Kudi Arasu — 1932, Part 1
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1932-1
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 14
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1932-1
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 246
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
கலைவிரித்தாமுய சாதிவவறி
பெரியார் ஐரோப்பிய பயணம் மேற்கொண்ட இக்காலகட்டத்தில்
அவர் இல்லாத நிலையிலும் குடி அரசும் சுயமரியாதை இயக்கமும் தளராமல் எழுச்சிநடை போட்டன.
என்.சிவராஜ் சட்டமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருந்தும் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தால் சென்னை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினராக மறுக்கப்பட்டார். குடி அரசு கண்டித்தது. பால்ய விவாகத்தைத் தடைசெய்யும் சாரதா தடைச்சட்டம் அமுலுக்கு வந்தபிறகும் கூட அந்த சட்டம் தங்களைக் கட்டுப்படுத்தாது
என்று தனது மகளான சிறுமிக்கு திருமணம் செய்கிறார் ஒரு தந்தை. மாவட்ட நீதிமன்றம் அவரைத் தண்டிக்கிறது. கல்கத்தா உயர்நீதிமன்றமோ அவரை: விடுதலை செய்கிறது. இந்து, முகமதிய குடும்பங்களில் நடைபெறும் காரியங் களை இங்கிலாந்து சட்டங்களே தடுக்கமுடியாது என்று 1780, 1797 ஆம் ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கம்பெனி இயற்றிய சட்டத்தை உயர்நீதிமன்றம் எடுத்துக்காட்டியது. அந்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று குடி
அரசு குரல் கொடுத்தது.
தாழ்த்தப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிந்தால் அவர்கள் மார்புகள் அறுக்கப்படும். வெள்ளை வேட்டி கட்டக்கூடாது. கிராப் வைக்கக்கூடாது என்று சேலம் மாவட்டம் தாத்தையங்கார்பட்டியில் ஆதிக்க சாதியினர் விதித்த கட்டுப்பாடுகளை குடி அரசு தட்டிக்கேட்டது. தாழ்த்தப்பட்டோர் தனித் தொகுதி முறையை முதலில் ஆதரித்த எம்.சி.ராஜா பிறகு காந்தியார் பக்கம் சாய்ந்து வேறு குரலில் பேசியது குடி அரசு விமர்சனம் செய்யத் தயங்க வில்லை. கோயிலுக்கு நுழையவே அனுமதி மறுக்கப்பட்ட நாடார் சமூகத்
தைச் சார்ந்த வி.வி.இராமசாமி இராமநாதபுரம் மாவட்ட தேவஸ்தானக் கமிட்டித் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டபோது குடி அரசு பாராட்டி மகிழ்ந்தது. மன்னார்குடியில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டில் பேசிய குஞ்சிதம் குருசாமி அந்நிய ஆட்சி அந்நிய பாஷைகளை எதிர்க்கும் காங்கிரசாரைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினார். ஆங்கிலேயர் அந்நியர் என்றால் ஆரியர் யார்? ஆங்கிலம் அந்நிய பாஷை என்றால் சமஸ்கிருதம் எந்த பாட்டன் வீட்டு பாஷை?
யோகாவை மதத்தோடு இணைத்து தெய்வீக முலாம்பூசும் முயற்சிகள். இப்போது நடப்பதைப் போலவே அந்தக் காலத்திலும் நடந்ததை யோகாப்
புரட்டு என்ற கட்டுரையில் குடி அரசு சுட்டிக்காட்டுகிறது.
- பதிப்பாளர்
குடி அரசு - 1932 M
வைொருணடக்கம்
11
தலைநகரம் பிடிபட்டது காலஞ்சென்ற மாணிக்க நாயக்கர்.
ஐஉஜவதத தல உ
19
மீண்டும் தொல்லை
20
சூழ்ச்சி வெளிப்பட்டது
25
பகிஷ்கார யோசனை
28
சமஸ்கிருத சனியன்.
29
சுயராஜ்யம்! சுயராஜ்யம்!
32
37
ஜாதி மகாநாடுகள்
42
திரு. வல்லத்தரசு பெண் போலீஸ்
44
ஈ. வெ. ராமசாமியின் ஈஜிப்ட் கடிதம்
46
சமதர்மப் போர். வெண்ணெயை வைத்துக் கொண்டு?
50
54
பூனைக்கும்? பாலுக்கும்?
60
62
கிறிஸ்துவ மதத்தில் ஜாதியுண்டா?
ஈ. வெ. இராமசாமியின் “கெய்ரோ” கடிதம்
64
வைதீக வெறி
70
நான்கையும் பாருங்கள்
75
மலேயா தமிழர்கள்
80
உணர்ச்சி வீண் போகாது
81
இரண்டு மசோதாக்களின் கதி
85
சட்டசபையில் வைதீகர்
88
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தீண்டாதார் துன்பம்
23.
தனித் தொகுதியா? பொதுத் தொகுதியா?
24.
மத உரிமையின் ஆபத்து பாராட்டுகிறோம்
25.
26.
தேசீயப் பைத்தியம்
27.
திரு. மாளவியாவின் புரோகிதம்
28.
சர். ரெட்டி நாயுடு அவர்கள்
29.
ஏ.பி.சி. வைதீகம்
30.
வாக்குரிமை
31.
கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?
32.
பாழாகிறது 12000 கும்பகோணக் கொள்ளை
33.
தீண்டாமையே இந்துமதம்
34.
சுதேசிப் பிரசாரம்
35.
ஹிந்திக்கொள்ளை
36.
யோகப்புரட்டு
37.
சட்டசபைநாடகம் இத்தகைய கோயில்கள் ஏன்?
38.
39.
கவியும் பண்டிதரும்
40.
மீண்டும் குழந்தை மணம்
41.
ஐக்கியதிட்டத்தின் அலங்கோலம்
42.
வக்கீல்களின் ஜாதி ஆணவம்
43.
சுயமரியாதையும் காங்கிரசும்
44.
எட்டாவதாண்டு
45.
கோயில் நுழைவும் தீண்டாமையும்
46.
காலித்தனமா? அஹிம்சையா?
47.
சேலம் சுயமரியாதை மகாநாடு
48.
திருச்சி பார்ப்பனரல்லாதார் மகாநாடு
49.
இந்து முஸ்லிம் கலகம்
50.
எதிரிகளின் விஷமப்பிரசாரம்
51.
குடி அரசு - 1932 M
விபசாரம் ஒழியுமா?
209
சீர்திருத்த அரசியல் சிங்கம்
214
இளைஞர்களும் சுயமரியாதையும் தற்கொலை தெய்வீகமா?
216
221
சிறுபிள்ளைத்தனம்
223
சத்தியாக்கிரகம் வீண்
228
சிறுபான்மையோர் ஒப்பந்தம்
231
அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும்
235
பாராட்டுகின்றோம்
237
மன்னார்குடி மகாநாடு
238
வைதீகர்களின் முட்டுக்கட்டை
241
அருஞ்சொல் பொருள்
246
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
குடி அரசு - 1982 0)
த
முள்ளவிரபுருடனகை
ஸ்ப s, bl e
கின் கங்க பஸ்பம், பிள்.
i சா e st டவ் எக்க W, s ரீசாவாின o MAREE Gt செய்யும்போது முன்பணம் ௫ 8 அணபவேண்டும் வை ங்க ித்கியானத்த வெட்கம் ஹன், பழனி S. I,
4!
1 க்த்ற்த்த் ப த்த்தற்திற்கறற்க்தள்ஷ்4க்கறர்கக்4 அறர்கககக் ககக கக்கர்க்கச்ச்சகக்கக்கககககுக்க ARENASANIAMRRLLE டாக்டர் சிங்காரம் அ ச்கவின்
c] g~
5 € o
5 & 3
9 %
5 {11
8
8
&
[ன
கி வக் என பலைன சாஸாமிரிரி கயம் இ 4 த snsepn Qua.»- கு P e, Lo il i avw 5 ¢ s இரத el g, நள T அல் ச்ச என்ன் ந ன க் ள் எண் பதம் அதா உளக எத பண்களை அதம் அவனும் e வா மல்க இவ்ள PR | T உ௨௰ கம பட தாம் மோட s அன்ப ன் லவ்வை
» s e R I et இனால் கப i amwa.\, H
i ெதப்பல்குளல்பொண்ட ணைன
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
குடி அரசு - 1932 M
கறநைநகரும் யிமுபட்டது
ஒரு நாட்டு மக்களைச் சீர்திருத்த வேண்டுமானால் - அவர்களிட முள்ள மூடப்பழக்கவழக்கங்களை ஒழிக்க வேண்டுமானால் - அவர் களிடமுள்ள சாதிசமய பேதங்களை ஒழித்து சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழச் செய்ய வேண்டுமானால் தைரியமாக அவர்களிடம் குடி கொண்டி
ருக்கும் குற்றங்களை எடுத்துக்காட்ட வேண்டும் - இவ்வாறு தேச மக்களிடம் படிந்து கிடக்கும் குற்றங்களை அவர்களுடைய எதிர்ப்பையும், வெறுப்பை
யும் எதிர்பாராமல் எடுத்துக்காட்டுவதன் மூலந்தான் அவர்களைச் சீர்திருத்தஞ் செய்ய முடியும். தேசத்தின் நன்மைக்கு மக்களுடைய சீர்த்திருத்தத்திற்கு எந்தெந்தக் காரியங்களை ஒழிக்க வேண்டும், எந்தெந்தக் காரியங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்னும் விஷயங்களைப் பகுத்தறிவுடன்
ஆராய்ந்துத் தன் மனத்திற்கு பட்டதை தைரியமாக ஜன சமூகத்திற்கு எடுத்துக் கூறும் தலைவர்களால்தான் - இயக்கங்களால்தான் எந்த தேசமும் முன்னேற்ற மடைய முடியும்.
இவ்வாறில்லாமல், மக்களுடைய பழக்க வழக்கங்களுக்கு அவர் களுடைய பழய கொள்கைகளுக்கு விரோதமான அபிப்பிராயங்களை வெளி யிட்டால் பொதுஜனங்கள் நம்மை எதிர்ப்பார்கள்; அவர்களிடம் நாம் தலைவர்களாக விளங்கமுடியாது: பொதுஜனங்களால் நாம் தூஷிக்கப் படுவோம் என்று பயந்து கொண்டுஅவர்கள் அனுசரித்து வரும் மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டே சீர்திருத்தஞ் செய்ய முயலும் தலைவர்களாலும், இயக்கங்களாலும் ஒரு சீர்திருத்தமும் செய்ய முடியாது என்பது சீர்திருத்தவாதிகளின் முடிவான அபிப்பிராயமாகும்.
இந்த அபிப்பிராயத்துடன் நமது நாட்டில் உள்ள தலைவர்களின் போக்கையும், இயக்கங்களின் நடத்தைகளையும் கவனித்தால் அநேகமாக
எல்லாத் தலைவர்களும், எல்லா இயக்கங்களும் பாமர மக்களின் மூடப்பழக்க வழக்கங்களுக்கு விரோதமான பிரசாரத்தைத் தாராளமாகவும் அஞ்சாமலும் செய்வதில்லை என்பது விளங்கும். ஆனால், தேசமக்களின் முன்னேற் றத்திற்கு காலநிலையை அனுசரித்து எந்தக் காரியங்களைச் செய்வது சரி யென்று படுகிறதோ அந்தக் காரியங்களை யாருடைய தயவுக்கும்,
11 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தாட்சண்யத்திற்கும் கட்டுப்படாமல், இது வரையிலும் பகுத்தறிவுக்குப் பொருத்தமான - பொது ஜனங்களின் மூடப் பழக்க வழக்கங்களுக்கு விரோத மான - சிறந்த கொள்கைகளை ஆண்மையுடன் வெளியிட்டு வருவது நமது இயக்கம் ஒன்றேயாகும்; நமது இயக்கத் தோழர்களே யாவார்கள்; என்பது நமது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாகும்,
இம்மாதிரியான சீர்திருத்த அபிப்பிராயங்களைப் பாமர மக்களிடம் பரப்பிவருவதனால் அவர்களை இது வரையிலும், ஏமாற்றிக் கொண்டிருந்த எல்லா கூட்டத்தாருக்கும் நமது இயக்கத்தின் மேலும், நமது இயக்கத் தோழர்களின் மேலும், குரோதமும் பொறாமையும் ஏற்பட்டு நமது இயக் கத்தைப் பற்றியும், நமது இயக்கத் தோழர்களைப் பற்றியும் பலவகையான.
தப்புப் பிரசாரங்கள் செய்து வருகின்ற விஷயம் குடி அரசு வாசகர். களுக்கெல்லாம் நன்றாய்த் தெரிந்த செய்தியாகும்.
முக்கியமாக நமது இயக்கத்தின்மேல் துவேஷத்தைக் கற்பித்துப் பொதுஜனங்களிடத்தில் பிரசாரம் பண்ணுகிறவர்கள் பிச்சை வாங்கும் புரோகிதக் கூட்டத்தாராகிய பார்ப்பனர்களும், அவர்களுடைய வார்த்தை களையும், அவர்களுடைய பிழைப்புக்கு ஆதாரமாக ஏற்படுத்தப்பட்டி
ருக்கும் மதம், வேதம் புராணம், சுவர்க்கம், நரகம், கடவுள், மோட்சம் என்னும் புரட்டுக்களின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் பகுத்தறிவற்ற ஏமாந்த சோணகிரிகளாகிய சில பார்ப்பனரல்லாதார்களும், கூலிக்கு மாரடிக்கும் சில காலிகளுமே ஆவார்கள்.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் பெற்று விளங்கும் தேசீயப் பத்திரிகைகள் என்பனவும், வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்ட மற்றும் சில கூலிப் பிரசாரக் குட்டிப்பத்திரிகைகளும், நமது இயக்கத்தின் பேரிலும், தோழர்களின் மேலும், பல ஆதாரமற்ற அற்பத்தனமான அபாண்டமான பழிகளைச் சுமத்திப் பாமர மக்களிடம் பொய்ப்பிரசாரம் பண்ணிக் கொண்டிருக்கின்றன என்பதும் வாசகர்களுக்குத் தெரியாத செய்தி அல்ல..
நம்மைப் பற்றி சுயநலக்காரர்களும், மோசக்காரர்களும், கூலிக் காரர்களும், அயோக்கியர்களும் அவதூறுப் பிரசாரம் பண்ணிக் கொண்டி
ருந்தாலும் நமது இயக்கம், நாளுக்கு நாள் பொதுஜனங்களின் மனத்தில் ஆழமாக ஊன்றி அவர்களைத் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்தி வருகின்றன என்பதை எந்த எதிரிகளும் மறுக்கமுடியாது.
இதற்கு உதாரணம் அடுத்தடுத்து பல இடங்களில் ஜில்லா மகா
நாடுகளும், மாகாண மகாநாடுகளும், தாலூகா மகாநாடுகளும் நடந்து வருவ தைக் கொண்டே அறியலாம். சென்ற 1931-ம் வருஷத்தில் தூத்துக்குடியில் ஒரு மகாநாடும், காரைக்குடியில் ஒரு மகாநாடும், பொறையாற்றில் ஒரு மகாநாடும், நன்னிலத்தில் ஒரு மகாநாடும், லாலுகுடியில் இரண்டு மகாநாடுகளும்.
குடி அரசு - 1932 M 12
விருதுநகரில் பல மகாநாடுகள் சேர்ந்த ஒரு மாகாண மகாநாடும், திருவாரூரில்
ஒரு மகாநாடும், சென்னையில் பல மகாநாடுகள் சேர்ந்த ஒரு மகாநாடும், ஆக 9மகாநாடுகள் நடந்திருக்கின்றன. கணக்கிடமுடியாத பொதுக்கூட்டங்களும் நடந்திருக்கின்றன. இந்த மகாநாடுகளெல்லாம் மந்திரிகளுடைய தயவைக் கொண்டோ, ஸ்தலஸ்தாபனத் தலைவர்களின் தயவைக் கொண்டோ, ஜமீன் தாரர்களுடைய தயவைக் கொண்டோ, பெரிய பணக்காரர்களுடைய தயவைக் கொண்டோ நடைபெறவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இதைக் கொண்டு நம்மை அரசாங்கத்தின் தயவை நாடுகிறவர்களென்றும், உத்தி யோகஸ்தர்களின் தாசர்களென்றும், நமது எதிரிகள் பிதற்றித்திரிவது வீண்புரட்டு என்பதை உணரலாம். ஆனால் பொது ஜனங்களின் ஊக்கத்
தினாலும், வாலிபர்களின் முயற்சியாலுமே மேற்கூறிய நமது மகாநாடுகள். யாவும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். இந்த மாதிரி வேறு எந்த இயக்க மகாநாடுகளும் நடந்ததில்லை, நடப்பதில்லை என்று தைரிய
மாகச் சொல்லுவோம். இந்த மகாநாடுகளில் சென்ற 26, 27-12-31-ந் தேதி சனி, ஞாயிறுகளில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நடை பெற்ற நமது சுயமரியாதை மகாநாட்டைப் பற்றி இப்பொழுது கவனிப்போம். மற்ற மகாநாடுகளைப் பற்றிய விஷயங்களை அவ்வப்போது நமது பத்திரிகையில் எழுதிவந்ததைப் படித்திருப்பீர்கள்.
நமது மாகாணத்தின் தலைநகரமாகிய சென்னையில் நமது இயக்கம் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலும் நமது இயக்க சம்மபந்தமாக ஆங்காங்கே பல சமயங்களில் பல பொதுக்கூட்டங்கள் நடந்ததைத் தவிர சுயமரியாதை இயக்கத்தின் பேரால் ஒரு மகாநாடேனும் நடந்ததில்லை. இதற்குக் காரணம் நமது இயக்கப் பிரசாரம், அங்கு சரிவர நடத்தப் படாததும், நமது இயக்கத்தின் உண்மையான கொள்கைகள் பொது ஜனங்களுக்குத் தெரியாததும், இக்காரணங்களால் சென்னை நகரப் பொது ஜனங்களின் எண்ணம் நமது இயக்கத்தில் திரும்பாததுமே ஆகும் என்பதை நாம் தாராளமாக மறைக்காமல் ஒப்புக்கொள்ளுகிறோம்.
சென்னை நகர மக்களிடம் ஆங்கில நாகரிகம் எவ்வளவு குடி கொண்டிருக்கிறதோ அதைவிடப் பதினாயிரம் மடங்கு அதிகமாக மூடப் பழக்கவழக்கங்கள் அவர்கள் இரத்தத்தில் ஊறிப் போயிருக்கின்றன என் பதைச் சென்னை நகரத்தில் சிறிது அனுபவமுடையவர்களும் அறிவார்கள். அவர்கள் கொண்டாடாத பண்டிகைகளும், கும்பிடாத சாமிகளும், செய்து கொள்ளாத பிரார்த்தனைகளும், அநுஷ்டிக்காத விரதங்களும், நம்பாத மூட நம்பிக்கைகளும், செய்யாத புரோகிதச் சடங்குகளும், தரித்துக் கொள்ளாத மத வேஷங்களும், நமது மாகாணத்தில் வேறு எந்த பாகத்திலும் இல்லவே இல்லை. சர்வகலாசாலைப் பட்டங்கள் பெற்றவர்கள் முதல், எழுத்து வாசனை அறியாத பாமரர்கள் வரையில் இந்நிலைமையில் கொஞ்சமும் வித்தியாசம் இல்லாதவர்கள். அரசாங்க மந்திரிகள் முதல் தெருக் கூட்டும் தோட்டிகள்
13 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வரையில் எல்லோரும் இந்த நிலைமையிலேயே இருக்கிறார்கள். உதாரணமாக ஒன்றே ஒன்று சொல்லுகிறோம். கால்சட்டை, மேல்சட்டை,
கழுத்துச் சுருக்கு, காலில் பூட்சு முதலியவைகளை நாகரிகமாக அணிந்தி ருப்பதோடுங் கூட காதில் வயிரக் கடுக்கன்களும், கைகளில் காப்பு கொலுசு களும், நெற்றியில் பட்டைநாமங்களும், கழுத்தில் அங்கவஸ்திரமும் அணிந்
திருக்கும் வைதீக நாகரீகஸ்தர்களைச் சென்னை நகரில்தான் காணலாம். இந்த அலங்கோலமுள்ள நாகரீகத்தை வேறு எந்த இடத்திலும் காண முடியாது. இத்தகைய மக்கள் நிறைந்த இடத்தில் பொது ஜனங்களின் பெரிய தாராளமான ஆதரவாலும் முயற்சியாலும் பெண்கள் மகாநாடு, தொண்டர் மகாநாடு இவற்றுடன் கூடிய ஒரு சுயமரியாதை மகாநாடு நடப்பதென்றால் நமது இயக்கம் பொது ஜனங்களின் கவனத்தை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிற தென்பதை யோசித்துப் பாருங்கள். இனி அம்மகாநாட்டின் நிகழ்ச்சிகளைச்
சிறிது கவனிப்போம்.
மகாநாடு நடந்த இரண்டு தினங்களிலும், நமது இயக்கத் தோழர்கள் செய்த ஒவ்வொரு பிரசங்கங்களையும் மண்டபங் கொள்ளாமல் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும், அளவற்ற சந்தோஷத்தோடும், ஊக்கத் தோடும், மூட பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்னும் ஆவேசத்துடனும் அப்படியே ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தகுந்ததாகும். மகாநாட்டில் தலைமை வகித்தவர்களும், பேசியவர்களுமான ஒவ்வொரு தோழர்களும் நமது இயக்கக் கொள்கைகளை சென்னை நகர மக்களின் கண்கள் திறக்கும் படி விளக்கமாக அஞ்சாமல் ஆண்மையோடும், ஊக்கத்தோடும் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.
நமது இயக்கம், நமது மக்களாகிய ஆண், பெண்கள் அனைவரும் சம சுதந்தரம் பெற்று உலக வாழ்வில் உயர்வு தாழ்வில்லாத இன்பத்தை அனுபவித்து வரவேண்டுமென்பதற்காகவே பாடுபடுகின்றது என்னும் விஷயம் சுயமரியாதை இயக்கத்தின் உண்மையை அறிந்தவர்களுக் கெல்லாம் தெரிந்த செய்தியாகும். இதற்குத் தடையாக இருப்பவைகளான பார்ப்பன ஆதிக்கம், புரோகிதப்புரட்டு, வேத புராண இதிகாச சாஸ்திரங்கள், அவைகள் மேல் உள்ள நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை, இவற்றுக்கெல்லாம் காரணமான ஆத்மா நம்பிக்கை ஆகியவைகள் அடியோடு ஒழியவேண்டும் என்று கூறுகின்றோம். இந்த விஷயங்களை அஸ்திவாரமாகக் கொண்டு கட்டப்பட்ட எல்லா மதங்களும் வேரோடு, அடியோடு, கிளையோடு வீழ்ந்து மாள வேண்டும் என்று சொல்லுகின்றோம்.
மதங்கள் ஒழிந்தால் சாதிகள் ஒழியும்; மூடநம்பிக்கைகள் யாவும்
ஒழியும்; எல்லோரும் அரசியலில் சமத்துவம் பெறலாம்; ஏழைகள் துயரம்
நீங்கும்; ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்கும் போன்ற வித்தியாசம் ஒழியும் என்று சொல்லி வருகின்றோம்.நமது மக்களின்
குடி அரசு - 1922 0) 14
உயர்வு தாழ்வுக்கும், ஒற்றுமைக் குறைவுக்கும் காரணமாயிருப்பவைகளை யெல்லாம் ஒழிக்காமல் அவற்றைப் பாதுகாத்து நிலைநிறுத்தப் பாடுபடும் காங்கிரஸ் முதலிய இயக்கங்களை ஒழிக்க வேண்டுமெனக் கூறுகின்றோம். இவ்விஷயங்களையெல்லாம் சுயமரியாதை மகாநாட்டைத் திறந்து வைத்த தோழர் சிங்காரவேலு அவர்கள் பிரசங்கத்திலும், வரவேற்புத் தலைவர்: தோழர்லட்சுமிநரசு அவர்கள் பிரசங்கத்திலும், தலைவர் தோழர் பார்த்தசாரதி அவர்கள் பிரசங்கத்திலும், பெண்கள் மகாநாட்டைத் திறந்து வைத்த சகோதரி. கிரிஜாதேவி அவர்கள் பிரசங்கத்திலும், வரவேற்புத் தலைவர் சகோதரி குஞ்சிதம் அவர்கள் பிரசங்கத்திலும், தலைவர் சகோதரி அன்னபூரணி அவர்கள் பிரசங்கத்திலும், தொண்டர் மகாநாட்டு வரவேற்புத் தலைவர். சகோதரி சகுந்தலா அவர்கள் பிரசங்கத்திலும், தலைவர் சகோதரி இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்கள் பிரசங்கத்திலும் தெளிவாக விளக்கப்பட்டிருக் கின்றன. இந்த மகாநாட்டினால் சென்னை வாசிகள் அனைவரும், காங்கிரஸ்
மக்களின் சாதி, மத, பழக்கவழக்கக் கொடுமைகளைப் போக்கி அவர்களை உண்மையான சுதந்தர முடையவர்களாகச் செய்யக்கூடிய ஸ்தாபனம் அல்ல
வென்றும், இத்தகைய விடுதலையைத் தருவது சுயமரியாதை இயக்கமே என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள் என்று கூறலாம். “காங்கிரஸ் ஒன்றே விடுதலையளிக்கும் ஸ்தாபனமாகும். ஆகையால் எல்லோரும் காங்கிரசிலேயே சேர வேண்டும். இனி பார்ப்பனரல்லாதார் கட்சி, சுயமரியாதைக் கட்சி முதலியவைகள் நமதுநாட்டிற்குத் தேவையல்ல”” என்று பலர் பிரசாரம் பண்ணியதன் புரட்டையும் சென்னைவாசிகள் அறிந்து கொண்டார்கள் என்றே சொல்லுவோம்.
சென்னை மகாநாட்டில் இப்பிரசங்கங்களில் தோழர் சிங்காரவேலு அவர்களின் பிரசங்கத்தில் உள்ள இரண்டொரு விஷயங்கள் மாத்திரம் நாம் ஒப்புக்கொள்ள முடியாதவை என்பதை இச்சமயத்தில் கூறாமல் இருப்பதற்கில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை மாத்திரம் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
நமது இயக்கக் கொள்கைகளில், ஜாதிகளையும், மதங்களையும், சடங்குகளையும் ஒழிக்கக் கலப்புமணம் அவசியமானது என்பதும் முக்கிய மானதொன்றாகும். இவ்விஷயம் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமும் ஆகும். ஆனால். தோழர். சிங்காரவேலு அவர்கள் தமது பிரசங்கத்தில், “நமது தேச ஜாதி கலப்பு மணத்தால் ஒழியும் என்று சிலர் கருதுகின்றார்கள். ஆனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் தனிப்பட்ட ஒரு ஜாதியாகின்றார்கள். இந்த விதங்களால் இன்னும் ஜாதிகள். வளர்ந்து வருகின்றன”” என்று கூறியிருப்பதை நாம் ஒப்புக்கொள்ளமுடியாது. தற்போது கலப்பு மணம் செய்து கொள்ளுகின்றவர்கள் குறைவா யிருப்பதனாலும் கலப்பு மனஞ் செய்து கொள்ளுவதனால் பாதகம் இல்லை என்ற எண்ணம் நமது மக்களிடம் உண்டாகாததனாலும், இவர்கள் தனி
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஜாதியாக இருப்பதைப்போல காணப்படுகின்றார்களே யொழிய உண்மையில் இவர்கள் தனி ஜாதியாராக இல்லை. கலப்பு மணம் அதிகப்பட அதிகப்பட, ஜாதியென்னும் பாறை தூள் தூளாகச் சிதறி, பொடியாக பறந்துபோய்விடும். என்பதில் சந்தேகம் இல்லை. ஜாதி, மதம், சடங்குகள் என்னும் பாறைகளை உடைத்துத் தூளாக்கிப் பறக்கச் செய்யும் கருவி கலப்பு மணத்தைவிட வேறொன்றும் இல்லையென்பதே நமது இயக்கத்தின் அபிப்பிராயமாகும். இது கல்வியினாலும் ஆகும். அந்நியநாட்டில் உள்ள பல மேதாவிகளும், நமது நாட்டிலுள்ள பல பேரறிஞர்களும் இதையே வற்புறுத்தி வருகிறார்கள்.
சென்னைச் சுயமரியாதை மகாநாட்டில், காங்கிரஸ், காந்தி, ஹிந்தி முதலியவைகளைக் கண்டித்தும், செங்கற்பட்டு, ஈரோடு, விருதுநகர், மகாநாடுகளில் நிறைவேறிய தீர்மானங்களை ஆதரித்தும் யாதொரு எதிர்ப்புமின்றிப் பொது ஜனங்களின் ஏகமனதான அபிப்பிராயத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதனால் சென்னைப் பொது ஜனங்கள், காங்கிரஸ் பித்தலாட்டங்களையும், சுயமரியாதை இயக்கத்தின் உண்மையான கொள்கைகளையும் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று
கூறலாம்.
சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்டில் நிறைவேறியுள்ள தீர்மானங் களும் பெண்களின் சமத்துவத்திற்கும், சுதந்தரத்திற்கும் பெரிதும் ஏற்றதாகவே யிருக்கின்றன. சென்ற 28 - 12 - 31-ல் சென்னை “செனட்” மண்டபத்தில் இந்தியப் பெண்கள் மகாநாடு சகோதரி பி. கே.ராய் அவர்களின் தலைமையில் நடந்தது. அம்மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் சகோதரி நாசிர் உசெய்ன் அவர்கள். இவ்விருவர் பிரசங்கங்களும், பெண்கள் சுதந்தரத்திற்கான விஷயங்களை எடுத்துக் காட்டுகின்றன. அம் மகாநாட்டிலும் பெண்கள்
சுதந்தரத்திற்கும், சமத்துவத்திற்கும் ஏற்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
ஆனாலும் அத்தீர்மானங்களைக் காட்டிலும், அம்மகாநாட்டிற் பேசியவர்களைக் காட்டிலும் நமது சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்டுத் தீர்மானங்களும், பேச்சுக்களும் முற்போக்குடையதாக இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நமது சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்.
டில், பெண்களின் அடிமைக்கு முதற் காரணமாக இருக்கின்ற மதங்கள் ஒழிய வேண்டும் என்றே எல்லாச் சகோதரிகளும் கர்ஜித்தார்கள். இந்த வாசனை யானது கொஞ்சங்கூட “செனட்” மண்டபத்தில் நடந்த இந்தியப் பெண்கள். மாநாட்டில் வீசவில்லை என்பதை அந்த மகாநாட்டு நிகழ்ச்சிகளைப் படித்தவர்களும், பார்த்தவர்களும் அறிவார்கள். ஆயினும் வயதேறிய மத நம்பிக்கையுள்ள பல பெண் மக்கள் கூடிய இந்திய பெண்கள் மகாநாட்டில் பலத்த விவாதத்தோடும், திருத்தத்தோடும் பிரஜா உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டிருப்பதை நாம் பெரிதும்
குடி அரசு - 1932 M 16
பாராட்டுகிறோம். மற்றும் பெண்கள் சுதந்தரத்திற்காக நிறைவேற்றப் பட்டிருக்கும் எல்லாத் தீர்மானங்களையும் பாராட்டுகிறோம்.
இனி நமது சுயமரியாதைத் தொண்டர்கள் மகாநாட்டைப் பற்றி நாம் அதிகமாகக் கூற வேண்டியதில்லை. இவ்வளவு தூரம் நமது நாட்டில் சுய மரியாதை இயக்கம் பரவவும், பொது ஜனங்கள் இவ்வியக்கக் கொள்கைகளை உணர்ந்து கண் விழிக்கவும் செய்தவர்கள் சுயமரியாதைத் தொண்டர்களாகிய தோழர்களே யென்பதை யாரும் மறுக்க முடியாது. இத்தோழர்களின் இடை விடாத - சுயநலங் கருதாத - யாருடைய தயவு தாட்சண்யங்களுக்கும் கட்டுப்படாத உழைப்பினால் தான் நமது இயக்கம் சம்பந்தமான இத்துணை: மகாநாடுகளும், கூட்டங்களும் நடைபெறுகின்றன என்பதை யாரும் அறிவார்கள். ஆகவே அவர்கள் மகாநாட்டில் பேசிய பேச்சுக்கள், நமது இயக்கத்தை இன்னும் அதிதிவிரமாக நாடு முழுதும் பரவச் செய்து பொது ஜனங்களை ஏமாறாமல் எழுப்பிவிடக் கூடியனவாகவேயிருந்தன. அப்பேச்சுக்களையும், அப்பேச்சாளர்கள் எடுத்துக் காட்டிய உண்மைகளை
யும் ஆணித்தரமான அபிப்பிராயங்களையும் கேட்ட கிழவர்கள் முதல் வாலிபர் வரை ஆண் பெண்கள் அனைவரும் மதப்புரட்டு, காங்கிரஸ் புரட்டு, வைதீகப் புரட்டு, சடங்குப் புரட்டு முதலியவைகளை விளக்கமாகத் தெரிந்து கொண்டு அடிக்கடி சந்தோஷ ஆரவாரஞ் செய்தனர்.
கடைசியாக ஒரு விஷயத்தை மட்டும் கூறி முடிக்கின்றோம். நமது தலைவர் ஈ. வெ. ராமசாமி அவர்கள், உடல் நலமில்லாமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் மனிதத் தன்மையற்ற பேடிகள் சிலரும் “சிவநேசர்கள்” என்றும், “தேசீயவாதிகள்” என்றும், “சைவப் பெரியார்கள்” என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அயோக்கி யர்கள் சிலரும் “ஈ. வெ. ராமசாமி இப்படியே எப்பொழுதும் ஓய்வெடுத்துக் கொண்டு வேறு உலகம் போய்விட வேண்டும். போய் விட்டால் நாடு நன்மையடையும்” என்று முட்டாள் தனமாகவும், சிறிதும் உலக ஞான மில்லாமலும்,பத்திரிகைகளில் எழுதினார்கள். தங்கள் சாமிகளை வேண்டிக் கொண்டார்கள். பிறகு, ஈ.வெ. ராமசாமியும் தோழர். எஸ். ராமநாதனும் ஐரோப்பா சுற்றுப்பிரயாணம் போயிருக்கின்றதை அறிந்ததும் அப்பேடிகள்: ஆனந்தக் கூத்தாடினார்கள். நமது இயக்கம் செத்து போய்விடும். தங்கள் வயிற்றுப் பிழைப்பு நாடகத்தை யாதொரு விக்கினமும் இல்லாமல் நடத்திப் பொது ஜனங்களை ஏமாற்றலாம் என்று கும்மாளம் போட்டார்கள். ஆனால் இத்தகைய பேடிகளின் அடிவயிற்றில் நெருப்பு எரியும்படி நமது மகாநாடு சென்னையில் வெற்றிகரமாக பொது ஜனங்களின் தாராளமான ஆதரவுடன் நடைபெற்றது. இதிலிருந்தாவது நமது எதிரிகளாகிய வயிற்றுப் பிழைப்புக் காரர்கள், நமது இயக்கம் பொதுஜன இயக்கம் என்பதையும் தலைவர்கள். சுயநலத்திற்கான இயக்கம் அல்ல வென்பதையும் உணர்ந்து வாயடங்கு வார்களென்று நினைக்கிறோம். கடைசியாக இந்த சென்னை மகாநாட்டை
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
முன்னின்று நடத்திய நமது இயக்கத் தோழர்களையும் பொதுஜனங்களையும்
நாம் பாராட்டுவதுடன் நமது தலைவர்களான ஈ. வெ. ராமசாமியும், எஸ். ராமநாதனும் ஐரோப்பா சுற்றுப்பிரயாணத்திலிருந்து திரும்பி வருவதற்குள் இது போல இன்னும் பல மகாநாடுகளும் நடைபெறும் என்று எதிர் பார்க்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 03.01.1932.
குடி அரசு - 1932 M 18
காலை்லசனண்ற மாணிக்க நாயக்கர்
பெருந்தமிழறிஞரும்,ரிட்டயரான சூப்பிரின்டென்டிங் இஞ்சினீயரும்
சிவபுரி ஜமீன்தாரருமான திரு. பா. வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ் சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில் சிறந்த ஆராய்ச்சியுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார். இவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழ் மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டாயிருக்கக்
கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதியால் இறந்தது பெரும் நஷ்டமேயாகும். இவரை இழந்து வருத்தமடையும் அவர் மனைவிமார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர்களுக்கும் நமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.01.1932
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மீண்டும் வவால்லை
இது வரையிலும் தேசம் அடைந்து வந்த கஷ்டம் நீங்குவதற்கு ஒரு மார்க்கமும் ஏற்படாமல் இருந்துவரும் இச்சமயத்தில் மறுபடியும் தேசத்
திற்குப் பலவகையிலும், கஷ்டங்களும், நஷ்டங்களும் உண்டாக்கக் கூடிய
சந்தர்ப்பம் வந்து விட்டது பற்றி நாம் மிகவும் வருத்தமடைகின்றோம். சென்ற வருஷத்தில் திரு. காந்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உப்புச் சத்தியாக் கிரகத்தினால் உண்டான துன்பம் இன்னும் நீங்கினபாடில்லை.இந்த நிலையில் மறுபடியும் காங்கிரஸ், பகிஷ்கார இயக்கத்தையும் வரிகொடாமை, வாரங் கொடாமை முதலியவைகளையும் ஆரம்பித்ததைக் கண்டு, அரசாங்கத்தாரும் அதிமும்முரமாக அடக்குமுறைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் இம்மாதிரி காங்கிரஸ் போர் தொடுக்க ஆரம்பித்ததற்கும், அரசாங்கத்தார் அடக்குமுறையைக் கையாளவும், அவசரச் சட்டங்களை
ஏற்படுத்துவதற்கு முன் வந்ததற்கும் இருவர் கூறும் காரணங்களையும் நாம் விட்டு விடுகின்றோம். உண்மையில், காங்கிரஸ் எதற்காக மீண்டும் இத்தகைய போராட்டம் தொடங்க வேண்டும், அப்படிப்பட்ட நெருக்கடி என்ன வந்து விட்டது? என்பதைப் பற்றி மாத்திரம் இப்பொழுது நாம் கவனிப்போம்.
சென்ற வருஷம் நடைபெற்ற உப்புப் போரின் முடிவில் திரு.காந்தி அவர்களுக்கும், லார்டு இர்வின் அவர்களுக்கும் நடந்த ஒப்பந்தமும் அதன் பயனாக திரு. காந்தியவர்கள் காங்கிரசின் ஏகப் பிரதிநிதியாக இங்கிலாந்
திற்குப் போனதும் எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகும். அவர் வட்ட மேஜை மகாநாட்டில் பேசும் போதெல்லாம் காங்கிரஸ் ஒன்றுதான் இந்தியா முழுவதுக்கும் பிரதிநிதித்துவம் பொருந்திய ஸ்தாபனம்: ஆகவே அந்த ஸ்தாபனத்தின் ஏகப்பிரதிநிதியாகிய தாம் ஒருவரே, இந்தியாவின் 35 கோடி மக்களின் பிரதிநிதி ஆகையால் தான் கேட்கும் சுயராஜ்யந்தான் கொடுக்க வேண்டும்; மற்ற பிரதிநிதிகள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்லர் என்று எவ்வளவோ முறை கூறியும், இவ்வார்த்தைகளை வெள்ளைக்காரர்களும், மற்றைய பிரதிநிதிகளும் ஒரு சிறிதும் ஒப்புக் கொள்ளாமல் மறுத்து. இம்மா
கள். திரு. காந்தியின் ஆத்ம சக்தியின் வலிமையும், அவருடைய “கடவுள்” பிரார்த்தனையின் வலிமையும் மகாத்மா தன்மையும் வெள்ளைக்காரர்களிடம்
குடி அரசு - 1932 M 20
பலிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் இந்தியாவின் பொதுவான ஒரே ஸ்தாபனம் அல்லவென்பதும் இந்தியாவிலுள்ள மற்ற கட்சிகளைப் போல் அதுவும் ஒரு பெரிய கட்சிதான் என்பதும் உலக முழுதும் தெரிந்து விட்டது.
அடுத்தபடியாக, திரு. காந்தி அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் வழங்க மறுக்கும் விஷயத்தில் தன்னோடு ஒத்துழைத்தால் உங்கள் கோரிக்கைகள் எல்லாவற்றிற்கும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கிறேன் என்று முஸ்லிம்களிடம் ஒப்பந்தம் பேசியதிலிருந்தும் “முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க சம்மதிக்கிறேன், ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுப்பதை என் உயிர் போகும் வரையிலும் தடுத்துப் போராடுவேன்” என்று கூறியதிலிருந்தும் சிறுபான்மை வகுப்பினரான கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் முதலியவர்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வழங்க மறுத்ததிலிருந்தும், திரு. காந்தியின் மேல் இந்தியாவிலுள்ள அனேகருக்கு நம்பிக்கை யில்லாமற் போய்விட்டது. தீண்டா வகுப்பினரும், மற்றச் சிறு பான்மைச் சமூகத்தினரும் இவர்களின் முன்னேற்றத்தில் அனுதாபங் கொண்ட மற்ற நடுவுநிலைமையான எண்ணமுடையவர்களும் காங்கிரஸ் ஸ்தாபனத்தை வருணாச்சிரம தர்மஸ்தாபனமாகவும் திரு.காந்தியை வருணாச் சிரம தர்ம ஸ்தாபனத்தின் பிரதிநிதியாகவும் எண்ணத் தொடங்கிவிட்டனர்.
அன்றியும் காங்கிரஸ் பிரதிநிதி வட்டமேஜை மகாநாட்டிற்குப் போயும் கூட, காங்கிரஸ் பிரதிநிதி போகாத காலத்தில் நடைபெற்ற முதல் வட்டமேஜை மகாநாட்டில் பிரிட்டிஷ் முதல் மந்திரி இந்தியாவுக்கு என்ன சீர்திருத்தங்கள். கொடுப்பதாகக் கூறினாரோ அதே சீர்திருத்தத்தை தான் கொடுப்பதாக காங்
கிரஸ் பிரதிநிதியாகிய திரு. காந்தியும் இருந்த இரண்டாவது கூட்டத்திலும் கூறினார். இதனாலும் காங்கிரசினாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மனத்தை.
மாற்ற முடியவில்லை என்பது வெட்ட வெளியாகி விட்டது.
ஆகவே காங்கிரஸ் உப்புப் போர் நடத்தியதற்கு ஒரு பயனும் இல்லா
மல் போய்விட்டது. காங்கிரஸ் செய்து வந்த கிளர்ச்சிகளால் தேசத்திற்கு நஷ்ட
மும் கஷ்டமும் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு எள்ளத்தனையும் பலன் கிடைக்கவில்லை என்பதும் திரு. காந்தி இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் முன்பே சாதாரண ஜனங்களுக்கும் தெரிந்து விட்டது.
காங்கிரசாலும், திரு. காந்தியாலும் இவர்களைத் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் கூட்டத்தாராலும் நாட்டுக்கு ஒரு பலனும் உண்டாக வில்லை என்பது தெரிந்தால், பொது ஜனங்கள் இவர்கள் வார்த்தைக்கு
மதிப்புக் கொடுக்கமாட்டார்கள். இவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் முன் போல வரமாட்டார்கள். இவர்களை வெறுக்கவும் ஆரம்பித்து விடுவார்கள். பொதுஜனங்கள் இப்படித் திரும்பி விட்டால் காங்கிரசின் கொஞ்ச நஞ்ச
பலமும், கிளர்ச்சியும் போய்விடும். காங்கிரசின் பலம் போய்விட்டால்,
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வருணாச்சிரம தருமமும், மத தர்மங்களும் தளர்ந்து தேய்ந்து அழிந்து போகக் கூடிய நிலைமைக்கு வந்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதற்கு உதாரணம் வேண்டுமானால், நாசிக்கில் தீண்டாதார் கோயில் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததையும் அவர்களுக்குச் சில காங்கிரஸ்காரர்கள் உதவி செய்ய முன் வந்ததையும், மலையாள நாட்டில் குருவாயூரில் காங்கிரஸ் காரர்களே கோயில் பிரவேச சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததும், மற்றும் பல காங்கிரஸ் கமிட்டிகளில் கோயில் பிரவேசம் போன்ற சமதர்ம சத்தியாக் கிரகங்கள் ஆரம்பிக்க வேண்டுமென்ற யோசனைகள் நடந்து கொண்டிருந்
ததும் போதுமானதாகும். இவ்வாறு காங்கிரசில் கோயில் பிரவேசம் போன்ற சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்குக் காரணம் நமது இயக்கமும், நமது இயக்கக் கொள்கைகளை ஒப்புக் கொண்டால்தான் பாமர மக்களிடத்தில் செல்வாக்குப் பெறலாம் என்னும் நோக்கமுடைய சில பார்ப்பனரல்லாதார் காங்கிரசில் இருப்பதனாலுமேயாகும்.
இம்மாதிரியான காரணங்களால் காங்கிரசின் தன்மை வெளிப்பட்டு, அதன் மதிப்பு குறைந்து போய்விடும் என்ற நிலைமைக்கு வந்தவுடன் மறுபடியும் காங்கிரசின் கிளர்ச்சியையும் மதிப்பையும் பலப்படுத்தவே இப்பொழுது சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இதைத் தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். இதனால் தான் என்ன பலன் உண்டாகப் போகிறது என்று எதிர்பார்க்கிறீர்கள்? குருவாயூர் சத்தியாக்கிரகம் போன்ற சமதர்ம சத்தியாக்கிரகம் நிறுத்தப்
படுதலும், வாயளவிலாவது திரு. சி.ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் பேசிவந்த தீண்டாமை விலக்குப் பேச்சு அடியோடு ஒழிக்கப்படுதலும்,
மறுபடியும் பாரதமாதா பஜனை, ராம பஜனை போன்ற பஜனைகள் ஆரம்பிக் கப்படுதலும், இவைகளின் மூலம் மக்கள் மனத்தில் மூடநம்பிக்கைகளை உண்டாக்குதலும் ஆகிய பலன்தான் உண்டாகப் போகின்றது.
ஆகையால் இச்சமயத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். சென்ற உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது எத்தனை பார்ப்பனர்கள் ஜெயிலுக்குப் போனார்கள்: எத்தனைப் பார்ப்பனர்கள் தடியடி வாங்கினார்கள், எத்தனை பார்ப்பனரல்லாதார் ஜெயிலுக்குப் போனார்கள், எத்தனைப் பார்ப்பனரல்லாதார் தடியடி வாங்கினார்கள் என்ற கணக்கை. நன்றாய் ஆலோசித்துப் பார்த்து விட்டுப் பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள். இதோ, எத்தனை பார்ப்பனர்கள் பெரிய தலைவர்களாகத் தேசீயப் பத்திரிகைகள் மூலம் சட்ட சபையில் பிரஸ்தாபத்திற்கு வந்ததன். மூலமும் விளம்பரப்படுத்தப்பட்டார்கள்; எத்தனை பார்ப்பனரல்லாதார் இம் மாதிரி விளம்பரப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் மறக்காமல் கணக் கெடுத்து யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடி அரசு - 1932 M 22
இந்தக் கணக்கைப் பார்ப்பீர்களானால் தடியடிபட்டவர்களும், சிறை சென்றவர்களும் பார்ப்பனரல்லாதார்கள் என்பதையும், தலைவர்களாகவும் தியாகிகளாகவும், வீரர்களாகவும் விளம்பரப்படுத்தப்பட்டவர்கள் பார்ப் பனர்கள் என்பதையும் அறிவீர்கள். ஆகையால் காங்கிரசின் வருணாச்சிரம
தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகத் தொடங்கியிருக்கும் சட்டமறுப்பில் கலந்து நமது விடுதலையாகிய சமதர்மத்தை இன்னும் தள்ளி வைக்காமலிருக்கும்படி. எச்சரிக்கின்றோம்.
அன்றியும் காங்கிரஸ் இப்பொழுது சட்டமறுப்பு இயக்கம் ஆரம்பித்
திருப்பதில் மற்றொரு சூழ்ச்சியும் அடங்கி இருக்கிறது. அதாவது, “வருணாச் சிரம தரும இந்துக்களின் கையிலேயே அரசியல் சீர்திருத்த ஆதிக்கம் இருக்க வேண்டும்” என்ற காங்கிரசின் நோக்கத்திற்கு விரோதமாகவே வரப்போகும் சீர்திருத்தம் அமைந்திருக்கப் போகின்றது. முஸ்லீம்களுக்கும், சீக்கியர் களுக்கும், தீண்டாதவர்களுக்கும் மற்றச் சிறுபான்மை வகுப்பினருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் உள்ள சீர்திருத்தந்தான் வரப்போகின்றது. இத்தகைய
சீர்திருத்தம் வந்தால் கூடுமான வரையிலும், தாழ்த்தப்பட்டிருக்கும் சமூகத்த வர்கள், மற்ற சீர்திருத்தக்காரர்களின் ஆதரவையும் பெற்றுச் சட்டசபைகளின்
மூலம் தாங்களும், மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்களைப் போல எல்லா உரிமை களையும் பெறக்கூடும் என்று நம்பலாம். இம்மாதிரி இவர்கள் சமநிலைக்கு
வந்துவிட்டால் வருணாச்சிரம தருமங்களும், மதப்புரட்டுகளும் கட்டாயம் அழிந்து போகும். ஆகையால் வரப்போகும் சீர்திருத்தத்தைக் கெடுக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனும், இனி இந்தியாவில் நடக்கப் போகும். சீர்திருத்த ஆலோசனைக் கமிட்டிகளை நடக்காமற் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடனுமே சட்ட மறுப்பு ஆரம்பித்து இருக்கிறார்கள். என்றும் துணிந்து கூறலாம்.
ஆகையால் சமதர்மத்தையும் நியாயமான அரசியல் சீர்த்திருத் தத்தையும், நாட்டின் நன்மையும், வேண்டுகின்ற எவரும் தற்சமயத்தில் காங்கி
ரசால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போராட்டத்தைக் கண்டு மயக்கமடைய மாட்டார்கள் என்பது நிச்சயம். காங்கிரசின் உண்மை நோக்கமும் கொள்கை
யும் தெரியாமல் சுயராஜ்ய ஆவேசம் கொண்டு திடீரெனச் சட்ட மறுப்பு இயக்கத்திற்கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளு கின்ற பார்ப்பனரல்லாத இளைஞர்களை எச்சரிக்கவே இவ்விஷயங்களைக் கூறினோம்.
பார்ப்பனர்கள் தங்கள் பிழைப்புக்கும் உத்தியோகங்களுக்கும், யாதொரு ஆபத்தும் வராமல் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும், காங்கிரஸ் பிரசாரம் பண்ணுவார்கள். பார்ப்பனரல்லாத இளைஞர்களையும், பள்ளிக்கூட மாணவர்களையும் தூண்டி விடுவார்கள். இந்த ஏமாற்று வார்த்தை களில் ஈடுபட்டுப் பார்ப்பனரல்லாத இளைஞர்கள் தங்கள் பிழைப்பைக்
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கெடுத்துக் கொள்வார்கள்; பார்ப்பனரல்லாத மாணவர்கள் படிப்பையும் விட்டுத் திண்டாடுவார்கள். பார்ப்பன இளைஞர்களும், பார்ப்பன மாணவர். களும் வாய்ப்பேச்சளவிலேயே நின்று கொண்டு வேடிக்கைப் பார்ப்பதும், பார்ப்பனரல்லாதாரைப் பலி கொடுத்து மகிழ்வதுமாகவே இருப்பார்கள். என்பதையும் இச்சமயத்தில் கூறாமல் இருக்க முடியவில்லை. ஆகையால் பார்ப்பனரல்லாதார்களே ஜாக்கிரதை!
குடி அரசு - தலையங்கம் - 10.01.1932.
குடி அரசு - 1922 0) 24
௯ழ்ச்சி வவணிப்பட்டது
- தேசீயத்துரோகி
திரு. காந்தியவர்கள் இங்கிலாந்தில், வட்ட மேஜை மகாநாட்டிலும்
மற்றும் வெளியிடங்களிலும், இந்தியாவின் நிலைமையைப்பற்றிச் செய்து வந்த பிரசங்கங்களை நாம் அவ்வப்போது பத்திரிகைகளிற்படித்து வந்திருக் கிறோம். அவர் இந்தியாவில் உள்ள சாதி வேற்றுமைகளை வெளிப்டுத்தாமல் கூடிய வரையிலும், மறைத்துக்கொண்டே வந்தார். இந்தியாவில் சமூக ஒற்றுமை ஏற்பட்டு விட்டதென்றும், ஆகையால் பூரண சுயேச்சை கொடுத்து விட வேண்டுமென்றும் ஆரவாரம் பண்ணினார். தாழ்த்தப்பட்டவர்களைப்
பற்றிப் பேசும்போது, “அவர்களுக்குக் காங்கிரஸ்தான் பிரதிநிதி, அம்பெட்கார். முதலானவர்கள் பிரதிநிதிகள் அல்லர். தாழ்த்தப்பட்டவர்களை இந்துக்கள் அவ்வளவாகக் கொடுமைப்படுத்தவில்லை. ஆகையால் அவர்களுக்குத் தனித்தொகுதி வேண்டிய அவசியமில்லை. பொதுத்தொகுதிகளிலேயே தாழ்த்தப்பட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்படலாம். கொஞ்ச நஞ்சம் உள்ள வேற்றுமைகளும் சுயராஜ்யம் கொடுத்துவிட்டால் நீங்கிப்போய்விடும்”” என்று பேசிக்கொண்டிருந்தார்.
திரு. காந்தி, இவ்வாறு முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள்வைத்து மூடிக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து கொண்டிருக்க இங்குள்ள அவருடைய வாலர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அம்பெட்கார் தேசத்துரோகி யென்றும், முஸ்லீம்கள் அரசாங்கத்தைத் தாங்குகிறவர்களென்றும், அம்பெட் காரின் விஷமத்தனமென்றும், அம்பெட்காரின்மேல் நம்பிக்கையில்லை யென்றும் பத்திரிகைப் பிரசாரங்களும், மேடைப்பிரசாரங்களும் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களும் பல மகாநாடுகளும், கூட்டங்களும் கூட்டி, அம்பெட்காரே தங்கள் பிரதிநிதி யென்றும், காந்தி தங்களுக்குப் பிரதிநிதியல்ல வென்றும் கண்டித்துத் தீர்மானங்கள் பல செய்து கொண்டுதான் இருந்தார்கள்.
கடைசியில் திரு. காந்தி இங்கிலாந்து சென்று, வட்டமேஜை மகா நாட்டை ஒரு முடிவும் செய்யவொட்டாமல் பண்ணிவிட்டு இந்தியாவுக்குச்
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சென்ற 28-12-31 ல் திரும்பிவந்தார். அப்போது அவரை அவர்பால் பக்தியுடைய மக்கள் திரளாகக் கூடி பம்பாயில் வரவேற்றனர். அச்சமயத்தில் நடந்த மற்றொரு சம்பவம் குறிப்பிடத் தகுந்ததாகும். 1000 தொண்டர்கள் தீண்டா வகுப்பினர் கறுப்புக்கொடி பிடித்துக்கொண்டு வந்து திரு. காந்திக்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 1000 தொண்டர்கள் என்பது தேசீயப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கணக்குத் தான் : ஆனால், உண்மையில் ஆயிரத்திற்கு மேலான தொண்டர்கள் இருந்திருக்கவேண்டும்.
தாழ்த்தப்பட்ட தொண்டர்கள் கருப்புக்கொடி பிடித்ததோடுமட்டும் விடவில்லை, காங்கிரஸ் தொண்டர்களுக்கும், இவர்களுக்கும் பெரிய சச்சரவுகளும் நடைபெற்றது. அடிதடிகளும் நடந்தன. கடைசியில் போலீசார். தலையிட்ட பின்னரே கலகம் அடங்கிற்று. இவ்வாறு காந்தியின் வருகையின்போது கலகம் நடந்த செய்தியை யாரும் மறைக்கமுடியாது..
அதில் உள்ள ரகசியமும் வெளிப்படையானதேயாகும்.
இவ்வாறு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தொண்டர்கள், கறுப்புக் கொடி பிடிக்கவேண்டிய காரணந்தான் என்ன? திரு. காந்தி, தானே இந்தியா
முழுவதற்கும் பிரதிநிதி; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிரதிநிதி. ஆகையால் தான் சொல்லுவதையே கேட்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தது பொருத்தமற்ற வார்த்தை - அர்த்தமற்ற சொற்கள். அவர் எங்களுடைய பிரதிநிதி அல்ல; அம்பெட்கார் தான் எங்கள் பிரதிநிதி என்பதைத் தெரிவிப் பதற்கே யாகும். இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் உண்மையான மனப்பான்மையையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச் சியைக் கொண்டு திரு. காந்தி இங்கிலாந்தில் பேசிய பேச்சுக்களின் உண்மை விளங்கும்.
இந்த சம்பவத்தை, நமது நாட்டு தேசீயப்பத்திரிகைகள் குறிப்பிடும் போது, “அம்பெட்கார் கட்சியாரின் அமளி” என்றும் “அம்பெட்கார். கூட்டத்தாரின் அயோக்கியத்தனம்” என்றும் “அம்பெட்கார் கோஷ்டியாரின். ஆர்ப்பாட்டம்”” என்றும், பெரிய தலைப்பெயர்கள் கொடுத்துப் பிரசுரித்தன. தாழ்த்தப்பட்டவர்கள், தங்கள் உணர்ச்சியைக் காட்டுவதற்காகச் செய்த காரி. யத்தை ஏன் இவர்கள் இவ்வாறு விவேகமின்றிக் குறைகூற வேண்டும்? இதற் காகத் திரு. அம்பெட்காரின் பெயரையும் ஏன் இழுக்கவேண்டும்?'
தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திரு. காந்தியின் மேல் நம்பிகை இல்லை என்பதற்கும், தனித் தொகுதி வேண்டுமென்பதை ஆதரித்தவர்களிடத்தில் தான் நம்பிக்கையுண்டென்பதற்கும் மற்றொரு உதாரணத்தையும் காணலாம். சென்ற 27-12-31 ல் சென்னைக்கு வந்து சேர்ந்த, திருவாளர்கள் எ.டி. பன்னீர்செல்வம், எ.ராமசாமி முதலியார், ஆர், சீனிவாசன், பொப்பிலிராஜா முதலியவர்களைக் குதூகலமாக வரவேற்ற கூட்டத்தில் மிகுதியாக இருந்த வர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புப்பிரதிநிதிகளும், அவ்வகுப்புத் தொண்டர்.
குடி அரசு - 1932 M 26
களுமேயாவார்கள்.தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் இவ்வாறு ஏராளமாகக்கூடி வரவேற்றது ஏன்? திரு. அம்பெட்காரின் துணையாக இருந்த திரு. ஆர். சீனிவாசன் அவர்களிடம் தங்களுக்குள்ள நம்பிக்கையை காட்டுவதற் கேயாகும். திரு. அம்பெட்காரின் கொள்கையை ஆதரித்த திருவாளர்கள். பன்னீர் செல்வம், பொப்பிலிராஜா, ராமசாமி முதலியார் ஆகியவர்களிடமும், தமக்குள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கேயாகும்,
இவ்வாறு இந்தியா முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் திரு. காந்தியாரின் அபிப்பிராயத்திற்கு விரோதமாகவும். அம்பெட்கார் அபிப்பிராயத்தில் நம்பிக்கையுடையவராகவும் இருப்பது மலைமேல் ஏற்றிய விளக்கைப்போல் தெரிகிறது. இப்படியிருந்தும், திரு. காந்தியும், அவருடைய பக்தர்களும், இன்னும் பழய பல்லவியையே பாடு வதில் என்ன பயன் என்று கேட்கிறோம். நமது நாட்டுப் பத்திரிகைகளும் உன்மையை மறைத்துவிட்டுத் தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களின் மேல் பழியைச் சுமத்துவது எவ்வளவு அயோக்கியத்தனம்? தாழ்த்தப்பட்டவர்களை உயர்ந்த ஜாதி இந்துக்களால் நசுக்கப்படுகிறவர்களாகவே இன்னும் வைத்துக் கொண்டு, “அவர்களும் இந்துக்கள் தான் அவர்களை பிரிக்கக்கூடாது. அவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுத்தால் அவர்கள் எப்பொழுதும் தீண்டாதார்களாகவே இருந்துவிடுவார்கள்”” என்று வீண் பிடிவாதம் பேசு வதில் என்ன பிரயோசனம்?
திரு. காந்தி அவர்கள் வந்து இறங்கும் போதே - அவரை வரவேற்கக் கூடியிருந்த கூட்டத்திலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் உயர்த்திக் கொண்: டிருப்பவர்களுக்கும் சண்டை சச்சரவு நடந்தது. அவர் வரும்போதே இப்படி யிருந்தால், இனி காரியங்களைச் செய்யத் தொடங்கும் போது என்னென்ன காரியங்கள் நடக்கப்போகின்னனவோ? என்பதைப்பற்றி இப்பொழுது நாம் என்ன சொல்லுவது? எல்லாம் போகப் போகத்தான் தெரியும்.
குடி அரசு - கட்டுரை - 10.01.1932
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பகிஷ்காற கமாசணை
காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில், போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்தப் பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால்
கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம். தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ் காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.
இந்த வியாக்கியானம் கூறவும் இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்ய
வும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்
காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது.ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே யிருக்க மாட்டார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு. அதிலும் கார்டு 9 பைசாவும், கவர்1அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசனமில்லை.
உண்மையிலேயேபகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக் கார அரசாங்கத்திற்குச் சொந்தமானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங் கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது. ஆகவே அவர்களுடைய ஆட்சிக்
குள் அடங்கிய நாட்டில் இருப்பது “பாவம்” அல்லவா? ஆகையால் எல் லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக்காரர் ஆளும் பூமி யைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.011932
குடி அரசு - 1932 0) 28
சமஸ்கிருத சணியன்
- தேசியத் துரோகி
தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.
சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும்.
உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும் இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக் கொடுமை. சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும் தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்தரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமே
யாகும். இன்று வருணாச்சிரமதருமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும் சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாச்சிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும்.தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்
குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே. யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்த சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்களின் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ், பி.ஏ. பி.எல்., எம்.எல்.சி.அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பன. ரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குறைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வருணாச்சிரமக் கூட்டத்தார்கள் எல் லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லு கின்றனவென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லு கின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்த சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாம லிருக்க வேண்டுமானால் - அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.
ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச்செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும் குடி கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசீய ஆடைகளைப் புனைந்து “ஹிந்தி” என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஹிந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப் படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாச்சிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழய கெளரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைகாரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த ஹிந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிடச் சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள்.
ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியார் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபார்சு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை: செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமா யிருப்பவைகளும் காப்பாற்றப்பட
குடி அரசு - 1932 M 30
வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிக்கிளப்புப் பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்டமறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங்கச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியின் சிபார்சைக் கைவிட்டுவிடக் கூடாதென எச்சரிக்கை செய்ய வேண்டும். சில பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பல தீர்மானங்கள் செய்து அரசாங்கத்தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ்
கிருதச் சனியன் ஒழியும்.
குடி அரசு - கட்டுரை - 17.011932
31 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இப்பொழுது நமது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் வெள்ளைக் கார்களைத் துரத்தி விட்டு இந்நாட்டின் அரசாட்சியை நாமே ஆளவேண்டும் என்று தேசீயவாதிகள் ஜனங்களிடம் கிளர்ச்சி செய்து அவர்களைத் தூண்டி
வருகிறார்கள். இதற்காக சட்டமறுப்பு, வரிகொடாமை முதலிய இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களாகவும், தீண் டாத வகுப்பினர்களாகவும் உள்ள சுமார் 7 கோடி மக்கள் இந்துக்களின் ஆட்சியை விட வெள்ளைக்காரர்களின் ஆட்சியையே - அதாவது அவர் களின் பாதுகாப்பையே விரும்புகின்றனர். இவ்வாறு இவர்கள் விரும்புவது நியாயமானதே என்பதும் இதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை என்பதுமே நமது அபிப்பிராயமாகும்.நமது நாட்டிற்கு வெள்ளைக்கார ஆட்சி வருவதற்கு முன் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்துக்களுடைய ராஜ்யபாரம்தான் இருந்து வந்தது. அக்காலத்தில் அதாவது அந்தப் பல ஆயிரம் ஆண்டுகளிலும் தீண்டத்தகாத வகுப்பினர்களெல்லாம், தீண்டத்தகா தவராகவும்! தெருவில் நடக்கத்தகாதவராகவும், கண்ணால் பார்க்கத்தகாத வராகவும், சண்டாளராகவும், அடிமைகளாகவும், சுகாதாரமற்ற சதுப்புநிலங் களில் வசிக்கின்றவர்களாகவும், உண்ண உணவில்லாதவராகவும் உடுக்க உடை இல்லாதவராகவும் தான் இருந்து வந்தார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வுண்மையை இந்துக்களின் பரிசுத்தமான நூல்களாகக் கருதப்படும் புராணங்கள் ஸ்மிருதிகள் முதலியவைகளைக் கொண்டும் இந்திய நாட்டின் சரித்திரத்தைக் கொண்டும் அறியலாம். இன்றும் வெள்ளைக் கார அரசாங்கத்தார், தீண்டத்தகாதவர்களுக்குச் செய்ய முன் வரும் சில நன்மைகளையும் மதம், வழக்கம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் தடுத்துக் கொண்டிருக்கிறவர்கள் உயர்ந்த சாதி இந்துக்களே என்பதை யாரும் மறுக்க முடியாதல்லவா? நமது மதத்திலும், நமது சமூக சீர்திருத்தங்களிலும் தலை யிடாமல் இருக்கும் அந்நிய ஆட்சியிலேயே உயர்ந்த ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களைப் பலவகையிலும், தொந்தரவு பண்ணி அடிமையாக்கி மிருகங்களைப் போல் வைத்திருக்க விரும்புகின்றார்கள்; அவர்கள் விரும்பும் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் எதிராக பலமான கிளர்ச்சி செய்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்டவர்கள் கையிலேயே ராஜ்ய
குடி அரசு - 1932 M 32
அதிகாரமும் கிடைத்துவிட்டால் அப்பொழுது நமது நாட்டு ஒடுக்கப்பட்டவர். களின் கதி என்ன ஆகும்? தென்னாப்பிரிக்காவில் உள்ள வெள்ளையர்கள், இந்தியர்களை எவ்வாறு முன்னேற முடியாமல் அடக்கி வைக்கவும், அந்த நாட்டை விட்டு ஓட்டி விடவும் முயலுகின்றார்களோ, அதைவிட இன்னும் பன்மடங்கு அதிகமாகத் தீண்டாதார்களை அடக்கி வைக்க முயல்வார்கள். என்பதில் சிறிதும் ஐயமில்லை. தென்னாப்பிரிக்கா வெள்ளையர்களாவது தங்களுடைய சுய நலத்தையும் பொருளாதார நிலையையும் கருதி இந்தியர்: களை அடக்கி வைக்க நினைக்கிறார்களேயொழிய வேறு மத சம்பந்தமான குருட்டு எண்ணம் அவர்களிடம் ஒன்றுமில்லையென்று சொல்லலாம். ஆனால் நமது நாட்டு வருணாச்சிரம தரும இந்துக்களோ சுயநலத்தோடுங் கூடதீண்டாதவர்கள் எப்போதும் தீண்டாதவர்களாகவே அடக்கி வைக்கப்பட வேண்டுவது மத கட்டளையாகவும் “கடவுள்” சித்தமாகவும், சாஸ்திர சம்மத மாகவும் கருதுகிறார்கள்: கருதுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. இக்காரணங்களை முன்னிட்டே இன்று தீண்டாத வகுப்பினரும், மற்ற சிறு பான்மை வகுப்பினரும் இந்துக்களின் அதாவது வருணாச்சிரம தரும உயர்தர:
ஜாதி இந்துக்களின் ஆட்சியை விட அந்நியர்களாகிய வெள்ளையர்களின் பாதுகாப்புள்ள ஆட்சியையே மேலானதாக விரும்புகிறார்கள் என்பதை வட்ட மேஜை மகாநாட்டில் டாக்டர். அம்பெட்கார்,திரு.சீனிவாசன் முதலிய வர்கள் கூறிய அபிப்பிராயங்களை கொண்டும் இந்தியாவில் பல பாகங்க ளிலும் அவர்கள் நடத்திய மகாநாடுகளின் தீர்மானங்களைக் கொண்டும் அறியலாம். இவ்வாறு விரும்புவதில் தவறு ஒன்றுமில்லை என்றே நாமும் உறுதியாகச் சொல்லுகிறோம். இவ்விஷயத்தை இன்னும் உறுதியாக வற்புறுத் துவதற்குச் சென்ற டிசம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று தினங்களிலும் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய சுயராஜ்ய சங்க மகாநாட்டின் தீர்மானங்களே போதுமானதாகும்.
ஆகையால் அம்மகாநாட்டுத் தீர்மானங்களைக் கவனிப்போம்.
1.“தீண்டாதவர்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள் தான்”
2. “தீண்டாதவர்கள், வேதம், புராணம், ஸ்மிருதி, முதலிய வைகளைப் பின்பற்றுகிறவர்களென்று அவர்கள்மேல் மற்ற உயர்ந்த ஜாதி இந்துக்கள் சகோதர வாஞ்சை காட்டி வருகின்றனர்”.
3. “சில சீர்திருத்தக்காரர்களால், அவர்கள் அனாவசியமாகக் கிளப்பிவிடப்பட்டது காரணமாக, அவர்கள் வருணாச்சிரம தருமி களுக்கு விரோதிகளாய் விட்டனர்”.
என்று தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர்மானங் களினால் தீண்டாதாருக்கு இன்னும் ஆபத்தேயொழிய ஒரு சிறிதும் நன்மை யில்லை என்பது உறுதி. தீண்டாதவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்
32 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கொண்டிருக்கும் வரையிலும் அவர்கள் அடிமையாகத்தான் இருந்து தீரவேண்டும். சமத்துவம் பெறவே முடியாது. இந்து மத வேத, புராண, ஸ்மிருதிகளை ஒப்புக் கொள்ளுகிறவர்கள்தான் இந்துக்களாவார்கள் என்பதை
நாம் சொல்ல வேண்டியதில்லை. வேத, புராண ஸ்மிருதிகளை ஒப்புக் கொண்: டால் வருணாச்சிரம தருமத்தையும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.வருணாச் சிரம தர்மத்தை ஒப்புக்கொண்டால் பார்ப்பான் உயர்ந்தவன், க்ஷத்திரியன் பார்ப்பானுக்குத் தாழ்ந்தவன் ஆகையால் பார்ப்பான் சொன்னபடியே கேட்க வேண்டும்; வைசியன் பார்ப்பானுக்கும் க்ஷத்திரியனுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; சூத்திரன் மேற்கூறிய மூவர்களுக்கும் வேலை செய்ய வேண்டும்; பஞ்சமன், சண்டாளன், தெருவில் நடக்கக் கூடாது ஊருக்கு வெளியில்தான். கிடக்க வேண்டும்; கல்வி கற்கக் கூடாது; நல்ல உணவு கொள்ளக் கூடாது; நல்ல உடைதரிக்கக் கூடாது; எந்தப் பொது இடங்களுக்கும் வரக் கூடாது என்ற நிலையில் இருந்துதான் ஆக வேண்டும். ஆகவே இந்த நிலையில் இருக்கத் தீண்டாதவர்கள் தம்மை இந்துக்கள் என்று கூறிக் கொள்ளச் சம்மதிக்கலாமா?' அப்படி சம்மதிப்பதனால் தம்முடைய தாழ்ந்த நிலையை - அடிமைநிலையை
- கஷ்டமான நிலைமையை விட்டுக் கரையேற வழியுண்டா? என்று தான் கேட்கிறோம்.
மேல் உள்ள தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானத்தில் அவர்கள் தங்கள் சமத்துவத்திற்குப் போராடுவது தகாது என்று கூறிவிட்டார்கள். “சீர்திருத்த வாதிகளால் அனாவசியமாக கிளப்பிவிடப்பட்டார்கள்”” என்று சொல்லுவதிலிருந்து “தீண்டாதவர்கள் கேட்கும் சமவுரிமைஅனாவசியமான தென்று” அகில இந்திய வருணாச்சிரம சுயராஜ்ய சங்கத்தார் அபிப்பிராயப் படுகிறார்களெனவும், “தீண்டாதவர்கள் இது வரையிலும் இருந்த அடிமை வாழ்க்கையில் இருப்பதே அவசியமானதென” அபிப்பிராயப்படுகிறார்கள். எனவும் பட்டப்பகல் போல் உணரக்கிடக்கின்றதல்லவா?'
இன்னும் அவர்கள் செய்திருக்கும் தீர்மானங்களைப் பார்த்தால் நாம் மேலே கூறியதில் எள்ளளவும் பிசகில்லை என்பதையும், அவை முற்றும் உண்மை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.அத்தீர்மானங்கள் வருமாறு:-
4. “நாசிக் ஆலயத்தையும், ராமகுண்ட தீர்த்தத்தையும் அசுத்தப்படுத்த முயற்சி செய்கின்றவர்களைக் கண்டிக்கின்றது”.
5.“இந்தச் சத்தியாக்கிரகிகளைக் கஷ்டத்தோடு எதிர்க்கும் சனாதன தர்ம இந்துக்களை இம்மகாநாடு பாராட்டுகின்றது. இவர்களுக்குத் தேவைப் படும் பண உதவியையும், மற்ற உதவிகளையும் செய்யத் தயாராயிருப்பதாக உறுதி கூறுகிறது”.
6. “தீண்டாத வகுப்புப் பிள்ளைகளுடன் வருணாச்சிரம தருமி களின் பிள்ளைகளும் சேர்ந்து பள்ளிக்கூடங்களில் படிக்கும்படி
குடி அரசு - 1932 0 34
வற்புறுத்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போக்கையும் இந்திய சமஸ் தானங்களின் போக்கையும் கண்டு இம்மகாநாடு வருந்துகிறது”.
இத்தீர்மானங்களும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருப் பதிலிருந்து அவர்களுடைய மனப்பான்மை இன்னதென்பதை அறியலாம். இந்த மனப்பான்மை தான் நமது நாட்டில் உள்ள உயர்ந்த ஜாதி இந்துக்களாகிய பார்ப்பனர்கள், அவர்கள் வலையில் சிக்குண்டு கிடக்கும் பார்ப்பனரல்லா தார்கள், இந்துமத பக்தர்கள் எல்லோரிடத்திலும் குடி கொண்டிருப்பதாலும், இந்த அபிப்பிராயமுள்ள மக்களே மிகுதியாக இருக்கும் ஒரு தேசத்தில் உள்ள
ஒரு ஏழைத் தீண்டத்தகாத மக்கள் எப்படி முன்னுக்கு வரமுடியும்? அதிலும் இவர்கள் கையில் அதிகாரமும் ராஜ்ய பாரமும் வந்துவிட்டால் இன்று சம
தர்மக் கிளர்ச்சி செய்கின்றவர்களின் கதியும், தீண்டத்தகாத மக்களுக்குப் பாடு படும் தலைவர்களின் கதியும் என்ன வாகும்? திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் சமணர்களுக்குக் கிடைத்த கழுவேற்றத்தைப் போல தூக்குத் தண்டனையும் சித்திரவதையும் தீவாந்தர சிட்சையும் சிறைத் தண்டனையும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை அல்லவா. இவ்வளவு காரியங்களைச் செய்ய இந்து மதமும், இந்து மதச் சாஸ்திரங்களும் தடை செய்யாமல் இவற்றுக்கு அனுகூலமாகவே இருக்கும் என்று உறுதியாகக் கூறு கிறோம். ஆகையால் தான் நாம் இந்து மதமும், ஜாதிகளும் ஒழிய வேண்டும் என்று கூறிவருகின்றோம். இவை ஒழிந்தால் இத்தகைய ஆபத்துகள் ஒன்று மில்லை. கல்கத்தா, “அகில இந்திய வருணாச்சிரம சுயராஜ்ய சங்க” மகா நாட்டார் தீண்டாதார்களை இந்துக்களென்று முடிவு கட்டிய பின்னர்தான், “அவர்கள் சமத்துவம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் அல்லர்” என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள் என்பதை ஆலோசித்துப் பார்ப்பவர்கள் எவரும், இந்து மதம் இருக்க வேண்டும் என்று சொல்லமாட்டார்கள். இந்து மதத்தை வைத்துக் கொண்டு ஜாதிக் கொடுமைகளை ஒழிக்கலாமென்றாவது,
சமத்துவம் பெறலாம் என்றாவது சொல்லவும் முன் வரமாட்டார்கள்.
இன்னும் அந்த “அகில இந்திய வருணாச்சிரம சுயராஜ்ய சங்க மகா
நாட்டில்” மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது.
“தீண்டத்தகாதவர்களின், வர்ணாச்சிரமதர்மத்திற்கு விரோத மான தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதற்காக நாடெங்கும் உபதேசிகள் பலரை அனுப்ப வேண்டும்”
என்பதாகும்.
இத்தீர்மானம் எதற்காக என்று யோசித்துப்பார்த்தால் உண்மை விளங்காமல் போகாது. தீண்டத்தகாதவர்களின் சுயமரியாதை உணர்ச்சியை சமதர்ம உணர்ச்சியை அடக்கி அவர்களை இந்து மதத்தவர்களாக- அதாவது அடிமைகளாக - பாவிகளாக - சண்டாளர்களாக - மிருகம் போன்றவர்களாக
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இருக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டது தானே ஒழிய வேறில்லை என்பது நிச்சயமாகும்.
இந்த மாதிரி இன்னும் வருணாச்சிரம தர்மப்பிரசாரம் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் எப்படி சுயராஜ்யம் நியாயமாக நடக்க. முடியும்? என்று யோசித்துப் பார்க்கவேண்டுகின்றோம். இத்தகைய வருணாச் சிரம தரும மனப்பான்மையை மாற்ற திரு. காந்தியாலாவது அல்லது மற்ற எந்த தேசீயவாதிகளாலாவது முடிந்ததா? என்று கேட்கின்றோம். இம் மாதிரி யான ஜாதி வருணாச்சிரம தருமக் கொடுமைகளையும், இக்கொடுமை களுக்குக் காரணமாக இருக்கும் மதங்களையும், ஒழித்தால்தான் நாம்
சமத்துவம் பெறமுடியும்; நாம் ஒற்றுமையடைய முடியும்; நாம் ராஜ்ய பாரத்தை நீதியோடு - சமாதானத்தோடு - எல்லா மக்களும் சுகமடையும்படி நடத்த முடியும் என்று கூறுகின்றவர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்லும் கூட்டம் மெஜாரிட்டியாக இருக்கும் ஒரு தேசம் எப்படி முன்னேற்றமடைய முடியும்? அத்தேசத்தில் உள்ள - கொடுமைப் படுத்தப்படுகின்ற மக்கள் - சிறுபான்மைச் சமூகத்தினர் எப்படி சமஉரிமை பெற்று எதை எப்படி அனுமதிக்க முடியும்? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
நமது நாட்டிலேயே பிறந்து, நமது நாட்டிலேயே வளர்ந்து, நமது நாட்டிலேயே வாழும் மக்களைக் கொடுமைப்படுத்தும் வருணாச்சிரம தர்மிகளாகிய சகோதரத் துரோகிகளை அடக்கமுடியாமல் - அவர்களுடைய செல்வாக்கை ஒழிக்க முடியாமல் - அவர்களுடைய மதங்களையும், சாஸ்திரங் களையும் சுட்டுப் பொசுக்க முடியாமல், அப்படிச் செய்வதற்கும் மன மில்லாமல் இருக்கின்ற, நாம் எந்தக் காரியத்தில் தான் வெற்றி பெற முடியும்? என்று கேட்கிறோம். “சுயராஜ்யம்” “சுயராஜ்யம்” என்று சொல்லி பாமர மக்களை ஏமாற்றத்தான் முடியுமே ஒழிய வேறு ஒன்றும் முடியாது என்று உறுதியாகக் கூறுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.011932
குடி அரசு - 1932 M 36
ஹாதி மகாநா௫கள்
நமது நாட்டில் சிறிது அரசியல் உரிமை கிடைத்ததன் பலனாகவும், அரசியல் கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்பட்டதன் பலனாகவும், கல்வி, அரசாங்க உத்தியோகம், ஸ்தல ஸ்தாபன பதவிகள் முதலியவைகளில் முன்னேறாமல் இருந்த ஒவ்வொரு ஜாதியினரும் விழித்துக் கொண்டனர்.
கல்வி, பட்டம், பதவி முதலியவைகளில் முன்னேறி இருக்கும் வகுப்பாரைக் கண்டு தாமும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வகுப்பு மகாநாடுகள் கூட்டவும் தங்களுக்குரிய பங்கைக் கொடுக்க வேண்டு மென்று அரசாங்கத்தைக் கேட்கவும் ஆரம்பித்தனர். பல வகுப்புகள்- அதாவது பல ஜாதிகள் உள்ள ஒரு தேசத்தில் அதிகாரம், பட்டம், பதவி முதலியவைகளில் எல்லா வகுப்புகளுக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என்று கேட்பதும் அதற்காகப் போராடுவதும் நியாயமேயாகும்.
இந்தக் காரணங்களுக்காக நமது நாட்டில் வகுப்பு மகாநாடுகள் கூட ஆரம்பித்த காலத்தில், எல்லாவற்றிலும் முன்னேற்றமடைந்து தேசத்தில் ஆதிக்கம் பெற்று மற்ற வகுப்புகளை எல்லாம் தாழ்ந்த வகுப்புகளாக வைத்து தமது வகுப்பை மாத்திரம் உயர்ந்த வகுப்பாக வைத்துக் கொண்டிருக்கும் சிறுபான்மைக் கூட்டத்தாராகிய பார்ப்பனர்கள் இம்மகா நாடுகளைக் கண்டித் தனர். பார்ப்பனர்களின் பேச்சை நம்பிய பார்ப்பனரல்லாதார் சிலரும் இந்த வகுப்பு மகாநாடுகளைக் கண்டித்தார்கள். வகுப்பு மகாநாடுகள் கூட்டுவது தேசத் துரோக மென்றும் வகுப்பு வாதத்தை வளர்ப்பதாகுமென்றும், தேசீய ஒற்றுமைக்கு விரோதமென்றும் பலமாகப் பிரசாரம் பண்ணினார்கள். ஆனால் எந்த ஜாதியினரும், இந்த பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இப்பிரசாரம் அரசாங்கத்தின் அதிகாரம், பட்டம், பதவி இவைகளைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு கூட்டத்தார் தங்கள் ஆதிக்கத்திற்குக் கெடுதிவராம லிருக்க, அதாவது இவைகளில் மற்ற சாதியினர்களும் பங்குக்கு வராமலிருக்.
கச் செய்யும் சுயநலப்பிரச்சாரம் என்பதை அறிந்து கொண்டனர். ஆகையால் இத்தகைய பிரச்சாரத்தைக் கண்டு ஏமாறாமல் தங்கள் தங்கள் வகுப்பு முன்னேற்றத்தில் கவலைக் கொண்டு மகாநாடுகளைக் கூட்டி, அவர்களைக்
கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலியவைகளில் முன்னேறி மற்ற உயர்ந்த வகுப்பினரைப் போல ஆகவேண்டுமென பிரச்சாரம் பண்ணினார்கள்.
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இவ்வாறு முயற்சி செய்ததின் பலனாக ஒவ்வொரு வகுப்பினரும் விழிப்படைந்து, நாகரீகம் பெற்று தேசத்தில் எல்லா விஷயங்களிலும் தங்களுக்கும் சமஉரிமை இருக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். வகுப்பு மகாநாடுகள் தேச ஒற்றுமைக்கு விரோத மானவை என்று கூறிக் கொண்டிருந்த பார்ப்பனரல்லாதார்களும், இப்பொழுது இவைகளை ஆதரிக்கவும், வகுப்பு முன்னேற்றத்தில் கவலைக் கொள்ளவும் ஆரம்பித்துவிட்டார்கள். வகுப்பு மகாநாடுகளைக் கூட்டுவோர் தேசத் துரோகிகள் என்று சொல்லிப் பலமாகக் கிளர்ச்சி செய்த பார்ப்பனர்களும், இதுவரையிலும் தாங்கள் அனுபவித்து வந்த ஏகபோக உரிமைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை அறிந்து, பார்ப்பன மகாநாடுகளும், வருணாச்சிரம தரும மகாநாடுகளும், சனாதன தரும மகாநாடுகளும் கூட்டித் தங்களுடைய ஆதிக்கம் குறையாமல் இருப்பதற்கு வழியும், பாதுகாப்பும் தேடுகின்றனர். சுருங்கக் கூறினால் தற்சமயத்தில் நமது நாட்டு அரசியல் வாதிகளில் “ஜாதி” அபிமானம் இல்லாத தலைவர்களே இல்லை யென்று கூறிவிடலாம்.
சமீபத்தில் நடந்த வட்ட மேஜை மகாநாட்டிற்குச் சென்ற இந்திய பிரதிநிதிகளும், ஜாதியின் பேராலும், மதத்தின் பேராலும் சென்றுதவைகளை மனதில் வைத்துக்கொண்டே, அதாவது தங்கள் ஜாதிக்கும், மதத்திற்கும் சரியான பாதுகாப்புகள் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனேயே பேசினார்கள்; காரியங்களில் கலந்து கொண்டார்கள் என்பதை யாரும் மறுக்க
முடியாது.
எல்லா ஜாதிகளும், கல்வியிலும், அறிவிலும், நாகரிகத்திலும் முன்னேற்றமடைந்து சமநிலைக்கு வரவேண்டும். எல்லா ஜாதிகளும் அரசாங்க உத்தியோகப் பதவிகளிலும், கெளரவப் பதவிகளிலும் சமபங்கு பெற்று முன்னேற வேண்டும். மலை உச்சியில் இருக்கிற ஜாதிகளும், மலையின் நடுத்தளங்களில் வாழும் ஜாதிகளும், மலைக் குகைகளில் வாழும்
ஜாதிகளும், மலைச் சரிவுகளில் வாழும் ஜாதிகளும், மலை அடிவாரத்தில்
வாழும் ஜாதிகளும், சமமான ஒரே இடத்தில் வந்துஒரேநாகரிகம்,ஒரே விதமான கல்வி ஒரே விதமான சுதந்திரம் ஒரே விதமான ஒழுக்கம் முதலியவைகளைப் பெறுவார்களானால், அவர்களிடமிருந்த ஜாதி வித்தியாசம், கொள்கை வித்தி யாசம் முதலியவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து எல்லோரும் ஒரே சகோதரர்களாக ஆக முடியும் என்ற கருத்தைக் கொண்டுதான் நாம் ஆதி
முதல் ஜாதி மகாநாடுகளை ஆதரித்து வருகிறோம். ஒவ்வொரு ஜாதியும் தாம தாம் முயற்சி செய்து சம சுதந்திரம் பெறுவதன் மூலம் ஜாதி ஒழியும் என்னும் நோக்கத்தோடுதான் நாம் ஜாதி மகாநாடுகளுக்கு ஆதரவளிப்பதுமாகும். எண்ணற்ற ஜாதிகளும் கணக்கற்ற கொள்கைகளும் உள்ள ஒரு தேசத்தில் இவைகளை ஒன்றுபடுத்துவதற்கு இதுவே சிறந்த வழியாகும் என்பது அறிவுடையவர்கள் ஒப்புக்கொள்ளக் கூடியதேயாகும். இவ்வாறில்லாமல்
குடி அரசு - 1932 M 38
வகுப்பு வாதம் கூடாது, ஜாதி மகாநாடுகள் கூடாது, வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் உதவாது என்று சொல்லும் தேசாபிமானப் பாசாங்கு பேச்செல்லாம். தற்போது எல்லாவற்றிலும் ஆதிக்கம் பெற்றிருக்கும் உயர்ந்த ஜாதிக்காரர்கள். என்பவர்கள் எப்பொழுதும் ஆதிக்கம் பெற்றிருக்கவும், கொடுமைப் படுத்தப்பட்டிருக்கும் தாழ்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் எப்பொழுதும் கொடுமைக்குட்பட்டு அடிமையாகவே வாழ்ந்து கொண்டிருக்கவும் செய்யப்
படும் சூழ்ச்சிப் பிரசாரமேயாகும். வேறு யோக்கியமான பிரசாரமென்றோ, நாணயமான பிரசாரமென்றோ சொல்லமுடியாதென்றே கூறுவோம்.
ஆனால் தனிப்பட்ட ஜாதியாச்சாரங்களும், மதக் கொள்கைளும் ஒழிந்து, தங்களுக்கு மேற்பட்டவர்களென்றும் இல்லாமல் கீழ்ப்பட்டவர்க எளென்றுமில்லாமல் எல்லா மக்களும் சமசுதந்தரம் பெறவே ஜாதியின் பெயரால் மகாநாடுகள் கூட்டப்படுகிறது என்னுங் கொள்கை கைவிடப் பட்டாலும் பழய ஜாதியாச்சாரங்களையும் கொள்கையாச் சாரங்களையும் புதுப்பித்து தங்கள் ஜாதி எப்பொழுதும் தனிப்பட்ட ஜாதியாகவே இருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் ஜாதி மகாநாடுகள் கூட்டப்பட்டாலும் அது தேசத்தை இன்னும் அடிமை நிலையிலும், ஒற்றுமையற்ற நிலையிலும் கொண்டு போய்ச் சேர்க்குமேயொழிய வேறு ஒரு பலனையும் தராது என்பது
நிச்சயம்.
ஆனால் இப்பொழுது நமது நாட்டில் நடைபெற்று வருகின்ற ஜாதி மகாநாடுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் சீர்திருத்தத்துக்குரிய பேச்சு
களும் தீர்மானங்களுமே நடந்து கொண்டு வருகின்றன. ஒவ்வொரு ஜாதி மகாநாடுகளிலும் ஆண் பெண்கள் எல்லோருக்கும் கட்டாயமாகக் கல்வி போதிக்கப் படவேண்டுமென்றும், தங்கள் ஜாதிக்குள்ளிருக்கும் உட்பிரிவு களை ஒழிக்க வேண்டுமென்றும், அவர்களுக்குள் கலப்பு மணங்களும். சமபந்தி போஜனங்களும் செய்யப்பட வேண்டுமென்றும் பெண்கள். சுதந்திரத்தை ஒப்புக் கொண்டு அவர்களுக்கு விதவா விவாக உரிமை, சொத் துரிமை, வயது வந்தபின் மணஞ் செய்து கொள்ளும் உரிமை முதலியவை களைக் கொடுக்க வேண்டுமென்றும், கல்யாணம் முதலிய சடங்குகளில் செலவுகளைக் குறைக்க வேண்டுமென்றும் பேசப்பட்டும் இவை சம்பந்தமான தீர்மானங்கள் செய்யப்பட்டுமே வருகின்றன. மதப் பைத்தியமும், ஜாதிப்பித்
தும் பிடித்த சில தலைவர்களால் கூட்டப்படும் சில ஜாதி மகாநாடுகளைத் தவிர பெரும்பாலான எல்லா மகாநாடுகளிலும் மேற்கூறியவை சம்பந்தமான தீர்மா னங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான தீர்மானங்கள். ஜாதி மகாநாடுகளில் நிறைவேற்றப்படுவதற்கு காரணம் நமது சுயமரியாதை இயக்கமேயாகும்.
ஆனால் சில ஜாதி மகாநாடுகளில் நடைபெறும் சில பிற்போக்கான செயல்களையும், பேச்சுகளையும் பற்றி மாத்திரம் நாம் எடுத்துக் காட்டிக்
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கண்டிக்காமல் இருப்பதற்கில்லை.அதாவது சில ஜாதி மகாநாடுகளில் அந்த
ஜாதிக்காரர்கள் தங்களுடைய பழம் பெருமைகளை எடுத்துப் பேசாமலிருப் பதில்லை.தங்களை க்ஷத்திரியர்களென்றும், வைசியர்களென்றும், பிராமணர்: களென்றும் சொல்லிக் கொண்டும் இம்மாதிரி அரசாங்கத்தாரும் தங்கள் ஜாதிகளை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் பேசுகின்றனர், தீர்மானங் களும் நிறைவேற்றுகின்றனர். இவர்கள் கூற்றுக்கு ஆதாரமாக ஜாதி மதங் களை நிலைநிறுத்தி மக்களைத் தனித்தனி வகுப்பாகப் பிரித்து வைத்து எல்லா ரையும் தமக்கு கீழ் அடக்கி வைத்து ஆதிக்கம் செலுத்துவதற்காகப் பார்ப்ப னர்களாலும், பார்ப்பனர்களின் சாவகாசத்தாலும் ஆரியர்களின் நாகரீகமே உயர்ந்தது என்று எண்ணிய தமிழ்ப் புலவர்களாலும் ஏற்படுத்தப் பட்டிருக்கும் புராணங்களையும், கதைகளையும் காட்டுகின்றனர். தங்கள் தங்கள் ஜாதிக்குத் தனித் தெய்வங்கள் உண்டென்றும் தனிக் கொடிகள் உண்டென்றும் கூறி அவைகளையும் அனுஷ்டிக்கும் படியும், அவைகளுக்குப் பூசை, திருவிழா முதலியன செய்யும்படியும் தூண்டுகின்றனர். இவ்வாறு செய்வதனால் அந்த. ஜாதிகள் தேசமக்களுடன் சமநிலைக்கு வரமுடியுமா? என்றுதான் நாம் கேட்கிறோம். மக்களை முட்டாள்களாக ஆக்கி அவர்கள் உழைப்பினால் வரும் செல்வங்களைப் பயனற்ற வழிகளில் செலவு செய்து தரித்திரர்களாக்கி வைக்கும் தெய்வ நம்பிக்கையையும், தெய்வ வழிபாட்டையும் வற்புறுத்து வதனால் என்ன பலன் உண்டாகப் போகின்றது? இதுவரையிலும் நமது நாட்டு
மக்கள், தெய்வங்கள், திருவிழாக்கள், பூசைகள் இவைகளுக்காக செலவழித்த பொருள்கள் எவ்வளவு? அவைகளால் நமது நாட்டிற்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்று ஆலோசித்துப் பார்க்குமாறு இப்பிற்போக்காளர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய கொள்கைகளை அனுசரிக்க முற்படும்
ஜாதிகள் இதுவரையிலும் ஒதுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டுத் தனித்துக் கிடந்தது போலவேதான் இன்னும் கிடக்கவேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.
ஆகையால், உண்மையிலேயே தங்கள் ஜாதி முன்னேற்றம் அடைய வேண்டும் என்று எண்ணி ஜாதி மகாநாடுகளைக் கூட்டுகின்ற தலைவர்கள். பரந்த நோக்கமும், சிறந்த கொள்கையும், சுயமரியாதை உணர்ச்சியும் உடையவர்களாய் இருக்க வேண்டும். தனிப்பட்ட ஜாதியாசாரங்களையும், கொள்கையாசாரங்களையும் ஒழித்து உலக சகோதரத்துவத்தை அடைவதற்கு தகுந்த பொதுவான ஆசாரங்களை உண்டாக்க வேண்டும் என்னும் நோக்க முள்ளவராய் இருக்க வேண்டும். தமக்கு மேல் உயர்ந்த ஜாதியார்கள் இருக் கிறார்கள். தமக்குக் கீழ் தாழ்ந்த ஜாதியார்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தைத் தம் ஜாதியினரிடமிருந்து அகற்றவேண்டும் என்னும் கொள்கையுடையவராயிருக்கவேண்டும். பரம்பரையாக நமது ஜாதிக்கு ஏற்பட்ட தொழிலை விட்டுவிடக் கூடாது; நமது ஜாதியினர் அனைவரும் பரம்பரைத் தொழிலையே செய்து வரவேண்டும் என்னும், மூடக் கொள்கை: யையும், பிடிவாதமான கொள்கையும் ஒழித்து, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கல்விக்கும், அறிவுக்கும், திறமைக்கும், வசதிக்கும் ஏற்ற எந்தத்
குடி அரசு - 1932 0) 40
தொழிலையும் செய்யலாம் என்ற கொள்கையையும் எண்ணத்தையும் தமது ஜாதியினர்க்கு உண்டாக்க வேண்டும் என்னும் உறுதியான அபிப்பிராய முடையவராய் இருத்தல் வேண்டும். இத்தகைய கொள்கையும், உறுதியான எண்ணமும் உள்ள தலைவர்களால் கூட்டப்படும் ஜாதி மகாநாடுகளும், ஜாதிகளுந்தான் முன்னேற்றமடைய முடியும்; சமசுதந்தரப் பந்தயப் போட்டி
யில் கலந்து கொண்டு செம்மையாக வாழமுடியும் என்று உறுதியாகக் கூறுகிறோம்.
ஆகையால், தங்கள் மதத்தையும் பழய ஆசாரங்களையும், தொழில் களையும் காப்பாற்றிக் கொண்டு சமசுதந்தரமும் பெறலாம் என்று நினைக் கின்ற வைதிக ஜாதித் தலைவர்களின் எண்ணம் பயனற்றதென்பதை உணர்ந்து கொண்டு, காலத்திற்கேற்ப மதாச்சாரம், ஜாதி ஆச்சாரம் எல்லா வற்றையும்
மாற்றிக் கொள்ளப் பின்வாங்காத தலைவர்களாலேயே ஜாதிகளும், ஜாதிக் கொடுமைகளும், மதங்களும், மதக் கொடுமைகளையும் ஒழிக்க முடியும் என்று கூறுகிறோம். இத்தலைவர்களின் முயற்சியினால் தான் நமது நாட்டில் ஐக்கியபாவம் ஏற்பட முடியும் என்றும் சொல்லுகிறோம். ஆகையால் ஜாதி மகாநாடு கூட்டுகின்றவர்கள் மேற்கூறிய சில பிற்போக்கான செயல்களும் பேச்சுகளும் இனியும் தங்கள் மகாநாடுகளில் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.01.1932.
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
திரு. வல்தைதாசு
புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர். களிடம் ஏமாறாமலிருக்கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவ ராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ., பி. எல்., அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும். சென்ற வருஷத்தில் புதுக்கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்ததாகச் சொல்லப்படும். கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள். ஆனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு. மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளேயே வசிக்கக் கூடாதென, சமஸ்தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்துவிட்டு விட்டார்கள்.
நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மை: யிலேயே அரசாங்கதின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்று தான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார். பார்ப்பனர்களைப் பாமர மக்கள். நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப்பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார். பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களைக் கண்விழிக்கச் செய்து பகுத்தறிவுடையவராக்கப் பிரசாரம் பண்ணும் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டவராயிருந்தார். இதன் பயனாகப் புதுக்கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத்திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு, அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்
குடி அரசு - 1932 M 42
பட்டது. எப்படியோ எந்தக் காரணத்தாலோ, யார் வைத்த கொள்ளியோ வீடு வெந்து போயிற்று. அரசாங்கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை.
ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக்கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம்
என்று வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற் றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது
இயக்கக் கொள்கைகள் அதிதீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம். இறுதி யாகத் திரு.வல்லத்தரசு அவர்களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றி
யது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கையாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட்டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ்தானத்தில், சமதர்ம நோக்க முடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேரு மென்பதைச் சிந்தித்துப் பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.011932
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பெண் போலீஸ்
இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரிக்ஷார்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப்படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தியோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்க ளென்பதே.
“போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்”
என்று போலீஸ் தலைமை சூப்பரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-1-32 ௨ வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது.
இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சி யையும், பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு, மட்டற்ற மகிழ்ச்சியையும் உண்டாக்குமென்பதில் சிறிதும் ஐயமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம். ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கிய வர்கள், அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள் என இதுவரை மதம், கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவை களின் பேரால் அடக்கி, ஒடுக்கி, மிதித்து, ஆழ்த்திக் கொண்டிருக்கும் சுயநலக் கூட்டத்தார்களுக்கு, வைதீக வெறியர்களுக்கு தலையில் இடி விழுந்தாற்
போல் தோன்றலாம். தங்கள் மதமே அழிந்து விட்டதாகக் கருதலாம். ஆனால் கால மாறுதலையும், உலக முற்போக்கையும், பெண்களது அதி தீவிர உணர்ச்சி களையும், ஒருக்காலும், யாராலும் தடுக்கவியலாது என்பதை அவர்கள். அறியவேண்டும்.
“அடுப்பங்கரையே கைலாசம், ஆம்படையானே சொர்க்கலோகம்” என்ற எண்ணத்தில் பெண்களை வைத்திருந்த காலம் போய் இன்று பெண் உலகம் தனக்கு ஆடவரைப் போல எல்லா உரிமைகளும் வேண்டும், தாங்கள்
குடி அரசு - 1932 M 44
எவ்வகையிலும் ஆடவரினும் தாழ்ந்தவரல்லர் இயற்கையாய் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுதந்திரங்களை நல்கவேண்டுமென வீரமுழக்கம் செய்கிறார்கள். பெண்கள் உரிமை இயக்கம் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றே வருகின்றது, பெண்கள் படிக்கலாகாது.படித்தால் கெட்டு விடுவார்கள். என்று வாய் வேதாந்தம் பேசிய சோம்பேறிக் கூட்டத்தார் பெண்கள் படித்துப் பட்டம் பெற்று டாக்டர்களாகவும், உபாத்தினிகளாகவும், தாதிகளாகவும், வக்கீல்களாகவும் இருப்பதைக் கண்டு என்ன செய்து விட்டார்கள். அஃதே. போல் சாரதா சட்டமோ, இளமை மண தடுப்புச் சட்டமோ பிரஸ்தாபத்திற்கு வந்தபோது “மதம் போச்சு” என்று கத்தியது தவிர கண்ட பலன் ஒன்று மில்லை. அது போலவே இன்றும் “பெண்களாவது போலீசில் சேரவாவது”' என்றும் சொல்லலாம்.ஆனால் பெண்கள் அவர்களது சுயநல எண்ணத்தை மெய்ப்பிக்கத் தக்கவாறு நடந்து கொள்ளல் வேண்டும். சுமார் 2 வருஷ காலத்திற்கு முன்பிருந்தே அகில இந்திய மாதர் சங்கத்தார் பெண்கள்: போலீசில் சேர்க்கப்படல் வேண்டுமென வற்புறுத்தி வருகிறார்கள். மேல் நாடுகளில் பெண் போலீசார் துப்பறிவதிலும் குற்றங்களைக் கண்டுபிடிப்ப
திலும் அதிக சாமர்த்தியம் வாய்ந்திருக்கிறார்களென்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகையால் இன்று தங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக் கின்ற பெண் மக்கள், தங்கள் சுதந்திரத்திற்காக வாதாடும் பெண்மக்கள், தங்கள். சமத்துவத்திற்காக விழையும் பெண் மக்கள் சர்க்காரால் கொடுக்கப்பட்ட இவ் வரிய சந்தர்ப்பத்தை என்ன செய்யப் போகின்றார்கள்?
“சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினிலே பெண்கள் செய்ய வந்தோம்”
என்ற கவி பாரதியாரின் வீர மொழிகளை மெய்ப்பிப்பார்களா?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.011932
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
. Qa. ராமசாமியிண் ஈளிப்ட் கமுதம்
“நாங்கள் பார்த்த கப்பல்”
சூயஸ் துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பலை 29 - 12 - 31 தேதியில் நாங்கள் பார்த்தோம். அதன் பெயர் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” (Empressof
Britain) நேற்றைக்கு முந்திய தினம் கனடியன் பசிபிக் ரெயில்வே கம்பெனி யாரால், அக்கப்பலின் மேல் தளத்தில் ஒரு விருந்து கொடுக்கப் பட்டது. அது
சமயம் மேன்மை தங்கிய பிரதம மந்திரி அவர்களும் மேன்மை தங்கியஹை. கமிசனர் அவர்களும் பிரதம விருந்தினராயிருந்தனர். மேற்படி கப்பலைப் பற்றிய சில ருசிகரமான விவரங்கள் கீழ்வருமாறு.
உலக அதிசயக் கப்பல்
உலகத்திலே அதிசயமானாதும், பெரியதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கே பெருமை தரக் கூடியதுமான, கனடியன் பசிபிக் போக்குவரவுக் கப்பலான “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” என்ற இந்தக் கப்பலைத் தவிர வேறு ஒன்றையும் கூற முடியாது. பிரிட்டிஷார் கடல் வியாபாரத்தில் மிகவும் கியாதி வாய்ந்தவர்.
கள் என்ற பரம்பரை புகழை இந்த அதி உந்நத கப்பல் ஒருபடி அதிகம் உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம். இது 800 அடி நீளமும் 100 அடி அகலமும் உள்ளது. மணி 1க்கு 20மைல் வேகம் போகக்கூடியது. மொத்தம் 42,500 டன் எடையுள்ளது. பிரகாசமான வெண்மை வர்ணத்தால் பூசப்பட்டும் மேல் தட்டின் பகுதிகளில் நீலநிறப் பட்டைகள் அழகாகத் தீட்டப்பட்டும், இதனை ஊடுருவிச் செல்லும் மூன்று பெரிய புகை போக்கிகள் மங்கலான பழுப்பு நிறத்தோடும் திகழ்வது கண்ணைக் கவரத் தக்க காட்சியாகும். அதன் அடிப்பாகத்தில் தீட்டப் பெற்றுள்ள பச்சை நிறப் பட்டைகள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அலைகளின் நிறத்தைத் தோற்கடிப்பனவாய் இருக்கின்றன. மேல்தளத்திலிருந்து சுமார் 208 அடி உயரத்தில் பறக்கும் கொடிகளும், கப்பல் அசையும்போது காற்றினால் அலைக்கப்பட்ட அக்கொடிகள் அசையும் கம்பீரமும் தூரத்திலிருந்து காண்போருக்கு, ஓர் மிகப் பெரிய, உன்னத, நவீன ராஜ மாளிகையே தண்ணீரில் மிதப்பது போல் தோன்றும். “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” முதல் வகுப்புப் பிரயாணிகள் மூன்றாம் அறையும், 3ம் வகுப்பும் உடையதாயிருக்கிறது.இதை உண்டாக்கும் போதே ஒன்றுமட்டும் முக்கியமாய்
குடி அரசு - 1932 0 46
கவனிக்கப்பட்டது. அதாவது, மற்ற எந்தக் கப்பலிலும் இல்லாத மாதிரி ஒவ்வொரு பிரயாணிகளுக்கும் அதிகமான இடவசதி அளிக்கத் தக்கதாய் இருக்க வேண்டுமென்பதே. மற்ற அதிக எடையுள்ள கப்பல்களைக்
காட்டிலும், இதில் குறைந்த பிரயாணிகளே இருக்கக் கூடியதாயிருக்கிறது.
சுமார் 1195 பிரயாணிகள் மட்டும் இதிலிருக்கலாம். ஆனால் கப்பல் மாலுமிகள்
714 பேர் இருக்கிறார்கள்.
ஒன்பது அடுக்குகள்
பிரயாணிகளது உபயோகத்திற்காக ஒன்பது தட்டுகள் விடப்பட்டிருக் கின்றன. சலூன் பிரயாணிகளின் உபயோகத்திற்காக 11 பொது அறைகளும், ஒரு சிசுபோஷண சாலையும், யாத்ரீகர்களுக்கு 3 பொது அறையும், ஒரு சிசு போஷண சாலையும் 3ம் வகுப்புப் பிரயாணிகளுக்கு 2 பொது அறைகளும், ஒரு சிசு போஷண சாலையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஏ தட்டிலும், பி தட்டிலும் பிரயாணிகள் உலாவவும் காற்று வாங்கவும்
தகுந்த திறந்த வெளிகள் இருக்கின்றன. மற்றும் ஏ தட்டில் ஒரு பாகம் நடனத் திற்காக ஒதுக்கிவிடப் பட்டிருக்கிறது. பி தட்டு மிகவும் அலங்கார மாகவும் முதல் வகுப்புப் பிரயாணிகள் செளகரியமாய் இளைப்பாறத்தக்க தாயும் இருக்கிறது. சலூன் பிரயாணிகளின் செளகரியத்தை முன்னிட்டு டென்னிஸ் முதலிய விளையாடுமிடங்கள் கொண்ட தட்டு ஒன்றும் இணைக்கப்பட்டி
ருக்கிறது. டி தட்டில் இரண்டு பெரிய சாப்பிடும் அறைகளும் அதிலிருந்து ஏணி வழியாக மேலே எப் தட்டுக்குச் சென்றால் அங்கு நீந்தும் குளமும்
சிற்றுண்டிச் சாலையும், தேகாப்பியாச இடங்களும் மனோரம்மியமான காட்சி யளிப்பனவாயிக்கின்றன.
நவீன தோற்றங்கள்
ஜனங்கள் செளகரியமாய் உட்கார்ந்து பார்க்கத்தக்க காலரிகள் நிறைந்த டென்னிஸ் பந்து விளையாடுமிடமும் அதன் சமீபத்திலேயே சிற்றுண்டிச் சாலையும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. எம்ப்ரஸ் ஆப் பிரிட்டனின் இன் னொரு முக்கியக் காட்சி என்ன வெனில் ஒவ்வொரு தட்டிலுள்ளவர்களும் நீந்துவதற்குக் கொண்டுள்ள ஆர்வமே தண்ணீர் மட்டத்தில் அவர்கள் எல்லோரும் நீந்துவது கண்டு களிக்கவேண்டிய ஆச்சரிய காட்சியேயாகும். கைகால் முதலிய அங்கங்களைப் பரீட்சை செய்து வேண்டிய சிகிச்சை செய்ய ஏற்பட்ட தனி அறைகள் பி.தட்டின் மத்தியில் இருக்கிறது.ஜி. தட்டில் பற்பல புதிய காட்சியளிக்கும் பல அறைகள் சுமார் 30 அடி அகலத்தில் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேற்சொன்ன பல நவீனங்களோடு எப். தட்டில் டர்க்கிஷ் பாத் (Turkish Bath) என்று சொல்லப்படும் ஒரு வித ஸ்நானத்திற்குரிய சாதனங்களெல்லாம் அமைக்கப் பெற்றிருக்கின்றன.
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
நூதன அலங்காரம்
இத்தகைய பெரிய கப்பலின் அலங்காரம் மிகவும் நூதனமானவை.. ஒவ்வொரு இடத்திலும் அலங்காரங்கள் ஒழுங்காயும், நவீனமாயும் மேனாட்
டுப் புராதன சித்திர வேலைப்பாட்டுடன் நவீன கொள்கைகளைப் புகுத்தி எங்கும் வளைவுகளாகவும், கோணங்களாகவும், சரிகோடுகளாகவும் உள்ள அலங்காரம் பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.
பல கற்றுத்தேர்ந்த நிபுணர்களின் மேற்பார்வையில் எவ்வித குறை பாடுமில்லாது செவ்வனே அலங்கரிக்கப்பட்ட தோற்றம் போற்றக் கூடியதே.
எம்பரஸ் அறை
முதல் முதல் கண்களைக்கவர்வது எம்பரஸ் அறை என்ற நடன அறையேயாகும். இதை மிகவும் பிரக்யாதி பெற்ற எம்பயர் நடன சாலைக்கு அடுத்தபடியாகச் சொல்லலாம். இருண்ட நீலநிற மேற்கூரையும், அதன் வழியாக மின்சார சாதனத்தால் தோன்றி மறையும் நட்சத்திரங்களின் ஒளியும், அவற்றைச் சுற்றிய வெண்ணிறமான சுவராகச் சதுரத் தூண்களும், மெல்லிய சிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்தம்பத்தின் பீடங்களும் ஜரிகை வேலைப் பாடமைந்த இளஞ்சிவப்பான வெல்வட் பட்டினால் தொங்கவிடப் பட்ட ஜன்னல் திறைகளும், மற்றொரு மூலையில் மேடையின் பின்புறம் ஜன்னல் திறைகளையும் தோற்கடிக்கக் கூடிய சிங்காரத்தோடு தொங்கவிடப் பட்ட திறையின் பிரகாசமும் ஒருங்கே சேர்ந்து மனோரம்மியமான காட்சியளிப் பதோடு, இஃதோர் வாத்தியகாரர் மேடையோ, அன்றி பேசும் படக்காட்சி சாலையோவென்ற ஐயத்தை உண்டாக்காதிராது.
அடுத்தாற்போல் பசும் சலவைக்கல் தூண்களும், கண்ணாடிவில் கூரையும் கொண்டு, சிவப்பும் நீலமும் கலந்த வெல்வட் பட்டுத் திறைகள். தொங்கவிடப்பட்டதுமான இளைப்பாறும் கூடம் காணப்படுகிறது.
சாப்பாடு மண்டபமும் - நீந்தும் குளமும்
விலையுயர்ந்த மரத்தினால் தூண்களே இல்லாது நுண்ணிய வேலைப் பாடுகளமைந்து இரண்டு பாகமாக தடுக்கப்பட்ட சாப்பிடும் மண்டபத்தின் சுவற்றில் காணப்படும் சித்திரங்கள் ஆச்சரியப்படத்தக்கன வாயிருக்கின்றன. ஒரு புறம் புஷ்பங்கள், பறவைகள் முதலிய சித்திரங்களும் மற்றொருபுறம் வானமும், நட்சத்திரங்களைப் போலும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 40 அடி அகலமும் தூண்கள் தாங்கிய கண்ணாடிக் கூரையும், பளிங்கு போன்ற தண்ணீரும் கொண்ட நீந்தும் குளம் மிகவும் அழகானது. அக்கண்ணாடிக் கூரையின் வழியாக செயற்கை சூரிய ஒளி செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பாகத்திலிருந்து படிக்கட்டுகளின் வழியாக மேல் தளத்துக்கும், சிற்றுண்டிச்
குடி அரசு - 1982 ) 48
சாலைக்கும், உடைமாற்றிக் கொள்ளும் அறைக்கும் செல்ல வசதி ஏற்படுத்தப்
பட்டிருக்கிறது.
ஆகாயவசனி
எம்பரஸ் ஆப் பிரிட்டனில் பிரயாணிகள் இரண்டு கண்டத்திலிருந்தும் ஆகாயவசனியின் உபயோகத்தால் ஆனந்தமடைகிறார்கள். சேமிக்கப் பட்ட ஓரிடத்திலிருந்து சுமார் 10 அல்லது 12 ஒலி பெருக்கும் கருவியின் மூலம்,
மேல் தட்டுகளுக்கும் முக்கியமான பொது அறைகளுக்கும் நிகழ்ச்சிகள் கேட்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
சுத்தக் காற்று
எம்பரஸ் ஆப் பிரிட்டனில் உள்ள பிரயாணிகள் வெளிவேவிடும்
சுவாசக் காற்று ஒவ்வொரு 7 நிமிஷத்துக்கு ஒரு தரம் சுத்தமாக்கப்பட்டு, புதிய ஆரோக்கிய காற்று நிரப்பப்படுகிறது. ஓர் நூதன சாதனத்தால் கடல் காற்று ஓரிடத்தில் சேகரிக்கப்பட்டு பின்னர் காலநிலைக்குத் தக்கவாறு உஷ்ணமோ அல்லது குளிர்ச்சியோ ஆக்கப்பட்டு, பொது அறைகளிலும், மண்டபத்திலும் பொருத்தியிருக்கும் விசைகளை அழுத்துவதன் மூலம் எல்லாவிடங்களிலும்
சுத்தக் காற்று நிறப்பப்படுகிறது. மற்றும் தனிப்பட்ட நபர்களது விருப்பத் திற்கேற்றவாறு இளங்காற்றாகவோ அல்லது பெருங் காற்றாகவோ, தாங்கள் விரும்பிய அறைகளுக்கும் இடத்திற்கும் வரவழைத்துக் கொள்ளலாம்.
இணையற்றது
எம்ப்ரஸ் ஆப் பிரிட்டன் எல்லா வகையிலும், இணையற்றதாகும். 42500 டன் எடையுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இக்கப்பல், பிரிட்
டிஷ் ஏகாதிபத்திய துறைமுகங்களின் மத்தியில் செல்லும் கப்பல்களெல் லாம் பெரியது, ஐரோப்பாவுக்கு சென்ட் லாரன்ஸ் வழியாகப் பிரயாணம் செய்யும் கப்பல்களிலெல்லாம் பெரியது, உலகப் போக்குவறவு கப்பல்களிலே பெரியது, லண்டன் துறைமுகத்திலேயே பெரியதென பதிவு செய்யப்பட்டது, மகா
யுத்தத்திற்குப் பிறகு இங்லாந்திலோ, அமெரிக்காவிலோ இது போன்று கட்டப் படாத இணையிலாதது. சென்ட் லான்ரஸ் வழியிலேயே அதிக வேகமானது.
இக் கப்பலின் முக்கிய அம்சமாக கவனிக்கப்பட்ட கரைக்கும் கப்பலுக்கும் டெலிபோன் சம்பந்தம் இணைக்கப்பட்டது. ராயல் கழகத்தினராலேயே அலங்கரிக்கும் பெருமை வாய்ந்த முதல் கப்பல் இது ஒன்றே. இன்னும் சில்லரை விஷயங்களைப் பற்றி எழுத வேண்டுமானால் விரிந்து கொண்டே போகும். மேற்கூறப்பட்ட காரணங்களால் இக்கப்பலின் தனிச் சிறப்பு தெள்: ளென விளங்குகிறது.
குடி அரசு - பயணக் கடிதம் - 24.011932
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சமதர்மப் யோர்
- தேசீயத்துரோகி
டில்லியில் உள்ள போலீஸ் சீனியர் சூப்பரின்டென்ட் அவர்கள். போலீஸ் இலாகாவில் பெண்களையும் சேர்க்க முயற்சி செய்கிறார். “போலீஸ் உத்தியோகத்திற்கு பெண்கள் தேவை” என விளம்பரங்களும் வெளியிட்டி ருக்கிறார். இந்த நிகழ்ச்சியை நாம் பாராட்டுகிறோம்.எதற்காகப் பெண் போலீஸ். தேவைஎன்று சொல்லுகிறார் என்பதைப் பற்றிநமக்குக் கவலை இல்லை.ஆனால் இது பெண்களின் சமத்துவத்திற்கு ஏற்ற செய்கையாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
சென்னையில் சென்ற வருஷத்தில் கூடிய பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்கு போலீஸ் உத்தியோகம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக் கப்பட்டிருப்பதாக நமது ஞாபகம்.டாக்டர். முத்துலட்சுமி அம்மாள் அவர்கள். கூட ஒரு சமயம் பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் வேண்டுமெனப் பேசியிருப்பதாக நினைக்கிறோம். பெண்மக்களும் ஆண்மக்களைப் போல் சமஉரிமை பெற வேண்டும் என்று சொல்லுகின்ற ஆண் பெண்கள் அனை வரும் டில்லி போலீஸ் சூப்பரின்டென்டின் யோசனையை வரவேற்பார்க ளென்று நம்புகின்றோம்.
சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண்களைப் போலீசார் இம்சிப்பதைப்பற்றி சீர்திருத்தமுள்ள பெண்களெல்லாம், சமத்துவம். வேண்டுகின்ற பெண்களெல்லாம் ஆத்திரப்படுகின்றார்களாம். ஆனால் இது
எதற்கு? என்பது தான் நமக்கு விளங்கவில்லை. சட்ட மறுப்பில் கலந்து கொண்டு மறியல் - ஊர்வலம் முதலியவைகளை நடத்துகின்ற ஆண்மக்கள் போலீசாரால் அடிபடுகின்ற பொழுது பெண்களும் அடிபடுகின்றது நியாயந் தானே? ஆண்மக்கள் தண்டனை அடைகின்ற பொழுது பெண்மக்களும் தண்டனை அடைய வேண்டியது முறைதானேசுகத்தில் மாத்திரம் ஆண்களுக் குள்ள உரிமைகள் எல்லாம் பெண்களுக்கும் வேண்டும், கஷ்டத்தில் மாத்திரம் பெண்களுக்குப் பங்கும், சமத்துவமும் வேண்டாமென்றால் யார். கேட்பார்கள்? சர்தார் பட்டேல் சொல்லியபடி “பிள்ளைகளைப் பெறுவதும், வளர்ப்பதுந்தான் பெண்கள் கடமை” என்பதை ஒப்புக் கொண்டு அவர்கள்.
குடி அரசு - 1932 M 50
சட்ட மறுப்பில் கலந்து கொள்ளாமல் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற நான்கு வகையான பழக்க குணங்களுடன் வீட்டிற்குள்ளேயே இருந்தால் அவர்களை யார் என்ன செய்யப் போகிறார்கள்?
ஆனால் ஆண்மக்களை ஆண் போலீசார் தடுக்கிறார்கள். பெண்: களைத் தடுக்க பெண் போலீசார் இல்லை.ஆண் போலீசார்தான் அவர்களைத் தடுக்கிறார்கள். ஆகையால் பெண் போலீசாரை நியமித்துவிட்டால் இந்த வித்தியாசமும் ஒழிந்து போகிறது.ஆகையால் பெண் போலீசார் நியமிப்பதை. நாம் மனப்பூர்வமாய் பாராட்டுகிறோம். அன்றியும் விபசாரத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்திருக்கும் இச்சமயத்தில் பெண் போலீசார் ஏற்படுவது சீர். திருத்த வேலைக்கும் சாதகமாகுமென்று சந்தோஷப்படுகின்றோம். ஆகை:
யால் பெண் போலீசாரை ஏற்படுத்துவது எப்பொழுதும் நிலையாக இருந்து வரச் சீர்திருத்தவாதிகள் முயல வேண்டும்.
o
பிப்ரவரி 4-ந்தேதி கூடும் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் சமூக சீர் திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்படுகின்றனவாம். அவைகளில் திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்களால் கொண்டுவரப்படும் தீண்டாதவர்களுக்கு இருந்துவரும் அசெளகரியங்களைப் போக்கும் மசோதாவும், தேவதாசி முறையை ஒழிக்கும் மசோதாவும் முக்கியமானவையாகும். இதில்தான் இந்திய சட்டசபையின் யோக்கியதை விளங்கப் போகிறது. ஜாதி இந்துக்கள் ஏழைத் தீண்டாதவர்களின் நன்மையை எவ்வளவு தூரம் கவனிக்கின்றவர்களா யிருக்கின்றார்கள் என்பது வெட்டவெளியாகி விடும். காங்கிரசும் மற்ற வைதீகர்களும், ஜாதி இந்துக்களும் தீண்டாதவர்களுக்குத் தனிப் பிரதி நிதித்துவம் வேண்டுவதில்லை என்று சொல்லித் தீண்டாதவர்களின் கோரிக்கையை மறுத்ததின் சூழ்ச்சி விளங்கும். “தேவதாசி முறை மதசம் மந்தமானது. அது ஒழிந்து விட்டால் இந்து மதத்திற்கு ஆபத்து” என்று சொல்லுகின்ற கூட்டத்தார் இந்திய சட்டசபையில் எத்தனைபேர் இருக்கின்றனர் என்பதும் வெளிப்படும். இப்பொழுது சட்டசபையில் திரு. எம். கே.ஆச்சாரியார், பண்டித மாளவியா போன்றவர்கள் இல்லை யென்றாலும் திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியாரும், அவர் கூட்டத்தைச் சேர்ந்த சிலரும் இருக்கின்றார்கள் என்பது நேயர்களுக்குத் தெரியும். இவர்கள். எதிர்க்காமல் இருக்க மாட்டார்கள். ஆணால் அரசாங்கத்தார் வைதீகர் பக்கம் சேருவார்களா? அல்லது நமது சுயமரியாதைத் தலைவர் திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பக்கம் சேருகின்றார்களா? என்பது நமக்கு இன்னும் விளங்கவில்லை.
இந்த சட்டசபைக் கூட்டத்தில் மற்றொரு கரடியும் வருகிறது. ஒரே கரடி பல உருவமாக வருகிறதாம். அதாவது சாரதா சட்டத்தை எடுத்து விட வேண்டும் என்றும், திருத்த வேண்டுமென்றும் பல மசோதாக்கள்.
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வருகின்றனவாம். இந்த மாதிரியான மசோதாக்களைப் பல இந்துக்கள் கொண்டு வருகிறார்களாம். ஒரு முஸ்லீம் கூட இத்தகைய மசோதா ஒன்று கொண்டு வருகிறாராம். இதுதான் ஆச்சரியமான சேதி. குழந்தைகளைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைப்படும் கிழவர்களின் “அதிர்ஷ்டம்” எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.
சாரதா சட்டத்தை ஆட்சேபித்தும் திரு. ஆர் கே. ஷண்முகம் அவர் களின் மசோதாக்களை கண்டித்தும் நாடெங்கும் உள்ள வைதீகர்கள். தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள். “நாங்கள் ஒற்றுமையடைந்து விட்டோம்.
சீர்திருத்தம் பெற்று விட்டோம். ஆகையால் முழு சுயராஜ்யம் வேண்டும்” என்று சொல்லும் காங்கிரஸ்கார்களின் உண்மைப் பேச்சு இச்சமயம் விளங்கி
விடும். ஆகையால் இந்த மசோதாக்களின் கதி என்னவாகிற தென்பதைக் கவனித்துக் கொண்டிருப்போம்.
m
திரு. காந்தி அவர்கள், தாம் ஜெயிலுக்குப் போகுமுன்பு, ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகத்தைப் பற்றி தமது “யங் இந்தியாவில்” ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அக்கட்டுரையில் “ஆலயப் பிரவேச சத்தியாகிரகஞ் செய்ய நினைப்பவர்களுக்கு, ஆலயத்தின் மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டியது அவசியமாகும். ஆலயத்தில் நம்பிக்கையற்றவர்கள் சத்தியா
கிரகஞ் செய்ய நினைப்பது தவறு. ஆலயப் பிரவேசம் ஒரு மத உரிமை. ஆகையால் இந்துக்களின் கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் பிரவேசிக்க முயற்சிப்பது தவறு. இந்த சத்தியாக்கிரகத்தில் இந்துக்கள். அல்லாதவர்கள் வெளியிலிருந்து கொண்டு உதவி புரியலாமே தவிர கலந்து கொள்ளக் கூடாது” என்ற அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன.
ஆகவே சுயமரியாதைக்காரர்கள் இந்த அபிப்பிராயத்தை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? இந்த அபிப்பிராயத்தை ஒப்புக் கொண்டு சத்தியாக்கிரகம் பண்ணுகிறவர்களுடன் எப்படிக் கலந்து கொள்ள முடியும்?
நாம் கோயில்கள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறோம். இப்படிச் சொல்லுகிற நாம் எப்படிக் கோயில்கள் மேல் நம்பிக்கை கொள்ள முடியும்? ஆகையால் தற்போது காங்கிரஸ்காரர்களால், காங்கிரஸ்காரர்களின் ஆதரவு பெற்றவர்களால் நடத்தப்படும் ஆலயப்பிரவேச சத்தியாக்கிரகம் மதப்பற்று கொண்டவர்களாலேயே நடத்தப்படுகிறதென்று தெரிந்து கொள்ளலாம். ஆகையால்தான் மத நம்பிக்கை கொண்டவர்களால், மதத்தை அறியாமல் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படும் சத்தியாக்கிரகங்களில் சுயமரியாதைக்
காரர்கள் கலக்கவில்லை. அப்படிக் கலந்து கொள்ளுவதும் தவறு என்று அபிப்பிராயப்படுகிறோம்.
குடி அரசு - 1932 M 52
v
திரு.காந்தி அவர்கள் “சட்டசபை தீர்மானங்கள் குடிஅரசின் தத்துவப் படி பொது ஜனங்களின் அபிப்பிராயத்தைச் சார்ந்ததாகவே யிருக்கும். ஆகையால் பொது ஜன அபிப்பிராயத்தை வளர்க்க வேண்டுமானால், தகுந்த முறையில் நடத்தப்படும் உண்மையான சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறு வழியில்லை” என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். பொது ஜன அபிப்பிராயப்படிதான் சட்டசபையில் சட்டங்கள் ஏற்படுத்த முடியும் என் பதையாரும் மறுக்க முடியாது.ஆனால் பொது ஜன அபிப்பிராயத்தை வளர்க்
கச் சத்தியாக்கிரகந்தான் சரியான வழி என்று சொல்லுவது தவறாகும். சத்தியாக்
கிரகஞ் செய்தால் எதிரிகள் இன்னும் பலமாக எதிர்த்து நிற்பார்களேயொழிய சாதகமாக மனந்திரும்பமாட்டார்கள். சத்தியாக்கிரகம் என்பது அகிம்சை யாகாது. ஒருவருடைய காரியங்களைத் தடுப்பது எப்படி அகிம்சையாகும்?' ஒருவருடைய காரியங்களை நடைபெற வொட்டாமல் எந்த வகையில் தடுத் தாலும் அது ஹிம்சையேயாகும். ஆகையால் சத்தியாக்கிரகத்தால் எதிர்க் கட்சியின் கொள்கை உறுதிப்பட்டு அவர்கள் இன்னும் பலமாக எதிர்த்துத்தான் நிற்பார்கள். ஆகையால் பிரச்சாரத்தாலும், பத்திரிகைகளாலும் தான் பொது ஜனங்களைத் திருப்ப முடியும். ஸ்பெயின், டர்க்கி, ரஷ்யா, பிரான்சு முதலிய தேசங்களில் நடந்த சீர்திருத்தப் புரட்சிகளுக்குச் சாதகமாகப் பொது ஜனங் களின் மனம் திரும்பியது பத்திரிகைகளாலும் தலைவர்களின் பிரசாரத் தாலுமே ஒழிய சத்தியாக்கிரகத்தால் அல்ல என்பது திரு.காந்தியவர்களுக்குத் தெரியாததல்ல. ஆகையால் பிரசாரத்தின் மூலம் பொது ஜனங்களின் மனத் தைத்திருப்பிச் சட்ட சபைகளின் சமதர்மச் சட்டங்கள் செய்து, சமதர்மத்தை நிலை நிறுத்துவதே கைகூடும் மார்க்கம் என்று நாம் சொல்லுகிறோம்
குடி அரசு - கட்டுரை - 31.01.1932
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வண்ட வைக்துக் ௭ nG?
நமது நாடு விடுதலை பெற வேண்டும் என்று நமது நாட்டிலுள்ள எல்லாக் கட்சியின் தலைவர்களும் கூறிக் கொண்டு வருகின்றனர். அதற்காக ஏதோ சில காரியங்களையும் செய்து கொண்டும் வருகின்றனர். தற்பொழுது சுயராஜ்யத்தைப் பற்றியும், தேச விடுதலையைப் பற்றியும் பேசாத மனிதர்கள் ஒருவர்கூட இல்லை யென்றே சொல்லலாம். ஆனால் யாரும் நமது நாட்டு ஏழை ஜனங்களின் துன்பத்தைப் போக்கி அவர்களைச் சுகமாக வாழும்படி செய்வதற்குத் தகுந்த வழி என்ன என்பதைப் பற்றிச் சிந்திப்பது கிடையாது. சுயராஜ்யம் வந்து விட்டால் எல்லாம் சரிப்பட்டு விடும் என்று ஒரேயடியாகச் சொல்லி விடுகிறார்கள். இப்படிப் பேசுகின்ற கூட்டத்தார் இது வரையிலும் நமது நாட்டு மக்களின் கஷ்டத்தைப் போக்க ஏதாவது செய்திருக்கிறார்களா? அல்லது அதைப் பற்றி நினைத்ததுதான் உண்டா? என்றால் கொஞ்சங்கூட இல்லை என்று நாம் துணிந்து சொல்லுவோம்.
நமது நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எண்ணற்ற மக்கள், இன்று கட்டத் துணி இல்லாமலும், உண்ண உணவில்லாமலும், இருக்க இடமில்லாமலும்,
மற்ற மக்களுடன் சேர்ந்து வாழ முடியாமலும் மிருகத்தை விடக் கேவலமான
நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.அனேக மக்கள், மிருகத்திலும் கேவலமாக இந்த நாட்டில் கிடந்து உண்ண உணவில்லாமல் சாவதை விட அந்நிய நாடுகளில் சென்று எந்தக் கஷ்டத்திற்குள்ளானாலும் அவமானத்திற்குள் ளானாலும் வயிற்றையாவது கழுவிக் கொண்டிருக்கலாம் என்னும் எண்ணத் துடன் கப்பலேறிப் போய் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பொழுது தென்னாப்பிரிக்கா, மலேயா, பர்மா, சிலோன், ஜாவா, கெனியா, கிழக்காப்பிரிக்கா முதலிய நாடுகளில் நமது நாட்டு இந்தியர்களே. அதிகமாகக் குடியேறிக் கூலிகளாக இருக்கின்றனர். இந்த நாடுகளில் “இந்தியர்” என்ற வார்த்தைக்கு “கூலிகள்” என்ற அர்த்தமே வழங்கி வரு
கின்றது. இம்மாதிரி அந்நிய தேசத்தில் சென்று வசிப்பவர்களில், வியாபாரம், உத்தியோகம் முதலிய தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்கள் மிகச் சிலரேயாவார்கள். மற்ற நூற்றுக்கு தொண்ணுற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் மக்கள் கடல் கடந்து சென்றும் கஷ்டம் தொலையாமல் கூலிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
குடி அரசு - 1932 0) 54
இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் தாய் நாட்டைத் துறந்து -
சிலர் பெண்டு பிள்ளைகளையும் கூடப் பரிதவிக்க விட்டுவிட்டு, உற்றார். உறவினர்களை எல்லாம் றந்து, வேற்று நாடுகளுக்கும், வேற்றுத் தீவுகளுக்கும் குடியேறுவதன் காரணத்தை நன்றாய் யோசித்தால் விளங்காமல் போகாது.
நமது நாட்டிலேயே பிறந்த எண்ணற்ற மக்களுக்குக் குடியிருப்பதற்குச் சொந்தமாக ஒரு “சென்ட்” நிலங்கூட இல்லை. அவர்கள் பிறர் அதாவது உயர்ந்த சாதிக்காரர்களின் நிலங்களில் குடியிருந்து கொண்டு, அந்நிலக் காரர்களுக்கு அடிமை வேலை செய்து அவர்கள் கொடுக்கும் குறைந்த கூலியைப் பெற்று ஜீவனஞ் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் எஜமானனிடத்தில் அதிகக் கூலி கேட்டாலோ அல்லது அதிகக் கூலி கிடைக்கும் இடத்திற்கு வேலைக்குப் போனாலோ உடனே அவர்கள் இந்த பரிதாபகரமனான மக்களுக்குக் குடியிருக்கக் கூட இடமில்லாமல் தங்கள் நிலத்தை விட்டு விரட்டுகின்றனர்.
இத்தகைய ஏழை மக்களின் சந்ததிகளாவது முன்னுக்கு வர வழியிருக் கிறதா? என்று ஆலோசனை செய்து பார்த்தால் அதற்கும் வழி இல்லை. இவர்கள் படிப்பதற்கும் வசதி இல்லை. ஏழை மக்கள் சிறு பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலில் இவர்களால் பள்ளிக்கூடச் சம்பளம் கொடுக்க முடியாது. இரண்டாவது, இவர்:
கள் பள்ளிக்கூடம் போய்ப் படிப்பதாயிருந்தால் சாப்பாட்டிற்கு என்ன செய் வது? ஆகையால் இந்த ஏழை மக்களின் சிறு பிள்ளைகளும் ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமையில் இருக்கிறார்கள். ஆகையால் இந்த நிலையைப் பரிகரித்து இவர்களை யெல்லாம் கல்வியுடைய வராக்கிமனிதராக்க என்ன முயற்சி செய்யப்படுகிறது?
தொழில் செய்து ஜீவிக்கும் நிலைமையிலுள்ள அனேகருக்கு தொழில் கிடைப்பதில்லை. நமது நாட்டில் பூர்வீக காலந் தொடங்கி நடைபெற்று வருந் தொழில் விவசாயத்தொழில் ஒன்றேயாகும்.அதுவும் சென்ற யுகங்களில் எந்த
முறையில் நடந்துகொண்டிருந்ததோ அந்த முறையில்தான் இன்றும் நமது நாட்டில் நடைபெற்று வருகின்றது. ஆகையால் இது கஷ்டமான தொழிலாக
வும் லாபமற்றத் தொழிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. விவசாயத் தொழிலைப் புதிய முறையில் அபிவிருத்தி செய்தாலொழிய அதில் லாபத்தை ஏராளமாக எதிர்பார்க்க முடியாது ; விவசாயத் தொழிலாளர்களின் கஷ்டமும்
நீங்காது. மற்றபடி வேறு தொழிற்சாலைகள் மிகுதியாக ஏற்படவில்லை. போயும் போயும் திரு.காந்தியவர்களால் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட தொழில் கதர் ஒன்றேயாகும். இதற்காக ராட்டினத்தில் நூல் நூற்று அரை அணா
ஒரு அணா பெற்று எத்தனை மக்கள் சுகமாக வாழ முடியும் என்று கேட் கிறோம்?
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அன்றியும் ஏழை மக்கள் சுகாதாரமற்ற இடங்களிலும், நெருக்கமான
சிறிய குடிசைகளிலும் கும்பலாக வாழ்ந்து நல்ல காற்றும் வெளிச்சமும் இயற்கையாக இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாமலிருக்கின்றார்கள். பல வகையான நோய்களுக்கு ஆளாகி ஆரோக்கிய வாழ்வும் இன்றி, அகால மரணமும் அடைந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாதிரியாக இவர்கள். அடையும் கஷ்டங்களைப் போக்க என்ன செய்யப்பட்டது? இந்த மாதிரியான நம்மால் நிவர்த்திக்கக் கூடியதாயிருந்தும் நிவர்த்திக்காத காரணத்தினால் தானே எண்ணற்ற மக்கள் நமது நாட்டை விட்டு வெளியேறு கின்றனர். தென்னாப்பிரிக்கா முதலிய இடங்களில் வெள்ளைக்காரர்கள் இந்தியர்களை. அவமதிக்கிறார்கள் என்பதற்காகப் பெரிய கிளர்ச்சி செய்கின்ற அரசியல் தலைவர்களில் யாராவது நமது நாட்டில் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று இருக்கின்ற வைதீகர்கள் ஏழை மக்களைப் படுத்தும் கொடுமையைப் பற்றி ஏதாவது பேசுகின்றார்களா? கிளர்ச்சி செய்கின்றார்களா? என்பதைக் கொஞ்சம். யோசித்துப் பார்க்கும் படி தெரிவித்துக் கொள்ளு கிறோம்.
இவ்வாறு நமது நாட்டில் ஏழை மக்கள் கஷ்டப்படுவதற்கும் அக் கஷ்டம் தாங்க முடியாமல் அவர்கள் கடல் கடந்து முன்பின்னறியா அயல் நாடுகளுக்குச் சென்று துன்ப வாழ்க்கை வாழ்வதற்கும் நமது நாட்டுப் பணக் காரர்களாலும். உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்களாலும், அவர்கள். விடுதலை பெறுவதற்கும் இக்கஷ்டங்களை நிவர்த்திக்க முடியாமலிருப்பதற்
கும் காரணம் என்ன என்று கேட்டால் தேசாபிமானிகளென்று இருக்கிறவர்கள் உடனே தயங்காமல் ஒரு காரணம் சொல்லிவிடுகின்றனர். அந்தக் காரணம்:- “ஆங்கிலேயராகிய அன்னியர் நமது நாட்டை ஆளுவதால்தான் நமது நாடு இந்த நிலையில் இருக்கிறது” என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால் இது சரியான காரணமாகுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.
“மதம், மதம்” என்ற குருட்டு நம்பிக்கையின் பேரால் நாம் குடும்பங் களில் செய்கின்ற செலவுகளை விட்டு விட்டுப் பொதுவாக நமது நாட்டில் ஒன்றுக்கும் பயன்படாமல் பொதுச் சொத்தாக இருந்து வீணாகும் பொருள்கள். மாத்திரம் எவ்வளவு என்று பாருங்கள்! திருப்பதி, இராமேஸ்வரம், சீரங்கம், மதுரை, மாயவரம், திருவடமருதூர், சிதம்பரம், திருவாரூர், பழனி, ஆவுடையார் கோயில், வேதாரண்யம், திருவையாறு, வைத்தீஸ்வரன் கோயில் போன்ற தேவஸ்தானங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் எவ்வளவு? அவைகளி
லிருந்து நிரந்தரமாக வந்து கொண்டிருக்கும் வருஷ வரும்படி எவ்வளவு? இவையல்லாமல் யாத்ரீகர் மூலம் வரும் லாபம் எவ்வளவு? என்று பார்த்தால் எல்லாம் கிட்டத்தட்ட 60 அல்லது 70 கோடிக்குக் குறையாமல் இருக்கக் கூடுமென்பதில் சந்தேகமில்லை. இவற்றோடு திருவாடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்றக்குடி மதுரை, கும்பகோணம், சிருங்கேரி முதலிய பல ஊர்களில் உள்ள மடங்களுக்கு இருக்கும் சொத்துக்கள் குறைந்தது 10 அல்லது
15 கோடி ரூபாயாவது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில்
குடி அரசு - 1932 M 56
திருவாங்கூரில் பத்மநாப சாமி கோயிலில் உள்ள நாணயங்களைக் கணக்கிட்ட போது 20 லெட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வெள்ளி நாணயங்களும் 30
லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள தங்க நாணயங்களும் இருக்கின்றனவாம்.
இன்னும் திறந்து பார்த்து விலை மதிப்பிட முடியாமல் அனேக பெட்டிகள் கிடக்கின்றனவாம். அவைகளையும் கணக்கிட்டால் குறைந்தது 50 லட்ச ரூபாய்க்காவது இருக்கக்கூடும். ஆகவே, திருவாங்கூர் பத்மநாப சாமி கோயி
லில் ஒன்றுக்கும் உதவாமல் பாழாகிக் கிடக்கும் பொருள் மாத்திரம் ஒரு கோடி என்றால் மற்ற கோயில்களையெல்லாம் சேர்த்துப்பார்த்தால் 60 அல்லது 70 கோடிக்கு குறையாமலிருக்கலாமென்று நாம் கூறியதில் சிறிதும் தவறு இருக்க
முடியாது.
இந்த மாதிரி நமது நாட்டிலுள்ள குழவி கல்லுகளுக்கும், கரடுமுரடான பொம்மைக் கற்களுக்கும், சந்நியாசி வேஷதாரிகட்கும் கோடிக்கணக்கான பொருளை வைத்து விட்டு “நமது நாடு தரித்திர நாடு! தரித்திர நாடு! வெள்: ளைக்காரர்களால் நாம் தரித்திரமடைந்து விட்டோம். ஆகையால் அந்நிய ராகிய வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை விட்டுப் போனால்தான் நமது தரித்திரம் நீங்கும் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் ஏதாவது அர்த்த முண்டா!” என்றுதான் நாம் கேட்கின்றோம்.
உயிரற்ற கல்லுகளும் சந்நியாசிகளுமே கோடிக்கணக்கான ரூபாய் களுக்கு முதலாளிகளாய் இருப்பதையும், இவைகளுக்காக ஒவ்வொரு வருஷமும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு நாளும் அழிக்கப்படும் பண்டங் களையும், ரூபாய்களையும் பார்த்த எந்த அறிவுள்ள மனிதனாவது நமது நாட்டை வறுமை நிறைந்த நாடு என்று சொல்லுவதை ஒப்புக்கொள்ள முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்த மாதிரி கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒருவருக்கும் பிரயோசனப் படாமல் துருப்பிடித்துக் கிடப்பதற்குக் காரணம் நமது மக்களின் மூளையில், நமது தலைவர்கள் என்கிறவர்களின் மண்டையில் அழுக்கேறிப் பாசி பிடித்து விளக்கமின்றி இருப்பதுதானே காரணம்? இந்த அழுக்கை- பாசியைக் கழுவி சுத்தப்படுத்தினாலல்லவோ நாம் விடுதலை பெற முடியும்?
காலஞ் சென்ற பனகால் மன்னரால் தேவஸ்தானங்களும், மடங்களும் தூங்கள் செய்யும் செலவுகளுக்குக் கணக்கு ஒப்பிக்கவேண்டும் என்பதற்காகவும் அவைகளின் சொத்துக்கள் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற் காகவும் நிறைவேற்றப்பட்ட “இந்து மத தரும பரிபாலனச் சட்டத்தையே நமது நாட்டு வைதீகக் கூட்டத்தார் எதிர்த்து “மதமே போச்சு, மதத்திற்கு ஆபத்து” என்று பெருங் கிளர்ச்சி செய்தார்களென்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இத்தகைய மனப்பான்மையுடைய வைதீகர்கள் இவைகளின் சொத்துக்கள் நாட்டிற்குப் பிரயோசனப்பட வேண்டும் என்று சொன்னால் சாமானியமாக ஒப்புக்கொள்ளவா போகின்றார்கள்? இவ்வாறு சொல்லுகின்ற
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வர்களை நாஸ்திகர்களென்றும் மதத் துரோகிகள் என்றும், கடவுள் துரோகிகள் என்றும், தேசத் துரோகிகள் என்றும் சொல்லிப் பலமாக எதிர்ப் பிரசாரம்
புரியாமல் விடமாட்டார்கள் அல்லவா?
ஸ்பெயின், ரஷியா முதலிய நாடுகளில் கோயில்கள் மடங்கள் இவை களின் சொத்துக்கள் அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்டு தேசத்தின் நன்மைக்குப் பயன்படுத்தப்பட்டதைப் போல நமது நாட்டிலும் இவைகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யாவிட்டாலும் அவைகளின் வரும்படியைக் கொண்டு, தொழிற்சாலைகளும், ஆராய்ச்சி ஸ்தாபனங்களும் கல்விச் சாலைகளும் ஸ்தாபிக்கவாவது சம்மதிப்பார்களா என்றுதான் நாம் கேட் கின்றோம். மதத்தின் பெயரால், கல்விக்கும். தொழில்களுக்கும், வைத்தியத்
திற்கும் செலவு செய்யும் கிறிஸ்தவ மதத்தையுடைய வெள்ளைக் கார அரசாங்கம் நாமும் நமது மதச் சொத்துக்களை இவ்வழியில் செலவு செய்வ
தற்குத் தடை செய்யாது என்பது நிச்சயம். இதற்கான சட்டங்களை நாமே செய்து கொள்ளலாம். ஆனால் யார் இதற்குச் சம்மதிக்கிறார்கள்? என்று கேட் கிறோம். காங்கிரஸ்காரர்கள் கேட்கும் சுயராஜ்யத்திலும் இந்த மதச் சொத்துக்
கள் இப்பொழுது இருக்கும் பாழான நிலையிலேயே இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருக்க வேண்டும் என்றுதானே சொல்லு கிறார்கள்? ஆகவே எந்த சுயராஜியம் வந்துதான் என்ன பயன்? ஏழை மக்களின் கதி என்றும் ஒரே கதிதானே? “இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?” என்று ஏழைமக்கள் கூறும் பழமொழியில் என்ன குற்றமிருக்கிறது?
நமது மதத்தின் பேரால் புதைபட்டுக் கிடக்கும் கோடிக்கணக்கான பொருளைக் கொண்டு கல்விச் சாலைகளும், கைத்தொழிற் சாலைகளும், ஆராய்ச்சி சாலைகளும் ஏற்படுத்தி நமது மக்களை இத்துறையில் ஈடுபடுத்து வோமானால் நமது நாட்டில் ஒருவராவது எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்க முடியுமா? ஒருவராவது தொழிலற்ற சோம்பேரியாக இருக்க முடியுமா? ஒருவராவது பகுத்தறிவில்லாத மூட நம்பிக்கையுள்ளவராக இருக்க முடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.
ஆகவே, நமது மக்களைக் கெட்டியாகப் பிடித்து அழுத்திக் கொண்டி ருக்கும் மதம் என்னும் பாரம் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள். தலைதூக்கி கண்விழித்து மற்றவர்களைப் பார்க்க முடியும். பிறகுதான் பாழாகக் கிடக்கும் திரவியங்களை நாட்டின் நன்மைக்கு உபயோகப்படுத்தச் சம்மதிப்பார்கள். இல்லாத வரையில் நாம்என்றும் அடிமைகளாகவே, பகுத்தறிவில்லாதவர்களாகவே இருக்க வேண்டியதுதான்.
இதுவரையிலும் ஆயிரக் கணக்கான வருஷங்களாக மதங்களையும், சாமிகளையும் கட்டிக் கொண்டு அழுததனால் என்ன கிடைத்தது? நமது நாடு அடிமையாகவும் நமது நாட்டு மக்கள் ஏழைகளாகவும், நமது நாட்டில்
குடி அரசு - 1932 M 58
சாப்பாட்டுக்கில்லாமல் அந்நிய நாட்டுக்குச் செல்லக் கூடியவர்களாகவும், இந்தியர் என்றால் கூலிகள் என்று அந்நியர்களால் இகழக் கூடியவர்களாகவும் ஆனதுதான் கண்ட பலன். இவைகளைத்தான் நமது மதங்களும், நமது சாமிகளும் நமக்கு கொடுத்தன. ஆகையால் இன்னும் இவைகளைக் கட்டிக் கொண்டு அழ வேண்டுமா? இவைகளுக்காக நமது செல்வங்களை வீணாக்க வேண்டுமா? இவைகளை இன்னும் அழியாமல் கட்டிக் காப்பாற்றக் கூடிய சுயராஜ்யம் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம். நன்றாய் யோசனைச் செய்து பார்த்தபின் பதில் சொல்லுங்கள். கடைசியாக நமது நாட்டு
மக்கள் சமத்துவமடைந்து சுகத்தோடு வாழ வேண்டுமானால் நமது மதங்கள்: ஒழிய வேண்டும். மத ஸ்தாபனங்களின் சொத்துக்கள் தேசத்தின் நன்மைக் காகப் பயன்படும்படி அவைகளை பறிமுதல் செய்து உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாமும் நாகரிகம் பெற்ற தேசத்தார்களைப் போலச் சிறந்து மனிதர்களாக விளங்க முடியும் என்று கோபுரத்தின் மேல் நின்று கொண்டு கூறுகின்றோம்.
கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும் மூடர் களைப் போல, ஏராளமான பொருள்களை முட்டாள்தனம் காரணமாகப் பாழ்படுத்தி வைத்துக் கொண்டு, “நாம் அன்னிய ஆட்சியினால் ஏழைகளாக இருக்கிறோம்; கல்வியறிவில்லாமல் இருக்கிறோம்: ஒற்றுமை இல்லா மலிருக்கிறோம்; தொழிலில்லாம லிருக்கிறோம்” என்று தொண்டைத் தண்ணீர் வற்றும்படி கத்துவதில் ஏதாவது அர்த்தம் உண்டா? என்பதை மறுபடி யும்மறுபடியும் நன்றாய் யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளு கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 31.01.1932
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பூனைக்கும்? யானுக்கும்?
இந்திய சட்டசபையில் மேன்மை தங்கிய வைசிராய் என்ன பிரசங்கம் செய்யப்போகிறார் என்று நமது நாட்டு அரசியல்வாதிகள் அனேகர் எதிர்
பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பிரசங்கமும் சென்ற 25 - 1- 32 தேதியில் வெளிவந்து விட்டது. அதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் தற்கால சட்ட மறுப்பைப் பற்றி ராஜப்பிரதிநிதி அவர்கள் சொல்லியிருக்கும் விஷயமே
யாகும். மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதியவர்கள் “சண்டைக்கு இழுக்கப் பட்டால் எந்த அரசாங்கம் பின் வாங்கி நிற்கும்?” என்று கேட்கும் கேள்வியும், “சட்டமறுப்புக்கு விரோதமாக இப்பொழுது அமுலில் உள்ள முறைகள் அவசியமாக இருக்கக் கூடிய வரையில் அவைகள் தளர்த்தப்படவே மாட்டா” என்று கூறிவிருப்பதும் மிகவும் கவனிக்கக் கூடிய விஷயமாகும். அதிலும் காங்கிரஸ்காரர்கள்பால் அநுதாபம் காட்டுவதன் மூலம் “தேசாபிமானிகள்” என்று காங்கிரஸ்காரர்களால் மதிக்கப்பட வேண்டுமென்றும், சட்டமறுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலைமையில் இருப்பதின் மூலம் அரசாங்கத்தாருக்
கும் “நல்லபிள்ளைகளாக” இருக்க வேண்டுமென்றும் தடுமாறிக் கொண்டி ருக்கின்ற கோழைத் தலைவர்கள் அவசியம் கவனிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.
அவசரப்பட்டு சட்டமறுப்பைத் தொடங்கியவர்கள் காங்கிரசின் குட்டி தலைவர்களென்பது நாடறிந்த விஷயமாகும். ஆனால் *திரு.காந்திக்கு இராஜப்பிரதிநிதி பேட்டி கொடுத்துப் பேசியிருந்தால் சட்டமறுப்பியக்கம் இவ்வளவு கஷ்டமான நிலைமைக்குப் போயிருக்கா” தெனவும், ஆகவே *ராஜப்பிரதிநிதியவர்கள் திரு. காந்தியவர்களுக்குப் பேட்டியளிக்க மறுத்தது தவறு” எனவும் இந்த நடுநிலைமைக்காரர்கள் சொல்லிக் கொண்டிருக்கின் றனர். ஆனால் இவர்கள் இவ்வாறு சொல்லுவதிலும் ஒரு சிறிதும் அர்த்த மில்லை என்றுதான் நாம் சொல்லுகிறோம். உண்மையில் திரு. காந்தியவர்கள் சமாதானப் பிரியமுடையவராயிருந்தால் காங்கிரசின் சர்வாதிகாரியாகிய தன் னுடைய அனுமதியும் இல்லாமல் குட்டித் தலைவர்களால் தொடங்கப்பட்ட சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்திவிட்டு ராஜப்பிரதிநிதி அவர்களுடன் சமா தானம் பேச முன் வருவாரானால் அது நியாயமாக இருக்கும்.அப்பொழுது ராஜப்பிரதிநிதியவர்கள் சமாதானம் பேச மறுத்திருந்தால் காங்கிரஸ் தன்னு
குடி அரசு - 1932 M 60
டைய கொள்கைப்படி சட்டமறுப்பு ஆரம்பித்திருக்கலாம். அப்பொழுது இந்த நடுநிலைமைவாதிகள் கூறும் “ராஜப்பிரதிநிதி காந்திக்குப் பேட்டியளிக்க
மறுத்துவிட்டது தவறு” என்று சொல்லுவதற்கு அர்த்தமிருக்க முடியும்.
இது நிற்க, சட்டமறுப்பியக்கத்தால் ஒரு காரியமும் நடக்கப் போவ தில்லை என்பது நமது நேயர்களுக்கெல்லாம் தெரிந்த விஷயமே ஒழிய வேறில்லை. இதுவரையிலும் நடந்த சட்டமறுப்பினால் நமக்குக் கிடைத்த பலன் என்ன என்பதை யோசித்துப் பார்ப்பவர்களுக்கு இது விளங்காமல் போகாது, சட்டமறுப்பு இல்லாமலிருந்தால், வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டி
களின் வேலை இன்னும் திறமையாகவும். தாராளமாகவும், விரைவாகவும் நடந்து முடியக்கூடும். இப்பொழுது கொஞ்சம் சீர்பட்டிருக்கின்ற தொழில்
களும், வியாபாரங்களும் விளைவுப் பொருள்களின் அக விலைகளும் இன்னும் கொஞ்சம் சீர்படக்கூடும். சட்டமறுப்புநடைபெறுவதால் இவைகள் பாதகமடையக் கூடுமேயொழிய நமது நாட்டிற்கு வேறு கடுகளவு நன்மை கூட உண்டாகப் போவதில்லையென்று ஆரம்பமுதல் கூறிவந்ததையே இப்பொழுதும் கூறுகிறோம்.
ஆகையால், சட்டமறுப்பு இயக்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லா விட்டாலும் அது நாட்டுக்குத் தீமை விளைக்கும் பயனற்ற வழி என்று எண்ணிக் கொண்டிருந்தாலும், பாமர மக்களின் தூற்றுலுதக்குப் பயந்து பேசாமலிருக்கும் ராஜீயவாதிகள் தமது கோழைத்தனத்தை விட்டுவிட்டு தைரியமாக சட்டமறுப்பை நடத்துவதற்கு உதவி செய்வதே சிறந்த காரிய
மாகும். “சட்டமறுப்பு நின்றால் அவசர சட்டங்களும் நீக்கப்படும்” என்னும் கருத்தைத் தெளிவாக இராஜப்பிரதிநிதியவர்கள் தமது பிரசங்கத்தில் கூறியிருப்பதைக் கவனித்து ஆவன செய்வதே கடமையாகும். “பூனைக்குத் தோழன் பாலுக்கும் காவல்” என்று சொல்லிக் கொண்டு வாழுகின்ற சமயம் இதுவல்ல என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.011932
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கிறிஸ்துவ மதத்தில் வாதியுண்டா?
இந்து மதத்தில் தான், சாஸ்திர சம்மதமாகவும், தெய்வ சம்மதமாகவும், பலர் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாய் அந்த மதத்தை விட்டு வெளி யேறினாலொழிய மனிதத் தன்மை பெறமுடியாதவர்களாய் கோடிக்கணக்கான
மக்கள் இருப்பதாக உலக முழுதும் தெரிந்திருக்கிறது. ஆனால் மிகவும்
நாகரிகம் பெற்ற மதமாக அன்பு மதமாக- சகோதரத்துவம் நிறைந்த மதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வரும் கிறிஸ்துவ மதத்தில் இத்தகைய சாதிக் கொடுமை இல்லை என்று பறை சாற்றப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அந்த மத வேதத்தின் படி- அந்த மத கர்த்தாவான யேசு நாதரின் கொள்கைப்
படி அந்த மதத்தில், சாதி வித்தியாசம் பாராட்டவோ, சாதி வித்தியாசம் காரண மாகத் தாழ்த்தப் பட்ட மக்களைக் கொடுமைப் படுத்தி வைத்திருக்கவோ ஒரு ஆதாரமும் இல்லையென்பதை நாம் அறிவோம்.
இத்தகைய ஒரு மதம் ஜாதி வித்தியாசங்களும், கொடுமைகளும்
நிறைந்த இந்தியாவில், அதிலும் தென்னிந்தியாவில் எந்தநிலையிலிருக்கிறது என்று பார்த்தால், இந்து மதத்தின் அண்ணனாகவோ, அப்பனாகவோ பாட்ட னாகவோதான் இருந்து வருகிறதென்று கூறலாம். இந்து மதக்கோயில்களில் எப்படி ஜாதிக்கு ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கிறதோ அது போலவே கிறிஸ்துவ மதக் கோயில்களிலும் ஜாதி வித்தியாசம் பாராட்டப் பட்டுத் தனித் தனி இடங்கள் ஒதுக்கப்படுகின்றனவாம். ஆனால் அரசாங்கக் கணக்கில் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி வாரிக்கணக்கு போடாமல் எல்லாக் கிறிஸ்தவர்க ளையும் பொதுவாகக் “கிறிஸ்தவர்கள்” என்ற தொகுதியிலே சேர்க்கப்பட்டி ருக்கின்றது. இக்காரணத்தால், தீண்டாத சாதியினராகக் கருதப்படும் கிறிஸ்த
வர்கள், பொது ஸ்தாபனங்களில் ஒருவித உரிமையும் பெற முடியாமல், எல்லா உரிமைகளையும் உயர்ந்த சாதியாராக இருந்து கொண்டிருக்கும் கிறிஸ்து வர்களே அடைந்து வருகிறார்கள்.
எப்படி இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்கள் தங்களுக்குக் கீழுள்ள சாதியார்களின் மேல் வெறுப்பும் வித்தியாசமும் பாராட்டி வருகின்றார்களோ அதுபோலவே கிறிஸ்தவ மதத்தில் புகுந்துள்ள வர்களும், நாயுடு முதலியார், பிள்ளை, அய்யர் முதலிய ஜாதி வித்தியாசங்
குடி அரசு - 1932 M 62
களை விடாமல் வைத்துக் கொண்டு, ஆதிதிராவிடக் கிறிஸ்தவர்களையும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்புக் கிறிஸ்தவர்களையும் வித்தியாசமாக வைத்துக் கொடுமை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்து வருவதைப் பற்றிய கிளர்ச்சி நீண்டநாளாக நடைபெற்றுங்கூட இன்னும் அம்மத குருமார்கள். இவ்வேற்றுமைகளை ஒழித்து உண்மையான கிறிஸ்தவக் கொள்கைகளை நிலை நிறுத்த முயற்சி செய்யாமலிருந்து வருகிறார்கள்.
ஆகவே இதுவரையிலும் பொறுமையோடு கொடுமைகளை அனுபவித்து வந்த தீண்டாத வகுப்புக் கிறிஸ்தவர்கள் இப்பொழுது கண்: விழித்துக் கொண்டு அதிக ஊக்கத்துடன் கிளர்ச்சி செய்வதைக் கண்டு நாம் பாராட்டுகின்றோம். இதற்கு உதாரணமாகச் சென்ற 23. 1.32-ல் லாலு குடியில் தீண்டப்படாத கிறிஸ்துவர்கள் மகாநாடு கூடியிருப்பதைக் கூறலாம். அம்
மகாநாட்டுத் தலைவர் திரு. ஞானப்பிரகாசம் அவர்களும், திறப்பாளர் திருமதி நீலாவதி ராமசுப்பிரமணியம் அவர்களும் வரவேற்புக் கழகத்தலைவர் திரு ஆரோக்கியசாமி அவர்களும் மற்றும் உள்ள உபந்யா சகர்களான திருவாளர்.
கள் டி.வி.சோமசுந்தரம், டி. பி.வேதாசலம் வி. ஐ. முனிசாமி பிள்ளை முதலிய பலரும் தீண்டப்படாத கிறிஸ்தவருக்குள்ள குறைகளை எல்லாம் விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகையால் இனியாவது அம்மத குருமார்கள் தீண்டாதவர்களுக்குள்ள குறைகளை நீக்கி மதக் கொள்கைப்படி யாதொரு வேற்றுமையையும் பாராட்டாமல் அவர்களையும் நடத்துவதற்குரிய ஏற்பாடு களைச் செய்ய வேண்டும், அல்லது அரசாங்கத்தார் அவர்கள் விரும்புகிறபடி தீண்டப்படாத கிறிஸ்துவர்களும் மற்ற ஆதிதிராவிடர்களுக்குக் காட்டு வதைப் போலத் தனிச் சலுகை காட்ட முன் வரவேண்டும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
கடைசியாகத் தீண்டப்படாத கிறிஸ்தவர்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லி முடிக்கிறோம். தீண்டப்படாத கிறிஸ்துவர்களின் குறைகள் நீங்கா விட்டால் அம்மதத்திலுள்ளவர்கள் நீக்க முற்படா விட்டால், இந்து மத ஆதி திராவிடர்கள் எந்த வகையில் தங்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மதக் கொடுமைகளையும் ஜாதிக் கொடுமைகளையும் நீக்கிக் கொள்ள விரும்பு கின்றார்களோ, அந்த வகையிலேயே தீண்டப்படாத கிறிஸ்துவர் களுக்கும் தங்கள் குறைகளை நீக்கிக்கொள்ள முயலுவதே சமத்துவம் பெறுவதற்கு ஏற்ற வழியாகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 31.011932
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஈ. வெ. இறாமசாமியின் “வகய்றோ ' கமகம்
போர்ட் சைட்டிலிருந்து எழுதிய வியாசம் கிடைத்திருக்கலாம். அதில் “எம்பரஸ் ஆப் பிரிட்டன்” என்கின்ற கப்பல் விஷயத்தைப்பற்றி மாத்திரம் எழுதமுடிந்தது. மற்றபடி கொழும்பிலிருந்து கப்பல் புறப்பட்ட தற்குப் பின் கண்ட விஷயங்களைப்பற்றி சுருக்கமாக எழுதுகிறேன்.
கொளும்பிலிருந்து
டிசம்பர் 17 -ம் தேதி காலை புறப்பட்ட கப்பல் 24-ம் தேதி காலை 10 மணிக்கு *ஜிபுட்டி” என்கின்ற பிரஞ்சு துறைமுகம் வந்து சேர்ந்தது. இது ஏடனுக்கு எதிர்பாகத்தில் இருப்பதும் பிரஞ்சுக்காரருடைய துறை முக முமாகும். நாங்கள் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணம் செய்ததால் பிரஞ்சு கப்பல் அங்கு செல்ல வேண்டியதாயிற்று. பிரஞ்சுக்காரருக்குச் சொந்தமான தீவாகிய மடகாஸ்கர் என்னும் தீவுக்கு அனுப்பப்படும் சாமான்களும் அத்தீவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சாமான்களும் ஜிபுட்டி என்கின்ற துறைமுகத்தின் வழியாகத்தான் வரவேண்டும். இந்த துறைமுகத்தில் நாங்கள் இரங்கினதும். “கமாலியர்” என்கின்ற ஒரு ஜாதியார் நீக்கிறோவர்களைப் போல் அதிக கருப்பும் மிகவும் சுருண்ட தலைமயிரும் உடையவர்கள் தான் இந்தத் தேசத்தில் அதிகமாய் இருக்கிறவர்கள், இவர்கள் பாஷை அரபு - மதம் இஸ்லாம். மிகவும் இளைத்த சரீரம் உள்ளவர்கள், பார்வைக்கு விகாரமா னவர்கள், ரொம்பவும் ஏழைகள், அழுக்கு துணியுடையவர்கள் இவர்கள்தான் இவ்விடத்திய கூலிகள். பெண்கள் விகாரமாய் மலைலம்பாடி ஜாதியாரைப் போல் நகை அணிந்துகொண்டு நீண்ட குப்பாயம் போட்டுக் கொண்டிருக் கிறார்கள். இங்கு சில அரபியரும், நம் பக்கத்திய அதாவது மரைக்காயர்கள், றாவுத்தர்மார்களைப் போல் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல உடை உடுத்திக் கொண்டு சுத்தமாகவும், நல்ல தோற்றமாகவும் இருக்கிறார்கள்.இவர்.
கள் முதலாளிகளாகவும், சற்று நாகரீக வாழ்க்கைகாரராகவும் காணப்படு கிறார்கள்.
குடி அரசு - 1922 0) 64
தினசரி வாழ்க்கை
ஜிபுட்டி துறைமுக பாகம் மாத்திரம் நல்ல உயர்தரக் கட்டடங்களும், நல்ல உயர்தர ஷாப்பு கடைகளும், பிரஞ்சுக்கார வெள்ளையர்களால் மிகுதி
யும் குடியிருக்கப்பட்ட மாளிகைகளும் உடையதாக காணப்படும். மற்றப்படி ஊருக்கு ஒரு பெண் கூட முகத்தை மூடிக் கொண்டு போனதை நாங்கள். பார்க்கவில்லை. ஆனால் முக்காடு மாத்திரம் போட்டிருக்கிறார்கள். இங்கு பம்பாய் குஜராத்தி வியாபாரிகள் சிலரைப் பார்த்தோம். இங்கு தபால் எழுதிவிட்டு சில சாமான்கள் சாப்பாட்டுக்கு வாங்கினோம். பிறகு 24ந்தேதி மாலை - 5 மணிக்கு ஜிபுட்டியிலிருந்து கப்பல் புறப்பட்டு 29ந்தேதி சூயஸ்
துறைமுகத்துக்கு வந்தது. அத்துறைமுகம் மிக்க அழகானதாகவும், ஊர் மிகவும் புதிய முறையில் ஏற்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. ஜிபுட்டி யிலிருந்து செங்கடலில் கப்பல் புறப்பட்டவுடன் தினம் 1க்கு 3, 4 கப்பல் வீதமும், சூயசுக்கு பக்கத்தில் வரவர ஒரு மணி ஒன்றுக்கு ஒரு கப்பல் வீதம் கடலில் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டே இருந்தோம். சூயசுக்கு பக்கத்தில் வந்தவுடனே சிறிது சிறிதாய் குளிர் அதிகப்பட்டு சூயசில் நடுங்கும்படியான குளிர் ஏற்பட்டது. ஏனெனில் அங்குதான் முதலில் குளிர்கண்டோம். கப்பலில் எங்களுடைய இடம் 4வது வகுப்பு (மேல் தட்டு! ஆனதால் அங்கு சென்னையில் கப்பல் ஏறினது முதல் 4, 5 நாள் வெய்யி
லாலும், மழையாலும் மிகவும் கஷ்டப்பட்டதுடன், சாமான்களுடன் அடிக்கடி மூட்டைகள் இறக்கும்போதும் ஏற்றும் போதும் இடம் மாறவேண்டியதாயும் இருந்தது. புதுச்சேரி துறைமுகத்தில் எனக்கு சிறிது காச்சலும், மயக்கமும், தலை வலியும் அதிக தொந்தரவு செய்ததுடன், வெய்யிலிலேயே இருக்க வேண்டி இருந்ததாலும் சற்று மன வருத்தமும் உடல் நிலையைப்பற்றி கவலையும் ஏற்பட்டதால் 4வது வகுப்பில் இருந்து 3-வது வகுப்புக்கு மாற்றலாம் என்று தீர்மானித்து புதுச்சேரியிலிருந்து எங்களைக் காண: வந்திருந்த திரு. பாரதிதாசன், திரு. நோயேல், திரு. செல்வம், அவர்களுடைய காரியதரிசி ஆகியவர்கள் மூலமாய் கப்பல் கமிஷனரிடம் சென்று மாற்றும்படி கேட்டதில் அவர் சென்னையில் 3-வது வகுப்புக்காக சொல்லப்பட்ட சார்ஜை விட 2 - பவுன் அதிகமாக கூட்டி 1 - டிக்கட்டுக்கு 120ரூ. வீதம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று சொன்னார். அதற்கும் சம்மதித்ததில் இங்கிலீஷ் பவுன்நோட்டு எடுக்க மாட்டேன் என்று சொல்லி இந்திய நாணய நோட்டே வேண்டுமென்று கேட்டார். எங்களிடம் இருந்த துகைகள் எல்லாம் இங்கிலீஷ் நாணய நோட்டாகவே மாற்றப் பட்டிருந்ததால் புதுச்சேரி டவுனுக்கு இங்கி லீஷ் பவுன் நோட்டை அனுப்பி, இந்திய நாணயமாக மாற்றிக்கொண்டு வந்து கொடுப்பதாகச் சொல்லி நாணயம் மாற்ற திரு. பாரதிதாசன் அவர்களை புதுச் சேரி ஊருக்குள் அனுப்பினோம். அவர் இந்திய நாணயத்தையும் சில தின் பண்டங்களையும் ஒரு டாக்டர் வசம் அனுப்பி கொடுத்தார். அதற்குள் எனக்கு சற்று குணமாயிருந்ததாலும், டாக்டர் பரீக்ஷித்துப் பார்த்து சில பக்குவம்
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சொன்னதாலும் 3-வது வகுப்புக்கு மாறாமல் 4-வது வகுப்பிலேயே இருந்து கொண்டோம். பிறகும் 2, 3 நாள் கஷ்டப்பட்டோம். கப்பலில் நாங்கள் மூட்டைகளை விட கேவலமாகவே நடத்தப்பட்டோமானாலும் 4-ம் நாள் ஒரு
கீழ் தட்டில் சாமான்களை வைத்துக் கொள்ள கப்பல் கமிஷனர் அனுமதி கொடுத்தார். அந்த கீழ்தட்டானது மூட்டைகள் போடவும் ஒரு பக்கம் பிரஞ்சு சோல்ஜர்கள் இருக்கவும் ஏற்பட்டது. அதில் 50 சோல்ஜர்கள் இருக்க இடமுண்டு.50 சோல்ஜர்கள் ஏற்கனவே இருந்தார்கள். நாங்கள் மூட்டைகளின் மேல் இருந்தோம். இரண்டொரு நாள் சோல்ஜர்கள் எங்களுடன் பழகி விட்டதாலும், மூன்று தமிழ் பிரஞ்சு இந்திய சோல்ஜர்கள் மிக்க பழக்கமாகி
விட்டதாலும் பிரயாணம் சிறிது கூட கஷ்டமாக தோன்றவில்லை. ஆகாரம் இந்த சோல்ஜர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆகாரமே தான் எங்களுக்கும் கொடுக்கப்பட்டது. அதாவது தினம் 2 வேளை வேக வைத்த உருளைக் கிழங்
கும், கொள்ளு, அல்லது அவரை, கடலை முதலிய ஏதாவதொரு தானியமும் வேகவைத்துக் கொடுப்பதுடன், உருண்டை ரொட்டி 3-ம் இதுகளும், மாட்டு மாம்ச துண்டும், சாராயமும் கொடுக்கப்படுவது வழக்கம். காலையில் பால் இல்லாத காப்பியும் ரொட்டியும் உண்டு. இவற்றுள் சாராயம் மாட்டு மாம்சம் ஆகியவைகளை நாங்கள் உபயோகிக்கவில்லை. மற்றதுகளுடனும், கொளும்
பிலும், சென்னையிலும் புதுச்சேரியிலும் வாங்கின பிஸ்கட்,ஆரஞ்சுப்பழம் ஆகியவைகளுடனும் காப்பி, டீயுடனும் சரிப்படுத்திக் கொண்டோம்.
சூயஸ் கால்வாய்
சூயசிலிருந்து 29-தேதி பகல் 2 மணிக்குக் கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக போர்ட் சைட்டுக்குப் புறப்பட்டது. இந்தக் கால்வாயானது செங்கட
லுக்கும் மத்தியதரை கடலுக்குமாக சுமார் 100 மைல் நீளம். மணல் தரையில் வெட்டப்பட்ட கால்வாயாகும். இதன் அகலமெல்லாம் சுமார் 150 அடி தானி
ருக்கும். நமது வாய்க்கால் போலவே இருபக்கம் கரையில் நடக்கும் ஜனங் களுடன் பேசிக் கொண்டே கப்பலில் போகலாம். ஆனால் 40 ஆயிரம் 50 ஆயிரம் டன் கனமுள்ள கப்பல்கள் எல்லாம் தாராளமாய் போகத்தகுந்த ஆழம் வெட்டப்பட்டிருக்கிறது. கால்வாய் வேலைகள் இன்னமும் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது. எதிரில் கப்பல் வந்தால் ஒதுங்கி நிற்க ஆங்காங்கு வசதி இருக்கின்றது. கால்வாய்க்கு நெடுக வாட்சுமேன்களும், காவல்களும், பந்தோபஸ்துகளும் உண்டு.இந்த கால்வாய் “சூயஸ் கால்வாய் கம்பெனியார்” என்கின்ற ஒரு கம்பெனியாரால் முதல் போட்டு வெட்டப்பட்டு ஒவ்வொரு கப்பலுக்கும் சுங்கம் வாங்குவதன் மூலம் பங்குக்காரர்களுக்கு லாபம் கிடைத்து வருகின்றது. ஒரு கப்பலுக்குச் சுமார் 10,000 பத்தாயிரம். ரூபாய், 15, 000 ரூபாய் போல் சுங்கம் வசூலிக்கப்படுவதாகக் கேள்விப்பட் டோம். சூயஸிலிருந்து போர்ட் சைட்டுக்கு போவதற்குள் குளிர் அதிகப் பட்டுக் கொண்டே வந்துவிட்டது.
குடி அரசு - 1932 M 66
போர்டு சைட்
29- தேதி இரவு 10 மணிக்கு கப்பல் போர்ட் சைட்டுக்கு வந்தது. இரவு
1 மணிக்கே பிரயாணிகளை கப்பலை விட்டு இறக்கிவிட்டார்கள். துறைமுகம் சென்னையைப் போலவே கப்பலிலிருந்து தரையில் கால் வைக்கலாம்.ஸ்தல யாத்திரைகளில் எப்படி பண்டாரங்களும் அர்ச்சகர்களும் யாத்திரை வழி காட்டிகளும் ரயிலிலேயே வந்து தொந்திரவு செய்வார்களோ அதுபோல் GUIDE என்று சொல்லப்படும் வழிகாட்டிகள் கப்பலுக்குள்ளாகவே வந்து சூழ்ந்து கொண்டு இம்சைப்படுத்திவிட்டார்கள். பிறகு ஒருவன் எங்களுடன் விடாப்பிடியாய்த் தொடர்ந்து எங்கள் சாமான்களைக் கப்பலில் இருந்து போட்டில் ஏற்றிக் கொண்டு, எங்களை கஸ்டம் ஆபீசு, டாக்டர் சோதனை, சாமான் சோதனை முதலியவைகளை நடத்திக் கொடுத்து “அக்ராப்போல்” என்கின்ற ஒரு ஓட்டலில் கூட்டிக் கொண்டு வந்து இரவு 12 மணிக்கு விட்டான். இங்கு ஓட்டல் என்பது தங்குமிடம் மட்டுந்தான். அதாவது ஒரு அறையில் சாமான் வைத்து படுத்துக் கொள்ளலாம். கட்டில், நாற்காலி, மேஜை உண்டு. சாப்பாட்டுக்கு வேறு ஏற்பாடுதான் செய்து கொள்ள வேண்டும். இந்த ஓட்டலில் நாள்1க்கு 3 பேருக்கும் தங்குவதற்கு தினம் 3 ரூ. வீதம் பேசி ஒரு வாரம் இருந்தோம். சாப்பாடு சொந்தத்தில் செய்து கொண்டோம். வழிகாட்டி 7ரூபாய் வாங்கிவிட்டான். வழிகாட்டிகளின் கஷ்டத்தைத் தவிர வேறு கஷ்ட மில்லை. பாஷை தெரியாதவர்கள் இந்த கஷ்டம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
போர்ட்சைட் ஊரானது சூயசைப் போலவே புதிதாக உண்டாக்கப்பட்ட சிறிய பட்டணம் 3 புறமும் தண்ணீர் சூழ்ந்தது. இங்குள்ள மக்கள் பெரும் பாலும் எகிப்தியர்கள். அநேகமாக 100க்கு 90 பேர் இஸ்லாம் மதக்காரர்கள். மற்ற பல தேசத்தாரும் இங்கு இருக்கிறார்கள். துறைமுகம் என்பதைத் தவிர. இதற்கு வேறு பெருமை கிடையாதானாலும் பெரிய பெரிய ஷாப்புகளும், அலங்கார சாமான் கடைகளும் தாராளமாய் உண்டு. சரி பகுதி காப்பிக் கடைகள் இருக்கும். சாமான்கள் நிலவரமெல்லாம் நமது ஊர்களிலுள்ளது போலவேயொழிய அதிகமில்லை. ஆனால் கடைகளில் சாப்பிட்டால் செலவு அதிகம். ஜனங்கள் பார்வைக்கு வெள்ளைக்காரர்களை போலவே இருக்கிறார்.
கள். எகிப்திய இஸ்லாம் பெண்களுக்கும், ஐரோப்பிய பெண்களுக்கும் வித்தி யாசம் கண்டு பிடிப்பது கடினம். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கூட அடையாள வித்தியாசம் கிடையாது. 3ல் 2 பாகம் பெண்கள் ஐரோப்பிய உடையுடனும் தொப்பிகளுடனுமே திரிகிறார்கள். ஆண்கள் எல்லாம் ஐரோப்பிய உடைதான், சில ஏழைக் குடும்பப்பெண்களும், சில கிராமக்
குடும்ப பெண்களும் மாத்திரம் உள்ளே ஐரோப்பிய உடை அணிந்து மேலே கருப்புத் துணியினால் போர்த்துக் கொண்டு வாய் மாத்திரம் மறையும் படி ஒருவித வலை துணிகட்டிக் கொள்ளுகிறார்கள். (நெற்றி, கண்,மூக்கு எல்லாம்
தெரியும்!
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஆண்கள் ஐரோப்பிய உடையுடன் சிலர் ஐரோப்பிய தொப்பியும் துருக்கி தொப்பியு மணிகிறார்கள். தாடி என்பது கிடையவே கிடையாது. கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் இங்கு அடையாளம் கண்டு பிடிக்கவே முடியாது. இந்த ஊர் ஜனங்கள் எல்லோருக்கும் இந்த துறைமுகத் திற்கு வந்து போகும் பிரயாணக்காரர்களால்தான் வியாபாரமும் பிழைப்பும் நடக்க வேண்டியதே தவிர வேறில்லை. எகிப்திய இஸ்லாம் பெண்களின் டேன்சு தினமும் நடக்கும். பலர் உடம்பெல்லாம் பலவித பச்சைகுத்திக் கொள்ளுகிறார்கள்.
கெய்ரோ
போர்ட் சைட்டில் ஒரு வாரம் இருந்து விட்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி காலை 8 மணிக்கு கெய்ரோவுக்குப் புறப்பட்டு ரயிலேறி 5-ந் தேதி பகல் 1 மணிக்கு கெய்ரோவுக்கு வந்தோம். 150 மயில் தூரம் 3 வது வகுப்புக்கு மயிலுக்கு அரை அணா ரயில் சார்ஜ் விகிதம் ரயில் வண்டிகள் எல்லாம் 5.1 சின்ன வண்டிகளில் இரண்டு, இரண்டு பேருக்கு பெஞ்சிகள் இருப்பது போலவே எல்லா வண்டிகளிலும் இருக்கின்றது. வண்டிகள் எல்லாம் பெரிய வண்டிகள்.
முதல் வண்டியிலிருந்து கடைசி வண்டி வரை வண்டி நடுவில் நடந்து போகலாம். கெய்ரோ பட்டணமானது ஆப்பிரிக்கா தேசத்திலேயே பெரிய பட்டணமாகும். இதில் 10 லட்சம் ஜனங்கள் வசிக்கிறார்கள். இது ஈஜிப்ட் (எகிப்திய தே. தலைநகரமுமாகும். எகிப்திய தேசம் என்பது உலகத்தில் உள்ள பழமையான தேசங்களிலெல்லாம் மிகப் பழமையானது. நாகரிகங்க
ளிலும் எகிப்திய நாகரிகமே மிகப் பழமையானது. இது உலகுக்கு மத்திய தேசமுமாகும், இவ்விடத்திய சீதோஷ்ண நிலை குளிர் காலத்தில் பெங்க ளூரைப்போலவும் வெய்யில் காலத்தில் நமது ஊர்களைப் போலவும் இருக்
கும். இங்குள்ள மலைகள் அநேகமாய் மணல் மலைகளேயாகும். நிலங்கள் பெரும்பாகம் வெரும் மணல் பூமிகளாகவே இருக்கும்.
கெய்ரோவில் ஒரு பெரிய நதி ஓடுகின்றது.அதற்குப் பெயர் நில் 041௦
நதி என்று பெயர். இது உலகத்திலேயே பெரிய நதியாகும். இதன் நீளம் 3500 மைல். இதில் கப்பல்கள் தாராளமாகப் போகின்றன. இதற்கு பல வாய்க்கால்
களும் தாராளமாகப் பாசனங்களும் உண்டு. இங்கு மழை என்பதே கிடையாது.
ஒட்டகம், குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகியவைகளால்தான் எல்லா வேலையும் செய்யப்படுகின்றது. பசுமாடு பால்கரக்கவும், காளை மாடுகள். சாப்பிடவும் தான் பயன்படுகின்றன. உருளைக் கிழங்கு, முட்டை கோஸ் முதலிய குளிர் தேசக் காய்கரிகளே தான் அதிகம். எல்லோரும் கோதுமை ரொட்டியும் சப்பாத்தியும் தான் அதிகம் சாப்பிடுகிறார்கள். உடை விஷயங்கள்
நம் ஊர் உடைகளைவிட அதிகம் தேவை இருக்கிறதுடன் அதிகமாகவே
குடி அரசு - 1932 M 68
உபயோகிக்கிறார்கள். அவற்றின் விலைகள் எல்லாம் நமது பக்கத்தை விட நயமாகவே இருக்கின்றன.
பொதுவாக கிராமங்கள் எல்லாம் மண் சுவர் வீடுகளாகவும் மேற் கூரைகள் எல்லாம் மரம் போட்டு பலகை போட்டு மண்பரப்பியதாகவுமே இருக்கின்றன. மழை இல்லாததால் கூரையைப் பற்றி இவர்கள் கவலைப் படுவதில்லை. பட்டணங்களில் வீடுகள் 3, 4, 5, 6,7 மாடி வரையில் இருக் கின்றன. 3, 4 மாடிகளே அதிகம். பொதுவாகப் பம்பாய்க் கட்டடங்கள். போலவே காணப்படும்.
நிற்க, நான் இதுவரை எனது உடைகளை மாற்றிக் கொள்ள வில்லை. தலைக்கு மாத்திரம் ஒரு கம்பளி குளிர் (மங்கி கேப்) குல்லாய் போட்டுக் கொண்டேன். ஆகாரம் ரொட்டி, முட்டை, காப்பி இவைகள் தான் முக்கியமாய் உபயோகிக்கிறேன். முட்டை இவ்விடம் மிக மலிவு.2 அணாவுக்கு 5 முட்டை கிடைக்கின்றது.
இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு நான் ஒருவனே தாடி வைத்தவனா கவும், ஒரு புதுமாதிரி மனிதனாயும் காணப்படுவதால் யாரும் குறிப்பாய்ப் பார்ப்பதும் மற்றும் மரியாதை செய்வதுமாய் இருக்கிறார்கள். கூடுமான வரை:
யில் ஜனங்கள் நமது ஜனங்களை விட நல்ல குணமுள்ளவர்களாகவும், விவேகிகளாகவும் இருக்கிறார்கள். இந்தியன் என்றால் மிகப்பிரியமாய்ப் பேசுகிறார்கள். ஐரோப்பியரிடம் வெருப்பாய் இருக்கிறார்கள். இவ்விடத்திய பெண்கள் மிகவும் சுரு சுருப்பாகவும், சுதந்திர உணர்ச்சியும், தைரியமும், துணிவும் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். குழந்தைகள் சிறுவர்கள் ஆகியவர்களுக்கு நமது பக்கத்திய குழந்தைகளை விட அதிக புத்தியும், சுதந்திர உணர்ச்சியும் துணிவும் இருக்கின்றன. மற்ற அரசியல் மதவியல் சம்மந்தமான விஷயங்கள் பின்னால் எழுதுகிறேன். இன்னும் இரண்டு மூன்று தினத்தில் “ஏதன்சுக்கு' (கிரீக் தேசம்) போவோம்.
குடி அரசு - பயணக் கடிதம் - 07.02.1932.
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வைதீக வறி
இந்துப் பெண்மணிகள் பலவகையிலும் சுதந்திரம் இல்லாதவர்களாய் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு முதன்மையான காரணம், அவர்கள் ஆண்: களின் தயவைக் கொண்டு ஜீவனம் பண்ணக் கூடிய நிர்ப்பந்தமான நிலை யிலிருப்பதேயாகும். இந்த வகையான நிர்ப்பந்த நிலைமை இருப்பதற்குக் காரணம் இந்தப் பாழும் இந்து மதமும், அதன் மூலம் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுமே என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகையால் ஆண் மக்களுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளும் பெண் மக்களுக்கும் சட்ட மூலமாக ஏற்பட்டால் தான் அவர்கள் சீர்திருத்தமடைய முடியுமென்று
நாம் கூறி வருகிறோம். ஈரோடு, விருதுநகர், சென்னை முதலிய இடங்களில் கூடிய நமது இயக்கப் பெண்கள் மகாநாடுகளிலும் இது சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டிருக்கின்றன. ஆனால் எந்த விதமான மாறுதலையும் விரும்பாமல் தங்கள் சுயநலம் ஒன்றையே விரும்புகின்ற வைதீகர்கள், பெண் மக்கள் உரிமைகளுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்து கொண்டு வருகின்றனர். பெண் மக்கள் கேட்கும் சுதந்தரங்களையெல்லாம். மதத்திற்கு விரோதம், “கடவுள்” கட்டளைக்கு விரோதம், சாஸ்திரங்களுக்கு விரோதம்; அவர்கள் விருப்பத்தின்படி சுதந்தரம் கொடுத்துவிட்டால் மதம் போய்விடும்; கடவுள்கள் போய்விடுவார்கள்: சாஸ்திரங்கள் அழிந்து விடும் என்றெல்லாம் வீண் கூட்சலிட்டுத் தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் கல்வி யறிவும் உலக நாகரீக அறிவும் சுயமரியாதை உணர்ச்சியும், சுதந்தர தாகமும் உள்ள பெண்மக்கள் எல்லோரும் இந்த வைதீகர்களின் பூச்சாண்டிகளுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் தங்கள் அபிப் பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர். நாமும் இவர்களுடைய அபிப்பி ராயங்களை ஆதரித்து சட்டங்கள் செய்ய வேண்டுமெனக் கிளர்ச்சி செய்து கொண்டு வருகிறோம். இவ்வாறு பெண்மக்களும் சீர்திருத்தக்காரர்களும், சுயமரியாதை இயக்கமும் உழைத்ததன் பயனாகவே திவான்பகதூர் அரி விலாச சாரதா அவர்களால் இந்திய சட்டசபையில் இளமை மணத்தைத் தடுக்கும் சட்டம் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது. ஆயினும் நமது நாட்டு வைதீக மூடர்களின் கிளர்ச்சியாலும், அரசியல் கிளர்ச்சிக்காரர்களின் ஆர்ப்பாட்டங்களாலும் அந்தச் சட்டம் சில மாதங்கள் சரியாக அநுஷ்டிக்
குடி அரசு - 1932 M 70
கப்படாமல் இருந்தது. இப்பொழுதும் அச்சட்டம் அமுலிலிருப்பதாகத் தான் சொல்லப்பட்டு வருகிறது. இன்றும் வைதீகர்கள் அனைவரும் இச்சட்டத்தைக் கண்டித்து இதனால் மதம் போய்விட்டதென்றும், வருணாச்சிரம தருமம் போய்விட்டதென்றும், சனாதன தருமத்திற்கு அழிவு வந்துவிட்டதென்றும், ஆகையால் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும் குலைத்துக் கொண்டு கிடக்கிறார்கள். இச்சட்டத்தை ஒழிப்பதற்கென்றே தஞ்சை திருச்சி ஜில்லாக்களின் பிரதிநிதியாகத் திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார். இந்திய சட்டசபையில் போய் உட்கார்ந்து கொண்டு திருத்த மசோதாவும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அம்மசோதாவை ஆதரிக்கும் மனப் பான்மையுடைய வைதீகர்களும் சபையில் அங்கத்தினர்களாயிருக்கின்றனர்.
இதற்கிடையில் இளமை மணத்தடைச் சட்டத்தைக் கொண்டு வந்த திவான் பகதூர் அரிவிலாச சாரதா அவர்களே மற்றொரு சிறந்த சீர்திருத்த மசோதாவைச்சென்ற 26-1- 32 இந்திய சட்டசபையில் கொண்டு வந்து அதைத் தனிக் கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமென்று பிரேரேபித்தார். அந்த மசோதா
வின் நோக்கம் “பெண்களுக்குப் புருஷனுடைய சொத்தில் பாகம் இருக்க வேண்டும்” என்பதேயாகும். நியாய புத்தியும் பகுத்தறிவும் மனிதத் தன்மை.
யும் உள்ள எவரும் இம்மசோதாவை அப்படியே ஒப்புக் கொள்வது தான் ஒழுங்காகும்; ஜீவகாருண்யத் தன்மையும் சமரச நோக்கமும் உள்ள எந்த ஒரு மனிதனும் இம்மசோதாவை ஒப்புக் கொள்ளப் பின் வாங்க மாட்டான்.
இந்து மதப் பெண்கள் எவ்வளவு செல்வமுள்ள குடும்பத்தில் பிறந்தா
லும், பிறந்த அகத்திலுள்ள சொத்திலும் அவர்களுக்குப் பாத்தியம் இல்லை. எந்த செல்வவானுடைய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாலும், புருஷன்
இருக்கும் வரையில் கொஞ்சம் சுகமாக இருக்கலாமே யொழிய புருஷன் இறந்து விதவையாகிவிட்டால், சொத்துரிமையும், சுகமும் இல்லாமல் துன்பப் படக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இத்தகைய கொடுமையை இந்துமத பெண்கள்தான் பாழும் இந்து மதத்தில் பிறந்ததற்காக அனுபவிக்க வேண்டிய வர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கஷ்ட நிலை கிறிஸ்தவ, முஸ்லீம் பெண்களுக்கு இல்லவே இல்லை. வேறு எந்த நாகரீகம் பெற்ற நாட்டிலும் இல்லை என்றே கூறலாம். இந்தப் பரிதாபகரமான நிலையை நீக்கிப் பெண்: களைப் புருஷனுடைய சொத்துக்கு உரிமையுடையவராகச் செய்வதே திரு. சாரதா அவர்கள் மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
இத்தகைய அரிய மசோதாவைப் பிரரேரேபித்த போது அதை திரு.
அமர்நாத் தத்தர், திரு. லால் சந்து நாவல்ராய் திரு. ராஜா பகதூர் கிருஷ்ண மாச்சாரியார் ஆகிய மூவரும் எதிர்த்தனர். அரசாங்கத்தின் சார்பாக சர். லாஸ்பெடட் கிரஹாம் அவர்களும் சபை அங்கத்தினர்களில் மூன்று பேர். எதிர்த்ததைக் காரணமாகக் கொண்டு மசோதாவை ஆதரிக்க மறுத்தார். ஆனால் மற்ற அங்கத்தினர்கள் அனைவரும் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியவர்களும் இம்மசோதாவை வரவேற்று ஆதரிப்பதாக
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
யூகிக்க இடமிருக்கிறது. ஆகவே இந்த மசோதாவுக்குச் சட்டசபையில் தாராளமான ஆதரவிருப்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது. இனி இம்மசோதாவை எதிர்த்த வைதீகர்களும் அரசாங்கத்தாரும் தாங்கள் அம்மசோதாவை எதிர்ப்பதற்கு கூறிய காரணங்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். இம்மசோதாவை எதிர்த்த திரு. அமர்நாத் தத்தர் என்பவர் தாம் வருணாச்சிரம தருமத்தில் நம்பிக்கை உடையவர் என்றும் பண்டைக்கால மகான்களின் புனித சட்டங்களில் கை வைக்க ஒருவருக்கும் சுதந்தரம் கிடையாது என்றும் சொன்னார். இந்த வைதீக மனப்பான்மையுள்ள கனவான் பேச்சைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள். இவர் வருணாச்சிரம தருமத்தில் நம்பிக்கையுடையவராயிருந்தால், இவர் அதைப் பின்பற்றி நடக்கிறாரா? இவரால் நடக்கத் தான் முடியுமா? வெள்ளைக்கார அரசாங்கத்
தால் ஏற்படுத்தப்பட்ட சட்டசபையில் சட்டை, தலைப்பாகையோடு வந்து உட்கார்ந்து கொண்டு பேச எந்தப் “பண்டைக்கால மகான்களின் புனித சட்டம்” போதிக்கிறது? “மிலேச்ச” பாஷையாகிய ஆங்கில பாஷையைப் படிக்கவும், உத்தியோகம் பெறவும், பேசவும் எந்த “பண்டைக்கால மகான் களின் புனித சட்டம் கூறுகிறது? என்று தான் கேட்கிறோம்.
அடுத்தபடியாக இந்த மசோதாவை எதிர்த்த திரு. கிருஷ்ணமாச் சாரியார் இந்து விதவைகள் கஷ்டப்படுகிறார்கள், அநீதியாக நடத்தப்படு கிறார்கள் என்னும் கதை மெய்ப்பிக்கப்பட வில்லை யென்றும், இம்மசோதா இந்து சமூகத்தின் வேரையும் தர்மத்தையும் வெட்டி வீழ்த்தி விடும் என்றும், இந்துமதத்தின் அடிப்படையான அஸ்திவாரங்களைப் பலமாய்த் தாக்குகிறது என்றும் பேசி இருக்கிறார். இவர் பேசியிருப்பதில் உண்மையாவது, அல்லது அறிவுக்குப் பொருத்தமான வாதமாவது இருக்கிறதா? என்று பாருங்கள்! உண்மையில் இவர், வருணாச்சிரம தருமத்தைப் பற்றி பேசவோ, அல்லது தன்னை ஒரு வருணாசிரம தரும இந்துவாகச் சொல்லிக் கொள்ளவோ எவ்வளவு தூரம் சுதந்திரம் உள்ளவர் என்று தான் நாம் கேட்கின்றோம். வேதங்களை மனப்பாடம் பண்ணித் தவளையைப் போல் கத்திக் கொண்டு காவிரிக் கரையில் உட்கார்ந்து கொண்டு ஓமம் பண்ணிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு இங்கிலீஷ் பாஷை பயிற்சியும், உயர்ந்த உத்தியோகஸ் தர்களாகிய இங்கிலீஷ்காரர்களின் கூட்டுறவும் வைத்துக் கொண்டிருக்கும் இவர் வருணாச்சிரம தரும இந்து ஆவாரா? இனி இவர் பேசியதில் உள்ள விஷயங்களைக் கவனிப்போம்.
இந்து சமூக விதவைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதும் அநீதியாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் மெய்ப்பிக்கப்படவில்லையாம். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போன்ற பேச்சேயாகும். மற்ற சமூகத்தை விடத் திரு.ஆச்சாரியார் அவர்களின் பார்ப்பன சமூகத்திலேயே விதவைகள் அதிகம். அவர்கள் வீடுகளில் நூற்றுக்குத்தொண்ணூற்றொன்பது வீடுகளில் விதவைகள் இல்லாமல் இல்லை.அவர்கள் படும் கஷ்டங்களுக்கு அளவில்லை. வேண்டுமானால் நாலு மொட்டை அம்மாள்களைக் கூப்பிட்டு
குடி அரசு - 1932 M 72
விசாரித்தால் உண்மை விளங்கும். இது போகட்டும். இந்த மசோதா இந்து சமூகத்தின் வேரையும், தர்மத்தையும் வெட்டி வீழ்த்தி விடுமாம்! இந்து சமூகத்தின் அடிப்படையான அஸ்திவாரங்களைப் பலமாக தாக்குகிறதாம்! எவ்வளவு உண்மையான - சீவகாருண்யமான பேச்சு பாருங்கள்! பெண்: மக்களை மிருகங்களிலும் கேடாகக் கொடுமைப் படுத்தி, பிள்ளை பெறும் யந்திரங்களாகவும் அடிமை வேலை செய்யும் கருவிகளாகவும் வைத்திருப் பது தானா இந்து மதம்? ஜன சமூகத்தில் பாதியாக இருக்கின்ற தாய்மாரைத்
தவிக்க விடுவது தானா இந்து மதம்? இந்து மத தர்மம்? இந்து மதத்தின் அடிப்படையான அஸ்திவாரம்? என்று தான் நாம் கேட்கின்றோம். இப்படிப் பட்ட சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு மதம் மதமாகுமா? என்று யோசித்
துப் பாருங்கள். இப்படிப்பட்ட சட்டங்களை உண்டாக்கியவர்கள் மகான்களா? அல்லது சுயநலவாதிகளா? ஜீவகாருண்ய முள்ளவர்களா? அல்லது வன்: நெஞ்சர்களா? யோக்கியர்களா? அல்லது அயோக்கியர்களா? என்று நன்றாய் யோசனை செய்து பாருங்கள்!
ஆகையால் தான் நாம் இத்தகைய அயோக்கியத் தனங்கள் நிறைந்த இந்து மதத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம். இந்த மதம் ஒழிந்தலான்றி பெண்மக்களுக்கோ, மற்ற ஜாதிக் கொடுமையால் கஷ்டப் படும் கூட்டத்தார்க்கோ சுதந்திரம் கிடைக்கப் போவதில்லை என்று உறுதி
யாகச் சொல்லுகிறோம். ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லா மக்களை யும்மக்களாகப் பாவித்து சுதந்தரம் வழங்கக் கூடியதாக ஒரு மதமோ அல்லது ஒரு கடவுளோஅல்லது ஒரு வேதமோ இருந்தால் அதை நாம் ஆட்சேபிக்க வில்லை. இப்படி யில்லாமல் ஒரு கூட்டத்தாரை உயர்ந்த பதவியிலிருந்து எல்லாச் சுகங்களையும் அடையக் கூடியவராகவும், மற்றொருக் கூட்டத் தாரைப் பிறந்தது முதல் இறக்கும் வரை அடிமையாயிருந்து எல்லாத் துன்பங் களையும் அனுபவிக்கக் கூடியவராகவும் வைத்திருக்கக் கூடியவராகவும்,
வைத்திருக்கக் கூடியது மதமாயிருந்தாலும் சரி அல்லது கடவுளாயிருந்தாலும் சரி அல்லது வேதங்களாயிருந்தாலும் சரி அவைகளை நெருப்பிலிட்டுக் கொளுத்தி அச்சாம்பல்களை “அட்லாண்டிக் ஓஷன்” என்னும் கடலில் கொண்டுபோய் கொட்டவேண்டுமென்பதே நமது முடிவான தீர்மானமாகும்.
இனி அரசாங்கத்தின் நோக்கத்தையும் கவனிப்போம். நமது பிரிட்டீஷ் அரசாங்கத்தார் “இந்துக்களின் மதத்தில் தலையிடுவதில்லை” என்று சொல்லிக்கொண்டு நமது சமூக சீர்திருத்தத்தில் சிறிதும் கவனமில்லாமலே தான் இது வரையிலும் இருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை யிலேயே அரசாங்கமும் சமூக சீர்திருத்தம் பண்ணுவதில் கவனமுடையதாக இருந்திருக்குமானால் பிரிட்டீஷ் அரசாங்கம் ஏற்பட்ட இந்த நூற்றைம்பது வருஷ காலத்திற்குள் நமது இந்து சமூகம் எவ்வளவோ சீர்திருத்தமான நிலைமைக்கு வந்திருக்கக் கூடும். ஆனால் அரசாங்கத்தாரோ சீர்திருத்தத்தில் கொஞ்சமும் கவலை இல்லாமல் “நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்” என்னும் அந்தப் பழயப் பல்லவியையே வைதீக வெறியர்களின் மிரட்டு
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தலுக்குப் பயந்து இன்னும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆதரவற்ற பெண்: களுக்குச் சொத்துரிமை வழங்கும் பொருட்டுக் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதாவைப் பற்றி அரசாங்கத்தின் சார்பாக “இந்த மசோதாவுக்குப் பலமான பொது ஜன ஆதரவிருப்பதாக எங்களுக்குத் தெரிந்தால் ஒழிய நாங்கள் இதை ஆதரிக்க மாட்டோம்” என்று சொல்லிவிட்டார்கள். அரசாங்கத்
தார் இம்மசோதாவை ஆதரிக்க முன்வராமல் இவ்வாறு எதிர்த்ததை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம். பெண்கள் சம்பந்தமாகக் கொண்டு வரும் இம்மசோதாவுக்குப் பொது ஜன ஆதரவு இருப்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கத்தாருக்கு ஞாபகப் படுத்த விரும்பு கின்றோம். உண்மையில் இந்தச் சாரதா மசோதாவுக்குப் பொது ஜன ஆதரவு இருக்கிறதா என்று அறிய வேண்டுமானால் சொத்துரிமை இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கும் பெண் மக்களின் அபிப்பிராயங்களை அறிவது தான் ஒழுங்காகும். இம்மசோதாவைப் பற்றி வைதீக வெறி பிடித்த, சுயநலமுடைய ஆண்மக்கள் கூறும் அபிப்பிராயம் பொருத்த மற்றதாகும். ஏனென்றால் பெண்களை அடிமையாக வைத்திருப்பதுதான் இந்து மதம். சிறு குழந்தை களைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதுதான் இந்து மதம் -ஆண் மக்கள் சொத்து சுதந்தரத்தோடு சுககடைவதும் பெண் மக்கள் அவையில்லாமல் துன்பமடைவதுந்தான் இந்து மதம், இந்து மத தர்மம், இந்த மதத்தின் அஸ்திவாரம் என்ற கொள்கையுடையவர்கள் எப்படி இம்மசோதாவை ஆதரிக்கக் கூடும்? ஆகையால் பெண் மக்களின் அபிப்பிராயத்தையே அனுசரித்து இம்மசோதாவுக்கு ஆதரவு கொடுப்பது தான் அரசாங்கத்தின் நியாயமான கடமையாகும். “இந்தியர்களைக் காப்பாற்றவே நாங்கள் இந்தியா வுக்கு ஊழியம் புரிகிறோம்”” என்று வெள்ளைக்கார அரசாங்கம் சொல்லிக் கொண்டிருப்பது உண்மையானால் இந்த மசோதாவை ஆதரித்துப் பெண் மக்களுக்குநியாயம் வழங்குவது தான் நேர்மையாகும் என்று எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.
கடைசியாகப் பொது ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லி முடிக் கிறோம். சாரதா சட்டத்தைக் கண்டித்து வைதீக வெறியர்கள் கிளர்ச்சி செய்தது போல் இப்பொழுது அந்தக் கூட்டத்தார் கிளர்ச்சி செய்யப் போகின்றார்கள். ஆகையால் நாம் அவர்களுடைய விஷமப் பிரசாரத்திற்கு இடங்கொடாமல், இந்த மசோதாவை ஆதரித்துப் பொதுக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறை வேற்றி அரசாங்கத்தார்க்கு அனுப்பி அவர்களையும் எச்சரிப்பது அவசியம் ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
நாம் எதிர்பார்த்ததற்கு விரோதமாக பலத்த விவாதத்திற்குப் பின் மேற்படி மசோதா தோற்றுவிட்டதாக இன்றைய செய்தியறிய மிகவும் விசனிக்கிறோம். இதைப் பற்றி மறுமுறை எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 07.02.1932.
குடி அரசு - 1922 0) 74
நாண்கையரும் பாருங்கன்
- தேசீயத்துரோகி
சீனாவைப் பாருங்கள்
தற்காலத்தில் சீனதேசம் ஆபத்தான நிலைமையிலிருந்து கொண்டிருக்
கிறது. ஜப்பான் அதை ஓட ஓட விரட்டுகிறது. ஜப்பானுடன் எதிர்த்து நின்று போர் செய்யும் வல்லமை சீனாவுக்கு இல்லை. ஆகையால் அது சர்வதேச சங்கத்தினிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறது. சர்வதேச சங்கமும் இத் தனை நாட்களாக ஒரு முடிவுக்கும் வராமலிருந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சர்வ தேசங்களுக்கும் சொந்தமாக இருக்கும் பிரதேசத்தில் ஜப்பான் ஆதிக்கம் செலுத்த விரும்புவதால் சீனா ஜப்பான் தகராறில் சர்வதேச சங்கமும் தலையிட்டுக் கொண்டிருக்கிறது. இது எப்படியாவது போகட்டும்.
சீனா இத்தகைய பலமற்ற நிலைமையில் இருப்பதற்குக் காரணம் என்ன என்பதைமாத்திரம் கொஞ்சம் கவனிப்போம்.
சீனாவில் சரியான சீர்திருத்தம் ஏற்பட வில்லை.சீனாவின் மக்கள் ஏறக் குறைய இந்தியா மக்களைப் போன்றவர்கள். பழய நாகரீகத்தை விடாப் பிடி யாக பிடித்திருப்பவர்கள். சீனாவில் சீர்திருத்த நோக்கமுடைய கூட்டத்தாரும் இருக்கின்றனர். அவர்கள் நம்மைப் போன்ற - அதாவது சுய மரியாதை இயக்கக்காரர்களைப் போன்ற சீர்த்திருத்தக்காரர்கள். ஒரு பக்கம் பழமையை உயிர்போனாலும் விடக் கூடாது என்ற கொள்கையை உடைய மக்கள் இருக் கின்றனர்.அவர்கள் நாட்டின் அரசியலில், கவனம் இல்லாதவர்கள்.அவர்கள், பரலோகத்துக்கான காரியங்களிலேயே கருத்துள்ளவர்கள். சுருங்கக் கூறினால் நமது நாட்டு வருணாச்சிரம வைதீகர்களின் பங்காளிகள்.
அல்லாமலும் முதலாளிக் கூட்டத்தாரும் சீனாவில் மிகுதியாக இருக்கின்றனர். அவர்கள் தாங்கள் மனைவியுடன் மக்களுடனும் சுகபோக வாழ்க்கை வாழ்வதில் தான் கருத்துடையவர்கள். ஆகையால் அவர்களுக்கு நாட்டைப் பற்றிய கவனம் சிறிதும் இல்லை.
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அன்றியும் அங்கு ஏழை மக்களின் கூட்டம் மிகுதி. ஆகையால் சைனாவில் பொதுவுடமைப் பிரசாரமும் அதிகம். இவ்வியக்கமும் பலமாக இருக்கிறது. இவர்களும் ஒரு புறத்தில் உள்நாட்டு அரசியலை ஸ்தாபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
ஆகவே இதுவரையிலும் கூறியவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்த்தால் சைனாவின் மக்கள் பழய நாகரீகத்தில் - மூட நம்பிக்கையில் இன்னும் கருத்துடையவர்களாக இருப்பதால் அவர்களிடம் ஒற்றுமை யில்லை. பலமான அரசாங்கம் ஸ்தாபிக்க முடியவில்லை. ஆகையால் அது அந்நிய தேசப்படையெடுப்புக்குக் கட்டுப்பட்டு பயந்து கொண்டிருக்கிறது. எல்லா வல்லரசுகளும் சைனாவின் பிரதேசத்தில் ஆதிக்கம் வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதனோடு நமது நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுகிறோம். சீன மக்கள் மனத்தில் உண்டாயிருக்கும் கொஞ்சம் மாறுதல் கூட இன்னும் நமது மக்களின் மனத்தில் உண்டாகவில்லை.
அவர்களுக்கிருக்கும் குறைந்த ஒற்றுமையில் லட்சத்தில் ஒரு பங்கு ஒற்றுமை கூட நமது மக்களிடம் உண்டாகவில்லை. இந்த நிலையில் நமக்குப் பூரண சுயேச்சை கிடைத்துவிட்டால்? நம்மை விரட்ட யார்தான் முன்வர மாட்டார். கள்? இளைத்தவன் தலையில் மிளகாய் அரைக்க நினையாதவர்கள் யாரே
னும் உண்டா? ஆகையால்தான் முதலில் மக்கள் மனத்தில் உள்ள மூடத் தனத்தை அகற்றுங்கள். ஒற்றுமையை உண்டாக்குங்கள்! ஜாதி மதங்களை: ஒழியுங்கள்! பூரண சுயேச்சை பெறலாம் என்று கூறுகிறோம்.
தீண்டாதாரின் சமத்துவப் போர்
குருவாயூர் ஆலயதர்மகர்த்தாக்கள் தீண்டாத வகுப்பினரின் சத்தியாக் கிரகத்திற்குப் பயந்து இதுவரையிலும் கோயிலை மூடிவைத்து விட்டனர். சென்ற 28-1- 39ல் மீண்டும் திறக்கப்பட்டது. அப்பொழுது தீண்டாதவர்களும். சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பண்டரிபுரத்தில் உள்ள கோயிலுக்குள் போக விரும்பி தாழ்த்தப்பட்ட வர்கள் தர்மகர்த்தாக்களை அனுமதி கேட்டனர். அவர்கள் அனுமதி தர மறுத்துவிட்டனர். உடனே திண்டத் தகாதவர்கள் அனைவரும் சத்தியாக் கிரகம் செய்வதெனத் தீர்மானித்து விட்டனர்.
மேற்கண்ட இரண்டு செய்திகளைப் பற்றி கொஞ்சம் ஆலனோசித்துப் பாருங்கள். குருவாயூர் கோயில் பூனைகள் கோயிலைப் பூட்டி வைக்க சம்மதித்தார்களே யன்றி அதற்குள் தாழ்த்தப்பட்டவர்களைப் போக விடச் சம்மதித்தார்களில்லை. பல நாட்களாகச் சிறையிலிருக்கச் சம்மதிக்கும் குருவாயூர் சாமி, தீண்டத்தகாதவர்கள் தன்னிடம் வர சம்மதிக்கவில்லையா?'
குடி அரசு - 1932 M 76
இனி பண்டரிபுரப் பார்ப்பனர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.அவர்களும் பூட்டிவைக்கப் போகிறார்களா அல்லது குருவா
யூர்ப் பிரகஸ்பதிகள் செய்ததுபோல் முள்வேலி போடப் போகிறார்களா? என்பது தெரியவில்லை.
இந்தச் சங்கடங்கள் தீர நமக்கு ஒருவழி தோன்றுகிறது. கோயில்களில் உள்ள சாமிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க விரும்புகின்றவர்கள் அவை களைத் தூக்கிக் கொண்டுபோய் தங்கள் சொந்த வீடுகளில் வைத்துக்கொண்டு கொண்டால் அங்கு யாரும் சத்தியாக்கிரகம் பண்ண வரமாட்டார்கள். சாமி களுக்கும் உயிர் போய்விடாது.
அல்லது கோயில்களையே அடியோடு தரைமட்டமாக்கிவிட்டால் தீண்டாதவர்கள் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டிய அவசியமில்லை. கோயில்கள் இருப்பதினால்தானே அதற்குள் பிரவேசிக்க வேண்டுமென விரும்புகின்றனர்?
போகட்டும் எப்படியாவது செய்யுங்கள்; ஆனால் இதைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். தீண்டத்தகாத மக்கள் இம்மாதிரி தங்கள். சமதர்மத்திற்காக கஷ்டப்பட வேண்டிய நிலையிலிருக்கின்றனர். அவர்கள். உரிமையைக் கவனிப்பார் யாருமில்லை.எந்த சுயராஜ்யக்காரனாவது ஜாதிக் கொடுமையை ஒழிக்க வேலை செய்கிறானா? மதம் என்னும் மூடத்தனத்தை ஒழிக்க வேலை செய்கிறானா? இவைகளைப் பற்றி கவலையில்லாமல் இருக்கும் போது இவர்கள் சுயராஜ்யமாவது, பூரண சுயேச்சையாவது! பெறுவதாவது! அனுபவிப்பதாவது! என்று நாம் பரிகாசம் பண்ணுவதை யாராவது குற்றமென்று சொல்ல முடியுமா?
நகர சபையா? மத சபையா?'
சென்னை நகர சபையார் சென்ற 30-1-32-ல் கெளடய மடாதிபதியான
திரு. “பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி” அவர்களுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்தார்களாம். அது சமயம், திரு. சுவாமியார், தமது சீடர்களுடன் விஜயம் பண்ணினாராம். வரவேற்புப் பத்திரம் வாசிப்பதற்கு
முன் அவருடைய சீடர்களில் ஒருவரால் “தெய்வ ஸ்தோத்திரம்” கூறப்பட்ட
தாம். அதன்பின்தான் வரவேற்பு பத்திரம் கொடுக்கப்பட்டதாம். திரு. சுவாமியாரும் கடைசியில் பதில் கூறும் போது “கடவுள் சர்வாந்திரியாமியாய்
எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றும், “மதக்கல்வி மிகவும் அவசியமானது” என்றும் உபதேசம் பண்ணினாராம்.
போகட்டும், சென்னை நகரசபை உறுப்பினர்கள் நல்ல உபதேசம் பெற்றதற்காக சந்தோஷப்படுகிறோம். உறுப்பினர்களில் எத்தனை பேர். ஸ்வாமிகளிடம் உபதேசம் பெற்று அவர்களின் சீடர்களானார்களோ
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தெரியவில்லை. சென்னை நகரசபை இனி மதக் கல்வி போதிக்க விரும்பி
னாலும் விரும்பலாம். ஆனால் அச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் மறந்து விடக் கூடாது. சென்னை நகரத்தின் குடிமக்களில் கடவுள், புராணம், மதம் முதலியவற்றை மறுக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்களிட மிருந்தும் நகரசபைக்கு வரிப்பணம் வந்துகொண்டிருக்கும். ஆகையால் நாஸ்திகக் கல்வியும் போதிக்க வேண்டியது நியாயமாகும் என்பதை நினைப்
பூட்டுகிறோம்.
சென்னை நகரசபை இனி கும்பகோணம் சங்கராச்சாரியாருக்கும் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டியதுதான். தருமபுரம், திருவாவடுதுறை முதலிய ஊர்களில் உள்ள பண்டார சன்னதிகளுக்கும் வரவேற்புப் பத்திரம் வாசித்துக்கொடுக்க வேண்டியதுதான். மற்றும் ஜீயர்கள், பிஷப்புகள், போப்புகள், மகந்துகள், முல்லாக்கள் ஆகிய எந்த மதத் தலைவர்கள் வந்தாலும் அவர்களுக்கும் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டியதுதான். இனி நகரசபை மதசபையாக மாற வேண்டி யதைத் தவிர வேறு வழியில்லை என்று நாம் பயப்படுகிறோம்.
தெய்வ சக்தி எங்கே?
ஸ்பெயின் தேசத்தில் புதிதாக ஏற்பட்டிருக்கும் குடியரசு அரசாங்கம், மக்களின் அறிவைக் கெடுத்து மூடராக வைத்திருக்கும், மதஸ்தாபனங்களின் ஆதிக்கங்களை யெல்லாம் ஒழித்துக் கொண்டு வருகின்றனர். மடங்கள் கோயில்கள் இவைகளின் சொத்துக்களை யெல்லாம் பறிமுதல் செய்து அவைகளைத் தேச மக்களின் நன்மைக்குப் பயன்படுத்தத் தீர்மானித்து விட்டனர்.
இதைக் கண்ட ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்களெல்லாம், மிகவும் கோபம் கொண்டு, அரசாங்கத்திற்கு எதிராகப் பொது ஜனங்களைக் கிளப்பி விட எவ்வளவோ முயற்சி செய்தனர். அறிக்கை மேல் அறிக்கை வெளி யிட்டனர். மதத்திற்கு ஆபத்து என்று கூச்சலிட்டனர். ஆனால், ஒன்றும் பலிக்க வில்லை.பாவம், அவர்களுடைய கடவுள் அவர்களைக் காப்பாற்றா
மல் கைவிட்டு விட்டார். அவர்களுடைய கடவுளுக்கு - தெய்வீக சக்திக்கு - மதத்திற்கு, அரசாங்கத்தின் செய்கையைத் தடுப்பதற்கு வலிமையில்லையா? கடைசியில் அந்தப் பாதிரிமார்க ளெல்லாம் மூட்டை முடிச்சுகளுடன், நாட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார்கள். “ஹாலண்ட்”” தேசத்தில் போய் தங்கியிருக் கிறார்களாம் !
இந்தச் சமயத்தில் நமக்கு ஒரு யோசனை யுண்டாகிறது. கடவுளின்
பிரதிநிதியாக - மதத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற தங்களையே காப்பாற்றாத
மதம் தேசத்தைக்காப்பாற்ற முடியுமா? மக்களைக் காப்பாற்ற முடியுமா? என்ற யோசனை இந்தப்பாதிரிகளுக்கு உண்டாக வில்லையே என்று தான் யோசிக்
குடி அரசு - 1932 M 78
கிறோம். இதனால் தான் “மதம் மக்களுடைய சொந்த புத்தியையே கெடுத்து விடுகிறது” என்று சொல்லுகிறோம். இதனால் நாம் கிறிஸ்துவ மதத்தையும் கிறிஸ்துவப் பாதிரி மார்களையும் மாத்திரம் கண்டிக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக எல்லா மதங்களையும் இப்படித்தான் கூறுகிறோம். ஆகையால் இனியாவது மதம் பயனற்ற தென்பதை அறிவீர்களா?
குடி அரசு - கட்டுரை - 07.02.1932
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மலேயா கமிமர்கன்
மலேயாவில் உள்ள பினாங்கு நகரில் சென்ற 16, 17-1-32 ல் அகில மலேயாத் தமிழர்களின் இரண்டாவது மகாநாடு மிகவும் விமரிசையாக நடை பெற்றதை அறிந்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மலேயாவில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்து தொண்டாற்றி வரும் திருவாளர்களான வி. கே. முருகேசம் பிள்ளை, ஆர். ஆர். ஐயாறு, தாமோதரம், ஜி. சாரங்கபாணி, சுவாமி அற்புதானந்தா, எச். எச். அப்துல்காதர். முதலானவர்கள் அம்மகாநாட்டில் அதிகமான பங்கு எடுத்துக் கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள். அந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர். மானங்கள் எல்லாம் நமது இயக்கக் கொள்கையை அநுசரித்தனவாகவே இருக்கின்றன.
அத்தீர்மானங்களில் முக்கியமானவை பொருத்தமற்ற விவாகங் களைக் கண்டிப்பதும், விதவா விவாகத்தை ஆதரிப்பதும், விவாகரத்தை ஆதரிப்பதும், இறந்து போனவர்களுக்காகச் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டிப்பதும் “அகில மலேயா தமிழர் மகாநாடு” என்பதை “அகில மலேயா தமிழர் சீர்திருத்த மகாநாடு” என்று மாற்ற வேண்டும் என்ப
தும் முக்கியமான தீர்மானங்களாகும். இது போலவே வாலிபர் மகாநாட்டிலும், பிறப்பினால் ஏற்றத்தாழ்வு இருப்பதைக் கண்டிப்பதாகவும், விவாகங்களைச்
சடங்குகள் இல்லாமல் குறைந்த செலவில் பதிவு செய்து கொள்ளும் முறை
யில் செய்ய வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இத்தீர்மானங்களை யெல்லாம் நாம் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம்.
தீர்மானங்களோடு நில்லாமல், வாலிபர்களும் சீர்திருத்த ஆர்வ முடைய தோழர்களும் இவைகளை அநுஷ்டானத்தில் கொண்டு வர வேலை செய்வார்களென்று நம்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.02.1932.
குடி அரசு - 1932 M 80
உணர்ச்சி வீண் போகாது
எல்லா மக்களும் தாங்கள் இருக்கும் நிலையை விட்டு இன்னும் உயர்ந்த நிலையை அடைவதற்கே ஆசைப்படுவார்கள். கீழான நிலையை அடைவதற்கு விரும்புகின்ற மனிதர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கீழான நிலைக்குச் செல்லவேண்டுமென்னும் கருத்துடையவர்கள் யாராவது இருந்தாலும், அவர்கள் கருத்தும், அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையைக் கொண்டதாகத் தான் இருக்கக் கூடும். இது மனித சமூகத்தின் இயற்கையாகும். இத்தகைய ஆவலும் முற்போக்குணர்ச்சியும் இருந்த காரணத்தால்தான் மனித சமூகமானது பண்டை காலத்திலிருந்த மிருகப் பிராயத்திலிருந்து முற்றும் மாறுதலடைந்து தற்கால முள்ள நாகரீகமான நிலைக்கு வந்திருக்கின்றது.
“மனிதன் அறிவுடையவனாகவே படைக்கப்பட்டான்” என்னும் மத வாதிகளின் கட்டுக் கதையைத் தள்ளிவிட்டுச் சரித்திர மூலமாகப் பண்டைக் காலத்தில் மக்கள் எந்த நிலையிலிருந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். மக்கள் உண்டான காலத்தில் அவர்கள் குரங்கு களைப் போலவே மரங்களிலும், மலைகளிலும் வாழ்ந்து பிறகு தழை, மரப் பட்டைகளை எடுத்து, மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள். நாளடைவில், நல்ல உடைகளைச் செய்து அணியக் கூடியவர்களாகவும், ஆகாரங்களைப் பக்குவப்படுத்தி உண்ணக் கூடியவர்களாகவும் இருந்து இடங்களமைத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் சிறப்படைந்தனர் என்பது
சரித்திர உண்மை.
இத்தகைய மக்கள் எல்லோரும் பண்டை காலத்தில் அறிவுடையவர். களாக இருந்திலர்.அறிவுடையவர்கள் சிலரும், அறிவில்லாதார்கள் பலருமாக இருந்தனர். இந்த அறிவுடைய சிலரே மற்ற எல்லா மக்களையும் ஒரு கட்டுக்கு உட்படுத்தி அவர்களையெல்லாம் ஆண்டு வந்தனர். தமது அறிவின் திறமையால் பல சட்டங்களை ஏற்படுத்தி மக்களை அதற்கு கட்டுப்பட்டு ஒழுகும்படி செய்து வந்தனர். அக்காலத்திலிருந்த அறிஞர்களின் எண்ணம் மிகவும் முன்னேற்றமுடையதாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் எண்ணக் கூடிய எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கும் ஆற்றல்
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அவர்களுக்கில்லை. தற்காலத்தில், ஆகாயத்தில் பறக்கவும், இயந்திரங்களால் ஆகிய மோட்டார் ரயில் முதலியவைகளை உபயோகிக்கவும், இயந்திரங் களைக் கொண்டு சண்டை போடவும் மனிதர்கள் கண்டு பிடித்திருப்பது போலவே அவர்களுக்கும் இம்மாதிரியான விஷயங்களின் மேல் ஆசை
மாத்திரம் இருந்தது. ஆகையால் சாதாரணமாக நடந்து திரிந்த மனிதர்கள்,
மாடு, கழுதை, குதிரை முதலியவைகளின் மேல் ஏறிக் கொண்டு சவாரி செய்யவும், பிறகு அவைகளை வண்டிகளில் பூட்டிப் பிரயாணம் பண்ணவும், தண்ணீரில் கட்டைகளை மிதக்கவிட்டுக் கொண்டு அதன்மூலம் நீர்நிலை களைத் தாண்டவும், பிறகு அவைகளைப் பாய்க்கப்பல்களாகச் செய்து கொள்ளவும் தான் கற்றுக் கொண்டார்கள். சரீர பலத்தால் சண்டை செய்த வர்கள், வில், ஈட்டி, முதலிய ஆயுதங்களைக் கொண்டு சண்டை செய்யவுந் தான் கற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில் அவர்களுடைய அறிவினாலும் முயற்சியினாலும் இவ்வளவு தூரந் தான் நாகரீகமடைய முடிந்தது.ஆகவே அதற்கு மேல் உண்டான, அதாவது தாங்கள் செய்ய முடியாத எண்ணங்களை எல்லாம் செய்வதற்கு ஏதோ ஒரு பொருள் இருக்கவேண்டுமென்று கருதி விட்டார்கள். அப்பொழுது தான் “கடவுள்”, “தெய்வம்”, வேறு உலகம் என்ற எண்ணங்களெல்லாம் உண்டாயின. அவ்வெண்ணத்தின் பயனாகவே சாஸ்தி ரங்களும், மதங்களும் ஏற்பட்டு விட்டன.அது முதல் மக்களுடைய மனத்தில் உள்ள தன்னம்பிக்கை குறைந்து தங்களுக்குத் தெரியாத ஒரு பொருளின் சக்தியினால்தான், தங்களால் முடியாத காரியங்களெல்லாம் நடைபெறுகின்றன. என்ற நம்பிக்கையில் வீழ்ந்தார்கள்.
பண்டைக் காலத்தில் ஆகாயவிமானம் இருந்ததாகவும், அது பறந்து சென்றதாகவும் இராமாயணத்தில் கூறப்படுகின்றது. “மயில் பொறி” என இயந்திரத்தினால் மயில்போல ஒரு வாகனம் இருந்ததாகவும், அதன் மீது ஏறிக் கொண்டு சென்றதாகவும் சீவக சிந்தாமணி என்னும் நூலில் சொல்லப்படு கிறது. மகாவிஷ்ணு என்னும் தெய்வத்துக்கு விரோதமாக இருந்த ஒருவன் மகாவிஷ்ணுவைப் போலவே சங்கு, சக்கரம், வில், வாள், கதை முதலிய ஆயுதங்களையும், இயந்திரத்தினால் கருடன் போல ஒரு வாகனம் செய்து கொண்டு அதன்மேல் ஏறி ஆகாயமார்க்கமாக பிரயாணம் செய்ததாகவும் பாகவதம் கூறுகிறது. மற்றும் பல புராணங்களில் கோட்டைச் சுவர்களின் மேல் பகைவர்களுடன் தானே சண்டைபோடக்கூடிய அனேக விதமான இயந்திரங்
கள் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றன. ஆனால் இவை யெல்லாம் அக்காலத்தில் உண்மையில் இருந்தனவா என்றால் இல்லை என்று திடமாகக் கூறலாம். அப்படியானால் இவற்றைப் பற்றிய பிரஸ்தாபம் உண்டாவதற்கு காரணம் என்ன என்றால் எண்ணமே காரணம் என்று கூறுவோம். இவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஆசை அக்காலத்தில் அறிஞர்களுக்கு இருந்தது. அந்த ஆசையினாலும்,மனோபாவத்தினாலுமே கதைகள் எழுதிவிட்டார்கள் என்பது தான் உண்மை. இவ்வாறே ஓர் இடத்திலிருந்து பேசுவதை நெடுந்தூரத்திலுள்ளவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும்
குடி அரசு - 1932 M 82
இருந்தது. இந்த மாதிரியான பல ஆசைகள் இன்றும் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருடைய மனத்திலும் இருப்பதைக் காணலாம்.
இவ்வாறு மக்களுடைய மனத்தில் பல காலமாக நிகழ்ந்து வந்த ஆசையே முதிர்ச்சி அடைந்து அதன் பயனாக தற்காலத்தில் அவைகளெல்
லாம் நிறைவேறி வருகின்றன. ஆகையால் மக்களுடைய மனத்தில் உண்டா
கும் முன்னேற்றமான எண்ணங்கள் நாளடைவில் நிறை வேறாமல் போவ
தில்லை.
இது போலவே பண்டைக் காலத்திலேயே எல்லா மக்களுடைய அறிவும் வளர வளரப் பலவகையான அபிப்பிராய பேதங்களும் வளரத் தொடங்கின. மக்களை அடக்கி ஆளும் பொருட்டு அறிஞர்களால் ஏற்படுத் தப்பட்டதெய்வங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் முதலியவைகளின் உண்மை யற்ற தன்மைகளையும் உணர்ந்து வெளிப்படுத்தவும், மக்களுக்கு அவை களின் மூலம் உண்டாகி இருக்கும் பயத்தையும் அடிமைப் புத்தியையும் அகற்றி ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கை உடையவர்களாக வாழச் செய்யவும் முயன்றனர். இதன் பயனாகத் தோன்றியவைகள் தான் நாஸ்திக மதம், புத்த மதம், சித்தர்களின் கொள்கைகள் முதலியவைகள்.
பொதுவாக அறிவுடைய மக்கள் அனைவரும் தாமே கடவுள், சாஸ்திரம் இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் போது அவைகள் பொய்யென உணரத் தொடங்கினர். ஆகவே அவர்கள் அவைகளின் கட்டுப்பாடுகளி
லிருந்து விலகிச் சுயேச்சையாகவும், சுகமாகவும், கவலையின்றியும் வாழ முயற்சி செய்தனர். நாளடைவில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆளுவதற்கும் செல்வமும் சுகமும் உடையவர்கள் எப்பொழுதும் செல்வமும் சுகமும் உடையவர்களாகவே வாழ்வதற்கும், அவையில்லாமல் அடிமையாய் இருந்து துன்புறுவோர்கள் எப்பொழுதும் அடிமையாக இருந்து துன்புறுவதற்குமே,
நம்மால் ஒரு காரியமும் ஆகாது என்றிருக்கும் சோம்பேரிகளுக்குமே
மதமும், கடவுளும், சாஸ்திரங்களும் என்ற உணர்ச்சி உண்டான பின், அவை
கள்சிறிது சிறிதாக ஒழிந்து வருகின்றன.
“மதங்களையும், சாஸ்திரங்களையும், கடவுளுக்குச் செய்யப்படும்
காரியங்களையும் அழிக்க ஒரு காலத்திலும் முடியாது. அவைகளுக்கு அழிவு வருகிற காலத்தில் கடவுளே அவதாரம் பண்ணி அவைகளை நிலைநிறுத் துவார்” என்று மதவாதிகள் கூறும் சொல் பொய்யாகப் போகுமாறு ரஷியா போன்ற தேசங்களில் மதங்களும், கடவுள்களும், அவைகளுக்குச் செய்யப் படும் காரியங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மதங்கள், கடவுள்.
கள், சாஸ்திரங்கள் இவைகளை அழிக்க வேண்டும் என்ற கொள்கை பரவாத
நாடு ஒன்றுமே இல்லை. எல்லா நாடுகளிலும் இக்கொள்கையுடைய மக்கள்
இருந்து வருகின்றனர்.
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இன்னும் சில ஆண்டுகளுக்குள் உலக முழுவதும் இக்கொள்கைகள் பரவி தற்போது உள்ள மதங்களும் கடவுள்களும் சாஸ்திரங்களும் இவை களின் மூலம் ஏற்பட்டுள்ள உயர்வு தாழ்வு வித்தியாசங்களும் அடியோடு மாண்டொழியும் என்பதற்கு ஐயமில்லை.மக்களுடைய மனதில் உண்டாகும் உணர்ச்சிகள் நாளடைவில் முதிர்ச்சி அடைந்து சித்தி பெறுவதே இவ்வுலகில் இது வரையிலும் நடைபெற்று வரும் இயற்கை நிகழ்ச்சியாக இருந்து வரு கின்றது என்ற உண்மையை அறிந்தவர்கள் எவரும் நாம் கூறுவதைப் பற்றிச்
சிறிதும் ஐயமுறமாட்டார்கள் என்பது நிச்சயம்.
இப்பொழுது. கடவுள், சாஸ்திரம், மதம் முதலியவைகளைப் பற்றிய பயமும் நம்பிக்கையும் யாரிடத்திலிருக்கின்றது என்று பார்த்தால் உண்மை விளங்கும். கல்வி அறிவும், உலக நாகரிக உணர்ச்சியும், பகுத்தறிவும் இல்லாத சாதாரண மக்களிடத்தில் தான் இவைகளைப் பற்றிய நம்பிக்கை இருக் கின்றதே தவிர, வேறு படித்தவர்களிடத்திலோ, நாகரீகமுடைய வர்களிடத் திலோ, பகுத்தறிவு உடையவர்களிடத்திலோ இவைகளைப் பற்றிய நம்பிக் கையோ, பயமோ இருக்கிறதென்று கூற முடியவே முடியாது. நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக் கொண்டு வைதீகர்கள் போல் நடிப்பவர்களெல்லாம் சுயநலத்தினால் பொருளையோ, புகழையோ, பிறரை ஏமாற்றுவதையோ கருதித்தான் அவ்வாறு நடிக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அவைகளில் நம்பிக்கை உடையவர் களாயிருந்தால் அவை களில் சொல்லுகின்றபடி நடக்க வேண்டும். இவ்வாறு சாஸ்திரங்கள் சொல்லு கிறபடியோ மதங்களின் கட்டளையின்படியோ, கடவுள்களின் அபிப்பிராயப் படியோ, முற்றிலும் நடந்து வருகின்ற ஒரு மனிதனாவது இவ்வுலகில் இல்லை. ஆகையால் அவைகள் யாருடைய நம்பிக்கைக்கும் உரியதாக இல்லாமை
யால் அடியோடு அழியக்கூடிய காலமும் தூரத்திலில்லை யென்று சொல்லு கிறோம். இவ்வாறு நடைபெறுவது இயற்கையேயாகும் என்பதையும்
தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 14.02.1932.
குடி அரசு - 1922 0) 84
காண்டு மசோதாக்கனின் கதி
இந்திய சட்ட சபையில் இம்மாதம் 4-ந்தேதி நடந்த நிகழ்ச்சிகள் நமது
நாட்டுச் சீர்திருத்தவாதிகள் எல்லோராலும் கவனிக்கக் கூடிய தொன்றாகும். அன்று நமது நாட்டுப் பெண்மக்களுக்கு விடுதலையளிக்கக் கூடிய இரண்டு மசோதாக்கள் விவாதத்திற்கு வந்தன. அவைகளில் “விதவைகளுக்கு சொத்துரிமை” அளிக்கும் மசோதா ஒன்று. இம்மசோதா விவாதத்திற்கு வந்த. காலத்தில், வைதீகர்கள் இதைப் பற்றி கூறிய அபிப்பிராயத்தையும் சென்றவாரம் எடுத்துக் காட்டி கண்டித்திருந்தோம். கடைசியாக இம்மசோதா
தனிக் கமிட்டிக்கு அனுப்பப்படாமல் தோற்றது. இரண்டாவது “விவாக விடுதலை மசோதா” ஒன்று விவாதத்திற்கு வந்தது. கடைசியில் இம் மசோ தாவைப் பற்றிய விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவும் “விதவை களுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் போலவே தோற்றுப் போகும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு இந்தியப் பெண்மணிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் மசோதாக்கள் தோற்றுப் போவதற்குக் காரணம் என்னவென்று பார்ப்போம். முதற்காரணம் வைதீகர்கள்: இரண்டாவது காரணம் அரசாங்கத்தார்கள்.
இவர்களில் வைதீகர்களைப் பற்றி நாம் குறை கூறுவதில் ஒன்றும் பயன் உண்டாகப் போவதில்லை. அவர்கள் எப்பொழுதுமே சீர்திருத்தங்க ளுக்கு முட்டுக்கட்டைகளாகவே இருந்து தீருவார்கள். பொருள் சம்பாதிப்
பதிலும், பட்டம், பதவி பெறுவதிலும், சாஸ்திரம், மதம் முதலியவைகளைப்
பார்க்காமல் எந்தக் காரியங்களையும் செய்யப் பின்வாங்கமாட்டார்கள். ஆனால் அவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு உண்டாகும் நன்மைகளை மாத்திரம் தடுக்க, முன் வராமல் இருக்க மாட்டார்கள். பிறருடைய சுதந்திரத்
திற்கும், சமவுரிமைக்கும் தடை செய்வதற்காக மதத்தையும், சாஸ்திரங் களையும் கொண்டு வந்து நடுவில் போட்டு குழப்பம் பண்ணுவார்கள். இவ்வாறே தான் எந்தச் சீர்திருத்தங்களுக்கு முயற்சி செய்கின்ற காலங் களிலும் வைதீகர்கள் செய்து கொண்டு வருகிறார்கள். ஆகவே அவர்க ளுடைய நோக்கம் சுயநலத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆகையால் சீர்திருத்தம் புரிய விரும்புகிறவர்கள் வைதீகர்களுடைய அபிப்பிராயங்களை.
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
யும், கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய காரியத்தை நிறைவேற்றுவதில் நோக்கமுடையவராயிருந்தால் தான் சீர்திருத்தம் பண்ண
முடியும்.
அடுத்தபடியாக அரசாங்கத்தாரும் மசோதாக்களுக்கு ஆதரவளிக் காமல் எதிர்த்தார்கள். ஒரு நாட்டு மக்களைச் சீர்திருத்தி அவர்களுக்குச் சுதந்திரத் தன்மையும், சமத்துவத் தன்மையும் உண்டாகும்படி செய்வதற்கு அரசாங்கமே கடமைப் பட்டதாகும். அரசாங்கத்தின் ஆதரவில்லாமல்
நாட்டில் எந்த விதமான சீர்திருத்தங்களையும் செய்ய முடியாது. ஒரு துருக்கி தேசத்தை எடுத்துக் கொண்டால் அந்த நாட்டில் இன்று நடைபெற்று வரும் சமுக சீர்திருத்தங்களெல்லாம் அரசாங்கத்தாராலேயே செய்யப்பட்டு வருகின்றன. இது போலவே ரஷியா, ஸ்பெயின் முதலிய நாடுகளிலும் நடை பெறுகின்றன. மற்றய இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்சு, இட்டாலி முதலிய எல்லா தேசங்களிலும் அரசாங்கத்தாராலேயே சமூகச் சீர்திருத்தச் சட்டங்கள் செய்யப்பட்டன என்பது அறிந்ததாகும். ஆனால் நமது நாட்டு அரசாங்கமோ “நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்” என்று சொல்லிக் கொண்டு வைதீர்களுக்குச் சாதகமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
இந்திய அரசாங்கம் இவ்வாறு வைதீகர்கள் கூச்சலைக் கண்டு அஞ்சு வதற்குக் காரணம், அவர்களைத் திருப்தி செய்துவிட்டால் அரசியல் கிளர்ச்சி அதிகமாக நடைபெறாது என்று நினைத்திருக்கலாம். உண்மையில் அரசாங்
கம் இவ்வாறு நினைத்திருக்குமாயின், அது மிகவும் தவறானதே யாகும். இதனால் அரசியல் கிளர்ச்சிக்காரர்கள் ராஜ விசுவாசிகளாக மாறிவிடப் போவதில்லை. அவர்கள் எப்பொழுதும் அந்தக் கிளர்ச்சியைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள். இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுத்துவிட்டு வெள்ளைக்காரர்கள் நமது நாட்டைவிட்டுப் போய் விட்டாலும், அப்பொழுதும் அரசாங்கத்தாரை எதிர்த்துக் கொண்டு இருக்கும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆகையினால் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு வேறு ஒன்றைச் செய்வது ஒழுங்காகாது என்று சொல்லுகிறோம்.
அடுத்தபடியாக நமது நாட்டு அரசியல் வாதிகள் சீர்திருத்த வியஷங்
களில் எந்தவிதமான அபிப்பிராயமுடையவர்களாயிருக் கின்றார்கள் என்று பார்த்தால், அவர்களும் வைதீகர்களின் “வக்காலத்து”க் காரர்களாகத்தான் இருந்து வருகின்றார்கள் என்பது விளங்கும். சீர்திருத்த வாதிகளை ஏமாற்ற வாய்ப் பேச்சுக்காக மாத்திரம் சுயராஜ்யம் பெற்ற பின், எல்லா சீர்திருத்தங் களையும் செய்து கொள்ளலாம் என்று மாத்திரம் பேசுகின்றார்களே ஒழிய சாதாரணமாகச் சீர்திருத்தங்களைப் பற்றிப் பிரசாரங்கள் கூடச் செய்வதில்லை. இவர்கள் கேட்கும் சுயராஜ்யமோ “மத நடுநிலைமை” வகிக்கக் கூடிய சுயராஜ்யமாக இருக்கிறது. இது மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மதத்திற்கும், மத நூல்களுக்கும், நாகரீகங்களுக்கும், பழக்கவழக்கங்களுக்கும் பாதுகாப்பு
குடி அரசு - 1932 M 86
அளிக்கக் கூடிய சுயராஜ்யமாக இருக்க வேண்டுமென்றும் சொல்லுகிறார்கள். தற்போதுள்ள வெள்ளைக்காரர் அரசாங்கத்திலாவது ஜனப் பிரதிநிதிகளாகச் செல்லும் “மெஜாரிட்டி'யான சட்டசபை அங்கத்தினர்கள் சீர்திருத்த நோக்க. முடைய வர்களாயிருந்தால் எந்தச் சீர்திருத்தச் சட்டங்களையும் நிறைவேற்றக். கூடிய செளகரியம் இருக்கிறது. ஆனால் அந்த அரசியல் வாதிகள் கேட்கும் சுயராஜியத்தில் மதக்கொள்கைக்கு விரோதமான எந்த சீர்திருத்த மசோதாக் களையும் சட்ட சபையில் கொண்டுவரவே இடமில்லையே. ஆகையால் அரசியல் கிளர்ச்சிக் கார்களையும் சமூக சீர்திருத்த விரோதிகளாகத்தான். நாம் தீர்மானமாகக் கருதுகின்றோம்.
இவ்வாறு வைதிகர்களும் அரசாங்கத்தாரும், அரசியல் வாதிகளும் சமூகச் சீர்திருத்தத்திற்கு விரோதிகளாயிருப்பதனால் சீர்திருத்தக்காரர்கள். யாருடைய தயவையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. தம்மைத் தாமே நம்பி ஜன சமூகத்தின் பழய மனப்பான்மைகளை மாற்ற முயற்சிப்பதைத் தவிர:
தற்காலத்தில் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. மக்களுடைய மனத்தைச் சமூக சீர்திருத்தத்தில் மாற்றினால் சட்டசபைக்குச் செல்லும் பிரதிநிதிகளும் சீர்திருத்த நோக்கமுடையவர்களாகவே இருக்கக் கூடும். அவர்களைக் கொண்டு எந்த விதமான சட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே நமது அபிப்பிராயமாகும்..
குடி அரசு - துணைத் தலையங்கம் - 14.02.1932
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சட்டசபையில் வை,
மதம், கடவுள், வேதம், சாஸ்திரம் முதலிய கற்பனைகளில் குருட்டு நம்பிக்கையுடைய பகுத்தறிவற்ற வைதீகர்களைக் காட்டிலும், தாம் பார்க்காத வைகளையும், அறியாதவைகளையும், நம்பாத பகுத்தறிவுடைய நாஸ்திகர். களே உலகத்தில் நன்மையை, மக்களுடைய நலத்தைக் கவனிப்பவர்கள். என்பது ஒரு உண்மையான அபிப்பிராயமாகும் என்று நாம் தீர்மானமாக நினைக்கிறோம். வைதீகர்கள் எவ்வளவு தான் யோக்கிய பொறுப்புடைய வர்களாயிருந்தாலும், இரக்கமன முடையவர்களாய் இருந்தாலும் கால நிலையையும் மக்களுடைய மனோபாவத்தையும், பிறர் நலத்தையும் அறிந்து
அதற்குத் தகுந்த வகையில் நடந்து கொள்ளுவதற்குரிய அறிவு, அவர்களிடம் உண்டாவதில்லை. ஏனெனில், கொடுமைப்படுகிற மக்கள் கொஞ்சம் சுக மடையக்கூடிய சீர்திருத்த சம் மந்தமான விஷயங்கள் வருகிற பொழு தெல்லாம் அவர்கள் வேதங்களில் என்ன சொல்லப்படுகின்றது. புராணம் ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களில் என்ன சொல்லப்படுகின்றது என்று பார்த்து அதன்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களே ஒழிய தமது சொந்த புத்தியினால் ஆலோசித்துப் பார்க்க முன்வருவதே யில்லை. அவர்கள் சொந்த அறிவும் உபயோகப்படுவதேயில்லை. ஆனால் மதம், கடவுள், வேதம், சாஸ்திரம் முதலிய கற்பனைகளைக் கற்பனைகளாகவே அறிந்திருக்கின்ற “நாஸ்திகர்” என்பவர்களோ எந்த விஷயங்களிலும் தமது சொந்த புத்தியை செலுத்தி யோசனை செய்யக் கூடியவர்களாக இருக்கின் றார்கள். இவ்வாறு யோசனை செய்வதனால் பிறருடைய சுகதுக்கங்களையும் இலாப நஷ்டங்களையும் அறிந்து அவர்கள் பால் இரக்கங்கொண்டு உதவி செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மேலே நாம் கூறியவைகளைப் பொய்யென்றோ, பொருத்தமற்ற தென்றோ யாரும் கூறமுடியாது. இது வரையிலும் உலகில் நடந்து இருக்கின்ற எந்தச் சரித்திரங்களைப் பார்த்தாலும் இவ்வுண்மை விளங்காமல் போகாது. புராணங்களில் ஆகட்டும், இதிகாசங்களிலாகட்டும், மற்றும் தேச சரித்திரங் களிலாகட்டும் மதம், வேதம், கடவுள், சாஸ்திரம் இவைகளை நம்பாத நாஸ்திகர்கள் ஜனசமூகத்திற்குத் தீங்கு செய்ததாகவோ அல்லது ஜன சமூகத்தை அடிமைப்படுத்தியதாகவோ, கொடுமைப்படுத்தியதாகவோ
குடி அரசு - 1932 M 88
சொல்லப்படவில்லை. இதற்கு மாறாக மதம் என்னும் அபினையும், வேதம் என்னும் சாக்கடையையும், கடவுள் என்னும் பொய் மொழியையும், சாஸ்திரம் என்னும் குப்பையையும் கண்மூடித்தனமாக நம்பிய வைதீகர்களே ஜன சமூகத்தைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கி வந்திருக்கின்றார்கள் என்று அறியலாம். ஒரே வகையான மக்களை வேறு வேறு சாதிகளாகப் பிரித்து வைத்ததும், கொள்கை காரணமாக அதாவது மதம் காரணமாக ஒருவரை ஒருவர் வெறுப் பதும், பழிப்பதும், அடிப்பதும், குத்துவதும், கொல்லுவதும், கழுவேற்று வதுமான கொடுமைகளைச் செய்யும் படி வைத்ததும் குருட்டு நம்பிக்கை யுள்ள வைதீகர்களே ஆவார்கள். ஆகையால் எந்தக் காலத்திலும் வைதீகர்.
களால் ஜனசமூகம் விடுதலையோ, சுதந்திரமோ, சுகமோ அடைய முடியாது என்ற உண்மையான நிச்சயத்தோடுதான் நாம் வைதீகத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமெனக் கூறிவருகிறோம்.
ஜனசமூகத்தில் சரிபகுதியாக விருக்கும் பெண் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகக்கட்டுண்டு கிடந்த தமது அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுதந்தரத்தோடு வாழ உலகமெங்கும் கிளர்ச்சி செய்து வருகின்றனர் என்பதும் அவருடைய கிளர்ச்சிநியாயமானதும், உண்மையானதும், அவசியமானதும் ஆகும் என்பதும், குடி அரசு வாசகர்களுக்குத் தெரியாத புதிய செய்தி அல்ல. பெண்மக்கள் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் அடிமையாகவே இருந்து துன்பப்பட்டு வாழக்கூடிய நிலையை அகற்றி.அவர்களும் ஆண் மக்களைப் போலவே சுதந்தரத்துடன் வாழச் செய்ய வேண்டுமென்றும் நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் இடைவிடாது பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறோம். மதம், வேதம், கடவுள், சாஸ்திரம் இவைகளின் பேரால் ஆண்.
களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி ஏற்பட்டிருக்கும் கொடுந்தன்மை யான - அக்கிரமமான - அநீதி ஒழிய வேண்டும் என்று சொல்லி வருகிறோம்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்காகச் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தமாகிய “விவாகம்” அதாவது மணம் என்ற விஷயத்தை எடுத்துக் கொண்டு கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்! இவ்விஷயத்தில் ஆண். களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளையும், பெண்களுக்கு ஏற்படுத்தியுள்ள. அநீதிகளையும் பாருங்கள் !இந்து சமூகத்தில் ஆண்கள் எத்தனை மனைவி களை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்; உயிரோடிருக்
கும் மனைவி பிடிக்காவிட்டால் அவளை நீக்கி விட்டு வேறு பெண்ணை: விவாகம் பண்ணிக் கொள்ளலாம்.மனைவி இறந்து விட்டாலும் வேறு மணம்
புரிந்து கொள்ளலாம் என்பதற்கு மதம், வேதம், சாஸ்திரம் ஆகிய இவைகள் இடந்தருகின்றன. ஆனால் பெண்கள் பல கணவர்களை மணம் புரிந்து கொள்ளவும், உயிரோடிருக்கும் கணவன் பிடிக்காவிட்டால் அவனை நீக்கி விட்டு வேறு ஒருவனை மணம் புரிந்து கொள்ளவும், கணவன் இறந்து
விட்டால் வேறு மணம் செய்து கொள்ளவும், அந்த மதமும், வேதமும், சாஸ்திரங்களும் தடைசெய்கின்றன.
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இப்படிப்பட்ட வித்தியாசமும் கொடுமையும் இல்லாமல் பெண்களும் ஆண் மக்களைப் போலத் தங்கள் விருப்பப்படியே மணம் புரிந்து கொள்ளச் சுதந்தரமுடையவர்களாய் இருக்க வேண்டுமென்று கூறுகிறவர்களையும், இதற்காக சட்டஞ் செய்ய வேண்டுமென்று சொல்பவர்களையும், சட்டம் ஆக்குவதற்காக மசோதாக்கள் கொண்டு வருபவர்களையும், அதை ஆதரிப் பவர்களையும் வைதீகர்கள் நாஸ்திகர்கள் என்றும் மதத் துரோகிகள் என்றும் தூற்ற வாரம்பித்து விடுகின்றனர். “மண விஷயத்தில் ஆண்களுக்கு இருக்கும் உரிமை பெண்களுக்கும் இருந்தால் மணம் என்பதன் தெய்வீகத் தன்மை போய் விடும்: பெண்களின் கற்புத்தன்மை போய் விடும்: இந்திய மக்களின் கட்டுப்பாடான சமூகத்தன்மை அழிந்து விடும்”, என்று வைதீகர்கள். கூச்சலிட்டு எதிர்க்கின்றனர். ஆனால் இவர்கள் ஆண் மக்கள் விஷயத்தில் மாத்திரம் இக்கட்டுப்பாட்டைப் பிரயோகிக்கச் சம்மதிப்பதில்லை:; ஆண்:
மக்கள் மாத்திரம் பல மனைவிகளை மணந்து கொள்ளுவதனாலும், ஒரு மனைவியை நீக்கிவிட்டு வேறு மனைவியை விவாகம் புரிந்து கொள்ளு வதனாலும் மனைவி இறந்தபின் வேறு மணம் புரிந்து கொள்ளுவதனாலும்.. *மணம்” என்பதன் தெய்வீகத் தன்மை அழியவில்லையா? கற்புத் தன்மை அழியவில்லையா? இந்திய மக்களின் கட்டுப்பாடான சமூகத்தன்மை அழியவில்லையா? என்று தான் கேட்கிறோம்.
பொதுவாகப் பெண்மக்களுக்குச் சுதந்தரம் வழங்கும் விஷயத்தில் நமது நாட்டு வைதீகர்களுக்கு இருந்து வரும் மனப்பான்மையை நாம் பல தடவைகளில் விளக்கமாக எடுத்துக் காட்டி வந்திருக்கின்றோம். அன்றியும்
சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்கள், பெண்கள் சுதந்தரம் சம்பந்தமான மசோதாக்கள் சட்ட சபைகளில் கொண்டு வரப்படும் காலங்களில், வைதீகர்
கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் மனப்பான்மையை வெளியிட்டு வந்திருக்கின்றார்கள்.இவ்விஷயங்களை பாலிய விவாகத் தடைமசோதாவை இந்திய சட்டசபையில் திரு. சாரதா அவர்கள் நிறைவேற்றிய காலத்தில் அதை எதிர்த்த பண்டித மாளவியா, திரு. எம். கே. ஆச்சாரியார் போன்றவர்களின் பேச்சுகளிலிருந்து உணரலாம். அன்றியும் இந்த ஆண்டிலும் சென்ற ஜனவரி மாதத்திலும், பிப்ரவரி மாதத்திலும் இந்திய சட்டசபையில், “விதவைகளுக்குச் சொத்துரிமை வழங்க வேண்டும்” என்ற மசோதாவை திரு. சாரதா அவர்கள் கொண்டு வந்த காலத்திலும் “இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு விவா
கரத்துச் செய்து கொள்ள உரிமை வேண்டும்” என்ற மசோதாவை திரு. அரி சிங்கவர் அவர்கள் கொண்டு வந்த காலத்திலும், இவர்களை எதிர்த்து திரு. ராஜா பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் போன்ற வைதீகர்கள் வெளியிட்ட அபிப் பிராயங்களைக் கொண்டும் வைதீகர்களின் மனப்பான்மைகளை நன்றாய் உணரலாம். சென்ற வாரங்களில் “விதவைகளுக்குச் சொத்துரிமை” வழங்கும் மசோதாவைப் பற்றி எழுதியிருந்தோம். ஆதலால் இப்பொழுது “விவாக விடுதலை” மசோதாவைப் பற்றி மாத்திரம் கூறி முடிக்கின்றோம்..
குடி அரசு - 1932 M 90
சென்ற13-2-32 இல் இந்திய சட்டசபையில் மீண்டும் விவாக விடுதலை மசோதா விவாதத்திற்கு வந்த போது வைதீகர்கள் நடந்து கொண்ட மாதி ரியைக் கவனித்தால் நமது நாட்டினரனைவரும் வெட்கமடைய வேண்டிய
தைத் தவிர வேறு வழியில்லை. அன்று காலையில் மசோதாவைப் பற்றிய விவாதம் தொடங்கிய போது பண்டித சத்தியேந்திர நாத சென் என்பவர். மசோதாவை எதிர்த்தும், திரு. ஜோஷி, ஆர். எஸ். சர்மா போன்றவர்கள் மசோதாவை ஆதரித்தும், திரு. சீத்தாராம ராஜு, திரு. ஸி. எஸ். ரெங்கய்யர் போன்றவர்கள் மசோதாவின் கொள்கையை ஒப்புக் கொண்டும், ஆனால் அதைப் பிறகு நிறைவேற்றிக் கொள்ளலாமென்றும் விளக்கெண்ணையாகவும் பேசினார்கள். இவ்வாறு காலையில் விவாதம் நடந்து முடிந்தது. மீண்டும் இடைவேளை போஜனத்திற்குப் பின் சட்டசபைக் கூடிய போது சபையில் 18 அங்கத்தினர்களே வீற்றிருந்திருந்தார்களாம். மற்ற அங்கத்தினர்கள், அதா வது இம்மசோதாவை எதிர்க்கும் மனப்பான்மையுடைய வைதீக அங்கத் தினர்களும், ஆதரிக்கும் மனப்பான்மையுடைய அங்கத்தினர்கள் சிலருங்
கூடச் சட்ட சபைக்குள் வராமல் வெளியிலேயே நின்று விட்டார்களாம் சட்ட சபையிலிருந்து இருந்து கொண்டு தங்களுடைய உண்மையான அபிப்பிராயத்தை வெளியிடத் துணிவில்லாத இவ்வங்கத்தினர்களால் நமது சமூகத்திற்கோ, அல்லது தேசத்திற்கோ என்ன நன்மை செய்ய முடியும் என்று கேட்கின்றோம். கடைசியில், சட்ட சபைத் தலைவர் சபையில் “குவாரம்” உண்டாவதற்கு எவ்வளவோ முயன்றும் கடைசி வரையிலும் “குவாரம்” ஏற்படாததால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து “* விவாக விடுதலை” விஷயத்தில் நமது வைதீகர்களின் மனப்பான்மை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.இந்த வைதீகர்கள் “விவாக விடுதலை” உரிமையில்லாமையால் உண்டாகும் தீமைகளையும், நன்மைகளையும், விவாக விடுதலை உரிமை இருந்தால் அதனால் உண்டாகும் நன்மை தீமைகளையும் தங்கள் சொந்த அறிவைக் கொண்டு நன்றாய் ஆலோசித்துப் பார்த்தால் “விவாக விடுதலை” மசோதாவை எதிர்க்க முன் வருவார்களா? என்று கேட்கின்றோம்.
ஒரு குடும்பத்திலுள்ள கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமையில்லா
விட்டால் எந்தக் காலத்திலும் ஒற்றுமை ஏற்பட முடியாத அதிருப்தி ஏற்பட்டு விட்டால், அல்லது வியாதி யுடையவர்களாய் இருந்தால் ஒருவருடைய நடத்தை மற்றவர்களுக்குப் பிடிக்காமல் இருந்தால், தாங்கள் கணவன் மனைவிகளாக வாழ்வதில் சிறிதும் விருப்பமில்லாதவர்களாயிருந்தால் அவர்கள் தங்கள் மண ஒப்பந்தத்தை சட்ட மூலமாக நீக்கிக் கொள்ளுவதில் என்ன குற்றமிருக்கின்றது? மனவொற்றுமையில்லாத இருவர்கள் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதில் ஏதாவது செளகரியமோ சுகமோ அவர்களுக்கு இருக்க முடியுமா? ஆனால் ஆண் மகன் மாத்திரம் மணம் செய்து கொண்ட மனைவி பிடிக்கா விட்டால் யாதொரு தடையுமின்றி உடனே அவளை
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
நீக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணஞ் செய்து கொள்ளுகின்றான். இது சட்டப்படி செல்லத்தக்கதாகவும், குற்றமற்றதாகவும் இருக்கிறது. ஆனால் கணவனால் நீக்கப்பட்ட பெண்கள், கணவன் உயிரோடு இருக்கும் வரையிலும் தனக்கு விருப்பமுள்ள வேறொரு புருஷனை மணந்து கொள்ளச் சட்டப்படி உரிமையில்லை. இந்தக் காரணத்தால் கணவனால் நீக்கப்பட்ட - வெறுக்கப்பட்ட- அநேக பெண்கள் திருட்டுத் தனமாகத் துன்மார்க்க வழியில் பிரவேசிக்கவும் சில சமயங்களில் மானம் பொருக்க மாட்டாமல் தற்கொலை செய்து கொள்ளவும், தனித்திருந்து விபசாரம் புரிந்து மானமற்ற வாழ்க்கை. நடத்தவும் நேருகின்றது. பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களெல்லாம் மாமன், மாமி, புருஷன் முதலியவர்களின் கொடுமை
சகிக்க முடியாமலும், வேறு ஒரு புருஷனை மணந்து வாழ வழியில்லாமலும்;
தனித்திருந்து கெளரவமாக ஜீவிப்பதற்கு முடியாமலும், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளுகிறார்களே ஒழிய வேறு காரணம் இல்லை என்று சொல்லலாம். இது போலவே மாமன், மாமி, பெண்சாதி முதலியவர்களின் கொடுமைக்கு அஞ்சித், தற்கொலை செய்து கொண்ட ஆண்கள் எவரேனும் உண்டென்று கூறமுடியுமா?
ஆகையால் பெண்களும் ஆண்களைப் போலவே உரிமைப் பெற்றவர்களாயிருந்தால் இத்தகைய கொடுமைகள் நடைபெற முடியுமா? என்று தான் கேட்கிறோம். கணவன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும் வியாதியஸ்தனாயிருந்தாலும், ஆண்மை அற்றவனாய் இருந்தாலும், கொடுமைப்படுத்துகின்றவனாய் இருந்தாலும் அவனையே ஆயுள் வரையிலும் தெய்வமாகக் கொண்டு அவனுக்கு அடிமையாக இருந்து வாழ்வது தான் “மணத்தின் தத்துவம்” *விவாகத்தின் தெய்வீகத்தன்மை” “ரிஷிகளின் புனிதமான சட்டம்” பெண்கள் கடமையென்று விதிப்பது ஒரு மதமாகுமா? வேதமாகுமா? சாஸ்திரமாகுமா? நீதியாகுமா? அறிவுடைமை யாகுமா? என்று நன்றாய் யோசனை செய்து பாருங்கள்!
ஆகையால் இத்தகைய கஷ்டங்களில்லாமல் ஆண் பெண் இருவரும் சமவுரிமையடைய வேண்டுமென்ற நல்லெண்ணத்துடனேயே திரு. அரி சிங்கவர் அவர்கள், “விவாக விடுதலை மசோதா” வைக் கொண்டு வந்தார். இத்தகைய ஒரு நல்ல சீர்திருத்த மசோதாவை வைதீகர்கள் ஆதரிக்க மனமில்லாமலும் அவ்விவாதத்தில் அதிகமாகக் கலந்து கொள்ள இஷ்ட மில்லாமலும் சட்ட சபைக்கு வெளியிலேயே நின்று விட்டார்கள். இவ்வாறு. வெளியிலேயே நின்றவர்களுடன் அரசாங்க அங்கத்தினர் சிலரும் இருந்த னராம்! இதனால் அரசாங்கமும் வைதீகர்களுடன் சேர்ந்து கொண்டு இந்த மசோதாவை எதிர்த்ததாகத் தானே அர்த்தம்? இவ்வாறு எத்தனை நாளைக்கு அரசாங்கத்தார் வைதீகர்கள் வார்த்தைக்கு அஞ்சிச்சீர்திருத்தத்திற்கு விரோதி யாய் இருப்பார்களென்று கேட்கின்றோம். உண்மையிலேயே நாட்டின் நன்மையில் கருத்துடைய அரசாங்கமாய் இருந்தால் இது போன்ற சீர்திருத்த
குடி அரசு - 1932 M 92
மசோதாக்களை ஆதரிக்க வேண்டியது கடமையாகும். அல்லது மத நடு நிலைமை வகிக்கக்கூடிய அரசாங்கமாய் இருந்தால் மசோதாவை எதிர்க்கா
மல் நடுநிலைமை வகிக்க வேண்டும். இரண்டுமில்லாமல் மசோதாவுக்கு எதிராக உள்ள வைதீகர்களுடன் சேர்ந்து கொண்டு வெளியேறுவது ஒழுங் கான காரியமா என்று தான் கேட்கிறோம்.
வைதீகர்களும் அரசாங்க உறுப்பினர் சிலரும் “விவாக விடுதலை மசோதாவைக் கெடுக்கும் பொருட்டு சபைக்குள் வராமலிருந்த காரணத்தால், உத்தியோகப் பற்றற்றவர்களின் மசோதாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாளில் அரை நாள் வீண் போயிற்று. இனியும் உத்தியோகப் பற்றற்றவர்களின் தீர்மானங்கள் விவாதத்திற்கு வரும் நாளில் இந்த மசோதாவும் வரத்தான் போகிறது. அப்பொழுதும் இம்மாதிரி சட்டசபைக்குள் வராமல் வெளியி லேயே நின்று கொண்டு நாளை வீணாக்கப் போகிறார்களா? அல்லது மசோதாவை எதிர்த்துத் தோற்கச் செய்யப் போகிறார்களா? அல்லது வேறு என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
இவ்வாறு வைதீகர்களும், அரசாங்கமும் சீர்திருத்தங்களை எதிர்ப்ப தனால் அவ்வுணர்ச்சியை அடக்கி விட முடியாது என்பது நிச்சயம் என்று
மாத்திரம் எச்சரிக்கை செய்கிறோம். வரவர மக்களுடைய மனத்தில் சமூகச் சீர்திருத்த உணர்ச்சி மிகுந்து வருவதன் பலனாக சீர்திருத்தங்களுக்கு விரோத. மாக இருக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், வைதீகம் ஆகியவைகளின் ஆதிக்
கம் வீழ்ச்சிடையும் காலம் தூரத்திவில்லை என்றே நாம் கூறி முடிக்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 21.02.1932.
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தீண்டாதார் துண்பம்
வெள்ளைக் காரர்களைப் பார்த்து “நீங்கள் எங்களைக் கொடுமைப் படுத்துகிறீர்கள்! ஆகையால் உங்களுடைய அரசாட்சி எங்களுக்குப் பிடிக்க வில்லை; ராஜ்யத்தை எங்களிடம் விட்டு விட்டு நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய் விடுங்கள்; நாங்கள் ஒற்றுமையாயிருந்து எங்கள் தேசத்தை ஆண்டு கொள்ளுவோம்” என்று சுயராஜ்ய வாதிகள் கூச்சலிடுகின்றனர்; இதற்காகச் சட்டமறுப்பு செய்கின்றனர்; சிறைக்குச் செல்கின்றனர்; இன்னும் சத்தியாக் கிரகத்தின் பெயரால் என்னென்ன காரியங்களையோ செய்து கொண்டிருக் கின்றனர். ஆனால் வடநாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள. கலகமும் வெறுப்பும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இவர்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்குரிய காரியங்களைச் செய்யவும் இல்லை.
இது ஒரு புறமிருக்க மிகவும் பரிதாபகரமான வாழ்வில் இருந்து துன்பப்படும் ஆதிதிராவிடர் போன்ற தீண்டாத மக்களின் கதி இன்னும் மோசமானதாகவே இருந்து கொண்டிருக்கின்றது. தீண்டாதவர்கள் கோயில் பிரவேசத்தின் பொருட்டு நாசிக்கிலும், குருவாயூரிலும் சத்தியாக்கிரகம் புரிந்து கொண்டு துன்பப்படுதலும், அவர்களை வைதிக இந்துக்கள் எதிர்த்துத் துன்பப்படுத்துதலும் ஒரு புறமிருக்க, அவர்கள் தங்கள் மட்டிலாவது
சுத்தமாகவும், நாகரீகமாகவும் செளகரியமாகவும் வாழக்கூட மனஞ்சகிக்காத இந்துக்கள் அவர்களுக்குப் பண்ணும் கொடுமை மிகவும் அநீதமாக இருக்கின்றது என்ற விஷயம் நமது நாட்டு மக்களுக்கு தெரியாததல்ல. சென்ற ஆண்டில் ராமநாதபுரம் ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்குச் செய்த கொடுமையும், திருச்சி ஜில்லாவில் ஜாதி இந்துக்கள் தீண்டாத வர்களுக்குச் செய்த கொடுமையும் இன்னும் மறக்கப்படவில்லை. இது போலவே ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டாதவர்களுக்குப் பல கஷ்டங் களிருந்து வருகின்றன. ஆனால் அத்தீண்டாத மக்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கு உயர் ஜாதி இந்துக்களின் கையையே எதிர்பார்த்திருப்பதாலும், பெரும்பாலானவர்கள் கல்வி அறிவும் உலக நாகரீக உணர்ச்சியும் இல்லாமை யால் “தங்களை ஆண்டவன் என்பவன் தீண்டாதவராகவே கஷ்டப்படும்படி படைத்தான்; எல்லாம் தமது தலை விதியின் படி நடக்கும்” என்ற நம்பிக்கை.
குடி அரசு - 1932 M 94
யுடையவர்களாயிருப்பதனாலும் தங்கள் துன்பத்தைச் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இப்படி யில்லாமல் தீண்டாத மக்கள் கொஞ்சம் சுயமரியாதை உணர்ச்சி பெற்றுத் தங்களைச் சீர்திருத்தம் செய்து கொள்ள முந்துவார்களானால், அப்பொழுதே அவர்களை முன்னேற ஒட்டாமல் நசுக்கிப் பழைய சாக்கடை: யிலேயே அமிழ்த்தி வைக்க ஜாதி இந்துக்கள் தயாராகிவிடுகிறார்கள். இதற்கு உதாரணமாக இப்பொழுது சேலம் ஜில்லா ராசிபுரம் தாஜூக்கா, தாத்தைய் யங்கார் பட்டி கிராமத்திலிருக்கும் தீண்டத்தகாத மக்களை, அவர்கள் முன்னேற்றமடையாதபடி அடக்கி வைக்க உயர் ஜாதி மக்கள் அவர்களுக்கு விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால் விளங்கும். இதைப் பற்றி அவர்கள் சேலம் ஜில்லா கலெக்டருக்கும், போலீஸ் சூப்பரின்டெண்டுக்கும் செய்து கொண்டிருக்கும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுக் காட்டியிருக் கின்றனர்.
“எங்களூர்க் குடியானவர்கள், நாங்கள் நாகரிகமாய் இருப்பதற்காகப் பொறாமைப்பட்டு எங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் அடித்தும், எங்கள் தெருப் பெண்களை வாய்க்கு வந்தபடி திட்டியும் கஷ்டப்படுத்து கிறார்கள். அதோடு அல்லாமல் கீழ்க்கண்ட நிபந்தனைகள் ஏற்படுத்தி அதன்படி நடக்காது போனால் எங்கள் கால்களை ஓடித்து விடுவோம்” என்று சொல்லு கிறார்கள்.
நிபந்தனைகள் :-
1.பறையர்கள் கிராப்பு வைக்கக் கூடாது
2. பள்ளிக்கூடம் தெருவில் இருக்கவும் கூடாது, படிக்கவும் கூடாது.
3.வெள்ளை வேஷ்டிக் கட்டக்கூடாது; அழுக்கு வேஷ்டி யிலிருந்
தாலும் முழங்காலுக்கு மேல் கட்ட வேண்டும்.
4. பெண்கள் மார் ஆடை போடக்கூடாது; மீறி மார் ஆடைப் போட்
டால் மாரை அறுத்துவிடுவது.
5. நாகரிகமான நகைகள் போடக் கூடாது.
6. குடைகள் பிடிக்கவும் கூடாது: குடையிருந்தால் நெருப்பு வைத்துக் கொளுத்தி விடவேண்டும்.
7. பெட்டிகள் கையில் கொண்டு வரக்கூடாது; புஸ்தகமும் கையில் பிடிக்கக்கூடாது.
கமிழ்நாடு!
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
என்பது தீண்டாதவர்களின் விண்ணப்பம்.இந்தக் கொடுமைகளை யார். பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? என்று கேட்கின்றோம். இந்த நிலைதான். கிராமாந்தரங்களிளெல்லாம் இருந்து வருகின்றது. இதை மாற்றுவதற்கு இது வரையிலும் என்ன முயற்சியை, எந்தத் தேசீயவாதிகள் செய்தார்கள் என்று கேட்கிறோம். அந்நியர்கையில் அதிகாரமும், தாங்கள் சுதந்தரமின்றி அந்நிய நாட்டினர்க்கு அடிமையாக இருக்கும் இக்காலத்திலேயே இந்த உயர்ஜாதி இந்துக்கள் தீண்டாதவர்களுக்கு இக்கொடுமையைச் செய்வார்களாயின் இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் அவர்களைச் சித்திரவதை செய்யமாட்டார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.
இம் மாதிரி வலுத்தவர்கள் இளைத்தவர்களுக்குக் கொடுமை செய்வதை பொருட்படுத்தாத ஒரு தேசீயம், அல்லது ராஜீயம் எதற்குப் பயன்படும்? இவ்வாறு தீண்டாதவர்களைக் கொடுமைப்படுத்தும் எண்ணத்தை உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் பதிய வைத்திருப்பதற்கு காரணம், பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்கங்களுமே அன்றோ? ஆகையால் இந்தப் பாழும் மதமும், வைதீகமும், பழக்க வழக்க மூட நம்பிக்கையும் தொலைந்தாலொழிய உயர் ஜாதி இந்துக்களின் மனத்தில் மாறுதல் ஏற்படுமா? ஒருக்காலும் முடியாது. ஆகவே இனியும் தீண்டாத வர்கள் கடவுளையோ மதத்தையோ நம்பிக்கொண்டிருந்தால் ஒரு சிறிதும் முன்னேற்ற மடையப் போவதில்லை. தம்மையே நம்பி இடைவிடாது கிளர்ச்சிச் செய்வதன் மூலமும், வைதிகர்களாகிய அரசியல் கிளர்ச்சிகாரர்கள்.
எல்லாம் “சுயராஜ்யம் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறும் வார்த் தைக்கு ஏமாறாமல் முயற்சிசெய்வதன் மூலமும் தான், தாங்கள் விடுதலை
பெற்று மனிதர்களாக வாழ முடியுமென்று எச்சரிக்கின்றோம்..
குடி அரசு - துணைத் தலையங்கம் - 21.02.1932.
குடி அரசு - 1932 M 96
தணித் ஷாகுதியா? வாதுத் வதாகுதியா?
ஒரு நாட்டில் வகுப்புப் பிரிவினைகள் நிலைத்திருக்கும் வரையிலும், ஒவ்வொரு வகுப்பினரும் தாம் தாம் தனித் தனி வகுப்பினரென்றும், தாம் மற்ற வகுப்பினருடன் உடனிருந்து உண்பதும், கலப்பதும், உறவாடுவதும், தமது
மதத்திற்கும், கடவுளுக்கும், வேதத்திற்கும், புராதன நாகரிகத்திற்கும் விரோத மான செய்கையாகுமென்றும் நினைத்துக் கொண்டும் உண்மையாகவே நம்பிக் கொண்டும் இந்த நம்பிக்கையின் படி நடந்து கொண்டும் வருகின்ற வரையிலும் ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினருடைய நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அந்தரங்க சுத்தியுடன் உழைப்பார்கள் என்று நினைப்பது தவறான எண்ணமேயாகும். இவ் விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கு நாம் வேதங்களையோ, சாஸ்திரங்களையோ, சிலாசாசனங் களையோ கஷ்டப்பட்டு ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. தற்காலத்தில் நம் கண் முன் நடைபெறும் காட்சிகளைக் கொண்டே யாவரும் சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக இன்று அரசியலிலோ, அல்லது உத்தியோகத் துறையிலோ, அல்லது வியாபாரத் துறையிலோ, மற்றும் எந்தத் துறையிலாகட்டும் உயர்ந்த பதவியும், ஆதிக்கமும், செல்வாக்கும் அடைந்திருக்கின்ற அய்யர், அய்யங்கார், முதலியார், பிள்ளை, நாயுடு, செட்டியார், ரெட்டியார். நாடார் முதலிய எல்லா வகுப்பினரும் தங்கள் தங்கள். வகுப்பினருடைய நன்மையையும் முன்னேற்றத்தையும் மாத்திரம் கருதி அவர்களுக்கே உதவி செய்யக் கூடியநிர்ப்பந்தமான நிலையில் இருப்பதும்
தம் வகுப்பினரல்லாத கஷ்டப்படும் மற்ற வகுப்பினர்களுக்கும் உதவிசெய்ய வேண்டுமென்ற எண்ணமிருந்து கூட அவ்வாறு செய்ய முடியாத நிலையில் இருப்பதும் சிறிது உலக அனுபவம் தெரிந்த எல்லோருக்கும் விளங்கக் கூடிய விஷயமேயாகும்..
மற்ற நாட்டுச் சரித்திரங்களை விட்டு விட்டு, நமது இந்திய நாட்டுச்
சரித்திரத்தை மாத்திரம் சிறிது யோசித்துப் பார்த்தாலுங் கூட இந்த விஷயத் தைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. முஸ்லிம் அரசர்கள் நமது நாட்டை ஆண்டகாலத்தில் அவர்கள் முஸல்மான்கள் நலத்தை மாத்திரமே முதன்மையாகக் கருதி அரசாட்சி செய்து வந்திருக்கிறார்கள் என்பதும், நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் தங்கள் குலத்திலுள்
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ளவர்களையே முதன்மையான பதவிகளில் நியமித்து ஆண்டு வந்திருக்கி றார்கள் என்பதும், வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை ஆளத் தொடங்கிய
நாள் முதல் அவர்களும் தமது வகுப்பினர் நன்மையையே முக்கியமாகக் கருதி ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஆண்ட காலத்திலும் நாயக்க அரசர்கள் ஆண்ட காலத்திலும் வெள்ளைக் காரர்கள் ஆளும் இக்காலத்திலும் அரசாங்கத்தில் உயர்ந்த பதவி வகித்திருந்தவர் களும், வகித்திருப்பவர்களும் ஆகிய பார்ப்பனர்க ளெல்லாம் தங்கள் வகுப்பிற்கான நன்மைகளையே சாதித்துக் கொண்டார்கள், சாதித்துக் கொண்டி ருக்கிறார்கள் என்ற விஷயமும் வெளிப்படையாகத் தெரியக் கூடும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த விஷயங்களையெல்லாம் நன்றாக ஆலோசித்துப் பார்க்கின்ற எந்த வகுப்பினரும், தங்கள் தங்கள் வகுப்பின் முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் கருதுவார்களானால், அவர்கள் தங்களுக்கு அரசியல் துறையிலும், சமுதாயத்துறையிலும் நியாயமான உரிமை கிடைப்பதற்குரிய வசதிகளைச் செய்து தர வேண்டுமென்று அரசாங்கத்தாரைக் கேட்பது எந்த வகையிலும் குற்றமற்ற நியாயமேயாகும். உயர்வு தாழ்வான வகுப்புப் பிரிவுகள் நிலைத்திருக்கும் வரையிலும், படிப்பும், பணமும், பதவியும் பெற்ற உயர்ந்த வகுப்பினர்கள் அவை இல்லாத தாழ்ந்த வகுப்பினரை அடக்கி வைத்திருக்கும் வரையிலும், அவ்வாறு அடக்கி வைத்திருப்பதுதான் மதக் கட்டளையும், சாஸ்திர நீதியும் என்ற எண்ணமுடையவர்களாய் இருக்கும் வரையிலும் முன்னேற்றமடைவதற்கு வழி இல்லாமல் கொடுமைப்படுத்தப் பட்டிருக்கும் மக்கள், தங்கள் சுதந்தரத்திற்கு அரசாங்க அமைப்பில் பாதுகாப்பு தேடிக் கொடுக்க வேண்டும் என்று கேட்பது தவறானதென்றோ, தேசத்திற்குத் தீமை தரக்கூடிய காரியமென்றோ நிதான புத்தியுடனிருந்து யோசனை செய்து
பார்க்கின்ற கடுகளவு அறிவுடைய எந்த மனிதனாவது சொல்ல முடியுமா?
ஆகவே நமது நாட்டில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்டும், மிதிக்கப்பட்டும்,நசுக்கப்பட்டும், கொடுமைப் படுத்தப்பட்டும் கிடக்கின்ற மக்கள் தங்களை இதுவரையிலும் முன்னேற வொட்டாமல் தடைப் படுத்தி வைத்திருந்த கூட்டத்தாரின் கையில் அரசியல் அதிகாரம் கிடைக்கப் போகின்ற காலத்தில், அவர்கள் தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பை அரசியல் சுதந்திரத்தில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்க முன் வந்திருக்கிறார்கள். இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்கள் கேட்பதை இதுவரை:
யிலும் ஏகபோக உரிமையாகச் சுகம் அனுபவித்து வந்த கூட்டத்தார் “இப்படிக் கேட்பது வகுப்புத் துவேஷமான காரிய”மென்றும் “தேச ஒற்றுமைக்கு விரோதமானக் காரிய'”மென்றும் கூறித் தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விஷயம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் அவர்களிடத்தில் அனுதாப முள்ளவர்களுக்கும் தெரியாத தொன்றல்ல. இதன் உண்மையை வட்ட மேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளும், முஸ்லீம் வகுப்புப்
குடி அரசு - 1932 M 98
பிரதிநிதிகளும், கிருஸ்தவர், ஐரோப்பியர், சட்டைக்காரர் முதலான சிறு பான்மை வகுப்புப் பிரதிநிதிகளும் எதிர்கால அரசியல் சீர்திருத்தத் திட்டத்தில் தங்களுக்குத் தனிப்பட்டத் தேர்தல் தொகுதி இருக்க வேண்டுமென்று கூறியதையும் இதைக் காங்கிரஸ் பிரதிநிதியாகவும் வருணாச்சிரம தருமத்தின் பிரதிநிதியாகவும் இந்து மகாசபையின் பிரதிநிதியாகவும் வட்டமேஜை
மகாநாட்டிற்குப் போயிருந்த திருவாளர்களான, காந்தி, மாளவியா, மூஞ்சே முதலானவர்கள் ஆதிமுதல் அந்தம் வரையிலும் எதிரிகளாக இருந்து மறுத்துப் பேசியதிலிருந்தும் அறியலாம். கடைசியாக இந்த வகுப்பு சம்மந்த மான தகராறு ஒரு முடிவுக்கு வராத காரணத்தினாலேயே வட்ட மேஜை மகாநாடும் பயன்தரத் தகுந்த ஒரு முடிவுக்கும் வராமல் வீணாகக் கலைந்தது. அப்போது முதல் மந்திரியாகிய திரு.மெக்டொனால்டு அவர்களும் “வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக நீங்களே ஒரு சமரசமான முடிவுக்கு வருவீர்களா
னால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளு” மென்றும் “இல்லாவிட்டால் இனி ஏற்படுத்தப்படும் வட்ட மேஜை மகாநாட்டுக் கமிட்டிகளின் மூலம் அரசாங்கமே முடிவு செய்யு”மென்றும் கூறி அனுப்பிவிட்டார். அவ்வாறே இப்பொழுது அரசியல் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட தனித் தனி மூன்று கமிட்டிகள் இந்தியா
வில் துரிதமாகத் தமது வேலைகளைச் செய்து கொண்டு வருகின்றன. இவற்
றுள் திரு. லோதியன் அவர்களைத் தலைமையாகக் கொண்ட வாக்குரிமைக் கமிட்டியானது பல இடங்களிலும் சுற்றுப் பிரயாணம் செய்து எவ்வாறு வாக்குரிமை அளிப்பது என்பது பற்றியும் எந்த முறையில் தேர்தல் தொகுதி களை ஏற்படுத்துவது என்பதைப் பற்றியும் விசாரணை செய்து கொண்டு வருகிறது. இக்கமிட்டி கடைசியில் எந்த விதமாக முடிவு செய்கிறதோ அந்த முடிவே அநேகமாக ஆங்கிலப் பாராளுமன்ற சபையாரால் ஒப்புக் கொள்ளப் பட்டு அரசியல் சீர்திருத்தமாக வரக்கூடுமென்று நம்பலாம். ஆகவே இச்சமயத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும், மற்ற சிறுபான்மை வகுப்பி னரும் தங்களுக்கு வேண்டிய பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆகையால் அவர்களுக்கு அதிகாரம் வாய்ந்த சட்டசபை முதலிய ஸ்தாபனங்களில் பங்கு பெற எந்த விதமான தேர்தல் தொகுதி இருந்தால், அவர்களின் உண்மையான பிரதிநிதிகள் யாருடைய செல்வாக்கிற்கும் எதிர்ப்புக்கும், தயவுக்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்படா
மல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அச்சமூகத்தின் உயர்வுக்காகவும், விடுதலைக் காகவும் உழைக்க முடியும் என்னும் விஷயத்தில் நமது அபிப்பிராயம் என்னவென்பதை இப்பொழுது முடிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
முஸ்லீம் வகுப்பினரின் உண்மையான பிரதிநிதிகளாகிய மெளலானா ஷெளக்கத் அலி போன்றவர்கள் முஸ்லீம்களுக்குத் தனித்தேர்தல் தொகுதியே இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்களென்பதும், இந்தியக் கிறிஸ்துவர்களும், சீக்கியர்களும், ஐரோப்பியர், சட்டைக்காரர் முதலியவர்.
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
களும் தனித்தேர்தல் தொகுதியையே விரும்புகிறார்களென்பதும், எல்லோரும் அறிந்த செய்கையாகும். இதைப் போலவே தாழ்த்தப் பட்டவர்களும் தனித் தேர்தல் தொகுதியையே விரும்புகின்றார்களென்பதை அச்சமூகத்தார். இந்தியாவெங்கும் பலவிடங்களிலும் கூடிய பல மகாநாடுகளிலும் மற்றும் அவர்களுடைய ஸ்தாபனங்களாக இருக்கின்ற பல சங்கங்களிலும் செய்யப் பட்டுள்ள தீர்மானங்களின் மூலமாகவும், இச்சமூகத்தாரின் செல்வாக்கு வாய்ந்த தலைவர்களான திருவாளர்கள் அம்பேட்கார், சீனிவாசன், எம். சி. ராஜா, சிவராஜ், முனிசாமி பிள்ளை, சுவாமி சகஜானந்தம் முதலியவர்களின் அபிப்பிராயங்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் திரு. எம். சி. ராஜா அவர்கள் இதற்கு முன் வெளியிட்ட தனது அபிப்பிராயங்களை மாற்றிக் கொண்டு இப்பொழுது பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப்படுவது மூலமாகத் தேர்ந்தெடுக் கப்படுவதனாலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு விமோசனமுண்டு என்று கூறமுன் வந்திருப்பது பற்றி நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
திரு. ராஜா அவர்கள் தமது அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதைப் பற்றி அவர்கள் கூறும் காரணங்களை சிறிது ஆராய்ந்து பார்ப்போம்.
1. தனித் தொகுதி ஏற்படுத்தினால் தேர்தலுக்கு முன் வரும் அபேட்சகர்கள் ஓட்டர்களைச் சந்திக்க இரண்டு மூன்று ஜில்லாக்களில்
சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டுமாகையால் ஏழைமக்களாய் இருக்கின்ற அச் சமூகத்தின் பிரதிநிதிகளுக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும்; ஆகையால் பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதே நன்மையாகும்.
2. தாழ்த்தப்பட்ட சமூகத்தார் இப்பொழுது மத பக்தியிலும், தெய்வ
வணக்கத்திலும் வர வர அதிகப்பட்டு ஜாதி இந்துக்களின் ஆதரவு பெற்று வருவதாலும், ஜாதி இந்துக்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன் வந்து கொண்டிருப்பதாலும் பொதுத் தொகுதி யிலேயே அவர்களின் சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப்படக்
கூடும்.
3.வரப்போகும் மாகாண கயாட்சியில் அரசியல் கட்சிகளே அதிகாரம் வகிக்குமாகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியை ஆதரித்து நின்றால்தான் மந்திரி பதவி பெற முடியும்; ஆகையால் தனித் தேர்தல் தொகுதி ஏற்படுத்திக் கொண்டு ஒதுங்கி நிற்பதை விட பொதுத் தேர்தல் தொகுதியில் ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களில் அரசியல் கட்சிக்காரர்களின் ஆதரவு பெற்று அச் சமூகத்தாரின் சரியான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியும்.
குடி அரசு - 1922 0) 100
என்ற காரணங்களை திரு.ராஜா அவர்கள் கூறுகின்றார். இக்காரணங்
கள் எவ்வாறு பொருத்த மற்றவையாக இருக்கின்றன என்பதைச் சிறிது காட்டுகின்றோம்.
தனித் தொகுதி ஏற்படுத்தினால் அபேட்சகர்கள் அதிக தூரம் சுற்றுப் பிரயாணம் செய்ய வேண்டுமென்று பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு அவர்களுடைய உண்மையான நன்மையைக் கவனிக்கின்ற தலைவர்கள் யார் என்பது தெரியும். ஆகையால் அவர்களுக்கு ஓட்டுச் செய்ய முன் வருவார்கள் என்பதில் ஐயமில்லை. உதாரணமாகச் சென்ற வட்டமேஜை மகாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்காக உண்மை யோடு போராடிய திரு. அம்பெட்கார், திரு. சீனிவாசன் ஆகியவர்களின் அபிப்பிராயங்களை ஆதரித்துக் கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் தீர்மானங்கள் செய்யவில்லையா? இன்று அந்தப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கே ஒரு அபேட்சகராக முன் வந்தால் அவர்கள். இந்தியா முழுதும் சுற்றுப் பிரயாணம் செய்து தாழ்த்தப்பட்ட சமூக ஓட்டர். களை எல்லாம் சந்தித்தால் தானா அவர்களுக்கு ஓட்டுக் கிடைக்கும்? அவர். கள் சுற்றுப் பிரயாணம் செய்யாமலே தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் ஓட்டு களைப் பெற்று வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை யல்லவா?' அது போலவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உண்மையாகப் பாடுபடுகின்ற தலைவர்கள் கஷ்டமில்லாமலே தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
அடுத்தபடியாகத் “தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகயிருந்து வருவதாலும், ஜாதி இந்துக்களும் அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவதாலும் அவர்களுக்குத் தனித் தேர்தல் தொகுதி வேண்டாம்; பொதுத் தேர்தல் தொகுதியில் ஸ்தானங்கள். ஒதுக்கப்படுவதே போதுமானது” என்பதைப் போன்ற மோசமான அபிப்பி ராயம் வேறொன்றும் இல்லையென்றே நாம் சொல்லுவோம். இன்று அன்னிய மதங்களை அனுசரித்து வருகின்ற தாழ்த்தப்பட்டவர்களைக் காட்டிலும் இந்து மதத்திலேயே இருந்து வருகின்ற தாழ்த்தப்பட்டவர் களுக்குத் தான் அதிக மான கஷ்டங்களும், நிர்ப்பந்தங்களும் இருந்து வருகின்றனவென்பதும், இவைகளுக்கு இந்து மதமே காரணமாக இருக்கின்றதென்பதும், ஆகையால்
இந்து மதம் அழிந்தாலே அல்லது இந்து மதத்தை விட்டு வெளியேறின்லோ ஒழிய தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு விமோசனமில்லை என்பதும் பகுத்தறி வுடையவர்களுக்குத் தெரியாத செய்தி அல்ல. வர்ணாச்சிரம தருமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து மதத்தை நம்பியிருக்கும் உயர்ந்த சாதிக்
காரர்களாலும், மதங்களையும், கடவுள்களையும், வருணாசிரம தருமங் களையும் காப்பாற்ற வேண்டுமென்ற அரசியல்வாதிகளாலும், தாழ்த்தப்பட்ட
சமூகத்தார் சமத்துவம் பெற முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்! அன்றியும் இன்று தாழ்த்தப்பட்ட சமூகத்தார் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
படிப்பதற்கும், கோவிலுக்குள் செல்வதற்கும், பொதுக்குளம், கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கும், பொதுத் தெருக்களில் நடப்பதற்கும் தடையாக இருக்கின்ற உயர்ந்த சாதி இந்துக்கள் எப்படி அவர்களின் சமத்துவத்திற்கு உழைக்கும் உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பார்களா? என்றுதான். கேட்கின்றோம்.
அடுத்தபடியாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தார் ஏதேனுமொரு அரசியல் கட்சியை ஆதரித்தால் தான் மந்திரி பதவி பெற முடியுமென்பதற்கும், தனித் தேர்தல் தொகுதிக்கும் என்ன சம்பந்தமிருக்கிறதென்பது நமக்கு விளங்க வில்லை. அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்று பொதுத் தொகுதியில் ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்கு அபேட்சகராக வருகின்றவர்கள் ஏன் அவ்வாறே தனித் தேர்தல் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று கேட்கின்றோம். இன்று தனித் தேர்தல் தொகுதியில் இருக்கும் முஸ்லீம்களின் பிரதிநிதிகளும், கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளின் பேரால் அபேட்சகராக நிற்பதும், தேர்ந்தெடுக்கப்படுவதும் தெரியாத விஷயமா? ஆகையால் மந்திரி பதவி பெறுவதற்கு பொதுத் தேர்தல் தொகுதி அனுகூலமாய் இருக்குமென்று சொல்லுவதும், தனித்தேர்தல் தொகுதி பிரதி
கூலமாய் இருக்குமென்று சொல்லுவதும் தவறான அபிப்பிராயம் என்பதில் சந்தேகமில்லை.
இனி, பொதுத் தொகுதி, பொதுத் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்படுவதில், தனித்தொகுதி இம்மூன்றிலுமுள்ள நன்மை தீமைகளை
மாத்திரம் எடுத்துக்காட்டி முடிக்கிறோம்.
தற்சமயத்தில் காங்கிரஸ்காரர்களும், இந்து மகாசபைக்காரர்களும் சொல்லுவதுபோல “பொதுத் தேர்தல் தொகுதியிலேயே தாழ்த்தப்பட்ட
சமூகத்தார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று முடிவு செய்து விட்டால்
அச் சமூகத்தாரின் பிரதிநிதிகள் ஒருவரேனும் சட்ட சபையில் ஸ்தானம் பெற முடியாதென்பது நிச்சயம். வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை வழங்கப் பட்டாலுங் கூட உயர்ந்த ஜாதி இந்துக்களே மெஜாரிட்டி ஓட்டர் களாக இருப்பார்களென்பதும் அவர்கள் தாங்கள் இதுவரையிலும் அனு
பவித்து வந்த ஆதிக்கத்திலும், அதிகாரத்திலும் சமத்துவம் பெற விரும்பு கின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் பிரதிநிதிகளுக்கு ஓட்டளிக்க முன் வர
மாட்டார்கள் என்பதிலும் சிறிதும் ஐயமில்லை.
அடுத்தபடியாகப் பொதுத் தேர்தல் தொகுதியில் ஸ்தானங்கள். ஒதுக்கப்பட்டாலும் மெஜாரிட்டி ஓட்டர்களாகிய உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஆதரவைப் பெற்றவர்களும், தாழ்த்தப்பட்ட சமூகத்தாரின் சுதந்தரங்களை விட்டுக் கொடுத்து உயர்ந்த சமூகத்தாரின் ஆதிக்கத்திற்கு சாதகமாய் இருக்கின்ற அடிமை மனப்பான்மை உடையவர்களும்தான் தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்று சொல்லுகிறோம்.
குடி அரசு - 1922 0) 102
ஆகையால் தனித்தேர்தல் தொகுதி ஏற்படுவதின் மூலமாகவும், அச்சமூகத்தாரே தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதின் மூலமாகவும் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தார்களும், மற்ற சிறுபான்மை வகுப்பினரும் தங்கள் சமூகத்திற்குழைக்கும் உண்மையான பிரதிநிதிகளைச் சட்ட சபைகளுக்கு அனுப்பி நன்மை பெற முடியுமென்று துணிவாய்ச் சொல்லு கிறோம். ஆகையால் தாழ்த்தப்பட்ட சமூகத்தார்கள் இச்சமயத்தில் ராஜீய வாதிகளின் வார்த்தைகளையும், சமத்துவத்திற்குப் பாடுபடுவது போல் நடிக்
கும் வைரம் பாய்ந்த வருணாச்சிரம தரும இந்துக்களின் வார்த்தைகளையும், அரசியல்வாதிகளாலும், வருணாச்சிரம தரும இந்துக்களாலும் ஏமாற்றப் பட்டிருக்கும் சிலருடைய வார்த்தைகளையும் கேட்டு மோசம் போகாமல் இருக்கும்படி எச்சரிக்கை செய்கின்றோம். உண்மையிலேயே தங்கள் சமூகத்
திற்கு நன்மை செய்வதாக இருக்கின்ற தனித் தேர்தல் தொகுதி வேண்டு மென்றே கிளர்ச்சி செய்வார்களென்றும் இவ்விஷயத்தையே திரு. லோதியன் கமிட்டியின் முன் சாட்சியம் கூறும் போது எடுத்துச் சொல்லி தங்கள். நன்மையில் வெற்றி பெறுவார்களென்றும் எதிர்பார்க்கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 28.02.1932
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மத உரிமையிண் ஆபத்து
இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும், மூன்று கமிட்டிகளில் ஒன்றாகிய ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் சில நாட்களாகப் புது டில்லியில் நடைபெற்று வருகின். றது. அக்கமிட்டியில் அரசியல் சீர்திருத்தத்தில் சேர்க்க வேண்டிய அடிப்படை யான உரிமைகளைப்பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். அவர்கள் முடிவு செய்து ஒப்புக் கொண்டிருக்கும் உரிமைகளாலும், அத்தகைய உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சீர்திருத்தத்தாலும் நமது
நாட்டின் ஏழைமக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அதிகமான நன்மையுண்டாகப் போவதில்லையென்றுதான் நாம் துணிந்து கூறுகிறோம். இவ்வாறு நாம் கூறுவதற்குரிய காரணங்களை ஆராய்வோம்.
“எந்த சமஸ்தானமாயினும், மாகாண ஆட்சிக்கு உட்பட்டதானாலும், ஐக்கிய ஆட்சிக்குள் அடங்கியதானாலும், அவ்விடங்களில் சர்க்கார் மத மென்பது ஒன்று இல்லை என்று அறிக்கையிட வேண்டும்” என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அடுத்தபடியாக “மத சுதந்தரம், பொது ஜனங் களின் பழக்க வழக்கங்கள் முதலிய உரிமைகளுக்குச் சம்மதம் அளிக்கிறது” என்பதாகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விரு
தீர்மானங்களால் இதுவரையிலும் நமது நாட்டு மக்கள் எந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்களோ அந்த நிலையில்தான் அரசியல் சீர்திருத்தம் பெற்றபின்னும் இருந்து தீர வேண்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
உண்மையிலேயே ஒரு நாட்டு மக்கள், ஜாதி பேதங்கள் இல்லாமல், ஏழை பணக்கார வித்தியாசங்கள் இல்லாமல், தொழிலாளி முதலாளிக் கொடுமைகள் இல்லாமல் குடியானவன் நிலச்சுவான்தார் வித்தியாசமில்லா
மல், உயர்ந்தவன் தாழ்ந்தவன் வித்தியாசம் இல்லாமல் சமத்துவமும், சகோதரத்துவமும், சுதந்தரமும் பெற்று வாழ வேண்டுமானால், முதலில் மதங்களும், தனித்தனிப் பழக்க வழக்கங்களும் ஒழிந்தாக வேண்டும். இவ்வாறு மக்களைப் பிரித்துவைத்துக் கொடுமைப்படுத்துவதற்குக் காரண: மான மதங்களையும் அவைகளிலிருந்து முளைத்த பழக்கவழக்க
குடி அரசு - 1922 0) 104
வேறுபாடுகளையும் அரசாங்கமே தைரியமாக முன் வந்து ஒழிக்க வேண்டும். இப்படியில்லாமல், “அரசாங்கத்திற்கு எந்த மதமும் இல்லை” என்று சொல்லுகின்ற அரசாங்கமாயிருந்தாலுஞ்சரி, “நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம்” என்று சொல்லுகின்ற அரசாங்கமாயிருந்தாலும் சரி, “ஒவ்வொரு மதங்களுக்கும், கலைகளுக்கும், நாகரீகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று சொல்லுகின்ற அரசாங்கமா யிருந்தாலுஞ் சரி, சமதர்மக் கொள்கையுள்ள சீர்திருத்தங்கள் எவையும் செய்ய முடியாது. இந்த மாதிரி யான கொள்கையுள்ள அரசாங்கங்கள் ஏக நாயக அரசாங்கமானாலும், அல்லது குடியேற்ற நாட்டு அந்தஸ்துள்ள அரசாங்கமானாலும் ஐக்கிய அரசாங்கமானாலும், அல்லது பூரண சுயேச்சை அரசாங்கமானாலும், இவை களால் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்.
சுதந்தரமற்ற மக்களுக்கும் கடுகளவாவது நன்மையுண்டாகப் போவதில்லை.
எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, அதாவது ஏக நாயக அரசாங் கமானாலும் அல்லது ஜனநாயக அரசாங்கமானாலும், அது தேச மக்கள் எல்லோரையும் மக்களாகவே கருதி, அவர்களுக்குள் சமத்துவம், சகோதரத்
துவம், சுதந்தரம் ஆகியவைகள் நிலைத்திருக்கச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். இந்த சமத்துவம், சகோதரத்துவம் சுதந்திரம் ஆகிய வைகள் வளர்வதற்குத் தடையாக இருப்பவை மதமானாலும், பொருளா
னாலும், ஜாதியானாலும், வேதமானாலும் நாகரீகங்களானாலும், பழக்க வழக்கங்களானாலும், கடவுள் ஆனாலும் மற்றும் எவையானாலும் அவை களைச் சட்டங்களின் மூலம் அடியோடு ஒழிக்கப் பின்வாங்காத அரசாங்க மாக இருக்க வேண்டும். இத்தகைய அரசாங்கத்தினால்தான் தேசமக்கள். எல்லோருடைய சுய மரியாதையையும் காப்பாற்ற முடியுமென்பதில் ஐய மில்லை.
இப்படியில்லாமல், “அரசாங்கத்திற்கு மதமில்லை” என்று மாத்திரம் ஒப்புக்கொண்டு “மத சுதந்தரம், பொது ஜனங்களின் பழக்க வழக்கங்கள். முதலிய உரிமைகளுக்குச் சம்மதமளிக்கிறது” என்ற கொள்கையை உடைய ஐக்கிய ஆட்சி அரசாங்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டு விட முடியும் என்று கேட்கிறோம். இந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ள அரசாங்கம், கல்யாணம், சிரார்த்தம், கருமாதி முதலிய பல பெயர்களால் பார்ப்பனரல்லாதார்களிடமிருந்து செல்வத்தைச் சுரண்டுவது எங்கள் மதம் ஐந்து வயதுப் பெண் குழந்தையை அறுபது வயதுக் கிழவனுக்கு மணஞ்செய்து கொடுத்து, அன்றைக்காவது, அல்லது மறுநாளிலாவது, மறு மாதத்திலாவது, மறுவருஷத்திலாவது தாலி யறுக்கவைப்பதும், இவ்வாறு தாலியறுத்த பெண்களை மொட்டையடித்துக் கைம்பெண்களாக ஆயுள் முழுதும் இருந்து துன்புறும்படி வைப்பதுதான் எங்கள் மதம், கோயில்கள். என்பவைகளில் உள்ள குழவிக்கல்லுகளுக்கும், பொம்மைகளுக்கும், ஏராளமாக செல்வங்களைப் பாழ்பண்ணிவிட்டு மக்களுடைய உழைப்பை
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
யும், செல்வத்தையும், காலத்தையும் பயனற்ற வழியில் செலவிடுவதுதான்.
எங்கள் மதம், இவ்வாறுள்ள கோயில்களின் செல்வங்களைப் பார்ப்பனர்கள். தான் தின்று கொழுக்கலாம். இக்கோயில்களுக்குள் உயர்ந்த ஜாதி இந்துக்கள் தான் போகலாம், தாழ்த்தப்பட்டவர்கள் போகக்கூடாது என்று ஏற்பட்டிருப்பது தான் எங்கள் மதம்; ஆண்களுக்குத்தான் சொத்துரிமை உண்டு, பெண்களுக்கு
எந்த வகையிலும் சொத்துரிமை இல்லை என்பதுதான் எங்கள் மதம்; ஆண்கள் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், பெண்கள் இவ்வாறு செய்து கொள்ளக்கூடாது, கணவன் இறந்து விட்டாலும் விதவையாகத் தனித்திருந்தே உயிர் வாழ வேண்டும் என்ற ஏற்பாடுதான்
எங்கள் மதம் என்று சொல்லுகின்ற மதம் சுதந்தரங்களுக்கு எல்லாம் உரிமை கொடுத்து ஆக வேண்டுமல்லவா?
உயர்ந்த ஜாதி இந்துக்களின் பிள்ளைகளும், தாழ்ந்த வகுப்பினரின் பிள்ளைகளும் ஒரு பள்ளிக் கூடத்தில் சேர்ந்து படிப்பது மதச் சுதந்தரத்
திற்கும், பழக்க வழக்க சுதந்தரங்களுக்கும் விரோதம்; உயர்ந்த வகுப்பினர். தண்ணீர் எடுக்கும் கிணறு, குளங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தண்ணீர். எடுப்பது. பழக்க வழக்க சுதந்தரத்திற்கு விரோதம். உயர்ந்த வகுப்பினர்கள். வசிக்கும் தெருக்களில் தாழ்ந்த வகுப்பினர் நடப்பது பழக்கவழக்க சுதந்தரங் களுக்கு விரோதம்; உயர்ந்த வகுப்பினர் பார்க்கும்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் படிப்பதும் நல்ல வேஷ்டிக் கட்டுவதும், சட்டை போடுவதும், கிராப்பு வைப்பதும், காலில் செருப்பணிவதும், குடை பிடிப்பதும், பெண்கள்.
மார்பில் துணி போடுவதும் பழக்க வழக்க சுதந்தரங்களுக்கு விரோதம் என்று கூறி வைதீகர்களும், ஜாதி இறுமாப்புக் கொண்டவர்களும் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொடுமைப்படுத்த மேற்கூறிய உரிமை இடங் கொடுக்கின்ற தல்லவா? ஆகையால், மத நடு நிலைமையும், மதம், பழக்க வழக்கம் ஆகிய சுதந்தரங்களுக்கு உரிமையும் வழங்கும் ஆட்சியில் ஏழை மக்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லையென்று நிச்சயமாகக் கூறலாம்.
இன்னும் ஆலோசனைக் கமிட்டியில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் வேண்டுகோளுக்கு இணங்கி மற்றொரு தீர்மானமும் செய்யப் பட்டிருக்கிறது. அது “குடிமக்கள் தங்கள் நகர உரிமைகளை அனுபவிப்பதற்குத் தடையாக எத்தகைய பழக்க வழக்க வித்தியாசங்கள் ஏற்படுவதாயினும் அவைகள் சட்ட விரோதமானவை எனத் தீர்மானிக்க வேண்டும்” என்பதாகும்.
முதலில் மதம், பழக்க வழக்கம் ஆகிய சுதந்திரங்களுக்கு உரிமை கொடுத்து விட்டு மேற்கூறியவாறு தீர்மானிப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. முதலில் கூறிய தீர்மானத்தை அரசாங்கம் நடத்தி வைப்பதா? அல்லது இரண்டாவது செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை அரசாங்கம் நடத்தி வைப்பதா? என்று யோசித்துப் பாருங்கள்! வரப்போகின்ற அரசாங்கத்தில் பெரும்பாலும். ஆதிக்கமும், அதிகாரமும் செலுத்தப் போகின்ற பணக்காரர்களும், வைதீகப்
குடி அரசு - 1922 0) 106
பித்தர்களும், ஜாதி இறுமாப்புக் கொண்டவர்களும் “மதம் பழக்க வழக்க சுதந்திரங்களுக்கு உரிமை கொடுக்கும்” தீர்மானத்தை நடைமுறையில் வைத் திருப்பார்களா? அல்லது “குடிமக்கள் தங்கள் நகர உரிமைகளை அனுபவிக்
கத் தடையாக இருக்கும் பழக்க வழக்க வித்தியாசங்களைத் தடுக்கும்” தீர்மானத்தை நடைமுறையில் வைத்திருப்பார்களா? என்று யோசனை செய்து பாருங்கள்! ஆகவே இரண்டாவது செய்யப்பட்டிருக்கும் தீர்மானம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு வெறும் வாய்ச்சமாதானம் கூறுவதற்குப் பதிலாகவே செய்யப்பட்டி ருக்கிறதென்று தான் சொல்லலாம்.
இன்னும் “தர்ம ஸ்தாபனங்கள், மத ஸ்தாபனங்கள், சமூக ஸ்தாபனங்
கள், கல்வி ஸ்தாபனங்கள் முதலியவற்றைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள். தங்கள் சொந்த செலவில் அமைத்து அந்த ஸ்தாபனங்களில் தங்கள் சொந்த. மதங்களையும், தங்கள் சொந்த பாஷைகளையும் அநுஷ்டிக்க அவர்களுக்
குப் பூரண சுதந்திரம் கொடுக்கிறது” என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இத்தீர்மானம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்
திற்குச் செய்யப்பட்டிருப்பது போலக் காணப்படுவதாயினும் இத்தகைய உரிமை மற்ற உயர்ந்த வகுப்பினர்களுக்கும் இல்லாமலில்லை. எந்த வகுப்பி னர்களுக்கும் இத்தகைய உரிமை உண்டு.ஆகவே இதுவும், “மதங்கள், பழக்க வழக்க சுதந்திரங்கள்” ஆகியவைகளுக்கு உரிமை கொடுக்கும் தீர்மானத் தைப் போன்றதேயாகும். இத்தீர்மானம், இன்னும் மக்களின் ஒற்றுமைக்குத் தடையாக இருக்கின்ற மதங்களையும், நாகரிகங்களையும் நிலைத்திருக் கும்படி செய்வதற்குத் துணை புரியக் கூடியதே யாகும்.
இவ்வாறு ஒவ்வொரு தனிப்பட்ட வகுப்பினரும் தங்கள் தங்கள் மதம், கலை, பழக்க வழக்கங்கள் இவைகளைக் காப்பாற்றிக் கொள்ள உரிமைய ளித்து விட்டு, “அரசாங்க ஆதரவு பெற்ற பள்ளிக் கூடங்களில் எல்லோரை:
யும் சேர அனுமதிக்க வேண்டும், ஜாதி, மதம், சமூகம், பிறப்பிடம் முதலியவற்
றைக் கொண்டு தடைப்படுத்தக்கூடாது” என்று தீர்மானித்திருப்பதில் என்ன பயனுண்டு? தனித்தனி ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை யிருக்கின்றதால், உயர்ந்த சாதிக்காரர்கள், அரசாங்க ஆதரவு பெற்ற ஸ்தாப னங்களில் தாழ்த்தப்பட்டவர்களையெல்லாம் சேர்க்கப்படும் பொழுது தாங்கள் அதை பகிஷ்கரித்து விடுவார்கள். ஏனென்றால் ஒவ்வொரு சமூகத்
திலும் உள்ள மதப் பித்தர்கள், தங்கள் மதம், பழக்க வழக்கங்களைக் காப்பாற்ற எப்படியேனும் தனி ஸ்தாபனங்களை ஏற்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். இவ்வாறு தனிப்பட்ட ஸ்தாபனங்கள் அதிகமாக ஏற்படுகின்றபோது அரசாங்க ஆதரவு பெற்ற கல்வி ஸ்தாபனங்களின் எண்ணிக்கைக் குறையும் என்பதில் ஐயமில்லை.ஆகவே இவைகளைக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்கள் பெரிய பயனைப் பெற முடியாது என்று சொல்லுகிறோம். ஆனாலும் சிறிதளவாவது நன்மை தரக்கூடிய இத்தீர்மானத்தை நாம் வரவேற்கிறோம்.
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இது நிற்க, இனி எந்த மாதிரியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலுங் கூட அவைகளெல்லாம் பெரிய நன்மையை அளித்துவிடாது என்று சொல்லு கிறோம். ஏனென்றால், மதம், பழக்க வழக்க சுதந்திரம் முதலியவைகளுக்கு உரிமையளிக்கின்ற வரையிலும், அரசாங்கத்திற்கு மதம் இல்லையென்று. சொல்லிக் கொண்டு மதத்தில் தலையிட மறுக்கின்ற வரையிலும், நமது
நாட்டில் சமதர்மம் பரவமுடியாது என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
ஆயினும், “ஒவ்வொரு மதங்களுக்கும், கலைகளுக்கும் நாகரீகங் களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதையும், எந்தத் தனி வகுப்பினர்களுக்கும் தனிச் செல்வாக்கு இல்லாமலும்” உள்ள சுயராஜியம் வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிற காங்கிரசைக் காட்டிலும், வட்டமேஜை ஆலோசனைக் கமிட்டியாரால் செய்யப்படும் முடிவுகள் சிறிதளவு நன்மையானவைகளாயிருக்கிறதென்றே நாம் கருதுகின்றோம்.” “தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பொது ஸ்தாபனங்களில் அவர்களுடைய பங்குக்கு ஏற்றவாறு உரிமையளிக்க வேண்டும்” என்பன போன்ற சில தீர்மானங்கள் அவர்களுக்கு நன்மையளிப்பனவாகும். இந்தச் சிறிய சாதகத்தைக் கொண்டு அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் தங்கள் கையை பலப்
படுத்திக் கொண்டு, சிறிதளவாவது முன்னேற்றமடைய வழியிருக்கிறது என்பதனால் கொஞ்சம் திருப்தி அடைய வேண்டியிருக்கிறது. தாழ்த்தப் பட்டவர்களுக்கு ஒரு சிறிதும் பாதுகாப்பு அளிக்க விரும்பாத காங்கிரஸ்: காரர்களைக் காட்டிலும், ஆலோசனைக் கமிட்டியார் ஓரளவு சாதகமான காரியங்களுக்கு இடங் கொடுத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைகிறோம்.
இவைகளை எல்லாம் ஆலோசிக்கும் போது சீர்திருத்தக்காரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயமென்ன? அவர்கள் பிரசாரத்தின் மூலம் மக்களுடைய மனத்தில், மாறுதல் உண்டாக்குவதனால் தான், ஜாதி, மதப் பழக்க வழக்கங்களை ஒழிக்க முயலவேண்டியதிருக்கிறதே யொழிய தற்கால அரசாங்க அமைப்பைச் சாதகமாகக் கொண்டு ஒன்றுஞ் செய்ய முடிவதற் கில்லை என்பதே. இத்தனை காலமாக பிரிட்டிஷ் அரசாங்கமும் “நாங்கள். மதத்தில் தலையிடுவதில்லை” என்ற பல்லவியைப் பாடிக் கொண்டே சீர்திருத்தங்களைச் செய்வதற்கு முன் வராமலிருந்தது, காங்கிரஸ் கேட்ட சுயராஜ்யமும் இதைவிட மோசமானதாகத்தான் இருந்தது. இப்பொழுது நடைபெறும் வட்ட மேஜை ஆலோசனைக் கமிட்டியின் தீர்மானங்களை ஆராயும் போதும், வரப்போகும் ஐக்கிய ஆட்சியும் இப்படித்தானிருக்கு மென்று தெரிகின்றது.
ஆதலால் எந்தச் சுயராஜியம் வந்தாலும் படித்தவர்களும், பணக்காரர்.
களும், உத்தியோகம், பட்டம், பதவி, முதலியவைகளைப் பெற்று ஏழை மக்களின் பொருளைச் சுரண்டுவதற்குத் தான் துணைசெய்யுமே ஒழிய மற்றபடி ஜாதி மத உயர்வு தாழ்வுக் கொடுமைகள் ஒழிந்து, நாட்டு மக்களனைவரும்.
குடி அரசு - 1922 0) 108
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பெற்று வாழமுடியாது என்பதைத் தான்
கூறுகிறோம். உண்மையில் நமது நாட்டு மக்கள் சுயமரியாதை பெறவேண்டு
மானால் ஜாதி,மதம்,பழக்கவழக்கம் முதலியவைகளை ஒழித்து எல்லோரையும் ஒன்றுபடுத்தக் கூடிய ஆட்சிதான் தேவை என்பதை எடுத்துக் காட்டி முடிக் கிறோம். அது குடி அரசானாலும், முடி அரசானாலும் அல்லது வேறு எந்த
அரசானாலும் சரி.
குடி அரசு - தலையங்கம் - 06.03.1932.
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கிறோம்
தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறவும், தங்கள் உரிமையையும், சமத்துவத்தையும் பெற அவர்கள் போதிய கல்வியறிவு பெற்று உலக ஞான. மறிந்து தங்கள் இழிவான நிலையைத் தாங்களே உணரவேண்டுமென்பதை
நாம் பன்முறையும் கூறிவருகிறோம். அத்தகைய அவர்களது நிலையை அறிய அவர்கள் எல்லோரும் ஏனையோரைப் போலவே கல்வி கற்று அறிவு வளர்ச்சிபெற வேண்டுவது மிகமிக இன்றியமையாதாகும். அவ்விதமே அவர்கள் கல்வி கற்க முற்படினும் அவர்களுக்கு அதனால் ஏற்படும் கஷ்டங்களும், இன்னல்களும், எதிர்ப்புகளும் எண்ணிறந்தன. அத்தகைய பல இடையூறுகளில் பொருளின்மை தலைசிறந்ததெனலாம். தங்கள் பிள்ளை: களைப் படிக்க வைக்க வேண்டுமென்ற பேரவா பல பெற்றோர்க்கு இருந்த போதிலும் போதிய பணமின்மையால் அவர்களது புஸ்தக வகைக்கோ, அல்லது துணிமணிகளுக்கோ வேண்டியன கொடுத்துதவ முடியாமையால் பிள்ளைகளின் படிப்பில் கவலை செலுத்தாத பெற்றோர்கள் அனேகர். உண்டென்பதும் நமக்குத் தெரியும்..அத்தகைய அவர்களது குறை நீக்கப்பட்ட திற்கொப்ப திருச்சி ஜில்லா லால்குடியில் உள்ள போர்டு ஸ்கூல் ஆதிதிராவிட மாணவர்களின் உபயோகத்திற்காக ரூபாய் 10,000 நன்கொடையளித்த ராவ்பகதூர் சபாரத்னம் செட்டியார் அவர்களது தயாள குணத்தைப் பற்றி சென்ற வாரம் ஒரு செய்தி பிரசுரிக்கப்பட்டது நேயர்களறிந்ததே. பெருந்தணி கரான சபாரத்னமவர்கள் ஏழை ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவி செய்ய முன்போந்தது அவரது தயாள சிந்தையையும் தெள்ளிதில் விளக்குகின்றது. ஷி தொகையானது Gy மாணவர்களது சாப்பாடு வசதிக்காக உபயோகிக் கபடுமென்பது கேட்டு மகிழ்ந்தோம்.மிகவும் தாராள சிந்தையுடன் பொருளீந் துதவிய திரு. சபாரத்னம் அவர்களைப் பெரிதும் பாராட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.03.1932.
குடி அரசு - 1922 0) 110
தேசீயப் பைத்தியம்
தேசியம் என்பது ஒரு பித்தலாட்டம் என்பதையும், அது சுயநலவாதி. களின் வயிற்றுப்பிழைப்புக்குத் துணைபுரியும் வார்த்தை என்பதையும்;நம இயக்கம் தோன்றிய நாள் முதல் நாம் எடுத்துக்காட்டி வ ்திருக்கின்றோம். தேசீயவாதியாக இருக்கின்ற ஒருவன் எச்சமயத்திலும் யோக்கியப் பொறுப்பு டன் நடந்துகொள்ள முடியாது. சமயத்திற்குத் தகுந்த வேஷங்களைப் போட்டுக்கொண்டு பாமர மக்களை ஏமாற்றக் கற்றுக் கொள்ளவேண்டும். பாமர மக்களைப் பலவகையிலும் ஏமாற்றி அவர்களைத் தன்னைப் பின்பற்று மாறு செய்துகொள்ள முடியாத எவனும் தேசீயத்தலைவனாக இருக்க முடியாது. பாமர மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு பித்தலாட்டங்களும், அயோக்கியத்தனங்களும் செய்தாக வேண்டுமோ அவ்வளவும் செய்துதான். ஆகவேண்டும். அன்றியும் ஒரு நிலையான கொள்கையும், நேர்மையான நடத்தையும் இல்லாதவனே தேசீயவாதியாக இருக்க முடியும். அல்லாமலும் பாமர மக்கள் எவ்வளவு பிற்போக்கான கொள்கையும், பழக்க வழக்கமும் ' 'உடையவர்களா யிருக்கிறார்களோ அவ்வளவு பிற்போக்கான கொள்கையை [ e புகழ்பெற்று விளங்க முடியும். காலத்திற்குத் தகுந்த மாதிரியில் நாட்டிற்கு நன்மை தரும்கொள்கைகளை யாருடைய நன்மதிப்பையும் இகழ்ச்சியையும் பாராட்டாமல் எடுத்துக் கூறும் ஒருவன் தேசீயவாதியாக விளங்க முடியாது. அவன் தேசத் துரோகியாகவும், புரட்சிக்காரனாகவும், நாஸ்திகன் என்று வைதீகர்களால் பழி சுமத்தப்படுபவனாகவுந் தான் விளங்க முடியும். ஆகை:
யால் தான் நமது தேசத்திலும் மற்றும் நமது நாட்டைப் போல மூடநம்பிக் கையுடைய மக்கள் வாழ்கின்ற தேசங்களிலுமுள்ள ஒருவன் தேசீயத்தின் பெயரால் புகழ் பெறுவதும், பாமர மக்களின் நன்மதிப்பைப் பெறுவதும், தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாக இருந்து வருகின்றது.
அல்லாமலும் முற்காலத்தில் வைதீகர்கள், பக்தர்கள், மதாச்சாரியார்கள், புரோகிதர்கள் என்பவர்கள் எவ்வாறு ஜன சமூகத்தை ஏமாற்றுகின்றவர். களாகவும், ஜன சமூகத்தின் நன்மதிப்பிற்கு பாத்திரப்பட்டவர்களாகவும், ஜன சமூகத்திற்குப் பல ஆசை வார்த்தைகளைக் காட்டுவதன்மூலம் அவர்களிடம் பொருள் பெற்றுப் பிழைக்கின்றவர்களாகவும் இருந்து வந்தார்களோ
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அவ்வாறேதான் இக்காலத்தில் தேசீய வாதிகளும் இருந்து வருகின்றார்கள். வைதீகர்களும், பக்தர்களும், மதாச்சாரியார்களும், புரோகிதர்களும், பாமர மக்களுக்கு “இறந்தபின் சுவர்க்கக்தை அடையலாமென்றும், அங்கே இவ்வுலகத்தைக் காட்டிலும் அதிகமான சுகத்தை அடையலாமென்றும், அச்சுகத்தை நீண்டநாள் அனுபவிக்கலாமென்றும், அது அழியாத சுகமென்
றும், ஆகையால் அதைப் பெற முயல்வதே அறிவாகுமென்றும், அற்பமான இவ்வுலக சுகத்தை இச்சிப்பதனால் அவ்வுலக சுகத்தைப் பெறமுடியா தென்றும் கூறி அவர்கள் அறிவைக் கெடுத்துவந்தனர். அந்தச் சுவர்க்க வாசலின் சாவி தங்களிடத்தில்தான் இருக்கின்றதென்றும் கூறி, அவர்களின் உழைப்பையும், செல்வத்தையும், அறிவையும் கொள்ளை கொண்டு வந்தனர். அவர்களைப் போலவே இன்று தேசீயவாதிகள் என்பவர்களும், “நாங்கள் ராம ராஜியத்தைக் கொண்டு வருகிறோம். அந்த ராஜியத்தில் எல்லோரும். கஷ்டமில்லாமல், தரித்திரமில்லாமல் வாழலாம். ஒருவரும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதில்லை.அரசாங்கத்திற்கு வரிகொடுக்க வேண்டிய தில்லை. எல்லோரும் தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு வருகின்றனர். அந்த சுவர்க்க லோகத் தரகர்கள் தங்கள் மதச் சின்னங்களாக “விபூதி பட்டை நாமம், துளசிமணி, உருத்திராட்
சம் முதலியவைகளைத் தரித்துக் கொண்டு “அரகரா சிவ சிவா ராமா கோவிந்தா” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தது போலவே இந்தத் தேசீயவாதிகளும் இன்று ராமராஜ்யச் சின்னமாக கதர்த்துணி, தேசீயக் கொடி முதலியவைகளைத் தரித்துக் கொண்டு “பாரத மாதாவுக்கு ஜே! மகாத்மா காந்திக்கு ஜே!” என்று சத்தமிட்டுப் பாமர மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் பாமர மக்களின் கவனத்தை இழுக்கும் பொருட்டு அளவற்ற பண்டிகைகளையும், சடங்குகளையும், விழாக்களையும், உண்டாக்கி அவைகளை அவர்கள் கொண்டாடும்படி செய்து அவைகளின் மூலம், அவர்களுடைய உழைப்பையும், அறிவையும், செல்வத்தையும் எவ்வாறு கெடுத்துவந்தார்களோ அதைப்போலவே இன்று இந்தத்தேசீயவாதிகளும். ஜெயந்திகளையும், பிரார்த்தனைகளையும், கொடியேற்று விழாக்களையும் ஏற்படுத்தி அவைகளின் மூலம் பாமரமக்களின் கவனத்தை இழுத்து, அவர்களுடைய செல்வத்தையும், உழைப்பையும், அறிவையும் கெடுத்து வருகின்றனர். அந்தக் காலத்தில் நமது மக்கள் எவ்வாறு சுவர்க்கத்தை நம்பி வைதீகர்களும், பக்தர்களும், மதாச்சாரியர்களும், புரோகிதர்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க்கொண்டிருந்தார்களோ அதைப்போலவேதான் இன்றும் இருக்கின்றனர். தேசீயவாதிகள் வாங்கித் தருவதாகக்கூறும் “ராம ராஜியத்”தை நம்பி இவர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் பின்செல்லு கின்றவர்களாயிருக்கின்றனர். பாமர மக்களின் இத்தகைய அறியாமையைக் கண்டே இன்று நமது நாட்டில் வேறுபிழைப்பிற்கு வழியில்லாமலிருக்கின்ற வர்களும், கெளரவமான வழியில் ஜீவனம் பண்ண வகையற்றவர்களும், யோக்கியமான முறையில் பட்டம் பதவி பெறத் திறமையற்றவர்களும் தேசீய
குடி அரசு - 1922 0) 112
வேஷம் பூண்டு, தேசீய வாதிகளாக நடனம் பண்ண ஆரம்பித்து விடு கின்றனர்.
இந்த உண்மையை அறிய வேண்டுமானால் இன்று நமது நாட்டில் தேசீய வேஷம் போட்டுத் திரியும் கூட்டத்தினரைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் கொஞ்சம் பகுத்தறிவுடைய எவரும் நன்றாகத் தெரிந்து கொள்ள லாம். தேசீயத் தொண்டர்கள் என்பவர்களில் அனேகர் வேறு பிழைப்பிற்கு வழியில்லாத காரணத்தால் தேசீயக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டு “காங்கிரஸ்”, “காந்தி”, “கதர்”, “சுயராஜ்யம்” என்று கூச்சலிட்டுத் திரிகின்றனர். என்பதை யாரும் மறுக்க முடியாது, இவர்களில் அனேகருக்கு, காங்கிரஸ் என்றால் இன்னது, காந்தியென்றால் இப்படிப்பட்டவர், கதர் என்றால் அதன் தத்துவம் என்ன? சுயராஜியம் என்றால் அது எப்படி யிருக்கும்? என்று கூடத் தெரியாதவர்கள் என்பது பலருக்குத் தெரிந்த விஷயமாகும். இவர்களை: நடத்துகின்ற தலைவர்கள் என்பவர்கள், எதைச் சொல்லும்படி கட்டளை யிடுகிறார்களோ, எதைச் செய்யும்படி உத்தரவிடுகிறார்களோ, அவற்றையே அவற்றின் பொருளை யுணராமலே செய்கின்ற புத்திசாலித்தனமுடைய வர்கள் என்பதும் அனேகருக்குத் தெரியாத விஷயமல்ல. நமது நாட்டுத் தேசீய ஸ்தாபனமென்று சொல்லிக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் கைக்கூலி கொடுப்பதையோ, சோறு போடுவதையோ நிறுத்திவிடுமானால் காங்கிரசின் கட்டளைப்படி சட்டமறுப்புச் செய்யத் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டு தேசீயத்தின் பெயரால் பெருவாரியாக முன்வர மாட்டார்கள் என்பது
சிறிதும் சந்தேகமற்ற உண்மையாகும். இதற்கு உதாரணமாக சென்ற ஒத்துழையாமை இயக்கம் தோன்றிய காலத்திலும், உப்புச் சட்ட மறுப்பு இயக்கம் தோன்றிய காலத்திலும், காங்கிரஸ் பேரால் “தேசீய சேவை' என்று சொல்லிக் கொண்டு எத்தனை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன் வந்தார்கள் என்பதையும், தற்போது ஆரம்பித்து நடத்தப்பட்டுவரும் சட்ட மறுப்புப் போரில் எவ்வளவு பேர் தேசீயத்தின் பெயரால் தொண்டர்களாக முன் வந்து சட்ட மறுப்புச் செய்திருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் விளங்கும். சென்ற ஒத்துழையாமையின் போதும், உப்புச் சட்டமறுப்பின் போதும், அரசாங்கத்தார் கடினமான அடக்கு முறையைக்கைக் கொள்ளாத காரணத்தாலும், காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சட்ட விரோதமானதெனக் கூறி அதன் பணத்தில் கை வைக்காத காரணத்தினாலும் காங்கிரஸ் ஸ்தாபனம் தொண்டர்களுக்குக் கைக்கூலி கொடுக்கவும்,சோறு போடவும் தயாராயிருந்
தது. இக் காரணத்தாலேயே ஏராளமான வேலை மற்றவர்கள் தேசீயத்தின் பேரால் சட்டமறுப்புச் செய்ய முன் வந்தனர். ஆனால் இப்பொழுது காங்கிர
சால் நடத்தப்படும் சட்ட மறுப்பிலோ, முன்போல ஏராளமான தொண்டர் களைக் காணவில்லை. இதற்குக் காரணம் அரசாங்கத்தார் கடுமையான அடக்குமுறையைக் கையாண்டதும், காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சட்ட விரோத மானதென விளம்பரப்படுத்தி அதன் பொக்கிஷத்தைக் கைப்பற்றிக் கொண்டதும், பாமர மக்களிடம் காங்கிரசின் பேரால் பணம் வசூல்
112 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
செய்வதைத் தடுத்ததுமேயாகும். இவ்வாறு காங்கிரசின் பணமும் போய் பண: வருவாய்க்கு இடமில்லாமலும் போனவுடன் அதன் தலைவர்களால் யாருக்கும் கைக்கூலி கொடுக்கவும், சோறு போட்டு வளர்க்கவும் முடியாமற் போய்விட்டது. ஆகவே தேசீயத்தின் பெயரால் முன் வந்து, சட்டமறுப்புச் செய்கின்ற தொண்டர்கள் கூட்டமும் குறைந்து விட்டது. இதனால் தேசீயம்
என்று சொல்லப்படுவது பிழைப்பற்றவர்களுக்கு ஒரு கையாயுதமாக இருக் கின்றது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அடுத்தபடியாகத் தேசீயவாதிகளாக விளங்கும் தலைவர்களாகிய பணக்காரர்களைப் பற்றிக் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்! பணக்காரர். களுக்கு எந்த காலத்திலாகிலும், தமது சுய நன்மையை விட்டுக் கொடுத்து ஏழைமக்களுக்குச் சம உரிமையும், சம சுகமும் அளிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாக முடியுமா? அவர்களுடைய பணத் திமிரும், ஜாதி அகங் காரமும், மதக்கிறுக்கும் ஒழிந்தால் அல்லாமல் அவர்களிடம் சமதர்ம நோக்க.
மும், அதற்குத் தகுந்த தியாக புத்தியும் தோன்றப் போவதில்லை என்பது உறுதியாகும். இத்தகைய இயல்பையுடைய அவர்கள் தேசீய வேடம் தரித்து ஏழைகளுக்குப் பாடு படுவதாகப் பாசாங்கு பண்ணுவது எதற்காக என்று ஆலோசித்துப் பாருங்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற்று, அதன் மூலம் சட்ட சபைத் தேர்தல், ஸ்தல ஸ்தாபனத் தேர்தல் முதலியவைகளில் வெற்றி பெற்று அதிகாரம் வகிப்பதன் வாயிலாகப் பாமர மக்களின் உழைப் பையும், அதன் பயனையும் நிரந்தரமாகக் கொள்ளையடிக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கிறோம். உண்மையாகவே “தேசியம்” பேசும் பணக்காரத் தலைவர்கள், தியாகஞ் செய்யக் கூடியவர்களாயிருந்தால் இப்பொழுது அவர்.
கள் எங்கே? அரசாங்கத்தார் கடினமான அடக்குமுறையைக் கையாளாத காலங்களில் தொண்டைவறளத் தேசீயம் பேசியவர்களெல்லாம், கடுமையான அடக்குமுறை ஆரம்பித்தவுடன் “தப்பித்தோம் பிழைத்தோம்” என்று எங்கோ ஓடி ஒளிந்து போனார்கள்? இத்தகைய தேசீயவாதிகளில் அனேகர் கவர்னர்கள், மந்திரிகள், நிர்வாக சபை அங்கத்தினர்கள் ஆகியவர்களுக்கு அளிக்கும் வரவேற்புக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், கவர்னர் வீட்டுக் கல்யாணத்தில் மணமக்களுக்குப் பரிசுகள் வழங்கவும் பின் வாங்க வில்லையன்றோ? மற்றுஞ் சிலர் சட்டசபைகளில் உட்கார்ந்து கொண்டு, காங்கிரஸ், காந்தி, கதர், சுயராஜ்யம் முதலிய வார்த்தைகளைக் கலந்து பேசி
விடுவதும், அரசாங்கத்தாரின் அடக்கு முறையைப் பற்றியும், தடியடி பிரம்படி முதலியவைகளைப்பற்றியும், பிரமாதமாகக் கேள்விகள் கேட்டு ஆர்ப்பாட்
டம் பண்ணுவதும் எதற்காக? இவைகளெல்லாம் தங்களைத் தேசீய வாதிகள் என்று பாமர மக்கள் நினைத்துக் கொள்ளவும், அதன் மூலம் அடுத்த எலக்ஷ
னில் வெற்றி பெறவும் செய்யப்படும் தேசீய தந்திரமா? அல்லவா? என்று ஆலோசித்துப் பாருங்கள்!
குடி அரசு - 1922 0) 114.
இன்னும் ஸ்தல ஸ்தாபனங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் தேசீய வேஷக்காரர்களில் அநேகர் “சட்ட மறுப்புக்கு அநுதாபம் காட்டும் தீர்மானங்
கள் எதுவும் ஸ்தல ஸ்தாபனங்களில் நிறைவேற்றக் கூடாது” என்று
அரசாங்கத்தாரின் கடுமையான உத்தரவு இருப்பதை அறிந்திருந்தும், பலஸ்தல ஸ்தாபனங்களில் சட்டமறுப்புக்கு அநுதாபம் காட்டும் முறையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களையெல்லாம் அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளாமல், நிராகரிக்கும்படி உத்திரவிட்டவைகளை அறிந்திருந்தும். “கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்” என்றும், யாராவது சிறைப்பட்டால் அதற்கு அநுதாபங் காட்டுவதாகவும் ஸ்தல ஸ்தாபனக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டுவருகிறார்களே இது எதற்காக? இதுவும் மறுபடியும் எலக்ஷனில் வெற்றியடைவதற்குச் செய்யப்படும் பிரசாரமா? அல்லவா? என்றுதான் கேட்கிறோம். ஆகவே தேசீயத்தலைவர்கள் என்பவர்களிலும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் பேர்வழிகள் பட்டம் பதவிகளைப் பெறவே இவ்வேஷத்தைத் தரித்துக் கொண்டிருக் கிறார்கள் என்று தெளிவாக உணரலாம். அன்றியும் அறிவு, திறமை, தியாகம் முதலியவைகளுக்கு மதிப்பில்லாமல் பணத்தையும், ஜாதியையுமே முதன்மை: யாக மதித்து, தேசீய இயக்கங்களில் தலைமைப் பதவியும், பத்திரிகை விளம்பரமும் அளிக்கப்படுவதும், ஏழைத் தொண்டர்களைப் பற்றிக் கேள்வி முறையில்லாமல் மேற்கூறிய பணக்கார உயர்ந்த சாதித் தலைவர்களைப் பற்றியே சட்ட சபைகளில் கேள்விகள் கேட்டு விளம்பரப்படுத்துவதும். தேசீயத்தின் உண்மையை உணர்வதற்குத் தகுந்த உதாரணமாகும்.
அடுத்தபடியாகத் தேசீயத்தின் பெயரால் நடைபெறும் பத்திரிகை. களைப் பாருங்கள்! அவைகள் வெகு ஜாக்கிரதையாக, அரசாங்கத்தாரின் அடக்குமுறைச் சட்டங்களுக்கு அகப்பட்டுக் கொள்ளாமல் தலையங்கங்கள் எழுதினாலும், தேசீயத்தின் பெயரால் நடைபெறும் காரியங்களைப் பற்றி, அவை வெகு அற்பமானவையாய் இருந்தாலும் பிரமாதப்படுத்திப் பெரிய பெரிய எழுத்துக்களால் தலைப் பெயர் கொடுத்துப் பிரசுரிக்கின்றன. உண்மை யிலேயே சட்ட மறுப்பு இயக்கத்தை ஆதரிக்காத பத்திரிகைகளும், சட்ட மறுப்பு இயக்கத்தை எதிர்க்கும் பத்திரிகைகளுங் கூட இவ்வாறு செய்கின்ற னவே எதற்காக? தேசீயப் பத்திரிகை என்று பெயர் பெறுவதின் மூலமும், தேசீய விஷயங்களையே அதிகமாக வெளியிடுகின்றன என்று தேசீய மோகங் கொண்டிருக்கும் மக்களால் நம்பப்படுவதன் மூலமும் பத்திரிகைகள். அதிகமாக விற்பனையாகிப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத் தைத் தவிர வேறென்ன? ஆகவே தேசீயம் என்பது பத்திரிகைகளுக்கு பிழைப்பைக் கொடுக்கும் ஒரு கருவியாகி விட்டது என்று உணரலாம்.
இன்னும், இந்தத் தேசீயம் என்பதன் பெயரால், உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்பவர்கள், தங்கள் செல்வாக்கும், அதிகாரமும் எப்பொழுதும் குறையாம லிருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அரசியல் சீர்திருத்தத்தில்,
116 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கொடுமைப்படுத்தப்பட்டு, தாழ்த்தப் பட்டிருக்கும் வகுப்பினருக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதை மறுத்து வருவதையும், இதைத் தேசீயத்தின் பேரால் உயர்ந்த வகுப்பினர் என்பவர்களாலேயே நடத்தப்படும் பத்திரிகைகளெல்
லாம் ஆதரித்து வருவதும் தெரியாத விஷயமல்ல.
பதையும் யார்மறுக்க முடியும்? மக்களை வைதீகத்தில் திருப்ப தேசியம் உதவி யாக இருக்கின்ற காரணத்தினாலேயே, வருணாச்சிரம தருமத்தில் முரட்டுப் பிடிவாதமுடைய “மடி சஞ்சி”களில் அனேகரும் தேசீய வேடந்தரித்து நடிக்கின்றார்கள் என்பதும் உண்மையான விஷயமாகும்.
ஆகவேநாம் இது வரையிலும் “தேசீயம்” என்பதைப் பற்றிச் சொல்லி வந்த விஷயங்களைக் கொண்டு அதன் பித்தலாட்டங்களை உணரலாம்.
ிழைப்பற்றவர்களும், பணந் திரட்டும் தந்திர சாலிகளும், பதவி வேட்டைக்
காரர்களும், தங்கள், தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். என்பதை அறிந்து கொள்ளலாம். ஆதலால் உண்மையான சமதர்ம நோக்க முடைய எந்த வாலிபர்களும், முதியவர்களும், தேசீயத்தின் பெயரால் நடை பெறும் கிளர்ச்சிகளையும், காரியங்களையும் கண்டு ஏமாறாமல் இருப்பதே
நன்மையாகும்.
இதுவரையிலும் இந்த “தேசீயம்”என்ற வார்த்தையின் பேரால் நமது
நாட்டில் நடந்த கிளர்ச்சிகளாலும், காரியங்களாலும் ஏழை மக்கள் என்ன நன்மையைப் பெற்றார்கள்? மேலும் மேலும் பல வகையில் ஏழை மக்களுக்
குக் கஷ்டமும், நஷ்டமும் பொதுவாக தேசத்தின் செல்வத்துக்கும், வியா பாரத்துக்கும், அனேக மக்களின் உயிருக்கும் துன்பமும் சேதமும் உண்டான தைத் தவிர வேறு கடுகளவு நன்மையாவது கிடைத்ததுண்டா? என்று யோசித்துப் பார்ப்பவர்களுக்குத் “தேசீயத்தின்' பித்தலாட்டம் விளங்காமற் போகாது.
ஆதலால், நமது நாட்டு ஏழை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக் கும் நன்மை உண்டாக வேண்டுமானால்- நமது நாட்டில் வேரூன்றி இருக்கும்
குடி அரசு - 1922 0) 16
சாதி மத பேதங்கள் ஒழிந்து, எல்லா மக்களும் சம சுதந்திரம் அடையக் கூடிய சந்தர்ப்பத்தை உண்டாக்க வேண்டுமானால் எப்படி “வைதீகம்” என்னும் பழய பாசிபிடித்த விஷநீர்க் குளத்தை முழுதும் மண்ணைப் போட்டு மூட வேண்டுமோ அதைப்போலவே இந்தத் தேசீயம் என்னும் பித்தலாட்டத் தையும் அடியோடு ஒழித்தாக வேண்டும். எப்படி வைதீகத்தில் நம்பிக்கை யுடையமக்கள் பகுத்தறிவும், நாகரீகமும் அடையாமல் புரோகிதர் வலையில் அகப்பட்டுக் கிடந்து அழிய வேண்டுமோ அதுபோலவே தேசீயத்தில் மக்களுக்கு நம்பிக்கையும் பைத்தியமும் இருக்கின்றவரையிலும், சுகமும் சமத்துவமும் பெற முடியாமல் “தேசீயத் தலைவர்கள்” என்பவர்களின் வலையிற் சிக்கிக் கஷ்டமும் நஷ்டமும் அடைய வேண்டியதுதான். “தலை வலி போய்த் திருகு வலி வந்தது” என்பது போலவே மக்களுக்கு வைதீகத்
தில் உள்ள மூடநம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் குறைந்து சிறிது பகுத்தறிவு உதயமாகி வருகிற இக்காலத்தில் இந்தப் பாழும் “தேசீயம்” என்பது தோன்றி அவர்களைப் பிணித்து மறுபடியும் மூடநம்பிக்கையில் அழுத்தி வருகிறது என்பதில் ஐயமில்லை.
ஆகையால் இச்சமயத்தில் ஜன சமூக ஊழியர்கள் அனைவரும் தேசீயமென்பதன் பித்தலாட்டங்களை வெளியாக்கிப் பொது ஜனங்களை ஏமாறாமலிருக்கச் செய்ய முன்வர வேண்டுவதே உண்மையான ஜன சமூக ஊழியமாகும் என்பதை உணர வேண்டுகிறோம். வைதீகத்தைப் போலக் கொடியதான இந்த தேசீயத்தை ஒழிக்க எவருடைய புகழ்ச்சியையும், இகழ்ச்சி யையும் எதிர்பாராமல் தைரியத்துடன் முன் வருவதே ஓவ்வொரு பகுத்தறிவு டைய வாலிபர்களின் கடமையாகும் என்று கடைசியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.03.4932.
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
திரு. மானவியாவின் புரோகிதம்
பிரபல வருணாச்சிரம தருமவாதியாகிய பண்டித மதன் மோகன மாளவியா அவர்களைப் பற்றி, நாம் அதிகமாக யாருக்கும் எடுத்துக்கூறத் தேவையில்லை. அவர் இங்கிலாந்து சென்றபோது, கங்கை நீரும், களிமண்
ணும் மடிசஞ்சிகளும் கூடவே கொண்டு சென்ற வைதீகர் என்பது தெரியும். “சூத்திரன்” என்பவன் ஒருவன் மோட்சமடைய வேண்டுமானால் “அவன் இருபத்தோரு ஜென்மங்கள் நற்குலத்தில் பிறந்து, சற்கருமங்களைச் செய்து, பிராமண பக்தனாயிருந்து கடைசியில் பிராமணனாகப்பிறந்து தான் மோட்சம் பெற வேண்டும் என்ற பிராமணீய மதக்கொள்கையில் உறுதியான நம்பிக்கை: யுடைய முதிர்ந்த வயிரம் வாய்ந்த வைதீகர் என்பது அவருடைய போக்கை: உணர்ந்தவர்கள் எல்லோருக்கும் தெரியும்.
இத்தகைய வைதீக மாளவியா அவர்கள் அரசியல் சீர்திருத்தத்தில் தீண்டாதவர்களுக்குத் தனித்தொகுதி அளிப்பதை அடியோடு மறுக்கின்றார். என்ற விஷயமும் தெரியாததல்ல. இப்படிப்பட்ட இவர் சென்ற சிவராத்திரி வாரத்தின்போது, காசியில் கங்கைக்கரையில் நடந்த “தசாஸ்வமேதக் கூட்டத்
தில்” இந்துமதத்தைச் சேர்ந்த சகலவகுப்பினருக்கும் ஜாதி பேதமின்றி “மந்திரதீக்ஷ” கொடுத்தாராம்! அப்போது 150 பேர்களுக்குமேல் 500 பேர் களுக்குள் அடங்கிய தீண்டாதார்களுக்குச் “சமயதீக்ஷ” கொடுத்தாராம்!
இவ்விஷயங்கள் பத்திரிகைகளிலெல்லாம் வெளியாகியிருக்கின்றன. என்றுமில்லாமல் இப்பொழுது திடீரெனத் தீண்டாத வகுப்பினர்மேல் திரு. மாளவியா அவர்களுக்குக் கருணைபிறந்து “சமயதீக்ஷ'” அளிக்கப் புறப் பட்டது எதற்காக? அவர்கள் இந்த உலகத்திலிருந்துகொண்டு “சமத்துவம் வேண்டும் சமத்துவம் வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு வருணாச்சிரம தருமத்தைக் கெடுக்க வழி தேடுகின்றனர். ஆகையால் அவர்களை ஒரேயடி யாக மோட்சலோகத்திற்கு அனுப்பிவிடலாம் என்ற எண்ணத்தின் பேரிலா? அல்லது அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமையைப் போக்கிச் சமத்து
வம் அளிக்கவா? என்று கேட்கின்றோம். அல்லது “தீண்டாதவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தனியாகப் பிரிக்கக் கூடாது. அவர்களுக்கும், அரசியல் சீர்திருத்தத்தில் பொதுத்தொகுதிதான்
குடி அரசு - 1922 0) 118
அளிக்கப்படவேண்டும். இந்துக்கள் தீண்டாதார்களை வெறுத்து ஒதுக்க வில்லை. அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து சமத்துவம் கொடுத்து வருகின்றார்கள்” என்று இந்துமகா சபைக்காரர்களும், காங்கிரஸ் காரர்களும் கூறி வருவதற்கு அடையாளமாக இக்காரியத்தைச் செய்யத் தொடங்கினாரா? என்று கேட்கின்றோம். இவ்வாறு “சமயதீகை்ஷ” கொடுக்கப் பட்ட தீண்டாத வகுப்பினர்களை இன்று திரு. மாளவியாவின் கூட்டத்தார். உடன் வைத்து உண்ணவும் பழகவும் தயாராயிருக்கிறார்களா? என்றும் கேட்கி றோம். ஒருநாளும் அவர்கள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆகவே தீண்டாதார்களை ஏமாற்றும் பொருட்டுச் சமயத்
திற்குத் தகுந்தபடி செய்யப்படும் ஒரு தந்திரந்தான் திரு.மாளவியா அவர் களால் செய்யப்பட்ட “சமயதீக்ஷ'” என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு திரு.மாளவியா போன்றவர்கள், தீண்டாதார்களை ஏமாற்று
வதற்குச் செய்யும் புரோகிதங்களைக் கண்டு ஏமாறாமலிருக்குமாறு தாழ்த்தப் பட்ட சகோதரர்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். இந்துமத நம்பிக்கையும், இந்துமத வேதங்களில் நம்பிக்கையும் உள்ள எந்த இந்துக்களும், “பிறப்பி னால் எல்லோரும் சமம்” என்பதை ஒத்துக்கொண்டு எல்லா வகுப்பினர். களுக்கும் சமத்துவம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிய வேண்டுகிறோம். வீணாக யாரும், “சமய தீக்ஷை”, “மந்திர தீக்ஷ'” என்ற பெயர்களைக் கேட்டு, வருணாச்சிரம தருமவாதிகளின் வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென மீண்டும் எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1932
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சர். ஷாட்மு நாயுடு அவர்கள்
இந்திய சர்க்காரின் ஏஜண்டாகத் தென்ணாப்பிரிக்காவில் உத்தியோகம். வகித்திருந்த சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்கள் தமது உத்தியோகத்தினின்.
றும் நீங்கி இந்தியாவுக்கு வந்து விட்டார். சர். ரெட்டி நாயுடு அவர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியாவின் நன்மைக்காக உண்மையாகவும், அஞ்சாமலும் உழைத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. சர். ரெட்டி நாயுடு அவர்கள் சமுதாய ஊழியத்தில் அளவு கடந்த பற்றும், உண்மையாகத் தனது கொள்கைகளைக் கைப்பற்றி நடக்கும் தன்மையும் உள்ளவர் என்பதை அவரை நேரில் அறிந்த நமது மாகாண வாசிகள் அனைவரும் அறிவர். இவருக்கு முன் தென்ணாப்பிரிக்காவில் ஏஜண்டாயிருந்த மகாகனம் சீனிவாச சாஸ்திரிகளைக் காட்டிலும் ஊக்கமாகவும், உண்மையாகவும் இந்தியர்களுக் காக உழைத்தவராவார். ஆனால் மகாகனம் சீனிவாச சாஸ்திரிகள் தென்னாப் பிரிக்காவிலிருந்த காலத்தில், அவர் எங்கேயாவது மூச்சு விட்டாலும், தும்மி
னாலும், இருமினாலும் அவற்றையெல்லாம் நமது நாட்டுப் பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட்டு விளம்பரம் பண்ணி வந்தன. அதற்குக் காரணம் அவர் பார்ப்பனராயிருந்ததும், நமது நாட்டுப் பத்திரிகைகளும் பார்ப்பனர் களுடையதாயிருப்பதுமேயாகும். ஆணால் “சர். ரெட்டி நாயுடு அவர்களோ
பார்ப்பனரல்லாதார்; அதிலும் வருணாச்சிரம தருமப் புரட்டுகளில் நம்பிக்கை: யற்ற ஓர் சீர்திருத்தவாதி” ஆகையால் இவருடைய உண்மையான ஊழி யத்தை பற்றிக் கூட எந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளும் எடுத்துக்காட்டா
திருந்தன. இது நமது நாட்டு வழக்கமாகவே இருந்து வருகின்றது. இதனா லேயே ஒன்றுக்கும் உதவாப் பார்ப்பனர்களும் கூடப் பெரிய தலைவர்க.
ளாகவும், பிரபல தேசாபிமானிகளாகவும் ஆகிவிடுகின்றார்கள்.உண்மையாக நாட்டு மக்களுக்கு உழைக்கும் பார்ப்பனரல்லாதார்கள் எப்படிப்பட்டவர் களாயிருந்தாலும் குடத்துள் வைத்த விளக்கைப் போல் இருக்கின்றார்கள். என்பது நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கையறிந்தவர்.
களுக்குத் தெரிந்த விஷயமாகும்.
குடி அரசு - 1922 0) 120
இறுதியாக நாம், சர். கே. வி. ரெட்டி நாயுடு அவர்களுடைய ஊழி யத்தைப் பாராட்டுகிறோம். இனி அவர் நமது நாட்டில் உள்ள வருணாச் சிரம
தருமச் சூழ்ச்சிகளையெல்லாம் ஒழித்து உண்மையான சமதர்மத்தைப் பரவச் செய்ய முன் வருவாரென நம்புகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.03.1932
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
எஃபயி.சி. தகம்
- தேசீயத்துரோகி
நாம் சொல்லுவதைத் தயவு செய்து கொஞ்சம் காதுகொடுத்துக் கேளுங்கள். பிறகு அதைப் பற்றிக் கொஞ்சம் ஆலோசனையும் செய்து பாருங்கள். அதன் பின் வேண்டுமானால் நம்மைத் தூற்றுங்கள். தாராளமாகக் கேட்டுக் கொள்ளுகிறோம். கூடுமானால் நாம் பதில் சொல்லுகிறோம். “காங்
கிரஸ் இயக்கம் முதலாளிகள் இயக்கம் அதில் உள்ளவர்கள் அனைவருமே முதலாளிகளின் ஆதிக்கத்தை எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள்” என்று எந்தக் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டும் சொல்லத்தயார். இதற்குக் காரணம் சொல்லுகிறேன் கேளுங்கள்!
இப்பொழுது சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போயிருக் கின்றவர்களைப் பாருங்கள். அவர்கள் ஜெயிலுக்குப் போன விதத்தையும் ஆலோசனை பண்ணுங்கள். ஜெயிலில் போய் அடையும் கஷ்ட நஷ்டங் களையும் கொஞ்சம் ஆலோசனை செய்து பாருங்கள். நாம் கூறுவதன் உண்மை காந்த விளக்கைப் போலத் தெரியும்.
முதலில் தொண்டர் கூட்டத்தைப் பாருங்கள். இவர்களெல்லாம் மறியல் செய்து போலீஸ்காரரிடம் தடியடியும், பிறம்படியும் பட்டு ஜெயிலுக்குப் போகின்றார்கள்.தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் அடிபட்ட வர்களே. அடிபடாதவர்கள் மிகக் கொஞ்சம்.
இரண்டாவது தலைவர்கள் கூட்டத்தைப் பாருங்கள். அவர்களை இரு பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒருபிரிவு பார்ப்பனரல்லாத தலைவர்கள், மற்றொரு பிரிவு பார்ப்பனத் தலைவர்கள், பார்ப்பனர்களிலும், தெலுங்கப் பார்ப்பனர்கள், தமிழ்ப்பார்ப்பனர்கள் என்று இரு வகையாகப் பிரித்துக் கொள்: ளலாம். இவர்கள் ஜெயிலுக்குப் போன கதையைப் பாருங்கள். பிறகு இவர்: களில் எந்தக் கூட்டத்தார் கெட்டிக்காரரென்று யோசியுங்கள்.
பார்ப்பனரல்லாத சோணகிரித் தலைவர்கள், போலீசாரிடம் அடிபட்டுத் தான் ஜெயில் செல்லுகிறார்கள். இதற்கு உதாரணம், திரு. பக்தவச்சலம், முத்துரங்க முதலியார் போன்றவர்கள் உதைபட்டுச் சிறைசென்றதே போதீய
குடி அரசு - 1922 0) 122
உதாரணமாகும். தெலுங்குப் பார்ப்பனர்களாகிய திரு. பிரகாசம், நாகேசுவர:
ராவ் பந்துலு போன்றவர்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டே சிறைசென்றார்கள். ஆனால் இவர்களில், தமிழ்ப் பார்ப்பனர்கள்தான் மிகவும் தந்திரசாலிகள். திரு. சத்தியமூர்த்தி, ராஜ கோபாலாச்சாரி முதலியவர்கள் எப்படிச் சிறை சென் றார்கள் என்று பார்த்தீர்களா? தடியடி படவில்லை: பிரம்படி படவில்லை; கால் நடையாக நடந்து சென்று கூட காங்கிரசுக்கு ஒன்றும் செய்யாமல் சிறை சென் றார்கள், மோட்டார்கார்களில் உட்கார்ந்தபடியே நோட்டீஸ் வழங்கிவிட்டுச் சிறை சென்றார்கள். ஆகையால் இப்பொழுது தொண்டர்கள் சமர்த்தர்களா? தலைவர்களில் பார்ப்பனரல்லாதார் சமர்த்தர்களா? தெலுங்கப் பார்ப்பனர்கள். சமர்த்தர்களா? தமிழ்ப் பார்ப்பனர்கள் சமர்த்தர்களா? என்றுதான் கேட் கிறோம். இனி இவர்கள் சிறையில் சென்று அனுபவிக்கும் கஷ்ட நஷ்டங் களைப் பாருங்கள்!
சிறையில் ராஜீயக் கைதிகளுக்கு மூன்று விதமான உபசாரம் நடக் கின்றது. அவை ஏ. வகுப்பு, பி. வகுப்பு சி. வகுப்பு என்பன. இந்த ஏ. பி. சி.
வகுப்புப் பிரிவினை நமக்குப் பழயகால மனுநீதியைத்தான் ஞாபகம் படுத் துகிறது. மனுநீதியில்தான் ஒரு குற்றத்தை பார்ப்பான் செய்தால் அவனுக்குக்
குறைந்த தண்டனையும், க்ஷத்திரியன் அதே குற்றத்தைச் செய்தால் இன்னும் அதிகமான தண்டனையும், வைசியன் அதே குற்றத்தைச் செய்தால் க்ஷத்திரியனுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமான தண்டனையும்,
சூத்திரன் அந்த குற்றத்தைச் செய்தால் சகிக்க முடியாத கொடுந் தண்டனையும் விதிக்கும்படி எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே ஜாதிக்கொரு நீதி கூறும் மனு நூலை நாம் வெறுக்கிறோம்; கொளுத்த வேண்டுமென்று கூறுகிறோம். ஆனால் மநுநீதியைப் போலவே இப்பொழுது பிரிட்டிஷ் அரசாங்கத்திலும்
ராஜீயக் கைதிகளுக்கு ஏ. பி.சி. வகுப்பு அளிக்கப்படுகிறது. இதற்குக் காரணம். யார்? பணக்கார ஜாதியாராக இருக்கின்ற காங்கிரஸ்காரர் தானே? முன்னே அதாவது இந்துமத அரசர்கள் காலத்தில், ஜாதியின் பேரால் தண்டனை கொடுக்கப்பட்டது. இப்பொழுது பணத்தின் பேரால் தண்டனை கொடுக் கப்படுகிறது. இவை இரண்டில் என்ன வித்தியாசம் இருக்கிறது? பெரிய பணக்காரனாகவும் தலைவன் என்று பெயர் படைத்தவனாகவும் இருக்கிறவன் ஏ.வகுப்புக் கைதியாவான். கொஞ்சம் குறைந்த பணக்காரனாகவும் சின்னத் தலைவனாகவும் இருக்கின்றவன் பி. வகுப்புக் கைதியாவான், சாதாரண: மானவர்களும் அன்னக்காவடிகளும் சி. வகுப்புக் கைதிகள்.
இக்கைதிகளுக்குள் ஏ. வகுப்புக் கைதிகளுக்கு யாதொரு கஷ்டமும் இல்லை.மாமியார் வீடாகவே ஜெயிலை நினைத்துக் கொள்ளலாம். மாமியார் வீட்டைக் காட்டிலும் அதிக செளகரியமும் உபசாரமும், ஏ.வகுப்புக் கைதிக ளுக்கு உண்டு. பி.வகுப்புக் கைதிகளுக்கும் அவ்வளவு கஷ்டமில்லை, அவர்.
களும் அனேகமாக மாமியாள் வீடாக இல்லா விட்டாலும் தங்கள் சொந்த
வீட்டில் இருப்பது போலவாவது இருக்கலாம். ஆனால் நமது தோழர்களாகிய
123 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தொண்டர்களும், மற்றவர்களும் பெறும் சி. வகுப்புக்கும், மற்ற திருட்டு கொலை முதலிய குற்றங்கள் செய்த கைதிகள் நிலைக்கும் வேறுபாடில்லை என்றே சொல்லலாம்.
பொதுவாகப் பார்க்கும் போது சுய ராஜ்யம் பெறத் தியாகிகளாக வெளி வரும் பணக்காரனுக்கு ஒரு கஷ்டமும் இல்லை. அவன் வெளியிலும் சுகம் அடைகின்றான். ஜெயிலுக்குள் சென்றாலும் ஏ வகுப்பில் அமர்ந்து இன்பம் அனுபவிக்கின்றான். ஆனால் வறுமையினாலும் வேலை யில்லாமையாலும், திண்டாடும் சாதாரண மக்கள் வெளியிலிருந்தாலும் கஷ்டந்தான் அடை கிறார்கள். காங்கிரஸ் பேரைச் சொல்லிச் சிறைசென்றாலும் அங்கேயும் சி வகுப்பில் சேர்க்கப்பட்டு வெளியிலிருந்ததைக் காட்டிலும் அதிக கஷ்டத் தைத்தான் அடைய வேண்டியிருக்கின்றது. அந்தோ! பரிதாபம்! பரிதாபம்!!!
தோழர்களே! காங்கிரஸ் காதலர்களே! இங்கே கொஞ்சம் ஆலோசனை பண்ணுங்கள்! ஏழை மக்களின் செளகரியத்திற்காக சுயராஜ்யம் வேண்டு மென்று கேட்கின்ற இந்த காங்கிரஸ் தலைவர்கள் உள்ளக் கிடக்கையைக் கொஞ்சம் நுழைந்துபாருங்கள்! இந்தத் தலைவர்களுக்கு மதிப்பிருக்கும் படி உழைப்பவர்கள் தொண்டர்களல்லவா? தொண்டர்கள் இல்லாவிட்டால் தலைவர்கள் எப்படி வெளிவர முடியும்? இப்படிப்பட்ட தொண்டர்களுக்குச் சிறையில் செளகரியம் வேண்டுமென்பதற்காக இவர்கள் இதுவரையிலும் என்ன செய்தார்கள்? இவர்கள் மாத்திரம் ஏ வகுப்பில் போய் சுகமாகக் கவலை யற்று வாழ்கிறார்களே ஒழிய வேறு என்ன செய்கிறார்கள்? சிறையிலும் தங்க
ளுக்கும் தொண்டர்களுக்கும் சமத்துவமான ஸ்தானமே இருக்கவேண்டு மென்று யாரேனும் கேட்டார்களா இவர்கள்தானா நாளை சுயராஜ்யம் பெற்று ஏழைமக்களுக்குச் சமத்துவம் கொடுக்கப்போகிறார்கள்?'
சுயராஜ்யத்திற்காக எவ்வளவோ தியாகம் செய்யத் தயாரென்று முன்வந்திருக்கும் இந்தத் தலைவர்களில் எவரேனும் இதுவரையிலும் “எங்கள் சகாக்களான- தேச மக்களான - அரசியல் கைதிகளில் அநேகர் சி வகுப்பில் இருக்கும்பொழுது நாங்கள் ஏ வகுப்பிலும், பி வகுப்பிலும் இருக்க மாட்டோம். அவர்களுக்கும் எங்களைப் போலவே ஏ வகுப்போ, பிவகுப்போ கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களும் சி வகுப்பிலேயே இருக் கிறோம்” என்று எந்தத் தலைவர்களாவது தியாக புத்தியுடன் சொல்ல முன்வந்தார்களா? என்று பாருங்கள்.
நீங்கள் மகாத்மா என்று சொல்லுகிற திரு. காந்தியாகட்டும், குட்டி காந்தி என்று சொல்லுகிற திரு. ராஜகோபாலச்சாரியாகட்டும், அல்லது மற்ற பேர்வழிகளாகட்டும், அவர்கள் அனைவரும் இன்று ஏ வகுப்பில்தானே இருக்கின்றார்கள்? வெளியில் இருப்பதுபோலவே ஜெயிலுக்குள்ளும், பகவத்கீதை படித்துக்கொண்டும், பத்திரிகை பார்த்துக் கொண்டும், உலாவிக் கொண்டும், காற்று வாங்கிக் கொண்டும் இருக்கிறார்கள் அல்லவா? ஆனால்
குடி அரசு - 1922 0) 124.
நமது ஏழைத் தோழர்களின் கதி யென்ன? கல்லுடைப்பதும், மூட்டை தூக்குவதும், இட்ட வேலைகளைச் செய்வதும், சுதந்தரம் இன்றி இருப்பதும் ஆகிய கஷ்டங்களைத்தானே அடைந்து வருகிறார்கள்?
இதிலிருந்தே நமது ராஜீயத் தலைவர்களின் மனப்பான்மை விளங்கவில்லையா? ஜெயிலில் நடக்கும் குறைகளைப் பற்றி பத்தி பத்தியாக பத்திரிகைகளில் எழுதும் தேசாபிமானிகளில் யாராவது இந்த ஏ, பி, சி என்னும் புதிய வருணாச்சிரம தர்மத்தைக் கண்டித்தார்களா? எந்தெந்த காரியத்தைப் பற்றியோ சட்டசபைகளில் கேள்விகள் கேட்டுத் தங்களை விளம்பரப்படுத் திக்கொள்ளும் காருண்ய கனவான்களில் யாரேனும் இந்த ஏ, பி,சி வருணாச் சிரமத்தைப் பற்றி கண்டித்ததுண்டா? கேள்வி கேட்டதுண்டா? என்று யோசித்
துப் பாருங்கள். ஆகவே எல்லா ராஜ்யத் தலைவர்களும் சிறையில் இந்த ஏ,
பி, சி பிரிவு இருக்க வேண்டுமென்று தானே விரும்புகின்றார்கள் இவர்கள் அதிகாரம் வகிக்கக் கூடிய சுயராஜ்யத்திலும் இந்த ஏழை பணக்கார ராஜ்யந் தானே இருக்கும்? காங்கிரஸ் பேரைச் சொல்லி சிறைசெல்லும் சோணகிரி. களே ஏ. பி.சியைக் கவனிங்கள்! நீங்கள் கொண்டிருக்கும் மயக்கம் தெளியும். அதன்பின் நம்மோடு சண்டைக்கு வாருங்கள்.
குடி அரசு - கட்டுரை - 13.03.1932
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ணாக்குரிமை
சுதந்தரம் பெற்ற ஒரு தேசத்தின் அரசாங்கம் நன்றாய் நடைபெறுவ தற்கு முதன்மையான காரணமாயிருப்பவர்கள் வாக்காளர்களே யாவார்கள். உள்நாட்டுக் கலகங்கள் ஒன்றும் இல்லாமலும், வெளி நாடுகளுடன் சண்டைச் சச்சரவுகளில்லாமலும் நடைபெறுவதாக மாத்திரம் இருக்கின்ற அரசியலை நல்ல அரசியல் என்று கூறிவிட முடியாது. நியாயமாக ஆளுகின்ற அரசாங் கத்தாலும் அமைதியோடு ஆட்சி புரிய முடியும். கொடுங்கோல் ஆட்சி புரிகின்ற அரசாங்கத்தாலும் அமைதியோடு ஆளமுடியும். கொடுங்கோல் அரசாங்கம் பணக்காரர்களையாதரித்து அவர்களுக்குப் பட்டம் பதவிகளை யளித்து ஏழை மக்களையடக்கி யாண்டால் நாட்டில் எந்தக் கலகமும் உண்டா
காமல் தடுக்க முடியும், ஆதலால் நல்ல அரசாங்கமென்பது ஏழை பணக்காரர் என்ற வேறு பாடில்லாமல் எல்லா மக்களும் சம சுதந்தரமுடையவர்களாக
வாழும் படியும், தேசத்தில் உள்ள வறுமை, பிணி முதலியவைகளைப் போக்கியும் நன்மை செய்கின்ற அரசாங்கமேயாகும்.
இம்மாதிரியான நல்ல அரசாங்கம் என்பது ஒன்று நடைபெற வேண்டு.
மானால், அதன் நிர்வாகிகள் சமதர்ம நோக்கமுடையவர்களாகவும், காலதேச வர்த்தமானங்களையறிந்து ஆட்சி புரியக் கூடியவர்களாகவும், மாறாத, உறுதி யான,நன்மையான கொள்கை யுடையவர்களாகவும், எவ்வளவு கஷ்டமான
காலத்திலும் மனத்தளர்ச்சியும், அச்சமும் இல்லாமல் தமது பொறுப்பையு ணர்ந்து நடக்கின்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய சமதர்ம நோக்கமுடையவர்களை அரசாங்கநிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பது வாக்கா எர்களின் கடமையாகும். ஆகையால் தான் நல்ல அரசாங்கம் ஏற்படுவது வாக்காளர்களைப் பொறுத்த விஷயமாகும் என்று கூறினோம்.
ஆகவே ஒரு நாடு சுதந்தரம் பெறுவதற்கு முன்பே அந்நாட்டில் உள்ள வாக்காளர்களுக்கு அரசியல் விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் வாக்கின் பெருமையை உணரமுடியும். வாக்காளர்கள் தங்கள் வாக்கை அலட்சியமாகக் கருதக் கூடாது. அதனுடைய உண்மையான பெருமையை உணர்ந்திருத்தல் வேண்டும். இத்தகைய அறிவு பெற்ற வாக்காளர்கள்தான் மேற்கூறிய சிறந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்களாயிருப்பார்கள்.. குடி அரசு - 1932 M 126
மேல் நாடுகளில், சுதந்தரம் பெற்ற நாடுகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்கின் பெருமையை உணர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு அரசியலின் பெருமையையும், அதனால் உண்டாகும் பலா பலன்களும் தெரியும். ஆகையால் அவர்கள் அரசியல் கட்சிகளின் கொள்கைகளை யறிந்து, தங்களுக்குப் பிடித்த கொள்கைகளையுடைய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் வாக்களிக்கின்றனர்.
ஆனால் தற்சமயம் நமது நாட்டில் சிறுபான்மையோராக இருக்கின்ற வாக்காளர்களில் பெரும்பாலான மக்கள் இன்னும் தங்கள் வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளவில்லையென்றே கூறலாம். நகர சபைத் தேர்தல் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் வாக்கின் மதிப்பு 5 ரூபாய்க்கு மேற்பட்டதென்றும், தாலுகா போர்டுத் தேர்தல் வாக்காளர்கள். தங்கள் வாக்கின் மதிப்பு1 ரூபாய்க்கு மேற்பட்டதென்றும், சட்டசபைத் தேர்தல் வாக்காளர்கள் தங்கள் வாக்கின் மதிப்பு 8 அணாவுக்கு மேற்பட்ட தென்றும் உணர்ந்து கொண்டிருக்கின்றார்களே யொழிய வேறுவகையில் அதன் உண்மையான மதிப்பை உணரவில்லை. ஜில்லா போர்டுத் தேர்தல் வாக்காளர்: கள் தங்கள் வாக்கை எவ்வளவு மதிப்புள்ளதாக உணர்ந்திருக்கிறார்கள். என்பதை இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு வாக்காளர்கள் தவறான உணர்ச்சியுடையவர்களாயிருப்
பதற்குக் காரணம் நமது நாட்டு அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களுமே யாவார்கள். வாக்காளர்களை அறிவுடையவர்களாகச் செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளுடையவும், அவைகளின் தலைவர்களுடையவும் கடமை யேயாகும். ஆனால் நமது நாட்டு அரசியல் கட்சிகள் யாவும் இதுவரையிலும் தமது உறுப்பினர்களுக்குத் தேசீயத்தின் பெயரால் பட்டம் பதவி உத்தியோகம் செல்வாக்கு முதலியவைகளைத் தேடிக் கொடுப்பதில் முதன்மையான கவனத்தைச் செலுத்தி வந்து கொண்டிருக்கின்றவே யொழிய வாக்காளர். களைச் சீர்திருத்துவதில் எந்தக் கட்சியும் கவனஞ் செலுத்தவே யில்லை யென்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமேயாகும்.
நாகரீகம் பெற்ற மேல் நாடுகளில், தேர்தல் காலங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் அபேட்சகரை நிறுத்துகின்றனர். ஒரு கட்சியின் கொள்கைகளை உறுதியாகப் பின் பற்றுகின்ற வர்களும், அக்கொள்கைகளில் ஆட்சேபமற்ற நம்பிக்கையும் உள்ளவர். களுமே கட்சியின் பேரால் அபேட்சகராக முன்வருகின்றனர். அவர்கள். தங்கள் கட்சியின் நோக்கங்களையும், திட்டங்களையும் வாக்காளர்களுக்குப் பிரசங்கங்களின் மூலமாகவும், துண்டு விளம்பரங்களின் மூலமாகவும், பத்திரிகைகளின் மூலமாகவும், பலவகையாக எடுத்துக்கூறி வாக்குக் கொடுக்கும்படி பிரசாரம் பண்ணுகின்றனர்.
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இவ்வாறு ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தங்களுடைய நோக்கங்களை.
யும், திட்டங்களையும் எடுத்துரைப்பதனால் வாக்காளர்கள் எந்தக் கட்சியின் கொள்கை தங்களுக்கு நன்மையளிக்கக் கூடியது என்று தீர்மானிக்க முடிகிறது. அபேட்சகர்களும், தங்கள் கட்சிகளின் நோக்கங்களையும், திட்டங்களையும் பிரசாரம் பண்ணும் வகையிலேயே பொருளைச் செலவு செய்கின்றனர். தேர்தலில் செலவாகின்ற பணம் இவ்வகையில் செலவாகின்றதேயொழிய நமது நாட்டைப் போல வாக்காளர்களுக்கு “லஞ்சம்” கொடுக்கும் வகையில்
ஒரு காசு கூடச் செலவழிவதில்லை.
ஆனால் நமது நாட்டு வாக்காளர்களுக்கோ எந்த அரசியல் கட்சி களின் உண்மையான கொள்கைகளைப் பற்றியும் தெரியாது. அவர்கள். தங்கள் விருப்பப்படிவாக்களிக்க முடியாத நிலைமையில் கூட இருக்கின்றனர். என்று கூறுவதும் தவறாகாது. ஒவ்வொரு ஏழை வாக்காளர்களும், தங்களுக்கு மேலாக இருக்கின்ற பணக்காரர்களின் செல்வாக்கிற்கும், தாட்சண்யத்திற்கும் கட்டுப்பட்டவர்களாகவே யிருக்கின்றனர். தேர்தலில் அபேட்சகராக முன் வருகின்றவர்களும் பணக்காரர்களாகவே யிருக்கின்றனர். அவர்கள் தங்கள். சொந்த கெளரவம், பட்டம், பதவிகளின் செல்வாக்கைக் கூறிப் பணத்தைச் செலவிட்டு வாக்குப் பெறுகிறார்களேயொழிய வேறுவழியில் தாங்கள். கொள்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி அதன்மூலம் வாக்குப் பெற முன் வருவதில்லை. அபேட்சகர்கள் பெரும்பாலும் வாக்காளர்களிடம் தாங்கள் இன்ன கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூடத் தெரிவித்துக் கொள் வதே கிடையாது.
பணக்கார அபேட்சகர்கள், தாங்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் ஏஜண்டுகளை வாக்குக் கொடுக்கும் இடங்களுக்கு அனுப்பிப் பணத்தினா
லும், தங்கள் பெயருக்குள்ள செல்வாக்கினாலும் வாக்குப் பெற்று வெற்றி
யடைகின்றனர். இதுதான் நமதுநாட்டில் தேர்தல் நாடகமாக இருந்து வருகிறது.
பொதுவாக மேல் நாடுகளில், கட்சியின் பெயரால் ஒரு தலைவனுக்குச் செல்வாக்கும், வெற்றியும் ஏற்படுகின்றது. ஆகவே கட்சிதான் அங்கு தலைவர்களையும், தேர்தல் அபேட்சகர்களையும் சிருஷ்டிக்கின்றது. நமது நாட்டிலோ ஒரு தலைவன் பேரினாலேயே ஒரு கட்சிக்குச் செல்வாக்கு ஏற்படுகின்றது. தலைவர்கள்தான் கட்சிகளைச் சிருஷ்டிக்கிறவர்களாக
இருக்கின்றார்கள். இம்முறை மாறி ஒரு கொள்கையைப் பொறுத்து மதிப்பும், இழிவும் ஏற்படக் கூடியநிலை வர வேண்டும்.
உதாரணமாக இன்று காங்கிரஸ்காரர்கள் தேர்தலுக்கு முன்வருகிறார்.
கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது அவர்கள் வாக்காளர். களுக்கு எதைக் கூறுவார்கள். “காந்திக்கு ஜே! மகாத்மாவுக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று பிரசாரம் பண்ணுவதைத் தவிர வேறு ஒன்றையும் சொல்ல மாட்டார்கள். இதற்கு முன் காங்கிரஸ்காரர்கள் அபேட்சகர்களாக
குடி அரசு - 1922 0) 128
முன் வந்த காலங்களில் இவ்வாறு பிரசாரம் பண்ணித்தான், பணத்தையும் செலவு செய்து ஓட்டு வாங்கினார்கள் என்பது நமக்குத் தெரியாத செய்தி அல்ல.ஆகையால் இந்த முறை மாறுவதற்கு வழியென்ன என்பதைப் பற்றிச்
சிறிது ஆலோசிப்போம்.
ஓட்டர்களின் தொகை குறைந்திருப்பது தான் இத்தகைய ஊழல்கள் ஏற்படுவதற்கே காரணமாகுமென்றே நாம் நினைக்கின்றோம். ஒரு ஜில்லாவில்
60 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பார்களாயின், அவர்களில் அநேகமாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கும் குறைந்தவர்கள் தான் தங்கள் வாக்கை உபயோகப்படுத்த முன் வருவார்கள். ஆகவே 25 ஆயிரம் வாக்குகளைப் பெறுகின்ற ஒருவன் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவான். ஒரு வாக்குக்கு ஒரு ரூபாய் வீதம் கணக்கு வைத்துக் கொண்டாலும், 25 ஆயிரம் ரூபாய் போதுமானதாகும். மேற்கொண்ட செலவுக்கு ஒரு 5 ஆயிரம் வைத்துக் கொண்டாலும் 30 ஆயிரம் செலவு செய்கின்ற ஒருவன் சந்தேகமில்லாமல் தேர்தலில் வெற்றி பெறமுடியும். ஒரு பணக்காரன் சட்ட சபைத் தேர்தலில்
30 ஆயிரம் செலவு செய்வது ஒரு பெரிய காரியமல்ல. இவ்வாறு செலவு செய்துதான் இப்பொழுது பெரும்பாலான பணக்காரர்கள் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றனர்.
ஆகையினால் வாக்காளர்களின் தொகை ஒரு ஜில்லாவுக்கு 50 ஆயிரம் 60 ஆயிரம் என்று குறைந்த தொகையில் இல்லாமல், இரண்டு லட்சம் மூன்று லட்சம் என லட்சக்கணக்கிலாகி விட்டால் அனேகமாகப் பணங் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற தைரியம் பணக்காரர்களிடத்திலிருந்து ஒழிந்து போய்விடும். லெட்சக்கணக்காகத் தேர்தலில் செலவு செய்ய முன்வரவும் மாட்டார்கள். அப்படிச் செலவு செய்ய முன் வந்தாலும், எத்தனை தேர்தலில் இவர்களால் போட்டி போட முடியும்? போட்டி போடுவார். களானால் இரண்டொரு தேர்தல்களுக்குள்ளேயே அவர்களுடைய பணத்
திமிர் ஒழிந்து மூலையில் உட்கார்ந்து விடுவார்களென்பதில் ஐயமில்லை.
இந்த நிலையில் சட்டசபை ஸ்தாபனங்களுக்கு அபேட்சகர்களாக முன் வருகின்றவர்கள், தங்கள் நோக்கங்களையும், சட்டசபையில் போய் தாங்கள் செய்ய உத்தேசித்திருக்கும் வேலைத்திட்டங்களையும் வாக்காளர். களிடம் சொல்லிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் வந்துவிடும்.வாக்காளர்களும், அபேட்சகர்களின் சொந்தத் தொகுதிகளைக் கவனிக்காமல், அவர்களுடைய நோக்கங்களையும், கொள்கைகளையும் உணர்ந்து - வாக்குக் கொடுக்கக் கூடிய நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இவ்வாறு வாக்காளர்களை அதிகப்படுத்தும் விஷயத்தில் நமது நாட்டினர் எந்த வகையான எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். என்பதை இப்பொழுது வாக்குரிமையைப் பற்றி விசாரணை செய்து கொண்டி ருக்கும் திரு. லோதியன் கமிட்டிமுன் நமது நாட்டுப் பொது ஜனப் பிரதிநிதி
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
களில் பலர் கொடுத்த சாட்சியங்களைக் கொண்டு ஒருவாறு யூகித்து
உணரலாம்.
சில பிரமுகர்கள் ஜனத்தொகையில் நூற்றுக்குப் பத்து வீதம் வாக்காளர். களை அதிகரிப்பது போதுமென்றும் சிலர் 20 வீதம் அதிகரிப்பது போது
மென்றும், சிலர் 25 வீதம் அதிகரிப்பது போதுமென்றும், சிலர் முப்பது வீதம் அதிகரிப்பது போதுமென்றும் கூறிவருகின்றனர். ஒரு சிலரே வயது வந்தவர். களுக்கெல்லாம் ஓட்டுரிமையளிக்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். காங்கிரஸ்காரர்களும் இந்த அபிப்பிராயத்தையே கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூடிய ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டத்திலும் இதை. ஆதரித்து முடிவு செய்திருக்கின்றனர்.
இன்னும் சிலர், சொத்துரிமையின் மீது வாக்குரிமை கொடுக்க வேண்டுமென்றும், ஆங்கிலப் படிப்பின்மீது வாக்குரிமை வழங்க வேண்டு மென்றும், எந்தப் பாஷையை யேனும் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையின்மேல் வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகின்றனர். இவைகளெல்லாம் வாக்காளர்களின் தொகையைக் குறைப் பதற்குக் கூறும் யோசனையே யன்றி வேறாகாது.
ஒரு தேசத்தின் அரசாங்கத்தினால் வரும் நன்மை தீமைகளை, அந்த
நாட்டில் உள்ள ஏழைகள், பணக்காரர்கள், முதலாளிகள், தொழிலாளிகள், ஆண்கள், பெண்கள், படிப்புள்ளவர்கள், படிப்பில்லாதவர்கள் ஆகிய எல்லா மக்களும் அனுபவிக்கக் கூடியவர்களாகவேயிருக்கின்றார்கள். ஆகையி னால் அரசியல் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எல்லா மக்களுக்கும் இருக்க வேண்டியதேநியாயமாகும்.
வயது வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமையளிக்கப்பட்டு விட்டால் கூடிய வரையிலும் மக்களின் சமதர்மத்திற்குப் பாடுபடக் கூடியவர்களும் அரசியல் நிர்வாகத்தில் திறமையுடைவர்களும், சட்ட சபைகளுக்கும் மற்ற பொது ஸ்தாபனங்களுக்கும் தெரிந்தெடுக்கப் படமுடியும் என்றே நாம் நினைக்கிறோம். ஏனென்றால் பணக்காரர்கள் லட்சக்கணக்கான வாக்காளர். களைப் பணத்தினால் வசப்படுத்தவோ, அல்லது அதிகாரத்தினாலும், செல்வாக்கினாலும் பயமுறுத்தவோ முடியாது.
எந்த அபேட்சகர்களும் தங்கள் நோக்கங்களையும் வேலைத் திட்டங் களையும் வாக்காளர்களிடம் கூறித்தான் ஆகவேண்டும். கல்வியறி வில்லாத வாக்காளர்களும் ஒவ்வொரு அபேட்சகர்களின் கட்சிக் கொள்கை களையும் திட்டங்களையும் அறிந்து கொள்வது கஷ்டமான காரியமல்ல. இவ் விஷயத்தைப் பற்றி சென்னையில் ஆகாயவசனி மூலம் பிரசங்கம் செய்த
திரு. லோதியன் அவர்கள் கூறிய அபிப்பிராயம் கவனிக்கத்தக்க தொன் றாகும். “கல்வியில்லாத காரணத்தால் ஒருவரை அறிவு, திறமைகள்
குடி அரசு - 1922 0) 120
இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது.கல்வி கற்றவர்களைக் காட்டி லும் கல்வி அறிவில்லாத கற்றவர்களில் பலர்உலக விஷயங்களில் தேர்ச்சிய டைந்தவர்களாயிருக்கக் காணலாம். ஆதலால் கல்வியறிவில்லாதவர்.
களுக்கும் ஆகாசவசனிகள் போன்ற சாதனங்களின் மூலம் அவர்களுடைய தாய் பாஷைகளில் அரசியல் விஷயங்களைக் கூறி அவர்களை அரசியல் அறிவுடையவர்களாக்கலாம்” என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்,
ஆகையால் வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை அளிப்பதன் மூலம் தான், நமது நாட்டு ஓட்டர்களைச் சிறிதளவாவது தங்கள் வாக்கின் மதிப்பை உணரச் செய்ய முடியுமென்றும் லஞ்சங் கொடுத்தோ, பயமுறுத் தியோ ஓட்டு வாங்கும் முறையை ஒழிக்க முடியுமென்றும், சமதர்மத்திற்குப் பாடுபடும் உண்மையான உழைப்பாளர்கள் சிலராவது தேர்தலில் வெற்றி பெற முடியுமென்றும் நாம் கருதுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.03.1932
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கீதைக் கூட்டமா? காங்கிரஸ் கூட்டமா?
காங்கிரஸ்காரர்கள், தங்களுடைய காரியங்களுக்கு இப்பொழுது ஜனக்கூட்டம் சேர்வதும் கஷ்டமாகி விட்டதை அறிந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இன்று திரு. காந்தியவர்கள் தமது “ராமராஜ்ய”ப் பேச்சையும், “பகவத்கீதை”ப் பிரபாவத்தையும் விட்டு விடுவாரானால் அவருக்கும் பொது ஜனங்களிடம் உள்ள மதிப்புக் குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை. பொது ஜனங்கள், தாங்கள் கொண்டிருக்கும் மூடநம்பிக்கை காரணமாக “ராமராஜ்யம்” “பகவத் கீதை” முதலிய வார்த்தை. களைக் கேட்டே ஏமாறுகிறார்கள் என்பதில் ஐயமில்லை.
சென்ற 1 - 3 - 32ல் கராச்சியில் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி சுவாமி கிருஷ்ணானந்தர் என்பவர் ஐவுளிக்கடை வீதியில் காங்கிரசின் பெயரால் கூட்டம் சேர்ப்பதற்கு ஒரு தந்திரம் செய்தார். இரு தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியில் உட்கார்ந்து கொண்டு “பகவத்கீதை” பாராயணம் பண்ண ஆரம்பித்தார். உடனே அதைக் கேட்க ஜனக்கூட்டம் சேரத் தொடங்கிற்று. பிறகு வழக்கம்போல் போலீஸார் வருவதும், கலகஞ் செய்வதும், கைது செய்வதும் ஆகிய காரியங்கள் நிறைவேறின.
இவ்வாறு காங்கிரஸ் கூட்டம் கூட்டுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்று தான் நாம் கேட்கிறோம். சாதாரணமாக மருந்து விற்கின்றவன் ஒருவன்
ஒரு சந்தியில் நின்று கொண்டு, தனது மருந்தைப் பற்றியும், அது தீர்க்கும் வியாதிகளைப் பற்றியும் பிரசங்கம் பண்ண ஆரம்பித்தால் அங்கும் வேடிக்கை பார்க்கத் திரளான ஜனங்கள் கூடி விடுகின்றனர். கழைக் கூத்தாடி ஒருவன் தனது கழைக் கோலை நட்டு வைத்து விட்டுத் தனது வாத்தியத்தை முழக்கத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடிவிடுகின்றனர். செப்பிடு வித்தைக்காரன் ஒருவன் தனது கோணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டு தண்டு தளவாடங்களுடன் உட்கார்ந்து தனது சங்கதிகளை எடுத்து விடத் தொடங்கினால் அங்கும் திரளான ஜனங்கள் கூடி விடுவார்கள். பாம்பாட்டி ஒருவன் தனது பாம்புப் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டு
தன் மகிடியை ஊத ஆரம்பிப்பானாயின் அங்கும் எண்ணில்லாத மக்கள். கூடி விடுகின்றார்கள்.
குடி அரசு - 1922 0) 132
இந்த அற்பமான காரியங்களுக்கே இவ்வளவு ஜனங்கள் கூடுவார்க ளாயின் சாதாரணமாக, பொது ஜனங்கள் உண்மையானவை யென்றும் கேட்டால், படித்தால் மோட்சமும் சகல செளகரியமும் உண்டாகுமென்றும்
நம்பிக் கொண்டிருக்கும் ராமாயண பாரத பாகவதம் முதலியவைகளையும், பகவத்கீதையையும் பாராயணம் பண்ணத் தொடங்கினால், மூட நம்பிக்கை. யை யுடைய மக்கள் ஏராளமாகக் கூடுவார்கள் என்பதில் என்னதடை?
ஆகையால் மக்கள் மயங்கத் தகுந்த இதுபோன்ற காரியங்களைச் செய்து ஜனக் கூட்டத்தைச் சேர்த்து, அதை அரசியல் கூட்டமென்றும், காங்கி
ரஸ் கூட்ட மென்றும், சொல்லி ஏமாற்றுவதுதான் ஒழுங்கா என்று கேட்கின் றோம். இத்தகைய காரணங்களின் மூலம் பொது ஜனங்கள் காங்கிரசை ஆதரிப்பதாகவும்; அரசாங்கத்தை வெறுப்பதாகவும் விளம்பரம் பண்ணு வதனால் வெள்ளைக்காரர்களோ மற்றவர்களோ ஏமாந்து விடுவார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
ஆகையால்தான் பொது ஜனங்கள் ஏமாறாமல் இருக்க வேண்டு
மானால், அவர்களுடைய ஏமாற்றத்திற்குக் காரணமான மூட நம்பிக்கையை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று நாம் கூறி வருகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.03.4932.
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
யாமழாகிறது 12000 கும்பகோணக் கொன்னை
- தேசீயத் துரோகி
அடுத்த வருஷத்தில் மாசி மாதத்தில் வரப்போகும் மகத்திற்கு மகா மகம் என்று பெயர். இது பன்னிரண்டு வருஷத்திற்கு ஒரு தடவை கும்பகோணத்திற்கு வரும் ஒரு கொள்ளை நோயாகும். இந்தக் கொள்ளை நோய் கும்பகோணத்தை மட்டிலும் விட்டுவிடுவதில்லை. சென்னை மாகா ணத்தையே பிடித்து ஒரு ஆட்டம் ஆட்டிவிடும். சென்னை மாகாணத்தைத் தவிர வெளிமாகாணத்தில் உள்ளவர்கள் சிலரையும் கூட பிடிக்காமல் விடுவதில்லை.
கும்பகோணத்தில் அழுக்கும் பாசியும் நாற்றமும் பிடித்த குளம் ஒன்று இருக்கிறது; அதன் பக்கத்தில் சென்றாலே மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் போக வேண்டும். அந்தக்குளத்தில் தான் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சல் இலைகள் ஒதுங்கிக் கிடக்கும். குழந்தைகள் ஆபாசம் பண்ணிய துணி களையும், பாய்களையும் அதில்தான் கழுவுவார்கள். தீட்டுக்காரப் பார்ப்பன பெண்களும், மற்றவர்களும் அதில்தான் சாதாரண நாளில் முழுகுவார்கள். விபசாரம் பண்ணிப் பிள்ளை பெறும் முக்காடு போட்ட அம்மாமார்களும்
அந்தக் குளத்தில்தான் குழந்தைகளை அமிழ்த்தி மோட்சத்திற்கு அனுப்பு வார்கள். எல்லாப் பாவங்களையும் அந்த அற்புதமான தீர்த்தம் நீக்கிவிடும். இத்தகைய “மகாத்மீயம்” பொருந்திய குளம் அது. அதில் வந்து மாசி மாச
மகத்தில் முழுகிவிட்டால் உடனே மோட்சமும் சகல ஐசுவரியங்களும் கிடைத்து விடுவதாக இந்துக்களின் நம்பிக்கை. இதன் பொருட்டே இந்தியா வின் பல பாகங்களிலிருந்தும் திரளான மக்கள் வந்து கூடி அந்தக் குளத்தில் விழுந்து போவார்கள். ஐயோ! அந்தப் பரிதாபக் காட்சி பார்க்க முடியாததாகும். அன்று பிடிக்கும் நாற்றம் ஒரு மாதம் வரையிலும் உடம்பை விட்டு நீங்காது.
ஊர் முழுதும் நாற்றம். அதுமுதல் மாகாணம் முழுதும் காலரா பரவி விடும். ரயில்வேகாரனுக்கு கொழுத்த வரும்படி, இந்துக்களின் பணம் குறைந்தது 5 லட்சமாவது நஷ்டமாகும்.
இது மாத்திரம் அல்ல. கும்பகோணம் நகர மக்களுக்கும் பெருவாரி யான நஷ்டம். இந்த மகாமகத்தை முன்னிட்டு இப்பொழுதே நகர சபையார்
குடி அரசு - 1922 0) 134
பணத்தைச் செலவழிக்க திட்டம் போடுகின்றனர். மகாமகத்தின் பொருட்டு ரோடுகளைச் சீர்திருத்தவும், புது ரோடுகள் போடவும் அறுபதினாயிரம் ரூபாயும், மகாமகக் குளத்தைச் சுத்தம் பண்ண பன்னிரண்டாயிரம் ரூபாயும் திட்டம் போட்டு நகர சபையின் ஆலோசனைக்குக் கொண்டு வரப்பட்டி ருக்கிறது. ரோடுகளைச் சீர்திருத்தம் பண்ணுவதும் புது ரோடுகள் போடுவதும், நகரத்திற்கே ஒரு பொதுவான நன்மையைத் தருவதாயிருப்பதால் அது அவ்வளவு மோசமான செலவல்ல. ஆனாலும் இந்தப் பணப் பஞ்ச காலத்தில் இவ்வளவு பணத்தை மண்ணில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால் குளத்தைச் சுத்தம் பண்ண வேண்டும் என்பதற்காகச் செலவிடலா மென்று ஆலோசிக்கப்படும் பன்னிரண்டாயிரம் ரூபாயும் பாழ்! பாழ்!! பாழ்! என்றுதான் சொல்லுகிறோம். இந்த மாதிரியே ஒவ்வொரு மகாமகத்தின் போதும் செலவழிந்து கொண்டுதான் வந்திருக்கலாம்.ஆகவே அந்தப்பாழும் சாக்கடையானது இதுவரையிலும் எத்தனை லட்சம் ரூபாய்களை விழுங்கி யிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்!
ஜனங்களின் வரிப்பணம் இவ்வாறு பாழாகுவதற்குக் காரணம் என்ன? இந்துக்களின், வைதீகர்களின், மதியற்ற தன்மையல்லவா? சுதேசிப்பிரசாரம் பண்ணுகிறவர்கள் யாராவது இதைப்பற்றி பேசுவார்களா? இந்தமாதிரி 12000 ரூபாயைக் குளத்தில் கொட்டிப் பாழாக்கி, நமது இந்தியாவில் உள்ள ஜனங் களை யெல்லாம் “கும்பகோணத்திற்கு வாருங்கள்!”, என்று கவியழைப்ப
தால் வரும் நஷ்டத்தை எந்தத் தேசாபிமானியாவது சிந்தித்துப் பார்க்கின் றார்களா? ஜனங்கள் ரயிலுக்குக் கொடுக்கும் பணம் எவ்வளவு? அவை எங்கே போய்ச் சேருகிறது. கும்பகோணத்திலேயே கூட்டத்தில் மிதியுண்டு சாகப்போகிறவர்கள் எவ்வளவுபேர்? காலரா, ஜுரம் முதலிய நோய்களால் கும்பகோணத்திலும் மகாமகத்திற்கு வந்து போன ஜனங்களுடைய சொந்த ஊர்களிலும் சாகப் போகின்றவர்கள் எத்தனை பேர்? பிறகு வைத்திய உதவிக்காக ஆகும் செலவு எவ்வளவு? கும்பகோணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தில் நகைகளையும் பணங்களையும் திருட்டுக் கொடுப்பதன் மூலம் நஷ்டமாகும் பொருள் எவ்வளவு? என்று எந்த அறிவுள்ள தேச பக்தனாவது யோசித்துப் பார்க்க முன் வருவானா?
அல்லது கும்பகோணம் வாசிகளும், நகர சபையாரும் தான் இவை களை யோசித்துப் பார்க்க முன் வருவார்களா? உண்மையிலேயே இவை களையெல்லாம் ஆலோசித்துப் பார்த்து, நமது மக்களுக்கு அவர்களுடைய அறியாமையால் உண்டாகப்போகும், உடல், பொருள், உயிர் நஷ்டங்களைத் தடுக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? உடனே குளத்திற்கொட்டும் பன்னீராயிரத்தை பத்திரப்படுத்த வேண்டும். வேண்டுமானால் இனி எந்தக் காலத்திலும் இந்த எண்ணமே வராமலிருக்கும் பொருட்டு அந்த மகாமக ஆபாசக்குளத்தைத் தரைமட்டமாகத் தூர்ப்பதற்குச் செலவழிக்கலாம். எங்கும் விளம்பரம் பண்ணி, மகாமகத்தை முன்னிட்டு யாரும் கும்பகோணம் வரக்
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கூடாதென்று தெரிவித்து விட வேண்டும். மகாமகத்தின் போது கும்பகோணத் திற்கு வருவதால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வது தான் மக்களை அறிவுடையவர்களாகச் செய்வதற்கும், பொருள் நஷ்டத்தைத் தடுப்பதற்கும் வழியாகும். இதனால் நமது நாட்டு “ஏழை மக்களுடைய பல லட்சக்கணக்கான ரூபாய்கள் மீத
மாகும் என்பதில் ஐயமில்லை. அவர்களுடைய உடலுக்கு வரும் கஷ்டமும்,
நேரத்திற்கு உண்டாகும் நஷ்டமும் மீதமாகும் என்பதிலும் ஐயமில்லை. இதை விட்டு விட்டு நகரின் ரோடுகளை யெல்லாம் சுத்தப்படுத்தி வைத்திருக் கிறோம். மகா மகச் சாக்கடையையும் சுத்தம் பண்ணியிருக்கிறோம். ஆகை:
யால் இந்துக்களே வாருங்கள்!” என்று விளம்பரம் பண்ணுவதனால் என்ன நன்மையுண்டு? இன்னும் ரயில்வேக்காரர்கள் செய்யப் போகும் விளம்பரங் கள் வேறே யிருக்கின்றன. அவர்கள் இதற்காக இப்பொழுது முதலே வர்ணப் படங்கள் தயார் செய்து கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. மகாமகத்தின் புராணக் கதையையும் பார்ப்பனர்களைக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. ஆகவே இனி எஸ். ஐ. ஆர். காரர்கள் படங்களைப் போட்டு புராணக் கதைகளைக் கூறிப் பொது ஜனங்களுக்குக் கும்பகோணத்தின் பெருமையை உபதேசம் புரியத் தொடங்கி விடுவார்கள்.
ஆனால், இந்தமாதிரி இச்சமயத்தில் செய்யச் சம்மதித்து விட்டால் அதாவது மகாமகச் சாக்கடையைச் சுத்தப் படுத்தாமலும் கும்பகோணத்திற்கு மகாமகத்தை முன்னிட்டு யாரும் வரக் கூடாதென்றும் பேசாமல் இருந்து விட்டால், கும்பகோணம் பார்ப்பனர்கள் சும்மாயிருப்பார்களா? என்பது தான். சுயமரியாதைக்காரர்கள் கேட்கும் கேள்வி. உடனே அவர்கள் சாஸ்திர மூட்டைகளையும், மடிசஞ்சிகளையும் தூக்கிக் கொண்டு வைசிராயிடம் போய் எங்கள் மதத்திற்கு ஆபத்து வந்து விட்டது என்று முறையிடுவார்கள்
என்பதில் ஐயமில்லை.அதிலும் முடியாமல் போனால் இங்கிலாந்திற்குக் கூட சாஸ்திரமூட்டை, மடிசஞ்சி இவைகளுடன் கூட கங்காஜலமும் களிமண்ணும் சேர்த்து எடுத்துக் கொண்டு போவார்களென்பதிலும் சந்தேகமில்லை.
ஆகவே, நமது செல்வங்களைப் பாழக்குவது எவை என்பதைப்
பாருங்கள். நமக்கு மாத்திரமா? அரசாங்கத்தாருக்கும் இதனால் வரும் நஷ்டம் அளவற்றவை. அவர்கள் அன்றைய தினம், நகரத்தில் ஏராளமான போலீஸ் அதிகாரிகளையும் சுகாதார அதிகாரிகளையும், டாக்டர்களையும் வைத்திருக்க வேண்டும். இந்தச் செலவெல்லாம் யார் தலையில் விடிகிறது? ஆகையால் இது போன்ற முட்டாள் தனத்தை ஒழிக்க வேண்டியது அவசியமாகும் என்று சொல்லும் சுயமரியாதைக்காரர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடு படுகிறவர்களா? அல்லது இந்த மாதிரியானவைகளைப் பிரசாரம் பண்ணும் வைதீகர்களும், பார்ப்பனர்களும் அவர்களுக்கு துணை செய்யும் காங்கிரஸ் காரர்களும் நாட்டின் முன்னேற்றத்தைக் கருதுகின்றவர்களா? என்று
குடி அரசு - 1922 0) 136
யோசனைப் பண்ணிப் பாருங்கள்! அழுக்கும், பாசியும், நாற்றமும் எடுத்த ஒரு பாழுங் குளத்தில் குளிப்பதனால், தாங்கள் செய்த பாவமெல்லாம் போய் விடுகிறது! ஏராளமான புண்ணியம் வருகிறது! மோட்சம் கிடைக்கின்றது! நினைத்தவை நிறைவேறுகின்றன. என்று நம்புவதை விட முட்டாள் தனம் வேறு என்ன இருக்கின்றன? நாற்றமடிப்பதையும், வியாதி வருவதையும் கண்கூடாகப் பார்த்திருந்தும் இவ்வாறு செய்வதில் என்ன அருத்தமிருக் கிறது? சுகாதாரமுறை அறிந்த டாக்டர்களில் எவ்வளவுபேர் சயின்சு படித்த கலாசாலைப் பட்டதாரிகளில் எவ்வளவு பேர் இந்தக் குளத்தில் விழுவார்கள். என்பதை நினைக்கும் போது நாம் அழுவதா? சிரிப்பதா? என்று தெரிய வில்லை! நமது மக்கள் கற்றவர்களாயிருந்தாலும் கல்லாதவர்களாயிருந்தாலும் அவர்கள் மூளையில் மதம், நம்பிக்கை என்னும் அழுக்குகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே என்றைக்கு மதமும், வைதீகமும், நம்பிக்கையும் நமது நாட்டை விட்டு. ஒழிகின்றதோ அன்றுதான் நாம் உருப்பட முடியும் என்றுகூறுவதில் என்ன
தவறு இருக்கின்றது.
இந்த ஒரு மகா மகத்திற்கு மாத்திரம், முனிசிபாலிட்டியாரால், ரோட்டுகளுக்காக 60,000 ரூபாயும், குளத்திற்காக 12,000 ரூபாயும், ஆக 72,000 எழுபத்திரண்டாயிரம் ரூபாய் செலவழிக்கத்திட்டம் போடப் படுமானால் மற்றபடி நமது நாடு, முழுவதும் இதுபோல் நடைபெறும் திரு விழாக்களுக்
கும், பண்டிகைக்கும் செலவாகும் பணம் எவ்வளவு? இவைகளால் நமது நாடு அடையும் பலன் என்ன? இது வரையிலும் மேலும் மேலும் தரித்திரர்: களாகவும், அடிமைகளாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும் ஆனதைத் தவிர. வேறு என்ன பயனைப் பெற்றோம்? என்று ஆலோசனை செய்து பாருங்கள்! சுயமரியாதைக்காரர் சொல்லுவதன் உண்மை விளங்கும்.
குடி அரசு - கட்டுரை - 20.03.1932.
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ரிஙிஸ்டர் தே. 2041, குடி தைட சிற ஒன் பம் : s சாயமும் கெள்கும் | SRt Bt ot a8
க்சச்ச்ச்சச்சசசசக்சச்௪ ௫௧௧௪0௧௧1௧9 442 கண்களா சங்காரம் அவர் மிகவும குணமுள்ள மருந்துகள் உம்ப = i+ e,
5
ரன்கிக் கக்கு AR R R கக்க
காட ஸ் ன சாலாமிலரி வேவ ன
01)
குடி அரசு - 1922 0) 138
தீண்பாமையே இந்துமதம்
அகில இந்திய தீண்டாமை விலக்குச் சங்கத்தின் சென்னைக் கிளை: யின் ஆதரவில் சென்ற 17 - 3 - 32 வியாழனன்று, காலஞ் சென்ற சுவாமி சிரத்தானந்தர் அவர்களின் உருவப் படத்தை வைக்கும் பொருட்டு, சர். ஏ. பி. பாத்ரோ அவர்கள் தலைமையில் சென்னைக் கோகலே மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் கூடிற்று. கூட்ட ஆரம்பத்தில், திரு. பாத்ரோ அவர்கள்,
“தண்டாதாருக்கு இந்து சமூகம் செய்துள்ள தீமைகள் கொஞ்சம் அல்ல.அதை அகற்றுவதற்குப் பல சீர்திருத்தக்காரர்கள் பாடுபட்டு வந்திருந்
தும், இன்று வரையிலும் இக்கொடுமை அழியாமல் இந்தியாவில் நிலைத்து வருவது வருந்தத் தக்கதாகும். ஒரு சமூகத்தாரைத் தொடவும் கூடாதென மிருகங்களைக் காட்டிலும் இழிவாக நடத்துவதை விடக் கொடுமையான விஷயம் வேறொன்றுமில்லை. புத்தர் போன்ற பெரியார்களின் உபதேசங்கள். இந்நாட்டில் தோன்றியிருந்தும், இன்னும் இத்திண்டாமைக் கொடுமை ஒழியா மலிருப்பதற்குக் காரணம் இந்து சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யாகும்”
என்று பேசியிருக்கிறார். இதைக் கொண்டு, நமது நாட்டில் தீண்டாமை நிலைத்திருப்பதற்குக் காரணம் இந்து மதமும், அதைக் கைப்பற்றியிருக்கும் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளும், மூடப் பழக்க வழக்கங்களுமே யென்பதை அறியலாம். ஆனால் அதே சமயத்தில் சேலம் திரு. சி. விஜய ராகவாச்சாரியார் அவர்கள் பேசும் போது,
“இப்பொழுது நாம் யோசிக்க வேண்டிய விஷயம் தீண்டாமையை எப்படி விலக்கலாம் என்பதைப் பற்றியேயாகும். தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் மேல் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது. இந்து மதந்தான் தீண்டாமை தொல்லையைப் புகுத்தி விட்டது என்று சொல்லவே முடியாது. இந்து சமூகம் தீண்டாமை நிலைத்திருப்பதை ஒப்புக்கொள்ளவே யில்லை என்று துணிந்து கூறுவேன்.”
139 ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
என்று இந்து மதத்தைப் புகழ்ந்தும், தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டும் பேசியிருக்கிறார். ஆகவே இவ்விருவர்களின் கருத்துக்களையும் கவனித்தால் “தீண்டாமைத் தொல்லைக்கு இந்து மதம் காரணம்” என்று திரு. பாத்ரோ கருதுவதாகவும், இந்துமதம் தீண்டாமையை ஒப்புக் கொள்ளவில்லை. ஆகையால் இந்து மதத்தைக் குறை கூறுவது தவறு என்று திரு. விஜயராகவாச்சாரியார் கருதுவதாகவும் அறியலாம். ஆனால் எது உண்மையான அபிப்பிராயம் என்பதைப் பற்றி நாம் சிறிது ஆராய்வோம்.
இன்று தீண்டாத மக்களை உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்கள் வசிக்
கும் தெருவில் நடக்கக் கூடாது என்று தடுப்பதற்கும், தீண்டாதார்களை, உயர்ந்த சாதியினர் என்பவர்கள் தண்ணீர் எடுக்கும் குளம், கிணறு முதலிய வைகளில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று தடுப்பதற்கும், அவர்களைப் பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று தடுப்பதற்கும் காரணம் இந்து மதமும், அதில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களும் அல்லவா என்று கேட்கிறோம்.
இன்று மலையாள நாட்டைச் சேர்ந்த குருவாயூரில், தீண்டாத மக்கள். கோயில் பிரவேசத்திற்காகச் செய்யும் சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நிற்கின்ற வர்கள், உயர்ந்த சாதியென்று சொல்லிக் கொண்டிருக்கும் வைதீக இந்துக்கள் தானே. இதைப் போலவே பம்பாய் மாகாணத்தில் உள்ள நாசிக் என்னும் ஊரில் தீண்டாதார்கள் கோயில் பிரவேச உரிமையின் பொருட்டுச் செய்யும் சத்தியாக்கிரகத்தை எதிர்த்து நிற்பவர்களும் உயர்ந்த சாதி யென்று சொல்லிக். கொண்டிருக்கும் வைதீக இந்துக்கள் தானே. இந்த உயர்ந்த சாதிக்காரர்களான. வைதீக இந்துக்கள் இவ்வாறு தீண்டாதவர்களின் உரிமைகளுக்கு எதிரி டையாய் இருப்பதற்கு, இந்து மதத்தையும் இந்து மத சாஸ்திரங்களையும் தவிர வேறு ஏதாவது காரணம் உண்டா? என்றுதான் கேட்கிறோம்.
பார்ப்பனர்கள் வருணாச்சிரம தருமத்தின் பேராலும், சனாதன தருமத்தின் பேராலும், கூட்டங்கள் கூட்டுவதற்கும்,மகாநாடுகள் நடத்துவதற்
கும், அந்தக் கூட்டங்களிலும் மகாநாடுகளிலும் தீண்டாதவர்கள் ஆலயங் களுக்குள் செல்ல வேண்டுமென்று கேட்பதும் அதற்காக முயற்சி செய்வதும்
இந்து மதத்திற்கு விரோதமான தென்றும், தீண்டாதார்க்குக் கோவில்களுக்குள். செல்லவும், உயர்ந்த சாதி இந்துக்களுடன் சமத்துவமாகப் பழகவும் உரிமை கொடுத்து விட்டால் இந்துமதம் அழிந்து விடுமென்றும் தீர்மானங்கள். செய்வதற்குக் காரணம் இந்து மதமும் இந்துமத சாஸ்திரங்களும் அல்லவா என்று தான் கேட்கின்றோம்.
பாமர மக்களால், மகாத்மாவாக மதிக்கப்படும் திரு. காந்தி அவர்கள் தீண்டாமையின் கொடுமையைப் பற்றியும், அதை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும், பேசியும் எழுதியும் வருகின்றார். ஆனாலும் “தீண்டாமை ஒழிய வேண்டும்; ஆனால் வருணாச்சிரம தருமம்
குடி அரசு - 1922 0) 140
நிலைத்திருக்க வேண்டும்” என்றும், “பிறப்பினால் ஒவ்வொருவரிடமும் குண வேறுபாடு உண்டு” என்றும், ஆத்மாவில்தான் எல்லாரும் சமத்துவமே ஒழிய உடம்பில் சமத்துவமில்லை” என்றும் சொல்லிக் கொண்டு தான் தீண்டா மையை ஒழிக்க வழி தேடுகிறார். இவ்வாறு அவர் சொல்லுவதற்குக் காரணம்
அவர் படித்த இந்து மத சாஸ்திரங்களும், அவர் நம்பும் இந்து மதமும் அல்லவா என்றுதான் கேட்கிறோம்.
இனி இந்துமத நூல்களில் வருணாச்சிரம தருமத்தைப் பற்றிக் கூறப்படாத சாஸ்திரங்கள் எவையேனும் உண்டென்றும் எவராலேனும் சொல்ல முடியுமா? திரு. காந்தியினாலும், மற்றும் இந்து மத வைதீகப் பண்டிதர் களாலும் மற்றும் சீர்திருத்த வாதிகளாலும் கூடப் புகழ்ந்து பேசப்படும் “கீதை” யில்தான் வருணாச்சிரம தருமத்தைப் பற்றிக் கூறப்படவில்லை என்று சொல்ல
முடியுமா?
*பார்த்தனே! பெண்கள் வைசியர்கள் சூத்திரர்கள் பாப யோனியில் பிறந்தவர்களானாலும் அவர்களுள் என்னை நம்பி யிருப்பவர்கள் யாரோ அவர்கள் பரமபதத்தைச் சேர்வார்கள்.
“புண்ணிய ஜென்மமுள்ள பிராமணர்களும் ராஜரிஷிகளும் பக்தி யுள்ளவர்களாய் என்னை ஆதரிப்பதற்குச் சொல்ல வேண்டுமா?!
(பகவத்கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32, 33)
மேற்காட்டியுள்ள பகவத்கீதை எதைப் போதிக்கின்றது. பிறப்பினால் ஜாதி உண்டு என்பதைப் போதிக்க வில்லையா? இந்த கீதையைப் பாராயணம் பண்ணிக் கொண்டிருப்பதுதான் சுயராஜியம் பெறுவதற்கும் மோட்சம் பெறுவதற்கும் வழி என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் வருணாச்சிரம தருமம் அழிவதற்கு எவ்வாறு சம்மதிப்பார்கள்?
*ஆத்ம ஞானிகள் கல்வியில் தேர்ந்தவனிடத்திலும், கல்வியில்லாத பிராமணனிடத்திலும் பசு, யானை, நாய் என்பவைகளிடத்திலும் நாயைத் தின்கிற சண்டாளனிடத்திலும் அறிவுடையவர்கள் ஆத்மாக்
களின் சமத்துவத்தையே பார்ப்பார்கள்”
(பகவத்கீதை அத்தியாயம் 5, சுலோகம் 18)
என்று காணப்படும் கீதை வாக்கியத்தைக் கொண்டு பகவத்கீதையில் தீண்டாமைக்கு ஆதரவில்லையென்று சொல்லக்கூடும். ஆனால் இதில் ஆத்மாவுக்குத்தான் சமத்துவம் கூறப்படுகிறதே ஒழிய உடம்புக்குச்
சமத்துவம் கூறப்படவில்லை என்பதை அறிந்தால் தீண்டாமை விலக்குக்கு இடமில்லை என்பதை அறியலாம்.
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பகவத்கீதையில் இந்த சுலோகத்தைக் காட்டிலும் சமத்துவத்தை வற்புறுத்துவதற்கு வேறு சிறந்த கலோகமில்லை. இதுவே இப்படி இருக்குமா னால் மற்றவை எப்படியிருக்குமென்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.
இனி தமிழர்களால் சமதர்மநூல் என்று சொல்லப்படும் குறளில் தீண்டாமைக்கு இடமில்லை என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதன் உண்மை நிலை என்ன என்பதைக் கொஞ்சம் பார்ப்போம்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால்”
என்ற குறளைக் கொண்டு பிறப்பு வித்தியாசத்தைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லையென்றும் தொழில் வேற்றுமை பற்றியே உயர்வு தாழ்வு வித்தியாசம் உண்டென்றும் கூறுகின்றனர். இதுவும் தீண்டாமையை ஒரு வழியில் ஒப்புக் கொள்ளுகின்றதென்பதே நமது அபிப்பிராயமாகும். உயர்வு தாழ்வு வித்தியாசத்தைக் கற்பிப்பது பிறப்பாயிருந்தாலும் சரி அல்லது தொழிலாயிருந்தாலும் சரி, அவை மூலம்தான் தீண்டாமையும் உற்பத்தியா
கின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது.
அல்லாமலும் திருவள்ளுவரும் வருணாச்சிரம தர்மத்தை ஒப்புக் கொள்ளமலில்லை யென்றே சொல்லலாம்.
“மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக்கெடும்”
“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்”
என்னும் குறள்பாடல்கள் வருணாச்சிரம தருமத்தைப் போதிப் பனவேயாகும். “பார்ப்பான் வேதத்தை மறந்து விட்டாலும் மறுபடியும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவனுடைய பிறப்பிற்குரிய ஒழுக்கத்தை விட்டு விடுவானானால் கெடுவான்”.
“அரசன் சரியாக அரசாட்சி செய்யாவிட்டால் பசுக்களின் நன்மை குறையும் ஆறுவகைத் தொழிலையுடைய பார்ப்பனர்கள் வேதத்தை மறந்து விடுவர்”
என்பனவே மேற்கூறிய குறள்களுக்கு அர்த்தம் என்பதைக் கொண்டு ஆராயும் போது திருவள்ளுவர் வருணாச்சிரம தருமத்தை ஒப்புக் கொள்ள வில்லையென்றாவது, உயர்வு தாழ்வு வித்தியாசங்களை ஒப்புக் கொள்ள வில்லை யென்றாவது, தீண்டாமைக்கு இடங்கொடுக்க வில்லையென்றாவது சொல்ல முடியுமா? “தமிழ் வேதம்” “சமதர்ம வேதம்” என்று சொல்லப்படும்
குறளின் நிலமையே இப்படி இருக்குமானால் மற்ற நூல்களின் நிலைமையைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
குடி அரசு - 1922 0) 142
இனி புராணக்கதைகளை எடுத்துக் கொண்டாலும் அவைகளும் தீண்டாமையை ஒழிக்க இடந்தரவில்லை என்பதைப்பற்றி நாம் அதிகமாக ஒன்றும் கூற வேண்டிய அவசியமில்லை. பெரிய புராணத்திலுள்ள நந்தனார். கதை ஒன்றே போதுமானதாகும். நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளிடத்தில் பக்தியுள்ளவராகிக் கோயிலுக்குள் செல்ல விரும்பிய தீண்டாதாராகிய நந்தனாரை அந்த உடம்புடன் கோயிலுக்குள் வந்து தன்னை வணங்குவதற்கு அந்த நடராஜா என்கிற பரமசிவன் என்னும் கடவுளே. சம்மதிக்காமல் நெருப்பில் மூழ்கி இறந்து பார்ப்பன சரீரத்தைப் பெற்றுக் கொண்டபின் கோயிலுக்குள் வர வேண்டுமென்று சொல்லி அவ்வாறே நந்தனாரும் நெருப்பில் மூழ்கிப் பார்ப்பன உடம்பு பெற்றுக் கொண்டு கோயிலுக்குள் போனதாகத்தானே பெரிய புராணத்தில் சொல்லப் படுகின்றது? தீண்டாமை விலக்குக்கும் சமத்துவத்துக்கும் இடமிருப்பதாகச் சொல்லப்படும் பெரியபுராணம் என்பதே இவ்வளவு கொடுமையாக இருக்குமானால் மற்ற சின்ன புராணங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
இனி, சங்கராச்சாரியார் என்பவர் தீண்டாமையை ஒழிக்கப் போதனை செய்தார் என்று கதை சொல்லுகிறார்கள் அவர் ஒருநாள் கங்கையில் ஸ்நானம் பண்ணிவிட்டு வரும் போது எதிரில் வந்த ஒரு தீண்டாதானைக் கண்டு விலகியதாகவும், உடனே அத்தீண்டாதான் சங்கரரை நோக்கி ஆத்மாவில் என்ன வித்தியாசம்? என்று கேட்டதாகவும், பிறகு சங்கராச்சாரியார் ஆத்ம சமத்துவத்தை யறிந்து அவனைக் கட்டித்தழுவிக் கொண்டதாகவும், அவனுடைய ஆத்ம ஞானத்தைப் பாராட்டியதாகவும், அதற்காக சங்கராச்சாரி. யார் பஞ்சதசி என்ற நூலைச் செய்ததாகவும் அவருடைய கதையில் சொல்லப்படுகிறது. இந்தக் கதையும் ஆத்ம சமத்துவத்தைச் சொல்ல வந்ததே. ஒழிய சரீர சமத்துவத்தைச் சொல்லவரவில்லையே! ஆகையால் இந்தக் கதையினால் பிறப்பு வித்தியாசமும், தீண்டாமையும் இருப்பதைக் காணலாம்.
மேற்கூறிய காரணங்களிலிருந்து தீண்டாமை நமது நாட்டில் தோன்றி
நிலைத்திருப்பதற்கு இந்து மதமும், இந்து மத சாஸ்திரங்களும் அவைகளின் மூலம் உண்டான மூட நம்பிக்கைகளும், குருட்டுப் பழக்க வழக்கங்களுமே என்பதை அறியலாம். இந்த உண்மையை மறைத்துவிட்டு “இந்து மதத்தில் தீண்டாமைக்கு அனுமதியில்லை ஆகையால் இந்து மதத்தின் மேல் குறை
கூறக் கூடாது” என்று சொல்லுவது இந்து மதத்தின் பேரில் வைத்துள்ள குருட்டு நம்பிக்கையும் இந்து மதம் அழிந்து போனால் தங்களுடைய கெளரவத்துக்கும் சுய நலத்துக்கும் பங்கம் வரும் என்னும் எண்ணமுமே தவிர வேறல்ல என்றே நாம் கூறுவோம்.
திரு. விஜயராகவாச்சாரியார் அவர்கள் “தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் பேரில் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது” என்று
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கூறியிருப்பது எவ்வளவு மோசமான அபிப்பிராயம் என்று யோசித்துப் பாருங்கள்! ஒரு வியாதியைப் போக்க வேண்டுமானால் அது எவ்வாறு உண்டாயிற்று என்பதை முதலில் தெரிந்துகொண்டு அது தோன்றுவதற்குக் காரணமாயிருந்த தீமையை ஒழிப்பதன் மூலமாக அன்றோ எப்பொழுதும் அந்த வியாதியை வர வொட்டாமல் தடுக்க முடியும்? இதை விட்டு விட்டுத் தற்கால சாந்தியாகச் சில மருந்துகளைக் கொடுத்து அதன் தொந்தரவைத் தணித்து விட்டால் போதுமா? மறுபடியும் அடிக்கடி அவ்வியாதி உண்டாகித் துன்பப்படுத்தாதா? என்று யோசனை செய்து பாருங்கள்! இது போலவே தீண்டாமை உண்டானதற்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அக்காரணத்தை அடியோடு கல்லி யெறிந்து சுத்தப்படுத்தினால் அல்லவா தீண்டாமை அடியோடு அழியும்?
ஆதலால் தீண்டாமை எப்படி வந்தது என்பதைப்பற்றி யோசனை பண்ணிப் பார்த்தால் இந்து மதத்தின் மூலமாகத் தான் வந்தது என்னும் உண்மை யாருக்கும் விளங்காமற் போகாது. இவ்வுண்மையை யறிந்தவர்கள், தீண்டாமையை அடியோடு ஒழிக்க வேண்டுமானால் இந்து மதத்தையும் அடியோடு ஒழித்துத்தானாக வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரக்கூடும். ஆகையால்தான் இந்துமதமே தங்கள் உயர்வுக்குக் காரணம்; அது அழிந்தால் தங்கள் மதிப்பும் போய்விடும் என்று முடிவு செய்து கொண்டு எந்தக் காரியங்களைச் செய்தாலும் அவைகளுடன் இந்து மதப் பிரசாரத்தையும் சேர்த்துக் கொண்டு வருகின்ற பார்ப்பனக் கூட்டத்தைச் சேர்ந்த திரு. விஜயராகவாச்சாரியாரவர்கள் “தீண்டாமை எப்படி வந்தது?” என்பதைப் பற்றி ஆராய வேண்டாமென்று கூறினார் என்பதில் என்ன சந்தேகம்?
ஆகவே இந்தக் கொடிய தீண்டாமையை அடியோடு ஒழிப்பது எப்படி என்பதைப் பற்றிய நமது அபிப்பிராயத்தைப் பலமுறை வெளியிட்டிருக் கிறோமாயினும் இச்சந்தர்ப்பத்திலும் சுருக்கமாகக் கூறிவிடுகின்றோம். தீண்டாமை எப்பொழுதும் நிலைத்திருந்தால் தான் இந்து மதம் நிலைத் திருக்கும் என்ற அபிப்பிராயமுடைய வைதீகக் கூட்டத்தை ஒதுக்கித்தள்ளி விட்டு மற்றவர்களில் தீண்டாமையை ஒழிப்பதற்கு யோசனை கூறுவோரு டைய அபிப்பிராயத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். “இந்து மதத்தில் தீண்டாமைக்கு ஆதரவில்லை. ஆகையால் இந்து மத தர்மங்களைக் கைப் பற்றுகிறவர்கள் எல்லோருக்கும் மத சம்பந்தமான சமூக சம்பந்தமான தடை
கள் இருக்கக் கூடாது” என்று சொல்லுகின்றவர்கள் ஒரு சாரார். “இந்து மதத்தில் தீண்டாமைக்கு இடமிருக்கிறது; இதனாலேயே இந்து மதம் பாழடைந்து வருகிறது. ஆகையால் இக் கொடுமையை இந்து மதத்தை விட்டு.
ஒழித்துப் பரிசுத்தமாக்க வேண்டும்” என்று சொல்லுகின்றவர்கள் ஒருசார்பார்.
ஆனால் நாமோ இந்த இரு சார்பினர்களின் அபிப்பிராயங்களையும் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும், மதத்தையும், சாஸ்திரங் களையும் நம்பிக்கொண்டு, அவைகளை ஒழிக்க மனமில்லாமல் அவைகளின் மூலமாகவே தீண்டாமையை ஒழித்துச் சமத்துவத்தை உண்டாக்க
குடி அரசு - 1922 0) 144.
வேண்டுமென்று விரும்புகின்றார்கள். இவர்களுடைய விருப்பம் எந்தக்
காலத்திலும் நிறைவேறப் போவதில்லையென்பதை, மதத்தையும், சாஸ்திரங்க ளையும் நம்பிக் கொண்டு தீண்டாமையை ஒழித்துச் சமதர்மத்தை உண்டாக்க. முன் வந்த, ராமாநுஜர், சைதன்யர், குரு, கோவிந்தசிங், குருநானக், தயானந்த சரஸ்வதி, விவேகாநந்தர், ராமலிங்க சுவாமி போன்றவர்களின் முயற்சி என்ன ஆயிற்று என்று ஆலோசித்துப் பார்ப்பவர்கள் ஒப்புக் கொள்ளுவார்கள். இவர்களுடைய முயற்சியினால் ஒரு கடுகளவாவது தீண்டாமையைப் போக்க
முடிந்ததா?
இவ்வாறு இவர்களுடைய முயற்சிகளும், உபதேசங்களும் பலன் தராமல் போனதற்குக் காரணம், அவர்கள் தங்கள் முயற்சிகளுக்கும், உப தேசங்களுக்கும் மதங்களையும், சாஸ்திரங்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு, அவைகளுக்குத் தத்துவார்த்தங்கள் கூறித் தங்கள். கொள்கைகளுக்கு ஆதரவு தேடியதேயாகும் என்பதில் என்ன சந்தேகம்?
ஆகையால், மதமும், சாஸ்திரங்களும் ஒழிந்தாலல்லாமல் தீண்டாமை
ஒழியப் போவதில்லை என்பதே நமது முடிவான அபிப்பிராயமாகும். இந்த அபிப்பிராயத்தினால் தான், சுயமரியாதை இயக்கம், மதங்களையும் சாஸ்திரங் களையும், அதிலும், அவசரமாகவும் அவசியமாகவும் இந்து மதத்தையும், இந்துமத சாஸ்திரங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டுமெனக்கூறியும், அந்த வேலையைச் செய்தும் வருகிறது.
உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களான- இந்து மதத்திலும், இந்துமத சாஸ்திரங்களிலும், நம்பிக்கையும் குருட்டுப் பழக்க வழக்கங்களும் உடைய இந்துக்களிடம் உள்ள மத நம்பிக்கையையும் சாஸ்திர நம்பிக்கையையும் ஒழிப்பதன் மூலமே தீண்டாதவர்கள் சமத்துவம் பெற
முடியும் இந்து மதத்தை வைத்துக் கொண்டு ஒரு பொழுதும் சமத்துவம் பெற முடியாது. ஆகையால் இந்து மதம் ஒழியும் வரையிலும் தீண்டாமைக் கொடு மையை சகித்துக் கொண்டு இந்து மதத்துடன் போர் புரிந்து கொண்டிருக்க
முடியாதவர்கள் இந்து மதத்தையே அடியோடு விட்டு விட்டுத் தங்களுக்குச் சமத்துவம் அளிக்கின்ற வேறு மதத்தில் சேருவதும் தவறாகாதென்றும் சொல்லுகின்றோம். அவசரமாகச் சமத்துவம் பெற விரும்புகிறவர்களுக்கு இதைத்தவிர வேறுமார்க்கமில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.
குடி அரசு - தலையங்கம் - 27.03.1932.
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சுதேசிப் பிரசம்
நமது நாட்டின் பொருளாதாரத் துறையை விருத்திச் செய்ய வேண்டு. மென்பதிலும் இதற்கு ஆதாரமானத் தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதிலும் நாம் யாருக்கும் பின்வாங்கியவர் அல்லோம் என்பதை நமது மகாநாடுகளில் அவ்வப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் தீர்மானங் களைக் கொண்டு அறியலாம்.
பொருளாதாரத் துறையிலும், தொழில் அபிவிருத்தியிலும் நாம் முன்னேற்றமடைய வேண்டுமானால் கூட்டுறவுத் தொழில் முறையில் இயந்திரங்களை விருத்தி செய்தால் ஒழிய நாம் வியாபாரத்தில் அன்னிய தேசங்களுடன் போட்டி போட ஒரு நாளும் முடியாது என்பதே நமது கொள் கையாக இருந்து வருகின்றது. இந்தத் தத்துவத்தைக் கொண்டுதான் நாம், ராஜியச் சின்னமாக உபயோகப்பட்டு வருகின்ற கதர்த் திட்டத்தைப் பலமாக எதிர்த்து வருகின்றோம்.
அன்றியும் இப்பொழுது காந்தீயத்தினால் ஏற்பட்ட “சுதேசீயம்”* என்னும் பிரசாரம் மக்களை மீண்டும் பழய மிருகப் பிராயத்திற்கு இழுத்துச் செல்லும் தத்துவத்தை யுடையதென்று கூறி அதை அடியோடு கண்டிக் கின்றோம்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கு வேண்டிய பொருள்களைப் பிறரு டைய கூட்டுறவை விரும்பாமல் தானே உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் திரு.காந்தியின் தேசீயமாகும். இத் தேசீயத்திலிருந்து முளைத்தது தான் கதர்த்திட்டம்
என்பதும். மேற்கூறிய “தனக்குத் தானே உதவி செய்துகொள்ளுதல்'” என்னும் கொள்கையை அஸ்திவாரமாகக் கொண்டு தான் இப்பொழுது நமது நாட்டு
“ராஜீயம்”, “தேசீயம்”, “காந்தீயம்”, “சுதேசியம்” ஆகிய எல்லாம் நடைபெற்று வருகின்றன.
மனிதர்கள் உற்பத்தியான பழய காலத்தில் - அவர்கள் மிருகப் பிராயமுடையவர்களாக இருந்த காலத்தில், ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைத் தேடிக் கொண்டு தனித்தனியே வாழ்ந்து
குடி அரசு - 1922 0) 146
வந்தனர். அதன் பின் சிறிது அறிவு விளக்கமான பின்பு தனித்தனிக் குடும்பங்களாக இருந்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்தனர். அதன் பின் தனித்தனி சமூகங்களாகப் பெருகினர். இப்பொழுது எல்லா மக்களும் ஒரே சமூகமாக வாழ வகை தேடுகின்றனர்.
இதைப் போலவே தொழில்களும் கூட்டுறவு முறையில் வளர: ஆரம்பித்தன. ஒருவனுக்கு வேண்டிய பண்டத்தை அவனே செய்து கொள்ளாமல், ஒவ்வொன்றை ஒவ்வொருவன் செய்யவும், ஒருவன் தான் செய்த பொருளை மற்றொருவனிடம் கொடுத்து தனக்கு வேண்டிய பொருளை அவனிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் நேர்ந்தது. இதுதான் பண்டமாற்றுதல் என்னும் வியாபாரத்திற்குக் காரணமாகும். இந்த முறையில் தான் பொருளாதாரத் துறையும், தொழில் அபிவிருத்தியும் முன்னேற்ற மடைய முடியும். மக்களுடைய தனித்தனி சமூக அமைப்பும் ஒழிந்து ஒரே சமூகமாக வழியும் உண்டாகும். இந்த முறைதான் தேசத்தின் முற்போக்குக்கு
ஏற்ற வழியாகும்.
இதை விட்டு விட்டுத் திரு. காந்தியின் “தனக்குத் தானே உதவி செய்து கொள்ளுதல்” என்னும் தத்துவத்தை உடைய தேசீயத்தைப் பின்பற்றும்
தேசம், தொழில் முறையிலும், வியாபாரத்துறையிலும், பொருளாதாரப் பெருக்கத்திலும் வளர்ச்சியடைய முடியாமலும், மக்களுக்குள் சமத்துவமும் சகோதரத்துவமும் உண்டாக முடியாமலும், வருணாசிரம தரும வாழ்க்கை யிலேயே இருந்து கொண்டு அதிவிரைவாகப் பழய மிருகப் பிராயத்திற்குச் செல்ல வேண்டியதுதான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இதனால் தான் தேசீயமும், சுயமரியாதையும் எந்தக் காலத்திலும் ஒன்று சேரமுடியாதென்றும் கூறி வருகின்றோம்.
இவ்விஷயங்களையே சென்ற ஆண்டில் விருது நகரில் நடந்த சுயமரியாதை மூன்றாவது மகாநாட்டில் நிறைவேற்றிய,
“பொருளாதாரத் துறைக்கும், தொழில் அபிவிருத்திக்கும் இயந்திர வளர்ச்சிக்கும் சமதர்ம உணர்ச்சிக்கும் கதர் தத்துவம் விரோதமாய் இருப்பதால் கதர் தேசீயப் பொருளதாரத்து தொழில் திட்டம் என்பதை இம்மகாநாடு மறுக்கின்றதுடன் தொழில் முறை இயந்திர வளர்ச்சியை இம்மகாநாடு ஆதரிக்கின்றது”.
என்ற தீர்மானமும் வற்புறுத்துகின்றது. ஆகவே, தேசத்தில் பொருளாதார முன்னேற்றத்தையும், சமூக சமத்துவத்தையும் உண்டாக்க விரும்புகின்றவர்கள் எவரும் இயந்திரங் களினால் செய்யக் கூடிய தொழில்களை எல்லாம் இயந்திரங்களைக் கொண்டே கூட்டுறவு முறையில் அபிவிருத்தி செய்வதற்கு முயற்சி
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பண்ணினால் ஒழிய நமது நாடு முன்னேற்றம் அடைய முடியாது. என்பதை உணர்ந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் இந்த முறையில் பண்டங்களை உற்பத்தியாக்க நமது நாட்டில் இது வரையிலும் ஒரு முயற்சியும் செய்யப்படவுமில்லை; பண்டங்கள் உற்பத்தியாகவும் இல்லை. ஆனால் அன்னிய நாட்டுப் பொருள்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்னும் சத்தம் மாத்திரம் பலமாக இருந்து கொண்டு.
வருகிறது.
இப்பொழுது “பகிஷ்காரக் கூச்சல்காரர்களு”க்கு ஆபத்து உண்டான வுடன் இக்கூச்சலே வேறு விதமாக மாறி “சுதேசிப் பொருள்களை வாங்குங்
கள்” என்ற கூச்சலாகப் புறப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே நமது நாட்டில் சுதேசிப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்குமானால் அவற்றை வாங்குங்கள் என்று செய்யும் பிரசாரத்தை நாம் வரவேற்பதுடன், நாமும் அந்தப் பிரசாரத்தை மேற்கொண்டு முன்னணியில் நின்று வேலை செய்வோம். ஆனால் நமக்குத் தேவையான சுதேசிப் பொருள்கள் கிடைக்காமலும், கூட்டுறவு முறையில் இயந்திரத் தொழில்களை உற்பத்தி செய்யாமலும், இவ்வாறு தொழில்களைச் செய்ய
சிறிது கூட முயலாமலும், இக்கொள்கையைக் கூட “தேசீய வாதிகள்” ஒப்புக் கொள்ளாமலும் இருக்கின்ற போது “சுதேசியை வாங்குங்கள்” என்னும் பிரசாரமும், இப்பெயரினால் சங்கங்களும் உண்டாவதில் என்ன அர்த்த
மிருக்கிறது என்று நமக்கு விளங்கவில்லை.
ஆனால் இது வரையிலும் நமது நாட்டில் “ஹோம்ரூல்”, “சுயராஜ்யம்”, “காங்கிரஸ்”, “காந்தீயம்”, “தேசீயம்” என்ற பற்பல வார்த்தை களைக் கூறித் தேசாபிமானிகளாக விளங்கியவர்கள் எவ்வாறு அவ் வார்த்தைகளைக் கொண்டு பொது ஜனங்களை ஏமாற்றிப் பட்டங்களையும் பதவிகளையும் பெற்று வந்தார்களோ, அவ்வாறே தான் இப்பொழுதும் “சுதேசியை வாங்குங்
கள்” என்ற பிரசாரத்தை மேற்கொண்டிருப்பவர்களும், வரப் போகும் தேர்தல்
களில் வெற்றி பெறுவதற்கு இதை ஒரு தந்திரமாக ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
*சுதேசியை வாங்குங்கள்” என்னும் இந்த புதிய தேர்தல் பிரசாரம் முதலில் யாரால் கிளப்பிவிடப்பட்டது. இப்பொழுதும் யாரால் நடத்தப்படு
கிறது? எப்படி நடத்தப்படுகிறது? என்ற விஷயங்களை அறிந்தால் அதன் பின் இதைக் கண்டு யாரும் ஏமாற மாட்டார்கள் என்பது நிச்சயம். ஆகையால் அவ்விஷயங்களை ஆராய்வோம்.
வருணாச்சிரம தரும வாதியாகிய திரு. மாளவியா பண்டிதர் இங்கிலாந்திலிருந்து வட்ட மேஜை மகாநாட்டை விட்டுத் திரும்பி வந்த
குடி அரசு - 1922 0) 148
வுடனேயே இந்த இயக்கத்திற்கு விதை போட்டார். காங்கிரஸ் பெயராலோ,
காந்தியின் பெயராலோ, சத்தியாக்கிரகத்தின் பெயராலோ, பகிஷ்காரத்தின் பெயராலோ, தேர்தல் பிரசாரம் பண்ணினால் நிச்சயமாகத் தடியடியோ, அபராதமோ, சிறை தண்டனையோ பெற்று கஷ்டமடையும்படி நேரும் என்பது அவருக்குத் தெரியும். ஆகையால் அன்னிய நாட்டுப் பொருள் களைப் பகிஷ்கரியுங்கள் என்று சொல்லுவதை விடச் “சுதேசியை வாங்குங்கள்” என்று பிரசாரம் செய்வது சட்ட விரோதமும் ஆகாது; தேர்தல் பிரசாரம் நடப்பதற்கு வழியும் ஆகும் என்று கருதிப் பிரசாரம் பண்ண
ஆரம்பித்தார்.
இச்சமயத்தில் அடக்குமுறைச் சட்டங்களால் மூலைகளிற் பதுங்கிக் கிடந்த பதவி வேட்டைக்காரர்கள் அனைவரும் இப்பிரசாரத்தை வரவேற்றனர்.இவர்கள் எல்லோரும் பார்ப்பனர்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. உதாரணமாகச் சென்னையிலும், கும்பகோணம், கோய
முத்தூர், திருநெல்வேலி முதலிய இடங்களிலும் இப்பொழுது ஆரம்பிக்கப் பட்டிருக்கும் இச்சங்க நிர்வாகிகளைப் பார்த்தாலே இவ்வுண்மை விளங்கும். இனி மற்ற ஊர்களில் ஆரம்பிக்கப்படப் போகும் சங்க நிர்வாகிகளும் பார்ப்பனர்களாகவேதான் இருப்பார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை. இவர்கள் எல்லோரும் அடக்கு முறைச் சட்டங்கள் ஏற்படு வதற்குமுன்பு தேர்தலுக்காக வேண்டி “காந்தி”, “காங்கிரஸ்”, “சத்தியாக்கிரகம், “சட்ட மறுப்பு, “பூரண சுயேட்சை”, “கதர்” என்ற வார்த்தைகளைக் கூறித் திரிந்தவர்கள் தான் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.
இப்பொழுது “சுதேசியை வாங்குங்கள்” என்பது பற்றிப் பிரசாரம் செய்யப் புறப்பட்டு இருப்பவர்கள் இவர்கள் கொள்கைப்படி செய்யப் பட்டி
ருக்கும் சுதேசிப் பண்டங்கள் ஒன்றும் இல்லாமையால் கதர் ஒன்றைத் தான்
பிரசாரம் பண்ண முடியும். கதர் ஒரு தொழிலாகாமையாலும் அதனால் இதுவரையிலும் ஒரு லாபமும் கிடைக்காமையாலும் இனியும் கிடைக்கப் போவதில்லையாகையாலும் கெஜம் இரண்டரை அணா மூன்று அணா பெறக்கூடிய துணிக்கு 9 அணா, 10 அணா கொடுத்து வாங்க வேண்டி யிருப்பதனாலும் கதரை நம்பி நூல் நூற்கின்றவர்கள் ஒரு நாளைக்கு 1அணா 1 அணாவுக்கு மேல் பெற வழி இல்லாமையாலும் கதர்ப் பிரசாரத்தால் பரம்பரையாக நெசவு செய்து வாழ்ந்து வந்தவர்களிலும், அதன் மூலம் வியா பாரம் செய்து வந்தவர்களிலும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேலை யின்றி பட்டினிகிடக்க நேர்ந்தமையாலும், “கதர் பிரசாரம்” என்பது ஏழை மக்களின் பொருளை கொள்ளை அடிக்கப் பார்ப்பனர்களால் செய்யப்படும் ஏமாற்றுப் பிரசாரம் என்பதை நாம் இப்பொழுது புதிதாக எடுத்துக்காட்ட வேண்டியதில்லை...
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
நமது நாட்டில் தொழில்களை அபிவிருத்தி செய்து வியாபாரம் பண்ணுவதன் மூலம் பொருளாதாரத்தை வளர்க்க இந்த “சுதேசி பக்தர்கள்” ஒரு முயற்சியும் செய்யாமல் “சுதேசியை வாங்குங்கள்” என்று மாத்திரம் பிரசாரம் பண்ணுவதில் என்ன அர்த்தமிருக்கிறது என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்து பார்த்தால் இதில் உள்ள சூழ்ச்சி வெளிப்படாமல் போகாது, சுதேசிப் பண்டங்கள் இருந்தாலல்லவோ அவைகளை வாங்குங்கள் என்று பிரசாரம் பண்ணவேண்டும். அவை இல்லாமலிருக்கும் போது இப்பிரசாரம் செய்ய முன் வந்திருப்பது தேர்தலுக்காகச் செய்யப்படும் சூழ்ச்சியா? அல்லவா? என்று யோசனை செய்து பாருங்கள்.
ஆகவே யாரும் இந்த சுதேசிப் பிரசாரத்தைக் கண்டு ஏமாறாமல் இருக்கும்படி எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம். ஆங்காங்கே உள்ள நமது இயக்கத்தோழர்கள் பார்ப்பனப்புலிகள் இந்தச் சுதேசி” என்னும் பசுத் தோலைப் போர்த்துக் கொண்டு பொது ஜனங்களை ஏமாற்ற முன் வந்திருப் பதை எடுத்துக்காட்டி பாமர மக்களை எச்சரிப்பார்கள் என்று நம்புகின்றோம்.
காங்கிரஸ் பிரசாரத்தின் பெயரால் தேர்தலுக்குப் பணம் சேர்க்க முடியாமல் போய் விட்ட படியால் இப்பொழுது சுதேசிப் பிரசாரத்தின் பெய
ரால் பார்ப்பனர்கள் பணம் சேர்க்கப் புறப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை: யைப் பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டி அவர்களை ஜாக்கிரதையாக இருக்கும்படி செய்ய வேண்டுகிறோம்.
சுதேசி என்னும் பதத்தில் உள்ள ஏமாற்றங்களை எடுத்துக் காட்டுவது நமது கடமையாகும். இப்பொழுது நாம் சும்மா இருந்து கொண்டு சுதேசியின் பேரால் பார்ப்பனர்களைப் பணம் சேர்க்க விட்டு விடுவோமானால் பின்னால் அது பார்ப்பனரல்லாத பொது ஜனங்களுக்கே ஆபத்தாய் முடியும் என்பதில் சந்தேகமில்லை.
குடி அரசு - தலையங்கம் - 03.04.1932.
குடி அரசு - 1922 0) 150
ஹிந்திக் கான்னை
ஒரு தேசத்தில் உள்ள மக்களைச் சுலபமாகவும், சீக்கிரமாகவும், அறிவுடையவர்களாகச் செய்வதற்கு, முதலில் அவர்களுடைய தாய் மொழி யின் மூலம் எல்லா விஷயங்களையும் போதிக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுவருகிறது. இதுதான் பொது ஜனங்களின் மனத்தில் தேசாபி மான உணர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான வேலையென்றும் சொல்லப்படுகிறது. இது போலவேதான் சுதந்தரப்போர் புரிந்த நாட்டினர். செய்து தங்கள் காரியங்களில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் என்றும் அறி கின்றோம். ஆனால் நமது தமிழ் நாட்டின் தேசாபிமானமோ இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகவே இருந்து வருகிறது.
சுயராஜ்யம் வேண்டுமென்று கூச்சலிடுகின்ற தேசத்தலைவர்கள் என்பவர்களில் யாரும் இதுவரையிலும் தாய்மொழியின் வளர்ச்சியில் மனஞ் செலுத்தவும் முயற்சி செய்யவும் முன்வரவே இல்லை.
ஆனால் வட நாட்டினர் அரசியல் விஷயத்துடன் ஹிந்தியையும் சேர்த்துக் கொண்டு, அதையே இந்தியா முழுவதுக்கும் பொதுப்பாஷை ஆக்க வேண்டுமென முயற்சி செய்யத் தொடங்கியவுடன் நமது நாட்டுத் தேசாபிமானிகளும் அவர்கள் கொள்கையை ஆதரித்துப் பிரசாரம் பண்ணத் தொடங்கிவிட்டனர். தேசாபிமானியாக வெளி வருகின்ற ஒருவன் “காந்திக்கு ஜே” “காங்கிரசுக்கு ஜே” “கதர் கட்டுங்கள்” என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது போலவே “இந்தியைப் படியுங்கள்” என்றும் சொல்ல வேண்டிய அவசியமும் இப்பொழுது ஏற்பட்டு விட்டது.
தெலுங்கர்கள், வங்காளிகள் முதலானவர்கள் தங்கள் தாய் பாஷையை மிக உன்னத பதவிக்குக் கொண்டு வந்து வைத்திருக்கின்றனர். அவர்கள். தங்கள் மொழிகளில் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற புதிய நூல்களை: யெல்லாம் ஆக்கி வைத்திருக்கின்றனர். அவைகளைப் படிக்குமாறு மக்க ளுக்கு ஊக்க மூட்டுகின்றனர். நமது தமிழ் மொழியோவென்றால் ஒன்றுக்கும் பயன்படாத நிலையிலேயே இன்னும் இருந்து வருகிறது. மக்களுடைய அறியாமையைப் போக்கி நவீன அறிவையும், உலகப் பொருள்களின்
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தன்மைகளை அறிந்து அவைகளைத் தமது வாழ்க்கைக்கு உபயோகப் படுத்திக் கொள்ள அறிவையும் ஊட்டக் கூடிய நூல்களைச் செய்ய முயற்சி எடுத்துக் கொள்ளவே இல்லை.
தமிழ் மொழிக்காக உழைக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்ற பண்டிதர்களும், சங்கங்களும் தமிழ் மொழியினால் பொதுஜனங்கள். நன்மையடையத் தகுந்த உருப்படியான வேலைகள் ஒன்றுமே செய்வதில்லை. ராமாயணக் கதையையும், பாரதக் கதையையும் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய கதைகளையும் வசனமாகவும், பாட்டாகவும், சுருக்காகவும், விரிவாக
வும் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கின்றனர், அல்லது அந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார்... இந்தப் புலவர் எந்தக் காலத்திலிருந்தார். என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இது தான் ஆராய்ச்சி யென்று சொல்லப்படுகின்றது. இவ்வளவுதான் இவர்கள் தமிழ் பாஷைக்குச் செய்யும் தொண்டு. இதனால் மக்களை இன்னும் மூட நம்பிக்கை உடைய வர்களாக்குவதற்கு வழி தேடுகின்றார்களேயொழிய வேறு தேசத்திற்கு என்ன நன்மை செய்கின்றார்கள் என்றுதான் கேட்கின்றோம்.
ஆனால் தேசாபிமானிகளாக வருகின்றவர்களுக்கோ இதில் கூடக் கொஞ்சமும் கவலை இருப்பதில்லை. பொதுவாக நமது நாட்டு தேசாபி மானிகளுக்கு எந்த வகையிலும் சொந்த அறிவு என்பதே இருப்பதில்லை... வடநாட்டுத் தேசாபிமானிகள் எந்தக் காரியங்களை ஆரம்பிக்கின்னனரோ அதையே பின்பற்றுவது தான் நமது நாட்டு அரசியல் வாதிகளின் போக்காக
இருந்து வருகின்றது. சமூகவியலாகட்டும், மதவியலாகட்டும், அரசியலாகட்'
டும், பாஷாவியலாகட்டும் மற்ற எந்த இயலாகட்டும் எல்லாவற்றிலும் நமது நாட்டினர் வடநாட்டினர்க்கு அடிமைப்பட்டே வந்து கொண்டிருந்தனர். இதற்கு உதாரணமாக இது வரையிலும் நடந்து வந்திருக்கும் கதர் இயக்கம், காங்கிரஸ் இயக்கம்.இந்தியியக்கம் முதலியவைகளை எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும்.
சமீபத்தில், சென்னையிலுள்ள இந்திப் பிரசாரசபைக்கு ஒரு கட்டடம் கட்டும் பொருட்டு நிதி சேகரிப்பதற்காகப் பத்திரிக்கைகளில் ஒரு வேண்டு. கோள் வெளிவந்தது. அதில் இந்தியின் அவசியத்தையும், அதற்குக் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்திப் பொது ஜனங்களைப் பொருளுதவி செய்யுமாறு வேண்டிக்கொண்டு, பலவகையான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சட்டசபை மெம்பர்களும் தாலூக்கா போர்டு, முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு முதலிய ஸ்தாபனங்களில் பதவி வகிப்பவர்: களுமாகச் சுமார் 50 பேர்களுக்கு மேல் கையொப்ப மிட்டிருக்கின்றனர்.
உண்மையிலேயே இவர்கள் இந்தி மொழி தேசீய பாஷையாக வேண்டும். அதன் மூலம் மக்கள் நன்மையடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்வந்தார்களா என்பது தான் நமக்குச்
குடி அரசு - 1922 0) 152
சந்தேகம். இவர்கள் தங்கள் சொந்த பாஷையின் வளர்ச்சிக்குக் கடுகளவாவது நன்மை செய்திருப்பார்களானால் இந்தி மொழிக்கு ஆதரவளிக்க முன்
வந்ததில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியும். அப்படியில்லாமல், தமிழ் மக்கள் முன்பின் அறியாததும்; சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களைத் தவிர. மற்றவர்களுக்குப் படிக்கக் கஷ்டமாயிருப்பதும், துளசிதாஸ் ராமாயணத்தைத் தவிர வேறு இலக்கியங்களோ அல்லது நவீன கலைகளோ இல்லாததும் ஆகிய ஒரு பிரயோசனமற்ற பாஷையைத் தமிழ் மக்களிடம் பரப்ப முன் வருவார்களா? தங்கள் சொந்த மொழியையே கற்க முடியாமல் வாழுகின்ற பொது ஜனங்கள் இந்தி மொழியை எவ்வளவு தூரம் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?
இவையெல்லாம் அந்தப் பிரமுகர்களுக்குத் தெரியாத விஷயம் அல்ல. ஆயினும் ஏன் கையெழுத்திடமுன் வந்தார்களென்றால், தங்களைத் தேசாபிமானி என்று காட்டிக் கொள்வதன்மூலம் அடுத்த தேர்தலுக்கு ஆதரவு பெறவே என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆதலால் இதைக் கண்டு யாரும் ஏமாந்து விட வேண்டாமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.04.1932.
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மோகப்புாட்டு
மூச்சடிக்கிப் பலவகையாக யோகஞ் செய்வதன் மூலம் சிறிது சரீர
திடம் பெறுவதற்கு ஏதாவது மார்க்கமிருக்குமேயொழிய அதில் வேறு “தெய்வீகத்தன்மை” யாதொன்றுமில்லை யென்பதே நமது அபிப்பிராய
மாகும். ஆகவே இதுவும் கழைக் கூத்து, சர்க்கஸ், ஜால வித்தை முதலியவை களைப் போல ஒன்றுதான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் நமது மக்கள் யோகத்தில் ஏதோ “தெய்வீகத்தன்மை” இருப்ப தாக நம்பியிருப்பதால் அநேகர் யோகிகள் என்று கிளம்பி, சில ஜாலங்களைச் செய்து, பாமர மக்களை மலைக்கச் செய்து ஏமாற்றி வருகின்றனர். ஜன சமூகமும் இவர்கள் பால் பரம்பரையாகவே ஏமாந்து கொண்டும் வருகிறது.
இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கவனித்
தால் விளங்கும்.“ஹட யோகம்” என்பதில் சித்தி பெற்றவராகச் சொல்லப்பட்ட நரசிம்மசாமி யென்பவர் சென்னை, கல்கத்தா முதலிய இடங்களில், பிரபல ரசாயன சாஸ்திரிகளின் முன்னிலையில், கொடிய விஷம், கண்ணாடித் துண்டுகள், ஆணிகள் முதலியவற்றை விழுங்கி உயிரோடிருந்தாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசாயன சாஸ்திரிகள் எல்லோரும் மலைத்துப் போய் விட்டனர். ஆகவே யோகத்தின் மகிமையைப் பற்றிப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது.
ஆனால் இதே நரசிம்ம சாமியார் சில தினங்களுக்கு முன் ரெங்கூனில் இரண்டாம் முறையாக விஷங்களையும் கண்ணாடித் துண்டுகளையும் விழுங்கிய கொஞ்ச நேரத்திற்குள் மரண யோகம் பெற்று விட்டார். இதற்குக் காரணம் விஷம் உண்டவுடன் “ஹட யோகம்” பண்ணுவதற்குக் கொஞ்சம் நேரமாகிவிட்டது என்று பத்திரிகைகளில் சொல்லப்படுகின்றது. ஆனால், அவைகளை உட்கொள்ளும் சாதுரியத்திலோ அல்லது மாற்று மருந்தை உட்கொள்ளுவதிலோ அல்லது பழக்கப்பட்ட அளவை உட்கொள்ளுவதிலோ தவறிவிட்டார் என்று ஏன் சொல்லக் கூடாதென்று தான் நாம் கேட்கின்றோம்.
யோகத்தில் “தெய்வத் தன்மை” உண்டென்பது வீண் புரட்டேயொழிய வேறில்லை. சாதுரியத்தினாலோ அல்லது பழக்கத்தினாலோ அல்லது மாற்று.
குடி அரசு - 1922 0) 154
மருந்துகளினாலோ செய்யப்படும் காரியங்களையெல்லாம் யோகமென்றும், மந்திரமென்றும், தேவதையென்றும், தெய்வசக்தியென்றும் சொல்லி ஒரு கூட்டத்தார் ஜன சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள் என்பதை அறிய வேண்டு கிறோம்.ஆகையால் இனியேனும் இது போன்ற மோசடியான காரியங்களைக் கண்டு ஏமாறாமலிருக்கும்படி எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 03.04.1932.
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கட்டசயைநாடகம்
ஏழைமக்களுடன் பழகி, ஏழை மக்களாகவே வாழ்கின்ற ஏழை மக்கள்
தான் அவர்களுடைய துன்பங்களை நீக்க உண்மையாகப் பாடுபட முடியுமே யொழிய ஏழைமக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு பதவி வகித்து வருகிற வேறு எந்தப் பணக்கார முதலாளிகளும் அவர்களின் துன்பத் தைப் போக்கப் பாடுபடமுடியாது என்று நாம் அடிக்கடி சொல்லி வருகிறோம்.
இதற்கு உதாரணம் வேண்டுமானால் நமது இந்தியா சட்டசபையின் நிகழ்ச்சிகளையும் மாகாண சட்டசபைகளின் நிகழ்ச்சிகளையும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும். இச்சமயத்தில் சென்ற 4-4-32 ௨ இந்திய சட்டசபையில் இந்திய ராணுவ சம்பந்தமான முக்கிய விஷயம் பற்றி விவாதம். நடக்கும்போது சபையில் பல உறுப்பினர்களின் ஸ்தானங்கள் காலியாக இருந்தனவாம். இதை திரு. எஸ். சி. மித்திரா அவர்களும், சட்டசபைத் தலைவரும் எடுத்துக்காட்டி கண்டித்தனர். அப்போது தலைவர் கண்டித்துக் கூறியதாவது:-
“சட்டசபைக் கூட்டத்திற்கு பலர் வரவில்லை என்றும், சிலர் வந்து
விட்டுத் திரும்பி விட்டார்கள் என்றும், சபையில் அதிக மெம்பர்கள் இல்லை யென்றும், திரு. எஸ். சி. மித்திரா கூறியதைக் கவனிக்க வேண்டும். ஆகையால் வாக்காளர்களே இதைக் கவனியுங்கள்.
தேர்தல் காலத்தில் ஏராளமாகச் செலவு செய்து படாதபாடுபட்டு சட்டசபைப் பதவி பெறுகிறவர்கள் பிறகு சபைக்கூட்டத்திற்கு வருவதைப்பற்றிக் கவலை கொள்வதில்லை. இத்தகைய மெம்பர்க ளிடம் அனுதாபம் காட்ட முடியாது.
என்று மிகவும் அழுத்தமாக உறுப்பினர்களின் செய்கையைத் தலைவர். கண்டித்திருக்கின்றார்.
இவ்வாறு சட்ட சபைக் கூட்டங்களுக்கே சரியாகப் போகமுடியாத நமது பிரதிநிதிகள் எவ்வாறு நமது நன்மைக்காகக் கவலையுடன் பாடுபடுவார்:
கள் என்று யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1922 0) 156
இவர்கள் ஏழைகளின் நன்மைக்காகவோ , சீர்திருத்தத்திற்காகவோ, பாடுபடாமல் போனாலும், சட்டசபையில் சில மெம்பர்களால் கொண்டு வரப்
படும் நல்ல தீர்மானங்களுக்கு முட்டுக்கட்டை போடாமலாவது இருக்கிறார் களா என்று பார்த்தால் அப்படியும் இருப்பதில்லை. “மதம்” “கடவுள்” “வேதம்” “பழமை” “தெய்வீகம்” “பழக்க வழக்கம்” என்னும் பெயர்களினால் அவைகளை எதிர்த்து தீமை செய்யச் சிறிதும் பின்வாங்குவதில்லை..
இதற்கு உதாரணம் வேண்டுமானால் இந்திய சட்ட சபையில் திரு. சாரதா அவர்களால் விதவைகளுக்குச் சொத்துரிமை வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட மசோதாவைத் தோற்கடித்ததும், திரு. அரிசிங்கோர். அவர்களால் விவாக விடுதலை செய்து கொள்ளுவதற்கு உரிமை வழங்கக் கொண்டுவந்த மசோதாவின் விவாதத்தின் போது சபையில் குவாரம் இல்லாமற் போகுமாறு சபை மெம்பர்கள் சபையை விட்டு வெளியேறியதும் ஆகிய காரியங்களே போதுமானதாகும்.
அல்லாமலும் பால்ய விவாகத்தைத் தடுக்கும் சாரதா சட்டத்தைத் தொலைக்க வேண்டும் என்பதற்காகவே சட்டசபையில் ஆதி முதல் ஒரு கூட்டம் சூழ்ச்சி செய்து கொண்டு உட்கார்ந்திருப்பதைக் கொண்டும் அறியலாம்.
ஆகவே இந்திய சட்டசபை மெம்பர்களின் நாடகத்தையறிய, அச் சபைத் தலைவர் கூறிய அபிப்பிராயமும், நாம் காட்டிய இரண்டொரு உதாரணங்களுமே இச்சமயத்தில் போதுமானதென்று கருதுகிறோம். சமயம் நேரும்போது மற்றொரு முறை இது பற்றி எடுத்துக் காட்டுவோம்.
இனி நமது மாகாண சட்டசபையைப் பற்றி மாத்திரம் கொஞ்சம் கவனித்தால் மற்ற மாகாண சட்டசபைகளின் நாடகங்களும் நன்கு விளங்கும்.
நமது மாகாண சட்டசபையில் சென்ற கூட்டங்களில் நடந்த காரியங்
கள் முழுதும் அனேகமாகத் தேர்தலுக்காகச் செய்யப்பட்ட பிரசாரங்களும், பிரசங்கங்களும், கேள்விகளுமாக இருந்தனவேயன்றி வேறு யாதொன்றும் நடைபெற்றதாகத் திட்டமாகக் கூறமுடியாது.
ஒருமாஜிஸ்திரேட், சட்டமறுப்புச்செய்து அதன் பொருட்டு அபராதம் விதிக்கப்பட்ட ஒரு பெண். தன்னிடம் அபராதம் கொடுக்கப் பணமில்லை என்று சொல்லியபோது, அப்பெண் கழுத்திலிருந்த தாலியைக் கொடுவென்று கேட்டதைப் பற்றிய பேச்சு, சட்டசபை ஆரம்பம் முதல் முடிவுவரையிலும்
இருந்து கொண்டே வந்தது. இதன் பொருட்டு, அந்த மாஜிஸ்திரேட் வருத்தந்தெரிவித்தும், அரசாங்கத்தாரும் அச்செய்கையைக் கண்டித்துங்கூட, சட்டசபை மெம்பர்கள் அப்பேச்சை விட்டு விடவே யில்லை.
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தாலியைத் தெய்வத் தன்மையாகக் கருதிக் கேள்விகள் கேட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிய இந்த மெம்பர்கள், கணவனையுடைய பெண்கள், வைதீகர்களின் கொள்கைப்படி. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பிறவி குணங்களை விட்டு விட்டுச் சட்டமறுப்புச் செய்ய பகிரங்கமாக வெளிவந்ததனால், அவர்களுடைய “தெய்வீகத்” தன்மை போய்விட்டது என்பது பற்றி ஏன் அப்பெண்களைக் கண்டிக்கவில்லை என்று கேட்கின் றோம். உண்மையில் இவர்கள் தாலியின் “தெய்வீகத்தன்மையை” அறிந்து அதற்காக இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்றால் அதில் சிறிதும் அர்த்தமே இல்லையென்பது தான் நமது அபிப்பிராயம்.
அடுத்தபடியாக அடிக்கடி பிரஸ்தாபிக்கப்பட்ட விஷயம்; டாக்டர். பேட்டன் அவர்களைச் சென்னைப் போலீசார் அடித்ததும், அவர் மீது
வழக்குத் தொடுத்ததுமாகிய விஷயமாகும். இது பற்றி இந்திய மந்திரியுள் பட அரசாங்கத்தார் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தும் நமது சட்டசபை மெம்பர்கள் சும்மா விட்டுவிடவில்லை கேள்விகளுக்குமேல் கேள்விகள்: கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
இன்னும் தடியடிகளைப் பற்றியும், பிரம்படிகளைப் பற்றியும் கேட்ட கேள்விகளுக்கு அளவே யில்லை. அரசாங்கத்தாருடைய அடக்குமுறை களைப் பற்றியும், அவசரச் சட்டங்களைப் பற்றியும், கண்டித்துத் தீர்மானங்கள். கொண்டு வருவதும், சரமாரியாகக் கேள்விகள் கேட்பதும் ஆகிய காரியங்க ளில் தான் ஏறக்குறைய எல்லா மெம்பர்களும் ஊக்கமெடுத்துக் கொண்டு காலத்தைக் கடத்தினார்களேயன்றி, வேறு நாட்டுக்கு - மக்களுக்குப் பிரயோச னகரமான காரியங்கள் எதையும் உருப்படியாகச் செய்து முடித்தார்கள் என்று கூறுவதற்கு இடமில்லை. உண்மையிலேயே நமது சட்டசபைப் பிரதிநிதிகள், நமது தேசமக்களின் நன்மைகளைக் கவனிக்கக் கூடியவர்களாய் இருந்தால், ஏழைமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் இவர்களின் நன்மைக்காக ஏதேனும் செய்திருக்க வேண்டும்.
நமது தேசமக்களில் கோடிக்கணக்கான பேர், உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும், இருக்க இடமின்றியும், ஒவ்வொரு நாளும், பட்டினியினாலும், பசியினாலும், நோய்களினாலும் மடிந்து வருகின்றனர். இவர்களுடைய துன்பங்களைப் போக்க ஒரு மார்க்கமும் தேடாமல் இருக் கின்றனர்.
விவசாயிகளோ, அகவிலைக் குறைவினாலும், வரிச் சுமையினாலும், கடன் சுமை தாங்கமாட்டாமல் நாளுக்கு நாள் பாப்பராகிக் கொண்டே வரு கின்றனர். இவர்கள் துன்பத்தைப் போக்க ஒரு மார்க்கமும் இல்லை.ஆனால், “சிக்கனம்” “சிக்கனம்” என்பதைப் பற்றிய பேச்சு மாத்திரம் பலமாக இருந்து வருகிறது. இந்த சிக்கனப் பேச்சினால் யாருக்கும் நன்மை இல்லை.சிக்கனம் என்ற பெயரினால், பத்துப் பன்னிரண்டு, இருபது முப்பது சம்பளம் வாங்கும்
குடி அரசு - 1922 0) 158
கீழ் தர வேலைக்காரர்களுக்குக் கஷ்டமும், ஆபத்தும் ஏற்பட்டதே ஒழிய வேறு ஒரு நன்மையும் இல்லை. ஆயிரக்கணக்காக சம்பளம் வாங்குபவர்கள், நூற்றுக்குப் பத்து வீதம், பதினைந்து வீதம் குறைத்துக் கொண்டார்கள் என்று பெருமையாகப் பேசப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான சம்பளக்காரர்.
களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.
உண்மையிலேயே சிக்கனம் செய்வதனால் நன்மை யேற்பட வேண்டு மானால், ஆயிரக்கணக்கான சம்பளம் வாங்கும் உத்தியோகஸ்தர் களின் தொகையைக் குறைத்து ஏராளமான சம்பளத்தையும் குறைத்து, விவசாயி களின் வரிச்சுமையைக் குறைத்திருக்க வேண்டும். இதற்கு யாரும் கவலை எடுத்துக் கொண்டார்கள் என்று கூறமுடியாது.
அடுத்தபடியாக தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றியும் யாரும் கவலைப் படவே இல்லை. சிக்கனத்தின் பெயரால், ரயில்வேயிலும் மற்றும் தொழிற்சாலைகளிலும், சொற்ப கூலி பெறும் தொழிலாளர்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்காக சம்பளம் வாங்கும் உயர்ந்த உத்தியோக பதவிகளில் யாதொரு சிக்கனமும் நுழைவதில்லை.
இந்தப் பரிதாபகரமான நிலையைக் கவனித்து ஏழைத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்ய நமது சட்டசபைப் பிரதிநிதிகள் யாதொரு முயற்சியும் எடுத்துக் கொள்ளக் காணோம்.
இவ்வாறு நமக்கு தற்போது தேவையாயுள்ள முக்கியமான காரியங் களின் மேல் கவனமில்லாமல், சுயராஜியம் என்று ஆர்ப்பாட்டம் பண்ணு வதும், அரசாங்கத்தாரின் தவறுகளையே சதா எடுத்துக் காட்டி கொண்டிருப் பதுமாகிய காரியங்களையே எப்பொழுதும் சட்டசபையில் செய்து கொண்டி ருப்பதனால் நமக்கு என்ன நன்மை உண்டாகப் போகின்றது?
தற்போது நமது நாட்டில், வியாபார மந்தமும், பொருளாதார நெருக்கடி
யும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஏற்படுவதற்குக் காங்கிரசால் செய்யப்
படும் சட்டமறுப்பும் ஒரு முக்கிய காரணம் என்பதை இந்த சட்டசபை மெம்பர்.
கள் உணராதவர்கள் அல்லர். ஆயினும், அவர்கள் காங்கிரசின் செயலைக் கண்டித்துப் பேச முன்வருவதே இல்லை. காங்கிரஸ்காரர்கள் போல் அரசாங் கத்தாரை மாத்திரம் கண்டிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வரு கின்றனர். இது எதற்காக? தேர்தல் பிரசாரம் பண்ணுவதற்காகவா? அல்லவா? என்று நினைத்துப் பாருங்கள்!
சட்டசபை ஸ்தாபனங்களில் கெட்டியாக உட்கார்ந்து கொண்டு உருப் படியான காரியங்கள் ஒன்றும் செய்யாமல் சட்டமறுப்பைப் பற்றியும், தடியடிகளைப் பற்றியும், சிறைத் தண்டனைப் பற்றியும், அபராதத்தைப் பற்றியும் வீண் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரகர்களே என்றுதான் நாம் கூறுகின்றோம். இவர்கள் உண்மையிலேயே
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சட்டமறுப்பிலும், காங்கிரசிலும், பற்றுடையவர்களாயிருந்தால் இவர்களும், காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு சட்டமறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போக வேண்டும். அப்படியில்லாமல் செளக்கியமாகச் சட்டசபை ஸ்தானங்களில் உட்கார்ந்து கொண்டு அரசாங்கத்தாரை மாத்திரம் கண்டித்துப் பேசிவிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
இவ்வாறு அரசாங்கத்தாரை கண்டிப்பதின் மூலம், தங்களைத் தேசீயவீரர்கள் என்று பாமர மக்கள் நினைக்கும்படி செய்து கொண்டு அதை அடுத்தத் தேர்தலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளத்தான் இக்காரியம் செய்கின்றார்கள் என்பதில் என்ன சந்தேகம்?
ஆகையால் இந்திய சட்டசபைத் தலைவர், வாக்காளர்களுக்கு எச்சரிக்கை செய்தது போல நாமும், நமது மாகாண வாக்காளர்களுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகின்றோம், சட்டசபையின் வேலையைக் கெடுத்
துக் கொண்டு தேசாபிமானியென்ற பட்டத்திற்காக வீண் ஆர்ப்பாட்டங்கள்
புரியும் பிரதிநிதிகளையெல்லாம் கவனித்துக் கொள்ளுமாறு வாக்காளர் களுக்குக் கூறுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 10.04.1932.
குடி அரசு - 1922 0) 160
இத்தகைய கோயில்கள் எண்?
தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வரகூர் என்னும் கிராமத்தில் உள்ள வெங்டேசப் பெருமாள் கோயிலில் பார்ப்பனரல்லாதார் சென்று தெரிசனம் பண்ணக்கூடாது என்பது பற்றி அவ்வூர் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ரல்லாதார்களுக்கும் நீண்ட காலமாக வழக்கு நடைபெற்றது. கடைசியில் சென்னை ஹைகோர்ட்டில், ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே முன்பும், ஜஸ்டிஸ் வாலர் முன்பும் விசாரணைக்கு வந்த போது இருவரும் வேறு வேறு அபிப்பிராயம் கொண்டனர்.
ஜஸ்டிஸ் கிருஷ்ணன் பண்டலே பார்ப்பனரல்லாதாருக்கும் தரிசனம். பண்ண உரிமையுண்டு என்று அபிப்பிராயப்பட்டார்; ஜஸ்டிஸ் வாலர். பார்ப்பனரல்லாதாருக்குத் தரிசனம் பண்ணும் உரிமையில்லை என்று அபிப்பிராயப்பட்டார்; ஆகையால் கடைசியாக ஜஸ்டிஸ் வாலஸ் அவர்கள் அவ்வழக்கை இரண்டாம் முறையாக விசாரித்து, பார்ப்பனரல்லாதார்க்குத் தரிசன உரிமை இல்லை என்று தீர்ப்புக் கூறினார்.
இத்தீர்ப்பைப் பற்றி நமக்கு ஒரு கவலையுமில்லை. பார்ப்பன ரல்லாதாருடைய தயவோ ஒத்தாசையோ இல்லாவிட்டால் எந்தக் கோயில்
களும் நிலைத்திருக்க முடியாது. சோற்றை வடித்து பொங்கல் புளியோத ரைகள் பண்ணி அவற்றைக் கல்லுப் பொம்மையின் முன்பு கொண்டு போய் காட்டியபின் பார்ப்பனர்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போகிற ஒரு காரியத்தைத் தவிர, மற்ற எல்லாக் காரியங்களையும் பார்ப்பனரல்லாதார்களே. செய்து வருகின்றார்கள். இத்தகைய ஒரு கோயிலுக்குள், பார்ப்பனரல்லாதார். போகக் கூடாது என்று தடுத்துக் கோர்ட்டுக்குப் போகும்படி செய்த பார்ப்பனர். களின் சுய நலத்தையும் அகங்காரத்தையும் உணருகின்ற எந்தப் பார்ப்பன
ரல்லாதாரும், இனி இது போன்ற கோயில்கள் விஷயத்தில் எந்த வகையிலும் ஒத்துழைக்க முன் வர மாட்டார்களென்றே நம்புகின்றோம்.
ஆகையால் உண்மையில், பார்ப்பனர்களின் சுயநலத்தையும், அகங் காரத்தையும் ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்ய வேண்டியது கோயில் களை பகிஷ்கரிக்க வேண்டிய வேலையேயாகும். தங்களுக்கு உரிமை
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
யில்லாத கோயில் சம்பந்தமான எந்த வேலைகளையும் செய்ய மறுத்து அவைகளைப் பார்ப்பனர்களே செய்து கொள்ளும்படி விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு கோயில்களைப் பகிஷ்கரிக்க ஆரம்பித்தால், கோயில்களே. அனேகமாக ஒழிந்து போய் விடும். நமது மக்களுக்குக் கோயில்களின் மேல் உள்ள மயக்கம் ஒழிந்தால் முக்கால்வாசி மூட நம்பிக்கைகள் ஒழிந்து போகு மென்பதில் ஐயமில்லை.
ஆகையால் இனியேனும், கோயில் பிரவேசத்திற்காகப் பாடுபடுகின்ற வர்கள், கோயில்களை ஒழிக்கப்பாடுபடுவார்களானால், அதனால் அதிக
நலனும், பொருளாதாரச் சிக்கனமும் ஏற்படுமென்பதில் ஐயமில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.04.1932.
குடி அரசு - 1922 0) 162
கவியும் பண்முதரும்
காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்தின் பேரில், காங்கிரஸ்காரர்கள் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கும் காலத்திலேயே பூரியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டையும் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அரசங்கத்தார் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ்காரர்கள் நடத்திக் கொண்டிருக்கும் போது காங்கிரஸ் மகாநாடு கூடினால் சட்ட மறுப்பு இயக்கத்தை இன்னும் பலப்படுத்துவதற்குக் காரணமாகும் என்று கூறி பூரி காங்கிரசைத் தடுத்து விட்டார்கள்.
இதன்பின் காங்கிரஸ் கமிட்டியினர் மகாநாடு கூட்டும் விஷயத்தில் கவலை கொள்ளுவதை விட்டுச் சட்டமறுப்பு இயக்கத்தையே நடத்தினர். இதன் பலனாகக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அங்கத்தினர் பெரும்பாலும் சிறை சென்றுவிட்டனர். இப்பொழுது வெளியிலிருப்பவர்கள் இரண்டொரு வரேயாவார்கள்.
இந்த நிலையில் இப்பொழுது காங்கிரசின் ஆக்டிங் தலைவராக
இருக்கும் திருமதி சரோஜினிதேவியார் காங்கிரசின் 47வது மகாநாட்டை டில்லியில் கூட்டத் தீர்மானித்து, அதற்குத் திரு. மாளவியா பண்டிதரைத் தலைமை வகிக்கும்படி கேட்டு, அவரும் ஒப்புக் கொண்டு, மற்றும் மகாநாட்டு உத்தியோகஸ்தர்களும் நியமிக்கப்பட்டுப் பத்திரிகைகளிலும் வெளியிடப் பட்டன.
இதற்கிடையில் அரசாங்கத்தாரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை
யில் “காங்கிரசை நடத்த முன் வருவோர், சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவான தீர்மானங்கள் ஒன்றும் காங்கிரஸ் கூட்டத்தில் கொண்டு வரப்பட மாட்டாதென்று உறுதி கூறினால், காங்கிரஸ் கூட்டத்திற்கு அரசாங்கத்தார் ஒரு தடையும் செய்ய மாட்டார்கள்” என்ற விஷயம் காணப்பட்டது. இதை திருமதி சரோஜினி தேவியாரும், திரு. மாளவியா பண்டிதரும் கவனித்துத் தானிருக்க வேண்டும்.
இந்த நிலையில், டில்லி மகாநாட்டுக்குக் காரியதரிசியாக நியமிக்கப் பட்டிருந்தவர் மகாநாடு கூடுவதற்கு வழக்கம்போல இட வசதியளிக்க
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வேண்டுமென டில்லி கமிஷனருக்கு எழுதியிருந்தார். கமிஷனர், கலெக்டர். மூலமாக, காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வருவதால் இடவசதி யளிக்க முடியாது எனக் கூறிவிட்டார்.
இவ்விஷயம் வெளியானவுடன் நமது நாட்டுப் பத்திரிகைகள் எல்லாம், அரசாங்கத்தாரின் செய்கையைக் கண்டிக்க ஆரம்பித்துவிட்டன. ஜனங் களிடையில் கொஞ்சங் கொஞ்சமாக மறந்து போய்க் கொண்டிருந்த காங்கிரஸ். பெயரை மறுபடியும் ஞாபகப்படுத்தப்பட்டது.
டில்லியில் கூடுவதாக ஏற்பாடு செய்த காங்கிரசைப் பற்றி பலர் பலவாறாக அபிப்பிராயங் கூறினர்.திரு.மாளவியா பண்டிதர், மிதவாத நோக்க. முடையவராகையாலும், திருமதி. சரோஜினி தேவியாரும் தென்னாப்பிரிக்கா விலிருந்து வந்த பின் சட்ட மறுப்புக்கான காரியத்தில் இறங்கிச் சிறைசெல்லா மலிருப்பதினாலும், இருவரும் அரசாங்கத்திற்கும், காங்கிரசிற்கும் சமரசம் உண்டாகும்படியான மார்க்கத்திற்காக ஏற்பாடு செய்வார்களென்று சிலர். கூறினார்கள். சிலர் அமிதவாதிகளிடமுள்ள காங்கிரசை மிதவாதிகளும் புத்தி சாலிகளான இளைஞர்களும் கைப்பற்றிக் கொள்ளப் போகிறார்களென்று கூறினார்கள், இவ்வாறு பலர் அபிப்பிராயம் கொண்டது வெறும் யூகமே ஒழிய வேறு இதற்குத் தக்க காரணம் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆனால் எதற்காக திருமதி. சரோஜினி தேவியாரும், திரு. மாளவியா பண்டிதரும் மகாநாடு கூட்ட முன் வந்தார்களென்றால், இருக்கின்ற கிளர்ச்சி
கள் போதாவென்று இன்னுஞ் சில கிளர்ச்சிகளை உண்டாக்கித் தேசத்தில் குழப்பத்தை உண்டு பண்ணும் பொருட்டாகவே என்று தான் நாம் கூறுவோம்.
உண்மையில் திருமதி, சரோஜினி தேவியாரும், திரு. மாளவியா பண்டிதரும் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்த முயற்சி செய்யும் நோக்க முடை யவராயிருந்தால், அல்லது அரசாங்கத்தாருக்கும், காங்கிரசுக்கும் சமாதானம். செய்து வைப்பவர்களாயிருந்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி காங்கிரஸ்காரர்களை வேண்டிக் கொண்டு மகாநாடு கூட்டும் விஷயத்தில் பிரவேசித்திருக்கலாம். இவர்கள் இவ்வாறு ஒன்றும் செய்ய முன்வரவில்லை அல்லது அவர்களாவது தனித்த முறையிலாவது சட்ட மறுப்பு இயக்கத்தைக் கண்டிக்கின்றவர்களாகவுமில்லை. இந்த நிலையில் இவர்களால் நடை பெறக்கூடிய ஒரு மகாநாடு சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கத்தோடு கூடுகிறது என்று தான் யாரும் கருதக் கூடுமே யொழிய வேறு வகையாக ஒரு நாளும் கருதவே முடியாது.
அன்றியும், இவ்விருவருடைய தனித்தனி நடவடிக்கைகளை யெடுத்துக் கொண்டு பார்த்தால், ஒருவரையாவது நம்பி ஒரு காரியத்தையும் செய்ய முடியாது.
குடி அரசு - 1922 0) 164
முதலில் திருமதி. சரோஜினி தேவியாரை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு கவி என்பது நாடறிந்த விஷயம். எப்பொழுதுமே கவிகளும், மகாத்மாக்களும், பைத்தியக்காரர்களும், பாலர்களும், பக்தர்களும், பேதையர். களும் ஒரு தன்மையானவர்கள். இவர்கள் எப்பொழுதும் உறுதியாக இருக்க. மாட்டார்கள். இவர்களுக்குப் பொறுப்பு என்பதும் இருக்காது. இவர்களை:
நம்பி ஒரு காரியமும் செய்ய முடியாது என்பது உலகறிந்த விஷயமாகும். ஆகவே கவியரசியாகிய திருமதி. சரோஜினி யாரைத் தேசத்தின் அமைதி யைப் பாதுகாப்பவர் என்று எப்படி நம்ப முடியும்.
இரண்டாவது திரு.மாளவியா பண்டிதரை எடுத்துக் கொள்ளுவோம். இவர்மிதவாதி என்பது உண்மையே. ஆனால் வருணாச்சிரம வாதி என்பதை
யாரும் மறுக்க முடியாது. சென்ற வட்ட மேஜை மகாநாட்டில், வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக திரு. காந்தியார் பிடிவாதமாக இருந்து குழப்பம் விளைத்ததற்கு உறுதியான பக்கபலமாக இருந்தவர் திரு. மாளவியா பண்டிதரேஎன்பதையாரும் அறிவார்கள். இத்தகைய பண்டிதரைத் தலைமை
யாகக் கொள்ளும் காங்கிரஸ், முழு வருணாச்சிரம தரும ஸ்தாபனமாகவும், இந்து முஸ்லீம் கலகத்தை அதிகப்படுத்துகின்ற ஸ்தாபனமாகவும், தாழ்த்தப் பட்டார் உயர்த்திக் கொண்டிருப்பவர் சண்டையைப் பெருக்குகின்ற ஸ்தாபன
மாகவும் மாறக் கூடுமே யொழிய வேறு எந்த வகையிலும் சீர்திருத்தமடைய முடியாதென்பதுநிச்சயம்.
ஆகவே இவ்விருவரும், திடீரென காங்கிரஸ் கூட்ட முற்பட்டபோது, “சட்ட மறுப்பு இயக்கம் நடைமுறையில் இருக்கும்போது, காங்கிரஸ் மகா நாட்டை நடத்த அரசாங்கத்தார் இடங் கொடுக்க மாட்டார்கள்” என்னும் விஷயம் அவர்கள் புத்தியில் படாமல் இருந்திருக்க முடியாது. அவர்கள் சொந்த புத்தியில் படாமலிருந்தாலும், அரசாங்கத்தார் வெளியிட்ட அறிக்கை: யையாவது நிச்சயமாகப் பார்த்திருக்கலாம். இருந்தும் சட்ட மறுப்புச் சம்பந்த மாக ஒன்றும் பேசாமல் மகாநாடு கூட்டுவதாகத் தடபுடல் செய்தது வீண்: கிளர்ச்சிக்கேயாகும். இதன்மூலம் அரசாங்கத்தை ஆதரிக்கின்றவர்கள். மனத்திலும் அரசாங்கத்தைப் பற்றிய வெறுப்பை உண்டாக்கிச் சட்ட மறுப் பைப் பலப்படுத்துவதற்குச் செய்த தந்திரமேயாகும்.
அன்றியும், காங்கிரசையும், சட்ட மறுப்பையும் ஞாயமானதென்றும், அரசாங்கத்தாரின் செய்கைகள் அநியாயமானவைகளென்றும் சொல்லிக் கொண்டும், தம்மையும் காங்கிரஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டும், ஆனால் இன்னும் சட்டமறுப்புச் செய்து சிறைக்கு மாத்திரம் போகாமலிருக்கின்ற திருமதி. சரோஜினி தேவியாரும், திருமாளவியா பண்டிதரும் காங்கிரசுக்காக மிகவும் பாடுபடுகின்றார்கள் என்று புகழ் பெறுவதற்காகவே டில்லியில் மகாநாடு கூட்ட முயற்சித்தார்களென்றும் கூறலாம்.
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
உண்மையில் இவர்கள் சட்டமறுப்பை ஆதரிக்கின்றவர்களா யிருந்
தால் இப்பொழுது சிறைக்குள் வாசஞ்செய்து கொண்டிருக்க வேண்டும். அல்லது காங்கிரசுக்கும், அரசாங்கத்திற்கும் சமரசம் பண்ணி நாட்டில் அமைதியை உண்டாக்கும் நோக்கமுடையவர்களாயிருந்தால் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்துவதற்கு வழி தேடியிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல், அரசாங்கத்தின் எண்ணந்தெரிந்தும் மகாநாடு கூட்ட முற்பட்டது எதற்காக என்றுதான் கேட்கின்றோம்.
ஆகவே அரசாங்கத்தார் தேசமிருக்கும் தற்போதைய குழப்பமான நிலையில், நிபந்தனை கூறாமல் காங்கிரஸ் மகாநாடு கூடத் தொடங்கியதைத் தடுத்த விஷயத்தை நியாய புத்தி உடையவர்கள் எவரும் அக்கிரமமான தென்று கூறமுடியாது, தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க முயற்சிப்பது போல் ஒரு நிபந்தனையுமில்லாமல் காங்கிரசை நடத்தும்படி விட்டுவிட்டுப் பிறகு, அவர்கள் சட்டமறுப்புக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றிய
பின் இன்னும் பலமான அடக்குமுறைகளைக் கையாளுவதன் மூலம், தேசத்
தில் அதிகமான குழப்பம் உண்டாவதை இப்பொழுதே தடுக்க முன்வந்ததைப் புத்திசாலித்தனமான காரியமென்றே நாம் அபிப்பிராயப் படுகிறோம்.
இது நிற்க, இனி டில்லி காங்கிரசைப் பற்றி இன்னும் சில விஷயங் களைக் கவனிப்போம். டில்லி காங்கிரசுக்கு அரசாங்கத்தார் ஆதரவளிக்க மறுத்தபின்னர் திருமதி. சரோஜினியார் வெளியிட்ட அபிப்பிராயத்தில் “சர்க்கார் காங்கிரஸ் கூட்டத்திற்குத் தடை செய்தது, அதைப் பாராட்டியது போலவேயாகும். ஆகையால் எப்படியும் காங்கிரசை நடத்தியே தீருவேன்” என்று கூறியிருக்கிறார். திரு. மாளவியா பண்டிதரும் “காங்கிரசைப் பொருத்த
மட்டில் வருடாந்தரக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு நடந்து கொண்டு தானிருக்கிறது. குறிப்பிட்ட தேதியில் டில்லியில் கூட்டம் நடக்கலாம்” என்று ஒரு வகையாகச் சந்தேகமான அபிப்பிராயத்தை வெளியிட்டார். இதன்பின் டில்லி காங்கிரஸ் காரியதரிசியாகிய திரு. சாஹ்னி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அரசாங்கத்தார் டில்லி காங்கிரசுக்கு ஆதரவளிக்க மறுத்தா
லும், வருஷாந்தரக் கூட்டத்தைக் கூட்ட வரவேற்புக் கழகத்தினர் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தானிருக்கின்றனர். இம்மகாநாட்டிற்கு வரும் பிரதிநிதிகள் இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை ஏற்கத் தயாராயிருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் அரசாங்கத்தாரின் அபிப்பிராயம் மாறிவிட்டதாகத் தெரிய வில்லை. காங்கிரஸ் கூட்டத்தை நடக்கவொட்டாமல் செய்யவேண்டும் என்னும் நோக்கம், அரசாங்கத்தாரிடம் உறுதியாக இருப்பதாகத் தெரிகின்றது. இந்தநிலையில் கூட்டப்படும் காங்கிரசினால் குழப்பமும், கலகமும் ஏற்படப் போவதைத் தவிர வேறு என்ன நன்மை ஏற்படப்போகிறது?
குடி அரசு - 1922 0) 166
அன்றியும் டில்லி காங்கிரஸ் விஷயத்தில், தற்சமயம் காங்கிரசில் உள்ள அதிதீவிரவாதிகளுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதைக் கூட்டுவதில் விருப்பமில்லையென்றும் சொல்லப்படுகிறது. பாஞ்சாலத்தி லுள்ள தீவிர காங்கிரஸ்வாதிகள் டில்லி மகாநாட்டை ஆதரிக்கவில்லை யென்றும் தெரிகிறது.
ஆகவே, காங்கிரஸ்காரர்களின் ஆதரவில்லாத நிலையிலும், அரசாங் கத்தாரின் எதிர்ப்புக்கிடையிலும், கூட்டப்படுவதாக இருக்கும் இக்கூட்டம் காங்கிரஸ் கூட்டமாகாது.
காங்கிரஸ்காரர்களைத் தவிர மற்றவர்களிடம் திருமதி. சரோஜினி யாருக்கும், திரு. மாளவியா பண்டிதருக்கும் செல்வாக்கில்லாமையால், இது தேசமக்களின் கூட்டமும் ஆகாது. வீணாகக் கிளர்ச்சியையும், கலகத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குகின்ற ஒரு போலிக்கூட்டமே யாகுமென்றுதான்
நாம் கூறுகின்றோம்.
ஆகையால் இக்கூட்டத்தையோ, இக்கூட்டம் சம்பந்தமான கிளர்ச்சி யையோ கண்டு யாரும் ஏமாந்து போக வேண்டாமென எச்சரிக்கை செய் கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 17.04.1932
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
நண்டும் .
பால்ய விவாகத் தடைச்சட்டமாகிய சாரதா சட்டம் தோன்றிய நாள்
முதல் அதற்கு உண்டான ஆபத்துக்கள் அளவற்றவை. வைதீகர்கள் அதை ஒழிப்பதற்குச் சூழ்ச்சிகள் பல செய்து கொண்டு வந்தார்கள். காங்கிரஸ் காரர்களின் சட்ட மறுப்பு ஒருபுறம், அச்சட்டத்தை அமல்நடத்தாமல் தடை செய்து கொண்டு வந்தது. அரசாங்கத்தாரின் அலட்சியப் புத்தி ஒருபுறம் பெருந்தடையாக இருந்து வந்தது, ஆனால் இப்பொழுது அச்சட்டமே
செல்லத்தக்கது அல்ல என்பதற்குத் தகுந்த ஆதாரம் அகப்பட்டு விட்டது.
திரு.வசந்த குமாரதாஸ் என்பவர்,14 வயதுக்கு உட்பட்ட தனது மகளை மணஞ்செய்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்ததைத் தடை செய்திருந்தும், தடை யுத்தரவை மீறி விவாகம் நடத்தப்பட்டது. அதன் பின் ஜில்லாக் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டு, பேக்கர் கஞ்ச் ஜில்லா நீதிபதி, திரு.வசந்த குமாரதாசை சிவில் ஜெயிலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். இவ் வுத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கல்கத்தா ஹைக்கோர்ட்டுக்கு விண்ணப்பித்து “1780, 1797 ஆகிய வருஷங்களில் பார்லிமெண்டில் நிறைவேறிய கிழக்கிந்திய கம்பெனிச் சட்டங்கள் இன்னும் ரத்தாகாம லிருக்கும்போது ஒரு இந்து தனது மகளை விவாகம் பண்ணிக் கொடுப்பதற்கு உள்ள உரிமையையும், அதிகாரத்தையும் மறுக்க முடியாது” என்று விவாதிக்கப்பட்டது. ஹைக்கோர்ட்டு நீதிபதிகளும் இதை ஒப்புக் கொண்டு ஜில்லா நீதிபதியின் உத்தரவைரத்து செய்தனர்.
இவ்வழக்கினால் சாரதா சட்டம் பயனற்றதெனத் தெரிந்துவிட்டது.
இவ்வழக்கில் எடுத்துக் காட்டப்பட்ட 1780ஆம் வருஷத்திய
கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 18வது விதியில் “சுதேசிகளுடைய பழக்க வழக்கங்களுக்குச் சாதகமளிக்கும் பொருட்டு இந்து, முகம்மதிய சட்டங்களின். படியும், அக்குடும்பங்களின் வழக்கப்படியும் குடும்பத்தின் தந்தைக்கும்,
முதலாளிக்கும் உள்ள உரிமையில் தலையிடுவதில்லை என்று பார்லிமென்ட் தீர்மானிக்கிறது. இவர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் செய்து கொள்ளும்
காரியங்கள் இங்கிலாந்து சட்டங்களுக்கு விரோதமாக இருந்தாலும் அவை குற்றமாகா”” என்றும்,
குடி அரசு - 1922 0) 168
1797வது கிழக்கிந்திய கம்பெனிச் சட்டத்தில் 12வது பிரிவில் “சுதேசி களின் சமூகப்பழக்க வழக்கங்களுக்குப் பாதகம் ஏற்படாதிருக்கும் பொருட்டு
குடும்ப சம்பந்தமாக இந்து, முஸ்லீம் தந்தைகளுக்கும், முதலாளிகளுக்கும் உள்ள உரிமையில் எத்தகைய கோர்ட்டு நடவடிக்கையும் தலையிடக்கூடாது என இச்சட்டம் கட்டளையிடுகிறது” என்றும் இருக்கின்றன.
இந்தப் பழைய துருப்பிடித்த சட்டங்கள் தான் இப்பொழுது சாரதா
சட்டத்திற்கு ஆபத்தை விளைவித்ததாகும்.
இனி சாரதா சட்டம் பயன்பட வேண்டுமானால், பார்லிமெண்டின்
இந்தப் பழய சட்டங்கள் ரத்தாக வேண்டும். அல்லது சாரதா சட்டத்தில், பழய சட்டங்களில் உள்ள இவ்விதிகள் செல்லத்தக்கவைகள் அல்லவெனக் குறிப்பிடப்படவேண்டும். சாரதா சட்டத்தை நிறைவேற்றிய ஆரம்ப காலத் திலேயே இதைக் கவனித்திருந்தால் இப்பொழுது இத்தகைய சங்கடம் ஏற்பட இடமிருந்திருக்காது.
இவ்விரண்டு காரியங்களைச் செய்யும் விஷயத்திலும் பல சங்கடங்
கள் ஏற்படக்கூடும். நமது நாட்டு வைதீகர்களும், அவர்களுக்குச் சாதகமாக இருக்கும் அரசியல் கிளர்ச்சிக்காரர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்.
ஒரு சமயம், இந்திய அரசாங்கத்தாரின் முயற்சியினால், பார்லி மெண்டில் பழய சட்டங்கள் முழுவதையுமோ, அல்லது அவற்றில் உள்ள மேற்காட்டிய பிரிவுகளையோ ரத்துச்செய்வதற்கு ஏற்பாடாகுமானால், நமது வைதீகர்கள், அரசாங்கம், பழைய வாக்குறுதிகளை மீறுகிறதென்றும், மதத்தில் தலையிடுகின்றதென்றும் கூறி அரசாங்கத்தின் மேல் பழி தூற்ற ஆரம்பித்து விடுவார்கள். இதை வருணாச்சிரமதரும அரசியல் கிளர்ச்சிக் காரர்களும், அரசாங்கத்தைத் தூற்றுவதற்கு ஒரு ஆதாரமாக வைத்துக் கொள்ளுவார்கள். ஆகையால், இச்சமயத்தில், அரசாங்கத்தார், மேற்கண்ட பழைய சட்டங்க ளையோ அல்லது அவற்றில் உள்ள மேற்காட்டிய விதிகளையோ ரத்துச் செய்ய முன்வரமாட்டார்களென்றே நினைக்கின்றோம்.
இனி சாரதா சட்டத்தில் டே விதிகள் செல்லத்தக்கவையல்ல வென்று விதி ஏற்படுத்தவும் தற்சமயமுள்ள சட்டசபையில் இயலாதென்பது நிச்சயம். சென்ற கூட்டங்களில் விதவைகளுக்குச் சொத்துரிமையளிக்கும் மசோதாவும், விவாக விடுதலை மசோதாவும் அடைந்த கதியைப் பார்த்தால் விளங்கும்.
இனிச் சட்ட நிபுணர்களின் அபிப்பிராயத்தைப் பார்த்தாலோ அவர். களும் வேறு வேறு அபிப்பிராயப்படுகிறார்கள். இந்தியா சட்டசபைக்கு இத்தகைய சட்டஞ் செய்யஉரிமை உண்டு என்று கூறுவோர் சிலர். இத்தகைய
சட்டஞ் செய்ய உரிமை இல்லையென்று சொல்லுவோர் சிலர். ஆகவே இந்த வகையிலும் முரண்பட்ட அபிப்பிராயமே இருந்து வருகிறது.
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஆனால் எந்தச் சங்கடத்தையும் அரசாங்கம் கண் வைத்தால் நீக்கி விடலாம். இனி அரசாங்கம் இவ்விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது தான் நமது கேள்வி.
உண்மையிலேயே நமது இந்திய அரசாங்கம், இந்தியர்களின் முன்னேற்றத்தில் நோக்கமுள்ளதாயிருந்தால் சாரதா சட்டத்தைப் பயபனுடை யதாகச் செய்ய வேண்டும். அல்லது மேற்கண்ட பழைய பார்லிமெண்ட் சட்டமாகிய மனுஸ்மிருதிகளை ரத்துச் செய்ய முயலவேண்டும். இரண்டு. மல்லாமல் ஏனாதானாவென்று இருக்குமானால், சீர்திருத்தக்காரர்கள். வெள்ளைக்கார அரசாங்கத்தின் மேல் வைத்திருக்கும் சிறிது நம்பிக்கையும்
ஒழிந்து போகும்.
திரு. ஹரிவிலாச சாரதா அவர்களும், சளைக்காமல், இதற்கான முயற்சியைச் செய்வாரென்றே எதிர் பார்க்கிறோம். நாமும் நாடெங்கும் கூட்டங்கள் கூட்டிப் பழைய சட்டங்களை ரத்துச் செய்ய முயலும்படியும்,
சாரதா சட்டத்தைத் திருத்தும் படியும், அரசாங்கத்தாரை வற்புறுத்துவதாகத் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
இளங் குழந்தைகளை மணம் புரிந்து கொடுப்பது குற்றம் என்று அறிவதற்குப் புத்தியில்லாத வைதீகர்களுக்குச் சட்டத்தினால் அறிவு புகட்ட வேண்டிய நிலையில் நமது நாடு இருக்கின்றது. இந்தப் புத்திசாலிகள் பூரண சுயேச்சை கேட்கின்றார்கள் என்று நம்மைப் பிறர் ஏளனம் பண்ணுவதில் என்ன தவறு இருக்கின்றது என்றே நாமும் கேட்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 17.04.1932
குடி அரசு - 1922 0) 170
ஐக்கிய திட்டத்தின் அணை்கோலம்
மதவாதிகள் என்று இருப்பவர்கள் ஏதேனும் ஒரு “கடவுள்” என்பதன்
பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றுவது எவ்வாறு உலக இயல்பாக ஆகிவிட்டதோ, அவ்வாறே அரசியல்வாதிகளாக இருக்கின்றவர்:
கள் மிதவாதிகளானாலும் சரி, அமிதவாதிகளானலும் சரி, மற்றும் எந்த வாதி பிரதிவாதிகளானாலும் சரி எல்லோரும் “சுயராஜ்யம்” என்று சொல்லிப் பாமர: மக்களை ஏமாற்றுவது சகஜமாக இருந்து வருகிறது. இதன் உண்மையை அறிவதற்கு நமது நாட்டின் தற்கால அரசியல் நிலைமையைக் கவனித்துப் பார்ப்பது ஒன்றே போதுமானதாகும்.
நமது நாட்டில், இப்பொழுது உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் ஐக்கிய ஆட்சி என்பதைப் பற்றியே எங்கும் பேசிக் கொண்டு வருகிறார்கள்.
இந்தியாவுக்கு எத்தகைய சீர்திருத்தம் ஏற்படுத்துவது என்பதைப் பற்றி யோசனை செய்வதற்காகக் கூட்டப்பட்ட வட்டமேசை மாநாடுகளின் பயனால் உண்டான வார்த்தையே இந்த “ஐக்கிய ஆட்சி” என்பதாகும்.
காங்கிரசின் சர்வாதிகாரியான திரு. காந்தியுள்பட மற்ற எல்லா அரசியல் கட்சிக்காரர்களும், இந்தியாவுக்கு “ஐக்கிய ஆட்சித் திட்டம்” ஏற்படுத்துவதை ஒப்புகொண்டு விட்டனர். ஆனால் இதை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதைப் பற்றித்தான் இப்போது ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது.
இந்த ஐக்கிய ஆட்சி முறையை நமது நாட்டில் சரியான முறையில் அமைப்பதற்கு எவ்வளவு இடையூறுகள் இருக்கின்றன என்பதையும், அந்த இடையூறுகளுக்குக் காரணங்கள் என்ன என்பதையும் ஆராய்ந்துப் பார்ப்பவர்களுக்கு, ஐக்கிய ஆட்சி அமைப்பில் உள்ள கஷ்டமும், சிரமமும் விளங்காமற் போகாது.ஆகையால், தற்கால நிலைமையில், ஐக்கிய ஆட்சித் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு முடியாமலிருக்கும் சங்கடங்களைப் பற்றியும், ஏற்படுத்தினாலும், அவ்வாட்சியை எல்லா மக்களும் சுகமடையும்படி நடத்த முடியாது என்பதற்குள்ள காரணங்களையும் ஆராய்வோம்.
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மாகாணங்களும், சுதேச அரசாங்கங்களும் சேர்ந்து இருக்கும் ஆட்சியே ஐக்கிய ஆட்சியாகும். மாகாணங்களின், பிரதிநிதிகளும், சுதேசி சமஸ்தானங்களின் பிரதிநிதிகளும் கூடிய ஒரு மத்திய சபைக்கே ஐக்கிய அரசாங்க சபை என்று பெயர்.
இந்த ஐக்கிய மத்திய சபையின் அதிகாரங்கள் எப்படி இருக்க வேண்டும், அதன் பிரதிநிதிகள் யார் யாராக இருக்க வேண்டும், எந்தெந்த வழிகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் விஷயமும், மாகாண சட்டசபைகளுக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும்... அவைகளின் பிரதிநிதிகள் யார் யாராக இருக்க வேண்டும், அவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்னும் விஷயமும் சமஸ் தானங்களின் நிலைமைகள் எப்படி இருக்க வேண்டும் என்னும் விஷயமும் தீர்மானிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய ஆட்சியை ஸ்தாபிக்க முடியும். இவைகளே ஐக்கிய ஆட்சிக்கு அடிகோல வேண்டிய அடிப்படையான வேலைகள்.
ஆனால் இந்த விஷயத்தில் நமது இந்திய அரசியல்வாதிகளிடத்தில் எந்த விதமான ஏகோபித்த அபிப்பிராயமும் இது வரையிலும் உண்டாக வில்லை.மத சம்பந்தமான காரணங்களாலும், வகுப்பு உணர்ச்சி சம்பந்தமான காரணங்களாலும், ஒவ்வொரு வகுப்பினரும், கட்சியினரும், மதத்தினரும், சட்டசபைப் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக ஒற்றுமையடைய முடியாத வேறு வேறு அபிப்பிராயங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
உதாரணமாக, முதலில் சமஸ்தான மன்னர்களை எடுத்துக்கொள்ளு வோம். சமஸ்தான மன்னர்கள் ஐக்கிய ஆட்சியின் மத்திய சட்டசபையில்
தங்களுக்குப் பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 51வீதம் இருக்க வேண்டுமென்றும், தங்கள் சமஸ்தானத்தில், தங்களுக்குள்ள உரிமைகளில் ஐக்கிய சட்டசபை தலையிடக் கூடாதென்றும், கிழக்கிந்திய கம்பெனியாருக்கும், சமஸ்தானங் களுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை காப்பாற்றப் பட வேண்டுமென்றும். விரும்புகின்றனர்.
சமஸ்தான மன்னர்களின் இந்த அபிப்பிராயத்தை அனுசரித்து ஐக்கிய ஆட்சி ஏற்படுமானால் அந்த ஐக்கிய ஆட்சியினால் இந்தியாவுக்கு ஒரு நன்மையும் இல்லை என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. பிரிட்டிஷாருக்குப் பதிலாக சுதேச மன்னர்களே இந்திய ஏழை மக்களை ஆளுகின்றவர்களாக ஏற்பட்டுவிடுகின்றார்கள். ஆகையால் இந்த மாதிரியான ஐக்கிய ஆட்சியை இந்திய அரசியல்வாதிகள் எவரும் ஒப்பு கொள்ளவும் மாட்டார்கள். சுதேச மன்னர்களோ தங்கள் கோரிக்கையை அங்கீகரிக்காத ஐக்கிய ஆட்சியை ஒப்புக்கொண்டு அதில் சேருவார்களா என்பது சந்தேகம். ஆகவே, சுதேச
மன்னர்கள் சேராத ஒரு ஆட்சியைச் சரியான ஐக்கிய ஆட்சியென்று கூறவும் முடியாது. ஆகையால் ஐக்கிய ஆட்சி ஏற்படுவதற்குச் சமஸ்தானங்களின்
குடி அரசு - 1922 0) 172
பிரச்சினை ஒரு முக்கியமான சங்கடமாக இருந்து வருகிறது என்பதை
அறியலாம்.
இனி அடுத்தபடியாக வகுப்புப் பிரச்சினை எவ்வளவு பெரிய தடை யாக இருக்கிறது என்பதைச் சிறிது பார்ப்போம். வகுப்புப் போராட்டம் காரண மாகவே இந்தியா அடிமை நாடாக இருப்பதாகக் கூறுகின்ற அபிப்பிராயத் தைத் தவறானதென்று கூற முடியாது. இந்த வகுப்புப் பிரச்சினையில் ஒரு
முடிவுக்கும் வர முடியாத காரணத்தாலேயே வட்ட மேஜை கூட்டங்களால் ஒரு பயனும் கிடைக்காமல் போயிற்று என்பது நமக்குத் தெரியாத
செய்தியல்ல...
முதலில் முஸ்லீம்களுக்கும், இந்துக்களுக்கும் சட்டசபைப் பிரதிறிதித் துவ விஷயத்தில் ஒரு வகையான சமரச முடிவும் ஏற்படுவதற்கு வழி யில்லாமல் இருக்கின்றது.
முஸ்லீம்கள் ஐக்கிய சட்டசபையில் தங்களுக்கு மூன்றிலொருபங்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்றும், பாஞ்சாலம், சிந்து முதலிய மாகாண சட்டசபைகளில் தங்களுக்கு மெஜாரிட்டி ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்படவேண்டுமென்றும் விரும்புகின்றார்கள். இவர்களுடைய அபிப்பி ராயத்தை முஸ்லீம்களைத் தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் ஆதரிக்க வில்லை.ஆகையால் இந்த விஷயத்தில் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஏகோபித்த அபிப்பிராயம் உண்டாவதற்கு இடமில்லாமலிருக்கிறது.
அடுத்தபடியாகத் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினையும் இவ்வாறே ஒற்றுமையடைவதற்கு வழி இல்லாமல் இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்ட வர்களில் ஒரு சார்பார் தனித் தொகுதி வேண்டுமென்றும், ஒரு சார்பார். பொதுத் தொகுதி வேண்டுமென்றும் கேட்கின்றனர். இவ்வகையில் அவர்கள். தங்களுக்குள்ளேயே ஒற்றுமையான அபிப்பிராயமில்லாமல் சண்டை போட்டுக் கொண்டு எதிரிகளுக்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் தங்களுடைய ஜனத் தொகைக்கு தகுந்தவாறு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்றும் கேட்கின்றனர். இதை இந்து மகா சபையாரும் காங்கிரஸ்காரர்களும் ஆட்சேபித்து தாழ்த்தப்பட்டவர்களும் இந்துக்கள் தானென்றும் அவர்களை இந்துக்களினின்றும் தனியாகப் பிரிப்பது கூடாது என்றும் கூறி அவர்கள் கேட்கும் உரிமைகளை மறுக்கின்றனர்.
மற்றும் இந்தியக் கிறிஸ்துவர், சீக்கியர், ஆங்கிலோ இந்தியர், வெள்ளையர் முதலிய வகுப்பு சம்பந்தமான பிரச்சினைகளும் இருக்கின்றன. ஆனால் முஸ்லீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பிரச்சினைகள் சமரசமான
முடிவுக்கு வந்து விடுமானால் மற்றவைகளைப் பற்றிய கஷ்டமில்லை. சுலபமாகவே முடிவு செய்து விடலாம்.
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஆகவே ஐக்கிய ஆட்சித் திட்டத்தை முடிவு செய்ய வேண்டுமானால்
முதலில் சமஸ்தான பிரச்சினையும், வகுப்புப் பிரச்சினைகளும் முடிவடைய வேண்டியதே அவசியமானதாகும். இவை ஒரு சமரசமான முடிவுக்கு வருமானால் மற்ற வரவு செலவு சம்பந்தமாகவும், உத்தியோகம் சம்பந்த
மாகவும், வியாபார சம்பந்தமாகவும், அதிகார சம்பந்தமாகவும், வாக்குரிமை சம்பந்தமாகவும் முடிவு செய்வது ஒரு கஷ்டமான காரியமல்லவென்பதே நமது அபிப்பிராயமாகும்.
சமஸ்தானப் பிரச்சினை, வகுப்புப் பிரச்சினை ஆகிய இவ்விரண்டுள்
வகுப்புப் பிரச்சினை விஷயம் இந்திய அரசியல் வாதிகளையே பொறுத்த விஷயமாக இருக்கிறது. இவ்விஷயத்தில் இந்துக்களும், முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் மற்ற சிறுபான்மை வகுப்பினர்களும்
சேர்ந்து ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை...
இந்தியாவுக்கு நான்தான் பிரதிநிதி என்று பறையடித்துக் கொண்டி ருக்கும் காங்கிரஸ் ஸ்தாபனமும், அதன் சர்வாதிகாரியாகிய திரு. காந்தியும் இந்த வகுப்புப் பிரச்சினையைத் தீர்க்கச் சரியான நடவடிக்கை ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாகத் திரு. காந்தியோ, அல்லது காங்கிரசோ கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை தாழ்த் தப்பட்டவர்களும், முஸ்லீம்களும் மற்ற வகுப்பினர்களும் ஆதரிக்கவே யில்லை; அவர்களுக்குக் காங்கிரசினிடம் ஒரு சிறிதும் நம்பிக்கையேயில்லை..
ஆனால் திரு காந்தியார் “எங்களிடம் இந்தியாவை ஒப்பித்து விட்டால். அதன் பின் நாங்கள் வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளுவோம். பிரிட்டிஷார் இருப்பதனால்தான் வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்ய முடியவில்லை” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு வருகிறார். இது காங்கிரஸ்காரர்களாலும் திரு. காந்தியாலும் வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்ய முடியாது என்பதையே தெளிவாகக் காட்டுகிறதல்லவா? இப்பொழுது இதை முடிவு செய்வதற்கு ஆற்றல் இல்லாதவர்கள் சுயராஜ்யம் வந்த பின் எவ்வாறு சமரசமாக வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்யும் ஆற்றலுடைய வர்களாவார்கள்? என்று தான் கேட்கின்றோம்.
இந்த விஷயம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தெரியாததொன்றல்ல.. ஆயினும் இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டில் திரு. மெக்டனால்டு அவர்கள், “வகுப்புப் பிரச்சினையை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், உங்களால் முடியாவிட்டால் அரசாங்கமே முடிவு செய்யும்” என்று கூறிக் கொஞ்சம் காலமும் கொடுத்திருந்தார். கொடுத்திருந்தும் இவ்விஷயத்தில் இந்திய அரசியல்வாதிகளால் ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை.
ஆகவே இனி அரசாங்கத்தாரே வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு முடிவு செய்யப் போகின்றனர். முடிவும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இருக்குமா? என்பது சந்தேகம். குடி அரசு - 1932 0) 174
முஸ்லீம்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மற்ற சிறுபான்மை வகுப்பினர்களுக்கும் தனி உரிமைகள் அளிக்கும் எந்த முடிவையும் காங்
கிரஸ் கட்சியினரும், இந்து மகா சபையினரும் ஒப்புகொள்ளப் போவதில்லை. காங்கிரஸ், இந்து மகாசபை இவைகளின் கோரிக்கைகளை அனுசரித்ததாக அரசாங்கத்தாரின் முடிவு இருக்குமாயின் அதை மற்றவர்கள் ஒப்புக் கொள்ளப்போவதில்லை.
இரண்டாவது வட்ட மேஜை மகாநாடு நடந்தபோது முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்டவர்களும் மற்ற சிறுபான்மை வகுப்பினரும் சட்டசபை ஸ்தானங்கள் சம்பந்தமாகத் தங்களுக்குள் ஒரு ஏற்பாடு செய்து கொண்டனர். அதைக் காங்கிரஸ்காரர்களும், இந்து மகாசபைக்காரர்களும் தவிர மற்ற எல்லோரும் அனேகமாக ஆதரித்தனர். முதல் மந்திரி திரு. மெக்டனால்டு. அவர்களும் “வகுப்புப் பிரச்சினை. சம்பந்தமாக முடிவு செய்யப்படும்போது இவ்வொப்பந்தம் கவனிக்கப்படும்” என்று கூறியுள்ளார். அந்த ஒப்பந்தத்தைக் கூட முஸ்லீம்களில் பலர் ஒப்புக் கொள்ளவில்லை.
ஆகவே அரசாங்கத்தார் செய்யும் எந்த முடிவும் எல்லோருக்கும் திருப்தியளிக்கக் கூடாததாகவேயிருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை.
மேலே நாம் கூறிவந்த காரணங்களையெல்லாம் யோசிக்கும் போது ஐக்கிய ஆட்சிக்கே ஆபத்து வருமோ என்று சந்தேகப்படுவதற்கே இடமிருக்கிறதென்பதை யறியலாம்.
இந்தச் சங்கடங்களையெல்லாம் உத்தேசித்துச் சில அரசியல்வாதிகள். முதலில் மாகாண சுயாட்சி அளித்து விட்டு அதன்பின் ஐக்கிய ஆட்சித் திட்டத்திற்கான வேலையைச் சாவகாசமாகச் செய்து கொண்டு செல்லலாம். என்று கூறுகின்றனர். இது ஒரு நல்ல யோசனை என்றுதான் நாமும் அபிப் பிராயப்படுகிறோம்.
ஆனால் எந்த ஆட்சியானாலும் சரி, ஐக்கிய ஆட்சியாக இருக்கட்டும், அல்லது மாகாண சுயாட்சியாக இருக்கட்டும், அல்லது பூரண சுயேச்சை யாகவே இருக்கட்டும் அவற்றை நமது நாட்டில் உள்ள எல்லா வகுப்பினரும் சமாதானத்துடன் ஒப்புக் கொள்ளும்படியான முறையிலும், அத்தகைய ஆட்சியால் எல்லா வகுப்பினரும் செளகரியம் பெறும்படியான முறையிலும் அமைப்பது கஷ்டமான காரியம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நமது
நாட்டில், சுயநலம் விரும்புகின்ற சுதேச மன்னர்களும், சுதேச ராஜ்யங்களும், பல வேறுபட்ட மதங்களும், வகுப்புக்களும் இருக்கும் வரையிலும், இந்தக் கஷ்டம் தீருவதற்குக் கொஞ்சமும் வழியே இல்லை. ஆகையால் தான் நாம் வகுப்புச் சங்கடங்களும், மதத் தொல்லைகளும் ஒழிவதற்குப் பாடு படவேண்டுமென்றும், இவை யொழிந்தால் சுயராஜ்யம் தானே வருமென்றும் ஆதி முதல் சொல்லிக் கொண்டு வருகின்றோம். நமது நாட்டு அரசியல்
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கட்சிகள் இதைக் காதிற் போட்டுக் கொள்ளாமல் வீணே, ஐக்கிய ஆட்சி யென்றும், சுயராஜ்யமென்றும் கூச்சலிடுவதிலும், பிரச்சாரம் பண்ணுவதிலும், சட்ட மறுப்புச் செய்வதிலும் என்ன பயன் உள்ளது? என்று கேட்கின்றோம்.
ஒரு சமயம், ஐக்கிய ஆட்சியோ அல்லது மாகாண ஆட்சியோ ஏற்பட்
டாலும் அதனால் நாட்டின் ஏழை மக்களுக்கு ஒரு பயனுமில்லை என்பதை
யும், பணக்காரர்களும், ஜமீன்தாரர்களும், சுதேச ராஜாக்களும் ஆதிக்கம் பெற்று, ஏழைகளையும், தொழிலாளர்களையும், கொடுமைப்படுத்த வசதியும், சந்தர்ப்பமும் உடையதாகத்தான் அவ்வாட்சி இருக்குமென்பதையும் நாம் இப்பொழுது புதிதாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை என்றே கருது கின்றோம்.
ஆதலால் யாரும், அரசியல் கிளர்ச்சிக்காரர்களின் பசப்பு வார்த்தை களைக் கேட்டு ஏமாறாமல், நமது தேசமக்களைப் பிடித்து வாட்டிக் கொண்டி ருக்கின்ற சாதி, மத பேதங்களை ஒழித்துச் சமதர்மத்தை உண்டாக்கப் பாடுபடவேண்டியதே நமது கடமையாகுமென்பதையும், இதுவே தேச நன் மையை உண்மையாகவே கருதுகின்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முதல் வேலை என்பதையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 24.04.1932.
குடி அரசு - 1922 0) 176
வக்கீல்களிண் காதி ஆணவம்
மதுரையில் உள்ள பார்ப்பன வக்கீல்களும், கோயமுத்தூரில் உள்ள பார்ப்பன வக்கீல்களும் சென்னை அரசாங்கத்தின் சட்ட மந்திரி கனம் கிருஷ்ண நாயர் அவர்களுக்கு வரவேற்பு அளிப்பதில்லையென்று தங்கள். சங்கத்தில் தீர்மானம் செய்தனர். ஆனால் கோயமுத்தூரிலுள்ள பார்ப்பன ரல்லாத வக்கீல்கள், தங்கள் சங்கத்தில் இவ்வாறு தீர்மானம் நிறைவேறிய
தற்குப் பார்ப்பன வக்கீல்களின் ஜாதி ஆணவமே காரணமென்பதை அறிந்து, பார்ப்பனரல்லாத வக்கீல் சங்கம் ஒன்றை ஸ்தாபனம் பண்ணினார்கள். இவ்வாறு பார்ப்பனரல்லாத வக்கீல்கள் செய்த காரியத்தை நாம் வரவேற் கின்றோம்.
நமது மாகாண முழுவதிலும் உள்ள வக்கீல் சங்கங்கள் எல்லாவற்றிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் தான் மிகுந்து நிற்கின்றது. ஆகையால் மாகாணத்
தில் உள்ள எல்லா வக்கீல்களுமே பார்ப்பனரல்லாதார் நன்மைக்கென ஒரு தனிச் சங்கம் ஏற்படுத்திக் கொள்ளுவது மிகவும் நன்மையேயாகும். இனி கனம் கிருஷ்ணன் நாயருக்கு வரவேற்புஅளிப்பது கூடாது என்று தீர்மானித்த
வக்கீல்களின் மனப்போக்கையும் அவர்கள் செய்த காரியம் உண்மையில்
தேசாபிமானத்திற்கு அறிகுறியான காரியமா? அல்லது ஜாதி ஆணவத்திற்கு அடையாளமான காரியமா? என்பதைப் பற்றிக் கொஞ்சம் ஆலோசித்துப்
பார்ப்போம்.
அடக்குமுறைச் சட்டங்களை அமல் நடத்திவரும் அரசாங்கத்தில் சட்டமந்திரியாயிருக்கும் காரணத்தால் கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்கக்கூடாது என்பதே மேற்படி வக்கீல் சங்கங்களின் மனக்கருத்து என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அடக்குமுறையை அனுசரித்துவரும் அரசாங்கத்தின் ஆதிக்கத்திலுள்ள கோர்ட்டுகளில் ஆஜராகிப் பணம் சம்பாதிக்கும் இவர்கள் அந்த அரசாங்கத்தின் சட்ட மந்திரியை மாத்திரம் வெறுப்பதில் என்ன அர்த்த மிருக்கிறது? என்று யோசித்துப்பாருங்கள்.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
உண்மையில் இந்த வக்கீல் கூட்டத்தார்கள் அரசாங்கத்தின் செய் கையை ஆதரிக்காதவர்களாயிருந்தால், உடனே வக்கீல் தொழிலை விட்டு வெளியேறவேண்டும். இப்படி யில்லாமல் பணத்திற்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிபணிவதும், பணமில்லாமைக்கு ஒரு தீர்மானம் செய்வதும் எவ்வளவு மோசமான செய்கையாகும்?
மதுரை வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கோயமுத்தூர் வக்கீல் சங்கப் பார்ப்பனர்களும், கனம் கிருஷ்ண நாயருக்கு வரவேற்பு அளிக்க மறுத் தமைக்குக் காரணம் ஜாதி ஆணவத்தைத் தவிர வேறு அரசியல் காரணம் ஒன்றுமே இல்லையென்பதை சர்.சி. பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்ட மந்திரியாயிருந்த காலத்தில் நடந்த காரியங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்பவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.
சர். சி. பி.ரா.அய்யர் அவர்கள் சட்டமந்திரியாயிருந்த காலத்திலும்,
தற்போது நடப்பது போன்ற அடக்குமுறைகள் நடந்து கொண்டு தானிருந்தன. ஆனால், அந்தக் காலத்தில் அவர் சுற்றுப் பிரயாணம் செய்தபோது, எந்த வக்கீல் சங்கங்களும் அவரைப் பகிஷ்கரிக்கவில்லை. ஆங்காங்கே அவருக்குச் சிறப்பாகவே வரவேற்பு அளித்தனர். இதற்குக் காரணம், அவர் பார்ப்பனர் என்பதா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம். இப்பொழுதுள்ள
சர். கிருஷ்ண நாயரோ பார்ப்பனரல்லாதார். ஆகவே பார்ப்பனரல்லாத சட்ட மந்திரியை கெளரவிப்பது தங்கள் ஜாதிக் கொள்கைக்கு ஏற்றதாகாது என்ற அகங்கார புத்தியால்தான் பார்ப்பன வக்கீல்கள் வரவேற்பு அளிக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள் என்பதில் யாரும் சந்தேகப்பட வேண்டியதில்லை.
இத்தகைய மனப்பான்மையுள்ள வக்கீல்களும், மற்றும் ஜாதி அகங்காரம் கொண்ட வைதிகப் பார்ப்பனர்களும், இயற்கையிலேயே அகங்
காரம் பிடித்த பணக்காரர்களும்தான் கயராஜ்யத்திற்காகப் பாடுபடுகின்றார்கள். இவர்கள் கையில் தேசத்தின் அதிகாரப் பதவி கிடைத்துவிட்டால் பார்ப்பன ரல்லாத ஏழை மக்களின் கதி என்னாகு மென்பதைக் கவனிக்க வேண்டு
கிறோம்.
பார்ப்பனரல்லாத கட்சியினரையும், சுயமரியாதைக் கட்சியினரையும் வகுப்புத் துவேஷிகள் என்று புரளி பண்ணிக் கொண்டுத் திரியும் புத்தி சாலிகள், உண்மையில் வகுப்புத் துவேஷிகள் யார்? என்பதை இப்பொழு தாவது உணர்வார்களா? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 24.04.1932.
குடி அரசு - 1922 0) 178
சுமாமரியாதையும் காங்கிரச௬ம்
சுயமரியாதை
திரு. காந்தியால் 1921ஆம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழை யாமை இயக்கமானது அரசியல் கொடுமைகள் ஒழிப்பதோடு பார்ப்பனக் கொடுமைகளையும் ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில் சில கொள்கை:
கள் கொண்டிருந்தாலும் நம் போன்றவர்களின் ஆசைக்கும், அவசரத்திற்கும் தக்கபடி அது காணப்பட்டதை முன்னிட்டும், அவ்வியக்கத்தில் கலந்து மனப்பூர்வமாக நாலைந்து வருஷ காலம் உழைத்ததின் மூலமும் அது சமயம் பார்ப்பனர்களுடைய நெருங்கிய சம்பந்தம் இருக்க நேர்ந்ததன் மூலமும், அதன் பலாபலன்களை நாமும் ஒரு பங்கு அனுபவிக்க நேர்ந்ததின் மூலமும், அவ்வியக்கத்தின் போக்கைப் பார்ப்பனர்கள் எந்த வழியில் திருப்பி அதன் பலனை எப்படி அடைய முயற்சித்தார்கள், முயற்சிக்கின்றார்கள் என்பதை.
நன்றாய் அறிய நமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும் ஒரு வகையில் ஒன்றுபடுத்தி ஒரே வழியில் திருப்பி யோசிக்க வேண்டிய அவசிய முண்டாயிற்று.அங்கனம் யோசித்ததின் பலனாக நமக்குக் கிடைத்த பலன் என்னவென்றால் நமது மக்கள் அரசியல் விஷயமாய் கூச்சல் போடுவதும், முயற்சிகள் செய்வதும் சற்றும் நமக்குப் பயன்படுவதல்ல என்பதும், இவைகள் பார்ப்பனர்கள் நம் மீது செலுத்தி வரும் தங்கள் உயர்வை யும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளும் சூழ்ச்சிக்கேது உண்டாக் கப்பட்டிருக்கிறதே தவிர வேறல்லவென்றும், இன்றைய நிலையில் நமது மக்களுக்கு வேண்டியவைகளெல்லாம் பகுத்தறிவும் மானமுமே முக்கிய மானதென்றும், இன்றைய பார்ப்பன ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமும், அந்நிய ஆட்சியின் கொடுமைக்குக் காரணமும், நமது மக்களுக்குப் பகுத்தறிவும் தன் மதிப்பு உணர்ச்சியும் தடைப்படுத்தப் பட்டிருப்பதே. தானென்றும் கண்டு பிடித்தோம். இது மாத்திர மல்லாமல் நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், சமத்துவத்திற்கும் வேண்டிய வேலையெல்லாம்
செய்தும் பார்த்து விட்டோம். அதாவது பணம் கொடுத்தோம், சுக செளக்கியம் விட்டோம், சிறை சென்றோம் இன்னும் மனிதனால் உயிரைத் தவிர வேறு என்ன என்ன சாதனங்களை அலட்சிமாய் கருத முடியுமோ அவ்வளவும்
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
செய்தோம். இப்படிச் செய்ததால் ஒருவரல்ல, இருவரல்ல ஆயிரக்கணக்கான
பேர் லட்சக்கணக்கான ரூபாய்களையும் நட்டமடைந்து ஒரு தடவை மாத்திர மல்லாமல் பல தடவை சிறையும் சென்றோம்.
இவ்வளவு செய்ததின் பலனாகவும் கடுகளவு கூட முற்போக்கு அடைய முடியாமல் போனதையும் கண்கூடாகக் கண்டோம். அதன் பிறகே மற்ற நாட்டு விடுதலை நிகழ்ச்சிகளை ஆராயத் துடங்கியதில் அவற்றிலும் அநேகமாய் ஒவ்வொரு நாடும் நம்மைப் போலவே வேறு பல முயற்சிகளை: எவ்வளவோ செய்து பார்த்தும் முடியாமற் போன காலங்களில் எந்த முடிவைக் கண்டு பிடித்து அந்த முயற்சியிலேயே யிறங்கி கடைசியாக விடுதலைப் பெற்று சமத்துவம் அடைந்ததாகவும் கண்டோமோ அதையே பின்பற்ற நாமும் ஆசைப்பட்டோம்.
அன்றியும் பெருமையும் வலிமையும் கொண்ட நாடு என்று சொல்லப்பட்ட ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களின் உன்னத. நிலைமைக்கு அவற்றின் பகுத்தறிவு வளர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சி யுமே முக்கியமான தென்பதையும் கண்டோம். சமீப காலம் வரை கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த துருக்கி, சைனா, ஜப்பான் முதலிய தேசங்கள் வல்லரசுத் தன்மை பெற்றதற்கு அவற்றின் சுயமரியாதை உணர்ச்சி என்பதையும் கண்டோம். அதன் பிறகே நாமும் நமது தேசத்தின் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், பகுத்தறிவும் தன்மதிப்புமே பிரதானம் என்பதாகக் கருதி அதன் முயற்சிக்குச் சுயமரியாதை இயக்கம் எனப் பெயரிட்டோம். இவ் வியக்கம் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டிற்கோ, சமூகத்திற்கோ வென்பதாக. இல்லாமல் பொதுவாக தாழ்த்தப்பட்டும், இழிவு செய்யப்பட்டும், தன்மான உணர்ச்சி உண்டாகாமல் அழுத்தப்பட்டும், பகுத்தறிவு வளர்ச்சி செய்யாமல் தடைசெய்யப்பட்டும் இருக்கும் எல்லா மக்களுக்கும், கொடுங்கோன்மையில் அடக்கி ஆளப்பட்டு வரும் மக்களுக்கும் பயன்படும்படியான முறையில் அமைக்க விரும்பியே இதில் பிரவேசித்துள்ளோம். பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து மக்களெல்லோரும் சமத்துவம் என்கின்ற உண்மையான மனிதத் தன்மைக்குத் தாராளமாய் இடங்கொடுக்கின்ற ஒவ்வொருவருக்கும் இடமும் ஒதுக்கி வைக்கும் எண்ணங் கொண்டே இம்முயற்சிலீடுபட்டோம் என்றும், இம்முயற்சியானது மிகவும் கஷ்டமானதென்றும், அளவுக்கு மீறிய துன்பத் தையும் தொல்லைகளையும் விளைவிக்கக் கூடியதென்றும் நாம் நன்றாய் உணர்கின்றோமாயினும், இது வெற்றி பெற்றாலொழிய நமது சமூக மாத்திர: மல்ல, நமது நாடு மாத்திரமல்ல, உலக சமூகம் எல்லாவற்றிற்கும் உலக முழுமைக்கும் நிற்பயமான விடுதலையோ, சாத்தியமோ, ஓய்வோ இல்லை என்கின்ற முடிவினாலும், இம்முயற்சி இன்றைய பெரியோர் களெனப்படும். வயது சென்றவர்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் பெறமுடியாவிட்டா
லும் பெரும்பான்மையான பரிசுத்தத் தன்மையுடைய வாலிபர்களின் கூட்டுறவும் அனுதாபமும், ஆதரிப்பும் மலிந்து கிடப்பதாலும் துணிந்து இறங்கிவிட்டோம்; முடிவில் இதனுடைய வெற்றி தோல்வியைப் பற்றி நாம்
குடி அரசு - 1922 0) 180
அதிகமான கவலை எடுத்துக் கொள்ளாமல் இந்த முயற்சி சரியா, தப்பா என்பதைப் பற்றி மாத்திரம் தீர யோசித்து தைரியமாயிறங்கி இருக்கின்றோம்.
காங்கிரஸ்
காங்கிரஸ் என்பது பாமர மக்களைப் படித்த கூட்டத்தார் ஏமாற்றுவதற் கென்று ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும் அதிலும் அப்படித்த கூட்டத்தார் என்பதில் முக்கியமானவர்கள் நமது தென்னாட்டு பார்ப்பனர்க ளேயென்றும், அவர்கள் இஷ்டப்படியெல்லாம் ஏறக்குறைய காங்கிரஸ் ஆரம்பமான காலமுதல் கொண்டு ஆட்டப்பட்டு வந்திருக்கின்றது என்றும், காங்கிரஸ் என்பதாக ஒன்று நமது நாட்டில் ஏற்பட்ட பிறகே மக்களின் ஒற்றுமை குலையவும், ஒழுக்கம் கெடவும் ஏழை மக்களுக்கு பல வழிகளிலும் கஷ்டம் ஏற்படவுமான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதென்றும் கோபுரத்தின் மீதிருந்தும் கூறுவேன்.
உண்மையை ஒளிக்காமல் பேச வேண்டுமானால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கின்ற ஒரு கொடிய எமன் போன்ற இந்த ஸ்தாபனம் இருக்கும் வரையில் ஏழை மக்கள் விடுதலை என்பதை கனவிலும் நினைக்க வேண்டிய தில்லை என்றே கல்லிலும் எழுதி விடுவோம்.
வெள்ளைக்காரனுடைய கொடுமையான ஆட்சிமுறை ஏதாவது ஒரு காலத்திலாவது நமது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமானால் முதலாவது காங்கிரஸ் ஒழிந்து தீர வேண்டும். பிறகுதான் “இந்து மதமும் பார்ப்பன ஆதிக்கமும் ஒழிய வேண்டும்” என்று சொல்லுவோம். ஏனெனில் “இந்து* மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் மாத்திரம் தான் மக்களை ஏமாற்றி பாழ்ப் படுத்த முடியும். காங்கிரசோ அப்படியில்லை. காங்கிரசின் பெயரால் எல்லா வகுப்பு அயோக்கியர்களும், அன்னக்காவடிகளும் அனாமதேயங்களும், காலிகளும் மக்களை ஏமாற்ற வசதி இருக்கின்றது.
“இந்து” மதம் ஒரு மனிதன் செத்தபிறகு மோட்சம் (விடுதலை) என்கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். காங்கிரசோ உயிருடன் இருக்கும் போதே விடுதலை (மோட்சம்) கொடுப்பது என்கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். பாமர மக்களும் ஏழை மக்களும் இதை வெகு சுலபத்தில் நம்பி ஏமாந்து போகத் தக்கபடி தந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதற்கு தக்கபடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெருப்பு ஏற்படும் படி பிரசாரங்கள் செய்ய வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே ஜனங்கள். ஏமார்ந்து போவதில் அதிசயமில்லை..
குடி அரசு - கட்டுரை - 01.05.1932.
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
எட்டாவகாண்்டு
நமது குடி அரசுக்கு” ஏழு ஆண்டுகள் நிறைவேறி, இன்று எட்டாவது ஆண்டின் முதல் இதழ் வெளிவருகிறது. நமது “குடி அரசு' பிறந்தது முதல் இது வரையிலும் நாட்டில் உண்டாக்கியிருக்கும் மாறுதலை எதிரிகளும் வயிற்றெரிச்சலோடு ஒப்புக்கொண்டுதான் தீருவார்கள்.
நமது “குடி அரசு” மக்களுடைய உயர்வு தாழ்வுக்குக் காரணமான எல்லா மாசுகளையும் போக்கிச் சமத்துவத்தை உண்டாக்கும் கொள்கையுடன் ஏற்பட்டது என்பதை வாசகர்களுக்கு நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
முதலில் புரோகிதப் புரட்டில் உள்ள சூழ்ச்சிகளையும் அர்த்தமற்ற செயல்களையும் வெளிப்படுத்திச் சிக்கனத்தையும், மூட நம்பிக்கையைப் போக்கிப் பகுத்தறிவையும் போதித்தது.
இரண்டாவது மக்களிடம் ஜாதி பேதத்தையும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளையும் உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கும் வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி முதலிய சாஸ்திரங்களின் ஆபாசங்களையும் பொய்யுரைகளையும், அவைகள் பார்ப்பனர்களின் சுயநலத்திற்காக உண்டாக். கப்பட்டவை என்பதையும் எடுத்துக்காட்டிற்று.
மூன்றாவது மக்கள் ஏமாறுவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கும் காரணமான அவதாரம், நாயன்மார், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், ஜீயர்கள், சந்நிதானங்கள், பாதிரிகள், முல்லாக்கள், புரோகிதர்கள், குருக்கள் முதலிய வர்களின் சூழ்ச்சிகளையும், மோசங்களையும் வெளிப்படுத்திற்று.
கடைசியாக, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு முதலிய வற்றில் உள்ள சூழ்ச்சிகளையும் புரட்டுகளையும், இவ்வார்த்தைகளில் உள்ள அர்த்தமற்ற தன்மைகளையும் வெளிப்படுத்தியது.
மேற்கூறிய விஷயங்களைப் பிரச்சாரம் பண்ண நாம் எல்லா மதங்க ளையும் தாக்க வேண்டியதிருந்தது. மதங்களைத் தாக்காமல் மேற்கூறிய காரியங்களைச் செய்யவே முடியாது.
குடி அரசு - 1922 0) 182
“கடவுள்”, “வேதம்”, “ஆன்மா”, “மோட்சம்”, “நரகம்”, “மறுபிறப்பு£, “அவதாரம்” ஆகிய புரட்டுகள் எல்லாவற்றையுமோ, அல்லது இவைகளில் சிலவற்றையோ, அல்லது பலவற்றையோ, அல்லது ஒன்றையோ அஸ்திவார:
மாகக் கொண்டிராத மதமே உலகில் இல்லை. ஆகவே மேற்கூறிய அஸ்தி வாரங்களையெல்லாம் அகழ்ந்தெரிய வேண்டுமானால் மதங்களையும் அடியோடு அழித்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்தது.
பெண்களின் சமத்துவத்திற்கும் சுதந்திரத்திற்கும் “குடி அரசு” செய்திருக்கும் அவ்வளவு வேலை இந்தியாவில் வேறு எந்தப் பத்திரிகையும் செய்ததில்லையென்று தோள்தட்டிக் கூறலாம். இன்று நமது நாட்டில் நடைபெறும் எந்தப் பெண்கள் கூட்டத்திலும் குயமரியாதைக்கான தீர்மானங்
கள் நிறைவேற்றப்படுவதற்குக் “குடி அரசின்” பிரசாரமே காரணமாகும்.
“குடிஅரசு” இவ்வாறு மத விஷயத்திலும், சமூக விஷயத்திலும், பங்கு எடுத்துக் கொண்டதோடு மாத்திரம் நிற்காமல் அரசியல் விஷயத்திலும்
மக்கள் ஏமாறாமலிருக்குமாறு அடிக்கடி எச்சரிக்கத் தவறவில்லை.
அரசியல்வாதிகளின் புரட்டுகளையும், அயோக்கியத்தனங்களையும், தாட்சண்யமில்லாமல் பொது ஜனங்களுக்குக் கூறி வந்தது. இதன் பலனாகத் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குப் பொது மேடைகளில் இடங்கிடைக்காத நிலைமையும் உண்டாயிற்று. இன்று தென்னாட்டில் வருணாச்சிரம தருமி களுக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் செல்வாக்கு இல்லாமலிருப் பதற்குக் காரணம் “குடி அரசின்” பிரசாரமேயாகும். சுருங்கக் கூறினால் காங்கிரஸ் ஸ்தாபனத்தின் மதப் பிரசாரத்தையும், வருணாச்சிரம தருமப் பிரசாரத்தையும், முதலாளி ஆதிக்கப் பிரசாரத்தையும் ஆரம்ப முதல் இன்று வரையிலும் வெட்டவெளிச்சமாக்கிப் பொது ஜனங்களை ஏமாறாமல் இருக்கும்படி செய்து வருவதும், இக்காரணங்களில் காங்கிரஸ் ஸ்தாபனத்தை அடியோடு
அழித்தால் ஒழிய நமது நாட்டுக்குச் சமதரும ராஜியம் கிடைப்பதற்கு வழி யில்லை என்று பிரசாரம் பண்ணி வருவதும் நமது “குடிஅரசு” ஒன்றேயாகும்.
இவ்வாறு “குடி அரசு” மத விஷயத்திலும், சமூக விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் உள்ள சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வந்த காரணத்தினால் இதற்கு உண்டான எதிர்ப்புகள் எண்ணற்றவை.
“மத பக்தர்'கள் எல்லோரும் “குடிஅரசு” வாலிபர்களையெல்லாம் கெடுக்கிற தென்றும் “குடி அரசு' பெண்களையெல்லாம் கெடுத்து விடுகிறது
என்றும் “குடி அரசு”ப் பிரசாரத்தால் உலகமே முழுகிப் போய் விடுமென்றும் மறுபடியும் “கடவுள்” அவதாரம் பண்ணித்தான் “குடி அரசையும்” அதை ஆதரிக்கும் சுயமரியாதைக்காரர்களையும் தொலைக்க வேண்டுமென்றும் ஊர்ணராகப் பிரசாரம் பண்ணினார்கள்; பத்திரிகைகளில் எழுதினார்கள்: புதிய
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பத்திரிகைகளும் ஆரம்பித்து நடத்தினார்கள்: அவர்கள் நம்பும் 'ஆண்ட வனை நோக்கித் “தவமும்” கிடந்தார்கள்.
இரண்டாவது, “குடி அரசு” தோன்றுவதற்கு முன் சமூகச் சீர்திருத்தக் காரர்களாக விளங்கி வந்தவர்களெல்லாம் “குடி அரசை”க் கண்டு நடு
நடுங்கினார்கள். “குடி அரசு சீர்திருத்த விஷயத்தில் அளவு கடந்து செல்லு கிறதென்றும், இவ்வாறு சென்றால் உள்ள சீர்திருத்தமும் அழிந்து விடும் என்றும், மதங்களையெல்லாம் அழித்துவிட்டுச் சீர்திருத்தம் பண்ணுவது முடியாத செயலென்றும், ஆப்கானிஸ்தானத்தில் மாஜி அரசர் அமனுல்லா கான் அதிதீவிரச் சீர்திருத்தம் செய்ய முயன்றதனால் ராஜியத்தை இழக்கும் படி நேர்ந்ததைப் போல “குடி அரசு'க் கொள்கையும் மதிப்பிழந்து புறக்கணிக் கப்படுமென்றும், பலவாறாக பயமுறுத்தல் பிரசாரமும், அவதூறுப் பிரசாரமும். பண்ணினார்கள்.
மூன்றாவதாகப் பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் பொறாமைக் காரர்களும் “குடி அரசை” ஒழிப்பதற்குச் செய்த சூழ்ச்சிகள் எண்ணத் தொலையாதவை. “குடி அரசை”த் தேசத் துரோகப் பத்திரிகையென்றும் அர சாங்க தாசப் பத்திரிகையென்றும், ஜாதித்துவேஷப் பத்திரிகையென்றும்,
நாஸ்திகப் பத்திரிகையென்றும் பலவாறு பொது மக்களிடம் பிரசாரம் பண்ணி னார்கள். “குடி அரசு” பொது உடைமைப் பிரசாரம் பண்ணுகிறதென்றும், ஆகையால் அதையும் அதைச் சேர்ந்த கூட்டத்தாரையும் அடக்காவிட்டால் நாட்டில் கலகமும் கொள்ளையும் உண்டாகுமென்றும், அரசாங்கத்தாரிடமும், பொது மேடைகளிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பிரசாரம் பண்ணினார்கள்.
அதிலும் சென்ற இரண்டு ஆண்டுகளில், அதற்கு முந்திய ஆண்டு களைக் காட்டிலும் “குடி அரசை”யும் அதன் மூலம் உண்டான சுயமரியாதை இயக்கத்தையும் அழிக்கப்பாடுபட்டவர்களின் முயற்சி மிகவும் அதிகம் என்றே கூறவேண்டும், நமது நாட்டில் உப்புச் சத்தியாக்கிரகத்திலும், சட்ட
மறுப்பிலும் ஈடுபட்ட பார்ப்பனர்களும், சில பார்ப்பனரல்லாதாரும் குடி அரசை "ப் பற்றியும் “குடி அரசை” ஆதரிப்போரைப் பற்றியும், ஒவ்வொரு
ஊரிலும், ஒவ்வொரு மேடையிலும், கூட்டத்திலும், நாள் தவறாமல், நாழிகை தவறாமல் அவதூறுப் பிரசாரம் பண்ணினார்கள் நம்மவர்களுக்குள்ளேயே
சிலர், புத்தி தடுமாற்றத்தினாலேயோ, அல்லது சுய நலத்தினாலேயோ, அல்லது வேறு எந்தக் காரணத்தினாலேயோ எதிரிகளுடன் சேர்ந்து கொண்டும், “தேசீய சுயமரியாதை” என்ற புதுப் பெயர் வைத்துக் கொண்டும். *குடி அரசை“யும் சுயமரியாதை இயக்கத்தையும் எதிர்த்தார்கள். இவ்வாறு எவ்வளவு பாடுபட்டுங்கூட அதன் சந்தாதாரர்களின் எண்ணிக்கையைச் சிறிதளவு குறைக்க முடிந்ததேயொழிய வேறு இதன் கொள்கைகளின் நமது எதிரிகளால் ஒரு உரோமத்தைக் கூட அசைக்கமுடியவில்லை என்பது வாசகர்களுக்குத் தெரியாத செய்தியல்ல.
குடி அரசு - 1932 M 184
*குடி அரசு” தோன்றிய நாள் முதல் இது வரையிலும் தனது கொள்கையிலிருந்து சிறிதும் வழுவாமல், உழைத்து வருவதற்குக் காரணம், யாருடைய தயவையும் தாட்சண்யத்தையும் எதிர்பாராமல் வேலை செய்வதே. யாகும். ஒரு கொள்கையைப் பிரசாரம் பண்ண ஏற்பட்ட எந்தப் பத்திரிகை யாகட்டும், எந்த ஊழியராகட்டும், பிறருடைய தயவு தாட்சண்யத்திற்குக் கட்டுப்படாமலிருந்தால் தான் கொள்கைக்காக உழைக்க முடியும் என்ற
தத்துவத்திலிருந்து சிறிதும் பிசகாமலே “குடி அரசு” இது வரையிலும் இருந்து வருகிறது.
எண்ணற்ற எதிர்ப்புக்களிருந்தும் “குடி அரசு” பொது ஜனங்களின் கவனத்தை நாளுக்கு நாள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே கவர்ந்து
வருவதற்கு அதன் அசைக்கமுடியாததும்,பகுத்தறிவுக்குப் பொருத்தமானதும். உண்மையில் நாட்டில் சமதருமத்தை யுண்டாக்கத் தகுந்ததும் ஆகிய கொள்கைகளே காரணமாகும் என்று நாம் கூறுவது மிகையேயாகும்.
ஆரம்பத்தில் “குடி அரசை”த் தங்களுடைய தேர்தல் பிரசாரத்திற்கு உபயோகப்படுத்தி கொள்ளாலாமென்று கருதி அதன் கொள்கைகளை ஒப்புக் கொள்வது போலச் சிலர் நடித்து வந்தார்களானாலும், நாளடைவில் அவர்கள். குடிஅரசின்” உண்மைக் கொள்கைகளையும் அது யாருடைய தயவையும் போற்றுதல், தூற் றுதல்களையும் எதிர்பார்ப்பதல்ல என்பதையும் அறிந்த பின்
“குடி அரசு” படிப்பதையும் அதன் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதையும்
விட்டு விட்டதோடு மாத்திரமல்லாமல் மறைமுகமாகச் சிலர் எதிர்ப்பிரசாரங்
கூடச் செய்ய ஆரம்பித்தார்கள் என்னும் விஷயம் “குடிஅரசு” வாசகர்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இப்படி இருந்தும் “குடி அரசின் கொள்கை: களுக்கும் “குடி அரசு'க்கும் ஒரு குறைவும் உண்டாகவில்லை.
வைதீகர்களும், பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் “குடி அரசை” உபயோகப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் “குடி அரசை” ஒழிக்கப் பாடுபட்டாலும், ஆரம்பத்தில் “குடிஅரசி!ன் சீர்திருத்தத் கொள்கை களை ஆதரித்து வந்த பணக்காரர்களும், உத்தியோகஸ்தர்களும், மந்திரி மார்களும் “குடி அரசை” ஆதரிக்கவும், சுயமரியாதைக் கூட்டங்களுக்கு வரவும் பயந்து ஒதுங்கியிருந்தாலும் பணக்காரர்களில் சில உண்மையான சுயமரியாதைப் பற்றுடையவர்களைத் தவிர மற்ற எல்லாப் பணக்காரர்களும் ஜமீன்தாரர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் இவர்களுடைய கையாட்' களாக வேலை செய்யும் ராஜ்யவாதிகளும் “குடி அரசு'க் கொள்கையை முந்தியஆண்டுகளைவிடச் சென்ற ஆண்டில் அதிகமாக எதிர்த்துப்போராடி
னாலும், அதன் வேலை சென்ற ஆண்டிலேயே அதிகமாக நடைபெற்றி ருக்கிறது என்று தைரியமாகவே கூறவேண்டும். உதாரணமாகச் சென்ற ஆண்டில் நடைபெற்ற சுயமரியாதை மகாநாடுகளை எடுத்துக்கொள்ளலாம்.
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சென்ற ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு காரைக்
குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, பொறையாற்றில் ஒரு சுயமரியாதை மகாநாடு, நன்னிலத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, லாலு குடியில் இரண்டு. சுயமரியாதை மகாநாடுகள், விருதுநகரில் மாகாணச் சுயமரியாதை மகாநாடு, நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, சென்னையில் ஒரு சுய மரியாதை மகாநாடு ஆக பத்து சுயமரியாதை மகாநாடுகள் நடந்திருக்கின்றன. இவைகளைத் தவிர நாடெங்கும் நடைபெற்றுள்ள பொதுக்கூட்டங்கள் எண்ணற்றவை. இந்த மகாநாடுகளின் பயனாலும் பொதுக் கூட்டங்களின் பயனாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுயமரியாதை யியக்கத்தின் உண்மைக் கொள்கைகளையறிந்து, அவைகளைக் கூடிய வரையிலும் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதையும் யார் மறுக்க முடியும்? இவற்றுக்கெல்லாம் “குடிஅரசின்” அச்சமற்ற ஊழியம் அன்றோ காரணம்.
சுருங்கக் கூறவேண்டுமானால் சென்ற ஏழாண்டுகளாகக் “குடி அரசு” தனது கொள்கையை விட்டு நழுவாமலும் யாருடைய தயவுக்கும் கட்டுப் படாமலும், எவருக்கும் அஞ்சாமலும், உழைத்து வந்ததன் பலன் வீண்: போகாமல் நாளுக்கு நாள் அதிகமான மக்கள் - ஆரம்பத்தில் அதன் கொள்கைகளில் நம்பிக்கையில்லாமலிருந்தவர்கள் கூட அதன் கொள்கை: களைப் பற்றிச் சிந்திக்கவும் பின்பற்றவும் முன் வருகிறார்கள் என்ற உண். மையை அறியும் போது “குடி அரசும்” அதன் வாசகர்களும், பெருமையும்,
மேலும் மேலும் உறுதியோடும், அஞ்சாமையோடும் பிரசாரம் பண்ணுவதில் ஊக்கமும், தைரியமும் அடைய வேண்டுமேயொழிய வேறு தளர்ச்சியோ, கவலையோ படவேண்டிய அவசியமில்லையென்றே நிச்சயமாகக் கூறு வோம்.
மற்றொரு விஷயத்தையும் *குடி அரசின்” வெற்றிக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சென்ற நாலைந்து மாதங்களாக நமது ஆசிரியர் நமது நாட்டில் இல்லாமல் மேல் நாட்டுச் சுற்றுப் பிரயாணத்திற்காக தோழர் இராமநாதன் அவர்களுடன் சென்றிருந்தும் “குடி அரசி*ன் வளர்ச்சியில் ஒரு விதமான குறைவும் ஏற்படவில்லை என்பதைக் கொண்டும் அதன் கொள்கைக்கு தேசத்தில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை அறியலாம்.
இனி எதிர்காலத்தில் சென்ற ஆண்டுகளைவிடக் “குடி அரசின்” வளர்ச்சியும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவும் அதிகப்படும் என்றே எதிர்பார்க்கிறோம். நமது ஆசிரியர் ஈ. வெ. ராமசாமி அவர்களும், தோழர்
எஸ். ராமநாதன் அவர்களும் மேல் நாட்டினர் மத சமுதாய விஷயங்களில் எவ்வாறு முன்னேறியிருக்கின்றார்கள் என்பதையும், அவ்வாறு முன்னேறி யிருப்பதற்குக் காரணங்கள் என்ன என்பதையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு மேல் நாடுகளில் இப்பொழுது சுற்றுப்பிரயாணம். பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சுற்றுப் பிரயாணத்திலிருந்து
குடி அரசு - 1922 0) 186
திரும்பி வந்தவுடன் “குடி அரசின் கொள்கைக்காக வேண்டி இன்னும் அதி தீவிரமாக உழைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆகவே இனி வருங் காலத்தில் பொது ஜனங்களின் கவனமும், வாசகர்களின் ஆதரவும் “குடி அரசி”னிடமும் அதன் கொள்கைகளிடமும் அதிகமாகவே ஏற்படுமென்று உறுதியாக நம்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 01.05.1932
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
கோயில் நுமைவம் தீண்டாமையும்
தீண்டாமை என்னும் வழக்கம் மனிதத் தன்மைக்கு விரோதமான தென்பதையும், அதுவே நமது நாட்டு மக்களைப் பல்வேறு பிரிவினராக்கி வைத்துக் கலகத் தன்மையை உண்டாக்கி வருகிறதென்பதையும், தீண்டாமை
ஒழிவதன் மூலந்தான் நாட்டில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவமுடியு மென்பதையும் இப்பொழுது அனேகமாக எல்லாக் கட்சியினரும் ஒப்புக் கொண்டுவிட்டனர். தீண்டாமையை நாட்டை விட்டு அகற்றி, அதனால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்குச் சமூக சமத்துவமளிப்பதற்காகப் பல கட்சியினரும் பேச்சளவிலும் எழுத்தளவிலுமாவது முயற்சி செய்ய முன்: வந்திருக்கின்றனர்.
தீண்டாமை ஒழிந்துவிட்டால் அதைப் போற்றுகின்ற வேத சாஸ்திரங்க ளுக்கும், வைதீக மதங்களுக்கும், அம்மதங்களைப் பின்பற்றுகின்ற கண்மூடி வைதீகர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும் ஆட்டமும் அபாயமும் உண்டாகி விடும் என்பதை அறிந்திருக்கின்ற திரு. எம். கே. ஆச்சாரியார் கூட்டத்தைச் சேர்ந்த முரட்டு வைதிகர்களையும் அவர்களுடைய சூழ்ச்சிகளில் அகப்பட்டு. கிடக்கும் பொது ஜனங்களையும் தவிர வேறு யாரும் தீண்டாமைக்கு ஆதரவளிக்கவில்லையென்று துணிந்து கூறலாம்.
தீண்டாமையை ஒழித்து, அதனால் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை கை தூக்கி விட வேண்டியது ஒழுங்கும் நியாயமும் அவசியமும் ஆகும் என்ற உணர்ச்சி தற்போது நமது நாட்டு உயர்சாதி மக்கள் எனப்படு வோர்கள் சிலருடைய மனத்தில் பட்டிருப்பதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டச் சகோதரர்கள் செய்யும் கிளர்ச்சியும், சென்ற ஏழெட்டு ஆண்டுகளாக நமது இயக்கம் செய்துவரும் பிரசாரமுமே என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் தீண்டாமையை எந்த வகையினால் ஒழிக்க முடியும் என்பதை ஆலோசிக்கும் போது, எல்லோரும் கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி எண்ணிப் பார்க்காமலிருக்க முடியாது.
இந்து மதத்தைச் சாராதவர்களும், இந்து மதத்திற்கு எதிரானவர்களும் இந்துமதப் பற்றுடைய மக்களால், “அந்நியர்கள்” “மிலேச்சர்கள்” என்று
குடி அரசு - 1922 0) 188
இழித்துக் கூறக் கூடியவர்களுமாகிய வேற்று மதத்தினர்கள் உயர்சாதி இந்துக் களுடன் தீண்டாமையென்ற வேறுபாடின்றி நெருங்கிப் பழகிக் கொண்டி க்கின்றனர்.
ஆனால், நீண்டகாலமாக இந்துக்கள் என்றே மதிக்கப்பட்டு வருகின்ற தாழ்த்தப்பட்டமக்களோ உயர்சாதி இந்துக்களுடன் நெருங்கிப் பழக முடியாத வர்களாகவும், அவர்கள் வசிக்கும் தெரு, குளம் கிணறு, பள்ளிக்கூடம், கோயில் முதலியவைகளைச் சமத்துவமாக அனுபவிக்க முடியாத வர்களாகவும் “சண்டாளர்கள்” என்றும் “பாபிகள்” என்றும் “பஞ்சமர்கள்” என்றும், “பாதகர்கள்” என்றும், “புலையர்கள்” என்றும் பலவாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தத் தகாத நடத்தைக்குக் காரணம் என்ன வென்பதைக் கொஞ்சம் பொறுமையோடு ஆலோசித்தால் விளங்காமற் போகாது.
அந்நியராயிருந்தாலும் அவர்களிடம் மற்ற உயர்ந்த சாதி இந்துக் களைப்போல கல்வியும், செல்வமும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்
பாடும், ஒற்றுமையும் அமைந்திருப்பதே அவர்கள் மற்ற உயர்ந்த சாதி இந்துக் களுடன் சமத்துவமாகப் பழகுவதற்குக் காரணமாகும்.
சகோதர இந்துக்கள் என்று சொல்லப்பட்டாலும் தாழ்த்தப் பட்டவர் களிடம், செல்வமும், கல்வியும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் இல்லாமையே இவர்கள் “உயர்சாதி” என்று சொல்லப்படுகின்ற இந்துக்களால் தீண்டப்படாதவர்களாகக் கொடுமை படுவதற்குக் காரண:
மாகும்...
ஆகையால் உண்மையில் தீண்டப்படாத சகோதரர்கள் சமூக சமத்து
வம் பெற வேண்டுமானால் அவர்கள் கல்வியிலும், திறமையிலும், செல்வத்
திலும், செல்வாக்கிலும், ஒற்றுமையிலும் மற்றவர்களைப் போல சமநிலையை அடையவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இக் காரியத்தை இப்பொழுதோ அல்லது இன்றைக்கோ, அல்லது நாளைக்கோ, அல்லது மறுநாளோ, அல்லது ஒன்றிரண்டு மாதங்களிலோ அவசரப்பட்டுச் செய்து விட முடியாது. நாளடைவில்தான் இதைச் செய்யமுடியும்.
ஆனால் தற்போது, அவர்களுக்குச் சமத்துவமளிக்கச் செய்யப்படும் சாதகமான செயல்கள் கோயில் பிரவேசம், தெரு, குளம், கிணறு, பள்ளிக் கூடம் முதலியவைகளைத் தடையின்றி அனுபவிக்க இடமளிப்பது போன்ற காரியங்களாகும் என்பதும் உண்மையேயாகும்.
ஆகவே இவைகளில் தீண்டப்படாதவர்கள் சமத்துவ உரிமை பெறும் விஷயத்தில், அரசாங்கத்தாரும், சமூக - அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஆதரவாகவே இருக்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை.
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஆனால் பொதுஜனங்களோ இன்னும் வைதீகர் வசப்பட்டவர்களாகவும் ஜாதி,
மதம், தீண்டாமை முதலியவைகளில் கொண்டுள்ள நம்பிக்கை மாறாதவர் களாகவும் இருந்து வருவதினால், தீண்டப்படாத சகோதரர்கள் மேற்கூறியவை களில் சமத்துவம் பெறுவதற்குக் கஷ்டமாக இருந்து வருகிறது.
இவற்றுள் மற்றவைகளைக் காட்டிலும் “கோயில் பிரவேசம்” என்ற ஒரு விஷயமே இப்பொழுது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையாக
இருந்து வருகிறது.
இந்தக் கோயில் பிரவேசத்தின் பொருட்டு குருவாயூர், நாசிக் முதலிய இடங்களில் சத்தியாக்கிரகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதற்குமுன் பல தடவைகளில் மதுரை, திருச்சிராப்பள்ளி, நாகர்கோவில், ஈரோடு முதலிய இடங்களில் கோயில் சத்தியாக்கிரகங்கள் ஆரம்பிக்கப்பட்டு அவை பய வின்றி கழிந்தன.
ஆனால் அக்காலத்தில் கோயில் சத்தியாக்கிரகத்திற்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் இப்பொழுது கொஞ்சம் அதிக ஆதரவே இருந்து வருகிறது என்று கூறலாம். இந்த ஆதரவைக் கொண்டு விடாமுயற்சியுடன் கோயில் நுழைவுக்காகப் பாடுபட்டால் அவ்வுரிமை கிடைத்துவிடும் என்ப திலும் ஐயமில்லை என்றே வைத்துக் கொள்ளலாம். ஆனால் இவ்வாறு தீண். டாத சகோதரர்கள் கோயில் நுழைவு உரிமை பெறுவதினால் அவர்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன என்பதைப் பற்றியே இப்பொழுது நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.
அவர்கள் மற்றவர்களுடன் சமத்துவமாகக் கோயில்களுக்குச் செல்லும் உரிமை பெறுவதன் மூலம் ஓரளவு தீண்டாமை ஒழிகின்றதென் பதையும், சமத்துவம் கிடைக்கின்ற தென்பதையும் நாம் ஒப்புக் கொள்ளு
கிறோம். இதுவும் ரயில்வண்டிகளிலும் திருவிழாக் காலங்களிலும் கோயில்
களின் தேர்களை இழுக்குங் காலங்களிலும் எந்த அளவில் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படுகிறதோ அந்த அளவில் தான் கோயில் நுழைவினா
லும் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படும் என்பதே நமது கருத்தாகும். ஆகவே கோயில் நுழைவினால் நிரந்தரமாகத் தீண்டாமையொழிவோ, சமத்து வமோ ஏற்பட்டு விடமுடியாது என்பதைப் பற்றி யாரும் ஐயுற வேண்டிய
தில்லை.
ஆகையால் பொது இடத்திற்குப் போகக் கூடிய உரிமை தீண்டாதவர். களுக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் கோயில் பிரவேச முயற்சி நடைபெறுமானால் அதை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்கவே கடமைப் பட்டுள்ளோம் என்பதில் ஐயமில்லை.
குடி அரசு - 1922 0) 190
இவ்வாறில்லாமல் தீண்டாதவர்களும், கோயிலில் சென்று அங்கு இருப்பதாகச் சொல்லப்படும் “கடவுள்” என்கின்ற குழவிக்கல்லுகளையும், பதுமைகளையும் தொழுவதற்கும், அவைகளின் பேரால் மற்ற மூட மக்களைப் போல் பணம் செலவு பண்ணுவதற்கும், இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் *பக்திமான்கள்” ஆவதற்கும் “மோட்சம்” பெறுவதற்கும் கோயில் பிரவேசம் அவசியம் என்ற கருத்துடன் முயற்சி செய்யப்படுமானால் “இம்முயற்சி கண்டிப்பாகத் தீண்டாதவர்களுக்குக் கேடு சூழும் முயற்சியே” என்று தான் கூறுவோம்.
இப்பொழுது நமது நாட்டில் இருந்து வரும் எண்ணற்ற கோயில்கள். காரணமாகவும் அவைகளின் சார்பாக நடைபெற்றுவரும் “திருவிழாக்களின் காரணமாகவும் இவைகளின் மேல் பாமரமக்களுக்கு உள்ள நம்பிக்கை “பக்தி” முதலியவைகளின் காரணமாகவுமே பொதுஜனங்களின் செல்வம் பாழாகின்ற தென்பதை யாரும் மறுக்க முடியாது. இதோடு மட்டுமல்லாமல் பொது ஜனங்கள் அறியாமை நிறைந்தவர்களாகவும் மூட நம்பிக்கை மிகுந்தவர். களாகவும் இருந்து வருகின்றதற்கும் கோயில்களே காரணமாகும். இந்த நிலையைக் கருதும் போது தீண்டப்படாத சகோதரர்களும் மூட நம்பிக்கை காரணமாகக் கோயில்நுழைவு உரிமை பெறுவார்களாயின் அவர்களும்
தங்கள் பொருளைச் சிறிதும் பயனில்லாமற் பாழாக்கி என்றுமுள்ள வறுமை: நிலையில் இருந்து வரவேண்டியதைத்தவிர வேறு வழியில்லை என்றே கூறுகின்றோம்.
ஆகையால் தீண்டப்படாத சகோதரர்களும், அவர்கள் சமூக சமத்து
வத்தில் ஆவலுடைய மற்றவர்களும் “பக்தி” என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு கோயில் நுழைவுக்குப் பாடுபடாமல் “பொது இடத்தில் எல்லா மக்களுக்கும் உரிமை வேண்டும்” என்ற உறுதியுடன் கோயில் நுழைவுக்கு முயற்சி செய்ய வேண்டுகின்றோம். இவ்வகையில் தீண்டப்படாத சகோதரர். களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம். உண்மையில் தீண்டாமைக் கொடுமையொழிந்து மற்ற மக்களுடன் சமத்துவமாக வாழ்வதற்கு அடிப் படையான காரணங்களாக இருக்கும் செல்வம், கல்வி, திறமை, செல்வாக்கு, ஒற்றுமை முதலியவைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 08.05.1932.
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
காலித்தணமா? அணிம்சையா?
காங்கிரசின் பெயராலும், திரு. காந்தியின் பெயராலும், அஹிம்சையின் பெயராலும், சத்தியாக்கிரகத்தின் பெயராலும் நமது நாட்டில் இப்பொழுது நிகழ்ந்து வரும் காரியங்களைப் பார்த்தால் நியாய புத்தியுடைய எவரும் அவைகளைக் கண்டிக்காமலிருக்க முடியாது. “அஹிம்சையின்” பெயரால் ஆரம்பித்து நடத்தப்படும் சட்டமறுப்பு இயக்கத்தினால் உண்டாகும் ஹிம்சைகள் எண்ணற்றவை.
நாட்டில் வியாபார மந்தமும் பொருளாதார நெருக்கடியும் ஏற்றுமதி இறக்குமதிக் குறைவுகளும் ஏற்பட்டுச் செல்வ நிலை பாழ்பட்டுக் கிடக்கிறது. ஏழைமக்கள் பட்டினியினாலும் நோயினாலும் கிடந்து மடிகின்றனர். கற்றவர்கள் பலர் வேலையற்ற திண்டாட்டத்தினால் படும் தொல்லைகள்
சொல்லித் தொலையாதவை.
அரசாங்கமோ இத்துன்பங்களை நிவர்த்தி செய்ய முன் வராம லிருப்பதற்குத் தங்களுக்கு சட்ட மறுப்புக்காரர்கள் கொடுத்து வரும் தொல் லையே காரணம் என்று சொல்லி விடக் கூடிய நிலைமையில் இருக்கின்றனர்.
ஆகவே பொதுஜனங்களின் கஷ்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு போகின்ற தென்பதை யாரும் இல்லையென்று சொல்ல முடியாது. “அரசாங்கத்திற்கு உண்டாகும் கஷ்டம் ஜனங்களைப் பாதிக்காமல் போகாது” என்ற அரசியல் தத்துவத்தை அறிந்தவர்கள் சட்டமறுப்பு இயக்கமும் பொது ஜனங்களின் கஷ்டத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும் என்பதை ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும்
தற்போது சட்ட மறுப்பு இயக்கம் அரசாங்கத்தாருக்குத் துன்பங்
கொடுத்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் நேரே பொது ஜனங் களுக்கும் துன்பம் உண்டாக்கக் கூடிய நிலைக்குத் திரும்பி விட்டதைக் கண்டும் பொது ஜனங்கள் அதை அடக்க முன் வராமலிருப்பதா என்பதுதான். நமது கேள்வி.
குடி அரசு - 1922 0) 192
உதாரணமாகச் சில தினங்களாக நடை பெற்று வரும் “தபால் பெட்டி
களில் தீயிடுதல்” என்ற நிகழ்ச்சியைப் பாருங்கள். இந்த முயற்சி இப்பொழுது அனேகமாக இந்தியாவில் உள்ள எல்லா முக்கிய பட்டணங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த மதியற்ற காரியத்தால் உண்டாகும். கஷ்டமும் நஷ்டமும் யாருக்கு என்று ஆலோசித்துப் பாருங்கள்.
இதனால் அரசாங்கத்திற்கு ஒருவித நஷ்டமுமில்லை கஷ்டமு மில்லை.அரசாங்கத்தாரிடம் விலை கொடுத்து வாங்கிய ஸ்டாம்புகள் ஒட்டப் பட்டதபால்களே பெட்டிகளில் போடப்படுகின்றன. அவைகள் பற்றியெரிந்து விடுவதனால் நஷ்டம் அரசாங்கத்தாருக்கா? பொது ஜனங்களுக்கா? என்று ஆராய்ந்து பார்க்கும் மூளையற்றவர்கள் தானா சுயேச்சை சுயராஜியம் பெற்று ஆளக் கூடியவர்கள்?
இன்னும் தபால் ஆபீசுகளில் மறியல் செய்யவும் ஆரம்பித்து இருக்கின்றனர். சில இடங்களில் ரயிலை மறியல் செய்தார்களாம். ஆஹா! இவையெல்லாம் எவ்வளவு புத்திசாலித்தனமான காரியங்கள்!
இது மாத்திரமல்ல தனி மனிதர்களின் உயிருக்கும் காலிகள் ஆபத்தை உண்டாக்கி வருகின்றார்கள். கொலை வெறிபிடித்த சில வாலிபர்களால், இது வரையிலும் உத்தியோகஸ்தர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு உதாரணம் சில தினங்களுக்கு முன் மிதுனபுரி ஜில்லா மாஜிஸ்திரேட். திரு. ஆர். டக்ளஸ் என்பவரை சுட்டுக் கொன்ற அநியாயமும் ஒன்றாகும். தங்கள் கடமைகளை நிறைவேற்றுகின்ற உத்தியோகஸ்தர்களை இவ்வாறு மூர்க்கத்தனமாகச் சுட்டுக் கொல்வதனால் சுயராஜியம் கிடைத்து விடுமா என்று தான் கேட்கின்றோம்.
இங்ஙனம் உத்தியோகஸ்தர்களைக் கொலை புரிந்து வரும் கூட்டத்
திற்கும், காங்கிரஸ் சட்ட மறுப்புக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லப் பட்டாலும் அரசாங்கத்தின் மேலும் வெள்ளைக்கார அதிகாரிகளின் மேலும் துவேஷத்தை உண்டாக்கி வரும் அஹிம்சா தருமம் என்று சொல்லப்படுகின்ற
சட்டமறுப்புப் பிரசாரமே காரணமென்பதை யார் மறுக்க முடியும்?
இத்தகைய கொலைச் செயல்களையெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள். என்பவர்கள் கண்டிக்கின்றார்கள் என்றாலும் கொலை செய்யத்தூண்டும், துவேஷத்தை யுண்டாக்கும் சட்ட மறுப்புப் பிரசாரத்தை நிறுத்தவோ ஒழிக்கவோ யாரும் முன்வராமலிருப்பது நமது நாட்டிற்கு இன்னும் கெடுதியை உண்டாக்கும் விஷயமேயாகும்.
இன்னும் பல இடங்களில், சட்ட மறுப்புக்காரர்கள் வேலை நிறுத்தம் செய்யச் சொல்லும் போது, வேலை நிறுத்தம் செய்யாதவர்களையும், கடை களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கின்றவர்களையும் பலாத் காரத்தினால்
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
துன்புறுத்துகிறார்கள் என்ற செய்திகளும் கிடைக்கின்றன. இவைகளை யெல்லாம் பார்க்கும் போது தற்போது அஹிம்சையின் பேரால் சட்ட மறுப்பு செய்து வரும் “புத்திசாலிகள்” காலித்தனத்திலும், பலாத்காரச் செயல்களிலும் இறங்கிப் பொது ஜனங்களுக்குத் துன்பத்தை உண்டாக்கத் தொடங்கி விட்டார்கள் என்று சொல்லுவதில் என்ன குற்றமிருக்கின்றது?'
இவ்வாறு தொண்டர்கள் என்பவர்கள் செய்வதற்குக் காரணம் காங்கிர சல்ல வென்றும், பொறுப்பற்ற சிலருடைய தூண்டுதலேயென்றும் சில தேசீயப் பத்திரிகைகள் என்பன குறிப்பிட்டிருந்தன. ஆனால் காங்கிரஸ் கமிட்டியில் தபால் தந்தி,ரயில்வே முதலியவைகளையும் பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணியிருக்கும் போது இவைகளுக் கெல்லாம் எப்படி காங்கிரஸ் காரணம் அல்லவென்று கூறமுடியும் என்று கேட்கின்றோம்.
ஆகையால் இவ்வாறு பொறுப்பற்ற தன்மையிலும், காலித் தன்மை
யிலும், பொது ஜன நன்மைக்கு விரோதமாக நடந்து கொள்ளுவதோ - நடந்து கொள்ளுபவரோ - எதுவாயிருந்தாலும், எவராயிருந்தாலும் அவர்களை அடக்க வேண்டியதே பொது ஜனங்களின் கடமை என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.05.4932
குடி அரசு - 1922 0) 194.
சேலம் சுயமரியாதை மகாநா௫
சென்ற, 8-5-32 சனி ஞாயிறுகளில் சேலத்தில் நடைபெற்ற முதலாவது
சேலம் ஜில்லா சுயமரியாதை மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர்; பெண்கள் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத்தலைவர், திறப்பாளர்: தொண்டர் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர், திறப்பாளர் முதலிய வர்களின் பிரசங்கங்கள் நமது பத்திரிகையில் சென்ற வாரத்திலும், இவ் வாரத்திலும் வெளியாகி யிருக்கின்றன. அந்தப் பிரசங்கங்களை யெல்லாம் படித்துப் பார்ப்பவர்களுக்கு, நமது இயக்கத்தின் தற்கால வளர்ச்சியைப்
பற்றியும், உண்மையான கொள்கைகளை அநுபோகத்தில் கொண்டு வரும் செய்தியைப் பற்றியும் நாம் ஒன்றும் அதிகமாகக் கூறவேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.
முதலாவது இவ்வாண்டில் முதலில் சேலத்தில் நமது மகாநாடு நடை: பெற்றதே நமக்கு ஒரு பெரிய வெற்றியாகும். ஏனெனில் சேலம் ஒரு பெரிய தேசீயக் கோட்டை என்றும், தேசியத்திற்கு எதிர்ப்பான எந்தச் செயல்களையும்
சேலத்தில் செய்ய முடியாதென்றும், சிலர் மனதில் ஒரு தப்பான எண்ணம் நிலவியிருந்தது. இவ்வெண்ணம் தவறானதென்பதை உணர்த்துவதற்கும், சுயமரியாதை இயக்கமும், அதன் கொள்கைகளும், எந்தத் தேசீயத்திற்கும் அஞ்சாமல் எந்த இடத்திலும் எப்பொழுதும் பரவிப் பொது ஜனங்களை விழிப்படையச் செய்யக் கூடிய தன்மையுடைய தென்பதற்கும், ஒரு எடுத்துக் காட்டாகவே சேலத்தில் நமது மகாநாடு கூடிற்று என்று நிச்சயமாக கூறலாம்!
சேலத்தில் மகாநாடு கூட்ட முயன்றவர்களுக்கு உண்டான துன்பங்கள் எண்ணற்றவை. சுயமரியாதை இயக்கம் பரவினால் தங்கள் தேசீய வயிற்றுப் பிழைப்பிற்குக் கெடுதி வரும் எனக் கருதிய “காலிகள்” சிலர் மகாநாடு கூடா
மல் இருக்க எவ்வளவோ பிரயத்தினம் பண்ணி பார்த்தார்கள். ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் சென்று அவர்களுக்குத் தகுந்த மாதிரி இல்லாத பொல்லாத பொய்யுரைகளைப் புகன்று மகாநாட்டிற்கு உதவி செய்யாமல்
இருக்கும் படியும், மகாநாட்டு நிர்வாகிகளுடன் ஒத்துழைக்காமலிருக்கும்
படியும் கலகம் பண்ணினார்கள். எதிரிகள் இம்மாதிரி எவ்வளவோ சூழ்ச்சிகள். செய்தும், மகாநாட்டு வேலைகள் தடைப்படாமல் நடந்து கடைசியாகக் குறிப்பிட்ட தேதியில் மகாநாடும் நடைபெற்றது. 195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
நமது இயக்கத் தோழர்களான எஸ்.வி. லிங்கம், அழகர்சாமி போன்ற வர்களை வெட்டி விடுகிறோம் என்றும், குத்திவிடுகிறோமென்றும், மிரட்டிக் கொண்டும், மகாநாட்டைக் கலைப்பதற்காக ஆள்சேர்ப்பது போலப் பாவனை பண்ணிக் கொண்டும் கப்பி விட்டார்கள்.
மகாநாடு நடக்கும் சமயத்திலும் “காலிகள்” கலகம் பண்ண மறந்து விடவில்லை. வெளியிலிருந்து கொட்டகை மீது கல் விட்டெறிந்தும், இயக்கத் தோழர்கள் மகாநாட்டில் பேசும்போது இடைஇடையே சத்தம் போட்டும் கலகம் பண்ண முயற்சித்தனர்.
ஆனால், நமது இயக்கத் தோழர்கள் இவற்றையெல்லாம் பொருட் படுத்தாமலும் எதிரிகளுக்குக் கொஞ்சமும் கஷ்டத்தை உண்டாக்காமல் அவர்களிடம் பொறுமை காட்டியும் மகாநாட்டை வெற்றியுடன் நடத்தியது
குறிப்பிடத்தக்கது.
மகாநாட்டிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளும் சுயமரியாதை இயக்கத்தின் உண்மையையும், தேசீயவாதிகள் என்று வேஷம் போட்டுக் கொண்டு கலகம் பண்ண முயற்சித்த எதிரிகளின் காலித் தனங் களையும் உணர்ந்து கொண்டார்கள்.
நமது இயக்கத் தோழர்கள் “ஈ. வெ. ராமசாமி” அவர்களும், “எஸ்.ராமநாதன்” அவர்களும் மேல்நாட்டுச் சுற்று பிரயாணத்திற்குப் போயி ருப்பதைக் கண்டு “சுயமரியாதை இயக்கம் செத்துப் போய்விட்டது, கொஞ்ச நஞ்சம் உள்ள கிளர்ச்சியும் இனி அடியோடு ஒழிந்துவிடும்” என்று திண்ணைப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்த நமது எதிரிகளுக்கு சேலம் ஜில்லா மகாநாடு சரியான புத்தி கற்பித்ததென்றே கூறலாம்; அவர்கள் இரு கன்னங்களிலும் “பளிர், பளீர்” என இரண்டு அறைகள் கொடுத்து “ஏ: பேதைகளே நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன். முன்னையைக்
காட்டிலும் இப்பொழுது அதிகமாகக் கொழுத்துப் பருத்து உயர்ந்து வருகிறேன் பாருங்கள்” என்று சுயமரியாதை இயக்கம் சொல்லுவதைப் போல இருந்ததென்றே கூறுவோம். சுருங்கக் கூறவேண்டுமானால் சேலத்தில் இதுவே முதல் மகாநாடாய் இருந்தாலும் பொது ஜனங்கள் கவனத்தை இது போல் வேறு எந்த மகாநாடும் கவரவில்லையென்றே சொல்லலாம்.
இனி இம்மகாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட தோழர்களின் பேச்சுக் களின் சிறப்பைப் பற்றியும், அப்பேச்சுக்கள் பொது ஜனங்களின் கண்ணைத் திறந்து சுயமரியாதை இயக்கத்தின் உண்மைக் கொள்கைகளை உணர்ந்து பார்க்கும்படி செய்தது என்பதைப் பற்றியும் நாம் கூறுவது தற்புகழ்ச்சி யாகுமென விடுக்கின்றோம்.
குடி அரசு - 1922 0) 196
ஆனால் சுயமரியாதை மகாநாட்டிற்குத் தலைமை வகித்த தோழர் ம.
சிங்கார வேலு அவர்களின் பிரசங்கத்திலுள்ள ஒரு விஷயம் மட்டிலும் குறிப்பிடத்தக்கதாகும். “நாம் விரும்புகின்ற சாதி ஒழிவு, சமய ஒழிவு, பெண்கள் விடுதலை, சமூக சமத்துவம், பொருளாதார சமத்துவம், மூடப் பழக்கவழக்கங்களை ஒழித்தல் முதலியவைகளைச் செயலில் நிறைவேற்ற வேண்டுமானால் அரசியலைக் கைப்பற்றவேண்டுமென்றும், அரசியலைக் கைப்பற்றாத வரையில் இந்த நோக்கங்களை நிறைவேற்ற முடியா” தென்றும்
குறிப்பிடுகிறார்.
ஆனால் இவ்விஷயத்தை நாம் தற்சமயத்தில் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அரசியலைக் கைப்பற்றினால்தான் நமது இயக்கக் கொள்கை: களைச் சீக்கிரமாகவும், எளிதாகவும் நிறைவேற்ற முடியும் என்ற தத்துவத்தை
ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் இக் கொள்கையை இப்பொழுதே சுய மரியாதை இயக்கம் கைக்கொண்டு விடுமானால் அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பாதகம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
நமது கட்சியின் கொள்கைகள் தேசமக்கள் எல்லோருடைய மனத்
திலும் படிந்துவிடுமானால் அதன்பின் நாம் சட்ட மூலமாகவே அரசாங் கத்தைக் கைப்பற்றுவதும், நமது கொள்கைகளைச் சட்டங்கள் செய்வதன்
மூலம் நிறைவேற்றுவதும் ஆகிய காரியங்கள் சுலபமாக முடியும். இந்தக் காரணத்தினால்தான் நமது கட்சி இது வரையிலும் அரசியலில் கலக்காமல் சமூகசீர்திருத்தப் பிரசாரம் மட்டும் செய்து கொண்டு வருகிறது என்று
தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம்.
அன்றியும் நாம் இப்பொழுதே அரசியலைக் கைப்பற்றுவது என்று தீர்மானித்து விடுவோமானால் மற்ற அரசியல் கட்சிகளில் எவ்வாறு பட்டம் பதவிகளை விரும்புகின்ற சுயநலவாதிகள் நிரம்பிக் கிடக்கின்றார்களோ, அவ்வாறே நமது கட்சியிலும் நிரம்பிவிடக் கூடும் என்று நிச்சயமாக நம்பலாம். பட்டங்களுக்கும், பதவிகளுக்கும் ஆசைப்படுகின்றவர்கள் நிறைந் துள்ள கட்சிகள் எல்லாம் உண்மையான சமூக சீர்திருத்தத்திற்கும், சாதி மதங்கள் ஒழிவதற்கும், ஆண் பெண் சமத்துவத்திற்கும், ஏழை பணக்கார:
சமத்துவத்திற்கும் உண்மையாக உழைக்க முடியாத நிலைமை அடைந்து விடும் என்பதை நமது நாட்டில் தற்காலத்தில் நடைபெற்றுவரும் அரசியல் கட்சிகளின் போக்கைக் கொண்டு உணரலாம்.
ஆகையால் நமது இயக்கம் உண்மையில் ஏழை மக்கள் இயக்க மாகவே இருந்து, ஏழைமக்களின் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும் உழைக்க. வேண்டுமானால், நமது இயக்கக் கொள்கைகள் தேசமெங்கும் பரவி மக்கள். எல்லோரும் அவைகளை ஒப்புக் கொள்ளும் வரையிலும் அரசியலில் கலவாமல் வெறும் சமூகச் சீர்திருத்த இயக்கமாகவே அதிதீவிரமாகப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருவதே சாலச் சிறந்ததென்பதே நமது இயக்கத் தலைவர்.
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
களின் கருத்தாகும். இவ்வாறு செய்தால்தான் நாட்டில் சமாதான பங்கம் ஏற்படாமல் நமது இயக்கக் கொள்கைகளை நடைமுறையில் வழங்கும்படி செய்ய முடியும் என்பதில் ஐயமில்லை.
மற்றபடி, தோழர் சிங்காரவேலு அவர்கள் சொல்லியுள்ள அபிப்பி ராயங்கள் முழுவதும் நமது கட்சியின் அபிப்பிராயங்களே என்பதையும் அவைகளை நிறைவேற்றுவதன் மூலம்தான் நமது நாட்டில் எல்லாவித
சமத்துவமும் உண்டாகமுடியும் என்பதிலும் ஐயமில்லை.
சேலம் மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் புதுமை யானது ஒன்றுமில்லை யென்றாலும், இதற்குமுன் செங்கற்பட்டு, ஈரோடு, விருதுநகர் முதலிய மகாநாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை: ஆதரிப்பதான தீர்மானம் ஒன்றே போதுமானதாகும். இந்த மூன்று மகாநாட்டுத் தீர்மானங்களிலும் நமது இயக்கக் கொள்கைகள் முழுவதும் அடங்கியுள்ளனவென்பதை நாம் கூறுவது மிகையாகும். ஆகையால் அத் தீர்மானங்களைப் பொது ஜனங்களிடம் பிரசாரம் பண்ணி அமுலுக்குக் கொண்டு வருவதைத் தவிர, வேறு புதிதாகத் தீர்மானிக்க வேண்டிய விஷயம் ஒன்றுமில்லையென்றே சொல்லலாம்.
அடுத்தபடியாக, காங்கிரஸ் வருணாச்சிரம தருமப் பிரசாரமும், புராணப் பிரசாரமும் செய்து வருகிறது என்ற கருத்துடன் செய்யப்பட்ட தீர்மானமும் பாராட்டக் கூடியதேயாகும். இத்தீர்மானங்களைப் பற்றிப் பேசிய நமது இயக்கத் தோழர்கள், அப்பாதுரையார், டி. வி. சுப்பிரமணியம்,
கே. வி. அழகர்சாமி, பொன்னம்பலனார், குருசாமி, பண்டிதர் திருஞான சம்பந்தம், எஸ். வி. லிங்கம் முதலானவர்கள் சாதி, சமயம், வேதம், புராணம்,
மதம், கடவுள், மகாத்மா, காங்கிரஸ், ஹிந்தி, கதர், அரசியல் முதலிய புரட்டு களை தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டிய போது பொது ஜனங்கள் உணர்ந்த உண்மைக்கும், அடைந்த மகிழ்ச்சிக்கும், கொண்ட ஊக்கத்திற்கும் அள வில்லை யென்றே சொல்லலாம்.
கடைசியாக பல எதிர்ப்புக்கிடையே சேலம் ஜில்லா மகாநாட்டை நடத்த முன்னின்று உழைத்த நமது இயக்கத் தோழர்களின் ஊக்கத்தையும் தைரியத்தையும் போற்றுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.05.1932.
குடி அரசு - 1922 0) 198
திருச்சி பார்ப்பணால்லாதார் மகாநா௫
சென்ற 7, 8-5-32 இல் திருச்சிராப்பள்ளி ஜில்லா பார்ப்பனரல்லாதார் ஆறாவது மகாநாடு திருச்சியில் நடைபெற்றது. அம் மகாநாட்டை அங்கு எந்த விஷயத்திற்குக் கூட்டப்பட்டதோ அந்த விஷயத்தைத் தவிர மற்றவை களெல்லாம் வெற்றியோடு நடைபெற்றன என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்சமயம், பார்ப்பனரல்லாதார் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று, அக்கட்சியின் தலைவர்கள் சிலர். கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி ஆராய்ந்து ஒரு முடிவு செய்யவே இம்மகாநாடு கூட்டப்பட்டதாகும்.ஆனால் இவ்விஷயம் விஷயாலோசனைக் கமிட்டியில் விவாதத்திற்கு வந்துங்கூட தலைவர்களின் பிடிவாதத்தினால் நிராகரிக்கப்பட்டதென அறிகிறோம். மற்றபடி அரசியல் சுதந்தரம் சம்பந்த மாகவே பெரும்பாலும் தீர்மானங்கள் நடைபெற்றன. மகாநாட்டின் தலைவர்
சர். ஏ. பி.பாத்ரோ அவர்களும், மற்றும் திறப்பாளர் வரவேற்புத் தலைவர். முதலியவர்களும், பெரும்பாலும் அரசியல் உரிமை சம்பந்தமாகவே ஊக்கங் காட்டிப் பேசினார்கள்.
சர். பாத்ரோ, சர், கே. வி. ரெட்டி போன்ற பிரபல தலைவர்கள் அனை வரும் காங்கிரசின் போக்கையும், சட்ட மறுப்பின் தீமையையும் பலமாகக் கண்டித்துப் பேசிய விஷயம் தேச மக்களால் கவனிக்கக் கூடியதாகும்.
பார்ப்பனரல்லாதார் கட்சியை அகில இந்திய இயக்கமாக்க வேண்டு மென்னும் விஷயத்தில் எல்லாத் தலைவர்களும் ஒன்றுபட்ட அபிப்பிராயங் கொண்டிருந்தனர் என்றே கூறலாம்.
உண்மையில் பார்த்தால், நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் தற்சமயம் கட்டுப்பாடானதும் நிதானத்தோடு காரியம் செய்யக் கூடியதுமான அரசியல் கட்சி ஜஸ்டிஸ் கட்சி ஒன்றேயென்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்விஷயங்களை திருச்சி ஜில்லா மகாநாட்டின் நிகழ்ச்சிகளைக் கவனிப்
போர் அறியலாம்.
திருச்சி மகாநாட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் தீர்மானம் அரசியல் வாதிகளால் கவனிக்கக் கூடியதொன்றாகும் அதாவது:- “மத்தியப் பொறுப் 199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பாட்சியுடன் கூடிய மாகாண சுயாட்சி கொடுக்க வேண்டு” மென்று தீர்மானம் செய்திருப்பதேயாகும். வட்ட மேஜை மகாநாட்டிலும் நமது நாட்டிலும், எல்லா அரசியல் வாதிகளும் ஐக்கிய ஆட்சியே வேண்டுமென்று கேட்டனர். இன்னும் பலரும் ஐக்கிய ஆட்சியைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருக் கின்றனர். வட்ட மேஜை மகாநாட்டிற்குச் சென்ற ஜஸ்டிஸ் கட்சி கட்சியின் அங்கத்தினர்கள் கூட ஐக்கிய ஆட்சியையே ஆதரித்தனர். இப்படியிருந்தும்
திருச்சி மகாநாட்டில், மத்தியப் பொறுப்பாட்சியும், முழு மாகாண சுயாட்சியும் வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்ற முன் வந்தது.மிகுந்த சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் சாத்யமான வழியில் தடையின்றி சுதந்திரம் பெற்றுத் தேசத்தை முன்னேற்ற வேண்டுமென்னும் எண்ணமும் ஆகுமென்றே கூறலாம். சுதேச சமஸ்தானங்களும் ஒன்றுபட்டு அமையக்கூடிய ஐக்கிய ஆட்சி ஏற்படுத்துவது அசாத்தியமான காரிய மென்பதை அறிந்த பின், தைரியமாக இவ்வாறு தீர்மானம் பண்ண முன் வந்ததைப் பாராட்டுகிறோம்.
சமூகச் சீர்த்திருத்தம் சம்பந்தமாக ஜஸ்டிஸ் கட்சி இது வரையிலும் அதிக ஊக்கம் செலுத்தாமல் இருந்தது போலவே இந்த மகாநாட்டிலும் இருந்தது என்று சொல்லுவதில் தவறு ஒன்றும் இல்லை.
இந்தக் காரணத்தினாலேயே இதற்குமுன் நடைபெற்ற பார்ப்பனரல் லாதார் மகாநாடுகளில் காணப்பட்ட ஒரு ஊக்கமும் கிளர்ச்சியும் இந்த மகா நாட்டில் கொஞ்சங் கூட காணப்படாமலிருந்தது.இம் மகாநாட்டுடன் சர். கே. வி. ரெட்டியார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் இளைஞர் மகாநாட்டில் காணப்பட்ட ஒரு ஊக்கம் பார்ப்பனரல்லாதார் மகா நாட்டில் இல்லையென்று கூறலாம். ஆயினும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டி
ருக்கும் இச்சமயத்தில் ஒரு மகாநாட்டைக் கூட்டி காங்கிரசின் போக்கைத் தைரியமாகக் கண்டித்து தீர்மானங்களும் பிரசங்கங்களும் செய்த இந்த மகாநாட்டைப் போற்றாமலிருக்க முடியாது.
ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களுக்கு திருச்சி மகாநாடு ஒரு வழிகாட்டி யாக இருந்ததென்றே கூறலாம். பார்ப்பனரல்லாதார் கட்சியைத் தேசமெங்கும். பரப்பவும், கட்சியின் கொள்கைகளைத் தவறில்லாமல் நிறைவேற்றவும்,
கட்சித் தலைவர்கள் பொதுஜனங்களின் அபிப்பிராயப்படி நடக்கவும் மகாநாடு மிகவும் முயற்சியெடுத்துக் கொண்டது என்று சொல்லலாம். இந்த வகையில் இனி வரப்போகும் மாகாணப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டிற்குத் திருச்சி மகாநாடு ஒரு வழிகாட்டியாக இருந்தது என்பது உண்மையாகும். ஆகவே இவ்வகையில் மகாநாட்டை வெற்றிபெற நடத்திய தலைவர் களையும் நிர்வாகிகளையும் நாம் பாராட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 15.05.1932.
குடி அரசு - 1922 0) 200
ர் லிம்
மொகரம் பண்டிகையை முன்னிட்டு சென்ற 14-5-32 முதல் பம்பாயில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் கடுமையான கலகம் நடைபெற்று வருகின்றது. கல்கத்தாவிலும் இக்கலகம் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. எங்கும் ஒற்றுமை, சகோதரத்துவம், சமரசம், சீர்திருத்தம் என்று பேசப்பட்டு. வரும் இக்காலத்தில் கேவலம் மதத்தையும், ஜாதியையும் முன்னிட்டு இவ்வாறு கலகம் விளைவித்துக் கொள்ளுவதாக உலகத்தார் கருதும்படி நடந்து கொள்ளுவதைவிட நமது நாட்டிற்கு மானங்கெட்ட தன்மை வேறு ஒன்றுமே இல்லையென்பதை எந்த இந்தியரும் வெட்கத்தோடு ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும்.
கலகம் உண்டானதற்கு மூலகாரணம் சிறுபிள்ளைகள் ஆரம்பித்த சில காரியங்கள் என்றே பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்படுகின்றது. சில முஸ்லிம் சிறுவர்கள் இந்துக்கள் வசிக்கும் இடங்களுக்குச் சென்று யாசகம் கேட்டார். களாம். இந்துக்கள் யாசகம் கொடுக்க மறுத்தார்களாம். இவ்வாறு யாசகம் கொடுக்க மறுத்தவர்களையும் வற்புறுத்திக் கேட்கவே அவர்கள் கோபங் கொண்டு,தமது வேலைக்காரர்களைக் கொண்டு அச்சிறுவர்களைத் துன்புறுத் தினார்களாம். இதைக் கேள்வியுற்ற முஸ்லிம்கள் உடனே கூட்டமாகச் சேர்ந்து வந்து இந்துக்களுடன் கலகம் புரிந்தார்களாம். இதன் பின்பே கலகம் முற்றி விட்டதாம். இதுவே பத்திரிகைகளில் காணப்படும் கலகத்திற்குக் காரணமான
செய்தியாகும்.
இந்த அற்பகாரணத்தால் கலகம் மூண்டு நூற்றுக்கணக்கான மக்கள். உயிர் துறக்கவும் ஆயிரக்கணக்கானவர்கள் அடிபடவும், காயப்படவும்
சொத்து சுதந்திரங்களை இழக்கவும், உயிருக்கு அஞ்சவும் நேர்ந்ததென்றால் இதைவிட நமது தேசத்திற்கு அவமானம் வேறு என்ன வேண்டும்? அபலை களான பெண்மக்களும், குழந்தைகளும் காலிகளால் தாக்கப்படுகின்றனர். கடைகளும் வீடுகளும் தாராளமாக கூறையாடப்படுகின்றன.இந்துக்களுக்குச் சொந்தமான இடங்களும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடங்களும் தாராளமாக நெருப்புக்கு இரையாக்கப்படுகின்றன. இக்கலகத்தில் இந்துக்கள். பக்கம் தான் அதிகச் சேதமென்றோ, அல்லது முஸ்லிம்கள் பக்கம்தான்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அதிகச் சேதமென்றோ கூறுவதற்கில்லை. கலகம் என்று ஏற்பட்டால் இரு பக்கத்திலும் கொலைகளும், அடிகளும், கொள்ளைகளும் நடந்துதான் தீரும்.
இவ்வாறு அடிக்கடி இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கலகம் உண்டாவதற்குக் காரணம் எப்பொழுதும் இவ்விரு சமூகத்தாருக்குள்ளும் இருந்துவரும் அவநம்பிக்கையேயாகும். முதலில் இந்த அவநம்பிக்கையைப் போக்கி இருசமூகத்தாருக்குள்ளும் ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்யாமல் “எங்கள் நாட்டில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகி விட்டோம்; எங்களுக்குள் சாதிச் சண்டை இல்லை, மதச் சண்டை இல்லை; சுயராஜ்யம் கொடுப்பதுதான் தாமதம்; இப்பொழுதே சுயராஜ்யம் கொடுத்து விட்டால் கொஞ்ச நஞ்சமுள்ள மனப்பிணக்குகளும் ஒழிந்துவிடும்” என்று தேசீய வேஷக்காரர்கள் கூச்சலிடுவதில் என்ன அர்த்தமிருக்கிறது?
இப்பொழுது பம்பாயில் ஏற்பட்ட கலகத்திற்குக் காரணம் சிறு பிள்ளைகள் செய்த முரட்டுத்தனமான விளையாட்டுக் காரியங்களும், அவைகளுக்கு மேல் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்ட இந்துக்களின் அவசரப்பட்ட ஆத்திரமான காரியமுமே மூலகாரணம் என்று கூறப் பட்டா
லும்,மதப் பிடிவாதம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் கலகம் பெருகி ஓங்கியதற்குக் காரணம் “அரசியல்” என்றுதான் நாம் அபிப்பிராயப் படுகின்றோம்.
முஸ்லிம் பொது ஜனங்களும், பொது ஜனங்களால் மதிக்கப்படும் தலைவர்களும் காங்கிரசையோ, சட்ட மறுப்பையோ, சத்தியாக்கிரகத்தையோ ஆதரிக்கவில்லை என்பது உலகறிந்த விஷயம், அன்றியும் திரு. காந்தியார். வட்டமேஜை மகாநாட்டிற்குச் சென்று வந்தபின், திரு. காந்தியும் காங்கிரசும் அரசியலில் முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஒப்புக்கொள்ள முடியா தென்பதை பகிரங்கமாகக் காட்டிக் கொண்டபின் முஸ்லிம்கள் காங்கிரசை “இந்து மகாசபையின் அப்பன்” என்றே தீர்மானித்து விட்டார்கள். ஆகவே காங்கிரசின் மீது கொள்ளும் பகைமையை அதை ஆதரிப்போர்பாலும் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இதைப் போலவே காங்கிரஸ் அபிமானங் கொண்ட இந்துக்கள், முஸ்லிம்கள் சட்டமறுப்பை ஆதரிக்கவில்லை என்பதற் காகவும் முஸ்லிம் பொது ஜனங்களும், அவர்களின் தலைவர்களான மெளலானா ஷெளக்கத் தலி போன்றவர்களும், காங்கிரசையும் அதன் காரியங்களையும் வெளிப்படையாகக் கண்டித்து எதிர்க்கின்றார்கள் என்பதற் காகவும், முஸ்லிம்களின் மேல் உள்ளூர வெறுப்பில் ஆத்திரமும் கொண்டி ருந்தார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இதனாலேயே “வேண்டாத பெண்டாட்டி கால் பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம்” என்பது போலச்
சிறு பிள்ளைகள் யாசகம் கேட்ட அற்பகாரணத்தை முன்னிட்டுக் கலகம் உண்டாகி விட்டதென்று கூறுவதில் சிறிதும் தவறு கிடையாது. இதுவே இந்து முஸ்லீம் கலகம் வலுப்பதற்குக் காரணம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
குடி அரசு - 1922 0) 202
இந்து முஸ்லிம் கலகத்திற்கு அரசியல் காரணமில்லை என்றும், சில பொறுப்பற்றவர்களும் வகுப்புச் சண்டை மூட்டுகின்றவர்களுமே கலகத்
திற்குக் காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டுகிறோம். இந்தியாவில் அரசியல் சீர்திருத்த
மும், அதிகப்படியான அரசியல் சீர்திருத்தம் வேண்டும் என்னும் கிளர்ச்சியும் ஏற்படுவதற்கு முன் இப்பொழுது நடப்பது போல இந்துக்களுக்கும் முஸ்லிம் களுக்கும் அடிக்கடி பெரும் கலகங்கள் நடந்தது உண்டா என்று கேட்கிறோம். இம்மாதிரியான கலகங்கள், அரசியல் சீர்திருத்தமும், அதிகப்படியான அரசியல் சீர்திருத்தம் வேண்டுமென்னும் கிளர்ச்சியும் ஏற்படுவதற்குமுன் இல்லையென்பது உண்மை.ஆகவே இதற்கு முன்னில்லாமல் இப்பொழுது சில ஆண்டுகளாக ஆரம்பித்து அதிகப்பட்டு வரும் இக்கலகங்களுக்குக்
காரணம் அரசியலா? அல்லவா?
இரு சமூகத்தாரிடமுமிருந்து வரும் இத்தகைய விரோத மனப் பான்மை நீங்கி இந்து முஸ்லிம் ஒற்றுமை உண்டாவதற்குத்தான் வழியுண்டா என்று பார்த்தால் சமீபத்தில் ஏற்படுவதற்கு வழியில்லையென்று தான் கூறவேண்டும். பல வகுப்புகளும், பல மதங்களும் உள்ள ஒரு நாட்டில் அரசியல் கிளர்ச்சி அதிகமாக அதிகமாக வகுப்பு மதக்கலகங்களும் அதிகப் பட்டுக் கொண்டுதான் இருக்கக் கூடும். ஆகையால் வகுப்பு வித்தியாசங் களையும், மதக் கோட்பாடுகளையும் ஒழித்தாலன்றிக் கலகத்தை ஒழிக்கவா வது, அரசியலை நன்றாக நடத்தவாவது விரும்பும் அரசியல் சீர்திருத் தங்களைப் பெறவாவது முடியாது என்பது நிச்சயம். ஆதலால் நமது நாட்டில் இந்துக்கள் பழய இந்துக்களாகவே இருக்கும் வரையிலும், முஸ்லிம்கள் பழய முஸ்லிம்களாகவே இருக்கின்ற வரையிலும் இரு சமூகத்திற்குள்ளும் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லை.
இந்து சமூகத்திலும் முஸ்லிம் சமூகத்திலும் மாறுதலை உண்டாக்கி னால்தான் இருசமூகத்திற்கும் ஒற்றுமை உண்டாக முடியும் இருசமூகத் தினருடைய பழக்க வழக்கங்களிலும், மனப்பான்மைகளிலும் மாறுதலை உண்டாக்கப்பாடுபடுவதே உண்மையான தேசவூழியமாகும். ஆனால் தேசீயத்தில் ஈடுபட்டிருக்கும் எந்த ஸ்தாபனமும், எந்த மனிதர்களும் இதற்காகப் பாடுபடக் கொஞ்சமும் கவலையெடுத்துக் கொள்ளவே இல்லை
யென்பது உண்மை. இதற்கு மாறாக, இரு சமூகத் தலைவர்களும்; மத விஷயத்
திலும், வகுப்பு விஷயத்திலும், இரு சமூகத்தாருக்குள்ளும், மூடநம்பிக்கை களையும், பிடிவாதத்தையும் அதிகப்படுத்தி வருகிறார்கள் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது. இப்படியானால் எப்பொழுதுதான் இரு வகுப்பினருக் குள்ளும் சமரச உணர்ச்சி உண்டாக முடியும் என்று யோசனை செய்து பாருங்கள்!
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அன்றியும், சுலபமாக இந்து முஸ்லிம் கலகம் உண்டாவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது என்று நாம் நினைக்கின்றோம். சாதாரணமாக ஓடுகின்ற ஒருவனை ஓட ஓட விரட்டுவதே உலக இயல்பு. எவ்வளவு அடித்தாலும் எதிர்க்கமுடியாமல் தாங்கிக் கொள்ளுகின்ற ஒருவனை அடிக்கின்றவன் பயமில்லாமல் அடிப்பதுதான் இயல்பு. “நாம் விரட்டினால் நம்மை எதிர்த்து விரட்டுவான்” என்ற பயமிருந்தால், “நாம் அடித்தால் நம்மையும் திருப்பி அடிப்பான்” என்ற அச்சமிருந்தால் விரட்ட எண்ணுகின்றவனும், அடிக்க நினைக்கின்றவனும், நினைத்தவுடன் விரட்டவோ, அடிக்கவோ, துணிய மாட்டான் என்பது உறுதி. இந்த முறையில் இந்துக்களின் நிலைமையையும், முஸ்லிம்களின் நிலைமையையும் எடுத்துக் கொண்டால், இந்துக்கள் சமூகம் ஜாதிமத விஷயங்களில் நெல்லிக் காய் மூட்டைகளாய் இருப்பதனால், ஒற்றுமையோடு எதிர்க்கின்ற கூட்டத்தைக் கண்டால் முதலில் பயந்து ஓடக் கூடிய நிலையிலும், அடிபடக் கூடிய நிலையிலுமே இருக்கின்றது என்பதில் ஐயமில்லை. இக்காரணத்தினால் தான் முஸ்லிம்கள் சிறுபான்மையினரா யிருந்தாலும் அஞ்சாமல் எதிர்க்கவும் இந்துக்கள் முதலில் யோசனை
யில்லாமல் கலகம் உண்டாவதற்குக் காரணமாயிருந்து விட்டுப் பிறகு அடி பட்டு ஓடவும் நேருகின்றது. இதற்கிடையில், கலகக்காரர்களும் கொள்ளைக் காரர்களும் புகுந்து கலகத்தை அதிகப்படுத்திப் பொருள்களைக் கொள்ளை. யடிக்கின்றார்கள்.
ஆகவே, ஒருவன் அடிப்பதைப் பொறுத்துக் கொண்டிருப்பது, அல்லது ஒருவன் விரட்டுவதைக் கண்டு ஒருவன் பயந்துகொண்டு ஓடுவது என்ற நிலை இருக்கும் வரையிலும் இது மாதிரியான வகுப்புக் கலகங்களும் மதச்சண்டைகளும் இருந்துதான் தீரும் என்பதில் யாரும் சந்தேகமே படவேண்டியதில்லை.
ஆனால், திரு.காந்தியின்- காங்கிரசின் ஆதிக்கம் ஏற்பட்டபின் இந்த நிலைமாறி, கலகத்தை எதிர்த்து நின்று அடக்கும் சக்தி உண்டாவதற்கு வழியே இல்லாமல் போய்விட்டது. திரு. காந்தியின் உபதேசமும், காங்கிரசின் பிரசார
மும் “சத்தியாக்கிரகம் பண்ணுங்கள்! தடியடி வாங்குங்கள்! எவ்வளவு அடித்
தாலும் பட்டுக் கொள்ளுங்கள்! ஆத்மசக்திதான் பெரிது! ஆத்மசக்தியினால் எதிரிகளை வெற்றி கொள்ளுங்கள்” என்று கோழைத்தனத்தை ஊட்டிக் கொண்டு வருகின்றது. இந்தக் கோழைத்தனமான பிரசாரம் நடைபெறுகின்ற வரையிலும், இதை மக்கள் பின்பற்றிக் கொண்டு அடிபடுகின்ற வரையிலும்
எந்த வகுப்பினரானாலும் சரி, எந்த மதத்தினரானாலும் சரி, கலகம் நேரும் போது அடிபட்டு மானங்கெட்டுச் சாவ வேண்டியது தான்.
ஆகவே, இந்து முஸ்லிம் கலகத்திற்குக் காரணம் அரசியலும், மூட நம்பிக்கைகளும், ஒரு சார்பாரின் கோழைத்தனமும் காரணமா யிருப்பதை உணராமலும், உணர்ந்து அவைகளை ஒழிக்க வழி தேடாமலும், இருந்து
குடி அரசு - 1922 0) 204.
கொண்டு வீணாக அரசாங்கத்தின் மேல் பழி போடுவது எவ்வளவு ஒழுங்கான செய்கையாகும்?
கலகம் நேர்ந்தபின், அதை அடக்க அரசாங்க அதிகாரிகள் சரியான முறைகளைக் கையாளவில்லை; பாராமுகமாக இருக்கிறார்கள் என்று தேசீயவாதிகளும், தேசீயப் பத்திரிகைகளும் கூச்சலிடுகிறார்கள். ஆனால் அரசாங்கத்தாருடைய அடக்கு முறைகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்படாமல் சட்டமறுப்புச் செய்யக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? இந்தத்
தேசீயத் தலைவர்களும் பத்திரிகைகளும் அல்லவா? அரசாங்கத்திற்கு விரோதமாகக் காங்கிரஸ்காரர்கள் சட்டமறுப்பும் கலகமும் செய்வது போ லவே, இந்துக்கள் முஸ்லிம்களுக்கு விரோதமாகவும், முஸ்லிம்கள் இந்துக் களுக்கு விரோதமாகவும் கலகம் புரிகின்றார்கள். சட்டமறுப்புக் காரர்கள். அரசாங்கத்தாருடைய தடியடிகளையும், பிரம்படிகளையும், கடுமையான தண்டனைகளையும் மீறிக் கலகம் பண்ணுவது போலவே, இப்பொழுது இந்துக்களும், முஸ்லிம்களும் அரசாங்க அதிகாரிகளின் அடக்கு முறை களுக்கும் அடங்காமல் கலகம் பண்ணிக் கொள்ளுகிறார்கள். ஆகவே இந்தக் குற்றத்திற்கும் அரசியல் கிளர்ச்சியே காரணம் என்பதை யார் மறுக்கமுடியும்?'
அன்றியும் இந்த இந்து முஸ்லிம் கலகம் நடந்த காலத்தில், அந்த பம்பாய் நகரத்திலேயே போஸ்டாபீஸ்களுக்குத் தீ யிடுவதும், தபால் பெட்டி களுக்குத் தீ யிடுவதும் ஆகிய காரியங்களும் நடந்திருக்கின்றன. இதைக் கொண்டே இக்கலகம் சட்ட மறுப்புக்காரர்களால் உண்டானதா? அல்லவா? என்பதை எளிதில் தீர்மானிக்கலாம்.
ஆகவே இனியாவது உண்மையில் இந்து முஸ்லிம் ஒற்றுமை உண்டாகவேண்டுமானால், இருவகுப்பினரிடமுள்ள மூட நம்பிக்கை களையும் முரட்டுப் பிடிவாதங்களையும் ஒழிப்பதும், அரசியலில் முஸ்லிம்
கள் விரும்பும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தேசீயவாதிகள் சம்மதிப்பதும், இந்துக்கள் கோழைகளாயில்லாமல் முஸ்லீம்களைப் போல் ஒற்றுமையாகவும், தைரியமாகவும் இருக்கும்படி செய்வதும், பொது ஜனங்களிடம் சட்டத்தை மீறுவது, கலகம் பண்ணுவது என்ற எண்ணம் உண்டாகாமல் இருக்கச் செய்வதும் ஆகிய காரியங்களாலேயே முடியுமென்று கூறுகிறோம்.
இதைவிட்டு விட்டு இப்பொழுதே வெள்ளைக்காரர்கள் நமது நாட்டை விட்டு ஓடி விட வேண்டுமென்று பிரசாரம் பண்ணுவதும், இன்றைக்கே பூரண சுயேச்சை கொடுத்துவிட்டால் வகுப்புச் சச்சரவுகள் ஒழிந்து சமரசம் ஏற்பட்டு விடும் என்று சொல்லுவதும் வீண் என்பதையும், அதனால் ஒரு பலனும் உண்டாகப் போவதில்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 22.05.1932.
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
எதிரிகனிண் alapoiniyammb
நமது இயக்கத் தோழர்களான திரு. செளந்தர பாண்டியன் அவர்களும்,
திரு. வி. வி. ராமசாமி அவர்களும், திரு. முருகப்பர் அவர்களும், திரு. கி.ஆ பெ.விஸ்வநாதன் அவர்களும், திரு.டி.வி சோமசுந்தரம் அவர்களும், “சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை வரையறுத்து ரிஜிஸ்டர் செய்ய முடியாதிருப்பதனாலும், பலரும் தங்கள் தங்கள் விருப்பப்படி சங்கத்தின் அனுமதியின்றி நடந்து கொள்ளுவதாலும், இயக்க நிர்வாகக் கமிட்டி யினின்றும் நீங்கிக் கொள்ளலாமா” என்று யோசனை செய்ததாகவும், முடிவை நமது மாகாணச் சங்கத் தலைவர் திரு. ஆர். கே. சண்முகம் அவர்கள் வரும் வரையிலும் ஒத்திவைத்திருப்பதாகவும், அதுவரையிலும் இயக்கத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதென்று தீர்மானித் திருப்பதாகும் சண்டமாருதம் பத்திரிகையில் ஒரு அறிக்கை வெளிவந்தது.
அவ்வறிக்கை வெளிவந்த பின் திரு. டி. வி.சோமசுந்தரம் அவர்கள், தான் அவ்வறிக்கையில் சம்பந்தப்படவில்லையென்றும், தனக்கு அவ் வறிக்கையில் கூறியுள்ளவை யாதொன்றும் தெரியாதென்றும், அவ்வறிக்கை.
யில் கண்ட விஷயங்களை தாம் ஒப்பவில்லை என்றும், அவ்வறிக்கையில் கையெழுத்து இடும்படி தன்னை யாரும் கேட்க வில்லையென்றும் வெளியிட் டிருக்கிறார். மற்றவர்கள் நால்வரும் “சண்டமாருதத்தில்” வெளிவந்த அவ்வறிக்கைக்குப் பின் வேறொரு செய்தியும் வெளிப்படுத்தாததால் அவ் வறிக்கையின் அபிப்பிராயத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளுவதாகவே நாம். கருத வேண்டியிருக்கிறது.
ஆகவே நமது இயக்கத் தோழர்களான திரு. செளந்தரபாண்டியன் அவர்களும், திரு. முருகப்பர் அவர்களும், திரு. வி.வி.ராமசாமி அவர்களும்,
திரு. கி.ஆ. பெ. விசுவநாதன் அவர்களும் இவ்வறிக்கையை வெளியிட்ட
திலிருந்து நமது இயக்க அபிமானிகள் பலர் அவர்கள் இயக்க த்திலிருந்தே விலகி விட்டதாக ஒரு தப்பு அபிப்பிராயப்படுவதாக அறிகின்றோம். இதற்கு அனுசரணையாக நமது எதிரிகளும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து மேற்கண்ட தோழர்கள் விலகிவிட்டார்களென்றும், அதனால் சுயமரியாதை
இயக்கத்தில் பிளவு உண்டாகி விட்டதென்றும், இனி இயக்கம் அழிந்து விடுமென்றும் விஷமப் பிரசாரம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
குடி அரசு - 1922 0) 206
ஆனால் உண்மையில் மேற்கூறிய நான்கு தோழர்களும் நமது இயக்கத்திலிருந்து விலகவில்லை யென்பதையும், விலகுவதற்கு நினைக்கக் கூட இல்லை என்பதையும், இவர்கள் எந்தக் காலத்திலும் நமது இயக்கத்தை. விட்டு விலகக் கூடியவர்கள் அல்ல வென்பதையும் சந்தேகமில்லாமல் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இந்த நான்கு தோழர்களும் நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் இதில் ஈடுபட்டு யாருடைய தயவு தாட்சண்யங்க ளுக்கும் கட்டுப்படாமல் உழைத்து வருபவர்கள் என்பதை நாம் கூறுவது மிகையேயாகும். உண்மையில் இத்தோழர்கள் சுயநலங்கருதியவர்களா யிருந்தால் அவர்கள் நமக்கு எதிரிடையான இயக்கங்களில் சேர்ந்து சுலபமாக. தேசாபிமானப் பட்டம் பெற்றிருக்கலாம். அப்படியில்லாமல் உண்மையான சுயமரியாதைக் காரர்களாகவும் இயக்கக் கொள்கைகள் முழுவதையும் மனப் பூர்வமாக நம்பி ஒப்புக் கொள்ளுகின்றவர்களாகவும் இருக்கும் காரணத்தால் தான் அவர்கள் இது வரையிலும் நமது இயக்கத்திலிருந்து கொண்டு எதிரி
களின் மிரட்டுதல்களுக்கும் வசைமொழிகளுக்கும் அஞ்சாமல் உழைத்து வருகிறார்கள் என்பது நமது இயக்கத்தில் உள்ள மற்ற தோழர்களுக்குத் தெரியாத செய்தியல்ல.
இத்தகைய உண்மையான சுயமரியாதைத் தோழர்களை, இயக்கத்
திலிருந்து விலகிவிட்டார்களென்று சிலர் செய்யும் “பிரசாரம்” நமது இயக்கத்
தின் மேல் உள்ள குரோத புத்தியினால் செய்யப்படும் பொய் பிரசாரமேயாகும். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிரிகளின் கூற்றுக்கு ஆதாரமாக ஒரு வார்த்தையாவது ஒரு எழுத்தாவது காணப்படுகிறதா? என்று கேட்
கின்றோம்.
அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் காணப்படுவது “இயக்க நிர்வாகக் கமிட்டியிலிருந்து விலக்கிக் கொள்ளலாமா” என்று யோசித்த தாகவே காணப்படுகிறதே யொழிய இயக்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அவர்கள் ஒரு பொழுதும் கருதியதில்லை யென்று அறியலாம். ஆகையால் அவர்கள் வெளியிட்ட அறிக்கையைத் திரித்துக் கூறி தப்புப் பிரசாரம் செய்வதன் மூலம் மேற்கூறிய நமது இயக்கத் தோழர்களின்மேல் பழி சுமத்தும் பொறுப்பற்றவர்களின் வார்த்தைகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
எந்த இயக்கத்திலும் தலைவர்களுக்குள் மன வேற்றுமை ஏற்படுவதும், அதனால் வருத்தமடைவதும் சகஜம். அதனால் இயக்கத்தின்மேல் உண்மை யான பற்றுடைய யாரும் திடீரென்று இயக்கத்தை விட்டு விலகி விடாமல், இயக்கத்தில் தாங்கள் வகித்திருக்கும் பொறுப்பான பதவிகளிலிருந்து ஒதுங்கி நிற்பதும், தங்கள் மன வேறுபாடு தீருகின்ற வரையிலும், இயக்க நடவடிக்கை
களில் கலந்து கொள்ளாமலிருப்பதும் சில சமயங்களில் நடைபெறக் கூடிய காரியங்கள்தான். இந்தமுறையிலேயே நமது இயக்கத் தோழர்களுக்கும் சில விஷயங்களில் அபிப்பிராயப்பேதம் தோன்றி வருத்தமடைந்து நடவடிக்கை.
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
களிலிருந்து மாத்திரம் தற்சமயம் விலகியிருக்கத் தீர்மானித்திருக்கிறார்கள். என்றுதான் நம்புகிறோம்.
இனி நமது இயக்கத் தோழர்களான மேற்கூறியவர்கள் நிர்வாகக் கமிட்டியிலிருந்து விலக யோசித்ததற்குத் தாங்கள் கூறிய காரணங்களை: நிவர்த்தித்து இயக்கத்தைப் பலப் படுத்துவதற்கு இச்சமயத்தில் தாங்களே உழைக்க வேண்டுமென்றும், நமது எதிரிகளின் விஷமப் பிரசாரத்திற்கு இடங் கொடாமல் இயக்க நடவடிக்கைகளில் கலந்து கொண்டு இயக்க வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் தோழர்களான ஈ. வெ. ராமசாமி, ஆர்.கே.சண்முகம், எஸ்.ராமநாதன் முதலியவர்கள் வந்தபின் மனவருத்தம் அடைந்திருக்கும் நமது இயக்கத் தோழர்கள் கூறும் குறைகளின் உண்மை களை ஆராய்ந்து நிவர்த்திக்கப்பட்டு எல்லாத் தோழர்களுக் குள்ளும் ஒருமனப்பட்ட அபிப்பிராயமும் சமரசமும் உண்டாகு மென்பதிலும் இவர்
கள் முன்னிலும் பன் மடங்கு உற்சாகத்துடன் நமது இயக்க வளர்ச்சிக்காக வேலை செய்வார்களென்பதிலும் ஐயமில்லை.
ஆகையால் நமது இயக்க அன்பர்கள் யாரும் தோழர்கள் செளந்திர
பாண்டியன், முருகப்பர், வி.வி.ராமசாமி, கி.ஆ, பெ. விசுவநாதன் முதலியவர் களைப் பற்றி எதிரிகள் செய்யும் தப்புப் பிரசாரத்திற்கும் அவர்கள் இயக்கத்
திலிருந்து விலகி விட்டதாகக் கூறும் புரளிகளுக்கும் செவி சாய்க்காமலிருக் கும்படிவணக்கமாக எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.05.1932.
குடி அரசு - 1922 0) 208
விபசாரம் ஒழியுமா?
“விபசாரம்” என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள். பலவகையாகும். பொதுவாக இப்பொழுது “பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபசாரம்” என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் “விபசாரம்” என்றே கூறலாம்
இத்தகைய “விபசார”த்தினால் தேசத்தில் உண்டாகி வரும் தீமைகள். எண்ணற்றவை. கேட்கச் சகிக்காத கொடும் பிணிகளும், பார்க்கப் பொறுக்காத பெரும்நோய்களும் விபசாரத்தினால் உண்டாகின்றன. விபசாரத்தில்
ஈடுபட்டிருக்கும் ஆண்களும், பெண்களும் நோய்வாய்பட்டு வருந்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகளும் நோய்க்கு ஆளாகி ஜன சமூகத்தையே பிணியடையச் செய்யும் காளான்களாக இருக்கின்றனர்.
இன்னும் “விபசார"த்தினாலேயே கொலை, களவு முதலிய தீச் செயல் களும் மிகுதிப்படுகின்றன. ஆதலால் இக்கொடிய விபசாரத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது; அறிஞர்கள் எல்லோரும்
இக் கொடுமையைப் பற்றி பேசி வருகின்றனர்.
ஜனசமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் “விபசாரத்தைப்”' போன்ற வேறொரு கொடிய புழு இல்லை யென்றே சொல்லலாம்.பண்டைக் காலந் தொட்டு வழங்கி வரும் அனேக தீய விஷயங்களில் “விபசார”மும் ஒன்றாகும்.
பழந்தமிழ் நூல்களில் “விலை மகளிர்”, “பொது மகளிர்”, “வரைவின் மகளிர்” என்னும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்களுடைய தொழில் *விபசார'மேயாகும். “விபசாரம்” என்பது சாஸ்திரங்களின் மூலம் குற்றமாகக் கருதப்பட்டாலும், ஜன சமூகத்தில் அது தாராளமாக நடைபெற்றே வந்திருக் கிறது. ஒரு ஆடவன், மணம்புரிந்து கொண்ட மனைவியோடு கூட “காதற் கிழத்தி” என்னும் பெயருடன் நிலையாக வேறொரு பெண்ணோடு சேர்ந்தி
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ருப்பதும் சில சமயங்களில் இதுவும் போதாமல் “கணிகையர்” இல்லங்க ளுக்குச் சென்று வருவதும் வழக்கமாகயிருந்ததாகவும் தமிழ் நூல்களால் அறியக்கிடக்கின்றது.
இதுவும் அல்லாமல், கோயில்களின் ஆடல் பாடல்களைச் செய்து கொண்டும், “சாமியையே கல்யாணம் செய்து கொள்ளப்பட்டது என்னும் அர்த்தத்தில் பொட்டுக் கட்டிக் கொண்டும், “தேவரடியார்” எனப் பெயர் பூண்டும் வாழும் கூட்டத்தினரும், விபசாரத்திற்குக் காரணமாக இருப்பதும் நாடறிந்த செய்தியாகும். இத்தகைய “தேவரடியார்' களைப் பற்றியும் அவர்கள் கோயில்களிலுள்ள கல்லுச் சாமிகளுக்குப் (அவைகளை உண்டாக்கி வைத்திருக்கும் புரோகித ஆசாமிகளுக்கும்! பெண் சாதிகளாக இருந்து தொண்டு புரிய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் சமஸ்கிருத நூல்களில் சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
தமிழ் நூல்களிலோ பண்டைக் காலத்தில், விபசார வாழ்க்கையை மேற்கொண்டிருந்த “விலை மகளிர்” “பொது மகளிர்” “வரைவின் மகளிர்” என்ற பெயருடைய கூட்டத்தார் போக, ஆடல் பாடல்களைத் தொழிலாகக் கொண்டிருந்த “பாடினி” “பாணினி” “விறலி” என்ற பெயருடைய ஒரு கூட்டத் தினரும் வேறேயிருந்திருக்கின்றனர். இக் கூட்டத்தாருக்கும் தற்காலத்தில் உள்ள “தேவரடியார்” என்னும் கூட்டத்தாருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கக் கூடுமா? என்பது ஆராயத்தக்க விஷயமாகும்.
ஆகவே இந்த “விபசாரம்” என்னும் கொடிய வழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல வென்பதையும், பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.
முற்காலத்திலிருந்த வைதீகர்கள், புலவர்கள், நூலாசிரியர்கள் முதலிய வர்கள் அனைவரும் விபசாரத்தின் தீமையைப்பற்றிக் கூறாமல் விடவில்லை. விபசாரத்தின் கெடுதியைப் பற்றிச் சொல்லாத நீதி நூல்களோ. இலக்கியங் களோ, கதைகளோ ஒன்றுமில்லை என்று கூறலாம். “கொலை”, “களவு”, “பொய்”, “கள்”, “காமம்” என்று கூறப்படும் பஞ்சமகா பாதகங்களில் “காமம்” என்று குறிப்பிட்டிருப்பது விபசாரத்தையேயாகும். இவ்வாறு வைதீகர்களும்,
நீதி நூல்களும், புலவர்களும், நூலாசிரியர்களும், விபசாரத்தை ஜன சமூகத் தினின்றும் நீக்குவதற்குப் பண்டைக் காலமுதல் முயற்சி செய்துங்கூட, அக் கொடிய வழக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்ததேயொழியக் குறைந்த பாடில்லை. இவ்வாறு “விபசாரம்” குறையாமல் வளர்ந்து வந்ததற்குக் காரணம். “விபசாரம்” தோன்றுவதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து அதை அடியோடு ஒழிக்க வழி தேடாமையேயாகும்.
“விபசாரம்” வளர்ந்ததற்கு முதற்காரணம் ஆடவர்களின் ஆணவமே
யாகும், பெண்கள் விஷயத்தில் மாத்திரம் “கற்பு” “பதிவிரதாதர்மம்” என்ற கட்டுப்பாடுகளை வற்புறுத்தி ஆண்கள் விஷயத்தில் வற்புறுத்தாமல்
குடி அரசு - 1922 0) 210
விட்டதனால் பெண்கள் பலர் விபசார வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது. பணம் கொடுத்துப் பண்டங்களை வாங்குவோர் இல்லாவிட்டால், பண்டங்களை: விற்பனைக்கென்று வைத்துக் கொண்டு வாங்குவோரை எதிர்பார்ப்பவர்களும் இருக்க மாட்டார்களல்லவா? அது போலவே சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப் பட்டு விபசாரியானவர்கள் பெருகியே விபசாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது.
இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமை: யான கட்டு திட்டங்களும் விபசாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் ஐய மில்லை.
காதல் மணமில்லாமை, விதவை மணமில்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமையில்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள் பெண்கள் விபசாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப் பனவாகும்.
ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத் தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.
பருவ காலத்தில் விதவையான பெண்களை சாஸ்திரங்களின் மேலும்,
மதத்தின் மேலும் பழிசுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபசாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபசாரிகளாலும், விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார்: மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில் தான் விபசாரங்களும்,சிசுக்கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?
இந்து சமூகத்தில், விவாக விடுதலை இல்லாமையால் நேரும் *விபசாரம்”மும் அதிகமே. மனைவியின் மேல் விருப்பமில்லாத கணவன், அவளை நீக்கிவிட்டுத் தாராளமாக வேறு பெண்ணை மணம் புரிந்து கொண்டோ அல்லது வேறு ஒரு பெண்ணைச் சேர்த்து வைத்துக்கொண்டோ வாழலாம். ஆனால் மனைவியோ வேறுமணம் புரிந்து கொண்டு வாழ, சட்டப்படி இடம் இல்லாமையால் விபசார வாழ்க்கையையே மேற்கொள்ள
நேருகின்றது.
பெண்களுக்கு கணவனுடைய சொத்திலும் பெற்றோர் சொத்திலும் உரிமை இல்லாத காரணத்தால் கணவனாலும் பெற்றோர்களாலும் ஆதரிக்கா
மல் விடப்பட்டவர்கள் ஜீவனத்திற்கு வேறு வகையில்லாத போது. “விபசார” வாழ்க்கையையே கைக்கொள்ளும்படி நேருகின்றது.
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
ஆகவே உண்மையில் விபசாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களு டைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்தரமாகிய காதல் மண: உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவா விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும்.
இப்பொழுது பல நாடுகளிலும் விபசாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள். செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால் விபசாரத் தடைச் சட்டம் அமுலிலிருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டதென்று கூறத்தகாது.
ஒருக்கால் இந்தியாவைத் தவிர மற்ற தேசங்களில் விபச்சாரத் தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்திவிடக்கூடும்.
ஏனெனில் இந்தியாவைத் தவிர மற்ற இடங்களில் நடைபெறும் விபசாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபசாரத்தைத் தடுப்பது எளிது.
ஆனால் நமது நாட்டில் நடை பெறுவது போன்ற மறைமுகமான விபசாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபசாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபசாரங்களையும் எப்படித் தடுக்க
முடியும்?
மேல் நாடுகளில் ரஷியா தேசம் ஒன்றில்தான் அடியோடு விபசாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல் சட்டமூலம் ஏற்பட்டிருக்கும் செளகரியமேயாகும்..
இப்பொழுது நமது தேசத்தில் பரோடா, மைசூர், திருவாங்கூர் முதலிய சமஸ்தானங்களில் சட்டம் மூலம் விபசாரம் தடுக்கப் பட்டிருக்கிறது. சென்னையிலும் பம்பாயிலும் “விபசார*ச் சட்டம் நிறைவேறியிருக்கிறது. பம்பாய் நகரத்திலும், சென்னை நகரத்திலும் இச் சட்டம் அமுல் நடத்தப் படுகிறது. இப்படி இருந்தும் மேற்கண்ட சமஸ்தானங்களிலும் நகரங்களிலும் விபசாரக் கொடுமை அடியோடு ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பகிரங்கமாக நடந்த “விபசார” வியாபாரம் ஓரளவு ஒழிந்ததே அன்றி மறைமுகமான விபசாரம் சிறிதும் குறையவேயில்லை.
இன்னும் இச்சட்டத்தை நாடெங்கும் அமுலுக்குக் கொண்டு வந்தாலும், தாட்சண்யமின்றிச் சட்டத்தின் விதிகளை உபயோகித்தாலும் விபசாரத்தை அடியோடு ஒழிக்க முடியாது.
குடி அரசு - 1922 0) 212
வெளிப்படையான “விபசார” வியாபாரத்தை ஓரளவு ஒழிக்க முடியுமே தவிர ரகசிய வியாபாரம் எப்பொழுதும் நடந்தே தான் தீரும்.
ஆகையால் மற்ற நாடுகளைப் போல் ஆண்களுக்கும் பெண்களுக்
கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம்
ஏற்படுத்தி அதை அனுபோகத்தில் கொண்டு வருவதன் மூலந்தான் விபசாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆனால் நமது நாட்டு வைதீகர்களோ விபசாரம் தீயது என்று வாயளவில் மாத்திரம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குத் தமது வீட்டில் உள்ள விதவைப் பெண் மக்கள் செய்யும் விபசாரம் கண்ணுக்
குத் தெரிவதில்லை.தமது குடும்பங்களில் உள்ள ஒற்றுமையில்லாத தம்பதிகள். செய்யும் விபசாரமும் கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைக் குற்றமாகவோ விபசாரமாகவோ கருதாமல், அதற்குப் பரிகாரம் தேடாமல் கண்ணால் காணாதது போலவும், காதால் கேளாதது போலவும் இருந்து விடுகின்றார்கள்.
விபசாரம் ஒழிவதற்கு, காதல் மணம், விதவை மணம், விவாக விடுதலை, சொத்துரிமை முதலியவைகளே வழியென்று கூறும் சீர்திருத்தக் காரர்களையும் சுயமரியாதைக்காரர்களையும் “பெண்களை யெல்லாம் விபசாரம் செய்யத் தூண்டுகின்றவர்கள்”” என்று குறைகூறுகின்றார்கள்.
மதப் புரட்டுகளையும், சாஸ்திரப்புரட்டுகளையும், நம்பிப் பெண் களைக் கொடுமைப்படுத்தி விபசாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டி
ருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும், சமுதாய விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபசாரத்தை ஒழிப்பதற்கு எத்தகைய சட்டங்கள். செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.05.1932
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சீர்திருத்த அளசியல் சிங்கம்
உண்மையான சீர்திருத்தக்காரரும், தேசபக்தருமான திரு.விபினசந்திர: பாலர் அவர்கள் காலஞ்சென்ற செய்திகேட்டு வருந்துகின்றோம். நமது நாட்டில் அரசியல்வாதியாகவும், சமுதாய சீர்திருத்தவாதியாகவும் விளங்கிய தலைவர்கள் சிலரேயாவார்கள், அவர்களில் காலஞ் சென்ற லாலா லஜபதிராய் ஒருவர் என்பது நாடறிந்த செய்தி. அவரைப் போன்றே திரு. விபினசந்திர
பாலரும் சமுதாய சீர்திருத்தக் காரராகவும், நிதானமுள்ள அரசியல்வாதியாக
வும் விளங்கினார்.
சென்ற 1925 ல் சென்னையில் நடைபெற்ற ஒரு வாலிபர் மகாநாட்டில்
திரு. விபினசந்திர பாலர் அவர்கள் தலைமை வகித்துப் பேசும் போது “நீங்கள். உண்மையில் வீரர்களாகவும். தேசத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் இருக்க விரும்புவீர்களானால் 25 வயதிற்குமுன் ஒருக்காலும் மணம் புரிந்து கொள்ளாதீர்கள்! ஒரு சமயம் உங்கள் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மணம் செய்து வைக்கத் துணிவார்களாயின் வீட்டை விட்டு ஓடிப் போய்விடுங்கள்” என்று கூறினார். இதைப் போலவே பெண்கள் மணவிஷயத்திலும் பால்ய மணம் கூடாது என்ற அபிப்பிராயமுடையவர்..
அன்றியும் திரு. பாலர் அவர்கள் தமது முதல் மனைவி இறந்தபின் இரண்டாவதாக ஒரு விதவைப் பெண்ணையே மணம் புரிந்து கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தமது இளம் வயதிலேயே சீர்திருத்த அபிப்பிராயங்களை உறுதியாகக் கொள்ளத் தொடங்கி விட்டார். பிரம்ம சமாஜ ஸ்தாபகரான பாபு கேசவசந்திரசென் அவர்களின் மாணவராகிப் பிரம்ம சமாஜத்தில் ஈடுபட்ட பொழுது இவரது தந்தை அதில் ஈடுபடக்கூடாது எனத்தடுத்தும் கேட்காமல்
பிரம்ம சமாஜக் கொள்கைகளை மேற்கொண்டதால் தமது சொத்துக்களை இவருக்குக் கொடுக்காமல் வேறொருவருக்கு எழுதி வைத்தும்; வீட்டை
விட்டுத் துரத்தியும் கூட தமது உறுதியான கொள்கையினின்றும் சிறிதும் தவறாத வீரராக விளங்கினார். இத்தகைய அஞ்சா நெஞ்சம் படைத்த
சீர்திருத்த வீரர் நமது விபினசந்திர பாலர்.
குடி அரசு - 1922 0) 214
காங்கிரஸ் திரு. காந்தியின் கையில் சிக்கி தாறுமாறாகும் வரையில் காங்கிரசில் சேர்ந்து இருந்தார்: காங்கிரஸ் பயனற்ற ஆவேசமான காரியங்
களில் புகுந்த போது அதைவிட்டு விலகித் தனித்து நின்று தேச ஊழியம்
புரிந்து வந்தார்.
சாதாரணமாக சுயராஜியம் என்னும் பெயரால் மக்களை ஆவேசமான வழிகளில் தூண்டிவிட்டு வீண்கிளர்ச்சிகளை உண்டாக்கி நாட்டில் பொருளா தாரக் கஷ்டத்தையும் மற்றும் பல தொல்லைகளையும் உண்டாக்கும் ஆவேசக்காரர்களுக்குத் தேசத்தலைவர் பட்டம் கிடைப்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாகவும், அமைதியாகவும் பலனுண்டாகும்
படியும் அரசியலிலும் சமுதாய விஷயங்களிலும் ஈடுபட்டு உழைக்கின்ற வர்களுக்குத் தேச துரோகப் பட்டம் கிடைப்பதும் போலவே நமது திரு. விபினசந்திரபாலர் அவர்களுக்கும் காங்கிரசிலிருந்து விலகிய பின் வசை மொழிகளும், தேசத்துரோகப் பட்டமும் கிடைத்துவந்தன. ஆயினும் அவர். சிறிதும் அஞ்சாமல் இறக்கும் வரையிலும் தமது அபிப்பிராயங்களை: அடிக்கடி பத்திரிகைகளில் வெளிப்படுத்துவதன் மூலம் தேச ஊழியம் புரிந்து கொண்டு வந்தார்.
பேசுந் திறமையில் இவரைப் போல் சிறந்தவர் வேறு எவரும் இல்லை யென்று சொல்லலாம்.1907-ம் ஆண்டில் சென்னை கடற்கரையில் இவர் செய்த பிரசங்கத்தொனி இன்னும் இந்திய மக்கள் மனத்தைவிட்டு நீங்கியிருக்க
முடியாது.
இத்தகைய பெரியார் தமது 76 - வது வயதில் காலஞ் சென்றது பற்றி
நாம் அதிகமாக வருந்துவதற்கு நியாயமில்லை. வயதேறியவர்கள் இறப்பது இயல்பே என்று சமாதானமடைவதே முறையாகும். இவர் கொண்டிருந்த அரசியல் அபிப்பிராயத்தையும், சமுதாய சீர்திருத்த அபிப்பிராயத்தையும் நமது நாடு பின்பற்றியிருக்குமாயின் தற்பொழுதுள்ள மோசமான நிலை மாறி. எவ்வளவோ ஒழுங்கான முறையில் முன்னேறியிருக்கக்கூடும் என்ற விஷ யத்தை இச்சமயத்தில் ஞாபகப்படுத்த வேண்டியது தேச ஊழியர்களின்
கடமையாகும்...
காலஞ் சென்ற திரு. விபினசந்திரபாலர் அவர்களின் தேச ஊழியத்தைப் போற்றுகின்றவர்களும் அவருடைய சமுதாய ஊழியத்தைப் பாராட்டுகின்றவர்களும் அவருக்குச் செய்ய வேண்டிய நன்றி அவருடைய உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் நன்மைக்கு உழைப்பதேயாகும் என்று தெரிவித்துக் கொள்ளுவதுடன் அவருடைய அன்பினர்களுக் கெல்லாம் நமது அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.05.1932
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இனைஞர்களும் சுயமரியாதையும்
கத்தோலிக்கர் பயம்
இளைஞர்களுக்கும். சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி இப்பொழுது நாம் கூறுவது புதியதன்று. இந்த நாட்டில்
மட்டிலும் அல்ல, வேறு எந்த நாட்டிலும் மூடப் பழக்க வழக்கங்களையும் அவற்றிற்குத் தந்தைமார்களாக இருந்து வளர்த்து வரும் புரோகிதர்களின் ஆதிக்கங்களையும், இந்தப் புரோகிதர்களின் வயிற்றுப் பிழைப்பு வஞ்சகச் செயல்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து வரும் மதங்களையும் அழித்து தவிடுபொடி செய்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் அந்நாட்டின் வாலிபர்.
கள் என்பதை உலக ஞானம் உள்ள எவரும் அறிவார்கள். இளைஞர்களால் விரும்பப்படாததும், அவர்களுடைய கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் பெறாததுமான எந்த இயக்கமும் மாண்டு மடிந்து இருந்த இடந்தெரியாமலும், தேசமக்களின் நினைவில்கூட இல்லாமலும் போதல் திண்ணம். ஏனென்றால் முதியோர்களைப் போன்று அழுக்கேறிப் பாசம் பிடித்து. சுரணையற்றுப் போன மூளை இளைஞர்களிடமில்லை. இது நமது முன்னோர் வழக்க மாயிற்றே இதை விட்டு விட்டால், நமக்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ! அண்டை அயலார் நம் மேல் பழி கூறுவார்களே! இதனால் நமது வருவாய்க்கு இடையூறு நேர்ந்து விட்டால் என்ன செய்வது? வழக்கத்திற்கு விரோதமாக நடந்தால் “குலதெய்வம்” கெடுத்து விடுமோ “தெய்வம் கோபித்துக் கொள்ளுமே” என்று தொட்டதற்கெல்லாம் சந்தேகமும், பயமும் கொள்ளு
கின்ற கோழைத்தனமும் பேடித்தனமும் இளைஞர்களிடமில்லை. இளைஞர் களின் சிந்தையும், அறிவும் செயலும் பரிசுத்தமானவை; ஒரு கட்டுப்
பாட்டுக்குள் அடங்காதவை; சுயநல விவகாரங்களில் படிந்து முனை மழுங்கா
மல் கூர்மையாகவே இருப்பவை. ஆகையால் அவர்கள் எந்தச் செயல் களையும் ஆலோசித்துப் பார்த்து அவை சரியானவை என்று தம்மனத்திற்குப் பட்டால் உடனே அந்தக் காரியத்தை யாருடைய புகழ்ச்சியையும், இகழ்ச்சி யையும் எதிர்பாராமல், ஆதரிப்பையும், புறக்கணிப்பையும் பொருட் படுத்தாமல், எதிர்ப்பையும் கண்டிப்பையும் லட்சியம் பண்ணாமல், செயல் முறையில் காட்டக் கூடிய ஆண்மை படைத்தவர்கள். ஆகையால்தான் அவர்கள் தலையிட்டு அவர்களுடைய ஆதரவைப் பெற்று அவர்களுடைய ஊழியத்தைப் பெற்று, நடைபெறக் கூடிய எந்த இயக்கங்களும் மின்சார சக்திபோல் பரவி வெற்றி பெற்று வருகின்றன.
குடி அரசு - 1922 0) 216
துருக்கி தேசத்தின் சுயமரியாதை வீரரான “முஸ்தபா கமால் பாஷா” அவர்களின் கொள்கைகளை முழுமனத்துடன் ஆதரித்து, நாடெங்கும் பரவச் செய்து வெற்றியைக் கொடுத்தவர்கள் இளைஞர்கள்; இத்தாலி தேசத்தின் சுயமரியாதை வீரராகிய “முசோலினி” அவர்கள் அந்நாட்டு இளைஞர்களின் ஆதரவைப் பெற்றே தமது கொள்கைகளில் வெற்றி பெற்றார்; ரஷியா
தேசத்துச் சுயமரியாதை வீரராகிய “லெனின்” அவர்களும் இளைஞர்களின் துணையைக் கொண்டே தமது கொள்கைகளை நிலைநிறுத்தி வெற்றி பெற்றார்; ஸ்பெயின் தேசத்தில் புரோகிதர்களின் ஆதிக்கத்தை ஒழித்து மக்களின் சுயமரியாதையைக் காப்பாற்றக் காரணமாயிருந்தவர்களும், இருக்கின்றவர்களும் இளைஞர்கள்: கடந்த மகாயுத்தக் காலத்தில் அப்பொழுது பிரிட்டிஷ் முதல் மந்திரியாகயிருந்த திரு. லாயிட் ஜார்ஜ் அவர்களின் விருப்பத்தின்படி நின்று இங்கிலாந்தின் சுயமரியாதையைக் காப்பாற்றியவர்கள் அந்நாட்டின் இளைஞர்கள் என்னும் விஷயங்கள் சரித்திர ஞானம் உள்ளவர்களுக் கெல்லாம் தெரியாதவை யல்ல.
பழயகால சரித்திரங்களைப் புரட்டிப் பார்த்தாலும் இந்த உண்மையை வெளிப்படையாக உணரலாம். கிரீசின் வைதீக முதலாளிக் கூட்டத்தாரால் அக்கிரமாகக் குற்றஞ் சாட்டி விஷங்கொடுத்துக் கொல்லப்பட்ட “சாக்ரட்டீஸ்” என்னும் பெரியாரின் கொள்கைகளை ஆதரித்தவர்கள் இளைஞர்கள்: அக்காலத்தில் மூடநம்பிக்கை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களுக்குப் புரோகிதர்களின் வஞ்சகச் செய்கைகளை எடுத்துக் காட்டி அவர்களை: விடுதலை செய்த ஏசுகிறிஸ்துவின் கொள்கைகளைப் பரவச் செய்தவர்கள். இளைஞர்கள்; விக்கிரக ஆராதனைகளிலும், பலிகளிலும், கொடுமையான வழக்கங்களிலும் அமிழ்ந்துக் கிடந்த அரேபிய தேச மக்களுக்குச் சுயமரியாதையை உண்டாக்கிய முகமது நபி அவர்களின் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தவர்கள் இளைஞர்கள்; ஜெர்மனி தேசத்தின் சுயமரியாதை வீரராகிய மார்ட்டின் லூதர் அவர்களின் கொள்கைகளை ஆரம்பத்தில் ஆதரித்து நாடெங்கும் பரப்பியவர்கள் இளைஞர்கள்; மேற்கூறிய பெரியார்.
கள் அனைவரும் புரோகிதர்களின் மோசங்களையும், அக்கிரமங்களையும், வேஷங்களையும் எடுத்துக் காட்டி தேசமக்களை விழிப்படையச் செய்ய முயன்றபோது முதியவர்களான வைதீகர்களும், புரோகித ஆதிக்கத்திற்கு அடங்கியவர்களும் எதிர்த்து அப்பெரியார்களுக்குப் பலவகையான துன்பங் களை உண்டாக்கிய காலங்களிலும் அஞ்சாமல் அவர்கள் கொள்கைகளை ஆதரித்துப் பரவச் செய்தவர்கள் பரிசுத்த மனமுடைய இளைஞர்களே என்பதைக் கற்றவர்கள் யாவரும் அறிவார்கள்.
இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏழு ஆண்டுகளுக்கு முன் தொடங் கப்பட்ட நமது சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு இதைப் பரவச் செய்து வருபவர்கள் அனைவரும் பெரும்பாலும் இளைஞர்களே என்பதை யாரும் அறிவார்கள். இன்று சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று பிரயத்தனம் பண்ணிய படு வைதீகர்களின் பிள்ளைகளையும் நமது இயக்கம்
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வெளியில் இழுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டு வளர்ந்து வருவதுடன், அவ்வைதீகத் தந்தைமார்களின் உச்சிக் குடுமியையும் பிடித்துக் குலுக்குகிறது என்பது நாடெங்கும் தெரிந்த செய்தியாகும்.
“சைவப் பெரியார்" களெல்லாம் மகாநாடுகள் கூட்டிச் சுயமரியாதை: இயக்கத்தைக் கண்டித்தார்கள்.சைவ இளைஞர் மகாநாடு கூட்டி அவர்களை யெல்லாம் சுயமரியாதை இயக்கத்தில் சேரவிடாமல் தடுத்துப் பார்த்தார்கள். என்னதான் முயன்றாலும் இளைஞர் மனத்தையும் சுயமரியாதை இயக்கத் தையும் வேறுபடுத்த முடியாமல் இப்போது மூலையில் உட்கார்ந்து
விட்டார்கள்.
ஆனால் இப்பொழுது கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களில் சிலர் நம்மைக் கண்டிக்க முற்பட்டிருக்கின்றதைக் கண்டு நாம் ஆச்சரியமடையவில்லை. புரோகித ஆதிக்கம் எந்தெந்த இடங்களில் இருக்கின்றதோ, அங்கெல்லாம் நமது இயக்கம் சென்று அவ்வாதிக்கத்தைத் தளர்த்தாமற் போகாது.
இந்தியாவில் புரோகிதர்களின் சட்டத்திற்கும், நிபந்தனைகளுக்கும் அடங்கியுள்ள மதங்களில் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் மதமும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. ஆகையால்தான் அம்மத இளைஞர்கள் பலர் இப்பொழுது சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிறார்கள். இதைக் கண்டு பயந்தே அம்மத வைதீகர்களின் ஆதிக்கத்தில் சென்ற 30-5-32 -இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கத்தோலிக்க வாலிபர்களின் மகாநாட்டில் நமது இயக்கத்தைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். அத்தீர்மானம் வருமாறு:-
சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளை மேலே போர்த்துக் கொண்டு நாஸ்திகத்தையும் மதத்தில் வெறுப்பையும் பரப்பிவரும் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி இம்மகாநாடு கத்தோலிக்க இளைஞர்களுக்கு எச்சரிக்கை செய்வதுடன்,
சமத்துவமின்மையை உண்டு பண்ணியவர்களும், அதை ஆதரித்து வருகின்றவர்களும், குருக்கள்மார்கள் என்று சொல்லிக் குருக்கள் களை எதிர்த்தும், அவர்கள்மேல் குறைகூறியும் வரும் மனப்பான் மையை வளர்த்துவருவதையே நோக்கமாகக் கொண்டுள்ள இவ் வியக்கத்தின் செயல்களில் ஒன்றை இம்மகாநாடு முக்கியமாகக் கண்டிக்கிறது.
இத்தகைய பிரசாரத்தை அழிக்கத் தங்களால் முடிந்த வகையில் எல்லாம் முயற்சி செய்யுமாறு இம்மகாநாடு கத்தோலிக்க வாலிபர்: களைக் கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானத்தைக் கத்தோலிக்க வாலிபர்கள் மகாநாட்டில் நிறை
குடி அரசு - 1922 0) 218
வேற்ற வேண்டிய அவசியம் நேர்ந்ததற்குக் காரணம் இன்னதென்பதை நாம். விளக்கிக் காட்ட வேண்டியதில்லை. இத்தீர்மானத்தில் “சமத்துவமின்மையை உண்டுபண்ணியவர்களும், அதை ஆதரித்து வருகின்றவர்களும் குருக்கள் மார்கள் என்று சொல்லிக் குருக்களை எதிர்த்தும், அவர்கள் மேல் குறை கூறியும் வரும் மனப்பான்மையை வளர்த்துவருவதையே நோக்கமாகக் கொண்டுள்ள இவ்வியக்கத்தின் செயல்களில் ஒன்றை இம்மகாநாடு முக்கிய மாகக் கண்டிக்கிறது” என்று விளக்கமாகக் கூறப்பட்டிருப்பது ஒன்றே போதுமானதாகும்.
இத்தீர்மானத்தைச் செய்தவர்களுக்கு நாம் சொல்லுகின்றோம். சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் என்பனவைகளை உண்டாக்குவதே எங்கள் இயக்கத்தின் நோக்கம்: இவைகளுக்குத் தடையாக இருப்பவை புரோகிதர்களும், கடவுள், மோட்சம், நரகம், சொர்க்கம், பாவம், பாவமன்னிப்பு, பரலோகம் முதலிய பூச்சாண்டிகளேயாகும். இவைகளின் மேல் மக்கள்: கொண்டிருக்கும் மயக்கத்தையும் நம்பிக்கையையும் ஒழித்தால்தான் சுய மரியாதையை உண்டாக்க முடியும் என்றுதான் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகின்றோம். இந்தப் பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் எங்கள். இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுதும் இப்பிரசாரமே எங்கள்
இயக்கத்தின் முதன்மையாக இருந்து வருகிறது. இந்த பிரசாரமானது கத்தோலிக்க இளைஞர்கள் மனத்திலும், சைவ இளைஞர்கள் மனத்திலும், வைணவ இளைஞர்கள் மனத்திலும், முஸ்லிம் இளைஞர்கள் மனத்திலும்
மற்ற எந்த இளைஞர்கள் மனத்திலும் புகுந்துதான் தீரும். இந்த உணர்ச்சி இளைஞர்கள் மனத்தில் வேரூன்ற, வேரூன்ற பாதிரிகளுக்கும், பண்டார சன்னதிகளுக்கும், ஜீயர்களுக்கும், முல்லாக்களுக்கும் மற்றுமுள்ள சமுதா யத்தை அரித்துக் கெடுக்கும் விஷப்பூச்சிகளாகிய புரோகிதக் கூட்டங் களுக்கும் செல்வாக்கும், வயிற்றுப் பிழைப்பும் இல்லாமல் போகும் என்பதில் ஐயமில்லை.
சுயமரியாதை இயக்கம், குருக்கள்மார்களின் வஞ்சகச் செயல்களைக் கண்டிக்கின்றதென்று ஆத்திரப்பட்டு வாலிபர்களுக்கு எச்சரிக்கை செய்ய முன் வந்த கத்தோலிக்க கிறிஸ்துவ வாலிபர் மகாநாட்டார், அவர்களுடைய “கடவுள் குமாரன்” என்று சொல்லப்படுகின்ற ஏசுநாதர் புரோகிதர்களைக் கண்டித்திருப்பதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?
“நீங்கள் குருக்கள் என்று அழைக்கப்படாதிருங்கள்! கிறிஸ்து ஒருவரே உங்களுக்கு குருவாயிருக்கிறார்.”
“வஞ்சகர்களாகிய வேத பாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் வெளி வேஷத்திற்காக அதிக ஜெபம் பண்ணுவதுபோலக் காட்டி, விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள்.”
“சாப்பிடுகின்றதும் தண்ணீர் அருந்துவதுமான பாத்திரங்களின்
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
வெளிப்புறத்தை மாத்திரம் சுத்தமாக்குகிறீர்கள்! உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கின்றன.”
“நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பா யிருக் கிறீர்கள்! அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும் உட்புறத்திலோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா அசுத்தங்களும் நிறைந்திருக்கும்.”
“அப்படியே நீங்களும் வெளிவேஷத்தில் நீதிமான்கள் போல மக்களுக்குக் காணப்படுகிறீர்கள்! உள்ளத்திலோ, வஞ்சகத்தினாலும், அக் கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்!” என்று மத்தேயு சுவிசேஷம் 23-வது அதிகாரத்தில் சொல்லப்படும் விஷயத்தை நாம் இக்காலத்தில் எல்லா
மதத்தில் உள்ள குருமார்களுக்கும் பொருத்தமானது என்றுதான் சொல்லு கிறோம். எங்கள் இயக்கம் குறிப்பிட்ட ஒரு மதத்தைக் கண்டிக்கவோ, அல்லது ஒரு வேதத்தைக் கண்டிக்கவோ, அல்லது ஒரு மத குருமார்களைக் கண்டிக் கவோளழுந்தது அன்று என்று பல தடவை விளக்கப்பட்டிருக்கிறது. மக்களின் பகுத்தறிவிற்கு முட்டுக்கட்டைகளாக இருக்கும் மதங்களையும், எல்லா வேதங்களையும் எல்லா மதகுருக்கள்மார்களின் வஞ்சகங்களையும் ஒழிக் கவே செய்யும் என்பதை இப்பொழுதும் கூறுகிறோம்.
உண்மையில் இந்த விஷயங்கள் இளைஞர்களுக்கெல்லாம் தெரியாதவைகளும் அல்ல; புரோகிதர்களின், மோசங்களும் வஞ்சகங்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் மதப் புரட்டுகளும் இளைஞர்கள் மனத்தில் இயற்கையாகவே வேரூன்றி வந்து கொண்டிருக்கின்றன. ஆகை: யால் இனி எவர் என்ன தீர்மானங்கள் செய்தாலும், பிரசாரம் பண்ணினாலும். இளைஞர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.06.1932.
குடி அரசு - 1922 0) 220
தற்வகாலை தைய்விகமா?
-தேசியத்துரோகி
மசூலிப்பட்டிணத்தில், ஒரு போலீஸ் சேவகரின் மகளுக்குக் கல்யாணம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். கல்யாணத்திற்கு, முதல் நாள் அந்த மணப்பெண், கல்யாண உடைகளை அணிந்து கொண்டு
வீட்டின் கொல்லைப் புறத்தில் அடுக்கியிருந்த விறகில் ஏறித் தானே நெருப்பு வைத்துக் கொண்டு இறந்து விட்டாளாம். இவ்வாறு இறந்ததற்குக் காரணம். அப்பெண், தன்னை “தெய்வத் தன்மை உள்ளவள்” என்றும் தான் “மனிதனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்யதை இல்லை” என்றும் கூறியதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அப்பெண் இறந்ததற்கு “தெய்வத்தன்மை” கற்பிக்கப்பட்டவுடன், ஏராளமான ஜனங்கள் கூடி, முனிசிபல் அதிகாரிகளின் உத்தரவுப் பெற்று அப்பிணத்தை ஊர்வலமாக தூக்கிச் சென்று அடக்கள் செய்தார்களாம். இதன்பின் அப்பிணத்தை புதைத்த இடத்தில் கோயில் கட்டுவதற்காக ஜில்லா முழுதும் பணம் வசூல் பண்ணுகிறார்களாம்.
நமது நாட்டு மக்களின் பயித்தியக்காரத்தனத்தைக் காட்டுவதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?
வாங்கினகடனை திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தால் மான முள்ளவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். கெளரவமாக ஜீவனம் பண்ணியவர்கள், கஷ்டப்பட வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்த போது கஷ்டம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக் கிறார்கள். குடும்பச் சச்சரவு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போனவர்களில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு.மணமகன் பிடிக்காத காரணத்தால் மணமகள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதும், மணமகள் பிடிக்காத காரணத்தால் மணமகன் தற்கொலை செய்து கொண்டு சாவதும் உண்டு. இம்மாதிரி இதற்கு முன் நடைபெற்றும் இருக்கின்றது. ஆகையால் தற்கொலை செய்து கொண்டு இறப்பதில் தெய்வத்தன்மை
கற்பிப்பதும், அதை மக்கள் நம்பி ஏமாறுவதும் மூடத்தனமேயாகும்.
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மசூலிப்பட்டணத்தில் இறந்து போன மணப்பெண் விஷயமும் வெறும் தற்கொலையே தவிர வேறு ஒன்றும் ஆச்சரிய முள்ளதல்ல வென்றே நாம் சொல்லுவோம்.
அந்தப் பெண், தனக்குக் குறிப்பிட்டிருந்த மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் இறந்திருக்க வேண்டும்; அல்லது புத்தி தடுமாற்றத்தால் இறந்திருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் கூற முடியாது. இவ்வாறு உண்மையைச் சிந்தித்துப் பார்க்கும் அறிவில்லாமல் “தெய்வீகத் தன்மையை” நம்பி ஒருவர் சென்ற வழியே மற்றவர்களும் ஆட்டு மந்தைப் போலச் செல்வதனால் உண்டாகும் பயித்தியக்காரத்தனத்தையும், பொருள் நஷ்டத்தையும் யாராவது கவனிக்கின்றார்களா?'
இந்த மாதிரியே செத்துப் போனவர்கள் சம்பந்தமாக உண்டான மூட நம்பிக்கைகள் காரணமாகத்தான் இன்று நமது நாட்டில் எண்ணற்ற கோயில்
கள் பெருகியிருக்கின்றன. கிராமங்களில் உள்ள பலவகைப்பட்ட கோயில் களெல்லாம் செத்துப் போன மனிதர்கள் பேரால் ஏற்பட்டவை என்பதை இன்றும் கிராமங்களில் உள்ளவர்கள் அந்தக் கோயில் “சாமி” களைப் பற்றிச் சொல்லும் கதைகளால் அறியலாம். இப்பொழுது மசூலிப் பட்டினத்தில் நடந்த
சம்பவமும் இதற்கு தகுந்த உதாரணமாகும்.
பொது ஜனங்களிடம், இந்த மாதிரியான இயற்கை நிகழ்ச்சிகளை: எல்லாம் “தெய்வத்தன்மை” என்று நம்புகின்ற குணம் இருக்கின்ற வரையிலு
மவர்கள் முன்னேற்றமடையப் போவதில்லை. ஆகையால் பகுத்தறிவுடைய தோழர்கள் இது போன்ற விஷயங்கள் நேரும் போதெல்லாம் பொது ஜனங் களை எச்சரித்து ஏமாறாமலிருக்கும்படி செய்ய முன் வருமாறு வேண்டு கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 05.06.1932.
குடி அரசு - 1922 0) 222
சிரில் த் o
சிறுபிள்ளைகள் விளையாட்டிலேயே கவனமுள்ளவர்கள்: தாம் செய்யும் வேலைக்குப் பிற்காலத்தில் இன்னது பலன் கிடைக்கும் என்பது பற்றிச் சிறிதும் சிந்திக்கமாட்டார்கள். தற்கால சந்தோஷத்திற்காக எந்தக் காரியங்களையும் பொறுப்பின்றித் செய்யத் துணிவார்கள். அவர்களுக்குக் கவலையோ பொறுப்போ ஒரு சிறிதும் தெரியாது. இதனால்தான் “சிறுபிள்ளை: யிட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது' என்று சொல்லுவது வழக்கம்.
இத்தகைய விளையாட்டுப் பிள்ளைகளைப் போலத்தான் இப்பொழுது காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் நடந்து வரு கிறார்கள். உண்மையில் கொஞ்சங் கூட பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்கள்.
யாரும் இப்பொழுது இல்லை. பொறுப்பற்ற முறையில் காலித்தனமான காரியங்களைச் செய்து வீண் கலகத்தை உண்டு பண்ணும் சில சிறுபிள்ளைத் தனமுடையவர்களே இப்பொழுது “காங்கிரஸ்” என்பதன் பெயரால் ஆர்ப் பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தபால் பெட்டிகளுக்குத் தீயிடுவது, தபாலாபிசை மறியல் செய்வது, ரயிலை மறியல் செய்வது காங்கிரஸ் கட்டளைகளுக்கு உட்படாத தனித்த வியாபாரிகளுக்கு நஷ்டத்தை விளைவிப்பது, அவர்கள் கடைகளை ரகசிய முறையில் தீக்கிரையாக்குவது போன்ற காரியங்களை எந்த யோக்கிய முள்ள மனிதராவது செய்ய முடியுமா? இச்செயல்களெல்லாம் தேசத்தில் நடைபெறவில்லையா?'
திரு. சரோஜினி அம்மாள் அவர்களும், திரு. மாளவியா பண்டிதர்: அவர்களும் டில்லியில் காங்கிரஸ் நடத்துவதாக ஏற்பாடு செய்து நடத்தத் தொடங்கும்போது அரசாங்கத்தார் அக்காங்கிரசைத் தடைசெய்து விட்டதும், பிறகு காங்கிரஸ் நடவாமற் போனதும் யாவரும் அறிந்த விஷயம். ஆனால் காங்கிரஸ்காரர்கள் டில்லி மகாநாட்டை அரசாங்க உத்தரவை மீறி நடத்தி விட்டதாகவும், தீர்மானங்கள் நிறைவேற்றிவிட்டதாகவும் வீண் புரட்டாக வீராப்புப் பேசிக் கொண்டனர். டில்லி காங்கிரஸ், அரசாங்கத்தார் செய்திருந்த தடைப் பற்தோபஸ்துகளையெல்லாம் மீறி நடந்து விட்டதாகவும் முக்கியமான
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்றி விட்டதாகவும், பத்திரிகைகளும் பிரசுரித்துக் கிளர்ச்சி பண்ணின. பொறுப்புள்ள “காங்கிரஸ்” தலைவர்கள் என்பவர்கள் எவரும் வெளியில் இல்லாதிருக்கும்போது இவ்வாறு காங்கி ரசைக் கூட்டியதாகவும், அவற்றைத் தேசமக்கள் பின்பற்ற வேண்டும் என்ப தாகவும் பேசியதும் புரளி பண்ணியதுமே சிறு பிள்ளைத்தனமான காரிய மாகும். இதன் பிறகுதான் சிறு பிள்ளைத்தனமான செயல்களும் அதிகப் பட்டன என்பதில் ஐயமில்லை.
இதன்பின் இன்னுஞ் சில இடங்களில் மகாநாடு கூட்டுவதாக விளம்பரம் புரிந்ததும் அரசாங்கத்தார் அவைகளைத் தடுத்ததும் டில்லி காங்கிரஸ் மாதிரியே எங்கோ ஓரிடத்தில் மகாநாடு கூட்டியதாகவும், டில்லி காங்கிரஸ் தீர்மானங்களை ஆதரித்ததாகவும், 500 பிரதிநிதிகள் வந்திருந்த தாகவும்,1000 பிரதிநிதிகள் வந்திருந்ததாகவும் பத்திரிகைகளில் எழுதிப்புரளி பண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு உதாரணமாக தஞ்சாவூர் ஜில்லா “காங்கிரஸ்” மகாநாட்டை எங்கோ ஓரிடத்தில் கூட்டியதாகவும், தமிழ் மாகாண: மகாநாட்டை மதுரையில் எங்கோ ஒரு சந்திக்கடையில் கட்டியதாகவும், பத்திரிகைகளில் வெளியான செய்திகளே போதுமானதாகும். இன்னும் கல்கத்தாவைச் சேர்ந்த ஹெளராவில் நடத்த முயற்சித்த காங்கிரஸ் மகாநாடு,
குண்டூரில் நடத்த முயற்சித்த ஆந்திரமாகாண மகாநாடு, பகல்காட்டில் நடத்த முயற்சித்த மகாநாடு, நாகபுரியில் நடத்த முயற்சித்த மத்திய மாகாண மகாநாடு, அமிர்தசரசில் நடத்த முயற்சித்த பாஞ்சால மாகாண மகாநாடு முதலியவை களும் போதிய உதாரணங்களாகும். இந்த மகாநாடுகளால் உண்டான பலன் என்ன? பத்திரிகைகளில் மகாநாடு கூட்டப் போவதாக விளம்பரம் புரிவதும், உடனே அரசாங்கத்தார் மகாநாடு நடத்துவதாக விளம்பரம் பண்ணிய நிர்வாகிகளுக்கு 144 போடுவதும், அதை அவர்கள் மீறுவதும், மகாநாட்டிற்கே தடையுத்தரவு போடுவதும், பிறகு அந்தப் பொறுப்பற்றவர்கள் மகாநாடு நடத்திவிட்டதாகப் புரளி பண்ணுவதும் ஆகிய வீண் விளையாட்டுக் காரியங்களைவிட வேறு கடுகளவேனும் பலன் விளைந்தது என்று சொல்ல
முடியுமா?
இவ்வாறே தான் “காங்கிரஸ்” காரர்களால் செய்யப்படும் மறியல், பொதுக்கூட்டம் முதலியவைகளும் நடைபெறுகின்றன. யாராவது தங்களுக் குப்பணம் கொடுக்காத வியாபாரிகள் இருந்தால் அவர்கள் கடைக்கு மறியல் செய்வதாக இரண்டு மூன்று பேர் விளம்பரம் பண்ணிக்கொண்டு போவதும், போலீசார் வந்தவுடன் ஓட்டமெடுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒரு குறிப் பிட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறப்போவதாக விளம்பரம் பண்ணு
வதும், பிறகு அந்த இடத்தில் கூட்டத்தை நடத்தாமல் நாலு பேரைச் சேர்த்துக் கொண்டு எங்காவது ஒரு குப்பை மேட்டில் பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து போலீசாரை ஏமாற்றிக் கூட்டத்தை நடத்திவிட்டதாக விளம்பரம் பண்ணிக் கொள்வதும், ஜாலவித்தைக் காட்டப் போவதாகவும்,
குடி அரசு - 1922 0) 224
கழைக்கூத்தாடப் போவதாகவும் கோழிக் சண்டை, கிடாச் சண்டை நடக்கப் போவதாகவும் விளம்பரம் பண்ணிக் கூட்டத்தைச் சேர்த்து அதில் “காங்கிரஸ் பிரசாரம் பண்ணிவிட்டு, போலீசார் வருவதற்கு முன் கூட்டத்தைக் கலைத்து விட்டு ஓடிவிடுவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இவைகளுக்கும், மாமரத்தை குத்தகை எடுத்திருக்கின்ற ஒருவன் கல்லெறிந்து மாங்காய் அடிக்கும் சிறுபிள்ளைகளைத் தடியைத் தூக்கிக் கொண்டு பயமுறுத்தி விரட்டவும், அவர்கள் ஓடவும், பிறகு குத்தகைக்காரன் மறைந்த பின் மீண்டும் அந்தப் பிள்ளைகள் கல்லெறிந்து மாங்காய் அடிக்கவும், மறுபடியும் குத்தகைக்காரன் முன்போலவே விரட்டவும் இவர்கள் ஓடவும் ஆக, இப் படியே அடுத்தடுத்து நடைபெறுவதற்கும் என்ன வித்தியாசம் என்றுதான் கேட்கிறோம்.
“காங்கிர"சானது அதைச் சேர்ந்தவர்கள் பிதற்றிக் கொள்வது போல இந்தியாவின் 35 கோடி மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்குமானால், ஏன் இந்து முஸ்லீம் சச்சரவு உண்டாகாமல் பார்த்துக் கொள்ளக் கூடாது? ஏன் தீண்டத்தகாதார் தீண்டுவோர் சண்டை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளக் கூடாது? சென்ற ஆண்டில் கான்பூரில் நிகழ்ந்த இந்து முஸ்லீம் கலகம் இன்னும் இரத்தத்தில் எழுதப்பட்டு நம்மனதை விட்டு அகலாத பயங்கரக் காட்சியாக இருக்கின்றது. சென்ற சில தினங்களுக்கு முன் பம்பாயில் ஆரம்பித்த இந்து முஸ்லீம் கலகம் இன்னும் சரியாக ஓய்ந்த பாடில்லை.
தாழ்த்தப்பட்ட, தீண்டத்தகாத மக்களுக்குத் தீண்டத் தகுந்த உயர்த்திக் கொண்டிருக்கும் மக்கள் ஒவ்வொரு நாளும் செய்துவரும் கொடுமை சகிக்க முடியாததாக இருக்கின்றது. இவற்றை எல்லாம் சரிப்படுத்த முடியாத ஒரு ஸ்தாபனமோ, அதைச் சேர்ந்தவர்களோ நாங்கள்தான் 35 கோடி மக்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வது வெட்கக் கேடல்லவா?
காங்கிரசின் யோக்கியதையும், அது செய்யும் காரியங்களால் தேசத்தில் நடைபெறும் காலித்தனங்களும், கலகங்களும் இந்த நிலையில் இருக்கும் போது இந்தியாவின் அடிமையைப் பாதுகாப்பதற்கு வைசிராய் அவர்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கும் அவசரச் சட்டத்தைக் கண்டிக்க முன் வந்து விட்டார்கள்.இவ்வளவு கட்டுத் திட்டங்களும், கவனிப்பும், அவசரச் சட்டமும் இருக்கும்பொழுதே போக்கற்ற காலிகள் பலர் “காங்கிரஸ்” பெயரைச் சொல்லிக் கொண்டு அடாத செயல்களைச் செய்து, தேசத்தின் அமைதிக்குப் பங்கம் விளைப்பார்களானால் இந்தக் கட்டுத்திட்டங்களும் கவனிப்பும் அவசரச் சட்டங்களும் இல்லாமல் போனால் தேசத்தின் கதி என்னாவது? பம்பாயில் நடப்பது போன்ற கலகம் மூலைக்கு மூலை தாராளமாக நடை பெறாமலிருக்கவும்,நிரபராதிகளான பொதுஜனங்களின் சொத்துக்களுக்கும்
சுதந்தரங்களுக்கும் உயிர்களுக்கும் அபாயம் ஏற்படாமலிருக்கவும் முடியுமா
என்று கேட்கிறோம்.
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
“கேவலம், சிறுபிள்ளைகள் தண்ணீர்ப் பந்தல் வைக்கும் பொருட்டு யாசகங் கேட்பதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் அவர்களைத் தொந்தரவு செய்த சில துவேஷப் புத்தியுடைய இந்துக்களால் நேர்ந்த கலகந்
தான் பம்பாய் இந்து முஸ்லீம் கலகத்திற்குக் காரணம்” என்று சொல்லப் படுவதைவிட நமக்கு வேறு என்ன அவமானம் வேண்டும்?
இத்தகைய நிலைமையைப் போக்கி தேசத்தில் அமைதியை உண். டாக்க வேண்டுமென்னும் கவலை மிதவாதிகள் என்று சொல்லப் படுகின்ற
காங்கிரசில் சேராத அரசியல் வாதிகளில் அனேகருக்கு இருந்தா லும், அவர்
கள் வெளிப்படையாகக் காலிகளின் செயல்களைக் கண்டிக்கவோ தேச மக்களுக்கு நன்மையான வழிகளை எடுத்துக்காட்டவோ தைரியமாக முன்வராமல் பதுங்குகிறார்கள். காங்கிரஸ் செயல்களைக் கண்டிப்பதனால் எங்கே தங்கள் செல்வாக்குக் குறைந்து போய்விடுமோ என்று பயப்படு கிறார்கள். ஆகையால் அவர்கள் பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலை
யும் காட்டும் “விலாங்கு” மீன்களைப் போல் அரசாங்கத்தார்க்குநல்ல பிள்ளை களாகவும், காங்கிரஸ்காரர்களிடம் அநுதாபம் உள்ளவர்கள் போலவும் நடந்து கொண்டு தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்கள். இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் கவனிப்போம். வெளியில் பேசும் மிதவாதிகளெல்லாம், காங்கிரசுடன் ராஜி பண்ணிக் கொள்ளாமல், திரு. காந்தியை விடுதலை செய்யாமல் தேசத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாதென்றும், அரசியல் சீர்திருத்தம் கொடுத்தாலும் அதைச் சரியாக நடத்தி வைக்க முடியாதென்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இதில் ஏதாவது அர்த்தமிருக்கிறதா என்றுதான் நாம். கேட்கிறோம். லார்டு இர்வின் அவர்கள் வைசிராயாக இருந்த காலத்தில், திரு. காந்தியவர்களுக்கும், லார்டு இர்வின் அவர்களுக்கும் ராஜி ஒப்பந்தம் ஏற் பட்டதே; சில நாள் அவ்வொப்பந்தமும் அமுலில் இருந்ததாகக் கருதப் பட்டதே; அப்பொழுதுதான் தேசத்தில் அமைதியும் சமாதானமும் நிலவி இருந்ததென்று சொல்ல முடியுமா? ஆகையால் காங்கிரசோடு ராஜி செய்து கொள்ளுவதன் மூலம் தேசத்தில் அமைதி ஏற்பட்டு விடும் என்று கூறுவது வீண் பேச்சென்றே சொல்ல வேண்டும். அன்றியும் பூரண சுயேச்சை கேட்கும்
காங்கிரசுக்கும், மாகாண சுயாட்சி கொடுக்கலாமா? என்று யோசனை செய்து கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கும் எப்படி ராஜி ஏற்பட முடியும்? ஏற்பட்டா
லும் எத்தனை நாளைக்கு அந்த ராஜி நிலைத்து நிற்க முடியும்? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டிலுள்ள வகுப்புப் பிரிவுகளும், துவேஷங்களும் ஒழிகின்ற வரையில் மக்களுக்குள் ஒற்றுமை ஏற்பட முடியாது என்ற அபிப்பிராயத்தை மறுக்கின்றவர்கள் யாருமில்லை, இருந்தும், இந்த சாதி, மதங்களை ஒழித்து ஒற்றுமையுண்டாக்க யாரும் முயல முன்வரவில்லை. இந்த நிலையில் பூரண.
குடி அரசு - 1922 0) 226
சுயேச்சைப் பேச்சுப் பேச சிறிதேனும் யோக்கியதை உண்டா என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?
திரு. காந்தியார் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போகுமுன்னர். “வகுப்புப் பிரச்சினையில் ஒரு முடிவு ஏற்பட்டால் தான் இங்கிலாந்து போ வேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தாரே அதன்படி செய்தாரா? இங்கி லாந்தில் பேசும் போதெல்லாம் “இந்தியாவுக்குப் போனவுடன் முதலில்
வகுப்புப் பிரச்சினையை முடிவு செய்த பிறகே மற்ற காரியங்களைப் பார்ப்பேன்” என்று சொல்லிக் கொண்டாரே! இந்தியாவிற்கு வந்த பின் என்ன செய்தார்? சட்டமறுப்பில் கலந்து கொண்டு சிறைசென்று, நூல் நூற்றுக் கொண்டும், பகவத்கீதை படித்துக்கொண்டும் ஓய்வுபெற்றிருப்பதைவிட வேறு என்ன செய்தார்? இதை ஆலோசித்துப் பார்க்கும்போது திரு. காந்தியா ராலோ அல்லது காங்கிரசாலோ வகுப்புப் பிரச்சினையைத் தீர்த்துச் சமாதா னத்தை ஏற்படுத்த முடியாது என்பது விளங்குகிறதல்லவா? பூரண சுயேச்சைப் பேச்சுப் பேசிக் கொண்டு காலிகளைத் தூண்டிவிட்டுக் கிளர்ச்சி செய்து கொண்டிருக்கத்தான் காங்கிரசால் முடியும் என்பது தெரியவில்லையா?
ஆகையால் இச்சமயத்தில், காங்கிரசோடு ராஜி பேச வேண்டு மென்றும், அவசரச் சட்டங்கள் கூடாதென்றும், உடனே காங்கிரசின் விருப்பப் படி பூரண சுயேச்சை கொடுத்தாக வேண்டும் என்றும் பல்லவி பாடிக் கொண்: டிருப்பதில் பயனில்லை. பொறுப்பற்ற முறையில் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொண்டு தேசத்தில் அமைதியைக் கெடுக்கின்றவர்கள் யாராய் இருந் தாலும் அவர்களை அடக்கவும், அவர்களுக்குப் புத்தி கற்பிக்கவும், அவர். களுக்குப் பொது ஜனங்களிடம் செல்வாக்கில்லாமற் செய்யவும், பொது ஜனங்
கள் அவர்கள் செயல்களுக்கு ஆதரவு அளிக்காமலிருக்கும்படி செய்யவும் எச்சரிக்க வேண்டியதே இச்சமயத்தில் உண்மையான தேச ஊழியர்களின் கடமையாகும் என்று கூற விரும்புகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.06.1932.
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சத்தியாக்கிரகம் வீண்
“சத்தியாக்கிரகம்” என்பது “சண்டித்தனம்” என்பதும், அதனால் வீண்
சிரமமும், நஷ்டமும் ஏற்படும் என்பதும், அது மனிதருடைய வீர உணர்ச் சியைக் குறைத்து அடிமைப்புத்தியை வளர்க்கக்கூடிய தென்பதும் நமது இயக்கத் தோழர்களுக்கெல்லாம் தெரியும்.ஆகையால் தான் நாம் சத்தியாக் கிரகத்தைக் கண்டித்து வருகிறோம்.
அரசியல் துறையில் சத்தியாக்கிரகம் சிறிதும் பயனளிக்காதென்பது வெளிப்படையாகத் தெரிந்த செய்தி. சமூக ஊழல்களைப் போக்கும் வகையில் சத்தியாக்கிரகம் பயன் தரக்கூடும் என்ற ஒரு நம்பிக்கை சிலரிடம் இருந்து வந்தது. அந் நம்பிக்கையும் பயனற்ற தென்பதை விருதுநகர் மகாநாட்டிலும், அதன்பின் பல மகாநாடுகளிலும் நமது பத்திரிகை மூலமாகவும் விளக்கப் பட்டிருக்கிறது. இதை உண்மையென்று நிரூபிக்க, சமீபத்தில், நாசிக்கில், தீண்டாதவர்கள் செய்த சத்தியாக்கிரகம் சம்பந்தமாக அவர்களுக்கும் சனா தன தருமிகளுக்கும் உண்டான சச்சரவை, நாசிக் ஜில்லா மாஜிஸ்திரேட் திரு.
எல். என். பிரெளன் அவர்கள் விசாரணை செய்து தீர்ப்பளித்து உத்தர விட்டிருப்பதே போதுமானதாகும்.
நாசிக்கில், ராமகுண்டம், இலச்சுமணகுண்டம், தனூர்குண்டம், சீதா குண்டம் என்று நான்கு தீர்த்தக் குளங்கள் இருக்கின்றன. இந்தக் குளங்களைச்
சுற்றி வருவதற்கு “சாந்தவா” என்று சொல்லப்படும் வழி ஒன்றிருக்கிறது, இந்தக் குளங்களில் குளிக்கவும் “சாந்தவா”வில் நடக்கவுமே தீண்டாதவர்கள் சத்தியாக்கிரகம் பண்ணினார்கள். இதை எதிர்த்தே சனாதன தருமிகளும் போர்.
புரிந்தார்கள். கடைசியாக “மாஜிஸ்திரேட்” தீண்டாதவர்களுக்கு அந்தக் குளங் களில் குளிக்கவும், அந்த வழியில் நடக்கவும் உரிமையில்லையென்று தாம் நம்புவதாகவும் ஆகையால் “சிவில் கோர்ட்” மூலம் இவ்வுரிமைகளுக்கு உத்திரவு பெறும் வரையிலும் அந்தக் குளங்களை நெருங்கவும், அவைகளில் குளிக்கவும் கூடாதென்று கிரிமினல் புரொஸிஜர் கோட் 147 - 3- வது பிரிவின் படி உத்திரவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறிய தீர்ப்பின்
உத்தரவு வருமாறு-
குடி அரசு - 1922 0) 228
பொதுவாகத் தீண்டாத வகுப்பினருக்கு நான்கு குண்டங் களின் அருகே செல்லவும் அவைகளில் இறங்கிக் குளிக்கவும் உரிமையில்லை என்றுநான் நம்புகிறேன். ஆதலால் லட்சுமண குண்டம், தனூர்குண்டம், ராம குண்டம், சீதா குண்டம் என்னும் இந்த நான்கு குண்டங்களின் அருகே செல்லவாவது அவைகளில் இறங்கிக் குளிக்கவாவது கூடாது என்று மகர்களுக்கும், மங்கர்களுக்
கும், தோடர்களுக்கும், பங்கிகளுக்கும் மற்றுமுள்ள தீண்டாத வகுப்பினர்களுக்கும் கிரிமினல் புரொஸீஜர் கோட் 147 - 3-வது பிரிவின் படி நான் தடை உத்தரவு செய்கிறேன். தீண்டாதவர்கள் இவைகளில் குளிப்பதற்கு சிவில் கோர்ட் மூலம் உத்தரவு பெறும் வரையிலும் பக்கத்தில் நெருங்கவோ அல்லது இவைகளில் இறங்கிக் குளிக்கவோ அவர்களுக்கு உரிமை இல்லை.குண்டங்களைச் சுற்றி வரும் பிரயாணிகள் சாந்தவாவை உபயோகப்படுத்துகின்றார்கள். ஆதலால் அதை பொதுப் பாதையாக உபயோகிக்கலாமா என்பது இரண்டாவது விஷயம். நாகரிகமாக உடைதரித்திருக்கும் கிறிஸ்த வர்களும், முஸ்லீம்களும் அவ்வழியாக நடக்க விடப்படுகிறார்கள் என்று சாட்சிகளின் மூலம் தெரிகிறது. ஆனால் அந்த சாட்சிகள் இந்த வழக்கிற்கு பொருத்தமாக இல்லை.ஆகையால் தீண்டாத வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் சம்பந்தமான இவ்வழக்கில் தீண்டாத வகுப்பு இந்துக்களுக்கு சாந்தவாவை உபயோகிக்க உரிமையுண்டு என்பது வெளியாக வில்லை”
இதுதான் மாஜிஸ்திரேட் திரு. பிரெளன் அவர்களின் தீர்ப்பின் உத்தர: வாகும்.
இவ்வுத்தரவில், மகமதியர் கிறிஸ்தவர் முதலான அன்னிய மதத்தினர். நடக்கும் ஒரு வழியில், இந்து மதத்தைச் சேர்ந்த தீண்டாதவர்களுக்கு மாத்திரம் நடக்க உரிமையில்லை என்று மாஜிஸ்திரேட்டால் குறிப்பிட்டிருப் பதைக் கவனிக்க வேண்டுகிறோம். இவ்வாறு தீர்ப்புக் கூறுவதற்கு, இந்துக்
களின் பிடிவாதமும் குருட்டு மாமூல் பழக்கமும் காரணமல்லவா? இப் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு தானே மாஜிஸ்திரேட் உத்தரவளித் திருக்கிறார்? இதற்கு விட்டுக் கொடுக்காத இந்துக்களும், இப்பழக்க வழக்கங் களுக்கு ஆதரவளிக்கும் சட்டமும், நியாயமும் இருக்கும் வரை யிலும் தீண்டாதார்களுக்கு சத்தியாக்கிரகத்தினால் என்ன நியாயம் கிடைக்க முடியும்?
ஆகவே உண்மையில் எளிதாகச் சமூக மத உரிமை பெற விரும்பு கின்றவர்கள் செய்யவேண்டிய வேலை சட்டஞ் செய்வதற்குக் கிளர்ச்சி செய்ய வேண்டியதேயாகும். “எந்த பொது இடங்களிலும் எல்லார்க்கும் செல்ல அனுபவிக்க உரிமையுண்டு” என்கின்ற சட்டம் ஏற்பட்டு விடுமானால், அப்பொழுது இச்சட்டத்திற்குக் கட்டுப்படாமல் தடை செய்கின்றவர்களிடம்.
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சத்தியாக்கிரகம் போன்ற காரியங்களைச் செய்வது ஒரு சமயம் பயன்தரக் கூடியதாக இருக்கலாம். ஏனென்றால் சட்டபலமும், உரிமையும் அப்பொழுது ஏற்பட்டு விடுகிறது. அதிகாரிகளும் இம்மாதிரி தடையுத்தரவு பிறப்பிக்கவும்,
தீர்ப்பளிக்கவும் முடியாது என்பது உண்மையல்லவா?
ஆகையால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டுத் தீண்டப்படாதவர்களாக வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கும் கூட்டத்தார் அமைதியான முறை
யில் அரசியல் உரிமைகளைக் கைப்பற்றி தங்கள் உரிமைகளுக்குச் சட்டங்கள். செய்வதன் மூலம் சுதந்தரம் பெற முயல்வதே சிறந்தவழி யென்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றோம். ஆனால் தற்சமயம் சுதந்தரமடைவதில் தங்களுக் குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்த சத்தியாக்கிரகம் போன்ற பிரசாரம் தீண்டாத வகுப்பினரைப் பொறுத்தவரையில் ஒருவகையில் சிறிது சாதக மளிக்கக் கூடிய தென்பதை ஒப்புக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 12.06.1932
குடி அரசு - 1922 0) 230
சிறுபாண்மையோர் ஒப்பந்தம்
வாக்குரிமை சம்பந்தமாக இந்தியாவில் விசாரணை செய்த திரு. லோதியன் கமிட்டியின் அறிக்கையும் வெளியாகி விட்டது. வயது வந்தவர். களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்தால் ஒழிய, தேசத்தில் கஷ்ட நிலை மையை அனுபவத்தில் உணர்ந்திருக்கும் ஏழை மக்கள் சட்டசபைகளில்
பிரதிநிதித்துவம் பெற முடியாதென்றும், ஓட்டுரிமையை நூற்றுக்குப் பத்து வீதமோ, பதினைந்து வீதமோ, இருபது வீதமோ, முப்பது வீதமோ, ஐம்பது வீதமோ அதிகப் படுத்துவதனால் ஏழைகளுக்கு ஒரு வித நன்மையும் ஏற்பட்டு விடாதென்றும், இப்பொழுது இருப்பதுபோல், பணக்காரர்களும், ஜமீன்தார்களும், முதலாளிகளும் தான் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் பெற
முடியுமென்றும் முன்பு எழுதியிருந்தோம். வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்கும் விஷயத்தைப் பற்றி. லோதியன் கமிட்டியோடு ஒத்துழைத்த யாரும் கவலை எடுத்துக் கொள்ளவில்லை யென்றும் குறிப் பிட்டிருந்தோம். அவ்வாறே இப்பொழுது வெளியா யிருக்கும் லோதியன் கமிட்டி அறிக்கையிலும் ஓட்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப் பட்டிருப்பதைத் தவிர வேறு எந்த அபூர்வமான காரியமும் காணப்பட வில்லை. ஆகவே ஏழைமக்கள் நிலை எப்பொழுதும் ஒன்றுதான். தாழ்த்தப் பட்ட வகுப்பினர் தங்களுக்கு வயது வந்தவர்களுக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுக்க வேண்டுமென்று கேட்டுவந்தார்கள். இவ்விஷயமும் லோதியன் கமிட்டியாரால் கவனிக்கப்படவில்லை.
அடுத்தபடியாகச் சட்டசபைகளின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக எந்தெந்த வகுப்புக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கொடுப்பது என்பதைப்
பற்றியும் தனித் தொகுதி ஏற்படுத்துவதா? கலப்புத் தொகுதி ஏற்படுத்துவதா? ஸ்தானங்கள் ஒதுக்கி வைப்பதா? என்பதைப் பற்றிய லோதியன் கமிட்டி அறிக்கையில் யாதொரு முடிவும் கூறப்படவில்லை. வகுப்புப் பிரச்சினை சம்பந்தமான இம்முடிவு, பிரிட்டிஷ்பிரதம மந்திரியினால் செய்யப்பட வேண்டியிருக்கிறது. பிரதம மந்திரியோ எவ்வகையாக இவ்விஷயத்தில் முடிவு செய்யப்போகிறார் என்பது வெளிப்படவில்லை.
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
இங்கிலாந்தில் இரண்டாவது வட்டமேஜை மகாநாடு நடந்தபோது, சிறுபான்மை வகுப்புப் பிரதிநிதிகளும் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதி களும் சேர்ந்து “தங்களுக்குத் தனித்தொகுதியும். பாதுகாப்பும் வேண்டும்” என்று தீர்மானித்து கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு சட்ட சபைகளிலும் ஸ்தானங்
கள் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானித்தார்கள்.
ராஜாங்க சபை மொத்த ஸ்தானம் இருநூறில் ஜாதி இந்துக் களுக்கு 101-ம், தாழ்த்தப்பட்டவக்ளுக்கு 20-ம்,முஸ்லீம்களுக்கு 67-ம், கிறிஸ்த வர்களுக்கு 1-ம், சீக்கியர்களுக்கு 6-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 1-ம், ஐரோப்பியர்களுக்கு 4-ம் ஒதுக்க வேண்டும் என்றும்;
மத்திய தலைமைச் சட்ட சபையில் மொத்தம் முன்னூறு ஸ்தானங் களில் ஜாதி இந்துக்களுக்கு 123-ம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 45-ம், முஸ்லீம்களுக்கு 10-ம், கிறிஸ்தவர்களுக்கு 7-ம், சீக்கியர்களுக்கு 10-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 3-ம், ஐரோப்பியர்களுக்கு 12-ம் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும்;
வங்காள சட்டசபையில் மொத்தம் 200 ஸ்தானங்களில், ஜாதி இந்துக் களுக்கு 38-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35-ம், முஸ்லீம்களுக்கு 102-ம், கிறிஸ்தவர்களுக்கு 2-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 3-ம், ஐரோப்பியர். களுக்கு 20 ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும்;
பம்பாய் சட்டசபையில் மொத்த ஸ்தானங்கள் இருநூறில் ஜாதி இந்துக் களுக்கு 88-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 28-ம், முஸ்லீம்களுக்கு
66-ம், கிறிஸ்தவர்களுக்கு 2-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 3-ம், ஐரோப் பியர்களுக்கு 13-ம் ஒதுக்கி வைக்க வேண்டுமென்றும்;
சென்னை சட்டசபையில் 200 மொத்த ஸ்தானங்களில் ஜாதி இந்துக்களுக்கு 102-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 40-ம், முஸ்லீம்களுக்கு
30-ம், கிறிஸ்தவர்களுக்கு 14-ம், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 4-ம், ஐரோப் பியர்களுக்கு 8-ம், மலை ஜாதியார்களுக்கு 2-ம் ஒதுக்கி வைக்கவேண்டு.
மென்றும்,
பாஞ்சால சட்டசபையில் 100 மொத்த ஸ்தானங்களில் ஜாதி இந்துக் களுக்கு 14-ம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 10-ம், முஸ்லீம்களுக்கு 51-ம், சீக்கியர்களுக்கு 20-ம், மற்றவர்களுக்கு 5-ம் ஒதுக்கி வைக்கவேண்டு
மென்றும்;
சிந்து மாகாணத்தில் இந்துக்களுக்கும், எல்லைப்புற மாகாணத்தில் இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் விசேஷ பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இவ்வொப்பந் தத்தில் திருவாளர்கள் ஆகாகான், பன்னீர்ச் செல்வம், அம்பெட்கார்,
குடி அரசு - 1922 0) 232
கிட்னிகார் முதலியவர்கள் கையெழுத்திட்டு இதைப் பிரதம மந்திரி திரு. மேக்டனால்டு அவர்களிடம் அளித்திருக்கின்றார்கள். அவரும் இவ் வொப்பந்தத்தைப் பெற்றுக் கொண்டபோது “வகுப்புப்பிரச்சினையைப் பற்றி முடிவு கூறும்போது இவ்வொப்பந்தம் முக்கியமானதாகக் கவனிக்கப்படும்” என்று கூறினார். ஆனால் இவ்வொப்பந்தப்படி பிரதம மந்திரி முடிவு செய்யப் போகிறாரா? அல்லது இதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வேறு விதமாக முடிவு செய்யப்போகிறாரா? என்பது பிறகுதான் தெரியும்.
ஆனால் இச்சமயத்தில், மேற்கண்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்குமுக்கிய காரணமாயிருந்த, முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்டவர்களும் எவ்வித அபிப் பிராயமுடையவர்களாயிருக்கின்றார்கள் என்பது கவனிக்க வேண்டியதாகும். அவ்வொப்பந்தத்தில் கண்டுள்ளபடி ஸ்தானங்கள் ஒதுக்கிவைக்கப்படும் எண்ணிக்கை விஷயமாக முஸ்லீம்களுக்குள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குள்ளும் மாறுபாடான அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால் தனித்தொகுதியும், பாதுகாப்பும் கோரும் விஷயத்தில் முஸ்லீம் களுக்குள்ளும் தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளும் பெரும்பான்மையோரு டைய அபிப்பிராயம் அவ்வொப்பந்தத்திற்குச் சாதகமாகவே இருக்கிறதென் பதை யாரும் மறுக்க முடியாது.இதனை ஆதிமுதல் மெளலானா ஷெளக்கத் அலி அவர்கள், முஸ்லீம்களுக்கு தனித் தொகுதி கொடுக்க வேண்டுமென்றே போராடிக் கொண்டிருப்பதைக் கொண்டும், சமீபத்தில் இந்தியாவில் உள்ள பிரபல முஸ்லீம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, “லண்டன் டைம்ஸ்” என்னும்
பத்திரிகையில் வெளியிட்டிருக்கும் ஒரு மகஜரில் “ஆங்கில அரசாட்சிக்குப் பதிலாக இந்துக்களில் அரசாட்சி ஏற்படுவதாயிருந்தால், அப்பொழுது
முஸ்லீம்கள், ஆங்கில அரசாட்சியே சிறந்ததென்று கருதுவார்கள். ஏனெனில் ஆங்கில அரசாட்சி பாரபட்ச மற்றதாக இருக்கிறது. அல்லாமலும் ஆங்கில அரசாட்சி நீங்கிவிட்டால் பலசாலிகளான முஸ்லீம்களுக்கும், சதியா லோசனை இரத்தவெறி முதலிய கெட்டகுணங்களைக் காங்கிரசின் மூலம் கற்றுக் கொண்டிருக்கும் இந்துக் களுக்கும் ஓயாமல் சண்டை உண்டாகிக் கொண்டேயிருக்கும். ஆகவே பொறுப்பாட்சியுடன் ஐக்கிய அரசாட்சியை ஏற்படுத்தி எல்லா வகுப்பினர்க்கும் அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கவேண்டு மென்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கு மானால் இரு சமூகங்களின் உரிமைகளையும் வரையறுக்கும் பொழுது ஒவ்வொரு சமூகத்தின் ராஜ விசுவாசத்தையும் கவனிக்கப்படுமென்று நம்புகிறோம்” என்று கூறியிருப்பதைக் கொண்டும் உணரலாம்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களும் இவ்வொப்பந்தத்தை ஆதரித்தும், தனித்தொகுதியையும் பாதுகாப்பையும் வற்புறுத்தியும் தீர்மானங்கள் செய்
திருக்கின்றார்கள். “தனித் தொகுதி வேண்டாம், பொதுத் தொகுதியில் ஸ்தானங்
கள் ஒதுக்கி வைக்கப்படவேண்டும்” என்றும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித் திருக்கும் திரு எம். சி. ராஜாவின் கூட்டத்தாருக்கு இந்து மகாசபைக்
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
காரர்களின் ஆதரவும், தனித்தொகுதிக்கு விரோதமாயிருப் பவர்களின் ஆதரவும் தான் இருக்கின்னனவேயொழிய தாழ்த்தப்பட்ட சமூகத்தில் அதிக ஆதரவில்லை என்று சொல்லப்படுகிறது. மற்றைய சிறுபான்மை சமூகத்
தினரும் தனித்தொகுதியை விரும்பி நிற்கின்றனர்.
ஆனால் இச்சமயத்தில் திரு.மாளவியா, திரு. மூஞ்சே முதலிய இந்து மகாசபைக் கூட்டத்தாராலும் காங்கிரஸ் அபிமானமுடையவர்களாலும் தனித் தொகுதிக்கு விரோதமாகப் பிரசாரம் பண்ணப்பட்டு வருகிறது. இப்பிரசாரத்
தினால் முதல் மந்திரியார் மயங்கி தனித்தொகுதிக்கு ஆதரவளிக்காமல் விட்டுவிடுவாரானால் பொதுத்தொகுதிக்கு ஆதரவு அளித்து அவ்வாறு முடிவு செய்யும்படி விட்டு விடுவாரானால் இந்தியாவில் எப்பொழுதும் இந்து
முஸ்லீம் கலகம் மாத்திரம் அல்லாமல் மற்றும் பல வகுப்புக் கலகங்களும் உண்டாகுமென்பதில் ஐயமில்லை. இப்பொழுது இருக்கும் மதச்சண்டை போதாமல் தேர்தல் சண்டைகளும் முளைத்து விடும் என்பது நிச்சயம். ஆகை: யால் தேசத்தில் வகுப்புக்கலகங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் பிற்போக்கான சமூகங்களுக்குத் தனித்தொகுதி ஏற்படுத்துவதே சிறந்தது என்பதை எடுத்துக் காட்ட விரும்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.06.1932.
குடி அரசு - 1922 0) 234
அரசாங்கமும், சமூக சீர்திருத்தமும்
மைசூர் சமஸ்தான சட்டசபைத் கூட்டத்தின் முடிவில், திவான் சர். மிர்ஸா இஸ்மாயில் அவர்கள் செய்த பிரசங்கத்தில்,
“இந்தியாவில் சமுதாய சீர்திருத்தங்கள் சம்பந்தமான சட்டங்களை அமுலுக்குக் கொண்டு வரும் விஷயத்தில் பல கஷ்டங்கள் ஏற்படும். முதலில் பொது ஜனங்களிடம் சீர்திருத்தம் உண்டாக வேண்டும். இதனால் தான் எளிதில் சமுதாயச் சீர்திருத்தம் உண்டாகும். இவ்வாறு பொது ஜனங்களிடம். சீர்திருத்த உணர்ச்சி உண்டாகாத காரணத்தால்தான், அதிகமான பொது ஜன ஆதரவு ஏற்படும் வரையிலும் சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்களை ஆதரிக்க அரசாங்கத்தார் பின் வாங்குகின்றனர்” என்று பேசியிருக்கிறார்.
இப்பேச்சிலிருந்து பொதுஜன ஆதரவு இருந்தால் தான் அரசாங்கத்தார், சமூகச் சீர்திருத்த மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்க முடியும். இன்றேல் அளிக்க முடியாதென்று அர்த்தம் உண்டாகவும் இட மிருக்கின்றது. உண்மையில் இந்த அர்த்தத்தில் திவான் அவர்கள் பேசி யிருப்பாரானால், இது “அலை ஒய்ந்த பின் கடலில் ஸ்நானம் செய்யலாம்” என்னும் முடிவைப் போன்றது என்று தான் நாம் கருதுகின்றோம்.
பொது ஜனங்கள் எப்பொழுதும், மூட நம்பிக்கையுடைய வைதீகர் களுடைய பேச்சுக்களுக்குச் செவிசாய்க்கக் கூடியவர்களாகத் தான் இருப்பார்.
கள். ஆகையால் அவர்களே சமுதாய சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்க முன் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறாகும். குற்றஞ் செய்கின்றவனை தானே குற்றஞ் செய்யாமல் திருந்தி வரட்டுமென்று விட்டுக் கொண்டிருந்தால் அவன் திருந்துவது எப்பொழுது? அவன் செய்த குற்றத்தை எடுத்துக் காட்டித் தண்டனையும் அளித்தால் தான் அவன் திருந்துவான் என்பது உண்மை யல்லவா? அதுபோலவே, பழய நம்பிக்கையினாலும், குருட்டுப் பழக்க வழக்கங்களினாலும் பொது ஜனங்கள் கைக்கொண்டு வரும் சமூக ஊழல் களைப் போக்கஅரசாங்கத்தாரே முற்பட்டு, சட்டங்களைச் செய்து, அச்சட்டங் களின் கருத்துக்களைப் பொது ஜனங்கள் உணரும்படி செய்வதன் மூலமே சமூகச் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சமீபத்தில் சமுதாய சீர்திருத்தம் ஏற்பட்டிருக்கும், துருக்கி முதலிய தேசங்களை எடுத்துக் கொண்டால், அங்கெல்லாம் பொது ஜனங்கள் சமுதாய
சீர்திருத்த உணர்ச்சி பெற்ற பிறகு தான் சமுதாயசீர்திருத்தச் சட்டங்கள் செய்யப் பட்டதா? அல்லது அரசாங்கத்தாரே முன்வந்து சமுதாய சீர்திருத்தச் சட்டங் களைச்செய்து அவைகளுக்குப் பொது ஜன ஆதரவைப் பெற்றார்களா? என்று
பார்த்தால், இவ்வுண்மை விளங்கும். அரசாங்கமே தைரியமாகச் சமுதாய சீர்
திருத்தச் சட்டங்களை நிறைவேற்றி அவைகளைப் பொது ஜனங்கள் அனுசரிக் கும்படி செய்தார்கள் என்பது யாவருக்கும் தெரியும்.
இப்பொழுது இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் காட்டிலும் சமுதாய சீர்திருத்தம் சம்பந்தமாகக் கொஞ்சம் முன்னணியில் நிற்கும் சமஸ்தானங்களில் முதன்மை பெற்று பரோடாவும், இரண்டாவது மைசூருமாக இருக்கின்றது என்று புகழப்படுகின்றது. இந்த நிலைமையில் திவான் அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சமுதாய சீர்திருத்தம் சம்பந்தமான மசோதாக்கள் சட்டசபையில் ஆலோசனைக்கு வரும்போது பொது ஜன ஆதரவு இருக் கிறது என்று தெரிந்தால்தான் நாங்கள் ஆதரிப்போம் என்ற பல்லவியைப்
பாடிக் கொண்டிருப்பது போல மைசூர் அரசாங்கத்தின் சார்பாகவும் பாட ஆரம்பித்ததைப் பற்றி நாம் வருந்துகின்றோம். ஆயினும் திவான் அவர்கள் “அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கப் பின்வாங்குகின்றனர்” என்று தான் கூறுகிறாரே ஒழிய பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் போல ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறவில்லை என்பதைப் பார்க்கச் சிறிது சமாதானம் அடைய வேண்டியிருக்கிறது. இவ்வாறு பின்வாங்கிய மனதுடனாவது சமூகச் சீர்திருத்த சட்டங்களுக்குக் கூடியவரையிலும் ஆதரவு அளித்து வரும் மைசூர் அரசாங்கத்தையும் திவான் சர். மீர்சா இஸ்மாயில் அவர்களையும் பாராட்டுகின்றோம். சென்ற சட்டசபைக் கூட்டத்தில் “பால்ய விவாகத் தடைச் சட்டம்” மைசூர் சட்ட சபையில் நிறைவேறி இருப்பதும் அவ்வரசாங்கம் சமுதாய சீர்திருத்த விஷயத்தில் ஊக்கம் காட்டி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணமாகும் என்பதையும் இச்சமயத்தில் நினைப்பூட்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1932
குடி அரசு - 1922 0) 236
பாரா டுகின்றோம்
எவ்வளவுதான் பழமை விரும்பிகளும், வைதீகர்களும், வர்ணாசிரமி களும் தங்கள் சுயநலத்தையும், கொள்கைகளையும், பிடிவாதத்தையும் நிலைநாட்ட பகீரதப் பிரயத்தனப் பட்டபோதிலும், எவ்வகை சூட்சிகள் செய்ய முற்பட்டபோதிலும், எவ்வகை மறைமுகமான எதிர்ப்புகள் உண்டாக்கி வைத்த போதிலும் நடைபெறுகின்ற சம்பவங்கள் அவர்களது மனமுவந்த எண்ணங்களையும் ஆகாயக் கோட்டைகளையும் தவிடு பொடியாக்குவதன்றி நேர்விரோதமாகவுமிருக்கின்றன. இது காலச் சக்கரத்தின் வேகமேயன்றி பிறிதொன்றில்லை. உலகம் தினம் தினம் நிமிஷத்திற்கு நிமிஷம் முற்போக் கடைந்து கொண்டு நவீன மயமாகிக் கொண்டு வருவதுடன் ஒவ்வொரு
நாளும் நடைபெறும் அதியற்புத செயல்களினின்று பழமையை மறந்து
விடுங்கள்! பழமையை மறந்து விடுங்கள்! என்று அறை கூவியழைப்பதை போன்றிருக்கிறது.
இதற்கு உதாரணம் வேண்டுமாயின் இவ்வாரம் நமதியக்கத் தோழர்.
விருதுநகர் திரு வி. வி.ராமசாமி அவர்கள் ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தான கமிட்டி ஆலோசனை போர்டின் தலைவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். என்ற செய்தியே போதுமானதாகும்.அன்பர் திரு. ராமசாமி அவர்கள் நாடார். என்று வழங்கப்படும் குலத்தவராவர். நாடார் குலத்தவர்கள் மற்ற ஜாதியாரைக் காட்டிலும் தாழ்ந்த ஜாதியார் எனக் கற்பித்து வைதீகர்களும், வருணா சிரமிகளும் நாடார் பெருமக்களுக்கு கோயில் நுழைவு உரிமை மறுக்கப் பட்டிருப்பது நேயர்கள் அறிந்ததொன்றாகும். அவ்வாறிருந்தும் அத்தகைய “புனித தெய்வீகம்” பொருந்திய கோவில்களின் கமிட்டி ஆலோசனைத் தலைவராகத் தோழர் ராமசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு மகிழ் வதோடு அவரைப் பெரிதும் பாராட்டுகிறோம். வைதீக உலகத்திற்கிதுவோர்.
நல்ல பாடமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1932.
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
மண்ணார்குமு மகாநா௫
தஞ்சை ஜில்லாவின் இரண்டாவது சுயமரியாதை மகாநாடு, சென்ற 18, 19-6-32 சனி, ஞாயிறுகளில் மன்னார்குடியில் நடைபெற்றது. அம்மகா நாட்டு.
டன் தொண்டர் மகாநாடும் நடைபெற்றது. தஞ்சை ஜில்லாவின் முதலாவது மகாநாடு சென்ற ஆண்டில் தரங்கம்பாடியில் நடைபெற்றபின் சென்ற ஆண்டி லேயே நன்னிலம் தாலூக்கா மகாநாடு நன்னிலத்திலும் நாகப்பட்டிணம் தாலூக்கா மகாநாடு நாகப்பட்டிணத்திலும், சென்னை மாகாணச் சுய மரியாதைத் தொண்டர் மகாநாடு திருவாரூரிலும் நடை பெற்றன. இன்னும் பல பொதுக்கூட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு தஞ்சை ஜில்லா
வில் பல சுயமரியாதை மகாநாடுகளும், அடிக்கடி பல ஊர்களில் பல பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கிணற்றுத் தவளைகளாக. இருந்து கொண்டிருக்கும் நமது வைதீக எதிரிகளில் பலர் தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கம் ஆதரவற்று மாண்டு போய் விட்டதென்று கனவு கண்டு கொண்டும், அக்கனவை உண்மையென்று அறியாமையால் நம்பிப் புரளி பண்ணிக் கொண்டும் இருந்தனர். இத்தகைய அறிவற்றோர்க்கு மன்னார்குடி மகாநாடு நல்ல புத்தி கற்பித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
தஞ்சை ஜில்லாவில் சிறந்த வைதீகக் கோட்டையாக இருப்பது மன்னார்குடியேயாகும். அனேகமாக நமது மாகாணத்திலேயே மன்னார் குடியைப் போல பார்ப்பனர்கள் நிறைந்த இடமும் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லலாம். இதுவும் அல்லாமல் தற்சமயம் காங்கிரஸ் பெயரால் ஏதாவது கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றவர்கள் சிலராவது இருக்கின் றார்கள் என்று சொல்லக்கூடிய இடம் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒன்று இருக் கின்றது என்று யாரேனும் சொல்லுவார்களேயானால் அது மன்னார்குடியே யாகும். “தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரஸ் கிளர்ச்சி பலமாக இருக்கின்றது”
என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் அவ்வாறு சொல்லுவதற்குக் காரணமாக: இருந்தது மன்னார்குடியே யாகும். இத்தகைய வைதிகமும், பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் நிறைந்த ஒரு ஊரில் நமது மகாநாடு நடைபெறுவ தென்றால் அது ஒன்றே நமது இயக்கம் எவ்வாறு பரவி வருகிறது என்பதற்குத்
தகுந்த உதாரணமாகும். மன்னார்குடியில் நமது மகாநாடு நடைபெற்றதைக் கொண்டு இனி எந்த வைதீகமானாலும் சரி, வேதங்களானாலும் சரி,
குடி அரசு - 1922 0) 238
குருமார்களானாலும் சரி, மதஸ்தர்களானாலும் சரி, இயக்கங்களானாலும் சரி, பிரசாரங்களானாலும் சரி, நமது இயக்கத்தை ஒழித்து விட முடியாது. இவ் வியக்கத்தின் தத்துவமாகிய சமதர்ம வெள்ளம், மதங்கள், புரோகிதம், சாதிகள், சாத்திரங்கள், உயர்வு தாழ்வுகள், சுய நலங்கள், மூட நம்பிக்கைகள், குருட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியஅணைகளையெல்லாம் அடியோடு பெயர்த்துக் கொண்டு எல்லா மக்களையும் இழுத்துக் கொண்டு பகுத்தறிவுச் சுதந்தர கடலில் போய்ச் சேருவதில் எள்ளளவும் ஐயமில்லையென்று அறியலாம்.
மன்னார்குடி மகாநாடு மற்றொரு வகையில் குறிப்பிடத் தகுந்த ஒரு பெருமையுடைய மகாநாடாக விளங்கினது போற்றத் தக்கதாகும். இதுவரை
யிலும் நடைபெற்ற மகாநாடுகளிலெல்லாம் பெண்கள் மகாநாட்டைத் தவிர சுயமரியாதை மகாநாடுகளில் ஆண்களே தலைமை வகித்து வந்தார்கள். ஆனால் மன்னார்குடி மகாநாட்டிலோ, நமது இயக்கத்தின் உண்மைத் தோழர்
களில் ஒருவராகிய திருமதி. குஞ்சிதம் அவர்கள் பி. ஏ., எல்.டி., தலைமை வகித்தது நமது இயக்கம் எவ்வாறு பெண்களின் சமத்துவத்திற்கு உண்மை யோடு உழைத்து வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஒரு உதாரணமாகும்.
மன்னார்குடி மகாநாட்டில் பலதிறப்பட்ட அரசியல் அபிப்பிராய முடையவர்களும் பலதுறையிலிருந்து கொண்டு சமூகச் சீர்திருத்தம் புரிந்து வருபவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விசேஷ
மாகும். இதனால் வேறு வேறு துறையிலிருப்பவர்களும் கூட சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களை மறுக்க முடியாதவர்களாக அதன் கொள்கை களுக்கு ஆதரவளிக்கும்படியான நிலைமை நமது இயக்கம் உண்டாக்கி விட்டதென்ற உண்மையை யார் மறுக்க முடியும்?
நமது இயக்கத்தின் உண்மைத் தத்துவங்களை தெரிந்து கொள்ள முடியாத அறிவற்றவர்களும், நமது இயக்கக் கொள்கைகள் எங்கும் பரவி விடுமானால் தங்களின் தனிமதிப்புக்கும் சுயநலத்திற்கும் இடமில்லாமல் போய்விடுமே என்ற பயமும் சுயநலமும் உடையவர்களும் “காந்தி” “காங் கிரஸ்” “சுயராஜ்யம்” என்ற பெயர்களைச் சொல்லி தலைவர் பட்டமும் தேசாபிமானப் பட்டமும் பதவிகளும் அடைய விரும்பும் போலிகளும், தற்சமயம் நமது இயக்கத்தைப் பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள்; இக்கூட்டத்தார்கள் தாம், நம்மை “தேசத்துரோகிகள்” என்றும், “நாஸ்திகர்கள்” என்றும் வகுப்புத் துவேஷிகள்” என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் கூற்று சுயநலமுடையதும் யோக்கியப்பொருப்பு இல்லாததும் ஆனது என்பதை மகாநாட்டின் தலைவர் திருமதி. குஞ்சிதம் அவர்கள் தமது முன்னுரையில்
“காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி “அன்னிய ஆட்சி” என்றும், *அன்னியத் துணி” என்றும் “அன்னிய பாஷை” என்றும் சொல்லி நமது மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆங்கிலேயர்கள் அன்னியர்கள் என்றால்:
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
பார்ப்பனர்கள் (ஆரியர்கள்? யார்? என்று கேட்கிறேன். “இங்கிலீஷ்” அன்னிய பாஷை என்றால் சமஸ்கிருதம் எந்தப் பாட்டன் வீட்டுப் பாஷை? என்று கேட்கிறேன். ஆகையால் அவர்கள் சொல்லுகிறபடி
பார்த்தாலும், 400 வருஷத்திற்கு முந்தி வந்த அன்னிய பாஷையை ஒழிப்பதற்கு முன் 2000 வருஷங்களுக்கு முந்தி வந்த “அன்னியராகிய பார்ப்பனர்களின் ஆட்சியை ஒழிக்க வேண்டியது இன்னும் அவசிய மல்லவா? அது போலவே 400 வருஷத்திற்கு முந்தி வந்த அன்னிய பாஷையை ஒழிப்பதற்கு முன் 2000 வருஷமாக நமது சமூகத்தில். *பராசரஸ்மிருதி” *மதுதர்மம்” முதலிய கொடூரச் சட்டங்களைச் செய்த அன்னிய பாஷையாகிய “சமஸ்கிருத பாஷையை அடியோடு அழிக்க வேண்டாமா? என்று கேட்கிறேன். ஆகையால் இந்த பசுப்பு வார்த்தை. களிலெல்லாம் மயங்கிவிடாமல் நிதானப் புத்தியோடு ஆவேசங் கொள்ளாமல்; எந்தக்காரியத்தையும் யோசித்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருப்பதிலிருந்து அறியலாம்.
மன்னார்குடியில் நமது மகாநாட்டை நடத்தவொட்டாமல் செய்ய வைதீகர்களும், அவர்களுக்கு ஆதரவாயுள்ள பார்ப்பன உத்தியோகஸ் தர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்காமல் மகாநாடு மிகவும் வெற்றியோடு முடிவு பெற்றது பாராட்டத்தக்கதாகும். பெரிய மனிதர்களின் ஆதரவின்மையையும், வைதீகர்களின் விஷமப் பிரசாரத்தையும், அதிகாரி களின் அக்கிரமங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் மகாநாட்டை வெற்றியுடன் நடத்துவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மன்னார்குடி யிலுள்ள நமது இயக்க வாலிப வீரர்களே என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். ஆகவே எத்தகைய கஷ்ட நஷ்டங்களையும் லட்சியம் பண்ணாமல் மகா நாட்டைவெற்றியோடு நடத்திய நிர்வாகிகளையும் மகாநாட்டின் நடவடிக்கை களில் பங்கெடுத்துக் கொண்டவர்களையும் பாராட்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 26.06.1932
குடி அரசு - 1922 0) 240
வைதீகர்களிண் முட்டுக்கட்டை
உலகமெங்கும், “சுதந்திரம்” “சமத்துவம்”, “சகோதரத்துவம்”, “விடுதலை” என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நின்ற கோட்டைகளைத் தகர்த்து ஒழித்து தரைமட்டமாக்கிக் கொண்டு வருகிறார்கள். இவர்களின் படை எழுச்சி யினால், மதக் கோட்டைகளும், சாஸ்திரக் கோட்டைகளும், வருணாசிரம தருமக் கோட்டைகளும், சுய நலக் கோட்டைகளும், பகுத்தறிவுக் குண்டு களால் அடியோடு பெயர்த் தெறியப்படுகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில்
இந்தியாவில் உள்ள உலக நிலையறியாத, பரந்த நோக்கமில்லாத வைதீகப் பிடுங்கல்கள் தர்ப்பைப் புல்லுகளையும், பழய பஞ்சாங்கக் கட்டுகளையும், சாத்திரக் குப்பைகளையும் காட்டி மேற்படி கோட்டைகளைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றார்கள். ஆனால் இவர்களின் முயற்சி வீணென்று பள்ளிப் பிள்ளைகளும் அறிந்து பரிகசிக்கின்றார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இந்த வைதீகப்பிடுங்கல்களின் போக்கையும், மனப் பாங்கையும், முட்டாள் தனத்தையும் சென்ற 20-6-32 ல் தஞ்சை ஜில்லா திருவிடமருதூரில் கூடிய பிராமணர் மகாநாட்டின் தீர்மானங்களைக் கொண்டு உணரலாம். இனி அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானங் களையும் அவைகளின் மூலம் அந்த மிரட்சியடைந்த மூளையையுடைய வைதீக மக்களின் போக்கையும் கவனிப்போம்.
பெண்கள் விஷயமாக அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில், பெண்கள் மகாநாடுகளையெல்லாம் கண்டித்தும், பெண்கள். மகாநாடுகளெல்லாம் மேல் நாட்டுக் கல்வி கற்ற பெண்களால் கூட்டப் படுகின்றதென்றும், அவர்கள் விரும்பும் சுதந்திரங்கள் மதத்திற்கும் சமூகப் பழக்க வழக்கங்களுக்கும் விரோதமானவை என்றும், ஆகவே, அவர்களு டைய அபிப்பிராயங்கள் இந்தியப் பெண்களின் அபிப்பிராயம் அல்ல வென்றும், ஜன சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை செய்வதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். வைதீகர்களின் புத்தியற்ற தன்மைக்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்? இன்று பெண்கள் விரும்பும் சுதந்திரமும்,
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
சொத்துரிமையும், கல்வியறிவும், சுகாதார வாழ்க்கையும் ஆண்களைப் போல் வயது வந்த பின் தங்கள் விருப்பப்படி மணஞ் செய்து கொள்ளும் உரிமையும், விதவைகளாகிவிட்டால் மறுமணம் புரிந்து கொள்ளும் உரிமையும், கணவனு டைய கொடுமையையோ நடத்தையையோ சகிக்கமுடியாத போது மண விடுதலை செய்து கொள்ளும் சுதந்தரமும், தங்கள் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் இடம் பெறும் உரிமையும் கேட்கின்றார்கள். இவ்வுரிமைகளெல்லாம் இன்று ஆண்களுக்கு எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறு பெண்களுக்கும் இருக்க வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? இளம் வயதில் மாடு, கன்றுகளை விற்பனை புரிவது போல் பெண்களை மணம் செய்வித்து தாலியறுத்த பின் வீட்டின் மூலையில் உட்கார வைத்து, அவர்கள். தங்கள் இயற்கை உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாமல் திருட்டுத் தனமாக அன்னிய புருஷருடன் இன்பம் அனுபவித்துக் கற்பமாகிக் குழந்தை. பிறந்த பின் அதைக் கழுத்தை முறித்துக் கள்ளிக் காட்டிலோ, சாக்கடையிலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ, குளத்திலோ எறியும்படி செய்வது மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? கணவனால் வெறுக்கப்பட்ட சொத்துரி' மையும், கல்வியறிவும், ஆதரவும் அற்ற பரிதாபகரமான நிலைக்குரிய பெண்கள் விபசார வாழ்க்கையில் ஈடுபட்டு மானத்தை விற்று ஜீவனஞ்
செய்யும் காரியந்தான் மதத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும் சம்மதமா? “மதம்” “பழக்கவழக்கம்” என்று கண்மூடிக்கதறிக் கொண்டிருக்கும் அறிவிலி களால் தான் பெண் மக்கள் மேற்கூறிய கொடிய வாழ்க்கையில் ஈடுபட வேண்டியிருக்கிறதென்பதை பகுத்தறிவாளர் மறுக்க முடியுமா? இவற்றை யுணராத வைதீகர்கள் பெண்கள் விரும்பும் சுதந்திரத்தால் மதமும், பழக்க வழக்கங்களும் போய்விடும் என்று ஏன் பாழும் குரலெடுத்துக் கத்து கிறார்கள்?
அடுத்தபடியாக ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தீர்மானத்தில் குருவாயூர் முதலிய இடங்க
ளில் நடைபெறும் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகங்களைக் கண்டித்தும், தீண்டாதார் ஆலயங்களில் நுழைந்தால் சனாதன தர்மமும் இந்து மத சம்பிர
தாயமும் அழிந்து விடுவதுடன் இந்து சமூகத்தில் கலகமும் வேற்றுமைகளும் உண்டாகுமென்றும் ஆகையால் காங்கிரஸ் இவ்வியக்கத்தை ஆதரிக்கக் கூடாதென்று எச்சரிக்கை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். கோயில் பிரவேசத்திற்காகச் சத்தியாக்கிரகம் பண்ண வேண்டும் என்கின்றவர்கள். கவனிக்க வேண்டுகின்றோம். கோயிலுக்குள் நுழையும் உரிமை பெறச் சத்தியாக்கிரகம் பண்ணுகின்ற கஷ்டத்தையும் கோயில் பிரவேச உரிமை கிடைத்தபின், அந்தக் கல்லுச் சாமிகளுக்காகத் தாங்கள் பாடுபட்டுத் தேடும் செல்வங்களைப் பாழாக்கும் முட்டாள்தனத்தைப் போக்க பாடுபட வேண்டிய கஷ்டத்தையும் ஆலோசித்துப் பார்த்தால், இப்பொழுதே இக்கஷ்டங்களுக்கு இடம் இல்லாமல் தடுத்து விடலாமல்லவா? கோயில் பிரவேசத்திற்காகப்
குடி அரசு - 1922 0) 242
பாடுபடுவதை விட, கோயில்களின் பயனற்ற தன்மைகளையும் அவைகளால் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும் எடுத்துக் கூறி எவரையும் கோயிலுக்குப் போகாமலும், அதற்காகச் செலவு செய்யாமலும் தடுக்க முயற்சிப்பது எவ்வளவோ பயன் தரக்கூடியதென்பதே நமது அபிப்பிராயமாகும்.ஜனங்கள். கோயில்களுக்குப் போவதையும், அங்கே கொண்டு போய் பணத்தைப் பார்ப் பனர்கள் வயிற்றில் போடுவதையும் நிறுத்தி விடுவார்களானால் கோயில் களும் அழிந்து போகும்; அவைகளைக் கட்டிக் கொண்டு அழும் வைதிகர்.
களும், பார்ப்பனர்களும் கொட்டம் அடங்கி மூலையில் உட்கார்ந்து விடுவார்.
கள். இதைவிட்டு, கோயில் பிரவேசத்திற்கு என்று நாம் பாடுபட்டுக் கொண்டி
ருக்கும் வரையிலும் கோயில்களுக்கு மதிப்பும், பாமர மக்களின் செல்வங் களுக்குக் கேடும், சோம்பேறி வைதீகர்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பிழைப்பும் இருந்து கொண்டுதானிருக்கும். ஆகையால் கோயில்களை ஒழிப் பதற்கு வழி தேடுவதே சாலச் சிறந்ததென்று நாம் எச்சரிக்கை செய்கின்றோம். இந்த வகையில் பார்ப்பனர்களே கோயில்களைக் கட்டிக் கொண்டு அழுவதில் நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், கோயில்களாகட்டும், குளங்க ளாகட்டும், மற்ற எந்த பொது ஸ்தலங்களாகட்டும், அவைகளில் எல்லோரும் பிரவேசிக்கக் கூடிய உரிமையை நிலை நாட்டும் பொருட்டுச் செய்யப்படும் எந்த முயற்சியையும் நாம் முழு மனதுடன் ஆதரிக்கின்றோம். பார்ப்பனர்கள் எதையும் தங்களுடைய ஏகபோக உரிமையாக அனுபவிக்கச் சுதந்திரம் பெற்றிருந்த காலம் மலையேறி விட்டதென்று எச்சரிக்கின்றோம்.
அடுத்தபடியாக, “மத உரிமை” பற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத உரிமைகளுக்கு விரோதமாகச் சட்டங்கள் ஏற்படுத்தக் கூடாதென சர்க்காருக்கும் சட்டசபைகளுக்கும் தடையேற்படுத்த வேண்டும் என்றும்
மதச் சம்பந்தமான பழக்க வழக்கங்களில் அரசாங்கமும், சட்டசபைகளும் தலையிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த வைதீகர்களின் மனப்போக்கின் படி பார்த்தால், அரசாங்கம் என்று ஒன்று இருக்க வேண்டிய தேவையே இல்லை என்று கூறலாம். தேசமக்களின் கொடிய பழக்க வழக்கங் களைப் போக்கி அவர்களை நலமுடன் வாழச் செய்ய வேண்டியதே அரசாங் கத்தின் முக்கிய கடமையாகும். இக்கடமையைச் செய்யாத அரசாங்கம்
இருந்தும் பயனில்லை; இறந்தும் பயனில்லை. தன் மதத்தினர் தவிர அன்னிய மதத்தினரை யெல்லாம் அழிக்க வேண்டும் என்று கூறும் ஒருமத உரிமைக்கு அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? புருஷன் இறந்த பின் அவன் மனைவியையும் காஷ்டத்தில் ஏற்றிக் கொலை செய்யும் மத உரிமையை அரசாங்கம் தடை செய்யாமலிருக்க முடியுமா? பெண்களைப் பொட்டுக்கட்டி விட்டு விபசாரத் தொழில் நடத்தச் செய்யும் மதவுரிமையை அரசாங்கம்
பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமும் நெற்றி வேர்வை நிலத்தில் வரும்படி உழைப்போர் உணவின்றி வருந்திச் சாகவும், நகத்தில் அழுக்குப்படாமல் வெல்வெட்டு மெத்தையிட்ட சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கும் சோம்பேரிகள் ஆதிக்கம்
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
செலுத்தும் மதவுரிமைக்கு, (அக்கிரமத்திற்கு) அரசாங்கம் எப்பொழுதும் இடங்கொடுத்துக் கொண்டிருக்க முடியுமா? ஆகையால் தேசம் நன்மை யடைய வேண்டுமானால், மதவுரிமை, சாதி உரிமை, பழக்க வழக்கம் என்ப வற்றையெல்லாம் மூட்டைக்கட்டி “அட்லாண்டிக்” பெருங்கடலில் போட்டு விட்டுச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்ற வேண்டியதே முறையாகும். இத் தகைய அரசியல் சீர்திருத்தம் வருவதாயிருந்தால்தான் சுயமரியாதைக் காரர்கள், அரசியல் சீர்திருத்தத்தை ஆதரிப்பார்கள். இவ்வாறில்லாமல் இந்த வைதீகர்கள் விரும்புகின்றபடியும் காங்கிரஸ்காரர்கள் கேட்கின்றபடியும், மதப் பாதுகாப்புள்ள சீர்திருத்தம் எது வந்தாலும் அதைச் சுயமரியாதைக்காரர்கள். ஆதரிக்கப் போவதில்லை. ஒரு சமயம் ஆதரிக்கும்படியான சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், மதப்பாதுகாப்பை ஒழித்துச் சமூக சீர்திருத்தச் சட்டங்களை: ஏற்படுத்தவே முன்வருவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆதலால், வைதீகர்
கள் வேண்டும் மதப்பாதுகாப்புப் பூச்சாண்டி இனிப் பலிக்காதென்று எச் சரிக்கை செய்கின்றோம்.
அடுத்தபடியாக, சாரதா சட்டத்தைக் கண்டித்தும் இச்சட்டத்தை இந்து சமூகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆதரிப்பதைக் கண்டித்தும் பால்ய விவாகத்தைத் தடை செய்வது மதத்திற்கு விரோத மென்றும் ஆதலால், சாரதா சட்டத்தைத் திருத்தவோ, ரத்து செய்யவோ அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கின்றார்கள். இவர்கள் தீர்மானத்திலேயே, சாரதா சட்டத்தை இந்து சமூகத்திலுள்ள பலரும், பல ஸ்தாபனங்களும் ஆததரிப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் போது சிலராகிய வைதீகர்கள் ஏன் கூச்சலிட வேண்டும்? இச்சட்டம் உண்மையிலேயே ஜனசமூகத்திற்கு நன்மை. யளிக்கக் கூடியதென்பதை அறிந்து தானே பலரும் ஆதரிக்கின்றார்கள், அப்படியிருக்க ஏன் இவ் வைதீகர்கள் இதை எதிர்க்க வேண்டும்? “மதம்” என்ற குருட்டுத்தனம் தானே இவர்களுடைய அறிவை நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்க முடியாமல் தடை செய்கின்றது? ஆகையால் இந்த வகையிலும் இவர்களுடைய தீர்மானம் ஒரு செல்லாக் காசு என்றுதான் நாம் கூறுவோம்.
கடைசியாக மற்றொரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அதாவது “வேதம் ஆகமம் முதலியவைகளை பிரசாரம் பண்ணுவதற்கும், புரோகிதர், கோயில் அர்ச்சகர்கள் முதலியவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வைதீக காரியங்களுக்கு அழிவு வராமல் காப்பாற்றுவதற்கும், வருணாச்சிரம தருமசபைகள் ஏற்படுத்துவதற்கும், இந்துமத தத்துவங்களைப் பிரசாரம் பண்ணுவதற்கும், மாணாக்கர்களிடம் வைதீக ஒழுக்கங்கள் உண்டாவதற்காகச்
சிறு விடுதிகளை ஏற்படுத்தவும் “தர்ம ஊழியர் சங்கம்” என்னும் ஒரு ஸ்தா பனத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்தினரும் வேதாகமப் புரட்டுகளையும், புரோகிதப் புரட்டுகளையும், அர்ச்சகர்களின் அயோக்கியத்தனங்களையும், வருணாச்சிரம தர்ம
குடி அரசு - 1922 0) 244
அக்கிரமங்களையும், பழைய குருட்டுப் பழக்கங்களையும் ஒழிக்க முயற்சி செய்யும் இக்காலத்தில், நமது பார்ப்பனர்கள் இவற்றை வளர்க்க முயற்சி செய்வது எவ்வளவு புத்திசாலித்தனமென்று யோசித்துப் பார்க்க வேண்டு
கிறோம். உண்மையில் இவர்களுக்கு தேசத்தின் மீது கவனமோ, ஏழை களின்மேல் அனுதாபமோ மற்ற தேசங்களைப் போல் நமது தேசமும் சிறந்து விளங்க வேண்டும் என்னும் ஆசையோ இருந்தால் இவ்வாறு மகாநாடுகள் கூட்டிப் பிற்போக்கான தீர்மானங்களைச் செல்வார்களா? என்று தான் கேட்கி
றோம். பணபலமும், பத்திரிகை பலமும் செல்வாக்குப் பலமும் படைத்த வைதீகப் பார்ப்பனர்கள் இப்பொழுது தீர்மானித்திருக்கிறபடி, பலதுறை களிலும் நுழைந்து பிரசாரம் பண்ணவும், பார்ப்பனர்களை இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பாமர மக்களில் பலர் இவர்கள் பிரசாரத்தினால் ஏமாறவும்
கூடும். ஆனால் இது எப்பொழுதும் நிலைத்து நிற்க முடியாது என்பது மாத்திரம் நிச்சயம். காலச்சக்கரம் வெகுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்நிலையில் பார்ப்பனர்களின் வைதீகப் பிரசாரம், ஒரே முறையில் செய்யப் படும் சுயமரியாதைப் பிரசார சண்டமாருதத்தால் சிதறிப் போய்விடும் என்பது நிச்சயம், ஆகையால் எங்கும் பகுத்தறிவும், விடுதலையும், சுதந்திரமும் உதயமாகிவரும் இக்காலத்தில் பார்ப்பனர்கள் மாத்திரம் இவ்வாறு இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்க நினைப்பதும், அதற்காக மகாநாடு கூட்டுவதும், தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் வீண்! வீண்! வீண்! என்று எச்சரிக்கை செய்கின்றோம். இத்தகைய அழுக்குமூட்டை வைதீகர்களைக் கண்டிக்காத தேசீயப் புலிகள் நம்மைத் “தேசீயத்துரோகிகள்'” என்றும் “சுயராஜ்ய விரோதி
கள்” என்றும் கூறுவது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா? இனியேனும்
யார் உண்மையான சுதந்திரத்திற்குப் பாடுபடுவர்க ளென்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.06.1932
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 14
அருஞ்ணசால் வாருன்
கியாதி
புகழ் தண்டனை, பயிற்சி குழந்தைகள் காப்பகம் கல்வெட்டு மேன்மை,கீர்த்தி
சிட்சை
சிசு போஷண சாலை
சிலா சாசனம்
பிர பாவம்
இடையூறு, தீது
விக்கினம்
குடி அரசு - 1932 M
246