக்குப் பிரச்சினை என்றும் சொல்லலாம். உலகத்தை ஒரு குடும்பமாக்கி உலக மக்களை ஒரு குடும்பமக்களாக்கி உலக செல்வத்தையும் சுக துக்கதையும் அக்குடும்பத்துக்குப் பொதுவாக்கி அக்குடும்ப மக்கள் எல்லோரும் அக்குடும்ப சொத்துக்களை சரிசமமாய் அனுபவிக்கும்படி செய்யும்முறையே பொது உடமைத் தத்துவமாகும்.
இதனால் யாருக்கும் ஏற்றத்தாழ்வோ ஜாஸ்தி கம்மியோ இல்லாமல் இருக்கும் என்கின்ற முடிவின்பேரிலும் உலகவாழ்க்கையில் மக்கள் உயர்வு தாழ்வும் ஜாஸ்திகம்மியும் அனுபவிப்பது மனித இயற்கை என்றும் இந்தப் படி இருக்கவே மனிதன் ஏற்பட்டவன் என்றும் இந்தப்படியான வித்தியாச வாழ்வு அமைப்பு அவனவன் முன்ஜன்ம கர்மப்படியும் கடவுள் சித்தப்படி
யும் ஏற்பட்டதென்றும் சொல்லும் கொள்கையை அடியோடு தப்பு என்கின்ற முடிவின்பேரிலும் இப்பொதுவுடமைக் கொள்கை கண்டுபிடிக்கப்பட்டு அது சில இடங்களில் அனுபவத்தில் இருந்து வருகின்றது.
ஆகையால் இக்கொள்கையை வற்புறுத்துகின்றவர்கள் இன்னார் ஆள வேண்டும் என்கின்ற பிடிவாதம் இல்லாமல் இன்ன கொள்கையின் மீது ஆளப்படவேண்டும் என்கின்ற பிடிவாதத்துடன் கிளர்ச்சியோ புரட்சியோ செய்து புரட்சி ஏற்படுத்தவேண்டியது வாலிபர் கடமையாகும்.
குடி அரசு - கட்டுரை - 17.09.1933
குடி அரசு - 1933 (2 132
இன்னுமா காந்தீயம்?
காந்தீயம் படுத்துவிட்ட தென்றும், அதனால் இதுவரையில் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்றும், அதை இனியும் பரீக்திப்பதால் யாதொரு பயனும் ஏற்படாது என்பதோடு அது முட்டாள் தனமும், தற்கொலையு
மாகும் என்றும், இமயமலை முதல் கன்னியாகுமரி வரை இன்று ஒரே அபிப் பிராயமாக இருந்து வருகின்றது. ஆனால் தோழர் காந்தியவர்கள் மாத்திரம்
தான் “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்ற பழமொழிபோல் தன்னுடைய சொந்த கெளரவத்தை முன்னிட்டு இதை ஒப்புக்கொள்ளாமல் இருப்பதாக காட்டிக்கொண்டு இருப்பது தான் தோல்வி அடையவில்லை என்றும் தனது கொள்கை பயனற்று (வெத்தி வேட்டாய் புஸ்ஸ்ஸென்று போகவில்லை யென்றும், பாமர ஜனங்களைக் கருதும்படி செய்யவேண்டும் என்கிற துறை யிலேயே தனது முயற்சியை எல்லாம் செலவழித்து வெகுதீவிரமாய் உழைத்து வருகிறார். இந்த உழைப்புக்கு அவருடைய பிரதம சிஷ்யர்கள்
சிலரும் காந்தீயத்தாலன்றி வாழ முடியாத சில காந்தீய சன்னியாசிகளும், காந்திமட சன்னியாசிகளும் தங்கள் தங்களால் கூடிய அளவு உதவி புரிந்து வருகின்றார்கள். என்றாலும் காந்தீயத்தால் பிழைத்து வந்த பத்திரிகைகாரர்.
கள் அநேகர் இனி இதை நம்பினால் பயன்படாது என்று கருதியதோடு வில்லிங்டனார் அடக்குமுறைக்கு பயந்தும் வேறு வழியில் திரும்பிக் கொண்டதால் இளி யார் எப்படிப்பட்ட உதவி செய்தாலும் அது மறுபடியும் தலைதூக்க முடியாத காரியமாய் போய்விட்டது.
தோழர் காந்தியாருக்கு பத்திராதிபர்களின் ஆதரிப்பு குறைந்து விட்டது என்று தோன்றியவுடன், மிதவாதிகள் என்னும் கூட்டத்தையாவது பிடித்து ஏதாவது பரிகாரம் தேடிக்கொள்ளலாமா என்று பார்த்ததில் அவர். களும் கைவிட ஆரம்பித்துவிட்டார்கள். ஏனெனில் மிதவாதிகள் என்பவர்
கள் தங்கள் தேர்தல்களுக்குப் பங்கம் ஏற்படாமல் இருக்கவேண்டிய அளவுக்கு மாத்திரமே காந்தியாரின் பெயரை உபயோகித்துக் கொண்டி ருந்தவர்களே ஒழிய அவர்களுக்கு காந்தியாரிடத்தில் கடுகளவு நம்பிக் கையோ அனுதாபமோ ஒரு நாளும் இருந்ததில்லை. ஆகவே இனிமேல் தேர்தலில் நிற்கின்றவர்கள் காந்தியாரின் பெயரை உபயோகிக்கவேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் தெரிந்து கொண்டவுடன் அவர்களும் காந்தியாரை அலட்சியம் செய்ய தீர்மானித்து விட்டார்கள்.
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
நிற்க, இப்போது காந்தியார் தனது ஒவ்வொரு வார்த்தையிலும், தான் எதிர்பாராமல் சிறையிலிருந்து விடுதலையாகி விட்டதாகச் சொல்லிக் கொண்டே வருவதை வாசகர்கள் கவனித்து இருந்தால் அதிலிருந்து ஒரு விஷயத்தை உணரலாம். அதென்னவெனில் இப்போது ஜனங்களில் அதிகம் பேருக்கு காந்தியார் அனாவசியமாய் பட்டினியிலிருந்து விடுதலையானார். என்றும், அப்பட்டினிக்கு விடுதலையாக வேண்டும் என்கின்ற காரணம் அல்லாமல் மற்றபடி வேறு எவ்வித நியாயமான காரணமும் இருக்க இட மில்லை என்றும் கருதி இருப்பதால் இக்கருத்தைமாற்றவே அவர் “நான் எதிர்பாராமல் விடுதலை அடைந்துவிட்டேன்” “எதிர்பாராமல் விடுதலை அடைந்து விட்டேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டிய தாகிவிட்டது.
காந்தியார் முதல் முதலில் விடுதலை அடைந்ததும் பட்டினியின் காரணத்தினாலேயாகும். அதாவது தீண்டப்படாத மக்களின் தனித் தொகுதியை ஒழிக்க என்று பட்டினி இருந்ததாகும்.
அரஸ்டு செய்யப்பட்டு விடுதலை அடைந்ததும் பட்டினியின் காரணத்தினாலேயாகும். அதாவது தனது சகாக்கள் சில தப்பிதம் செய்ததற் காக என்று பட்டினி கிடந்து விடுதலை அடைந்ததாகும்.
இப்போது விடுதலை அடைந்ததும் பட்டினியின் காரணத்தினா லேயாகும். அதாவது சிறையில் ஹரிஜன வேலை செய்ய சர்க்கார் அதிக செளகரியம் அளிக்காததினால் என்று பட்டினி இருந்ததாகும்.
இப்படியே ஒவ்வொரு தடவையும் தான் பட்டினி கிடப்பதாகச் சொல்லி பட்டினி ஆரம்பித்தவுடன் சர்க்கார் விடுதலை செய்து கொண்டே வந்திருக்கிறார்கள்.
( இந்தத்தடவை மாத்திரம் சர்க்காரார் முன்போல் உடனே விடுதலை செய்துவிடாமல் பலாத்காரமாய் ஆகாரத்தைச் செலுத்த துணிவு கொண்: டார்கள் என்றாலும் தோழர் ஆண்ட்ரூஸ் முதலியவர்கள் பிரவேசத்தினால் விடுதலை செய்துவிட்டார்கள்?
அப்படி இருக்க இந்தத் தடவையும் தான் பட்டினி ஆரம்பித்தால் சர்க்கார் தன்னை விடுதலை செய்துவிடுவார்கள் என்று தோழர் காந்தி எதிர்.
பார்க்காமல் இருந்திருக்கமுடியுமா என்பதை வாசகர்கள்தான் முடிவுசெய்து கொள்ள வேண்டும்.
அன்றியும் இந்த விடுதலைக்கு தோழர் ஆண்ட்ரூசால் ஏதாவது ஒப்பந்தம் நிகழ்ந்திருந்தாலும், நிகழ்ந்திருக்கலாம் என்றும் சிலர் கருது கிறார்கள். இது எப்படி இருந்தாலும் தோழர் காந்தியவர்கள் முன்பு விடுதலை அடைந்தவுடன் எப்படி “தனிப்பட்ட சட்ட மறுப்பு செய்யவேண்டியது தவிர
குடி அரசு - 1933 (2 134
வேறு ஒரு மார்க்கமும் தனக்கு இல்லை” என்று சொன்னதுடன் இந்த சட்டமறுப்பு செய்து சிறைசெல்லவேண்டியதின் அவசியத்தைப்பற்றி சொல்லும்போதும், “நான் வெளியில்வந்து ஜனங்களுடன் பழக நேர்ந்ததில் படித்தவர்களும், படிக்காதவர்களும், மேல்ஜாதிக்காரரும், கீழ்ஜாதிக்காரரும், பணக்காரர்களும், ஏழைகளும் சீர்குலைந்திருப்பதைக் கண்டதாகவும் அவர்கள் தங்கள் உடமைக்கும், சுதந்திரத்திற்கும் ஆபத்து வருமென்று பயப்படுவதாகவும் ஆதலால் அஹிம்சையில் நம்பிக்கையுள்ள நான் சிறைபுகுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி சிறைபுகுந்து இருக்கிறார்.
ஆனால் இப்போது வெளிவந்த காந்தியவர்கள் வெளிவந்தது முதல் இவ்வளவு நாள்யோசித்தும் தோழர் ஜவஹர்லால் உடன் இரண்டு மூன்று
நாள் கலந்து பேசியபிறகும் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறுவது என்னவென்றால் “நான் இனி ஒருவருஷ காலம் சட்ட மறுப்பிலிறங்கி சிறைபுகுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்” என்றும் இந்த ஒரு வருஷகாலத்துக்குள் தான் சட்ட மறுப்புச்செய்து சிறைக்குச்செல்லுவது அற்பத்தனம் என்றே தனக்கு படுகின்றது என்றும் விளக்கமாகச் சொல்லி விட்டார்.சிறிது நாளைக்குமுன் தான் “தேசம் சீர்கெட்ட நிலையில் இருக்கும். போது அஹிம்சையில் நம்பிக்கையுள்ள சத்தியாக்கிரகி சிறையிலிருக்க வேண்டும்” என்று சொன்னவர் இப்போது ஒரு மாதத்திற்குள் “இந்த சமயத்
தில் ஜெயிலுக்கு போகக்கூடாது” என்றும் “ஜெயிலுக்குப் போவது அற்பத் தனம்” என்றும், சொல்லும்படியான நிலைமை எப்படி ஏற்பட்டதென்பது நமக்கு புரியவில்லை. ஒரு சமயம் தேசம் சீரடைந்துவிட்டதாக கருதிவிட் டாறோ என்பதும் விளங்கவில்லை.
அல்லது ஒருசமயம் வில்லிங்டன் துரைமகனாரின் சண்டித்தனம் காந்தியாரின் சண்டித்தனத்தை ஜெபித்து விட்டதோ என்னமோ என்றும் நினைக்கவேண்டியிருக்கிறது.
காந்தியாருக்கு வில்லிங்டனாரிடம் போய் நேரில் பேசி ராஜி என்ற பேரால் ஏதாவது ஒருவழியில் தனது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது, வில்லிங்ட னாரோ இதை அறிந்துகொண்டு ஒரே பிடிவாதமாய் கல்உளி சித்தன்போல் சண்டித்தனம் செய்கிறார். அதென்னவென்றால் சட்டமறுப்பை நிறுத்தி விட்டேன் என்று சொன்னால் ஒழிய காந்தியாரின் முகத்தில்கூட விழிக்க மாட்டேன் என்று சிறு குழந்தைகள்போல் ஹடம்சாதிக்கிறார். இந்த நிலையில் காந்தியார் மறுபடியும் சிறைக்குச் சென்று பட்டினி இருந்தால் வில்லிங்டன் அரசாங்கம் என்ன செய்யும் என்பது காந்தியாருக்கு நன்றாய் தெரியும் ஆதலால் இரண்டு சண்டிகள் தங்களது சண்டித்தனத்தை நடத்திக்கொண்டே போனால் (இரண்டு நேர்கோடுகள் எப்படி ஒன்று சேராதோ அதுபோல்) ஒரு
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
முடிவுக்குவர முடியாதநிலை ஏற்பட்டுவிடுமாதலால் ஏதாவது ஒரு சண்டி (பலக்குறையுள்ள சண்டி) வழிக்குவந்து சற்று இறங்கிவந்தால்தான் முடியு மெனக் கருதி காந்தியாரே “பெரும் தன்மையுடன்” இறங்கிவந்து, சரி வில்லிங் டனார் இஷ்டப்படிதான் ஆகித் தொலையட்டுமே எனக் கருதி இனிமேல் (ஒருவருஷ காலத்துக்கு) சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய எந்தக் காரியத்தையும் செய்து ஜெயிலுக்குப் போவதில்லை என்று வாக்குக் கொடுக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாக வேண்டியதாய் போய் விட்டதோ என்பதும் விளங்கவில்லை.
எப்படி இருந்தாலும் இந்தக்காரியம் இவ்வளவும் காந்தியார் தன் இஷ்டப்படி செய்யாமல் “நன்றாய் பிரார்த்தனை செய்து ஆழ்ந்த சிந்தனை என்னும் யோகத்தில் இறங்கி பகவானுடைய உத்திரவு பெற்றபின்பே அதாவது பகவானின் உத்திரவுப்படியே செய்து வருகிறேன் என்கிறார். ஆத லால் (கடவுள் நம்பிக்கையுள்ள வேறு எவருக்கும் இதில் குற்றம் கண்டு
பிடிக்க இடமில்லை”.
இதுதவிர தோழர் காந்தியார் மற்றொரு விஷயத்தையும் ஒளிக்காமல் சொல்லிவிட்டார். அதென்னவென்றால் நான் பொதுத்தொண்டில் இறங்கிய
காலம் முதல் ஒரு காரியம் ஏதோ ஒரு வழியில் முடிவுபெற்றுவிட்டால் அடுத்தபடியாக என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக முன்னதாக தெரிந்துவிடும். ஆனால் (இந்த எதிர்பாரத விடுதலையினால்) இப்போது என்னை இருட்டு (அறியாமல்) மூடிக்கொண்டது. எனது உடமை என்ன என்பது எனக்கு விளங்கவில்லை என்று சொல்லுகிறார்.
“ஓவ்வொரு காரியத்தையும் கடவுள் பிரார்த்தனை செய்து ஆழ்ந்து யோசிப்பவர்” யோக்கியதை இப்படியிருக்குமானால் இனிமற்ற சாதாரண ஆத்மாக்களுக்கு என்ன விளங்கக் கூடுமென்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆகவே காந்தீயத்தின் நிலை இப்போது எப்படி
இருக்கின்றது என்பதற்கு இது ஒரு தக்க சந்தர்ப்பமாகும்.
இனி மற்றொரு வீரரின் நிலையைப்பற்றி சிறிது யோசிப்போம். அதாவது காந்தியாருக்குப் பின் இந்திய தேசியத் தலைவராக வரவேண்டும் என்று வாலிபர்களால் எதிர் பார்க்கப்படும் தோழர் ஜவஹர்லால் அவர் களைப் பற்றியேயாகும்.
இவர் தன்னை பொதுவுடமைக்காரர் என்று பொதுஜனங்கள் கருதும் படியும் நடந்து வந்திருக்கிறவர். ஆனால் காந்தியாரின் அபிமான புத்திரர் என்றும், அந்தரங்க சிஷ்யர் என்றும் காட்டிக்கொள்வதால் கிடைக்கும் பய னையும் விட்டுவிட சம்மதிக்காதவர். அல்லது காந்தியாரின் தாக்ஷண்ணியத் துக்குக் கட்டுப்பட்டவர் என்றாவது சொல்லியாகவேண்டிய நிலையிலிருப்
பவர்.
குடி அரசு - 1933 (2 136
காந்தியாரிடத்திலும், காந்தீயத்தினிடத்திலும் சலிப்பும், வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட வாலிபர்கள் பலருக்கு தோழர் ஜவஹர் லாலிடத்தில் ஒருவித நம்பிக்கை இருந்து வருவதை நாம் அறிகிறோம்.
ஆனால் இந்த நம்பிக்கைகள் ஜவஹர்லால் அவர்களின் ஏதோ இரண் டொரு வாய் வார்த்தையைக் கேட்டு ஏமாந்து போய்க் கொண்டிருப் பதாலேயே ஒழிய அவருடைய செய்கையைக் கொண்டோ அல்லது அவரது உறுதியான அபிப்பிராயத்தைக்கொண்டோ என்று சொல்லி விடுவ
தற்குப் போதிய ஆதாரம் ஒன்றையும் நம்மால் காணமுடியவில்லை. அவ
ருக்கு இரணடுவித மனப்பான்மை இருந்துவருகிறது என்பதே நமதபிப்
பிராயம்.
அதாவது வானதத்துவ நிபுண உபாத்தியாயர் ஒருவர் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளுக்கு கிரஹணத்தைப்பற்றிப் போதிக்கும் போது கிரஹணம் என்பதில் உண்மையை வானசாஸ்திரப்படி போதித்து விட்டு அதாவது பூமியும் சூரியனும் சுற்றுவதினால் ஒன்றின் நிழலில் ஒன்று மறைபடும்போது ஏற்படும் மறைவுக்கு கிரஹணம் என்று சொல்லப்படு கின்றது என்று சொல்லிவிட்டு அதே வாத்தியார் தன்வீட்டுக்குப் போன வுடன் சூரிய சந்திரர்களுக்கு ஏற்பட்ட சாபதண்டனையாக ராகு, கேது என்கின்ற பாம்புகள் விழுங்குகின்றன என்று கருதி ஸ்நானம், ஜபம், விரதம் முதலியவைகள் செய்வது போல் தோழர் ஜவஹர்லால் அவர்கள் வாலிபரி
டம் பேசும்போது ஒரு விதமாகவும் பிறகு காந்தியாரிடம் இருக்கும்போது ஒருவிதமாகவும் நடந்துவருகிறார். இவை இரண்டில் அவருடைய உண்மை யான மனப்பான்மை என்ன என்று கண்டுபிடிப்பது கஷ்டமாகவே இருக் கிறது. ஆனால் அரசியல் உலகில் உள்ள மற்ற பெரியவர்கள் என்று சொல்லப்படுகின்ற அனேகருக்கு ஜவஹர்லால் அவர்களிடம் மதிப்பு இல்லை என்பதும், ஜவஹர்லால் அவர்களுக்கும் மற்ற பெரியார்களில் காந்தியாரைத்தவிர மற்றவர்களிடம் மதிப்பு இல்லையென்பதும் கவனித்துப் பார்த்தவர்களுக்கு நன்றாய் விளங்கும்.
ஜவஹர்லால் அவர்களின் பொதுவுடமைக் கொள்கையையும், அவரது பூரண விடுதலை கொள்கையையும், வெளி தேசத்து பொது உடமைக் கொள்கைக்காரர்களும் பூரண விடுதலைக்காரர்களும் நம்பி அவரை உலக ஏகாதிபத்திய மறுப்பு சங்கத்திற்கு உபதலைவராக தெரிந் தெடுத்து இருந்தார்கள். ஆனால் தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தி- இர்வின் ராஜியை ஒப்புக் கொண்டவுடன் இவரை மேற்படி உபதலைவர். பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள். இதற்காகவேண்டியே ஜவஹர்லால் அவர்கள் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஒரு போர் நிறுத்த (அதாவது தர்க்கால
சாந்தியாய் இளைப்பாரு வதாக செய்து கொண்ட) நிபந்தனைகளே தவிர சமாதான உடன்படிக்கை அல்ல என்று பல தடைவ கூறினார். இப்போதுகூட
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
அப்படியே சொல்லி வருகிறார் என்றாலும் இவரை உபதலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டது மாற்றப்படவில்லை.
இவர் இந்தமாதிரி காந்தி-இர்வின் ஒப்பந்தத்துக்கு வியாக்கியானம் சொன்னதினாலேயே வில்லிங்டன் பிரபு “ஒப்பந்தப்படி காங்கிரசுக்காரர்கள் நடந்துகொள்ளவில்லை” என்று சொல்லி ராஜியை அலட்சியம் செய்ய வேண்டியவரானார்.
இப்போது தோழர் ஜவஹர்லால் அவர்கள் சிறையிலிருந்து காந்தி யாரைச் சந்தித்துப் பேசியபிறகு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் காந்தி யாரின் இன்றைய நடவடிக்கைகள் எல்லாம் அவருடைய (காந்தியாருடைய/ சொந்த விஷயமே ஒழிய தேசிய விஷயமல்லவென்றும் ஆனாலும் அத னால் தேசீய விஷயம் பாதிக்கப்படலாம் என்றும் சொன்னதோடு தேசீய விஷயம் வேறு என்றும் சொல்லி இதற்கும் அதற்கும் சம்மந்தமில்லை யென்று ஜனங்கள் கருதும்படி பிரிவுபடுத்திக் கூறிஇருக்கிறார்.
இதுமாத்திரமல்லாமல் சத்தியாக்கிரகம் என்பதில் மததத்துவம் இருக் கிறது என்பதை தான் நம்புவதில்லை என்றும் அது ஒழுக்கமுள்ளதா, அனுபவத்தில் பலன் தரத்தக்கதா என்பதைப் பொருத்தேதான் தான் சம்மந்
தப் பட்டிருந்ததாயும் தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து காந்தியாருடைய தத்துவத்தை இவர் தேசீய பொதுக்காரியத்தைச் சேர்ந்தது என்று கருத வில்லை என்பதும் எல்லாவற்றையும் இவர் அப்படியே ஒப்புக்கொள்ளு பவர் அல்ல என்பதையும் காட்டிக்கொள்ளுகிறார் என்றே கருதவேண்டி
இருக்கிறது.
ஆனால் இந்த அபிப்பிராயம் இவருக்கு எதுவரையில் இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியாது. மறுபடியும் காந்தியாருக்கு நெருக்கடியான
சமயம் வரும்போது மறுபடியும் வேதாளம் முருங்கமரத்தில் ஏறிவிட்டது என்பது போல காந்தியின்றிக் கதி இல்லை என்கின்ற அடிமை மந்திரத்தை உச்சரித்து விடுவார் என்று நான் இவரது பழய நடவடிக்கையில் இருந்து கருதவேண்டி இருக்கிறது.
இவ்வளவும் தவிர இந்த இரண்டு மூன்று நாளாய் தோழர்கள் காந்தியும், ஜவஹர்லாலும் பேசிய பேச்சுக்கள் வெளியிட தைரியமற்றதாய் விட்டதும் வெளிப்படையானதும், தெளிவானதுமான ஒரு அறிக்கையை வெளியிட முடியாமல் இரண்டருத்தமுள்ள வார்த்தைகளையும், வாசகங்க ளையும் கொண்டே இருவரும் அறிக்கை வெளியிட்டிருப்பதும் இனியும் இருவருக்குள்ளும் ஒரு முடிவு ஏற்படாமல் இனியும் இருவரும் செய்து கொள்ளும் கடிதப்போக்குவரத்தினாலேயே விளக்கக்கூடும் என்று முடிவு செய்து கொண்டதும் ஆகிய காரியங்களால் இருவருக்கும் பலமான அபிப் பிராய பேதம் இருப்பதாகவும் உணரக்கிடக்கின்றது. இனி இருவருக்கும்
குடி அரசு - 1933 (2 138
இடையில் பஞ்சாயத்து தரகர்கள் சரோஜனிதேவி போன்றவர்களின் தூதினால் இன்னும் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டாலும் ஏற்படலாம்.
எது எப்படியானாலும் இப்போது ஜனங்கள் செய்யவேண்டிய வேலை என்ன என்பது இது வரையில்செப்பனிடமுடியவில்லையென்பதும், காந்தீயம் கடைசி மூச்சில் இருக்கின்றது என்பதும் அது அடியோடு புதைக் கப்பட்டு பல தேசீயவாதிகள் என்பவர்களாலேயே “உத்திரக்கிரிகைகள்”” நடந்துவருகின்றது என்பதும் தெளிவாய் விளங்குகின்றது.
ஆனால் தீவிர உணர்ச்சி உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலிபர்களுக்கு இவைகளை ஒப்புக் கொள்ள வெட்கமாயிருப்பதும் துணிந்து வந்து காந்தீயத்திற்கு எதிரான காரியங்களைச் செய்ய தைரிய மில்லாமல் இருப்பதும் பார்க்க நமக்குப் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. என்றாலும் இதைத்தவிர வேறு மார்க்கமில்லையென்றும் இன்னும் எத்தனை நாளைக்கு இம்மாதிரி வெட்கப்பட்டும் தைரியமற்றும் கிடந்தாலும், தங்களை: வீரர்கள் என்று காட்டிக்கொள்ள இனியும் எத்தனை தரம்தான் ஜெயிலுக்குப் போனாலும் முடிவில் ௪ம. கொள்கைகளைத்தான் ஒப்புக்கொண்டு அதன் படிக்குத்தான் நடந்து ஆகவேண்டுமென்றும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.09.1933
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
யாராட்டுகிறோம்
“கச்௬க்காரி' கன் வதால்லை ஒழிப்பு
ஈரோட்டில் குச்சுக்காரிகள் தொல்லை என்பதாகவும், விபசாரிகள் தொல்லை என்றும் தலையங்கங்கள் கொண்ட இரண்டு வியாசங்கள் “குடி அரசி”ல் உபதலையங்கங்களாக எழுதி அதைக் குறித்து போலீசாரும், முனிசிபாலிட்டியாரும் முயற்சியெடுத்து “விபசார ஒழிப்பு” சட்டத்தை ஈரோட்டிற்கு அமுலில் வரும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக் கொண்ட விஷயம் நேயர்களுக்குத் தெரியுமென்றே நினைக்கிறோம்.
அந்தப்படியே ஈரோடு முனிசிபல் கெளன்சிலில் கெளன்சிலர் தோழர் கேசவலால் அவர்களால் ஒருதீர்மானம் கொண்டுவரப்பட்டு தோழர். ஈஎஸ்.கோவிந்தசாமி நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு மற்ற எல்லா கெளன்சிலர்களாலும் ஏகமனதாய் ஆமோதிக்கப்பட்டு சேர்மென் அவர் களுடைய பலமான குறிப்பின்மேல் கவர்ன்மெண்டுக்கு அனுப்பப்பட்ட
தில் கவர்ன்மெண்டார் அதை ஏற்று ஈரோட்டிலும், கோயமுத்தூரிலும் இந்தச் சட்டம் அமுலுக்குவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டு அடுத்த மாதம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்குவர விளம்பரம் செய்யப் பட்டாய்விட்ட விபரம் நமக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுவிஷயமாய் ஈரோடு முனிசிபல் கெளன்சிலர்களையும், பிரத்தி யேகமாய் தோழர் கேசவலாலையும், சேர்மென் அவர்களையும் பாராட்டு வதுடன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அன்றியும் போலீஸ் அதிகாரிகள் இதற்கு அனுகூலமாய் இருந்து வந்ததற்காக அவர்களையும், கவர்ன்மெண்டாரையும் பாராட்டுகிறோம்.
இந்தச் சமயத்தில் ஒருவிஷயத்தை மறுபடியும் ஈரோடு முனிசிபல் கெளன்சிலர்களுக்கும், சேர்மென் அவர்களுக்கும் தெரிவித்து கொள்ளுகி றோம். அதாவது ஈரோட்டுக்கு ஒரு பெண்டாக்டர் அவசியமாய் இருப்ப
குடி அரசு - 1933 (2 140
தையும், ஏனெனில் சர்க்கார் சம்பளப் பெண்டாக்டரை எடுத்துவிட்டு கெளரவடாக்டரை நியமித்து இருப்பதால் அது போதாததால் தனியே பொது ஜன சேவகராக ஒருடாக்டர் வேண்டியிருப்பதால் தயவுசெய்து ஒரு பெண் டாக்டரை முனிசிபாலிட்டியார் தங்களுக்குச் செளகரியப்பட்ட சீக்கிரத்தில் நியமிக்க வேண்டும் என்று முன் தெரிவித்துக்கொண்டதை இப்போது ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
அதோடு ஈரோடு காரைவாய்க்கால் ஓடையில் தேங்கிறிற்கும் ஜல தாரைக் கசுமாலத் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அதிகம்பேருக்கு மலேரியா காய்ச்சல் எற்படுவதால் அந்தத் தேக்கத்தை ஒழிக்க ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.09.1933
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
நாம், சமதர்ம இயக்கத்திட்டம் அடி கோலி, சட்டசபைகளையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்ற வேண்டும் என்றுதீர்மானித்தபொழுது
நம் எதிரிகள் தம் பத்திரிகைகளில் “இந்த நாஸ்திக சு.ம.காரர்களின் இத்
திட்டத்தின் படி நமது நாட்டில் ஒரு சிறு ஸ்தானத்தையும், எந்த ஸ்தல ஸ்தாபனத்திலும் அடையமுடியாது என்பதையும் அப்படியடைய முயற்சிக்
கும்படி நாம் பகிரங்கமாய் அறை கூவி அழைக்கின்றோம்” என்று எழுதின.
ஆனால் அதன் பின், நமது தோழர்களால் பல ஜில்லா போர்டு, தாலுக்காப்போர்டு, முனிசிபால்டி முதலியவைகளில் பல ஸ்தானங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சென்ற மாதம் நமது இயக்கப் பிரமுகர் தோழர். பி.சிதம்பரம் திருவிதாங்கூர் ஸ்ரீமூலம் அஸம்பிளிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொழுது நமது இயக்கப்பிரமுகர்களில் ஒருவரும்புதுக்கோட்டை பெரும் கலகத்திற்கே காரண பூதரென்று சிலகாலம் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்டவரும் இளைஞரேறுமான தோழர் அட்வகேட் கே. முத்துசாமி வல்லதரசு பி.எஃபி.எல். மறுமுறையும் புதுக்கோட்டை சட்டசபைக்குஅபேட்ச கராக நின்று அதிகப்படியான ஓட்டுகளால் நமது மாற்றலர் தலைகவிழ வெற்றி பெற்றது கண்டு நாம் அடங்கா மகிழ்சியடைவதோடு நாட்டில் சமதர்ம இயக்கத்திற்கிருந்து வரும் செல்வாக்கைகண்டு நமது கொள்கையில்
நாம் மேலும் மேலும் அதிக உருதியுடையவராகின்றோம்.
தோழர் வல்லத்தரசு வெற்றி பொதுவாய் நமது நாட்டு ஏழைத் தொழி லாளர்களுக்கும், சிறப்பாய் புதுக்கோட்டை சமஸ்தான ஏழைத்தொழிலாள
மக்களுக்கும் விசேஷ பயனளித்து புதுக்கோட்டை சமஸ்தானம் சமதர்ம ஆட்சியாய் விளங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.09.1933
குடி அரசு - 1933 (2 142
பட்டேல் STBaNmSHuIb
தோழர் பட்டேல் அவர்கள் ஒரு பெரிய தியாகி என்றும், தேசபக்தர் என்றும், தேசீயவாதி என்றும் பலர் கருதிக்கொண்டிருப்பது நமக்குத்
தெரியும். ஆனால் அவரைப்பற்றிய நமது அபிப்பிராயமெல்லாம் நமது தென்னாட்டில் தியாகி என்றும், தேச பக்தர் என்றும் தேசியவாதி என்றும், பெயர் வாங்கி இருக்கும் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்களைப் போல், படேல் அவர்கள் ஒரு ஆல் இந்தியா சத்தியமூர்த்தி என்பதேயாகும்.
இந்த கருத்து நாம் அவரை முதல் முதல் எப்போது சந்தித்தோமோ அப்போதே கொண்டதாகும். என்றாலும் தோழர் காந்தியவர்கள் தோழர் படேலின் வசவுக்கும், எதிர்ப்புக்கும், மார்பைக்காட்ட தைரியமில்லாமல் அவரை கைவசப்படுத்தக் கருதி ஒருகாலத்தில் “பட்டேலின் தொடையின்
மீது நான் தலைவைத்துப் படுத்துக்கொண்டிருக்கும் போது எனது உயிர். போகுமானால் அதை ஒரு பாக்கியமாகக் கருதுவேன்” என்று சொல்லி தோழர் பட்டேலை தட்டிக்கொடுத்து தப்பி வந்தார். இதன் பயனாக தோழர். பட்டேல் அவர்களும் தீவிர ஒத்துழையாமை காலத்தில் இந்திய சட்டசபைத் தலைவர் பதவிபெற்று “பெரிய தியாகி” யாகி ஏராளமாய் பணம் சம்பாதித்து, உலக விளம்பரம் முதலிய பலன்களைப் பெற்றார். அவர் பார்ப்பனர்களுக்கு
தாசராய் இருந்த காரணத்தால், வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவத்தை எதிர்த்த தால் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரை தோழர் சத்தியமூர்த்தியை விட பெரிய தேசபக்தராகவும், தியாகியாகவும் ஆக்கிவிட்டன.
மதத்தில் எப்படி பார்ப்பனர்களும், பார்ப்பனர் எழுதிவைத்த புஸ்தகங்களுமே பார்ப்பனரல்லாதார்களுக்கு குருவாகவும், வேதமாகவும் இருந்து வந்ததோ அது போல் அரசியலிலும் பார்ப்பனர்களே குருவாகவும், பார்ப்பனப் பத்திரிகைகளே வேதமாகவும் இருந்ததால் பார்ப்பனரல்லாத வாலிபர்கள் அப்படியே நம்பிவிட்டார்கள்.
அது எப்படியோ இருக்கட்டும் இப்போது சீர்திருத்தம் ஏற்பட்டு அது அமுலுக்கு அடுத்த வருஷக்கடைசியில் வரக்கூடும் என்று தெரிந்தவுடன், பழயவாடை அடிக்க ஆரம்பித்துபுதிய ஞானம் பெற்று இந்திய மக்களுக்கு புதிய ஞானோபதேசம் செய்ய வந்து இருக்கிறார்.
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
“அதாவது இங்கிலாந்து இருதயமற்றதென்பதே எனது அபிப்பிராயம். இந்தியாவினால் இங்கிலாந்து மகோன்னத நிலைய டைந்து விட்டது. இங்கிலாந்து இந்தியாவை உதறித்தள்ளி விட முடியாது.இங்கிலாந் துக்கு பலவந்த நிர்ப்பந்தம் ஏற்பட்டா லொழிய இந்தியாவைவிட்டு விடாது.
காந்தியாரின் உபதேசங்களெல்லாம் தவறு, என்று உணர்கி றேன். சமாதானம் செய்துகொள்வதற்கெல்லாம் போதிய காலங்கள் காந்தியாருக்கு அளிக்கப்பட்டு விட்டது. காந்தியாருக்குள்ள அவ் வளவுஅதிக அதிகாரங்கள் வேறு எந்த தலைவருக்கும் இந்தியாவில் இல்லை. ஆனால் அவரால் ஏற்பட்ட முடிவான பலன்களெல்லாம் வெறும் பூஜ்யமேயாகும், காந்தீயத்தினால் நாங்களெல்லாம் வெற்றியே ஏற்படாதென்கிற துணிந்த முடிவுக்கு வந்து விட்டோம். நாங்கள் ஒரு புதிய வேலைத்திட்ட முறையை ஒரு புதிய தலைவ
ரின் கீழ் நடத்த விரும்புகிறோம்.”
என்கின்ற குறிப்புகளைக்காட்டி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார். என்றாலும், இந்த செய்தி எதுவரையில் இருக்கும் என்பதுயாவரும். சந்தேகப்படக்கூடியது தான். ஏனெனில் தோழர் காந்தியாருக்கு ஏதாவது ஒரு விதத்தில் மறுபடியும் செல்வாக்கு வந்துவிடுமானால் “காந்தியின்றிக்
கதி மோட்சமில்லை” என்கின்ற பல்லவியைப்பாட ஆரம்பித்துவிடுவார் என்பதில் யாவரும் சந்தேகப்படவேண்டியதில்லை.
குடி அரசு - கட்டுரை - 24.09.1933
குடி அரசு - 1933 (2 144
கேோரனத்தில் சுயமரியாதை இயக்கம்
கேரளம் என்பது மலையாள நாட்டைக் குறிப்பிடுவதாகும். மலையாள நாடு என்பது திருவாங்கூர் ராஜ்யத்தையும், கொச்சி ராஜ்யத்தை பிரிட்டிஷில் மலையாள ஜில்லாவையும் சேர்த்து குறிப்பிடுவதாகும். இவற்
றுள் நமது சுயமரியாதை இயக்கமானது எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றது என்பதை விளக்கவே இதை எழுதுகின்றோம்.
கொச்சி, திருவாங்கூர் ஆகிய இரு ராஜ்யங்களும் “சுதேச சமஸ் தானங்கள்” ஆகும். இந்த இருநாடும் சுதேச ராஜாக்கள் என்பவர்களால் இந்து மத சம்பிரதாயங்களைப் பிரதானமாய் கருதி ஆட்சிபுரியப் படுவதா
கும். ஹிந்து மதத்தை அதன் உண்மைத் தத்துவமான வருணாச்சிரம தரும முறைப்படி ஜாதி வித்தியாசங்களைக் கடுமையாய் அனுஷ்டித்து வந்ததின் பயனாகவே மேல் ஜாதிக் கொடுமைகள் தாங்காமல் அந்த இரு நாடுகளிலும் மொத்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட சரிபகுதி ஜனங்கள் இந்து மதத்தை விட்டு இந்துக்கள் அல்லாதவர்களாய் விட்டார்கள். அதாவது, அவர்கள் கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமானவர்களும், யூதர்களும், புத்தர்களுமாய் இருந்து வருகிறார்கள். பாக்கியுள்ள பகுதியில் அரையே அரைக்கால் வாசிப்பேர்கள் இன்றும் தாழ்ந்த ஜாதி மக்களாய் கருதப்பட்டு தீண்டப்படக் கூடாதவர்களாய்க் கருதப்பட்டு வருகின்றார்கள். இதன் பயனாய் இந்த தீண்டப்படக்கூடாத மக்கள் என்பவர்களில் இப்போது சுயமரியாதை உணர்ச்சி பெற்று சகல வித கட்டுப்பாடுகளையும் உடைத்தெரியத் துணிந்து முன்னணியில் நிற்பவர்கள் ஈழவ சமூகத்தார் என்று சொல்லப்படும் வகுப்பார். களேயாவார்கள். இவர்களின் எண்ணிக்கை அந்த இரண்டு சமஸ் தானங்களிலும் மொத்தம் சுமார் 15 லக்ஷம் ஆகும். பிரிட்டிஷின் தீயர் சமூகம் என்னும் ஈழவர்களையும் சேர்த்தால் 25 லட்சம் ஆகும். இந்த 25 லட்சம் ஈழவத் தோழர்களும் வைக்கம் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலம் தொட்டு தங்களைக் கட்டுப்படுத்தியுள்ள ஒவ்வொரு கட்டுப்பாடுகளையும் உடைத் தெரியக் கருதி பல முயற்சிகள் செய்து அவற்றில் பெரிதும் வெற்றி பெற்று, இப்போது அவர்கள் அத்தனை பேரும் அதாவது 25 லட்சம் பேரும் ஒரு
மித்து ஒரே அபிப்பிராயமாக தங்களுக்கு இனி “மதமே வேண்டியதில்லை” என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால், மற்றபடி அந்த ராஜ்ய
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வேறு என்ன அத் தாட்சி வேண்டும் என்பது நமக்குப் புரியவில்லை. எப்படியெனில் கேரள
நாட்டு ஈழவ சமூகங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவானதான சமுதாய ஸ்தாபனம் ஒன்று உண்டு. அதன் பெயர் “ஸ்ரீ நாராயணகுரு தர்ம பரிபாலன யோகம்” என்று சொல்லப்படும். இது அவர்களது சீர்திருத்தத் தலைவரான ஸ்ரீநாராயண குரு சுவாமி பேரால் ஏற்பட்டதாகும். இவர்களது ஒவ்வொரு வருடாந்திர மகாநாட்டிலும் மதத்தைப் பற்றி வாக்குவாதங்கள் நடந்து வந்து, இந்த வருஷத் தில் கூட்டப்பட்ட வருடாந்தர (SN.D.P) மகாநாட்டில் இந்தப்படிக்கு அதாவது, ஈழவ சமூக மக்கள் மதத்தில் நம்பிக்கை அற்றவர்.
கள் என்றும், அவர்களுக்கு மதம் தேவையில்லை என்றும், எந்த ஈழவரும் இனி தங்களை இந்து என்றோ, அல்லது வேறு எந்த மதஸ்தர் என்றோ, சொல்லிக் கொள்ளக் கூடாதென்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.
இந்த மகாநாட்டுக்கு சென்னை சட்டசபை மெம்பரும், பி.எ.பி.எல் -
லும், பெரிய பாங்கீக்காரரும், “மிதவாதி” என்னும் பத்திரிகையின் ஆசிரியரு மாகிய கள்ளிக்கோட்டை தோழர் சி.கிருஷ்ணன் (பி.ஏ. பி.எல், எம்.எல்.சி.) அவர்கள் தலைமை வகித்து இருக்கிறார். இவரது தலைமையில் பல ஆயிரக் கணக்கான பிரதிநிதிகள் கூடி பெருத்த கரகோஷத்துக்கு இடையில் அளவுக்கு மீறிய உற்சாகத்துடனும், ஆர்வத்துடனுமே இத்தீர்மானம் நிறை வேற்றப் பட்டிருக்கிறது. இந்தத்தீர்மானமானது முதலில் கேரள யுவர் சங்கத்
தில் தீர்மானிக்கப்பட்டு அந்த யுவர்களால் கிராமம் கிராமமாய்ப் பிரசாரம். செய்யப் பட்டு பிறகு இந்த சமூக மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சுமார் 4, 5 வருஷங்களுக்கு முன் இதே SN.D.P. மகாநாடானது முதுகுளம் என்னும் ஊரில் நடந்த பொழுது அங்கு ஈழவர்கள் எல்லோரும் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய்விடுவது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு பெருத்த கலவரம் நடந்து அந்த மகாநாட்டில் ஆரிய சமாஜக்காரர்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி அழைத்தும், கிறிஸ்தவர்கள்
தங்கள் மதத்துக்கு வரும்படி அழைத்தும், புத்தர்கள் தங்கள் மதத்துக்கு வரும்படி அழைத்தும் கடைசியாக ஒரு முடிவும் ஏற்படாமல் மதத்தை வெறுப்பதாக மாத்திரம் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குடி அரசில் படித்திருக்கலாம். அது புகைந்து கொண்டே இருந்து இப்போது தைரியமாக மதமே வேண்டியதில்லை என்கின்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணம் கேரள ஈழவ சமுதாயத்திலகம்போல் விளங்கும் தோழர் கே. அய்யப்பன் பி.ஏ. எம்.எல்.சி. அவர்களுடைய சுயமரியாதை பிரசார முயற்சியும், அவரது பத்திரிகையாகிய “சகோதரன்” பத்திரிகையின் பிரசாரமும், கள்ளிக்கோட்டை தோழர் சி.கிருஷ்ணன் பி.ஏ.,
பி.எல். எம்.எல்,சி., அவர்கள் பிரசாரமும், அவரது மிதவாதி பத்திரிகை யுமாகும். தோழர் கே.அய்யப்பன் அவர்களால் மற்றும் ஒரு பத்திரிகை நடத்தப்படுகின்றது. அதாவது நமது ரிவோல்ட் பத்திரிகையைப் போல் ஒரு
குடி அரசு - 1933 (2 146
மாதப் பத்திரிகையானது மதமறுப்பையும், கடவுள் மறுப்பையும், பிரதான
மாய்க் கொண்டு “யுக்திவாதி” என்னும் பேரால் நடத்தப்படுகின்றது. இந்த
யுக்திவாதிப் பத்திரிகைக்கு தோழர் ராமவர்மதம்பான் முதலிய சில படித்த மேதாவியான இந்துக்கள் என்பவர்களும், தோழர்கள் ஜோசப் பி.ஏ. பி.எல். டாக்டர் அந்தோணி எம்.பி., பி.எஸ்., முதலிய கிறிஸ்துவர்களும், தோழர். எம்.கே.இப்ராஹிம் பி.ஏ., எம்.எல்சி., முதலிய முகமதியர்களும் உப பத்திரா திபர்களாகவும், விஷயதானம் செய்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள். தோழர் அய்யப்பன் அவர்களுக்கு மத உணர்ச்சியைப் பற்றியும், கடவுள் உணர்ச்சியைப் பற்றியும் உள்ள வெறுப்பானது சுமார் 10, 15 வருஷகால மாகவே இருந்து வருவதைக் கேரள மக்கள் நன்றாய் உணர்வார்கள். ஈழவ சமுதாயத்தில் இன்று உள்ள கடவுள், மத வெறுப்புணர்ச்சிக்கு வித்து ஊன்றி யவர் நமது தோழர் அய்யப்பன் அவர்களே ஆகும் என்பதாகத் தாராள
மாய்ச் சொல்லலாம். இன்று கேரளத்தில் கிறிஸ்துவ சமுதாயம் என்பதிலும் பல ஆயிரக்கணக்கான பேர்களை கடவுள் பற்றில்லாதவர்களாகவும் மதப் பற்றில்லாதவர்களாகவும் காணலாம். அங்கு பாதிரிமார்கள் ஏழைக் கிறிஸ்த வர்களைத்தான் மத மறுப்புக்காகத் தண்டிக்கிறார்கள்.
சற்று செல்வமும், செல்வாக்கும் உள்ளவர்களாய் இருந்தால் கெஞ்ச
வும், பெண்கள் மூலமாகச் செல்வாக்குப் பிடித்துக் கேட்டுக் கொள்ளவுந்தான் செய்கிறார்கள்.
உதாரணமாக யுக்திவாதிப் பத்திரிகைக்கு ஒரு லோயர்கிரேட் உபாத்தி யாயர் ஒரு வியாசம் எழுதியதற்காக அவரை டிஸ்மிஸ் செய்து மதப் பிரஷ்
டம் செய்து விட்டார்கள். அதைவிட வேகமான மற்றொரு வியாசத்தை ஒரு பணக்காரக் கிறிஸ்தவர் எழுதியதற்கு அந்த ஊர் சாமியார் அந்தப் பணக்
காரர் வீட்டுக்குச் சென்று “இனிமேல் நீங்கள் யுக்திவாதிக்கு வியாசம் எழுது வதாய் இருந்தால் தயவுசெய்து உங்கள் பெயரைப் போடாதீர்கள்” என்று மாத்திரம் கெஞ்சிக் கூத்தாடிக் கேட்டுக் கொண்டு வந்தாராம்.
இதுபோலவே முகம்மதியர்களிலும் தோழர் 14..6இப்ராஹிம் 8.&, MLC, அவர்களைப் பின்பற்றும் முஸ்லீம்வாலிபர்கள் பலரைக் காணலாம்.
அதுபோலவே எல்லா சமய சமூகப் பெண்மக்களையும் நமது கொள்கையில் தீவிரமாய் ஈடுபடச் செய்தது தோழர் அய்யப்பன் அவர் களின் துணைவி தோழர் பார்வதி பி.ஏ, எல்.டி, அவர்களாவர். இந்த மாதிரியாகக் கேரள நாட்டில் சுயமரியாதை இயக்கம் எல்லா மத மக்களிடத்
திலும், எல்லாச் சமூகத்தாரிடத்திலும் கூத்தாடுகின்றதை யாரும் பார்க்கலாம். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் அந்நாட்டு வாலிப மக்களுக் கிடையில் பொது உடமைக் கொள்கையானது வீறுகொண்டு நிற்கிறது என்பதேயாகும். இந்தப் பொது உடமைக் கிளர்ச்சிக்கு, கேரளத்தில் பல வாலிப வக்கீல்களும், 2, 3 தடவை சிறைசென்று வந்த பல நாயர் வாலிபர்.
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
களும் தங்கள் முழு ஆதரவையும் கொடுத்து வருவதைப் பார்க்கின்றோம். ஆகவே கேரளத்தில் உள்ள 25 - லக்ஷம் ஈழுவத் தோழர்களும் மத உணர்ச்சியை விட்டும் கடவுள் உணர்ச்சியை விட்டும் பொது உடமைக் கொள்கையை கைக்கொண்டும் எவ்வித தியாகத்துக்கும் தயாராய் இருக்
கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இதன் பயனாக இன்று கேரள ஈழவர்கள் நிலை இந்தப் பத்து வருஷங் களுக்குமுன் இருந்ததை இப்போது ஒரு பெரிய புரட்சியில்லை என்று சொல்லும்படியான மாதிரியிலேயே தலை கீழாக மாறி இருக்கின்றது.
இதன் காரணம் என்ன என்று பார்ப்போமேயானால் இந்த சமூகமா னது மேல் ஜாதியார் என்கின்ற பார்ப்பனர்களாலும், அவர்களுடைய விந்துக் குப்பிள்ளையாய்ப் பிறப்பதே மேன்மை என்று கருதிக் கொண்டிருந்த நாயர். சமூகத்தாலும் அடக்கி, ஒடுக்கி வைத்திருந்த கொடுமையே, இன்று அந்த ஈழவ சகோதரர்களைக் கண்விழிக்கச் செய்து தயவு தாட்சண்ணிய மன்றியும்,
நமக்கு தடையின்றியும் முன்னேறுவதற்கு தூண்டுகிறது. இந்த ஈழவ தோழர் கள் தோழர் காந்தியின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சீறி விழுவார்கள். காதுகளை பொத்திக் கொள்ளுவார்கள். ஈழவர் அகராதியில் காந்தியென்றால் பார்ப்பனர்களின் ஒற்றர், பணக்காரர்களின் லைசென்சு பெற்ற சேவகர். என்றே குறித்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் இந்திய வாலிபர்களில் அநேகர் உள்ளங்களில் இந்தப் படியான ஒரு உணர்ச்சி ஏன் இல்லை என்று கேட்கலாம்.
இந்தியாவில் காங்கிரஸ் என்னும் ஒரு இயக்கம் பணக்காரர்களுக் காகவும், பார்ப்பனர்களுக்காகவும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் நடைபெறுவதால் அவ்வியக்கம் அனேக வாலிபர்களின் உள்ளக்கிளர்ச்சி யையும், ஊக்கத்தையும் தியாகத்தையும் வீரத்தையும் விலைக்கு வாங்கிக் கொள்ளு கின்றது.
ஆதலால் தான் இந்தியாவில் கேரளத்தைப் போல காணமுடிய வில்லை. கேரளத்தில் பணத்தினாலோ, பணம் வைத்தோ இயக்கம் நடத்து கின்றவர்களுமில்லை.
ஈழவ சமுதாய பெண்மக்களின் நிலைமையை நாம் குறிப்பிட்டோ மேயானால் அதை ஒரு தமிழ்நாட்டு தோழர் நம்புவதே கஷ்டமாய் இருக்
கலாம். எல்லாத்துறையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களா
யிருக்கிறார்கள். ஒவ்வொரு பெண்கள் ஒரு மணி நேரம், இரண்டு மணிநேரம் பேசும்போதும் அவர்கள் மதத்தை மறுப்பதும், அவர்களது வார்த்தைகளில் கடவுள், கடவுள் செயல் என்பது போன்ற வார்த்தைகளை கண்டனம் செய்வதும் தவிர வேறு எவைகளையும் காணவே முடியாததுமாகும்..
குடி அரசு - 1933 (2 148
கேரளநாட்டுப் பெண்மணிகள் அதிதீவிரமாக சுயமரியாதைக் கொள்கைகளை மேற்கொண்டு தொண்டாற்றி வருவதற்கு காரணமாயிருப்
பவர் தோழர் அய்யப்பன் பி.௪. எம்.எல்.சி (கொச்சி அவர்களின் அருமைத் துணைவியார் தோழர் பார்வதி பி.எ.எல்.டி.அவர்களாகும் என்று கூறினோம். அவர்களால் பெண்கள் விடுதலைக்கென்று மலையாளத்தில் “ஸ்ரீ” என்று
ஓர் பத்திரிகையும் வெளியிடப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட ஈழவ சமூகம் திருவிதாங்கூர் ராஜ்ய அரசியலில் ஒத்துழையாமையை அனுஷ்டிக்கக் கூடிய தைரியத்துடனும் பலத்துடனும் இன்றைய தினம் இருக்கிறார்கள்.
அதாவது திருவாங்கூர் சமஸ்தான பிரஜைகளில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்ட தங்கள் சமூகத்திற்கு அரசியலில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவமும், தேர்தல்களில் தனித்தொகுதி முறையும் கொடுக்க வேண்டும் என்றும் ஜனத்தொகைக்குத் தகுந்த விகிதாச்சாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு, அந்த பார்ப்பனீய அரசாங்கமாகிய திருவாங்கூர். அரசாங்கத்தால் கவனிக்கப்படாததால் இவ்வருஷம் நடந்த சட்டசபை தேர்த
லில் ஒத்துழையாமையை அனுஷ்டித்து விலகி நின்றிருக்கிறார்கள். ஏதோ இரண்டு மூன்று பெயர்கள் மாத்திரம் தங்களது சுயநலத்தைக் கருதி அரசாங்க தயவுக்கு கருதி கட்டுப்பட்டுப் போய் தீரவேண்டியதாய் விட்டது என்றாலும்,
சமுதாயத் தலைவர்களும் சுலபமாய் போகக் கூடியவர்களுமான அனேகர் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பது அரசாங்கத்தோடு ஒத்துழை யாமை செய்து சட்டசபையை வெறுப்பதென்றால் அச்சமூகத்துக்கு எவ்வ ளவு தூரம் முற்போக்குணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.
ஆகவே இன்று கேரளமானது தனது ஜனத்தொகையில் கிட்டத்திட்ட பகுதியை மத உணர்ச்சியையும், கடவுள் உணர்ச்சியையும் வெறுக்கும்படி
யும், பொதுவுடமைக் கொள்கையையே தங்கள் கொள்கையாய் கொள்ளும்
படியும் சர்க்காரோடு ஒத்துழையாமையும் செய்யும்படியான நிலைமைக்கும் வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்க நமது சுயமரியாதைத் தோழர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றே கருதுகிறேன்.
குடி அரசு - தலையங்கம் - 24.09.1933
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஐவணஹர்லால் - காந்தி
தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதியகடிதத்தின் ஆரம்பத்தில், ராஜீய கோரிக்கை என்ன என்பதில் வாசகம் தெளிவாயில்லை என்றும், மக்களை தப்பான வழியில் நடக்கும்படியான பிரசாரம் நடந்து வருகிறதென்றும் ஆதலால் அதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சொல்லிவிட்டு ராஜீய கோரிக்கைகளை தெளிவுபடுத்தும் முறையில் பூரண: சுயேட்சை என்று காங்கிரஸ் தீர்மானித்திருப்பதற்கு பொருள், ராணுவம் அன்னியநாட்டு சம்மந்தம் பணம் ஆகியவைகளில் பூரண ஆதிக்கம் இருக்க வேண்டுமென்பதே என்றும் விளக்கி இருக்கிறார். அதன்பிறகு தன்னைப் பொருத்தவரையில் இப்பொழுது அவர் இன்னும் அதிகமாகப் போகவேண்டி இருப்பதாகவும், அந்த நிலைமையையும் தெளிவுபடுத்துவ தாகவும் சொல்லி, மேல்கண்ட அதிகம் என்பதின் கருத்தை விளக்குகையில் பாமரமக்களுடைய வாழ்க்கை நிலைமையை உயர்த்தவும், அவர்களுக்கு பொருளாதார செளகரியம் ஏற்படுத்தவும், அவர்கள் சுதந்திரத்தோடு வாழ
வும், வேண்டுமானால் இந்தியாவில் அதிகமான உரிமைகளையும், சலுகை: களையும், அனுபவித்து வரும் கூட்டத்தார்கள் அவற்றை விட்டுக்கொடுத்தா லொழிய வேறு எவ்வழியிலும் முடியாது என்றும் விசேஷ தனி உரிமையை
யும், சலுகை யையும், பாமர ஜனங்களுக்கு அனுகூலமாக திருப்பவேண்டும். என்றும், அப்பொழுதுதான் சுதந்திரம் என்பது ஏற்பட்டதாகச் சொல்ல முடியும் என்றும், சொல்லிவிட்டு. தனிப்பட்ட விசேஷ உரிமையும், சலுகை யும் அனுபவித்து வருபவர்களில் முறையே பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், இந்திய சமஸ்தானாதி பதிகளும், இன்னும் பலருமாவார்கள், என்றும்,
இவர்கள் எல்லோருடைய தனி உரிமைகளையும், சலுகைகளையும், ஒழிக்கும் விஷயத்தில் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும்,
ஆனாலும் பொது ஜனங்களின்-பாமர மக்களின் உழைப்பினால் ஒரு
சிலர் பெருமையுடன் வாழும் முறையை ஒழித்துத் தான் ஆகவேண்டும் என்றும், இதனால் சிலருக்கு அல்லது ஒரு வகுப்பாருக்கு நஷ்டம் உண்டாய்த்தான் தீரும் என்றும்,
ஆனால் பாமர மக்கள் நிலை எவ்வளவு கேவலமாய் இருக்கிறது
குடி அரசு - 1933 (2 150
என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் அவைகள் அவசியமாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு பதில்விடுத்த தோழர் காந்தியாரின் கடிதத்தில் கராச்சி காங்கிர
சுக்கு பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சியின் அனுபவத்தினால் தனக்கு பூரண சுயேட்சை தீர்மானத்திலும், தோழர் ஜவஹர்லால் சொல்லும் பொருளாதாரத் திட்டத்திலும், நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது என்றும், பூரண சுயேட்சையே முடிவான லட்சியம் என்றும் முடிவாகி திட்டமாகி விட்டது என்றும், பொருளாதார விஷயத்தில் தோழர் ஜவஹர்லால் அபிப்பிராயத்தில் தானும் கலந்து கொள்ளுவதாகவும், ஆனாலும் தான் அவ்வளவு தீவிர எண்ண மில்லாதவறாய் இருப்பதாகவும், மற்றும் இருந்தபோதிலும் இந்தியா ஒன்றுபடும்வரை சமஸ்தானாதிபதிகள் தங்கள் அதிகாரத்தில் பெரும் பாகத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.
இவற்றுள் தோழர் ஜவஹர்லால் அவர்கள் கூறியிருக்கும் கோரிக்கை கள் மிதவாத பாஷையில் இருந்தாலும் பயமும், தாட்சண்யமும் அதற்குள் வழிந்திருந்தாலும், அவரது கருத்தையும், உணர்ச்சியையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனால் இந்த அளவுக்கு இப்பொழுதுதான் போவ
தாகச் சொல்லுகிறார். இப்பொழுதாவது இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு நாம் மகிழ்ச்சி அடையவேண்டியதேயாகும்.
தோழர் காந்தியவர்களோ தந்திரமான வார்த்தைகளால் இவற்றை வெகு சுலபமாக கவிழ்க்கப் பார்க்கிறார். காந்தியவர்களின் வார்த்தைகள் அவர் எல்லா வகுப்பாருக்கும் எப்பொழுதும் தானே தலைவராய் இருக்க வேண்டுமென்கின்ற ஆசையையும், எல்லோரும் எப்பொழுதும் தன்னை போற்றவேண்டுமென்கின்ற ஆசையையுமே வளியவளிய நிரப்பிக் கொண்: டிருக்கிறது. எல்லோராலும் போற்றப்பட வேண்டும் என்று கருதிய எவரா
லும் உலகுக்கு யாதொரு பயனும் ஒரு நாளும் ஏற்பட்டதில்லை. பொதுப் படையான வார்த்தைகளாலும், இரண்டருத்தம் கொடுக்கும் வார்த்தை களாலும் மக்களை ஏமாற்றிப் பெருமை சம்பாதிக்க வேண்டும், சுயநலம் டைய வேண்டும் என்பதே தலைவர்கள் என்பவர்களுடைய குண மாகவும், மகான்கள் என்பவர்களுடைய குணமாகவும் இருந்து வருகின்றது. இப்படி இருந்து வருவதற்கு காரணம் மக்களின் மடத்தனமும், கூலிகளின் தொண்டு மேயாகும்.
இனிவரும் சகாப்தத்திலாவது இந்தக்குணம் ஒழிந்துபோக வேண்டும்
என்று ஆசைப்படுகின்றோம். ஆதலால் இதற்கு மருந்து இனி அரைவினாடி நேரமாவது இந்திய மக்களின் அரசியல் தத்துவத்திலேனும் பொருளாதார
தத்துவத்திலேனும், மதசம்பந்தமென்னும் சமுதாய வாழ்க்கை முறைத் தத்து வத்திலேனும், காந்தியாருக்கு யாதொரு வேலையும் இல்லாமல் செய்து விடுவதேயாகும்.
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தோழர் ஜவஹர்லால் அவர்கள் காந்தியாருக்கு எழுதிய கடிதத்தின் முதல்வாக்கியத்தில், அதாவது வழவழத்த வார்த்தைப் பிரயோகமும் மக்களை தவறான வழியில் நடத்திச் செல்லத்தக்க பிரச்சாரமும் நடந்ததால்
குழருபடி ஏற்பட்டுவிட்டது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருப்பது, முழுவதும் தோழர் காந்தியாரைக் குறிப்பதும் அவருக்கே மிகச் சரியாய் பொருந்தக் கூடியதுமாகும். தோழர் ஜவஹர்லால் இவ்வளவு சொல்லிய பின்பும் தோழர் காந்தி மறுபடியும் அதே மாதிரியே பேசுகிறார்.
அதாவது பூரணச் சுயேச்சை என்பதுதான் தனது முடிவான லக்ஷியம் என்று முடிவு செய்து கொண்டதாகவும், அதற்குமேல் தோழர் ஜவஹர்லால் போன அளவுக்கு போகத் தக்க அளவு தீவிர எண்ணமில்லை என்றும், அரசர்கள் கொஞ்சகாலத்துக்காவது இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் ஜனங்கள் பிரதிநிதியாய் இருக்க வேண்டுமென்றும், சொல்லுகிறார். இது அரசர்களுக்கும் முதலாளிகளுக்கும் பாமர மக்களுக்கும் எல்லோ
ருக்கும் நல்ல பிள்ளையாக ஆவதற்கும் ஏற்ற வார்த்தையே தவிர பாமர: ஜனங்களின் கஷ்டத்தை அடியோடு போக்குவதற்கு ஏற்றவார்த்தையே யல்ல.
மற்றும் தோழர் காந்தியாரின் அல் அறிக்கையில் எவ்வளவு முர ணான கருத்துக்கள் இருக்கின்றது என்பதைப் பார்த்தால் அவரது தலைமை இனி நாட்டுக்குப் பயன்படுமா என்பதும் விளங்கும்.
அதாவது அடுத்த ஆகஸ்டு மாதம்வரை, தான் சட்டமறுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லையாம். ஆனால் சட்டமறுப்புச் செய்கின்றவர்களுக்கு யோசனை சொல்லுபவராகவும் வழிகாட்டியாகவும் இருப்பாராம்.
தன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறதாம். ஆனால் வைசிராயோடு ஒரு சமாதானம் செய்து கொள்ளுவதில் சாத்தியமான எல்லா வழிகளாலும் கவனம் செலுத்துவாராம். அரிஜனவேலையும் செய்வாராம். இவை எவ்வளவு முன்னுக்குப் பின் முரண் என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.
மேலும் சட்டமறுப்பில் கலந்துகொள்ளச் சுதந்திரமற்றவர் என்று கருதிக் கொள்ளும் ஒருவர் சட்டமறுப்புச் செய்பவர்களுக்கு யோசனை சொல்லவும் வழிகாட்டவும் மாத்திரம் எப்படிச் சுதந்திரமுடையவராவார். என்பது நமக்கு விளங்கவில்லை...
தன்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதிக் கொள்ளும் ஒருவர், ஒரு பெரிய காரியமாகிய சர்க்காரோடு சமாதானம் செய்து கொள்ளும் விஷயத்திலும் அரிஜன சேவை விஷயத்திலும் எப்படித் தகுதியுடையவராவார் என்பதையும் வாசகர்கள் தான் முடிவுகட்ட வேண்டும்.
குடி அரசு - 1933 (2 152
மற்றும் தான் என்ன செய்வதென்பதே தனக்குத் தெரியாமல் திகைப்ப
தாகக் கருதிக் கொண்டிருக்கிற ஒருவர், இனிஅடுத்த ஒரு வருஷத்துக்கு மக்கள் செய்ய வேண்டிய வேலைத் திட்டத்தை கூறுவதற்கு முன்வருவது எவ்வளவு முன்னுக்குப் பின் முரண் என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
ஆகவே இந்த நிலையில் இனி இந்திய மக்களின் துன்பத்தைப் போக்கி, அவர்கள் யாவரும் சரிசமமாகத் தனிப்பட்ட கவலையற்று வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்கள் இம்மாதிரியான வழவழ, குழகுழ, போன்ற வார்த்தையுடையவர்களையும் முன்னுக்குப் பின் சதாசர்வகாலமும் முரணாய் பேசிக்கொண்டும் நடந்து கொண்டும், ஒவ்வொன்றுக்கும் கடவுள் பேரால் தத்துவார்த்தம் சொல்லிக்கொண்டு இருப்பவர்களை எதிர்பாராமலும் பின்பற்றாமலும் இருக்கவேண்டும் என்பதே நமது அழுத்தமான அபிப்பி
ராயமாகும்.
தோழர் ஜவஹர்லால் அவர்கள் எவ்வளவு மிதவாதப் பேச்சு பேசி யிருந்தாலும் இந்த அளவுக்காவது அந்த அபிப்பிராயங்களை அமுலுக்குக் கொண்டுவரச் செய்ய என்ன ஏற்பாடு செய்யப் போகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
முதலாவது காந்தியாரை விட்டுப் பிரிந்து தன் காலில் நடக்கத் தைரியம் கொள்ளுவாரா? என்பதும், இரண்டாவது இவரது இந்த கொள்கை களைக் “காங்கிரஸ்” ஏற்றுக்கொள்ளுமா? என்பதும், மூன்றாவது “காங்கிரஸ்” ஏற்றுக் கொள்ளாவிட்டால் இவர் தனித்து நின்று ஒரு ஸ்தாப னத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வேலை செய்யச் சக்தியும் தைரியமும் இருக்கின்றதா? என்பதும் முக்கியப் பிரச்சனையாகும்.
இதன்படி நடக்காமல் வெறும் அறிக்கையின் மூலம் அபிப்பிராயங் களை வெளியிட்டுக் கொண்டே இனியும் இருப்பதானால், இப்போது எப்படியோ ஒருவழியில் பொது ஜனங்களில் அனேகருக்கு குறிப்பாய் வாலிபர்களுக்குத் தோன்றியிருக்கும் ஒரு உத்வேகமான எழுச்சியையும் ஊக்கத்தையும் பாகுபடுத்தி “பெருமையை” அடைய முழு யோக்கியதை உடையவரேயாவார் என்பது நமது அபிப்பிராயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.09.1933.
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வபசண்டம்மையாரிண் முழுவ
தோழர் அன்னிபெசண்ட் அம்மையார் 20-9-33ந் தேதி மாலை 4- மணிக்கு சென்னை அடையாற்றில் முடிவெய்தி விட்டார்கள். அம்மை யாரின் வாழ்வு பெண்மணிகளுக்கு ஒரு படிப்பினையாகும். ஆண்களுக்
கும் ஓர் அறிவுருத்தல் ஆகும்.
பெண்கள் “பாபஜென்மம்” என்றும், “பேதமையென்பது மாதர்க் கணிகலம்” என்றும், பெண்கள் ஆண்களின் காவலுக்குட்பட்டு இருக்க வேண்டியவர்கள் என்றும், அறியாமையும், அயோக்கியத்தனமும், முட்டாள். தனமும், மூர்க்கத்தனமும் கொண்ட வாக்கியங்களை பொய்யாக்கி அவற்றில் பொதிந்துள்ள சூழ்ச்சிகளை வெளியாக்கவென்றே தோன்றியவர் என்று கருதும்படியானவர் நமது பெசண்டம்மையார்..
தோழர் பெசண்டம்மையார் ஒரு பாதிரியாரின் மனைவியாவார்.
பாதிரி களின் கொடுமையும், பித்தலாட்டமும் அம்மையாரை நாஸ்திகமாக்கி, தெய்வம் இல்லை என்று பிரசாரம் செய்யும்படி செய்தது. பிறகு புருஷனை விட்டுப் பிரிந்தார். பிறகு கர்ப்பத்தடையை யாவருக்கும் பிரசாரம் செய்து வந்தார். கர்ப்பத்தடையை சட்ட சம்மந்தமாக்கினார். அக்காலத்திலேயே அரசாங்கத்தையும் எதிர்த்து பிரசாரமும் செய்தார்.
பின்னர் தனது 32-ம் வயதுக்கு மேல் மறுபடியும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்தார். பிறகு பல புத்தகங்களை எழுதினார். அதன் பிறகு பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்தார். அதன் பிறகு இந்தியாவுக்கு வந்தார். வந்து அச்
சபையின் உலக தலைவரானார்.
பிறகு சென்னையை வாசஸ்தலமாகக் கொண்டார். கிறிஸ்து மதத்தை கண்டித்து இந்துமத தத்துவ பிரசாரம் என்னும் பார்ப்பன மதப்பிரசாரம் செய்தார்.
இதனால் சென்னையில் உள்ள விபூதிபூசும் பார்ப்பனரிடம் மிக செல்வாக்கு அடைந்தார். ஹை கோர்ட்டு ஜட்ஜுகள் உள்பட அனேக பெரிய பதவியாளர்களை தனக்கு சிஷ்யராகக் கொண்டார். அரசாங்கத்திலும், ஓரளவு
குடி அரசு - 1933 (2 154.
செல்வாக்குப் பெற்று விபூதிப் பார்ப்பனர்களுக்கு அச்செல்வாக்கை பெரிதும் உதவினார். இதுகண்டு பொறாத சென்னை நாமம்போடும் அய்யங்கார் பார்ப்பனர்கள் அம்மையாருக்கு பல தொல்லைகளை விளைவித்தார்கள். அவற்றை சமாளிக்க (முன் பார்ப்பன மதப்பிரசாரம் செய்தது போலவே! அரசியலில் தலையிட்டு அரசியல் பிரசாரமும் செய்தார்கள். இதன் பயனாயும், அம்மையாரின் அபார சக்தியாலும் இந்தியா முழுமைக்கும் அரசியல் தலைவராயும் விளங்கினார்.
காலஞ்சென்ற தோழர்கள் தாஸர், பாலர், நேரு முதலியவர்கள் எல்லாம் அம்மையாருக்கு சிஷ்யர்களாக இருந்தார்கள். அம்மையார் ஓடி ஆடித்திரிய சக்தி உள்ளவரையில் ஐயங்கார் கூட்டத்தை பொது வாழ்வில் தலை எடுக்க வொட்டாமல் செய்து கொண்டே வந்தார். இதன் பயனாகவே (அம்மை யாருக்கு அரசியலிலும் மதத்திலும் செல்வாக்கு இருக்கும்வரை? தோழர் சி.விஜயராகவாச்சாரியராகிய ஐயங்கார் காங்கிரஸ் பிரசிடெண்டாக முடியாமலேயே போய்விட்டது. இந்தக் காரணத்தால் சென்னை ஐயங்கார்கள் அரசியலில் “அமிதவாதிகள்” ஆகி தோழர்கள் சி.எஸ்.கஸ்தூரி ரங்கய்யங்
கார் சி.விஜயராகவாச்சாரியார், சிராஜகோபாலாச்சாரியார், எஸ்.சீனிவாசய்யங்
கார், முதலிய அய்யங்காரர்கள் ஒன்று சேர்ந்து, மறுபடியும் அம்மையாரின் அரசியல் செல்வாக்கை ஒழிக்க வேண்டியவர்களானார்கள். இதற்குப் பார்ப்பனரல்லாத தோழர்கள் பி.வரதராஜலு, வி.ஒசிதம்பரம் பிள்ளை, ஜார்ஜ் ஜோசப், ஈ.வெ.ராமசாமி முதலியவர்களையும், அய்யர் பார்ப்பனரில் தோழர். எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்களையும், பயன்படுத்திக் கொண்டு அம்மையாரை எதிர்த்து அம்மையாருக்குப் பல தொல்லைகளும் கொடுத் தார்கள். அம்மையாருக்குச் சரியான போட்டித் தலைவராக தோழர் காந்தி யாரைப் பிடித்துக் கொண்டுவந்து மகாத்மாவாக்கினார்கள்.
இதன் பயனாகவும் அம்மையாரின் வயோதிகத்தின் பயனாகவும் அம்மையார் அரசியலில் சிறுகச்சிறுக, விட்டுக் கொடுத்துக் கொண்டே வந்துவிட்டார்கள் என்றாலும் அரசாங்கத்தின் மூலம் தனது விபூதிப் பார்ப்பன அய்யர் சிஷ்யர்களுக்கு அளவுகடந்த உதவி செய்து கொண்டே வந்தார். தோழர் சர்.சி.பி. போன்றவர்கள் எல்லாரும் உயர்ந்த அந்தஸ்திற்கு அம்மையாராலே ஆக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அம்மையாரின் அபார சக்தியை ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், அம்மையார் இந்த உலகம் முழுவதும் ஒரு ஆட்சிக்கு உட்படுத்தி அதன் தலைமை ஸ்தானத் தைக் கொடுத்தால் அதை ஒருகையிலும், அதன் ராணுவ ஆட்சியை மற்றொரு கையிலும் உலக மத (போப்) குருவேலையை உபவேலையாக
வும், பார்க்கத் தகுதியும் ஆற்றலும் உடையவர் என்றே சொல்லுவோம். ஆகவே பெண்களுக்கு எவ்வளவு ஞானம் எவ்வளவு தைரியம் எவ்வளவு சக்தி இருக்கின்றது என்று கணிப்பதற்கு அம்மையார் ஒரு ஒப்பற்ற சாதனமா
வார். அப்படிப்பட்ட அம்மையார் தனது 86-வது வயதில் முடிவெய்தது
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பற்றி யாரும் வருந்தவேண்டியதே இல்லை. ஏனெனில் இனி தன்னால் யாதொருகாரியமும் செய்யமுடியாமல் போய்விட்டதென்றால் உடனே முடி வெய்துவிட வேண்டியது தான் நல்லறிவின் குறிப்பாகும்.
ஆகவே அம்மையாரைத் “தாயைப்போலவும் குருவைப்போலவும் தெய்வத்தைப்போலவும்” கருதி அம்மையாரைப் போற்றி வந்த அவரது சிஷ்யர்கள் பெரிதும் மனிதஜீவ இயற்கையை உணர்ந்த ஞானவான்கள் ஆதலால் அப்படிப்பட்டவர்களுக்கு பிறரது அனுதா்பமோ ஆறுதலோ அவசியம் இல்லையென்றே கருதுகிறோம்.
குடி அரசு - இரங்கல் செய்தி - 24.09.1933
குடி அரசு - 1933 (2 156
ஒரு எச்சரிக்கை
தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் இன்று தோழர் ஷண்முகத்தின் பதவி மிக்க வயிற்றுக் கடுப்பாய் இருந்து வருகின்றதை நாம் உணர்ந்து வருகின்றோம். இவற்றுள் ஒரு விகடப் பத்திரிகை மிக்கக் கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறதைப்
பற்றிப் பல தோழர்கள் நமக்குப் பல வியாசங்கள் எழுதி இருக்கிறார்கள். அவற்றை இப்போது நாம் பிரசுரிக்கவில்லை. தயவு செய்து அப்பத்திரிகை அம்மாதிரி நடந்து கொண்டதற்காக வருந்தாதவரை அந்த வியாசங்களை.
நாம் பிரசுரித்துத் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
விகடத்துக்கும் விஷமத்துக்கும் குரோதத் தன்மைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட மாட்டாது என்று நினைப்பது ஏமாற்றத்தைத் தரும் என் பதை எச்சரிக்கை செய்தே, அந்தச் செய்கையைப் பின்வாங்கிக் கொள்ளும் படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 24.09.1933
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
சங்கறாச்சாரிக்கு அவமரியாதையா?
மூப்மு கலைக்டர் தர்பார்
சென்ற 22-9-33 வெள்ளிக்கிழமை இரவு தஞ்சையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியைப் பார்க்க அவ்வூர் டிப்டி சூப்ரெண்டெண்டான ஒரு பிராமணரல்லாத கனவான் குடும்ப சமேதராய் சென்றிருந்தார். அது சமயம் சங்கராச்சாரியாரின் முகாமில் நின்று கொண்டிருந்த - தஞ்சை டிவிஷன் ஹெட் குவார்ட்டர் டிப்டி கலைக்டர் அவர்கள் ஷெயாரை அழைத்து எவ்வாறு மேலே ஷர்ட் போட்டுக்கொண்டு போகலாமென்று வினவினார். அதன் பேரில் இருவர்களுக்கும் சில வாக்கு வாதங்கள் நிகழ்ந்தது.
இதுவிஷயமாக தஞ்சையில் பெருத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சங்கராச்சாரியின் முன்பு சட்டை போட்டுக்கொண்டு போகக்கூடாதென்பது பழக்கத்தில் இருப்பதாகவே ஒத்துக்கொண்ட போதிலும், அதை அமுல் நடத்த (Enforce) டிப்டி கலைக்டருக்கு என்ன சம்மந்தமுன்டென்பதும், அதற்கு சங்கராச்சாரிக்கு ஆள் மாகாணம் இல்லையா என்றும், டெ டிப்டி கலைக்டர் அந்த வேலையைத்தானே வகித்துக் கொண்டு சங்கராச்சாரியா
லும் அவர் சிப்பந்திகளாலும் செய்ய சாத்தியப்படாததான காரியத்தை தான்
தன் அதிகார பதவியை கொண்டு அமுல் நடத்தி, மதத்தைக் காப்பாற்ற செய்யும் சூழ்ச்சி யாயென்றும் நமக்கு விளங்கவில்லை.
எந்த பிரத்தியேக அதிகாரத்தைக் கொண்டு டிப்டி கலைக்டர் நடந்து கொண்டார் என்கிற விஷயத்திற்கு வல்லத்திற்கு விஜயமாகியிருக்கும் ஜில்லா கலைக்டருக்கு ரிப்போர்ட் செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிய
வருகிறது. (ஒருநிரூபர்!
குடி அரசு - செய்தி விளக்கம் - 01.10.4933
குடி அரசு - 1933 (2 158
கொச்சி, திருவாங்கூர், திருவநல்வேலி தொழிலாளர் மகாநா௫
தோழர்களே!
உங்களுடைய மகாநாட்டில் தலைமை வகிக்கும் பேற்றை எனக் களித்து இந்த சந்தர்ப்பத்தில் எனது அபிப்பிராயத்தைத் தெரிவித்துக் கொள்ள வசதி அளித்ததற்கு எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
என்னைப்பற்றிப் பல தோழர்கள் கவிராயர்கள் போல் புகழ்ந்துகூறிய தற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனாகிலும் அப்புகழ்ச்சி உரை: களுக்கு நான் தகுதியுடையவனல்ல என்றும், அப்புகழ்ச்சிகளில் ஏதாவது ஒரு பாகத்துக்காவது தகுதியுடையவனாக என்னை ஆக்கிக் கொள்வதற்கு அவைகளை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறேன் என்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
என்னைப்பற்றிப் பேசிய சிலர் வைக்கம் சத்தியாக்கிரகத்தைப் பற்றி
பிரஸ்தாபித்து அதை நடத்துவித்ததும் அது வெற்றியாய் முடிவு பெற்ற காரணமாய் இருந்ததும் நானேயாவேன் என்று பேசினார்கள். அதையும் ஒப்புக்கொள்ள முடியாமைக்கு நான் வருந்துகிறேன். வைக்கம் சத்தியாக் கிரகத்தில் பெயரளவுக்கு என் பெயர் அடிபட்டாலும் அதன் உற்சாகமான நடப்புக்கும், வெற்றிக்கும் வாலிப தோழர்களுடைய வீரம் பொருந்திய தியாகமும், சகிப்புத்தன்மையும், கட்டுப்பாடுமே காரணமாகுமென்று தெரிவித் துக் கொள்ளுகிறேன்.
நிற்க, தோழர்களே! தொழிலாளர் பிரச்சினை என்பது உலக மக்கள் சமூகத்தின் பிரச்சினையேயாகும். ஏனெனில் உலக மக்களில் 100-க்கு 90 பேருக்கு மேம்பட்டவர்கள் தொழிலாளிகள் என்னும் தலைப்பின் கீழ்தான் வருவார்கள். எப்படியெனில் தொழிலாளிகள் என்றாலே மனித சமூகத்தில் சரீரத்தினால் பாடுபட்டு வேலை செய்து ஜீவனம் செய்யும் மக்களாவார்கள்.
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இந்தப்படி ஜீவனம் செய்வதிலும் அன்னியருக்காக என்று பாடுபட்டு அன்னியர் சுகமாய் போக போக்கியத்துடன் சரீரத்தினால் பாடுபடாமல்
வாழக் கூடிய ஒரு கூட்டத்திற்காக என்று உழைத்துவிட்டு மேலும் மேலும் உழைப்ப தற்கும், தாங்கள் சீக்கிரம் இறந்து விடாமல் இருப்பதற்கும், தங்கள் ஜீவ தசைக்குப் பிறகும் அன்னியருக்கு உழைத்துப் போடுவதற்காக சந்ததிகளை ஏற்படுத்தி அவர்களையும் அன்னியருக்கு உழைக்கவே தற்பித்து செய்யவும், எவ்வளவு வேண்டும் அவ்வளவை மாத்திரமே அடைவதற்கு தகுதியுடைய வர்களாக தங்களை ஆக்கிக் கொண்டிருக்கிற வர்களாவார்கள்.
ஆகவே இப்படிப்பட்ட மக்கள்கள் உலக மக்கள் சமூகத்தில் 100-
க்கு 90 பேர்களுக்கு மேலானவர்களாய் இருப்பதால் தான் இப்படிப்பட்ட தொழி லாளர்களுடைய பிரச்சினையை உலக மக்கள் பிரச்சினை என்று சொல்ல வந்தேன். ஆனால் இப்படிப்பட்ட பெரும் சமூகப்பிரச்சினையை
ஒரு தனிப் பிரச்சினை என்பதாக (தொழிலாளர் பிரச்சினை என்று) ஒதுக்கி வைத்திருப் பதும் மிக சிறுதொகை கொண்ட தனிப்பட்ட வகுப்பார்களது பிரச்சினையை அதாவது பாடுபடாமல் அன்னியர் உழைப்பால் வாழும் மக்களாகிய எஜ மானத் தன்மை-முதலாளித் தன்மை கொண்ட 100 க்கு 10
பேர்களாய் உள்ள மக்களின் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக ஆக்கி அதைப்பற்றியே எல்லா மக்களும் கவனிக்கும்படியானதா யிருந்து வரும் காரணம் என்ன என்று உங்களில் பலர் கருதலாம். அதற்குக் காரண மெல்லாம் உலகம் பாடுபடாத சோம்பேறிக் கூட்டத்தார், சூழ்ச்சிக் கூட்டத்
தார் ஆகிய முதலாளித் தன்மை, புரோகிதத்தன்மை கூட்டத்தார் என்பவர் களின் ஆதிக்கத்தில் இருப்பதால் அப்படிப்பட்ட அவர்களுடைய பிரச்சி னையை உலகப் பொதுப்பிரச்சினையாக ஆகிவிட்டது. முன் குறிப்பிட்ட தொழிலாளிக் கூட்டத்தார் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர். களாய் இருந்தும், ஆதிக்கமற்றவர்களாகவும் அடிமைத்தனத்தின் பேரி லேயே தங்களது வாழ்வை நிர்ணயித்துக் கொண்டவர்களாகவும் இருந்து கொண்டு இந்தத் தன்மையையே உலக இயற்கை என்று கருதிக் கொண்டி
ருப்பதால் (தொழிலாளர் பிரச்சினை 100-க்கு 90 மக்களது பிரச்சினை பொது பிரச்சினையாகக் கருதப் படுவதற்கில்லாமல் போய் விட்டது.
ஆகவே தொழிலாளி மக்கள் பிரச்சினை உலக மக்கள் பிரச்சினை என்கின்ற கருத்தின் மீதே அது சம்மந்தமாக எனக்குப் பட்ட சில விஷயங் களை உங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
தோழர்களே! இன்றைய உலக நிலை அதாவது மனித சமூகத்தின் வாழ்க்கைத் தன்மையானது துக்கம் கவலை அதிர்ப்தி, சாந்தியற்ற தன்மை, ஒருவருக்கொருவர் தாழ்ந்த தன்மை, ஒருவரை ஒருவர் அடக்கி ஆளும் தன்மை ஆகியவைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கத் தக்கதாகவே இருந்து வருகிறது. இந்த நிலையானது இன்று நேற்று ஏற்பட்டது
குடி அரசு - 1933 (2 160
என்று சொல்லி விடுவதற்கு இல்லாமல், உலகம் தோன்றியதாகச் சொல்லப்
படும் காலமுதல் நாளது வரையிலும் எவ்விதமான மாறுதலும் இல்லாமலே
இருந்து வருகிறது. மனித சமூகத்தில் உள்ள இவ்விதமான கஷ்டங்களையும், கொடுமைகளையும் குறைகளையும் நிவர்த்திப்பதற்காக வென்று வெகுகால மாகவே அதாவது நமக்கு சரித்திர பூர்வமாய் விளங்கும் பல ஆயிரக் கணக் கான வருஷங்களாகவே அநேக மனிதர்கள், கடவுள், கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன், கடவுள் தன்மை பெற்றவர் என்னும் பெயர்களாலும், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், மகாத்மாக்கள், ஞானிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்ற பெயர்களாலும் தோன்றி எவ்வளவோ காரியங்கள் திருத்தப்பாடுகள் உண்டாக்கியதாக எழுதி வைக்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகின்றது. மேல்கண்ட ஒவ்வொருவருடைய தோன்றுத
லுக்கும் காரணமாக, பெரிதும் உலகத்தில் தர்மம் குன்றிவிட்டதாகவும், அதர்மம் அதிகரித்துவிட்டதாகவும், துஷ்டர்களால் சாதுக்கள் கஷ்டப்படு வதாகவும், வலியோரால் எளியோர்கள் துன்பப்படுவதாகவும் அவைகளை யெல்லாம் போக்குவதற்காகவென்றே தோன்றி அதர்மத்தை ஒழித்து துஷ்டர்களை சிகஷித்து சாதுக்களையும், ஏழைகளையும், கஷ்டப்படும் மக்களையும் ரகஷிப்பதற்காகவே தோன்றினார்களென்றும் சொல்லப்பட்டு வருகிறது.
மற்றும் இந்த “தெய்வாம்சம் பெற்றவர்கள்” என்ற கூட்டத்தவர்களால் மனித சமூக வாழ்க்கையின் ஒழுங்குக்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் வேதங்கள், நீதி சாஸ்திரங்கள், மற்றும் நீதியைப் போதிக்கும் சாதனங்கள் என்பவைகளும் எண்ணிக்கைக்கும், எல்லைக்கும் கட்டுப்படாத அளவுக்கு
குவிந்து கிடக்கின்றன. இவைகளின் பயனாகவெல்லாம் அநேக காலமுதல் நாளது வரையில் பெரும்பான்மையான மனித சமூகத்திற்கு சிறிதாவது கஷ்டமோ துன்பமோ, கவலையோ, ஒழிந்திருப்பதாகச் சொல்லமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
எப்படிப்பட்ட கடவுளோ, அவதாரமோ, கடவுள் தன்மை பெற்றவர். களோ, ஞானிகளோ, மகான்களோ தோன்றிய காலங்களிலும் மற்றும் அவர்: களது ஆதிக்கத்திலும் ஆகஷியிலும் உலகம் இருந்துவந்த காலங்களிலுங்
கூட ஜனசமூகத்திற்கு இன்று இருக்கிற கஷ்டமேதான் இருந்துவந்திருக் கின்றதென்பதை எந்த சரித்திரத்திலும் காணலாம்.
“தர்மராஜ்யம்” “ராமராஜ்யம்” “சத்தியகீர்த்தி ராஜ்யம்” என்று சொல்லும்படியான காலங்களில் எல்லாம்கூட இன்று காணப்படும் கொடு
மையும், அதர்மமும், கஷ்டமும், தரித்திரமும், அடிமைத் தன்மையும் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது என்பது சரித்திரங்களிலும், சாஸ்திரங்
களிலும், புராணங்களிலும் தாராளமாய் காணப்படுகின்றன.
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
எனவே இவற்றிற்கெல்லாம் காரணமென்ன? இப்படிப்பட்ட பெரியார்
கள் என்பவர்களால் மனிதச் சமூகத்திற்குள்ள கஷ்டங்கள், துன்பங்கள் ஏன் ஒழிக்கப்படவில்லை? இவர்களால் எல்லாம் ஆகாத காரியம் நம்மால் ஆகி விடுமா? என்பனபோன்ற விஷயங்களை யோசித்து ஒரு முடிவுக்கு வந்த பிறகேதான் நாம் இன்று என்ன செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம் என்பதை யோசிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அப்படிக்கெல்லாம் இல்லாமல் கூடிக்கூடிப் பேசி பழைய பாடங் களையே படித்து கஷ்டப்படுபவர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு அவர். களது கஷ்டங்களை இவர் வந்துப்பேசி கண்ணீர்விட்டுப் போவதென்பது “அரைத்த மாவை அரைத்ததுபோலும், சிரைத்த தலையை சிரைத்தது போலும்” ஆகுமே யொழிய பலன் தரத்தக்க காரியம் எதுவுமே நம்மால் முடியப்போவதில்லை..
ஆகவே ஏன் இந்த பழைய நிலை மாறவில்லையென்றும், மாற்று வதற்காக தோன்றிய பெரியார்கள் எல்லாம் ஏன் தோல்வி அடைந்துவிட் டார்கள் என்றும் யோசித்துப் பார்ப்போமேயானால் முறையே அதன் காரணமும் அப்படிப்பட்டவர்களின் தவறுதலும் நமக்கு நன்றாய் விளங்கும்.
எனக்குத் தோன்றியவரையிலும் “பெரியார்” களுடைய முயற்சி களெல்லாம் வெற்றிபெறாமல் போனதற்குக் காரணம் அப்பெரியார்கள். கஷ்டநிலை என்பதற்குக் காரணம் என்ன என்பதையே அவர்கள் சரியாய் உணரவில்லை என்றுதான் சொல்லுவேன்.அஸ்திவாரத்தில் உள்ள கோளாறு களை லக்ஷியம் செய்யாமல் மேலும் மேலும் கட்டிடங்கள் கட்டியதாலேயே கட்டின கட்டிடங்களெல்லாம் இடிந்து விழுந்து கொண்டே வந்துவிட்டன. இதனால் இன்று இடிந்து விழுந்த-பழுதுபட்ட சாமான்களும், வாழ்வுக்கு தவாக் குட்டிச்சுவர்களுமாகத்தான் அம்முயற்சியின் பலன்கள் காணப்படு கின்றன. ஆதலால் தான் பயன்படவில்லை.
ஒரு விவகாரத்தை ஒழிக்க (பைசல் செய்ய! முன்வந்த ஒருவன் ஐந்தும் * ஐந்தும் -பனிரெண்டு 6555-12) என்று கருதிக்கொண்டு விவ காரத்தை தீர்க்க முற்படுவானேயானால் அப்படிப்பட்டவனால் விவகாரம் சரியான தீர்ப்பு அடைய முடியுமா? அதுபோலவே உலகக் கஷ்டத்தைப் போக்குவதற்குத் தோன்றிய அவதாரங்கள் (பெரியார்கள்! எல்லாம் மனித.
சமூகத்தின் கஷ்டங் களுக்கு காரணமாயிருப்பது மனித சமூகத்திலுள்ள
சிலரின் சூழ்ச்சியென்றும் அக்கிரமமான நடத்தையென்றும் கருதாமல் தங்களால் நிரூபிக்கச் சாத்தியமற்றதும் தங்களுக்கே புரியாததுமான ஒரு வஸ்துவைக் கற்பனை செய்துகொண்டு அதற்கே சகல சக்திகளையும் கொடுத்து எல்லாவற்றிற்கும் அதையே பிணையாக்கி அதன்பேரிலேயே எல்லாப் பழிகளையும்போட்டு அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இருப்ப தாகக் காட்டி அதன் தயவினா லேயே உலகக் கஷ்டங்களைப் போக்க
குடி அரசு - 1933 (2 162
முயற்சிப்பதாகச் சொல்லி அந்தப் படியே மக்களையும் நம்பச் செய்துவிட்டு போய்விட்டார்கள். இப்பொழுது தோன்றுகிறவர்களும் தங்களை “மகான்கள்” என்றும் “ஞானிகள்” என்றும் உலகக் கஷ்டத்தை ஒழிப்பதற்கு கடவுள் அருளால் தோன்றி கடவுள் அருளால் இருந்து, கடவுள் கட்டளைப் படி நடந்து வருவதாகவும் சொல்லுகிற படியால் அவர்கள் ஒரு காரியத் தையும் செய்ய முடியாமல் இருப்பதோடும், கஷ்டங்களையும், கஷ்டத்திற்கு ஆதாரமாக இருப்பவைகளையும் என்றும் நிலைத்திருக்கக்கூடியதாகவே செய்துவருகிறார்கள்.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் இத்தனை பெரியார்கள் என்பவர்: களும் தங்கள் முயற்சியால் வெற்றிபெறாமல் போனதற்குக் காரணம் என்ன வென்பதைக் கண்டுபிடிக்க சக்தி இல்லாமல் போய்விட்டதால் அவர்கள். அச்சக்தியற்ற தன்மையைத் தைரியமாய் ஒப்புக்கொள்ள இஷ்டப்படாமல் “இவ்விதக் கஷ்டங்களும், துன்பங்களும் கீழ்மேல் நிலையும், அதிருப்தி
யும், சாந்தமற்ற நிலையும் மனித சமூகத்திற்கு தவிற்க முடியாதது” என்றும் “இதுவே உலக இயற்கை” என்றும் சொல்லிவிட்டுப்போய் இருக்கிறார்கள். இதைத்தான் இன்று சகல துரைகளிலும் அடக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதசமூகம் ஒட்டும் நம்பிக்கொண்டு இயற்கையையோ, தெய்வத்தின் அருளையோ, எதிர்பார்த்துக் கொண்டு. இருக்கிறார்கள்.
இதன்றி இனி மற்றொரு காரணம் என்னவென்றால் அதாவது இன்றைய மேல்கண்ட நிலைகள் மனித சமூகத்துக்கு பெருந்துன்பமாய்
இருந்தும் மனிதனுக்கு பகுத்தறிவு என்பதான ஒரு விசேஷ சிந்தனா சக்தி இருந்தும் அத்துன்பத்தை ஒழித்துக் கொள்ள அது பயன்படாமல் போன தற்கு மற்றொரு காரணம் என்னவென்றால் மனித வாழ்க்கையில் மனிதன் தான் இன்று உயிருடன் இருக்கும்போது அனுபவிக்கும் கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவை எல்லாம் லட்சியம் செய்யத்தக்க தல்லவென்றும் அதாவது இந்த வாழ்வே நிலையற்றதென்றும் “மனிதன் இறந்தபிறகு தீர்ப்பு நாளிலோ, அல்லது மற்றொரு உலகமாகிய மேல்லோகத்திலோ” அனுப விக்கப்போகும் விஷயங்களே முக்கியமானதென்றும் அதைப் பற்றியே மனிதன் கவலை செலுத்தவேண்டும் என்றும் மதங்கள் மூலம் கற்பிக்கப் பட்டதும் ஒரு முக்கிய காரணமாகும். இத்தியாதி காரணங்களே-இந்த விதமான கற்பனைகளே மனித சமூகத்தின் துக்கங்கள் ஒழிக்கப்படுவதற்கு இடையூராய் இருந்து வந்திருக்கின்றன.
அப்படிக்கில்லாமல் இருக்குமானால் உலகில் உள்ள ஜீவராசிகளில் எல்லாம் விசேஷமானது என்றும் மனித ஜீவனுக்கு உயர்ந்த ஞானமும், அறிவும், சிந்தனாசக்தியும் இருந்து வருகின்றது என்றும் சொல்லப்பட்ட ஒரு சமூகம் இவ்வித கீழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாய் இருந்து வந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
இது இப்படி இருக்க தொழிலாளிகளுக்கு உள்ள கஷ்டங்களைப் பற்றி சிறிது ஆராய்வோம்.
தோழர்களே! உலகமானது தொழிலாளர்களாலேயே நிர்மாணிக்கப்
பட்டு தொழிலாளர்களாலேயே நடைபெற்று வருவதாய் இருந்தாலும் உலக வாழ்க்கையில் உள்ள சகலவிதமான தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும், கவலைகளுக்கும் தொழிலாளிகளே ஆளாகிவருகின்றார்கள். சகல ஐஸ்வர் யங்களும், சுகபோகத்துக்கு வேண்டிய சகல சாதனங்களும் தொழிலாளி களாலேயே உண்டாக்கப்படுவதாய் இருந்தாலும் தொழிலாளிகளுக்குத் தான் வயிரார உண்ண உணவில்லை என்கின்ற குறையும், இடுப்பார துணி இல்லை என்கின்ற குறையும், இருக்க இடமில்லை என்கின்ற குறையும், நாளைக்கு என்ன செய்வது என்கின்ற கவலையும் மற்றும் காயலா வந்தால் வைத்தி யத்துக்கு என்ன செய்வது, பெண்ஜாதி பிரசவத்திற்கு என்ன செய்வது, பிள்ளை படிப்புக்கு என்ன செய்வது, சாவு, கல்யாணம் ஆகியவை களுக்கு என்ன செய்வது என்பதுபோன்ற அனேக கவலைகள், குறைகள் இருந்து வருகின்றன. தொழிலாளிகள் அல்லாத மனிதருக்கோ இவ்வித கவலைகள் ஏதுமில்லை இவர்களுக்குள்ள கவலையெல்லாம் தொழிலாளி களின் உழைப்பால் சமித்த பொருளை எப்படிப் பத்திரப்படுத்துவது, எப்படி
மேலும் மேலும் பெருக்குவது, எப்படி அதிகமான சுகபோகங்களை அனுப விப்பது என்பது போன்ற கவலைகளேயாகும். இன்னும் ஏதாவது கவலை இருக்குமானால் அது நாமே உலகில் பெரிய சீமானாக எப்படி ஆவது நாம் செத்த பிறகும் நமது பெருமையும், புகழும், செல்வமும் நமது பிள்ளை
களுக்கும், நமது பேரன்களுக்கும் உலகமுள்ள அளவும் எப்படி நிலைத்
திருப்பது என்பது போன்றவைகளுமேயாகும்.
இவைகள் தவிர முதலாளிகள் என்பவர்கள் தங்கள் நிலை என்றும்
நிலைத்திருக்கவும், தொழிலாளிகள் என்னும் பேரால் உலக பெரும்பான்மை யான மனித சமூகம் தங்களை எதிர்க்காமலும், தாக்காமலும் இருப்பதற்காக வேண்டிய பந்தோபஸ்துக்காக ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுமாகின்றார்கள். நாளாவட்டத்தில் அந்த ஆட்சியின் ஆதிக்கத்தையும் தங்கள் கைக்குள் கொண்டுவந்துவிடவே முயற்சிப்பர். களாகவுமிருந்து வருகிறார்கள். இதனால் முதலாளிகளின் வாழ்வுக்கும், செல்வம் சேர்ப்பிப்பதற்கும் மாத்திரம் தொழிலாளிகள் பாடுபடுகிறார்கள் என்பதில்லா மல் இந்த முதலாளிகளை காப்பாற்றவும் தொழிலாளிகளை அடக்கவுமான காரியத்தின் செலவுக்கும் இந்த தொழிலாளிகளே பாடுபட்டு உழைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இத்தியாதி காரணங்களால்
சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களாகிய தொழிலாளிகளுடைய நிலை மையை நாளுக்குநாள் அடிமைத் தனத்திலும், தரித்திரத்திலுமே அமிழ்த்தப் படுகின்றது.
குடி அரசு - 1933 (2 164
ஆதலால் தொழிலாளிகளது கஷ்டமும், துன்பமும், அடிமைத்தன
மும், கவலையும் குறையும் நீங்கவேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது இல்லாமல் போயே ஆகவேண்டும். அப்படிக்கில்லாமல் வேறு. எப்படிப்பட்ட காரியம் செய்தாலும் தொழிலாளி துன்பமும், இழிவும், தரித்திர
மும் ஒருநாளும் ஒழியாது மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறைவு என்பதெல்லாம் மற்றவனை விட நாம் அதிகமாய் கஷ்டப்படுகின் றோமே மற்றவரைவிட நாம் தாழ்மையாய் வாழ்கின்றோமே மற்றவன் நம்மை அடக்கி ஆளுகின்றானே என்கின்ற மனப்பான்மைகளேயாகும். இந்த மனப்பான்மை இருக்கவேண்டுமானால் மற்றவனுக்கும் நமக்கும் வித்தியாசம் காணப்படாத ஒரு நிலையை உண்டாக்குவதேயாகும்.
உதாரணமாக 100 வருஷத்திற்கு முன் 50 வருஷத்திற்கு முன் மனிதர் களின் சாதாரண வாழ்க்கை இருந்ததைவிட இன்றைய வாழ்க்கைத் திட்டங்கள் அனேக வழிகளில் ஒரு அளவுக்கு உயர்ந்திருக்கின்றது என்பது பிரத்தியட்சம். அப்படியிருந்தும் அந்த அளவுக்கே மற்ற நிலையில் உள்ள வர்கள் திட்டமும் உயர்ந்துவிட்டதால் திட்டம் உயர்ந்தாலும் நிலைமையும் தன்மையும் முன்போலவேதான் இருக்கின்றது. தொழிலாளிகளின் கவலை யெல்லாம் தங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்பதல்ல. தங்களுடைய நிலைமை மற்ற யாருடைய நிலைமைக்கும் தாழ்ந்ததாக இருக்கக்கூடாது என்பதேயாகும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந் திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்த
வும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கிய தத்துவமாய் இருக்கவேண்டும்.
அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படு வதற்காக போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சி
யில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால் தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின்பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்தி விடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்து சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலதுகையில் கூலி அதிகம் கொடுத்து இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்ளுவார்கள். முதலாளி களுடன் கூலித் தகரார் என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூட்சியேயாகும்.
4 அணா கூலிக்கு வேலை செய்ய மக்கள் இன்று 14 அணா கூலி பெருவது எனக்குத் தெரியும். இதன் பயனாய் அவனுடைய நிலை சிறிதுகூட உயர்ந்ததாக சொல்ல முடியாது. அடிமைத்தன்மையும், தரித்திரமும் அவனைச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது. 4 அணா கூலிகொடுத்த
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
முதலாளி அப்போது இருந்ததைவிட இப்போது 14 அணா கொடுக்கும் போது எத்தனையோ பங்குமேன்மையாய் மோட்டாரிலும், ஆகாய ரதத்
திலும் செல்லுகிறான். சந்திரகாந்த மண்டபத்தில் வசிக்கிறான். ஒரு நாளைக்கு
4 அல்லது 5 கையெழுத்துப் போடுவதுடன் அவனது வேலை முடிவடைந்து விடு கின்றது. இந்த நிலையை அவர் பிள்ளைபிள்ளை தலைமுறைக்குப்
பத்திரப் படுத்திக் கொள்ளுகிறான். தொழிலாளி நிலை இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறதா பாருங்கள். அவன் பிள்ளைகள் 3-வது, 4-வது பாரம்வரையில் கூட படிக்க முடியவில்லை. ஓதம் (ஈரம்) இல்லாத இடத்தில் படுக்க முடிய வில்லை. இடுப்புக்குத் தவிர மேலுக்குத் துணியில்லை. இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.
(தொடரும்)
குறிப்பு 2 05.09.1933 (கொச்சி) 10.09.7933 (ஆலப்புழை! 23.09.7933. (திருநெல்வேனி! ஆகிய இடங்களில் நடைபெற்ற தொழிலாளர்கள் மாநாடுகளில் தலைமையேற்று ஆற்றிய சொற்பொழிவு:
குடி அரசு - சொற்பொழிவு - 0110-1933
குடி அரசு - 1933 (2 166
நமது வருததம
- ஈ.வெ.ரா
திருநெல்வேலியில் நடந்த தீண்டாமை மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழா சிரியர் தோழர் எஸ்.சோமசுந்திரபாரதியார் MA, 8.ட, அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். அம்மகாநாட்டிற்கு வரவேற்பு கழகத்தலைவராக இருக்க திருநெல்வேலி தோழர் சாவடி கூத்தநயினார் பிள்ளை அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார். இவ்வேண்டுகோளுக்கிணங்க இரு தோழர். களும் தங்கள் கடமைகளை ஆற்ற மகாநாட்டிற்கு வந்திருந்தார்கள். இங்கு
ஒரு விஷயம் குறிப்பிடவேண்டியதாகும்.
அதாவது அவர்கள் இருவரும் காங்கிரஸ் கொள்கையில் பற்றுள்ள வர்கள், ஆஸ்திகர்கள், காங்கிரஸ் தீண்டாமை விலக்கு “ஹரிஜன முன் னேற்ற”) வேலை கமிட்டியில் அங்கம் வகிப்பவர்கள் ஆவார்கள். இவற்றை யெல்லாம் சுயமரியாதை மகாநாட்டைக் கூட்டிய தோழர்கள் அறிந்தே அவர்களை தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதாகும்.
அன்றியும் மகாநாட்டில் தோழர் சோமசுந்திரபாரதியாரைத் தலைமைப் பதவிக்கு நான் பிரேரேபிக்கும் போதே தோழர் பாரதியாருக்கும் நமக்கும் விசேஷ அபிப்பிராய பேதங்கள் உண்டு என்றும், அப்படியிருந்
தும் இம் மகாநாட்டிற்கு நாம் அவர்களை தலைமை வகிக்க அழைத்திருப்ப
தும், அவர்கள் இணங்கி வந்திருப்பதும், ஆகிய இரண்டு காரியத்தையும்
பார்ப் போமேயானால் நாம் அழைத்ததைவிட அவர் ஒப்புக்கொண்டு வந்திருப்பதே போற்றக்கூடியதென்றம், இதுவே அவரது உதாரத் தன்மை யைக் காட்டு கின்றதென்றும் சொன்னதோடு, நமக்கும் அவருக்கும் உள்ள முக்கிய அபிப்பிராயபேதமென்னவெனில் தோழர் பாரதியார் ஒரு சீர்திருத்த நோக்கமுடையவர் என்றும், அதாவது எதையும் அழித்துவிடாமல் அப்படியே வைத்துச் சீர்திருத்தம் செய்வதன் மூலம் மனித சமூகத்திற்கு விடுதலை யையும், மேன்மையையும் உண்டாக்கக் கருதி இருக்கிறவர் என்றும், நாம் அப்படிக்கில்லாமல் சீர்திருத்தத்தில் நம்பிக்கை வைத்து அதற்குக் கொடுக்க வேண்டிய சலுகையெல்லாம் கொடுத்துப் பார்த்து
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
அதற்காகக் காத்திருக்க வேண்டிய காலமெல்லாம் காத்துப் பார்த்து அந்த அனுபவத்தின் மீது இப்போது நாம் பல விஷயங்களில் தலைகீழ் புரட்சி வேலையிலும், பல விஷயங்களில் பெரியதொரு அழிவு வேலையிலும் ஈடுபட்டிருக்கிறவர்கள் என்றும், ஆனபோதிலும் அவரவர்கள் அபிப்பிராயத்
துக்கு பங்கமில்லாமல் ஏதாவது ஒரு பொது லட்சியத்துக்கு இருவரும் கூடி உழைக்கக்கூடுமானால் அதனால் பயன் உண்டு என்று தோன்றுமானால் யாரும் பின்வாங்க வேண்டியதில்லை என்றும், அதனால் காரியம் கெட்டு விடுமோ என்று பயப்படவேண்டியதில்லை என்றும், பேசி கடைசியாக மற்ற வைதீகர்கள், சைவர்கள் ஆகியவர்களைப் போல் அதாவது “சுயமரியாதைக் காரர்களைப் பார்ப்பதே பெரிய பாவம்” என்று கருதாமல் நமது வேண்டு கோளுக்கு இணங்கி இங்கு வந்திருப்பதற்கு பாராட்டுவதாகவும் சொல்லி பிரேரே பித்தேன். இந்தப்படி சொல்ல வேண்டியதும் பிரேரேபணை செய்ய வேண்டியதும் மரியாதையும் பத்ததியும் நியாயமும் என்றே நான் நினைத்து அந்தப்படி செய்தேன்.
தோழர் பாரதியவர்கள் தலைமை வகித்து தலைமைப் பிரசங்கம் செய்யும்போது முதலில் தன்னை நான் விலக்கிப் பேசி இருக்க வேண்டிய தில்லை என்றும் தான் இம்மகாநா। கு வந்ததில் அதிசயமொன்றுமில்லை யென்றும், மகாநாட்டார் தன்னைத் தேடி அழைத்ததே பெரிதென்றும், சுய மரியாதைக்காரர்களுக்கு உள்ள மனித சமூகத்திற்கு விடுதலை ஏற்பட வேண்டும் என்கிற ஆசையிலும் மனித சமூகம் மேன்மையடைய வேண்டும் என்கின்ற ஆசையிலும் தான் ஒரு சிறிதும் குறைந்தவரல்ல வென்றும் சொல்லிவிட்டு தீண்டாமையைப் பற்றி பேசும்போது தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது யாவரும் ஒப்புக் கொள்ளவேண்டிய விஷயம்
என்றும் அதற்கு உலகில் எந்த சமயமும் விரோதமாய் இருப்பதாக யாரும் கருத வேண்டியதில்லை என்றும், சைவர்கள் தங்களை சைவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் தீண்டாமை பாராட்டக் கூடாதென்றும் சொல்லி அதற்கு ஆதாரமாக இரண்டொரு சைவ மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். அதுபோலவே வைணவர்களும் தீண்டாமையை பாராட்ட நியாயமில்லை என்றும், தீண்டாமை பாராட்டுகின்றவர் வைணவராக இருக்க. முடியாதென்றும் சொல்லி அதற்கு ஆதாரமாக ராமானுஜருடைய விஷயத்தை எடுத்துச் சொன்னார். இந்த சந்தர்ப்பத்தில் தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் எழுந்து ராமானுஜர் தனது பெண்ஜாதியை தன் இஷ்டப்படி நடவாததற்காக விலக்கி விட்டாரல்லவா என்ற ஒரு கேள்வி கேட்டார். அந்த சமயம் சிலர் சிரித்தார்கள். இந்தக் கேள்வி அந்தச் சமயத் துக்கு அவசியமற்றது என்பது எனதபிப்பிராயம். ஆனபோதிலும் அதற்குத் தலைவர் இப்படிப்பட்ட கேள்விகளை மற்றொரு சமயம்கேட்டால் எனக்குத் தெரிந்த பதிலை நான் சொல்ல எப்பொழுதும் தயாராய் இருக்கிறேன். ஆனால் இது சமயமல்ல என்பதாக சொல்லிவிட்டு, ஆனபோதிலும் இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லுவதாகச் சொல்லி ராமானுஜர் சுயமரியாதைக்
குடி அரசு - 1933 (2 168
கொள்கைப்படிதான் நடந்தாரென்றும், தனது மனைவியார் நடத்தை பிடிக்கா விட்டால் அவர் என்ன செய்வது என்று யோசித்துத்தானே தனது மனைவியை விட்டு நீங்கிக் கொண்டாரே ஒழிய தனது மனைவியை நீக்கிவிடவில்லை என்றும் சொன்னார்.
இதற்கும் பலர் சிரித்தார்கள். சிலர் கையும் தட்டினார்கள். அப்போது
பாரதியார் “பரிகாசம் செய்பவர்கள் பரிகசிக்கப்படுவார்கள்” என்பதாக ஒரு பழமொழி உண்டு என்பதாகச் சொல்லிவிட்டு மேலால் பேசும்போது தோழர்கள் ஜீவானந்தம், குப்தா முதலிய 2, 3 பேர்கள் தலைவர் பேசும்போது அடிக்கடி மத்தியில் பிரவேசித்து தலைவரை கேள்விகள் கேட்க ஆரம்பித் தார்கள். இந்த சமயத்தில் நான் தலைவர் அனுமதியின் பேரில் எழுந்து இந்த தோழர்களை கேட்டுக் கொண்டு, தலைவர்பேசும்போது மத்தியில் மத்தியில் பேசுவது அழகல்ல என்று சொன்னேன். அதற்கு தோழர் வல்லத்தரசு அவர்: கள் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வது என்றார். தோழர் குப்தா அவர்.
கள் எங்கள் உணர்ச்சியை இப்படி ஒடுக்கக்கூடாது என்றும் சந்தேகங்களை கேட்டுத்தான் ஆகவேண்டும் என்றும் சொன்னார். தோழர் ஜீவானந்தம் அவர்களும் வாயில் ஏதேதோ சத்தம் கேட்காமல் பேசிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தலைவர் நீங்கள் எல்லோரும் ஏககாலத்தில் உபன்யாசம் செய்வதாய் இருந்தால் என் உபன்யாசத்தை நிறுத்திக் கொள்ளு கிறேன் என்று சொல்லிய பிறகு அவர்கள் உட்கார்ந்தார்கள். பிறகு தலைவர் பாரதியார் அவர்கள் எழுந்து மறுபடியும் பேசும்போது தான் சமய ஆதாரங் களைப்பற்றி பேசுவதானது சுயமரியாதைக்காரர்களை திருப்புவதற்காக அல்லவென்றும் தீண்டாமை விலக்குக்கு சமயம் இடம் கொடுக்கவில்லை என்று கருதி இருக்கிறவர்களுக்கும், சமயத்தில் நம்பிக்கை உள்ளவர் களுக் கும், ஆகவே இதை பேசியதாகவும் இனி மற்ற விஷயங்களைப்பற்றி பேசு வதாகவும் சொன்னார். இந்தப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போது தோழர். வல்லத்தரசோ, அல்லது தோழர் குப்தாவோ அப்படிப்பட்டவர்கள் அதாவது சமய நம்பிக்கைக்காரர்கள் இங்கு யாரும் இல்லை என்று சொன்னார்.
அப்பொழுது தோழர் கூத்தநயனார் பிள்ளை அவர்கள் நாமம் போட்ட சிலரும் விபூதி பூசிய சிலரும் உருத்திராட்சம் கட்டிய சிலரும் வந்திருப்பதாகக் காட்டினார். இந்நிலையில் தலைவர் உபந்யாசம் முடிந்ததும் முதல் தீர்மானம் என்னால் பிரேரேபிக்கப்பட்டது.அதில் அது சம்பந்தமான பல விஷயங் களைச் சொல்லி பிரேரேபித்த பிறகு அதை ஆமோதிக்க
தோழர் ஜீவாநந்தம் அவர்கள் வெகு ஆத்திரத்துடன் எழுந்தார். அது சமயம் நான் தோழர் ஜீவாநந்தம் அவர்களை நீங்கள் ஆமோதிக்க வேண்டாம், வேறு யாராவது ஆமோதிக்கட்டும் என்று பலவிதத்திலும் வணக்கமாகக் கேட்டுக்கொண்டும், எனது வேண்டுகோள் பயன்படாமல் அவர் தான் ஆமோதித்துத்தான் தீரு வேன் என்றதின்பேரில் அவர் அனுமதிக்கப்பட்டு
எழுந்து, தலைவரையே சுட்டிச் சுட்டி தீர்மானத்துக்குச் சம்பந்தமில்லாத பல
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
விஷயங்களைப் பேசி தீர்மானத்தை ஆதரித்தார். பிறகு தோழர் வல்லத்தரசு அவர்கள் பேச வேண்டுமென்று எழுந்து தீர்மானத்தைப்பற்றி ஒரு
வார்த்தையும் பேசாமல் கடசிவரை தலைவரையே பலவித கடினமான வார்த்தைகளால் கண்டபடி வைதுவிட்டு உட்கார்ந்தார். (அந்த வார்த்தைகள் எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆனாலும் இதுசமயம் வெளியிட விரும்ப வில்லை) பிறகு இரண்டொரு தீர்மானங்கள் நிறைவேறி தலைவர் முடிவுரை நடந்தபிறகு என்னை தலைவருக்கு நன்றி செலுத்தும்படி தோழர் குற்றால லிங்கம் அவர்கள் கட்டளையிட்டதற்கிணங்க நான் எழுந்து நடந்த சம்பவத் திற்கு வருந்தி தலைவருக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ளும் முறையில்
மகாநாட்டில் ஒழுக்கமுறை தவறி நடந்து கொண்ட தோழர்கள் செய்கையை கண்டித்து பேசுகையில் குறிப்பிட்டதாவது சுயமரியாதைக்காரர்களைப் பற்றி பலர் கண்டபடி பழி கூறித் திரியும் காரியங்களை மெய்ப்பிக்க அனுகூல
மாகும் படி இன்று இங்கு சில தோழர்கள் வேண்டுமென்றே ஒழுங்கு முறை களை அலகஷியம்செய்து நடந்து காட்டிவிட்டார்கள். தலைவரைப்பற்றி நான் பிரேரேபிக்கும்போதே எல்லா விபரங்களையும் தெரிவித்திருக்கின்றேன். இம்மாதிரி மனப்பான்மையுள்ள தோழர்களுடன் இனி ஒத்துழைப்பதினால் நன்மையைவிட கெடுதியே அதிகமாக ஏற்படும் என்று தோன்றுகிறது. இதுவரை நமது இயக்கத் தோழர்கள் பலரின் நடத்தையால் நான் அதிகக் கஷ்டமடைந்திருக்கிறேன். எனக்கு சொந்தத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் பழிகள், நஷ்டங்கள் ஆகியவைகளைப்பற்றி நான் எப்போதும் கவலைப் படவில்லை. அதைப்போக்கிக் கொள்ள நான் முயற்சிக்கவும் இல்லை. ஆனால் இம்மாதிரி நடவடிக்கைகளால் இயக்கத்தின் யோக்கியதை கெட்டுப் போகின்றதென்றே நான் வருந்துகிறேன். இன்றைய மாதிரியை நான் வன்மையாய்க் கண்டிக்கிறேன். இதனால் இப்படிப்பட்ட தோழர்கள் கோபித்
துக் கொண்டுபோய், இதற்குமுன் கோபித்துக்கொண்டு போனவர்கள் செய் கின்ற மாதிரி எவ்வளவு இடையூறு செய்தாலும் அதற்குத் தலை கொடுக்கத் தயாராயிருக்கிறேன். அதை எல்லாம் எதிர்பார்த்தே நான் இப்படி பேசுகி றேன். இதற்கு முன்னும் நான் இப்படி கண்டிப்பதாய் இருந்ததாலேயே இயக்கம் ஓரளவுக்காவது உயிருடன் இருக்கிறது.
இதுபோல் அநேகரின் இடையூறுகளையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டுதான் இயக்கத்தை ஒரு அளவுக்கு நிலை நிறுத்திக் கொண்டு வந்திருக்கிறேன். இந்தத் தோழர்கள் தங்களது இப்படிப்பட்ட மனப் பான்மையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இவர்களுடன் ஒத்து உழைப்பது சாத்தியமற்றதாகிவிடும். ஜஸ்டிஸ் கட்சியுடனும் சில பணக்காரர்களுடனும்
நான் கலந்திருந்தது வாஸ்தவமே. ஆனால் அது எனது சுயநலத்துக்கு அல்ல. அவர்களை இயக்கத்துக்கு எவ்வளவு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு அவர்களுடன் கலந்து வந்திருக்கிறேன்.
குடி அரசு - 1933 (2 170
நமது சொந்த விஷயத்தில் ஒருவர் நடந்து கொண்டதற்காக ஒருவரை: இகழ்வதும், வைவதும், பொதுக் கூட்டங்களில் பேசுவதென்பதும் சிறிதும் ஒழுங்காகாது. இந்தக் கூட்ட நடவடிக்கையைப் பார்த்தபிறகு இனியும் நமக்கு மகாநாடுகள் வேண்டுமா என்றும் மகாநாடுகள் நடத்த நமக்குத் தகுதி உண்டா என்றும் பயப்படும்படியாக ஆகிவிட்டது. மத்தியான மகா நாட்டுக்கு வரலாமா வரக்கூடாதா என்றுகூட யோசிக்கிறேன். ஏதோ என்
சக்தி அனுசாரம் எனக்குள்ள ஊக்கத்தைக் கொண்டு என் அபிப்பிராயத்தை தெருவில் நின்று பேசி விட்டுப் போவதே மேல் என்றுகூட யோசிக்கிறேன். நான் ஏன் இவ்வளவு வருத்தமாய் பேசுகிறேன் என்றால் தப்பாகவோ சரியாகவோ இதன்பழியும் பொறுப்பும் என் தலைமீது இருக்கிறது என்று கருதியும் மற்ற தோழர்களுக்கு சிறுவயது வாலிப ரத்தம் என்கின்ற சாக்குகள் இருக்கின்ற மாதிரி எனக்கு சாக்கு இல்லை என்றும் கருதுவதாலேயேயாகும்.
ஒவ்வொருவருடைய அபிப்பிராயமும் உணர்ச்சியும் தனித்தனியே தாண்டவமாட வேண்டுமென்றால் ஒழுங்குமுறை என்பதற்கு அர்த்தமே இல்லை. தனித்தனி அபிப்பிராய சுதந்திரம் என்பது அனேக பரீட்சைக்கும் அனுபவத்திற்கும் பிறகு மாறி இப்போது ஒரு தனி அபிப்பிராயத்தின்கீழ் நடந்தாகவேண்டியதாய் இருந்துவருகிறது. இப்படியெல்லாம் இருக்க ஒவ்வொருவரும் எழுந்து தங்கள் தங்கள் உணர்ச்சிப்படி சபையில் நடப்பது என்றால் சபைக்குத் தலைவர் எதற்கு? ஆகவே இங்கு இந்த மகாநாட்டுத் தலைவரிடம் நடந்த மாதிரிக்கும் அவரை அனாவசியமாய் வைத மாதிரிக்
கும் நான் இன்று வருந்தாமல் இருக்கமுடியவில்லை என்பதோடு, தலை வரை வணக்கத்துடன் மன்னிப்பும்கேட்டுக் கொள்கிறேன். முக்காலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதோடு இந்தமாதிரி தோழர்கள் மத்தி யில்தான் இந்த 7, 8 வருஷங்களாக இந்த பிரச்சாரமும் செய்துவருகிறேன். இன்னும் பல தோழர்களின் கதை கேட்டால் தலைவரவர்களே அதிசயப் படுவார்கள். அதையெல்லாம் இங்கு விரிக்க நான் ஆசைப்படவில்லை. ஆதலால் தலை வரவர்கள் எனது கஷ்டமான பரிதாபகரமான நிலையைக் கண்டாவது இன்றைய சம்பவங்களை மறந்துவிடவேணுமாய் மறுபடியும் மறுபடியும் வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொன்னேன்.
முற்பகல் மகாநாடு முடிந்தபிறகு பிற்பகல் தோழர்கள் பாரதியாரவர்கள்' சாவடி கூத்த நயினார் பிள்ளை அவர்கள் ஜாகைக்குச் சென்று தனிப்படவும் இருவருக் கும் சமாதானம் சொல்லிவிட்டு பிறகு பிற்பகல் தொழிலாளர். மகாநாட்டுக்கும் வந்து எனது கடமைகளைச் செய்தேன்.
மகாநாடு முடிந்தபிறகும் கடைசியாக தோழர் வல்லத்தரசு அவர்கள்
மறுபடியும் பேச எழுந்து அப்பொழுதும் ஒரு முறை சில கடின பதங்களை உபயோகித்து விட்டு கடைசியாக இம்மாதிரி மகாநாடுகளில் சுயமரியாதை இயக்கக்காரர்கள் அல்லாதவர்களை உள்ளே புகவிடக்கூடாதென்றும், அவர். களை சேர்க்கவே கூடாதென்றும், சேர்த்ததால்தான் இப்படி நடந்ததென்றும்
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஆதலால் தான் நடந்துகொண்டமாதிரி சரி எனப்பொருள்படவும் பேசி
முடித்தார். ஆகவே இந்தமாதிரி நடவடிக்கையால் எனது மனம் சற்று புண்பட்டு விட்டதுடன் எனது நம்பிக்கையும் சற்று ஆட்டம் கொடுத்துவிட்டது. இது ஒரு புறமிருக்க நல்ல சமயத்தில் அதாவது நமது இயக்க கொள்கைகள் நம் எதிரிகளாலும் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிக்காரர்களாலும் ஒப்புக்கொள்ளத்தக்க சமயமாகவும் எல்லா இந்திய ஸ்தாபனம் என்னும் காங்கிரசுக்காரர்களாலும் ஒப்புக் கொள்ளக்கூடிய சமயமாய் இருக்கும் போதும், சுயமரியாதைக்காரர்கள் அல்லாதவர்களை உள்ளேவிடக் கூடாது என்றும் உள்ளேவிட்டால் இப்படித்தான் நடக்கும் என்கின்ற பொருளிலும் பேசினால் நலம் விளையுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.
உண்மையைப் பேசப்போனால் சுயமரியாதைக்காரர்கள் என்று சொல்லி, கூடவே அளவளாவிக் கொண்டிருக்கிறவர்களைவிட காரியத்
திலும் கொள்கையிலும் ஒழுங்கிலும் எவ்வளவோ சரியாய் நடந்து கொண்டு சுயமரியாதைக்காரர்கள் என்பவர்களில் சிலருடைய நடத்தைக்காகவும் வசவுக்காகவும் பயந்து கொண்டு கலந்துகொள்ள முடியாமல் இருக்கிறவர்.
கள் பலர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆதலால் சுய மரியாதைக்காரர்கள் அல்லாதவர்கள் உள்ளே வந்தால் இப்படித்தான் நடக்கும் என்று நாம் எப்படி சொல்லமுடியும். இதுவரை நடந்த நமது மகாநாடுகளில் நமது சங்கங்களில் நமது கூட்டங்களில் எத்தனையோ வித அபிப்பிராயமுள்ளவர்களை கலக்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அவர். களால் எல்லாம் இயக்கத்திற்கு பலன்பெற்றிருக்கிறோமேயொழிய அவர்க ளால் அல்லது அவர்களுக்காக நமது கொள்கைகள் எதையும் விட்டுக் கொடுத்துவிடவில்லை. ஆதலால் இனியாவது இயக்க தோழர்கள் என்ப வர்கள் தங்கள் செய்கை சரியா தப்பா என்று யோசித்துப் பார்த்து தக்கபடி நடந்து கொள் வார்கள் என்கின்ற நம்பிக்கையின் மீது எழுதுகிறேன்.
தோழர் பாரதியாரவர்களையும் மகாநாட்டில் தெரிவித்துக் கொண்டது போலவும் தனியே தெரிவித்துக்கொண்டது போலவும் பத்திரிகை மூலமும் மேல்படி சம்பவத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து மற்றுமொருமுறை இச்சம்பவத்தை மறந்துவிடும்படியாக வேண்டிக்கொள்ளுகிறேன்.
குடி அரசு - தலையங்கம் - 0140.1933.
குடி அரசு - 1933 (2 172
மதக்கிறுக்கு
உலகில் மதங்கள் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள். ஆகி இருந்தாலும் மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூல புருஷர்கள் எல்லாம் தெய்வீகச் சக்தி பொருந்தியவர்களா
யும், தெய்வ சம்மந்தமுடையவர்களாயும், தீர்க்கத் தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இருந்தார்கள் என்று சொல்லப்பட்டும் எல்லா மதக் கட்டளைகளும் தெய்வங் களாலேயே மூல புருஷர்கள் மூலம் உலகத்திற்கு இறக்கப்பட்டது என்று சொல்லப்பட்டும் இருந்தாலும் சதா சர்வ காலமும் அந்த அந்த மதப் பிரசாரம் செய்யப்படாவிட்டால் மதம் ஒழிந்து போய் விடுமே என்கின்ற பயம் எல்லா மதஸ்தர்களிடமும் இருந்துதான் வரு
கின்றது. இந்தக் கருத்திலும், காரியத்திலும் உலகில் இன்னமதம் உயர்வு, இன்னமதம் தாழ்வு என்று சொல்லுவதற்கில்லை.
சாதாரணமாக ஒரு கோடி ரூபாயோ, அல்லது இரண்டு கோடி ரூபாயோ கையில் வைத்துக் கொண்டு ஆயிரம் ஆளுகளோ, அல்லது இரண்டாயிரம் ஆளுகளையோ நியமித்து 5, 6 பாஷைகளில் பத்திரிகைக ளையும் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு தாழ்த்தப்பட்ட மிருகத்தின் பேரால் ஒரு மதத்தைக் கற்பித்து அம்மிருகத்துக்கு சில “தெய்வீகத்தன்மை”யை கற்பித்து அது பல “அற்புதங்கள்” செய்ததாகக் கதைகள் கட்டிவிட்டு பிரசாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக சில வருஷத்திற்குள். லக்ஷக்கணக்கான மக்களை அம்மதத்தைப் பின்பற்றுபவர்களாகச் செய்து விடலாம். பிறகு அந்த மதத்தை எவனாவது குற்றம் சொல்லுவானேயானால் அவன் தண்டிக்கப் படவோ, வையப்படவோ, அடிக்கப்பபவோ, கொலை செய்யப்படவோ ஆளாகும்படியும் செய்துவிடலாம்.
ஆதலால் மதங்களுக்கு ஜீவநாடியாய் இருந்துவருவது பணமும் பிரசாரமுமே அல்லாமல் அவற்றின் தெய்வீகத் தன்மையோ, உயர்ந்த குணமோ என்று எதையும் யாரும் சொல்லிவிடமுடியாது.
“சமீபகாலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை ஒரு “பேய் பிடித்துக்கொண்டு” அந்த பெண்ணும் தலைவிரித்து ஆடத்தொடங்கினாள். அதற்காக ஒரு பேயோட்டியைக் கூப்பிட்டு அந்தப் பேயை ஓட்டச் சொன்ன
172 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தில் அந்தப் பேயோட்டி இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் யார். என்று கண்டுபிடிப்பதில் 2-நாள் செலவழித்து கடைசியாக 5, 6 வருஷத்திற்கு, முன்னால் அவ்வூர் கிணற்றில் விழுந்து செத்துப்போன ஒரு மராட்டியன் அடுத்த ஜன்மத்தில் நாயாய் பிறந்து இந்தப் பெண் வீட்டில் வெகு செல்ல
மாய் வளர்ந்து இந்தப் பெண்ணிடமும் மிக அன்பாய் இருந்து ஆறு
மாதத்திற்கு முன் அதுவும் கிணற்றில் விழுந்து செத்து போனதால் அது பேயாகி அந்தப் பெண்ணைப் பிடித்துக் கொண்டது என்று சொன்னான். இதை அந்த ஊர்க் காரர்கள் நம்பினார்கள் என்ற குறியை இந்தப் பெண்: தெரிந்தவுடன் பேய் ஆடும்போது அடிக்கடி நாய்மாதிரி குலைப்பதும் சிற்சில சந்தர்ப்பங்களில் மராட்டி பேச்சுமாதிரி பேசுவதுமாய் இருந்தார். அதுமாத்திரமல்லாமல் தன்னைப் பிடித்திருக்கும் பிசாசு நாய்ப்பிசாசுதான் என்பதைக் காட்டுவதற்காக சில சமயங்களில் மலத்தைச் சாப்பிடவும் செய் வாள். மற்றும் வேறு பல நாய்களுக்கும் தின்பண்டம் போட்டு சதா 7, 8 நாய் களுடன் காமாதுர விளையாட்டும் விளையாடுவாள். இதைப் பார்த்த எல்லோருமே சிறிது கூடச் சந்தேகமில்லாமல் இந்தப் பெண்ணைப் பிடித்
திருப்பது நாய்ப்பிசாசுதான் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.”
மதங்களும் இதுபோலவேதான் தன்னை ஒரு மதக்காரன் என்று காட்டிக் கொள்ள வேண்டுமானால் மதக் குருக்கள் அல்லது மதகர்த்தர்கள் அல்லது மதப் பிரசாரக்காரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் என்ன சொல்லு கின்றார்களோ, எப்படி நடந்தால் மதபக்தி உடையவன் என்று சொல்லுவார். களோ அந்தப்படி நடக்கத்தான் ஒவ்வொரு மதபக்தனும் ஆசைப் படுகிறான்.
மதம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதென்றும் சைன்
சுக்கும், மதத்துக்கும் சம்மந்தம் பார்க்கக் கூடாதென்றும் பகுத்தறிவு வேறு, மதக் கோட்பாடுகள் வேறு என்றும் இந்தக் காலம் வேறு அந்தக் காலம் வேறு என்றும் பெரியார்கள் நியமனங்களுக்குக் காரணகாரியங்கள் தேடக்கூடாது
என்றும் ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கக்கூடாது என்றும் எல்லா மதக்காரர்: களும் சொல்லி விடுவதால் உலகில் எந்த மூடனும் எதையும் சொல்லித்
தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியத்தின்மீதே மத ஆபாசமும், மத அயோக்கியத்தனங்களும் உலகில் நிலைத்து வருகின்றது.
இந்த லட்சணத்தில் உள்ள மதங்களுக்கு ஆள் பிடிக்கவேண்டும் என்கின்ற ஆர்வத்தின் மீது மதமாற்றப் பிரசாரங்களும் நடந்து வருகின்றன என்றால் இது “புழுத்ததின் மீது நாய் விட்டையிட்டது” என்கிற பழ மொழிப்
படி மனிதர்களை மேலும், மேலும் மூடர்களாக்குவதாகவே இருந்து வரு கிறது. சாதாரணமாக இந்திய மக்களில் 100-க்கு 92 பேர்கள் தற்குறிகள், எழுதப்படிக்கத் தெரியாத மூடர்கள், இவர்களிலும் 100-க்கு 90 பேர்கள் நல்ல ஜீவனத்துக்கு மார்க்கமில்லாமல் வயிற்றுப்பிழைப்புக்கு எதையும் செய்ய
குடி அரசு - 1933 (2 174
லாம் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறவர்கள். இப்படிப்பட்ட இவர்களிடத்தில் எது சொன்னால் ஏராது? என்ன சொன்னாலும் நம்பும்சக்தி எழுத்து வாசனை அறியாத மூடர்களுக்கே அதிகம். ஆதலால் இப்படிப்பட்ட ஜனங்களிடம் மதப் பிரசாரம் செய்து மதமாற்றுதல் வேட்டை ஆடுவது என்பது யாவருக்
கும் சுலபமான காரியமாகும்.
இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனை அற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத் தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்த
தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மதமாற்றமும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவில் இந்துக்கள், கிறிஸ்து வர்கள், முஸ்லீம்கள், புத்தர்கள். யூதர்கள், பாரசீகர்கள், சீக்கியர்கள், ஆரிய சமாஜிகள், வைணவர்கள், சைவர்கள், ஸ்மார்த்தர்கள் முதலிய கடவுள் மாறு பாடுள்ளவர்களும், மதக்கர்த்தாக்கள் மாறுபாடுள்ளவர்களும், மதக்கோட் பாடுகளின் அருத்த மாறுபாடுள்ளவர்களுமாக எத்தனையோ பிரிவினர்கள் இருந்துகொண்டு வெகுகாலமாகவே மதமாற்றப் பிரசாரம் செய்து கொண்டு தான் வருகிறார்கள்.
ஆனால் இந்த மதங்களில் மனித வாழ்க்கை தத்துவத்தில் ஏதாவது ஒன்றுக்கொன்று பிரமாத வித்தியாசங்கள் இருக்கின்றதா என்று பார்த்தால் ஒன்றுமே காணமுடியாத நிலையில்தான் இருந்துவருகின்றன.
எல்லா மதத்துக்குமே-ஒரு கடவுள் உண்டு.
மேல்லோகமுண்டு..
மோட்ச நரகமுண்டு.
ஆத்மா உண்டு.
செத்தபிறகு இந்த ஆத்துமா அல்லது மனிதன் அவனவன் நன்மை தீமைக்கு ஏற்றவிதம் மோட்ச நரகம் அனுபவிப்பது என்கின்ற கொள்கை களை வைத்து வித்தியாசமில்லாமல் நடந்து வருகின்றது.
பிரத்தியட்ச அனுபவத்தில் எல்லா மதத்திலும் “அயோக்கியர்கள்” “யோக்கியர்கள்” இருந்து வருகிறார்கள்.
எல்லா மதத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லா
மதத்திலும் எஜமான், கூலியாள் இருக்கிறார்கள். எல்லா மதத்திலும் உற்சவம், பண்டிகை இருக்கின்றன. எல்லா மதத்திலும் வணக்கம், தொழுகை, பிரார்த்தனை, ஜபம், தபம் இருக்கின்றன. எல்லா மதக் கடவுள்களும் தொழுகை, பிரார்த்தனை, வணக்கம், பூசை ஆகியவைகளுக்கு பலன்கள் கொடுக்கின்றன.
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
எல்லா மதக் கடவுள்களும் கண்களுக்கு தோன்றாததும் மனத்திற்கு படாததும், ஆதி. அந்தம், ரூபம், குணம், பிறப்பு, இறப்பு முதலியவைகள் இல்லாதவைகளுமாகவே இருக்கின்றன. எல்லா மதங்களும், கண்களுக்கும் மனதிற்கும் தோன்றக் கூடிய எந்த வஸ்துவுக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும் என்றும், ஆனால் கண்களுக்கும், மனதிற்கும் எட்டாத ஒரு வஸ்துவாகிய கடவுளுக்கு ஒரு கர்த்தா இல்லையென்றும் தான் சொல்லு கின்றன. ஒரு மதமாவது என் கடவுள் கண்ணுக்குத் தெரியக்கூடியது என்றோ, என்வேதமாவது தனது கோட்பாடுகள் எல்லாம், மக்கள் எல்லோ
ரும் ஏற்று நடக்கக் கூடியதாய் இருக்கின்றது அல்லது நடக்கக் கூடியதாய் செய்ய சக்தி உள்ள தாய் இருக்கின்றது என்றோ சொல்ல யோக்கியதை உடையதாக இல்லை. எல்லா மதக்காரர்களுக்கும் பசி, தாகம், நித்திரை,
புணர்ச்சி, இன்பம், துன்பம், ஒன்று போலவே இருக்கின்றன. எல்லோருடைய வேதம் கடவுளாலும் கடவுள் தன்மை உடையவர்களாலும் தான் உண்டாக் கப்பட்டதாய் சொல்லப் படுகின்றன. எல்லா மதக்காரர்களுக்கும் ஒவ்வொரு வித அடையாளம் இருக்கின்றன. இந்த நிலையில் மதப்பிரசாரத்தால், மதமாற்றத்தால் மனிதர் களுக்கு என்ன லாபம் என்பது விளங்கவில்லை...
சாதாரணமாக இந்தியர்களில் 8 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். 1கோடிகிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சுமார் 10 கோடி வைணவர்கள் இருக் கிறார்கள், 5 கோடி சைவர்கள் இருக்கிறார்கள்.
மற்றும் கலப்பு மதம் உள்ளவர்கள் மதக் குறிப்பு இல்லாதவர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள் என்று உத்தேசமாகச் சொல்லக்கூடுமானாலும் இவர்கள் பெரும்பான்மையோர் சமீப காலங்களில் அதாவது சுமார் 1000, 2000 வருஷங்களுக்குள் மதமாற்றமடைந்தவர்கள் என்று சொல்லலாமா னாலும் இவர்களின் வாழ்க்கையில் உயர்வு தாழ்வு என்ன? என்பதை
நன்றாய் பார்ப்போமேயானால் ஒருவித மேன்மையும் எந்த ஒரு தனி மதக் காரருக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது அரசியலிலாகட்டும், பொருளியலிலாகட்டும், அறிவியலி
லாகட்டும், சமூதாய வாழ்க்கையிலாகட்டும், ஆண் பெண் தன்மையிலா கட்டும், எல்லோரும் ஒரு மாதிரியாகவேதான் இருந்து வருகின்றார்கள்.
ஆகையால் இந்தியாவுக்கோ, அல்லது உலகத்துக்கோ இனி மதம்
ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா? அல்லது மதம் மாற்று பிரசாரம் வேண்டுமா? என்பதை ஒவ்வொரு அறிவாளியும் யோசிக்க வேண்டியது முக்கிய கடமை
யாகும். மதம் மாற்றுதல் மதப்பிரசாரம் ஆகிய காரியங்களால் சமீப காலத்
திற்கு முன்பு உலகிலும், குறிப்பாக இந்தியாவிலும், சிறப்பாக தென்னிந்தியா
விலும் நடந்த முட்டாள்தனமான-மூற்கத்தனமான பலாத்காரக் கொடுமைச் செயல்களும், கலகங்களும், அடிதடிகளும், குத்து வெட்டுகளும், கொலை களும், சித்திரவதைகளும் எவ்வளவு என்பதற்கு சரித்திரங்கள், புராணங்கள்
குடி அரசு - 1933 (2 176
பிரத்யபட்ச அனுபவங்கள், எத்தனையோ மலிந்து கிடக்கின்றன. இவை களையெல்லாம் உத்தேசித்தாவது இனிவரும் சுயமரியாதை அறிவியக்க சமதர்ம உலக ஆட்சியில் மதவிஷயத்தைப்பற்றி ஆதரித்து எவராவது தெரு வில் நின்று பேசினாலும், தெருவில் புஸ்தகங்கள் வைத்து விற்பனை செய்
தாலும் பத்திரிகைகளில் எழுதினாலும் அவர்களெல்லாம் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள் என்று சட்டம் செய்யப்படுமானால், உலக
மக்கள் பிரிவினையற்று, குரோதமற்று, மடமையற்று தோழோடு தோழ் புனைந்து தோழர்கள் போல் வாழமுடியும் என்பதோடு மத தத்துவங்களின் பலனால் இன்று உலக மக்கள் அனுபவிக்கும் உயர்வு தாழ்வு நிலை ஒழிந்து சகல துறைகளிலும் சமத்துவத்துடன் வாழ முடியும் என்றும் வற்புறுத்திக் கூறுகிறோம். இந்த அபிப்பிராயமானது மதங்கள் தெய்வத்தினாலும் தெய் வாம்சம் பெற்ற வர்களாலும் உண்டாக்கப்பட்டது என்கின்ற நம்பிக்கையை உறுதியாயும் உண்மையாயும் உடையவர்களுக்கு விரோதமாய் இருக்காது என்றும் கருதுகிறோம். ஏனெனில் அப்படிப்பட்ட மதப்பிரசாரம் இல்லா விட்டால் மறைந்து போகும்-அழிந்துபோகும் என்று அவர்கள் (மதபக்தர்.
கள்) பயப்பட மாட்டார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 08.10.1933.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
முதல் மந்திரி கவணிப்பாறா?
சமீபத்தில் நடந்த திருப்பத்தூர் தாலூகா மகாநாட்டுக்காக வாணியம் பாடிக்குச் சென்றிருந்ததில் அங்குள்ள முனிசிபல் நிர்வாகம் மிக மோசமாய் இருக்கக்கண்டோம். முனிசிபாலிட்டியில் எப்பொழுதும் இந்து முஸ்லீம் உணர்ச்சி தகராறு இருப்பதால் அவ்விடத்திய அநேக முக்கிய காரியங் களை சரியாய் கவனிக்கமுடியாமல் போகின்றதாய் தெரிகிறது. ஊர் ரோட்டு. கள் மிக சீர்கேடாய் இருக்கிறது. சுகாதாரம் நடுத்தெருவில் ஜலதாரை (@8 மாலத் தண்ணீர்! ஓடுகிறது. ரோட்டின் இரு மருங்கும் கச்கூசாக உபயோகப் படுத்தப்படுகின்றன. வேறு பல உள்துரைப் புகார்கள் இருப்பதாகச் சொல்லப் படுவதைக் கவனிக்காவிட்டாலும், மத உணர்ச்சித் தகராறுகள் இருப்பதாகச் சொல்லப்படுவதைக் கவனிக்காவிட்டாலும் இதன் பயனாகவே அல்லது வேராலோ நல்ல நிர்வாகம் கெட்டிருக்கிறது என்பது பிரத்தியட்சம். இதுசமயம் அங்கு காலரா பலமாக இருக்கிறது. 100 கேசுக்கு 80 கேசு இறந்து போகின்றது. இந்தக் கொடிய தொத்து வியாதிக்கு எவ்வித முயற்சி எடுத்துக் கொண்டதா கவும் காணப்படவில்லை. சுகாதார அதிகாரிகளைக் காணவே முடியவில்லை. தாலுகா ஜில்லா போர்டாவது கவனித்ததாகத் தெரியவில்லை. இதுதவிர இந்து முஸ்லீம் ஜனசமூகம் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிசமமாய் இருந்தும் ரிவினியூ வரும்படியும் அதுபோலவே இருந்தும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை முஸ்லீம்களில் பகுதிதான் இருப்பதாகத் தெரிகின்றது. பெண்களுக்கு ஸ்தானமே ஒதுக்கப்படவில்லை. இந்தக்குறை கள் இந்துக்கள் என்பவர்கள் மனதில் புகைந்து கொண்டிருப்பதாலேயே
நிர்வாகத்தில் கட்சியோ இல்லாவிட்டால் மனஸ்தாபமோ இருந்துவர காரண மாய் இருக்கிறது. மத வித்தியாசம் உள்ளவரை எங்கும் இப்படித்தான் இருக்குமானாலும் இவ்விதக் கட்சி மனஸ்தாபங்களும் நிர்வாக சீர்கேடு
களும் முதிர்ந்து பொதுஜனசமூகத்துக்கு பெருங்கெடுதிக்கு இடம் கொடாமல் இருப்பதற்காக சர்க்கார் இதை கவனித்து இவை உண்மை என்று உணர்வார். களானால் தயவு செய்து வாணியம்பாடி முனிசிபாலிட்டிக்கு உடனே ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்கவேண்டுமாய் தெரிவித்துக்கொள்ளுகிறோம். தோழர் கனம் முதல் மந்திரி அவர்களும் இதை கவனிப்பார் என்று எதிர் பார்க்கிறோம்.
குடி அரசு - கட்டுரை -15.10.1933
குடி அரசு - 1933 (2 178
தோழர்களே!
தீபாவளி கொண்டாடப்போகிறீர்களா? அதன் கதை தெரியுமா? பகுத்தறிவுள்ள மனிதனுக்குப் பிறந்தவர்களாய் இருந்தால் இம்மாதிரி இழி
வும், பழிப்பும், முட்டாள் தனமுமான காரியத்தைச் செய்வீர்களா? தீபா வளியை விளம்பரம் செய்கின்றவர்கள் யார்? சோம்பேறியும், துரோகியும், அயோக்கி யர்களுமான கழுகுக் கூட்டமல்லவா?
கதர் கட்டினால் தான் சரியான தீபாவளி என்று பல சுயநல சூக்ஷிக்
காரர்கள் சொல்லுகிறார்கள். இது மகா மகா பித்தலாட்டமாகும். இதற்கும் பார்ப்பன அயோக்கியர்களுடன் அரசியல் அயோக்கியர்களும் சேர்ந்து அனுகூலமாயிருந்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சொன்னதை எல்லாம் கேட்பதுதானா பார்ப்பனரல்லாத மக்களின் நிலை? மலம் சாப்பிட்டால் மோக்ஷம் வரும் சுயராஜ்யம் வரும்
என்றால் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடுவதுதான் மததர்மமா? தேசீய தர்மமா? மதத்துக்காக மாட்டு மலம் சாப்பிடுவது போல் அரசியலுக்காக பணத்தை வீணாக்குவதா? சென்னையில் தீபாவளிக்கும், கதருக்கும் செய்யப்பட்டி ருக்கும் விளம்பரம் குச்சிக்கார தாசி விளம்பரத்தையும் தோற்கடித்து விடும் போல் காணப்படுகின்றன. இந்த செலவுகள் யார் தலையில் விடியும் தெரியுமா? புத்தி இருந்தால் பிழைத்துக்கொள்ளுங்கள். கோபிப்பதால் பயனில்லை.
குறிப்பு: ஓவ்வொரு க.ம.சங்கத்திலும் நாளையே தீபாவளியைப் பற்றி பொதுக்கட்டம் கூட்டி மக்களுக்கு தீ.ாவளிப்புரட்டையும் கதர்புறட்டையும் எடுத்துச் சொல்லக் கோருகிறோம்.
குடி அரசு - அறிக்கை - 15.10.1933.
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
காந்தி யைந்தி
கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.
தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜஸ்டிஸ்காரர்கள், இந்து, முஸ்லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான பெருமைகளை எல்லாம் பெற்றவர் என்பவராவார்.
அன்றியும் (ஆத்மா என்பதாக ஒன்று உண்டா? இல்லையா? என்
கின்ற வாதம் தலை நிமிர்ந்து நிற்கின்ற காலத்தில்கூட) பெரும்பான்மை மக்க. ளால் மகாத்மா என்று கொண்டாடப் படும்படியாகவும் செய்துகொண்டார்.
இன்னும் அநேக காரியம் செய்தார் என்றும் வைத்துக்கொள்ளலாம். இவையவயெல்லாம் சாதாரண (அதாவது சராசரி) மனிதனால் செய்துகொள்ள முடியாத காரியம் என்றும் ஒப்புக்கொள்ளுவோம். ஆனால் இவ்வளவு செய்தும் இவ்வளவு சக்திஉடையவராய் இருந்தும், இவ்வளவு பெருமை பெற்றும் இவரால் மனித சமூகத்துக்கு நடந்த காரியம் என்ன? இதனால் எல்லாம் ஏற்பட்ட பலன் என்ன? என்பதே அறிவியக்கக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதுஒருபுறமிருக்க,
குடி அரசு - 1933 (2 180
இப்போது அப்படிப்பட்ட காந்தியாரின் ஆட்ட பாட்டமெல்லாம் அடங்கி கடைசியில் “எல்லாம் கடவுள் செயலில்” வந்து நின்று “எனக்கு ஒன்றும் புரியவில்லையே” “என்னை இருள் சூழ்ந்து கொண்டதே” “மேலால் என்ன செய்வது என்பது எனக்கு விளங்கவில்லையே” “கடவுள் ஒரு வழிகாட்ட வேண்டியிருக்கிறதே” என்கின்ற பல்லவியில் வந்து விட்டார்.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் அவரிடம் உள்ள கடைசி ஆயுதத் தையும் காட்ட ஆரம்பித்துவிட்டார். அதாவது பொதுவுடமைப் பூச்சாண்டி யைக் காட்டுவது.எப்படியெனில் தன் வாயால் ஒன்றும் சொல்லாமல் தன்மீது எவ்வித பொறுப்பும் போட்டுக்கொள்ளாமல் தோழர் ஜவகர்லால் அவர்கள் வாயினால் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பொதுவுட மையை ஜாடைகாட்டச் செய்து ஓரளவுக்கு அதை ஒத்துக்கொள்ளுவது போல் (பின்னால் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இடம் வைத்துக் கொண்டு! பேசி சர்க்காரை மிரட்டுகிறார்.
அதாவது தன்னுடன் சர்க்கார் ராஜிக்கு வரவில்லையானால் “பொது வுடமைக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விடுவேன்” என்கின்ற ஜாடை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.
இதை ஏன் அடிக்கடி சொல்லுகிறோம் என்றால் தோழர் காந்தியார். முன்பு பட்டினியினிமித்தம் வெளி வந்து பூனா மகாநாடு நடத்தி விட்டு மறு படியும் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லும் போது சர்க்கா ருக்குக் கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டில் இதே மாதிரி சர்க்காரை மிரட்டு வதற்குப் பொதுவுடமை ஜாடையை உபயோகித்துக் கொண்டார்.
அதாவது “ஜனங்களிடம் நான் கலந்து பார்த்ததில் மேல் ஜாதிக் காரருக்கும், கீழ்ஜாதிக்காரருக்கும், பணக்காரருக்கும், ஏழைகளுக்கும், பெண் களுக்கும், ஆண்களுக்கும் இடையில் சீர்கெட்டு இருக்கிறதாக அறிந்தேன். இதனால் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவர வர்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் அஹிம்சாவாதியான நான் ஜெயிலில் இருப்பதே முறை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ராஜ கோபாலாச்சாரியாரும் ஒத்துப்பாடி இருக்கிறார்.
இப்பொழுது ஜெயிலில் இருந்து வந்த பிறகும் முன்காட்டியபடி தோழர் ஜவகர்லாலின் பொருளாதாரத் திட்டத்தை ஒப்புக்கொள்ளுவ தாகவும் ஆனால் அவ்வளவு தூரம் போக முடியாதென்றும் சொல்லுகிறார். எவ்வளவோ முக்கியமானதும் அவசியமானதும், கட்டாயம் நடந்து தீர வேண்டியதுமான ஒரு கொள்கையைக் காரியத்தில் நடத்துவிக்கின்றதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யாமல் அல்லது அதுசெய்ய முடியாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டாவது இருக்காமல் அதை வீண்மிரட்டலுக்
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கும் தனது சுயநலத்துக்கும் உபயோகப்படுத்தி “அதில் பலாத்காரம் வந்து விடும் ரத்தக்” களரி ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் பேசி கெடுக்கச் செய்வது என்றால் யார் தான் இச்செய்கையை பொருக்கமுடியும்?
அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான் களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்! சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடு வதற்கு அறிகுறியாய் காந்தி ஜயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவ தென்றால் இதன் அக் கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை. தோழர் காந்தியாருக்கு இன்று ஜயந்தி கொண்டாடு. வதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர்: களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர்
களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜயந்தி கொண்டாடத்தக்க “பெரியார்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.
கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை.
உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜயந்தி நடந்து வருகிறது. அதாவது,
“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும், நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா, அலகிலா விளையாட்டுடையா ரவர், தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக் கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்தி வாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்திஜயந்தி. இதுபோலவே மற்றொரு விஷயம் என்னவென்றால்,
தோழர் அன்னிபெசண்டம்மையார் செத்து பத்து நாள்கூட ஆக வில்லை. ஆனாலும் அந்தம்மையாரின் சூக்ஷம சரீரம் அதற்குள் பூலோக ஜனங்களோடு பேச ஆரம்பித்து விட்டது. இந்த அம்மையாருக்கும் இவ் வளவு யோக்கியதை ஏற்பட்டதின் காரணம் அந்தம்மாளும் பார்ப்பனிய தாச ராய் இருந்து பார்ப்பனப் பிரசாரம் செய்து வந்து செத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை.
குடி அரசு - 1933 (2 182
தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்திய வர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச் சிரம தர்மத்தை ஆதரிப்ப தினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பன
ரல்லாதார் நிலை என்னவா கின்றது?
அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற" விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,
“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.
“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி
சூத்திரராகக் கருதப்படுவார்கள்”'
“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.
“வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்”
என்று சொல்லியிருக்கிறார்.
இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர்
9ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின்
கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பன ரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி
இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக்கொண்டார்கள்.
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
மானத்தை விற்று மனிதத்தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.
ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப் பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பன ரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜயந்தியை விட மானமற்றதும், இழிவா னதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜயந்திக்கு ஒரு உதாரணமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 15.10.1933
குடி அரசு - 1933 (2 184
சி.மூ. நாயகம்
தோழர் சி.டி.நாயகம் அவர்கள் கூட்டுறவு (கோவாப்பரேட்டிவ் உதவி ரிஜிஸ்ட்ராராக இருந்து அந்த இலாக்காவில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தை
யும் ஆக்ஷிகளையும் அறிந்து ஓரளவுக்காவது அவைகளை அகற்ற எவ்வளவோ அவர் முயற்சித்து வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமாகும். இதன் பயனாய் பார்ப்பனர்களாலும் பார்ப்பனக் கூலிகளாலும் அவர். எவ்வளவோ தொல்லைகளைச் சமாளிக்க வேண்டியிருந்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
அப்படிப்பட்ட வீரமும், தீரருமான நாயகம் இப்போது தனது 55- வது வயதில் உத்தியோகத்தைவிட்டு நீங்கி பென்ஷன்பெற்று வாழ்ந்துவரு
கிறார். இனி இவரது வாழ்நாள் பெரும்பாலும் பொதுஜன வாழ்விலேயே கழிக்கப் படும் என்பதில் யாருக்கும் ஆக்ஷ்பனையிராது.
தோழர் நாயகம் அவர்களும் அவரது வாழ்க்கைத் துணையாரும்
மக்களும் சுயமரியாதை இயக்க விஷயத்தில் மனப்பூர்வமாய் ஈடுபட்டு உழைத்து வந்ததும் யாவரும் அறிவர்.
ஆதலால் தோழர் நாயகம் அவர்கள் உத்தியோகத்திலிருந்து விலகி யது சுயமரியாதை இயக்கத்துக்கு ஒரு பெரும் ஆதரவு என்பதைத் தெரி
வித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.40.1933
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கதோழுர்கன் சிங்காரவேனுக்கும்
பொனண்னம்பலதை்துக்கும் சமாதானம்
சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் தோழர் சிங்காரவேலு அவர்களால் ஒரு வியாசம் எழுதப்பட்டிருந்ததை நேயர்கள் அறிந்திருப்பார்கள். அதற்கு நாம் ஒரு சமாதானம் எழுதியிருக்கவேண்டும். ஆனால் பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று சற்று அசதியாக இருந்துவிட்டோம். இதற்குள் மற்றொரு வியாசம் தோழர் பொன்னம்பலம் அவர்களால் எழுதப்பட்டு இவ்வாரம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
ஆகவே மேற்கண்ட இரண்டு வியாசத்தைப்பற்றியும் இவ்வாரம் நமத பிப்பிராயத்தை எழுதலாம் என்று கருதி இத்தலையங்கம் எழுதுகிறோம்.
தோழர் சிங்காரவேலுக்கு
தோழர் சிங்காரவேலு அவர்களின் வியாசத்தின் கருத்தைச் சுருக்க
மாகக் கூறவேண்டுமானால், “சமதர்மவாதி அல்லாதவர்களையும் சம யோசிதமாய் பேசுபவர்களையும், மேல் பூச்சுக்கு அனுகூலமாய் முகம் துடைக்கப் பேசுகின்றவர்களையும் நம் இயக்கத்தோடு சம்மந்தம் வைத்துக் கொள்ள இடங்கொடுக்கக் கூடாது” என்பதேயாகும்.
மேலும், “அப்படிப்பட்டவர்கள் நம் மகாநாடுகளில் தலைமை வகிக்கவிட்டு வருகின்றபடியால் கூட்டத்தில் குழப்பமும், மாச்சரியமும், விறோதமும் ஏற்படுகின்றன” என்பதும் அவரது வியாசத்தின் கருத்தாகும்.
இந்தக் கருத்துக்கள் சற்றேரக்குறைய திருநெல்வேலி மகாநாட்டு நிகழ்ச்சிகளை சரி என்று ஆதரிப்பதாகவே நமக்குத் தோன்றுகின்றது. ஆத
லால் இதற்கு நமது சமாதானத்தைக் கூறவேண்டியது நம் கடமையாகும்.
சுயமரியாதை இயக்கத்துக்கு சில திட்டங்களை லட்சியமாகவும் சில திட்டங்களை காரியாம்சையில் நடத்தவும் ஈரோடு வேலைத்திட்டக் கூட்டத்
தில் தீர்மானித்திருப்பது யாவரும் அறிந்ததே என்றாலும் காரியாம்ச திட்டத் திற்கு சுயமரியாதை சமதர்ம திட்டம் என்பதாகப் பெயர் கொடுத்து அதை
குடி அரசு - 1933 (2 186
மாகாண மகாநாட்டில் ஊர்ச்சிதப்படுத்த எதிர்பார்த்து அதுவரையில் அத் திட்டங்கள் பிரசார தத்துவத்தில் இருக்கவேண்டுமென்கின்ற கருத்தின்மீது பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
அன்றியும் இப்படி இரண்டுவிதமாக அதாவது லக்ஷியம் ஒரு விதமாகவும், திட்டம் ஒரு விதமாகவும் பிரித்து ஏற்பாடு செய்ததற்குக் காரணமும் அப்போதே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதென்னவென்றால், லட்சியத்தை இப்போதே எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதென்றும், லட்சியத்தை ஒப்புக் கொள்ளாதவர்களும் கூட நம்முடன் இருந்து வேலை செய்யத்தக்க மாதிரி
யிலும் கூடியவரை யாரும் ஆக்ஷேபிக்க முடியாத மாதிரியிலும் ஒரு திட்டம் வகுக்கவேண்டும் என்கின்ற எண்ணத்தின்மீதுமே ஒரு திட்டம் வகுத்து அதற்கு சமதர்ம திட்டம் என்று பெயர் கொடுத்திருப்பது அக் கூட்டத்தில் இருந்த யாவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
மேற்கண்ட திட்டம் இரண்டையும் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த
- இருக்கின்ற தோழர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டவர்கள் என்றோ, மறுக்காதவர்கள் என்றோ, ஆக்ஷபித்து எதிர்ப்பிரசாரம் செய்யாதவர்கள் என்றோ, சொல்லிவிட முடியாது.
இன்றும் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றவர்களுக்குள்ளாகவே சிலர் ஆக்ஷபித்தும், மறுத்தும், எதிர்ப்பிரசாரம் செய்து கொண்டும் அவைகளை ஒழிக்க கட்சி சேர்க்கவும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் முயற்சி செய்தும் வருவது அநேக
ருக்குத் தெரிந்த விஷயமேயாகும். இந்தக்காரியங்கள் செய்ய அவர்களுக்கு இப்பொழுது உரிமை இருக்கின்றது என்று கருதித்தான் அப்படிப்பட்ட வர்களையும் இயக்கக்காரர்கள் என்று கருதி வருகிறோம்.
இது ஒருபுறமிருந்தாலும், சமதர்மத் திட்டத்தை ஒப்புக்கொண்டவர். கள் யார்? ஒப்புக்கொள்ளாதவர்கள் யார்? என்று கண்டுபிடிக்க நம்மிடம் என்னவிதமான அளவு கருவி இருக்கிறது? நம்மிடம் என்ன விதமான மெம்பர் லிஸ்ட்டு இருக்கின்றது?
அன்றியும் ஒரு தோழர் ஆஸ்திகறாயிருந்து விட்டதாலேயே அவர்:
சும. இயக்க சமதர்ம கட்சியில் மெம்பராக அருகதையற்றவறாக ஆகிவிடு வாறா? ஒரு ஆஸ்திகறும் சமதர்ம திட்டத்தை ஒப்புக் கொள்ளாதவறுமான
ஒருவர் நம் மகாநாட்டுக்கு வந்ததாலோ கலந்து கொண்டதாலோ, ஒரு கூட்டத்திற்கு தலைமை வகித்ததாலோ நம் இயக்கம் ஒழிந்து போகுமா? அல்லது ஆடிப்போகுமா? அப்படிப்பட்டவர்கள் வந்தால் சுயமரியாதைக் காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கலகமும், கூச்சலும், குழப்பமும்
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஏற்படும்படி செய்துதான் ஆகவேண்டுமா? என்று தோழர் சிங்காரவேலு அவர்களை பணிவாய் வினவுகின்றோம்.
நாம் பல தடவைகளில் தெரிவித்து இருப்பதுபோல் சங்கராச்சாரி என்பவர் நமது மகாநாட்டிற்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டாலும் ஏற்றுக் கொள்வதில் நமக்கு ஆட்சேபனை இல்லை என்று இப்போதும் சொல்லு கின்றோம். ஏனெனில் அவர் நமது கூட்டத்திற்கு வருவதற்கு முன்
நம் லட்சியங்களையும், கொள்கைகளையும், திட்டங்களையும், உணர்ந்து கொண்டுதான் வருவார். அப்படி இல்லாவிட்டாலும் கூட அவரது உபதேசத் தாலோ பிரசாரத்தாலோ நமது இயக்க கொள்கைகள் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும் - அல்லது நமது கொள்கைக்காரர்கள். சங்கராச்சாரி போன்ற - அப்படிப்பட்டவர்கள் பிரசங்கங்களைக் கேட்டு மனம் திரும்பிவிடு வார்கள் என்று நாம் பயப்படவேண்டியதில்லை.
இந்த எண்ணத்தின் மீதும், துணிவின்மீதும்தான் ஈரோடு மகாநாட்
டிற்கு இந்து மத) மகாசபையின் தலைவரான தோழர் ஜெயகரவர்களை' தலைவராகப் போட்டு நடத்தி இருக்கின்றோம். சில ஜில்லா மகாநாடுகளில் புத்தமத தலைவராகிய தோழர் பி.லெக்ஷிமிநரசு அவர்களை தலைவராகப் போட்டு நடவடிக்கைகள் நடத்தியிருக்கின்றோம். மற்றும் பல மகாநாடு களில் பழுத்த ஆஸ்திகர்களையும் போட்டு இருக்கின்றோம். அனேக கூட்டங்களில் ஆஸ்திகர்கள், முதலாளிகள் ஆகியவர்கள் தலைமையில் காரியங்கள் நடத்தி இருக்கின்றோம்.
இதுவரையில் அனுபவத்தில் நமது பக்கத்தை முழுவதும் ஒப்புக் கொள்ளாதவர்கள் தலைமையில் எத்தனையோ மகாநாடுகளும், கூட்டங் களும் நடந்தும் அதனால் நமது இயக்க லட்சியங்களோ, கொள்கைகளோ திட்டங்களோ மாறிவிட்டதாகவோ, பலங்குறைந்து விட்டதாகவோ, சிலராவது மனந்திரும்பிவிட்டதாகவோ சொல்வதற்கு இல்லாமல் இருந்து வந்திருக்கிறது என்றுதான் கருதுகிறோம்.
நாம் இன்று பிரசார நிலையில் இருக்கின்றோம் என்பதையும், நமது காரியத்திட்டங்களை எல்லோரிடமும் பரப்பவேண்டும் என்கின்ற வேலை
யில் இருக்கின்றோம் என்பதையும் வேறு ஒரு கருத்துள்ள தோழரின் பிரசாரத்தால் நாம் ஏமாந்துவிடமாட்டோம் என்பதையும் சந்தேகமற உணர்ந் தோமேயானால் அதற்காக நமக்குள் பயமோ குழப்பமோ உண்டாக சிறிதும். இடமில்லை.
சில ஆஸ்திக ஸ்தாபனங்களும் சில முதலாளிகள் ஸ்தாபனங்களும் இந்த இரு கூட்டத்தாரின் ஆயுதமான காங்கிரசும்தான். சுயமரியாதைக்காரர். களை உள்ளேவிட்டால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்று பயப் படுவதும், சுயமரியாதைக்காரர்கள் கூட்டத்தில் கலகமும், கூச்சலும்,
குடி அரசு - 1933 (2 188
குழப்பமும் உண்டாக்கும் இழிதொழில்களைச் செய்து கலைக்கப் பார்ப்பது மான காரியங்கள் நடைபெறுகின்றதை நாம் பார்த்துவருகின்றோம்.
ஏனெனில் அவர்களுடைய நிலை அந்தமாதிரி பலமற்றதும்
உண்மையற்றதும், சூகஷிநிறைந்ததும், அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் நிற்காத துமாய் இருப்பதால் அவர்கள் பயந்து மாச்சரியங்கொண்டு துவேஷித்து மூர்க்கத்தன மான காரியங்களைச் செய்ய வேண்டியவர்களாகின்றார்கள்.
நமக்கு அப்படிப்பட்ட அவசியம் என்ன என்பது விளங்கவில்லை. தோழர் சிங்காரவேலு அவர்கள் “நமது லக்ஷியத்துக்கு-கொள்கைகளுக்கு, திட்டத்துக்கு விரோதமானவர்களைச் சேர்க்கக்கூடாது” என்று மாத்திரம் சொல்லியிருந்தாலும் அதற்குச் சாதாரண சமாதானமே போதுமானதாயிருக் கலாம். அப்படிக்கில்லாமல் அப்படிப்பட்டவர்களை நமது இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களைச் சேர்த்தால் “குழப்பமும். விரோதமும், மாச்சரியமும் நேரிடுகின்றன” என்று சொல்லியிருப்பதானது
சிறிதும் ஒப்புக் கொள்ள முடியாத விஷயம் என்று வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்தவேண்டியதாய் இருக்கிறோம். இதுவரையில்
நடந்திருக்கும் மகாநாடுகளுக்கும், பிரசாரங்களுக்கும் பெரும்பாகமான உதவிகளும் நமது கொள்கைகளை ஒப்புக் கொள்ளாதவர்களிடமிருந்து ஏற்பட்டிருக்கின்றதென்பதை யாரும் மறுக்கமுடியாது.
அதோடு மாத்திரமல்லாமல் அப்படிப்பட்டவர்களைச் சேர்த்ததாலும், தலைமைவகிக்க விட்டதாலும் அப்படிப்பட்டவர்கள் பெரிதும் மனமாற்ற மடைந்து நமது கொள்கைகள், திட்டங்கள் எல்லாவற்றையும் அடியுடன் தழுவாவிட்டாலும் பெரும்பாகங்களில் மனம் திரும்பியும், சிலவற்றைத் தழுவியும் இருக்கிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் யாரும் மனம் திரும்பி விடவில்லை.
நிற்க நமது சமதர்மத் திட்டத்தின்படி அடுத்துவரும் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் நிற்கவேண்டுமானால் நாஸ்திகர்களும் முதலாளிகள் அல்லாதவர்களுமாகவே கிடைத்துவிடுவார்களா? என்று யோசிக்கும்படி வினயமாய் வேண்டுகின்றோம்.
முதலாளிகளாய் இருந்தாலும் சரி, ஆஸ்திகர்களாய் இருந்தாலும் சரி அதைப்பற்றி விசேஷமாய்க் கவனிக்காமல் சமதர்மத்திட்டத்தை ஒப்புக் கொண்டு கையெழுத்துப் போட்டு சட்டசபைக்கு நின்று வெற்றிபெற்ற பிறகு அத்திட்டத்தை நிறைவேற்றத் தகுந்த சட்டம் செய்ய வேலை செய்வாரா இல்லையா? என்பதைத்தான் நாம் முக்கியமாய்க் கவனிக்கவேண்டும் என்ப தாகத்தான் நாம் கருதியிருக்கிறோம். இந்தப்படிக்கானால்தான் சட்ட சபைப் பிரவேசம் என்பதையும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு திட்டங்களை நிறை வேற்ற முயற்சிப்பது என்பதையும் நமது வேலைத் திட்டமாக வைப்பதில் அருத்தம் உண்டு. அப்படிக்கு இல்லையானால் சமதர்ம திட்டத்தை வெறும்
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
காகிதத் திட்டம் என்பதாகத்தான் சொல்லவேண்டியிருக்கும் என்று பயப் படுகின்றோம்.
அரசாங்க சட்டத்தை மதித்து அச்சட்டத்திற்குட்பட்ட கிளர்ச்சி செய்து காரியத்தை சாதிக்கக் கருதியிருக்கும் நாம், ஆஸ்திகர்களையும், முதலாளி களையும் உதவிக்கு அதுவும் நமது கொள்கைக்கு திட்டத்திற்கு பாதகமில் லாமல் அவர்களாக சம்மதித்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதால் நமது காரியம் கெட்டுப் போகுமென்றோ, அதற்காக கூச்சலும் குழப்பமும் ஏற்பட வேண்டியது கிரமம் என்றோ கருதி பயப்படவேண்டுமா? என்றும் அறிய விரும்புகிறோம்.
தோழர் பொன்னம்பலம்
நிற்க, தோழர் பொன்னம்பலனார் எழுதியிருக்கும் இவ்வாரக் கட்டுரையில் சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்த பார்ப்ப னீயத்தை ஒழிக்கும் முயற்சியிலும் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கும் முயற்சி யிலும் இன்னமும் ஈடுபட்டிருக்காமல் அதை விட்டு விட்டு வேறு வழியில் அதாவது சமதர்மம் பொதுவுடமை என்கின்ற வழியில் பிரவேசித் தது தப்பு என்றும் அதனால் பழயபடி பார்ப்பனீயம் துளிர்த்து வருவதாக வும்,பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடுவதாகவும் குறிப்பிட்டுவிட்டு நாம் ஏதோ பார்ப்பன மாய்கையில் சிக்கி இருப்பதாகவும் பொருள்பட மிக்க ஆத்திரத்துடன் பல விஷயங்களைக் கொட்டியிருக்கிறார். அதற்கும் சிறிதாவது சமாதானம் கூறவேண்டும் என்றே கருதுகின்றோம்.
முன்போல் பார்ப்பனீயத்தின் கொடுமைகளை வெளியாக்கும் வேலையிலும் பார்ப்பன ஆதிக்கத்தை ஒடுக்கும் வேலையிலும் நமது முயற்சி முழுவதும் இல்லை என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளு கின்றோம். ஆயினும் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியமெல்லாம் அதுவேதான் என்பதை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பார்ப்பனி யத்துக்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் காரணமாயிருப்பது மதம் என்பதை நமது தோழர் பொன்னம்பலனார் அவர்கள் உணர்ந்திருப்பார். அம்மதத்தை ஒழிப்பதில் நாம் முன்னையைவிட இப்போது பலமடங்கு தீவிரமாய் இருக்கின்றோம் என்பதையும் தோழர் பொன்னம்பலம் அவர்கள் அறிவார்.
பார்ப்பனீயத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் அழிக்க வேண் டிய அவசியம் நமக்கு எதனால் ஏற்பட்டது? பார்ப்பனீயத்தின் பேராலோ, பார்ப்பனர் பேரிலோ, ஏற்பட்டது துவேஷமா? வெறுப்பா? வஞ்சகமா? என் பதை யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். ஒரு நாளுமல்ல மற்றென்ன வென்றால், பார்ப்பனீயமும் பார்ப்பன ஆதிக்கமும் ஏழை மக்களை- தாழ்த்தப் பட்ட மக்களை என்றென்றும் தலை எடுக்கவொட்டாமல் அழுத்தி நசுக்கி வருவதற்கு ஆதரவாய் இருக்கின்றதென்றும்,தாங்களே என்றென்றும்
குடி அரசு - 1933 (2 190
மேன்மையாயும் ஆதிக்கமாயும் இருந்துவரத்தக்கதாய் இருக்கின்றதென்றும் கருதியே அதனுடன் போர் புரிந்து வந்தோம். ஆனால் அப்போரின் பலன் என்ன ஆயிற்று என்று பார்ப்போமானால் பார்ப்பனர்களின் ஆதிக்கம் சில குறைவுபட்டது. அரசியல் துறையில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு சாவுமணி அடிக்கத்தக்க நிலைமையும் ஓரளவுக்கு ஏற்பட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட பயன் என்ன என்று பார்ப்போமானால் சில பார்ப்பனரல்லாதார். பார்ப்பனர்களின் ஸ்தானத்துக்கு வந்தார்கள். பார்ப்பனர்களைப் போலவே நடந்தார்கள். ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், தலைதூக்க விடாமல் இருக்க பார்ப்பனர்களுக்கு கையாளாக இருந்து வேலை செய்து வருகின்றார்கள் என்பதுதான் வெளிப்படையாகத் தெரிகின்றது.
தோழர்கள் Dr. சுப்பராயன் முத்தையா முதலியார் ஆகியவர்கள். காலத்தில் பார்ப்பனரல்லாதார்களுக்கென்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கென்
றும் அரசியலில் என்ன காரியங்கள் செய்யப்பட்டனவோ அதற்குமேல் நாளது வரை ஒரு இம்மியளவாவது முற்போக்கு ஏற்பட்டது என்று சொல்ல முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.
உதாரணமாக சொல்லவேண்டுமானால் பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக் கொண்டு பெரிய மனிதனாகி மந்திரி பதவியையும், பார்ப்பன
ரல்லாதார் இயக்கத்தலைவர் பதவியையும் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் பதவிக்கு வந்தவுடன் பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகவே தோழர் முத்தையா முதலியார் அவர்களால் உத்தியோகங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி வினியோகிக்கவேண்டும் என்று செய்யப்பட்டிருந்த விதியை ஒழிக்க வேண்டும் என்றும் பாடுபட்டதோடு சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒரு இயக்கம் இருக்கின்றதா என்று அறியாதவர்போலும் பல தடவைகளில் அதை அலட்சியமாய் பேசியும் நடந்தும்வந்தார். இந்த காரியம் சுய மரியாதை இயக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கபாடுபட்டதற்கும் தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் தலைவராவதற்கும், முதல் மந்திரியாவ தற்கும் ஓரளவாவது காரணமாய் இருந்ததற்கு ஏற்பட்ட பலனாகும். இதுமாத்திரமல்ல மற்ற மந்திரிகள் நிலைமையை யோசித்தால் இனியும் வெட்கக்கேடாகும். ஒரு மந்திரியார் ஒரு பொதுக் கூட்டத்தில் “சுயமரி யாதை இயக்கத்தின் நிழலில் தான் நாங்கள் இன்று மனிதர்களாய் வாழு கின்றோம்” என்று கோஷம் செய்தார். அவர் கண்களுக்கு இன்று ரூபாயைத் தவிர வேறு வஸ்துவே உலகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. பார்ப்பனர்
கள் தான் அவர்களுக்கு மனிதர்களாக காணப்படுகின்றார்கள். மற்றொரு மந்திரியோ “சுயமரியாதை இயக்கமே தனது மூச்சாய் இருந்து வருகின்றது” என்று நடித்தவர். ஆனால் இன்று அவர் கொடுக்கும் உத்தியோகம் 100-க்கு 97 பார்ப்பனருக்கு. அவரது மந்திரிகள் எல்லாம் பார்ப்பனர்களே. தாசி வீட்டுக்கு போவதானாலும் பார்ப்பன தாசிகள் வீட்டுக்கேதான் போக
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வேண்டுமென்ற அவ்வளவு பார்ப்பன அபிமானியாயிருந்துவருகிறார். மற்றும் இப்போது பார்ப்பன ரல்லாதார் தலைவர் என்று சொல்லிக்கொள்ளு கின்ற பணக்காரர்களின் யோக்கியதையும் முன்சொன்ன மந்திரி போலவும் பார்ப்பனர்களையே தூதாட்களாகவும் தங்கள் பதவி வேட்டைக்கு ஒற்றர். களாகவும் வைத்து பார்ப்பனீய ஆதிக்கத்தை விட மோசமான ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வர்களாவார்கள்.
தோழர் பொன்னம்பலம் அவர்கள் விரும்புவது போல் பார்ப்பனி யத்தை ஒழிக்கவும் பார்ப்பன ஆதிக்கத்தை வீழ்த்தவும் இன்னமும் எவ்வளவு தான் பாடுபட்டாலும் இன்றைய நிலையில் இருந்த பலன் தான் ஏற்படுமே ஒழிய வேறு ஒன்றையும் நாம் கனவு கூட காணமுடியாத நிலை
யில் தான் இருக்கிறோம்.
பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை வாங்கிக் கொடுக்க சுயமரியாதை இயக்கம் இருக்கின்றது என்று சொல்லுவதானால் கஷ்டப்படும் மனித சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்வித பலனும் ஏற்படாதென்பதே நமதபிப்பிராயம்.
ஆதலால் சமதர்மத்தையும் பொதுவுடமைக் கொள்கையையும் விட பார்ப்பனீய ஒழிப்பும், பார்ப்பன ஆதிக்க அழிப்பும் பிரதானம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்.
தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க தாம் சட்டசபைக்குப்போகவேண்டும் என்று சொல்லித் துணிந்தது சத்திய மூர்த்தி
யின் சாமர்த்தியமும் துணிவும் என்று நாம் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முடி யாது. அந்தப்படி அவரைச் சொல்லச் செய்வது பார்ப்பனரல்லாத பணக் காரரின் பணமும் பார்ப்பனரல்லாத பணக்காரரின் சூழ்க்ஷியுமேயாகும். அவரது நிலைமையாரும் அறிந்ததே. அவரது அரசியல் ஞானமும் முயற்சி
யும் எல்லாம் வயிற்றுப்பாட்டிற்கே ஒழிய வேறு ஒரு பிரமாத காரியத்திற்கு
மல்ல. ஆதலால் அவருக்கு ஒரு சிறு உத்தியோகமோ வயிற்றுப் பாட்டிற்கு ஒரு வழியோ ஏற்பட்டுவிட்டால் அவரால் யாருக்கும் எவ்வித தொல்லை
யும் இல்லாமல் போய்விடும். தோழர்கள் டாக்டர் சுப்பராயன் அவர்கள்
மந்திரிகாலமும், குமாரராஜா அவர்கள் மேயர் காலமும் ஒரு அளவுக்காவது அமைதியாய் நடைபெற்று வந்ததற்குக் காரணம் தோழர் சத்தியமூர்த்தி அவர்களது அமரிக்கைத் தன்மையேயாகும். “அப்படிப்பட்ட” சத்திய
மூர்த்தி “இப்படிப்பட்ட” அமரிக்கையாய் இருப்பது சும்மா முடிந்திருக்
குமா?
ஆதலால் அவரது கூச்சலைப்பற்றி நாம் அவ்வளவு கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சியின் உதவியில் வாழ்ந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியை வைவதென்றால் அதில் இரகசியமில்லாமல்
குடி அரசு - 1933 (2 192
இருக்காது. ஏனெனில் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்குள்ளாகவே, அடுத்ததடவை தலைவராவது யார்? யார் யார் மந்திரியாவதென்ற விஷயம் இன்னமும். தீர்மானமில்லை என்பதோடு அக்கட்சித் தலைவர்கள் என்பவர்களே ஒரு வரை ஒருவர் அழுத்த வேலைசெய்துவருகின்றார்கள். ஆதலால் அவ் வேலையின் பயனே தோழர் சத்தியமூர்த்தியின் “துணிவுக்கும் ஆணவத்
திற்கும்” காரணமென்பது நமதபிப்பிராயம்.
தவிர சில பத்திரிகை, தோழர் ஷண்முகத்தினிடம் பொறாமைகாட்டி அவரை இழிவுப்படுத்தியும் இழிவுப்படுத்துவதற்காக தோழர் பட்டேல் அவர்களை உயர்த்திக்காட்டி ஷண்முகத்தைத் தாழ்த்திப் பேசுவதையும்பற்றி தோழர் பொன்னம்பலனார் குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் பார்ப்பன சூட்சி என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும் பொது ஜனங்கள் இதில் ஏமாந்துபோக மாட்டார்கள். பொது ஜனங்கள் முட்டாள்களாய், மூடர்களாய் இருந்தால் அதற்கு நாம் என்ன செய்யலாம்.
தோழர் பட்டேல் அவர்கள் “எல்லா இந்திய சத்தியமூர்த்தி” என்று முன்னமே சிலதடவை எழுதியிருக்கிறோம்..
அவர் காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போகக்கூடாது என்று தீர்மானித்திருந்த காலத்தில் காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாய் சட்ட சபையை ஒழிப்பதற்கென்று சொல்லிக்கொண்டு, சட்டசபைக்குப் போய் அங்கு மீ” 4000 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்தை அடைந்து சட்ட சபையை ஒழிப்பதற்குப் பதிலாக அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் பதிலாக தலைமைவகித்து ஒழுங்காய் நடத்திக்கொடுத்து சட்ட சபையை நிலைக்க வைத்துவிட்டுப் போன வீரர். “சட்டசபையை ஒழுங்காய் நடத்துவ தற்காக நாள் ஒன்றுக்கு பத்துத்தடவை வைசிராய் பிரபு வீட்டிற்குப் போவேன்” என்று சொன்ன “முட்டுக்கட்டை வீரராவார்”. அன்றும் ஓத்து ழையாமையை ஒழிக்கச் சூட்சி செய்தவர். இன்றும் “காந்தி தலைவராய் இருக்க யோக்கியதை இல்லை” என்று சொல்லி வேறு தலைவரை நியமிக்க. வேண்டுமென்று சொன்னவர். எந்தக்காலத்தில் எந்தவேலையில் அவர். நாணயஸ்தராய், யோக்கியராய், வீரராய் நடந்துகொண்டார் என்பது நமக்கு விளங்கவில்லை. தோழர் சத்தியமூர்த்தியைப்போல் வாய்ப்பேச்சில் வீரரா
னவர். சர்க்காருக்குத் தொந்திரவில்லாமல் முட்டுக்கட்டை போடமுடியாமல் சட்டசபையை அழிக்காமல் வேகமாய், கடினமாய் பேசிவிட்டு வில்லர் என்ற பேர்வாங்கினவர். அவர் போல் தோழர் ஷண்முகம் இல்லையென்று சொல் வதில் ஒருவித அர்த்தம் உண்டுதான். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் காரியங்களை உணர்ந்தும் ஷண்முகத்தின் மீதுள்ள பொறாமையால் ஏதோ உளரித் தீரவேண்டிய முறையில் குலைக்கின்றார்களென்றால் அதற்காகவே கொள்கையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பது நமக்குப் பரிகாசமாய் தோன்றுகின்றது.
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
மூன்றாவதாக ஒரு பார்ப்பனப் பத்திரிகை வாணியம்பாடி மகா நாட்டைப்பற்றி விஷமப் பிரசாரம் செய்திருப்பதை குறிப்பிட்டிருக்கிறார். நாளது வரை எந்தப் பார்ப்பனப் பத்திரிக்கையாவது சுயமரியாதை இயக் கத்தைப் பற்றி விஷமத்தனமாயும் அயோக்கியத்தனமாயும் நடக்காதிருந்து
இந்த பத்திரிகை மாத்திரம் நடந்திருந்தால் அதை ஒரு பிரமாதமாகக் கருதலாம். பாம்புக்கு விஷமிருப்பதைப் பற்றி கோபிப்பதில் என்ன புத்தி சாலித்தனமோ அதுதான் பார்ப்பன பத்திரிகை நமது விஷயத்தில் அயோக் கியத்தனமாய் நடந்து கொள்வதைப்பற்றி கோபிப்பதாகும். ஏனெனில் நமது இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும், ஒழிப்பதை ஒரு திட்டமாகக் கொண்டது என்றிருக்கையில் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் நம் விஷயத்தில் யோக்கியமாய்-நாணையமாய் நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனமேயாகும். பார்ப்பன ரல்லாத மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத்தான் அப்பத்திரிகைகளை: ஆதரிக்கிறார்கள். வாங்கி விற்கிறார்கள். சுதேசமித்திரன் இந்து முதலிய பத்திரிகைகளின் யோக்கியதைகளை அறிந்தவர்களுக்கு இந்த “அரைடிக்கட்” பத்திரிகை, என்பதின் யோக்கியதை குற்றமாகத் தோன்றாது.
இந்து சுதேசமித்திரன் பத்திரிகைகளுக்கு நாட்டில் செல்வாக்கு இருக்கும்வரை, இந்தியாவுக்கு வெள்ளைக்கார முதலாளிகள் ஆட்சி மேலானது என்பதுதான் நமதபிப்பிராயமாயிருந்து வருகிறது. ஏனெனில் தங்களை இழிவுபடுத்தி தங்கள் சமூகத்தை அடிமையாக்கி வாழ்ந்துவரும் ஸ்தாபனத்தை ஒரு மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்றால், அந்த மக்கள் “விடுதலை” பெற யோக்கியதை உடையவர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக்கொள்ள முடியுமா? இவற்றையெல்லாம் பார்த்துத்தான் இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும், பொதுவுடமைத் தத்துவமும் என்ற
முடிவுக்கு வந்தோமேயொழிய வேறில்லை. பார்ப்பனரல்லாத மக்கள் அறிவோடு, மானத்தோடு நடந்துகொள்ள யோக்கியதை உடையவர்கள். என்றால், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில் அருத்தமுண்டு: அப்படிக்கில்லாமல் பார்ப்ப னீயத்தை அழித்து பார்ப்பன அடிமை கையில் ஆதிக்கத்தை கொடுப்ப தற்கு பாடுபடுவதென்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வதேயாகும். என்றாலும் எல்லாக்காரியத்தையும், ஏககாலத்
தில் செய்கின்ற முயற்சியில்தான் நாம் இருக்கின்றோமேயொழிய அவற்றை அடியுடன் விட்டுவிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.10.1933.
குடி அரசு - 1933 (2 194
க€கன்வியும் - பதினும்
- சித்திரபுத்திரன்
கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.
பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.
இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.
ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதையார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது.ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.
குடி அரசு - வினா விடை - 29.10.4933
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இண்றைய ஆகறி ஏண் ஒழிய வண்டும்?
இந்தியாவில் இன்றைய அரசாங்கமானது ஆட்சி முறையில் எவ்வளவு தூரம் பாமர மக்களுக்கு விரோதமாகவும், பணக்காரர்களுக்கு அனுகூலமாகவும் இருக்கின்றது என்கின்ற விஷயம் ஒருபுறமிருந்தாலும்,
நிர்வாக முறையானது ஏழைக்குடி மக்களுக்கு மிகவும் கொடுமை விளை: விக்கக்கூடியதாகவே இருந்து வருகின்றது.
அரசியல் நிர்வாகத்திற்கென்று குடிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் தொகைகள் 100க்கு 75 பாகம் அக்கிரமமான வழிகளிலேயே-பெரிதும் செல்வவான்களுக்குப் பயன்படும் மாதிரியிலேயே-சிலரை செல்வவான் களாக்குவதற்குமே நடைபெறுகின்றன. பாமர மக்கள்-ஏழை மக்கள் ஆகிய வர்களின் உழைப்பெல்லாம் வரியாகவே சர்க்காருக்கு போய் சேர்ந்து விடு
கின்றது. அந்த வரிகள் பெரிதும் சம்பளமாகவே செலவாகி விடுகின்றன. இதன் பயனாய் ஒரு நல்ல ஆட்சியினால் குடிகளுக்கு என்ன விதமான பலன்கள் ஏற்படவேண்டுமோ அப்பலன்களில் 100க்கு 5 பாகம் கூட ஏற்படாமல் இருந்து வருகின்றன.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து சுமார் 175 வருஷ கால மாகிய பிறகும் இன்றும் கல்வித் துறையில் 100க்கு 8 பேர்களேதான் நம்மவர்.
கள் படிக்கத்தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அதுவும், பெரிதும் பணக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களுமே என்றால் இந்த நிர்வாக மானது ஏழைகளுக்குப் பயன்படும் முறையில் தனது வரிப் பணத்தைச் செலவு செய்து இருக்கின்றது என்று சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம்.
ஆனால் அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் மாத்திரம் நாளுக்கு நாள் விஷம் ஏறுவது போல் உயர்ந்து கொண்டே வந்திருக்கிறது.
நமக்குத் தெரியவே இந்தியவருமானம், வருஷம் ஒன்றுக்கு 75 கோடி ரூபாயாக இருந்தது இன்று வருஷம் 1-க்கு 175கோடி ரூபாயாக ஆகி யிருக் கின்றது.
இராணுவச் செலவுக்கு வருஷம் 20 கோடி ரூபாயாக இருந்தது
7 கோடியாகி, இன்று 60 கோடியாக இருந்து வருகின்றது.
குடி அரசு - 1932 (2) 196
மற்ற அநேக துறைகளிலும் உத்தியோகச் செலவுகள் இதுபோலவே உயர்வாகி வருகின்றது.
உதாரணமாக கல்வித்துறையை எடுத்துக்கொண்டால் கல்விஇலாக்கா உத்தியோகச் செலவுகள் இதுபோலவே வளர்ந்திருக்கிறது. ஆனால் கல்விப் பெருக்கத்தில் மாத்திரம் சென்ற 10-வது வருஷத்திற்குமுன் 100-க்கு 7 பேரா யிருந்த கல்விவான்கள் இன்று 100-க்கு 8 பேராகத்தான் ஆகி இருக்கிறார்கள் என்றால் இந்த நிர்வாகம் ஏழை மக்களுக்கும், பொது மக்களுக்கும் அனுகூலமானது என்று எப்படிச் சொல்லமுடியும்? ரூ. ஒன்றுக்கு பட்டணம் படியால் 6 Lig 7 படி சில இடங்களில் 8 படி அரிசிவீதமும் கிடைக்கக்கூடிய இந்தக் காலத்தில்- BAMA படித்த மக்கள் மாதம் 15ரூ 20ரூ. சம்பளம் கூட வெளியில் கிடைக்காமல் திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் அரசாங்க நிர்வாக உத்தியோகங்களில் ஏராளமான ஆட்களை நியமித்துக்கொண்டு அவர் களுக்கு மாதம் 100,200, 500, 1000, 5000 வீதம் சம்பளங்களை அள்ளிக் கொடுப்பதென்றால் இப்படிப்பட்ட அரசாங்கமும், அரசாங்க நிர்வாக உத்தி யோகங்களும் இந்திய பாமர ஏழை குடி மக்களைச் சுரண்டும் கூட்டுக் கொள்ளை ஸ்தாபனம் என்று சொல்லவேண்டியதா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
இன்றைய ஆட்சியானது அழிக்கப்படவேண்டியது என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதாதா என்றும் கேட்கின்றோம். ஆட்சி நிர்வாகம் என்பது சுத்த விளையாட்டுத்தனமாகவும், யோக்கியப் பொருப்பற்ற தனமாகவும் இருந்து வருகின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும். சென்னை மாகாணமானது சுமார் 20 வருஷங்களுக்கு முன்பு 2-மந்திரிகளாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது யாவரும் அறிந்ததாகும். ஆனால் இப்பொழுது 7-மந்திரிகளால் நிர்வாகம் செய்யப் பட்டு வருகின்றது. இதன் பயணாய் மக்கள் அடைந்த பயன் என்ன என்பதை கவனித்தோமா னால் மேலே கூறியபடி 2-மந்திரிகள் இருக்கும்போது 100-
க்கு 7-பேர் படித்த வர்களாய் இருந்தது இப்போது கல்விக்காக என்று ஒரு தனி மந்திரி மாதம் 5000 ரூ. சம்பளத்தில் ஏற்படுத்தி அந்த இலாக்காவில் 20-வருஷங்களுக்கு முன் இருந்ததைவிட 100-க்கு 200-பங்கு பணம் அதிகம் செலவழித்தும் இன்றும் 100-க்கு 8-பேர் படித்தவர்களாய் இருக்கிறார்.
கள் என்கின்ற அளவில் தான் அபிவிருத்தி காட்டப்படுகின்றது. ஆனால் இந்த மந்திரிப் பதவிகள் இந்தப்படி 100-க்கு 350-பங்கு வளர்ந்ததற்கு காரணம் என்ன என்று பார்ப்போமானால் ஆட்சிமுறையை ஒரு திருட்டு தனம்போலவும் மந்திரிப் பதவிக்காரர்கள் அந்த திருட்டில் தங்களுக்கு ஒரு பாகம் கூட்டு கொடுக்காவிட்டால் அத்திருட்டைக் காட்டிக் கொடுத்து விடு வோம் என்று மிரட்டி பங்கு பெற்றது போலவும்தான் ஆகி இருக்கின்றதே தவிர வேறு ஒன்றுமே இல்லை.
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இப்படி 100-க்கு 8-வீதமான கல்வி என்பதும் செல்வவான் வீட்டுப் பிள்ளைகளுக்கு மாத்திரம் கிடைக்கும்படியாகவேதான் கல்வியின் தத்துவ
மும், கல்வி இலாக்காவும் அமைக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக ஒரு பையன் 5.5.ட0., படித்து வெளிவர வேண்டுமா னால் மாதம் 1-க்கு 5-4-0 ரூ. சம்பளம் கொடுக்கவேண்டும். அவன் புத்தகம் முதலியவைகளுக்கு மாதம் 2-ரூ வீதம் செல்லும். ஆக மாதம் 7-4-0 ரூ. வீதம் ஒரு மாணவனுடைய படிப்புக்கு வேண்டி இருக்கிறது. இந்த தொகை யான மாதம் 7-4-0 ரூ. கூட 45 பேர்களைக்கொண்ட ஒரு குடும்பத்திற்கு வரும்படி இல்லாத மக்கள் நம் நாட்டில் 100-க்கு 60,70 பேர்கள் இருப்பார்கள் என்றால் இவர்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் எப்படி படிக்கமுடியும் என்பதை யோசித்துப் பார்த்தால் கல்வி தத்துவத்தின் புரட்டும், அயோக்கியத்
தனமும், சுலபத்தில் விளங்காமல்போகாது. மேற்கண்ட கல்விச் செலவானது மாதம் 7-4-0 ரூ. என்பது பட்டணத்துப் பிள்ளைகளுக்குத்தானே ஒழிய, கிராமாந்திர பிள்ளைகளுக்குப் பட்டினங்களுக்குச் சென்றுபடிக்க மாதம் 17- 4-0 ரூ.ஆகிவிடுமென்பதை நினைத்துப்பார்த்தால் 100-ல் 1 பிள்ளையாவது குறைந்த யோக்கியதா பக்ஷ்ப்படிப்பு என்னும் 5.5.ட0., படிப்பு படிக்க முடி யுமா என்று கேட்கின்றோம். மக்கள் நிலை இந்தப்படி இருக்கும்போது இந்தப்படிப்பு சொல்லிக்கொடுக்கும் உபாத்தியாயர்களுக்கு மாதம் 75 முதல் 350 ரூ. வரை சம்பளம் கொடுப்பது என்றால் இது எவ்வளவு கொடுங் கோன்மையான நிர்வாகம் என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும். மாதம் ஒன்றுக்கு 30-ரூ. 35-ரூ. சம்பளத்தில் வேலைக்கு வருவதற்கு 100 & கணக்கான பி.ஏ., எல்.டி. கள் இன்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தப்படி பலர் அமர்ந்தும்இருக்கிறார்கள். அதுமாத்திரமல்லாமல் பி.ஏ., எல்.டி. படிப்பையும் பரீட்சையையும், வஞ்சகமில்லாமல் இன்னம் சிறிது தாராளமாய் விட்டால் மாதம் ஒன்றுக்கு 20 ரூபாயிலும் 25 ரூபாயிலும் கிடைக் கும்படியாக ஆயிரக் கணக்கான பி.ஏ.,எல்.டி. உபாத்தியாயர்களைக் காண லாம்.அப்படிக்கெல்லாம் இருக்க படிப்புக்காக மக்களிடம் இருந்துவசூலிக்
கும் வரியையும் அபாரமாக்கி தனிப்பட்ட முறையில் படிப்புக்காக பெற் றோர்கள் செய்யவேண்டிய செலவையும் அபாரமாக்கி அவ்வளவையும், உபாத்தியாயர்களுக்கும் படிப்பு இலாகா நிர்வாக உத்தியோகஸ்தர்கள் என்ப வர்களும் வீணாய் கொட்டிக் கொடுத்து அந்தக் கூட்டத்தைச் செல்வான் களாகவும் ராஜபோகக்காரராகவும் ஆக்குவதல்லாமல் அந்தப்படிப்பால் மக்களுக்கு பலனும் இல்லாமல் செய்து மொத்த ஜனத்தொகையில் 100-க்கு 92-பேர்களை கையெழுத்துக்கூடப் போடத் தெரியாமல் தற்குறிகளாய் வைக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்த அக்கிரமங்களை மக்கள் எப்படித் தான் சகித்துக்கொண்டிருப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட கொடுமைகளையும் அயோக்கியத்தனங்களையும் மக்கள் என்றென்றும் தெரிந்துகொள்ளாமலும், தெரிந்தாலும் சகித்துக்
குடி அரசு - 1933 (2 198
கொண்டும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக் கூடத்தில் பிள்ளைகளுக்குக் கடவுள்செயல் பிரசாரத்தையும் ராஜ பக்தி பிரசாரத்தையும் கொண்ட புஸ்தகமும் படிப்பும் கற்பிக்கப்படுகின்றது என்று தீர்மானிக்க வேண்டியதாய் இருக்கிறது.
ஆயிரம் சமாதானம் சொன்ன போதிலும் இன்றைய ஆக்ஷி முறை
யும் நிர்வாக முறையும் முதலாளித் தன்மை கொண்டது என்பதிலும், இவை ஏழைமக்களுக்கு விஷம்போன்றது என்பதிலும், கண்டிப்பாக இவை அழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதிலும் நமக்குச் சிறிதும் சந்தேகமோ தயவோ தாக்ஷண்யமோ தோன்றவில்லை. ஆனால் இப்படிப்பட்ட சூழ்ச்சி ஆகஷித் தன்மைக்கு இந்தியாவில் இன்று தூண்கள் போல் இருந்து வரு பவை முதலாளித்தன்மையும் புரோகிதத்தன்மையுமே பிரதானமாகும். அதற்கேற்ற முறையிலேயே காங்கிரசும்-காந்தீயமும் வேலை செய்து கொண்டு வந்திருக்கின்றது என்பதுடன் அதில் இருந்தால் தங்களுக்குப் பதவி கிடைக்காது எனக்கருதி வெளிவந்து அவற்றோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் மற்ற அரசியல் ஸ்தாபனங்களுமே நடுத்தூண்களாய்
இருந்து வருகின்றன.
இந்தக் காரணத்தால் தான் நாம் காங்கிரசை அழித்தாகவேண்டும் என்றும் காந்தீயத்தை ஒழித்தாக வேண்டும் என்றும் அதே தத்துவம் கொண்ட, மற்ற அரசியல் கிளர்ச்சிகளையும் ஒழிக்கவேண்டும் என்றும் புரோகித சம்மந்தமான எந்த உணர்ச்சியையும் அடியோடு புதைத்தாக வேண்டும் என்றும் கூப்பாடு போடுகின்றோம்.
இக்கூப்பாட்டைக் கண்டு முதலாளிகளும் முதலாளிகளின் கூலி
களும் உத்தியோக வர்க்கங்களும் உருமுவதில் நமக்கு அதிசயமொன்று மில்லை. ஆனால் ஏழைமக்கள் தொழிலாளிகள் சரீரத்தால் சதாகாலமும் பாடுபட்டு துன்பப்படும் கூலிமக்கள், முதலாளிகளுக்கும் முதலாளிகள் கூலி களுக்கும் ஆதரவளிப்பதும் அவர்களை அண்டுவதும் நமக்கு அதிசய மாய் இருக்கின்றது.
ஆகையால் வரப்போகும் தேர்தல்களில் ஏழை மக்கள் தொழிலாளி
கள் ஆகியவர்கள் இவற்றை உணர்ந்து ஏமாந்து போகாமல் நடந்து கொள் வார்களாக.
குடி அரசு - தலையங்கம் - 29.10.1933.
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
யட்டேல் பட்டுவிட்டார்
தோழர் வித்தல்பாய்பட்டேல் அவர்கள் 22-10-33-ந்தேதி ஜினிவா
வில் காலமாய்விட்டார் என்ற செய்தியைக்கேட்ட இந்தியமக்கள் மிகுதியும் வருத்தமடைவார்கள்.
பட்டேல் அவர்கள் அரசியல் உலகத்தில் மிக்க புகழப்பெற்றவர் வாக்குவல்லவர், யாவரும் பிரமிக்கத்தக்கபடி விஷயங்களுக்கு வியாக்கி யானம் செய்யும் கூர்மையான புத்திசாதுரியமுமுள்ளவர். பம்பாய் நகரசபைத் தலைவராகவும் இந்திய சட்டசபைத் தலைவராகவும் இருந்து அவற்றுள்
மிக்க கியாதி பெற்றவர். இந்தியாவில் மாத்திரமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளிலும் இந்திய அரசியலின் மூலம் புகழ்பெற்ற
வர். எப்படிப்பட்ட அரசியல் வாதியும் பட்டேலை எதிர்ப்பதென்றால் மிகவும் பயப்படுவார்கள்.தோழர் காந்தியாருக்கு பட்டேலிடம் எப்பொழுதும் சிறிது பயம் உண்டு. ஒரு காலத்தில் பட்டேலின் துடையின்மீது தன் தலை இருக்கும் போது தனது உயிர் போக நேரிட்டால் அதுவே தனக்கு ஒரு பெரிய பாக்கிய மாகும் என்று தோழர் காந்தி பேசி பட்டேலை புகழ்ந்திருக்கிறார். உப்பு சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்கள் பட்டேலுக்கு இஷ்ட மில்லாத காரியங்களாகும்.அதனாலேயே அவர் கடைசிகாலத்தில் பெரிதும் மேல் நாட்டில் இருக்கவேண்டியதாயிற்று என்று சொல்லவேண்டும்.
கடைசியாக அவர் இந்தியாவுக்கு அனுப்பிய செய்தியில் தோழர் காந்தியவர்களின் அரசியல் தலைமைப்பதவி இந்தியாவுக்கு சிறிதும் பயன்படாதென்றும் வேறு தலைவரைக்கொண்டு தான் வேறுவழியில்
கிளர்ச்சி செய்யப்படவேண்டுமென்றும் சொன்னவர். அவரது தர்க்கங்
களிலும் மற்றும் எவ்வளவோ கவனமான சம்பாஷணைகளிலும் தமாஷ் கலந்தே இருக்கும். இப்படிப்பட்ட பெரியார் 62 வயதில் காலமாகிவிட்டார். என்பது இந்திய அரசியலில் கலந்த மக்களுக்கு பெரிதும் விசனத்தைக் கொடுக்கக்கூடிய சம்பவமாகும் என்பதில் ஆட்சேபணையில்லை.
குடி அரசு - இரங்கலுரை - 29.10.1933
குடி அரசு - 1933 (2 200
கர்ப்பத்தடை I
கர்ப்பத்தடையைப்பற்றி இந்நாட்டில் சுயமரியாதை இயக்கமும், குடிஅரசுப் பத்திரிகையும் சுமார் 7.8 வருஷங்களுக்கு முன்பிருந்தே மகாநாடுகள் கூட்டி தீர்மானங்கள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும்,
வியாசங்கள், தலையங்கங்கள் மூலமாகவும், பொதுஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்து வந்திருக்கின்றன.
மேல்நாடுகளிலும் கர்ப்பத்தடையைப்பற்றி சுமார் 70, 80 வருஷ மாகப் பிரசாரம் செய்துவரப்படுவதாகவும் தெரியவருகிறது.
தோழர் பெசண்டம்மையார் சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே கர்ப்பத்தடைப் பிரசாரத்தில் கலந்திருந்து பிரசாரம் புரிந்ததாகவும், மற்றும் கர்ப்பத்தடை பிரசாரமானது, சட்டவிரோதமானதல்ல என்று வாதாடி கர்ப்பத் தடை பிரசாரத்துக்கு அரசாங்கத்தை அனுமதிக்கும்படி செய்ததாகவும், அவ் வம்மையார் சரித்திரத்திலிருந்தும் விளங்குகின்றது.
இவைகள் மாத்திரமல்லாமல் மேல்நாடுகளில் இன்றும் பல தேசங் களில் தனிப்பட்ட நபர்களாலும், சங்கங்களாலும் கர்ப்பத்தடை பிரசாரங்
களும், அது சம்மந்தமான பத்திரிகைகளும், புத்தகங்களும் ஏராளமாய் இருந்துவருகின்றன. இவைகளையெல்லாம்விட மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்ப்பத்தடைப் பிரசாரம் செய்ய பல அரசாங் கங்கள் அதற்கென ஒரு இலாக்காவை ஏற்படுத்தி அதன்மூலம் பிரசாரங்கள் செய்தும் வருகின்றன. மற்றும் அனேக இடங்களிலும் வியாபார ஸ்தலங் களிலும் கர்ப்பத்தடைக்கு ஏற்ற சாதனங்கள் விற்கவும் படுகின்றன.
இந்தப்படி உலகத்தில் பல்வேறு இடங்களில் பலவிதங்களாக கர்ப்பத்தடை பிரசாரங்கள் நடந்து பெரிதும் அனுபவசாத்தியமாகி பலர் அதன் பயனை தனிப்பட்ட முறையில் அடைந்து சுகத்தையும், க்ஷேமத்தையும் பெற்று வாழ்ந்து வருகின்றார்கள்.
எனவே கர்ப்பத்தடைப் பிரசாரமும், முறையும் உலகமெல்லாம் பரவி மிகுதியும் செல்வாக்கடைந்த பிறகு இப்போதுதான் நமது நாட்டில் கர்ப்பத்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தடை என்பதைப்பற்றி எண்ணவும், பேசவும் சிலர் துணிந்து முன்வந்திருக் கிறார்கள்.
அதுவும் இந்தியநாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், சமூக வாழ்க்கைச் சுதந்திரம் ஆதாரம், உடல்கூறு ஆதாரம் முதலியவைகளின் தாழ்ந்த நிலைமைக்குப் பரிகாரம் செய்ய வேறு எத்தனையோ வழிகளில் பல நிபுணர் களும், தலைவர்களும் வெகுகாலமாக முயற்சித்தும் பயன் படாமல் போன பிறகே வேறு வழியில்லாமல் இந்த உண்மையைப் பின்பற்ற வேண்டியவர் களானார்கள்.
இந்தக் கர்ப்பத்தடை பிரச்சினையில் குழந்தைகளே இல்லாத வர்களான “வறடர்” களும் முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரிப்பது போல் ஏராளமான அதாவது 10-பிள்ளைகள், 20 பிள்ளைகள் பெற்றவர்களாகிய “புத்திரபாக்கியம்” உடையவர்களும், சட்ட சம்மந்த நிபுணர்களும், மத சம்மந்தமான நிபுணர்களும், டாக்டர்களும் தாராளமாய் கலந்திருப்பது கர்ப்பத்தடை வெற்றிக்கு அறிகுறி யென்றே சொல்லவேண்டும். ஆனால் கர்ப்பத்தின் பயனால் வேதனையடைந்து கஷ்டப்பட்டு, தொல்லைப்பட்டு அடிமைகளாக வாழும் பெண் மக்கள் போதிய அளவு வெளிவந்து இப்
பிரச்சினையில் கலந்து ஆதரவளிக்காதது வருந்தக்கூடிய விஷயமானாலும் பெண்கள் தங்களைத் தாங்களே பாபஜன்மம் என்றும், கீழான பிறவி என்றும் பிறவியிலேயே பிரம்மனால் விபசாரிகளாய் பிறப்பிக்கப்பட்டு விட்டதால் என்றென்றும் புருஷர்களுக்கு அடிமையாய் இருந்து அவர்களது காவலி லேயே வாழ்ந்து தீரவேண்டியவர்கள் என்றும், பேதைகள் என்றும் கருதிக் கொண்டிருக்கின்ற பிறவிகளான பெண்கள் இம்மாதிரியான காரியங்களில் கலந்துகொள்ளாததற்கு ஆகவும் இக் கஷ்டங்களிலும், கொடுமையிலும் தொல்லையிலும் இருந்து விடுதலையாவதற்கு முயற்சி யெடுத்துக் கொள்ளா ததற்காகவும் இவர்கள் மீது குறைகூறுவது “இருட்டில் ஏன் வெளிச்ச மில்லை” என்று கேட்பதையே யொக்கும்.
ஆனபோதிலும் ஏதோ இரண்டொரு ஸ்திரீகள் கலந்திருப்பதையும் சுயமரியாதை இயக்கத்தில் மாத்திரம் அனேக ஸ்திரீகள் கர்ப்பத் தடை பிர சாரம் செய்து வருவதையும் பார்க்கும்போது ஒரு அளவுக்காவது மகிழ்ச்சி அடைய வேண்டியது நியாயமாகும்.
நிற்க நமது பிரசாரத்தின் பலனாகவும், மற்றும் பலர் முயற்சியாலும். நமது சென்னை மாகாணத்தில் அரசாங்கமானது கர்ப்பத்தடையின் அவசியத்தை உணர்ந்து அரசாங்க வைத்திய ஸ்தாபனங்கள் மூலமாக கர்ப்பத் தடைபிரசாரம் செய்து பார்க்கலாம் என்கின்ற எண்ணங் கொண்டவு டன் மனித சமூகப் பொருப்பற்ற பிற்போக்குவாதிகள் மதத்தின்பேரால் கர்ப்பத்தடை கொள்கையையும், பிரசாரத்தையும் கண்டிக்கப் புறப்பட்டு கூப்பாடு போடுகிறார்கள் என்பதைக் கேழ்க்க யாரும் வருந்துவார்கள்.
குடி அரசு - 1933 (2 202
அப்படிப்பட்ட எதிர் பிரசாரங்களில் ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர். கள்தான் முதன்மையானவர்களும், தடையானவர்களுமாய் இருக்கிறார்கள் என்றால் யாரும் ஆச்சரியப்படமாட்டார்கள். ஏனெனில்
இந்தக் கூட்டத்தாருக்கு அறிவைப்பற்றியோ, மனிதத்தன்மையைப் பற்றியோ, பிரத்தியக்ஷபிரமாணங்களைப்பற்றியோ சிறிதும் கவலை கிடை யாது. இவர்கள் மனிதசமூகத்தை மிருகங்கள் என்றும், அடிமைகள் என்றும்
கருதி கேவலமாய் நடத்தும் முரட்டு மூர்க்கக் கொள்கையைக் கையாளு கின்றவர்கள். சுருங்கக்கூறுவதால் ரோமன் கத்தோலிக்கர்கள் பிற மனிதர். களைப் பாவிப்பதிலும், பிறமனிதர்களிடம் நடந்துகொள்வதிலும், பிற மனிதர்களை மதிப்பதிலும் இந்தியத் தென்னாட்டுப் பார்ப்பனர்களைவிட மிக மிகமோசமானவர்கள் என்றும் அவர்களது மதக்கொள்கையும் தென்
னாட்டுப் பார்ப்பன மதத்தைவிட மிகமிக மோசமும் முட்டாள்தனமும், சுய நலமும் கொண்டவைகள் என்றும் சொல்லலாம்.
மேலும் தங்கள் வாழ்வுக்கும், தங்கள் மேன்மைக்கும் பார்ப்பனர்கள் கொஞ்சகாலத்துக்கு முன்பாகக் கூட மனிதசமூகத்தை எவ்வளவு கேவல மாக, சூட்சியாக, முட்டாள்தனமாக, கொடுங்கோன்மையாக நடத்தி வந்தி ருக்கிறார்கள் என்பதற்கு அவர்களது வேதங்களும், புராணங்களும், அரசியல் சட்டங்களும், “தர்ம” சாஸ்திரங்களும் ஆதாரமாய் எடுத்துக் காட்டாய் இருந்து வருகின்னனவோ, அதுபோலவே கத்தோலிக்கர்களின்
சரித்திரமும் இருந்து வந்திருக்கின்றது. இருந்தும் வருகின்றது என்றும் சொல்லவேண்டியிருக்கின்றது.
அவர்களுடைய தற்காலயோக்கியதைகளை உணரவேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அவர்கள் நடந்துகொள்ளும் மாதிரியில் இருந்தே ஒருவாறு உணரலாம். ஆதலால் தான் இப்படிப்பட்ட இவர்கள் கர்ப்பத்தடையைப்பற்றி எதிர்ப்பிரசாரம் செய்யப் புறப்பட்டிருப்பதில் யாருக்
கும் ஆச்சரியம் இருக்க நியாயமில்லை. ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவர்கள் கர்ப்பத்தடையை எதிர்ப்பது என்பது இன்று நேற்றல்ல. வெகு காலமாகவே எதிர்த்துவந்திருக்கிறார்கள். அதே புத்தியை இந்தியாவிலும் காட்டி யிருக்கிறார்கள்.
கர்ப்பத்தடையை இவர்கள் எதிர்ப்பதற்கு ஒரு இடத்திலாவது
பகுத்தறிவுக்குப் பொருத்தமான நியாயத்தையோ, மனித சமூக நன்மைக்கு ஏற்றதான நியாயத்தையோ எடுத்துச் சொல்லி மெய்பிக்க இவர்களால் இது வரையிலும் முடியாமலே போய்விட்டது. மற்றபடி இவர்களது எதிர்ப்புக்கு உள்ள ஆதாரங்கள் எல்லாம் மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களே ஒழிய வேறில்லை.
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
பகுத்தறிவு ஆதாரமும், விஞ்ஞான ஆதாரமும் பிரத்தியட்சஅனுபவ ஆதாரமும் இல்லாத எவ்வித எதிர்ப்புகளிலும், தடைகளிலும் பெரும்
பாலும் சூக்ஷிகளும், புரட்டுகளும், சுயநலங்களும், பித்தலாட்டங்களுமே
தான் மறைந்திருக்கின்றன என்பதே நமதபிப்பிராயம். அதிலும் இம்மாதிரி யான எதிர்ப்புகள் மதத்தின்பேரால் ஏற்பட்டு நன்மையான காரியங்களுக் கெல்லாம் முட்டுக்கட்டையாயிருக்குமானால் அதில் சுயநலமும், சூட்சியும்,
புரட்டும், பித்தலாட்டமும் மாத்திரமல்லாமலும் பெரும்பாலும் அயோக்கியத்
தனங் களுக்கு ஆதரவுதேடும் தன்மையும் இருக்குமென்பதும் நமதபிப்பி.
ராயமாகும்.
இந்தக் காரணங்களால்தான் மனிதனுக்கு அறிவும் பிரத்தியக்ஷ அனுபவமும், பஞ்சேந்திர உணர்ச்சியின் பலாபலனும் இருக்கும்போது இவைகளையெல்லாம் லக்ஷியம் செய்யாததும் இவைகளுக்கு மாறுபட்டது மான மதம் என்பது எதற்காக உலகில் இருக்கவேண்டுமென்பது நமது முதல் கேள்வியாகும். அதனாலே தான் இப்படிப்பட்ட மதங்கள் என்பவைகள் எல்லாம் ஒழியவேண்டும் என்று முழுமூச்சுடன் நாம் போராடிவருகின்றோம். சிறிதுகாலத்துக்கு முன்கடவுள் பேரால் தேவதாசிகள் என்கின்ற ஒருமுறை இருக்கக்கூடாது என்று ஒருவிதகிளர்ச்சி ஏற்பட்ட காலத்தில் தோழர் சத்திய
மூர்த்தி அய்யர் போன்ற தேசபக்தர்கள் பலர் தேவதாசிதன்மை ஒரு மேலான தன்மையென்றும், அது கடவுள் கைங்கரியமென்றும், அதனால் புண்ணிய முண்டு என்றும் கூப்பாடு போட்டது அனேகருக்கு ஞாபகமிருக்கும். அதற்கு பதில் அளிக்கும் முறையில் நாம் “அப்படிப்பட்ட மேலானதும், சிரேஷ்டமானதும், புண்ணியமானதுமான காரியத்தை புண்ணியத்தில் நம்பிக்கையுள்ள வகுப்பார்கள் தங்கள் குடும்பங்களில் உள்ள பெண் களுக்குக்கொடுத்து இப்பொழுது தேவதாசிகளாய் இருக்கின்ற பெண்களை
குடும்பப் பெண்களாக ஏன் ஆக்கிவிடக்கூடாது”? என்று கேட்ட பிறகு அந்த சமாதானத்தை விட்டுவிட்டு “தேவதாசிகள் என்கின்ற வகுப்பை
ஒழித்து விடுவது மதத்திற்கும், ஆகமத்துக்கும் விரோதமானது” என்று சொல்ல வந்தார்கள். இதற்கும் பதில் குடிஅரசு சொல்லும் வகையில் “மனித
தன்மைக்கும், சுயமரியாதைக்கும், மதமும், ஆகமும் விரோதமாய் இருந்
தால் எதை ஒழிப்பது” என்றுகேட்டபோது தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் “ராமசாமியும், வரதராஜுலுவும் இன்றைக்குத் தேவதாசியை வேண்டா மென்று சொல்லுவார்கள். நாளைக்கு கோவிலுக்கு பூஜை செய்ய அர்ச்சகரே வேண்டாமென்று சொல்லுவார்கள்; ஆதலால் மதத்துக்கும், ஆகமத்துக்கும் சிறிதும் விரோதமான காரியம் எதுவும் செய்யக்கூடாது”
என்றார். இதன்பிறகு தான் இந்து மதத்தின் யோக்கியதை முன்னையைவிட அதிகமாக சந்தி சிறிக்க ஏற்பட்டு தேவதாசிமுறை ஒழிக்க சட்டம் செய்ய
முடிந்தவுடன், சாரதா சட்டம் செய்யவும் சுலபமாய் முடிந்து விட்டது. பார்ப் பனர்கள் பேச்சைக்கேட்டு சில முஸ்லீம்கள் கூட குழந்தைகளை கல்யாணம் செய்து கொண்டு காரியாதி களைச் செய்வதைத்தடுக்கும்படியான சட்டம்
குடி அரசு - 1933 (2 204.
செய்வது முஸ்லீம் மதத்துக்கு விரோதம் என்பதாகபோட்டகூச்சல்கள்கூட லட்சியம் செய்வாரற்று குப்பைத் தொட்டிக்குப்போய் விட்டது.
ஆகவே தேவதாசி ஒழிப்பு, குழந்தை மணம் ஒழிப்பு, கர்ப்பத்தடை ஆகிய விஷயங்களுக்கு எதிர்ப்புகள் எல்லாம் மதங்களின் முட்டாள் தனங்க ளையும் அவற்றிற்குள் அடங்கிக்கிடக்கும் மோசங்களையும், சூகஷிகளையும், வெளிப்படுத்த ஒரு தக்க சாதனமாய் ஏற்பட்டிருப்பதற்கு
நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம். ஏனெனில் இவற்றின் மூலம்
மதங்கள் மனிதசமூக நன்மையை விட- சுகாதாரத்தைவிட- உடல் கூற்றின் தத்துவநிலையைவிட- பொருளாதார நலத்தைவிட வேறுபட்டதாகவும் முக்கியமானதாகவும் பாவிக்கப்படுகின்றனவென்பதை உலகம் அறியச் செய்துவிட்டது. ஆதலால் மதத்தின்பேரால் வரும் எதிர்ப்புகள் எல்லாம் மதங்களை ஒழிக்க நாம் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கு அனுகூலம்என்றே
கருதி வரவேற்போமாக.
நிற்க கர்ப்பத்தடை முறையை கத்தோலிக்கர் மதத்தின் பேரால் எதிர்ப்பதில் மூன்று முக்கிய காரணங்கள் எடுத்துச்சொல்லி வருகிறார்கள்.
1 கடவுளுக்கு விறோதமாம்.
2 வேதத்துக்கு விறோதமாம்.
3.இயற்கைக்கு விறோதமாம்.
இந்த மூன்று காரணங்களும் முற்றும் முட்டாள்தனமும், மோசமும் நிறைந்த கற்பனைக் காரணங்கள் என்பதுடன் முன்னுக்குப்பின் முரணான காரியங்கள் என்பதுமாகும் என்பதே நமதபிப்பிராயம். இதைப்பற்றி அடுத்தவாரம் விளக்குவோம்.
குடி அரசு - தலையங்கம் - 05111933
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
மீண்டும் பார்ப்பண கூழ்ச்சி
தேசீயத்தின் பேராலும், காங்கிரசின் பேராலும், இதுகாறும் சென்னை மாகாண பார்ப்பன அரசியல் வாதிகள் செய்து வந்த சூழ்ச்சிகளையும் புரட்டு களையும் நாம் அப்போதைக்கப்போது வெளிப்படுத்தி வந்திருக்கிறோம். இப்பொழுது தோழர் காந்தி முதலியவர்கள் காங்கிரசுக்கு தகனக்கிரியை செய்து பார்ப்பன தேசீயப் புரட்டுக்கு ஆதரவு இல்லாமல் செய்து விட்டதால். ஒரு புதிய ஏற்பாடு செய்யவேண்டிய அவசியம் பட்டம் பதவிகளை நாடும் காங்கிரஸ் அரசியல் வாதிகளுக்கு ஏற்பட்டு விட்டது. அதற்காகவே தோழர்கள் சத்தியமூர்த்தி, சி.எஸ். முத்துரங்க முதலியார், எம்.பக்தவத்சலம் ஆகியோர்களால் “காங்கிரஸ் சுயராஜீயக் கட்சி” என்ற பேருடன் ஒரு புதிய கட்சி பழயபடி சென்னையில் ஸ்தாபித்திருப்பதாகத் தெரிகிறது. “அடுத்த தேர்தலிலே சட்டசபை ஸ்தாபனங்களையும், ஸ்தல ஸ்தாபனங்களையும் கைப்பற்ற முயற்சி செய்வதும், வெள்ளை அறிக்கையையும், சமூக தீர்ப்பை
யும் எதிர்த்துப் பிரசாரம் செய்வதும், சுயராஜ்யத்துக்காகப் போராடுவதும்
இந்தக் கட்சியின் நோக்க” ங்களென்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதை: ஊன்றிக் கவனிக்கும் பொழுது இது மக்களுக்கு இப்பொழுது நன்றாய் தெரிந்து போய் விட்டிருக்கிற, பழய பார்ப்பனீய சூழ்ச்சியின் புதிய வேஷமேயன்றி வேறல்ல என்பது தெற்றென விளங்கும். இதுவரையில் இப்பார்ப்பன காங்கிரஸ்வாதிகளும், அவர்களுடன் சேர்ந்து “ஓத்துக்கு மத்தளம் போடும்” சில முடத்தெங்குகளும் செய்து வந்த “தேசியப் பிரசாரத்தாலும்”, “சுயராஜ்யப் போராட்டத்தாலும்” நமது மாகாணத்திலுள்ள பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்ட நஷ்டங்கள் சொல்லுந்தரமல்ல. அப்படியிருக்க, மீண்டும் இவ்வித சூழ்ச்சிக்கு இடம் கொடுக்கலாமா என்று கேட்கிறோம். தங்களுடைய சொந்தப் பிழைப்புக்காகவும், தங்கள் சொந்த வகுப்பு நலத்துக்காக அதிகாரத்தையும், அரசாங்க பதவிகளையும் கைப் பற்றுவதற்காகவும் பார்ப்பனர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இவ்வித புரட்டு களையும் சூழ்ச்சிகளையும் செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் சுயநல முன்னேற்றத்தைக் கருதியோ, அல்லது ஏமாளித்தனத்தினாலோ
மற்றவர்கள் இவ்வித மோச முயற்சிகளுக்கு ஆதரவு செய்வதைப்பற்றித் தான் மனம் வருந்துகிறோம்.
குடி அரசு - 1933 (2 206
எனவே இந்தப் புதிய கட்சிக்கு ஆதரவு கொடுக்காமல், அதற்கு “கர்ப்பத்திலே இறந்த குழந்தை”யின் கதியே நேரிடும்படி செய்வது பார்ப்பனரல்லாத மக்களின் கடமையாகும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.11.4933
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
எது துவேஷம்?
நவம்பர் 1-11-33ந்தேதி வெளியான சுதேசமித்திரன் பத்திரிகையில் கர்ப்பத்தடை ஆதரிப்புக்கூட்ட நடவடிக்கை வெளியாயிருப்பதில் பார்ப்பனர்கள் பேசியதை விபரமாய் பிரசுரித்துவிட்டு “வரதராஜலு நாயுடு தமிழில் பேசினார்” என்று ஒருவரியில் முடித்து விட்டது. ஆங்கிலத்தில் பேசிய பார்ப்பனர்களின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்து விரிவாகப் பிரசுரிப்பதும், தமிழில் பேசிய பார்ப்பனரல்லாதார் பேச்சை ஒரே வரியில் தமிழில் பேசினார் என்று பிரசுரித்திருப்பதையும் கவனித்தால் இந்த பார்ப்பன பத்திரிகையின் துவேஷ மனப்பான்மை நன்கு விளங்குகிறதல் லவா? இங்கிலீஷ் பேச்சுகளையெல்லாம் மொழி பெயர்த்து பிரசுரித்த இந்தப் பத்திரிகை தோழர் வரதராஜலுவின் தமிழ் பேச்சை பூராவாகப் போடாத தற்குக் காரணம் என்ன? தமிழ் மொழிமீதுள்ள வெறுப்பா? அல்லது பார்ப் பனரல்லாதார் மீதுள்ள பார்ப்பன துவேஷமா? என்றுதான் கேட்கிறோம். பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கும் தமிழ் வாசகர்கள் இதைச் சிந்தனை செய்வார்களாக.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 05.114933
குடி அரசு - 1933 (2 208
அகில கூட்டுறவானர்கள் திணம்
ரஷ்மாவிண் கூட்ட௫ுறஷ வாழ்க்கை வியாங்கன்
ரஷியக் கூட்டுறவு முறை
தலைவரவர்களே! தோழர்களே! எனக்கு இன்று பேச சந்தர்ப்பம் கொடுத்து எனது அபிப்பிராயங்களை எடுத்துச்சொல்ல அனுமதி கொடுத்த தோழர் கணபதி ஐயர் அவர்களுக்கும், தலைவர் அவர்களுக்கும் எனது நன்றியறிதலை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நான் கடைசியாக பேசவேண்டியவனாக இருக்குமென்று கருதினேன். ஆனால் நான் முதலி லேயே பேச ஏற்பட்டுவிட்டது. ஆனபோதிலும் எனது அபிப்பிராயங்களை: சொல்லிவிடுகிறேன்.
நான் (கோவாப்ரேடிவ்! கூட்டுறவு சங்கங்கள் என்ற விஷயத்தில் ஆதியில் கொஞ்சம் அக்கரை கொண்டவனாய் இருந்தவன். முதல் முதலாக நம்முடைய சென்னை ரிஜிஸ்ட்ரார் தோழர் ராமச்சந்திரராவும், அதுசமயம்
டிப்டி கலைக்டராக இருந்த தோழர் நாராயணசாமி அவர்களும் இங்கு கோவாப்ரேடிவ் ஸ்தாபனம் ஏற்படுத்த முதல் முதல் என்னிடமே வந்தார்.
கள். எங்கள் வீட்டில்தான் கூட்டம் கூட்டப்பட்டது. பாங்கு புஸ்தகத்தைப் பார்த்தாலும் நான்தான் முதல் பங்குக்காரனாக இருப்பது தெரியவரும். அதற்காகப் பெரிதும் நானும் அந்தக் காலங்களில் உழைத்திருக்கிறேன்.
என்றாலும் இன்றைய நிலைமையானது நான் கோவாப்ரேடிவ் சொசைட்டி களிலிருந்து சிறிது விலகி அலக்ஷிய அபிப்பிராயமுடையவனாக இருக் கிறேன். ஏனெனில் எங்கு பார்த்தாலும் ககஷியும் சுயநலத்துக்கு ஸ்தாபனங் களை உபயோகித்துக்கொள்வதும் அதன் உத்தேசங்களுக்கு விறோதமாக பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதுமாய் இருந்துவருவதேயாகும். தோழர் கணபதி ஐயர் அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பு என்னிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது நம்முடைய நிலைமையானது இப்படித்தான் இருக்க முடியுமென்று குறிப்பிட்டார். அதுமிக உண்மையேதான். ஏனெனில் நம் நாட்டில் நிலைபெற்றுள்ள பல்வேறுவிஷயங்களையும், முறைகளையும் அடி யோடு மாற்றாமல் நம்முடைய ஜனசமூகத்திற்கு நன்மையைக் கொண்டு வந்துவிடுவது என்பது கொஞ்சமும் முடியாத காரியமாகும்.
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ரஷ்யா நாட்டின் கூட்டுறவு முறைகளைப்பற்றி பேசுபவன் என்று உங்களுக்கு தலைவர் எடுத்துச்சொன்னார். சர்வ விஷயத்திலும் ஐக்கிய பாவமான கூட்டுறவு முறையானது சாத்தியப்படுமா என்று ஒருகாலத்தில் கருதி இருந்தேன். ஆனால் எனது மேல்நாட்டு அனுபவங்களினால் அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் கூட்டுறவு முறைகளைக் கவனித்துப் பார்த்ததினால், கூட்டுறவு முறையைப் பற்றிய எனது எண்ணம் சாத்திய
மாகக் கூடிய தென்பது மிக்க பலமாக உறுதிப்பட்டது.
என்னைப்பொருத்தவரையில் என்னைப்பற்றி யார் என்ன நினைத்துக் கொண்டிருந்தபோதிலும் எனது முடிவான லக்ஷ்யம் அதாவது எனது எண்ணம் ஈடேறுமானால் அது உச்சஸ்தானம் பெற்ற உயரிய கூட்டுறவு வாழ்க்கை முறையாகத்தானிருக்கும் என்பதுதான் என் அபிப்பிராயம்.
கூட்டுறவு என்கிற உயரிய சரியான நிலையானது நம்முடைய நாட்.
டில் ஏற்பட்டுப்போனால் ஜனசமூகமானது கவலையற்று-சஞ்சலமற்று நாளைக்கு என் செய்வோம் என்று ஏங்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலைமையற்று நிம்மதியாக-சவுக்கியமாக குதூகுலமாக வாழவழி ஏற்பட்டு விடும்.
நம்முடைய நாட்டில் ஏதாவது ஒருசங்கம் ஏற்பட்டால் அதைப்பற்றி நம்முடைய மக்கள் என்ன கருதுகிறார்களென்றால் அதில் தங்களுக்கு எவ் வளவு தூரம் லாபமிருக்கிறதென்றும் அதைத் தங்கள் பெருமைக்கும், வாழ்வுக்கும் எவ்வளவு தூரம் சுயநலத்திற்கு) பிரயோஜனப்படுத்திக் கொள் எலாமென்றும் தான் கருதிக்கொண்டு அதில் சம்மந்தம் வைத்துக் கொள்ளு கிறார்களே ஒழிய அதனால் உலக நன்மைக்கு-ஜன சமூக மேம்பாட்டிற்குப் பாடுபடவேண்டுமென்பதைப்பற்றிய கவலையை அறவே விட்டு விடு கின்றார்கள்.
அதுபோலவே நம்முடைய கோவாபரேடிவ் ஸ்தாபனங்களிலும் இருந்துவருகிறது. அந்த ஸ்தாபனத்திலுள்ள மக்களுக்குள்ளாகவே கூட்டுறவு உணர்ச்சி கூட கிடையாதென்றே உறுதியாகச் சொல்லலாம். ஆனால் ஏதோ சிலர் அவரவர்கள் தங்களுடைய நன்மைக்காகவும் பட்டம் பதவிகளுக்காகவும் கெளரவத்திற்காகவும் ஏதோ சம்பந்தம் வைத்திருப்ப தினால் மாத்திரம் என்ன பலன் ஏற்பட்டுவிடும்?
சாதாரணமாக இந்த ஊர் கூட்டுறவு ஸ்தாபனத்தை எடுத்துக்கொள் ளுங்கள். அதில் 2000, 3000 பேர்கள் வரை பங்குதார மெம்பர்களாக இருக் கின்றார்கள். ஆனால் இந்த ஸ்தாபனத்தினால் உருப்படியாக பொது மக்க ளுக்கு என்ன நன்மை ஏற்பட்டு விடுகிறது? ஒருசில சொற்பபேர்கள், ஏதோ எப்படி கடன் பெறலாமென்று பெருத்த பிரயாசை எடுத்துக்கொள்பவர்களே சில அனுகூலங்கள் அடைகிறார்கள். இவர்களுக்கு டெ ஸ்தாபனத்தைப்
குடி அரசு - 1933 (2 210
பற்றிய கவலையே இல்லை. இன்றை உலக எல்லா வாழ்க்கையும் இப்படித் தான் இருக்கிறது. வெறும் குற்றத்தையே பேசுவதால் பயனில்லை. ஆனாலும் இவைகள் தக்க படிப்பினையாக இருக்க உதவ வேண்டும். கூட்டுறவு வாழ்க்கையென்றால் பிறருக்கு நாம் எவ்வாறு சகாயம் செய்வது எவ்வாறு உதவி செய்வது என்கிற விஷயங்களே நமது வாழ்க்கை யின் முக்கிய லக்ஷியமாய் இருக்கவேண்டும். என்பதாகும். இவைகளில் தனித்தனி மனிதனைப்பொறுத்த தத்துவம் என்பதே கூடாது.
சாதாரணமாக நாம் நம்மிடையே ஒருவரை புதிதாகக் கண்டால் அதாவது சந்தித்தால் அவருடைய நிலை என்னவென்றும், உத்தியோகம் என்னவென்றும் வினவஆசைப்படுகிறோம். அவர் ஒரு பெரிய உத்தியாகஸ் தனாகவோ, பணக்காரனாகவோ இருந்தால் ஒரு தனி மதிப்பும், ஒரு குமாஸ் தாவாக இருந்தால், கூலியாக இருந்தால், ஒரு தனிமதிப்பும் தான் கொடுக் கின்றோம். இது தான் நம்முடைய நாட்டில் ஒரு மனிதனை மதிப்பதைப் பற்றிய முறையாகும். ஆனால் ரஷ்யாவிலோ இங்குள்ள இதுபோன்ற கேள்விகளை அங்கு யாரும் கேட்பதில்லை. அங்கு ஒருவருடைய உத்தி யோகத்தைப் பற்றியோ, செல்வத்தைப் பற்றியோ சிறிதும் யோசிப்பதே இல்லை; விசாரிப்பதுமில்லை. ஒருவனைக் கண்டதும் அவன் (Socialservice) சமுதாயசேவை என்ன செய்திருக்கிறான் என்று மட்டுமேதான் பிரதானமாக கவனிப்பார்கள், அதைத்தான் கேட்பார்கள். ஒருவர் பிறருக்கு என்ன நன்மை புரிய ஏற்றுக்கொள்ளுகிறார் என்பது தான் மனிதனை அறிய முக்கிய தத்து வமாகும். அதுதான் அங்கு அவனுடைய பெருமையைக் காட்டுவதாகும். அங்கு உத்தியோகத்தைப் பற்றிய பேச்சோ, வருமானமோ, மேல்கீழ் வரும்படி என்பது போன்ற பேச்சோ, எங்கும் எவ்வித ரூபத்திலும் கிடை யாது. அங்கு எங்கும் யாவரும் சமுதாய வேலை செய்வோரேயாவார்.
நான் ரஷ்யாவில் இருந்த காலத்தில் ஒரு நியாயஸ்தலத்தைப் பார்வை யிட அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஒரு குற்றவாளியை விசாரிக்கக் கண்டேன். அவன் ஒரு விசேஷ நாளில் குடித்து வெறியனாகி கலகம் செய்தான் என்பதான குற்றவாளி. இவனை அந்த விசாரனை ஸ்தலத்தில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றால் உன்னுடைய Social Service Work (சமுதாய ஊழிய வேலை) என்ன என்பதேயாகும். அவன் அதற்கு எனக்கு
Social Service சமுதாய வேலை இல்லைஎன்றான். இதைக் கேட்டதும் நியா யாதி பதியும் ஜூரியான ஒருபெண்ணும் “உனக்குசமுதாய வேலையில்
லாமல் போய் விட்டது என்கிறாயே வெட்கமில்லையா? என்னை உலகுக்கு உப யோகப்படுத்திக் கொள்ள வகையற்றவனாக இருக்கிறேன் என்று சொல் லுவது அவமானகரமானதாகத் தோன்றவில்லையா?” என்று கடிந்தார். அதற்கு அவன் எல்லா சோஷியல் சர்வீசையும் சிறு பிள்ளைகளாகிய கம்சமால் கூட்டத்தார் எடுத்துக்கொள்ளுகிறார்கள், நான் என்ன செய்வது என்றான். அந்தம்மாள் வெட்கம், வெட்கம், என்றாள். இவைகளைக் கேட்ட
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பிறகு தான் சோஷியல் சர்விஸ் (Social Service) என்பவைகளைப்பற்றி அதிகம் அறிய விசாரணை செய்தேன். சமூக ஊழியம்செய்வது தான் தங்கள். வாழ்க்கையின் கெளரவம் என்பதை முதலாகவும் அடுத்தபடி கூட்டுறவு வாழ்க்கையே மேலானதாகவும் அவர்கள் கருதி நடக்கிறார்கள்.
ரஷ்யர்களுடைய வாழ்க்கையானது உற்சாகமாகவும் சந்தோஷ மாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் 5௦௦ Service சும் கூட்டுறவு வாழ்க்கையை நடத்த முனைந்து நிற்பதேயாகும். அவர்கள் வாழ்க்கையில் மேற்போட்டுக்கொள்ளும் இந்த வேலையானது மனிதனுடைய கவலை துன்பம், மனச்சோர்வு என்பவைகளே இல்லாமல் செய்து விடுகிறது. அங் குள்ள சர்வ ஜனங்களுடைய எண்ணமெல்லாம் பிறருக்கு எவ்வளவு தூரம் நன்மைசெய்யவேண்டும்? என்றே குடிகொண்டிருக்கிறது. இந்த நோக்க. மில்லாத மனிதனை மனிதனல்ல என்று வன்மையாக அவர்கள் உணர்ந் திருக்கிறார்கள்.
நம்முடைய நாட்டில் உத்தியோகத்தின் பேராலும் மற்ற பதவிகளின் பேராலும் 1000, 2000, 5000,7000 ரூபாய்கள் கொள்ளை கொள்வது போன்ற கொடுமைகள் ரஷ்யாவில் கிடையாது. அங்கு உள்ளவர்களுக்கு தனக்கு வேண்டிய அளவுக்கு மேல் வரும்படி-லஞ்சம்-லாவணம் என்பன போன்றவைகளே அடியோடு கிடையாது. அங்கு ரூபாய் 10,20 கூட கடன் கொடுக்கும் முறையோ.கடன்படும் முறையோ கிடையாது. அதுகுற்றமாகும்.
ஆனால் அந்தமுறைகள் எல்லாம் நம்முடைய நாட்டின் இன்றைய நிலைமைக்கு சாத்தியமில்லை என்று சொன்னாலும் நம் நாட்டு நிலைமை களை எல்லாம் அடியோடு மாற்றி அமைத்துத்தான் ஆகவேண்டும். இக்
கருத்தைத்தான் நான் வலியுறுத்திக் கூறுகின்றேன். இது சிறிது சிறிதாய் கோவாப்பரேட்டிவ் ஸ்தாபனங்களின் மூலம்செய்யலாம். நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச் செருக்கு கொண்டவர்களையும்-கல் நெஞ்சம் படைத்த கணத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோபஸ்தாய் வைத்துக் கொண்டிருக்கின்றோம். மற்றொரு பக்கத்தில் வேலையில்லாத்திண்டாட்டக்காரர்களையும் பிச்சைக்காரர்களையும் வைத்
துக் கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் ஏன் இப்படி இருக்கிறது? இது போன்ற நிலைமை ரஷ்யாவில் இல்லையே! ஆதிக்கக்காரனுக்கும்-ஆதிக்
கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிறவரையிலும் தொல்லைப்படுகிறவர்.
களும்- தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.
இன்று காலை முதல் மாலை வரையிலும் என்னிடம் வந்து 5, 6
பேர்கள் வரைவந்து “வேலைகொடு-வேலைகொடு'” என்று வருந்தினார்கள். ஒருவருக்கு கலைக்டருக்கு சிபார்சு கடிதம், தாசில்தாருக்கு சிபார்சு கடிதமும்
எழுதித்தர வேண்டுமாம். ஒருவர் தனது குழந்தைகளுக்கு அம்மை
குடி அரசு - 1933 (2 212
போட்டிருக்கிறது, சம்சாரத்திற்கும் உடல்நோவு, நான் என்னசெய்வேன். 4 மாதமாக வேலையில்லையே காப்பாற்றுவாறில்லையே என்று கதறினான். நான் அவருக்கு 2 படி புழுங்கல் அரிசி கொடுக்கும்படி வீட்டிற்கு சீட்டு கொடுத்தேன். இதுபோன்ற கொடுமைகளின் தன்மையை இன்று என்னுடன் தங்கியிருந்த நண்பரும் நன்கறிவர். எங்கும் வேலை இல்லை என்ற கூக்குரல் அதிகரித்து விட்டது. ஏன் வேலை இல்லாமல் போய் விட்டது? வேலை இல்லாமை எப்படி ஏற்படும்? என்று யோசித்துப்பார்த்தீர்களா? ஒரு வேலைக்காரன் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை வேலை செய்கின் றான். ஒரு தையல்காரன் 3-மிஷின்களை வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு
$ரூ. 10ரூ. சம்பாதிக்கின்றான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒருவன் அதிக நேரம் வேலைசெய்து அதிகப்பணம் ஒருவனே சம்பாதிப்பது எதற்கு? இவை களையெல்லாம் கணக்குப்போட்டு ஒரு ஒழுங்குமுறைப்
படுத்தி ஒரு கூட்டுறவு முறையில் அமைத்தால் அவனவனுக்கு தேவை யான அளவுக்கு ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக போதியபலன் கிடைக்கும்.
நம்முடைய நாட்டில் அடிப்படையான மாறுதல் செய்யாவிட்டால் கூடிய சீக்கிரத்தில் நாம் என்ன கதிக்கு ஆளாகவேண்டிவரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாம் செலவழிப்பதில் வகைதகையற்ற முறையில் வீண்செலவு செய்துவருகின்றோம். கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தி னால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒருபாகம் தான் செலவு ஏற்படும் பாக்கி இன்னும் 8-பேருக்கு உதவும்.
உதாரணமாக ரஷ்யர்களின் சாப்பாட்டு முறையைக் கவனியுங்கள். அங்கு சாப்பாடும் கூட்டுறவு முறைதான். அங்கு ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒருவேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிடுமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்கு மேல் அதிகமாய்த்தான் போட்டுச் சமைக்கிறார். கள்-4,5 பேர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண் கண்டிப்பாக சமையலுக் கென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குடும்ப சமையலுக்கு என்றும் ஒரு தனி அரை. பாக்கி வசதிகளுக்கென்று கொள்ளை கொள்ளை யான இடமும் ஒதுக்கிவைத்துக்கொண்டு என்ன அக்கிரமமான தீங்குகளை வசதியற்ற எளியவர்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்.
ரஷ்யாவிலுள்ள மேல் சொன்ன பொது சமையல் சாலையில் (Gen-
eral Kitchen) 970 பேர்கள் தான் வேலையிலீடுபட்டிருக்கிறார்கள் என்று நான் கணக்குக்கேட்டுத் தெரிந்தேன். நம்முடைய நாட்டில் 4-பேர் களுக்கு ஒரு பெண்வீதம் சமையலுக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டிருக்கிற கணக்குப்படி 40000 பேர்களுக்கும் எத்தனைப் பெண்களை ஒதுக்கித் தள்ளி கொடுமைக்
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
காளாக்குவது? என்றுதான் யோசித்துப் பார்க்கும்படி கோறுகிறேன். நம் முடைய சமையலைப்பற்றி ஏதாவது பந்தோபஸ்து உண்டா? சமைய லரையையும் சாப்பாட்டுச் சாமான்களையும் சமைத்தபிறகும் அங்கு தினம் டாக்டர் சரியான பரிசோதனை செய்கிறார். ஒரு பெரிய எம்.டி.டாக்டர் அதற்கென்றே ஒவ்வொரு கூட்டுறவு சமயலுக்கு உண்டு. இங்கு நாம் என்ன செய்கிறோம்? சல்லீசான சரக்குகளை வாங்கிப்போட்டு வெந்தும் வேகாமல் அவித்துத் தின்று, சாப்பாட்டின் காரணமாகவே பெரும்பாலும்நோய் அடை கின்றோம். மேல் நாட்டின் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டக்குறைவு, அனு கூலம், மிச்சம், சுகாதாரம், செளக்கியம் ஆகியவைகள் கவனிக்கப் படுகிற தென்பதையோசியுங்கள். அங்கு ஒரு ரொட்டிக்கிடங்கில் (Bakey) நாள் ஒன்றுக்கு 250 டன் ரொட்டிகள் ஒரேசமயத்தில் செய்யப்படுவதைப் பார்த்
தேன். கூட்டுறவு முறையினால் ஒருநாள் ஒன்றுக்கு ஒரு இடத்தில் இருபதி னாயிரம் முப்பதுஆயிரம் வீதம் ஷர்ட்டுகள் டிரெளசர்கள், ஜாக்கட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு அத்தனைபேரும் வேலையிலேயே ஈடுபட்டி ருக்கின்றனர். அங்கு மிகக்குறைந்த சிலவு தான்.
இங்கு நாம் துணி வாங்கிக் கொடுத்தால் காலே அரைக்கால் பாகம்
திருட்டும் சேதமாகிறதென்றும் சொல்லலாம். அங்கு அப்படியில்லை. துணியை அப்படியே 200, 300 வீதம் மடிப்பு மடித்து முதலிலேயே சின்ன சின்ன வேலைக்கானவைகளுக்கு அதாவதுபாக்கெட், கழுத்துப்பட்டை கைப்பட்டை முதலானவைகளுக்கு ரம்பத்தில் அறுப்பது போன்ற மிஷினில் அருத்து எடுத்துக்கொண்டு பாக்கியை அப்படியே சேதாரம் இல்லாமல் முழுதும் உபயோகப்படுத்திவிடுகிறார்கள்.
அங்கு ரஷ்யாவில் 2,000-3,000 ஜனங்கள் சந்தோஷமாக செளக்கி யமாக போதிய சுகாதாரத்தோடு ஒரே கட்டிடத்தில் நிறம்பி வாழ்வதைப் பார்த்தேன். இங்கு நம்முடைய ஒருவீட்டை என்ன அனாவசியமாக 3, 4 அடுக்கு மெத்தைகளுடன் கட்டுகிறோம். அதில் பகுதி பாகம் நாம் உபயோகப்படுத்துவதுகூடஇல்லை. அப்படி உபயோகப்படுத்தும் பாகத்தில் சுத்தம் சுகாதாரம் இருப்பதில்லை. நம்முடைய வீட்டை நிரப்புவது ஒடிந்து போன மத்து கெட்டுப்போன நாற்காலி முரம் கூடை கிழிந்துபோன பாயும் அவிந்து போன தானிய குப்பைகளால்தான். இந்த முட்டாள் தனத்திற் காகவா நாம் பெரும்வீடு வைத்துக்கொண்டுவாழுகிறோம்? என்று யோசித் துப்பாருங்கள்.
அங்கு எப்படி வீட்டு வசதி முறை இருக்கின்றதென கேட்கலாம். சர்வாதிகாரியான ஸ்டாலினுக்கும் சாதாரண தொழிலாளிக்கும் சுமார் 10,16 அடிக்கும் உள்ள ஓர் அளவு இடந்தான். அங்கு ஒரே மாதிரிசாதிக்காய் கட்டிலும், மேஜையும் சிறப்பாக இருக்கும். அங்கு ஒரு சிறு 4 - 4 உள்ள கக்கூசு நூற்றுக்கணக்கானவர்களுக்கு உபயோகப்படுகிறது. தோட்டியே
குடி அரசு - 1933 (2 214.
கிடையாது. அது கக்கூஸா என்று நாம் சந்தேகப்பட்டே போய்விடுவோம். அவ்வளவு சுத்தம் அதில் எவ்விதவாடையும் இருக்காது அழகுஒழுங்கான முறை எல்லாம் சேர்ந்திருக்கிறது. இங்கு ஒருவீட்டுக்கு 5 பேருக்கு ஒரு கச்கூசாக இருக்கிறது. அதற்கு எவ்வளவு இடம்? அப்படியிருந்தும் என்ன சகிக்க முடியாத சுகாதாரக்குறைவு? இங்கு 300பேர்களுக்கு ஒருதோட்டிவீதம் இருப்பானென்று நம்புகிறேன். இந்த 30,000 பேர்கள் உள்ள ஈரோட்டில் எத்தனை தோட்டிகள்? எத்தனை வீடு, தெருக்கூட்டுகிறவர்கள்? எத்தனை வேலைக்காரர்கள்? இப்படியிருந்தும் இங்கு அசுத்தம் அசுத்தந்தானே என்றும் அதிஅக்கிறமமாக இருக்கிறது. அங்கு கக்கூசுக்கு பக்ககிலேயே படுக்கை அறை இருக்கும் அங்குள்ள முறை கஷ்டத்திற்கே இடமில்லை வழியுமில்லை.
ஒவ்வொருகூட்டுபண்ணையிருக்கும் இடத்திலும் ஒவ்வொரு தொழில் சாலைக்கும் ஒரு நல்ல Park பார்க் சினிமா, விளையாட்டு இடம்,
டிராமா சுகாதார வசதிசாலை எல்லாம் அமையப்பட்டிருக்கிறது..
ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் உள்ள 5000 பேருக்கும் 1000 கூட்டு றவுபேருக்கும்முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுசம்பளம் ஒரே அளவு தான் கொடுக்கப்பட்டு வருகிறது. மேல்கெண்ட மீதியை அக்கூட்ட பொதுஜனங் களுடைய நன்மைக்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
கூட்டுறவு சிக்கனம்
இங்கு ஒரு மனிதனுக்கு ஒருவண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் அவன் எப்பொழுதும் போய்க்கொண்டிருக்கிறானா? 10மணி நேரத்திற்கும் வீணில் தீனிபோட்டு 8மணி நேரத்திற்கும் குறை வாகவே வேலை வாங்குகிறான். 3 மணிநேரத்திற்கு அனுபவிப்பதினால் பாக்கி 7 மணிநேரகூலியும் செலவும் வீணாகிறது. இப்படியேதான் தனிப் பட்டவர்கள் தன்மையால் உண்டாகும் நாசங்கள். அநேகம் நம்முடைய நாட்டில் தேச செழிப்பும் அனுபவப்பொருள்களுற்பத்தியும் ஒன்றுக்கு எட்டாக விளங்கு கிறதா இல்லையா? ஆனால் மக்களின் கஷ்டத்திற்குக் காரணம் என்ன? தனித்தனி என்னும்உணர்ச்சி ஒழிய வேண்டுமா-வேண் டாமா? கவலையற்று வாழ்வது தான் சிறந்தது அதற்கு கூட்டுறவு முறையே தான் பெரிதும் தேவையானது.
இந்த ஈரோடு முனிசிபாலிட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஒன்று சேர்க்கப்பட்டு பலருக்கும் வாழ்க்கை வசதிகளை பூர்த்தி செய்விக்கிற தென்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் எவ்வளவு பிரயோசனப்படும்? எவ்வளவு செலவு மிச்சமாகும்? எவ்வளவு அனுகூலம்? எவ்வளவு லாபம்? எல்லாவற்றிலும் நன்மையே தான் ஏற்படும். அப்படிக்கின்றி தனிப்பட்ட வர்கள் நன்மைக்கு மாத்திரம் ஏன் எதுவும் இருக்கவேண்டும்.
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஒரு ஹோட்டலை பொதுவாகபல குடும்பங்களுக்கு சேர்த்துவைத்து நடத்தினால் இரண்டணாவுக்கும் கீழாகவே நல்ல சாப்பாடுபோடலாம்.அது சத்துள்ளதாகவும், சுகாதாரமுறைப்படியும் இருக்கும். நம்வீட்டில் சமையல் என்னும் பேரால் சரிபாக சாமான் வீணாய்போகிறது. நம்முடைய நாட்டில் என்ன பொதுப்பிரியம் இருக்கிறது? பொது அலுவல்களில் டாக்டர் பரீக்ஷ செய்து என்ன செளக்கியமாக எத்தனை காரியங்களைச் செய்யலாம். இது போலவே வியாபாரத்திலும் கடையில் பேரம் செய்யும்போது கிராமக் குடியானவனிடம் 9 சாக்குப்போட்டு விட்டு 10 சாக்கு என்று பித்தலாட்டம் செய்வது தெரியும். ஒன்றுக்கு ஒன்ரரையாய் எடுத்துக்கொள்வது தெரியும்.
இது நானும் செய்திருக்கிறேன். நம்மிடம் நிறைந்திருப்பது பொய், சரக்கோ கலப்படம், உபயோகிப்பதோ முக்கால் அளவுள்ளபடிதான். இவைகளினா லெல்லாம் எவ்வளவு நஷ்டம்? இவைகளை எல்லாம் கூட்டுறவு முறையில் லக்ஷியம்கொண்ட ஜனத் தலைவர்கள் என்பவர்கள் ஏன் Control செய்து அடக்கித்தடுக்கக் கூடாது? ஒவ்வொரு தனிப்பட்டவனையும் ஒன்றுபடுத்தி
நீயும் வா எல்லோரும் ஒரு காரியத்தை செய்வோம். எல்லோரும் லாபம் பெறுவோம்.அதிக லாபமும் அதிக ஓய்வும் எடுத்துக்கொள்ளும் என்று ஏன் கூட்டுறவுத்தன்மையை பிரவேசிக்கக்கூடாது?
இம்முறைகள் என்றைக்காவது தலைதூக்கிதான் ஆகவேண்டும். இதற்காக பொதுவுடமை வேண்டுமா? பொதுவுடமை பேச்சே வேண்டிய தில்லை. ஆனால் இன்றே கூட்டுறவு தன்மையைக் கைப்பற்றுங்கள், வட்டி விஷயத்திலும் பாங்குகளில் ஏராளமான ரூபாய் தூங்குகிறது. இங்கு வட்டி
10க்கு மாதம் கால் ரூபாய் வாங்குகிறானே? என்ன கொடுமை? ரஷ்யாவில் லேவாதேவியும் செய்யக்கூடாது? ஒருவனுக்கு ஐந்து ரூபாய் கடன் கொடுத்
தால் அது அங்கு திருட்டு ஆகிவிடுகிறது. ஆபத்தில் உதவுவதென்றால்- கஷ்டத்துக்காகயிருக்குமென்றால்-ஏன் ஆபத்தும், கஷ்டமுமான நிலைமை
யும் ஏற்படும் என்பது தான் அங்கு கேட்கப்படும் கேள்வியாகும்.
ஜனைமூகம் கவலையற்று வாழஒழுங்கான முறை கூட்டுறவுத் தத்துவ வாழ்க்கை முறையேயாகும். நான் அதிகமாகச் சொல்லவரவில்லை. இவை களைத்தான் சொல்ல நினைத்தேன். இதற்கு மக்கள் தயாராகிவிடவேண்டும். சுயநலத்தை ஒதுக்கி வைத்துவிடவேண்டும்-பலருடைய நன்மைக்கும் என்று கருதி இரங்கவேண்டும். இவற்றைச் சர்க்கார்செய்யவேண்டியதா? பொது ஜனங்கள் செய்யவேண்டியதா? என்பது ஆஸ்திகர்கள் விதி பெரிதா? மதி பெரிதா? ஏன்று தர்க்கிப்பதை ஒத்ததாகும். இவ்விவகாரங்களில் வலுத்த
வன், வாய்ப்பேச்சுக்காரன் தான் ஜெயமடைவான். சர்க்கார் தான் ஜனங்கள்; ஜனங்கள் தான் சர்க்கார் என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டம் ஏற்பட்டால் நமக்கென்னவென்று நாம் இருப்போமா? அதுபோல் நமது உணர்ச்சிகள் இருக்கவேண்டும். சிப்பியானது திறந்திருக்கும் பொழுது மழை
ஜலம் விழும்போது தான் முத்தாகிறது. அதுபோல் தான் நமது உணர்ச்சிகள்
குடி அரசு - 1933 (2 216
பக்குவப் படுத்தி சரிப்படுத்தி வைத்துக்கொண்டு தயாராகவே இருக்க வேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டுவிடும். நம்முடைய அபிப்ராயந்தான் ஜனசமூக அபிப்பிராயம் என்று தன்நம்பிக்கையுடன் நாம் வேலை செய்யவேண்டும். நமது உடலில் பழைய தனித்தனித் தத்துவ இரத்தத்தை எடுத்துவிட்டுக் கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்ச (Injeet) செய்யவேண்டும். இது நம்மால் முடியுமா? என்று இருக்கக்கூடாது.
கண்டிப்பாய் இதுமுடியாமல் போய்விடாது.
நம்முடைய மக்கள் மடத்தனத்தில் இருக்கின்றார்கள். அதனால்
முடியாது என்றோ அறியாமை அந்தகாரம் சூழ்ந்திருக்கிறது. அதனால் முடியாதென்றும் சொல்லி விடமுடியாது. 1914-18 வருஷத்தில் நடந்த கொடிய மகாயுத்தத்தைக்கூடக் கேள்விப்படாத ரஷ்யர்களே இருக்கிறார்கள். இப்பொழுதும் (0௮) ஜார் அரசன் இருந்து அரசாளுகின்றான் என்றே கருதிக் கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்.
கள். இதனால்எல்லாம் அங்கு சகித்துக்கொண்டிருந்த கூட்டுறவு தன்மை ஏற்படாமல் போய்விட்டதா? எப்படிகாய்ந்த தீய்ந்த சருகில் அதி வேகமாய்
நெருப்புத்த பற்றிக்கொள்ளுகிறதோ அப்படியேதான் அங்கு மதம் ஒழிந்து- கடவுள் மாய்ந்து-அரசர்கள் மண்ணாங்கட்டிகளாகி செல்வவான்கள் பனிக்கட்டிகளாகி மழை பெய்தாலும் வெய்யில் அடித்தாலும் கெடுவது போல்கெட்டு 16 கோடிஜனங்களும் கூட்டுறவு வாழ்க்கைக்காரராக்கிவிட்டது என்பதை நீங்கள் ஞாபகத்தில் நன்கு பதியவைத்துக்கொண்டு இந்நாட்டு கொடுமை ஒழிப்புக்கு தைரியங்கொண்டு திடங்கொண்டு போராடி உழையுங்
கள். உங்கள் உணர்ச்சிகள் இவைகளுக்கு எப்பொழுதும் அனுகூலமாகவே
இருக்கட்டும்.
குறிப்பு: 04.111933 இல் ஈரோடு மகாஜன உயர்நிலைப்பள்ளி சரஸ்வதி அரங்கில் அகில கூட்டுறவாளர்கள்தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரஷியாவில் உள்ள கூட்டுறவு முறையைப்பற்றி ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 12.111933
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
“வக௫வாண் கே௫ நிணைப்யாண்
- தோழர் ஈ.வெ.இராமசாமி
கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஒரு பழமொழியாகும். இது இரு கக்ஷியாரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும்.
எந்தெந்த இரு கக்ஷியார் என்றால் பஞ்சேந்திரியங்களுக்குப் புலனா வதைத்தவிர வேறு வஸ்து கிடையாது என்கின்ற முடிவைக்கொண்ட “மெடீ ரியலிஸ்டு” (Materialist) என்னும் கக்ஷியாரும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத ஒரு வஸ்து இருக்கிறது என்கின்ற முடிவைக்கொண்ட “ஸ்பிரிச்சு வலிஸ்ட்டு” (Spiritualist) என்னும் கக்ஷியாரும் ஆகிய இரு ககஷிக்காரர் களும், அதாவது “நாஸ்திகர்களும்” “ஆஸ்திகர்களும்” ஆகிய இரு ககூஷிக்
காரர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய பழமொழியாகும்.
இந்தப் பழமொழியின் கருத்து என்னவென்று தெரிந்திருக்கின்றோ மென்றால், அன்னியருக்குக் கேடுசெய்யவேண்டுமென்றோ, கேடு உண்டாக வேண்டும்மென்றோ நினைப்பவன் கெட்டுப்போவான் என்பதாகும்.
இதை ஆஸ்திகர்கள் எந்த முறையில் ஒப்புக்கொள்ளுகின்றார்கள் என்றால், மனிதர்களில் ஒவ்வொருவருடைய நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தனித்தனியே கவனித்து அந்தந்த நடவடிக்கைக்கும், எண்ணத்துக்கும் தகுந்த பலனைக் கொடுப்பதற்கு சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் என்பதாக ஒரு ஜிவனோ ஒரு சக்தியோ உண்டு என்றும், அது பிறருக்குக் கேடு செய்தவனையும், கேடுநினைத்தவனையும் அறிந்து அப்படிப்பட்டவனுக்குத் தண்டனையாக கெடுதிசெய்வதனால் அவன் கெடுவான், கெட்டுப்போவான் என்றும் கருதுகின்றார்கள்.
நாஸ்திகர்கள் அதாவது சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள. கடவுள் என்பதாக ஒரு ஜீவனோ, அல்லது ஒருவஸ்துவோ, ஒரு ஆவியோ இருந்துகொண்டு மனித சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் நடவடிக்கை. களையும், எண்ணங்களையும் கவனித்து அதற்கேற்ற பலன்களை அவரவர். களுக்குக் கொடுத்துவருகிறார் என்பதை முழுதும் நம்பாதவர்களின் வர்க்கம்
குடி அரசு - 1933 (2 218
இந்த கெடுவான் கேடுநினைப்பான் என்கின்ற பழமொழியை எப்படி ஒப்புக் கொள்ளுகின்றார்கள் என்றால், சமூக வாழ்வில் பிறருக்குக் கேடு செய்கின்ற மனிதனும் கேடு நினைக்கின்ற மனிதனும் பிறமனிதர்களால் கேடுசெய்யப் படுவதும் மற்றும் இவனது கெட்ட செய்கையைக் கண்ட கேட்ட பிறரால் வெறுக்கப்படுவதும், துவேஷிக்கப்படுவதும் பெரிதும் சகஜமான சம்பவங் களல்லவா? ஆகவே பிறருக்குக் கேடு செய்யநினைத்து, பிறரால் வெறுக்கப் படவும் துவேஷிக்கப்படவும் ஆன மனிதன் கேட்டிற்கு ஆளாவதும்
சகஜமாகும்..
“பெருமையும் சிறுமையும் தான் தர வருமே” என்ற பிரத்தியக்ஷ பழமொழிப்படியே “நன்மையும் தீமையும் தான் தர வருமே” என்பதும் யாவராலும் ஒப்ப முடிந்த விஷயமாகும்.
ஆனால் இந்த வியாசத்தில், இப்பழமொழிக்கு நாஸ்திக சம்பிரதாய மானகருத்தை ஆதாரமாய் எடுத்து கொள்ளாமல் ஆஸ்திக சம்பிரதாயமான கருத்தை ஆஸ்திகர்கள் என்பவர்களே சரியானபடி ஏற்றுக்கொள்ளு கின்றார்களா என்ற பிரச்சனையை முக்கியமாய் வைத்து வேடிக்கை முறை
யில், இராமாயணத்தின் நடவடிக்கை எப்படிப்பட்டது: அதைப் பிறர் எப்படி மதிக்கிறார்கள் என்கின்றவைகளை எடுத்துக் காட்டவும், இந்தப் பழமொழி ஆஸ்திக சம்பிரதாயப்படி பார்ப்பவருக்கு இராமாயணம் என்பது ஒரு படிப்பினையாகும் என்பதைக் காட்டவும் எழுதப்பட்டதாகும்.
“கெடுவான் கேடு நினைப்பான்”
இராமாயண புராணத்தின் கதைப்படி “தசரதனும், இராமனும், பரதனுக்குக் கேடு நினைத்ததால் கெட்டார்கள்” என்பது இவ்வியாசத்தின்
கருத்தாகும்.
இராமாயணக் கதைப்படிக்கு தசரதனுக்கு நான்கு ஆண்பிள்ளைகள். இவற்றுள் ராஜ்ஜியப் பட்டமானது பரதனுக்குச் சொந்தமானது. எப்படி எனில் பரதனுடைய தாயாராகிய கைகேயியை தசரதன் மணக்க ஆசைப்பட்டு, கேகய ராஜனிடம் சென்று அவனது பெண்ணான கைகேயியை தனக்குத் தரும்படி கேழ்க்க கேகய மன்னன், தசரதனின் யோக்கியதையையும் நடத் தையையும் தெரிந்து “உனக்கு ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான மனைவி
கள் இருப்பதால் நான் என் மகளை உனக்குக் கொடுக்கமுடியாது” என்று மறுத்துவிட்டான். இதற்குத் தசரதன், அந்தப்பெண்ணின்மேல் உள்ள ஆசை
யால் கேகய மன்னனிடம் வணங்கி “அய்யா எனக்கு எத்தணை மனைவி
கள் இருந்தாலும் உனது மகளையே நான் பிரதான மனைவியாய்க் கொள் வேன். உனது மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கே ராஜ்ஜிய பட்டாபி ஷேகம் செய்வேன்” என்று வாக்குத் தத்தம் செய்துகொடுத்து கைகேயியை மணந்துகொண்டான்.
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
அந்தப்படி மணந்துகொண்ட தசரதன் கைகேயியையே பிரதான நாயகியாக அனுபவித்து வந்து அவள் மூலம் ஒரு ஆண் குழந்தையையும் (பரதனை! பெற்று, அது வளர்ந்து பெரியதாகி பட்டத்துக்கு யோக்கியமான வுடன் தசரதன் கெட்ட எண்ணங்கொண்டு, அதாவது ராஜ்ஜிய பட்டாபி ஷேகத்தைப் பரதனுக்குக் கொடுக்காமல் இராமனுக்குக் கொடுக்கவேண்டு மென்று நினைத்துவிட்டான்.
இந்தவிதமான கெட்ட எண்ணம் தசரதனுக்கு உண்டாகும் படியாகவே இராமனும், மிக்க தந்தரமாக யோக்கியன் போலவும், தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவன் போலவும் நடந்து வந்ததுடன், தகப்பனாரின் ஆசைக்கு ஏற்ற வண்ணமாகவும் நடந்து வந்திருக்கிறான்.
இருவரின் கெட்ட எண்ணமும் முதிர்ந்து, கடைசியாக ஒருநாள், பட்டத்துக்கு (பரதன் வாக்குறிதிப்படி) உரியவனாகிய பரதனை அவனது பாட்டனார் ஊருக்கு அனுப்பிவிட்டு, அவன் இல்லாத சமயம் பார்த்து திடீரென்று ஒரேநாளில் இராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதாய் ஏற்பாடு செய்து அவசர அவசரமாய் (திருட்டுத்தனமாய்! பட்டாபிஷேக காரியங்கள் செய்ய சூக்ஷிசெய்துவிட்டான்.
ராஜ்ஜிய பட்டமானது பரதனுக்கு வெகு காலத்துக்கு முந்தியே தன் தகப்பனால் வாக்குக்கொடுக்கப்பட்டு விட்டாய் விட்டது என்பது இராமனுக்கு தெரிந்திருந்தும் அதைச் சிறிதாவது இராமன் லக்ஷியம் செய்து தகப்பனிடம் மறுத்துக் கூறாமலும், அதுதான் போகட்டுமென்றாலும், சரி யொத்த சகோதரனான பரதன் ஊரில் இல்லாத போது இப்படிப் பட்டதொரு முக்கியமான காரியத்தைச் செய்வது யோக்கியமான காரியமாகாது என்றா வது தகப்பனுக்கு புத்திகூறாமலும், தான் புத்தி கூறியும் தகப்பன் ஒரு சமயம் இராமனின் யோசனையை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று சொல்லி இருந்த போதிலும் கூட “பட்டத்துக்கு உரியவனும் எனது அன்புள்ளவனு மான சகோதரன் பரதன் இல்லாமல் இப்படிப்பட்ட காரியத்திற்கு நான் சம்மதிக்க மாட்டேன்” என்று ராமன் ஒரு வார்த்தையாவது சொல்லாமலும், ஆளில்லாத சமயம் பார்த்து திடிரென்று தகப்பன் சொன்னவுடன் தானும் சம்மதித்து பேராசையுடன் பட்டம் கட்டிக்கொள்ள இசைந்தான் என்றால், இவ்விருவரும், அதாவது தசரதனும் ராமனும் பரதனுக்குக் கேடு நினைத்தார்.
கள் என்ற முடிவின் பேரில் ஆஸ்திகர்கள் கொள்கைப் படியே, கேடு நினைத்தவர்கள் கெடாமல் இருக்க முடியாது என்பதை ஆஸ்திகர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.
அன்றியும் இந்த சூடியை அறிந்த கைகேயியானவள், அதாவது பரதனுடைய தாயாரானவள், தன் புருஷனான தசரதனுக்கு பல விதத்தில் எடுத்துச் சொல்லியும், பிடிவாதம் செய்தும், ஒன்றும் கேழ்க்காமல் தசரதன் இவ்வுண்மைகளை மறைத்துக் கைகேயியைக் கெட்டவளாக்கி உலகம்
குடி அரசு - 1933 (2 220
முழுவதும் கைகேயியை நிந்திக்கும்படி செய்து தன் காரியத்தைச் சாதித்துக் கெள்ள முயற்சிக்கிறான்.
இச்சூக்டியும் பிடிவாதமும் எல்லாம் இராமன் அறிந்திருந்தும், பட்டா பிஷேகத்தை ஒத்தி வைக்கக்கூட தகப்பனுக்கு யோசனை சொல்லாததால் கடைசியாக, கேடு நினைத்தவர்கள் கெடவேண்டியதாகவே நேர்ந்து விட்டது.
அதாவது எவ்விதம் என்றால் தசரதன் தனது சூக்ஷி வெளிப் பட்டு விட்டதால் இனி தான் அரசனாய் இருந்து ஆக்ஷி புரிவதில் உலகம் தன்னை மதிக்காது என்றும் இகழும் என்றும் கருதி தற்கொலை செய்து கொண்டு இறக்கவேண்டியவனேயாகிவிட்டான்.
இராமனுடைய பேராசையையும் சூக்ஷியையும் நன்றாய் அறிந்த கைகேயி இராமனை ராஜ்ஜியத்திற்குள் இருக்க விட்டால் பரதனுக்கு ஏதா வது கேடுசெய்துவிடுவான் என்று கருதி ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறும் படி செய்துவிட்டாள். ஆனால் இராமன் இந்தப் பழியுடன் வேறு எங்கும் போய் வாழ்வதற்கு முடியாமல் காட்டிற்குப்போக வேண்டியதாய் முடிந்து விட்டது. காட்டிற்குப் போனவனும் அங்கும் சும்மா இராமல், மறுபடியும் எப்படியாவது, அயோத்திக்கு வந்து அரசாள வேண்டும் என்கின்ற ஆசையை வைத்துக் கொண்டு அதற்குவேண்டிய சூக்ஷிகளை எல்லாம் செய்து பரதனையும் மோசம் செய்து தனது செருப்பைக் கொடுத்தனுப்பி அந்த செருப்பை வைத்து தன் பேரால் அரசாளவேண்டும் என்று சொல்லி ராஜ்ஜிய சுதந்திரத்தை தனக்கு ஆக்கிக்கொள்ள நினைத்ததால் காட்டிலும் இராமனுக்குப் பல தொந்திரவுகள் ஏற்பட்டதோடு, இராமனால் கைகேயிக்கு எவ்வளவு கெட்டபேர் ஏற்பட்டதோ அதைவிட அதிகக்கெட்டபேரும் இழிவும் இராமன் பெண்ஜாதியான சீதைக்கும் ஏற்பட்டது.
சீதையை இராவணன் தூக்கிகொண்டுபோனதும், இராமன் இராவ ணனை சூழ்சியாய்க் கொன்றதும், எப்படியென்னால், இராவணனைக் கொன்றுவிட்டால் அந்தப் பட்டம் இராவணன் தம்பியாகிய விபீஷணனுக்
குக் கொடுப்பதாகவும், வாலியைக் கொன்று அந்தப் பட்டத்தை வாலியின் தம்பி சுக்ரீவனுக்குக் கொடுப்பதாகவும் இப்படியெல்லாம் தில்லுமல்லும் செய்து ஜெயித்துத் தன் பெண்ஜாதியை (சீதையை! அழைத்துவந்ததும், அவளை இராமன் வைத்து வாழமுடியாமல் இராமனாலேயே சீதைக்கு விபசார தோஷம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டும், பிறகு அதைக்கூட லக்ஷியம் செய்யாமல் சேர்த்துக்கொண்டும், அப்படி சேர்த்துக்கொண்டதும் விபசார தோஷத்தைப் பொருட்படுத்தாமலோ, அல்லது விபசார தோஷத்
துக்கு சதை ஆளாகவில்லை என்ற பரிசுத்த எண்ணத்தோடோ அல்லாமல், தான் பட்டாபிஷேகம் செய்து கொள்ளும்போது பெண்ஜாதி இல்லாமலும், அல்லது பெண்ஜாதியை விபசார தோஷத்திற்காக வெளிப்படுத்திவிட்ட
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இராமன் என்கின்ற பழியுடன் இருக்ககூடாது என்றும் கருதித் தனக்குப் பட்டாபிஷேகம் ஆகும்வரை, கூட வைத்திருப்பதுபோல் பாசாங்கு செய்து, பட்டாபிஷேகம் ஆனபின் சீதையினது கர்ப்பத்தைச் சந்தேகப்பட்டு தானாய் தள்ளினதாய் இருக்ககூடாது என்று கருதி அதற்கும் ஒரு சூழ்ச்சி செய்து, அதாவது சீதையின் கர்ப்பத்தைப்பற்றி ஏதோ ஓர் வண்ணான்
குற்றம் சொன்னதாக ஏற்பாடுசெய்து, ஏனென்றால் அந்தப்புரத்தில் ஸ்திரீகள் கர்ப்பவதியாய் இருக்கும் சேதி வெளியில் முதல்முதல் வண்ணார்களுக்குத் தான் தெரியுமாதலால் அந்த வண்ணான்தான் சொன்னான் என்றால் உல கோரும் சீதையும் நம்புவார்கள் என்று அவன் மீது பழிபோட்டு, பெண் ஜாதியை கர்ப்பத்துடன் காட்டுக்கு அனுப்பவேண்டியதாகி, காட்டில் அந்தம்
மாள், (சீதை) இராமன் இல்லாமலேயே “ஒட்டைக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாப்பாள்” என்பதுபோல் மற்றொரு பிள்ளையும் பெற்றுக் கொள்ள நேர்ந்து, அந்த இரண்டு பிள்ளைகளாலேயே இராமன் யுத்தத்தில் தோல்வி அடைந்து, கடைசியாக இவ்வளவு வியாகூலங்களுடனும், கஷ்டங் களுடனும், பழிகளுடனும் இராமன் சாகவேண்டியதாக ஏற்பட்டது.
இராமன் என்றையதினம் பரதனை ஏய்த்து ராஜ்ஜியப் பட்டாபி ஷேகம் பெற வேண்டுமென்று நினைத்தானோ, அன்றுமுதல் சாகும்வரை: துக்கத்தையும், அவமானத்தையும், கஷ்டத்தையுமே அதிகமாய் அடைந் தானென்றுதான் சொல்லவேண்டும்.
ஆகவே “கெடுவான் கேடுநினைப்பான்;” என்னும் பழமொழியை ஆஸ்திக தர்மப்படி நம்புகின்றவர்கள், இராமாயணக் கதையை இப் பழ மொழிக்கு ஒரு உதாரணமாய்க்கொள்ள ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படிக் கில்லாவிட்டால் இக்கேடு நினைத்த தசரதன், இராமன் இருவர்களும் ஏன் கேடு அடையவில்லை என்பதற்குச் சமாதானம் சொல்லவேண்டும். தசரத
னும் இராமனும் கேடுநினைக்கவில்லையென்றால், கதையில் உள்ளபடியான கேடுகளும், துன்பங்களும், தொல்லைகளும் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டன வென்பதற்காவது சமாதானம் சொல்லியாகவேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 12111933
குடி அரசு - 1933 (2 222
FOITG அர்பன் பாங்கு
அறிக்கைப் பத்திரக் குறிப்பு
ஈரோடு அர்பன் பாங்கியானது சுமார் 20 வருஷத்துக்கு முன் இவ்வூரில் ஸ்தாபிக்கப்பட்ட பொழுது அதற்கு பெரிதும் பார்ப்பனரல்லாத மக்களே பிரயத்தனக் காரராகவும், ஆதரவுக்காரர்களாகவும் இருந்தாலும் அது நாளாவட்டத்தில் பார்ப்பனர்கள் அதிகாரத்துக்கும் ஆட்சிக்கும், ஆதிக்கத்துக்கும் உள்ளாகி பாங்கி சிப்பந்திகளும், நிர்வாகிகளும் பார்ப்பன அக்கிரமமாகவும் பார்ப்பன நன்மைக்கு ஒரு கோட்டையாகவும் வந்து முடிந்ததுடன் மற்ற ஊர்ப் பொதுக்காரியங்களிலும் பார்ப்பன ஆதிக்கத் தைப் புகுத்துவதற்கு பாங்கியின் செல்வாக்கை உபயோகப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டது. இதன் பிறகே சமீப காலத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இதையறிந்து பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லிவந்ததின் பயனாய் சிருகச்சிருக பார்ப்பன ஆதிக்கம் குறையத் தலைப்பட்டு இப்போது இந்த இரண்டு வருஷமாய் அப்பாங்கின் நிர்வாகத் தைப் பொருத்தவரை அடியோடு பார்ப்பனரல்லாதார் கைக்கு வந்திருக்
கின்றது என்றே சொல்லலாம்.
இதன் பயனாய் அப்பாங்கின் நல்ல நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டை
யாய் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் அளவிடற்பாலதன்று. பதவி இழக்க நேரிட்ட பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத ஆளுகளையே பிடித்து அவர் களுக்கு பூச்சுற்றி விட்டு கலகம் செய்ய விடுதல் முதலாகிய காரியங்கள் முதல் தினம் ஒரு வசவு நோட்டீஸ் பிரப்பித்தல் வரை அநேக சூழ்ச்சிகள் செய்ததுடன் பாங்கிக்கு நாணயக் குறைவையும், கெட்டபெயரையும் உண்டாக்க எவ்வளவோ விஷமப் பிரசாரமும் செய்துவந்தார்கள். ஆனால் பார்ப்பனர்களின் இவ்வளவு சக்திகளையும், சூக்ஷிகளையும் நன்றாய்
அறிந்தவரும், எதற்கும் அஞ்சாத நெஞ்சையுடையவரும், எவ்வித நஷ்டத் துக்கும், பழிப்புக்கும், மிரட்டலுக்கும் சிறிதும் பின்வாங்காதவரான தோழர்.
எம். சிக்கையா அவர்கள் துணிவுடன் பாங்கின் தலைமைப் பதவியை யேற்று கலங்காமல் இருந்து நிர்வாகம் நடத்திவந்ததின் பயனாகவும் மற்றும் அவருக்கு உதவியாக இருந்து எதற்கும் பயப்படாமல் இருக்கும்படி
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தைரியமூட்டி உற்சாகத்தை அளித்துவந்த டைரெக்டர்களான தோழர்கள்
வி.வி.சி.வி. பெரியசாமி முதலியார், சா.ராமசாமி நாயக்கர், வி.வி.சி.ஆர். முரு கேச முதலியார், எஸ்.வி.சி.ராமலிங்க முதலியார், கே.எம். சீனிவாசம்பிள்ளை, என்.எம்.ஷண்முகசுந்திர முதலியார், ஈ.எஸ்.கோவிந்தசாமி நாயுடு, கே.காதர். சாயபு, ஈ.ஒய்.உமர்நவாஸ்கான் சாயபு, வி.வெங்கடசாமி ரவுத் ஆகியவர்களது உதவியாலும் இவ்வளவு சூக்ஷிகளும் கலகங்களும் சிவில் கிரிமினல் விவகாரங்களும் விஷமப்பிரசார துண்டுப் பிரசுரங்களும் டிபாசிட்டுகாரர். களுக்கு பொய் தகவல்களைக் கொடுத்து டிபாசிட்டுகளைத் திருப்பிவாங்கிக் கொள்ளச் செய்தல் முதலிய சில்லரை விஷமங்களும் ஆகியவைகளில் ஒரு
சிறிதும் பயன்படாமல் போனதுடன் பாங்கியின் நிலைமையானது முன்னை விட ஒவ்வொரு துரையிலும் அபிவிருத்தி அடைந்திருப்பதோடு சில அயிட்டங்களில் எப்போதையும்விட மேலான நிலையை அடைந்திருக் கின்றது.
எப்படியெனில் இவ்வருஷம் நமக்குக் கிடைத்திருக்கும் அறிக்கை யைப் பார்த்ததில் அடியில் கண்ட குறிப்புகள் காணக் கிடைத்தன. அதாவது:-
பாங்கியால் வாங்கப்பட்டிருக்கும் டிபாசிட் துகைகள் தற்போதிய நிர்வாக சபையார் காலத்தில் அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. டி
யார் நிர்வாக ஆரம்பத்தில் பாங்கில் டிபாசிட்டுகளின் துகை ரூ.3,23,000 ஆக இருந்தது. ஆனால் 30-6-33ல் ரூபாய் 4,00,000க்கு அதிகரித்திருக்கிறது. பாங்கு ஆரம்பமுதல் எப்பொழுதாவது இவ்வளவு டிபாசிட்டு துகை இருந்ததாக இந்த பாங்கு அறிக்கை ஸ்டேட்மெண்டிலிருந்து காணவே முடியவில்லை. இதன் காரணம் பாங்கு மீது மாத்திரமல்லாமல் பாங்கை நிர்வகிப்பவர் மீதும் இந்த பாங்கானது மெம்பர்களுக்கும், மெம்பரல்லாத டிபாசிட்டுத்தாரர்களுக்கும் உள்ள நம்பிக்கை யென்றே சொல்லவேண்டும். ஒரு பாங்கு செவ்வனே நடைபெற்று வருவதற்கு உள்ள முக்கிய அரிகுறி தவணைகடந்த கடன்களின் துகையின் குறைவே ஆகும். பார்ப்பன ஆதிக்கத்தில் அதாவது தற்போதிய டைரக்டர்கள் பொறுப்புவைக்கும்
முன்பு சுமார் ரூபாய் 65000 வரை பல வருஷங்கள் தவணை கடந்த கடன் துகை இருந்துவந்தது.
ஆனால் சென்ற வருஷ இறுதியில் தோழர் சிக்கையா அவர்கள். தலைமையில் கொண்ட பார்ப்பனரல்லாத டைரேெக்டர்கள் நிர்வாகக் கால மாகிய (30-6-33) ல் ரூ.36, 297 க்கு குறைந்து போயிருக்கிறது. சுமார் 2 வருஷங் களுக்கு முன்பு இருந்த நிலைமையை விட 6டி காலத்தில் பண: நெருக்கடி அதிகரித்தே இருந்தது என்பது யாவரும் அறிந்ததே. அப்படி இருந்தும் சிறத்தையுடன் பாங்கு நன்மையை உத்தேசித்து தாச்சண்யமின்றி
சாமர்த்தி யத்துடன் அவைகளை வசூலித்து பாங்கின் நிலைமையை
குடி அரசு - 1933 (2 224.
மேன்மையுறச் செய்த சிறப்புநிர்வாக சபையாருக்கும், விசேஷமாக தலைவர். தோழர் எம். சிக்கையா அவர்களுக்கும் உரியது. தவணை கடந்த கடன்கள் விஷயத்தில் பாங்கின் நிலைமை இந்த ஜில்லாவிலும், இன்னும் இம் மாகாணத்திலுள்ள பல ஐக்கிய பாங்குகளைக் காட்டிலும் மேன்மையதாக இருக்கிறது. 30-6-33ல் டெ கடன்களின் துகை மொத்தக் கடன் நிலுவையில் 100க்கு 16 விழுக்காடு தான் ஏற்பட்டிருந்தது. இவ்வளவு வட்டி குறைந்த காலத்திலும் வழக்கம் போல் வட்டி கொடுக்கப்பட்டதுடன் வழக்கம்போல் காப்புத்துகையும் ஒதுக்கிவைக்க முடிந்திருக்கிறது.
பாங்கின் பாதுகாப்பு திரவியம் (Reserve Fund) நாளது தேதியில் ரூ.32,808க்கு அதிகரித்திருக்கிறது. மெம்பர்களின் சங்கியையும் அதிகரித்து தற்போது 1,882 மெம்பர்கள் ரூ.89,599 செல்லான பாங்குத் துகையு டனிருக்கிறார்கள். பாங்கின் முதலீடு (Working கக ரூபாய் 4,41.413 லிருந்து ரூ.515,477க்கு அதிகரித்திருக்கிறது. இவ்வளவு துகை பாங்கு ஸ்தாபிக்கப் பட்டது முதற்கொண்டு இருந்ததில்லை யென்றும் தெரியவருகிறது.
பாங்கின் புதிய கடன்கள் கொடுக்கும் விஷயத்தில், தற்போதுள்ள வியாபாரமந்தம், பணநெருக்கடி இவைகளை உத்தேசித்து, கடன் மனுக் களை ஊன்றி பரிசீலனைசெய்யஏற்பட்டதால் துகை சிறிது குறைய அதன் காரண மாக லாபமும் முன் வருஷத்தைக் காட்டிலும் சற்று குறையக்காரணம் ஏற்பட்டது. இந்நிலைமை எல்லா ஐக்கிய பாங்குகளிலும் இன்னும் இதர பாங்குகளிலுமே காணப்படுகிறது. என்றபோதிலும் முன் வருஷங்களைப் போலவேமெம்பர்களுக்குப் பங்குத்தொகையின் பேரில் 100க்கு 9வீதம் டிவி டெண்டுகொடுக்க போதுமான லாபமிருந்தது.
நமது ஈரோடு அர்பன் பாங்கு பார்ப்பனரல்லாதார் கைக்கு நிர்வாகம் வந்ததின்பயனாய் மேல் குறிப்பிட்டபடி எத்தனையோ சூட்சிக்கும், தொல் லைக்கும், விஷமப் பிரசாரத்துக்கும் ஆளாக நேர்ந்தாலும் தோழர் சிக்கையா அவர்களது முயற்சியாலும், மற்ற டைரக்டர்களது ஆதரவாலும் பல துரைகளிலும் என்றும் இல்லாத அபிவிருத்தியடைந்தும் இந்த ஜில்லா
விலும், இந்த மாகாணத்திலும் உள்ள அநேக பாங்குகளைவிட மேன்மை யாயும் இருந்து வந்திருப்பதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைவதுடன் பிரசி டெண்டையும், டைரெக்டர்களையும் பாராட்டுகின்றோம்.
குடி அரசு - குறிப்புரை - 12111933
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
குழ அரசுக்கு பாணம்
- ஈ.வெ.ரா
குடி அரசு பத்திரிக்கைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்
காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிக்கை யின் பிரசுர கர்த்தாவாகவும், வெளியிடுவோராகவும் இருக்கிறார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்டவேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப்பட்டாய்விட்டது.
இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையிலும் இப்படிச்செய்யாமல் விட்டுவைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்ட ருக்கிறோம்.
முதலாளிவர்க்க ஆக்ஷியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி
குடிஅரசு ஆரம்பித்தகாலம் முதல் இந்த நிமிஷம்வரை குடி அரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ்வொரு வாக்கியத்திலும் கண்ட விஷயங்கள் குடி அரசைக் கொல்லத்தக்க பாணம்விடக்கூடத் தகுதியுடையவைகளே. என்பதில் நமக்குச் சிறிதும் ஐயமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்.
“குடி அரசு” தோன்றி இந்த 8 Y, வருஷகாலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப் படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலை கொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்ப னீயம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவைகளோடு இவற்றிற்கு ஆதிக்
கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என்பதிலும் கவலையுடன் உழைத்து வந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபணை:
யில்லை.
குடி அரசு - 1933 (2 226
இதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதைகளை கண்ணாடிபோல் வெளிப்படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக் கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக் காத்திருக்கிறோம் என்பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள் கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில்லையானால் குடி அரசு பத்திரிகை இருக்கவேண்டிய அவசியமுமில்லை.
சிறிது காலத்துக்கு முன் நாம் தெரிவித்துக்கொண்டபடி இனிநம்மால் நமது கடமையைச் செய்யமுடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பது மேல் என்பதுபோல் “குடி அரசு” தன் கடமையை ஆற்ற முடிய வில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும்? ஆதலால் அது மறைந்து போக நேரிட்டாலும் ஆசிரியன் என்கின்ற முறையில் நமக்குக் கவலை யில்லை.
ஆனால் பதிப்பாளர் என்கின்ற முறையிலும், பிரசுரகர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும்
சிலருக்குக் “குடி அரசு” மறைவதில் அதிகக் கவலையிருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் துகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி
முடியும் என்று முடிவுகட்டமுடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டுவிட்டது. மயக்கமும், மார்வலியும் அதிகம், கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டிருக்கிறது. காதுகளும் சரியாய் கேட்ப தில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்குபாரம் என்றே எண்ணினோம். இந்த நிலையில் “குடிஅரசு” நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொருவிதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டிய தாகும். ஆனால் என்ன நடக்கின்றனவோ பார்ப்போம்.
நிற்க இதன் பயனாய் “குடி அரசி”ன் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள். கெட்டுப் போகுமோ என்றாவது யாரும் பயப்படவேண்டியதில்லை.
நமது கொள்கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன. பிரசாரம் என்கின்ற கொடி எங்கும்பரவிவிட்டது. “குடிஅரசோ” சுயமரியாதைக்காரரோதான்
இக் கொள்கைகளைப்பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனிகருதவேண்டிய தில்லை. “குடிஅரசு”ம் ௬.ம. காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக் கொள்கை: யைச் சொல்லவும் பிரசாரம் செய்யவும், வெகு “தொண்டர்களும்” “தலைவர் களும்” இந்தியாவெங்கும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததுபோலவும் ஆகும்.
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
மற்ற விபரங்கள் பல தோழர்களைக் கலந்தபிறகு வெளியாக்கப் படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை ஈரோடு) மகாநாட்டிற்கு “குடி அரசு” அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ்செய்து இது விஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்துகொள்ளவேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.11.4933
குடி அரசு - 1933 (2 228
குழ அரசுக்கு நோட்டீஸ்
(1931-ம் வருஷத்திய இந்திய பத்திரிக்கைகள் (அவசர அதிகார! சட்டத்தின் 3-வது பிரிவினுடைய (3-வது) உட்பிரிவின்படி!
கோயமுத்தூர் ஜில்லா ஈரோட்டிலிருந்து பிரசுரிக்கப்படுகின்றதும்
1931ம் வருடத்திய இந்தியபத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டப்பிரிவு களின்படி செக்யூரிட்டி வாங்கப்படாததுமான, “குடி அரசு” என்ற பெய ருள்ள பத்திரி கையின் 1933 ஜுலை 30ம்தேதி இதழிலே 1932ம் வருஷத்திய கிரிமினல் சட்ட திருத்தச்சட்டத்தினால் 6001 ௦11932) திருத்தபெற்ற டி சட்டத்தின் 4வது செக்ஷன், () சப்செக்ஷனின் டி) பிரிவில் விவரிக்கப்பட்ட தன்மையுள்ள வார்த்தைகள் (அதன் இங்லீஷ் மொழிபெயர்ப்பு ஒன்று இத் துடன் அனுப்பப் பட்டிருக்கிறது! பிரசுரிக்கப்பட்டிருப்பதாக லோக்கல் கவர்ன்மெண்டுக்கு தெரியவருகிறபடியால் 1931ம் வருஷத்திய இந்திய பத்திரிகைகள் (அவசர அதிகார) சட்டம் ௦0011௭1930 7-வது செக்ஷனில் @ சப்செக்ஷனின்படி , டெ பத்திரிகையின் பிரசுரதாரராகிய எஸ்.இராமசாமி நாயக்கர் மனைவி எஸ்.ஆர். கண்ணம்மாள், 1933 நவம்பர் 20-ந் தேதி அல்லது அதற்கு முந்தி ரூ.1000 (ஆயிரம் ரூபாய்) ரொக்க பணமாக அல்லது இந்திய கவர்ன்மெண்டு செக்யூரிட்டி பாண்டுகளாக கோயமுத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட்டிடம் செக்கியூரிட்டி கட்டவேண்டும் என்று லோக்கல் கவர்ன்மெண்டார் இதனால் அறிவிக்கின்றனர்.
(கவுன்சிலின் கவர்னர் உத்திரவுப்படி) ஆக்டிங் சீப் செக்ரட்டரி.
“குடி அரசு” பத்திரிகை அச்சடிக்கப்படுகிற “உண்மைவிளக்கம்” அச்சுக்கூட சொந்தக்காரரான தோழர் கண்ணம்மாளுக்கு இவ்விதமாக 1000 ஜாமீன் கேட்டு ஒரு நோட்டீசு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆக 2000. ரூபாய் ஜாமீன் கேட்கப்பட்டிருக்கிறது.
குடி அரசு - அறிக்கை - 12111933
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
நாதர்ஷா ப௫ுகாலை
தோழர் அமாநுல்லா கருத்து
தோழர் அமாநுல்லா ஆப்கானிஸ்தான் அரசராயிருந்த காலத்தில் அந்நாட்டு மக்களிடை இருந்துவந்த மூடபழக்கவழக்கங்களை அகற்றி நாட்டை முன்னேற்ற முயன்றார். அது முல்லாக்களுக்கும் வைதீகர்களுக்கும் பிடியாததால் அவர்கள் சதி செய்து அவரை நாட்டைவிட்டு ஓடும்படி செய் தார்கள். அதன்பின் தண்ணீர்க்காரன்மகன் பாட்சா சாக்கோ சிலநாள். அரசைக் கைப்பற்றி அட்டகாசம் செய்தான். பிறகு அவனை தொலைத்து விட்டு மீண்டும் தோழர் அமாநுல்லாவை அமீர் ஆக்கப்போவதாகச் சொல்லிக் கொண்டு ஜெனரல் நாதர்கான் பாட்சா சாக்கோவின் மீதுபடை எடுத்து சென்று வெற்றி பெற்றதும், அதன் பின் மாஜி அமீரை அழையாமல் தாமே ஆப்கானிஸ்தான் அரசராக முடி சூடிக்கொண்டதும் பத்திரிகை வாசகர்கள் எல்லாருக்கும் ஞாபகமிருக்கலாம்.
அப்படியிருக்க சென்ற 8-ந் தேதி மாலை 2-45மணிக்கு நாதர்ஷா
தமது அரண்மனை அந்தப்புரத்திலிருந்து வந்து கொண்டிருக்கையில் ஒரு ஆப்கன் மாணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையைப்பற்றி “ராய்ட்டா” பிரதிநிதி அமாநுல்லாவைக் கண்டு பேசியதில் அவர் கூறியதாவது:-
என் சீர்திருத்த முறைகளை கைக்கொண்டு, நான் ஆப்கானிஸ் தானத்துக்கு திரும்பவேண்டும் என்று ஆப்கன் ஜனங்கள் விரும்பினால் நான் திரும்பிச் சென்று எனது முழுபலத்துடனும் தேசத்துக்கு தொண்டு செய்ய தயாராக இருக்கிறேன்.
ஆப்கானிஸ்தானத்தில் நாதர்ஷாவின் ஆட்சி மிகவும் கண்டிக்கத் தக்கது-அது பயங்கர ஆட்சியாயிருந்தது, அவர் பற்பல சமூகங்களைச் சேர்ந்த அறிவாளிகள் பலரை படுகொலை செய்திருக்கிறார். எனவே, நாதர்ஷா ஒழிந்ததற்காக நான் சிறிது சந்தோஷமடையாமலிருக்க முடியாது.
குடி அரசு - 1933 (2 220
ஆயினும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவராயிருப்பதால் அவர் மரணம் எனக்கு பூரண சந்தோஷத்தை அளிக்கமுடியாது.
நாதர்ஷா அவருடைய ஜனங்களுக்கு மாத்திரமல்ல, ஆப்கானிஸ் தானுக்கு பக்கத்திலுள்ள நாடுகளுக்கும் மிகுந்த ஆபத்தை விளைவிக்க கூடியவராக இருந்தார் என்று கூறினாராம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 12111933
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
saridebit PR S A e s L S A |
: | £
மூன்னற்று ர்திற்கு மதம் முட்டுக்கட டை.
பகுத்து அம்ப இப்புக்மூகம் SO S, பப
பக்கத்த D B L P LT TS T
குடி அரசு - 1933 (2 232
தமிழ் அண்பர் மகாநா௫
தமிழ் அன்பர் மகாநாடு என்பதாக பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதரவு தேடும் ஒரு மகாநாடு சென்னையில் அடுத்த மாதம் கிருஸ்துமஸ் வாரத்தில் நடக்கப்போவதாக அறிக்கைகள் வெளியாகிக்கொண்டு வரு கின்றன.
இம்மகாநாட்டைப் பற்றி சென்றவாரத்திற்கு முந்திய வார இதழில் தோழர் அ. இராகவன் அவர்களால் “தமிழ் அன்பர் மகாநாடு மற்றொரு பார்ப்பன சூக்ஷியே” என்னும் தலைப்பின்கீழ் ஒரு நீண்ட வியாசம் எழுதப் பட்டதை “குடி அரசு” வாசகர்கள் படித்திருக்கலாம். ஆனால் அவ் வியாசத்தில் கண்ட இரண்டொரு விஷயங்களை மாத்திரம் நாம் ஆதரிக்க முடியவில்லை.
அவற்றுள் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் “இக் கமிட்டிக்கு கடிதம் எழுதி தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும், தைரியமாக அஞ்சாது போரிடும் ஆற்றல்மிக்க தோழர்களான ஈ.வெ.ராமசாமி, நாகர். கோவில் பி.சிதம்பரம், டாக்டர் வரதராஜலு, கா. சுப்பிரமணிபிள்ளை, சாத்தூர். கந்தசாமி முதலியார், சுவாமி வேதாசலம், மதுரை கார்மேகக் கோனார் போன்ற சுமார் 10 பேர்களை சேர்க்கவேண்டும். இன்றேல் அம்மகாநாட்டில் கலந்து கொள்ள மறுக்கவேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்தை
நாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் மேல்கண்ட இப்பதின்மரை சேர்த்துக் கொண்டதால் மாத்திரம் இம்மகாநாடு தமிழன்பர்கள் மகாநாடு என்பதாக தோழர் அ. ராகவன் கருதும் மாதிரியில் ஆகிவிடுமா என்று கேள்க்கிறோம்.
இம்மகாநாட்டின் சூக்ஷிகளிலெல்லாம் முதன்மையான சூக்ஷி என்ன வென்றால், பார்ப்பனர்கள் தமிழர்கள் என்னும் தலைப்புக்குள் புகுந்து கொண்டு மக்களுக்குள் இருந்துவரும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என் கின்ற உணர்ச்சியை நசுக்கி, பழயபடி பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரமே இந்நாட்டில் இருக்கும்படி செய்யவேண்டும் என்பதும் அதற்காக சில பார்ப்பனரல்லாத செல்வவான்களையும், எதையும் விற்று தங்கள் சுய நலத்தையே நாடும் சில பார்ப்பனரல்லாத மக்களையும் சேர்த்துக் கொண்டு.
298 ௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1T
பார்ப்பனரல்லாத சமூகம் முழுமையுமே ஏமாற்றிவிடலாம் என்பதேயாகும். இப்படிப்பட்ட சூட்சிக்கூட்டத்தில் மேல் குறிப்பிட்ட ஒரு 10 பேருக்கு இட மிருந்துவிட்டதால் மாத்திரமே அக்கூட்டத்தின் கருத்தை நிறைவேறாமல் செய்துவிட முடியும் என்று நம்மால் நினைக்கமுடியவில்லை. அன்றியும் இப் பத்துப்பேர்கள் அக்கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விடுவார்களானால் அம் மகாநாட்டைக் கூட்டினவர்களது கருத்து நிறைவேறுவதற்கு வசதி அதிகப் பட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றியும் இந்தப் பத்துபேருக்கு சமானமான வேறு பார்ப்பனரல்லாதார்கள் அக்கூட்டத்தில் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
நமது நாட்டில் தமிழ் கற்றறிந்த பார்ப்பனரல்லாத மக்கள் பெரும் பான்மையானவர்களுக்கு பகுத்தறிவில்லை என்று நாம் சொல்லுவதற்கு தமிழ் பண்டிதர்கள் மன்னிக்கவேண்டுமென்று கோறுகிறோம். ஏனெனில் தமிழ் பாஷையைக்கற்று பண்டிதர்களானவர்கள் 100-க்கு 99 பேர்கள் மதவாதி களாகவும் மதத்துக்காக தமிழைக் கற்றவர்களாகவும் தமிழில் மதத்தைக் காண்கிறவர்களாகவும் இருந்துவருவதுடன் தங்கள் புத்தியை மதத்துக்கு பறி கொடுத்து மதக் கண்ணால் தமிழைப் பார்க்கின்றவர்களாகவே இருக்கின் றார்கள். தமிழ் நாட்டில் அறிவுக்கு மரியாதை கொடுத்த பண்டிதர் ஒருவரை: யாவது காண்பது கஷ்டமாகவேயிருக்கின்றது.
ஆனால் பார்ப்பனர்களில் அப்படிக்கில்லை. பார்ப்பான் எவ்வளவு
தமிழ் கற்றிருந்தாலும் தன் சுயநலத்தையோ பகுத்தறிவையோ ஒருநாளும் பறிகொடுக்க மாட்டான். அவன் எங்காவது பகுத்தறிவை உபயோகிக்காத வன் போல நடந்து கொண்டாலும் அது தன் சுயநலத்துக்காக பிறத்தியாரை ஏமாற்ற அப்படிக் காட்டிக்கொள்வானே ஒழிய உண்மையில் முட்டாளாக இருப்பது மிக்க அருமை.
மேல்நாடுகளில் பண்டிதர்கள் பெரும்பாலோர்கள் தங்கள் பாண்டித்
தியத்தில் சிறிதும் மதத்தைக் கலப்பதுமில்லை, மத நம்பிக்கையைப் பிர யோகிப்பதுமில்லை.
இதற்கு ஒரு காரணம் சொல்லலாம். மேல்நாட்டில் மதத்தைப் படிக்கா
மல் பண்டிதராகலாம். கீழ் நாட்டிலோ மதத்தைப் படித்தால்தான் பண்டித ராகலாம். ஆதலால் இங்கு பண்டிதர் வேறு, மதம் வேறு என்று சொல்லு வதற்கு இடமே இல்லை. இதனால் தான் நமது நாட்டில் பகுத்தறிவு என்றால் பண்டிதர் களும், பண்டிதைகளும் நடுங்குகின்றார்கள். பகுத்தறிவு என்ற வார்த்தையே பண்டிதர்கள் காதுக்கு “நாராசமாய்” இருந்துவருகின்றது. இந்தக்கூட்ட பண்டிதர்களுக்கு அறிவு உலகில் மதிப்பு ஏற்பட வேண்டும் என்று கருதுவது “சூரியனைக் கையில் பிடிக்க வேண்டும்” என்று சொல்லுவதையே ஓக்கும்.
குடி அரசு - 1933 (2 234
உதாரணமாக மதத்தையும் மத மேற்கோள்களையும் தள்ளிவைத்து விட்டு ஒரு பதினைந்து நிமிஷம் பேசுங்கள் பார்ப்போம் என்றால் பேசக் கூடிய தமிழ் பண்டிதர்கள் எத்தனை பேர்கள் நம் நாட்டில் கிடைப்பார்கள் என்று பார்த்தால் இவ்வுண்மை விளங்கிவிடும். மதத்தை நீக்கிய-மத சம்மந்தப்படாத தமிழ் புத்தகம் இலக்கிய வடிவத்திலோ இலக்கண வடிவத் திலோ சரித்திர வடிவத்திலோ விஞ்ஞான ஆராய்ச்சி வடிவத்திலோ காண்ப தென்பது “குதிரைக் கொம்பாக” இருக்கிறது. இப்படிப்பட்ட நூல்களைப் படித்த பண்டிதர்கள் பரிசுத்த பகுத்தறிவுவாதிகளாக இருப்பார்கள் என்று எப்படி எண்ணமுடியும்? பகுத்தறிவுக்காரருக்கு பயந்த சில பண்டிதர்கள்
தங்கள் வாய்சாமார்த்தியத்தால் மத சம்மந்தமான சில கோட்பாடுகளையும் ஈரருத்தம் உள்ள சில வாக்கியங்களையும் விஞ்ஞான முறைக்கும் பகுத்தறி
வுக்கும் பொருத்த முயற்சிக்கிறார்கள் என்றாலும் விஞ்ஞானத்துக்கு மாறு பட்டதையும் பகுத்தறிவுக்கு மாறுபட்டதையும் தள்ளி வைக்க சம்மதிக் கிறார்களா என்றால் அவர்களுக்கு நம்மை வையத்தான் அல்லது நம் மீது குறைகூறத்தான் தெரியுமே ஒழிய தங்கள் நிலைக்கு வெட்கப்படவோ வருந்தவோ சிறிதும் தெரியவே தெரியாது. இந்த நிலையில் தமிழ்க் கல்வி அமைந்துவிட்டதால் இந்தப் படிப்புப்படித்த தமிழ் பண்டிதர்களை பார்ப் பனர்கள் தங்கள் இஷ்டப் படிக்கு ஆட்டிவைத்து தங்கள் காரியங்களைச்
சாதித்துக் கொள்ளத் துணி வதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நிலையுள்ள
தமிழ் பண்டிதர்கள் “மயிலைக்கண்ட பச்சோந்தியானது தானாகவே வந்து தனது கண்ணை கொத்திக் கொள்ள வசதி கொடுக்கும்” என்று சொல்லும் வாசகம்போல் தமிழ் பண்டிதர்கள் தாங்களாகவே பார்ப்பனர்களுக்கு அடிமையென்று ஒப்புக் கொள்ளுவதிலும் அதிசயமில்லை..
தமிழ் துறையில் பார்ப்பனர்கள் செய்யும் அட்டூழியங்களை இதுவரை: எந்த பார்ப்பனரல்லாத பண்டிதர்களாவது எடுத்துச் சொன்னதே கிடையாது. இங்கிலீஷ் பாஷையில் பார்ப்பனர்களுக்கே எல்லா ஆதிக்கமும் இருந்து வருகிறது. உபாத்தியாயர்கள் பார்ப்பனர்கள், புஸ்தகம் எழுதுகிறவர்கள். பார்ப்பனர்கள், இலாக்கா அதிகாரிகள் பார்ப்பனர்கள், பரிக்ஷகர்கள் பார்ப்ப னர்கள் சமஸ்கிருத பாஷையிலோ இதைவிட அதிகமான ஆதிக்கம் புதிதாக
வந்து நுழைந்த ஒரு அனாமதேய ஹிந்தி பாஷையிலோ இன்னும் அதிக மான ஆதிக்கம். தமிழ் பாஷையில் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துடன் பார்ப்ப னரல்லாதவர்கள் ஆதிக்கமும் சிறிது உண்டு என்று சொல்லக் கூடுமானால் அந்த சிறிதும் பார்ப்பனர்களின் அடிமைகளான பார்ப்பனரல்லாதார்களாய்த்
தான் இருக்க முடியுமே ஒழிய மற்றபடி சுதந்திரப் பார்ப்பனரல்லாதாரை: சுலபத்தில் காண முடியாது. இந்தப்படியான கல்வியின் ஆதிக்கம் பாஷை
யின் ஆதிக்கம், இலாக்காவின் ஆதிக்கம் அவர்கள் கையில் இருந்து வரு கின்றதை இன்னும் அதிகமாய் பலப்படுத்திக் கொள்ளவே இந்த சூட்சி மகாநாடு கூட்டப்படுகின்றது என்பதே நம்முடையவும் அபிப்பிராயமாகும்.
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பார்ப்பனரல்லாத தமிழ் பண்டிதர்களையும் தமிழில் ஞானமோ தமிழ் மக்களிடத்தில் அன்போ தமிழ் பாஷைக்கும் தமிழ் மக்களுக்கும் உலகில் சுயமரியாதை இருக்க வேண்டும் என்ற கருத்தோ கொண்ட பார்ப்பனரல்லாத மக்கள் இம்மகாநாடு சம்பந்தத்தில் இருந்து கண்டிப்பாய் விலகிக் கொண்டு இதன் சூட்சியைத் தைரியமாய் வெளியாக்க வேண்டுமென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம்.
அரசியலின்மூலம் பெருமை பெற்றுப் பணம், கீர்த்தி, பதவி முதலி யன சம்பாதிக்கக் கருதும் ஒரு கூட்டமக்கள் மனித சமூகத்துக்கு க்ஷய ரோகம் போன்றவர்கள். தங்களது மானம்-ஈனம் ஜீவகாருண்யம்-பொது நன்மை ஆகியவைகளை அடியோடு துறந்து திரிகின்றவர்களானதால், அப்படிப் பட்டவர்கள் பார்ப்பனர்களைவிட்டுச் சிறிதும் விலகி நிற்கமுடியாத காரணத்தால் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்து அவர்கள் இஷ்டப் படி ஆடட்டும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. வெகுசீக்கிரத்தில் அவர்கள் ஒருவர் காதை ஒருவர் பிடித்துக் கொண்டு “உன்னால் நான் கெட் டேன்” “உன்னால் நான் கெட்டேன்” என்று ஒருவரையொருவர் சொல்லிக் கொண்டு தோப்புக்கரணம் போடும் காலம் சீக்கிரம் வரப்போகின்றது.
ஆதலால் அவர்களைப்பற்றி கவனிக்காமல், இந்த மகாநாட்டை காரணமாக வைத்தாவது தமிழ் பண்டிதர்கள் பார்ப்பனர்களை விட்டுவிலகி நிற்பார்களாக. இந்தப் பண்டிதர்கள் சுமார் 40, 50 வருஷங்களுக்கு முன்னால் இருந்தே பார்ப்பனர்களை விட்டுவிலகி இருப்பார்களேயானால் இன்றையத்
தமிழின் நிலைமையும் தமிழ் பண்டிதர்கள் நிலைமையும் வேறாக இருந் திருக்கும். இன்று அப்படிக்கில்லாமல் பண்டாரசன்னதிகள் என்பவர்களிடம் கூட பார்ப்பனத் தமிழ் பண்டிதர்களுக்கே மதிப்பு இருக்கிறது. தமிழ்ச் சங்கம் என்பதில் கூட பார்ப்பனர்களுக்கே ஆதிக்கம் இருந்துவந்திருக்கிறது. அது மாத்திரமல்லாமல் பார்ப்பனரல்லாத தமிழ்க்கற்ற வித்துவான்கள் என்பவர். களை பார்ப்பன வித்துவான்கள் அழுத்திவைக்கவே பார்க்கிறார்கள்.
சமீப காலத்தில் தமிழில் மிக மேன்மையாய் தேரிய ஒரு பார்ப்பன ரல்லாதாருக்கு அதாவது சென்னை டி.பி. மீனாக்ஷிசுந்திரம், எம்.ஏ., பி.எல். (இவர் பார்ப்பனருக்கு அனுகூலமாகவும் சுயமரியாதை இயக்கத்துக்கு விரோதமாகவும் வேலை செய்வதற்காக காங்கிரசினால் 2,000 ரூ. கொடுத்து உதவி செய்யப்பட்ட தோழர் டி.பி.கிருஷ்ணசாமிப் பாவலரது தம்பியாவார்! இவர் கல்வி விஷயத்தில் மிக்க தேர்ச்சியுடையவர். பல விஷயங்களில் பண்டிதர். தமிழை ஒரு சந்தோஷத்திற்காக படித்து இம்மாகாண மாணவர். களில் உயர்தர வகுப்பில் தேறியவர். தமிழில் உயர்தர வகுப்பில் தேரிய வருக்கு பரிசளிக்கவென்று திருவாடுதுறை பண்டார சன்னதியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 1,000 ரூபாய் பரிசை பரிசு முறைப்படிக்கு அடைய தகுதி உடையவர். இப்படிப்பட்ட இவர் பார்ப்பனரல்லாதாராய் இருப்பதால்
குடி அரசு - 1933 (2 236
இவ்வருஷப் பரிசு இவருக்கு வழங்கப்படாமல் போயிற்று. இந்தப் பெருமை தோழர் மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்களுக்கே சேர்ந்
தது. பார்ப்பனரல்லாதார் செய்யும் தற்காப்பு காரியங்கள் பார்ப்பன துவேஷ மாய் போய்விடுகிறது. பார்ப்பனர் செய்யும் சகலவித கொடுமைகளும் அவர்களை பட்டதாரிகளாகவும் பதவிதாரர்களாகவும் ஆக்கிவிடுகிறது.
இம் மகாநாடு கூடி வெற்றியுடன் நடைபெற்றால் (நடைபெறத்தான் பேகிறது) பார்ப்பன ஆதிக்கம் தமிழ் பாஷையை அடிமைப்படுத்தி புஸ்தக மெழுதல் விற்பனை முதலியவைகளைத் தங்கள் சுவாதீனமாகச் செய்து விடும் என்பது உறுதி-உறுதி-உறுதி.
தமிழ் அன்பர் மகாநாடு அறிக்கையின் முதல் வாக்கியத்தில் காணப்
படும் விபரம்:
தென் இந்திய மொழிகளிலே உள்ள இலக்கியங்கள் வளம்பெறு வதற்கும், பொது ஜனங்களிடையே கல்வி அறிவு பரவுவதற்கும் உயரிய ஏற்பாடுகளைச் செய்வதற்காக “புத்தக ஆசிரியர்கள், பிரசுர கர்த்தாக்கள்,
புத்தக வியாபாரிகள், உபாத்தியாயர்கள் புத்தகாலய அதிகாரிகள் முதலியோர்களை சேர்த்து மகாநாடு ஒன்றைக் கூட்டுவிக்க வேண்டு மென்ற புத்தகாலய பிரசுர சங்கம் உத்தேசித்திருக்கிறது”” என்று வியக்த
மாய் கண்டிருக்கிறது. அதோடு இம் மகாநாட்டைக் கூட்டுகின்றவர்கள் யார்? அக்கமிட்டி அங்கத் தினர்கள் நிர்வாகிகள் யார்? என்பவைகளை தோழர். ராகவன் வியாசத்திலேயே எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இம்மகா நாட்டின் முக்கிய தீர்மானமாக புஸ்தகம் எழுதுவது, பிரசுரிப்பது விற்பது ஆகிய காரியங்கள் எப்படியாவது பார்ப்பனர்கள் கையிலும் அவர்களது ஆதிக்கத்திலும் சிக்கும்படியாகவும் அவர்களே நிர்வாகஸ்தார்களாகவும் இருக்கத்தக்க மாதிரிக்கு ஒரு தீர்மானம் செய்து பார்ப்பன வாழ்க்கைக்கு ஒரு பெரும் மான்ய மாக செய்யப்படப் போகிறது என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை. இதில் சிறிது சிந்தினதும் வழிந்து ஒழுகினதும் ஏதாவது இருக்குமானால் அது பார்ப்பனரல்லாதவர்களுக்குப் பிச்சையாகக் கிடைத்
தாலும் கிடைக்கலாம்.
இப்படிப்பட்ட சிறுபிச்சைக்கு ஆசைப்பட்டு சில பார்ப்பனரல்லாத தமிழ் பண்டிதர்கள் தங்களுடைய பெயரை இம் மாநாட்டுக்கு கொடுத்து பார்ப்பனரல்லாத மக்களை வஞ்சிக்க இடம் கொடுப்பது மிகுதியும் மோச மான காரியம் என்றே சொல்லுவோம். தோழர்கள் டி.கே. சிதம்பரநாத முதலியார், எஸ். வையாபுரி பிள்ளை போன்றவர்கள் தங்கள் உத்தியோக தாக்ஷண்யத்தால் இதில் கலந்து கொள்ள வேண்டியவர்களானாலும், தோழர்.
கள் ஆர்.சி.நமசிவாயமுதலியார், திரு.வி.கல்யாணசுந்திரமுதலியார் போன்ற வர்கள் இதில் எப்படி கலந்திருக்க சகிக்கிறார்கள் என்பது நமக்கு விளங்க வில்லை. இந்த இரு தோழர்களும் தமிழ் பண்டிதர்கள் என்கின்ற முறையில்
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தங்கள் தலையிலும், மற்ற தமிழ் பண்டிதர்கள் தலையிலும் மண்: போட்டவர்களாகப் போகிறார்கள் என்பதே நமதபிப்பிராயம். நிற்க,
இம் மகாநாட்டுக்கு பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயப்படாத “தமிழன் பர்கள்” யாராவது போவார்களானால் “புத்தகங்கள் பிரசுரிப்பதில் அறிவுக் கல்விவேறு, மதக்கல்விவேறு” என்று பிரித்து தனித்தனியாய் புத்தகம் எழுதப்பட வேண்டும் என்றும், அப்புத்தகம் எழுதும் இலாக்கா அரசாங்கத்திற்கே உட்பட்டிருக்கவேண்டுமே ஒழிய தனிப்பட்ட நபர் களுக்கோ சங்கங்களுக்கோ சற்றும் சம்மந்தம் இருக்கக்கூடாது என்றும் ஒரு தீர்மானம் செய்ய முயற்சிக்க வேண்டும். சர்க்கார் கொடுக்கும்படிப்பு என்பது அறிவுக்கு ஆகவே ஒழிய மதத்துக்காக அல்லவென்பதை உறுதிப்படுத்த வேண்டும். விஞ்ஞானத்திலும் பகுத்தறிவிலும் யார் மேன் மையுற்றிருக்கின்றார்களோ அவர்கள்தான் அறிவுக்கல்வி புத்தகங்கள் எழுதத் தகுதியுடையவர்கள் என்றும் தீர்மானிக்கப்பட வேண்டும். இப்படிச் செய்ய ஆரம்பித்தால் மகா நாட்டின் யோக்கியதை தானாகவே வெளிபட்டு விடும்.
குடி அரசு - தலையங்கம் - 19.11.4933
குடி அரசு - 1933 (2 238
துறையூர் சப் ரிலிஸ்மூரார் அமுல்
பொதுஜன ஊழியன் தோழர் வி.ஜி.பிச்சை எழுதுகிறார்:-
துறையூரில் திரு. சி.எம்.சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் சப் ரிஜிஸ்ட ரராயிருக்கிறார். அவர் பத்திரம் ரிஜிஸ்ட் செய்யப்போகும் விபரந்தெரியாத பார்ப்பனரல்லாதாருக்கு ரிஜிஸ்டர் விஷயமாக தெரியாத சங்கதிகளை: சொல்லிக் கொடுத்தும் உதவி செய்வதற்கு பதிலாக அவர்களை மிரட்டி நஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்.
உதாரணமாக சென்ற 10-ந் தேதி பழனியாண்டி முத்திரியன் என்ப வரும், நானும் ஒரு வீட்டுக் கடன் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய அவரிடம் போனோம். அவர் மேற்படி பழனியாண்டி முத்திரியனைக் கூப்பிட்டு எந்த ஊர் என்று கேட்க அவர் ஆதனூர் என்று சொன்னாராம். அதற்கு, பத்திரத்
தில் உள்ளூர் என்றுதான் இருக்கிறது. ஆதனூர் என்று போடவில்லை என்று அவர் மிரட்ட, பழனியாண்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் போய் உள்ளூர் என்பது ஆதனூரில் ஒரு பாகம் என்றும் அப்படியே சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் சொன்னேன். அவர் அதைக் கேட்
காமல் துறையூர் டிவிஷனில் உள்ளூர் என்ற கிராமமே கிடையாது என்று கூறி மேற்படி பத்திரத்தை ரிஜிஸ்டர் செய்ய மறுத்துவிட்டார்.
பிறகு மறுநாள் ஊர் கர்ணத்துடன் மேற்படி பழனியாண்டியை அனுப்ப மேற்படி பத்திரம் ரிஜிஸ்டர் ஆகிவிட்டது. முந்தினதினம், துறையூர் டிவிஷனில் இல்லாத மேற்படி உள்ளூர் கிராமம் மறுநாள் எப்படி அங்கு நுழைந்ததோ தெரியவில்லை. முந்தினநாள் அவர் மறுத்ததால் எங்களுக்கு ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களைப் பாருங்கள்.
இரண்டாவது 22-வயதுள்ள ஒரு பெண் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வந்தாள். சப்-ரிஜிஸ்டிரார் அந்தப் பெண் இன்னும் மேஜராகவில்லை என்று ரிஜிஸ்டர் செய்ய மறுத்து விட்டார். அந்தப் பெண்ணுக்கு வயது 22 என்றும், கையில் குழந்தை இருக்கிறதென்றும் கூடச் சான்றிருந்த கர்ணம் எவ்வளவோ சொல்லியும் அதை ஒப்புக்கொள்ளாமல் பிறப்பு சர்ட்டிபிக் கேட் கொண்டு வரச்சொன்னாராம்.
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கர்ணம் அதற்குத் துறையூரில் 20 வருடத்துக்கு முந்தின ஜனன மரண: ரிஜிஸ்டர் இருக்குமா அல்லது முசிரிக்குப்போய் வாங்க வேண்டுமா என்று கேட்க சப்-ரிஜிஸ்டிரார் இவ்விடம் வாய்ப்பேச்சு ஒன்றும் கூடாது, மனு எழுதிக்கொண்டு வந்து கொடு என்றாராம்.
கடைசியில் கர்ணம் அந்த 3 ரூ. பத்திரத்தைக் கிழித்து விட்டு தன் கையில் இருந்த இரண்டேகால் ரூபாய்க்கு வேறு பத்திரம் வாங்கி, முந்தின திலும் குறைந்த தொகைக்கு பத்திரம் எழுதி அந்தப் பெண்ணின் தகப்பனை கார்டியனாகப் போட்டு ரிஜிஸ்டர் செய்ய வேண்டியதாயிற்று.
இப்படியெல்லாம் ஒன்றும் அறியாத ஏழைக்குடிகளை அனாவசிய மாக கஷ்டப்பட படுத்துவது சர்க்கார் உத்தியோகஸ்தருக்கு அடுக்குமா? ஆகையால் துறையூருக்கு நல்ல அனுபோகமுள்ள ஒரு பார்ப்பனரல்லாத சப்-ரிஜிஸ்டிராரை நியமித்தால் ஜனங்களுக்கு பெரிதும் அனு கூலமாயிருக்
கும் என்று அதிகரித்து தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
(இவ்வாறே பலபார்ப்பன சப்-ரிஜிஸ்டிரார்கள் ஜாதி துவேஷத்தினால் தங்களிடம் பத்திரம் ரிஜிஸ்டருக்கு வரும் பார்ப்பனரை ஒரு விதமாகவும் பார்ப்பனரல்லாதாரை ஒரு விதமாகவும் நடத்துவதாகவும், சில இடங்களில் பார்ப்பனரல்லாதாரை மேல் வேட்டியை எடுக்கும்படி செய்து அவமானப் படுத்துவதாகவும், பத்திரம் ஒன்றுக்கு இவ்வளவு மாமூல் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகவும் நமக்கு பல இடங்களிலிருந்தும் புகார். கடிதங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன. இத்தகைய பார்ப்பன சப்-ரிஜிஸ்டி ரார்கள் தாங்கள் பொதுஜன ஊழியர்களென்பதை மறந்துவிட்டு, சட்ட விரோதமான முறையில் நடந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக் கிறோம். நாம் ஆதிமுதலே கூறிவந்திருக்கிறபடி அரசாங்க உத்தியோகங். களை வகிக்க, பார்ப்பனருக்கு லாயக்கில்லை என்பதற்கு இது தக்க அத்தாட் சியாகும். மேல் அதிகாரிகள் இவ்வித ஒழுங்கீனங்களை சரிப்படித்திடும் பொதுஜனங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வற்புறுத்தி குறிப்பிடுகிறோம். அரசாங்க இலாகாக்களில் நூற்றுக்கு 90 வீதம் உத்தியோ கங்களை ஜாதித் துவேஷமுள்ள ஒரு சிறிய வகுப்பார் கைப்பற்றியிருப்பதே இவ்விதக் கேடுபாடுகளுக்கு மூல காரணமாயிருக்கிறது. இந்த நிலைமை அடியோடு மாற்றப்பட வேண்டியது அத்தியாவசியம் என்று சர்க்காருக்கு எடுத்து காட்ட விரும்புகிறோம்.
குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 19.11.1933
குடி அரசு - 1933 (2 240
ப ய்ச்த
ரியன்,. iy OB வ பதுவு இதன் வ களு டங்கா... த்து னம் க் வெ. இசாமராமியின் 97 இருந்த வாடு
" மகாதாட்டுர் சொத்போழிவு து உ கைத துட பூரண ஆம்,
ம் அல்ல, ற்ண குிப்புடடபுன்தகல்களுக்கு றது o g க மவக்கக்குமொ ற்ற மெய்யா? பொய்யா? ததன் வல ளும்
Frarin ஒருகருஆமான் எபண்ட்ட செய்தது செய வள
மானேஜர், குடி அசசு புத், பப்,
இகத வெட்டை தோவல் கு உத்திசவாம்,
கொம்ப வழிலாமல் (கேட்டல் வாடு அமுத i, லிங்க சுவாமிகள் பாடல் ல் தடு இவ்வ வயல்ல பவப்! விலே கணட 02 st sy “.-fl’vfi"‘
¢ S 4 உயரிய அயமரியரை நடப் சவக்
ந ட்ட ந ன க்கள்
ம பதிப்பகதிதன் அச்டடப்பட்டு தொழ e ரா, கண்ணம்மா அலாகளால் e
241 ௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தனிப்பிசதி விலை ஒரு அணா: ரட்ச
வயிழுதொதும் வெளிவரும்,
சத்தம படவ (20—11—1983) ம் 1.
வண்ண ணையை
ப... பெண் என் அடிமையானாள்? $
சக்கி அருமர்சர் சரர்கன் T, கேள்நளம் அவிகா ஆக்கெழ் 4B.A B! மொரழிபெயர்க்கப்பட்ட அட இறில் ப்
நான் ஏல் த ிஸ்கவ்ன்லை?
இபால் Why [வல ) ஆகர்களால் எழுதப்பட்டு நதி வவகப்பற்தியும், 8 e டு
மதம் என்றால் என்ன? புல் பாட் 0 இவ்விசல் லட்கமிரதன் பாரதி M. க். ஐ, L ரின் தலைமையையும் கன்று g இங்கசாலின் சொற்ப ல் (s சீனாவில் வெளிவரும். < bk வேல்ட் 7554 9.3 அட வொ கல்லாக அலப்பண்லு வாசம்: - ”yam, அற்பதிப்புக்கழகிம் லிமிட்டெட், ஈசோடு, வையை வைவ் த .
குடி அரசு - 1933 (2 242
புரட்சி
“குடி அரசை” ஒழிக்கச் செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. உண்மையிலேயே பாமர மக்களின் அதாவது பெரும் பான்மையான மக்களின் ஆக்ஷியாகிய குடி அரசுக்கு உலகில் இடமில்லை யானால் கண்டிப்பாகப் புரட்சி தோன்றியே தான் ஆக வேண்டும்.
அந்த ஐதீகப்படியே புரட்சி தோன்றி இருப்பதால் “புரட்சி”யை
புரட்சியில் பற்றுள்ள மக்கள் யாவரும் வரவேற்பார்கள் என்பதில் நமக்குச்
சிறிதும் ஐயமில்லை.
நமது முதலாளிவர்க்க ஆக்ஷியானது தனது காவலாளிகளாகிய பாதிரி வர்க்கத்திற்கு அடிமையாக இருக்க வேண்டியிருப்பதால் “குடி அரசை” அதன் முதுகுப்புறத்தில் குத்திவிட்டது. இந்தக் குத்தானது “பாதிரி வர்க்கத்தை ஒழித்தால்தான் முதலாளி வர்க்கத்தை அழிக்க முடியும்” என்ற ஞான போதத்தை உறுதிப்படுத்திவிட்டது.
ஆதலால் நமது “புரட்சியானது “குடி அரசை”க்காட்டிலும் பதின் மடங்கு அதிகமாய் பாதிரி வர்க்கத்தை அதாவது மதப்பிரசார வர்க்கத்தை அடியோடு அழிப்பதையே கங்கணமாய்க் கொண்டு வெளிவரவேண்டி யதாகிவிட்டது.
இதன் காரணமாய் “புரட்சி” எந்த நிமிஷத்தில் குத்துப்பட்டாலும்
படலாம். எந்த வினாடியில் கொலையுண்டாலும் உண்டாகலாம். ஆனால் சுயமரியாதை புரட்சியானது இனி ஒரு நாளும் மறையாது. அது வெற்றி பெரும் வரை ஒரு க்ஷணமும் ஓய்வு கொள்ளாது என்பது மாத்திரம் உறுதி.
காங்கிரஸ் காரியதரிசியான தோழர் ஜவஹர்லால் அவர்கள், தான் இதுவரை மத விஷயமாய் புரட்சி செய்யாமல் ஏமாந்து விட்டதைப்பற்றி மனமார வருந்தியும் மதவிஷயத்தில் தான் அலட்சியமாய் இருந்த ஒவ்வொரு நிமிஷமும் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் பலப்பட்டு வருவதற்கு இடம் கொடுத்தாகி விட்டது என்று வியக்தமாக எடுத்துச் சொல்லியும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டார்.
249 ௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1T
மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி.
மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி.
மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி.
மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி...
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை.
மதமே முதலாளி வர்க்கத்துக்கு காவல்.
மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.
மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை
உச்சத்தில் வைப்பதற்கு உதவி என்கின்ற முடிவின்பேரிலேயே “புரட்சி” தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.
ஆதலால் மனித சமூகத்தில் சமதர்ம வாழ்க்கையை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்தாக வேண்டும் என்று காங்கிரஸ் காரியதரிசி தோழர் ஜவஹர்லால் அவர்கள் இப்போதாவது கண்டுபிடித்ததற்கோ அல்லது தைரியமாய் வெளியிட்டதற்கோ நாம் உண்மையிலேயே மகிழ்ச்சி யடைகின்றோம்.
சோம்பேறித்தனமாய் வாழ நினைத்து சுயமரியாதை இயக்க நிழலில் திரிந்தவர்களுடையவும், பட்டம், பதவி, அதிகாரம், செல்வம் ஆகியவைகள். அடையக் கருதி சுயமரியாதை இயக்கப் போர்வை போட்டுக் கொண்டி ருந்தவர்களுடையவும் ஆதரவு நம் “புரட்சி”க்கு இனி சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்பதை நன்றாய் உணர்ந்தே “புரட்சி” தோன்றியிருக்கிறது.
ஆதலால் பாடுபட்டு உழைத்து ஊரானுக்குப் போட்டு விட்டு பட்டினி யாயும் சமூக வாழ்வில் தாழ்மையாயும் வாழும் மக்களின் ஆதரவையே “புரட்சி” எதிர்பார்த்து நிற்கிறது.
வெள்ளை முதலாளிகளை ஒழித்துக் கருப்பு முதலாளிகளைக்
காக்கும் வேலைக்கு இன்று “புரட்சி” வெளிவரவில்லை. அல்லது வெள்ளை ஆட்சியை ஒழித்துக் கருப்பு ஆட்சியை ஏற்படுத்த “புரட்சி” தோன்றவில்லை. அதுபோலவே இந்து மதத்தை ஒழித்து, இஸ்லாம், கிறிஸ்து மதத்தைப் பரப்ப “புரட்சி” தோன்றியதல்ல..
அதுபோலவே, இஸ்லாம், கிறிஸ்து மதத்தை ஒழித்து இந்து மதத்தை நிலைநிறுத்த புரட்சி வெளிவரவில்லை.
குடி அரசு - 1933 (2 244
சகல முதலாளி வர்க்கமும், சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண் பெண் அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காக புரட்சி செய்யவே “புரட்சி” தோன்றியிருக்கிறது.
அது உயிருள்ளவரையும் அதன் கடமையைச் செய்து கொண்டு இருக்கும்.
ஆதலால் “புரட்சி”யில், ஆர்வமுள்ள மக்கள் “புரட்சியை” ஆதரிக்க வேண்டுகிறோம்.
புரட்சி - தலையங்கம் - 26.111933
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வத் சுவான் அற்பம் தம்மிடம் உன்ன இத பநிப்புப் புஸ்மாங்கள்ட
வம் அமவபது அலகிஸ்பனம்ட இரிமாவடை ஆசய, Sl v R டர
L m 1, மாமியின் க் 9 இ த த
3
ks ப் லை வள் தன்னு! ப
B oo G
குடி அரசு - 1933 (2 246
கோவை efleoeom சுயமரியாதை மகாநாடு - வண்கள்மகாநா௫
சுயமரியாதை மகாநாடு
தோழர்களே! தோழர் அய்யப்பன் அவர்களை நான் சுமார் 9, 10 வருஷமாய் அறிவேன். வைக்கம் சத்தியாக்கிரகத்தில் அறிமுகமானோம். வைக்கம் சத்தியாக்கிரகக் கிளர்ச்சிக்கு அவர் ஒரு முக்கிய காரணஸ்தர். அவர். இந்துமதப்படியும், மலையாள நாட்டுச் சம்பிரதாயப்படியும் வர்ணாச்சிரமத் தர்மப்படியும் தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர். எனக்கு மலையாள தேசம் 30.40 வருஷங்களாகத் தெரியும். வியாபார முறையில் அங்கு சென்று தாமதிப்பதுண்டு. அந்தக் காலத்தில் அய்யப்பன் வகுப்பார் வீதியில் நடந்தால் மோட்டார் கார் ஆரன்கொடுப்பதுபோல் அவர்கள் ஹா, ஹா என்று
கத்திக் கொண்டு போக வேண்டும். ஏனெனில் மோட்டார் கார் எப்படி ஜனங்கள் தனது சக்கரத்தில் சிக்காமல் இருப்பதற்காக ஆரன் ஊதித் தான் வருவதை முதலிலேயே தெரிவிக்கிறதோ அதுபோல் ஈழவர் முதலியவர்கள் மற்றவர் கள் தங்கள் அருகாமையில் வந்து தீட்டுப்பட்டு தோஷமடை யாமலிருப்பதற்கு, ஹா, ஹா என்ற கூப்பாடு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியவர்களாய் இருந்தார்கள்.
ஆனால் இப்போது தோழர் நாராயணகுருஸ்வாமி அவர்கள் முயற்சியாலும், அய்யப்பன் முதலியோர் கிளர்ச்சியாலும் அக்கொடுமைகள்' ஒழிந்து சட்டசபை அங்கத்தினர் முதலிய ஸ்தானம் பெற்று சுமார் 20 லக்ஷம் ஜனங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மலையாள தேச ஈழுவசமுதாயம் ஓட்டுக்கும் உள்ள ஸ்தாபனமாகிய எஸ்.என்.டி.பி.யோக காங்கிரசில் தங்களுக்கு மதமே வேண்டியதில்லை என்றும், தாங்கள் யாரும் இனிமேல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளக்கூடாது என்றும் தீர்மானங். கள் செய்ததற்குக் காரணம் தோழர் அய்யப்பனேயாவார். அவர் ஒரு பத்திராதிபர். அவர் மனைவியாரும் பி.ஏ, எல்.டி. யுடன் ஒரு பத்திராதிபரும் ஒரு ஜட்ஜின் குமாரத்தியும் ஆவார். இருவரும் சேர்ந்தே உழைத்து வரு கிறார்கள். மலையாளத்தில் அய்யப்பன் என்கின்ற பெயர் ஒவ்வொரு
247 ௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 1T
வருக்கும் வீட்டுப் பேர்போல் வளங்குகின்றது. மலையாள வாலிபர்களை யெல்லாம் இன்று அவர் பொதுவுடமை சமதர்மவாதியாக ஆக்கிவைத் திருக்கிறார்கள். அவரது பொதுவுடமைக் கட்சியில் அனேக நாயர் வாலிபர்.
களும் மகம்மதிய வாலிபர்களும், கிறிஸ்துவ வாலிபர்களும் கூட இருக் கிறார்கள்.
நமது மகாநாட்டில் லெனின் படத்தை திறக்க ஒப்புக் கொண்டிருந்த தோழர் கொச்சி இப்றாஹிம் பி.ஏ., எம்.எல்.சி. அவர்கள் கொச்சி சட்ட சபையில் பொதுவுடமைக் ககஷி சார்பாக அங்கம் பெற்றிருக்கிறவர்.
ஆனால் அவர் இன்று சிறையிலிருக்கிறார். இங்கு வர விடக் கூடா தென்று தான் அவரை கொச்சியில் சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். அவர்கள் கடன் மறுப்புப் பிரச்சாரமும் செய்து சிறிய ஒரு கடன் துகையை செலுத்தாமல் ஜெயிலுக்குப் போனவர். இப்படிப்பட்ட கிளர்ச்சி களெல்லாம் திருவாங்கூரிலும், கொச்சியிலும் நடத்துபவர்களில் தோழர் அய்யப்பன் பிரதானப்பட்டவர். இவரை நமது நாட்டுக்கு வரவழைக்க வேண்டுமென்று தோழர் குருசாமிக்கும், எனக்கும் நீண்டநாள் எண்ணம். ஆதலால் அவரைக் கேட்டுக் கொண்டேன். உடனே, சம்மதித்து வந்திருக்
கிறார்.
குறிப்பு:- கோவைமாவட்டசுயமரியாதைமாநாட்டுத்தலைவரை வழிமொழிந்து ஆற்றிய உரை.
பெண்கள் மகாநாடு - தலைவர் முன்மொழிவு
தோழர்களே! சுயமரியாதை இயக்கமானது இந்த நாட்டில் 8, 9 வருஷ மாக நடந்து வருகின்றது. இதைப்பற்றி பலருக்கு விருப்பு வெறுப்பு உண்டு.
யார் யாருக்கு இந்த இயக்கத்தினால் லாபம் இல்லை என்று கருதுகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்த இயக்கத்தைக் குற்றம் சொல்வதுண்டு. என்ன குற்றமென்றால், சுயமரியாதை இயக்கம் கற்றறியாத மூடர்கள் இயக்கம். பொறுப்பற்றவர்கள் இயக்கம், அது காலிகள் இயக்கம் என்றெல்லாம் பேசு வார்கள். சிலர் இதிலுள்ள பெண்களைப் பற்றியும் தாருமாராய்ப் பேசுவ துண்டு. சிலர் இனி இதில் பிழைப்புக்கு மார்க்கமில்லை என்று கண்டவர்கள். இந்த இயக்கம் செத்துப்போச்சு, கெட்டுப்போச்சு என்று சொல்வதுமுண்டு.
ஆனால் இன்று இந்த மாகாணத்தின் எல்லா பாகத்திலிருந்தும் வந்திருக்கும் நீங்கள் எல்லோரும் பார்த்து அறிய உங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. இதில் இருக்கின்றவர்கள் படிப் பற்றவர்களா? காலிகளா? பொறுப்பற்றவர்களா? இயக்கம் செத்துப் போயி ருக்கிறதா? பாருங்கள். எங்கள் இயக்கம் சிலருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்
கச் சக்தியில்லாததால் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். சிலருக்குக் காங்கிரஸ் முதலிய ஸ்தாபனங்கள் போல்
குடி அரசு - 1933 (2 248
சாப்பாட்டுக்கு வகைசெய்ய சக்தியில்லாததால் இதையே நம்பி ஜீவிக்க வேண்டிய சிலரால் வசவு கேட்க நேரிடுகிறது என்பதை ஒப்புக் கொள்ளு கிறேன். ஆனால் இதிலிருக்கிறவர்களைப் பாருங்கள்.
முதலாவதாக இம் மகாநாட்டைத் திறந்து வைத்த தோழர் லி.ரா.ரங்க நாயகி அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தம்மாள் இந்த ஜில்லாக்
காரர். பண்டிதர் பரீட்சை பாஸ்செய்த வித்வான். தகுந்த பொறுப்புள்ள உத்தி யோகத்தில் இருக்கிறவர். அவர் துணைவரும் ஒரு பண்டிதர், இருபதினா
யிரக் கணக்கான பிரதிகள் வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியர். ரங்க நாயகி அம்மாளின் திரனை அவர்களது உபந்யாசத்தின் மூலமாகவே நீங்கள்
அறிந்திருப்பீர்கள். இதுவரை லி.ராமசாமி மாத்திரம் நம் இயக்கத்தில் இருந்து வந்தார். அவர் “குடி அரசு” ஆசிரியராய் இருந்தது கூட உங்களுக்குத் தெரியும்.ஆனால் துணைவியாரும் வந்திருப்பதானது இயக்கம் வளர்ந்து விட்டதா? செத்துவிட்டதா பாருங்கள். அவரது உபந்யாசத்தில் “இரண் டொரு விஷயம் தவிர மற்றதெல்லாம் ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார். அந்த இரண்டொரு விஷயமும் அம்மையார் அபிப்பிராயப் படியே நாம் ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்கிறோம். ஆதலால் அதை எங்களுக்கு எடுத்துச் சொல்லி எங்களைத் திருத்த வேண்டுமென்று தான் கேட்டுக் கொள்ளுகிறோம்.
அதுபோலவே மகாநாட்டு வரவேற்புத் தலைவர் தோழர் சிவானந்தம் வள்ளியம்மாள் அவர்களும் “தொண்டமண்டல வேளாள” ஜாதியைச் சேர்ந்தவர். அவரது துணைவர் தோழர் ஏ.ஆர்.சிவானந்தம் அவர்கள் நமது இயக்கத்தில் ஆரம்பத்திலிருந்து அபார வேலை செய்து வருகிறார். அம்மை யாரும் அவருக்கு உதவியாகவே இருந்து வந்திருக்கிறார்.
அதுபோலவே தோழர் சி.டி.நா. சிதம்பரம் அம்மையார் ஆங்கிலத்
தில் எம்.ஏ. படித்தவர். அவரது துணைவர் தோழர் சி.டிநாயகம் அவர்கள்
சர்க்கார் உத்தியோகத்தில் மாதம் 500 ரூ. சும்பளமுள்ள கொவாப்ரேடிவ் டிப்ட்டிரிஜிஸ்டார் என்னும் பெரிய உத்தியோகஸ்தராக இருந்தவர். அவரது பிள்ளைகள் பெரிய பெரிய உத்தியோகத்தில் இருக்கிறார்கள். பெண்: பிள்ளைகள் எல்லாம் பி.ஏ. படித்திருக்கின்றனர். இன்று கூட வந்திருக்கும் அவரது இச்சிறிய பெண் குழந்தைகூட பி.ஏ. அவர்கள் குடும்பம் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு வேலை செய்தி ருக்கிறது என்பதை அறிய ஆசையுள்ளவர்கள். இவரைப்பற்றி சட்டசபை
யில் தோழர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனரும், அவரது அடிமைகளாகிய
சில பார்ப்பனரல்லாத சட்ட சபை மெம்பர்களும், கேட்ட கேள்விகளைப் படித்துப்பார்த்தால் தெரிய வரும். அவர் உத்தியோகத்தையும், பணத்தையும் பிரதானமாய் எண்ணியிருந்தால் இன்னம் 4, 5 வருஷம் உத்தியோகத்தில் இருக்கக்கூடும். அவர்கள் குடும்பத்துடன் இப்போது நமது இயக்கத்துக்கு வேலை செய்து வருகிறார்கள்.
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தோழர் நாயகம் அவர்கள் “திருநெல்வேலி சைவ வேள்ளாளர்”' குலம் என்பதைச் சேர்ந்தவர். ஆனாலும் இவர் குடும்பத்தை பொருத்தவரை: வெகுகாலமாகவே ஜாதி வித்தியாசம் இல்லை. அனேக விதவை விவாகம் செய்திருக்கிறார்கள். அனேக சுயமரியாதை விவாகம் செய்திருக்கிறார்கள், சுயமரியாதை மகாநாடு எங்கு கூடுவதாகப் பத்திரிகைகளில் பார்த்தாலும் அழைப்பில்லாமல் போய் விடுவார்கள். ஆகவே நமது இயக்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு பெரும் ஆதரவு அளித்து வந்த தோழர் சிதம்பரம் அம் மாள் அவர்கள் இன்று இப்பெண்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க இசைந்து இரண்டு நாளைக்கு முன்னமே குடும்பத்துடன் வந்திருப்பதையே
நான் சுயமரியாதை இயக்கப் பெண்களைப்பற்றி குறைகூறும் “பெரியார்” களது கூற்றுக்கும் இயக்கம் செத்துப் போய்விட்டது என்று கூறும் வீரர்களது
கூற்றுக்கும் சமாதானமாகச் சொல்லி பிரேரேபிக்கிறேன்.
குறிப்பு- கோவை மாவட்ட பெண்கள் மாநாட்டுத்தலைவரை முன்மொழிந்து
ஆற்றிய உரை.
நன்றியுரை
தோழர்களே இப்போது இப்பெரியார்களுக்கு நமது நன்றிசெலுத்தும் கடமைக்கு எழுந்து நிற்கிறேன். இவ்விழாவின் தலைமையில் டாக்டர். வரத ராஜுலு நாயுடு அவர்கள் பேசியதை கேட்டீர்கள். தோழர் முதலியார் அவர். கள் பேசியதையும் கேட்டீர்கள். அவற்றுள் நமக்கு மாறுபட்ட அபிப்பிரா
யங்கள் பிரமாதமாக ஒன்றும் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் சிற்சில மாறுதல் இருக்கிறதென்றும் நாம் மிக தீவிரமாகப் போவதாகவும் சொன்
னார்கள்.
தோழர்களே! எனது பொதுவாழ்வுக்கு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்களே காரணமாவார். அவரது கூட்டுறவு அந்தக் காலத்தில் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால் அக்காலத்திய எனது தொழிலின் பயனாய் இன்று
நான் ஒரு சமயம் ஒரு பெரிய முதலாளியாகவும் வணிகனாகவும் இருந்தி ரப்பேன். அல்லது ஒரு சமயம் அம்முயற்சியால் அனாமதேய பாப்பராக
வும் இருந்திருப்பேன். எப்படியிருந்தாலும் அவரது நேசமே நான் இன்று இந்நிலைக்கு வந்ததற்குக் காரணம். அப்படி இருக்க நான் தீவிரமாய் போய் விட்டதாகச் சொல்லுகிறார். ஏன் குருவை மிஞ்சின சிஷ்யன் உலகில் இல்லையா? ஒரு சமயம் அதுபோல் இருக்கலாம் என்றாலும் எனது மூக் கணாங்கயிற்றை அவர் கையில் கொடுக்க இப்போதும் எனக்கு ஆக்ஷே பனையில்லை.நிதானமாய் என்னை ஓட்டிச் செல்லட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அன்றியும் உண்மையிலேயே அவர்களுக்கு நமது இயக்க சம்மந்தமாய் அபிப்பிராய பேதம் இல்லை என்றே இப்போதய அவருடைய உபன்யாசத்தில் இருந்து அறிகிறேன். ஏதோ சில காரியத்துக்கு என்றுதான் அபிப்பிராய பேதம் இருக்கிறது என்று சொல்லு கிறார் என்று
குடி அரசு - 1933 (2 250
கருதுகின்றேன். ஆதலால் அவர்களது வரவால் உபன்யாசத்தால் நமக்கு அதிக பலமும், ஆதரவும் ஏற்பட்டது என்பதே எனது அபிப்பிராயம். அதற்
காக நாம் நன்றி செலுத்தவேண்டியதே. தோழர் முதலியார் அவர் களுக்கும்
நன்றி செலுத்த வேண்டியது நமது கடமையாகும். அவரது உடல்நிலையில்
நாம் கூப்பிட்டவுடன் கட்டுப்பட்டது மதிக்கத்தகுந்ததாகும். அவர்களால் தான் எனக்கு வைக்கம் வீரர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. இப்போது
நான் அதை பெருமையாகக் கொள்ளவில்லையானாலும் அப்போது அந்தப் பெயரால் நான் மகிழ்ந்து பரவசப்பட்டது எனக்குத் தெரியும். எல் லோருக்கும் பெயர் வைக்கும் பெருமை தோழர் முதலியா ருக்கே இருந்தது.
கம்பர் கம்பராமாயணம் பாடியிருக்கவில்லையானால் தமிழ்நாட்டில் ராமாய ணத்துக்கும் ராமனுக்கும் எப்படி மதிப்பிருந்திருக்காதோ அதுபோல் தோழர் முதலியார் அவர்கள் காந்தியாரை, எம்பெருமாள் என்றும், அடிக ளார் என்றும், எம்மான் என்றும், பெம்மான் என்றும் கவிபாடா திருந்திருந்
தால் காந்தியாருக்குத் தமிழ்நாட்டில் இவ்வளவு மரியாதை கூட இருந்திருக்
காது. நான் அனேகமாய் தோழர் முதலியார் அவர்களால் தான் ஒத்துழை யாமையில் அவ்வளவு ஈடுபட்டது. நாங்கள் மூவரும் அதாவது, நாயுடுகார், முதலியார், நான் என்கின்ற மூவரும் சேர்ந்து அந்தக் காலத்தில் பார்ப்ப னர்களுக்கு தேசபக்தியின் பேரால் எவ்வளவோ உழைத்து விட்டோம். பார்ப்பனர் சூழ்ச்சியறிந்து அவர்கள் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டிய முக்கிய சமயத்தில் பிரிந்து விட்டோம்.
அந்தக் காலத்து எங்கள் சக்திக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லு கின்றேன் கேளுங்கள். நான் காங்கிரஸ் காரியதரிசியாயும், தலைவனாகவும் இருந்த காலங்களில் தமிழ்நாடு வாலிபர்களை தேசிய வீரர்களாக்க வென்று வி.வி.எஸ்.ஐயர் என்னும் ஒரு தேசீயப் பார்ப்பனர் காங்கிரசை 10,000 ரூபாய் கேட்டபோது அதற்கு நானே பிரதானமாய் இருந்து ரூபாய் அனுமதிக் கப்பட்டது. அந்தப் பணம் குருகுலம் என்று ஒரு ஆச்சிரமம் வைத்து அதில் பார்ப்பனப் பிள்ளைகளை வீட்டிற்குள் வைத்தும் பார்ப்பனரல்லாத பிள்ளை களை வெளியில் வைத்தும் சாப்பாடு போட்டு வருணாச்சிரம
தர்மம் கற்றுக் கொடுக்கப் பயன் படுத்தப்பட்டதுடன் இதன் பேரால் தமிழ் மக்களிடம் மற்றும் 20, 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யவும் பட்டது. இதற்கு “தமிழ் நாடும்” “நவசக்தியும்” ஆதரவும் அளித்தன. இந்த சூழ்ச்சி யான அக்கிரமம் சகிக்காமல் நான், முதலியார் அவர்களிடம் மாயவரத்தில் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டேன். அப்போது அவர்டாக்டர் நாயுடு அவர்கள் பேரில் புகார் சொல்லி நாயுடு அவர்கள் “தமிழ்நாடு” வில் ஆதரிப்பதால் நான் ஆதரிக்க வேண்டியிருக்கின்றது என்றார். இருவரும் நாயுடு அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டோம். அவ்வளவு தான் சங்கதி. உடனே டாக்டர் குருகுலத்தின் மீது போர் தொடுத்தார். தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் தோழர் கள் ராஜகோபாலாச்சாரியார், சீனிவாசய்யங்கார். உள்பட எல்லோரும் நாயுடு அவர்களுக்கு விரோதமாய் எவ்வளவோ
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தொல்லை விளைவித்தும் பயன்படாமல் கடைசியில் குருகுலம் அடியோடு அழிந்து அதில் இப்போது படைக்கள்ளியும், நெரிஞ்சி முள்ளும் வளரும் படியும், பாம்பும், பூச்சியும் வாழும்படியும் ஆய்விட்டது. அதுபோலவே மற்ற காரியங்களிலும் மூவரும் ஒத்து வேலை செய்திருந்தால் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவை விட்டு ஓடி இருக்கும். உண்மையிலேயே சொல்லுகின்றேன். இதுவரை நாங்கள் மூவரும் ஒரு அபிப்பிராயமாய் இருந்திருந்தால், இந்து, சுதேச மித்திரன் முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள். இருந்திருக்குமா? இருந்தாலும் இந்தமாதிரி பார்ப்பனப் பிரசாரம் செய்து பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்தைத் தடுத்து முட்டுக்கட்டை போட்டு இழிவுப்படுத்தி விடுமா? யோசித்துப் பாருங்கள். நாம் எந்த சாஸ்திரத்தை, எந்த தத்துவத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின் றோமோ அதையே கலம் கலமாய், பக்கம் பக்கமாய் அப்பத்திரிகைகள். எழுதி வருகின்றன. சங்கராச்சாரியின் வருணாச்சிரம பாஷ்யமும் சூத்திரன்
யார்? சண்டாளன் யார்? என்கின்ற தத்துவமும், இன்னமும் பக்கம் பக்கமாய் எழுதி வருகின்றன. குட்டிப் பத்திரிகைகளெல்லாம் பயமின்றி குலைக் கின்றன. இவற்றின் சூக்ஷிகளை மக்கள் அறியும்படி செய்ய முடியவில்லை. பார்ப்பனரல்லாத பார்ப்பனக் கூலிகளையும் ஒழிப்பதென்றால் நாம் மூவரும் சேர்ந்தால்தான் முடியும். ஏன் என்று கேழ்க்க இப்போது நாதியற்றுப் போய் விட்டது. மூன்று பேர் அடுப்புக் கல்லைப் போல் பயனற்று வாழ்கின்றோம் என்பது தான் எனது எண்ணம். இனியாவது ஒத்து இருந்தோமானால் பார்ப்பனரல்லா பெருமக்கள் சம தர்மம் பெற்று, சுயமரியாதை அடைந்து சோம்பேறி வாழ்க்கைக்காரரும், சூழ்ச்சி வாழ்க்கைகாரரும் அழிவு பெற மாட்டார்களா? என்பதுதான் எனது ஆசையே தவிர முதலியாரும் நாயுடு
வும் வந்து சேர்ந்தால் தான் ஏதோ சொந்தத்தில் பெருவாழ்வு வாழ்ந்து விட
லாம் என்று கருதவில்லை.
தோழர்கள் முதலியாரையும் நாயுடுவையும் சில சோம்பேறி வயிற்றுச் சோற்று தேசபக்தர்களென்கின்ற காலிகள் சிலர் வைவார்களென்பது எனக்குத் தெரியும்.இவர்கள் என்ன பாவம் பண்ணிவிட்டார்களென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் கூலிகொடுத்து காலிகளை: ஏவிவிட்டு அவர்களை வையச் சொல்லுவார்கள். இதற்கொரு சிறு உதாரணம் கூறு கிறேன். கொஞ்சகாலத்துக்கு முன்பு தோழர் வரதராஜுலு அவர்கள் ஜஸ்டிஸ் ஆபீசுக்குச் சென்றிருந்தாராம். இதை ஒரு பார்ப்பன
ஒற்றர் கண்டுபிடித்துச் சுதேசமித்திரனுக்கும், இந்துவுக்கும் தெரிவித்து விட்டார். இதைப் பெரிய பெரிய எழுத்தில் அப்பத்திரிக்கைகள் “ஜஸ்டிஸ் ஆபீசில் வரதராஜுலு நாயுடு” என்று தலைப்புக் கொடுத்து எழுதிவிட்டன. உடனே நாயுடுகார் சமாதானம் சொல்ல ஆரம்பித்து விட்டார். இதிலிருந்து பார்ப்பனர்களுக்கு எவ்வளவு ஆதிக்கம் இருக்கிறது என்று நினைத்துப் பாருங்கள். இவ்வித மிரட்டலுக்கெல்லாம் இனிபயப்பட மாட்டார்களென்றே நினைக்கிறேன்.
குடி அரசு - 1933 (2 252
நமது தோழர்களுக்கும் ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன்:-
நம்மில் சில தோழர்கள் இவர்களை நாம் வரவழைத்ததால் நமது கொள்கைகளோ,திட்டங்களோ மாறுபட்டுவிட்டது என்று ஓலமிட்டு நம்மை வைய ஒருவழி தேடக்கூடும் அல்லது உண்மையிலேயே சிலர் அப்படி நினைத்து பயப்படக் கூடும். அது சரியல்ல. அவர்கள் வந்ததால் நமக்குப் பலமேற்பட்டது. அனேக காங்கிரஸ்காரர்கள் பாமர ஜனங்கள் டாக்டர் நாயுடு அவர்களை ஒரு பெரிய தேசீயவாதி என்றும் நம்மை ஒரு தேசத் துரோகி என்றும் கருதியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைக் கூட இன்று நம்மையும் மதிக்கும்படி செய்து விட்டோம். ஏன்? நாம் சொல்லுபவை களையே தான் டாக்டர் நாயுடு அவர்களும் இன்று பலமாக அழுத்திச் சொல்லி இருக்கிறார். ஆதலால் லாபம் நமக்குத்தான். எப்படியென்றால் சொம்பிலிருந்து ஊற்றினால் தண்ணீர் என்பார்கள். கெண்டியால் ஊற்றினால்
தீர்த்தம் என்பார்கள். உத்திரணிலில் ஊத்தினால் தான் மதிப்பது வழக்கம். அதுபோல் அவர் வாயிலிருந்தே நமது கொள்கைகள் முழுவதும் வந்து விட்டன. இனி அவர்களைப் பின்பற்றுபவர்களும் நமது கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் வையவாவது மாட்டார்கள். அதுபோலவே தோழர் முதலியார் அவர்களும் மதத்தைப் பற்றிப் பேசிய இரண்டொரு இடம் தவிர மற்றதெல்லாம் அனேகமாக நமது கொள்கையைத் தழுவியதே
ஆகும். மதவிஷயமாய் தோழர் முதலியார் அவர்களது இப்போதைய அபிப்பிராயத் தைப் பற்றி கவலையில்லை. அவர் நம்மைத் திருப்பட்டும் அல்லது நமது வழிக்குத் திரும்பட்டும் அல்லது அவரவர் அபிப்பிராயம் அவரவரிடமிருக்கட்டும். ஒரே மேடையில் இருவரும் அவரவர் அபிப்பி ராயம் சொல்ல நம் இருவருக்கும் உரிமை வேண்டும். ஒருவருக்கொருவர். சொந்த விரோதம் வேண்டாம். பகைத்துக் கொள்ள வேண்டாம். மூவரும் மனித சமூக புல்லுருவியும், கஷயரோகக் கிருமியுமாகிய பார்ப்பனீயத்தை அழிப்பதிலும் முதலாளித்துவத்தை ஒழிப்பதிலும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்கால ஆசை.
தோழர்களே கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். அதென்னவென்
றால் இவர்களிருவரும் என்னைப் பார்ப்பனீயத்துக்கு இட்டுச் சென்று விடுவார்கள் என்கின்ற பயம் உங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் என்னை நம்பினாலும் நம்புவார்கள். முதலியாரையோ, நாயுடுவையோ எப்போதும் ஒரு பார்ப்பனரும் நம்ப மாட்டார்கள். இவர்கள். பூணூல் போட்டுக் கொண்டால் கூட சேர்க்க மாட்டார்கள். அது மிக மிக உறுதி. உப்புச் சத்தியாக்கிரகத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி சிறைப்பட்ட
தும் தோழர் முதலியாருக்கு சர்வாதிகாரம் கொடுப்பதாய்ச் சொல்லி அவரும். தயாராயிருந்தார். ஆனால் அந்தப்படி செய்யவில்லை. ஒரு சாதாரண பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டது. முதலியார் பேர் அடிபட்டதால் அவர். பத்திரிகை ஒழிந்தது தான் மிச்சம். இப்பொழுது வரப் போகும் காந்தியார்.
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வரவேற்பு கமிட்டிக்கு நாயுடு அவர்களை பார்ப்பனர் சேர்க்கவில்லை. ஒரு 3-வது வகுப்பு பார்ப்பனர்தான் தலைவராய் இருக்கிறார். ஆனால் பார்ப்பன ரல்லாதார் இடமிருந்துதான் பணம் வசூல் செய்யப்படுகிறது. ஆதலால் பார்ப்பனீயம், புரோகிதம், முதலாளித்துவம் ஆகிய கொடுமையை அழிக்
கும் விஷயத்தில் நமக்குப் பெரியதொரு ஆதரவு கிடைத்திருக்கிறது என் கின்ற நம்பிக்கையின்பேரில் அவர்களது கருணை நிரம்பிய விஜயத்துக்கும் அவர்களது அரிய உபதேசத்துக்கும் நான் உங்கள் சார்பாகவும், என் சார்பாக
வும் மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அவர்களது விஜயத்தில் இங்கு அவர்களுக்குப் போதிய செளகர்: யமும், மரியாதையும் அளிக்கத் தவறியதற்கும் மன்னிக்கும்படி அவர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
குறிப்பு- 25, ாபல3நாள்களில் ஈரோடு டவுன்முனிசிபல் ஜெனரல் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற கோவை மாவட்ட சுயமரியாதை மாநாடு மற்றும் பெண்கள் மாநாடுகளில் ஆற்றிய உரை:
புரட்சி - சொற்பொழிவு - 03.12.4933
குடி அரசு - 1933 (2 254
லெணின் - நாகம்மான்
உருவப்படத் திறப்புவிழா
தோழர்களே! இப்போது நடக்கப்போவது படத் திறப்புவிழா. இதை நடத்திக் கொடுக்கச் சென்னை தோழர்கள் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களையும் கல்யாணசுந்திர முதலியாரவர்களையும் கேட்டுக் கொண்: டோம். அவ்விரு பெரியார்களும் நமது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து இங்கு விஜயம் செய்துள்ளார்கள்.நமது இயக்கக் கொள்கைகள் முழுமையும் அவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றவர்களல்ல. பல விஷயங்களில் நமக்கும் அவர்களுக்கும் பலமான அபிப்பிராய பேதம் உண்டென்பது உங்கள். எல்லோருக்கும் தெரியும். அப்படியிருந்தும் நாம் ஏன் அவர்களைத் தேடிப் போனோம்? அவர்களது விஜயத்தால் நமது கொள்கைகளுக்கும், அபிப்பி ராயங்களுக்கும் ஆதரவும் பலமும் கிடைக்குமென்கின்ற எண்ணத்தி னால்தான். இந்தச் சங்கதிகள் அவர்கள் தெரிந்தே தங்களது ஆதரவும் இவ்வியக்கத்துக்கு இருக்கட்டும் என்கின்ற பெருந்தன்மையான தயாள குணத்துடனேயே இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள். எனக்கும் அவர்
களுக்கும் சில காலமாய் அபிப்பிராயபேதம் இருந்து வந்தது. அதைப்பற்றி நாங்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும் வந்திருக்கிறோம். ஆனால்
எல்லாம் ஒரே தத்துவத்தின் மீதேயொழிய வேறில்லை. அதாவது மனித சமூகத்துக்கு அவரவர்களால் கூடுமான தொண்டைச் செய்ய வேண்டும் என்கின்ற தீவிர அவாவினாலேயே ஒழிய அவரவர்கள் சொந்தவீட்டு வாழ்க்கைப் பிழைப்புக்காக அல்ல. அபிப்பிராயப் பேதங்கள் ஏற்படுவது சகஜம். முன் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்கள் சரியல்லவென்று தோன்று வதும் சகஜம். ஒவ்வொரு மனிதனுக்கும் சரீர அமைப்பில் அபிப்பிராயங்கள் ஏற்படுவதற்கு காரணமாகிய மூலாதார அமைப்புகள் வேறு. அதன் பயனாய் அபிப்பிராயபேதம் ஏற்பட்டுத்தான் தீரும். அதுபோலவே அபிப்பிராயங்
கள் மறுபடியும் ஒற்றுமைப்பட்டும் வரும்.
அந்த முறையிலேயே இப்போது இவ்விரு பெரியார்களுடைய
அபிப் பிராயங்கள் பலது நமது அபிப்பிராயங்களுக்குப் பிரமாதமான மாறுபாடில்லா விட்டாலும் பலது ஒற்றுமையாகவும் இருந்து வருவதை நான் “தமிழ்நாடு” பத்திரிகை மூலமாகவும், “நவசக்தி” பத்திரிகை மூலமாகவும் 255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
தோழர் முதலியார் அவர்களால் எழுதப்பட்ட “சமரச சன்மார்க்க போதம்” என்னும் புத்தகத்திலுள்ள பல வாக்கியங்கள் மூலமாகவும் உணர்ந்தேன்! அப்போதே நான் அவர்களது ஒற்றுழைப்பையும் கூட்டுறவையும் பெற ஆசைப்பட்டேன். நமது இயக்கத்தில் எனக்குள்ள பற்றானது எங்கெங்கெல்
லாம் நமக்கு ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் நுழைந்து ஆதரவு பெற வேண்டும் என்கின்ற ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது. அது எவ்வளவு கொஞ்சமானாலுஞ் சரி என்று தான் ஆசைப்படுகிறேன். நமது இயக்கத்துக்கு மாறுபட்ட சில அபிப்பிராயங்கள் அவர்களிடம் இருக்கிறதென்றாலும் அவ் வபிப்பி ராயங்களையும் அவர்கள் நமக்கு உபதேசிக்கட்டும். அது சரியா னால் தான் நாம் ஒப்புக் கொள்ளுவோமே தவிர டாக்டர் வரதராஜுலுவும், கல்யாண சுந்திர முதலியாரும் சொல்லுகின்றார்களே என்று நினைத்து நாம் ஏமாந்துவிட மாட்டோம். அப்படிப்பட்டவர்கள் சும. இயக்கத்தில் இருப்பார். களென்று நான் நம்பவேயில்லை.நமது இயக்கத்தில் இல்லை. நமது இயக்கத் தத்துவமே அதுதான். அதாவது “கடவுள்” சொன்னதாகச் சொன்னதையே
ஒப்புக் கொள்ளாமல் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்கின்ற நாம் இவர்கள் சொல்வதைக் கண்மூடிக் கொண்டு ஒப்புக்கொள்ளப்போகிறோமா?'
அபிப்பிராய பேதத்தைத் தெரிவிக்க இடங் கொடுத்தால், அதைத் திருத்தவோ அல்லது நாம் திருந்தவோ சமயமும், இடமும் ஏற்படுமாதலால் அவர்களது எவ்வித அபிப்பிராயமும் நமக்குப் பலன்படக் கூடியதேயாகும். சுமார் 10-வருஷங்களுக்கு முன்பு நான் இவர்களைப் பின்பற்றியே நடந்த வன் என்பது உங்களுக்குத் தெரியும். இவைகளையெல்லாம் உத்தேசித்துத் தான் நாங்கள் அவர்களை வரும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கிணங்கி விஜயஞ்செய்திருப்பதைப் பெருமையாகவே கருதுகிறேன்.
தவிர, இப்பெரியார்களை தோழர். நாகம்மாள் உருவப்படத்தை திறந்து வைக்கவே நாம் கேட்டுக் கொண்டோம். தோழர் லெனின் அவர்க
ளின் உருவப்படத் திறப்பு விழாவிற்கு தலைமை வகிக்க தோழர் எம். சிங்காரவேலு அவர்களையும் திறந்து வைக்க கொச்சி பொதுவுடமைவாதி தோழர் கே.எம். இப்ராஹிம், பி.ஏ., எம்.எல்.சி. அவர்களையும் கேட்டுக் கொண்டோம். ஆனால் தோழர் சிங்காரவேலு அவர்கள் காயலாபட்டு விட்டதாகவும் தோழர் கே.எம். இப்ராஹிம் கடன் மறுப்பு பிரசாரத்தில் சட்ட மறுப்பு செய்து சிறைபட்டு விட்டதாகவும் தெரிவித்து விட்டதால் அந்தப் படத் திறப்பு விழாவையும் ஆற்றும்படி இவர்களையே வேண்டிக் கொண்டு
டாக்டர் வரதராஜுலு அவர்களை தலைமையை ஏற்றுக் கொள்ளும்படி உங்கள் சார்பாக வேண்டி கொள்ளுகின்றேன்.
குறிப்பு: ஈரோடு ஸ்டாலினா மண்டபத்தில் 261119336 நடந்த படத்திறப்பு விழாவில்தலைமை முன்மொழிவு உரை.
புரட்சி - சொற்பொழிவு - 03.12.1933
குடி அரசு - 1933 (2 256
கோவை வில்லா (FBITG) மகாநா௫
கோயமுத்தூர் ஜில்லா மகாநாடு ஈரோட்டில் சென்ற மாதம் 25, 26 தேதிகளில் நடைபெற்ற விபரம் மற்ற பக்கங்களில் பார்க்கலாம். மகாநாடு மிக்கச் சிறப்பாகவும், பிரதிநிதி ஜனங்களின் மனதைக் கவரத் தக்கதாகவும் நடை பெற்றிருக்கின்ற தென்பதை அதிலிருந்து உணரலாம்.
அதோடு இம் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தவர்கள், திறப் பாளர்கள், வரவேற்புத் தலைவர்கள், உருவப் படத் திறப்பாளர்கள் ஆகிய வர்கள் பெரிதும் நமது மகாநாட்டுக்குப் புதிதானவர்களென்றும் காணப்
படலாம். சுயமரியாதை மகாநாட்டுக்குத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்கள். கொச்சி ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். பெண்கள் மகாநாட்டுத் தலைவர், திறப்பாளர் ஆகியவர்களில் தலைவர் தோழர் நாயகம்-சிதம்பரம் அம்மாள் அவர்கள் இதற்குமுன் நமது மகாநாடுகளில் கலந்திருந்தாலும் அவர்கள். நமது மகாநாட்டில் தலைமை வகித்தது இதுவே முதல் தடவை. திறப்பாள ராகிய தோழர் பண்டிதை லி.ரா. ரங்கநாயகி அம்மாள் அவர்கள் சுய மரியாதை உலகத்துக்குப் புதியவர்களேயாவார்கள்.
உருவப்படத் திறப்புவிழாவுக்கு தலைமை வகிக்கவும், விழா நடத்தவும் வந்த தோழர்கள் 0:.வரதராஜுலு, கல்யாண சுந்தர முதலியார். ஆகியவர்கள் நம் இயக்கத்துக்கு புத்தம் புதியவர்களென்றே சொல்ல வேண்டும். நம் இயக்கத்தைக் குறை கூறியவர்கள் என்றும் கூற வேண்டும். நமது இயக்கத் துக்கும் அவர்களது கொள்கைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தி யாசம் என்று சொல்லப்பட்டது என்றும் சொல்ல வேண்டும். நாமும் அவர்களை அப்படியே சொன்னோம் என்பதையும் மறைக்க வில்லை. ஆனால் அவர்கள் இப்போது நம்மை சில விஷயங்களில் மாத்தி
ரம் நாம் அதி வேகமாய் போய்க் கொண்டிருக்கிறோம் என்று கருது கிறார்கள். நாமும் அவர் கள் பல விஷயங்களில் நமது கொள்கைக்கு அனு சரணையான அபிப்பிராயங்கள் கொண்டிருக்கிறார்களென்று கருதுகிறோம்.
இதன் உண்மைகள் எப்படியோ இருக்கட்டும். இருவர் நிலைக்கும் பிரமாத வித்தியாசம் அதாவது கூடிக் கலந்து நாமும், அவர்களும் ஒற்றுமை யாய் இருந்து நம் அடிப்படையான கொள்கைக்கேற்ற தொண்டை நடத்த
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
முடியாத அளவு, வித்தியாசமான நிலைமையில் இன்று இல்லை என்பதை நாமும் உணர்கிறோம். அவர்களும் உணர்கிறார்கள் என்றே கருதுகின்றோம்.
இந்த உண்மையை அவர்களது உபந்யாசங்களில் இருந்தே அறிய
லாம். மேலும் “தமிழ்நாடு” பத்திரிகையானது சுமார் 2-வருஷகாலமாகவே பச்சையாய் சமதர்மத்தை ஆதரித்து வந்திருக்கிறது. காங்கிரசின் போக்கை
யும் காந்தியாரின் கொள்கைகளையும் ஒப்புக் கொள்ளாமல் நம்மைப் போலவே பல தடவை தாக்கி வந்திருக்கிறது. பார்ப்பனீயத்தையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் கண்டிப்பதில் அது பின் வாங்கினதுமில்லை.நமது இயக் கத்துக்கும் அது தன்னாலான உதவி செய்து வந்திருக்கிறது - வருகிறது.
ஆகவே அப்பத்திரிகையின் உதவியையும் டாக்டர் வரதராஜுலு அவர்கள் கூட்டுறவையும் நாம் அனுபவிக்க நேருவது நமக்கு நன்மை யேயாகும்.
தோழர் கல்யாணசுந்திர முதலியார் அவர்களது அபிப்பிராயங்கள் பார்ப்பன ஆதிக்கத்தை வெறுத்து நிற்கின்றதென்றே உணர்கிறோம். சமதர்மத்தை முழுதும் ஆதரிக்கின்ற தென்றே கருதுகிறோம். தொழிலாளர் விஷயங்களில் அவருக்கு எப்போதும் கவலையுண்டு. தொழிலாளர்களுக் காக எதுவும் செய்ய அவர் துணிந்திருக்கிறார் என்பவைகளில் யாருக்கும் உறுதியான நம்பிக்கையுண்டு. ஆதலால் அவர்களது கூட்டுறவும் நமக்கு நன்மையையே பயக்கும் என்பது நம் உறுதி.
மற்றபடி நம் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்ட எண்ணங்கள் சில அவர்கள் இருவர்களிடமும் இருக்கலாமென்றே வைத்துக் கொள்வோம். அதனால் நமக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிடாது. மகாநாட்டின்போது அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் நாம் ஆக்ஷேபித்துத் தீர வேண்டிய அம்சம் எதுவும் நமக்குத் தென்பட்டதாக நமக்கு ஞாபகமில்லை.
கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மத நம்பிக்கையைப் பற்றியுங்கூட அவர்கள் நம்மைக் கட்டாயப் படுத்தவில்லை. எதையும் வலியுறுத்திச் சொல்லவுமில்லை. அவற்றில் தங்களுக்குச் சிறிது நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக் கொண்டிருக்கலாம். அவை உண்மையான கடவுள் மத நம்பிக்கை யானால் நமக்குக் கவலையில்லை. உண்மையான நம்பிக்கையென்பது அனுபவத்தில் முன்னுக்குப் பின் முரணாய்த் தீருமானதால் சீக்கிரம் மாறியே
தீருவார்கள். பொய்யான-உலக மெய்ப்புதலுக்கான கடவுள் மத நம்பிக்கை யானால் சமயத்திற்குத் தகுந்த படி அவற்றைத் திருப்பிக் கொள்வார்கள். ஆதலால் நம்மீது அந்நம்பிக்கைகளைப் புகுத்துகின்ற வரையில் நாம் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த விதத்திலும் உலகப் பொது எதிரிகளான பார்ப்பனர்கள் விஷயத்தில் நம்மைப் போலவே அவர்களும் அபிப்பிராயம் கொண்டிருப்பதால் பொது எதிரிகளை ஒழிக்க
குடி அரசு - 1933 (2 258
ஒன்று சேர்ந்தாக வேண்டியதே புத்திசாலித்தனமாகும். அரசாங்க விஷயத்
திலும், உலகப் பொது எதிரிகளாகிய ஏகாதிபத்தியங்களை அழிப்பதிலும், முதலாளிகள் ஆதிக்கங் களை ஒழிப்பதிலும், முதலாளித் தன்மை அரசியல் களை ஒழிப்பதிலும் நம்மைப் போலவே அவர்களும் கருத்துக் கொண்டி ருக்கிறார்கள். ஆதலால் அவற்றில் நாம் ஒன்று சேர்வது அவசியமேயாகும்.
ஏழை மக்கள் பெயரைச் சொல்லிக் கொண்டு காங்கிரஸ் என்னும் பெயரால் ஒரு கூட்டம் (பார்ப்பனர்கள்! மக்களை ஏய்ப்பதை ஒழிக்க வேண்டியதும், பார்ப்பனரல்லாதார் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பன ரல்லாதார் கட்சி என்னும் பெயரால் ஒரு கூட்டம் பணக்காரர்கள்! மக்களை ஏய்ப்பதை ஒழிக்க வேண்டியதும் நமக்கு எவ்வளவு அவசியமோ அது போலவே தொழிலாள மக்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு தொழி லாளர் சங்கம், டிரேட் யூனியன் என்னும் பெயர்களால் ஒரு கூட்டம் (சிவ ராவ்கிரி முதலிய கூட்டத்தார்கள்! மக்களை ஏய்ப்பதையும் ஒழிக்க வேண்டி யதும் இப்போது நமக்கு மிகவும் அவசியமாகும். இக்காரியத்திற்கும் தோழர்கள் நாயுடு, முதலியார் ஆகியவர்களது கூட்டுறவு நமக்கு அவசிய மேயாகும். ஆதலால் இம்மகாநாட்டுக்கு அவர்களை அழைத்ததையும் அவர்கள் மகாநாட்டுக்கு விஜயம் செய்ததையும் நாம் மனமார பாராட்டு கின்றோம்.
இதிலிருந்து, நாம் கருத்திலிருத்த வேண்டியது என்னவென்றால் நமது இயக்க கொள்கைகளுக்கு ஆதரவளிப்பவர்கள் நமது தோழர்கள், நேயர்கள் ஆவார்கள். நமது கொள்கைகளுக்கு எதிர்ப்பு அளிப்பவர்கள், எதிர்மாறாகச் சூக்ஷி செய்கின்றவர்கள் நமது எதிரிகள் ஆவார்கள் என்று தான் கருத் திலிருத்த வேண்டும்.
தோழர் சி.டி. நாயகம் அவர்கள் தனது குடும்ப சமேதராய் நமது இயக்கத்துக்கு உழைத்து வந்தவர்கள் என்றாலும் அவர்கள் இப்போது பென்ஷன் பெற்றுவிட்டதால் இனி நமக்கு அவர்களது முழு நேர உழைப்
பும் கிடைக்கும் படியாக ஏற்பட்டதானது மற்றொரு பலமேயாகும். தோழர். பண்டிதை லி.ரா. ரங்கநாயகி அம்மாள் அவர்களது வருகையும், நமது இயக்கத்துக்கு புதியதொரு ஆதரவாகும். இவைகளின் பயனாய் நமது இயக்கம் முன்னிலும் வேகமாய்ச் செல்லக்கூடிய நிலைமை ஏற்பட்ட தென்றே கருதுகிறோம். மற்றும் இயக்கத்திலிருந்து பல காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் நிஷ்டூரப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் காட்டிக் கொண்டிருந்த பல தோழர்கள் அதாவது அய்யாமுத்து, கண்ணப்பர், கோவை சி.பி. சுப்பையா, ராவணதாஸ் முதலிய இன்னும் பல தோழர்கள் மகாநாட்டிற்கு வந்திருந்ததும் காரியங்களில் கலந்து கொண்டதும் மகிழத்
தக்க காரியமாகும்..
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இவைகளையெல்லாம்விட மகாநாட்டு நடவடிக்கைகளில் நாம் மிகுதியும் பாராட்டி மகிழ்ச்சியடையத்தக்க காரியம் ஒன்று உண்டு: அதென் னவென்றால் மகாநாட்டிற்கு விஜயம் செய்த கனவான்கள் தங்கள் அபிப்பிரா யங்களை தெரிவிக்கும் முறையில் இயக்கக் கொள்கைகளையும் தோழர். ஈவெராமசாமியையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ அல்லது தாக்கியோ பேச நேரிட்ட சமயங்களில் எவ்வித சந்தடியும் ஒழுங்குத் தவறுதலான நடவடிக்கையும் எவரிடமிருந்தும் காணாமல் இருந்ததானது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததோடு சிறிது தைரியத்தையும் கூட ஊட்டிற்று என்று மனமாற தெரிவித்துக் கொள்கிறோம். சிலருக்குப் பேச சந்தர்ப்பம் கொடுபட வில்லை என்ற வருத்தம் இருந்ததாகக் கண்டாலும் அது உடனே மறந்து போயிருக்கும் என்றே கருதுகிறோம்.
மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இப்போது அவசர மாயும், அவசியமாயும் காரியத்தில் செய்து காட்ட வேண்டிய தீர்மானங்கள் இரண்டாகும். அவை முதலாவது தோழர் காந்தியவர்கள் தென்னாட்டிற்கு வந்து தீண்டாமை விலக்கு என்னும் பேரால் நடத்தப்போகும் வருணாச்சிர- மதப்பிரசாரத்தை பகிஷ்கரிப்பதாகும்.
இரண்டாவது சமீபத்தில் நடைபெறப் போகும் தமிழன்பர் மகாநாடு என்னும் பேரால் பார்ப்பனர்கள் ஆதிக்கத்துக்காக செய்யப்படும் பார்ப்பன சூட்சி மகாநாட்டை பகிஷ்கரிப்பதாகும். இவ்விரண்டு காரியங்களையும் செய்யவேண்டுமானால் பெரியதொரு கிளர்ச்சி உடனே செய்ய வேண்டி
யிருக்கிறது. இதற்காக உடனே சென்னையில் ஒரு பகிஷ்காரத் திட்டக் கூட்டம் ஏற்பாடு செய்து பிரசங்கம், துண்டுப் பிரசுரம் முதலியவை மூலம் பிரசாரம் செய்ய வேண்டியதாகும். பல சங்கங்களிலும் இப்பகிஷ்காரத் தீர்மானத்தை நிறைவேற்றி பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும். தோழர். காந்தியாருக்கும், தமிழன்பர் மகாநாட்டு நிர்வாகிகளுக்கும் அனுப்ப வேண்டும். இன்று கூடும் இராமநாதபுரம் ஜில்லா சுயமரியாதை மகா நாட்டிலும் இதைப்பற்றிப் பேசி ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசிய
மாகும்.
கடைசியாக மகாநாட்டுக்கு அதிக உதவி செய்த மாயவரம் தோழர் நடராஜன் முதலியவர்களுடையவும், முனிசிபாலிட்டி, தாலுகா போர்டு லண்டன்மிஷின் பள்ளிக்கூடம், மகாஜன பள்ளிக்கூடம், அர்பன் பாங்கு முதலிய ஸ்தாபனங்கள், தலைவர்கள், அதிகாரிகள், சிப்பந்திகள் ஆகியவர். களுடையவும் உதவி மிகவும் பாராட்டத்தக்கதே ஆகும். காரியதரிசிகள் தோழர்கள் எஸ்.வி.லிங்கம், எஸ்.ஆர். கண்ணம்மாள் ஆகியவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும் மகாநாடு சிறப்பாய் நடைபெறுவதற்குக் காரணமாகும்.
புரட்சி - தலையங்கம் - 03.12.1933
குடி அரசு - 1933 (2 260
இராமநாதபுரம் வில்லா ௬.ம.மகாநா௫
காந்தி பகிஷ்காரம்
இராமநாதபுரம் ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு சென்ற வாரம் சிவகங்கையில் வெகு சிறப்பாய் நடந்தேறியிருக்கும் விபரம் மற்ற
பக்கங்களில் காணலாம்.
அவற்றுள் மகாநாட்டுத் தலைவர் தோழர் எஸ்.ராமநாதன் அவர்கள் “இயக்கக்கொள்கைக்குத்தக்க திட்டங்களை வகுத்துக்கொள்ளவில்லை”
என்றும் “காரியத்திற் கடமைகளை உணரவில்லை, வேலை தொடங்க வில்லை” என்றும் கூறியிருப்பதையும்,
வேறு சிலர், காந்தியவர்கள் வரவை பகிஷ்காரம் செய்த தீர்மானத்தை தவறு என்று கூறி கண்டித்திருப்பதையும்பற்றி சிறிது சமாதானம் கூற வேண்டியது அவசியம் என்று கருதுகின்றேம்.
முதலாவது, தோழர் ராமநாதன் அவர்கள் கூறும் குறைக்குச் சமாதா னம் இயக்கத்திற்கு கொள்கைகளும் திட்டங்களும் வகுக்க என்று ஈரோட்டில் சென்ற வருஷம் டிசம்பர் மாதத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்து, தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 250 தோழர்கள் வரை விஜயம் செய்து, இரண்டு நாள் தாராள விவகாரத்திற்குப் பிறகு இயக்கத்திற்கென்று ஒரு லக்ஷியமும் ஒரு திட்டமும் வகுக்கப்பட்டிருப்பதை யாவரும் அறிவார். கள்.அந்த லக்ஷியமும் திட்டமும் இதுவரை, சுமார் 120 சங்கங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டும், சுமார் 10, 20 மகாநாடுகளில் நன்றாய் விவாதிக்கப்பட்டும்.
23 மகாநாடுகளில் தோழர் ராமநாதன் அவர்களாலேயே எதிர்த்து ஆக்ஷேப ணைகள் கூறி மறுக்கப்பட்டு அம்மறுப்புகளுக்கு ஆங்காங்கு அவ்வப் போது சமாதானம் கூறப்பட்டு அநேகமாய் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு இருப்பதும் தோழர் ராமநாதன் அவர்களுக்கும் மற்றும் அம் மகாநாடு
களுக்குச் சென்ற அநேகருக்கும் தெரியும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கத்திற்கு திட்டங்கள் வகுத்துக் கொள்ளவில்லை என்பது நமக்குப் புரியவில்லை.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இது ஒருபுறமிருக்க, தோழர் ராமநாதன் அவர்கள் சுமார் 3,4 ச.ம. மகா நாடுகளில் பொதுஜனங்களுக்குத் தனது அபிப்பிராயத்தையும் கொள்கை: களையும் திட்டங்களையும் எடுத்துச் சொல்லத்தக்க வசதி உள்ள தலைமை யை வகித்தும் இருக்கிறார். அவைகளில் எதிலாவதொன்றிலாவது “அக் குறையை” நீக்கத்தக்க திட்டங்களை வகுத்துக் குறிப்பிட்டதாகவும் தெரிய வில்லை. ஆனால் தான் விஜயமாகும் மகாநாடுகள் தோறும் சிலவற்றுள்: “லக்ஷியத்தையும் திட்டத்தையும் எதிர்ப்பதாகவும்” சிலவற்றுள் “லக்ஷியம் அர்த்தமற்றது. திட்டம் பயனற்றது” என்று சொல்லுவதாகவும் சிலவற்றுள். “லக்ஷியம் ஒப்புக்கொள்ளக்கூடியது, திட்டம் பயனற்றது” என்று சொல்லு வதாகவும் தான் தெரியவருகின்றது. ஒரு இயக்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும்பற்றி மாறு அபிப்பிராயப்படவும் மறுக்கவும் யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் அவ்வியக்கத்தில் இருக்கின்றவர்களுக்கு அவ் வுரிமையுடன் கூடவே அதற்கு பதிலாக, வேறு எதையாவது தான் கருதி இருப்பதை காட்டவேண்டிய அவசியமும் இருக்கவேண்டியது நியாய
மாகும்.
மற்றபடி தனிப்பட்ட முறையில், இருக்கிறதா? இல்லையா? என்பதை விவகாரத்துக்கு இடமானதாகக் கொள்வதானாலும், மகாநாடுகளுக்குத் தலைமை வகித்து தலைமைப்பேருரை நிகழ்த்துங்காலையில் குறைகள் கூறப்படும்போது அதற்குப் பரிகாரமும் கூறவேண்டியது யாரும் எதிர். பார்க்கத்தக்க தர்மமாகும்.
நிற்க, இம்மகாநாட்டுத் தலைவரால் மற்றொரு குற்றமும் கூறப்
பட்டிருக்கிறது. அதாவது,
“வேலை துடங்கவில்லை என்பதை நாம் அனைவரும் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டும். இனியாவது நமது கடமை களை உணர்ந்து அவைகளைச் செலுத்த வேண்டிய முறையில் காரியாம் சையில் ஈடுபட ஒருப்படுவோமென்கின்ற நம்பிக்கையில் இம் மகா நாட்டின் நடைமுறைகளை அமைப்போமாக” என்று கூறி இருக்கிறார். இதையும் அர்த்தம்செய்து கொள்ளத்தக்க சக்தி நமக்கு இல்லை.
என்ன வேலை துடங்கவில்லை? நமது கடமை என்ன? காரியாம் சையில் ஈடுபடுவது என்பது எப்படி? ஆகிய விஷயங்களை அறிய ஆசைப்பட எவருக்கும் உரிமையுண்டு. ஆதலால் அவைகளை அத் தலைமை உரையிலாவது, முடிவுரையிலாவது கூறப்பட்டிருக்குமானால் மிகவும் அழகாயிருந்திருக்கும் என்பதோடு சமாதானம் சொல்லவேண்டிய அவசியமும் நேர்ந்திருக்காது..
மற்றபடி அபிப்பிராய பேதங்கள் இயற்கையானதும் அவசிய மானதுமாகையால் மற்றும் சில விஷயங்களைப் பற்றி இப்பொழுது பேச அவசியமில்லை என்ற அளவில் அடுத்த விஷயத்தைக் கவனிப்போம்.
குடி அரசு - 1933 (2 262
காந்தி பகிஷ்காரம்
தோழர் காந்தி அவர்களது தமிழ் நாட்டு விஜயத்தைப் பொது மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்றும் அவருக்குப் பண முடிப்பு சமர்ப்பிக்க யாரும் பணம் கொடுக்கக்கூடாதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டி ருப்பது உண்மையேயாகும். இதிலென்ன தப்பிதம் இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
வாலிப உலகில் காந்தியார் சுமார் 5, 6 வருஷகாலமாகவே பகிஷ்கரிக் கப்பட்டு வருகிறார்என்பது யாவரும் அறிந்ததே. கராச்சியிலும், பம்பாயிலும். மற்றும் இரண்டொரு இடங்களிலும் காந்தியார் வரவுக்குக் கருப்புக்கொடி
பிடித்ததும் கையில் கருப்பு புஷ்பம் கொடுத்தும் “காந்திஜி திரும்பிப்போ” என்று மக்கள் கூவியதும் அனேகருக்குத் தெரியும். அப்படிக் கூடியவர்கள். வெறும் சோத்து ராமன்கள் அல்ல. பின்னை யாரென்றால் தூக்கு மேடையில் ஒருகாலும் காந்தி பகிஷ்காரத்தில் ஒரு காலும் வைத்துக்கொண்டு மனித சமூக சமதர்ம இன்ப வாழ்வுக்கு உயிரைத் தத்தம் செய்து வைத்திருந்த வாலிபர் களேயாவார்கள்.
ஆதலால் காந்தி பகிஷ்காரம் என்பது ஒரு ஒப்பற்ற மனித சமூக சுயமரியாதைத் தத்துவம் கொண்டதே ஒழிய, ஓட்டுப் பெறவோ சோம்பேறிக் கூட்டங்களுக்கு அன்னசத்திரம்வைப்பது போன்ற சோம்பேறி மடங் கட்டவோ ஏற்பட்ட வேலையல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். “சுயமரியாதைக்காரர் பகிஷ்காரம் வெற்றி பெறுமா” என்பது வேறு சங்கதி.
“பெரியபாளையத்து அம்மன்” உற்சவத்துக்கு, சீலையையும் வேஷ்டியையும் அவிழ்த்துப் போட்டு ஆடுவதற்கும், அதைப் பார்ப்ப
தற்கும் அதற்குப் பணம் கொடுப்பதற்கும் லக்ஷக்கணக்கான ஜனங்கள். போகிறார்கள். அதைப் பகிஷ்கரிக்கச் செய்த பிரசாரங்களில் எட்டில் ஒரு பங்குகூட இன்னமும் வெற்றிபெறவில்லை. ஆதலால் வெற்றி தோல்வி என்பவைகளிலேயே காரியங்களின் யோக்கியதாம்சங்கள் இருக்கின்றன என்று கருதினால் விஷயங்களின் தன்மையில் ஏமாந்துபோக நேரிடும்.
“காந்தியாரைப் பகிஷ்கரிப்பது அறிவீனம்” என்று சில பத்திரிகை
கள் எழுதுகின்றன. ஆனால் இப்பத்திரிகைகள் “காந்தியாரைப் பகிஷ்கரிப் பது பெரிய பாவம்” என்று சொல்லும் மேதாவிகளைவிட ஒருபடி மேலான வைகளென்றே சொல்லலாம்.
காந்தியார் எதற்காக வருகிறார்? அவருக்குக் கொடுக்கும் பணம் எதற்குப் பயன்படும்? அவரை யார் கூட்டிவந்து காட்டி பணம் பெருகி றார்கள்? காந்தியார் கொள்கை என்ன? என்பவைகளைப்பற்றி இவர்கள்.
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
யோசித்து இருந்தால் உண்மைத் தன்மையில் இப்படிப் பேசியும் எழுதியும் இருக்கமாட்டார்கள்.
காந்தியார் தீண்டாமைவிலக்குப் பிரசாரம் செய்ய வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். தீண்டாமை எதிலிருந்து உற்பத்தியாயிற்று? ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு ஆதாரம் இருக்கின்றதோ இல்லையோ என்பது ஒரு பிரச்சினையேயானாலும் இந்துமத சம்பிரதாயப்படிக்கு என்றுதானே இன்று தீண்டாமை இருந்து வருகின்றது.
தோழர் காந்தியவர்கள் “தீண்டாமைப் பேயை” ஓட்ட வேண்டு மென்பது “மதத்தைப் புனிதமாக்கவே” ஒழிய தீண்டாதார்களைப் பற்றிய கவலையால் அல்ல என்பது யாவரும் உணரக்கூடியதேயாகும். மதத்தைப் புனிதமாக்குவது என்பது எதற்காக என்றால் இந்து மதம் குற்ற முடையதாகி அது பலராலும் குற்றம் சொல்லும் நிலைமைக்கு வந்தது சீக்கிரத்தில் கழிந்துபோகத்தக்க நிலைமைக்கு வந்துவிட்டதாதலால் அக்குற்றங்களை களைந்து சீக்கிரம் அழிந்துபோகக்கூடுமான நிலைமையில் இருக்கும் இந்துமதத்தை காப்பாற்றவேண்டும் என்பதற்காக என்பது காந்தியவர்களு டையவும் அவரைக் கூட்டிவந்து வேடிக்கை காட்டும் பார்ப்பனர்களு டையவும் அவ் வேடிக்கையில் வசூலாகும் பணங்களைக்கொண்டு வயிறு வளர்க்கும் மத-தேச பக்தர்களுடையவும் கருத்து என்றே வைத்துக் கொள்ளலாம். இதை சுயமரியாதைக்காரர்கள் அல்லது மனித சமூக ஒற்றுமை
யிலும் பரஸ்பர அன்பிலும் கவலையுள்ளவர்கள் அல்லது இந்தியா ஒரு தேசமாகி இந்திய மக்கள் ஒற்றுமையுடன் பரஸ்பர அன்புடனும் சமாதானத் துடனும் சகோதரத்துவத்துடனும் நம்பிக்கையுடனும் வாழவேண்டும் என்று கருதுகின்ற உண்மை தேசபக்தர்கள் அல்லது தேசியவாதிகள் என்பவர்கள் ஒப்புக்கொள்ள முடியுமா என கேட்கின்றோம்.
தீண்டாமை விலக்கு என்பது ஒரு பொதுஜன தர்மம் அல்லவென்றும் அது இந்துக்களை மாத்திரம் சேர்ந்த வேலையென்றும் தோழர் காந்தியார் ஆயிரம் தடவை சொல்லி இருக்கிறார். இதிலிருந்தே தீண்டாமை விலக்கு என்பது ஒரு மதப்பிரசாரம் என்பதாக ஒரு சாதாரண மனிதனுக்கும் விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
காந்தியாரின் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தினால் “இந்திய தேசியத்திற்கே ஜாதிப்பாகுபாடானது இயற்கை விரோதியாய் இருக்கின்றது” என்று தேசியவாதிகள் தேசபக்தர்கள் என்பவர்களால் சொல்லப்படுகின்ற
ஜாதிப் பாகுபாடுமுறை அழிந்து விடுமா?
அல்லது “இந்திய சமுதாய மக்களின் சுயமரியாதை வாழ்வுக்கே விரோதமாய் இருக்கிறது” என்று எல்லாப் பார்ப்பனரல்லாத மக்களாலும் ஏக மனதாய் ஒப்புக் கொள்ளப்படுகின்ற வருணாச்சிரம தர்மமுறை தோழர்
குடி அரசு - 1933 (2 264
காந்தியார் தீண்டாமை விலக்குப்பிரசாரத்தால் ஒழிந்துவிடுமா என்று தேச பக்தர் தேசியவாதிகள் பார்ப்பனரல்லாத சுயமரியாதையுடைய மக்கள் என்று சொல்லிக்கொள்கின்றவர்கள் ஆகிய எல்லோரையுமே வணக்கத்துடன் கேட்கின்றோம்.
மனிதன் தனக்கு எழுதவும் பேசவும் தெரிந்துவிட்டதாலேயே தன்னை பூரண மனிதன் என்று நினைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு நாளும் ஒப்புக்கொள்ளத் தக்கதாகாது. மனிதன் மதிக்கப்படவேண்டுமா னால் அவனது எழுத்தும் பேச்சும் பொருத்தவரையிலாவது எதற்கு பயன் படுகிறது என்ப தைப் பொருத்ததேயாகும். இன்றைய தினம் காந்தியாருக்கு பாமரமக்களிடம் உள்ள செல்வாக்கின் பயணாய் காந்தியைப் புகழ்ந்து கூறும் ஒரு கிறாமபோன் தகடு (அது யார் கூறியதாய் இருந்தாலும்)க்கு கூட
மதிப்பும் பக்தியும் இருந்துவருவது யாவரும் அறிந்ததே யாகும்.
காந்தியார் பல தடவைகளில் ஒவ்வொரு ஜாதியாரையும் பார்த்து “ஜாதிப்பாகுபாடுகள் அவசியம்” என்றும் அவனவன் தகப்பன் செய்த தொழில் (அவனவன் ஜாதித்தொழில் அவனவன் செய்யவேண்டும் என்றும். சொல்லி வருவதும், இதை அனுசரித்துத் தனது ஆச்சிரமத்தில் இன்றைய தினம்கூட தீண்டப்படாத ஜாதியாருக்குத் தோல் பதனிடும் வேலை செய்ய
வும், பழகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்து கொடுத்து வருவதும் யாவரும்.
அறிந்தாகும்.
ஜாதிகள் அழியவேண்டும் என்று நாளது வரை தோழர் காந்தியார்.
தன் வாயினால் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை என்றும் ஆனால் ஜாதிகள் இருக்க வேண்டுமென்று பல தடவை சொல்லி இருக்கிறார் என்றும்,
நாம் பந்தயங்கட்டிக் கூறத் தயாராயிருக்கிறோம். இதை மறுக்கும் மனிதர் யாராயிருந்தாலும் தயவு செய்து முன்வரட்டும் என்று தலைவணங்கி அழைக்கின்றோம். இதற்கு யோக்கியமில்லாதவர்கள் காந்தி பகிஷ்காரம் பாவம் என்றும், அறிவீனம் என்றும் சொல்லுவதில் பயன் என்ன? என்பது நமக்கு விளங்கவில்லை.
வருணாச்சிரம விஷயத்தில் தோழர் காந்தியார் “பிராமணன், க்ஷத்திரி
யன், வைசியன், சூத்திரன் என்கின்ற நான்கு வகுப்பு இருக்க வேண்டும்” என்றும், ஐந்தாவதான சண்டாளர் என்கின்ற வகுப்புக் கூடாதென்றும் அச்சண்டாளர் என்னும் வகுப்பை சூத்திரர் என்னும் வகுப்புடன் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லுகிறார். இதற்கு ஆதாரம் இரண்டொரு மாதத்
திற்கு முன் குடி அரசி” லேயே எடுத்துக்காட்டியிருக்கிறோம். அதாவது,
தீண்டாதவர்கள் கோயிலுக்குப் போனால் அவர்கள் நிற்கவேண்டிய இடம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கும் தீண்டாமை என்பது போய் விட்டால் தீண்டாதவர்களாய் இருந்தவர்களுக்கு இந்து மதத்தில் அவர்
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
களுடைய நிலைமை என்ன என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கும் தோழர் காந்தியவர்கள் அளித்த பதில், “அவர்கள் (தீண்டப்படாதவர்கள்! சூத்திரர்.
களுக்குச் சமமாக அதாவது சூத்திரர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியவர்களாகப் பாவிக்கப்படுவார்கள்” என்று
சொல்லியிருக்கிறார்.
இவைகளுக்கெல்லாம் காந்தி பகிஷ்காரத்தைக்கண்டு துள்ளிக் குதிக்கின்றவர்கள் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்களுக்கு இது சமயம் ஒரு காந்தியார் வேண்டியது மிக அவசியமாகும். ஏனெனில் தர்ம கிளர்ச்சியும் ஏற்படுகிற காலங்களில் எல்லாம் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டிருப்பதாக சரித்திரம் இருக்கின் றது. அச்சரித்திரங்களில் பலவற்றை சுயமரியாதைக்காரர்கள் முழுப்பொய் என்றாலும் அவை பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை என்றும் நிலை நிறுத்திக்கொள்ள நடந்து கொள்ள வேண்டியதற்குவழி காட்டிகள் என்பது ஒரு முடிவு. ஆதலால் பார்ப்பனர்களுக்கும் சோம்பேறிகளுக்கும் ஆதர வளிக்கும் காந்தியாருக்கும் பிரசாரத்துக்கும் தாழ்த்தப்பட்ட மக்களும் பின் தள்ளப்பட்ட மக்களும் ஏன் ஆதரவளிக்கவேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.
பண முடிப்பு
காந்தியார் பேரால் வசூலிக்கப்படும் பணம் நாளைக்கு என்ன கதி அடையப்போகிறது என்பதைப் பற்றி சிறிது சிந்திக்க வேண்டுகிறோம்.
கதருக்கு வசூல் செய்த பணம் கதர் இலாக்காவுக்கு அதாவது நிர்வாகத்தில் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாயிருந்து மாதம் 250, 200,
150, 100, 50 என்கின்ற கணக்கில் சம்பளமாக கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பதற்கும் பார்ப்பனரல்லாதவர்களையும் அவர்களது இயக்கத்தையும் முயற்சியையும் வைது திரிவதற்கும் ஒரு சோம்பேறிக் கூட்டம் அனுபவிக்
கப் பயன்படுத்தப்பட்டது-படுகிறது என்பதை யாரோ மறுக்கவல்லார்? இன்றும் ஆங்காங்கு காந்தி பண முடிப்பு வசூல் செய்வதெல்லாம் பார்ப்பன ரல்லாதாரிடமிருந்தும் வசூல்நிர்வாகம் செய்வதெல்லாம் பெரிதும் பார்ப்ப னருமாயிருந்தும் வருவது யாவரும் அறிந்ததேயாகும். மொத்த வசூல் தொகைகள் பார்ப்பனர்களிடம் ஒப்புவிக்கப்பட்டு அவற்றில் ஒரு சிறிது வேறு வழியில் பிழைக்க வகையற்றவர்களும் தங்கள் சுயமரியாதையை
விற்றுப் பிழைத்துத் தீர வேண்டியவர்களுமான இரண்டொரு “கனவான் களுக்கு” அதாவது தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்த இரண்டொருவருக்கும், பார்ப்பனரல்லாத வகுப்பைச் சேர்ந்த இரண்டொருவருக்கும் கொடுத்து விட்டு மீதி அவ்வளவும் பார்ப்பனர்கள் மூலமே பெரிதும் பார்ப்பனர்க ளுக்கே பயன்படப் போகின்றது. தீண்டப்படாதவர்களுக்கு ஒரு நாளைக்கு
குடி அரசு - 1933 (2 266
தலைக்கு எண்ணையும், குளிக்கச் சோப்பும் இடுப்புக்கு (விற்காமல் கட்டுக் கடையாயிருக்கும் இத்துப்போன கதர்த்துணியும் கொடுத்து அவர்கள் குடியிருக்கும் வீதியை ஒருநாளைக்கு கூட்டியும் விட்டால் தீண்டப்படாத வர்களுடைய கஷ்டம் நீங்கி அவர்கள் வாழ்ந்து விடமுடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். விற்காத கதர்களை விற்க இது ஒரு தந்திரம். காந்தி யாரின் தீண்டாமை விலக்குக் கொள்கையில் இருக்கின்ற புரட்டுகளையும் கொடுமைகளையும் விட தீண்டாமை விலக்குக்காக செய்யப்படும் வேலைத் திட்டங்களில் அநேக புரட்டுகளும், பித்த லாட்டங்களும், மோசங்களும் இருப்பதோடு அக்கூட்டத்தார்கள் மற்ற ஜனங்களை எவ்வளவு முட்டாள். களாகக் கருதியிருக்கிறார்கள் என்பதும் சிறிது யோசித்தால் விளங்காமல் போகக் கூடிய சங்கதி அல்ல.
நிற்க, “தோழர் காந்தியார் வரவை வைதீகர்களும் கண்டிக்கிறார்கள். சுயமரியாதைக்காரர்களும் கண்டிக்கிறார்கள். ஆதலால் இருவர்கள் செய்கையும் அக்கிரமம் என்றும், காந்தியார் நடுநிலைமையுடன் இருக்கிறார். என்பது விளங்குகின்றதென்றும்” சிலர் தர்மநியாயம்பேசுகிறார்கள். இது உண்மையறியச் சக்தியற்றவர்கள் வாதம் என்றே சொல்லுவோம். வைதீகர்கள் காந்தியாரை எதிர்ப்பது மாட்டுக் கடைதரகு வியாபாரம் போல் ஒருபெரும் சூட்சியேயாகும். இது தோழர் காந்தியும் வைதீகர்களும் நம்மை ஏமாற்ற ஏற்கனவே பேசிவைத்துக்கொண்டு செய்யப்படும் தந்திரமாய் இருந்தாலும் இருக்கலாம். வியாபாரிகள் இப்படித்தான் செய்வார்கள். அதாவது ஒரு கடையில் ஒரு சாமானுக்கு ஒரு குமாஸ்தா ஒரு விலை சொன்னால் அந்த விலையைப்பற்றி வாங்குகிறவனுக்குச் சிறிதும் சந்தேகம் தோன்றாமல் இருப்பதற்காக பக்கத்திலிருக்கும் முதலாளியானவன் குமாஸ்: தாவைக் கண்டபடி வைவது போல் வார்த்தைகள் உபபோயகப்படுத்தி “அந்தச் சரக்குக் கொடுக்கமுடியாது. அதன் விலை குமாஸ்தாவுக்குத் தெரியாது.அதற்கு அவன் பொருப்பில்லாதவன்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டி ரப்பான். இதைக் கேட்ட வாங்க வந்தவன் “இந்த விலைக்காவது கொடுத்தால் போதும். குமாஸ்தா ரெம்பவும் நல்லவன். நமக்கு வேண்டிய வன்” என்று கருதி விலையைப்பற்றியும் சரக்கைப்பற்றியும் சிறிதும் யோசிக்காமல் சொன்னபடி கேட்டுவிடுவான். இந்தத் தந்திரமே இன்று தீண்டாமை விலக்கிலும், கோவில் நுழைவிலும், தீண்டாமை விலகியபின் தீண்டாதவர்கள் நிலை என்ன என்பதிலும் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது. இதை அறியாத மக்களும், சுயநலமிகளும் நம்மைக் குறை கூறுகிறார்கள். நமக்கு இதைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை. ஆனால் காந்தியார் விஜய மானது மக்களு டைய சுயமரியாதைக்கு விரோதமென்றும், அவருக்குக் கொடுக்கப்படும் ஒவ்வொரு காசும், பிற்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்
கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் நிரந்தர கெடுதியையும் இழிவையும் உண்டாக்கத் தக்க தென்றும் நாம் பலமாக அபிப்பிராயப்படுகின்றோம்.
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தோழர் காந்தியாரைவிட வைதீகர்களும், சனாதன தர்மிகளும் எத்தனையோ பங்கு மேம்பட்டவர்கள் என்பது நமது அபிப்பிராயம். எப்படியெனில் வைதீகர்களுடைய அக்கிரமம், அயோக்கியத்தனங்கள் என்னப்பட்ட விஷமானது நன்றாகக் குருடனுக்கும் மூடனுக்கும் தெரியும் படியாக இருக்கின்றன.
காந்தியாரின் விஷம் மேலே சக்கரைப் பூச்சுப் பூசி எப்படிப்பட்ட “அறிவாளி” யும் எடுத்துச் சாப்பிடும்படியான மாதிரியில் தயாரிக்கப்பட்டி
ருக்கிறது.
ஆதலால் வைதீகர்களது விஷத்தை யாரும் சாப்பிட்டுச் செத்துப் போகமாட்டார்கள் என்பதோடு அவ்விஷங்கள் வைதிகர்களையே கொல்லு வதற்குத்தான் பயன்படும் என்றும் சொல்லலாம். ஆனால் காந்தியாரின் விஷம் எல்லோரையும் அருந்தச் செய்து எல்லோரையும் கொல்லத்தக்க மாதிரியில் பூச்சுப் பூசப்பட்டிருக்கிறது என்பதோடு காந்தியாரை மகாத்துமா வாக்கி பின் சந்ததிகளையும் கொல்லச் செய்யத் தக்கதாகும் என்று சொல்ல
லாம்.
ஆதலால் வைதீகப் பிரசாரத்தையும், சனாதனப் பிரசாரத்தையும் பகிஷ் கரிப்பதைவிடகாந்திபிரசாரத்தைப் பகிஷ்கரிக்கவேண்டியது அவசி
யமும் அவசரமுமான காரியமாகும்.
புரட்சி - தலையங்கம் - 10.12.1933
குடி அரசு - 1933 (2 268
“தமிழ் ° ர் மகாநாடு
சென்னையில் நடைபெற இருக்கும் தமிழ் அன்பர் மாகாநாட்டைப்
பற்றி இரண்டொரு சுயமரியாதை மகாநாடுகளிலும், பல சுயமரியாதை சங்கங்களிலும் அம்மகாநாடானது பார்ப்பனர்கள் தமிழர் மீது ஆட்சி செலுத்த வும் தமிழ்ப்பண்டிதர்களை அடிமை ஆக்கிக்கொள்ளவும் பார்ப்பன ரல்லாத உபாத்தியார்களை அடக்கிவைக்கவும் பார்ப்பனர்களில் பலருக்கு உத்தியோகமும் வருவாயும் ஏற்படுத்தவும் செய்யப்படும் ஒரு சூழ்ச்சி என்ப தோடு தமிழ் கல்வி என்பதையே தங்கள் இஷ்டப்படி மாணாக்கர்களுக்கு ஊட்டுவதற்கு ஏற்ற தந்திரம் என்றும் பேசி அதை பகிஷ்கரிக்கத் தீர்மானித் திருப்பது யாவரும் அறிந்திருக்கலாம். அந்தப்படியே ஒரு பலமான உணர்ச்சியும் தமிழ் மக்களுக்குள் இருந்து வருவதையும் பார்க்கலாம்.
ஆனால் இதை அறிந்த பார்ப்பனர்கள், கவர்னர் பிரபு தங்கள் மகா நாட்டை ஆசீர்வதித்திருப்பதாவும், யூனிவர்சிட்டியார் தங்களை ஒப்புக் கொண்டு தங்களுக்குப் பணம் கொடுத்திருப்பதாகவும் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் தங்களுடன் கலந்திருப்பதாகவும் பிறர் நம்பும்படி எவ்வளவோ தந்திரங்கள் செய்து வருகிறார்கள். பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு பயந்த சிலர் தங்கள் பெயரைக் கொடுத்திருப்பதுடன், சில பத்திரிகைகளும் அந்த தந்திரங்களுக்கு உதவி செய்து வருகின்றன.
இது நிற்க, அம்மகாநாட்டை பகிஷ்கரிக்கவேண்டுமென்ற தீர்மானம் ஒருபுறமிருக்க. அம்மகாநாட்டில் பிரேரேபிக்க என்று சில தீர்மானங்கள் அனுப்பப்பட்டிருப்பதாய்த் தெரியவருகின்றது. இது அம்மகாநாட்டுக்குச் சென்று அங்கு நமது தீர்மானங்களை செய்யமுமயற்சித்துப் பார்ப்பதால் அம்மகாநாட்டை நாம் பகிஷ்கரித்து சரி என்று மக்களுக்கு எடுத்துக்காட்ட செய்த காரியமாயிருக்கலாம்..
இருந்தாலும் அத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதையும், ஏற்றுக்கொண்டாலும் நிறைவேற்றப்படத்தக்க ஆதரவு கிடைக்காது என்பதையும் இப்போதே நாம் “ஜோசியம்” சொல்லுவோம்.
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஏனென்றால் அம்மகாநாட்டில் பார்ப்பன சூட்சியே மூளையாய் இருப்பதோடு பணக்காரர்கள் ஆதிக்கமும், பார்ப்பனீயப் பணக்கார அரசாங்க ஆதிக்கமும் அதற்கு அடிமைப்பட்டு உதவியாய் இருப்பதால்
சுலபத்தில் நாம் வெற்றி பெற்றுவிட முடியாது.
ஆனால் பார்ப்பன சூட்சியையும் பணக்கார ஆணவத்தையும், அவை இரண்டையும் அஸ்திவாரமாய்க் கொண்ட ஆட்சியையும் ஒழிக்க வேண்டு மென்று மக்கள் பலரும் ஒருமனதாய் நினைப்பதற்கு இதுபோன்ற மகா நாடுகளின் நடவடிக்கைகள் அனுகூலமாய் இருக்குமென்பதில் ஐய மில்லை.
இதிலிருந்து ஒரு விஷயம் தெரிந்துகொள்ளவேண்டியது நமக்கு அவசியமாயிருக்கிறது. பார்ப்பனர்களின் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இருந்தாவது இனி பண்டிதர்கள் என்பவர்களுக்கும் பார்ப்பனரல்லாத ஏழை உபாத்தியாயர்கள் என்பவர்களுக்கும் புத்திவருமா? என்பதுதான். அப்படி அவர்களுக்குப் புத்தி வந்ததற்கு அறிகுறி என்னவென்றால் அவர்கள். சமதர்ம இயக்கத்தில் சேரவேண்டியதுதான். சமதர்மப் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் எழுதிப் பரப்ப வேண்டியதுதான். அதை விட்டு விட்டு இராமாயணத்திற்குத் தத்துவார்த்தம் சொல்லிக்கொண்டிருப்பதில் பய னில்லை என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
புரட்சி - துணைத் தலையங்கம் - 10.12.1933
குடி அரசு - 1933 (2 270
நகர பரிபாணை சயை அமைப்பு
தோழர்களே!
இன்று இந்நகர பரிபாலன சபை ஆண்டுவிழாவிற்கு நான் பேச வேண்டுமென்றோ பேசச் சந்தர்ப்பம் ஏற்படும் என்றோ சிறிதும் நினைக் கவே இல்லை. இவ்வூர் வாலிபர்கள் பலர் நான் பேசியாக வேண்டுமென்று ஆசைப்படுவ தாகவும், மற்றும் எனது மேல்நாட்டுப் பிரயாணத்திற்குப்
பிறகு முதன் முதலாக இங்கு வந்திருப்பதால் எனது பழைய நண்பர்கள்
பலர் நான் பேச வேண்டுமென்று விரும்புவதாகவும் முனிசிபல் மானேஜர் அவர்கள் சொல்லி விரும்புவதால் ஏதாவது பேசலாமென்று முன்வந்திருக்
கிறேன். ஆனால் இவ்விழா பிரமுகர்களுக்கு நான் ஏதாவது விபரீதமாய் பேசி விடுவேனோ என்கின்ற பயம் அதிகமாய் இருப்பதாகத் தெரிகிறது கண்டு பரிதாபப்படுகிறேன். என்றாலும் நான் பேசுவதில் பலருக்கு அதிருப்
தியும், அபிப்பிராயபேதமும் காணப்படுவது மிக சகஜமேயாகும். அபிப்பி ராய பேதங்களுக்கு முக்கிய காரணமென்னவென்றால் நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் பழக்கவழக்கங் களிலும், பழைமைகளிலும் பழங்கால நூல்
களிலும் பழங்காலப் பெரியோர்கள் என்பவர்கள் வாக்குகளிலுமே முழு நம்பிக்கைவைத்து தண்டவாளத்தின்மீது ரயில் போவதுபோல் ஒரே போக் காய்ப் போய்க்கொண்டு அதையே மேன்மையாய்க் கருதிக் கொண்டிருப்ப
தால் அவற்றிற்கு மாறுபட்ட எதினிடத்திலும் அதிருப்தி மாத்திரமல்ல, அபிப்பிராய பேத மாத்திரமல்லாமல் வெறுப்பும், துவேஷமும், பகைமை
யும் கூடக் கொள்ளுவது சகஜமேயாகும். ஆனால் நான் அந்தப்படி மக்கள் நினைக்கவேண்டுமென்கின்ற எண்ணத்தின்மீது எதையும் பேசுவதில்லை.
நான் ஒரு சுதந்திர மனிதன், எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன், நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனைசெய்து ஒப்பக் கூடியதை ஒப்பி, தள்ளக் கூடிய தைத் தள்ளி விடுங்கள் என்கின்ற நிபந்தனையின்பேரில் தான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழைமை விரும்பி களானாலும் இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும், ஒழுங்குமாகாது. ஆத லால் நடுநிலையில் இருந்து கேட்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இன்று என்னை “நகர பரிபாலன சபை அமைப்பும், வேலையும்” என்பது பற்றிப் பேச விழா பிரமுகர்கள் விழைவதாகத் தலைவரவர்கள்' அறிவித்துள்ளார். இவ்விஷயம் பற்றிப் பேச எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.
நகர பரிபாலன சபை என்பது நகரில் பாழும் மக்களின் நலனைக் குறித்துக் கவலைகொண்டு அவர்கட்கு வேண்டுவன செய்யும் கடமையை ஏற்ற சபை என்பது பொருள் என்றே கருதுகின்றேன். அச்சபையை நிர்வாகிப்பவர்கள் அந்நகர மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டு நகர மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுகின்ற மக்கள் ஆவார்கள். இதுபோலவே ஜில்லா பரிபாலன சபை, தாலூக்கா பரிபாலன சபை, கிராமப் பரிபாலன சபை, மாகாண பரிபாலன சபை என்பது போன்றவைகளுமாகும். ஆனால் நாம் காணும் இப்பரிபாலன சபைகள் என்பவை எப்படி அமைக்
கப் பட்டிருக்கின்றன வென்றால் நகர் முதலியவைகளில் வாழும் செல்வ வான் களது பரிபாலன சபைகளாகவே அமைக்கப் பெற்றிருக்கின்றன.
எப்படியெனில் அச் சபைகளில் அமருகின்றவர்களுக்கென ஏற்படுத் தியுள்ள யோக்கியதாம்சை என்ன? அவர்களைத் தெரிந்தெடுப்பவர்களின் யோக்கியதாம்சை என்ன என்று யோசித்துப்பார்ப்போமேயானால் அப்படிப் பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு சொத்து உடைமையைப் பொறுத்தே அத்
தகுதிகள் இருந்துவருவதைக் காணலாம். சொத்துடைமை இல்லாத எவருக் காவது தகுதி இருக்கக் காணுவோமேயானால் அத் தகுதியும் அந் நகர: தாலூக்கா, ஜில்லா, மாகாண மக்களில் 1000-க்கு ஒருவருக்குக்கூட இருக்க முடியாததான படிப்பு உடைமையைப் பொறுத்தே ஏற்படுத்தப்பட்டுள்ள தகுதியேயாகும். அதாவது ஒன்றா, ஒரு குறிப்பிட்ட சொத்து இருக்க வேண்டும். அல்லது ஒரு குறிப்பிட்ட படிப்புப் பட்டம் இருக்கவேண்டும். இந்த இரண்டும் இல்லாதார் தகுதி இல்லாதாராகவே கருதப்பட்டிருக்கிறது. ஆதலால் மேற்கண்ட பரிபாலன சபைகளின் அமைப்புகளானது பொது மக்களது சபையாக அமைக்கப்படவில்லை என்பதே எனது அபிப்பிரா
யம். பிரத்தியட்ச அனுபவத்தில் காணவேண்டுமென்றாலும் நீங்கள் காண
லாம். எந்தப் பரிபாலன சபைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் ளுங்கள். அவற்றில் வீற்றிருப்போர் யாவர் என்று நோக்குங்கள். அவற்றின் தலைவர்கள் யாவர் என்று நோக்குங்கள். மற்றும் அவர்கள் எல்லோரையும் தெரிந்தெடுப்பவர்களும், தெரிந்தெடுக்கப்படுபவர்களும் தங்கள் கடமை களை, பொறுப்புகளை உணர்ந்தவர்களாய் இருக்கின்றார்களா என்று பாருங் கள்.சொத்துடைமையைத் தகுதியாகக் கொண்ட மக்களின் சபைப் பிரதிநிதி
கள் தங்கள் தங்கள் சொத்துடைமையைப் பெருக்குவதைக் கடமையாகக் கொள்ளுவார்களா அல்லது சொத்தில்லாதவர்கள், படிப்பில்லாதவர்கள் ஆகிய ஏழை பாமர மக்களின் நலன் பெருக்கத்தைக் கடமையாகக் கொள் ளுவார்களா என்பதை இயற்கைத் தத்துவம் என்னும் கண்ணினால் பாருங்
கள். ஆகவே நகரபரிபாலன சபைகளின் அமைப்பே பொது மக்களின்
குடி அரசு - 1933 (2 272
நலத்திற்கு ஏற்றதாய் இருக்கமுடியாமல் அமைக்கப்பட்டிருக்கிறது. அவை களில் ஒழுக்கக்தையோ நாணயத்தையோ காண்பதென்பது மிக மிக அரிதாகவே இருக்கத்தக்கதாய் இருக்கிறது. தெரிந்தெடுத்தல்கள் (எலக்ஷன் கள் என்பவைகளைப்பற்றி யாவரும் வெளிப்படையாய் அறிந்த விஷயமே யாகும். தெரிந்தெடுப்பவன் எவருக்குமே ஏறக்குறைய 100-க்கு 99-Cumé குமே தெரிந்தெடுப்பவனின் கடமை என்ன என்பதே தெரியாது. ஒவ்வொரு தெரிந்தெடுப்பவனும் அவனவன் சுயநலம், தாட்சண்யம் ஆகியவைகளைக் கவனித்தே வியாபார முறையில் தெரிந்தெடுக்கிறான். தெரிந்தெடுக்கப்படு பவனும் தனது சுயநலம், தற்பெருமை தற்காப்பு ஆகிய வைகளைக் கருத்தில் வைத்தே தெரிந்தெடுக்கப் பாடுபட்டு தெரிந்தெடுக் கப்பட்டவனா கிறான். ஆகவே தெரிந்தெடுப்பு முறை பெரிதும் சுயநலத் தையே அஸ்தி
வாரமாய் கொண்டு உலவுகின்றது.
பொதுஜனங்கள் பேரால், சில ஜனங்கள் புகழ்பெற்று செல்வம் பெருக்கி மகிழ்வது என்பதே நகரபரிபாலன சபையின் அமைப்பாகவும் வேலையாகவும் இருந்து வருகின்றது.
இதுபோல் தான் ஜில்லா, தாலூக்கா பரிபாலன சபைகளுமாகும். ஜில்லா தாலூக்கா சபைகள் என்பது நகரங்கள் தவிர்த்த கிராமங்களையே பொறுத்தது. கிராமங்களில் உள்ள பெரும்பான்மை மக்களான விவசாயக் கூலிகளுக்கு இந்தச் சபைகள் பிரதிநிதி சபையாகுமா? சின்ன குடியானவர்: களுக்கு இது பிரதிநிதி சபையாகுமா? பூமி இல்லாதவனுக்கும் ஒரு ஏக்கரா, அரை ஏக்கரா பூமி உள்ளவனுக்கும் 1000-ஏக்கர் 10,000-ஏக்கர் பூமி உள்ளவர். கள் பிரதிநிதிகளானால் இது எதற்கு பயன்படும்? அந்த ஒரு ஏக்கரா அரை ஏக்கரா பூமியையும் பிடுங்கி 1000-ஏக்கர்காரன் 1500-ஏக்கர் காரனாகவும்,
10,000-ஏக்கர் காரன் 15,000 ஏக்கர் காரனாகவும் மற்றவர்களை ஏழைகளா
கவும், பாப்பர்களாகவும் ஆக்கத்தான் பயன்படும். மற்றும் தங்கள் அதிகார ஆணவங்களைக் கொண்டு விவசாயக் கூலிமக்களை அடக்கி ஓடுக்கி துஷ்ட மிருகங்கள் மாதிரியிருந்து நடத்தத்தான் பயன்படும்.
இந்தப்படி நாடுமுழுவதும் நடக்கிறதா இல்லையா பாருங்கள். நகர பரிபாலன சபைகளின் செல்வங்கள் அவற்றில் உள்ள உத்தியோகஸ்தர் களும் கண்ட்ராக்டர்களும் சாப்பிடவும் இவற்றுள் பரிபாலன சபையார் களுக்கும் பங்கு இருக்கவுமே பெரிதும் பயன்படுகின்றன. ஒருபாகம் பொது ஜனங்களுக்கும் பயன்படுகின்றது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் பெரிதும் செல்வவான்களுக்கும், படித்தவர்கள் என்று சொல்லப்படும் சோம்பேரிகளுக்குமே போய்ச் சேருகின்றன.
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
மாகாண பரிபாலனசபைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அவைகளில் ஜமின்பேரால் மக்கள் ரத்தத்தை உரிஞ்சும் கொள்ளைக்காரர்கள், லேவா தேவியின் பேரால் மக்கள் ரத்தத்தையும் எலும்பில் உள்ள ஊன்களையும் உரிஞ்சும் கொள்ளைக்காரர்கள், மிராசுதாரர்கள் பெயரால் விவசாய கூலி களின் ரத்தத்தையும் எலும்பு ஊன்களையும் மனிதத் தன்மையையும் கொள்ளை கொண்ட துஷ்டமிருகங்களுக்கொப்பானவர்கள், வன்னெஞ்ச வியாபாரிகள், படித்தவர்கள் என்னும் ஈவு இரக்கமற்ற சோம்பேரிக் கூட்டங்
கள் ஆகியவைகளே நிறையப் பெற்றிருக்கின்றன. இவர்களது எண்ண மென்ன? கடமை என்ன? செய்கை என்ன? என்பவைகளை நான் விவரிக்க வேண்டுமா? பிரத்தியக்ஷத்தில் நீங்கள் அறியாதது எதை நான் சொல்ல வேண்டும்?
ஆதலால் இச்சபைகளின் அமைப்பையும், வேலைத்திட்டத்தையும் நடவடிக்கைகளையும் கண்ட ஒருவன் யோக்கியனாய் இருப்பானாயில் இவைகளைக் கலைக்க வேண்டுமென்றுதான் சொல்லுவானே ஒழிய சீர்திருத்த வேண்டுமென்று சொல்வதுகூட மிகக்கஷ்டமாய்தான் இருக்கும். ஆனால் சிறிது காலமாகவே நான் கொண்ட அபிப்பிராயப்படிக்குதான் நகரபரிபாலனங்களின் ஆதிக்கங்கள் நாளாவட்டத்தில் குறைந்துவருவது
பற்றி மகிழ்ச்சியடைகின்றேன். என்னவெனில் நகரபரிபாலன சபைக்கு இருந்துவந்த அதிகாரங்கள் இந்த 20-வருட காலத்தில் அதாவது பாமர மக்களுக்கு “சுயாட்க்ஷி”” உணர்ச்சி ஊட்டி செல்வவான்களும், படித்த சோம்பேறிகளும் ஏமாற்ற ஆரம்பித்த காலம்முதல், நாளுக்குநாள் ஏற் கனவே இருந்த அதிகாரங்கள் பறிக்கப்பட்டே வருகின்றன. இனி ஜில்லா தாலுக்கா சபைகளின் அதிகாரங்களும் பறிக்கப்படவேண்டுமென்ற விருப் பங்களும் செல்வாக்குப் பெற்றுவருகின்றன. இதிலிருந்தே பரிபாலன சபை
களின் அமைப்பும் வேலையும் ஒழுங்காக இல்லை என்பது யாவரும் அறிந்ததாகும். நம் நாட்டில் நகரபரிபாலனசபைகள் ஏற்பட்டு 50-வருஷங் களுக்கு மேலாகியும் இன்னமும் மக்களுக்கு அவற்றின் கடமையும் பொறுப்பும் தெரியவில்லை என்றால் நாம் நம் சமூகத்தின் பேரால் வெட்கப் பட வேண்டாமா என்று யோசித்துப்பாருங்கள்.
எப்படிப்பட்ட நகரத்திலும் ஒரு வீட்டுக்காரன் பொது இடத்தில் ஒரு அடி நிலமாவது சேர்த்துக்கட்டிக் கொள்ளவே பார்க்கிறான். அதில் அவன் வெட்கப்படுவதில்லை. பொது சொத்து என்றால் கொள்ளை அடிக்கத்தகுந் தது என்பதே ஒவ்வொருவனுடையவும் எண்ணமாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் ஒருநாளும் பொது நிர்வாகத்துக்கு அருகதையுடையவர்களாகமாட்டார்கள். இப்படிப்பட்ட ஜனங்களின் பிரதி நிதிகளும் நம்பிக்கைக்கும் கடமைக்கும் உரியவர்களாகமாட்டார்கள் என்று வலியுறுத்தி கூறுவேன். எந்தப் பெண்ணும் தன் வீட்டுக் குப்பைகூளம் அசிங்கம் ஆகியவற்றை பக்கத்துவீட்டுப்புரம் கொட்டுவதிலும் தன் வீட்டுப்
குடி அரசு - 1933 (2 274
பிள்ளையை எதிர்வீட்டுப்புரமோ அல்லது பக்கத்துவீட்டுப்புரமோ இருத்தி மலஜலம் கழிக்கச்செய்வதையுமே கடமையாகவும், நீதியாகவும் கொண்டி ருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை 50-வருஷமாய் திருத்த முடியாத பரிபாலனசபை அமைப்பும் வேலையும் இனி எப்பொழுது திருந்தப் போகின்றது?
மேல்நாடுகளில் இவ்விஷயங்கள் ஓரளவு கவனிக்கப்படுகின்றன என்றாலும் அங்கும் போதிய வேலைகள் செய்திருப்பதாய் கனப்பட
வில்லை...
உண்மையான நகரபரிபாலன சபைகள் என்பவைகள் ஒரு அரசாங்கம் என்பதின் வேலைகள் எல்லாவற்றையுமே மேற்போட்டுக் கொண்டு வேலை செய்து வரத்தக்கதாய் இருக்க வேண்டும். அவைகள்
நகரின் பெரும் பான்மையான மக்களான தொழில் செய்துவாழும் மக்களு டைய முழு பிரதிநிதிகளாகவே இருந்து அவர்களது நன்மையையே பெரி
தும் கவனிக்கத் தக்கதாய் இருக்கவேண்டும். பொதுஜனங்களை உத்தேசித்து பொதுஜனங்களுக்காக நடைபெறும் எந்தக் காரியத்தையும் வியாபாரத்தை
யும் தனிப்பட்ட மனிதன் நடத்திப்பயன்பெற இடமே இருக்கக்கூடாது. உதாரணமாக வியாபாரங்கள் தொழில்சாலைகள் மற்றும் மக்களுக்கு வேண்டிய ஆகாரசாமான் போகபோக்கிய சாமான் போக்குவரவு வசதி, கல்வி முதலிய எல்லா நிர்வாகங் களும் நகர பரிபாலன சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு அதன் லாபங்கள் முழுமையும் நகர மக்களின் வாழ்க்கைக்
கும் கல்விக்கும் சுகபோகத்துக்கும் சரிசமமாய் பயன்படத்தக்கதாகவே இருக்கவேண்டும். உற்பத்தி செய்பவனுக்கும் அனுபவிப்பவனுக்கும் மத்தி
யில் மிடில் மேன் கூடவே கூடாது.நகர சிவில் கிரிமினல் போலீசு முதலிய காரியங்களும் நகர பரிபாலனத்துக்குள்ளாகவே அடங்கியதாய் இருக்க வேண்டும். ஜட்ஜிகள், போலீசு அதிகாரிகள் சிறைக்கூடத் தலைவர்கள் முதலிய எல்லா அதிகாரிகளும் நகரபரிபாலன சபையின் அதிகாரிக ளாகவே இருக்க வேண்டும்.
இந்த முறையில்தான் ரஷியதேசத்தில் நகர்சபைகள் நடப்பதை பார்த்தேன். ஓட்டர்கள் சங்ககூட்டத்தில் ஜட்ஜியை நிருத்தி கேள்விகள் கேட்கப் பட்டதை நேரில் பார்த்தேன்.ஜட்ஜி நகரஜனங்களால் தெரிந்தெடுக் கப்பட்டவராவார். அவரும் ஒரு தொழிலாளியேயாவார். ஒவ்வொரு தெரிந் தெடுக்கப்பட வேண்டிய ஸ்த்தானத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்டவரிடம். இருந்து வேலைவாங்கவும் அவர் கடமையை சரியாய் உணர்ந்து பொருப்பு டன் நடக்கின்றாரா என்பதைக் கவனிக்கவும் ஒரு தனிக்கமிட்டி உண்டு. அக்கமிட்டிக்கு அவர்கள் என்றும் பொறுப்பாளிகளாய் இருக்க வேண்டும் என்கின்ற முறையிலேயே எல்லா ஸ்தல ஸ்தாபனங்களும், வேலை முறை களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நிற்க,
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
நமது நாட்டு ஸ்தாபனங்களில் ஸ்தாபன சிப்பந்திகளின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். சிப்பந்திகளுக்கு
சர்க்கார் சிப்பந்திகள் போல பென்ஷன் இல்லை. அவர்கள் ஒரு எஜமான ருக்குத் திருப்தியாய் நடக்க முடியாவிட்டால் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளவோ, மாற்றப்படவோ மார்க்கமில்லை. இந்தக் காரணங்களால் மனச்சாட்சிப்படி நடக்கமுடியாமலும் சுதந்திரத்துடன் இருக்க முடியாமலும் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நகர பரிபாலன சபை அங்கத்தினர்களும், தலைவர்களும் எப்படிப் பட்ட யோக்கியதை உடையவர்கள் என்று மேலேயே சொன்னேன். அப்படிப் பட்டவர்களிடம் இருந்து காலந்தள்ள வேண்டிய அவசியத்தில் மனிதன் வாழ்வது மிகவும் கொடுமையான வாழ்வேயாகும். ஒரு எஜமானன் காலா வதியாகி அவனது மறுதேர்தலுக்கு ஏதாவது அபிமானம் காட்டினால் அடுத்து வருகிற எஜமானன் கல்நெஞ்சுடன் நசுக்கிவிடுகிறான். அபிமானம். காட்டவில்லையானால் அதே எஜமானன் திரும்பவும் வந்தால் அப்படியே செய்து விடுகிறான். மற்றும் சிப்பந்திகள் தங்கள் கடைமையை நிர்தாட்சண் ணியமாய் ஒருநிலையாய் செலுத்துவதானால் எஜமானாய் இருப்பவன் பொது ஜனங்களின் சாடியைக் கேட்டுக்கொண்டு கொடுமைப் படுத்தி
விடுகிறான்.
ஆதலால் சிப்பந்திகள் சமயத்துக்குத் தகுந்தபடி நடந்து தங்கள் பணத்தை பெருக்கிக் கொள்வதிலேயே கருத்துள்ளவர்களாகிவிடுகிறார்கள்.
ஸ்தல ஸ்தாபனங்கள் நகர பரிபாலன சபைகள் ஒழுங்குபட வேண்டு மானால் சிப்பந்திகள் எல்லாம் சர்க்கார் சிப்பந்திகள் ஆகவேண்டும். சிப்பந்தி
கள் விஷயத்தில் நகரபரிபாலன சபைத் தலைவர்களுக்கு சிறிதும் அதிகாரம் இருக்கக்கூடாது. இதுபோல் இத்துறையிலும் பல மாறுதல்கள் ஏற்பட வேண்டியிருக்கிறபடியால் பொதுவில் இன்றைய நிலையில் ஸ்தல ஸ்தாப னங்களை எடுத்துவிட்டு, சர்க்கார் மேல்பார்வையில் பொது ஜனங்களுக்கு ஜவாப்தாரித்தனமுள்ள முறையில் நடத்தப்படுவதே கூடியவரை மேலான தென்று சொல்லலாம். தோழர்களே நான் இன்று எடுத்துக்கொண்ட விஷயத்தில் சரியாய் பேசியதாக எனக்குத் திருப்திப்படவில்லை. எவ்வ ளவோ நிர்பந்தங்களுக்கிடையில் பேசியிருக்கிறேன்.
ஆனால் தோழர் கலியாணசுந்திர முதலியாருடன் வந்து உங்கள் முன்னிலையில் பேச நேர்ந்ததைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கூட்டங்களில் கெட்ட பேர் உண்டு. அதை மாற்றிக்கொள்ள வேண்டு மென்கின்ற ஆசையே முதலியாருடன் வந்துபேசினேன். பூவுடன் சேர்ந்து நாறும் மணம்பெற்றது என்பது போல் அவரோடுவந்து பேசியதில்
குடி அரசு - 1933 (2 276
நான் சரியாய் என் அபிப்பிராயங்கள் முழுவதும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஒரு அளவுக்கு எனக்கு மிகவும் சந்தோஷமே. இவ்வளவு நேரம் நீங்கள் பொறுமையாய்க் கேட்டதற்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:- 10.12.1933 இல் திருப்பூர் யுனிவர்சல் எலக்ட்ரிக் திரையரங்கில். நடைபெற்ற திருப்பூர் முனிசிபல் உத்தியோகஸ்தர் முதலாவது ஆண்டுவிழாவில். ஆற்றிய உரை.
புரட்சி - சொற்பொழிவு - 17.12.1933
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
ஆணஸ்திகணா? - நாஸ்திகணா?
- சித்திரபுத்திரன்
நாஸ்திகன்:- “பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவை விடுதலை செய் விக்க வேண்டும்” என்று பேசுகிற, பாடுபடுகிற தேசாபிமானிகள், தேசிய வாதிகள், தேச பக்தர்கள் ஆகியவர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?
ஆஸ்திகன்:- ஆஸ்திகர் என்றால் என்ன?
நா சர்வ சக்தியும் சர்வ வியாபகமும் உள்ள சர்வேஸ்வரன் ஒருவன் உண்டு. உலகம் முழுமையும் உண்டாக்கி ஆண்டு வருகிறான். அவ(னது சித்தம்) னன்றி ஒரு அணுவும் அசையாது என்கின்ற முடிவை உடையவர்கள்.
ஆர நாஸ்திகர் என்றால் என்ன?
நா:- மேற்கண்ட முடிவை ஒப்புக் கொள்ளாதவர்கள். ஆகவே
“பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும்” என்ற தேச பக்தர்கள் முதலிய வர்கள் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா?
ஆர-பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின்றவர்களுக்
கும் ஆஸ்திக நாஸ்திகத்துக்கும் என்ன சம்பந்தம்?
நா- சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள கடவுளின் திருச்சித்தமில்லாமல் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்திருக்க
முடியுமா?
ஆ:- ஒரு நாளும் வந்திருக்க முடியாது.
நா:-அப்படிப்பட்ட கடவுளுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கம், இந்தியாவுக்கு மிக மிக இன்றியமையாத அவசியம் என்ற முடிவேற்படாமல் திருச்சித்தம் ஏற்பட்டிருக்குமா?
குடி அரசு - 1933 (2 278
ஆஃ ஏற்பட்டிருக்காது. B அப்படியானால் சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வஞ்ஞத்துவம் உள்ள ஒரு கடவுளுடைய முடிவுக்கும் திருச்சித்தத்திற்கும் விரோதமாக இந்தியாவில் இருந்து பிரிட்டிஷாரின் ஆதிக்கம் ஒழிந்துவிட வேண்டு மென்று கருதுவதும் முயற்சிப்பதும் கடவுளுடைய சர்வசக்தி... முதலிய வைகளை நம்பாமலா அல்லது கடவுளின் அப்படிப்பட்ட சக்திகளுடன் எதிர்த்து போட்டிபோட்டுப் பார்க்கவா?
ஆஃ:- கடவுளின் சர்வ சக்தியை நன்றாய் அறிந்து தினமும் கடவுளிடம் பேசும் மகாத்மா காந்திகூட இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்கவேண்டுமென்று தானே கருதுகிறார்.
நா:- அது வேறு சங்கதி. உம்மைக் கேட்டதற்கு நீர் பதில் சொல்லும்.
ஆஃ எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. காந்தியார் வரப்போகிறார். அவரைக்கேட்டு நான் பதில் சொல்லுகிறேன்.
நா:- உன் சங்கதியே அதாவது நீ நாஸ்திகனா? ஆஸ்திகனா? என்கின்ற சங்கதியே உனக்குத் தெரியாமல் திண்டாடுகிற நீ, சுயமரியாதைக் காரர்கள் நாஸ்திகர்கள் என்று சொல்லுவது மடத்தனமும் போக்கிரித்தனமு மான காரியமா இல்லையா? அல்லது இவ்விரண்டிலொன்றா இல்லையா? ஆதலால் இந்த சங்கதிக்கு சரியான பதில் தோழர் காந்தியிடமிருந்தோ அல்லது அவரது பாட்டனாரிடமிருந்தோ தெரிந்து வந்து எனக்குச் சொல்லு கின்ற வரையில் “சு.ம. காரர் நாஸ்திகர்” என்று எங்காவது, மூலை முடக்கு களிலாவது, சந்து பொந்துகளிலாவது பேசுவாயேயானால் உன்னைப்போல் அயோக்கியன், இழிதகமை உள்ள மனிதன் அற்பன், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்ட வஞ்சகன் வேறு யாரும் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்.
புரட்சி - உரையாடல் - 17.12.4933
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
இணிப் பலிக்காது
சர்ச்சும் கண்ணியா மடமும் பணக்காரர்களும்
- சித்திரபுத்திரன்
ஸ்பெயின் தேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் சோம்பேரி. மடங்களுக்கும் ஏமாற்றுக்கூட்டத்திற்கும் யோக்கியக் கூட்டத்திற்கும் சரியான ஆபத்துகள் வந்திருக்கின்றதை பத்திரிக்கை சேதிகளில் காணலாம். அதாவது ஸ்பெயின் தலைநகராகிய மேட்ரிட் நகரில் இருந்து கிருஸ்த்துவ கோயில்கள் என்னும் சோம்பேரி மடங்கள் இடிக்கப்பட்டும் கன்யாமாடங் கள் என்னும் ஏமாற்றுக் கூட்டத்தாரின் மடங்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டும் பணக்காரர்கள் என்னும் அயோக்கியக்கூட்டம் உயி ரோடு ஒரு கட்டிடத் திற்குள் அடைந்து நெருப்பு வைத்துக்கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் வருவதாக அறிவிக்கப்படுகின்றது.
கோயில்களில் கடவுள் இருப்பதாகவோ அல்லது அவைகள் கடவுள் பிரார்த்தனைக்காக ஏற்பட்டவைகளாகவோ இருக்குமானால் கன்னிகா ஸ்திரீகள் கடவுள் சேவை செய்பவர்களாகவோ அல்லது கடவுளுக்கு ஆக ஒழுக்கமுள்ளவர்களாக நடப்பவர்களாகவோ இருப்பார்களானால்-பணக் காரர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த நற்கருமங்களால் செல்வம் பெற்ற வர்களாகவோ அல்லது கடவுளின் திருச்சித்தால் செல்வம் அடைந்த வர்களாகவோ இருப்பார்களேயானால் இவைகள் முறையே இடிபடவும் நெருப்பு வைத்து எரிக்கவும், உயிருடன் அடைந்து கொள்ளி வைத்துக் கொளுத்தவும் ஆன நிலைமை ஏன் ஏற்படுகிறது என்பது நமக்கு விளங்க வில்லை. உண்மையிலேயே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகின்ற
வர்கள் இச்செய்கையை கண்டபின் கோயில்கள் கன்யாமாடங்கள் பணக் காரர்கள் ஆகியவை உலகில் இருப்பதற்கு கடவுளுக்கு இஷ்டமில்லை. ஆதலால் அவைகள் கொளுத்தப்படுகின்றன என்று எண்ண வேண்டும். அல்லது புரட்சிகாரர்கள் கடவுளைவிட சக்தியுடையவர்கள் அதனால்தான் இவைகளை கொளுத்த நினைத்தார்கள் என்று சொல்லவேண்டும். அப்படிக் கில்லாமல் தொட்டதற்கெல்லாம் இது வேத விரோதம் இந்துமத விரோதம் என்கின்ற பூச்சாண்டிகள் இனிப்பலிக்காது.
புரட்சி - செய்தி விளக்கக்குறிப்பு - 17.12.1933
குடி அரசு - 1933 (2 280
ஈர்ணைனும் வராது உடமையும்
தோழர் ஜவர்லால் அவர்கள் தனது அரசியல் கொள்கையை விளக்கி பிரிட்டீஷ் ஜனங்களுக்குத் தெரியச் செய்வதற்காக ஒரு லண்டன் நிருபருக்கு எழுதிய கடிதத்தில் பொதுவுடமைக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக
வும், ஆனால் இப்போது ஜனங்கள் எல்லோரும் பொதுவுடமை எனக் கருதும் கொள்கையைத் தான் ஆதரிக்கவில்லை என்றும், அத்தகைய பொது வுடமைக் கட்சியைத் தான் சேர்ந்தவரல்லவென்றும் குறிப்பிட்டிருப்பதாக ராய்ட்டர் தந்தி கிடைத்திருக்கிறதாகப் பத்திரிக்கைகளில் காணக் கிடக்கிறது.
இது உண்மையானால் தோழர் ஜவார்லாலுக்கு இந்தக் குணம் காந்தியாரின். சாவகாசத்தால் ஏற்பட்ட குணம் என்றுதான் சொல்லவேண்டும். தோழர். காந்தியார் தான் இரு கூட்டத்தாரிடையும் நல்ல பிள்ளையாவதற்கு இவ் விதத் தந்திர மொழிகள் கூறி இருகட்சியாரையும் ஏமாற்றிப் பெருமை அடைவதை அனுசரித்துவருகிறார். உதாரணமாக
“வர்ணாச்சிரமதர்மம் வேண்டும். ஆனால் எனது வர்ணாச்சிரமம் வேறு” என்பார்.
“ராம ராஜ்யத்துக்காக நான் பாடுபடுகிறேன். ஆனால் எனது ராமன் வேறு” என்பார்.
“ஜாதிபாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்துவேறு” என்பார்.
“ராஜாக்கள், ஜமீன்தார்கள் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்.
“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்.
“ஏழைகள், தொழிலாளர்கள் க்ஷமமாய் இருக்கவேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்கக்கூடாது” என்பார்.
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
“தீண்டாமை ஒழியவேண்டும். ஆனால் தீண்டப்டாதவர்கள் சூத்திரர் களுக்கு சமானமாய் கருதப்படவேண்டும்” என்பார்.
“தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில்
தான் அவர்கள் இருக்கவேண்டும்” என்பார்.
இந்தப்படி எந்த விஷயங்களிலும் “ஆனால்” போட்டுத் திருப்பி விடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர். என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.
அதுபோலவே தோழர் ஜவார்லால் அவர்களும் “ஆனால்” போட வேண்டிய நிலைமைக்கு வந்துவிட்டது மிக்கப் பரிதபிக்கத் தக்கதாகயிருப் பதுடன் நமக்கு ஒருபெரும் ஏமாற்றத்தைத் தரத்தக்கதாகவும் இருக்கிறது.
தோழர் ஜவார்லால் அவர்கள் இதற்கு முன்னும் இப்படி இரண்: டொருதடவை செய்திருந்தாலும் அதாவது தனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லையென்று சொல்லிவிட்டு பிறகு தனது தகப்பனார் எலும்பைக் கங்கை.
யில் கொண்டு போய் கொட்டி தகப்பனுக்கு மோட்சத்தைத் தேடி
யிருந்தாலும்.
காந்தி-இர்வின் ஒப்பந்தத்தை முதலில் ஆட்சேபித்துவிட்டு பிறகு அதை ஒப்புக்கொண்டு பிறகு அதை “அது ஒரு ராஜி ஒப்பந்தமல்ல.. ஆனால் சண்டையில் இருகட்சியாரும் இளைப்பாறுவதற்காகச் செய்து கொண்ட மத்தியகால ஓய்வு, ஒப்பந்தம்” என்று சொல்லி யிருந்தாலும் இனி அப்படிச் செய்யமாட்டார், ஒரே உறுதியாய் இருப்பார். காந்தியாரின் தாட்சண்யத்துக்கும் கட்டுப்படமாட்டாரென்று இருந்தோம்.
இப்பொழுது அந்த நம்பிக்கை ஏமாற்றமடையத் தக்கவண்ணம் பல்டியடித்திருக்கிறார். “நான் ஒரு பொதுவுடைமைக் கொள்கைக்காரன், ஆனால் ஜனங்கள் எல்லோரும் பொதுவுடமை எனக் கருதும் பொது உடமையை நான் சேர்ந்தவனல்ல” என்று சொல்வதில் இந்திய பாமர ஜனங் களையும் வாலிபர்களையும் ஒருபுறமும், பிரிட்டிஷ் ஜனங்களையும், செல்வ வான்களையும் மற்றொருபுறமும் திருப்தி செய்யத்தக்க அம்சம்தவிர இதில் வேறு ஏதாவது சரக்கு இருக்கின்றதா என்பது நமக்கு விளங்கவில்லை.
அடிக்கடி மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளான தலைவர்களின் இவ்வித அபிப்பிராயங்களால் உண்மையும் அவசியமுமான கொள்கைகளும் அதை அமுலுக்கு கொண்டுவர முயற்சிக்கும் மக்களு டைய உழைப்பும் எவ்வளவு தூரம் பாதிக்கப்படத்தக்கதாகி விடுகின்றது என்பதை நாம் எடுத்துக்காட்டவேண்டியதில்லை. ஒரு சமயம் இவ்வித அபிப்பிராயத்தை தோழர் ஜவார்லால் அவர்கள் “தனக்கு தோன்றியதை
குடி அரசு - 1933 (2 282
வஞ்சனை இல்லாமல் வெளியிட்டிருக்கிறார். அதில் ஒன்றும் உள் எண்ணம் இல்லை” என்று சொல்லுவதானால் தோழர் ஜவார்லால் தனது பொது உடமைக் கொள்கைகள் என்பவை எவை? பொதுஜனங்களால் சொல்லிக் கொள்ளப் படுகின்ற பொது உடமைக்கொள்கைகள் என்பவை எவை? அவை இரண் டிற்குமுள்ள வித்தியாசங்கள் எவை? என்பவைகளை விளக்கி இருப்பாரானால் அது மிக்க அழகாய் இருந்திருக்கும். அப்படிக்கில்லாமல் இந்தியாவுக்கு வேண்டிய பொது உடமைக்குதானே தான் பாஷ்யக்காரர் என்பதாக ஆகவேண்டுமென்றோ அல்லது பொதுஉடமைக் கொள்கை களை குற்றமாக சர்க்கார் கருதுவார்களானால் “எனது பொதுஉடமைக்கு அருத்தம் வேறு” என்று சொல்லுவதற்கு இடம் இருக்கட்டும் என்றோ அல்லது வேறு என்ன காரணத்தாலோ இப்படிக் குழப்புவாரானால் அது மனித சமுகத்தின் முற்போக்கை எவ்வளவு பாதிக்கின்றது என்பதை யோசித்துப் பார்க்கும் வேலையை வாசகர்களுக்கே விட்டுவிடுகின்றோம்.
எந்தக்காலத்தில் அரசியல் என்னும் பேரால் இங்கிலீஷ் படித்த வக்கீல் கூட்டம் வியாபாரம் செய்யத் தொடங்கினார்களே அன்றுமுதல் இன்றுவரை: பொது வாழ்வு இந்தப்படியாகவே பாம்புக்கு வாலும், மீனுக்கு தலையுமாக காட்டும் தோரணையில் நடந்தேவந்து தேசம் முற்போக்கடைவது கெட்டுப்போனதுடன் சுமார் 25, 30 வருஷங்களுக்கு முன் இருந்த நிலை மைக்கு பின் தள்ளப்பட்டும் போயிற்று. குறைந்த அளவு காந்தியாரின் ஆதிக்கம் இந்நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லையானால் இந்தியாவில் இன்றைக்கு எவ்வளவோ பெரிய கிளர்ச்சிகள் ஏற்பட்டு ஒரு பயனுள்ளதும் பொறுப்புள்ளதுமான புரட்சி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று உறுதியாய்க் கூறுவோம். காந்தியாரின் எண்ணம், பேச்சு, எழுத்து செய்கை எல்லாம் பிற்போக்கிற்கே ஆதரவாய் இருந்திருக்கின்றதுடன் மக்களின் எழுச்சிகள். அடங்கி, சுய அறிவும் ஒடுங்கி மக்களுக்குள் மழுங்கிக் கிடந்த மத எண்ணங் களை தலைதூக்கினதுடன் வெறுக்கப்பட்டுக் கிடந்த பழமைகளும் புத்துயிர் பெற்று விட்டன. இனி நாடு முற்போக்கடையாவிட்டாலும் காந்தி காலத்தில் ஏற்பட்ட தீங்கான பிற்போக்குகள் மாறுவதற்கு இனியும் குறைந்தது 10 வருஷத்துக்காவது பலமான முறட்டு முயர்ச்சிகள் வேண்டும் என்றே சொல்லுவோம். இந்நிலையில் தோழர் ஜவார்லால் நிலைமை இப்படியானது
பற்றி எவரும் வருந்தாமலிருக்க முடியாது. நிற்க,
பொதுவுடமை என்பதுபற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை. எந்த அர்த்தத்தில் பொதுவுடமையை எடுத்துக்கொண்டாலும் அதற்கு எப்படிப் பட்ட வியாக்கியானம் செய்வதாயிருந்தாலும் பலாத்காரச் செயலில் பிரவேசமில்லாமல் பலாத்காரத்தைப் பிரசாரம் செய்யாமல் பொதுவுடமைத் தத்துவம் ஏற்பட பிரசாரம் செய்வதில் முயற்சி செய்வதில் எவ்வித தப்பித
மும் இல்லை என்பதே நமது அபிப்பிராயம். இதை சென்ற வருஷமே தெரி
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வித்து இருக்கிறோம். அதற்குப் பிறகு பல அரசாங்க உயர்தர நீதிஸ்தல தீர்ப்பு களும் தாராளமாய் இருக்கின்றன.
சென்ற வாரத்தில் கல்கத்தா பிரசிடெண்சி மேஜிஸ்டிரேட் தோழர் எஸ்.கே.சின்ஹா அவர்கள் ஒரு வழக்கில் ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார். அவ்வழக்கின் எதிரியானவர் நமது சுயமரியாதை இயக்கத்திற்கு அதன் லட்சியம் என்பதாக வகுக்கப்பட்டிருக்கும் கொள்கைகள் அவ்வளவையும் அப்படியே குறிப்பிட்டு பிரசாரம் செய்து வந்திருக்கிறார். அதை மேஜிஸ்
திரேட் அப்படியே எடுத்துத் தனது ஜட்ஜ்மெண்டில் குறிப்பிட்டு அந்தப்படி ஒருவன் பிரசாரம் செய்வது எவ்வித குற்றமுமாகாதென்றுகூறி எதிரியை விடுதலை செய்திருக்கிறார். அதை மற்றொரு பக்கம் காணலாம்.
அன்றியும் உலக செல்வங்களான பொருள்களும், பூமிகளும் பொது ஜனங்கள் எல்லோருக்கும் சொந்தமாக்கப்பட்டு அவற்றின் பலன்கள் எல்லோருக்கும் பொதுவாக சரிசமமாக இருக்கும்படி செய்வதையும் அதற்கு ஏற்றதொரு ஆட்சியை ஏற்படுத்தி நடத்துவதில் பொதுஜனங்கள் எல்லாருக்கும் உரிமை இருக்கும்படி செய்வதும் ஆன பொதுவுடைமைக் கொள்கையானது குற்றமானது என்பதாக இதுவரை எந்த அரசாங்கமும் கூற வில்லை. மேலும் உலகிலுள்ள எல்லா அரசாங்கங்களும் இக்கொள்கை யைப் பிரசாரம் செய்ய அந்தந்த நாடுகளில் இடம் கொடுத்தே வருகின்றன.
இவை ஒரு புறமிருக்க நாமும் நமது பகுத்தறிவைக் கொண்டு யோசிப்போம்.
உதாரணமாக, ஒரு தனிப்பட்ட மனிதன் சமூக வாழ்வில் எந்தக் காரணத்தினாலோ உயர்ந்த ஜாதியானாகப் பாவிக்கும் யோக்கியதையை அடைந்து சில தனி உரிமைகளை அடைந்து வருவதை இன்றையதினம்
நாம் ஆக்ஷேபித்து அப்படிப்பட்ட ஒரு தனி உரிமை யாவருக்கும் இருக்க வேண்டும் என்றும், அது எல்லோருக்கும் சரி சமத்துவமாய் இருக்க வேண்
டும் என்றும், அதன் நிருவாகம் எல்லோருக்குமே இருக்கவேண்டும் என்றும் கூறுகிறோம். இவற்றிற்கு சில சட்ட இடையூறுகள், பழக்க வழக்க இடையூறு கள் இருந்தாலும் அவைகளையும் மாற்றிப் புதிய சட்டங்களையும், புதிய பழக்கங்களையும் செய்யவேண்டுமென்கின்றோம்.
இப்படிச் சொல்வது அவ்வுயர் ஜாதிக்காரனுக்குத் துவேஷமாகவோ, அல்லது வேறு ஏதாவதொரு தப்பிதமாகவோ இருக்கின்றது என்று கருதி நாம் குற்றவாளிகளாக்கப்படுகிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
அதுபோலவே ஒரு தனிப்பட்ட மனிதன் எந்தக் காரணத்தினாலோ ஒரு நாட்டை லட்சக்கணக்கான ஜீவன்களையும், ரூபாய்களையும் பறி கொடுத்து ஜெயித்து அரசனாகி ஏக சக்கிராதிபதியாகி அந்நாட்டின் மீது ஆதிக்கம் பெற்று வெகுகாலமாக ஆட்சி செலுத்தி பெருமையடைந்து
குடி அரசு - 1933 (2 284
வருவதை இன்று நாம் ஆக்ஷபித்து “ஒரு நாட்டை ஆளும் பொறுப்பு அந்த நாட்டு ஜனங்களாகிய எங்கள் எல்லோருக்கும் இருக்கவேண்டுமே ஒழிய சண்டையிட்டு ஜெயித்து விட்டதினாலேயே ஒரு தனிப்பட்ட மனிதன் அந்நாட்டை தனக்கு சொந்தமென்று ஆளுவது-அதிகாரம் செலுத்துவது என்பவை எங்களுக்கு இஷ்டமில்லை. ஆதலால் அதை மாற்ற நாங்கள். கிளர்ச்சி செய்வோம், புரட்சி செய்வோம், அதற்கு ஏற்ற சட்டங்கள் செய்து கொள்ளவும் முயற்சிப்போம். இதை யார் தடுத்தாலும் அத்தடுப்புக்கு நாங்கள். கட்டுப்படமாட்டோம்” என்று சொல்லுகின்றோம்.
இப்படிச் சொல்லுவது இன்று எந்த சட்டத்திற்கு உள்பட்டது? அல்லது எந்த சட்டப்படி குற்றமாகப் பாவிக்கப்படுகின்றது. இதை எந்த அரசாங்கம் துவேஷமாகக் கொள்ளுகிறது? ஏதாவது ஒரு அரசாங்கம் துவேஷமாகக் கொள்ளுகின்றது என்றாலும் அதற்காக எல்லோரும் பயந்து அக்கிளர்ச்சியை விட்டுவிடுகிறோமா?
அதுபோலவே தான் ஒரு தனி மனிதன் எந்தக் காரணத்தினாலேயோ செல்வங்கள் தன் கைக்கு வரும்படியான முறைகள் செய்து நாட்டு மக்கள் பாடுபட்டு உழைக்கும் பயன்கள் தனக்கு வந்து சேரும்படியான ஏற்பாடு செய்து அதன் மூலம் ஒருவன் பொருளும், பூமியும் சேர்த்துப் பணக் காரனாகிவிட்டால் அந்தச் செல்வத்தைப் பொது ஜனங்கள் பார்த்து “அது எங்களுடைய செல்வம், நாங்கள் பாடுபட்டதால் நீ சேர்த்துக்கொள்ள முடிந்
தது. ஆதலால் எங்கள் எல்லோருக்கும் அதில் அனுபவமும் ஆதிக்கமும் இருக்க வேண்டுமென்று சொன்னால், அல்லது அதற்கேற்ற சட்டங்கள் செய்ய வேண்டுமென்று சொன்னால் இது எந்த சட்டப்படி குற்ற மாகும்? இதை யார் எப்படி ஆக்ஷபிக்க முடியும்? என்பது நமக்கு விளங்கவில்லை.
உலக வாழ்க்கையின் எந்தக் கொள்கையையும், எந்த திட்டங்க ளையும், எந்த அனுபவங்களையும் புரட்டி, அல்லது மாற்றி அமைத்துக் கொள்ளவும் அனுபவத்தில் கொண்டுவரவும் மனித சமூகத்திற்கு உரிமை யுண்டு என்பதை யாரும் ஆக்ஷேபிக்க முடியாது. ஆளும் மனிதனுக்கும், ஆளப்படும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படியோ அப்படித்தான் செல்வவான்களுக்கும், பாட்டாளிகளான ஏழை மக்களுக்கும் உள்ள சம்பந்தமாகும்.
ஒரு கொடுங்கோல் அரசன் எப்படி தனது ஆட்சிக்குப் பீரங்கியை
யும், துப்பாக்கியையும், வெடிகுண்டையும், பட்டாளத்தையும் காவலாக வைத்திருக்கிறானோ அதுபோல்தான் ஒரு செல்வவான் தனது செல்வத் துக்குக் கச்சேரி யையும், சிறையையும், போலீசையும் ஆதரவாய் வைத் திருக்கிறான். ஒரு கொடுங்கோலரசை ஒழிப்பதற்கு எப்படி நாம் பீரங்கியை
யும், துப்பாக்கியையும், வெடிகுண்டையும் கையாளுகின்ற மக்களைக் கூப்பிட்டு “தோழர்களே அரசர்கள் சொல்படி கேளாதீர்கள். இனி இதில்
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
சம்பந்தப்படாதீர்கள். விலகி எங்களுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். கடைசி
யில் நம் எல்லோருக்கும் பொறுப்பும் பங்கும் பெறலாம்” என்று சொல்ல வேண்டுமென்கிறோமோ அதுபோல்தான் தனிப்பட்ட மனிதனின் செல்வத் தன்மையை ஒழிப்பதற்கும் அதை பொதுவாக்குவதற்கும் அதே போன்ற வழிகளைப் பின்பற்ற வேண்டியதாகும்.
அதுபோல்தான் உயர்ந்த ஜாதி என்னும் பேரால் தனிப்பட்ட உரிமை களை அடைந்து வருவதையும் ஒழிக்க அப்படிப்பட்ட வழிகளை பின் பற்ற வேண்டியதாகும். இவைகளை எல்லாம் எந்தக் காரணத்தை முன் விட்டும் குற்றம் என்றோ சட்ட விரோதமான காரியம் என்றோ சொல்லிவிட
முடியாது.
ஆதலால் மனிதசமூக வாழ்க்கையில் மாறுதல்களைச் செய்வதிலும்
புதிய வாழ்க்கை முறைகளைப் புகுத்துவதிலும் மனித சமூகத்துக்குப் பூரண: சுதந்திரம் உண்டு என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் இருத்தவேண்டும் என்பது நமது அபிப்பிராயம். அதற்கு இடமில்லாத மனிதசமூகத்தை சுயமரியாதை அற்ற சமூகம் என்றேதான் சொல்லவேண்டும்.
ஆனால் இப்படிப்பட்ட காரியங்களால் உயர்நிலையில் இருப்பவர் களுக்கு அதிருப்தி ஏற்படலாம். அதனால் எதிர்ப்பும் ஏற்படலாம். இவை
யும் இயற்கையேயாகும். அப்படிப்பட்ட அதிருப்திகள் எதுவும் நீடித்து
நிற்காது. ஒரு அரைத் தலைமுறைக்குள் அவ்வதிருப்திகள் மறைந்து விடும். பிறகு உலக சுபாவமே - வாழ்க்கை முறையே இப்படித்தான் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்டுவிடும். பிறகு அதிருப்தியோ எதிர்ப்போ ஆன காரியங்களுக்கு இடமே இருக்காது.
ஆதலால் இதற்காக யாரும் பயப்பட வேண்டியதில்லை. பின் வாங்க
வும் வேண்டியதில்லை.
புரட்சி - தலையங்கம் - 17.12.4933
குடி அரசு - 1933 (2 286
ஏன் சுயமரியாதை இயக்கத்தில்
€சோவேண்டும்?
1 அது ஒன்றேதான் மக்கள் சமூகவாழ்வில் ஒருவருக்கொருவர். எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக்கூடாது என்று கூறி சமதர்மத்துக்கு போராடுகின்றது.
2 அது ஒன்றேதான் மனிதசமூகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன் ஏழை என்கின்ற வித்தியாசம் இல்லாமல்
எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
3.அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
4 அது ஒன்றேதான் மனிதசமூகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம்,
கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக நேய, ஒருமையே வேண்டும் என்று கூறி சமதர்மத்திற்குப் போராடுகின்றது.
அது ஒன்றேதான் உலகில் உழைப்பாளி என்றும், முதலாளி
என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்
களும் சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரிசமமாக அனுப விக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
6.அது ஒன்றேதான் ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும் எவ்விதத்
தும் அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகிய வைகளுக்கு இணங்கி நடக்க சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று கூறி சமதர்மத்துக்குப் போராடுகின்றது.
புரட்சி - பெட்டிச் செய்தி - 17.12.1933.
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
வடநாட்மல் சுயமரியாதை வற்றி
மத்திய மாகாணம், பீரார் ஆகிய இருமாகாணங்களின் தொழிலாளர் கள் விவசாயிகள் கட்சி (The workers and Peasants’ யென்று சமதர்மத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டி
ருக்கிறது. இதன் காரிய நிர்வாக கமிட்டி அங்கத்தினர்களாக பிரபல தொழிற்
சங்கத் தலைவர்களும், சோஷியலிஸ்ட் தலைவர்களுமாக பலர் இருக்கின்ற னர்.முக்கியமாக குறிப்பிடத்தக்க நாகபுரி தோழர் ஆர்.எஸ் ராய்க்கர் எம்.ஏ. எல்.எல்.பி. அவர்களும், அம்ரோதி பி.ஜி.தேஷ்பாண்டே அவர்களும் பெரிதும் இதில் அதிக ஊக்கமெடுத்து உழைக்கின்றார்கள். நமது சுயமரியாதை லட்சியத்தின் வெற்றிக்கு இதுவும் எடுத்துக் காட்டாகும்.
புரட்சி - செய்தி விளக்கம் - 17.12.1933
குடி அரசு - 1933 (2 288
தமிழ் அண்பர் மகாநா௫
அதிகாரிகள் மறுப்பு
தமிழன்பர் மகாநாடு என்ற பார்ப்பனர் சூழ்ச்சி மகாநாட்டு சார்பில் நடைபெறப் போகிற புத்தகக் காட்சியை திறந்து வைப்பதாக வெளியிட்டி ருந்த கல்வி இலாக்கா தலைவர், டைரக்டர் ஆப் பப்பிளிக் இன்ஸ்ட்ரஷன்
என்னும் அதிகாரியானவர் இப்போது மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் அவருக்கு பதிலாக இராமநாதபுரம் இராஜாவை அந்தக் காட்சியை திறந்து வைக்கக் கேட்டு அவர் ஒப்புக்கொண்டிருப்பதாக பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே மிகச்சிறு வயதுள்ளவரான ஒரு பெரியாரைத் தேடிப்பிடித்தது மிக புத்திசாலித்தனமான காரியமென்பதற்காக பாராட் டுகிறோம்.
புரட்சி - செய்தி விளக்கம் - 17.12.1933
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
° i. cdui “I” ப் லம்
பற் & கூடம் குழப்பத்தில் .
காந்தி-சுயமரியாதைக்காறர் பேட்ட
தோழர் காந்தி சென்னைக்கு விஜயம் செய்ததானது பெரிதும் அலங் கோலத்தில் முடிந்ததாகத்தெரிகிறது. பொது ஜனங்கள் காந்தியை வரவேற்க விரும்பவில்லை என்பதை சந்தேகமற வெளிப்படுத்தி விட்டார்கள். ஆதிதிராவிடர் குடியிருக்கும் பல இடங்களிலும் கருப்புக் கொடிகளும், காந்தி பகிஷ்கார விளம்பரங்களும் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
சென்ற 20 ௨ மாலை சென்னை கடற்கரையில் காந்தியாரை: வரவேற்க கூட்டப்பட்ட கூட்டம் குழப்பத்திலும் கூக்குரலிலுமே முடிந்த
தாகத் தெரிகிறது. அன்று மாலை ஏறக்குறைய நாற்பதினாயிரம் பேர் சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடியிருந்ததாகவும் முதலிலி ருந்தே அமளி ஏற்பட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அந்தக் கூட்டத் தைப்பற்றி பத்திரிகைகளில் காணப்படும் விபரங்களைக் கவனித்தால் காந்தியார் சென்னையில் பட்ட அவதியை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
“தமிழ் நாடு” பத்திரிகையில் அந்தக்கூட்டத்தைப்பற்றி காண்ப்படும் விபரத்தின் சாரம் வருமாறு - “கூட்டம் குழப்பத்திலும், பெண்கள் குழந்தை
கள் துயரத்திலும் முடிந்தது. அனேக பெண்களும் குழந்தைகளும் கூட்டத் தில் மிதிபட்டும் நசுக்குண்டும் காயங்கள் அடைந்ததாகவும், அனேகர். தங்கள் பணம் துணிமணி நகைகளை தவறவிட்டதாகவும் தெரிகிறது. கூட் டத்தை சமாளித்து அமைதியை உண்டு பண்ண தொண்டர்கள் செய்த முயற்சியெல்லாம் வீணாயிற்று, தொண்டர்கள் ஜனங்களை பின்னால்
பிடித்துத் தள்ளுவதும் ஜனங்கள் தொண்டர்களை பின்னால் பிடித்துத் தள்ளு வதுமாக இருந்தனர். அனேக தொண்டர்களுக்கு கூட்டத்தில் அடியும் கிடைத்தது. ஒரு தொண்டருக்கு கன்னத்தில் செருப்படியும் கிடைத்தது. தோழர் சத்தியமூர்த்தி கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்டு தனது தலைப் பாகை முதலியவற்றை பறிகொடுத்துவிட்டார். தொண்டர்கள் அவரைக் கூட்டத்திலிருந்து விடுவித்து அழைத்துச் சென்றனர். நிலைமை அதிக. மோசாகிவிட்டது. தோழர் காந்தி அனைவரையும் அமைதியாக இருக்கக்
குடி அரசு - 1933 (2 290
கேட்டும் அமைதி ஏற்படவில்லை. சிலர் கூட்டத்தில் மணலை வாரி எறிந்தனர். காந்தியார் ஐந்து நிமிட நேரம் பேசின பின் கூட்டத்தை விட்டுச் சென்று விட்டார். அதன் பின்னும் கூட்டம் கலையாமல் ஜனங்கள் மேடைப் பக்கமாக ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு வந்தார்கள்”.
ஜஸ்டிஸ் பத்திரிகை இந்தக் கூட்டத்தைப் பற்றிய செய்திகளைப்
பிரசுரித்திருப்பதில் ”. அது வரவேற்பு கூட்டமா அல்லது பகிஷ்காரக் கூட்டமா” என்று தலைப்புக்கொடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. காந்தியார். பேசுகையில் போலீசார் அங்கு சேர்ந்தனர். அவர்களாலும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.ஆகையால் கூட்டத்தை கலைத்துவிட வேண்டிய தாயிற்று. காந்தியார் மிகவும் கஷ்டத்துடனே தமது மோட்டார் வண்டிக்கு போய் சேர்ந்தார் என்று ஜஸ்டிஸ் பத்திரிகை கூறுகிறது.
“காந்தியார் கூட்டத்துக்குள் போவதற்குள்ளும், வெளியே போவதற் குள்ளும் அவர் பிழைத்து வெளியேறுவாரா என்ற திகில் பலருக்கு இருந்து கொண்டே இருந்தது. பிரசங்கம் முடிந்து திரும்பும்போது அவர்கள் தடுமாறி இரண்டுதரம் தன்னுடன் வந்த நண்பர்கள் மீது சாய்ந்துவிட்டார்”” என்று ஜெயபாரதி தனது தலையங்கத்திலே கூறுகிறது.
மேலும் குழப்பத்தில் முடிந்த இந்தக் கூட்டத்தைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை எழுதியிருக்கிற தலையங்கத்திலே, “மகாத்மாகாந்தி ரயில் வண்டி
யில் வந்து இறங்கியது முதல் நடைபெற்ற சகல கூட்டங்களிலும் கஷ்டமும், கலவரமுமே அதிகமாயிருந்து வருவதை யாவரும் கவனிக்கவேண்டும்” என்று எழுதியிருப்பது கவனிக்கதக்கது.
தோழர் காந்தி தமிழ்நாட்டில் காலடி வைத்தது முதல் அவர் சென்ற இடங்களில் எல்லாம் பொதுஜனங்களிடை கச்சலும், குழப்பமும், கஷ்ட
மும் கலவரமுமே ஏற்பட்டுவருகின்றன. இனிமேல் அவர் போகிற இடங் களில் ஜனங்களுக்கு என்ன துயரம் நேரிடுமோ என்ற சந்தேகம் உதய
மாகின்றது..
சென்ற 22-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 6-30மணிக்கு தோழர்கள் எஸ். ராமநாதன், எஸ். குருசாமி, குஞ்சிதம், கே.எம். பாலசுப்பரமணியம் அ. பொன்னம்பலம், ப.ஜீவானந்தம், சகுந்தலா, காந்தம் முதலிய பல தோழர்.
கள் சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பந்துலு வீட்டுக்கு சென்று காந்தியாரை கண்டு பேசினார்கள். சுயமரியாதை தோழர்கள் கேட்ட கேள்வி களுக்கு காந்தியார் சரியான பதில் கொடுக்காமல் “நான் எனக்கு தெரிந்தபடி
பிரசாரம் செய்கிறேன். நீங்கள் உங்கள் இஷ்டப்படி பிரசாரம் செய்யுங்கள்” என்று சொன்னதாகத் தெரிகிறது. அந்த விபரங்கள் அடுத்த வாரம் வெளி வரும்.
புரட்சி - கட்டுரை - 24.12.1933.
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
காந்தி பிரசாரம் பார்ப்பண சூட்சியே
காந்தி பகிஷ்காரக் கிளர்ச்சிகளைப்பற்றி குற்றமாகவும், பரிகாசமாக
வும் பாமர ஜனங்களை நினைக்கச் செய்ய, பார்ப்பனப் பத்திரிக்கைகள் கட்டுப் பாடாக சூட்சி செய்கின்றன.
இதற்கு ஆதாரமாக அவைகள் எழுதிக்காட்டும் ஒரே ஆதாரம் என்னவென்றால் காந்தியை சனாதன தர்மிகளும் பகிஷ்கரிக்கிறார்கள். அரசாங்கத்தாரும் பகிஷ்கரிக்கிறார்கள்.அதுபோலவேதான் சுயமரியாதைக் காரர்களும் பகிஷ்கரிக்கிறார்கள் என்று பல்லவி ஆரம்பித்து மூன்று பேரை:
யும் ஒன்றாக்கி இவைகள் ஏதோ சுயநலம் என்றும் வைத்து பிரமாதமான பொதுநலத்துக்கு விரோதமாய் ஏதோ பெரிய அக்கிரமம் செய்கிறார்கள் என்று படும்படியாக எழுதிவருகிறார்கள். இதுபரம்பரை வழக்கம்போல் பார்ப்பன தந்திரமே ஒழிய வேறில்லை என்பதை பார்ப்பனரை அறிந்தவர்.
கள் யாவரும் அறிவார்கள். ஆங்கிலோ இந்திய சர்க்கார் காந்தி விஜயத்திற்கு அனுகூலமாகச் சகல ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்கள் என்பதை ஜனங்களுக்குத் தெரியாது என்று கருதி இப்படி எழுதுகின்றனபோலும். சர்க்
காரார், சர்க்கார் அதிகாரிகளை மாத்திரம் அதில் கலந்துகொள்ள வேண்டா மென்று சொல்லுகின்றார்களே யொழிய ஜனங்கள் காந்தியைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்ல வில்லை. இது சர்க்காரின் தந்திரமேயாகும்.
காந்தியார் பிரிட்டிஷ் சர்க்காருக்கு இதுவரை யாதொரு கெடுதியை
யும் உண்டாக்கிவிடவில்லை; உண்டாக்க நினைத்ததும் இல்லை. அன்றியும் அவர் இச் சர்க்காரை நிலைநிறுத்தப் பாடுபடுகின்றவர். அதோடு மாத்திர மல்லாமல் சர்க்காரின் ஒற்றரும் ஆவார். இதை முன் எத்தனையோ தடவை
நாம் எழுதி வந்திருக்கிறோம்.
தோழர் காந்திக்கு எவ்வளவு விளம்பரம் கொடுத்து அவரை எவ் வளவு பெரிய தேசபக்தறாக்க வேண்டுமோ அவ்வளவுக்கு அவரை உயர்த்தி உலக மதிப்பேற்படுத்தி வந்திருக்கிறார்கள்.
காந்தியார் இல்லாமல் இருந்திருப்பாரானால் 5, 6 வருடங்களுக்கு முன்பாகவே பாமரமக்களுக்கு ஓரளவாவது ஆதிக்கம் வர மார்க்கம்
குடி அரசு - 1933 (2 292
ஏற்பட்டிருக்கும். அப்படிக்கில்லாமல் முதலாளிமார்களுக்குத் தாசராய் இருந்து முதலாளிமார்கள் ஆதிக்கம் ஒருசிறிதும் குறையாமல் இருக்கத் தக்க வண்ணம் ஒப்பந்தம் பேசிக்கொண்டு அதற்குத் தகுந்தபடியே பேசியும், எழுதியும் வந்ததின்பயன் எல்லாம் சர்க்காருக்கு அனுகூலமாகி சர்க்காருக்
குப் பலமும் ஏற்பட்டுவிட்டது. இந்தக் காரணங்களாலேயேதான் காந்தியாருக்குச் சர்க்கார் இவ்வளவு மதிப்பும். தனி மரியாதையும் கொடுத்து
வருகிறார்கள். “தோழர் காந்தியுடன் சர்க்கார் நல்ல சமயத்தில் ராஜிசெய்து கொள்ள மறுத்து விட்டார்கள்” என்று பல தேசீயப் பத்திரிக்கைகள் சர்க்காரை குறைகூறி பிதற்றுகின்றன. அது உண்மையறியச் சக்தியற்ற தன்மையேயாகும். அல்லது ஜனங்களை ஏமாற்றச் செய்யும் சூட்சியாகும். சர்க்காருக்கு டெல்லி ஒப்பந்தம் போல் காந்தியாரிடம் ஒரு பயனற்ற ஒப்பந்
தம் செய்து கொண்டு அதனால் காந்திக்கும் வெற்றி ஏற்பட்டது என்கின்ற பெயர் உண்டாவதற்கும் இடம் கொடுத்து தேச பக்தர்களையும், தேசீயப் பத்திரிக்கைகளையும் “காந்திக்கு ஜே” என்று கூப்பாடுபோட்டு “காந்தி வெற்றி பெற்றார் சர்க்கார் தோல்விய டைந்தார்'” என்று சொல்லிக் கொண்டி ருக்கும்படி செய்ய சர்க்காருக்குத் தெரியாமல் போகவில்லை. ராஜிபேச ஒப்புக்கொள்வதால் காந்தியார் ஏதோ பெரிய பெரிய பிரச்சினைகளை வற்
புறுத்தி சர்க்காருக்கு ஆபத்து வரும்படி யான திட்டங்களைக் கொண்டுவந்து போட்டு கஷ்டப்படுத்துவார் என்கின்ற பயம் சர்க்காருக்கு ஏற்பட்டு அத னால் ராஜியை மறுத்தார்கள் என்று புத்தி உள்ளவர்கள் சொல்லிவிட முடி யாது. ஏனெனில் பாமர மக்களின் நன்மைக் கும் சுதந்திரத்திற்கும், காந்தி கொள்கைக்கும் வெகு வித்தியாசம் உண்டு என்பது சர்க்காருக்கு நன்றாய் தெரியும். ஆனால் வேறு காரணம் என்ன என்று கேட்கலாம். அக்காரணம். என்னவென்றால் காந்தியாரிடம் பேசிச் செய்து கொள்ளும் ராஜியானது பொது ஜனங்களால் ஒப்புக்கொள்ளப்படுமா? காந்தியாருக்கு அவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா? காந்தியின் பிரதிநிதித்துவத்தை எல்லா ஜனங்
களும் ஏற்றுக்கொள்ளுவார்களா? என்கின்ற பயமும் சந்தேகமுமேயாகும்..
ஏனெனில் காந்தி - இர்வின் ஒப்பந்தமே சந்தி சிரித்து விட்டது. அதை காந்தி ஒப்புக்கொண்டதாலேயே வாலிப உலகில் காந்தியாரின் பெருமை மிக மிகக் குறையத் தலைப்பட்டு விட்டது. தோழர்கள் ஜவகர்லால் நேருவும், போசும் மற்றும் பலரும் அப்பொழுதே ஆக்ஷபித்து விட்டுப் பிறகு காந்தியாரின் செல்வாக்குக் குறைந்து விடுமே என்பதற்காக காந்தியாரின் தனி நலத்தை உத்தேசித்து ஒப்புக்கொண்டவர்கள் போல நடித்தார்கள். ஆதலால் அது போலவே இந்த ராஜியும் ஆகிவிடும் என்கின்ற பயத்தினாலேயே சர்க்கார் ஒரு ராஜி பேச்சு நாடகம் நடிக்க காந்தியாருக்கு இடம் கொடுக்க வில்லையே தவிர வேறில்லை.
அதுபோலவே தான் வருணாச்சிரம சனாதன தர்மிகளும் காந்தியார். வார்த்தையைத் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற்பட்ட மக்களும் ஒப்புக்
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
கொள்ள வேண்டும் என்பதற்காக பல தந்திரங்கள் செய்வதில் காந்தியாரை
எதிர்ப்ப தாகவோ, பகிஷ்கரிப்பதாகவோ வேஷம் போடுவதும் ஒன்றாகுமே தவிர வேறில்லை. இதன் உண்மையை அறியவேண்டுமானால் 18-12- 33ந்தேதி “சுதேசமித்திரன்” 3-வது பக்கம் 4-வது கலம் “காந்தியாரின் சென்னை விஜயம்” என்ற தலைப்பில் காந்தி விஜய நிகழ்ச்சிக் குறிப்பு விவரத்தில் காந்தி யாரை சனாதனப் பிரமுகர்கள் அழைத்திருப்பதையும் காந்தியார் ஒப்புக் கொண்டால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வதை
யும் பற்றிய ஒரு அறிக்கை இருப்பதையும் காணலாம். ஆனால் இந்த அறிக்கைக்கு “காந்திஜீக்கு அறைகூவல்” என்ற தலைப்பெயர் கொடுத் திருப்பது மாத்திரம் பார்ப்பன சூழ்ச்சியாகும். ஏனெனில் மற்றவர்கள் இந்த ரகசியத்தை அறிந்து விடுவார்கள் என்ற பயத்தினாலேயாகும். இவ்வறிக்கை
யில் பல சனாதன பிரமுகர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதோடு ஒரு சங்கராச்சாரி யாரும் விஜயம் செய்வார்என்றும் கண்டிருக்கிறது.
ஆகவே இந்த சூழ்ச்சிகள் எல்லாம் யாரை ஏமாற்றுவதற்கு என்பதை
யாரும் சுலபமாய் உணரலாம்.
மேலும் காந்தி நிதிக்குப் பணம் கொடுத் திருப்பவர்களையும், காந்தி விஜயத்தை நடத்தி நிர்வாகம் செய்கின்றவர் களையும் யார் என்று பார்த்தால் இவை பார்ப்பன ஏற்பாடா? இல்லையா? என்றும் தெரிந்து கொள்ளலாம். இதை பற்றிமுன் ஒரு தடவையும் எழுதியிருந்தோம். ஆனாலும் மற்றொரு தரமும் ஞாபகப்படுத்துகிறோம்.
நிற்க, காந்தி பண்டுக்கு சனாதன தர்மிகள் பலர் பணம் கொடுத்து இருக்கிறார்கள். கோவிலுக்குள் தீண்டப்படாதவர்களை விட சம்மதிக்காத வர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். வருணாச்சிரம தர்மிகள் பணம் கொடுத்தி ருக்கிறார்கள்.
ஆனால் தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் பகிஷ்கரிக் கிறார்கள். காந்தியாரைத் தங்களுக்காக ஒன்றும் பேசவேண்டாம் என்கிறார்கள். பார்ப்பனரல்லாதாரில் பெரும்பான்மையோர் சிறப்பாக பாமர: மக்களும் பகிஷ்கரிக்கிறார்கள். இதற்கெல்லாம் அர்த்தம் என்ன என்று கேட்கின்றோம். இவைகள் ஒரு புறமிருக்கட்டும்.
இன்னும் இப்பார்ப்பனப் பத்திரிக்கைகாரர்களை ஒன்று கேட்கின் றோம். இவர்கள் சூழ்ச்சியில்லாதவர்களாகவும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தப்பாடுபடும் வஞ்ககர்களல்லாதவர்களாகவும், உண்மையை மறைத்துப் பொய்யை உண்மையாய்க் காட்டும் இயல்பு இல்லாதவர்களா கவும், நாணய மான பொது நோக்குடையவர்களாகவும் இருப்பார்களானால் இப்போதாவது இது சம்மந்தமான நமது கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு காந்தி பகிஷ்காரத்தைக் கண்டிக்கட்டும், நமக்கு ஆக்ஷபணை யில்லை.
குடி அரசு - 1932 (2) 294
அக்கேள்விகளாவன:-
காந்தியார் வருணாச்சிரம வாதியா அல்லவா?
அவர் வருணாச்சிரமப் பிரசாரம் செய்கிறாரா இல்லையா 2
காந்தியார் “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு முக்கிய பிரிவு இருக்கவேண்டும்” என்று சொல்வதுடன்,
“சூத்திரன், முதல் மூன்று வருணத்தாருக்கும் கீழாகவும், அவர். களுக்குத் தொழில் செய்பவனாகவும் இருக்கவேண்டும்” என்று சொல்லு கிறாரா இல்லையா?
“பிராமணன், பின் மூன்று வருணத்தாருக்கும் மேலானவன், மேலான தொழிலையே செய்யவேண்டியவன்” என்று தொழில் முறைகளையும்
பிரித்துக் காட்டி இருக்கிறாரா இல்லையா?
பிறவியில் ஜாதிப் பாகுபாடுகள் இருக்க வேண்டும்” என்று சொல்லு
கின்றாரா இல்லையா?
தீண்டப்படாதவர்களுக்குத் தோல் பதனிடும் துர்நாற்றம் நிறைந்த வேலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறாரா இல்லையா?
“சூத்திரர்கள் தொழிலாளிகள் பணம் சேர்க்கக் கூடாது” என்று சொல்லுகிறாரா இல்லையா?
வருண பேதம் நிறைந்ததும் ஜாதிக் கொடுமைகள் உள்ளதுமான புராணங்களை, ஆட்சிகளைப் புத்துயிரளித்து நிலை நிறுத்தப்பாடுபடுகிறாரா இல்லையா?
“தண்டாதவர்களைச் சூத்திரர்களுடன் சேர்க்க வேண்டும்” என்: த சூத் ளு று சொல்லுகிறாரா இல்லையா?
இவைகளில் ஏதாவது வர்ணாச்சிரம தர்மத்துக்கோ, சனாதன தர்மத்துக்கோ, பார்ப்பனீயத்துக்கோ விரோதமென்று சொல்ல முடியுமா? என்பனவாகியவைகளை தங்கள் பத்திரிகைகளில் எடுத்துப்போட்டு அதற்கு நேர் நேராகப் பதில் எழுதி பகிஷ்காரக்காரர்களைக் கண்டித்தால் அது
மனிதத் தன்மையையும், வீரமும் ஆண்மையும் பொருந்திய காரியமாகும். அப்படிக்கில்லாமல் அயோக்கியத்தனமாய், இழிதன்மையாய், சூட்சியாய்,
பித்தலாட்டமாய் பாமர ஜனங்களை ஏய்க்கக் கருதி விஷமப் பிரசாரம் செய்வது என்பது மிக மிகக் கேவலமானது என்பதோடு இத்தகைய பிரசாரத்தை எதிர்த்து அடக்கவேண்டியது மனிதத் தன்மையுள்ளவர்களின் கடமையாகும். மற்றொரு விஷயமும் நாம் எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை. 295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
அதாவது பார்ப்பனரல்லாதாரில் சிலர் இக்கூட்டத்தாருடன் கலந்து கொண்டிருப்பதால் பார்ப்பனர்கள் ஆணவமாய் “இந்தப் பகிஷ்காரம் வெற்றி பெறப்போவதில்லை. இதனால் வரவேற்பு அதிகப்படும்” என்று கூற இடமேற்படுகின்றது. இந்த ஆணவம் பார்ப்பனருக்கு இன்று நேற்றல்ல, வெகுகாலமாக இருந்துவருவது நமக்குத் தெரியும். உதாரணமாக தர்மபுரியில் டாக்டர்.பி.வரதராஜுலு அவர்கள் தலைமையில் 1922-ல் கூடிய தாலூக்கா கான்பரன்சில் பார்ப்பன சூட்சியைப்பற்றி தலைமை உரையில் நாயுடு அவர்கள் மிக வன்மையாய் கண்டித்துப்பேசி சுயமரியாதை உள்ள பார்ப்பனரல்லாதார் பார்ப்பனருடன் இனி ஒத்து தேச சேவை செய்ய முடி யாது என்று சொன்னதோடு பார்ப்பனர்களின் தேச சேவை என்பதெல்லாம் பார்ப்பன சமூக ஆதிக்கத்திற்கேற்ற சுயநல சேவையே ஒழிய வேறில்லை என்று இதை நம்பிப் பார்ப்பனரல்லாதார் சிலர் ஏமாந்துவருகிறார்கள் என்றும் சொன்னார். அதற்குத் தோழர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒரே பதில்தான் சொன்னார்கள். அதாவது,
புத்தர் தொல்லை, முஹம்மதியர் ஆட்சிகாலத் தொல்லை முதலிய எத்தனையோ தொல்லைகளைச் சமாளித்துவந்த பார்ப்பனர்கள் இதற்கெல் லாமா பயந்துவிடப்போகிறார்கள். பார்ப்பனருக்கு விரோதமாக இதுவரை
யும் ஒரு காரியமும் எவரும் சாதித்துக் கொள்ளமுடியவில்லை. ஆதலால் நீங்களும் சொல்லிவிட்டுப்போங்கள் என்று சொன்னார்.
அதுபோலவே 1922-ல் திருப்பூரில் தோழர் வாசுதேவய்யரவர்கள். தலைமையில் நடந்த மாகாண மகாநாட்டின்போது கோயில் பிரவேசத் தீர்மானத்தைப்பற்றித் தோழர் ஈ.வெ.ராமசாமி பேசிய சந்தர்ப்பத்தில் ஜாதிக் கொடுமையுள்ள இராமாயணத்தை சுட்டுப்பொசுக்கவேண்டும் என்று சொன்ன சமயம் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் இது ஒன்றும் ஆகக் கூடிய காரியம் அல்லவென்றும் வீணாய்ப் பெயரைக்கெடுத்துக்கொள்வதை விட வேறு பயன்கிடைக்கப் போவதில்லை என்றும் சொன்னதோடு அன்று இரவு நடந்த மாகாணக் காங்கிரஸ் கமிட்டிக் காரியதரிசி தேர்தலில் தோழர்: ஈ.வெ.ராமசாமி யுடன் தோழர் டி. ஆதிநாராயண செட்டியார் போட்டி போட்டதில் தோழர் ஆதிநாராயண செட்டியாருக்கு 23 ஓட்டுகளும் தோழர். ராமசாமிக்கு 94 ஓட்டுகளும் கிடைத்தபொழுது தோழர் ராஜகோபாலாச்சாரி
யார் தோழர் ராமசாமியைப் பார்த்து “நீங்கள் இராமாயணத்தின்மீது பாயாதிருந்திருந்தால் உங்களுக்கு இன்னும் ஒரு 10.15 ஓட்டுகள் கிடைத் திருக்கலாம்” என்றும் பாராட்டிப் பேசினார்.
இந்த விபரங்கள் 1926-27 “குடி அரசு” மலர்களில் காணலாம்.
ஆதலால் பார்ப்பனர்களுக்கு இப்போது இருக்கும் அகங்காரம் எல்லாம் “இது ஜெயிக்காது” இதைப்போல் எத்தனையோ பெயரைப் பார்த்தாய்விட்டது” என்கிற அகம்பாவமே ஆகும்.
குடி அரசு - 1933 (2 296
பார்ப்பனர்களுக்கு எதுவரையில் இந்த அகங்காரமும், ஆணவ
மும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் பார்ப்பனரல்லாத சமூகத்துக்
குப் பெரும்பான்மை மக்களுக்கு மனிதத் தன்மையும், சுயமரியாதை உணர்ச்சியும் வரும்வரை இப்படித்தான் பேசுவார்கள். ஆனாலும் ஒரு அளவுக்குப் பார்ப்பனரல்லாதார் வெற்றிபெற்றுவிட்டார்கள் என்பதை: ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். அதற்கு ஒரு உதாரணம் வேண்டு மானால் ஒரு காரியத்தில் பார்க்கலாம்.அதாவது இன்று காந்தியாரைப்போல் எந்த ஒரு பார்ப்பனரையாவது அல்லது எந்த ஒரு சங்கராச்சாரியாரை: யாவது பொதுக்கூட்டம் போட்டு வீதியில் நின்று காந்தியார் சொல்வது போல் “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்கின்ற நான்கு வருணம் இருக்கவேண்டும். சூத்திரன் முதல் மூன்று வருணத்தாருக்கு சேவை செய்யவேண்டும். ராமராஜ்யம் வேண்டும், சூத்திரர்களும், தீண்டாத வர்களும் தான் ஒன்றாக வேண்டும், மற்ற வருணத்தாருடன் அவர்கள்
கலக்கக் கூடாது” என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முடியுமா? என்று பார்த்தால் அப்போது தெரியும் பார்ப்பனரல்லாதார் வெற்றிக்கு உள்ள பலமும் காந்தி கொள்கைக்கு உள்ள பலமும் என்று சொல்லுவோம்.
எனவே விபீஷணனை ஆழ்வாராக்கி ராஜ்ய பட்டம் கொடுத்து ராவணனைக் கொன்றதாக உள்ள கதையைப்போல் ஏதோ ஒரு வக்கீல் ஆசாமியைப் பிடித்து அவரை மகாத்மாவாக்கி அவருக்கு இந்திய ஜனப் பிரதிநிதித்துவம் என்பதில் சர்வாதிகாரியாக்கி பார்ப்பனரல்லாத சமூக சுயமரியாதைப் புனருத்தாரணத்தைக் கொல்லச் செய்யும் சூழ்ச்சியின் தன்மையைப் பிறர் அறிந்து கொண்டார்களே என்று வெட்கப்படாமல் பகிஷ்காரம் ஜெயிக்காது என்று வீரம் பேசுவதில் எவ்வளவு வெட்கங் கெட்ட தனமும், சொரணையற்ற ஆணவமும் இருக்கின்றது என்று யோசித்
தும் பார்க்க விரும்புகிறோம்.
காந்தியாருக்குச் சில முனிசிபாலிட்டிகள் வரவேற்புக் கொடுக்கின்ற னவாம். முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டுகள் யோக்கியதை நாம் அறியாததல்ல..
சங்கராச்சாரிக்கு வரவேற்புக்கொடுத்த முனிசிபாலிட்டி அவரது தாசருக்கு வரவேற்புக் கொடுப்பதில் அதிசயம் கண்டுபிடிக்க வேண்டியதே யில்லை. சங்கராச்சாரி சேவையைவிட, பார்ப்பனருக்கு காந்தியார் சேவை குறைந்ததல்ல. ஆதலால் பார்ப்பன ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்ட- பயந்த முனிசிபாலிட்டிகளும், போர்டுகளும் வரவேற்பு அளிக்கத்தான் செய் கின்றன. எப்படியாவது முனிசிபாலிட்டிகளிலும், போர்டுகளிலும் தங்க
ளுக்குப் பெருமையும், சுயநலமும் இருக்க வழிவேண்டும் என்கின்ற ஒரு நோக்கத்தைத்தவிர வேறு நோக்கம் கொண்டவர்களுக்கு இடமில்லாமலே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
வைசிராயுக்கும், கவர்னர்களுக்கும், மந்திரிகளுக்கும் வரவேற்பு ஒரு புறமும். “அப்பதவிகளை ஒழிக்கவேண்டுமென்னும் தேசபக்தர்களுக்கு” ஒரு புறமும், சனாதனதர்மிகளுக்கும் சங்கராச்சாரிக்கும் ஒரு புறமும், “சீர் திருத்தவாதிகளுக்கு” ஒரு புறமும், இவர்கள் இத்தனை பேர்களது கொள்கை களையும் ஒழிக்கவேண்டும் என்கின்றதான சுயமரியாதைக் காரர்களுக்கு ஒரு புறமும் வரவேற்பளித்து தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்திலிருப்பவர்கள். ஏனென்றால் ஸ்தல ஸ்தாபனங்களில் பார்ப்பனீயமும், பணக்காரத்தன்மையுமே கொண்டவர்கள் தான் 100க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். ஆதலால் இவ்வரவேற்புகளால் காந்தியாருக்கு பெருமையும் வெற்றியும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லுவதெல்லாம் வெறும் வெளிமயக்கேயன்றி வேறல்ல...
ஆதலால் காந்தி பகிஷ்காரத்தைக் கண்டிப்பவர்கள் யோக்கியமும் நேர்மையும் உள்ளவர்களாகவும், சூகஷியும் இழி தன்மையும் இல்லாதவர். களாகவும் இருந்தால் நாம் எந்த எந்தக் காரணத்தைக் காட்டி பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அந்தக் காரணங்களை எடுத்துக்கூறி அவைகள் தப்பு என்பதாகக் காட்டிய பிறகு கண்டிக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
புரட்சி - தலையங்கம் - 24.12.1933
குடி அரசு - 1933 (2 298
ரிஜிஸ்டர் நெ, M. 2092, சலிப்பு குனு புரட்:
விபி ததோனும் வெளிவரும், i எ, வெ. நெஷ்ணசாமி, Sl | ஈரோடு நிமுகணு மார்கழிப் Via. (31—12—1083) லர் 6.
ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?
கரத்இயத்தை ஒழிப்பது வர்ணாசிஸெமத்தை ஒலிப்பதும்,
பதான் மயன் சளக் வில் oSt எல்லி உயர்வு அழவும் த் ன பன்ற சமதர்மக்துக்கு பொசா
| என்றது விற இனி F g ey wmliydrs,,
பசது தெழுயண் ம்மலொரு மச
"தரரில் எழுசழவை காலம நாத்த
டு! து, L அது ஒன்றேனன் மனிதாமூகம் பொ குளாதாரத்தன் ஸை அக்கொருவர் பணக் காரன் ஏழை எவ் எல்லாப் பொருளும், பூமியு சரிசமமாய் இருக்லேண்று் என்ற சமதர்மத்
பயனரின் கையான்.
கரகர
க்குப் போரால் g, 3. அது ஒன்றன் அிசாமததல் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வம் இல்லாமல் சகல அறைகளிலும். சச்ச்்து, வம் இருக்கவேண்டும். என்ற சமதர்மத்துக்கப் போசாடுகிள் தது,
காந்தியார் பணக்
க அது ஒன்றேதான். மனிதாமுகத்தில், ஜாதி, மதம், ட தேம், கடவுள் அய: அபிமானங்களை ,அசவெ ஒழித்து உலக மனித
காந்தியார் o
சமூக தோழமை வேண்டும் என்ற சமதர்மத்தித் குப்பொராமலன்று. 5 அது. ள் உல்
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
தமிமுண்பர் மகாநா௫
-ஈ.வெ.கி
சென்னையில் இம்மாதம் 23, 24 களில் கூடிய தமிழன்பர் மகாநாடு ஒரு சுயநலக் கூட்டத்தார்களால் கூட்டப்பட்டு அதன் பலன்களை அச்சுய
நலக் கூட்டத்தவர்களுக்கே பயன்படுமாறு உபயோகப்படும்படியான முறை
யில் கடத்தப்போவதாக நம் புரட்சியில் பல கட்டுரைகளும், தலையங்கமும் எழுதப்பட்டன. அதைக் கண்டிப்பாய் பகிஷ்கரிக்கும்படி இரண்டு ஜில்லா மகாநாடுகளும், பல சங்கங்களும் தீர்மானங்கள் நிறைவேற்றி பத்திரிகை
களில் வெளிவந்துள்ளன.
தென்னாட்டில் தமிழ் கற்று அதில் பாண்டித்யம் பெற்று அன்பு பூண்டி ருக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மலித்திருக்க, தமிழென்றால் வேப்பங்காயெனக் கருதும் சில ஆரியப்பார்ப்பனர்கள் பெருக்காக தங்க
ளுக்கு இசைந்த இரண்டொரு தமிழர்களையும், இரண்டொரு மகம்மதியர் களையும், கிறிஸ்தவர்களையும் சேர்த்துக்கொண்டு தமிழர் மகாநாடு என்று போடாது தமிழன்பர் மகாநாடு என்று ஓர் மகாநாட்டைக் கூட்ட ஆரம்பித் ததே இம்மகாநாட்டைக் கூட்டியவர்களின் சூழ்ச்சியை விளக்கப் போதிய சான்றாகும்.
அடுத்தபடியாக அதன் நடவடிக்ககைகளில் அங்கம் பெற்றவர்க ளாகிய புத்தகாலய பிரசார சங்கத்தலைவர், வரவேற்புக்கழகத் தலைவர் முதலியோர்களின் யோக்கியதைகளைப் பற்றிக் கவனித்தால் அதன் உட் கருத்து விளங்காமற் போகாது. அதாவது தோழர் கே.வி.கிருஷ்ணசாமி ஐயர். என்பவர் தமது ஜீவனமாகிய வக்கீல் தொழிலில் இன்றையத் தினத்தில் கோர்ட்டுகளில் எல்லா நடவடிக்கைகளும் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும் என்பதாக ஏற்பட்டு விட்டால் இவருக்குள்ள தமிழின் அன்பு அப்பொழுதே விளங்கிவிடும். அடுத்தபடியாக “மகாமகோபாத்யாயர்” பட்டம் பெற்றவரைக் கவனித்தால் தமிழ் மக்களும் ஆரியமக்களும் அவரி
டம் ஒரு பதவியை எதிர்பார்க்கிற காலத்தில் அவரது தமிழன்பு, வடமொழி யன்பு, தமிழரன்பு ஆசியரன்பு என்பது எத்தகையதென விளங்கும்? மகாநாட்டுத் திறப்பாளர் விஷயத்தில் அவரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி
குடி அரசு - 1933 (2 300
யில் பார்ப்பன ஆதிக்கத்திற்கோ, தாக்ஷண்யத் திற்கோ, பயத்திற்கோ உள் பட்டதாகக் காணப்படும் தமிழ் பாஷைக்கும், தமிழர்களுக்கும் ஏற்படுத்தி நடத்தப்பட்டு வரும் முறையே போதுமான அத்தாகரியாகும்.
அடுத்தபடியாகத் தலைவரவர்களைப்பற்றி அவருக்கு ஏற்பட்டிருக்
கும் கல்வி உத்தியோகத்தில் முதன்மையான உத்தியோகம் அமையப்பெற் றிருந்தும் அக்கல்வி இலாக்காவில் தமிழுக்கு எவ்வளவு ஆதிக்யம் வழங்கப் பெற்றிருக்கிறதென்பதை யோசித்தால் தானே விளங்கிவிடும். மகா நாட்டுத் தலைமைப் பதவியில் தீர்மான காலங்களில் ஒன்றில் நடந்து கொண்ட மாதிரியும் மனப்பான்மையையும், நடுநிலைமைக்கும் போதுமான காரணங்களாகும்.
தவிர இம் மகாநாடானது ஒற்றுமையைக் கொண்டதும், நல்லெண்: ணத்தின் முதிற்சியைக் கொண்டதாகவும் ஏற்படுத்தவில்லை என்பதற்கு அறிகுறியாகிய போலீஸ் பந்தோபஸ்தை விரும்பி ஒரு போலீஸ் கமிஷனர்,
2 சப் இன்ஸ்பெக்டர், ஒரு சார்ஜெண்டு,12 கான்ஸ்டேபிள்கள் அடங்கிய ஒரு போலீஸ் கச்சேரியாக மகாநாட்டை ஆக்குவித்து அதில் வந்தவர்களினு டைய கையெழுத்துகளை வெள்ளைக்காகிதமாகிய முச்சலிக்கையில் கையெழுத்து வாங்கிய பிறகே மகாநாட்டை ஆரம்பிக்கப்பட்டதெனின் அதற்கிருக்கும் யோக்கியதையும், மனப்பான்மையும், நல்லெண்ணமும், நம்பிக்கையும் எத்தன்மை வாய்ந்த தென்பது கவனித்தவர்களுக்கே புலப்படும்.
தவிர தமிழ் எழுத்துக்களைப் புதுப்பித்து சீர்ப்படுத்தவேண்டிய தீர்மானத்துக்கு அநுசரணையாக ஏற்படுத்திய கமிட்டியை ஏற்படுத்தும் போது டெ கமிட்டிக்கு ஒரு பெண்மணியையாவது அங்கத்தினராக தேர்ந் தெடுக்காதது பெண்ணுலகத்திற்கே கல்வி விஷயத்தில் பொறுப்பேற்று நடத்தும் அறிவும், ஆசையும், ஆற்றலும், இல்லை எனப் பகிரங்கப்படுத்தி அவமானத்தை உண்டாக்கும் தீர்மானமாகுமென்றே கருத இடமேற்படு
கிறது. திறப்பாளர் ராஜா சர். அண்ணாமலையார் தமது திறப்பு விழாவாற்று முறையில் ஆற்றிய சொற்பொழிவில் “தமிழன்பர்களே அறிவு அனைவ
ருக்கும் பொது அது ஒருவருக்கே உறியதன்று, அதனை ஆடவரும் பெற வேண்டும், மகளிரும்பெறவேண்டும், ஏழையும் பெறவேண்டும் தனிகரும் பெற வேண்டும்” என்று கூறிஇருப்பதற்கும் மேல்கண்ட கமிட்டியில் பெண் மணிகளில் ஒருவரையாவது சேர்க்காதிருப்பதற்கும் சம்பந்தம் எப்படி இருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. ஒவ்வொரு தமிழனும் இன்னும் பள்ளியில் ஒளவைப்பிராட்டியின் நீதிமொழிகளைக் கற்று அதன்படி நடக்கிற வனைத் தான் பண்டிதனென்றும், பெரியோர் என்றும் பெயர் பெற்று விளங்குவதையும் நாம் பார்க்கலாம். அப்படி இருக்க போர் வீரர்களாகவும், நீதிபதிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், தபாலாபிசர்களாகவும், கல்வியதி
301 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
காரிகளாகவும் உத்தியோகங்களில் பெண்மக்களைச் சேர்த்து நடத்தி வருகிற இக்காலத்திலும் கூட நாம் நமது பெண்மக்களுக்காக கல்வி சம்பந்த மாகக்கூட ஒரு ஆதிக்கம் தருவதற்கு முற்பட விரும்பவில்லையானால் அது மிகமிக பிற்போக்கான காரியமென்றே சொல்லுவோம். ஏனெனில் இந்த தமிழன்பர் மகாநாட்டில் சுமார் 1-15 பண்டிதைகளான பெண் மணிகள்: விஜயமாகியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் பெரிய பெரிய மகாநாட்டுக் கூட்டங்களில் பேசும் திறமையும் பத்திரிக்கைகளில் கட்டுரை
கள் எழுதும் ஆற்றலும் அமைந்தவர்களாகவிருக்கும்பொழுதும் புறக் கணித்ததானது விவசாயி நிலத்தைப் பண்படுத்தாது வித்தை ஆராய்வது போலும், அழகுறச் செய்து கொள்ளுபவர் தலையிருக்க உடலை அலங் கரிப்பது போன்றதென்பதே நமது கருத்து. ஆகையால் இத்தகைய மகா நாடுகள் நம் நாட்டிற்காவது, மக்களுக் காவது பயனளித்து முற்போக்கடை
யும் வழிகளில் உபயோகப்படும் என்கிற முறையில் நடத்தப்படவில்லை என்பது நமதபிப்பிராயம். மற்ற நடவடிக்கைகளைக் குறித்து பின் தெரிவிக் கப்படும்.
புரட்சி - தலையங்கம் - 31.12.4933
குடி அரசு - 1933 (2 302
கோவைச் சிறையில் தோழர் ந௩ாமசாமி
இந்திய சட்டசபைத் தனைவரின் சந்திப்பு
கண்ணாம்மான் ஸாமீணில் வி௫தலை
26-12-33 ௨ அன்று 11 மணிக்கு கோயம்புத்தூர் ஜில்லா மாஜிஸ்டிரேட் தோழர் வெல்ஸ் ஐ.சி.ஏஸ். முன்பு தோழர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் சகோதரியும் குடி அரசுப் பத்திரிகையின் பிரசுதாரருமான தோழர் கண்ணம் மாளை ஜாமீனில் விடவேண்டுமென கொடுத்திருந்த மனுவின்பேரில் விவாதம் நடைபெற்றது. தோழர் கண்ணம்மாள் சென்ற வாரம் தோழர் ராமசாமியுடன் கைது செய்யப்பட்ட விவரம் நண்பர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஜாமீனில் தோழர் கண்ணம்மாளை விடவேண்டுமென்று தோழர் டிடி ரத்தினசபாபதி பிள்ளை இன்று கலெக்டர் முன்பு வாதிக்கையில் அக்டோபர் மாதம் 29 தேதி வெளிவந்துள்ள குடி அரசுப் பத்திரிகையில்
பிரசுரம் செய்யப்பட்டுள்ள கட்டுரைக்கு தோழர் கண்ணம்மாள் நேர் ஜவாப் தாரியல்ல வென்பதாகவும் டி வியாசமானது வாக்குத்தாரர்களுக்குக் கூறப் பட்ட ஓர் சாதாரண போதனைதான் ஆகும் என்பதாகவும். எனவே அது ராஜ நிந்தனையாகாது என்பதாகவும், இப்போது வியாசத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதோடு எதிரி ஒரு பெண்ணாக இருப்பதை முன்னிட்டும், தேக அசெளகரியத்துடன் இருப்பதை முன்னிட்.
டும், சாட்சிகள் கலைக்கப்படுவார்கள் என்று நினைப்பதற்கு இடமில்லாமல் இருப்பதை முன்னிட்டும், தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விட வேண்டு மென்று பல வழக்குகளில் நடந்த மேற்கோள்களை எடுத்துக்காட்டி வாதாடி
னார்.
ஜாமீனில், தோழர் கண்ணம்மாளை விடுவதை, மனுவில் கண்டுள்ள காரணங்களைக் கொண்டு எதிர்ப்பதாக போலீஸ் பிராசிக்கியூட்டிங் இன்ஸ்
பெக்டர் தோழர் வரதராஜுலு நாயுடு கூறினார். இது விஷயமாக யோசிக்கச் சிறிது சாவகாசம் வேண்டும் என்று கூறினாலும், தோழர் கண்ணம்மாள் நோய்வாய்ப்பட்டிருப்பது வாஸ்தவந்தான் என்பதாகவும் கூறினார்.
303 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மாஜிஸ்திரேட் தோழர் கண்ணம்மாளை ஜாமீனில் விடுதலை செய்ய உத்திரவிட்டிருப்பதாகக் கூறினார்.
தோழர் டிடி ஆர் பிள்ளைக்கு உதவியாக தோழர்கள் ஈரோடு வேணு கோபால், சென்னை கே.எம்.பாலசுப்பிரமணியம், கோவை நஞ்சுண்டையா முதலிய வக்கீல்கள் ஆஜரானார்கள்.
“புரட்சி” பத்திரிகை பிரசுரகர்த்தாவும் பதிப்பாளருமான தோழர் எஸ். ஆர். கண்ணம்மாளை, அவர்மீது கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு விசாரனை முடியும் வரை ஜாமீனில் விட வேண்டுமென கோவை ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மனுச் செய்து கொள்ளப்பட்டது. ஜில்லா மாஜிஸ்.
டிரேட் அவரை ரூ.500 சொந்த ஜாமீனும், அதே துகைக்கு மற்றும் ஒரு நபர். ரூ.500 ஜாமீனும் கொடுத்தால் விடுதலை செய்யும்படி உத்திரவிட்டார்.
தோழர் கண்ணம்மாள் 26 ௨ ஜாமீன் கொடுத்து விடுதலையடைந்து அன்றிரவே மெயிலில் ஈரோடு வந்து சேர்ந்தார். தோழர் ஈ.வெ. ராமசாமி, எஸ்.ஆர்.கண்ணம்மாள் இவர்கள் இருவர்மீதும் கொண்டு வரப்பட்டிருக்கும் வழக்கு ஜனவரி மாதம் 4 தேதி கோவை ஜில்லா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை வரும்.
தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களை கோவைச் சிறையில் இந்திய சட்டசபைத் தலைவர் தோழர் சர். ஆர். கே. ஷண்முகம் பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ., அவர்களும், தோழர்கள் ஈ.வி. கிருஷ்ணசாமி, எஸ். ராமசாமி, கே.எம்.பாலசுப்பிரமணியம், பி.ஏ. பி.எல். வி. வேணுகோபால் பி.ஏ. பி.எல். முதலியவர்களும் சென்று பார்த்து வந்தார்கள்.4-1-34ல் தமிழ்நாடு ஆசிரியர். தோழர் டாக்டர் பி. வரதராஜுலு அவர்கள் பார்த்து வரப்போவதாகத் தெரிய வருகிறது.
புரட்சி - துணைத் தலையங்கம் - 31121933
குடி அரசு - 1933 (2 304
நாகர்கவமன்றால் எண்ண?
தோழர்களே! இனி அடுத்தபடியாக நிகழ்ச்சிக்குறிப்பில் கண்டுள்ள விஷயம். அக்கிராசனர் முடிவுரை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் அனேக கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லுவேன் என்று எனக்கு முன்பு பேசிய நண்பர் கூறினார். நான் எப்பொழுதும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாராயிருக்கிறேன். ஆனால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான
- முடிவான பதில் சொல்லக் கூடிய சகலகலாவல்லவனென்று எண்ணி விடாதீர்கள். நான் சொல்லும் அபிப்பிராயம் தான் முடிவானதென்றோ, அதுவே முடிந்த ஆராய்ச்சியின் சரியான கருத்து என்றோ, நீங்கள் கருதக் கூடாது.
விவகாரம், நியாயம் என்ற இரண்டு வார்த்தைகளையும் உபயோகப்
படுத்தும் விதத்தை சரியாக உணர்ந்து கொள்ளும்படி கோருகிறேன். நியாயம் வேறு-விவகாரம் என்பதும் வேறு. விவகாரம் என்பது வலுத்தவன் ஆதிக் கத்தையும், தந்திர சூக்ஷிகளையும், பணச் செல்வாக்கையும் பொருத்து முடிவு பெற்றுவிடும். ஒருவன் தன்னிடம் சக்தி இல்லாத காரணத் தால்-பேசும் திறமை, எடுத்துக்காட்டும் அனுபோகம் ஆகியவை இல்லாத காரணத்தால்-ஒரு விஷயத்தைப் பற்றி வாதித்துத் தோல்வியுற்று விட்டால் அது நியாயம் கண்டு பிடித்தாகிவிடுமா? அது போல் உங்கள் வாய் அடங்கும்படி நான் பதில் சொல்லி விட்டதாலேயே நான் சொன்னது சரி என்று சொல்லிவிட முடியாது. உங்களுக்கு எடுத்துச் சொல்லி மெய்ப்பிக்க முடியாததாலேயே நான் சொன்னது தப்பு என்றும் சொல்லிவிட முடியாது. ஆதலால் எனக்குத் தெரிந்த பதில் சொல்லுகிறேன். அதை ஆராய்ச்சி செய்து பிறகு ஒரு தக்க முடிவுக்கு வாருங்கள்.
இன்றைய தினம் இங்கு பேச எடுத்துக் கொண்ட விஷயம் “இந்தியா
வின் தற்கால நாகரிகம்” என்பதாகும். இது ஒரு கூடாத விஷயமல்ல. மிக்க ருசிகரமானதும் விரிந்த பொருள்களைக் கொண்டதுமான நல்ல விஷயத் தையே நீங்கள் இங்கு பேச எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
“நாகரீகம்” என்கின்ற வார்த்தைக்குப் பொருளே பிடியில் சிக்காத ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் “நாகரீகம்” என்பதற்கு ஒரு தனிப்
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17
பொருள் கூறி வருகிறார்கள். கண்ணோட்டம் என்கிற தலைப்பின் கீழ் குறளில் நாகரீகம் என்கிற வார்த்தை வள்ளுவரால் உபயோகப்படுத்தப்பட்டி ருக்கிற தாக நான் 10, 20 வருஷங்களுக்கு முன்பு பார்த்ததாக ஞாபகம். அது தாக்ஷண்ணியம், அடிமை என்கிற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டி ருப்பதாகவும் எனக்கு ஞாபகம்.
நாகரீகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, ஆகாரம் மற்றும் எல்லா பாவனை களிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் தான் இவைகள் வேறுபட்டிருக்கிறதென்று கூறமுடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில் தான் போய்க்கொண்டிருக்கிறது. நம்முடைய பெண்கள் முன்பு முழங்கைக்குக் கீழும் இரவிக்கை அணிந்து வந்தார்கள். பின்பு மேலேறியது. மறுபடி கீழே இறங்கியது. இப்பொழுது மறுபடியும் மேலேயே போய்க் கொண்டிருக்கிறது. மேல் நாட்டு ஸ்திரிகளும்-தெருக்களில் தெருக் கூட்டு வது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள். அந்த காலத்தில் துணிகளைத் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணம் படைத்தவர்கள் ஆள்களை நியமித்துக் கொண்டிருந்தார்கள். அது அக்கால நாகரீகம். இப்பொழுதோ என்றால் ஆடை விஷயத்தில் மேல் நாட்டுப் பெண்களும் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். அதை நாம் இப்பொழுது நாகரிகமென்று தான் கருதுகிறோம்.
நாம் இவைகளைப்பற்றி எல்லாம் பேசும் பொழுதும் யோசிக்கும் பொழுதும் எந்தவித பற்றுதலும் இல்லாமல் அதாவது ஜாதி, மதம், தேசம் என்பன போன்ற பற்றுகளை விட்டு விட்டு (Free யாக) சுயேச்சையாக சீர்தூக்கிப் பார்த்தால் தான் விஷயங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுது தான் விளங்கும்.
ஒரு காலத்தில் சாம்பலைப் பூசிக் கொண்டு சிவ சிவா என்று ஜெபிப்பது தான் யோக்கியமாகக் கருதப்பட்டது. இன்றைய கால தேச வர்த்த மானங்கள் மேல் சொன்ன விஷயத்தை கேலி செய்கிறது.
புருஷன் பெண்ஜாதி என்கிற இரு சாரர்களை எடுத்துக் கொண்டா
லும், முன்பு கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன் என்று மதித்து அடுப்பூதுவதே ஒரே கடமையென்று நடந்து வந்த பெண்களைப் பற்றி பெரிதும் மதித்து வந்தார்கள். ஆனால் இன்றோ புருஷனிடம் மனைவி யானவள் நான் உனக்கு வேலைக்காரியா? அடிமைப்பட்ட மாடா? ஜாக் கிரதையாயிருந்தால் சரி, இல்லாவிட்டால் எனக்கும் சம அந்தஸ்தும் சம உரிமையும் சர்வ சுதந்திரமும் உண்டு என்று கர்ஜனை செய்யும் பெண் களையே நாகரீகம் வாய்ந்தவர்களென்று கருதுகிறோம்.
குடி அரசு - 1933 (2 306
முன்பு புராணத்தைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் பேசுவது தான் வித்வத் தன்மையாக இருந்தது. ஆனால் அது இன்று குப்பையாகி பரிகசிக்
கத் தக்கதாக ஆகிவிட்டது. புத்திக்கும் அறிவிற்கும் பொருத்தமில்லாத முரட்டுப் பிடிவாதத்தில் முன்பு நம்பிக்கையிருந்ததை சிலாகித்துப் பேசி னோம். ஆனால் இன்றைய தினம் பிரத்தியக்ஷமாக எதையும் எடுத்துக் காட்டித் தெளிவுபடுத்துவதையும்-விஞ்ஞானம் போன்றதான அறிவியக்க நூல்களைக் கற்றுணர்ந்த வல்லுணர்களையுமே நாம் பெரிதும் மதித்து வருகின்றோம்.
நாகரீகம் என்பது நிலைமைக்கும் தேசத்திற்கும்-காலப் போக்கிற்கும் தக்கவாறு விளங்குகிறது. காலதேச வர்த்தமான-வழக்கத்தையேயொட்டி “நாகரிகம்” காணப்படுகிறது.
காலப்போக்கானது எந்த தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும்-புரட்சி ஏற்படவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டுப் பேசினீர்.
கள். எது நாகரீகமென்று கருதுகின்றோமோ அது பெருத்த அஜீர்ணத்துக்கு வந்துவிடுகிறது. மிண்டும் அந்த நிலைமையானது மாறிக்கொண்டு போகத்தான் செய்கின்றது.
ஒரு விஷயமானது வாய் சாமர்த்தியத்தினால் செலவாணியாகிவிடும். அது மெய்யோ-பொய்யோ சரியோ-தப்போ எப்படியும் இருக்கலாம்.
நாம் ஏன் எதற்காக உழைத்துப் பாடுபடவேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆகவேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத் தான் உண்ண வேண்டுமா? என்கிற கேள்விகள் எழுந்து மக்கள்
சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரீகமாக கருதப்பட்டு பயன் அடைந்தாலும் அடையலாம்.
இன்றைய அரசியல் விஷயத்தில் இராட்டை சம்பந்தப்பட்டிருக்கிறது. இது ஆயிர வருஷங்களுக்கு முன்பு ஏற்பட்டு நாகரிகமாக பாவிக்கப் பட்டி ருந்தது. பின்பு குப்பையில் தள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அது வெளிப் படுத்தப்பட்டு அதற்குக் கொஞ்சம் மதிப்புக் கொடுக்கப்பட்டு இராட்டை சுற்றுவதும்-தக்ளி நூல் நூற்பதும் நாகரிகமாகக் கருதப்பட்டது. ஆனாலும் அதுவும் ஒழிந்து போயிற்று என்றே சொல்லலாம். இவைகளையெல்லாம் எந்தவிதமான தேசம், மதம், ஜாதி) பற்றுதலுமில்லாத பொதுமனிதன், பொது நோக்கோடு கவனித்தால் உண்மை விளங்காமல் போகாது.
நாம் ஓர்காலத்தில் தேசம், தேசீயம்-தேசப்பற்று என்பதை நாகரீக மாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால் இன்றோ அவைகளையெல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் மக்கள்
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
அபிமானம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரீக
மாகக் கருத முன் வந்துவிட்டோம்.
ஒருகாலத்தில் நாகரீகமாக கருதி வந்ததை இன்று நாம் பரிகசித்து வருகிறோம். ஒரு மனிதன் தான் நாயக்கன், முதலி, வைணவன், சைவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பாராட்டிக்கொண்டு ஒவ்வொரு வரும் தாங்கள் அதிக மேல் சாதிக்காரனாவதற்குச் சைவ-வைணவப் போக்கைப் பற்றிக் கொண்டு பூணூலையும் நாமத்தையும் போட்டுத் தங்கள் மதத்தையும் சிலாகித்துப் பிதற்றிக் கொண்டும் வந்தான். ஆனால் இன்றைய தினம் இவைகளையெல்லாம் புத்திகெட்ட தனமென்றும், முற்போக்குக்கு முரணான தென்றும் கூறி வெகுவாகக் கண்டனம் செய்து வருகிறோம். ஒரு காலத்தில் தனித் தனித் தத்துவம் நாகரீகமாகக் கருதப்பட்டது. உதாரணமாக
ஒரு தனித்தனி ஜாதி நன்மையும்-தேச நன்மையும் சிலாக்கியமாகக் கருதப் பட்டது. ஆனால் ஒரு ஜாதியின் அனுகூலம் பிற ஜாதியானுக்குப் பாதகம் என்பதையும் ஒரு தேச நன்மை மற்றொரு தேசத்திற்கு பொல்லாங்கு என்ப தையும் நாம் இன்று நன்கு உணர ஆரம்பித்துவிட்டோம்.
தோழர்களே! நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது நாம் அனுபவ முதிர்ச்சியால் அறிவு ஆராய்ச்சியால் நாம் முற்போக்காகிக் கொண்டு வருகிறோம் என்பதேயாம்.
நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக் கிறோம். உதாரணமாக வியாபாரிகளை-மக்கள் சமூகத்தின் நலனைக் கொடுத்து லாபமடையும் கோஷ்டியைச் சேர்ந்தவர்களென்றும், லேவா தேவிக்காரர்களை-மனித சமூக நாசகர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங் கொண்டவர்க்கத்தினர்களையும்-மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்
கின்றோம்.
நாகரீகம் என்பது பிடிபடாத ஓர் விஷயமென்று முன்பே கூறினேன். நம்நாட்டு பெண்கள் எப்படி 8 (பெல்ட்) கட்டாமல் கீலைகட்டுகிறார் களென்றும் அது இடுப்பில் எவ்வாறு தங்கியிருக்கிறதென்றும், தலைக்கு ஊசி இல்லாமல் பெண்கள் எவ்வாறு மயிர்களை சேர்த்து முடிந்துகொள்ளு கிறார்களென்றும், நாம் சாப்பாட்டுக்கு தினம் ஒரு இலை (Plate) எப்படி சிலவு செய்கிறோம், என்ன மகத்தான நஷ்டமென்றும், மேனாட்டார் ஆச்சரியப் பட்டு நம்மவர்களை கேட்பவரையும் கேட்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் அவர்களின் செய்கையை சரியாக உணராததினால் சிலதை ஆச்சரியமாக
கருத நேரிடுகிறது.
நம்மிடையேயுள்ள சாதி அபிமானம் சொந்தகார அபிமானம், பாஷா அபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலையவேண்டும்.இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.
குடி அரசு - 1933 (2 308
காந்தியார் மேனாட்டில் முழங்கால் துண்டோடு-போதிய ஆடை யின்றி போன பெருமையைப் பற்றி ஒரு நண்பர் குறிப்பிட்டார். இது எவ்வளவு தூரம் புத்திசாலித்தனமானதாகும் செளகரியத்திற்காவும்- நன்மைக்காவும் அங்கு அதிக ஆடைகளை பந்தோபஸ்துக்காக அணிந்து கொள்ளாமல் பிடிவாதத்தோடு-கேவலம் இந்திய தர்மம் என்ற வெறும் எண்ணத்திற்காக குளிரில் விரைத்துபோக இங்கிலாந்து வாசம் செய்தது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்?
புதிய எண்ணங்களும் புதிய எழுச்சிகளும்-புதிய காரியங்களும் நிகழுகின்றன. நீங்களும் காலப்போக்கின் உயரிய பலனை வீணாக்காது பகுத்தறிவை மேற்போட்டுக்கொண்டு ஜனசமுதாய நன்மையை தேடி பாடு பட முன்வாருங்கள். உங்களுடைய முயற்சிக்கு எல்லாம் வெற்றியே உண்டு. வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்களும்கூட தங்களுடைய போக்கை மாற்றிக்கொண்டு முயற்சி மெய்வருத்தகூலி தரும் என்றுசொல்லி வருகிறார்கள். ஆகவே தோழர்களே! நீங்கள் தன் நம்பிக்கைகொண்டு- மக்களின் விடுதலைக்கு சரியான வழிகளில் பகுத்தறிவை அடிப்படை யாகக்கொண்டு போராட வாருங்கள்.
குறிப்பு:- ஈரோடு London Missionary Society யின் போதனாமுறை பாடசாலையில் நடைபெற்ற Library Association கூட்டத்தில் “இந்தியாவில். காணப்படும் இன்றைய நாகரீகம் ” என்ற பொருள் பற்றி நிகழ்ந்த விவாத முடிவில். ஆற்றிய முடிவுரை.
புரட்சி - சொற்பொழிவு - 31.12.1933.
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
அருவ்கால் வாருன்
அசார்சமாய் அமரிக்கை ஆதிக்யம் இடை உதாரத்தன்மை உத்திரணி
ஈடுபாடு காட்டாமல், கவலையற்று அமைதி தலைமை எடை பெருங்கொடைத் தன்மை பஞ்ச பாத்திரக் கரண்டி, தீர்த்தம்,
எடுத்தற்குரிய சிறுகரண்டி செல்வம் இறுமாப்படையவில்லை
ஐஸ்வர்யம் கனப்படவில்லை கியாதி கெண்டி
புகழ் கமண்டலம்
தண்டித்து தன் காரியம் கைகூட
சிக்ஷித்து சுயகாரிய சித்திபெற
தர்க்கிக்கப்படுதல்
விவாதித்தல்
பயிற்சி, தகுதியாக்கல்
தற்பித்து தனிகர். தியங்கும்படி திரவிய சகாயம்
செல்வர்: கவலையடையும்படி பொருளுதவி
நிர்த்தாக்ஷண்யம்
இரக்கமின்மை கொடுமை, வெறுப்பு
நிஷ்டூரம்
ஒழுங்கு பலவற்றை விளக்கவுரை மீணிலை நிறுத்தம் கோணலாக வளர்ந்த தென்னை உடன்படிக்கை காப்பாற்றுவது
பத்ததி பலவைகளை பாஷ்யம் புனருத்தாரணம்
முடத்தெங்கு முச்சலிக்கை:
ரக்ஷிப்பது வதிந்து வியக்தமாய்
தயங்கி பெருமையாய் கவலை
வியாகூலம்
210 211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 17.
குடி அரசு - 1933 (2
குடி அரசு - 1933 (2 312