கும ௮௬
1932-2
பெரியாரின் எழுத்தும் கச்சம்
கொகுதி15
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் - திருவான்மியூர்
சென்னை - 600 041
நூல் விளக்கம்
நூலின் பெயர்
பொருள்.
மொழி
பதிப்பாளர்.
பதிப்பு
உரிமை
தாள் வகை:
நூல் அளவு
எழுத்து அளவு
பக்கங்கள்.
அட்டை வடிவமைப்பு
குடி அரசு 1932-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தமிழ்
கொளத்தூர் தா.செ.மணி
2008
பதிப்பாளருக்கு
நேச்சுரல் ஷேட்
1/8 டெம்மி
11 புள்ளி
236
ட்ராட்ஸ்கி மருது,
செம்பட்டி இராசா
அசுரன் ஊடகம், திண்டுக்கல்
உர. 200 / -
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர்
நகர் - திருவான்மியூர்
சென்னை - 600 041
சரட்டைவாக்குரிமைமை
உறுதியாக ஆதரித்த குழ NS
உடல்நலமில்லாத பெரியார் நீண்ட ஓய்வு எடுக்கவேண்டுமென்று
மருத்துவர்கள் கூறிய ஆலோசனையை புறக்கணித்து பெரியார் மேலைநாடு
பயணத்தை மேற்கொண்டார். ஈஜிப்ட், க்ரீஸ்,துருக்கி. ரஷ்யா, ஜெர்மனி, இங்
கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ப்ரான்ஸ், போர்ச்சுகல் நாடுகளில் சுமார் ஒரு
வருடம் பெரியார் பயணம் செய்தார். பயணம் முடித்து கொழும்பு வழியாக
தமிழகம் திரும்பிய காலகட்டம் இது.
இலங்கையில் பல பகுதிகளுக்கும் சென்று தனது அனுபவங்களைப்
பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பயணத்தில் நீண்ட காலத்தைச் செலவிட்ட
சோவியத் நாட்டின் சோசலிசக் கொள்கைகள் பெரியாரை மிகவும் ஈர்த்திருந்
ததை அவரது உரைகள் வெளிப்படுத்தின. நமது நாட்டில் மக்கள் ஓரணியில்
திரளாமல் தடுப்பதற்கு கடவுள், மதம், சாதி, தலைவிதி, கர்மபலன் போன்ற
நம்பிக்கைகளே காரணம் என்றார் பெரியார்.
இங்கிலாந்தில் மாபெரும் தொழிலாளர் பேரணியில் பிரிட்டன் தொழிற்
கட்சித் தலைவர் லாம்ஸ் பெரி முன்னிலையில் பெரியார் ஆற்றிய உரை;
பெயருக்கு முன்னால் தோழர் என்றே விளியுங்கள் என்று பெரியார் விடுத்த
அறிக்கை ஆகியவை இத்தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளன.
வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த பெரியாரின் எழுத்துகள் பேச்சுகள்.
இக்கால குடி அரசு ஏட்டில் இடம் பெறும் வாய்ப்புகள் இல்லை என்றாலும்
அக்கால கட்டங்களில் குடி அரசில் இடம்பெற்ற தலையங்கங்கள், கட்டுரை
கள் அதன் முக்கியத்துவம் கருதி தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
ஷெட்யூல்டு மக்களுக்கு வழங்கப்பட்ட தனித்தொகுதி முறையை
எதிர்த்து காந்தியார் உண்ணாவிரதம் தொடங்கிய காலகட்டம் இதுதான். தனித்
தொகுதியை உறுதியுடன் ஆதரித்த குடி அரசு காந்தியார் மிரட்டலுக்குப்
பதிலடி தந்தது. இந்துமத உயர்சாதியினர் எதிர்ப்பு மட்டுமின்றி கிறிஸ்தவ
மதத்தின் எதிர்ப்பையும் குடி அரசு சந்தித்தது. குடி அரசை வாங்கிப் படிப்
போர் பதினைந்து நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் “ஜாதி பிரஷ்டம்” செய்யப்
படுவர் என்று கோவை மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைமை
மிரட்டியது.
சங்கராச்சாரியின் பித்தலாட்டத்தை எள்ளல் நடையில் கேலி செய்யும்
பெரியார் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
- பதிப்பாளர்
குடி அரசு - 1932 @
4
©
P NP
o oA
e PR
ஜம
வ
T
ப
ப ப
S
©
®
N
o
o
க
w
௩
5
22.
பொருளடக்கம்
மாகாண சுயாட்சி தான் சட்டமறுப்பால் பயனில்லை
வெற்றிக்குறி
ஏழைகளுக்கு நன்மையில்லை.
தூழ்த்தப்பட்டார் விடுதலை
பெண்கள் அடிமை நீங்குமா?
வைதீகக் கோட்டையில் சுயமரியாதைக் குண்டு
தேர்தல்ஜாக்கிரதை!
ஸ்தல ஸ்தாபனச்சட்டம்
ஏழைகள் கண்ணீர்.
தமிழர் மகாநாடு
கல்வி மந்திரி பிரசங்கம்
பர்ணாட்ஷா-
மேத்தா
இதற்கு என்ன சொல்லுகிறார்கள்?
நம்பிக்கையில்லைத் தீர்மானம்
குற்றஞ்சொல்ல வாய் உண்டா?
“மதத்திற்கு வக்காலத்து”
கார்ப்பொரேஷனும் பிராமணீய பக்தியும்
அரசியல்வாதிகளுக்குப் புத்தி வருமா?
காந்தியின் வைதீக வெறி
தீண்டாதார்க்கு விமோசனம் உண்டா?
உண்ணாவிரதப் பலன்
மண்ணுருண்டை மாளவியாக்கள்
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
a1,
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
51.
குடி அரசு - 1932 @
ஜஸ்டிஸ் கட்சி கொலை செய்யப்படுமா?
தீபாவளிக் கொள்ளை நோய்
கோயில்பிரவேச மசோதா
கொழும்பில் ஈ.வெ. இராமசாமி
கொழும்பில் ஈ. வெ. இராமசாமி
கடவுளைப் பற்றி நினைக்க முடியா தொழில் முயற்சி
பரோடாவில் ஆலயப் பிரவேசம்
கத்தோலிக்கப் பெரியார்கள்.
ஆதிதிராவிட அபிவிர்த்தி சங்கத்தார் வரவேற்பு
ஈ.வெ.ரா. குறிப்பு
ஈ. வெ. இராமசாமியின் கொழும்பு விஜயம்
கொழும்பு கெயிட்டி தியேட்டர் வரவேற்பு
ஆதிதிராவிடர் சங்க வரவேற்பு
வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச பார்ப்பானுக்கும்
சம்பாஷணை
இலங்கை உபன்யாசம்
கோயில் நுழைவும் ஒற்றுமை மகாநாடும்
ஹரிஜனங்கள்
தோழர் எஸ். ராமநாதன்
அய்ய நாடார் மறைந்தார்
ஆதிதிராவிட வாலிபர்கள் வரவேற்பு
ஏன் பயப்பட வேண்டும்?
ஈ.வெ.ராமசாமிக்கு முனிசிபல் உபசாரம்
தொழிலாளர்கள்
தேசியத்தின் விளைவு
புரட்சி என்றால் என்ன? ஏன் பயப்பட வேண்டும்?
சங்கராச்சாரியும் காந்தியும்
தொழில் கட்சியின் போலித் தன்மை
வேலைத் திட்டக்கூட்டம்
அருஞ்சொல் பொருள்.
191
சீஜிஸ்டர் தெ, 2041
கனிப்பிரநி விலை ஒறு அனு:
குடிஅரசு
[
Gumatt
dwics o4 1 36 1.
000
s வெளிவரும்,
| o
ஸ்்பம் g
| விடிந்த dinsjais நனி ¥
—1032)
i 10,
aymimnfi ]L{jl_@cl மாத களுக்கு
மக்கான் பது
த ங்கபஸ்பம்,
ன
இ்திற்ள. அ வெக்கம் 120
ற்று
னல்
SEEETREEFREER பண்டிகர். உயர்திரு சாமி சிதம்பரனார் அவர்கனியற்றிய
தாது புஷ்டிக்கு
மாதர் சுதந்திரம் அல்லது
கய்ரோடைன்?
$பெண் மக்கள் பெ
N
என்னும் அரிய அல் ன் அனா
8. (எட்)
7
படட... ஓபரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
குடி அரசு - 1932 @
மாகாண ௬யாட்சி தாண்
சட்டமறுப்பால் பயணில்லை
நமது நாட்டில் உள்ள ஆவேசங் கொண்ட தேசாபிமானிகள்
கூட்டத்தில் பல மாதங்களாய், பூரண சுயேச்சைப் பேச்சும், குடியேற்ற நாட்டு
ஆட்சிப் பேச்சும், ஐக்கிய ஆட்சிப் பேச்சும் நடைபெற்று வந்தன.
இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் வழங்கலாம் என்பதை விசாரித்து
முடிவு செய்வதற்காக ஆங்கிலப் பாராளுமன்றத்தாரால் நியமிக்கப்பட்ட
“சைமன் கமிஷனை காங்கிஸ்காரர்கள் பகிஷ்காரம் பண்ணினார்கள், “பூரண:
சுயேச்சையே இந்தியாவுக்கு வேண்டும்” என்று சொல்லி திரு. காந்தி
அவர்களின் தலைமையில் “உப்பு சத்தியாக்கிரகம்” “சட்ட மறுப்பு” முதலிய
வற்றை நடத்தி தேசத்தில் பெருங்குழப்பத்தையும், கிளர்ச்சியையும் உண்டாக்
கினார்கள். இவ்வாறு சட்டமறுப்பு இயக்கம் பலமாக நடைபெற்ற காரணத்தால்
பிரிட்டிஷ் அரசாங்கத்தாரும், இந்தியர்களிடம் தாராள மனது காட்டுவது
போல், வட்ட மேஜை மகாநாடு ஒன்றை ஏற்படுத்தி இந்தியப் பிரதிநிதிகளை:
இங்கிலாந்திற்கு வரவழைத்து அரசியல் சீர்திருத்தம் சம்பந்தமாக விவாதிக்கச்
செய்தார்கள். முதலில் நடந்த வட்டமேஜை மகாநாட்டிற்கு காங்கிரஸ் பிரதிநிதி
கள் செல்லவில்லை. ஆனாலும் முதல் மகாநாட்டிலேயே இந்தியாவுக்கு
ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவது என்று தீர்மானித்தார்கள். பிறகு இரண்டாம்
முறை நடந்த வட்டமேஜை மகா நாட்டிற்குக் காங்கிரசின் ஏகப்பிரதிநிதியாக
திரு. காந்தி அவர்களும் சென்றார். இந்த மகாநாடும் ஐக்கிய ஆட்சியை
ஏற்படுத்துவது என்ற முதல் மகாநாட்டு முடிவோடு நின்றதே ஒழிய அவ்
வாட்சிக்கான திட்டங்கள் ஏற்படுத்துவது பற்றி ஒரு முடிவுக்கும் வராமல்
கலைந்தது. கடைசியாக பிரிட்டிஷ் முதல் மந்திரியால் வாக்குரிமைக் கமிட்டி,
சமஸ்தானக்கமிட்டி, ஆலோசனைக் கமிட்டி என மூன்று கமிட்டிகள்
நியமிக்கப்பட்டன. இக்கமிட்டிகளில் வாக்குரிமைக் கமிட்டியின் வேலையும்,
சமஸ்தானக் கமிட்டியின் வேலையும் முடிந்து விட்டன. இவைகளின் அறிக்
கைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருக்கின்றது, இன்னும் ஆலோசனைக்
கமிட்டியின் வேலைகள் முழுவதும் முடியவில்லை.
வட்ட மேஜைமகாநாடு கூடியது முதல் சில தினங்களுக்குமுன், சென்ற
27-6-32ல் இந்தியா மந்திரியின் அறிக்கை வெளியாகும் வரையிலும் எங்கும்
9
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஐக்கிய ஆட்சியைப் பற்றியே பேச்சாக இருந்தது. ஆனால் இந்தியாவில்
ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவதில் உள்ள இடையூறுகளையும், சிக்கல்
களையும் உணர்ந்த பல நிருபர்களும், அரசியல்வாதிகளும், மாகாண ஆட்சி
தான் முதலில் ஏற்படக் கூடும் என்று கூறிவந்தார்கள். “காந்தி - இர்வின்”
ஒப்பந்தம் ஏற்பட்டது முதல் பெரும்பாலான காங்கிரஸ்காரர்களும் திரு. காந்தி
யும் ஐக்கிய ஆட்சித் திட்டத்தை ஒப்புக் கொண்டனர்.
ஆனால் நாம் மாத்திரம். ஆதிமுதல், “ஐக்கிய ஆட்சி ஏற்பட
இடமில்லை” என்றே வட்ட மேஜை மகாநாடு ஏற்படுவதற்கு முன் உண்டான
“சைமன் கமிட்டி” அறிக்கையின்
படியும் அவ்வறிக்கையின் மேல் இந்திய
அரசாங்கத்தார் செய்துள்ள சிபாரிசின் படியும், அமைந்த “மாகாண சுயாட்சி”
தான் ஏற்படும் என்றும் ஆகவே “காங்கிரஸ்” காரர்கள் செய்யும் சட்ட மறுப்பி
னாலும், மற்றவர்கள் போடும் கூச்சலினாலும் ஒரு பயனும் இல்லை என்றும்.
கூறி வந்தோம்.
இவ்வுண்மையைத் தற்சமயம் இந்தியா மந்திரி வெளியிட்டிருக்கும்
அறிக்கையைக் கொண்டு உணரலாம். இந்தியா மந்திரியின் அறிக்கையை
சென்ற 27-6-39ல் மேன்மை தங்கிய வைசிராய் அவர்கள் வெளியிட்
டுள்ளார்கள். அவ்வறிக்கையிலிருந்து நமக்குத் தெரியும் செய்தியாவது -
“தற்பொழுது அவசரமாக மாகாண சுயாட்சி கொடுப்பதே
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவாகும். ஆனால் இப்பொழுது
மாகாண சுயாட்சிக்காக தயாரிக்கப் போகும் அறிக்கையிலேயே,
ஐக்கிய ஆட்சிக்கான திட்டமும் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்திய
ஆட்சித் திட்டங்களை ஆராய்ந்து முடிவு செய்வதற்கு அதிக காலம்
பிடிக்குமாதலால் முதலில் மாகாண சுயாட்சியே வழங்கப்படும்.
வகுப்புப் பிரச்சினை சம்மந்தமாக அரசாங்கத்தார் தமது
முடிவை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தெரிவித்து விடு
வார்கள். அதன்பின் ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் நடை
பெற்று அதன் அறிக்கை தயாரிக்கப்படும். இதன் பின்பே பாராளு
மன்றத்தாரால் நியமிக்கப்படும் கூட்டுக் கமிட்டியினால், இந்தியப்
பிரதிநிதிகளையும் விசாரித்து உடனே மாகாண சுயாட்சியைக்
கொடுக்கின்ற மசோதா தயாரிக்கப்படும். இம்மசோதாவைத் தயாரிக்
கும் போது, வாக்குரிமைக் கமிட்டி சமஸ்தானக் கமிட்டி ஆலோ
சனைக் கமிட்டி ஆகியவைகளின் அறிக்கைகளையும் துணையாக
வைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மசோதா
பாராளுமன்றத்தாரால் ஒப்புக் கொள்ளப்பட்டபின் சட்டமாக
அமுலுக்கு வரும்.”
என்பதுதான் இந்தியா மந்திரியின் அறிக்கையில் உள்ள சாரமாகும்.
குடி அரசு - 1932 @
10
இனி தயாரிக்கப் போகும் அறிக்கை பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியினால்
இந்தியப் பிரதிநிதிகளின் உதவியையுங் கொண்டு தயாரிக்கப்படும் என்று
விளம்பரப் படுத்தியிருந்தாலும் உண்மையில் அவ்வறிக்கை குப்பைத்
தொட்டியில் போட்டுவிட்டதாக அறியாதவர்களால் கருதப்படும் “சைமன்
அறிக்கையை ஒட்டியதாகவும்,
அதன்மேல் இந்திய அரசாங்கத்தார், செய்தி
ருக்கும் சிபாரிசை ஒட்டியதாகவும் தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை
என்றே சொல்லலாம்.
ஆகவே, இதுவரையிலும் “சைமன் கமிஷனை” எதிர்த்தும் வட்ட
மேஜை மகாநாட்டை எதிர்த்தும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்தும் சட்ட
மறுப்பும். கிளர்ச்சிகளும் செய்ததினால் என்ன பலன் கிடைத்தது? என்று
கேட்கிறோம்.
“சட்டமறுப்பு இயக்கத்தை ஓடுக்கி தேசத்தில் அமைதியை
ஏற்படுத்துகின்றோம்”” என்று சொல்லிக் கொண்டு இந்திய அரசாங்கத்தாரால்
பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களாலும், அவைகளை எதிர்த்துச் சட்ட
மறுப்புக்காரர்கள் செய்யும் கலகங்களாலும் நிரபராதியான ஏழை மக்கள்
கஷ்டப்படுகிறது தான் கண்டபலன்.
“பிரிட்டிஷ் அரசாங்கத்தார் முதலில் இந்தியாவுக்கு மாகாண சுயாட்சி
தான் கொடுப்பது” என்று தீர்மானித்திருப்பதால் அரசாங்கத்திற்கு இப்
பொழுது இருந்து வரும் இந்திய அரசியல்வாதிகளின் ஆதரவும் பொது
ஜனங்களின் ஆதரவும் குறைந்து விடும். ஆகையால் மாகாண சுயாட்சித்
திட்டத்தை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று சிலர் கூறி வரு
கிறார்கள். இக்கூற்று சிறிதும் உண்மையற்றது என்று நாம் கூறுவோம். இங்கி
லாந்தில் இரண்டாவது வட்டமேஜை மகாநாடு நடந்த காலத்திலேயே பிரபல
மான இந்தியஅரசியல் வாதிகளில் பலர் ஐக்கிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு
முன் மாகாண சுயாட்சியை ஏற்படுத்த வேண்டுமென்று கூறினார்கள். வட்ட
மேஜை மகாநாடு கலைந்தபின்னும், முஸ்லீம் தலைவர்களில் பலரும் இந்துத்
தலைவர்களில் பலரும் மற்ற சிறுபான்மை வகுப்புத் தலைவர்களில் பெரும்
பாலானவர்களும் முதலில் “மாகாண சுயாட்சி” ஏற்படுத்தும் விஷயத்தை
ஆதரிப்பதாக அபிப்பிராயங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆகையால்
அரசாங்கத்தார் ஏக காலத்தில் ஐக்கிய ஆட்சியையும் மாகாண சுயாட்சி
யையும் விரும்புகின்றவர்களும். பூரண சுயேட்சைக்காரர்களும் காட்டும்
பூச்சாண்டிகளுக்குப் பயப்படமாட்டார்கள்.
இதற்கு மத்தியில் அரசாங்கத்தார் காங்கிரசுடன் சமாதானம் பண்ணிக்
கொள்ள வேண்டும் என்றும் அவசரச் சட்டங்களையெல்லாம் நீக்கிவிட
வேண்டுமென்றும், மீண்டும் அவசரச் சட்டங்களை ஏற்படுத்தக் கூடா
தென்றும் இனி வரப்போகும் தேர்தலில் ஜனங்களிடம் ஓட்டுப்பெற விரும்பும்
“தேச பக்தர்கள்” எல்லாம் தனித்தனியாகவும் ஒன்று சேர்ந்தும் பல
11
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அறிக்கைகள் வெளியிட்டார்கள். திரு காந்தி அவர்களும் “தேசீய கெளரவத்
திற்குப் பங்கம் வராத சமாதான” த்திற்குச் சம்மதிப்பதாக வெளியிட்டிருந்தார்.
ஆனால் சிறந்த ராஜதந்திரியான லார்டு வில்லிங்டன் அரசாங்கத்தார்.
“காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு நடத்திக் கொண்டிருக்கின்றவரையிலும்.
எத்தகைய சமாதானத்திற்கும் தயாராஇல்லை” என்ற முடிவோடு இருக்கிறார்.
கள் என்ற விஷயம் அடிக்கடி தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும்
அரசியல் தந்திரம் அறியாதவரும் மதபக்தரும்ஆன மாஜி வைசிராய் லார்டு
இர்வின் பிரபு அவர்களுடன் திரு. காந்தியவர்கள் சமாதான உடன்படிக்கை
செய்து கொண்டது போல லார்டு வில்லிங்டன் பிரபு அவர்களுடன் செய்து
கொள்ள முடியாது என்பதை காங்கிரஸ்காரர்கள் இன்னும் உணராததாலேயே
பிடிவாதமாகச் சட்ட மறுப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஒருக்கால்
காங்கிரசுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் சமாதானம் ஏற்பட்டாலும் முன்பு
ஏற்பட்ட “காந்தி - இர்வின்” ஒப்பந்தத்தைப் போல் போலிச்சமாதானம்
ஏற்படாது என்பது நிச்சயம். காங்கிரஸ் படிந்து வந்தாலொழிய சமாதானம்.
செய்து கொள்ளப் போவதில்லை என்ற உறுதியினால் தான் இப்பொழுதுள்ள
அவசரச் சட்டங்களின் காலம் முடிந்தபின் மீண்டும் ஜூலை 3ந்தேதிமுதல்
புதிய அவசரச் சட்டங்களை ஏற்படுத்துவதாக அரசாங்கத்தார் முடிவு
செய்திருக்கின்றார்கள். இது பற்றி சென்ற 27-6-32ல் பாராளுமன்றத்தில்
இந்தியா மந்திரியவர்கள்
“ஜூலை மாதம் 3-ம் தேதி முதல் புதிய அவசர அதிகாரங்
களைப் பெற வேண்டிய சங்கடமான நிலைமைக்கு வந்திருக்கி
றோமாகையால் அதற்கு வேண்டிய அவசர அதிகாரங்களைப்
பெறுவதென்று முடிவு செய்திருக்கிறோம்”
என்று பேசியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
ஆகவே இது வரையிலும் கூறியவற்றால் இப்பொழுது மாகாண
சுயாட்சி கொடுப்பதாகவே அரசாங்கத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்
என்பதையும் பூரண சுயேச்சைக்காகவும், ஐக்கிய ஆட்சிக்காகவும், செய்த
சட்டமறுப்புக்களும் போட்ட கூச்சல்களும் வீணே என்பதையும், காங்கிரஸ்
காரர்கள் சட்ட மறுப்புச் செய்து கொண்டிருக்கும் வரையிலும் அரசாங்கத்தார்.
சமாதானத்திற்கு இணங்கப்போவதில்லையென்பதையும் அவசரச்
சட்டங்களையும் கைவிடப் போவதில்லையென்பதையும் உணரலாம்.
இந்த நிலையில் தேச மக்கள் செய்ய வேண்டிய வேலை வரப்போகும்
மாகாண சுயாட்சியில் ஒவ்வொரு வகுப்பினரும் சமபங்கு பெற்றுத் தங்கள்
தங்கள் நிலையைச் சரிப்படுத்திக் கொள்ள முயலுவதேயாகும். பிற்போக்
கடைந் திருக்கும் சமூகத்தினர் இப்பொழுது ஏமாந்து பேசாமலிருந்துவிட்டால்
பிறகு கஷ்டப்படுமாறு நேரும். ஆகையால் முக்கியமாகத் தாழ்த்தப்பட்ட
குடி அரசு - 1932 @
12
சமூகத்தினர் வரப்போகும் மாகாண சுயாட்சியில் சட்டசபைகளிலும் மற்ற
பொதுஸ்தாபனங்களிலும் தங்கள் ஜனத்தொகைக்குத் தகுந்த பிரதிநிதித்துவம்
பெறுவதற்கும் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் யாருடைய
தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல் உழைக்கக் கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்
தெடுப்பதற்கும் தகுந்த வகையை மாகாண சுயாட்சித்திட்டத்தில் அமைக்கும்
படி கிளர்ச்சி செய்ய வேண்டும். வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான முடிவி
லேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடைய நன்மை தீமைகளும் மற்ற பிற்
போக்குள்ள சமூகத்தினருடைய நன்மை தீமைகளும் அடங்கியிருக்கின்றன.
ஆகையால் எல்லாச் சமூகத்திற்கும் அரசியலில் நியாயமான பிரதிநிதித்துவம்
ஏற்படும்படி முடிவு கூறுமாறு பிரிட்டிஷ் முதல் மந்திரிக்கு எடுத்துக் காட்டு
வதே இச்சமயத்தில் உண்மையான தேசாபிமானிகளின் கடமையாகும்
என்பதை நினைப்பூட்டுகிறோம். இதை விட்டு இன்னும் வீணாகச் சட்ட
மறுப்பென்றும், சத்தியாக்கிரகமென்றும் சொல்லிக் கொண்டு தேசத்தின்
அமைதியைக் கெடுத்துக் கொண்டிருப்பதனால் ஒரு பயனும் இல்லை என்று
எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.07.1932.
12
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
PP
திருச்சியில் உயர்திருவாளர் எம். டி. சோமசுந்திரம் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற சீர்திருத்த திருமண நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி
பிறிதோரிடம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நமதன்பர் சோமகந்திரம் அவர்கள்
சென்னை அரசாங்க அமைச்சர் கனம் பி.டி.ராஜன் அவர்களது சிறிய தந்தை
யென்பதும், தொண்டைமண்டல முதலியார் என்று சொல்லப்படும் வகுப்பைச்
சேர்ந்தவரென்பதும் நேயர்கள் அறிந்ததே. அன்னார் தலைமையில்
புரோகிதம் ஒழிந்து சீர்திருத்தத் திருமணம் நடந்ததானது மேற்படி சமூகத்தில்
ஒரு பெரும் புரட்சியை யுண்டாக்கி விட்டதென்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்த சமூகத்தார் தாங்கள் ஜாதியில் உயர்ந்தவர்கள் என்ற
இறுமாப்புக் கொண்டிருப்பதோடு புரோகிதத்தையோ, வைதீக மதாச்சார
சடங்குகளையோ எக்காரணம் கொண்டும் கைவிட ஒறுப்படாதவர்கள்.
அத்தகைய ஓர் “பெரிய” வகுப்பில் புரோகிதம் ஒழிந்த சீர்திருத்தத் திருமணம்
நடந்ததென்றால், அது நமதியக்கத்திற்கு மகத்தான வெற்றி என்றே கூற
வேண்டும். நமதியக்கக் கொள்கைகள் நாட்டில் எவ்வளவு மலிந்து வருகின்ற
தென்பதோடு நமது கொள்கைகள் திட்டங்கள் யாவும் மக்களுக்கு தங்கள்
தினசரி வாழ்க்கைக்கு பயன்படத்தக்க இன்றியமையாதனவாய் இருக்கின்றன
வென்பது நன்கு புலனாகும். நமது கொள்கைகள் நாடெங்கும் பரவி சர்வ
வியாபகமாக வேண்டுவதற்கு பார்ப்பனீயக் கோட்டைகளும், சைவக்
கோட்டைகளும் தகர்த்தெறியப்பட வேண்டுமென நாம் பன்முறையும்
இடித்திடித்து கூறிவந்திருக்கிறோம். தலைவரவர்கள் தனது முன்னுரையில்
சுயமரியாதை உலகெலாம் பரவவேண்டுமென அவாவுவதையும் இத்தகைய
மணங்கள் நாட்டிற்கு எவ்வகையிலும் புதிதன்று எனவும், இது பழங்கால
முறையே என்றும் குறித்திருப்பதைப் பாராட்டுவதோடு இத்தகைய திருமணங்
கள் ஏராளமாக நடைபெற வேண்டுமென்றும் விரும்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.07.1932.
குடி அரசு
- 1982 (2)
14.
ஏழைகளுக்கு நண்மையில்லை
இக்காலத்தில் எங்கு பார்த்தாலும் பணமில்லாத காரணத்தால் மக்கள்
படும் துன்பம் சொல்ல முடியாததாக இருக்கின்றது. இன்னார் கஷ்டப்
படுகின்றார்கள்; இன்னார் கஷ்டப்படாமல் இருக்கிறார்கள் என்று சொல்லு
வதற்கில்லை. ஏழை முதல் பணக்காரன்
வரை ஆண்டி முதல் அரசன் வரை
எல்லோரும் பொருளாதார நெருக்கடியால் இன்னது செய்வதென்று
தோன்றாமல் திக்குமுக்காடுகின்றார்கள். நமது நாட்டு மக்களில் நூற்றுக்குத்
தொண்ணூற்றொன்பது பேர் பரம ஏழைகள் என்பது தெரிந்த விஷயம்.
இத்தகைய ஏழை மக்கள் உணவுக்கும், உடைக்கும், உறைவிடத்திற்கும், படுந்
துன்பம் இவ்வளவு அவ்வளவு என்று யாராலும் குறித்துரைக்க முடியாது. இந்த
நாட்டில் பிழைப்பில்லாமல் பெண்டு பிள்ளைகள், உற்றார் உறவினர், எல்லோ
ரையும் விட்டு விட்டு கடல் கடந்து அன்னிய நாடு சென்று கூலி வேலை
செய்யும் மக்களில் இந்தியரே அதிகமானவர்கள் என்பது எல்லோருக்கும்
தெரியும். இப்படிப்பட்ட கூலிகளுக்குக் கூட அன்னிய நாடுகளிலும் பிழைப்பு
இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரும்பி வந்து
கொண்டிருக்கின்றனர். இவர்கள் பெண்டு பிள்ளைகளுடன் வறுமையின்
கொடுமையினால் பல பிணிகளுக்கும் ஆளாகி இரத்தக் கண்ணீர் வடிக்
கின்றார்கள். நாட்டின் தலைவர்கள் என்பவர்களும் பணக்காரர்களும்,
படிப்பாளிகளும் இத்தகைய ஏழைமக்களின் துயரைப் போக்க ஒரு வழியும்
செய்யக் கவலையெடுத்துக் கொள்ளக் காணோம்.
வெள்ளைக்காரர்களின் அரசாட்சியை யொழித்து இந்தியர்களுடைய
சுயராஜ்யத்தை ஸ்தாபிக்கும் பொருட்டு “காங்கிரஸ்” சட்டமறுப்பு இயக்கத்தை
வருஷக்கணக்காக நடத்திக் கொண்டு வருகிறது. சுயராஜ்ய ஆவேசங்
கொண்ட வாலிபர்களும், நடுத்தர வயதுள்ளவர்களும், காங்கிரசின் பேராலும்,
சட்ட மறுப்பின் பேராலும் ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். சட்ட
மறுப்பின் பெயரால் இவர்கள் செய்யும் காரியங்கள் இன்னவையென்பது
வாசகர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. இந்தச் சட்ட மறுப்பால் அரசாங்கத்
திற்கும் கஷ்டமும், நஷ்டமும் உண்டாவதைப் பற்றி, நமக்குக் கவலை
இல்லை.ஆனால் பொது ஜனங்களுக்கும் பல கஷ்டங்களையும் நஷ்டங்
15
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
களையும் சட்ட மறுப்பு இயக்கம் உண்டாக்கிக் கொண்டு வருகிறது என்பதை
யாரும் மறுக்க முடியாது.
இந்தச் சட்டமறுப்பு இயக்கத்தை அடக்கும் பொருட்டு அரசாங்கத்தார்
எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியினாலும் பொதுஜனங்களுக்குக் கஷ்டம்
உண்டாகாமற் போகவில்லை. சட்ட மறுப்புக் கைதிகளாக ஆயிரக்கணக்கான
மக்களைச் சிறையிலடைத்துக் கொண்டு அவர்களுக்குச் சோறு போட்டு
வருகிறார்கள். இன்னும் சட்ட மறுப்பைச் சமாளிக்கும் பொருட்டு விசேஷ
போலீசாரையும் மற்றும் பல உத்தியோகஸ்தர்களையும் ஏற்பாடு செய்ய
வேண்டியிருக்கிறது.ஆகவே இவை போன்ற காரியங்களுக்குச் செலவாகும்
பணமெல்லாம் பொது மக்கள் தலையிலேயே விடிகின்றது. இதன்மூலம்
ஏழைகள் படும் துயரை அளவிட்டுக் கூற முடியுமா? இது நிற்க,
படித்த கூட்டத்தினர்க்கு ஏழைமக்களிடம் எள்ளளவும் அனுதாபம்
இருப்பதில்லை. அவர்கள் எப்பொழுதும் பட்டம் பதவி முதலியவைகளைப்
பெற்று அச்செல்வாக்கைக் கொண்டு ஏழைமக்களின் இரத்தத்தை உறிஞ்சி,
தாங்கள் மாத்திரம் செளக்கியமாக வாழ்வதிலேயே குறிப்பாய் இருப்பவர்கள்.
இவர்களைப் போலவேதான் பணக்காரர்களும், ஏழை மக்கள் பால் சிறிதும்
இரக்கமில்லாமல் தமது நன்மைக்கான காரியங்களிலேயே கவனத்தைச்
செலுத்தி வருகின்றவர்களா யிருக்கின்றார்கள். இந்தப் படித்தவர்களுடைய
தயவும், பணக்காரர்களுடைய தயவும் இன்றேல் அரசாங்கமும் நாட்டில்
தங்கள் விருப்பப்படி ஆண்டு கொண்டிருக்க முடியாது.ஆகையால் இவ்விரு
கூட்டாத்தாரையும் திருப்தி செய்விக்க வேண்டிய நிர்ப்பந்தம் எப்பொழுதுமே
அரசாங்கத்திற்கு உண்டு. ஆகையால் அரசாங்கத்தார், படித்தவர்கள்,
பணக்காரர்கள் ஆகியவர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் மேலும் மேலும்
வளர்ச்சியடைவதற்குத் தகுந்த முறையில் “சுயராஜ்யம்” என்னும் பெயரினால்
அரசியல் சீர்திருத்தம் வழங்கி வருகின்றனர்.
இந்தச் சீர்திருத்தத்தின் மூலம் கிடைக்கும் லாபங்களைப் பங்கு
போட்டுக் கொள்ளும் விஷயமாக படித்தவர்களுக்குள்ளும், பணக்காரர்.
களுக்குள்ளும் உண்டாகியிருக்கும் கட்சிகள் பல. இக்கட்சியைச் சேர்ந்த
வர்கள் தேர்தல்களில் வெற்றிபெறும் பொருட்டுச் செய்யும் ஆர்ப்பாட்டங்கள்
பல, பிராமணர் கட்சி, அல்லாதார் கட்சி, முஸ்லீம்கட்சி, சீக்கியர் கட்சி, தாழ்த்தப்
பட்டோர் கட்சி, கிறிஸ்தவர் கட்சி என வகுப்பின் பேராலும் மதத்தின் பேரா
லும் உண்டாகியிருக்கும் கட்சிகள் பல. இக்கட்சிகளில் பிராமணருக்குள்
காங்கிரஸ் பிராமணர், மிதவாதப் பிராமணர், சுதேசிப் பிராமணர், சனாதன
தருமப் பிராமணர் எனப் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பிராமணரல்லா
தார்க்குள்ளும் இதுபோலவே, தேசீய பார்ப்பனரல்லாதார், சுயேச்சைப்
பார்ப்பனரல்லாதார் எனப் பல வகைக் கட்சிகள் இருக்கின்றன. முஸ்லீம்
களுக்குள்ளேயும், மெளலானா ஷெளகத் அலி கட்சி, சர். முகமது இக்பால்
குடி அரசு - 1932 @
16
கட்சி, மெளலானா ஹசரத் மோகினி கட்சி, தேசீய முஸ்லிம் கட்சி எனப்பல
பிரிவுகளிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களுக்குள்,
திருவாளர்கள்
அம்பேட்கார், சீனிவாசன் கட்சி, திருவாளர்கள் மூஞ்சே ராஜா ஒப்பந்தக் கட்சி
எனப் பிரிவுகளிருக்கின்றன. இவ்வாறே ஒவ்வொரு வகுப்புக் கட்சிக்குள்ளும்
உட்பிரிவுக் கட்சிகள் பல இருந்து வருகின்றன. இப்பிரிவுகளும் கட்சிகளும்
தோன்றியிருப்பதன் நோக்கம், சீர்திருத்தத்தில் பட்டம் பதவிபெறுவதையன்றி
வேறில்லை யென்பதில் ஐயமில்லை. இந்தக் கட்சிகளில் ஒன்றேனும் அரசியல்
திட்டத்தில் மதப் பாதுகாப்பும், பணக்கார நிலச்சுவான்தார் பாதுகாப்பும்
இருக்கக் கூடாது என்பது பற்றிப் போராடாத ஒரு காரணத்தைக் கொண்டே
இவையெல்லாம் படித்தவர்களின் நன்மைக்காகவும், பணக்காரர்களின்
ஆதிக்கத்திற்காகவும் சிருஷ்டிக்கப்பட்ட கட்சிகளேயொழிய ஏழைமக்களின்
நன்மைக்காகச் சிருஷ்டிக்கப் பட்டவைகள் அல்லவென்பதை உணரலாம்.
இன்றும் அரசியல் காரணமாகவும், மதம் காரணமாகவும் தேசத்தில்
ஒரு வகுப்போடு ஒரு வகுப்பும், ஒரு மதத்தோடு ஒரு மதமும் சதா கலகம்
விளைத்துக் கொண்டிருப்பதைத் தடுப்பதற்கான முயற்சிகளை எந்தக்
கட்சியினரும் செய்ய முன் வரவில்லை. இவ்விஷயத்தில் யாரும் கவலை
கொண்டிருக்கிறார்கள் என்று கூடச் சொல்ல முடியவில்லை.
உதாரணமாக இப்பொழுது பம்பாய் நகரத்தில் நடைபெறும் இந்து
முஸ்லீம் கலக சம்பந்தமான செய்திகள் நமது மனத்தைக் கலக்குகின்றன..
அங்கு இந்துக்களிலும், முஸ்லீம்களிலும் நிரபராதிகள் படும் துன்பத்தைக்
கேட்கும் எவரும் இரத்தக் கண்ணீர் வடியாமலிரார். கடைகள் கொள்ளை
போகின்றன; தீக்கு இறையாக்கப் படுகின்றன: பலர் கொல்லப் படுகின்றார்கள்:
எண்ணற்றவர்கள் காயமடைகின்றார்கள்; அபலைகளான பெண்மக்களும்
கூட அவமானமும், அடியும் படுகிறார்களென்றால் இதை விட இன்னும் வேறு
என்ன வேண்டும்.மசூதிகளும் கோயில்களும் தாக்கப் படுகின்றன. இவைகள்
தாக்கப்படுவதில் நமக்குச் சிறிதும் கவலையில்லை.
இதன் மூலம் இன்னும்
கலகம் வலுத்து வருகிறதென்பதைப் பற்றியே கவலைப் படுகிறோம்.
உண்மையில் இக்கலகம் உண்டாவதற்கு முதலில் அரசியல் காரணமாக
இருந்தாலும், வரவர இக்கலகம் மதச் சண்டையாகவே முற்றிவிட்டது
என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே உண்மையில் இது போன்ற வகுப்புக் கலகங்களும், மதச்
சண்டைகளும் ஒழிய வேண்டுமானால் மதப்பாதுகாப்பும், ஜாதி நாகரிகப்
பாதுகாப்பும், நிலச்சுவான்தார், பணக்காரர்களுக்குப் பாதுகாப்பும் உள்ள
அரசியல் சீர்திருத்தத்தால் ஒழியுமா? என்றுதான் கேட்கிறோம்.
ஏழைமக்களின் வறுமையைப் போக்குவதற்கு முயலாமலும், கவலை
கொள்ளாமலும், ஜாதிமதச் சண்டைகளை ஒழித்துச் சமாதானத்தை உண்டாக்க.
வழி தேடாமலும் இருந்து கொண்டு, வீணே “ஐக்கிய ஆட்சி” “மாகாண
17
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
சுயாட்சி” “குடியேற்ற நாட்டு ஆட்சி” “சுயராஜ்யம்” என்று பட்டம் பதவி
களுக்காக வேண்டிக் கூச்சலிடும் அரசியல் கட்சிகளால் நாட்டுக்கு என்ன
நன்மை யுண்டாகுமென்று கேட்கிறோம்.
ஆகையால் பொது ஜனங்கள், எந்த அரசியல் கட்சிக்காரர்களை
நம்பினாலும் நன்மையடையப் போவதில்லை யென்பது நிச்சயம். ஜாதிப்
பிரிவுகளுக்கும், உயர்வு தாழ்வுகளுக்கும் ஏழை பணக்காரத் தன்மை
களுக்கும் காரணமாக இருக்கும் மதத்திற்கு ஆதரவளிக்கும் எக்கட்சி
யினாலும் நாட்டுக்குக் கடுகளவும் நன்மை செய்ய முடியாது என்று எச்சரிக்கை
செய்கின்றோம்.
மதமும் மதப்பாதுகாப்பும் நிலைநிற்கும் வரையிலும்,
வகுப்புச் சண்டைகளும், மதச் சண்டைகளும் ஒழியப் போவது இல்லை
என்பது நிச்சயம். ஆகையால், முதலில் மதத்தையும், அதன் மூலம் உண்டான
மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டியதே உண்மையான தேசாபி
மானிகளின் கடமையாகும். இதை விட்டுவிட்டு வீணாகச் “சுயராஜ்யம்”
“சுதந்திரம்” “விடுதலை”, சமத்துவம்” என்று கூச்சலிடுவதெல்லாம், பொது
ஜனங்களை ஏமாற்றும் பொருட்டே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்
கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.07.1932.
குடி அரசு - 1932 @
18
தாழ்த்தப்பட்டார் வி௫தலை
இந்துக்கள் மயவலை
பொதுவாக உலகில் வாழும் ஜீவப் பிராணிகளெல்லாம் இன்பத்தையே
அடைய விரும்புகின்றன. இது உலக சுபாவமாகும்.இது போலவே அறிவில்
சிறந்தவர்கள் என்று கருதப்படும் மனிதர்களும் இன்பத்தோடு வாழ
விரும்புவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற ஜீவப் பிராணி
களுக்கும், மனிதர்களுக்கும் தாங்கள் செளக்கிய மடையும் விஷயத்தில் ஒரு
வித்தியாசம் மாத்திரம் உண்டு. மற்றய பிராணிகள் வேறுள்ள ஜீவன்
களையெல்லாம் தங்களுக்கு அடிமையாக வைத்துக்கொண்டு, அவைகளின்
உழைப்பால் தாங்கள் கஷ்டப்படாமல் செளக்கியமாக ஜீவிக்க வேண்டும்
என்று நினைப்பதில்லை.ஒவ்வொரு ஜீவப் பிராணி வகையும் தாமே உழைத்து
வருந்திச் செளக்கியமடைகின்றன. ஆனால் மனிதன் மாத்திரம் பிற மனிதன்
தமக்குக்கீழ் அடங்கி நடக்கும்படி செய்து, அவர்கள் உழைப்பைக் கொண்டு,
தான் சிறிதும் கஷ்டப்படாமல் சுகம் அனுபவிக்க ஆசைப் படுகின்றான்.
இக்
குணம் முற்காலத்தில் ஒரு மனிதனிடம் உற்பத்தியாகி, பின்பு அது பல
மனிதர்களிடம் பரவி, கடைசியில் ஒரு கூட்டத்தினரிடம் நிலைத்து விட்டது
என்று யூகித்துக் கூறுவது பொருத்தமாக இருக்கலாம். இக்குணத்திற்கே
“சுயநலம்” என்று சொல்லப்படுவது. இக்குணத்தையே தொழிலாகக் கொண்ட
ஒரு கூட்டம் பல்லாயிரக்கணக்கான வருஷங்களாக உலகில் இருந்து
கொண்டுதான் வருகிறது.
இக்கூட்டத்தினரின் சூழ்ச்சியினால் தான் உலகில் தற்போது நமது
கண்முன் காணப்படும் எண்ணற்ற சாதிப் பிரிவுகளும், மதவேற்றுமைகளும்,
கொடுமைகளும், குருட்டுப்பழக்க வழக்கங்களும் ஏற்பட்டு நிலை பெற்று
வருகின்றன,
எங்கும் “சமத்துவம்” “சகோதரத்துவம்” “விடுதலை” “சுதந்திரம்”
என்னும் வார்த்தைகள் தோன்றி சுயநலக்கூட்டத்தாரின் சூழ்ச்சியால்
அடிமைப்பட்டு மனிதத் தன்மையை மறந்து கிடந்த மக்களை விழிக்கச்
செய்கின்ற இக்காலத்திலும் பரம்பரையாக கஷ்டமின்றிச் சுகம் அனுபவித்து
19
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வந்த கூட்டத்தார் தங்கள் சுயநலத்தை விட்டுக்கொடுக்கச் சம்மதிக்கா
மலிருப்பதில் ஆச்சரியமில்லை.
நெடுங்காலமாக அனுபவித்து வந்த
செளக்கியத்தைத் திடீரென்று எப்படி தியாகம் பண்ணிவிட முடியும்? தங்கள்
சமத்துவத்திற்குப் போராடத் தூக்கத்தினின்று எழுந்து புதிய ஊக்கத்துடன்
முன்வந்திருக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுகுழியில் வீழ்த்தவே
முயற்சி செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால் “மனுதருமத்தை”ச் சட்டமாகவும், அதை ஆக்கிய
பார்ப்பனர்களை மந்திரிகளாகவும், குருமார்களாகவும் வைத்துக் கொண்டு
அரசாண்ட இந்திய மன்னர்களின் அரசாட்சி ஒழிந்து “பிரிட்டிஷ்” அரசாட்சி
ஏற்பட்டதின் பலனாக, இன்று மனிதத்தன்மையை மறந்து அடிமையாகக்
கிடந்த மக்கள், தங்கள் மனிதத் தன்மையைப் பெற முயற்சிக்கின்றனர். பழய
இந்து மன்னர்களின் அரசாங்கம் இப்பொழுதும் நமது நாட்டில் நிலைத்திருக்
குமாயின் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் விரும்புவது போலவும், கிளர்ச்சி
செய்வது போலவும், சமத்துவத்திற்கும், சுதந்திரத்திற்கும் கிளர்ச்சி செய்வார்.
களானால் கட்டாயம் அச்சமூகத்தார் முழுவதும் சித்திரவதைக்கும் சிரச்சேதத்
திற்கும் உட்படுவார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களில்
சிலர் கொஞ்சம் கல்விப் பெற்றதன் பயனாலும், தாங்களும் மற்றவர்களைப்
போல் மனிதர்கள் தான் என்பதை உணர்ந்ததன் பயனாலும், தாங்கள் உழைக்க
பிறர் அதைக் கொண்டு உயிர் வாழ்ந்து, தங்கள் தலை மேலேயே உட்கார்ந்து
கொண்டு அமிழ்த்திக் கொண்டிருக்கும் கொடுமையை உணர்ந்ததன்
பயனாலும், தாங்கள் இந்துக்களினின்றும் தனியாகப் பிரிந்தாலொழிய
தங்களுக்கு ஒருவித விமோசனமும் ஏற்படாது என்பதை அறிந்து அதற்காகக்
கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இக்கிளர்ச்சி சமூகத்திலிருந்து ஆரம்பித்து
அரசியலிலும் நுழைந்து விட்டது.
இந்துக்களின் அரசாட்சி ஒழிந்துவிட்ட கால முதலே அவர்கள்
ஆதிக்கமும் குறைந்துவிட்டது.ஆகையால் எப்பொழுதும் அடக்கி ஆண்டு
வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை மதத்தைக் கொண்டாவது. வேத
சாஸ்திரங்களைக் கொண்டாவது, பலாத்கார அதிகாரத்தைக் கொண்டாவது
இனியும் அடக்கி வைத்திருக்க முடியாது என்பது நிச்சயம். ஆகவே அரசியல்
ஆதிக்கம் பெற்றால் தான் அவர்களை முன்போல அடக்கி ஆளமுடியும்.
இந்தக் காரணத்தால் தான் வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து
தங்கள் கையில் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் வைத்துக் கொள்ளக்
கூடிய “சுயராஜ்ய”த்திற்காகச் செய்யப்படும் கிளர்ச்சியில், உயர்ந்த சாதிக்காரர்.
களும், வைதீகர்களும், மத பக்தர்களும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்பதில் ஐயமில்லை.
குடி அரசு - 1932 @
20
திரு.காந்தி உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களும், பண்டித மாளவியா, திரு
மூஞ்சே யுள்ளிட்ட இந்து மகாசபைக்காரர்களும் தாழ்த்தப்பட்ட கூட்டத்
திற்குத் தனித் தொகுதி ஏற்படுத்தக் கூடாது என்று பலமாக எதிர்ப்பதற்குக்
காரணம் இதுவேயாகும். முஸ்லீம்கள் தனித் தொகுதி வேண்டிப் பிரிந்து
நிற்கும் காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும், மற்ற சிறுபான்மைச்
சமூகத்தாரும், தனித்தொகுதி பெற்றுப் பிரிந்து நிற்பார்களாயின் இந்து
சமூகத்தாரின் கூட்டம் சட்ட சபைகளில் மைனாரிட்டியாகி விடும் என்பதில்
ஐயமில்லை. இவ்வாறாகி விட்டால், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தமக்கு
வேண்டிய செளகரியங்களை முஸ்லீம்களுடையவும் மற்றச் சிறுபான்மைச்
சமூகத்தினருடையவும் பிரதிநிதிகளின் உதவி பெற்றுச் சட்ட சபைகளின்
மூலம் செய்து கொள்ளலாம் என்பதில் சந்தேக மில்லை. இவ்வகையாகத்
தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறக்கூடிய சந்தர்ப்பம் பெற்று விட்டால்
அது, இதுவரையிலும் அவர்களைக் கொடுமைப் படுத்தி அடக்கியாண்டு
வந்த உயர்ந்த சமூக இந்துக்களின் சுயநலத்திற்குப் பாதகம் உண்டாக்காமற்
போகாது. இக் கருத்துகளைக் கொண்டுதான் “காங்கிரஸ்” பிரதிநிதி என்ற
பெயரோடு “வருணாச்சிரம தரும”த்தின் பிரதிநிதியாகச் சென்ற திரு. காந்தி
யவர்களும் மற்ற இந்து மகாசபையைச் சேர்ந்தவர்களுமான வட்டமேஜை
மகாநாட்டுப் பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி ஏற்படுத்
துவதை ஒரே அடியாக
எதிர்த்தார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால் இச்சூழ்ச்சியை அறிந்த தாழ்த்தப்பட்ட மக்கள், தங்களுக்குத்
தனித் தொகுதியே வேண்டுமென விரும்புகின்றனர். அச்சமூகத்தின்
தலைவர்களாகிய திருவாளர்கள் டாக்டர் அம்பெட்கார், ஆர். சீனிவாசன், எம்,
சி.ராஜா, வி. ஐ. முனுசாமி பிள்ளை போன்ற தலைவர்களெல்லாம் தங்களு
டைய சமூகத்திற்குத் தனித் தொகுதியே வேண்டுமென்று கிளர்ச்சி செய்தனர்.
இவர்களில் திரு. எம்.சி.ராஜா அவர்களைத் தவிர மற்றவர்கள் இன்றும் தனித்
தொகுதி வேண்டுமென்பதிலேயே உறுதியாக இருக்கின்றனர்.
திரு.எம்.சி.ராஜா மட்டிலும், எவ்வித சூழ்ச்சியினாலோ ஏமாற்றப்பட்டு
இந்து மகாசபையைச் சேர்ந்த திரு. மூஞ்சே அவர்களுடன் ஒப்பந்தம் செய்து
கொண்டு தனித் தொகுதியை எதிர்த்தும், கூட்டுத் தொகுதியை ஆதரித்தும்
பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார். உண்மையில் இப்பிரசாரத்திற்கு
காரணம், இந்துக்களின் சூழ்ச்சி என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்துக்களின்
வலையிற் சிக்கி இருக்கும், திரு, எம். சி. ராஜா அவர்களைப்போல் அவர்.
களுடைய வலையிற் சிக்கிய வெகு சிலரே ராஜாவின் பேச்சை ஆதரிக்
கின்றார்கள்.
ஆனால் திரு. ராஜா அவர்களின் அபிப்பிராயந்தான் தாழ்த்தப்பட்ட
வர்களின் அபிப்பிராயம் என்று நினைக்குமாறு, இந்துக்களின் ஆதிக்கத்
திலிருக்கும் தேசீயப் பத்திரிகைகள் எனப் பெயர் வைத்துக் கொண்டிருப்
பவை, திரு.ராஜாவை ஆதரித்து விளம்பரம் பண்ணிக் கொண்டு வருகின்றன.
21
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15.
உண்மையில் தாழ்த்தப்பட்ட சமூகம் சமத்துவம் பெற வேண்டு
மானால், அவர்கள் இந்துக்களினின்றும் பிரிந்து தங்கள் கால்பலத்தில் நின்று.
கொண்டே கிளர்ச்சி செய்தால் தான் முடியும் என்பதை நாம் அடிக்கடி
எடுத்துக் காட்டியிருக்கிறோம். ஆகவே டாக்டர். அம்பெட்கார், சீனிவாசன்,
வி.ஐ. முனிசாமி பிள்ளை ஆகியவர்கள் விரும்புகிறபடி அரசியல் சீர்திருத்
தத்தில் தனித் தொகுதி பெற்றால் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற
முடியும்.இவர்கள் கூறுவது தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம்.
என்பதையும், திரு. எம்.சி. ராஜாவின் அபிப்பிராயம் இந்துக்களின் அபிப்
பிராயமே தவிர தாழ்த்தப் பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயம் அல்ல வென்ப
தையும் சென்ற 5-5-32ல் கமிட்டியில் திரு வி.ஐ.முனுசாமிபிள்ளை அவர்கள்.
தலைமையின் கீழ் கூடிய அகில இந்திய தாழ்த்தப்பட்டார் காங்கிரஸ்
தீர்மானத்தைக் கொண்டும், சென்ற 10-7-32ல் பம்பாயில் திரு. எம். சி. ராஜா
அவர்கள் தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டார் மகாநாட்டைக் கொண்டும்
அறியலாம். டாக்டர் அம்பெட்கார் கட்சியை ஆதரிப்போரால் கூட்டப்பட்ட
கமிட்டி காங்கிரசுக்கு, பல மாகாணங்களிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு
மேற்பட்ட பிரதிநிதிகள் வந்திருந்தனர். தனித் தொகுதியை எதிர்க்கும் கட்சி
யினரும் வந்திருந்தனர். அவர்கள் மிகச் சிலராக இருந்த காரணத்தால்
மகாநாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஆகவே தனித்தொகுதியை
ஆதரிப்பதாகவும், இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது
இங்கிலாந்தில் செய்து கொள்ளப்பட்ட சிறுபான்மையோர் ஒப்பந்தத்தை
ஆதரிப்பதாகவும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த மகாநாட்டிற்கு
இந்துக்களின் எதிர்ப்பு இருந்ததே தவிர ஆதரிப்பு சிறிதும் இல்லை. ஆகவே
இம் மகாநாட்டுத் தீர்மானங்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் உண்மையான
அபிப்பிராயம் என்று கூறுவதற்கு என்ன தடையுண்டு?'
பம்பாயில் திரு. எம். சி. ராஜா கட்சியினரால் கூட்டப்பட்ட மகா
நாட்டிற்கு சுமார் 200, பிரதிநிதிகளே வந்திருந்தனர். மகாநாட்டிற்கு எதிராகத்
தனித் தொகுதியை ஆதரிக்கும் கட்சியைச் சேர்ந்தவர்கள் 250 பேர்கள்
மகாநாட்டுக் கொட்டகைக்குள் விடப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.250
என்னும் எண்ணிக்கை, பொதுத் தொகுதியை ஆதரிக்கும் தேசியப் பத்திரிகை
களில் காணப்படுகின்றதாதலால், இது உண்மையாக இருக்க முடியாது.250க்கு
மேல் அதிகமாகத்தான் இருக்க வேண்டும். அன்றியும் இம் மகாநாடு இந்துக்
களின் ஆதரவின் மேல்தான் கூட்டப்பட்டதாகும். ஆகவே இம் மகாநாட்டில்
நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங்கள் இந்துக்களின் அபிப்பிராயத்தைச்
சேர்ந்தனவே யொழிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் அபிப்பிராயத்தைச்
சேர்ந்தவை யென்று கூற முடியாது என்பது நிச்சயம். இம் மகாநாட்டில் தான்
கூட்டுத் தொகுதியை ஆதரிப்பதாகவும், “ராஜா - மூஞ்சே ஒப்பந்த”த்தை
ஆதரிப்பதாகவும், வட்டமேஜை மகாநாட்டில் செய்யப்பட்ட “சிறுபான்மை
யோர் ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகவும் தீர்மாலித்திருக்கிறார்கள்..
குடி அரசு - 1932 @
22
இந்து மகாசபைக்காரர்களின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த மகா
நாட்டில் தலைமை வகித்த திரு.எம்.சி.ராஜா அவர்கள் பேச்சில் காணப்படும்.
வாதங்களிலும் ஒரு புதுமையும் தோன்றவில்லை. வழக்கம்போல் இந்துக்
களை ஆதரித்தால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு அரசாங்கத்தில்
மந்திரி முதலிய உத்தியோகப் பதவி கிடைக்குமென்றும், இந்துக்களின்
துணையோ, உதவியோ இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தார் சமத்துவமோ,
சுதந்திரமோ பெற முடியாதென்றும் கூறியிருக்கிறார்.
அடிக்கடி இவர் மந்திரி பதவியையே கூட்டுத்தொகுதிக்கு உதாரண
மாகக் கூறி வருவதைக் கொண்டு, மந்திரிப்பதவி மோகத்தினாலேயே இந்து
மகாசபைக்காரரின் பாட்டுக்குத் தாளம் போடுகிறார் என்று கூறுகிறார்கள்.
அது
எப்படியாவது இருக்கட்டும். இந்து சமூகத்தினரின் உதவியோ, துணையோ
இல்லாமல், தாழ்த்தப்பட்டார் சமத்துவம் பெற முடியாது என்னும் வாதத்தை.
மாத்திரம் கவனிப்போம்.
இது வரையிலும் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்
களின் தயவை எதிர்பார்த்து வாழ்ந்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு
அவர்கள் செய்த நன்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களைக் கல்வி கற்க
அனுமதிக்காமலும் தெருவில் நடக்க அனுமதிக்காமலும், நல்ல உடை உடுத்த
அனுமதிக்காமலும், கிணறு குளங்களில் தண்ணீர் எடுக்க அனுமதிக்காமலும்
செய்ததுதான் கிடைத்த பலன். பிரிட்டிஷ் அரசாங்கம் இருக்கின்ற இக்
காலத்தில் கூட தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பொது இடங்களில் சமத்துவம்
கொடுக்க மறுக்கிறார்கள் என்றால் பிரிட்டிஷ் அரசாங்கமில்லாமல் தங்கள்
கையிலேயே எல்லா அதிகாரமும் இருக்குமானால் என்னதான் செய்ய
மாட்டார்கள் என்று கேட்கிறோம். இதைபற்றி நாம் அதிகமாக விரித்துக் கூற
வேண்டியதில்லை. “இந்துக்களின் தயவை எதிர்பார்த்துக் கொண்டும்,
தங்களையும் இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டும் இருக்கும் வரையிலும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விமோசனமே உண்டாகப் போவதில்லை” யென்று
கோபுரத்தின் மேல் நின்றும் கூறுவோம்.
ஆகையால் இந்து மகாசபைக்காரர்களின் வலையிற் சிக்குண்டு
கிடக்கும் திரு எம்.சி.ராஜா கூட்டத்தாரின் பேச்சைக் கேட்டு ஏமாறக்கூடாது
என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
கொடுமைபடுத்தப்பட்டு, நசுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டுக்
கிடக்கும் சமூகத்தின் சமத்துவத்திற்கும், முன்னேற்றத்திற்கும், உண்மையாகப்
பாடுபடுகின்றவர்கள் யார் என்பதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ள ஒரு
வழியுண்டு. அவ்வழியாவது:-
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடுதலைக்கு உண்மையாக
பாடுபடுபவர் அச்சமூகத்தைத் தாழ்த்தி வைத்திருக்கும் கூட்டத்தினரால்
23
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கட்டாயமாக எதிர்க்கப்படுவார்கள், தூஷிக்கப்படுவார்கள். பல விதமான
பழிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது நிச்சயம். ஆதலால் தாழ்த்தப்
பட்ட சமூகத்தினரின் பரம்பரை விரோதிகளாகிய உயர்ந்த சமூகத்தினரால்
*தேசத்துரோகி” என்றும் *சமூகத்துரோகி* *தேசாபிமான மில்லாதவர்”
என்றும் தூற்றப்படுகின்றவர்கள் யாரோ அவர்களே அச்சமூகத்தின் உண்மை
யான சமத்துவத்திற்கும். சுதந்திரத்திற்கும் பாடுபடுகின்றவர்கள் என்பதை
உணரலாம்.
இப்படி இல்லாமல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விரோதிகளாகிய
உயர்ந்த சமூகத்தினரால், தாழ்த்தப்பட்ட சமூகத்தலைவர்கள் என்றும்
விடுதலைக்குப் பாடுபடுகிறவர்கள் என்றும், “தேசாபிமானிகள்” என்றும்,
இவர்கள் பேச்சைக் கேட்டால்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு விடுதலை
உண்டு என்றும் பிரசாரம் செய்யப்படுபவர்களால் அச்சமூகத்திற்கு உண்மை
யான விடுதலை ஏற்பட முடியாது என்பது நிச்சயம், ஆகையால் எவர் தங்கள்.
சமூகத்தின் உண்மையான விடுதலைக்குப் பாடுபடுகின்றவர் என்பதை
அறிந்து அவர்களைப் பின்பற்றுமாறு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு
எச்சரிக்கின்றோம்.
இந்து மகாசபைக் காரர்களின் சூழ்ச்சி வலையிற் சிக்கியும், தேசா
பிமான வேஷக்காரர்களின் பசப்பு வார்த்தைகளுக்கும், தட்டிக் கொடுத்
தலுக்கும் ஏமாற்றமடைந்தும், தங்கள் சமூக நன்மையை, இதுவரையிலும்
விரோதிகளாகவே இருந்து வரும் சமூகத்தார் கையிலேயே ஒப்படைக்க
வேலை செய்யும் ஏமாந்தவர்களின் பேச்சைக் கேட்டு மோசம் போகாம
லிருத்தலே தாழ்த்தப்பட்டார் கடமையாகும்.
குடி அரசு - தலையங்கம் - 17.07.1932.
குடி அரசு - 1932 @
24
பெண்கள் அமமை நீங்குமா?
இந்தியப் பெண்களுக்கு எத்தகைய கல்வியளிக்க வேண்டும்
என்பதைப் பற்றிப் பலர் பலவாறான அபிப்பிராயங்களை வெளியிட்டு
வருகிறார்கள். அவைகளில் பிற்போக்குடையவர்களின் அபிப்பிராயங் களை
இப்பொழுது எந்தப் பெண்களும் ஒப்புக் கொள்ளத் தயாரில்லை. முற்போக்
குடையவர்களின் அபிப்பிராயங்களையே பெண்கள் வரவேற்கத் தயாரா
யிருக்கிறார்கள்.
“இந்தியப் பெண்கள் இதுவரையிலும் இருந்தது போலவே தங்களுக்
கென்று ஒரு வித அபிப்பிராயமும், சுதந்திரமும் இல்லாமல், “கல்லென்றாலும்
கணவன், புல்லென்றாலும் புருஷன்” என்று சொல்லுவது போல கணவனு
டைய நன்மையை மாத்திரம் கருதி அடிமையாகவே இருந்து, பிள்ளைகளைப்
பெற்றுக்
கொண்டும், அவைகளை
வளர்த்துக் கொண்டும் வாழ்வதே சிறந்தது;
இதுவே இந்தியப் பெண்களுக்கு வேண்டிய நாகரீகம்; இந்நாகரிகத்தை
மீறினால் இந்தியப் பெண்களின் சமுதாய வாழ்க்கையின் உயர்வு கெட்டுப்
போகும்; அவர்களுடைய பதிவிருதா தர்மம் அழிந்து போகும்; இதனால்
இந்திய நாகரீகமே மூழ்கிவிடும்; ஆகையால் பெண்களுக்குக் குடும்பக்
கல்வியும், மதக் கல்வியும் மாத்திரம் அளித்தால் போதும்” என்று பிற்போக்
கான அபிப்பிராயமுடையவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆண்கள்
இவ்விதமான அபிப்பிராயத்தை வெளியிடுவதைப் பற்றி நமக்குக் கவலை
இல்லை.அவர்கள் தங்கள் சுயநலத்தைக் கருதுகின்ற பொழுது, இதற்குமேல்
தீவிரமான அபிப்பிராயத் திற்குச் செல்ல முடியாது: சென்றால் அவர்களு
டைய சுயநலத்திற்கு நிச்சயமாக ஆபத்து உண்டாகிவிடும். ஆனால் பெண்கள்.
இம்மாதிரியான அபிப்பிராயத்தை வெளியிட்டால் அது ஆச்சரியப்படத்
தக்கதேயாகும்; அன்றியும் அதில் வேறு ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும்
என்றுதான் நினைக்கவும் வேண்டும்.
சில தினங்களுக்கு முன் லண்டனில், லிசியம் கிளப்பில், பம்பாய்
சர்வசலாசாலைப் பெண்கள் சங்கத்தின் ஆண்டு விழாவில், சென்னை
கிறிஸ்துவப் பெண்கள் கலாசாலைத் தலைவரான திருமதி. மெக்டாக்கல்
என்பவர் ஒரு பிரசங்கம் செய்தார். அப்பொழுது அவர்,
25
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
“பெண்மக்கள் உயர்தரக் கல்வி கற்பதனால் குற்றமற்ற பயன்
உண்டாகும் என்று சொல்ல முடியாது. இந்தியப் பெண்கள் பக்தி
யிலும் மனோவுறுதியிலும் சிறந்தவர்கள். அவர்களுக்குக் குடும்பத்
தில் மிகவும் சம்பந்தமும், பற்றுதலும் உண்டு. அவர்கள்
குடும்பத்
திலுள்ள பற்றுதலிலிருந்து நீங்குவார்களானால் இந்திய சமூக
வாழ்க்கைக்கு மிகுந்த பாதகம் ஏற்பட்டு விடும். ஆகையால் அவர்.
களுக்குப் போதிக்கும் உயர்தரக் கல்வியுடன் கிறிஸ்தவ மதத்தின்
உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப் போதிக்க வேண்டும்:
இன்றேல் உயர்தரக் கல்வியால் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தே
உண்டாகும்.”
என்று பேசியிருக்கிறார். திருமதி. மெக்டாகல் அவர்கள் நாகரீகம் பெற்ற மேல்
நாட்டுப் பெண்மணியாயிருந்தும் இவ்வாறு பேசி யிருப்பதைக் கண்டு
உண்மையில் நாம் வருந்தாமலிருக்க முடியவில்லை. ஆனால் இந்தியப்
பெண்களின் சமுதாய வாழ்க்கையைப் பற்றி இந்த அம்மாளுக்கு இவ்வளவுக்
கவலை தோன்றியிருப்பதைப் பற்றி ஆராயும் போது நிச்சயமாக அதில் ஒரு
சூழ்ச்சியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே வரலாம். அச்சூழ்ச்சியும் அந்த
அம்மாளின் சொற்களிலேயே காணப்படுகின்றது. அச்சூழ்ச்சி, “உயர்தரக்
கல்வியுடன் கிறிஸ்துவ மதத்தின் உயர்ந்த தத்துவங்களையும் சேர்த்துப்
போதிக்க வேண்டும்” என்பதேயாகும். ஆகவே இது கிறிஸ்து மதத்தை
இந்தியாவில் பரவ வைப்பதற்குச் செய்யப்படும் பிரசாரத்தைத் தவிர
வேறொன்றுமல்ல என்றுதான் நாம் கூறுவோம்.
கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த திருமதி. மெக்டாகல் அவர்கள் எப்படி
“கிறிஸ்துவ மதக்கல்வி” உயர்தரக்கல்வி கற்கும் பெண்களுக்கு அவசியம்
என்ற அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ இதைப் போலவே இந்திய
வைதீகர்களும் பெண்களுக்கு இந்து மதக்கல்வி அவசியம் என்று சொல்லிக்.
கொண்டிருக்கிறார்கள்
ஆனால் இவ்வபிப்பிராயங்களை நாம் அடியோடு மறுக்கிறோம்.
“பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையில் அடிமையாயிருந்த பிள்ளைகளைப்
பெற்று வளர்த்துக் கொண்டிருப்பது ஒன்றுதான் ஏற்றது” என்ற அபிப்பி
ராயமே தவறாகும். இத்தகைய கட்டுப்பாடு இருக்கின்ற வரையிலும் பெண்கள்
அடிமைகளாகத்தான்
- அதாவது ஆண்களுடைய உதவியை நம்பித்தான்
வாழ முடியும் என்பது நிச்சயம். உண்மையில் பெண்களும் ஆண்களுக்குச்
சமமாக வாழ வேண்டுமானால், அவர்களும் ஆண்களைப் போலவே
தாங்கள் விரும்பிய கல்விகளைக் கற்கவும், தங்கள் அறிவுக்கும், ஆற்றலுக்
கும், விருப்பத்திற்கும் இசைந்த எத் தொழில்களையும் தடையின்றிச்
செய்யவும் உரிமை வேண்டியது அவசியமாகும்.
அல்லாமலும் மதக்கல்வி என்பது அவர்கள் காதில் கூட விழக்கூடாது
குடி அரசு - 1932 @
26
என்பதே நமதபிப்பிராயம். மதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிற ஆண்.
மக்களே இன்று அடிமைப் புத்தியினாலும், மூட நம்பிக்கைகளாலும் கிடந்து
சீரழிகின்ற செய்தியைப் பற்றி நாம் அடிக்கடி கூறி வருகின்றோம். “மதம்
என்பதுதான் மக்களிடத்தில் அடிமைப் புத்தியையும் பயங்கொள்ளித்தனத்
தையும், தன்னம்பிக்கையின்மையையும், மூடநம்பிக்கைகளையும் உண்டாக்
கக் காரணமாயிருக்கின்றது. ஆதலால் மதத்தையே அடியோடு ஒழிக்க
வேண்டும்” என்று பிரசாரஞ் செய்து வருகின்றோம். இந்த நிலையில்
“பெண்களுக்கு மதக் கல்வியளிக்க வேண்டும்” என்னும் அபிப்பிராயத்தை
நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
சாதாரணமாக மதக்கல்வி கற்காவிட்டாலும், கேள்வி மூலமும், பழக்க
வழக்கங்களின் மூலமும் மத விஷயமாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டி
ருக்கும் நமது பெண் மக்களின் நிலையை ஆராய்ந்தால் அதன் மோசத்தை
அறியலாம். நமது பெண் மக்கள் மனத்தில் இன்று அடிமைப் புத்தியும்,
கோழைத் தனமும், மூட நம்பிக்கைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களில்
விடாப்பிடிவாதமும் நிறைந்திருப்பதற்குக் காரணம் மதமே என்பதை யார்.
மறுக்க முடியும்? ஆதலால் பெண்களுக்கு மதக்கல்வி வேண்டும் என்று
சொல்லுகின்ற அபிப்பிராயத்தை நாம் ஒரு சிறிதும் ஒப்புக்கொள்ள முடியாது.
“பெண்களும் ஆண்களைப்போல் உடல் வலிமையிலும் சிறப்படைய
வேண்டும். தேகப் பயிற்சி,
ஆயுதப் பயிற்சி முதலிய பழக்கங்களை பெற்றி
ருக்க வேண்டும். தங்களை மானபங்கப்படுத்த நினைக்கும் அறிவற்ற, வெறி
கொண்ட ஆண்மக்களை எதிர்த்துத் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்
கொள்ளக் கூடிய ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும். சமயம் நேரும்போது,
படை வீரர்களாகச் சேர்ந்து பகைவர்களை எதிர்க்கக் கூடிய சக்தி பெண்
களுக்கும் இருக்க வேண்டும்” என்பதே நாகரீகம் பெற்ற மக்களின் அபிப்
பிராயம்; பெண்மக்களும் இவ்வபிப்பிராயத்தை முழுமனத்தோடு ஆதரிக்
கிறார்கள். உலகத்தின் போக்கும் அபிப்பிராயமும் இப்படி இருக்க “பெண்
மக்களுக்கு உயர்தரக் கல்வி கற்பிப்பதனால் பயனில்லை” என்று சொல்லு
வதை யார் ஒப்புக் கொள்ளமுடியும்?
ஆனால் தற்காலத்தில் உள்ள கல்வி முறை மிகவும் மோசமான
தென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். வெறும் குமாஸ்தா வேலைக்குப்
பழக்கக் கூடிய கல்விதான் இப்பொழுது கற்பிக்கப்படுகிறதே யொழிய வாழ்க்
கைக்குப் பயன்படும் கல்வி கற்பிக்கப்படவில்லை என்பது உண்மையாகும்.
ஆகையால் தற்காலத்திலுள்ள கல்விமுறையை மாற்றி வாழ்க்கைக்குப் பயன்
படக்கூடிய முறையிலும், சிறிதும் மத நம்பிக்கைகளும், கோழைத்தனமும்,
அடிமைப் புத்தியும் உண்டாகாத வகையிலும் உள்ள கல்வித் திட்டத்தை
ஏற்படுத்தி பெண்களுக்கும், ஆண்களுக்கும் சமத்துவமான கல்வியளிக்க
ஏற்பாடு செய்வதே மக்கள் முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும் என்று கூறுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.07.1932
27
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வைதீகக் கோட்டையில்
சுயமரியாதைக் குண்டு
செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17 - 7 - 32ல்
இராமநாதபுரம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசை
யாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய
நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்க
மும், மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர் இடத்தில் வெளிவந்திருப்
பதைக் காணலாம்.
செட்டி நாட்டில் நடைபெற்ற இம்மகாநாடு நமது இயக்கத்தின்
வெற்றிக்கு ஒரு சிறந்த சின்னமாகும் என்று கூறியும், நினைத்தும் சந்தோஷப்
படுவது சிறிதும் தவறாகாது. ஏனெனில், இன்று நமது நாட்டில் பார்ப்பனி
யத்திற்கு ஆதரவு அளித்து வருகின்ற மக்கள் நிறைந்த இடம் செட்டிநாடு
என்பது உலகமறிந்த விஷயம்.
“வேதங்கள்” என்று
சொல்லப்படுகின்றவைகளிலும் இயற்கை
நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாததும், வருணாச்சிரம தருமத்திற்கு ஆதரவ
ளிக்கக் கூடியவைகளுமான புராணங்களிலும் நம்பிக்கை வைத்துக் கொண்
டும். அவைகளைப்
பற்றி பிதற்றுகின்றவர்களின் வலையிற் சிக்கி ஏமாந்து
கொண்டும் இருக்கின்ற மக்கள் செட்டி நாட்டில்தான் அதிகமாக இருக்கி
றார்கள். பழமை என்பதில் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்துக் கொண்டு,
அவை தீமையை உண்டாக்கக் கூடியவைகளாய் இருந்தாலும் விடாமல்
குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு கஷ்டப்படுகின்ற மக்களும், செட்டி
நாட்டு மக்களேயாவர்கள். பார்ப்பனர்கள் சோம்பேறிகளாக உட்கார்ந்து
கொண்டு தின்று கொழுப்பதற்காக அன்னச் சத்திரங்களைக் கட்டி வைக்கின்ற
வர்களும், பார்ப்பனப் பிள்ளைகளைத் தேடிப் பிடித்துக் கொண்டுபோய்
சோறு போட்டு எண்ணைய், துணிமணி முதலிய சகல செளகரியங்களும்
கொடுத்து வளர்த்து ஆட்டு மந்தைகளைப் போல கத்திக் கொண்டிருக்கச்
செய்கின்ற வேத பாடசாலைகளை அமைத்திருக்கின்றவர்களும் நன்றாய்
இருக்கின்ற கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளி கோடிக் கணக்கான
பணங்களை செலவிட்டு மீண்டும் அவற்றைக் கட்டி, பிறகு அவைகளுக்கு
“கும்பாபிஷேகம்” என்னும் பெயரால் லட்சக்கணக்கான பொருள்களையும்
குடி அரசு - 1932 @
28
செலவு செய்து பணத்தை வீணாக்கும் “பேரறிஞர் களும் செட்டி நாட்டில்
தான் மிகுதியாக இருக்கிறார்கள். உலகமெங்கும் நாகரீக வெள்ளம் புரண்டு.
பழய மூடப் பழக்க வழக்கங்களையெல்லாம் அழித்துக் கொண்டு வருகின்ற
இக்காலத்திலும் செட்டி நாட்டிலுள்ள முதியோர்கள் அனைவரும் பார்ப்பனர்
களைச் “சாமி” என்று அழைத்துக் கொண்டும், அவர்களையே “பூவுலக
தெய்வங்கள்” என நம்பிக்கொண்டும்,
அவர்களையே
தங்கள் குடும்பத்தின்
சகல வரவு செலவுகளையும் நடத்தும் “சர்வாதிகாரி”களாக வைத்துக் கொண்
டும் இருக்கிறார்கள் என்பது அந்நாட்டில் அனுபவமுள்ளவர்களுக் கெல்லாம்.
தெரிந்த விஷயம். ஆனால் அந்நாட்டு இளைஞர்கள் தற்பொழுது சுய
மரியாதை உணர்ச்சியுடையவர்களாகி அங்கு குடிகொண்டிருக்கும், பார்ப்ப
னீயத்தை ஒழிக்கவும், தங்கள் சமூக ஊழல்களைப் போக்கிச் சீர்திருத்தஞ்
செய்யவும் சில காலமாக வேலை செய்து வருகின்றனர். இத்தகைய உணர்ச்சி
வாலிபர்களிடமும் உண்டான பிறகுதான் இங்கு நமது இயக்கம் அதி
தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது என்று கூறலாம்.
அங்கு நமது இயக்கம் பரவ ஆரம்பித்த காலத்தில் அந்நாட்டில்
குடிகொண்டிருக்கும் “பழம் பெருச்சாளிகள்” நமது இயக்கத்தை அழிப்ப
தற்குச் செய்த சூழ்ச்சிகளும், இழி செயல்களும் எண்ணற்றவை. பார்ப்பன
அதிகாரிகளும், பார்ப்பனர் பேச்சுக்கு “ஆமாம் சாமி” போடும் பணக்காரர்.
களும் நமது இயக்கத்தைப் பிரசாரம் பண்ணியவர்களுக்கெல்லாம் எவ்வ
ளவோ கெடுதிகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்து பார்த்
தார்கள். ஒன்றினாலும், நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கெடுதியோ,
நமது இயக்கத்தைப் பரவ வொட்டாமல் தடுக்கவோ முடியவில்லை.
சென்ற ஆண்டில் நமது மகாநாடு பல எதிர்ப்புகளுக்கிடையே திரு.
ஆர்.கே. ஷண்முகம் அவர்கள், பி. ஏ. பி. எல். , எம்.எல். ஏ. தலைமையிலும்
இவ்வாண்டு புதுச்சேரி அரசாங்க வரவு செலவு இலாக்காத் தலைவர் ஏ. வி.
முத்தையா அவர்கள், பி. ஏ. பி. எல். தலைமையில் வெற்றியோடும்
நடைபெற்றிருக்கின்றன. சென்ற ஆண்டு மகாநாட்டைப் போலவே (சற்று
அதிகமாகவே! இந்த ஆண்டிலும் அதிகாரிகளும் பார்ப்பனர் வசப்பட்ட
பணக்காரர்களும் காங்கிரஸ் பேரால் செட்டி நாட்டில் ஜீவனஞ் செய்து
கொண்டிருக்கும் அன்னக் காவடிகளும் மகாநாட்டைத் தடைசெய்ய பல
சூழ்ச்சிகளைப் புரிந்தார்கள். சென்ற ஆண்டிலாயினும் நமது மகாநாட்டிற்குப்
பல பணக்காரர்களின் ஆதரவு இருந்ததாகக் கருதப்பட்டது.
இந்த ஆண்டில்
பெரிய பணக்காரர்கள் என்று சொல்லக் கூடியஎவருடைய ஆதரவும் இல்லை
யென்றே கூறலாம். ஆனால் எதிர்ப்பு மாத்திரம், ஒரு சிறிதும் குறைந்த
பாடில்லை. அப்படி இருந்தும் நமது மகாநாடு வெற்றியோடு நிறை
வேறியதற்குக் காரணம் அந்நாட்டு இளைஞர்களின் ஊக்கமும், தைரியமும்,
உழைப்பும், சுயமரியாதையும் ஆகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
29
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இம்மகாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் திரு. ஏ. வி, முத்தையா
அவர்கள் என்பதையும் வரவேற்புத் தலைவராய் இருந்தவர், திரு. எஸ்.லக்ஷி'
மிரதன் எம்.ஏ.பி. எல். அவர்கள் என்பதையும் அறிந்த எவரும் மகாநாட்டைப்
பொறுப்பற்றவர்களின் கூட்டம் என்றோ, படிக்காதவர்களின் கூட்டமென்றோ,
ஒன்றும் தெரியாத இளைஞர்களின் கூட்ட மென்றோ சொல்ல முன்
வரமாட்டார்கள். அப்படியும் பொறாமையால், வழக்கம்போல் மேற்கண்ட
பல்லவிகளை பாட முன்வருவார்களானால் அவர்களைப் போல வடிகட்டின
முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பதைச் சிறு பிள்ளைகளும்
அறிவார்கள். இவ்விஷயத்தை வரவேற்புத் தலைவர் திரு. எஸ். லக்ஷிமிரதன்
அவர்கள்,
“வயதாலும், கல்வியறிவாலும், உலக அனுபவத்தாலும்
முதிர்ந்த இத்தகைய பெரியார் ஒருவர் நமது இயக்கக் கொள்கைகள்
அனைத்தையும் அங்கீகரித்து ஆதரிப்பதுடன் அவற்றை நிலை
பெறச் செய்வதிலும் இத்தனை ஆர்வத்துடன் கலந்து கொள்ளுதல்,
இவ்வியக்க விரோதிகளின் வம்புப் பேச்சுகளுக்கு ஒரு வாய்ப்
பூட்டாக இருக்கும் என்பது திண்ணம்”
என்று தமது வரவேற்புப் பிரசங்கத்தில் கூறியிருப்பதைக் கொண்டு
உணரலாம்.
வரவேற்புத் தலைவர் அவர்கள் பிரசங்கத்தில் நமது இயக்கத்தின்
உண்மையான கொள்கைகள் இவைகள் என்பதையும், எதிரிகள் நம்மை
“நாஸ்திகர்கள்” என்றும், “பிராமணத் துவேஷிகள்” என்றும், “வகுப்பு
வாதிகள்” என்றும், “தேசத் துரோகிகள்” என்றும் பிரசாரஞ் செய்வ தெல்லாம்
கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை தெள்ளத் தெளிய விளக்கிக்
காட்டியிருக்கும் பகுதிகள் மிகவும் கவனிக்கத் தக்கவையாகும். அவை
களாவன:-
“பசுவிற்காகவும், உருக்கிவிட்ட ஈயத்தைப் போல் காது
களைத் துளைக்கின்ற கொட்டுகளுக்காகவும், தென்கலை, வடகலை
நாமங்களுக்காகவும் இன்னும் இத்தகைய இழிந்த காரியங்களுக்
காகவும் நம்மைப் பல வகுப்பினராகப் பிரித்து தமது உடல், பொருள்,
ஆவியாவற்றையும் ஒருங்கே இழந்து உலகத்தை எப்பொழுதும்
போர்க்களமாக்குவதற்குக் காரணமாயிருக்கும் மதங்களை விட்
டொழியுங்கள்”” என்றால் நாம் உடனே நாஸ்திகர் என பட்டம்
சூட்டப் படுகின்றோம்.
“அறிவை ஒதுக்கிப் பிறப்பைப் பேணி அநீதிகளைப்
போதிக்கும் சாத்திரக் குப்பைகளைக் கண்டிப்பதனாலும், வருணாச்
சிரம உயர்ச்சி தாழ்ச்சிகளையும், அதனாலாய உரிமைகளையும்,
கடமைகளையும் தள்ளி விடுவதனாலும் நம்மை பிராமணத்
துவேஷிகளாகத் தூற்றுகிறார்கள்”'
குடி அரசு - 1932 (5)
30
“உயர்வடைவதற்காக சந்தர்ப்பம் ஏற்படும் வரையிலும்
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பிரத்தி
யேகமான வசதிகள் அமைக்க வேண்டுமென்றால் நம்மைத் தேசீய
விரோதமான வகுப்புவாதச் சச்சரவுகள் செய்பவர்களாகப் பறை
யறைகின்றனர்.”
“அன்னிய அரசாட்சியை ஒழிப்பது மட்டும் சுயராஜ்யமாகக்
கருதி, மக்கள் கட்டுண்டு அடிமைகளாய் வாழ்வதற்கு காரணமாய்
இருக்கும் பழக்கவழக்கங்களாகிய இரும்புத் தளைகளை, மத
நடுநிலை என்ற பெயரால் இருந்தபடியே என்றும் நின்று நிலவச்
செய்யும் காங்கிரசுத் திட்டத்தையும் இன்னும் இன்னோரன்ன
அவர்தம் குறைகளையும் நாம் எடுத்துக் கூறுவதனால் நம்மைச்
சுதந்திரம் வேண்டாத தேசத்துரோகிகள் என்று முரசறைகிறார்கள்.”
மேற்கூறிய உண்மைகளை அறிந்த எவரும் சுயமரியாதை
இயக்கத்தை பழி கூற முன் வருவார்களா என்று கேட்கிறோம்.
எந்த இடங்களில் அடிமைத்தன்மை, ஏமாற்றுந் தன்மை, வஞ்சகம்,
கொடுமை, புரட்டு, மூடநம்பிக்கை, சுயநலம் முதலியவைகள் குடிகொண்டு
இருக்கின்றனவோ அங்கெல்லாம் நமது இயக்கம் தோன்றாமலும், தனது
சமதர்ம வேலையைச் செய்யாமலும் போகாது என்ற உண்மையை நாம்
அடிக்கடி கூறிவருகிறோம் . மேற்கூறிய பார்ப்பனீயத்தால் கட்டுப்பட்டு
வருந்தும் மக்களுக்குச் சமத்துவமும், சுதந்தரமும், விடுதலையும் அளிக்கவே
நமது இயக்கம் தோன்றியதாகும். இதனை மகாநாட்டுத் தலைவர் திரு. ஏ. வி.
முத்தையா பி.ஏ. பி.எல்.அவர்கள் தமது தலைமைப் பிரசங்கத்திலும் விளக்கிக்
காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அப்பகுதி வருமாறு:-
“ஏழை மக்கள்” - வறிய மக்கள் அறியாமையில் அழுந்தி
உண்மை விளங்காது பலபல துறைகளிலும் இன்னல்களுக்கு
உட்பட்டுத் தவிக்கின்றார்கள். இது ஒரு காட்சி! இப்படித் தவிக்கும்
ஏழை மக்களுக்கு - வறிய சகோதரர்களுக்கு கண்களைத் திறந்து
விடாமல், புத்தியைத் துலக்காமல் - வழி காட்டாமல் வேறு சில
சகோதரர்கள், அவர்களை மிரட்டி - அதட்டி - பயப்படுத்தி -
ஏய்த்துப் பொருள் பறிக்கின்றார்கள். இது மற்றொரு காட்சி.
இவ்விரண்டு காட்சிகளையும் கண்டு மனம் பொறாது -
உள்ளம் உடைந்து இவைகளை யகற்ற - வழிதேட - இச்சீர் கேடான
நிலையைச்சீர்படுத்த அருள் நோக்கங் கொண்ட
- அறிவிற் சிறந்த
பெரியார்கள் இவ்வியக்கத்தை ஆரம்பித்திருக்க வேண்டும்;
ஆரம்பித்தார்கள்.
31
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அன்பு - அறிவுடைய எவரும் இந்தக் காட்சிகளைக் கண்
டால்- இந்த நிலையைப் பார்த்தால் - இதைப்பற்றிக் கேள்விப்
பட்டால் சும்மா இரார்: எப்படி இருக்கமுடியும்?
மனம் பதைத்து “அந்தோ! அறியாமையின் விபரீதங்கள்
எவ்வளவு கொடியன! இப்படிப்பட்ட அநியாயங்களும், அழும்பு
களும் உண்டா? இவைகளை அகற்றுவதற்கு வழியொன்றும்
கிடையாதோ என ஆழ்ந்து யோசிக்காமலிரார்.
இந்த யோசனை உதித்த ஒருவருக்கு ஆற்றலுமிருந்தால்
இயக்கம் ஒன்றில் முற்பட்டுத் தொண்டு செய்யாமலிரார்.
தன்னைப் போன்ற உயிர்கள் இன்னலுற்று, வாடி, வதங்கி
ஏங்கி நிற்கும் போது, கல் நெஞ்சம் படைத்தவனாய் சாத்திரங்கள்
காட்டி உதவி செய்ய முன்வராமல், வாதம் புரிபவனும் மனித
னாமோ? சொல்லுங்கள்”
மேற்கூறிய தலைவர் பேச்சில் உள்ள உண்மையைச் சிந்திக்கும்
எவரும் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்ய முன்வராமல் இருக்கமுடியுமா?
அவ்வாறு ஏழைகளுக்காக - கஷ்டப்படும் மக்களுக்காக - அடிமையாகிக்
கிடக்கும் மக்களுக்காக உண்மையாக உழைக்க விரும்புகின்றவனுக்காகவே
சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது என்பதை மேற்கூறிய உண்மை உரை
களைக் கொண்டு தெளிவாக உணரலாம்.
கடைசியாக வரவேற்புத் தலைவர் அவர்கள்,
“விருதுநகர் மகாநாட்டுத் தீர்மானத்திற்கு இணங்க நமது இயக்கத்
திற்குச் சங்கம் அமைக்க வேண்டும். அதன் சட்ட திட்டங்களும்,
கொள்கைகளும், நமது இயக்க நோக்கங்களுக்கு இணங்க அவசியம்
நேரிடும் பொழுது மாற்றியமைத்துக் கொள்ளக் கூடியனவாக இருத்தல்
வேண்டும். அதற்குப் பெரு நிதி திரட்டல் வேண்டும். வளம் நிறைந்த
ஓரிடத்தில் சுயமரியாதைப் பல்கலைக் கழகமும், தலைச்சங்கமும்
நிறுவ வேண்டும். மேனாட்டுக் கிறிஸ்தவ மிஷன்களைப் போல
பொருளீட்டுவதும், மக்கள் முன்னேற்றமே கருதி உழைக்க முன்
வரும் ஆசிரியர்களையும், தோழர்களையும், இளைஞர்களையும்
ஒன்று சேர்க்கவும் வேண்டும். நமது கொள்கைகளுக்கேற்ற வாழ்க்கை
முறையும் சகல விதமான கலைகளும், கைத் தொழில்களும், விவசாய
அபிவிருத்தி முறைகளும், அவ்விடத்தில் போதிக்கப்பட வேண்டும்.
அக்கழகம் நாட்டில் நாம் என்ன மாறுதல்களை விரும்புகிறோமோ
அவற்றின் உண்மையையும், மேன்மையையும் வாழ்க்கையில்
அனுஷ்டிப்பது மூலமாக விளக்கிக் காட்டுவதாக இருக்க வேண்டும்.”
குடி அரசு - 1932 @
32
என்று கூறியிருக்கும் விஷயம் எல்லோருடைய கவனத்தையும் தற்சமயத்தில்
கவர்ந்து நிற்கும் ஒரு விஷயமாகும்.
இது சம்பந்தமாகப் பலமுறை பேசப்
பட்டும் தீர்மானங்கள் செய்யப்பட்டும் வருகின்றனவேயொழிய இன்னும் ஒரு
காரியமும் செய்யப்படவில்லை. ஆனால் இதனால் நமது வேலைகள் ஒன்றும்
தடைப்பட்டு விடவில்லையென்பது மாத்திரம் நிச்சயம். நமக்கென்று ஒரு
சரியான ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலே தனிப்பட்ட சிலருடைய
உழைப்பினாலும் செல்வாக்கினாலும் நமது இயக்கம் நடைபெறுகிறது என்று
பிறர் சொல்லக் கூடிய நிலைமையிலிருந்தாலும், நமது நாட்டில் சங்கங்களும்,
சட்ட திட்டங்களும் உள்ள இயக்கங்கள் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்து
ஏழைகளுக்குச் செய்திருக்கும் நன்மையைக் காட்டிலும், நமது இயக்கம்
எவ்வளவோ மாறுதலையும், உணர்ச்சியையும் குறுகிய காலமாகிய இந்த 7
ஆண்டுகளுக்குள் தேசத்தில் உண்டாக்கி யிருக்கிறது என்பதை யாரும்
மறுக்கமுடியாது. ஆயினும் நமக்கென ஒரு ஸ்தாபனம் வேண்டியது
அவசியம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. ஆகவே இவ்விஷயம்
வெளிநாட்டிலிருக்கும் நமது தலைவர்கள் வந்தவுடன் செய்யப்படும் என்று
உறுதியாக நம்பலாம்.
இம்மகாநாட்டில் முக்கியமாகச் செய்யப்பட்டிருக்கும் தீர்மானம்
ஒன்றேயாகும். அது:-
“தற்பொழுது ஜில்லா அதிகாரிகளான, ஜில்லா கலெக்டர், ஜில்லா
நீதிபதி, ஜில்லா வைத்திய அதிகாரி, தேவ கோட்டை சப் கலெக்டர்
முதலியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாயிருப்பதனாலும், தேவ
கோட்டைக்கடுத்த கிராமங்களில் அடிக்கடி ஆதிதிராவிடர்கள் தாக்கப்
பட்டுக் கொள்ளையடிக்கப் படுவதனாலும், இந்த ஜில்லாவிலுள்ள
பிராமண அதிகாரிகளை மாற்றி பிராமணரல்லாத அதிகாரிகளையே
நியமிக்க வேண்டுமென்று அரசாங்கத்தை இம் மகாநாடு கேட்டுக்
கொள்ளுகிறது.”
என்னும் தீர்மானமாகும். இந்தத் தீர்மானத்தைக் கொண்டே அப்பக்கங்களில்
ஏழைமக்கள் படும் துன்பத்தை அறியலாம். சாதாரணமாகவே, பணக்காரத்
தன்மையும், பார்ப்பனீயமும் மிகுந்த உறவுடையது என்பது கண்கூடான
விஷயம்.பணக்காரர்கள் நிறைந்த நாட்டில் ஏழைமக்கள் சுதந்திரம் வேண்டு
மென்று பேச வாயெடுத்தாலே அவர்கள் பாடு கஷ்டத்தில் முடியும். அதோடு
பார்ப்பனீயத்தை மேற்கொண்ட அதிகாரிகளும் நிறைந்திருப்பார்களானால்
அந்த நாட்டு மக்களின் நிலையை நாம் என்னவென்று சொல்ல முடியும்?
ஆகவே இத்தீர்மானம் மிகமிக அவசியமான ஒரு தீர்மானமாகும் என்பதில்
ஐயமில்லை.
இத்தகைய பார்ப்பனீயமும், பணக்காரத் தன்மையும், மூடப் பழக்க
வழக்கங்களும் நிறைந்துள்ள நாட்டில் வெற்றியாக நடந்த சுயமரியாதை
மகாநாடு குறிப்பிடத் தக்கதொன்றன்றோ? இம் மகாநாட்டை நடத்துவதில்
32
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட வாலிபர்களின் ஊக்கத்தையும், உழைப்
பையும், தைரியத்தையும் பாராட்டுகின்றோம்.அதோடுங்கூட செட்டிநாட்டைச்
சீர்திருத்த இது போல் ஆண்டுக்கொரு மகாநாடு நடத்துவது மட்டும் போதா
தென்றும், நாள் தோறும் மகாநாடுகளும் பொதுக் கூட்டங்களும் சங்கிலித்
தொடர் போல் நடத்திக் கொண்டே யிருந்தால் தான் அந்நாட்டில் உள்ள
பார்ப்பனீயத்தை அடியோடு விரைவில் ஒழிக்க முடியும் எனபதையும்
ஞாபகப்படுத்துகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.07.1932.
குடி அரசு - 1932 @
34
தேர்தல் ஜாக்கிரதை!
நமது நாட்டில் பல ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஒரு சிறு
கூட்டம், தேசத்தில் உள்ள பெரும்பாலான ஏழை மக்களை ஏமாற்றி வயிறு
பிழைத்துக் கொண்டேயிருக்கிறது.
அச்சிறு கூட்டமே நாட்டின் அரசியல்
துறையில் செல்வாக்கு வைத்துக் கொண்டும், சமூகத் துறையில் தலைமை
வகித்துக் கொண்டும் தங்கள் சுகபோக வாழ்வுக்கு எந்த வகையிலும் குறைவு
வராமல் காப்பாற்றிக் கொண்டும் வருகிறது. தாழ்ந்த நிலையிலிருந்து துயரப்
படும் மக்களில் எவரேனும் உயர்நிலையடைந்து வாழ்ந்திருக்கும் அச்சிறு
கூட்டத்தாரின் சூழ்ச்சிகளை அறிந்து வெளிப்படுத்த ஆரம்பித்தார்களாயின்
அப்போதே அவர்களை, அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும்,
தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை உபயோகித்துத் தலைதூக்க வொட்டாமல்
செய்து கொண்டு வந்தார்கள். இது பண்டைக் கால முதல் நடைபெற்று வரும்
மறைக்க முடியாத உண்மையாகும்..
பண்டைக் காலத்தில் இக் கூட்டத்தார் பாமர மக்களைப் பயமுறுத்தி
அடிமைப் படுத்துவதற்கு உபயோகித்த ஆயுதங்கள், “கடவுள்” “வேதம்”
“மதம்” “சடங்குகள்"
“புராணங்கள்” “வருணாச்சிரமதருமங்கள்”'
“நரகம்” “சுவர்க்கம்” “பாவம்” “புண்ணியம்” முதலிய வார்த்தை
களேயாகும். இவ் வார்த்தைகளுக்குப் பயந்தே ஏழைமக்கள் தங்கள்
“மோட்சம்”
சுயமரியாதையை யிழந்து வாடி வதங்கிக் கிடந்தனர். ஆயினும் நாளேற
நாளேற மக்களுடைய அறிவும் சிறிது வளர்ச்சியடைந்த காரணத்தாலும்,
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்து “நாமும்
ஏன் அவ்வாறு இருத்தல்
கூடாது” என்று சிந்திக்கத் தொடங்கிய காரணத்தாலும், தமது உரிமையை
அடையமுடியும் என்ற தைரியம் உண்டான காரணத்தாலும், மேற்கூறிய
அர்த்தமற்ற வார்தைகளுக்கு அடியோடு அஞ்சிக் கட்டுப்படுவதிலிருந்து
நீங்கினர்.ஆகவே மேற்கூறிய வார்த்தைகளுக்குள்ள கெளரவமும், அவை
களால் உயர்ந்த கூட்டத்திற்கு இருந்த மதிப்பும் கொஞ்சம் கொஞ்சம் குறைய
ஆரம்பித்தன. ஏழை மக்களும் அரசியல் துறையிலும், சமூகத்துறையிலும்
பண்டுமுதல் இருந்து வந்த கட்டுப்பாடுகளை ஒழித்துக் கொஞ்சம் சம
நிலையும் செளக்கியமும் அடையத் தொடங்கினர்.
35
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இது கண்ட, உயர்ந்த அச்சிறு கூட்டத்தினர், இனிமத சம்பந்தமான
காரியங்களைக் கொண்டும், வார்த்தைகளைக் கொண்டும் பாமர மக்களை:
ஏமாற்றுவது முடியாதெனக் கண்ட அக்கூட்டத்தார், தங்கள் பழய பழக்க
வழக்கங்களையும் நாகரீகங்களையும் அடியோடு விட்டு விட்டுப் புதிய
கல்விகளையும் தொழில்களையும் கற்றுக் கொண்டு அரசியல் பதவிகளை
மட்டிலும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். அக்கூட்டத்தார்கள் தான் நமது
நாட்டில் உள்ள வைதீகப் பார்ப்பனர்கள் என்பதை நாம் விரித்துக் கூற
வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம். இக் கூட்டத்தார்,
இந்தியாவின் நன்மைக்கு என்றோ, இந்திய மக்களின் முன்னேற்றத்திற்
கென்றோ ஏழைமக்களின் உதவிக் கென்றோ ஏற்படும் எந்த ஸ்தாபனங்
களிலும் நுழைந்து
கொண்டு,
அவைகளின்
மூலம் கிடைக்கும் செல்வாக்
கையும், நன்மைகளையும் தங்களுக்கும் தங்கள் சமூகத்திற்கும் மாத்திரம்
உபயோகப்படுத்திக் கொண்டும் பாமர மக்களை வழக்கம் போல் கீழே
அமிழ்த்துக் கொண்டுமே வந்திருக்கின்றார்களென்பது நமது நாட்டின்
உண்மை நிலையை அறிந்தவர்களுக் கெல்லாம் தெரியாத விஷயமல்ல.
உதாரணமாக நமது நாட்டிற்குச் சுயராஜ்யம் வேண்டும் என்று கிளர்ச்சி
செய்ய ஏற்பட்ட அரசியல் ஸ்தாபனமாகிய “காங்கிரஸ்” ஏற்பட்டது முதல்
இது வரையிலும் எந்தச் சமூகத்தார் நன்மையடைந்து வந்தார்கள் என்பதை
உணர்ந்தால் இவ்வுண்மை விளங்காமல் போகாது. திரு. காந்தி அவர்கள்
காங்கிரசைக் கைப்பற்றுவதற்கு முன், அதில் ஈடுபட்டிருந்தவர்கள் யாவரும்,
அரசாங்கத்தாரை மிரட்டுவதும் பிறகு அரசாங்கத்தார் கொடுக்கும் உத்தி
யோகத்தை ஏற்றுக் கொண்டு, தாசானுதாசராகி ஏழை மக்களின் இரத்தத்தை
உறிஞ்சுவதுமாகவே இருந்து வந்தார்கள் என்ற விஷயம் காங்கிரசின் பழய
நிலையை அறிந்தவர்களுக்கெல்லாம் தெரியும். காங்கிரசைத் திரு. காந்தி
யவர்கள் கைப்பற்றிய காலத்திலும் கூட, ஒத்துழையாமையியக்கத்தைக்
காங்கிரஸ் நடத்தாத காலத்தில் எல்லாம் வைதிகக் கூட்டத்தைச் சேர்ந்த
பார்ப்பனர்கள் அனைவரும் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு பட்டம்
பதவிகளை வேட்டையாடி வந்ததும், ஒத்துழையாமைக் காலங்களில் ஏமாந்த
பார்ப்பனரல்லாதார் அடிபடுதலும், அபராதம் செலுத்துதலும், சிறைப்படுத்
தலுமாயிருக்கப் பார்ப்பனர்கள் மாத்திரம் காங்கிரஸ் பேச்சை விட்டுவிட்டு
வேறுபல பெயர்களால் ஜன சமூகத்தை ஏமாற்றிப் பட்டம் பதவிகளைப் பெற
முயற்சிப்பதும் நமது நாட்டினற்குத் தெரியாத விஷயமல்ல.
காங்கிரசின் சட்ட மறுப்பு இயக்கமாகிய ஒத்துழையாமையோடு கலந்து
கஷ்டப்படுவதின் மூலம் பாமர மக்களின் செல்வாக்கைப் பெறாதவர்கள்,
வேறு தேசீயத்தின் பெயரால் பாமரமக்களை ஏமாற்றிச் செல்வாக்குப் பெறும்
பொருட்டு “சுதேசிப் பொருள்களை வாங்குங்கள்” சங்கம் ஏற்படுத்திப்
பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள் என்பதும் இச்சமயத்தில்
நினைவுக்குக் கொண்டு வர வேண்டிய ஒரு விஷயமாகும். சுதேசிப் பொருள்
குடி அரசு - 1932 @
36
விருத்தியாக வேண்டுமென்பதைப் பற்றியும்,
அப்பொருள்களை ஆதரிக்க
வேண்டுமென்பதைப் பற்றியும் நமக்குயாதொரு ஆட்சேபணையும் இல்லை.
ஆனால் நஷ்டப்படக் கூடியதும், பிழைப்புக்கு வழியில்லாததும், படித்த
கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் கொள்ளையடிக்கக் கூடியதுமாகிய கதர்
போன்ற போலிச் சுதேசிகளை விட்டு விட்டு, அன்னிய நாடுகளுடன் நாமும்
போட்டி போட்டு வியாபாரம் செய்யக் கூடிய முறைகளில் யந்திர சாதனங்
களைக் கொண்டு, துணி நெய்தல் போன்ற பல வகையான கைத்தொழில்
களையும் வளர்க்க வேண்டுமென்பதே நமது நோக்கமாகும். இவ்வாறு
செய்வோமானால் நமது நாட்டுப் பொருள்கள் சிறந்ததாகவும், குறைந்த
விலையுள்ளதாகவும் இருக்கக் கூடுமென்பதில் ஐயமில்லை. இத்தகைய
சிறந்ததும், குறைந்த விலையுள்ளதுமாகிய பொருள்களை மக்கள் தாமே
பிரியப்பட்டு வாங்குவார்கள். இவைகளை “வாங்குங்கள்” என்று பிரசாரம்
பண்ண வேண்டிய அவசியம் கூட அதிகமாக உண்டாகாது. இதற்கான முயற்சி
ஒன்றும் செய்யாமல், சும்மாவாவது “ சுதேசிப் பொருள்களை வாங்குங்கள்”
என்றும் “அப்பொழுதுதான் சுயராஜ்யம் வரும்” என்றும் வீண் பிரசாரம்
செய்வதும், இப்பிரசாரத்தில் பார்ப்பனரல்லாதார்க்கு இடந்தராமல் முழுதும்
பார்ப்பனர்களையே சேர்த்துக் கொண்டிருப்பதும் தேர்தல்களில் பார்ப்பனர்.
கள் வெற்றி பெறுவதற்காகச் செய்யப்படும் தேர்தல் பிரசாரம் என்றுதான் நாம்.
கூறுகின்றோம்.
முதலில் “மதம்” “கடவுள்” “வேதம்” “பாவபுண்ணியம்” முதலிய
அர்த்தமற்ற சொற்களால் பாமர மக்களை ஏமாற்றி வந்த மக்கள் பிறகு
அவைகளை விட்டு விட்டு காங்கிரசின் பெயரால் அரசியல் ஆதிக்கம் பெற்று
பாமர மக்களை ஏமாற்றத் தொடங்கினார்கள். காங்கிரசிலிருந்தால் கஷ்டம்
உண்டாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதன் பெயரையும் சொல்லிக்
கொள்ளாமலும் “கதர்”, “சுதேசி” என்பவைகளின் பெயரால் பாமர மக்களை:
ஏமாற்றத் தொடங்கி இருக்கின்றார்கள்.
இக்கூட்டத்தார், இப்பொழுது வேறொரு இயக்கத்தையும் ஆரம்பித்து
அதன் பெயராலும் பாமர மக்களை ஏமாற்றத் தொடங்கி இருக்கின்றார்கள்.
என்று தெரிகின்றது. இப்பொழுது மக்கள் “சமத்துவம்”, “சகோதரத்துவம்”
“சமூக முன்னேற்றம்” முதலிய வார்த்தைகளைக் கேட்டு, அவைகளைப்
பெறவேண்டும் என்றும் இச்சிக்கின்றார்கள். ஆகையால் “சமூக ஊழியம்”
“சமூக சீர்திருத்தம்” “சமூக முன்னேற்றம்” என்று சொல்லிக்கொள்ளு
கின்றவர்களுக்கும் நாட்டில் ஒருவகையான செல்வாக்கு ஏற்படத் தொடங்கி
யிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தையும் பார்ப்பனர்கள் வீண் போக்காமல் “சமூக.
முன்னேற்றச் சங்கம்” என ஒன்று ஏற்படுத்திக் கொண்டு தேர்தல் பிரசாரம்
பண்ணப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
இவ்வாறு ஒரு சங்கம், திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் தோன்றி அதைச்
சேர்ந்த சிலர் கிராமங்களில் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருவதாகப்
37
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி -15
பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.இச்சங்கத்திற்குத்
தற்பொழுது, திரு.டி.எஸ். எஸ். ராஜன் அவர்களும் கே. ஜி. சிவசாமி அய்யர்.
அவர்களும் முறையே தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து
வருகிறார்கள். இவர்களை நன்றாய் அறிந்தவர்கள் இச்சங்கம் உண்மையில்
ஏழைமக்களை முன்னேற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டதா? அல்லது
பார்ப்பன சமூகத்தை மறுபடியும் ஜில்லா போர்டுகளிலும் தாலூகா
போர்டுகளிலும் முன்னேற்றமடையச் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டதா?
என்பதைக் கண்டுகொள்ளுவார்கள். முதலில் இச்சங்கத்தைத் தொடங்கு கின்ற
காலத்தில் கோவை திரு. சி. எஸ். இரத்தினசபாபதி முதலியார், திருச்சி. திரு.
டி. எம்.நாராயணசாமி பிள்ளை முதலியவர்களையெல்லாம் வரவழைத்துச்
சங்கத்தை விளம்பரப்படுத்தினார்கள். இவ்விளம்பரம் பார்ப்பனரல்லாத.
மக்களை
வசப்படுத்துவதற்காக
வேண்டியென்பது
பின்னால்
விளங்கிவிட்டது.
இச் சங்கத்தின் நடவடிக்கைகளிலும், கிராமப் பிரசாரங்களிலும் கலந்து
கொள்ள விரும்பிய சமூக, ஊழியப் பிரியர்களான பார்ப்பனரல்லாதார்களை
இச்சங்கத்தார்களுடன் கலந்து கொள்ளுவதற்கு இடங்கொடுக்காத காரணம்.
ஒன்றே இச்சங்கம் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக ஏற்பட்டது
என்பதற்குப் போதிய சான்றாகும்.
கட்டாய ஆரம்பக்கல்வி, தீண்டாமை ஒழித்தல், மதுவிலக்கு,
சுதேசியம், சிக்கனம் முதலியவைகள் இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாக
அமைக்கப் பட்டிருப்பதும் பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றுவதற்கென்
பதில் ஐயமில்லை. இச்சங்கத்தார்களின் கொள்கைகளை ஆதரிப்பதாக ஒப்புக்
கொள்கின்றவர்களையும், இதற்காக இவர்கள் வெளியிட்டிருக்கும் உறுதி
மொழிப் பத்திரத்தில் கையொப்பமிடு பவர்களையும், ஸ்தல ஸ்தாபனங்
களுக்கு அபேட்சகர்களாக நிறுத்தி ஓட்டுச் சேகரித்து கொடுப்பதாகவும்
பிரசாரம் பண்ணிவருகின்றனர். அதோடு கூட தற்போது இருக்கும் ஸ்தல
ஸ்தாபன உறுப்பினர்களையும், தலைவர்களையும் பற்றிப் பாமர மக்களிடம்
அவர்களுடைய செல்வாக்கு குறையும் படியான வழியில் பிரசாரம் பண்ணிக்
கொண்டு வருகின்றார்கள். இதைக் கொண்டு இச்சங்கத்தாரின் சூழ்ச்சியை
நன்றாய் உணரலாம். தற்போது இருக்கும் ஸ்தல ஸ்தாபன உறுப்பினர்களும்,
தலைவர்களும் பார்ப்பனரல்லாதார்களே என்பது எல்லோருக்கும் தெரியும்.
பார்ப்பனரல்லாதார் கட்சி தோன்றிய பிறகும் ஸ்தல ஸ்தாபனங்கள் பெரும்
பாலும் பார்ப்பனரல்லாதார் வசமாகிவிட்டன. ஸ்தல ஸ்தாபனங்களில்
பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் பெற்றபின் அவை சம்பந்தப்பட்ட உத்தி
யோகங்களும் “கண்ராக்ட்டு”” களும் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாக
இருந்தது போக பார்ப்பனரல்லாதார்க்கும் கிடைக்க ஆரம்பித்து விட்டன.
பார்ப்பனர்கள் எவ்வளவு முயன்றும் அவைகளில் முன்போல ஆதிக்கம்
பெற முடியாமல் போய்விட்டது. ஆகையால் தான் இப்பொழுது மீண்டும்
குடி அரசு - 1932 @
38
சில வருஷங்களுக்கு முன்பு இருந்தது போலவே ஸ்தல ஸ்தாபனங்களில்
பார்ப்பனர்களும் அவர்களுக்கு “ஆமாம் சாமி” போடும் பேர்வழிகளும்
ஆதிக்கம் பெறும் பொருட்டுப் பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுப் பறிப்பதற்
காகவே “சமூக முன்னேற்றச் சங்கம்” என்றும், “சுதேசியம் பிரசாரச் சங்கம்”
என்னும் வகையான சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு தேர்தல் பிரசார
வேலை செய்ய முன் வந்திருக்கின்றார்கள் என்று தெரிவித்துக் கொள்ளு
கிறோம்.
இந்தச் “சமூக முன்னேற்றச் சங்கம்” மாத்திரம் அல்ல; இன்னும் இது
போன்ற பல சங்கங்கள் தேர்தலின் பொருட்டு பார்ப்பனர்களால் ஏற்படுத்தப்
படலாம்.ஆனால் எந்தப் பெயருடன் எத்தகைய சங்கங்கள் பார்ப்பனர்களால்
ஏற்படுத்தப்பட்டாலும் அவர்களால் செய்யப்படும் பிரசாரம் மதப் பிரசார
மாயிருந்தாலும், காங்கிரஸ் பிரசாரமாயிருந்தாலும், சுதேசிப் பிரசாரமாயிருந்
தாலும், சமூக ஊழியப் பிரசாரமாயிருந்தாலும், தீண்டாமை விலக்குப்
பிரசாரமாயிருந்தாலும், மதுவிலக்குப் பிரசாரமாயிருந்தாலும் அவை
யெல்லாம் தங்கள் சமூகத்தின் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட
பிரசாரமாக இருக்குமே தவிர வேறொன்றாயிருக்க முடியாது என்பது
இதுவரையிலும் நாம் கண்டுணர்ந்த அனுபவம் அன்றோ? ஆகையால் நமது
மாகாணமெங்கும் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள்,
அதாவது ஜில்லா தாலூகா
போர்டுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இச்சமயத்தில்
பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரத்திற்கு ஏமாறாமல் ஜாக்கிரதையாயிருப்பது
அவசியம். பார்ப்பனர்களின் வலையிற் சிக்கியவர்களும் அவர்களிடம் கூலி
பெறுபவர்களும் ஆகிய சில பார்ப்பனரல்லாத கூலிப் பிரசாரகர்களும்
புறப்பட்டுப் பார்ப்பனர்களுக்குச் சாதகமாகப் பிரசாரம் பண்ணக் கூடும்.
ஆதலால் அவர்கள் சொற்களையெல்லாம் நம்பி ஏமாற்றமடைய வேண்டாம்
என்று பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். உண்மையில் பொது
ஜனங்களின் நன்மைக்கு உழைக்கக்கூடியவர்களும், சுயநலம் கருதாத
வர்களும், குருட்டு நம்பிக்கை இல்லாதவர்களும், உயர்வு சாதிபேதம்
பாராட்டாதவர்களும், மதப் பிடிவாதம் இல்லாதவர்களும் ஆகிய சிறந்தவர்
களேயே தேர்தல்களில் ஆதரிப்பது பொது ஜனங்களின் கடமையாகும்.
இத்தகைய மனிதர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற்றால்தான்
அவர்களால் அடையக் கூடிய நன்மைகளைப் பொது ஜனங்கள் அடைய
முடியும். இப்படியில்லாமல் பார்ப்பனர்களுடைய தயவு தாட்சண்யங்களுக்
குக் கட்டுப்பட்டோ, அவர்கள் கூறும் “சுதேசியம்” “சமூக ஊழியம்”
“சுயராஜ்ஜியம்” முதலிய பூச்சாண்டி வார்த்தைகளுக்கு ஏமாந்தோ பார்ப்பனர்:
கையாள்களை ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அனுப்புவீர்களானால் பிறகு
கஷ்டப்பட வேண்டியவர்கள் நீங்கள் தான் என்று இப்பொழுதே பலமாக
எச்சரிக்கை செய்கின்றோம். பொதுஜனங்களே! வாக்காளர்களே! தேர்தல்
பிரசாரம்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!!
குடி அரசு - தலையங்கம் - 31.07.1932.
39
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஸ்தல ஸ்தாயனச் சட்டம்
இப்பொழுதுள்ள “ஸ்தல ஸ்தாபனச் சட்டப்படி நகரசபைத்
தலைவர்களோ, லோக்கல் போர்டுகளின் தலைவர்களோ ஒழுங்காக நடந்து
கொள்ளாவிட்டால் அவர்கள் மீது உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத்
தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம்
பெரும்பான்மையோரால் நிறைவேற்றப்பட்டவுடன் தலைவர்கள் தங்கள்
பதவியை இழந்து விடவும் இடமிருக்கிறது.
“ஸ்தல ஸ்தாபனச்சட்ட”த்தில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தியிருப்பதை
யாரும் ஆட்சேபிக்க முடியாது. இது ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகம்
ஊழலாகப் போய் விடாமல் திறமையாக நடைபெற வேண்டும் என்னும்
நன்னோக்கத்துடன் அமைக்கப்பட்டதேயாகும். இப்பிரிவு இல்லாவிட்டால்
தலைவர்கள் சிறிதும் பயமில்லாமல் தங்கள் அதிகாரங்களைச் சுய நலத்தின்
பொருட்டு துஷ்பிரயோகம் செய்ய இடமேற்படும் என்பதில் ஐயமில்லை.
இப்பிரிவு இருந்தால் “ஸ்தல ஸ்தாபன”த் தலைவர்கள் தங்கள் பதவியைக்
காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டாவது நேர்மையான வழியில் நடந்து
கொள்ள வேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கொண்டே இருக்கும்.
ஆனால் இச்சட்டம் அமலுக்கு வந்த சுமார் இரண்டு வருஷங்களாக,
பல நகர சபைகளிலும், லோக்கல் போர்டுகளிலும் உள்ள தலைவர்களின்
பேரில் நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சில
“ஸ்தல ஸ்தாபனங்களில்” மற்ற வேலைகளைக் கவனிப்பதற்கு நேர
மில்லாமல் சதா நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் கொண்டு வருவதும்,
இருக்கும் தலைவரை விலக்குவதும், வேறு தலைவரைத் தேர்ந்தெடுப்பதும்
பிறகு அத்தலைவர் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதும்
ஆகிய வேலையே நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கின்றது. நகர சபைக்
காரியங்களையும் லோக்கல் போர்டுகளின் வேலைகளையும், ஒழுங்காகவும்,
திறமையாகவும் நிர்வாகம் புரிந்து வந்த தலைவர்களும் இந்த நம்பிக்கை
யில்லாத் தீர்மானத்திற்கு இரையாகி இருக்கிறார்கள். ஆகையால், இந்த
நம்பிக்கை இல்லாத் தீர்மான அதிகாரமானது உறுப்பினர்களுக்கும் தலைவர்:
களுக்கும் உள்ள தனிப்பட்ட விரோதங் களினாலும், சம்பந்தத்தினாலும்
தலைவரின் நிர்வாகத் திமையையோ, ஊழலையோ கவனியாது பதவியை
குடி அரசு - 1932 @
40
விட்டு நீக்கவும் பதவியில் வைத்திருக்கவும் இடங்கொடுக்கிறதென்பதை
உணரலாம். இந்தக் காரணத்தை உத்தேசித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம்
சம்பந்தமாகத் திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும், ஸ்தல
ஸ்தாபனங்களின் நிர்வாகம் ஊழல்களாகப் போகாமல் இருக்க பாதுகாப்புகள்
ஏற்படுத்த வேண்டும் என்னும் எண்ணமும் இச்சட்டம் ஏற்பட்ட நாள்முதலே
பலர் மனத்தில் இருந்து வந்தது. இதற்காகச் சில தனிப்பட்ட சட்டசபை
உறுப்பினர்கள் முயற்சி செய்தும் ஒன்றும் நிறைவேறவில்லை.
ஆனால் இம்மாதம் நடைபெறும் சென்னை சட்டசபைக் கூட்டத்தில்
முதன் மந்திரியவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத்
தீர்மானத்தைப் பற்றிய திருத்தமொன்று அரசாங்கத்தாரால் கொண்டு
வரப்படுமென்று அறிகிறோம். அத்திருத்தத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள்
அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
“தலைவர் மீதோ, உபதலைவர் மீதோ நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டு வரப்படுவதற்கு முன் தீர்மானத்தைக் கொண்டு வருபவர் பத்து
நாட்களுக்கு முன் அறிக்கை செய்ய வேண்டும்.”
“அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு
உறுப்பினர்களால் நிறைவேற்றப் பட்டால் தலைவரை அப்புறப்படுத்த
அரசாங்கத்தாருக்கு அதிகாரம் உண்டு.”
“ஒரே கூட்டத்தில் தலைவர் பேரிலும், உபதலைவர் பேரிலும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கூடாது.”
“ஒருவரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் சபை
உறுப்பினர்களால் நிராகரித்துத் தள்ளப்படுமானால் அவர் மீண்டும் ஆறு
மாதத்திற்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் கூடாது.”
“நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொஞ்சம் அதிகப்படியான
அங்கத்தினர்களின் ஆதரவை மாத்திரம் பெற்று மூன்றில் இரண்டு பங்கு
அங்கத்தினரின் ஆதரவைப் பெறாதிருந்து ஆறுமாதங்களுக்குப் பின்னும்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு இதே போன்று
நிறைவேறுமானால் தலைவரை நீக்கும் அதிகாரம் அரசாங்கத்தார்க்கு உண்டு”
இத்திருத்தம் நிறைவேறுமானால் ஸ்தல ஸ்தாபனங்களின் நிலைமை
தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் மாறுதலடையும் என்று
நிச்சயமாக நம்பலாம். தற்பொழுதுள்ள சட்டப்படி தலைவர் மீதும் உபதலைவர்.
மீதும் ஒரே சமயத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர:
இடமிருப்பதனாலும், அத்தீர்மானம் நிறைவேறிய உடன் தலைவர்கள் தமது
பதவியை விட்டு நீங்க வேண்டியிருப்பதனாலும் உண்டாகும் சங்கடங்கள்
பல.
இச்சங்கடத்தைத் தற்போது கொண்டு வர இருக்கும் திருத்தம்
41
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
நிவர்த்திக்கிறது என்ற அளவில் திருப்தியடைய வேண்டியிருக்கிறது.
ஆனால் தற்போதுள்ள “ஸ்தல ஸ்தாபனச் சட்டம்” நம்பிக்கையில்லாத்
தீர்மானம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி,அவைகளின் ஆட்சியோ
சமமாக நடைபெறுவதற்குத் தூண்டுகோலாக இருப்பதென்பதே நமது
அபிப்பிராயம். இது விஷயமாகத் தற்போதைய சட்டம் அமலுக்கு வந்த
காலத்திலேயே “குடிஅரசு” தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறது.
இப்பொழுதும் அவ்வபிப் பிராயத்தையே வலியுறுத்திக் காட்ட விரும்பு
கிறோம்.
நமது நாட்டில் அரசியல்வாதிகளாக விளங்குகின்றவர்கள் அனை
வரும் அரசாங்கத்தில் புதிய அரசியல் சீர்திருத்தத்தின் பலனாக ஏற்பட்டி
ருப்பதும், ஏற்படவிருப்பதும் ஆகிய மாதம் 1000, 2000, 3000, 4000, 5000
கணக்காக சம்பளமுள்ள அதிகாரப் பதவிகளைப் பெறுவதிலேயே நோக்க
முடையவர்கள் என்பதை நாம் புதிதாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
ஆகவே இவ்வரசியல்வாதிகள் ஜனங்களின் ஓட்டுக்களைப் பெற்றுச்
சட்டசபைகளுக்குச் செல்ல வேண்டுமானால் கிராமத்து ஜனங்களிடம் தங்கள்
செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இதற்கு
அடிப்படையாக இவர்கள் “ஸ்தல ஸ்தாபனங்” களையே வைத்திருக்
கிறார்கள்.
“ஸ்தல ஸ்தாபனங்” களில் உத்தியோக நியமனங்களும் “கண்ராக்ட்”
விஷயமும் அவற்றின் தலைவர்களுக்கு இருப்பதனால் இவைகளின்
தலைமை ஸ்தானத்தைக் கைப்பற்றி மேற்கண்ட அதிகாரங்களை உப
யோகப்படுத்திச் சட்ட சபைத் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்னும்
கருத்தைக்
கொண்டே அரசியல்வாதிகளெல்லாம் ஸ்தல ஸ்தாபனங்களில்
முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்று கூறலாம்.
இரண்டாவது, ஆயிரக்கணக்கான சம்பள உத்தியோகங்களுக்கு
ஆசைப்படாதவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களுக்கு உத்தியோகம் தேடிக்
கொடுக்கவும், கண்ட்ராக்டின் மூலம் பணம் சம்பாதிக்கவுமே “ஸ்தல
ஸ்தாபனங்” களின் ஸ்தானங்களைக் கைப்பற்ற விரும்புகின்றார்கள்.
இவ்விரண்டு காரணத்தைக் கொண்டுதான் இன்று ஸ்தல ஸ்தாபனத்
தேர்தலில் போட்டி பலமாக இருக்கின்றது. கேவலம் கிராமப் பஞ்சாயத்து
உறுப்பினர் பதவி முதல் ஜில்லா போர்டு உறுப்பினர் பதவி வரையில் உள்ள
ஒவ்வொரு தேர்தலுக்கும், ஆயிரம், பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில்
ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன. “ஆதாயமில்லாத செட்டியார்.
ஆற்றோடு போவாரா?” என்று கூறும் பழமொழி இந்த ஸ்தல ஸ்தாபனங்களில்
பணஞ் செலவழிக்கின்றவர்கள் விஷயத்தில் பொருந்தாமல் போகாது.
குடி அரசு
- 1982 (2)
42
மற்றபடி ஸ்தல ஸ்தாபனங்களின் மூலம் பொது ஜனங்களுக்கு
நன்மைகள் செய்யவேண்டும் என்னும் உண்மை நோக்கமுடையவர்களுக்கு
இக்காலத்தில் இடங் கிடைப்பது அரிது. “இப்பொழுது தேர்தலில் செலவு
செய்யும் பணத்தைப் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம்” என்ற தைரியம்
உள்ளவர்கள் தான் துணிந்து கணக்கில்லாமல் பணத்தைச் செலவழிக்க முன்
வருவார்கள். நாணயமாக நடந்து கொள்ளும் நோக்கம் உள்ளவர்கள்.
கணக்கற்ற பொருளை வீணாகத் தேர்தலில் செலவு செய்யச் சம்மதிக்க
மாட்டார்கள். ஆகவே நாணயமுள்ளவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம்
பெறுவதே முடியாததாகும்.
ஒரு சமயம் நாணயமுள்ளவர்களும், திறமையுள்ளவர்களும்,
பொதுஜன ஊழியத்தில் உண்மையான விருப்பமுள்ளவர்களும் ஸ்தல
ஸ்தாபனங்களில் உறுப்பினர் பதவி பெற்றுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்
கப்பட்டாலும் அவர்கள் தங்கள் பதவியின் கெளரவத்திற்கு ஆசைப்பட்டால்,
நாணயத்தோடும் திறமையோடும் தங்கள் கடமையைச் செய்ய முடியாத
நிலையிலேயே தான் இருக்க முடியும். ஏனென்றால், “ஸ்தல ஸ்தாபனங்”'
களின் பொருளிலிருந்தே, தங்கள் தேர்தல் செலவை ஈடுசெய்து கொள்ளலாம்
என்ற நோக்கமுடன் வந்திருக்கும் உறுப்பினர்களுக்கும்,தங்கள் செல்வாக்கை
உபயோகப்படுத்திப்பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கமுடன் வந்திருக்கும்
உறுப்பினர்களுக்கும் சலுகை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டே தீரும்.
இந்நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்படாத தலைவர், நம்பிக்கையில்லாத் தீர்மானத்
தின் மூலம் தமது பதவியை இழக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விடும்.
ஆதலால் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகின்றவர்கள், சபையின் பெரும்
பாலான உறுப்பினர்களை எந்த வகையினாலும் திருப்திப்படுத்தி வைத்திருக்க
வேண்டியநிலைமையில் இருக்கிறார்கள்.
இதனால் எவ்வளவு யோக்கியமும், திறமையும் உள்ள தலைவரா
யிருந்தாலும் அவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்று
ஆசைப்படுவாரேயானால் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து
அங்கத்தினராக வந்திருப்பவர்களில் “மெஜாரிட்டி” யாரை ஒழுங்கீனமான
வழியில் திருப்தி செய்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்
றார் என்பதை உணரலாம். இந்த நிலையை உண்டாக்கி இருப்பது தற்போ
துள்ள சட்டமும், நம்பிக்கையில்லாத் தீர்மானமுமேயாகும் என்பதையும்
அறியலாம்.
ஆனால், ஸ்தல ஸ்தாபனச் சட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்
கொண்டுவர இடமில்லாதிருக்குமானால் இத்தகைய ஊழல்களுக்கு இட
முண்டாகாது என்று கூறலாமா? என்றால் இப்படியும் கூறமுடியாது. இப்
பொழுதாவது உறுப்பினர்களெல்லாம் உண்மையான பொது ஜன ஊழியர்
களாயிருந்தால், யோக்கியமுள்ள தலைவரை வைத்திருக்கவும், யோக்கியப்
43
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பொறுப்பில்லாத தலைவர்களைப் பதவியை விட்டு நீக்கவும் அதிகார
மிருக்கின்றது.நம்பிக்கையில்லாத் தீர்மானம் இல்லாவிட்டால் ஒழுங்கீனமாக
நடந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகள் செய்யும் தலைவர்கள் எந்த
வகைக்கும் பயமில்லாமல், தற்போதுள்ள சட்டப்படி தலைவர் பதவியேற்ற
மூன்று வருஷம் வரையிலும் தமது விருப்பம் போல் தாராளமாக நடக்க இடங்
கொடுக்குமாதலால் “ஸ்தல ஸ்தாபனங்” களின் நிர்வாகமானது தற்பொழுது
இருப்பதைக் காட்டிலும் இன்னும் படுமோசமாகப் போய்விடும் என்பதில் ஐய
மில்லை.ஆகையால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவசியம் இருந்துதான்
தீரவேண்டுமென்று நாம் வற்புறுத்துகிறோம்.
இப்பொழுது “ஸ்தல ஸ்தாபனங்” களில் உள்ள ஊழல்கள் ஒழிந்து
அவைகளின் ஆட்சி திறமையாகவும், பொதுஜனங்களுக்குப் பயன்படும்
வழியிலும் நடைபெற வேண்டுமானால் அவைகளுக்கு ஒவ்வொன்றும்
தனித்தனியே ஒரு நிர்வாக அதிகாரியை நியமனம் பண்ணி, அவற்றின்
காரியங்களை நடத்தும் உரிமையை அந்த உத்தியோகஸ்தரிடம் விட்டு
விட்டால் போதுமானதாகும் என்பதே நமது நோக்கமாகும். அதாவது,
இப்பொழுது சென்னை நகர சபைக்குக் “கமிஷனர்” என்று ஒரு நிர்வாக
அதிகாரி இருப்பது போல ஒவ்வொரு “முனிசிபாலிட்டி” களுக்கும், “தாலூகா
போர்டு”களுக்கும், “ஜில்லா போர்டு” களுக்கும், அதனதன் வரவு
செலவுகளுக்கும், நிர்வாகத்துக்கும் தகுந்த யோக்கியதையில் ஒவ்வொரு
நிர்வாக அதிகாரியை நியமிக்கவேண்டுமென்பதே நமது அபிப்பிராயம்.
இப்பொழுது சென்னை நகரசபையில் அதன்றிர்வாக காரியங்களை நடத்த.
“கமிஷனர் என்னும் நிர்வாக அதிகாரி இருப்பதனால் தான் அங்கத்தினர்கள்
ஒருவர்க்கொருவர் எவ்வளவு தான் அரசியல் விஷயமாகவும், வகுப்பு
சம்மந்தமாகவும் விரோதம் பாராட்டிக் கொண்டாலும் அதன் நிர்வாகம்
திறமையாக நடந்து வருகின்றது என்பதில் ஐயமில்லை. இவ்வாறில்லா
விட்டால் பெரிய நகரமாகிய சென்னையும் மற்ற -அங்கத்தினர்களும்,
தலைவர்களும், சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்ற நகர சபைக்கும்
உட்பட நகரங்களும் லோக்கல் போர்டுகளுக்கு உட்பட்ட ஊர்களும்
கஷ்டப்படுகின்ற மாதிரி கஷ்டப்பட வேண்டியதுதான் என்பதை யாரும்
மறுக்க முடியாது...
ஆகையால் இதுபோலவே “ஸ்தல ஸ்தாபனங்களுக்கும்” நிருவாக
அதிகாரிகள் என்பவர்களை ஏற்படுத்திவிட்டால் அவைகளில் உத்தியோக
நியமனங்கள் சம்பந்தமாகவும் கண்ட்ராக்ட் சம்மந்தமாகவும் தற்பொழுது
நடைபெறும் ஊழல்கள் நடைபெற இடமே ஏற்படாது. ஸ்தல ஸ்தாபன உத்தி
யோகஸ்தர்களும் அங்கத்தினர்களின் தயவுக்கும், சலுகைக்கும் கட்டுப்பட்டு
ஒழுங்கீனமான வழியில் நடந்து கொள்ள வேண்டிய நிலைமை மாறி, யோக்கி
யர்களாகவும் தங்கள் கடமையைத் திறமையோடு செய்யக் கூடியவர்களா
கவும் நடந்து கொள்ள முடியும். இதனால் நிர்வாகம் மிகவும் உயர்வுடைய
தாகவும் இருக்கும்.
குடி அரசு - 1932 (5)
44
அடுத்தபடியாக “ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் அங்கத்தவர்கள்
ஏராளமாகச் செலவழிப்பதும் ஒழியும். கூடிய வரையிலும் உண்மையான
பொது ஜன ஊழியர்களும் யோக்கியர்களும், கல்வியறிவுடையவர்களும்
ஸ்தல ஸ்தாபனங்களில் பதவி பெறுவார்கள்,
இதனால் “ஸ்தல ஸ்தாபனங்” களில் மோகமுள்ளவர்கள் “இவ்வாறு
செய்வதனால் ஜனநாயகத் தன்மை போய்விடுகிறது” என்று நொண்டிவாதம்
கூறுவார்கள். இதனால் ஜனநாயகத்துவம் போய்விடவில்லையென்பதே நமது
அபிப்பிராயம். “நிர்வாக அதிகாரி” அந்த ஸ்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட
ஊழியரே தவிர யதேச்சதிகாரியல்லர். தலைவரும், அங்கத்தவர்களும்
யோசித்துச் செய்யும் தீர்மானங்களின் படி தான் “நிர்வாக அதிகாரி” காரியங்
களை நடத்திச் செல்லுவாரேயொழிய வேறு அவராக ஒன்றும் செய்வதற்கு
அதிகாரமில்லை. அன்றியும் இவ்வதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம்
ஜனப்பிரதிநிதிகளின் தலைவர்களான மந்திரிகளுக்கு ஏற்படுகிறது. இதனால்
ஜனநாயகத்துவத்திற்கு விரோதமான சங்கதியும் ஒன்றுமில்லை என்று
இதனால் அறியலாம். இம்மாதிரி நிர்வாக அதிகாரியை நியமிக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டால்தான் தற்போதைய ஸ்தல ஸ்தாபனச்சட்டம் ஒழுங்கு பெற
நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவு தூரம் கூற முன்
வந்தோம். இந்த முறையில் சட்டத்தைத் திருத்த முயற்சிசெய்வதே உண்மை
யான ஜணாபிமானிகளின் கடமையாகும்.இல்லாத வரையில் சுயமரியாதையும்,
நாணயமும், திறமையும் உள்ளவர்கள் யாரும் ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம்
வகிக்கவும், தலைமை வகிக்கவும் இவைகளின் மூலம் தேச மக்களுக்கு
நன்மை செய்யவும் இடமில்லை என்றே கூறுகின்றோம். இதற்கு உதாரணம்.
வேண்டுமானால் தற்பொழுது
“ஸ்தல ஸ்தாபனங்”களில் விரல் விட்டு
எண்ணக்கூடிய சில ஸ்தாபனங்களே நாணயமான தலைவரைப் பெற்று ஒழுங்
காக நிர்வாகம் நடத்திக் கொண்டு செல்லுகின்றனவே தவிர நாணயமும்,
நிர்வாகத் திறமையும் உடைய தலைவர்கள் பலர் நம்பிக்கையில்லாத் தீர்மா
னங்களால் விரட்டியடிக்கப் பட்டதையும் ஒழுங்கீனமும் சக்தியில்லாமையும்
உடையவர்கள் பலர் தலைவர்களாக இருப்பதையும் நினைத்துப் பார்த்துக்
கொள்ள வேண்டுகிறோம்.
ஆனால் இப்பொழுது “நிர்வாக அதிகாரி ஏற்படுத்த வேண்டும்”
என்னும் நமது கொள்கைக்கு எதிர்ப்பு இருந்தாலும் இவைகளின் ஊழல்கள்
இன்னும் அதிகமாக அதிகமாகக் கடைசியில் உண்மையான ஜன சமூக
ஊழியர்கள் இம்முடிவுக்கே வந்து தீருவார்களென்பதில் நமக்கு நம்பிக்கை
யுண்டு.
குடி அரசு - தலையங்கம் - 07.08.1932.
45
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஏழைகள் கண்ணீர்
தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும்
வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகிப்
பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள். அதிலும், தொழிலாளர்கள்
படும் துயரத்தைச் சொல்லத் தரமன்று. ஒவ்வொரு யந்திரசாலைகளிலும்,
தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே
வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை
யற்றவர்களாக வெளியேறுகின்றனர்.
நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும், அனேகமாக,
எல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், வாரச்
சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும், மாதச் சம்பளம் பெறுகின்றவர்.
களாயிருந்தாலும், அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ்
செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதைத்
தவிர அவர்களுக்கு வேறு பூஸ்திதியோ, ரொக்கப் பணமோ இல்லை.
அனேகர் குடியிருக்கவும் சொந்தக் குடிசை இல்லாமல், குடிக்கூலிக்கு
வாழ்ந்து வருபவர்கள். இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று
வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால்,
அவர்.
களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம். எங்கும் பணப்பஞ்சம் மக்களை
வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்று
வது எப்படி?
இன்று பணக்காரர்களோ, நிலச்சுவான்தார்களோ, முதலாளிகளோ
மற்றும் யாராயிருந்தாலும் அனைவரும் செளக்கியம் அனுபவிப்பதற்குக்
காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள். நாட்டில் தொழில்கள்
வளர்ச்சி அடைவதற்கும், வியாபாரம் வளர்வதற்கும், காரணமாய் இருப்ப
வர்கள் ஏழைத் தொழிலாளர்கள். இருந்தும் அவர்கள் நிலை என்ன? இருக்க
இடமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும், உண்ண உணவில்லாமலும்,
பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்திப்
பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.
குடி அரசு
- 1982 (2)
46
இன்று ஒவ்வொரு ரயில்வேக் கம்பெனிகளிலும் ஆட்களைக்
குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வரு
கிறார்கள். இது போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்
சாலைகளிலும் தனிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்
சாலைகளிலும் ஆட்களைக் குறைத்து வருகிறார்கள். ஆனால் இக்
கம்பெனிகளிலும் தொழிற்சாலைகளிலும் உள்ள ஆயிரம், இரண்டாயிரம்
என்று சம்பளம் பெறும் உத்தியோகஸ்தர்களைக் குறைக்கக் காணோம். ஏழைத்
தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகஸ்தர்களின்
பணப்பெட்டிகள் நிரப்பப் படுகின்றன.
தொழிலாளர்களை குறைப்பதைக் காட்டிலும், தொழில் நேரத்தைக்
குறைத்து, விடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக்
கொடுப்பதன்மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம்
ஏற்படுவதை தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின்
தலைவர்கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையேயாகும். இந்த
யோசனைக்கு ஏனைய தொழிலாளர்களும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம்.
இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது
குடித்துக் கொண்டிருக்க முடியும். இந்த முறையையாவது, தொழிலாளர்களைக்
குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும்
கம்பெனிகளும் அரசாங்கமும், முதலாளிகளும் கைப்பற்றுவார்களானால்
ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம். ஆனால் இது
நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.
“சுயராஜ்யத்திற்கு” என்றும் “சுதேசி”க்கு என்றும் “பொதுப்
பாஷை”க்கு (ஹிந்தி) என்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக
விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும்
கவலை எடுத்துக் கொள்ளக் காணோம்.அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க
முன்வரக் காணோம். இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும், வேலை
யில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில்
பெரும் ஆபத்தாக முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம். ஆகையால்
இப்பொழுதே முதலாளிகளும், மாகாண அரசாங்கங்களும், இந்திய
அரசாங்கமும், தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி
யெடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.08.1932.
47
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
தமிழர் மகாநா௫
திருச்சி ஜில்லா துறையூரில் சென்ற 6, 7-ம் தேதி சனி, ஞாயிற்றுக்
கிழமைகளில் தமிழ்ப் புலவர் மகாநாடு, தமிழ் மாணவர் மகாநாடு, தமிழர்
மகாநாடு ஆகிய மகாநாடுகள் கூடி முடிந்தன. இம்மகாநாடு சம்பந்தமான
அறிக்கைகள் பத்திரிகைகளிலும், துண்டுப் பிரசுரங்களாகவும் வெளிவந்த
காலத்தில் நாம் ஒரு வகையில் மகிழ்ச்சியடைந்ததுண்டு. இதற்குக் காரணம்
இம் மகாநாடு, தமிழர் சீர்திருத்தத்தையும், தமிழ் மொழி வளர்ச்சியையும்
ஒருங்கே கருதி செல்வர்கள், புலவர்கள், மாணவர்கள், சீர்திருத்தக்காரர்கள்,
அரசியல்வாதிகள் முதலிய எல்லாத் தமிழர்களும் ஒன்று சேரும் மகாநாடு
என்று கருதியதே யாகும்.
நாம் இவ்வாறு அபிப்பிராயப்பட்டது தவறல்ல என்பதற்கு இம்
மகாநாட்டு நிர்வாகிகளால் வெளியிடப்பட்டிருக்கும் 9-வது அறிக்கை ஒன்றே
போதுமான சாட்சியாகும்.
அவ்வறிக்கையில்
1.“மக்களுள் வேறுபாடு பிறப்பினால் இல்லை என்பதை உணர்ந்து
ஏழை மக்களை நம்மைப் போல் மேன்மையடைவிக்கவும்,
சுதந்தர தாகங் கொண்டுள்ள நம்முடைய நாட்டிற்குக் கல்வியை அடிப்
படையாகக் கொண்டாலன்றி அஸ்திவாரமில்லாத, வீடு போலாகுமாத
லின், தாய் மொழியைத் தற்காலத்துக்கு ஏற்ற முறையில் பயில்வித்து
நம்முடைய நாட்டைச் சீர்திருத்தவும்,
2. சோம்பேரிகள் உண்டு உறங்குவதற்கு இடமாக அமைந்து கிடக்
கின்ற பொதுச் சொத்துக்களை நம்முடைய ஏழைமக்களின் கைத்
தொழில், கல்வி முதலியவற்றிக்குப் பயன்படுத்த முயற்சிக்கவும்,
3. அறிவு. ஆற்றல், ஆண்மை, கல்வி,
செல்வம், கைத்தொழில்,
வாணிபம் முதலியவற்றில் ஏனைய நாடுகளினின்றும் நம்முடைய
தமிழ் நாடு ஒரு சிறிதும் பின்னிட்டதன்று என்பதை மெய்ப்பிக்கவும்”
என்ற பகுதிகள் காணப்பட்டன. இப்பகுதிகளைப் படித்தவர் எவரேனும் இம்
குடி அரசு - 1932 @
48
மகாநாடுகள் சீர்திருத்தங் கருதிய மகாநாடுகள் அன்றெனக் கருதமுடியுமா?
என்று கேட்கிறோம்.
இத்தகைய அறிக்கைகளைக் கண்ட பின்னர்தான் நம்மவர்களில் பலர்,
அதாவது சுயமரியாதைத் தோழர்களில் பலர் தமிழர் சமூக முன்னேற்றத்
திற்கான தீர்மானங்கள் பலவற்றை எழுதி மகாநாட்டின் காரிய தரிசிகளுக்கு
அனுப்பினார்கள்.
ஆனால் மகாநாடு நடைபெறுவதற்கு இரண்டொரு தினங்களுக்கு
முன்னர்தான் மகாநாட்டின் வரவேற்புத் தலைவராகிய திரு. த. வெ. உமா
மகேஸ்வரம் பிள்ளையவர்கள் “தமிழர் மகாநாடு தமிழ் வளர்ச்சியை மட்டும்
கருதிய மகாநாடே யன்றி சீர்திருத்த சம்பந்தமான மகாநாடும் அன்று சமய
சம்பந்தமான மகாநாடு மன்று” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டி
ந்தார்கள்.
தமது வரவேற்புப் பிரசங்கத்திலும் “தமிழ் வளர்ச்சி இம் மகாநாட்டின்
நோக்கமெனின் தமிழ்ப் புலவர் மகாநாடும், தமிழ் மாணவர் மகாநாடும்
அதனை நிறைவேற்றக் கூடுமே, தமிழர் மகாநாடு இயற்றத்தகும் கருமம்
என்ன? தமிழரில் பெரும்பான்மையோர் தமிழ்ப் புலவரும் அல்லர்: தமிழ்
மாணவரும் அல்லர்: தமிழ்க் கலைகளைப் பரவச் செய்ததற்குத் தமிழ்ப்
புலவரும், தமிழ் மாணவர்களும் இன்றியமையாத கருவிகள் என்றாலும்
மொழிப் பற்றுடைய தமிழர்கள், பொருளையும் தமது செல்வாக்கையும்
வரையாது கொடுத்து உதவினாலன்றி தமிழ்ப் புலவர்களும் மாணவர்களும்
யாதும் செய்ய இயலாது. இம் முத்திறத்தினரும் ஒன்று சேர்ந்து தமிழ் மொழி
வளர்ச்சிக்குரிய வழிகளில், தொண்டாற்ற வேண்டுமெனக் கருதியே மூன்று
மகாநாடுகளும் கூட்டப் பெற்றிருக்கின்றன.
இம்மகாநாடுகளின் உண்மை நோக்கங்கள் யாதெனத் தெரியாத
படியால் மக்களின் சீர்திருத்தத்தில் கருத்துடைய நண்பர்கள் செய்தித்
தாள்களிலும், துண்டுத் தாள்களிலும் தாம் நிறைவேற்ற விரும்பும் முடிவுகளை:
வெளியிட்டு வருவதைப் பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு இவர்
அறிக்கை வெளியிட்டதும் வரவேற்புப் பிரசங்கத்திற் கூறியதும் இதற்கு முன்
வெளியிட்ட அறிக்கைகளுக்கு முன்னுக்குப் பின் முரண்பட்ட கூற்று
என்றுதான் நாம் கூறுவோம். மகாநாடு நடத்துவதாக முடிவு செய்த ஆரம்ப
கால முதல் மகாநாட்டுத் தேதிக்கு இரண்டு மூன்று தினங்களுக்குமுன்
வரையில் “தமிழர் மகாநாடு தமிழரின் சீர்திருத்தத்திற்காகவும், தமிழ்மொழி
வளர்ச்சிக்காகவும் கூட்டப்படுகிறது” என்று அறிக்கை மேல் அறிக்கைகள்
வெளியிட்டவர்கள் மகாநாட்டு நிர்வாகிகளே ஒழிய வேறு யாரும் அல்லர்.
இவர்களுடைய அறிக்கைகளைக் கண்டுதான் மக்களின் சமூக சீர்திருத்தத்
திற்குப் பாடுபடும் அன்பர்கள் பல முடிவுகளை எழுதி அனுப்பினார்கள். திரு.
உமா மகேசுவரம் பிள்ளையவர்கள் சில தினங்களுக்குமுன் சீர்திருத்தக்
49
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
காரர்களின் தீர்மானங்களைக் கண்டு வெருண்டு வெளியிட்ட அறிக்கை.
யையும், தமது வரவேற்புப் பிரசங்கத்தில் கூறிய செய்தியையும், மகாநாடு
நடத்த ஆரம்பித்த காலத்திலேயே வெளியிட்டு மகாநாட்டு நிர்வாகிகளின்
9-வது அறிக்கை போன்ற அறிக்கைகளையும் வெளியிடாமல் இருந்திருப்
பார்களானால், யாரும் “செய்தித்தாள்களிலும், துண்டுத்தாள்களிலும் தாம்
நிறைவேற்ற விரும்பும்” சீர்திருத்த சம்பந்தமான தீர்மானங்களை வெளியிட்
டிருக்கமாட்டார்கள் என்பது உறுதி.
இனி, இவர்கள் முதலில் “தமிழர் சீர்திருத்தத்திற்காகவும், தமிழ் மொழி
வளர்ச்சிக்காகவும் மகாநாடு கூட்டுகின்றோம்” என்று அறிக்கைகளை,
வெளியிட்டு விட்டுக் கடைசியாகச் சீர்திருத்தக்காரர்களின் தீர்மானங்களைக்
கண்டபின் “சீர்திருத்த மகாநாடும் அன்று சமயவளர்ச்சி மகாநாடும் அன்று
மொழி வளர்ச்சி ஒன்றையே கருதிய மகாநாடு” என்று தீர்மானித்ததற்குக்
காரணம் என்னவென்பதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
இம்மகாநாட்டைக் கூட்ட ஏற்பாடு செய்தவர்கள் அனைவரும்
உண்மையான தமிழ்ப் பற்றும் தமிழ் வளர்ச்சியில் நோக்கமும் உடையவர்.
களாய் இருந்தாலும் “சைவ சமய பக்தர்கள்” என்பதை யாரும் அறிவார்கள்.
இவர்கள் “சைவத்தை விட்டால் தமிழ் இல்லை; தமிழை விட்டால் சைவம்
இல்லை” என்னும் கொள்கையினராய் இதுகாறும் இவை இரண்டையும் இரு
தோள்களிலும் தூக்கிப் போட்டுக் கொண்டு திரிந்தவர்கள் என்பதையும்
யாரும் அறிவார்கள். இத்தகையவர்கள் சீர்திருத்தத்தின் பெயரால் கூட்டும்.
மகாநாடு சீர்திருத்தத்தின் பெயராலும் தமிழின் பெயராலும் சைவத்தை
வளர்க்க முயலும் மகாநாடாக இருக்கும் என்று கருதியே பல சீர்திருத்தக்
காரர்கள் மகாநாட்டினருக்கு எச்சரிக்கை செய்யவும், பல தீர்மானங்களை:
அனுப்பவும் முன் வந்தார்கள். உண்மையிலேயே இந்த மகா நாட்டினர்
சீர்திருத்தத்தில் ஆர்வமுடையவர் களாக இருந்தால் சீர்திருத்தக்காரர்களின்
அறிக்கைகளைக் கண்டோ தீர்மானங்களைக் கண்டோ பயப்பட்டிருக்க
வேண்டியதில்லை. விவாதத்திற்கு இடமில்லாத சீர்திருத்தத் தீர்மானங்களை:
யெல்லாம் மகாநாட்டில் நிறைவேற்றியிருக்கலாம். விவாதத்திற்கு இடமான
விஷயங்களை மகாநாட்டினரும் கொண்டு வராமலிருந்தால், சீர்திருத்தக்
காரர்களும் கொண்டு வராமலிருந்திருப்பார்கள். மகாநாடும் முதலில் எதற்
கென்று கூட்டுவதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டனவோ அதற்கென்று
கூட்டப்பட்டதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாகவும் முடிந்திருக்
கும். இவ்வாறு செய்ய மகாநாட்டினர் முன் வராததிலிருந்தே இவர்கள்.
நோக்கம் வேறு என்பதும், கடைசியில் அது நிறைவேற முடியாமல் போய்
விட்டதென்பதும் விளங்கிவிட்டது.
கடைசியாக, மகாநாட்டில் மொழி சம்பந்தமான தீர்மானங்கள் மட்டுமே
நிறைவேற்றப்படும் என்ற முடிவுக்கு வந்த பின்னும் அதைப்பற்றிச்
சீர்திருத்தக்காரர்கள் ஒன்றும் ஆட்சேபிக்கவேயில்லை. ஆனால் மத
குடி அரசு - 1932 @
50
சம்பந்தமில்லாமல் மொழி சம்பந்தமாக மாத்திரம் செய்யப்படும் தீர்மானங்
களில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்வதாகவும் சீர்திருத்தக்காரர்கள் ஒப்புக்
கொண்டனர்.
திவான்பகதூர் குமாரசாமி ரெட்டியார் கல்வி மந்திரி அவர்கள்.
தலைமையில் இரண்டாவது நாள் கூடிய தமிழர் மகாநாட்டில் மாத்திரம்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் யாவும் தமிழ்மொழி
சம்பந்தப்பட்டனவே யொழிய
மதச் சம்பந்தமானவை அல்ல. சில
தீர்மானங்களோடு ஒட்டிக் கொண்டிருந்த மதச் சம்பந்தமான விஷயங்களும்.
சீர்திருத்தக்காரர்களால் திருத்தப்பட்டு அவைகள் ஏகமனதாக நிறைவேறின.
இவ்வாறு மகாநாடு வெற்றியுடன் முடியும் பொருட்டு, மத சம்பந்த
மாகப் பிடிவாதஞ் செய்யாமல் விட்டுக் கொடுத்த மகாநாட்டு நிர்வாகி
களையும், மொழி சம்பந்தப்படாத மற்ற சீர்திருத்தத் தீர்மானங்களை
வற்புறுத்தாமல் விட்டுக்கொடுத்த சீர்திருத்தக்காரர்களையும் எல்லோரும்
ஏகமனதாக மொழி வளர்ச்சி கருதி மகாநாட்டை அமைதியோடு நடத்திய
தற்காக இருபாலரையும் பாராட்டுகின்றோம். இவ்வாறு அமைதியோடு நடை
பெறுவதற்கு முக்கியக் காரணமாயிருந்தவர், தமிழர் மகாநாட்டுக்குத்
தலைமை வகித்த கல்விமந்திரி திவான்பகதூர் குமாரசாமி ரெட்டியார்
அவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மொழி வளர்ச்சி கருதி, பல வேறுபட்ட கொள்கையினரும் ஒன்று
சேர்ந்து கூடிய மகாநாடு இது ஒன்றேயாகும். ஆதலால் இதில் நிறைவேற்றப்
பட்ட தீர்மானங்கள் வீண்போகாமல் - ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் -
பலன் அளிக்குமென்று நம்புகின்றோம். கடைசியாக மற்றுஞ் சில விஷயங்
களையும் கூறாமலிருக்க முடியாமைக்காக உண்மையாகவே வருந்துகின்
றோம். அவையாவன:-
மகாநாட்டின் நிர்வாகத்தினர்களில் சில சில்லரைப் பேர் வழிகள்
நடந்துகொண்ட வெறுக்கத் தகுந்த முறைகளேயாகும். மகாநாட்டிற்குச்
சீர்திருத்தக்காரர்களாகிய சுயமரியாதைத் தோழர்களும் ஏராளமாக வந்திருந்
தனர். இவ்வாறு வருவார்கள் என்ற விஷயமும் முன்னரே மகாநாட்டுநிர்வாகி
களுக்குத் தெரியும். அப்படியிருந்தும், சுயமரியாதைத் தோழர்களின் மணம்
புண்படும் படியான வாக்கியங்கள் எழுதிய இரண்டொரு “போர்டுகள்
போடப்பட்டிருந்தன. இந்த போர்டுகளை எடுத்துவிட வேண்டுமென்று
மகாநாட்டுத் தவைவர்களில் சிலர் சொல்லியும் கூட எடுக்கப்படவில்லை.
கடைசியில் இவைகள் சுயமரியாதைக்காரர்களின் முயற்சியினாலேயே
மகாநாட்டு நிர்வாகிகளுக்குத் தெரிவித்து எடுக்கப்பட்டன.
மகாநாடு தொடங்கும் பொழுதும்,
இடையிலும் சமய சம்பந்தமான
பாடல்கள் பாடுவது முறையல்லவென்று தெரிவிக்கப்பட்டும், பிடிவாதமாக
51
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அப்பாடல்களையே பாட முயற்சித்தது வெறுக்கத் தகுந்த செயலாகுமென்றே
கருதுகின்றோம். இப்பிடிவாதம் காரணமாகவே சிறிது குழப்பமும் ஏற்பட்ட
தாகத் தெரிகிறது.
முதல் நாள் கூட்டத்தில், சுயமரியாதைத் தோழர்களில் சிலர் மேடை
யின்மேல் உட்கார்ந்திருந்ததைக் கண்டு பொறுக்காமல் இரண்டாம் நாள்
மேடையின் மேல் உள்ள நாற்காலிகளின் மேல் பெயர்கள் எழுதிய சீட்டுக்கள்
கட்டப்பட்டிருந்தன. ஆனால் அப்பெயர்களில் மகாநாட்டிற்கு வராதவர்கள்
பெயர்கள் கூட இருந்ததாகவும், பெயர்கள் எழுதிய சீட்டுப்படி யாரும்
உட்காரவில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே இச்செயல் சுயமரியாதைத்
தோழர்கள் எவரும் மேடையின் மேல் உட்காரக் கூடாது என்பதற்காகச்
செய்யப்பட்டது என்பது நன்றாக விளங்கிவிட்டது.
இன்னும் சுயமரியாதைக்காரர்கள் கலகம் பண்ணினால் அவர்களை
அடிப்பதற்காக ஆட்கள் தயாரித்து வைத்திருந்ததாகவும் நம்பிக்கையான
இடங்களிலிருந்து கேள்வியுற்றோம்.
மிகவும் கேவலமாக இருந்த மற்றொரு விஷயம் குறிப்பிடத் தகுந்த
தாகும். போலீஸ்காரர்களை பிரம்புடன் கொண்டு வந்து வைத்திருந்ததும்,
அவர்கள் சாதாரணமாக வெளியே செல்ல எழுந்திருப்போரைக் கூட
பிரம்பைக் காட்டி, “உட்காரு, வெளியே போ” என்று ஆர்ப்பாட்டம் பண்ணி
யதும் மிகவும் வெட்கக்கேடான செய்கையாகும். இவ்வளவும் சுயமரியாதைத்
தோழர்களுக்குப் பயந்து செய்த காரியம் என்றே சொல்லப்படுகின்றது. இது
உண்மையானால் படித்த பண்டிதக் கூட்டத்தாரின் பயங்கொள்ளித் தனத்
திற்கும், அறியாமைக்கும் இதைவிட வேறு அத்தாட்சி வேண்டியதில்லை.
சுயமரியாதைக்காரர்கள் கலகக்காரர்கள் அல்லர் என்பதையும்
“போலீஸ்” முதலிய எந்த உதவியும் இல்லாமல் 5000, 10000 மக்கள் கூடி
யிருக்கும் மகாநாடுகள் பலவற்றை அமைதியுடன் நடத்தியவர்கள் நடத்து
கிறவர்கள் என்பதையும், நியாயத்தின் பொருட்டு வாதிட எந்தப் போலீசுக்கும்
அடியாட்களுக்கும் அஞ்சமாட்டார்கள் என்பதையும் மகா நாட்டு நிர்வாகிகள்.
உணராமல் போனதற்காக உண்மையில் நாம் பரிதாபப் படுகின்றோம். தமிழ்
மொழி சம்பந்தமாகக் கூடிய ஒரு மகாநாட்டைத் தமிழர்கள் போலீஸ்
உதவியைக் கொண்டு நடத்தினார்கள் என்றால் இதைவிட வேறு என்ன
அவமானம் வேண்டும்?
இன்னும் சுயமரியாதைத் தோழர்கள் விஷயத்தில் மகாநாட்டு நிர்வாகி
களில் குறுகிய நோக்கமுடைய சில சில்லரைப் பேர்வழிகள் காட்டிய மனோ
பாவங்களை வெளியிட வெட்கப்படுகிறோம்.
இக்காரியங்களையெல்லாம் வெளியிடுவதன்மூலம் யாரையும்
அவமானப்படுத்த வேண்டுமென்றோ, மனம் நோகச் செய்ய வேண்டு
மென்றோ நாம் கூறவில்லை. இனிமேலாவது இவர்கள் மகாநாடு கூட்டும்
குடி அரசு - 1932 @
52
காலங்களில் இவ்வாறு கேவல புத்தியுடன் நடந்து
கொள்ளுவோரை மகாநாட்டு
நிர்வாகங்களில் சேர்த்துக் கொள்ளாமலிருக்கும் பொருட்டே கூறினோம்.
கடைசியாக சுயமரியாதைத் தோழர்கள் மகாநாட்டில் கலந்து கொண்:
டிரா விட்டால் இந்தத் தமிழர் மகாநாடு பெரும்பாலும் சைவ சித்தாந்த
மகாநாடாகவே முடிந்திருக்க கூடும் என்பதில் ஐயமில்லை. சுயமரியாதைத்
தோழர்கள் கலந்து கொண்டதனால்தான் இது உண்மையான தமிழ் மொழி
வளர்ச்சி மகாநாடாக முடிந்தது என்பது குறிப்பிடத் தகுந்ததாகும்.
இச்சமயத்தில், தமிழ் பண்டிதர்களுக்கும், தமிழபிமானிகளுக்கும் சில
வார்த்தைகள் கூற விரும்புகிறோம். சுயமரியாதைத் தோழர்கள், தமிழ்
மொழிவளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும்
தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர்கள் அல்லர் என்று தெரிவிக்கின்
றோம். இதற்கு சுயமரியாதைத் தோழர்கள் தமிழர் மகாநாட்டிற் கலந்து
கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களிலும். முக்கிய பங்கு எடுத்துக்
கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் “ஹிந்தி” மொழியைக் கண்டிப்
பதாக மகாநாட்டில் மெஜாரிட்டியினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்,
சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும்.
“ஹிந்தி” கண்டனத் தீர்மானத்தைச் சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப்புக்
குச் சரியான பதில் இறுத்தி “ஹிந்தி” கூடாது என்பதை பெரிய “மெஜாரிட்டி”
யாரை ஒப்புக் கொள்ளச் செய்தவர்கள் சுயமரியாதைத் தோழர்களே
யாவார்கள் என்பதை நாம் கூற வேண்டியதில்லை.
ஆனால் மற்ற பண்டிதர்களில் பலர் விரும்புவது போல, புராணங்
களை எழுதுவதும், அவைகளைப்
பற்றிப் பேசுவதும், தேவார, திருவாசகங்
களைப் பாடுவதும்தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள்
கருதுவதில்லை.
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும், அறிவையும்,
திறமையும், தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலை
களையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய
அறிவையும்,தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று
கருதியிருப்பவர்கள் என்று கூறுகிறோம். இதுதான் உண்மையான தமிழ்
வளர்ச்சிக்கான வழியுமாகும். ஆகையினால் இனியேனும் “மதம்” என்றும்
“சமய உணர்ச்சி” என்றும் “தெய்வீகப் பாடல்கள்” என்று சொல்லுகின்ற
பல்லவிகளை விட்டுவிட்டு உண்மையான தமிழ் வளர்ச்சிக்காக உழைக்க
வேண்டுகிறோம். இவ்வகைக்கு சுயமரியாதைத் தோழர்களும் மற்றவர்களும்.
துணை நிற்பார்கள் என்பதில் ஐயமில்லை என்று கடைசியாகத் தெரிவித்துக்
கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.08.1932.
53
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கல்வி மந்திரி பிரசங்கம்
சென்ற 4-8-32ல் நடந்த சென்னைச் சர்வகலா சாலைப் பட்டமளிப்பு
விழாவின் போது நமது மாகாண கல்வி மந்திரி திவான் பகதூர் எஸ். குமாரசாமி
ரெட்டியார் அவர்கள் பட்டதாரிகளுக்குச் செய்தப் பிரசங்கம் மிகவும் சிறந்த
தொன்றாகும்.
அவர் தற்காலக் கல்வியில் உள்ள குற்றங்களையும், கல்வியின்
லட்சியம் இன்னதென்பதையும், கல்வி எம்முறையில் போதிக்கப்பட வேண்டு
மென்பதையும், எத்தகைய கல்வி அவசியமென்பதையும், கற்றவர்கள் செய்ய
வேண்டிய வேலையையும் தெள்ளத்தெளிய விளக்கிக் காட்டியிருக்கிறார்.
கல்வியானது உலக வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதாக இருக்க
வேண்டும். வெறும் வித்தையை மாத்திரம் கற்றுக் கொடுப்பதனால் தேச
மக்களின் துன்பத்தைப் போக்க முடியாது. ஆகையால் தொழில் கல்வியை
வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்னும் அபிப்பிராயத்தை
வெளியிட்டிருக்கிறார்.
அன்றியும் தற்காலத்தில் உயர்தரக் கல்விக்கு அதிகமாக செலவு
செய்வதைக் காட்டிலும், ஆரம்பக் கல்வியின் பொருட்டு அதிக கவனம்
செலுத்த வேண்டும்; ஆரம்பக்கல்வியின் மூலம் தேசமக்கள் எல்லோரையும்
அறிவுடையராக்க முயல வேண்டும் என்னும் சிறந்த அபிப்பிராயமும் கல்வி
மந்திரியின் பிரசங்கத்தில் காணப்படுகிறது.
நமது நாட்டு மாணவர்களுக்குத் தற்சமயம் எல்லா விஷயங்களையும்
ஆங்கிலத்தின் மூலமே கற்பிக்கப் படுவதானால் விஷயங்களைத் தெரிந்து
கொள்வதற்கு அதிக நாளாகிறது. ஆங்கில பாஷையைத் தவிர மற்ற விஷயங்
களைத் தாய்மொழியின்மூலம் கற்பிக்கப்பட்டால் குறைந்த காலத்திலும்
சுருங்கிய செலவிலும் கற்கக் கூடும். ஆகையால் இவ்வாறு கற்பிப்பதற்கு
முயற்சி செய்ய வேண்டும் என்று சில காலமாகக் கல்வித் துறையில்
உழைத்துவருவோர் சிலர் பிரயாசைப்பட்டு வருகின்றனர். நமது கல்வி
மந்திரியவர்கள் இவ்வபிப்பிராயத்தை வற்புறுத்தி தாய்மொழிக் கல்வியின்
அவசியத்தை எடுத்துக்காட்டிப் பேசியிருப்பது கவனிக்கத்தக்க தாகும்.
தற்பொழுது தேசீயவாதிகளில் பலர், ஆங்கில பாஷையின் மீதும்
வெறுப்புக்கொண்டு, அதற்குப் பதிலாக “ஹிந்தி” பாஷையை இந்தியாவிற்குப்
பொதுப்பாஷையாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றனர். வட
நாட்டார், தங்கள் பாஷையின் மேல் உள்ள அபிமானம் காரணமாக
குடி அரசு - 1932 @
54
ஆரம்பித்த இம்முயற்சியைத் தென்னாட்டில் உள்ள தமிழ் மொழியின் மேல்
வெறுப்புக் கொண்ட பார்ப்பனர்களும் ஒப்புக் கொண்டு இதன் பொருட்டுப்
பெரும் முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால் நாம் ஆதிமுதல் “ஹிந்தி”
பொது மொழியாவதற்குத் தகுதி உடையதன்று என்று சொல்லிவருகிறோம்.
ஹிந்தி மொழியில் விஞ்ஞானக் கலைகள் ஒன்றேனும் இல்லையென்பதையும்,
இலக்கியங்கள் இல்லையென்பதையும், தமிழர்க்கு கஷ்டமான மொழி
என்பதையும், ஆங்கிலத்தை அன்னிய மொழியென்றால் ஹிந்தியும்
அன்னிய மொழிதான் என்பதையும், ஹிந்தியைப் பொது மொழியாக்க
வேண்டுமென்றால் முஸ்லீம்கள் உருதுவைப் பொதுமொழியாக்க வேண்டு
மென்கிறார்களாதலால் இதன் மூலம் இந்து- முஸ்லீம் கலகம் நேரும் என்பதை
யும் அறிந்தவர்கள் நாம் சொல்லுவதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கமாட்டார்.
களென்பது நிச்சயம். ஆதலால் தற்காலத்தில் அதிகமான மக்களால் பேசப்
படுவதும், உலகம் முழுவதும் பரவியிருப்பதும், எல்லாக் கலைகளும் நிரம்பி
யிருப்பதும் ஆகிய ஆங்கிலத்தையே பொது மொழியாக வைக்க வேண்டும்
என்றும் கூறிவருகின்றோம். கல்வி மந்திரியவர்களும் ஆங்கிலமே பொது
மொழியாக இருக்க வேண்டும் என்று தமது பிரசங்கத்தில் குறிப்பிட்டிருப்
பதை நாம் பாராட்டுகிறோம்.
கல்வியானது, கற்றவர்களுக்குப் பகுத்தறிவை உண்டாக்கக் கூடிய
தாகவும், பழய குருட்டுப் பழக்க வழக்கங்களைப் போக்கக் கூடியதாகவும்
இருக்க வேண்டுமென்றும், இதற்கேற்ற முறையில் கல்வியைத் திருத்தி
அமைக்க வேண்டுமென்றும் நாம் கூறிவருகிறோம். இவ்வபிப்பிராயமும்
கல்விமந்திரியின் பிரசங்கத்தில் காணப்படுகின்றது.
கற்றவர்கள் உத்தியோகத்திற்கென்று கற்காமல், அறிவுக்கென்றும்,
நாட்டின் நன்மைக்கென்றும் கற்று, தேசமக்களைச் சீர்திருத்த வேண்டும்
என்னும் அபிப்பிராயத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். கற்றவர்களெல்லாம்,
கிராமப் புனருத்தாரண வேலையில் ஈடுபட்டு கிராமாந்தரங்களையும்
அங்குள்ள மக்களையும் சீர்திருத்த முயல வேண்டும் என்றும், இதுவே தேசீய
வேலையும், தேசீய நோக்கமும் ஆகும் என்றும் குறிப்பிட்டிருப்பது நமது
நாட்டுக் கல்விமான்களால் கவனிக்கக் கூடியதொன்றாகும்.
தற்பொழுது கற்றவர் கூட்டம், தேசமக்களின் முன்னேற்றத்தில் சிறிதும்
கவலையில்லாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே கருதி உத்தியோகம் ஒன்
றையே நாடித்திரிந்து கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கல்விமுறை
என்பதில் ஐயமில்லை.
ஆகையால், இனியாவது கல்விமுறை சீர்திருத்தப்
பட்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு உபயோகத்திற்கு ஏற்ற முறையில் கற்பிக்
கப்படுவதற்கு முயற்சி செய்யுமாறு வேண்டுகிறோம். இறுதியாக இத்தகைய
சிறந்த அபிப்பிராயங்களைத் தைரியத்தோடு வெளியிட்ட திரு. ரெட்டியார்.
அவர்களைப் பாராட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1932
55
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பர்ணாட்ஷா - மேத்தா
நமது இயக்கப் பிரசாரத்தைக் கண்டு நமது நாட்டு வைதீகர்களும்,
பண்டிதர்களும் நடு நடுங்குகிறார்கள், நமதியக்கக் கொள்கைகள் எல்லா
மக்கள் மனத்திலும் பதிந்துவிட்டால் தங்கள் சுயநலத்திற்குக் காரணமாக
இருக்கும் வைதீகம் அழிந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள். உண்மையில்
இவ்வாறு பயப்படுவதற்குக் காரணம் பகுத்தறிவில்லாமையும், பழைய
சாஸ்திரங்களிலும், பழக்க வழக்கங்களிலும் வீண் அபிமானம் கொண்டிருப்
பதுமேயாகும். அபிமானத்தைப்போல அறிவைத் தடைபடுத்தும் கருவி
உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. எவ்வளவுதான் படித்தவர்கள் மூட நம்பிக்
கைகளை ஒழிக்க அஞ்சி அவைகளைக் காப்பாற்ற முயன்றாலும் காலம்
சும்மா விடுவதில்லை. உலகம் புகழும் பரந்த அறிவினர்கள் உள்ளத்தில்
உண்மை உணர்ச்சித் தோன்றி வெளிப்பட்டு விடுகின்றது.
உலகத்தில் உள்ள கவிஞர்களில் மிகச் சிறந்த - பரந்த - அறிவினராகிய
“ஜியார்ஜ் பர்னாட்ஷா” என்பவரைப்பற்றி அறியாதார் எவரும் இலர். அவர்:
கூறுவது முழுவதும் நமது இயக்கக் கொள்கைக்கு ஆதரவளிக்கக் கூடிய
மொழிகளேயாகும். அவர் எழுதிய நூல்களைக் கற்றோர் அனைவரும்
அவருடைய அபிப்பிராயங்களை நன்கு அறிவார்கள்.அவர் இங்கிலாந்தில்
சமீபத்தில் ஆகாசவசனி மூலம் ஒரு பிரசங்கம் செய்தார். அப்பிரசங்கத்தின்
சுருக்கம் வருமாறு:-
“நான் மிகவும் பெரிய மனிதன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
பிரிட்டீஷ் ஆகாயவசனிக் கார்ப்பொரேஷனும் இவ்வாறே கருதுகிறது.
நானும் ஒரு சாதாரண தாடியுள்ள கிழவனைப் போலவே இருக்கிறேன்
என்பதை என்படத்தின் மூலம் அறிந்திருப்பீர்கள். நீங்கள், நான் பெரிய
மனிதனானது எப்படி என்னும் ரகசியத்தை அறிய ஆசைப்படுவீர்கள்.
உண்மையில் பெரிய மனுஷனென்றோ, பெரிய மனுஷி என்றோ
யாரும் இல்லை. மக்கள் கொண்டுள்ள பலவாறான மூட நம்பிக்கைகளில்
இதுவும் ஒன்றாகும்.
குழந்தைகளால் பெற்றோர்களுக்குப் பெரும் பொறுப்பு உண்டாகிற
தென்று பலர் கூறுகிறார்கள். இப்படி கூறுவது சிறிதும் பொருளற்ற வார்த்தை
யாகும். குழந்தைகளால் ஏற்படும் பெரும் செலவைப் பெற்றோர்கள் ஏற்றுக்
கொள்ளக் கூடாது.
குடி அரசு - 1932 @
56
இறந்து போனவர்களுக்குப் பதிலாக புதிய மக்களை உண்டாக்க
வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தைச் சேர்ந்ததாகும். இதன் பொருட்டு அர
சாங்கத்தார் பெற்றோர்களுக்குத் தாராளமாகப் பண உதவி செய்ய வேண்டும்.
இறந்து போனவர்களுக்குப் பதிலாகப் புதிய மக்களை உண்டாக்கு
வதனால் ஏற்படும் செலவு முழுவதும் இப்பொழுது பெற்றோர்களையே
சேருகிறது. ஆனால் பிரமச்சாரிகளுக்கு இவ்விஷயத்தில் எவ்வகையான
செலவுமில்லை.
ஆகையால் பெண்களுக்குக் கொஞ்சமேனும் புத்தி இருக்குமாயின்,
அரசாங்கத்தார் குழந்தைகளைப் பெறுவோர்களுக்குத் தக்க ஒத்தாசை
செய்வதாக உறுதி கூறாமலிருக்கும் வரையிலும், தாங்களும் பிரம்மச்சரி
யத்தை மேற்கொண்டு “குழந்தைகளைப் பெறமுடியாது” என்று கண்டிப்பாக
அரசாங்கத்தாருக்கு எச்சரிக்கை செய்து விட வேண்டும்.”
இதுதான் திரு. பர்னார்ட்ஷா அவர்களின் பிரசங்கமாகும். இதன்
பொதுக் கருத்து, நாட்டின் ஜனப்பெருக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய
கடமையும், மக்கள் தொகையை அதிகப்படுத்த வேண்டிய கடமையும்
அரசாங்கத்தைச் சார்ந்தது என்பதாகும். இத்தகைய சிறந்த அரசாங்கம் ஏற்பட
வேண்டுமானால் முதலில் மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள் யாவும்
ஒழிய வேண்டும் என்று தான் நாம் கூறுகிறோம்.
அடுத்தபடியாக தொழிலாளர் தலைவர்களில் ஒருவரான திரு.யமுனா
தாஸ் மேத்தா அவர்கள் சென்ற 6-8-32 வெள்ளிக்கிழமை மாலை பம்பாய்
பிரவொட்ஸ்கி விடுதியில் மாணவர் கூட்டத்தில் சமதர்மத்தைப் பற்றி ஒரு
பிரசங்கம் செய்துள்ளார். அப்பிரசங்கம் வருமாறு:-
“மக்களின் சுபாவமே சமதர்மத்தை நாடி நிற்கின்றது. சமதர்மத்தின்
தத்துவம் ஜீவகாருண்யமுடையது. இக்கொள்கை மற்றய நாடுகளை விட
இந்தியாவிற்கு மிகவும் அவசியமாகும். ஆகையால் இந்த தத்துவத்தை
நன்றாக உணர்ந்து ஆதிக்கத்தையும் வேற்றுமையையும் ஒழிக்கும்படி
மாணவர்களை வேண்டிக் கொள்ளுகிறேன்.
பண்டைக் காலத்தில் இருந்த மதத்தலைவர்களும், அறிஞர்களும்,
மக்களுடைய வறுமைத் துன்பத்தைப் போக்கும் பொருட்டு “தர்மம் புரிய
வேண்டியது அவசியம்” என்று உபதேசம் புரிவதை வழக்கமாகக் கொண்டி
ருந்தார்கள். ஜன சமூகம் தற்பொழுது எந்த அடிப்படையின் மேல் இருக்
கிறதோ அந்த அடிப்படையை அடியோடு மாற்றி வேறு விதமாக அமைத்து
விட்டால் தருமம் கொடுப்பதும், தருமம் வாங்குவதும் (பிச்சை எடுப்பது!
ஒழிந்து போகும் என்பதே சமதர்ம வாதிகளின் அபிப்பிராயமாகும்.
இப்பொழுதுள்ள ஜன சமூக அமைப்பின்படி மக்கள் வாழ்க்கைக்கு
வேண்டிய அவசியமான சாதனங்கள் எல்லாம் சில மனிதர்களின் ஆதிக்கத்
57
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
தில் உள்ளன. உணவுப் பொருள்களைத் தரும் விளைநிலங்கள் ஜன சமூகத்
திற்குப் பொதுவாக இல்லை. அவைகள் சிலருடைய ஆதிக்கத்தில் மட்டுமே
இருக்கின்றன. நிலம் வேண்டுமானால் நிலச் சுவான்தார்களிடம் பணம்
கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது.
யாருக்கும் முதலே இருக்கக் கூடாதென்று சமதர்மவாதி கூறவில்லை..
முதல் இல்லா விட்டால் எக்காரியமும் நடைபெறாது. ஆனால் ஒரு அளவுக்கு
மேல் தனிப்பட்ட சொத்து இருப்பதற்கு இடமில்லை. எல்லோரையும் ஒரே
அளவுக்குக் கட்டுப்பாடு செய்வதும் கஷ்டமானதே. ஆனால் லட்சாதிபதியின்
மகனுக்கும், தோட்டியின் மகனுக்கும் உள்ள வேற்றுமையை ஒழிக்க
வேண்டுமென்பதே சமதர்வாதியின் கொள்கையாகும். பகுத்தறிவைத் துணை
யாகக் கொண்டால்தான் இத்தகைய சமதர்மம் ஏற்படும்படி செய்யலாம்.”
என்பது திரு. மேத்தா அவர்களின் பிரசங்கமாகும், இதிலிருந்து எந்தக்
கொள்கை பரவவேண்டுமானாலும், அது ஐக்கிய ஆட்சிக் கொள்கை
யானாலும், பூரண சுயேச்சைக் கொள்கையானாலும், சமதர்மக் கொள்கை:
யானாலும், பொது உடமைக் கொள்கையானாலும் முதலில் மக்களிடமுள்ள
மூட நம்பிக்கைகள் அழிய வேண்டும். அதன் பின்தான் ஜனசமூகத்திற்கு
நன்மையை அளிக்கத் தகுந்த எந்த அரசியல் அமைப்பையும் ஏற்படுத்த
முடியும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய அபிப்பிராயத்தையே அறிவுடை
யோர் அனைவரும் வெளியிட்டு வருவதை மேற்கூறிய அபிப்பிராயங்
களைக் கொண்டு உணரலாம்.
உலகம் இவ்வாறு விரைந்து சமதர்ம உலகத்திற்குச் சென்று கொண்டி
ருப்பதை அறியாதக் கிணற்றுத் தவளைகள் சுயமரியாதை இயக்கத்தைப்
பழிக்கத் தொடங்குகிறார்கள். அவ்வியக்கத்தினால் உண்டாகும் நன்மையை
உணராமல்; கோயிலை இடிக்கச் சொல்லுகிறது; குளத்தைத் தூர்க்கச்
சொல்லுகிறது; மதத்தை அழிக்கச் சொல்லுகிறது; சாஸ்திரங்களை கொளுத்தச்
சொல்லுகிறது; ஜாதியைப் போக்கச் சொல்லுகிறது என்று கூறி பாமர மக்களை:
அதற்கு எதிராகத் திருப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் மேற்கூறியவாறு
இவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் மேல் பழிசுமத்துவதாகக் கூறுவதாகக்
கருதிக்கொண்டு செய்யும் பிரச்சாரமே உண்மையான சுயமரியாதைப் பிரச்சார
மாகும். அறிவுடையவர்கள் இதை யோசித்துப் பார்த்தால், அதாவது
சுயமரியாதை இயக்கம் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவென்பதை
ஆராய்ந்து பார்த்தால் உண்மையை அறிந்து கொள்ளுவார்கள் என்பது
நிச்சயம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.08.1932.
குடி அரசு - 1932 @
58
இதற்க எண்ண ணால்னுகிறார்கள்?
மக்களுக்குள் எந்த வகையினாலும் வித்தியாசங்கள் என்பன சிறிதும்
இல்லை. ஆனால் தற்போது காணப்படும் வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒரு
கூட்டத்தாரை உயர்வாகவும், மற்றொருக் கூட்டத்தாரைத் தாழ்வாகவும்,
மற்றுஞ்சில கூட்டத்தாரை நடுத்தரமானவர்களாகவும், மற்றும் பலரைத்
தாழ்த்தப்பட்டவர்களாகவும், மற்றும் பலரைத் தீண்டாதார்களாகவும் பிரித்து
பிரித்து வேறு வேறாக வைத்திருப்பது சுயநலங் கொண்ட மக்களால்
செய்யப்பட்ட ஏமாற்றேயன்றி வேறல்ல. உண்மையில் நோக்கும் போது
எல்லா மனிதர்களும் சமமான நிலையையும், இன்பத்தையும், வாழ்வையும்
பெறுவதற்குத் தகுதியுடையவர்களே யாவார்கள்.ஆகையால் மக்களுக்குள்
உள்ள உயர்வு தாழ்வு வேற்றுமைகளை ஒழித்து எல்லோரையும் ஒன்று
படுத்திச் சுதந்திரமும், சுகமும் உடையவர்களாய் வாழச் செய்ய வேண்டும்
என்னும் எண்ணம் தற்கால அறிஞர்கள் மனத்தில் தோன்றி அதற்கான
முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்றன.
மக்களுக்குள் அளவிலடங்காத வேற்றுமைகளும் இவ்வேற்றுமை
காரணமாக ஒருவர் மேல் ஒருவர் வீண் வெறுப்புக் கொள்ளுதலும், இவ்
வெறுப்புக் காரணமாக கொடுமைகளைச் செய்வதுமாகிய காரியங்கள் மற்றய
நாடுகளைக் காட்டிலும், நமது நாட்டில் நமது சமூகத்தில் நாள்தோறும் அதிக
மாகவளர்ந்து கொண்டே போகின்றன என்பதைப் பகுத்தறிவு உடையவர்கள்
எல்லோரும் அறிவார்கள். இவைகளுக்கெல்லாம் காரணமாயிருப்பன
பலவாயினும் முக்கியமானது மதம் ஒன்றே என்று நாம் கூறிவருகிறோம்.
ஆகவே மதம் என்பது அடியோடு அழிந்தால் மக்களிடம் உள்ள
வேற்றுமைகளும், வெறுப்புகளும்,நீங்கி ஒற்றுமை உண்டாகிவிடும் என்றும்
கூறிவருகிறோம்.
அதிலும் முக்கியமாக இந்துமதம் அழிந்தால் தான் இந்துக்கள்
உருப்படமுடியும் என்பதை முக்கியமாக எடுத்துக்காட்டிவருகிறோம். இவ்
விஷயத்தை நாம் சொல்லும் போது தான் நம்மை “இந்து மதத் துரோகி” கள்
என்றும் “தேசத்துரோகி” கள் என்றும் “நாஸ்திகர்கள்'” என்றும் நம்மைப்பற்றி
நம் எதிரிகள் பொது ஜனங்களிடையில் துவேஷப் பிரசாரம் பண்ணிக்
59
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கொண்டு வருகிறார்கள். எதற்காக நாம் இந்து மதம் முதலில் அழிந்து தீர
வேண்டும் அல்லது அழிக்கப்பட்டு ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்
றோம் என்பதை அறிந்தார்களானால் நம்மைப் பகுத்தறிவுடையவர்கள்
அவசரப்பட்டு ஒதுக்கி விடமாட்டார்கள்; அல்லது நம்மோடு அவசரப்பட்டுச்
சண்டைக்கு வரமாட்டார்கள் என்பது நிச்சயமாகும். ஆகையால் அக்
காரணத்தைச் சிறிது கூற விரும்புகிறோம்.
சாதி வித்தியாசம் “கடவுள்” என்பவராலேயே ஏற்படுத்தப்பட்டது
என்பது இந்து மதக்கொள்கை. “வேதங்கள்” என்பவைகளிலும், “ஸ்மிருதி
கள்” என்பவைகளிலும் “கடவுள்” என்பவரின் முகத்தில் இருந்து
“பிராமணன்” என்னும் சாதியும், தோளிலிருந்து" “க்ஷத்திரியன்” என்னும் சாதி
யும், துடையிலிருந்து
” *வைசியன்” என்னும் சாதியும், பாதத்திலிருந்து
“சூத்திரன்” என்னும் சாதியும் பிறந்ததாகக் கூறுகின்றன. இந்த சாதி
வேற்றுமையை ஆதாரமாகக் கொண்டே உயர்வு தாழ்வுகளும், தொழில்களும்
கற்பிக்கப்பட்டன. ஆதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த நாலு வகையான சாதி
வேற்றுமையே இப்பொழுது நாலாயிரக் கணக்கான சாதி வேற்றுமைகள்
தோன்றி நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருந்தன.
அன்றியும் மக்கள் சமூகத்தில் பாதித் தொகையாக இருக்கின்ற
பெண்கள் சமூகத்தைக் கொடுமைப் படுத்தி, அடிமைப்படுத்தி அவர்கள்
ஒன்றுமறியாத அபலைகளாக வைத்திருப்பதற்குக் காரணமும் இந்து
மதமேயாகும்..
இன்னும் எண்ணற்ற பண்டிகைகளையும், திருவிழாக்களையும்
ஏற்படுத்தி ஏழைமக்களின் பொருளை வீணாகச் செலவழிப்பதற்குக் காரணமா
யிருப்பதும் இந்து மதமோயாகும்.
கல்யாணத்திலும் கருமாதியிலும், இன்னும் பலகாரியங்களிலும்
பலவகையான அர்த்தமற்ற சடங்குகளை ஏற்படுத்தி, இவைகள் மூலம் ஏழை
மக்களின் பொருளைப் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும்படி செய்
வதற்குக் காரணம் இந்துமதமேயாகும்.
காளியென்றும், கருப்பன் என்றும், முனியாண்டி என்றும், சிவன்
என்றும், பெருமாள் என்றும் பலவகையான சாமிகளையும், அவைகளுக்கு
விக்கிரகங்களையும், அவ்விக்கிரகங்களுக்குக் கோயில்களையும் ஏராள
மானப் பொருளைச் செலவு செய்து கட்டி வைத்து அவைகளின் பேரால் நாள்
தோறும், வாரந்தோறும்,
வருஷந்தோறும், ஆயிரக் கணக்காகவும், லட்சக்
கணக் காகவும், கோடிக்கணக்காகவும் பணத்தை வீணாகச் செலவு செய்து
விட்டு இந்திய நாடு வறுமையடைவதற்குக் காரணமாய் இருப்பதும் இந்து
மதமேயாகும்..
குடி அரசு - 1932 @
60
இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும் இந்து மதமானது அதை
பின்பற்றும் மக்களை நாள் தோறும் அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும்,
மூடர்களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர முடியாதவர்களாகவும்
செய்து கொண்டு வருகிறதே யொழிய மற்றபடி கடுகளவு நன்மையையாவது
உண்டாக்கவில்லை என்பதை “மதம்” என்னும் பாசியினால் மறைக்கப் படாத
மூளையை உடையவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தினால் விளையும் இத்தகைய கெடுதிகளை நன்றாய்
அறிந்தே காலஞ்சென்ற பெரியார்களாகிய இராமாநுஜர், சைதன்னியர்,
ராசாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் முதலியவர்கள்
சாதி வேற்றுமையை ஒழிக்கவும், பெண்களின் அடிமையை அகற்றவும்
எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும்
இன்று ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிற்பதைத் தவிர ஒரு பலனையும்
தரவில்லை என்பதை நாம் அறிந்துதான் இருக்கின்றோம். இவ்வாறு அவர்கள்
முயற்சி பலன் தராமல் போனதற்குக் காரணம் பெரும்பாலும் இந்து மதமே
என்பதில் ஐயமில்லை. சாதிபேதம் பெண்ணடிமை ஆகிய அஸ்திவாரங்
களின் மேல் கட்டப்பட்டிருக்கும் இந்து மதத்தை வைத்துக் கொண்டே அந்த
சாதிபேதத்தையும், பெண்ணடிமையையும் ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி
முடியும்? ஆகையால் நாம் இந்து மதமாகிய வீட்டையே முழுவதும் இடித்து
எறிந்தால்தான் அதன் அஸ்திவாரமாகிய சாதி பேதம், பெண்ணடிமையாகிய
இரண்டையும் அடியோடு பெயர்த்தெறிய முடியும் என்று கூறுகின்றோம்.
ஆகவே நமது நோக்கம் சாதிபேதமும், பெண்டிமையும் ஒழிய வேண்டு.
மென்பது தான் என நாம் எடுத்துக் காட்டுவது மிகையாகும்.
ஆகையால் யார் யார், சாதி வேற்றுமைகளை ஒழித்து மக்களுக்குள்
சமதர்மத்தை நிலை நிறுத்தவும், பெண்களுடைய அடிமைத்தன்மைக் கான
காரணங்களை எல்லாம் ஒழித்து அவர்களுக்கும் ஆண்களைப்போல் சம
உரிமை அளிக்கவும் பாடுபடுகின்றார்களோ அவர்களையெல்லாம் நாம்
பாராட்டுகின்றோம். இத்தகைய கொள்கைகளுடன் உழைத்து வரும் இயக்கங்
களுக்கும், மக்களுக்கும், சாஸ்திரங்களுக்கும் மதங்களுக்குங்கூட நாம்
எதிரிகளல்ல வென்பதைச் சொல்லிக் கொள்ளுகிறோம்.
நாம் இப்பொழுது இந்துக்களுக்குள்ளேயே வடநாட்டிலும் தென்னாட்
டிலும் சாதிவேற்றுமையையும், பெண்ணடிமையையும் ஒழிக்க வேண்டும்
என்னும் கிளர்ச்சி தோன்றியிருப்பதைக் கண்டு நமது இயக்கத்தின் நோக்க
மும், வேலையும் வீண்போகவில்லையென்று களிப்படைகிறோம். இதற்கு
உதாரணமாகச் சென்ற 8-8-32ல் புதிய டில்லியில் “இந்து சீர்திருத்த மகாநாடு”
என்னும் பெயருடன் இந்துக்களால் ஒரு மகாநாடு நடத்தப்பட்டதையும்,
அம்மகாநாட்டின் தலைவர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களின்
பேச்சுக்களையும், அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும்
கூறலாம்...
61
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அம் மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திரு. ராமலால் வர்மா
என்பவர் “மூட நம்பிக்கைகளாலும், இழிவான வைதீகங்களாலும், பலவித
மான சாதி பேதங்களும் பிரிவுகளும் ஏற்பட்ட காரணத்தால் இந்து சமூகம்
தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது. இந்து சமயம் தீண்டாமை என்னும்
கறையினால் தாழ்வையடைந்திருக்கிறது. ஆகையால் இந்த சாதி வேற்றுமை
களையும், தீண்டாமையையும் அடியோடு ஒழிக்க வேண்டியது அவசிய
மாகும்” என்று பேசியிருக்கிறார்.
அம் மகாநாட்டின் தலைவர் சுவாமி சத்திய தேவ பாரி பிரஜாத்
என்பவர்,
“இந்துக்கள் வீண்பெருமையையும் துவேஷத்தையும் விடுவார்
களானால் அவர்கள் ஆதிக்கம் மிகுந்தவர்களாவார்கள். இந்துக்களுக்குள்
ஒற்றுமை ஏற்படுவதற்கு முன் சுயராஜ்யம் கிடைப்பதென்பது முயற்கொம்பு
தான். இந்தியாவின் மக்களாகிய இந்துக்கள் அனைவரும் தமக்குள் உள்ள
சமூகத் துவேஷங்களை விட்டொழித்தும் சமூகக் கொடுமைகளை ஒழித்தும்,
சுயநலத்தை விட்டுக் கொடுத்தும் இந்தியாவுக்குத் தொண்டு புரிய வேண்டு
மென்று கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
இன்னும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில்
மூன்று தீர்மானங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சிறந்த
தீர்மானங்களாகும்.அவைகள் வருமாறு:-
1. இம்மகாநாடு இந்து சமூகத்தில் பிறப்பினாலேயே சாதி
வேற்றுமை பாராட்டும் காரணத்தால் ஆயிரக்கணக்கான சமூக வேற்று
மைகளும், தீண்டாமையும் வளர்வதாகக் கருதுவதால் சாதி வித்தி
யாசம் பாராட்டுவதை இந்துக்கள் அதிவிரைவில் விட்டொழிக்க
வேண்டுமென்றும், இதன் பொருட்டு இந்துக்களின் பல விரிவான சாதி
யினரும் தங்களுக்குள் சமபந்தி போஜனமும், கலப்பு மணமும் செய்ய
வேண்டுமென்றும் யோசனை கூறுகிறது.
2. இம்மகாநாடு தீண்டப்படாதவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட
வகுப்பாருக்கும் பொது இடங்கள், பொதுக்கிணறுகள், பொதுப் பாதை
கள் முதலிய வற்றை மற்ற இந்துக்களைப்போல் சம உரிமையோடு
அனுபவிக்க உரிமை உண்டு என்று கருதுவதுடன், பொதுப்பள்ளிக்
கூடங்களில் மேற்கண்ட வகுப்புப் பிள்ளைகளைத் தடையின்றிச்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்கோயில்களிலும், மற்ற
பொதுஇடங்களிலும் தடையின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்
என்றும் கேட்டுக் கொள்ளுகிறது.
குடி அரசு - 1932 @
62
3.இம்மகாநாடு இளம்பருவத்தில் பெண்களுக்கு மணம்புரியும்
காரணத்தாலேயே விதவைகள் பெருகுவதனால் இந்துக்கள் அனை
வரும் இளம்பருவ மணத்தை ஒழித்துச் சாரதா சட்டத்தின்படி மணம்:
செய்யுமாறும், சமூக ஒற்றுமையுடன் அச்சட்டத்தை அனுஷ்டிக்க
வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.
மேற்கண்ட மூன்று தீர்மானங்களிற்கண்ட விஷயங்கள் நமது
சுயமரியாதை இயக்கத்திற்குப் புறம்பானவையல்ல. அத்தீர்மான விஷயங்கள்.
இந்துக்களால் அனுஷ்டானத்துக்கு கொண்டு வரப்படுமானால் நமது
விருப்பத்தின் படி இந்துக்களின் சமூகம் வளர்ச்சியடைவதுடன் அவர்களின்
வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இந்து மதமும் அழிந்துதான் தீரும்.
ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் கோயில்களிலும், பள்ளிக்கூடங்
களிலும் பொதுக்கிணறு, பொதுப்பாதைகளிலும், தாழ்த்தப்பட்டார்க்கு உரிமை.
இல்லாதிருப்பதும் இளமை மணமும் இந்து மதத்திற்கு அடிப்படையானவை
கள்;ஆகையால் இவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கும்பகோணம்
பார்ப்பனர்கள் பேசிக் கொண்டு வருவதையும் மகாநாடுகளில் தீர்மானங்கள்.
நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்தவர்கள் டில்லி இந்து சீர்திருத்த
மகாநாட்டுத் தீர்மானங்கள் இந்து மதத்திற்கு மாறுபட்டதென்பதையும் இந்து
மதத்திற்கு அழிவைத் தேடுவது என்பதையும் ஒப்புக் கொள்ளாதிருக்க
முடியுமா? என்றுதான் கேட்கின்றோம். ஆகவே இந்து மதத்திற்குப் புறம்பான
தாயிருந்தாலும் இருக்கட்டும், இதனால் இந்து மதம் அழிந்தாலும் அழியட்டும்
என்ற தைரியத்துடன் இந்து சமூக வளர்ச்சி ஒன்றையே கருதி மேற்கண்ட
தீர்மானங்களை நிறைவேற்றிய டில்லி “இந்து சீர்திருத்த மகாநாட்டா”ரை நாம்
பாராட்டுகிறோம். இச்சமயத்தில் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டு முணு
முணுக்கும் பண்டிதர்களும், தென்னாட்டுக் கும்பகோணம் மடிசஞ்சிகளும்
திரு. எம். கே. ஆச்சாரியார் கூட்டத்தாரும், வடநாட்டில் இந்துக்கள் கூடி
இவ்வாறு தீர்மானம் பண்ணியிருக்கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார்
கள் என்று கேட்கின்றோம்.
இதனால்தான் நமது இயக்கத்தின் ஆக்க வேலைகளாகக் கலப்பு
மணங்களையும், விதவா விவாகங்களையும், சமபந்தி போஜனங்களையும்,
தீண்டாமை ஒழித்தலையும் செய்து வருகிறோம். இக்காரியங்களின் மூலம்
சடங்குகளும் சாதிகளும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இக்கொள்கை இந்தியா
முழுவதும் அனுஷ்டிக்கப்படுமாயின் இந்துக்களைப் பிடித்த கஷ்டம்
விரைவில் அழிந்து ஒழிவது நிச்சயமென்பதில் ஐயமில்லை.
இன்று சாதிகள் ஒழிய வேண்டும், பெண்களுக்குச் சமத்துவம்
கொடுக்க வேண்டும், இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட
வேண்டும், மூட நம்பிக்கைக்கான சடங்குகளை ஒழிக்க வேண்டும் என்னும்
கொள்கைகளை பழுத்த இந்து மத பக்தர்கள் கூட ஒப்புக்கொண்டு பிரசாரம்
63
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பண்ண முன் வந்திருப்பதை நோக்கும் போது இன்னுஞ் சில நாட்களில்
இவர்களே, இந்து மதத்தினர் வரவர தரித்திர திசையை அடைவதற்கு காரணம்
எனன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார்களாயின் அதற்குக் காரணம் கோயில்
களும், சாமிகளும், சடங்குகளும், பண்டிகைகளும் என்பதையுணர்ந்து
இவைகளையும் ஒழிக்க முன்வருவார்களென்றே நம்பலாம்.
ஆகையால் எப்பொழுதாவது இன்றில்லாவிட்டாலும் இன்னுஞ் சில
தினங்கள் கழித்தாவது மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கின்ற
“இந்து மதம்” “வைதீக மதம்” “தெய்வீக மதம்” “புராதன மதம்” என்று
சொல்லப்படுகின்ற பாழும் மதம் அழிந்தே தீரும் என்பதில் எள்ளளவும்
சந்தேகமில்லை. ஆதலால் இனியாவது சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்ற
விஷயங்களில் உண்மையை உணர்ந்து மக்களின் முன்னேற்றத்திற்கான
முயற்சியைப் புரியுமாறு பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.08.1932.
குடி அரசு - 1932 @
64
நம்பிக்கையில்லைத் தீர்மாணம்
செல்வாக்கோ, வன்மையோ பெற்ற எந்த கட்சியே யாயினும் எந்த
இயக்கமே யாயினும் அதிலுள்ள அங்கத்தினருள் அபிப்பிராய பேதங்கள்.
எழுவதும், இருப்பதும் சர்வ சாதாரணம். உண்மையுணர்ந்து அத்தகைய
அபிப்பிராய பேதங்கள் பரிகரிக்கப்பட்டால் பின்னர் ஆக்க வேலைகள்
தீவிரமாய் நடைபெறுவதும் சரித்திர சம்மதமான யாரும் மறுக்க முடியாத
உண்மைகளாகும். உலகெங்கும் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை கேட்டும்,
கண்டும் வருகிறோம். இத்தகைய சம்பவங்கள் கட்சியின் முன்னேற்றத்தையும்
பலத்தையும் குறிக்கிறதேயன்றி வேறில்லை. பார்ப்பன ரல்லாதார் கட்சி
ஆதிக்கத்திலிருப்பதும் பார்ப்பனரல்லாத மந்திரிசபை அதிகாரத்திலிருப்பதும்
இக்கட்சியை ஒழிக்க அதிகாரத்தைக் குலைக்க எதிரிகள் செய்யும் சூழ்ச்சி
களும் விஷமங்களும் எண்ணிறந்தன.
இதன் உண்மையறியாது நம் மக்கள்
இன்னும் ஏமாந்தே வருகின்றனர். சில தினங்களுக்குமுன் சென்னை
அரசாங்க மந்திரி கனம் முனுசாமி நாயுடு அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத்
தீர்மானம் கொண்டு வருவதாக இருந்த விஷயமே தக்க சான்றாகும். அதற்
காகக் கூடிய தென்னிந்திய நலவுரிமைச்சங்க நிர்வாகக் கமிட்டியின் கூட்ட
நடவடிக்கைகளை பிரிதோரிடம் பிரசுரித்துள்ளோம். யாராயிருந்த போதிலும்
தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லவும், குறையைத் தெரிவித்துக் கொள்ள
வும் உரிமை உண்டு என்பதை நாம் ஒப்புக் கொண்டபோதிலும் இந்தியாவுக்கு
வழங்கப்போகும் சீர்திருத்தங்கள் பிரஸ்தாபத்தில் இருக்கின்றன. கட்சி
பலத்தை உத்தேசித்து ஏகோபித்த ஆக்க வேலையில் ஈடுபட வேண்டிய
பொழுது இத்தகையதோர் சம்பவம் நடந்ததையறிய உண்மையில்
வருந்துகிறோம்.
அஃதெவ்வாறாயினும் இத்தகையதோர்த் தீர்மானம் கொணர்ந்த
அங்கத்தினரே முன்யோசனையுடனும், பகுத்தறிவுடனும் நடந்து மேற்படி
தீர்மானத்தை வாபீஸ் வாங்கிக் கொண்டதறிய சந்தோஷிக்கிறோம். பார்ப்பன
ரல்லாதார் கட்சி கட்டுக் குலைந்து போகப் போகிறது என்று அகந்தையும்
வீராப்பும் கொண்டிருந்த எதிரிகள் சூடுகண்ட பூனை போலடங்கினறென்றே
சொல்லுவோம். பார்ப்பனரல்லாத மக்கள் ஒறுமைப்பட்டு ஆக்க வேலையில்
முழு மனதுடன் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.08.1932.
65
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
குற்றக்கசால்ல வாய் உண்டா?
(வகுப்புப் பிரச்சிணை apipay)
இனிவரப்போகும் மாகாணசுயாட்சி அமைப்பில், ஒவ்வொரு மாகாண
சட்டசபைகளிலும், ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனியே எத்தனை
ஸ்தானங்கள் இருக்கவேண்டும் என்னும் வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான
முடிவு சென்ற 16-8-32ல் அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்டு விட்டது. இந்த
வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக பல சமூகங்களும் ஒப்புக் கொள்ளும்
படியான ஒரு முடிவு காண திரு. காந்தியுள்பட வட்டமேஜை மாநாட்டுப்
பிரதிநிதிகள் இந்தியாவிலும் இங்கிலாந்துக்குச் செல்லும் வழியில் கப்பலிலும்
இங்கிலாந்திலும் எவ்வளவோ முயன்றும் முடியாமற்போய் விட்டது. இவர்
களால் முடியாமல் போன காரணத்தாலேயே இப்பொழுது பிரிட்டிஷ் பிரதம
மந்திரியால் தீர்மானிக்கப்பட்ட முடிவை இந்திய அரசாங்கத்தார் வெளியிட்
டிருக்கின்றார்கள்.
இப்பொழுது அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும் தீர்ப்பின்படி
முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள்
ஐரோப்பியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முதலியவர்களுக்குத் தனித் தொகுதி
கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையளிக்கப் பட்டிருக்கிறது.
மற்றும் பெண்கள், தொழிலாளர்கள், நிலச்சுவான்தாரர்கள், வியாபாரிகள், சர்வ
கலாசாலைகள் முதலிய பலருக்கும் ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இத்தீர்ப்பில் முக்கியமாகக் கவனிக்கக் கூடியன சில உள்ளன.முஸ்லீம்
கள் பஞ்சாப் மாகாணத்திலும் வங்காள மாகாணத்திலும் தாங்கள் பெரும்
பான்மையினராயிருப்பதால், தங்கட்கு அதிக ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்க
வேண்டும் என்றும் மற்ற மாகாணங்களில் தங்கள் ஜனத்தொகைக்குத் தக்க
வாறு ஸ்தானங்கள் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டனர். ஏறக்குறைய
அவர்கள் கேட்டவாறே கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆகையால் இத்திர்ப்பைக்
கொண்டு முஸ்லீம்கள் திருப்தியடைவதுதான் நியாயமே தவிர தங்களுக்கு
அரசாங்கத்தார் காட்டியிருக்கும் சலுகை போதாதென்று குறை கூறுவது
ஒழுங்கானதல்லவென்று நாம் கருதுகின்றோம்.
அடுத்தபடியாக தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதியும்,
பொதுத்தொகுதியில் ஓட்டுக்கொடுக்கும் உரிமையும் அளித்திருப்பது
குடி அரசு - 1932 @
66
பாராட்டத்தகுந்ததாகும். இதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குச் சட்ட
சபையின் மூலம் அவர்கள் விரும்பும் நன்மைகள் கிடைக்க இடமுண்டு.
எப்படியெனில் பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதி
கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் வாக்குகளையும் பெற்றே சட்டசபைக்குச்
செல்ல வேண்டியிருப்பதால், அப்பிரதிநிதிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த பிரதிநிதிகள் அவர்கள் சமூக முன்னேற்றத்தின் பொருட்டு கொண்டு
வரும் தீர்மானங்களுக்கு ஆதரவளித்தே தீர வேண்டும். இன்றேல் அடுத்தத்
தேர்தலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் வாக்குகளைப் பெறமுடியாமல் போய்
விடுவார்கள்.
அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கொடுத்திருக்கும் ஸ்தானங்கள்
மிகவும் குறைவாகும். ஜனத்தொகையில் பாதிக்கு மேலுள்ள பெண் சமூகத்
திற்கு மிகக்குறைந்த ஸ்தானங்களை அளித்திருப்பது அச்சமூகத்தை இழிவு
படுத்துவதாகுமென்பதே நமது அபிப்பிராயமாகும். ஆனால் அவர்களுக்
குள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வழங்கியிருப்பது போற்றத்தக்க
தாகும். இவ்வாறு பெண்களுக்குள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
வழங்கியிருப்பதைப் பலர் கண்டிக்கிறார்கள். தற்பொழுதுள்ள நிலையில்
பெண்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் சட்டசபை
களுக்குப் பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கும் எல்லாப் பெண்:
களும் அநேகமாக இந்துப் பெண்களாகவே இருப்பார்களென்பதில் ஐய
மில்லை.மற்றய வகுப்புப் பெண்கள் ஸ்தானம் பெறுவதற்கு முடியாமல் போய்
விடும். ஆகையால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்திருப்பதன் மூலம்
எல்லா வகுப்புப் பெண்களுக்கும் ஸ்தானம் கிடைக்கும்படி செய்திருப்பதை.
நாம் பாராட்ட வேண்டுமே தவிர குறை கூறுவது தவறாகும்.
அடுத்தபடியாகத் தொழிலாளர்களுக்கு அளித்திருக்கும் ஸ்தானங்
களும் மிகமிகக் குறைவானதாகும். தொழிலாளர்கள் இல்லாவிட்டால் நாட்டில்
விவசாயமோ, கைத்தொழில்களோ, வியாபாரமோ பணக்காரர்களோ, அரசாங்
கமோ ஒன்றும் நிலைத்திருக்க முடியாது என்பது அறிஞர்கள் கண்ட உண்மை
யாகும். நாட்டின் செல்வத்தை வளர்க்கின்றவர்கள், நாட்டைப் பாதுகாத்து
வருபவர்கள் தொழிலாளர்களே யாவார்கள். ஆகவே நியாயப்படிப் பார்த்தால்
அவர்களுக்கு அரசாங்கத்திலும் சட்டசபையிலும் அதிக ஆதிக்கமிருக்க
வேண்டியது ஒழுங்காகும். இப்படியில்லாமல் அவர்களை நசுக்கும் மனப்
பான்மையுடையவர்களுக்கு அதிக ஆதிக்கமும், அவர்களுக்கு பேருக்கு
மாத்திரம் சில ஸ்தானங்களும் ஒதுக்கி வைத்திருப்பது திருப்தியற்ற செயலாகு
மென்று தான் நாம் கூறுவோம்.
ஆயினும் பிரதம மந்திரியவர்கள் வருணாச்சிரம தரும அரசியல்
வாதிகளின் பயமுறுத்தல்களையும், முட்டுக்கட்டைகளையும் சிறிதும்
லட்சியம் பண்ணாமல் தாழ்த்தப்பட்டோர், முஸ்லீம்கள், சிறுபான்மைச் சமூகத்
தினர்கள் முதலியவர்கள் விரும்பியபடியே அவர்களுக்குத் தனித்
67
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
தொகுதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து வெளியிட்டிருக்கும்
இத்தீர்ப்பை நாம் வரவேற்கின்றோம்.
இது சட்டமாகும் போது, இத்தீர்ப்பில் கண்டுள்ள தேர்தல் ஏற்பாட்
டையும் மற்றும் பல ஏற்பாடுகளையும் 10 வருஷ காலத்திற்குப் பிறகு இதில்
சம்பந்தப்பட்ட சமூகத்தினரின் சம்மதத்தின் பேரில் மாற்றுவதற்கு இடமிருக்
கவும் மாற்றப்படாவிட்டால் 20 வருஷங்களுக்குப்பின் இந்த விசேஷ
ஏற்பாடுகள் தாமே முடிந்து விடுவதாகவும் சட்டத்திலேயே விதித்துவிட
வேண்டுமென்பது அரசாங்கத்தாரின் உத்தேசமெனக் கூறப்பட்டிருக்கின்
றதும் கவனிக்கத் தக்கதாகும்.
இந்த விதமான வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பு வெளியானவுடன், நமது
நாட்டில் உள்ள சில நியாயபுத்தியுள்ள அரசியல்வாதிகளைத் தவிர
பாக்கியுள்ள அதிதீவிர ஆவேச அரசியல் வாதிகளும், இந்து மகாசபைக்
காரர்களும், வருணாச்சிரமத் தருமிகளும், அரசியல் வயிற்றுப் பிழைப்புக்
காரர்களும் தேசீயப் பல்லவி பாடும் பத்திரிகை ஆசிரியர்களும் ஒரேடியாக
இதைக் கண்டிக்கத் தொடங்கி விட்டார்கள் “இந்திய அரசியலில் வகுப்புவாத
விஷயத்தை பிரதம மந்திரி புகுத்தி விட்டார்” என்று வகுப்புவாத விஷயத்
திலேயே ஊறிப்போய் கிடக்கும் இவர்கள் கூச்சலிடுகிறார்கள். ஆனால்
இவர்கள் இவ்வாறு புலம்புவதில் ஏதாவது அர்த்தமுண்டா என்றுதான் நாம்
கேட்கின்றோம்.
வட்டமேஜை மாநாடு ஆரம்பமானது முதல் இந்த வகுப்புப் பிரச்சினை
விஷயம் முதன்மையானதாக இருந்து கொண்டிருந்தது யாருக்கும்
தெரியாததல்ல, பிரிட்டிஷ் அரசாங்கமும் பிரதம மந்திரியும் “நீங்களே
இவ்விஷயத்தை முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லி இந்தியப்
பிரதிநிதிகளிடமே ஒப்படைத்து விட்டு ஆரம்ப முதல் கடைசிவரையிலும்
இதில் தலையிடாமலே இருந்து விட்டார்கள்.
இந்தியப் பிரதிநிதிகளும் கூடிக்கூடிப் பேசிப் பார்த்தார்கள்; திரு.
காந்தியவர்களும் வகுப்புப் பிரச்சினை தீர்ந்தால்தான் வட்ட மேஜை
மாநாட்டுக்குப் போவேன் என்று சொல்லிப் பார்த்தார்: இங்கிலாந்திலும்
என்னென்னமோ செய்து பார்த்தார். கடைசியில் ஒன்றும் முடியாமல்
போய்விட்டது. வட்டமேஜை மகாநாட்டு முஸ்லீம் பிரதிநிதிகளோ வகுப்புப்
பிரச்சினை சம்பந்தமாகச் சமரசமான முடிவு ஏற்பட்டால்தான் தாங்கள்
மகாநாட்டுடன் கலந்து உழைக்க முடியும்; இன்றேல் கலந்து உழைக்க முடியாது
என்று கூறி ஒதுங்கிவிட்டார்கள். இக்காரணத்தால் மேலே நடத்த வேண்டிய
அரசியல் வேலை தடைப்பட்டு விட்டது என்னும் விஷயங்கள் இதைத்
தேசீயக் கச்சல்காரர்கள் அறியாததல்லவே.
குடி அரசு - 1932 @
68
ஆகவே இவர்களால் முடிவு செய்யமுடியாமல் கைவிடப்பட்ட ஒரு
விஷயத்தையே பிரதம மந்திரி முடிவு செய்திருக்கும் போது, அது
சரியாயிருந்தாலும், தப்பாயிருந்தாலும் அதைப்பற்றிப் பேச இவர்களுக்கு
வாயுண்டா என்றுதான் நாம் கேட்கின்றோம்.
அன்றியும் இவ்விஷயத்தை முடிவு செய்யக் கூடிய யோக்கியதை
யாவது இந்த தேசீயக் கூச்சல்காரர்களுக்கு இருக்கிறதா என்று கொஞ்சம்
ஆலோசனை செய்து பாருங்கள்! முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும்
மற்ற சிறுபான்மையினரும் தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்,
தனித் தொகுதியும் தான் வேண்டுமென்று பிடிவாதம் செய்தனர்; காங்கிரசின்
சார்பாகத் திரு. காந்தியவர்கள் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் மாத்திரம்
தனித் தொகுதியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் கொடுக்க சம்மதிக்
கிறேன்; மற்றச் சிறுபான்மை வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தி
னருக்கும் ஒருக்காலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதியும்
கொடுக்க சம்மதிக்க மாட்டேன் என்றார்; மற்றும் ஒரு வருணாச்சிரம தரும
இந்துக் கூட்டம், இந்திய அரசியலில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமோ, தனித்
தொகுதியோ எதுவும் இருத்தல் கூடாது; எல்லாம் பொதுப் பிரதிநிதித்துவ
மாகவும், பொதுத் தொகுதியாகவுமே இருக்க வேண்டும் என்று கூறிக்
கொண்டிருந்தது. இந்த வகையாக மூன்றுவித அபிப்பிராயங்களை பிடிவாத
மாக உடைய பிரதிநிதிகள் எவ்வாறு ஒன்று கூடி ஒரு ஏகோபித்த முடிவுக்கு
வர முடியும் என்றுதான் கேட்கிறோம். ஆகவே இத்தகைய கூட்டத்திற்கு ஒரு
முடிவைக் கட்டுவதற்கு இவர்களல்லாத வேறொருவர்தானே வந்து தீர
வேண்டும். வேறொருவரால் தானே ஏதேனும் ஒருவகையான முடிவையும்
ஏற்படுத்த முடியும் என்பது உண்மையா அல்லவா என்று யோசனை செய்து
பாருங்கள்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித் தொகுதியும் தேசீய அபி
விருத்திக்கு இடையூறு விளைவிக்கக் கூடியது, இவைகளால்
எந்தக் காலத்
திலும் தேசம் ஒன்றுபட முடியாது, வகுப்புத் துவேஷமும் கலகமும் இன்னும்
அதிகப்பட்டு அவை எப்பொழுதும் அழியாமல் நிலைத்து நிற்கவே இட
மேற்படும் என்றெல்லாம் கூறி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், தனித்
தொகுதியையும் நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பமான நாள் முதல்
இன்றுவரையிலும் ஒரு கூட்டத்தார் கண்டித்து வருகின்றார்கள். இவர்கள்
கண்டிப்பது சரியானதாகவும், நமது நாட்டின் நிலைமகளுக்குப் பொருத்த
மானதாகவும், தேசத்துக்கு நன்மையளிக்கக் கூடியதாகவும் இருக்கிறதா
என்பதைச் சிறிது கவனிப்போம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், தனித்
தொகுதி தேர்தல் முறையையும் கண்டிக்கின்ற இக் கூட்டத்தாரோ வென்றால்,
தாம்தான் அரசியல் சுதந்திரங்களையெல்லாம் அனுபவிக்க உரிமை
யுடையவர்களென்றும், தமக்கே பரம்பரையாக அதிகாரம் செலுத்தும் உரிமை
“கடவுள்” என்பவராலேயே கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும், மற்ற
69
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
சமூகத்தார்கள் - அதிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தார்கள் எப்பொழுதும்
சுதந்திரமில்லாமல் அடிமைகளாக இருந்து உழைத்துக் கஷ்டப்படுவதற்கே.
உரியவர்களென்றும், அவர்களை எந்த வகையிலும் முன்னேற வொட்டாமல்
பரம்பரையாக அவர்கள் அனுபவித்து வந்த கொடுமைகளையே அனு
பவிக்கச் செய்வதுதான் நமது கடமை என்றும் நம்பிக்கொண்டும் இவ்வாறே
செய்து கொண்டும் இருக்கின்றவர்கள் என்பது அறிவுள்ள மக்கள் அனை
வருக்கும் தெரிந்த விஷயமேயாகும்.
ஆனால் பெரும்பாலோராக இருக்கின்ற மேற்கூறிய கூட்டத்தாரால்,
நசுக்கப்பட்டும், வெறுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் கிடக்கும்,
செல்வமும் செல்வாக்கும் அற்ற கூட்டத்தார் ஜனசமூகத்தில் மதத்தின்
பெயராலும், ஜாதியின் பெயராலும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
களை அரசியல் மூலம் நீக்கிக் கொண்டு முன்னேற்றமடையும் பொருட்டு,
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித் தொகுதியும் இருந்தாலொழிய
சட்டசபைகளில் தாங்கள் ஸ்தானம் பெற்று தமது காரியங்களைச் சாதித்துக்
கொள்ள முடியாது என்று அறிந்து தங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்
துவமே வேண்டும் என்று கேட்டு வந்தனர் என்பதும் அறிவுள்ளவர்கள்.
அறியாததல்ல..
இவ்விரு சார்பார்களின் கோரிக்கைகளில் உண்மையில் அனுதாபத்
திற்குரிய கோரிக்கை பிற்கூறிய ஒடுக்கப்பட்ட சிறுபான்மையோருடைய
கோரிக்கையேயாகும் என்பதை அறிவுடைய எவராவது மறுக்க முடியுமா?
இந்த அனுதாபத்திற்குரிய கோரிக்கையையுடைய மக்களையும் கவனிக்காமல்
உயர்ந்த - அறிவுடைய - செல்வமுடைய ஜாதி ஆணவமும், அதிகாரச் செருக்
கும் உடைய கூட்டத்தார் கோரிக்கையாகிய பொதுப்பிரதிநிதித்துவமும்,
பொதுத் தேர்தலும் உள்ள அரசியல் அமைப்பை அளித்தால், இதன் மூலம்
திக்கற்ற- தாழ்த்தப்பட்ட-சிறுபான்மை சமூகத்தாரை என்றென்றும் தலைதூக்க
முடியாதபடி பாதகஞ் செய்ததாகாதா? என்னும் விஷயத்தை நன்றாய்
யோசனை செய்து பார்க்கும் படி வேண்டுகின்றோம். இச்சமயத்தில் வகுப்பு
வாரிப் பிரதிநிதித்துவம், தனித்தொகுதி தேர்தல் முறை சம்பந்தமாகவுள்ள
நமது அபிப்பிராயத்தை முன்பு பல தடவைகளில் வெளியிட்டிருந்தாலும்
இப்பொழுதும் அதுபற்றிச் சிறிது கூறிவிடுகின்றோம்.
நாமும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பிரதிநிதித்துவம்
பெற்று அவைகளின் மூலம் நடைபெறும் அரசியலினால் நாட்டில் சமதர்மம்
உண்டாக்க முடியாது. மதங்களின் பாதுகாப்புக்காகவும், தனித்தனி ஜாதிகளின்
பாதுகாப்புக்காகவும் அரசியல் உரிமை பெறுகிறோம் என்று இல்லாமல் நாட்டு
மக்களின் பாதுகாப்புக்காகவே அரசியல் உரிமை பெறுகிறோம் என்னும்
எண்ணமுடைய பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெறும் அரசாங்கத்தின்
மூலமே தேசத்தில் சமதர்மம் தோன்ற முடியும்; மக்கள் சுகமடைய முடியும்
என்னும் உறுதியான நம்பிக்கையுடையோம்.
குடி அரசு - 1932 @
70
ஆனால் இத்தகைய சமதர்ம நோக்கம் சட்டசபைகளிலும், அரசியல்
அதிகாரங்களிலும் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளிடம் உண்டாக வேண்டு
மானால் முதலில் மதங்களும், ஜாதிகளும் அழிந்து தீர வேண்டும்.மதங்களும்
ஜாதிகளும் அழிய வேண்டுமானால் முதலில் ஒரு மதத்தினரை ஒரு
மதத்தினர் தாழ்வாக மதிப்பதும், துன்பப்படுத்துவதும், ஒரு ஜாதியினரை ஒரு
ஜாதியினர் கொடுமைப்படுத்துவதும், அடிமைப் படுத்துவதும், அடக்கியாள்
வதும் ஆகிய தற்போது நிகழும் காரியங்கள் அடியோடு அழிய வேண்டும்;
ஒரு மதத்தினர்க்கு ஒரு மதத்தினர் ஒரு ஜாதியினர்க்கு ஒரு ஜாதியினர்; எந்த
வகையிலும் குறையாத அதிகாரம் படைத்தவராயும், கல்வியறிவு பெற்றவ
ராகவும், செல்வம் பெற்றவராகவும், சுதந்திரம் பெற்றவராகவும்
ஆகி விட்டால்
மதக் கொடுமைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்து போகும்;
மதக் கொடுமைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்தால் மதங்க
ளும், ஜாதிகளும் தாமே மாண்டொழியும். மதங்களும் ஜாதிகளும் கொடுமை:
யான காரியங்களைச் செய்து கொண்டிருப்பதன் மூலமே நிலைத்து நிற்
கின்றன என்னும் உண்மையை அறிந்தவர்களுக்கு இது விளங்காமற்
போகாது.
ஆகவே இவ்வாறு ஆவதற்கு எல்லா மதத்தினரும், எல்லா
வகுப்பினரும் அரசியலில் சமபங்கு பெற்றாக வேண்டியது அவசியம்;
அரசியலில் சமபங்கு பெறாவிட்டால் ஒரு ஜாதியினருக்கு ஒரு ஜாதியினர்,
ஒரு மதத்தினருக்கு ஒரு மதத்தினர் இழைத்துவரும் கொடுமைகளை எந்த
வகையிலும் நீக்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு எல்லா வகுப்பினரும்,
மதத்தினரும் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு தற்கால நிலைமை
யில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதி தேர்தல் முறையும்
இல்லாவிட்டால் முடியவே முடியாது என்பது நீண்ட நாளைய நமது உறுதி
யான அபிப்பிராயமாகும். ஆகையால் நாம் ஆதி முதல் வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தையும் தனித் தொகுதி தேர்தல் முறையையும் ஆதரித்து
வருகின்றோம்.
ஆகவே தற்காலத்தில் நமது நாடுள்ள சிக்கலான நிலையில் எல்லா
வகுப்பினரும் எல்லா மதத்தினரும் அரசியலில்
சிறிது அதிகாரம்
பெறும்படியான ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டுமானால், தற்பொழுது
பிரதம மந்திரியால் செய்யப்பட்டிருக்கும் முடிவைத்தவிர வேறு எந்த
விதமான முடிவையும் செய்ய முடியாது; செய்வதற்கும் வழியில்லை என்பதே
நமது கருத்தாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
தேசமக்களுக்குக் கடுகளவாவது நன்மை செய்ய வேண்டும் என்னும்
அரசியல்வாதிகள் இம்முடிவை ஒப்புக்கொண்டு இதற்குமேல் ஆகவேண்டிய
அரசியல் காரியங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டியதே யோக்கியமான
செயலாகும்.
71
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அன்றியும் இத்தீர்ப்பின்மேல் பிரிட்டிஷ் பிரதம மந்திரி வெளி
யிட்டிருக்கும் அறிக்கையையும், இந்திய அரசாங்கத்தார் வெளியிட்டிருக்கும்
அறிக்கையையும் கவனிப்போர் பிரதம மந்திரியின் மீதோ, இந்திய
அரசாங்கத்தின் மீதோ, சிறிதும் குறைகூற இடமில்லை யென்பதையும்
அறியலாம். பிரதம மந்திரியின் அறிக்கையில்
“இம்முடிவு கூடிய விரைவில் பாராளுமன்றத்தின் முன்
வைக்கப்படும். இதற்குள் எல்லாச் சமூகங்களும் ஒற்றுமைப்பட்டு
ஒரு முடிவுக்கு வந்தால் அரசாங்கத்தார் செய்திருக்கும் இத்
தீர்ப்பைப் பாராளுமன்றத்தின் முன் வைக்கமாட்டார்கள். சமூகங்கள்
ஒரு முடிவுக்கு வராவிட்டால் தான் இம்முடிவு பாராளுமன்றத்தின்
முன் வைக்கப்படும்.”
என்றும், இந்திய அரசாங்கத்தாரின் அறிக்கையில்
“எல்லா சமூகத்தினரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வரும்
சந்தோஷகரமான நிலைமை ஏற்படுவதாயிருந்தால் அதற்கு
இடமில்லாமல் செய்துவிட பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை.
ஆகையால் புதிய இந்திய அரசாங்கச் சட்டம் பாராளுமன்றத்தில்
நிறைவேறும் முன் தனிப்பட்ட மாகாணங்களைப் பொருத்தோ
அல்லது பிரிட்டிஷ் இந்தியா முழுவதையும் பற்றியோ சம்பந்தப்
பட்ட எல்லாச் சமூகத்தினரும் சேர்ந்து ஒரு ஒற்றுமையான வேறு
முடிவுக்கு வந்து விடுவார்களாயின் அம்முடிவை, இந்தத் தீர்ப்புக்
குப்பதிலாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று அவர்கள் பாராளு
மன்றத்திற்குச் சிபார்சு செய்வார்கள்.”
என்றும் குறித்திருப்பதைக் காண்பவர்கள் அரசாங்கத்தார் மீது குறை
கூற இடமுண்டா என்றுதான் கேட்கின்றோம்.
இனிமேலாவது இம்முடிவு இந்தியாவுக்குப் பொருத்தமில்லாததாக
இருந்தால் இந்தியமக்களால் விரும்பப்படாதது என்பது உண்மையாக
இருந்தால் இதன் மூலம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதி
தேர்தல் முறையும் பெற்றிருக்கிற மக்களால் ஒப்புக்கொள்ளப்படாததாக
இருந்தால் காங்கிரஸ்காரர்களும், வகுப்புவாதத்தை விரும்பாத மிதவாதி
களும், மற்ற வயிற்றுப்பிழைப்புத் தேசாபிமானிகளும் தங்கள் செல்வாக்கைக்
கொண்டு இந்தியாவில் உள்ள சமூகங்களை ஒற்றுமைப் படுத்தி வேறு
இவர்கள் விரும்புகின்ற மாதிரியான முடிவைச் செய்து அம்முடிவை எல்லாச்
சமூகத்தினரையும் ஒப்புக் கொள்ளச் செய்து பிறகு பிரிட்டிஷ் அரசாங்
கத்தாரின் முன் கொடுக்கட்டுமே. இப்படிச் செய்தால் இப்பொழுது பிரதம
மந்திரியின் தீர்ப்பு தானே அழிந்து
போய்விடுகிறது. இதையும் செய்யாமல்
தீர்ப்பையும் ஒப்புக் கொள்ளாமல் கூச்சலிடுவது கையாலாகாத் தனமும்,
குடி அரசு - 1932 @
72
சுயநலத்தனமும், ஏதாவது கிளர்ச்சி பண்ணிக் கொண்டிருக்க வேண்டும்
என்னும் மனப்பான்மையும், வீண் ஆர்ப்பாட்டமும் ஆகும் என்று நாம்
கூறுவதில் எள்ளளவாவது தவறுண்டென்று யாராவது சொல்ல முடியுமா? இது
நிற்க நமது நாட்டின் உண்மை நிலையை அறிந்தவர்களும், நிதானமான
அரசியல் வாதிகளும் ஆகிய திருவாளர்கள் சர். சாப்ரூ, சர் ரபீந்திரநாத் டாகூர்,
ஜார்ஜ் ஜோசப், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி முதலியவர்கள் இத்தீர்ப்
பின் மேல் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயத்தைக் காண்பவர்களுக்கும் நாம்
கூறுவதன் உண்மை விளங்காமற்போகாது.
ஆகையால் அவர்கள் கருத்துக்
களையும் கீழே வெளியிடுகின்றோம்.
“நாமே நமக்குள் ஒரு சமரசம் செய்து கொண்டிருக்கலாம்;
ஆனால் அவ்விதம் செய்து கொள்ளவுமில்லை; செய்துகொள்ளவும்
முடியவில்லை.
ஆனால் தற்போதைய காலதேச வர்த்தமானத்தை மனத்தி
லிருத்தி தீர்ப்பின் அமைப்புகள் முழுவதையும் பொதுவாக நான்
ஆராய்ந்து பார்த்ததில் இத்தீர்ப்பைக் கண்டிக்கவோ அல்லது மிகவும்
சங்கடமான இவ்வேலையில் முதன் மந்திரி நல்லெண்ணங் காட்ட
வில்லை என்றோ கூற நான் துணியமாட்டேன்.”
சர். சாப்ரூ.
“நமது சமூகத்தினர் தக்க முறைகளைக் கொண்டு தற்போதுள்ள
கொஞ்ச சுதந்திரத்தையும், மேலான வகையில் உபயோகப் படுத்திக்
கொள்ளவேண்டும்.”
-
சர். ரபீந்திரநாத் டாகூர்.
“வகுப்புத் தீர்ப்பைச் சிலர் விரும்பலாம்; வேறுசிலர் விரும்பா
திருக்கலாம்; ஆனால் தற்போதைக்கு இதுவே முடிவான தீர்ப்பாகும்.
வேறுவழியில்லை என்பதை உத்தேசித்து இதனை ஒப்புக்கொண்டு
விடுவதே புத்திசாலித்தனமாகும்.”
- ஜார்ஜ் ஜோசப்.
“பல வகுப்பினரும் தங்களுக்குள் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள
தவறிப்போய் அரசாங்கத்தின் கழுத்தில் இச்சங்கடமான கடமையை
கட்டிவிட்டுத் தற்போது அதைப்பற்றிக் குறைகூறப்படுவது அழகல்ல
_சமாதானம் வேண்டுவோர் இத்தீர்ப்பைக் கண்ணியமாக ஒப்புக்
கொள்ள வேண்டும்.”
- ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி.
73
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மேற்காட்டிய அபிப்பிராயங்களை நிதான புத்தியுள்ள யாராவது தவறு
என்று கூறமுடியுமா? ஆகையால் வீண் ஆர்ப்பாட்டக் காரர்களின் பேச்சு
களுக்குச் செவிசாய்க்காமல் முதலில் வகுப்புக்களும், மதங்களும் ஒழிவதற்
கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும், இவ்வேலைதான் வகுப்புமத
அரசியல் ஒழிவதற்கு வழியென்றும், இதற்குத் தற்சமயம் அரசியல்
அமைப்பில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும், தனித்தொகுதியும் அவசியம்
என்றும் இவைகளைப் பெறுவதன் மூலம் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள்
கொஞ்சமாவது அரசியல் அதிகாரம் பெற்றுத் தங்கள் சுயமரியாதைக்காக
வேலை செய்ய முடியுமென்றும், ஆதலால் பிரதம மந்திரியின் வகுப்புப்
பிரச்சினைத் தீர்ப்பை ஆதரிப்பதே ஒழுங்கு என்றும் கூறுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.08.1932.
குடி அரசு - 1932 @
74
மதத்
தற்
வக்
|
93.
நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும்,
அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த
பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப்
பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல்
போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப்
பாதகம் உண்டான கூட்டத்தார் அனைவரும் நமது இயக்கத்தை மறைமுக
மாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத்
தின் ஒரு உரோமங்கூட அசைக்கப் படவில்லை என்பதை நாம் பல தடவை
களில் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். இதற்கு மாறாக இவ்வியக்கம் ஒவ்
வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிற
தென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும்.
மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும்
கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின்
கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன என்னும் விஷயங்களைச் சிறிது
ஆராய்ந்துபார்ப்பவர்களுக்கு இவ்வியக்கத்தின் பெருமையும்
இதை எதிர்ப்ப
வர்களின் சிறுமையும் விளங்காமற்
போகாது.
ஆகையால் அவ்விஷயமாகக்
கொஞ்சம் கூற விரும்புகின்றோம்.
இன்று நமது இயக்கத்தைப் பற்றி மறைமுகமாகவும், சில சமயங்களில்
வெளிப்படையாகவும் எதிர்த்துப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருப்பவர்களில்
முதன்மையாக இருப்பவர்கள் கீழ்க்காணும் கூட்டத்தினரேயாவார்கள்.அவர்.
கள் அரசியல் வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள், கோயில் தரும கர்த்தாக்
கள், மடத்தலைவர்கள் முதலியவர்கள்...
இவர்களில் முதலில் அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுவோம்.
நமது இயக்கந் தோன்றிய நாள் முதல், நாம் அரசியல்வாதிகளின் புரட்டுக்
களையும், சூழ்ச்சிகளையும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம். “சுய
ராஜ்யம்” என்பதும், “சத்தியாக்கிரகம்” என்பதும் ஆகிய வார்த்தை
களெல்லாம் பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுப் பறிப்பதற்காகக் கூறும் தந்திர
75
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வார்த்தைகள் என்று கூறி வருகிறோம். மக்களுக்குள் உள்ள வித்தியாசங்கள்
ஒழிவதற்கு முன், ஜாதியினாலும், மதத்தினாலும் மனிதனை மனிதன்
அடிமையாகவும், மிருகங்கள் போலவும் நடத்துகின்ற நிலை மாறுவதற்குமுன்
இந்நிலைமையைக் கொஞ்சங் கூட மாற்றுவதற்கு முயற்சியும் செய்யாமல்
“சுயராஜ்யத் திற்குப் பாடுபடுகிறோம் என்று கூறுவது சுத்த அயோக்கியத்
தனத்தைத்தவிர வேறல்ல என்றே கூறி வருகிறோம்.ஆகையால் அரசியலை
வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் கூட்டத்தார் நமது இயக்கத்தை
எதிர்ப்பதும், இதைப்பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணுவதும் இயல்பேயாம்.
இவ்வாறு செய்வதன் நோக்கம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்பில் மண்:
விழுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அறியலாம்.
இரண்டாவது பண்டிதக் கூட்டத்தார், ஏன் நமது இயக்கத்தைக் கண்டு
அஞ்சுகிறார்கள் எதிர்க்கிறார்கள்: என்று பார்ப்போம். நாம் குறிப்பிடும்
பண்டிதர்ககள் என்பவர்கள், புராணங்களையும், இராமாயணப் பாரதக் கதை
களையும், வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளை படித்துவிட்டு
மூளை மழுங்கி, சொந்த மூளை அதாவது ஆராய்ச்சி அறிவு கொஞ்சங்கூட
இல்லாமல், தாங்கள் படித்த புத்தகங்களில் சொல்லப் பட்டவைகள் தான்
உண்மை அவைகளின் படி நடப்பதுதான் ஒழுங்கு அவைகளை மீறி
நடந்தாலோ, அல்லது அவைகளை நம்பாவிட்டாலோ, “பாவம்” “நரகம்”
முதலியவைகள் சம்பவித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்
களேயாவார்கள். இப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை
யெல்லாம் நாம் “பண்டிதர்கள்” என்று குறிப்பிடுகின்றோம். இப்பண்டிதர்கள்
எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய
வயிற்றுப் பிழைப்பாகும். அவர்கள்
புராணப் பிரசங்கம் செய்வதன் மூலமும், வருணாச்சிரம தருமப்பிரசங்கம்
செய்வதன் மூலமும் புராணக் கதைகளை வசனங்களாகவும், பாட்டுக்
களாகவும் எழுதிப் புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்வதன் மூலமும்
ஜனங்களிடம் காசு பறித்து வந்தார்கள். சுயமரியாதை இயக்கப் பிரசாரத்தால்
பொய்ப் புராணங்களுக்கும், அர்த்தமற்ற வருணாச்சிரம தர்மங்களுக்கும்
ஆட்டங் கண்டு விட்டபடியால், இவைகளை வயிற்றுப் பிழைப்பாக வைத்துக்
கொண்டிருந்த “பண்டிதர்கள்” பிழைப்புக்கும், கெளரவத்திற்கும் ஆபத்து
ஏற்பட்டுவிட்டது.ஆகையால் இக் கூட்டத்தார் இவ்வியக்கத்திற்கு விரோத
மாக இருப்பது ஆச்சரியமல்ல.
இனி மூன்றாவதாகப் புரோகிதர்களை எடுத்துக்கொள்வோம்.
புரோகிதர்கள் என்பவர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி, பல சடங்குகளைப்
பாமர மக்களின் தலையிற் சுமத்தி, அவைகளின் மூலம் பொருள் பறித்து
ஜீவனம் பண்ணும் சோம்பேரிக் கூட்டத்தாரே யாவார்கள், இக்கூட்டத்தாரின்
கையிலேயே உலக மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் சிக்கித்
துன்புற்று அடிமையாகக்கிடந்து வந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய
சீர்திருத்தவாதிகள் எல்லோரும் முதலில் புரோகிதர்களின் ஏமாற்றல்களை
குடி அரசு - 1932 @
76
ஒழிக்கவே முயன்றிருக்கின்றனர். இம்முயற்சி காரணமாகப் பல தேசங்களில்
புரோகிதர்களின் ஆதிக்கங்கள் அழிந்து விட்டன.
ஆனால்
நமது நாட்டில்
மாத்திரம் இன்னும் புரோகித ஆதிக்கம், அழிய வேயில்லை, நமது நாட்டில்
இந்தப் புரோகித ஆதிக்கம் இந்து மதத்திலும், கிறிஸ்துவ மதத்திலும், முஸ்லிம்
மார்க்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆகையால் நமது
இயக்கம் ஆரம்பமுதலே புரோகிதத்தையும் புரோகிதர்களையும் பலமாகக்
கண்டித்து அவர்களின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகிறது. இதன்
பயனாக, இந்துக்களில்
அனேகர் இப்பொழுது புரோகிதத்தை ஒழித்தும்
புரோகிதர்களை பகிஷ்கரித்தும் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்ள
ஆரம்பித்து விட்டார்கள்; முஸ்லீம்களிலும் முல்லாக்களின் ஆதிக்கத்தையும்,
அவர்களால் ஏற்படுத்தப்பட்ட “பஞ்சா” வணக்கம், சமாதி வணக்கம் “கூடு”
எடுத்தல் முதலிய மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களையும் ஒழிக்க
வேண்டும் என்ற கிளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. முற்றும் புரோகிதர்களின்
ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்ற “ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவமத”
த்திலும் பல இடங்களில் புரோகிதர்களைப் பகிஷ்கரிக்கும் வேலை
ஆரம்பித்து விட்டது. இதனால் ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகள், அவர்கள்
கூட்டங்களிலும்.,மாதா கோயில்களிலும், சுயமரியாதை இயக்கத்தைத் தூக்கிப்
பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வாறு புரோகிதர்களின் சோம்பேரிப்
பிழைப்புக்கு ஆபத்து ஏற்பட்ட காரணத்தினாலேயே அவர்கள் நமது
இயக்கத்தை எதிர்த்துப் பேசப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.
இனி நான்காவதாகப் புத்தக வியாபாரிகளில் சிலர் நம்மை ஏன்
எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம். இவர்கள் புராணக்கதைகளாகிய, பெரிய
புராணம், திருவிளையாடல் முதலியவைகளையும், தேவாரம், திருவாசம்.
நாலாயிரப் பிரபந்தம் முதலிய புத்தகங்களையும் அச்சிட்டும் பாடப்புத்த
கங்களாக எழுதி வெளியிட்டும் ஒரு ரூபாய் புத்தகத்தை ஐந்து ரூபாய் விலை
வைத்து விற்றும் பணம் சம்பாதிக்கின்றவர்கள். இந்த புராணப் புத்தக
வியாபாரிகள் சைவத்தை வளர்ப்பதாகவும் வைணவத்தை வளர்ப்பதாகவும்,
தமிழை வளர்ப்பதாகவும் கூறிப் பணம் சம்பாதிப்பவர்கள். நமது இயக்கம்
தோன்றியபின் இத்தகைய புத்தகங்களின் மதிப்பும் விற்பனையும் குறைந்து
விட்டதால், இவர்கள் வியாபாரமும் குறைந்து விட்டது. ஆகையால் இந்தப்
புராணப் புத்தக விளம்பர வியாபாரக் கூட்டத்தார் நம்மைப் பற்றி தப்புப்
பிரசாரம் பண்ணுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
அடுத்தபடி ஐந்தாவதாக நம்மை எதிர்க்கும் பத்திரிகைக்காரர்கள் யார்.
என்பதைப் பார்ப்போம். “சமய போதனை” “சன்மார்க்க போதனை” “நல்
லொழுக்க போதனை” என்னும் பெயர்களால் சைவ மதப் பிரசாரம் பண்ணும்
பத்திராசிரியர்களும், வைணவமதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும்,
கிறிஸ்துவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் இன்னும் தேசியப்
பத்திரிகை என்று பெயர் வைத்துக் கொண்டு மருந்து வியாபாரங்களும்,
77
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
புராணப் புஸ்தக வியாபாரங்களும் செய்யும் “கேட்லாக்” பத்திரிகைக்
காரர்ளும் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்.
களுடைய வயிற்றுப் பிழைப்பு போகிறதே என்பதைத் தவிர வேறு என்ன
வாயிருக்க முடியும் என்றுதான் கேட்கிறோம்.
இனி ஆறாவதாகக் கோயில் தருமகர்த்தாக்கள் ஏன் நம்மை எதிர்க்
கிறார்கள் என்று பார்த்தால் அதன் உண்மையும் விளங்காமல் போகாது. நமது
இயக்கப் பிரசாரம் காரணமாக வரவர கோயில்களுக்குப் போகும் ஜனங்களும்.
குறைந்து வருகிறார்கள். கோயில் உண்டிகளில் விழும் பணமும் குறைந்து
வருகிறது. அன்றியும் நாம் கோயில்களின் சொத்துக்களையெல்லாம் பறிமுதல்
செய்து அவைகளை கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலியவைகளுக்குச்
செலவு செய்யவேண்டுமென்று கூறி வருகிறோம். இவ்வாறாகி விட்டால்,
பரம்பரை யாகக் கோயில்களுக்குத் தருமகர்த்தாக்களாக இருந்து கொண்டு
அவைகளின் செல்வங்களை அனுபவித்துவரும் கூட்டத்தாரின் சுக வாழ்
விற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமல்லவா? ஆகையால் தான் இக்கூட்டத்தார்.
நமது இயக்கத்திற்கு விரோதமாக இருந்து வருகின்றார்கள்.
இனி அடுத்தபடி ஏழாவதாக மடாதிபதிகள் நமது இயக்கத்தை எதிர்ப்
பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். இந்தக்கூட்டத்தார், ஏராளமான
சொத்துக்களை வைத்துக் கொண்டு அவைகளை நாட்டு மக்களின் நன்மைக்
காக ஒரு சிறிதும் பயன்படுத்தாமல் தங்கள் சுக வாழ்வுக்கே செலவு செய்து
கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய சொத்துக்களோ தேச
மக்களுடைய சொத்துக்கள் என்பதில் ஐயமில்லை. அன்றியும் இவர்கள்.
“மடாதிபதிகள்” என்று பெயர் வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றிக்
கொண்டிருப்பதற்குக் காரணம் மதமேயாகும்.
ஆகையினால் மதத்தையும்
அழிக்க வேண்டும் மதத்தின் பேரால் வீணாகச் செலவழித்து வரும் மடாதிபதி
களின் சொத்துக்கள் போன்றவைகளையெல்லாம் தேச நன்மைக்குப்
பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறோம். இதனால் இந்த மடங்களின்
கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு எதிராக இருந்து வருகின்றார்கள்.
இனி எட்டாவதாக நாடகக்காரர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற
நாடுகளில் உள்ள நாடகக்காரர்களோ சிறந்த படிப்பாளிகளாகவும், தேசத்தை
சீர்திருத்த வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகவும் இருந்து
வருகிறார்கள், இதற்குத் தகுந்தபடி பாமர மக்களின் மனத்தில் பகுத்தறிவு
உணர்ச்சியை ஊட்டத் தகுந்த சிறந்த நாடகங்களை நடத்தி வருகின்றார்கள்.
ஆனால் நமது நாட்டு நாடகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெறும்
வயிற்றுப் பிழைப்பையே குறியாகக் கொண்டவர்களாதலால் இவர்கள் பாமர:
மக்களின் அறியாமையை இன்னும் வளர்க்கக் கூடிய மத சம்பந்தமான
புராணங்களையே நாடகங்களாக நடத்தி வருகிறார்கள். நமது இயக்கம் பரவு
வதன் காரணமாக, இந்தப் புராணப் பிழைப்பு நாடகக் காரர்களுக்கு வருவாயும்
குறைய ஆரம்பித்து வருகிறது. ஆதலால், இவர்கள் ஆயிரக்கணக்கான
குடி அரசு - 1932 @
78
ரூபாய்களுக்குச் “சீன்” களும், நாடகம் நடத்தும் போதெல்லாம் அதிகப்
பணத்தைச் செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண்டியிருக்கிறது.
அப்படியும் சரியானபடி பணம் வசூல் ஆவதில்லை.ஆகையால் இவர்களும்
இப்பொழுது நம்மை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும், அதிகமாக
நமது இயக்கத்தை மறைமுகமாகத் தாக்கும் நாடகக்காரர்கள் பார்ப்பனர்களே
என்பதை நாம் கூற வேண்டியதில்லை.
ஏன் எனில், மதத்தினால் பாமர:
மக்களை ஏமாற்றி வருபவர்கள் பார்ப்பனக் கூட்டத்தார் அல்லவா? ஆகை
யால் நாடகக் காரர்கள் நமது இயக்கத்திற்கு எதிரான பிரசாரம் பண்ண
ஆரம்பித்திருப்பதும் ஆச்சரியமில்லை.
இனி இவ்வாறு மதத்திற்கும், வருணாச்சிரம தருமத்திற்கும்
புராணங்களுக்கும் பரிந்து பேசி, நம்மை எதிர்க்க மேற்கூறிய அரசியல்
வாதிகள் பண்டிதர்கள் புரோகிதர்கள் முதலான கூட்டத்தார்க்கு அக்கரை
உண்டாகக் காரணமென்ன என்பதைப் பற்றி வாசகர்களே தெரிந்து கொண்டி
ருக்கலாம். இக்கூட்டத்தார்கள் அனைவரும் மதத்தின் பெயராலும் வருணாச்
சிரம தருமத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும், வயிறு வளர்க்கின்ற
வர்கள். இவைகளைக் கொண்டு ஏழை மக்களின் செல்வத்தைக் கொள்ளை
யடிக்கின்றவர்கள். ஆகையால் தான் இவற்றைத் தடுக்கும் நம்மைப் பற்றித்
தப்புப் பிரசாரம் செய்துகொண்டுவருகிறார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆகையால் இனியும் இக்கூட்டத்தாரின் வார்த்தைகளுக்கு ஏமாறாமல்
சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பாமர மக்களுக்கு உதவி
செய்வது தான் நமது கடமையாகும். அரசியல்வாதிகளின் பேச்சையும்,
புராணப் பிரசங்கிகளின் பேச்சையும் புரோகிதர்களின் பேச்சையும் நம்பி தாம்
சம்பாதிக்கும் பொருளை இவர்கள் கையிற் கொடுத்து விட்டு தரித்திரமாகவும்
அடிமையாகவும் வாழ வேண்டாம் எனப் பாமர மக்களுக்கு எச்சரிக்கை
செய்ய வேண்டியதே சுயமரியாதைத் தோழர்களின் கடமையாகும். மதத்திற்கு
“வக்காலத்து வாங்கிப்” பேசுபவர்களின் பேச்சை கேட்டு யாரும் ஏமாறப்
போவதில்லையென்றும் இவர்களால் சுயமரியாதை இயக்கம் அழிந்துவிடப்
போவதில்லையென்றும் எச்சரிக்கை செய்வதுடன், இக்கூட்டத்தாரையும்
மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுந் தொழிலை மேற்கொள்ளாமல்
வேறு கெளரவமான தொழிலை செய்து ஜீவிக்குமாறு வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 04.09.1932
79
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கார்ப்வபாரேஷனும் பிராமணிய பக்தியும்
சென்னைக் கார்ப்பொரேஷனில் சென்ற 7-9-32 தேதியில் நடந்த
கூட்டத்தில் சென்னைக்கு விஜயஞ் செய்யும் கும்பகோணம் சங்கராச்சாரி
யாருக்கு ஒரு உபசாரப் பத்திரம் வாசித்தளிப்பதாகத் தீர்மானித்திருப்பதைக்
கண்டு ஆச்சரியப்படுகிறோம்.
கார்ப்பொரேஷன் சபையானது நகரத்தின் சுகாதார நிலையைக்
காப்பாற்றுவதற்கும், நகர ஜனங்களின் க்ஷமத்தைக் கவனிப்பதற்கும்
ஏற்பட்டதென்பதை எவரும் அறிவார்கள். இவைகளின் பொருட்டு நகர
மக்களிடம் வரி வசூலித்து அப்பணத்தை நகர மக்களின் க்ஷமத்திற்காகச்
செலவு செய்து வருகிறது. ஒரு நகரத்திற்கு, தேச நன்மைக்காக அதாவது
அரசியல் அபிவிருத்திக்காகவும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் பாடுபடக்
கூடிய தலைவர்கள் விஜயஞ் செய்வார்களாயின், அவர்களுக்கு அந்த நகர
சபை உபசாரஞ் செய்வது எங்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிச்
செய்வது அந்தத் தலைவர்களை ஊக்கப் படுத்துவதற்கும் அவர்களுடைய
உழைப்பைப் பாராட்டுவதற்கும் அறிகுறியாகும். ஜனங்களின் நன்மைக்காக
உழைக்கும் உண்மையான அரசியல் வாதிகளுக்கும் சமுதாய சீர்திருத்த
வாதிகளுக்கும் நகர மக்கள் சிறிது உபசாரத்திற்காகச் செலவு செய்வது எந்த
வகையிலும் தவறாகாது.
ஆனால், உலக நன்மையைச் சிறிதும் கருதாமல் தம்முடைய ஜாதி
நன்மையை மட்டும் கருதுகின்றவர்களும் “மற்ற மதங்கள் யாவும் அழிய
வேண்டும். தம்முடைய மதம் மட்டிலும் ஓங்க வேண்டும் என்று
நினைக்கின்றவர்களும், மற்ற மக்களெல்லாம் “சூத்திரர்கள்” “இழிந்தவர்கள்'”
“சண்டாளர்கள்” “அந்நிய மதத்தினர்கள்” அனைவரும் “மிலேச்சர்கள்”
ஆகையால் அவர்களுடன் பழகுதலும் பேசுதலும் பாவம், அப்படிச் செய்தால்
அதற்காகப் பிராயச்சித்தஞ் செய்து கொள்ள வேண்டும்” என்று கருதுகின்ற
வர்களும் ஆகிய குறுகிய மனப்பான்மையுடைய கூட்டத்தார்க்கெல்லாம்
பொது ஜனங்களின் வரிப் பணத்திலிருந்து நடைபெறும் ஸ்தாபனம் உபசாரம்
பண்ணுவதென்றால் அது எந்த விதத்தில் நியாயமுடையதென்று
கேட்கின்றோம்.
குடி அரசு - 1932 @
80
உதாரணமாகச் சென்னைக் கார்ப்பொரேஷனை எடுத்துக் கொள்ளு
வோம். அதற்கு வரி கொடுப்பவர்களில் கிறிஸ்தவர்களிருக் கிறார்கள்;
முஸ்லீம்கள் இருக்கிறார்கள்; ஜைனர்களிருக்கிறார்கள்; புத்தர்களிருக்கிறார்.
கள்; பார்சிகளிருக்கிறார்கள்; சைவர்களிருக்கிறார்கள்; வைணவர்களிருக்
கிறார்கள். இவ்வாறு பல திறப்பட்ட மதத்தினர் களிருக்கிறார்கள்.
ஜாதிகளிலோ ஆதிதிராவிடர்கள், ஆங்கிலேயர்கள், பார்ப்பனர்கள்,
அல்லாதார்கள் முதலிய இந்தியாவில் எவ்வளவு ஜாதிகள் உண்டோ
அவ்வளவு ஜாதியினர்களும் சென்னை நகரில் வாழுகின்றார்கள். இவ்வளவு
மதத்தினரிடமிருந்தும், ஜாதியினரிடமிருந்தும் வாங்கப்படும் வரிப் பணத்
தினால்தான் கார்ப்பொரேஷன் நடைபெற்று வருகிறது என்பது யாருக்கும்
தெரியாத விஷயம் அல்ல.
இந்தக் கார்ப்பொரேஷனால் இப்பொழுது உபசாரப்பத்திரம் வாசித்துக்
கொடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கும் சங்கராச்சாரியாரைப்
பற்றி நமது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அவர் பிராமணர்களின்
ஆதிக்கத்தையும், பிராமணீயத்தையும் வளர்க்க உதவி செய்பவர் சந்நியாசி
வேடம் பூண்டவராயிருந்தாலும், யானை, குதிரை, ஒட்டை முதலிய மிருக
வர்க்கங்களுடனும், ஆள் மாகாணங்களுடனும் உலக குரு என்று பெயர்
வைத்துக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றுபவர். சுற்றுப் பிரயாணம் பண்ணும்
போது, ஆங்காங்கே உள்ள பிராமணரல்லாத பணக்காரர்களிடம், பாத
காணிக்கை என்னும் பெயருடன் ஆயிரக்கணக்காகப் பொருள் பறிக்
கின்றவர். ஏமாந்து பொருளைக் கொடுக்கும் பார்ப்பனரல்லாதார்களிடம்
மேற்படி சங்கராச்சாரியார் நேரே பேசுவது கூட பாவம் என்று நினைத்து
பக்கத்தில் ஒரு பிராமணரை வைத்துக் கொண்டு அவரிடம் பேசுவது போல
பாவித்துக் கொண்டு பணம் கொடுத்த பார்ப்பனல்லாதாரிடம் பேசுபவர்;
பார்ப்பனரல்லாதாரிடம் பறிக்கும் பொருளைப் பிராமண போஜனம் என்னும்
பெயரால் பார்ப்பனர்களுக்கே வயிறு வெடிக்கும்படி விருந்து செய்பவர்:
பார்ப்பனரல்லாதார்க்கு அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதத்தைப் போட்.
டால் கூட அதனால் தமக்குத் தோஷம் வந்து விடும் என்று நினைப்பவர்;
சுருங்கக் கூறினால் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கடவுள், வேதம்,
புராணம் என்பவைகளின் பேரால் பார்ப்பனரல்லாதார்களை அடிமைப்
படுத்துவதற்கு வருணாச்சிரம தருமப் பிரசாரம் பண்ணுபவர்தான் சங்கராச்
சாரியார் என்று சொல்லுவதில் எள்ளளவும் ஐயமில்லை.
இத்தகைய ஒரு சிறு கூட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உலக மக்க
ளுக்கு கெடுதியை உண்டாக்கும் மதப்பிரசாரமும் வருணாச்சிரம தருமப்
பிரசாரமும் செய்து வரும் ஒருவருக்கு, சகல மதத்தினர்க்கும், சகல ஜாதி
யினர்க்கும் பொதுவான ஒரு சபை உபசாரம் செய்வதென்றால் அது பொது
ஜன அபிப்பிராயத்திற்கு இசைந்ததாகுமா என்றுதான் கேட்கின்றோம்.
81
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அன்றியும், சென்னைக் கார்ப்பொரேஷனில் இது சம்பந்தமான
விவாதம் நடந்தபோது சில அங்கத்தினர்கள் எழுப்பிய இரண்டொரு
சந்தேகங்களும் கவனிக்கக் கூடியதாகும். அதாவது ஒரு அங்கத்தினர்-
“எலெக்ட்ரிக் லிப்டில் ஏறி கவுன்சிலர் அறைக்கு வந்து நம்முடன் கலந்து
கொண்டு உபசாரப்பத்திரம் பெற திரு. சங்கராச்சாரியார் ஒரு சமயம் விரும்ப
மாட்டார் என நினைக்கிறேன் என்று கூறினார். இது
உண் மையேயாகும்.
ரயில்வண்டி, மோட்டார்கார்,
ஆகாய விமானம் முதலிய வாகன வசதிகள்.
ஏராளமாக இருக்கின்ற இக்காலத்திலும், பல்லக்கின் மேல் ஏறிக் கொண்டு
மனிதர்களை சுமக்கச் செய்யும் பெரியார்கள், “எலெக்ட்ரிக் லிப்டி”ன் மேல்
அடி வைப்பதற்கு துணிவார் என்பது சந்தேகந்தான். அப்படியேறுவது அவர்.
களுடைய மத சம்பிரதாயத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், “தெய்வீகத்”
தன்மைக்கும் விரோதமாக இருந்தாலும் இருக்கலாம்.ஆகவே அவர் எப்படி
கார்ப்பொரேஷன் சபைக்குள் புகுவார் என்பதில் சந்தேகம் உண்டாவது
இயல்பு என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம்.
மற்றொரு அங்கத்தினர் “இந்துக்களல்லாத மற்ற அங்கத்தினருடன்
கை குலுக்கித் தீட்டுப்பட்டுக் கொள்ள சங்கராச்சாரியார் சம்மதிப்பாரா?
என்பதை அறிய விரும்புகிறேன்” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார்.
அந்த அங்கத்தினர், அந்நிய மதத்தைச் சேர்ந்தவராதலால் சங்கராச்சாரியாரின்
உண்மை நிலையறியாமல் இவ்வாறு கேட்டார் என்றே நாம் நினைக்கிறோம்.
பிராமணர்களைத் தவிர மற்ற இந்துக்களை யெல்லாம், “சூத்திரர்கள்”
அதாவது அடிமைப் பட்டவர்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், வேசி
மக்கள் சண்டையில் ஜெயித்துப் பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்கள் என்று
கருதி அவர்களைப் பார்க்கக் கூடச் சம்மதிக்காதவர் என்பதைத் தெரிந்தி
ருந்தால் அவ்வங்கத்தினர் இச்சந்தேகத்தை எழுப்பியிருக்க மாட்டார். ஆத
லால் சங்கராச்சாரியார் பிராமணரல்லாத இந்துக்களையே தொட்டுக் கொள்:
ளாத போது மற்ற மதத்தினரை எப்படித் தொட்டுக் கொள்ளுவார் என்று
கேட்கிறோம்.
அன்றியும், “கடவுள்” என்பவரின் முகத்திற் பிறந்ததாகக் கூறிக்
கொண்டிருக்கும் கூட்டத்தாரின் தலைவராகிய சங்கராச்சாரியாருக்குக் கார்ப்
பொரேஷன் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுப்பதாகத் தீர்மானித்திருப்
பதில் பல சங்கடங்கள் நேர இடமிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்ட
விரும்புகின்றோம்.
முதலில் வேத சம்பிரதாயப்படி நடந்து கொள்ளுகின்ற ஒருவர்,
“மிலேச்சர்” என்று சங்கராச்சாரியாரால் கருதப்படுகின்ற ஆங்கிலேயர்களின்
சம்பிரதாயப்படி அமைந்துள்ள ஒரு சபைக்குள் பிரவேசிக்கலாமா? அச்
சபையின் உபசரிப்பை ஏற்றுக் கொள்ளலாமா? என்னும் கேள்விகள் எழ
இடமிருக்கின்றன. ஒருக்கால் இவைகளுக்கு ஏதாவது சமாதானம் சொல்லிக்
குடி அரசு - 1932 @
82
கொண்டு உபசாரத்தை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தால், அப்பொழுது
சங்கராச்சாரியார் சபைக்குள் வரும்பொழுது, அங்குள்ள பிராமணரல்லாத
அங்கத்தினர்கள், முஸ்லீம் அங்கத்தினர்கள், கிறிஸ்தவ அங்கத்தினர்கள்,
ஆதிதிராவிட அங்கத்தினர்கள் இவர்களெல்லாம் சபையில் இருக்கலாமா?
இவர்கள் இருக்கின்ற ஒரு கூட்டத்தின் நடுவில் சங்கராச்சாரியார் செல்ல
லாமா? அப்படி செல்லுவது அவருடைய வேத சாஸ்திரங்களுக்கும் ஏற்குமா?
என்னும் கேள்விகளும் எழுகின்றன.
அப்படிச் சங்கராச்சாரியார் சென்றாலும் எல்லா அங்கத்தினர்களும்
இருந்தாலும், அங்கத்தினர்களும் சங்கராச்சாரியார் அவர்களும் ஒருவர்க்
கொருவர் எவ்வாறு அறிமுகப்படுத்திக் கொள்வது? மரியாதை செய்து
கொள்ளுவது என்ற விஷயத்தில் தகராறு ஏற்பட இடமிருக்கிறது.
அதாவது
சங்கராச்சாரியார் சம்பிரதாயப்படி யாரும் அவரைக் கண்டவுடன் நமஸ்காரம்
பண்ண வேண்டும்; அப்பொழுது சங்கராச்சாரியார் நமஸ்காரம் பண்ணிக்
கொண்டவர், பிராமணராயிருந்தால் தன் கையில் “பிரசாதம்” எனும் பெயரால்
சாம்பல் கொடுப்பார். பிராமணரல்லாதவராயிருந்தால் மற்றொருவர் கையில்
சாம்பல் கொடுக்கச் சொல்வார். இதுதான் சங்கராச்சாரியாரைக் கண்டு
கொள்ளும் முறையாகும். கார்ப்போரேஷன் உபச்சாரம் செய்யும் போது இந்த
முறையை அனுசரிப்பதா? இம்முறைக்குக் கார்ப்பொரேஷன் அங்கத்தினர்
கள் அனைவரும் சம்மதிப்பார்களா?'
அல்லது ஆங்கில சம்பிரதாயப்படி, சங்கராச்சாரியார் வந்தவுடன்
தலைவர் ஒவ்வொரு அங்கத்தினரையும் அறிமுகம் செய்து வைக்க, சங்கராச்
சாரியார் அவ்வங்கத்தினர்களுடன் கைகுலுக்க வேண்டும்; இம்மாதிரி செய்ய
அவர் அனுமதிப்பாரா? இப்படிச் செய்தால், அவருடைய கொள்கைக்கும்
மதத்திற்கும், வேத சாஸ்திரங்களுக்கும் ஏற்குமா? என்ற கேள்விகளும்
எழுகின்றன.
அன்றியும், “சமஸ்கிருதம் ஒன்றுதான் தெய்வ பாஷை. தமிழ்
சூத்திரபாஷை, இங்கிலீஷ் போன்ற அந்நிய தேச பாஷைகள், மிலேச்ச
பாஷைகள்” என்ற கொள்கையுடைய சங்கராச்சாரியாருக்கு எந்த பாஷையில்
உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப் போகின்றார்கள் என்ற சந்தேகம்.
நமக்கு உண்டாகிறது. சங்கராச்சாரியார் கொள்கைப்படி “தெய்வ பாஷை”
யாகிய சமஸ்கிருதத்தில் உபசாரப் பத்திரம் வாசிக்க கார்ப்பொரேஷன்
துணியுமா? அல்லது “மிலேச்ச பாஷை” யாகிய ஆங்கிலத்தில் உபசாரப்
பத்திரம் வாசித்துக் கொடுத்தால் அதை சங்கராச்சாரியார் ஏற்றுக் கொள்ளுவது
அவருடைய கொள்கைக்குப் பொருத்தமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்தச் சங்கடங்களை யெல்லாம் உத்தேசித்து, சங்கராச்சாரியார்.
அவர்களே “கார்ப்பொரேஷன் உபசாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது”
என்று தெரிவித்து விட்டால்,
இது ஒரு பெரிய கார்ப்பொரேஷன் சபைக்கு
83
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அவமானமைல்லவா? இதுவரையிலும் கெளரவம் பொருந்திய கார்ப்பொ
ரேஷன் உபசாரத்தை மறுத்தவர் யாரேனும் உண்டா?
ஆகையால் நாம் மேலே கூறிய விஷயங்களையெல்லாம் ஆலோ
சித்துப் பார்ப்பவர்கள் கார்ப்பொரேஷன் செய்த தீர்மானம் தவறானது
என்பதை உணராமலிருக்க முடியாது. இவ்வாறே மதவாதிகளுக்கும்,
வருணாச்சிரம தருமிகளுக்கும் கார்ப்பொரேஷன் உபசாரம் செய்யத்
தீர்மானிப்பதன் நோக்கம் என்ன என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. எல்லா
மத குருக்களுக்கும் கெளரவம் செய்ய வேண்டும் என்று கார்ப்பொரேஷன்
தீர்மானிக்குமாயின், அபிப்பிராயப்படுமாயின் பிறகு அதன் உபசாரத்திற்கே.
கெளரவமில்லாமற் போய்விடும் என்பது நிச்சயம். சாதாரணமாகத் தெருவில்
பிச்சையெடுத்துத் திரிகின்ற ஒரு பிச்சைக்காரனும் தன்னை மதகுரு என்று
சொல்லிக் கொள்ளலாம். அத்தகைய மத குருமார்களுக்கும் கார்ப்பொரேஷன்
உபசாரம் செய்யத் துணியுமா? என்றுதான் கேட்கின்றோம்.
அன்றியும், சங்கராச்சாரியாருக்கு உபசாரம் செய்ய வேண்டுமென்னும்
தீர்மானத்தை, அவரால் “சூத்திரர்” என்று கருதப்படுகின்ற திரு. ஜி. நாராயண
சாமி செட்டியார் என்னும் பிராமணரல்லாத கனவான் கொண்டு வந்ததைப்
பற்றியே நாம் மிகவும் வெட்கப்படுகிறோம்.
இத் தீர்மானத்தை, “ஜஸ்டிஸ்”
கட்சியைச் சேர்ந்த பார்ப்பனர் அல்லாத அங்கத்தினர்கள் ஆதரித்தது
அதிலும் வெட்கக் கேடான காரியமாகும்.
அன்றியும் சங்கராச்சரியாருக்கு உபசாரப் பத்திரத்தைத் தயாரிக்க
செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கமிட்டியில், திரு. வி. சக்கரைச் செட்டியார்.
என்னும் கிறிஸ்துவ கனவானும், திரு.பஷீர் அகமது சையத் எனும் முஸ்லிம்
கனவானும் சேர்ந்திருப்பதன் அர்த்தமும் நமக்கு விளங்கவில்லை.
இவற்றையெல்லாம் நினைக்கும் போது கார்ப்பொரேஷன் சபை நகர:
நன்மையை கவனிக்கும் சபை மாத்திரமா? அல்லது மதப் பிரசாரம், வருணாச்
சிரம தர்மப் பிரசாரம், பார்ப்பனப் பிரசாரம் செய்யும் சபையா? என்னும்
சந்தேகங்களும் உண்டாகின்றன.
இதற்கு யார் எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும் கார்ப்
பொரேஷன் இம்மாதிரி, வருணாச்சிரம தருமப் பிரசாரகர்களுக்கு உபசாரம்
செய்வதை மேற்கொள்ளுமானால், அதையும்,
அதன் அங்கத்தினர்களையும்
வருணாச்சிரம தருமசபை, “வருணாச்சிரம தருமப் பிரசாரகர்கள்”
“பிராமணிய பக்தர்கள்” என்று பொது ஜனங்கள் காட்டும் குற்றத்தினின்றும்
தப்பித்துக் கொள்ள முடியாதென்று தான் நாம் கருதுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 11.09.1932
குடி அரசு - 1932 ()
84
அரசியல்வாதிகளுக்குப் புத்தி வருமா?
சென்ற 5-9-32 ந்தேதி இந்தியா சட்டசபையில் மேன்மைதங்கிய
வைசிராய் அவர்கள் செய்த பிரசங்கம் தற்கால நிலைமையில் மிகவும் கவனிக்
கத்தக்க தொன்றாகும். “காங்கிரசானது பயமுறுத்தலினால் சுயராஜ்யம் வாங்கி
விடலாம் என்னும் நோக்கத்துடன் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் செய்யும் போராட்டமானது பலாத்காரமில்லாதது, சாத்வீகமானது
என்ற பெயருள்ளதாயிருப்பினும், உண்மையில் தேசத்தில், கலகத்தையும்,
அமைதியின்மையையும், பலாத்கார உணர்ச்சியையும் உண்டாக்குவதற்கு
காங்கிரசின் கிளர்ச்சியே காரணமாக இருக்கின்றது. ஆகையால், எந்த வகை:
யிலும், காங்கிரசின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு வேண்டிய முயற்சியை
அரசாங்கம் செய்யாமலிருக்க முடியாது” என்னும் அபிப்பிராயம் வைசி
ராயின் பிரசங்கத்தில் காணக்கிடக்கின்றது.
இந்த அபிப்பிராயம் தவறான
தென்று நடுநிலையும், உண்மையும், பகுத்தறிவும் உள்ள எவரும் கூறமுடியாது
என்றே நாம் கூறுவோம். இதற்கு உதாரணமாகச் சென்ற பம்பாய் கலகத்
தையும், வங்காளத்தில் நடைபெற்று வரும் புரட்சி இயக்கத்தையும் கூறலாம்.
இதையும் வைசிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில் கட்டிக் காட்டியிருக்கிறார்.
பொதுவாகவே, காங்கிரசின் மூலம் சத்தியாக்கிரகம் “சட்ட மறுப்பு£,
“சாத்வீகப் போராட்டம்” என்னும் பெயர்களால் சட்டத்தையும், ஒழுங்கையும்
மீறி நடக்கும் விதத்தை மக்களுக்கு கற்பிக்கப்பட்ட பிறகே தேசத்தில்,
கலகமும், புரட்சியும், சண்டை சச்சரவுகளும் பெருகலாயின என்னும்
உண்மையை யாரும் மறுக்கமுடியாது.
அன்றியும், காங்கிரஸ் இந்த மாதிரியான போராட்டத்தை ஆரம்பித்த
தனால் தேசம் அடைந்த லாபந்தான் என்ன என்பதையும் சிறிது ஆலோ
சித்துப் பார்த்து உண்மையைத் தெரிந்து கொள்ளுகின்றவர்கள், நாம் கூறு
வதைப் பற்றிச் சிறிதும் குறைகூற மாட்டார்கள் என்பது திண்ணம்.
அதாவது காங்கிரஸ் “சுயராஜ்யம்” என்னும் பெயரால் சட்ட மறுப்பு
இயக்கத்தை ஆரம்பித்தவுடன், உண்மையிலே தேசீய வெறி கொண்ட சில
இளைஞர்களும் வேறு வேலை செய்து பிழைக்க வழி தெரியாத மற்றும் பல
வாலிபர்களும் அதில் சேர்ந்தார்கள்; தலைவர்கள் என்பவர்கள் இடுகின்ற
85
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கட்டளைகளைச் செய்து, தடியடியும், பிரம்படியும் பட்டுச் சிறைசென்று
கஷ்டப்படுகிறார்கள். தலைவர்கள் என்பவர்களில் சிலர் சிறை சென்றாலும்
அவர்கள் “ஏ” வகுப்பில் செளக்கியமாக உட்கார்ந்திருந்து விட்டு வீடு வந்து
சேர்கிறார்கள். கடைசியாக, சட்டசபை தேர்தலோ,ஸ்தல ஸ்தாபனத் தேர்தலோ
வருகின்ற காலங்களில், காங்கிரசின் பேரால் தலைவர்களாக விளங்கியவர்.
களும், காங்கிரஸ் அனுதாபிகளாக விளங்கியவர்களும், ஒன்றும் தெரியாத
ஏழை இளைஞர்களைச் சிறைக்கனுப்பக் காரணமாய் இருந்தவர்களும்,
“தேசாபிமானி” என்னும் பட்டத்துடன் தேர்தலில் அபேட்சகர்களாக நின்று
பதவி பெறுகிறார்கள். இதுதான் சட்ட மறுப்பில் நாம் அடையும் பலன். எந்த
வகையில் பார்த்தாலும், ஏழைகளின் உழைப்பும், கஷ்டமும், தியாகமும்,
பணக்காரர்கள் பட்டம் பதவி பெறுவதற்கே உபயோகப்படுகிறதேயொழிய
வேறு கடுகளவாவது ஏழை மக்களின் நன்மைக்கு உபயோகப்படுவதில்லை
யென்பதை நாம் அறிந்துதானிருக்கிறோம்..
அன்றியும், நீண்ட நாளாகச் சட்டமறுப்புப் போராட்டம் நடந்து
கொண்டிருப்பதனால், நாட்டின் வியாபாரமும், கைத்தொழிலும் பாதிக்கப்
படுகிறதே தவிர அவைகளிலும் ஒருவித முன்னேற்றத்தையும் காண
வழியில்லாமலிருக்கிறது.
எந்த வகையிலும். சட்ட மறுப்பு இயக்கம் ஒழிய வேண்டுவது
அவசியமாகும். ஆகையினால், காங்கிரஸ் தலைவர்கள், புத்திசாலித்தன
மாகச் சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு, உண்மையில் நாட்டு மக்கள்
முன்னேற்றமடையத் தக்க வழியில் உழைப்பார்களானால் அவர்கள் உழைப்பு
பலனளிக்கக் கூடியதாகும். இன்றேல் அவர்கள் உழைப்பு வீண் என்பது நமது
அபிப்பிராயமாகும். சேனைகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் உள்ள ஒரு
அரசாங்கத்துடன், ஒன்றுமில்லாத பேர்வழிகளாகிய நெல்லிக்காய் மூட்டை
கள், “கை ராட்டினத்தாலும்” “ஆத்ம சக்தி” யாலும் எதிர்த்து போர் செய்து
வெற்றிபெற முயற்சிப்பது,நமது நாட்டிலுள்ள மதப்பித்து கொண்டவர்களுக்கு
“சாத்தியமானது” என்று தோன்றினாலும், உண்மை அறிவுடையவர்களுக்கும்
அயல்நாட்டு மக்களுக்கும் சிரிப்பை உண்டாக்காமல் போகாது. ஆகையால்
“சத்தியாக்கிரகம்” “ஆத்ம சக்தி” என்று பைத்தியக்காரக் கொள்கைகளையும்,
அவைகளின் மூலம் உண்டான “சாத்வீகச் சட்ட மறுப்பு” போராட்டம்
என்பதையும் அடியோடு நிறுத்திவிடுவது தான் புத்திசாலித்தனமாகும்
என்பதை பகுத்தறிவுடையோர் எவரும் மறுக்க முடியாது.
இப்படி இல்லாமல், இன்னும் காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு
இயக்கத்தை நடத்திக் கொண்டே போவார்களாயின், வைஸ்ராய் அவர்கள்.
கூறியிருப்பது போல தேசத்தின் அமைதியை உத்தேசித்து, அவ்வியக்கத்தை
அடக்க, அரசாங்கத்தாரும் பொது ஜனங்களும் தங்களால் ஆன முயற்சியை
செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிவுடைய எவரும் ஒப்புக்
கொண்டுதான் தீரவேண்டும்.
குடி அரசு - 1932 (5)
86
அடுத்தபடியாக வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பைப் பற்றி வைஸ்ராய்
அவர்கள் கூறியிருக்கும் அபிப்பிராயமும் குறிப்பிடத் தக்கதாகும். அவர்,
இந்தியப் பிரதிநிதிகள் வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியாத
காரணத்தாலேயே பிரிட்டிஷ் பிரதம மந்திரியால் வகுப்புப் பிரச்சினையை
முடிவு செய்ய நேர்ந்தது. ஆகவே “அம்முடிவை இந்தியர் ஒப்புக் கொள்ள
வேண்டும். அல்லது தங்களுக்குள் வேறு சமரசமான முடிவை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். அல்லது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வேறு அரசியல்
சுதந்திரம் பெறுவதற்கு முயற்சிக்காமல் சும்மா இருந்துவிட வேண்டியது.
இம்மூன்றைத் தவிர வேறு வழியில்லை” என்று கூறியிருப்பது கவனிக்கத்
தக்கதாகும்.
மூன்றாவது கூறிய அரசியல் சுதந்திரம் வேண்டாம் என்ற
விஷயத்தைப் பற்றிப் பேசுவது இதுவரையிலும் இந்தியா அடைந்து வந்திருக்
கும் அரசியல் அபிவிருத்திக்கும் நோக்கத்திற்கும். முரண்பாடானதாகும்.
என்பதை வைசிராயே குறிப்பிட்டு விட்டார்.ஆகவே மற்ற இரண்டு விஷயங்
களை அதாவது வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பை ஒப்புக் கொள்ளுவது
அல்லது வேறு முடிவு செய்து கொள்ளுவது என்ற விஷயத்தை எடுத்துக்
கொண்டால் வேறு சமரசமான முடிவு செய்து கொள்ளுவது என்பது நமது
நாட்டு அரசியல்வாதிகளால் முடியாத காரியம் என்பதை நாம் கோபுரத்தின்
மேல் நின்று கொண்டும் கூறத் தயாராயிருக்கிறோம்.
ஆகவே இம்முடிவை
ஒப்புக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நாம் முன்னமே
எடுத்துக் காட்டியிருக்கிறோம்.
ஆகையால் இனியேனும் நமது நாட்டு அரசியல் வாதிகள் நாட்டின்
உண்மை நிலையையும் அரசாங்கத்தின் பிடிவாதத் தன்மையையும்,
அதனோடு எதிர்த்து போராட முடியாத நமது சக்தியற்ற தன்மையையும்
உணர்ந்து சட்ட மறுப்புப் போராட்டத்தை நிறுத்திவிட்டு வகுப்புப் பிரச்சினைத்
தீர்ப்பையும் ஒப்புக்கொண்டு மேலே ஆக வேண்டிய காரியங்களை செய்ய
முன் வருவார்களா என்று கேட்கிறோம்.
உண்மையில் நமதுநாடு சுதந்தரமடைய வேண்டுமானால் நமதுமக்கள்
அனைவரும் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால் கிடைக்கப் போகும்
மாகாண சுயாட்சியின் அதிகாரத்தைக் கொண்டு சாதிமத வித்தியாசங்களை:
ஒழித்துச் சமத்துவத்தை உண்டாக்கித் தேசத்தை முன்னுக்குக் கொண்டுவர:
முயலுவதே அறிவுடைமையாகும்.
இதை
விட்டு வீண் கூச்சல் போட்டுக்
கொண்டு இன்னும் காந்தி விழாவும், நேரு விழாவும், பாரத மாதா விழாவும்,
தீபாவளிப் பிரசாரமும்,நடத்திக் கொண்டு மக்களை மூடர்களாகவும், குருட்டு
பக்தியுடையவர்களாகவும், பகுத்தறிவு இல்லாதவர்களாகவும் ஆக்க
முயல்வது பிராமணீயப் பிரசாரத்திற்கும், வருணாச்சிரம தருமப் பிரச்சாரத்
திற்கு அடிகோலுவதாகுமென்றுதான் நாம் கூறுவோம்.
87
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வைசிராய் அவர்களின் பிரசங்கத்தையும், இதுவரையிலும் செய்த
அரசியல் ஆர்ப்பாட்டத்தால், நாம் அடைந்த பலனையும் கவனிப்பவர்கள்
இந்த முடிவுக்குத்தான் வரக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூறுவோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 11.09.1932
குடி அரசு - 1932 @
88
காந்தியிண் வைத்க வவறி
இந்துக்கள் என்பவர்களும், திரு. காந்தியும், காங்கிரசும் தீண்டாதார்க்கு
அரசியல் தனித் தொகுதியை ஏற்படுத்துவதை ஆதி முதல் மறுத்து வருவ
தற்குக் காரணம், அவர்களை இதுவரையிலும் இருந்தது போலவே எப்
பொழுதும் இந்துக்களுக்கு அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்னும்
எண்ணமேயாகும் என்று நாம் கூறி வருகிறோம்.
இவ்வாறு நாம் சொல்லி வந்ததின் உண்மை, இப்பொழுது திரு.
காந்திக்கும், இந்தியா மந்திரிக்கும், முதல் மந்திரிக்கும் நடந்த கடிதப் போக்கு
வரத்துகளின் மூலம் நன்றாக விளங்கிவிட்டது.
தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்துவிட்டால் அவர்களுக்
காகத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், வேறு எந்த உயர்ந்த வகுப்பி
னருடைய தயவையும் எதிர்பாராமல் சட்டசபைக்குத் தெரிந்தெடுக்கப்
படலாம். சட்டசபையிலும் அவர்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு,
உண்மையாகவும் தைரியமாகவும் போராடலாம்.
அன்றியும், இந்துக்களினின்றும் தீண்டாதாரைத் தனியாகப்
பிரிப்பதனால், அவர்களுக்கு மற்றொரு பெருஞ் சாதகமும் உண்டு. அதாவது,
தற்போது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்திருக்கும் வகுப்புப் பிரச்சினைத்
தீர்ப்பின்படி பார்த்தால், ஒவ்வொரு சட்டசபைகளிலும் உள்ள, முஸ்லீம்கள்,
கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், ஆங்கிலேயர்கள், தீண்டாதார்கள்
ஆகிய இவர்கள் எல்லோருடைய தொகையும் ஒன்று சேர்ந்து இந்துக்களின்
தொகையைக் காட்டிலும் சிறிது மெஜாரிட்டியாகி விடுகிறது. தீண்டாதாருக்குத்
தனித் தொகுதி கொடுத்துப் பிரிக்கா விட்டால், மற்றவர்களின் தொகையைக்
காட்டிலும் இந்துக்களின் தொகை சிறிது மெஜாரிட்டியாக இருக்கும்.
மேற்கூறியவாறு, இந்துக்களின் தொகையை விட, தீண்டாதாரை
உள்ளிட்ட மற்றவர்களின் தொகை மெஜாரிட்டியாவதன் மூலம் தீண்டா
தாருக்கு அவர்கள் கோரிய நன்மைகள் கிடைக்கக் கூடும் என்பதில் ஐய
மில்லை. எப்படியெனில், இன்று தீண்டாதார்கள், பொதுத் தெருக்களில்
நடக்கும் உரிமைக்கும், பொதுக் குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கும்
89
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
உரிமைக்கும், பொதுக் கோயில்களில் நுழையும் உரிமைக்கும், பொதுப்
பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கும் உரிமைக்கும், இன்னும் மற்ற
மக்களைப் போல் தாங்களும் தேசத்தில் சமத்துவத்துடன் வாழ வேண்டும்
என்னும் உரிமைக்கும் போராடிக் கொண்டு வருகின்றார்கள். இப் போராட்டத்
திற்கு எதிராக நிற்கின்றவர்கள் கிறிஸ்தவர்களல்லர்: முஸ்லிம்களல்லர்;
ஆங்கிலேயர்களல்லர்; ஆங்கிலோ இந்தியர்களல்லர் என்பது யாரும்
அறியாததல்ல. ஆனால் தீண்டாதார்களின் மேற்கண்ட உரிமைகளை மறுத்துப்
போராடுகின்றவர்கள், வைதீக இந்துக்கள் தான் என்பதை யாரும் மறுக்க
முடியாது. இதற்கு உதாரணம், நாசிக், குருவாயூர் முதலிய இடங்களில் நடை
பெறும் சத்தியாக்கிரகமும், இன்னும், அடிக்கடி ராமநாதபுரம் ஜில்லாவிலும்.
மற்றும் பல இடங்களிலும் தீண்டாதாருக்கு உண்டாகும் துன்பமுமே
போதியவைகளாகும்.
அன்றியும், தீண்டாதாருக்குச் சுதந்தரம் அளிப்பதன் சம்பந்தமாகச்
சட்டசபைகளில் ஏதாவது தீர்மானங்கள் வருகின்ற காலங்களில் அவைகளை
இந்துக்களே எதிர்த்து வருகின்ற செய்தியும் போதுமானதாகும். இத்தகைய
மனப்பான்மையுடைய இந்துக்களுடன், தீண்டாதார் சேர்ந்திருப்பதன் மூலம்
அவர்களுக்கு எள்ளளவாவது நன்மை கிடைக்கப் போவதில்லை என்பது
உறுதியாகும்.
அன்றியும் தீண்டாதாருக்குத் தனித் தொகுதியளிக்காமல், பொதுத்
தொகுதியில் ஸ்தானங்கள் ஒதிக்கி வைத்தால் கூட, அதனாலும் அச்சமூகத்
திற்கு கடுகளவும் பயன் உண்டாகாது. ஏனெனில் பொதுத் தொகுதியில் உள்ள
மற்ற இந்துக்களின் வாக்கையும் பெற்றே அச்சமூகத்தினர் சட்டசபை
ஸ்தானம் பெற முடியும். தீண்டாதார்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம்
ஓட்டுரிமை அளித்தால் கூட, அவர்களைக் காட்டிலும் உயர்ந்த சாதி இந்துக்
களின் வாக்காளர் தொகையே மிகுதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆகவே, இந்துக்களின் தயவினால் தான் தீண்டாதார் பிரதிநிதிகள் சட்ட
சபைக்குச் செல்ல முடியும். உயர்ந்த சாதி இந்துக்களின் தயவினால் செல்லும்
பிரதிநிதிகள் எவ்வாறு தீண்டாதூராகிய தங்கள் சமூகத்திற்கு உண்மையாகவும்,
தைரியமாகவும் போராட முடியும் என்று கேட்கிறோம். ஆகையால் தீண்டா
தார்களுக்குத் தனித் தொகுதி இல்லாவிட்டால் அவர்கள் முன்னேற்றமும்
நீண்ட காலங்களுக்கு இல்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வுண்மையை உணர்ந்தேதான், வைதீகர்களின் பிரதிநிதியாகிய
திரு. காந்தியவர்கள்,
ஆதி முதல், தீண்டாதாருக்கு தனித் தொகுதி கொடுப்
பதைப் பலமாக ஆட்சேபித்துக் கொண்டு வருகிறார். முஸ்லிம்களுக்கும்,
சீக்கியர்களுக்கும் தனித் தொகுதி கொடுக்க ஒப்புக் கொண்ட திரு.
காந்தியவர்கள் “தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுத்தால் எனது உயிரை
விட்டாயினும் அதைத் தடுப்பேன்” என்று கூறியதற்கு காரணம் தீண்டாதார்.
குடி அரசு - 1932 @
90
முன்னேற்றம் கருதியல்ல; இந்துக்களின் முன்னேற்றம் கருதியும், இந்து மதம்,
வருணாச்சிரம தரும மதம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது கருதியுமே
யாகும் என்பது இப்பொழுது நன்றாகத் தெரிந்து விட்டது.
இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டின் போது, சிறுபான்மையோர்.
சம்பந்தமாக ஒரு முடிவு செய்வதற்கு, திரு. காந்தியுள்பட மற்றப் பிரதிநிதி
களும் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள்; ஆனால் தனித் தொகுதித்
தகராறினாலும், ஸ்தானங்களின் எண்ணிக்கையில் உண்டான தகராறினாலும்,
ஒரு ஒப்பந்தத்திற்கும் வரமுடியாமற் போய்விட்டது. ஆகவே வகுப்புப்
பிரச்சினை சம்மந்தமாக ஒரு முடிவுக்கும் வரமுடியாமல், அதைத்
தீர்மானிக்கும் விஷயத்தைப் பிரதம மந்திரியிடமே ஒப்படைத்து வந்து
ஆனால், திரு. காந்தி அவர்களுக்கு மாத்திரம், மற்ற விஷயங்களைக்
காட்டிலும், தீண்டாதாருக்குத் தனித் தொகுதியளிக்கக் கூடாது என்னும்
விஷயத்தில் மாத்திரம் பெருங்கவலை இருந்ததாகத் தெரிகிறது. இதை திரு.
காந்தியவர்களே, இந்தியா மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் “இந்தியாவிற்கு
வந்து, தனித் தொகுதிக்கு விரோதமான பொதுஜன அபிமானத்தை,
தீண்டாதார் விஷயத்திலாவது மிகுதிப்படும்படி செய்யலாம் என்று நினைத்தே
இந்தியாவுக்குத் திரும்பினேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது”
என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்து அறியலாம்.
இந்தியா முழுதும் உள்ள தீண்டாதார் ஸ்தாபனங்களும், அவர்களின்
நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைவர்களும் ஆரம்பம் முதல் தங்களுக்குத்
தனித் தொகுதிதான் வேண்டுமெனப் போராடி வந்திருக்கின்றனர். இவ்
விஷயம் திரு. காந்தியவர்களுக்குத் தெரியும். இதனால், பிரிட்டிஷ் அரசாங்
கம்,வகுப்பு பிரச்சினை சம்பந்தமாக முடிவு செய்யும் போது தீண்டாதாருக்குத்
தனித் தொகுதிதான் அளிப்பார்கள் என்ற விஷயமும் திரு. காந்திக்குத்
தெரியும். ஆகையால்தான் அவர் சிறையிலிருந்து கொண்டே, வகுப்புப்
பிரச்சினைத் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, இந்தியா
மந்திரிக்கு சென்ற
மார்ச்சு மாதம் 1 தேதி எழுதிய கடிதத்தில் தீண்டாதாருக்குத் தனித் தொகுதி
கொடுக்கக் கூடாது என முன்னெச்சரிக்கையாக மறுத்திருக்கிறார். அவ்வாறு
பிடிவாதத்துடன் மறுத்திருப்பதற்குக் காரணம், இந்து மதம் காப்பாற்றப்பட
வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை யென்பதை அக்
கடிதத்தில் உள்ள வாக்கியங்களைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம்.
“இந்து தர்மம் சம்பந்தப்பட்ட வரையில், தனித் தொகுதி
முறை அச் சமூகத்தை சின்னா பின்னமாகச் சிதைத்து உருப்படாமல்
செய்து விடும். நான் சம்பந்தப்பட்ட வரையில் இந்த வகுப்பாரின்
தர்ம சம்பந்தமானதும், மத சம்பந்தமானதுமே முக்கியமானதாகும்.
தர்ம விஷயத்தையும், மத விஷயத்தையும் கவனிக்கும் போது
91
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அரசியல் விஷயம் முக்கியமானதா யிருந்தாலும் அதுதானே
முக்கியமற்றதாகி மறைந்து விடுகிறது”
என்றும்
“எனது பயமெல்லாம் வெறும் பயமாகி தீண்டாதாருக்கு,
பிரிட்டீஷ் சர்க்கார் தனித் தொகுதியளிக்க விரும்பவில்லை என்று
ஏற்பட வேண்டுமென்றே நம்புகின்றேன்”
என்றும் குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, 7 கோடி தீண்டாதார்களைப் பலி
கொடுத்தாவது இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில், திரு.
காந்திக்கு எவ்வளவு பிடிவாதம் இருக்கிறதென்பதை அறியலாம்.
மேற்கூறிய இந்தியா மந்திரிக்கு எழுதிய கடிதத்திலேயே, “அரசாங்
கத்தார், தீண்டாதாருக்குத் தனித் தொகுதி அளித்துவிடுவதெனத் தீர்மானித்து
விடுவார்களாயின் நான் பட்டினிக் கிடந்து சாவதைத் தவிர வேறு வழி
யில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதன்பின் அதாவது பிரிட்டிஷ் அரசாங்கத்தாரின் வகுப்புப்
பிரச்சினைத் தீர்ப்பு வெளியான பின், “தீண்டாதாருக்குத் தனித் தொகுதி
கொடுத்திருப்பதை மாற்றா விட்டால் செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல்
பட்டினி கிடக்கத் தீர்மானித்து விட்டேன்” என்று பிரதம மந்திரிக்கு ஆகஸ்ட்
மாதம் 18 ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்திற்கு முதல்
மந்திரி திரு.மெக்டனால்ட் கொடுத்திருக்கும் பதில் சரியான பதிலாகும். பிரதம
மந்திரியின் பதிலில்,
“நீங்கள் பட்டினிக் கிடந்து உயிர் துறக்க நினைத்திருப்பது,
தாழ்த்தப்பட்டவர்களுக்கு மற்ற இந்துக்களுடன் கூட்டுத் தொகுதி
அளிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; ஏனெனில் இவ்விதக்
கூட்டுத் தொகுதி முன்னமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களுக்
குள் ஒற்றுமை உண்டாக்க வேண்டுமென்னும் எண்ணத்துடனும்
அல்ல; அதுவும் முன்னமே அரசாங்கத்தாரின் திட்டத்தில் அடங்கி
இருக்கிறது. ஆனால்
தற்சமயம், பெருங் கஷ்டங்களுக்கு உட்பட்
டுள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், தங்கள் சார்பாகச் சட்டசபைகளில்
பேச, ஒரு சில பிரதிநிதிகளைத் தாங்களாகவே தங்களுக்குள்
தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமையைத் தடுப்பதற்காக மாத்திரந்தான்
நீங்கள் பட்டினி விரதத்தைக் கைகொள்ள எண்ணியிருக்கிறீர்கள்
என்று நான் அறிகிறேன்”
என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் உண்மை என்றே நாம் கூறுவோம்.
திரு. காந்தியின் இந்துமத அபிமானத்தையும், வருணாச்சிரம தருமப்
பிடிவாதத்தையும் உணர்ந்தவர்கள்
இதை மறுக்க முன் வரமாட்டார்கள்.
குடி அரசு - 1932 @
92
பிரதம மந்திரியின் தீர்ப்பின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுத்
தொகுதியில் “ஓட்” செய்யும் உரிமை யிருக்கிறது.
இதனால், உயர்ந்த ஜாதி
இந்துக்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒற்றுமை உண்டாக இடமிருக்
கிறது. ஆகையால் இத்தீர்ப்பினால் இந்துக்களினின்றும் தீண்டாதாரைப்
பிரித்து விட்டார்கள் என்று குறை கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை, இப்படி
யிருந்தும் வீணாகக் கூச்சலிடுவதெல்லாம் பிரதம மந்திரி குறிப்பிட்டிருப்பது
போல, “தீண்டாதார் தங்கள் சார்பாகச் சட்ட சபைகளில் பேச தாங்களே ஒரு
சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமையைத் தடுப்பதற்கே”
யன்றி வேறல்ல என்பதில் கடுகளவும் ஐயமில்லை.
உண்மையிலேயே திரு. காந்தி அவர்கள் தீண்டாதாரின் நன்மையை
உத்தேசித்து அவர்களுக்குத் தனித் தொகுதியளிக்கக் கூடாதெனக் கூறுவாறா
னால், அவ்வாறு அளித்திருப்பதற்காகப் பட்டினி கிடந்து உயிர்விடுவது
அவர்கள் நன்மைக்கே என்று கூறுவாரானால், இதுவரையிலும் அவர்.
தீண்டாதார்களுக்குச் செய்த காரியம் என்ன என்றுதான் கேட்கின்றோம்?
காங்கிரசில் 1920ல் முக்கிய திட்டத்தில் ஒன்றாக யிருந்து வந்த “தீண்டாமை
விலக்குதல்” என்னும் திட்டத்தை ஏன் கை விட்டார், காங்கிரஸ் அரசியல்
திட்டத்தில் மதப் பாதகாப்பு ஏன் வைத்திருக்கிறார்? மதப் பாதுகாப்பை ஒப்புக்
கொண்டால் தீண்டாதார் இன்னும் பரம்பரையாக இப்பொழுது இருப்பது
போலவே இருக்க வேண்டியதுதானே. தீண்டாதார்கள் இதுவரையிலும்
போராடிக் கொண்டு வரும் எந்த உரிமையைக் கொடுக்கும் படி செய்தார்?
ஆகையால் திரு. காந்தியின் இத்தகைய பயமுறுத்தல் உண்மையாக
இருந்தாலும், அது தீண்டாதாரின் கேட்டிற்கும், உயர்ந்த சாதி இந்துக்களின்
பாதுகாப்பிற்குமே என்று நாம் கூறுவோம்.
அன்றியும், திரு. காந்தி அவர்கள், மற்ற பெருங்காரியங்களை
யெல்லாம் விட்டு விட்டு இந்தத் தீண்டாதார் விஷயத்திற்கு மாத்திரம்
இவ்வளவு பிடிவாதம் செய்வதன் அர்த்தம் விளங்குவது யாருக்கும் கொஞ்சம்
சங்கடமாகவேதான் இருக்கக் கூடும். ஜனநாயகத்துவத்தைப் பற்றி பரிந்து
பரிந்து பேசும் திரு. காந்தியவர்கள், தேசமக்களின் அபிப்பிராயத்தை மாற்றி,
வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பை ஒப்புக் கொள்ளாமல் வேறு ஒரு சிறந்த
முடிவைச் செய்வதுதானே. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஒன்றும் தடை
கூறவில்லையே. பிரதம மந்திரி, வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின் மேல் எழுதி
இருக்கும் அபிப்பிராயத்தில், “வேறு சமரசமான முடிவை எல்லாச் சமூகத்
தினரும் சேர்ந்து செய்வார்களாயின் அதை பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஏற்றுக்
கொள்ளுவார்கள்” என்று கூறியிருப்பது திரு. காந்தியவர்களுக்குத் தெரி
யாதா? இங்ஙனமிருக்க, பட்டினி கிடந்து உயிர் துறக்கத் துணிவது எவ்வளவு
நேர்மையான செயலாகும் என்றுதான் கேட்கின்றோம்.
ஒரு காரியத்தைத் தானும் செய்யச் சக்தியில்லை. பிறர் செய்வதையும்
ஒப்புக் கொள்வதில்லை என்றால், அத்தகைய மனிதரால் யாருக்கு என்ன
93
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
நன்மையுண்டு என்று ஆராய்ந்து பாருங்கள்.
இச்சமயத்தில் தேசாபிமானப் பட்டத்திற்கும் பத்திரிகைகளில்
கொட்டை எழுத்துக்களில் புகழ்ந்து தங்களைப் பற்றி எழுதுவதற்கும் ஏமாந்து
ஒருசில தீண்டாத தலைவர்கள் தங்களையும் இந்துக்களென்றும், ஆகையால்
தாங்கள் இந்துக்களோடுதான் சேர்ந்திருக்க வேண்டும் என்றும் வீண் ஆர்ப்
பாட்டம் செய்பவர்களின் வார்த்தையைக் கேட்டு யாரும் ஏமாற வேண்டாம்.
அவர்கள் இதுவரையிலும் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்.
களுடன் சேர்ந்திருந்ததனால் அடைந்த பலன் என்ன? என்பதை மாத்திரம்
பொறுமையோடு சுயநலமில்லாமல் ஆராய்ந்து பார்ப்பார்களாயின் உண்மை
யுணர்ந்து கொள்ளாமல் போகமாட்டார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 18.09.1932.
குடி அரசு - 1932 @
94
தீண்டாதார்க்கு விமோசணம் உண்டா?
திரு. காந்தியவர்கள் தற்பொழுது உண்ணாவிரதம் ஆரம்பித் திருப்
பதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. நமது நாட்டு அரசியல்வாதி
களும், சீர்திருத்த வாதிகளும், வருணாச்சிரம தரும வாதிகளும் கூட திரு.
காந்தியவர்களின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றிப்
பத்திரிகைகளிலும் அறிக்கைகள் வெளியிடுகின்றனர். பொதுக் கூட்டங்
களிலும் பேசி வருகின்றனர். நாமும் அவருடைய உயிர் காப்பாற்றப்பட
வேண்டுமென்பதை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளுகிறோம்.
ஆனால், திரு. காந்தியவர்கள் எதற்காக உண்ணா விரதமிருக்கிறார்?
அவர் உண்ணா விரதமிருப்பதன் மூலம், அவர் கருதுகின்ற காரியமோ,
அல்லது ஏழை மக்களுக்கு விடுதலையோ பூரணமாக ஏற்பட்டுவிடுமா?
என்பதைப் பற்றி நம்மைப் பொறுத்தவரை ஒன்றும் ஏற்பட முடியாது
என்றுதான் கூறுவோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தார்க்குத் தேர்தலில் தனித்
தொகுதி அளித்திருப்பதால், இந்து மதம் பிளவுபட்டு விட்டதென்றும்,
தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் இந்து மதத்திலிருந்து பிரிந்து விட நேர்ந்து
விடுமென்றும், ஆகையால், இந்து மதம் காப்பாற்றப்படவும், தாழ்த்தப்பட்ட
மக்கள் இந்து சமூகத்திலிருந்து பிரியாமலிருக்கவும் வேண்டுமானால் தனித்
தொகுதியைரத்துச் செய்ய வேண்டும் என்றும் கூறியே இப்பொழுது உண்ணா
விரதமிருந்து வருகிறார்.திருகாந்தியவர்கள் சென்ற 20- 9 - 32ல் பத்திரிகைப்
பிரதிநிதிகளுக்குப் பேட்டி கொடுத்துப் பேசி கொண்டிருந்தபோது அவர்.
கூறிய விஷயங்களைக் கவனித்தால் இவ்வுண்மையைத் தெரிந்து
கொள்ளலாம்...
“தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்துச் செய்வதன்
மூலம் எனது உண்ணாவிரதம் பொதுவாக முடிவு பெறும்; ஆனாலும்
எனது விரதத்தின் அடிப்படையான எண்ணம் ஒரு பொழுதும் நிறை
வேறியதாகாது.நான் என்னையும் ஒரு தீண்டாதானெனக் கொண்டி
ருப்பதனால், தீண்டக் கூடியவர்களுக்கும், தீண்டக்கூடாதவர்களுக்
கும் தற்கால சாந்தியாக ஏற்படும் எந்த ஒப்பந்தத்தையும் நான் ஒப்புக்
கொள்ள முடியாது. தீண்டாமையை அடியோடு கல்லி எறிந்து விட
95
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வேண்டும் என்பதே எனது ஆவல். நான் அதன் பொருட்டே
உயிரோடிருக்கிறேன். அதை ஒழிக்க சந்தோஷத்தோடு எனது
உயிரை இழக்கவும் தயாராக இருக்கிறேன். இரு சாராருக்கும்
நிலையான உடன்படிக்கை ஏற்படவேண்டுமென்பதே எனது
ஆவல். இவ்வாறு ஏற்படும் ஒப்பந்தத்தினால் இப்பொழுதே
தீண்டாதார்களுக்கு நன்மை ஏற்படவேண்டும். ஆகையால் இந்தியா
முழுதும் ஆட்சேபனையின்றி ஒப்புக் கொள்ளக் கூடிய ஒப்பந்தமே
ஏற்பட வேண்டும் ஒப்பந்தம். ஏற்பட்டு விட்டது என்று வீண்
ஆர்ப்பாட்டம் செய்வதில் பயனில்லை.”
என்று சொல்லியிருப்பதைக் கொண்டு, திரு. காந்தியவர்கள்
உண்மையிலேயே தீண்டாதவர்களின் நன்மையைக் கருதியே தான்,அதாவது
அவர்களுடைய சமத்துவத்தைக் கருதியே தான் உண்ணா விரதமிருந்து
வருகிறார் என்று கூறலாம். ஆனால், திரு. காந்தியவர்கள் இதற்குமுன் கூறிக்
கொண்டு வந்த சில விஷயங்களை நினைக்கும்பொழுது, இவர் எந்த
அளவில் தீண்டாமை ஒழித்தலையும், அவர்களுக்குச் சமத்துவம் கொடுக்க
வேண்டுமென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறார் என்பதில் சந்தேகம் ஏற்படும்
என்பதில் ஐயமில்லை. அதாவது, வருணாச்சிர தருமம் இருக்க வேண்டும்.
ஆனால் தீண்டாமை ஒழிய வேண்டும் என்றும், “பிறப்பினால் மனிதர்களின்
குணத்தில் வேறுபாடுகள் இருப்பதினால் பிறப்பில் வித்தியாசம் உண்டு”
என்றும் இதற்குமுன் கூறியிருக்கிறார்.
இப்பொழுது இவைகளையெல்லாம் மறந்து விட்டு, உண்மையாகவே,
இந்து சமூகத்துடன் தீண்டாதவர்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
திரு. காந்தியவர்கள் அபிப்பிராயப்படுவதாகவே வைத்துக் கொள்ளுவோம்.
ஆயினும் இது தீண்டாதாரின் நன்மையின் பொருட்டா அல்லது இந்து
மதத்தின் நன்மையின் பொருட்டா என்பதைப் பற்றி ஆராய்ந்தால், இந்துமத
நன்மையின் பொருட்டேயென்பது வெளிப்படையாக விளங்கும். இதனை
இதற்கும் உண்ணாவிரதத்திற்கும்!
அரசியலுக்கும் எவ்வகையிலும் சம்பந்தமில்லை. ஆயினும்
இதனால் அரசியல் விஷயத்தில் பலன் உண்டாகாது என்று கூறி
விடவும் முடியாது. தீண்டாமையை விலக்கத் தகுந்த வழிகளைக்
கைக் கொள்ளுவதால் அரசியல் விஷயத்திலும் சிறந்த பயன்
உண்டாகும், அன்றியும் அதில் மதம், தர்மம் சம்பந்தமான
விஷயங்களும் அடங்கியிருக்கின்றன. நான் தீண்டாமையைக்
கண்டிப்பதானது இந்து மதத்தில் உள்ள ஆபாசங்களின்
அடிப்படையைக் கண்டிப்பதாகுமென்றே நான் நம்புகின்றேன்.
எனவே சுயராஜ்ய அரசியல் திட்டத்தைவிட அவ்விஷயம்
மிகவும் முக்கியமானது...
குடி அரசு - 1932 @
96
என்று பத்திரிகைப் பிரதிநிதிகளிடம் கூறியிருப்பதைக் கொண்டுமே, இந்தியா
மந்திரிக்கு திரு. காந்தியவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில்,
“இந்து தர்மம் சம்பந்தப்பட்டவரையில் தனித் தொகுதி முறை
அச்சமூகத்தைச்சின்னாபின்னமாகச் சிதைத்து, உருப்படாமல் செய்து
விடும். நான் சம்பந்தப்பட்டவரையில் இந்த வகுப்பாரின் தர்ம
சம்பந்தமானதும், மத சம்பந்தமானதுமே முக்கியமானதாகும். தர்ம
விஷயத்தையும் மத விஷயத்தையும் கவனிக்கும்போது அரசியல்
விஷயம் முக்கியமானதா யிருந்தாலும்
அது, தானே முக்கியமற்றதாகி
மறைந்து விடுகிறது!”
என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டும் அறியலாம். இவைகளைக் கொண்டு,
திரு. காந்தியவர்கள் உண்மையிலேயே தாழ்த்தப்பட்டார்கள் பால் அனுதாபங்
கொண்டு அவர்களுக்குச் சகல சுதந்தரங்களும் அளிக்க வேண்டுமென்று
கேட்பதும், இந்து மதம் அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே
என்னும் உண்மையை உணர்ந்து கொள்ளலாம். திரு. காந்தியின் சுயராஜியத்
திட்டம் கூட மதத்தை அடிப்படையாகக் கொண்ட சுயராஜ்யத் திட்டம்
என்பதை நாம் பல தடவைகளில் விளக்கிக் காட்டியுள்ளோம்.
திரு. காந்தியவர்களின் நோக்கப்படி இந்து மதம் காப்பாற்றப்பட
வேண்டுமானால் தீண்டாமையை ஒழித்து தீண்டாதார்களையும் இந்துக்
களுடன் சேர்த்துக் கொள்ளப்படாத வரையில் இந்து மதம் நிலைத்து நிற்க
முடியாது என்ற தீர்மானத்திற்கு திரு. காந்தி வந்து விட்டார் என்றே தெரி
கின்றது. மற்ற இந்து மகாசபைக்காரர்களும், முஸ்லீம்களுக்கு எதிரான நோக்க.
முடைய மற்ற அரசியல் வாதிகளும் தீண்டாமை ஒழியாவிட்டாலும் அவர்
களை இந்துக்களினின்றும் பிரிக்காமலிருந்தால்தான் இந்து மதம் நிலைக்க
முடியும் என்பதை உணர்ந்து
கொண்டார்கள். இதனாலேயே
திரு. காந்திய
வர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்தவுடன் பலதிறப்பட்ட அபிப்பிராய
முடையவர்களும் தீண்டாமையை ஒழிப்பதற்கும், தனித் தொகுதியை ரத்து
செய்வதற்கும் பம்பாயில் சமரச மகாநாடு கூட்டி ஆலோசனை செய்
திருக்கிறார்கள்.
இச்சமயத்தில், தீண்டாதார்களையும், அவர்களின் தலைவர்களையும்
சமாதானப்படுத்துவதற்காகப் பல கோயில்களை அவர்களுக்காகத் திறந்து
விடப்படுவதாகவும், பல குளங்களிலும் கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க
அனுமதிக்கப் படுகிறதாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. உண்மை:
யிலேயே இத்தகைய உரிமைகளும், இன்னும் தீண்டாதார் கேட்கும் உரிமை
களும் தீண்டாதார்களுக்குக் கொடுக்கப் பட்டுவிட்டால், அவர்கள் இந்துக்
களோடு சேர்ந்திருப்பது பற்றியோ, அல்லது தனித் தொகுதித் தேர்தலை ரத்து
செய்து பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்க ஏற்பாடு
செய்வதைப் பற்றியோ நாம் கவலைப்பட போவதில்லை.
97
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஆனால் தீண்டாதாருக்கு இத்தகைய உரிமைகளையளிக்க சநாதன
தர்ம இந்துக்கள் ஒரு நாளும் சம்மதப்பட மாட்டார்கள் என்றேதான் நாம்
கூறுகின்றோம்.
இதற்கு உதாரணம் வேண்டுமானால் இப்பொழுது நடக்கும்
நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே விளங்கும். இன்று கோயில்களைத் திறந்து விடப்
படுவதாகச் செய்தி வருவதெல்லாம் வட நாட்டிலிருந்து தான் வருகின்றன.
அங்கும் பிரபலமாக விளங்கும் பொதுக் கோயில்கள், எதையும் திறந்து
விட்டதாகக் காணமுடியவில்லை.அநாமதேய கோயில்களையும் சிலர் தங்கள்
சொந்தக் கோயில்களையும் திறந்து விட்டிருப்பதாகத்தான் செய்திகள் கிடைக்
கின்றன. தென்னாட்டைப் பொறுத்தவரையில் அந்தப் பேச்சுக் கூட இல்லை.
நமது மாகாணத்திலும் சென்னை, சிதம்பரம், திருச்சி, மதுரை, கும்பகோணம்,
ஸ்ரீரங்கம், திருநெல்வேலி போன்ற பெரிய ஊர்களிலும் தீண்டாமையை
ஒழிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் திரு. காந்தியின் பட்டினி விரதத்
தையும், தனித் தொகுதியையும் மாற்ற வேண்டும் என்றும் கூட்டங்கள்
போட்டுப் பேசியிருக்கிறார்கள். ஆனால் இவ்வூர்களில் உள்ள கோவில்களில்
பிரவேசிக்கவோ, அவைகளைத் திறந்துவிடச் செய்யவோ முயற்சி செய்
வதாகத் தெரியவில்லை.
சென்னையில் கந்தசாமி கோயிலில், சில ஆதிதிராவிடர்கள் சென்ற
தாகச் செய்தி வந்தது. மறுநாள் கோயில் அடைக்கப்பட்டுவிட்டது. மைலாப்பூர்.
கோவிலுக்குள் செல்ல அனுமதி கேட்பதற்காகச் சென்ற உயர்ந்த சாதி இந்துக்
களையே கோயிலுக்குள் விடாமல் கதவடைத்து விட்டார்கள். இந்த நிகழ்ச்சி
யிலிருந்தே, தென்னாட்டில் உள்ள மற்ற கோயில்களில் தீண்டாதார்கள் செல்ல
சுலபத்தில்
அனுமதிப்பார்களா? என்பதை ஆலோசித்தால் உண்மை
விளங்காமற் போகாது.
அன்றியும், இச்சமயத்தில் கோயில் பிரவேசத்திற்கு வைதீகர்களின்
எதிர்ப்புக் கிளம்பியிருப்பதையும் கவனிக்க வேண்டுகிறோம். குருவாயூரில்
நீண்ட காலமாக கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் செய்யப்பட்டும்
வைதீக இந்துக்களின் மனம் இன்னும் இரங்கவில்லை. இன்னும் திரு.
காந்தியவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்தும் கூட அங்கு கோயில் கதவு
தாழ்த்தப்பட்டவர்களின் பொருட்டு அடைக்கப்பட்டே இருக்கிறது. நாசிக்
கிலுள்ள ஆலயத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்க வேண்டும் என்று
சொல்லிச் சில இந்துத் தலைவர்கள் முயற்சி செய்வதைக் கண்டு வைதீகர்கள்
எதிர் சத்தியாக்கிரகம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அகமதாபாத்தில்
உள்ள காளியின் ஆலயத்தில் தாழ்த்தப்பட்டாரும் போகலாம் எனச் சிலர்.
முயற்சியால் போடப்பட்டிருந்த விளம்பரத்தைக் கண்டு வைதீகர்கள் பரப்பரப்
படைந்து ஒன்றுகூடி அவ்விளம்பரத்தை எடுத்தெறிந்துவிட்டனர், தாழ்த்தப்
பட்டார் யாரும் அக்கோயிலுக்குள் நுழைய முடியாதபடி மறியலும் செய்யத்
தொடங்கி விட்டனர். பம்பாய் வைஷ்ணவ குருமார்களில் ஒருவரான திரு.
குடி அரசு - 1932 @
98
கோகுல நாத்ஜி நெளரோஜி என்பவர் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில்
விடஅநுமதிப்பதை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில்,
“சநாதன தர்மிகள் சம்மந்தப்பட்டவரையில் அவர்களுக்கு
மதமே முக்கியமானதாகும், இரண்டாவதாகவே அரசியல் விஷயங்
கவனிக்கப்படும். எங்கள் சமயத்திலும்
கொள்கையிலும் அரசாங்கம்
தலையிடா திருந்தால் அவர்கள் மற்ற விஷயங்களில் எவ்வாறு
இருந்தாலும் நாங்கள் மாகாண சட்டசபைகளிலும், இந்தியா சட்ட
சபைகளிலும் ஸ்தானங்கள் வேண்டுமென்று போராடமாட்டோம்.”
என்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இன்னும் பம்பாய்
வருணாச்சிரம சுயராஜிய சங்கத்தார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
“சமயமும், சமய சம்பந்தமான கொள்கைகளுமே எங்க
ளுக்கு மிகவும் முக்கியமானதாகும். சட்டசபைகள் எங்கள் மதத்
திலோமதாச்சாரத்திலோ தலையிடுவதை நாங்கள் பார்த்துச் சகித்துக்
கொண்டிருக்க முடியாது.”
என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இன்னும் தென்னாட்டில் உள்ள சிதம்பரம்,
சீரங்கம், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருவாரூர் போன்ற
ஊர்களில் உள்ள பெரிய கோவில்களில் தீண்டாதாரை அழைத்துக் கொண்டு
போக ஆரம்பித்தால் அப்பொழுது கும்பகோணப் பார்ப்பனர்கள் என்ன
செய்வார்கள் என்பது தெரியும்.
ஆகையால் உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் விரும்புவது
போலத் தீண்டாதார்களுக்குச் சமத்துவம் கொடுக்கும் விஷயத்தில் வைதீகர்.
கள் சிறிதும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள் என்பது நிச்சயம். தீண்டா
தார்க்குக் கொடுத்துள்ள தனித் தொகுதியை ரத்துச் செய்ய வேண்டும் என்று
திரு காந்தியவர்கள் கூறுவதற்கு மாத்திரம்தான் இன்று வைதீகர்களும் அவரு
டைய உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். இப்பொழுது
திரு. காந்தி “தனித்தொகுதி ரத்து” என்னும் பேச்சை விட்டு விட்டுத் தீண்டா
தார்க்குக் கோயில் பிரவேசம் போன்ற உரிமைகளைக் கொடுக்க வேண்டும்.
இன்றேல் பட்டினி கிடந்து இறப்பேன் என்று கூறுவாரானால் இன்று சமரசம்
பேச முன் வந்திருக்கும் வைதீகர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது
பேர் “இந்து மதத்துரோகியாகிய காந்தி பட்டினி கிடந்து இறக்கட்டும். அது
பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று நெஞ்சிரக்கமில்லாமல் கூற
முன்வந்திருப்பார்கள் என்று சத்தியஞ் செய்து கூறுகிறோம்.
ஆகையால் திரு. காந்தி செய்யும் பிடிவாதத்தினால், தீண்டாதார்களும்,
அவர்களுடைய சமூகத்தைப் பலி கொடுத்து, தனித்தொகுதித் தேர்தல்
முறையை ரத்துச் செய்யச் சம்மதித்து திரு. காந்தியின் உயிரைக் காப்பாற்றி
னாலும், தீண்டாச் சமூகத்தினரின் அடிமையும், கஷ்டமும் நீங்கப் போவ
99
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
தில்லையென்றே உறுதியாகக் கூறுவோம்.திரு. காந்தியவர்கள், பிடிவாதமாகத்
தீண்டாமையை ஒழிப்பதற்கு முயல்வாரானால், முன்பு “தீண்டாமை
விலக்குத்” திட்டத்தைக் கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தை, நமது
நாட்டுப் பார்ப்பனர்கள், சுயராஜ்யக் கட்சியைக் கிளப்பி அதன் மூலம் ஒழித்
ததைப் போல இப்பொழுதும் புதிதாக ஏதாவதொரு கட்சியைக் கிளப்பி அதன்
மூலம் அடக்கி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.அன்றியும் முன்பு போல்
திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்து விடுவார்கள் என்பதிலும்
ஆட்சேபணையில்லை.
ஆகையால் தீண்டாதார்களின் உரிமைகள் முழுவதும் சட்ட மூலமாக
ஏற்பட வேண்டும். ராவ் பகதூர் ஆர். சீனிவாசன் அவர்கள் கூறுவது போல,
தீண்டாமை என்பதைக் குற்றமாகக் கருதும்படி சட்டத்தின் மூலம் ஏற்பாடு
செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் உரிமை முழுவதும் சட்ட மூலம்
ஏற்பட்டபின் அவர்களுக்கு எந்தத் தொகுதி இருந்தாலும் கவலையில்லை.
இது ஏற்படுவதற்கு முன் அவர்களுக்குரிய தனித்தொகுதி முறையை ஒழிக்க
முயல்வது அவர்கள் சமூகத்தை என்றென்றும் விடுதலையில்லாமற்
செய்வதற்கு முயலும் சதியாலோசனை என்று தான் நாம் கூறுவோம்.
ஆகையால், தீண்டாதாருக்குள் பிளவுண்டாகும் பொருட்டு அவர்
களுடைய தலைவர்களில் சிலரைத் தங்கள் வசமாக்கும் பொருட்டும்,
தீண்டாதார் சமத்துவத்தைப் பற்றி வெறும் வாய்ப்பேச்சு
பேசுவதில்
கடுகளவும் பயனில்லை. “தீண்டாதார் பொருட்டு காந்தி பட்டினி கிடக்கிறார்.
ஆகையால் நாமும் பட்டினி கிடக்க வேண்டும். அவருடைய உயிருக்காகப்
பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று பிரசாரம் பண்ணுவதிலும், பட்டினி
கிடப்பதிலும், பிரார்த்தனை பண்ணுவதிலும் பலனில்லை.இந்தப் பட்டினியும்,
பிரார்த்தனையும் இன்னும் மக்களை மூடர்களாக்கவும் பகுத்தறிவற்றவர்.
களாக்கவும் தான் பயன்படும். சென்ற 20 -9-32ல் சென்னை மாகாணத்தில்
பட்டினி கிடந்த பார்ப்பனர்கள் எத்தனை பேர்? அவர்கள் தீண்டாதாருக்கு
அன்றைய தினம் என்ன செய்தார்கள் என்று கேட்கிறோம்.
ஆகையால் தாழ்த்தப்பட்ட மக்களும், அவர்களுடைய தலைவர்
களின் பட்டினியையும் பிரார்த்தனையையுங் கண்டு ஏமாற வேண்டாம் என்று
எச்சரிக்கை செய்கின்றோம். சட்ட மூலமாகத் தீண்டாதார்களுக்குள்ள தடை
களும், துன்பங்களும், கொடுமைகளும் ஒழியாதவரையில் அவர்கள் தனித்
தொகுதியை விட்டுக் கொடுத்து கூட்டுத் தொகுதியை ஏற்றுக் கொள்வது அவர்.
களுடைய அழிவுக்குக் காரணமாகுமென்று தீர்மானமாகக் கூறுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 25.09.1932
குடி அரசு
- 1932 (2)
100
உண்ணாவிரதப் பணை
திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததன் பலனாகத் தாழ்த்தப்
பட்டோர்க்கு ஏற்பட்டிருந்த தனித்தொகுதித் தேர்தல் முறை ரத்து செய்யப்
பட்டுவிட்டது. புனாவில் இந்துத் தலைவர்கள் என்பவர்களும், தாழ்த்தப்பட்ட
வகுப்புத் தலைவர்கள் என்பவர்களும் கூடிச் செய்து கொண்ட சமரச முடிவை
பிரிட்டிஷ் பிரதம மந்திரியவர்கள் ஆட்சேபணையின்றி ஒப்புக் கொண்டு
விட்டார். திரு. காந்தியும் தனது உண்ணா விரதத்தை முடித்து விட்டார்.
திரு. காந்தியவர்கள் உண்ணாவிரதமிருந்ததனாலும், தலைவர்கள்
என்பவர்கள் சமரச மகாநாடு கூடி ஒப்பந்தஞ் செய்து கொண்டதனாலும்,
அவ்
வொப்பந்தத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அங்கீகரித்துக் கொண்டு, தாழ்த்தப்
பட்டவர்களின் தனித் தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்ததனாலும்
உண்டான பலன் என்ன என்பதை மாத்திரம் பார்ப்போம்.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வகுப்புப் பிரச்சினைத் தீர்ப்பின்படி,
தாழ்த்தப்பட்டோர்க்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மகாணச் சட்டசபை
களுக்கும் ஏற்பட்டிருந்த மொத்த ஸ்தானங்கள் எழுபத்தொன்று. இந்த எழுபத்
தொன்று ஸ்தானங்களுக்கும் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் அனை
வரும், அந்த வகுப்பினரின் ஓட்டுக்களாலேயே தெரிந்தெடுக்கப் படுவார்.
களாகையினால், அவர்கள் யாருடைய தயவுக்கும், தாட்சண்யத்திற்கும்
கட்டுப்படாமல் தங்கள் சமூக நன்மைக்கு உண்மையாகவும், உறுதியாகவும்,
தைரியமாகவும் போராடலாம். தங்கள் சமூகத்திற்கு எதிராக உள்ள வேறு
கூட்டத்தாரின் தயவில் தேர்ந்தெடுக்கப்பட்டு,
அவர்களுடைய தயவு தாட்
சண்யங்களுக்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான
பிரதிநிதிகளைவிட, யாருடைய தயவையும் பொருட்படுத்தாமல் சுயேச்சை
யாகத் தமது சமூக உரிமைக்குப் போராடும் நிலையில் உள்ள சில பிரதிநிதிகள்
இருந்தாலும் போதும் என்பதே நமது அபிப்பிராயம்.இதனாலேயே நாம் ஆதி
முதல் தாழ்த்தப்பட்டார்க்குத் தனித்தொகுதித் தேர்தல் முறைதான் வேண்டு
மென்றும் கூறி வந்தோம். அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே
கூறிவந்தார்கள். ஆனால் திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்ததன் பலனாகத்
தாழ்த்தப்பட்டார்க்கு ஏற்பட்டிருந்த இந்தச் செளகரியம் பலிகொடுக்கப்பட்டு
விட்டது.
101
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இனி இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பற்றிச் சிறிது
ஆராய்வோம். இவ்வொப்பந்தப்படி, இந்தியா முழுவதுமுள்ள எல்லா
மாகாண சட்டசபைகளுக்கும், பொதுத் தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்
படும் மொத்த ஸ்தானங்களில் எண்ணிக்கை நூற்றுநாற்பத்தெட்டாகும். இந்த
நூற்று நாற்பத்தெட்டு ஸ்தானங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நூற்று
நாற்பத்தெட்டு பிரதிநிதிகளும் இந்துக்கள் ஓட்டினாலும் தாழ்த்தப்பட்டார்
களின் ஓட்டினாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதில் ஒவ்வொரு
ஸ்தானங்களுக்கும் அபேட்சகராக நான்கு பிரதிநிதிகளே முன்வரலாம். இந்த
நான்கு பிரதிநிதிகளும் முதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஓட்டர்களால்
மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு அவர்கள் பொதுத் தொகுதியில்
போட்டி போட வேண்டும்.
இவ்வாறு தாழ்த்தப்பட்டாருக்கு முன்னிருந்ததைக் காட்டிலும் இரண்டு
பங்கு ஸ்தானங்களுக்கு மேல் அதிகமான ஸ்தானங்கள் ஏற்பட்டு விட்ட
தனாலும் பூர்வாங்கத் தேர்தல் முறை ஏற்பட்டிருப்பதனாலும் தனித்
தொகுதியை விட அதிக செளகரியம் ஏற்பட்டு விட்டதென்றும் தேசீயப்
பத்திரிகைகள் என்பன வெல்லாம் ஒரேயடியாக ஆர்ப்பாட்டம் புரிகின்றன.
ஆனால் உண்மையில் எவ்வளவு ஸ்தானங்கள் அதிகப்பட்டாலும் இதனால்
தனித்தொகுதியை விட அச்சமூகத்திற்கு ஒன்றும் நன்மையுண்டாகி விட
வழியில்லை என்பதில் சந்தேகமில்லை. டாக்டர். அம்பெட்காரின் பிடிவாதத்
தினால் பூர்வாங்கத் தேர்தல் முறை ஏற்பட்டிருப்பது ஒன்றுதான், சிலராவது
அச்சமூகத்தினரின் நம்பிக்கைக்குப் பாத்திரமுள்ள பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்
கப்பட்டலாம் என்று எண்ண இடமிருக்கிறது.
தாழ்த்தப்பட்டவர்களில் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை
அளித்தாலும் கூட, உயர்ந்த ஜாதி இந்துக்களின் ஓட்டர்கள் தொகையே
அதிகமாக இருக்கும். இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களாலேயே பூர்வாங்க
மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுத் தொகுதியில் நிறுத்தப்படும் நான்கு
அபேட்சகர்களில் யார் உயர்ந்த ஜாதி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திர
மாயிருக்கிறார்களோ அவர்கள் தான் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட
முடியும். முற்றும் தாழ்த்தப்பட்டார் உரிமைக்கு அஞ்சாமல் போராடும்.
பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியாது. உதாரணமாக, ஒரு ஸ்தானத்திற்கு
நடைபெற வேண்டிய பூர்வாங்கத் தேர்தலில், ராவ் பகதூர், சீனிவாசன், டாக்டர்
அம்பெட்கார், திரு. வி. ஐ. முனிசாமி பிள்ளை, ஒரு வெற்றிவேலு இன்னுஞ்
சிலர் போட்டிப் போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவர்களில்
முதல் மூவரும், அவ்வகுப்பினரின் மெஜாரிட்டியான ஓட்டர்களால் தெரிந்
தெடுக்கப்படுவார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
நான்காவதாக, உள்ள வெற்றிவேலு என்பவரிடம் அச்சமூக மக்களுக்கு
நம்பிக்கையில்லாவிட்டாலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த பெரிய மிராசு
தார்கள், அய்யர், அய்யங்கார்கள் முதலியவர்களின் முயற்சியால் அவர்.
குடி அரசு
- 1932 (2)
102
நான்காவது அபேட்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று வைத்துக்
கொள்ளுவோம். இவ்வாறு பூர்வாங்கத் தேர்தலில், தாழ்த்தப்பட்ட சமூகத்
தாரின் முழு ஆதரவோடும் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராவ்
பகதூர் சீனிவாசன், டாக்டர் அம்பெட்கார் திரு. வி. ஐ. முனிசாமி பிள்ளை
ஆகியவர்கள் இந்து மிராசுதாரர்கள் அய்யர், அய்யங்கார்கள் ஆகியவர்.
களின் சொல்லுக்குத் தாளம் போடும் வெற்றிவேலு ஆகிய நால்வரும் ஒரு
ஸ்தானத்திற்கும் போட்டி போடுவார்களானால் இவர்களில் யார் தேர்ந்தெடுக்
கப்படுவார்கள் என்று கேட்கின்றோம். பணக்கார மிராசுதார்களின் சொல்லை
யும், அய்யர், அய்யங்கார்களின் சொல்லையும், கைகட்டி, வாய்பொத்திக்
குனிந்து நின்று கேட்டு அதன்படி நடக்கத் தயாராக இருக்கும் வெற்றிவேலு
என்பவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை யார் மறுக்க முடியும்? ஆகவே
இத்தகைய பிரதிநிதிகளாகவே சட்டசபைக்கு வந்து சேர்வார்களாயின் அவர்.
களால் அச்சமூகத்திற்கு என்ன நன்மை உண்டாகிவிட முடியும்? இத்தகைய
பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தால் என்ன?
இப்படி யில்லாமல் பூர்வாங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும்
நான்கு பிரதிநிதிகளும் அச்சமூகத்தின் நம்பிக்கைக்கும் பாத்திரமுடைய
பிரதிநிதிகளாகவே தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் பொதுத்தொகுதியில்
போட்டிப் போட்டு வெற்றி பெறும் பிரதிநிதி அச்சமூகத்தின் உண்மையான
பிரதிநிதியாக இருக்க முடியும். இவ்வாறே இந்த 148 ஸ்தானங்களுக்கும்
பூர்வாங்கத் தேர்தல் நடத்தினாலும் அவைகளுக்கு அபேட்சகர்களாக நின்று
வெற்றி பெறும் 592 அபேட்சகர்களும் அச்சமூகத்தின் நம்பிக்கைக்குப்
பாத்திரமுடையவர்களாகத்தான் இருப்பார்களென்று கூற முடியாது. ஆகை
யால் புதிய தேர்தல் முறையின்படி, தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் உண்மை
யான பிரதிநிதிகளாக ஒரு சில பிரதிநிதிகளாவது தேர்ந் தெடுக்கப்படு
கிறார்களோ இல்லையோ என்பது சந்தேகம் என்றுதான் கூறுவோம். இக்
காரணங்களால் தான் தனித் தொகுதி தேர்தல் முறையைவிட கூட்டுத் தொகுதி
தேர்தல் முறை எந்த வகையினும் சிறந்ததல்ல என்று கூறுகின்றோம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கூறுகின்றார்கள்.
ஆயினும் பூர்வாங்கத் தேர்தல் முறையை ஏற்படுத்தியிருப்பதன் மூலம்.
உண்மையுடன் போராடக் கூடிய சில பிரதிநிதிகளாவது சட்டசபைக்கு
வரக்கூடும் என்ற நம்பிக்கைக்கு இடமாக இவ்வொப்பந்த மாவது ஏற்பட்டது
பற்றிச் சிறிது ஆறுதலடைகின்றோம்.
இதன் மூலம் திரு. காந்தியவர்களின்
பிராணத்தியாகத்தைத் தடுத்த டாக்டர் அம்பெத்கார், சர். சாப்ரூ, திரு. ஜெயகர்.
முதலியவர்களின் முயற்சியையும் பாராட்டுகின்றோம். ஆனால் திரு.
காந்தியவர்களின் பட்டினியின் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சட்டசபை
பிரதிநிதித்துவத்தில் ஏற்பட்டிருந்த நன்மையில் முக்கால் பாகம் நாசமாக்கப்
பட்டது என்பதையும் கூறாமல் இருக்க முடியவில்லை.
103
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அடுத்தபடியாக இவ்வுண்ணாவிரதத்தின் மூலம் ஏற்பட்டபலன் என்ன
என்பதைப் பார்ப்போம். திரு. காந்தியவர்கள் எதைச் செய்தாலும், எதைப்
பேசினாலும் “கடவுள் கட்டளை” “கடவுள் அபிப்பிராயம்” என்ற பாடம்
படிக்கின்றனவர் என்பது நமக்கு புதிய விஷயமல்ல. நமது நாட்டில் வாழும்
குருட்டு நம்பிக்கையுள்ள பாமர மக்களையெல்லாம் ஏமாற்ற வேண்டு
மானால், “கடவுளை” யும். “மதத்தையும் இழுத்தால் தான் முடியும் என்பது
திரு. காந்தியவர்களுக்கு நன்றாய் தெரிந்த விஷயம்.மனிதனுடைய செய்கைக்
கும், அபிப்பிராயத்திற்கும் மதிப்பு கொடுக்கும் அறிவு இன்னும் நமது
மக்களுக்கு உண்டாகவில்லை.ஆகையால் “எனது செய்கை” “எனது அபிப்
பிராயம்” என்று சொல்லி யார் எதைச் செய்தாலும், சொன்னாலும், அவைகள்
எவ்வளவு உண்மையாயிருந்தாலும், நன்மையுண்டாக்கக் கூடியவைகளா
யிருந்தாலும், அவைகளுக்கு நமது தேசத்தில் கெளரவம் ஏற்படுவதில்லை.
ஆகையால் தான் திரு. காந்தியார் எதையும் கடவுள் தலையில் போட்டுப்
பாமர மக்களை ஏமாற்றுகிறார் என்பதில் கடுகளவு சந்தேகமில்லை. ஆகவே,
வழக்கப்படி உண்ணா விரதத்திற்கும் “கடவுளை” இழுத்து விட்டார்.
அன்றியும், தமது உண்ணாவிரதத்தின் நோக்கமும் தனித் தொகுதியை
ரத்து செய்வது மாத்திரமன்று, தாழ்த்தப்பட்டார்க்குத் தற்போதுள்ள சமூகத்
தடைகளைவயெல்லாம் ஒழித்து அவர்களையும் இந்து சமூகத்துடன் ஒன்றுபடச்
செய்ய வேண்டும் என்று நன்றாக வற்புறுத்திக் கூறினார். இதனால், பலர்.
அச்சமூகத்தார்க்குக் கோயில் பிரவேச உரிமை அளிக்கவும், மற்றும் குளம்,
கிணறு, பள்ளிக் கூடம் முதலியவைகளில் சமஉரிமை அளிக்கவும் முயற்சி
செய்தனர். இம்முயற்சியும் தீவிரமாக நடந்தது வடநாட்டிலேயாகும். தென்
னாட்டில் அவ்வளவு மும்முரமாக நடைபெறவில்லை. ஆனால் பல
விடங்களில் உபவாசங்களும், கோயில்களில் பூசைகளும், கூட்டங்களில்
பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. இவைகளின் மூலம் பாமர மக்களை,
“உபவாசம்” “பூசை” “பிரார்த்தனை” முதலியவைகளில் தெய்வத் தன்மை
யிருப்பதாகவும், அவைகளின் மூலம் காரிய சித்திகள் உண்டு என்பதாகவும்
நம்பச் செய்யப்பட்டன. இத்தகைய முட்டாள் தனந்தான் நமது மக்களை:
இன்று சோம்பேறிகளாகவும், மூடர்களாகவும், அடிமைகளாகவும் ஆக்கி
வைத்திருக்கின்றன என்பதை அறிந்திருந்தும். காந்தி பக்தர்கள் இப்பிரசாரம்
பண்ணியது அயோக்கியத்தனத்தைத் தவிர வேறல்ல என்றே கூறுவோம்.
ஆகவே திரு. காந்தியின் விரதத்தால் நமது நாட்டுக்குக் கிடைத்த இரண்டா
வது பலன் “உபவாசம்” “பூசை” “பிரார்த்தனை” என்னும் சோம்பேரித்
தனப்பிரச்சாரமும், முட்டாள் தனப்பிரச்சாரமும், குருட்டு நம்பிக்கைப் பிரச்
சாரமும் செய்யப்பட்டதுதான்.
திரு. காந்தியின் விருப்பத்தின் படியும், திரு.ராஜகோபாலாச்சாரியின்
அறிக்கையின் படியும், உபவாசமும், பிரார்த்தனையும் செய்த நமது நாட்டுப்
பார்ப்பனர்களில் யாராவது தீண்டாதார்க்கு என்ன உபகாரம் பண்ணினார்கள்
குடி அரசு - 1932 @
104.
என்று கேட்கின்றோம். திரு.காந்தி இந்து மதத்தைக் காப்பாற்றப் பாடுபடுகிறார்.
என்னும் எண்ணத்துடன் அவர் பொருட்டு உபவாசமும் பிரார்த்தனையும்
செய்தார்களேயொழிய தீண்டாதார் துயரம் அகல வேண்டும் என்னும்
கருத்துடன் இவைகளைச் செய்த பார்ப்பனர் ஒருவரேனும் நமது நாட்டில்
உண்டா?
தனித் தொகுதியை ஒழிக்கும் விஷயத்தில் உயிரைவிடத் துணிந்த திரு.
காந்தியின் பொருட்டு நாடெங்கும், பத்திரிகைகளும் காந்தி பக்தர்களும்
பிரசாரமும், விளம்பரமும் பண்ணியதில் பதினாயிரத்தில் ஒரு பங்காவது,
தீண்டாமையை ஒழிக்க உண்ணாவிரத மிருக்கும் திரு. கேளப்பன் பொருட்டுச்
செய்யப்படுகிறதா என்று பாருங்கள். குருவாயூர் கோயிலில் தாழ்த்தப்பட்
டோரை அனுமதித்தாலொழிய தனது உண்ணா விரதத்தை நிறுத்துவ
தில்லையென்று சென்ற 20 -9 - 32 முதல் திரு. கேளப்பன் அவர்கள் உண்ணா
விரதமிருந்து வருகிறார். இதற்காக எத்தனை பேர், உபவாசமும் பிரார்த்
தனையும் செய்யப் போகிறார்கள்? இதைக் கொண்டே தீண்டாமையை
உண்மையாக விலக்கும் விஷயத்தில் நமது நாட்டு உயர்ந்த சாதி மக்களுக்கு
எவ்வளவு கவலையிருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் திரு. காந்தியவர்கள், உண்ணா விரதத்தை முடித்தபின்
கூறியுள்ள அபிப்பிராயத்திலும் அதற்குமுன் குறிப்பிட்டது போலவே,
“தீண்டாமையை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் மும்முரமாக வேலை செய்து
ஒழிக்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரத்தை கைகொள்ளுவேன்” என்று
கூறியிருக்கிறார்.
இவ்வாறு உண்ணாவிரதமிருப்பாரானால், அப்பொழுது, தற்சமயம்,
திரு. கேளப்பன் அவர்களின் உண்ணாவிரதத்தின் பொருட்டு நமது நாட்டு
பார்ப்பனர்களும், காந்தி பக்தர்களும் எவ்வளவு கவலை எடுத்துக் கொள்ளு
கிறார்களோ அவ்வளவு கவலைதான் எடுத்து கொள்ளுவார்கள் என்று
உறுதியாகக் கூறுகின்றோம்.
நாம் சென்ற வாரத்தில் குறிப்பிட்டிருந்தது போலவே ஒரு பார்ப்பன
ராவது திரு. காந்தியிடம் அனுதாபங் காட்டமாட்டார் என்பது உண்மை.
இப்பொழுதே தீண்டாமை விலக்குக்கு எதிர்ப் பிரசாரங்களும் கண்டனங்
களும் புறப்பட்டு விட்டன இன்னும் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆகையால் இனி திரு. காந்தியை எந்த பார்ப்பனரும் லட்சியம் பண்ண
மாட்டார்கள் என்பது நிச்சயம்.
ஆகையால் உண்மையிலேயே தீண்டாதார்க்கு விமோசனம் உண்டாக
வேண்டுமானால் அவர்கள் இந்துக்களை நம்பியிருப்பதனாலாவது
அவர்களோடு சேர்ந்திப்பதனாலாவது முடியாது என்பதை அறிய வேண்டும்.
105
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கேவலம் கோயில் பிரவேசத்தால் மாத்திரம் அவர்கள் நன்மை
யடைந்து விட முடியாது. கோயில்களின் மேல் பக்தி கொண்டு நம்பிக்கை.
வைத்துக் கொண்டு அவைகளில் பிரவேசிக்கும் உரிமை மாத்திரம் பெறுவார்.
களாயின் நன்மைக்குப்பதிலாகத் தற்பொழுது இருப்பதை விட அவர்களுக்கு
இன்னும் அதிக தீமையையே உண்டாகும் என்பதில் தடையில்லை கொஞ்சம்
நஞ்சம் சம்பாதிக்கும் பொருளையும் கோயில் உற்சவங்களுக்குச் செல்லுவ
தன் மூலமும் “அர்ச்சனைகள்” 'பூஜைகள்” என்பவைகளின் பெயரால்
செலவழிப்பதன் மூலமும் இன்னும் வறுமையடையவார்களென்பது
திண்ணம்.
ஆகையால் “பொதுச் சொத்தாகிய கோயிலில் நமக்கும் செல்ல
உரிமையிருக்க வேண்டும்” என்னும் எண்ணத்துடன் மாத்திரம் கோயில்
பிரவேசத்தை ஆதரிக்க வேண்டும் என்றுதான் நாம் தாழ்த்தப்பட்ட சமுகத்
தார்க்கு எச்சரிக்கை செய்கின்றோம்.
நிற்க திரு. காந்தியின் உண்ணாவிரதத்தின் மூலம் தீண்டாமை விலக்கு
விஷயத்தில் வெற்றி ஏற்பட்டதா என்று பார்த்தால் நமது தமிழ்நாட்டை
பொறுத்த வரையிலும் ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி
யிருக்கிறது.
இனி திரு. காந்தியின் வெற்றி என்று எல்லோரும் பிரசாரம் பண்ணு
வதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா? என்று பார்ப்போம். அவர் இதற்கு முன்
தாழ்த்தப்பட்டார்களும் பொதுத் தொகுதியின் மூலம் போட்டிபோட்டுச் சட்ட
சபைகளுக்கு வரவேண்டும் என்று கூறினாரே யொழிய பொதுத் தொகுதியில்
ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதைக் கூட ஒப்புக்
கொள்ளவில்லை. ஆனால்
இப்பொழுதோ, பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதையும்
அதற்கும் கூடத் தனித் தொகுதித் தேர்தல் போலவே பூர்வாங்கத் தேர்தல்
நடத்தும் முறையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகவே இதில் திரு. காந்தியின்
கொள்கைக்கு வெற்றி ஏதாவது இருக்கிறதா? என்று பாருங்கள். தனித்
தொகுதித் தேர்தல் முறையை ரத்து செய்த வெற்றியை அவர் கடவுள்
சக்தியால் பெற்றார் “ஆத்ம சக்தி”யால் பெற்றார் என்று கூறுவதும் புரட்டு
என்று சொல்வோம். “கடவுள் சக்தி”யும் “ஆத்ம சக்தியும்” இருந்தால் இவர்:
ஏன் பட்டினி கிடந்து பிடிவாதம் பண்ண வேண்டும்? பட்டினி கிடந்து பிடி
வாதம் பண்ணினால் தான் “கடவுள் சக்தியும் “ஆத்ம சக்தி”யும் தன்னுடைய
அதிகாரத்தைச் செலுத்துமா? ஆகையால் “கடவுள் சக்தி” “ஆத்ம சக்தி”
என்று பிரசாரம் பண்ணுவதெல்லாம் மக்களை ஏமாற்ற வேண்டிச் செய்யப்
படும் பிரசாரம் என்றே சொல்லுவோம்.
ஆகையால் திரு. காந்தியின் உண்ணாவிரதத்தால் நமது நாட்டுக்கு
ஏற்பட்டபலன் தீண்டாதார்களின் சட்டசபைப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்
பட்டதும் “உபவாசம்”, “பிரார்த்தனை” முதலிய மூட நம்பிக்கைகளைப்
“பிரசாரம்” பண்ணப்பட்டதும் தான் என்று அறியலாம்.
குடி அரசு - தலையங்கம் - 02.10.1932.
குடி அரசு
- 1932 (2)
106
மண்ணுருண்டை மானவியாக்கன்
திரு. காந்தியார் அவர்கள் தீண்டாதார்க்கு ஏற்பட்டிருந்த தனித்
தொகுதியை ஒழிக்கும் பொருட்டுச் சில தினங்களுக்கு முன் உண்ணா
விரதமிருக்கத் தொடங்கியதும், அதன் பின் தலைவர்கள் என்பவர்கள்
பம்பாயில் சமரச மகாநாடு கூட்டியதும், அதில் தீண்டாதாரின் தனித் தொகுதி
முறை பலிகொடுக்கப்பட்டதும் பழய சங்கதிகளாகி விட்டனவென்று கூற
முடியாது.இவ்வாறு தலைவர்களின் மகாநாட்டைக் கூட்டி ஒரு சமரச முடிவை
யுண்டாக்கப் பாடுபட்டவர்களில் திரு. பண்டித மாளவியாவே முதன்மை
யானவர் என்று எங்கும் புகழப்பட்டு வருகிறது. தனித்தொகுதியை ஒழிக்க
விரதமிருந்த திரு. காந்தியாரோ தனித் தொகுதியை ஒழிப்பது மட்டும்
போதாது, தாழ்த்தப் பட்டார்க்கு “ஜாதி இந்துக்களுக்கு இருந்து வரும் சகல
உரிமைகளும் கொடுக்கப்படவேண்டும்” என்று கூறினார். ஆகையால்
தீண்டாதார் தலைவர்கள் தனித் தொகுதியை விட்டுக் கொடுத்துப் பொதுத்
தொகுதித் தேர்தல் முறையை ஒப்புக் கொள்ளும்படி செய்வதற்காக நாடெங்கு
முள்ள காங்கிரஸ் வாதிகளும், சீர்திருத்தவாதிகளும் தீண்டாமையை விலக்கு
வதற்கு முயற்சி செய்வதாகப் பாவனைகள் செய்தனர். வடநாட்டில் பல
கோயில்களைத் திறந்து விட்டு விட்டதாகவும் சில இடங்களில் தீண்டாத
வகுப்பினருடன் உயர்ந்த வகுப்பு இந்துக்கள் சமபந்தி போஜனம் செய்த
தாகவும், தண்ணீர் அருந்தியதாகவும், தின்பண்டம் தின்றதாகவும் செய்திகள்
வெளிவந்தன.
தீண்டாதார்க்குப் பூணூல் போட்டு தீட்சை செய்வித்து அவர்கள் மீது
ஒட்டிக் கொண்டிருக்கும் “சண்டாளத்துவ”த்தைப் போக்க முயற்சித்த திரு.
மாளவியா புரோகிதர், ஒரு நிபந்தனையுமில்லாமல் தன்னுடைய வீட்டிற்குத்
தீண்டாதாரை அழைத்துச் சென்றதாகவும் தனது வீட்டிலுள்ள சொந்தக்
கோயிலைத் தீண்டாதார்க்காகத் திறந்து விட்டதாகவும் பத்திரிகைகளில்
வெளிவந்தன. வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளையும்,
புராணங்களையும் உருப்போட்டு உருப்போட்டு மூளையில் சுரணையே
இல்லாமல் இருக்கும் மரக்கட்டை வைதீகர்களுக்கெல்லாம் தலைவராக
விளங்கும் திரு. பண்டித மாளவியாவே பூணூல் போடுதல், தீக்ஷ செய்
வித்தல், கங்கையில் குளிப்பாட்டுதல் ஆகிய ஒரு சடங்குமில்லாமலேயே
தீண்டாமையை ஒழித்துவிட்டார் என்னும் செய்தியைக் கேட்டவுடன்
பத்திரிகைகளெல்லாம் அவரை அளவு கடந்து புகழத் தொடங்கின; வைதீகப்
107
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பார்ப்பனர்கள் ஒன்றும் சொல்லுவதற்கு வழியில்லாமல் திகைப்படைந்தனர்.
ஆனால் நாம் மாத்திரம், இவைகளெல்லாம், தீண்டாதார்களை
ஏமாற்றித் தனித் தொகுதித் தேர்தல் முறையை ஒழிப்பதற்காகச் செய்யப்படும்
கண்கட்டி வித்தைகள் என்றே கூறிவந்தோம்.
இந்து மதத்தை அப்படியே வைத்துக் கொண்டு இந்துமத
சாஸ்திரங்களை அப்படியே வைத்துக் கொண்டு தீண்டாமையை ஒழிக்க
வேண்டும் என்று கூறுவது சுத்த அயோக்கியத்தனம் என்று சொல்லிக்
கொண்டே வந்தோம். இத்தகைய நமது அபிப்பிராயம் சிறிதும் குற்றமுள்ள
தல்ல என்பதைக் காட்ட திரு. மாளவியாவைப் பற்றித் தற்போது வெளி
வந்திருக்கும் செய்தி ஒன்றே போதுமானதாகும்.
“வைதீக மாளவியா தீண்டாமையை ஒழிப்பதற்கு முனைந்து விட்டார்
என்று புகழப்பட்ட வருணாச்சிரம தரும மாளவியா, களிமண்ணும் கங்கா
ஜலமும் எடுத்துக் கொண்டு இங்கிலாந்துக்குக் கப்பலேறிச் சென்ற மாளவியா,
பம்பாயைச் சேர்ந்த கல்பதேவி என்னுமிடத்தில் சென்ற 2 - 10 -39ல் ஒரு
கூட்டத்தில் பேசும்போது “பழய கருப்பனே கருப்பன்” என்னும் சங்கதிக்கு
வந்து விட்டார். அவர்,
“சம்பந்தி போஜனம், கலப்புமணம் இவைகளைப் பொறுத்த
வரையில் ஜாதிக் கட்டுப்பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான்
ஒப்புக் கொள்ள முடியாது. தனிப்பட்ட வகையினாலோ, குடும்ப
சம்பந்தத்தினாலோ இம்முறைகளை அனுசரிக்க முயற்சிப்பது
முடியாது காரியம்”
என்று பேசியுள்ளார். இதிலிருந்த திரு.மாளவியா புரோகிதரின் மனப்பான்மை
என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஜாதிக் கட்டுப்பாடு அதாவது வருணாச்சிரம தர்மம் இருக்கும்
வரையிலும் தீண்டாமை ஒழியும் என்று பகுத்தறியும் மூளையையுடைய
எவராவது ஒப்புக் கொள்ள முடியுமா? இன்று நமது நாட்டு மக்கள் ஒருவரை:
ஒருவர் துவேஷிப்பதற்கும், ஒரு வகுப்பினர்க்கு மற்றொரு வகுப்பினர்.
கொடுமை செய்வதற்கும் காரணமாயிருப்பது பாழும் ஜாதிக்கட்டுப்பாடு,
அதாவது வருணாச்சிரம தருமம் என்பதை கடுகளவு புத்தியுள்ளவர்கள் கூட
மறுக்க முன் வரமாட்டார்களே. உயர்ஜாதி இந்துக்கள் தாம் வசிக்கும் தெருவில்
தாழ்த்தப்பட்ட மக்கள் நடந்தால் தீட்டுப்பட்டுவிடும் என்று நினைப்பது ஜாதி
அகங்காரமல்லவா? அவர்கள் தம்முடன் சமத்துவமாக உட்காரக் கூடாதென்று
நினைப்பதும், பள்ளிக்கூடங்கள், காப்பி கிளப்புகள் முதலியவைகளில்
தம்முடன் சமமாக உட்கார்ந்து படிக்கவோ சாப்பிடவோ இடந்தராமலிருப்
பதற்கும் காரணம் அர்த்தமற்ற ஜாதிக் கட்டுப்பாடு அல்லவா? ஆகையால்
குடி அரசு
- 1932 (2)
108
ஜாதிக் கடுப்பாட்டை வைத்துக் கொண்டால் ஜாதி உயர்வு தாழ்வை அப்படியே
வைத்துக் கொண்டால் வருணச்சிரம தருமம் என்னும் அர்த்தமற்ற
கொள்கையை ஒப்புக் கொண்டால் எப்படித் தீண்டாமை அடியோடு போக
முடியும் என்று யோசனை செய்து பார்க்கும் படி கூறுகின்றோம்.
உண்மையிலேயே தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் சாதி
வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். சாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால்
சாதிக்கட்டுப்பாடும், வருணாச்சிரம தருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்
பட்டாக வேண்டும். இவைகளை நிறைவேற்றச் சமபந்தி போஜனமும் கலப்பு
மணமும் எங்கும் நடைபெற வேண்டும். தீண்டாதார்கள் மக்கள் எல்லாம்
வைதீகப் பார்ப்பனர்களின் வீட்டு மாப்பிள்ளைகளாகவும், மருமக்கள்
களாகவும் வேண்டும். வைதீகப் பார்ப்பனர்களுடைய மக்களும் தீண்டாதார்.
கள் வீட்டு மாப்பிள்ளைகளாகவும் மருமக்கள்களாகவும் ஆக வேண்டும்.
இவ்வாறே ஒவ்வொரு சாதிகளும் தமக்கு மேற்பட்ட சாதிகளுடனும்,
கீழ்ப்பட்ட சாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். இப்படியே “பஞ்சமர்”
முதல் “பார்ப்பனர்” வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும்
வரையிலும் ஜாதிகள் ஒழியாது தீண்டாமையும் ஒழியாது.
இன்று இக்காரியங்களுக்குத் தடையாய் இருப்பன இந்து மதமும்,
அதில் உள்ள வேத, புராண, இதிகாச சாஸ்திரங்களும், அவைகளைப் படித்து
விட்டுச் சொந்த புத்தியில்லாதிருக்கும் திரு மாளவியா போன்ற மண்ணு
ருண்டைகளுமே யாகும்.
ஆனால் இந்த திரு. மாளவியா பண்டிதர், தீண்டாதார்களுக்குக்
கோவில் பிரவேசம் அளிக்க வேண்டும் என்றும், குளம், கிணறு, நடைபாதை,
பள்ளிக்கூடம் முதலியவைகளில் சமத்துவம் அளிக்க வேண்டும் என்று
மாத்திரம் பேசுகிறார். இதன் பொருட்டுத் தென்னாட்டிற்கும் பிரசாரம்
பண்ணவரப் போகிறாராம்.
அவர் தென்னாட்டிற்கு வருவாரானால் கட்டாயம்
அவமானப்படுவார் என்று மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறோம்.
சாதிகள் ஒழியாமல் - சாதிகட்டுப்பாடுகள் அழியாமல்- வருணாச்சிரம
தருமம் மாளாமல் - திரு. மாளவியா சொல்லும் தீண்டாமை ஒழியப் போவ
தில்லை; ஒரு சமயம் சட்டத்தின் மூலம் கோயில் பிரவேசம் மற்றும் பொது
ஸ்தாபனங்களில் சம உரிமை முதலியவைகளை ஏற்படுத்தாமலும் அதனால்
தாழ்த்தப்பட்டார்க்கு எள்ளத்தனையும் நலங்கிடைக்கப் போவதில்லை.
உயர்ந்த வகுப்பினர் என்பவர்கள் வாயில்லாப் பூச்சிகளாகிய அவர்களை
இன்னும் ஈவு இரக்கமின்றிக் கொடுமைப் படுத்தவே முன்வருவார்கள் என்பது
திண்ணம்.
தீண்டாமை ஒழிவதற்காக “இன்னொரு முறை பட்டினிகிடக்கப்
போகிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் திரு. காந்தியடிகளும் இதே
109
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கொள்கையுடையவர் தான் என்பதை நாம் இப்பொழுது கூறவேண்டிய
தில்லை. நமது “குடி அரசு” வாசகர்களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த
விஷயமாகும்.
ஆகையால்தான்
திரு. காந்தியார், திரு. மாளவியா போன்ற
வர்களின் ஆதிக்கத்தில் உள்ள “காங்கிரஸ்” சபையில் மதப் பாதுகாப்பையும்
ஜாதிப் பாதுகாப்பையும், சாஸ்திரப் பாதுகாப்பையும், நாகரீகப் பாதுகாப்பை
யும் திட்டங்களாக அமைத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும்.
முன்பே பல தடவைகள் விளக்கிக் கூறப்பட்ட விஷயமாகும். ஆகையால்
தற்போதைய கொள்கையையுடைய காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கும் வரை:
யிலும் திரு. காந்தியார், திரு.பண்டித மாளவியா போன்றவர்கள் காங்கிரசைக்.
கைப்பற்றிக் கொண்டிருக்கும் வரையிலும்
- ஜாதியோ, வருணாச்சிரம
தருமமோ; ஜாதிக் கட்டுப்பாடோ, தீண்டாமையையோ ஒழிவதற்குச் சிறிதும்
வழியேயில்லை யென்று சத்தியமாகக் கூறுவோம்.
இதுநிற்க, இனி, திரு.மாளவியா அவர்களும்
திரு. காந்தி அவர்களும்
சொல்லுகிறபடியாவது, கோயில்களிலும் குளம் கிணறு நடைபாதை பள்ளிக்
கூடம் முதலியவைகளிலுமாவது தீண்டாதார்க்குச் சமவுரிமையளிக்க நமது
நாட்டு வைதிகர்கள் சம்மதிப்பார்களா என்று கேட்கின்றோம். தமிழ் நாட்டில்,
இப்பொழுதே எங்கும் பகுத்தறிவற்ற மண்ணுருண்டைக் கூட்டத்தார், “மதம்
போச்சு, சாஸ்திரம் போச்சு, பழக்க வழக்கம் போச்சு” என்று கூச்சலிட ஆரம்
பித்து விட்டார்கள்.
சில தினங் களுக்கு முன் 2 - 10 - 32) தஞ்சையில் வாயள
வில் வைதீகம் பேசும் வக்கீல் பார்ப்பனர்கள் கூடிய வருணாச்சிரம தர்மக்
கூட்டத்தில் தீண்டாதார்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும் விஷயத்தைக்
கண்டித்துத் தீர்மானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அக்கூட்டத்தினர்,
கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூரில் திரு. கேளப்பன் அவர்கள்.
உண்ணாவிரதம் இருந்ததைக் கண்டித்தும், கள்ளிக் கோட்டை சாமொரின்
அவர்கள் குருவாயூரில் கோயிலைத் தீண்டாதார்களுக்குத் திறந்து விடா
மலிருந்த செய்கையைப் பாராட்டியும் தீண்டாமையை ஒழிக்க முயலுவதும்,
கோயில் பிரவேசமளிக்க முயலுவதும் இந்து மத ஆகம, வேத, புராண:
சாஸ்திரங்களுக்குப் பொருத்தமுடையதல்ல வென்றும் தீர்மானங்கள் நிறை
வேற்றியிருக்கின்றார்கள். இன்னும் கோயில் பிரவேசத்தின் பொருட்டுச்
சென்னைச் சட்டசபையில் சட்டம் நிறைவேற்ற அனுமதியளிக்கக் கூடாது
என்று கவர்னர் வைசிராய் முதலியவர்களை வேண்டிக் கொள்ளுவதாகவும்
தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.
மற்றொரு வைதீகராகிய திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார்
என்பவர் தீண்டாமை ஒழிக்கும் விஷயத்தில் அரசாங்கமே கவனம்
செலுத்திவரும் சுதேச முஸ்லிம் சமஸ்தானமாகிய ஹைதராபாத்திற்குப் போய்
தீண்டாமை விலக்குக்கு எதிர் பிரசாரம் பண்ணுகிறார். ஹைதராபாத்தில்
சென்ற 30 - 9 - 32ல் கூடிய வக்கீல்களில் மகாநாட்டில், திரு. ராஜா பகதூர்.
கிருஷ்ணமாச்சாரியார் தலைமை வகித்துப் பேசும் போது,
குடி அரசு - 1932 @
110
“சமூக, மத சம்பந்தமான விஷயங்களில் அரசாங்கத்தார்
தலையிடக்கூடாது”
என்றும்,
“இந்து மதமும், இஸ்லாம் மதமும் கடவுளால் வெளியிடப்
பட்ட மதமாதலால் இவைகளில் சட்டத்தைப் புகுத்துவது சரியாகாது”
என்றும் வைதீகப்பிரசாரம் பண்ணியிருக்கிறார். திரு. ஆச்சாரியார் இந்து
மதத்துடன் மதத்தையும் சேர்த்துக் கொண்டு பேசியது முஸ்லிம் மதத்தைப்
பற்றி அவருக்குள்ள கவலையைக் காட்டவா? அல்லது ஹைதராபாத்
அரசாங்கத்தாரை ஏமாற்றவா? என்று கேட்கின்றோம்.
இன்னும் வைதீக பார்ப்பனர்களுடைய பிடிவாதத்தை
அறிய வேண்டு
மானால் சில நாட்களுக்கு முன் ஒரு பிரபலமான தமிழ் தினசரி ஒன்றில்
பார்ப்பன கனபாடி ஒருவர் எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் உள்ள சில
விஷயங்களைக் கவனித்தால் உண்மை விளங்கும். அவை
“ஒரு வகுப்பாரது நோக்கத்தை நிறைவேற்ற இன்னொரு
வகுப்பாரது உணர்ச்சி பாதிக்கப் படலாகாது. நமது தேசத்தவர்.
“ஹிந்துக்கள்” என ஒரு வழிப்பாடாய் அழைக்கப்பட்டாலும்,
வெவ்வேறு வகுப்பிற்குரியவாழ்க்கையையும் உடையவர்களாகவே
இருக்கின்றனர். ஒரு வகுப்பாரைப் புண்படுத்திப் பட்டினிகிடந்து
ஒன்றைப் பெறுவது சிலாக்கிய மல்ல”
என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு, தற்போதிருக்கும், ஜாதி வித்தி
யாசங்களும், பழக்கவழக்கங்களும் மாற்றுவதும் மாற்றுவதற்கு முயலுவதும்
சரியல்ல என்பதே வைதீகர்களின் எண்ணம் என்பதை உணரலாம். ஆகவே,
இனி திரு. காந்தியவர்கள் பட்டினி கிடந்தாலும் அதை எந்த வைதீகரும்
ஆதரிக்கப் போவதில்லையென்பதையும் இப்போழுதே நிச்சயப்படுத்திக்
கொள்ளலாம். மேலும்,
“உத்சவ காலங்களில் சுவாமி ஊர்வலம் வருவதும், உத்சவ
முடிவில் நடக்கப்படும் ரதோத்சவமும் தாழ்ந்த வகுப்பினருக்குக்
காட்சி கொடுக்கவே யென்பதை யாவரும் அறியலாம். ரதோத்சவ
காலங்களில் தீண்டாதார்கள் என்பவர்களைத் தீண்டலும் தகும்
என்பது வைதீகர்களது கொள்கை. எனவே தாழ்த்தப்பட்டவர்களை:
இந்துக்கள் சமஉரிமை கொடுத்துச் சகோதரர்களாகவே பாவிக்
கின்றனர். இப்பொழுது புதிய வழியில் அவர்களைக் கோவில்களில்
புகுந்து வணங்கச் செய்ய வேண்டுமெனத் தலைவர்கள்
முயலுவதைக் கண்டு வைதீகர்களாகிய நாங்கள் வருந்துகிறோம்.”
111
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
என்று குறிப்பிட்டிருப்பதைக் கொண்டு கோயில் பிரவேச விஷயத்தில்
வைதீகர் கொண்டுள்ள மனப்பான்மையை அறியலாம்.
மேற்கூறிய பல விஷயங்களையும் உதாரணங்களையுங்கொண்டு,
திரு.மாளவியா பண்டிதர் பிரசாரம் பண்ணப் போவதாகக் கூறும் போலித்
தீண்டாமை ஒழிப்புப் பிரசாரத்தைக் கூட ஆதரிக்க எந்த வைதீகரும்
தயாராயில்லை என்பதை அறியலாம்.
ஆகவே யாரும் திரு. காந்தியோ அல்லது, திரு. மாளவியாவோ,
அல்லது காங்கிரசோ செய்யும் தீண்டாமை விலக்குப் பிரசாரத்தைக் கண்டு
ஏமாற வேண்டாம், தீண்டாமை ஒழிப்புப் பிரசாரம் பண்ணும் காங்கிரஸ்.
பார்ப்பனர்களை “ஜாதிகளை அழிப்பதற்கும் ஜாதிக்கட்டுப்பாடுகளை:
அழிப்பதற்கும், காரணமாக இருக்கும் கலப்பு மணத்தையும் சமபந்தி
போஜனத்தையும் ஒப்புக் கொள்ளுகிறார்களா” என்று கேட்டால் அவர்:
களுடைய குட்டு வெளிப்பட்டுப் போகும். சமபந்தி
போஜனத்திற்கு அனேகர்:
ஒப்புக் கொண்டாலும், கலப்பு மண விஷயத்தை ஒப்புக் கொள்ளத் துணிய
மாட்டார்கள். இதற்கு நமது நாட்டு பார்ப்பனர்கள் சிலர் மனப்பூர்வமா ஒப்புக்
கொண்டாலும், திரு. மாளவியா போன்ற வைதீகர்கள் ஒரு நாளும் ஒப்புக்
கொள்ளவேமாட்டார்கள். ஆகையால் எல்லோருக்கும் இந்து மதப்பிரசாரம்.
பண்ணும் காங்கிரசிடமும் அதன்பிரச்சாரகர்களிடமும் ஜாக்கிரதையாயிருக்
கும்படி எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.40.1932.
குடி அரசு - 1932 @
112
ஸ்மஸ் கட்சி காலை கெய்யப்படூுமா?
சென்ற வாரத்தில் தஞ்சையில் கூடிய பன்னிரண்டாவது பார்ப்பன
ரல்லாதார் மகாநாட்டில் நடந்த மானக்கேடானக் காரியங்களைக் கேட்ட எந்த.
பார்ப்பனரல்லாதாரும், பார்த்த எந்தப் பார்ப்பனரல்லாதாரும், வெட்கமடைந்து
தலையைத் தொங்க விட்டுக் கொள்ளாமலிருக்க முடியாது. தேசத்தின்
நன்மைக்காக உழைக்கின்றோம் என்றும், சமூகத்தின் நன்மைக்காக உழைக்
கின்றோம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும்,
பணக்காரக் கூட்டத்தாரும் ஆகிய பார்ப்பனரல்லாதார்களே சாதாரண
முறட்டு, அறிவற்ற காலிகளைப்போல் ஒருவரோடு ஒருவர் மோசமாக நடந்து
கொண்ட நடத்தையை நினைக்கும் போது உண்மை பார்ப்பனரல்லாதார்
இரத்தம் கொதிக்காமலிராது. பார்ப்பனரல்லாதார் கட்சியை எப்படியேனும்
குழி தோண்டி புதைத்துவிட வேண்டுமென்று வெகுநாட்களாக முயற்சி
செய்து கொண்டிருந்த பார்ப்பனர்களும், பார்ப்பனக் கூலிகளும் சந்தோசப்
பட்டுத் தலைகால் தெரியாமல் கூத்தாடவும், பார்ப்பனரல்லாதாரின் சமூக
நலத்தைப் போதிய அளவு கவனிக்கா விட்டாலும் ஏதோ பார்ப்பனரல்லா
தாரின் நன்மைக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டாவது ஒரு கட்சி
இருக்கிறதே என்று
நினைத்துக் கொண்டிருக்கின்றவர்களின் நெஞ்சந்
துடிக்கவும் ஆன காரியங்கள் நடந்ததைப் பற்றி நினைக்கும் பார்ப்பன
ரல்லாதார் எவரும் ஆத்திரமடையாமலிருக்க முடியாது. ராஜாக்களும்,
மந்திரிகளும், ஜமீன்தாரர்களும், ஜில்லாபோர்டு தலைவர்களும், தாலூகா
போர்டு தலைவர்களும், முனிசிபல் தலைவர்களும், சட்டசபை உறுப்பினர்
களும், வியாபாரிகளும், பணக்காரர்களும், நிலச்சுவான்தார்களுமாகிய
பார்ப்பனரல்லாதார்கள் ஒன்று கூடிய ஒரு மகாநாடு குழப்பத்தில் நடந்ததென்
றால் இதைவிடப் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு அழியாத, வெட்கங்கெட்ட
வசை மொழி வேறு என்ன தான் வேண்டும்? மேலே கூறிய பெரிய
மனிதர்களென்று சொல்லக்கூடிய பார்ப்பனரல்லாதார்களே ஒரு மகா
நாட்டைச் சமாதானத்தோடு நடத்த யோக்கியதை இல்லாமற் போய் விட்டார்
கள் என்றால், “பார்ப்பனரல்லாதார்க்கு மூளையில்லை, திறமையில்லை”
என்று நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டிருக்கும், பார்ப்பனர்
களுக்குத் தகுந்த பதில் கூறப் பார்ப்பனரல்லாதார்க்கு வாயுண்டா என்று தான்
கேட்கின்றோம்.
112
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
தஞ்சை மகாநாட்டில் எந்த கட்சியினர் செய்தது சரி, எந்த கட்சியினர்.
செய்தது தப்பு என்பதைப்பற்றி நாம் ஒன்றும் கூற விரும்பவில்லை.
ஆனால்
எந்தக் கட்சியினராயிருந்தாலும், கூட்டத்தை கலைப்பதற்கென்றும்,மகா நாடு
நடைபெற வொட்டாமல் சத்தம் போடுவதற்கென்றுமே ஒரு கூட்டத்தை மகா
நாட்டுப் பிரதிநிதிகளாக்கிக் கொண்டு வந்ததை விட வெறுக்கத்தகுந்ததும்,
கண்டிக்கத்தகுந்ததுமான காரியம் வேறில்லை. அதிலும் சத்தம் போடு
என்றால் சத்தம் போடவும், பேசாமலிரு என்றால் பேசாமலிருக்கவும் ஆன
மக்களையும், வேறு அறிவோ, படிப்போ ஒன்று மில்லாத மக்களையும் பிரதி
நிதியாக அழைத்துக் கொண்டு வந்திருந்ததாகச் சொல்லப்படும் விஷயம்
இன்னும் கேவலமாகும். அன்றியும், ஜஸ்டிஸ் கட்சியைத் தொலைக்க
வேண்டும் என்னும் எண்ணமுடைய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும்,
எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியில் பிளவு உண்டாக்கி அதை அதிகாரப்
பதவியிலிருந்து வீழ்த்தி, அவ்வதிகாரத்தைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள
வேண்டும் என்னும் நோக்கமுடைய இதர கட்சியினரும் மகாநாட்டுக்குப்
பிரதிநிதிகள் என்ற பெயருடன் வந்திருந்தது வியப்பைத் தரக்கூடிய செய்தி
யாகும். இத்தகைய பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மகாநாடு எப்படி ஒழுங்காக
நடக்க முடியுமென்றுதான் கேட்கிறோம். இம்மாதிரியான மக்களை மகா
நாட்டுக்குப் பிரதிநிதிகளாக அழைத்து வந்தவர்களும், அழைத்துவர உதவி
செய்தவர்களும், அவர்களைப் பிரதிநிதிகளாக ஒப்புக் கொண்டு அனுமதித்
தவர்களும் யாராயிருந்தாலும் சரி அவர்கள் செய்கை மிகவும் கண்டிக்கக்
கூடியதும், இகழக்கூடியதும் பரிகசிக்கக் கூடியதும் ஆகுமென்றே நாம்
கூறுவோம்.
உண்மையிலேயே ஜஸ்டிஸ் கட்சியின்
தலைவர்கள் அனைவரும்,
பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கும், தேச மக்களுக்கும் நன்மை செய்ய
வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்களாயிருந்தால் அவர்களுக்குள்
இத்தகைய குழப்பமும், கலகமும், காலித்தனமும் நடந்திருக்க இடமே
ஏற்பட்டிருக்காது. இதற்கு மாறாகக் கட்சித் தலைவர்கள் கட்சியின் பெயரால்
பட்டம் பதவிகளைப் பெற்று சுயலாபம் பெறுவதில் பிடிவாத முடைய
வர்களாகவும்,
இவ் விஷயத்தில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காத
வர்களாகவும் இருந்த காரணத்தால் தான் இவ்வாறான கலகம் நேர்ந்தது.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் மந்திரி உத்தியோகத்தின் பொருட்டு தான்
மகாநாட்டில் இம்மாதிரியான மானக்கேடு சம்பவித்தது என்று சொல்லி
விடலாம். இதன் பொருட்டே ஒவ்வொருவரும் கூலிக்கு ஆள் பிடித்து
பிரதிநிதிகளாகப் பலரைக் கொண்டு வர நேர்ந்தது என்பதிலும் சிறிதும்
சந்தேகப்பட வேண்டியதில்லை.
நெல்லூர் மகாநாட்டுக்குப் பின் சென்ற மூன்று ஆண்டுகளாக மகா
நாடு கூடாமல், இருந்ததே அக்கட்சித் தலைவர்களுக்குக் கட்சி முன்னேற்
நத்திற் கவலை இருக்கிறதா? அல்லது தங்களுடைய சுயநல முன்னேற்றத்தில்
கவலையிருக்கிறதா? என்பதைக் காட்டுவதற்குப் போதுமானதாகும்.
குடி அரசு - 1932 @
114
அன்றியும் தற்காலத்தில் அக்கட்சியில் உள்ளவர்களில் பலர்
சுயநலத்தை உத்தேசித்துக் கட்சியின் அடிப்படையான கொள்கையையே
மாற்றிக் கட்சியையே கொலை செய்யச் சில வருஷங்களாக முயன்று
கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பார்ப்பனரல்லாத சமூகக் கொலைகாரர்.
களும் தஞ்சை மகாநாடு கலகத்தில் முடிந்ததற்கு ஒரு வகையில் காரண:
கர்த்தாக்களாவார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அதாவது பார்ப்பன
ரல்லாதார் கட்சியை ஆரம்பித்த ஆதிகர்த்தர்களாகிய திரு. டி. எம். நாயர்,
அவர்களும், சர். பி. தியாகராயர் அவர்களும் பார்ப்பனர்களால் மிதியுண்டு,
தாழ்த்தப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதார் சமூகத்தை அரசியல் துறையிலும்
சமுதாய முன்னேற்றத் துறையிலும், சமவுரிமையடையும்படி செய்ய
வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே கட்சியை ஆரம்பித்தார்கள்.
அக்
காலத்தில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டு தேச நன்மைக்கென்றோ,
ஏழைகளின் நன்மைக்கென்றோ ஆரம்பித்த எந்த இயக்கங்களும்
சங்கங்களும் கடைசியில் பார்ப்பனர்களின் சுயநலத்திற்கே உபயோகப்படும்
படி பார்ப்பனர்கள் செய்து வந்த தந்திரமாகிய அயோக்கியத்தனத்தை
ஜஸ்டிஸ் கட்சி ஸ்தாபகர்கள் நன்றாய் அறிந்திருந்தார்கள். ஆகையினால்
பார்ப்பனரல்லாதார் கட்சியானது அழியாமல் நிலைத்து நின்று பார்ப்பன
ரல்லாதார் சமூகத்திற்குச் சிறிதளவாவது நன்மை செய்ய வேண்டுமானால்
அக்கட்சியில் பார்ப்பனர்களைச்
சேர்த்துக் கொள்ளக் கூடாது என்ற
திட்டத்தை அமைத்து வைத்தார்கள். இனியும் பார்ப்பனரல்லாதார் கட்சி
சாவாமல் உயிரோடு இருக்க வேண்டுமானால், கட்சி ஸ்தாபகர்களின்
நோக்கத்தையும் திட்டத்தையும் கொலை செய்யாமல் இருக்க வேண்டியதே
பார்ப்பனரல்லாதார் கடமையாகும்.
தஞ்சை மகாநாட்டிலோ ஒரு கூட்டம், கட்சியில் பார்ப்பனர்களைச்
சேர்ப்பதாகத் தீர்மானித்து விடவேண்டும் என்பதற்காக வெகு கஷ்டப்
பட்டதாகத் தெரிகிறது.ஆனால் தஞ்சை மகாநாட்டின் பெரும் பாலான பிரதி
நிதிகள் பார்ப்பனரைக் கட்சியில் சேர்ப்பதற்கு எதிரான மனப் பான்மை
யுடையவர்களாக இருந்தார்களென்ற விஷயம் பார்ப்பனரைச் சேர்க்கும்
எண்ணமுடைய கூட்டத்தார்க்குத் தெரியும். ஆகையால் இவர்களும் மகாநாடு
சரியாக நடைபெறாமல் போவதற்கு வெளிப்படையாக இல்லா விட்டாலும்,
மறைமுகமாகப் பல யோக்கிய மற்ற செயல்களைச் செய்து வந்தார்களென்று
சொல்லப்படும் விஷயத்தையும் எளிதில் மறுக்க முடியாது.
அடுத்தபடியாகத் தலைவர் தேர்தல் விஷயமும் கலகத்திற்கு ஒரு
முக்கியமான காரணமாகி விட்டது. தலைவர் தேர்தல் விஷயமும் தற்கால
மந்திரிகளின் உத்தியோக விஷயத்தில் மாறுதலை உண்டாக்குமோ என்ற
பயம், மந்திரிகளிடத்திலும், மந்திரிகளின் பாதந்தாங்கிகளிடத்திலும் குடி
கொண்டிருந்த காரணமே கலகத்திற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்
படுகின்றது. சில மாதங்களாக மந்திரிகளுக்குள் ஒற்றுமையில்லாதிருந்த
116
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
விஷயமும், தென்னிந்திய நல உரிமைச் சங்க நிர்வாக சபையில் மந்திரிகளின்
மேல் நம்பிக்கை இல்லை என்னும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுப் பிறகு
சமாதான விஷயமும், தஞ்சை மகா நாட்டுக்கு வந்த தலைவர்கள் இரு
கட்சியினராக ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே ஆள்பிடித்துக் கொண்டு
வந்த விஷயமும், மந்திரிகளின் உத்தியோக விஷயமே கலகத்திற்கு முக்கிய
காரணம் என்பதை நன்றாய் விளக்கிக் காட்டுகின்றன.
ஆகவே ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்கள், சுயநலத்தை முன்னிட்டு
யோக்கியப்பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால், பார்ப்பன
ரல்லாதார் சமூகத்திற்கு நீங்காத பழியுண்டாகும் படி மகாநாடு குழப்பத்தில்
நடந்து, தலைவர் பிரசங்கத்தோடு ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றது. இனி,
ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை நாள் கடத்தாமல், அந்தத் தஞ்சையிலேயே
நடத்திக் கட்சியைக் கொலை செய்யாமல் கட்சியின் முன்னேற்றத்திற்கான.
வழிகளைக் காண்பார்களாயின் அப்பொழுது தான் இப்பொழுது ஏற்பட்டுள்ள
அவமானத்திற்கு ஓரளவு பரிகாரம் தேடியதாகும் என்பதை எடுத்துக் காட்ட
விரும்புகிறோம்.
இவ்வாறு மகாநாட்டை மீண்டும் நடத்த ஆரம்பிக்கும் பொழுது,
தற்போது மகாநாடு குழப்பத்தோடு முடிந்ததற்குக் காரணமான தலைவர்
தேர்தல் பிரச்சினைத் தகராறும், பார்ப்பனரை சேர்க்கும் பிரச்சினைத் தகராறும்
முதலில் நிற்கும் என்பதில் ஐயமில்லை. ஆகையால், எவ்வித கலகமும்
நடப்பதற்கு இடமில்லாத ஏற்பாடுகளுடன் மகாநாட்டை ஒழுங்காக நடத்து
வதில் கட்சித் தலைவர்கள் பெரிதும் கவனம் செலுத்த வேண்டியது அவசி
யமாகும்.
இச்சமயத்தில் நாம் மேற்கூறிய தலைவர் தேர்தல், பார்ப்பனரைச்
சேர்த்தல் ஆகிய இரண்டு விஷயங்களைப் பற்றி கட்சியின் அபிவிருத்தியின்
பொருட்டு நமது அபிப்பிராயத்தை கூறி விட விரும்புகிறோம். கட்சித்
தலைவர் யார் வருவதாக இருந்தாலும் அதைப் பற்றி நமக்குக் கவலை
இல்லை; கட்சித் தலைவர் விஷயத்தில் ஆந்திரர், தமிழர்.ஜமீன்தார், ஜமீன்தார்.
அல்லாதவர், நாயுடு, முதலியார் முதலிய வகுப்புத் துவேஷங்களை கிளப்பி
விடுவது வடிகட்டின முட்டாள் தனமும், பொறுப்பற்றத் தன்மையும் என்றே
நாம் கூறுவோம். யாராயிருந்தாலும் கட்சியின் அபிவிருத்தியில் நோக்க
முடையவர்களாகவும், எதிர்கட்சிக் காரர்களை சமாதானம் பண்ணவேண்டும்
என்னும் எண்ணத்துடன் கட்சிக் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்.
களாயும், சுயநலத்தை கருதாதவர்களாயும் கட்சியின் அடிப்படை
நோக்கமாகிய சமுதாயச் சீர்திருத்தம் அரசியல் முன்னேற்றம் இரண்டையும்
ஒருங்கே நிறைவேற்றக் கூடியவர்களாயும் இருத்தல் வேண்டும். இத்தகைய
ஒருவரை தேர்ந்தேடுத்தாலொழிய ஜஸ்டிஸ் கட்சி நிலைத்து நிற்காது என்பதை
நாம் மிகவும் உறுதியோடும் உண்மையோடும் அறிவிக்கின்றோம்.
குடி அரசு - 1932 @
116
அடுத்தப்படி பார்ப்பனரைச் சேர்க்கும் விஷயத்தில் கட்சியினர் மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சில பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை
வகுப்புவாதக் கட்சி என்றும் அரசியல் கட்சியல்ல வென்றும், தேசத்தின்
பிரதிநிதித்துவம் பொருந்திய கட்சியல்ல வென்றும் கூறுகின்றார்களென்று
சொல்லிக் கொண்டு கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்க முயற்சிப்பது
கட்சியைக் கொலை செய்து விட்டுத் தாம் தேசாபிமானப்பட்டம் பெறுவதற்
கும் எதிரிகளாகிய பார்ப்பனர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கும்
செய்யப்படும் சூழ்ச்சியேயாகும். இவ்வாறு கூறுகின்றவர்களின் புத்தியில்
பார்ப்பனர்களின் வகுப்புவாதமும், சுயநலமும் இன்னும் ஒழியவில்லை
என்னும் விஷயம் படவில்லையா என்று கேட்கிறோம். இது வரையிலும்
பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கின்ற எந்த இயக்கமாயினும்,
எந்தச் சங்கமாயினும், தாழ்த்தப்பட்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் நிலையை
உயர்த்தச் சிறிதளவாவது உதவி செய்திருக்கின்றனவா? என்பதை நன்றாய்
யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம். இப்பொழுதுள்ள ஜஸ்டிஸ்
கட்சியானது எவ்வளவுதான் பார்ப்பனர்களின் வசை மொழிகளுக்கு உட்
பட்டிருந்தாலும் உண்மையில் தேச மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி
யென்பதை தேச மக்கள் ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாக மூன்று முறை
தேசமக்களின் ஆதரவைப் பெற்று அதிகமான உறுப்பினர்கள் சட்டசபைக்
கும் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். இக்கட்சி அரசாங்கத்தாராலும் ஒரு
அரசியல் கட்சியென அங்கீகரிக்கப்பட்டு அதிகாரப் பதவியிலும் இருந்து
வந்திருக்கின்றது. இப்பொழுதும் இருந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே
பார்ப்பனரைச் சேர்க்காத காரணத்தால் கட்சியின் எந்த காரியம் தடைபட்டு
விட்டது என்று கேட்கின்றோம்.
ஒருக்கால் இனி கூடப்போகும் மகாநாட்டில் பார்ப்பனர்களையும்
கட்சியில் சேர்ப்பதென்று தீர்மானிப்பார்களாயின் அப்பொழுதே கட்சியின்
ஆயுட்காலம் முடிந்து விட்டது. திரு. டி. எம். நாயர் அவர்களாலும், சர்.
தியாகராயராலும்
, பனகால் அரசராலும் தோற்றி வளர்க்கப்பட்ட கட்சியை
அவர்களுக்குப் பின் வந்த சுயநலங் கொண்ட தலைவர்கள் கொலை
செய்தார்கள் என்ற பழியை ஏற்காமல் போக முடியாது என்று எச்சரிக்கை
செய்கின்றோம்.
இவ்வாறு பார்ப்பனர்களையும் கட்சியில் சேர்க்கப்பட்டுக் கட்சியும்
குழி தோண்டி புதைக்கப்பட்டு அழியக் கூடிய காலம் வந்தாலும் அதனால்
பார்ப்பனரல்லாதார் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாகப்போய் விடாது என்று
நாம் நிச்சயமாக நம்புகின்றோம். மீண்டும் பழய கொள்கையையுடைய
அதாவது பார்ப்பனர் சம்பந்த மில்லாததும் சமுதாய சீர்திருத்தக் கொள்கை.
யையும் அரசியல் முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு
சுத்தமான பார்ப்பனரல்லாதார் கட்சி தோன்றாமல் போகாது என்பதும்,
தற்போதுள்ள ஜஸ்டிஸ் கட்சியை கொலை செய்வதற்கு முனைந்து நிற்கும்
117
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
துரோகிகளைப் பொது வாழ்விலிருந்து விரட்ட அவர்கள் பின்வாங்க
மாட்டார்கள் என்பதும் நிச்சயம் என்று உறுதியாகக் கூறுகின்றோம்.
ஆகையால் தற்போதுள்ள ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பொறுப்பாளிகள்
உண்மையிலேயே பார்ப்பனரல்லாதார் சமூக நலத்தைக் கருதக் கூடியவர்:
களாயிருந்தால் பார்ப்பனரல்லாத சமூகத்தாரால் சமூகத் துரோகிகள் என்ற
பழியைச் சுமக்க மனமில்லாதவர்களாயிருந்தால் சுயநலமின்றிக் கட்சியின்
முன்னேற்றத்தின் விருப்பமுடையவர்களாயிருந்தால் திரு. டி. எம். நாயர்.
காலத்திலும், சர். தியாகராயர் காலத்திலும், பனக்கால் அரசர் காலத்திலும்
இருந்த உண்மையான பார்ப்பனரல்லாதார் கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க
வேண்டுகின்றோம்.
குடி அரசு
- தலையங்கம் - 16.10.1932
குடி அரசு - 1932 @
118
தீமாவனிக் வகான்னை நோய்
ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய்
சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய உயிரைக் கவர்ந்து செல்லும்
கொள்ளை நோயினால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை
உயிரோடு வைத்து அவர்களுடைய இரத்தத்தையும், செல்வத்தையும்,
அறிவையும் உறிஞ்சி விடும் கொள்ளை நோய்களுக்கே அதிகமாக அஞ்ச
வேண்டும். அத்தகைய கொள்ளை நோய்கள் இந்து மதத்தில் ஏராளமாக
இருக்கின்றன. இவைகளில் எல்லாம் மிகவும் பெரியதாகிய கொள்ளை நோய்
தான் இவ்வாரத்தில் வருகிறது.
அக் கொள்ளை நோய் தீபாவளிப் பண்டிகை
யேயாகும்.
ஆகையால் எல்லா மக்களையும் ஜாக்கிரதையாயிருக்கும்படி
எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே
நாம் அக்கொள்ளை நோயின்
கொடுமைகளை எடுத்துக் காட்ட முன்வந்தோம்.
இந்தியர்கள் அவர்களுக்குள்ளும், இந்துக்கள் என்பவர்கள் மற்ற
சமூகத்தாரைக் காட்டிலும் செல்வத்திலும், அறிவிலும், வீரத்திலும் தாழ்ந்து
அடிமை மனப்பான்மை மிகுந்தவர்களாயிருப்பதற்குக் காரணம், இந்து
மதமும், அதன் மூலம் ஏற்பட்டுள்ள பண்டிகைகளுமே என்பதை நமது
இயக்கம் நன்றாய் விளக்கிக் காட்டியிருக்கின்றது. இந்து மதமும் இந்து
மதத்தின் பேரால் ஏற்பட்டு வழங்கிவரும் பண்டிகைகளும் இல்லாதிருக்கு
மானால் நமது மக்கள் எவ்வளவோ உயர்ந்த நிலையிலும், சுதந்திர முடைய
வர்களாகவும் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இன்று மதத்தையும், மதப்பண்டிகைகளையும், லட்சியம் பண்ணாமல் தங்கள்
சொந்த புத்தியின் வழியே நடந்து, இவ்வுலகத்தில், சுகமாக வாழ்வதற்கு
வழியைக் கண்டு பிடிப்பதில் முனைந்து நிற்கும் மக்களே பகுத்தறிவு உடைய
வர்களாகவும், அடிமைத் தன்மை இல்லாதவர்களாகவும், தரித்திரமில்லாத
வர்களாகவும், வாழ்வதை நாம் கண்கூடாகக் காணக்கூடிய நிலைமையிலிருக்
கிறோம். இருந்தும் நமது நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாக ஆர்ப்
பாட்டம் புரிந்து கொண்டிருக்கும் எவரும், மற்ற நாட்டு மக்கள் சுதந்திரமடை
வதற்குக்கைக்கொண்ட உண்மையான வழிகளைப் பற்றிச் சிந்திக்கவோ அது
பற்றி நமது மக்களிடையே பிரசாரம் பண்ணவோ முன் வராமலிருக்கின்றனர்.
ஆனால் நாம் மாத்திரம் ஆதிமுதல், இந்துமதமும், இந்துமதப் பண்டிகை
119
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
களும் ஒழிந்தாலொழிய நமது மக்கள்,
செல்வத்திலோ, அறிவிலோ, சமத்துவத்
திலோ ஒரு நாளும் முன்னேற முடியாது என்று சொல்லி வருகிறோம்.
இப்பொழுது நமது கண்முன் நிற்கும்
தீபாவளிப் பண்டிகையை
எடுத்துக்
கொள்ளுவோம். இப்பண்டிகையினால்
நமது நாட்டு மக்களுக்கு
உண்டாகும் பொருள் நஷ்டம் சரீரத் துன்பம் எவ்வளவு? அன்றியும் சிறு
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையுள்ள எல்லோர் மனத்திலும்
பதியும் மூட நம்பிக்கை எவ்வளவு? இவற்றை எல்லாம் ஜன சமூகத்திற்கு
எடுத்துக் காட்டி அவர்களைச் சீர்திருத்த எந்த தேசாபிமானியாவது முயற்சி
எடுத்துக்கொள்கின்றானா?
முதலில் இப்பண்டிகையினால் மக்களுடைய அறிவு எவ்வாறு மழுங்க
வைக்கப்படுகிறது என்பதைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். இதை அறிய
வேண்டுமானால் இதன் பொருட்டு
- அதாவது இப்பண்டிகையை
“தெய்வீகமானது என்று மக்கள் நம்பவைக்கும் பொருட்டு ஏற்பட்டிருக்கும்
புராணக் கதையை ஆராய்ந்தாலே இதன் உண்மை விளங்கும். ஆதலால்
அக்கதையைக் கீழே குறித்துக் காட்டுகிறோம்.
“பூமி தேவி” என்னும் இந்த மண்ணுக்கும், “மகா விஷ்ணு” என்று
சொல்லப்படும் ஒரு தெய்வத்திற்கும் “நரகா சூரன்” என்னும் ஒரு மகன்
பிறந்தானாம். அவன் அதிக பலசாலியாக இருந்து கொண்டு பார்ப்பனர்:
களுக்கு துணைவராகிய “தேவர்கள்” என்பவர்களை யெல்லாம் மிகவும்
கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தானாம். ஆதலால், தேவர்களெல்லாம், தமிழர்
குலமாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்தவனாகச் சொல்லப்பட்ட “நரகாசுர””
னுடைய கொடுமையை சகிக்க முடியாமல் “மகாவிஷ்ணு” என்னும் அந்த
தெய்வத்தினிடம் சென்று முறையிட்டார்களாம். மகா விஷ்ணு என்பவரும்,
அந்த நரகாசுரனைக் கொன்று தேவர்களுடைய கஷ்டத்தை நீக்குவதாகக்
கூறினாராம். அப்பொழுது பூமிதேவி, நரகாசுரனைக் கொல்லும் போது
தன்னையும் உடன் வைத்துக் கொண்டே தன் மகனைக் கொல்லும்படி
வேண்டிக் கொண்டாளாம். அதற்கு மகா விஷ்ணுவும் சம்மதித்தாராம்.
அதன் பிறகு மகா விஷ்ணு கிருஷ்ணனாகப் பிறந்து, சத்திய
பாமையாகப் பிறந்திருந்த பூமி தேவியையும் தன்னுடன் அழைத்துக்
கொண்டு போய் ஒரு தீவில் வசித்து வந்த நரகாசுரனைக் கொன்றானாம்.
கிருஷ்ணன் நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறந்த நாளை
பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டுமென்று “வரம்” கேட்டானாம்
கிருஷ்ணனும் அவ்வாறே “வரம்” கொடுத்தானாம்.
இது தான் தீபாவளிப் பண்டிகைக்காகக் கற்பிக்கப்பட்டிருக்கும் கதை.
இக்கதையை நம்பி தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் மக்களை சிறிதாவது
புத்தியுள்ளவர்களென்று கூறமுடியுமா என்பதை நன்றாய் யோசனை செய்துப்
பாருங்கள்!
குடி அரசு - 1932 (3)
120
முதலில் நமது
கண்ணுக்கு முன் காணப்படும் இந்த மண் ஒரு
பெண்ணாக இருக்க முடியுமா? இரண்டாவது “மகாவிஷ்ணு” என ஒரு
தெய்வம் கடைகளில் விற்கும் பண்டங்களில் இருப்பது போல, பல
பெண்ஜாதிகளுடன், ஒரு குருவியின் மேல் உட்கார்ந்து
கொண்டோ, அல்லது
பாம்பின் மேல் படுத்துக்கொண்டோ, சமுத்திரத்தில் மிதந்துகொண்டோ
இன்றும் இருப்பதாகக் கூறப்படுவதும்,
இதற்குமுன் இருந்ததாகச்
சொல்லப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமான செய்தியா?
இப்படிப்பட்ட ஒரு தெய்வத்திற்கும் மண்ணுக்கும் ஒரு பிள்ளை
பிறந்தது என்று சொல்லுவது எவ்வளவு புரட்டு? ஆரம்பமே புரட்டாயிருக்கும்.
போது மற்றவைகளெல்லாம் எப்படியிருக்குமென்பதை இன்னும் நாம்
விரித்துக் காட்ட வேண்டியதில்லை. ஆகவே, இத்தகைய அர்த்தமற்ற
கதையைத் “தெய்வீக” முள்ளதாக நம்பிக்கொண்டு,
இதன் பொருட்டு ஒரு
தேசம் கோடிக்கணக்கான பொருளை ஒரே நாளில் செலவு செய்யுமானால்,
அதை அறிவுடைய தேசமென்று சொல்ல முடியுமா?
இந்தக் கதையை நம்பியே “நரகசதுர்த்தி” என ஒரு நாளைக்
குறிப்பிட்டுக் கொண்டு அன்று விடியற் காலையில் எழுந்து எண்ணெய்
தேய்த்து முழுகுவதும், எண்ணெய்ப் பலகாரங்களை வயிறு புடைக்கத்
தின்பதும் பட்டாசுக் கட்டுகளைக் கொளுத்துவதுமான செயல்களை செய்து
பண்டிகை கொண்டாடுகின்றனர்.
இவ்வாறு செய்வதனால், மக்களுக்கு மதப் புரட்டிலும், பண்டிகை:
புரட்டிலும், புராணப் புறட்டிலும், அவதாரப் புரட்டிலும் பார்ப்பன வம்சத்தைச்
சேர்ந்ததேவர்கள் அனைவரும் பரிசுத்தமானவர்கள், உயர்ந்தவர்கள், தமிழர்.
வம்சத்தை சேர்ந்தவர்களாகிய அசுரர்கள் அனைவரும் அயோக்கியர்கள்,
தாழ்ந்தவர்கள் என்னும் புரட்டிலும் நம்பிக்கையுண்டாகி, அவர்கள் அறிவு
குன்றிப் போகின்றது. அன்றியும், மக்கள், பண்டிதர்கள், புரோகிதர்கள்,
மதவாதிகள் என்னும் புரட்டர்களுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கக்
கூடிய நிலையையும் அடைகிறார்கள் என்பதை யார் மறுக்க முடியும்?
இனி இப்பண்டிகையினால் உண்டாகும் பொருள் நஷ்டத்தையும்,
சுகாதாரக் குறைவையும் கவனிப்போம். ஏழை முதல் பணக்காரன் வரையுள்ள
எல்லா இந்துக்களும் இதையொரு “தெய்வீக” மான பண்டிகையென்று
கருதுவதால், எப்பாடுபட்டாவது எவ்வளவு பணத்தை செலவழித்தாவது,
பணமில்லாவிட்டால் கடன் வாங்கியாவது, இதைக் கொண்டாட
வேண்டுமென்று தமது அறியாமையால் நினைக்கிறார்கள்... இவர்களில்
பணக்காரர்கள், இப்பண்டிகையின் பொருட்டு எக்கேடு கெட்டாலும், எந்தச்
சந்தியில் நின்றாலும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால்
ஏழைமக்களும், பணக்காரர்களைப் பார்த்தும், அர்த்தமற்ற தெய்வீகத்தையும்
புராணக் கதைகளையும் நம்பியும், வீணாக அறிவின்றிக் கஷ்டப்படு
121
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கின்றார்களே என்றுதான் நாம் பரிதாபப் படுகின்றோம். ஏழை மக்கள்,
தீபாவளிப் பண்டிகை வர ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, பண்டிகை
கொண்டாடுவதற்காக பலகாரம் தயார் செய்வதற்கு கடைச் சாமான்கள்
வாங்குவதற்கும், புது வேட்டிகள் புடவைகள் வாங்குவதற்கும், பட்டாசுக்
கட்டுகள் வாங்குவதற்கும், பட்டினி கிடந்து பொருள் சேர்க்கின்றார்கள்.
அவ்வாறு சேர்த்து வைத்த பொருளும் போதாமல் கடன் வாங்குகிறார்கள்.
இவ்வாறு வாங்கிய கடனை கொடுப்பதற்கு வேறு வழியில்லாமல் இவர்கள்.
தேடி வைத்திருக்கும் நகைகளோ பாத்திரங்களோ விற்கப்படுகின்றன.
இவ்வாறு ஏழைமக்கள் பொருள் வீண் நஷ்டமாகிறது.
இதற்கு மாறாக முதலாளிகளாக இருக்கும் ஜவுளி வியாபாரிகளும்
மளிகைக் கடைக்காரர்களும், இத் தீபாவளியில் நல்ல லாபம் அடைகிறார்கள்.
அவர்கள் அடையும் லாபம் ஏழைமக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பொருள்.
என்பதை யார் மறுக்க முடியும். ஆகவே இப்பண்டிகை ஏழைமக்களை
இன்னும் பரம ஏழைகளாக்கவும், பணக்காரர்களை இன்னும் கொழுத்த பணக்
காரர்களாக்கவும், ஒருவகையில் உதவி செய்கிறதென்பதையும் அறியலாம்.
அன்றியும் வீணாகக் கொளுத்திச் சுட்டு பொசுக்கப்படும், பட்டாசு
களும், வாணங்களும், எங்கிருந்து
வருகின்றன. இவைகள்
பெரும்பாலும்.
அயல் நாடுகளிலிருந்தே தீபாவளிக்கென்று நமது நாட்டிற்கு வியாபாரத்
திற்காகக் கொண்டு வரப்படுகின்றன. சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமான
முள்ள பட்டாசுக் கட்டுகளும், வாணங்களுமாவது இந்தத் தீபாவளியில்
பொசுக்கப்படுமென்பதில் ஐயமில்லை. இந்த இரண்டு கோடியும் கரியும்
புகையுமாக போவதைத் தவிர இதனால் வேறு யாருக்கு என்ன பலன்? நமது
தேசப் பணமாகிய இந்த இரண்டு கோடி ரூபாயும் அந்நிய நாட்டுக்குத் தானே
போய்ச் சேருகிறது? இன்னும் அன்னிய நாட்டுத் துணிகள் வியாபாரத்தின்
மூலம் அயல் நாடுகளுக்குச் செல்லும் பொருள் நாலைந்து கோடி ரூபாய்க்குக்
குறையாது என்பது நிச்சயம். இந்த நாலைந்து கோடியும் நமது தேசத்திற்கு
நஷ்டம் தானே.
இன்னும் அடை மழை பெய்து கொண்டிருக்கும் இந்த ஐப்பசி
மாதத்தில் விடியற்காலையில் எண்ணெய் தேய்த்து முழுகிவிட்டு எண்ணெய்
பலகாரங்களைப் போட்டு வயிற்றை நிறப்புவது சரீரசுகத்துக்கு ஏற்றதா என்று
தீபாவளியை நம்பும் எந்த முட்டாளாவது யோசித்துப் பார்க்கிறானா?
சாதாரணமாக நமது நாட்டில் “காலரா” என்னும் விஷப் பேதி நோய் பரவுவது
இந்த தீபாவளி முதல் தான் என்பதை எவரும் அறிவார்கள். எதனால் இந்த
விஷப் பேதி உண்டாகின்றது என்பதை அறிந்தவர்கள் இந்தத் தீபாவளிப்
பண்டிகையினால் நமது ஜன சமூகத்திற்கு உண்டாகும் தீமையை மறுக்க
மாட்டார்கள். சாதாரணமான அஜீரணமே இந்த விஷ பேதிக்கு முதற்
காரணமாகும். விடியற்காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகி எளிதில் ஜீரண
மாகாத மாவு பண்டங்களைப் போட்டு வயிற்றை நிரப்பினால் வயிற்றில் உள்ள
குடி அரசு
- 1932 (2)
122
ஜீரணக் கருவிகள் என்ன நிலையடையும்? இதனால் பலவிடங்களில் நமது
நாட்டில் விஷ பேதி உண்டாகி விடுகின்றது. இன்னும் பல வகையான
நோய்களும் உண்டாகி விடுகின்றன. நாம் கூறுவதில் நம்பிக்கையில்லை
யானால் தீபாவளியன்று மறுநாள் நமது நாட்டில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்குச்
சென்று பாருங்கள்! எத்தனை அஜீரண நோயாளிகள் வருகிறார்களென்
பதைத் தெரிந்து கொள்ளலாம். இன்னும் சமாச்சாரப் பத்திரிகைகளைக்
கவனித்துக் கொண்டிருப்பீர்களானால் எங்கெங்கே விஷ பேதி உண்டாகி
யிருக்கிற தென்பதையும் அறியலாம்.
இதுவுமல்லாமல் பட்டாசுகளிலிருந்து எழும் விஷப் புகையினால்
வரும் வியாதிகள் பல. இவ்வாறு தீபாவளி பண்டிகையானது மக்களுடைய
மனத்திலும் மூட நம்பிக்கையை உண்டாக்குவதோடு அவர்களுடைய
பொருளுக்கும் நஷ்டத்தை உண்டாக்கி சரீர சுகத்தையும் கெடுத்து உயிருக்குக்
கூட உலை வைத்துவிடுகிற தென்பதையும் அறியலாம்.
ஆனால் இந்தப் பண்டிகையைப் பற்றியும் இது போன்ற மற்றப்
பண்டிகைகளைப் பற்றியும், நமது நாட்டு தேசீயப் பத்திரிகைகளாவது, தேசீய
வாதிகளாவது கண்டித்துக் கூறி அவைகளில் உள்ள சூழ்ச்சிகளையும்
புரட்டுகளையும் எடுத்துக் காட்டி, மக்களுடைய செல்வத்தை நஷ்டமாகாமற்
செய்யவாவது, அவர்களுடைய மூட நம்பிக்கைகளைப் போக்கவாவது
முயற்சி செய்கின்றார்களா என்று பார்த்தால் ஒரு சிறிதும் இவ்வாறு செய்வ
தாகக் காணோம். இதற்கு மாறாக, இது போன்ற பண்டிகைகளைப் பற்றி
யெல்லாம் விளம்பரப்படுத்துவதும், அவைகளின் “பரிசுத்தத்
தன்மை” களை
மக்களுக்கு எடுத்துக் காட்டுவதும் அவைகளைக் கொண்டாடும்படி செய்
வதும் ஆகிய காரியங்களையே செய்து வருகின்றார்கள்.உதாரணமாக, இந்தத்
தீபாவளியைப் பற்றிச் சென்ற இரண்டு மாதங்களாகவே பிரசாரஞ் செய்யப்
பட்டு வருவதை அறியலாம். அதாவது தீபாவளி பண்டிகை நமது தேசீய
பண்டிகையென்றும் தேவர்களுக்கு விரோதியாயிருந்த நரகாசுரனைக்
கொன்று அவர்கள் சுகமடையும்படி விடுதலையுண்டாக்கிய விடுதலை நாள்.
என்றும், ஆகையால் அன்று எல்லோரும் தேசீய விடுதலையைக் கருதி
கதர்வாங்கிக் கட்ட வேண்டும் என்றும், கதர் பக்தர்களும், காங்கிரஸ் பக்தர்.
களும், தேசீய பக்தர்களும், கதரின் பேராலும், காங்கிரசின் பேராலும், தேசீயத்
தின் பேராலும் தீபாவளிப் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் செய்யும்
இந்த பிரசாரம், மக்களை இன்னும் மூட நம்பிக்கையுடையவர்களாக்கவும்,
குருட்டுப் பழக்க வழக்கங்களை யுடையவர்களாக்கவும், செய்யப்படும் மதப்
பிரசாரமா அல்லவா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.
நமது நாட்டுத் தேசீயவாதிகளுக்கு, இது போன்ற பண்டிகைகளின்
பேரில் உள்ள பக்திதான் இன்று எடுத்தவைகளெல்லாம் அதாவது, தேசீய
ராஜீய காரியங்களைக் கூடப் பண்டிகைகளாக்கி அவைகளைத், “தேசீய
123
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மதம்” என்னும் ஒரு புதியமதத்தின் பேரால் கொண்டாடச் செய்ய வேண்டும்
என்னும் எண்ணமுண்டாகி அவ்வாறே செய்தும் வருகிறார்கள். இதற்கு
உதாரணமாக, காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, திலகர் ஜெயந்தி, தாஸ் ஜெயந்தி,
லஜபதிநாள், சத்தியாக்கிரக நாள்,டண்டி நாள், புனா ஒப்பந்த நாள், உண்ணா
விரத நாள் என்பவை போன்ற பல நாட்களைக் குறிப்பிட்ட அவைகளைப்
பண்டிகைகள் போலக் கொண்டாடும்படி செய்து வருவதைக் கூறலாம்.
ஆகவே இத்தகையவர்கள், புராதனமானதென்று சொல்லப்படும் தீபாவளி
போன்ற பண்டிகைகளைப் பற்றி பிரசாரம் பண்ணாமல் விட்டு விடுவார்களா?
இன்று தீபாவாளிப் பண்டிகையின் விசேஷத்தைக் கூறிக் கதர்ப்
பிரசாரம் பண்ணும் தேசீயவாதிகள் உண்மையில், பகுத்தறிவுடைவர்களா
யிருந்தால், நமது நாட்டுச் செல்வம் அன்னிய நாட்டுக்குச் செல்லக் கூடாது
என்ற எண்ணமுடையவர்களாயிருந்தால், நமது மக்கள் அனைவரும்
அறிவுடையவர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் நோக்கமு.
டையவர்களாயிருந்தால் தீபாவளிப் பண்டிகையையும் இது போன்ற மற்றப்
பண்டிகைகளையும் ஒழிப்பதற்கே முயற்சி செய்ய வேண்டும். தீபாவளிப்
பண்டிகையை ஒழிப்பதன் மூலம், அன்னிய நாட்டிற்குப் பட்டாசுகளின் மூலம்
செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்களையும், துணிகளின் மூலம் செல்லும்
கோடிக்கணக்கான ரூபாய்களையும் செல்லாமல் தடுப்பதனால் நமது நாட்
டிற்கு லாபமுண்டா? அல்லது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதன்
மூலம் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குக் கதர் விற்பனை புரிவதனால்
லாபமுண்டாவென்று கேட்கிறோம்.
ஆகவே உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் நமது நாட்டில் உள்ள
தேசீயவாதிகளோ, சமயவாதிகளோ, புரோகிதர்களோ, பண்டிதர்களோ,
காங்கிரஸ்வாதிகளோ அனைவரும் மக்களை இந்து மதத்தின் பேராலும்
பண்டிகைகளின் பேராலும், ஏமாற்றி இன்னும் அடிமைகளாகவே வைத்
திருந்து தங்கள் சுயநலத்தைச் சாதித்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள்
என்பதை அறியலாம்.
ஆதலால், உண்மையில் விடுதலை பெற நினைக்கின்றவர், மூட
நம்பிக்கையினின்று நீங்க நினைக்கின்றவர்கள், மதமும் பண்டிகைகளும்
ஒழிந்து மக்களைப் பிடித்த பீடை நீங்க வேண்டுமென்று நினைப்பவர்கள்.
அனைவரும், தீபாவளிப் பண்டிகையை அடியோடு ஒழிக்க வேண்டுகிறோம்.
தீபாவளிப் பண்டிகைக்கென்று, பணத்தையும் செலவு செய்து புத்தியையும்
கெடுத்துக் கொள்ளாமல் அந்த நாளையும் மற்றச் சாதாரணமான நாளைப்
போலவே கழிக்கும் படி வேண்டுகின்றோம். ஆகவே இக்கொள்ளை
நோய்க்கு இடங்கொடாமல், அதைத் தடுக்குமாறு எல்லோருக்கும் எச்சரிக்கை.
செய்கின்றோம்.
குடி அரசு
- தலையங்கம் - 23.10.1932
குடி அரசு
- 1932 (2)
124.
கோயில் பிரவேச மசோதா
அடுத்து வரப்போகும் சென்னைச் சட்ட சபைக் கூட்டத்தில், மாஜி
மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆலயப்
பிரவேச மசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம். டாக்டர்
சுப்பராயன் அவர்கள், சமூக சீர்திருத்த விஷயத்தில் உண்மையான பற்றும்
ஆர்வமும், செய்கையளவில் நடத்திக் காட்டும் குணமும் உடையவர்.
என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இப்பொழுது அவர் கொண்டு
வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டு, அவர் வெறும்
புகழுக்காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச் செய்ய முன் வந்திருக்
கிறார் என்று யாரும் கூற முடியாது. அவர் எல்லாச் சமூகத்தின்பாலும்
கொண்டிருக்கும், உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக்
கொண்டே, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோயில்களில் சமவுரிமை வழங்க
வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத்துடனேயே இம்மசோதாவைக்
கொண்டு வரப்போகிறார் என்று ஐயமறக் கூறுவோம்.
ஆனால் இம்மசோதா
சென்னைச் சட்டசபையில் சட்டமாக நிறைவேறுமா? நிறைவேறாதா?
என்பதைப் பற்றி இப்பொழுது நாம் ஒன்றும் துணிந்து கூறுவதற்கில்லை.
ஆனால் அரசாங்கத்தார், இம்மசோதாவுக்கு ஆதரவளிக்காவிட்டாலும் கூட,
மனம் வைத்தால், சென்னைச் சட்டசபை அரசாங்கத்தின் தயவில்லாமலே,
இம்மசோதாவைச் சட்டமாக்கி விட முடியும். எப்படியெனில் இப்பொழுது
சென்னைச் சட்டசபையில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியும், மெஜாரிட்டி
யாகயிருக்கும் கட்சியும் ஜஸ்டிஸ் கட்சியாகும்.இப்பொழுது ஆலயப் பிரவேச
மசோதாவைக் கொண்டு வரப்போகும், திரு. சுப்பராயன் அவர்கள் எதிர்க்
கட்சியின் தலைவராவார். ஆகவே திரு.சுப்பராயன் அவர்களின் மசோதாவை
அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களெல்லாம் ஆதரிப்பார்கள் என்பதில்
ஐயமில்லை. சட்டசபையின் மெஜாரிட்டிக் கட்சியினரான ஜஸ்டிஸ் கட்சி
யினரும் இம்மசோதாவை ஆதரிப்பார்களானால், அது சட்டமாகிவிடு
மென்பதற்குச் சந்தேகமில்லை.
ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமூகச் சீர்திருத்தத் கொள்கையையே
அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக
எல்லா வகுப்பினர்களுக்கும் ஆலயங்களில் சமவுரிமை இருக்க வேண்டும்
என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள். ஆகையால், அவர்கள் தமது
எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான
125
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்கமாட்டார்கள்
என்றே நாம் நிச்சயமாக நம்புகின்றோம். ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர்,
திரு. சுப்பராயன் அவர்களுடைய
கட்சிக்கும், தமது கட்சிக்குமுள்ள அரசியல்
அபிப்பிராயங்களை முன்னிட்டும், “எதிர்க் கட்சியினர் எந்த நல்ல மசோதா
வைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே நமது கடமை” என்னும்
அரசியல் வஞ்சந் தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும், இம்மசோதாவை
ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும், அல்லது எதிர்த்தாலும், அது
மிகவும் வெறுக்கத்தகுந்த செய்கை யாகுமென்றே நாம் கூறி எச்சரிக்
கின்றோம்.
இப்பொழுது வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதா சட்ட
மாகுமானால், அதன் மூலம் எல்லா வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும், இந்து
மதக் கோயில்களில் தடையில்லாமல் செல்லுவதற்கு உரிமையுண்டாகு
மென்பது நிச்சயம். ஆதலால் இத்தகைய மசோதா ஒன்று சென்னைச் சட்ட
சபையில் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே, நமது நாட்டு வைதீகர்கள்.
அதைக் கண்டனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இந்த மசோதாவைச்
சட்ட சபையில் கொண்டு வர அனுமதியளிக்கக் கூடாது என்று மேன்மை
தங்கிய வைசிராய், கவர்னர் முதலியவர்களுக்கு தந்திகளும் தீர்மானங்களும்
அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் பல பொதுக் கூட்டங்கள் என்னும் பெயரால் வைதீகர்கள் இம்
மசோதாவைக் கண்டித்துக் கொண்டு வருகிறார்கள். தீண்டாதார்களுக்கு
ஆலயப் பிரவேசம் அளிப்பது சாஸ்திரங்களுக்கு விரோதம்: மதத்திற்கு
விரோதம்: பழக்க வழக்கங்களுக்கு விரோதம்; ஆகையால் தீண்டாதார்க்குக்
கோயில் பிரவேசம் அளிக்கும்படியான சட்டஞ் செய்யக் கூடாது என்று
கூச்சலிடுகின்றனர். இக்கூச்சலைச் சட்ட சபை உறுப்பினர்களும், அரசாங்கத்
தார்களும் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணாமல், டாக்டர் சுப்பராயன் அவர்.
களின் மசோதாவைச் சிறந்த திருத்தங்களுடன் சட்டமாகச் செய்ய ஆதர
வளிக்க வேண்டுகிறோம்.
வெகு காலமாக நமது நாட்டில் கோயில் பிரவேசத்
திற்குத் தடை செய்து கொண்டிருந்த சமூகம் பார்ப்பன சமூகம் ஒன்றேயாகும்.
இன்று அச்சமூகத்திலும், பகுத்தறியும் மூளையற்ற-
சாத்திரப்பித்தும், கயநலப்
பித்தும் கொண்ட வைதீகர்களே கோயில் பிரவேசத்திற்குத்தடை கூறிக்
கொண்டிருக்கின்றவர்கள். ஆதலால். மற்ற சமூகங்களின் ஜனத்
தொகையை விட, மிகக் குறைந்த ஜனத் தொகையையுடைய ஒரு சமூகத்
திலுள்ள சில எண்ணிக்கையையுடைய வைதீகர்களின் கூச்சலுக்கோ,
தடைக்கோ பயந்து சென்னைச் சட்ட சபையானது இம்மசோதாவை நிராகரிக்
குமாயின்
அதை விட பேடித் தன்மையான செயல் வேறொன்றும் இருக்க
முடியாது என்பதை முன்னெச்சரிக்கையாகவே கூறிவிட விரும்புகிறோம்.
இச்சமயம், “தீண்டாதார்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பொது
ஜனங்கள் விரோதமாக இருக்கிறார்கள்” என்னும் சாக்குச் சொல்ல முடியாது.
குடி அரசு
- 1932 (2)
126
இந்தியா முழுவதும், சுதேச சமஸ்தானங்களிலும் கூட, தீண்டாதார்க்கு
ஆலயப்பிரவேச உரிமையும், மற்றும் இந்துக்களுடன் சம உரிமையும் இருக்க
வேண்டும் என்னும் கொள்கையை ஆதரித்து வருகிறார்கள். பொது ஜனங்
களின் அபிப்பிராயம் அவர்கள் சமத்துவ உரிமைக்குச் சாதகமாகவே திரும்பி
இருக்கிறது என்பதை நாட்டில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு வரும்
நிகழ்ச்சிகளைக் காண்போர் தெரிந்து
கொள்ளலாம். ஆதலால் அரசாங்கத்
தாரும், சட்டசபை உறுப்பினர்களும் இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விடாம
லிருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விட்டு விடுவார்களானால்,
அவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தை அலட்சியம் செய்தவர்களாகவும்,
பொது ஜன நம்பிக்கைக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாகவும், ஆகிவிடு
வார்களென்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
டாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்
தாரும், உண்மையிலேயே எல்லாச் சமூகங்களும் ஒற்றுமையடைய
வேண்டும் என நினைப்பார்களாயின் “இந்து மத ஆலயங்களில் எல்லோரும்
அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் செல்லலாம்” என்பதாகச் சட்டம்
செய்ய வேண்டும்.
இப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும்
மசோதாவில் “இந்துக்களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான்
இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும்” என்று
கோருவதாகத் தெரிகிறது.
ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு
திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ்வகை
யிலும் குற்றமாகாது. இன்று முஸ்லிம்களுடைய மசூதிகளில் முஸ்லிம்கள்
அல்லாதவர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லிம்கள்:
அந்நிய மதத்தினரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத்
தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும்
யாரும் சென்று
வணங்கலாம். அங்கு நடக்கும் “ஜபத்தில்” கலந்து கொள்ள
லாம். கிறிஸ்துவர்களும் அந்நிய மதத்தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்
கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும்
எந்த மதத்தினர்களும் தாராளமாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக்
கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும், ஜாதி வித்தியாசம் இல்லாமல்
செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய்விடும்? என்று
கேட்கிறோம். இவ்வாறு செய்வதனால் பல மதத்தினர்க்குள்ளும் சமத்துவம்
உண்டாவதற்கும் வழியாகும். ஆகையால் இம்முறையில் மசோதாவைத்
திருத்தியமைத்து நிறைவேற்றச் சென்னைச் சட்டசபை தைரியமாக முன்
வருமா? என்று தான் நாம் கேட்கிறோம்.
சென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறு
மானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச்
சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ்
127
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கட்சிக்கும், ஐக்கிய தேசீயக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும்
உண்டு. இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின்,
இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட
உறுப்பினர்களுக்கும் என்றென்றும் அழியாத வசையே உண்டாகும்
என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில், நமக்கு இவ்வளவு அக்கரை
இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக்கெல்லாம் தெரிந்த
விஷயமாகும். “எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும்,
அங்கு தெய்வமிருக்கிறது; அல்லது கடவுளிருக்கிறது”' என்னும் நோக்கத்து
டன் நாம் கோயில் பிரவேசத்தை ஆதரிக்கவில்லை. கோயில்களும் தேசத்
தின் பொதுச்சொத்து என்ற முறையில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை.
பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவைகளுக்குள் நுழையக் கூடிய
உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்னும் எண்ணத்
துடனேயேநாம் கோயில் பிரவேசத்தை முழுமனதுடன் ஆதரிக்கின்றோம்.
இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சியையும் வரவேற்கிறோம் என்பதைத்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.40.1932.
குடி அரசு
- 1932 (2)
128
கொழும்பில் வை. இராமசாமி
தமிழ் நாட்டில் நான் செய்துள்ள சிறிய தொண்டை முன்னிட்டும் எமது
மேல் நாட்டு பிராயணத்தை முன்னிட்டும் எம்மை உபசரிக்கும் நோக்கமாகச்
செய்த வந்தணோபசாரங்களுக்கு நான் எனது உண்மையான நன்றியறிதலை
செலுத்துகிறேன். நீங்கள் என்னை அதிகம் புகழ்ந்து விட்டீர்கள். இருந்தும்
எனது கொள்கையை நீங்கள் பூரணமாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள் என்று
இதனால் எனக்குத் தோன்றுகிறது.
இன்று உலகத்தில் விடுதலையின் பேரால், சுதந்திரத்தின்பேரால்
எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன. மதாபிமானம், தேசாபிமானம்,
கடவுளபிமானம் என்ற பேரால் எத்தனை பேர் வயிறு பிழைக்கின்றனர்.
லக்ஷக் கணக்கான நமது சகோதரர், உடன் பிறந்தார், ஊணுடையின்றிக்
கஷ்டப்பட்டுச் சாகின்ற இந்நாட்களில் அவர்களுடைய இன்னல்களை நீக்க
வழி தேடுவதை விட்டுக் கடவுளைப் பற்றி பேசி என்ன பயன்?
நாம் ஆலோசனைக்காரார். அதுவே நமது கொள்கை; அதுவே
சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை. நமக்குத் தோன்றுகிற
எண்ணங்களை ஆலோசித்து அலசிப் பார்க்க வேண்டும். அதற்குப்
பயப்படக் கூடாது.எனக்குக் கடவுளைப் பற்றியே கவலையில்லை.உலகத்தில்
எத்தனை பேர் இருக்கிறார்கள்? அதுபோல் கடவுளும் ஒருவர் இருக்கட்டும்.
அதுபற்றி என்ன விசாரம்? ஆனால் நாள்முழுதும் பாடுபட்டும், வேலை
செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களை
திரும்பிப் பார் என்றால் நமது மதப்பிரசாரகர்கள் கடவுளைப் பார் என்
கின்றார்கள்.
மக்கள் கஷ்டத்தினின்றும் விடுதலையடைய வேண்டும். இதற்குச்
சம்மதமான கடவுள் இருக்கட்டும் மற்றக் கடவுள்கள் வேண்டாம்.
இவ்வளவுதான் நாம் சொல்வது.
மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ண முடியாத தேசபிமானம்
வேண்டாம். தேசாபிமானம் நாளைக்கு; இன்றைக்கு வயிற்றுச் சோற்றுக்கு.
129
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
விஷயங்களைப் பரிசோதனைசெய்து பாருங்கள். பார்த்து அதற்
கேற்றவாறு நடவுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.
நான் மனிதன். என் அறிவைக் கொண்டு விஷயங்களைத் தேடி
இம்முடிவுக்கு வந்தேன். ஒன்றையும் வெறுக்க வேண்டாம். ஒன்றையும்
மறுக்கவும் வேண்டாம். அவர் சொல்லிவிட்டார், இவர் சொல்லிவிட்டார்.
என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள், இன்னொருவனுக்கு அடிமையாய்
உங்கள் மனச் சாட்சியை விற்றுவிட வேண்டாம். எதையும் அலசிப்பாருங்கள்.
ஆராயுங்கள். எண்ணங்களை அடக்கி ஆண்ட காலம் மலையேறி விட்டது.
சுயஅறிவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய காலம் இது.
நாம் எண்ண வேண்டியது, ஆராய வேண்டியதெல்லாம் முன்னேயே
எமது ஆன்றோரால் ஆய்விட்டது என்று நீங்கள் கொள்ள வேண்டாம். நான்
சொல்லுவது முற்றும் சரியென்றும் நீங்கள் கொள்ள வேண்டாம். எதையும்
ஆராய்ந்து உண்மை தேறிக்கொள்ளுங்கள்.
எனக்கு மதாபிமானம் இல்லையென்று
நீங்கள் கருத வேண்டாம். 25
வருட காலமாக நான் ஒரு கோவிலில் தர்மகர்த்தாவாகவிருந்து, அக்
கோயிலின் கிரமங்களையெல்லாம் ஒழுங்காக நடத்தி வந்தேன். எனக்கு
தேசாபிமானம் இல்லையென்றும் நீங்கள் சொல்லவேண்டாம். 1 தடவைக்கு
3, 4 தடவை தேசீய விஷயமாக ஜெயிலுக்குஞ்
சென்றேன்.
ஆனால் இந்த
அபிமானமெல்லாம் நம் ஏழைச் சகோதரருக்கு விமோசனம் கொண்டுவராது.
ஆதலால் தான் அபிமானமொன்றும் நமக்கு வேண்டாம். மனுஷாபிமானமே
வேண்டுமென்று ஜனங்களுக்கு நான் எனக்குத் தோன்றிய வரை போதிக்கத்
தலைப் பட்டேன். சோம்பேறி ஞானமும் மதாபிமானமும் பசி கொண்ட
மகனுக்கு அவன் பசியைத் தீர்க்குமா? எண்ணத்துக்குச் சுதந்திரம் கொடுங்கள்.
மனுஷாபிமானத்தையும் சுயமரியாதையையும் காப்பாற்றுங்கள். ஏழைகளின்
கஷ்டத்திற்கு நிவாரணந் தேடுங்கள்.
குறிப்பு: 23-10-1932
ஆம் நாள் கொழும்பு மருதானை எல்பின்ஸ்டோன் காட்சி
சாலையில் மலையாளி சுயாபிமானிச் சங்கத்தாராலும் கொழும்பு சுயமரியாதைச்
சங்கத்தாராலும் அளிக்கப்பட்ட வரவேற்பு பத்திரம் அளிக்கப்பட்ட கூட்டத்தில்
ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 30.10.1932
குடி அரசு
- 1932 (2)
120
கொழும்பில் ஈ. வ. இராமசாமி
“நான் சாதாரண மனிதனில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும்
என் அபிப்பிராயப்படிநடக்க வேண்டுமென்று திரு.சாரநாதன் கூறினார்.
அது
என் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு நீங்களே சிந்தித்து
நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி
செய்யக்கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்கவேண்டும்.
விஷயங்களை நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும்.
100-க்கு 99பேர் ஒப்புக்
கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்த்தே அறிய வேண்டும். உலகத் திலுள்ள
சகல தேசங்களிலும் தலைவர்களின் கட்டளைப்படி நடந்தவர்கள் கஷ்டத்
திலாழ்ந்து வருகிறார்கள். நடுநிலைமையிலிருந்து விஷயங்களை கிரகிக்க
வேண்டும்.என்னில் கடவுளிருக்கிறாரென்று நான் கூறவில்லை.நான் கூறும்
விஷயங்களை ஆலோசித்துப் பாருங்கள். சகாயத்தைப் பெறுவதற்காகவோ,
வேறு சுயநலம் காரணமாகவோ நான் இங்கு வந்திருக்கவில்லை.
நாட்டிலே மக்களிடை பல நிலைமைகளைக் காண்கிறோம். ஒரு
கூட்டத்தார் கஷ்டப்படுகிறார்கள், ஒரு கூட்டத்தார் இன்புற்று சக போகங்
களை அனுபவித்து வருகிறார்கள். உலகப் பரப்பில் இந்த வித்தியாச
மிருக்கிறது. தேசம், மதம், ஜாதி, பாஷை முதலானவற்றின் பேரால் சரித்திர
கால முதல் மக்கள் கஷ்டமடைந்து வருகிறார்கள். அவதார புருஷர்களும்,
தலைவர்களும் கூறின விஷயங்களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள்.
ஆதியில் மனிதர் ஒழிக்க விரும்பின காரியங்கள் இன்று வரை ஒழிக்கப்
படவில்லை. அவதார காலங்களிலும் அன்னியராட்சியில்லாத காலங்களிலும்
இதே கஷ்டம் நிலவி வந்தது. அதை மாற்றும் காரணத்தை மனிதர் உணர
வில்லை.
ஆதி முதல் நாம் எடுத்துக் கொண்ட நோக்கம் தீர்ந்த பாடில்லை.
ஆகையால் புதிய முறைகளைக் கண்டுபிடிக்க நடுநிலைமை வகித்துச்
சிந்திக்க வேண்டும்.
நம்முடைய நாட்டில் பறையனென்றும் பார்ப்பானென்றும்,நிழல் படக்
கூடாதென்றும் ஒரு பகுதி துவேஷம் வைத்து வருகிறது. பார்ப்பனரைப்
பூதேவரென்றும், உயர்ந்த ஜாதியென்றும் சரித்திர காலம் முதல் கருதி
வருகிறார்கள்.காரணம் மனித சமூக பந்தத்திவில்லாததே உனக்கும் எனக்கும்
131
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
என்ன வித்தியாசமென்று கேட்டால் மதவிரோதமென்றும், நாஸ்திகமென்றும்
கூறப்படுகிறது. இந்த அக்கிரமங்களை அழிக்க முற்படுகிறவன் தேசத்
துரோகியென்றும், மதத் துரோகியென்றும் கருதப்படுகிறான். மனுதர்ம
சாஸ்திரங்களையும் வேதங்களையும், ஆதாரமாகக் காட்டி கடவுள் சிருஷ்டி,
பகவான் செயல், பகவான் வாக்கென்றும் கூறுகிறார்கள். அவற்றை குழி
தோண்டிப் புதைக்க நீங்கள் தயாராயிருந்தால் மட்டும் வெற்றி பெற்று
விளங்கலாம். தேசாபிமானி உயர்வு தாழ்வை ஒப்புக் கொள்வானாகில்
அவனுடைய தேசாபிமானம் நமக்குவேண்டாம்.
ஒருவனுக்கு பைத்தியம் பிடித்திருந்தாலொழிய கடவுளையும் தேசத்
தலைவர்களையும், குறை கூற முன்வரமாட்டான். அவன் உண்மைத்
தொண்டின் காரணமாகவே குறை கூறுகிறான். மக்களை ஏமாற்றி பிழைத்து
வருபவர்கள் தங்கள் நிலைமையை பலப்படுத்த பகவான் கட்டளை என்று
முடிச்சு போட்டு வைத்திருக்கிறார்கள். அக்காலத்தில் மனிதர்கள் சோம்பேறி
களாயிருந்த படியால் ஆக்ஷேபமின்றி அதற்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.
அடிமைத்தன அஸ்திபாரம் வலுத்தவுடன் ஜனங்கள் பகுத்தறிவால் அலசிப்
பார்க்க முன்வந்தார்கள். முன்ஜன்மத்தைப் பற்றி இப்பொழுது நினைப்
பாரில்லை. அவர்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் மதத்தோடு
சேர்த்துத் தீக்கொளுத்தவும் குழி தோண்டிப் புதைக்கவும் முன் வந்திருக்
கிறார்கள். சமஉரிமையை ஒப்புக் கொள்ளாதவர்களின் அபாரமான
ஆதாரங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படவேண்டும். ஏழைகள் பட்டினி
கிடக்கும் பொழுது ஆஸ்திமான்கள் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியாது.
பொறுமை, அடுத்த ஜென்மம், மோட்சம் முதலான போதனைகளெல்
லாம்போதும், இறந்து பிறகுதான் பொறுமையின் பலன் கிடைக்கும்...
பொறுமையைப் போதிக்கும் தரகர்கள்வேண்டாம். ஒற்றுமை ஏற்பட்டால்
என்ன நேரிடுமோயென்று பயந்தவர்கள் தேசாபிமானம், மதாபிமானமென்று
பறை சாற்றி வருகிறார்கள். வெறுப்பையும் பொறாமையுமேற்படுத்தும்
மதங்கள் தான் தோன்றின. கீழ் நாட்டின் கஷ்டங்களே மேல் நாட்டிலு
மிருக்கின்றன. ஆங்கு மதச் சட்டம் முதலானவையிருப்பதால் கஷ்டப்
படுவோர் இருக்கிறார்கள். மாளிகையில் வசிப்போரும் இருக்கிறார்கள்.
அரசனில்லாத குடியாட்சி நடைபெறும் தேசத்திலும் இதே கஷ்டங்களி
ருக்கின்றன. முதலாளிகளிருக் கின்றார்கள். பாதிரிமார்களும் பிரசாரம் செய்து
வருகிறார்கள் என்றாலும் மதக் கோட்பாடுகளை வெறுத்தே வருகிறார்கள்.
நம் மக்களின் விடுதலையைக் கருதுவோர் உண்மையோடு நடுநிலை
மையில் விஷயங்களை ஆலோசிக்க வேண்டும். அடக்குமுறைகளும்
பழிப்புகளுமேற்படலாம் பயந்தவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
நம்பிக்கையும் தியாகம் செய்யும் குணமுமிருந்தால் மட்டும் வெற்றி பெறலாம்.
நாஸ்திகனென்று பழித்தால் பழிப்போரின் அபிப்பிராயம் அவர்களோ
டிருக்கட்டும். ஆக்ஷேபங்களைப் பொருட்படுத்த வேண்டாம். நம்முடைய
குடி அரசு
- 1932 (2)
132
சொந்த அபிப்பிராயத்தைக் கடைபிடிக்காதவர்கள் மூடர்களாயிருந்து
வந்தார்கள். சில ஜாதியார் படிப்பதை பாவச் செயலாகக் கருதி வந்தார்கள்.
படிக்க சிலர்க்கு சந்தர்ப்பமேற்படவில்லை. கல்வியறிவில்லாதவர்களை:
தந்திரக்காரர்கள் ஏமாற்றி வந்தார்கள். பாமரமக்களின் அபிப்பிராயத்தைத்
தகர்க்க முயற்சிகளெடுக்கப்பட்டாலும் நாம் பொறுமையை இழக்காமல் நம்
காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.
மதங்களின் பேராலும் சடங்குகளின் பேராலும் மக்கள் எத்தகைய
இன்னல்களையடைந்து வருகிறார்கள். கோவில்களுக்கும் உற்சவங்களுக்கும்.
கோவில் சொத்துக்களுக்கும் எவ்வளவு பொருள் வீணில் விரையம்
செய்யப்பட்டு வருகின்றது. திருப்பதியில் வருஷம் 20லட்சம் ரூபாய்
காணிக்கை கிடைக்கிறது. காணிக்கை கொடுப்போர் பிரயாணம் செய்து வரும்.
செலவைப் பாருங்கள். அக்கோவிலுக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்திருக்
கிறது. அரைவட்டி போட்டுப்பார்த்தால் எத்தனை லட்சம் கிடைக்கும்.
கடவுளுக்காக பட்டை நாமத்தோடு பிச்சையெடுத்த பணம் யார் வயிற்றில்
விழுகிறது? கணக்குப் பார்த்தால் பாவமாம். காணிக்கை கொடுத்தவனிலும்
அச்சொத்தை அனுபவித்து வருகிறவர்களிலும் ஏதாவது மாறுதலேற்பட்டு
வருகிறதா? ஒரு ரூபாய் வட்டியில் சேர்த்து 5000 ரூபாய் காணிக்கை
கொடுத்தவன் அடுத்த வருஷத்தில் ஒன்றரை ரூபாய் வட்டி வசூலிக்கிறான்.
கஷ்டத்தை அதிகரிக்கவே கடவுள் உணர்ச்சி மனிதரிலேற்பட்டு வரு
கிறது. இதைப்பற்றி சுய அபிப்பிராயங்களைத் தெரிவித்தால் நாஸ்திகமாம்.
தென்னாட்டில் ஜில்லாவுக்கொரு பெரிய உபத்திரவம் (ஆலயம்) இருந்து
வருகிறது. பிழைப்பிற்காக அயல் நாடுகளுக்குச் சென்றால் அந்நாடுகளில்
அவர்களுக்கு முன் சுவாமிகள் சென்று விடுகிறார்கள். இந்தியாவில் 35
கோடியில் தாழ்த்தப்பட்டோர் நீங்கலாக 16 கோடி உயர் ஜாதி இந்துக்களிருக்
கிறார்கள். நபரொன்றுக்கு இரண்டு கடவுளைக் கும்பிடுவோர் ஏழை ஜனங்
களை அயல் நாடுகளுக்குத் துரத்தி வருகிறார்கள். நம் புத்திக் கெட்டின
நன்மையான காரியத்தைச்செய்ய வேண்டுமானால் மூடப்பயம் ஒழிய
வேண்டும். சுயமரியாதையின் நோக்கம் இதுவே. சாமிகளுடைய சுய
மரியாதையற்றத் தன்மையை நாம் அறிந்து வருகிறோம். தேசபக்தியும்
கடவுள் பக்தியும் மதபக்தியுமில்லாத தேசத்தில் மட்டும் வேலையில்லாது
கஷ்டப்படும் மக்களிருக்க மாட்டார்கள். அங்கு கொடுமைக்காரரும்
ஆஸ்திமான்களுமில்லை. இதை எந்த
இடத்திலும் கூறத்தயாராய்
இருக்கிறேன். நான் கூறுவது தப்பிதமாய்த் தோன்றினால் பைத்தியக்காரனின்
கூற்றாக நினைத்துக் கொள்ளுங்கள்.”
@y :23-10-1932
இல் கொழும்பு கால்பேஸ் மைதானத்தில் சுயமரியாதைச்
சங்கத்தார் ஆதரவில் மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 30.10.1932
133
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கடஷனைய் பற்றி நிணைக்க முழுமா
தொழில் முயற்சி
மேல் நாட்மூணர் முற்போக்கு
“நான் ஓர் நாஸ்திகனல்ல, தாராள எண்ண முடையோன். நான் ஒரு
தேசீயவாதியுமல்ல, தேசாபிமானியுமல்ல.
ஆனால் தீவிர ஜீவரக்ஷா எண்ண
முடையவன். எனக்கு ஜாதி என்பதோ, ஜாதியென்பதின் பேரால் கற்பிக்கப்
படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது.
அத்தகைய எண்ணத்தையே நான்
எதிர்ப்பவன். ஆதரிப்பவனல்ல. தாங்கள் மேல் ஜாதியார், உயர்ந்தவர்கள்
என்று சொல்லிக் கொண்டு, மனிதரது ஜீவாதாரமான உரிமைகளாகிய தெரு
வில் நடத்தல், கோவிலுக்குள் செல்லல் முதலியவற்றை மறுத்துக் கொண்டு,
ஏனையோர்க்கும் சமத்துவம் வேண்டுமென்று செய்கிற முயற்சியைக்
கண்டிக்கிறேன்.”
“காலமெல்லாம் பண்டய பழக்கவழக்கங்களும், மூடக் கொள்கை
களும் நிலைத்தே நிற்க வேண்டுமென்றால் ஒரு பறையன் என்று சொல்லப்
படுகின்றவனோ, அல்லது சக்கிலி என்று சொல்லப் படுகின்றவனோ,
மிருகத்தைவிடக் கேவலமாக நடந்தப்பட்டே வர எப்படி இந்தியா அவன்
தாய் நாடு தான் என்று எண்ண முடியும்? ஒரு பொது சேவைக்கு அவர்களை
நம்மோடு ஒத்துழைக்க எதிர்பார்க்க முடியுமா?”
வேலையில்லாத் திண்டாட்டம்
கஷ்டப்படுகின்ற தொழிலாளிகள் அரசாங்கத்தை நடத்துகின்ற
வர்களாயிருக்கவேண்டும். ஜனங்களின் நன்மைக்காக, ஜனங்களாலேயே
நடத்தப்படுகின்ற அரசாங்கமாயிருத்தல் வேண்டும். இந்தியாவைப் பற்றி
யுள்ள வறுமையை அகற்றக் கூடிய அரசாங்கமாயிருக்க வேண்டும். பிரான்ஸ்,
ஜெர்மனி, கிரீஸ்,ஐக்கிய தேசம் முதலியனவெல்லாம் குடியரசு நாடுகளாகவே
இருக்கின்றன. ஆனால் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டமே தலை
விரித்து ஆடுகிறது. ரஷ்யா ஒன்றில் மட்டும் வேலை இல்லாத் திண்டாட்டமே
கிடையாது.ஒரு சில பிச்சைக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களெல்லாம்
வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே, அவர்களை அரசாங்கம்
போஷிக்கிறது. உண்மையில் அது ஒரு புதிய உலகம் அதுபோல் முன்னொரு
குடி அரசு
- 1932 (2)
134
போதும், எந்நாட்டிலும் சீர்திருத்தம் நடந்தேறியதேயில்லை.
அந்நாடு தொழி
லாளர் மயமாகவே இருக்கிறது. தோட்டி முதல் தொண்டமான் ஈறாக எல்
லோரும் அரசாங்கத் தொழிலாளராகவே கருதப்படுகின்றனர்
அங்கு எல்லா
மனிதரும் சமமாகவே கருதப்படுகின்றனர். மக்களுக்குள் உயர்வு தாழ்வு
என்பதே கிடையாது. வியாபாரம், தொழில், வர்த்தகம், கல்வி முதலிய சமூக
அபிவிருத்திக்கான தொழில்களெல்லாம் அரசாங்கப் பொறுப்பிலேயே
நடைபெற்று வருகின்றன. விவசாயம் ஐக்கிய முறையில் அரசாங்கப்
பொறுப்பில் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.
“அங்கு சமயமென்பது ஒன்றுமே கிடையாது. ஜனசமூக நன்மையே
சமயம்.அதுவே சன்மார்க்கம். கிறிஸ்துவ கோயில்களுண்டு. அதற்கு அரசாங்
கத்தார் எவ்வித பணஉதவியும் செய்வது கிடையாது.அவர்களுக்கு கடவுளைப்
பற்றியோ,மதத்தைப் பற்றியோ கவலையோ, விசாரமோ கிடையாது.”
“குற்றம் செய்தவர்களை அரசாங்கம் ஒரு நவீன முறையில் தண்டிக்
கிறது.
அவர்களுக்கு சகல செளகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டாலும்,
அவர்கள் சம்பளத்தில் ஒரு பாகம் அபராதத் தொகையாக பறிமுதல் செய்யப்
படுகிறது. பலமுறை குற்றம் செய்தவர்களை சுகாதார நிலயத்திற்கனுப்பி
அங்கு அவர்களது மனோ நிலை மாறத்தக்க சிகிச்சைகள் செய்யப்படு
கின்றன.”
“பாடசாலைகள் மூலமாயும் சினிமாக்கள் மூலமாயும் இதுவரை
கற்றிராத பாமர மக்களுக்கும் தொழிற் முயற்சியை அஸ்திவாரமாகக் கொண்ட
கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு மதத்தையும் பின் பற்றாத அரசாங்கம், மத
எதிர்ப்பு சங்கத்திற்கு போதிய உதவியளித்து வருகிறது.”
நான் இத்தேசத்தைப் பார்வையிடச் சென்றதின் நோக்கமெல்லாம்,
அங்குள்ள நிலைமைகளைச் சரிவர அறியவும், அத்தேசத்தைப் பற்றிப்
பெருமிதப்படுத்திக் கூறும் கதைகள் உண்மையா வென்று அறியவுமேயாகும்.
அரசாங்கம் தாம் தேசத்தை புணருத்தாரணம் செய்ய வேண்டுமென்ப
திலேயே தீவிர கவனம் செலுத்துவதால் கடவுளைப் பற்றியோ மதத்தைப்
பற்றியோ நினைப்பதற்கு அவர்களுக்குநேரமில்லை.”
“எகிப்து நாட்டில் பர்தா(கோஷா! முறை அநேகமாக அழிந்து விட்ட
தென்றே சொல்லலாம். சில வயோதிகக் கிழவிகள் மட்டும் அதைவிடவில்லை..
எகிப்திய பெண்கள் ஆங்கில மாதரைப் போலவே ஆடை அணிந்து
கொள்ளுகிறார்கள். துருக்கி தேசத்தில் அதி தீவிரமான மாறுதல்கள் ஏற்பட்
டுள்ளன. சமூகமுன்னேற்றத்தில் துருக்கி மாதர் அதிக பிரயத்தனம் எடுத்து
வருகிறார்கள். சமீபத்தில் ஒரு துருக்கி மாது போலீஸ் சூப்பரெண்டாக
நியமனம் பெற்றிருக்கிறார்.”
குறிப்பு: கொழும்பில் 17 - 10 - 32இல் சிலோன் டெய்லி நியூஸ் பத்திரிகை
பிரதிநிதியொருவருக்கு பேட்டி கொடுத்துப் பேசியது.
குடி அரசு
- நேர்காணல் - 30.10.1932.
135
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
யபணோடாவில் ஆயைப் பிரவேசம்
சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மை
யாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றே யென்பதை
நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில்,
பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல
நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்புப்
பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆக்ஷேபனையின்றிச்
சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்
கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி
இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்; பள்ளிக் கூடங்களில் சேரவந்த
தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை
உண்டாக்கினார்கள்; தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள்
வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக்
குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக் கிரையாக்கினர்:
அவர்கள்
தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்ணெணெயை ஊற்றிக் குடி தண்ணி
ருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்
பட்டவர்களுக்குச் சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள்
அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்தரத்தை உபயோகிக்காமல் விட்டு
விடவில்லை.அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த உத்தரவை மாற்றாமல், பிடி
வாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த
உறுதியை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பால் அனுதாபம் உள்ள எவரும்
பாராட்டாமலிருக்க முடியாது.
இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்
பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு
பிறப்பித்ததை நாம் பாராட்டுகிறோம். இதற்கு முன் “போர்” சமஸ்தானத்திலும்
இவ்வாரே தாழ்த்தப்பட்ட சமூகத்தார்க்குக் கோயில் பிரவேசம் அளித்
திருக்கின்றனர். அதைப் பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதீகர்.
களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப்
பாராட்டுகிறோம்.
இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், “தாழ்த்தப்பட்டவர்.
களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு
குடி அரசு
- 1932 (2)
136
அரசாங்கத்திற்கு சிபார்சு செய்வதாகத்” தீர்மானம் நிறைவேறியிருக்கின்றது.
சென்னை அரசாங்கத்தார், இத்தீர்மானத்தை அனுசரித்தும் “பரோடா”
“போர்” முதலிய சமஸ்தானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும்,
தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்
தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம். சுதேச
சமஸ்தானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும், சென்னை மாகாணப்
பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறைவேற்ற
வேண்டுமென்று சிபார்சு செய்த பிறகும்
சென்னை அரசாங்கம் மெளனஞ்
சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும்
ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம். அரசாங்கத்தின் நோக்கம்
எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும்
நீதிபுரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும்.
ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் “பரோடா”
“போர்” முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட
வகுப்பினர்க்கு ஆலயங்களில் சமஉரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்
என்று கூறுகின்றோம்.
குடி அரசு
- துணைத் தலையங்கம் - 06.111932
137
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கத்தோலிக்கப் வபரியார்கள்
சுயமரியாதை இயக்கமும், குடி அரசும், “கடவுள்” என்று சொல்லப்
படும் ஒன்றை ஒழிப்பதற்கு
என்றோ, அல்லது அது இல்லை யென்று நிலை
நாட்டுவதற்கென்றோ அல்லது அது உண்டு யென்று நிலை நாட்டுவதற்
கென்றோ தோன்றியவைகள் அல்ல; குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தின் மீதும்
துவேஷம் கொண்டு அதை ஒழிப்பதற்குப் புறப்பட்டவையுமல்ல. ஆனால்,
ஜாதியின் பேராலோ, அல்லது மதத்தின்
பேராலோ அல்லது சாஸ்திரங்களின்
பேராலோ மற்ற எதன் பேராலோ ஜன சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் எவ்வித
மான உயர்வு தாழ்வுகளையும் ஒழித்து மக்களுக்குள் சமத்துவத்தை உண்டாக்
கவே இவ்வியக்கம் ஏற்பட்டதாகும். மனிதர்களை மனிதர்கள் பலவகையான
அர்த்தமற்ற காரணங்களைச் சொல்லிப் பரம்பரையாகக் கொடுமைப் படுத்தி
வரும் அக்கிரமத்தை - அது எந்த வகையான பரிசுத்தமான பெயரால் நடை
பெற்று வந்தாலும் அதை ஒழிக்கவே இவ்வியக்கம் தோன்றியதாகும்.
இவ்
வியக்கத்தின் உண்மைக் கருத்தை உணர்வோர் இதை ஒரு “ஜீவரக்ஷக
அறிவியக்கம்” என்று ஒப்புக் கொள்ளாமல் போகமாட்டார்கள்.
ஆனால் மக்களுடைய சமவுரிமைக்கு விரோதமாகவும், அவர்களைக்
கொடுமைக்கு உட்படுத்துவதாகவும், அவர்களுடைய அறிவையும், சுதந்திரத்
தையும், தடைசெய்வதாகவும் உள்ளவை எவையானாலும்,
அவை, கடவுளோ,
மதமோ, சாஸ்திரமோ, ஜாதியோ, அரசாங்கமோ, மற்று எவையோ அவை
களை யெல்லாம் அடியோடு அழிப்பதற்கு இவ்வியக்கம் சிறிதும் பின்
வாங்காது.
ஆகையால் இவ்வியக்கத்தைக் கண்டு, மக்கள் அனைவரும் சம
வுரிமை பெற வேண்டும் என்று விரும்புகின்ற எவரும் - மனிதர்களின்
கையில் அகப்பட்டுப் பரம்பரையாகக் கொடுமையனுபவித்து வருகிற
மக்களை விடுதலை செய்ய வேண்டுமென்று நினைக்கின்ற எவரும் - ஜாதிக்
கொடுமையினின்றும்,மதக் கொடுமையினின்றும் மக்கள் விடுபட வேண்டும்
என்று விரும்புகின்ற எவரும் - சிறிதும் பயப்பட வேண்டிய அவசியமே
இல்லை.ஆனால், மதத்தினாலோ, ஜாதியினாலோ, மூடச் சடங்குகளினாலோ,
சாத்திரங்களினாலோ ஏழை மக்களை அடக்கி வைத்துத் தாமே ஆதிக்கம்
குடி அரசு
- 1932 (2)
138
செலுத்த வேண்டும் என்று நினைக்கின்ற வன்னெஞ்சர்கள் அனைவரும்
பயப்பட்டுத்தான் ஆக வேண்டும். இத்தகைய வன்னெஞ்சகச் சுயநல பிரியர்
களின் ஜீவாதார உரிமைகளை வேரோடு அறுக்க முனைந்து நிற்பதில்
சுயமரியாதை இயக்கத்திற்கு ஒப்பாக வேறொன்றையும் கூற முடியாது.
இந்த உண்மையான காரணத்தை உணர்ந்தே, இப்பொழுது இவ்
வியக்கத்தைப் பல மதத்தைச் சேர்ந்தவர்களும், பல ஜாதியைச் சேர்ந்த
வர்களும், பல கொள்கைகளை உடையவர்களும் ஆதரித்து வருகின்றார்கள்.
நமது இயக்கத்தில் “கடவுள் இல்லை” என்று சொல்வோரும் இருக்கின்றார்கள்.
கடவுள் உண்டு என்று சொல்லுவோரும்; நம்புவோரும் இருக்கின்றார்கள்.
இவ்விஷயம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அபிப்பிராயமாகும்.ஆனால்
இயக்கத்திற்குக் கடவுளைப் பற்றிய கவலையே இல்லை.
இந்த நிலையில், இப்பொழுது நமது இயக்கத்தைப் பகிரங்கமாக
எதிர்க்கப் புறப்பட்டிருகின்றவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாதிரிமார்.
களேயாவார்கள். இவர்கள் நமது இயக்கத்தைக் கண்டு பயந்து, இப்பொழுது
நமது இயக்கத்தையும், குடிஅரசையும் எதிர்க்கப் புறப்பட்டிருப்பதன் காரணம்.
நமக்கு விளங்கவில்லை. ஏழை மக்களைச் சுதந்தரமின்றிக் கட்டுப்படுத்திக்
கொடுமைப்படுத்துங் கூட்டத்தார்க்கு நமது இயக்கமும், குடி அரசும் விரோத
மாகத்தான் காணப்படும் என்ற உண்மையை வைத்துப் பார்க்கும் போது, இந்த
கத்தோலிக்க மதப் பாதிரிமார்கள் சுயமரியாதை இயக்கத்தின் விரோதத்திற்கு
இலக்கானவர்களா யிருக்கலாமோ என்ற சந்தேகம் தோன்றுவது இயல்பே
யாகும்.
கத்தோலிக்க மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களின்
நிலையை எடுத்துக் கொண்டால், அவர்கள் படும் கஷ்டத்திற்கும், இந்து
மதத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் படும் கஷ்டத்திற்கும் ஒன்றும்
வித்தியாசமில்லை என்றே சொல்லலாம்.தாழ்த்தப்பட்டட சமூகத்தைச் சேர்ந்த
கிறிஸ்துவர்களுக்கு உயர்குலக் கிறிஸ்துவர்கள் செல்லும் மாதா கோயில்
களுக்குட் சென்று அவர்களுடன் சமமாக இருந்து வணங்குவதற்கு உரிமை:
யில்லை. கிறிஸ்து மத சம்பந்தமாக வைக்கப்பட்டிருக்கும் கலாசாலைகளிலும்
சாப்பாட்டு விடுதிகளிலும், உயர்குலக் கிறிஸ்துவர்களுக்குச் செய்து
கொடுக்கப்படும் செளகரியங்கள் தாழ்த்தப்பட்ட சமூக கிறிஸ்தவர்களுக்குச்
செய்து கொடுக்கப்படுவதில்லை; இன்னும் இவை போன்ற பல புகார்கள்
நீண்டநாட்களாக இருந்து வருகின்றன. ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த கிறிஸ்துவர் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமை ஆகிய
விசேஷங்களில் பாதிரி மார்களுக்கும் கோயில்களுக்கும் சேர வேண்டிய
பொருளை மாத்திரம் வாங்குவதில் தவறுவதில்லை. இவ்விஷயங்களெல்லாம்
தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்கள் மகாநாடுகளின் மூலம் வெளிப்படுத்தப்
பட்டிருக்கின்றன.
139
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இக்காரணங்களால் இப்பொழுது கிறிஸ்துவர்களில் பலர் பாதிரிமார்.
களைப் பகிஷ்கரித்துச் சுயமரியாதை முறைப்படி கல்யாணம் முதலிய காரியங்
களைத் தாங்களே செய்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இம்முறையில்
திருச்சி ஜில்லாவில் மாத்திரம்
சுமார் 150
கல்யாணங்கள் வரையிலும்
பாதிரிமார்களை நீக்கி நடைபெற்றிருக்கின்றன என்று தெரிகின்றது. இதற்கு
ஒரு வகையில் சுயமரியாதை இயக்கமும் குடி அரசும் காரணமாகும் என்பதை
அவர்கள் நன்றாய் அறிந்திருக்கிறார்கள். இக்காரணத்தால் தான் அவர்கள்.
சுயமரியாதை இயக்கத்தை எதிர்க்கப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில்
ஐயமில்லை.
அவர்கள், இவ்வியக்கத்தால், தமது மதத்தில் கட்டுண்டு, தமது
சொற்களுக்கு அடங்கி நடந்து கொண்டு வரும் பாமர மக்கள் அனைவரும்.
விழிப்படைந்து விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டு, தமது முழு
அதிகாரத்தையும் செலுத்திக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் மத்தியில்
சுயமரியாதை இயக்கத்தை பரவாமல் தடுக்க முயலுகிறார்கள். சமீபத்தில்
கோயம்புத்தூர் ஜில்லாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கெல்லாம், அந்த
மதகுருவாகிய “மேற்றிராணியார்” என்பவர் “குடி அரசிலும், சுயமரியாதை
இயக்கத்திலும் யாரும் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது, “குடி அரசு”
வரவழைத்துப் படிப்பவர்கள் 15 நாட்களுக்குள் அதை நிறுத்தி விட
வேண்டும்” என்று ஒரு சுற்றுத் தரவு அனுப்பி. 15 நாட்களில் குடி அரசை
நிறுத்தாதவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சென்ற 30. 10. 32 - இல் திருச்சியில் நடந்த கத்தோலிக்க வாலிபர்:
மகாநாட்டில், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டிப்பதாகவும், வாசக சாலை
களிலும் பொதுமேடைகளிலும், பத்திரிகைகளிலும் இவ்வியக்கத்தை
எதிர்த்துப் பிரசாரம் பண்ணவேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள்.
இவ்வாறு பாதிரிமார்களும் அவர்களுடைய பக்தர்கள் சிலரும்
செய்யும் வீண் மிரட்டலைக் கண்டு நமது இயக்கமோ, குடி அரசோ சிறிதும்
அஞ்சப் போவதில்லை.ஆனால் ஜன சமூகத்திற்கு நன்மையை உண்டாக்கு
வதற்கெனத் தோன்றிய இவ்வியக்கத்தைக் கண்டு நடுங்கும் கத்தோலிக்க
குருமார்களுக்கும், அவர்களுடைய சீடர்களுக்கும் சில விஷயங்களைச்
சொல்ல விரும்புகின்றோம்.
கத்தோலிக்க மதத்தில் உள்ள மக்கள், கத்தோலிக்க குருமார்களைப்
பகிஷ்கரிக்க ஆரம்பித்திருப்பதற்கும், பாதிரிமார்களின் கட்டுப்பாடுகளை மீற
ஆரம்பித்திருப்பதற்கும், சுயமரியாதை இயக்கமே முழுதும் காரணமல்ல;
மதத்தினாலும், மத குருமார்களின் நடத்தைகளாலும், கட்டுப்பாடுகளாலும்,
அந்த மக்களுக்கு உண்டாகி இருக்கும் கஷ்டமே காரணமாகும்.ஆகையால்
மக்களின் செளகரியத்திற்கு ஏற்றபடி மதக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும்
மதக் கொள்கைகளைத் திருத்தி அமைப்பதுமே மக்களைத்திருப்திப்படுத்தக்
குடி அரசு - 1932 @
140
கூடிய செய்கைகளாகும். இதை விட்டு,மக்களுடைய அறிவையும், சுதந்தரத்
தையும், சமத்துவத்தையும் வளர்க்க முன் வந்துள்ள சுயமரியாதை இயக்கத்தை
ஒழித்து விடுவதென்றால் அது ஒருக்காலும் முடியாத காரியம்.
மத குருமார்கள் சொல்லுவதையெல்லாம் உண்மையென்று நம்பி.
அவர்களுக்கு அடிமையாக இருக்கும் காலம் மறைந்து வருகிறது. மக்கள்:
வரவர அறிவு வளர்ச்சி பெற்று வருகின்றனர். “நாமும் மனிதர்” என்ற
உணர்ச்சி எல்லா மனிதர்களிடமும் உண்டாகிக் கொண்டு வருகிறது. ஜாதி
வித்தியாசங்கள் எல்லாம் பெயரளவில் இருந்தாலும், சில அறிவில்லாதவர்கள்
விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தாலும், உண்மையில் அது தானா
கவே அழிந்து கொண்டே வருகிறது.
மதங்களும், தற்பொழுது புரோகிதக் கூட்டத்தாரின் வயிற்றுப்
பிழைப்புக்காக மாத்திரம் அவர்களால் இருப்பதாகச் சொல்லப்பட்டு வரு
கின்றதே ஒழிய, பொது ஜனங்கள் அவற்றைச் சிறிதும் லட்சியம் பண்ணுவ
தில்லை. பெயரளவில் மதங்கள் உலவி வருகின்றனவேயொழிய உண்மையில்
அவைகள் இல்லவேயில்லை; மதக்கட்டளைகளும், மதசாஸ்திரங்களும்
பாமர மக்களை ஏமாற்றுவதற்காக மத குருமார்களால் வாயளவில் சொல்லவும்
படிக்கவும் மாத்திரம் உபயோகப் படுகின்றனவேயன்றி, அவைகளின் படி
நடப்பவர்கள் யாருமில்லை;
அவைகள் தாமாகவே அழிந்து கொண்டுதான்
வருகின்றன. இன்னும் ஜன சமூகங்களின் பழக்க வழக்கங்களிலும்,
அதிதீவிரமாக மாறுதல் அடைந்து கொண்டே வருகின்றன. இந்த மாறுதல்
களை இனி எவராலும் தடுக்க முடியாது. இன்னும் சில ஆண்டுகளில் இம்
மாறுதல் காரணமாக, மதங்களும், ஜாதிகளும், சடங்குகளும் புரோகிதக்
கூட்டங்களும் கட்டாயம் அடியோடு அழிந்தே போகும். இந்த மாறுதலை
ஒட்டியே சுயமரியாதை இயக்கமும் சீர்திருத்தம் செய்ய உழைத்து வருகிறது.
ஆகையால் இவ்வியக்கத்தை அடக்கி விடலாம் எனக் கனவு காண்பதில்
ஒன்றும் அர்த்தமில்லை என்று கூற விரும்புகின்றோம்.
சுயமரியாதை இயக்கத்தை எதிர்த்து எவ்வளவு பிரசாரம் செய்ய
வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்தாகி விட்டது. சைவப்பெரியார்கள்
செய்த எதிர்ப்பிரசாரத்தைவிட, வைணவப் பெரியார்கள் செய்த எதிர்ப்
பிரசாரத்தைவிட காங்கிரஸ் பெரியார்கள் செய்த எதிர்ப்பிரசாரத்தைவிட
கத்தோலிக்கப் பெரியார்கள் ஒன்றும் அதிகமான எதிர்ப்பிரசாரம் பண்ணி
விடப் போவதில்லை. அன்றியும், சுயமரியாதை இயக்கமும், குடி அரசும்
எப்பொழுதும் எதிர்ப்பிரசாரத்தைச் சந்தோஷத்தோடு வரவேற்குமே யொழிய
அதைக் கண்டு அஞ்சுகின்ற வழக்கமில்லை என்பதை இச்சமயத்தில்
நினைப்பூட்ட விரும்புகின்றோம்.
ஏனெனில், இதுவரையில் எதிர்ப் பிரசாரத்தினால் இவ்வியக்கமும் குடி
அரசும் செல்வாக்கும், வளர்ச்சியும், வலுவும் பெற்றனவே ஒழிய சிறிதும்
141
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
குறைவடையவில்லை. ஆகையால், கத்தோலிக்கர்கள் செய்யும் ஆர்ப்பாட்
டத்தால்,
இப்பொழுது, தமிழ் நாடு, மலேயா, பர்மா, சிலோன் முதலிய இடங்
களில் நன்றாக வேரூன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கமும், குடி அரசும்
மற்றய தேசங்களிலும் சென்று பரவும் என்பதில் ஐயமில்லை. ஆகையால்,
தாராளமாகக் கத்தோலிக்கப் பெரியார்கள் எதிர்ப்பிரசாரம் செய்ய முன்
வரட்டும் என்று அறை கூவி அழைக்கின்றோம்.
ஆனால் உண்மை எப்பொழுதாவது வெளிப்பட்டுத்தான் தீரும்.
உண்மையை எப்பொழுதும் பின்பற்ற மக்கள் தயாராகத்தான் இருப்பார்கள்.
பொய்யான கட்டுப்பாடுகளும், மக்களை ஏமாற்றுவதற்கு - அடிமைப் படுத்து
வதற்கு என்று ஏற்படுத்தி வைத்துள்ள மதக் கட்டுகளும் இனி நிலைத்து நிற்க
முடியாது: அழிந்து தான் தீரும் என்று மாத்திரம் கடைசியாகத் தெரிவித்துக்
கொள்ளுகிறோம். அன்றியும், தங்கள் கொள்கைகளும் செய்கைகளும்,
நடத்தைகளும், வார்த்தைகளும், பரிசுத்மானவை; உண்மையானவை; அழிய
முடியாத “தெய்வீகத்” தன்மை பொருந்தியவை என்ற உண்மையான
நம்பிக்கையுடையவர்களாயிருந்தால் அவர்கள் எதற்கும் அஞ்ச வேண்டிய
தில்லை. உண்மையான - அழியாத - “தெய்வீகத் தன்மை பொருந்திய
மதத்தைச் சுயமரியாதை இயக்கமோ, மற்ற எதுவோ அழித்து விட முடியாது.
ஆதலால் கத்தோலிக்கப் பெரியார்கள் தங்கள் மதத்திலும், தங்களுடைய
கட்டுப்பாடுகளிலும், பழக்க வழக்கங்களிலும் உண்மையான நம்பிக்கையு
டையவர்களாய் இருந்தால்
ஏன் சுயமரியாதை இயக்கத்தையும் குடி
அரசையும் கண்டு நடு நடுங்க வேண்டும் என்று கேட்கின்றோம்? ஆகவே,
அவர்களுடைய கொள்கையில் அவர்களுக்கே நம்பிக்கையில்லையா என்று
கேட்கின்றோம்.
மதக் கட்டுப்பாடுகளினாலும், மதகுருமார்களாலும், தங்கள் அறிவும்,
சுதந்திரமும், செல்வமும் பாழாகின்றன என்ற உணர்ச்சி பெற்ற மக்களை,
“சுயமரியாதை இயக்கத்தோடு
சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று
சொல்லுவதனாலோ, “குடி அரசைப் படிக்கக் கூடாது” என்று கூறுவதனாலோ
அடக்கி விட முடியாது என்று எச்சரிக்கின்றோம். நாலா பக்கமும் அறிவு
வெள்ளமும், சுதந்தர வெள்ளமும், சமத்துவ வெள்ளமும் பெருக்கெடுத்து
வந்து பெரிய பெரிய அலைகளுடன் மோதும் போது நடுவில் உள்ள மூடப்
பழக்க வழக்கம், அர்த்த மற்ற பயங்கரமான கட்டுப் பாடுகள், அறிவுக்குப்
பொருந்தாத கோட்டுபாடுகள் ஆகியவைகள் சேர்ந்த மணல் முட்டு எப்படி
நிலைத்து நிற்கும்? என்று யோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம்.
ஆகையால் இனி, எந்த விதமான பிரசாரம் செய்தாலும் ஜாதிப்
பகிஷ்காரம், மதப் பகிஷ்காரம், போன்ற பூச்சாண்டிகளைக் காட்டினாலும்
பகுத்தறிவுடைய மக்களை பயமுறுத்த முடியாது. ஜாதியும் வேண்டாம்,
மதமும் வேண்டாம் என்று சொல்லும், சுயமரியாதை இயக்கத்தோடு
குடி அரசு
- 1932 (2)
142
சம்பந்தப்பட்டவர்கள் குடி அரசைப் படிப்பவர்கள், ஜாதி பிரஷ்டத்திற்கும்
மதப் பிரஷ்டத்திற்கும் அஞ்சுவார்களா? ஆகையால் கத்தோலிக்கப்
பெரியார்களின் மிரட்டலும் ஆர்ப்பாட்டமும் வீண் என்பதை எடுத்துக் காட்ட
விரும்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.11.1932.
143
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அதி கிராவிட அவிவிர்த்தி சங்கத்தார்
வாவவேற்பு
அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!! அக்கிராசனரவர்கள்.
எம்மைப்பற்றி அதிக புகழ்ச்சியாகக் கூறிவிட்டார்கள். நான் அவைகளுக்கு
அருகதையுடையவனல்ல என்றாலும், நமது மக்கள் தங்களது பகுத்தறிவைக்
கொண்டு நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொள்கிறது
ஒன்றே எமக்கு திருப்திகரமாகவிருக்கிறது. “தாழ்த்தப்பட்ட மக்கள் ஈடேறும்
வழி” என்பதாக என்னை பேசும்படி கேட்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி
வியாக்கியானம் அதிகம் செய்ய வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.
ஏனெனில் பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம்
என்பவைகளின் உட்கருத்தை ஊன்றிக் கவனித்தால் தாழ்த்தப்பட்ட மக்கள்
ஈடேரும் வழி தானாகவே தோன்றும். எப்படி எனில் குறிப்பிட்ட எந்த
விதமான அபிமானத்தை எடுத்துக் கொண்ட போதிலும், அநேகமாக அந்த
அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகளே நடைபெறுகின்றன. தாழ்த்தப்பட்ட
மக்களின் தலைவராகவுள்ளவர்கள் இவைகளை ஊன்றிக் கவனித்து
-
அலசிப்பார்த்து - உரைகல்லில் வைத்து உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு
அவர்கள் பார்ப்பார்களேயானால் வாஸ்தவதத்திலே தாழ்த்தப்பட்டவர்கள்.
ஈடேறும் வழியை எளிதில் கண்டு கொள்வதற்கு ஏதுகரமாக விருக்கும்.
மக்களது முன்னேற்றத்திற்கு தடைகல்லாக விருக்கும் காரியங்கள் எது
வுண்டோ அவைகளை தகர்த்தெரிய வேண்டும். வீணாக - ஆடம்பரமாக
நாங்களும் தலைவர்கள் தான் என்று வீரம் பேசிக் கொள்வதில் பயனில்லை.
நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அப்பகுத்தறிவின் பயனால் இடையூறாக
இருக்கும் காரியங்களை மனோதிடத்துடன் தகர்த்தெறிய முன்வர வேண்டும்.
அன்றே முன்னேற - ஈடேர வழி ஏற்படுமென்பதில் சிறிதும் ஐயமில்லை.
குறிப்பு :ஆதி திராவிட அபிவிருத்தி சங்கத்தின் ஆதரவில் கொழும்பு கும்பனித்
தெரு, சி.எம். எஸ். பாட சாலையில் 2. 10. 1932- இல் நடைபெற்ற வரவேற்பு கூட்டத்
தில் ஆற்றிய சொற்பொழிவு:
குடி அரசு - சொற்பொழிவு - 06.11.1932.
குடி அரசு
- 1982 (2)
144
ஈ.ணை.ரா. குறிப்பு
தோழர்களே, எனது மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணம் ஒருவாறு
வெற்றியுடன் முடிந்து 11-11-32 தேதி காலை ஈரோடு வந்து சேர்ந்திருக்கிறேன்.
நீண்ட பிரயாணத்தினால் நான் சிறிது களைப் புற்றிருந்தாலும் சமீபத்தில்
களைப்பு நீங்கி இயக்க வேலையை மும்முரமாய் தொடங்க உறுதி கொண்டி
ருக்கிறேன். என்னுடன் கூட வந்த தோழர் ராமநாதன் அவர்கள் என்னை மார்.
செயில்ஸில் இந்தியாவுக்கு கப்பலேற்றி விட்டு ஜினிவாவுக்கு சென்று
இருக்கிறார். அங்கு சில விஷயம் அறிந்து 2 அல்லது 3 மாதத்தில் இந்தியா
திரும்புவதாக சொல்லிப் போயிருக்கிறார். அதற்குள் கூடிய சீக்கிரம் நமது
இயக்கத் தோழர்கள் பலரை கூட்டிக் கலந்து பேசி ஒரு வேலைத் திட்டத்துடன்
தீவிர பிரசாரம் நடத்த உத்தேசித் திருக்கிறேன்.
சீக்கிரத்தில் எனது சுற்றுப் பிரயாணத்தின் விருத்தாந்தங்களையும்,
காட்சிகளையும், அதனால் நான் கொண்ட கருத்துக்களையும் அதை எந்த
அளவுக்கு நாம் பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கி சீக்கிரம்
பத்திரிகையில் வெளியிடவும் உத்தேசித்து இருக்கிறேன். நான் இங்கு இல்லாத
போது இயக்கத்தை தொடர்ந்து முன்னிலும் பல மடங்கு அதிகமாக எழுத்
தாலும் உபன்யாசங்களாலும் மகாநாடுகள் கூட்டியும் மக்களுக்கு உண்மை
உணர்ச்சிக்களை ஊட்டி தீவிரமாய் வேலை செய்து வந்த தோழர்கள் யாவ
ருக்கும் நான் என் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளு
கிறேன்.
முக்கிய குறிப்பு
இயக்கத் தோழர்களும் இயக்க அபிமான தோழர்களும் இனி
ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்ளுவதிலும், பெயருக்கு முன்னால்
பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக
“தோழர்” என்கின்ற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா -
ள- ஸ்ரீ, கனம், திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது
போன்ற வார்த்தைகள் சேர்த்து பேசவோ எழுதவோ கூடாது என்று
வணக்கமாய் வேண்டிக் கொள்ளுகிறேன். “குடி அரசி” லும் அடுத்த வாரம்
முதல் அந்தப்படியே செய்ய வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்
கிறேன். -ஈ.வெ.ரா
குடி அரசு - அறிக்கை - 13.11.1932.
145
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 16
ஈ. வை. கறாமசாமியிண் கொழும்பு விகயைம்
கொழும்பு பர்ஷியன் ஹோட்டல் விருந்து
இன்று உலகில் பெரும் பாகத்தில் நடக்கும் தேசப்பக்திக் கிளர்ச்சிக்கும்
ஜாதியக் கிளர்ச்சிக்கும் அரசியல் கிளர்ச்சிக்கும் தனது அபிப்பிராயம் மாறு
பட்டிருப்பதாகவும் இவ்வித கிளர்ச்சிகள் கஷ்டப்படும் மக்களுக்கு எவ்வித
மாறுதலையோ பயனையோ கொடுக்காதென்றும் ஏழை மக்களின் கஷ்டங்
களைச் சொல்லிக் கொண்டு அதின் பேரால் சோம்பேரி வாழ்க்கைப் பிரியர்.
களாலும், பேராசைக் காரர்களாலும் நடத்தப்படும் போட்டி “வியாபாரங்களே”
இன்று தேசீயமாயும், ஜாதீயமாயும் மதாபிமானமாயும் இருக்கின்றதே தவிர
அவற்றுள் நாணயமோ உண்மையோ சிறிதும் தன்னால் காணக்கூடவில்லை
யென்றும், உலகில், ஒரு பெரிய மாறுதல், அதாவது வெடி மருந்து சாலையில்
தீப் பிடித்து வெடிக் கிளம்புவது போல் சமீபத்தில் ஏற்படப் போகின்றதென்றும்
வாழ இஷ்டமிருக்கின்றவர்கள் அதற்குத் தகுந்தபடி தங்களை ஆக்கிக்
கொள்ள வேண்டு மென்றும், இப்போதையப் பெரும்பாக கிளர்ச்சிகள் உலக
உண்மைக் கஷ்டத்தைக் கஷ்டப்படும் மக்கள் அறிய முடியாமல் இருப்ப
தற்குச் செய்யும் தந்திரமென்றும் பேசினார்.
குறிப்பு : 20-10-1932 இரவு கொழும்பு பர்ஷியன் விடுதியில் தோழர் டி.சாரனாதன்.
மற்றும் சில செட்டித் தெரு தோழர்கள் ஆகியோர் அளித்த விருந்தில் கலந்து
கொண்டு பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 13.111932.
குடி அரசு - 1932 @
146
கொழும்பு வகயிட்மு தியோட்டர் வாவேற்பு
இந்த சினிமாக் காட்சி பார்ப்பதற்கு மிக அதிசயமாயும் ரம்மியமாயும்
காணப்பட்டாலும், இதைப் பார்ப்பதனால் ஏற்படும் பயன் மூடநம்பிக்கையும்
அடிமைத் தனமும் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், இந்த மூட
நம்பிக்கையும், அடிமைத் தன்மையையும் சோம்பேரிகள் பயன்படுத்திக்
கொண்டு ஏழைகளை வருத்தி செல்வம் பெருகிக்கொள்ள பயன்படுகின்ற
தென்றும், இனி இப்படிப்பட்ட காட்சிகள் தடுக்கப்பட வேண்டுமென்றும்,
பகுத்தறிவும், சுதந்தரமும் ஏற்படக் கூடிய விஷயங்களையே நாடகமாகவோ,
படக் காட்சியாகவோ காட்ட இந்த தியேட்டர் சொந்தக்காரர் முயற்சிக்க
வேண்டுமென்றும், உண்மையான சுதந்திர, சமத்துவத் தேசங்களில் உள்ள
காட்சிகள் அப்படித்தான் இருக்கின்ற தென்றும் சொன்னார்.
குறிப்பு :21-10-1032மாலை கொழும்பு கெயிட்டி திரையரங்கில் சில சிங்கள வாலிபர்
களால் நடத்தப்பட்ட திரைப்படக் காட்சியைப் பார்த்தும் வரவேற்புப் பத்திரத்திற்கு.
பதில் அளித்தும் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932.
147
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஆதி திராவிடர் சங்க வாவேற்பு
தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேற ஒரே ஒரு வழிதான் உண்டென்றும்,
அது
உலகில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர வேண்டிய முயற்சி
எடுக்க வேண்டு மென்றும், அம்முயற்சிக்கு எதிரியாய் இருக்கும் சாதனங்
களான தேசாபிமானம், மதாபிமானம் என்பவைகளை அடியோடு அழித்து
உலக ஏழைகள் அபிமானம் - உலக தாழ்த்தப்பட்டவர்கள் அபிமானம்
என்பதன் உணர்ச்சியுடன் வேலை செய்யத் துணிய வேண்டும் என்றும், உலக
மனித சமூகத்தை 2 வகுப்பாகத்தான் பிரிக்க வேண்டு மென்றும், அது ஒன்று,
தொழில் செய்து கஷ்டப்பட்டு வாழும் ஏழை, மற்றொன்று தொழில் செய்யா
மல் மற்றவர்கள் தொழிலின் பயனை அனுபவிக்கும் சோம்பேரி செல்வ
வான்கள் என்றும் இரண்டே பிரிவாகப் பிரிந்து போராடி விடுதலை அடையத்
தயாராயிருக்க வேண்டு மென்றும் பேசினார்.
(கடைசியாக ஒரு உபதேசியார் எழுந்து ராமசாமியின் உழைப்பையும்
உபதேசத்தையும் தான் பல வருஷங்களாகப் பார்த்து வருவதாகவும்,
அவர்.
மூலம் தான்மக்கள் கஷ்டம் ஒழியக் கூடுமென்றும், ஆனால் அவர் கடவுளை
நம்பவில்லை யென்று சொல்லுவது தனக்கு வருத்தத்தைக் கொடுக்கிற
தென்றும் சொன்னார்.) அதற்கு ராமசாமி பதிலளிக்கையில், கடவுளை நம்ப
வேண்டும் என்பது ஒரு அடக்கு முறை என்றும், அது அவனவன் சொந்த
விஷயமாகப் பாவிக்க வேண்டுமென்றும் கடவுள் மீது சிறிதாவது நம்பிக்கை
இருப்பவர்கள் ராமசாமியால் கடவுள் இல்லாமல் போய் விடுமோ என்று பயப்
பட வேண்டியதில்லை என்றும், உலகில் நடக்கும் அக்கிரமங்களுக்கும், ஏழை
களை வஞ்சித்து கொடுமைபடுத்தி வேலை வாங்கி சோம்பேரியாய் வாழும்
அயோக்கியத்தனத்திற்கும் பெரிதும் கடவுள் நம்பிக்கைக்காரர்கள் தான்
காரணஸ்தர்களாகவும் பொருப்பாளிகளாகவும் இருக்கின்றார்களே ஒழிய
வேறில்லை என்றும்,
ஆதலால் கடவுள் நம்பிக்கை போய் விட்டால் உலகம்
என்ன கதியாகும் என்று யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும்
சொன்னார்.
குறிப்பு :22-10-1932 இரவு கொழும்பு ராதாபுரம் டிவிஷன் திருநெல்வேலி ஜில்லா
ஆதிதிராவிடர் சங்கத்தின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 13.11.1932.
குடி அரசு - 1932 (@)
148
வைதீகப் பார்ப்பானுக்கும் கோயில் பிரவேச
யார்ப்பானுக்கும் சம்பாஷணை
- தேசியத் துரோகி
வைதீகப் பார்ப்பனர்: என்ன சாஸ்திரிகளே! நீங்கள் கூட பறைப்
பசங்களை கோயிலுக்குள் விடுவது சரியென்று சொல்லுகிறீரே! நீரே இப்படிச்
சொல்ல ஆரம்பித்துவிட்டால் பிறகு நம்ம சாஸ்திரங்கள் என்ன ஆவது?
கோயில் பிரேவேச பார்ப்பனர்: ஆமாம்! என்ன பண்றது! இனி
சாஸ்திரத்தையும் மதத்தையும் சொல்லி அந்தப் பசங்களின் சுதந்திரத்தைத்
தடுக்க முடியாது. அந்தப் பசங்களும் நம்ம சாஸ்திரத்தில் என்ன சொல்
லுகிறது என்று தெரிந்து கொண்டார்கள். அவர்கள் ஏதாவது கேட்கும் போது
நாம் சாஸ்திரமென்றோ மதமென்றோ சொன்னால், உடனே அவர்கள் நீங்கள்
அவைகளின் படி நடக்கிறீர்களா? என்று கேட்டு விடுகிறார்கள்? அதற்கு நம்
மால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஆகையால் அவாள் சொல்றதை
ஆமோதித்தால் தான் நம்மையும் நாலு மனுஷாள் நல்லவன் என்று
சொல்லுவான்கள் போலிருக்கிறது?
வை-
பா:இதற்காகவா நாம் பயந்து விடுகிறது? பிறகு நம்ம ஜாதிக்கே.
ஆபத்து வந்து விடுமே. சாஸ்திரம், பிராமணாளாகிய நம்ம செளகரியத்திற்கு
ஏற்படுத்தியதுதானே! சாஸ்திரத்திற்கே அதிகாரிகள் நாம் தானே! நாம் அதன்
படி நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? நம்மைக் கேட்க இந்தப் பசங்
களுக்கு என்ன அதிகாரமுண்டு?
கோ. பி: பா சரிதான் காணும். நீர் சொல்றதை யார் காது கொடுத்துக்
கேட்கிறார்கள். சாஸ்திரத்தின்படி நடந்தால் தானே நீ பார்ப்பான்? நீ,
பார்ப்பானுக்குச் சொல்லப்பட்ட எல்லா கர்மாக்களையும் செய்கிறாயா? இங்கி
லீஷ் படித்து உத்தியோகம் பண்ணும்படி உங்கள் சாஸ்திரம் சொல்லுகிறதா?
காப்பி கிளப் வைத்திருக்கிறவனையும், கள் குடிப்பவனையும், கப்பலேறி
செல்பவனையும் மிபேச்சர்களாகிய ஆங்கிலேயர்களுடன் கைக்குலுக்குகிற
வனையும் பார்ப்பான் என்று சொல்ல உங்கள் சாஸ்திரம் இடங்கொடுக்
149
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
கிறதா? இப்படிப் பட்டவர்களை யெல்லாம் பார்ப்பனர்கள் என்று நீங்கள்
ஒப்புக் கொண்டு அவர்களுக்கு எல்லா விடங்களிலும் சமத்துவம் வழங்கும்
போது நாங்களும் ஏன் சமத்துவம் பெறக் கூடாது? என்று கேட்கிறார்களே
இதற்கு என்ன சொல்வது?
வை- பா: இதற்குத்தானா சமாதானம் சொல்ல முடியாது? காயத்திரி
ஜெபம்பண்ணும் சுதந்தரம் பார்ப்பானுக்குத் தான் உண்டு. ஆகையால் அவன்
எந்தப் பாபத்தைச் செய்தாலும் காயத்திரி ஜெபம் பண்ணி அதை நீக்கிக்
கொள்ளுகிறான்.
அதனால் அவன் சுத்த பார்ப்பனாகி விடுகிறான் என்ற
சமாதானத்தைச் சொல்லுமே.
கோ- பி- பா: சரி, நீர் சொல்லற சமதானத்தையே சொல்லுவதாக
வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது, அந்தக் காயத்திரி ஜெபத்தை
எங்களுக்கும் கற்றுக் கொடுங்களேன்; நாங்கள் அதை ஜெபித்துக் கொண்டு
பார்ப்பானாகி விடுகிறோம் என்று சொன்னால் என்ன சொல்லுகிறது?
வை-
பா: காயத்திரி ஜெபத்தைச் சூத்திராளுக்கும், பஞ்சமாளுக்கும்
கற்றுக் கொடுக்கச் சாஸ்திரமில்லை என்று சொல்லி விட்டால் போகிறது.
கோ. பி. பா: ஆரிய சமாஜத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோருக்கும்
காயத்திரி மந்திரத்தைக் கற்றுத் கொடுத்துப் பார்ப்பானாக்கி விடுகிறார்களே;
அந்த மாதிரி நீங்களும் செய்யுங்களேன்; என்று சொன்னால் என்ன
சொல்லுகிறது?
வை - பா: ஆரிய சமாஜத்தார் செய்வது தப்பு. அவர்கள் இந்து
மதத்தைச் சேர்ந்தவாள் அல்ல; அவாள் முக்கால் நாஸ்திகாள் என்று சொல்லி
விடுவது தான் நல்லது.
கோ. பி. பா: சரி, நீர் சொல்ற சமாதானத்தைச் சொன்னால் எல்லாரும்
கேட்பார்களா? சுயமரியாதைக்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சமாதா
னம் சொல்ல முடியாமலிருக்கிறதே. அவர்கள் ஒரேடியாக, “சாஸ்திரங்க
ளெல்லாம் பொய் அவைகள் பார்ப்பனர்களின் வயிற்றுப் பிழைப்புக்காக
ஏற்பட்டவை. மனிதர்களுக்குள் சிறிதும் வித்தியாசமே இல்லை. எல்லா
மனிதர்களுக்கும் எல்லாச் சுதந்தரங்களும் உண்டு. உலகத்தில் உள்ள
வித்தியாசங்கள் எல்லாம் மனிதனால் ஏற்பட்டவை தான், அதுவும் சுயநலத்
தால் ஏற்பட்டவைகள்” என்று கூறி சமதர்ம வாதம் புரிகிறார்களே அவர்களை
எப்படிச் சமாதானப் படுத்த முடியும்?
வை-பா:அடே அப்பா! சுயமரியாதைக்காரர்களா? அவர்கள் பெய
ரைக் கேட்டவுடனேயே எனது வயிறு கலங்குகிறது. எல்லாம் அவர்களால்
குடி அரசு
- 1932 (2)
150
வந்த வினைதான், அவர்கள் சொல்லும் வாதங்களுக்கு ஒன்றும் சமாதானம்
கூற முடியாதுதான். அவர்கள் கொடுத்த சாட்டையால்தான், நம்ம
ராஜகோபாலச்சாரி கூட இப்பொழுது கோயில் பிரவேசத்தைப் பற்றி அதி
தீவிரமாகப் பிரசாரம் பண்ணுகிறார். அவர்களுக்குக் கூற வேண்டிய சமா
தானம் ஒன்றுதான். நீங்கள் நாஸ்திகர்கள், உங்களுக்கு ஒன்றும் சொல்ல
முடியாது என்று சொல்லி விட வேண்டியது தான். மற்றவர்களிடமும்.
அவர்களைப் பற்றி “நாஸ்திகர்கள், மதத் துரோகிகள், தேசத்துரோகிகள்”
என்று கூறிவிட்டால் சரியாகப் போய்விடும். ஆகையால் அதைப் பற்றிக்
கவலை வேண்டாம்.
கோ-
பி- பா: ஆமாம்
| இவ்வளவு சிரமந்தான் நமக்கு எதற்கு?
நம்மால்தான் சாஸ்திரத்தின் படி நடக்க முடியவில்லை. எதோ சும்மாவாவது
சாஸ்திரம்! சாஸ்திரம்! என்று சொல்லிக் கொண்டு வருகிறோம். ராஜ
கோபாலாச்சாரியார் முதலியவர்கள் சொல்லுகிறபடி கோயில்களில் ஆதி
திராவிடர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்களை யெல்லாம் விட்டு விட்டால்
தான் என்ன? சாஸ்திரம் போனால் போகிறது? இனி மேல் தானா சாஸ்திரம்
போக வேண்டும், அது தான் முன்னமே போய்விட்டதே!
வை - பா: அட பைத்தியமே! உமக்குச் சிறிதும் விஷயம் புரிய
வில்லையே. ஏதோ, சாஸ்திரம், மதம் என்று சொல்லிக் கொண்டிருப்பதனால்
தான் கொஞ்சமாவது நமக்கு மதிப்பிருக்கிறது. நம்மை ஒன்றுந் தெரியாத
பாமரமக்களாவது உயர்ந்த ஜாதியென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்
இல்லா விட்டால் அதுவும் போய்விடுமே! என்ன செய்கிறது?
கோ. பி.பா: இப்பொழுதான் நமக்கு என்ன மதிப்பிருக்கிறது? நம்மை
எவன் மதிக்கிறான்; இனி மேல் தானா நம்முடைய மதிப்புக் கெடவேண்டும்?'
யார் நமது வார்த்தையைக் கேட்கப் போகிறார்கள்?
வை- பா: அப்படியா? எத்தனையோ சோணகிரிகள் இல்லையா?
கும்பகோணத்தில் ராவ்பகதூர் முத்துக் குமரசாமி செட்டியார் அவர்கள்
போன்றவர்கள் இல்லையா? அவர்களெல்லாம் நமக்குக் கெளரவும்
கொடுப்பதால் தானே நம்ம சாஸ்திரத்தையும் நம்புகிறார்கள்? அவர்கள்
கோயில் பிரவேசத்திற்கு எதிராக இல்லையா? அவர்களைப்போல இன்னும்
பத்து பணக்காரச் சூத்திராள் நம்மை ஆதரித்தால் போதாதா?
கோ. பி. பா: ஓகோ! கோ! இப்பொழுதான் விஷயம் புரிந்தது! நாம்
சாஸ்திரத்தின் படி நடக்காவிட்டாலும், நமக்கு அதில் நம்பிக்கையில்லா
விட்டாலும், நாம் சாஸ்திரங்களைத் தெய்வீகமானவைகள் என்றும் கடவுளால்
ஏற்பட்டவைகள் என்றும், அவைகளை மீறி நடந்தால், பாவம், மதம் போய்
விடும், தோஷம் சம்பவிக்கும் என்ற பிரச்சாரம் பண்ணுவதனால், நமக்கு
151
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
லாபமுண்டு என்று தெரிந்துக் கொண்டேன். இம்மாதிரி பிரசாரம் பண்ணி
ணால்தான், ஒன்றுந்தெரியாத பார்ப்பனல்லாதார் நம்மை மதிப்பார்கள், நாமும்
அவர்களை மிரட்டி மதத்தின் போராலும், சாஸ்திரங்களின் பேராலும் காசு
பறிக்கலாம் என்று சொல்லுகிறீர். சரி.இனி நானும் கோயில் பிரவேசப் பேச்சை
விட்டு விடுகிறேன். எதிர்ப்பிரசாரம் ஆரம்பித்து விடுகிறேன்.
வை-
பா: சந்தோஷம், அதுதான் சரி, இப்படிச் செய்தால் தான், சுய
மரியாதைக்காரர்கள் தேசாதிகாரிகளாக வரும் வரையிலாவது நம்முடைய
சூழ்ச்சிகள் நிலைத்திருக்கும். இன்றேல் பிராமணீயமே அழிந்து போகும்.
குடி அரசு - உரையாடல் - 13.11.4932.
குடி அரசு
- 1932 (2)
152
இலங்கை உயண்மாசம்
அன்புள்ள தலைவரே! வீரமும், எழுச்சியும், சுயமரியாதை உணர்ச்சி
யும் உள்ள வாலிபர்களே!
தலைவரின் முன்னுரையிலும், உபசாரப் பத்திரங்களிலும், மற்றும்
பேசியவர்களும் அளவுக்கு மீறி என்னைப் பற்றியும், எனது சிறு தொண்டைப்
பற்றியும் புகழ்ந்து கூறி இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட புகழ்ச்சிகளுக்கு நான்
சிறிதும் தகுதியுடையேன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கி
றேன். அதோடு கூடவே இதன்மூலம் நீங்கள் எனது கொள்கைகளையும்,
தொண்டையும் ஆதரிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து மகிழ்ச்சியடைகிறேன்.
மனித சமூகம்
தோழர்களே! எனது அபிப்பிராயத்திற்கும், முயற்சிக்கும், குறிப்பிடத்
தகுந்த அளவு எதிர்ப்பு இருக்கின்றது என்பதை நான் அறியாமலோ, அல்லது
அறிந்தும் அவைகளை மறைக்க முயலவோ இல்லை.யார் எவ்வளவு எதிர்த்த
போதிலும், யார் எவ்வளவுக்கு தூஷித்து விஷமப் பிரசாரம் செய்த போதிலும்,
யார் எவ்வளவு எனது அபிப்பிராயம் வெளியில் பரவாமல் இருக்கும் படியும்
சூழ்ச்சிகள் செய்து மக்களின் கவனத்தை வேறுபக்கம் திருப்பிய போதிலும்,
உலகத்தில் எல்லா பக்கத்திலும் வேத புராண சரித்திரகாலம் முதல் இன்றைய
வரையிலும் மனித சமூகமானது கடவுள், ஜாதி, மதம், தேசம் என்னும்
பேர்களால் பிரிவுபட்டு உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை - பணக்காரன்,
முதலாளி - தொழிலாளி, அரசன்
- பிரஜைகள், அதிகாரி - குடி ஜனங்கள்,
குரு -சிஷ்யன் என்பனவாகிய பல தன்மையில் வகுப்பு வித்தியாசங்களுக்
காளாகி மேல் கீழ் தரத்தோடு கட்டுப்பாடான சமுதாயக் கொடுமைகளாலும்,
அரசாங்கச் சட்டங்களாலும் கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றது - வரு
கின்றது என்பதை மாத்திரம் யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது
என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இவ்வகுப்பு பேதங்களால் மக்கள் படும்
துன்பத்தையும். அனுபவிக்கும் இழிவையும் அல்லும் பகலும் காடுகளிலும்,
மேடுகளிலும், தொழிற்சாலைகளிலும், கஷ்டமான வேலைகளைச் செய்தும்,
வயிறார கஞ்சி இல்லாமலும் குடியிருக்க மழைக்கும், வெய்யிலுக்கும்,
153
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மறைவுக்கும், நிழலும் இல்லாமலும் எத்தனை பேர் அவதிப்படுகிறார்கள்'
என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவர்களது நிலைமையை உங்கள் மனத்தில்
உருவகப்படுத்திபாருங்கள். இந்தக் கொடுமைகள் எத்தனை காலமாக இருந்து
வருகின்றன? இன்றா? நேற்றா? இது அன்னிய அரச ஆட்சியாலா? குடி
ஆட்சி இல்லாததாலா? தர்ம தேவதை ஆட்சி, அவதார ஆட்சி, தெய்வாம்ச
ஆட்சி இல்லாததாலா? என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். உலக சரித்திரம்
கிடைத்தது முதல் உலகத்தில் எந்த பாகத்தில் எந்த ஆட்சியால் என்றைய
தினம் இந்தக்
கொடுமைகள் இல்லாதிருந்தது என்பதைச் சற்று நினைவுக்குக்
கொண்டு வந்து பாருங்கள்.
காரணம்
தோழர்களே! இனி இதற்கு அடிப்படையாகவும், அரணாகவும் இருந்து
வரும் காரணங்கள் எவை என்பதை நீங்கள் சற்று நடுநிலைமையில் இருந்து
சிந்தித்துப் பார்த்தீர்களானால் இக்கொடுமைகளுக்கு முக்கியக் காரணம்
முற்கூறிய மதம், கடவுள், ஜாதீயம், தேசீயம்
என்பவையாகிய மயக்க
உணர்வை மக்களுக்கு ஏற்றி அதன் பயனாக பெரும்பான்மையான மனித
சமூகத்தை மடமையாக்கி ஏய்த்து, அடிமைப்படுத்தி தங்கள் சுயநலமே
பிரதானமெனக் கருதி சோம்பேறிகளாய் இருந்து கொண்டு சுகம் அனுபவித்து
வரும் ஒரு சிறு கூட்ட மக்களின் சூழ்ச்சியே ஒழிய வேறில்லை என்பதைத்
தெள்ளத் தெளிய உணர்வீர்கள்.
இந்த சூழ்ச்சிகளை யாராவது வெளிப்படுத்தக் கிளம்பி விட்டாலோ
உடனே அப்படிப்பட்ட காரியத்தை நாஸ்திகம் என்றும், மதத்துரோகம்
என்றும், தேசத் துரோகமென்றும், தேசீயத்துக்கு விரோதமென்றும் சிலர்.
சொல்லி அடக்கி விடப்பார்க்கிறார்கள். இப்படிச் சொல்லி அடக்குகின்ற
வர்கள் யார் என்று பார்த்தாலோ அவர்கள் பெரிதும் மேல் நிலையில் இருந்து
கொண்டும், சரீரத்தினால் சிறிதும் பாடு படாமல் சோம் பேரி வாழ்க்கையில்
இருந்து கொண்டும் அன்னியன் உழைப்பின் சுக மனுபவிக்கும் ஒரு சிறு
கூட்டத்தாரும் மற்றும் அவர்களால் தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக்
கொள்வதற்காக என்று ஏற்படுத்தப்பட்டு இருக்கும் அவர்களது கூலிப்
பிரசாரகர்களுமே யாவார்கள்.அதோடு “ஈன ஜாதி” யாராயும் ஏழைகளாயும்
தொழிலாளர்களாயும் கூலிகளாயும் கருதப்பட்டும் கீழ் நிலையில் இருந்து
வெகுகாலமாய் தலைமுறை தலைமுறையாக இழிவு படுத்தப்பட்டும் அரைப்
பட்டினி கிடந்து உழலும் மக்களிலும் சிலர் அவர்களுடன்
சேர்ந்து கொண்டு
மேற்கண்டபடி கூப்பாடு போடுவதையும் பார்க்கலாம். இதற்குச் சமாதானம்
சொல்லுவதென்பது சிலருக்கு சற்று கஷ்டமானதாகக் காணப்பட்டாலும்
கூர்ந்து கவனித்தால் மேற்கண்ட உயர்நிலையை நிரந்தரமாய்க் காப்பாற்றிக்
கொள்ள வேண்டும் என்கின்ற கருத்தின் மீது செய்து கொண்டிருக்கும்
ஏற்பாடுகளான கடவுள், மதம், தேசீயம், தேசம் ஆகியவற்றின் ஸ்தாபனங்
குடி அரசு
- 1932 (2)
154
களும் அவற்றிற்குள்ள கவசமும் காப்பும் அவை சம்பந்தமான பிரசாரங்
களுமேதான் காரணம் என்பது தெளிவாய் விளங்காமல் போகாது.
என்ன செய்ய வேண்டும்?
ஆகையால் மேற்கண்ட - கஷ்டப்படும் மக்களுக்கு விடுதலையும்
சமத்துவமும் வேண்டுமானால் முதலில் அக்கவசங்களையும், காப்புகளையும்
உடைத்தெறிய வேண்டும். அவற்றின் பிரசாரங்களையும் முறியடித்துத் துரத்த
வேண்டும்.
அஃதில்லாமல் வேறு எவ்வளவு பாடுபட்ட போதிலும் கஷ்டப்
படும் மக்கள் ஒரு நாளும் விடுதலை அடைய முடியாது.இக்காரியம் செய்வது
என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. செய்பவர்களுக்கு மகத்தான
உறுதியும் தன்னல மறுப்பும் வேண்டும். அனேக துன்பங்களுக்கும், தொல்லை
களுக்கும், பழிப்புகளுக்கும் நஷ்டங்களுக்கும் ஆளாகத் தயாராய் இருக்க
வேண்டும். “ஊரார் நம்மைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் - சொல்லு
வார்கள்” என்பதைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கக் கூடாது. போலி மானாபி
மானங்களையும், கெளரவங்களையும், வசவுகளையும் துச்சமாய் கருத
வேண்டும். பாமர மக்களால், சுயநல சூட்சிக்காரர்களால் வசவு கேட்கவும்
உயிர் விடவும் கூட தயாராயும் இருக்க வேண்டும். இந்த நிலையில் உள்ளவர்.
களால் அல்லாமல் வேறு யாராலும் இக்காரியங்கள் ஒரு சிறிதும் செய்ய
முடியாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
தானாக ஏற்பட்டதல்ல
தோழர்களே! கடவுள், மதம், ஜாதீயம், தேசீயம், தேசாபிமானம் என்ப
வைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள்
அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தர:
மாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின்
மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி
புகுத்தப் படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால்
அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அன்னியர் உழைப்
பாலேயே வாழ வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட
பேராசையும், சோம்பேரி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.
ஆதியில்
ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையாய் - சுயேச்சையாய் திரிந்த
- இயற்கை வாழ்க்கையிலிருந்து சமூக கூட்டு வாழ்க்கைக்கு வரும் போது
அவனவன் தன் தனக்கு வேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து
கொண்டும், அவசியமான பரஸ்பர உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே
சமூகமாய் சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணியே ஒழிய மற்றபடி
155
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்கு வேண்டிய எல்லா
வேலையையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து அவனை உலக சுகபோகங்களில்
பட்டினிப் போட்டு தான் மாத்திரம் சோம்பேரியாய் இருந்து வாழ்ந்து கொண்டு
எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ
அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து
அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டு விட்டு தான்
பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும்
ஒப்புக் கொள்ளத்தக்க விஷயமாகும்.
ஆனால் நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்கு பேராசையும், பொறா
மையும் சோம்பேரித் தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வ
வானும் அரசனுக்கு குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலை நிறுத்த ஆத்மா,
கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள் ஆகியவைகளைக் கற்பித்து பிறகு
அவைகளின் மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம், பின் ஜென்மம், கர்மம்,
பாவம், புண்ணியம், மேல் உலகம், கீழ்உலகம், தீர்ப்பு நாள், மோக்ஷம், நரகம்
ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது.
இந்த கற்பனைகளின் பயன் தான் பெரும்பான்மையான மக்கள்
பாமரர்களாகவும் ஏமாற்றப் படவும், கொடுமைக்குள்ளாகவும் மற்றவர்களுக்கு
அடிமையாகி உழைக்கவும் உழைத்தும், சரியான கூலி கிடைக்காமல்
பட்டினிக் கிடந்துழல்வதை பொருமையுடன் பொறுத்துக் கொள்ளவுமான
காரியங்கள் நடந்து வருவதுடன் அவை எங்கும் என்றும்
நிலைத்தும்
நிற்கின்றன. எப்படியாயினும் இந்த நிலை அடியோடு அழிபட வேண்டும்.
அதற்காக அதன் காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள், மதம், தேசீயம்,
ஜாதியும் என்பவைகளும் அவற்றின் பேறுகளான ஆத்மா, முன் ஜென்மம்,
கர்மம், தீர்ப்பு, மோக்ஷ நரகம், பாவ புண்ணியம் ஆகியவைகளாகிய போலி
உணர்ச்சிகளும் அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெரியப் பட வேண்டும்.
தலை விதி
கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க
நேருவதையும், “யோக்கியமாய்” “நாணயமாய்” நடந்து “இழிவாய்” “கீழ்
மக்களாய்” கருதப் படுவதுமான தங்களது கொடுமையின் நிலைமைக்கு
மற்றவர்களால் தாங்கள் ஏமாற்றப் படுவதுதான் காரணம் என்பதை உணராமல்
தங்களுடைய முன் ஜென்ம கர்ம பலன் - தலை விதி - கடவுள் செயல்
என்பதாகக் கருதிக் கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யா
மலும் சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள்.
நிலைமையைப் பற்றி சிறிதும் அதிருப்திகட அடையக் கூடாதென்று கருதி
தங்கள் நிலையைப் பற்றி தாங்களே சமாதானமும் சாந்தமும் அடைந்து
கொள்ளுகிறார்கள். வெளியில் சொல்லிக் கொள்ளக் கூட வெட்கப்படு
குடி அரசு
- 1932 (2)
156
கிறார்கள். ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும்
மதமும் இதைத்தான் போதிக்கின்றது. எப்படி என்றால்:-
“ஓ கஷ்டப் படுகின்ற மனிதனே! கஷ்டப் பட்டும் பட்டினி கிடக்கின்ற
இளைத்த ஏழை மனிதனே! நீ உனது முன்ஜென்ம பாப கர்ம பலத்தினால்
தலை விதியால் - கடவுள் சித்தத்தால், இம்மாதிரி துன்பத்தை அனுபவிக்
கின்றாய். இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமை:
யுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில் அடுத்த
ஜன்மத்தில் சுகப்படுவாய் மேலான பிறவி பெறுவாய் - அல்லது மேல் உலகில்
மோக்ஷம், என்னும் மேன்மையை அடைவாய் - கடவுள் சன்மானம் அருளு
வார், என்கின்ற” உபதேசமேயாகும்.
இந்த பொருமை உபதேசமும், சாந்த உபதேசமும், சமாதான உப
தேசமும், மக்களை கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும் செய்து
அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும்
விடுபட முடியாமலும், சுயமரியாதை உணர்ச்சி பெராமலும் இருந்து உயிர்
வாழும் படி செய்து வந்திருக்கிறது.
இவ்வளவு தானா?
இவ்வளவு மாத்திரம் தானா? இக்கடவுள் உணர்ச்சியும் மதமும்
செல்வந்தர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும், மற்றும் உத்தியோகம் வியாபாரம்,
லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பெரும் பணம்
கொள்ளை கொண்டு மற்றவர்களை பட்டினி போட்டு பெரும் பணம் சேர்க்
கும் பணக்காரர்களுக்கும் போதிப்பது என்ன என்பதைப் பார்த்தாலோ அது,
“ஓ பிரபுக்களே! செல்வவான்களே!! ஏராளமாக மேலும், மேலும்
பணம் சேர்க்கும் பணக்காரர்களே!!! லக்ஷிமிபுத்திரர்களே!! நீங்கள்
முன்ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் கடவுள் உங்கள் மீது
வைத்த கருணையினால் இவ்வுயர் நிலையை அடைந்திருக்கிறீர்கள்,
இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இச்சுக
போகம் உங்களுக்கு கிடைத்ததற்குக் காரணம் கடவுள் சித்தமேயாகும்..
ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக்
காணிக்கை செலுத்துவதன் மூலமும் கடவுளுக்குக் கோயில் கட்டுவதன்
மூலம் கடவுள் பக்தர்களான பாதிரி குரு, பிராமணர் முதலியவர்களுக்கு
மரியாதை செய்து சத்திரம், மடம் முதவிய உதவி அளிப்பதன் மூலமும்
நன்றி செலுத்தி இந்நிலையை நிலை நிறுத்திக் கொள்ளுவதுடன் மோக்ஷ
லோகத்திலும் சுலபமாக
இடம்
சம்பாதித்துக் கொள்ளுங்கள்”
என்பதேயாகும்.ஆகவே தோழர்களே! இந்த காரணங்களாலேயேமக்களில்
157
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
உயர்வு - தாழ்வும், எஜமான் - அடிமையும், முதலாளி - தொழிலாளியும்,
அரசன் - குடிகளும், குரு - சிஷ்யனும், ஏற்பட்டிருக்கின்றன என்பதை
இப்போதாவது உணருகிறீர்களா?'
அரசன்
உலகிற்கு அரசன் அரசாகஷி என்பதாக ஒரு வகை இருந்து வருவதின்
காரணமெல்லாம் கூட செல்வவான்களின் செல்வங்களை காப்பாற்றவும்,
சோம்பேரி வாழ்க்கைகளையும், அவர்களது தத்துவங்களையும் பிறர் இகழா
மல் இருக்கவுமே ஒழிய மற்றபடி மக்கள் சமூகம் துன்பப் படாமலோ, மற்றவர்
களாய் கொடுமைப் படுத்தப் படாமலோ சகல துறைகளிலும் உயர்வு தாழ்வு
கொடுமை இல்லாமலோ, இருப்பதற்காக அல்லவே அல்ல என்பதை நீங்கள்:
உறுதியாய் நம்புங்கள்.
இது போலவேதான் முன் குறிப்பிட்ட கடவுள் மத உணர்ச்சி கற்பிக்கப்
படுவதும் ஏழைகள் தாங்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம் முதலாளிகளின்
சூழ்ச்சியும், சோம்பேரிகளின் தத்துவங்களும் என்பதை உணராமல்
இருப்பதற்காகவே ஒழிய வேறில்லை.
உதாரணம்
உதாரணம் வேண்டுமானால், இன்றைய தினம் கஷ்டப் படுவதாகவும்,
இழிவு படுத்தப்பட்டதாகவும், பட்டினிகிடந்து துன்பப் படுவதாகவும், ஏழை
களாகவும் காணப்படும் மக்களில் அனேகரை அணுகி அவர்களது இவ்வித
கஷ்டநிலைக்கு காரணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் உடனே அவர்.
கள் சற்றும் தயக்கமின்றி தங்களின் கஷ்ட நிலைக்கு தங்கள் “தலைவிதி”
என்றும் “முன்ஜன்ம கர்ம பலன்” என்றும் “கடவுள் சித்தம்” என்றும்
“ஆண்டவன் கட்டளை” என்றும்தான் பதில் சொல்லுவார்களே யொழிய பிற
மனிதர்களால் - அரசாங்க சட்டத்தால்
- செல்வவான்களின் சூழ்ச்சியால்,
சோம்பேரிகளின் தந்திரத்தால், தாங்கள் ஏமாற்றப்பட்டு, அடிமைப் படுத்தப்
பட்டு, அவதிப்படுவதாக ஒரு நாளும் சொல்ல மாட்டார்கள். ஆதலால் தான்
ஏழைகளின் கஷ்டங்களை விலக்க வேண்டுமென்பவர்கள் முதலிய அதற்கு
அஸ்திவாரமான காரண காரியங்களை கண்டுபிடித்து
அழித்தெரிய
வேண்டும் என்று சொல்ல வேண்டியிருக்கின்றது.
கடவுள்
கடவுள் என்பது அருத்தமும் குறிப்பும் அற்ற வார்த்தையாய் இருந்து
வந்த போதிலும் அது மனித சமூகத்தில் 100க்கு
99 மக்களை பிடித்து
தன்வயப்படுத்தி மடமையாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடவுள்
குடி அரசு
- 1932 (2)
158
என்ற வார்த்தை கற்பிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான வருஷங்கள்
ஆயிருந்த போதிலும் கூட கடவுள் என்பது இன்னது என்று குறிப்பாக குளறு
படி இல்லாமல் - தெளிவுபட உணத்தியவர்களோ உணர்ந்தவர்களோ இது
வரையில் காணக்கிடைக்கவில்லை. பொதுவாக அந்தப்படி ஒரு உணர்ச்
சியை மக்களுக்குள் எப்படியாவது புகுத்தி அவர்களைப் பயப்படுத்திவைக்க
வேண்டும் என்கின்ற அவசியத்தினால் அதற்கு என்று வேறு ஒரு (மானச!
உலகத்தையும், பாவபுண்ணிய பயனையும், மோக்ஷ நரகத்தையும், கற்பித்து
அதை பரப்ப பலவித ஸ்தாபனங்களை உண்டாக்கி அதன் பிரசாரத்தின்
பேரால் பிழைக்க ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்து அக்கூட்டத்திற்கு
அதிலேயே பிழைத்துத் தீர வேண்டியதான நிலைமையையும் ஏற்படுத்தி
விட்டதால் வெகு சுலபமாகவும் செல்வாக்காகவும்,அதன் பிரசாரம் நடக்கவும்
மக்களை தன் வயப்படுத்தவும் ஆன காரியங்கள் நடந்து கொண்டே வரு
கின்றன. கடவுள் என்றால் என்ன? என்றாலும் கடவுள் என்றால் என்ன?
என்பதை உணருவதற்கில்லாமலும் உணர வேண்டும் என்று நினைப்ப
தற்கில்லாமலும் இருந்து வருகிறது.
யாராவது கடவுளைப் பற்றி நெருக்கிப் பிடித்துக் கேட்டால் அது
முழுவதும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும் செய்கைகளையும்
கொண்டிருப்பதும், ஆளுக்கு ஒரு வித வியாக்கியானம் கூறுவதுமாய்
இருப்பதோடல்லாமல் வேறு விதமாய் குறிப்பான பதில் கிடைப்பது என்பது
அறிதாகவேயிருக்கிறது.
கடவுள் என்பது சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும், சர்வசக்தியும்
கொண்டஒரு ஒப்பற்ற தனி பொருளென்று சொல்லப்பட்டு விட்டு உடனேயே
அது கண்ணுக்குத் தெரியாதது என்றும், மனதிற்குத் தோன்றாதது என்றும்
சொல்லப்படுவதோடல்லாமல் அதற்கு உருவம் இல்லை யென்றும், குணம்
இல்லை யென்றும், இன்ன தன்மையது என்று விளக்க முடியாதது என்றும்
சொல்லப்பட்டு விடுகின்றது.
ஒரு வேடிக்கை
இவற்றுள் மற்றொரு வேடிக்கை என்ன வென்றால் இப்படிப்பட்ட ஒரு
கடவுள் தன்மையை அதாவது “சர்வ சக்தியும் சர்வ வியாபகமும், உடையதும்.
கண்ணுக்கும் மனதிற்கும் தென்படாததும், குணமும் உருவமும் இன்ன
தன்மையென்று
குறிப்பிடக் கூடிய தன்மையும் இல்லாதது”மான ஒரு
கடவுளை நிலை நிறுத்தவும் அதைப் பற்றி மக்கள் நம்பிக்கை கொள்ளவும்
“கடவுளால் உண்டாக்கப் பட்ட” மக்களிலேயே பலர் வக்காலத்துப் பெற்று
கடவுளை நிரூபிக்க ஒழுங்கற்ற முறையிலும் ஒழுக்க ஈனமான முறையிலும்
எவ்வளவோ பாடு படவேண்டியிருப்பதுமேயாகும்.
159
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மற்றும் அப்படிப்பட்ட வக்காலத்துக்காரர் தங்கள் சொந்த நிலையில்
தங்களால் செய்யப்படும் ஒவ்வொரு காரியத்தையும் தாங்களே செய்வ
தாகவும் தங்களால் சொல்லப் படும் ஒவ்வொரு விஷயமும் தாங்களே
அறிந்து சொல்லுவதாகவும் நினைத்தே பேசியும் நடந்தும் வருகிறார்கள்.
அது
மாத்திரமல்லாமல் மற்றவர்களால் செய்யப்படும் - சொல்லப்படும் ஒவ்வொரு
விஷயத்தையும் மற்றவர்கள் தங்களுக்குச் செய்வதாகவும் சொல்லுவதாகவும்,
எழுதுவதாகவும் கருதுவதுடன், மற்றவர்கள் மீது துவேஷமும், வெறுப்பும்,
விருப்பும் கொண்டு அவர்களை இன்ன இன்னபடி நடவுங்கள் என்றும்
தங்களுக்கு இன்ன இன்ன காரியங்களைச் செய்து கொடுங்கள் என்றும்
கோறுகிறார்களேயல்லாமல் “இவையெல்லாம் சர்வ வல்லமை உள்ள
கடவுள்” செயலால்தான் நடக்கின்றது, நடந்து விடும் என்ற நம்பிக்கையும்
உறுதியும் தைரியமும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
மற்றொரு சாரார்
மற்றொரு சாரார் “கடவுளைப் பார்க்கா விட்டாலும், உணரா விட்டா
லும் உலகப் படைப்புக்கும் நடக்கும் ஏதாவது ஒரு கர்த்தாவோ காரணமோ
இருக்க வேண்டாமா? அப்படிப் பட்ட கர்த்தாவோ காரணமோதான் கடவுள்”
என்று சொல்லுகிறார்கள்.
மற்றொரு சாரர் “உலகத் தோற்றத்திற்கும்,
நடப்புக்கும் ஏதாவது ஒரு சக்தி (FORCE) ஆவது இருக்கு மல்லவா? அதுதான்
கடவுள்” என்கிறார்கள்.
மற்றொரு சாரர் “இயற்கையே - அழகே - அன்பே - சத்தியமே
கடவுள்” என்றும் இன்னும் பலவாராக சொல்லுகிறார்கள். ஆனால் நமது
நாட்டைப் பொருத்தவரை மக்கள் கடவுளுக்கு மனித உருவம் கற்பித்து
சாதாரண மனித வாழ்க்கையிலுள்ள பெண்டு பிள்ளை முதலியவைகளைக்
கற்பித்து, செல்வவானுக்குள்ள குணங்களையும் சுகபோகங்களையும்
கற்பித்து, அதற்குக் கோவில் பூசை உற்சவம் கல்யாணம் சாந்தி முகூர்த்தம்
முதலியவைகளைக் கற்பித்து வணக்கத்திற்காக என்று கோடான கோடி
ரூபாய்களை செலவு செய்யச் செய்து மக்களை அதுவும் ஏழைமக்களை'
வாட்டி வளவெடுத்து தொல்லைப் படுத்தியும் வருகிறார்கள். இப்படியாக
கடவுளைப் பற்றி இன்னும் பல விதமாய் அபிப்பிராயங்கள் சொல்லப் பட்டும்
காரியத்திலும் பல செய்யப்பட்டும் வருகின்றன.
இந்த விதமான கடவுளைப்
பற்றி அர்த்தமற்ற - குறிப்பற்ற - பரிகாசத்திற்கும் முட்டாள் தனத்திற்கும்
இடமான அபிப்பிராயங்களும் மற்றும் பாமர மக்களை தந்திரக்காரர்கள்.
ஏமாற்றுவதற்கான முறைகள் கொண்ட கருத்துக்களும் விவகாரங்களும்
இன்றோ நேற்றோ அல்லாமல் வெகு காலமாகவே இருந்து வருகின்றது.
அன்றியும் இக்கருத்துக்களை மதக்கொள்கைகள் என்பவற்றின் மூலமாகவும்
அரசாங்கச் சட்டங்களின் மூலமாகவும் மறுத்துப் பேச இடங்கொடுக்
கப்படாமலும் மீறிப் பேசினால் தண்டித்தும் மதவெறியால் என்றும்
குடி அரசு
- 1932 (2)
160
கொடுமைப்படுத்தியும் தான் காப்பாற்றப்பட்டும் நிலை நிறுத்தப்பட்டும்
வந்திருக்கின்றது.
இன்றும் கூட
இன்றும் கூட நமது இயக்கப் பிரசாரங்களில் அவற்றின் கொள்கை
களைப் பற்றி ஆட்சேபிக்கக் கூடிய வகை சுலபத்தில் இல்லாமல் இருப்பதால்
வேறு வழியில் தந்திரமாய் அதாவது “சு. ம. இயக்கக் கொள்கைகள் எல்லாம்
சரி, அது ஏழை மக்களுக்குத் தான் பாடுபடுகின்றது. ஏழை பணக்காரன்
என்கின்ற வித்தியாசம் கூடாதென்கின்றது.
ஆனால் அது கடவுள் இல்லை
என்று சொல்லுகின்றது மதத்தை அழிக்கின்றது மக்களை நாஸ்திக
மாக்குகின்றது. அதுதான் எமக்குப் பிடிக்கவில்லை. ஆதலால் அதைவளர
விடக் கூடாது” என்று சொல்லுவதன் மூலம் நமக்கு எதிர் பிரசாரம் செய்
கின்றார்கள். மற்றும் பல இடங்களில் நாம் போகு முன்பே நாஸ்திகன் வந்து
விட்டான், மதத்துரோகி வந்து விட்டான் என்று விஷமப் பிரசாரம் செய்து
மக்களை நமது பிரசங்கத்தை -நான் என்ன சொல்லுகிறேன் என்பதை கேட்க
அனுமதிக்க கூட மறுக்கின்றார்கள். மற்றும் சில இடங்களில் பலாத்கார
முறையில் - காலித்தனமான முறையில் நமது பிரசாரத்தை கலைக்க முயற்சிக்
கிறார்கள்.
காரணம்
இதன் காரணம் என்ன வென்று பார்க்கப் போனால் கண்டு பிடிப்பது
மிகவும் சாதாரணமான விஷயமேயாகும்.
அதாவது அவர்களது “எங்கும்
நிறைந்த” “எல்லாம் வல்ல” “அவனன்றி ஓர் அணுவும் அசையாததான”
கடவுள் நம்பிக்கையும் அப்படிப்பட்ட கடவுளின் அவதாரங்களாலும் கடவுள்
அம்சம் பெற்றவர்களாலும் கடவுள் குமாரராலும் உண்டாக்கப்பட்ட மத
நம்பிக்கையுமே யொழிய வேறில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே
இதன் கருத்து என்ன வென்றால் எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த கடவுள்.
உணர்ச்சியும், தத்துவமும், ஒரு சாதாரண மனிதனால் அழிக்கப்பட்டுவிடும்
என்றும், கடவுள் அவதாரம், அம்சம், குமாரன், தூதன் ஆகியவர்கள் மூலம்
உபதேசிக்கப் பட்ட மதமானது ஒரு சாதாரண மனிதன் முயற்சியால் அழிக்கப்
பட்டு விடும் என்றும் இதனால் மனித சமூகத்தின் மேன்மை போய் விடும்
என்றும் பயந்தே இம்மாதிரி விஷமப் பிரசாரம் செய்வதாயும், பலாத்கார
செயல்கள் கூட செய்ய வேண்டி இருப்பதாயும் தீர்மானிக்க வேண்டி இருக்
கிறது. இவ்விதமாக கடவுள் நம்பிக்கையின் பேரால், மத நம்பிக்கையின்
பேரால் பலாத்காரச் செயல் - எதிர்ப் பிரசாரம் - விஷமப் பிரசாரம்ஆகியவை
கள் செய்யப்படுவது பெரிதும் அறியாமையால் என்றோ, மதத்தையும் கடவுள்
தன்மையையும் சரிவர உணராததினால் என்றோ அல்லது மதவெறி கடவுள்
வெறி என்றோ சொல்லி விட முடியாது. ஏனெனில் கடவுளும் மதமும் உலகில்
161
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மக்கள் தோன்றிய காலமுதலே அவற்றிற்கு எதிரிடையான கருத்துடைய
வர்களையும், அவற்றை ஒப்புக் கொள்ளாதவர்களையும் அரசாங்கமும், மத
ஸ்தாபனக்காரர்களும் கொன்றும், சித்திரவதை செய்தும், தண்டித்தும்,
கொடுமை செய்தும் வந்திருப்பதானது கடவுள் மதம் சம்பந்தமான
சரித்திரங்களாலும், பிரசார முறைகளாலும் நன்றாய் உணரலாம். இக்கொள்கை
முறையை இன்னும் சில சமயக்காரர்களும் கையாண்டு வருவதையும் நம்
போன்றவர்கள் கடவுள், மத நம்பிக்கைக்காரர்கள் என்பவர்களால் நடத்தப்
படுவதையும் கொண்டு உணரலாம். ஆகவே இதன் கருத்து சுய நலமும்
சோம்பேரி வாழ்க்கைப் பிரியமும் ஒழிய வேறில்லை.
மதம்
மதம் என்பதும் “சர்வ வல்லமையும்” “சர்வ வியாபகமும்” உள்ள
தாகச் சொல்லப்படும் கடவுள் உணர்ச்சியை மக்களிடம் பெருக்கவும், அதை
நிலை நிறுத்தவும் ஏற்பட்ட ஸ்தாபனங்களாய் இருந்து வருகின்றனவே
யொழிய மற்றபடி எந்த மதத்தாலாவது, அதைச் சேர்ந்த உலக மக்கள்
வாழ்க்கையிலோ பொருளாதாரத்திலோ சுதந்திரமோ, சமத்துவமோ பெற்று,
கேவலம் ஜீவனத்திற்காக மற்ற மனிதனுக்கு அடிமையாகாமல் வாழ்வதற்கு
இடமளித்திருப்பதாய் காண முடியவில்லை. ஒரு மதக்காரனே தன் மதத்தைச்
சேர்ந்த மற்றொருவனை அடிமைக் கொண்டிருக்கிறான்.ஆனால் அவன்மத
நம்பிக்கையென்பது “மக்கள் யாவரும் கடவுள் பிள்ளைகள்” “எல்லோரும்.
சமமானவர்கள்” என்று போதிப்பதாகத்தான் சொல்லுகிறான். ஆனால் ஏழை,
பணக்காரன், கூலிக்காரன், எஜமான் என்கின்ற வித்தியாசம் எப்படி ஏற்பட்டது
என்பதை மாத்திரம் உணரும்போது “எல்லாம் வல்ல கடவுள் சக்தியையும்,
சமத்துவ மத போதனையையும்” மறந்து விடுகின்றான்.
மதம் என்பது ஒரு போதை தரும் - வெறி உண்டாக்கும்! வஸ்து என்று
பல அறிஞர் கூறியிருப்பது போல் மதத்தின் ஆதிக்கத்தில் கட்டுண்டு
இருப்பவர்களுக்கு ஆவேசமும், வெறியும் உண்டாவது
தான் முக்கிய
பலனாக இருக்கிறதேயொழிய அது கஷ்டப்படுகின்ற, ஒரு பாவமுமறியாத
பாமர மக்களுக்கு காரியத்தில் இன்று என்ன நன்மை செய்திருக்கிறது?
செய்கிறது? மதத்தால் மக்களுக்கு என்ன ஒழுக்கம் ஏற்பட்டிருக்கிறது? என்ற
கேள்விக்கு (“இது மதத்துரோகமான கேள்வி” என்று சொல்லுவதல்லாமல்
வேறு) எவ்விதமான பதிலும் சொல்லுவதற்கு இடம் காணவில்லை...
எல்லா மதங்களும் கடவுள் அருளால், கடவுள் அம்சம் பெற்ற
வர்களால், அவரால் அனுப்பப்பட்டவர்களால் ஏற்பட்டதாகச் சொல்லப்
பட்டாலும் ஒரு மதத்திற்கும், மற்றொரு மதத்திற்கும் நடப்பு, வேஷங்கள்,
சடங்குகள் ஆகியவைகளுடன் மற்றும் பல முக்கிய விஷயங்களில் பெருத்த
மாறுபாடும், துவேஷமும், வெறுப்பும் சிறிதாவது காணப்படுவானேன்,
என்பதைப் பார்த்தால் ஒன்றா பத்து மதங்கள் இருந்தால் அதில் ஒன்று
குடி அரசு
- 1982 (2)
162
உண்மை போக பாக்கி ஒன்பது மதங்கள் பொய்யாகத் தான் இருக்க
வேண்டும். அல்லது ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கடவுள் அருளால்
ஏற்பட்டதாயிருக்க வேண்டுமேயொழிய ஒரே கடவுள் அருளால் ஏற்பட்ட
தாயிருக்காது. எப்படியிருந்தாலும் சர்வசக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம்
உள்ள ஒரு கடவுள் அருளால் எந்த மதமாவது ஏற்பட்டது என்று சொல்வது
பகுத்தறிவுக்கும், விவகாரத்திற்கும் நிற்காத காரியமேயாகும் அன்றியும்
ஒரேமதத்தை அனுசரிக்கிற மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி நடக்கிறார்கள்
என்று சொல்லுவதற்கோ, அல்லது மதசக்தியானது மக்கள் யாவரும் ஒரே
மாதிரி நடத்தப்பட பயன்படுகின்றது என்று சொல்லுவதற்கோ இடமில்லா
மல்தான் எல்லா மதங்களும் இருந்து வருகிறது. ஏனெனில் ஊருக்கு ஒரு
விதம் வகுப்புக்கு ஒரு விதம் நடப்பதுடன் வெளிப்படையாகவே ஒரே ஊணில்
ஒரேமதக் கொள்கைக்கு பல வித வியாக்கியானங்களும் ஏற்பட்டு இருப்
பதுடன் நடப்புகளும் எண்ணங்களும் வேறுபட்டிருக்கின்றன. ஒரு சமயம்
இப்படி மாறுபட்டு நடப்பவர்கள் எல்லோரும் மூட மக்கள் என்றும், மதத்தை
சரிவர உணராதவர்கள் என்றும் சுலபமாய் சொல்லி விடலாம்.
ஆனாலும்
அந்த மதத்தை நம்பி அதை தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வந்த
மக்களின் கதி அதுதானா என்பதும் அம்மதத்திற்கு உள்ள சக்தி அவ்வளவு
தானா? என்பதுமாவது யோசிக்க வேண்டிய முக்கிய விஷயமல்லவா? என்று
கேட்கின்றேன்.
எது எப்படியிருந்தாலும்
எது எப்படியிருந்த போதிலும் முன் குறிப்பிட்ட அதாவது “சர்வ சக்தி
சர்வ வியாபகம் சர்வ தயாளத்துவம் கொண்ட கடவுளால்” சிருஷ்டிக்கப்
பட்டவர்களாகவும் “சர்வ சமரசம் கொண்ட மதத்தை”ப் பின் பற்றியவர்
களாகவும் உள்ள மக்களுக்குள் ஒருவன் ரிக்ஷா வண்டி இழுத்து கஷ்டப்
படவும், ஒருவன் அதின் மேல் சுகமாய் உட்கார்ந்து சவாரி செய்யவும்.
ஒருவன் கிரீடத்தை அணிந்து பல்லாக்கில் சவாரி செய்யவும் 16 பேர்கள் முக்கி
முக்கி சுமந்து செல்லவும் அக்கடவுளும் மதமும் எப்படி அனுமதித்தது என்ற
கேள்விக்கு “அது நமக்குத் தெரியாது சர்வ சக்தி உள்ள கடவுள் செயல்”
என்பதைத் தவிர இது வரை எந்த கடவுள் நம்பிக்கைக் காரரும் மத நம்பிக்
கைக்காரரும் வேறு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. ஒரு சமயம் இச்
செய்கைக்கு முறையே ஒருவனின் அதாவது “ரிக்ஷா வண்டியிழுப்பவனின்
முட்டாள்தனமும், சவாரி செய்பவனின் அயோக்கியத்தனமும்” என்று பதில்
சொல்லக் கூடுமானாலும்
சர்வசக்தியும் சர்வ வியாபகமும் சர்வ தயா
பரத்துவமும் உள்ள கடவுளுக்கும் சர்வ மனித சமூக சமத்துவமாகிய மதத்
திற்கும் தன்னை ஏற்றித் துதித்துப் பின்பற்றும் மக்களின் இம்மடமையையும்,
அயோக்கியத் தனத்தையும் நிறுத்த முடிய வில்லை என்பதாவது
விளக்குகின்றதா இல்லையா? என்பதை பொருமையோடு பகுத்தறிவுடன்
நடுநிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.
163
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
சற்று கவனியுங்கள்
தோழர்களே இங்கு சற்று கவனியுங்கள். என்னவென்றால் மேல்
சொன்ன கடவுள் உணர்ச்சியும் மத உணர்ச்சியும் மேற்சொன்ன மடமை
யையும் அக்கிரமத்தையும் ஒழிப்பதற்குச் சிறிதும் பயன் படாமலிருப்பதோடு
அம் மடமையையும், கொடுமையையும் நிலை நிறுத்துவதற்கும், அமுல்
நடத்துவதற்கும் பயன்பட்டு வருகின்றதா இல்லையா என்பதை பரிசுத்த
நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள்.
கடவுள், மத உணர்ச்சியானது மக்களின் சுதந்திரத்திற்கும் சமத்துவ
வாழ்விற்கும் இவ்வளவு இடையூறுகளுக்கும் தார தம்மியங்களுக்கும்
இடந்தராதிருக்குமானால் நான் அவைகளைப் பற்றி இவ்வளவு கவலை
எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. கடவுள், மத
பிரசாரத்தின் பேரால் வயிற்றுப் பிழைப்பு நடத்த வேண்டியவர்களின்
பரிதாபத்திற்காகவாவது சும்மா விட்டு விடுவேன் என்பதை நம்புங்கள்.
ஏனெனில் ஒரு மனிதன் அனாவசியமாய் அர்த்தமும்
குறிப்பும் அற்ற
வார்த்தைக்காக பைத்தியம் பிடித்திருந்தாலொழிய போராடிக் கொண்டிருக்க
முடியாது. ஆனால் அதனால் பாமரமக்கள் சமூகத்திற்கு விளையும் கெடுதி
யைப் பார்க்கும் போது உண்மையான உணர்ச்சி உள்ளவன் அதை ஒழிக்கப்
போராடாமல் இருக்க முடியாது.
கவலையில்லை
கடைசியாக “உலக உற்பத்திற்கும் இயற்கைத் தோற்றங்களுக்கும்
நடப்புக்கும் ஏதாவது ஒரு காரணப் பொருள் இருக்க வேண்டாமா” என்று
கேட்பதின் மூலம் எப்படியாவது ஒரு சக்தி உண்டு என்பதை ஒப்புக் கொள்ளச்
செய்து அதிலிருந்தே ஒரு கடவுளை கற்பிக்க முயற்சிகள் செய்யப்படு
வதையும் அத்தோடேயே சர்வசக்தி, சர்வ வியாபக கடவுள் நம்பிக்கைக்
காரர்கள் திருப்தி அடைந்து விடுவதையும் பிறகு அதை அஸ்திவாரமாக
வைத்துப் பெரியஆகாய கோட்டைகள் கட்டுவதையும் பார்த்திருக்கிறேன்.
உலக உற்பத்திக்கும் அதில் காணப்படும் தோற்றங்களுக்கும் நடப்புகளுக்கும்
விஞ்ஞானம் என்னும் சைன்சை தொடர்ந்து கொண்டே போனால் சமாதானம்
கிடைக்கலாமானாலும் பிறகு “சைன்ஸ்சுக்கு யார் கர்த்தா” என்கின்ற
கேள்வியும் பிறக்கும். அதை இதுவரை எந்த அறிவாளியும் கண்டு பிடிக்க
வில்லை என்று பதில் சொன்னால் “அதுதான் கடவுள்” என்று சொல்லி
திருப்தி
அடைவார்கள். அப்படியானால் அந்தக் கடவுளுக்கு யார் கர்த்தா
அவர் எப்படி உண்டானார், அவரின் நடவடிக்கைக்கு என்ன காரணம்
என்பதான கேள்விகளை முன்னைய விஷயங்களுக்கு போடப்பட்ட கேள்வி
களைப் போலவே, போட்டோமானால் அப்படிப்பட்ட கேள்வி கேட்கக்
கூடாது என்றும், கடவுளும், சக்தியும் தானாக உண்டான தென்றும் அதற்குக்
குடி அரசு - 1932 @
164
கால வரை இல்லையென்றும் சொல்லுவார்கள். அச்சமாதானத்தால் நாம்
திருப்தியடையாவிட்டால் அல்லது இது உங்களுக்கு எப்படித் தெரிந்தது
என்று கேட்டால் (அல்லது கடவுள் தானாக உண்டாகும் போது இயற்கை:
தானாக உண்டாகாதா என்று கேட்டால்) உடனே நம்மை நாஸ்திகன் என்று
சொல்லி விடுவார்கள். இந்த மாதிரி நிலையில் தான் ஏதோ யூகத்தின் மீது
அதுவும் “ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டாமா” என்கிற யூகத்தின்
மீதே “இதுவாயிருக்கலாம் அல்லது அதுவாயிருக்கலாம்” என்கின்ற
பொறுப்பற்ற நிலையில் கற்பிக்கப்பட்ட ஒரு கடவுள் என்பதைப் பற்றி நாம்
சிறிதும் கவலைப் படுவதில்லை.
பொறுப்பு ஏற்றுவது
ஆனால் அப்படிப்பட்டதின் மீது மனித வாழ்க்கையின் பொறுப்பு
களை சுமத்துவதும்,
அதை வணங்குவது, தொழுவது, பிரார்த்தனை செய்வது
என்பதும், அதை வணங்கினால் பிரார்த்தித்தால் தொழுதால் அதற்காக
நேரத்தையும் அறிவையும் பணத்தையும் செலவு செய்தால் பயன் பெறலாம்
என்பதும் பிரதிபலன் உண்டென்பதும் பாவங்கள் மன்னிக்கப் படுமென்பதும்,
மற்றும் மனிதனால் தன் சுயநலத்திற்காகவும் சோம்பேரி வாழ்க்கைப்
பிரியத்திற்காகவும் பிறருக்குச் செய்யப்படும் சூட்சிக்கும் அக்கிரமத்திற்கும்
கடவுள் செயலே காரணம் எனச் சொல்லி ஏமாற்றுவதைப் பார்த்தால் பிறகு
எப்படிப்பட்ட கடவுள் உணர்ச்சியாணாலும்
அது எங்கிருந்த போதிலும் அதை
அழித்தே தீர வேண்டியிருக்கிறது.
திருடனுக்கும் கடவுள்
அன்றியும் திருடப் போகிற ஒரு திருடன் தான் திருடப் புறப்படு முன்
தனக்கு “நல்ல திருட்டுக் கிடைக்க வேண்டும்” என்று கடவுளை பிரார்த்தித்து
விட்டுப் புறப்படுகிறான். நல்ல திருட்டுக் கிடைத்தவுடன் அதில் ஒரு சிறு
பாகத்தை கடவுளுக்கும் அதன் திருப்பணிகளுக்கும் செலவு செய்து கடவுள்
உணர்ச்சியை அனுபவிக்கிறான். இது போலவே ஒரு கொலைகாரனும் தான்.
விடுதலை அடையக் கடவுளைத் துதித்து விடுதலையடைந்த உடன்
கடவுளுக்கு பூசை அபிஷேக முதலியது செய்து நன்றி செலுத்துகிறான். இது
போலவே சொத்துக்களை வைத்திருக்கும் உடமைஸ்தனும் தனது சொத்துக்
களைத் திருடர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்று கடவுளைப் பிரார்த்
தித்து நன்றி செலுத்துகிறான். இது போலவே கடவுள் நம்பிக்கை உள்ள சகல
சோம்பேரிகளும் செல்வவான்களும் கடவுள் பிரார்த்தனையின் மீதே தங்கள்
வியாபாரத்தை நடத்துகின்றார்கள்.
ஆகவே கடவுள் செயலும் கடவுள் கருணையும் எவ்வளவு ஒழுக்க
குறைவுக்கும் அநீதிக்கும் இடம் தருகின்றது என்று பாருங்கள்.அவை இதைத்
தவிர வேறு எதற்காவது பயன்படுகின்றதா என்றும் பாருங்கள்.
165
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மத விஷயத்திலும்
மதம் என்றால் என்ன என்கிற விவகார காலத்தில் மதவாதிகள் “மனித
சமூக வாழ்க்கை ஒழுங்காகவும் ஒரு கட்டுப் பாட்டிற்கு உள்பட்டும் நடை
பெறுவதற்காக அனுபோகஸ்தர்களால் வகுக்கப்பட்ட திட்டங்களே மதம்
என்றும், மதக் கொள்கைகள் என்றும் அவை காலதேச வர்த்தமானத்திற்கு
ஏற்றவாறு திருத்திக் கொள்ளக் கூடியது என்றும் சொல்வதுடன் அதற்கு
உதாரணமாக அவ்வப்போது பல சீர்திருத்தவாதிகள் தோன்றி புதிய திட்டங்
கள் ஏற்படுத்த சீர்திருத்தி இருக்கிறார்கள் என்றும் ஒரு சிலரால் சொல்லப்பட்டு
இதுதான் மதம் என்பதின் அருத்தம் என்று சொல்லி அதனிடம் நமக்குத்
தகரார் இருக்கக் கூடாது என்கிறார்கள். அப்படியானால் அக்கொள்கைகளின்
குண தோசங்களைப் பொருத்தும் அதனால் ஏற்படும் பயன்களைக் குறித்தும்
யோசிக்கவும் திருத்தவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்பதை
அவர்கள் ஒப்புக் கொள்ளத் தயாராயிருக்க வேண்டும்.
அப்படிக்கில்லாமல் மதம் என்பது மனித சக்திக்கு மீறிய ஒரு
சக்தியையுடைய மக்களால் ஏற்படுத்தப் பட்டது என்றும், அதன் கொள்கைகள்
எல்லாம் எங்கும் எக்காலத்திற்கும் ஒரே மாதிரியாய் இருக்கத்தக்கது என்றும்,
அவைகளில் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் ஏற்படுத்த எவருக்கும்
உரிமை இல்லை என்றும், அதனால் யாருக்கு எவ்வளவு கெடுதி இருந்த
போதிலும் பயனில்லாத போதிலும் பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்றும்
சொல்லப்படுமானால் அப்படிப் பட்ட மதத்தை நாம் சிறிதும் ஒப்புக் கொள்ள
முடியாது என்பதுடன் அவ்வித மூட அடுக்கு முறை உணர்ச்சியைகொண்ட
மதத்தை என்ன விலை கொடுத்தாவது அழித்தாக வேண்டும். ஏனெனில்
அவை மனித சமூக முற்போக்கை தடை செய்வதுடன் மனித சமூக
ஒற்றுமைக்கும் சுதந்திரத்திற்கும் சம உரிமைக்கும் இடையூராய் இருக்கின்றன.
மற்றும் மதத்தின் பேரால் அநேக அற்புதங்களும், இயற்கைக்கும்
மனித சக்திக்கும் மீறிய காரியங்களும் பலர் செய்ததாகவும் கதைகள் கட்டி
மக்களை மூடர்களாகவும், மூட நம்பிக்கைகாரர்களாகவும் ஆக்கப்பட்டு
வருகின்றதுடன் ஏராளமான பொருளும் முயற்சியும் நேரமும் மனித சமூக
நன்மைக்கும் சமத்துவத்துக்கும் உபயோகப்படாமல் பாழாக்கப் படுகின்றன.
அன்றியும் அறிவும் ஆராய்ச்சியும் கட்டுப் படுத்தப்பட்டு அடிமையாக்கப்
படுகின்றன. இவ்வளவு கேட்டை எப்படி சகித்துக் கொண்டிருக்க முடியும்,
ஏன் சகிக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
தேசீயம்
தேசியம், தேசீயம் என்பதும் முற்கறியவைகளை போன்ற ஒரு போலி
உணர்ச்சிதான்.ஏனெனில் தேசீய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது
மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும்
குடி அரசு
- 1932 (2)
166
மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும்
போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும்
மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய
நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப் படுத்தவும் ஆங்காங்குள்ள
செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவி
களால் கற்பிக்கப்பட்ட சூக்ஷியாகும். தேசீயம் என்பதும் மனிதனுக்கு ஒரு
மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.
தேசம் என்றால் எது?
தேசம் என்றால் எது? உலகப் பரப்பு ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்
பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு
மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்
கின்றன. இவைதவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத்திலும்.
பல மாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல
மதங்களும், பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன.
இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும்
தேசீயகொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது
என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க
வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருப்பதாகும். இவற்றின் பயணாய் மக்கள்
ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்
பார்க்கின்றோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த
ஜாதி தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ் நிலை - மேல் நிலை, கஷ்டப்
படுகின்றவன் - கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும்
வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு
விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தளித்த தேசம் தேசீயம்
என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்கு புரிய வில்லை.நமது
தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக்
கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதிலுள்ள
மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம்
என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது.
நாம் குறிப்பிடும் தேசத்தில்
உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களா
கவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்களோ
அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து
வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின்
துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே,
அந்த விதமான துயரம்
கொண்டமக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள்.
நம்முடைய தேசீயம் என்பதிலேயே எந்த விதமான மக்கள் சோம்பேறி
களாகவும் சூழ்ச்சிக் காரர்களாகவும், செல்வவான்களாகவும் அரசாங்க
167
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஆதிக்கக் காரர்களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான
பொது ஜனங்களை பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி
பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ் செல்வம் சேர்த்து வாழ்ந்து
சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அது போலத்தான் அன்னிய
தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும் பான்மையான மக்களை
கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்னக்
கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு
அளவை மாத்திரம்
பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று
கேள்க்கின்றேன்.
துருக்கி தேசத்துக்கும், இந்தியா தேசத்திற்கும் சண்டை வந்தால் இந்திய
இஸ்லாமியர்களுக்கு தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதரா:
பாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால் ஹைதராபாத் இந்தியர்கள்
தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே தேசம் தேசாபி
மானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள் மதம் என்பது போன்றே ஒரு
வகுப்பாருடைய சுய நலத்திற்கு ஏற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்ல
வேண்டியிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலா
ளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு தங்கள் தங்கள் முதலை
பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை - பாமர மக்களை பலி கொடுப்பதற்காக
கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.
உதாரணமாக இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா நியூயார்க்
தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று தங்கள் செல்வத்தை
மேலும், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டால்
அல்லது நியூயார்க் முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து
தேசத்துக்கு முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப்
பதாயிருந்தால் இங்கிலாந்து தேசத்து முதலாளிகள் இங்கிலாந்து தேசது
ஏழைமக்களையும் பாமர மக்களையும் பார்த்து “ஓ இங்கிலாந்து தேசீய வீரர்
களே, தேசாபிமானிகளே தேசத்துக்கு நெருக்கடி வந்து விட்டது. இங்கிலாந்து
மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள் ஓடி வாருங்கள், ஓடி
வாருங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை
அமர்த்தியும்
வயிற்றுப் பிழைப்பு பத்திரிகை காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரசாரம்
செய்விப்பார்கள். இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம்
நெருக்கடி நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமர
மக்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல்
பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்ப
தாகவும், கூவிக் கொண்டு கூலி கொடுத்து பிரசாரம் செய்வார்கள். இரண்டு
தேச ஏழை மக்களும் மற்றும் சாப்பாட்டிற்கு அறவே வேறு வழியில்லாத
மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியை
குடி அரசு
- 1932 (2)
168
தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்று
கொள்ளுவார்கள் சிறைப்பிடிப்பதின் மூலம் இரு தேச சிறையையும் நிரப்பி
விடுவார்கள். கணக்குப் பார்த்தால் இரு கக்ஷியிலும் பத்து லக்ஷக் கணக்கான
மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் ராஜியாகப் போயோ
அல்லது யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.
ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும், அல்லது தங்கள்
முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திர மேற்பட்டிருக்கும். ஆனால்
சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்கு சுடுகாடும் அவர்கள் பெண் ஜாதிகளுக்கு
சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை
யோசித்துப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நாடாவதற்கும் அன்னிய
ஆக்ஷியைத் துரத்துவதற்கும் அமெரிக்க ஏழைமக்கள் தொழிலாளி மக்கள்
எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள்
என்பதை அமெரிக்கா “விடுதலைச் சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள். இன்று
அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்
களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன.ஆனால்
ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள்
அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து
வருவது வேறு எந்த நாட்டிற்கும் குறைந்ததல்ல.
தோழர்களே! அமெரிக்கா தேசாபிமானத்தின் தன்மையும் அதன்
பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்கா அன்னிய ஆக்ஷியை ஒழித்
தாலும் ஒரு அரசனையே விரட்டி விட்டு “குடிகளின் ஆக்ஷி” ஏற்படுத்திக்
கொண்டதாலும் ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பதை
மற்றொரு தரம் யோசித்துப் பாருங்கள்.
இந்த லங்கையில் இருந்து கொண்டு இந்திய தேசாபிமானம் பேசும்
தேசீய வீரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் ஏறக்குறைய
அத்தனை பேருக்கும்100க்கு 90 பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து
வந்து இலங்கை தேசத்தை சுரண்டிக் கொண்டு போக இருக்கிறவர்களும்
அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளாய் இருப்பவர்களும் ஆகும்.
லேவாதேவிகாரர்கள் பெரிதும் மாதம் 100க்கு 12 வரை வட்டி வாங்கி
ஏழை மக்களையும் இலங்கை வாசிகளையும் பாப்பராக்கி கொள்ளை
கொண்டு போக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கை பூமி
களை ஏராளமாய் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்து
பொருள் சேர்த்து கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், வியாபாரிகள்
கொள்ளைலாபம் அடித்து இலங்கை செல்வத்தை கொள்ளை கொண்டு போக
வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆகஷியில் வந்து புகுந்து
இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டு பணம் சுரண்டிக்
கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம் பிடித்த வன்னெஞ்ச
169
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பார்ப்பனர்களுமாகக் கூடிக் கொண்டு இந்திய தேசாபிமானக் கூப்பாடு
போடுகின்றார்கள்.
வெள்ளைக்காரனான அன்னியன் 100 -க்கு வருஷம் 6 வட்டிக்கு
கொடுத்தால் கருப்பனான அன்னியன்
100க்கு மாதம் 6 வட்டிக்கு கொடுக்
கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால் கருப்பன்
ஏழைகளிடம், கூலிகளிடம் வட்டி வாங்கி கொடுமைப் படுத்துகிறான்.
இந்தப் படிமக்களை சதித்து கொள்ளை அடிப்பவர்களே (வெள்ளை
யரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம் மதாபிமானம் தேச
அபிமானம் பேசுகிறார்கள்.
ஆகவே இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம்,
என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்து விடுங்கள். அவை ஒரு
நாளும் கஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்காது, உலகில் ஏழை பணக்காரன்
என்று இரண்டு வகுப்புக்கள் இருக்கவும் ஏழைகளைத் தொழிலாளிகளை,
பணக்காரரும் சோம்பேரிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும் தான்
பயன்படும்.
முடிவு
தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி
வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களை பாருங்கள். வேலை இல்லாமல்
திண்டாடும் மக்களையும், அவர்களது பெண்டுபிள்ளைகளின் பட்டினி
யையும், கொடுமையையும் பாருங்கள். வீடு வாசல் இல்லாமல் மூட்டை
முடிச்சுகளை தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி
மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால்
கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள். உயர்ந்தவன் -
தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன்,
மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன்- குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை
முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளி தரை மட்டமாக்குங்கள். அதன்
மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததும், மனித சமூகம்
சமஉரிமை
- சமநிலை என்கின்ற கட்டடத்தை கட்டுங்கள்.
இதைச் செய்ய
நீங்கள் உலகில் உள்ள கஷ்டப் படும் எல்லா மக்களுடனும் ஜாதி,மதம், தேசம்
என்கின்ற வித்தியாசம் இல்லாமல், பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று
சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.
தேசபக்தி தேசீயம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக
மக்களை அன்னிய நாட்டு நடப்புகளையும் அன்னிய நாட்டு மக்கள்
நிலைமையையும் உணர முடியாமல் செய்து வந்த காரணமே உலக ஒற்றுமை
ஏற்பட முடியாமல் இருந்து வருகின்றது.
குடி அரசு
- 1932 (2)
170
தெளிவாய் சொல்ல வேண்டுமானால்
“அன்னிய ஆட்சி” “சுயாட்சி” என்பதெல்லாம் அறவே ஏழை
மக்களுக்கு பயனற்றதும் சூழச்சி நிறைந்ததுமேயாகும். சுயாட்சி உள்ள நாட்டி
லும், சுயராஜ்யம் உள்ள ஊரிலும் ராஜாவே இல்லாத குடி அரசு தேசத்திலும்
பணக்காரன் கொடுமையும், பாதிரியின் சூழ்ச்சியும், ஏழைகளின் கஷ்டமும்,
பாமர மக்களின் மடமையும் இருந்துதான் வருகின்றது. கடவுள் பக்தியும் மத
பக்தியும் தேசாபிமானமும் நிறைந்து ததும்பும் நாடுகளிலும் இக்கொடுமைகள்
இருந்துதான் வருகின்றது. கடவுளுக்காகவும், மதத்துக்காகவும் கோடான
கோடி ரூபாய் செலவளித்து பலி கொடுத்து பக்தி செலுத்தி வரும் நாட்டிலும்
இக்கொடுமைகள் இருந்துதான் வருகின்றன. ஆனால் கடவுள், மதம், தேசீயம்
ஆகியவைகள் அழிக்கப்பட்ட அடியோடு இல்லாத இடங்களில் மாத்திரம்
பணக்காரக் கொடுமையும், சோம்பேரி வாழ்க்கையும், பட்டினி கஷ்டமும்,
உயர்வு தாழ்வுநிலையும் காணப் படவில்லை.
அவ்வூராருக்கு கடவுள் மத தேச அபிமானம் இல்லை.மனித சமூக
சமத்துவ அபிமானம் மாத்திரமே பிரதானமாய் காணப்பட்டது. அங்கு
பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, அதிகாரி
- குடி ஜனங்கள்
என்கின்ற வித்தியாசமே காணப்படவில்லை.
அங்குள்ள சகல சொத்திற்கும் அங்குள்ள சகல மக்களும் சம சுதந்திர
முள்ளவர்களாய் இருந்து வருகிறார்கள். எல்லா மக்களுக்கும் சரி அளவு
வேலையும், போதுமான ஆகாரமும் சுக செளகரியமும் இருந்து சமமாய்
அனுபவிக்கப்பட்டு வருகிறது. “நாளைக்கு என் செய்வது” என்ற கவலையே
இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். கடவுளும் மதமும் இல்லாததால் அந்நாடு
பூமிக்குள் அமிழ்ந்து போக வில்லை.
அந்நாட்டு மக்களுக்கு ஆண் பெண் அடங்கலுக்கும் ஏற்பட்ட
தைரியமும், உயிருக்குத் துணிந்த வீரமும் சமத்துவ உணர்ச்சியும் கடவுளை
யும் மதத்தையும் நம்பிய தேசாபிமானமுள்ள எந்த நாட்டாரிடமும் காண
முடியாதாயிருக்கிறது. நமது நாட்டிலே சகல பொருப்பையும் கடவுள் மீது
போட்டுவிட்டு சோம்பேறி ஞானம் பேசுபவர்களே மலிந்து இருக்கிறார்கள்.
நமது தலைவர்கள் என்பவர்களோ அதைச் சாதிக்கிறேன் இதை செய்கிறேன்.
என்று பேசி மக்களை ஏய்த்து பயன் அடைவதும், முடியாவிட்டால் கடவுள்
மீது பழிபோட்டு நழுவிக் கொள்ளுவதுமானவர்கள். கடவுள் மீது நம்பிக்கை
யுள்ள நமது மக்கள் வீரமோ ஒரு சிறு உண்மை தியாகம் செய்ய வேண்டி
ஏற்பட்டாலும் “நான் எதற்கும் தயார்தான் ஆனால் எனக்கு எதாவது கஷ்டம்
வந்து விட்டால் என் பெண்டு பிள்ளைகளுக்கு என்னகதி என்றுதான்
யோசிக்க வேண்டியிருக்கின்றது”” என்ற அளவோடு நிற்கக் கூடியதாகும்.
கடவுளை நம்பாதவர்களும், கடவுள் மீது எவ்வித பொருப்பும் போடாத
171
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வர்களு மாயிருக்கிறவர்களும், கடவுள் உணர்ச்சியை அடியோடு ஒழித்து
கொண்டவர்களுமான மக்கள் உள்ள நாட்டில் “நாளைக்கு என்ன கதி” என்
கின்ற பேச்சேகிடையாது. ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை உடையவர்.
களாகவே காணப்படுகின்றார்கள்.
அந்த நிலைமைதான் “நம் நாட்டுக்கும் மற்றும் உலக மெங்கும்
வேண்டும். அதற்காகவே வாலிபர்கள் எல்லோரும் உழைக்க வேண்டும்.
அதுவே இப்போது நமது முன்னணியில் இருக்கும் வேலையாகும்.
புரட்சி வாழ்க!
பொதுவுடமை ஓங்குக!
குறிப்பு-ஐரோப்பா, ஆப்பிரிக்கா தேசங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு. 1770:1922
இலங்கை அடைந்து அங்கு சற்றுப் பயணம் செய்து கொழும்பு கண்டி நாவல் பட்டிய,
- ஹட்டன், யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தூத்துக்குடி, மதுரை முதலிய இடங்களில்
பல ஸ்தாபனங்களின் சார்பாக கொடுக்கப்பட்ட சுமார் 20 வரவேற்பிலும்
பொதுக்கூட்டங்களிலும் பேசிய சொற்பொழிவு தொகுப்பு.
குடி அரசு - சொற்பொழிவு - 20.11.1932.
குடி அரசு - 1932 @
172
கோயில் நுழைவம் ஒற்றுமை மகாநா௫ம்
இன்று “இந்திய தேசீய துறையில் கோயில் நுழைவு பிரசாரத்திற்கும்
ஒற்றுமை பிரசாரத்திற்கும்”” தான் அதிக விளம்பரங்கள் காணப்படுகின்றன
ஏனெனில் தோழர் ராம்சே மாக்டானால்டு அவர்களின் வகுப்புப் பிரச்சினை
தீர்ப்புக்காக வென்று தோழர் காந்தியவர்களால் செய்யப்பட்ட பட்டினியின்
பிரசாரம் பொது ஜனங்களின் மனதை கவரும் படி செய்து விட்டது.மற்றொரு
புறம் வைசிராய் அவர்களின் அடக்குமுறை பெருவாரியான தேசபக்தர்கள்.
என்பவர்களுக்கு தேசீய வேலை செய்ய இடமில்லாமல் செய்து விட்டதால்
எப்படியாவது ஒரு புதியத் துறையைக் கண்டு பிடிக்க வேண்டிய அவசியமும்.
ஏற்பட்டு விட்டது.ஆகவே இவ்விரண்டின் பயன்களால் கோவில் நுழைவும்
ஒற்றுமை மகநாடும் உச்சஸ்தானம் பெற்று விட்டன.
இக்காரியங்கள் இரண்டும் இன்று தேசீயத்திற்காகவே செய்யப்
படுவதாய் கூறப்பட்டும். அந்தப்படி மக்களை நம்பும் படியும் செய்திருந்தா
லும் நாம் அதை ஒப்புக் கொள்ள முடியாது. ஏனெனில் தேசீயம் என்பதின்
தத்துவம் எப்படி இருந்த போதிலும் இன்றையதினம் தேசீயத்திற்காக வென்று
இவ்வளவு பாடுபடுகின்றவர்கள் தோழர் ராம்சே மாக்டணால்ட் தீர்ப்புக்கு முன்
இவ்விஷயங்களில் இவ்வளவு பாடுபட்டிருந்தால் அதற்கு ஏதாவது ஓர்.
அர்த்தமுண்டு என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் வட்ட மேஜை மகா
நாட்டில் “எல்லா வகுப்புகளுக்கும் நாங்கள் தான் பிரதிநிதிகள், எதைப் பற்றி
யும் பேச எங்களுக்குத் தான் உரிமை உண்டு. மற்றவர்களெல்லாம் சரியான
பிரதிநிதிகள் அல்ல, சுயராஜ்யம் கொடுத்து விட்டால் வகுப்புத் தகராறுகள்
எல்லாம் தானே தீர்ந்து விடும், வகுப்புத் தகராறுக் கெல்லாம் சர்க்காரரே
காரணம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு எங்கள் உயிர் போனாலும் தனிப்
பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்க மாட்டோம்” என்பதாக வெல்லாம்
சொல்லிய பின் சர்க்காரே பிரவேசித்து வகுப்புத் தகராறு விஷயத்தில் தங்கள்
தீர்ப்புகளை ஏதோ ஒரு விதத்தில் கொடுத்து அந்த வகுப்பு மக்களை தங்கள்
சுவாதீனம் செய்து கொண்ட பிறகு இப்போது அவர்களை தங்கள் பக்கம்
இழுக்கக் கருதி சர்க்கார் கொடுத்ததைவிட தாங்கள்அதிகமாய் கொடுப்பதாகச்
சொல்லுவது போல் பேசி சில ஏற்பாடுகளையும் செய்து கொண்டு கோவில்
நுழைவைப் பற்றியும் ஒற்றுமையைப் பற்றியும் பேசினால் இதில் நாணையம்.
173
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இருப்பதாய் யார்தான் நம்புவார்கள். இதை இந்து சமூகம் செய்யும் இந்து மதப்
பிரசாரம் என்று சொல்லாமல் பொது நல நன்மையான காரியம் என்று எப்படி
சொல்ல முடியும்? ஏனெனில் தோழர் ராம்சே மாக்டனால்டின் தீர்ப்பானது
தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதியின் மூலம் தனிப் பிரதிநிதித்து
வம் கொடுத்ததானது அவர்களை (தாழ்த்தப்பட்ட மக்களை) நாளடைவில்
இந்து சமூக அடிமை வாழ்விலிருந்து பிரித்து பொது சமூக வாழ்வில் ஒரு
அளவு சுதந்திரர்களாக ஆக்கி விடுகிறது. அதாவது மக மதியர்களுக்கு சுமார்
20 வருஷங்களுக்கு முன் கொடுக்கப்பட்ட தனித் தொகுதியானது எப்படி
மகமதிய சமூகத்தை இந்து சமூகத்திலிருந்து நிரந்தரமாய் பிரிந்து விட்டதோ
அதுபோலவே இந்த தாழ்த்தப்பட்ட சமூகமும் தனித் தொகுதி பெற்றால்
கண்டிப்பாய் அது இந்து சமூகத்திலிருந்து பிரிந்தே போய்விட்டதாகத்தான்.
முடியும். ஆனால் மகமதிய சமூகம் தனித் தொகுதி பெற்ற பின்புதான் அது
தன் காலிலேயேநிற்கக் கூடிய ஒரு பலத்தையும் செளகரியத்தையும் பெற்றது
என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.அது போலவே தாழ்த்தப்பட்ட
சமூகமும் தனித் தொகுதி பெற்று விட்டால் அடுத்த 10 வருஷ காலத்திற்குள்.
அது மற்ற எவருடைய உதவியையும் தயவையும்
எதிர்பாராமல் தன்
காலிலேயே நிற்கக் கூடிய பலத்தையும் செளகரியத்தையும் பெற்று விடும்.
என்பதில் சிறிதும் சந்தேகிக்க இடமில்லை.
இவ்விரு சமூகமும் அதாவது மகமதிய சமூகமும், தாழ்த்தப்பட்ட
மக்கள் சமூகமும் சமூகவாழ்வில் சுதந்திரம் பெற்று மற்றவர்களுடைய தயவும்,
பிச்சையும் அவசியமில்லாமல் தங்கள் தங்கள் கால்களிலேயே நிற்கும்
படியான நிலைமை ஏற்பட்டு விட்டால் இந்து சமூகம் என்பதானது இன்று
சொல்லிக் கொள்வது போல இந்தியாவில் “ஒரு பெரிய பலம் பொருந்திய
சமூகம்” என்பதாகச் சொல்லிக் கொள்ள இடமில்லாமல் போவதோடு
மகமதிய சமூகமும் தாழ்த்தப்பட்ட சமூகமும் அதனதன் சமூகக் கொள்கை
யின் பயனாகக் கலந்து கொள்ள ஒன்றுக் கொன்று அன்னியோன்னியம்
ஏற்பட்டு விட நேரும் போது இந்து சமூகம் சிறுபான்மை சமூகம் என்று
சொல்லும் படியான நிலைமைக்கும் பரிகசிக்கத் தக்க நிலைமைக்கும் வந்து
விடும். அதோடு மாத்திரமல்லாமல் இந்து சமூகத்தில் இருக்கின்ற காரணத்தில்
இன்னும் எந்தெந்த உள் சமூகங்கள் சமூக வாழ்வில் சுதந்திரமும் சமத்து
வமும் அற்று இழிவு படுத்தப் படுகின்னவோ அவையெல்லாம் இப்படியே
வெளிக் கிளம்பவும் நேரிட்டு விடும். அப்போது இந்து சமூகம் என்பது
தானாகவே அழுவாரற்ற பிணமாய் ஒழிந்து விடும். இந்தக் காரணங்களா
லேயே மக்களுக்கு சமூக வாழ்வில் சமத்துவமும், சுதந்திரமும் இல்லா
விட்டாலுங்கூட இந்து சமூகம் மேன்மையாய் இருந்து ஆதிக்கம் செலுத்து
வதைமாத்திரம் விட்டு விடக் கூடாது என்கின்ற இந்து சமூகத் தலைவர்கள்
என்பவர்களின் எண்ணமே இந்த ஒற்றுமை மகாநாடுகளுக்கும், கோவில்
நுழைவுக்கும் அஸ்திவாரமாய் இருந்து வருகின்றது.
குடி அரசு - 1932 @
174
தோழர் ராம்சே மாக்டனால்டின் வகுப்புதீர்ப்பு ஒழிந்து தனித் தொகுதி
மாறி, பொதுத் தொகுதி நிலை நின்று அரசியலிலும் இந்து சமூகத்திற்கே
ஆதிக்கம் வந்து விட்டது என்று ஆனவுடன் “கோவில் ) நுழைவு சுயராஜ்ஜியம்
கிடைத்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும்”
“ஒற்றுமை என்பது
சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு தானாகவே ஏற்பட்டு விடும்” என்றும்
தாராளமாய் சொல்லப்பட்டு விடும். பிறகு “பழய குருடி கதவை திரடி*
என்கின்ற நிலைமை ஏற்படுவதில் சந்தேகமிருக்க நியாயமில்லை.
தவிரவும் இந்த கோவில்களுக்கு செல்வாக்குகள் இருந்த காலத்தில்
கோவில் நுழைவைப் பற்றி பேசுவது பெருத்த அபவாதமாகவும், மதத்
துரோகமாகவும், கலகாஸ்பதமாகவும் இருந்து வந்தது. இன்றை தினம்
உலகத்தில் கோவில்களுக்கு மதிப்பு குறைந்து சில தேசங்களில் கோவிலுக்கு
போவது முட்டாள் தனம் என்று கருதப்பட்டும் சில தேசங்களில் கோவில்கள்
இடிக்கப்பட்டும் போனபின்பும் நமது நாட்டிலும் கோவில்களின் புரட்டுகள்.
வெளியாகி அவற்றின் மதிப்பு குறைந்து அதன் பேரால் உயர் நிலையில்
இருப்பவர்களுடையவும், வயிற்றுப் பிழைப்பு மதக் காரர்களுடையவும்
யோக்கியதை வெளியாகி அவர்கள் மக்களால் வெறுக்கப்பட ஆரம்பித்த
பிறகே தான் இப்போது கோவில் நுழைவு இவ்வளவு முக்கியஸ்தானம் பெற்று.
விட்டது.
கோவில் நுழைவு வெற்றி பெற்றால் இந்து சமூகம் சிறிது பலப்படும்
என்றும் இன்னும் கொஞ்சகாலத்திற்காவது அதற்கு அழிவு வராமல்
காப்பாற்றலாம் என்றுமே இப்போது கோவில் நுழைவுக்காரர்கள் கருதி
வேலை செய்கிறார்களே யொழிய “சர்வ சமரச கடவுளின்” தரிசனத்தையும்
அருளையும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்பதாக ஒரு புதிய
உணர்ச்சி ஏற்பட்டதற்காக
அல்ல என்பதை சிறிது யோசனை உள்ளவர்களும்.
உணர்ந்து விடக் கூடும். அன்றியும் பகுத்தறிவையும் சம சுதந்திர நோக்கத்
தையும் கொண்டு இப்போது கோவில் நுழைவுக்கு ஆதரவு தேட எவரும்
வரவில்லை யென்பதும் கோவில் நுழைவு பிரசாரத்தின் உபன்யாசங்களையும்
எடுத்துக் காட்டும் ஆதாரங்களையும் பார்த்தால் நன்றாய்விளங்கும் மற்றெதற்
கென்றால் “மதத்தில் மத சாஸ்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில்
நுழைவை ஆட்சேபிக்க இடமில்லை” என்றுதான் சொல்லப் படுகின்றது.
ஆகவேமதத்தில் மதசாஸ்திரத்தில் ஆட்சேபனை இருந்தால் அவர்கள் கதி
என்ன ஆவது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மதத்தையும் மத சாஸ்திரத்
தையும் பற்றி பேசி அடைகின்ற ஆதரவு நாணையமான தென்றோ,நிலைக்கக்
கூடியதென்றோ நாம் ஒருக்காலும் சொல்லி விட முடியாது. ஏனென்றால்
“இந்து மதத்தில்” ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பது சுலபத்தில்
முடிவு கட்டக் கூடிய காரியமல்ல. ஏனெனில் இந்து மதம் என்று ஒரு மத
முண்டா? அதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சாஸ்திரமோ ஆதாரமோ உண்டா
என்பது போன்ற விஷயங்களும் விவகாரங்களும் யாவரும் அறிந்ததே.
175
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
யாகும்.ஆனால் ஒருசிலரின் நன்மைக்கு ஏற்ற விதமாக மாத்திரம் செளகரியத்
துக்கு தக்கபடி சமயத்திற்குத் தகுந்தபடி ஆதாரங்கள் தேடலாம், வியாக்கி
யானங்கள் செய்து கொள்ளலாம் என்கின்ற செளகரியம் மாத்திரம் இந்து மதம்
என்னும் பேரால் இருந்து வருகின்றது.
இந்த செளகரியமும் சந்தர்ப்பமும்
தீர்ந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் ஆதாரம் கிடைக்கக் கூடும். எப்படி
வேண்டுமானாலும் வியாக்யானம் செய்யலாம்.ஆதலால் இந்த ஆதரவைக்
கொண்டு கோயிலுக்குள் நுழைய விடுவது என்பது ஆபத்தானது என்பதை
ஒவ்வொருவரும் ஞாபகத்தில் இருத்தல் வேண்டும்.
சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்திற்கு அஸ்தி
வாரமாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும். பொருளாதார வித்தியாச
தத்துவத்திற்கு ஆதாரமாய் இருப்பது மதமேயாகும். இந்த இரண்டும் இருக்கிற
வரை ஒற்றுமைக் குறைவும், தீண்டாமைத் தன்மையும் ஏதாவது ஒரு
வேஷத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். தீண்டாமை முதலிய ஜாதி
வித்தியாசமானது. ஏதோ முட்டாள் தனத்தினால் ஏற்படுத்தப்பட்டது என்று
சொல்லுவது ஒரு நாளும் ஒப்புக் கொள்ள முடியாது.மற்றென்னவெனில் அது
மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன்ஜாக்கிரதையான
சுயநல அயோக்கியத் தனத்தினால் ஏற்படுத்தப்பட்டதாகும். அந்நிலை
கட்டுப்பாடாகவும் நிலையாகவும் இருப்பதற்கே சாஸ்திர ஆதாரங்களும் மதக்
கோட்பாடுகளும் ஏற்படுத்தப் பட்டவைகளாகும். அன்றியும் இன்றையத்
தினம் நமது நாட்டில் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் செய்யும்
கொடுமையின் பயனெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிதும் பொருளா
தாரக் கொடுமையை விளைவிப்பதல்லாமல் மற்றபடி “கடவுள் தரிசனமும்
மோட்ச சாதனமும்” கிடைக்காமலிருப்பதல்ல. அப்படிப்பட்ட, அதாவது
பொருளாதாரத் துறையில் கொடுமை படுத்தப்பட்ட மக்களுக்கு கோவில்
களில் உள்ள கடவுள் தரிசனத்தால் என்ன பயன் கிடைக்கக் கூடும்? ஏதோ
அவர்கள் பாடுபட்டு சம்பாதித்த சிறிது பொருளையும் கோவிலுக்கு கொண்டு.
போய் கடவுள் தரிசனை என்னும் பேரால் தொலைத்து விட்டு அடிமைத்
தன்மையையும் பொறுப்பற்ற தன்மையையும் பெற நேரிடுவதைத் தவிர
வேறு என்ன லாபம் அடையக் கூடும்? ஆகவே இந்த கோவில் நுழைவுப்
பிரசாரம் இப்போது கடவுள் பிரசாரத்துக்கும், மத பிரசாரத்துக்கும், சாஸ்திர
புராண பிரசாரத்துக்கும்தான் அஸ்திவாரமாகப் பயன்படுகிறது. என்பதே நமது
அபிப்பிராயம்.
நம்மைப் பொருத்தவரை நாம் “கோவில் பிரவேசம்” என்பதற்கு
அனுகூலமாகத் தான் இருக்கின்றோம்.எதற்காக என்றால் உயர்வு தாழ்வு மேல்
ஜாதி, கீழ் ஜாதி என்பவற்றை நிலை நிறுத்தவும் மக்களுக்குள் கொள்வினை,
கொடுப்பினை, உண்பன, தின்பன ஆகியவை இல்லாமல் பிரித்து வைக்கவும்
அவற்றை அனுபவத்தில் நடத்தவும் நிலைநிறுத்தவும் ஏற்பட்ட பல சூழ்ச்சி
ஸ்தாபனங்களில் கோவில் பிரவேசத்தடுப்பும் கோவிலுக்குள் ஏற்படுத்தப்
குடி அரசு - 1932 @
176
பட்டிருக்கும் பல வித்தியாசங்களும் முக்கியமானவைகளில் ஒன்று என்ப
தாகத்தான் கருதி இருக்கிறோம். ஆதலால் அவற்றை ஒழிக்க கோவில்
நுழைவு தடுப்பும் வித்தியாசங்களும் அழிக்கப் பட வேண்டியது அவசிய
மாகும். ஆனால் அது பக்திக்காக என்றும் கடவுள் தரிசனைக்காவென்றும்
சொல்வதையும் அதன் பேரால் மதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளை
பிரசாரம் செய்து மக்களுக்கு மூட நம்பிக்கையை உண்டாக்க முயற்சிப்ப
தையும் கண்டிக்காமல் இருப்பதற்கில்லை. ஒற்றுமை என்னும் விஷயத்திலும்.
மதம், மத வித்தியாசம் என்பவைகள் உள்ளவரை இரு சமூகத்திற்கு
உண்மையான ஒற்றுமை என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. “சுய ராஜ்யம்”
என்பது கிடைத்து விட்டாலும் உண்மையான ஒற்றுமை என்பது ஏற்பட்டு
விடாது.
உதாரணமாக இன்றைய தினம் துருக்கியும் “சுயராஜ்யம்” பெற்ற நாடு,
கிரீஸ் தேசமும் “சுயராஜ்யம்” பெற்ற நாடு. இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட
அபிப்பிராய பேதத்தால் கிரீசில் இருந்த இஸ்லாமியர்கள் பத்து லக்ஷக்கணக்
காய் துருக்கிக்கு துரத்தப்பட்டு விட்டார்கள். துருக்கியிலிருந்து கிறிஸ்தவர்கள்
பத்து லக்ஷக்கணக்காய் கிரீசுக்கு குடியேறி விட்டார்கள். ஆனால் இதற்கு சமா
தானம் “அவர்கள் துரத்தப்பட வில்லை. தானாகவே அவரவர்கள் தேசத்திற்கு
ஓடி விட்டார்கள்” என்று சொல்லக் கூடும். எப்படி யிருந்தாலும் அபிப்பிராய
பேத மேற்பட்ட காலத்தில் மதம் காரணமாய் சொத்து சுகங்களை விட்டு விட்டு
பெண்டு பிள்ளைகளை நாட்டை விட்டு ஓடும் படியாய் ஏற்பட்டு இன்று
சாப்பாட்டிற்கில்லாமல் பட்டினியாய் கிடந்து தவிக்க நேரிட்டிருக்கிறது
என்பதை மறுக்க முடியாது.
மற்றும் சில “சுயராஜ்ய” நாடுகளிலும் கத்தோலிக்கர்களுக்கும் புராட்
டாஸ்டெண்டுகளுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டு பல கொடுமைகள்
அடைந்து வருகிறார்கள். இவற்றிற்கெல்லாம் அன்னிய ஆட்சி இருந்து
கலகங்களையும் அபிப்பிராய பேதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற
தென்றே சொல்லி விட முடியாது.
ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டு
மானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டு
மானாலும் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத் துறையில் மக்கள் எல்லோருக்
கும் சமத்துவம் இருக்கும் படியான ஏற்பாடுகளுக்கு ஏற்ற காரியங்கள் செய்ய
பட்டாலொழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப் பட கூடியதில்லை என்றே
சொல்லுவோம்.
எனவே அதை விட்டு விட்டு ஒற்றுமை மகாநாடுகளுக்கும் கோவில்
நுழைவு பிரசாரமும் செய்வது முற்கூறிய படி இந்து மதப் பிரசாரமும்
சாஸ்திரப் புராணப் பிரசாரமும் என்றுதான் சொல்ல வேண்டிருக்கிறது.
இம்
மாதிரி பிரசாரங்களால் நாட்டிற்கோ, மனித சமூகத்திற்கோ ஒரு நன்மை
177
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
யையும் செய்து விடமுடியாது.
இரு சமூகங்களிலும் மேல் நிலையில் உள்ள
அதிகாரம் பதவி பட்டம் செல்வம் ஆகியவற்றில் பற்றுக் கொண்ட சில
மக்களை திருப்தி செய்யலாம். அவர்கள் சிறிது நாளைக்கு பாமர மக்களை
ஏமாற்றி அடக்கி வைக்கலாம். இவ்வளவு தானே ஒழிய சமூக சமத்துவத்
தையோ சமூக ஒற்றுமையையோ பொருளாதார சமத்துவத்தையோ நிலை
நிருத்தி விட முடியாது.
அரசாங்கத்தாரும் தங்கள் சுய நலத்தை உத்தேசித்து இந்த தந்திரங்
களுக்கு உடந்தையாயிருந்து தங்களது இரட்டைப் பங்குக்கு மோச மில்லாமல்
நடந்து கொள்ளலாம். அரசாங்க கொள்கையெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்க
ளும், ஏழைத் தொழிலாளிகளும் கிளர்ச்சி செய்யும் போது “படித்தக் கூட்டத்
தையும் பணக்காரர்களையும் ஆதரிப்பதற்கும் காப்பாற்றுவதற்குமே தாங்கள்
இங்கு இருக்க வேண்டியதாய் இருக்கிறது” என்று சொல்லுவதும், படித்த
மக்களும் பணக்காரர்களும் கிளர்ச்சி செய்யும் போது “பாமர மக்களின்
நன்மைக்காக தாங்கள் இருக்க வேண்டியதாயிருக்கிறது'” என்று சொல்லுவது
மான தந்திரங்களை அனுசரித்தே ஆட்சி நடத்த வேண்டியவர்கள் ஆகி
விட்டதால் அவர்கள் யாருக்கு எவ்வளவு பங்கு எதில் வேண்டுமானாலும்
கொடுக்க சம்மதித்து தங்கள் பங்கை பெருக்கிக் கொண்டு வருகிறார்கள்.
எனவே தேசீயமும், ஒற்றுமையும், அரசாங்கமும், சீர்திருத்தமும்
பொருளாதாரத்திலும் சமூக வாழ்விலும் சமத்துவமில்லாமல் இழிவு படுத்தப்
பட்ட மக்களை அந்நிலையிலேயே நிலை நிறுத்தி மேல் நிலையில் இருந்து
வாழக்கருதும்
சோம்பேரிகளுடையவும் செல்வவான்களுடையவும்
அரசாங்கங்களுடையவும் சூட்சிகளேயாகும்.
குடி அரசு - தலையங்கம் - 20.11.4932.
குடி அரசு - 1932 (2)
178
20
குடி அரசுப்
கைவல்யம் அல்லது கலைக்யொனம்,
நச காணம எம்பர்கால் டுப்ப்ட கட
o
கொளில்டப்பட்।
இல்கட்டுரைகிளேப் படல்ய
e e "இற்கும்
s i உன
வனக சினத்த
அண்ட் சகன்,
இன்
னிவ அனா: பகல்
இராமாயண ஆராய்,
5% தய
றல் சமண அஆத்வனாம். கம்ப
மனை
வ தாவல் இன்பத் கக ழக்கு
என்ன
உள்ள GGl
இர
it அதது
த்த அ
e
கனு: 0
ஞானசூரியன்,.
[துங்கு அ்மிருழி முனரியலைகளின் அபாசல்
வெய்ன் அவல் T
அஸ்க அரிக் தமது ம i
e
நம்
த்க் பல்வ இதன்
வில் கனு ப்ட்
மநுநீதி கருமம் பொ
இதப்
சான்றிதல் உள்ள
R,
பாரின்.
B தாலா அளப்பது கக
ன்ன குழிகளும் கக்ருவத. இன் விலை அணா. 0—2—0
இராமலிங்க சுவாமிகள் பாடல்
இசட்டு,
இபத இரானிக்கு ககாமியால் பாடிய அருட்பாலிஸ்,
ஆறும்
e e S w5
'ாடக்களாஷ் கேன் ரானை, வாம்
ஜ்
ர்வ ல்
X pmaiiard வா்.
o
இதன்
விவ குடர்
சுயமரியாதைத் தாலாட்டு,
உாலைம் செறு,
றி அவல் கொக
வா்
த்வத் Py
b oy
et
ey o]
இதன் வல் கடட
சோதிடப் புசட்டு,
8500 e
s என்தை பே
களும், புரோதெர்களும்
e oy
g @ p w
e X
பள கு
ச. வெ. இராமராமியின் 94 இருத்த
மகாதாட்டுச் சொற்பொழிவு:
ர கணக
க்கள் அ
உணரலாம்,
சட
வெட
வருத்த வாழ்த்
ணாய e o B இதல் கதா
இநன் வில ளு,
00
மானேஜர்,
ட
சான் எழுதப்பட்டு.
P
893 அரியான் arimsale. கி இன்பா
Lo
ren
P
phudonay, அல்லது புசாண ஆபாசம்,
80 தரு வாய பன்,
இன் புரணவ்ன
ஏத்த குதைண்டும், (b மான கோன்ககவும்
தென்கத்தெனிய உணரா,
இரண்டு இங
செட்ல சவதர்வுத்தைய் போதிப்பது,
இதுல
அம்,
ம
ய்துலு சயசய
பரத்கவ முதன்யாசான் எழு
இதில களு0-
2-0.
கடவுவ தித்திக்கும். கயவர்கள்
யார்?
சவகியானைக்சார்கள் அக்க
ச்ம் ாணவியாதைச்கார்கள் தாள் கடக கிழியக் o
வின் அஷ் இளாசப் புராணங்களின் குதாரய்ண்்கொண்டே.
ச்ச் காட்டப்பப்தருக்கெது,. ண்டர் அட சாகன்
ர்ச
இன் விலகு
கதர் மூடதம்பிக்கை (இங்கிலிஷ்,
AR
இதைப் படத்தால் அப் பூட்டை, உண
ல்
இதன் வில கள 0-3—0
குடி அசசு புத்தகாலயம், ஈரோடு.
உன்மை ்ல்வபதிபபாததல் அரிடப்பட்டு தெர் e ஏனாகளால் G A
179
௨... ஏபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 15
ணங்கள்
இந்திய தேசியம் என்னும் சுயராஜ்ய முயற்சி தோல்வியடைந்தவுடன்
இந்து மதப்பிரசாரம் தொடங்கப்பட்டு அதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு
வருவது யாரும் அறியாததல்ல.
உண்மையைச் சொல்லுமிடத்து இந்திய தேசீயமென்பதே இந்து மத
ஆதிக்கமே தவிர வேறல்ல. இக்கருத்தை இதற்கு முன் பல தடவைகளில்
விளக்கியிருக்கின்றோம். இந்திய தேசீயம் இந்து மத ஆதிக்கத்திற்கு
பாடுபடுகின்றது என்று நன்றாய் விளங்கியதால் தான் இந்து மதத்தின்
காரணமாய் உயர் நிலையில் இருப்பவர்களான 100க்கு 90 வீதமுள்ள.
பார்ப்பனர்கள் காப்பிக் கடை, வக்கீல், குமாஸ்தா உள்பட யாவரும் தேசீயப்
பிரசாரத்தை நடத்துகிறார்கள்.
அதோடு மாத்திரமல்லாமல் மத உணர்ச்சியால்
தான், மதத்தின் கற்பனையின் பயனாகத் தான் தாங்கள் செல்வவான்களாக
இருக்க முடிகின்றது என்று கருதிய செல்வவான்கள் எல்லோரும் இந்த தேசீய
முயற்சிக்கு கோடிக் கணக்கான ரூபாய்களை உதவி வருகின்றார்கள். அதற்கு
பிரதி உபகாரமாகவே தான் இந்திய தேசீயத்தில் முக்கிய கொள்கையாக,
“மதத்தையும், மத ஆதாரங்களையும் காப்பாற்றப்படும்” என்றும், எல்லா
மதங்களினுடைய எல்லா ஆதாரங்களையும் எல்லா மதசம்பந்தமான பழக்க
வழக்கங்களையும் காப்பாற்றப்படும் என்றும் உறுதி கூறுவதாக திட்டம்
போட்டுக் கொண்டார்கள். இதன் பயன் எல்லா மதங்களுக்கும் சமமானது
தான் என்பதாகக் காணப்பட்டாலும், பலர் அந்தப்படியே நம்பியிருந்தாலும்,
மேற்கண்ட கொள்கைகள் அமுலில் இருக்கும் வரை இந்து மத சமூகம்
என்பது தான் எப்போதும் மெஜாரிட்டியாகவும், மற்ற மத சமூகங்கள் என்பது
எப்போதும் மைனாரிட்டியாகவுமே இருந்து வருவதற்கு ஏதுவாய் இருக்கும்.
எப்படி ஆன போதிலும் இம்மத பாதுகாப்புகள் என்பவை மேல் ஜாதிக்
காரனையும் பணக்காரர்களையும் காப்பாற்றவும் நிலை நிறுத்தவும் பலமான
ஆயுதமாக இருந்து வரப் போகின்றனவே தவிர, பல மதங்களிலும் உள்ள
தாழ்த்தப் பட்ட மக்களையும், ஏழை மக்களையும் கூலித் தொழிலாளி என்ற
மக்களையும் ஈடேற்றச் செய்யப் போவதில்லை என்பதோடு வேறு வழியில்
ஈடேற முயர்ச்சித்தாலும் அதைத் தடைப்படுத்தவே பயன் படப்போகிறது
என்பது மாத்திரம் உறுதி.
குடி அரசு
- 1932 (2)
180
அன்றியும் இன்றைய தேசீய மதப்பிரசாரகர்களும் இந்த விஷயங்கள்
தெரிந்து தான் தங்களின் இன்றைய உயர் நிலைக்கும், செல்வ நிலைக்கும்
ஆபத்து வந்து விடக் கூடாது என்று கருதியே அவசர அவசரமாக மதப்
பாதுகாப்பையும் மத ஆதார பாதுகாப்பையும் வெகு நாளைய பழக்க வழக்க
பாதுகாப்பையும் அரசியல் திட்டத்தில் புகுத்தி பந்தோபஸ்த்து செய்து
கொண்டார்கள்.
தாழ்ந்த ஜாதி என்பது ஒழியவேண்டுமானால் உயர்ந்த ஜாதி என்பது
ஒழிய வேண்டாமா? ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமானால் பணக்காரத்
தன்மை ஒழிய வேண்டாமா? என்பது நடு நிலையில் இருந்து நியாயக்
கண்களுடன் பார்த்தால் மூடனுக்கும் விளங்காமல் போகாது. ஆகவே மதம்
வேண்டும், சாஸ்திரம் வேண்டும், வர்ணாசிரம தர்மம் வேண்டும், இவ்வளவும்
போராமல் வெகு நாளைய பழக்க வழக்கங்களும் வேண்டும். இவ்வளவு
மாத்திரம் அல்லாமல் இந்தியாவிலுள்ள சுதேச சமஸ்தான அரசர்களும்
அவர்களது ஆட்சிகளும் இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்துக்
கொண்டால் பிறகு சுயராஜ்ஜியம் என்பது என்ன அது யாருடைய நன்மைக்கு
பயன்படக் கூடியது என்பது யோசிக்க தக்க விஷயமல்லவா? என்று
கேள்க்கின்றோம்.
தோழர் காந்தியுள்பட “சுதேச சமஸ்தான அரசர்கள் இந்தியாவில்
இருக்க வேண்டியது சரி” என்று ஒப்புக் கொண்ட பிறகு வட்ட மேஜை மகா
நாட்டிலும் ஏற்றுக் கொண்ட பிறகு சுயராஜ்யம் என்பதன் பொருள் என்ன
என்பது சிறிது யோசித்தாலும் விளங்காமல் போகாது.
ஆகவே வரப்போகும் சுயராஜ்ஜியத்தில் மதம், சாஸ்திரம், ஜாதி,
அரசன், முதலாளி, தொழிலாளி, ஹரிஜனங்கள் ஆகியவைகள் இருக்கும்
என்பதும் அந்நிலைகள் காப்பாற்றப்படும் என்பதும் மறுக்க கூடியதல்ல.
தோழர்களே! தேசீய சமதர்ம வாதிகளே இப்படிப்பட்ட சுயராஜிய
முயற்சிக்கு - தேசீய முயற்சிக்கு மக்களுக்குள் சகல துறைகளிலும், ஒற்றுமை
யும் சமத்துவமும் வேண்டும் என்பவர்கள் ஒத்துழைக்க வேண்டியதா?
அல்லது தடையாய் இருந்து அம்முயற்சிகளை முறியடிக்க வேண்டியதா?
என்பதை யோசித்துப் பாருங்கள்.
சென்ற வாரம் நாம் குறிப்பிட்டபடி ஒற்றுமை மகாநாட்டில் என்ன
செய்ய முடிந்தது? “இந்து மதத்திற்கு விரோதமாய் இருக்கக் கூடாது, அதைக்
குற்றம் சொல்லக் கூடாது” அதன் மோசத்தையும் சூழ்ச்சிகளையும் வெளி
யிடக் கூடாது” என்கின்ற ஒப்பந்தத்தை மகமதியர்களிடம் பெற்றுக் கொண்டு
அதற்கு பதிலாக அவர்களுக்கு ஏதோ சில பிச்சைகள் போல் கொடுத்து
ஏமாற்றப் பட்டு விட்டது. அங்கு கூடியிருந்த முஸ்லீம்கள் உண்மையிலேயே
சமதர்ம வாதிகளாய் இருந்திருப்பார்களானால் அவர்கள் எந்த விதத்தில் இந்த
181
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டிருக்க முடிந்தது என்பதே நமது கேள்வி? இந்து
மதத்தில் உள்ள ஊழல்களும், மோசங்களும், கொடுமைகளும், சூழ்ச்சிகளும்
அவர்களுக்குத் தெரியாதா? அம்மதத்தால் 100க்கு 90 மக்கள் பலர் கீழ்
ஜாதியாயும், பலர் ஏழைகளாயும், பலர் கூலிகளாயும், பலர் பிச்சைக்காரர்
களாகவும் இழிவு படுத்தப்பட்டு கஷ்டப்படுவதும் தெரியாதா?
மகமதிய மதம் தன் சமூகத்தை மாத்திரம் தான் காப்பாற்ற வேண்டியது.
அதற்காகவே மற்ற மத மக்கள் எவ்வளவு இழிவும், கொடுமையும் படுத்தப்
பட்டாலும் அதற்கு சம்மதித்து பயன் பெற்றுக் கொள்ள வேண்டியதும்
என்றுதான் போதிக்கின்றதா? என்று கேள்க்கின்றோம். ஆகவே இந்து
முஸ்லீம் ஒற்றுமையானது இந்திய சமூக ஏழை மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு பெருத்த ஆபத்தாகவும் எவ்வகையாலும் வேறு வித சிபார்சோ
ஆதரவோ வருவதற்கு இடமில்லாமலும் செய்து விட்டது என்பது தான் நமது
முடிவு,
அது போலவே பூனா ஒப்பந்தமும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில்
அவர்கள் வெகுகாலமாக கஷ்டப்பட்டு வாதாடி சிறிது கூட இந்து சமூக உயர்
நிலை மக்கள் என்பவர்களின் உதவியே இல்லாமல் - அவர்களது எதிர்ப்
பையும் சமாளித்து ஏதோ சிறிது தலை தூக்கிப் பார்க்க அடைந்த நிலையை
பெரிய பாராங்கல்லைத் தூக்கி அதன் தலையில் போட்டு கசகச வென்று
நசுங்கும் படி செய்தது போல் நாசமாக்கப்பட்டு விட்டது. போதாக்குறைக்கு
மறுபடியும் என்றென்றைக்கும் தலை தூக்க அவர்களுக்கு ஞாபகமே
உண்டாகாதபடி அவர்களுக் கிடையில் கடவுள் பிரசாரமும் மதப் பிரசாரமும்
செய்ய புகுந்தாய் விட்டது.
இது “குதிரை கீழே தூக்கிப் போட்டது மல்லாமல் புதைக்க குழியும்
தோண்டிற்றாம்'” என்ற பழமொழிப் படியே ஆகிவிட்டது. எப்படியெனில்
தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது தீண்டப்படாதவர்கள் என்கின்ற சமூகத்தார்.
தங்களை உயர்ந்த ஜாதியார் என்பவர்களிடம் இருந்து பிரித்து தங்களுக்குத்
தனித்த தொகுதி வேண்டும் என்று கேழ்ப்பதற்கு ஏற்பட்ட காரணம் தான்
என்ன?
இந்து சமூகத்துள் தாங்கள் கலந்திருந்தால் தாங்கள் விடுதலை
அடைந்து மனிதனாக வாழமுடியாதென்றும், அதற்கு காரணம் இந்து சமூக
மதக் கொள்கைகள் என்றும் உணர்ந்தே தென்னாடு முதல் வடநாடு பஞ்சாப்
வரையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் தாங்கள் இந்து மதஸ்தர்கள் அல்ல
என்று சொல்லிக்கூடத் தங்களுக்கு தனித்தொகுதி கேட்டார்கள். அப்படிப்
பட்டவர்களை இந்துக்கள் தான் என்று சொல்லச் செய்து அவர்கள் தனித்
தொகுதியையும் கெடுத்து அவர்களுக்கு ஹரிஜனங்கள் என்று பெயரும்
கொடுத்து, அவர்களுக்குள் மதப்பிரசாரம் செய்வது என்பது எப்படிப்பட்ட
கொடுமையான காரியமாகும்? என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளவும்.
குடி அரசு
- 1932 (2)
182
அவர்களுக்கு ஹரிஜனங்கள் என்று பெயர் சூட்டியதானது அவர்
களை எந்த வழியிலாவது தீண்டப்படாதார் அல்லாதவர்கள் என்று குறிப்பிட
இடமிருக்கின்றதா என்று பாருங்கள். பறையர் என்றாலும் ஆதி திராவிடர்.
என்றாலும் ஹரிஜனங்கள் என்றாலும் இவைகளில் எது உயர்ந்த பெயராகும்.
இந்த மூன்று பெயர்களையும் நினைக்கும் போதே தீண்டாதவர்களுக்கு
இடப்பட்ட பெயர் என்றுதான் புலப்படுகின்றதே தவிர இவற்றுள் அவர்கள்.
தீண்டப்படாதவர்கள் அல்ல என்பதற்கு என்ன அடையாளம் இருக்கிறது.
ஒரு சமயம் இந்துக்கள் அல்லாதவர்கள், மகமதியர்கள், புத்தர்கள்
என்று பெயர் வைத்திருந்தாலாவது மற்றக் காரியங்களில் எப்படி இருந்தாலும்.
தீண்டாதவர்கள் என்கின்ற எண்ணம் தோன்றாதவாறு மறைவு படலாம்.
அப்படிக்கில்லாததால் இதை “பட்டுக்குஞ்சம் கட்டிய துடப்பக் கட்டை”
என்பதுபோல் ஹரிஜனங்கள் என்ற பெயர் இருக்கின்றது என்று தான் சொல்ல
வேண்டும். அன்றியும் ஆதிதிராவிடர் என்ற பெயராவது தீண்டாதவர்கள்
என்பதை மறைக்காவிட்டாலும் இந்த நாட்டின் பழங்குடிமக்கள் என்ற
கருத்தையாவது கொண்டிருக்கின்றது என்பதாக எண்ண இடமுண்டு.
ஆனால் இந்த “ஹரிஜனங்கள்”” என்பது அவர்களுக்கு தீண்டாதார்
என்ற பட்டத்தை மறைக்காமல் போவதோடு (ஏனெனில் அந்தப் பெயரானது
தீண்டப்படாதாருக்கு தோழர் காந்தியால் வைக்கப்பட்ட பெயர் என்பது
தெரியாமல் போகாது) ஹரி என்கின்ற ஒரு கடவுளை பூஜிப்பவர்கள் என்றும்
அதற்கு பக்தி செய்ய வேண்டியவர்கள் என்றும் ஏற்பட வேண்டியதாய்
இருக்கின்றது. தோழர் காந்தி ஒரு வைணவர் ஆனதாலும் தோழர் ராஜ
கோபாலாச்சாரியார் ஒரு வைணவர் ஆனதாலும் தங்கள் மதத்தைப் பெருக்க
வைணவக் கடவுள் பெயரைக் கொடுக்க வேண்டியதாய் விட்டது.
“சைவ ரத்தம் ஓடும் சைவர்களான சைவ” தேசீயவாதிகள் இதை
எப்படிப் பொருத்துக் கொண்டிருக்கின்றார்களோ நமக்கு தெரியவில்லை.
நிற்க,
தீண்டாமை விலக்கு பிரசாரம் என்பதாக பெயரை வைத்து வட நாட்டு.
பணக்காரர்களிடமும் மதக்காரர்களிடமும் லக்ஷக்கணக்கான பணத்தை
வசூல் செய்து தென்னாட்டில் (திருச்சியில்) தீண்டாமை மகாநாடு கூட்டி
ஒவ்வொரு ஊர்களிலும் கமிட்டிகள் ஏற்படுத்தி அவைகளுக்கு பணத்தை
வினியோகித்து பெரிய பிரசாரங்கள் செய்யப் போவதாய்த் தீர்மானித்திருக்
கிறார்கள். இதன் பிரசார வேலைத் திட்டம் என்ன என்பதை தோழர்களே
“தேசீயசமதர்மவாதிகளே” சற்று சிந்தித்துப் பாருங்கள்.“ஜாதி இந்துக்களிடை.
யேயும் ஹரிஜனங்கள் இடையே “ஹரி கதைகள் பஜனைகள் செய்வது”
மேஜிக் லண்டர்ன் படக் காக்ஷிகளுடன் பிரசாரங்கள் செய்வது துண்டு
பிரசுரம் வழங்குவது” என்பதாகும்.
183
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
(இது 23 - 11- 32 தேதி இந்தியா பத்திரிகையில் 10வது பக்கம் 2வது
கலத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அன்றியும் இது அகில இந்திய
தீண்டாமை விலக்கு சங்கத் தமிழ் நாட்டு ஸ்தாபன காரியதரிசியால் அனுப்பப்
பட்ட உத்தியோக தோரணையான அறிக்கையாகும்!.
ஆகவே தேசீயத்தின் போக்கு என்ன? தீண்டாமை விலக்கின்
இரகசியம் என்ன? ஹரிஜனங்கள் என்ற பட்டத்தின் சூகஷி என்ன என்பதை
இப்போதாவது சிந்தித்துப் பாருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 27.11.1932.
குடி அரசு
- 1932 (2)
184
தோழர் எஸ். ராமநாதன்
தோழர் ராமநாதன் அவர்கள் ஐரோப்பாவிலேயே தங்கிக் கொண்ட
விஷயத்தைப் பற்றி பல பத்திரிகைகள் பல விதமாக எழுதி பொது ஜனங்
களுக்குள் ஒரு வித தப்பு அபிப்பிராயத்தை உண்டு பண்ண முயற்சிப்பதாய்
தெரிய வருகின்றது. அது என்னவெனில்
1. தோழர் ராமநாதன் கையில் ஒரு காசு கூட கொடுக்காமல்
அவரை காயலாவுடன் பிரான்ஸ் ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு ஓடி
வந்து விட்டதாக ஒரு கூற்று.
2. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் நடுத் தெருவில் கையில்
ஒரு காசு கூட இல்லாத
நிலையில் விட்டு விட்டு வந்ததாக மற்றொரு
கூற்று.
3. தோழர் ராமநாதனை மார்சேல்ஸ் தெருக்களில் ஒரு காசு கூட
நான் கொடுக்காமல் விட்டு விட்டு வந்து விட்டதாகவும், ஆனால்
தன்கையில் தன் தங்கை எவ்வளவோ கஷ்டப்பட்டு சேர்த்து வைத்
திருந்ததை அனுப்பி இருப்பதாகவும், அது சிறு தொகை - செலவுக்கு
போராதது போலவும், குறிப்பிட்டு இங்கு ஒரு கனவானை தனக்கு
கடனாக 300 ரூபாய் அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருப்பதாய்
மற்றொரு கூற்றும். இன்னும் பல.
மேல் கண்ட இவைகளை யெல்லாம் நிரூபிக்க தோழர் ராமநாதனால்
எழுதப்பட்ட கடிதங்கள் என்பதாக சில பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட
கடிதங்களேயாகும்.
அவையாவன
1.4.11.32 தேதி தாருல் இஸ்லாம் உப தலையங்கம்.
“எமது நண்பர் ஒருவருக்குத் திரு. எஸ். இராமநாதன் அவர்கள்
எழுதிய கடிதத்திலிருந்து, அவர்கள் ஜினீவாவில் (ஸ்விட்ஜர்லாந்து?
இருப்பதாகவும், பிரான்சில்
அவரை ஆஸ்பத்திரியில் விட்டு விட்டு, தோழர்.
. வெ.ராவும், ராமும் ருஷ்யா போய் விட்டதாகவும் செய்தி எட்டியது.”
185
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மற்றொன்று ஜினிவாவிலிருந்து,
2.“நாயக்கரது வருகையைப் பற்றி தெரிந்திருப்பீர்கள் என்று நினைக்
கிறேன். கையில் ஒரு காசு கூட இல்லாத நிலையில் அவர் மார்செய்லஸ்
வீதிகளில் என்னை விட்டு விட்டு வந்து விட்டார்..அது அவருடைய சுபாவம்,
ஆகையால் அதைப் பற்றிக்குறை கூறுவதற்கில்லை. என்னுடைய சகோதரி
சேகரித்து அனுப்பக் கூடிய சிறிய தொகையைக் கொண்டு கஷ்டத்துடன்
நாட்களைக் கழித்து வருகின்றேன். தங்களுக்கு வேறு பலவித செலவு
இருக்குமென்பது தெரிந்தாலும், தாங்கள் இது சமயம் ரூ. 300 கடனாகக்
கொடுக்க கடமைப் பட்டுள்ளீர்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத்
தொகையை தங்களால் அனுப்ப முடியாதிருந்தால் கூடுமானதையாவது
அனுப்ப வேண்டுகிறேன்” என்பதாகும்.
இவற்றை சிலர் நம்பியும், சிலர் நம்பாமலும், இதன் உண்மைதான்
என்னமாய் இருக்கக் கூடும்
என்பதை அறிய ஆசைப்பட்டும் இருப்பதாக
தெரிய வருகிறது.
இதைப் பற்றி இது சமயம் மிகச் சுருக்கமாகவே விளக்கினால் போதும்
என்று கருதுகிறேன். ஏனெனில் தோழர் ராமநாதன் இங்கு பக்கத்தில் ஆஜர்.
இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் மேல்கண்ட கூற்றுகளைப் பொருத்த
வரையில் தான் பொது ஜனங்களும் உண்மை அறிய ஆசைப் படுவார்கள்
ஆனதினாலும் பத்திரிகைகளில் காணப்பட்ட மேற்கண்ட கூற்றுக்கள், அவை
தானாகவே ஒன்றுக் கொன்று முரணாய் இருப்பதை வாசகர்கள் கூர்ந்து
கவனித்தாலே ஒருவாறு உண்மை உணரலாம்.ஆனதினாலும், மற்றும் அதைப்
பரப்ப முயற்சிக்கின்றவர்களின் மனப் போக்கை கவனித்துப் பார்த்தால் என்ன
கருத்துடன் இந்த பிரசாரம் செய்யப் படுகிறது என்பது தெளிவாகுமான
தினாலும் வெகு சுருக்கத்திலேயே இருப்பது நலம் என்று கருதுகிறேன்.
தோழர் ராமநாதன் காயலாவுடன் எந்த ஆஸ்பத்திரியிலும் விட்டு
விட்டு வரப்படவில்லை என்பது அவர் கடிதங்கள் என்பவைகள் ஒன்றிலி
ருந்தே வெளிப்படுகிறது. அவர் கையில் ஒரு காசு கூட இல்லாமல் விட்டு
விட்டு வரப்படவில்லை என்பதும் அவரது கடிதங்கள் என்பவைகளின்
மற்றொன்றிலிருந்து விளங்குகின்றது.
ஆகவே
பிரசாரத்திற்கு ஆதாரமான
இரண்டு கூற்றுகளும் உண்மையில்லை என்பதை நான் எடுத்துக் காட்ட
வேண்டியதில்லை. ஆனால் தோழர் ராமநாதனால் எனக்கு எழுதப்பட்ட
இரண்டு கடிதத்தை இதில் பிரகரிக்கிறேன்.
அவ்விரண்டு கடிதத்தையும் பார்த்தால் ஒன்று தோழர் ராமநாதன்
இந்தியாவுக்கு வர இஸ்டப்படவில்லை என்பதும், நாம் அழைத்தும்
அதை.
மறுத்திருப்பதும், என்னை மாத்திரம் தனியாய் இந்தியாவுக்குப் போகும்படி
வலியுறுத்தி இருப்பதும் விளங்கும். (இதன் காரணம் அவரது குடும்பத்தாருக்
குடி அரசு
- 1932 (2)
186
கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தெரியும் மற்றொன்று நான் இந்தியா வந்து
சேர்ந்த பிறகு தோழர் ராமநாதனால் ஜினிவாவிலிருந்து எழுதி இருப்பது
விளங்கும்.அவையாவன:-
Madrid Hospital
17-8-1932
எனக்கு உடம்பு கொஞ்சம் செளக்கியமாய் விட்டபடியால் உடுப்பு
தேவையாய் இருக்கிறது. அதற்கு சவுக்காரம் போடாதவைகளை வீட்டுக்
காரியிடம் கொடுத்து போடச் சொல்லி காயவைத்து ஒரு செட் பூட்ஸ் Socks
உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். கை பையில் Brush Paste சவரம்
பண்ணிக் கொள்ள கத்தி பெட்டி சோப்பும் கடிதம் எழுத காகிதம், கவர்,
பென்சில், ஸ்டாம்பும் அனுப்ப வேண்டுகிறேன். அவ்விடமுள்ள என் புஸ்தகத்
தில் Bertrand Russel அனுப்புவது நலம்.
தாங்கள் எனக்காக காலம்கடத்தாமல் மேல் கொண்டு போவதே
சரி என்று மறு படியும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இங்கு வேலைக்காரர்களுக்கு ஏதாவது கொடுப்பது வழக்கமாகையால்
சில்லரை கொஞ்சம் அனுப்ப வேண்டுகிறேன்.
ராமநாதன்.
குறிப்பு- இந்த ஆஸ்பத்திரி மாட்ரிட்டுக்கு 6 மைல் தூரத்தில் Tetuan victorias
என்ற இடத்தில் கட்டப்பட்டது. அங்கிருந்து மாட்ரிட்டுக்கு எழுதப்பட்டது.
11
5. Ramanathan
/O Thomas cook.
Geneva, Switzer Land,
26-10-32.
அன்புள்ள அய்யா,
மேற்கண்ட எனது விலாசத்திற்கு “குடி அரசு” பத்திரிகை அனுப்பி
வர வேண்டுகிறேன்.மதத்தைப் பற்றிய புத்தகம் வெளியிட்டிருந்தால் நான்கு
பிரதிகள் அனுப்பவும். பர்லினில் இருந்த ராமு இந்தியாவுக்குத் திரும்பு
வதாகச் சொல்லிவிட்டு இங்கிலாந்து போனதாகக் கேள்விப்படுகிறேன்.
அவ்விடம் திரும்பிவந்த விபரம் எழுத வேண்டுகிறேன்.
தங்கள் அன்பன்
ராமநாதன்..
187
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இந்தக் கடிதம் நான் இந்தியாவுக்கு வந்ததுமேல் 13-11-32. தேதியில்
ஈரோடு விலாசத்திற்கு கிடைத்தது.
இந்தக் கடிதங்கள் தோழர் ராமநாதனின் நிலையையும், என்ன
நடந்திருக்கக்கூடும் என்பதையும் தானாகவே சொல்லும்.
தவிர தோழர் ராமநாதன் கையில் பணம் இல்லை என்பது உண்மை
அல்ல என்பதை அவர் மற்றொரு நண்பருக்கு எழுதி இருப்பதாக சொல்லப்
படும் கடிதங்கள் ஒன்றின் மூலமாகவே விளங்குமானாலும் அதைப் பற்றியும்
சற்று விளக்குவோம்.
அவர் இந்தியாவுக்குத் திரும்புவது இல்லை என்கின்ற விஷயத்தை
தனது சகோதரிக்கு சூசனையாய் காட்டி எழுதி செலவுக்கு அனுப்பும் படி
எழுதிய கடிதத்தின் மீது அவ்வம்மையார் வருத்தப்பட்டு அவசியம் திரும்பி
வரும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் மற்றும் அவர் கேட்டப்படி 300
ரூபாய் அனுப்பி இருந்த தொகையின் செக் ஒன்று என்னை அவர் பயணம்
அனுப்பும் முதல்நாள் வரையில் மாற்றாமல் வைத்திருந்து அன்று தான்
மாற்றிக் கொண்டார். இதோடு அவர் இந்தியாவுக்கு வருவதில்லை என்று
சொன்ன பிறகும், அவர் தனக்கு பணம் தேவையில்லை என்று சொன்ன
பிறகும் அவர் கப்பலை விட்டு இறங்கும் போது நான் கொடுத்த 5 பவுனும்
மற்றும் அவரிடம் சில்லரையாய் இருந்த தொகையும் சேர்த்து சற்றேறக்
குறைய 400 நானூறு ரூ. போல் அவர் கைவசம் இருந்தது. அவரது தங்கை
அனுப்பிய ரூபாய் சுமார் ஒரு மாத காலமாய் செக்கு மாற்றாமலும்,
அதிலி
ருந்து செலவழிக்கச் செய்யாமலும் இருக்கும்படி வற்புறுத்தியவன் நானே
யாகும்.
அன்றியும் அவர் ஜினிவாவுக்குப் போவதாய் பயணம் சொல்லி
கொண்டு கப்பல் விட்டு இறங்கும் போது எப்பொழுது தான் இந்தியாவுக்கு
வருவதாக உத்தேசம் என்று கேட்டதற்கு, “அதைப் பற்றி நான் முடிவு செய்ய
வில்லை.இரண்டு மூன்று மாதத்தில் திரும்பலாம் என்று யோசித்திருக்கிறேன்”
என்று சொன்னார்.
எப்படியாவது இந்தியாவிற்கு திரும்பி வருவதுதான் கிரமமாகும்
என்றும் சொன்னேன். கப்பல் புறப்பட இருந்ததால் என்னிடம் ரூபாய்
பெற்றதும் ஆகட்டும் என்று சொல்லிக்
கொண்டு அவசரமாய் கப்பலை விட்டு
இறங்கினார்.
ஆகவே கையிலும் பணம் இருக்க நானும் கொடுத்து வந்திருக்க
இந்தியாவுக்கு வருவதானால் இனியும் பணம் அனுப்பச் செய்கிறேன் என்று
சொல்லியும் வந்திருக்க, தோழர் ராமநாதனை கையில் ஒரு காசும் இல்லாமல்
நோயுடன் ஆஸ்பத்திரியில் விட்டு வந்ததும், மார்செல்ஸ் தெருவில் விட்டு
குடி அரசு
- 1932 (2)
188
வந்ததும் எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்கக் கூடும் என்பதை நாம்
விளக்க வேண்டியதில்லை. நேரில் நடந்த வார்த்தைகள் என்பது எப்படி
இருந்தாலும் இதில் பிரசுரிக்கப்பட்ட எல்லா கடிதங்களிலிருந்தும் பொது
ஜனங்கள் கருத வேண்டிய விஷயம் மூன்றேயாகும்.
1. தோழர் ராமநாதன் அவருடைய இந்திய நண்பர்களுக்கு
எழுதிய கடிதங்கள் என்பவை கற்பனைக் கடிதங்களாக இருக்குமா?
2. அல்லது எனக்கு எழுதப்பட்டக் கடிதங்கள் என்பவை
கற்பனையாக இருக்குமா?
3. எல்லாக் கடிதங்களும் தோழர் ராமநாதன் அவர்களால்
உண்மையாகவே எழுதப்பட்டிருக்குமானால் அவர் நிலைமைதான்
என்னவாக இருக்கக் கூடும் என்பவைகளேயாகும்.
இது விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளவோ,
முடிவு செய்து கொள்ளவோ வாசகர்களுக்கு பூரண சுதந்திரமும் போதிய
அனுபவமும் உண்டு என்றே கருதி இதுசமயம் இத்துடன் முடிக்கின்றேன்.
ஈ. வெ. ரா.
குடி அரசு - அறிக்கை - 27.11.1932
189
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அம்ம நாடார் மறைந்தார்
தோழர் ஊ. பு. அ. செளந்திர பாண்டியன் எம். எல். சி. அவர்களது
அருமைத் தந்தையார் பட்டிவீரன்பட்டி, பழமையான பிரபல குடும்பஸ்தரும்
பெரும் புகழ் பெற்றவரும் சமூகத்திற்கே நாயகமாய் இருந்து சமூக சமதர்மத்
துக்கு வெகுகாலமாகவே போராடிக் கொண்டிருந்த வருமான தோழர் ஊ. பு.
அய்ய நாடார் அவர்கள் காயலாவாய் இருந்து 18 தேதி இரவு 10 மணிக்கு
காலம் சென்றார் என்ற சேதியைக் கேட்டு வருந்துகின்றோம். தோழர் அய்ய
நாடார் அவர்கள் தென்னாட்டில் சமூக சீர்திருத்த முயற்சிகள் ஏற்படுவதற்கு
முன்பும் சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கும் முன்பு இருந்தே சகல
சமூகமும் ஒன்றுபட வேண்டும் என்றும், உயர்வு தாழ்வு கூடாதென்றும்
போராடி வந்ததுடன் மூடப் பழக்கவழக்கங்களையும், திதி திவசம் போன்ற
பார்ப்பன சூழ்ச்சிகளையும்
அறவே வெறுத்து பிரசாரம் செய்து வந்தவர்.
களுமாவர். அது மாத்திரமல்லாமல் சுயமரியாதை இயக்கத்திற்கும் அது
தோன்றிய காலமுதல் குடும்பத்துடன் சுற்றத்தாருடன் ஒத்துழைத்து அதற்கு
அளவு கடந்த ஆதரவு அளித்துவந்தவருமாவார். இப்படிப்பட்ட பெரியார்.
தனது 60 வயதில் அருமை மனைவியாரையும் கண்கள் போன்ற மக்களாகிய
தோழர் செளந்திரபாண்டியன், ரங்கசாமி மற்றும் சகோதரிகளான பெண்
மக்களையும் விட்டு மறைந்தது மிக்க பரிதாபகரமான விஷயமாகும்.
அவரது மக்கள் யாவரும் இயற்கையை உணர்ந்த மதிவள்ளல்கள்.
ஆனதால் அன்னியரின் தேறுதலும் ஆறுதலும் தேவை இருக்காது என்றே
கருதுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.11.1932
குடி அரசு
- 1932 (2)
190
ஆதிதிராவிட
வாலிபர்கன்
வரவேற்பு
தோழர்களே! நீங்கள் இங்கு எனக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக்
கொடுக்கப் பட்டதைப் பற்றியும், தலைவர் புகழ்ந்து பேசியதைப் பற்றியும்,
நான் சிறிதும் பெருமையாகக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் பிறந்து
வளர்ந்ததும் இந்த ஊர். நீங்கள் பிறந்து வளர்ந்ததும் இந்த ஊர். அன்றியும்
சுமார் 10 வருஷத்திற்கு முந்திய வரையில் உங்களுக்கும் எனக்கும் வெகு
நெருங்கிய சம்மந்தம் இருந்து வந்திருக்கிறது.
ஆதலால் உள்ளுர்க்காரர்கள்
நெருங்கிய சம்மந்தம் இருந்து வந்தவர்கள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து
கொள்வது என்பது பரிகசிக்கத்தக்கது என்றே கருதுகிறேன். உங்கள் பத்திரத்
தில் உள்ளுரிலிருக்கிற உங்களை நான் முன்போல் கவனிக்கவில்லை என்று
கண்டு இருக்கிறீர்கள். முன்போல் உங்களுக்குப் பலவித நன்மைகள் செய்ய
வில்லை என்று சொல்லுகிறீர்கள். இவைகள் வாஸ்தவமாயிருக்கலாம். ஏனெ
னில் நான் இந்த ஊர் முனிசிபல் சேர்மணாய் இருந்த காலத்தில் உங்கள் தெரு
விற்கு என்று அதிக சலுகை காட்டினது போல் இப்போது நான் ஈடுபட்டி
ருக்கும் காரியத்தில் தனி சலுகை என்றும், பொருள் சம்மந்தமாயும் நான்
எதைச் செய்யமுடியும்? என் சொந்தத்திலும் எனக்கு முன்பு இருந்த மாதிரி
யான பொருள் வருவாய் கிடையாது. பொதுக் காரியங்களின் உண்மை யாய்
உழைப்பவர்களுக்கு வரும்படி இல்லாமல் போவதோடு கைபொருளும்
சிதைந்து போய் விடும். ஆதலால் பொருள் மூலமாய் செய்யும் நன்மைகள்
செய்வது கஷ்டமான காரியம்.
மற்றபடி நீங்கள் குறிப்பிட்டப் படியே உங்கள் சமூக விஷயத்தில்
பொதுவாக ஒரு புரட்சிப் போன்ற காரியத்தை சுயமரியாதை இயக்கம்
செய்திருக்கிறது என்று சொல்லுவதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடை
கிறேன். நான் காங்கிரசில் இருக்கும் போதும் தீண்டாதார் விஷயத்தைப்
பற்றியே அதிகம் உழைத்திருக்கிறேன். வைக்கம் சத்தியாக்கிரகம் என்பதும்
தீண்டாமை விலக்குக்காகத் தான் ஏற்பட்டதே தவிர வேறில்லை.3 வருடத்
திற்கு முன் நடந்த ஈரோடு கோயில் பிரவேசம் என்பதும் அது சம்மந்தமான
வழக்கும் தீண்டாமை விலக்கு சம்மந்தமாக ஏற்பட்டதே தவிர வேறில்லை.
191
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இன்னும் சுயமரியாதை இயக்கத்திலும் தீண்டாமை விலக்குத் தத்துவம்
தான் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.
அது விஷயமாய் சம பந்தி போஜனம்,
கலப்பு மணம் முதலியவைகள் கூட ஜாதி வித்தியாசம் என்பது சிறிதும்
பாராமல் அநேக காரியங்கள் நடை பெற்று வருவதை நீங்கள் உணர்ந்தே
இருக்கிறீர்கள். இங்கு சற்று முன் பேசிய தோழர் அன்ன பூரணியம்மாள் ஒரு
“பறப்பெண்” அவரை மணம் செய்து கொண்ட இங்கிருக்கும் தோழர்
ரத்தினசபாபதி ஒரு “திருநெல்வேலி சைவர்” ஒன்றுக் கொன்று எவ்வளவு
வித்தியாசம் பாவிக்கப்படுவது மாறி இன்று “சதிபதி” களாய் உங்கள் முன்
விளங்குவதைப் பாருங்கள். உங்கள் சமூகத்துக்கு சகல துறைகளிலும் சர்க்கார்.
உத்தியோகத்திலும் தனி பிரதி நிதித்துவம் எப்படி வந்தது? ஓர் காலத்தில்
“சுயமரியாதை இயக்க மந்திரிகளாய்” இருந்த டாக்டர் சுப்பராயன், தோழர்:
முத்தைய முதலியார் ஆகியவர்கள் காலத்தில் தான் இது ஏற்பட்டது.
அது
போலவே சட்டசபை முதலிய ஸ்தாபனங்களிலும் கூட உங்களுக்குத் தனி
பிரதிநிதித்துவம் எப்படிக் கிடைத்தது. “உலகமே வெறுத்துத் தள்ளிய” சைமன்
கமிஷனை சுய மரியாதை இயக்கம் தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று,
உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக் கொள்ளும் படி வேண்டிக் கொண்டது
டன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்
தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும் சூழ்ச்சி செய்தும் ஒரு அளவா
வது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம் பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்
கிணறும், தனிக் கோவிலும் கட்ட வேண்டு மென்று சொன்ன தேசியங்களும்,
மாளவியாக்களும் உங்களுக்கு பொது கிணற்றில் உரிமையும், பொதுக்
கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயலவிலாவது
சொல்லக் கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம்
உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசீயத்தின் வண்டவாளத்தை வெளிப்
படுத்தியும் தீண்டாமை விலக்கின் சூட்சியை வெளியாக்கியும் செய்த பிரசார:
மல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். இந்த காரியங்களுக்காக
சுயமரியாதை இயக்கமும், தோழர்களும் பொது ஜனங்களிடத்தில் எவ்வளவு
கெட்ட பெயர் வாங்கினார்கள், எவ்வளவு பழிப்புக்கும் தூஷணைக்கும்
ஆளானார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா?
இவற்றை யெல்லாம் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு ஏதாவது
நன்மை ஏற்பட்டதா இல்லையா என்பது நன்றாய் விளங்கும். இனிமேல்
நீங்கள் ஒன்றுக்கும் கவலைப் பட வேண்டியதில்லை. இனியும் 10 வருஷக்
காலத்திற்குள் தீண்டாமை இந்திய நாட்டை விட்டு பறந்தே ஓடிவிடும். தேசிய
சூட்ச்சி குறுக்கிடாமலிருந்தால் இன்னும் உங்களுக்கு எவ்வளவோ நன்மை
ஏற்பட மார்க்கமுண்டு. எப்படி யெனில் உலகம் ஒரு பெரும் புரட்சிக்கு
தயாராகிக் கொண்டு வருகின்றது. அப்புரட்சி வெற்றி பெற்றாலும், தோல்வி
அடைந்தாலும் தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட தன்மையும் சமீபத்தில்
அழிந்துதான் தீரும். இந்த நாட்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு 160 வருஷ
காலமாகியும் தீண்டாமை ஒழிக்கப் படாமல் இருப்பது பிரிட்டிஷாருக்குப்
குடி அரசு
- 1932 (2)
192
பெருத்த அவமானகரமான காரியமாகும். அவர்கள் இனி ஆட்சி செய்ய
தகுதியுடையவர்கள் அல்ல என்பதற்கு இந்த ஒரு காரணமே போதும்.
பிரிட்டிஷார் இந்தியப் பொது ஜனங்கள் மீது, பார்ப்பனர் மீது, இந்து மதத்தின்
மீது பழி போடலாமானாலும், இவர்களுக்கு அறிவும் யோக்கியப் பொருப்பும்
எங்கு போயிற்று என்ற கேள்விக்கு இவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள்.
ஆகவே இனியாருடைய தயவும் தேவையில்லாமலேயே காரியங்கள் நடந்து
விடும். உலகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை உதயம் ஆகி
விட்டது.
அதன்
முன்
இவைகள் ஒன்றினாலும் உங்களுடைய தீண்டாமையை ஒழித்து சமதர்மம்
கொடுக்க முடியாது. உங்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும்.
அவ்வுணர்ச்சி உண்மையாக உங்களுக்கு ஏற்பட்டால் உங்களை அறியாமலே
பெரியதொரு புரட்சி ஏற்பட்டு விடும். அதில் நீங்கள் மாத்திரம் சமத்துவ
மடைந்து உலக சுகபோகங்களில் சம சுதந்திரம் பெறுவதோடு நில்லாமல்
உலகிற்கே சமதர்மம் வழங்கக் கூடியவர்களாகி விடுவீர்கள்.
பழய கருப்பன்தான் ஆய்
விடுவீர்கள்.
நான் ஏன் இப்படி சொல்லுகிறேன்? எனக்கு மதமும் கடவுளும்
இருந்திருக்கவில்லையா? இந்த ஊர் கோவில்களைப் போய் பாருங்கள்.
எங்கள் குடும்பப் பெயர் அங்கெல்லாம் இருக்கின்றதா இல்லையா
193
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
. எல்லாவற்றையும்
நான் அனுபவித்து பார்த்து விட்டேன். என்னுடைய 40, 50 வருஷ உலக
அனுபவமும் இவைகளை சந்தேகமற விளக்கி விட்டத. அணு
உங்கள்
புரட்டுகளை உணர்ந்து விட்டோம் நல்ல தனத்தில் யோக்கியமாய் நடக்
கிறீர்களா அல்லது இதற்காக எங்கள் உயிரை இழக்க வேண்டியதுதானா என்று
கேளுங்கள்.
இதில் ஒன்றும் தப்பிதமில்லை. ஏனெனில் பாடுபட்ட நீங்கள் பட்டினி
கிடக்கவும், கீழ் ஜாதியாய் இருக்கவும், சோம்பேரியாய் இருந்தவர் செல்வ
வானாய் இருக்கவும், மேல் ஜாதியாய் இருக்கவும் ஏற்பட்ட முறைகள் எது
வானாலும் அதை ஒழிப்பது எவ்விதத்திலும் குற்றமாகாது.
அவை
புரட்டின்
பேரிலும் சூழ்ச்சியின் பேரிலும் சுயநலத்தின் பேரிலுமே கட்டப் பட்ட கட்ட
டமாகும். உங்களுக்கு உண்மையான சுயமரியாதை உணர்ச்சி வந்து விட்டால்
அது மணலால் கட்டிய வீடு சரிந்து விழுவது போல் அது தானே சரிந்து
விழுந்து விடும். ஆதலால் நீங்கள் உங்கள் பங்கை அடைய எதன் பேராலும்
பின் வாங்காதீர்கள். உங்களுக்கு எந்த கோவிலுக்குள் போய் எந்தக் கடவுளை
வணங்க அனுமதி கிடைத்து விட்டாலும் இதனால் எல்லாம் இன்று நீங்கள்
படும்
அரை பட்டினி அவஸ்தையையும்,
அரை நிர்வாண அவஸ்தையையும்,
கல்வி இல்லாமல் தற்குறிகளாய் மடையர்களாய் ஆக்கி வைத்திருக்கும்
பகுத்தறிவற்ற அவஸ்தையும் ஒரு காலமும் நீங்கிவிடப் போவதில்லை.
அதற்கு ஏற்ற முயற்சிகளே செய்ய வேண்டும். அதிலே வெற்றிபெற
வேண்டும். அதற்காகத்தான் சுயமரியாதை உணர்ச்சி வேண்டுமென்கிறோம்.
குறிப்பு: வெளிநாடு சென்று திரும்பியபின் ஈரோட்டில் 27. 17. 1932ந் தேதி
ஆதிதிராவிட வாலிபர்கள் கொடுத்த வரவேற்பில் ஆற்றிய சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 04.12.1932
குடி அரசு
- 1932 (2)
194.
ஏண் பயப்பட வேண்டும்?
இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும்
எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும்
அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசா
ரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரிய
வருகின்றது.
இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம்
உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக்
காரணமாய் இருந்து சோம்பேரிகளுக்கும், பேராசைக்காரர்களுக்கும், முறடர்.
களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும்
பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆஸ்திகமே யாகும்.
விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திகம் என்பதாக ஒன்று இல்லா
திருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக்காரனுக்கு இடமேது? குருமார்கள்,
முல்லாக்கள், பாதிரிமார்கள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள், பண்டார சன்னதி
கள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர்களுக்கு இடமேது? பிரபுக்கள்,
முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள்,
ஜமீன்தார்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள்
ஆகியவர்களுக்கு இடமேது?
அன்றியும் இந்த ஆஸ்திகம் என்பது இல்லாதிருந்திருக்குமானால் கீழ்
ஜாதிக்காரன், ஏழை, பிச்சைக்காரன், கூலி வேலையாள் முதலிய இழிவு
படுத்தப்பட்ட - அடிமைப் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட
மேது? என்பவைகளைக் கூர்ந்த அறிவு கொண்டு நடுநிலை என்னும்
கண்ணாடி மூலம் பார்த்தால் யாவருக்கும் இதன் உண்மை நன்கு விளங்கும்.
அன்றியும் இன்றைய ஆஸ்திகப் பிரசாரகர்கள் எல்லாம் எங்கு பார்த்
தாலும் சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல், நோகாமல் உட்கார்ந்து கொண்டு
ஊரார் உழைப்பில் உண்டு உடுத்தித் திரியும் சோம்பேரிகளும் நயவஞ்ச
கர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய வேறு யாராவது இவ்வளவு இருக்கி
றார்களா? என்பதைக் கவனித்தாலும் உண்மை விளங்காமல் போகாது.
195
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மேலும் இந்த ஆஸ்திகக் கூட்டம் எல்லாம் நாத்திகத்திற்கு அணுவள
வாவது பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல் இருந்தாலும் நாத்திகம்
பரவுவதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டு பிடித்து அதை சரிப்படுத்து
வதற்கு யோக்கியதையோ இஷ்டமோ இல்லாமல் இருந்தாலும் அதைப்
பற்றிக் கவனிப்ப தென்பதில்லாமல் ஒரே அடியாய் இது ரஷியப் பிரசாரம்,
போல்ஸ்விக் பிரசாரம் இவை மக்களை மிருகப் பிராயத்திற்குக் கொண்டு
வரும் பிரசாரம், என்று சொல்லிப் பாமர மக்களின் மடமையை உபயோகப்
படுத்திக் கொண்டு அவர்களை வெறியர்களாக்கி அதனால் ஆத்திகத்தை
நிலைநிறுத்தி விடலாம் என்றே கருதுகிறார்கள். பாமரமக்களும், ஏழை
மக்களும் தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களும் என்றென்றைக்கும்
மூடர்களாகவே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது தன்னைத்
தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகத் தான் முடியுமே அல்லாமல் மற்றபடி
அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.
நாத்திகம் “ரஷ்யாவிலிருந்து
பரவுகின்றது” என்று சொல்லி
விடுவதன் மூலமாகவே ஆத்திகர்கள் நாத்திகத்திற்கு ஒரு இழிவு கற்பிக்க
முயற்சிக்கின்றார்கள் அதற்கு உதாரணமாக ரஷியாவின் நாத்திக திட்டத்
தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
அதாவது ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் 5 வருஷங்களுக்குள்
கடவுள்,மதம், கோயில்
ஆகியவைகள் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்
கிறார்கள். இந்த 5 -வருஷ நாஸ்த்திக திட்டத்தைப் பற்றி லண்டன் பார்லி
மெண்டு மெம்பர் தோழர் ஆதல்டச்சஸ் என்பவர் பேசிய ஒரு விருந்துப்
பேச்சில் குறிப்பிட்ட தென்னவென்றால்:-
1.முதல் வருஷத்தில் கோவில்களையும், மார்க்கஆராதனை
களையும் இடங்களையும் மூடிவிடுவது.
2. இரண்டாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் பிரார்த்
தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தி
யோகத்தில் மத சம்பந்தமான எண்ணமுடையவர்கள் யாவரும்
இல்லாமல் செய்து விடுவது மத சம்பந்தமான புஸ்தகங்கள் ஆதாரங்
களெல்லாம் அழிக்கப்பட்டாகவேண்டும். நாத்திக படம், நாடகம்,
சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும்.
3. மூன்றாவது 5 வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள்
என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது. இந்த உத்திரவுக்கு
கீழ் படியாதவர்களை தேசத்தை விட்டு வெளியாக்கி விடுவது.
4. எல்லாக் கோவில்களையும் பிரார்த்தனை ஸ்தலங்களையும்
பொது நன்மைக்கு பயன்படும்படிசினிமா இளைப்பாறும் மண்டபம்,
காலப் போக்கு ஸ்தலம் ஆகியவைகளாக மாற்றுவது.
குடி அரசு
- 1932 (2)
196
5.ஐந்தாவது வருஷத்தில் அதாவது 1-5-37க்குள் கடவுளுக்கு
வீடோ வணங்க இடமோ நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள்
இருக்கக் கூடாது.
என்பதாகும். இந்தக் காரியங்களில் ரஷியர் வெற்றி பெற்று விடுவார்கள்
என்பதற்கு இப்போதே அங்கு பல அறிகுறிகள் காணப்படுகின்றன. அன்றி
யும் ரஷ்யா இந்த நிலை எய்தி விட்டால் அங்குள்ள மனித சமூக விடுதலை
யும் சமத்துவமும் சுதந்திரமும் பெற்றுக் கவலை இன்றி மேன்மையால்
வாழ்வார்கள் என்பதற்கும் அங்கு அநேக அறிகுறிகள் தோன்றுகின்றன.
எப்படியெனில் ரஷியர்கள் கடவுளையும் மதத்தையும் அழிக்கவேண்டும்
என்று கருதியது இன்று நேற்றல்ல. வெகுகாலமாகவே கருதி வந்திருக்
கிறார்கள்.
இந்த முரசை ரஷியாவெங்கும் அடித்து ரஷியமக்களின் உள்ளத்தில்
கல்லின் மேலேழுதிய எழுத்துப்போல் பதியவைத்த பிறகுதான் கொடுங்
கோன்மை வேருடன் சாய்ந்தழிந்தது பணக்காரத் தன்மை அதன் கிளை
களுடனும் சுற்றங்களுடனும் மறைந் தொழிந்தது.
கடவுளும், மதமும் ஒழிந்து விட்டதால் “மக்களுக்கு” ஆபத்து
என்பது ரஷியாவில் இல்லை என்பது ஓரளவுக்கு ௬ஜுப் படுத்தப் பட்டதை
நாமும் நன்றாய் மனப் பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் எந்த
மாதிரியான மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது தான் இங்கு கவனிக்க
வேண்டிய முக்கிய விஷயமாகும். எனவே எப்படிப்பட்ட மக்களுக்கு
ஆபத்து வந்து விட்டது என்றால், இன்றைய தினம் இந்தியாவில் ஆத்தீகப்
பிரசாரமும் மதப் பிரசாரமும் செய்யும் மக்களைப் போன்ற மக்களுக்குத் தான்
ரஷியாவிலும் கடவுளும் மதமும் ஒழிந்ததால் ஆபத்து வந்துவிட்டது.
இப்படிப்பட்ட மக்கள் அங்கு 100க்கு 5 பேர்களோ 7 பேர்களோ தான்
197
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அதாவது சக்கிரவர்த்திகளாகவும், அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும்,
முதலாளிகளாகவும் பெரியபெரிய உத்தியோகஸ்தர் டாக்டர்கள் வக்கீல்கள்
போன்ற பல ஊரான் உழைப்பில் கொள்ளை அடிப்பவர்களாகவும், பாதிரி
களாகவும் முல்லாக்களாகவும், குருமார்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும்
இருந்து வந்த மக்களுக்கே தான் ஆபத்து வந்து விட்டது.
மற்றபடி இவர்கள் தவிர்ந்த மற்ற 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட
ஏழைகள் தொழிலாளிகள் கீழ்மைப்பட்டவர்கள் என்று சொல்லத்தக்க மக்கள்
யாவருக்குமே மேன்மை கிடைத்து விட்டது. அதுவும் தூங்கும் போது கீழ்
மகனாய் கூலியாய் அடிமையாயிருந்து விழித்தெழும்போது மேன்மகனாய்
விடுதலை பெற்றவனாய் சமவுரிமை அடைந்தவனாய் ஆனதுபோல்
நிலைமை உயர்ந்து விட்டது.
ஆகவே கடவுளும் மதமும் ஒழிவதின் மூலம் மக்கள் சமூகத்திற்கு
எந்த நாட்டிற்கும் இவ்வித “ஆபத்து” நிலைமைதான் ஏற்படக்கூடும்.
இந்தப்படியான “ஆபத்து” நிலையை தாழ்த்தப்பட்ட அடிமைப்படுத்தப் பட்ட
ஏழைத் தொழிலாளிமக்கள் அதுவும் இந்தியாவில் மாத்திரமல்லாமல் ரஷியா
தவிர உலகமெங்கணும் 100க்கு 90 பேர்களாயிருப்பவர்கள் மேளதாளம்
வைத்து வருந்தி வருந்தி அழைத்து வரவேற்க வேண்டி யவர்களாகவே
இருக்கிறார்கள். இவர்களை
இனி ஹரிபஜனையினாலும் ஆண்டவன் மகிமை
யினாலும் - அடியார்கள் தூதர்கள் பெருமையினாலும் ஒரு நாளும் மறக்
கடித்து விட முடியாது.
உலகத்தில் எந்த ஆண்டவனை நம்பின சமூகமும் எந்த மதத்தை ஏற்ற
சமூகமும், இந்த கதியில்தான் இருந்து வருகின்றதே யொழிய “ஆண்ட
வனையும் அவனை அடையும் மார்க்கத்தையும்” ஒழித்த ரஷியாவைப்போல்
மனித சமூகம் உயர்வு தாழ்வு இல்லாமல் சமதர்மமாய் இருப்பதாக யாராவது
சொல்ல முடியுமா?
பணக்காரர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் கட்டியதினாலும்
வேத பாடசாலைகள், யுனிவர்சிட்டிகள் மதரசாக்கள் கட்டி விட்டதினாலேயும்
பத்திரிகைக்காரர்கள் வேதத்தின் பெருமையையும், புராணத்தின் மகிமை
யையும், பக்கம் பக்கமாய் எழுதி “ஆண்டவனையும் மார்க்கத்தையும்”
புகழ்ந்து கொண்டு “நாஸ்திகர்”களை வைவதினாலேயும் ஏழை மக்கள்,
இழிவுபடுத்தப்பட்ட மக்கள், பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் மக்கள் எழுத்து
வாசனை அறிய வகையில்லாமல் தடுத்து தாழ்த்திவைக்கப் பட்டிருக்கும்
மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு விடமுடியுமா? என்றுதான்
கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட மக்கள் எந்த நாட்டில் எந்த மார்க்கத்தில் எந்த
ஆண்டவன் படைப்பில் இல்லாமலிருக்கின்றார்கள்? என்று பந்தயம் கட்டி
குடி அரசு
- 1932 (2)
198
கேட்கின்றோம். இந்த குறைகளுக்கு கொடுமைகளுக்கு ஆண்டவன் செயல்
என்பதல்லாமல் வேறு என்ன பதில் இந்த ஆத்திகர்கள் சொல்லக் கூடும்
என்று பணிவாய்க் கேட்கின்றோம். உலகம் தோன்றி பல “லட்சக்கணக்கான”
காலங்களாகி விட்டன. “கடவுள்கள்” தோன்றி வெகு காலம் ஆகிவிட்டன.
மார்க்கங்கள் தோன்றி ஆயிரக்கணக்கான வருஷங்களாகி விட்டன. இத்
தனை கால கடவுள்- மத ஆட்சியிலும் மனித சமூகம் சீர்படவில்லை. கவலை
யில்லாமல் வயிற்றுக்கு ஆகாரமில்லை.மனிதனுக்கு மனிதன் அடிமைப்பட்டு
உழைக்காமல் வாழ முடியவில்லை என்கின்றதான நிலைகள் இன்னமும்
இருக்குமானால் இந்த கடவுள்களும், மார்க்கங்களும் இனி
அரை நிமிஷ
மாவது உலகில் இருக்க அருகதை உண்டா என்றுதான் கேட்கின்றோம்.
எப்படி எந்த
மதமும், எந்த மார்க்கமும் மக்களை சமமாக பாவிக்காது சமமாக ஆக்காது;
இதுவரை பாவிக்கவும் இல்லை, ஆக்கவும் இல்லை என்று சொல்லு
கிறோமோ, அதுபோல் தான் இன்று உலகில் வேறு எந்த அரசும், ஆட்சியும்
மக்களை சமமாக பாவிக்க வில்லை - நடத்தவில்லை என்று சொல்லி எப்படிப்
பட்ட ஆட்சியும் வேண்டியதில்லை, சமதர்ம ஆட்சியே வேண்டும் என்
கின்றோம். இதனால் யாருக்கு என்ன கஷ்டம் என்பது நமக்கு விளங்க
வில்லை. யாராவது “எங்கள் ஆண்டவன் கட்டளை, எங்கள் மார்க்க
கொள்கை எங்கள் அரசியல் முறை இதுதான்” என்று சொல்ல வருவார்:
களானால் குஷாலாய் வரட்டும் மண்டியிட்டு வரவேற்கக்காத்திருக்கிறோம்.
அவர்களோடு ஒன்றுபடக் கலர முன்னிர்க்கிறோம். அதில்லாமல் “இது
போல்ஷலிக் பிரசாரம்” “இது மனித சமூகத்திற்கு ஆபத்து” “இது
தேசியத்திற்கு ஆபத்து” “இது சயராஜ்ஜியத்திற்கு ஆபத்து” “இது சட்டத்
திற்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஆபத்து” என்கிறதான பூச்சாண்டிகளைக்
கொண்டு ஏழைகள்
- பட்டினி கிடக்கின்றவர்கள்
- கீழ்மைப் படுத்தப்
பட்டவர்கள் கண்களில் முளகு பொடியைக் தூவ முற்பட்டால் கண்கள்
போனாலும் உயிர் போனாலும் எத்தனை காலமாவதானாலும் எப்பாடு பட்டா
கிலும் இதைச் சாதித்துத் தீர வேண்டு மென்றுதான் சொல்லுவோம் - அவர்.
களுக்கு இதை தவிர வேறு
மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 04121932
199
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ராமசாமிக்கு முணிசியல் உபசாரம்
ஈரோடு முசினிபல் சேர்மென் அவர்களே, ஸ்கூல் போர்ட் காரியதரிசி
அவர்களே!! மஹா ஜன ஸ்கூல் ஹெட்மாஸ்டர் அவர்களே,
தாங்கள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்திற்காக நான் பெருமை
கொள்ள வேண்டியவனும் நன்றி செலுத்தவேண்டியவனு மாவேன். ஆனால்
இவைகளை எனக்கு நானே செய்து கொண்டது போல் கருதினேயானால்
இதனால் ஒரு மகிழ்ச்சியும் நன்றி செலுத்த வேண்டிய அவசியமும் எப்படி
ஏற்படும்.
ஏனெனில் இந்த ஊரிலுள்ள மிகப் பழமையான ஸ்தாபனங்களான
இம்மூன்றும் அவைவேறு நான்வேறு என்று பிரிப்பதற்கு முடியாத மாதிரியில்
ஒன்றிலிருந்து வருகின்ற ஸ்தாபனங்களல்லவா? என்பதை யோசித்துப்
பாருங்கள். அவற்றின் நிர்வாகிகளாகிய தாங்களும், மற்றும் தங்கள் சகாக்
களும் சகோதரர்கள் போன்ற நெருங்கிய அன்பர்களாய் இருக்கிறவர்கள்
அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள். ஆகவே இப்படிப்பட்ட
நிலையில் அளிக்கப்படும் மரியாதைகளை நான் எப்படி போற்றக் கூடும்?
எப்படி அரியதென்று எண்ணக் கூடும்? என்றாலும் தாங்கள் எல்லோரும்
என்னை உற்சாகப்படுத்தவும் என்னிடம் வேலை வாங்கவும் உங்களுக்கு
இருக்கின்ற அவாவை காட்டுவதற்கு ஆக பயன்படுத்திக் கொண்ட ஆயுதங்
கள் என்றே கருதி அந்தப்படியே நடக்கிறேன் என்பதாக உறுதி கூறுவதைத்
தான் உபசாரத்திற்குப் பதிலாகவும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துக்
கொள்ளுகிறேன்.
தோழர்களே, உங்கள் உபசாரப் பத்திரங்களில் கண்டுள்ள புகழ்ச்சி
வாக்கியங்கள் என்னை சந்தோஷிக்கச் செய்யவில்லை அதற்குப் பதிலாக
என்னை வெட்கப் படவே செய்தது. ஏனெனில் அந்தப்படி அளவுக்கு மீறி
புகழ்ந்து கூறியிருக்கிறீர்கள். என்றாலும் அவற்றில் சுயமரியாதை இயக்கத்
தையும் சமதர்மக் கொள்கைகளையும் குறிப்பிட்டுப் பாராட்டி இருப்பதில் நான்
மிக மிக திருப்தியும் மகிழ்ச்சியும்
அடைகின்றேன். இவ்விரண்டு விஷயங்
களும் இப்போது நமது நாட்டில் சிலருக்கு எருதுகளுக்கு முன்னால் சிகப்பு
குடி அரசு
- 1932 (2)
200
வேஷ்டியைப் போட்டால் அது எப்படி மிரண்டு துள்ளித் துள்ளி குதிக்குமோ
அதுபோல் ஒரு விஷயத்தையும் நடுக்கத்தையும் கொடுத்திருக்கிறது.
அதனால் எவ்வளவோ தூரம் தங்களை மறந்து கண்டபடி பேசுகிறார்கள்.
இப்படிப்பட்ட பேச்சுக்கள் எல்லாவற்றையும் ஒரே அடியாய் நான் அலட்சியம்
செய்து விடுவதில்லை. சிலவற்றைப் பற்றியாவது நான் சிந்திப்பதுண்டு.
அப்படிசிந்திப்பதில் நான் மயங்கத்தக்க விஷயம் ஒன்றும் எட்டாவிட்டாலும்
அப்படிப்பட்ட நபர்களில் இதை உத்தேசித்து பார்க்கின்ற போது ஒரு சமயம்
நமது லட்சியங்கள் மக்களுக்கு ஏதாவது கெடுதி அளிக்கக் கூடியதோ
என்கின்ற எண்ணம் தோன்றி அயரச் செய்வதுண்டு. ஆனால் அப்படிப்பட்ட
அயர்வுகளைப் போக்கும் ஒப்பற்ற மருந்து போல் உங்கள் உபசாரப் பத்திர
வாக்கியங்கள் காணப்படுகின்றன.
அப்படிப்பட்டவர்களுடைய கூப்பாடுகளுக்கும் ஆவலாதி களுக்கும்
தக்க சமாதானங்கள் உங்கள் பத்திரங்களில் இருக்கின்றன.
அது மாத்திரம்
மல்லாமல் அவைகள் இயற்கைதான் என்றும் அவற்றில் சிறிதும் லட்சியம்
செய்யக் கூடாதென்றும் கண்டுள்ள தைரிய வார்த்தைகள் நிரம்பிக் கிடக்
கின்றன. ஆகவே அவற்றிற்காக நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவன்.
இந்தச் சமயத்தில் நான் ஏதாவது சில வார்த்தைகள் சொல்ல
வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. நான்
எதைப் பற்றி பேசக் கூடும்? ஸ்தல ஸ்தாபனங்கள், கல்வி என்கின்ற இரண்டு
விஷயங்களைப் பற்றிப் பேசுவதே பொருத்தமுடையது என்று கருதுகிறேன்.
தோழர்களே!
நமது நாட்டு ஸ்தல ஸ்தாபனங்கள் என்பதானது நாட்டு மக்களின்
நன்மைக்கு ஏற்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றின் நிர்வாகப்
பரிபாலனமானது சுதந்தரமானது. நாட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்
பட்டிருப்பதாய் கூறப்பட்டாலும் அவைகள் எல்லாம் உண்மையான
நாட்டுமக்கள் நலனுக்கு நடப்பதாகவும் உண்மையான நாட்டு மக்கள் கைக்கும்
வந்திருப்பதாகவும் ஒரு சிறிதும் கூற முடியாது. நாட்டு மக்கள் என்றால் யார்.
நாட்டு மக்களை மாத்திரம் அல்லாமல் உலக மக்களையே இரண்டு விதமாகத்
தான் பிரிக்கலாம்.
ஒரு பிரிவில் 1. செல்வவான்கள் 2. முதலாளிகள். 3. மிராசுதாரர்கள்.4.
பெரிய வரும்படியுள்ள உத்தியோகஸ்தர்கள், புரோகிதர்கள், படிப்
புள்ளவர்கள் போன்றவர்கள் அடங்குவார்கள்.மற்றொரு பிரிவில்1. ஏழைகள்
உதொழிலாளிகள். 3. பயிரிடும் குடியானவர்கள். 4. கூலியாட்கள் இம்மாதிகள்
கீழ் ஜாதிக்காரர்கள், பாமரர்கள் போன்றவர்கள் அடங்குவார்கள். முதல்
வகுப்புப் பிரிவில் மொத்த ஜனங்களில் 100க்கு 10பேர்களுக்குள் அடங்கிய
201
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
எண்ணிக்கையுள்ளவர்கள் இருப்பார்கள். பிற்பட்ட வகுப்பில் 100க்கு 90
பேர்களுக்கு மேல் இருப்பார்கள்.
ஆகவே மேற்கண்ட இரண்டு வகுப்புகளுக்கு பிரதிநிதிகள்
யாராயிருக்கிறார்கள். மேற்கண்ட ஸ்தாபன நிர்வாகங்கள் யார் கையில் இருக்
கின்றன என்பவற்றைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.100க்கு 90 பேர் கொண்ட
கஷ்டப்படும், கீழ் நிலைமையிலுள்ள மக்களுக்கு 100க்கு 10 பேர் கொண்ட
சுகமனுபவித்துக் கொண்டிருக்கும் மேல் நிலையிலுள்ள மக்கள் இருக்
கிறார்கள். இந்த முறையை எப்படி ஜனநாயகம் என்று சொல்ல முடியும், இந்த
ஸ்தாபனங்களை எப்படி ஜனப்பிரதிநிதித்துவம் பொருந்தியது என்று சொல்ல
முடியும். பெயரளவில் பொது ஜனங்களுக்கு ஓட்டுக் கொடுக்கப்பட்டு இருக்
கிறது என்று சொல்லலாமே ஒழிய பொது ஜன பிரதி நிதித்துவத்திற்கு
பயன்படக் கூடியதாய் இருக்கின்றா பாருங்கள். எந்த ஸ்தாபனமும் எந்த
நாட்டிலும் இப்படித்தான் இருந்து வருகின்றன. ஏழைகளுக்கு ஏற்ற மாதிரி
லட்சியம் மாற்றப்பட்டாலொழிய மற்றப்படி எவ்விதத் திட்டத்திலும்
உண்மையான பலன் ஏற்படாது. எவ்வளவோ கஷ்டப்பட்டு ஆட்சிமுறையை
மாற்றியிருப்பதாக நினைத்துக் கொண்டாலும் இதுவரை நிர்வாக ஆட்சி
எதுவரையிலாவது மாறுபாடடைந்து இருப்பதாகக் கருதமுடியுமா என்று
பாருங்கள்.
கஷ்டப்படும் மனிதனுக்கு சுகப்படும் மனிதன் பிரதிநிதியாகவும்,
ஏழைக்கு செல்வவான் பிரதிநிதியாகவும், தொழிலாளிக்கு முதலாளி
பிரதிநிதியாகவும், கீழ் ஜாதிக்கு மேல்ஜாதி பிரதிநிதியாகவும், அடிமைப்பட்டப்
பெண் சமூகத்துக்கு ஆதிக்கம் செலுத்தும் ஆண்சமூகம் பிரதிநிதியாகவும்
தானே பெரிதும் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறது. இதை ஞாயம் என்று
சொல்ல முடியுமா? எலிகளுக்கு பூனை பிரதிநிதிகளாய் வருவதாய் இருந்தால்
பயன் உண்டாகுமா என்று யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்றய ஸ்தல
ஸ்தாபனங்கள்
ஏழைகளுக்கு உதவும் படியாய், ஏழைகள் கிரமமான
பிரதிநிதித்துவம் பெரும்படியாய் அமைக்கப்பட வேண்டும். ஏழை மக்க
ளுக்குத் தங்கள் நிலைமையையும் அதன் காரணத்தையும் உணரும் படி
யாகவும் அதற்குப் பரிகாரம் தேட யோக்கியதை உண்டாகும் படியாகவும்
கற்பிக்கப்பட வேண்டும். அவர்கள் பெறும் பிரதிநிதித்துவத்தை சரியானபடி
பிரயோகித்துக் கொள்ளவும் கற்பிக்கப்பட வேண்டும்.
இப்போது செல்வவான்களுக்கும் படித்த கூட்டத்தாருக்கும், தங்கள்
நிலைமையும் அதை அடையும் விர்த்தி செய்யும் மார்க்கமும், அதற்காக
ஸ்தல ஸ்தாபனங்களை எப்படி அடைவது அதில் தங்கள் நன்மை எப்படி
மேலும் மேலும் பெருக பயன்படுத்திக்கொள்வது என்பது நன்றாய் தெரியும்.
அதுபோல் மற்றவர்களைப் பார்க்க வேண்டாமா. தேசத்தின் முன்னேற்றம்,
விடுதலை, சுதந்திரம் என்பவைகள் பெரும்பான்மையான 100க்கு 90 ஆக
குடி அரசு
- 1932 (2)
202
உள்ள மக்கள் சமூகத்தின் முன்னேற்றம் விடுதலை சுதந்திரம் ஆகியவை
களைப் பொருத்ததா 100க்கு 10 பேராக உள்ள மக்களின் ஏற்கனவே உயர்.
நிலையில் உள்ள மக்களின் நன்மையைப் பொருத்ததா என்று பாருங்கள். நாம்
இப்படிச் சொல்லுவதற்கு ஆக வருத்தப் படாதீர்கள். உங்கள் மீது சிறிதும்
தப்பிதம் சொல்ல முடியாது. மற்றவர்களை விட ஈரோடு எவ்வளவோ
ஏழைகளுக்கு பயன்படக் கூடிய நிலையில் இருக்கிறது. இது மாத்திரமல்ல
மற்ற நாடுகளை விட இந்தியா இந்தக் காரியத்தில் அதிக மோசம் என்று
சொல்லி விட முடியாது. வெகுகாலமாக நாகரீகத்தில் சிறந்து விளங்கும்
ஜெர்மனி தேசம் சமதர்ம ஜனநாயகமாய் இருந்தும் சக்கரவர்த்தியையும்
அரசனையும் பட்டத்தில் இருந்து இறக்கி தேசத்தை விட்டு விரட்டி அடித்து
ஜனங்களே அரசாட்சி புரிகிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அங்கு,
இங்குள்ள ஏழைகளை விட அதிக ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் மக்க
ளுக்கு வேலையே இல்லாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொரு பெரிய தொழிற்
சாலைகளும் வியாபார ஸ்தலங்களும் 3ல் 2 பாகம் மூடிக்கிடக்கின்றன.
விபசாரித்தனத்தினால் பணம் சம்பாதித்து வயிறு வளர்க்க வேண்டிய
பெண்களின் எண்ணிக்கை லேசானதல்ல. நல்ல கெளரவமான கடைத்
தெருக்களில் பெருத்த கூட்டங்களுக்கிடையில் பகல் காலத்தில் கையைப்
பிடித்து ரூமுக்கு வரும் படி அழைக்கிறார்கள்.
நல்ல ஆபீசுகள் கம்பெனிகள் இருக்கும் தெருக்களின் மேல் மாடிகள்
எல்லாம் பெரிதும் விபசாரப் பிழைப்பு பெண்கள் காணப்படுகிறார்கள்.
பட்டணங்களை விட்டு தோட்டம் காடுகளில் வசிக்க ஆசைப்படுகிறார்கள்
ஜர்மனி ஒரு சமயம் சண்டையினால் தோல்வியுற்றதால் இந்தக் கஷ்டம்
அனுபவிக்கின்றதோ என்னமோ என்று நீங்கள் கருதக்கூடும்.
“குபேர பட்டண” மாகிய அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள்,
அமெரிக்கப் பெண்களை லண்டனில் சந்தித்தக் காலத்தில் அவர்களும்
தங்கள் ஊர் ஏழைகளின் நிலைமையைப் பற்றிச் சொல்லும் போது அங்கு
அநேகர் தொழில் இல்லாமல், வீடு இல்லாமல் பட்டினியாய் அவஸ்தைப்
படுவதுடன் ரோட்டுகளில் ரிப்பேருக்காக போடப்பட்டுள்ள முனிசிபல்
குழாய்களுக்குள் படுத்துக் கொள்ளுகிறார்கள் என்று சொன்னார்கள். இந்தப்
படியே இன்னும் சில தேசங்களில் நேரில் பார்த்தோம். இங்கிலாந்து
கிராமங்களில் சென்று அங்குள்ள தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து அவர்கள்
வாழ்க்கையில் கலந்து பார்த்ததில் வெறும் உருளைக் கிழங்கையும்,
முள்ளங்கிக் கீரைகளையும் வேக வைத்து, உப்புத் தூவி சாப்பிடுகிறார்கள்.
எங்களுக்கும் அதைத்தான் கொடுத்தார்கள். அந்தப் படி கஷ்டப்படும்
தொழிலாள ஏழைகள் நம்மிடம் வெகு அன்பாயும் நம் நாட்டு தொழிலாளி
களிடம் அனுதாபமாயும் நடந்து கொள்கிறார்கள். இவற்றிற் கெல்லாம்
தேசமோ, தேசாபிமானமோ காரணமல்ல,மனுஷாபிமானமும், கஷ்டப்படும்.
மக்களின் வகுப்பு அபிமானமுமேயாகும்..
203
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஆகவே நமது தேச ஆட்சியினாலும் ஸ்தல ஸ்தாபன ஆட்சியி
னாலும், மனுஷ அபிமானத்தாலும், கஷ்டப்படும் மக்களை அதிலிருந்து
விடுதலை செய்ய அந்த வகுப்பு அபிமானத்தாலுமே தான் ஆட்சி நடத்தப்
படும் மாதிரியில் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். இவை
தங்களுக்கு மாறுபாடாகக் காணலாம். ஆனால் நான் சொல்லுவது தான் சரி.
நீங்கள் அபிப்பிராயப் படுவது தப்பு என்று நான் சொல்ல வரவில்லை. நான்
சொல்லுவதை யோசித்து தாங்கள் காண்பதையும், தாங்கள் அனுபவத்தில்
அனுபவிப்பதையும் மற்றும் உலக நிலையை கேள்விப் படுவதையும் சேர்த்து
கலந்து ஆலோசித்து தங்களுக்கு தோன்றுகின்ற முடிவுக்கு வரவேண்டு
மென்றும் வந்த முடிவுப்படி நடக்க வேண்டு.
மென்றும் தெரிவித்துக்
கொள்ளுகிறேன் .
குறிப்பு:- 03.12.1932 இல் ஈரோடு நகர முனிசிபல் வரவேற்பு கூட்டத்தில்
சொற்பொழிவு.
குடி அரசு - சொற்பொழிவு - 11.12.1932.
குடி அரசு
- 1932 (2)
204.
தொழிலானர்கன்
முதலாளிகளுக்கு தங்களது வாழ்நாளைப் பற்றிய கவலை என்பதே
கிடையாது. மற்றபடி அவர்களது கவலை எல்லாம் தங்களுக்கு வேண்டியது
போக மீதி இருப்பதை எப்படி பத்திரப் படுத்துவது, எப்படி பெருக்குவது,
எப்படி சுகபோகங்களைப் பெருக்கி அனுபவிப்பது என்பவை போன்றவை
களைப் பொருத்ததேயாகும்.
இவர்கள் வேலை செய்து அன்றாடம் கூலி
பெற்று ஜீவிக்கும்
ஜனங்களைப்போல் நாளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, வீட்டு வாட
கைக்கு என்ன செய்வது, துணிக்கு என்ன செய்வது, குழந்தை பிறந்து
விட்டதே அதற்கு வகை என்ன? அதற்கு பால் எங்கே? படிப்புக்குப் பணம்
எங்கே? அதை எப்படிவளர்ப்பது? வியாதி வந்து விட்டதே! எப்படி தப்புவது?
வைத்தியனுக்கு பணம் எங்கே? என்பது போன்ற கவலைகளை அவர்கள்
அறிந்திருக்கவே மாட்டார்கள். இந்த கவலைகள் எல்லாம் தொழிலில் ஜீவிப்ப
வர்களைத்தான் பற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருதேசம் என்பது
இருப்பதற்கே காரணமும் ஆதாரமும் தொழில் செய்யும் மக்களால் தானே
தவிர வேறில்லை. இந்த மக்களின் தொழிலின் பயனை அனுபவிப்பதினால்
தான் சிலர் முதலாளிமார்களாகி தங்கள் முதலாளி தத்துவம் நிலை நிற்கவும்
பெருகவும் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி அதற்கு ஓர் அரசனை ஏற்படுத்திக்
கொண்டு தொழிலாளிகளை அடக்கி வைத்து வாழ்ந்து வருகிறார்கள் அரச
வென்றால் ஒரு வேலையும் செய்யாமல் அநாவசியமான ஜீவனாய் இருந்து
கொண்டு, வாரம் ஒன்றுக்கு பத்தாயிரம் பவுன்போல் உதவி தொகையும்,
மேல்கொண்ட தனது முழுச் செலவுக்கும் வேறு படித்தொகையும் பெற்றுக்
கொண்டு, தன்னுடைய கையெழுத்தை எங்கு வேண்டுமானாலும் எப்படி
வேண்டுமானாலும் போட்டுக் கொள்வதற்கு முதலாளிமார்களுக்கு அனுமதி
கொடுத்து தன் பெயரால் எதையும் செய்யும்படி விட்டுக் கொண்டும், சில
சமயங்களில் முதலாளிமார்கள் சொல்லிக் கொடுத்ததை சொல்லிக் கொண்டு
இருப்பவரே ஆகும். உண்மையிலேயே இந்தக் காரியம் தவிர மற்றெதுவும்
தெரியாத வரையும் சிறிதும் சுமரியாதை அற்றவர்களையுழ்தான் மிக நல்ல
அரசர் என்று முதலாளிமார்கள் கொண்டாடுவார்கள். இளவரசர் என்பதும்
205
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இதே சங்கதியில் சிறிது குறைந்த அளவு கொண்டவர் என்பதைத் தவிர
வேறொன்றுமில்லை.
இந்தக் கூட்டங்கள் தொழிலாளிகளிடம் அதாவது வேலை செய்து
ஜீவனம் செய்யும் கூலிஜனங்களிடம் மிக அன்பு இருப்பதாகக் காட்டிக்
கொண்டு இவர்களுக்காக பரிதாபப்படுகிறவர்கள் போலவும் பேசிக் கொண்டு,
தொழிலாளர் சங்கம் என்றும் பொது ஜனசேவை சங்கம் என்றும் ஏற்படுத்தி,
அவைகளுக்குத் தாங்களே முழு நிர்வாகிகளாய் இருந்து கொண்டு அவர்.
களது கூலிக்காரத் தன்மையும், ஏழ்மைத் தன்மையும் நிரந்தரமாய் இருக்கவும்,
தாங்கள் மேலும் மேலும் முதலாளிகளாகி நிரந்தர பிரபுக்களாக இருக்கவும்
ஆன காரியங்களைச் செய்து கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றிக்
கொண்டே வருவார்கள். இன்று இருந்து வரும் தொழிலாளர்கள் சங்கங்கள்
தொழிலாளர்களை நசுக்கவும், ஏய்க்கவும் ஏற்பட்டவைகளேயாகும். இன்று
உலகில் நடைபெறும் எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும் அநியாயங்
களுக்கும் தொழிலாளிகள் பேரால் பொது ஜனங்கள் பாமர ஜனங்கள் பேரால்
ஏற்பட்ட சங்கங்கள், கட்சிகள் ஆகியவைகளேயாகும். இவை ஒரு புறமிருக்க
இச்சங்கங்கள் உண்மையாக தொழிலாளிகளுக்கும் பொது ஏழை ஜனங்
களுக்கும் பாடுபட என்ற கட்சிகளையும் உண்மையாகவே உலகத்தில்
தொழில் செய்து பிழைக்கும் மக்கள் ஆட்சிக்கு வேண்டும் என்று பாடுபடும்
கட்சிகளாகிய சமதர்மக் கட்சி பொதுவுடமை கட்சிகளாகியவைகளையும்
அழிக்கப்பாடுபடுகின்றன. அவைகளுக்கு நேர் விரோதமாகவே பாடுபடு
கின்றன. தொழிலாளிகள் கூடி தங்கள் நலத்தைப் பெருக்குவதற்கும், தங்கள்
கஷ்டத்தைக் குறைத்துக் கொள்வதற்கும் தங்கள் வேலைக்குத் தகுந்த
கூலிகிடைப்பதற்கும் முயற்சி செய்யப்படும் வேலைகள் எல்லாம் சட்ட
விரோதமானதாகப் பாவிக்கப்படுகிறது. தொழிலாளிகளை மோசம் செய்து
அவர்களை வாட்டி இம்சித்து வேலைவாங்கி, வயிறார கஞ்சிக்கும்.
இடுப்பாரத்துணிக்கும் வெளியில் மழை மேல் படாமல் குடியிருக்க
வீட்டுக்கும் வகை இல்லாமல் கொடுமைப்படுத்தி மோசம் செய்வது சட்ட
சம்மதமாகக் கருதப்படுகிறது. தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலா
ளிகள் செயல்களை எல்லாம் தொழில் திறமையாகவும், நிர்வாகத் திறமை
யாகவும் கருதப்படுகிறது. முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக்
குறைவானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக் குற்றத்தில் சேர்ந்தது
என்பதாக ஆகிவிடுகின்றது. இதற்குக் காரணம் எல்லாம் முதலாளிமார்கள்.
ஆட்சி வலுத்திருக்கிறது. அவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதற்கு
அரசாங்கத்தின் சலுகை இருக்கிறது. அவர்களது நன்மைக்கு என்றால் உலக.
முதலாளிகள் எல்லாம் ஒன்று கூடி விடுகிறார்கள். முதலாளிகள் நன்மையில்
ஒவ்வொரு முதலாளிக்கும் கவலை இருக்கிறது. அரசாங்கமும் அவர்கள்
கைவசமிருக்கிறது. சட்டசபை அவர்கள் கைவச மிருக்கிறது. சட்டசபையில்
100க்கு 90பேர் அவர்கள் இனத்தவர்களாகவே அவர்களைத் தழுவி ஆதரிப்
பவர்களாகவே சேர்ந்து விடுகிறார்கள் ஆனால் தொழிலாளிகளுக்கோ
குடி அரசு
- 1932 (2)
206
உண்மையான சங்கம் என்பது இல்லை. ஒற்றுமை என்பது இல்லை. தக்க
பிரதிநிதித்துவம் என்பதில்லை ஒன்று படக் கவலையுமில்லை மார்க்கமும்
இல்லை, தொழிலாளிகளை முதலாளிகள் தங்கள் நன்மைக்கு உபயோகித்துக்
கொள்ளுகிறார்கள் தொழிலாளிகளை ஆயுதங்களாகக் கொண்டுதான்
முதலாளிகள் ஒருவரோடொருவர் யுத்தம் செய்து கொள்ளுகிறார்கள். இரண்டு
முதலாளிகள் சண்டை போட்டுக் கொள்ளுகிறார்கள். இரண்டு முதலாளிகள்
சண்டைபோட்டுக் கொள்வதின் பயன் தொழிலாளிக்குத் தான் நஷ்டமாகவும்
உயிர் பலியாகவும் முடிகின்றதே தவிர முதலாளிகளுக்கு ஒன்றும் நஷ்டம்
இல்லை. சரீரத்தில் வேலை செய்யாத சோம்பேறி அன்னியர்கள் உழைப்பில்
வாழ்கின்றவன் ஆகியவர்களுக்கே தொழிலாளிகள் ஓட்டுக் கொடுத்து தங்கள்
பிரதிநிதியாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். பிறகு இந்த சோம்பேரிகள் ஊரார்
உழைப்பில் வாழ்கின்றவர்கள் தொழிலாளிகளின் பிரதிநிதிகளாய் ஆனவுடன்
முதலாளிகளாகவே ஆகப்பார்க்கின்றார்கள் அனேகர் முதலாளிகளாகவே
ஆகிவிடுகிறார்கள். அனேகர் முதலாளிகளுக்கு உளவாளிகளாயிருந்து
தொழிலாளிகள் நலத்தை விற்று தொழிலாளிகளைக் காட்டிக் கொடுத்துத்
தாங்கள் வாழ்கிறார்கள்.
சரீரத்தில் பாடுபடுகின்றவன் தவிர, வேறுயாரும் தொழிலாளிகளுக்குப்
பிரதிநிதியாக இருக்கக் கூடாது. எந்த சபையிலும் தொழில் செய்பவனே
தொழிலாளர் பிரதிநிதியாக இருக்க வேண்டும். உலகின் சகல துறைகளைச்
சேர்ந்த ஆட்சிகளும் தொழிலாளர்கள் கைக்குள்ளாகவே வரவேண்டும்.
அப்படிப்பட்ட ஆட்சிதான் தகும், அப்படிப்பட்ட ஆட்சி தான் பொது ஜன
ஆட்சியாகும், அப்படிப்பட்ட பொது ஜன ஆட்சி என்பது உலகப் பொது
ஜனங்கள் நன்மைகளை எல்லாம் கருதியதாக இருக்க வேண்டும்.அப்படிக்
கில்லாமல் ஒரு தேசத் தொழிலாளிகள் மாத்திரம் அந்த ஆட்சி பெற்றால்
போதும் என்பது தற்கொலையேயாகும். அதனால் உலக தொழி லாளர் கஷ்டம்
நீங்காது. மற்ற தேசத் தொழிலாளர் கஷ்டம் அதிகரிக்கும். உலக தொழிலாளர்.
யாவருமே விடுதலை பெற்று ஆட்சிபெறும் மார்க்கந்தான் நிரந்தரமான
நன்மையை கொடுக்கும். இல்லாத வரை மற்ற தேச முதலாளிகள் ஒன்று
சேர்ந்து தனிச்தேச தொழிலாளர் ஆட்சியை அளிக்கப் பார்ப்பார்கள்.
உலகில் வேலைசெய்பவர்களைத் தவிர மற்றவர்கள் இருக்கக் கூடாது.
ஒருவர் செளக்கியமாயிருக்க மற்றவன் கஷ்டப்படுவது, பட்டினி கிடப்பது
ஜீவனத்திற்கு மார்க்கமில்லாமல் திண்டாடுவது என்கின்ற நிலைமை
எங்கிருந்தாலும் அவைகள் ஒழிக்கப்பட வேண்டும். அவைகளுக்குக்
காரணமானவைகள் வேருடன் அழிக்கப்பட வேண்டும்.
யந்திரங்களால் ஏற்பட்டது சரீரங்களால் கஷ்டப்படும் மக்களின்
கஷ்டத்தை குறைத்து வேலைகளை சுளுவாகவே ஒழிய மற்றபடி வேலை
செய்யும் ஆட்களைப் பட்டினி போட்டு விட்டு முதலாளிகள் கொள்ளை
207
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
லாபம் சம்பாதித்து பணம் சேர்ப்பதற்காகவல்ல என்பதை பொது ஜனங்களும்
முதலாளிகளும் உணரவேண்டும்.யந்திரங்கள் வேலை செய்வதால் ஏற்படும்
லாபம் ஏராளமாய் இருக்கும் போது, பொது ஜனங்கள் ஏன் பட்டினி கிடக்க
வேண்டும். யந்திர லாபத்திற்கு விதிக்கப்படும் வரிகள் உத்தியோகஸ்தர்கள்.
சம்பளக் கொள்ளைக்கும் அரசர்கள் அதிகார வர்க்கக்காரர்கள் அனுபவக்
கொள்ளைக்கும் மக்களை அடக்க என்று வளர்க்கப்படும் பட்டாள செலவுக்
குமே போய் விடுகிறதே தவிர பட்டினி கிடந்து சாகும் மக்களைப் பற்றி
கவலையே கிடையாது. அரசாங்கம் தொழிலாளிகளுடையதாகுமானால்,
பொது ஜனங்களுடையதாகுமானால் இந்த யந்திர சாலை லாபமெல்லாம்,
பொது ஜனங்களுக்குக் கிடைக்கும், தொழில் செய்பவர்களுக்கெல்லாம்
வேலை நேரத்தைக் குறைத்து வேலையைப் பங்கிட்டுக் கொடுத்து ஜீவனத்
திற்கு வேண்டியதை கொடுக்க முடியும். முதலாளிகள் வசம் முதலாளிகள்
ஆதிக்கத்தில் ஆட்சி இருக்கும் வரை ரூபாய்க்கு 5 ரூபாய் லாபம் கிடைக்கும்
படியான தொழிலாயிருந்தாலும் அவை முதலாளிவர்க்கத்திற்கும் அதிகார
வர்க்கத்திற்கும் தான் கொள்ளை போகுமே யொழிய ஒரு நாளும் தொழிலாளி
வர்க்கம் தாராளமாய் ஜீவிக்கப்பயன் படாது. இந்த சுவல்ப்ப யந்திரத்தின்
பயனாகவே இத்தனை பேர்கள் பட்டினி கிடக்கிறார்கள் என்றால் இனியும்
அதிகமாக எத்தனையோ மாதிரியான யந்திரங்கள் ஏற்படப் போகின்றது
என்று சொல்லிக் கொள்ளப்படுகிறது போல் ஏற்பட்டால், அப்போதைய நிலை
என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். வேலையாளுக்கு வேலை
யில்லை ஆனதினால் யந்திரங்கள் வேண்டாம் என்று சொல்லுவதா? அல்லது
யந்திரத்தின் வேலை சுளுவின் பயனை வேலையாட்கள் அனுபவிக்க
வேண்டுமே தவிர முதலாளிவர்க்கம் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதா
என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அதிகாரிகள் அடிக்கும் கொள்
ளையை நிறுத்த வேண்டுமானால் முதலாளி ஆதிக்க அரசாங்கத்தைக்
கவிழ்க்க வேண்டும் அப்பொழுதுதான் உலகில் எல்லா மக்களும் சுகமாக
வாழலாம்.
தொழிலாளர் ஆட்சி செய்யும் அரசாங்கம் நடக்கும் ரஷியாவைப்
பாருங்கள். அங்கு யந்திரங்கள் தினத்திற்கு தினம் பெருகி, ஒவ்வொரு யந்திர.
சாலைகளிலும் பத்தாயிரம் இருபதாயிரம், முப்பதாயிரம் ஆணும் பெண்ணும்
சரி சமமாக வேலை செய்கிறார்கள். அங்கு ஒருவருக்குக் கட வேலை
யில்லை என்று சொல்ல முடியாது.ஒருவராவது பட்டினி கிடக்கிறார்கள் என்று
சொல்ல முடியாது, ஒருவருக்காவது நாளைக்கு என்ன செய்வது என்ற
கவலையே கிடையாது. ஓ தேசீயவாதிகளே! இதற்கென்ன பதில் சொல்லு
கிறீர்கள்?
குடி அரசு - தலையங்கம் - 1121932
குடி அரசு
- 1932 (2)
208
கேசியத்திண் வினைவ
- தேசீயத்துரோகி
1914ம் வருஷம் முதல் 1918ம் வருஷம் வரை நடந்த உலக மகா
யுத்தமானது அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தேச மக்களையும் தேசீயம்-
தேசாபிமானம் என்பவற்றின் பேரால் செய்யப்பட்ட பிரசாரத்தின் பயனாகவே
அந்த யுத்தத்தில் சம்மந்தப்படும்படி செய்து. இந்த உலக மகாயுத்தத்தின்
பயனாய் கொல்லப் பட்டவர்கள் 9743914 கிட்டத் தட்ட ஒரு கோடிபேர் காயம்
பட்டவர்கள் 2,09,27,459 இரண்டு கோடிப் பெயர்களுக்கு மேலானவர்கள்.
காணாமல் போனவர்கள் 30,00,000. இந்த மகாயுத்தத்திற்கு செலவான துகை:
70,00.0000.000 பவுன் ஏழு ஆயிரம் கோடி பவுன் அதாவது 10,00,00.00,00,000
ஒரு லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.
இது நிற்க இன்றைய தினம் உலக யுத்தத்தை எதிர் பார்த்து “தேசாபி
மானத்தின் காரணமாக” என்று தேசத்தைக் காப்பாற்றுவதற்காக உலக அரசாங்
கங்கள் மொத்தமும் செலவு செய்யும் தொகை சென்ற 1931ம் வருஷத்திற்கு
மாத்திரம் 80,00,00,000 எண்பது கோடி பவுன் அதாவது 1080,00,00,000
ஆயிரத்து எண்பது கோடி ரூபாய் ஆகும்.
இதை தினக்கணக்காய் பிரித்தால் தினம்1க்கு 2000000 பவுன் (இருபது
லட்சம் பவுன் அதாவது நாள்1க்கு 27000000 இரண்டே முக்கால் கோடி ரூபாய்
செலவு செய்யப்படுகின்றது.
பிரிட்டிஷ் அரசாங்கமானது தனது அரசாட்சி வரி வரும்படியில்
உள்ள ஒவ்வொரு பவுன் வரும் படியிலும் 13 ஷில்லிங் யுத்த தேசாபி
மானத்திற்காக. தேசத்தைக் காப்பாற்ற தேசீய கடனுக்கும் சேனை தளவாடங்
களுக்காக அதாவது
யுத்தக் கடனுக்கு வட்டி
0-9-0
யுத்த வீரருக்கு பென்ஷன்
0-1-3
தற்கால ராணுவத்திற்கும்
0-2-9
209
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
தரைகப்பல் தளவாடத்திற்கும்
ஆக:
0-13-0
ரெபதின்மூன்று ஷில்லிங் போக பாக்கி இருக்கும்
ஷில்லிங்கில் கல்விக்கு
0-1-5
உத்தியோக பென்ஷன்
0-1-3
ஸ்தலஸ்தாபன உதவி
0-1-2
வேலை இல்லதவர்களுக்கு பிச்சை
0-1-2
வீட்டு வசதி கோர்ட்டு வசதி வகையறாவுக்கு
0-0-8
போலீஸ்:
0-0-6
விவசாயம் சுகாதாரம்
0-0-2
சில்லரை:
0-0-3
ஆக:
0-7-0
ஆக பிரஜைகளின் நன்மைக்கு என்று ஏழு ஷில்லிங்கும் செலவு
செய்யப்படுகிறது.
அதாவது மேற்கண்ட யுத்தக் கடன் வட்டிக்காக என்று
செலவு
செய்யப்படும். 9 ஷில்லிங்கும் முதலாளிமார்களுக்கே போய்ச்சேரும்
தேசாபிமானத்திற்காக ஏற்பட்ட காரியத்தின் பயனாய் இன்று முதலாளி
மார்கள் தேச அரசினர் வரும் படியில் கிட்டத்தட்ட சரிபகுதியை உலக முள்ள
ளவும் அனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
எனவேபல கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து காயப்படுத்தி
காணாமல் போகச் செய்ததும் அல்லாமல், மக்களிடத்தில் வாட்டிப் பிழிந்து
வசூல் செய்யும் வரியிலும் நூற்றுக்கு 65 பாகத்தை தேசத்தைக் காப்பாற்ற
என்னும் பேரால் இராணுவத்திற்கும், தள வாடங்களுக்கும் செலவு செய்தும்,
இந்த தேசத்தில் இன்று பத்து லட்சக் கணக்கான மக்கள் வேலையில்லாமலும்,
ஜீவனத்துக்கு தங்களுக்கும் தங்கள் பெண்டு பிள்ளைகளுக்கும் அரை:
வயிற்றுக்கு போதுமான கஞ்சிக்கூட மார்க்கமில்லாமலும் தவித்து வரு
கிறார்கள். இது பாமர ஜனங்களுடைய - ஏழை ஜனங்களுடைய தேசாபிமான
முட்டாள் தனமா? அல்லது பணக்காரணுடைய “படித்த* கூட்டத்தாருடைய
தேசாபிமான பித்தலாட்டமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அடுத்த
வாரம் தேசீயக்கடன் என்றால் என்ன? என்பதைப் பற்றி எழுதுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 11. 12. 1932
குடி அரசு - 1932 @
210
புரட்சி எண்றால் எண்ண?
ஏண் பயப்பட வேண்டும்?
சுயமரியாதை உணர்ச்சிக் கொண்ட வாலிபத் தோழர்களே, இன்று
நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப்பத்திரத்திற்கு நான் உண்மை
யாகவே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்க
ளுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே நீங்கள்
இதை! வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர
வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன்.
தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பிலே புரட்சி
வாழ்க! பொதுவுடமை ஓங்குக! என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைக்
கண்ட அநேகர் எருதுக்கு முன்னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு
மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு
பயப்படத் தகுந்த காரண காரியங்கள் ஏதும் அவ்வார்த்தையில் அடங்கி
யிருப்பதாய் நான் கருதவில்லை.
ஆனால், அவ்வார்த்தையானது பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப்
பட்டு விட்டது. எது போலென்றால் “பூச்சாண்டி” என்றால் அதற்கு அர்த்தம்
இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத்
திருப்பதுப் போல் உங்களில் அநேகரைப் புரட்சி என்றால் அதன் அருத்தம்
என்ன? பயன் என்ன? என்கின்ற விஷயம் உணராமல் பயப்படும் படி
செய்யப்பட்டாய் விட்டது.
புரட்சி
புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா
என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பார்ப்போம்.
சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப்
போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3-மைல் வீதம் நடந்து கொண்டிருந்த
நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல் ஆகாயத்தில் பறக்கும் படியான
211
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
நிலையை அடைய யோசிப்பானேயானால் நடக்கும் விஷயத்தில் அது ஒரு
பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும்.
இந்தப்படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் 1
மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடையிலேயே இருக்கிற
ஒருவன் அதிசயப் பட வேண்டியதுதான். ஆனால் பயப்படுவதற்கு இதில்
ஒன்றும் இல்லை. இதனால்
யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த
ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகுநாளைய பழக்கம், வழக்கம்,
நம்பிக்கை ஆகியவைகளுக்கு விரோதமாக ஆக்க முயற்சித்தால் அதைப்
புரட்சி என்று தான் சொல்லுவார்கள். ஆனால் அதனால் அனுகூலம்
அடைக்கின்றவர்கள் அதை நன்மையான காரியம் என்று சொல்லிப் புகழவும்,
அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி
இகழவும், சரியான முறையில் எதிர்க்க சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம்
கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன் மூலம் எதிர்ப்பு ஏற்படச் செய்வார்கள்.
ஆனால் மனித சமூகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து
காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனிதனுக்கு முற்போக்கு அறிவும்,
அக்கறையும். ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற
மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டேதான் இருக்கும்.
புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில்
இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை
அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படுவதாகும்.
அந்தப்படி இப்போது நம் கண் முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக்
காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம். ஒவ்வொரு
புரட்சியிலும் எந்தெந்த தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமூகம்
பூண்டற்றுப் போய் விட்டது? மாறுதலேற் படும்போது சற்று தடபுடலாய்
மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும்,
பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜந்தானே. சாதார
ணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.
நமது நாட்டில் அரசர்களெல்லாம் “கடவுள் அவதாரங்களல்லவா, கடவுள்
அம்சங்களல்லவா, கடவுள் அருள் பெற்றவர்களல்லவா? கடவுள் கடாட்சம்
பெற்றவர்களல்லவா” இது தானே அரசனைப் பற்றிய நமது சாஸ்திரங்கள்
என்பவைகளிலும் புராணங்கள் என்பவைகளிலும் சொல்லப் பட்ட சத்திய
வாக்கு? சமீப காலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக்
கொண்டிருக்க வில்லையா? அரசர் கடவுள் அவதார அம்சம் என்பதாகக்
கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்க வில்லையா?
இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையா?
ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமூகத்திற்கு அரசன்
எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்து விட வில்லையா? எங்களுக்கு
ஒரு சக்கரவர்த்தியோ அரசனோ
இருப்பது எங்கள் சுய மரியாதைக்கு குறைவு
என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? ராஜபக்தி, ராஜ வாழ்த்து,
குடி அரசு - 1932 @
212
அடிமைத் தனம் என்று சொல்ல வந்து விட்டோமா? இல்லையா? அந்தப்
படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார்களா? இல்லையா?
ஆகவே அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று
உங்களைக் கேட்கின்றேன். இந்த புரட்சியால் என்ன ஆபத்து வந்து விட்டது?
எந்த தேசம் மண்ணில் புதைந்து விட்டது? யார் வாய் வெந்து போய் விட்டது?
யார் தலைபோய் விட்டது? அரசர்கள் ஒழிக்கப் பட்ட தேசம் நெருப்புப் பற்றி
எரிந்து விட்டதா? அல்லது பாலை வனமாகி விட்டதா? சுமார் 40,50 வருஷங்
களுக்குமுன் அரசாங்கத்தைக் குறை கூறவோ மாற்றவோ யாராவது நம்
நாட்டில் கருதியிருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்
திலாவது, சாஸ்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்னதாகப்
பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்து விட்டோம்?
இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள். இது
போலவே மக்களில் ஒரு சாராரை “பூதேவர்கள்” (இந்த உலகக் கடவுள்கள்!
என்றும் மற்றொரு சாராரை கண்ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும்,
சண்டாளர்கள் என்றும் கருதியிருந்தோமா? இல்லையா? இதற்கு வேத
சாஸ்திர புராண ஆதாரங்கள், கடவுள் வாக்குகள் இருக்கின்றது என்று
சொல்லி “பூதேவர்கள்” காலில் விழுந்து கும்பிட்டும் “சண்டாளர்களை”
தெருவில் நடக்க விடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால்
இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவிலுக்குள் கூட்டிக்
கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகின்றோமா? இல்லையா? இப்படிச்
சொல்லுகின்றவர்கள் “மகாத்மா” என்று அழைக்கப்படுகிறார்களா
இல்லையா?
மற்றும் இம்மாதிரி “சண்டாளர்கள்” கண்ணுக்கே தென்படக் கூடாது,
கிட்டவே வரக் கூடாது என்று இருந்ததெல்லாம் போய் இப்போது அவர்கள்
பக்கத்தில் போய் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய்யங்
கார், சாஸ்திரிகள், றாவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள்
ஆளுக்கு 10 ஆயிரம் 15 ஆயிரம் ரூபாய்கள் (தேர்தல்களில்) செலவு செய்து
அந்த ஸ்தானங்களை அடைய முயற்சிக்கிறார்களா இல்லையா? சமூக
வழக்கங்களில் 10 வயது பெண்ணை கட்டிக் கொடுக்கா விட்டால் பெற்றோர்.
கள் “நரகத்துக்கு”ப் போய் விடுவார்கள், பெண்ணும் விபசார தோஷத்திற்கு
ஆளாய் விடும் என்று கூறிய வேத சாஸ்திரங்களையும் “ரிஷிகள்” வாக்கியங்
களையும் பழக்க வழக்கங்களையும், குப்பையில் தள்ளிவிட்டு 14 வயதான
பிறகு, பெண் ருதுவான பிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் இல்லா
விட்டால் தண்டனை அடைய வேண்டும் என்று சொல்லி சட்டம் செய்து
விட்டோமா இல்லையா?
எனவே இவைகள் எல்லாம் சமூகப் புரட்சியேயாகும். இதனால்
யாருக்கு என்ன ஆபத்து வந்து விட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?
213
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஆகவே அரசியல் துறையிலும் சமூகத்துறையிலும் எவ்வளவு
புரட்சிகள் செய்ய முன் வந்து விட்டோம் - செய்தும் விட்டோம். இவைகள்
எவ்வளவு சர்வ சாதாரணமான விஷயமாகவும் மிகவும் ஞாயமானதாகவும்,
அறிவுடைமையாகவும், மக்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும்
கருதப்படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.
மற்றும் “உலகத்தையே படைத்துக் காக்கும் கடவுள்” விஷயம் இன்று
உலகில், நம் நாட்டில் என்ன பாடுபடுகின்றது? அக்கடவுளையடையும்
மார்க்கமாகிய மத விஷயம் இன்று என்ன பாடுபடுகின்றது? இவைகள் கடவுள்.
புரட்சி மதப் புரட்சியல்லவா? இதனால் மக்களுக்கு என்ன ஆபத்து வந்து
விட்டது? ஆகவே இவ்விஷயங்களில் ஆபத்து, ஆபத்து என்று சொல்லப்
படுவதெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் அவற்றால் யார் யார் நன்மை.
அடைந்து வந்தார்களோ அவர்களுக்குத் தான் சிறிது ஆபத்தாய்க் காணப்
படுகின்றதே அல்லாமல் வேறு என்ன? இவர்கள் யார்? இவர்கள் மக்கள்.
சமூகத்தில் 100க்கு எத்தனை பேர்கள்? என்று பார்த்தால் லட்சியம் செய்யக்
கூடிய அளவா என்பது விளங்கும். ஆகவே அரசியல், சமூக இயல்,
அறிவியல் ஆகியவற்றில் பெருத்த புரட்சிகள் ஏற்பட்டு அவை சாதாரணமாய்
நடந்து வருகின்றதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே மேற்கண்ட புரட்சிகள்
போல் அதாவது அரசன் ஏன்? உயர்ந்த ஜாதி ஏன்? தாழ்ந்த ஜாதி ஏன்? கடவுள்
ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே இப்போது பணக்காரன் ஏன்?
பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன்? அடிமை ஏன்? என்று கேள்க்கிறோம்.
இந்தப்படி ஏன் கேட்கின்றோம்? முதன் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில்
மாறுதலையடைய துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு.
காவல்
ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும்,
அதேஅறிவும்,
அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு
அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.
பட்டாளம், பீரங்கி, ஆகாயக் கப்பல், வெடிகுண்டு, 20 மைல் பீரங்கி
விஷப்புகை, வெடி முதலிய பலமும் “கடவுள் அவதாரமும்” உள்ள அரசனை,
நீ வேண்டாம் மூட்டை கட்டிக் கொள் என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டு
அது நியாயமும் அவசியமும் என்று தோன்றிப் பல அரசர்கள் ஒழிக்கப்
பட்டும் போன பிறகு, அதை விட கஷ்டமானதும் நினைக்க முடியாததுமான
காரியமா இந்த பணக்காரன் ஏன்? ஏழை ஏன்? என்று கேட்கும் விஷயம் என்று
தான் கேட்கிறேன். முன்னையதைவிட இதற்கு என்ன அதிக தைரியம்
வேண்டும்? என்ன அதிகபலம் வேண்டும்? அல்லது இது என்ன ஒரு பெரிய
பாவமான காரியமாகும்? அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம்
ஆகியவையெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு
செய்து கற்பித்து வைத்த சாதனங்களே யொழிய இவர்கள் இயற்கையா?
காற்றைப் போல் இன்றியமையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து
வந்து விட்டதோ அப்பொழுதே பணக்காரர்கள் நிலை காவலில்லா சொத்து
குடி அரசு - 1932 @
214.
காணாமல் போவது போல், மறைவு பட வேண்டியதுதானே? இதனால்
யாருக்கு என்ன நஷ்டம்? உண்மையான நடு நிலைமையும் அறிவும் இருக்
கிறவன் இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்?
இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள
எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம் தானே? இதை வெளியில் சொல்லுவது
தப்பு - சட்ட விரோதம் என்று மிரட்டினால் சிலர் வேண்டுமானால் வாயில்
சொல்ல பயப்படுவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் உதிக்கக்கூடாது
என்று சொல்ல முடியுமா? ஒரு சமயம் சிலர் இது சாத்தியப்படுமா? என்று
கேட்கலாம். இப்படி கேட்பது வேறு விஷயம். ஒரு விஷயம் சரியா தப்பா
என்று கவனித்த பிறகு தான் அது சாத்தியப்படுமா என்கின்றதைப் பற்றி
யோசிக்க வேண்டும்.
சாத்தியப்படுமா?
அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம்
என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு உள்ள படை,பட்டாளம், வெடி குண்டு,
பீரங்கிகளை யெல்லாம் விட, இந்தப் பணக்காரனுக்கும் முதலாளிக்கும் என்ன
அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனை விட பணக்காரனுக்கு
என்ன அவ்வளவு அதிகமான வேத சாஸ்திர புராணப் பாதுகாப்புகள்.
இருக்கிறது? அவர்கள் நிலைமையே இப்போது காற்றாய்ப்பறக்கின்றது.
பணக்காரர்கள் நிலைமைக்கு என்ன பளுவு இருக்கிறது? வரிசைக் கிரமத்தில்
இவர்கள் நிலைமையும் மாற்றமடைய வேண்டியது தானே? சும்மா சமய
சந்தர்ப்பம் இல்லாமல் அரசனையும் பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்
படி பேசி, கடவுளையும் மதத்தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பது
தான் சுயமரியாதைக் கட்சியின் லகஷியமா? என்று யோசித்துப் பாருங்கள்.
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்
காணப்படுகின்றதோ அவைகளை யெல்லாம் மாற்றுவது தான் உண்மையான
சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாக
பார்ப்பானை ஏற்றி வைப்பதும் பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப்
பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுய மரியாதையாகாது:; இவையெல்லாம்
சுய நலமரியாதையேயாகும்.
அன்றியும் அரசன் வேண்டாம் என்றாலும், பார்ப்பான் வேண்டாம்
என்றாலும், பணக்காரன் வேண்டாம் என்றாலும் இதனால் கஷ்டப்படும்
மக்கள் 100க்கு 10 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவை ஒழிந்தால்
சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேர்களுக்கு மேல் இருப்பார்கள். ஆகவே
யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப் பட வேண்டியது அறிவாளி
யின் கடமை என்பதைசிந்தித்துப் பாருங்கள். உண்மையான ஜீவ காருண்யம்
215
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலை கீழாக கொண்டு போகப் படுவதை
யும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறு புண் இருப்பதையும் ஜீவ காருண்யம் என்று
எண்ண மாட்டார்கள். பெரும் பான்மையான மக்கள் வெகு சிறு பான்மை
யோரின் சுயநலத்தால் எவ்வளவு கஷ்டப் படுகின்றார்கள் என்பதைத் தான்
கவனிப்பார்கள்.
“ஐயோ இந்தப் புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே” என்று
ஒரு அறிவாளியும் கருத மாட்டான். எப்படி யெனில் ஒரு திருடனுக்காகப்
பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால்
திருடன் பாடு பட்டினிதான். அதனால் திருடன் மனம் பதருமே - ஏமாற்ற
மடைய நேரிடுமே- அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களென்று சொல்லி
எல்லோரும் கதவை திறந்து போட்டே படுத்துக் கொள்ளுங்கள்” என்று
சொன்னால் இதை ஜீவகாருண்ய மென்று நீங்கள் ஒப்பு கொள்ளுவீர்களா?
பெரிய மாறுதல்கள் உண்டாக்கபட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால்
குறுகிய நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர்களும் சில சமயங்களில்
மனக் கஷ்டப்படத்தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும். எலியும்,
பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர் போவதனால்
எத்தனை சங்கராச்சாரிகள் மனம் பதருகிறது? இதில் ஏதாவது நாணையமோ,
உண்மையோ இருக்க முடியுமா?
இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டும்
என்பது நமது கருத்தல்ல ஆனால் பலாத்காரத்துக்கு பலவந்தமாய் வருபவர்
களிடமிருந்து எப்படி மீள வேண்டுமோ அதற்கு தயாராய்த்தான் இருக்க
வேண்டும். இதற்காக எந்தப் பணக்காரரும் கஷ்டப்பட வேண்டியிருக்காது;
யாரும் பட்டினிகிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு
நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.
உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் தொழிலாளர்கள்
கஷ்டப்படுகிறார்கள் என்றால் பணக்காரர்களும் முதலாளிகளும் மாத்திரம்
சுகப்படுகிறார்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லி விட முடியுமா?
ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக்கின்ற கவலை உங்களுக்குத்
தெரியாததா? அவன் அதை சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதை விட
கவலைப்படுவதை விட அதிகமாகவே அதை காப்பாற்றுவதிலும் கவலைப்
படுகிறான்; லாப நஷ்டம் வரும் காலையிலும் அதிக லாபம் வர வில்லையே
என்றும் நஷ்டம் வந்து விட்டதே என்றும் தான் கஷ்டப் படுகிறான். எவ்வளவு
இருந்த போதிலும் இன்னும் பொருள் சேர வேண்டுமென்றே ஆசைப்படு
கிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து
வருகின்றது: எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக்
கொண்டும் பெருங் கவலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக்
காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால்
குடி அரசு - 1932 @
216
உண்மையில் லாபம் ஒன்று மில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கம்
வழக்கம் பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டே
பணக்காரனாக ஆசைப்படுகிறான். ஆகவே பணக்காரத்தன்மை என்பது
போய் விடுவதால் மனித சமூகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்து விடாது: பணக்
காரத்தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையைப் பொருத்த
காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சமதர்மக் கொள்கை கொண்ட
ஆட்சிதான் நடைபெறும்.
மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழி தன்மைக்கும், ஓய்வற்ற
தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக்காரத்
தன்மையும் ஏழ்மைத்தன்மையுமேயாகும்.
மனிதப் பிறவி உயர்ந்த தென்றும், அருமையான தென்றும், மற்ற
ஜீவராசிகளை விட மேம்பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும்
சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக் கொள்ள முடியாது.
இன்றைய மனித சமூகத் திட்டம் சரியென்று ஒப்புக் கொள்வதனால்
“அறிது அறிது மானிடராய்ப் பிறத்தலரிது” என்பது சோம்பேரிகள், பகுத்தறி
வற்றவர்கள் ஆகியவர்களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு
நான் “இழிவு, இழிவு மனிதராய் பிறத்தல் இழிவு” என்றுதான் சொல்லுவேன்.
மனிதப் பிறப்பின் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் அவனது இன்றைய
வாழ்க்கைத் திட்டமே காரணமாய் இருக்கிறது: மனிதனை விட மற்ற ஜீவப்
பிராணிகளில் தன் இனத்தை அடிமை கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற
ஜீவன் மிக அபுரூபமேயாகும்.
மனிதனை விட மற்ற ஜீவ பிராணிகளில் நாளைக்கு என் கதி என்ன?
என் பிள்ளை குட்டி பேத்தி பிதிர் ஆகியவர்களுக்கு என்ன கதி? உலகம்
உள்ள நாள் வரை நானும் என் சந்ததியும் உலகிலுள்ளவர்களுக்குக் கெல்லாம்
மேலாய் வாழ்வதற்கு என்ன மார்க்கம் என்று கருதி தன் சமூகத்தையோ சகல
வித அயோக்கியத்தனங்களாலும் வதைத்து நலம் பெரும் ஜீவன்கள் மிக மிக
அருமையாகவே இருக்கும். மனித சமூகத்தாலேயே எதை எதை இழிவான
கொடுமையான குணம் என்று கருதுகிண்றோமோ அவை யெல்லாம்
உலகிலுள்ள எந்த இழிவான ஜீவன் என்று சொல்லப்படுவதை விட
மனிதனிடத்திலேயே அதிகமாய் இருக்கின்றது. கழுதை மேல் கழுதை சவாரி
செய்கின்றதா? புலிமேல் புலி சவாரி செய்கின்றதா? பாம்பு தேள் ஆகியவை
மேல் பாம்பு தேள் சவாரி செய்கின்றதா? ஆனால் மனிதன் மேல் மனிதன்
செய்கின்றானா இல்லையா! ஆகவே மனிதனிடம் என்ன உயர்வான
குணங்கள் இருக்கக் காண்கின்றோம்?
அரசன், ஜாதி,மதம், கடவுள், பணக்காரன் ஆகிய தன்மைகள் எல்லாம்
மேல் கண்ட இழி தன்மைக்கும் அக்கிரமத்தன்மைக்கு மனித ஜீவகாருண்ய
217
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
மற்றத் தன்மைக்கும் அனுகூலமாய் இருக்கின்றதா? இல்லையா?
மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்து “பகுத்தறி
வுள்ள” தனது பெண்டு பிள்ளைக்கு பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்று
சொல்லுகிறான். ஆனால் மிருகம், Lis ஆகியவைகள் பகுத்தறிவு இல்லாத
தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்க கருதுவதில்லை.
தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் அவை தானாக ஓடியாடும் பருவம்.
வந்தவுடன், தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்தி
விடுகின்றது. அவற்றைப் பற்றிய கவலையோ ஞாபகமோ கூட அவை
களுக்குக் கிடையாது.
மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம். இறப்பு கடவுளால் என்
கிறோம். இவ்விரண்டுக்கும் காரணமாய் காணப்படுவது. மனிதன் நடப்பாய்
இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால்
தான்
என்று சொல்ல
வேண்டியதாகின்றது.
ஆகவேமனிதனின் நடப்பையும் கடவுளால் தான் நடைபெறு கின்றது
என்று சொல்லுகிறார்கள். மனிதனுடைய நடப்போ பெரிதும் நான் மேலே
சொல்லியது போலவேதான் கவலையும் கொடுமையும் நிறைந்ததாய் இருந்து
வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளை காரணமாக்குகின்றவர்கள்
இதன் பயனாகிய பிறப்பு இறப்புக்குக் கடவுளை காரணமாக்குகின்றவர்கள்.
கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா?
என்று யோசித்துப் பாருங்கள்.
செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமையுடையவன்!
என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும் மதத்திற்கும்
ஜாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப்
பாருங்கள்.
குறிப்பு: 06-2-032ஆம் நாள் ஈரோடு கயமரியாதை இளைஞர்கள் அளித்த
வரவேற்பு பத்திரத்திற்கு பதில் அளித்து பேசியது.
(தொடரும்!
குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1932.
குடி அரசு - 1932 @
218
சங்கராச்சாரியும் காந்தியும்
உலக மக்கள் அறிவு விருத்திக்கும், ஒற்றுமைக்கும் சமூக பொரு
ளாதார சமத்துவத்திற்கும், விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் பரம விரோதி
களாயிருப்பவர்கள் மதத்தலைவர்களும், மத நம்பிக்கை கொண்ட ஜனத்
தலைவர்களுமேயாவார்கள். இவர்களது சூட்சிகள் தான் உலக மக்கள் ஒற்று
மையைப் பிரித்து சின்னாபின்னமாக்கி, வலுத்தவன் இளைத்தவனை
வதைத்து, அவனது இரத்தத்தை உருஞ்சி வாழும் முறையை நிலை நிருத்தி
வருகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானல் ஐரோப்பாவிலுள்ள கிறிஸ்து மதத்
தலைவராகிய போப்பும், அவரது சிப்பந்திகளாகிய பாதிரிக் கூட்டமும்
இல்லாதிருக்குமானால் உலக இயற்கை விஷயங்களில் எவ்வளவோ முற்
போக்கு பெற்றுள்ள ஐரோப்பியர்கள் இம்மாதிரி நாடு பிடிக்கும் நாட்டு வெறி
யும், உலக செல்வங்கள் தங்கள் தங்கள் நாடுகளுக்கே வரவேண்டும் என்
கின்ற செல்வ வெறியும், அந்தப்படி பல நாடுகளை கொள்ளை கொண்டும்
பல தேச மக்களை வதைத்தும் தேடிய பொருள்களை அந்நாட்டு ஏழை
மக்களுக்குப் பயன்படுத்தாமல் தாங்கள் (ஒரு சிறு கூட்டம்) மாத்திரமே
அனுபவிக்கும் குணமும் ஏற்பட்டிருக்க நியாயமிருக்காது.
அது போலவே ரஷியா தேசத்திலும் “மகாத்மா” டால்ஸ்டாய்
என்கின்ற ஒரு மத நம்பிக்கை கொண்ட மனிதர் போன்றவர்கள் ஜனத்
தலைவராயில்லாதிருந்தால் அந்நாடு வெகுகாலத்திற்கு முன்னதாகவே அதன்
பழைய காட்டுமிராண்டித் தன்மையில் இருந்து மீண்டிருக்கும்.
நம் இந்திய நாட்டின் இன்றைய நிலையைப் பற்றியும் யோசிப்போ
மேயானால், மேல் கண்ட முட்டுக் கட்டைகள் போலவே மதத் தலைவர்கள்
என்னும் சங்கராச்சாரிகள் போன்ற கூட்டத்தாராலும் ஜனத் தலைவர் என்னும்
“மகாத்மா” காந்தி போன்றாராலும் இன்றுவரை இந்திய நாடு காட்டுமிராண்டித்
தன்மையில் இருந்து மீள வகையின்றித் தத்தளிக்கின்றது.
ரஷியாவின் முன்னேற்றத்திற்கு, அதாவது அதன் காட்டுமிராண்டித்
தன்மையிலிருந்து விடபட, டால்ஸ்டாய் எப்படி கடவுள் பெயரையும்,
மதத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு முட்டுக்கட்டையாயிருந்தாரோ
219
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அதே போல் ஏன்? இன்னும் அதை விட மோசமாக தோழர் காந்தியின்
நாடகத்தால் இந்தியா இன்னும் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முந்திய
காட்டுமிராண்டித் தன்மைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. மனித
சமூகத்திற்கு மெளடீகத் தன்மை அதாவது தெளிவு இல்லாமல் குழப்ப
மடைந்து கொண்டிருக்கும் தன்மை பெரிதும் கடவுளையும் மதத்தையும்
பற்றியதேயாகும். அந்த இடத்தை நன்றாய் அறிந்து அதை உபயோகப்
படுத்திக்கொள்ள வகை தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் எவ்வளவு
சாதாரண - உண்மையற்ற - நிலையற்ற - பயனற்ற மனிதராய் இருந்தாலும்
அவர்கள் ஏதாவது ஒரு வகையில் வெற்றி பெற்றே தீருவார்கள்.
அந்த முறையில் தான் இன்று இந்தியாவானது தோழர் காந்தி
கையிலும், சங்கராச்சாரி கையிலும் சிக்கிக் கொண்டு சித்திரவதை செய்யப்
பட்டு வருகின்றது. “தொட்டது தொண்ணூரிலும்” தோல்வியடைந்த தோழர்:
காந்தி, இன்று மக்கள் கவனத்தை கோவிலுக்குத் திருப்பிக் கடவுள்
பிரசாரத்தை ஆரம்பித்து விட்டு மக்களுக்கு கடவுள் வெறியை உண்டாக்கி
வருகிறார். அவரது சிஷ்யகோடிகள், அதாவது அவரது நாடகத்தில் உப
பாத்திரர்களாயிருந்து பிழைத்துத் தீர வேண்டியவர்கள்
- புகழடைய
வேண்டியவர்கள் எல்லோரும் திருப்பதி உண்டியல்காரர்கள் போல்
“பகவான்” நாமத்தை ஸ்மரணை செய்வதிலும் “அவரது பெருமையை” கால
கேஷபம் செய்வதிலும் ஒரு புரம் பெருத்த பிரசாரம் செய்கிறார்கள். மற்றொரு
புரத்திலோ சங்கராச்சாரியாரும்,
அவரது கூட்டமாகிய பார்ப்பன கோஷ்டியும்
கரை புரண்டோடும் காட்டு வெள்ளம் போல் மதப்பிரசாரமும், சாஸ்திரப்
பிரசாரமும் செய்கின்றார்கள். “தமிழ் நாடு” “காந்தி” ஆகிய இரண்டொரு
பத்திரிகைகள் தவிர ஏனைய “தேசிய” பத்திரிகைகளும், “தேசியவாதி
களும், “தேச” பக்தர்களும் எப்படியாவது தங்களுக்கு வயிற்றுப் பிழைப்பும்,
வாழ்வும், புகழும் ஓட்டும் கிடைத்தால் போது மென்று, உப்பு கண்டம்
மாமிசம் திருட்டுக் கொடுத்த பார்ப்பனர் போல் வாயை மூடிக் கொண்டு ஒரு
பக்கம் தலையும் மற்றொரு பக்கம் வாலும் காட்டிக் கொண்டு வாளாய் கிடைக்
கின்றார்கள். சமீபகாலமாக ஒரு இரண்டு மூன்று வார காலமாய் அதாவது
காந்தி நாடகத்தில் குருவாயூர் கோவில் பிரவேச காந்தி பட்டினி பாகம் நடிக்கத்
துடங்கியவுடன் “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான்
.
... என்பது
போலாகி சங்கராச்சாரியும் மற்றும் உள்ள பார்ப்பனர்களும் எழுதும் விஷயங்
கள் பத்தி பத்தியாய் கலம் கலமாய் பக்கம் பக்கமாய் பத்திரிகைகளில்
கொள்ளை போகின்றன. அவற்றில் இதற்கு முன் சூத்திரன் என்று சொல்
வதற்கு பார்ப்பனர்களில் பெரிய பெரிய ஆள்களெல்லாம் பயந்து நடுங்கிக்
கிடந்தது போய் இப்போது அகஷியபாத்திர பார்ப்பனர்கள் முதல் யாவரும்
சூத்திரன், சூத்திரன் என்று வரிக்கொரு வார்த்தையும், சண்டாளன், சண்டாளன்
என்று பத்திக்கு பல வார்த்தையுமாக அவசரமாய் அள்ளிக் கொட்டுகிறார்கள்.
ஏன் என்று கேட்க நாதியில்லை.
குடி அரசு
- 1932 (2)
220
இதுதான் இன்றைய தேசிய வேலையாய் போய் விட்டது. கோவி
லுக்குப் போய் எவன் “மோட்ச”மடைந்தாலென்ன? அடையா விட்டா
லென்ன? எந்தக் கோயில் இடிந்து நாசமாய்ப் போனால் நமக் கென்ன? இந்த
சாக்கை வைத்துக் கொண்டு இந்த யோக்கியர்கள் ஏன் சூத்திரன், சண்டாளன்
என்பவைகளை நிர்ணையம் செய்ய பாடுபட வேண்டும்? என்பது தான் நமது
கேள்வி.
ஒரு பார்ப்பான் “தீண்டப்படாதவர்கள், ஆதிதிராவிடர், ஹரிஜனங்கள்
என்பவர்கள் எல்லோரும் சண்டாளர்கள் ஆனதினால் கோவிலுக்குள் போகக்
கூடாது” என்று எழுதுவதும், மற்றொரு பார்ப்பான் “அது சரியல்ல சண்டாளர்.
என்பது பஞ்சமர்கள் அல்ல. மற்ற யார் என்றால் மேல் ஜாதி பெண்ணுக்கும்
கீழ்ஜாதி ஆணுக்கும் பிறந்தவர்கள் தான் சண்டாளர்கள்” என்று எழுதுவதும்,
அப்படிப் பிறந்தவர்கள் யார் யார் என்று பார்க்கப் போனால் செட்டி, நாயுடு,
நாடார், முதலி, கவுண்டர், கோனார், குயவர், நாவிதர் என்று ஒரு “ஸ்மிருதி”
சொல்லுவதும், மற்றொரு ஸ்மிருதியில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லாம்.
என்று சொல்லுவதும், அதாவது “கலியுகத்தில் பிராமணர்கள் தவிர மற்ற
க்ஷத்திரியர், வைசியர் கிடையாது. சூத்திரர்தான் உண்டு. அவர்களுக்குள்
இருக்கும் ஜாதிகளுக்கு ஆதாரம் கலப்புப் பிரவி, விபசாரப் பிரவி” என்று
காணப்படுவதும் இந்த ஆதாரங்களை தைரியமாய் வெளிப்படுத்தி
ஜனங்களுக்குள் செல்வாக்கு ஏற்படுத்தி நிலைக்கச் செய்வதும் ஆன
காரியங்களே இன்று கோவில் பிரவேசமாகவும், எதிர்ப்பாகவும் இருந்து
வருகின்றது.
இதை ஆட்சேபிக்காமல் சகித்துக் கொண்டு இருக்கும் மக்கள் தான்
இன்று முதல் நெம்பர் தேசீயப் பத்திராதிபர்களாகவும், தேச பக்தர்களாகவும்
விளங்குகிறார்கள். ஓட்டுக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பத்திரிகை
வியாபாரத்திற்காகவும், தீண்டாமை விலக்கு கோவில் பிரவேசம் ஆகிய
நடிப்பில் பாத்திரர்களாய் (வேஷதாரிகளாய்! அமர்ந்தவர்களுக்கு மானம்,
வெட்கம், சொரணை இருப்பதற்கு ஞாயமில்லை. ஏனெனில் பசி வந்திடப்
பத்தும் பறந்து போகும் என்பதும், கருமமே கண்ணாயினார் என்பதும்
இவர்களை மாத்திரம் விட்டு விடாது.ஆனால் உண்மையில் சமத்துவத்தை
விரும்புகிறேன். சமதர்மம் எனது கொள்கை என்கின்ற வீரர்கள் இதை ஏன்
சகிக்கிறார்கள் என்கின்ற ரகசியம் மாத்திரம் நமக்கு விளங்கவில்லை.
இரண்டு ஆச்சாரியார்கள்
யாரோ இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்ளுவதில் அதில்
சம்பந்தமில்லாதவர்களை எதற்காகச் சூத்திரன் என்றும் சண்டாளன் என்றும்,
பல ஜாதிக் கலப்பு என்றும் சொல்வது என்பது தான் நமது கேள்வி, அதில்
ஒரு கட்சியார் அபிப்பிராயப்படி அதாவது வைதீக சங்கராச்சாரி அபிப்பி
221
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ராயப்படி பார்த்தால் தீண்டப்படாதவர்கள் சண்டாளராகிறார்கள். சீர்திருத்த
ஆச்சாரியார் அபிப்பிராயப்படி பார்த்தால் பார்ப்பனரல்லாத மற்ற ஜாதியார்.
சண்டாளராகிறார்கள் இதற்குள் தீண்டாதவர்களும் மற்றவர்களும் சேர்ந்து
விடுகிறார்கள்.
இதை யோசித்தோமானால் சங்கராச்சாரி கூட்டம் ஆழாக்கை தலை
கீழாகக் குப்புறக்கவிழ்த்தி அளப்பதாய் சொன்னால், சீர்திருத்த ஆச்சாரியார்.
ஆழாக்கைப் படுக்கை வசத்தில் வைத்து அளந்து போடச் சொல்லுகிறார்.
இவர்களில் யார் யோக்கியர் என்பதே விளங்கவில்லை.
நம்மைப் பொருத்தவரை படுக்க வைத்து அளக்கும் சீர்திருத்த
ஆச்சாரியை விட குப்புறக் கவிழ்ந்து அளக்கும் சங்கராச்சாரியாரையே
(கூறை வீட்டில் ஏறிக் கொள்ளிக் கட்டை வைத்து விளையாடுபவரே இரு
வரில் யோக்கியர் என்பது போல்! யோக்கியர் என்று சொல்லுவோம்.
சங்கராச்சாரி
இது நிற்க, சங்கராச்சாரியின் அட்டகாசமும், ஆணவமும், கொள்
ளையும் இன்று சென்னையில் தாண்டவமாடுகின்றது. ஏன்என்று கேட்
பாரில்லை? பார்ப்பனரல்லாத மக்கள் அவர் காலில் 1000, 2000, 3000, 5000,
10000 ரூ.கணக்காய் கொண்டு போய்க் கொட்டி பெண்டு பிள்ளைகளுடன்
விழுந்து கும்பிட்டு பாத தீர்த்தம் வாங்கி சாப்பிட்டு விட்டு வருகிறார்கள்.
சங்கராச்சாரி கால் கழுவின தண்ணீர் இன்று தங்கத்தை விட ஏன்
- வைரத்தை
விட அதிக விலைக்கு விற்கப்படுகின்றது. சுயராஜ்யம் கேட்கும் ஆட்களும்
காந்தி சுயராஜ்யத்திற்கு அதாவது ராமராஜ்யத்திற்கு 1000, 10000 என்று காந்தி
சிஷ்யர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு அள்ளியள்ளிக் கொடுத்த ஆட்களும்
இதில் அதிகம் இருக்கின்றார்கள். இவர்களுக்கு எதாவது கடுகளவு அறிவா
வது சுயமரியாதையாவது இருக்கின்றதா? என்பது தான் நமது சந்தேகம்.
சங்கராச்சாரி என்றால் என்ன? யாருக்கு சங்கராச்சாரி? அவரது
கொள்கை என்ன? நடப்பு என்ன? வேஷம் என்ன? எண்ணம் என்ன? அனுப
வம் என்ன? என்பது போன்ற ஒவ்வொன்றையும் யாராவது கவனித்தார்களா?
அல்லது கவனித்தும் வேண்டுமென்றே தெரியாதவர்கள் போல் நடந்து
கொள்ளுகிறார்களா? என்பது நமக்கு விளங்கவில்லை.
தோழர்களே! சற்று கவனித்துப் பாருங்கள். சங்கராச்சாரியார் என்பவர்.
ஒரு விதமான “ஆணவம் பிடித்த நாஸ்திகக் கொள்கைக்காரர்” அதாவது
கடவுள் என்று ஒரு தனிப் பொருள் கிடையாது என்பதோடு தானே தான்
கடவுள் என்ற கொள்கையுடையவர்.
குடி அரசு
- 1932 (2)
222
ஆனால் அவர் தினமும் பூஜிக்கும் உருவமோ ஒரு தனிக் கடவுள்
உருவம். அதிலும் பெண் கடவுள், அதாவது “சக்தி பூஜை” வேஷமோ,
சைவவேஷம், விபூதி பட்டை பட்டையாய் பூசிக் கொள்வது.
நிலையோ சந்யாசி நிலை அதாவது தலை மொட்டை காவிவஸ்திரம்.
அனுபவமோ, ராஜபோகம் யானை - குதிரை- பல்லக்கு படை எடுபிடி
ஆள்கள்.
இந்த நிலையில் உள்ள இவரால் பொது மக்களுக்கு ஏற்படும்பயனோ
தெண்டவரி அதாவது சர்க்கார் தண்டவரியை விட மோசமான வரி. பார்ப்பன
உத்தியோகஸ்தர்களையும் செல்வாக்கான பார்ப்பன வக்கீல்களையும்,
பார்ப்பன பத்திராதிபர்களையும் விட்டு மிரட்டியும் தாட்சண்யத்திற்கு கட்டுப்
படுத்தப்படக் கூடிய தந்திரத்தைச் செய்தும் மக்களின் விதரை நசுக்குவது
போல் நிர்ப்பந்தப் படுத்தி பணம் வசூல் செய்வது.
இப்படி வசூல் செய்யப்பட்ட பணத்தைக் கொண்டு செய்யப்படும்
காரியமோ பார்ப்பன சோம்பேறிகளுக்கும், கொட்டாப்புளிகளுக்கும் பானை
பானையாய் பாயாசம் வடையுடன் பொங்கிப் போடுவது.
பணங்கொடுத்தவர்களுக்கு பயனோ, கொடுப்பதையும் கொடுத்து
சங்கராச்சாரி காலில் பெண்டு பிள்ளைகளுடன் விழுந்து போராக்குறைக்கு
அவர் கால் கழுவின தண்ணீரையும் குடித்து விட்டு வந்து வீடு சேருவது.
இவ்வளவோடு இந்த சீன் முடிவு பெருவதில்லை. பணம் கொடுத்த
பார்ப்பனரல்லாதார் வீடு வந்து சேருவதற்கு முன்பதாகவே பணம் கொடுத்த
பார்ப்பனரல்லாதார்களை பார்த்ததற்காகவும் அவர்களுடன் பேசினதற்காக
வும் அந்த தோஷ பரிகாரத்துக்காக இவர்கள் பணத்திலேயே பார்ப்பனர்க்கு
தானம் வழங்குவதும், அவரும் குளித்து முழுகி தீட்டைக் கழித்து விட்டு ஜபம்
செய்து தோஷத்தை பரிகாரம் செய்து கொள்ளுவதும் ஆகும்.
இவை ஒரு புறமிருக்க இவருக்கு தனியோக்கியதை என்ன என்பதைப்
பார்ப்போம். இவர் ஒரு சாதாரண பார்ப்பனர். இவருக்கு முன் அந்தப்
பட்டத்தில் இருந்தவர் இவரைப் பிடித்து வைத்து விட்டுப் போனார்
என்பதைத் தவிர வேறு ஒரு யோக்கியதையோ அருகதையோ கிடையாது.
இவருக்குப் பிறகு யார் அந்தப் பட்டத்துக்கு வருவார் என்பதும் இவர் பிடித்து
வைக்கும் ஆளேயொழிய வேறில்லை. இவர் காலம் முடியும் வரை எந்த
வழியிலாவது இவருக்கு திருப்தியாய் நடந்து கொள்ளுகின்றவர்கள் அந்த
ஸ்தானத்திற்கு அருகதையாகி விடுவார்கள். ஆகவே வாக்கு சுதந்திரம், ஓட்டு
சுதந்திரம், ஜனநாயகம் கேட்கின்றோம் என்று சொல்லும் பார்ப்பனர்கள்
அதை விட மேலானதாகக் கருதும் தங்கள் மத விஷயத்தில் “ஆத் மாத்த
223
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
பாரமார்த்திக” விஷயத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதையும்
இந்தப்படி நடந்துக் கொள்வது அறிவில்லாமலா அல்லது மேதாவித்
தனத்தாலா அல்லது இதுவும் சுயராஜ்யம் தேசியம் என்பதைப் போன்ற ஒரு
சூட்சியாலா என்று யோசித்துப் பாருங்கள்.
நிற்க, “சகலத்தையும், துறந்து ஆன்ம கோடிகள் உய்வதற்காக உலகில்
தோன்றியஅவதார புருஷரான” “சங்கராச்சாரிய சுவாமிகள்” யானை, குதிரை,
பல்லக்கு இதைத் தூக்க 32 ஆள்கள் மற்றும் படைகொடி எதற்கு என்று
கேட்பது ஒரு புறமிருக்க இவருக்கு அதாவது இந்த சன்யாசிக்கு “பிச்சைக்கு”
என்று தினம்1க்கு 500 ரூ. அழுவது எதற்காக என்று கேட்கின்றோம்.
இவர்.
பக்தாள் வீடுகளுக்குச் செல்லத் தனித்தனி ரேட்டுகள் எதற்காக என்று
கேட்கின்றோம்.
இந்தப்படி வசூலித்த பணத்தைக் கொண்டு பொங்கிப் பொங்கிப்
போடும் சமாராதனையில் பணம் கொடுத்த பார்ப்பனரல்லாதார் ஏன் கலந்து
கொள்ளக் கூடாது என்று கேட்கின்றோம்?
ஒரு சமூகத்தில் எவ்வளவுதான் அடி முட்டாள்கள் இருந்து விட்டாலும்
அதை இன்ன அளவு தான் ஏமாற்றுவது என்கின்ற ஒரு பக்ஷாதாபமாவது
இருக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம்.
இவைகளையெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தோமேயானால்
இது ஒரு பார்ப்பனப் பிரசாரம் என்றும் பார்ப்பன ஆதிக்கத்திற்காக
செய்யப்படும் பார்ப்பன மத சூழ்ச்சிப் பிரசாரம் என்றும் சொல்லாமல் வேறு
என்ன சொல்ல இருக்கின்றது.
காந்தியை மகாத்மா ஆக்கினதில் எத்தனை சோம்பேறிகளுக்கு
வயிற்றுப் பிழைப்புக்கும் உத்தியோகம், பதவி புகழ் வேட்டைக்கும் இடம்
கிடைத்ததோ அதை விட எத்தனையோ மடங்கு அதிகமான பேருக்கு ஒரு
பார்ப்பனரை சங்கராச்சாரி லோக குரு ஆக்கினதில் வயிற்றுப் பிழைப்பு
மாத்திரமில்லாமல் உயர்ந்த ஜாதி நிலையும் ஏற்பட்டு வருகின்றது.
சங்கராச்சாரி இன்னார் என்றும் அவருடைய யோக்கியதை இன்ன
தென்றும் நம்மைவிட பல மடங்கு அதிகமாகவே பார்ப்பனருக்கும் தெரியு
மானாலும் அதை ஒரு சாதனமாய் வைத்து அதாவது கோவில் ஒரு கல்லை
நட்டு அதன் மூலமாக மக்களைக் கொள்ளை அடிப்பது போல் மத வியாபாரம்.
நடத்துகிறார்கள். இந்த மாய்கையில் பார்ப்பனரல்லாத மக்கள் சிக்கி பணத்தை.
அள்ளிக் கொடுப்பதென்றால் அறிவுள்ள யாருக்குத் தான் வயிறு கொதிக்காது
என்று கேட்கின்றோம்.
குடி அரசு
- 1932 (2)
224
இந்த லட்சணத்தில் அவர் குருவாயூர் கோவில் பிரவேசத்தைப் பற்றி
ஜாமொரீனுக்கு “சண்டாளர்களைக் கோவிலுக்குள் விடாதே” என்று தந்தி
கொடுத்திருக்கிறோம் இது எவ்வளவு அயாக்கியத்னமான காரியம் என்று
கேட்கின்றோம். இவருக்கும் (அதாவது சங்கராச்சாரிக்கும்) குருவாயூருக்கும்.
எந்த விதத்தில் சம்மந்தம் என்று கேட்கின்றோம்.
அப்துல்காதருக்கும்,
ஆடி அமாவாசைக்கும் உள்ள சம்மந்தம் போல்
இவரோ, தானே கடவுள் என்பவர், சைவ வேஷக்காரர். சக்தி பூசைக்காரர்,
சன்னியாசி, துறவி ஆகிய இத்தனைக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு
கல்லுருவம் உள்ள இடம் அதுவும் விஷ்ணுசாமி என்கின்ற பெயர்கொண்ட
கல் உருவம் உள்ள கோவில் அதுவும் “பாமர மக்களை உஜ்ஜீவிக்கச் செய்ய
அச்சாவதாரமாய் எழுந்தருளி இருக்கும்” இடம், அதுவும் ஒரு மனித உருவ
ஸ்திரீயின் வயிற்றில் பிறந்து வளர்ந்து பிறகு கடவுளாகி வந்த ஐதீகத்தை
ஆதாரமாய் வைத்து செய்யப்பட்ட உருவத்தினிடம் ஒரு கூட்டத்தாரை:
மாத்திரம் போக விடப்படக்கூடாது என்றும், அவர்கள் சண்டாளர்கள் என்றும்,
தந்தி கொடுப்பதென்றால் அதுவும் எப்படிப்பட்ட சமயத்தில் இரண்டு
உயிர்கள் அதாவது ஒரு “மகாத்மா” என்னும் உயிரும் மற்றொன்று “மகாத்மா
வினது” பிரீதிக்கு பாத்திரமான உயிரும் ஆக “இரண்டு உயிரும் செத்தாலும்
சரிஅதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை, கல்லுருவத்தினிடம்.
மாத்திரம் மனிதனை விட்டு விடாதே” என்கின்ற கருத்தின் மீது தந்தி
கொடுப்பதென்றால் இதன் ஆணவத்தையும், அகம்பாவத்தையும்
என்னவென்று சொல்வது? ஒரு சமயம் இவருக்கு ஜீவன்களிடத்தில் அன்பும்,
சமத்துவமும் நேரான ஞானமும் இருந்திருக்குமானால் “யார் செத்தாலும்
கவலையில்லை மக்களில் ஒரு சமூகத்திற்கும் ஒருவித இழிவும் இருக்கக்
கூடாது எல்லோரையும் உள்ளே விட்டு அவர்களுக்கு உள்ள இழிவை
நீக்குங்கள்” என்று தந்தி கொடுத்திருந்தால் இவரை மனித சமூகத்தில்
சேர்க்கலாம். அப்படிக்கில்லாமல் இந்தப்படி தந்தி கொடுப்பதை நினைத்தால்
இந்த ஸ்தாபனத்தின் அட்டூழியம் எவ்வளவு என்பதுதான் முன் வந்து
நிற்கின்றது.
தோழர்கள் காந்தியும், கேளப்பனும் செத்துப் போவார்களே என்று
நாம் சிறிதும் கவலை கொண்டு இவ்விதம் எழுதவில்லை. அவர்கள்.
இருவரும் எப்படியாவது, என்றைக்காவது சாகின்றவர்கள் தாம் என்பது
நமக்கு நன்றாய் தெரியும்.
அவர்கள் தங்களுடைய உயிரை வியாதிக்கும்
மூப்புக்கும் பவியாய் கொடுப்பதை விட ஒரு புகழுக்கோ அல்லது தாங்கள்
நல்லது என்று நினைக்கிற ஒரு காரியத்திற்கோ பலி கொடுப்போமே என்று
எண்ணி இருக்கலாம். அல்லது பல காரணங்களால் வாழ்க்கையில் வெறுப்புத்
தோன்றி இருக்கலாம். ஆதலால் நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
சங்கராச்சாரியாரின் இப்படிப்பட்ட காரியமும்
அவர் ஆதரவால் நடத்தப்படும்
பார்ப்பன ஆதிக்கப் பிரசாரமும் சகிக்கக் கூடியதாயில்லை. என்பதற்காகவே
225
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
இதை எழுதுகின்றோம். சங்கராச்சாரி சென்னையில் இன்னும் ஒரு மாத காலம்.
தங்கப் போவதாகவும் அதற்கு பல பேர் பார்ப்பனரல்லாதார்களே இன்றும்
பல ஆயிரரூபாய்கள் கொடுக்கப் போவதாகவும் யாரோ ஒரு மார்வாடி சேட்
ஒரு மாதத்திய செலவையும் அதாவது சுமார் 10, 20 ஆயிரம் ரூபாயையும்
பொருத்துக் கொள்ளப் போவதாகவும் கேள்விப்பட்டோம்.
இது உண்மையாய்
இருக்குமானால் இதை மனதார அனுமதிக்கலாமா? என்பதே தான்
இப்போதைய நமது கேள்வி. நாட்டில் உள்ள பண நெருக்கடி எவ்வளவு?
ஏழைகள் தொழிலாளர்கள் வேலையில்லாமல் கூலி இல்லாமல் பிள்ளை
குட்டிகளுடன் பட்டினி கிடந்து தொல்லைப்படுவது எவ்வளவு? உதாரணமாக
எம். எஸ். எம். ரயில்வே தொழிலாளர்கள் வேலையில்லாத காரணத்தால்
சிலரால் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு அவரவர்கள் வீட்டு அடுப்பில்
பூனைக்குட்டிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்களது பிள்ளை
குட்டிகள் பட்டினியால் மடிகின்றன.
ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் சோம்பேறிப் பார்ப்பனர்.
களுக்கு தின்று கொழுக்க என்று சமாராதனைக்கு பதினாயிரக் கணக்கான
ரூபாய் கொள்ளை போகின்றதுடன் வேகின்ற வீட்டில் பிடிங்கினது லாபம்
என்பது போல் வேலை நிறுத்தத்தை ஆதரவாய் வைத்துக் கொண்டு தாங்கள்
பெரிய மனிதர்களாகவும் நோகாமல் சட்ட சபைக்குப் போகவும் சூழ்ச்சிகள்
நடைபெறுகின்றன. இதைத் தவிர வேறு என்ன நடக்கின்றது என்று
கேட்கின்றோம்.
தேசீயப் பத்திரிகைகள் தொழிலாளர்களிடத்தில் சுயமரியாதைக்
கொள்கைகளைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து விட்டு தங்கள் பத்திரிகை
யில் சங்கராச்சாரி பிரசாரத்திற்கு தினம் 5 கலமும், சீர்திருத்த ஆச்சாரிக்கு
தினம் 10 கலமும் இடம் ஒதுக்குவதைத் தவிர மற்றும் இதில் பிரவேசித்தால்
தங்களுக்கு ஏதாவது தலைமை ஸ்தானம் கிடைக்குமா என்றும் மீன்கொத்தி
குருவிபோல் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்கின்றன என்று கேட்
கின்றோம்.
ஆகவே நாம் முடிவாகச் சொல்லுவதென்ன வென்றால் கள், சாராயக்
கடை மறியலை விட, அன்னியத்துணி மறியலைவிட மற்றும் கோவில்
பிரவேசத்திற்கு உயிர் விடுவதை விட, சங்கராச்சாரி கொள்ளையையும்,
அட்டூழியத்தையும், அவர் பார்ப்பனரல்லாத மக்களை இழிவு படுத்திப்
பிரசாரம் செய்வதையும் அடக்குவதற்குப் பாடுபடுவதே முக்கிய கடமை
என்று சொல்லுகின்றோம். ஏனெனில் இது நமது சமூகத்திற்கே அவமானம்!
அவமானம்! அளவு கடந்த அவமானம்!!!
குடி அரசு - தலையங்கம் - 18.12.1932
குடி அரசு
- 1932 (2)
226
இங்கிலாந்தில் ஈ.வே.ராமசாமி பிரசங்கம்
தொழில் கட்சியிண் போலித் தண்மை
தோழர்களே!
இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக்
கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டீஷ் தொழில்க் கஷியை மிக மிகப் பரிக
சிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளு
கிறேன்.
ஏனெனில் தொழில் கஷித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி
அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும்
விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள்
கார்வாத் (ஸி சேனைகள் நிராயுதபாணிகளான மக்களைச் சுடுவதற்கு
மறுத்ததற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்ககஷி கவர்ன்மெண்டானது
அந்தச் சிப்பாய்களுக்கு 15-வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது
என்பதை ஞாபகபடுத்துகிறேன்.
2. தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்ப
தாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள்.
ஆனால் எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும், மற்ற
தொழிலாளிகளும், சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்
ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ்
தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழில் கக்ஷி'
அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது.
3. தோழர்லான்ஸ்பரி
அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க
அனுதாபமிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும், அடிக்கப்
படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும் தாம் விரும்புவ
தில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப் பட்டேன்.
ஆனால் தோழர் லான்ஸ்பரி யுடைய தொழில் கக்ஷி அரசாங்க
கேபினட்டானது சுமார் 80000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை
227
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
ஜெயிலில் அடைத்திருக்கிறது, ஆயிரக்கணக் கான மக்களை சுட்டுத்
தள்ளிக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிடிகன் கிராமங்களின் மீது ஆயிரக் கணக்கான தடவை
ஆகாயப் படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பர்மியர்களையும், கிராமத்தாரையும் சுட்டுக்
கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
4. இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு
8 அணா
கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகின்றது. சுமார் 40
ஆயிரம் பெண்கள் தினம் ஐந்தனா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து
கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழில்
கட்சி அரசாங்கம் என்ன செய்தது?
5. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளி
களை ஆதரிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்திய
விஷயத்தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும் கொடுமை
யான வட்ட மேஜை மகா நாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு
மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்.
களும், முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம்
வகிக்கும் படியானதும் தொழிலாளிகளுக்கும், குடித்தனக்காரர்
களுக்கும் பாத்தியமும் - பொருப்பும், இல்லாததுமான ஒரு அரசியல்
சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும் படியான காரியத்திற்கு உதவி
செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
6.தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும், யுத்த முஸ்தீபை
யும் வெறுக்கிறதாக சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள
பிரிட்டிஷ் துருப்புகளையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி
அழைத்துக் கொள்ள மறுக்கிறார்.
7.கடைசியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்கமானது இரண்டு
வருஷ காலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும்,
வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி வண்டிகளையும் கவசம்
செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கிகளையும்,
பிரிட்டிஷ் பட்டாளங்களை யும் கணக்கு பார்த்தால் பால்ட்வின்
அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதை
விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே! இவற்றிலிருந்து
பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம
பார்ட்டியின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்க
ளுக்கு மிகக் கஷ்டமாகவே இருக்கிறது.
குடி அரசு
- 1932 (2)
228
ஆதலால் யாக்ஷையார் தொழிலாளிகளே நீங்கள் இந்த போலி
கட்சிகளையும், கொள்கைகளையும், நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும்,
சுதந்திரத்துக்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத்
தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள்.
குறிப்பு:20-06-032
ஆம் நாள் இங்கிலாந்து மேக்ஸ்ப்ரோ பான்சிலே! லேக் பார்க்கில்
பிரிட்டிஷ் தொழிற்கட்சித்தலைவர் தோழர் லான்ஸ்பரி பேசியதற்கு புதில் அளித்து
உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1932
229
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
வலைத் திட்டக் கூட்டம்
இந்த மாதம் 28, 29 தேதி புதன், வியாழக் கிழமைகளில், ஈரோட்டில்,
சுயமரியாதை இயக்கத்தின் 1933 வருஷத்திய வேலைத் திட்டத்தைப் பற்றி
யோசிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக சுய
மரியாதை இயக்கத்து பிரமுகர்களும், தீவிர பிரசாரர்களும் அபிமானிகளும்
ஆதரவளிப்பவர்களுமான தோழர் பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்
கிறது.சில முக்கிய பிரபலஸ்தர்களுக்கு அழைப்பு வந்து சேராமலோ, அல்லது
அனுப்பத் தவறிப்போயோ இருந்தாலும் இருக்கலாம். அவற்றை யெல்லாம்.
லட்சியம் செய்யாமல் இயக்க அபிமானிகள் உள்பட யாவரும் விஜயம் செய்து
ஒரு வேலைத் திட்டம் நிர்ணயிக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்
கொள்ளுகின்றோம். இதுவரை சுயமரியாதை இயக்கம் பெரிதும் பிரசார நிலை.
யிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும் அது தோன்றியது முதல்
நாளுக்கு நாள் முற்போக்கான, கொள்கைகளையே படிப்படியாய் கைக்
கொண்டு பிரசாரம் செய்து வந்திருப்பதின் மூலம் பெரிதும் தமிழ் நாட்டு
மக்களின் உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சி உணர்ச்சியை உண்டாக்கி இருப்ப
துடன் குறுகிய நோக்கமும் சுயநல பிரதானமும் கொண்டவர்கள் உள்ளத்தில்
பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி வந்திருக்கிறது.
தீவிர முற்போக்குகள் ஏற்படுகின்ற எந்த தேசத்திலும், எந்த காலத்
திலும் சுயநல மக்களுக்கு இவ்வித அச்சமும் ஆத்திரமும் தோன்றி, சிறிது
காலம் புத்தி தடுமாறி தாறுமாராய் திரிந்து விட்டு கடைசியாய் உள் நுழைந்து
கொள்வது இயல்பேயாகும்.ஆனால் உண்மையான கவலையோடு மக்களின்
முற்போக்கிற்கு உழைக்கின்றவர்கள்
இவற்றை லட்சியம் செய்யாமல் புது புது
கொள்கைகளுடன் மேலே மேலே போய்க் கொண்டிருப்பார்களேயானால்
பழய கொள்கைகள் என்பவை எதிரிகளால் சகிக்கக் கூடியதாகவும் சாதாரண
மானதாகவும் கருதக் கூடியதாகி, புதுக் கொள்கைகளோடு மாத்திரம் போரிடு
பவர்களாக ஆகிவிடுவார்கள். அப்படிக்கில்லாவிட்டால் குறிப்பிட்ட
கொள்கையைப் பற்றியே விவகாரம் நடத்திக் கொண்டிருக்க நேரிட்டு
முயற்சிகளுக்கு முன்னேற்ற மென்பதில்லாமல் தேக்கம் உண்டாய் விடும்.ஒரு
விஷயத்தைப் பற்றி சரியோ, தப்போ என்பதை கவனிக்காமல், எதைச்
சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாய் வம்பளந்து வயிறு வளர்ப்பதையே
குடி அரசு
- 1932 (2)
230
வாழ்க்கையாய் கொண்ட மக்கள் உலகம் எங்கும் இருந்து தான் வருகின்றார்.
கள். இவர்களுடைய உதவி யாருக்கும் எவ்வளவு குறைந்த விலைக்கும்
கிடைக்கக் கூடும்.
ஆதலால் முற்போக்கால் புதுக்கொள்கைகளால் சுயநல பங்கமடையக்
கூடிய மக்கள் இக்கூட்டத்தின் உதவியால் ஒரு சாதாரண விஷயத்திற்
கெல்லாம் ஆகாயம் இடிந்து விழப்போவதை தடுக்க வேண்டியவர்கள் போல்
மாய்மாலக் கூப்பாடு போட்டு அங்கு மிங்கும் திரிந்து பாமர மக்களை ஏமாற்றி
ஆதரவு தேட அலைவார்கள்.
நிற்க, மக்கள் நலத்தில் கவலைக் கொண்டு பொது காரியத்தில் முனைந்
திருப்பவர்கள் சிறிதாவது ஏதாவதொரு காரியத்தைச் செய்து சாதிக்க
வேண்டும் என்று கருதுவார்களேயானால் அவர்களுக்கு முக்கியமான ஒரு
யோக்கியதை இருக்க வேண்டும். அதென்னவென்றால் இப்படிப்பட்ட
போலிக் கூப்பாடுகளுக்கும், கூலி மாரடிப்புகளுக்கும் மனம் கலங்காமல்
இருக்க வேண்டியதே யாகும். மற்றும் “நமது கொள்கையைப் பற்றி ஊரார்:
என்ன நினைப்பார்கள். நம்மைப் பற்றி ஊரார் என்ன பேசுவார்கள்” என்கின்ற
விஷயத்தைப் பற்றி எவ்வளவுக் கெவ்வளவு கவனியாமல் யாவர் அலட்சிய
மாய் இருக்கிறார்களோ அவர்களேதான். அவ்வளவுக்கவ்வளவு புதிய
எண்ணங்களையும், புதிய உணர்ச்சிகளையும், புதிய கொள்கைகளையும்,
மக்களுக்குள் புகுத்தவும்,
அதை காரிய அனுபவத்தில் கொண்டு செலுத்தச்
செய்யவும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
உதாரணமாக நிர்வாணக் கொள்கையை ஒரு நாட்டில் வெற்றி பெற
நடத்த வேண்டும் என்று ஒருவன் கருதுவானேயானால் அவன் அக்கொள்கை:
யின் அவசியத்தையும், சரியா தப்பா என்பதையும் கவனிக்க வேண்டுமே
யொழிய மற்றபடி இக்கொள்கையை எடுத்து சொன்னால் மக்கள் என்ன
சொல்லுவார்கள் என்று நினைப்பானே யாகில் அக் கொள்கைக்காரன் அந்த
வேலைக்கு தகுதி அற்றவனே ஆவான்.நிர்வாணக் கொள்கையை பிரசாரம்
செய்ய ஆரம்பித்தால் பஞ்சாலை துணியாலை வியாபாரிகள் எல்லோரும்
எதிர் பிரசாரத்திற்கு வந்து விடுவார்கள். ஜவுளி வியாபாரிகள், ஆக்கர்கள்
எல்லோரும் விஷமப் பிரசாரத்திற்கு வருவார்கள். இவர்கள் வார்த்தைகளைக்
கேட்ட சாதாரண பாமரமக்கள் எல்லோரும் நிர்வாணப் பிரசாரர்கள் மீது
கல்லெடுத்துப் போடவும் வருவார்கள். இவற்றை சமாளிக்கவோ அல்லது
அதன் பயனை அடையவோ தயாராயிருப்பவர்கள் தான் இந்தப் பிரசாரத்தில்
புகவேண்டும். இவர்கள் தான் வெற்றி பெறக் கூடும். அப்படிக்கில்லாமல்
“நமது உருவப்படம் மூடர் வீட்டில் பூஜையில் இருக்க வேண்டும்” என்று
கருதுகின்றவர்கள் இவ்வேலைகளைச் செய்யச் சிறிதும் தகுதியற்றவர்களே
யாவார்கள். ஆதலால் தனக்குள் உறுதியும் அதனால் ஏற்படும் பலனை
அனுபவிக்க துணிவும் உள்ளவர்களால் தான் பயன்படத்தக்க மாறுதல்களை.
231
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
உண்டாக்க முடியுமென்றும், அப்படிப் பட்டவர்களால்தான் உலகில் தலை
கீழான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றும் எடுத்துக் காட்டுவதற்
காகவே இதைக் குறிப்பிட்டோம்.
நிற்க,1933 ஹுத்துக்கு என்று நாம் வகுக்கப்போகும் திட்டங்களில் பல
பொது ஜனங்கள் என்பவர்களும் அரசாங்கத்தார் என்பவர்களும், குற்றங்
கூறக் கூடியதாகவும், குற்றமாய் கருதக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனா
லும் அவ்வியக்கத்தில் அத்திட்டங்களில் நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்.
களும், முதலாவதாக இத்திட்டங்களை வெளியிட்டால் ஜனங்கள் என்ன
சொல்லுவார்கள்; அரசாங்கத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதை மறந்து,
இது சரியா, தப்பா,
அவசியமா, அவசியமில்லையா என்பதைத்தான் யோசிக்க
வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். பொது ஜன அபிப்பிராயம்
என்பதை எப்படி லட்சியம் செய்யக் கூடாது என்று சொல்லுகின்றோமே
அப்படித்தான் சர்க்கார் (அரசாங்கத்தார்) என்ன சொல்லுவார்கள் - என்ன
செய்வார்கள் என்பதையும் லட்சியம் செய்யக் கூடாது என்று தெரிவித்துக்
கொள்ளுகின்றோம். பொது ஜனங்களோ பாமரர்கள் - மூடநம்பிக்கையில்
பற்று கொண்டவர்கள் பகுத்தறிவு தடை படுத்தப்பட்டவர்கள். சர்க்கார்,
என்பதோ சுயநலமே உருவாய் கொண்ட முதலாளித் தன்மையும் எஜமானத்
தன்மையும் கொண்டது. அதாவது இந்த இரண்டுப் பிரிவும் முதலாளி
(செல்வவான்கள்! களாலும், சோம்பேரி (பார்ப்பனர்கள்)களாலும் நடத்தப்
படுவனவாகும்.மேற்கண்ட செல்வமும், பார்ப்பனியமும் மதம், அரசாங்கம்
என்னும் சாதனங்களாலேயே காக்கப்படுவதாகும்.ஆகவே ஒன்றுக் கொன்று
சுலபத்தில் பிரிக்க முடியாத சம்மந்தமும் ஆதரவும் கொண்டவைகள். எனவே
பொது ஜனங்களானாலும், சர்க்காரானாலும் செல்வவான்களுக்கும்
சோம்பேரிகளுக்கும் விபரீதத்தை விளைவிக்கக் கூடிய எந்தக் கொள்கை
களையும் எதிர்த்தே தீருவார்கள். ஆதலால் இவ்விரண்டு வகை எதிர்ப்புக்கும்
தயாராயிருந்து தான் நாம் நமது திட்டங்களை வகுக்க வேண்டியவர்களாய்
இருக்கிறோம். தீவிரமான, அவசியமான வேலைத் திட்டம் வகுக்க கருதும்
தோழர்கள் இந்த இரண்டு எதிர்ப்பையும் சமாளிக்க உறுதி கொண்டு வந்தால்
தான் சரியான திட்டங்களை வகுக்க முடியும் என்பதை தெரிவித்துக்
கொள்ளுகின்றோம்.
இப்பொழுது இரண்டுவகை திட்டங்கள் யோசனைக்கு கொண்டு
வருவதற்காக சில தோழர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒன்று
சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம் என்னும் பேராலும், மற்றொன்று
சுயமரியாதை கட்சி இதுவரையில் செய்து வந்தது போலவே பிரசாரத்தின்
மூலமாக பல துறையிலும் சீர்திருத்தங்கள் செய்து மக்களுக்கு உலக ஒற்றுமை
யையும் பகுத்தறிவையும், அன்பையும் உண்டாக்குவது என்பது. இரண்டைப்
பற்றியும் சுருக்கமாக விளக்க வேண்டுமானால் முன்னையது சில கொள்கை
களை வகுத்து அதை நிறைவேற்ற சட்டசபை முதலிய அரசியல் பொது
குடி அரசு
- 1932 (2)
232
ஸ்தாபனங்களைக் கைப்பற்றி அதன் மூலம் நடத்துவிப்பது என்பது, பின்னை
யது அரசியல் ஸ்தாபனங்களை லட்சியம் செய்யாமல் மக்களிடை பல
கொள்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டே உலகப் புரட்சியை எதிர்
நோக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது மற்றொன்று. இந்த இரண்டு வித
வேலையும் தனித்தனியே நடத்தப்படலாம் என்பது. ஆகவே இந்த விஷயங்
கள் எல்லாம் நன்றாய் பொறுப்புடன் ஆலோசிக்கப்படப் பட்டு ஒரு முடிவுக்கு
வரவேண்டியது அவசியமாகும்.
ஆதலால் உண்மை விடுதலையிலும், உண்மை சமத்துவத்திலும் பற்று.
கொண்ட கயமரியாதைத் தோழர்கள் அவசியம் விஜயம் செய்து கூட்டத்தின்
உத்தேசத்தை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்
படுகிறார்கள்.
குடி அரசு - தலையங்கம் - 25.12.1932
233
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
அருவ்கால் வாருன்
ஆக்கர்.
காலகாஸ்பதம்
சதித்து
சர்வ வியாபகம்
பக்ஷாதாபம்.
மடிசஞ்சி
விருத்தாந்தம்
ஸ்மரணை
குடி அரசு - 1932 @
திரிந்துகொண்டே துணி முதலிய
விற்போன்
கலகத்துக்கான இடம்
அழித்து, வஞ்சித்து
எங்கும் பரவி நிற்பது
இரக்கம்
புல் அல்லது கம்பளியாலான பை.
வரலாறு
ஞாபகம்
234
235
பெரியாரின் எழுத்தும்
பேச்சும்: தொகுதி - 15
குடி அரசு
- 1932 (2)
236