Kudi Arasu — 1933, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1933-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 16
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1933-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 288
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
சமதர்ம கட்சி - உதயமானது
சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கொள்கைகளையும், தனது வேலைத் திட்டத்தில் இணைத்துக் கொண்டு, சமதர்ம கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய காலம் இதுவேயாகும். இந்த மாற்றத்தை எதிர்த்த வர்களுக்கு “குடிஅரசு” பதில் தந்தது. கசாப்புக்கடை நடத்தும் பிரிட்டிஷ் ஆட்சியிடம் காங்கிரஸ் இறைச்சி வாங்கிடும் வாடிக்கையாளராகி, பேரம் பேசுகிறது. ஆடுகளாக பலியிடப்படுவோர் மக்கள் தான் என்று “குடிஅரசு” எழுதியது.
காந்தியாரின் “உப்பு சத்தியாகிரகம்” மற்றும் “தீண்டாதார் ஆலயப் பிரவேசத்தின்” பொய்மைகளையும், சூழ்ச்சிகளையும் அம்பலமாக்கியது. நாட்டில் பொதுவுடைமை கிளர்ச்சி வந்துவிடக் கூடாது என்பதே, உப்பு சத்தியாகிரகத்தின் நோக்கம் என்று காந்தி கூறியதையும், தீண்டாதார்
கோயிலுக்குள் நுழைவதற்கு, தனிநேரம் ஒதுக்கித் தரலாம் என்று காந்தி கூறிய யோசனையையும் கடுமையாக சாடும் பெரியார், தீண்டாமையை மதப் பிரச்சினையாக அணுகுவதே தவறு என்கிறார். அது சமூக, சமத்துவப் பிரச் சினை என்று அழுத்தமாகக் கூறுவதோடு, கோயில் நுழைவு, மனிதனைத் தொடுதல் என்பவற்றையும் தாண்டி, தீண்டப்படாதாரின், சமூக, பொருளாதார. முன்னேற்றத் திட்டங்களும், தீண்டாமை ஒழிப்பில் அடங்கியிருப்பதை சுட்டிக் காட்டினார்.
மேல்நாட்டு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய பெரியாருக்கு, ஒரு சில இடங்களில் பாராட்டு வரவேற்புகள் வழங்கப்பட்டதை ஏற்றுக் கொண்டஅவர், இவை சடங்குகளாக மாறி வருவதால், முழுமையாக நிறுத்தப் படும் என்று அறிவித்ததோடு, புரட்சிகர இயக்கத்துக்கு, பாராட்டுகளும், வரவேற்புகளும், மாலைகளும் அடையாளங்கள் அல்ல என்றார். சுய மரியாதை இயக்கத்தின் முன்னோடித் தலைவர் மாயவரம் நடராசன், தாயார். மற்றும் குடும்பத்து உறுப்பினர், மறைவுக்கு இரங்கல் செய்தி எழுதிய
பெரியார், “உலக வழக்கப்படியான ஆறுதல் மாயவரம் நடராசனுக்கு தேவை யில்லை” என்று எழுதியிருப்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். துணைவியார் நாகம்மையார் மறைவுக்கு, பெரியார் எழுதிய இரங்கல்
அறிக்கையும் இத் தொகுப்பில்தான் இடம் பெற்றுள்ளது. இலக்கியமாக போற்றப்படும் அந்த இரங்கல் உரையில் பெரியார் நாகம்மையாரை ஒருமை
யில் குறிப்பிட்டுள்ளதை, உள்ளது உள்ளவாறே பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேசப் பிரச்சினைகளையும் “குடிஅரசு” அலசியுள்ளது. சீனா - ஜப்பான் போர். ஸ்பெயின் நாட்டின் அரசியல் போராட்டம், ரஷ்ய நீதிமன்றம் வழங்கியதீர்ப்பு;சோவியத்தில் ஸ்டாலின், “ட்ராட்ஸ்க்கி” தத்துவார்ந்த மோதல்
கள் இகைளை விளக்கியும் இந்திய அரசியலோடு ஒப்பிட்டும் தலையங்கங்
கள் எழுதப்பட்டுள்ளன.
கிறிஸ்தவ மதத்தில் தீண்டாதோர் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித் ததால், “குடிஅரசு” கத்தோலிக்க கிறிஸ்தவ நிறுவனங்கள் அவர்கள் நடத்திய பத்திரிகைகளின் கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டது. அய்ரோப்பிய பகுத் தறிவு இயக்கங்களின் கிறிஸ்தவ மத எதிர்ப்பு வெளியீடுகளை வரவழைத்து, அதைத் தமிழாக்கம் செய்து வெளியிடவும் இயக்கம் முன்வந்தது.
மகாமகப் புரட்டுகளை விளக்கியும், பெண்ணுரிமையை வலியுறுத்தி
யும் தலையங்கங்கள் எழுதப்பட்டன...
9ஆம் ஆண்டில் “குடிஅரசு கால்பதித்த காலகட்டம் இது. ஒவ்வொரு ஆண்டும் எதிர்ப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை பட்டியலிட்டு “குடிஅரசு” விளக்கியது. இதே காலத்தில் லால்குடி வட்ட ஆதி திராவிட கிறிஸ்தவர்கள் மாநாடு, நாகையில் தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாடுகள். நடந்தன.
“மதப் பிரச்சாரங்கள் வழிபாட்டுத் தலங்களுக்குள்ளே நடத்த வேண்டி யுள்ளது, பொதுவிடங்களில் நடத்த முடியாமல் போய்விட்டது”. இதற்குக் காரணம் “சுயமரியாதை இயக்கம்தான்” என்று “மெயில்” ஆங்கில நாளேடு கண்டனத் தலையங்கம் எழுதியது. இதுவே சுயமரியாதை இயக்கமும் “குடிஅரசு'ம் ஈட்டிய வெற்றிக்கான அளவுகோலாகும்.
குடி அரசு - 1933 M) 4
பொருளடக்கம்
The Aims and ideals of the Self-Respect Party of South India
வேலைத்திட்டக் கூட்ட முடிவு
வேண்டுகோள்
சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை
காந்தியின் மற்றொரு ராஜி
இந்தியாவின் ஜனத் தொகையும் கல்வி நிலையும்
நாடார் மகாஜன சங்கம்
“சுப்பராயன் மசோதா”
கத்தோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்
காந்தியாரின் தீண்டாமை ஒழிப்பு
“சுப்பராயன் மசோதா” வின் இரகசியம்
ஸ்பெயினும் இந்தியாவும்
வருந்துகிறோம்
நேற்றும், இன்றும்
மதிப்புரை
எலெக்ஷன் கத்து
எதுநல்ல ஜோடி?
வரவேற்கின்றோம்
ஏன் வரி குறைக்க வேண்டும்?
கான்சாகிப் சேக்தாவுத் அவர்கட்குப் பாராட்டு
விபசாரத் தடை 67
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார். வாசித்த உபசாரப் பத்திரமும் பதிலும்
22.
இந்தியப் பெண்களுக்கும் இடம் சுயமரியாதையைப் பற்றி காந்தி அபிப்பிராயம்
23.
24.
இந்தியாவில் பெண்கள் நிலை
25.
கோவை உபசாரப் பத்திரங்கள் தீண்டாமை விலக்கு இரகசியம்
26.
27.
வருந்துகிறோம்
28.
“காந்தியின் மிரட்டல்” உள்ள கோவில்கள் போறாதா?
29.
30.
புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!! “காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?
31.
32.
33.
மகாமகம்
ரஷியாவும் அட்வெகோட் ஜெனரலும்
34.
ஈ.வெ.ராவுக்கு சென்னிமலை: யூனியன் போர்டார் வரவேற்பு
35.
காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது.
36.
ரகசியம் வெளிப்பட்டதா?
37.
மாமாங்கம்
38.
“மெயில்' பத்திரிகையின் கூற்று.
39.
மாமாங்கத்தில் பார்ப்பன கும்மாளம்
40.
“மாமாங்கத்தின் அற்புதம்”
41.
எதை நம்புவது!
42.
திருவாங்கூரில் சமதர்ம முழக்கம்.
43.
வருணாச்சிரமம்.
44.
காந்தியின் ஆலயப் பிரவேச நோக்கம்
45.
சேலத்தில் ஈ. வெ. ராமசாமி, முத்துச்சாமி வல்லத்தரசு.
46.
காங்கிரசும் ஒத்துழைப்பும் உண்மைத் தோழர் மறைந்தார்
47.
48.
ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை.
49.
குடி அரசு - 1933 M)
164
விருதுநகர் ஆண்டு விழா
விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம்
167
ஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம்
171
ஸ்தல ஸ்தாபன சுயாக்ஷிகளின் மோசம் 1
174
பார்ப்பனர்களின் தேசியம்
180
183
இராணுவம்
தோழர். R. K. ஷண்முகம்
189
192
“தொழிலாளர் நிலைமை”
195
அரசியல் சீர்திருத்தம்
குடி அரசு “குபேர” பட்டணத்தின் சிறப்பா? சிரிப்பா?
199
காரைக்குடியில் போலீஸ் அட்டூழியம்
202
செட்டிநாட்டில் தோழர் ஈ. வெ. இராமசாமி
204
சைனா - ஜப்பான் யுத்தம்
210
மாரியம்மன்
213
மதப்பிரசாரம்.
215
கேசவ பிள்ளை
216
217
“தொழிலாளர் நிலைமை”
சம்பளக்கொள்ளை
226
ஈரோடு முனிசிபாலிடி கவனிக்குமா?
232
235
தஞ்சை ஜில்லா மகாநாடு போலீஸ் யோக்கியதை
239
241
“தொழிலாளர் நிலைமை”
244
ரஷ்ய நீதி
249
ஒன்பதாவதாண்டு லால்குடி தாலூகா ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் மகாநாடு
255
ஈரோடு சுதேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா
260
265
மற்றொரு பட்டினி விரதம்
270
தோழர் காந்தி கெண்டைக் குஞ்சுகள்
211
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
79. வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாடு 274
80. “மே தினம்சமதர்மப் பெருநு 282
81. நாகம்மாள் மறைவு 284
82. அருஞ்சொல் பொருள் 287
குடி அரசு - 1933 () 8 9 வட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ரிஜிஸ்டர் தெ. 2041. தனிப்பிரஇ விலை ஒரு குடினாசு
வியபீகள் விம்பம் அ 1484 1 ஞாயி சதோதும் வெளிகளும்... | து ததக வடிந்த ண்பபாற்கக்கு நனி digh
மா 8, | சோ, அங்செனஃனு! கறிய 1-௨ (11-13) i 30,
இதற்க்கு ன்று ச்சு “கடவுளும் பிரபஞ்சநும்”
நவா ஸ்வம் அணுக்கம் வாறது
கமர் 50 பப்வ்கள் கொண்ட 22 1-க்கு வீல் அனு 0-0 தனிப்பித தி வெண்டுவோ? 5- அறை பா நிங்கள் அனுப்பவேண்டும்.
இந்தியாவின் குறைபாடுகள்.
The Crux of the Indian Problem என்னும் புஸ்தகத்தை வாங்வொரியுங்கள்,
னிட மூக்கை முனை அவெசகளும்
குடி அரசு - 1933 M) 10
The Aims and ideals ௦8 the Self-Respect Party of South India.
1. The attainment of complete independence from the Brit-
ish and other forms of capitalist Governments.
2. The cancellation of all national debts.
3. Public ownership of Railways, Banks, Shipping and other
transport services waters and lands etc.,
4.Public ownership without compensation of all agricultural lands,
forests, and estates.
5. Cancellation of all private debts and other obligations in-
curred by the workers and peasants.
6. Changing of வி Native States into one common Indian Federation under the rule of the workers and peasants of India.
7.Improving the life of the workers and peasants of the land by secur-
ing for them, more than 7 hours labour, increased wages, State aid for their unemployed, health resorts, free libraries and other cultural facilities.
8. These shall form the main ideals of the Self-Respect Party.
Self-Respect League. Samadharma Party of South India. Proposals.
Preamble:-
Whereas, the Self-Respect Party, during the past eight years has
very largely succeeded in rousing the attention of the mass people to the enormity of their superstitions habits, customs and practices of their religion
and caste and of their degraded economic conditions of life.
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
Whereas, it is becoming increasingly evident that such irrational
religious and caste habits and customs and their low economic conditions of
life, cannot be done away with, except through state action, and
Whereas, it is further evident that the various political social and
religious bodies and institutions are ever more determined to hold the masses
in sodial, religious and economic bondage and degradation, through their
political organisation all over the country, and
Whereas, the safeguards adopted by the Round Table Conference
for the perpetuation of pemicious religious practices and of inhuman caste distinctions are inimical to and destructive of all rational life of the masses.
Objects:-
IT IS HEREBY PROPOSED to form from the body of Self respectors,
a political Party called THE SAMADHARMA PARTY OF 5. 1, to carry out the following main objects, namely,
1. To obtain by constitutional means and methods, the repeal of all
irrational safeguards for the private enjoyment of public utilities, for all harmful
religious and caste practices and habits, and thereby free the masses from
their degrading religious and caste superstitions and habits and improve their economic life.
11. To obtain the adoption of adult suffrage for election of members to
all Government, Legislative and Municipal bodies, Local, Provincial and Cen-
tral.
111. To obtain security of service and minimum wage to all workers in
public and private utility services, வள் as factories, workshops, railways,
shipping, transport, post and telegraphs etc.,
IV. 1௦ get for the landless workers and agricultural labourers working
in cultivable lands, estates and waters, 8 reasonable share in the produce of
such lands, estates and waters.
V. To obtain state sanction for utilising temple, church, mosque and
religious funds and incomes, for the education, both literary and vocational,
for sanitation and housing of the mass population in the country, and for the maintenance of destitute children and orphans.
VI. To obtain the removal of all caste distinctions among all caste,
sects and classes of the Indian community, by removing all caste titles, from
all public records and making வள் retention of caste titles 85 a disability to
hold any kind of public service.
குடி அரசு - 1933 M) 12
VII. To secure through state action, municipalisation of housing, trans-
port, milk and medical service and establishment of nurseries in Municipali-
ties Taluk and District Boards and Village Unions.
VIIL To set up party candidates to the Legislative Councils, Taluk,
District, and Village Boards and Unions and Panchayats, to secure the afore-
said objects of the party.
IX. Party Candidates pledged to these various objects of the party will
be elected for the various Legislative Councils, Taluk and District Boards,
Village Unions etc.
X . These various measures, acts, and reforms shall be obtained through all constitutional means and methods such as council entry and propaganda by means of lectures, discussions and discourses as well as through the press. Rules and regulations for party funds and organisations
etc will be made by a provisional committee of the party called for the pur- pose.
குடி அரசு - 01.011933
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
6வலைத்திட்டக் கூட்ட முழுவ
சென்ற வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தபடி சுயமரியாதை இயக்க வேலைத்திட்டக் கூட்டம் ஈரோட்டில் தோழர் ஈவெரா. வீட்டில் நடைபெற்ற விபரமும் அதன் முடிவும் சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூட்ட நடவடிக்கை மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. அக்கூட்டத்திற்கு எதிர்பார்த்ததற்கு மேலாகவே பல ஊர்களில் இருந்தும்
சுமார் இருனூறு தோழர்கள் வரை விஜயம் செய்து இருந்தார்கள். பல தோழர்கள் தாங்கள் வர முடியாத அசெளகரியத்திற்கு வருந்தி தந்தியும் கடிதங்களும் எழுதி இருந்தார்கள். என்றாலும் கூட்டத்தின் முடிவை ஏற்று, தங்களால் கூடியவரை கலந்து உழைப்பதாகத் தெரிவித்துக் கொண்டார்கள்.
கூட்டமானது இரண்டு நாளில் நான்கு தடவை கூடி சுமார் 20 மணி
நேரம் நடந்தது. பல விஷயங்களைப் பற்றியும் பலமான வாக்கு வாதங்களும். நடந்தது என்றாலும் முடிவில் ஏகமனதாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப்
பட்டன,
முதலாவது சுயமரியாதை இயக்கத்தின் லக்ஷியம் என்பது. அதாவது சென்றவாரக் குடியரசில் “சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை” என்ற தலைப்பில் பிரசுரித்த விஷயமாகும். இது பலருக்கு ஒரு பெரிய உணர்ச்சியையும், திடுக்கிடக்கூடிய நிலையையும் உண்டாக்கி விட்டதாகத் தெரிகிறது. அதில் சிலருக்கு அந்த கொள்கையே அதிருப்தியைக் கொடுக்கக்கூடியதாய் இருந்ததாகவும் காணப்பட்டது என்பதோடு மாத்திர. மல்லாமல், சிலருக்கு அந்த லக்ஷியத்தை அப்படியே ஒப்புக்கொள்ளு கின்றவர்களுக்கும் கூட அதை வெளியில் சொல்லுவது என்பது அதிக பயத்தைக் கொடுத்திருக்கிறதாய்த் தெரிகிறது. எதனாலென்றால் இதைச் சொன்னால் அரசாங்கத்தார் பிடித்து 10 அல்லது 20 வருஷம் தண்டித்து விடுவார்களோ என்று கருதினதினாலேயாகும்.
ஆகவே, எது எப்படி இருந்த போதிலும் சரி, அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை, அதன் சாதக பாதகங்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் நன்றாய் விவாதித்து ஆராய்ந்து அறிந்த பின்பே அது சரியா தப்பா என்று முடிவு கட்ட வேண்டும் என்பது தான் நமது கடமையாய்
குடி அரசு - 1933 M) 14
இருந்தது. அந்தப்படியே நமது அழைப்புக்கு இணங்கி விஜயம் செய்து இருந்த சுமார் 200 தோழர்களும் நன்றாய் இரண்டு நாளும் விவாதித்து பிறகே. ஏகமனதாய் ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அதுபோலவே சு.ம.இயக்க வேலைத் திட்டம் என்கின்ற விஷயமும் மேற்கண்டது போன்றவையாய் இல்லா விட்டாலும் அதுவும் ஓரளவுக்கு பெருத்த விவாதத்தைக் கிளப்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி என்றால் சு. ம. இயக்கம் அரசியலில் தலையிட்டால் இயக்கத்திற்கு கேடுவந்து விடுமென்றும் பலருக்கு அது அசெளகரியமாய் இருக்குமென்றும் சொல்லப்பட்டது. ஆனபோதிலும் சட்டசபை முதலிய ஸ்தாபனங்களை கைப்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அதனால் குறைந்த பட்சம் என்று சற்று அதிகமான பிரசாரம் செய்யவாவது இடமேற்படும் என்றும் கருதி ஏகமனதாய்த் தீர்மானிக்கப் பட்டு விட்டது.
லக்ஷியம்
நிற்க, சுயமரியாதை இயக்க லக்ஷியம் பொது உடமை இயக்க லக்ஷிய மாய் இருக்கின்றதென்றும், அதற்கு அரசாங்க அடக்குமுறை கொடுமை ஏற்படுமென்றும், அதனால் இயக்கமே அழிவுர வேண்டி வரும் என்றும் பலர். சொல்லக் கேள்க்கிறோம். பலர் பத்திரிகைகளிலும் பிரசங்கங்களிலும் அந்தப்படி குறிப்பிட்டு வருவதையும் பார்க்கின்றோம். இதற்கு நாம் முதலாவதாக கூறும் பதில் என்னவென்றால் அவர்கள் கூறுகின்றபடியே பொது உடமைக் கொள்கையே ௬. ம. கொள்கை என்று ஒத்துக் கொண்டே பா£ப்போமானாலும் அதனால் ஏற்படும் நஷ்டமென்ன? கஷ்டமென்ன?' என்றுதான் கேள்க்கின்றோம். நாம் என்றையத் தினம் சுயமரியாதை இயக்கம் என்று ஆரம்பித்தோமோ அன்று முதலேதான் இவ்வியக்கத்தைப்பற்றி
பலரால் இது பொதுவுடமை இயக்கமென்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது என்பதோடு சு. ம. இயக்கத்தின் முடிவான லட்சியங்களை எடுத்துச் சொல்லும். போதெல்லாம் நாமும் மேல் கண்ட தத்துவத்தையே தான் சொல்லி வந்திருக் கிறோம். ஆதலால் நாம் புதிதாக எதையும் கொண்டு வந்து புகுத்தி விட வில்லை.
நிற்க மனித சமூகத்துக்கு ஏதாவது ஒரு உண்மையான தொண்டு செய்யவேண்டுமென்று ஒருவன் கருதினால் அவன் ராட்டினத்தின் பெருமை யையும், கோவில்களிலுள்ள கடவுள்களின் பெருமையையும், பகவத்கீதை, புராணங்கள் ஆகியவற்றின் பெருமையையும் உலகிற்கு எடுத்து ஓதிக் கொண்டிருந்தால் போதுமா? என்றும் சகல கொடுமைகளுக்கும், குறைபாடு களுக்கும் அன்னிய நாட்டான் மீது குற்றம் சொல்லி பாமரமக்களை அவன் பக்கம் திருப்பி ஏவிவிட்டுக்கொண்டு இருந்தால் போதுமா என்றும் கேட்
கின்றோம்.
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
நமது நாட்டுக்கு நன்மை செய்ய முற்பட்ட காங்கிரசை 46 வருஷமாய்
பார்த்தாய் விட்டது. அதைத் தலைமை வகித்து நடத்த தேசாபிமானிகள், லோகமானியர்கள், தேச பந்துக்கள், மகாத்மாக்கள் வரை முன்வந்த எல்லாப் பெரியார்களின் யோக்கியதைகளையும் பார்த்தாய்விட்டது. அதுமாத்திரமல்ல. அவற்றால் விளைந்த பயன்களையும் பார்த்தாய் விட்டது. இனி விளையப் போகும் பயன்களும் நன்றாய் விளங்கிவிட்டன. ஆகவே இனியும் அறிவுள்ள மனிதன் - மனித சமூகத்தின் ஜீவகாருண்யத்தில் உண்மையான பற்றுக் கொண்ட மனிதன் அவற்றையேதான் இன்னமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
அன்றியும் நம்மை ஆட்சிபுரியும் அரசாங்கம் என்பதின் யோக்கிய தையும், அது இந்த 160 வருஷ காலமாய் நமக்கு செய்துவந்த பயன் என்ன என்பதையும் கண்டுவிட்டோம். அது இனி என்ன செய்யபோகின்றது என்ப தையும் தெரிந்துவிட்டோம். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமானால் நமது அரசாங்கம் ஒரு கசாப்புக்கடைக்காரன் போலவும், நமது காங்கிரஸ் அந்தக் கசாப்புக்கடைக்காரனிடம் வியாபாரம் செய்து விலை பேசி மாமிசம் வாங்கும் வாடிக்கைக்காரன் போலவும், நாமாகிய பொது மக்கள் கசாப்புக்கடைக் காரனது ஆடுகள் போன்றுமே இருந்து வந்திருக்கின்றோம். ஆடுகளாகிய நம்மை வளர்க்கும் விஷயத்தில் கசாப்புக்கடைக்காரனுக்கு இருக்கும் கவலையும் தாராள நோக்கமும் எல்லாம் நம்மை வெட்டி விற்பனை செய்வ
தில் அதிகலாபம் கிடைக்கும்படியான ஆசை முயற்சியே யொழிய
வேறில்லை...
இனியும் அரசாங்க சீர்திருத்த திட்டங்களையும் காங்கிரஸ் தலைவர் களுடைய தேசீய வேலை முறைகளையும் நம்பிக்கொண்டும் அவற்றிற்காக உழைத்துக்கொண்டுமே இருப்போமானால் கசாப்புக்கடைக்காரனை நம்பிய ஆடுகளின் கதியேஆவோம்.
இதற்கு ஒரு சிறு உதாரணம் எடுத்துக்காட்டுகிறோம். அதென்ன வென்றால், சமீப வட்டமேஜை மகாநாட்டின் முடிவை எடுத்துக் கொள்ளுங்
கள். வட்டமேஜை மகாநாட்டின் அடிப்படையான கொள்கை யானது அதா வது இந்திய அரசியல் எப்படி அமைக்கப்படவேண்டும் என்ற விஷயமானது காங்கிரசினுடையவும் காந்தியாருடையவும் பூரண சம்மதத்தைப்பெற்றது என்பதை நன்றாய் ஞாபகத்தில் இருத்துங்கள்.
எப்படியென்றால்,
உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைசென்ற தேசீயவீரர்கள் விடுதலை பெறுவதற்காக தோழர் இர்வின் பிரபுவிடம் தோழர் காந்தி செய்து கொண்ட ராஜி ஒப்பந்தத்தில் வட்ட மேஜை மகாநாட்டின் அடிப்படையான பெடரல் கவர்ண்மெண்ட் சிஸ்டம், அதாவது சமஸ்டி அரசாங்கம் என்னும் மகாராஜாக்களும், ஜமீன்தாரர்களும், முதலாளிகளும் சேர்ந்து ஆதிக்கம்
குடி அரசு - 1933 ) 16
செலுத்தும் ஆட்சிக் கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்து செய்து விட்டுத்தான் விடுதலை செய்யப்பெற்றார்கள் என்பதை ஞாபகத்தில்
வையுங்கள்.
ஏறக்குறைய சென்ற 30 வருஷ காலமாய் அரசியல் துரையில் ஏற்பட்டுவந்த சீர்திருத்தமென்பதெல்லாம் “ஜனநாயக ஆட்சி” “குடிக ளுடைய ஆட்சி” "சுயராஜ்யம்” என்னும் பேரால் பாமரமக்களை ஆயுதமாக வைத்துக் கிளர்ச்சி செய்யப்படுவதும், அதன் பயனாய் ராஜாக்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும்” முதலாளிகளுக்கும் ஆதிக்கங்கள் ஏற்படுத்திக் கொள்ளுவதுமாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால் இந்தத்தடவை செய்யப்பட்ட கிளர்ச்சியின் பயனாய் ராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிகள் என்பவர்கள் மாத்திரமல்லாமல் மகாராஜாக்கள் என்பவர்களுக்கும், இந்திய ஆட்சி ஆதிக்கம் கொடுக்கப்பட்டு அதை நிலைநிறுத்துவதற்காக எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு அளித்துக் கையொப்பமும் போட்டாய்விட்டது. இந்தப்படியான அரசியல் சீர்திருத்தமே 1933 லோ 34 லோ அமுலுக்கு வந்து விடப்போகின்றது. இதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம். இதற்காக அடிபட்டவர்களுக்கும், உதைபட்டவர்களுக்கும், சிறை சென்றவர்.
களுக்கும், தேசாபிமானி, தேசிய வீரர், தேசபக்தர் என்ற பட்டமும், தலைமை
வகித்து நடத்தியவர்களுக்கு மகாத்மா, கவர்னர், மந்திரி முதலிய பட்டமும், பதவியும் அல்லாமல் வேறு என்ன நடக்கக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இதுசமயம் உலகிலுள்ள மற்ற தேச அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சி களானது அரசர்களை ஒழிப்பதற்கும் அரசாட்சிக்கு பாமர மக்கள் மீது இருக்கும் ஆதிக்கத்தைக் குறைப்பதற்குமாக கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன. நமது நாட்டிலோ அரசர்களுக்கும், மகாராஜாக்களுக்கும் அவர்களது ஆதிக்க அரசாட்சிக்கும் படிப்படியாய் அதிக பலம் ஏற்படுத்தவே கிளர்ச்சிகள் நடை பெறுகின்றன.
சென்ற பல வருஷக் கிளர்ச்சியை நினைத்துப்பாருங்கள். நமது நாட்டின் ஆகஷிக்கு சென்ற சீர்திருத்தங்களால் ஸ்டேட் கவுன்சில் ராஜாங்க சபை என்று ஒன்று புதிதாக உண்டாக்கப் பட்டது. அதன் கருத்து என்ன? முதலாளிமாரையும், ஜமீன்தாரையும் கொண்ட ஒரு தனிச்சபை ஆகஷிக்கு பொருப்பாய் தலைமையாய் இருக்க வேண்டும் என்று கருதி செய்யப்பட்டு
வந்ததல்லவா?'
இது இந்திய அரசியல் நிலைமை சீர்திருத்தம் என்பதற்கு முன் இருந்த நிலைமையை விட அதிக மோசமான நிலைமைக்குக் கொண்டுவந்ததா அல்லது முற்போக்கான நிலைமைக்கு கொண்டு வந்ததா என்று பாருங்கள். இதற்கு தேசியமும், காங்கிரசும் காரணமாயிருந்ததா இல்லையா என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
அதுபோலவே இப்போது வட்ட மேஜையால் வரப்போகும் அரசியல்
சீர்திருத்தம் முதலாளி ஜமீன்தார் மாத்திரமல்லாமல் மகாராஜாக்களும் கலந்த சபையின் ஆக்ஷிக்கு ஆளாக இருக்க வேண்டும் என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டதா இல்லையா என்பதை நன்றாய் யோசித்துப் பாருங்கள்.
இதைப்பற்றி ஆரம்ப காலத்திலேயே தோழர்கள் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் ரங்கசாமி அய்யங்கார்கள் சிவசாமி அய்யர்கள் சி.பி. ராமசாமி அய்யர்கள் வியாக்கியானங்கள் செய்து புகழ்மாலை பாடும்போதே நாம்
எடுத்துச் சொன்னோம்.
இந்தியா முழுவதிலுமே நம்மைத் தவிர வேறு யாருமே இந்த மகாராஜாக்கள் கூட்டுறவு கொண்ட அரசியல் திட்டத்திற்கு ஆட்சேபணை சொல்ல முன்வரவே இல்லை. இந்த நிலைமையில்தான் தோழர் காந்தியும், காங்கிரசும் ராஜி பேசிக் கையொப்பமிட்டாய் விட்டது. இனி இதை மாற்ற வேறு என்ன வழி இருக்கின்றது என்று யோசித்துப்பாருங்கள். ஆகையால் எப்படியாவது நாம் இந்த மகாராஜாக்கள், ஜமீன்தாரர்கள், முதலாளிமார்கள். ஆதிக்கம் கொண்ட ஆட்சியை அழிக்க வேண்டியவர்களாய் இருக்கின் றோம். அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிஷாரால் நடத்தப்படுவதானாலும் சரி, இந்தியரால் நடத்தப்படு வதானாலும் சரி, மற்ற எவரால் நடத்தப்படுவதா னாலும் சரி நமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் கடமையாகும்.
உதாரணம் காட்டவேண்டுமானால் “பீரங்கியால் சுடப்படவேண்டும்” என்ற முடிவை ஒப்புக்கொண்ட பிறகு அந்த “பீரங்கியை யார் சுடுவது” என்பதில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதில் பயன் உண்டா என்று கேட்கின்றோம்.
நமது தேசீயம் இப்போது “யார் சுடுவது” என்பதில்தான் சண்டை போடுகின்றது. ஆனால் நமது சுயமரியாதை இயக்கமோ பீரங்கியை உடைத்து சின்னா பின்னமாக்குங்கள்; இந்த வேலைக்கு தேசீயம் வேண்டாம்; செய்யவருகின்றவர்களை எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்லுகின்றது. இது சரியா தப்பா என்று யோசித்துப்பாருங்கள்.
வட்டமேஜை மகாநாடானது என்றைய தினம் காங்கிரசினிடமும், காந்தியினிடமும் பிடரல் சிஸ்ட்டத்திற்குக் கையெழுத்து பெற்ற அன்றே
முடிவு பெற்றுவிட்டது. இனி அதை யார் எப்படி திருத்தினாலும் அதனின் முக்கிய பயன் ஒன்றும் மாறுதலை அடைந்து விடாது.
இந்த நிலையில் இன்று இந்தியா மாத்திரம் இருப்பதாகக் கருதி விடாதீர்கள். உலகத்தில் உள்ள “தேசீயக்கிளர்ச்சி”கள் என்பவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள பாமர மக்களை ஏமாற்றி, கூலிகளை அமர்த்தி இந்தப்படியே
தான் வேலை செய்து, சரீரத்தினால் பாடுபட்டு வாழும் மக்களை வதைத்து
குடி அரசு - 1933 M) 18
வாழ்ந்து வருகின்றன. இதனால்தான் நமது சுயமரியாதை இயக்க லக்ஷியம் உலக லக்ஷியமாய் உள்ளதை கைகொண்டு இருக்கிறது. இந்த லக்ஷியத்தால் ஒன்றும் ஆபத்து வந்து விடப்போவதில்லை. அப்படி ஏதாவது ஒரு ஆபத்து வருவதாய் இருந்தாலும் அந்த ஆபத்தானது மக்கள் சமூகத் தினிடம் உண்மையான கவலை உள்ளவனுக்கு மேல் கண்ட ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருவதை விட கடினமானதாக இருக்காது. ஒரு சமயம் யாருக்குக் கடினமான தாக இருக்கும் என்று யோசிப்போமானால் சோம்பேரிகளுக்கும் ஊரார். உழைப்பில் வாழ்கின்றவர்களுக்கும், முதலாளிகளுக்கும், ஜமீன்தாரர்
களுக்கும், ராஜாக்களுக்கும் மகாராஜாக்களுக்கும் கடினமாய் இருக்கலாம்.
அதனால் நமக்கு என்ன? என்றையத்தினம் நாம் அந்த சமூகங்கள் பெரும்பான்மையான மனித சமூகத்தின் இன்ப வாழ்வுக்கும் சுதந்திர வாழ்வுக்கும் இடையூறாய் இருக்கின்றது என்று கருதி விட்டோமோ அன்றே அவற்றின் நாசகாலத்தை எதிர்பார்க்க வேண்டியவர்களாகவும் அதற்கு நம்மால் ஆன எல்லா காரியத்தையும் செய்து தீரவேண்டியவர்களாகவும் ஆகிவிட்டோம். ஆதலால் அதைப்பற்றி கவலை இல்லை.
மற்றபடி வேலைத்திட்டத்தைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.01.1933
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
6வண்டுகோன்
நமது மாகாணத்தில் ஆங்காங்குள்ள சுயமரியாதை சங்கத்தார்களும்
மற்றும் அதன் லக்ஷியத்தையே லக்ஷியமாய்க் கொண்டு நடைபெற்று வரும் சங்கத்தார்களும் தங்கள் தங்கள் சங்கத்தின் ஊர் பேர்,நிர்வாகஸ்தர்கள் பெயர், அங்கத்தினர் கள் எண்ணிக்கை முதலியவைகளைக் குறித்த விபரம் ஒன்று உடனே தெரிவிக்க வேண்டுகிறோம். ஏனெனில் துண்டு பிரசுரங்களையும்,
சிறு புத்தக வெளியீடுகளையும் அப்போதைக்கப்போது அனுப்பி வரவும் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொள்ளவும், சங்கங்களைக் குறித்து ஒரு
சிறு புத்தகம் வெளியிடவும் வேண்டியிருப்பதால் அதன் விபரங்களை உடனே அனுப்பக் கோருகின்றோம். உடனே சீக்கிரத்தில் புதியதாய் ஏற் படுத்தக் கூடியதையும் ஏற்படுத்தி விபரம் தெரிவிக்க விரும்புகின்றோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 01.01.1933
குடி அரசு - 1933 M) 20
சுயமரியாதை இயக்க லட்சியம்,
வேலைத்திட்டக் கூட்ட நடவழுக்கை
திருத்தப்பட்டபடி நிறைவேறிய சுயமரியாதை இயக்க லக்ஷியம்
1பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைகொண்ட ஆட்சி
யிலிருந்தும் இந்தியாவை பூரண விடுதலை அடையச் செய்வது.
2. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய எல்லா கடன்களை ரத்து செய்வது.
3. எல்லா தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கி களையும், கப்பல் படகு நீர் வழி போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களுக்கு உரிமையாக்குவது.
4.எந்தவிதமான பிரதிப் பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமையாக்குவது.
5. குடியானவர்களும், தொழிலாளிகளும், லேவாதேவிக்காரர் களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் (கேன்சில்) செல்லுபடி யற்றதாக ஆக்கி விடுவது, அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து
விடுவது.
6. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை யெல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்கு கொண்டு வருவது.
7. தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த் தப்படுவது. தொழிலாளிகளுக்கு கூலியை உயர்த்தி, அவர்களது
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
21
சுகவாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களையும் இலவச நூல் நிலையங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது. தொழில் இல்லா
மல் இருக்கின்றவர்களை சர்க்கார் போஷிக்கும் படியும் செய்வது.
என்பவைகள் சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான லட்சியங் களாகும்.
திருத்தப்பட்டபடி நிறைவேறிய வேலைத்திட்ட தீர்மானம்
சுயமரியாதை இயக்கமானது தென் இந்தியாவில் சென்ற 7, 8 வருஷ காலமாக பாமர மக்களிடையே ஏராளமாய் புதைந்து கிடந்த ஜாதி, மதம் முதலியவைகளைப் பற்றிய குருட்டு நம்பிக்கைகள் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவைகளைப் பற்றியும், பொருளாதாரத் தன்மையின் கீழ்நிலையைப் பற்றியும் செய்து வந்த புரட்சி பிரசாரத்தின் பலனாய் ஒரு பெருத்த உணர்ச்சி யைக் கிளப்பி விட்டிருப்பதாலும், பகுத்தறிவுக்கு ஏற்காத முறையில் நடை
பெற்று வரும் மேல்கண்ட பழக்க வழக்க முறைகளை சட்ட மூலமாகவன்றி வேறு வழியில் ஒழிப்பது என்பது முடியாது என்கின்ற அபிப்பிராயம்
நாளுக்கு நாள் பலப்பட்டு வருவதாலும்,
பாமர மக்களைப் பல அரசியல் ஸ்தாபனங்களும், சமூக கட்டுப் பாடுகளும் அந்தந்த விஷயங்களில் அடக்கியும், பொருளாதாரத் துறையில் ஒடுக்கியும் வைப்பதற்கு சாதனமாக அரசியல் ஸ்தாபனங்களே உபயோகப் படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆட்சேபிக்க முடியாத உண்மையாய்
இருப்பதாலும்,
வட்டமேஜை மகாநாட்டின் பயனாய் பாமர மக்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கு நாசத்தை உண்டாக்கும் கொடுமையான பழய பழக்க வழக்கங் களுக்கும் மனிதத் தன்மைக்கு முரணான ஜாதி வித்தியாசங்களுக்கும் மற்றும் பல கெடுதிகளுக்கும் பாதுகாப்பும், ஆக்கமும் அளிப்பதாய் இருப்பதாலும்,
சுயமரியாதை இயக்கத்தாருக்குள் சமதர்ம (Socialist party) கட்சி என்பதாக ஒரு அரசியல் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு அடியிற் கண்ட திட்டத்தை வகுத்து, அதன் மூலம் பரிகாரம் தேடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.
திட்டங்களாவன:-
1. பொது ஜன செளகரியங்களுக்கு ஏற்பட்ட சாதனங்களை தனிப் பட்ட மனிதர்கள் அனுபவிப்ப தென்பதற்கும் ஜாதிமத சம்பந்தமான கொடுமைகளுக்கும் பாதுகாப்புகளாய் இருக்கும் அறிவுக்கு ஒவ்வா முறைகளை ரத்து செய்ய வேண்டும். பாமர ஜனங்களை அவர்களது பொருளாதாரக் கொடுமையில் இருந்தும், ஜாதி மதக் கொடுமையில்
குடி அரசு - 1933 M) 22 23
இருந்தும் விடுவித்தும் சுதந்திர மனிதர்கள் ஆக்குவதற்கும், பொது ஜன அவசியத்திற்கு என்று ஏற்படுத் தப்படுகிற தொழில் முறைகள் போக்குவரத்து சாதனங்கள் ஆகியவைகளின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கும் வேண்டிய காரியங்களை அரசியல் ஸ்தாபனங்களின் மூலமாகச் செய்ய வேண்டும்.
2. எல்லாச் சட்டசபை, முனிசிபல் தாலூக்கா ஜில்லா சபை ஆகியவற்றின் தேர்தலுக்கு வயது வந்த யாருக்கும் ஓட்டுரிமை ஏற்படும்படி செய்ய வேண்டும். தனிப்பட்ட தொழிற்சாலைகள், ரயில்,
கப்பல் முதலியவைகளில் தொழிலாளிகளுக்கு எப்பொழுதும் தொழில்
இருப்பதற்கு ஒரு ஜவாப்தாரித்தனத்தையும் அவர்களுடைய நல் வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியத்தை நிர்ணயப் படுத்தி அதற்கு ஒரு உறுதிப் பாட்டையும் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. நில சொந்தக்காரர்களாயில்லாமல் விவசாயத்தில் ஈடுபட்ட தொழிலாளிகளுக்கு வெள்ளாமையில் ஒரு ஞாயமான பங்குவிகிதம் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
4. கோவில், பிரார்த்தனை இடங்கள் முதலிய மத ஸ்தாபனங்களின் சொத்துக்கள், வரும்படிகள் ஆகியவைகளைப் பொது ஜனங்களின் தொழில், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, அனாதைப் பிள்ளைகள் விடுதி ஆகியவைகளுக்கு பயன்படுத்த அனுமதி பெற வேண்டும்,
5. இந்திய சமூகத்தில் ஜாதி மத பிரிவு முதலியவைகளைக் குறிக்கக் கூடிய குறிப்புகள் எதையும் பொது ஆதாரங்களில் ரிகார்டுகளிலி
ருந்து! எடுத்து விடுவதற்கும், அம்மாதிரிப் பட்டம் உடையவர்களைப் பொது வேலைகளில் இடம் பெறாமல் இருக்கும்படி செய்வதற்கும் அனுமதி பெறுதல்..
6. முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாபனங்களின் மூலமாகவே போக்குவரவு சாதன வசதி, வீட்டு வசதி, பால் வசதி, வைத்திய வசதி முதலியவைகள் நடை பெறும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.
7. இவைகளை நிறைவேற்ற சட்டசபை, முனிசிபாலிட்டி முதலிய ஜனப் பிரதிநிதி ஸ்தாபனங்களுக்கு மேல்கண்ட கட்சியினர் பேரால் அபேகஷ்கர்களை நிறுத்த வேண்டும்.
8. கட்சி அபேட்சகர்கள் மேல் கண்ட திட்டங்களுக்கு உறுதிகூறி கையெழுத்திட வேண்டும்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
9. மேல்கண்ட சட்டங்கள், சீர்திருத்தங்கள் முதியவைகளை
எல்லாம் சட்டசபைப் பிரவேசம் மூலம், பிரசங்க மூலம், சொல்லுவதன்
மூலம், பத்திரிகைத் துண்டுப் பிரசுரம் முதலியவைகள் மூலம் சட்டத்தை அனுசரித்துச் செய்ய வேண்டியது.
குடி அரசு - 01.01.1933
குடி அரசு - 1933 M) 24
காந்தியின் மற்வறாரு ராசி
தீண்டாமை ஒழிப்பா? நிலைப்பா?'
அரசியலில் வேலையற்றதினால் பாமர மக்களுக்கு தம் மீது ஏற்பட்ட சலிப்பையும், வெறுப்பையும் தீர்த்துக் கொள்ளுவதற்காக சமூகத்துறையில் ஏதோ பெரியதொரு சீர்திருத்தம் செய்வதாக வெளிப்பட்டு, அவ்வெறுப்பை
மாற்றிக் கொள்ளலாம் என்று கருதிய தோழர் காந்தியவர்கள் “பிள்ளையார். செய்யப் போய் குரங்காய் முடிந்தது” என்ற பழமொழிப்படி மக்களின் அதிகமான வெறுப்புக்கு ஆளாக நேரிட்டு, இப்போது அதிலிருந்தும் தப்பு வதற்கு ஒரு பெரிய குட்டிக் கரணம் போடவேண்டியதாய் ஏற்பட்டு விட்டது.
அதென்னவெனில் தோழர் காந்தி, இர்வின் பிரபுவிடம் செய்து கொண்ட ராஜியின் பயனாய் இந்திய ஏழை மக்களின் மீது பணக்காரர்கள் ஆட்சியையும், முதலாளி ஆட்சியையும் இந்திய மகாராஜாக்கள் ஆட்சி யையும் எப்படி நிரந்தரமாய் இருக்கச் செய்து விட்டாரோ அதே போல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று கள்ளிக்கோட்டை சாமூதிரினிடமும், சாஸ்திரிகளிடமும் செய்து கொள்ளும் ராஜியானது தீண்டப்படாத மக்களுக்கு தீண்டாமை என்பது என்றும் நிரந்தரமாய் இருக்க ஏற்பாடு செய்து தீர வேண்டிய நிலைமைக்கு வந்து சேர்ந்து விட்டது. இதுபார்ப்பன தேசீயவாதி களுக்கு ஓர் பெரிய வெற்றியேயானாலும் பார்ப்பனரல்லாத “தேசீயவாதிகள்” இதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை. என்றாலும் எப்படியோ தமிழ்நாடு பத்திரிகையும், தோழர் வரதராஜலுவும், ஜஸ்டிஸ் பத்திரிகையும் ஒரு வழியில் தைரியமாய் இதன் இரகசியத்தை வெளியாக்கி விட்டன. என்றாலும் மற்றவர்கள் என்ன சொல்வார்களென தெரியவில்லை. என்னவோ சொல்லிக் கொள்ளட்டும். தேசீயம் என்பது அழியும் வரையோ, அல்லது தேசீய வாதிகள் என்பவர்கள் வாழ வேறுமார்க்கம் கண்டு பிடிக்கும் வரையோ இப்படிப்பட்ட விஷயங்களில் அவர்கள் தைரியமாய் உண்மை சொல்ல முடியாதாதலால் காந்தியாருக்கும், அவரது பார்ப்பன வலக்கை: களுக்கும் பின் தாளம் போட்டுத்தானாக வேண்டும். அவர்களைப்பற்றி இப் போது நாம் கவலைப்படவில்லை. ஆனால் தீண்டப்படாதார் என்ற மக்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள் என்பது ஒரு சிக்கலான பிரச்சினை யாகவே இருக்கின்றது.
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மக்களுக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி என்பது இல்லாத காரணத்தால் தான் உலகில் அரசனும், குருவும், பணக்காரனும் மேல் ஜாதிக்காரனும் ஏற்பட இடமுண்டாயிற்று என்பதோடு, ஏழையும் தொழி லாளியும் கூலியும் “சூத்திரனும்” (அடிமையும்) “சண்டாளனும்” ஏற்பட இடமுண்டாயிற்று என்றும் தைரியமாய் கூறுவோம்.
இந்த காரணத்தால்தான் இன்று நமது “தெய்வத்தன்மை” பொருந்திய “ஞானபூமி” யாகிய இந்தியாவில் 16 கோடி “சூத்திரர்” அடிமை! என்பவர்
களும். 7 கோடி “தீண்டாதார்கள்” “சண்டாளர்கள்” என்பவர்களும் பல ஆயிரக்கணக்கான வருடங்களாய் இருந்து வருவதுடன் இவற்றை இன்றும், என்றும் நிலைநிருக்க வென்று சங்கராச்சாரி “லோக குருக்களும்” “மகாத்மாக்
களும்” இருந்து வருவதுடன் இவர்களுக்கு இடமும், ஆக்கமும் அளிக்க “ஜாதி மத நடுநிலைமை” வகிக்கும் “மகா காருண்யம் நிறைந்த” சக்கரவர்த்தி கள்,மகாராஜாக்கள் ஆட்சிகளும் இருந்து வருகின்றன.
சாதாரணமாக ஆட்சி என்பது மக்களுக்கு சமதர்ம நீதி செலுத்தவே ஒழிய, அதாவது எளியோரை வலியோர் வஞ்சித்து வதைக்காமல் இருப்ப தற்கே ஒழிய பூனைக்கு குரங்கு மத்தியஸ்தமாய் இருந்த கதைபோல் “எப்படியோ வலிமை பெற்ற அயோக்கிய மூர்க்கர்களுக்கும், அவர்களால் வலிமையற்ற சாதுக்களுக்கும் நடுநிலைமை வகிப்பதற்கு” அல்ல என்பதை உலகில் எந்த அரசாட்சியும் இதுவரை உணர்ந்து நடந்ததாக தெரியவில்லை. என்றாலும் தாழ்த்தப்பட்ட மக்களாகிய தீண்டாதார் என்னும் மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி கடுகளவாவது இருக்குமானால் அவர்கள் ஒருநாளும். உதைத்த காலுக்கு முத்தமிடுவது போல் இந்த கோவில் நுழைவு சூட்சிக்கு ஆளாகி இருக்கவே மாட்டார்கள்.
ஏனெனில் இன்றைய கோவில் நுழைவு கிளர்ச்சியில் “கடவுளை நம்புகிறவன் தான் கோயிலுக்குள் போக இஷ்டப்பட வேண்டும்” என்றும் இன்றைய கோயில் பிரவேசக் கிளர்ச்சி “ கடவுளை நம்புகிறவர்களைப் பற்றியது தான்” என்றும் நன்றாய் விளக்கமாய் பறையடிக்கப் பட்டிருக்கிறது.
அது மாத்திரமல்லாமல் “ இந்துக்கள் தான் இந்துக் கோவில்களுக்குச் செல்ல ஆசைப்படலாம்” என்றும் “இந்துக்கள் தான் கோயில் பிரவேச முயற்சியில் கலந்துகொள்ளலாம்” என்னும் நிபந்தனைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆகவே, கடவுளைப்பற்றிய நம்பிக்கை இல்லாதவனுக்கும், தன்னை ஹிந்து என்று சொல்லிக்கொள்ள இஷ்டப்படாதவனுக்கும் இந்த கோவில் நுழைவு கிளர்ச்சியில் கலந்து கொள்ளவோ, கோவிலுக்குள் போக ஆசைப்படவோ செய்வது நியாயமாகாது என்பது வெளிப்படை அத னாலேயே அப்படிப்பட்ட அனேகர் அதில் கலந்து கொள்ளாமல் இருந்தாலும் இருக்கலாம்.
குடி அரசு - 1933 M) 26
இவை ஒரு புறமிருக்க உண்மையிலேயே கடவுள் அதாவது “சகலத் தையும் படைத்து, காத்து, நடத்தும் சர்வ சக்தியுள்ள” ஒரு கடவு ளையும், முன்
பின் ஜன்மம் உள்ள இந்து மதத்தையும் நம்புகின்ற, ஒப்புக் கொள்ளுகின்ற ஒரு இந்து தீண்டாதவன் என்கின்றவன் கோவிலுக்குள் பிரவேசிக்க முயலுவது அறிவுடைமையா? அல்லது சுயமரியாதை உடமையா? என்று பார்த்தால் இரண்டுமற்ற தன்மை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் ஒரு ஆஸ்திக இந்து சர்வ சக்தி உள்ள கடவுளால் தான், முன் ஜன்ம கர்மத்தால்
தான், தான் பிறந்ததாக கருதியாக வேண்டும். அன்றியும் தான் தீண்டப்படா
தானாய் பிறந்ததற்கும் அல்லது கருதப்படுவதற்கும் அந்த கடவுள்தான் காரணம் என்பதையும் உணர்ந்தாக வேண்டும். ஆகவே தன்னை இந்த நிலை ஆக்கிய ஒரு கடவுளை-அதாவது தீண்டத்தகாதவனாய் ஆக்கிய ஒரு கடவுளை - தீண்டத்தகாதவன் என்று சொல்லும்படி செய்த ஒரு கடவுளைப் போய், அதன் இருப்பிடம் சென்று தரிசிப்பது, பூஜிப்பது. பிரார்த்திப்பது, வணங்குவது என்பவைகளான காரியங்கள் அணுவளவாவது சுயமரியா தைக்கு ஏற்றதா? என்று கேள்க்கின்றோம். இந்தப் படியான சுயமரியாதை அற்ற மக்களைக் கொண்ட நாட்டுக்கு “தேசீயம்””“ வேண்டும், “சுயராஜ்ஜி
யம்” வேண்டும் என்று சொல்லிக் கொள்வதில்-அதற்காக பாடுபடுகின்றோம் என்று சொல்லப்படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா என்றும் கேள்க்கின்றோம்.
இவை ஒரு புறம் இருக்க, தீண்டாதார் சமூகம் என்பதாக ஒரு சமூகம்
இந்த நாட்டில் நிரந்தரமாய் இருப்பதற்காக இந்த கோவில் நுழைவு என்னும் பேரால் ஒரு புதிய சூகி செய்யப்படுவதாய்த் தெரின்றது. அதென்ன வென்
றால் இப்பொழுது தீண்டாதாராய்க் கருதும் ஒரு சமூகத்திற்கு ஹரி ஜனங்கள். என்று புதிதாக ஒரு பெயரை இட்டு அதை அவர்களையே ஒப்புக் கொள்ளச் செய்தாய் விட்டது,
இதனால் இந்த ஹரிஜனங்கள் என்கின்ற பெயர் உலகில் உள்ளவரை: தீண்டாதவர்கள் என்பவர்கள் இருந்தே தீருவார்கள் என்பது திண்ணம். அதுபோலவே இப்போது தோழர் காந்தியார் ஜாமொரினிடமும், சாஸ்திரி களிடமும் செய்துகொள்ளும் ராஜி ஒப்பந்தப்படி தீண்டப்படாதார் கோவி லுக்கு போக என்று ஒரு தனி நேரம் ஏற்படுத்திக் கொண்ட பிரகு இந்தக் கோவில்கள் உள்ள வரையிலும் தீண்டாதார் என்கின்ற கூட்டம் இருந்தேதான்
தீரும்.
தீண்டாதார் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோவிலுக்குப் போய் வணங்கிவிட்டு வருவதும் அவர்கள் வெளியே வந்தவுடன் அக்கோவிலுக்கு
சுத்தி சம்ரோட்சணை? செய்வதுமான காரியங்கள் அத்தீண்டப்படாதார் என்பவர்களை தினம்தினம் எவ்வளவு இழிவுபடுத்தி அவ்விழிவை நிலைக்கச் செய்கின்றது என்பதை நினைத்துப்பாருங்கள்.
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இன்றைய தினம் தீண்டாதாருக்கு யாராவது உண்மையான-பயன் தரும்படியான - அவர்களது இழிவு நிரந்தரமாய் நீங்கும் படியான நன்மை செய்கின்றவர்கள் இந்நாட்டில் உண்டு என்றால் அதில் தோழர் டி.ஆர்.ராமச்
சந்திர அய்யர் என்பவரே முதன்மையாவார் என்று சொல்லுவோம். ஏனெ
னில் அவர்தான் உண்மையை தைரியமாய்ச் சொல்லுகின்றார். அதாவது “தீண்டாதார் என்பவர்கள் இந்துக்கள் அல்ல” என்கின்றார்கள். அதையே
தான் நாமும் சொல்லுகின்றோம். வெகுகாலமாகவே சொல்லியும் வந்திருக். கின்றோம். மற்றும் அவர் சொல்லுகிறபடி அரசாங்க சட்டமும் ஏற்பட்டு விடுமானால் (அந்தப்படி ஏற்படுவதை தோழர் காந்தியே கெடுத்தார் அன்றே இந்தியாவைப் பிடித்த தீண்டாமைக் கொடுமை மாத்திரமல்லாமல், அடிமைத் தன்மைக் கொடுமையும் ஜாதி ஆணவமும் ஒழிந்தது! ஒழிந்தது! ஒழிந்தது!!! என்றே சொல்லுவோம். எப்படி என்பது இந்துக்கள் அல்லாத கிறிஸ்து வரை: யாவது மகமதியரையாவது மற்ற எவரையாவது தீண்டாதவர்கள் என்று சொன்னால் என்னபலன் கிடைக்கும் என்று பார்த்தால் விளங்கிவிடும். ஆகவே இன்று தோழர் டி. ஆர். ராமச்சந்திர அய்யரைக் குற்றம் சொல்லு பவர்களை நாம் தீண்டாதாரின் எதிரிகளென்றே சொல்லுவோம். தீண்டாத வர்கள் இந்துக்கள் அல்லவானால் அவர்களை பின்னையார் என்று சொல்லுவது என்று சிலர் கேள்க்கக் கூடும். அவர்கள் யாராயிருந்தாலும்
நமக்குக் கவலை இல்லை. கழுதைகள் என்று அழைத்தாலும் சரி, நாய்கள்: என்று அழைத்தாலும் சரி நாம் அதைப்பற்றி இவ்வளவு கவலைப் படுவதில்லை. ஏனெனில் இன்று தீண்டாதாரை தீண்டாதார் என்று கருதும் மக்கள் நாய்களையும், கழுதைகளையும் தீண்டாதார் என்று கருதுவதுமில்லை அவற்றைத் தீண்டாமல் இருப்பது மில்லை. தீண்டினால் குளிப்பதுமில்லை.
மற்ற விஷயங்களிலும் கழுதை களுக்கும் நாய்களுக்கும் உள்ள சுதந்தரங் களை திண்டாதார்களுக்கு அளிக்கவும் அவர்கள் சம்மதிப்பதுமில்லை.
அவைகளைப் பொருத்தவரை மாத்திரமல்லாமல் உண்மையைப் பேசப்போனால், இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதன் காரணமாம் “சூத்திரர்கள்” என்று அழைக்கப்படுகின்ற 15 கோடி மக்களைக்கூட சூத்திரர்.
கள் என்ற பெயரை எடுத்துவிட்டு கழுதை என்றோ, நாய்கள் என்றோ பெயரைக் கொடுக்கலாமா என்றால் அதற்கும் நாம் ஆட்சேபிக்க வர மாட்டோம்; முதலில் ஒட்டுக் கொடுப்போம்.
ஏனெனில் “இந்து மத” மனிதசமூகத்திதல் “சூத்திரன்” என்பவ னுக்கு உள்ள மதிப்பு அநேக விஷயங்களில் ஒரு நாயிக்கு உள்ள மதிப்பை விட கீழாகவே இருந்து வருகின்றது. நாய் போகக்கூடிய இடத்தில் “சூத்திரன் போக முடியாது. பன்றி போகக்கூடிய இடத்தில் “தீண்டாதார்” என்பவர் போக முடியாது என்பதை நினைப்புக்குக் கொண்டு வந்தால் இதன் நியாயம் விளங்கும்.
குடி அரசு - 1933 M) 28
தீண்டாதாருக்கு தனிக் கிணறு, தீண்டாதாருக்கு தனிப்பள்ளிக்கூடம்- தீண்டாதாருக்கு தனிக் கோவில் எல்லாம் இன்று இருந்துவருவது தவிர, இனி தோழர் காந்தியால் தீண்டாதாருக்கு தனி நேரமும் ஏற்பாடு செய்யபோகின்றது என்றால் இதை அறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள மனிதசமூகம் எப்படித்தான் பொருத்துக்கொண்டு இருக்க முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். உண்மையாக சுயமரியாதை ஆட்சி இன்று இருக்குமானால் இப்படிச் செய்கின்றவர்கள் கண்டிப்பாய் தண்டிக்கப்படுவார்கள் என்று தான் சொல்லவேண்டி வருகின்றது.
இன்றைய கோவில் நுழைவு கிளர்ச்சி தீண்டாமை ஒழிப்பு வேலையா? அல்லது தீண்டாமையை என்றைக்கும் நிலை நிறுத்தும் வேலையா? என்று யோசித்துப்பார்த்தால் அதன் உண்மை விளங்கும்.
இதைப்பற்றி தமிழ்நாடு பத்திரிகை எழுதுகையில் இதனால் “தீண்டா
தார்” மக்களுடைய இழிவும் மேல் ஜாதியினுடைய உயர்வும் மறுபடியும் உறுதியாக்கப்பட்டதென்றே சொல்லலாம்” என்றும், “இந்த யோசனை ஒப்புக் கொள்ளப்படுமாயின் தீண்டாதாருடைய தாழ்மைக்கு புதிய முத்திரையிட்டது போல் ஏற்படுகின்றது” என்றும் எழுதி இருக்கிறது. சுதேசமித்திரன் முதலிய கலப்பற்ற பார்ப்பனப் பத்திரிகைகளும், சில கலப்புப் பத்திரிகைகளும் வாய் மூடி மெளனம் சாதிக்கின்றன. ஆனால் அவைகள் தீண்டாதார்கள் பெயர் களைச் சொல்லிக் கொண்டு சட்ட சபைக்கு போகவும், ஊரைக் கொள்ளை: அடிக்கவும் வலை வீசுகின்றவைகளாய் இருப்பதால் இந்தப்படி வஞ்சகமாய்
நடந்து கொள்ளவேண்டி இருக்கிறது.
ஆனாலும் இவைகளின் வண்டவாளத்தை சீக்கிரத்தில் மக்கள் உணர்ந்து அவர்கள் ஆசையைக் கனவாகும்படி செய்யப் பொதுமக்களுக்கு யோக்கியதை ஏற்படாமல் போகுமென்று நாம் கருதவில்லை. எவை எப்படி யிருந்த போதிலும் தேசிய புரட்டு, கதர் புரட்டு, மறியல் புரட்டு, சத்தியாக் கிரகப் புரட்டு ஆகியவைகளை வெல்லாம் விட இந்த தீண்டாமை விலக்குப் புரட்டு கோவில் நுழைவுப் புரட்டு கொடுமை! கொடுமை! மகா கொடுமை!!! என்று சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.011933
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இந்தியாவிண் ஊத் வதாகையும்
கல்வி நியையும்
சென்ற பத்து வருஷத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஜன கணித கணக்குப் படி இந்திய ஜனத்தொகை சுமார் 32 கோடியாகும். இப்பொழுது அதாவது
1931ல் எடுத்த ஜனக்கணிதப்படி இந்திய ஜனத்தொகை சுமார் 35/7, கோடியாகும், இவர்களில் 100க்கு 11 பெயர்களே பட்டணங்களில் வசிக்கின்ற வர்கள். பாக்கி 89 பெயர்கள் கிராமவாசிகள். 100க்கு 67பேர்கள் விவசாய ஜீவிதக்காரர்கள்.பாக்கி100 க்கு 33 பேர்கள் கூலி தொழிலும் மற்றும் பல வகை உத்தியோகம் முதலிய ஜீவிதங்களிலும் வாழ்கின்றவர்கள். ஜன சங்கையும், அவர்களது வாழ்க்கையும், ஜீவனமும் இந்நிலையில் இருக்க இனி இவர்கள். கல்வி நிலையைப் பற்றி சற்று விசாரிப்போம்.
கல்வி விகிதம்
மேல்கண்ட 1931ம் வருஷத்திய ஜன கணிதப்படி மொத்த ஜனத் தொகையில் பகுதி சமூகமாகிய ஆண் சமூகத்தில் 100க்கு15/, பேரும், மொத்த ஜனத்தொகையில் மற்றப்பகுதி பேர்களாகிய பெண் சமூகத்தில் 100க்கு 271, இரண்டே முக்கால் பேர்களுமே எழுதப் படிக்க கற்று இருக்கிறார்கள் என்று மேற்படி கணக்கு புள்ளி விபரத்தில் இருந்து தெரிகின்றது, “வாசித்திருக்
கிறார்கள்” என்றால் பி.ஏ., எம்.ஏ. வாசித்தவர்கள் என்றோ, அல்லது தமிழ் முதலிய தம் தம் தாய் பாஷைகளையா தமிழாவது நன்றாக எழுதப்படிக்கத் தெரிந்திருக்கிறார்கள் என்றோ கருதி விடுவது ஏமாற்றத்தைக் கொடுக்கக் கூடியதாகும். எனவே மேல் கண்ட புள்ளி விபரமானது தங்கள் தங்கள் பெயர்களை எழுதுவதற்கே, அதற்குள்ள எழுத்துக்களை வேறு ஒருவர்:
எழுதிக் காட்டினாலொழிய எழுதமுடியாத விற்பன்னர்களையும் சேர்த்துக் கூட்டிக்கணக்கெடுத்த புள்ளி விபரமே ஆகும்.
ஆண் பெண் அடங்க மேல் கண்ட 35 Y, கோடி ஜனங்களிலும் மேல் கண்டமாதிரி கையெழுத்துப் போடக்கூடியவர்களையும் சேர்த்து கணக்குப் போட்டு மொத்த ஜனத்தொகை விகிதாசாரம் பார்த்தோமானால் 100க்கு 9V,
குடி அரசு - 1933 M) 30
பேர்வழிகள் தான் மேற்கண்டவாறு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்னும் கணக்குக்கு வரக்கூடும்.
ஆகவே இந்திய மக்களின் கல்வியறிவு 100-க்கு 9/, பேர்வழிகள்
தான் மேற்கண்டவாறு எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிறார்கள்.
இதற்குத் தான், அதாவது இந்த மக்களைக் கொண்ட நாட்டுக்கு தான் ஞானபூமி என்றும், கம்பன் காளிதாசன் வள்ளுவர் ஒளவை பிறந்த பூமி என்றும் பேசி இந்தியாவின் கல்வி ஞானத்தைப் பற்றி சதா புகழ் மாலை பாடிக் கொள்ளப்படுகின்றது.
தாழ்த்தப்பட்டார் விகிதம்
இது ஒரு புறமிருக்க இக்கல்வியின் பிரிவினையைப் பற்றி சற்று. விவரித்துப் பார்ப்போம். இந்திய மக்களில் சராசரி 100க்கு 9/, பேர்தான் கையெழுத்துப் போடத்தெரியும் என்ற கல்வி கற்றிருக்கின்றார்கள் என்றாலும்
இதில் எல்லா சாதியிலும் எல்லா சமூகத்திலும் எல்லாப் பிரிவிலும் இந்த சராசரி 100க்கு 97, பேர் என்கின்ற கணக்கு விகிதமாவது இருக்கின்றதா என்று பார்த்தால் அந்தப்படிபார்ப்பது என்பதே ஒரு பெரிய வகுப்பு வாதமாகவும்
வகுப்பு துவேஷமாகவும் தான் முடியும். அதோடுமாத்திரமல்லாமல் சற்று
அழுத்திப் பேச ஆரம்பித்து விட்டோமேயானால் பிறகு அது ஒரு பெரிய தேசத்துரோகமாகவும் முடிந்து விடும். பிறகு இந்த தேசத்துரோகம் என்ற தீர்ப்புக்கு தோழர் காந்தியின் மேலொப்பமும் ஏற்பட்டு விடும். ஆனால் நாம் அதற்கு பயப்படப் போகின்றோமா? தலைக்கு மேல் போகும் வெள்ளம் ஜாண்: போனா லென்ன? முழம் போனா லென்ன? ஆகவே பிரித்து கணக்குப் பார்த்
தால் இந்தியாவில் உள்ள அநேக வகுப்புகளில் 100க்கு 100 பேர் தற்குரிக ளாகவும் சில வகுப்புகளில் 100-க்கு 100 பேர் எழுதப்படிக்கத் தெரிந்த
வர்களாய் மாத்திரமல்லாமல் பி.ஏ. எம்.ஏ. முதலிய பட்டம் பெற்ற பண்டிதர் களையும் கொண்ட வகுப்பினர்களாகவும் சமூகமாய் இருக்கிறார்கள்.
உதாரணமாக சில ஊர்களில் பார்ப்பனர்களை எடுத்துக்கொண்டால் 100-க்கு 100பேர் படித்து இருக்கிறார்கள். பல ஊர்களில் பரையர்களை எடுத்துக்கொண்டால், பள்ளர்களை எடுத்துக்கொண்டால், சக்கிலியர்களை எடுத்துக்கொண்டால் மற்றும் இது போன்ற பல தாழ்த்தப்பட்ட வகுப்புகளை எடுத்துக்கொண்டால்100-க்கு 100-பேர் எழுத்து என்றால் ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்க்கக்கூடிய தற்குறிகளாகவே இருக்கிறார்கள்.
பெண்கள்
பெண்கள் சமூகமும் அப்படியே சில சமூகத்தில் பார்ப்பனர் சமூகத்
தில் சில இடங்களில் 100-க்கு நூறு பெண்கள் படித்தவர்களாகவும் அவர்கள் அல்லாத மற்ற அனேக சமூகத்தில் 100-க்கு 100 பெண்கள் எழுத்து வாசனை
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இவற்றைப்பற்றி யாராவது கேட்டால் அதாவது “பார்ப்பனர் மாத்திரம் ஆணும், பெண்ணும் 100-க்கு 100 பேர் எப்படி படித்தார்கள்? பரையர்கள், பள்ளர்கள் முதலிய வகுப்பார் மாத்திரம்
100-க்கு 100பேர் ஏன் தற்குரிகளாய் இருக்கிறார்கள்” என்று கேட்டால் இதற்கு
பதில் இது வகுப்புதுவேஷம் அல்லது வகுப்பு வாதம் என்று சொல்லுவதைத் தவிர வேறு சமாதானம் இல்லவே இல்லை.
கொடுமை! கொடுமை!!!
பார்ப்பானும், பாப்பாத்தியும் கோவணம் கட்டிக்கொண்டு பாடுபட்டு, மண்வெட்டி, தண்ணீர் பாய்ச்சி தெருவில் கல் உடைத்து கஷ்டப்பட்டு சம்பாதித்து படித்தார்களா? மற்றபடி பறையனும், பள்ளனும், பஞ்ச கச்சம் போட்டு பட்டு வேஷ்டி உடுத்திக்கொண்டு, மூன்று வேளை குளித்து முழுகி நகத்தில் அழுக்குப்படாமல் தெருத்திண்ணையில் உட்கார்ந்து வண்ணமே ஊரானிடமெல்லாம் கும்பிடும் காணிக்கையும் பெற்று, சாம்பலையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து படித்தார்களா என்று யோசித்துப் பாருங்கள். பாடுபட்ட கூட்டமெல்லாம் பட்டினியாய் கிடப்பதோடு, தற்குறிகளாக
இருக்கவும், பாடுபடாத கூட்டமெல்லாம் தின்று கொழுக்கவும், பி.ஏ., எம். ஏ., படித்து மாதம் 1000, 10000 கணக்காய் சம்பாதித்து, கெம்பு வைரத்தோடும். பனார்ஸ் பெங்களூர் புடவையும், பீச்சுரோட் மோட்டார் சவாரி உல்லாசமாக யிருக்கவும் எப்படி ஏற்பட்டது? என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விஷயமாகும். எனவே இதைப்பற்றி பேசப்போனால் இதை சோஷியலிச மென்றோ போல்ஷவிசமென்றோ, கம்யூனிசமென்றோ சொல்லி விட்டால் போதுமா? இது கம்யூனிசமாய் இருந்தால் என்ன, அவர்கள் பாட்டனிசமான கொள்ளை கொலைகாரிசமாய் இருந்தால் என்ன? மேற்கண்டபடி நடக் கின்றதா இல்லையா என்பதும் இந்த நிலை திருத்தப்பாடடைய வேண்டுமா வேண்டாமா என்பதும் தான் இங்கு நமது கவலை.
அரசாக்ஷி யோக்கியதை
உலகத்திலேயே நாகரிக அரசாட்சி என்று பேர் வாங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்து150 வருஷ காலம் ஆன பிறகும் பார்ப்பான் 150க்கு 150 பேர் படித்திருக்கவும், பறையன் 150க்கு 150 பேர் தற்குறியா யிருக்கவும் காரணம் என்ன என்பதற்கு என்ன பதில் சொல்லக்கூடும். இப்படிக்கேட்பதை அராஜகம் என்றோ போல்ஷவிசம் என்றோ சொல்லி இனியும் ஏமாற்றவோ மிரட்டவோ முடியுமா? என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர் முதலிய “உயர்ந்த” ஜாதியார் என்பவர்கள் செய்யும் வேலையையும் அதனால் ஏற்படும் பலனையும், பறையன் முதலான “தாழ்ந்த” ஜாதியார்கள் என்பவர்கள் படும்பாட்டையும் அதனால் ஏற்படும் பயனையும்.
சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். சோம்பேரிகள் - ஊரார் உழைப்பில் பயன்
குடி அரசு - 1933 M) 32
அடைபவர்கள், கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்கவும் பொருள்.
சேர்க்கவும், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தலைமுறை தலைமுறையாய் வயிற்றிலிருந்து வரும்போதே புஸ்தகத்துடன் வரவும் தலைமுறை தலை முறையாய் படிக்கவும் தலைமுறை தலைமுறையாய் மாதம் 400, 500, 1000, 5000 வீதம் சம்பாதிக்கவும், பாடுபடுகின்றவன் கஷ்டப் பட்டு உழைப்பவன் ஏழையாகவே இருக்கவும் அவன் பிள்ளை குட்டிகள் வயிற்றிலிருந்து வரும்போதே ஏர், மண்வெட்டி, சம்மட்டியுடன் வரவும் தலைமுறை தலை முறையாய் தற்குறியாகவே யிருக்கவும் தலைமுறை தலைமுறையாய் இருக்க. இடமில்லாமல் ஒண்ட நிழல் இல்லாமல் பட்டினியினால் நோயினால் மடியவு மான நிலைமைக்கு யார் காரணம்? யார் காரணமாயிருந்தாலும் அக் காரணங்களும் காரணஸ்தர்களும் அடியோடு அழிய வேண்டாமா? அழியா
விட்டாலும் ஒழிய வேண்டாமா? ஒழியாவிட்டாலும் மாறவேண்டாமா என்று கேட்கின்றோம்.
இம்மாதிரியாகக் கல்வித்துறையில் உள்ள அக்கிரமம், கொடுமை, கொலைபாதகத் தன்மை மற்றெதிலும் இல்லை என்று தைரியமாய்ச் சொல்லு வோம். பச்சையாய்ச் சொல்லவேண்டுமானால் மாடு மேய்க்கத் தெரியாத வர்கள் எல்லாம் படிப்பு என்னும் சாக்கால் மந்திரியாகி - சட்டமெம்பராகி மாதம் 5000, 6000 ரூபாய் வீதம் சம்பளம் வாங்கிக் குடித்துக் கூத்தாடிக் கொண்டு இருப்பதும், மண் வெட்டி கூலி வேலை செய்து பயிர் செய்து அரண்: மனை கட்டி கோட்டை கட்டி அரசனைக் காப்பாற்று கின்றவர்கள் எல்லாம் படிப்பில்லை என்னும் காரணத்தால் இடுப்புக்குத் துணி போராமல் வயிற்றுக்
கஞ்சி போராமல் வதைக்கப்படுவது என்பது நியாயமா? இந்நிலை அடியோடு அழிய வேண்டாததா என்று மறுபடியும் கேட்கின்றோம்.
சென்ற 10 வருஷத்திற்கு முந்தின ஜன கணிதத்தில் 100க்கு 7 பேர்கள்.
தான் படித்தவர்கள் இருந்தார்கள் என்று கூப்பாடு போட்டது இந்த “காருண்ய
சர்க்கார் நாகரீக சர்க்கார் ” காதுக்குக் கேட்கவில்லை என்று சொல்லி விட முடி யுமா? அல்லது இந்த “பொது ஜன தலைவர்கள் மகாத்மாக்கள்” காதுகளுக்கு கேட்கவில்லை என்று சொல்லிவிட முடியுமா? 10, 12 வருஷ காலமாக ஒத்துழையாமை, சுயராஜ்யக் கிளர்ச்சி, உப்பு சத்தியாக்கிரகம், பரதேசி மறியல், ஹரிஜன சேவை ஆகிய காரியங்கள் எவ்வளவு நடந்தன? எத்தனை கோடி ரூபாய்கள் இந்தக் காரியங்களுக்காக என்று வசூல் செய்து ஊரிலுள்ள சோம்பேரி கூட்டம் பெண்டு பிள்ளைகளுடன் கொள்ளை கொண்டன. ஆனால் இந்த மாதிரியான கல்வி நிலையைப் பற்றி ஏதாவது மூச்சுப் பேச்சு உண்டா என்று கேழ்க்கின்றோம்.அது போல காருண்ய நாகரிக சர்க்காருக்கும்
நல் அரசாட்சி செய்ய வேண்டும் என்ற ஆசையால் இந்திய மக்களை
காப்பாற்ற தங்களால் அல்லாமல் மற்றவர்களால் முடியவே முடியாது என்ற முடிவால் செலுத்தி வந்த தர்ம நீதி ஆட்சியால் இந்த 10 வருஷ காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட கல்வி அறிவுஞானம் எவ்வளவு? என்பதை ஒரு கடு
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
களவு அறிவுள்ள நடுநிலைமை ஞானமுள்ள ஒரு மனிதன் கவனித்தால் இதைவிட கொடுங்கோலாட்சியும் இந்தத் தலைவர்கள் மகாத்மாக்கள். என்பவர்களை விட ஏழை மக்கள் துரோகிகளும் உலகத்தில் வேறெங்காவது இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேள்க்கின்றோம். அர்த்த மற்ற உப்பு சத்தியாக்கிரகத்திலும் சூட்சி நிறைந்த கோவில் நுழைவிலும் தான் கவலை இருக்கின்றதே தவிர அதைப் பற்றிய விளம்பரங்களே விஷத்தைப் போல் மக்கள் மனத்தில் புகுத்தபடுகின்றதே தவிர இந்த தாழ்த்தப் பட்ட மக்கள் கல்வி அறிவைப் பற்றி பேசப்படுகின்றதா? அதற்காக ஒரு கடுகளவு கவலை கொள்ளப்படுகின்றதா என்று பாருங்கள். இதன் கருத்தென்ன? எந்தக் காரணத்தாலாவது உலகில் 100க்கு 90 மூடர்கள் எழுத்து வாசனை அற்ற பாமரர்கள் இருந்தால் தான் 100க்கு 10 வீதமாவது அயோக்கியர்கள், சோம்
பேரிகள், பேராசைக்காரர்கள், ஊரார் உழைப்பில் வயிர் வளர்ப்பவர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், சக்ரவர்த்திகள், ஜமீன்தாரர்கள், மகாத்மாக்கள், சங்கராச்சாரிகள், பண்டார சன்னதிகள், புரோகிதர்கள், குரு மார்கள் முதலாகிய பகல் கொள்ளைக் கூட்டம் வாழமுடியும் என்பதேயாகும். ஆதலால் இந்நிலையில் மக்களுடைய கல்வியைப்பற்றியோ, அறிவைப் பற்றியோ, பகுத்தறியும் ஞானத்தைப்பற்றியோ பேசுவது என்பது அரசாங்கங் களுக்கும் தேசியத்திற்குமே விறோதமான காரியமாகிவிடும். ஆகவே சுய மரியாதை சமதர்மக் கட்சியார் என்பவர்கள் அரசியலில் பிரவேசித்து சட்டசபைகளுக்கு போவதானால் அவர்கள் அடுத்த மூன்று வருஷக்காலத்திற்குள் கல்வித் துறையில் தாழ்த்தப்பட்டவர்களில் 100-க்கு இத்தனை வீதம் உள்ள மக்களுக்கு நன்றாய் எழுதப்படிக்க கற்றுக்கொடுப்பது என்பதாக ஒரு மூன்று வருஷத் திட்டம் போட்டு அதில் பெரும்பாலும் உழைப்பதாகவும் உறுதி செய்து கொள்ள வேண்டும். கள்ளுக்கடை மறியலும், பரதேசி துணி மரியலும், கோவில் நுழைவும் பார்ப்பன காங்கிரசுக்கும் வயிற்றுப் பிழைப்பு தேசீயத்
திற்கும் விட்டுவிட வேண்டியதே ஒழிய அவைகள் இந்தக் கல்விக் கொடுமை யைவிட பிரமாதமான காரியமல்ல. ஆகையால் இவ்விஷயத்திற்கு இப் போதே ஒரு திட்டம் வகித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.01.1933
குடி அரசு - 1933 M) 34
நாடார் மகானை சங்கம்
சென்ற டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கூடிய நாடார் மகாநாடு, நாடார் வாலிபர் மகாநாடு, நாடார் கல்வி மகாநாடு ஆகியவைகளின் தலைவர். களின் சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் இன்று நமது பத்திரிகையின் வேறிடத்து பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் பல்வேறு தொல்லைகளுக்குட்பட்டு வரும் உலகிற்கும், சுயமரியாதை இழந்து பரிதவிக்கும் இந்திய மக்களுக்கும் நாடார் மகாநாட்டுத் தலைவர்களின் சொற்பெருக்குப் போதிய வழி காட்டியாயிருக்கு மென்பதில் கிஞ்சித்தும் ஐயமின்று. வாலிபர்கள் மகாநாட்டிற் றலைமை வகித்த தோழர் கூ. கா. ஆ. பெரியசாமி அவர்களின் தம் சொற்பொழிவு பல நுண்பொருளை அடக்கிக் கொண்டிருக்கிறது என்பதில் ஒரு சிறிதும் மிகையாகா. வருமைநோய், வேலையில்லாத் திண்டாட்டம்! பொருளாதார நெருக்கடி! பஞ்சம்!!! என்று துன்பவாழ்வைப் போக்க வழிதெரியாது பரிதவிக்கும் உலகிற்கு, “ருஷிய தேசத்தின் மாஸ்கோ என்ற நகரிலுள்ள 8 முதல் 13 வயதுவரையுள்ள பள்ளிச் சிறுமிகள் ஒரு சங்கமாகச் சேர்ந்து படிக்கும் நேரம் நீங்கலாக மற்ற நேரங்க ளில் படியாத தொழிலாளர்கள் வசிக்குமிடங்களுக்குச் சென்று அவர்களுக் குப்படிப்புச் சொல்லிக்கொடுக்கிறார்கள். மற்றும் தேச முன்னேற்றத்திற்கான வழிகளில் சித்தத்தைச் செலுத்தி வருகிறார்கள். சிறு பிராயத்திலிருந்தே இவர்களுக்குத் தொழில் விவசாயம், ரசாயனம் முதலிய கல்விகளோடு தேகப் பயிற்சிக்கான வகையிலும் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. தேசப்புனருத் தாரண கைங்கிரியத்தில் சிறுவர் சிறுமிகள் ஈடுபடுகிறார்கள். இதனாலன்றோ, வேலையில்லாத் திண்டாட்டமும் வருமைப் பிணியும், வியாபார மந்தமும், பொருளாதார நெருக்கடியும், அடிமைத் தனமும் அந்நாட்டிலில்லை. ருஷியா வின் முற்போக்கைக் கண்டு இதர வல்லரசுகளும் திடுக்கிடுகின்றதென்றால் அந்நாட்டின் செல்வச் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ” என்று குறிப்பிட்டி ருப்பது நாம் அடிக்கடி உலகப் பொருளாதாரக் கஷ்ட நிவர்த்திக்கு சமதர்மமே வேண்டுமென்று கூறி உண்மையை வலியுறுத்தியிருப்பது நாடார்கள் மட்டு மல்ல மக்களனைவருமே கவனிக்கத்தக்கதாகும். மகாநாட்டின் தீர்மானங்
களிற் பெரும்பாலும் நமது சமதர்மக் கொள்கைகளை ஆதரித்தே இருக்கிற தென்று கூறலாம். நாடார் மக்கள் தங்கள் தலைவர்களின் சொற்பொழிவு களையும் தீர்மானங்களையும் நன்குணர்ந்து யாண்டும் சமதர்மம் நிலவச் செய்ய ஆவன புரிய முன் வருவார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.01.1933
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
“௬ய்பராயண் மசோதா”
வினம்பாம்
கோவில் பிரவேச மசோதா என்னும், டாக்டர் சுப்பராயன் மசோதா வுக்கு சிறிது காலத்துக்கு முன் ஜிண்டான் மாத்திரைக்குச் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு மேலாகவே செய்யப்பட்டு வருகின்றது. இவ்விளம்பரம் தோழர் ராஜகோபாலாச்சாரி சிபார்சின் மீது தோழர் காந்தியாலும் செய்யப் பட்டு வருவதைக் கண்டு டாக்டர் சுப்பராயனைப் பாராட்டாதவர்கள் இல்லை. டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு இது ஒரு சகட யோகமேயாகும். ஆனால் மசோதாவின் யோக்கியதை என்ன என்பதையும், பயன் என்ன என்பதையும் இதன் கருத்து என்னவென்பதையும், எதை உத்தேசித்து இந்தப் பித்தலாட்ட பிரசாரம் மகாத்மாக்களாலும், தேசீய பத்திரிக்கைகளாலும் நடைபெருகின்றது என்பதை சீக்கிரத்தில் நாமே விவரமாக வெளிப்படுத்த இருக்கிறோம். சிறிது
தாமதம் ஆவதால் ஒன்றும் முழுகிப்போகாது. ஆதலால் அது சம்மந்தமாக வந்திருக்கும் பல வியாசங்களை வெளியிடாததற்கு நிருபர்கள் பொருத்துக் கொள்வார்களாக.
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 08.011933
குடி அரசு - 1933 M) 36
கத்கோலிக்கர்களுக்கோர் விண்ணப்பம்
நமது பகுத்தறிவு இயக்கத்தை தாக்கி எழுதும் முறையில் திருச்சி “கிங்ஸ் ரோலி” என்ற ஆங்கில மாதச் சஞ்சிகையையும், சர்வவியாபி என்ற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையும் நம்மை திட்டி எழுதியிருந்தவைகளை நமக்கோர் நற்சாட்சிப் பத்திரமாக எண்ணி நமது கொள்கைகளை ஆதரிக்கும் அமெரிக்கா, ஐரோப்பாவிலுள்ள பகுத்தறிவு இயக்க ஸ்தாபனங்களுக்கு அதன் பிரதிகள் சிலவற்றை வாங்கி அனுப்பினோம். அவர்கள் நமது தொண்டைக் கண்டு மகிழ்ந்து அதற்கு வெகுமதியாக
1. Priest the Women and the Confessional
2. Question for Catholics
3. Roman Catholicism Analyzed
4. Fifty years in the church of Rome
5. Confession of a Nun
முதலிய புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள். அவைகளின் மொழி பெயர்ப்பு இனி குடி அரசில் வெளியாகிக் கொண்டு வரும். கத்தோலிக்கர் களுக்கும் மற்ற வைதீக கிறிஸ்துவர்களுக்கும் நாமாக ஏதாவது சொல்வதா யிருந்தால்
தான் அவர்கள் கோபித்துக் கொள்ள இடமேற்படலாம். ஆத லாலேயே இனி கத்தோலிக்கு பாதிரிகளும், பிஷப்புகளும் மற்றும் கிறிஸ்துவ அறிஞர்களும். சொன்னவற்றையே முதலில் சமர்ப்பிக்கிறோம். இதற்கும்கூட கோபிப்பார். களோ என்னமோ தெரியவில்லை. நம்மைக் கண்டிப்பவர்கள் நாம் எழுதிய வைகளை எடுத்து ஓதியோ, எழுதியோ அவற்றிற்கு சமாதானத்துடன் கண்டித் தால் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருப்போம் என்பதை அன்பு டன்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 08.011933
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
காந்தியாரிண் தீண்டாமை ஒழிப்பு
தீண்டாமை ஒழிப்பா? நிலைப்பா என்று சென்ற வாரம் நாம் தலையங்
கம் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதற்கு பதில், அல்லது சமாதானம் என்று கருதும்படி தோழர் காந்தியவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், மோர்வி மாஜி திவானுக்கு அளித்த பதிலிலும் காணப்படும் அடியிற்கண்ட விஷயங்கள் நமது கருத்தை ஊர்ச்சிதப் படுத்துவதாக இருக்கின்றதா? இல்லையா என்பதைச் சற்று கூர்ந்து கவனிக்கும்படி வாசகர் களை வேண்டுகின்றோம். தோழர் காந்தியார் கூறுவதாவது:-
“நான் கலப்பு மணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்ப தில்லை” ஏன்?)
“சுத்தமில்லாமல் இருப்பவர்களையும், மாட்டு மாமிசம் சாப்பிடுபவர் களையும் ஆலயத்துக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
காந்தியார் அறிக்கை கூறுவதாவது:-
எனது ராஜி பிரேரேபணையை யார் கண்டித்தாலும் நான் வாப்பீசு வாங்கிக் கொள்ளப் போவதில்லை.
மத விஷயத்தில் நிர்ப்பந்தமென்பது இருக்கக் கூடாது.
மத விஷயத்தில் பிறர் கொண்டுள்ள நம்பிக்கையை முக்கிய விஷயத்
திற்கு இணங்கிய அளவுக்கு மதித்து நடக்க வேண்டும்.
ஹரிஜனங்களுடைய ஆலயப்பிரவேசத்தை ஆட்சேபிக்கின்ற
வர்களும் மத சம்பந்தமான மன சாந்தியை அடைய உரிமைபெற்று இருக் கிறார்கள்.
ஆதலால் அவர்களுக்கு உரிய அந்த மன சாந்தியை பரிக்காத மாதிரி.
யில் தான் ஒரு திட்டம் தயாரிக்க வேண்டும்.
கோவிலுக்குள் சில ஜாதியார் சென்றால் அங்குள்ள விக்கிரகத்தின்
குடி அரசு - 1933 M) 38
சக்தி குறைந்து போகின்றது என்கின்ற உணர்ச்சி பலருக்கு இருந்து
வருகின்றது.
அம்மாதிரி உணர்ச்சி உள்ளவர்களை சட்டத்தைக் கொண்டோ, ஆயுதத்தைக்கொண்டோ, பலவந்தத்தைக் கொண்டோ விடும்படி செய்வது என்பது முடியாத காரியம். (அப்படி ஆனால் பின் எதற்காக பட்டினியும், மெஜாரிட்டி கையெழுத்தும் “சுப்பராயன் மசோதா” வும்?)
இந்து மதத்தில் தங்களுக்கு உள்ள அந்தஸ்த்தை நிலைநாட்டிக் கொள்ளுவதற்காக ஒருவர் பெற்றிருக்கும் நியாயமான கோரிக்கைகளை: அவருக்கு மறுத்து அவர்கள் மனதை புண்படுத்துவதை ஹரிஜனங்கள் விரும்பவில்லை என நான் கருதுகிறேன்.
(அப்படியானால் பார்ப்பனர்களை பூதேவர்கள் என்று ஒத்துக் கொள்ள வேண்டியது தான்?
சம்ரோக்ஷணை என்பது ஆட்சேபகரமான காரியம் தான். அதை ஒப்புக்கொள்ளுவது தீண்டாமையை ஒப்புக் கொண்டதாகும். என்றாலும் இதை ஒப்புக் கொள்ளுவது வைதீகர்களுக்கு காட்டும் ஒரு தயவாக இருக்கும்.
மனித வர்க்கத்தில் தீண்டாமை என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் சகஜமாக இருந்து தான் தீரும்.
அது மனிதனுடைய தொழில் அல்லது நடத்தையைப் பொருத்ததாக இருக்கும். அப்படிப்பட்ட தீண்டாமையை ஒழிப்பது இந்த இயக்கத்தின்
நோக்கமல்ல...
என்று எழுதி இருக்கிறார்.
இது 12-1-33 சு-மி பத்திரிகையில் காணப்படுகின்றது. இதிலிருந்து ஹரிஜன கோவில் பிரவேசத்தின் யோக்கியதையும், தீண்டாமை விலக்கின் தத்துவத்தையும், மதக் கொடுமையை ஒழிக்கும் சம்மதத்தையும் தோழர்களே. யூகித்தறிந்து கொள்ளுவீர்களாக.
குடி அரசு - கட்டுரை - 15.01.1933
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
“௬ய்பராயன் மசோதா” விண் இரகசியம்
டாக்டர் சுப்பராயன் அவர்களின் மசோதாவானது தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் ஏதோ பிரமாதமான நன்மை செய்துவிடப்போவதாக ஜனங் களுக்குள் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைப்பற்றி முன் ஒரு குறிப்பு காட்டி
இருந்தோம்.
அதன் இரகசியம் என்ன என்பதும், எதற்காக அந்தப்படி பிரசாரம் செய்யப்படுகின்றது என்பதும் அநேகர் அறிந்திருக்கவே மாட்டார்கள். இருந்தபோதிலும் அந்த மசோதாவின் யோக்கியதை என்ன என்பதும் அதனால் என்ன பயன் ஏற்படும் என்பதும் அடியில் குறிப்பிட்ட தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரின் இரண்டொரு வாக்கியத்தில் இருந்து ஒருவாறு உணரலாம். அதாவது,
“டாக்டர் சுப்பராயனின் கோவில் பிரவேச மசோதாவை அவர்கள் (வைதீக ஜனங்கள்! எதிர்க்க வேண்டிய அவசியமே ஏற்படாது.
ஹரிஜனங்களை கோவிலுக்குள்விட்டே தீரவேண்டுமென்றும், அம்மசோதா சொல்லவில்லை. அம்மசோதா சட்டமானவுடன் ஹரி ஜனங்கள் கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள் என்று யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்” என்று 9-1-33-ந் தேதி சுதந்திரச்சங்கு என்னும் பேப்
பரில் 5-வது பக்கம் இரண்டாவது கலத்தில் எழுதி இருக்கிறார். இதைப்பற்றி வியாக்கியானம் ஒன்றும் தேவையில்லை என்றே கருதுகிறோம்.
நிற்க, இந்த விளம்பரத்தின் இரகசியம் என்ன என்பது பற்றி மற்றொரு
சமயம் வெளியாகும்.
குடி அரசு - கட்டுரை - 15.01.1933
குடி அரசு - 1933 M) 40
ஸ்வயினும் இந்தியானம்
ராஜவை விரட்டி அடித்த பிறகும் ஸ்பெயின் தேசத்தில் முதலாளி களுடைய ஆட்சியே “குடி அரசு' ஆட்சி என்னும் போர்வையைப் போற்றிக் கொண்டு அதாவது இந்தியாவில் எப்படி சுயராஜியம்-தேசீயம் என்னும் போர். வையை போத்திக் கொண்டு முதலாளிகளுடைய ஆட்சிக்கு காங்கிரசின் மூலம் சிறிது காலமாய் அஸ்திவாரம் போடப்பட்டு வருகின்றதோ அதுபோல்
நடந்து வந்தது. இன்றும் அப்படியே நடந்து வருகிறது என்றாலும் இப்போது அங்கு இந்த முதலாளிக் குடி அரசு ஆட்சியையும் அழிக்க ஒரு கூட்டம் துணிந்து வெளியில் கிளம்பி வந்து, தேசீயத்தையும் ஒழித்து, போலிக் குடி அரசையும் ஒழிக்கப் புரட்சி செய்து பொது உடமை ஆட்சி ஆக்க முயற்சித்து ஒரு அளவுக்கு வெற்றியும் பெற்று வருகின்றதாக தெரியவருகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த கட்டலோனியா மாகாணத்தில் கிண்டிகலிஸ்ட் (அனார்க் கிஸ்ட்) அதாவது சர்க்கார் ஆட்சி என்பதே இல்லாமல் எல்லாம் தன்னரசு நாடாகவே இருக்க வேண்டும் என்கின்ற ஒரு வித கொள்கை மீது ஒரு பெரிய இயக்கம் நடந்து வருகின்றது. அந்த மாகாணத்தில் இந்த இயக்க மெம்பர்கள் தான் மெஜாரிட்டியாய் இருக்கிறார்கள். இவர்கள் ஸ்பெயின் தேசீய இயக்கத்
திற்கும் “குடி அரசு” என்கின்ற இயக்கத்திற்கும் எதிராய் இருப்பவர்கள். ஆனாலும் ஒரு அளவில் பொது உடமை ஆட்சிக்கு சிறிது அனுதாபம் காட்டு. கின்றவர்களாய் இருக்கிறார்கள். இந்த பொது உடமைக் கொள்கையிலும் ஸ்பெயின் தேச முழுவதிலுமே இரண்டு கட்சியார்கள் உண்டு. அதாவது ஒரு கட்சியார் இன்று ரஷியாவில் நடக்கும் ஸ்டாலினுடைய பொது உடமைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுகின்றவர்கள்.
மற்றொரு கட்சியார் ட்ராட்ஸ்க்கியினுடைய (இவர் முன் லெனினுடன் வேலை செய்து வந்தவர். இப்போது ஸ்டாலினால் நாடு கடத்தப்பட்டு வெளி நாட்டில் இருப்பவர்! பொது உடமைக் கொள்கையை ஒப்புக் கொள்ளுகின் றவர்கள். இவ்விருவருடைய பொது உடமைக் கொள்கைக்கும் உள்ள வித்தி யாசத்தை உணர வாசகர்கள் ஆசைப்படக் கூடும். அவ்வளவு விபரமாய் விளக்க நமக்கும் தெரியாது. ஆனாலும் தெரிந்தவரை சிறிது விளக்குவோம். என்ன வித்தியாசமென்றால் இப்போது ரஷ்யாவில் நடைபெறும் ஸ்டாலினின் பொது உடமைக் கொள்கையானது ரஷ்யா தேசத்தை மாத்திரம் பொருத்த
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
பொது உடமை என்றும் அதில் தேசீய வாடை வீசுகிறதென்றும் ட்ராட்ஸ்க் கியால் குற்றம் சொல்லப்படுகின்றது. ட்ராட்ஸ்க்கியின் பொது உடமைக் கொள்கையானது உலகம் முழுவதும் பொது உடமைக் கொள்கை ஏக காலத்தில் ஆக வேண்டும் என்றும், இதில் ரஷியாவென்றும், ஜர்மனி என்றும், இந்தியா என்றும் தேசீய உணர்ச்சியே இல்லாமல் எங்கும் பொதுவான புரட்சி நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது என்று சொல்லப் படுகின்றது. இதை ஸ்டாலின் கட்சியார் குற்றம் சொல்லுகின்றார்கள். காரணம் என்னவென்றால் ஒவ்வொரு தேசமாகத்தான் பொது உடைமை ஆட்சியாக ஆக்கப்படக்கூடும் என்றும், அப்படிக்கில்லாவிட்டால் உலக முழுவதும் முதலாளி தொழிலாளி, புரட்சி ஒரே சமயத்தில் ஒன்றாய் சாதிக்க முடியா தென்றும், தோல்வி ஏற்பட்டால் எல்லா தேசத்தையும் அந்த தோல்வி பாதிக்கு
மென்றும், அந்தந்த தேச மக்களுக்கு அந்தந்த தேசத்திய புரட்சியை விட்டு விட வேண்டும் என்றும் சொல்லுவதாகச் சொல்லுகின்றார்கள்.
இதற்கு டிராட்ஸ்கி சொல்லும் பதில் என்னவென்றால் உலகப் பரப்பில் ஒரு தேசம் மாத்திரம் பொது உடைமை ஆகி விட்டால் மற்ற தேச முதலாளி கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிர்த்துப் போர் தொடங்கி அதைக் கெடுத்து விடுவார்கள் என்றும் தனித் தேசத்திய பொது உடைமை என்றைக்கு இருந்தா
லும் ஆற்றோரத்திய வீடு போல் ஒரு நாளைக்கு வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போகப்பட்டு விடும் என்றும் சொல்லுவதாகச் சொல்லுகிறார்கள்.
இந்தப்படி இன்னும் அனேக வித ஆட்சேபணை சமாதானங்கள் உண்டு.இந்த இரண்டு கட்சியும் ஐரோப்பிய தேச முழுவதிலுமுள்ள முக்கிய நாடுகளிலெல்லாம் இருந்துவருகின்றது. இருகட்சிக்கும் புஸ்தகங்கள் துண்டு பிரசுரங்கள் உண்டு. ஆனால் ஸ்பெயினில் ஸ்ட்ராட்ஸ்க்கி கட்சியே பலம் பெற்று இருப்பதாய் தெரிய வருகிறது.
நிற்கஸ்பெயினில் தற்சமயம் இருந்து வரும் குடிஅரசுக்கு சற்று பலம் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அங்கு தற்சமயம் உள்ள குடிஅரசானது முன்குறிப்பிட்டதுபோல் ஒரு வகை முதலாளி குடிஅரசு ஆகத்தான் இருக்கிறது. ஆதலால் இதற்கு கிண்டிகலிஸ்ட் கட்சியாரும் இரண்டு வகை கம்யூனிஸ்ட் கட்சியாரும் பொது தொழிலாளிகளும் விரோதி களாகவே இருக்கிறார்கள். குடிஅரசு கவர்ன்மெண்டானது நாஸ்திக கொள்கை
யாய் இருப்பதால் பாதிரிகளும் ஆஸ்திக முதலாளிமாரில் சிலரும் மற்றும் பழய ராஜாவுக்கு சேர்ந்தவர்களும் விரோதிகளாய் இருக்கிறார்கள். ஆனால் இந்த குடி அரசு சர்க்காருக்கு இப்போது உதவியாய் இருப்பவர்கள் எல்லாம். நமது நாட்டு (இந்திய! காங்கிரசுக்கு உதவி இருப்பது போல் சில முதலாளி களும் (உத்தியோகத்தை எதிர்பார்த்த) படித்த கூட்டத்தாரும் அவர்களது கூலிகளான சில தேசீய வாதிகள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்களுமே ஆவார்கள். இவர்களுக்கு மேல் கண்ட தொழிலாளர் கூட்டத்தாரிடையும்
குடி அரசு - 1933 M) 42
பொது உடமை கூட்டத்தாரிடையும், தன்னரசு கூட்டத்தாரிடையும் மதிப்பு கிடையாது. இந்த மூன்று கூட்டத்தாரும் எக்காரணம் பற்றியாவது ஒன்று
சேர்ந்தால் அந்த நிமிஷமே ஸ்பெயின் முழுவதுமே ஒரு வினாடியில் பொது உடமை நாடு ஆகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய ஸ்பெயின் குடிஅரசை நிர்வாக விஷயத்தில் அதிகமாக குற்றம் சொல்லி எதிர் பிரசாரம் செய்பவர்களும், துண்டு பிரசுரம் வழங்குப வர்களும் பெரிதும் பாதிரிக் கூட்டங்களே ஆவார்கள். ஆதலால் ஸ்பெயின் குடி அரசானது சிற்சில விஷயங்களிலாவது பாதிரிகளுக்கு நல்ல பிள்ளையாய் நடக்க வேண்டி இருக்கின்றது. அதுபோலவே பொது உடமைக்காரரின் தயவை பெற சில விஷயங்களில் அவர்களுக்கு அனுகூலமாகவும் நடக்க வேண்டி இருக் கின்றது ஆகவே ஸ்பெயின் குடி அரசின் கொள்கைக்கு ஏதாவது ஒரு உதாரணம் காட்ட வேண்டுமானால் நமது சென்னை அரசாங்க மந்திரி சபையையே தற்சொரூபமான உதாரணமாய்க் காட்டலாம்.
சென்ற 5, 6 வருஷ காலமாய் சென்னை மந்திரி சபைகளுக்கு எப்படி யாதொரு வித கொள்கையுமில்லாமல் எப்படியாவது உத்தியோகம் நிலைத்தால் போதும் என்கின்ற ஒரே “பலமான” கொள்கை மீது மந்திரிகள்.
நிர்வாகம் நடை பெற்று வந்தனவோ அது போலவே தான் ஸ்பெயின் குடி அரசு அரசாங்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் நடந்து வருகின்றது. மக்களுக்கு உண்மை உணர்வு வந்து விட்டால் இம்மாதிரி கொள்கையற்ற ஆட்சி ஒழிந்து தான் தீரும். ஆதலால் தான் இன்று ஸ்பெயின் தேசத்தில் ஏற்பட்ட சில மக்களின் உண்மை உணர்வானது இன்று அந்த தேசத்தில் இரண்டொரு நகரங்களில் பொது உடமை ஆட்சி நிருவப்பட்டு விட்டதாக தினசரிகளில் காணப்படுகின்றது. (இதன் முடிவு எப்படி இருந்தாலும்) என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு, ஏன், வெகு சீக்கிரத்தில் ஸ்பெயின் தேச முழுவதுமே பொது உடமை தேசமாக ஆகித்தான் தீரும். ஜர்மனியும் இப்போது தனது முதலாளிக் கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு வெகுசீக்கிரத்தில் பொது உடைமை ஆட்சிக்கு ஓட்டம் பிடிக்கும் என்பதில் நமக்கு சந்தேகமில்லை.
இந்தியாவிலோ கைராட்டினமும், கோவில் பிரவேசமும் தான் தாண்டவமாடுகின்றது. இதைத்தான் தேசியமாகவும், சுயராஜ்யமாகவும், குடி அரசாகவும், புரட்சியாகவும் பாமர மக்கள் கருதும்படி காந்தியார் மூலம்
பிரசாரம் நடைபெற மில் முதலாளிகளும், கோடீஸ்வரர்களும் பண உதவி செய்து வருகிறார்கள். இதற்கே அடிபிடி சண்டையும் சனாதனதர்மம், வருணாச்சிரம தர்மம் சண்டைகளும் எதிர்ப்புகளும் நடப்பதுடன் இதற்கு வேதத்தில் சாஸ்திரத்தில் ஆதாரமிருக்கின்றதா இல்லையா என்கின்ற விவகார சபைகளும் நடந்த வண்ணமாயிருக்கின்றன.
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சட்டசபை வீரர்களின் தீவிரச் செயல்களோ “பிச்சை கொடுப்பவனை தடுக்கக்கூடாது”” என்று சொல்லத் தக்க விஷயங்களையே தீர்மானங்களாக கொண்டு போவதாய் இருக்கின்றன.
அதாவது யாராவது, எவரையாவது கோவிலுக்குப் போக அனுமதி கொடுத்தால் அதை சர்க்கார் தடுக்கப்படாது என்பதாகும்.
இதற்கே பொது மக்களை இருகூட்டமாய் கிளப்பி விட்டு இந்த
சட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டுமென்று ஒரு கூட்டமும், அனுமதி கொடுக்கக்கூடாதென்று ஒரு கூட்டமும், காதடைபடும்படி கூப்பாடு போடச் செய்யப்பட்டு வருகிறது. இரண்டுக்கும் தேசீயவாதிகளும் சுயராஜ்யவாதி களுமே காரணமாகும் (தப்பித் தவரி வைசிராய் பிரபு இந்த தீர்மானம் சட்ட சபைக்கு வருவதற்கு உத்திரவு கொடுக்க மறுத்துவிட்டால் அந்தச் சாக்கி லேயே யெல்லா பொருப்புகளையும் சர்க்கார் தலையில் போட்டு விட்டு தாங்கள் பெரிய தீண்டாமை விலக்கு வீரர்களாய் விளங்கிவிடலாம் என்கின்ற சூட்சியே இதில் விளங்குகின்றது! மற்ற சோம்பேரிகள் விளம்பரக்காரர்கள்
இதில் எதிலாவது ஒன்றில் சேர்ந்து தங்கள் பெயர் விளம்பரமானால் போதும். என்று கருதிக்கொண்டிருப்பதே பெரிய தேச சேவையாய் இருந்து வரு கின்றது. எப்படியானாலும் இதன் கடைசி முடிவானது பணக்காரனும், படித்த சோம்பேரிக் கூட்டமான உத்தியோகஸ்தனும், இவர்களுக்கு நடுத் தூண் களாயிருக்கும் மதமும், கோவிலும், சாஸ்திரங்களும் என்றும் சிரஞ்சீவியாய் இருக்கப்போகிறது. “தேச பக்தர்கள், தேசிய வாதிகள்” முதலியவர்கள் கதி,
* வெரும் நாய் சந்தைக்குப் போய் வெள்ளிக்கோலில் அடிபட்டது” என்பது போல் நாளைக்கு ஏதாவது இந்தப்பணக்காரனையும், உத்தியோகஸ் தனையும்
திட்டி காலம் கடத்துவதற்கு ஏதாவது ஒரு இயக்கமோ வழியோ கிடைக்காதா என்று தேடவேண்டியதைத் தவிர வேறு ஒரு வேலையும் கிடைக்கப் போவதில்லை.இத்தனை சந்தடியில் “கல்யாணசந்தடியில் தாலிகட்ட மறந்தது” போல் பிரிட்டிஷ் முதலாளிகள் சங்கதி மறந்து போய் அவர்கள் என்றும் பதினாராக வாழப்போகின்றார்கள் என்பதில் யாரும் கடுகளவு சந்தேகமும் படவேண்டியதில்லை.
குடி அரசு - தலையங்கம் - 15.01.1933
குடி அரசு - 1933 0) 44
வருந்துகிறோம்
ஈான்பகதூர் அய்பாசாமி முதலியார் மாரணம்
9-1-33 இரவு செங்கற்பட்டு பிரபல வியாபாரியும், ஜமீன்தாரும், நிலச்சுவான்தாருமான தோழர் ராவ்பகதூர் அப்பாசாமி முதலியார் அவர்கள். சென்னையில் உயிர் துரந்தார் என்ற சேதியைக் கேட்டு மிக வருந்துகிறோம்.
இவர் செங்கற்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மகாநாட்டிற்கு மூல
புருஷராயிருந்து நடத்தினவர். சீர்திருத்தத் துறையில் வெகு தூரம் முற்போக்கு டையவர். ஏழைகளிடத்தில் மிகுதியும் அன்பும் இரக்கமும் உடையவர். இவர்: இறந்தது அந்த ஜில்லாவாசிகளுக்கு ஒரு பெருங்குறைவேயாகும்.
குடி அரசு - இரங்கல் செய்தி - 15.011933
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ற்றும், இன்றும்
ஓ தேசியவாதிகளே! தேசியப் பத்திராதிபர்களே!
சுயமரியாதைப் பிரசாரங்கள் நடக்கின்ற பக்கங்களில் கலகங்கள். நடப்பதாகவும், அடிதடிகள் நடப்பதாகவும் கற்பனைகள் செய்தும் இழிபிறப்பு ரிபோர்ட்டர்களின் நிரூபங்களை நம்பியும் நடவாத சங்கதிகளை பத்திரிகை.
களில் போட்டு “நேற்று” மகிழ்ந்தீர்கள்.
சுயமரியாதை இயக்கம் செத்தது என்று பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்தால் உலகத்தார் கண்களும் மூடப்பட்டிருக்கும் என்று கருதிய திருட்டுப் பூனைகள் போல் நடித்தீர்கள். முடிவில் என்ன நடந்தது? என்று பார்த்திருப்பீர்கள்.
அதாவது உங்கள் வயிர் வளர்ப்புக்கு ஆதாரமாயிருக்கும் காங்கிரசின் யோக்கியதை - ஹரிஜன சேவையின் யோக்கியதை “இன்று” எப்படி இருக் கின்றது? எத்தனை பக்கம் கலகம்? எத்தனை பக்கம் தடியடி? எத்தனை பக்கம். கல்லடி? எத்தனை பக்கம் ரத்தக்காயம்? எத்தனை பக்கம் மண்டை உடை? எத்தனை பக்கம் விரட்டி அடித்தல்? எத்தனை பக்கம் காங்கிரஸ்காரரே கூட்டத்தை கலைத்துக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தல்? எத்தனை பக்கம் புரட்டு? இவைகள் தேசீயப்பத்திரிகைகளிலி லேயே சேர்ந்த நிரூபர்கள் பேரால் காணப்படுகின்றதே, இவை பொய்யா? இதைச்செய்தவர்கள் எல்லாம் புத்திசாலிகளா? அல்லது மடையர்களா? மேன் மக்களா? அல்லது கீழ்மக்களா? தேசீயவாதிகளா? தேசத்துரோகிகளா? அல்லது இதைச்செய்தவர்கள் எல்லாம் வீரர்களா? அல்லது காங்கிரஸ் காரர்களுக்குப் புத்தி கற்பித்தவர்களா? யோசித்துப்பாருங்கள் தட்டிப்பேச ஆளில்லாத காரணத்தால்தானே சண்டப்பிரசண்டர்களாய் விளங்குகிறீர்கள்?' “அளந்த வள்ளம் அட்டாலியில் இருக்கும்” என்பதை அறியாமல் தானே போக்கிரித்தனமாய் எல்லாம் எழுதிவிட்டீர்கள்.
குடி அரசு - 1933 M) 46
மற்றும் செருப்படி ஜோட்டடி என்றெல்லாம்... ..... தனமாய் எழுதி மகிழ்ந்தீர்களே! இப்பொழுது உங்களுக்கு உங்கள் சங்கதியே பட்டதெல்லாம் போதும் என்று ஆய்விட்டதே! ! இனியாவது புத்தியாய், யோக்கியமாய் பிழையுங்கள் என்று ஞாபக மூட்டவேஇதை எழுதினேன்.ஆத்திரப்படுவதில் பயனில்லை. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் என்பது உண்மை அனுபவமாய் விடவில்லையா? மற்றும் தோழர் காந்திக்கு கொடும்பாவி சட்டி
திருப்பூரில் இழுக்கப்படவில்லையா? தோழர் காந்திக்கு கருப்புப்புஷ்பம் கராச்சியில் கொடுக்கவில்லையா? தோழர் காந்திக்கு கருப்புக் கொடி பம்பாயில் பிடிக்கவில்லையா? தோழர் காந்தி மீட்டிங்குகளில் தமிழ் நாட்டில் குழப்பம் நடக்கவில்லையா? காந்தி ஒழிய! காந்தீயம் ஒழிய! காங்கிரசு ஒழிய!!! என்று கராய்ச்சியில் ஆயிரக்கணக்கான பேர் கூப்பாடு போடவில்லையா? “கடவுள் சித்தமில்லாமல் காந்தியும் காங்கிரசும் ஒழியாது” என்று தோழர் காந்தி உலகத்தாருக்கு தைரியம் சொல்லவில்லையா? சுயமரியாதைக் கூட்டத்
தில் காலித்தனம் செய்தது காங்கிரஸ்காரர்கள் என்பதை காங்கிரஸ்காரர்களே. மறுக்கமுடியாது. ஆனால் காங்கிரஸ் கூட்டத்தில் “காலித்தனங்கள்”' செய்ய மேல் கண்ட நடவடிக்கைகளில் ஒரு சிறிதும் சுயமரியாதைக்காரர்களால் நடத்தப்பட்டது அல்ல என்பதை நீங்களே ஒப்புக்கொள்ளுவீர்கள்.
ஆகவே, ஜனங்களுக்கு காலித்தனங்கள் செய்ய இன்று உபாத்தியாயர் களாய் இருப்பது எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், யாருடைய சிஷ்யர்கள். என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் என்பதை இப்போதாவது உலகம் உணரட்டும்.
குடி அரசு - கட்டுரை - 15.01.1933)
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மதிப்புரை
“ இளைஞர் பாடல்கள்” என்ற தமிழ் நூலொன்று வரப்பெற்றோம். அஃது கோவைத் தமிழ்ச்சங்க அமைச்சரும், பொதுநல உழைப்பாளரும்,
தமிழ் மொழி வல்லுனருமான தோழர். ராவ்சாஹிப் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார் பிஏ.பி.எல்.அவர்களால் இயற்றப் பெற்று கோவைத் தமிழ்ச் சங்கத்
தாரால் வெளியிடப்பட்டது. இந்நூல் எளிய நடையில் புதியமுறையில் இளைஞர்களுக்கு உணர்வு ஊட்டும் நோக்குடன் கடவுள், ஞாயிறு ஒழுக்கம்,
நிலா, மறை, யாறு, கல்விளையாட்டு, ஆகாயவிமானத்தில் முதல் அநுபவம், நாட்டுப்பற்று அல்லது தாய்நாடு முதலிய பல்வேறு பொருள்களைப் பற்றியும் மலையும் அணியும். ஹாதிம்தாய் என்னும் சிறுகதைகளை விளக்கியும்
செய்யுள் ரூபமாக சாதாரண மக்களும் அறியும் வண்ணம், எழுதப்பட்: டுள்ளது. கடவுளுணர்ச்சியையும், சோதிடப்பெருமையையும், இயற்கைக் காட்சியின் தன்மையையும், தேசீய உணர்ச்சியையும் கார்த்திகைத் திருநாள் முதலிய பல விழாக்களின் அருமையையும் பற்றிய நம்பிக்கை உடையோருக்
கும் தமிழின் பெருமையையும் கவிச் சுவையை அறிய விரும்புபவர்களுக்
கும் இந்நூல் மகிழ்ச்சியைத் தரத்தக்கதாகும் என்பதில் ஐயமில்லை. ஆனால்
தமிழ் பெருமையையும் கவி இன்பக்கலையையும் மக்களுக்கு ஊட்ட வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இயற்றப்படும் நூல்கள் இம்மாதிரி ஆத்திகப் பிரசாரத்துக்கும் பயன்படும்படியாய் இல்லாமல் பகுத்தறிவு பிரசாரத்திற்கே பயன்படும்படி இருந்தால் மாத்திரமே அவை மக்கள் சமூகத்
திற்கு நன்மை பயக்க, நீடூழி வாழ இடமுண்டு. அங்கனமில்லாமல் இனியும் தேரையும், திருவிழாவையும், நோன்பையும், விரதத்தையும் கொண்ட புராணக்கதைகள் தமிழ் பெருமை வேஷத்தில் வந்தாலும், கவி யின்பக்கலை: வேஷத்தில் வந்தாலும் அவற்றிற்கெல்லாம் உலகில் இனி இடம் கிடைப்பது என்பது மிக அருமையேயாகும்.
எனினும் தோழர் இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்களால் இயற்றப் பட்ட இந்நூல் 100 க்கு 75 பாகம் யாவரும் பாராட்டும் வண்ணமே அமையப் பட்டிருக்கிறது கண்டு மகிழ்ச்சியடைகிறோம். வேண்டுவோர் கோவை தமிழ் சங்கத்திற்கெழுதிப் பெற்றுக்கொள்ளவும்.
குடி அரசு - நூல் மதிப்புரை - 15.011993.
குடி அரசு - 1933 M) 48
o o . எலகைஷனண் TnHBHI
- சித்திரபுத்தன்
தமிழ் நாட்டில் ஸ்தல ஸ்தாபனங்களில் புதிய சீர்திருத்தத்தின்படி என்று நடைபெறும் எலக்ஷன்கள் (தேர்தல்) சம்பந்தப்பட்ட காரியங்களில் எல்லாம். ஏதாவது குழப்பமும், சண்டையும், கலகமும், அடிதடியும் கொலைகளுமான காரியங்கள் அவ்வளவுமோ அல்லது ஏதாவது ஒன்றோ நடந்த வண்ண மாகவே இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக் கைகளும் மிக மிக மோசமாகவே இருக்கின்றன.
இனிமேல் தேர்தல்கள்-எலக்ஷன்கள் ஏற்பட்டவுடன் அதன் அபேக்ஷ கர்களை காவலில் வைத்து விட்டு எலக்ஷன்கள் நடத்தப்பட்டால் ஒழிய கலக மும்,கொலையும் நடக்காமல் இருக்குமா என்கின்ற விஷயம் சந்தேகமாகவே இருந்து வருகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலையோ மிக மிக மோசமாயிருக்கின்றது. பெரிய பொறுப்புள்ள அதிகாரிகள் முதல் சாதாரண போலிங் ஆபீஸர்கள் என்பவர்கள் வரை மோசமாகவே நடந்துகொள்ளு கின்றார்கள்.
ஒரு சிறு கதை சொல்லுகின்றோம். ஒரே ஒரு ஊரில் ஒரு எலக்ஷன் நடந்தது அதற்கு நின்ற இரண்டு அபேட்சகர்களும் “எலக்ஷன் அதிகாரி
யிடம் சென்று எலக்ஷன் எப்படி இருந்தாலும் தங்களுக்கே அனுகூலமாய் இருக்க வேண்டுமென்று தனித்தனியே கேட்டுக் கொண்டு ஆளுக்கு100 ரூ.
வீதம் இரண்டுபேரும் “இரகசியமாய்” கொடுத்து விட்டுவந்து விட்டார்கள். அதற்கு ஏற்றாப் போல் எலக்ஷனிலும் போலிங் ஆபீசர்களது “தவறுதல்” களால் சில தப்பிதங்கள் நடந்தது. இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு தான் தோல்வி அடைந்து விடக் கூடும் என்று கருதிய! ஒரு அபேக்ஷகர் முடிவு சொல்லும் (டிக்ளேர் செய்யும்) அதிகாரிக்கு மறுபடியும் கொஞ்சம் பணம் கொடுத்து தன்னையேடிக்ளேர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகேட்ட மற்ற அபேட்சகரும் ஓடி மறுபடியும் கொஞ்சம் பணம் கொடுத்தார். இரண்டையும் வாங்கிக் கொண்டார். அதிகாரி யோசித்தார் யாருக்கு அனு கூலம் செய்தால் தனக்கு நல்லது என்று பார்த்தார். மற்றும் பல சங்கதிகளைப் பார்த்து ஒரு கட்சிக்கு அனுகூலமாக தீர்ப்பு கூறி கொஞ்ச ஓட்டு பெற்ற “கவைனையே” டிக்ளேர் செய்தார். வெற்றிபெற்றதாக முடிவு கூறினார்.
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
அதற்கு ஏதோ காரணமும் குறிப்பிட்டு விட்டார். ஆகவே மறுபடியும் பணம் கொடுத்த எதிர் அபேட்சகர் தைரியமாய் அதிகாரி வீட்டுக்குப் போய் “இது தானா யோக்கியதை” என்றார். அதிகாரி ரகசியமாய் வீட்டுக்குள் அழைத்து வாங்கின பணத்தை கையில் கொடுத்து “சந்தர்ப்பம் வேறு விதமாய் போய் விட்டதால் இப்படிச் செய்ய நேர்ந்தது. ஆனால் வருத்தப்படாதே கோர்ட்டுக்
குப் போனால் உனக்கு தான் அனுகூலமாகும். மன்னித்துக் கொள் என்று கேட்டுக் கொண்டார். அபேட்சகனோ ஓட்டர் வீட்டுக்கு அலைந்தது போறாமல் எலக்ஷன் ஆபிஸ் வீட்டுக்கு அலைந்தது போறாமல் இனி கோர்ட்டுக்கும், வக்கீல் வீட்டுக்கும் நீதிபதி வீட்டுக்கும் அலையும்படியா செய்கிறாய்? என்று ஏதோ தனக்கு மிக புத்தி வந்துவிட்டது போல் பேசியது மல்லாமல் அப்படித் தான் கோர்ட்டில் அனுகூலமானால் எனக்கு என்ன பிரயோஜனம்? இப்பொழுது நீ அனுகூலம் செய்திருந்தால் எனக்கு சமீபத்தில் நடக்கும் தலைவர் தேர்தலில் 1000மோ, 2000மோ கிடைத்திருக்கும். அதெல்லாம் பாழாய் போனது மல்லாமல் இன்னமும் 500ரோ1000௦மோ செலவு அல்லவா செய்ய வேண்டி இருக்கிறது.
அதற்கும் இனி அப்பீல் செய்தால் அப்புறம் வேறே செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இவ்வளவும் செய்து அனுகூலம் ஆகாமல் போய் விட்டால் என்ன பண்ணுவது? அல்லது நமக்கு அனுகூலம் ஆச்சுதென்றே வைத்துக் கொண்டாலும் மந்திகளோடு மந்தியாய் நாற்காலியில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவதைவிட வேறு என்ன செய்ய இடமுண்டாகும்? ஆதலால் இனி மேல் இந்த கிரகத்தைப்பற்றி நினைப்பதே இல்லை. நீ மாத்திரம் நல்லா இருந்தால் சரி, கடவுள் தான் உன்னைக் கேட்கவேண்டும். என்று சொல்லிக்கொண்டு வெளியில் வந்து விட்டார். அதிகாரி உடனே கதவை மூடித் தாழ்போட்டுக் கொண்டார். என்பதாக ஒரு கதை தேசீய மதத் தைச் சேர்ந்த சுயராஜ்ய புராணத்தில் எலக்ஷன் அத்தியாயத்தில் காணப் பட்டது.
இது நிற்க இன்னும் சிலர் தங்கள் எலக்ஷனில் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், சிபார்சு பிடித்தாலும் ஓட்டர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும், வெற்றிபெற முடியாது என்று கருதினால் எதிர் அபேட்சகரை அடிப்பதாக, உதைப்பதாக மிரட்டுவதும், அடிக்க ஏற்பாடு செய்வதும், கொலை செய்யவே ஏற்பாடு செய்வதுமான காரியங்கள் நடைபெறுகின்றன. இதற்கும் இரண் டொரு கதைகள் தேசீய புராணத்தில் இருக்கின்றன.
ஆனால் அவற்றை சிறிது நாள் பொறுத்து வெளியிடுவேன். இந்த மாதிரி அதிகாரிகளை பணம் கொடுத்து “தொந்திவு” செய்வதும் அபேட்சகர்: களை அடிதடி, கலகம், வசவு, கொலை முதலியவைகள் செய்து தொந்திரவு செய்வதுமான காரியங்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் உள்ள இரண்டு முக்கிய மான குற்றங்களினாலேயேதான் நடைபெறுகின்றன. அவை என்னவெனில்,
குடி அரசு - 1933 (0) 50
1 ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் வசம் கண்ட்ராக்டுகள் கொடுக்கும்
அதிகாரம் இருப்பது.
2. ஸ்தல ஸ்தாபனத்திற்கு உத்தியோகஸ்தர்கள் - சிப்பந்திகள்
நியமிக்கும் அதிகாரம் இருப்பது.
ஆகிய இந்த இரண்டு காரியங்களையும், ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களிடம் இருந்து எடுத்து விட்டால் அதாவது கண்ட்ராக்ட் கொடுப்ப
தும், சிப்பந்திகளை நியமிப்பதும் இவர்களிடம் வேலை வாங்குவதுமான இரண்டு காரியங்களையும் பிரசிடெண்ட் - சேர்மென் என்பவர்களிடம் இருந்து எடுத்துவிட்டால் கண்டிப்பாய் மேலே குறிப்பிட்ட மாதிரியான குற்றங்
கள் நடக்கவே நடக்காது. அன்றியும் தலைவர் ஸ்தானங்களுக்கு வருகின்றவர்.
களும், யோக்கியமாய் இருக்க முடியும்.
அப்படிக்கில்லாவிட்டால் எவ்வளவு யோக்கியமும்,நாணயமுமான தலைவர்கள் தலைமை ஸ்தாபனத்துக்கு வந்தாலும் தங்களைத் தலைவர் களாக்குவதற்கு உதவி செய்ததாகச் சொல்லிக்கொள்ளப்படும்-கருதப்படும் நபர்களுக்கு எல்லாம் உதவி செய்து தீர வேண்டியதாய் அவரவர்கள். “மனசாட்சி” வற்புறுபுறுத்தியேயிருக்கிறது..
இதை உத்தேசித்தே அனேகம் பேர் ஒவ்வொரு கட்சியில் சேர்ந்து கொண்டு “மகா அக்கரை” யுடன் பாடுபடவேண்டியதாய் இருக்கிறது, (குறைந்த அளவு பாடுபட்டதாகவாவது காட்டிக் கொள்ள வேண்டி இருக்
கிறது. சிலர் இருவரிடமும் யோக்கியர்போல்-வெகு அக்கரைக்காரர்கள் போல் நடந்துகொள்ளவோ அல்லது குறைந்த அளவு கோள் சொல்லியாவது நம்பிக்கைப் பாத்திரர்களாய் நடந்துகொண்டதாகக் காட்டிக் கொள்ளவாவது வேண்டியதாய் இருக்கின்றது. ஆகவே மத ஸ்தாபன இலாக்கா புதிய மந்திரி யாகிய தோழர். பொப்பிலி ராஜா சாயபாவது இதைக்கவனித்து தனது காலத்
தில் இதே காரியத்தை சாதித்துவிட்டுப்போனால் நாட்டுக்கு ஒரு வழியா வது நன்மை செய்தவர் என்று சொல்லிக் கொள்ள அருகதை உடையவராவார். டாக்டர் சுப்பராயன் அவர்கள் ஸ்தல ஸ்தாபன இலாக்காவிலும் மற்றும்
சிலதிலும் செய்த பல நன்மைகள் அவர் இன்னமும் எந்தக்கட்சியில் சேர்ந்து மக்களை எவ்வளவு ஏமாற்றினாலும், மறக்கக்கூடியதல்ல. அது போலவே தோழர் முத்தையா முதலியார் அவர்களும் உத்தியோக வினியோக விஷயத்
தில் செய்த காரியம் என்றும் மறக்கக்கூடியதல்ல. அதுபோல் ஏதாவது ஒருகாரியம் பொப்பிலி ராஜாவும் செய்தால் நன்மையாய் இருக்கும்.
குடி அரசு - கட்டுரை - 22.11933
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
எது நலை Bezmip 2
வருணாச்சிரம தரும தோழர் ராமச்சந்திரய்யர் “ஹரிஜனங்கள்”' என்பவர்களை ஹிந்துக்கள் அல்ல என்று சொன்ன விஷயத்தைச் சுயமரியாதை இயக்கத்தோர் ராமசாமியும் ஆமோதித்து விட்டாராகையால் ராமச்சந்திர அய்யரும் ராமசாமியும் “நல்ல ஜோடி” என்று சுதந்திரச் சங்கு என்னும் பத்திரிகை எழுதி இருக்கிறது.
என்றாலும் அதே பத்திரிகையின் வேறொரு இடத்தில் அந்த ஜோடிக்கு உவமை சொன்னதில் உண்மையைச் சொல்லி விட்டது. எப்படி
எனில் இரண்டும் சரியான ஜோடி அல்ல வென்றும் சிறிது கூட பொருந்தாத ஜோடி என்றும் மக்கள் நன்றாய் உணரும்படி தன் மனதிலுள்ள உண்மையை தன்னை அறியாமலே வெளிப்படுத்தி விட்டது.
அதாவது, “இருவரும் சேர்ந்த நல்ல ஜோடி என்பது காராம் பசுவும் காளை எருமையும் ஒரு வண்டியில் கட்டப்பட்டு ஓட்டப்படுவது போலிருக் கிறது” என்று உவமை காட்டி எழுதி இருக்கிறது. ஆகவே காராம் பசுவும் காளை எருமையும் சரியான ஜோடி என்று யாராவது ஒப்புக் கொள்ளுவார். களா? ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சுதந்திரச் சங்கு ஆசிரியரும் கூட தான் ஒரு குறிப்பிட்ட ஜாதியார் என்கின்ற முறையிலிருந்து விலகி தனியே நடு நிலையில் நீதிபதி என்கின்ற முறையில் இருந்து காராம் பசுவை
யும் காளை எருமையையும் ஒன்றாய் நிறுத்திப் பார்ப்பாரானால் இரண்டும் சரியான ஜோடி என்று ஒரு நாளும் தீர்ப்பெழுதமாட்டார். ஆனால் இப்படி எழுதுவதற்கு உள்ள காரணங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் வேலையைப் பிரதானமாகக் கருத இதுசமயம் நமக்கு நேரமில்லை, இங்கு
இடமும் இல்லை.
நாம் சேர்க்கும் ஜோடி
ஆனால் நாம் இப்போது ஒரு ஜோடியைச் சேர்த்து வெளியில் காட்டு கிறோம். இது சரியான ஜோடியா? அல்லவா என்று நடுநிலைக் கண்களைக் கொண்டு பார்த்து முடிவுகாணத் தோழர்களை வேண்டிக்கொள்ளுகின்றோம்.
குடி அரசு - 1933 M) 52
அதாவது:- “சுதந்திரச் சங்கு பத்திராதிபரின் தலைவரான “மகாத்மா” காந்தியையும் தோழர் வருணாச்சிரம ராமச்சந்திரய்யரின் தலைவரான “லோககுரு” சங்கராச்சாரியாரையும் ஒரு ஜோடியாகச் சேர்க்கிறோம். இரண் டையும் சரிபார்த்து எது நல்ல ஜோடி அதாவது சுதந்திரச்சங்கு மூலத்தில் சேர்த்துவிட்டு வியாக்கியானத்தில் பிரித்து விட்ட ஜோடி நல்ல சரியான ஜோடியா? அல்லது “குடி அரசு” சேர்த்த ஜோடி நல்ல சரியான ஜோடியா? என்பதை நல்ல நடுநிலைமைக் கண்ணாடிகொண்டு பார்த்து முடிவு செய்யுங்
கள். ஒரு சமயம் “குடி அரசின்“ கண் காமாலைக் கண்ணாயிருந்தாலும் இருக்கலாம். அது பார்க்கும் கண்ணாடி வர்ணக் (துவேஷ கண்ணாடியாய் இருந்தாலும் இருக்கலாம். ஆதலால் வாசகர்களையே ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லும்படி விரும்புகிறோம்.
1. சங்கராச்சாரி இந்துமதத் தலைவர், இந்துமத அதிகாரி, இந்து மதத்தைக் காப்பவர்.காந்தியும் தானே இந்துமதமாய் இருப்பவர். இந்து மதத்தைக் காக்கவே சுயராஜ்யம் கேட்பதாய்ச் சொல்லுகிறவர்.
2. சங்கராச்சாரி இந்துமத வேதசாஸ்திர புராண இதிகாசங்களை ஒப்புக்கொண்டு பிரசாரம் செய்பவர். காந்தியும் இந்துமத வேதசாஸ்திர புராண இதிகாசம் ஆகியவைகளை ஒப்புக்கொண்டு வியாக்கியானம் எழுதி பிரசாரம் செய்பவர்.
3. சங்கராச்சாரி வருணாச்சிரமத்தையும் “பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன்” என்கின்ற 4- வருணங்கள் பிறவியிலேயே உண்டு என்பவர். காந்தியும், வருணாச்சிரமமும் மேல்கண்ட நான்கு வருணப் பிறவியிலேயே உண்டு என்பவர்.
4. சங்கராச்சாரியும், சுதர்மம் அதாவது அவனவன் வருணத் திற்கேற்ற தொழிலையே அவனவன் செய்ய வேண்டும் என்று உபதேசிப்பவர். காந்தியும் அவனவன் வருணதர்மத் தொழிலையே செய்ய வேண்டும் என்று சொல்லுபவர்.
5. சங்கராச்சாரியும் ஜாதிப் பிரிவை ஒப்புக்கொள்வதுடன் ஒரு ஜாதிக்கு மற்றொரு ஜாதி சமபந்தி போஜனமோ, கலப்புமணமோ கூடாது என்று சொல்லுபவர். காந்தியும் ஜாதிப் பிரிவை ஒப்புக் கொண்டும் கலப்பு மணம் சமபந்தி போஜனம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறவர். சங்கராச்சாரியும் பிறவியில் ஜாதி உண்டு என்கின்றவர். காந்தியும் பிறவியில் ஜாதி உண்டு என்கிறவர்.
6. சங்கராச்சாரியும் முன்பின் ஜன்மம், தலைவிதி, கர்மம் என்பவை களை ஒப்புக்கொள்ளுகிறவர். காந்தியும் முன்பின் ஜன்மம், கர்மம், தலைவிதி ஆகியவைகளை ஒப்புக்கொள்ளுகிறவர்.
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
7. சங்கராச்சாரி மனுதர்மம் பராசர தர்மம் ஆகியவைகளை ஒப்புக் கொள்ளுபவர். காந்தியும் மனுதர்மம் பராசர தர்மம் ஆகியவைகளை ஒப்புக்கொள்ளுபவர்.
8. சங்கராச்சாரி தன்னை லோக குரு என்று அழைப்பதை ஒப்புக் கொள்ளுபவர். காந்தியும் தன்னை மகாத்மா என்று அழைப்பதை ஒப்புக்கொள்ளுபவர்.
9. சங்கராச்சாரி பரமசிவனுடைய அம்சமாக கருதப்பட பார்ப்பனர் களால் புராணக் கதைகள் எழுதி பிரசாரம் செய்யப்படுபவர். காந்தியும் மகாவிஷ்ணு அவதாரமாய் கருதப்பட பிராமணக் கவிகளால் எழுதி
யும் சுதந்திரச்சங்கு முதலிய அனேக பார்ப்பனர்களால் பிரசாரமும் செய்யப்படுபவர்.
10. சங்கராச்சாரியும் இந்தமாதிரி படத்தையும், பிரசாரத்தையும் வெட்கப்படாமல் பொறுத்துக் கொள்ளுகிறவர். காந்தியும் வெட்கப் படாமல் இப்படிப்பட்ட பிரசாரங்கள் நடைபெறுவதை ஆக்ஷேபிக்கா
மல் பார்த்துக் கொண்டிருப்பவர்.
11.சங்கராச்சாரி தீண்டாதாருக்குக் கோவில் பிரவேசம் கொடுத்தால் இந்துமதமே போய்விடும் என்பவர். காந்தியும் தீண்டாதாருக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்தால் இந்துமதமே போய்விடும் என்பவர்.
12, சங்கராச்சாரி தீண்டாதார் கோவிலுக்குள் போனால் கோவில் தீட்டுப்பட்டுவிடும் என்கிறார்.
காந்தி, புண்ணியார்ச்சனை (சம்ரோக்ஷணை! செய்து தீட்டைப் போக்கிக் கொள்ளலாம் என்கிறார்.
13. சங்கராச்சாரி மனிதனுக்கு தீண்டாமை உண்டு என்கிறார். காந்தியும் மனிதனுக்கு தீண்டாமை உண்டு என்கிறார்.
14 சங்கராச்சாரி மாடு தின்பவர்கள் - சண்டாளர்கள், கோவிலுக்குள். போக உரிமை இல்லாத ஜாதி என்கிறார். காந்தியும் மாடு தின்பவர் கீழ்ஜாதி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாத ஜாதி என்கிறார்.
15. சங்கராச்சாரி ராமராஜ்யம் வேண்டுமென்கிறார். காந்தியும் ராம ராஜ்யம் ஸ்தாபிப்பதற்காகவே உயிர் வாழ்கிறேன் என்கிறார்.
16. சங்கராச்சாரி சுயராஜ்யத்தை விட மதம் பெரியது என்கிறார். காந்தியும் மதத்திற்காகத்தான் சுயராஜ்யம் கேட்கிறேன் என்கிறார்.
குடி அரசு - 1933 M) 54 55
17. சங்கராச்சாரி பொது உடைமைக் கொள்கை கூடாது. அது கடவுள் ஆக்கினைக்கு விரோதம் என்கிறார்.
காந்தியும் பொது உடைமைக் கொள்கை கூடாது. அதை ஒழிக்கத் தான் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பித்து மக்கள் கவனத்தை அதில் திருப்பிவிட்டேன் என்கிறார்.
18. சங்கராச்சாரிக்கு மடம் உண்டு காந்திக்கும் மடம் ஆச்சிரமம்? உண்டு.
19. சங்கராச்சாரிக்கும் அடிமைகள் போன்ற பக்தர்கள் உண்டு.
காந்திக் கும் அடிமைகள் போன்ற பக்தர்கள் உண்டு.
20. சங்கராச்சாரிக்கும் முதலாளிமார்கள் ஊரார் உழைப்பில் வாழ்கின்ற வர்கள் பணம்கொடுத்து பிரசாரம் செய்விக்கிறார்கள்.
காந்திக்கும் முதலாளிமார்கள் ஊரார் உழைப்பில் வாழுகிறவர்கள் பணம்கொடுத்து பிரசாரம் செய்விக்கிறார்கள்.
21. சங்கராச்சாரியும் எதற்கும் பகவான் கட்டளை இடுகிறதாகச் சொல்லுகிறார். காந்தியும் எதற்கும் பகவான் கட்டளையிட்டதாகச்
சொல்லுகிறார்.
22 சங்கராச்சாரி பூஜை ஜபம் செய்கிறார். காந்தியும் பிரார்த்தனை பஜனை செய்கிறார்.
23. சங்கராச்சாரிக்கு டி ஆர். ராமச்சந்திரய்யர் போன்ற வருணாச் சிரமிகள் உதவியாளர்களாக இருக்கிறார்கள். காந்திக்கும் மாளவியா போன்ற வருணாச்சிரமிகள் உதவியாளர்களாக இருக்கிறார்கள்.
24. சங்கராச்சாரிக்கு காவி உடுத்தியிருந்தாலும் சென்றவிடமெல் லாம் இந்திரபோகம். காந்திக்கும் அரைத்துணி கட்டியிருந்தாலும் சென்ற விடமெல்லாம் ராஜபோகம் நடக்கிறது.
25. சங்கராச்சாரி காலில் ஜனங்கள் விழுகின்றார்கள். காந்தி காலி
லும் ஜனங்கள் விழுகின்றார்கள்.
26. சங்கராச்சாரியையும் பார்ப்பனர்கள்தான் லோககுருவாக்கி னார்கள். காந்தியையும் பார்ப்பனர்கள் தான் மகாத்மா ஏன் அவதார புருடராய் ஆக்கினார்கள்.
27. சங்கராச்சாரி விக்கிரக ஆராதனையை ஆதரித்துப் பிரச்சாரம்
செய்கிறார். காந்தியும் விக்கிரக ஆராதனையை ஆதரித்து அதை நிலைத்துவைக்க உதவி செய்கிறார்.
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
28. சங்கராச்சாரி பெண்களை சீதை, நளாயினி, சந்திரமதிபோல் இருக்கச் சொல்லுகிறார். காந்தியும் பெண்களை சீதை, நளாயினி, சந்திர மதிபோல் இருக்கச் சொல்லுகிறார்.
29. சங்கராச்சாரி படம் கடவுள் படம்போல் பாவிக்கப்பட்டு அதை வீடுகளில் கோவில்களில் பூஜையில் வைக்கப்பட்டிருக்கிறது. காந்தி படமும் கடவுள் படம் போல் பாவிக்கப்பட்டு அனேக வீடுகளிலும்
ரதம், தேர்களிலும் கூட வைத்துப் பூஜிக்கப்படுகிறது.
ஆகவே ஒரு நல்ல சரியான ஜோடிசேர்க்க சுதந்திரச் சங்கு இனியும் என்ன என்ன விஷயங்களில் பொருத்தம் தேவை என்று கருதுகின்றது என்று தெரிந்தால் நம்மால் ஆனவரை முயற்சித்துப் பார்க்கின்றோம். முடியா விட்டால் இவ்வளவுதான் இதற்கு மேல் நல்ல ஜோடி சேர்க்க நம்மால் ஆக வில்லை என்று கண்ணியமாய் ஒப்புக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 22.01.1933
குடி அரசு - 1933 M) 56
வரவேற்கின்றோம்
45 மாத காலமாய் விசாரணை நடந்துவந்த “மீரத் சதிவழக்கு” கேசு ஒரு வழியில் முடிவடைந்துவிட்டது, அதாவது 27 எதிரிகளுக்கு, 3 வருஷ முதல் ஆயுள் பரியந்தம் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தண்டனையைப்பற்றி நாம் சிறிதும் கவலைப் படவில்லை. இந்த 27 பேர். மாத்திரம் அல்ல இன்னும் ஒரு 270 பேர்களும் சேர்த்து தூக்கில்போடப்பட்டி ருந்தாலும் சரி நாம் அதற்காகக் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால்
இந்தத் தோழர்கள் சிறையிலிருப்பதாலோ, தூக்கில் கொல்லப்படுவதாலோ அவர்களது கொள்கையாகிய பொதுவுடமைக் கொள்கை என்பது, அதாவது முதலாளிகளின் ஆதிக்க ஆட்சியை சிதைத்து, நசுக்கி சரீரத்தினால் பாடுபடுகின்ற மக்களுடைய ஆட்சிக்கு உலக அரசாங்கங்களையெல்லாம் திருத்தி அமைக்க வேண்டும் என்கின்ற கொள்கையோ, உணர்ச்சியோ, அருகிப் போய்விடும் என்கின்ற பயம் நமக்கு இல்லை. அல்லது இன்று தண்டனை அடைந்த தோழர்கள் தான் இக்கொள்கைக்கு கர்த்தாக்கள் ஆவார்.
கள், கர்மவீரர்கள் ஆவார்கள். ஆதலால் இவர்கள் போய்விட்டால் இந்தக் கொள்கையைக் கொண்டு செலுத்த உலகில்வேறு ஆட்கள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற பயமும் நமக்கு இல்லை. அல்லது இந்த தோழர்கள் ஜெயிலில் கஷ்டப்படாமலோ, அல்லது தூக்கு மேடையில் உயிர்விடாமலோ, இருப்பார்களானால் உலகத்தில் சுகமாக நெடுநாளைக்கு ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு வாழப்போகிறவர்கள் என்றாவது நாம் கருதவில்லை.
உண்மையைப் பேசப்போனால் அவர்கள் உண்மையான கர்ம
வீரர்களாய் இருப்பார்களானால் வெளியில் இருப்பதைவிட சிறையில் கவலை:
யற்று சுகமாகவே இருக்கநேரிடும். ஏனெனில் உண்மையாக வேலை செய்து வரும் சமதர்மத் தொண்டர்களுக்கு வெளியில் இருக்கும் கவலையும், தொல்லையும், பொருப்பும் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பலவித உபத்திரவங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
கொள்கையில் இருக்கும் உண்மை ஊக்கமே இவ்வளவையும், சகித்துக்கொண்டு வேலை செய்யச் சொல்லுகின்றது.
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஆனால் இத்தொண்டர்கள் ஜெயிலில் இருப்பதின் மூலம் அவர்கள் ஜெயிலில் வதியும் ஒவ்வொரு வினாடியும், அவர்களது கொள்கையானது அவர்களைப் போன்ற 1,10,100,1000 கணக்கான தொண்டர்களைத் தட்டி எழுப்பி ஊக்கப்படுத்திக்கொண்டே தான் இருக்கச்செய்யும். அன்றியும் தூக்கு மேடையில் உயிர்விட்டு இருப்பார்களேயானால் அவ்வுயிரின் ஞாபகம் எப் பொழுதும் உண்மை தொண்டர்களின் உள்ளம்விட்டு அகலாமல் சதா அவர். களைத்தட்டி ஓட்டிக்கொண்டேதான் இருக்கும். இன்றையத் தினம் உலகில் உள்ள முக்கிய கொள்கைகளில் பல அவை சரியாயிருந்தாலும், தப்பாய் இருந்தாலும் அக் கொள்கையைக் கைக்கொண்டவர்களின் தியாகத்தை மதித்தே கொள்கைகள் பரவவும், நிலைநிறுத்தவும் செய்கின்றது என்பதை
எவரும் மறுத்துவிட முடியாது. ஆனால் பிற்காலத்தில் அதற்கு ஆயும் குறைவும், சக்திக்குறைவும் ஏற்படுகிறது என்பது கால தேச வேறுபாட்டாலும், அபிப்பிராய வேறுபாட்டாலும் கொள்கையின் பயனற்ற தன்மையாலுமே யொழிய வேறில்லை.
இன்று எத்தனையோ கொள்கைகள், பிரசாரம் பண்ணப் பதினாயிரக் கணக்கான ஆட்கள் இருந்தும் பிரசாரத்திற்கு பத்துலட்சக்கணக்காண ரூபாய்
கள் வருமானம் இருந்தும் அவை சடங்கு முறைபோல் நடைபெருவதையும், சில மறைந்துபோய்கொண்டு வருவதையும், மறைந்தே போய்விட்டதையும்
நாம் சரித்திரங்களில் பார்ப்பதோடு மாத்திரமல்லாமல் நேரிலும் பார்த்து வரு கின்றோம். ஆகவே இன்றைய உலக நிலையில் சிறப்பாக இன்னாட்டு மக்க
ளின் உணர்ச்சி நிலையில் இருந்து ஒரு அறிவாளியாயிருப்பவன் சிந்தித்துப் பார்ப்பானேயானால் பொதுவுடமைக் கொள்கை என்பதை இனி இந்தமாதிரி
27 பேரை தண்டித்தோ, அல்லது 2700000 இருபத்தி ஏழு லட்சம் பேரை “சமணர்களைக் கழுவேற்றியது” போல் நடுத்தெருவில் நிறுத்தி கழுவேற்றிக் கொன்றோ செய்வதன்மூலம் அடக்கிவிடலாம் என்று நினைப்பது கொழுந்துவிட்டெறியும் பெரும் நெருப்பை நெய்யைவிட்டு அணைத்து விடலாம் என்று எண்ணுவதுபோல்தான் முடியும்! கண்டிப்பாய் அப்படித்தான் முடியும்! கட்டாயம் அப்படியேதான் முடியும்!
ஏன்? எப்படி? என்கின்ற கேள்விகள் பிறக்கலாம். இன்றையத்தினம். பொதுவுடமைக் கொள்கை உணர்ச்சி என்பது பெரிதும் இந்தியாவில் ஏற்பட்ட தல்ல. ஐரோப்பிய நாடுகளில் நடைபெரும் காட்சிகளையும், அவற்றின் அனுபவங்களையும் கண்டு தோன்றிய உணர்ச்சியேயாகும். ஐரோப்பாவில்
சரிபகுதிக்கு மேற்பட்ட விஸ்தீரணமுள்ள தேசம் ஆகிய ரஷியா முழுவதும் பொதுஉடைமைக் கொள்கையே தாண்டவமாடி ஆட்சிபுரிகின்றது. அதன் ஜனத்தொகை இங்கிலாந்தைப்போல் நான்கு மடங்குகொண்டது. மற்றும் ஜர்மனி தேசத்திலும் பொது உடைமைக் கொள்கை உணர்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பிரான்சிலும், சைனாவிலும் பொது உடைமைக் ககஷிகள் தங்களது பிரசாரங்களை தாராளமாய் நடத்து
குடி அரசு - 1933 M) 58
கின்றன. ஜப்பானில் 1932-ம் வருஷத்தில் மட்டும் 7000 பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறைசென்றதும், இப்பொழுது 2000 பேர் சிறை யிடப்பட்டதும் ஜப்பானில் பொதுவுடமைக் கொள்கை உரம் பெற்றிருப்பதை நன்கு விளக்குகின்றது.
ஸ்பெயின் தேசத்திலோ இன்றோ, நாளையோ இதற்குள் ஒருசமயம் நடந்து இருக்குமோ என்று சொல்லும்படியாகப் பொது உடைமைக் கிளர்ச்சி
யும், புரட்சியும் தாண்டவமாடுகின்றன. இவைகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் காணப்படும் விஷயங்களே தவிர கற்பனை என்றோ, கட்டுக் கதை என்றோ சொல்லி ஏய்த்துவிட முடியாது.
இந்தியாவிலும் இன்றும் வாலிபர்கள் உள்ளத்தை அறியும் கருவி ஒன்று இருந்து பரிசோதித்துப் பார்ப்போமேயானால் பத்து லக்ஷக்கணக்கான வாலிபர்கள் உள்ளம் முழுவதையும் கவர்ந்து அவர்களது இரத்தத்தைக் கொதிக்கச் செய்து கொண்டிருக்கும் உணர்ச்சி பொது உடைமை கொள்கை
யைப் பற்றியதென்றே தான் கண்டுபிடிக்க முடியும். அல்லாமலும் கொள்ளை நோய்க்கும், தொத்து நோய்க்கும், பட்டினிக்கும், வேலையில்லாத் திண்டாட் டத்திற்கும், மூப்புக்கும், சாக்காட்டிற்கும், நெஞ்சடைப்பிற்கும், தற்செயலாய் ஏற்படும் ஆபத்துக்கும் பலியாகக் கொடுக்கப்படும்- கொடுத்துத் தீர வேண்டியதாயிருக்கும்-கொடுக்காமலே கோழிக்குஞ்சை கருடன் தூக்குவது
போல் நமக்குத் தெரியாமலே போகும் படியாயிருக்கும் இந்த அற்ப உயிரை, அதாவது ஒரு மனிதனுடைய சரீரத்தில் உள்ள ரோமம் முழுவதும் எண்ணிப் பார்த்து அதில் ஒரு ரோமம் குறைந்தால் அந்த மொத்த எண்ணிக்கை எவ்வளவு விகிதம் குறைவுபடுமோ அதற்குச் சமானமான அதாவது இந்தியா
வின் 35 கோடி ஜனத்தொகையில் ஒரு மனிதன் குறைந்துவிட்டால் 35 கோடி
யில் எத்தனை விகிதாச்சாரம் குறையுமோ அதுபோன்ற நிலையில் உள்ள உயிர்களை இப்பேர்ப்பட்ட அதாவது 100க்கு 99 மக்கள் ஏழைகளாக, கூலி களாக, இழிவான வாழ்க்கை நடத்துபவர்களாக இருந்துகொண்டு பார்ப்பனர். களாலும், பணக்காரர்களாலும், அரசாங்கங்களினாலும் வதைக்கப்படும் பூச்சி புழுப்போன்ற மக்களின் விடுதலைக்கும், அவர்களது மான வாழ்க் கைக்கும், அவர்களது உழைப்பின் பயனை அவர்களே அனுபவித்துக் கொண்டிருப் பதற்குமான காரியத்திற்கு உயிர்விட நேர்ந்தால் எந்தப் பேதை பின் வாங்கு வான், மனவருத்தமடைவான் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
ஆகவே மீரத்வழக்கு சரியாய் விசாரணை செய்திருந்தாலும் சரி, அக்கிரமமாய் விசாரித்து இருந்தாலும் சரி, ஒரு காசு செலவில்லாமல் விசாரித்து இருந்தாலும் சரி, ஒருகோடி ரூபாய் செலவுசெய்து விசாரணை: நடத்தி இருந்தாலும் சரி,மற்றும் அதன் தீர்ப்பு நியாயத் தீர்ப்பாய் இருந்தாலும் சரி, அநியாயமான தீர்ப்பாய் இருந்தாலும் சரி அவற்றில் பிரவேசித்து நேரத்தையும் யோசனையையும் பாழாக்க நாம் சிறிதும் கவலைகொள்ளாமல்
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மீரத்து முடிவை நாம் மேளதாளத்தோடு வரவேற்பதுடன், தண்டனை அடைந்த தோழர்களை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகின்றோம். முக் காலும் பாராட்டுகின்றோம். இனியும் நமக்கும் நம்போன்ற வாலிபர்களுக்கும் அதாவது நம் போன்ற மான உணர்ச்சி கொண்ட வாலிபர்களுக்கும் இந்தப்
பெரும் பேரு கிடைக்கப் பெறும் நிலையை அடைய முடியவில்லையே என்று நமக்காகவும் எமதருமைத் தோழர்களான வாலிபர்களுக்காகவும் வருந்தி மற்றுமொரு முறை வரவேற்கின்றோம்.
நிற்க சர்க்காரால் இப்பிரசாரங்களை அடக்குவதற்கு தங்களுக்கு ஒரு ஆதாரம்வேண்டுமே என்கின்ற கவலைகொண்டு எதிரிகள் என்பவர்கள் பலாத்காரம் செய்ய பிரசாரம் செய்தார்கள் என்று ஒரு சாக்கு கற்பிக்கப் பட்டிருக்கிறது. நம்மைப் பொருத்தவரை பலாத்காரம் என்பதை எப்போதும் வெறுத்தே வந்திருக்கின்றோம். பலாத்காரம் இல்லாமலே நமது லட்சியங்கள் நிறைவேற வேண்டும் என்றே ஆசைப்பட்டு வந்திருக்கின்றோம். ஆனால்
எந்த சமயத்திலும் பலாத்காரம் கூடவே கூடாதென்றும், நமக்கு விரோதமாக ஏற்படும் பலாத்காரத்தையெல்லாம் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் சொல்ல நம்மால் முடியவில்லை. பாம்பை அடிக்காதீர்கள் என்று சொல்லலாமே தவிர பாம்பு கடிக்கவரும்போது தடுக்காமலோ, தட்டாமலோ இருந்து முத்தமிட்டு கடிபடுங்கள் என்று சொல்லக்கூடிய இயற்கைக்கு மீறியதான போலி அஹிம்சையை வேஷத்துக்காக உபதேசிக்க இப்போது நாம் தயாராய் இல்லை.
தவிரவும் 100க்கு 90 மக்களாய் உள்ளவர்களை வஞ்சித்து, வதைத்து, கொடுமைப்படுத்தி, அழுத்தி வைத்து கொள்ளை கொள்ளும் தன்மையை வெளியிடுவது பலாத்காரமானால் இவ்வித பலாத்காரத்தை மனிதத்தன்மை யுள்ள ஒவ்வொரு ஆணும் பெண்ணும் வரவேற்க வேண்டும் என்றும், இவ்வித பலாத்காரத்தில் தவராது இறங்கி வேலை செய்யவேண்டும் என்றும் தான் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றோம். யோக்கியமான சர்க்காருக்கு பலாத்காரம் உண்டாகாமல் இருப்பதைத் தடுக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி கடுகளவாவது இருக்குமானால் இவ்விதப்பிரசாரம் தாராளமாய் நடைபெறும் விஷயத்தில் அதற்கு இடையூறாய் ஏற்படும் எவ்வித பலாத்காரச் செய்கைகளையும் தடுத்துப் பிரசார பாதைகளை செப்பனிட்டு ஒழுங்காக்கி கொடுக்க வேண்டியது பொறுப்பும் கடமையுமாகும். ஆதலால் இவ்வித போலி பலாத்காரப் பூச்சாண்டிக்கு பொதுவுடமைக் கொள்கையில் ஆர்வ முள்ள தோழர்கள் பயப்படமாட்டார்கள் என்றும் உண்மையிலேயே எந்த வழியிலும் பலாத்காரம் ஏற்படுவதை வெறுப்பார்கள் என்றுமே நம்பு
கின்றோம்.
அடக்கு முறை பயன்படுமா? வெற்றிபெறுமா என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு சிறிதும் கவலைகொள்ளவும் இல்லை. அடக்கு முறையில் இந்த
குடி அரசு - 1933 M) 60
இயக்கம் தோல்வி அடைந்து போகுமோ என்று பயப்படவும் இல்லை. இந்த அபிப்பிராயத்தை நாம் பிரத்தியட்ச ஒரு அனுபவத்தைக்கொண்டே சொல்லுகின்றோமே அல்லாமல் நமது சொந்த தைரியத்தையே ஆதாரமாய்க் கொண்டு சொல்லுவதாக யாரும் நினைக்கக் கூடாதென்றே கருதுகின்றோம். ஏனெனில் பொதுவுடமைக் கொள்கை பிரசாரம் செய்யப்படுவதை தடுக்கவோ அடக்கவோ அடக்கு முறைகளைக் கையாளும் விஷயத்தில் ரஷிய சார்.
சக்ரவர்த்தி அரசாங்கத்தை விட இனி உலகில் வேறு யாராலாவது அதிகமான அடக்கு முறையைக் கையாண்டு விட முடியும் என்பதாக நாம் கருதி விட முடியாது. அன்றியும் சாரை விட கொடுங்கோன்மை அடக்கு முறைக்கு
முதற்பரிசு பெற இந்த உலகத்தில் வேறு எந்த அரசாங்கத்தாலும் இன்று முடியவே முடியாது என்றும் சொல்லுவோம். அந்த சார் அரசாங்கத்தால் செய்யப்பட்ட அடக்கு முறைக் கொடுமைகளில் பலவற்றின் சின்னங்களை நேரிலேயே பார்த்திருக்கிறோம். பலரின் சரீரத்தில் உயிருடன் தோல் உரிக்கப் பட்டு, அத்தோல்களை நகங்களுடன் காட்சி சாலைகளில் வைக்கப்பட்டிருக் கின்றதையும் கண்கள் குத்தப்பட்ட சின்னங்களையும் பார்க்க நேரிட்டது.
எனவே இவைகளைவிட இனி எப்படி கொடுமைப்படுத்தி மக்களை அடக்கிவிடமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்றியும் அப்படிப் பட்ட அடக்கு முறை நடத்திய அரசாட்சிகள் அடைந்த பலன்களையும் காதால் கேட்டுவிட்டோம், கண்ணால் பார்த்தும் விட்டோம். அதனால் கொள்கை ஒழிந்துவிடவும் இல்லை, பிரசாரகர்கள் மறைந்துவிடவும் இல்லை. அதற்கு பதிலாக முழு வேகத்துடன் வெற்றிபெற்று ஜெகஜ்ஜோதியாய் உலகக் கண்கள் கூசும்படி விளங்குகின்றதையே பார்க்கின்றோம். அதனால் தான் வரவேற்கின்றோம் என்று மறுபடியும் சொல்லுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.011933
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஏன் வரி குறைக்க கவண்டும்?
“விளை பொருள்களுக்கு விலை குறைந்து போனதால் வரிகளைக் குறைக்க வேண்டு” மென்று மிராசுதாரர்கள் கூக்குரல் இடுகின்றார்கள். விலை குறைந்த காரணத்தைக் கொண்டு வரியைக் குறைக்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டதா என்பதை வாசகர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். வரிவசூல் செய்வதானது விளை பொருள்களின் விலையை உத்தேசித்தா அல்லது “அரசாங்கம் நடைபெற வேண்டும்” என்கின்ற காரணத்துக்காகவா என்பதை முதலில் யோசித்துப் பார்க்க வேண்டும்.
அந்தப்படி யோசித்துப் பார்த்தால் அரசாங்கம் நடைபெறுவதற்காகத் தான் வரி வசூலிக்கப்படுகின்றது என்பது யாவருக்கும் விளங்கும். ஆகவே இது வரையில் பூமி மீதோ, வியாபாரத்தின் மீதோ மற்றும் பலவற்றின் மீதோ போடப்பட்ட வரி யெல்லாம் அரசாங்கம் நடைபெறுவதற்காகவே அரசாங்க செலவை உத்தேசித்து அதற்கு ஏற்றபடி வரி வசூல் செய்யப் பட்டு வருகின்றது.
ஆதலால் இப்போது வரியைக் குறைக்க வேண்டுமானால் அரசாங்கம் நடைபெறுவதற்கு என்று ஏற்பாடு செய்திருக்கும் செலவைக் குறைத்தால் ஒழிய வரியைக் குறைக்கமுடியாது. அப்படி இருந்தும் பல துரைகளில் அரசாங்க வருமானம் குறைந்து போய் விட்ட தென்று கருதி அரசாங்கம் நடைபெற வேண்டிய செலவை குறைப்பது என்கின்ற முறையில் சில துறை களில் செலவைக் குறைத்திருக்கிறது என்றாலும், அக்குறைவுகள் பெரிதும்
கல்வி (மக்களுக்கு அவசியம் செய்து தீர வேண்டிய இலாகாவிலேயே அதிகமாய் குறைக்கப்பட்டு விட்டது. மேலும் இரண்டொரு இலாக்காவில் வரியும் அதிகப்படுத்தியுமாய் விட்டது. அதாவது வருமானவரி ஸ்டாம்பு
வரி, கோர்ட் செலவு விகிதவரி, தபால் கார்டு, கவர் முதலிய வரி மற்றும் பல
வழிகளில் ஏழைகளையே பாதிக்கும் படியான துறைகளில் வரியை உயர்த்தி கொடுமை செய்தாய் விட்டது. ஆனால் வரிப் பணங்களில் 100க்கு 75 பாகத்திற்கு மேல் மாதம் 1க்கு 100, 200, 500, 1000, 2000, 4000, 5000, 10000, 20000 ரூபாய்கள் வீதம் சம்பளமாக கொள்ளை அடிக்கும்
குடி அரசு - 1933 M) 62
உத்தியோகஸ்தர்கள் சம்பளத்தில் கைவைக்க அதைக் குறைக்க அரசாங்கமும் நடுங்குகின்றது. தலைவர்களும், ஜனப்பிரதிநிதிகளும் நடுங்குகின்றார்கள். அதிகவரி! அதிகவரி!! பொருக்க முடியாத - தாங்க முடியாத வரி!!! என்று கூப்பாடு போடுகின்ற மிராசுதாரர்களும்கூட சம்பளத்தைப் பற்றி பேச நடுங்குகின்றார்கள். அது ஒன்றும் குறைந்தாகவும் தெரியவில்லை. இப்படி இருக்கையில் எதற்காக வரியை குறைப்பது என்பது தான் நமக்கு விளங்க வில்லை. இன்று நடக்கின்ற அரசாங்கம் உண்மையிலேயே பணக்காரர் களுக்கு - மிராசுதாரர்களுக்காகவே தான் நடைபெறுகின்றது. ஆனால் அரசாங்கம் நடைபெற வசூலிக்கப்படும் வரியில் பெரும்பகுதி ஏழை களிடமேதான் வரி வசூலிக்கப்படுகின்றது. ஸ்டாம்பு, கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, உப்பு, வெளிநாடுகளில் இருந்துவரும் சாமான்கள் மீதும், சில்லரை: தொழிலாளிகள் மீதும் வியாபாரத்தின் மீதும் மற்றும் பலவழிகளிலும் வசூலிக்கப்படும் வரியெல்லாம் 100-க்கு 99 பேர்களாய் இருக்கும் ஏழை மக்களையே பாதிக்கும்படியாய் இருக்கின்றது. மிராசுதார்கள் அதிகமான சொத்துக்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் வரியைக் குறைக்க ஏன் இவ்வளவு அவசரமும், ஆத்திரமும் படுகின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இவர்களுக்கு எவ்வளவு வரி போட்டாலும் வரி கொடுத்தது போக இவர்களுக்கு சாப்பாட்டிற்கு இடம் இருந்தே தீரும். ஆனால் இவர்களது குடிக்கும், கூத்திக்கும், தர்பாருக்கும், மோட்டாருக்கும், கல்யாண கருமாதிகளில் பார்ப்பன பாகவதர்களுக்கு அழுவதற்கும் வேண்டு மானால் பணம் காசு குறையலாம். இதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இந்திய தொழிலை காப்பாற்ற என்ற சாக்கின்பேரில் அன்னிய
நாட்டு சாமான்கள் மீது போடப்படும் வரி கொடுமை! கொடுமை! முக்காலும் கொடுமை!!! இந்திய கைத்தொழிலை காப்பாற்றுவதாக வைத்துக் கொண்டா
லும் அதன் கொள்ளையெல்லாம் முதலாளிமார்கள்தான் 100-க்கு 10, 20, 30,
50 வீதம் லாபம் அடைகின்றார்களே தவிர ஏழைக் கூலிக்கும், தொழி
லாளிக்கும் என்ன லாபம்?
இன்னும் இதுபோன்ற பித்தலாட்ட வரி எவ்வளவு வசூலிக்கப் படுகின்றது? ஆகவே வரி குறைப்பதைப்பற்றி யோசிப்பதானால் முதலில் பெரிய சம்பளங்களைக் குறைக்கவேண்டும். பிறகு ஏழைகளை கொடுமைப் படுத்தும் வரியைக் குறைக்கவேண்டும். கடைசியாக மிராசுதாரர்களின் விஷயத்தை கவனிக்க வேண்டும். இது தான் யோக்கியமான - செங்கோல் அரசாங்கத்தின் முறை அப்படிக் கில்லையானால் கொடுங்கோல் அரசாங்கத்
தின் முறை என்று தான் சொல்லுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.01.1933
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
காண்சாகிப் கசக்தாவத் அவர்கட்குப் பாராட்டு
தோழர்களே! இன்றுதோழர் சேக்தாவுத் அவர்கட்கு கான்சாயபு பட்டம் கிடைத்ததைப் பாராட்டுவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன்.
இம்மாதிரியான பட்டங்களை சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பு கருதியதைப் போல் இதுசமயம் மக்கள் அவ்வளவு மேன்மையாகக் கருதுவதில்லை.
உதாரணமாக இரண்டொரு வருஷங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு கிடைத்த ஒரு பட்டத்திற்கு பெருத்த பாராட்டுதல்கள் நடக்கும்போது நான் அவரைப் பார்த்து “பட்ட சம்பந்தமான பாராட்டுவிழா தொந்திரவு உங்களுக்கு இனி கொஞ்சநாளைக்கு இருக்கும். உங்கள் மனமும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கும்” என்று சொன்னேன். “பட்டங்களால் பிரமாதமான பலன் இல்லாவிட்டாலும் இந்த சந்தோஷத்திற்காவது இடமிருக்கிறதே'” என்று சொன்னேன். அதற்கு அவர் அப்படிக்கூட இதில் ஒன்றும் பெருமைப்பட இடமில்லை என்றார். உடனே நான் ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இதோ இவ்வருஷம் பட்டம் வழங்கி இருக்கும் லிஸ்ட்டைப் பாருங்கள். எனக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது. இன்னொரு வருக்கும் பட்டம் கிடைத்திருக்கிறது. அவரைப்பற்றியோ, தங்களுக்கும், உலகத்திற்கும் நன்றாய்த்தெரியும், சர்க்காருக்கும் நன்றாய்தெரிந்திருக்கலாம். ஆகவே நான் பட்டம் கிடைத்ததே என்று பெருமைப்படவா? அல்லது என்னையும், அவரையும் ஒரே லிஸ்டில் சேர்த்திருக்கிறார்களே என்று அவமானப்படவா என்று சொன்னார். அந்தச் சமயம் எனக்கு மிகவும் பரிதாப மாகவே இருந்தது. இதற்காகப் பாராட்டுவதா? அனுதாபப்படுவதா என்பது எனக்கே புரியவில்லை. இம்மாதிரியாகவேதான் பெரும்பான்மையான பட்டங்கள் பயன்பெறுகின்றன. ஆகவே பட்டங்களுக்கு யோக்கியதை யையும், செல்வாக்கையும் உண்டாக்க வேண்டும் என்கின்ற உத்தேசத்தில் ஒன்று இரண்டு தகுந்த நபர்களுக்கு அளிக்கப்படுகிறது என்று தான் நான்
கருது கிறேன். உண்மையிலேயே கான்சாயபு பட்டமானது தோழர் ஷேத்
தாவுத் துக்கு வந்து சேர்ந்ததால் இவருக்கு ஏதாவது அதிக பெருமை ஏற்பட்டு
குடி அரசு - 1933 M) 64
விட்டது என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை. ஆனால் அந்தப் பட்டம் இவரை வந்து அடைந்து (அடைக்கலம் புகுந்து பெருமை அடைந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
இனி வருங்காலத்தில் பட்டங்கள் லட்சியமற்றதாக ஆகிவிடும்.
இப்பொழுதே பார்க்கலாம். பட்டம் பெற்றவர்களைவிட ஜெயிலுக்கு போனவர்கள் ஜனங்களுக்காக பாடுபடுகின்றவர்கள் என்று கருதியே அதிக மாக மதிக்கச் செய்கின்றார்கள் என்பதாகும்.
உண்மையில் பார்த்தாலும் ஏழை ஜனங்களுக்காகப் பாடுபடுகின்ற வர்கள் தங்கள் பட்டத்துக்கு உரியவர்கள் என்று சர்க்கார் பெரிதும் கருது வதில்லை என்பதை யாரும் அறியலாம்.
இதற்குக் காரணம் எப்படி இருந்தாலும் ஏழை ஜனங்களுக்கும், சர்க்காருக்கும் நல்ல பிள்ளையாய் இருக்க சுலபத்தில் இனி முடியாது. ஜனங் களுக்கு அறிவும், அனுபவமும் ஏற ஏற அனேக விஷயங்கள் தலைகீழ் புரட்சியை அடைவது இயல்பேயாகும். ஆகவே அதற்குத் தகுந்தபடி திருத்துப்பாடடைய வேண்டியது அறிவுடமையாகும். இன்று இந்த ஊரில் பட்டம் உடையவர் தோழர் ஷேக்தாவுத் அவர்களேயாகும்.
இதற்குமுன் யாராவது இருந்தார்களா என்றால் அதுவும் இவருடைய தகப்பனாரேயாகும். இவரது தகப்பனார் தோழர் கே. அலாவுதீன் சாயபு அவர்கள் கான்பஹதூர் பட்டம் வழங்கப்பட்டவர். ஆனால் அது இவருக்குக் கூட- இந்த ஊரில் அனேகருக்கு கூட தெரியாது. ஏனெனில் அந்தக் காலத்திலேயே அதை அவர் அவ்வளவு பிரமாதப்படுத்திக் கொள்ளவில்லை. தோழர் கே. அலாவுதீன் சாயபு அவர்கள் இந்த ஊர் பொது நடவடிக்கை விஷயத்தில் அக்கால மாதிரிக்கேற்றபடி எல்லாப் பொருப்புகளையும் வகித்து வந்தவர். இவரைப் போலவே மிகவும் அடக்கமானவர், கூட்டங்களில் பேசவேமாட்டார். அதுபோலவே இவரும் யெல்லாப் பொருப்புகளையும் வகித்து இருக்கின்றார். ஆனால் பேசுவதில்லை. பேசவேண்டி ஏற்பட்டு விடுமோ என்று அவர் அனேக கூட்டங்களுக்கு போவதில்லை. போனாலும் பின்னால் ஒளிந்துகொள்வார். ஆனால் இன்று அவர் பேசியதில் எவ்வளவு கருத்துக்கள் இருந்தது என்பதை பாருங்கள். என் விஷயத்தைப்பற்றி பேசிய பல விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் அறிவும், கருத்தும் நிறைந்தவைகளாகும். இதுவரை வேறு யாருடைய நிர்வாகத்திலும், ஈரோடு. முனிசிபாலிட்டியானது இவ்வளவு ஒற்றுமையாய் கலகமில்லாமல் நிர்வாகத்திற்கு எவ்வித குந்தகமும் இல்லாமல் நடைபெற்று வந்ததாகக் கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும். ஊர் ஒற்றுமைக்கும், ஊர் ஜனங்களுக்கு முனிசிபாலிட்டியிடம் இருக்கும் மதிப்புக்கும் ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்.
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இந்த முனிசிபாலிட்டியில் இந்த ஊருக்கு மின்சார விளக்குத் திட்டம்
ஒன்று ஏற்பாடு செய்து அதைச் சொந்தத்தில் வைத்து நடத்துவதற்குப் பணங் களும் ஏற்பாடுசெய்து காரியங்கள் துவக்கப்படும்போது சர்க்காரார் தங்க
ளுக்கு உள்ள அதிகாரத்தை தப்பு வழியில் செலுத்தி அதற்கு உரிய அனு மதியை ஒரு வெள்ளைக்கார முதலாளி கம்பெனிக்கு அளித்துவிட்டார்கள்.
நமது மந்திரிகள் ஈரோடு முனிசிபாலிட்டி நன்மையைவிடத் தங்கள் உத்தியோகம் நிலைக்கவேண்டிய நன்மையையே அதிகமாய் கணித்து ஆட்டுக் குட்டிக்கும் புலிக்குமுள்ள கதைபோல் “நீ செய்திருக்காவிட்டாலும் உன் தகப்பன் செய்திருப்பான்” என்று சொல்லி அதாவது உமக்கு முன் இருந்தவர்கள் நடத்திய நிருவாகத்தால் இந்த முனிசிபாலிட்டி லைசென்ஸ்: பெறத் தகுதி அற்றது என்று சொல்லி விட்டார்கள். இதைப்பற்றி நான் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் மனிதர்களின் சராசரி யோக்கியதைக்கு இது குறைந்ததல்ல. ஆதலால் அப்போதைய மந்திரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதைப் பிரதானமாய் கருதியதை குற்றமாகக் கருதவில்லை. ஆனால் அதை ஈரோடு ஜனங்கள் தங்களை அலட்சியமாய் கருதியதாய் கருதி இப்போது முன் குறிப்பிட்ட மின்சார திட்டம் வெள்ளைக்கார கம்பெனியாரால் நிறைவேற்றி அமுலுக்கு கொண்டுவந்து ஒரு வருஷமாகியும் அதை நிவர்த்தில்லாத இரண்டொருவர் தவிர மற்றும் யாரும் அதை உபயோகப்
படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இது பாராட்டக் கூடியதேயாகும். இனியும் இதுபோலவே ஒற்றுமையாயும் பொருப்பாயும் பொது ஜனங்க ளுடைய நன்மைக்கும், முற்போக்குக்குமான காரியங்கள் நடைபெறவேண்டு மென்றே விரும்புகிறேன்.
குறிப்பு:16.01933இல் ஈரோடு முனிசிபல் சேர்மன் கே.ஏ.ஷேக்தாவுது சாயபு அவர்களுக்கு “கான் சாயபு” பட்டம் கிடைத்ததற்கு முனிசிபல் அலுவலக அதிகாரி. களால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவிற்கு தலைமை யேற்று ஆற்றிய உரை,
குடி அரசு - சொற்பொழிவு - 22.011933
குடி அரசு - 1933 M) 66
விபசாரத் தடை
மதுரையில் விபசாரத் தடை மசோதா அமுலுக்கு வந்திருப்பதாக தெரிய வருகின்றது. சென்னையிலும் அது முன்னமேயே அமுலுக்கு
வந்துவிட்டது. மற்ற ஜில்லாக்களுக்கும் அது உடனே அமுலுக்கு வரவேண்டி யதாகும். குறைந்த அளவு 30 ஆயிரம் ஜனங்கள் உள்ள ஈரோட்டில் 300 பேர்களுக்கு குறையாத விபசாரிகள் என்போர்கள் அதாவது ஒரு அணா இரண்டு அணா ரேட்டு முதல் விபசாரித்தனம் செய்து ஜீவிக்க வேண்டிய பெண்கள் இருந்து வருகின்றார்கள் என்றால் மற்ற பெரிய பட்டணங்களைப் பற்றி கேள்க்கவும் வேண்டுமா?
விபசாரத்தடை மசோதா வருவது என்பது சற்று தாமதானாலும் ஆங்காங்குள்ள போலீஸ் அதிகாரிகளாவது இவ்விஷயங்களில் சற்று கவலை செலுத்தி அவர்கள் (விபசாரிகள்! தெருவில் நின்று மக்களை அழைப்ப தையும், தெருக்களில் சில்லரைக் கலகங்களை ஏற்படுவதையும், இவர்கள் பயனாய் ஆபாச பேச்சுவார்த்தைகள் நடப்பதையும் மற்றும் சில வாலிபர்கள் காலித்தனமாய் நடக்க ஏற்படுவதையும் ஒருவாறு தடுக்கலாம் என்றே
கருதுகின்றோம்.
இப்படிப்பட்ட காரியங்களில் சின்ன சிப்பந்திகள் பிரவேசிக்க இடம் கொடுக்காமல் சற்று மேல் அதிகாரிகளாய் இருப்பவர்களே பிரவேசித்து ஏதாவது செய்ய முயற்சிப்பார்களானால் உடனே காரியம் கை கூடும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 29.014933
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஈ.வவ.ராவக்க காவை முணிசிபல்
சங்கத்தார் வாசித்த
ஊயபசாரப் பத்திரமும் பதினு
அன்பு கொண்ட நகரசபை தலைவரவர்களே! அங்கத்தினர்களே!!
மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!!
கோவை நகரசபையின் சார்பாக எனக்கு வாசித்தளித்த உபசாரப் பத்திரத்திற்கு நான் மிகுதியும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டவனேயாவேன். ஆனால் அவ்வுபசாரப் பத்திரத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றேன் என்று சொல்லுவேனேயானால் நான் உண்மையற்ற புகழை ஏற்றுக் கொண்டவன் என்னும் குற்றத்திற்காளானவணாவேன். ஏனெனில் தீண்டாமை
விலக்கிலும், பொது நல சேவையிலும், அரசியலிலும், ஸ்தல ஸ்தாபனங் களிலும் நான் ஏதோ பெரிய வேலைகள் செய்திருப்பதாக உங்கள் உபசாரப் பத்திரத்தில் புகழ்ந்து இருக்கிறீர்கள். உண்மையில் பார்ப்போமானால் அத் துரையில் பொது மக்களுக்கு என்ன காரியம் செய்திருக்கிறேன் என்று இன்று உங்கள் முன்னிலையில் நான் சொல்லக் கூடும்?'
தோழர்களே! இந்தியாவில் பார்ப்பனர்களும் படித்த கூட்டத்தாரும் செல்வவான்களுமாகிய ஊரார் சரீர உழைப்பில் வாழ்வதற்கென்றே உயிர். வாழும் கூட்டங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாதாருக்கு பாடு பட்டிருக்கின்றேன், ஏழைகளுக்கு பாடுபட்டிருக்கின்றேன், தொழிலாளிக்கு பாடுபட்டிருக்கின்றேன் என்று ஒருவர் ஒப்புக் கொள்ளுவதானால் அப்படி பட்ட அவர், நான் மாத்திரமல்ல மற்றும் எப்படிப்பட்ட தேச பக்தர் ஆனாலும், தேசீயவாதி ஆனாலும், தேசப் பாதுகாப்புக்காக தேச மக்களுக்காகவே உயிர் வாழ்கின்றேன் மூச்சு விடுகின்றேன் என்று சொல்லுபவர்களானாலும் அதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ, அறிவுடைமையோ பலன் தரும் தன்மையோ இருக்க முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1933 M) 68
பொதுநலசேவை என்பது புரட்டு
நான் வெகுநாளைக்கு முன்பதாகவே (Social service 15 a hum-
bug) சோஷியல் சர்விஸ் இஸ் ஏ ஹம்பக். அதாவது சமூக சேவை என்று சொல்வது முழுப் புரட்டு என்றும் அதன் கருத்து பணக்காரர்களையும் முதலாளிகளையும் சோம்பேரிகளையும் காப்பாற்றக் கோட்டை கட்டுதல் என்றும் சொல்லி இருக்கிறேன். இந்த அபிப்பிராயம் எனது மேல் நாட்டு
சுற்றுப் பிரயாணத்தில் முன்னிலும் அதிகமாய் பலப்பட்டது என்று தான் சொல்லுவேன். நான் ஸ்பெயினில் ஒரு பெண்ணினிடம் பேசிக் கொண்டி
ருக்கும் போது அந்தம்மாள் பேச்சு சந்தர்ப்பத்தில் என் வேலை என்ன என்று கேட்ட காலத்தில் நான் சாதாரணமுறையில் ஏதோ என்னாலான பொது ஜன சேவை செய்கிறேன் என்று சொன்னேன். அதற்கு உடனே அந்தம்மாள். “பொது ஜன சேவை என்பது முழுதும் பித்தலாட்டம் என்றே நாங்கள். கருதுகிறோம்” என்று சொன்னார்கள். பிறகு நமது இயக்க விஷயத்தை சொன்ன பிறகு ஒரு அளவில் அந்தம்மாள் சரி என்று சொன்னார்கள். நமது நாட்டு பொதுஜன சேவை என்பதை என்ன என்று சற்றுயோசித்துப் பாருங்கள்.
தீண்டாமை விலக்கு
தீண்டாமை விலக்கு என்றால் ஒருவனைதொட்டு விடுவதாலும் கோயிலுக்குள் புகவிட்டுவிடுவதாலும் தீண்டாமை விலகிப் போய் விட்டது என்று கற்பித்து, அந்தப்படியே இந்நாட்டு மக்களை நம்பச் செய்து, அவ்வளவு செய்தாலே போது மென்று சொல்லி அதற்கே பெரிய புரட்சி செய்ய வேண்டி யதாய் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறோம். அப்படிச் சொல்லுகின்றவர் களையேமகான்கள்-மகாத்மாக்கள்- பொது ஜன சேவைக்காரர்-தீண்டாமை விலக்கு வீரர்-வைக்கம் வீரர்-என்றெல்லாம் ஆக்கி விட்டோம்.
“கங்காதரா மாண்டாயோ என்ற ஒரு வண்ணாத்தி அழுகைக்குரல் அரசன் வீடுவரை அழச்செய்து விட்டது” என்ற கதை போல் இந்த காரியமே இப்போது தேசீய சேவையாய் - பொது ஜன சேவையாய் - சுயராஜிய சேவையாய் - அன்னிய ஆட்சியை விரட்டி அடிக்கும் சேவையாய் ஆக்கப்
பட்டு எங்கு பார்த்தாலும் இதே தப்பட்டை அடிக்கப் படுகின்றது. அது மாத்திர மல்லாமல் மக்கள் எல்லோராலும் அப்படியே கருதப்படுகின்றது. இதனால்
எல்லாம் உண்மை மை எப்படி விலகும்? தீண்டாமை விலக்கு என்றால் தீண்டாதவனைத் தொடுவதும் அவனை “மோட்சத்திற்கு அனுப்ப” என்று கோவிலுக்குள் கொண்டு விடுவதும் தானா? என்று கேட்கின்றேன். ஒரு மனிதனுக்கு சாப்பாடும் உடையும், இடமும், கல்வியும் வேண்டுமா? மனிதனைத் தொடுவதும் “செத்த பிறகு அனுபவிப்பதுமான மோகஷமும்” வேண்டுமா? என்று கேட்கின்றேன்.
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
தொடவும் கோவிலுக்குள் போகவும் விடப்பட்டு விட்டால் அவனுக்கு உண்டியும், உடையும், இடமும், கல்வியும் கிடைத்துவிடும் என்று சிலர். சொல்ல வருவார்கள். அப்படியானால் இன்று தொடவும், கோவிலுக்குள் போகவும் உரிமையுடையவர்களும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் அவற்றை அனுபவித்து வருபவர்களுமான மனிதர்கள் எல்லாம் இன்று சோறும், துணியும், குடிசையும், படிப்பும் உடையவர்களாய் இருக்கிறார்களா? என்பதை சிந்தித்துப்பாருங்கள். சோற்றுக்கும், துணிக்கும் வழியென்ன? என்று கேள்க்கும்போது கல்லில்போய் முட்டிக் கொள்ளக் கூட்டிவிட்டதால், அது பொதுநல சேவை ஆகுமா? ஜீவகாருண்யமாகுமா? சமதர்மமாகுமா? என்று யோசித்துப் பாருங்கள். அல்லது ஏழைகள் படும் கஷ்டத்துக்கு வழி என்ன என்று கேட்கும்போது ஒரு நாளைக்கு ஏதோ இரண்டு மூட்டை அரிசியை வேகவைத்துப் போட்டு தர்மத்துக்கு வந்து சாப்பிடுங்கள் என்று தண்டோறா அடித்துவிட்டால் ஏழைகளின் பசியாற்றிய சேவை ஆகிவிடுமா? என்று யோசித்துப்பாருங்கள். எனவே இப்படிப்பட்ட காரியங்களை நாணைய மானதும், பயன் தரத்தக்கதும், அறிவுடமையானதும் என்று எப்படிச் சொல்ல
முடியும்?
அரசியல்
நமது சுயராஜ்ஜியப் புரட்டும், ஸ்தல சுயாட்சிப்புரட்டும் இப்படித்தானே இருக்கின்றது. சுயராஜ்ஜியமென்றால் யாருக்கு என்று யோசித்துப்பாருங்கள். நாளைவரும் சுயராஜ்ஜியத்தில் 100-க்கு 90 மக்களாய் உள்ள ஏழைகளுக்கு என்ன புதியவசதி ஏற்படப்போகின்றது? ஏழைகள், தொழிலாளிகள், கடன்
காரர்கள், ஏழை விவசாயக்கூலிகளான படிப்பில்லாதவர்கள் முதலாகிய மக்களுக்கு முறையே பணக்காரன், முதலாளி, லேவாதேவி, பாங்கிக்காரன், நிலச்சுவான், ஜமீன்தாரன், படித்த பார்ப்பனன் ஆகியவர்கள்தானே போய் பிரதிநிதிகளாக உட்காரப்போகின்றார்கள். தீண்டாதார்கள் என்பவர்கள் “இந்து மதத்தை விட்டுவிடுவோம், எங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும்” என்று கேட்டதின் பயணாய் சிறிது பிரதிநிதித்துவமாவது கிடைத்
தது. கோவிலுக்குள் வாருங்கள் என்று சிலர் கூப்பிடுகின்றார்கள். மற்றபடி மேல்கண்ட வகுப்பாருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதை சற்று யோசித்துப்பாருங்கள். அவர்கள் குறைகளை நீக்கிக்கொள்ள அரசியலில் எங்காவது எந்த சட்ட சபைகளிலாவது இடமளிக்கப்பட்டிருக்கின்றதா? இதுபோல்தானே இன்று ஸ்தல சுயாட்சியும் இருந்து வருகின்றது.
முனிசிபல் கெளன்சிலிலோ, தாலூகா ஜில்லா போர்டுகளிலோ, பட்டக் காரர்களும், ஜமீன்தாரர்களும், வெள்ளியங்கிரிக் கவுண்டர்களும், ரத்தின சபாபதி முதலியார்களும், ஷண்முகஞ் செட்டியார்களும் மற்றும் இது போன்றவர்களும்தான் எங்கும் போட்டிபோட்டு அவரவர்கள் “பெரியவீட்டு” சொத்துகளைப்போல் பங்குபோட்டுக்கொள்ளுவதுபோல் மோதல்கள்
குடி அரசு - 1933 M) 70
நடக்கின்னனவேயொழிய உண்மையான ஏழை, கூலி, தொழிலாளி, பயிர் செய்பவன் போட்டி போடவோ வெற்றிபெறவோ முடிக்கின்றதா என்று பாருங்கள். சொத்தின் பேரிலும் படிப்பின் பேரிலும்தான் ஓட்டர் லிஸ்ட்டும், அபேட்சகர் லிஸ்ட்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறதே தவிர சொத்தும், படிப்பும் இல்லாத மக்கள் கதி என்ன? என்பதை யோசித்துப்பாருங்கள். தோழர்களே இந்த மாதிரியான பொது நல சேவை, சுயராஜ்ஜிய சேவை, தேசீய சேவை, தீண்டாமை விலக்கு சேவை ஆகியவைகளால் என்ன காரியங்கள் ஆகப் போகின்றது என்றுகருதி இருக்கிறீர்கள். நான்யாருடைய மனதையும் நோகும் படி செய்வதற்காகப் பேசவில்லை. என்னுடைய பொது நல சேவையையும், தீண்டாமை விலக்கு வேலையையும், சிலாகித்து சிலாகித்து திருப்பித் திருப்பி. உபசாரப்பத்திரத்தில் எழுதிப் புகழ்ந்திருக்கிறீர்கள். நான் எப்படி அவைகளை ஒப்புக்கொள்ள முடியும். அதைக்கேட்டு நான் வெட்கப்படத்தானே வேண்டி
யிருக்கிறது. உண்மையான பொதுநல சேவையோ தீண்டாமை விலக்கு வேலை நான் என்ன செய்துவிட்டேன்? இப்போது ஏதோ செய்யவேண்டும் என்று கருதுகிறேன் என்றாலும் அதற்கு எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு தொல்லைகள் இருக்கின்றன என்று யோசித்துப்பாருங்கள். நான் செய்ய நினைக்கும் பொது ஜனசேவை தீண்டாமை விலக்கு வேலை என்பவை மதத்துரோகம், கடவுள் துரோகம், ஜாதித்துவேஷம், வகுப்புத்துவேஷம், தேசீயத்துரோகம். ராஜத்துரோகம் என்றெல்லாம் ஆகிவிடுகின்றன. ஆகை.
யால் இந்நிலையில் சுலபத்தில், உண்மையான பொதுநல சேவையும், தீண்டாமை விலக்கு சேவையும், காரியத்தில் பயன்படும்படி செய்யமுடியும் என்று நான் நினைக்கவில்லை. பொது நல சேவை என்றால் என்ன? தீண்டாமை விலக்கு என்றால் என்ன? என்பதை மக்களுக்கு தெரியும்படி செய்தாலே போதும் என்று நினைக்கிறேன். அந்த வேலைதான் செய்ய வேண்டியது முக்கிய கடமையாய் இருக்கிறது என்று கருதியிருக் கிறேன்.
இந்த வேலை இந்தியாவுக்கு மாத்திரம் அவசியம் என்று நான் கருதிவிடவில்லை. “தீண்டாமை” என்பது இல்லாத ஊரிலும், அன்னிய ஆட்சி என்பது இல்லாத ஊரிலும், ஏகாதிபத்தியமோ, சக்கரவர்த்தியோ, ராஜாக்களோ இல்லாத ஊரிலும் இப்படித்தான் இருக்கிறது. “குபேர பட்டணம்” என்று சொல்லும் அமெரிக்காவிலும், சக்கரவர்த்தியை ஒழித்து சமதர்ம ஆட்சி நடத்தும் ஜர்மனியிலும், சொந்த தேச அரசர் ஆளும்
இங்கிலாந்திலும், அரசரை விரட்டி அடித்த குடி அரசு நாடான ஸ்பெயினிலும் இந்த கதிதான் இருக்கிறது. சில இடங்களில் ஒரு கட்டிலில் பகுதி படுக்கையை வாடகைக்கு விட்டு ஜீவிக்கவேண்டி இருக்கின்றன. வெரும் சகிக்க முடியாத பட்டினிக்காகவே பெண்கள் தெருக்களில் வந்து கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு போய் விபசாரித்தனம் செய்து ஜீவிக்கவேண்டி இருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம் முதலாளிகளின் ஆட்சியே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றே உணருகிறேன்.
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
தோழர்களே! இவைகள் என் சொந்த அபிப்பிராயமே யொழிய
தர்க்கித்து முடிவுகண்டு முடிந்த முடிவு என்று சொல்ல வரவில்லை. நான் பார்க்
கும் கண்ணாடி துவேஷக் கண்ணாடியாய், பாரபட்சக் கண்ணாடியாய் இருக்க லாம். ஆகையால் நீங்கள் இவற்றை உங்கள் நடு நிலைக்கண்ணாடிகொண்டு பார்த்து உங்களுக்கு தோன்றியபடி நடவுங்கள் என்று சொல்லுவதோடு, மறுமுறையும் எனக்கு இவ்வித சந்தர்ப்பமளித்து ஊக்கமளித்ததற்காக உங்கள் எல்லோருக்கும் உங்கள் பிரதிநிதியாகிய கோவை முனிசிபல் அங்கத்தினர். களுக்கும் அவர்களது அக்கிராசனாதிபதி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
குறிப்பு: 22.01.1933 இல் கோவை முனிசிபல் சங்கத்தாரால் வழங்கப்பட்ட
உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து பேசிய உரை,
குடி அரசு - சொற்பொழிவு - 29.011933
குடி அரசு - 1933 M) 72
இந்தியப் வண்களுக்கும் இடம்
நணயபாக அப்பும், சப்ரமஞ்சக்கட்முனும் பிரசவ ஆஸ்பத்திரியுமா?'
சென்னையில் கூடியபெண்கள் சங்கத்தில், பெண்கள் நலனுக்கென்று, சில பெண்கள் கூடி, சில தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள் என்பதாகத்தெரிய
வருகிறது. அவற்றின் ஒரு தீர்மானமானது இந்திய ஸ்திரீ ரத்தினங்கள் நளபாக அடுப்பும், சப்ர மஞ்சக்கட்டிலும், பிரசவ ஆஸ்பத்திரியும் தவிர வேறு இடத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்கின்ற மனப்பான்மையைக்
காட்டுவதாய் இருக்கின்றது.
அதாவது, “சிறுவர் பாடசாலைகளில் சிறுமிகளுக்கு அவசியமாக வேண்டப்படும் சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடித்தன சாஸ்திரம் இவை களைப்போதிக்க வேண்டியதிருப்பதால் சிறுவர் பாடசாலைகளையும், சிறுமி
கள் பாடசாலைகளையும் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது”
என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இந்தியப் பெண்கள் தாம் ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிருகங்களை விட கேவலமான நிலையில் இருப்பதைப்பற்றி சிறிதாவது கவலையோ, வெட்கமோ அடைந்ததாகத் தெரியவில்லை.“கல்வியறிவுள்ள மேதாவிப்” பெண்களான ஸ்திரீ ரத்தினங்களைப் பற்றியே நாம் பேசுகின்றோம்.
இவர்கள் நிலையே இப்படியானால், பிள்ளை பெரும் யந்திரங்களான மற்ற “வநிதாரத்தனங்களை”ப் பற்றிப் பேசவும் வேண்டுமா? மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய யோக்கியதையை எடுத்துக்கொண்டால் அவர்கள். எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும், எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும், தொழில் திறமையும் கொண்ட சக்தியையும் உடையவர்களாய் இருக்கிறார்களே ஒழிய இந்திய “ஸ்திரி ரத்தினங்கள்” கோருகிற மாதிரி சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடும்ப சாஸ்திரங்கள் ஆகியவைகளைக்
கற்று சீதையைப் போலவும், சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர் பெண் ஜாதியான வாசுகியைப் போலவும், நளாயினியைப் போலவும் இருக்கத் தகுதி யற்றவர்களாகவே இருப்பார்கள்-இருக்கிறார்கள்.
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
உதாரணமாக இதன்கீழ் உலகப் பிரசித்திபெற்று வாழ்கின்ற ஒரு 6.7 பெண்களைப்பற்றி மாத்திரம் குறிப்பிடுகின்றோம்.
1. எலிநார் மிச்சேல் (Eleanormitchel) என்கிற ஐரோப்பிய மாது ஒரு நிமிடத்துக்கு 1000 எழுத்துகள் டைப்பு அடிக்கக்கூடிய சக்தியோடு கடந்த ஐந்து வருஷ காலமாக உலகிற் சிறந்த டைப்பிஸ்டாக முதற்
பரிசு பெற்று வருகிறார்.
2. மிஸ். ஆமிஜான்சன் (Amy Johnson) என்கின்ற ஐரோப்பிய மாது, இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் ஆகாய விமானத்தில் அதி வேகமாய்ச் செல்லக்கூடிய கீர்த்தி பெற்றிருக்கிறார்.
3. ஜார்ஜ் என்னும் செல்வப் பேர் வாய்ந்த ஜாயி கூப்பர்
(Joyeecooper) என்கிற ஒரு ஐரோப்பிய ஆங்கில மாது தண்ணீரில் நீந்துவதில் ஆண்களைவிட கீர்த்தி பெற்றிருக்கிறார். அத்துடன் தன்னைப்போலவே நீந்துவதில் பேர்பெற்ற, பீரியன் இசன் (Brian
Hession) என்கின்ற ஒரு ஆண் மகனையே மணக்கப் போவதாக உறுதி கொண்டிருக்கிறார்.
4.மிஸஸ் கார்நல் (Comel) என்கிற மற்றொரு மாது. பெண்கள் சரீர அப்பியாசசங்கத்திற்கு காரியதரிசியாயிருந்து கொண்டு சர்வ தேச சரீர அப்பியாச சங்க பந்தயங்களில் அதிகம் தூரம் தாண்டும் பந்தயத் தில் முதலாவதாக தாண்டி, முதல் பரிசு பெற்று அட்லாண்டா (Atalanta) “என்கின்ற தெய்வம்” போல் பிரக்கியாதி பெற்றிருக்கிறார்.
5.சோனியா ஹென்ஜ் (Sonia Henje) என்கின்ற மற்றொரு மாது, உரை பனியின் மீது சரிந்து நடக்கும் ஒருவித பந்தயத்தில் உலகப் போட்டி
யில் வெற்றி பெற்ற (World Champion) உலக சாமர்த்தியசாலி என்ற பட்டம் பெற்றிருக்கிறார்.
6. மிஸஸ் ஸட்டூவர்ட் (Stewart) என்கின்ற மாது மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் விடுவதில் உலகத்தில் அதிக வேகமாய் விட்டவர். களின் அளவையெல்லாம் மீறி 1930ல் ஒரு மணிக்கு 130 மைல் வேகத்தில் விட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
7. பெட்டி கார்ஸ்டேர்ஸ் (Betty Carstairs) என்கிற மாது 400-டன் எடையுள்ள மோட்டார் படகை தண்ணீரில் செலுத்தி பெரும் பெரும் பந்தயங்களில் வெற்றி பெற்று “மோட்டார் படகு ராணி” எனப்பெயர்: பெற்றிருக்கிறார்.
இப்படி இன்னமும் அநேக பெண்களை பிரத்தியட்ச காட்சியாக இன்றும் ஐரோப்பாவில் காணலாம்.
குடி அரசு - 1933 M) 74
துருக்கியில் (கோஷா! படுதாவில் இருக்கவேண்டிய ஒரு மாது போலீஸ்இலாக்கா இன்ஸ்பெக்டர் ஜனரலாயும், மற்றொரு மாது அன்னிய நாடுகளுக்குச் சென்று பேசும் பிரதிநிதியாகவும் இருக்கிறார்.
மற்றும் ரஷியா முதலிய தேசங்களில் ரயில்வே இன்சின் ஓட்டுதல், பெரிய யந்திரசாலைக்குத் தலைமை வகித்தல் மற்றும் வைத்திய இலாக்கா தலைமை அதிகாரியாயிருத்தல் முதலிய அநேக காரியங்கள் திரமையாய்
நடத்துகிறார்கள். இந்திய “ஸ்திரீ ரத்தினங்கள்” - கடைந்தெடுத்த அடிமை ரத்தினங்களாயிருப்பதற்கு ஏற்ற சங்கீதம், கும்மி, கோலாட்டம், பின்னல், குடும்ப சாஸ்திரம் ஆகியவை படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். ஆதலால் தான் அவர்கள் ஆண் பிள்ளைகள் கூடயிருந்து படிக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக்கிறார்கள் போலும்! இதைப் பார்த்த யார் தான் வெட்கப்படாமல் இருப்பார்கள்.
ரஷிய தேசத்தின் ஜனத்தொகை 17 கோடி என்றால், 7 கோடி மக்களும் ஆண் பெண் அடங்க மனிதத்தன்மை பெற்ற மனிதர்களாகவே இருக்கிறார்
கள். இவர்கள் யாவரும் அத்தேச எல்லாக் காரியங்களையும் கவனிக்க அரு கதையுள்ளவர்களாகவும், ஆட்சிபுரியச் சக்தியுடையவர்களாகவும் இருப்ப தோடு, இவ்வளவு பேர்களின் “குடும்ப காரியங்களை” கவனிக்க ஆண்களும் பெண்களுமாய்ச் சேர்ந்து 100க்கு ஒருவரோ, இருவரோ மாத்திரம் பெண்ணோ, அல்லது ஆணோ குடும்ப சாஸ்திரம் படித்திருந்தால் போதும் என்கின்ற நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் சுதந்திர சாஸ்திரத்தில் தீரர்களாயிருக் கிறார்கள்.
இந்தியாவில் 34 கோடி மக்கள் இருந்தாலும் இவர்களில் பகுதியாகிய
17 கோடி பேர்களான ஸ்திரீ ரத்தினங்கள் ஆடல், பாடல், குடும்ப சாஸ்திரம், கோலாட்டம், பின்னல் கும்மி கற்றவர்கள் என்று கழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்று பாருங்கள்.
அன்றியும், இந்த ஆடல், பாடல், கும்மி, கோலாட்டம், குடும்ப சாஸ்திரம் ஆகியவற்றில் வாழும் ஸ்திரீ ரத்தினங்கள் வயிற்றில் பிறக்க நேர்ந்த பிண்டங்களாகிய ஆண்களுக்குத்தான் எவ்வளவு யோக்கியதை இருக்க
முடியும் என்று யோசித்துப்பாருங்கள்.
மேற்கண்ட ஸ்திரி ரத்தினங்களின் ஆடல், பாடல்களுக்குத் தாளம் போடவும், கோலாட்டத்திற்குக் கோல் சீவிக்கொடுக்கவும், குடும்ப சாஸ்திரத்து வித்தாயிருக்கவும் தவிர வேறு என்ன வேலைக்கு லாயக்குடையவர்கள். ஆவார்கள் என்பது நமக்கே விளங்கவில்லை. பெண்கள் முன்னேற்றத்திலும் கூட பார்ப்பனீயப்பேய்த் தன்மை புகுந்து நாட்டைப் பாழாக்குகின்றதென்றால் பிறகு இவர்களுக்கு வேறு என்னதான் கதி என்பது நமக்கு விளங்கவில்லை.
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஏனெனில் பச்சைப் பார்ப்பனீயத்தில் தான் பெண்களுக்கு இந்த யோக்கியதை
கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
நிற்க, கற்ப ஆட்சி கூடாதென்றும், கல்யாண ரத்து கூடாதென்றும் தீர்மானங்கள் செய்ததும்கூட இந்த ஸ்திரி ரத்தினங்கள் தான் என்றால் இவர். களே கூடிய கூட்டங்களில், கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், பின்னல் குடும்ப சாஸ்திரங்களுக்குத் தான் பெண்கள் லாயக்கு என்று தீர்மானிப்பதில் அதிசயம் ஏதும் இருப்பதாக நமக்குக் காணமுடியவில்லை.
அன்றியும், ஆண் பிள்ளைகளுடன் பெண் பிள்ளைகள் சேர்ந்து படிக்கக்கூடாது என்பதின் கருத்தும் நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிப்பதால்-பழகுவதால், பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள குருட்டு மோகம் குறைந்து விடுமோ என்னமோ என் கின்ற பயம் காரணமாய் இருந்தாலும் இருக்கலாம் என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது.
ஆண்களுடன் பெண்கள் நெருங்கிப் பழகவும், சேர்ந்து படிக்கவும் இடம் கொடுத்து விட்டால் கண்டிப்பாய் இன்றைய தினம் பெண்களுக்கு உள்ளது போன்ற அடிமை நிலையான குடும்ப சாஸ்திரம் என்னும் அடுப்பூ
தும் நிலையும், குழந்தை விவசாயம் செய்யும் பண்ணை நிலையும், கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல்களால் அல்லாமல் ஜீவிக்க முடியாத நிலையும், அதாவது பெண்களுக்கு மேற்கண்டவைகளே முக்கியமானது என்கின்றதான நிலைகள் பறந்தே போய் விடும். ஒரு சமயம் மேல்கண்டவைகள் எல்லாம். கலைஞானமென்றும் அவைகள் இல்லாவிட்டால் மிருகங்களுக்குச் சமான
மென்றும், சில சனாதன மேதாவிகள் சொல்லக் கூடும். அப்படியானால் அந்த அருங்குணங்கள் இல்லாத ஆண்கள் கலைஞானமற்ற, மிருகங்களுக்கு சமானமானவர்களா என்று அவர்களைப் பணிவுடன் கேட்கின்றோம்.
அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் ஆண்களுக்கேற்ற கலை வேறு, பெண்களுக்கேற்ற கலை வேறு என்று சொல்லுவார்களானால் அந்தப் புத்தியைத்தான் என்ன செய்தாவது ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்லு கின்றோம். அந்தப் புத்தியின் உணர்ச்சி தான் பெண்களை கும்மி. கோலாட் டம், ஆடல், பாடல், குடும்ப சாஸ்திரம் ஆகியவை வேண்டும் என்று சொல்லு கின்றது என்று சொல்லுகின்றோம்.
தவிர இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றிய ஸ்திரீ ரத்தினங்களில்
நமக்குத் தெரிந்த, அறிமுகமுள்ள தோழர் பெண்களும் சிலர் இருந்திருக் கிறார்கள். அவர்களை ஒன்று கேட்கின்றோம். அதாவது அவர்களுடைய இன்றைய வாழ்க்கையில் கோலாட்டமும். சங்கீதமும், பின்னலும், குடும்ப சாஸ்திர மென்பதும் எவ்வளவு தூரம் பயன்படுகின்றது? அதனால் அவர்.
குடி அரசு - 1933 M) 76
களது முன்னேற்றம் எவ்வளவு ஏற்பட்டிருக்கின்றது? என்று அறிய விரும்புகின்றோம்.
எனவே இந்த ஸ்திரீ ரத்தினங்கள் இந்தியப் பெண்களுக்கு அடிமைப் பட்ட மிருகத்திலும் கேவலமாய் சமயல் காரியாகவும், ஆயம்மாளாகவுமே இருந்து வரும் பெண்கள் ரத்தினங்களுக்கு அவர்களை மனித ரத்தினங் களாக்க எப்படி பிரதிநிதிகளாயிருக்க தகுந்தவர்கள் என்பதுதான் நமக்கு புரியாத விஷயமாயிருக்கின்றது.
குடி அரசு - தலையங்கம் - 29.01.1933
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சுயமரியாகையைய் பற்றி காந்தி
அவிப்பிறாயம்
சென்றவாரம் வெளியான தினசரி பத்திரிகைகளில் தோழர் காந்திய வர்களால் கலப்புமணத்தையும், சமபந்தி போஜனத்தையும் ஆதரிப்பதில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த வாரம் வந்த தினசரிகளில் சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட ஆகாரத்தையும் சுயமரியாதையை லட்சியமாய் கொண்ட கலப்பு மணத்தையும் தான் ஆதரிப்பதாகச் சொன்ன
தாய் காணப்படுகின்றது.
இதைப் பார்க்கும்போது ஒரு கேள்வி புறப்படுகின்றது. அதாவது சம
ஜாதி மக்களால் சமைக்கப்பட்ட ஆகாரம் சம ஜாதி மக்களுடன் கூட இருந்து உண்ணும் ஆகாரம் ஆகியவைகள் சுகாதார முறைப்படி சமைக்கப் பட வேண்டிய அவசியமில்லையா என்ற கேள்வி பிறக்கின்றது. ஒரு சமயம் இரண்டு வித மக்களுடனும் கலந்து உட்கார்ந்து உண்ணும் ஆகாரத்துக்கும் சுகாதாரமுறை பக்குவம் வேண்டுமானால் அதை இந்த சமயத்தில் தனியாய் குறிப்பிடக் காரணம் என்ன? என்கின்ற கேள்வி பிறக்கின்றது.
அதுபோலவே சுயஜாதி மணம் செய்து கொள்வதானாலும் சுய மரியாதை இலட்சியம் இருக்க வேண்டியது அவசியம் என்றால் கலப்பு மணத்தைப் பற்றிச் சொல்லும் போது மாத்திரம் சுயமரியாதை இலட்சியத்தைப்
பற்றிக் கவலைப்படுவானேன்? என்கின்ற கேள்வியும் பிறக்கின்றது. ஒரு சமயம் கலப்பு மணம் இல்லாவிட்டால் திருமண விஷயத்தில் சுயமரியாதை இலட்சியம் தேவையில்லையோ என்கின்ற சந்தேகமும் பிறக்கின்றன.
எது எப்படி இருந்தாலும் கலப்பு மண விஷயத்திலாவது மக்களுக்கு சுயமரியாதை இலட்சியம் இருக்க வேண்டும் என்றும் தோழர் காந்தி ஒப்புக் கொண்டதைக் குறித்து நாம் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.011933
குடி அரசு - 1933 M) 78
இந்தியாவில் வபண்கள் நிலை
தோழர்களே! இந்தியப் பெண்கள் நிலைமையைப் பற்றி பேசுவ தென்றால் அது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். அங்குள்ள ஆண், பெண், வித்தியாசமானது முதலாளி தொழிலாளிக்கு உள்ள வித்தியாசத் தைவிடமிகக் கடினமானது. ஒரு தொழிலாளியானவன் எப்படியாவது பணம்
சம்பாதித்துக் கொண்டானேயானால் அவன் மெள்ள மெள்ள முதலாளி கூட்டத் தில் கலந்து கொள்ளக்கூடியவனாகி விடுவான். ஆனால் இந்தியப் பெண்களோ அப்படியில்லை. அவர்கள் எந்த நிலையிலும் ஆண்களுக்கு அடிமையாகவும், அவர்களுடைய அனுபவப் பொருளாகவும், ஆண் களையே தெய்வமாகக் கருதி பூஜித்து தொண்டு செய்து கொண்டிருக்க வேண்டியவர்களாகவும் இருப்பார்கள்.
பெண் இழிவான பிறவி
இந்தியாவில் இந்து பெண்கள் இந்துமத சம்பிரதாயப்படி பாப ஜன்மங் களாகக் கருதப்படும். அதாவது சென்ற ஜன்மத்தில் அவர்கள் செய்த பாப காரியங்களால் இந்த ஜன்மத்தில் பெண்களாய்ப் பிறக்கிறார்கள் என்பது ஒரு
சாஸ்திர விதி. ஒரு குடும்பத்தில் எத்தனை பெண் குழந்தை இருந்தாலும் அக்குடும்பத்திற்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் அதை பிள்ளையில்லாத. குடும்பம் என்றே சொல்லுவது வழக்கம். ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை
பிறந்தால் அது அவ்வீட்டுக்கு அதிருப்தி தரத்தக்க விஷயமாகவே கருதப் படும். ஆண் குழந்தை பிறந்தால் வெகு திருப்தியுடன் ஆடம்பரச் செலவு செய்வார்கள். ஏதாவது ஒருசபை அல்லது கூட்டம் யாரும் பேசாமல் நிஸப்த. மாய் இருப்பதாய் இருந்தால் அதைப்பார்த்து “என்ன பெண் பிறந்த வீடு போல் இருக்கிறதே” என்று கேட்பது வழக்கம். எவ்வளவு பெண் குழந்தை
இருந்தாலும் ஒருவனுக்கு ஆண் குழந்தை இல்லாவிட்டால் வேறு குடும்பத் தில் இருந்து ஒரு ஆண்பிள்ளையை சுவீகாரம் எடுத்துக் கொள்வார்களே ஒழிய பெண் குழந்தையை வார்சு குழந்தையாய்க் கருதுவதில்லை.
பெண்கள் எந்த நிலையிலும் சுதந்திரத்திற்கு அருகதை அற்றவர்கள் என்பதே மதசம்பிரதாயம். ஒரு பெண்ணானவள் குழந்தைப் பருவத்தில் தாய் தகப்பன் மேற்பார்வையிலும், வாலிபப்பருவத்தில் புருஷன் மேற்பார்வை
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
யிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்கள் மேற்பார்வையிலும் இருக்க வேண்டுமே ஒழிய, சுதந்திரமாய் இருக்க விடக்கூடாதென்று மனுதர்ம சாஸ்
திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது மாத்திரமல்லாமல் பெண்களை கடவுள் பிறவியிலேயே விபசாரியாய் பிறப்பித்திருப்பதால், அவர்களை சர்வ ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும் என்று மத சாஸ்திரத்தில் எழுதப்பட்டி
ருக்கின்றது.
பெண்களுக்கு கல்வி கூடாது
பெண்களுக்கு கல்வி கற்பிப்பதும் மதசாஸ்திர விரோதமான காரிய
மாகும். இவ்வளவு நாகரீகமான காலத்திலும் இந்தியாவில் மொத்த ஜனத் தொகையில் 100-க்கு ஒருவர் வீதந்தான் பெண்கள் கல்வி கற்றிருக்கக்கூடும். அப்படிக் கற்றிருந்தாலும் அந்தக்கல்வி அவர்களது வாழ்க்கையில் யாதொரு காரியத்திற்கும் பயன்படுவதில்லை. பெண்களுக்கு கற்றுக்கொடுப்பதெல்லாம்
வீட்டு சமையல் வேலை முதலிய வேலைகளைச் செய்யத்தான் கற்றுக் கொடுப்பது வழக்கம். சிறு பருவ முதலே அவர்களை ஆண் குழந்தைகளிடம் இருந்து பிரித்து வைக்கவேண்டுமென்று கருதுவதால் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு அவர்களை அநேகமாய் அனுப்பவே மாட்டார்கள்.மற்றபடி
சிறு குழந்தைப்பருவத்தில் யாருக்காவது சங்கீதம் பாட்டு முதலியவை கற்றுக் கொடுக்கப்பட்டாலும் அவை அப் பெண்ணின் வாழ்க்கையில் சிறிதும் பயன்பட சந்தர்ப்பம் இருப்பதே கிடையாது.
கல்யாண விஷயம் என்பது மிகவும் பரிதாபகரமானது. அநேகமாக பெண்களுக்கு 10, 12 வயதிற்குள்ளாக கல்யாணம் ஆகிவிடும். பிறந்த ஒரு வருஷத்திலிருந்தே எப்பொழுது வேண்டுமானாலும் கல்யாணம் செய்யலாம். சில வகுப்புகளில் எப்படியானாலும் 10 வயதிற்குள் கல்யாணம் செய்தாக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம் உண்டு. கல்யாணம் என்பது பெண்கழுத்தில் ஆண் ஒரு கயிற்றை கட்டுவதுதான் கல்யாணம். தாலிகட்டுகின்றது என்கின்ற சடங்கு வரையிலும் பெண்ணுக்கு மாப்பிள்ளை இன்னார் என்றே அடை யாளம் தெரியாது.மாப்பிள்ளைக்கும் பெண் இன்னார் என்றே அடையாளம் தெரியாது. கல்யாணம் என்பது பெண் மாப்பிள்ளை ஆகியவர்களின் பெற்றோர்கள் செய்து கொள்ளும் ஏற்பாடே ஒழிய, பெண் மாப்பிள்ளை ஆகிய இருவருடைய சம்மதம் என்பது கிடையாது. பெண்ணுக்கும் மாப் பிள்ளைக்கும் பொருத்தம் என்பது ஜோசியத்தின் மூலமும், சகுனத்தின்
மூலமும் பார்ப்பதே தவிர பிரத்தியட்ச யோக்கியதை முதலியவைகளைக் கொண்டு பார்ப்பதில்லை.5,10 வயதுள்ள சிறு பெண்களுக்கு 40,50 வயதுள்ள மாப்பிள்ளையை கல்யாணம் செய்வதும் உண்டு.10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணை கட்டுவதும் உண்டு. 60, 70 வயது கிழவனுக்கு சிறு
குடி அரசு - 1933 M) 80
பெண்களை கல்யாணம் செய்வதும் உண்டு. சென்ற வருஷத்தில்கூட 90 வயது கிழவன் ஒரு சிறு பெண்ணை கலியாணம் செய்து கொண்டான். பெண்ணின்
தாய் தகப்பன்மார் யாருக்கு கல்யாணம் செய்து கொடுப்பதானாலும் பெண் சம்மதித்துதான் ஆகவேண்டும். பெண் ஏதாவது தனது அதிருப்தியை காட்டினால் அது பெண்ணின் கற்புக்கே விரோதமானது என்று சொல்லி விடுவதால் பெண் தன்னை யாருக்கு கொடுக்கப்படுவதானாலும் சம்மதித்தாகவேண்டும்.
புருஷன் வீட்டில் பெண் நிலைமை
கல்யாணம் செய்யப்பட்ட பெண் புருஷன் வீட்டு வேலைக்கே கல்யாணம் செய்யப்பட்டதாய் கருதி புருஷன் வீட்டில் மாமனார், மாமி, நாத்தி, கொழுனன் ஆகியவர்களுக்கு வேலையாளாக இருந்து சகல வேலையையும் பார்க்கவேண்டும். சில வகுப்புகளில் பெண் புருஷனின் தகப்பன்மாருக்கும், சகோதரர்களுக்கும்கூட பெண்சாதியாய் இருக்க வேண்டும். இதற்கு சட்டத்
திலும் இடமுண்டு. பெண் தாய் வீட்டிலிருந்து புருஷன் வீட்டிற்கு போகும் போது அழுதுகொண்டே போகும். பெற்றோர்கள் பெண்ணுக்கு சொல்லி அனுப்பும் புத்திமதி யெல்லாம் “புருஷன் வீட்டில் உள்ளவர்களுக்கு பணிந்து, நல்ல வேலைக்காரியாய் நடந்துகொள்” என்றுதான் சொல்லி அனுப்புவார்கள். அந்தப்பெண்ணை புருஷன் எவ்வளவு கொடுமையாய் நடத்தினாலும் கேள்வி கிடையாது. சில சமயங்களில் புருஷனுடைய பெற்றோர்கள் கொடுமைப்படுத்தினாலும் கேள்வி கிடையாது. புருஷன் எவ்வளவு அயோக்கியனாகவும், குடிகாரனாகவும், சூது, விபசாரம் செய்பவனாகவும், இருந்தாலும் பெண்ணுக்கு கேள்க்க அதிகாரம் கிடையாது.
அவன் வரும்படி இல்லாமல் திரிந்தாலும் பெண் தானே கூலி வேலை செய்தாகிலும் அவனுக்கு போடவேண்டும். பெண் இவற்றையெல்லாம் தனது
முன் ஜன்மத்தின் கர்ம பலனென்று எண்ணிக்கொள்ள வேண்டும்.
கல்யாண ரத்து கிடையாது
புருஷன், மேல்கொண்டு எத்தனை பெண்சாதி வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம். எத்தனை தாசிகளை வேண்டுமா னாலும் வைத்துக் கொள்ளலாம். இந்து மத கடவுள்கள் 60 ஆயிரம் பெண் களை கட்டிக்கொண்டதாகவும்,12 ஆயிரம் தாசிகள் வைத்திருந்ததாகவும் மத ஆதாரங்கள் உண்டு. எந்த நிலையிலும் கல்யாண ரத்து என்பது கிடையவே கிடையாது. பெண்ணுக்கு ஒரு தடவை கல்யாணம் ஆகிவிட்டால் சாகும்வரை: அவனிடமேதான் இருந்தாக வேண்டும். புருஷன் கொடுமை சகிக்காமல் பெண் தாய் வீட்டுக்கு போய்விட்டால், புருஷன் கோர்ட்டில் தாவா செய்து டிக்ரி பெற்று பெண்ணை சுவாதீனம் செய்து கொள்ளலாம். ஆனால்
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
பெண்ணுக்கு புருஷனிடமிருந்து ஜீவனாம்சம் பெறத்தான் பாத்தியமுண்டு. அதுவும் பெண் விபசாரி என்று புருஷன் ருஜுப்படுத்திவிட்டால் அந்த ஜீவனாம்சமும் இல்லை.
சொத்துரிமை
பெண்ணுக்கு தகப்பன் சொத்தில் சிறிதும் பங்கு கிடையாது. புருஷன் சொத்திலும் பங்கு கிடையாது.
விதவைத்தன்மை
புருஷன் இறந்துவிட்டால் பெண் விதவை என்று அழைக்கப்படுவாள். புருஷன் இறக்கும்போது அவள் எவ்வளவு செல்வத்துடன் மேன்மையாய் இருந்தாலும், கணவன் இறந்தவுடன் இவள் ஒரு அபசகுன உருவமாக ஆகி விடுவாள். நகை அணியக்கூடாது, புஷ்பம், வாசனை, நல்ல உடுப்பு ஆகியவை அணியக்கூடாது. ஒரே வேளை - அதுவும் சத்தற்ற ஆகாரந்தான் சாப்பிடவேண்டும்.சில வகுப்புகளில் தலையை மொட்டையடித்து, வெள்ளை உடுப்பு அணிந்து கொண்டு வீட்டிற் குள்ளாகவே வீட்டு வேலைகள் செய்து கொண்டு இருக்க வேண்டும். விதவையைக் காணுவது அபசகுனமாகப் பாவிக்கப்படும். விதவைக்கு குடும்ப காரியங்களில் அல்லது சடங்குகளில் எவ்வித பாத்தியமும் கிடையாது. சாப்பாட்டுக்கு மாத்திரம் பெற பாத்திய முண்டு. வேறு கல்யாணம் செய்து கொள்ளவும் கூடாது. 5 அல்லது 10 வயதில் புருஷன் இறந்து போனாலும் பெண் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது. ஆனால் புருஷன் தனது பெண்ஜாதி இறந்த 10 நாளிலேயே கல்யாணம் செய்து கொள்ளலாம்.
அவன் எவ்வளவு கிழவனாயிருந்தாலும் மறுமணம் செய்து கொள் வதில் எவ்வித ஆட்சேபணையும் கிடையாது. புருஷன், குழந்தை இல்லா
விட்டாலும், ஆண் குழந்தை இல்லா விட்டாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம். பெண் தனது குழந்தை பருவத்தில் புருஷன் இறந்து போனாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது.
தனி வகுப்புகளில்
இவை பொது நிலைமையாகும். இனி சில தனி வகுப்புகளில் உள்ள பெண்கள் நிலைமையைப் பற்றி சில குறிப்பிடுகின்றேன். சில வகுப்புகளில் பெண்கள், ஆண்கள் கண்களுக்கே தென்படக்கூடாது உடம்பு, தலை, முகம் ஆகிய எல்லாவற்றையும் ஒரு துணியினால் போர்த்தி மூடிக் கொள்ள வேண்டும். கண்கள் மாத்திரம் தெரியும்படி ஓட்டை விட்டு பார்த்துக் கொண்டே போக வேண்டும். பெண்கள் தனியே எங்கும் போகக்கூடாது. சிறு பெண்ணை அதாவது 8, 10, 12 வயது பெண்ணை 220, 30, 40 வயதுக் காரர்களுக்கு கட்டிக் கொடுத்தாலும் கல்யாணமான அன்று இரவே படுக்கை
குடி அரசு - 1933 (0) 82
வீட்டில் பெண்ணையும் ஆணையும் தனியாய் படுக்க வைத்து விடுவார்கள். அவன் அதை காமாகாரமாய் எப்படி மிருகத்தனமாய் வேண்டுமானாலும் சில சமயங் களில் நடத்துவான்.
சில வகுப்புகளில், மகனுக்கு கல்யாணம் செய்த பெண் மாமனாருக்கும் பெண்ஜாதியாய் இருந்தாக வேண்டும். 10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணை கல்யாணம் செய்து பையன் 18 வயது நிரம்புவதற்குள் பெண்: ணுக்கு 2, 3 குழந்தைகள் பிறந்து விடும். அது மாமனாருக்கோ அல்லது புருஷனுடைய அண்ணனுக்கோ பிறந்ததாக இருந்தாலும் அக்குழந்தைகள் சட்டபடி பிறந்த லெஜிட்டிமேட் குழந்தைகளாகவே பாவிக்கப்படும்.
சில வகுப்புகளில் குடும்பத் தலைவன் மாத்திரம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அவனுடைய சகோதரர்கள் உள்பட யெல்லா ருமே அப்பெண்ணை பெண்ஜாதியாய் அனுவிப்பது உண்டு.
சில வகுப்புகளில் ஒரு குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம்தான் கலி யாணம் செய்து கொள்ளலாம். மற்ற இளைய சகோதரர்கள் வேறு ஜாதி பெண் களை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருப்பது வழக்கம். இந்தப்படி வைப்பாட்டியாக வைத்துக் கொண்ட பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தால், அவற்றை தகப்பன் காப்பாற்ற வேண்டும் என்கின்ற நிபந்தனை இல்லை. தகப்பன் சொத்தில் அவைகளுக்கு பங்கும் இல்லை.
சில வகுப்புகளில் உயர்ந்த ஜாதிக்காரன் என்கின்ற பிராமணன் மற்ற வகுப்புப் பெண்களைக் கூப்பிட்டால் அவனுக்கு அவள் இணங்கியே ஆக வேண்டும்.
பிராமணன், ஒரு பெண்ணினுடைய புருஷனைக் கூப்பிட்டே அவனு டைய பெண்ஜாதி மீது தனக்கு ஆசையாய் இருப்பதாகவும், அவளை அழைத்து வரும்படியும் கேட்டால் புருஷன் உடனே அழைத்துக் கொண்டு போகவேண்டும். பெண் சம்மதிக்காவிட்டால் நிர்பந்தப்படுத்தி, அல்லது கொடுமைப்படுத்தி சம்மதிக்கச் செய்வதுமுண்டு. சில வகுப்புகளில் குரு கூப்பிட்டால் இணங்கியே ஆகவேண்டும். முன் குறிப்பிட்ட, அதாவது ஒரு குடும்பத்தில் மூத்தவன் மாத்திரம் கல்யாணம் செய்து கொள்ளலாம் மற்றவன் வேறுவகுப்பில் வைப்பாட்டி வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்ட வகுப்பில் பெண்கள் மீதி ஆகி அனேக பெண்கள் சாகும் வரை கல்யாணம் இல்லாமல் கன்னிப் பெண்ணாகவே இருந்து சாவது வழக்கம். இப்படிப்பட்ட பெண்களுக்கு அவர்கள் செத்த பிறகு பிணத்திற்கு ஒருவனைக் கொண்டு தாலிகட்டச் செய்து பிறகு நெருப்பில் வைத்துக் கொளுத்தி விடுவது வழக்கம்.
சில வகுப்புகளில் கடவுளுக்கு பெண்ஜாதி ஆகிறது என்று கோயிலில் வைத்து கடவுளை கல்யாணம் செய்து கொண்டதாக ஏற்பாடு செய்து பொது விபசாரியாய் வாழச் செய்வது உண்டு. இவர்களுக்குப்பெயர் தேவதாசி.
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஒரு கல்யாணமான பெண்ணுடன் மற்றொரு ஆண் சம்பந்தம் வைத்
துக் கொண்டதாகத் தெரிந்தால் அந்த ஆண் சட்டப்படி தண்டனைக்குள்ளா வான். பெண்ணை ஜாதியை விட்டு தள்ளி வைத்துவிடுவதுமுண்டு.
ஒரு பெண் விபசாரியாய் ஆகிவிட்டால், அல்லது தேவதாசியாக இருந்தால் சொத்து வைத்துக் கொண்டு சுதந்திரமாய் இருக்கலாம். இல்லா
விட்டால் சொத்து உரிமை இல்லை, சுதந்திரமும் இல்லை.
இந்து விதவைகள் நிலைமையைப் பற்றியும், அவர்கள் சம்பந்தமான சட்டங்களைப் பற்றியும் விபரமாய் மற்றொருசமயம் நேரிடும்போது பேசு
கிறேன்.
குறிப்பு: ஐரோப்பாவில் பெண்கள் கூட்டத்தில் இந்தியப் பெண்கள். நிலையைப் பற்றி பேசியது,
குடி அரசு - சொற்பொழிவு - 05.02.4933
குடி அரசு - 1933 M) 84
கோவை உபசாரப் பத்திரங்கள்
தலைவரவர்களே! கோவை சுயமரியாதை இயக்கத் தலைவரே! வாலிபத் தோழர்களே!!! மற்றும் இங்கு கூடியுள்ள தோழர்களே!!! உங்கள் பத்திரங்களின் மூலம் உங்களுக்குள்ள ஆவேசம் இன்ன தென்று நன்றாய் விளங்குகின்றது. அவற்றையெல்லாம் என்னைப் புகழும் வழியில் காட்டி விட்டீர்கள். நான் அப்புகழ்ச்சிகளை ஒப்புக் கொள்ளக்கூடுமா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆனால் ஒன்றை மட்டும் ஒப்புக் கொள்ளு கிறேன். அதாவது என்னென்ன காரியம் நான் சாதித்து விட்டதாகக் குறிப் பிட்டிருக்கிறீர்களோ, அந்த காரியங்கள் எல்லாம் அவசியம் நடந்தாக வேண்டும் என்றும், அதற்காக நாம் எல்லோரும் பாடுபட வேண்டும் என்றும்
ஒப்புக் கொள்ளுகிறேன்.
சீர்திருத்தம்
தவிர அப்பத்திரங்களின் இரண்டொரு இடங்களில் நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமென்றும், பொது நல இயக்கமென்றும், குறிப்பிட்டிருக்
கிறீர்கள், அவைகளை நான் ஒப்புக் கொள்வதில்லை. நமது இயக்கம் சீர்திருத்த இயக்கமல்ல. ஆனால் அழிவு வேலை இயக்கம் என்றே சொல்லு வேன். சீர்திருத்தம் என்றால் எதை சீர்திருத்துவது? இன்றைய நிலைமையில் மனித வாழ்க்கைக்கு, சமத்துவத் தன்மைக்கு பெரும்பான்மையான மக்களா
கிய ஏழை மக்கள் படும் கஷ்டமும், தரித்திரமும் இழிவும் நீங்குவதற்கு அனுகூலமாக என்ன கொள்கைகள், நடை முறைகள் இங்கு இருக்கின்றன? என்று பாருங்கள். அதாவது மத சம்பந்தமாகவோ கடவுள் சம்பந்தமாகவோ, பொருளாதார முறை சம்பந்தமாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ ஏதாவது
ஒரு கொள்கை மனித சமூக ஜீவகாருண்யத்திற்காவது சமத்துவத்திற்காவது ஏற்றதாய் இருக்கின்றதா? என்று பாருங்கள். இருந்தால்தானே சீர்திருத்தம் செய்வீர்கள்? மதம்-கடவுள் பொருளாளன் அரசன் இவர்கள் எல்லோரும் மக்களை வருத்தி வஞ்சித்துக் கொடுமைப்படுத்தி வாழும் மக்களாவார்கள். இவர்கள் எல்லோருமே ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகள். ஆளுக்கொரு வேலை பார்க்கின்றவர்கள். இவர்களுக்கு அனுகூலமாகவே எல்லாம் இருக் கின்றன. இவைகளில் எதை சீர்திருத்தம் செய்தாலும் செய்ய நினைத்தாலும்
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
அவை இன்னும் வெகு காலம் நிலைத்திருப்பதற்கு தான் பயன்படுமே தவிர மாறுதலை உண்டாக்க முடியாது.இவைகள் எல்லாம் அழித்தொழிந்தால் ஒழிய கஷ்டம் நீங்கப்போவதில்லை..
உதாரணமாக “மகா விசேஷம்” பொருந்திய ஒரு (பேரூர் தீர்த்தக் குளத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது “ஒரு கடவுளால் உலகிலுள்ள மக்களின் சர்வபாவமும் நீங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பொற்றாமரைக் குளமாய்” இருக்கலாம். அதன் புராணமானது “அக்குளத்து நீரில் ஒரு துளி மேலே பட்ட மாத்திரத்தில் சகல பாபமும் தீர்ந்து வெகு காலத்திற்கு சொர்க்
கத்தில் இருக்கக் கூடிய மகத்துவமுடைய” தென்று கடவுளே சொன்னதாக இருக்கலாம். ஆனால் இன்றைய தினம் அக்குளத்து நீரில் ஒரு துளி மேலே பட்டால் சொரியும், ஊரலும், குஷ்டநோயும் உண்டாவதாய் இருந்தால் அதை
நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் முனிசிபாலிட்டி என்ன செய்யும்? தண்ணீரை சுத்தமாக்க மருந்துகள் போடலாம் என்று சொல்லுவீர்கள்.மருந்து
கள் போட்டபின்னும் அத்தண்ணீரின் குணம் அப்படியே இருந்தால் என்ன செய்வீர்கள்? தண்ணீரை யெல்லாம் இரைத்து வெளியில் கொட்டி கிணற்றை
சுத்தம் செய்வீர்கள். அந்தப்படி சுத்தம் செய்தபின்பும் அத்தண்ணீரின் குணம் அப்படியே இருந்தால் பிறகு என்ன செய்வீர்கள்? அக்கிணற்று நீர் ஊற்றமே விஷத்தன்மை பொருந்தியது என்று கருதி அக்குளத்தில் யாரையும் இரங்கச் செய்யாமல் செய்து குப்பை செத்தைகளைக் கொட்டி அதை மூடி விடுவீர்களா இல்லையா? இதைச் செய்யாமலிருந்தால் முனிசிபாலிட்டியாரையாவது பொது மக்களையாவது அறிவுடைய மக்கள் என்று நாம் கூறுவோமா?'
ஆகவே மனித சமூகத்திற்கு தீங்கை இழைத்து வரும் விஷயம் கடவுள் சொன்னதானாலும், மதம் சொன்னதானாலும் அல்லது கடவுளும், மதமும், அரசாங்கமும் ஆனாலும் அவைகளை அழிக்கத் தைரியம் கொள்ள
வேண்டும். நாம் எல்லோரும் வெகு காலமாகவே முன்னோர் காலந்தொட்டு மத சீர்திருத்த வாதிகளாகவும், கடவுள் சீர்திருத்த வாதிகளாகவும், ஒழுக்க சீர்திருத்த வாதிகளாகவும், அரச சீர்திருத்த வாதிகளாகவும் இருந்து பார்த்தாய் விட்டது. நமது முன்னோர்கள் காலம் தொட்டு ஆயிரக்கணக்கான வருஷங்களாய் சீர்திருத்தவாதிகளாய் இருந்தும் பார்த்தாய் விட்டது. எந்த
துறையில் சீர்திருத்தமடைந்திருக்கிறோம். ஏழை “சீர்திருந்தமடைந்து”' நாளுக்கு நாள் பட்டினியும், நோயும், இழிவும் அடைந்து கொண்டே போகி றான்.பணக்காரனும் சோம்பேரியும் சீர்திருத்தமடைந்து நாளுக்குநாள் பெரும். பணக்காரனாகி, பிரபுவாகி, ஜமீனாகி, ராஜாவாகி தலைமுறை தலைமுறை ஜமீனும், ராஜாவுமாய் ஆகிக்கொண்டே போகின்றான். சீர்திருத்தத்தின் பலனைக் காண்பதற்கு இன்னும் வேறு என்ன உதாரணம் வேண்டும். ஆகவே ஏழைத்தன்மை, பணக்காரத்தன்மை என்கின்ற இரண்டு தன்மையும் உலகில் இருக்கக்கூடாது என்று அவைகளை அடியோடு அழிப்பது நல்ல வேலையா? அல்லது அத்தன்மைகள் எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி
குடி அரசு - 1933 M) 86
சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா? என்று யோசித்துப்பாருங்கள். அழிவு வேலைக்கு எதிர்ப்புத்தான் சீர்திருத்த வேலை என்பது. தீமைகளுக்கு காவல்தான் சீர்திருத்தம் என்பது. ஆகவே தீமைகளை அழிக்க வேண்டுமா னால் அவற்றின் காவல்களையும், காப்புகளையும் முதலில் நிர்த்தூளியாக்க வேண்டும்.
அரசனையானாலும், மதத்தையானாலும், கடவுளையானாலும், நாம்
எதிர்ப்பதும், அழிக்க முற்படுவதுமான காரணமெல்லாம் இவை தீமைக்கு காவலாய் இருக்கின்றன என்கின்ற ஒரே நோக்கமேயல்லாமல் அவைகளிடம் நமக்கு பொறாமையோ, துவேஷமோ ஏற்பட்டதாலல்ல. ஏழ்மைக் கஷ்ட மில்லாமலும்,பணக்காரக்கொடுமை இல்லாமலும், பார்ப்பன உயர் சாதி இல்லா மலும்-பறைய தாழ்ந்த ஜாதி இல்லாமலும் முதலாளி ஆதிக்கமில்லாமலும்-
கூலி அடிமைத்தன்மை இல்லாமலுமிருப்பதற்கு ஆதாரமான மதம், கடவுள், அரசன், சட்டம், நீதி, தர்மம் ஆகியவர்களை நாம் அழிப்பதில்லை. அவை களைப்பற்றி நமக்கு கவலையே இல்லை. இவர்கள் விஷயத்தில் நாம் மதத் துரோகியோ, கடவுள் துரோகியோ, ராஜத்துரோகியோ சட்டம் மறுக்கவோ, அதர்மக்காரனாகவோ நாம் சிறிதும் விரும்பவில்லை.
ஏழை பணக்காரத்தன்மையையும் கீழ்மேல் ஜாதியையும், முதலாளி அடிமையையும் கொண்டதான நிலைமைகள் நடைபெற ஆதரவாயிருக்கும் கடவுள், மதம், அரசன், தர்மம், சட்டம் ஒழிந்தே ஆகவேண்டும். ஆதரவா
யிருக்கும் கடவுள், மதம், அரசன் என்பவைகள் மாத்திரமல்ல இவைகளை அனுமதித்துக்கொண்டிருக்கும் அரசாங்கமும், நீதி, ஒழுக்கம், பழக்கம், வழக்கம் முதலியன என்பவையையும், நாங்கள் அழித்தே தீருவோம். ராஜத் துரோகி, கடவுள் துரோகி, மதத்துரோகி பூச்சாண்டிகள் இனி சுயமரியாதைக் காரர்களிடம் செல்லாது.
சுயமரியாதைக்காரர்களிடம் மாத்திரமல்ல, வெகு சீக்கிரத்தில் உலகத்தி லேயே அவைகளுக்கு இடமில்லாமல் போகப்போகின்றது. இது காலவரையும் கஷ்டப்படும் மக்கள் தங்கள் தலைவிதியின் மீதும், கடவுள் மீதும், பழி போட்டுக்கொண்டு தலைவிதியை மாற்றவும் கடவுள் தயவு பெறவும் என்று, மேலும் மேலும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்துவந்தார்கள். ஆனால் இப்போது சுயமரியாதைக்காரர்களால்-நாத்திகர்களால், கடவுள் மதத் துரோகி களால் ஜனங்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். இவைகள் சோம்
பேரிகளும், பணக்கார முதலாளிகளும் செய்யும் சூழ்ச்சியும், பித்தலாட்ட முமே யொழிய வேறல்ல என்றும், கடவுளும் மதமும் இந்த பித்தலாட்டக்காரர் கற்பனைகளே தவிர வேறு இல்லை என்றும் உணர்ந்துகொண்டார்கள். நன்றாய் உணர்ந்துகொண்டார்கள். இப்பொழுது இவைகளை எப்படி ஒழிப்பது? என்பதில்தான் கவலையாய் இருக்கிறார்கள்.
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
வேகமாய்ப் போகவேண்டிய - போவதற்கு தயாராய் இருக்கிற - மோட்:
டார் காருக்கு முன்னால் பனை மரத்தைக் கொண்டுவந்து போட்டது போல், இன்று கடவுளும், மதமும், அரசாங்கமும் குறுக்கே கொண்டு வந்து போடப் பட்டு இருக்கின்றன. இவை வெகு நாளையத்த கடவுளாய் இருந்தாலென்ன? அவதார புருஷர்களால் உண்டாக்கப்பட்ட மதமாய் இருந்தாலென்ன? சட்டப்படி அமைக்கப்பட்ட அரசாங்கமாய் இருந்தால் என்ன? ஒழிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பின் அவை தானாக ஏற்பட்டால் என்ன சட்டப்படி ஏற்பட்டால் என்ன? சும்மா ஏற்பட்டால் என்ன? ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்பது தானே முக்கிய விஷயம்.
பொதுநலம்
அதுபோலவேதான் பொது நல சேவை என்பதும், மனித சமூக சம தர்மத்துக்கு விரோதமானதேயாகும். பொது நலம் என்றால் என்ன? எல்லோருக்குமே நன்மை செய்ய வேண்டுமென்பதுதான் அதன் பொருளாக. முடியும். கொடுமைப்படுத்துகிற கூட்டத்துக்கும் - கொடுமைப்படுகின்ற கூட்டத்துக்கும் நன்மை செய்வதென்றால் அதனால் என்ன பிரயோஜனம் ஏற்படும். கஷ்டப்பட்ட - படுகின்ற கூட்டத்துக்குத் தான் நன்மை செய்ய வேண்டும்.
ஆகவே நாம் ஒரு கூட்டத்தாருக்குத்தான், ஒரு வகுப்பாருக்குத்தான் நன்மை செய்கின்றவர்களாவோம். அது மற்றொரு வகுப்பாருக்கு தீமையாய்த்
தோன்றலாம். நமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. திருடனுக்கும் திருட்டுக் கொடுப்பவனுக்கும் எப்படி நன்மை செய்ய முடியும். “திருட்டுப்புத்தியை விட்டுவிடு, இல்லாவிட்டால் விட்டு விடும்படி செய்வேன்” என்பதுதான் திருடனுக்குச் செய்யும் நன்மையாகும். இதை நன்மையாகத் திருடன் மதிப் பானா? ஆதலால் நமது சேவை ஒரு நாளும் பணக்காரனுக்கும், முதலாளிக்
கும் நன்மையாய் காணமுடியாது. அவர்களுக்கு இனியும் நன்மை செய்வது என்பது நமது கொள்கையுமல்ல. ஆகவே நாம் பொதுநல சேவைக்காரரல்ல..
நாம் புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவோம். நமக்கு சீர்திருத்தக் காரர்களும், பொதுநலசேவைக்காரர்களும் பெரிய விரோதிகளே யாவார்கள்.
புரட்சி ஆரம்பித்த காலங்களில்தான் சீர்திருத்தங்கள், பொதுநல சேவைகள்.
புறப்படும். எதற்கு? புரட்சிகளை அடக்குவதற்கு. ஆகையால் நாம் எந்த வித சீர்திருத்தவாதிகளுடனும் எந்த வித பொதுநலவாதிகளுடனும் சேராமல் தனித்து நின்றே புரட்சி செய்ய வேண்டும்.
புரட்சி
தலை கீழாய் கவிழ்ப்பது தான் புரட்சியாகும். இதற்காக யாரும் பயப் படக்கூடாது. குழந்தைகளை பூச்சாண்டி பேர் சொல்லி மிரட்டுவது போல் நம்மையும் “புரட்சி என்று வாயில் சொல்லாதே, மனதினாலும் நினையாதே,
குடி அரசு - 1933 M) 88
வாய் வெந்துபோகும்” என்று பலர் சொல்லுவார்கள். இனி அந்தக் கதை பலியாது. புரட்சி செய்து வெற்றி பெற்ற தேசங்களையும், மக்களையும் பார்த்து விட்டோம். நாமும் சில விஷயங்களில் புரட்சி செய்தும் பார்த்துவிட்டோம். ஜாதிப் புரட்சி செய்தோமே என்ன ஆய் விட்டது? வெற்றி மார்க்கத்தில் செல்லுகிறோமா இல்லையா? மதப்புரட்சி செய்தோமே என்ன முழுகிப் போய் விட்டது? தத்துவார்த்தம் பேசி அதைக் காப்பாற்றப் பாடுபடுகின்றார்களே ஒழிய புரட்சி செய்தவர்களுக்கு என்ன ஆபத்து வந்தது? கோவில் நுழைவுப் புரட்சி என்ன ஆய் விட்டது? இப்போது அதுசட்ட சபைக்கு வந்து விட்டது. கோயிலுக்குள் விடுவதற்கு மனமில்லாதவனும்கூட நம்முடன் சேர்ந்து கொண்டு கோவிந்தா போட வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டானா இல்லையா? அரசியல் புரட்சியும் செய்கின்றோம். அரசனே வேண்டிய தில்லை என்றும் சொல்லுகின்றோம். பல தேசங்களில் இப்புரட்சிகள் வெற்றி பெற்றும் இருக்கின்றன. இவற்றை நாமும் தைரியமாய் சொல்லவும் முன்வந்து விட்டோம். என்ன ஆய்விட்டது? நம்மைப் பொருத்தவரை இந்தப் புரட்சி களை எல்லாம் நாம் ஏன் செய்தோம். ஏழை மக்கள் கஷ்டம் நீங்கவும் பாடுபடுகின்ற மக்களை சோம்பேரிகள் ஏய்த்து அவர்களது பலன்களை
எல்லாம் அடையாமல் இருக்கவும் தான் செய்தோமே ஒழிய செய்கின்றோமே ஒழிய மற்றப்படி யாரிடமாவது குரோதமோ வெறுப்போ பொறாமையோ துவேஷமோ பலவந்தமோ மனதில் வைத்துச் செய்தோமா? என்று யோசித்
துப் பாருங்கள். மனிதன் என்று ஒருவன் இருப்பானேயானால் அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால் எவனும் பரிதாபப் பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்து விட்டால் அவனுக்கு பாபமோ, நரகமோ, சட்டமோ, நீதியோ, பழக்கமோ, வழக்கமோ ஒன்றும்
எதிரில் இருக்க முடியாது.
ஆதலால் இன்றைய நிலைமையானது சகிக்க முடியாத கஷ்டத்தாலும் வேறு அனேக வழிகளில் பார்த்துப்பார்த்து முடியாததாலும் ஏற்பட்டதாகும்.
நாம் அடுத்த ஜன்மத்தை நம்பி வெகுகாலம் வீணாக்கி விட்டோம்.
மேல் லோகத்தை நம்பி வெகுகாலம் வீணாக்கிவிட்டோம். தலைவிதியை நம்பி வெகு காலம் பாழாக்கி விட்டோம். ஒழுக்கத்தையும், நியாயத்தையும், சட்டத் தையும் நம்பி வெகு காலம் நாசமாக்கி விட்டோம். இப்போதும் தேசத்தையும், தேசீயத்தையும் நம்பி மறுபடியும் வெகு காலம் பாழாக்கி வருகி றோம். இவைகளை நம்புவது இவைகளுக்கு கட்டுப்படுவது இவைகளுக்காக. பாடுபடுவது எல்லாம் முட்டாள்தனம் என்பதை உணர்ந்தோம். இனி மனித. சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேரியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபடவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன்.
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இது குற்றமானால் இது பாபமானால் இந்தக் குற்றத்தையும், பாபத் தையும் குஷாலாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியதுதான் வரவேற்க வேண்டியது தான்.ஆனால் நமது கருத்தும், செய்கையும் பரிதாபத்தை ஆதார மாய்க் கொண்டதாகவும், குறோதத்தையும், பலாத்காரத்தையும் வெறுத்த
தாகவும் இருக்க வேண்டுமெயொழிய மற்றபடி வீண் அர்த்தமற்ற ஆத்திரத் தையும், துவேஷத்தையும், முரட்டுத் தனத்தையும் குறிகொண்டதாய் இருக்கக் கூடாது.
குறிப்பு: 30.017933 இல் கோவை சுயமரியாதைச் சங்கத்தாராலும் மற்ற
சங்கத்தாராலும் வழங்கிய உபசாரப் பத்திரத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 05.02.4933
குடி அரசு - 1933 M) 90
தீண்டாமை விலக்கு இரகசியம்
இது சமயம் இந்தியாவில் நடைபெற்று வரும் “தீண்டாமை விலக்கு” வேலையானது தீண்டாதாரெனக் கருதப்படும் மக்களுக்கு சமூக வாழ்வி லுள்ள சகலவித கஷ்டத்தையும் ஒழிப்பதற்காக ஏற்பட்டதல்லவென்றும். அதுவெரும் இந்து மத பிரசாரத்திற்காகவே துவக்கப்பட்டு, அந்த முறை யிலேயே நடந்து வருகின்ற தென்றும் இதற்கு முன் பல தடவைகளில்
எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.
உண்மையான தீண்டாமை விலக்கு என்பது மனித சமூக ஜீவ காருண்யத்தையும் எத்துறையிலும் சமதர்ம தத்துவத்தையும் கொண்டதே ஒழிய அது எந்த விதமான மத சம்பந்தத்தையும் கொண்டதல்ல வென்பதே நமது துணிபு. அன்றியும் அது பெரிதும் பகுத்தறிவையும், சுகாதாரத்தையும், சமதிருஷ்டியையும் மாத்திரமே கொண்டு யோசிக்கப்பட வேண்டியதே தவிர, மற்றபடி வேறு எந்த விஷயத்தையும் பற்றி கவனிக்க அதில் சிறிதும் இட மில்லை என்பதும் நமது துணிபாகும். ஆனால், இன்று நடைபெறும் தீண்டாமை விலக்கு பிரசாரம் என்ன கருத்தின் மீது என்ன ஆதாரத்தின் மீது நடைபெறுகின்றது என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்.
முதலாவதாக, இந்தப் பிரச்சினை இப்போது இவ்வளவு தூரம் விளம்பரப்படவும், முக்கியமானதாய்க் கருதப்படவும் ஏற்பட்ட காரணம். என்ன? என்பதை சற்று யோசிப்போம். அதாவது, சென்ற வருஷம் நடந்த சட்ட மறுப்பு மறியல் கிளர்ச்சிகளின் போது ஆங்காங்குள்ள தேசியத் தலைவர்கள் என்பவர்களை தீண்டப்படாத மக்கள் என்பவர்களும், அவர். களுக்காக வேலை செய்து வருபவர்களும் சில கேள்விகள் கேட்டதும் அதற்கு அத்தேசியத்தலைவர்கள் பதில் உரைத்ததும் யாவரும் அறிந்ததே யாகும். என்ன வென்றால் “ஐயா தேசிய தலைவர்களே! தேசிய வாதிகளே!
சிறிது காலத்திற்கு முன் தீண்டாமை ஒழியாமல் இந்தியாவுக்கு சுயராஜ்யம் வராது என்றும், வந்தாலும் நிலைக்காது என்றும் சொன்னீர்களே! இப்போது தீண்டாமையைப் பற்றிய பேச்சை அடியோடு மறந்து விட்டு வேறு எது ஏதோ
பேச்சுப் பேசுகிறீர்களே இதன் மர்மம் என்ன”? என்று கேட்ட காலத்தில் தோழர் காந்தியார் உள்பட “இப்போது தீண்டாமை என்பது அவ்வளவு
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
முக்கியமானதல்ல, சுயராஜியமே முக்கியமானது. ஏனெனில் சுயராஜியம் வந்துவிட்டால் தீண்டாமையை ஒரே ஒரு உத்தரவில் ஒழித்துவிடுவோம். ஆதலால் இப்போது உப்புக் காய்ச்சுவதும், மதுவிலக்கு மறியல் செய்வதும், அன்னியத் துணி விலக்கு மறியல் செய்வதுமே தான் முக்கியமான காரியம்” என்று சொல்லி வந்ததும் அதற்கு தீண்டப்படாத மக்களும் அவர்களது அனுதாபிகளும் பதில் சொல்லுகையில்,
“தீண்டாமையை சுயராஜியம் வந்த பிறகு ஒரு உத்திரவில் ஒழித்து விடக்கூடுமானால் உப்பு வரியையும், கள்ளுக்கடைகளையும், அன்னியத் துணிகளையும் ஒரு உத்திரவில் ஒழித்து விட முடியாதா” என்று கேட்டதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லும் முறையில் தோழர் ராஜ கோபாலாச்சாரியார் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது “எந்தெந்த விஷயத்தை எவ்வெப்பொழுது கவனிப்பது என்பதான காரியங்கள் காந்தி யாருடைய இஷ்டத்தைப் பொருத்ததாகையால் அதைப் பற்றி நாங்கள் ஒன்றும் பதில் சொல்ல முடியாது” என்று பதில் சொன்னதும் வாசகர்கள் அறிந்ததேயாகும்.
இப்படி இருக்க உப்புவரி நீக்கப்படாமலும், கள்ளுக்கடை எடு படாமலும், அன்னியத்துணி நிறுத்தப்படாமலும் இருக்கும்போதும், சுயராஜ்யம் ஏற்படாமல் இருக்கும்போதும் இப்போது திடீரென்று தீண்டாமை விலக்குக்கு ஏற்பட்ட அவசரமென்ன? என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
தீண்டப்படாத மக்களுக்கும், அவர்களிடம் உண்மையான அனுதாபம் உள்ளவர்களுக்கும், தீண்டாமை விலக்கு விஷயத்தில் காங்கிரசினிடமும், தேசியத்தலைவர்கள் என்கின்றவர்களிடமும் இருந்த நம்பிக்கையானது அடியோடு மறைந்துபோய் அவர்கள் “புற மதஸ்தர்” களையும் அரசாங்கத் தாரையும் அடைக்கலம் புக உறுதி செய்து கொண்டு சிலர் புறமதம் புகுந்தும், அரசாங்கத்தாரிடம் தங்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் கேட்டும் அது பெறுவதற்காக புற மதஸ்தர்கள் என்பவர்களுடன் சில ஒப்பந்தம் செய்து கொண்டும் தைரியமாய் வெளிக் கிளம்பியதுடன் தீண்டாதார் தலைவர்கள். என்பவர்களும் தீண்டாதாருக்குத் தலைவர் என்றும் இந்தியர்களுக்கும் ஏக. தலைவர் என்றும் சொல்லிக்கொள்ளப்பட்ட காந்தியாரையே “நீர் எங்க
ளுக்குத் தலைவருமல்ல பிரதிநிதியுமல்ல நாங்கள் உங்களை தலைவராகவோ பிரதிநிதியாகவோ ஏற்றுக்கொள்வது மில்லை” என்று லண்டன் வட்ட மேஜை
மகாநாட்டில் உலகோரறிய கர்ஜ்ஜனை புரிந்ததோடல்லாமல் வெகு கடுமை: யாகத் தாக்கி பேசியும், அதாவது காந்தியாரைப்பார்த்து “நாங்கள் ஒருவரை: எங்கள் பிரதிநிதி அல்ல என்று சொன்ன பிறகும்கூட சிறிதும் வெட்கமில்லா
மல் மறுபடியும், மறுபடியும் எங்கள் பிரதிநிதி என்று பாத்தியம் கொண்டாடு.
குடி அரசு - 1933 M) 92
வது ஒழுங்கானவர்களுக்கு அழகல்ல” என்றும் சொன்னதும் வாசகர்களுக்கு
ஞாபகமிருக்கும்.
இப்படிச் சொன்ன பிறகே அரசாங்கத்தார் காந்தியார் தடுத்ததையும் லட்சியம் செய்யாமல் தீண்டாதாருக்கு தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்து தீண்டப்படக் கூடாதவர்களுக்கே தங்களது தீண்டாமையை நீக்கிக்கொள்ள அவகாசம் ஏற்படுத்திவிட்டதும் வாசகர்களுக்கு நன்றாய்த் தெரியும்.
இவ்வளவும் தவிர இந்த இரண்டு வருஷகாலத்தில் சென்னை மாகாணத்திலும், சுதேச சமஸ்தானங்களிலும் மாத்திரம் ஆயிரக்கணக்கான தீண்டப்படாத பேர்கள் என்பவர்கள் இந்துமதம் என்பதைவிட்டு விட்டு புற மதங்கள் என்பவைகளைத் தழுவிக்கொண்டதும், இந்து மதத்தில் இருந்த வர்களிலும் அனேகர் தங்களுக்கு “மதமும் வேண்டாம், கோவிலும் வேண்:
டாம், கடவுளும் வேண்டாம்” என்று சொன்னதும் அந்தப்படியே பலபல மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதும், இந்த தீர்மானங்கள் இந்தியா தேசம் முழுவதும் அனேகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டும். பிரசாரங்கள் செய்யப்பட்டும், வெற்றி முரசுகள் அடிக்கப்பட்டதும் வாசகர் களுக்குத் தெரியும்.
இவ்வளவு அல்லாமல் மற்றும் ஒரு பெரிய கிளர்ச்சி அதாவது,
“காங்கிரசும், தேசீயமும், காந்தீயமும், பணக்காரர்களுக்கும், மேல் ஜாதிக்காரர்.
களுக்கும், படித்த மக்களுக்குந் தான் பிரதிநிதித்துவம் பொருந்தியதே யொழிய ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், குடியானவர்களுக்
கும், தொழிலாளிகளுக்கும் பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல”வென்று சொல்லி, காங்கிரசு ஒழிய வேண்டும். காந்தீயம் ஒழிய வேண்டும் என்று காந்தியார். முன்னிலையிலேயே கோஷமிடப்பட்டு. கருப்புக்கொடி பிடித்ததும் அவருக்கே கருப்புமாலை போட்டதும் ஆகிய காரியங்களும், வாசகர் களுக்கு நினைவிருக்கும்.
ஆகவே இவ்வளவு காரியங்களும் நடந்த பிறகும், மற்றும் தேசீயத் தலைவர்களுக்கு இதுசமயம் வேறு எந்தவிதமான கிளர்ச்சியும் மும்முரமாய்ச் செய்ய முடியாமல் போனபிறகும் தான் “தீண்டாமை விலக்கு” - “ஹரிஜன சேவை” - “கோவில் பிரவேசம்” ஆகிய காரியங்கள் தாண்டவமாடுகின்றன. அதுவும் எதற்காக என்றால் மதத்துக்காக என்றும், அதிலும் இந்துக்கள்தான் இதில் ஈடுபட வேண்டும் என்றும் இது கலப்பற்ற மதப்பிரசாரமே என்று பெயரிட்டும், வரையறுத்தும் கிளர்ச்சிகள் செய்யப்படுகின்றன.
பிரசார முறைகள் எப்படியிருக்கின்றன? என்று பார்த்தாலோ அவை தீண்டாமைக்கு மதத்தில் ஆதாரமில்லை என்று ஒருவர் சொல்லுவதும், தீண்டாமைக்கு மதத்தில் ஆதாரமிருக்கின்றது என்று மற்றவர்கள் சொல்லு வதும், தீண்டாமை ஒழிந்தால் ஜாதி முறை கெட்டுப்போகும் என்று ஒருவர்.
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சொல்லுவதும், தீண்டாமை ஒழிந்தால் ஜாதி முறை கெடாது என்று மற்றவர் சொல்லுவதும், தீண்டாமை ஒழிந்தால் வருணாச்சிரம முறை ஒழிந்துவிடும் என்று ஒருவர் சொல்லுவதும் தீண்டாமை ஒழிந்தால் வருணாச்சிரம முறை அழியாது என்று ஒருவர் சொல்லுவதும், தீண்டாமை பாராட்டாவிட்டால் கோவில்களின் பரிசுத்தத்தன்மை கெட்டு விடும் என்று ஒருவர் சொல்லுவதும், பரிசுத்தத்தன்மை கெட்டு விட்டால் சுத்தம் செய்து கொள்ளலாம் என்று மற்றவர்கள் சொல்லுவதும் இன்னும் இதுபோன்ற பிற்போக்கான முறைகளில் தான் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.
தோழர் காந்தியவர்களே மாடுதின்பவர்கள் கோவிலுக்குள் பிரவே
சிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் சென்று வந்த பிறகு கோவிலை சுத்தி செய்ய வேண்டுமென்பதை அனுமதித்தும் ஜாதி முறைகளையும் வருணாச்சிரம பிரிவுகளையும், தொழில்களையும் ஆதரித்
தும் பேசி அவைகளைப் பலப்படுத்தி வருவதும் யாவரும் அறிந்ததே தவிர மற்றபடி யாரும் இதைக் கற்பித்துச் சொல்லுவதல்ல.
மற்றும் தீண்டாமை ஒழிக்க சட்டம் செய்ய இந்திய சட்ட சபையில் மசோதா கொண்டு வந்து விளம்பரம் பெற்ற தோழர் சி.எஸ்.ரங்கையர் அவர்.
களுக்கும் தன்னுடைய மசோதாவால் வருணாச்சிரம முறையும், ஜாதி பாகு பாடு முறையும் கெடாதவாறு பார்த்துக்கொள்ளுவதாக டில்லி தீண்டாதார் மகா
நாட்டுத் தலைமை உரையில் சொல்லியிருக்கிறார். இதுவும் இவ்வார தினசரி. களில் காணப்படுகின்றனவேயொழிய நாமாகக் கற்பித்துக் கூறுபவையல்ல.
மற்றும் தோழர் பண்டித மாளவியா அவர்கள் தமது தீண்டாமை விலக்குத் திட்டத்தில் தீண்டாதார்களுக்குப் பூணால் போட வேண்டுமென்றும்,
பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும், பழைய மாமிசம் மாட்டு மாமிசம் சாப்பிடக்கூடாதென்றும், சாராயம் குடிக்கக்கூடாது என்றும், துளசி மாலை அஷ்டாக்ஷர மந்திரம் அல்லது ருத்திராக்ஷ பஞ்சாட்சரமந்திரம் ஆகிய ஏதாவதொரு மந்திரமும், தீக்ஷையும் பெற்று இருக்க வேண்டுமென்றும், ஸ்நானம், ஜபம், தபம் முதலியவைகள் செய்யவேண்டுமென்றும், இவை களுக்குக் கட்டுப்பட்டு தீண்டாதார்களுக்கு ஆலயப்பிரவேசம் கொடுக்க லாமென்றும், திட்டம் போட்டிருக்கிறார்கள்.
மற்றும், தோழர் ராஜகோபாலாச்சாரியாருடைய தீண்டாமை பிரசாரத்
திலும் “நந்தன்” “திருப்பாணன்'” ஆகியவர்களின் உதாரணத்தைச் சொல்லி அவர்கள் கோயில் பிரவேசம் பெற்ற நிபந்தனையைக்காட்டி பிரசாரம் செய்வதுமான முறையிலேயே தீண்டாமை விலக்கும் ஹரிஜன சேவையும் கோயில் பிரவேசக் கிளர்ச்சியும் நடைபெறுகின்றன. இவைகளை நன்றாய் கூர்ந்து யோசித்துப் பார்த்தால், இந்த சேவைகளிலும், கிளர்ச்சிகளிலும் உண்மையான தீண்டாமை விலக்கு என்பதின் வாசனையாவது காணப் படுகின்றதா என்று கேட்கின்றோம்.
குடி அரசு - 1933 M) 94
சுயமரியாதைக்காரர்கள் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியில் காங் கிரசுக்காரருடன் சேர்ந்து ஒத்துழைக்கவில்லை என்று சில இடங்களில் காங்கிரசுக்காரர்களாலும் பாமரமக்களாலும் பழி கூறப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. உண்மையான-நாணையமான தீண்டாமை விலக்குக்காரர் களுக்கு இந்த மாதிரியான மேல் கண்ட சூட்சிக் கிளர்ச்சியில் சேர மனம் வருமா என்பதை சற்று நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படியாய் வேண்டு கின்றோம். ஒரு மனிதனை, ஒருமனிதன் தீண்டக்கூடாது என்பதற்கு என்ன
காரணம்? என்று கேட்டு அதற்கு தகுந்த நியாயத்தை எடுத்துச் சொல்லுவதை விட்டு விட்டு வருணாச்சிரமம் ஜாதிமுறை மாட்டு மாமிசம், பஞ்சாட்சரம், அஷ்டாச்சரம், நந்தன், பாணன் ஆகிய பேச்சுகளும் நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளும் ஏன் பேசப்பட வேண்டும்? என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இது சமய சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் மதத்தையும் ஜாதி யையும் காப்பாற்றும் வேலையைச் செய்வது என்கின்ற சூட்சியே தவிர மற்ற
படி இதில் உள்ள நாணையமோ நன்மையோ என்ன இருக்கின்றது? மதங் களால், ஜாதிகளால் நாட்டிற்கும் மனித சமூகத்திற்கும் ஏற்பட்ட கெடுதிகளை உணர்ந்து அவைகளை ஒழித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று கருதியிருக்கின்ற மக்கள் இந்த சூட்சிக் கிளர்ச்சியில் சேர முடியுமா என்பதை மறுபடியும் யோசியுங்கள்.
உலக நடப்புக்கு சமூக வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால், வேண்டும் என்றே நாமும் ஒப்புக் கொள்ளு கிறோம். ஆனால் அது எல்லோருக்கும் சமமாய் இருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றோம்.
ஆகவே, மேற்கண்ட எல்லோருக்கும் சமமான திட்டம் என்பது இந்தத் தீண்டாமை விலக்கு கோவில் பிரவேசக்கிளர்ச்சி ஹரிஜன சேவை ஆகிய வைகளில் கடுகளவாவது இருக்கின்றதா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
மேலும் இன்று நடக்கும் மேல்கண்ட கிளர்ச்சிகள் எதற்காக, எதுவரை நடக்கப்போகின்றது என்பதை சற்று கவனித்தோமானால் உண்மை விளங்கி
விடும். அதாவது தீண்டப்படாத மக்களின் தனித்தொகுதி வாயில் மண்ணைப் போடவும் (போட்டாய் விட்டது! மற்றும் இந்த முடிவு ராஜிமுடிவு ஆட்சேபிக் கப்படாமல் சட்ட மூலமாய் உறுதிப்பட்டு வெளியாகும்வரை தீண்டப்படாத மக்களுக்கு ஏதோ பிரமாதமான நன்மைகள் செய்யப்போவதாகக் காட்டவும், அவர்கள் தங்கள் தனிப்பிரதிநிதித்துவம் போய்விட்டதை ஞாபகத்துக்கு கொண்டு வந்து கவலைப்படாமல் இருக்கவும், ஆன காரியங்களுக்காகவே இவை நடைபெறுகின்றன. அன்றியும் அரசியல் சீர்திருத்த சம்பந்தமாய் காங்
கிரசின் கூப்பாடுகளுக்கு விரோதமாய் மகமதியர்களோ, கிறிஸ்துவர்களோ, தீண்டப்படாதார்களோ தட்டிப்பேசாமல் இருப்பதற்காக சர்வ கட்சி மகாநாடு,
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இந்து முஸ்லீம் மகாநாடு, தீண்டாமை விலக்கு வேலை ஆகியவைகள் மூலம் அழுத்தி வைக்கவும், ஆன காரியங்களுக்கே இவை நடைபெருகின்றன. அரசியல் சீர்திருத்தம் என்பது வெளியாகி அது உறுதியானவுடன் “கையை வளை பார்ப்போம்” என்று இந்த காங்கிரசுக்காரரும், மேல்ஜாதிக்காரரும் சொல்லப்போகின்றார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகை
யால் மதமும், ஜாதியும், மனிதசமூக முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், சமத்துவத்திற்கும் விரோதமாய் இருக்கின்றன என்று கருதியவர்கள் எவரும் இன்றைய தீண்டாமை விலக்குக்கும், மத நடுநிலைமைக்கும், மத ஒற்றுமை மகாநாட்டிற்கும் சிறிதும் சம்மந்தம் வைத்துக்கொள்ள முடியாத நிலைமை யிலேயே இருக்கிறார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல் அதன் உள் அந்தரங் கங்களையும் , அவற்றின் பலாபலன்களையும் வெளியில் எடுத்துச்சொல்ல வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 05.02.1933
குடி அரசு - 1933 M) 96
வருந்துகிறோம்
சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு சதா உழைத்துவரும் மாயவரம் தோழர் சி. நடராஜன் அவர்களது அருமைத் தாயாரும் நாளது 1-2-33 தேதி காலை மரணமடைந்த சேதி கேட்டு வருந்துகிறோம். சென்ற 7, 8 மாதங்க
ளுக்கு முன்புதான் தோழர் நடராஜனது தந்தையாரும், அவரது சகோதரியும் காலஞ்சென்றார்கள்.அம்மையாரவர்கள் அன்று முதல் தனது கணவன் இறந்த.
துக்கத்தாலும், குமாரத்தி இறந்த துக்கத்தாலும் ஆழ்ந்தவராகி அதே கவலையாய் இருந்து இம்மாதம் முதல் தேதி காலமாகி விட்டார். இதெல்லாம் அதிசயமற்ற காரியமாயினும், இயற்கையேயாயினும் தந்தையையும், தாயை
யும் 8 மாத காலத்தில் பரி கொடுக்க நேர்ந்த தோழர் நடராஜனவர்களைப்
பற்றியும், அவரது இளைய சகோதரரான சப்ரிஜிஸ்டரார் தோழர். சி. சுப்பையா பி.ஏ. அவர்களைப் பற்றியும் அனுதாபப்படாமல் எவரும் இரா. அம்மை யாரவர்கள் கடைசிவரையிலும் மாயவரம் செல்லும் சுயமரியாதைத் தொண்டர். களுக்கும், அன்பர்களுக்கும் பொங்கிப் பொங்கிப் போடுவதில் சிறிதும். சலிப்பில்லாமல் சந்தோஷத்துடனேயே உபசரிப்பார்கள். பெரும்பான்மை யான தொண்டர்களுக்கு மாதக்கணக்காய் இளைப்பாருவதற்கு மாயவரம்.
தோழர் நடராஜன் அவர்கள் வீடு ஏற்றதாய் இருந்துவந்ததற்கும் காரணம் இந்த அம்மையாரின் அன்பு நிறைந்த உபசாரமேயாகும். அப்படிப்பட்ட அம்மை
யார் காலமானதானது மிகவும் விசனிக்கத்தக்கதாகும்.
தோழர்கள் நடராஜனும், சுப்பையாவும், அவர்களது சிறிய தந்தையார். முத்தையாவும் இயற்கையை செவ்வனே உணர்ந்த ஞானவான்களானதால் அவர்களுக்கு உலக வழக்கப்படியான ஆறுதல் தேவையில்லை என்றே கருதுகிறோம்.
குடி அரசு - இரங்கலுரை - 05.02.1933
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
[ o B 2 ° மிரட்டல்
காந்தியவர்கள் “உயிர் விடுகிறேன்! உயிர் விடுகிறேன்” என்று சர்க்காரை மிரட்டலாம், தாழ்த்தப்பட்ட வகுப்பாராகிய தீண்டப்படாதார். என்பவர்களை மிரட்டலாம். ஆனால் பார்ப்பனர்களை மாத்திரம் மிரட்ட
முடியாது. ஏனென்றால் இந்த “மகாத்மா” உயிர்விட்டால் அவருக்கு சமாதி
கட்டி, குருபூஜை, உற்சவம் செய்யச் செய்து விட்டு அதன் பேராலும் பலருக்கு பிழைப்பு ஏற்படுத்திக் கொண்டு மற்றொரு மகாத்மாவையும் சிருஷ்டி செய்து கொள்ள அவர்களால் முடியும். ஆதலால் காந்தி மிரட்டல் பார்ப்பனர்களிடம்
மாத்திரம் செல்லாது. ஆகையால் காந்தி மகாத்மா பட்டம் நிலைக்க வேண்டு. மானால் ஹரிஜன சேவையை விட்டு விட்டு “மதத்திற்காகத்தான் சுயராஜியம் கேட்கின்றேன்” என்று உப்புக் காய்ச்சும் வேலைக்கோ, ராட்டினம் சுத்தும்படி செய்யும் வேலைக்கோ, ஏழைகள் பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்
படக் கூடாது என்ற உபதேசம் செய்யும் வேலைக்கோ திரும்புவது தான் நல்ல யோசனையாகும். இல்லா விட்டால் எப்படியாவது ராஜி செய்து கொள்ளுவது எல்லாவற்றையும் விட நல்லதாகும்.
குடி அரசு - கட்டுரை - 05.02.1933
குடி அரசு - 1933 M) 98
உன்ன கோவில்கள் கபோறாதா ?
இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின் றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாக மாறி கழுதைகள் போய் ஒண்டுவதற்குக்கூடலாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒண்ணரை லட்சம்
ரூபாய் செலவு செய்து ஓர் புதுக்கோயில் கட்டி அதில் ஆதிதிராவிடர்களை: அனுமதித்திருக்கிறார்களாம். இதை தேசியப்பத்திரிகைகள் போற்றுகின்றன. இது என்ன அக்கிரமம்? எவ்வளவு முட்டாள்தனம்? என்பதையோ சிந்தித்துப்
பார்க்க வேண்டுகிறோம். பழய கோவில்களில் ஆதித்திராவிடர்களை விட வில்லையானால் அதற்காக புதுக்கோவில்கள் கட்டுவது பித்தலாட்டமான காரியமா? அல்லவா? தீண்டப்படாதவர்களுக்குக் கோவில் பிரவேசம் மறுப்பது உயர்வு தாழ்வு பேதத்தைக் காட்டுவதாய் இருக்கின்றதே என்று சொன்னால் அதற்கு பதில் புதுக்கோவில் கட்டி அவர்களுக்குப் பிரவேச மளித்துவிட்டால் உயர்வு தாழ்வு ஜாதி வித்தியாசம் ஒழிந்து விடுமா என்று கேள்க்கின்றோம். தேசீயம் என்ற பித்தலாட்ட சூழ்ச்சி என்று ஆரம்பமானதோ அன்று முதல் இன்றுவரை தேசீயத்தலைவர் முதல், வாலர்கள் வரையில் ஒவ்வொரு விஷயத்திலும் இந்தமாதிரியான சூழ்ச்சிகளும், பித்தலாட்டங் களுமே நடைபெற்று மக்களையும், முழு மூடர்களாக்கி வருகின்றது.
என்றுதான் இந்த புரட்டுகளும், கேடுகளும் ஒழியுமோ?
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 05.02.1933
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
புதுமை! புதுமை!!!
எண்றும் கேட்மூராத புதுமை!!!
- சித்திரபுத்திரன்
புதுமை! புதுமை!! என்றும் கேட்டிராத புதுமை!!! என்றால் என்ன?
முதலாவது:- வெகுநாளாய் மறைந்திருந்த சித்திரபுத்திரன் திடீரென்று தோன்றியது ஒரு புதுமை.
இரண்டாவது:- சித்திரபுத்திரன் வெளியிடப் போகும் சேதி ஒரு
புதுமை.
மூன்றாவது:- வேடிக்கை புதுமை என்ன வென்றால்,
தோழர்களே! கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மகாமக விசேஷத்தில் ஒரு புதுமையான வியாபாரம் நடைபெறப் போகின்றது.
தேசத்தில் பஞ்சம்! பஞ்சம்! பணப்பஞ்சம்!!! நில்லு நில்லு யாருக்கு பஞ்சம்?
சோற்றுக்கு இருந்தால் மாத்திரம் போதாது. நாடகத்துக்கு பணம் வேண்டாமா? குடிக்கிறதுக்கு பணம் வேண்டாமா? கூத்தியாளுக்கு பணம் வேண்டாமா? மோட்டாருக்கு பணம் வேண்டாமா? இந்த இழவுகள் எல்லாம் எப்படியோ போகட்டும் என்றால் எலக்ஷனுக்காவது பணம் வேண்டாமா? நில்லு நில்லு ஒரு சங்கதி என்னவென்றால் எலக்ஷனுக்கு பணம் என்னத்
துக்கு? செலவு செய்த பணம் மெம்பர்-பிரசிடெண்ட் உத்தியோகம் கிடைத்த வுடன் சம்பாதித்து ஆன செலவும் போகமீதியும் ஏற்படுமே அதை ஏன் இதில்
சேர்க்கிறாய் என்று கேட்பீர்கள். அது சரியான கேள்வியாகாது. ஏனெனில் தோற்றுப் போகிறவர்களுக்கும் செலவாகும். பிரசிடென்ட் போட்டி சேர்மன் இல்லாவிட்டால் மெம்பர்களுக்குப் பணம் கிடையாது. மற்றும் பல காரணத் தாலும் எலக்ஷன் செலவு உண்டு. சிநேகிதனுக்காக என்று எத்தனை பேர். “இதாவது ஒரு வேலை கிடைத்ததே” என்று வீட்டுப் பணத்தை பாழாக்கு கிறவர்கள் எவ்வளவு பேர்? ஆகவே பல வழிகளிலும் மிராசுதார்களுக்கு
குடி அரசு - 1933 M) 100
பணம் வேண்டியிருக்கிறது. கல்யாணத்தை வேண்டுமானாலும் பணத்துக்காக கொஞ்சநாள் தாமதிக்கலாம், இழவுக்கு ஒரு நாளாவது பொருக்க முடியுமா? ஆகையால் அதற்கும் வேண்டியிருக்கிறது.
போதாக் குறைக்கு சர்க்காரும் சுயமரியாதைக்காரன் பேச்சைக் கேட்டுக்கொண்டு திரிகின்றது. நில்லு நில்லு. சந்தடி சாக்கில் இதென்ன புது சங்கதி? என்று கேட்கலாம். விசேஷம் ஒன்றும் இல்லை. தஞ்சாவூர் மிராசு
தாரர்கள் மேற்கண்ட செலவை யெல்லாம் உத்தேசித்து நெல்லு கலம் 0-14-0 அணா ஆகிவிட்டதால் சர்க்காருக்குக் கிஸ்தி கட்ட பணமில்லை என்று கருதி “மிராசுதார் கூட்டம் போட்டு” “தீர்மானம் நிறைவேற்றி” கிஸ்து குறைக்க வேண்டும்; வசூலுக்கு வாய்தா கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டார்கள். இதைக் கண்ட சுயமரியாதைக்காரன் பிச்சை போடா விட்டாலும் நாயை இஸ்கே படுத்தி விடாமலாவது இல்லாமல் “என்னத்துக்காக வரி தள்ள வேண்டும். குடிக்கும் கூத்திக்கும் வைதீகத்திற்கும் செலவுக்குப் பணம் இல்லாவிட்டால் அதற்கு சர்க்காரார் பொருப்பாளியா? கண்டிப்பாய் யாருக்கு வரி குறைத்தாலும் தஞ்சாவூருக்கு மாத்திரம் வரி குறைக்கக்கூடாது” என்று சர்க்காருக்கு கம்பி இல்லாத தந்தி பேசி கடைசியில் “கூட்டமும்” “தீர்மான
மும்” குப்பைத் தொட்டியில் போடும்படி செய்து விட்டார்களே. இந்த சம.காரருடைய நன்றி கெட்டத்தனம் எவ்வளவு என்று பாருங்கள். சும. வுக்கு வேலை செய்கிற வெட்டி ஆள்கள் எல்லாம் தஞ்சாவூர் ஜில்லாக்காரர். இதனால் வெகுகுடும்பம் கெட்டுப்போய் வெகு பேர்கள் சோம்பேரிகளாகி விட்டார்கள். சு.ம. காரனை வண்டியில் வைத்து முதல் முதல் இழுத்தவர்கள் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள். தஞ்சாவூர் ஜில்லாக்காரர் தான் 6 குதிரை கட்டி இழுத்தவர்கள். தஞ்சாவூர் ஜில்லாகாரர்தான் சு.ம.காரன் வீட்டு சுவற்றில் ஒரு சதுர அடி சுவறுகூட கண்ணுக்குத் தெரிய மார்க்கமில்லாமல் வீட்டுக்கார அம்மாள் கோபப்பட கோபப்பட சுவரெல்லாம் ஆணி அடித்து மாட்டி இருக்கும் “உபசாரப் பத்திரம்” எல்லாம் முக்கால் வாசி முனிசிபாலிட்டி உள்பட தஞ்சாவூர் ஜில்லாக்காரருடையது தான், இன்னும் என்ன என்னமோ இவ்வளவும் இருக்க தஞ்சாவூருக்கு வரி குறைக்க வேண்டாம் என்றால் இது எவ்வளவு நன்றிகெட்ட தனம் - உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் தனம் என்று பலர் கேள்கக்கூடும். இதைப் பற்றி பிறகு பேசிக் கொள்ளலாம்.
இது எப்படியோ இருக்கட்டும் எடுத்த சங்கதியை விட்டு விட்டு சித்திர புத்திரன் எங்கெங்கோ வாய் வைத்து விட்டான் என்ற இலக்கணப் பிழை ஏற்படாமல் பழைய சங்கதிக்குப் போகலாம்.
ஆகவே இப்படிப் பட்டபஞ்ச காலத்தில் ஒரு புதுமையான வியாபாரம் நடைபெறப் போகின்றது. என்ன அநியாயம்! என்ன அறநியாயம்!! என்ன அநியாயம்!!! மனதில் நினைக்கவே பயமாய் இருக்கிறது, வாயில் பேசவே பயமாய் இருக்கிறது. எப்படிதான் உலகமறிய கையில் எழுதுவது என்று
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
தோன்றுகின்றது. ஆனாலும் புதுமையை வெளிப்படுத்தாத பத்திரிகை இருந்தென்ன? செத்தென்ன? இந்த நல்ல புதுமையை வெளியிடாத சித்திர
புத்திரன் இருந்தென்ன அந்தமானுக்கு போயென்ன? ஆகையால் போவதற் குள் அதை வெளியிட்டு விட்டு போய்விடலாம் என்று துணிந்து சொல்லத் துணிகின்றேன்.
அதாவது விபசாரத்தனம் என்றால் இத்தனை காலம் பெண்களுக்கு மாத்திரந்தான் சொந்தமாய் இருந்தது. இப்போது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு அது ஆண்களுக்கும் சொந்தமாய் விட்டது. எப்படி என்றால் கூம.காரன் பெண்களை காப்பாற்றப் போவதாய்ச் சொல்லி “விபசாரதோஷம் பெண்களுக்கு மாத்திரம் தான் சொந்தமோ ஆண்களுக்கும் அது. ஏன் சொந்தமாய் இருக்கக்கூடாது” என்று பேசிப் பேசி சும்மா கிடந்த ஆண்களைத் தூண்டிவிட்டு கொஞ்சங் கொஞ்சமாய் ஆண்களையும் விபசார தோஷத்துக்கு ஆளாகும்படி செய்து விட்டார்கள். அது இப்போது “தோலைக்
கடித்து, துருத்தியைக் கடித்து, செருப்பைக் கடித்து கடைசியில் வேட்டை நாய் ஆனது” போல் ஆண்கள் விபசாரித்தனமானது பெண்கள் விபசாரித்தனம் போலவே அதாவது திருட்டுத்தனமாய்ச் செய்து வெளிப்படையாய் செய்து, வீட்டை விட்டுக் கிளம்பி கூத்தியாளாகி விலை மாதாகிச் சந்து பொந்து குச்சுக்காரியாகி, கடைசியாக உற்சவத்தில் வியாபாரம் நடத்தும் குச்சுக்காரி என்கின்ற நிலைமைக்கு எப்படி வந்துவிட்டதோ அது போலவே ஆண்களும் விபசாரனாகி மாமாங்க உற்சவத்தில் சில அறைகள் வாடகைக்கு வாங்கிக்கொண்டு பணத்துக்காக பெண்களிடம் பணம் வாங்கிக் கொண்டு விபசாரத்தனம் செய்வது என்கின்ற துணிவின் மீது இப்போதே பலர். கும்பகோணம் வந்து இறங்கிவிட்டார்கள். அதற்காக சில வீடும் பிடித்துக் கொண்டார்கள். இவர்களுக்கு தரகர்களாக சில பெண்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் உற்சவத்திற்கு பெண் விபசாரிகளுக்கு தரகர். களாய் இருக்கும் ஆண் தரகர்கள் மற்ற ஆண்களிடம் எப்படி வந்து, சார் கொஞ்சம் பொடி கொடுக்கிறீர்களா என்று கூப்பிட்டு, இந்த கடுக்கன் எங்கு வாங்கினீர்கள்! இந்த மோதிரம் எங்கு வாங்கினீர்கள் ஜில்ல்ல்லென்று ஜொலிக்கின்றதே என்று ஆரம்பித்து மெள்ள மெள்ள சங்கதி ஆரம்பிப்பது போலவே சில பெண் தரகர்களும் உற்சவத்திற்கு வந்த பெரிய இடத்து பெண்களிடம் சென்று அம்மா கொஞ்சம் சுண்ணாம்பு கொடுக்கின்றீர்களா? என்று ஆரம்பித்து இந்த கம்மல் எங்கு வாங்கினீர்கள்? இந்த புடவை எங்கு வாங்கினீர்கள் என்று பேசி மெள்ள மெள்ள சங்கதிகள் பேசத் தர்ப்பித்து செய்து கூட அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
இதற்காக நகைகள், உடுப்புகள் சென்னை எஸ். எஸ். ஆனந்தம் கம்பெனியிலும், திருச்சி சிங்காரம் கம்பெனியிலும், சென்னை அருணகிரி கம்பெனியிலும் பலவித மருந்துகள் வாங்கிக்கொண்டு, நில்லு நில்லு இதென் னையா புதுமையிலும் புதுமை விபசாரத்தில் பணம் சம்பாதிக்க
குடி அரசு - 1933 M) 102
போகிறவனுக்கு மருந்தென்ன என்று கேள்க்கலாம். விபசாரத்தில் பெண்க ளுடன் ஆண்கள் போட்டிபோட முடியாது. ஏனென்றால் அது கடவுளே பெண்களிடம் கருணை வைத்து அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் விபசாரம் செய்யப்பட இடம் கொடுத்துவிட்டான். ஆண்கள் மீது கோபப் பட்டோ அல்லது பொறாமைப்பட்டோ வரையறை ஏற்படுத்திவிட்டான். இந்த வைத்தியர்கள் கடவுளோடு போட்டி போடத்துணிந்து இப்போது என்ன என்னமோ மருந்துகள் செய்திருக்கிறார்களல்லவா. ஆதலால் இந்த மருந்து களையும் வாங்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். இதனால் பெண்கள் விபசாரித்தனத்துக்கு ஆண்கள் கொடுக்க வேண்டிய சார்ஜைவிட ஆண்கள் விபசாரத்திற்கு பெண்கள் கொடுக்கவேண்டிய சார்ஜ் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். ஏனென்றால் மருந்துக்கு பணம் வேண்டியிருக்குமல்லவா? ஆதலால் கும்பகோண மாமாங்கத்துக்கு போகின்ற ஆண்கள் ஷோக் பேர். வழிகள் குடும்ப சகிதமாய் போவதானால் நில்லு! நில்லு! போவதானால் என்பதென்ன போய்த்தானே ஆகவேண்டும். ஏனென்றால் மகாமக புராணம் படித்தால் அந்த சங்கதி தெரியும். மாமாங்கக் குளத்தில் குளிக்கும் போது பெண்ஜாதியும் புருஷனுமாய் குளித்தால் தான் புண்ணியம். இல்லாவிட்டால் புண்ணியமும் போய் பாபமும் ஏற்படுவதல்லாமல் செலவு பண்ணின காசும் வீணாய் விடும். ஆதலால் சம்சாரத்துடனேயே போயாக வேண்டும்.இப்படிப் பட்ட மற்ற செலவும் இரட்டிப்பாய் விடும். இந்த பஞ்ச காலத்தில் சர்க்கார். வரி குறைக்காத காலத்தில் மிராசுதாரர்கள், பிரபுக்கள், ஜமின்தாரர்கள், மற்ற செல்வவான்கள் மாமாங்கம் போவதென்றால் இந்தப் புதிய வியாபாரத்தில் நிலைமை கஷ்டமாக ஏற்பட்டு விட்டது.
நிற்க, இந்த மாதிரி ஆண்களும் விபசார வியாபாரம் செய்வது என்பது மேல் நாட்டில்தான் வழக்கத்திலிருப்பதாய் கேள்விப்பட்டது உண்டு. ஆனால் நமது நாட்டில் சில ஆண்கள் இந்த மகாமக புண்ணிய காலத்தை உத்தேசித்து வயிற்றுக்கொடுமைக்காக பணம் சம்பாதிக்க இந்தமாதிரி ஒரு வழிகண்டு பிடித்து உற்சவத்தின் போது கடை போட்டிருக்கிறார்கள் என்றால் இது புதுமை அல்லவா?
இந்த மாதிரி ஆண்கள் விபசாரக்கடைகள் மற்ற புண்ணிய க்ஷத்திரங் களுக்கும் போகும் போல் தோன்றுகின்றது. ஆதலால் சென்னை மாகாண விபசாரச் சட்டத்தில் விபசாரம் என்பதற்கு வியாக்கியானம் செய்யும் போது “பெண்ணாயிருந்தாலும், ஆணாயிருந்தாலும் பணத்துக்காக விபசாரத்தனம் செய்தால்” என்று ஒரு திருத்தம் போடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
இதற்கெல்லாம் காரணம் இந்த மாதிரி “புண்ணிய க்ஷத்திரங்கள்”' என்றுதான் சொல்லவேண்டும். எப்படிப்பட்ட சட்டம் செய்தாலும் புண்ணிய க்ஷத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் ஒழிந்தா லல்லது விபசாரத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்து சட்டம் செய்வது
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சட்டசபை அங்கத்தினர்களின் முட்டாள்தனம் என்றுதான் சொல்லுவேன். இந்தப் புதுமை இதற்கு முன்னும் இரண்டொரு புண்ணியகேஷத்திரங்களில் இருந்து வந்திருக்கின்றது. அது எங்கே என்றால் பிள்ளைவரத்துக்காக என்று செல்லும் க்ஷேத்திரங்கள் சிலவற்றில் ஆண் விபசாரகர்கள் சிலர் இருந்து பணம் சம்பாதித்து வந்திருக்கிறார்கள், வருகிறார்கள். ஆனால் அது மத சம்பந்தமான கணக்கில் தாக்கலாய் வந்ததால் அதைப் பற்றிய விளம்பரம். இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆண்களுடைய குஷாலையும் செளகரியத்தையும் எதிர்பார்த்து வயிற்றுக் கொடுமைக்காக பெண்கள் நடத்துவதுபோல் பெண்களுடைய குஷாலையும் செளகரியத்தையும் ஆண்களின் வயிற்றுக் கொடுமையையும் உத்தேசித்து வியாபார முறையில் ஆண்கள் இந்த விபசாரித்தனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முதல்
முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த புது வியாபார முறையானது இந்த மகா புண்ணிய ஸ்தலமாகிய கும்பகோண க்ஷேத்திரத்தில் அதுவும் மகா புண்ணிய காலமான 12 வருடத்திற்கு ஒரு தடவை வரும் மகாமகபுண்ணிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் எல்லாம் வல்ல விசாலாட்சி சமேத விஸ்வநாத ஸ்வாமிகள் இதை என்றும் நிலைபெறவும், எங்கும் பரவவும் அருள்
புரிவாராக.
“எவ்வளவு தான் தெய்வத்தன்மை இருந்த போதிலும் (தெய்வத் தாலாவ தெனினும்) மனுஷ எத்தனமும் இருந்தாக வேண்டும்” என்பது போல் மகாமகத்துக்கு வரும் சதிபதிகள் ஒருவரைப்போல் ஒருவர் ஆண்களைப் போல் பெண்கள் நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற முறையில் இந்தப் புதுத்தொழிலை ஆதரிப்பார்களாக. பாவமோ புண்ணியமோ தோஷமோ விசேஷமோ எல்லாம் ஆண்களைப் போலவே தானே ஒழிய பெண்களுக்கு
என்று வேறு வித மாறுதல் இல்லை. இருந்தாலும் மகாமகத் தீர்த்த ஸ்நானத்தின் பயனாய் சர்வ தோஷமும் பாவமும் பரந்துபோகும். ஆகையால் கவனிக்க கவனிக்க தயவு செய்து கவனிக்கக் கோறுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 12.02.1933
குடி அரசு - 1933 M) 104
“காருண்ய” சர்க்கார் கவனிக்குமா?
விபசாரத் தடுப்பு மசோதா சென்னையிலும், மதுரையிலும், சீரங்கத்
திலும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாய்விட்டது. மற்றும் பல ஊர்களிலும் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாய் தெரிய வருகிறது. விபசாரத் தடுப்புமசோதா அமுலுக்கு கொண்டுவர அவசியமாகின்ற பட்டணங்கள் எது எது என்று ஒருவர் அறிய விரும்பினால் அதற்காக கஷ்டப்பட்டு தகவல் தேடவேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு சுருக்கமான வழியில் கண்டுபிடித்து விடலாம். எப்படி யென்றால் “இந்துமத” ஐதீகப்படி புராண சாஸ்த்திர நிச்சயப்படி, எந்த எந்த ஸ்தலங்கள் புண்ணிய கேஷத்திரங்களோ, அதாவது கண்ணால் பார்க்க முக்தி, காதால் கேட்க்க முக்தி, காலால் மிதிக்க
முக்தி, நெஞ்சால் நினைக்க முக்தி, அதுமாத்திரமல்லாமல் எந்த எந்த கேஷத்திரங்களை கண்டவரைக் கண்டால் முக்தி, கேட்டவரைக் கேட்டால் முக்தி, நினைத்த வரை நினைத்தால் முக்தி, மிதித்த வரை மிதித்தால் முக்தி என்று இருக்கின்றனவோ அந்தந்த க்ஷேத்திரங்களையெல்லாம் குறித்து பட்டியல் போட்டோமேயானால் உடனே விபசாரத்தடுப்பு சட்டம் அமுலுக்கு வரவேண்டிய ஊர்கள் இவ்வளவுதான் என்று கண்டுபிடித்து விடலாம். அந்த முறையில்தான் இப்போது மதுரையும், சீரங்கமும் டி சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட வேண்டிய புண்ணிய க்ஷேத்திரங்களாகி விட்டது.
ஆனால் இப்போது நாம் வெகு அவசரமாக ஒரு புண்ணிய கேஷத்திரத் திற்கு, அச்சட்டம் அமுலுக்கு கொண்டுவர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அது எது என்றால் அதுதான் மகா புண்ணிய க்ஷேத்திரமாகவும் 12 வருஷத்திற்கு ஒருமுறை மகாமகா புண்ணிய க்ஷேத்திரமாகவும் விளங்கப்போகும் நமது மகாமக க்ஷேத்திரமாகிய கும்ப கோணமேயாகும்.
மார்ச்சு மாதத்தில் நடைபெறப்போவதாய்ச் சொல்லப்படும் மகாமக விசேஷம் என்பதற்கு தமிழ்நாட்டில் ஆஸ்பத்திரியில் கிடக்கும் விபசாரிகள் முதல்கொண்டு, கை கால்கள் முடக்கமேற்பட்டு நீட்டவும், குருக்கவும் முடியாமல் அவஸ்தைப் படும் விபசாரிகள் கூட கால்களுக்கும், கைகளுக்கும் தப்பைகள் வைத்துக்கட்டி நிமிர்த்துக் கொண்டு க்ஷேத்திர யாத்திரை:
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
போய்க்கொண்டிருக்கிறார்கள். எதற்காக என்கின்ற சந்தேகம் சில தோழர். களுக்கு தோன்றலாம். எதற்காக? தாங்கள் இது வரை செய்த பாவத்தை அந்தக் கிணற்றிலுள்ள மண்ணை, சேற்றை எடுத்து தடவிக் கொண்டால் சகல பாவமும் தீர்ந்து விடுமே என்கின்ற நம்பிக்கைக்காகவா என்றால் அல்லவே அல்ல. இந்த “புண்ணிய காலத்தில்” கும்பகோணக் குருக்கள் பார்ப்பனரும்,
காப்பி கிளப்பு, டிராமா, சினிமாக் கதை காலக்ஷேபக் கம்பெனி மற்றும் சுதேசி வியாபாரி முதலியவர்களும் சம்பாதிக்கும் புண்ணியம் போல், தாங்களும் கடை வைத்துப் புண்ணியம் பணம்! சம்பாதிக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே யாத்திரை புறப்படுகிறார்கள். அந்த ஊரில் ஏற்கனவே ஒரு கூட்டம் உண்டு. சரித்திரகாலம் தொட்டு பேர்பெற்ற கும்பகோண அய்யர்களைக் காப்பாற்றும் விபசாரிகளும், கஞ்சிக்கில்லாத காரணத்தால், உற்சவ காலத்தில்
மட்டும் தற்கால சாந்தியாய் விபசாரத்தை மேற்கொள்ளுகின்றவர்களும் சிலர். உண்டு. போதாக்குறைக்கு வெளி ஊர்களிலிருந்தும் பல கூட்டங்கள்
புறப்பட்டு இருக்கின்றன.
ஆகவே அந்த “புண்ணியோதய” காலத்தில் கும்பகோணம் முழுவ
தும் என்ன காரியத்தில் ஈடுபட்டிருக்கும் என்பதை மனக்கண்ணால் உருவகப்
படுத்திப் பார்த்தால் விஷயம் விளங்காமல் போகாது. விபசாரத்தடுப்பு மசோதா என்பது உண்மையாகவே விபசாரத்தைத் தடுப்பதற்கு ஏற்பட்டது என்று இருந்தால் அது கும்பகோண க்ஷத்திரத்தின் மகா புண்ணியோதய காலமாகிய மகாமக காலத்தில் அல்லாமல் வேறு எதற்கு அவசியமானது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகையால் “காருண்ய” சர்க்கார் இந்த விபசாரிகளிடம் காருண்யம் வைப்பதை சிறிது நாளைக்கு ஒத்திப்போட்டு விட்டு,மகாமகத்துக்கு வரும் குட்டிச்சுவர்களான ஆண்களிடம் காருண்யம் வைத்து உடனே டெம்பர்வரியாகவாவது கும்பகோணத்திற்கு விபசாரத்
தடுப்பு சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 12.02.1933.
குடி அரசு - 1933 M) 106
மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம்மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடு.
கள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்க ளுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக்கிடப்பட்டு, ரயில்வேக் காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட்டகைகளையும் போடுகிறார்
கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப் படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம்
கட்டித் தொங்கவிட்டும், பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும் படி செய்தும் மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள்.
சாதாரணமாகக் கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன்படத் தகுந்த விசேஷம் பொருந் தியபட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது.அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்குநாள் க$ண திசை அடைந்துவரும் தோற்ற முடைய பழங்காலமுறைக் கட்டடங்களையும் உடைய ஊராகும். அதில்
வசிக்கும் மக்களோ பெரும்பாலோர் பார்ப்பனர்களும் “மேல் ஜாதி“ மிராசுதா
ரர்களுமாகும்.
கும்பகோணப் பார்ப்பனர்கள் என்றால் மிக தந்திரசாலிகள் என்பார்.
கள். கும்பகோணம் மாத்திரமல்ல தஞ்சாவூர் ஜில்லா முழுவதுமே உள்ள பார்ப்பனர்கள் பழைய ராஜாவின் தர்மத்தினாலும் மற்றும் தஞ்சை ஜில்லா விலேயே ஏற்பட்டிருந்த இரண்டு முதல்தர காலேஜினாலும் சாப்பாடும், கல்வி
யும் சுலபமாய் இருக்கும் இடத்திலேயே கிடைக்கக்கூடிய நிலைமை இருந்த
தால் படித்துப் பட்டம் பெறவும், அதற்கேற்ற உத்தியோகங்கள் பெறவும் செளக ரியம் ஏற்பட்டு இந்த மாகாணத்தில் அவர்களே முக்கிய மானவர்களாய் இருந்து வந்திருக்கிறார்கள்.
சுமார் 25 வருஷங்களுக்குமுன் தமிழ் நாடு மாத்திரமல்ல சென்னை மாகாண முழுவதிலும் தஞ்சை ஜில்லா பார்ப்பனர்களே திவான்களாகவும், பிரபல வக்கீல்களாகவும், முன்சீப், ஜட்ஜி, டிப்டி கலெக்டர் போலீஸ் இன்ஸ்
107. பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
பெக்டர், சூப்பிரண்டுகளாகவும் மற்றும் பல பெரிய பதவி உடையவர். களாகவும் ஆக நேர்ந்து பிரபலமாகிவிட்டார்கள். இந்தக் காரணங்களால் கும்பகோண பார்ப்பனர்களுக்கு அதிகமான விளம்பரம் ஏற்பட வசதி யாகிவிட்டது. அங்குள்ள மிராசுதாரர்களும், ஏறக்குறைய பார்ப்பனர்களை காப்பியடித்து தங்களையும் மேல்ஜாதிக்காரர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதோடுநின்றுவிட்டார்களே தவிர, கல்வியில் அவர்களுடன் போட்டி போடவோ, உத்தியோகம் பெறவோ முடியாதபடி பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை வென்று முன்னேற முடியவில்லை. ஆதலால் பணம் சேர்ப்ப திலும்,பூமியை பெருக்குவதிலும் மாத்திரம் கவலைகொண்டுஆள் ஒன்றுக்கு 1000 வேலி 2000 வேலி என்பதாக நிலத்தை பெருக்கிக்கொண்டார்கள். இரண்டு கூட்ட மும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல், ஏழைகள், உழைப் பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதைத் தவிர மற்றபடி அந்த ஜில்லாவுக்கும், கும்பகோணத்துக்கும் வேறு உண்மை யான யோக்கியதை ஒன்றும் கிடையாது.
ஆனால் மற்றொரு யோக்கியதையும் உண்டு. அது மேற் சொன்னவை களைவிட மிகவும் மோசமான யோக்கியதையேயாகும். அதென்னவென்றால் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு விசேஷ ஸ்தலங்
களாகும். பாடல் பெற்ற ஸ்தலங்களாகவும், பூலோக வைகுண்டமாகவும், பூலோக சுவர்க்கமாகவும் மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய கேஷத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் என்பவைகள்
எல்லாம் தஞ்சை ஜில்லாவிலேயே ஒவ்வொரு கிராமத்தில் ஒவ்வொன்று பிரதி பலிப்பதாக கதைகளும், புராணங்களும் கர்ன பரம்பரை விசேஷங்களும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் படித்துவிட்டு வெளியிடங்களுக்கு சென்று ஆங்காங்குள்ள செல்வங்களை கொள்ளைகொண்டு போய் சேர்ப்பது ஒன்று, கிராமங்கள் தோரும் புண்ணிய க்ஷத்திரங்களும், பாடல் பெற்ற கேஷத்திரங்களுமாய் இருப்பதால் மற்ற ஊர்களில் இருக்கும் மூடர்கள் எல்லாம் பாடுபட்டுத்தேடிய பணங்களை மூட்டை கட்டிக்கொண்டுபோய் அந்த ஜில்லாவில் அழுதுவிட்டு வரும் மடத்தனம் இரண்டு. ஆகிய இவை
களால் மாத்திரமல்லாமல், மைசூர், குடகு தேசத்தில் இருந்து வரும் காவேரியானது சேலம் கோயமுத்தூர் ஜில்லா வழியாக வந்தாலும் சேலம் ஜில்லாகாரர்களுக்கு குடிப்பதற்குக்கூட மார்க்கமில்லாமல் செய்துவிட்டும், கோயமுத்தூர் ஜில்லாக்காரருக்கு ஒரு செண்டு பூமிகூட பயிராவதற்கு உதவா மல்படி ஏமாற்றி விட்டு எல்லா தண்ணீரும் நேரே தஞ்சை ஜில்லா சென்று ஜனங்கள் வெளிக்கு போவதற்குக் கூட இடமில்லாமல் எல்லா நிலமும் நஞ்சை பயிராகும்படியும் செய்து கொண்ட சூட்சியால் ஏற்பட்டலாபம் மூன்று. இந்தப் படியாக “இயற்கை” வளம் பெற்ற தஞ்சை ஜில்லாவுக்கு மகாமக விசேஷம் என்னும் ஒரு புரட்டு யோகமும் சேர்வதில் அதிசயமொன்று மில்லை. ஆனால் இப்போது நாம் இதை ஏன் எடுத்துக்காட்ட வருகிறோம்
என்றால், நமது மக்கள் இத்தனை காலம் தான் மூடர்களாய், மடையர்களாய்,
குடி அரசு - 1933 M) 108
கடையர்களாய் இருந்து இவ்விதப் புரட்டுகளுக்கும், சூட்சிகளுக்கும் ஆனாகி, நஷ்டமும், கஷ்டமும், இழிவும், ஏமாற்றமும் அடைந்து வந்தோம் என்றாலும் இனியும் பாரம்பரியமாய் தலைமுறை தலைமுறையாய் அடைய வேண்டுமா என்பதை ஞாபகப்படுத்தவே இதை எழுதுகிறோம்.
தோழர்களே! மகாமகம் என்றால் என்ன? என்பதை சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல் பட்டு தேடினோம். கும்பகோண ஸ்தல புராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம். அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.
“கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதா வரி, சரயு, தாமரபரணி” ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகை களாக வெளி வந்து, வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, “உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்து விட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்கு கொடுத்து
தீர்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அந்தப் பாவங்களை யெல்
லாம் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்படி அவைகளை போக்கிக் கொள்ளுவது” என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார், “கும்ப கோணத்திலே, தென்கிழக்கிலே ஒரு தீர்த்தம், உண்டு. 12 வருஷத்துக்கு ஒரு முறை மாசி மாதம் மகாமக நாளன்று அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் துலைந்து போகும்” என்று சொன்னார். அந்த 9 கன்னிகைகளும் “கும்ப கோணம் எங்கே இருக்கின்றது” என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து “நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களை கும்பகோணத்திற்கு அழைத்துப்போகிறேன்” என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகை:
கள் காசிக்குப் போயிருந்தார்கள். பரமசிவனார் அவர்களை காசி யிலிருந்து கும்ப கோணத்துக்கு அழைத்துச் சென்று மகாமக குளத்தைக் காட்டி குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்த கன்னிகைகளும் கும்பகோணத் திலேயே கோவில் கொண்டு விட்டார்.
கள்.” ஆதலால் இதில் அந்த காலத்தில் குளித்தவர்களுக்கு சர்வ பாவ
மும் துலைந்து சர்வ மங்களமும் உண்டாகும்” என்று கண்டிருக் கின்றது.
தோழர்களே! இதுதான் கும்பகோண ஸ்தல மகத்துவமும், தீர்த்த
மகத்துவமும், கோவில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது. அதற்காக பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்கவேண்டியது என்கின்ற
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
விஷயங்களும் எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்த சாமியை எப்படி எப்படி கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.
இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்த மகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள், எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவுகஷ்டங்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்துக்
கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே கோபப்பட்டுக்கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின் றோமே அல்லாமல் அறிவைக்கொண்டு பார்க்கின்றோமா?
இந்த கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள விசேஷம் போலவே உலகத்தில் உள்ள அனேக சாக்கடைகளிலும்,
பட்டிக் காடுகளிலும், குப்பைமேடுகளிலும் உள்ள குழவிக் கல்லுகளுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும், குட்டைகளுக்கு மெல்லாம் புராணங்
களும், கதை ஆதாரங்களும், ஐதீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இது போன்ற எந்தக்காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்கள் தான் அடங்கி இருக்கின்றன.
1 சர்வ பாபங்களும் நிவர்த்தியாகிவிடும்.
2 வேண்டியதெல்லாம் அடையலாம்.
என்கின்றவைகளே யாகும்.
இந்த இரண்டு காரியமும் யோக்கியமான காரியமாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால்
தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாப காரியங் களைச் செய்யத் தவருவானா? தயங்குவானா? என்று யோசித்துப்பாருங்கள்.
மனிதனுக்கு வேண்டிய- அவன் ஆசைப்படும் படியான காரியங்கள். எல்லாம் இந்த மாதிரியான சிறு காரியங்களால் கை கூடிவிடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி - நடத்தை - ஒழுக்கம் என்பவைகளுக்கெல்லாம் அவ சியமும், நிபந்தனையும், வரையரையும் எதற்காக வேண்டும் என்பதையும்
சிந்தித்துப் பாருங்கள்.
நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதி களுக்கு அந்தப்பாவங்கள் ஒட்டிக்கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தை தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணையம் இருக்கின் றதா? என்று யோசித்துப்பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக்
குடி அரசு - 1933 M) 110
கொண்டமகாமக தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உருவெடுத்து எந்த குளத்தில் போய் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக்குளம் வேறு எந்த குளத்துக்குப்போய் பாவத்தைத் தீர்த்துக்கொள்ளும் என்பதையும் யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாப புண்ணியத் தின்பேரால், கடவுள் பேரால், தீர்த்தம் ஸ்தலம் மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்கள், மடையர்கள் ஆக்கப் படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
மற்றும் அந்த புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்கு பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்கு பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் 660000000 அருபத்தி ஆறு கோடி தீர்த்தம் இருப்பதாகவும், இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப் பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்று பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதய நமது கேள்வி. மற்றென்ன வென்றால் இதைப்படித்துப்பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்கவேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.
தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நதி என்றால் மழைபெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச்சேர்ந்து மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்போக்காகும்.
குளம் என்றால் இந்தமாதிரி ஓடையில் இருந்து வழி வைத்து தண்ணீர். நிறப்புவதோ, அல்லது மழை, வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக்கொண்டுவந்து குளத்தில் விழுந்து தேங்கி யிருப்பதேதான். மற்ற குட்டித்தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குநீர் ஊற்றம் போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு. மற்றபடி அவற்றில் ஒருமனிதன். செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக் கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்கு தெரியாதா என்றுதான் கேட்கின்றோம்.
மாமாங்க குளம் என்பது மேல் கண்டமாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமக சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்து விட்டு வெறும் அடிவண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்த சேரானது
கருப்புக் களிமண் போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார்.
" பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
500 அடி சதுரம் இருக்கலாம். அடிமட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் லக்ஷம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படி சாத்தியமாகும். அந்தக் குளத்தில் இறங்கி அந்த சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்கவேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறிஸ்தவறோ, ஒரு மகமதியறோ இந்தப்படி செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது
நாம் என்ன என்று சொல்லுவோம்.
மிஸ்.மேயோ நமது பழக்க வழக்கங்களைப்பற்றியும், சடங்குகளைப் பற்றியும் தீர்த்தங்களைப்பற்றியும் எழுதியதைப்பார்த்து கோபித்துக் கொண்டோம். ஆனால் இந்த மாதிரி சேற்றில் குளிப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று கருதி இருக்கிற முட்டாள்தனமான பேராசைக்காக நாம் வெட்கப் படுவதில்லை என்றால் பிறகு எந்த விதத்தில் நாம் அறிவாளிகள், யோக்கியர்கள், மனிதத்தன்மையுடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாமாங்கத்தால் எத்தனை லக்ஷ ரூபாய் ரயில்க் காரன் கொள்ளை அடிக்கப் போகிறான்? எத்தனை லக்ஷ ரூபாய் பார்ப்பான் கொள்ளை அடிக்கப் போகிறான் என்பதை சிந்தித்துப்பாருங்கள். இவை ஒரு பக்கம் இருப்பதோடு கூட்ட நெருக்கடியில் உயிர்ச்சேதம் எவ்வளவு, திருட்டு எவ்வளவு, இவை தவிர இப்பொழுதே அங்கு கும்ப கோணத்தில் காலராவும் அம்மையும் வந்து விட்டது. இதற்காககொட்டகை கட்டி அங்கு கட்டிலும் படுக்கையும் போட்டாய்விட்டது.பிளேக்குக்கும் கொட்டகையும் போட்டாகி விட்டது. அதுவும் தான் தன் பாபத்தைத் தீர்த்துக் கொள்ள அங்குவரப் போகின்றது. சுடுகாட்டுக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்து அங்கு சில குளிகளும் தயாராய் முனிசிபாலிட்டியார் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
கும்பகோணத்துக் கொசுக்களோ அந்த ஊர் பார்ப்பனர்களையும் குச்சிக்காரிகளையும்விட எத்தனையோ பங்கு மோசமானவைகள் என்று சொல்லலாம். ஏனெனில் இது அவர்களை விட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை உரிஞ்சக் காத்துக் கொண்டு இருக்கின்றது. மாமாங்கத்துக்கு போய் வந்தவனுக்கு வரப் போகின்ற மலேரியா காய்ச்சல் அடுத்த மாமாங்கம் வந்தா லொழிய தீராது. இந்த நிலையில் உள்ள மகாமகம் என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 12.02.1933
குடி அரசு - 1933 M) 112
ஈஷியாவம் அடலவககோட் னானும்
ருஷ்ய (பொது உடமைக் கொள்கைளைப் பற்றி பேசுவதோ, பிரசாரம் செய்வதோ குற்றமான தென்பதாகப் பல நண்பர்கள் பயந்து அடிக்கடி புத்தி கூறி வருகின்றார்கள். பலர் இதை எடுத்துக்காட்டி பாமர ஜனங்களை மிரட்டி வருகின்றார்கள்.
ஆனால் இவர்களை யெல்லாம் பைத்தியக்காரர்களாக்கத் தக்க வண்ணமும், வீண் பூச்சாண்டி காட்டி பயப்படுத்துகின்றவர்களாக்கும் வண்ண
மும், சென்னை மாகாண சட்ட நிபுணரும், அட்வொகேட் ஜெனரலும் சர்க்கா ருக்கு சட்ட சம்பந்தமான யோசனை சொல்லு பவரும்) ஆன தோழர் அல் லாடி கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் சென்னை ஓரியண்டல் யூனிவர்சிடி சங்கத்தின் ஆண்டு விழாவில் மாணவர்களிடையும் மற்றும் பண்டிதர் களிடையும் பேசும் போது நன்றாய் விளக்கிக்காட்டி இருக்கிறார்.
அதாவது, “ரஷியாவில் ஒரு திட்டம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
அதில் சில கெடுதல்கள் இருந்தாலும் மேலான நன்மைகளும் இருக்கின்றன. ரஷிய திட்டம் உலக முழுதுக்குமே நல்ல பாடம் கற்பிக்கக் கூடியதாய் இருக் கின்றது. கைத்தொழில் அபிவிர்த்தி விஷயத்தில் ருஷியா இப்போது உலகத் திலேயே தலை சிநத்து விளங்குகின்றது” என்றும், “முதலாளிக்கும் தொழி லாளிக்கும் உள்ள சம்பந்தம் நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்றும் பேசி இருக்கிறார். ரஷிய திட்டம் என்றால் என்ன? அது எப்படி ஏற்பட்டது? என்பதை யோசித்தால், பொது உடமைப் பிரசாரம் செய்வதோ “மக்களுக்கு அதை எடுத்துக்காட்டுவதே தப்பு” என்கின்ற விஷமப்பிரசாரம், சோம்பேரி களின் சுயநலப் பிரசாரம் என்பது யாவருக்கும் வெளியாகி விடும். திருச்சி
யிலும், புதுச்சேரியிலும், சென்னையிலும் இருந்து வெளியாகும் சில மதப் பிரசார பத்திரிகைகள் ரஷியா என்றால் மிரண்டு மிரண்டு பாராங் கல்லில் முட்டி மண்டையை உடைத்துக்கொள்ளுகின்றன. ஆனால் இன்று அவர்கள். காப்பாற்றப் போவதாய் வேஷமிடும் மதங்களுக்கு ஆதாரபீடமாக இருக்கும்
மேல் நாடுகளிலும் மற்றும் பல நாடுகளிலும் இருக்கும் நிலைமைகளைப் பார்ப்பார்களேயானால் இந்த பகல் வேஷங்கள் பரிகசிக்கத்தக்க வேஷம் என்பதை உணர்ந்து வெட்கப்படுவார்கள். அதுமாத்திரமல்லாமல் அந்தந்த
112 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
மதங்களில் கட்டுப்பட்ட வாலிபர்களும் இவர்களை முன்னே விட்டுப்பின்னே பரிகசிப்பார்கள். ஆதலால் பொதுவுடமை, சமதர்மம் என்கின்ற கொள்கை
களுக்கும், வார்த்தைகளுக்கும் விரோதமாக மதப்பிரசாரப் பிழைப்புக்காரர் களும், சோம்பேரிக் கூட்டங்களும் செய்யும் விஷமப் பிரசாரத்தையும்,
சூழ்ச்சிப் பிரசாரத்தையும், வயிற்றுப்பிழைப்புப் பிரசாரத்தையும் கண்டு
சிறிதும் கவலையோ லட்சியமோ கொள்ளாமல், கொள்கைகளின் தத்துவங்
களும், பயன்களும், ஏழை மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் நன்மையா தீமையா என்பதை மாத்திரம் கவனித்து அதன்படி நடக்கவேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.02.1933
குடி அரசு - 1933 M) 114
ஈ.வை.ராவக்கு சண்ணிமலை நுணியன்
€யோர்டார் வாவேற்பு
தோழர்களே! இன்று இவ்வூர் யூனியன் போர்டார் அழைப்புக்கு இணங்கி வந்த சமயம் உற்சவக் கூட்டத்திற்காக ஒரு பொதுக்கூட்டம் கூட்ட வேண்டுமென்று சொன்னதால் இங்கு பேச ஒப்புக்கொண்டேன். ஆனால் இங்கு கூடியிருக்கும் நீங்கள் பெரிதும் இந்த உற்சவத்திற்காக வந்தவர்கள்.
நான் பேசும் விஷயம் உங்கள் மனத்திற்கு திருப்தியாய் இருக்காது, ஆனாலும் உங்கள் மனதை புண்படுத்தவேண்டும் என்று நான் பேசவர வில்லை. ஆனால் இதன் பயன் என்ன என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளவே நான் சில விஷயங்களைப் பேசுகிறேன்.
இன்றைய உற்சவமும், கொண்டாட்டமும் என்ன கருத்தைக் கொண்: டது? சுப்பிரமணியசாமிக்கு கல்யாணம். கல்யாணம் செய்து கொண்ட சாமி தேர்மீது ஊர்கோலம் வருகின்றார். இதற்காக இத்தனை ஆயிரம் ஜனங்கள் வீடு வாசல், வேலை வியாபாரம் முதலியவைகளை விட்டு விட்டு வந்து இன்று இங்கு கூட்டத்தில் நெருக்கப்படுகிறார்கள். பலர் காவடி தூக்கி ஆடுகிறார்கள். சாமிக்குக் கல்யாணம் என்பதில் ஏதாவது அறிவு இருக்கிறதா? வருஷந்தோறுமா கல்யாணம் செய்வது? இந்த காவடி தூக்கிக்கொண்டு கண்டபடி குதிப்பதிலும் உளருவதிலும் ஏதாவது அருத்தம் இருக்கிறதா? இதை அன்னிய மதக்காரனோ அன்னிய தேசத்தானோ பார்த்தால் என்ன சொல்லுவான்? வேறு மதக்காரன் இந்தபடி ஆடினால் நாம் என்ன சொல்லு வோம். நமது அறிவுக்கும் நாகரிகத்திற்கும் இது தானா அடையாளம்? எத்தனை வருஷகாலமாக இந்தப்படி மூடக்கொள்கையில் ஈடுபட்டு வரு கிறோம்? என்ன பலனைக் கண்டோம். மனிதனுக்கு முற்போக்கே கிடை யாதா? 2000, 3000 வருஷத்திற்கு முந்திய நிலை நம்மிடம் சிறிதும் மாற வில்லை. இம்மாதிரி நடவடிக்கை நம்மை மிருக பிராயக்காரன் என்று காட்டு வதுடன் நமது பணம் எவ்வளவு செலவாகின்றது, நமது நேரமும் ஊக்கமும் எவ்வளவு செலவாகின்றது பாருங்கள். கடவுளைப் பற்றிய எண்ணங்களும். பக்திகளும் நமக்கு என்ன பலனைக் கொடுக்கின்றன? அதிக பக்திக்காரன் தனக்கு வேண்டியதெல்லாம் கடவுள் தருவார் என்று எண்ணுகின்றான்.
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
கடவுளைப் பற்றி அதிகமாய் அறிந்தவன் சகலமும் கடவுள் செயல் அவனன்றி ஓரணுவும் அசையாது என்று எண்ணுகிறான். மனிதனுடைய முற்போக்கையும் அவனது கஷ்டத்தையும் கொடுமையையும் நிவர்த்தி செய்து கொள்ளுவதையும் இந்த எண்ணங்கள் தடைப் படுத்துகின்றன.
பல ஆயிர வருஷங்களாக ஒருவன் கீழ் ஜாதியாய் இருப்பதற்கும் கல்வி. அறிவு பெறாமல் இருப்பதற்கும் சதா உழைத்து உழைத்து பாடுபட்டும் பட்டினியாயும் போதிய ஆதாரமும் வசதியும் இல்லாமலும் இருப்பதற்கும் இந்த எண்ணங்களே காரணமாகும் இது போலவே பாடுபடாத சோம்பேரிகள் கோடீஸ்வரர்கள் ஆகவும் தலைமுறை தலைமுறைய் பிரபுக்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருப்பதற்கும் இந்த எண்ணங்கள் தான் காரணம். இந்த எண்ணங்கள் பணக்காரனுக்கும் சோம்பேரிக்கும் பார்ப்பானுக்கும்! தான் அனுகூலம். தொழிலாளிக்கும், கூலிக்காரனுக்கும், பண்ணைய ஆளுக்கும் கெடுதியே ஆகும்.
ஏழைகள் தங்கள் தரித்திரத்திற்கும் கஷ்டத்துக்கும் கடவுளும் தலைவிதியும் தான் காரணம் என்று சொல்லிவிடுவாரேயாகில் அவர்கள் எப்படி தரித்திரத்தை நீக்கிக்கொள்ள முடியும்? அவன் தன் பாட்டின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பார்த்து அவை களை தடுக்கவேண்டும். இந்த காரியம் செய்ய ஒரு கடவுளும் ஒப்பாது. ஏனென்றால் கடவுளையும் தலைவிதியையும் பணக்காரனும் சோம்பேரியும் தான் உண்டுபண்ணுகிறான். ஆகையால் அவைகளை தங்களுக்கு தகுந்த மாதிரியாகத் தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இங்கு மாத்திரம் அல்லாமல் எல்லா தேசங்களிலும் பணக்காரர்கள் தங்கள் நன்மைக்கும் அது ஸ்திரமாய் இருப்பதற்கும் இந்த மாதிரியாகத்தான் கடவுளை சிருஷ்டித்து அதைப் பிரசாரம் செய்யப் பாதிரி களை ஏற்படுத்தி அவர்களுக்கு பணம் கொடுத்து காப்பாற்றி வருகிறார்கள்.
இந்தப் புரட்டுகளை உலகில் வெகு பேர் அறிந்திருந்தாலும் ரஷியா தேசத் தார்கள் தான் முதன் முதலில் இதை அழித்து நிர்த்தூளியாக்கிப் பணக்காரத் தன்மையையும் பாதிரித் தன்மையையும் ஒழித்தார்கள். ரஷியா தேசமானது இந்தியாவைப்போலவே பணக்காரருடையவும், பார்ப்பனர் பாதிரி) களுடை
யவும் ஆதிக்கத்தில் இருந்து ஏழை மக்களை வாட்டி வதைத்து வந்தது. ஆனால் அவர்கள் அதற்குக் காரணம் கடவுள் புரட்டும், மதப்புரட்டும் என்பதை உணர்ந்து அந்த இரண்டையும் அழிக்கத் தொடங்கி இன்று எலலோரும் சமமாய் வாழுகின்றார்கள். அங்கு சோம்பேரியோ, பிரபோ, பணக்காரனோ, முதலாளியோ, மிராசுதாரனோ, ஜமீன்தாரனோ கிடையாது. எல்லோரும் பாடுபடவேண்டியது. அதன் பயனை எல்லோரும் சமமாய் அனுபவிக்க வேண்டியது. ஒருவனை ஒருவன் ஏய்க்கவோ, ஒருவன் பாடு பட்டதை ஒருவன் அனுபவிக்கவோ முடியாது.
குடி அரசு - 1933 M) 116
ஆனால் இன்று இங்கு “கடவுள் செயலால்” இருக்கும் தேசத்தில் ஒரு மனிதனுக்கு 1000 ஏக்கர் 10000 ஏக்கர் பூமி கூட இருக்கிறது. பூமிக்குச் சொந்தக்காரன் என்பவன் உழுவதில்லை, விதைப்பதில்லை, தண்ணீர். இறைப்பதில்லை, பாத்தி கட்டுவதில்லை, அறுப்பு அறுப்பதில்லை.ஆனால் விளைந்த வெள்ளாமையை எல்லாம் தன் வீட்டில் கொண்டு போய்க் கொட்டிக் கொள்ளுகிறான். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, அறுப்பு அறுத்த ஆளுக்கு ஓருபடி போராதா, இரண்டுபடி போராதா என்று அரை வயிற்றுக்குத்தான் கொடுக்கிறான். துணி வேண்டுமானால் தர்மத்துக்கு இனாம் கொடுப்பது போல் அரைத் துணி கொடுக்கிறான். வீடு வேண்டு மானால் காட்டில் கை அகலம் இடம் காட்டுகிறான். இதெல்லாம் பிச்சை கொடுப்பது போல் கொடுக்கிறான். ஆனால் மிராசுதாரனோ இவ்வளவையும் விற்று மாடி வீடு, மோட்டார் வண்டி, தேவடியாள், பிராந்தி, உஸ்கி, நாடகம், சினிமா, தாலூகா, ஜில்லா போர்டு மெம்பர், பிரசிடெண்ட்டு, முனிசிபல் சேர்மென் ஆகியவைகளுக்கு பதினாயிரக்கணக்காக வாரி செலவு செய்து ராஜ போகம் அனுபவிக்கிறான். இந்த அக்கிரமங்களுக்கு உடந்தையாய்
இருக்கிற கடவுளும், அனுமதித்துக் கொண்டிருக்கிற கடவுளும், இன்னமும் நமது நாட்டுக்கு வேண்டுமா என்று கேட்கின்றேன். கடவுள் புரட்டு ஒழிந்தா லொழிய இந்த மிராசுதாரர்கள் ஒழியமாட்டார்கள். இவர்களது இப்படிப்பட்ட அகந்தையும் ஆணவமுமான காரியங்களும் ஒழியாது. உங்கள் தரித்திரங்
களும் ஒழியாது.
ஆகையால் இவைகளை யெல்லாம் நன்றாய் யோசித்து உங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன என்று கண்டுபிடித்து அதன் படி நடவுங்கள்.
குறிப்பு:09:021933இல் சென்னிமலை போர்டு பள்ளிக்கூடத்தில் சென்னிமலை. யூனியன் போர்டாரால் வழங்கப்பட்ட உபசார நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலைநடந்த பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை,
குடி அரசு - சொற்பொழிவு - 19.02.1933
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
காங்கிரஸ் ஸ்தம்பித்து விட்டது
௬கதசமித்ரன்” “தமிழ் நாடு” “இந்து” அவிப்பிராயம்
தற்கால காங்கிரஸ் நிலமையை பற்றி “சுதேசமித்திரன்” பத்திரிகையில். நாளது மாதம் 11-ந் தேதி தலையங்கத்தில் காணப்படும் சில குறிப்புகளாவன:-
“இந்தியாவில் தற்கால நிலையில் சீர்திருத்தங்களுக்காகப் போராடி வற்புறுத்தும் சக்திகள் குறைந்து கொண்டிருக்கின்றன. சீர்திருத்தங்களுக்காக வெகுவாக பிரயாசைப்பட்ட தேசீய உணர்ச்சியானது தலைவரிழந்து சக்தி குறைந்து வருகிறது”.
“இந்நிலையை எவ்விதம் பரிகரிப்பது? சோர்வடைந்திருக்கும் ராஜிய
கிளர்ச்சிக்கு எவ்விதம் புத்துயிரளிப்பது”.
“காங்கிரஸ் ஸ்தாபனமானது, தனது சக்திகளை, பல துறைகளில், பல பிரச்சனைகளில் திருப்பி வலுவற்றதாகச் செய்துக்கொள்ளக்கூடாது. இதர பிரச்சனைகள் சமுதாய வாழ்விற்கு எவ்வளவு முக்கியமானதாயினும், இந்த சமயத்தில் ராஜிய பிரச்சனையே முதல் பெறவேண்டும். சட்ட மறுப்பு கொள்கை வெற்றி பெறுவதற்கு, ஆதியில் எவ்வளவு செளகரியங்களிருந்த போதிலும் தற்காலம் அது பயன்படாதென்றோ அல்லது அதற்குத் தேவையான உணர்ச்சி தேசத்தில் இல்லையென்றோ அவர்கள் கருதுவார். களானால், உடனே தேசத்தின் நலத்தை உத்தேசித்து தங்கள் திட்டத்தை
திருத்தி அமைத்து விடவேண்டும்”.
என்ற குறிப்புகள் ஷெ தலையங்கத்தில் காணப்படுகின்றன.
ஆகவே, இதன் உண்மைத் தத்துவம் என்ன என்பதை வாசகர்கள் ஊகித்து பார்க்க வேண்டுமாய் விரும்புகின்றோம்.அரசியல் கிளர்ச்சி தோல்வி யடைந்து விட்டதென்றும், மற்றும் தலைவர்கள் என்பவர்கள் தீண்டாமை,
விலக்கு, பரதேசி மறியல், சுதேசிப்பிரசாரம் மற்றும் தபாலாபீஸ் பகிஷ்காரம் முதலிய பல சில்லரை விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி தொண்டர்களும், தலைவர்கள் என்கின்றவர்கள் தங்கள் தங்களிஷ்டப்படி தலைவிரி கோலமாய் திரிந்ததின் பலனாய் கிளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது.
குடி அரசு - 1933 M) 118
வலுகுறைந்து விட்டது, வெற்றிபெற போதியதாக இல்லை. தேசம் இதுசமயம், போதிய உணர்ச்சி பெற்றதாயில்லை என்றும், ஆதலால் தீண்டாமை முதலிய விஷயங்களையும் மறியல், பகிஷ்காரம் முதலிய பல விஷயங்களையும் விட்டு விட்டு குறிப்பாக, சிறப்பாக ஆலய பிரவேச விஷயத்தில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு ஒரு புதிய திட்டத்தை அதாவது சர்க்காரோடு ஒத்துழைத்து ஏதாவது ஒரு வழியில் காங்கிரஸ் தோல்வியுறவில்லை யென்றும் வெற்றி பெற்ற தென்றும் பாமர மக்கள் நினைக்கும் படியாக ஒரு தந்திரம் செய்ய வேண்டும் என்று சூசனைக் காட்டுவதாகவே இருக்கிறது. இந்த அபிப்பிராயம் சுதேசமித்திரனுக்கு மாத்திரம் இப்பொழுது தோன்றி இருப்பதாக அதைக்குற்றம் கூறுவதற்கில்லை. ஏனெனில் மற்றொரு பத்திரிகையாகிய.
“தமிழ் நாடு”
“தமிழ்நாடு” பத்திரிகையும் அதே பிப்பிரவரி மீ” 11-தேதி தனது தலையங்கத்தில் காங்கிரசின் வீழ்ச்சியைப் பற்றி சிறிது சூசனைக் காட்டியிருக். கிறது. என்ன வென்றால்.
“காங்கிரஸ் இயக்கத்தின் வேகம் குன்றிவிட்டதால் தோழர் காந்தி தீண்டாமை விலக்குப்போர் தொடுத்திருக்கிறார்” என்று எழுதியிருக்கிறது.
இந்த இரண்டு பத்திரிகைக்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால் சுதேசமித்திரன் பத்திரிகையானது தோழர் காந்தி அவர்கள் “தீண்டாமை” விலக்கு கோவில் பிரவேசம் முதலிய வேலைகளில் பிரவேசித்ததால் காங்கிரஸ் ஸ்தம்பித்துப் போய்விட்டதென்று சொல்லுகிறது.
“தமிழ்நாடு” பத்திரிகையோ அந்தப்படி சொல்லாமல் காங்கிரஸ் இயக்கம் ஸ்தம்பித்துப்போய் விட்டதால் தோழர் காந்தி “தீண்டாமை விலக்கு” வேலையைத் தொடங்கி இருக்கிறார் என்றெழுதி இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் இரண்டு தேசீய பத்திரிகைகளும் காங்கிரஸ் ஸ்தம்பித்துப்போய் விட்டதென்பதை கண்ணியமாக ஒப்புக்கொள்ளுகின்றன.
ஹிந்து
இதோடு “ஹிந்து” பத்திரிகையின் யோக்கியதையும் சற்று கவனிப் போம். அதாவது “இந்து” பத்திரிகையின் லண்டன் நிருபர் எழுதிய கடித மொன்று பிப்பிரவரி மீ£14-ந்தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் மொழி பெயர்த்திருப்பதாவது.
“சட்டத்தினாலும் இராணுவத்தினாலும் ஏராளமான பலத்தையுடைய இந்திய கவர்மெண்டானது ஒற்றுமையற்றதும் சரியான ஒரு தலைவரற்றதும் ஆன காங்கிரஸிற்கு தோற்றுப் போவதென்பது, லேசான காரியமல்ல”.
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
“ராஜிய இயக்கம் சரியாக நடத்தப்படவில்லை யென்று அநேக ஜனங் கள் அபிப்பிராயப் பட்டிருக்கின்றார்கள். சென்ற சில வருஷங்களாக காங்கிரஸ்) செய்து வந்திருப்பது கண் மூடித்தனமாய் எதிரில் முட்டிக் கொள்ளுவது போலிருப்பதால், அது இந்திய கவர்மெண்டை அசைக்க முடியவில்லை”.
“மகாத்மா காந்தி உலக ஜனங்களின் மதிப்பைப் பெற்றிருக்கிறார் என்றாலும் இக்கால ராஜியத் துறையில் வெற்றி பெற அவர் அருகதை
யற்றவர்”.
“சட்ட மறுப்பியக்கம் பிரமாதமான பலனைத் தந்துவிடு மென்று பல தேசியவாதிகள் அளவுக்கு மீறி நம்பினது சிரிப்பாக விருக்கிறது”.
“இப்படி வீண் நம்பிக்கை கொள்ளவேண்டாமென்று எங்களில் சிலர். அப்பொழுதே எச்சரிக்கை செய்தோம். நாங்கள் நினைத்தது சரியென்று இப் பொழுது ஏற்பட்டு விட்டது. இந்தியாவின் கட்சி நியாயமானதென்ற எங்களு டைய நம்பிக்கை குறையவில்லை. ஆனால் இந்தியாவின் இலட்சியத்தை அது குறுக்கு வழியில் போய்ப்பெற்று விடாதென்று தெரிந்து கொள்ள விசேஷ சாமர்த்தியம் தேவையில்லை”.
“இந்தியாவின் கோட்டையைப்பிடிக்கப் பெறும் கூச்சல் மாத்திரம் போதா தென்பது, அனுபவத்தில் தெரிந்து விட்டது.ஆர்ப்பாட்டங்கள் மறியல்
கள், பகிஷ்காரங்கள் ஆகியவைகள் வெற்றி பெற்றுவிட முடியுமானால் இதற்குள் வெற்றி பெற்றிருக்கவேண்டும்”.
“சட்டசபைகளுக்கு வெளியில் தேசீயவாதிகள் மூடத்தனமாக வேலை செய்து வந்திருப்பதுபோல், சட்டசபைகளில் அவர்கள் சரியான வேலை செய்து வந்திருந்தால் அடக்குமுறைக்குக் கையாளாகச் சட்டசபைகளை: உபயோகித்திருக்க முடியாது. காங்கிரஸ் சேர்ந்து சட்டசபையில் கவர்ன் மெண்டைநெருக்கி வந்திருப்பார்களாயின் ஒத்துழையாமைக் காட்டில் அவர்.
கள் சஞ்சாரம் செய்து வந்ததில் அடைந்துள்ளதைக் காட்டிலும் அதிகப் பலனை அடைந்திருப்பார்கள்”.
“இப்போது மகாத்மா தீண்டாமையை ஒழிக்க முனைந்திருப்பது போல் ராஜீயத்துறையில் முனைந்திருக்கவில்லை என்று தெரிகின்றது. இந்த மத சம்பந்தமான பிரச்சனையை கிளப்பிவிட்டதால் ராஜீயப்பிரச்சனை சிறிது அசட்டைச் செய்யப்பட்டுவிட்டதாக இங்கு சிலர் நினைக்கின்றார்கள்'” என்று
எழுதி இருக்கிறது.
ஆகவே “சுதேசமித்திரன்”, “தமிழ்நாடு”, “இந்து” ஆகிய மூன்று “தேசீய” பத்திரிகைகளும் உள்ளதை ஒரு அளவுக்கு ஒப்புக்கொண்டன. ஆனால் “சுதேசமித்திரன்” “இந்து” ஆகிய இரண்டு பார்ப்பனத் தேசீயப்
குடி அரசு - 1933 M) 120
பத்திரிகைகளும் காந்தியை தீண்டாமை வேலையை விட்டு விட்டு சர்க்கா ரோடு ஒத்துழைக்கும்படி ஜாடை காட்டுகின்றன. “தமிழ் நாடு” பத்திரிகை வருணாச்சிரமத்தையும் ஜாதிப்பிரிவையும் ஒழிக்க வேலை செய்யும்படி சொல்லுகின்றது. ஆனால் தொண்டர்கள், தேச பக்தர்கள், தேசியவாதிகள். இதை எப்படி ஒப்புக்கொள்ளமுடியும்? “அரசியலுக்குவேறு வேலை வேண்: டாமா?” எலக்ஷன்களில் வெற்றி பெறுவதற்கு வேறு தந்திரங்கள் வேண் டாமா? சிலருக்கு சாப்பாட்டிற்கே வேறு வழி வேண்டாமா? ஆகையால் மேல்கண்ட பத்திரிகைகள் இதற்கு ஒரு வழி காட்டுமா என்று கேழ்ப்பார்கள்.
குடி அரசு - கட்டுரை - 19.02.1933.
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
ரகசியம் வணிப்பட்டதா?
காங்கிரசினுடையவும், காந்தியினுடையவும், கொள்கைகளும் அது சம்பந்தமான கிளர்ச்சிகளும், முதலாளிமார்களுக்கும், உயர்ந்த ஜாதிக் காரர்கள் என்பவர்களுக்கும் மாத்திரமே நன்மை பயக்கத் தக்கதென்றும்,
காங்கிரசும், காந்தியும், பணக்கார முதலாளிகளுடையவும், “படிப்பாளி” களாகிய சோம்பேரிகளுடையவும் ஆயுதங்களே என்றும் இந்த 7, 8 வருஷ காலமாகவே நாம் தெரிவித்துக்கொண்டு வந்திருக்கின்றோம்.
இதன் பயனாய் தேசியப்புலிகள்-தேசபக்த வீரர்கள் என்பவர்கள் நம்மீது சீறிப்பாய்ந்து நம்மை தேசத்துரோகி என்றும், மதத்துரோகி என்றும் பட்டம் சூட்டி கண்டபடி வைததோடல்லாமல் குத்திவிடுவதாகவும், சுட்டு விடுவதாகவும் வீரம் பேசி ரத்தத்தில் (தோய்த்து கையெழுத்துச் செய்த பல எச்சரிக்கைக் கடிதங்களையும் அனுப்பினார்கள்.
இவை மாத்திரமல்லாமல் தேசியப்பத்திரிகை என்பவைகளும் மதப் பத்திரிகை என்பவைகளும் நமக்கு இழைத்த தீங்குகளுக்கும் கொடுத்த தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ராமசாமியையும் சுயமரியாதை இயக்கத்தையும் அடியோடு ஒழித்தாலொழிய தேசியம் வெற்றிபெறாது
என்றும், இவற்றை ஒழிப்பதே ஒரு பெரிய தேசிய வேலை என்றும் பேசி னார்கள், எழுதினார்கள். சோம்பேரிகளையும் காலிகளையும் ஏவியும்
விட்டார்கள்.
மற்றும் மேடையில் ஏறிப்பேச செளகரியம் கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தையும் ராமசாமியையும் வைவதும், பேனாப் பிடித்து எழுத சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றவர்கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தையும் ராமசாமியையும் தாக்கி எழுதுவதுமான காரியங்களையே நடத்திவந்தார்கள்.
எல்லாவற்றையும் விட இந்த இரண்டு வருஷ காலமாய் அதாவது சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு, மறியல் என்கின்ற பெயர்களால் சிலருக்கு ஜெயிலுக்குப்போக சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அவர்கள் எல்லாம் ஜெயிலி
லிருந்து வெளியாகும்போதே ஒவ்வொருவரும் தங்களை பெரிய வீரர்கள்.
குடி அரசு - 1933 M) 122
என்றும், சூரர்கள் என்றும், பிரமாதமான காரியத்தைச் செய்து சாதித்துவிட்ட மேதாவிகள் என்றும் நினைத்துக்கொண்டு ஜெயில் வாசல்படியிலிருந்து வெளிவரும் போதே சுயமரியாதை இயக்கத்தையும் ராமசாமியையும் சின்னா பின்னமாகக் கிழித்தெரிந்து விடப்போவதாய் கருதி ஆவேசத்துடனேயே வருவதும் தலைகால் தெரியாமல் துள்ளித் துள்ளிக் குதிப்பதுமாய் நடந்து வந்தார்கள்.
ஆனால் நம்மைப் பொருத்தவரை நாம் இதை உணர்ந்தும் ஒரு அளவுக்கு இதன் பயனை அனுபவித்துக் கொண்டுமிருந்தாலும் கூட உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கும்போதே இந்த சத்தியாக்கிரகம் மக்களுக்கு யாதொரு பயனையும் அளிக்கா தென்றும் இது எந்த விதத்திலும் வெற்றி யடைந்ததாக கருதும்படியாகவாவது யாதொரு குறிப்பையும் உண்டாக்கா
தென்றும் இது பொஸ்ஸ் என்று போய்விடும் என்றுமே எழுதினோம். மற்றும் இதனால் ஏதாவது பலன் ஏற்பட்டதாகச் சொல்லிக்கொண்டாலும் அது பணக் காரர்களுக்கும் சோம்பேரி வாழ்க்கைக்காரர்களான மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கும் தான் பயன் அளிக்குமே தவிர ஏழை மக்களுக்கும் கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களுக்கும் யாதொரு பயனையும் உண்டாக்காது என்றும் பந்தயங்கட்டி கூறிவந்தோம்.
கடைசியாக என்ன நடந்தது? என்பதை சற்று சிந்திப்போம். முதல்
மூச்சு உப்பு) சத்தியாக்கிரகமானது பம்பாய் மில் முதலாளிகளினுடைய பண: உதவியாலும், பார்ப்பனர்களுடைய பத்திரிகையின் உதவியாலும், பிரசார: உதவியாலும் பதினாயிரக்கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்ப முடிந்தும், கடைசியாக எதை எதிர்த்து சத்தியாக்கிரகம் துடங்கப்பட்டதோ அதிலேயே (சைமன் கமிஷனின் வட்டமேஜைமகாநாட்டிலேயே!) தானாகவே போய் கலந்து கொள்ளுகிறது என்கின்ற நிபந்தனையின் மீது ராஜியாகியே எல்லோரும் ஜெயிலில் இருந்து வெளிவரவேண்டியதாயிற்று. அதாவது “சட்ட மறுப்பை நிறுத்திக் கொள்ளுகிறேன், ராஜாக்களும் மகாராஜாக்களும் ஜமீன்தாரர்களும், முதலாளிமார்களுமாய் 100க்கு 90 பேர் கூடிப்பேசி இந்தியாவின் அரசியல் சுதந்திரங்களைத் தீர்மானிக்கப்போகும் வட்ட மேஜை
மகாநாட்டில் நானும் கலந்து கொள்ளுகிறேன், அதுவும் அவர்களுடைய நிலைமைக்கு அதாவது அந்த ராஜாக்கள், மகாராஜாக்கள், ஜமின்தாரர்கள். முதலாளிமார்களுடைய இன்றைய நிலைமைக்கு எவ்வித குறைவும் ஏற்படாதபடி தீமானிக்கப்போகும் கூட்டத்தில் கலந்து கொள்ளுகிறேன்” என்பதாக ஒப்புக்கொண்டு “ராஜி” பேசித்தான் ஜெயிலில் இருந்து விடுதலை யாக வேண்டியிருந்தது.
அந்த ராஜியும், வட்டமேஜை மகாநாட்டுக்கு காங்கிரசும் காந்தியும்
சென்று வரும் வரையில் தான் இருக்க முடிந்ததே தவிர வேறில்லை.ஆகவே அது முடிந்தவுடன் மறுபடியும் ஒரு தடவை சத்தியாக்கிரகமோ மறியலோ
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
தொடங்கித் தீரவேண்டியதாய் விட்டது. இதிலும் முதலாளிகளுடைய பண உதவியும் பார்ப்பனர்களுடைய பத்திரிகை உதவியும் பிரசார உதவியும் தாராளமாய் கிடைத்தது என்றே சொல்லலாம். இதனாலும் பதினாயிரக் கணக்கான பேர் மறுபடியும் ஜெயிலுக்கு போனார்கள் என்றும் சொல்லலாம். ஆனால் என்ன நடந்தது? முன்போல ஒரு ராஜி என்பதற்கு கூட மார்க்க மில்லாமல் மன்னிப்புக் கேட்டாலொழிய, அதாவது இனிமேல் அப்படிச் செய்வதில்லை யென்று சொன்னாலொழிய வெளியில் விடுவதில்லை என்று சர்க்கார் சொல்லும் நிலையில் இருக்கிறது. காந்தியும் ஏதோ ஒரு வழியில் சர்க்காருக்கு அந்தவித உறுதியைக் கொடுத்துவிட்டோ அல்லது அந்தவித உறுதி சர்க்காருக்கு ஏற்படும்படி ஏதாவது ஒரு சூசனையைக் காட்டிவிட்டோ விடுதலை ஆகப்போகின்றார் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆனால் இவற்றினால் எல்லாம் கஷ்டப்படும் மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன என்பதுதான் நமது கேள்வி.
புதிய சீர்திருத்தம் என்பது அதன்பாட்டுக்கு தானாகவே சைமன் கமிஷன் தீர்மானித்தபடி அல்லது ஒரு வழியில் சற்று அதிகமானால் மற்றொரு வழியில் சற்று குறைந்து ஏதோ ஒரு வழியில் அரசாங்கத்தாருக்கும் முதலாளிமார்களுக்கும் சுதேச ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், பெரிய உத்தியோ கஸ்தர்கள், பார்ப்பனர்கள் ஆகியவர்களுக்கும் எவ்வித மாறுதலும் குறைவும் இல்லாமலும் அவர் களுக்கு என்றென்றைக்கும் எவ்வித குறையும் மாறுதலும் ஏற்பட முடியா மலும் ஒரு சீர்திருத்தம் வரப்போகின்றது - வந்தாய் விட்டது என்பது உறுதி. இந்த சீர்திருத்தமானது பெரிதும் பணக்காரக் கூட்டமும், சோம்பேரிக் கூட்டமுமே நடத்திவைக்கத்தகுந்த மாதிரிக்கு இப்பொழு திருந்தே பிரசாரங்கள் நடந்தும் வருகின்றன. ஆகவே ஏதோ ஒரு வழியில் அந்த வேலை முடிந்து விட்டது. இனி இந்த நிலையில் அரசியல் மூலம் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு சிறு பலனாவது உண்டாகும் என்று சொல்வ தற்கில்லை.
இப்படி யெல்லாம் முடிந்ததற்கு ஏதாவது ஒரு இரகசியம் இருந்துதான் ஆகவேண்டும்.அந்த ரகசியம் என்ன?என்பதுதான் இந்த தலையங்கத்தின்
கருத்து.
இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தி யவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின் றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேரிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம் பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப்
படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும். அதென்னவென்றால்,
குடி அரசு - 1933 M) 124
“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக்கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகை
யால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத் தில் திருப்பவும் இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை? ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்
தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை. அவருடைய உபதேசத்தைக் கேட்க ஜெயில் வாசற்படியில் எப்போதும் ஆயிரக்கணக்கான பேரும் அவருடைய தரிசனையைப்பார்க்க எப்போதும் பதினாயிரக்கணக்கான பேரும் நின்ற வண்ணமாய் இருந்ததோடு இருக்கிறதோடு இந்தியாவிலுள்ள முதலாளித்தன்மைகொண்ட பத்திரிகைகள். எல்லாம் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் அரைவாசிப் பாகத்துக்கு மேலா கவே காந்தியின் புகழும், அவரது திருவிளையாடல்களும், அவரது உபதேசங்களுமாகவே நிறப்பப்படுகின்றன. அவரது அத்தியந்த சிஷ்யர்
களுக்கும் யாதொரு குறைவுமில்லை. சென்ற விடமெல்லாம் சிறப்புடனே பதினாயிரக் கணக்கான கூட்ட மத்தியில் வரவேற்று உபதேசம் கேட்கப் படுவதாகவே யிருக்கின்றன. காந்தி அவர்களது குடும்பத்துக்கும் யாதொரு குறைவும் இல்லை. அவர்களுக்கும் அது போலவே நடைபெறுகின்றன.
ஆனால் போலீசார் கைத்தடியால் அடிபட்டு உதைபட்டு அறைபட்டு மயங்கிக் கிடந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், சிறையில் சென்று கஷ்டப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது? என்று பாருங்கள். ஜெயிலிலும். பணக்காரனுக்கும் சோம்பேரிகளுக்கும் ஏ.பி. வகுப்புகளும் பாடுபடுகின்ற
கூட்டத்திற்கு சி.வகுப்புமாய்த்தான் இருந்தது. (இதற்காக தோழர் காந்தி ஒரு நேரம் பட்டினி இருந்திருப்பாரானால் ஜெயிலிலும் இந்தக்கொடுமை இருந்திருக்க முடியுமா? அதுவேறு சங்கதி ஆகவே ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும். முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றறாக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால்
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார்.
என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா? என்று கேட்கின்றோம். பணக்காரனும் சோம்பேரியும் காந்தியை புகழ்கின்றான். வெளிநாட்டுப் பாதிரியும் பணக்காரனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் காந்தியைப் புகழ்கின்றான். சர்க்காரும் அவருக்கு மரியாதை காட்டுவதுடன் அவருக்கு இன்னமும் அதிக செல்வாக்கும் மதிப்பும் ஏற்பட வேண்டிய தந்திரங்களை யெல்லாம் பாமர ஜனங்களுக்கு தெரியாமல் படிக்கு செய்து கொண்டும் வருகின்றன.
இவைகளைப் பார்த்தால் எந்த மூடனுக்கும் இதில் ஏதோ இரகசிய மிருக்க வேண்டும் என்று புலப்பட்டு விடும்.
ஏனெனில், நாளைய தினம் தோழர் காந்தியவர்கள் “இந்த சர்க்காரோடு. நான் ஒத்துழைக்க வேண்டியவனாகி விட்டேன். ஏனெனில் சட்டசபைகள் மூலம் அனேக காரியங்கள் ஆக வேண்டியிருக்கின்றது. ஆதலால் ஒத்துழை யுங்கள் இல்லா விட்டால் பொது உடமைக்காரரும் சமதர்மக்காரரும் சட்ட சபையைக் கைப்பற்றி தேசத்தை - மனித சமூகத்தை பாழாக்கி விடுவார்கள்.”
என்று (மதராஸ் காங்கிரசுக்காரர் “ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க சட்ட சபைக்கு போய் மந்திரிகளை ஆதரிக்க வேண்டியிருந்தது” என்று சொன்னது போல்! சொல்லுவாரேயானால் (சொல்லப் போகிறார்! அப்போது ஜனங்கள்- பாமர ஜனங்கள் யாதொரு முணு முணுப்பும் இல்லாமல் உடனே கீழ்படிவ தற்குத் தகுந்த அளவு காந்திக்கு எவ்வளவு செல்வாக்கும் பெருமையும் வேண்டுமோ அவ்வளவும் ஏற்படுத்த வேண்டியது இன்று சர்க்கார் கடமை யாய் இருந்து வருகின்றது. இவ்வளவோடுநிற்கவில்லை காந்தியின் புண்ணிய கைங்கரியம்.
மற்றும் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாகிய உழைப்பாளி களான தீண்டாத வகுப்பார் என்பவர்கள் எப்படியோ முன்னுக்கு வருவதான ஒரு வழியை அடைந்தவுடன் அவர்களையும் என்றென்றும் உழைப்பாளி களாகவே ஊராருக்காக கஷ்டப்படும் மக்களாகவே இருக்கும்படியான மாதிரிக்கு அவர்களை ஹரிஜனங்கள் என்னும் பேரால் ஒரு நிரந்தர ஜாதி யாராக்கி வைக்கவேண்டிய ஏற்பாடுகளும் நடக்கின்றன. அதைப்பற்றி தோழர். அம்பெத்காரின் அறிக்கையும்-காந்தியாரின் மறுமொழியும் தமிழ்நாடு பத்திரிகையின் தலையங்கமும் ஆகிய சுருக்கங்களை மற்றொரு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அதைப்பார்த்தால் ஒரு அளவுக்கு விளங்கும்.
காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாச்
சிரமதர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். “காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்” என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார் அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு
குடி அரசு - 1933 M) 126
என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரீரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்த மானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்று தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார். இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப்பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம். ஆகையால் காந்தியாரின் அரசியல் கிளர்ச்சியின் ரகசியமும் தீண்டாமை விலக்கு கிளர்ச்சியின்
ரகிசியமும் இப்போதாவது மக்களுக்கு வெளியிட்டதா இல்லையா என்று கேள்க்கிறோம். தலையங்கம் நீண்டுவிட்டதால் வருணாச் சிரமத்தைப்பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.02.1933
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
கும்பகோணத்தில் நடைபெறப்போகும் மாமாங்க விஷயமாய் சென்ற வாரம் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாமாங்கம் என்பது இந்து மதத்தில் சம்மந்தப்பட்ட ஒரு புண்ணிய (நல்ல) காரியமாக பாவிக்கப்படு
கின்றது என்றாலும், அது பெரிதும் சுயநலக்காரர்களாகிய முதலாளிமார்கள், சோம்பேரி வாழ்க்கைக்காரர்கள் ஆகிய இருகூட்டத்தாரின் விளம்பரங்களின் மூலமாகவே அது பிரபலப்பட்டு மக்கள் அதில் ஈடுபடுகின்றார்கள். மாமாங்கத்தை விளம்பரம் செய்யும் இவர்கள் மூன்று வகையாவார்கள். ஒன்று
பார்ப்பனர்கள், இரண்டு வியாபாரிகள், மூன்று ரயில்வேக்காரர்கள். இம் மூவருக்கும் அனுகூலக்காரராகவும் கூலிக்காரராகவும் இருக்கும் சில
பத்திரிகைக்காரர்கள் மூலமே அதிக விளம்பரமாகின்றது.
இதன் பயனாய் மாமாங்கத்திற்கு பல ஜனங்கள் வருவார்கள் என்று நாடகக்காரர்கள், சினிமாக்காரர்கள், சூதாட்டக்காரர்கள், விபசாரக் குச்சிக் காரிகள் மற்றும் முடிச்சவிழ்க்கும் (சட்டைப் பை! திருடர், தந்தித்திருடர், கத்திரிக்கோல் திருடர் முதலிய திருட்டுவகைக்காரர்களும் ஏராளமாய் வந்து, தங்கள் தங்கள் தொழில்களை நடத்துவார்கள். அங்கு ஏற்கனவே உள்ள சாராயக்கடைகளிலும் வெகு நெருக்கடியாய் வியாபாரம் நடக்கும். இவைகள் தவிர அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய் முதலிய ஆகாரத்திற்கு அவசிய
மாய் வேண்டிய சாமான்களாக இல்லாமல் வேறு அநேகவித சாமான்கள் அதாவது விளையாட்டு சாமான்கள், வேடிக்கை சாமான்கள்-அதிசய சாமான்கள் - அற்புத சாமான்கள், பிரபுக்கள் வீட்டில், மகாராஜாக்கள் வீட்டில் இருக்கத்தக்க சாமான்கள் ஆகிய போக போக்கிய சாமான்களே ஏராளமாய்
வரும்.
இவை தவிர காப்பிக்கடை, சோத்துக்கடை இவைகள் புதிய புதிய பெயர்களால் நன்றாய் விளம்பரம் செய்யப்பட்டு, எச்சில் மீது எச்சில் படிந்து,
எச்சில் குளத்தில் சாப்பிடுவது போல் ஓட்டல்கள் விளங்கும்.இவைகள் தவிர. காலரா, மலேரியா, இன்புளுயன்சா, அம்மை, பிளேக்கு முதலிய தொத்து நோய்களும் உண்டாகும். மற்றும் கூட்ட நெருக்கடியில் பலர் நசுக்குண்டு
சாகலாம்.
குடி அரசு - 1933 M) 128
இவைகள் தான் மேல் கண்ட விளம்பரங்களால் ஏற்படும் பயனே தவிர வேறு என்ன ஏற்படக்கூடும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். மாமாங்க சம்பந்தமான இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பாமர ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்ததற்காக மிக மிக கோபங்கொண்டு மெயில் பத்திரிகையில் அதன் நிரூபர் ஒரு சேதி எழுதி இருக்கிறார். அதன் சுருக்கமாவது:-
“சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சில காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து மகாமக பஹிஷ்காரம் செய்யப் புறப்பட்டு சில துண்டுப் பிரசுரங்கள் மாயவரத்திலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.ஆணால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். ஏனென்றால் சுயமரியாதைக்காரர்களை நாஸ்திகர்கள் என்றே ஜனங்கள் கருதுவதால் இவர்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள்.
அன்றியும் இவர்கள் இப்படிச் சொல்லுவதாலேயே அனேகம் பேர் மாமாங்
கத்துக்கு வருவார்கள். ஆதலால் சுயமரியாதைக்காரர் வேலை பயன்படாது” என்று எழுதப் பட்டிருக்கிறது.
சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்பதினாலேயே அவர்கள் நல்லது சொன்னாலும்கூட ஜனங்கள் கேட்கமாட்டார்கள் என்கின்ற தைரியம் “மெயில்” நிரூபருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை.
நாஸ்திகர் அல்லாதவர்கள் அவ்வளவு பெரியமூடர்கள் என்று மெயில் பத்திரிகையின் நிரூபர் கருதி இருப்பது அவரைத்தான் ஏமாற்றமடையச் செய்யுமே ஒழிய மற்றபடி சுயமரியாதைக்காரரை ஒன்றும் செய்துவிடாது.
மாமாங்கத்திற்கு ஜனங்கள் போவதினால் சுயமரியாதைக்காரருக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.மாமாங்கத்திற்கு ஜனங்கள் போகாமல் இருந்து விடுவதால் சுயமரியாதைக்காரருக்கு லாபம் ஒன்றும் வந்துவிடப் போவ
தில்லை.
கால தேச நிலைமையை உத்தேசித்து இந்த மாதிரி முற்போக்குள்ள காலத்தில் எங்கோ ஒரு சுகாதாரமற்ற ஆபாச ஊரில் உள்ள ஒரு சேற்றுத் தண்ணீரில் குளிப்பதற்காக மக்கள் 10, 20, 100, 200 ரூ. வீதம் செலவு செய்து கொண்டு போய், பலவித துன்பங்களையும் நோய்களையும் சம்பாதித்துக் கொண்டு வருவது அறிவுடமையா என்ற கருத்தின் மீதுதான் இந்தப்பிரசாரம் செய்கிறார்களே ஒழிய வேறு காரியம் ஒன்றும் இல்லை. இந்திய மக்களுடைய
- (சிறப்பாய்) தென்னாட்டு மக்களுடைய பகுத்தறிவை அளப்பதற்கு இந்த கும்பகோண மாமாங்கமே ஒரு முக்கிய அளவு கருவி என்றே நினைக் கின்றோம்.
அன்றியும் இதுவரை செய்துவந்த பகுத்தறிவு பிரசாரமானது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதையும் அறிய இது ஒரு சந்தர்ப்பமும்
ஆகும்.
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
தவிர ஆங்காங்குள்ள பகுத்தறிவு சங்கத்தாரும், சுயமரியாதைச்
சங்கத்தாரும், அதன் சார்புடைய மற்ற சங்கத்தாரும், தேசியவாதிகள் என்பவர்
களும் இந்த மாமாங்கப் புரட்டைப் பற்றி பாமர ஜனங்களுக்கு நன்றாய் விளக்கிப் பிரசாரம் செய்து அவர்களை இந்த மாதிரியான கஷ்டத்தில்
இருந்தும், நஷ்டத்தில் இருந்தும் மீட்பார்களாக.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.02.1933
குடி அரசு - 1933 M) 130
*வமயில்' பத்திரிகையின் கூற்று
சென்னை “மெயில்” பத்திரிகையானது தனது 11-2-33 தேதி தலையங்
கத்தில் எழுதுவதாவது:-
“சுயமரியாதை இயக்கமானது எல்லா மதங்களையும் துணிகரமாகத் தாக்கி வருவதுடன் மதங்களை அழிக்க வேண்டுமென்று பலமான பிரசாரம் செய்து வருகிறது. இதற்குக் காரணம் சர்க்கார் மத நடுநிலைமை வகித்தி ருக்கிறது என்ற ஒரே சாக்குத்தான். இதன் பயனாய் இப்பொழுது மத விஷய மான பிரசாரங்களுக்கு பொது மேடைகளில் இடமில்லாமல் போய் விட்டது. கோவிலிலும், பள்ளிவாசல்களிலும், சர்ச்சுகளிலும் மாத்திரம் தான் தனியாய் பேச முடிகின்றது. இதனால் சோவியத் ரஷியாவில் மதம் அழிந்தது அத் தேசம் நாசமுற்றது போல் இங்கும் நேரலாம் என்று கருத இடமேற்படுகின்றது. மத விஷயம் மறுபடியும் பொது மேடைகளுக்கு தாராளமாய் வரவேண்டு மானால் பள்ளிக்கூடங்களில் மதத்தைப் புகுத்தியாக வேண்டும். தோழர். காந்தியையும் தீண்டாமை விலக்குப் பிரசாரம் செய்வதை விட்டு விட்டு சுயமரியாதைக் கட்சியை ஒழித்து அதன் பிரசாரத்தை அடக்கும் விஷயத்தில் பாடுபட்டால் அது மிகவும் பயனளிக்கும்”
என்பது விளங்க எழுதி இருக்கிறது. இதைப் பார்த்து நாம் ஒன்றும் ஆச்சரியமடையவில்லை. ஏனெனில் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி இதுவரை இந்து மதக்காரரும் இஸ்லாம் மார்க்கக்காரரும், கிறிஸ்து சமயக் காரரும் எவ்வளவு தூரம் தாக்க வேண்டுமோ, குறையும் பழியும் கூற வேண்டுமோ,அவ்வளவு தூரம் தாக்கி, குறை கூறியும் அந்தப்படியேபிரசாரம் செய்தும் பாமரமக்களை ஏவியும் வருகிறார்கள்.
ஆனால் மேற்கண்ட இந்த பலமதக்காரர்களைப் போலவே மனப் பான்மையும், ஊரார் உழைப்பில் வாழும் சுகவாழ்வும் கொண்ட செல்வ வான்கள் என்னும் மற்றொரு மதக்காரர், அதாவது பணக்கார சுகவாசி மதக் காரர்கள் ஆன “மெயில்” பத்திரிகை இனத்தாரும் தங்களது நலத்திற்கும் ஆபத்து வருமோ என்னமோ என்ற பயத்தால் நம்மை ஏதோ ஒருவழியில் தாக்கியாக வேண்டியவர்கள் தான்.ஆதலால் இவர்கள் இப்போது தாக்குவதில்
நமக்கு அதிசயமொன்றுமில்லை.
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஆனால் ஒவ்வொரு தாக்குதல்காரர்களும் தாங்கள் தாக்குவதற்காகச் சொல்லும் காரணம்தான் இங்கு யோசிக்கத் தகுந்தது.
அதாவது, சுயமரியாதைப் பிரசாரத்தால் மதங்கள் ஒழிந்து கடவுள் உணர்ச்சி மறைந்து போகுமானால் இந்த மதப்பாதுகாப்பாளர்கள் என்பவர்கள். மக்களுக்கு “மோக்ஷம் கிடைக்காமல் போய் விடுமே” “கடவுள் சன்மானம் கிடைக்காமல் போய்விடுமே” “எல்லோரும் நரகத்துக்குப் போய் விடுவார். களே” என்றுதானே கஷ்டப்படவேண்டும். அப்படிக்கெல்லாம் இல்லாமல், எதற்கெடுத்தாலும் சுயமரியாதைகாரர்களை உச்சரிப்பதுடன், சோவியத் ருஷியாவை ஜெபித்து, சர்க்காரைக் கூப்பிட்டு பூச்சாண்டி காட்டுவதின் இரக.
சியம் என்ன என்பதைக் கவனித்தால் மதத்தின் இரகசியமும், கடவுள். உணர்ச்சியின் இரகசியமும் தானாய் விளங்கிவிடும் என்றே கருதுகிறோம்.
சோவியத் ரஷியாவில் மதமும் கடவுளுணர்ச்சியும் போய்விட்டதால் அது கடலுக்குள் முழுகிப் போய்விடவுமில்லை. காற்றில் பறந்து போய் விடவுமில்லை. தீப்பற்றி எறிந்து விடவுமில்லை.
மற்றபடி சோவியத் ருஷியாவைப் பற்றி யாராவது ஏதாவது யோக்கிய மான - உண்மையான குற்றம் சொல்லவேண்டுமானால் அங்கு (சோவியத் ரஷியாவில்) “ஒருவன் உழைப்பை ஒருவன் அனுபவிப்பதில்லை. எல்லோ
ரும் எல்லோருக்காகவும் பாடுபட வேண்டியது பலனை எல்லோரும் சரி சமமாய் அனுபவிக்கவேண்டும் என்கிறார்கள்” இந்தப்படியே நடக்கிறார்கள். இது தான் அங்குள்ள கெடுதி. இந்தக்கெடுதி சோவியத் ருஷ்யாவைத் தாண்டி அதற்கு 250 மைல் தூரத்திலிருக்கும் இந்தியாவுக்கும் வந்துவிடுமேயானால் யாருக்கென்ன ஆபத்து வந்துவிடும். அல்லது இந்தியா எந்த சமுத்திரத்தில்
மூழ்கிவிடும். எந்தக்காற்றில் பறந்துவிடும் அல்லது எந்த நெருப்பில் எறிந்து சாம்பலாகிவிடும். புலி வருகின்றது! புலி வருகின்றது! என்று போலி மிரட்டு மிரட்டுவதானது புலி வருவதைத் தடுத்துவிட முடியாது. அந்தப்படி புலியும் கிடையாது. பசுதான் வரப்போகிறது.
ஆகவே இவ்வித மிரட்டல்களையும், பழிசுமத்தல்களையும் இனி யாவது இந்தக்கூட்டங்கள் கை விட்டுவிடும் என்று கருதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.02.1933
குடி அரசு - 1933 M) 132
மாமாங்கத்தில் பார்ப்பண கும்மானம்
கும்பகோண மாமாங்கம் பார்ப்பனர்கள் புரட்டு என்றும், அவர்களது விளம்பரங்களுக்கும் பெருமைக்கும், லாபத்துக்கும் ஆதாரம் என்றும் நாம் சொன்னோம். இப்போது அது சரியா? இல்லையா? பாருங்கள்.“தோழர்கள் ரங்கசாமி ஐயங்கார் பொருட்காட்சியை திறந்தார். சி. ஆர். சீனிவாசய்யங்கார். சங்கீத மகாநாட்டைத் திறந்தார். விசாலாட்சி பாடினார். முத்தையா பாகவதர். கதை செய்தார். டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள் வரவேற்பு தலைவர். ராமசாமி
அய்யர், டைகர் வரதாச்சாரியார், கணபதி சாஸ்திரி, அலமேலு ஜெயராமய்யர்,
மற்றும் குமரய்யர், சுப்பைய்யர், ராமசாமி சாஸ்திரி, ரங்காச்சாரி, சுந்தரகனபாடி, சிங்கார கனபாடி, ஆச்சாரிய ஸ்வாமிகள் என்றெல்லாம் பார்ப்பன நபர்களே எங்கும் தோன்றுவதும் ஏதோ இரண்டொரு பார்ப்பனரல்லா முண்டங்கள் இவர்களுக்கு வால்பிடிப்பதுமாய் இருப்பதை அவர்களது பார்ப்பனர்களது! பத்திரிகைகளிலேயே காணலாம். ஆகவே மாமாங்கம் பார்ப்பனர் சூட்சி என்றும், அவர்களது வாழ்வுக்கே ஏற்பட்டதென்றும் சொல்லுவதில் என்ன பிழை இருக்கிறது. இதை பார்ப்பனரல்லாத சோணகிரிகள் உணர வேண்டாமா?
குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 19.02.1933
132 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
“In . த்தின் அற்புதம்”
- சித்திரபுத்திரன்
புராணமரியாதைக்காரன் கேள்வி:- ஐயா, சுயமரியாதைக்காரரே கும்ப கோண மாமாங்க குளத்தில் ஒரு அற்புதம் நடக்கின்றதே அதற்கு சமாதானம் சொல்லும் பார்ப்போம்.
சுயமரியாதைக்காரன் பதில்:- என்ன அற்புதமய்யா?
பு-ம:- மாமாங்கக்குளம் எவ்வளவு சேராய் இருந்தபோதிலும், கூழாயிருந்த போதிலும் அதில் அவ்வளவு ஜனங்கள் குளிக்கிறார்களே அந்த குளத்துத் தண்ணீர் ஏன் குறைவதில்லை. இதற்கு பதில் சொல் பார்ப்போம்.
சு-ம:- இது ஒரு நல்ல புத்திசாலித்தனமான கேள்விதான். இதன் காரணம் சொல்லுகிறேன், சற்று தயவுசெய்து கேள்க்க வேண்டும். அதாவது மாமாங்க குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் முனிசிபாலிட்டியார் இரைத்து விடுவார்கள். பிறகு ஒரு இரண்டு அடி உயரத் தண்ணீர் மாத்திரம் அதில் இருக்கும். அடியில் சிறிது மணலும் கொட்டி வைப்பார்கள். ஜனங்கள். தண்ணீரில் இறங்கியவுடன் மணல், சேரு, ஜனங்களின் அழுக்கு ஆகிய எல்லாம் சேர்ந்து குழம்புமாதிரி அழுக்கு நிரமாக ஆகிவிடும். குளிக்கிர ஜனங்களுடைய உடம்பு, துணிகள் எல்லாம் சேற்று வேஷக்காரன் போல் கருப்பாக ஆகிவிடும். இந்த நிலையில் குளிக்கும் ஒவ்வொரு நபரும் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை தனது வேஷ்டி நனையும் அளவுக்கு குளத்தைவிட்டு வெளியில் எடுத்துக் கொண்டு போகிறான் என்பது வாஸ்த் தவம்தான். ஆனால் அதற்கு பதிலாக ஒவ்வொரு நபரும் ஆண்பெண் அடங்கலும் அக்குளத்தில் கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் விட்டு விட்டுத்தான். போகிறார்கள்.
பு-ம-அதெப்படி தண்ணீர் விட்டுவிட்டுப்போகிறார்கள்? நமக்கு அது புரியவில்லையே அவர்களிடம் தண்ணீர் ஏது?
சு-ம:- இதுவும் நல்ல கேள்விதான், பதில் சொல்லுகிறேன். மாமாங்க
குடி அரசு - 1933 M) 134
காலத்தில் கூட்டம் அதிகம். தெருக்களில் எங்கும் பக்கத்தில் மறைவே இருக்காது. ஒரு மனிதன் வீட்டைவிட்டுப் புறப்பட்டால் மாமாங்க குளத்துக்கு போவதற்குள் நசுங்கி பஜ்ஜியாய் விடுவான். இதன் மத்தியில் அவன் மூத்திரம் பேய வேண்டுமானால் வழியில் காலோடு பேய்ந்து கொள்ளவேண்டும் அல்லது குளத்துக்கே போய் ஆகவேண்டும். ஆகவே யாரும் காலோடு பேய்ந்து கொள்ள சம்மதிக்க மாட்டார்கள். எப்படியாவது அடக்கி, அடக்கி அவசரமாய் குளத்துக்குப் போகும்வரை அடக்கிக் கொண்டுதான் போவார்.
கள். குளத்தில் இரங்கி துணியை நனைத்துக்கொண்டவுடன் இவர்களை அறியாமலே மூத்திரம் வந்துவிடும். அந்த மூத்திரம் மாமாங்க தீர்த்தத்துடன் தீர்த்தமாய் இரண்டரக்கலந்துவிடும். அப்போது அவர்களால் செலவாகும் தண்ணீர் கிட்டத்தட்ட சரிசமமாகவே பர்த்தியாகிவிடும். ஆகவே வரவும்,
செலவும் சரியாகிவிடும்.
பு-ம:- அந்தப்படி அந்தக் குளத்தில் மூத்திரம் சேருமானால் தண்ணீரில் ஒருவித நாற்றமிருக்காதா?
௬-ம:- நாற்றமிருக்கத்தான் செய்யும், தீர்த்தத்தண்ணீரை முகந்து பார்ப்பது மகா பாவம் என்று அவர்களுக்கு சொல்லி வைக்கப்பட்டிருக் கின்றதல்லவா? ஆதலால் யாரும் முகந்துபார்க்கமாட்டார்கள். ருசியும் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அது அவ்வளவு அழுக்காகவும் குளம்பாகவும் இருக்கும். அன்றியும் இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் முனிசிபாலிட். டியார் குளத்துத் தண்ணீரில் கெந்தகப்பொடிபோட்டு வைத்திருக்கிறார்கள். ஆதலால் மூத்திர நாற்றம் எது? கந்தக நாற்றம் எது? என்று சுலபத்தில் கண்டு பிடிக்கவும் முடியாது. ஆகவே சிலவுக்கும், வரவுக்கும் தானாகவே சரியாய் போய்விடும். இதற்குக் கடவுள் அற்புதம் ஒன்றும் தேவையில்லை.
குடி அரசு - உரையாடல் - 26.02.1933
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
எதை நம்புவது!
- சித்திரபுத்திரன்
தீண்டாமையை ஒழிக்கப்பட்டினி கிடக்கும்படி கடவுள் கட்டளை இட்டிருப்பதாக காந்தி சொல்லுகிறார்.
தீண்டாமையை நிலை நிறுத்துவதற்காக யானை குதிரைகளுடன் பல்லக்கு சவாரி செய்யும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதாக சங்கராச்சாரி
யார் சொல்லுகிறார்.
அவனன்றி ஓரணுவும் அசையாது. ஆதலால் மேற்கண்ட இரண்டு காரியங்களும் கடவுள் திருவிளையாடல் என்று கடவுள் பக்தர்களான ஆஸ்தி கர்கள் சொல்லுகிறார்கள்.
இந்த மூன்றும் முட்டாள் தனமும், சுயநலம் கொண்ட போக்கிரித்
தனமும், பித்தலாட்டமும், ஏமாற்றலும் அல்லது இதில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறில்லை என்றும் ரஷியர்கள் சொல்லுகிறார்கள்.
இவற்றுள் எதை நம்புவது, எதை நம்பினால் உண்மையில் தீண்டாமை
ஒழிய முடியும்?
குடி அரசு - கட்டுரை - 26.2.1933
குடி அரசு - 1933 M) 136
திருணாங்கூரில் சமதர்ம முழக்கம்
தோழர்களே! இன்று நான் பேசப்போவது உங்களுக்கு சந்தோஷமாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அநேகமாய் இன்று இங்கு நடக்கும் உற்சவத் திற்காக வந்தவர்கள். மிகுந்த பக்திவான்கள். நானோ அவற்றையெல்லாம். வீண் தெண்டம் என்றும், புரட்டு என்றும் சொல்லுகிறவன். அதுமாத்திரமல் லாமல் உங்களது கடவுள் உணர்ச்சி, மத உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, தேச உணர்ச்சி ஆகியவைகளையும், உங்களது சமூகத்தில் வெகுகாலமாய் இருந்துவரும் பழக்க வழக்கங்களையும் குற்றம் சொல்வதோடல்லாமல் அடியோடு அழித்து ஒழித்துவிட வேண்டுமென்றும் சொல்லுகின்றவன்.இதை
நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீர்களா என்பது எனது முதல் சந்தேகமாகும்.
நீங்கள் பொறுத்தாலும் சரி பொறுக்காவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் உங்களிடம் நான் முதலிலேயே என்னிஷ்டப் படி பேச அனுமதி வாங்கிவிட்டேன்.ஆனால் நீங்கள் நான் பேசப்போவதைப்
பற்றி வருத்தப்படுவதற்குமுன் ஒரு விஷயத்தை மாத்திரம் கவனித்துப்பார்க் கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். அதென்னவென்றால் நான் ஏன் இப்படிப் பேசுகிறேன். இதனால் எனக்கு என்ன லாபம்? இந்தப்படி பேசுவதனால் யாராவது எனக்கு பணம் கொடுப்பார்களா? ஒரு மனிதன் என்னைப் போல் வயது சென்ற “கிழவன்” ஒருவன் ஜாதியைக் குற்றம் சொல்லவும், மதத்தைக்
குற்றம் சொல்லவும், கடவுளைக் குற்றம் சொல்லவும், கோவிலைக் குற்றம் சொல்லவும், தேசத்தைக் குற்றம் சொல்லவும், அரசாங்கத்தைக் குற்றம் சொல்ல வுமான ஒரு கஷ்டமும் துக்கமுமான காரியத்தை ஏன் செய்ய வேண்டும்.நான். இதற்குமுன் இவைகளையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்திருப்பது உங்களில் பலருக்கு நன்றாய்த் தெரியும். தேசியத்திற்காக பலதடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். அப்படியிருக்க இப்போது இப்படிச் சொல்ல என்ன காரணம்? என்பதை யோசித்துப் பாருங்கள். இவைகளால் மக்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று யோசித்துப்பாருங்கள்.
உலக சரித்திரம் கிடைத்த காலந்தொட்டு ஜாதி, மதம், கடவுள், தேசம், சமூகம், அரசாங்கம் ஆகியவை இருந்து தான் வந்திருக்கின்றன. இவை களைப் பற்றிய அபிமானங்களும், சீர்திருத்த முயற்சிகளும், பெரியார்களும், மகாத்மாக்களும் அவ்வப்போது தோன்றியும், பல சீர்திருத்தக் காரியங்களைச்
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
செய்தும் தான் வந்திருக்கின்றனர். இவைகள் எல்லாம் மனிதசமூகத்திற்கு என்ன பயன் அளித்திருக்கின்றன? குறைந்தது ஒரு ஆயிரம் அல்லது 2000 வருஷ சரித்திரங்களையோ அல்லது அக்கால நிலையை உணர்த்தும் புராணக் கதைகளையோ எடுத்துக் கொண்டீர்களேயானால், அன்றைக்கும் இன்றைக்
கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை யோசித்துப்பாருங்கள். 2000
வருஷத்திற்கு முன் இருந்த சண்டாளனும், ஏழையும், கஷ்டப்படும் கூலியும், பட்டினி கிடந்து, பசியால் வாடி, மழையால் நனைந்து வெயிலால் காய்ந்து உடுக்க உடையில்லாமல் படுக்கப் பாயில்லாமல் இருக்க இடமில்லாமல் அலைந்து திரிந்து அவதிப்படும் மக்களும் கோடிகோடியாய் இன்றும் இருந்து தான் வருகின்றார்கள் என்றால் இதுவரை இருந்து வந்த மத அபிமானமும்,
கடவுள் அபிமானமும், தேச அபிமானமும், அரச அபிமானமும் ஆகியவை
கள் இக்கொடுமைகளை ஒழிக்கவோ, அல்லது இனிமேல் உலகில் இக் கொடுமைகள் இல்லாமல் செய்யவோ முடியவில்லை என்றால் இன்னமும் எத்தனை நாளைக்கு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போன்ற முட்டாள் தனமான வேலைகளாகிய மேற்படி அபிமானங்களை காப்பாற்றிக் கொண்டிருப்பது என்று கேட்கிறேன்.
சமிபகாலம்வரை அரசர்களை விஷ்ணு அவதாரமென்றும், விஷ்ணு அம்சமென்றும் சொல்லி வந்ததுடன் ஒவ்வொரு கூட்டங்களிலும் ராஜ விசுவாசத் தீர்மானம் செய்த பிறகே காரியங்களை துடங்கியும் வந்தோம். அதுபோலவே சர்வத்திற்கும், கடவுளே ஆதாரபூதம் என்றும் அவர் அருள் பெறுவதே எல்லாவற்றிற்கும் அவசியமானதென்றும் கருதி எந்தக் காரியம் செய்தாலும், எந்த எண்ணத்தை நினைத்தாலும், எந்தப் பேச்சைப் பேசினாலும், கடவுளை நினைத்து கடவுளை ஸ்தோத்தரித்த பிறகுதான் மற்ற காரியங்களை செய்துவந்தோம். அதுமாத்திரமா “கோயிலில்லா ஊரில் குடி இருப்பது பாவம்” என்று காடுமேடுகளில் எல்லாம் ஊர் கிராமங்களிலெல்லாம் கோயில் கள் கட்டினோம். சில கோயில்கள், கோட்டைகள் போல் கொத்தளங்கள். போல் கட்டி பல சுற்றுப்பிரசாரங்கள் விட்டு மதில்களும், வானமளாவக் கோபுரங்களும் கட்டி தங்கத்திலும், வெள்ளியிலும், தாம்பிரத்திலும், சாமிகள் செய்து ரத்தினங்களால் நகை போட்டு ஊணில் யார் பட்டினிகிடந்தாலும் எந்தக் குழந்தைக்கு பால் இல்லாவிட்டாலும், யாருக்கு வேஷ்டி துணி இல்லாமல் நிர்வாணமாய் இருந்தாலும், யாருக்கு பெண்டு இல்லாமல் கஷ்டமாய் இருந்தா
லும் சிறிதும் லட்சியமில்லாமல் பால் பழம் பஞ்சாமிர்த அபிஷேகமும் ஆராதனையும், பட்டு பீதாம்பர உடையும் வருஷா வருஷம் கல்யாண திரு விழாக்களும், வைப்பாட்டி திருவிழாக்களும் செய்த வண்ணமாய் இருந்த துடன் மக்களில் கோடிக்கணக்கான பேருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு வேளை: சாப்பாட்டிற்கும் விதி இல்லாவிட்டாலும் எண்ணிலடங்கா கடவுள்களுக்கு
தினம் 4-வேளை 5-வேளை 6-வேளை மூட்டை மூட்டையாய் பொங்கிப் போட்டு ஆராதனை அம்சை செய்து வந்தோம்.
குடி அரசு - 1933 M) 138
இவ்வளவு தானா ஒவ்வொரு கோவிலுக்கும் , ஒவ்வொரு சாமிக்கும் வருஷம் 10 லட்சம், 20 லட்சம் வரும்படி வரும்படியான பெருமைகளையும், சொத்துக்களை தேடிவைத்தோம். மத விஷயத்திலும் எத்தனையோ லட்சக்கணக்கான பெயர்கள் அடிக்கடி உயிரைக்கொடுத்து மதத்திற்காக என்று தலையைச் சிறைத்தும், கத்தரித்தும், முகத்தைச் சிறைத்தும், வளர்த்தும், காதை. ஓட்டை செய்தும், மூக்கை ஓட்டை செய்தும், மண்ணைப்பூசியும், சாம்பலைப்
பூசியும், சேற்றைப் பூசியும், சாணியை சாப்பிட்டும், மூத்திரத்தைக் குடித்தும், பட்டினி கிடந்தும் மற்றும் என்ன என்னவோ காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்தும் மதத்தைக் காப்பாற்றினோம். இதுபோலவே தேசத்திற்கு என்றும் அடிபட்டும், உதைபட்டும், சிறைசென்றும், தூக்கு மேடையில் உயிர்விட்டும் அன்னிய தேசத்தாருடன் போர்புரிவதென்னும் காரியத்தில் 10 லட்சக்கணக்கான பேர் உயிர்விட்டும் தேசாபிமானம் காட்டி னோம். இவ்வளவும் இன்று என்ன ஆயிற்று. பழய நிலையை வளர்க்கின்றதா அல்லது புதிதாக ஏதாவது செளகரியம் செய்ததா? யோசித்துப்பாருங்கள். இன்று இன்னாட்டில் தற்குறிகள் எவ்வளவு பேர்கள்? 100க்கு 87/, பேர் தற்குறிகளல்லவா? இன்னாட்டில் ஏழைகள் பாடுபட்டும் பட்டினி கிடப்பவர்
கள், தங்கள் பிள்ளைக்குட்டிகளை காப்பாற்றமுடியாமல் மானத்தை விற்றும், விபசாரித்தனம் செய்தும் ஜீவிக்க வேண்டியவர்கள் எத்தனைபேர் யோசித் துப்பாருங்கள். இந்த மேல்கண்ட அபிமானங்களுக்கு மரியாதை கொடுத்து இன்னும் எத்தனை ஆயிரம்வருஷம் பரீக்ஷை பார்ப்பது? அவைகளை சீர்திருத்தம் செய்ய இன்னும் எத்தனை வருஷம் காத்திருப்பது? என்பதை யோசித்துப் பாருங்கள். நான் சொல்லுவதென்ன வென்றால் இனி இந்த அபிமானங்களால் அதாவது ஜாதி, மத, கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லை யென்றும் அவைகள் போலி
யும், சூட்சியும் நிறைந்த ஏமாற்றல்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லுகின் றேன். ஆகையால் அதை விட்டு விட்டு மனுஷ்ய அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும் அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன்.
இனி ஜாதி மதம் கடவுள் தேசம் அரசு ஆகிய எவற்றிற்கும் சிறிதும் இடம்கொடாமலும் மனித அபிமானத்திற்காக மேல் கண்டவைகளில் எதை வேண்டுமானாலும் இழக்கவும் தயாராய் இருக்க வேண்டும். அன்றுதான் எல்லோரும் மனிதர்களாக இருக்க முடியும். இதனால் ஆபத்து ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றே எண்ணுகிறேன். ஆனால் இவைகளை நீங்கள் நன்றாய் யோசித்துப்பாருங்கள். பழய காரியங்கள் பயனளிக்காததாலேயே தான் இதைப்பற்றி பேசுகிறேன். உங்கள் புத்தியைக்கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரியென்று பட்டத்தைச் செய்யுங்கள். நான் சொல்லுவது குற்றமாகவும் துவேஷமாகவும் இருந்தாலும் இருக்கலாம்.
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
தோழர்களே! இன்றைய மகாநாடு முடிவடைந்துவிட்டது என்றாலும்
நிகழ்ச்சிக்குறிப்பில் எனது முடிவுரை பாக்கி இருக்கிறது இனிநான் என்ன சொல்வது என்பது விளங்கவில்லை. ஆனாலும் ஒரு விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்ல ஆசைப் படுகிறேன். அதென்னவென்றால் இன்று எல்லோரும் கோவில் பிரவேசத்தைப்பற்றி பேசினார்கள், நானும் ஒரு காரணம் பற்றி கோவில் பிரவேசத்திற்கு முயற்சித்தவன் தான். ஈரோட்டில் தேவஸ்தானக் கமிட்டியால் கோவில் பிரவேசம் பாசாக்கினதும் அந்தத் தீர்மானப்படி சிலர் கோவிலுக்குச் சென்றதும் அதனால் கேசுகள் நடந்து தண்டனை ஆனதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அதனால் பிரயோ ஜனமில்லை என்கின்ற முடிவுக்கு வந்ததோடு புதிதாக கோவில் பிரவேசம் பெறப்போகும் மக்களுக்கு புதிய கஷ்டங்களும் விளையக்கூடும் என்றே
கருதிவிட்டேன். இப்பொழுது வரவர கோவில்களே தேவையில்லை என்றே தோன்றி விட்டது. கடவுளைப்பற்றிய நம்பிக்கை எப்படி இருந்தாலும் கோவிலும், பூசையும், உற்சவமும் அவசியமா? என்று யோசித்துப்பாருங்கள். தோழர் கேளப்பன் அவர்களே கடவுள் உண்டோ இல்லையோ தனக்கு தெரியாது என்று சொன்னார். இந்தமாதிரி சந்தேகப்பட்ட காரியத்துக்கு எவ்வளவு செலவு, மெனக்கேடு, கஷ்டம் என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது எல்லோருக்கும் ஒன்று போல் இல்லாமல் மக்களை பாழ்படுத்துகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம், ஒவ்வொரு குணம், ஒவ்வொரு தோற்றம் சொல்லுகிறார்கள். இந்த
மாதிரி இப்போது ஏதாவது ஒரு வஸ்துவைப்பற்றி ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொன்னால் அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அல்லது அந்த வஸ்த்துவை நம்புவீர்களா? எந்தக் கடவுளுக்கு எப்படிப்பட்ட தத்து வார்த்தம் சொன்னாலும் அதனால் ஏற்படுகிற பயன் என்ன என்பதும், அதில் என்ன வித்தியாசம் என்பதும் யோசிக்க வேண்டிய காரியமாகும். கோவில் களை: எல்லாம் இடித்துவிடுவதால் எந்தக் கடவுளுக்கும் எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடாது. ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம். அனாவசியச்
செலவும், மதியீனமும் விலகிவிடும். நீங்கள் எந்த முறையில் கடவுளை: நிர்ணயத்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூடநம்பிக்கை கடவுளைவிட குருட்டுப் பழக்க மதத்தைவிட சீர்திருத்த கடவு
ளும் பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய் சாதித்துவிடப்போவதில்லை..
எப்படியானாலும் ஒரு கடவுளை சிருஷ்டிப்பதாயிருந்தால் “அவர். நமது கண்ணுக்குத் தெரிய மாட்டார் அவரை வணங்கினால் பிரார்த்தித்தால் பயன் உண்டு” என்றுதான் சொல்லியாக வேண்டும். எப்படிப்பட்ட மதத்தை
சிருஷ்டித்தாலும் அதற்கு ஒரு உபதேச கர்த்தாவை சிருஷ்டித்தாக வேண்டும். அக்கர்த்தாவுக்கு தெய்வீக தன்மை ஏற்படுத்தித்தான் ஆக வேண்டும். அவர். மூலமாக ஒரு வேதத்தை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அவ்வேதம் கடவுளால் அவருக்கு சொல்லப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டு தான்
குடி அரசு - 1933 M) 140
ஆகவேண்டும். அதை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று சொல்லித்தானாக வேண்டும். பிறகு அந்தப்படி நடக்காதவனையோ, அல்லது அந்தக் கர்த்தாவை ஒப்புக் கொள்ளாதவனையோ வையவோ, கொலை செய்யவோ முயற்சித்தாக வேண்டும். இவ்வளவும் மாத்திரம் அல்லாமல் அந்த வேதத்திற்கு சுயநலக்காரர்கள் சோம்பேரிகள் ஆகியவர்கள் தங்கள். நலத்துக்கு ஏற்ற மாதிரியாகச் செய்து கொள்ளும் கருத்தை எவனாவது மாற்றிச் சொன்னால் அது எவ்வளவு உண்மையாய் இருந்தாலும் அவன் மீது பாய்ந்து
தான் ஆகவேண்டும். இந்தப்படி தான் இது வரை நடந்துவந்திருக்கிறது. ஆகவே எந்த வழியில் எந்த மாதிரியில் எவ்வளவு நல்ல முறையில் கடவுளையும்,மதத்தையும், வேதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டாலும் அது மனித சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும், கேட்டையும்
பிரிவினையும் முறட்டுத்தனத்தையும் குரோதத்தையும் அடிமைத்தனத்தை யும் உண்டாக்கியே தீரும். இதுவே இன்றைய எல்லா மதத்தினுடையவும் அனுபோகம்! பிரத்தியட்ச அனுபோகம்!!
ஆதலால், கடவுள், மதம், வேதம் என்கின்றதான கற்பனைகளை ஒழிப்பதும் அழிப்பதுந்தான் மனிதனுக்கு உண்மையான விடுதலையே ஒழிய மனிதனை கடவுள் உணர்ச்சியில் புகுத்தி மத வெறியில் ஆழ்த்தி வேதத்திற்கு அடிமையாக்கி கல்லில் முட்டிக் கொள்ள கோவிலுக்குள் தள்ளுவது மிகவும் மோசமும், கெடுதியுமான காரியமாகும்.
குறிப்பு: திருவாங்கூரைச் சேர்ந்த பரூரை அடுத்துள்ள மூத்த குன்னத்தில் பரூர் காஸ்மாபாலிட்டன் புரோக்ரிசிங் சங்கத்தாரால் 11.02.7933 & 12.02.7933 இரண்டு நாள்களில் நடைபெற்ற மாநாட்டில் 12.02.1933இல் மாநாட்டிற்கு தலைமையேற்று ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 26.02.1933
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
வருணாச்சிரமம்
சென்றவாரக் “குடியரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் “இரகசியம் வெளிப் பட்டதா? என்ற தலைப்பில் காந்தியவர்களினுடையவும், காங்கிர சினுடையவும், அரசியல், சட்டமறுப்புக் கிளர்ச்சியின் தத்துவம் இன்னது என்பதை ஒருவாறு விளக்கினோம். ஆனால் அத்தலையங்கத்தின் இறுதியில் காந்தியின் வருணாச்சிரமத்தைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவதாக எழுதியிருந்தோம். அந்தப்படியே இவ்வாரம் “வருணாச்சிரமம்” என்பது பற்றி சில விஷயங்கள் எழுதுகின்றோம். வருணாச்சிரமம் என்பதைப்பற்றி இதற்கு முன் பல தடவை எழுதி இருக்கிறோம். ஆதியில் நாம் வருணாச் சிரமத்தைப் பற்றி எழுதிய காலத்தில் சில தேசீய வாதிகள் காந்தியின் வருணாச்சிரமம் இன்னது என்பதை நாம் அறியாமையால் குற்றம் சொல்லுவதாக பல “தேசியவாதிகளும்” “தேசீயப்பத்திரிகைகளும்” நம் மீது பழி சுமத்தி வந்தன. ஆனால், தோழர் காந்தியவர்களே தனது வருணாச் சிரமத்துக்கு நன்றாய் வெளிப்படையான வியாக்கியானம் செய்த பிறகு. அதாவது தேசிய வாதிகள் வேதத்தைப் போல் வாசித்து வந்த “யங் இந்தியா” என்ற பத்திரிகையில் எழுதிய பிறகு “இந்த ஒரு விஷயத்தில் (/வருணாச் சிரமதர்ம விஷயத்தில் மாத்திரம் காந்தியாருடன் அபிப்பிராயப் பேதம் கொள்ளுகின்றோம்” என்று வெளிப்படையாக எழுத ஆரம்பித்து விட்டன. ஆனால் இந்தப்படி எழுதிய தேசீய பத்திரிகைகள் எல்லாம் முழுவதும் பார்ப்பனரல்லாத “தேசிய வாதிகளின்” பத்திரிகைகளே ஒழிய ஒருபார்ப்பன தேசியப் பத்திரிகையாவது இது சரி யென்றோ, தப்பு என்றோ சொல்லாமல் திருடனைத் தேள் கொட்டியதுபோல மெளனம் சாதித்தன. காந்தியாரின் பரம சீஷர்களான தோழர்கள் ராஜகோபாலாச்சாரி, ஜவஹர்லால் நேரு முதலியவர்
கள் கூட இந்த காந்தி வருணாச்சிரம தர்மத்தைப் பற்றி ஒருவார்த்தையும் நாளது வரையும் பேசாமல் இருக்கின்றார்கள். பார்ப்பனரல்லாத தேசீய வாதிகள் என்பவர்கள் காந்தி வருணாச்சிரமத்தை ஒப்புக் கொள்ள வில்லை யானாலும் கண்டித்து வந்தாலும் காந்திக்குள்ள செல்வாக்கினாலும் அவரை விட்டுப் பிரிந்து தனித்து நிற்க சக்தியற்றதினாலும், பாமர மக்களின் அறிவின்மைக்கு பயந்தும், காந்தியாரின் திருவிளையாடல்களுக்கெல்லாம் பின்தாளம் போட்டே ஆகவேண்டி இருந்ததால் இதை போதிய அளவு வெளியாக்கி அதன் கெடுதிகளை எடுத்துச் சொல்ல தைரியமற்றவர்
குடி அரசு - 1933 M) 142
களாகவும் மனமற்றவர்களாகவும் இருக்க வேண்டியவர்களாகிவிட்டார்கள்.
“தமிழ் நாடு” மாத்திரம் ஏதோ ஒரு அளவுக்குத் துணிந்து எழுதிற்று என்னவாம்.
காந்தியார் வருணாச்சிரம தர்மத்துக்கு அவர் “யங் இந்தியா” பத்திரிகையில் எழுதிய வியாக்கியானத்தை இப்பொழுதும் ஒரு முறை எடுத்து எழுதுகிறோம். அதாவது -
1. “வருணாச்சிரம தர்மங்களில் கூறப்படும் நான்கு வருணாச்சிரம தர்மங்களிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.
2. அந்த வருண தர்மப் பாகுபாடுகள் பரம்பரையான தொழில்களைப் பொருத்தே ஏற்பட்டவை.
3. அதாவது, 1. பிராமணர், 2. க்ஷத்திரியர், 3. வைசியர், 4. சூத்திரர்.
4. அவர்களின் தொழில்களாவன..
A பிராமணர் உபதேசம் செய்தல், கல்வி கற்பித்தல்.
8. க்ஷத்திரியர் பகைவர்களினின்று காத்தல்.
C. வைசியர் வியாபாரம், விவசாயம் செய்தல்.
0. சூத்திரன் சரீரத்தால் உழைத்து மேல் கண்ட மூன்று வருணத்
தாருக்கும் ஏவல் வேலை செய்தல்.
இது தான் எனது வருணாச்சிரம தர்ம முறை. இந்த முறையை இந்து சமுகம் தவறி நடந்ததாலேயே வருண தருமம் அழிந்துவிட்டது. கலப்பு விவாகத்தால் நாட்டில் ஒற்றுமையும்,
சாந்தமும் ஏற்பட்டு விடாது என்று எழுதி இருக்கிறார்.
இந்த அபிப்பிராயமோ, வியாக்கியானமோ தோழர் காந்தியார் தன்னுடைய சொந்த வியாக்கியானம் என்று சொன்னாலும், இதே அபிப்பி ராயம் தான் மனுதர்ம சாஸ்திரத்திலும் மற்றும் பல ஸ்மிருதிகளிலும், புராணங் களிலும் இருந்து வருகின்றது. ஆகவே இதில் காந்தியார் அபிப்பிராயத்தால் வியாக்கியானத்தால் எவ்வித மாறுதலும் ஏற்பட்டுவிடவில்லை. ஒரு சமயம் ஏதாவது மாறுதல் உண்டா என்று ஆழ்ந்து கவனித்தால், மனுஸ்மிருதியில் வருணதர்மம் கெடாமல் அரசன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கின்றது. ஆனால் காந்தியாரின் ஸ்மிருதியானது, “வருணதர்மத்தைப் பற்றி அரசன் கவனிக்காததால் அரசனைத் தள்ளிவிட்டு வருண தர்மத்தைக் காப்பாற்றும் அரசாங்கத்தை ஏற்படுத்தி, வருணாச்சிரம தர்மிகள் கையில் ராஜியத்தை ஒப்புவிக்க வேண்டும்” என்கிறது. அதற்காகவே அதாவது
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
“வருணாசிரம தர்ம முறையைக் காப்பாற்றவே நான் சுயராஜியத்திற்கு பாடு படுகிறேன்” என்கிறார். ஆகவே காந்தியவர்களின் வருணாச்சிரமதர்மம் என்பது எப்படிப்பட்ட வியாக்கியானத்தையும், தத்துவ அடிப்படையையும் கொண்டிருந்தாலும் அவற்றின் தத்துவமெல்லாம் பொருளாதாரத்தையும் மற்றவன் உழைப்பால் சிலர் வாழும் சோம்பேரி வாழ்க்கையையுமே அடிப்படையாகக் கொண்டது என்பதே நமதபிப்பிராயம். எப்படியெனில் பார்ப்பான் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழவேண்டியதற்கு தகுந்த படியே அவனுக்கு உபதேசம், கல்வி கற்பித்தல் என்று சொல்லப்பட்டிருக் கின்றது. கல்வி கற்பித்தலும், உபதேசமும் யாருக்காக என்று பார்த்தோ மேயானால், உபதேசம் பெறவும் கல்வி கற்று கொள்ளவும் ஆளுகளே கிடையாது என்றுதான் விளங்கும். பெரும்பான்மையான வருணத்தார். என்னும் “சூத்திரர்கள்” என்பவர்கள், மற்றவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்கிற உபதேசத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது. மற்றவர்கள் சொல்படியே நடக்கவேண்டியவனுக்கு என்ன உபதேசம் என்ன கல்வி வேண்டியிருக்கிறது? என்பதை யோசித்துப்பாருங்கள்.
க்ஷத்திரியர்களால் தான் “சூத்திரர்களுக்கு” என்ன பிரயோஜனம்? யார்.
வந்தாலும், எந்த ராஜா வந்தாலும் சூத்திரன் முதல் மூன்று பேருக்கும் தொண்டு செய்யவேண்டியவனாகத்தானே இருக்கிறான். ஆதலால் க்ஷத்திரியன் என்பவனாலும் சூத்திரனுக்கு பலன் இல்லை.
வைசியனும் அப்படியேதான். ஆனால் வைசியனுக்குத் தான் பணம்
சேர்த்துக் கொள்ள அதிகாரம் உண்டு, சூத்திரனிடம் வேலை வாங்க அதிகாரம் உண்டு. அதனால்தான் சூத்திரனை பணம் சேர்க்கவிடக்கூடாது என்றும், சேர்த்துவிட்டால் பிராமணன் பலாத்காரமாய்க்கூட பிடுங்கிக்கொள்ளலாம் என்றும் மனுதர்மம் சொல்லுகின்றது. ஆனால் பிரிட்டிஷ் தர்மத்தில் சூத்திரன் பணம் சேர்க்கலாம். ஆனாலும் அதை வரி, கோர்ட்டு வக்கீல், கோயில், குளம், சடங்கு, பண்டிகை முதலியவைகளின் மூலம் பிடிங்கிக் கொள்ளலாம் என்று
இருந்து வருகின்றது. ஆனால் காந்தி தருமத்தில் சூத்திரன் கைக்கு பணம் வந்து சேரவே முடியாதபடி சூத்திரர்கள் கையில் ராட்டினத்தைக் கொடுத் தாய்விட்டது.
அதுமாத்திரமல்லாமல் சூத்திரர்களுக்குக் காந்தியாரால் செய்யப்படும் உபதேசமும் அதை அனுசரித்தே செய்யப்பட்டிருக்கிறது. அதென்ன வென்றால்:-
1 ராட்டினத்தையே சுற்ற வேண்டும்.
2 கைத்தரியில் நெய்யவேண்டும்.
3.மாடுமேய்த்து பால் தயிர் விற்கவேண்டும்.
குடி அரசு - 1933 M) 144
4 செருப்புத் தைக்கவேண்டும்.
5 பணப் பெட்டிகளில் வெள்ளி நாணையம் இருக்கக்கூடாது.
6.பம்பாய் மில் முதலாளிகள் (வைசியர்கள்! போல் பணக்காரர்களாக ஆசைப் படக் கூடாது.
என்றெல்லாம் உபதேசம் செய்திருப்பதோடல்லாமல் “இது தான் எனது சுயராஜ்ய வேலைத்திட்டம்” என்றும் இந்த 23 வருஷ சட்டமறுப்பு, சத்தியாக்
கிரகம் எல்லாம் இதற்காகத்தான் செய்யப்பட்டதென்றும் சொல்லியிருக்கிறார். (இந்த உண்மை அறிய வேண்டியவர்கள் 1931-ஜூன் மாதம் 12, 13-ந் தேதி “இந்து” “சுதேசமித்திரன்” “தமிழ்நாடு” பத்திரிகைகளைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். இதில் சிறிதும் தப்பில்லை. இன்றைக்கு தோழர் காந்திக்கு எழுதிக் கேட்டாலும் ஒப்புக்கொள்ளுவார்.
ஆகவே இந்தவித சுயராஜ்ஜியம் யாருக்கு நல்லது என்பதை யோசித்துப்பாருங்கள்?
இன்றையதினம் உலகம் முழுவதும் எவ்வித வகுப்பு வித்தியாசமும் கூடாது என்றும், குறிப்பாக ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, சோம்பேரி, பாட்டாளி என்பவை கூடாதென்றும் சொல்லி முயர்ச்சித்து உல கையே புதிய உலகம் ஆக்க வேண்டுமென்று பாடுபடுகின்ற காலத்தில், இந்தியாவில் “அன்னிய ஆட்சியை விறட்டுவது” என்ற தந்திர வார்த்தையை உபயோகித்துக் கொண்டு, அன்னிய ஆட்சி மாத்திரமல்லாமல் உலகத்தில் உள்ள எந்தவித கேடான ஆட்சியைவிட கேடான ஆட்சியானதும் 2500 வருஷங்களுக்கு முன் இருந்த பழைய ஆட்சிக்கும், வருணாச்சிரம ஆட்சிக்
கும் கொண்டு போகப்பாடுபடுவதென்றால் இதை எப்படித்தான் சுயமரியாதை:
யும், சுதந்திரவீரமும் உள்ள மனிதன் ஒப்புக்கொள்ளமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
மற்றும் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போனதும் கூட வருணாச்சிரமும், ஜாதி முறையும் மேல் நிலையில் பரம்பரையாய் மேல் நிலையில் இருக்கவும், கீழ் நிலையில் இருப்பவர்கள் பரம்பரையாய் கீழ் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்வ தற்கே ஒழிய மக்கள் யாவரும் சமமாய் இருக்க ஏற்பாடு செய்வதற்கென்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேள்கின்றோம். தோழர் காந்தி தனது “வருணாச்சிரமத்திலும் ஜாதி முறை
யிலும், உயர்வுதாழ்வு இல்லை, எல்லாரும் சமமாய் பாவிக்கப் படுவார்கள்” என்று சொல்லுகின்றார் என்றாலும் பிரிவு உண்டு என்றும் அவனவனுக்கு ஆதியில் விதித்த வருணத்தொழில், ஜாதித் தொழில் என்பதையே தான் அவனவன் செய்தாகவேண்டும் என்றும் சொல்வது சமதர்மத்திற்கும், சமத்து வத்திற்கும் ஏற்றதாகுமா என்பதை யோசித்துப் பாருங்கள்? முதலாளியும், தொழிலாளியும் இருப்பான், பார்ப்பானும் பறையனும் இருப்பான்; ஆனால்
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மேல் நிலையில் உள்ளவனைப்பார்த்து கீழ் நிலையில் உள்ளவன் வித்தியாசம் பாராட்டப்படாது என்றும் கீழ் நிலையில் உள்ளவனைப்பார்த்து மேல் நிலையில் உள்ளவன் வித்தியாசம் பாராட்டப்படாது என்றும் சொன்னால் இதற்கு என்ன அருத்தம்? என்பதை வாசகர்கள்தான் யோசித்து முடிவுகட்டவேண்டும். மேல்நிலையில் உள்ளவன் பாடுபடாமல் சுகமாய் கூட கோபுரம் மாடமாளிகைகட்டிக்கொண்டு மக்கள் மீது பல்லக்கு சவாரி செய்வது அவன் வருணதர்மமென்றும், கீழ் நிலையில் உள்ளவன் ஓட்டைக்குடிசையில் வசித்துக்கொண்டு போதிய ஆகாரமும் செளகரியமும் இல்லாமல் பல்லக்கு சுமப்பது இவனது வருண தருமமென்றும் சொல்லி இந்த இரண்டு நிலைக்கும் வித்தியாசம் பாராட்டக்கூடாது என்று சொன்னால், இது யாருக்கு சுகம் யாருக்கு கஷ்டம் என்பதை யோசித்துப் பாருங்கள். பல்லக்கு சுமப்பவன் இரண்டுக்கும் வித்தியாசமில்லை என்று கருதினாலும் பல்லக்கு சுமப்பவன் பாரமானது சவாரி செய்பவனுக்கும், சுமப்பவனுக்கும் யாதொரு
வித்தியாசமும் இல்லாமல் ஒன்றுபோல் சமமாய் இருக்குமா என்பது தான் நமது கேள்வி.
இந்த வருணாச்சிரமம், ஜாதி முறை, ஏழைகள் இருக்கவேண்டிய தன்மை, ராட்டினம் ஆகிய விஷயங்களைப் பொறுத்த காந்தியாரின் அபிப்பி ராயங்களேதான் நம்மை காந்தி சுவராஜ்ஜியத்தை விட “அன்னிய ஆட்சி” என்பது ஆயிரம் மடங்கு மேலானது என்று கருதச்செய்கின்றது.
காந்தி சுயராஜ்ஜியப்படி இந்த நாட்டில் தப்புக்கொட்ட பறையரும்,
செருப்புத் தைக்க சக்கிலியும், மலமெடுக்கத் தோட்டியும், மாடுமேய்க்க குடி. மக்களும் பல்லக்கு ஏறப் பார்ப்பானும், கொள்ளை அடிக்கச் செட்டியும்,
குதிர்களில் தானியங் களைக்கொட்டிக் கொள்ள ஜமீன்தாரனும், மிராசுதாரனும் இருந்தே தீருவான், அதுவும் தலைமுறை தலைமுறையாய் இருந்தே தீருவான். ஆனால் அன்னிய ஆட்சியிலும், இந்த நிலை இருக்குமென்று யாராவது சொல்லலாம். ஆனாலும் காந்தி சுயராஜியம் மாதிரி இந்தநிலைகள்.
ஜாதி முறைப்படி வருணதருமப்படி இருக்காது. பறையனுக்கு பல்லக்கேற சந்தர்ப்பம் வந்தாலும் வரும், பார்ப்பானுக்கு செருப்பு தைக்க சந்தர்ப்பம் வந்தாலும் வரும், செட்டிக்கு மாடு மேய்க்க சந்தர்ப்பம் வந்தாலும் வரும் க்ஷத்திரிய சிங்குக்கு பங்கா இழுக்க சந்தர்ப்பம் வந்தாலும் வரும். ஆதலால் அன்னிய ஆட்சி முறையாலாவது எல்லோருக்கும் பந்தயத்தில் இடமேற்
படும். காந்தி ஆட்சி முறைப்படி பந்தயமே கிடையாத பாரம்பரிய அனுபவம் தான் நிலைக்கும்.
ஆனால் இந்த முறையாகிய போட்டியும் சாந்தமற்று சதா மேல் நிலையைப் பற்றி கவலை இருப்பதும் மனித சமூகத்துக்கு நல்லதா என்று கேழ்க்கலாம். நல்லது என்றே நாம் சொல்லுவோம். ஏனெனில் எல்லாருக்கும் கஷ்டம் இருக்கின்றது என்று தோன்றினால் தான் கஷ்டநிவர்த்திக்குமார்க்கம்
குடி அரசு - 1933 M) 146
கிடைக்கும். மார்க்கம் தேடவும் மனம் வரும். நமது நாட்டு பழைய வழக்கங்
களும் மக்கள் பலர் ஜாதியின் பயனாய் மனிதத் தன்மையற்று மிருகங்கள்
போல் பாடு படவும் அது வெகுகாலமாய் நிலைத்திருக்கவும் காரணமே இந்த வருண தருமமும் ஜாதி முறையுமேயாகும். வருண தருமமும் ஜாதி முறையும் இந்த நாட்டில் இல்லாம லிருந்திருந்தால் இன்று காணப்படும் ராட்டினங்கள். நெருப்பில் எறிக்கப்பட்டு எத்தனை காலமாயிருக்கும் என்பதையோசித்தால் தானாகவே விளங்கும். ஆதலால் வருணாச்சிரமமும் ஜாதி முறையும் ஏழை களை ஏமாற்றவும் அவர்கள் செல்வவான்களுடையவும் சோம்பேரிக ளுடையும் சூழ்ச்சிகளையும் அறியாமல் இருக்கச் செய்யவும் பணக்காரர் களையும் பார்ப்பனர்களையும் காப்பாற்றவும் செய்யப்படும் தந்திரங்களே ஒழிய வேறில்லை. ஆகவே என்ன விலை கொடுத்தாவது இன்றைய காந்தி யவர்களின் வருணாச்சிரம சுயராஜ்ஜியத்தையும் ஜாதிமுறை தொழில் ஆட்சி யையும் அதையே திட்டமாக ஏற்றுக்கொண்ட காங்கிரசையும் மக்கள் ஒழித்
தாக வேண்டியது சுயமரியாதையின் சமதர்மத்தின் முதல் கடமையாகும்.
குடி அரசு - தலையங்கம் - 26.02.1933
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
காந்தியிண் ஆயைய் யிரவேச நோக்கம்
தோழர் காந்தியவர்கள் தாழ்த்தப்பட்ட தலைவர் ஒருவருக்கு ஆலயப் பிரவேச நோக்கத்தைப் பற்றி எழுதிய நோக்கத்தில் அடியில் கண்டகுறிப்புகள் காணப்படுகின்றன. அவையாவன:- “ஆலயப்பிரவேசத்தால் மட்டும் தீண்டாமை தீர்ந்து விடும் என்று நான் நினைக்கவில்லை” “ஆனால் பிறருடன் சரிசமமாக ஆலயப்பிரவேச உரிமை பெறாதவரை தீண்டாமை தீராது” “ஆலயப் பிரவேசத்தால் பொருளாதாரம் கல்வி முன்னேற்றம் ஏற்படும்” என்ற குறிப்புகள் இருக்கின்றன. இவைகளில் ஏதாவது இன்றைய அநுபவத்திற்கு ஒத்து இருக்கின்றதா என்பதை யோசிக்கவேண்டும். இந்து மதத்தில் தீண்டாத ஜாதியார் என்கின்ற கூட்டமல்லாமல் தீண்டக்கூடிய மக்கள்
பல கோடிக்கணக்கான பேர்கள் ஆலயப்பிரவேச சம உரிமையை தாராளமாய் அனுபவித்து வருபவர்களாகவே இருந்தும் பல வகுப்புகளில் இன்று நூற்
றுக்கு தொண்ணூற்றேழு பேர்கள் தற்குறிகளாகவும், நூற்றுக்கு தொண்ணூற் நறொன்பது பேர் போதிய இடமும் துணியும் உடையும் இல்லாமலும் அவர்: களது பிள்ளை குட்டிகளுக்கு கல்வி கொடுக்கவோ நோய்க்கு மருந்து கொடுக்கவோ முடியாமலும் இருப்பதின் காரணம் என்னவென்று கேட் கின்றோம். இன்று மக்களுக்கு பொதுவாக அதாவது இந்திய மக்களுக்கு மதம், ஜாதி, தீண்டாதவர், தீண்டக்கூடியவர் என்கின்ற பாகுபாடே இல்லாமல்
நூற்றுக்கு தொண்ணூறு பேர்கள் மனிதத்தன்மையிழந்து மானத்தை விற்று கஷ்ட ஜீவனம் ஜீவிக்க வேண்டியவர்களாகவும் அநேகர் அப்படிச் செய்தாலும் ஜீவிக்க முடியாதவர்களாகவும் மிருகங்களுக்கு இருக்கும் நிலை மையும் இல்லாமலும் இருந்து வருகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? இப்படிப்பட்டவர்களுக்கு என்ன மார்க்கம்? என்றுதான் கேட்கின்றோம். ராட்டினத்தையும் கோவிலையும் காட்டுவது யோக்கியமான மார்க்கமா? மோசடியான மார்க்கமா? என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள். இப்பொழுது தீண்டக்கூடிய மக்களுடைய பட்டினிக்கும், படிப்புக்கும் காந்தி
யார் கண்டு பிடித்த மருந்து ராட்டினமாகும். தீண்டப்படாத மக்களுடைய பட்டினிக்கும் படிப்புக்கும் காந்தியார் கண்டு பிடித்திருக்கும் மருந்து ஆலயங்கள் ஆகும். ஆகவே இந்த வைத்தியரின் சக்தியை நீங்களே மதியுங்கள். இந்த மாதிரி வைத்தியங்களால் காந்தியார் பணக்காரர்களுக்கும்.
குடி அரசு - 1933 M) 148
பணக்காரர் கொள்கைகொண்ட அரசாங்கத்திற்கும் உள்ஆளாய் இருந்து உதவி செய்தவர் ஆகிறாரா அல்லது ஏழைகளுக்கும் தீண்டப்படாத மக்களுக் கும்நண்பராய் இருந்து உதவி செய்வராகிறாரா என்பதை உணர்ந்துபாருங்கள்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.02.1933.
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
சேலத்தில்
. வை. ராமசாமி, முத்துச்சாமி வல்லகத்தாசு
வாவேற்புப்பத்திறங்கன் - வாதுக்கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே!
தலைவரவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியதில் நான் மேல் நாட்டிற்குச் சென்றதில் ஏதோ பல அறிய விஷயங்களை அறிந்து கொண்டு. வந்திருப்பதாக கூறி நான் ஏதோ பல அரிய விஷயங்களை சாதித்து இருப்ப தாகவும் கூறினார். நான் எனது மேல் நாட்டு சுற்றுப்பிராயணத்தில் ஒன்றும் புதிதாக கற்றுக்கொண்டு வரவில்லை. என்னுடைய அபிப்பிராயங்களும், எண்ணங்களும், ஆசைகளும் எனது மேல்நாட்டு சுற்றுப் பிரயாணத்தால் பலப்பட்டன, அசைக்க முடியாத அளவு உறுதி கொண்டு விட்டன. மற்றும் எனது ஆசை வெறும் கனவு ஆசை அல்லவென்றும், எனது அபிப்பிராயம் நடைமுறையில் சாத்தியமில்லாத ஆகாயக்கோட்டை அபிப்பிராயம் அல்ல என்றும், நான் எதையும் அமிதமாக எண்ணி மனப்பால் குடிக்கவில்லை என்றும் உணர்ந்தேன். அதற்கு ஆதாரமாக அநேக விஷயங்களை பிரத்தி யக்ஷத்தில் பார்த்து எனது கொள்கையும் ஆசையும் சாத்தியமே என்றும், சர்வ சாதாரணமே என்றும் அறிந்தேன். இது தான் எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிராயணச்சேதியென்றும் சுற்றுப்பிரபாண அனுபவமென்றும் ஒரு வார்த்தை
யில் சொல்லி முடிக்கின்றேன். மற்றும், தோழர் முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் பேசியபோதுபார்ப்பனக் கொடுமையையும், சூழ்ச்சியையும் பற்றிப் பேசியதுடன் பார்ப்பனீயத்தைப் பூண்டர ஒழிக்க வேண்டுமென்று சொன்னார். அதுவே எனது அபிப்பிராயம் என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் பார்ப்பனீயப் பூண்டை அழிப்பதால் பார்ப்பனி
யம் ஒழிந்து விடும் என்று நான் கருதவில்லை. ஏனெனில் பார்ப்பனப் பூண்டு தானாக முளைப்பதில்லை. அதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன், அதாவது,
குடி அரசு - 1933 M) 150
இந்த மண்டபம் நிறைய கொசகொசவென்று கொசுக்கள் இருந்து உங்களை உபத்திரவம் செய்வதாய் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கொசுக்கள் உங்களுடைய ரத்தத்தை உருஞ்சுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும். கொசுக்களைப் பிடித்துப் பிடித்து நசுக்கி விட்டால் போதுமா? இந்த மண்டபத்தை சுத்தம் செய்து வெள்ளை. யடித்து புகைபோட்டு இம்மண்டபத்துக்குள் இருக்கும் கொசுக்களைக் கொன்று விட்டால் போதுமா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். இதனால் எல்லாம் கொசு உபத்திரவம் தீர்ந்து விடாது, முதல் நாள் கொன்ற கொசுக் களுக்குப் பதிலாக மறுநாள் புதிய கொசுக்கள் வந்து புகுந்து விடும்.
மற்றும் ஒரு இடத்தில் ஒரு வியாதி ஏற்பட்டால் வியாதி வந்தவனுக்கு பார்த்துப் பார்த்து மருந்து கொடுத்து கொண்டு வருவதால் வியாதியை
ஒழித்துவிட முடியாது. வியாதியின் மூலாதாரத்தைக் கண்டு பிடித்து அதை அடியோடு அழிக்கவேண்டும். அதுபோலவே கொசுக்கள் இந்த மண்டபத்
திற்குள் வருவதற்கு காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதை அழிக்க வேண்டும். இந்த மண்டபத்தில் இவ்வளவு அதிகமான கொசுக்கள் கொச கொசவென்று இருக்கின்றதென்றால் இதற்குக்காரணம் இங்குள்ள ஓதம், அருகிலுள்ள நீர்த்தேக்கம் அதிலுள்ள அசுத்தம் அழுக்கு ஆகிய காரணங் களால் தான் கொசுக்கள் உண்டாகின்றன என்பதை நன்றாய் அறியவேண்டும். கொசு உபத்திரவம் கூடாதென்கின்றவர்கள் மேற்கண்ட அசிங்கங்களையும், நீர்த்தேக்கங்களையும் ஒழிக்கவேண்டும். அக்கம் பக்கம் உள்ள எல்லா இடமும் சுத்தமாக வைக்கப்படவேண்டும். அப்பொழுது தான் கொசுக்கள் ஒழியும். இல்லா விட்டால் “வெட்ட வெட்டத் தழையும்” என்பது போல எவ்வளவு அழித்தாலும் வட்டியுடன் பெருகும் என்பதே எனதபிப்பிராயம்.
ஆகையால் அதுபோலவே பார்ப்பனர்கள் எப்படி உண்டானார்கள், அவர்கள் தொல்லை எதனால் ஏற்பட்டது, அதை எது பாதுகாத்து வளர்க் கின்றது? என்பவைகளைக் கண்டு பிடித்து அவற்றை அழியுங்கள், நசுக் குங்கள். அதுதான் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் மார்க்கமாகும். இல்லாத வரையில் நமது பாடெல்லாம் வீணாகிவிடும். அன்றியும் மற்றவர்களால் வீண் கூச்சலும், குரோதமும், துவேஷமும் என்று தான் சொல்லப்பட்டுவிடும்.
ஆகையால் நாம் இவ்விஷயங்களில் முன்னைய அபிப்பிராயங்களை சிறிதும் மாற்றிக்கொள்ளாமல் மூல காரணங்களைக் கண்டு அதை அழிக்கும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று சொல்லுகின்றேன்.
அது என்ன வென்றால்? பார்ப்பான் என்பது மேல் ஜாதிக்காரன் என்கின்ற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல் ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேரியாயிருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப் பது என்கின்ற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து இந்த தத்துவ அடிப்படையை இடித்தெரிய முயன்றோமானால்
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
பார்ப்பனர்கள் என்கின்ற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும்.
பார்ப்பனர் மாத்திரமல்ல, ஒரு ஜாதிக்கு மற்றொரு ஜாதி மேல் என்கின்ற தத்துவமே அழிந்து விடும். அதுமாத்திரமல்ல ஜாதி முறையே அடியோடு அழிந்து விடும்.
சாதாரணமாக இன்று பார்ப்பன ஜாதியை மாத்திரம் ஒழித்து விட்டால் போதுமா? என்று பாருங்கள். இந்த நாட்டில் பார்ப்பனர்கள் கூடாதென்று சொல்லுகின்றபோது அதற்கு அடுத்த ஜாதியராய் விளங்கும் சைவர்கள் முதலியவர்களுக்கு இருக்க இடமுண்டா? என்று யோசித்துப்பாருங்கள். சைவன் என்றால் என்ன? பார்ப்பானைப்போலவே சரீரத்தால் வேலை செய் யாத சோம்பேரி என்று தானே அர்த்தம். எவனெவன் தன்னை மேல் ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்ளுகிறானோ அவனெல்லாம் சரீரத்தில் வேலைசெய்யாமல் மற்றவர்கள் உழைப்பில் வாழுகின்றவன் - வாழ ஆசைப் படுகின்றவன் என்றுதானே அர்த்தம்.
ஆகவே, ஜாதியை ஒழித்தாக வேண்டும் என்றும் எல்லோரும் சரீரத்தால் பாடுபட்டாகவேண்டும் என்றும் நிபந்தனை ஏற்படுத்தியாக வேண்டும். பாடு படாதவனுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்று ஆக்கி விட வேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பானும் ஒழிவான், பார்ப்பானால் வேறு எந்த வகையிலும் இந்த நாட்டில் இல்லாமல் ஒழியும்.
மேல்நாடுகளில் கூட பல இடங்களில் இந்தக்கொடுமை அதாவது சோம்பேரிகளின் சூழ்ச்சியும் கொடுமைகளும் இருந்துதான் வருகின்றன. அதற்காகத்தான் இன்று அநேக பாகங்களில் சோம்பேரி பாட்டாளி சண்டை களும் கிளர்ச்சிகளும் குழப்பங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வையுங்கள். அதென்னவென்றால் இந்த சோம்பேரி ஜாதிகளுக்கோ வகுப்புகளுக்கோ ஆதரவும் ஆக்கமும் அளித்துக் காப்பாற்றி வர மற்றொரு கூட்டம் இருக்கின்றது. அதுவும் ஒழிந்தாகவேண்டும் என்பதை.
கருத்தில் இருத்தினால் தான் இந்த ஏமாற்றமும் கொடுமையும் ஒழிந்துபடும். அதென்னவெனில் அது தான் பணக்கார வகுப்பு, முதலாளி வகுப்பு, மிராசுதார் வகுப்பு என்பனவாகியவைகளாகும். இந்த வகுப்புகளால்தான் பார்ப்பனியம் அதாவது சோம்பேரித் தத்துவம் இருந்து வருகின்றது. அதையும் மாற்றியோ அழித்தோதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் சுலபத்தில் பார்ப்பனீயம்
ஒழிந்துவிடாது.
குறிப்பு 19:021933 இல் சேலம் சுயமரியாதை சங்கத் தோழர்களால் மனுர்குல தேவாங்க பள்ளிக் கூடத்தில் நடைபெற்ற வரவேற்பில் ஆற்றிய உரை:
தோழர்களே! சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி பேசுவேன் என்று துண்டுப் பிரசுரங்களில் காணப்பட்டிருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் என்ன? என்பது பற்றி பொது ஜனங்களுக்கு ஒரு விதத்தில்
குடி அரசு - 1933 M) 152
சுயமரியாதை இயக்கத்தார்களைவிட அதன் எதிரிகளே அதிகமாகப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்.
அதாவது, சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம் என்றும் அது
கடவுள், மதம், காங்கிரஸ், அரசன் ஆகியவைகளுக்குத் துரோகமான இயக்கமென்றும், காங்கிரசுக்காரர்களும், இந்து, இஸ்லாம், கிறிஸ்துமதக் காரர்களும் அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்தும் அரசாங்க மந்திரி களுக்கும், சட்ட மெம்பர், மதம் காப்பாற்றும் போலீசு மெம்பருக்கும் தூது நடந்த வண்ணமாயும் விண்ணப்பங்கள் அனுப்பிய வண்ணமாயும் இருக்கின் றார்கள்.போதாக்குறைக்கு வெள்ளைப்பத்திரிகையாகிய “மெயில்” பத்திரிகை
யும் சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அரசாங்கத்திற்கும், காங்கிரசுக்கும், காந்திக்கும் எச்சரிக்கை செய்து சுயமரியாதை இயக்கத்தை அழிக்கச் சொல்லி சூசனை காட்டுகின்றது. அரசாங்கமும் தன்பங்கைச் செலுத்துகின்ற அளவிற் கென்று சுயமரியாதைக்காரர்கள் பின்னால் 01.0. களை விரட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆகவே சுயமரியாதை இயக்கத்தைப்பற்றித் தெரியவேண்டுமானால் அவ்வியக்கத்தின் விரோதிகள் யார் என்பதைத் தெரிந்தாலே விளங்கிவிடும். இவ்வியக்கம் தோன்றிய காலம் முதல் எவ்வளவோ தொல்லைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாகவேண்டியிருந்தது என்பதையும் பார்த்தாலும் விளங்கி விடும்.
ஆகவே இவ்வியக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இனி என்ன சொல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. மற்றபடி இவ்வியக்கக் கொள்கைகள் சரியா தப்பா என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டியது அவசியமென்றே கருதுகிறேன்.
தோழர்களே!
இந்தப்படிக்கு ஒரு இயக்கம் அதாவது இத்தனை மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்படி ஒரு இயக்கம் எதற்காக நடத்தப்படவேண்டும்? என்பதை யோசித்துப்பாருங்கள். ஒரு மனிதனுக்கு “நல்லபேர்”” வாங்குவ
தற்கும் சோம்பேரியாய் இருந்து வாழுவதற்கும் சுலபமானதும், சுகமானது மான பலவழிகள் இருக்கும்போது ஏன் இந்தக் கஷ்டமானதும், பழியும் தொல்லையும் இருக்கக்கூடிய வேலையில் ஈடுபட்டிருக்கின்றோம் என்பதை. யோசித்துப்பாருங்கள். எனது சொந்தத்திற்கு ஒரு கெளரவமும் பெருமையும் வேண்டுமானால் நான் சம்பாதித்துக்கொள்ள முடியும்.ஆனால் அவைகளால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்படக்கூடும் என்பதை ஆலோசித்துப்பார்த்தாய் விட்டது. மதத்திற்கு நல்ல பிள்ளையாய் இருந்தேன். அரசாங்கத்திற்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன், காங்கிரசுக்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன், பார்ப்பனர்களுக்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன், பார்ப்பனர்கள் அல்லாத
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
வர்களுக்கும் நல்ல பிள்ளையாய் இருந்தேன். ஒவ்வொருவரும் தன்தன் சுயநலத்துக்கு அனுகூலமாய் இருந்தால் மாத்திரம் நம்மை நல்லபிள்ளை
என்று சொல்லுகிறார்களே ஒழிய கஷ்டப்படுகின்ற மக்களுடைய நலத்தை கவனிக்க ஆரம்பித்தால் நம்மை விரட்டவும் நம்மை விட்டு ஓட்டம் பிடிக்கவுமே செய்கிறார்கள். அதுமாத்திரமல்லாமல் நம்மைத் தூற்றவும் ஆரம்பிக்கிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு உழைத்தது காட்டில் கத்தியது போலவே ஆய்விட்டதுடன் கஷ்டப்படுபவர்களுக்கு யாதொரு பயனும் ஏற்படாததோடு சோம்பேரித் தன்மைக்கும் முதலாளித்தனத்துக்குமே ஆக்கமளிக்கத் தக்கதாய்விட்டது.
இதனால்தான் இப்போது கஷ்டப்பட்டு உழைத்தும் முன்னுக்கு
வராமலும் தாழ்த்தப்பட்டும் இழிவுபடுத்தப்பட்டும் இருக்கும் மக்களுக்கு உழைக்கவேண்டியது மனிதர் கடமை என்று உணர்ந்தேன். அதுதான் சுயமரியாதை இயக்கம் என்பதும்.
எந்த மதமும் கடவுளும், அரசாங்கமும், ஏழைகள் தலையில் தான் சவாரி செய்கின்றனவே ஒழிய முதலாளிமார்களை ஏன் என்றே கேள்ப்ப தில்லை. அவர்களுடைய விருத்திக்கு உதவி செய்தே வருகின்றன. கேவலம் ஒரு தீண்டாமை என்கின்ற காரியம் எவ்வளவு அக்கிரமமென்றும், அயோக் கியத்தனமானதென்றும், ஆதாரமற்றதென்றும் எல்லா மனிதனுடைய
அறிவுக்கு பட்டிருந்தும் இன்று அதை ஒழிப்பது என்றால் எவ்வளவு கஷ்டமாய் இருக்கின்றது என்று பாருங்கள்?
தீண்டாமை ஒழியவேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சினையை முடிவு செய்ய “சாஸ்திரம் என்ன சொல்லுகின்றது? சாஸ்திரிகள் என்ன சொல்லுகின்றார்கள்?” என்று பார்ப்பதும் சாஸ்திரிகளுடன் தர்க்கம் செய்வ
தும் புத்தியுள்ள காரியமென்றோ நாணையமான காரியமென்றோ சொல்ல முடியுமா? என்பதை யோசித்துப்பாருங்கள்.
சாஸ்திரம் பார்ப்பதென்றால் என்ன அர்த்தம். இன்றைய தினம் தீண்டா மையில் கஷ்டப்படும் மக்களுடைய கஷடத்தை நீக்குவதற்காக இன்றைக்கு 2500 வருஷங்களுக்கு முன் இருந்த மக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்பது என்பது தானே அதன் அர்த்தம். கஷ்டப்படுகின்ற பறையர், சக்கிவியர்கள் முதலிய மக்களின் கஷ்டத்தை நீக்க சோம்பேரியாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்து தொந்தியைப் பெருக்கிக் கொண்டிருக்கும் சாஸ்திரிகளைப் போய் கேள்ப்பது என்பதும் அவர்களிடம் தர்க்கித்துக் கொண்டிருப்பதும் யோக்கியமான காரியமா என்று யோசித்துப்பாருங்கள். இந்தக் காரியங்களால் சாஸ்திரங்களையும் சாஸ்திரிகளையும் ஒப்புக்கொள்ளு கின்றோம் என்றுதானே அர்த்தம். இன்றைய மனித சமூக முன்னேற்ற காரியங்களில் சாஸ்திரங்களுக்கும், சாஸ்திரிகளுக்கும் என்ன வேலை இருக் கிறது? பாடுபடும் மனிதனின் சுக துக்கத்தைப்பற்றிப் பேச பாடுபடுபவனுக்கு
குடி அரசு - 1933 M) 154
உரிமையே ஒழிய சோம்பேரிகளுக்கு எப்படி உரிமை உண்டாகும். ஆகவே இன்றைய நியாயமும், அதிகாரமும் சோம்பேரிகள் கையில் இருக்கின்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இந்த நிலைமையை அடியோடு அழிக்கவேண்டும் என்றுதான் சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. எல்லா மதங்களினுடைய யோக்கியதையும் எல்லா அரசாங்கத்தினுடைய யோக்கியதையும் இப்படித்தான் இருக்கின்றன. இந்தக் கொடுமையுள்ள தீண்டாமை என்பது இந்த மனித சமூகத்தில் எவ்வளவு காலமாய் இருந்து வருகின்றது? இதை ஒழிக்க இதுவரை எந்தமதம் எந்த அரசாங்கம் பாடுபட்டு ஒழித்தது? கிறிஸ்துவ மதமும், இஸ்லாம் மதமும் தங்கள் மதத்துக்கு வந்து விட்டால் தீண்டாமை ஒழிந்துபோகும் என்கின்றன வேயொழிய இந்த அக்கிரமம் நாட்டில் எப்படி இருக்க முடியும்? ஏன் இருக் கின்றன? என்கின்ற கவலைகள் அவைகளுக்கு இல்லை. இருக்குமானால் கேவலம் ஏதோ அற்ப காரியங்களுக்கெல்லாம் உயிரை விடவும் தலையை வாங்கவும் மக்களுக்கு போதிக்கின்ற மதங்கள் இக்கொடுமைக்கு உயிர்விட ஏன் துணிந்திருக்கக்கூடாது. அரசாங்கங்களும் இந்த தேசத்தில் வெகு காலமாக சுமார் 5000 வருஷமாக இருந்து வருவதாக சரித்திரங்கள் காணப் படுகின்றன. ஒரு அரசாங்கமும் இந்த தீண்டாமையை ஒழித்து மனிதனை மனிதனாக்கச் செய்யவே இல்லை.அனேக பெரிய காரியங்களையும் நாகரிக காரியங்களையும் செய்து சாதித்ததாக கதைகள், புராணங்கள் சரித்திரங்கள் எழுதிவைத்து மகிழ்கின்றன. ஆனால் தீண்டாமை விஷயத்தில் அவை செய்ததென்ன என்றால் தலைகுனிந்துதான் ஆகவேண்டும். அது போலவே எந்தக் கடவுளாவது இந்த மாதிரியான ஒரு கொடுமையை நிவர்த்தித்ததா? இல்லையே. ஆனால் மதமும் அரசாங்கமும் கடவுளும் எல்லா மக்களுக்கும் பொது என்று வாயில் பேசுகின்றன; வெட்கமில்லாமல் எழுதிக் கொள்ளு கின்றன. அந்தப்படி எல்லா மக்களுக்கும் பொதுவாய் காரியத்தில் என்ன செய்திருக்கின்றன? தீண்டாமை என்கின்ற இந்த ஒரு விஷயத்தில் ஒன்றும் இதுவரை செய்ய முடியாத மதங்களும் அரசாங்கங்களும் கடவுள்களும் இனி ஏழைகளுக்கு அதாவது செல்வவான்களால் கொடுமைப் படுத்தப்படும் ஏழைகளுக்கு என்ன காரியத்தைச் செய்துவிட முடியும்? மதமும், கடவுளும் அரசாங்கங்களும் மேல் ஜாதிக்காரர்களுக்கும், முதலாளிமார்களுக்கும் கையாள்களேயாகும். ஆதலால் தான் ஜாதிக்கொடுமையும், பணக்காரத்
திமிரும் ஒழிய வேண்டுமானால் அவைகளின் ஆயுதங்களான கடவுள், மதம் அரசன் ஆகியவை சம்மந்தமில்லாத ஒரு ஆட்சியால் முடியும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றது. அதன்மீது கோபித்து என்ன செய்ய
முடியும். அதில் கலந்துள்ள சிலரை தூக்கில் போடலாம். சிறை வைக்கலாம். அந்த உணர்ச்சியை ஒழித்துவிட முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். இன்று உலகில் நாகரீகம் பெற்று முன்னணியிலிருக்கும் தேசங்களிளெல்லாம். இந்த உணர்ச்சிகள் தான் தான்டவமாடுகின்றன. ஆனால் படித்த மக்கள்
என்பவர்களும், பணக்காரர்கள் என்பவர்களும், பார்ப்பனர், பாதிரிகள்
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
என்பவர்களும் இதற்கு விரோதமாகத் தான் இருக்கின்றார்கள். இவர்களால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது உறுதி. எப்படி யெனில் பணக்கார ஆதிக்கமும், பாதிரி ஆதிக்கமும் மேலோங்கி இருந்த ரஷிய தேசத்தில் அவை ஒழிந்த உடன் அங்கு இன்று தீண்டாமையும் இல்லை, பணக்காரக் கொடுமையும் இல்லை. இந்தநிலை அந்த தேசத்துக்கு எப்படி வந்தது என்று கேட்பீர்கள். அங்கு முதலில் மதத்தையும், கடவுளையும் ஒழித்த பிறகுதான் ஏற்பட்டது என்பதை நீங்கள் யாவரும் உணர்ந்திருக்கலாம். இந்தக் காரணங் களால் தான் மதத்தையும், கடவுளையும் குற்றம் சொல்லுகின்றோமே ஒழிய வேறில்லை. மற்றபடி குரோதம் கொண்டோ, வெறுப்புக்கொண்டோ அல்ல. ஆதலால் நீங்களும் எவ்வித குரோதமும், துவேஷமும் இல்லாமல் பொறுமையாய் நடு நிலையிலிருந்து யோசித்துப்பார்த்து உங்களுக்குத் தோன்றுகிறபடி செய்யுங்கள்.
குறிப்பு: 19.02.1933இல் சேலம் விக்டோரியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் 20.031933இல் இராசிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஆகியவற்றில் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம்,
குடி அரசு - சொற்பொழிவு - 05.03.1933
குடி அரசு - 1933 M) 156
காங்கிரசும் ஒத்துழைப்பும்
சுயமரியாதை இயக்கத்திற்குள்ளாக சுயமரியாதை சமதர்மக்கட்சி என்ப தாக ஒருகிளை தோன்றி அது சட்டசபை ஸ்தல ஸ்தாபனங்கள் முதலியவை களைக் கைப்பற்றவேண்டும் என்ற ஏற்பாடுகளைச் செய்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் என்போர்கள் சிலருக்குள்ளும் சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்கின்ற ஆசை தோன்றி அதை வெளிப்படுத்த சமயம் பார்த்துக்கொண்டே இருந்து அதற்கு சில சாக்குகள் ஏற்பாடு செய்து இப்போது மெள்ள மெள்ள வெளியாக்கிவிட்டார்கள்.
தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “காங்கிரசுக்காரர்கள் வைதீகர்களைப்போல் பிடிவாதக் காரர்கள் அல்ல. அவர்களுக்கு சட்டசபைகளின் மூலம் பலன் ஏற்படும் என்று தோன்றினால் உடனே சட்ட சபைகளுக்குச் செல்வார்கள்” என்று குறிப்பிட்டி ருந்ததை வாசகர்கள் படித்திருக்கலாம். இந்த அறிக்கையின் கருத்தானது காங்கிரஸ் சட்டசபை நுழைவை அனுமதிக்கப்போகின்றதென்றும், ஆகை
யால் சட்டசபை செல்ல ஆசையுள்ளவர்கள் காங்கிரசை விட்டு விட்டு வேறு
கட்சியில் சேர்ந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளுவதேயாகும். அன்றியும் அதற்கேற்றாற்போல் சட்டசபைகளை லக்ஷியம் செய்தும் ஆதரித்தும் தோழர் காந்தியவர்கள் “அநேக விஷயங்களுக்கு சட்டம் தடையாயிருப்பதால் அத்தடையை விலக்க சட்டம் செய்ய வேண்டும்” என்று அடிக்கடிபேசியும், எழுதியும் வருவதின் மூலம் ஜனங்களுக்கு சட்டசபையின் அவசியமும், பிரதானமும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றதுடன் தோழர். ராஜகோபாலாச்சரியார் தீண்டாமை விலக்கு, கோவில் பிரவேசம் ஆகிய மசோதாக்களின் சாக்குகளை வைத்துக்கொண்டு அடிக்கடி டெல்லிக்குப் போவதும் சட்டசபை மெம்பர்களுடன் பேசுவதும் அவர்களுக்கு அறிக்கை. விடுவதுமான காரியங்களால் சட்டசபை பிரவேசம் அவசியம் என்று ஜனங் களுக்குப் படும்படிசெய்வதும், அதில் ஜனங்களுக்கு மோகம் உண்டாகும்படி செய்வதுமான காரியத்தைச் செய்துவருகிறார்.
இந்தக்காரணங்கள் சட்டசபை பிரவேசம் என்பதை மாத்திரம் காட்டு வதாயில்லாமல் காங்கிரசானது சர்க்காருடன் ஒத்துழைக்கத் தயாராயிருக் கின்றது என்பதையும் வெளிப்படுத்த ஒரு தந்திரமாகும். 157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஏனெனில் லார்ட் வில்லிங்டன் பிரபு“தோழர் காந்தியையும் மற்ற சில காங்கிரசு தொண்டர்களையும் விடுதலை செய்யவேண்டுமானால் காங்கிரசின்
சட்டமறுப்புக் கொள்கை மாறவேண்டும்” என்றும், தோழர் காந்தியவர்கள் சட்ட மறுப்பு செய்வதில்லை என்று சூசனை காட்டவேண்டும் என்றும் பல தடவை சொல்லி வந்திருப்பதை உத்தேசித்து சர்க்காருக்கும் இந்த விஷயம். தெரியட்டுமென்று கருதி இப்படிச் செய்கிறார்கள். இதைக்கண்ட பின்பு
சர்க்காரார் உடனே காங்கிரசுக்காரர்களை விடுதலை செய்து விடவும் கூடும்.
இந்த சமயம் காங்கிரசுக்காரருடைய உதவி சர்க்காருக்கு மிகவும் அவசியமானதாகும். ஏனெனில் இந்நாட்டில் மாத்திரமல்லாமல் உலகம். முழுவதிலுமே இது சமயம் ஏற்பட்டிருக்கும் சமதர்ம உணர்ச்சியை வீழ்த்தி ஒழிக்க ஐரோப்பிய வல்லரசுகள் எல்லாம் இந்தியாவைத்தான் நம்பியிருக் கின்றன. அதாவது இந்தியாவைத் தனது சொத்தாகக் கொண்ட பிரிட்டிஷ்
அரசாங்கத்தின் வலுவேதான் இன்று உலக சமதர்மத்திற்கு எதிராயிருக்கின்றது என்று தைரியமாயிருக்கின்றன. அன்றியும், இந்தியா தனது சொத்து என்கின்ற உரிமை பிரிட்டனுக்கு என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றே உலக சமதர்ம உதயகாலம் என்று அநேக சமதர்மவாத நிபுணர்கள் அபிப்பிராயப்படு கின்றனர். உண்மையும் அப்படியே தான் இருக்கின்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியா பிரிட்டிஷாருக்குச் சொந்தம் என்கின்ற தத்துவம் மாறாமல் இருப்பதற்காகவே புதிய அரசியல் சீர்திருத்தத்தில் மகாராஜாக் களைப் பிணைத்தும், மற்றும் காங்கிரசையும் காந்தியாரையும் பிணைத்தும். கொண்டதுமான காரியங்களாகும்.
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத் திலிருந்து விடுபடவேண்டுமானால் காங்கிரசும் அதன் அஸ்திவாரமான இந்திய முதலாளித் தன்மையும் ஒழிந்தாலொழிய முடியவே முடியாது என்பது பிரிட்டனுக்கு நன்றாய் தெரியும். அதுவே உண்மையுமாகும்.
ஆதலால்தான் வெகு சீக்கிரத்தில் முதலாளி தத்துவத்தின் மீது கட்டப் பட்டிருக்கும் காங்கிரசும், முதலாளி தத்துவ ஆட்சியாகிய சர்க்காரும் தங்களு டைய போட்டியை விட்டுவிட்டு வெகு சீக்கிரத்தில் வெளிப்படையாகவே தோளோடு தோள் பிணைந்து வெளிக்கிளம்பி சமதர்ம உணர்ச்சியை நசுக்கப் புறப்படப் போகிறார்கள். இதுவே நமது உறுதி, அதன் சூசனைகளே தான் இப்போது சர்க்கார் காந்தியையும் காங்கிரசுக்காரரையும் விடுதலை செய்ய “காங்கிரஸ் இனிசட்ட மறுப்பு செய்வதில்லை” என்ற சூசனையை கேட்பதும் காந்தியும், காங்கிரஸ் சட்டசபையைக் கைப்பற்ற வேண்டும் என்று கருது வதாகச் சொல்வதன் மூலம் சர்க்காரோடு ஒத்துழைக்கப் போகின்றோம் என் கின்ற சூசனையைக் காட்டுவதுமான காரியங்களாகும். இந்த சூசனை களானது வெகு சீக்கிரத்தில் சர்க்காரும், காங்கிரசும் ஊடலில் இருந்த நாயகனும் நாயகியும் ஊடல் தீர்ந்தபின் அடையும் காதல் பாவத்தின் பலன்
குடி அரசு - 1933 M) 158
போல் கட்டிப் புரளச்செய்யப் போகின்றது என்பதில் சிறிதும் சந்தேகப்பட இடமே இல்லை.
இதை தேசீயவாதிகள், தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் மேள தாளத்தோடு ஆதரித்து வரவேற்கப்போகின்றார்கள் என்பதிலும் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
இப்பொழுதே தேசிய பத்திரிகைகள் இது விஷயத்தில் தங்களது அபிப்பிராயங்களை தெரிவித்துவிட்டன. அதாவது தமிழ்நாடு பத்திரிகை யானது தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சட்டசபை என்றவுடன் “ஆச்சாரியாருக்கு இப்பொழுதாவது புத்திவந்ததா” என்று கேட்டு விட்டு இதை “நல்ல யோசனை” என்றும் சொல்லிவிட்டது. இந்து, சுதேசமித்திரன் என்ற பார்ப்பன பத்திரிகைகளும் காங்கிரஸ் ஸ்தம்பித்துப்போய் விட்டது, ஆதலால் வேறு ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்தாகவேண்டும் (என்று எழுதுகின்ற பாவனையில்! “காங்கிரசு சட்டமறுப்பில் செலவழித்த ஊக்கத்தை. சட்டசபையில் செலவழித்திருந்தால் எவ்வளவோ பலன் அடைந்திருக் கலாம்” என்றும் எழுதிவிட்டன.
சுயராஜ்யா என்னும் ஆந்திர பார்ப்பன தேசிய பத்திரிகையும் சட்ட சபை பிரவேசமே நல்ல மருந்து என்று கருதி இருப்பதாக ஜனங்களுக்கு காட்டிக்கொண்டுவிட்டது. ஆகவே சட்டசபை தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ். வாதிகளை, தேசிய வாதிகளை சட்டசபைகளுக்கு அனுப்புங்கள் என்று
காந்தியும் ராஜகோபாலாச்சாரியும் “ஸ்ரீமுகம்” உத்திரவு வெளியிட வேண்டி யதும் அதை மற்ற தேசியபத்திரிகைகள் கொட்டை எழுத்தில் வெளிப்படுத்தி விளம்பரம் செய்யவேண்டியதும் தான் பாக்கி இருக்கிறது. சிறையிலிருந்து வெளியாகும் தொண்டர்களுக்கு தேர்தல்வரை என்ன வேலை கொடுப்பது என்பதுதான் இப்போது காந்திக்கும் ஆச்சாரியாருக்கும் பெரிய கவலை என்றாலும் அதை உத்தேசித்தே ஹரிஜன வேலையை சிருஷ்டித்துப் பார்த்தார்கள். ஆனால் இதில் பட்டினி விரதப்புரட்டுகள் வந்து புகுந்ததால் அதன் செல்வாக்கும் இப்பொழுது ஒரு வழியில் குறைந்து போய்விட்டது.
ஆகவே இப்போது எப்படியாவது சிறிது காலத்திற்கு அதாவது அடுத்த தேர்தல்வரை காங்கிரசு ஸ்தம்பித்தது-ஸ்தம்பித்தபடிதான் இருக்கும். தேர்தல் வந்தவுடன் இந்து சுதேசமித்திரன் வேண்டிக்கொண்டிருப்பது போலவே காங்கிரஸ் இரட்டிப்பு முயற்சியுடன் வெளிக்கிளம்பக் கூடும். எப்படி இருந்தபோதிலும் சமதர்ம உணர்ச்சியையும், புரட்சியையும் இந்த
தந்திரங்கள் எல்லாம் அழித்துவிடமுடியாது என்கின்ற தைரியத்திலேயே தான் நாம் இருக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.03.1933
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
உண்மைத் கோழுர் மறைந்தார்
சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-2-33 ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக் கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தோழர் ராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்விதி தாட்சண்யத் திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார். இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த
காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலூக்கா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தி யோகம் கொடுப்பதில்லை” என்று ஒரு உறுதிமொழி கூறி அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப்படுத்தினார். மற்றம் அவரது திருநெல்வேலி சு.ம.மகாநாட்டின் தலைமை உரையில் (1929-ம் வருஷத்தில்) வருங்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தால் ஏற்படும் பலன் இன்னின்னவை என்று குறிப் பிட்ட சயமத்தில்,
“உலகம் எல்லாம் வழங்கப்படும் ஒரு பாஷை ஏற்படும்.
உலகம் எல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரு கொள்கை ஏற்படும்.
உலகம் எல்லாம் ஒரு ஐக்கிய ஆட்சி நாடாகும்.
உலகத்திலுள்ள சொத்துக்கள் பூமிகள் எல்லாம் உலகத்திலுள்ள
மக்களுக்குச் சொந்தமாகும்.
வேலை செய்யாத சோம்பேரிகள் ஒருவர் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். குற்றங்கள் குறைந்து விடும் நோய்கள் அகன்று விடும். மனித
குடி அரசு - 1933 M) 160
ஆயுள் இரட்டித்து விடும். மக்கள் வாழ்வில் உள்ள கவலைகள், பொறாமை கள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவு முயற்சிகளும் தாண்டாவமாடுவதுடன், மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கர்ஜித்ததுடன், தீண்டாமை என்பது மதக்கொள்கையைச் சேர்ந்தது என்பது முழுப்புரட்டென்றும் அது முழுதும் பொருளாதார சூழ்ச்சியின் அடிப் படையைக் கொண்டது” என்றும் பேசி இருக்கிறார்.
இந்த தத்துவங்களில் ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று சு. ம. இயக்கம் வேலை செய்து வருவதைப் பார்ப்பவர்கள் இவ்வியக்கம் யாதொரு
புதிய வழிகளிலும் செல்லவில்லை என்பதை உணர்வார்கள். தோழர் ராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும் செளகரியமும்
இருந்தும் அவைகளை லட்சியம் செய்யாமல் இயக்கத்திலேயே கவலைக் கொண்டு மற்றவைகளை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரேயாவர். இவரது வயது 48, அதாவது 1884-ல் பிறந்தவர் இவ்விளம் வயதில் இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர்ந்தமைக்கு யாரே வருந்
தாமல் இருக்க முடியும்? இவருக்கு 4-ஆண் மக்களும் 3- பெண்மக்களும் உண்டு. இவரது வாழ்க்கைத் துணைவியார் ராமனாதபுரம் ஜில்லா போர்டு அங்கத்தவராகவும் சிவகங்கை தாலூகா போர்டு அங்கத்தவராகவும் தகுந்த கல்வி ஞானமுள்ளவராகவும் இருக்கின்றார்கள்.
எனவே இவ்வம்மையார் இயற்கையை மதித்து துணைவரின் பிரிவை சடுதியில் மறந்து அவரது சுயமரியாதை இயக்கத்தில் அவரது கொள்கை களையே கொண்டு உலக விடுதலைக்கும் உலக இன்பத்துக்கும் உழைக்க முன்வருவார்கள் என்றே ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - இரங்கலுரை - 05.03.1933.
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
ஈறோட்மல் குச்சிக்காரிகள் வலால்லை
ஈரோட்டில் குச்சிக்காரிகள் தொல்லை அதிகரித்து விட்டதென்றும் இதன் பயனாய் காலித்தனங்களும், பொதுஜன சாவதானத்துக்கு அசெளகரி யங்களும் ஏற்பட்டு பல திருட்டு, ரகளை, அடிதடி, ஆபாசப் பேச்சுவார்த்தை
கள் முதலியவைகளும் ஏற்படுகின்றன என்று 29-1-33 தேதி “குடி அரசுப் பத்திரிகையில் எழுதியிருந்ததுடன் இவற்றைச் சீக்கிரத்தில் ஒழிக்கபோலீசார். தக்க முயற்சிகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும், விபசாரத் தடுப்பு சட்டத்தின் அமுல் ஈரோட்டிற்கும் கொண்டுவர வேண்டுமென்றும் தெரிவித் துக்கொண்டோம்.
சமீபத்தில் ஈரோடு போலீசு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவர்கள் சிறிது கவலை கொண்டு ஏதோ சில எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்ட தாகவும் தெரிகின்றது. ஆனால் காரியத்தில் தக்க மாறுதல்கள் எதுவும் ஏற்பட்டதாய் தெரியவில்லை.
ஆகையால் இப்போதும் பல தோழர்கள் முயற்சி எடுத்து போலீசு சூப்ரண்ட்டெண்ட் அவர்களுக்கு இக்கஷ்டங்களைக் குறித்து விண்ணப்பம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதாகத் தெரிகின்றது. அதில் தோழர்கள், மு.ச. முத்துக்கருப்பஞ் செட்டியார், ஆர். பழனியப்ப செட்டியார். ஈ. என். குப்புசாமி ஆச்சாரி, எ.கோவிந்தசாமி நாயக்கர், எஸ்.வேலுச்சாமி, சுப்பிரமணி
யம், ஈஸ்வரன், செலமேலு, நாதன், ரத்தினசபாபதி முதலிய பலர் கையெழுத்
திட்டு விண்ணப்பம் செய்துகொண்டதாகத் தெரிகின்றது.
ஆதலால் இனியாவது உடனே போலீசு இலாக்காதாரர்களும், முனிசி பாலிடியாரும் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
முனிசிபல் கவுன்சில் மூலம் ஈரோட்டிற்கு விபசாரத் தடைச் சட்டம் அமுலுக்கு வரவேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி சர்க்காருக்கு அனுப்பவேண்டும் என்றும் விரும்புகின்றோம்.
குடி அரசு - 1933 M) 162
ஈரோட்டில் சற்று ஏறக்குறைய 300 பேர்களுக்குக் குறையாமல் 500க்கு மேற்படாத பெண்கள் பணத்துக்கு விபசாரம் செய்கின்ற கீழ்தர விபசாரிகளாக இருப்பதாக தகவல் எட்டுகின்றது. சில வீதிகளில் மரியாதை யான மக்கள் வாழ்வதற்கு யோக்கியதையே இல்லாமல் இருந்து வருகின்றது. ஆகையால் இதை உடனே கவனிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.03.4933
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
விருதுநகர் ஆண்டு விழா
. வவ. இராமசாமியும் வல்தை்தாசும் 1000 ர் ஊர்வலம்
தலைவரவர்களே! வாலிபதோழர்களே! மற்றும் பல சங்கத்தினர்களே! இன்று இந்த ஆண்டுவிழாவுக்காக வந்த எனக்கு நீங்கள் அளித்த வரவேற் புக்கும், என்னிடம் காட்டிய அன்புக்கும் ஆர்வத்திற்கும் நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இந்த ஆடம்பர வரவேற்பும் உபசாரப் பத்திரங்களும் எவ்வளவு உணர்ச்சியுடையதானாலும் கிளாச்சியாய் இருந்தாலும் ஏதோ ஒரு அளவுக்கு இயக்க பிரசாரத்திற்கும் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டுவதற்கும் மக்கள் கவனத்தை இழுப்பதற்கும் பயன்படுகின்றது என்று சொல்லப்படுவதாய் இருந்தாலும் இப்போது வரவர எனக்கு இவைகள் ஒரு சடங்கு முறை போலவே தோன்றுகின்றன. இந்தப்படி வாயில் சொல்லிக் கொண்டே நானும் இந்த காரியங்களுக்கு உடன் பட்டுக் கொண்டே வருகின் றேன் என்றும் இவை அனாவசியம் என்றோ தவறு என்றோ பட்டவுடன் நிருத்திவிட வேண்டியதே கிரமமாகும் என்றும் சொல்வதில் குறை இருப்ப தாக நினைக்கவில்லை.
ஆனால் இப்போது நிறுத்தப்படுவது சிலருக்கு அதிருப்தியாகவும், சிலருக்கு விஷமம் செய்யஇடம் கொடுப்பதாகவும் இருக்கக்கூடும் என்றும் ஒரு சமயம் இயக்கத்தைப் பாதிக்கக் கூடியதாகும் என்றும், சில நண்பர்கள் சொல்வதால் நானும் நீங்களும் வெகு ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருப்
பதும் சமீபத்தில் நடக்கப் போவதுமான மாகாண மகாநாட்டில் ஊர்வலம் உபசாரப்பத்திரம் மலர் மாலை ஆகிய ஆடம்பரங்களை நிறுத்துவது என் பதை ஒரு தீர்மானமாக நிறைவேற்றிவிட்டு இவைகளை நிறுத்தப்பட வேண்டு. மென்று கருதி இருக்கிறேன்.
தோழர்களே! இதுபோலவே இனியும் அனேக விஷயங்கள். சடங்குகள் போல் சு.ம. இயக்கத்திலும், நடைபெற்று வருகின்ற விஷயம் எனக்குத் தெரியும். அவைகளையெல்லாம் சிறிது சிறிதாக குறைத்து வந்து முடிவில் அடியோடு எடுத்து விட முயற்சித்து வருகிறேன். இப்படிப்பட்ட
குடி அரசு - 1933 M) 164
பல காரணங்களால் தான் சு-ம இயக்கம் புரட்சி இயக்கமென்று சொல்லப் படுகின்றது.
ஒரு ஏழைக்கும், செல்வவானுக்கும், ஒரு முதலாளிக்கும் அவனது
காரியஸ்தர்களுக்கும், ஒரு எஜமானுக்கும், அவனது அடிமைக்கும், இருந்து வரும் வித்தியாசங்களும் நடப்புகளும், வெறும் சடங்குமுறை போலவும் பழக்க வழக்கம் என்பதை ஆதாரமாய்க் கொண்டும் நடந்து வருகின்றனவே ஒழிய அதில் ஏதாவதுநியாயமோ அறிவுக்குப் பொருத்தமான காரணங்களோ இருக்கின்றனவா என்று பாருங்கள். முதலாளி சுகப்படுவது, தொழிலாளி கஷ்டப்படுவது என்பது எதை ஆதாரமாய்க் கொண்டது என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். பார்ப்பான் மேல்ஜாதி, பறையன் கீழ்ஜாதி என்பதற்கு
எது ஆதாரமோ அதுதான் இந்த ஏழை பணக்காரன், முதலாளி தொழிலாளி,
என்கின்ற பழக்கத்திற்கும், நடப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்றது. பார்ப்பான், பறையன், மேல்ஜாதி, கீழ்ஜாதி ஆகியவை கூடாது என்றும் நாம் கூறும்போது நம்முடன் கூட இருந்து யார் யார் நமக்குப்பின் தாளம் போட்டார்களோ அவர்கள் எல்லாம் இப்போது முதலாளி, தொழிலாளி. ஏழை, பணக்காரன் என்கின்ற பாகுபாடும், வித்தியாசமும் ஏன் என்று கேள்க ஆரம்பித்தவுடன் நம்மைவிட்டு ஓட ஆரம்பித்துவிட்டார்கள். அதுமாத்திரமல்ல நம்மை குறைகூறவும் ஆரம்பித்துவிட்டார்கள். இதன் பயனாய் நமக்கு புதியபுதிய எதிரிகள் உண்டாகிக்கொண்டு வருகின்றார்கள். பணக்காரர்களைவிட சோம்பேரியாய் இருந்து இயக்கத்தின் பெயரைச் சொல்லி வயிறுவளர்த்துக் கொண்டவர்கள் எல்லாம், இப்பொழுது புதிய எதிரிகளாக வருவார்கள். இவைமாத்திரமல்ல இனியும் தாய், தகப்பன், அண்ணன், தம்பி முதலியவர்: களும் எதிரியாவார்கள். மற்றும் நம்ம பின்னால் மேலுக்காய் திரிந்து கொண்டி ருந்த தோழர்களைப் பற்றியோ வென்றால் சொல்ல வேண்டியதேயில்லை. இனி நாளாக நாளாக இவ்வியக்கத்திற்கு ஏழை மக்களும் பாடுபட்டு உழைத்து தங்கள் பயனை அன்னியர்கள் அனுபவிக்கவிட்டுக் கொண்டு கஷ்டப் படுகின்ற மக்களுந்தான் நமக்கு உற்ற துணைவர்கள் ஆவார்கள்.
பணக்காரர்களை நம்பி அவர்கள் தயவால் சோம்பேரியாய் இருந்து வாழ்ந்து வரும் மக்கள் ஒருநாளும் நமக்கு உதவிபுரியமாட்டார்கள். இவர்கள் சங்கதிகளே இப்படியிருக்குமானால் அரசாங்கத்தினரின் யோக்கியதையைப் பற்றி நான் சொல்லவேண்டுமா? ஆகவே மேற்கண்ட எதிர்ப்புகளைச்சிறிதும்
லட்சியம் செய்யாமல் தைரியமாய் தலைகொடுத்து அவைகளை சமாளித்தாக வேண்டும் என்பதில் குற்றமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாம் யாரை விரோதித்தாலும் யாரை நேசித்தாலும் நமது கருத்து ஒன்றேயாகும். அதாவது படித்தவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும், அரசாங்கத்தார் என்றும் சொல்லிக்கொண்டு ஏழைகளின் ரத்தத்தை எவரும். உரிஞ்சக்கூடாது என்பதேயாகும்.
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
படித்தவனும், பணக்காரனும், அரசாங்கமும் பாடுபட்டு உழைக்கும் மக்களுடைய நன்மைக்கும், அம்மக்களுடைய உழைப்பின் பயன் முழுவதும் அம்மக்களே அடையும்படியான காரியத்திற்கும் எதிரிகளாய் இருப்பவன் களேயானால் அவன்கள் எல்லோரும் உலகில் இல்லாமல் மறைய வேண்டிய வர்களேயாவார்கள். இதற்காக உழைக்காத இயக்கமோ மனிதனோ உலகில் இருப்பதும், இறப்பதும் இனி ஒன்றேயாகும். மற்றும் மனித சமூகத்தினிடம்.
ஓய்வு சாந்தி நிலவி, பொறாமை, துவேஷம் அசூயை, ஆகியவை ஒழிய வேண்டுமானால் சமதர்மத்தைத் தவிர வேறு வழியில்லை..
குறிப்பு: 28.02.1933 இல் நடைபெற்ற விருதுநகர் நாடார் பரிபாலன சங்க ஆறாம் ஆண்டு விழாவில் விருதுநகர் நாடார் பரிபாலன சங்கத்தார். இளைஞர். சுயமரியாதை சங்கத்தார். ஆதிதிராவிடர் சங்கத்தார். நித்தியானந்த வாசக சாலை. ஆகியநான்கு சங்கத்தாராலும் அளிக்கப்பட்ட வரவேற்புப்பத்திரத்திற்கு பதிலளித்து பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 12.03.1933
குடி அரசு - 1933 M) 166
விருதுநகரில் சுயமரியாதைப்
வொதுக்கூட்டம்
தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும் என்று தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்
கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்..
நாம் இந்த7, 8 வருஷகாலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.
சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டேசெய்யச் சொல்லி கெஞ்சுவோம். அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம், அவர்கள். சொல்லுவதையே நன்மை என்று கருதுவோம். அன்றியும் அது அரசாங்கம் வேறு பார்ப்பனர்கள்வேறு என்று சொல்ல முடியாத காலமாய் இருந்தது. அந்தக் காலத்தில் பெரும் பணக்காரன், ஜமின்தாரன், மீராகதாரன் என்பவர்கள். எல்லாம் பார்ப்பனர்கள் காலடியில்தான் கிடந்தார்கள். அதிலிருந்து ஒரு பெரும் புரட்சி உண்டாயிற்று. அது தான் ஜஸ்டிஸ் கட்சி புரட்சி என்பது. அது தோன்றிய பின்பு பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் பார்ப்பன ரல்லாத படித்தவர்கள் என்பவர்களுக்கும் சற்று செல்வாக்கு தோன்றிற்று. பார்ப்பனர். களையே நம்பி இருந்த அரசாங்கமானது பார்ப்பனரல்லாதாரைத் தட்டிக் கொடுத்து அவர்கள் ஆதரவில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாய் பார்ப்பனர்கள் அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுக்கக்கருதி பார்ப்பன ரல்லாத பாமர ஜனங்களை வசியம் செய்யத்தக்க சில புதிய சூகஷிகளைக் கையாள ஆரம்பித்தார்கள். அதன் பயணாய் பார்ப்பனர்கள் தன்மை இன்னது
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
என்றும் அரசாங்கத்தின் தன்மை இன்னது என்றும் ஓரளவுக்கு வெளியாயிற்று. பிறகு அவை ஒரு புரட்சியாய் ஆயிற்று. அந்த இரண்டுவித கிளர்ச்சியும் சுயநலங்களையே அதாவது முன்னணியிலிருந்து கிளர்ச்சி செய்பவர்கள் அதிகாரமும் பதவியும் பெருவழியும் கவலை கொண்ட பாமர மக்களை ஆயுதமாக வைத்து போர் நடத்தியதால் இரண்டும் பலமற்று ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுவதும் மறுதடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது. இந்த மாதிரியில் ஜஸ்டிஸ்: கட்சி என்பதும் ஒரு தடவை நல்ல தோல்வியடைய வேண்டி ஏற்பட்டது.
இந்த சந்தர்ப்பம் நமக்கு நல்ல சந்தர்ப்பமாய் கிடைத்ததால் நாம் சமூக வாழ்க்கையில் ஒரு கிளர்ச்சி செய்ய முடிந்தது. இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காத பக்ஷம் நமது வேலைக்கு அவ்வளவு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.
ஏனெனில் பார்ப்பனரல்லாதார்கள் ஜாதி வித்தியாசங்களையும் அதற்கு ஆதாரமான மத சம்பிரதாயங்களைப் பற்றியும் இவ்வளவு தூரம் கிளர்ச்சி செய்ய சம்மதித்து இருக்கவேமாட்டார்கள். பார்ப்பனரல்லாதாரியக்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்து மறுபடியும் அது வெற்றியாவதற்
குள் சுமார் 4 வருஷ காலத்துக்குள் அபரிமிதமான காரியங்களைச் செய்திருக்
கிறோம். இதை சமூக சம்பந்தமான ஒரு புரட்சி என்றே சொல்லவேண்டும்.
இப்பொழுது மேல்கண்ட அரசியல் கிளர்ச்சியும் சமூகக் கிளர்ச்சியும் நடத்தப்பட்டது போலவே தான் இப்போது பொருளாதாரத் துறையிலும் ஒரு
கிளர்ச்சி செய்ததாக வேண்டியிருக்கின்றது. இது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதைப் பற்றி நாம் கலலைப்பட வேண்டியதில்லை. இது நியாயமா? அநியாயமா? அல்லது அவசியமா? அவசியமற்றதா? என்று தான்: பார்க்கவேண்டும். அரசியலைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ சமூகத்தில் ஜாதி மதங்களைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ அவைகள் எல்லாம் இன்றைய பொருளாதார இயலிலும் இருப்பதைக் காங்கின்றோம். எப்படி அரசாங்கம் என்பதற்காக சில மக்களின் உழைப்பு வீணாகின்றதோ, எப்படி மேல் ஜாதியான் என்பதற்காக சில ஜனங்கள் இழிவு படுத்தப்படுகின்றார்களோ அதுபோலவே தான் பணக்காரன் முதலாளி என்பதற்காக பல மக்களின் உழைப்பு வீணாக்கப்படுவதுடன் இழிவு படுத்த வும்படுகிறார்கள். இந்தக் காரணங்களால் பொருளாதார இயலில் ஒரு பெரும்
கிளர்ச்சி செய்யவேண்டியது இப்போது அவசியமாகின்றது. இது இன்று நமது நாட்டுக்கு மாத்திரம் அவசியம் என்று காணப்பட்டதாக நினைக் காதீர்கள். இன்று உலகில் எங்கும் இவ்வுணர்ச்சி பரவி தாண்டவமாடுகின்றது.
ரஷியா தேசத்தில் இவ்வுணர்ச்சி தோன்றி பெரும் புரட்சியாக மாறி வெற்றி பெற்று இன்று காரியத்தில் நடைபெற்றும் வருகின்றது. ரஷியாவில் அரசியல் ஆதிக்கமோ ஜாதிமத ஆதிக்கமோ செல்வவான் ஆதிக்கமோ
குடி அரசு - 1933 M) 168
ஒன்றுமே கிடையாது. அந்த நாட்டிலுள்ள வாலிபர்களுக்கு அரசியல் என்றால் என்ன மதம் என்றால் என்ன ஏழை பணக்காரன் என்றால் என்ன என்கின்றவைகளுக்கு அருத்தமே தெரியாது.
மனிதரில், வாழ்க்கையில், கவலையில், பொருப்பில் ஒருவருக் கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் அறியார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இங்கும் ஏற்படுவதில் யாருக்கும் எவ்வித கஷ்டமோ நஷ்டமோ இருக்காது. பணக்காரனென்றும் மேல் ஜாதிக்காரன் என்றும் அரசன் என்றும் சொல்லிக் கொள்ளப்படுவதில் ஒருவித செயர்க்கை திருப்தி ஏற்படுவதைத் தவிர இவற்றின் பயன்களால் இவர்கள் கவலையற்று, அதிருப்தியற்று சாந்தியாய் மனச் சமாதானமாயிருக்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிட
முடியாது.
உலகம் தோன்றிய காலம்தொட்டு இதுவரை எத்தனையோ பேர். சாதாரண மனுஷர்களாகவும் ரிஷிகளாகவும், மகான்களாகவும் அவதார புருஷர்களாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகவும் ஏற்பட்டு மக்கள் சமூக நன்மைக்காக என்று எவ்வளவோ காரியங்கள் செய்தாகி விட்டது. இவற்றால் வாழ்வில் மனிதனுக்கு எவ்வித செளகரியமோ உயர்வோ ஏற்பட்டதாக சொல்வதற்கில்லை. இது மாத்திரமல்லாமல் மனித சமூக நன்மைக்காக, நல்ல வாழ்வுக்காக, முன்னேற்றத்திற்காக என்று எவ்வளவோ மதங்களும் அரசாட்சிகளும் சீர்திருத்தங்களும் தோன்றின அவைகளும் இன்றை வரை எந்த ஆட்சியிலோ, எந்த மதத்திலோ எந்த சீர்திருத்தத்திலோ ஏதாவது ஒரு காரியம் சாதித்ததாக காணப்படவேயில்லை.
மக்களுக்கு சுக துக்கம் பொது என்றும் ஒருவன் சுகப்படுவதும் ஒருவன் கஷ்டப்படுவதும் இயற்கை என்றும் இவையெல்லாம் கடவுள் செய
வென்றும், மாற்றமுடியாதவை என்றும் சொல்லப்பட்டு அந்தப்படியே மக்க ளையும் நம்பச்செய்து சிலர் கஷ்டப்படவும் சிலர் சுகப்படவுமான முறைகள்
நிலைநிறுத்தப் பட்டனவே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.
இன்றைய தினம் இருந்து வரும் எந்த அரசியலை, எந்த மத இயலை, எந்த செல்வ இயலைக் கொண்டும் மேல்கண்ட அக்கிரமங்களை ஒழித்து விடக்கூடும் என்றோ மக்கள் யாவரையும் சமமாக ஆக்கிவிடக்கூடும் என்றோ நினைப்பது முட்டாள் தனமேயாகும், ஆதலால் ஏதாவதொரு புதிய முறையைக் கொண்டுதான் ஆகவேண்டும். அதைப்பற்றி பிறத்தியார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற கவலையை சிறிதும் வைக்கக்கூடாது. அது கிளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும், புரட்சி என்று சொல்லப்பட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. கிளர்ச்சியும் புரட்சியும் உலக இயற்கை, மனித இயற்கை, நடப்பு இயற்கை. கிளர்ச்சியிலும், புரட்சியிலும் பிரிக்க முடியாமல் கலந்து இருக்கிறான் என்பதை ஒவ்வொரு மனிதனின் நடப்பையும், உணர்ச்சியையும் கவனித்துப் பார்த்தால் விளங்கிவிடும் நாம் எவ்வித
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
சுயநலத்தையோ பலாத்காரத்தையோ குறிவைத்து இப்படி பேசவில்லை. ஆனால் மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் பரிதாபத் தாலேயே தான் இப்படிப் பேசுகிறோம்.
குறிப்பு:28.02:933 இல் விருதுநகர் அம்மன் கோவில் முன்பு சுயமரியாதை சங்க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை,
குடி அரசு - சொற்பொழிவு - 12.03.1933
குடி அரசு - 1933 M) 170
BTG வபண் பாடசாலையில்:
பெற்றோர்கள் தினம்
ஈரோடு கவர்ன்மெண்ட் பெண்கள் பாடசாலையின் பெற்றோர்கள். தினவிழாவானது ஈரோடு மகாஜன ஹைஸ்கூல் சரஸ்வதி ஹாலில் தோழர் இ.எஸ். கணபதி அய்யரவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது கொண்டாட்டத்திற்கு பெரியவர்களும் குழந்தைகளுமாக சுமார் 1000 பேருக்கு மேலாகவே கூடி இருந்தார்கள், பெண்கள் அதிகமாகக் காணப்பட்டார்கள்.
விழாவானது கும்மி, கோலாட்டம் சிறு விளையாட்டு முதலியவை களுடன் நடந்த தென்றாலும் அவற்றுள் சாவித்திரி சத்தியவான் என்கின்ற ஒரு புராணக்கதையை நாடகரூபமாக நடத்திக் காட்டப்பட்டதானது மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. நாடக பாத்திரங்கள் எல்லாம் சுமார் 10 வயது முதல் 16 வயதுக்குள்பட்ட அப்பள்ளிக்கூட மாணவப் பெண்களாகவே இருந் தார்கள். நாடகமானது கூடியவரை மிகவும் அருமையாக நடித்துக் காட்டப் பட்டது. இம்மாதிரியாக ஒரு நாடகம் நடித்துக் காட்ட அம்மாணவிகளை தர்ப்பித்து செய்த பெண் பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரும், மற்றும் உதவி உபாத்தியாயர்களும் பாராட்டப் படத்தக்கவர்களே ஆவார்கள். மாணவர்களுடைய அறிவும் சுபாவ ஞானமும் சிலாகிக்கத் தக்கவையாகும்.. ஆனால் ஒரு விஷயம் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதாவது இவர்கள் நடித்துக் காட்ட எடுத்துக் கொண்ட புராணக்கதையின் முட்டாள். தனத்தையும், மூட நம்பிக்கையையும் குருட்டு பக்தியையும் வெளிப்படுத்தாமலும் அறிவு வளர்ச்சிக்காக படிப்பிக்கப்படும் பெண்களை இவ்விதம் பகுத்தறிவற்ற பிராணி கள் பிராயத்துக்கு ஆளாக்கி வைப்பதைப் பார்த்து வருந்தாமல் இருக்க முடியவில்லை என்பதேயாகும்.
மேற்படி கதையில் ஆரம்ப முதல் கடைசி வரை எந்த இடத்திலாவது பகுத்தறிவுக்கு ஒத்த விஷயம் கடுகளவாவது காணப்படுகின்றதா என்பதை யோசித்தால் இது யாவருக்கும் எளிதில் விளங்கும். கதைச்சுருக்கமாவது:-
“சாவித்திரி என்கின்ற ஒரு பெண் நந்தவனத்தில் விளையாடும் போது சத்தியவான் என்கின்ற ஒரு பையன் வேட்டையாடி நந்தவனத்திற்கு வந்து
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
சேர்ந்து பெண்ணைப்பார்த்து மையல் கொள்ளுவது, பெண்ணும் பையனைப் பார்த்து மையல் கொள்ளுவது, பிறகு இருவருக்கும் கல்யாண ஏற்பாடு நடை பெறுவது, அது சமயம் மணமகன் ஒரு வருஷத்தில் செத்துப்போவான் என்று தெரிவது, தெரிந்தும் பெண் அவனையே மணம் செய்து கொள்ள விரும்புவது, பிறகு மணம் நடந்த பின் ஒரு வருஷத்தில் மணமகன் செத்துப் போவது, பிறகு மணமகள் எமன் பின்னால் எமனை விடாமல் தொடர்ந்து
திரிந்து எமனை ஏமாற்றி தன் புருஷனை பிழைக்க வைத்து மகிழுவது” என்பதாகும்.
இதற்கு ஆதாரம் அப்பெண்ணின் கற்பு என்று சொல்லி அதனால் பெண்கள் எல்லோரும் கற்பாயிருக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டு கதையை முடிப்பது.
இக்கதை ஆரம்பமுதல் அந்தம் வரை எந்த இடத்திலாவது பகுத்தறிவுக்கு ஒத்த விஷயம் இருக்கின்றதா? அல்லது இன்றைய அனுபவத் திற்கு ஒத்த விஷயங்கள் இருக்கின்றனவா? என்பதை இதில் யோசிக்கத்
தக்கதாகும்.
இக்கதையில் ஜோசியம் பொய்த்துப்போய் விட்டது. எமன் ஏமாற்றப் பட்டுவிட்டான். கற்பு வெற்றி பெற்றது என்கின்ற மூன்று விஷயங்கள். காணப்படுகிறேன். ஜோசியத்தை நாம் நம்புவதில்லை, ஆதலால் ஜோசியம் பொய்த்துப்போவதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.
எமனையும் நாம் அப்படி ஒன்று இருப்பதாக ஒப்புக்கொள்ளு வதில்லை. ஆதலால் அதைப்பற்றியும், அவனது புத்திசாலித்தனத்தைப் பற்றியும் நாம் கவலைப்படுவதில்லை,
கற்பு என்பதாக ஒன்று இருப்பதாகவும் நாம் கருதவில்லை. ஆதலால் அதைப்பற்றியும் நாம் கவலைப்படவில்லை.
ஆனால் ஒரு விஷயத்தைப்பற்றி மாத்திரம் மக்களுக்கு ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளோம். சாவித்திரி கற்புள்ளவளாயிருந்ததால் தன் புருஷன் இறந்து போனவனை பிழைக்க வைத்தாள் என்று சொல்லி மற்றவர்களையும் கற்பாய் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்ற கதைப்படியே அக் கதையை உண்மை என்றே வைத்துக்கொண்டு பார்ப்போமேயானால் இன்று
உலகில் அல்லது இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான விதவைகளில் ஒரு குழந்தை விதவையாவது ஒரு மங்கை விதவையாவது கற்புள்ள விதவை யாயிருந்திருக்கமாட்டார்களா? அல்லது ஒரு விதவையாவது தன் புருஷன்
இறந்ததைக் குறித்து விசனப்பட்டுத் தனது கற்பை ஈடுகாட்டி அப்புருஷன் பிழைக்கவேண்டுமென்று வருந்தியிருக்க மாட்டார்களா? அந்தப்படி கற்பாய்
இருந்து வருந்தி இருந்தால் இறந்த கணவன்களில் ஒருவராவது பிழைத்து இருக்கமாட்டாரா? என்பவற்றை யோசித்தால் இன்று பெண்களில் சிறப்பா
குடி அரசு - 1933 M) 172
கவும், குறிப்பாகவும் விதவைகளில் ஒருவர் கூட கற்புள்ள பெண்மணிகள் இல்லையென்றுதானே அர்த்தமாகின்றது. அல்லது ஒருவரும் இம்மாதிரி முயற்சிக்கவில்லை என்றுதானே அர்த்தமாகிறது. இவை ஒருபுறமிருக்க 3, 4,
5, 7.10 வயதுகளுக்குள்பட்ட குழந்தைகள் கூட விதவைகளாக ஆகிவிடு கின்றனவே அவைகள் கூடவா கற்பில்லாத பெண்மணிகளாயிருக்கும் என்பதை யோசித்தால் அப்பொழுது பெண்கள் கற்பாயிருக்க முடியவே முடியாது என்பதாகத்தானே எண்ண வேண்டி யிருக்கிறது. அல்லது இக்கதை பொய்யும், முட்டாள் தனமும் நிரம்பியது என்றுதானே சொல்லவேண்டும். சாத்தியமேயில்லாத காரியத்தில் - பலனே யில்லாத காரியத்தில் மக்கள். புத்தியை இழுத்துவிடுவதால் லாபமென்ன? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டியது அறிஞர் கடமையாகும்.
இக்கதையின் சாரமானது கதையிலுள்ள எமன் என்பவன் ஏமாந்து போய் வரம் கொடுத்து முட்டாள்பட்டம் கட்டிக் கொண்டதுபோல் பெண்கள்
சமூகமும் ஏமாந்து போய் இம்மாதிரியான கதைகளை நடத்தி நிரபராதிகளான பெண் சமூகத்தை - விதவை சமூகத்தை ஏன் இம்மாதிரி குற்றங்களுக்கு ஆளாக்கவேண்டும் என்று ஒருவர் கேள்பதானால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
ஆகையால் இனியாவது அருமையான ஞானமுள்ள இளங் குழந்தை களை மிக்க போதனா சக்தியும் ஊக்கமும் உண்மை உழைப்பில் கவலையும் கொண்டநமது கவர்ன்மெண்ட் பெண்பாடசாலை உபாத்தியாயர்கள் பகுத்தறி
வுக்கு ஒத்ததும் அனுபவத்திற்கு ஏற்றதுமான விஷயங்களில் பாடுபட்டு பிள்ளைகளை முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆசைப்படு கின்றோம்.
பகுத்தறிவிலும் பெண்களது உண்மையான முன்னேற்றத்திலும் கவலை கொண்டவர்கள் இதை எடுத்துக்காட்டாமல் இருக்க முடியாது.
குடி அரசு - கட்டுரை - 12.03.4933
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஸ்கை ஸ்காபண ௬யாக்ஷிகளிண் மாசம்
1
இன்று இந்தியாவில் சுய ஆட்சியின் பேரால் நடைபெறும் அக் கிரமங்கள்- அயோக்கியத்தனங்கள் - ஒழுக்க ஈனங்கள் - நாணையக் குறைவு
கள் ஆகியவைகளில் எல்லாம் தலைசிறந்து விளங்குவது ஸ்தல சுயாட்சியென்று சொல்லப்படும் ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களேயாகும் என்று வெற்றி முரசுடன் கூறலாம்.
நம்நாட்டு ஸ்தல ஸ்தாபன உலகத்தை எடுத்துக்கொண்டோமே யானால் அதன் தலைப்பு முதல் கடைசி வரையில் உள்ள ஒவ்வொரு நிலை மையும் தீவத்திக்கொள்ளை போலவே நடந்து வருகின்றனவே அல்லாமல் மற்றபடிஅவை யாருக்காக -யாது காரணத்திற்காக ஏற்பட்டதோ அந்த தத்து வம் சிறிதும் இல்லாததை ஸ்தல ஸ்தாபன வாழ்வில் கலந்துள்ள அனுபவ முள்ள எவரும் சுலபத்தில் அறியலாம்.
மற்றும் இந்தியாவுக்காக கேட்கப்படும் சுயாட்சியும் இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத்து பணக்காரரும், சோம்பேரிகளும், காலிகளும் வாழ்வதற்கும் கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய வேறில்லை என்பதும் நன்றாய்
விளங்கும்.
இன்றைய ஸ்தல சுயாட்சியின் தன்மைகளை ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஒருவன் எப்படிப் பட்டவனானாலும் அவன் பணம் செலவு செய்தால் - காலிகளைக் கைவசப்படுத்தி காலித்தனம் செய்தால் யாரும் எப்படிப்பட்டவர்களும் ஸ்தல ஸ்தாபனங்கள் கைவசப்படுத்திக் கொண்டு, தான் செலவிட்ட பணத்தையும் வட்டியுடன் எடுத்துக்கொண்டு தனக்கு உதவி செய்த காலிகளுக்கும் தாராளமாக அனுகூலம் செய்து விட்டு மேல் கொண்டும் புதையல் எடுப்பது போல் பணமும் செல்வாக்கும் சம்பாதித்துக் கொள்ளு வதற்கு ஏற்ற ஆட்சி அல்லது ஸ்தாபனம் என்று தான் சொல்ல வேண்டும்.
குடி அரசு - 1933 M) 174
ஸ்தல சுயாட்சியின் நிர்வாகம் என்பதற்கு கொள்ளை அல்லது காலித் தனம் என்றுதான் இனி பதிப்பிக்கப்படும் அகராதியில் அருத்தம் எழுத வேண்டியதுமாகும்,
நிற்க, அரசாங்கத்தாரே இந்த இலாக்கா முழுவதையும் தங்கள் கையில் வைத்தும் ஸ்தல ஸ்தாபனங்கள் முழுவதும் ஜனப்பிரதிநிதிகள் என்பவர் களுடைய ஆதிக்கமே இல்லாமல் தாங்களே ஏகபோகமாய் நடத்தி வந்தது மான ஒரு காலத்தை எடுத்துக்கொண்டு அந்தக்கால நிர்வாகத்தையும் இன்றைய நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்போமே யானால் இனி வரப் போகும் சுயராஜ்ய போக்கு எப்படியிருக்கு மென்பதையும் ஒருவாறு இப்போதே நிர்ணயம் செய்து விடலாம்.
முதலாவது ஒற்றுமையாய் சகோதர பாவமாய், கட்டுப்பாடாயிருக். கின்ற ஒரு ஊருக்குள் ஸ்தல சுயாட்சி என்கின்ற “பிசாசு” போய் புகுந்த மாத்திரத்தில் வேற்றுமை, கட்சிப் பிரதிகட்சி, கலகம், காலித்தனம், அடிதடி. கொலை வரையில் நடைபெற வழி திறக்கப்பட்டுவிடுகின்றது. பிறகு எவ்வளவு யோக்கியணானாலும் அதில் பிரவேசித்தால் அயோக்கியன் ஆய்த் தீரவேண்டிய நிலையை ஏற்பட்டுவிடுகின்றதுடன் அனாவசியமாய் ஒருவருக்கொருவர் வர்மம் ஏற்பட இடமுண்டாகின்றது.
மேல்கண்ட இந்தக் காரியங்கள் எல்லாம் நாணையமாய் நடைபெரும் ஸ்தல ஸ்தாபன சுயாட்சிகளிலேயே காணக் கூடியதாய் இருக்கின்றன என்றால் இனி நாணையக் குறைவாய் நடைபெறும் ஸ்தல ஸ்தாபன சுயாட்சிகள். என்பவைகளில் என்ன நடைபெறும் என்பதை எடுத்துக் காட்ட வேண்டுமா என்று கேள்கிறோம்.
தேர்தல்கள் என்னும் தலைப்பை எடுத்துக் கொண்டால் ஒரு முனிசிபல் ஓட்டருடைய ஓட்டு 100ரூ. வீதமும், ஒரு தாலூகா போர்டு மெம்பருடைய ஓட்டு 5000ரூ. வீதமும், ஒரு ஜில்லா போர்டு மெம்பருடைய ஓட்டு 10000 பத்தாயிரம் ரூபாய் வீதமும் வாங்கி தேர்தல்களில் வெற்றி பெரும் விஷயங்
கள் நமக்கே நன்றாய் தெரியும்.
ஒரு முனிசிபல் கவுன்சிலர் எலக்ஷனுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஒரு தாலூகா போர்டு வைஸ்சேர்மன் எலக்ஷனுக்கு 20000 இருபது ஆயிரம் ரூபாயும், ஒரு ஜில்லாபோர்டு மெம்பர் எலக்ஷனுக்கு இருபது ஆயிரம் 20000 ரூபாயும் ஒரு ஜில்லாபோர்டு பிரசிடெண்ட் எலக்ஷனுக்கு ஒரு லட்சத்தி பதினாலு 114000 ஆயிரம் ரூபாயும், செலவு செய்து வெற்றிபெற்ற தேர்தல்களும் நமக்குத்தெரியும். நமக்குமாத்திரமல்லாமல் சர்க்காருக்கும் இந்த விஷயங்கள் தெரியும் என்று கூடச் சொல்லலாம். சில இடங்களின் தேர்தல்களில் எதிர் அபேட்சகர்கள் கொலை செய்யப்பட்டதும் ஓட்டர்கள் கொலை செய்யப்பட்டதும், கட்சி உதவியாளர் கொலை செய்யப்பட்டதும்
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
நமக்குத் தெரியும். தேர்தலில் நின்று விட்டால் அபேட்சகர்கள் எதிர் அபேட் சகர்களுக்கு பயந்து ரிவால்வரும் கையுமாய் தூக்கமில்லாமல் திரிவதும்
நமக்குத்தெரியும்.
தேர்தல் தலைப்பை விட்டுவிட்டு தேர்தல் முடிவு தலைப்பை எடுத்துக் கொண்டால் அது ஒரு பெரிய அத்தியாயமாகவே காணப்படும். எலக்ஷன் முடிவைப்பற்றிய விவகாரங்கள் பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முன்பு கலக்டர்களுக்கு இருந்தபோது அவை ஒழுங்காய் நடைபெறவில்லை என்று புகார்கள் ஏற்பட்டு கோர்ட்டுகளின் அதிகாரத்துக்கு விட்டதில் அது வக்கீல் களுக்கு ஒரு புதிய லாபமாய் ஏற்பட்டதோடு கட்சிக்காரர்களுக்கு 15 நாளில்
முடிவு பெறும் விஷயம் மூன்று வருஷம் இழுக்கப்பட்டு முன்னிலும் அதிக. மான கஷ்டமும் செலவும் ஏற்பட்டதல்லாமல் ஒரு வழியிலாவது அனுகூலம் ஏற்பட்டதென்று சொல்லுவதற்கில்லாமல் போய்விட்டது. எலக்ஷன்கள்,ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் நடத்துவதில் ஏற்பட்ட அக்கிரமங்களை தடுப்பதற்காக எலக்ஷன் நடத்தும் வேலைகளை தனி அதிகாரிகளிடமும் ரிவினியு அதிகாரிகளிடமும் விட்ட பிறகு அவர்களுக்கு இது ஒரு புதிய வரும்படிக்கு இடமாக ஏற்பட்டதே ஒழிய அது சம்பந்தமான குற்றங்கள் குறைந்ததாக சொல்லுவதற்கில்லை. ஏனெனில் கணக்கு வழக்கில்லாத எலக்ஷன் தகராறு விவகாரங்கள் கோர்ட்டுகளில் நடந்தவண்ணமாகவே இருக்கின்றன. கோர்ட்டு முடிவுகளோ பெரும்பாலும் பிராதுக்காரனுக்கு பயன்படாமல் அபேட்சகரின் உத்தேசம் நிறைவேராமல் போனபின்பே முடிவு செய்யப் படுகின்றன.
வியாபார முறையிலும், அதிகார தாட்சண்ணிய முறையிலுமே ஓட்டு
கள் உபயோகப்படுத்த செளகரியமேற்பட்டு விட்டபடியால் ஓட்டுகள் வெளிப் படையாகவே பதிவாகவும், எலக்ஷன் ஸ்தலத்திலேயே ரொக்கவிலைக்கே விற்கவுமான அவசியமும், செளகரியமும் ஏற்பட்டுவிட்டது.
இனி நிர்வாக முறையை எடுத்துக்கொண்டோமேயானால் அது இவை எதற்கும் இளைத்ததல்ல என்றுதான் சொல்லவேண்டும். நிர்வாகங்கள் பெரிதும் ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கும், அங்கத்தவர்களுக்கும் சொந்த குடும்பச் சொத்துக்கள் போலவே பாவிக்கப்பட்டு சகோதரர்கள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது போலவே அதன் சொத்துக்களை பங்கிட்டுக்கொள்வது வெளிப்படையான-எல்லோராலும் ஒப்புக்கொள்ளத் தக்கதான காரியமாய் இருந்து வருகின்றது. ஏனெனில் அந்த ஸ்தானங்களை அடைய அவரவர்கள். பட்ட பாடுகளையும், பணங்கள் செலவழித்ததையும் தெரிந்தவர்களுக்கு இது சரியென்றே தோன்றிவிடுகிறது. ஓட்டர்களும் இந்தமாதிரியான காரியங் களைப்பற்றி குற்றம் சொல்லவோ, நினைக்கவோ அருகதையற்றவர். களாகவே இருக்கிறார்கள். ஏனெனில் ஒருவன் முனிசிபாலிடியில் 10 அணா கொடுத்து தன்னை ஒரு ஓட்டராக பதிவு செய்து கொண்டால் 2-ரூபாய் முதல்
குடி அரசு - 1933 M) 176
5-ரூபாய் 10-ரூபாய் வீதம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடலாம் என்கின்ற தைரியம் ஒவ்வொரு ஓட்டருக்கும் ஏற்பட்டு விட்டது. 500, 1000,
2000ரூ. செலவுசெய்து கெளன்சிலராகவோ, மெம்பராகவோ ஆகிவிட்டால் சேர்மென், பிரசிடெண்ட் எலக்ஷன்களில் ஓட்டு செய்வதில் அசலுக்கு மேல் 500,1000 லாபம் சம்பாதித்துவிடலாம் என்கின்ற தைரியம் ஏற்பட்டு விட்டது. இது மாத்திரமல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உத்தியோகம் சம்பாதித்துகொடுக்கலாம் என்றும் கன்றாக்ட்டுகள் எடுத்து லாபம் சம்பாதித்
துக் கொள்ளலாம் என்றும் ஆசை ஏற்பட்டு விடுகின்றது.
சில போர்டுகளிலும், கெளன்சில்களிலும் பகுதி கன்றாக்ட்டு தலைவருக் கும், பகுதியில் மூன்றில் ஒருபாகம் வைஸ்பிரசிடெண்டுக்கும், மீதி மூன்றில் இரண்டு பாகம் மெம்பர், கெளன்சிலர்களுக்கும் என்று பங்குபிரித்துக் கொள்ளப்படுகின்றது.
சில போர்டுகளில் மோட்டார் பஸ் போக்குவரத்து பூராவும் பிரசிடெண்: டுக்கும், கன்றாக்டுகள் முழுவதும், வைஸ் பிரசிடெண்டுக்கும் மெம்பர் களுக்கும் என்று பாகம் பிரித்துக்கொள்ளப்படுகின்றது.
இவ்வளவும் தவிர பொய் கணக்கு, பொய் பில், சாமான்களில் கமிஷன் முதலியவைகளிலும் ஏராளமாகக்கொள்ளை அடிக்கப்படுகின்றன.
இவை ஒருபுறமிருக்க நிர்வாகச் செலவுகள் என்பதில் தலைவர் களுக்கும், அங்கத்தினர்களுக்கும் சிறிதும் பொறுப்பு கிடையாது. சிப்பந்திகளுக்கு கொடுக்கப்படும் சம்பளமோ, “குருட்டுக் கோமுட்டிக்கடை
யில் அள்ளாதவன் பாவி” என்றொரு பழமொழி உண்டு. அதுபோல் உலகத்
தில் உபயோகமற்ற பிராணிகளுக்கும் வேறு எந்த வழியிலும் பிழைக்க முடியா ஜீவன்களுக்கும் முனிசிபாலிட்டியும், தாலூக்கா ஜில்லா போர்டுகளும் தான தர்ம சத்திரங்கள் போலும் பஞ்சராப்போல் போலும் இருந்து வரு கின்றன. பி.ஏ. எம்.ஏ. படித்து பாஸ் செய்து விட்டு 25ரூ. சம்பளத்துக்கு ஆயிரக் கணக்கான மக்கள் திண்டாடுகின்ற இந்தக்காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து விட்டு மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு திண்டாடுகின்ற இந்தக் காலத்தில் ரூபாய் ஒன்றுக்கு பட்டணம் படியால் 8 படி அரிசி விற்கின்ற இத்தக்காலத்தில் ஸ்தல ஸ்தாபனங்களிலுள்ள சம்பளக்கொள்ளைகள் நினைத்தால் உண்மை யான உள்ளமுள்ளவர்களுக்கு நெஞ்சம் பதராமல் இருக்கவே முடியாது. இதைப்பற்றி மற்றொரு சமயம் குறிப்பிடுவோம்.
சம்பளக்கொள்ளை ஒரு புறமிருக்க ஸ்தல ஸ்தாபன தலைவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் அங்கத்தினர்களுக்கு வேண்டியவர்களுக்கும் தங்கள் தேர்தல்களில் உதவி செய்தவர்களுக்கும் அவர்களுக்கு வேண்டிய வர்களுக்கும் உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டுமே என்பதற்காக பழைய உத்தியோகஸ்தர்களை வெளியே அனுப்புவதும் புதிய புதிய
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
உத்தியோகங்களை அனாவசியமாய் உற்பத்தி செய்வதும் அவர்களுக்கு அளவுக்கும் தகுதிக்கும் மீறின சம்பளங்களை ஏற்படுத்திக் கொடுத்துவருவது மான அக்கிரமமும் கொள்ளையும் இன்று எந்த ஸ்தல ஸ்தாபனத்திலாவது இல்லை என்று சொல்லமுடியாது.
ஆகவே இன்றைய ஸ்தல ஸ்தாபனங்களில் எந்தவிதமான கொள்ளை, நாணையக்குறைவு, அயோக்கியத்தனம் பொறுப்பற்ற தன்மை முதலிய கொடுமைகள் இல்லை என்று சொல்லக்கூடுமா?'
இந்தக் காரணங்களாலேயே ஸ்தல ஸ்தாபனங்களுக்கு புதிய புதிய உரிமைகள் கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுவது ஒருபுறமிருந்தாலும் ஸ்தல ஸ்தாபனத் தலைவருக்கும் அங்கத்தினர்களுக்கும் இருந்த அதிகாரங்
கள் இந்த 15 வருஷ காலமாக சிறிது சிறிதாக பறிமுதல் செய்து கொண்டே வரப்படுகிறது என்பதையும் அந்தப்படி இன்னும் பறிமுதல் செய்யவே பொது ஜனங்கள் விரும்புகின்றார்கள் என்பதையும் யாவரும் மறுக்க முடியாது, இப்பொழுது சமீபத்தில் சென்னை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜில்லா முனிசிபாலிட்டி திருத்த சட்டப்படி முனிசிபாலிட்டிகளுக்கு ஸ்பெஷல் ஆபீசர் அல்லது நிர்வாக உத்தியோகஸ்தர்களை நியமித்து அவர் வசம் சிப்பந்திகள் நியமனம் கன்றாக்ட்டு வினியோகம் முதலிய நிர்வாக காரியங் களை ஒப்புவித்து விடுவது என்பதாக ஏற்பாடாயிருக்கின்றது. அந்த ஏற் பாட்டை ஒரு முனிசிபாலிட்டி கூட பாக்கியில்லாமல் சீக்கிரம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு விடுமானால் ஒரு அளவுக்கு முனிசிபல் நிருவாகம் யோக்கியமுடையதாகலாம் என்பதே நமதபிப்பிராயம். சில முனிசிபாலிட்டி. யின் தலைவர்களும் அங்கத்தினர்களும் பணம் காசு விஷயத்தில் நாணைய மாயிருக்கலாம் என்றாலும் அவர்களும் உத்தியோக வினியோகம், கன் றாக்ட்டு வினியோகம் ஆகிய காரியங்களில் சொந்தத்தில் பயனடையா
விட்டாலும் முனிசிபாலிடிக்கு நஷ்டமில்லாமல் செய்ய முடிகின்றதா என்பதும் இதன் பயனாய் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்கும் அபிப்பிராய பேதமோ அதிருப்தியோ கட்சியோ ஏற்படுவதற்கு இட மில்லாமல் இருக்கின்றதா என்பது சந்தேகமேயாகும்.
ஆதலால் நல்ல நிர்வாகம் என்று வெகு ஜனங்களாலும் சர்க்காராலும் பெயர் வாங்கினதும் தலைவர்கள் அங்கத்தினர்கள் ஆகியவர்களின் மீது நாணைய விஷயத்தில் சிறிதும் சந்தேகப்படுவதற்கு இடமில்லாமலிருக் கிறதென்று சொல்லிக்கொள்ளப்படுவதுமான ஈரோடு, கோயமுத்தூர் முதலிய முனிசிபாலிடிகளுக்கு அந்த முனிசிபாலிடியின் வேண்டுகோளின் மீதே ஸ்பெஷல் ஆபீசர் அல்லது எக்சி கூட்டிவ் ஆபீசர் என்பவர் நியமிக்கப்படு மானால் அது மற்ற முனிசிபாலிடிகளுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதோடு ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் ஒரு அளவுக்காவது யோக்கிய முடையதாகச் செய்ய கூடியதாகவும் இருக்கும்.
குடி அரசு - 1933 M) 178
இனி இதுபோலவே லோகல் போர்டு, ஜில்லா போர்டுகளுக்கும் இம்மாதிரியாக ஸ்பெஷல் ஆபீசர் நியமிக்க சென்னை ஸ்தல ஸ்தாபன மந்திரி. உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோறுகிறோம்.
ஏனெனில் 10 முனிசிபாலிடிகளில் நடக்கும் அக்கிரமங்களும்,நஷ்டங்
களும், மற்ற ஒழுக்கமற்ற காரியங்களும் ஒரு ஜில்லா போர்டில் நடப்பதற்கு சமானமாகும்படி ஜில்லா போர்டுகளில் அவ்வளவு பெரிது கைகள் கையாளப் படுகின்றன. முனிசிபாலிட்டியில் ஆயிரக்கணக்காக பணங்கள் கொள்ளை போகும் என்றால் ஜில்லா போர்டில் பதினாயிரக் கணக்காக லக்ஷக்கணக்காக கொள்ளை போக இடமிருக்கிறது. சிலதுகளில் போய்க் கொண்டு இருக் கின்றன.
இன்றைய ஜில்லாபோர்டு தலைமை ஸ்தானங்களும், அங்கத்தினர்கள் ஸ்தானங்களும் 100-க்கு 90-ஸ்தானங்கள் ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரிய பெரியநிலச்சுவான்தாரர்கள் பெருத்த வியாபாரிகள் என்று சொல்லத் தகுந்த வன்னெஞ்சக் கொடுமையாளர்கள் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள். என்கின்றவர்கள் கையிலேயே சிக்குண்டு கிடக்கின்றன. அவர்கள் அந்த ஸ்தானங்களை அடைய நாம் முன்கூறியபடி 10000, 20000, 50000, 100000 ரூபாய்கள் வீதம் செலவு செய்து அடைந்திருக்கிறார்கள். அந்த செலவை வட்டியுடன் அடைய எதிர்பார்க்காதவர்கள் மிகச்சிலர் தான் இருக்க முடியும். இவர்கள் இப்படிக்கொள்ளை அடிக்க ஆரம்பித்து மற்றும் மேற்சொல்லப் பட்ட காரியங்களும் நடைபெறுமானால் கஷ்டப்பட்டு பாடுபடும் பொது மக்களுக்குத் தான் நஷ்டமும், கஷ்டமும் வசதிக் குறைவும் ஏற்படும். ஆதலால் இன்றைய அரசாங்கம் உண்மையாகவே பொது ஜனங்களுடைய பிரதிநிதித்துவம் வாய்ந்தது என்று சொல்லிக்கொள்ள ஆசையிருக்குமானால் அது உடனே இந்தக்காரியத்தை அதாவது எல்லா முனிசிபாலிட்டிகளுக்கும் எல்லா தாலூகா ஜில்லாபோர்டுகளுக்கும் ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க ஏற்பாடு செய்து அந்தப்படி நியமித்துவிட்டு வேறுகாரியம் பார்க்கவேண்டு மென்று விரும்புகின்றோம். மற்றபடி மாதிரிகளைப்பற்றியும் சட்டசபை அங்கத்தினர்களைப்பற்றியும் அந்த நிர்வாகம் தேர்தல் ஆகியவைகளைப்
பற்றியும் மற்றொரு சமயம் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.03.1933.
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
யார்ப்பணர்கணிண் தேசியம்
- சித்திரபுத்திரன்
பார்ப்பனர்கள் என்ன நோக்கத்துடன் தேசியம் தேசியம் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்பதைப் பற்றி பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக்கிறேன். தேசியம் என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு, காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களை பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. தேசியம் என்கின்ற வார்த்தைக்கு அநேகமாய் மக்கள் மனதில் இத்தேசத்திய பழைய நாகரீகம் சனாதனதர்மம் பழக்க வழக்கம் என்பவை களையேபிரதானமாகக் கொள்ளும்படி பிரசாரம் செய்து வந்ததும் அதற்காக இந்தியபுராண இதிகாசங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டி பிரசாரம் செய்து வந்ததும் வாசகர்கள் அறிந்ததே. இக்கருத்தைக் கொண்டேதான் கராச்சி
காங்கிரஸ் சுயராஜ்ய திட்டம் ஏற்பாடு செய்திருக்கிறது.மற்றும் இந்திய நாட்டை “பாரத மாதா” பூமிதேவி! என்று அழைப்பதும் “பாரததேசம்”” என்று சொல்லு வதும் எல்லாம் இக்கருத்தை ஆதாரமாய்க்கொண்டதே ஒழிய வேறில்லை. தேசீயம் என்பதற்கு அரசியலை சம்பந்தப்படுத்திய கருத்தும் இந்தியாவின் பழைய நாகரீகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் ஏற்ற அரசியலை ஸ்தாபிக்கச் செய்த சூழ்ச்சியே தவிர வேறல்ல.
இன்றுகூட ஆங்கில ஆட்சியானது சனாதன தர்மப்படி-மனுதர்மப்படி ஆட்சி நடத்தப்படுவதாய் இருந்தால் இன்றைய தேசீயமும் சட்டமறுப்பும், ஒத்துழையாமையும் எல்லாம் பறந்தோடிப்போகும்.
இந்தக் காரணத்தினாலேயேதான் தோழர் காந்தியும், மகாத்மா வாக்கப்பட்டார். ஆனால் இதுசமயம் காந்தியின் செல்வாக்கு வேறுவழியில் ஒரு அளவு குறைந்துபோன காரணத்தினால் அதை புதுப்பிக்கவும் காந்தியின் பிரயத்தினமோ, தயவோ சிறிதும் இல்லால் தீண்டாமை விலக்கும், ஆலயப் பிரவேசமும் கிளர்ச்சி பெற்றதன் காரணமாய் காந்தியார் இதில் பங்குபெற கருதி வலிய வந்து கலந்துகொள்ளவேண்டியேற்பட்டதாலும் “தேசீயவாதி” களான பார்ப்பனர்களுக்கு இப்போது சிறிதுகஷ்டம் ஏற்பட்டுவிட்டது. சென்னை தேசீய பார்ப்பனர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. தோழர்கள் சத்தியமூர்த்தி, ஏ.ரங்கசாமி அய்யங்கார், கே. பாஷ்யம் மற்றும் எத்தனையோ சென்னை பார்ப்பனர்களுடைய பேச்சையும், மூச்சையும் காணோம். தோழர்.
குடி அரசு - 1933 M) 180
சத்தியமூர்த்தியின் விலாசமே கண்டுபிடிப்பது கஷ்டமாய் இருக்கிறது. அவருடைய முழுசேவையும் தோழர் ராஜா சர். அண்ணாமலையின் குடும்பத்தாருக்கு கண்ராக்ட்டாய் (சோல் ஏஜன்ஸி! விட்டுவிட்டார். அவரைப் பற்றி கவிபாடவும் அவர் கோரும் பொது வாழ்வு காரியங்களை காங்கிரஸ்
பிரதிநிதியாய் இருந்து நிறைவேற்றிக்கொடுக்க முன்னோடும் பிள்ளையாய் இருப்பதுமே அவருடைய சுயராஜ்ய தபசாயும், அவரது பிறப்புரிமையாயும் ஆகிவிட்டது. ஆனால் தோழர் ராஜா சர். அண்ணாமலை கொடுக்கும் பணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கே சேர்ந்தது. தோழர் ஏ. ரங்கசாமி அய்யங்காரோ சங்கராச்சாரி கூட்டத்தினர்களை ஆதரித்து அவர்களை மேன்மைப்படுத்துவதன் மூலமும் மற்றும் சில பணக்காரர்களை விளம்பரப் படுத்துவதன் மூலமும் பெருமையும், பணம் சம்பாதிப்பதே அவருடைய
காங்கிரஸ் பிரசாரமாகவும், தேசீய பிரசாரமாகவும் ஆகிவிட்டது. தோழர் கே. பாஷியம் அடுத்த சட்டசபை தேர்தல் வரை தலை நீட்டமாட்டார். குட்டி தேசீய வாதிகளான ஒரு கூட்டம் அதாவது, தோழர் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். போன்றவர்கள் மேல் குறிப்பிட்ட தேசியவாதிகளின் உத்திரவுக்கு இணங்க காந்தியின் செல்வாக்கை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் 7-3-33 ந் தேதி “தமிழ் நாட்டில் பிரசுரித்து இருக்கும் தோழர் எம்.எஸ், சுப்பிரமணிய அய்யர் பிரசங்கத்தைப்படித்துப் பார்த்தால் தெரியவரும். இந்த அவசரத்தில் தோழர் ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் கூட்டத்தை நான் மறந்து விட்டதாக சிலர் சொல்லக்கூடும். ஒரு நாளும் மறக்கவில்லை. முன் கூறிய கூட்டமும் இந்தக் கூட்டமும் சகோதரர்களே ஆவார்கள். முன் கூறிய கூட்டம் வாதிக்கு வக்கீலாக இருந்து கொள்ளை அடித்தால் பின் கூறிய கூட்டம் பிரதிவாதிக்கு வக்கீலாய் இருந்து கொள்ளை. அடிப்பவர்களாவார்கள்.வரும்படியை சமமாக பங்கிட்டுக் கொள்ளுவார்கள்.
தோழர்கள் ராஜகோபாலாச்சாரியாரும், ராஜனும் எந்த அளவில் சீர்திருத்தக்காரர்கள் என்பதை கவனித்தால் யாவருக்கும் சுலபத்தில் உண்மை விளங்கிவிடும். ராஜகோபாலாச்சாரியும், ராஜனும் அவர்களது ஜாதி உயர். வுக்கு உரிய ஏதாவது ஒரு சின்னத்தை விட்டு இருக்கிறார்களா? என்பதைக் கவனித்துப்பாருங்கள்.
1 உச்சிக்குடிமை,
2. வடகலை, தென்கலை பிரிவுப்படி நாமம்,
3. பூணூல்,
4 பஞ்சகச்சம்,
5, சந்தியா வந்தனம்,
6.நன்மை தீமைகளில் பார்ப்பனர்க்குரிய சடங்குகள்
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
முதலிய காரியங்களை எவ்வளவு ஜாக்கிரதையாய் அனுஷ்டிக் கிறார்கள் என்பதும் இவர்கள் பிரசங்கங்களில் பாரதம், ராமாயணம், நாலாயிரப்
பிரபந்தம், முதலிய வைணவ மத சாஸ்திர பிரசாரங்கள் எவ்வளவு நடைபெறு கின்றன என்பதும் கவனித்துப்பார்த்தால் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார். கோஷ்டிப் பிரசாரத்துக்கு ராஜகோபாலாச்சாரி, ராஜன் கோஷ்டி பிரசாரம் ஏதாவது கடுகளவாவது இளைத்ததா என்பது விளங்கும்.
நம் தென்னாட்டில் இன்றைய பொது வாழ்வில் முன்னுக்கு வர: வேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது விளம்பரம் பெறவேண்டும் என்கின்ற ஒருவனுக்கோ அல்லது அதிகாரம், பதவி, சட்டசபை, ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கத்தினர் முதலியவை பெறவேண்டும் என்பவர். களுக்கோ அவர்கள் பார்ப்பனராயிருந்தாலும், முஸ்லீம்களாய் இருந்தாலும் கிறிஸ்தவர்களாய் இருந்தாலும், பார்ப்பனரல்லாதார்களாய் இருந்தாலும், ராஜா சர்களாய் இருந்தாலும், ஜமீன்தாரர்களாய் இருந்தாலும் பெரும்பணம் பூமி படைத்த செல்வவான்களாய் இருந்தாலும், இந்த இரண்டு கூட்டத்தில் ஏதாவதொரு கூட்டத்திற்கு அடிமையானாலொழிய அல்லது வாய்பூசினா லொழிய வேறுமார்க்கமில்லாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இப்படிப்பட்ட இவர்கள் சங்கதியே இப்படியானால் மற்றபடி வயிற்றுச்சோத்துக்கு வேறுவழி யில்லாமல் எப்படி நடந்தாவது வயிறு வளர்க்கலாம் என்ற சில தேசபக்தர் களைப்பற்றி நான் சொல்ல வேண்டுமா? என்று கேள்கின்றேன். ஆகவே இன்றைய நிலைமையைப் பார்த்தால் பார்ப்பனர்களின் தேசியம் ஓரளவுக்கு வெற்றிபெற்று வருகின்றது என்று தான் சொல்லவேண்டும். காரணம் என்ன வென்றால் பார்ப்பனரல்லாத மக்களுக்குள் தலைவர்கள் என்பவர்கள் முதல் வாலர்கள் என்கின்ற வரை சுயமரியாதையில் போதிய கவலை இல்லாமல் எப்படியாவது அவரவர்கள் தனித்த முறையில் வாழ்ந்தால் போதும் என்கின்ற
சுய நலத்தன்மையானது அவர்களை மறுபடியும் கீழ் நிலைக்கு கொண்டு வரும்படி செய்கின்றது. இதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்தக் காரணங்களால்தான் பார்ப்பான் ஜாதி திமிரும் பார்ப்பனரல்லாதவர்களில் உள்ள பணத்திமிரும் மொத்தத்தால் உள்ள படிப்புத்திமிரும், உத்தியோக அதிகாரத்திமிரும் எல்லாம் ஒருங்கே அழியவேண்டும் என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்றதுபோல் தோன்றுகிறது.
குடி அரசு - கட்டுரை - 19.03.1933
குடி அரசு - 1933 M) 182
இந்திய சட்டசபை வரவு செலவு திட்டத்தின் விவாதத்தின் போது ராணுவ சம்மந்தமாய் பேசிய பல இந்திய பிரதிநிதிகள் என்னும் கனவான்கள் ராணுவத்தை இந்திய மயமாக்கவேண்டும் என்றும் இந்தியர்களையே ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் வாதம் செய்திருக் கிறார்கள்.
ஒவ்வொரு தேச மக்களையும் அடிமைகளாக்கி அத்தேச சரீர உழைப்பாளிகளினுடைய உழைப்பின் பயன்களை யெல்லாம் சோம்பேரி களும், சூட்சிக்காரர்களும் அனுபவித்துக் கொண்டிருப்பதற்கும், மனிதர் களுக்கு சுயமரியாதை உணர்ச்சியில்லாமல் மதம், கடவுள், அரசன் என்னும் பெயர்களால் வேதம், விதி சட்டம் என்பவைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதற்குக் காரணமாயிருப்பது இந்த ராணுவ ஸ்தாபனமேயாகும். எப்படி யெனில் கடவுள் கட்டளையால் ஏற்பட்ட வேதத்தின் கொள்கையை அனுசரித்
துச் செய்யப்பட்ட சட்டத்தை நிர்வகித்து வரும் அரச ஆட்சிக்கு எதிராக ஏற்படும் கிளர்ச்சிகளையும், சாதனங்களையும் அடக்கி, ஒடுக்கி அழிக்கவே ராணுவம் என்பது வெகு காலமாக இருந்து வருகின்றது.
இந்த ராணுவத்திற்கு ஏற்படும் செலவுகள் அவ்வளவும் சரீரத்தால் பாடுபட்டுழைக்கும் மக்களின் உழைப்பின் பயனிலிருந்தே கொடுக்கப்படு கின்றன. (எப்படியெனில் ஒரு நாட்டிற்கு உழைப்பாளியின் உழைப்பின் பயனாய் அல்லாமல் வேறு வழியில் செல்வமேயில்லை3
ராணுவச் செலவு மாத்திரமல்லாமல் ராணுவத்திற்காக சேர்க்கப்படும்
மக்களும், உழைப்பாளிகளுடைய மக்களும், சகோதரர்களுமே யாவார்கள்,
ஆகவே இதனால் ராணுவச் செலவும் உழைப்பாளிகளுடையது என்பதும், ராணுவ மக்களும் உழைப்பாளிகளின் சகோதரர்கள் என்பதும் தெளிவாய் விளங்குவதோடு எதற்காக இந்த ராணுவம் என்று யோசித்தால் மேற்கண்ட உழைப்பாளிகளாகிய தொழிலாள மக்கள் தாங்கள் உழைத்துப் பாடுபட்ட தொழிலின் பயனை அவ்வுழைப்பாளிகள் அடையமுடியாமல் அவர்கள் என்றென்றும் உழைப்பாளிகளாகவே இருந்து உழைத்துக்
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
கொண்டே வருவதற்காக அவர்களை அடக்கி வைத்திருக்கும் காரியத்திற்கே பயன் படுத்துவதாகும் என்பதும் விளங்குகின்றது.
எப்படியென்றால் ராணுவம் என்கின்ற பெயரால் ஒரு கூட்டமக்களை துப்பாக்கி, பீரங்கியுடன் வைத்திருக்காவிட்டால் உழைப்பாளியின் பயனை நோகாமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் சோம்பேரிக் கூட்டமும், பணக் கார முதலாளி கூட்டமும், இவ்விரண்டு கூட்டத்தாலும் ஏற்படுத்தப்பட்டு ஆதரித்துக் காப்பாற்றிவரும் அரசாங்கமும் அரை நிமிட நேரமும் உலகிலிருக்க இடமேயில்லை.
இதிலிருந்து ஒரு ராணுவ வீரன் என்பவன் எப்படிப் பட்டவன்? ஒரு தொழிலாளி என்பவன் யார்? என்று பார்த்தால் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரண்டு சகோதரர்களில் ஒருவன் பாடுபடவும் மற்றொருவன் அப்பாட்டின் பயனை அப்பாட்டாளி அடையாமல் பாடுபடாத சோம்பேரி அடைய உதவியாளனாயிருக்கவுமான வேலைகளுக்கமருகிறவர்கள் என்பது விளங்கும்.
ஆகவே ஒரு பாட்டாளி-ஒரு தொழிலாளி அவனது உழைப்பின் பயனை அவனே அடையவேண்டுமானால் அவனது சகோதரனே ராணுவ வீரனாய் வந்துகட்டுக் கொல்லும் கொடுமையை நிறுத்தினால் ஒழியமுடியவே முடியாது என்பதை உணர்ந்த எந்த உழைப்பாளியும் தன் சகோதரன் ராணுவத்துக்கு போவதற்கு சம்மதிக்கவேமாட்டான். அரசாங்கம் என்பதின் ரகசியமே இதில்தான் இருக்கின்றது.
எனவே இன்று ஒரு உழைப்பாளியின் உழைப்பானது உழைப் பாளியைப் பட்டினி போடுவது மாத்திரமல்லாமல் அவனையே கடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.
உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் சமீபத்தில் இரண்டு வருஷ காலமாய் நடந்த உப்பு சத்தியாக்கிரகம் - சட்டமறுப்பு ஆகிய கிளர்ச்சிகளில் தடி-அடிபட்டவர்களும், தடியால் அடித்தவர்களும் யார் என்று பார்த்தோ மானால் இருவரும் சகோதரர்களே ஆவார்கள். ஆனால் அடித்தவர்களுக்கு எஜமானன் அரசாங்கம் அடிபட்டவனுக்கு எஜமானன் முதலாளியும் சோம்பேரியான பார்ப்பானும் ஆவார்கள். இருவர் போட்டியின் பயணாய் இரு கூட்டத்திற்கும் ஆளுகளாய் இரு சகோதரர்கள் அடிபட்டார்கள் என்பது தான் உண்மையான முடிவு. இதுபோலவே தான் ஒரு தேசத்துக்கும், மற்றொரு தேசத்துக்கும் சண்டைவந்தால் இருதேச சகோதரர்களும் இருதேச முதலாளி களுக்காக, அரசர்களுக்காக ஒருவரை ஒருவர் சுட்டுக்கொன்று கொள்ளுகி றார்கள். இரு சகோதரர்களுக்கும் போதை உண்டாகும்படி தேசாபிமானம் என்கின்ற கள்ளை ஊற்றுவதுடன் இரு சகோதரர்களில் மற்றொரு சகோதரர். களாகிய உழைப்பாளிகளின் உழைப்பின் பயனாய் சேர்த்த பணத்தையே
குடி அரசு - 1933 M) 184
கூலியாகக் கொடுத்து கோயில்களில் நிரபராதியான ஆடுகளை கடவுள் பக்திக்காகப் பலிகொடுப்பதுபோல் யுத்தரங்கத்தில் தேச பக்திக்காக பலி கொடுத்து விடுகின்றார்கள். இந்தப்படி பலியான மக்களின் சகோதரர்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்று பார்த்தால் அவர்கள் மறுபடியும் பாடுபட்டு உழைத்து மறுபடியும் இப்பேர்ப்பட்ட யுத்தம் ஏற்பட்டால் அதில் பலி கொடுப் பதற்காக சகோதரர்களையும், அவர்களுடைய செலவுக்கு பணங்களையும் கொடுத்துக்கொண்டு வருவதைத்தவிர வேறுவேலை கிடையாது. இந்தக் காரியமேதான் இன்றோ, நேற்றோ இருந்து மாத்திரமல்லாமல் ராமாயண பாரதகாலம் என்பது தொட்டு அக்றோணி, வள்ளம், மூலபெலம் என்பதாக கோடிக்கணக்கான மக்களை பலிகொடுத்ததாக சொல்லப்படுவதுமாகும். இதனால்தான் ராணுவத்திலிருப்பவர்களுக்கு வீரர்கள் என்றும், ராணுவத்தில்
யுத்தத்தில் சாகின்றவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைக்குமென்றும் சொல்லி ஏமாற்றுவதுடன் அவர்களிடம் வேறு எவ்வித வேலையும் வாங்காமல் வளகிடாய்கள் போலவும் சும்மாவைத்து வளர்த்துவருவதுமாகும்.
இப்படிப்பட்ட காரியத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்தாபனத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கருதாமல் அதை இந்திய மயமாக்க வேண்டும் என்கின்ற விஷயத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடந்ததும், தங்கள் தங்கள் வகுப்புக்கு இந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றுவாதங்கள் நடந்ததும் மிகவும் வருந்தத்தக்கதேயாகும். ஒரு சமயம் அந்த பதவியையும், பணத்தையும் இந்தியர்கள் அடைவது நன்மையல்லவா என்று சிலர் கேட்கலாம். இந்தக்காரியத்தில் இந்தியர்கள் என்பது இந்த நிலையில் சிறிதும் பொருந்தாது என்றே சொல்லுவோம். ஏனெனில் இது
சமயம் உலகத்திலுள்ள ராணுவ வீரர்கள் என்பவர்கள் எல்லாம் தங்களுடைய உண்மையான நிலையை உணர்ந்து தேசம் என்றும், சட்டம் என்றும், நீதி என்றும், பாதுகாப்பு என்றும் சொல்லிக்கொண்டு தங்கள் சகோதரர்கள் உழைப்பிலேயே சாப்பிட்டுக் கொண்டு தங்கள் சகோதரர்களையே அடக்கி ஒடுக்கி சுட்டுக்கொண்டு வருகிறோம் என்பதை நன்றாய் உணர்ந்துகொண்டு வருகின்றார்கள். இந்திய ஜனங்களுக்கு கடுகளாவாவது இந்த உணர்ச்சி வரவேண்டுமானால் முதலில் அவர்களுக்குள் இருந்துவரும் ஜாதிப்பிரிவு உணர்ச்சியும் மதப்பிரிவு உணர்ச்சியும் மறைந்தாக வேண்டும், இவ்விரண்டு உணர்ச்சியும் மறைந்தாலொழிய அதிலும் குறிப்பாக ஜாதிப்பிரிவு உணர்ச்சி ஒழிந்தாலொழிய ஒரு சமூகம், அல்லது ஒரு மனிதன் ராணுவத்திற்கு லாயக் கில்லை என்றே சொல்லுவோம். ஏனென்றால் இந்திய வருணதருமப்படியும், ஜாதி தருமப்படியும் ஒவ்வொரு வருணத்துக்கும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு லக்ஷியம் இருந்து வருகின்றது.
இப்படிப்பட்ட இவர்கள் ராணுவத்திற்கு போனால் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளுவார்களே ஒழிய எதிரிகளை சுடுவார்கள்
என்று எதிர்பார்ப்பது மிகவும் அருமையான காரியமாகும்.
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
இதற்கு ஒரு சிறு உதாரணம் கூறுவோம். அதாவது போலீசுக்கு ஆள் களைச்சேர்த்து பயிர்ச்சிகொடுத்துவரும் வேலூரில் உள்ள போலீசு சிப்பாய் களை அவர்களது மேல் அதிகாரியானவர் எல்லா போலீஸ்காரர்களும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவேண்டும் என்று சொன்னதற்காக உடனே இரண்டு “மேல்ஜூதிக்கார” போலீஸ்காரர்கள் ராஜீனாமா செய்துவிட்டார்கள். என்றும் இதைப்பற்றி சட்டசபையில் கேள்விகேட்டு அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஜனங்கள் எதிர்பார்க் கிறார்கள் என்றும் சுதேசமித்திரன் என்னும் ஒரு “தேசியப்பத்திரிகை” 11-3-33ந் தேதி தனது நிருபர் பெயரால் ஒரு நீண்ட வியாசம் எழுதி
இருக்கின்றது.
இந்தக் காரியம் ஒன்றா சுதேசமித்திரனின் தேசியத்திற்கு விரோத மானதாக இருந்திருக்கவேண்டும், அல்லது பொது ஜனங்களுக்கே இது ஒருவிரோதமான காரியமாய் இருந்திருக்கவேண்டும். எப்படி இருந்தாலும் ராணுவத்தை இந்த ஜனங்களைக் கொண்ட இந்திய மயமாக்கலாமா என்பது தான் நமது கேள்வி. இது சமயம் வேலூர் போலீசார் வெட்டிசாதம் சாப்பிட்டுக் கொண்டு சோம்பேரியாய் இருக்கின்ற சமயமானதால் இரண்டு போலீசுக் காரர்கள் ராஜீனாமாக் கொடுத்துவிட்டதினால் ஒன்றும் முழுகிப்போய்விட வில்லை. தவிரவும் இந்த சமயம் பழசு போனால் புதிசு தானாக வரக்கூடிய சமயமுமாகும்.
ஆனால் யுத்தத்துக்கு தயார் செய்யப்பட்ட ஒரு நெருக்கடியான
சமயத்தில் இம் மாதிரியான ஒரு நிலைமை அதாவது ஒரு யுத்தத்துக்குபோன இடத்தில் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு ராணுவ அதிகாரி அந்தப்படி உத்திரவு போட்ட உடன் இந்த இந்திய மயமாக்கிய போர்வீரர்கள். (வேலூரில் செய்தது போலவே! உடனே ராஜிநாமாக் கொடுத்து விடுவார்களேயானால் யுத்தத்தின் தன்மை என்னவாய் முடியும் என்பதை சற்று இந்திய தேசியவாதிகளும், இந்தியா சட்டசபை பிரதிநிதிகளும், தேசியப் பத்திராதிபர்களும் சிந்தித்துப்
பார்ப்பார்களாக..
இந்தியன் என்பவனுக்கு ஒவ்வொரு வருணத்துக்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் சாப்பாட்டில் ரசி வேறு, சமையல் செய்வதில் பக்குவம் வேறு, சமையல் செய்வதற்கு சமையல்காரனுடைய ஜாதி வேறு, சமையல் செய்ய வேண்டிய இடம் வேறு, சமைக்கப்படவேண்டிய சாமான்கள் வேறு, சாப்பிடு வதற்கு இடம் வேறு என்று இப்படிப்பட்ட அநேகமானவேறுவேறுகள் வேண்டுமானால் பிறகு இதற்குத் தகுந்த மனச்சாட்சிகளும் வேறு வேறு வேண்டுமா? ஆனால் இதை விசாரித்து நடவடிக்கை நடத்தி நீதி செலுத்த சட்டசபை மெம்பர்களும் வேறு வேறு வேண்டியிருக்குமானால் இவை சாத்தியப்படுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். சாத்தியப்பட்டாலும் இந்த
குடி அரசு - 1933 M) 186
யோக்கியதை கொண்ட ராணுவத்தையுடைய ஆட்சி உருப்படி ஆகுமா? என்று கேட்கின்றோம்.
ஒரு மனிதனுடன் கூட இருந்து உண்ணுவதால் தனது யோக்கியதை கெட்டுபோய் விடுகின்றதென்று ஒருவன் தனது உத்தியோகத்தை ராஜினாமாக் கொடுத்துவிட்டு ஓடுவதும் இதை விசாரித்து இந்தப்படி உத்திரவு போட்ட மேலதிகாரியின் மேல் நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தேசியப் பத்திரிகை எழுதுவதுமானால் இந்த நாட்டுக்கு ஒரு சுயராஜ்யம் வேண்டுமா? அல்லது இந்த நாட்டை நான் கொல்லையிலும் நெருப்பு வைத்துக் கொளுத்தி சாம்பலாக்கி சமுத்திரத்தில் கரைத்து விட்டு பாலைவன மாக ஆக்கிவிட வேண்டுமா? என்றுதான் கேட்கின்றோம். அன்னிய ஆட்சி இருக்கும் போதே ஏற்கெனவே இந்த நாட்டை ஜமீன்தாரர்களும், சோம்பேரி. களான பார்ப்பனர்களுமே ஆளுகிறார்கள். இனி சுயாட்சி என்பது கிடைத்து தட்டிப் பேசவே ஆளில்லாத நிலையில் சாட்சிக்குக்கூட ஒரு அன்னியன் இங்கில்லாத ஒரு நிலை ஏற்பட்டு விடுமானால் இந்த நாட்டு உழைப்பாளி மக்களின் கதி - தாழ்த்தப்பட்ட மக்களின் கதி என்ன ஆவது என்பது தான் நமது கவலை இந்த நாடு சமதர்ம நாடு ஆகவேண்டுமானால், இந்த நாட்டில் முதலாளிகளையும், மேல் ஜாதிக்காரர்கள் என்னும் சோம்பேரிகளையும் காப்பாற்றும், பாதுகாக்கும் அரசியலும், மற்றப் பாதுகாப்புகளும் அடியோடு அழிக்கப்பட வேண்டுமானால் ராணுவத்தை இந்திய மயமாக்குவது என்பது ஒருநாளும் கூடாத காரியமேயாகும். இந்திய மயமாக்கவேண்டும் என்று சொன்னவுடனே வகுப்புவாரி உரிமை வந்தே தீரும். ஒவ்வொரு வகுப்புக்கு ஒரு சிப்பாய்-ராணுவ அதிகாரி ஏற்பட்டே தீரும். அதிலும்கூட இப்போதைய போலவே சூட்சிக்காரர்களும், தந்திரக்காரர்களும், மேல் ஜாதிக்காரர்களும் அதிகமான எண்ணிக்கை ஸ்தானங்களை எப்படியாவது கைப்பற்றியே தீருவார்கள். இவர்கள் எப்பொழுதும் உழைப்பாளிகள் மேலும், பாட்டாளிகள்
மேலும் சமதர்மத்துக்கு வாதாடுபவர்கள் மேலுமேதான் இவர்களது துப்பாக்கி யையும், மிஷின் பீரங்கிகளையும் திருப்புவார்களே ஒழிய ஒரு நாளும் ஏழைகளை வஞ்சித்து அவர்களது உழைப்பைக் கொள்ளை கொள்கின்ற வர்கள் மீதும் அவர்களை அடக்கி வைத்திருப்பவர்கள் மீதும் திருப்பவே
மாட்டார்கள். ஆதலால் இந்த நிலையில் இந்தியா ஒரு நாளும் சமதர்ம நாடாக முடியவே முடியாமல் போய்விடும்.
ரஷியா முதலிய சில நாடுகளில் இன்று ஏதாவது ஒரு அளவில் சமதர்மங்கள் விளங்குகின்றன என்றால் அங்குள்ள ராணுவ வீரர்கள் தங்களில் ஆளுக்கு ஒரு சமையல் அரையும், சாப்பாட்டு இடமும் தேடுகின்ற வர்களாய் இல்லாமல் இருந்ததுடன் அவர்களது சகோதரர்கள் மீது துப்பாக்கியைத் திருப்பாமல் அவர்களை வஞ்சித்து ஏமாற்றி அவர்களது உழைப்பை உண்டுவந்த முதலாளிகள், ஜமின்தாரர்கள் சோம்பேரிகள்
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
குருக்கள்மார்கள் மீது திருப்பியதினாலும் அந்தப்படி அவர்கள் திருப்பி இராவிட்டாலும் தங்களது சகோதரர்கள் மீது திருப்ப மறுத்ததாலுமே ஒழிய
வேறில்லை...
ஆகையால் இந்தியாவுக்கு சுயராஜியம் தேடவும் ராணுவத்தை இந்திய மயமாக்கவும் முயற்சிக்கும் தேசியவாதிகளும் தேசபக்தர்களும் தேசப்பிரதிநிதிகளும் மகாத்மாக்களும் தயவு செய்து முதலில் சமையல் கூடங்களையும் சாப்பாட்டு மண்டபங்களையும் எல்லாருக்கும் ஒன்றாக ஆக்க முயற்சிப்பார்களாக.
குடி அரசு - தலையங்கம் - 19.03.1933.
குடி அரசு - 1933 M) 188
தோழர். ௩. K. ஷண்முகம்.
தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் இந்தியா சட்டசபைக்குத் தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருப்பது கேட்டு பார்ப்பனர்களும், அவர்களது அடிமையாயிருந்து வயிறு வளர்த்துத் தீர வேண்டிய பேறுபெற்ற பார்ப்பனரல்லாதாரும், அவ்விருகூட்டத்தினது பத்திரிகைகளும் தவிர்த்து மற்றைய எல்லோருமே ஆனந்தக்கடலில் மூழ்குவார்கள் என்பதிலைய மில்லை.
தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்கள் ஒரு பார்ப்பனராயிருந்திருந்
தால் இன்று அரசியல் உலகில் மகாகனம் என்னும் பட்டம் பெற்ற சீனிவாச சாஸ்திரி பார்ப்பனரும், சர். பட்டம் பெற்று மற்றும் பல போக போக்கியங் களையும், மாதம் 20 ஆயிரம் 30ஆயிரம் வரும்படியையும் உடைய சர். சி. பி.ராமசாமி அய்யர்ப் பார்ப்பனரும் ஷண்முகத்திற்குப் பின்னால் 5-வது 6- வதுஸ்தானங்களில் இருப்பதற்குக்கூட தகுதி உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்பட மாட்டார்கள். மகாகனம் சாஸ்திரிக்கு தோழர்கள் கோக்கேல், காந்தி ஆகியவர்கள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் ஆதரவு கொடுத்தும் அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தும் இந்தியாவிலுள்ள “முக்கிய” பத்திரிகைகள் என்பனவெல்லாம் (பார்ப்பனர்களை ஆசிரியராகவும், நிருபர்களாகவும் கொண்டிருக்கும் காரணத்தால்) “சாஸ்திரி மணலைக்
கயிராகத் திரித்து வானத்தை வில்லாக வளைத்து விடுவார்” என்று புகழ்ந்து வந்ததாலுமே இந்தியப் பொதுமக்களுக்கு இன்ன விஷயத்தில் குறிப்பாக இன்ன காரியத்தைச் செய்தவர் என்றோ, அதனால் இன்ன பலன் இன்ன மக்களுக்கு ஏற்பட்டதென்றோ சொல்லுவதற்கு சிறிதுகூட இடமில்லாத ஒரு வாத்தியார் பார்ப்பனர் மகாகனமாகி இந்திய மக்களுடைய பிரதிநிதியென்று
உலகம் முழுவதும்விளம்பரம் பெற்று வாழ முடிந்தது.
அதுபோலவே தோழர் சர். சி.பி.ராமசாமி அய்யருக்கும் ஹைக்கோர்டு ஜட்ஜுகளில் இரண்டொருவருடைய சலுகையும், கோகேல், காந்தி இவர் களைப் போலவே அரசியல் உலகில் விளம்பரம் பெற்ற பெசண்டம்மை யாரின் வெளிப்படையாகவும், இரசியமாகவும் சர்க்காருக்குச் செய்த சிபார்சு
களும், மற்றும் பல வழிகளில் பெற்ற அரசாங்கத் தலைமை அதிகாரிகளின்
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஆதரவுகளும், தேசியபார்ப்பன பத்திரிகைகளின் விளம்பரங்களும் எல்லாம் சேர்ந்து அவரையும் ஒரு பெரிய மனுஷியனாக்கச்செய்ததோடு வருஷம் பல லக்ஷம் ரூபாய் வரும்படிக்கு ஆளாக்கியும் விட்டுவிட்டது.
ஆனால் தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்களுக்குத் தோழர் காந்தி முதல் எதிரியாயிருந்து முட்டுக்கட்டை போட்டவைகளையும், பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வந்த விஷமங்களையும், சூட்சிகளையும் தாண்டியும் பார்ப்பனர்களின் அடிமைகளாயிருந்த பல பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகள் செய்து வந்த தொல்லைகளிலிருந்து சமாளித்து அரசாங்கத்தையும் (தோழர் மோதிலால் நேரு “தேசியவீர'” ராயிருந்தபோது அவருக்கு வலக்கை யாயிருந்து! எதிர்த்தும் யாருடைய தயவில்லாமலும், எந்தப்பத்திரிகையுடைய பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் ஆகிய இருவர்களுடைய) ஆதரவில்லா.
மலும் மேற்படி பத்திரிகைகளின் நிருபர்களுடைய அயோக்கியத்தனமான விஷம நிருபங்களுக்கெல்லாம் மார்பைக் கொடுத்தும் தானாகவே இந்த நிலைமை அடைந்தார் என்பதை எல்லா மக்களும் அறிய வேண்டும் என்பது நமது ஆசை.
இந்த உத்தியோகத்தால் தோழர் ஆர். கே. ஷண்முகத்துக்கு மாதம்
4000 ரூபாய் லாபமே யொழிய மற்றபடி இந்திய ஏழை மக்களுக்கு-பாடுபடும். மக்களுக்கு ஒரு காதொடிந்த ஊசிக்கும் மார்க்கமில்லை என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். ஆனால் அப்படி ஒரு உத்தியோகமும், பதவியும் இருக்கும் வரையிலும் அதை ஏதாவது ஒருமாம்சப்பிண்டமாவது அனுபவித் துத்தான் தீரவேண்டும் என்கின்ற நிலைமை இருக்கின்ற வரையிலும் வெறும் அனாமதேயங்கள் அடைந்து தாழ்த்தப்பட்ட அதாவது பார்ப்பனரல்லாத
சமூகத்திற்கு இழிவும், தாழ்மையும் நிரந்தரமாய் இருக்கச் செய்வதற்கு பாடுபடும் மக்களோ, அல்லது இப்படி ஒரு கஷ்டமான, கொடுமையான நிலைமை ஒன்று இருக்கின்றது என்பதை அறியாத ஒரு தேசா போகமோ அடைவதைப் பார்க்கிலும் இப்படிப்பட்ட ஒரு அறிஞரும், சாமார்த்திய வாளியும், தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் கவலையும் அவர்களது தாழ்மைக்கும், இழிவுக்கும் அஸ்திவாரமான காரணத்தை நன்றாய் உணர்ந்த வரும், அதை வேருடன் களைந்து வெந்நீரை ஊற்றி பூண்டர அழிக்க வேண்டும் என்கின்ற ஆசையும் உறுதியும் கொண்ட ஒருவர் அனுபவிப்பதில்
எந்த மூடனும் பொறாமைப்படவே மாட்டான்.
அன்றியும் தோழர் ஆர். கே. ஷண்முகம் இன்று ஒரு வெரும் ஆசாமி அல்ல என்றும் இப்படிப்பட்ட பட்டம் பதவி முதலிய வேட்டைகளுக்காக தேசிய வேஷமோ, வகுப்பு வேஷமோ, மதவேஷமோ, தெய்வ பக்தி வேஷமோ மகான் வேஷமோ போட்டுக் கொண்டு பாமரர்களை ஏமாற்றும். பாஷாண்டியல்ல வென்றும், சொல்வதோடு ஜாதி, மதம், கடவுள், தேசம், வகுப்பு, அரச ஆட்சி முதலிய சகல விஷயங்களையும் புரட்டென்று ஒதுக்கித்
குடி அரசு - 1933 M) 190
தள்ளி சரீரத்தால் பாடுபடும் மக்களுடைய மேன்மைக்கும், சமூகத்தால் இழிவு படுத்தப்படும் மக்களுடைய விடுதலைக்கும் உழைக்கும் உண்மை இயக்கமாகிய சுயமரியாதை இயக்க சங்கத்துக்குத் தலைவராயிருக்கின்ற ஒரு வீரராவார் என்றும் சொல்லுவோம்.
சுயமரியாதைச் சங்கமானது பார்ப்பனர்களும், பார்ப்பனர்களது அடிமை களாகிய பார்ப்பனரல்லாத தேசியவாதிகள் என்பவர்களும் தூற்றி வருவதும்,மதவாதிகள் தூற்றி வருவதும், சர்க்காரும் கண்காணித்து வருவதும் சுயமரியாதை இயக்கமென்றாலே நாக்குசுட்டு விடுமென்றும், சர்க்கார். கோபித்துக்கொள்வார்கள் என்றும், அதிகாரிகள் கஷ்டப்படுத்துவார்கள்
என்றும் சொல்லப்பட்டு வருவதுமான ஒரு இயக்கமாகும்.
அதுமாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கம் அரசாங்கத்தையே கவிழ்க்கப்பார்க்கின்றது என்றும், மதத்தையே அழிக்கப்பார்க்கின்றது என்றும், கடவுளையே ஒழிக்கப்பார்க்கின்றது வென்றும், வேத சாஸ்திரங்களை எறிக்கப்பார்க்கின்றதுவென்றும் பல முண்டங்கள் ஒப்பாரி இட்டு மாரடித்து அழுவது மாத்திரமல்லாமல் அரசாங்கத்துக்கு மகஜரும், விண்ணப்பமும்,
தூதும் அனுப்புவதல்லாமல் பத்திரிகைகளிலும் பத்தி பத்தியாய் எழுதி திண்ணைப்பிரசாரம் செய்யப்படுவதற்கு ஆளாகி இருக்கும் ஒரு இயக்கமாகும்.
அப்படிப்பட்ட ஒரு இயக்க ஸ்தாபனத்துக்குத் தலைவராயிருக்கின்ற ஒருவர் இந்தியா சட்டசபை ஸ்தாபனத்துக்கும் தலைவராகத் தெரிந்தெரிந் தெடுக்கப் பட்டாரென்றால் அதுவும் எல்லாக் கட்சியாராலும் ஏகமனதாய்த் தெரிந்தெடுக்கப்பட்டார் என்றால் இப்படிப்பட்ட இவரைத் தலைவரா யடைந்தது இந்தியா சட்டசபைக்கே ஒரு பெரிய கெளரவமென்றே சொல்ல வேண்டும்.
ஆகவே தோழர் ஆர். கே. ஷண்முகம் அவர்களைத் தனது தலைவ
ராகக் கொண்ட இந்திய சட்டசபையைத்தான் நாம் பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.03.1933
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
“வதாொழிலானர் நிலைமை”
தோழர்களே!
இது பரியந்தம் தோழர் பொன்னம்பலனார் “வாலிபர் கடமை என்ன?” என்பது பற்றி விபரமாக உங்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர் சங்கராச் சாரியாரின் விஷயத்தைப் பற்றிப் பேசும்போதும் மத சம்பந்தமான அக் கிரமங்களைக் கூறும் போதும் கடுமையாகப் பேசியதாக நீங்கள் கருதலாம்.
சகிக்க முடியாத அக்கிரமங்கள் மதத்தின் பேரால் நடைபெறும் பொழுது அதை மேல் பூச்சாகப் பேசிப்போவதற்கு சாத்தியப்படாததாகவே இருக்கிறது. சென்னையில் கொள்ளையடித்தது போன்று மக்களிடம் மூடத்தனத்தைப் புகட்டி கொள்ளையடிப்பதை நேரில் சென்னையில் போய்ப் பார்த்திருந் தீர்களானால் தெரியும். இவ்விஷயத்தில் அவர் வாலிபரும் உணர்ச்சியுள்ள வருமாதலால் மிக்க ஆவேசத்துடனே தான் பேசினார். இன்னும் கவனித்தால் இன்றையதினம் கேவலமாக மக்களை மதிக்கப்படுகிற தீண்டாமை விலக்குக் கிளர்ச்சிக்கும் காங்கிரசில் பிரபல தேச பக்தர்கள் என்பவர்களும், ஏன் தோழர். காந்தியாரும்கூட உண்மையில் மத சாஸ்திர சம்மந்தமான அபிப்பிராயங் களைக் காட்டுவதன் மூலம் தீண்டாமை விலக்குக்குத் தடைசெய்து வரு
கிறார்கள். சங்கராச்சாரி பிரசங்கமும் மதசம்பந்தமானதுதான்.மத சம்பிரதாயப் படிக்கு இருவரும் நம்மை தேவடியாள் மக்கள் (சூத்திரர்கள் சண்டாளர்கள் என்று தான் சொல்லுகிறார்கள். மதத்தைப் பொறுத்தவரையில் ஒற்றுமை யாவதற்கு வேறு வழியுண்டா என்பது யோசித்தால் எதுவும் கிடையாது.
நமக்குள் வெகு காலமாக ஒற்றுமை இல்லை என்றுதான் சொல்லிக்கொண்டு. வந்தோம். ஆனால் காந்தி காங்கிரஸ் வந்தபின்பு சுயராஜ்யம் ஏற்பட்டால் ஒற்றுமை ஏற்பட்டுவிடும் என்று சொல்லிக்கொண்டு இருந்து இன்றைக்கு யார். கோவிலுக்குள் போகலாம் என்ற கேள்வி வைதிகர்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் அவர் இன்று அரசியல் சங்கராச்சாரி என்பதற்கு என்ன தடை. சங்கராச்சாரிக்கும் காந்தியாருக்கும் மத விஷயத்திலும், ஜாதி வர்ணம் என்பதிலும் நெருங்கிய சம்பந்தம் உண்டு தான். இன்று கோவிலுக்கு போக வேண்டுமென்றோ, போக வேண்டாமென்றோ போகாதேயுங்கள் என்றோ சொல்வதில் நமது விஷயமும் வராமலில்லை. கோவிலுக்குப் போவது விஷயமாக தடை செய்யப்பட்ட மக்களுக்கு இன்றும் தடை ஏற்படுத்தி
குடி அரசு - 1933 M) 192
அதற்கு ஆதாரம் சொல்லி உயர் ஜாதி என்பது இருக்க வேண்டும். என்று சொல்லி ஆதாரம் காட்டவே இம்மடாதிபதிகளும் சங்கராச்சாரிகளும் கிளம்பி. வருணதர்மத்தைப் பலப்படுத்துகிறார்கள். இவர்கள் விஷயத்தை ஒப்புக் கொண்டு விடுவதால் நமது நிலைமை மாறப்போவதுமில்லை. பழைய நிலைமை கெட்டிப்படும். மாறவேண்டுமானால் அடியோடு இம்மத சம்பந்தமான வழக்கம் மாற்றப்பட ஒரு புரட்சி ஏற்பட வேண்டும். தோழர். பொன்னம்பலனார் சொல்வதைப்போன்று இவ்விஷயமும் மத சம்பந்தமான அக்கிரமங்களையும் தடுக்க வேண்டுமானால் தைரியமாக எடுத்துச் சொல்ல வேண்டியது தான். ஏனெனில் சமூகத்திற்கு விளக்கிக் காட்டக்கூடிய அளவுக்கு வரும் பொழுது தைரியமாகக் கண்டித்துப் பேசுவதினாலேதான் மக்கள் மனதில் படுகிறது. அதிலும் சங்கராச்சாரி கொள்ளையைப் போன்ற அக்கிரமங்களைத் தடுக்க வேண்டுமானால் கண்டிப்பாக எவ்வித எதிர்ப்புக்
கும் அஞ்சாது சொல்லித் தீரவேண்டியதாகவே இருக்கிறது.
சங்கராச்சாரி போன்றவர்களும், லோககுருக்களும் சொல்லித் திரி கின்ற மதத்தை ஒப்புக்கொண்டால் இன்று உங்களைப் போன்ற தொழிலாளி களும் கூட தொடப்படாத மக்களாகவே ஆகிவிடுகின்றிர்கள். இதற்கு
ஆதாரம் நமது புராணமும் காந்தியார் வர்ணாசிரம தருமமும் ஜாதிமுறையுமே போதுமானது.
ஏனெனில் இந்து மதத்திலுள்ள எந்த சாஸ்திரங்களும், சரிரத்தால் பாடுபட்டுழைக்கும் மக்களைத் தீண்டக்கூடாத ஜாதி என்றே சொல்லுகிறது. அதற்கு நாம் இதுவரை கொடுத்து வந்த மரியாதையாலேயே இக்காலமுள்ள இத்தனை ஜாதிகளும் இருக்கிறது. மத தரகர்கள் சங்கராச்சாரிகள் சொல்வ தற்கும் சேர்த்து மரியாதை செய்தால் அடுத்த நாளே இன்னும் பல கோடி மக்கள் தீண்டாதார் ஆகிவிடுவார்கள் என்பதற்குச் சந்தேகமே இல்லை. வேண்டுமானால் வருணாசிரம தருமம் தவறாமல் நடைபெற்று வரும் மலையாளத்தில் இன்றைக்கும் உழைத்துக்கொட்டும் மக்கள் குளத்திலுள்ள தண்ணீரையும் தொடக்கூடாது, தொட்டால் தீட்டு என்று சொல்வது மட்டுமல்ல அடி உதை, அப்புறம் சட்டப்படி கைதியாகி சிறை செல்ல வேண்டியதுதான். அதே வருணாச்சிரம முறைப்படி இன்று தோழர் காந்தியாரும் கூட மலை
யாளத்தில் கோவிலுக்குள் போக முடியாது. லஜபதிராயும் ஜவகர்லாலையும் கூட மலையாளத்தில் ஆலயத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியாததல்ல, லஜபதியும், காந்தியும் அனுமதிக்காத கோவில் இன்று எத்தனை ஆபாசப் பார்ப்பனர்கள் நுழைந்து அக்கிரமங்கள் செய் கிறார்கள் என்பவைகளை தான் தோழர் பொன்னம்பலனாரவர்கள் விளக்க மாகச் சொன்னார்கள். இவைகள் எல்லாம் கவனித்தால் சங்கராச்சாரி காந்தி மாளவியாக்கள் சொல்லிய எந்தப்புராணத்தையும் ஒப்புக்கொள்வதின் மூலம் என்ன ஏற்படுகிறது என்பது விளங்கவில்லையா? இதை தடுத்து அடியோடு
நிறுத்தப்பட வேண்டுமானால் பலமான பிரசாரம் மட்டும் போதாது புரட்சியும்
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சட்டமும் அவசியமாகவே இருக்கிறது. எத்தனை தான் பணத்தைக் கொட்டிக் கொடுத்து காலில் விழுந்து கும்பிட்டு பெண்சாதி பிள்ளையுடன் அழுக்கு
நீரைக் குடித்தாலும் பின்னும் நம்மைச் சூத்திரன், வேசி மகன், அடிமை, சண்டாளன் என்றுதான் சொல்லுகிறான் என்பதை இக்கூட்டத்தில் யாரேனும் மறுக்க முடியுமா என்று தான் கேட்கிறேன். (தொடர்ச்சி 02.04.1933 குடிஅரசு!
குறிப்பு-05.03.933 ஆம் நாள் அனுப்பப்பாளையம் பாத்திரத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் ஆற்றிய உரை,
குடி அரசு - சொற்பொழிவு - 26.03.4933
குடி அரசு - 1933 M) 194
அரசியல் சீர்திருத்தம்
அரசியல் சீர்திருத்தத்தின் குறிப்புகள் “வெள்ளைக் காகித” அறிக்கை: என்னும் பேரால் வெளிவந்து இருக்கிறது. அதைப்பற்றிய வாதப்பிரதிவாதங்
கள் இந்தியப் பத்திரிகைகளின் பக்கங்கள் பூராவையுமே கவர்ந்து கொண்டு தினமும் சேதிகள், பிரசங்கங்கள், அபிப்பிராயங்கள், தீர்மானங்கள் என்கின்ற ரூபங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.
என்றாலும் இதைப்பார்த்து நமக்குப் பதினைந்தடுக்குள்ள ஒரு மாளிகையில் நெருப்புப் பிடித்துக் கொளுந்து விட்டெறியும்போது அந்த வீட்டைக்கட்ட வேலை செய்தவனும், குடியிருக்க வீடில்லாமல் சமீபத்தில் ஒருமரத்துநிழலில் பொங்கிச் சாப்பிட்டு விட்டு வேலையில்லாமல் தலைக்குக் கையை வைத்துத் தரையில் நாளையச் சாப்பாட்டிற்கு வழி என்ன என்று ஏங்கிப் படுத்துக்கிடக்கும் ஒருவனுக்கு எவ்வளவு கவலையிருக்குமோ அவ்வளவு தான் இன்றைய சீர்திருத்த முயற்சியிலோ, வெள்ளைக்காகித அறிக்கை யிலோ நமக்குக் கவலையுண்டு..
ஏனெனில் அந்த வீட்டை நெருப்புப்பற்றி எறிவதிலிருந்து காப்பாற்றப் படுவதில் இந்த மரத்தடியில் பொங்கித் தின்று கிடப்பவனுக்கு யாதொரு பயனுமில்லை.
மற்றும் அந்த வீடு அடியோடு வெந்து சாம்பலாகுமானால் அதை மறுபடியும் புதுப்பித்துக் கட்டுவதன் மூலம் இந்த வீடு வாசலற்ற - வேலையற்ற ஏழைத் தொழிலாளிக்கு ஏதாவது வேலை கிடைத்துச் சற்று கஞ்சிக்காவது வழியுண்டாகும்.
அந்தப்படி பார்க்கும் முறையில் நாம் இந்த வெள்ளைக்காகித அறிக்கையில் இந்திய மக்களுக்கு லாபம் என்ன? நஷ்டம் என்ன என்று பார்த்தால் நஷ்டம் இருந்தவரையில்தான் நமக்கு-ஏழை மக்களுக்கு- தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தொழிலாள உழைப்பாளி மக்களுக்கு நன்மை என்று தான் சொல்லவேண்டும். எப்படி யென்று பாருங்கள்.
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இந்திய ஏழை மக்களின் பேரால் சுயராஜ்யம் கேட்கப் புறப்பட்டு இன்றைக்குச் சுமார் 40 வருஷ காலம் இருக்கும். இது வரையில் 2,3 தொகுதி யாய் சுயராஜ்யம் -அரசியல் சீர்திருத்தம் வழங்கப்பட்டாய் விட்டது. அதைப்
பெற்று அமுலில் நடத்தியும் ஆய் விட்டது.
இதனால் இந்திய ஏழை மக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது? சோம்பேரிகளாகிய பார்ப்பனர்களுக்கு-பிச்சையெடுத்துப் பிழைக்க வேண்டியவர்கள் என்னும் பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் எவ்வளவு? அதுவும் எப்படிப்பட்ட உத்தியோகங்கள் என்று பார்த்தால்,
கவர்னர் நிர்வாக சபை அங்கத்தினர், ஜட்ஜுகள், கலெக்டர்கள், திவான்கள் முதலிய 10000, 5000 4000, 3000, 2000, 1000 ரூ. வீதம் மாதம் கிடைக்கத்தக்க இப்படிப்பட்ட உத்தியோகங்கள் கிடைத்தது. மற்றும் அவ்வகுப்பு 100க்கு 100பேர்கள் என்றும் மண்வெட்டியை கையில் தொடாமலும், மூட்டைத் தூக்காமலும் வாழ்வதற்கு செளகரியம் ஏற்பட்டது. பலர் சர் ஆனார்கள். சிலர் மகாகனம் ஆனார்கள்.
மற்றபடி முதலாளிமார்களுக்கும், பணக்காரர்களுக்கும் 100க்கு
100வீதம் லாபம் கிடைத்து பெரிய பெரிய முதலாளி-மில் சொந்தக்காரர்கள்- கோடீஸ்வரர்கள் ஆனார்கள்.
மிராசுதாரர்களும், லேவாதேவிக்காரர்களும், ஜமீன்களாகி, ராஜாக் களாகி, கோடீஸ்வரர்களாகி பரம்பரை ராஜாக்கள் ராஜ வம்சஸ்த்தார்கள் ஆனார்கள்.
மற்றும் பலர் மந்திரிகளானார்கள். மகாத்மாக்களானார்கள்,
ஏழைகள் என்ன ஆனார்கள்-ஏழைத் தொழிலாளிகள் என்ன ஆனார். கள்? என்றென்றும் ஏழைகளே ஆனார்கள் என்பதல்லாமல் வேறென்ன?
இதுபோலவே இனியும் வரப்போகும் சுயராஜ்ஜியத்தில்-சீர்திருத்
தத்தில் இந்த நிலையைத் தவிர வேறு எந்த நிலையை எதிர்பார்க்க முடியும்? ஆதலால் இது “நல்ல சீர்திருத்தமாய்” இருந்தால் என்ன “நாசமாய்ப்போன சீர்திருத்தமாய்” இருந்தால் என்ன என்றுதான் கேட்கின்றோம்.
“ஆத்து நிறைய தண்ணீர் போனாலும் நாய்க்கு சளப்புத் தண்ணீர்
(நக்கி சாப்பிடும்) தண்ணீர்தான்” என்ற பழமொழியும் “நாட்டுக்கு நல்ல துரை: வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலைதான்” என்ற பழமொழியும்
இந்த இந்திய சுயராஜ்ய சீர்திருத்தத்திற்கே மிகவும் பொறுத்தமாயிருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.
குடி அரசு - 1933 M) 196
வரப்போகும் சுயராஜ்யத்தின் யோக்கியதையைப் பார்க்கவேண்டு மானால் அதற்காகச் செய்யப்பட்ட கிளர்ச்சியின் யோக்கியதையைப் பார்த் தாலே அறிவுள்ளவனுக்குத் தானாக விளங்கிவிடும்.
அதாவது இந்த 10 வருஷ கிளர்ச்சியின் தலைவரான தோழர் காந்திய வர்கள் செய்த கிளர்ச்சியின் தத்துவங்கள் என்ன என்று பார்ப்போமானால்,
1“பிராமணர்களுக்கு” (பார்ப்பனர்களுக்கு அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் பிரவி மாத்திரத்தாலேயே உயர்ந்த ஜாதியான் அதாவது சரிரத்தினால் வேலை செய்யப்படவே கூடாதவன் என்கின்ற தத்துவம் கொண்ட) வருணாச்சிரம தருமமும்,
2.“க்ஷத்திரியர்களுக்கு” (காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் பயனா
யும். ரவுண்டேபிள் கான்பரன்சுக்கு சென்று வந்ததின் பயனாயும், சுதேச சமஸ்தான ராஜாக்கள் ஜமீன்தாரர் ஆகியவர்களுக்கு) பாது
காப்பும்,
3, “வைசியர்களுக்கு” (மில் முதலாளிகளுக்கு 100-க்கு 100 வீதம்
லாபம் சம்பாதிக்கத் தகுந்த மாதிரி) அன்னியதுணி பகிஷ்காரமும்,
4, “சூத்திரர்களுக்கு”' (ஏழைகளுக்கு நாள் 1-க்கு 10-மணி நேரம் வேலை செய்தால் ஒரு அணாகூலி அதுவும் அந்த துணியை வாங்கு கிறவர்கள் ஒரு ரூபாய், துணிக்கு இரண்டு ரூபாய் விலை போட்டு வாங்கினால் மாத்திரம் அந்த ஒரு அணாகூலியும் கிடைக்கதக்க) கை. ராட்டினமும், (அவன் எவ்வளவு மேலான அறிவும், ஞானமும், இருந் தாலும் அவனவன் ஜாதிமுறை படியான வேலையே செய்யவேண்டும் என்னும்படியான! சுதர்ம ஜாதிமுறையும்,
5, “பஞ்சமர்களுக்கு” (தீண்டப்படாதவர்கள் என்பவர்களுக்கு என்றும் அவர்களது தாழ்ந்த தன்மை நிலைத்திருக்கவும் அவர். களுக்கு மூடநம்பிக்கை பலப்பட்டு முன்னேறாமல் அவதிப்படவும் ஆஸ்ப தமான) ஹரிஜன பட்டமும், கோவில் பிரவேசமும்,
6.“அறிஞர்களுக்கு” (இனி படித்த பல ஜாதி கூட்டத்தாருக்கு காங்கிரசின் பேரால்) சட்டசபை பிரவேசமும்.
தான் இதுவரை அரசியல் கிளர்ச்சியால் பல உள்பிரிவு, தலைப்பு பெயர்களாய் இருந்து கிளர்ச்சி நடந்துவந்திருக்கின்றது. இந்தக் கிளர்ச்சிக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கிடைத்துவிட்டது. ஒரு சமயம் இந்த மேல் கண்ட தலைப்புகளுக்கு பூராவும் நன்மையும், பாதுகாப்பும் இல்லாமலிருந்
தால் அதற்காக வேண்டுமானால் இனியும் “போராது போராது” என்று சிறிது கூப்பாடு, வெளிவேஷக் கூப்பாடு அதுவும் அதாவது வேறு ஒருவர்.
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
வீட்டுக்கு இழவுக்குப்போன பெண்கள் ஒப்பாரி வைத்தும், மாரடித்தும் அழும் சடங்கு நடக்கும்போது மாரடித்துக்கொண்டும், அழுவது போன்ற வேஷ அழுகையே அழுவதாயிருந்தால் இருக்கலாம்.
ஆகவே காந்தியார் இஷ்டப்படியும், காங்கிரஸ் கோரிக்கைப் படியும் சுயராஜ்ஜியம் கிடைத்து விட்டது. இதில் இனி சில வார்த்தை திருத்தங்கள்.
மாத்திரம் பாக்கி இருந்தால் இருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு வேண்டிய சுயராஜ்ஜியம் - தொழிலாளிகளுக்கு வேண்டிய சுயராஜ்ஜியம் என்றதின் வாசனையோ நிழலோ, சிறிது கூட இல்லை என்றும் அதற்கான நாம் செய்ய வேண்டிய வேலையும், கிளர்ச்சியும் வேறு என்றும், அதன் முதல்படி இந்த காங்கிரஸ் சூழ்ச்சிகளையும் அதற்காக மேற்கண்ட தலைப்பு கிளர்ச்சி திட்டங் களையும் அடியோடு ஒழிக்க வேண்டியது தான் என்பதோடு நமக்கு இந்த சுயராஜ்ஜியம் வேண்டவே வேண்டாம் என்றும் தொழிலாளி ராஜ்யமே வேண்டும் என்றும் சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.03.1933
குடி அரசு - 1933 M) 198
கும அள “குபோ'” பட்டணத்தின்
சிறப்பா? சிரிப்பா?
அமெரிக்கா தேசத்தை இந்திய மக்கள் குபேர பட்டணமென்று சொல்வதுண்டு. குபேரபட்டணமென்றால் செல்வம் தாண்டவமாடும் பட்டண மென்று பெயர். உண்மையிலேயே அங்கு மற்ற நாடுகளைவிட செல்வம் அதிகந்தான்.
உலகில் பல பாகங்களிலுள்ள செல்வங்களும் பல வழிகளில் அமெரிக்காவுக்குப் போய்ச் சேருகின்றன. அமெரிக்கா செல்வம் மற்ற நாடுகளுக்கு வியாபார மூலமாகவும், லேவாதேவி மூலமாகவும் முதலாக அனுப்பப்பட்டு வட்டியும் லாபமும் ஏராளமாய் அடைகின்றது.
மகா யுத்தத்திற்காக மற்ற தேசங்கள் பட்ட கடன்களில் பெரும்பகுதி இன்னமும் கட்டுவளியாகாமல் எல்லா தேசமும் அமெரிக்காவுக்குக் கடனாளி யாகவேயிருக்கின்றது.
இது மாத்திரமா, அமெரிக்கா என்றால் அது ஒரு பெரிய பழமையான “குடியரசு நாடு” சக்கிரவர்த்தியில்லாமல், அரசன் இல்லாமல் “பிரஜைகளால் பிரஜைகளுக்காக” ஆளப்படும் “ஜனநாயக” ஆட்சியுள்ள நாடு என்றும் சொல்லப்படுவதாகும்.
அதன் (குடியரசு-ஜனநாயக) தலைவர் தேர்தலுக்கு பத்து லட்சக் கணக்கான நபர்கள் ஏழைகள், தொழிலாளிகள் ஆகிய மக்கள் ஓட்டுச் செய்துதான் தலைவர் (தேர்தல் நடந்து நியமிக்கப்படுவது “கண்டிப்பான”
சட்ட முறையாகும்..
இப்படியெல்லாம் இருந்தும் என்ன பயன்? இன்று அந்நாட்டில். ஒன்றரை ( 1 7, ) கோடி மக்களுக்கு-அமெரிக்கக் குடி மக்களுக்கு- ஓட்டுச்செய்ய உரிமை உள்ள மக்களுக்கு-கஞ்சியுமில்லாமல் வேலையுமில்லாமல் தெருவில் திண்டாடித் திரிகிறார்கள் என்றால், இது அக்குபேரபட்டணத்துக்கு சிறப்பா? அல்லது சிரிப்புக்கியமானதா? என்பதை. யோசித்துப்பாருங்கள்.
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
அமெரிக்கத் தொழிலாள மக்களின் உதவியால் தான்-அவர்களது ரத்தவேர்வை வெளிப்படும்படியான உழைப்பினால் தான் அமெரிக்கா நாடு “குபேர பட்டணம்” என்கின்ற பெயரை அடைந்ததும், அது மற்ற தேசத்திய செல்வங்களை இழுத்துக் கொண்டதுமாகும்.
இன்று உலகத்திலுள்ள பெரிய பெரிய தொழிற்சாலைகள் என்பனவை
கள் பலது அமெரிக்காவில்தான் இருக்கின்றன.
உலக மார்க்கட்டுகளுக்குப் பல தேசங்கள் அனுப்பப்படும் சாமான் களின் கணக்குகளில் அமெரிக்கா தேசம் அனுப்பப்படும் சாமான்கள்தான் அதிகமான அளவுடையது. இருந்தும் என்ன பிரயோஜனம், இன்று உலகில் எங்குமில்லாத அளவு அங்கு(15000000) ஒன்றைக் கோடிமக்களுக்கு தொழிலில்லை யென்றால் இந்த குபேர பட்டணம் குடி அரசு தேசம் என்பதின் அருத்தம் என்ன என்று கேட்கின்றோம். ஒன்றறைக்கோடி மக்களுக்கு வேலை இல்லை என்றால் இந்த ஒன்றறைக்கோடி மக்களின் பெண்டு பிள்ளைகள், குழந்தை குட்டிகளையும் சேர்த்துக் கணக்குப் போட்டுப்
பார்த்தால் எத்தனை கோடி மக்கள் பட்டினியாய்க் கிடக்கின்றார்கள் என்று பாருங்கள்.
இது மாத்திரமா? அமெரிக்கா தேசமானது 10 அடுக்கு, 20 அடுக்கு,
50 அடுக்கு, 100 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடங்கள் வானமளாவ இருக்கின்றன வென்றும், சிங்கார நந்தவனங்கள், ஜலக்கிரீடை நிலபாவிகள்,
கால் பந்து, கைப்பந்து, விளையாட்டுகள் விளையாடும் மைதானங்கள். முதலியவைகள் எல்லாம்கூட மேற்படி வானமளாவிய மண்டபங்களில் இருக்கின்றன வென்றும் சொல்லப்பட்டதும் “இந்திரலோக” மென்றும், “பொன்னுலக” மென்றும் மாறுபெயர் கொடுத்தழைக்கப் படுவதுமான அமெரிக்காவிலுள்ள மக்களில் லட்சக்கணக்காண பேர்களாகிய மேற்படி வானமளாவிய மண்டபங்களையும் கூட கோபுரங்களையும் கட்டிய மக்கள். இன்று அங்கு குடியிருக்க, குடியிருக்கக்கூட அல்ல, பகலெல்லாம் தெருத் தெருவாய் திரிந்து விட்டு இரவில் போய் சிறிது நேரம் படுத்தோ உட்கார்ந்தோ கண் அயர்ந்து தூங்கக்கூட இடமில்லாமல் முனிசிபாலிடியார் தெருக்களில்
ரிப்பேர் செய்வதற்காக போட்டிருக்கும் குழாய்களுக்குள் போய்ப் படுத்துக் கொள்வதும் பெரிய ஜலதாரைகளுக்குள் இரங்கிப் படுத்துக் கொள்வதுமா யிருக்கிறார்கள் என்றால், வானமளாவிய கட்டடம் இருப்பதின் இரகசியம் என்ன என்று பாருங்கள்.
இந்த அமெரிக்கா தேசமானது ஒரு காலத்தில் அன்னிய அரசர் ஆதிக்
கத்திலிருந்து விடுதலை பெற்று சுயராஜ்யம் பெறவும், முடி அரசிலிருந்து விடுதலை பெற்று குடிஅரசு பெறவும் எத்தனை லட்சக்கணக்கான மக்களைப் பறிகொடுத்துத் துப்பாக்கி பீரங்கிக் குண்டுகளுக்கு இறையாக்கி பாலா கத்தி ஈட்டிகளுக்கு இலக்காக்கி கை யொடிந்து, கால் முறிந்து, கண் போய், மூக்குப்
குடி அரசு - 1933 M) 200
போய், காது போய் உயிர் விட்டு இருக்கவேண்டும் என்பதையும், அப்படி உயிர் விட்டவர்கள் எல்லாம் யாராயிருப்பார்கள் என்பதையும் கவனித்துப் பாருங்கள்.
அது மாத்திரமல்லாமல் இன்று வானமளாவிய மண்டபத்தில் “இந்திரன்” கள் போல் “குபேரன்” கள் போல இருக்கின்றவர்கள் யார்? கஞ்சிக்கு வகையில்லாமல் பெண்டு பிள்ளைகளுடன் தெருவில் திரிந்து ஒண்டவும், ஒதுங்கவும் இடமில்லாமல் தியங்கிப் பரிதவிப்பவர்கள் யார்? என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இப்படியே இன்று அதாவது அமெரிக்காபோல் அவ்வளவு இல்லை யானாலும் (4500000) நாற்பத்தி ஐந்து லட்சம் பெயர்கள் இங்கிலாந்தில் ஏழை மக்கள் தொழில் இல்லாமல் வாடிவதைகின்றார்கள். சுயாட்சி குடி அரசு ஆட்சி பெற்ற நாடுகளாகிய ஜர்மனியிலும் அப்படியே, ஸ்பெயினிலும் அப்படியே,
கிரீசிலும் அப்படியே (ரஷியா தவிர) மற்ற நாடுகளிலும் அப்படியே தான். வேண்டுமானால் எண்ணிக்கையில் சிறிது வித்தியாசமிருக்கலாம். ஆகவே
சுயாட்சி, குடிஆட்சி, சுயராஜ்ஜியம் குடி அரசு ஆட்சி என்பவைகளின் புரட்டு களை இதிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய அரசர்களும், குடி ஆட்சி தலைவர்களும் முதலாளிகளின்
பிரதிநிதிகள் என்று மாத்திரம் சொன்னால் போராது முதலாளிகளேயாவார்கள்.
அவர்களுக்கு எதிர்ப்புக்காரர்களாய் எதிர் கட்சியில் இருப்பவர்களாய் இருந்துகொண்டு ஜனங்களின்--ஏழைகளின்-தரித்திர நாராயணர்களின் பெயர்களை சொல்லிக்கொண்டு சுயராஜ்ஜியத்திற்கும் குடி அரசுக்கும் கிளர்ச்சி செய்யும் “வீரர்கள் ஏழைப்பங்காளர்'””களாக இருப்பவர்கள் இந்த முதலாளிகளும், ஜமீன்தாரர்களும், மற்றும் இவர்களுடைய பிரதிநிதிகளுமே யாவார்கள். இதில் யாருக்கும் எவ்விதத்திலும், சந்தேகம் வேண்டியதில்லை என்று வற்புறுத்திக் கூறுவோம். சந்தேகமிருந்தால் மேல்கண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஜர்மன் ஆகிய தேசத்தை இன்று பாருங்கள். அப்பொழுது உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். அப்பொழுதும் உங்களுக்கு உண்மை விளங்கவில்லையானால் நீங்கள் இந்த “இம்பர்”
நாட்டில் (இந்த உலகத்தில்) இருப்பதைவிட “உம்பர்” நாட்டில் (இங்கு இல்லாமல்) இருப்பதே மேலான காரியமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.03.4933
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
காரைக்குமுயில் போலீஸ் அட்௫ுழியம்
காரைக்குடியில் இம்மாதம் 3-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலையில் கல்லுக்கட்டு என்கின்ற ஒரு ஒதுக்கு இடத்தின் வேலிக்கு உட்புரமாக தோழர். ஜீவானந்தம் அவர்கள் தீண்டாமை என்னும் விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் சில பார்ப்பனர்களின் ஏவுதலின் பேரில் ஒரு போலீசு சப் இன்ஸ்பெக்டர் கூட்டத்துள் புகுந்து திடீரென்று தோன்றி தோழர். ஜீவனாந்தத்தை யாதொரு முகாந்திரமும் இல்லாமல் கண்ணத்தில் அடித்த தாகவும் காரணம் சொல்லி அடித்தால் நலம் என்று தோழர் ஜீவானந்தம் மரியாதையாய்ச் சொல்லியும் மறுபடியும் பலமாக பல தடவை அடித்ததாகவும் உடனே கூட்டம் கலைந்து விட்டதாகவும், அந்த சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந் தத்தை அடித்தது மாத்திரம் போதாமல் தோழர் கணபதி என்பவரையும்
தெருவில் வழிமறித்து அடித்ததாகவும், பிறகு மறுபடியும் கொஞ்ச தூரத்தில் சென்று கொண்டிருந்த தோழர் ராமகப்பையா அவர்களையும் ஓடி வழிமறித்து பல அடிகள் கன்னத்தில் அடித்ததாகவும், ஏனய்யா? என்ன காரணமய்யா? சொல்லிவிட்டு அடியுங்களையா என்று கேட்டும் சிறிதும் லட்சியமில்லாமலும்
ஈவு இரக்கமில்லாமலும் கண்டபடி அடித்ததாகவும் பிறகு தோழர் ராம சுப்பையா அவர்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று தெரிந்தவுடன் அந்த
சப் இன்ஸ்பெக்டர் தனக்கு மேலால் ஏதாவது கேள்வி வரக்கூடுமோ என்று பயந்து மூவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப்போய் நியூ சென்சுக்கு சார்ஜ் செய்து கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டதாகவும் பத்திரிகைகளில் கண்ட சேதிகளாலும் நேரில் விசாரித்த விசாரனையினாலும் தெரிய வருகிறது.
இந்த நடவடிக்கைகளைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் போட்டு தீர்மானங்கள் செய்திருப்பதாகவும், இனியும் பல இடங்களில் போலீசாரின் இவ்வித அயோக்கியத்தனமான காரியத்தைக் கண்டித்தும் இந்த சப் இன்ஸ் பெக்டர் மீதுதக்க நடவடிக்கை எடுத்து அவருக்குப் புத்தி கற்பிப்பதுடன் இனி எந்த போலீஸ்காரரும் இவ்வித மடத்தனமும் அயோக்கியத்தனமும் பார்ப் பனர்களுக்கு குலாமாயிருந்து இவ்வித இழிவான காரியமும் செய்யாமல் இருக்க எச்சரிக்கும்படியும் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாக தீர்மானங்கள். பலர் செய்திருப்பதாகவும் செய்யப் போவதாகவும் தெரிய வருகின்றது.
போலீஸ் இலாக்காத் தலைமை அதிகாரிகளும், நிர்வாக இலாக்காத் தலைமை அதிகாரிகளும் இதைப்பற்றி இனி என்ன செய்யப் போகின்றார்கள்.
குடி அரசு - 1933 M) 202
என்பதைப் பார்க்கலாம். என்றாலும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அந்த “ஜாதியார்” அந்தந்த “ஜாதி” ப்புத்தியைத்தான் காண்பிப்பார்கள். ஒருவர் செய்த அயோக்கியத்தனத்தை அதே உத்தியோகத் தாயிக்குப் பிறந்த மற்றொருவர் அதை மூடிப்பூசி மெழுகும் முறையில் தான் காரியம் செய்வார்:
கள். 100ல் ஒருவர் 1000ல் ஒருவர் உத்தியோக ஜாதி அபிமானத்தையே பிரதானமாய்க் கருதாமல் ஞாயம் செய்தாலும் செய்வார்கள். ஆதலால் அதைப்பற்றி கவலையில்லை.
ஆனால் சட்ட சபைப் பிரதிநிதிகள் என்கின்ற முடத்தெங்குகள் கோழிக்குஞ்சுகள் பொரித்ததுபோல் பொல பொல வென்று நூற்றுக்கணக்கான மக்கள் பொது ஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டும் பட்டம் பரிவட்டங்கள் பெற்றுக்கொண்டும் பொதுஜனங்கள் பேரால்-பொதுஜனங்கள் பணத்தில் படிச் செலவு செய்து கொண்டும் வாழ்கின்ற இந்த ஜனப்பிரதி நிதிகள் என்பவர்கள் இந்த இருபது நாளாய் சட்டசபையில் இதைவிட வேறு என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்பது தான் நமது வேடிக்கைக் கேள்வியாகும்.
தோழர் கே.பாஷ்யம் ஐயங்காரையும் மற்றும் ஏதேதோ அணாமதேய மாம்ச பிண்டங்களையும் பற்றி “அவரை யேன் அடித்தார்கள்” இவருக்கு
“ஏன் மோர் கொடுக்கவில்லை” என்பது போன்ற பல கேள்விகள் கேட்டு சர். உஸ்மான் தயவையும் தோழர் கிருஷ்ணய்யர் தயவையும் பெற்ற இந்தப்
புலிகள் இந்த மாதிரியான அதாவது பொதுஜன சேவை செய்கின்றவர்களும் ஏழை மக்களுக்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்துகொண்டு யாதொரு சுயநலமும் எதிர்பாராமல் பாடுபடுகின்ற மரியாதையான வாழ்க்கையுள்ள மக்களை இம்மாதிரி தெரு
வில் நடக்கும்போது குடிகாரன் வெறிகாரன் போல் ஓடி மரித்து கத்திரிக்காய் பட்டணம்போல் கன்னங்கன்னமாய் பல்லில் ரத்தம் வரும்படி அடிக்கின்றது என்றால். இதைப்பற்றி ஒரு கேள்வியாவது கேட்கவோ ஒரு அவசரத் தீர்மானமாவது கொண்டுவரவோ வேண்டியது அவசியமில்லாமலும், அவசர
மில்லாமலும் போனதுதான் நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. தீண்டப்படாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பவர்களுக்குக்கூட இதைப்பற்றிய உணர்ச்சி இல்லாமல் போனது நமக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இதிலிருந்து நாம் ஒன்றுதான் சொல்ல முடியும். அதாவது அரசாங்கம் என்பதும் ஜனப்பிரதிநிதி என்பதும் ஒரே யோக்கியதை உடையது தான் என்றும் அரசாங்கம் என்பது ஏழைமக்கள் என்னும் பிணத்தைத் தின்னும் குள்ளநரி என்றால் பொதுஜன பிரநிதிகள் என்பவர்கள் அப்பிணத்தைக் கொத்திக் கொத்தி தின்னும்
கழுகுக்கு சமானமானவர்களே ஒழிய நரியை விரட்டுகின்றவர்கள் அல்ல என்றுதான் முடிவு செய்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.03.1993
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
செட்முநாட்முல் தோமூர் ஈ. வவ. இராமசாமி
கடவுளுக்கு ஒரு வார நோட்டீஸ்
தலைவரவர்களே! தோழர்களே! சமதர்மம் என்பது நமக்கொரு புதிய வார்த்தை அல்ல, எல்லாச் சமூகத்தாரும் எல்லா மதஸ்தர்களும் விரும்புவதும் அந்தப்படியே யாவரும் நடக்க வேண்டுமென்றும் எதிர்பார்ப்பதும், ஒவ் வொரு சமூகத்தானும், ஒவ்வொரு மதஸ்த்தனும் தங்கள் தங்கள் சமூகங்
களிலும், மதங்களிலும் இருக்கின்றதென்று சொல்லி பெருமை பாராட்டிக் கொள்ளுவதுமான வார்த்தையேயாகும். ஆனால் காரியத்தில் மாத்திரம் உண்மையான சமதர்ம தத்துவங்களை எடுத்துச்சொன்னால் “இது சாத்தியப் படுமா” என்று பேசுவதாகவும் இது நாஸ்திகமென்றும், துவேஷமென்றும் சொல்லுவதாகவே இருக்கிறது. எச்சமதர்மக் காரனையாவது அழைத்து உங்கள் சமூகத்தில் மதத்தில் சமதர்மம் இருக்கிறது என்றாயே நீ ஏன் இப்படி யிருக்கிறாய், அவன் ஏன் அப்படியிருக்கிறான், நீ ஏன் எஜமானனாயிருக்
கிறாய், அவன் ஏன் அடிமையாயிருக்கிறான், நீ ஏன் பிரபுவாய், செல்வந்தனா யிருக்கிறாய், அவன் ஏன் ஏழையாய், தரித்திரனாய், பிச்சைக்காரனாய், பட்டினிகிடப்பவனாயிருக்கிறான்? உனக்கு ஏன் மூன்றடுக்கு மாளிகை? அவனுக்கு ஏன் ஓட்டைக் குடிசை கூட இல்லை? நீ ஏன் வருஷம் 10000 கணக்காய் லாபம் பெருக்கி ராஜபோகம் அனுபவித்து லக்ஷாதிபதியாய் விளங்குகின்றாய்? அவன் ஏன் நஷ்டப்பட்டு, கை முதலை இழந்து கடன் காரனாகிறான்? நீ ஏன் பிச்சை கொடுக்கத் தகுந்தவனானாய் அவன் பிச்சை வாங்கத் தகுந்தவனானான்? நீ ஏன் பாடுபடாமல் வேதத்தையும், மந்திரத் தையும் சொல்லிக் கொண்டு நோகாமல் வயிறு வளர்க்கின்றாய்? அவன் ஏன் பாடுபட்டு இடுப்பொடிந்து, கூன்விழுந்து இளைத்துப்போகிறான். உன் பிள்ளை ஏன் பி.ஏ... எம்.ஏ. ஐ.சி.எஸ். பாரிஸ்டர் படிக்க முடிந்தது? அவன் பிள்ளை ஏன் கையெழுத்துப் போட கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்பன போன்ற சாதாரணமான பொதுக்கேள்விகளைக் கேட்டால் சமதர்மம் மதக்காரர்கள் என்பவர்கள் என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
முட்டாள்தனமானதும், போக்கிறித்தனமானதுமான பதிலைத்தான் சொல்லுவார்கள். அதென்னபதிலென்றால் “ஐந்து விரல்களும் ஒன்றுபோல்
குடி அரசு - 1933 M) 204.
இருக்கின்றனவா? ஒன்று உயர்வு, ஒன்று தாழ்வு ஆகத்தானே கடவுள் சிருஷ்டியின் இயற்கை இருக்கின்றது என்று சொல்லுகிறார்கள். இந்தப்
பதிலைப் படித்த மேதாவிகளான பி.ஏ. எம்.ஏ. பண்டிதர்களும், சாஸ்திரிகளும், குருமார்களும், பாதிரிகளும் மெளலானாக்களும், தத்துவஞானி என்பவர் களும், மகாத்மாக்கள் என்பவர்களும் அரசியல் ஞானிகள் சீர்திருத்தக் காரர்கள், பரோபகாரிகள், ஆஸ்திகர்கள், பிரமஞானிகள், பிரம சமாஜக்
காரர்கள் முதலாகிய எல்லாப் “பொருப்பு வாய்ந்த” கனவான்களும் சொல்லு கின்றார்களென்றால் இந்தக் கூட்ட மக்களோ, மதமோ, அரசியலோ, ஞானமோ, சமதர்மமாகுமா என்று யோசித்துப்பாருங்கள்.
ஏழை பணக்காரக் கொடுமைக்கும், சோம்பேறி உழைப்பாளி தன்மை
யில் உள்ள வித்தியாசத்திற்கும் “ஐந்து விரல்களும் ஒன்று போலிருக்கின்ற னவா” என்கின்ற உதாரணத்திற்கும் ஏதாவது பொருத்தமிருக்கிறதாவென்று யோசித்துப் பாருங்கள். இந்த பதிலை ஒன்றா முட்டாள்த்தனம் அல்லது போக்கிறிதனமான பித்தலாட்டத்தனம் என்று தானே சொல்லவேண்டும். இன்னும் வெளிப்படையாகப் பேச வேண்டுமானால் இன்று காணப்படும் மதம், ஜாதி, சமூகம், அரசாங்கம், ஞானம், தத்துவ சாஸ்திரம் முதலியவை களெல்லாம் சமதர்மத்துக்கு விரோதமான சூஷி எண்ணத்தின் மீது கட்டப் பட்டவைகளென்று தான் சொல்லவேண்டும். இதுமாத்திரமல்லாமல் இவைகளெல்லாவற்றிற்குமாதாரமாய்க் கொள்ளப்படும் கடவுள் என்ற தன்மையும் இந்த உண்மை சமதர்மத்திற்குவிரோதமான தன்மைகளை நிலை நிறுத்தவும் அதன் குற்றங்களை உணராமலிருக்கவும்,திருத்துப்பாடு செய்யா மலிருக்கவும் தந்திரக்காரர்கள் செய்த சூஷியேயாகும். அல்லவென்றால் இச்சூட்சிகளைக் கண்டுபிடிக்க முடியாத திருத்துப்பாடு செய்துகொள்ள முடியாத மூட மக்களின் அறியாமை உணர்ச்சியேயாகும்.
இன்றையத்தினம் வார்த்தையில் சமதர்மமே யொழிய காரியத்தில்,
வாழ்க்கைத் தத்துவத்தில் எங்கே சமதர்மம் இருக்கிறது?
ஒருவனுக்கு மகிமையில், சம்பாதனையில், அல்லது சொத்தில் இத்தனையில் ஒரு பங்கு என்று பிச்சை கொடுத்துவிட்டால் அது சமதர்ம மாகிவிடுமா? ஒருவனை தொட்டுக் கொண்டால் அது சமதர்மமாகிவிடுமா?' ஒருவன்கூட இருந்து சாப்பிட்டுவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா?' ஒருவனைக் கோவிலுக்குள் விட்டுவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா?' ஒருவன் கூடஇருந்து கடவுளைப் பிரார்த்தனை செய்தால் அது சமதர்ம மாகிவிடுமா? ஒருவன் கஞ்சித்தொட்டிவைத்து எல்லோருக்கும் கஞ்சி ஊற்றினால் அது சமதர்மமாகிவிடுமா? ஒரு சத்திரம் கட்டி வைத்துவிட்டால் அது சமதர்மமாகிவிடுமா? எல்லோரையும் ஒன்றாய் உட்கார்ந்து படிக்கச் சொன்னால் சமதர்மமாகிவிடுமா? எல்லோரும் ஒன்றாயிருந்து கும்பிட ஒரு கோவில் கட்டி விட்டால் சமதர்மமாகிவிடுமா வென்றுயோசித்துப்பாருங்கள்.
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இவற்றால் இதைசெய்கின்ற மனிதனுக்கோ, இதை அனுபவிக்கின்ற மனிதனுக்கோ, முறையே நஷ்டமென்ன? லாபமென்ன? இவையெல்லாம் வெரும் பித்தலாட்ட சமதர்மங்கள்.
உலகம் பொது, உலகத்திலுள்ள செல்வம் போக போக்கியம் பொது, உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு வேண்டிய காரியத்திற்காக மனிதன் செய்ய வேண்டிய வேலைகளெல்லாம் பொது, அதனால் ஏற்படும் பலன்களெல்லாம். எல்லா மக்களுக்கும் பொது-சரிபாகம் பிரித்துக்கொள்ளத்தக்கது. இதற்கு மீறி
நடந்தால் குற்றம் தண்டிக்கத்தக்கது என்று எந்த மதம், எந்த சமூகம், எந்த அரசாங்கம், எந்த அரசியல் ஞானம், எந்த மதத் தத்துவஞானம், எந்த மகாத்மா முதலியவைகள் கூறுகின்றன என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். மத வெறி காரணமாக தன்தன் மதம் சமதர்ம மதம் என்பதும், சமயவெறி காரணமாக தன் தன் சமயம் சமதர்ம சமயமென்பதும் அரசியல் வெறி-சூக்ஷி காரணமாக தன் தன் அரசியல் முறை சமதர்மம் என்பதுமான பித்தலாட்
டங்கள் தான் நடைபெறுகின்றனவேயல்லாமல் உண்மை சமதர்மம் எங்கே இருக்கின்றது? எதில் இருக்கின்றது என்பதை நடுநிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
அரசனும், ஆண்டியும் ஒன்றாயிருந்து ஒரு ஓட்டலிலிருந்து சாப்பிட்டால், ஒரு கோயிலில் கும்பிட்டால், ஒரு பள்ளிக்கூடத்தில்படித்தால், ஒரு தெருவில் நடந்தால், ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட்டால், ஒரு காற்றை சுவாசித்தால் இவையெல்லாம் எப்படி சமதர்மமாகிவிடும்? என்று யோசித்துப் பாருங்கள். இதைச் சொல்லி மக்களை இன்னும் எத்தனை காலத்திற்கு உண்மையான சமதர்ம மில்லாமல் கொடுமைப்படுத்தி ஏழைகளின்-தொழில் செய்து, பாடுபடும் பாட்டாளிகளின் ரத்தத்தை சோம்பேரிகளும், சுயநலக் காரர்களும், வன்னெஞ்சக்காரர்களும் உரிஞ்சும்படி விட்டுக்கொண்டிருப்பது என்பதை யோசித்துப் பாருங்கள். மேல்கண்ட கொடுமைகளுக்கும், பித்தலாட். டங்களுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் என்ன சமாதானமிருக்கின்றது. ஆண்டவன் செயல், “கடவுள் சித்தம்” “அவனவன் முன் ஜென்மப்பலன்” என்று சொல்வதோடு “ஐந்து விரல்களும்” ஒன்று போல் இருக்கின்றனவா
என்று கேட்கும் கேள்வியுமல்லாமல் வேறு என்ன? ஆண்டவன் செயலை ஒப்புக்கொள்ளாதவனும் ஐந்துவிரலும் ஒன்று போலிருக்குமா என்கின்ற சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாதவனும் இந்த சமாதானத்தைப்பற்றி என்ன சொல்லக்கூடும்? இந்த சமாதானம் போக்கிறித்தனமானதும், முட்டாள் தனமானதும், பித்தலாட்டமானதும் என்று தானே சொல்லித்தீர வேண்டும். ஐந்து விரல்களும் ஒன்றுபோலிருக்கின்றனவா வென்று கேட்டவர்கள் அரசியலில் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் கேட்பதின் கருத்து என்ன? ஒன்றாய் சாப்பிடவும், ஒன்றாய் பிரார்த்தனை செய்யவும், ஒன்றாய் படிக்கவும், ஒன்றாய் உத்தியோகம் பார்க்கவும், ஒன்றாய் அதிகாரம் செலுத்தவும், உரிமைகள் கேழ்ப்பதின் அர்த்தம் என்னவென்று யோசித்துப்பாருங்கள்.
குடி அரசு - 1933 M) 206
வெள்ளைக்காரன் இந்த நாட்டுச் சொந்தக்காரன் அல்லாததால் இந்த நாட்டை விட்டுப்போய் விட வேண்டும் என்கின்றோம். அதே முறையில் பணக்காரனும், மிராசுதாரனும், ஐமீன்தாரனும் பாடு படாதவர்களானதினால் அவர்கள் மற்றவர்கள் பட்டபாட்டின் பலன்களை அனுபவிக்கத் தகுதியுடை யவர்கள் அல்லவாதலால் அவைகளை எல்லாம் பாடு படுவர்களுக்கு விட்டு விட்டு அவர்களும் மண்வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நாங்கள் சொன்னால் “ஐந்து விரல்களும் ஒன்று போலிருக்கிறதா? ஆண்ட வன் செயலுக்கு யார் என்ன செய்யக்கூடும்?” என்றால் இது போக்கிறித் தனமான சமாதானமா? இல்லையா வென்று யோசித்துப்பாருங்கள்..
சில சமயக்காரர்கள்-சீர்திருத்த வாதிகள் பிறவியில் ஜாதி உயர்வு தாழ்வு கூடாது என்கின்றார்கள். காரணம் என்னவென்றால் சமதர்மம் என்கின்றார்கள். இது சரிதான். ஆனால் பிறவியில் பணக்காரர்கள், ஜமீன் தாரர்கள் ராஜாக்கள், பிரபுக்கள், ஏழைகள், வெட்டியான்கள் என்னும் வகுப்பு
களும் பணவிஷயமான-தொழில் விஷயமான வித்தியாசங்களும் இருப்பது சமதர்மமா என்று கேட்டால் அதை “ஆண்டவன் - செயல்” என்கின்றார்கள். இது நியாயமா அல்லது அயோக்கியத்தனமா வென்று யோசித்துப்பாருங்கள். போலி சமதர்மத்தையும், ஆண்டவனையும், ஐந்துவிரல்களையும் போக்கிறி
கள் தங்கள் சுயநலத்துக்கு தகுந்தபடி உபயோகித்துக்கொண்டு மூடர்களை
நம்பச் செய்து, மோசம் செய்து வருகின்றார்கள். ஆதலால் சமதர்மத்தில் உண்மையான திருஷ்டியுள்ளவர்கள் இந்த ஆண்டவனை - சமதர்மத்துக்கு விறோதமான ஆண்டவனை போக்கிறிகளும், சோம்பேரிகளும் தங்கள். சுயநலத்துக்கு உபயோகித்துக்கொண்டு தொழில் செய்யும் பாட்டாளி களையும், ஏழைமக்களையும் ஏமாற்ற உபயோகிக்கும் ஆண்டவனை அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் சமதர்மத்துக்கு அஸ்திவாரக்கல்
நாட்டும் வேலையாகும்.
ஏனெனில் ஆண்டவன் என்கின்ற ஒரு சாக்கு சொல்ல இடமில்லை யானால் உலகிலுள்ள அயோக்கியத்தனங்களுக்கும், கொடுமைகளுக்கும், பித்தலாட்டங்களுக்கும், எந்த மனிதனாலும் எப்படிப்பட்ட சமாதானமும் சொல்ல முடியவே முடியாது.அப்படி வேறு எந்தசமாதானமும் சொல்லப்பட்ட போதிலும் அந்த சமாதானங்கள் அரை நிமிஷநேரம் கூட நிலைக்காது. ஆண்டவன், கடவுள், பகவான் என்கின்றதான வார்த்தைகள் அர்த்தமற்றதும் வெகுகாலமாகச் சொல்லிச்சொல்லி மக்களைப் பயப்படுத்தி அவர்களது ரத்தத்தில் ஊரச்செய்து விட்டதினாலும், அந்த ஒரு வார்த்தைக்குத் தான் உழைப்பாளிகளான மூட ஜனங்கள் பயப்படுகின்றார்கள்.
உண்மையான சமதர்மத்தைவிரும்புகின்ற மக்கள் எவ்வளவுதான் ஆஸ்திகர்களா யிருந்தாலும் கொஞ்ச காலத்திற்காவது அவர்களது கடவுளை பகிஷ்காரம் செய்து வைத்துத்தான் ஆக வேண்டும்.அல்லது ஐந்து நாள்பத்து
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
நாள் வாய்தாக் கண்டு கடவுளுக்கு ஒரு நோட்டீஸாவது கொடுத்தாக வேண்டும். அதாவது,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடுபடும் மக்களாகிய நாங்கள். அதுவும் ஜனங்களிடம் பக்தி கொண்டு, உனது படைப்பு களான உலக மக்களுக்கு விவசாயம் செய்து தானியங்களை உண்டாக்கியும் தொழில்கள் செய்து சாமான்களை உண்டாக்கியும், வேலைகள் செய்து அவை களை நாட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்தும் கொடுத்த மக்களாகிய நாங்கள் இன்று மாத்திரமல்லாமல், வெகு காலமாய் வீடு இல்லாமல், போதிய துணிக ளில்லாமல் ஆகாரமில்லாமல் அவஸ்தைப்பட்டு பட்டினி கிடக்கின்றோம். மேற்கண்ட பாடுகள் படாத சோம்பேறிகள் ராஜாவாகவும், ஜமீன்தாரனாகவும், முதலாளியாகவும், குருவாகவும், மதப்பிரசாரகனாகவும், பெரிய பெரிய அதிகாரியாகவும் இருந்து கொண்டு அளவுக்கு மேல் அனுபவித்துக்கொண்டு மனம் பதரும்படி செல்வங்களை வீணாக்கிக்கொண்டு வாழ்கின்றார்கள். இவைகளையெல்லாம் ஒரு வாரத்தில் சரிசெய்து எல்லோருக்கும் செல்வத்
தையும், வேலையையும் சரி சமமாக்கி சமதர்மத்தை ஏற்பாடு செய்கின்றாயா?' இல்லையா?”
என்று ஒரு நோட்டீஸ் கொடுத்து விட வேண்டும். ஒரு சமயம் ஆஸ்திகர்களான கடவுள் பிரசாரகர்கள் இதற்குஇவ்வளவு பெரிய காரியத்
திற்கு ஒரு வாரம் போறுமா வென்று கேழ்ப்பார்கள். கடவுள் சர்வசக்தியும் நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடிய வல்லமையும் உடையவர். என்று சொல்லப்படுவதால் ஒரு வார நோட்டீஸே அதிக காலம் என்று சொல்லலாம். ஆகையால் அந்த வாய்தாவில் சமதர்மம் ஏற்படாவிட்டால் அதை ஒழித்து அந்த உணர்ச்சியையே அப்படி ஒருவிஷயமோ, வஸ்துவோ, பொருளோ ஒன்று இருந்ததாகவே ஞாபகத்திற்கு வரமுடியாமல் செய்து சமதர்மத்தை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டும்.
அப்படிக்கில்லாமல் செக்கு மாடு சுற்றுவது போலும், அறைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைப்பது போலும், ஆண்டவன் செயல், ஆண்டவன் செயல் என்று சொல்லிக்கொண்டும் ஆண்டவனை தினம் 5- தடவை 10-தடவை பிரார்த்தித்துக்கொண்டும், பூஜை, உற்சவம், பிரார்த்தனை செய்யச்செய்து கொண்டுமிருப்பதில் பபனென்னவென்பதை யோசித்துப் பாருங்கள்.
சமதர்மம் என்று நாம் சொல்வது எல்லா மக்களுடைய, எல்லா மத மக்களுடைய, எல்லா உலக மக்களுடைய சமத்துவத்தைப் பொருத்ததே யொழிய யாரோ, ஒரு சில சமூகத்திற்கோ, வகுப்புக்கோ, மதத்திற்கோ, தேசத் திற்கோ என்பதாக அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மனிதனின் வாழ்க்கைக்கு சமதர்மம் என்பது ஒப்பற்ற சாந்தியையும், மனத்
திருப்தியையும், நிம்மதியையும் அளிப்பதாகும். இன்று மனித சமூகமென்
குடி அரசு - 1933 M) 208
பதில் எந்த ஒரு தனிமனிதனுக்கும் அவன் எந்த நிலையில் இருப்பவனா
னாலும், எந்தப் பதவியிலிருப்பவனானாலும் சாந்தியோ, மனதிருப்தியோ, நிம்மதியோ, உண்மையான சந்தோஷமோ, பரஸ்பர அன்போ, பொறாமை யற்ற தன்மையோ இருக்கின்றதா வென்பதை யோசித்துப் பாருங்கள்.
குறிப்பு: 20.03.1933 இல் சிவகங்கை அரண்மனை வாசல் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 02.04.1933
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சைனா - ஐய்யாண் யுத்தம்
சைனாவுக்கும், ஜப்பானுக்கும் சுமார் ஒன்றரை வருஷ காலமாக யுத்தம் நடைபெற்றுவருகின்றது. இதுவரை யுத்தத்தில் லட்சக்கணக்கான மக்கள் மடிந்து விட்டார்கள். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிந்தும் விட்டன.
இந்த யுத்தத்தின் தத்துவம் “வலுத்தவன் இளைத்தவனை உதைத்து அவனிடமிருப்பதை பிடுங்கிக்கொள்ளலாம்” என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
நம்மைப் பொருத்தவரையில் சீனாவை சீனாக்காரனாண்டாலும்சரி, ஜப்பான்காரனாண்டாலும் சரி இதில் ஒன்றும் நமக்கு பிரமாதமான கவலை யில்லை. ஆனால் இதில் நடைபெறும் சூழ்ச்சிகள் ஒழிக்கப்படவேண்டிய
தாகும்.
சர்வதேச சங்கம் என்று ஒன்றிருப்பது யாவருக்கும் தெரியும். அது “உலக சமாதானத்துக்காக இருந்து வருகிறது” என்று சொல்லப்படுவதாகும். எப்படியென்றால் 1914ல் ஏற்பட்ட பெரிய யுத்தத்தின் பயனாய் அநேக உயிர்ச் சேதங்கள் பொருள் சேதங்கள் ஏற்பட்டு உலக பொதுஜனங்களுக்கும் அதிக மான கஷ்டங்களைக் கொடுத்து விட்டதால் “இனி ஒருவருக்கொருவர். நாடு
பிடிக்கும் ஆசைகொண்டு யுத்தம் செய்து கொள்ளக் கூடாது” என்பதற் காகவே ஏற்பட்டதாகும்.
ஆனால் இதை நாம் ஒரு நாளும் சரி என்று ஒப்புக்கொள்வதில்லை. ஏனெனில் ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தானாளுவதும், ஒருவன் அதிக பூமி வைத்துக்கொண்டு மற்றொருவனுக்கு சிறிய பூமியை விட்டு அத்துட னேயேஅவனை இருக்கச் செய்வதும், ஒரு நாட்டிற்கு அதிக செளகரியமும் ஒரு நாட்டுக்குச் செளகரியக் குறைவும் இருப்பதும் ஆகியவையான இப்படிப்பட்ட நிலையில் " “இனி ஒருவரும் நாடு பிடிக்கும் ஆசையில் சண்டை பிடிக்கக்கூடாது” என்று தீர்மானம் செய்து கொண்டால் அது சிறிய
நாடுகளுக்கும், ஒருகாலத்தில் தோல்வியடைந்து தனது நாடுகளை அன்னிய னுக்கு விட்டு விட்ட நாடுகளுக்கும், அன்னியன் ஆதிக்கத்தில் சிக்குண்டு
குடி அரசு - 1933 M) 210
அடிமைப்பட்டுத் தவிக்கும் நாடுகளுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். பிற நாட்டானிடம் சென்று தங்கள் குறைகளை எடுத்துச்சொல்லி விடுதலை
பெறுவதற்கும் இடமில்லாமல் போய்விடும்.
ஆதலால் இது சூதாடிகள் தங்கள் சூதாட்ட முடிவில் ஜெயித்துக் கொண்டவர்களும் தோற்றுவிட்டவர்களும் சேர்ந்து “இனிமேல் நாம் யாவரும் சூதாடக்கூடாது” என்று ஒரு ஒப்பந்தம் பேசிக்கொண்டால் எப்படி அது ஜெயித்தவர்களுக்குத்தான் லாபமாகவும் தோற்றவர்களுக்கு நஷ்ட மாகவும் இருக்குமோ அதுபோன்ற ஒப்பந்தமேயாகும். அப்படியிருந்தும் அந்தப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகாவது அது கிரமமாய் நடைபெறுகின்றதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எப்படியெனில் இப்போது சைனா தேசத்தையும் ஜப்பான் தேசம் துன்புறுத்தி யுத்தத்தில் ஜெயிக்கப்பார்க்கிறது. இதற்கு ஐப்பான் சொல்லும் காரணம் “எனது ஜனத் தொகை அதிகமாய் விட்டது, தொழில் திறமையில் நான் மேன்பாடடைந்து விட்டேன். எனக்கு இன்னும் அதிகமான துறைமுகங்கள் வேண்டும். ஆதலால் சைனாவைக் கைப்பற்ற வேண்டியிருக்கிறது என்கின்ற காரணமே ஒழிய வேறில்லை” என்கின்றது.
இதை பிரிட்டிஷ் பத்திரிகைகளில் சிலது ஆதரித்தும் எழுதுகிறது. அதாவது “ஜப்பான் தேசம் தனது நெருக்கடியாலும் அடிக்கடி ஏற்பட்ட
பூகம்பத் தொல்லைகளாலும் மிகவும் கஷ்டப்படுகிறது. இதற்கு ஏதாவதொரு வழி ஏற்பட்டுத்தானாகவேண்டும்” என்று எழுதியிருக்கிறது.
இதுதான் ஜப்பானின் நிலைமை. ஆனால் சர்வதேச சங்கம் தங்களது ஒப்பந்தங்களை மீறி ஜப்பான் நடந்ததற்கு என்ன செய்தது என்று பார்ப் போமானால் எழுத்தில் ஜப்பானை ஊரார் மெப்புதலைக்கு பொய் மிரட்டு மிரட்டுவதும் காரியத்தில் ஜப்பானுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கடனாக என்று கொடுப்பதும், ராணுவ வீரர்களை ரகசியமாயனுப்புவதும் சண்டைக்கு வேண்டிய சண்டைக் கப்பல் சண்டை ஞானம் முதலியவைகளை ரகசியமாய் உதவுவதுமாயிருக்கின்றதாம்.
இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் “ சைனாவை ஜப்பான் கைப்பற்றா விட்டால் அது ரஷ்ய செல்வாக்காலும், ஆதிக்கத்தாலும் சைனா முழுவதும் பொதுவுடமை தேசமாகிவிடும்” என்றும், “சைனாவும், ரஷ்யாவும் பொதுவுடமை தேசமாகி விட்டால் இந்தியாவே பொதுவுடமை ஆட்சிக்கு தலைமை ஸ்தாபனமாகிவிடும்” என்றும் “அப்போது மற்ற தேசங்கள் எல்லாம் வலிய வந்து பொதுவுடமையை சரணமடைய வேண்டி ஏற்பட்டு விடும் என்றும் சர்வதேச சங்கமும் சிறப்பாக பிரிட்டனும் கருதுகின்ற காரண மேயாகும்.
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
ஆகவே சர்வதேச சங்கம் இப்பொழுது எதற்கு என்னமாயிருக் கின்றது என்று பார்த்தால் அது முதலாளிகளின் கூட்டுறவுச் சங்கமாகவும், ஏழைகளை வஞ்சித்து வதைக்கும் சதிகார சங்கமாகவும் தான் இருக்கின்றது.
இதில் தலை சிறந்து விளங்குவது பிரிட்டிஷ் சாம்ராஜ்ய மென்பதே பொதுவுடமைக்காரர்களின் முடிவு. அதுவே உண்மையுமாகும். மற்ற அரசு களும் பொதுவுடமையை எதிர்க்கவோ ஒழிக்கவோ பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தைத் தான் தூண் போல நம்பியிருக்கின்றது. இந்தியாவும் இந்திய முதலாளிகளும், இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசியல் கிளர்ச்சிகளும் பிரிட்டிஷுக்கு அடிமையாகவும் பிரிட்டிஷ் கொள்கைகளைப் பின்பற்றுவன வாகவும் பிரிட்டிஷைப் போலவே பொதுவுடமைக் கொள்கையை வெறுப் பாகவும் இருப்பதால் இந்தியாவுக்கு என்ன அதிகாரம் என்ன சுதந்தரம்
கொடுத்தாலும் தங்களுக்கு அழிவுவராதென்கின்ற தைரியம் பிரிட்டிஷுக்கு இருப்பதால்-இந்திய ஆதாரத்தால் பிரிட்டிஷும் உலகில் ஒரு பெரிய வல்லரசாக இருந்து சர்வதேச சங்கத்தை ஆட்டிவைக்கின்றது. பிரிட்டிஷ் பார்த்து உண்மையான முறையில் ஒரு மிரட்டு மிரட்டியிருக்குமானால் ஜப்பான் நடுநடுங்கி யுத்தத்தை விட்டு மன்னிப்புக்கூட கேட்டிருக்கும். ஆனால் பிரிட்டிஷானது அப்படிச் செய்வதற்கு பதிலாக ஜப்பானுக்கு யுத்தக்கப்பல்கள் தளவாடங்கள், தளகர்த்தர்கள், பணம் ஆகியவைகளை சப்ளை செய்கிறது என்றும், இன்று சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் சைனாவுடன் ஜப்பான் சண்டை செய்யவில்லை என்றும் பிரிட்டிஷ் தான் ஜப்பான் பேரால் சண்டை செய்கின்றது என்றும் சொல்லத்தக்க மாதிரியில் லண்டனிலேயே சேதிகள் வெளியாகின்றன. இதை நம்பாமல் இருக்க போதிய
காரணம் இல்லை.
இந்த சண்டைக்குப் பெயர் சீனா ஜப்பான் சண்டை என்றோ,
பிரிட்டிஷ் சைனா சண்டையென்றோ சொல்வதையெல்லாம்விட முதலாளி தொழிலாளி சண்டையென்று சொல்லுவதுதான் சரியான பெயர் என்பது நமது
கருத்து.
நிற்க, இந்திய தேசியமும் சீனா ஜப்பான் சண்டையை முதலாளி தொழிலாளிச் சண்டை என்று அறிந்து கொண்டதினாலேயே அதைப்பற்றி காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தனது முதலாளித் தனத்தைக் காப்பாற்ற யாருக்கோ வந்த விருந்து போல் நடித்துக்கொண்டிருக்கின்றது.
இது விஷயத்தைப்பற்றி தோழர் சக்லத்வாலா அவர்கள் பேசியி
ருக்கும் பேச்சை மற்றொரு பக்கத்தில் காணலாம். அதிலிருந்து சீனா ஜப்பான்
யுத்த ரசசியமும், பிரிட்டிஷ் நிலைமையும், இந்தியத் தேசியத் தலைவராகிய தோழர் காந்தியின் நிலைமையும் ஒருவாறு விளங்கும்.மற்ற விபரம் பின்னால் எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.04.1933
குடி அரசு - 1933 M) 212
மாரியம்மன்
ன ங்கின்ோம்
மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங் களைப் போட்டுக்கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக்கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக்கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை.
இதுநாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழயகால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்ற தென்று சொல்லு வதற்கே இல்லை.
முழுமுதற் கடவுளென்று சொல்லப்பட்ட விஷ்ணு, சிவன் என்கின்ற கடவுள்களின் “பாடல் பெற்ற ஸ்தல” உற்சவம் பூசை முதலியவைகள் எல்லாம் கூட இப்பொழுது பெரிதும் குறைந்து வருகின்றன. இந்த உற்சவ வரும்படிகளும் சரி பகுதிக்கு குறைந்தும் வருகின்றன.
ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்தமாரிகருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட “கீழ்த்தர பரிவார தேவதைகள், என்று
சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவுகிடையாது. இந்த “தேவதைகளை” வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும், இம்
மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்க
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
மில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏககாலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்,
மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு, எவ்வளவு கெடுதி என்றும் கட்சிப்பிரதி கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்டவேண்டியதில்லை.
உதாரணமாக ஈரோட்டில் 3 மாரியம்மன்கள் உண்டு. இவைகள் கட்சி யில்லாமல் நடந்த காலமே அருமை. தவிர ஒவ்வொரு கோவிலும் ஊருக்குள் வீடுகளுக்கு மத்தியில் இருக்கின்றது. உற்சவ காலத்தில் இரவு எல்லாம் தப்புக்கொட்டுவது அக்கம் பக்கத்திய ஜனங்களுக்கு தூக்கம் இல்லாமல்
செய்துவிடுகிறது. இவற்றுள் ஒன்று குழந்தைகள் பெண்கள் ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதற்குப் பெரிய மாரியம்மன் என்று பெயர். இந்த கோவிலில் தப்பட்டை அடிப்பதால் ஆஸ்பத்திரி வியாதியஸ்தர்களுக்கு அதிக தொல்லை உண்டு.ஆதலால் இந்த வருஷம் ஆஸ்பத்திரி நிர்வாகஸ்தர் சர்க்காருக்கு விண்ணப்பம் போட்டு இரவு பத்து மணிக்கு மேல் கோவிலில்
தப்புக் கொட்டக்கூடாது என்ற உத்திரவை கோவில் அதிகாரிகளுக்கு சார்வு செய்திருப்பதாய்த் தெரிகின்றது. இந்தப் பெரிய மாரி இந்த உத்திரவு போட்ட வர்களையும் கேட்டவர்களையும் என்ன செய்யுமென்பது இனிமேல் பார்க்கக்
கூடிய விஷயமானாலும் இந்த உத்திரவை நாம் இப்போது மனமார வரவேற் கின்றோம்.
போலீசுக்கு ஒரு வார்த்தை
கடைசியாக போலீசுக்கு ஒரு வார்த்தை. இந்த பண்டிகையை உத்தே
சித்து வாலிபர்களில் பலர் பலவித ஆபாசமான வேஷம் போட்டு பொது ஜனங்களை பணம் கொடுக்கும்படி தொந்திரவு செய்வதும் குடித்து விட்டு கண்டபடி தப்புக்கொட்டிக்கொண்டு ஆபாசமான வார்த்தைகளைப் பேசிக் கொண்டு திரிவதுமான காரியங்களை போலீசார் கவனித்து நியூ சென்சுக்கு
சார்ஜ் செய்வதன் மூலம் இக்காரியங்களைச் செய்தால் அதனாலும் வாலிபர்.
களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் இப்படிச் செய்வதையும் மனமார: வரவேற்போம் என்றும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.04.1933.
குடி அரசு - 1933 M) 214.
சர்வமத கண்டணம்
மதப்யிரசாரம்
மதப் பிரசாரகர்கள் என்பவர்கள் 100க்கு 99பேர்கள் மதத்தை பற்றி எங்கோ மூலை முடுக்குகளிலோ அல்லது வேதம் வேதாந்த சாஸ்திரம் என்பவைகளில் உள்ளவற்றை எடுத்து தங்கள் இஷ்டபடி வியாக்கியானம் செய்தோ பிரசாரம் பண்ணிக் காட்டி பாமர மக்களை ஏமாற்றி தங்கள் தங்கள். மதம் பெரிதென்று பேசி சண்டப் பிரசண்டர்களாகிறார்களே ஒழிய அந்த மதத்தை சேர்ந்த 100 க்கு 99 முக்கால் பாக மக்களிடத்தில் அந்த மதத்தின் பேரால் நடக்கின்ற காரியங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி தங்கள் மதத்தின் யோக்கியதையை நிர்ணயிக்கும் யோக்கியர்கள் இன்று மிக மிக அருமை யாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்துக்கும் வேதமிருக்கிறது புராண
மும் இருக்கின்றது. ஒவ்வொரு மதத்திலும் 100க்கு 99 முக்காலரைக்கால் மக்கள் புராணப்படி தான் புராணத்திலுள்ள வேஷக் குறிபடிதான் நடக்கின் றார்களே ஒழிய வேறில்லை. அதாவது ஒவ்வொரு மதத்ததுக்கும் தலை
மயிரில் மத தத்துவம் இருக்கிறது, உடையில் மத தத்துவமிருக்கிறது. ஆகாரத் தில் மத தத்துவமிருக்கிறது, மனிதவாழ்க்கை சம்பந்தம், புணர்ச்சி பந்துத் துவமுறை ஆண் பெண் தத்துவம், கல்யாணம், உற்சவம் சொத்துரிமை முதலாகியவைகளிலும் மத தத்துவம் இருக்கின்றது. இவை மாத்திரமல்லாமல் ஒவ்வொருவரும் தங்கள் கடவுளை ஆதாரம் வைத்து அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்துத் தான் இவற்றில் அனேகத்தை நிர்தாரணம் செய்கின்
றார்கள். ஒரு மதத்தை விட்டு மற்றொரு மதத்திற்கு ஜனங்கள் மாறிக் கொண்டு. தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்தக்காரர்கள் தினம் ஒரு சீர்திருத்த முறையை பிரசாரம் பண்ணிக் கொண்டு தான் இருக் கிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் சீர்திருத்த விரோதிகள் மத வெறியர்கள் பலாத்காரச் செய்கையை நம்பியோ சர்க்கார் தயவை எதிர்பார்த்தோ தங்கள் மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற வைதீகர்கள், சனாதன தர்மிகள், மகான்கள். இருந்து கொண்டிருக் கிறார்கள். இந்த நிலையில் எந்த மதத்தை மாத்திரம் தனியாக நாம் குற்றம் சொல்ல முடியும் என்பது யோசிக்கத் தக்கது.
குடி அரசு - கட்டுரை - 02.04.1933
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
கேசவ பின்னை
தோழர் கேசவ பிள்ளையை சென்னை மாகாணஅரசியல் உலகம்
நன்றாய் அறியும்.
அவர் பழயகாலத் தலைவர் கோஷ்டியில் சேர்ந்தவர். பழய சட்ட சபைகளில் அவர் அதிகம் காரியங்கள் செய்தவர். ஆனால் அவர் பார்ப்பன
ராய் இல்லாததால் அவரைப்போல வேலை செய்த பார்ப்பனர்களுக்கு கிடைத்த பெருமையும் பயனும் இவருக்கு கிடைக்காமல் போனதில் அதிசய மில்லை. பொதுவாழ்வில் சுமார் 40 வருஷகாலம் கலந்திருந்தும் அவரது வாழ்க்கை ஒரு சாதாரண நிலையிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற தலைவர்களைப் போல ஆடம்பரமும் பண வருவாயும் பிரதானமாக அவர் எதிர்பார்க்கவுமில்லை, அவர் எந்த விஷயத்தில் கவலை எடுத்து உழைத்
தாலும் அதை மனப்பூர்வமாக உணர்ந்து மனப்பூர்வமான அக்கரையுடனும், உண்மையான கவலையுடனுமே உழைத்து வந்திருக்கிறாரே ஒழிய பொய் யாகவோ, கூலிக்காகவோ அல்லது ஏதாவது ஒரு சுயநல பலனை உத்தே சித்தோ உழைத்தவர் என்று சொல்லுவதென்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும். விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்குப்பிரியம் கிடையாது.
அவருக்கு “சர்” பட்டம் கிடைத்திருக்கலாம். ஆனால் அதை பார்ப்பனப் பத்திரிக்கைகள் கெடுத்துவிட்டன. ஆனாலும் அவரைப்பற்றிய அபிப்பிராயம் பொதுமக்களுக்கு ஒரே விதத்தில்தான் உண்டு. அதாவது நன்மையான விஷயங்கள் தவிர இன்ன தீமை செய்தவரென்றோ தீமையில் கலந்திருந்தாரென்றோ யாவரும் சொல்லுவதற்கில்லை. இப்படியே இவர். 70வருஷகாலம் ஜீவித்து காலமாயிருக்கிறாரென்றால் இந்தியாவின் நிலைக்கு இதை அர்ப்ப ஆயுள் அல்லது போறாத ஆயுள் என்று சொல்லிவிடமுடியாது. அவருடைய குடும்பத்தாரும் போதிய அளவுக்கு திருப்திகரமாகவே இருக்கிறதாக அறிகிறதுடன் விவேகிகளானதால், பிரரது அனுதாபம் கூட தேவை இருக்காதென்றே கருதுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 02.04.1933
குடி அரசு - 1933 M) 216
“ஓவதொழிலானர் நிலைமை”
இவைகளை ஒழிப்பதற்கு இம்மாதிரி கண்டிப்பாக பேசுவதன் மூலம் நாம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டியது தான். தோழர் பொன்னம். பலனார் கூறுவது நடு நிலைமையிலிருந்து யோசிக்கும் எவருக்கும் அக்கிரமம் என்றோ பொய் என்றோ ஏற்படாது.
சாமியைப் பற்றிக் குறை கூறுவதும் அக்கிரமமல்ல. கடவுள்களின் பேரால் இந்நாட்டில் சகிக்க முடியாத கொடுமைகள் நடப்பது எவ்வளவோ சொல்லிப் பார்த்தாகி விட்டது. எத்தனையோ கோடி ரூபாய்கள் வீணாக்கப் படுவதை தடுக்க எங்கள் இயக்கம் எவ்வளவோ சொல்லியும் வந்தது. இனி என்ன செய்வது இனியும் பச்சை பச்சையாகவே பேசினாலும் மக்கள் மனதில் பட்டு அவர்கள் திருந்த வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு
யாரிடத்திலும் துவேஷமோ சண்டையோ எங்களுக்கு கிடையாது. அவ்வித நோக்கத்துடனும் இது பேசப்படவே இல்லை.
கடவுளின் பேரால் மதத்தின் பேரால் மத ஆச்சாரிகள் புரோகிதர்கள். குருக்கள் பாதிரிகள் சங்கராச்சாரிகள் செய்யும் அநீதியும் அக்ரமமும் எவ்வளவு? சுயமரியாதைக்காரன் அவர்களின் குறைகளை கூறுவதிலுள்ள அக்கிரமம் எவ்வளவு என்பதை விசாரிக்க ஒருகமிஷன் ஏற்படுத்தி தீர்ப்புக் கூறச்செய்தால் சுயமரியாதைக்காரன் அயோக்கியத்தனமாகப் பேசுகிறானா அல்லது சங்கராச்சாரியும் அவரது கூட்டமும் பேசுவதும் எழுதுவதும் எழுதி வைத்திருப்பவைகளும் அயோக்கியத்தனமானதா என்பது வெளியாகும்.
௯.ம. காரர்கள் வாயில் பேசுகிறார்கள், இது நாளை காற்றோடு காற்றாப் பறந்து போகும். ஆனால் சங்கராச்சாரி கூட்டம் எழுத்தில் நம்மை நாய் பன்றி
யிலும் கடையாய் எழுதி வைத்திருக்கிறார்கள். இதில் யார் அயோக்கியர்கள்.
மேலெழுந்த வாரியாக கவனிப்பதில் பிரயோசனமில்லை சுய மரியாதைக்காரன் சொல்வது என்ன என்பதை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எந்த அறிவுள்ள மனிதனும் ௬. ம. காரன் மேல் குற்றம் சொல்ல முன்வர மாட்டான்.
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இன்று நடக்கும் அக்கிரமங்களை யெல்லாம் மக்களுக்கு விளக்கி காட்டி அதனால் வரும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் அனுபவிக்கவே சுயமரியாதைக்காரன் தயாராயிருந்து வந்திருக்கிறான். இதுவே காரணமல் லாது சங்கராச்சாரியையோ அரசியல் சங்கராச்சாரி காந்தியையோ அனாவசி யமாக குற்றம் சொல்லிக் கொண்டு திரியும் வேலை சு. ம. காரனுக்கு இல்லை.
தொழிலாளியின் நிலைமை...
தோழர்களே!
இந்நாட்டில் அல்லது உலகத்தில் தொழிலாளர்கள் என்னும் கூட்டம் எப்படி ஏற்பட்டது. அது ஏன் ஏற்பட்டிருக்கவேண்டும், தொழிலாளர் கடமை என்ன அவர்கள் நலனுறும் வழி எப்படி, அவர்களது தொழில் உழைப்பு சரியாக இருந்தும் அவர்களது வீழ்ச்சி வறுமைக்குக் காரணம் என்ன, இன்றும் இவர்கள் யாரால் எதனால் இந்த நிலைமையிலிருக்கிறார்கள் என்ற விஷயங் களை முதலில் கவனிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் என்பவர்கள் யார் என்றால் சரீர உழைப்பாளிகளே
தான். பலர் பலவிதமான தொழில்களைச் செய்யலாம், ஒருவர் வெட்டலாம்
ஒருவர் சுமை சுமக்கலாம், மற்றவர் முடையலாம், இன்னொருவர் சிறைக்க
லாம் வெளுக்கலாம், மற்றொரு கூட்டம் புது புது விதமாக மக்களுக்கு வேண்டிய சாமான்களையும் செய்யலாம் - இவர்கள் முதலியவர்கள் எல்லாம் தொழிலாளிகளே ஆவார்கள். இவர்கள் ஏன் பிரிக்கப்பட்டு ஒருவருக்கொரு
வர் சம்பந்தமில்லாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால் உண்மையும் அதிலுள்ள பலத்த சூழ்ச்சியும் விளங்காமல் போகாது.
மனிதன் ஆதியில் நாகரீகமில்லாமல் காட்டுமிராண்டித்தனமாகவும்,
கூட்டுறவு முறை என்பது சிறிதும் இல்லாது தனித்தனியே வாழ்ந்து வந்த காலம் நாகரீகம் என்பது தெரியாமலும் ஏதோ கிடைக்கும் வஸ்துவைத்தின்று தண்ணீர் குடித்து விட்டு வெட்டவெளிகளிலோ கல்பாறைகளிலோ படுத்து உறங்கிய காலம் நீங்கி மனிதன் மனிதனுடன் கூடி சமூகமாய் வாழ ஆரம்பித்த காலத்திலேதான் தொழிலாளி ஏற்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் மனிதன் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபட்டவுடன் பெண்டுபிள்ளை என்ற பாசம் ஏற்பட்டு கூடிவாழ நினைத்ததால் தனக்கென ஒரு குடிசை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாயிற்று. குடிசை கட்டவேண்டுமானால் அதற்குறிய சாமான்கள் கம்பு கழிகள் முதலியன திருத்தி அமைக்க தொழில்கள் செய்துதான் தீரவேண்டும். அதில் ஒருவருக்கொருவர் கூடி உதவி செய்துதான் ஆகவேண்டும். குடிசை வாழ்க்கையிலிருந்து இன்னும் கொஞ்சம் வாழ்வு உயர உயர அறிவுசிந்தனா சக்தியும் வளர வளர வாழ்க்கை
யில் சுகமாக இருக்க வேண்டி பல செளகரியங்களை செய்து கொண்டான். அச்செளகரியங்களை யடைவதற்கு தன்னாலும், பிறராலும் தேவையான
குடி அரசு - 1933 M) 218
வேலைகள் அவசியமாக இருந்தது. எனவே அவ்வப்போது தோன்றிய
யுக்திக்குத் தகுந்த பிரகாரம் மனிதனுக்கு தேவைக்கு தகுந்த உபகரணங் களிலிருந்து இன்று நிலைமை வரையிலும் தொழில்கள் ஏற்பட்டன. முன் சொன்னபடி குகையிலிருந்து வந்ததற்கு பதிலாக குடிசைவேண்டும்போது அடுத்தவனும் சேர்ந்து கட்டிக்கொண்டான் என்ற முறையிலேயேதான் வர:
வர அறிவுக்குத் தகுந்தபடி தொழில் விருத்தியும் கூட்டுறவும் பெருகிவந்தது. அந்த நிலையில்தான் தனி மனிதன் குடும்ப மானான். இதனால் நாளாவட்டத்தில் அறிவு விருத்தியால் சிலருக்கு சோம் பேறித்தனம் ஏற்பட்டு அடுத்தவன் உழைப்பில் 3-வது மனிதன் உழைப்பில் சுகம் அனுபவிக்க எண்ணம் தோன்றிற்று. சோம்பேறித்தனமாக உண்டு உறங்குவதற்கே யோசனை கண்டுபிடிக்கவே இப்போதுள்ள துன்பங்கள் ஆதிகாலத்தில் ஏற்பட்டன. அதை எப்படி வைத்துக் கொண்டாலும் சரி, ஒருவன் உழைக்க அதில் மற்றவன் வாழ விரும்பும் காலம் ஏற்பட்ட அன்றே இத்தனை
சூழ்ச்சிகளும், தீங்கும் ஏற்பட்டன. நிற்க,
இப்போது தொழிலுக்கு என்றே அவனுக்கு கூலியும் வரையறுக் கப்பட்டிருக்கிறது. நிலம் ஒருமனிதன் தனக்குச் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு ஒய்யாரமாக நாமம், விபூதியையணிந்துகொண்டு காலையிலும், மாலையிலும், வந்து ஏண்டா அதைச் செய்யவில்லை, இதைச்செய்யவில்லை என்று அதிகாரம் செய்து விட்டுப்போவான். ஆனால் நிலத்தில் வேலை
செய்யும் தொழிலாளியோ, நிலம் கல்லும் முள்ளுமிருந்தாலும் அதை வெட்டி உழுது நீர் இறைத்து விதைத்து அறுத்துவிளையும் தான்யத்தை மலை போலக்
குவித்து வைத்து ஓடோடியும் முதலாளி என்பவனை அழைத்துக் கொண்டு வந்து அளந்து கொட்டிவிட்டுதான் இரத்த வேர்வை சொட்ட சொட்ட பாடுபட்டதற்கெல்லாம் 1, 2 கலம் மட்டும் பெற்றுக் கொண்டு திருப்தியடைய
வேண்டும். இது கிருஷித்தொழில் செய்யும் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல. மற்ற ஒவ்வொரு தொழிலும் இதுபோலவே சோம்பேறியே ஊதியமடை
கிறான். இம்முறை மாற்றப்படாமலிருப்பதற்கு தொழிலாளிகள் பணம் காசு மீத்து மிச்சப்படுத்தி முன்னேறிவிடாமலிருப்பதற்கும் ஜாக்கிரதை யான பாதுகாப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. ரூபாய்க்கு பத்துபடி சோளம் விற் றால் தொழிலாளிக்கு சம்பளம் மாச 1க்கு 28படி சோளமிருக்கும் 5படி சோளமாக விற்றால் மாதச்சம்பளம் 2 அல்லது 3ரூபாயாகத்தான் இருக்கும். எனவே இம்மாதிரி தொழிலாளிகள் முன்னேறாமலும் முதலாளிகள் அல்லது சோம்பேறி கூட்டத்தினர்கள் ஆதிக்கம் எப்போதும் வலுவடையவே அதற்கு
சாமி மதம் சாத்திரம் புராணம் ராணுவம் அரசு முதலியவைகள் முதலாளி களால் ஏற்படுத்தியிருக்கிறது. இக்கொடுமைகள் நீங்கி இனி உலகமே சாந் தியை யடைந்து உலக ஒற்றுமை சகோதரத்துவம் எல்லாம் உண்டாகவே முத லாளி தொழிலாளி சமத்துவம் என்னும் கிளர்ச்சி ஏற்பட்டது. உலகப் போராட்டத்திற்கும் அதிருப்திக்கும் கஷ்டத்திற்கும் காரணம் பாடுபடுகிறவன்
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
சோம்பேறி அல்லது தொழிலாளி அவன் உழைப்பைத் தின்கிறவன் என்றும் இரண்டுவித தத்துவம் இருப்பதுதான்.
இது மாற்றப்பட்டு உலகில் தொழிலாளியன்றி சோம்பேறிக்கு இட மில்லை என்று சொல்லக்கூடிய நாளில்தான் “மனித சமூகம் தனது நிலையை அடைந்தது” என்று சொல்லமுடியும். அல்லது மிருகத்திலும் கேவலம் என்றுதான் சொல்லவேண்டும். மனிதனைத்தவிர உலகில் வேறு எந்த
ஜந்துவேனும் அடுத்ததை ஏமாற்றி அடுத்த ஜந்துவின் உழைப்பில்தான் வாழவேண்டும் என்று இவ்வளவு சூழ்ச்சி செய்வதில்லை. ஆனால் மனித
சமூகத்தில் மாத்திரம்தான் இந்த எண்ணம் இருந்துவருகிறது. இது மாறுவது தான் உண்மையான மனிதசமூகத்தின் முன்னேற்றமாகும். எந்த மனிதனாவது சோம்பேறிகளுக்கு பாடுபடவென்று பிறப்பதற்கு முடியவே முடியாது. வழக்க. மில்லாத இயற்கைக்கு மாறான முறை இன்று மக்களிடமிருந்து வருகிறது.
அதுவும் உயர்ந்த லட்சியத்தின் பேரால் மதம், கடவுள், அவதார புருடர்கள் என்பவர்களின் வாக்கு சட்டம் ஆகியவைகளினால் அரசாட்சி முறையினால் பெரும்பான்மையான மக்கள் ஒரு சிறுகும்பலுக்கு உழைத்துப் போடவேண்டியதிருக்கிறது. இதைமாற்றி விடாமல் ஜாக்கிரதையாக பலவித பந்தோபஸ்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த பந்தோபஸ்து தான் தொழிலாளர். களிடையில் கடவுள் உணர்ச்சியைப் புகுத்தியதாகும். கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கைகளால் தான் கஷ்டப்படும் எந்த மனிதனும் நாம் பாடுபடவே பிறந்தோம் என்று கருதுகிறான். அது தலைவிதி ஜன்மப் பலன் என்று எண்ணுகிற இழிதகமைக்கு ஆதாரமாகிறது.
சாதாரணமாக நீங்கள் ஒரு கஷ்டப்பட்டு நிலத்தை வெட்டி உழுது
பண்படுத்தி, விதைத்து அறுத்து முதலாளிக்குக் கொடுக்கும் ஒரு தொழி லாளியை ஏன் நீ இத்தனைபாடுபட்டுத் தேடிய தானியத்தைக் குவித்து கொடுத்து விட்டு நீ மட்டும் ஏன் சரியாக உணவுக்கும் இல்லாமல் பட்டினியாக ஓட்டைக் குடிசையில் முடக்கிக்கிடக்கிறாயா என்றும் ஏன் உனது உழைப்பின் பலனை நீ அனுபவிக்க முடியவில்லை என்றும் நீதானே எல்லாம் பாடுபட்டவன் என்றும் கேட்டீர்களானால் அவன் “நான் என்னசெய்வேன். நான் தான் பாடு பட்டேன், உழைத்தேன், அறுத்தேன், குவித்தேன். ஆனாலும்
நமக்கு அநுபவிக்க கொடுத்துவைக்க வேண்டாமா? நமது தலைவிதிப்படி தானே எதுவும் நடக்கும்” என்று சற்றும் தயங்காமல் கூறுவான். அதுமட்டுமா. நமது கிரகம் என்றும் கிடைத்ததை உண்டு இருக்கவே கடவுள் கட்டளை என்றும் சொல்லுவான். ஆனால் முதலாளி என்பவனைப்பற்றி அவன் ஏன் பாடுபடாமல் அனுபவிக்கிறான் என்றால் போன ஜன்மத்தில் புண்ணியம் செய்தவன், லட்சுமி புத்திரன், கொடுத்துவைத்தவன் என்பது போன்ற வார்த்தைகளைச் சொல்வானே யன்றி மனம் நோகமாட்டான் எந்த தொழி லாளியாயும் நாம் தான் உழைத்தோம், நாம் தான் உழைத்தோம், நாம்
குடி அரசு - 1933 M) 220
அனுபவிப்பது தான் ஒழுங்கு, முதலாளி என்பது வெறும் சூழ்ச்சி தன்மை, அவனது செயல்கள் அக்கிரமமானது என்று எவனும் சொல்லவுமாட்டான்.
ஒரு கொத்தன் நாலு அடுக்கு ஐந்து அடுக்கு மாடி கட்டிக் கொடுத்து விட்டு அவன் மட்டும் மேல் கூறையும், சுவருமில்லாத ஈரமுள்ள “குடிசை”
யில் பாயும், தலையணையுமின்றி படுத்து தூங்குவான். அவனையும் அந்தப்படி கேளுங்கள் அவனும் அவ்விதமே தலைவிதி என்று தான் பதில் சொல்வான். காசு மாலைகளையும், வைர நகைகளையும், சங்கிலியும் செய்து
கொடுக்கும் தொழிலாளியின் மனைவி மக்களுக்கு கழுத்திலோ நூல் சறடு தான் இருக்கும். பட்டாடைகள் உயர்ந்த கம்பளங்கள் நெய்து கொடுக்கும் நெசவுத் தொழிலாளியும் தனது இடுப்பில் உடம்பை மறைக்கப் போதிய துணி இருக்காது. அவனது குழந்தைகளோ 10, 12 வயது வரையில் கோவணம் கட்டியே தான் அலையும் அவனும் நான் என்ன செய்வேன் எனது தலைவிதி முன்ஜென்மபலன் என்றுதான் சொல்லுவான். பாத்திரத் தொழிலாளர்களாகிய
நீங்களும் அனலிலிருந்து காய்ந்து கொட்டியிடித்து அழகாக பாத்திரங்களைச் செய்து கொடுத்து விட்டு கூலிக்கு மண்டை யுடைத்துக் கொண்டு சோம்பேரிக் கூட்டத்தினர் மட்டும் தான் உல்லாசமாக வாழவும், நீங்கள் நாளுக்கு நாள்: தரித்திரப்படவும் ஏன் என்று கேட்டால் நாம் என்ன செய்வோம். எல்லாம். கடவுள் பகவான் ஆண்டவன் என்று தான் சொல்வீர்கள். எந்த காரியத்திலும் பகவான் தலைவிதி சாமி மதம் என்பதை நம் மூளை புகுத்தியதால்தான் தொழிலாளிக்கு முதலாளி உயர்ந்தவன் உழைப்பாளி ஒடுங்கியே இருந்து தீரவேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது.
ஆதியில் தொழிலாளி என்பதாகவே ஒரு (ஜாதி) திட்டம் ஏற்பாடு செய்து அடக்கியாள நினைத்த அன்றே தொழிளாளிக்கு அறிவிருந்து ஏன் நான் அடங்கி வாழவேண்டும் என்று கேட்டிருந்தால் இன்று முதலாளி தொழிலாளி என்னும் கூட்டமோ வித்தியாசமோ இருக்காது. ஆனால் கடவுள் உணர்ச்சியானது உங்களை அடங்கச்செய்து விட்டது. என்றைக்கும் வித்தியாசமிருக்கவே கடவுள் என்னும் ஒன்றைப் புகுத்தி அதுவும் புறண்டு விட்டால் என்ன செய்வது என்று மதத்தையும் ஜாதியையும் ஏற்படுத்தி தொழிலை பெயர்கொடுத்து அதை ஜாதியாக்கி ஜாதியில் உயர்வுதாழ்வு கற்பித்து அதைக் காப்பாற்றவே அரசாங்கம் போலீஸ் என்பதும் வைத்து முதலாளி தொழிலாளி முறை நிரந்தரமாகவே இருக்கச்செய்கிறது..
இந்த தொழிலாளி ஜாதி என்பதே மறைந்துவிட வேண்டுமானால் முதலாளித்தன்மை என்பது உலகில் எங்கும் இருக்கவேகூடாது என்று கூறவும் அதற்காக வேலை செய்யவும் தைரியமாக நீங்கள் முன்வரவேண்டும். முதலில் அரசாங்க சட்டங்கள் மாற்றப்பட வேலை செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு இன்னும் கடவுள்கடவுளென்று கத்திக்கொண்டிருந்தால் ஒருநாளும் அடிமை புத்தி விலகப் போவதில்லை...
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
திடீரென உங்கள் வருமையை நினைத்து இயற்கையாக உங்கள் இரத்தத்திலிருக்கும் உணர்ச்சியால் இரண்டொரு தடவை நீங்கள் முயற்சிக் கலாமே தவிர அதனால் நீங்கள் வெற்றியடைய முடியாது. நிச்சயமாக வெற்றிபெற வேண்டுமானால் கடவுள் தன்மை மதத்தின் பேராலுள்ள குருட்டு நம்பிக்கை, குறுகிய நோக்கம் ஒழித்து முன்வரவேண்டும். கடவுளும் மதமும் ஒழிந்த அந்நாளே தொழிலாளியின் விடுதலை நாளாகும்.
கடவுள் உணர்ச்சியை நீங்கள் எவ்வளவு விடாப்பிடியாகக் கொண்டா
லும் காலமாறுபாட்டால் உங்கள் சந்ததிகள் அதை பின்பற்றுவது குறைந்து போகும். தொழிலாளிகளின் இத்தினை துன்பத்தைக்கண்டும், பார்த்தும், அனுபவித்தும் வந்த ஒரு தொழிலாளி இத்தனை ஆபத்துக்கும் தப்பி
திருட்டுத்தனம் உண்மை மறுப்பு முதலிய பித்தலாட்டங்கள் எல்லாம் செய்து ஒருசமயம் நாளை அவனும் ஒரு முதலாளியாக ஆகிவிட்டால் தான் தொழி லாளியாக இருந்த காலத்திலுள்ள சம்பவங்களை மறந்துவிட்டு முதலாளி வர்க்கத்தில் ஐக்கியமாகி தொழிலாளிகளை கசக்குவான் என்பதில் சந்தேக மில்லை. அவனும் முதலாளியிடம் அடிமையாகவே இருந்து தந்திரமாக பிழைத்து முதலாளியை ஏமாற்றித்தான் வந்தவனாதலால் தன்கீழுள்ள. தொழிலாளியையும், சந்தேகித்து கவனிப்பான். ஆனால் இன்று உலகமெங்
கும் கிளர்ச்சி செய்யப்படும் நமது முயற்சியானது முதலாளி தொழிலாளி யாகவோ, தொழிலாளி முதலாளியாகவோ மாறிவிட முடியாது.
நமது முயற்சி உலகத்திலேயே முதலாளி தொழிலாளி வேற்றுமை
ஒழிந்து முதலாளியென்றோ, தொழிலாளியென்றோ ஒரு தனி வகுப்பு இல்லாமல் யாவரும் சமமாக வாழ வேண்டும் என்பதேயாகும்.இன்னும் நமது பிரயத்தனம் எது என்றால் இனி எக்காலத்திலும் அவ்வேற்றுமைகள் உண்டாகிவிடாமலும் மனித சமூகத்தில் உயர்வு தாழ்வு என்ற எவ்வித
பிரிவுகளும் இல்லாமலும் இருக்க வேண்டும் என்பதாகும்.
ஒரு ஊரில் அல்லது ஒரு மாகாணத்தில் மட்டும் தொழிலாளி இல்லை, முதலாளி இல்லை என்றாய்விட்டால் மாத்திரம் போதாது. உலகிலேயே மக்களுள் முதலாளி தொழிலாளி ஏழை பணக்காரன் என்பதுள்பட எப்படிப் பட்ட முதலாளி ஆதிக்கம் என்பதும் இருக்கவேகூடாது.
இம்முறைகள் இலேசான மாறுதலின்மூலமாகி விடாது. சுலபத்தில்
நிலைபெற்றும் விடாது.ஆதலால் கடுமையான சட்டங்கள் மூலமும், பிரசாரங்
கள் மூலமும் மக்களின் மனமாற்றமடைந்த பிறகுதான் இன்பமாக
வாழமுடியும்.
தொழிலாளி அடிமையாக நிரந்தரமாக வாழவேண்டுவதற்கு கிரம மாகவே இப்போதுள்ள ஜாதி சமூக முறை சட்டம் ஒழுக்கம் மத தர்மம் அரசாங்கம் என்பவை எல்லாம் இருக்கிறது. உலகில் இம்மாதிரியான வேற்றுமை தனிப்பட்ட கூட்டத்தின் ஆதிக்கம் என்பவை இல்லை என்றால்
குடி அரசு - 1933 M) 222
அரசாங்கம் ஜெயில் போலீஸ் இராணுவம் வேண்டியதில்லை. இன்று ஒரு நாடு தவிர உலகிலுள்ள அரசாங்கம் ராணுவமெல்லாம் பணக்காரனுடைய பாதுகாப்புக்கும் தொழிலாளிகளை அடக்கவுமே ஏற்பட்டது.
இராஜா என்றால் இக்கூட்டத்தில் பொறுக்கி எடுக்கப்பட்ட சோம்பேரி களின் பிரதிநிதி என்றுதான் அர்த்தம்.
இவைகள் எல்லாம் ஒழிவது என்று வந்துவிட்டால் உலகில் துவேஷம் ஆச்சரியம் அதிருப்தியே இருக்காது. இதற்கு வெறும் சங்கமும் பிள்ளையார். வணக்கமும் செய்து கூட்டம் போடுவதால் எதையும் அசைத்து விட முடியாது.
நமது முயற்சிகளை முதலாளிகள் கெட்டியான அஸ்திபாரத்துடன் எதிர்ப்பார்கள். இவைகளை தாங்கவும் தயாராக இருக்க வேண்டும். தொழி லாளர் நன்மைக்கு என்று வாயளவில் பேசுவதினால் எதுவும் வந்து விடாது.
சாதாரண கிளர்ச்சி கூட்டத்தின் மூலம் கொஞ்சம் கூலி அதிகமாக வேண்டுமானால் கிடைக்கலாம்-இவைகளால் முன்னேற்றம் எதுவும் இல்லை. முதலாளிகளுடன் வாதாடி 2 அணா அதிகமாக சம்பாதித்தால் மாத்திரம் போதாது. நீங்களும் தகுந்தபடி சுகப்படாமல் தற்கால வாழ்க்கை முறையில் முதலாளியைக் காப்பியடித்து அவனைப் போலவே நீங்களும் செலவு செய்து விடுவதும் 4 அணா மீதமிருப்பதை ஆடம்பரமாக செலவுச்செய்துவிட்டு
மறுபடியும் முதலாளியிடமே போய் கெஞ்சுவதும், வாய்கட்டி, வயிற்றைக் கட்டி 10-ரூ. சம்பாதித்தால் உங்கள் மனைவி மக்கள் தேருக்கும், திருவிழா
விற்கும், பண்டிகைக்கும் செலவு செய்வதும் தொழிலாள முன்னேற்றமாகாது. ஏனெனில் கடவுளும் சாமியும், பூதமும், தொழிலாளர்களுக்கென்றே
ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எவ்விதத்திலாவது 10, 5 மீதப்படுத்தி வைத்து தொழிலாளி முன்னேறினால் முதலாளி தத்துவத்தை எதிர்க்க நேரிடும் அல்லவா? ஆதலால் வருடம் 4 உற்சவம்,12 பண்டிகை எடுத்ததெற்கெல்லாம் சடங்கு சாத்திரம் என்று ஏற்படுத்தி வைத்து சாம்பிலுக்காக முதலாளிகளையும் கொஞ்சம் செலவு செய்யச்செய்து தொழிலாளியை முழுப் பாப்பாராக்க ஓர். நல்ல வழி-இன்று மாரியம்மனுக்காக முதலாளி 5-ரூ. ஆடு வெட்டினால் தொழிலாளி என்பவன் 10-ரூ. ஆடுவெட்டினால்தான் பெருமையுண்டெனக் கருதி அதன் படியும் செய்கிறான். இவைகளை யெல்லாம் சமூகக் கட்டுப் பாடுகள் வழக்கங்கள் என்பதின் மூலம் மக்கள் பணம் கொட்டப்படுவதை கவனிக்க முடியாமல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தொழிலாளிகள் அதிகமாக இருந்தால் அவர்களுக்குச் சமீபமாகவே
4 கள்ளுக்கடை, 2சாராயக்கடைகளும் வைத்துவிடுவார்கள். எல்லா விஷயத்
திலும் முதலாளியுடன் போட்டி போட்டு சிலவு செய்தால் பழய கருப்பன் கருப்பன் தான் என்பதைத் தொழிலாளர்கள் சமூகம் கண்டிப்பாக உணர வேண்டும்.
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இம்முறையில் தொழிலாளித்துவம் இருப்பது சமூக மூலம் ஸ்திரப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்துப்பார்த்தால் விளங்கும். இவை ஒழிய வேண்டுமானால் அஸ்திவாரம் அதாவது சமூகம், ஜாதி, மதம், கடவுள் என்பவைகள் தான் முதலில் வெட்டி எறியப்படவேண்டும். நமது முதல் வேலை இவ்வேற்றுமைகளுக்கு அஸ்திவாரம் எங்கே என்று கண்டு பிடிப்பதுதான். கடவுள், சாமி, மதம் என்பவைகளை குறைபேசுகிறான் என்றே முதலாளிகளை குறை கூறுவதாகவோ நீங்கள் வருத்தப்படக்கூடாது. கடவுள் என்னும் உணர்ச்சி தொழிலாளர்களிடமிருந்து நீங்காதவரை ஒருக்காலும் முன்னேற்றமில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலி உருத்தவே இப்படிச் சொல்லுகிறேன்.
சாமியைத்தான் இழிவாகப் பேசுகிறேன் என்று கருதுவீர்கள். சாமி
எங்கிருந்து வந்தது என்பது முன்னமேயே கூறினேன். முதலாளிகள் சூழ்ச்சியே சாமி ஏற்படுத்தியது. அச்சாமிகளினால் திருப்தியடைந்து வயிறு
வளர்க்கும் ஒரு சோம்பேறிகள் தவிர வேறு எவனும் கடவுள்களின் யோக்கிய தைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. யோசித்துப் பார்த்தால் அதன் புரட்டுவெட்ட வெளிச்சமாகும். இத்தனை ஆண்டுகளாக இருந்த கடவுள்களால் உங்களிடமுள்ள எந்தக் குறையைக்கடவுள்கள் நிவர்த்தித்து விட்டது என்று பார்க்க வேண்டும். இன்றைக்குத் தொழிலாளியை இந் நிலைமையில் வைத்திருக்க அவன் உழைப்பைக் கொள்ளைக் கொண்டு வாழும் முதலாளி சுகப்பட அக்கடவுள் ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதை யோசித்துப்பாருங்கள். வேண்டுமானால் தினசரி வாழ்க்கை யிலும்கூட அக்கடவுள் உணர்ச்சி தொழிலாளியைக் கெடுத்து வருவதைத் தவிர வேறு வழி காணோம். முதலாளியும் சாமிக்கு பூஜை தடபுடல் செய்தால் தொழிலாளியும் அவ்விதமே. தொழிலாளியும் பண்டிகை கொண்டாடுகிறான். ஏழை என்பவன் தனது சக்திக்குத் தகுந்தார்ப் போல் செலவு செய்யாமல் தனது சக்திக்கு மீறிப் பணக்காரனைப்பார்த்து செலவு செய்து கஷ்டப்படுகிறான்.
பணக்காரன் செலவு செய்வதில் பரவாயில்லை. 1000 பேர் தலையில் கையை வைத்து எந்த ஏழை வயிற்றிலாவது மண்ணடித்து அவன் ஆட்டம் போடுவான். நீயும் கையில் காசு இல்லாமல் கடன் வாங்கி அதைப்போலவே செலவு செய்தால் நஷ்டப்படுவதுமல்லாமல் பின்னும் அவனுக்கே அடிமை யாக வாய் பொத்தி நின்று முதலாளி ஆதிக்கத்தையும் எதேச்சாதிகாரத்தையும் உண்டாக்க உதவி செய்தவனாகிறாய். ஒரேவிதமாகவே நீங்கள் இருக்க வேண்டும். என்றைக்கும் மீறக்கூடாது சூழ்ச்சியே என்றைக்கும் அடிமையாக இருக்க வேண்டும் என்னும் சூழ்ச்சியேதான் இம்முறையான சோம்பேறிகள், முதலாளிகள், புரோகிதர்கள், பாதிரிகள், குருக்கள் என்பவர்களால் ஏற்படுத் தப்பட்டிருக்கிறன. உண்மையில் நீங்கள் கடவுளை நம்பிக்கொண்டிருந்தும் அதுபாடுபடும் மக்களைப் பட்டினி போட்டும் சோம்பேறி தின்று கொழுத்து சுகப்படவும் வைப்பது யோக்கியதையா? கள், கடவுள் பேரைச் சொல்லிச் செய்யும் பித்தலாட்டம் இன்னுமா விளங்கவில்லை.
குடி அரசு - 1933 M) 224.
உலகத்தில் எப்பாகத்திலேனும் இம்முறைகொஞ்சமேனும் இருந்தால் அங்கு வேற்றுமையும் கொடுமையும் இருந்தே தீரும். இக்கொடுமைகள். ஒழிக்கப்பட வேண்டுமானால் பெரிய புரட்சி வேண்டும். ஆயிரக்கணக்கான வருஷமாக இருக்கும் இச்செயலை ஒழிக்க மிக்க தைரியம் வேண்டும்.எந்த தேசத்தில் அரசன் பணக்காரன் இருக்கிறானோ அந்தத் தத்துவம் இருக் கிறதோ அங்கெல்லாம் சாமி பூதங்களிருக்கவும், முதலாளி கூட்டம் வாழவும் தொழிலாளி பட்டினிகிடக்கவும் சோம்பேறி சுகப்படவுமே தான் இருக்கிறது.
மற்ற தேசத்துடன் நமது நாட்டையும் ஒத்துப்பார்த்தால் தொழிலாளி
யின் நிலைமை கொஞ்சம் அதிகமாகவே, கஷ்டமாகவே இருக்கிறதே தவிர குறைவில்லை என்று சொல்லலாம். நமது முறையீடுகளையும் துன்பங்க ளையும் கண்டு மிக்க அனுதாபியைப்போலவே இன்று பெரிய தேச பக்தன் என்று சொல்லுகிறவர்கள் நம்மிடம் வந்து சேர்ந்து நம்மை விட ஆயிரம்
பங்கு அதிகமாக முதலாளிக் கொடுமைகளை ஒழிக்க வேண்டும் என்றே பேசுவான். இந்த அக்கிரமம் சகிக்க முடியாது என்றே பேசுவான். ஆனால் நம்ம தயவால் கொஞ்சம் பதவி கிடைத்த உடனே முதலாளியிடம் சேர்ந்து கொண்டு உடனே தொழிலாளிகள் செய்வது அக்கிரமம் என்று கூப்பாடு போடுவான். ஏன் என்று கேட்டால் அக்கிரமம் செய்வது முதலாளியல்ல, சர்க்கார் தான் காரணம் என்று முதலாளியிடம் 5 ரூபாய் வாங்கிக்கொண்டு நம்மிடம் சமாதானம் சொல்லி சர்க்காரை சுட்டிக்காட்டி விட்டு இஸ்கே படுத்தி விட்டு விடுவான். நாமும் அவன் சொன்னபடி சர்க்காரிடம் முட்டிக்கொண்டு துப்பாக்கிக்கும், தடியடிக்கும், உயிரைவிடவும் போய்விடுவோம்.தொடர்ச்சி 16.041933 குடிஅரசு!
(26.03.1933 குடி அரசு -அனுப்ப பாளையம் சொற்பொழிவு தொடர்ச்சி!
குடி அரசு - சொற்பொழிவு - 02.04.1933
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
சம்பனக்வகான்னை
இந்தியாவுக்கு இன்று உள்ள முதல் கொடுமையும், கடைசிக் கொடு மையும், சம்பளக்கொள்ளை கொடுமையே யாகும்.
இந்தியாவைப் போல் உள்ள ஏழை நாடு உலகில் எங்குமே இல்லை என்று சொல்லிக் கொள்ளுகிறோம். ஆனால் இந்தியாவைப் போல சம்பளக் கொள்ளை உள்ள நாடு உலகில் எங்குமே இல்லை.இதைப் பல தடவைகளில்
நாம் எடுத்துக்காட்டி இருக்கிறோம். இந்திய அரசியல் கிளர்ச்சியிலும் இதைப் பற்றி அடிக்கடி பேசப்படுகின்றது. என்றாலும் இதற்கு அஸ்திவாரமான குற்றத்தை அரசாங்கத்தின் மீது திருப்பப்பட்டு விடுகின்றபடியால் பாமர: ஜனங்கள் உண்மையை உணர்ந்து திருத்துப்பாடு செய்வதற்கு மார்க்கமில்
லாமல் போய்விடுகின்றது.
சம்பளக் கொள்ளை என்றால் ஒரு சாதாரணக் கொள்ளை என்று யாரும். கருதிவிடக்கூடாது. அது சம்மந்தமாக ஒரு சிறு புள்ளி விபரத்தை கீழே
குறிப்பிடுகின்றோம். அது பழைய குறிப்புகளேயானாலும் இது சமயம் இன்றைய இந்தியாவின் நிலைக்கும் அரசியல் நிலைக்கும் சற்று கவனித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
என்னவெனில் பிரிட்டிஷின் முழு ஆட்சிக்கும் பொறுப்பேற்று தலைமை வகித்து நடத்தும் பிரிட்டிஷ் பிரதம மந்திரிக்கு மாதம் 1க்கு 5500 ரூ. சம்பளமே கொடுக்கப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் சுதேசமாகிய இங்கிலாந்து தேசத்திய மக்களின் சராசரி வரும்படி மாதம் ஒன்றுக்கு 72 ரூபாயாகும்.
இது போலவே பிரஞ்சு தேசத்திய பிரசிடெண்டு என்னும் தலை வருக்கு மாதம்1க்கு 1500 ரூபா சம்பளமேயாகும். பிரஞ்சு தேசத்து மக்களின் சராசரி வரும்படியும் நபர் 1க்கு மாதம்1க்கு சுமார் 100 ரூபாயாகும்.
அமெரிக்க தேசம் உலகத்திலேயே செல்வம் பொருந்தியதேசம் என்று சொல்லப்படுவது, அந்த தேச மக்களின் சராசரி வரும்படி மாதம் 1க்கு நபர்
1க்கு சுமார் 120 ரூபாய் ஆகும். அந்த தேசத்தின் மாகாண கவர்னர்களுக்கு சராசரி மாதம்1க்கு 1000 ரூபாய் வீதமே கொடுக்கப்படுகின்றது.
குடி அரசு - 1933 M) 226
ஆனால், நபர் ஒன்றுக்கு மாதம் 1க்கு 3ரூபாய் சராசரி வரும்படி உள்ளது என்று சொல்லப்படும் இந்தியா தேசத்து வைசிராயிக்கு மாதம் 1க்கு
20000 இருபது ஆயிர ரூபாய் சம்பளமும் மாகாண கவர்னர்களுக்கு மாதம் 1க்கு 10000 பத்து ஆயிரம் ரூபாயும் நிர்வாக சபை அங்கத்தினர்களுக்கு முறையே மாதம்1க்கு 6500, 5500 வீதமும் மாகாணம் 1க்கு மந்திரிகள்: உள்பட 4,5,6,7 பேர்கள் வீதமும் இருந்து மேற்கண்டபடி சம்பளங்கள் பெற்று வருகின்றார்கள் என்றால் இந்த சம்பளங்களை நிர்வாகச் செலவு என்று சொல்லுவதா, சம்பளத்தின் பேரால் அடிக்கும் பகல் கொள்ளை என்று சொல் லுவதா என்பதை வாசகர்களே முடிவுகட்டிக்கொள்ள விட்டு விடுகின்றோம்.
நிற்க, இது மாத்திரமல்லாமல் இந்திய அரசாங்க பொதுஜன சிப் பந்திகளுடைய சம்பளமும் இது போன்ற ஒரு கொள்ளையாகத் தான் இருந்து
வருகின்றது. இன்று இந்தியாவில் தானியம் அதாவது ஆகாரத்துக்கு வேண்டிய நல்ல அரிசியானது ரூபா 1க்கு 6 பட்டணம் படியாக விற்கின்றது. ஒரு மனிதனுக்கு குடும்பத்தில் சராசரி குழந்தைகள் உள்பட 5 பேர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும்கூட இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு பட்டணம் படியில் அதிகமான கணக்குப் போட்டாலும் ஒருபடி அரிசிக்கு மேல் சாப்பிட முடியாது. இந்தப்படியே கணக்கு போட்டுப் பார்த்தாலும் குடும்பம்1க்கு மாதம்1க்கு 6ரூபாய் அரிசி தான் பிடிக்கும். மற்ற சாப்பாட்டுச் செலவு மாதம் 6ரூபாய் ஆகலாம். வீட்டுவாடகை, எதிர்பாராத சந்தோஷ செலவு மாதம் 8ரூபாய் ஆகலாம். ஆக இந்தியாவில் ஒரு குடும்பம் போதுமான நிலையில் வாழுவதற்கு குறைந்தது என்று வைத்துக் கொண்டா
லும் சராசரி மாதம் 20 ரூபாய் போதுமானதாகும். இதற்கு குறைந்து இருப்பது அறியாயம் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம்.
ஆனால், மாதம்1க்கு நூறு. இருநூறு, ஐநூறு ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் ரூபாய்கள் வீதம் கொடுப்பது எதற்காக என்பது நமக்கு புரியவில்லை..சர்க்கார் சம்பந்தத்தில் உத்தியோகம் வகிக்காத வனுக்கு இன்று மாதம்1க்கு சரீர வேலைக்காரனுக்கு 8 ரூபாய் வீதமும், புத்தி வேலை, எழுத்து வேலைக்காரர்களுக்கு இருபது அல்லது முப்பது ரூ. வீதம் தான் சாதாரண சம்பளமாகவும், அதிகச் சம்பளமாகவும் இருந்து வருகின்றது. இதுதான் இன்று நல்ல ஜீவனக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் 100க்கு 80 மக்களின் வரும்படியாயிருக்கின்றது. இதற்கும் இந்த மக்கள் சராசரி தினம் 10 மணி நேரம் வேலை செய்கின்றார்கள் என்றும் சிலர் 16 மணி நேரம் வேலை செய்கின்றார்கள் என்றும் சொல்ல வேண்டி இருக்கின்றது.
இது போல் மாதம் 8 முதல் 20 ரூபா வரையில் உள்ள சம்பளத்துக் குக்கூட வேலை கிடைக்காமல் திண்டாடும் மக்கள் 3வது 4வது பாரம் படித்தவர்களும் எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன் படித்தவர்களும் பி.ஏ. வரை படித்தவர்களும் இந்த சென்னை மாகாணத்தில் மாத்திரம் பல லட்சக்
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
கணக்காய் இருக்கின்றார்கள் என்று பந்தயம் கட்டி கூறலாம். இந்தப்படி படித்துவிட்டு வேலையில்லாமல் பரதவித்து திண்டாடி தெருவில் மக்கள் லட்சக்கணக்காய் அலையும் போது என்ன அவசியத்தை உத்தேசித்து இந்த சம்பளக் கொள்ளை இந்த நாட்டில் இருந்து வருகின்றது என்பது கவனித்தால் அதன் சூட்சி நன்றாய் விளங்கும். “நிர்வாகச் செலவு தலை கனத்துப்போய் விட்டது” என்பதின் கருத்து சம்பளக்கொள்ளை என்பதைத் தவிர வேறு யாதொரு காரணமும் கிடையாது என்பதும் விளங்கும்.
இந்த சம்பளக் கொள்ளையின் காரணமே வரி உயர்வுக்கும், வரிக் கொடுமைக்கும் காரணமேதவிர வேறு ஒன்றும் இல்லை.ஆனால் இதை எந்த தேசீய வாதிகளும் கவனித்து தீவிர நடவடிக்கைகளை யெடுத்துக்கொள்வதே. கிடையாது. அரசியல் வாதிகள் தேசியவாதிகள் என்பவர்கள் ஜனங்களிடம்.
ஓட்டுக்கு வரும்போது “வரியைக் குறைக்கின்றோம்” என்று சொல்லி ஓட்டுக் கேழ்ப்பதும் அரசாங்க சிப்பந்திகளிடம் வந்து அவர்களது “சம்பளங்களை உயர்த்துகிறோம்” என்று சொல்லி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வதுமான சூழ்ச்சிகளைச் செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்களே. ஒழிய சம்பளத்தைக் குறைக்க வாதாடி வரியைக் குறைப்பது என்கின்ற திட்டம்.
நமது நாட்டின் எந்த ஸ்தாபனத்திலும் இல்லை.
ஒரு வேலைக்கு ஒரு ஆள் தேவையானால் அந்த ஆளுக்கு பெரிதும் எந்தக்காரணத்தை அஸ்திவாரமாகக் கொண்டு சம்பளம் ஏற்படுத்த வேண்டும். என்றால் அந்த ஆளின் வாழ்க்கைச் செலவை உத்தேசித்து என்றுதான் சொல்லுவோம். ஆனால் அந்த செலவில் ஏதாவது சிறிது வித்தியாசம் அதுவும் அந்த ஆள் பார்க்கவேண்டிய உத்தியோக நிலைமைக்கு வேண்டிய அளவான சவுகரிய வித்தியாசம் எவ்வளவோ அதற்கு ஏற்றபடி கொடுக்
கலாம் என்றும் சொல்லுவோம். அப்படிக்கில்லாமல் அதிகமான செலவையும் போட்டு கணக்கு கூட்டி அதற்கும் மேலாக தாராளமாய் மாதம் 100,200, 1000, 5000 மீதி ஆகும்படியும் சம்பளம் ஏற்படுத்துவது என்றால் இதற்கு என்ன பெயர் கொடுப்பது என்பதை இப்போதே யோசித்துப் பாருங்கள்.
ஒரு தேசத்து மக்களை அந்த தேசத்து பொது நிர்வாகத்திற்கே ஏன் இந்தப்படி வித்தியாசமாக பிரிக்க வேண்டும்? அதுவும் அந்த தேசத்து மக்கள். கஷ்டப்பட்டுத் தேடிய பொருளையே பலவிதத்தும் வரி ரூபமாகக்்கொள்ளை கொண்டு அதை இந்தப்படி ஒரு சிலர் கொள்ளையடிக்க ஏன் இடந்தர: வேண்டும்? என்பனவாகியவற்றை யோசித்தால் மனம் பதருகின்றது. அரசியல் ஆதிக்கத்திலும், அரசியல் கிளர்ச்சியிலும் இதுவரை பார்ப்பனர். களே ஆதிக்கம் கொண்டிருந்தாலும் வரி கொடுக்க வேண்டிய மக்கள் எல்லோரும் 100க்கு 99 பேர் பார்ப்பனரல்லாதார்களாகவே இருந்தாலும் சம்பளம் பயன் பெரும் மக்கள் பெறும்பாலும் 100க்கு 80மக்கள் பார்ப்பனர். களாகவே இருந்ததாலும் இந்தப்படியான சம்பளக் கொள்ளைகள் ஏற்பட
குடி அரசு - 1933 M) 228
வேண்டியதாயிற்று. ஆனால் இப்போது ஜனங்கள் படுகின்ற கஷ்டத்தையும், நஷ்டத்தையும், பரதவிப்பையும் பார்த்தால் இந்த சம்பளக் கொள்ளையை ஒழித்தாகவேண்டியது முதற்கடமை என்றே தோன்றுகின்றது.
சம்பள விஷயத்தில் இவ்வளவு வித்தியாசம் வைத்து இருப்பதானது
அதுவும் பாடுபடுகிற சிப்பந்திகளுக்கு குறைந்த சம்பளமும் அதிக நேர உழைப்பும், பாடுபடாத சிப்பந்திகளுக்கு சோம்பேரிகளுக்கு கொஞ்சம் நேர வேலையும் அதிக சம்பளமும் இருக்கின்ற முறை அடியோடு ஒழித்தே ஆக வேண்டும். மற்றும் இவற்றைப் பற்றிய விபரங்களை மற்றொரு சமயம் எழுத.
லாம் என்று விட்டு விட்டு முக்கியமான மற்றொரு விஷயத்தில் மக்களுக்கு உள்ள கஷ்டத்தைப்பற்றி சிறிது குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம்.
அதென்ன வென்றால் ஆங்கிலம் கற்பிக்கும் உபாத்தியாயர்களின் சம்பளத்தைப்பற்றிய விஷயமேயாகும்.
உபாத்தியாயர்
வருஷம் ஒன்றுக்கு 365 நாள் என்றால் இந்த பள்ளிக்கூட உபாத்தி யாயர்களுக்கு பொது லீவுகள் 120 நாளும் சனி ஞாயிறு லீவுகளில் 70 நாள்:
களும் மொத்தம் குறைந்தது சுமார் 180 நாள் அதாவது 6 மாத காலம் பள்ளிக்
கூடம் இல்லாத லீவுநாட்களாகும். இந்த ஆறு மாத காலங்கழிந்த மற்ற ஆறு மாத காலங்களிலும் அவர்கள் வேலை பார்க்கும் நேரம் தினம்1க்கு காலையில்
2/, மணியும், மாலையில் 2V, மணியும் ஆக 5 மணி அல்லது 4/, மணி நேரம் தான் வேலை பார்க்கின்றார்கள். ஒரு வருஷத்தில் 6 மாத வேலைக்கு அதுவும் தினம் 41, மணி நேர உழைப்புக்கு சம்பளம் என்னவென்று பார்த்தால் மாதம்
1-க்கு பி. ஏ. எல்.டி. என்பவர்களுக்கு 70 ரூபாயில் இருந்து சாதாரணமாக 250 ரூபாய் வரையில் இருந்து வருகின்றது. இந்த சம்பளங்கள் பெரிதும் வரிப்பணத்தில் இல்லாமல் பிள்ளைகளிடமிருந்தே வசூலிக்கப்படுகின்றன. இந்த சம்பளக் கொடுமை காரணமாகவே 100க்கு 95 பிள்ளைகள் ஆங்கிலத்
தில் ஒரு எழுத்துக்கூட கற்க முடியாமல் இருந்து வருகின்றனர். பணமுள்ள பிள்ளைகள் மாத்திரம் தான் படிக்கக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் இந்த உபாத்தியார்களின் சம்பளக்கொள்ளை என்பதைத் தவிர வேறு என்ன காரணம் சொல்லக்கூடும்?
“படித்தவர்களுக்குத்தான் உத்தியோகம்” என்றும் “பணக்காரர்கள் வீட்டுப்பிள்ளைகள்தான் படிக்கக்கூடும்”” என்றும் ஏற்பாடு செய்திருப்பதை பொது ஜன ஆட்சி என்று சொல்லுவதா? பணக்காரர்கள் ஆட்சி என்று சொல்லுவதா? என்பதை யோசித்துப்பாருங்கள். எல்லாப்பிள்ளைகளுக்கும் சாதாரணமாய் படிக்கக்கூடிய செளகரியம் செய்திருந்தால் பொது உத்தி யோகங்களில் இந்த சம்பளக்கொள்ளை ஏற்பட்டே இருக்காது.
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
இந்த நிலையில் எப்படிப் பிற்பட்ட வகுப்புகள் - தாழ்த்தப்பட்ட வகுப்புகள் முன்னேற்றமடைய முடியும்? என்று கேட்கின்றோம்.
சாதாரணமாக, ஒரு பி.ஏ. எல்.டியை மீ£30ரூபா சம்பளத்தில் ஆரம்பிப் பது உறுதி என்று சொல்லி இன்றைய தினம் ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி விட்டு டிரெய்னிங் (போதனா முறை) பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பித்தால்
இந்த மாகாணத்தில் மாத்திரம் இன்று பி.ஏ., எம்.ஏ. க்களிலிருந்தே குறைந்தது 5000 விண்ணப்பங்கள் எதிர் பார்க்கலாம். இவர்களிடம் இப்போதைய பி. ஏ.
எல்.டி. களிடம் வாங்கும் வேலையைவிட 4 பங்கு வேலை அதிகமாக வாங்கலாம். இப்படி இருக்க கல்வியின் பேரால் உபாத்தியாயர்கள் என்கின்ற உத்தியோகத்திற்கு எவ்வளவு பணம் விரையமாகி எவ்வளவு பேர் படிக்க முடியாமல் போய் விடுகின்றது என்பதையும் உணர வேண்டுகின்றோம்.
இவ்வளவு பணம் செலவு செய்தும் உபாத்தியாயர்கள் என்பவர்கள் இவ்வளவு பணம் பொது மக்களிடம் இருந்து அடித்துப் பிடுங்குவது போல் பிடிங்கி அனுபவித்தும் சராசரி 100க்கு 25 பிள்ளைகள்கூட பாசாவதே கஷ்ட மாய் இருக்கின்றதென்றால் இக்கல்வியின் அக்கிரமத்தையும், உபாத்தி யாயர்களின் பொருப்பற்ற தன்மையையும், கொடுமையையும் பற்றிச் சொல்ல வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.
இந்த லட்சணத்தில் இருக்கும் கல்வி நிருவாகத்திற்கு சர்க்கார் செய்யும் செலவு எவ்வளவு என்பதையும் நிர்வாக அதிகாரிகள் மந்திரி உள்பட மாதம்
5000, 3000, 2000, 1000, 500, 200 என்பதாக அடிக்கும் கொள்ளை எவ்வளவு என்பதையும் பார்த்தால் யார் மனந்தான் பதறாமலிருக்க முடியும்.
வக்கீல்
இது ஒரு புறமிருக்க வக்கீல் என்கின்ற ஒரு கூட்டம் அடிக்கும் கொள்ளைக்கும், அவர்களால் ஏற்படும் அயோக்கியத்தனத்திற்கும் ஏதாவது ஒரு எல்லை காட்ட யாராலாவது முடியுமா? என்று பாருங்கள்.
எவ்வளவு குறைவாகக் கணக்குப்போட்டு பார்த்தாலும் இந்த மாகாணத்தில் மாத்திரம் சுதேச சமஸ்தானங்கள் உள்பட சுமார் 12500 வக்கீல் களுக்கு குறையாமல் இருப்பார்களென்றே கருதுகிறோம். இவர்கள் வாழ்க்கை மனித சமூக வாழ்க்கைக்கு அனுகூலமானதா பிரதிகூலமானதா என்பதை வக்கீல்களைக் கேட்டாலே 100க்கு 99 ', பேர்கள் நன்றாய் சொல்லு
வார்கள். என்ன சொல்லுவார்களென்றால் மனித சமூக ஒழுக்கத்திற்கும் சமாதானத்துக்கும் நாங்கள் “நரையான்கள்” போல் இருக்கின்றோம்” என்றே சொல்லுவார்கள். இந்நரையான்களால் ஏற்படும் கெடுதிகள் கள்ளுக்கடை, சாராயக்கடை, விபசாரவிடுதி, சூதாடுமிடம், மத உபதேசம் ஆகிய எல்லா கொடுமைகளைவிட எத்தனையோ மடங்கு அதிகமான
குடி அரசு - 1933 M) 230
தென்றே சொல்லலாம். இப்பேர்ப்பட்ட அதாவது நன்மைக்கு நரையான் போன்றதும் தீமைக்கு பிறப்பிடம் போன்றதுமான இந்த வக்கீல்களால் பொதுமக்களால் பாழாக்கப்படும் உழைத்துத் தேடிய செல்வம் எவ்வளவு? நேரம் எவ்வளவு? மனக்கவலை எவ்வளவு? மற்றும் இந்தக்கூட்டங்களை ஆதரிக்க அதாவது இந்த வக்கீல்கள் தங்கள் கொடுமையைச் செய்வதற்கு அனுகூலமாக ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் தன்மையும் வெரும் சூதாட்ட மண்டபம் என்பதல்லாமல் அதற்கு வேறு ஏதாவது பெயர் வைக்கக்கூடுமா என்பதையும் வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். “நியாயம்” பெறுவதற்கு
மாத்திரம் எவ்வளவு செலவு செய்யவேண்டி இருக்கிறது? நியாயஸ்தலத்துக்கு மாத்திரம் பொது ஜனங்களது பணத்தில் எவ்வளவு பணம் செலவு ஆகின்றது? என்பவைகள் நினைப்பதற்கே பயமான காரியமாகும். ஒரு சென்னை ஐகோர்ட்டை மாத்திரம் ஒழித்தால் 100000 பேர்கள் நன்றாக சாப்பிடவும், படிக்கவும் போதிய செல்வம் மீதியாகும்.
இப்படிப்பட்ட நிலைமையில் இந்தியாவை ஏழை தேசம் என்றழைப்
பதா அல்லது இந்திய தேசத்தாராலேயே ஒருவரை ஒருவர் ஏமாற்றி வஞ்சித்து வதைத்து சாப்பிடும் நர மாம்ச பக்ஷண தேசம் என்று அழைப்பதா என்பது நமக்கு விளங்கவில்லை.
இப்படிப்பட்ட காரியங்கள் உற்பத்தியாவதற்கு அனுமதி கொடுத்து ஆதரித்துவரும் சர்க்காரின் யோக்கியதையையும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் “வரிப்பணத்தையும் மேல்பார்வை உத்தியோகத்தையும்
எங்கள் கையில் கொடுத்துவிட வேண்டும்” என்று கேட்கும் தேசியத்தையும் முதலாளிகள் ஆட்சி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும். ஆதலால் இக்கொடுமைகள் ஒழிய முதலில் முதலாளிகள் ஆட்சியும், முதலாளிகள் தேசியமும் ஒழிக்கப்படவேண்டியதே முக்கிய காரியமாகும் என்பதையும் இக்காரியத்தை சுயமரியாதை இயக்கம் செய்யப்போகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.04.4933
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஈட முணிசியாலிமழ கவணிக்குமா 2
வைத்திய உதவி
இன்றைய நிலையில் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள்பட்ட ஜனங்க ளுக்கு பொது வைத்திய உதவி பொருப்புள்ளதாகவும், போதுமானதாகவும் இல்லை என்பதைக் குறிக்க வருந்தவேண்டியிருக்கின்றது. ஈரோட்டிலிருந்த முனிசிபல் ஆஸ்பத்திரியானது சுமார் 12-வருஷங்களுக்கு முன் சர்க்கார் ஆஸ்பத்திரியாக மாறின போது முனிசிபல் நிர்வாகத்தைவிட சர்க்கார். நிர்வாகம் சற்று மேலாகவே இருக்குமென்று ஜனங்கள் கருதினார்கள். அந்தப் படியே சில காலம் நடந்தும் வந்தது.
ஆனால் நாளாக நாளாக அந்த ஆஸ்பத்திரிக்கு பொது ஜனங் களுடைய தயவைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்கின்ற மாதிரி யிலேயே அதன் மேலதிகாரிகளால் நடைபெற்று வருவதாய் காணப் படுகிறது.
இதற்கு முக்கியகாரணம் சர்க்கார் நிர்வாகமேயாகும். ஈரோடு ஆஸ்பத்
திரி டவுன் ஜனங்கள் 35000 பேருக்கும், சமீப சுற்றுப் பக்கத்து ஜனங் கள்
சுமார் 20000 பேருக்குமாக 50000 பேருக்கு மேல் பயன்பட வேண்டிய தாய்
இருந்து இவர்களில் பெரிதும் ஏழைமக்களுக்கு ஆகவே இந்த ஆஸ்பித் திரி இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட ஆஸ்பத்திரியில் ஒரு சர்க்கார் சம்பள டாக்டர் இருக்கிறார் என்றாலும் கெளரவ டாக்டர்கள் என்பதாக இரண்டு மூன்று பிரைவெட் டாக்டர்களை நியமித்திருப்பதால் சம்பள டாக்டருக்கும் சம்பளமில்லாத டாக்டர்களுக்கும் மற்றும் தங்களுக்குள்ளும் ஒருவருக் கொருவர் உள்ள ஆசையாலும், பொறாமையாலும் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் சிகிச்சை பெரிதும் பாதிக்கப்படுவதோடு நோயாளிகள் விஷயத்தில் யாருக்கும் பொருப்பில்லாமல் கடன் கட்டுகிறமாதிரியில் நடை பெறுகின்றது.பணம் கிடைக்கக்கூடிய வைத்தியம் - பணக்காரன் வைத்தியம்- நாளை மறுநாள் தன்னையே குடும்பவைத்தியராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் வைத்தியம் முதலாகிய இவைகள் தான் சிறிது கவலையாய் கவனிக்கப்படுகின்றதே தவிர ஏழைகள் தொழிலாளிகள் பாடு கஷ்டம்தான்.
குடி அரசு - 1933 M) 232
கெளரவ வைத்தியர்களை ஏற்படுத்தியதின் பயனை ஒரு வார்த்தை
யில் சொல்லவேண்டுமானால் பிரைவேட்டாக்டர்கள் பிரைவேட்டாக பணம் வாங்கிக்கொண்டு செய்யும் வைத்தியத்திற்கு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்துகளை எடுத்துக் கொடுக்க பயன்படுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.மற்றும் பிரைவேட்டாக்டர்கள் தங்கள் தொழிலை விர்த்தி செய்து கொள்ள ஆஸ்பத்திரி பயன்படுத்தப்படுகின்றது என்றும் சொல்ல வேண்டும்.
இது எப்படியோ போகட்டும் என்றாலும் பொது ஜனங்களுக்கு இதனால் இருக்கும் அசெளகரியம் மிகவும் கவனிக்கத்தக்கதாய் இருக்கின் றதுடன் மற்றொரு விஷயம் என்னவென்றால் குதிரை கீழேதள்ளியது மல்லாமல் குளியும் தோண்டிற்றாம் என்பதுபோல் பெண்கள் சம்பந்தமான குழந்தைகள் சம்மந்தமான வைத்தியம் பார்க்கும் லேடி (பெண்! டாக்டர். ஸ்தானம் ஒன்று சுமார் 25 வருஷ காலமாக இந்த ஆஸ்பத்திரிக்கு இருந்து வந்தது இந்த கெளரவ டாக்டர் முறை அதிலும் போய் புகுந்து அந்த சம்பள டாக்டரையே எடுத்து விடும்படி செய்துவிட்டது. இப்போது ஈரோட்டிற்கு பெண் டாக்டர் இல்லை. பொதுவாக இந்தியாவில் அதிலும் தமிழ் நாட்டில் கெளரவ உத்தியோகங்கள் எந்த நிலைமையில் எவ்வளவு கண்ணியத்தில் நடைபெறுகின்றன என்பதை நாம் எடுத்துக்காட்டத் தேவையில்லை. அதிலும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக் கலாம் என்றும், என்ன தப்பு செய்தாலும் தொழில் மரியாதையை அனுசரித்து
மேல் அதிகாரிகளும் சகோதரத் தொழிலாளிகளும் அத் தப்பிதத்தை வெளிக்குக் காட்டாமல் ஆதரித்தே ஆகவேண்டும் என்கின்ற கொள்கை யுடைய டாக்டர் உத்தியோகம் ஒரு கெளரவ உத்தியோகமாக இருந்தால் அதன் கொடுமையை யாரால்தான் வர்ணிக்கமுடியும்? ஆதலால் இன்று மேல்கண்ட 50ஆயிரம் ஜனங்கள் கொண்ட ஈரோட்டில் குழந்தைகளும் பெண்களுமான சுமார் 30ஆயிரம் பேர்களுக்கு வைத்தியம் மிகவும் பரிதாபகரமாகவே இருந்து வருகின்றது. இங்கு மிஷின் ஆஸ்பத்திரி ஒன்று இருக்கின்றது என்றாலும் அது ஒரு மத சம்பந்தமானதும், மதப் பிரசாரத்தைக் குறிக்கொண்டதும், பொது ஜனங்களுக்கு எவ்விதத்திலும் பொறுப்புக்குக் கட்டுப்படாததுமாகும்.
ஆதலால் அதைப்பற்றி நாம் பேசுவதற்கு நமக்கு எவ்வித அரு
கதையும் உரிமையும் கிடையாது.
நிற்க, இன்றைய மக்கள் சாவுகளிளெல்லாம் அதிகமான சாவும், அநியாயமான சாவும், காயலாவும், பெண்கள் பிரசவ சாவும் காயலாவு மேயாகும். அதோடு பிரசவ குழந்தைகள் வியாதியும் பெண்கள் வியாதியுமே இயற்கையிலே அதிகமாயிருக்கின்றது என்று சொல்லுவது மிகையாகாது.
இது சமயம் ஈரோட்டில் பிரசவக் கேசுகளைக் கவனிக்க எப்படிப்பட்ட ஏழையானாலும் வீடுகளுக்கு யாராவது வரவேண்டுமானால் 5ரூபாய், 10
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ரூபாய் கொடுக்காமல் முடியவே முடியாது. முனிசிபல் மருத்துவச்சிகளின் ரேட்டோ, சர்க்கார் டாக்டர், கெளரவ டாக்டர்கள், பிரைவேட் டாக்டர்கள் பீசுகளைவிட அதிகமாகவும் நோயாளிகளிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்ளுவதும் அதிகாரம் செலுத்துவதுமான காரியங்கள் அதிகமென்றே சொல்ல வேண்டும். ஆகையால் இந்த நிலையில் பெண்கள் வைத்திய வசதிநிலை இது சமயம் ஈரோட்டில் மிகவும் மோசமாகவே இருந்து வருகின்றது. இந்த ஆண் பெண் வைத்திய வசதி விஷயங்களிலும் இதில் நடக்கும் கொடுமை விஷயங்களிலும் இன்னும் அநேக உண்மைகளை எடுத்துக்காட்டலாம் என்றாலும் அவை கிணறு வெட்டப் பூதம் புரப்பட்டது போல் ஆகிவிடுமாதலால் பொதுவாக இக்கஷ்டங்களைப்பற்றி சர்க்காருக்கு முனிசிபாலிடியார் எடுத்துச் சொல்லி அவர்கள் செவிசாய்க்காமல் போனால் உடனே முனிசிபாலிடி சார்பாகவாவது ஒரு லேடி டாக்டரை இந்த ஊருக்கு வரவழைத்து ஒரு சிறிய கட்டடத்தில் மருந்துகள் வைத்துப் பெண்களுக்கும் சிறப்பாக பிரசவப் பெண்களுக்கும் இலவச வைத்திய வசதி கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமென்று கோருகின்றோம்.
ஈரோடு முனிசிபாலிடியில் இப்பொழுதுள்ள இரண்டு மருத்துவச்சி களையும், எடுத்துவிட்டால் மாதம் 60ரூ. மீதியாகும். 20ரூ. அல்லது 25 ரூபாயில் ஒரு மருத்துவச்சியும் மாதம் 50 அல்லது 60 ரூபாயில் ஒரு லேடி அசிஸ்டெண்ட சர்ஜனைப் போட்டு விட்டால் முனிசிபாலிடிக்கு இப்பொழு திருப்பதைவிட மாதம் 20 அல்லது 25 ரூபாய்தான் அதிக செலவாகும்.
மருந்துகள் அவரவர்களே வாங்கிக் கொள்ளுவார்கள். ஏழைகளுக்கு ஏதோ
மாதம் 5 அல்லது 10 ரூபாய் மருந்துகள் வாங்கினால் சரிசெய்துகொள்ளலாம்.
இது முக்கியமான விஷயமானதால் முனிசிபல் கெளன்சிலர் கனவான்கள்: இதை அவசியம் கவனிப்பார்கள் என்று கருதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.04.1933
குடி அரசு - 1933 M) 234
தக்சை வில்லை மகாநாடு
இம்மாதம் 8, 9 தேதிகளில் தஞ்சை ஜில்லா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு நாகபட்டணத்தில் சிறப்பாக நடைபெற்ற விபரம் மற்றொரு பக்கம் காணலாம். அதை ஊன்றிப் பார்ப்பவர்களுக்கும், நேரில் மகாநாட்டு நடவடிக் கைகளைக் கவனித்தவர்களுக்கும், தமிழ் நாட்டில் எந்த இயக்கத்தை எப்படிப் பட்ட கொள்கையை மக்கள் ஆண், பெண், இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முதலியவர்கள் விரும்புகின்றார்கள்? எதில் ஊக்கமாய் இருக்கின்றார்கள்? என்பது விளங்கும்.
மகாநாடு நாகையில் நடைபெற வொட்டாமல் செய்ய வெளியிலிருந்து செய்யப்பட்ட சில சூட்சிகள் மகாநாட்டுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மேல் கூட்டம் சேர்த்துக் கொடுத்து அதி விமரிசையாய் அதாவது ஒரு மாகாண மகாநாடு போல் நடத்திக் கொடுத்து விட்டது. ஆகையால் அத்திருக் கூட்டத் தாருக்கு மகாநாடு நடத்தியவர்களின் நன்றியறிதல் உரியதாக வேண்டும். என்பதில் குற்றம் இல்லை.மகாநாடு நடக்க 2, 3 நாட்கள் இருக்கும்போது சுமார்.
150 கையெழுத்துக் கொண்ட விண்ணப்பம் ஒன்று அவ்வூர் கலெக்டருக்குச் சமர்ப்பித்து மகாநாட்டை நிறுத்த 144 உத்திரவு போட வேண்டும் என்று
பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதே போல் இதற்கு முன் 1931ம் வருஷம் நடந்த நாகை மகாநாட்டிலும் பலர் பொதுஜனங்களிடம் விஷமப் பிரசாரம் செய்ததும், தெருக்களில் காலித்தனம் செய்ததும், அது சம்மந்தமாய் அடி தடி நடந்து கிரிமினல் கோர்ட்டுகளில் விசாரணைகள் நடந்ததும் பலருக்கு ஞாபகமிருக்கலாம். அப்படி யெல்லாம் இருத்தும் அம்மகாநாடு தோழர் ஊ. பு. அ. செளந்திர பாண்டியரவர்கள் தலைமையில் விசேஷமாய் நடைபெற்றதும் ஞாபக
மிருக்கலாம்.
அதுபோலவே இந்த மகாநாட்டுக்கும் மேல் குறிப்பிட்டபடிபல தடுப்பு
கள் செய்ய முயற்சிகள் பல செய்யப்பட்டிருந்தாலும் அவ்வூர் ஸ்தல அதிகாரி யாகிய கலெக்டர் அவர்கள் உள்ளூர் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ பிரமுகர்கள் பலரை அழைத்துத் தனியே விசாரித்து உண்மை இன்னது என்று அறிந்த பின்பு144 உத்திரவு போட மறுத்ததுடன் மகாநாடு சிறப்பாய் நடக்க வேண்டு
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மென்று கோருவதாகவும் வெளிப்படையாய் தெரிவித்துக்கொண்டாராம். அதுபோலவே அங்குள்ள போலீஸ் அதிகாரிகளும், சில காங்கிரஸ் தொண்டர்.
களும், சில முஸ்லீம் பிரமுகர்களும், சில கிறிஸ்தவ நண்பர்களும் 2 நாளும் மகாநாட்டுப் பந்தலில் இடைவிடாது கூடவே இருந்து மகாநாட்டை உற்சாகப்
படுத்தி ஆனந்தித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் ஒரு விசேஷம் என்னவென்றால் இரண்டொரு முக்கிய
அதிகாரிகள் மற்ற ஜனங்களுக்குத் தெரியாமல் கூட்டத்திற்கு வந்து விஷயங்க ளைக் கவனித்துச் சென்றதாகவும் இரண்டொரு பிரசங்கங்களைப்பற்றி தாங்கள் இதுவரை இப்படிப்பட்ட கருத்துக்கள் கொண்ட பிரசங்கங்கள் கேட்டதில்லை என்றும், அவற்றில் கடுகளவாவது குற்றம் சொல்ல இட மில்லை என்றும், இதுதான் இனி இந்தியாவுக்கு வேண்டியதும், நடை பெறப்போவதுமானதென்றும் சொன்னதாகவும் திருப்திகரமாய் தெரிய
வந்ததாகும்.
கூட்டத்திற்கு சுமார் 250 முஸ்லீம்களுக்குக் குறையாமல் இரண்டு நாள்
4 வேளைகளில் இருந்ததும், பெண்கள் 100 பேர்கள் வரை சதா கூடியிருந்
ததும், கலப்பு மணம், விதவை மணம், கல்யாண ரத்து மணம், புரோகிதமற்ற மணம் ஆகியவைகளுக்கு அங்கேயே பல பேச்சு வார்த்தைகள் தனித் தனியே பிரமுகர்களிடத்தில் நடைபெற்றதும் சில கல்யாணப் பேச்சுகள் முடிவு
பெற்றதும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க வந்த தோழர் வல்லத்தரசு அவர் களையும் மகாநாட்டுக்குத் துவக்குவிழா வாற்ற வந்த தோழர் நீலாவதி அம்மையாரையும், மேல்நாட்டுக்குச் சென்றுவிட்டு நாகைக்கு முதல் முதல் வரும் தோழர் ராமசாமியையும் பார்க்கவும் அவர்களுடைய சொற்பொழி வைக் கேட்கவும் என்று தஞ்சை ஜில்லாவிலும் தென்னாற்காடு ஜில்லாவில் உள்ள கிராமங்களிலும் முக்கிய பட்டணங்களிலுமிருந்து வந்த வாலிபர்கள்
சுமார் 1000 பேர்களுக்கு மேலாகவே இருப்பார்கள் என்பதுடன் அவர்க ளுக்கு அங்கு காணப்பட்ட உற்சாகத்திற்கு அளவு கூறவேமுடியாது என்று சொல்வதில் சிறிதும் அதிகமில்லை.ஆனால் ஒரு விஷயம், சென்ற வருஷத் திற்கு முந்தியவருஷ மகாநாடுகளில் காணப்பட்டதான செல்வவான்கள் உத்தியோகஸ்தர்கள், ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்கள் என்கின்ற கூட்டங்
கள் பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடிப்பார்க்கவேண்டி இருந்தது. கூடுமா னவரை மறைந்துகொள்ளவே முயற்சித்திருக்கிறார்கள் என்றும் தெரியவந்தது. என்றாலும் வாலிபர்களாய் உள்ள செல்வவான்களும் வாலிபர்களாய் உள்ள சில உத்தியோகஸ்தர்களும் வந்து இருந்ததுடன் தங்களை தைரியமாகவும் உறுதியாகவும் மகாநாட்டு நடவடிக்கைகளில் காட்டிக் கொண்டார்கள். ஆகவே மேற்கண்ட காரியங்களில் இருந்து சுயமரியாதை இயக்கத்தின் போக்கு இன்னது என்பதும் அது எந்த தன்மையில் விளங்குகின்றது என்பதும் வாசகர்களுக்கு ஒருவாறு விளங்கக்கூடும் என்றே கருதுகின்றோம்.
குடி அரசு - 1933 M 236
தவிர மகாநாட்டு தலைவர் தோழர் வல்லத்தரசு அவர்களது தலைமை உபன்யாசம் சற்று நீண்டதாய் இருந்தாலும் அவ்வுபன்யாசமானது சுய மரியாதை இயக்கத்தின் 4, 5 வருஷ சரித்திரத்தை ஒருவாறு விளக்கி அதன்
படிப் படியான விருத்தியையும், முற்போக்கையும் சுட்டிக்காட்டுவதாய் இருக்
கின்றது என்பதுடன் வாலிபர்களுக்கு உற்சாகத்தையும் பிற்காலத்தில் பலமான நம்பிக்கையையும் உண்டாக்கும் தஸ்தாவேஜாயிருக்கிறது.
மகாநாட்டுக்கு துவக்க விழாவாற்றிய தோழர் நீலாவதியம்மையாரின் உபன்யாசம் ஆண்களைத் திடுக்கிடச் செய்தும், பெண்கள் நிலைமையை எடுத்துக்காட்டி ஆண்மக்களை வெட்கி தலைகுனியச் செய்தும்விட்டது. அது போலவேவரவேற்புத் தலைவர் தோழர் சிவராமசாமி அவர்கள் சர்க்கார் உத்தி யோகத்தில் இருப்பவர். ஆனாலும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். ஆனாலும் தைரியமாய் முன்வந்து இந்தப் பொருப்புள்ள பதவியை ஏற்றுக் கொண்டதோடு பல தத்துவங்கள் கொண்ட உபன்யாசமானது போற்றத்தக்கதேயாகும்.
நிற்க அங்கு மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒரு முக்கிய தீர்மானமாவது:-
“ சென்னை மாகாணத்தில் தஞ்சை ஜில்லாவை ஒரு “மாடல் ஏரியா வாக” (பகுதியாக! எடுத்துக்கொண்டு சுயமரியாதை இயக்க ஜில்லா, தாலுக்கா, கிராமங்களை ஏற்படுத்தி நமது வேலைத்திட்டத் திற்கண்ட துறைகளிலும் வேலை செய்து காண்பிக்க ஒரு கமிட்டி நியமிக்க இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது”
என்பதாகும்.
இது அன்று அங்கு கூடியுள்ள இளைஞர்கள் ஊக்கத்தாலும் வேகத்
தின் உணர்ச்சியாலும் ஏற்பட்டது என்று சொல்லக்கூடுமானாலும் உண்மை யிலேயே தஞ்சை ஜில்லாவானது இது சமயம் இயக்க சம்பந்தமான எந்த அபிப்பிராயத்துக்கும் தலை சிறந்து விளங்கத் தயாராயிருக்கின்றது என்பதில் ஆக்ஷேபணை இல்லை. ஆனாலும் தஞ்சை ஜில்லாவிலுள்ள பார்ப்பனர் களைவிடமிகக் குறுகிய நோக்கமே அந்த ஜில்லா மிராசுதார்களும், செல்வ வான்களும் பார்ப்பனரல்லாத வக்கீல்களில் பலரும் ஸ்தல ஸ்தாபனங்களில் கலந்துள்ளவர்களுமானவர்களின் மனப்பான்மை இருந்து வருகின்றது என்பதை ஒளிக்காமல் சொல்லித் தீர வேண்டியதாய் இருக்கின்றது.
தஞ்சை ஜில்லாவில் இதுசமயம் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி மேற்கண்ட கூட்டத்தார்களில் முன் இருந்ததில் 100க்கு 25 பாகம் கூட இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதற்குக் காரணம் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி உயர்வு போய் விட்டால் தங்கள் நிலை மோசமாகிவிடும் என்று எப்படிப் பயப்படுகின்றார்களோ அதேபோல் பார்ப்பனரல்லாத மிராசுதார்.
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
கள் முதலியவர்களும் தங்களுக்குள் ஏற்பட்ட கட்சிப் பிணக்கால் பார்ப்பனர். விரோதம் வந்தால் தாங்கள் கவிழ்ந்து விடுவோம் என்ற பயமும் பணக்காரத் தன்மைக்கு உண்டான உயர்வும். மதிப்பும் போய்விட்டால் தங்கள் நிலை மிகமோசமாய்ப் போய் விடுமே என்ற கவலையும் சேர்ந்து அவர்களை உலக நடப்பில் இருந்தே தள்ளி ஒதுக்கி வைத்து விட்டதுடன் சதாகாலமும் உத்தியோகம், பதவி, பணக்கொள்ளை என்கின்ற “பேய்கள்” பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கின்றன.
இதன் பயனாய் அந்த நாட்டு மிராசுதாரர்கள், பெரிய மனிதர்கள், ஸ்தல ஸ்தாபன தலைவர்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாதூராய் இருந்தாலும் ஏழை
மக்களின் தாழ்த்தப்பட்ட மக்களின் நன்மைகளுக்கும், விடுதலை களுக்கும் பார்ப்பனர்களைப் போலவே பெரிய எதிரிகளாகவும் முட்டுக் கட்டையாகவும் தான் இருக்கிறார்கள்.
எனவே தஞ்சை ஜில்லாவை சுயமரியாதை மாடல் சென்டராக ஆக்குவது என்பது அந்த ஜில்லாவில் உள்ள மேல்கண்ட கூட்டத்தாரின் யோக்கியதையை வெளியாக்கி பொது ஜனங்களுக்கு அவர்களிடம் இருக்கும் பயத்தையும், பயத்தினால் ஏற்பட்ட மரியாதையையும் ஒழிக்க வேண்டும் என்பதே முக்கிய காரியமாகும். இந்தக் காரியத்தை ஒவ்வொரு ஜில்லாவிலும். செய்து வருவதுதான் சுயமரியாதைத் தொண்டின் முக்கிய தத்துவமாகும்.
ஆதலால் தஞ்சை ஜில்லா வாலிபர்கள் அவர்கள் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் காரியத்தில் நடத்திக் கொடுப்பார்கள் என்றே கருதுகிறோம்.
அந்தப்படி இவர்கள் நடத்திக்காட்டி விட்டார்கள் என்பதற்கு அத் தாட்சி என்னவென்றால் இனிவரப்போகும் தேர்தல்களில் செல்வவான்களின் நிலை என்ன ஆகின்றது என்பதேயாகும்.
குடி அரசு - தலையங்கம் - 16.04.4933
குடி அரசு - 1933 M) 238
போலீஸ் கோக்கியதை
உப்பு சத்தியாக்கிரக சட்டமறுப்பு காலங்களில் இருந்து போலீசாருக்கு ஒரு புதிய யோக்கியதை ஏற்பட்டுவிட்டது. அதாவது போலீசு எவ்வளவு அக்கிரமமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்துகொண்டாலும் அதற்கு எவ்வித கேள்வியும், கேழ்ப்பாடும் கிடையாது என்பதாகும். போலீசு இலாக்
காத் தலைமை அதிகாரிகளுக்கும் நிர்வாக தலைவர்களுக்கும் சட்டசபை அங்கத்தினர்கள் கேட்ட கேள்விகளாலும், தேசிய பத்திரிகைகள் வைத வசவுகளாலும், பொது ஜனங்கள் மண்ணை வாரித்தூற்றி “சாபம்” கொடுத்து சபித்ததாலும், புத்தியும் நாணையமும், யோக்கியப் பொருப்பும் காப்புக்காச்சி மறத்துப் போய்விட்டதுடன் அவர்களது தோல் காண்டாமிருகத் தோலுக்கு சமமாய் போய்விட்டது. இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் போலீசு இலாக்காவை திருத்தவோ, அவர்களுக்கு நல்ல புத்தி வரும்படி செய்யவோ
யாராலும் முடியாது என்கின்ற பதவியை அது அடைந்து வருவதாகத் தெரியவருகின்றது. இது அந்த இலாக்காவுக்கு ஒரு கெளரவம்தான் என்றாலும் நம்மைப் பொருத்தவரை இனி நம்மால் போலீசு இலாக்காவைத் திருத்த முடியாவிட்டாலும் போலீசு இலாக்காவினால் நாமாவது திருத்துப்பாடடைந்து இனிமேல் இப்படிப்பட்ட விஷயங்கள் நம் கண்ணில் தென்படாமலும், காதில் கேட்கப்படாமலும் உள்ள நிலையை அடையவேண்டியது அவசியம் என்று கருதுகின்றோம். ஏனெனில்,
சமீப காலத்துக்குள் இரண்டு இடங்களில் போலீசு அட்டூழியம் ஏற்பட்டு விட்டது.
ஒன்று காரைக்குடியில் ஒரு நாட்டுக்குக் கோட்டை நகரத்து வாலிப ரையும் மற்றும் இரு தோழர்களையும் தெருவில் நடக்கும் போது அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்தது.
இரண்டு நீடாமங்கலத்தில் தோழர் கே. ராமையாவையும் மற்ற இரு நண்பர்களையும் தெருவில் நடக்கும் போது ஒரு நண்பரை யார் அடிக்கிறார்.
என்று ஒருவர் தலை நிமிர்ந்து பார்த்ததற்காக அடித்து துன்புறுத்தி அரஸ்ட் செய்து மூன்று நாள் தண்டித்து கொடுமைப்படுத்தியது ஆகிய காரியங்களுக்
கும் மற்றும் அவர்கள் குடிகாரன், வெறிகாரன் போலும் கீழ் மக்கள் என்ப
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
வர்கள் போலும் வைவதும் நடந்து கொள்ளுவதுமான காரியங்களைப் பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சுயமரியாதைக்காரர்கள் எந்த இடத்திலாவது இதுவரை போலீசு அல்லது நீதி நிர்வாக இலாகா உத்திரவுகளை மீறியோ அல்லது சட்டம் என்பதற்கு விரோதமான காரியங்களைச் செய்தோ இருந்தால் இவ்வித காரியங்களைப்பற்றி பேசவோ, எழுதவோ ஒருநாளும் வெளிவர மாட்டோம். அனாவசியமாய் பார்ப்பனர்கள் இடம் கூலி பெறவும் அகஸ்மாத்தாய் தங்கள். அயோக்கியத்தனமான நடவடிக்கைகளும் முட்டாள்த்தனமான நடவடிக் கைகளும். பிரசங்கத்தில் வெளியாய் விட்டதாகக் கருதிக்கொண்டும் இந்தப் படி நடந்து கொண்டால் அதன் எல்லை முழுவதையும் பார்த்து விட வேண்டும் என்றும் அந்த இலாக்காவின் யோக்கியதையை வெளிப்படுத்தி விட வேண்டும் என்பது தான் நமது கருத்து.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.04.1933.
குடி அரசு - 1933 M) 240
“ஓவதொழிலானர் நிலைமை”
நமது கவனத்தை அரசாங்கத்தாரும் வேறு ஏதாவது ஒரு வழியைக் காட்டித் திருப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும், அன்புக்கும் விரோதமில்லாமலே தான் அரசாங்கத்தார். நடந்து கொள்ளுவார்கள். அப்படிக்கில்லா விட்டால் அரசனுக்கும், அவனு டைய சிப்பந்திகளுக்கும் உலை வைக்க உடனே முதலாளி வர்க்கம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் தொழிலாளிகளுக்கு தீங்கு இழைத்துக் கொண்டிருப்பது முதலாளி வர்க்கம் தான் என்பதை மக்கள். அறியமுடியாமல் பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு நம்மை சர்க்கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள கஷ்டத்திற்கு காரணம் சர்க்கார் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்களே தவிர முதலாளிகள் என்று நீங்கள் கருதுவதில்லை. சர்க்காரால் தொழிலாளிக்கு அதிக நஷ்டமில்லை.
இத்தேசத்திற்கு வெளிநாட்டு சர்க்கார் வருமுன் தொழிலாளிகள் எல்லாரும் எந்தவிதமான தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களது சோற்றுக்கு மட்டும் கணக்குப் பார்த்து கூலி கொடுக்கப்பட்டு வந்தது. மாதம் மாதம் சாப்பாடு மட்டும்தான் போட்டு தினம் 24 மணியில் 20 மணி நேரம். வரை மாடுகளைப்போல் வேலை வாங்கிவந்தார்கள். அதிலும் இந்திய சுதேச அரசர்கள் அரசாண்ட காலத்தில் மக்களை ஆடுமாடுகளைப்போல பட்டியில டைத்து வைத்துத்தான் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். அதற்கு முன் அரசாண்ட இராமன், கிருஷ்ணன் என்பவர்களின் காலத்திலோ தொழிலாளர்.
களின் நிலைமையைக் கேட்க வேண்டியதில்லை. மனுதர்ம முறை தவறாமல் தான் வேலை வாங்கி இருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம். காளிக்கும், கருப்பனுக்கும் மனிதர்களைப் பலி கொடுப்பார்கள். அக்காலத்திலும் தொழி லாளர்கள் நிலை மிக மோசமாகவேதான் இருந்துவந்ததற்கு ஆதாரமுண்டு. அன்னியர் அரசு வேண்டாமென்றால் அதை விடக் கொடுமையான அரசு வருணாச்சிரம அரசு என்பது, ஆகவே அது சுதேசி அரசானாலும், காந்தி அரசானாலும் நமக்கு வேண்டியதில்லை. எந்த அரசாங்கம் இந்நாட்டில் ஏற்பட்டாலும் மேல் கீழ் ஜாதி முதலாளி, தொழிலாளி பிரிவு ஆகிய வேற்றுமை நிலை ஒழிக்கப்படும்வரை நாம் முட்டிக்கொள்ள வேண்டியது தான். உயிரையும் விடும்படியான கிளர்ச்சி செய்ய வேண்டியதுதான்.
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
மேனாடுகளில் அன்னிய அரசு, ராஜா அரசு ஆகியவை இல்லாத சுதேச அரசு, குடி அரசு நாடுகள் பல இருக்கின்றன. ஆயினும் அவை பேருக்குத் தான் ஜனங்கள் ஆட்சி என்பது தவிர அரசாட்சி செலுத்துவது ஆதிக்கம்
வகிப்பது எல்லாம் பணக்காரக்கூட்டம் தான். அங்கு இன்று லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளிகள் பட்டினிதான் கிடந்து வாடுகிறார்கள். உலகத்தில் குபேரநாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவின் யோக்கிய தைப் பற்றி வெளியில் சொல்லவேண்டியதில்லை. அங்குதான் வேலை யில்லாத திண்டாட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது.1/, கோடி மக்களுக்கு வேலையில்லை, பட்டினி தான் இருக்கிறது, அங்கு வேறு நாட்டான் வந்து அரசாளவில்லை. ஒரு அரசன் இருந்து அரசாள வில்லை. உள்ளூர்க்காரன்- சொந்தக்காரன்-குடிகள் தான் அரசாளுகிறான். அப்படியிருந்தும் தொழிலாளி
யின் நிலையானது ஏன் இவ்வளவு கேவலமாக வந்திருக்கிறது என்பதை கவனித்தால் காரணம் விளங்காமல் போகாது. இந்தியாவில்தான் “வெள்ளைக் காரன் அரசாளுகிறான் இதனால் வேலை இல்லை கஷ்டம் பஞ்சம்,” என்று குறை கூறப்படுகிறது. அவசர சட்டங்கள், அடக்கு முறைகள் என்று அலரப் படுகிறது. ஆனாலும் ஆங்கில அரசாட்சி யிலும் அல்லது இனி வரப்போகும் காந்தி அரசாட்சியிலும், இங்குள்ள தொழிலாளிகளுக்கு என்ன பயன் ஏற்படும். கருப்பன் அரசாண்டால் இன்னும் ஒரு 50 சங்கராச்சாரியும் ஊருக்கு
10 மடமும் 20 கோவிலும் ஏற்பட்டு இன்றும் மக்களை கொள்ளையடிக்கப் பட்டு மக்களை ஒன்றுபடவிடாமல் சாதிக்கு சாதி சட்டம்போட்டு நசுக்கு வதைத் தவிர வேறு என்ன வழிபிறக்கும்? என்பது இதுவரை சுயராஜ்யம் கேட்கும் தேசீயவாதிகள், தேசபக்தர்கள் மகாத்மாக்கள் சொல்வதிலிருந்தும், எழுதுவதிலிருந்தும் தெரியவில்லையா? ஆங்கில ஆட்சியிலேனும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதாக ஏதோ 100-க்கு 4, 2 அனு கூலங்கள் ஏற்பாடு செய்ததாக, செய்வதாக சொல்லப்படுகிறது. கொள்ளை, திருட்டு, ஜாதிமுறை இவைகள் தடுக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்கள் கையாளப்படுகிறது துவேஷமிருக்கக்கூடாது என்று சொல்லிக் கொள்ளப் படுகிறது.
ஆயினும் இப்போதுதான் சங்கராச்சாரி இங்கு தங்கப் பல்லாக்கு போட்டு மனிதன் மேல் சவாரி செய்கிறான். பார்ப்பானோ பகற்கொள்ளை'
யடிப்பது போன்று அவனுக்குத் துணையாக வருகிறான்.பாதிரிகளோ மக்கள் அறிவைக் கெடுத்து மோட்சத்திற்கு அனுப்ப உபதேசிக்கின்றனர். முல்லாக்
கள், புரோகிதர்கள் என்பவர்களின் கொடுமையிலிருந்து மக்களை மீட்க வழியைக் காணோம். காட்டுமிராண்டி தனமாகவே எல்லா மதக் காரர் களாலும் உற்சவம் பண்டிகைகள் கொண்டாடப்பட்டும் நரபலிகூட கொடுப் பதும் சரி என்று மக்கள் மனதில் பதிந்திருக்கும் எண்ணத்தையும் மாற்றும் முறையில் எதுவும் கவலை எடுத்துக் கொள்ளக்காணோம்.
ஆனால் சுயராஜ்யம் என்றும் மதம் என்றும் அதுவும் மதஒழுக்கம் வருணாச்சிரமம், தவறாமல் சுயராஜ்யம் வேண்டும் என்றும் கேட்கின்றார்கள்
குடி அரசு - 1933 M) 242
அவர்களது கோரிக்கைப்படி சுயராஜ்யம் வந்துவிட்டால் அதில் தொழிலாளர். கள்நிலைமை தீண்டப்படாதார் நிலைமை, தாழ்த்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் நிலைமை என்ன ஆகும் என்று சொல்லவும் வேண்டுமோ?
எந்த ராஜா எந்த தேசத்திலானாலும் இந்தியாவிலானாலும் ஆண்டா
லும் இங்கு பாடுபடுபவன் நாளெல்லாம் பாடுபட்டு மடியவும் சோம்பேறி இருந்து தின்கவும் தான் இருக்கிறதே ஒழிய வேறு வழி என்னவென்று கேட்டால் உடனே பதில் சொல்லாது மழுப்பிவிட்டு எல்லாம் சுயராஜ்ஜியம். வந்தால் சரியாகப் போய்விடும் என்பான். சுயராஜ்யத்தில் எப்படி சரியாகப் போய்விடும் என்று கேட்டால் அரசாங்கம் செய்வது தான் தப்பு இந்நாட்டில் அன்னிய அரசாங்கம் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம் என்று அரசாங்கத்தை ஒழிக்க வரும்படி தூண்டுவான். ஆனால் அரசாங்கத்தை எதிர்க்கும்படி காட்டிவிட்டு அவன் மட்டும் ஜட்ஜியாகவோ, வக்கீலாகவோ மாதம் 4000, 5000 சம்பளம் வாங்கிக்கொண்டு தன் பிள்ளை குட்டி பந்துக்களுக்கும் அரசாங்கத்திலே அதிகாரம் வாங்கிக் கொடுத்து தைரியம் ஏற்படுத்திக் கொள்வான். அன்னிய பாஷை விரோதம், அடிமைப்புத்தியை வளர்க்கும் என்றும் இனி பள்ளிக்கூடங்களுக்கு செல்லாதீர்கள் என்றும் உங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் தமது குழந்தை களை மட்டும் எம். ஏ., பி.ஏ., படிக்கவைத்து மேல் படிப்புக்குச் சீமைக்கு அனுப்பி அங்கிருந்தே உத்தியோகத்தோடு வந்து சேர வழிசெய்து கொள்வான். தொழிலாளியின் மக்கள் அவன் சொல்வதையே சரி என நம்பி நாளெல்லாம் பாடுபட்டு முட்டாள்களாக, முதுகெலும்பு ஒடிய வேலை செய்து மீதமிருக்கும் 2, 1 ரூபாயும் சங்கராச்சாரிக்கும், மாரியம்மனுக்கும் கொட்டி விட்டு மோட்சத்திற்கு போக வழி கேட்பார்கள். தனது செல்வாக்கு இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருப்பதற்கும் தனது சூழ்ச்சிகள் மறைக்கப்படுவதற்கும் தொழிலாளர்களின் விழிப்பை மடக்கி விடுவதற்கும்
தான் முதலாளி அன்னிய அரசாங்கத்தை சுட்டிக் காட்டுகிறான். முதலாளி களின் கூலிகளில் தான் சுயராஜியம் பேசுகிறார்கள். தொழிலாளித்துவம் இங்கு நிலைத்திருப்பதற்குக் காரணம் இதுதான் என்று அவனுக்கு நன்றாகத்
தெரியும்.
வெளிநாட்டிலிருந்து துணி வந்து இந்தியாவில் விற்றாலும் இந்தியா விலிருந்து ஏற்றுமதி செய்து வெளிநாட்டில் விற்றாலும் லாபம் யாருக்கு கொள்ளை லாபம் சம்பாதிப்பது முதலாளி கூட்டம் தானே.தொழிலாளி அவன் தேவைக்குத் தகுந்ததைச் செய்து கொடுக்கவேண்டியது அன்றி இவன் அடையும் ஊதியம் ஏதாவது உண்டா? மத்தியிலிருக்கும் தரகனுக்கு கிடைக்கும் லாபம்கூட தொழிலாளி - உற்பத்தி செய்கிறவன் - நெசவுக்காரன் ஆகியவனுக்குக் கிடைப்பது இல்லை. தொடரும்?
குறிப்பு07ல3குடிஅரசு -அனுப்பபாளையம் சொற்பொழிவு தொடர்ச்சி
குடி அரசு - சொற்பொழிவு - 16.04.1933
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
ரஷ்ய நீதி
ரஷ்ய தேச ஆட்சியின் கொள்கையை உலகம் முழுவதுமே வெருக் கப்பட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு பிரசாரம் செய்து வருவதாய் காணப்பட்டு வருகின்றது. எது போலவென்றால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் பெரிதும் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் இருந்ததால் பார்ப்பனர்களின் செல்வாக்கால் அது ஒரு காலத்தில் எப்படி எல்லா மக்களா
லும் வெறுக்கப்பட வேண்டுமென்று பிரசாரம் செய்வதாய் காணப்பட்டதோ அதுபோல்.
ரஷியா ஆட்சிக் கொள்கையானது சுருக்கமாகச் சொல்லப்பட வேண்டுமானால் அது உலக பணக்காரர்களுக்கு விஷம் போன்றதும் ஏழை மக்களுக்கு “சஞ்சீவி” போன்றதுமாகும். இன்றைய உலகம் பணக்காரர்கள் கையில் சிக்குண்டு, பணக்காரர்களுக்கு அடிமைப்பட்டு, பணக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால் பணக்காரர்கள் 100க்கு 10- பெயர்களே. யாயினும், அவர்களே உலக மக்களாகக் காணப்படுவதும், ஏழை மக்கள் 100க்கு 90-பேர்களாயினும் அப்படி ஒரு கூட்டம் இருப்பதாக உலகுக்கு ஞாபகத்துக்கே வரமுடியாமலும் இருந்து வருகின்றது.
ஆனால் ரஷ்யாவிலோ அப்படிக்கில்லாமல் பணக்கார ஆதிக்கம் ஒழிந்து ஏழைமக்கள் பணக்காரர்கள் கையினின்று விடுபட்டு சுதந்திரம்
பெற்று ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என்கின்ற வேற்றுமை இல்லாமல் எல்லோரும் ஒரே இனம் (அதாவது மனித இனம்) என்கின்ற தலைப்பில் எல்லோரும் ஓர் குடும்ப மக்களாய் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தநிலை பணக்காரர்கள் புரோகிதர்கள் ஆதிக்கமுள்ள நாடுகளுக்கு எதிரான நிலையானதினால் பணக்கார உலகம் ரஷியாவை தூற்றவும், பழிக்கவும், வெறுக்கவும், விஷமப் பிரசாரம் செய்யவும் ஆன காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதில் அதிசயமொன்றுமில்லை. இந்த நான்கைந்து வருடகாலமாக ரஷியாவைப் பற்றி பலவாறு அதாவது ரஷிய மக்களுக்கு போதிய ஆகாரமில்லை யென்றும், கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடி மடிகின்றார்கள் என்றும், கொடுங்கோன்மை முறையால் ஆளப்பட்டு வருகின்றதென்றும், அந்நாட்டு ஆட்சியில் நீதி என்பதே கிடையாது என்றும்,
குடி அரசு - 1933 M) 244
மற்றும் பலவிதமாக அதைத் தூற்றிப் பழித்து, இழித்து பிரசாரங்கள். செய்யப்பட்டு வந்தன. அங்குள்ள நன்மைகள், மேன்மைகள் எதுவாயினும் அவற்றை பரிசுத்தமாய் வடிகட்டினாற்போல மறைத்தும் வந்தன. எப்படி இருந்தும், எவ்வளவு விஷமப் பிரசாரம் செய்தும், சூரிய வெளிச்சத்தை உள்ளங்கையால் மறைக்க முடியாதுபோல ரஷியா நிலைமை இப்போது உலக மக்களுக்கு வெளியாகின்றது. வரவர ரஷிய சேதிகளின் உண்மையை வெளிப்படுத்தும் விஷயத்தில் ஜனங்களுக்குள்ள பயம் நீங்கியும் வருகின்றது. அது மாத்திரமல்லாமல் இந்த 4,5 மாத காலமாய் ரஷிய சேதிகளை வெளிப் படுத்துவது ஒரு நாகரீகமாயும், ரஷிய சேதிகளைப் பற்றிப் பேசுவது ஒரு சத்கால க்ஷேபமாகவும் ஏற்பட்டுவிட்டது. இதன் பயனாய் இப்போது ரஷிய சேதிகள் இல்லாத பத்திரிகைகளும், ரஷியா பிரஸ்தாபமில்லாத பிரசங்கங் களும் மிகமிக அருமையாகப் போய்விட்டது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆகவே ரஷிய பூச்சாண்டி திரை நீங்கப்பட்டு வெட்ட வெளிச்சத்தில் வெள்ளைக் கண்ணாடி மூலம் பார்க்கக்கூடியதாக இருந்து
வருகின்றது.
சமீப காலத்தில் ரஷியாவைப் பற்றி ஒரு பரபரப்பு இருந்து வந்தது நேயர்களுக்கு தெரிந்திருக்குமென்றே எண்ணுகின்றோம்.
அதாவது ரஷிய ஆட்சியானது சில பிரிட்டிஷ் பிரஜைகளின் மீது
குற்றம் சாட்டி சிறை பிடித்து வைத்திருப்பதாயும், அதுபழிவாங்கும் எண்ணத் துடன் கற்பனையாய் செய்யப்பட்டிருப்பதாயும், ஆனதினால் ரஷ்யாவுடன் பிரிட்டிஷ் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாதென்றும், வியாபாரத் துறையில் ரஷிய வியாபாரத்தை நிறுத்தி அந்தச் சரக்கு பிரிட் டிஷுக்குள் வராமல் தடுத்துவிட வேண்டுமென்று பல புதிய சட்டங்களையும் செய்தும் அதன் மூலம் ரஷிய வியாபாரத்தை பகிஷ்கரிக்கவும் முயற்சித்து வந்தது யாவருமறிவார்கள்.
விஷயம் என்னவென்றால் ரஷியாவில் இயந்திரத் தொழில் முறை
விருத்திக்கு அனுகூலமான மின்சார விசை நிலையங்கள் கொஞ்சகாலமாக ஒன்றன்பின் ஒன்றாய் பழுது ஆய்க்கொண்டு வந்ததுடன் அதனால் ரஷியத் தொழில் முறை கெட்டு பெரிய நஷ்டம் ஏற்பட்டும் வந்தது. ரஷ்ய ஆட்சி நிர்வாகிகள் இதைப்பற்றி சந்தேகப்பட்டு அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றதில் சில பிரிட்டிஷ் கம்பெனிக்காரர்களின் நன்மைக்காக ரஷ்யா விலுள்ள சில பிரிட்டிஷ் இஞ்சினீர்கள் சில ரஷ்யர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களைக் கைவசப்படுத்தி அதன்மூலம் அங்குள்ள மின்சார நிலையங் களுக்குக் கெடுதியை விளைவித்து வந்தார்கள் என்பதாகக் கண்டு பிடிக்கப்
பட்டு அந்த பிரிட்டிஷ் இஞ்சினீயர்களையும் அதற்கு உளவாயிருந்த ரஷ்ய சதிகாரர்களையும் கண்டுபிடித்துச் சிறை செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த விஷயத்தை பிரிட்டிஷ்
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
முதலாளி வர்க்கம் அறிந்து இதனால் தங்களுக்குப் பெரிய உலகப்பழியும் அவமானமும் வந்து விட்டதே என்று கருதி இச்செய்கைகளை மறைக்க ஆசைப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ரஷ்யரை மிரட்டிப் பார்த்த தல்லாமல் ரஷ்யாவின் மீது பழியும் சுமத்தினார்கள்.
ஆனால் ரஷ்யர்கள் இவை எதற்கும் பயப்படாமல் தைரியமாய் அது விஷயத்தில் தாங்கள் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து உலகத்தின் முன்பு தங்களுடைய திறனையும், தைரியத்தையும் நியாயம் வழங்கும் முறையையும் காட்டிக்கொண்டார்கள். எப்படி என்றால் இந்த சதிக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட 18- குற்றவாளிகளில் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6-பெயர்கள். (இவர்கள் ஆறு பேர்களும் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களாவார்கள். மீதி ரஷிய குற்றவாளிகள் 12 பேர்கள். இந்த பதினெட்டு பெயர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்திவெளிப்படையாய் எதிரிகளுக்கு தகுந்த வக்கீல்களை வைத்து வாதாட சந்தர்ப்பம் கொடுத்து அந்த வக்கீல்களுக்கு யோசனை சொல்லவும் விசார ணையின் யோக்கியதையை கவனிக்கவும் தக்க வண்ணம் பிரிட்டிஷ் பிரதி நிதிகள் வந்து கோர்ட்டில் ஆஜராக சம்மதித்தும் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த விசாரணையால் பிரிட்டிஷ் இஞ்சினீயர்களான குற்றவாளி
கள் சிலர் தங்கள் குற்றங்களை தங்கள் வாய் மூலமாக ஒப்புக்கொள்ளவும் நேர்ந்து விட்டதுடன் சாக்ஷிகள் மூலம் குற்றங்கள் தாராளமாய் ௬ஜுவும் ஆகிவிட்டன.
இதன் மீது ரஷ்ய நீதிபதியானவர் பிரிட்டிஷ் குற்றவாளிகள் 6 பேர்களில் ஒருவருக்கு விடுதலையும் இருவருக்கு முறையே 3 வருஷம் 2 வருஷம் வீதம் தண்டனையும், மூவருக்கு தேசப் பிரஷ்டமும் செய்துவிட்டு, ரஷ்யக் குற்றவாளிகள் பன்னிருவர்களில் ஒருவரை விடுதலை செய்து விட்டு பாக்கி பேர்களை 10 வருஷம் வருஷம் 2 வருஷம் 3வருஷம் வீதமும் இதில் ஒரு பெண்ணும் இருந்ததால் அவருக்கு 1/, வருஷமும் தண்டனை விதித்தார்கள். அப்பீலுக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
இதிலிருந்து ரஷ்ய ஆட்சி நீதி வழங்கும் முறையை ஒருவாறு உணரலாம். இந்தக் குற்றங்களை சாதாரண குற்றம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. இதன் உள் எண்ணமும் இதனால் ஏற்படக்கூடிய நஷ்டமும் எவ்வளவு கடுமையானது என்பதை நாம் விவரிக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட குற்றம் ரஷ்யர்கள் பிரிட்டிஷுக்குள் வந்து செய்திருந்தால் அது எப்படிப் பாவிக்கப்பட்டு எவ்வித தண்டனை அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவரவர்கள் சொந்த முறையில் யோசித்துப் பார்த்தால் தெரிய
வரும். அப்படிப்பட்ட இந்த கடுமையான சதிக்குற்றத்திற்கு இருவருக்கு 2- வருஷம் 3-வருஷம் தண்டனையும் மற்ற மூவருக்கு தங்கள் நாட்டை விட்டு அவர்களது சொந்த நாட்டுக்குப் போய் விடும்படியும் தீர்ப்புச் செய்தி
ருக்கிறார்கள் என்றால் இதற்கு மேலான காருண்யமும், அருளும் உள்ள நீதி இந்த உலகத்தில் எங்காவது கிடைக்கமுடியுமா? என்பதை யோசித்தால் ரஷ்ய
குடி அரசு - 1933 ) 246
நீதியின் பெருமை விளங்கும். இந்த நீதி “ராம” ராஜ்யத்திலோ அல்லது சுயாட்சி தேசத்திலோ கூட எதிர்பார்க்க முடியுமா என்பதும் யோசிக்கத்
தக்கதாகும்.
இது இப்படியிருக்க இதன் உண்மையையும் யோக்கியதையும் பார்த்து பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்கின்ற யோசனை சிறிதுமின்றி வேண்டு மென்றே அவசரப்பட்டு ரஷியர்கள் மீது உலக மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி தூற்றப் பழித்து சில பகிஷ்கார முறைகளை கையாடினதும் பிரிட்டிஷாரின் புத்திசாலித்தனத்தையோ, ராஜ தந்திரமுறையையோ நல்ல எண்ணத்தையோ காட்டுவதாக இல்லாமல் போனது குறித்து யாரும் வருந்தாமல் இருக்க
முடியாது.
எப்படியிருந்த போதிலும் இந்த தடபுடல் விஷமப் பிரசாரத்தின் பயனாய் ரஷியாவுக்கு நன்மையே ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். எப்படியெனில் ரஷியாவின் நீதியை உலகம் அறிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பதேயாகும்.
நிற்க ரஷியாவின் மீது எப்படியாவது ஒரு சமயத்தில் ஏதாவது ஒரு சாக்கை வைத்து “ நீ இல்லாவிட்டாலும் உன் தந்தையாவது செய்திருப்பான்” என்கின்ற ஆட்டுக்குட்டி-ஓநாய்க் கதையைப் போல்) ஒரு குற்றம் சுமத்தி அதனிடம் வம்புச் சண்டைக்குப் போயாவது ரஷியாவில் இன்று நடைபெறும் பொதுவுடமை ஆட்சியை ஏழை மக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் அனு கூலமான ஆட்சியை ஒழித்து மற்ற நாடுகளில் நடைபெறுவது போன்ற பணக் கார ஆட்சியை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் இந்த உலகில் இன்று பிரிட்டிஷாருக்கு மாத்திரமல்லாமல் எல்லா தேசத்து ஆட்சிக்காரர்
களிடமும் இருந்து வருகின்றது. அதற்கு ஆங்காங்குள்ள முதலாளிகளாலும், பாதிரி, புரோகிதர்களாலும் தண்ணீர்விட்டு பாதுகாத்தும் வரப்படுகின்றது. ஆனாலும் ஏழைமக்கள் சரீரத்தில் பாடுபட்டு தொழில் செய்து வாழும் மக்கள் கண்விழித்து சுயமரியாதை உணர்ச்சி பெற்று விட்டதால் முதலாளி ஆட்சி
யின் எண்ணங்கள் கருகி வாடி வருகின்றன.
அன்றியும் ரஷிய ஆட்சி “முதலாளித்துவ ஆட்சிகளின் தயவி னாலோ அல்லது கருணையினாலோ நாம் வாழலாம்” என்கின்ற எண்ணத் தின்மீது ஒரு சிடுக்கை நேரம்கூட இல்லை. ஆனால் அதற்கு பதிலாக இந்த உலக முதலாளிகள் மாத்திரமல்லாமல் இன்னும் “செவ்வாய் மண்டல” முதலாளிகளின் எதிர்ப்பையும், அவர்களது சக்தியையும், சூழ்ச்சிகளையும்,
நன்றாய் அறிந்து எந்த நேரமும் எதிர்பார்த்து நின்று கொண்டு இருக்கின்றது. அது எப்படிப்பட்ட யுத்தத்தையும் வரவேற்று ஒரு கை பார்த்து விட துணிந்து இருப்பதுடன் உலக முழுமைக்கும் தன்னுடைய ஆட்சிக் கொள்கையை உகந்தளித்து உதவி புரியக் காத்தும் இருக்கின்றது.
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
ஆனால் ஏழை மக்களுக்கும் கஷ்டப்பட்டு பாடுபடும் தொழிலாளி
மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உண்மையான சுயமரியாதை உணர்ச்சி உண்டாக்க வேண்டியதுதான் இப்பொழுது பாக்கியிருக்கின்றது.
குடி அரசு - தலையங்கம் - 23.04.1933
குடி அரசு - 1933 M) 248
ஒண்பதாவதாண்டு
நமது “குடி அரசு”க்கு எட்டாண்டு நிறைந்து ஒன்பதாமாண்டு துவக்கமாகின்றது என்னும் விஷயத்தை அறியும் வாசகர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்க மாட்டார்கள்.
குடி அரசு தோன்றும் போது இன்னாட்டில் எல்லாத் துறையிலும் செல்வாக்குப் பெற்று, சகல விதத்தும் ஆதிக்கம் அடைந்து, மக்களை: வஞ்சித்து அழுத்தி வைத்திருந்த பார்ப்பனர்களுக்கு விரோதமாகவே காணப்பட்டது. அதன் பயனாய் குடி அரசு எங்கு பார்த்தாலும் “பார்ப்பனத் துவேஷமயமாக”வே விளங்கி வகுப்புத் துவேஷியாயிற்று. இதன் பயனாய்
சர்வ வல்லமையுடைய பார்ப்பன சமூகத்தினுடைவவும், பார்ப்பன பத்திரிகை: களினுடையவும், பார்ப்பன அதிகாரிகளினுடையவும் சர்வ சக்தி கொண்ட எதிர்ப்புகளை சமாளித்து முதல் ஆண்டைக்கழித்து இரண்டாம் ஆண்டில்
பிரவேசித்தது.
இரண்டாமாண்டில் அப்பார்ப்பனர்களின் “வஜ்ஜிராயுத” மாய் இருந்த “காங்கிரசிற்கு விரோதமாய்” த் தோன்றி அதனோடு வாதாட வேண்டியதாகி
குடி அரசு தேசத்துரோகியாக விளங்கி தேசிய வாதிகளின் எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் ஈடு கொடுத்து வந்தது. இந்த சமயத்தில் குடி அரசு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய வேலை மாத்திரம் அல்லாமல் பார்ப்பனர். களாலும், அவர்களது ஆயுதங்களான காங்கிரசினாலும் முறியடிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கும் உழைக்க வேண்டியதாகி அதன் பயனாய் குடிஅரசு “சர்க்கார் தாசனாக விளங்கிற்று. எப்படியோ ஒரு விதத்தில் காங்கிரசினுடையவும் தேசபக்தர்களுடையவும் எதிர்ப்பு களையும், தொல்லைகளையும் சமாளித்து இரண்டாம் வருஷத்தைக்
கடந்து மூன்றாம் வருஷத்தில் பிரவேசித்து விட்டது.
மூன்றாம் வருஷமும் குடிஅரசு மேற்கண்ட மகத்தான எதிர்ப்புகளில்
சிக்கி சண்ட மாருதத்தில் சிக்கிய குப்பை கூளம் போல் பறக்கடிக்கப்பட வேண்டி இருந்தாலும் அவ்வெதிர்ப்புகளைச் சிறிதும் லக்ஷியம் செய்யாமல் அதிலிருந்து மற்றுமோரடிமுன்னேரிற்று என்று சொல்லும்படியாக பார்ப்பன அஸ்திவாரங்களான சாஸ்திரம், புராணம், இதிகாசம் என்று சொல்லும்படியான
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மகத்தான செல்வாக்கும், மதிப்பும், மரியாதையும் பெற்றிருந்த ஆதாரங்க
ளுக்கும் விரோதமாய் தோன்றி குடி அரசு எங்கு பார்த்தாலும் “இந்து மதத் துவேஷியாய்” விளங்கி பார்ப்பனர்கள், காங்கிரசுக்காரர்கள், ஆகியவர் களுடைய எதிர்ப்புக்கு மாத்திரமல்லாமல் இந்து சமூக பண்டிதர்கள் பாமர மக்கள் என்பவர்கள் எல்லோருடைய எதிர்ப்புக்கும், தொல்லைகளுக்கும் ஆளாகி அதிலிருந்தும் மீண்டு மூன்றாம் ஆண்டைக் கடந்து நான்காம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.
நான்காம் ஆண்டில் குடி அரசு இந்து மதம் என்னும் பழம் பெரும் பூதத்தோடு வெளிப்படையாய் போர் புரிய ஏற்பட்டது மாத்திரமல்லாமல் பார்ப்பனீயத்துக்கும், காங்கிரசுக்கும், இந்து மதத்துக்கும் அபயஸ்தம் கொடுத்து “உலகம் போற்றும் மகாத்மா” என்று விளங்கிவந்த தோழர் காந்தியாருடன் போராடவும் அவரது “சக்ராயுதம்” ஆகிய கதருடன் போராட வுமான ஒரு கஷ்டத்தில் சிக்கி இந்தியா முழுவதுமுள்ள இந்திய மக்கள் எல்லோருடையவும் எதிர்ப்புக்கும் ஆளாகி ஆலையில் சிக்கிய கரும்பு போல் நசுக்குற்று சத்து வேறு சக்கை வேறாகப் போய் விட வேண்டியநிலை மையை சமாளித்து நான்காம் ஆண்டைக் கடந்து ஐந்தாம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.
ஐந்தாம் ஆண்டில் குடிஅரசு பார்ப்பனர், காங்கிரஸ்,மத ஆதாரங்கள், தோழர் “மகாத்மா” காந்தி, “கதர்” என்பவைகளின் யோக்கியதைகளை வெளியாக்கி அவதிப்பட்டு அது சம்பந்தமான எதிர்ப்புகளை சமாளிக்கின்ற கஷ்டத்தோடு இல்லாமல் சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் கொண்டது என்று சொல்லப்படும் “கடவுள்” உடனேயும் போராடவேண்டிய அளவுக்கு “பச்சை நாஸ்திகமாகி” உலகிலுள்ள எல்லா மக்களுடைய வெறுப்பும், அதிருப்தியும், எதிர்ப்பும் சமாளிக்க வேண்டியதாகி ஓரளவு அதிலிருந்தும் சமாளித்து ஐந்தாம் ஆண்டைக் கடந்து ஆறாவது ஆண்டிற்குள் பிரவேசித்து விட்டது.
ஆறாவது ஆண்டில் குடி அரசுக்கு சற்று பொது ஜன எதிர்ப்பு பல
மாகத் தோன்றியதாக சிலர் நினைத்தவுடன் குடிஅரசு குன்றி விடுமோ என்று கருதிய சிலர் அதாவது குடி அரசின் பெயரைச் சொல்லிக்கொண்டும் சுயமரியாதை இயக்கத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டும் வாழ்க்கையை நடத்தத் தீர்மானித்திருந்த சில “சுயமரியாதை நண்பர்களின்” ஆசைக்கு பங்கமேற் பட்டதால் அக்கூட்டத்தினர்களின் எதிர்ப்புக்கும் ஆளாகியதோடு குடிஅரசைஆதரிப்பவர்களாக வேஷம்போட்டுபயனடைந்து கொண்டிருந்த
சில “பெரிய மனிதர்கள்” (அதாவது ஜஸ்டிஸ் கட்சியார்கள்! என்பவர் களுடைய அதிர்ப்த்திக்கும், அலட்சியத்திற்கும் ஆளாகவேண்டி இருந்தது. இதை சமாளிப்பது ஒரு முக்கிய காரியமாய் இருந்தாலும், முற்பட்ட புதிய எதிர்ப்புகளையும் அது அடையத் தவரவில்லை. அதுமாத்திரமல்ல, ஆறாவது ஆண்டில் “எல்லா மதங்களுக்கும் விரோதி” என்ற பெயரையும் பெற்றது.
குடி அரசு - 1933 M) 250
எப்படி இருந்தும் இவையனைத்திற்கும் தலைகொடுத்து ஆறாவதாண்டைக் கடந்து ஏழாம் ஆண்டில் பிரவேசித்து விட்டது.
ஏழாம் ஆண்டோ மிக மிக நெருக்கடியான ஆண்டாய் கழிய வேண்டியதாயிற்று. “சகல மதங்களும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று வெளிப்படையாய் தீர்மானம் போடப்பட்டுவிட்டது. ஏழை பணக்காரத் தன்மை அழிக்கப்படவேண்டுமென்றும் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. வாலிபர்களே.
கும்பல் கும்பலாய் வந்து கூடினார்கள். கொள்கைகள் “பெரியோர்” களால் பரிகசிக்கத்தக்கதாய்விட்டது. பழிப்புகள் பலத்துவிட்டன. இவைகள் எல்லாம்
சுலபமாய் சமாளிக்கக் கூடியதாய் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திராதி பருக்கு உடல் நிலை குன்றிவிட்டது. ஓய்வெடுக்கவேண்டிய அவசியமேற் பட்டுவிட்டது. கடைசியாய் பத்திராதிபர் பொறுப்பை தோழர் சிதம்பரனார். வசம் ஒப்படைத்துவிட்டு, பத்திராதிபர் மேல்நாட்டுக்கு சென்றுவிட்டார். இந்தச்சமயத்தில் இவ்வளவு எதிர்ப்பும், உள் கலகமும். பொருளாதார நெருக்கடியும் இருந்தும் ஒன்றையும் சட்டை செய்யாது தென்னாட்டில் இயக் கத்தை சந்து பொந்துகளிலும், கிராமங்களிலும் பரவும்படி செய்துவிட்டதுடன் தாராளமாய் ஏழாவது ஆண்டைக்கடந்து எட்டாவது ஆண்டில் நுழைந்து விட்டது.
எட்டாவது ஆண்டு சமதர்ம ஆண்டாய் திகழ்ந்தது. பத்திராதிபர் மேனாட்டு சுற்றுப்பிரயாணத்தில் இருந்து திரும்பியதும் வழக்கம்போல்
எதிர்ப்புகள் ஒரு புறமிருந்தாலும், புதிய எதிரிகள் பலர் தோன்றி இருந்தாலும், சர்க்கார் பயம் நிமிஷத்துக்கு நிமிஷம் இருந்தாலும் குடி அரசு எட்டாவது ஆண்டில் புரட்சி கோலம் கொண்டுவிட்டது. வாசகர்களுக்கு சமதர்மப் பைத்தியத்தை ஊட்டி விட்டது. அதன் நோக்கத்தையும், திட்டத்தையும் உறுதியுடன் வெளிப்படுத்திவிட்டது. அதன் பயனாய் உண்மை தோழர்களை
வடிகட்டி வருகின்றது.
இந்த நிலையில் எட்டாம் ஆண்டைக்கடந்து 9-ம் ஆண்டில் பிரவேசிக் கின்றது. ஆரம்பம் வெகு உக்கிரமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டிய பொருப்புகள் அதன் தலைமீது விழுந்து கிடக்கின்றது என்பதை இந்து
முஸ்லீம் கிறிஸ்துவ வருணாச்சிரமக் காரர்களும், சனாதனதர்மிகளும் உருமும் உருமலைப்பார்த்தாலே தெரிய வரும்.அவர்கள் தங்கள் குற்றத்தைச்
சிறிதும் கவனியாமல் தங்கள் சனாதன தர்மங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை
குடி அரசு போன்ற முயற்சிகளைக் குறைகூறி பாமர மக்களுக்கு போதை உண்டாக்கி உசுப்படுத்தி விடுவதினாலும் ஆபத்தினின்று தப்பித்துக் கொள்ள லாம் என்று மனப்பால் குடித்துவருகிறார்கள். இது அவர்களுக்கு ஏமாற்றத் தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
பாமர மக்கள் என்றும் மூடர்களாகவே இருந்துகொண்டு மதப் பைத்தியத்தால் கடவுள் உணர்ச்சியால் பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறி களுக்கு உழைத்துப் போட்டுக்கொண்டே இருப்பவர்கள் என்று நினைப்பது பெரியதொரு முட்டாள்தனமேயாகும். எல்லா “புண்ணிய மதத்திலும், எல்லா புண்ணிய வேதத்தை-மார்க்கத்தை ஒப்புக்கொண்டவர்களிலும் ஏழையும், பாடுபட்டு பட்டினி கிடப்பவனும், இழிதொழில் செய்பவனும் இருந்து கொண்டுதான் இருக்கிறான்.
பணக்காரனும் சோம்பேரியும் பாடுபடாமல் மேன்மையாய் மதிக்கப்
படுபவனும் இருந்துகொண்டுதான் இருக்கிறான். இந்தப்புரட்டை ஒழிக்க எந்த சத்தியவேதத்தாலும், புண்ணிய மார்க்கத்தாலும் முடியவில்லை. அப்படி யானால் பின்னை எதற்காக இந்த மதங்கள் இருக்க வேண்டும்? இனியும் எய்த்துப்பிழைக்கவா என்பதை யோசிக்கும்படி வேண்டுகிறோம்.
சமீப காலத்தில் இரண்டுமாத காலமாய் சிறப்பாய் ஒரு மாத காலமாய் கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரிகளின் அட்டகாசம் தலைகால் தெரியாமல் தாண்டவமாடுகின்றது. வியாதியின் பயனாய் ஏற்பட்ட ஜன்னி சேஷ்டைக்கு சற்று பலம் அதிகமாக இருக்கும். ஜன்னி நின்றவுடன் உள்ள பலமும் போய் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்க வேண்டியதாகும். அதுபோலவே சமீபத்தில் அழிந்து மறையப் போகும் கத்தோலிக்க மதம் சுயமரியாதை இயக் கத்தை அழித்துவிட வேண்டுமென்று கூட்டம் கூடி தீர்மானித்து இந்த 10 நாளாய் மதிப்புக்குறிய “மெயில்” பத்திரிகையில் பக்கம் பக்கமாய் கண்டண வியாசங்களும் அதற்கு ஏற்ற தலையங்கங்களும் வந்த வண்ணமாயிருக் கின்றன.
கத்தோலிக்க மதம் இந்த காரியங்கள் செய்வது நமக்கு சிரிப்பை உண்டாக்குகின்றதே தவிர சிறிதுகூட அதை ஒரு லட்சியம் செய்யவேண்டிய காரியம் என்றே நமக்குத் தோன்றவில்லை.
இன்றைய நிலையில் உலகில் உள்ள சூட்சி மதங்களில் இந்து மதத் தைவிட கத்தோலிக்க மதம் ஒன்றே தலைசிறந்த மதம் என்றே கருத வேண்டியிருக்கின்றது. மத சம்மந்தமான காரியங்கள் ஒருபுரம் இந்து மதத் தோடு நீ சிறந்தவனா, நான் சிறந்தவனா என்று போட்டி போடுவதா யிருந்தாலும் அதன் அரசியல் சூட்சிக்கு எதுவும் நிகரில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனெனில் இந்தியாவில் கிறிஸ்துமதத்திற்கு, ஆக்கமும் அஸ்திவார முமான இடம் தென்னிந்தியாவாகும். தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்களின் பெருக்குக்கு கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களேயாகும்.
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பகுதிக்கு மேற்பட்ட ஜன சமூகம் தாழ்த்தப் பட்ட கிறிஸ்தவர்கள். இந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுடைய
குடி அரசு - 1933 0) 252
எண்ணிக்கையை சர்க்காருக்கு எடுத்துக்காட்டி அதற்காக அந்த விகிதாச்சாரம் கிராண்டு தொகை, ஓட்டர் தொகை, உத்தியோகத்தொகை, ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர் தொகை, சட்டசபை அங்கத்தினர் தொகை, ஆகியவைகளை அதிகமாகப் பெருகின்றார்கள். இப்படிப்பட்ட ஸ்தல ஸ்தாபனங்கள் ஏதாவது ஒன்று இந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அடையமுடிகின்றதா என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது. மதத்தின் பேரால் செய்யப்படும் இழிவான மோசம் என்பதற்கு இதைவிட வேறு எதையாவது உதாரணம் காட்டமுடியுமா என்று கேட்கின்றோம்.
மதம் ஏழை மக்களை - பாமர மக்களை வஞ்சிக்க - மோசம்செய்ய - சதிசெய்ய ஏற்பட்டது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இந்து மதத்திலாவது சுயமரியாதை இயக்கத்தின் “நாஸ்திகத் தினாலும்” “மதத்துரோகத்தினாலும்” “வகுப்புத் துவேஷத்தினாலும்”
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு அளவுக்காவது எல்லாவற்றிலும் பிரதிநிதித் துவம் ஏற்பட்டு விட்டது. இதற்குக்காரணம் என்னவென்று பார்த்தால் “இந்து ஆதித்திராவிட மக்கள் மதத்தை விட்டு வெளியே போய்விடத் துணிந்ததும்
சிலர் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியது, சிலர் பச்சை நாஸ்திகர்கள் ஆன துமே தவிர வேறில்லை. அதுபோலவே ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் என்பவர்களும் தங்கள் விடுதலைக்கு, சுதந்திரத்துக்கு, சுயமரியாதை பெறுவதற்கு மதத்தை விட்டு வெளியாகி தான் தீருவார்கள். யார் சொன்னா
லும் இனி அது தடைப்படப் போவதில்லை என்பதே நமது அபிப்பிராயம். கத்தோலிக்க பாதிரிகள் சட்டசபைத் தேர்தலில் யாருக்கு ஓட்டு வாங்கி கொடுக்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் அவர்களுடைய யோக்கி யதை விளங்காமல் போகாது, கத்தோலிக்க ஆதிதிராவிடர்கள் எப்போது உத்தியோகம் பெறுவது? எப்போது சட்டசபை அங்கத்தினராவது? எப்போது மந்திரியாவது இதற்குத்தக்க சமாதானமான பதில் நடுநிலையிலிருந்து செல்லட்டும் என்று தான் கேட்கின்றோம். இந்து ஆதிதிராவிடர்கள் பலபேர். பி.ஏ. பி.எல். ஆகிபலபேர் சட்டசபை அங்கத்தினர்கள் ஆகி,பல பேர் ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்கள் ஆனதோடல்லாமல் நாளைக்கு அவர்கள் மந்திரி களும் ஆகப்போகின்றார்கள் என்று பந்தயம் கூற தயாராய் இருக்கிறோம்.
கத்தோலிக்க பாதிரிகள் சர்க்கார் தங்கள் கையில் இருக்கின்றதென்ற ஆணவத்தால் வண்டி வண்டியான பொய்யும் புழுகும் கூறி உங்களுக்கு அதை செய்கின்றோம், இதை செய்கிறோம் என்று வாயடி அடித்து பல லட்சக் கணக்கான மக்களை தங்கள் மதத்திற்கு இழுத்து அதன் பேரால் சீமையில் இருந்து சில பாதிரிகள் இந்தியாவுக்கு வந்து ஐ.சி.எஸ். வெள்ளைக்காரர்கள். ஒரு கூட்டம் பிழைக்க வழித்தேடிக் கொண்டதல்லாமல் இவர்கள் செய்த காரியம் என்ன என்று தான் மறுபடியும் கேட்கின்றோம். நமது ஒன்பதாம் ஆண்டு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியை கத்தோலிக்க பாதிரிகளுக்கு நோட்டீஸ் கொடுக்கவே தெரிவித்துக் கொள்ளுகிறோம். நமக்கு எந்த
253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
மதமானாலும், எந்த தேசமானாலும் ஜாதிமத தேச வித்தியாசமில்லாமல் ஏழை மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் நம்மால் கூடிய வரை கவனித்து அவர்களது இழிவையும், துன்பத்தையும் அழிக்க வேண்டுமென்பது தான் கொள்கையாகும். ஆகவே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெயரினால் சர்க்காரிடம் பெற்ற பங்கில் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட பறைய, சக்கிலிய, பள்ள கிறிஸ்தவர்களுக்கு விகிதாசாரம் கொடுத்து கிறிஸ்தவரானாலும். பறையனாய், சக்கிலியனாய், பள்ளனாய், பார்ப்பானாய், உடையாராய், சைவ வேளாளராய், நாடாராய் இருக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியையும், புரோகிதக் கொள்ளையையும் ஒழிக்காத வரை இந்திய கத்தோலிக்க உலகம். அஸ்தமாகித்தான் தீரும் என்பதை வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்ளு கிறோம். இதற்காக சுயமரியாதை இயக்கத்தோடு முட்டிக் கொள்ளுவது கல்லில் முட்டிக் கொள்ளுவதேயாகும்.
குடி அரசு - தலையங்கம் - 30.04.1933
குடி அரசு - 1933 M) 254
லால்குழமு தானூகா ஆதிதிராவிட
கிறிஸ்தவர்கள் மகாநா௫
தலைவரவர்களே! தோழர்களே! இன்று உங்களை இவ்வளவு பெரிய கூட்டமாகக் காண்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக இந்த வெய்யில் காலத்தில் கஷ்டப்பட்டு வந்து சேர்ந்து கூடியிருக்கின்றீர்கள். உங்களுடைய இன்றைய நோக்கமெல்லாம் இந்து மதத்தில் எவ்வளவோ காலமிருந்து கீழான ஜாதியாய் கருதப்பட்டு நீங்கள் அடைந்து வந்த இழிவைப் போக்கிக் கொள்வதற்காக வேறு மதத்தில்
வந்துசேர்ந்தும் அங்கும் அந்த இழிவு இருந்து உங்களைப் பழைய கருப்பனாகவே நடத்தி வந்தால் எப்படியாவது அந்த இழிவை போக்கிக் கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சியின் மீது இந்த மகாநாட்டைக் கூட்டி நீங்கள் எல்லோரும் இங்கு வந்து சேர்ந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மகா
நாட்டில் பலர் ஆவேசமாய் பேசிவிடுவதினாலும், பலர் அதிதீவிரமான தீர்மானங்கள் செய்து விடுவதினாலும் உங்களுக்கு ஏதாவது ஒரு பெரிய பலன் கிடைத்து விடுமா? என்று பார்த்தால் அது முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் இம்மாதிரி தீர்மானங்களும், இம்மாதிரி ஆவேசப்
பேச்சுகளும் வெகுகாலமாக நடந்துகொண்டேதான் வருகிறது. ஆனால் இவையெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களால் அலட்சியமாக கருதி அசட்டை செய்யப்பட்டுதான் வருகிறது. உங்களுக்கு மதப்பித்தின் பயனாக கம. உணர்ச்சி இல்லை யென்பதை உங்கள் பாதிரிமார்கள் நன்றாய் உணர்ந்தி ருக்கிறார்கள். கட்டுப்பாட்டை மீறி நீங்கள் ஏதும் செய்யமாட்டீர்களென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நீங்களும் மதத்திற்காகவும், கடவுளுக் காகவும் எவ்வளவு கஷ்டங்களையும் , இழிவுகளையும் பொறுத்துக்கொண்டு வெறும் வாயினாலே மாத்திரம் எதையாவது பேசிக்கொண்டிருப்பீர்களே. யொழிய கட்டுப்பாடுகளை மீறவோ உங்கள் இழிவுக்குக் காரணமானவற்றை உதறித் தள்ளவோ அதை அழிக்க முயற்சிக்கவோ ஒரு நாளும் சம்மதிக்க
உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள்
இழிவுக்கும், அடிமைத் தன்மைக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்த தைரியம் எவ்வித கட்டுப்பாடு களையும், நம்பிக்கைகளையும் உடைத்தெரிய தக்கதாகயிருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் வீணே வாய்ப்பேச்சிலும், காகிதத் தீர்மானத்திலும்
சாதித்து விடலாமென்று கருதுவது பைத்தியகாரத்தனமாய் தான் முடியும். நீங்கள் கீழ் ஜாதி என்பதும், தொடக்கூடாதவர்களென்பதும், சமத்துவமளிக் காமல் தனியாய் வைக்கப்பட வேண்டியவர்களென்பதும் ஆகிய காரியங் களுக்குவென்றும் மதமோ, பழக்கவழக்கமோ, சாஸ்திரமோ, கடவுள் செயலோ என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டமேயாகும். உங்களுடைய கீழ்
சாதி தன் மைக்கும் மேற்கண்ட காரியங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமே கிடையாது. உண்மையான காரணத்தைச் சொன்னால் ஒரே நிமிஷத்தில் நீங்கள் அவர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னமாய்க் கிழித்தெறிந்து விடுவீர்களென்று கருதி ஏதேதோ சாக்கு போக்குகளைச் சொல்லி உங்களை: ஏமாற்றுவதற்கு கடவு ளையும், மதத்தையும், பழக்க வழக்கத்தையும் சொல்லி வருகிறார்கள். கடவுள் மதத்தினர் கட்டளை என்றபடி பழக்க வழக்கங்கள் என்ற முறைப்படி யார் நடக்கிறார்கள்? அவர்கள் சொந்த விஷயத்தை பொறுத்த மட்டில் எவ்வித கட்டுப்பாட்டிற்கும் பழக்க வழக்கத்திற்கும் கடவுள் மத கட்டளைக்கும் கீழ்படியாமல் தங்கள் இஷ்டம் போலவே சமயத்திற் கேற்றபடியே நடந்து கொள்கிறார்கள். ஆனால் பிறத்தியானை அடக்கி ஆண்டு அடிமை கொள்வதற்காக மாத்திரம் இந்தப்படி சொல்லி பயன்
பெறுகிறார்கள்.
கீழ் ஜாதி என்பதாக ஒரு பிரிவு எதற்காக? யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதின் ரகசியத்தை உணர்ந்தால் பிறகு அதை அழிக்கும் விஷயம் வெகு சுலபமாக விளங்கி விடும்.
கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று சொல்வதின் தத்துவம் என்பதைப் பாருங்கள். ஒரு பார்ப்பானையும், ஒரு பறையனையும் கூட்டிவந்து நிறுத்தி
கீழ் ஜாதி, மேல் ஜாதி என்பது அவர்களிடத்தில் எப்படி விளங்குகிற தென்று பார்த்தால் மேல் ஜாதி என்பவன் பாடுபடாமல் சோம்பேறியாய் இருந்து ஊரார். உழைப்பில் வாழ்கிறவன் என்பதும், கீழ் ஜாதி என்பவன் பாடுபட்டு உழைத்து உழைப்பின் பயனையெல்லாம் அன்னியருக்கே அழுதுவிட்டு வீடில்லாமல், துணியில்லாமல், கஞ்சியில்லாமல், கல்வியில்லாமல், மிருகத்திலும் கேடாய் வாழ்கிறவன் என்பதும் நன்றாய் விளங்கும்.ஆகவே கீழ் ஜாதி தன்மை ஒழிய வேண்டும் என்று கருதுகிற ஒருவன் அன்னியருக்காக நாம் உழைக்கப் பிறந்தோமென்கிற எண்ணத்தை விட்டு விட்டு நமது உழைப்பின் பயனை சோம்பேறிகள், பாடுபடாத மக்கள் அனுபவிக்க விடக்கூடாது என்கிற உறுதி கொண்டு, பிறவியில் நமக்கும் மற்றவருக்கும் எவ்வித வித்தியாமுமில்லை என்கின்ற உறுதியோடு சோம்பேறி கூட்டத்தோடு எவன் போர் தொடுக்க முனைந்து நிற்கின்றானோ அவனே இவ்வித இழிவுகளை நீக்கிக்கொள்ள அருகதையுள்ளவனாக ஆகிறான். அதைவிட்டு விட்டு மதக்கட்டளையை
குடி அரசு - 1933 M) 256
மதிப்பவன், பாதிரிகளின் சொல்லுக்கு கீழ்படிந்துதான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கையை கொண்டவன் அவனவன் தற்கால நிலைமைக்குக் காரணம் “கடவுள் சித்தம்” என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். மத கட்டளையையும், கடவுள் நம்பிக்கையையும் கொண்ட ஒரு அடிமை ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் ஒரு நாளும் விடுதலை அடையவோ, முன்னேற்ற மடையவோ முடியவே முடியாது. மத கட்டளையும், கடவுள் நம்பிக்கையும்,
மேல்ஜாதிக்காரனுக்கும், பாதிரிகளுக்கும், முதலாளிகளுக்கும் தான் மேன்மை: யையும், அனுகூலத்தையும் அழிக்கக் கூடியதாகும். இந்த நாட்டில் 1000 கணக்
கான வருஷங்களாக ஏழை மக்களும் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் இருந்துதான் வருகிறார்கள். அவர்கள் அன்று முதல் இன்றுவரை மத பக்தியும், கடவுள் பக்தியும் கொண்டு அதற்காக எவ்வளவோ பணத்தையும், நேரத்தையும், செலவு செய்து தங்கள் கஷ்டங்களும், இழிவுகளும் ஒழிய வேண்டுமென்று பிரார்தனை செய்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஏழைகளின் எண்ணிக்கை குறைந்ததா? கீழ் ஜாதிக்காரர்களின் எண்ணிக்கை குறைந்ததா? அல்லது இவர்களுடைய கஷ்டமாவது ஒழிந்ததா? யோசித்துப் பாருங்கள்.
உலகில் எவ்வளவோ அதிசயங்களும், அற்புதங்களும், முன்னேற்ற மான காரியங்களும் நாளுக்குநாள் விருத்தியடைந்தும் அதற்கு தகுந்த படி தொழில் முறைகளும், யந்திர செளகரியங்களும், ஒன்றுக்குப் பத்து நூறாய் உயர்ந்தும் இவற்றின் பயனாய் லட்சாதிபதிகள் பத்துலட்சாதிபதியாகவும், பத்து லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்களாகவும்தான், முடிந்ததேயொழிய உங்களு டைய நிலைமை அன்றும் இன்றும் ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. நீங்கள் ஒரு உயிருள்ள இயந்திரம் போல் தான் இருக்கிறீர்கள். இயந்திரங் களுக்கு எப்படி எண்ணை ஊற்றினால் எண்ணையிருக்கிற வரையில் ஓடுகிறதோ அதுபோல் உங்களுக்கு ஏதாவது ஆகாரம் கொடுத்தால் அது ஜீரணமாகிறவரையில் வேலை செய்துவிட்டு மடிவது என்கிற முறையில் தானிருக்கிறீர்கள்.
உங்களுக்கு உங்களுடைய பிரதி பிரயோஜன மெல்லாம் உங்களு டைய வயிற்றுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுதான்.அதுவும் நீங்கள் சாகாமலிருப்பதற்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தான் என்பதாகப் பதினாயிர வருஷங்களுக்கு முன்பதாகவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. இந்த நிர்ணயத்தை மீறி நீங்கள் அதிகம் கேட்காமல் இருக்க வேண்டுமென் பதற்காகத்தான் உங்களை பறையர், சக்கிலியர் என்று சொல்லி தீண்டாத சாதியார்களென்று ஆக்கியும் உங்கள் அண்ணன்மார்களை யெல்லாம் “அடிமை” “பார்ப்பானின் வைப்பாட்டி மகன்? “சூத்திரன்” என்று சொல்லி
தாழ்ந்த ஜாதியும் ஆக்கிவைக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு ஜீவனத்திற்காக என்று கொடுக்கப்படும் கூலிகளும் உங்கள் மீதுள்ள கருணையினால் என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆகாரமும் இல்லாமல் மடிந்து போவீர்: களேயானல் நாளைக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கும் முதலாளிமார்களுக்கும்
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
வேலை செய்ய ஆள் இல்லாமல் போகுமே என்கின்ற சுயநல கருணை: கொண்டுதான் மாடு வளர்க்கிறவன் தீனி போடாவிட்டால் பால் கறக்காதே. பாடுபடாதே என்று கருதி அதற்கு தீனிபோடுவது போல் உங்களுக்கும் ஜீவனத்திற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை மாறவேண்டு மென்பதில் தான் உங்களுடைய முக்கிய வேலையாக இருக்க வேண்டுமே யொழிய சும்மா பறையர் பட்டம் போனால் போதும், கிறாதியை எடுத்து விட்டால் போதும், கோயிலுக்குள் நுழைய விட்டால் போதும் என் றெல்லாம் கருதுவதில் பிரயோசனமில்லை. கிறாதி வித்தியாசமில்லாமலும் பறஜாதி
பட்டம் இல்லாமலும் கோயிலுக்குள் போய் தொழுகிற உரிமை யுடனும் இருக்கின்ற கோடிக்கணக்கான மக்கள் கஞ்சிக்கு வகையில்லாமல் இருக்க, வீடில்லாமல் ஊர் ஊராய் பிச்சைக்காரர்கள் போல் லம்பாடிகள் போல் திரிவ
தையும் மரத்து நிழல்களில் தலைக்கு கல்லையோ, கையை மடக்கியோ வைத்து படுத்துக்கொண்டிருப்பதை இன்றையதினம் எங்கும் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன என்று கருதுகிறீர்கள்.
ஆகவே உங்களுடைய கிளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ஒழிய வேண்டுமென்பதையே அஸ்திவாரமாகக் கொண்டிருக்கவேண்டும். அதில்
தான் உங்கள் விடுதலை இருக்கிறது. எந்தக்கடவுளும், எந்த பாதிரியும் இதற்கு வகை செய்ய முடியாது?
உங்கள் மதங்களை எல்லாம், உங்கள் கடவுள் கட்டளை எல்லாம் “பொறு பொறு” “அவசரப்படாதே” “ஆத்திரப்படாதே” உனது வாழ்வில் உள்ள எல்லா துன்பங்களையும், எல்லா இழிவுகளையும் பொருமையோடு பொறுத்துக் கொண்டிருந்தால் நீ செத்த பிறகு மேல்லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்லசன்மானம் கொடுப்பார். அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவி பெறுவாய் பொறுத்தார் பூமியாள்வார் என்று தான் உபதேசிக்கும் இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாக கேட்டு கேட்டு அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன் தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து இழிவடைந்து கஷ்டப்பட்டு
சீக்கிரம் செத்து கடவுளிடம் சன்மானம் பெற வேண்டியவர்களாக இருக் கின்றீர்கள்.
ஆகவே செத்த பிறகு மேல் லோகத்தில் அல்லது அடுத்த ஜன்மத்தில்
பயன் பெறலா மென்கின்ற பித்தலாட்ட, சுயநல சூட்சியான உபதேசத்தை அடியோடு மறந்து இந்த ஜன்மத்தில் நீங்கள் சாவதற்கு முன் உங்கள். இழிவுக்கும், கஷ்டத்திற்கும் என்ன பரிகாரம் என்பதைக் கவனித்து அதற்குத் தக்கது செய்ய முன் வாருங்கள். இந்தப்படி நினைத்து தைரியமாய் முன் வந்த மக்கள் தான் இன்று உலகில் ஒருபக்கத்தில் அடிமையாய் கூலியாய் இழி ஜாதியாய் ஏழையாய் இல்லாமல் மனிதனாய் கவலையற்று தேசமே ஒரு
குடி அரசு - 1933 M) 258
குடும்பமாகவும் எல்லோரும் ஒரு தாய் வயிற்று சகோதரர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆகவே இந்த விஷயங்களை கவனித்து நன்றாய் ஆலோசித்து தங்களுக்கு சரி என்று பட்டதை பின்பற்றுங்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன்.
குறிப்பு:23041633 இல் களத்தில் வென்றான் பேட்டை கிராமத்தில் நடைபெற்ற இலால்குடி தாலூக்கா ஆதிதிராவிட கிருஸ்தவர்கள் மாநாட்டில் சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 07.05.1933
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
FEIT® ௬தேசி வர்த்தக சங்க ஆண்டுவிழா
தலைவரவர்களே! தோழர்களே!
இன்று இந்த ஆண்டு விழாவில் நானும் ஏதோ சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பதாக தலைவர் அழைக்கிறார். நேரம் அதிகமாய்விட்டது நானும் பேசவேண்டியிருக்குமென்று கருதவே இல்லை. அதோடு என்ன பேசுவது என்பதும் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனபோதிலும் ஒரு
10 நிமிஷம் “சுதேசி வர்த்தகம்” என்கின்ற தலைப்பைப் பற்றிப் பேசு கிறேன். ஏனெனில் இந்த ஆண்டுவிழா சுதேச வர்த்தக சங்க ஆண்டுவிழா வாதலால் அதையே தலைமையாய் வைத்து பேசுகிறேன்.
தோழர்களே சுதேசி வர்த்தகம் என்பதில் இரண்டு வார்த்தை இருக் கிறது. அதாவது ஒன்று சுதேசி, மற்றொன்று வர்த்தகம்.
சுதேசியம்
இதில் முதலில் சுதேசியம் என்பதைப் பற்றி பேசுகிறேன். சுதேசியம் என்பது ஒரு அருத்தமற்றதும், சுயநலம் நிரப்பிய சூட்சியால் கற்பிக்கப்பட்டது மான வார்த்தை என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் தேசீயம் என்ப தையே புரட்டு என்று வெகு நாளாக நான் சொல்லி வந்திருப்பது உங்களுக்குத் தெரியும். தேசீயம் தேசாபிமானம் என்பவைகளைப் பற்றி பல அறிஞர்கள் மிகக்கண்டித்தும், இழித்துக்கூறியும் எழுதி இருக்கிறார்கள். தேசாபிமானம் என்பது ஒருமனிதனுக்கு அவன் பிழைக்கும் மார்க்கத்துக்கு கடைசியான அயோக்கியத்தனம் என்று ஒரு அறிஞர் கூறி இருக்கிறார். இப்படி இன்னும்,
பலரும் கூறி இருக்கிறார்கள். இப்படி பலர் பலவிதமாக கூறி இருந்தாலும் என்: அனுபவத்தில் இந்த அபிப்பிராயங்கள் பிரத்தியட்ச ருஜுக்களால் பலப்பட்டு வருகிறதை பார்க்கிறேன்.
நிற்க சுதேசியம் என்பதற்கு எல்லை எது என்பதை முதலில் யோசித்துப் பாருங்கள். பரந்த உலகத்தில் பல கோடி மக்களின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாம் எந்த அளவுக்கு என்ன வித்தியாசத்தின்
மீது தேசங்களை பிரிப்பது என்பதை யோசித்துப்பாருங்கள். இந்தியாவை
குடி அரசு - 1933 M) 260
மாத்திரம் ஒரு தனி தேசம் என்று எந்தக் கணக்கின் மீது பிரித்துக் கொள் ளுவது? இந்தியாவும் ஒரு காலத்தில் 56 தேசங்கள் சேர்ந்ததாக இருந்து ஒரு தேசத்திற்கும், மற்ற தேசத்திற்கும் சண்டையும், வேற்றுமையும் இருந்துதான் வந்திருக்கிறது. பூகோள அளவுப்படிநமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டுபாருங்கள். தமிழ்நாடு. ஆந்திரதேசம், கேரள நாடு, கர்னாடக தேசம் என 4 பெரிய பிரிவுகளாகவும் பாஷைகளாகவும் பலவேறுபட்ட ஆச்சார அனுஷ்டானங்களையும் வேறுபட்ட நடை, உடை, பாவனைகளையும் கொண்டிருப்பதோடு ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டே இருக்கிறோம். அன்றியும் அவரவர்களுக்கு தங்கள் தங்கள் நாட்டின் அபிமானமே இருந்து வருகின்றது. மதத்திலும் இந்தியாவனாது பல மதங் களையும், பல உள் மதப்பிரிவுகளையும் கொண்டதாகவே இருந்து வருகிறது. பாஷாபிமானத்தின் மூலம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட உணர்ச்சியும், மதாபி மானத்தின் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட உணர்ச்சியும் வெளிப்படை
யாய் தாண்டவமாடுவதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த நிலையில் தேசியம் என்பதில் என்ன உண்மை இருக்கிறது. ஆனால் இது சமயம் பேசப்படும் சுதேசியம் என்பது வர்த்தகத் துறையைப் பொருத்த தாகவே இருக்கிறது. ஆதலால் வர்த்தக சுதேசியத்தைப் பற்றியே பேசுவோம்.
வெறும் சுதேசியத்தை ஆதாரமாய் வைத்து நடத்தப்படும் வியாபாரத்
தில் பொதுஜனங்களுக்கு என்ன லாபம் ஏற்படக்கூடும். தேசீயத்தை ஆதாரமாய் வைத்து நடத்தும் வியாபாரமும், தேசியத்தை ஆதாரமாய் வைத்து நடத்தும் அரசியலும் நாட்டுக்கு எவ்வித பயனும், முன்னேற்றமும் அளிக்கத் தக்கதாய் இருக்காது. அதில் ஈடுபட்ட சிலருக்கு தனிப்பட்ட சுயநலம் உண்டா கலாம். ஆனால் அதில் சிறிதும் நாணையம் கூட இருக்க
முடியாது.
உதாரணமாக சுதேசியக் கூப்பாடு போட்டு வெகுபணம் செலவு செய்து சுதேசியப்பிரசாரம் செய்து பதினாயிரக்கணக்கான மக்களுக்கு தேசிய வெறியை உண்டாக்கிய இன்னாட்டில் உத்தியோகம், பத்திரிகை முதலியவை கள் எல்லாம் தேசியத்தையே பிரசாரம் செய்து வந்தும் நமது நாடு இன்று எல்லாத்துறையிலும் மதம், ஜாதி, வகுப்பு, அரசியல், தொழில், கல்வி, கலை, ஞானம், நாகரிகம் முதலிய எல்லாக் காரியங்களும் பரதேசத்தில் மூழ்கிக் கிடக்கின்றது என்பதை நான் சொல்லாமலே அறிவீர்கள். இதற்கென்ன காரணம் பரதேசத்தின் ஆதிக்கம் என்றோ, பரதேசிகளின் சூட்சி என்றோ, வலிமை என்றோ சொல்லி விட்டால் போதுமா?
பரதேசம் ஒன்று இருக்கின்றது என்று தெரியாத காலத்திலும் பரதேச விஷயங்கள் நமக்கு எட்டுவதற்கு மார்க்கமில்லாதிருந்த காலத்திலும் எல்லாம்
சுதேசமாகத் தான் இருந்து இருக்கும். அப்படி இருந்த இந்த நாடு இன்று ஏன் பரதேசியத்தால் கவரப்பட்டுக் கிடக்கிறது? சுதேசியம் என்கின்ற அபி மானத்தை மாத்திரம் கட்டி அழுதோமே அல்லாமல் பரதேசியம் வந்து
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
புகாமல் இருக்கத் தகுந்த மாதிரி நடந்து கொள்ள நமக்கு யோக்கியதை யில்லாமல் போய்விட்டது. நமது சுதேசியம் நமது முற்போக்கையும் அறிவு விர்த்தியையும், புதுமையையும் தடைப்படுத்தி விஷயங்களுக்கு புதிய குணவிசேஷங்களை உண்டாக்க மார்க்கமில்லாமல் போய் விட்டது.
இன்றும் கூடமேல் காட்டிய எல்லாத் துறைகளிலும் சுதேசியத்தைவிட பரதேசியமே பெரும்பாக மக்களால் மதிக்கப்படுகின்றது. ஆனால் தனிப்பட்ட கூட்டத்தார்களின் நபர்களின் நன்மைக்கே சுதேசியம் பெரிதும் பேசப் படுகின்றது.
“செட்டி முடுக்கா, சரக்கு முடுக்கா என்பது பழமையானதும், அர்த்த புஷ்டியுமுடையதான ஒரு பழமொழி.
சரக்கு முடுக்காய் இருக்குமானால் சுதேசியம் பேசவேண்டியதே யில்லை. சரக்கை பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு சுதேசியம் பேசுவது செட்டி முடுக்கில் காரியம் சாதித்துக்கொள்ள நினைப்பதையே ஒக்கும்.அதுபோலவே தான் ஒவ்வொரு துரையிலும் மதம், கல்வி, அரசியல், கலைஞானம், வியாபாரம் தொழில் ஆகிய ஒவ்வொரு துரையிலும் நாம் சரக்கு முடுக்காக்க வேண்டும்.
நல்ல வஸ்துக்களை நல்ல கொள்கையை நயமான வழியில் பயன் படும்படி செய்ய வேண்டும். அப்போது பரதேசியம் தானாக பரந்தோடி விடும்
அதில் கவலையில்லாமல் இருந்தால் ஒரு நாளும் சுதேசியம் வெற்றி பெறாது.
இது தவிர சுதேசியத்தில் மற்றொரு சூட்சி என்ன வென்றால் சுதேசியத்
திற்கு யந்திரம் கூடாதாம்! இது எவ்வளவு பித்தலாட்டமான யோசனை. இன்று உலகில் மக்கள் யாராவது எந்தத் துறையிலாவது யந்தீரத்தை உபயோகிக்கா
மல் இருக்கிறார்களா? யந்திரம் என்றால் என்ன அருத்தம்? அறிவு, பிரயோகம் அல்லது (யுரோகிரசிவ்) முன்னேற்றம் என்றுதானே பொருள். அறிவுப் பிரயோகமும், முன்னேற்றமும் வேண்டாம் என்று எந்த மனிதனாவது சொல்லமுடியுமா? தவிரவும் யந்திர பயன் என்ன என்று பாருங்கள். யந்திர மானது மனிதனுடைய சரீரக் கஷ்டத்தை-நேரக்கேட்டைக் குறைக்கிறது என்பதில்லாமல் அது வேறு என்ன கெடுதி செய்கின்றது, யந்திரத்தின் பயனை
மக்கள் அடையவொட்டாமல் எவனோ ஒரு அயோக்கியன் (முதலாளி! கொள்ளையடிக்கிறான் என்றால் அதற்கு யந்திரத்தை ஒழிப்பதா? அல்லது அந்த முதலாளியை ஒழிப்பதா என்பதை யோசித்துப்பாருங்கள்.
அன்றியும் இன்று யந்திரத்தை பகிஷ்காரம் செய்து அதற்கு பதிலாக என்று உபயோகிக்கப்படும் கைராட்டினம் யந்திரமா அல்லவா? ஒரு கைராட்டினத்தில் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 1500 கெஜம் நூல் நூற்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த 1500 கெஜ நூலையும் ராட்டினத்தை உடைத்து
அடுப்பு எறித்துவிட்டு வெறுங்கையால் நூற்பதாய் இருந்தால் ஒரு ஆள்
குடி அரசு - 1933 ) 262
தினம் ஒன்றுக்கு 15 கெஜம் நூல்தான் நூற்க முடியும். அப்படியானால் ஒரு ராட்டினம் ஒரு நாளில் ஒரு ஆளால் நூற்கப்படும் 1500கெஜ நூலை 100 ஆளைக்கொண்டு வேலை செய்யச் சொல்லலாம் அல்லவா? இந்த கை
ராட்டினம் 100பேருடைய வேலையை கெடுத்துவிடுகிறதல்லவா? ஆதலால் ராட்டினத்தையும் அடுப்பெரித்து விட்டு ஏன் கையினாலேயே நூற்கச் சொல்லக்கூடாது என்று யோசித்துப் பாருங்கள்.
யந்திரத்திற்கும், கைத்தொழிலுக்கும் வியாக்கியானம் சொல்ல காந்தி ஒருவர் தான் பாஷியக்காரரா என்று கேட்கின்றேன். அப்படிப்பட்ட காந்தி யாரே புதிய முறையில் ராட்டின யந்திரம் கண்டுபிடிக்க ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிக்கை இட்டு இருக்கிறாரே அதற்கு பெயர் யந்திரம் அல்லவா?
தோழர்களே! இந்த மாதிரி சுதேசியமெல்லாம் முதலாளிகள், ஆமதாபாத் முதலாளிகள் பிழைக்க சூழ்ச்சியே ஒழிய வேறில்லை.
வியாபாரம்
இது சமயத்தில் வியாபாரம் என்பதைப்பற்றியும் சில வார்த்தைகள் பேசுகிறேன்.
வியாபாரம் என்பது பொதுஜனங்களுடைய நன்மைக்காக பொதுஜன செளகரியத்துக்காக ஏற்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தார் அக்குடும்பத் திலுள்ளவர்கள் ஆளுக்கொரு தொழிலை சமமாக எடுத்து உழைத்து சமமாக பயன் அடைவது என்கின்ற தத்துவத்தில் ஏற்பட்டதே தவிர வேறில்லை.
ஆனால் நாம் எப்படி வியாபாரத் தொழிலை நடத்துகின்றோம். பயிரிடு கின்றவன் கஷ்டம் எவ்வளவு? அதைப் பண்டமாக்கி, வஸ்துக்களாக்கி வைக்கிற தொழிலாளியினுடைய கஷ்டம் எவ்வளவு? அதை மக்களுக்கு சுலபத்தில் கிடைக்கும்படி கொண்டுவந்து சேர்க்கும் கூலியாளுடைய கஷ்டம் எவ்வளவு? இவற்றை யெல்லாம் கஷ்டப்பட்டு செய்த பின்பு கடையில் கொண்டு வந்து வைத்து விலை சொல்லி எடுத்துக் கொடுக்கச் செய்தும் பணத்தை வாங்கி பெட்டியில் போடச் செய்வதுமான வியாபாரியுடைய கஷ்டம் எவ்வளவு? முற்கூறியவைகளில் 100ல் ஒரு பங்கு கஷ்டம் இந்த வியாபாரிகளுக்கு உண்டா? என்று பாருங்கள், ஆனால் ஊதியம் அடைவதில் மேல்கண்ட முதல் மூன்று பாட்டாளிகளைவிட 100 பங்கு அதிகமான ஊதியத்தை வியாபாரி என்கின்ற முறையில் அடைகிறான்.10 வருஷத்தில் ஒரு வியாபாரி லட்சாதிபதி ஆகிவிடுகிறான். அவன் வீடுவாசல் அனுபவங்
கள் எப்படி உயர்ந்துவிடுகிறது என்று பாருங்கள். காரணம் என்ன? வியாபாரம் என்கின்ற தொழில் அவ்வளவு கொடுமையான தொழில். அதாவது திருடன் மற்றவர்களை பணம் அபகரிப்பதுபோல் வியாபாரியும் மற்ற ஜனங்களை
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
வஞ்சித்து பணம் சம்பாதிக்கிறான் என்பதேயாகும். ஆதலால் இன்றைய வியாபார நிலை அழிக்கப்படவேண்டிய தொன்றாகும்.
வியாபாரத்தில் நாம் உண்மையான சுதேசியத்தை விரும்பி அது இந்த நாட்டு மக்களுக்கு பயன்படத்தக்க வழியில் சுதேசியமாக்கவேண்டும் என்று இருந்தோமேயானால் கடைசியாக இன்றைய வியாபார முறையை அழித்து
முன்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் பண்டமாற்ற முறையை புதுப் பிக்க வேண்டும். அல்லது லாபத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் ஒரு யோக்கியமான சமாதானமான தொழிலாகும். அன்றியும் மக்கள் வஞ்சிக்கப்படாமல் தங்கள் கஷ்டத்தை மற்றொருவர்கள். ஏமாற்றியடையாமல் இருக்கச் செய்வதற்கும் அனுகூலமாக இருக்கும்.
அதில்லாமல் சுதேசியம் பேசுவதும், வியாபார விருத்தி முன்னேற்றம் பேசுவதும் ஏழைகளை, பாடுபடுகின்றவர்களை இன்னம் அதிகமாக எப்படி வஞ்சிப்பது என்பதேயாகும் என்பதோடு இப்போதைய வியாபார முறைக்கு வேறு சரியான வெள்ளையான பெயர் கொடுக்க வேண்டுமானால் பகல் கொள்ளை என்ற வார்த்தை தான் உபயோகிக்க வேண்டும்.திருட்டு என்பதற்கு என்ன அருத்தம்? ஒருவனுடைய பொருளை மற்றவன் எடுப்பது தனது அல்லாததைத்தான் எடுப்பது என்பது திருட்டு.அதுபோலவே ஒருவனுடைய உழைப்பை மற்றவன் அனுபவிப்பது திருட்டா அல்லவா? பொருள்களை உற்பத்தி செய்பவனுக்கும் அவைகளை வாங்கி அனுபவிப் பவனுக்கும்
மத்தியில் மத்தியஸ்தர்கள் அல்லது நடு மனிதன் எதற்கு? இந்த முறையே அக்கிரமமல்லவா? இன்று உலகில் உள்ள செல்வவான்கள் எல்லாம் நடு மனிதர்களே அல்லாமல் வேறு யாராவது இருக்கிறார்களா? யோசித்து பாருங்கள். ஆதலால் வியாபாரம் ஜன சமூக நன்மைக்கு ஏற்றதாய் இருக்க வேண்டுமானால் தரகர் நடுமனிதர் மிடில் மேன் (Middie-man) தன்மை ஒழிய வேண்டும்.அப்படிக்கில்லாமல் வியாபார விருத்தியைப் பேசுவது திருட்டுத் தொழிலை எப்படி விருத்தி செய்வது எப்படி சாமர்த்தியமாய் திருட மார்க்கம் கண்டு பிடிப்பது என்று யோசிப்பதையே ஒக்கும் என்பது எனதபிப்பிராயம்.
குறிப்பு:28.041633 இல் ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு சுதேச வர்த்தகர் சங்க ஆண்டுவிழா ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 07.05.1933
குடி அரசு - 1933 M) 264
மற்வறாரு urpal விரதம்
தோழர் காந்தியவர்கள் 8-ந் தேதி சோமவாரம் முதல் 21-நாள் பட்டினி விரத மிருக்கப்போவதாக ஒருவிளம்பரம் வெளியிட்டிருக்கிறார். இது பத்திரிகைகளுக்கு ஒரு பெரிய விருந்தாகும். காங்கிரஸ்காரர்களுக்கும் ஒரு பெரிய திருவிழாவாகும்.
தோழர் காந்திக்கு இந்தப்பட்டினி விரதம் புதியதல்ல. அவருக்கு ஏதாவது ஒரு விஷயத்தில் அதிகமான கவலை இருக்கிறது என்பதை உலகத் திற்கு அறிவிக்க இந்த பட்டினி விரதம் என்பதைத்தான் தக்க ஆயுதமாகக் கொண்டிருக்கிறார். தோழர் காந்தி அவர்கள் ஒத்துழையாமை கிளர்ச்சி நடத்தியகாலத்தில் சுயராஜ்ஜியம் பெற இந்து முஸ்லீம் ஒற்றுமையை மிகவும் முக்கியமானது என்று தான் கருதி இருப்பதாக தெரிவிக்கவேண்டிய சந்தர்ப்
பம் வந்த காலத்தில் இந்தமாதிரியாக ஒரு 21 நாள் பட்டினி விரதத்தை வெளிப் படுத்தினார். கடைசியாக அது என்ன பயன் விளைவித்தது என்பதும். இந்து- முஸ்லிம்கள் அந்தப் பட்டினியை எவ்வளவு தூரம் லட்சியம் செய்தார்கள். என்பதும் யாவருக்கும் வெட்ட வெளிபோல் தெரிந்த காரிய மேயாகும்.
பிறகு ஒரு தடவை தனது ஆஸ்ரமத்தில் ஏதோ சில ஒழுக்க ஈனங்கள் நடந்து விட்டதாகக் கருதி அவ்வொழுக்க ஈனங்களை வெறுப்பதற்கு அறிகுறியாக 6 நாள் பட்டினி விரதமிருப்பதாக விளம்பரம் செய்தார். அதன் பயனாய் என்ன ஏற்பட்டது என்பதும் ஒரு அளவுக்கு பொதுஜனங்கள் தெரிந் திருப்பார்கள்.
அதற்குப் பிறகு சென்ற வருஷக் கடைசில் தீண்டாதார் என்பவர் களுடைய தனித்தொகுதியை ஒழிப்பதற்கு என்று ஒரு காலம் குறிப்பிடாத பட்டினி விரதத்தை வெளிப்படுத்தினார், அதில் பூரணவெற்றி பெற்றார். ஏனெனில் தீண்டப்படாத மக்கள் என்பவர்கள் திக்கற்றவர்களாகவும், போதிய முற்போக்கு ஞானமில்லாதவர்களாகவும் இருந்ததால் அவர்களை சுலபத்தில் ஏமாற்றிவிடவோ, அல்லது நிர்ப்பந்தித்து அடக்கியாளவோ சாதாரணத்தில்
முடித்துவிட்டது.
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
அதற்குப் பிறகு குருவாயூர் ஆலயப்பிரவேச விஷயமாய் ஒரு கால வரையரையற்ற பட்டினி விரதத்தை வெளிப்படுத்தினார். அது சனாதன தர்மிகள் அதாவது நல்ல தெட்டுப்பட்ட பார்ப்பனர்களைப் பொருத்ததா கையால் அவர்கள் எல்லாத் துறையிலும் முன்னேற்றமடைந்த கூட்டத்தாரா னதால் அவர்கள் காந்தியின் பட்டினியை ஒரு சாதாரண ஜீவஜெந்து பட்டினி போலக்கூட மதியாமல் அலட்சியம் செய்துவிட்டார்கள். பிறகு அது எப்படி எப்படியோ மெழுகப்பட்டுவிட்டது. அன்றியும் “நீ ஏன் பட்டினிகிடந்து சாகவில்லை” என்று கேட்க யாருக்குத்தான் மனம் வரும்?
இப்போது மறுபடியும் ஒரு காலவரையுள்ள அதாவது 21 நாள் வாய்தா பட்னி விரதமொன்று ஏற்கப்போவதாக விளம்பரப்படுத்திவிட்டார். நாளை
திங்கள் கிழமை முதல் இந்தப் பட்டினிவிரதம் அமுலுக்கு வரக்கூடும்; இதற்குள் பத்திரிகைகள் இந்தப்பட்டினியை எவ்வளவு பிரமாதப்படுத்தக் கூடுமோ அவ்வளவு விளம்பரப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஏறக்குறைய 100-க்கு 90 பத்திராதிபர்கள் தங்கள் சொந்த நிலையில் தோழர். காந்தியின் பட்டினியைப் பற்றி கூட்டம் சேர்த்துக் கொண்டு பரிகாசம் பண்ணி பேசிக் கொண்டிருந்தாலும் பத்திரிகையில் எழுதும்போது இதை பிரமாதப்
படுத்தி ஆத்ம சக்தி என்றும், தெய்வீக சக்தி என்றும், ஏதேதோ சில முட்டாள் தனமானதும், சூழ்ச்சிகளானதுமான வார்த்தைகளைப் போட்டு நிரப்பி விளம்பரப்படுத்துவதில் சிறிதும் தயங்குவதில்லை. ஏனெனில் இந்தியாவில் இந்திய மக்களால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் அவ்வளவும் அனேக
மாய் ஒன்று இரண்டு தவிர மற்றவை எல்லாம் காந்தியையும், காந்தியவர்கள் செய்கை, குணம் முதலியவைகளையும் புகழ்ந்து கவிபாடி வாழவேண்டிய தன்மையிலேயே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் அதே பிரசாரம் செய்து பாமர மக்களுக்கு முன்னிலும் அதிகமாக காந்தி “மகத்துவம்” உண்டாக்கி விட்டார்கள். ஆனால் இப்போது அது எவ்வளவு பரிகசிக் கத்தக்கதானாலும். இன்று யாராவது உண்மையை எழுதினால் தங்கள் பத்திரிகை வாழ்வுக்கே. ஆபத்து வந்துவிடுமே என்ற பயம். ஆகையால் பொய் வேஷம் போட்டு ஆடவேண்டியதாய் போய் விட்டது.
நிற்க பட்டினி விரதத்தின் தத்துவம் என்ன என்பதைப்பற்றி சற்று ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.
பட்டினியில் “ஒரு ஆத்மசக்தி” இருப்பதாகச் சொல்லப் படுகிறது.
ஆத்ம சக்தி என்பது மனித சக்திக்கு மீறின ஒரு சக்தி என்றும் கருதப் படுகிறது.
இந்த ஆத்ம சக்தி என்பது ஒரு காரியத்திற்கு பிரயோகிப்பது என்பது மனித சக்தியில் செய்யவேண்டிய காரியம் எல்லாம் செய்து பார்த்து முடியா
மல் போன காலத்தில் உபயோகிக்கப்படும் ஆயுதமாகவே கொள்ளப்
குடி அரசு - 1933 M) 266
படுகிறது. அல்லது மனித சக்தியால் செய்ய முடியாது என்று கருதிய ஒரு காரியம் யாராலாவது செய்யப்பட்டுவிட்டால் அது ஆத்ம சக்தியால் செய்யப் பட்டது என்று சொல்லப்படுகிறது.ஆனால் பிரஸ்தாப பட்டினி விஷயத்தில் உள்ள ஆத்ம சக்திக்கு இரண்டுவித அவசியம் காட்டப்படுகிறது. ஒன்று ஏதோ ஒரு காரியம் சாதிப்பதற்கு என்றும் மற்றொன்று ஆத்மசுத்தி செய்து கொள்வதற்கு என்றும் சொல்லப்படுகின்றது. இவ்வளவோடு மாத்திரம் நிற்க வில்லை. “இந்த பட்டினிக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை””என்று ஒரு
இடத்திலும், “இதற்கு எவ்வித நோக்கமும் இல்லை” என்று ஒரு இடத்திலும் “இந்த பட்டினியை எப்போது வேண்டுமானாலும் துவக்கி கொள்ளலாம்”
என்றும், மற்றும் “ஒரு மகத்தான சீர்திருத்தம் நடை பெறும் போது ஒழுக்க மற்றதும், ஆபாசமான காரியங்களும் ஏற்படாமல் இருப்பதற்கும் காரியம்
துரிதப் படுத்தப்படவும் பட்டினி ஏற்கப்படவேண்டியது அவசிய” மென்றும் கூடியவரை பட்டினியை ஏற்க வேண்டாம் என்றும் தனக்குள்ளாகவே எதிர்த்துப்போராடி பார்த்தும் தன் மனச்சாட்சி ஏற்றுக் கொள்ளும்படி செய்தது
என்றும் “பட்டினி ஒரு மத சம்மந்தமானது” என்றும் இந்த “மத சம்பந்தமான இயக்கம் அதன் கர்த்தாக்களின் புத்தி சாதுர்யத்தால் வெற்றி பெற்று விடா” தென்றும் “ஆத்மார்த்த வலிவே வெற்றிக்குக் காரணம்” என்றும் தோழர் காந்தியே சொல்லி இருக்கிறார். இவற்றையெல்லம் அறிவோடு யோசித்துப் பார்த்தால் இந்த பட்டினி விரதத்தில் உள்ள உண்மை பொருள் அற்ற தன்மை நன்று விளங்கும். எப்படி இருந்த போதிலும் தோழர் காந்தி அவர்கள் இந்த பட்டினி விரதம் முட்டாள் தனமாக ஆரம்பித்து விட்டது என்று யாரும் கருதி
விடக் கூடாது.
பூனா ஒப்பந்தத்தை திருத்த வேண்டுமென்று தோழர் அம்பேத்கார். கூறிய விஷயமொன்று, சில மாகாணம் அதை ஆட்சேபிப்ப தொன்று, இதற்கு
முன் கூறிய குருவாயூர் கோவில் பட்டினி ஆரம்பிக்க முடியாமல் போனதால் பொது ஜனங்களிடை ஏற்பட்ட பழிப்பு ஒன்று சனாதனதர்மிகள் தோழர் காந்தியை பரிகாசம் செய்ய ஆரம்பித்ததென்று, சட்ட மறுப்பு இயக்கம் ஸ்தம்பித்தும் காந்தியாரை வெளியில் விட சர்க்கார் நிபந்தனை கேட்ட தென்று, காங்கிரசுக் காரருக்கு வேலையில்லாமல் போனதின் பயனாய் சற்று உணர்ச்சி உள்ள வாலிபர்கள் எல்லாம் காங்கிரசையும், காந்தியாரையும்
எதிர்த்து வைது கொண்டும், பொதுவுடைமையிலும், சமதர்மத்திலும் பற்றுக் கொண்டு அதில் போய் சேருவதென்று முடிவு செய்து பலர் அந்தப்படியே செய்து வரவதொன்று, ஹரிஜன சேவை என்பதன் இரகசியம் வெளியாகி ஹரிஜனங்களில் பெரும் பாலோர்களே அதை லட்சியம் செய்யாமல் போன தென்று, காங்கிரசில் இருந்து வரும் தென்னாட்டு பார்ப்பனத் தலைவர்கள் என்பவர்களின் நடத்தையில் பொது ஜனங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போனதுடன் அவர்கள் சூட்சிகள் சிலவற்றை காந்தியார் அறிந்து வெட்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டதென்று, மற்றும் ஏழை தொழிலாள மக்கள் காந்தியை தங்கள் எதிரிகளாக கருதி இருப்பதையும் அவர்கள் மத உணர்ச்சி
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
களை வெறுப்பதையும் காந்தியாருக்கு நன்றாக விளங்கிவிட்ட தொன்று, காந்தியையோ, காங்கிரசையோ சிறிதும் லட்சியம் செய்யாமல் லண்டன் மகாநாடு நடப்பதொன்று, இப்படியாக இன்னும் பல காரியங்கள் காந்தியா ருக்கு பட்டினி விரதமனுஷ்டிப்பதன் மூலம் ஏதோ ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி தீர வேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்து விட்டது.
எது எப்படியிருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை சத்தியாக்கிரகத் தையும், பட்டினி விரதத்தையும் ஒன்று போலவேதான் கருதுகிறோம்.
சத்தியாக்கிரகம் எப்படி சண்டித்தனமானது என்று சொல்லுகின் றோமோ அப்படியேதான் அதைவிட மேலாகவே பட்டினியையும் சண்டித் தனம் என்று தான் சொல்லுகின்றோம். அனுபவத்தில் பார்த்தாலே இதன் உண்மை விளங்கும். ஜனங்களில் சிலரும், குழந்தைகளில் பலரும் பட்டினி இருப்பதாக அதாவது வீட்டில் குடும்பத்தில் சாப்பிடமால் கோபித்துக் கொண்டிருப்பதாகக் காட்டுவதின் கருத்து என்ன என்பதைக் கவனித்தால் இதன் உண்மை விளங்கும்.நியாயம் சொல்லி மெய்ப்பிக்க முடியாமலோ, கை.
பலத்தால் சக்தியை காட்ட முடியாமலோ போன சமயத்தில் சாப்பிடுவ தில்லை, மண்டையை உடைத்துக் கொள்ளுகிறேன், தற்கொலை செய்து கொள்ளுகிறேன், எங்கேயாவது ஓடிப்போய் விடுகிறேன் என்பது போன்ற காரியங்களால் காரியத்தை சாதிக்க முற்படுவது இயற்கையாக இருப்பதைப் பார்க்கின்றோம்.
தவிரவும் ஏதாவதொரு காரியத்தில் ஒருவருக்கு இருக்கும் உண்மை யான ஆர்வத்தைக் காட்டிக் கொள்ளவேண்டுமானால் இதுதான் (பட்டினி
தான்) கடைசி வழியாகும்.
ஏனெனில் முதலில் ஒத்துழையாமை என்று சொன்னார். அதற்கு பிணக்கு என்று பேர் வைத்து நடத்திப் பார்க்கப்பட்டாய் விட்டது. பிறகு சத்தியாக்கிரகம் என்று சொன்னார். அதனால் சிறிது கஷ்டங்கள் அனுபவிப் பது என்று சொல்லி அந்தப்படியும் பார்த்தாய் விட்டது. இரண்டும் உத்தேசித்த வெற்றியைகொடுக்க வில்லை என்றாய் விட்டதால் மூன்றாவது காரியம் தனது உயிரை கொடுப்பதாக சொல்ல வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது. தவறான மார்க்கத்தில் இழுத்துச் செல்லப் பட்டவர்களுடைய கதியெல்லாம் இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள். பார்க்கலாம். ஒரு காலத்தில் இந்தக் காரியங்களுக்கு மதிப்பு இருந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இன்று மக்கள் அடைந்திருக்கும் முன்னேற்ற அளவுக்கு இந்த மாதிரி பழய கால தந்திரங்கள் பயனளிக்கு மென்று நம்மால் கருத முடியவில்லை.
எப்படி இருந்தபோதிலும் தோழர் காந்தியாரின் இந்தக்காரியங்கள்
எல்லாம் வெற்றிபெற்றாலும், தோல்வி அடைந்தாலும் உண்மையானதாய்
குடி அரசு - 1933 M) 268
இருந்தாலும் தந்திரமானதாய் இருந்தாலும், பொதுவாக இவை மனித
சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு கேட்டை விளைவிப்ப தேயாகும். காந்தியென்றாலே இப்போது ஒரு மனிதத் தன்மைக்கு மீறின சக்தியுடையவர் என்கின்ற எண்ணத்தைப் பார்ப்பனர்களும், வயிற்றுப்
பிழைப்புப் பத்திரிகைகளும், சில சுயநலமிகளும் (இது சுலபமான காரியமா யிருந்ததால்பாமர மக்களுக்குள் இந்த மாதிரி ஒரு அக்கிரமமான காரியத்தைச் செய்து விட்டார்கள். தோழர் காந்திக்கு செல்வாக்கு உண்டாக்கியதன் பயன்
எல்லாம் இப்போது மத புரட்டுகளையும் மத சூட்சிகளையும், நிலை நிறுத்தப் படும் தன்மைகளை பலப்படுத்தவே பயன்பட்டு வருகிறது.
உதாரணமாக தோழர் காந்தி ஒவ்வொரு வார்த்தைக்கும் “கடவுள் கட்டளை இடுகிறார்” “கடவுள் சொல்லுகிறார்” “கடவுள் தன்னோடு பேசு
கிறார்” என்று மக்கள் நம்பும்படியாகவே பேசியும் சூசனை காட்டியும் வரு
கிறார். இதன்பயன் என்னமாய் முடியும் என்று பார்த்தால் ஏசுநாதர், முகமது
நபி, என்பவர் போன்றவர்களின் கூட்டத்தில் தோழர் காந்தியும் சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற ஒரு உணர்ச்சி மூட மக்களுக்கு ஏற்படக்கூடும் என்பதைத் தவிர வேறில்லை. அவர் எப்படியோ முதலாளிமார்கள் இடம் இருந்து பணம் வசூல் செய்து பார்ப்பனர்கள் கையில் கொடுத்து விடுகிறார். பார்ப்பனர்களோ இந்தப் பணங்களைக் கொண்டு மகாத்மா தன்மையை பலப்படுத்தும் வேலைக்கும் நிலை நிறுத்தும் வேலைக்கும் பிரசாரத்திற்கும் பல தலைப்பின் கீழ் செலவு செய்கின்றார்கள். தற்காலம் வேலையில்லா திண்டாட்டமும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமும் சேர்ந்து பல வாலிபர்களை புராண காலக்ஷேபம் மதப்பிரசாரம் முதலியவைகளில் இழுத்து விட்டு விடுகிறது. இதற்கு நாம் என்ன செய்வது என்பது நமக்கு விளங்கவில்லை.
சாதாரண ஆத்மா விஷயமே சந்தி சிரிக்கும் போது மகாத்மா விஷயம் எப்படி பட்டதாய் இருக்க முடியும் என்பதை வாசகர்கள் தான் முடிவு கட்டி கொள்ள வேண்டும். ஆகையால் சுயமரியாதை இயக்க தோழர்களுக்கு இந்த சமயம் நாம் ஒன்று சொல்லுகின்றோம். அதாவது இந்த பட்டினி விபரத்தைப் பற்றி அவர்கள் பேசாமலிருப்பதே நல்லது என்பதுதான்.
குடி அரசு - தலையங்கம் - 07.05.1933
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
தோழர் காந்தி
தோழர் காந்தி அவர்கள் இப்போது இருந்துவரும் பட்டினி விரதத்தில் தீண்டப்படாத கிறிஸ்தவர்கள் விஷயமாயும் பாடுபடுவாராம், “போகட்டும். பாவம்”. இத்தனை நாளைக்குப் பிறகாவது கிறிஸ்தவ தீண்டாதார் விஷயம் அவருடைய ஞாபகத்துக்கு வந்தது பற்றி ஒரு விதத்தில் மகிழ்ச்சியே. ஆனால் இவையெல்லாம் சுயமரியாதை இயக்கத்துடன் போட்டி போடத் தென்னிந்
தியப் பார்ப்பனர்களின் சூத்திரக்கயரின் சக்த்தியேயாகும் என்பதில் மாத்திரம்.
சிறிதும் ஐயமில்லை.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 07.05.1933
குடி அரசு - 1933 M) 270
கெண்டைக் குஞ்சுகள்
- குறும்பன்
பரமசினைப் பார்த்தீர்களா?
ஆகாய விமானத்தில் போய் இமயமலையின் அதிக உயரமான சிகரமாகிய “எவரஸ்ட்” டைப் பார்த்துவிட்டு வந்தார்கள், என்று பத்திரிகை கள் கூறுகின்றன.
“அங்கே எங்கள் பரமசிவம் இருந்திருப்பாரே, பார்த்தீர்களா” என்று கேட்க வேண்டுமென்று லோகோபகாரப்பிள்ளை ஆவலோடிருக்கிறார்.
மாமாங்கம்
உபாத்தியாயர்:- சமீபத்தில் நடந்த மகாமகத்தை (மாமாங்கம்! பற்றி நீ தெரிந்து கொண்ட தென்ன?
பிராமணப்யைன்:- நமது ஹிந்துக்கள் இந்தப் பண நெருக்கடியான காலத்தில்கூட எவ்வளவு கடவுள் பக்தியோடு இருக்கிறார்கள், என்பதைக் காட்டுகிறது சார்.
உபாத்தியாயர்:- சரி, நீதெரிந்து கொண்டதென்ன?'
சும. பையன்:- யோக்கியமாய் உலகத்தில் வாழ்வதைவிட ஏமாற்றிக் கொண்டே வாழ்வது ரொம்ப லகுவு என்பது தெரிகிறது சார்.
ஆஸ்திகக் குழந்தைகள்
“குறித்த அளவுக்குமேல் உஷ்ணமோ குளிர்ச்சியோ ஒருவன் உடம்
பில் ஏற்பட்டதும் அவன் இறந்து விடுவதற்குக் காரணமென்ன? என்று வைத்தியப் பள்ளிக்கூட (Medical school) ஆசிரியர் வகுப்புப் பிள்ளைகளைக்
கேட்டார்,
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
*ஹிந்து' மாணவன்:- அது அவனுடைய தலைவிதி சார்.
கிறிஸ்து மாணவன்:- அது கர்த்தனுடைய கட்டளை சார்.
முஸ்லீம் மாணவன்: அல்லாஹ்விடைய ஆக்ஞை சார்.
இந்த பதில்களைத் தப்பு என்று சொல்கிறவர்களெல்லாம் பச்சை நாஸ்திகர்கள் என்பதே நமது அபிப்பிராயம்.
கொசுவலையா? கடவுளா?
“கொசுக்கள் நிறைந்த இடத்தில் நீ வசிக்கிறாய். உன்னிடம் 5 ரூபாய்
தான் பணமிருக்கிறது. நீ கடவுளுக்காக ஒரு பிரார்த்தனை செய்ய வேண்டி யிருக்கிறது. நீ கொசுவலை வாங்குவாயா? பிரார்த்தனைக்குச் செலவிடு வாயா? காரணங்களோடு விடை கூறவும்” என்று ஒரு சுகாதார உபாத்தியார். பரீட்சைக் கேள்விகளில் கேட்டிருந்தார்.
“நான் கொசுவலைதான் வாங்குவேன். ஏனெனில் நமது உடம்பைப்
பார்த்துக் கொண்டல்லவா கடவுளைப் பற்றி பிறகு நினைக்க வேண்டும்”
என்று 46 குழந்தைக்கு 44 குழந்தைகள் பதில் எழுதியிருந்தன.
இந்த 44 குழந்தைகளும் சு.ம. காரர் வீட்டுக் குழந்தைகள் அல்ல என்பதைக் கடவுளுக்காக வக்காலத்து வாங்கியிருக்கும் வக்கீல் குழாங் களுக்கு அர்ப்பணம் செய்கிறோம்.
“பிச்சையெடுக்குமாம் பெருமாள்:-”
நீடாமங்கலத்திலும், காரைக்குடியிலும் & w. தோழர்களைப் போலீசார் அகாரணமாய் அடித்து விட்டதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
ஊரை ஏமாற்றிச் சேர்த்திருக்கும் பார்ப்பான்கள் பணத்தைப் பிடுங்கு. வதற்கு நல்ல யோசனை செய்தீர்கள். போலீஸ்காரர்களே! விடாதீர்கள்! பஸ். ஜட்கா இல்லாத ஊர்களில் இது ஒரு சரியான வழிதான்!
திடீர் சந்தேகம்
ஒருவன்: வருணாச்சிரமக் கட்சிக்கும் “ஜஸ்டிஸ்” கட்சிக்கும் என்ன வித்தியாசம்?
மற்றவன் - வருணாசிரமக் கட்சியிலிருப்பார்களெல்லோரும் பூணூல் போட்டிருக்கிறார்கள், “ஜஸ்டிஸ்” கட்சியில் இருப்பார்களுக்கு அது கிடையாது.
குடி அரசு - 1933 M) 272
(ஒரு திருத்தம்:- அதிலும் இரண்டொரு பதில் வெட்டு உண்டு. இதிலும் இரண்டொரு பதில் வெட்டு உண்டு!
குடி அரசு - உரையாடல் - 07.05.1933
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
273
வடஆற்காடு வில்லா ௬சயமரியாகை மகாநா௫
தலைவர் அவர்களே! தோழர்களே!!!
இன்று இந்த மகாநாட்டுக்கு வந்த எனக்கு இங்குள்ள பல சங்கங்களால் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுக்கப்பட்டதற்கு பதில் சொல்லுவேன் என்று தலைவர் சொன்னார். வரவேற்புப் பத்திரங்களை ஒரு சடங்காகவே கருதி வருகிறேன், அவை புராணக் கற்பனைகள் போல் இருக்கின்றனவே ஒழிய உண்மைகள் மிக அருமையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட சில விஷயங்களினுடைய பாராட்டுதலும் எனக்குச் சேர வேண்டியதில்லை. அவைகள் எல்லாம் எனக்குத் துணையாய் இருந்து என்னுடன் ஒத்துழைத்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிவந்த வாலிபர்களுக்கே சேர வேண்டியதாகும்.ஆதலால் அப்புகழ்ச்சிகளை அவர்களுக்கே சமர்ப்பித்து விடுகிறேன்.
தோழர்களே! இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்த தலைவர் தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ., பி.எல். அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னை தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேனென்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது
ஒரு அளவுக்காவது மதிக்கத்தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படுமானால் அதற்கு காரணம் இந்தமாதிரி “சின்னப் பையன்களே” காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்ப தினாலேயே தான் எனக்கு ஒருபுரம் வயது வளர்ந்தாலும் வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சவகாசம் முழுவதும் சின்னப்பையன்களிடமே இருப்பதினால் தான் சின்னப்பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும் வளர்ந்தும் வருகிறது. என் ஆசை யெல்லாம் நான் எப்போதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்க வேண்டு மென்பதோடு பெரிய ஆளுகள்
மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்.
இத்தலைவரவர்கள் நமது இயக்கத்தில் கலந்திருப்பது இயக்கத்திற்கு ஒரு அளவிட முடியாத ஆதரவாகும் என்பதைப்பற்றி நான் உங்களுக்கு
குடி அரசு - 1933 M) 274
எடுத்துக் காட்டவேண்டியதில்லை. ஆனால் அவருக்கு வேண்டுமானல் பெருத்த நஷ்டம் ஏற்படலாம். ஏனெனில் அவருக்குள்ள ஊக்கமும் உற்சாக
மும், அறிவும் வேறு கட்சிகளில் பயன்படுத்தப்படுமானால் அவர் பெருத்த பதவியையும், செல்வத்தையும் அடையத் தக்கவராவர். ஆதலால் அது அவ ருக்கு நஷ்டமாகலாம். ஆனால் பெரும் பெரும் பதவிகளையும், செல்வம் சேர்க்கும் முறைகளையும் இன்னமும் நாம் நிலைக்கவைக்கப் போவதானால் தான் அவருக்கு அது நஷ்டமாகும். எனக்கு இருக்கும் நம்பிக்கைப்படி பார்த்தால் வெகு சீக்கிரத்தில் பெரும் பதவிகள் என்பவைகளும், செல்வம் சேர்க்கும் முறைகள் என்பவைகளும் ஒழிந்து விடுமென்றே கருதுகிறேன்.
நமது இயக்கம்
நமது இயக்கம் இப்போது ஏதோ ஒரு புதிய துறையில் இறங்கி விட்டதாக வரவேற்புத் தலைவர் வார்த்தைகளிலிருந்தும், மகாநாட்டுத் தலைவர் வார்த்தையில் இருந்தும் ஊகிக்க இடம்கொடுத்தது. இந்த அபிப்பி
ராயம் நம் இயக்கத்திற்கு தூண்கள் போல இருந்து ஆதரவளித்துவந்த, உதவிபுரிந்து வந்த இன்னும் பல அறிஞர்கள் உள்ளத்திலும் தோன்றி இருப்பதாக அறிகிறேன். அவ்வளவோடு மாத்திரமல்ல, இக்கருத்தின் மீது இயக்கத்துக்கு சிலருடைய பாராமுகமும் ஏற்பட்டு வருகிறதையும் உணரு
கிறேன்.
காரணம் என்னவென்றால் சுயமரியாதை இயக்கம் இதுவரை சமூக முன்னேற்ற இயக்கமாக இருந்தது மாறி இப்போது பொருளாதாரத்திலும், அரசியலிலும் பிரவேசித்து விட்டதாகவும் இதனால் இயக்கம் ஆதரவு அற்று அரசாங்க அடக்கு முறைக்கு ஆளாக்கி நசித்துப்போகுமென்றும் சொல்லுகி றார்கள். சிலர் தாங்கள் அரசாங்க ஆக்கினைக்கு தயாராயில்லை என்றும் ஆதலால் இதில் கலந்து கொள்ள முடியாது என்றும் சொல்லுகிறார்கள்.
இக்கூட்டத்தார் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியடையத்தக்க ஒரு விஷயவமிருக்கிறது. அதென்ன வென்றால் அரசாங்க அடக்கு முறைக்கு ஆளாக முடியாது என்கின்ற காரணம் மாத்திரமே அல்லாமல் இக்கொள்கை விஷயத்தில் ஆட்சேபணையிருப்பதாக காணப்படவில்லை என்பதேயாகும். இது எப்படியிருந்த போதிலும் விஷயத்தை சற்று கவனித்துப்பார்ப்போம்.
சமூக முன்னேற்றம்
சமூக முன்னேற்றமென்றால் என்ன? எந்த சமூக முன்னேற்றம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றம் என்பது மனிதர்கள் குளிப்பது, மதக்குறி இடுவது, புராணங்கள் படிப்பது, கோவில் குள
யாத்திர உற்சவம் செய்வது முதலாகிய இவைகள் தானா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிப்பது, சத்திரம் சாவடி கட்டுவது பள்ளிக் கூடம் வைப்பது
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
முதலியவைகள் தானா? இந்த மாதிரியான சமூக முன்னேற்றம் பல ஆயிர வருஷ காலமாக நடந்து வந்திருப்பதை சரித்திர வாயிலாக அறிகிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான மகாத்மாக்களும், முனிகளும், ரிஷிகளும், கடவுள் தூதர்களும், அவதராங்களும், கடவுள் அம்சங்களும் தோன்றி ஞானோபதேசம் செய்து வண்டிவண்டியான ஆதாரங்கள் சப்ளைகள் செய்தும் கடவுள்கள் பேரால் வெளியானவை என்று சொல்லியும் கட்டுப் பாடுகள் செய்து வைத்திருப்பதும் நாம் பார்க்கிறோம். இவற்றிற்காக உலகத்
தையும், உலக மக்களையும் தேசமென்றும், மதம் என்றும், ஜாதி என்றும், வகுப்பு என்றும் பிரித்து இவற்றின் பேரால் பல ஸ்தாபனங்களையும் ஏற்ப
டுத்தி 10 லட்சக்கணக்கான மக்கள் மதாச்சாரியார், உபதேசியார், மடாதிபதியார் முதலிய பேர்களால் வாழ்ந்து வருவதையும் பார்க்கின்றோம். இவ்வளவெல்
லாம் இருந்தும் மனித சமூக முன்னேற்றத்திற்கு என்ன பலன் ஏற்பட்டது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.
சுமார் 2000, 3000 வருஷத்திற்கு முந்திய மக்கள் சமூக நிலையை எடுத்துக் கொண்டால் அதில் இன்று என்ன மாறுதல், என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? அந்தக்காலத்தில் இருந்த கொடுமை, ஏழ்மை, உழைப்புக் கஷ்டம், மனக்கவலை, அடிமைத்தனம் எல்லாம் இன்றும் இருந்துதான் வருகின்றது. ராமர் காலத்தில், அரிச்சந்திரன் காலத்தில் இருந்து வந்த மேல் ஜாதி, கீழ் ஜாதி, பெண்ணடிமை, பிரபு, கூலிக்காரன், பிராமணன், சண்டாளன் முதலிய கொடுமைகள் இன்றும் இருந்துதான் வருகிறது. பெண்களுக்கு உரை: போட்டு தம்பூர் போலும், தலைகாணி போலும் வைத்திருக்கும் கொடுமை இன்று இல்லையா? பெண்களை விற்கும் கொடுமையும், அடிமை கொள்ளும் கொடுமையும் இன்று இல்லையா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி இன்று இல்லையா? மக்களை தெருவில் நடக்க விடாமை, தொடமுடியாமை, கண்ணால் பார்க்க முடியாமை ஆகிய மூர்க்க குணங்கள் இன்று இல்லையா? யாதொரு பாடும் படாமல் ஒரு நாளைக்கு நாலு வேளை, ஆறு வேளை சாப்பிடுகின்ற மக்களும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் 12 மணி நேரம் பாடு பட்டும் அவர்கள் பெண்டு பிள்ளைகள் இரண்டு நாளைக்கு ஒரு தரம் கூட
சமயல் செய்ய யோக்கியதை இல்லாத மக்களும் இல்லையா? இவைகள் எல்லாம் மதக் கட்டளை, கடவுள் சித்தம், அரசாங்க விதி என்பவைகளின் மீதே நடந்து வருகின்றனவா இல்லையா? என்பவைகளை யோசித்துப் பாருங்கள்.
மனித சமூக முன்னேற்றம் என்பதில் நாணையமாயும், யோக்கிய மாயும் பாடுபடுவதாய் இருந்தால் மேல்கண்ட கொடுமைகளை யெல்லாம் ஒழிக்க வேண்டுமா வேண்டாமா? என்று யோசித்துப் பாருங்கள். மனித சமூகம் என்றால் இதில் எந்த தேசத்தானாவது, எந்த மதத்தானாவது, எந்த சமயத்தானாவது, எந்த ஜாதியானாவது விலக்கப்பட முடியுமா என்று
யோசித்துப் பாருங்கள். எல்லா தேசத்திலும், எல்லா மதத்திலும், எல்லா ஜாதி
குடி அரசு - 1933 M) 276
யிலும், எல்லா அரசாங்கத்திலும் இந்தக் கொடுமைகளைப் பார்க்கின்றோம்.
சிலர் “எங்கள் மதத்தில் தீண்டாமை, பார்க்காமை முதலியவை இல்லை”
என்று சொல்லக்கூடும். தீண்டாமை, பார்க்காமை என்பது ஒரு மதத்தையே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதே எனது அபிப்பிராயம். தீண்டாமை என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதென்ன வென்றால் ஒருவன் பாடுபடாமல் ஊரான் உழைப்பில் வாழவேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.
உதாரணமாக பறையன் என்றால் என்ன? அவன் சதா கஷ்டமான வேலையைச் செய்ய வேண்டியவன் என்பதே. பார்ப்பான் என்றால் என்ன? அவன் சரீரத்தால் வேலையே செய்யக் கூடாது என்பதே. எங்காவது பார்ப்பனன் போட்டர் வேலை, மண்வெட்டி வேலை, வீதி கூட்டும் வேலை,
கக்கூஸ் எடுக்கும் வேலை, வண்டி இழுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய கஷ்டமான வேலை செய்கிறானா? பார்ப்பனப் பெண்களாவது காட்டு வேலை, தோட்ட வேலை, வீட்டுக்கலி வேலை முதலியவைகள் செய் கின்றார்களா? இதற்காகத்தான் ஜாதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கை கள் அதாவது இந்த மாதிரி பல ஜனங்கள் கஷ்டப்படுவதும், சில ஜனங்கள் சுகப்படுவதுமான நிலை எந்த தேசத்தில் எந்த மதத்தில் எந்த ராஜரிகத்தில் இல்லை என்று யோசித்துப்பாருங்கள். நன்றாய் யோசித்துப்பாருங்கள். இதை.
சீர்படுத்த வேண்டுமானால் எந்த விதமான சமூக முற்போக்கு வேலை செய்வது?
பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யா
மல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்கு பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டு செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை.
சும்மா அலங்காரமாக, வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பன சூட்சியையும் பேசி காலங்களிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கத்தின் வேலையானால் சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.
அரசியலைப்பற்றியும், பொருளாதாரக் கொடுமையைப்பற்றியும் பேசுவதே குற்றமான காரியம் என்று சில தோழர்கள் கருதி இருப்பதாகத் தெரி கின்றது. அது வீண் பயங்காளித்தனமேயாகும். இந்த மாதிரி பயங்காளித்தனம் கொண்ட மனதினால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அரசியலுக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் நாம் யாரையும் அடிக்கவோ, தடுக்கவோ, குத்தவோ, சுடவோ, வெடிகுண்டு எறியவோ அல்லது எவ்வித பலாத்காரத்தை உபயோகிக்கவோ வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்பதற்கு நாம் எத்தனை பேரைக் கொன்றுவிட்டோம், யாரை சுட்டோம், யார் மீது வெடிகுண்டு போட்டோம்,
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
வெறும் நமது வாய்க் கிளர்ச்சியின்பயனாகவே நமது அபிப்பிராயத்தை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளியிட்டதின் பயனாகவே மனித சமூகத்திற்குள் ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விடவில்லையா? “சுயராஜ்யம் கிடைத்த பின்பு தீண்டாமையை விலக்கிக் கொள்ளலாம்” என்று சொன்ன தோழர் காந்தி இரண்டு வருஷத் திற்குள் இன்று “தீண்டாமை ஒழிய 21 நாள் பட்டினி கிடக்கிறேன்” என்று சொல்லவும், “இந்தப் பட்டினி வெகு நாளைக்கு முன்னதாகவே இருந்திருக்க வேண்டும்” என்று சொல்லவும் கூட நாம் செய்துவிட்டோமா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள். நமது பயமற்ற, தாக்ஷண்ணியமற்ற உண்மை பிரசாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் இந்த 4, 5 வருஷத்தில் எவ்வளவு தூரம் அடக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதே பணக்கார ஆதிக்கத்தையும் நாம் சரியானபடி கண்டிக்காததால் பணக்கார ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இப்போது அது பார்ப்பன
ஆதிக்கத்துக்கு உதவி புரிகின்றது. ஆதலால் பொருளாதார துறையில் இரங்கி தைரிமாய் தாக்ஷண்ணிய மில்லாமல் அக்கொடுமையை வெளியாக்கினால் கண்டிப்பாய் பணக்கார ஆதிக்கத்துக்கு சாவுமணி அடிப்பதோடு பொருளாதாரக் கொடுமையும் சற்றாவது குறையும்.
பொருளாதார உயர்வு தாழ்வைப் பற்றியும், கொடுமையைப்பற்றியும், அது சம்மந்தமாக அரசியலைப்பற்றியும், நாம் பேசும்போது பயங்காளி களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், ரஷியா ஞாபகம் வந்துவிடுகின்றது. இது பைத்தியக்காரத்தனமே யாகும். “அன்னிய அரசாங்கமே வேண்டியதில்லை. எங்கள் தேசத்தை எங்களிடம் ஒப்புவித்து விட்டு வெளி நாட்டார். வெளியாகிவிட வேண்டும்” என்று சொல்லும் தேசியவாதிகளின் அரசியலை விட நம்முடைய அரசியல் கொடுமையானதல்ல. முட்டாள் தனமானதல்ல..
நாம் என்ன சொல்லுகின்றோம்?
அன்னியன் என்பதற்காக யாரையும் நாட்டைவிட்டு போகும்படி சொல்லுவதில்லை. அன்னியர் ஆட்சி என்பதற்காக எந்த ஆட்சியையும் நாம் அழிக்க வேண்டும் என்பதில்லை.
ஆனால் நாம் என்ன சொல்லுகிறோம். முதலாளித் தத்துவமுரை கொண்ட ஆட்சி வேண்டாம், பாடுபடும் மக்கள் அதன் பயனை அடையும் படியான முரைகொண்ட ஆட்சி வேண்டும் என்று தான் சொல்லுகிறோம்? ஏனெனில் உலகத்தில் பாடுபடும் மக்களோ, 100-க்கு 90-பேர்கள் இருக் கிறார்கள்.சோம்பேரிகள் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100-க்கு 10-பேர்கள் தான் இருப்பார்கள். ஆதலால் 100-க்கு 90-பேருக்கு அனுகூலமான ஆட்சி அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்கிறோம். இதனால் என்ன தப்பு, இது ஏன் முடியாத காரியமாகவேண்டும். இதை ராஜத்துவேஷம்
குடி அரசு - 1933 M) 278
என்றோ, வகுப்பு துவேஷம் என்றோ சொன்னால் அதற்காக பயந்துவிடுவதா என்று கேழ்க்கின்றேன். அப்படியானால் வருவதுதான் வரட்டுமே. என்ன முழுகிப்போய்விடும்? சதா சர்வகாலம் உழைத்து சோம்பேரிகளுக்குப் போட்டு விட்டு பட்டினியாகவே ஒரு சமூகம் உலகில் உயிர் வாழ வேண்டுமானால் அந்த சமூகம் பூண்டற்றுப் போவதில் யாருக்கு என்ன சங்கடம். சோம்பேரிகள்தானே இதற்காக வருத்தப்படவேண்டும். கசாப்புக் கடைக்காரனுக்காகவே ஆட்டுச் சமூகம் இருக்கின்றது என்றால், அந்த ஆட்டு
சமூகம் உலகில் அற்றுப்போவது ஆடுகளுக்கு நஷ்டமா? என்று யோசித்துப் பாருங்கள்.
உதாரணமாக தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக் கொள்ளுங்கள். காவேரி ஆற்றுப் பாசனம் முழுவதும் அங்குதான் பயன்படுகின்றது.எத்தனை ஆறுகள் ஓடுகிறது. கொல்லைக்கு போகக்கூட இடமில்லாமல் ஜில்லாவின் பெரும்பாகம் நஞ்சையாக இருக்கிறது. ஜில்லா போர்டு, தாலூகா போர்டு முனிசிபாலிட்டி எல்லாம் “பொதுஜனங்கள்” கையிலேயே இருக்கிறது. இருந்து என்ன லாபம்? சிலர் கொள்ளை அடிக்கிறார்கள். சிலர் 1000 ஏக்ரா, 5000 ஏக்ரா, 10000 ஏக்ரா என்பதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் மாத்திரமல்லாமல் கோயில், மடம் முதலியவைகளுக்கும் இதுபோலவே லட்சக்கணக்கான ஏக்ராவும், செல்வமும் இருக்கிறது.
இங்குள்ள சுவாமிகளுக்கும், மடாதிபதிகளுக்கும் உர்ச்சவம், திருக் கல்யாணம், கோபனம் ஆகியவைகளுக்கு கணக்கு வழக்கிலடங்காத பொருள் செலவழிக்கப்படுகின்றது. இவ்வளவும் இருந்து பயன் என்ன?
சிங்கப்பூர், பினங்கு, மலேயா, மோரிசு, பிஜி. கண்டி முதலிய இடங்களில் இருக்கும் கூலிகளில் அதிகமான விகிதாச்சாரம் தஞ்சாவூர். ஜில்லாக்காரர்களாகவே இருந்து வருகிறார்கள். தஞ்சாவூரில் அன்ன சத்திரங்களுக்கும் சமஸ்கிருத காலேஜுகளுக்கும் குறைவில்லை என்றால் இதன் கருத்து என்ன? என்று யோசித்துப்பாருங்கள். பாடுபடும் மக்கள். பறையனாய், பள்ளனாய், சாம்பனாய் கஞ்சிக்கு வகையில்லாமல் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு போய் நாயிலும், கழுதையிலும் கடையாய் பாடு படுவதும் சோம்பேறிகள் அன்னச்சத்திரத்தில் சாப்பிட்டு சமஸ்கிருத காலேஜில் வாசிப்பதும் அங்குள்ள மிராசுதாரர்கள் தினம் தினம் நிலா விருந்தும், சதுரும், பாட்டுக்கச் சேரியும், ஜலக்கிரீடையும் அனுபவிப்பதும் அங்குள்ள மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பதும் சகிக்கக்கூடிய காரியமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இதுபோலவே இன்னமும் எத்தனை ஜில்லாக்கள் எத்தனை மாகாணங்
கள், எத்தனை தேசங்கள் இருந்து வருகிறது. இன்னும் “நமது சுதேச” ராஜாக்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் யோக்கியதையை சொல்ல
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16.
வேண்டுமா? அநேக ராஜாக்கள் தங்கள் தேசத்தினுடைய மொத்த வரு மானத்தில் 100 க்கு 75 விகிதம் தேவடியாளுக்கும், குதிரைப் பந்தயத்துக்கும், விருந்துக்கும், மோட்டாருக்கும், வசந்தோற்சவத்திற்கும் பாழாக்குகிறார்கள்.
படிப்பு விஷயத்தில்
நமது நாட்டில் இவ்வளவு கொள்ளைக்கும், அக்கிரமங்களுக்கும், அயோக்கியத்தனத்திற்கும் பணம் இருந்தும் படிப்பு விஷயத்தில் 100 க்கு 12 பேர்கள் அதுவும் பார்ப்பனர்களும், பணக்காரர்களும் மாத்திரமே படிக்க முடிந்தது என்றால் இந்த ஆட்சியைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ எப்படிப் பேசாமல் இருப்பது என்று யோசித்துப் பாருங்கள். நாம் உண்மை யான மனித சமூகத்திற்குப் பாடுபடுவர்களாயிருந்தால் மேல்கண்ட அக்கிர. மங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரண பூதங்களாயிருப்பனவைகளை' அழித்தே ஆகவேண்டும். அது கடவுளானாலும், மதமானாலும், அரசாங்க மானாலும் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியதேதான். கடவுள் பக்தர்களும், மதபக்தர்களும், எங்கள் மீது பாய்வதில் பயனில்லை.தங்கள் தங்கள் கடவுள்
மீதும், மதத்தின் மீதும் பாய்ந்து அவைகளுக்கு புத்திவரும்படி செய்யுங்கள்.
நாங்கள் கடவுளும், மதமும் மேல் கண்ட அயோக்கியத்தனங்களுக்காக சோம்பேறிகளால் சூட்சிக்காரர்களால் மூடர்களால் கற்பிக்கப்பட்டதென்றே கருதுகின்றோம். ஆதலால் நாங்கள் அதைப்பற்றி லட்சியம் செய்வதில்லை. இன்றைய அரசியலையும் சோம்பேரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் காப்பளிக்க ஏற்பட்ட கவசம் என்றே கருதுகிறோம்.
ஆகையால் அவைகளையும் அடியோடு மாற்றி பாடுபடுபவர் களுக்கும் ஏழைகளுக்கும் காப்பளிக்கக்கூடியதான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.
இப்படிக் கருதுவதால் ஆபத்து வந்து விடும் என்று கருதுகிறவர்கள். எங்களையே இந்த ஆபத்துக்குள்ளாக்கிவிட்டு மரியாதையாய் விலகி தப்பித்துக் கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்கு பயமில்லை. ஆனால் எங்களுக்கு முட்டுக் கட்டை போட வேண்டாம் உள்ளே இருந்து துரோகம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவைகளை எல்லாம் அடிதடி குத்து வெட்டு ரத்தக்களரி இல்லாமல் சாதிக்க இடமிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். இதை ஒப்புக்கொள்ளுகிற எந்த ஸ்தாபனத்துடனும் கலந்து வேலை செய்ய தயாராய் இருக்கிறோம். நாங்கள் காங்கிரசுக்கு எதிரிகள் என்று இந்த ஊரில் சிலர். கருதியிருப்பதாய் கேழ்விப்பட்டோம். இந்தக் கொள்கைகள் காங்கிரசுடைய கொள்கைகளாய் இருந்தால் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் தான். வருணாச் சிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்கவேண்டும், “ராஜாக்கள்” இருக்க வேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் வேண்டும், வேதம் புராணம் இதிகாசம் இருக்க வேண்டும், இன்றைக்கு இருக்கிற தெல்லாம்
குடி அரசு - 1933 M) 280
இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவைகளை எல்லாம் பலப்படுத்த நிலைக்கவைக்க வேண்டி “வெள்ளைக்காரன் மாத்திரம் போகவேண்டும்” என்கின்ற காங்கிரசோ, சுயராஜியமோ, தேசியமோ, காந்தியமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியே யாகும். சுயமரியாதை இயக்கத்தார்களால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்த காங்கிரசும், காந்தியமும் ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் மாத்திரம் இருப்பதாய் கருதுகிறீர்கள் அது தவறு. உலகில் எங்கும் எந்த மூலை முடுக்குகளிலும் இருக்கிறது. இந்தியாவில் மலையாளம், ஆந்திரம், வங்காளம்,பம்பாய், பஞ்சாப் முதலிய அனேக மாகாணங்களில் இருக்கிறது. அவை களைப் பார்க்கும்போது நமது சு. ம. இயக்கம் மிகவும் வேகமற்ற சக்தி குறை வான தன்மையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
நாம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கிறவர்கள் அல்ல. நமது தகுதிக்கு நிலைமைக்கு ஏற்ற அளவில் இருக்கின்றோம். பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறையையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும், நேர்மையும் ஆனதால் நமக்கு பலாத்காரமும், ரகசியமும்
வேண்டாம்.
தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும், கவலையாயும் வேலை செய்தோமேயானால் நம்ம ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம்.
குறிப்பு: 07.08.05.33நாள்களில் திருப்பத்தூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா முதலாவது சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 14.05.1033
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
‘G’ தினம்
சமதர்மப் வருநான்
1933-வருடம் மே மாதம் 21-தேதி ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதையோரால்: தமிழ்நாடு முழுமையும் கொண்டாடப்படும்.
உலகெங்கும் கடந்த 50 வருஷமாக மே தினத்தை ஓர் பெருநாளாகத் தொழிலாளர், கிருஷிகள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழத்தப் பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் வொன்றே உவந்த தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும், குறைகளையும் தெரிவிப்பான் வேண்டி, ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும், உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்வருஷம் G’ தினமாகிய சென்ற
திங்களில் 1933, மே,1-வ ஆங்கில நாட்டிலும் (England) பிரான்சிலும் (France) ரஷ்யாவிலும் (Russia) ஜெர்மனி (Germany) இட்டலி (4) அமரிக்காவிலும்
(America) இந்தியாவிலும் (India) ஜப்பானிலும் (Japan) மற்றுமுள்ள தொழிலாளர், முதலாளி தேசங்களில் கோடான கோடி மக்கள் தம்தம் குறைகளைத் தெரிவித்தும், குறைகளுக்குப் பரிகாரம் தேடியும், யோசித்தும், பற்பல தீர்மானங்கள் செய்தும் வந்திருக்கின்றனர். இந்த வருஷம் பாரிஸ் பட்டணம், இந்நாளை தொழிலாளர் விடுமுறை நாளாகக் கொண்டாடியது. சமதர்ம நாடாகிய சோவியத் ரஷியாவில் 16 கோடி ஆண், பெண் குழந்தை
கள் அடங்கலாக யாவரும், ரஷியா தேச முழுமையும், இத் தினத்தைக் கொண்டாடினார்கள். சமதர்மிகளாகிய நாமும் இத்தினத்தைக் கவனிக்கா மலிருப்பது பெருங்குறைவேயாகும். இம்மாதம் முதல் நாள் கடந்து விட்ட போதிலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை மே மாதம் 21 தேதி சுயமரியாதை சமதர்ம சபைகள் யாவும், சமதர்ம கொள்கைகளை ஏற்றுக் கொண்ட சங்கங் கள் யாவும், அத்தினத்தை பெருந்தினமாகக் கொள்ளல் மிக்க நலமாகும். அன்று காலையிலும், மாலையிலும், அந்தந்தக் கிராமங்களிலும், பட்டணங்
களிலும் சமதர்மிகள் ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் வரலாம்.
குடி அரசு - 1933 M) 282
ஆங்காங்கு கூட்டங்கள் கூட்டி சமதர்மம் இன்னதென்றும், தொழிலாளருக்
கும் விவசாயிகளுக்கும் விளக்கமுறச்செய்யலாம். துர்ப்பழக்க வொழுக்கங் களை வொழிக்குமாறு பல தீர்மானங்களைச் செய்யலாம். இவ்விதமாக ஒழுங்காகவும், நியாய முறைப்படி கூட்டங்களையும், ஊர்வலங்களையும்
நடத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
ஈ. வெ. ராமசாமி
குடி அரசு - அறிக்கை - 14.05.1933
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
நாகம்மான் மறைஷ
எல்லாம் நண்மைக்கே
எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11-5-33 தேதி மாலை7-45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.
எப்படியிருந்தாலும் நாகம்மாளை “மணந்து” வாழ்க்கைத் துணை யாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம் மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநலவாழ்வில் “மைனராய்” “காலியாய்”
“சீமானாய்” இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டணாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்
குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிரத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ-போதிக்கி றேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.
ஆனால் நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும், ஆண்: உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமை
யாகவும், மூர்க்கமாகவும், குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.
நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவ தொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்..
குடி அரசு - 1933 M) 284
அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும்
நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநல காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பது தான்.நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும் போது மறியல் விஷயங்களிலும்,
வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், &. 1. இயக்கத்திலும் ஒத்துழைத்து
வந்தது உலகம் அறிந்ததாகும்.
ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று. சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா?
எதுவும் விளங்கவில்லையே.
எது எப்படி இருந்த போதிலும் நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரிய மல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை.
நாகம்மாளை அர்ப்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ் நாளாகிய 23 Y, இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என் கின்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.
எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில்
சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக்கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.
ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்ட துடன் “குடும்பத் தொல்லை” ஒழிந்தது என்கின்ற ஒரு உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது..
இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ அந்தமாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
படுத்திக்கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்
துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.
என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல.. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சி களைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல் நாட்டுச் சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ
காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும்
என்று கருதியது.
மூன்றாவதாக நமது “புதிய வேலைத்திட்டங்களை” உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம். ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு “கூற்றாக” நின்றது என்றால் இனி இவற்றை விட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். 2, 3 வருஷங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவ தையும் (சங்கராச்சாரிகள் போல) - (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல) (பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்க வில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள், இப்போது அந்த தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள்.
முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக.
- ஈவெரா.
குடி அரசு - தலையங்கம் - 14.05.1933
குடி அரசு - 1933 M) 286
அருஞ்கசால் வாருன்
அசூயை அத்தியந்த ஆக்கினை ஆஸ்பதம்
பொறாமை
மிகவும் நெருக்கமான கட்டளை:
இடம், பற்றுக்கோடு
சிவப்பு இரத்தினக்கல்
கெம்பு சகடயோகம்
குருவுக்கு ஆறு, எட்டு, பன்னிரண்டிற் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன்
சந்தியா வந்தனம்.
சந்தி வணக்கம்
சாக்காடு சிடுக்கை நேரம்
இறப்பு பெண்கள் தலைமுடியில்
சிக்கு எடுக்கும் நேரம்
புகழ்தல்
சிலாகித்தல்
தர்க்கீத்து
விவாதித்து பயிற்சி, ஒழுக்கம்
தர்ப்பித்து தியங்கி
சோர்வடைந்து, புத்திமயங்கி, கலங்கி
நிர்த்தூளி
முழு அறிவு நிலை நிறுத்தல் பறவைக்கூடு போல் இணையாகிவிடும், பகரமாகிவிடும்
நிர்தாரணம் பஞ்சராப்போல்
பர்த்தியாகிவிடும்.
பரியந்தம்
எல்லை, முடிய
பரதவித்து பிரக்கியாதி
வருந்தி
புகழ் கோணலாக வளர்ந்த தென்னை
முடத்தெங்கு வதியும்
தங்கும்
வநிதா வைரி
பெண், மனைவி
பகைவன்
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 16
287
குடி அரசு - 1933 M) 288