Kudi Arasu — 1931, Part 2
Kolathur Mani – Kudi Arasu Collection
குடி அரசு
1931-2
பெரியாரின் எழுத்தும் பேச்சும்
தொகுதி 13
பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600041
நூல் விளக்கம்
நூலின் பெயர்: குடி அரசு 1931-2
பொருள்: பெரியாரின் எழுத்தும் பேச்சும்
மொழி: தமிழ்
பதிப்பாளர் : கொளத்தூர் தா.செ.மணி
பதிப்பு : இரண்டாம் பதிப்பு, 2008
உரிமை: பதிப்பாளருக்கு
தாள் வகை: நேச்சுரல் ஷேட்
நூல் அளவு: 1/8 டெம்மி
எழுத்து அளவு: 11 புள்ளி
பக்கங்கள்: 416
அட்டை வடிவமைப்பு : ட்ராட்ஸ்கி மருது.
செம்பட்டி இராசா
கணினியாக்கம்: அசுரன் ஊடகம், திண்டுக்கல்
விலை உரு. 200 /-
வெளியீடு: பெரியார் திராவிடர் கழகம்
29 இதழியலாளர் குடியிருப்பு
திருவள்ளுவர் நகர் -திருவான்மியூர்
சென்னை - 600 041
பெரியா௱ரிண் அயப்கோாப்பிய பயணம் தொடங்கியது
இரண்டாவது வட்ட மேஜை மாநாடு லண்டனில் நடந்த காலகட்டம் இது. 12.11.4930 இல் தொடங்கிய மாநாட்டில் “தீண்டப்படாத' மக்களின் பிரதிநிதியாக டாக்டர் அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். முதல் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்காத காந்தியார், இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று, “தீண்டப்படாத” மக்க ளுக்கு தனித் தொகுதி வழங்கும் கோரிக்கையை எதிர்த்தார். வட்டமேஜை மாநாடுகள் தொடர்பாக “குடிஅரசு” எழுதிய முக்கிய தலையங்கங்கள் இத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. காந்தி வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற் றதற்கான பின்னணியை, “வட்ட மேஜை மாநாடு முறிந்ததால் கவலைப்பட வேண்டியதில்லை” என்ற தலையங்கம், வெளிப்படுத்துகிறது.
மாநாட்டில் பங்கேற்ற டாக்டர் அம்பேத்கர், ரெட்டைமலை சீனிவாச னுக்கு எதிராக சில ஆதி திராவிடர்களைப் பிடித்து லண்டனுக்கு பார்ப்ப னரும், காங்கிரசாரும் தந்தி கொடுத்ததை “குடிஅரசு” அம்பலப்படுத்தியது. தனித் தொகுதி உரிமையை வகுப்புவாதம் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு “குடிஅரசு” வலிமையான மறுப்புகளைப் பதிவு செய்திருக்கிறது. இந்தியாவின் தேசியம் என்பதே “அய்ரோப்பியம்- இந்தியம்” என்ற வட்டத்துக்குள் முடங்கியிருப்பதை சுட்டிக் காட்டும் “குடிஅரசு” இந்தியாவை எந்தக் கொள்கை ஆளவேண்டும், எத்தகைய ஆட்சி முறை வரவேண்டும் என்று கூறாமல், “இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டும் என்று கூறுவதே வகுப்புவாதமா? அல்லவா?” என்ற கேள்வியை எழுப்புகிறது. வட்டமேஜை மாநாட்டைத் தொடர்ந்து, சென்னையில் ஆதி திராவிடர்கள் நடத்திய 3 கூட்டங்களிலும் காங்கிர சாரும் பார்ப்பனரும் பெரும் கலவரம் செய்தார்கள். “குடிஅரசு” இந்த செய்தி களைப் பதிவு செய்துள்ளது.
சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாகாண மாநாடு விருது நகரில் ஆர்.கே.சண்முகம், பி.ஏ. பி.எல்., எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடந்தது. அம்மாநாட்டுடன் சுயமரியாதை பெண்கள் இரண்டாவது மாநாடும், சுயமரியாதை வாலிபர்கள் 3 வது மாநாடும் இணைந்து நடந்தன.
மாநாட்டின் புரட்சிகர தீர்மானங்களை விளக்கிடும் தலையங்கங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
பார்ப்பனர்கள் - “வர்ணாஸ்ரமத்தை” வெளிப்படையாகவே
ஆதரித்து செயல்பட்ட காலம் இது. குடிஅரசு” இந்த அநீதிகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியது. குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் “சாரதா” சட்டம் - சட்டசபையில் வந்தபோது, கிருஷ்ணமாச்சாரியார் எனும் பார்ப்பன சட்டசபை உறுப்பினர், இச்சட்டத்திலிருந்து பார்ப்பனர்களையும், முஸ்லீம்களையும் விலக்கிட வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வந்தார். “வாணியர்கள்” என்ற எண்ணெய் எடுக்கும் சாதிப் பிரிவினர், தீண்டப்படாத வர்களாக கருதப்பட்டு, கோயிலில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் கோவிலுக்குள் இந்த சமூகத்தினர். நுழைவது பற்றி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், “இவர்கள் எண்ணைப் பிழிந்து எடுப்பதாகிய இழிவான தொழிலைச் செய்வதால், கோயில் பிரவேச உரிமை கிடையாது” என்று தீர்ப்பளித்ததோடு, தீர்ப்புக்கு ஆதாரமாக “மனு சாஸ்திர*த்தை நீதிபதிகள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இராமநாதபுரம். மாவட்டம் தேவகோட்டையிலும், அதன் சுற்றுப் பகுதி ஊர்களிலும், ஆதி திராவிடர்கள் மீது உயர்ந்த சாதியார் என்று கூறிக் கொண்டவர்கள் கட்ட விழ்த்து விட்ட கொடுமைகளைக் கண்டறிந்து, விசாரணை நடத்தக் கோரி சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த டபிள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியன், சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை பார்ப்பன உறுப்பினர். களும், அமைச்சர்களும், கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேறியிருக்கிறது.
கும்பகோணத்தில் கூடிய “தஞ்சை ஜில்லா பிராமண சபை” தீண்டா மையையும், வர்ணாஸ்ரமத்தையும் ஆதரித்தது. “பிராமணர்கள்” கடல் தாண்டி பயணம் செய்வதைக் கண்டித்ததோடு, பெண்களை பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் வலியுறுத்தியது. காந்தி, ஜவகர்லால் நேரு, லாலா லஜபதிராய் ஆகியோர் கடல்தாண்டி பயணம் செய்தவர்கள் என்பதற்காக- திருவாங்கூர் சமஸ்தானம் அவர்களை திருவனந்தபுரம் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது. ஆனால், கடல் தாண்டிச் சென்றவரான சர்.சி.பி. ராமசாமி அய்யருக்கு மட்டும் அதே நிர்வாகம் அனுமதி அளித்தது.
காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்தை. பெரியார், காங்கிரசில் இருக்கும் போது, தமது செல்வாக்கைப் பயன்படுத்தி நிறைவேற்றச் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்களான சி. இராஜகோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டி.வி.எஸ். சாஸ்திரி, என்.எஸ். வரதாச்சாரி, கே.சந்தானம் போன்றவர்கள், காங்கிரஸ் கமிட்டியிலிருந்தே விலகிக் கொண்டார்கள். இந்த சமூகக் கொடுமைகளை “குடிஅரசு” தொடர்ந்து தலையங்கங்களில் பதிவு செய்திருக்கிறது. காங்கிரஸ்
குடி அரசு - 1931 (2) 4
கட்சியில் பெரியார் பணியாற்றியபோது, திண்டுக்கல், பெரியகுளம் போன்ற ஊர்களில் பார்ப்பனர்களால் வீட்டுக்கு வெளியே வைத்து சாப்பாடு போடப்பட்டதையும், சாப்பிட்டு முடித்த காலை, பகல், இரவு எச்சில் இலைகளை எடுக்காமல், அப்படியே எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊறிக் கொண்டிருக்க அதற்கு பக்கத்திலேயே வேறு இலை போட்டதையும் பெரியாரே - “காங்கிரசும் சுயமரியாதையும்” எனும் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“மத இயல் - அரசியல்” என்ற இரண்டையும் எந்தப் புரிதலுமின்றி திணித்து, மக்களைக் கட்டுப்படுத்தி, அடிமைப்படுத்துவதை சுட்டிக்காட்டி சென்னிமலையில் இளைஞர்களிடையே பெரியார் பேசினார். அதற்கு ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறார். ஒரு வீட்டுக்குள் பாம்பு, தேள் இருக்கிறது என்று கூறினால், அதற்கான பாதுகாப்புகளோடு, வீட்டுக்குள் ஒருவன் நுழைந்து விடுவான். ஆனால், ஒரு வீட்டில் “பேய் - பூதம்” இருக்கிறது என்றால், வீட்டுக்குள் நுழையவே முயற்சிக்க மாட்டான். காரணம், “பேய்-
பூதம்” பற்றி எதுவுமே அவனுக்கு தெரியாது. அதே நிலையில்தான் மத இயலும், அரசியலான *சுயராஜ்யமும்”, மக்களை புரியாமலேயே அடிமைப் படுத்தியிருக்கிறது, என்கிறார்.
சுயமரியாதைக்காரர்கள் தேவஸ்தான கமிட்டிகளில் பங்கேற்கலாமா? என்ற கேள்விக்கு பெரியார் விடையளிக்கிறார். தேவஸ்தான சொத்துக்களை: மக்களுக்குப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்குமானால் அதில் இடம் பெறுவதில் தவறு இல்லை; பழமையை மூட நம்பிக்கைகளைப் பரப்புவ தற்கு மட்டுமே, அப்பதவி பயன்படுமானால், அதில், இடம் பெறத் தேவை யில்லை என்று தமது சொந்த அனுபவத்தைக் கூறி விளக்குகிறார்.
இந்தியாவில் அனைத்து வகுப்பினரின் சாஸ்திரங்கள், கல்வி, மொழி, மதப் பழக்க வழக்கங்கள், மத தர்மங்கள் காப்பாற்றப்படும் என்று கராச்சி
காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை அழுத்தமாகக் கண்டிக்கும் பல தலையங்கங்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அப்படியானால், “பறையன், “சூத்திரன்”, “முஸ்லீம்”களை தொடக் கூடாது என்ற பார்ப்பன “பழக்க வழக்கத்தை” பாதுகாப்பீர்களா என்ற கேள்வியை பெரியார் எழுப்பினார். “இராமாயணம் - கீதை - டால்ஸ்டாய் உபதேசம் -
சட்டப் புத்தகம் இவைகளைத் தவிர, காந்திக்கு உலக அறிவு எதுமில்லை” என்று பெரியார் படம் பிடிக்கிறார்.
சுயமரியாதை இயக்கம் எவ்வித “சத்தியாகிரகத்திலும்” ஈடுபட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, “சத்தியாகிரகம்” எனும் தலைப்
பில் பெரியார் எழுதியுள்ள தலையங்கம், ஆழமான சிந்தனைகளை விதைக்
கிறது.
5 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலாக தமிழில் வெளியிட்டது சுயமரியாதை இயக்கம். அந்த அறிக் கைக்கு பெரியார் எழுதிய முகவுரையில்
“ _மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படு
கின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) வேலையாள் (ஏழை) என்பது வேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது...”
என்று இந்நாட்டுச்சூழலை துல்லியமாக உணர்ந்து பெரியார் எழுதிய கருத்து இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. மேலும் இத்தொகுப்பில்
“ இன்றையதினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக் கொடுத்து விட்டால் இந்த ஏழை நாளைக்கு கயா சிரார்த்த
மும், மதுரைவீரன் பூஜையும், காவடி அபிஷேகமும், பண்டிகையும் செய்து
வீட்டில் உட்கார்ந்து கொண்டே பணத்தைத் துலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும், தந்திரக்காரனும், ஏமாற்றுக் காரனும்தான் மறுபடியும் பணக்காரன் ஆய்விடுவான் என்பதும் எனக்குத்தெரியும்.”
“என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வரவேண்டாம் - தொடவேண்டாமென்பவனும், கிட்ட வந்தாலே - கண்ணில் தென்பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதை சாப் பிட்டால்-என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா? அல்லது “உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட்டாலும் பரவா யில்லை, நாம் எல்லோரும் சமம்தான்” என்று சொல்லுகின்றவன் அன்னி யனா? என்பதை யோசித்துப் பாருங்கள்.”
என்பது போன்ற அழுத்தமான செய்திகள் அடங்கிய சொற்பொழிவு களும் இடம்பெற்றுள்ளன.
பெரியாரின் நாகை பொதுக் கூட்டப் பேச்சு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். சுயமரியாதைக் காரர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை தாழ்த்தப் பட்டோருக்கு திருமணம் செய்து தருவார்களா என்ற கேள்விக்கு பெரியார்.
பதில் அளித்துள்ளார். “நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப் பட்டால், மக்கள் என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்யன் என்று சொல்லப்பட்டால், என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிர தையாகக் கவனிக்கப்படும்” என்று கூறிய பெரியார் “எந்த காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்தி விடாதீர்கள்” என்கிறார்.
குடி அரசு - 1931 (2) 6
“பயமுறுத்தல்” என்ற தலைப்பில் பெரியார் எழுதியுள்ள தலையங்கம் தனித்துவமான சிந்தனையாகும்.
பெண்கள் - முஸ்லீம்கள் - ஆதி திராவிடர்கள் உரிமைகளை வலியுறுத்தும் பல கருத்தாழ மிக்க தலையங்கங்கள், இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.
திருச்சியிலிருந்து சண்டமாருதம்” எனும் நாளேடும் மலாய் (மலேசியா! நாட்டிலிருந்து “தமிழன்” என்ற நாளேடும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பிட இதே காலகட்டத்தில் வெளிவரத் தொடங்கின.
பெரியார் தனது அய்ரோப்பிய சுற்றுப்பபணத்தைத் தொடங்கியதும் இதே காலத்தில்தான்!
- பதிப்பாளர்
7 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வஹொருளடக்கம்
பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம் சென்னிமலை யுவர் சங்க ஆண்டு விழா
FIBRLESABE BN B G @ <) 8888 e
© P NP தல ட
பொருளாதாரம் [
லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை
தொழிலாளர்களும் காங்கிரஸ் இயக்கமும்
காங்கிரசும் - சுயமரியாதையும்
சுயராஜியமும் சுதேச சமஸ்தானமும்.
அதிசயச்சாமியாரும், நம் பாமர மக்களும்
10. விருதுநகர் விருந்து
131. இன்னுமென்ன சந்தேகம்?
12. ஈரோடு முனிபாசிலிட்டியும், சென்னை அரசாங்கமும்
13. வந்தியின் திண்டாட்டம்.
14. சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும் சுய ஆகஷிசுப்பையருக்கும் சம்பாஷணை
15. காங்கிரஸ் புரட்டும் - காந்தியின் தவறும்
16. மெளலானா ஷெளகத் அலி
17. விருதுநகர் மகாநாடு
18 குத்தும் கொலை முயற்சியும்
19. புதுக்கோட்டை
20. முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்
21. சிக்கனம்
22. சித்தோடு சீர்திருத்த சங்கம்
குடி அரசு - 1931 (2)
23. ஈரோட்டில் திரு. முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் 123
24. இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? 130
25. சம்பளக் குறைவு 136
26. விருதுநகர் மகாநாடு 1 137
27. தமிழ் தினசரி 147
28 “இந்துமதம்” 149.
29. கோவையில் நபிகள் நாயகம் பிறந்தநாள் வைபவம் 151
30. விருதுநகர் மகாநாடு 11 157
31. “வகுப்புவாதம்” 162
32. சட்டசபையில் திரு.பாண்டியன் தீர்மானம் 165
33. ஈரோடு அர்பன் பாங்குத் தேர்தல் 166
34. சாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி 170
35. பயமுறுத்தல் கடிதங்கள் 172
86. காந்தியின் யாத்திரை மோ
37. விருதுநகர் மகாநாடு 117 181
38. ஈரோடு ரயில்வேஸ்டேஷன் மாற்றம் 185
39. முஸ்லீம்கள் பிரச்சினை 186
40. மரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை 187
41. திருச்சங்கோட்டில் உபன்யாசம் 192
42. சத்தியாக்கிரகம் 188.
43. மாளவியாஜீ 208
44. காந்திஜி 210
45. நவஜவான் தொண்டரும் தலைவரும் 212
46. MALT. உபாத்தியாரின் கடவுள் பாடம் 213
47. இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம் 214
48. ஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள். 219
49. சி.இராஜகோபாலாச்சாரியாரின் ஜாதிப் பிரசாரம் 221
50. கர்ப்ப ஆக்ஷிமுறை 222
9 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காசில்லாமல் நடத்தலாம்
கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்
கடலூரில் திருவாளர் ஈ.வெ.இராமசாமி
சுயமரியாதை இயக்கமும் இராமாநந்த சட்டர்ஜீயும் கேள்வி
தற்கால ரஷியாவின் கல்விமுறை புதுக்கோட்டை
சாரதா சட்டத்திற்கு அழிவா? வைதீகர்கள் கூக்குரல்
100000. லக்ஷம் ரூபாய் இனாம்!
சமதர்ம அறிக்கை.
அரசாங்கமும் தேசீயமும்
பெண்களுக்குச் சொத்துரிமை
274
நாகையில் பொதுக் கூட்டம்
276
நாகை முதலாவது சுயமரியாதை மகாநாடு
தீண்டாதாருக்கு விமோசனம்
இரண்டில் லொன்று வேண்டும்
புரட்டு! சுத்தப் புரட்டு!
. தீபாவளியும் காங்கிரசும்
திரிகூட சுந்தரனார் திருமணம்.
தமிழன்
. ஈரோடு முனிசிபாலிட்டி
காங்கிரஸ் புரட்டுக்குத் தோல்வி
. சென்னையில் சுயமரியாதை
இரண்டு சந்தேகம்?
337
342
குடி அரசு - 1931 (2)
348
8 தகதக நித்த த கதற 28
. கார்ப்பொரேஷன் தேர்தலைப்பற்றி பார்ப்பனர்
குறை கூறுவதன் ரகசியம்11
353
மற்றொரு “சனியன்” “கார்த்திகைத் தீபம்”
356
“சர்வம் பார்ப்பன மயம்” - திருவாங்கூர்
362
எல்லாம் பழய ஆதிக்கம் செலுத்தவே
366
தீண்டாதார் கல்வி
372
மூட்டைப்பூச்சிகளின் சேஷ்டை
374
இந்திய வைத்திய கலாசாலையின் மேல் துவேஷம்
375
அன்று சொன்னதற்கு அழிவில்லை.
380
நமது ஆசிரியரின் ஐரோப்பா பிரயாணம்
387
தியாகிகளின் வீரச்செயல்
390
இரண்டு ஆச்சாரியர்கள் தனி உரிமையும் மதமும் வேண்டுமாம். 393
துடையையுங் கிள்ளி விட்டுத்தொட்டியையும் ஆட்டுதல்
397
யார் செயல் ? யாருக்கு நன்றி ?
403
திரு. படேலின் வைதீகம்
406
407
அவர்களும் நாமும் அருஞ்சொல் பொருள்
415
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
குடி அரசு - 1931 (2) 12 13 வட... ஓபரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
=
3| it v, o இராம். வலு
எனகு ek AR அள 11௨ (2-ர மக
் வெவிவத்து விட்டுப் வெளிவத்து விட்டது! பாலர் பரிபாலனம் -: ஆரியர் e
பண்டிட் எஸ். எஸ், அனந்தம் அவர்கள்,
விவ ளு 100 ° தயால் சார்ஜ் வேது.
செட்காக்கும் சுகவழியும், இனம்:
e T ஏ தன்காரவு வித, சென்ன.
குடி அரசு - 1931 (2)
ஸ்னரத்தில் சீர்திருத்தத் திருமணம்
சகோதரிகளே!சகோதரர்களே!!இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டதென்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறி விடமுடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரமளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள்: தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலிகட்டப் படவேண்டும். புரோகிதமில்லாவிட்டாலும், புகைச்சலில்லா விட்டாலும் கூட, இந்த விவாகத் தில் “புரோகிதச்”” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக
நான் கருதுவதற்கில்லை.
சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக்கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். “என்ன செய்வது! விவாகம் திடீரென கூடிவிட்டது! அந்தநேரம் ( தாலிகழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்னசெய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத்தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும் கவனியாமலும்கூட,“நாங்கள் செய்து வைக்கின் றோம். உனக்கென்ன கவலை வந்தது?” என்று சொல்லியேதான் அநேக விவாகங்கள் நமது நாட்டிலின்றும் நடைபெறுகின்றன. நாம் ஒரு விவாகம் செய்வதென்றால் தம்பதிகளின் அபிப்பிராயத்தையும், வயதையும், யோக்கியதையும் கவனியாமலே, புரோகிதர்களிடம் 4-அணா கொடுத்து, இருவருக்கும் பொருத்தம் சரியாயிருக்கின்றதா என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்ளுகின்றோம். அவன் பணத்தை வாங்கிக்கொண்டு இருவருக்கும் பொருத்தமிருப்பதாகக் கூறிவிட்டால் உடனே விவாகமும் நடந்துவிடுகின்றது. நமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங்களும்,
நிர்பந்தங்களும், சந்தேகங்களுமே இதற்குக் காரணமாகும். மேல்நாடுகளில்
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தம்பதிகளிருவரும் ஒருவரையொருவர் நன்றாய் அறிந்து, பழகிக்கொண்டு, இவர்களுக்குள்ளாக நிச்சயம் செய்துகொண்ட பிறகுதான், அவர்களுடைய பெற்றோர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு ஒருவித சடங்குகளு மில்லை. சர்ச்சுக்குப் போய் சாக்ஷிகளின் முன்னிலையில் ஒருவரையொ ரவர் விவாகம் செய்துகொள்ள சம்மதிப்பதாக எடுத்துரைத்து கையெழுத்து செய்துவிடுவார்கள். அவ்வளவேதான். இப்பொழுது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நமது அரசரின் விவாகமும் அவ்விதமே தான் நடந்தது.
இஸ்லாமானவர்களில் கூட, மாப்பிள்ளைப் பெண்ணைப்பார்க்கா விட்டாலும்கூட, ஒருவித சடங்குமில்லாமல் தங்களுடைய பந்துக்களின் முன்னிலையில், முல்லாக்களை வைத்துக்கொண்டு, தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்ளுவார்கள். உலகத்தில் 100க்கு 90 விவாகங்கள் இம்மாதிரியேதான் நடைபெறுகின்றன. நமக்குப்போதிய அறிவில்லாததால், அனேக கஷ்டங்களுக்குள்ளாகி, பலவித சடங்குகளை வைத்துக்கொண்டு, நெருப்பையும், அம்மியையும், குழவியையும் சட்டி பானைகளையும் சாக்ஷியாக வைத்துக்கொண்டு, உலக வாழ்க்கையை நடத்த ஆரம்பிக்கின்றோம். நாம் பெண்களை அடிமைகள்போல நடத்து கின்றோமேயன்றி, அவர்களை சமமாகவும், கூட்டாளிகளாகவும் பாவித்து நடத்துவதில்லை. அப்படிக்கொடுமைப்படுத்தப்பட்டாலும், விவாகத்தை ரத்து செய்துகொண்டு, விலகிக்கொள்ள இருவருக்கும் உரிமையில்லை.
சிறிது நாட்களுக்கு முன்னதாகதான், பரோடா அரசாங்கம் “கல்யாணமான புருஷன் பெண்ஜாதி இருவருக்கும் தங்களில் யாருக்கு பிரியமில்லாவிட் டாலும், தங்களுடைய விவாக ஒப்பந்தத்தை ரத்துசெய்து, விலகிக்கொள் ளலா” மென்பதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றது.
நமது நாட்டில், அடுத்தலீட்டுப் பெண்களும், பெற்றோரும் மண: மகளுக்கு “மாமி வீட்டில் நீ நல்ல அடிமையாய் இரு. அடித்தாலும், உதைத்
தாலும் வருத்தப்படாதே, புருஷன் மனம் கோணாமல் நட” என்று உபதேசம் செய்து, மணமகன் வீட்டுக்கு அனுப்புவதும் வழக்கமாயிருக் கின்றது. இதனுடைய கருத்து அவர்களை ஆடவர்களுக்கு எப்பொழுதும் அடிமைகளாகவும், ஒருவித சுதந்திரமாவது அல்லது உரிமையாவதில்லா திருக்கும்படி செய்வதற்கேயாகும். அவர்களுடைய உபதேசங்களைக் கேட்டு, மணமகன் வீட்டுக்குச் செல்லும் அந்தப்பெண்ணும் தன்னை ஓர். அடிமையென்றே கருதி, புருஷன், மாமனார், மாமி, நாத்தி இன்னுமிருக்கக் கூடிய பந்துக்களுக்கும் பயந்து, அவர்களுடைய பிரியத்தை சம்பாதிப்பதி லேயே தன்னுடைய வாழ்க்கையை நடாத்தி உயிருள்ள பிணமாக வாழ் கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் உபத்திரவங்கள் அளித்தபோதிலும் அவைகளைப் பொருமையுடன் சகித்துக்கொள்ள வேண்டியவளாகிறாள்.
மேலும், நாம் கடன் வாங்கி, கலியாணங்கள் ஆடம்பரமாக செய்வ
தினால் அவர்களுடைய தலையின்மீது அக்கடனையும் சுமத்தி
குடி அரசு - 1981 (2) 16
விடுகிறோம். கடனை வைப்பதுமல்லாமல், அவர்களைத் தனி வாழ்க்கை நடத்தும்படியாக வேறாகவும் வைத்து விடுகிறோம். நாம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பயந்து கொண்டு, அதிக செலவு செய்வதினாலும், சடங்குகள் பல செய்வதினாலும் கடன் ஏற்பட்டு விடுகின்றது. இந்த யெண்ணம் மக்களைவிட்டு நீங்க வேண்டும். அதிலும் பெண்களை விட்டுத் தான் நீங்க வேண்டும். அப்படி நீங்குவதாக யிருந்தால் பெண்களின் அறிவு விருத்தியாக வேண்டும். உலகப் போக்கையனுசரித்து நடக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
சிலவிடங்களில் சுயமரியாதைக் கலியாணத்திற்கு ஆண்கள் மட்டும் ஏராளமாய் வந்திருப்பார்கள்.பெண்களோவெனில் 5 அல்லது 10 பெயர்கள் தான் வருவார்கள். பெண்கள் வந்தால் கெட்டுப்போவார்களாம்! இதற்குக் காரணம், நாம் அவர்களுக்கு உலக ஞானத்தையூட்டி, அறிவு புகட்டாதிருப் பதைத் தவிர்த்து வேறில்லை. ஆணுக்கும், பெண்ணுக்கும், வித்தியாச மில்லையெனவும், பெண்கள் அடிமைகள் அல்லவென்றும் அவர்கள் கருது வார்களானால், அப்பொழுது நகைகளும், ஆடைகளும் வேண்டுமென்றும் போராடுவதை அறவே விட்டுவிடுவார்கள். அவர்கள் தங்களைத் தாழ்ந்த வர்களெனக் கருதிக்கொண்டிருப்பதால்தான் தங்களை அழகுபடுத்திக் கொண்டு, ஆடவர்களை மயக்கவேண்டிய அவசியம் நேரிடுகின்றது. நமது பெண்களுக்கு, மேலும், குழந்தைகளை வளர்க்கும் முறைகளும் தெரியாது. குழந்தைகளுக்கு அறிவு, யூகம், சுதந்திர உணர்ச்சி ஆகியவைகளை யூட்டி வளர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏதாகிலும் வியாதி வந்து விட்டால், நாம் உடனே மாரியம்மன் கோவிலுக்கும், ஐயர், பண்டாரம் ஆகியவர்களின் வீட்டுக்கும்தான் செல்லுகிறோமே யல்லாது, அவ்வியாதி
ஏன் வந்தது என்பதை ஆராய்ந்து, அதற்குறிய மருந்துகளை அளிக்கும் வைத்தியர்களின் வீட்டுக்குச் செல்லுவதில்லை. சில இடங்களில், குழந்தை களின் வயிறு நிறைந்திருப்பதையும் அறிந்து கொள்ளாமல், அக்குழந்தை களின் வயிற்றை அமுக்கிப்பார்த்து அறிந்து கொள்ளுகிறார்கள். இவைகளுக்குக் காரணம் நமக்குப் போதிய கல்வியறிவும், தைரியமுமில்லா மையேயாகும். ஊரில் காலரா முதலிய நோய்கள் வந்தால், உடனே ஓங்காளியம்மனுக்குப் பொங்கலிடுவதிலும் “நாம் என்ன செய்யமுடியும்? அவனுடைய சீட்டு கிழிந்து விட்டது. போவதுபோய்தானே தீரும்” என்று சொல்லக் கூடியவர்களாகத் தானிருக்கிறோம். நாம் நமது அறிவை உபயோகப்படுத்தி நடந்தால், இத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியதில்லை...
நமது வாலிபர்கள் படித்த பெண்களைமட்டும் விவாகம் செய்து கொள்வதாக ஒரு வைராக்கியம் கொள்ளுவார்களேயாகில், அப்பொழுது பெண்களைப் பெற்றோர்கள், தங்களுடைய குழந்தைகளுக்கு கல்வியறிவை யூட்டுவார்கள். படித்த பெண்களாகப்படாவிட்டால் கலியாணம் செய்து
17 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கொள்ளாமலிருக்க வேண்டும். படியாதபெண்கள் கிழவர்களுக்கு 2 தாரம் 3ந்தாரமாக போய்சேரட்டும். இதுதான் படியாத பெண்களுக்கு தண்டனை யாகும். சில சுயமரியாதை விவாகங்களில், பெண்களுக்குத்தாலி கட்டும் வழக்கம் கிடையாது. முனிசிபாலிட்டிகளில் நாய்களுக்குக் கழுத்தில் பட்டை கட்டுவதைப் போல், விவாகமாகும் பெண்களுக்கு நாம்ஒரு தாலியை கட்டி விடுகின்றோம். அப்படி தாலி கட்டுவதாகயிருந்தால், மாப்பிள்ளைக்கும் சேர்த்துதான் கட்ட வேண்டும். எப்பொழுது மாப்பிள்ளை கட்டிக்கொள்ள சம்மதிக்கவில்லையோ, அப்பொழுது பெண்களும் தாலிக் கட்டிக்கொள்ள சம்மதிக்கக்கூடாது. தாலிகட்டுவது அடிமையுணர்ச்சியைத்
தான் குறிக்கின்றது.
பெண்களுக்கு நாம் அறிவையூட்டி சமத்துவத்தை அளித்துக் கொண்டு வரவேண்டும். அவர்களைப்பல கூட்டங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய மூடநம்பிக்கைகள்
நீங்கும். நமது பந்துக்கள் வரமாட்டார்களே யெனப் பயப்படக்கூடாது. ஜாதி யைப் பற்றி, நாம் கொஞ்சமும் கவலையடையக்கூடாது. நம்முடைய கொள்கைகளை ஆதரிப்பவர்களிடம் நாம் சம்பந்தம் செய்துகொள்ளலாம். எந்த ஜாதியாகயிருந்தபோதிலும் சரியே, அவர்களுக்கு அறிவு, யோக்கியதை முதலியவைகளிருந்தால் அவர்களிடம் சிநேகிக்கலாம். அறிவுக்கும், அனுபவத்துக்கும் ஒத்திருப்பவைகளை நாம் கவனித்து நடக்கவேண்டு மேயல்லாது பெரியவர்களின் பழக்க வழக்கங்களையே
நாம் கண்மூடித்தனமாய் பின்பற்றலாகாது. இவைகள் யாவும் வாலிபர்களால் தான் நடைபெற வேண்டியிருக்கின்றது. வீண் ஆடம்பரங்களின்றியும், அதிக செலவில்லாமலும், சடங்குகளின்றியும் தம்பதிகளிருவரும் தங்களுடைய விவாகத்தை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் ரிஜிஸ்தர்.
செய்து கொள்ளுவதே போதுமானது.
குறிப்பு : 25.06.1937 இல் கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் நடைபெற்ற திரு துரைசாமி - திருமதி காந்திமதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 05.07.4931
குடி அரசு - 1981 (2) 18
செண்ணிமலை யுவர் சங்க ஆண்டு விழா
“வாலிபர்ககன ஊக்கிரதை!””
எ ழுச்சியிணால் கண்முமத் ப் குழியில் விழுந்
விடாதீர்கள்
சகோதரர்களே! உங்கள் சங்க வருஷக் கொண்டாட்டத்தை முன் னிட்டு எனக்கு ஆடம்பரமான வரவேற்பளித்ததற்கும், என்னைத் தலைமை வகிக்கச் சொன்னதற்கும், எனக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்த
தற்கும் நான் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டவனாவேன். எனது கொள்கைகளுக்கு ஆதரவு காட்டும்முறையில் அப்பத்திரமிருப்பது
பற்றியும், அக்கொள்கையிலுங்களுக்குள்ள பற்றுதல் காரணமாய் எனக்குப் புகழ்ச்சியுரைகள் கூறுகிறீர்களென்று நான் கருதுவது பற்றியும் அப் பத்திரத்தை நான் பெற்றுக் கொள்ளுகிறேன். விழாவின் வரவேற்புக் கமிட்டித் தலைவர் நண்பர் பழனியப்பன் வாசித்த வரவேற்புப் பத்திரத் திலும்,பின்பு சங்க அறிக்கைப் பத்திரம் வாசித்துக் கொடுத்த நண்பர் என்.வி. பழனியப்பன் உரையிலும் நமது கொள்கை மிகவும் மலிந்து கிடக்கின்றது. நமதியக்கத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நன்குணர்ந்து அதைச் செயலிலும் செய்து வருகிறீர்களென்பதற் கவைகளே தக்க சாட்சிகளாயிருக்கின்றது. வரவேற்புத் தலைவர் உபன்யாசத்திலுள்ள பெரும் பகுதி விஷயங்கள் யாவும் எனது இன்றைய கொள்கைகளின் தத்துவங்களேயாகும். அதை விட நான் ஒன்றும் புதிதாகச் சொல்லக் கூடுமென்று நீங்களெதிர் பார்க்கமுடியாது. எனினும் அக்கிராசனர் என்கின்ற முறையில் வாலிபர்களுக்குச் சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன்.
நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களாலேயே தான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவை இன்று உலகில் சகலருமபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெரும் வார்த்தைகளல்ல. இதில் உண்மையில்லா மலுமில்லை.
19 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது, உலகப்பற்று, சுய
நலம், பேராசை, மனோராஜியமாகிய களிம்பும், துருப்பும் பிடியாமல் மூளையுடன் சுத்தமாயிருப்பதாகும். “இளங்கன்று பயமறியா” தென்ற பழமொழிக்கொப்ப அவர்களுக்கெந்தக் காரியத்திலும் பயமென்கிற தடை யானது கிடையாது. அன்றியும் வாலிபர்களின் உள்ளமானது பக்கத்தில் தோன்றுவதை பயமின்றி சடுதியில் பற்றுவதாகும். பற்றிவிட்டாலோ தங்கு தடைகளின்றி படரக்கூடிய வேகமுடையதாகும். இந்தக் காரணங்களால் வாலிபர்களே புதிய புதிய காரியங்களால் பயனேற்பட உதவக்கூடிய வர்களென்று சொல்லப்பட்டு வருகின்றது.
எந்தக் காரியத்தைச் சாதிக்க வேண்டுமானாலும், சுயநலமற்ற தன்மை
யும், பயமற்ற தன்மையும், எதையும் தியாகம் செய்யும் உள்ளமும் வேண்டிய தவசியமாகும். இந்தக் குணங்கள் வாலிபர்களிடமே தான் பெரிதும் காண முடியுமேெயொழிய உலகவாழ்க்கையிலீடுபட்ட பெரியவர்களென்பவர்
களிடத்தில் காணமுடியாது.
ஏனெனில், பெரியவர்களென்பவர்களுக்குப் பல தடைகளுண்டு. அவரவர்கள் மனம் பழக்கமாகிய வாழ்க்கையிலீடுபட்டு, பணந்தேடவும், பெயர்களைக் காப்பாற்றவும், மேலும் மேலுமுயறவும் ஆசைவந்து படர்ந்து, தியாக எண்ணமே தோன்றுவதற்கில்லாமல் செய்து, சகலத் துறைகளிலும் பயத்தை யுண்டாக்கி யிருப்பதாலவர்கள் சிறிதும் பொதுநலத்திற்கும், புதிய காரியங்களைச் சாதிப்பதற்கு முயலாமல் போய்விடுகின்றார்கள். நமது மக்களுக்கு அதாவது பெரியவர்கள், மனிதர்களானவர்களென்பவர்களுக்கு முதலாவது கெட்டகுணம், பயம், இரண்டாவது சுயநலமதிகமேற்படுகின்றது.. எப்படியெனில், “நான் செத்துப் போனாலென் பெண்டு, பிள்ளைகளின் கதி என்னவாவது?” “எனது பொருள் தொழில் என்னவாவது?” “என் பெண் டாட்டி, பிள்ளை சொத்து முதலியவைகளைக் காப்பது யார்?” யென்பவை களாகிய யெண்ணங்களே மனிதனை உலகத்தில் எப்படியாவது வாழ்ந்து கொண்டு வெகுநாட்களுக்கிருக்கவேண்டுமென்று கருதுவதற்காதார மாயிருந்து வருகின்றது.
“நான் செத்தால் என் பெண்டு, பிள்ளைகளென்னவாவது?” என்கிற யெண்ணமாகிய ஒரு பெரும் விஷமே நமது மக்களின் பொதுநல உணர்ச் சியைக் கொன்றுகொண்டு வருகின்றது. பொதுநல எண்ணம் ஏற்படாமல் செய்து வருகின்றது. நமது பெண்களும், அவர்களது ஆடவர்களை எவ்வித பொதுநல வேலைக்கும் லாயக்கில்லாமல் செய்து விடுகின்றார்கள். எப்படி யென்றால் “ஐயோ! என்கணவ!! என் தெய்வமே!!! நீ செத்துப்போனால் நான் எப்படிப் பிழைப்பேன்? இந்தப் பிள்ளை, குட்டிகளை எப்படிக் காப்பாற்று வேன்?” என்று சதா ஜபித்துவரும் மந்திரமே, ஆண் சமூகத்தைக் கோழை களாக்கி, சுயநலப்பித்தர்களாக்கி, நாணையமும், யோக்கியப் பொறுப்பற்ற தன்மையை யுடையவர்களாக ஆக்கி வருகின்றது.
குடி அரசு - 1981 (2) 20
நமதுபெண்களுக்குச் சுதந்திரமோ, அறிவோ மற்றவர்களுதவியின்றி தானாக வாழக்கூடிய சக்தியோ மற்றும் ஆண்கள் “இந்தப் பெண்ஜாதி போனால், வேறு ஒருத்தியைக் கொண்டு வாழ்க்கையை நடாத்தலாம். இதற்காக அழவேண்டுமா?” என்று எண்ணுகின்றயெண்ணம்போல “இந்த புருஷன் போனால்,வேறொரு புருஷனைக் கொண்டு வாழ்க்கை நடத்தலா” மென்கின்ற தன்நம்பிக்கையுமிருந்தால், கண்டிப்பாக இன்று நமது நாட்டி லுள்ள ஆண் மக்களெல்லாம் உண்மையான ஆண் மகனாயிருக்க முடியும்.
சுதந்திர புருஷனாக, மானமுள்ளவனாக இருக்க முடியும். ஆகவே இந்தப் படியில்லாமல் போனதற்குக் காரணம், ஆண்மக்கள் தங்களுக்கு ஏற்படுத்
திக் கொண்ட வாழ்க்கைத் துணையானது பயங்காளியாகவும், மூடத்தனம் பொருந்தியதாகவும், தன்நம்பிக்கையற்றதாகவுமிருக்கும்படியான நிலை
யில் உள்ள பெண்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டதால் தானே தவிர வேறில்லை.
ஆண், தனக்காக என்று கஷ்டப்படுவதுடன், தனக்காகவே தனது சாவுக்குப் பயப்படுவதோடு, தனது பெண்ஜாதிக்கும், பிள்ளைக்குமாகவும் சாவுக்கும், தீய சத்திற்கும் பயப்பட வேண்டியவனாயிருப்பதால் அவன் பயனற்றவனாகவும், சுயநலமும், பேராசையும், பயங்காளித்தனமுமே உருவ
மாகத் தோன்றியவனாகவுமாகி விடுகின்றான். ஆதலால் தான் மனிதன் பொது நலத்திற்கருகதையற்றவனென்று சொல்லப்படுவதுடன் மேல் கண்ட இந்த குணங்களற்ற வாலிபர்களே பொதுநலத்திற்கருகர்களென்றும் சொல்லப்பட்டு வருகின்றது.
ஆனால், வாலிபர்களெப்படிப் பொதுநலத்திற் கேற்றவர்களென்கின்ற
மகிழ்ச்சியும், பெருமையும் மக்கள் அடைவதற்கு லாயக்குடையவர்களா யிருக்கின்றார்களோ, அதுபோலவே அதற்கு நேரிடையாக அவர்கள் விஷயத்தில் நாம் பயப்படும்படிஅவர்கள்அந்த வாலிபபருவ பயனை
முன் பின் யோசியாமலெதிலும் செலுத்தி பொது நலத்திற்குக் கெடுதியை விளைவித்துவிடக்கூடிய அபாயகரமான வஸ்துவாக ஆகிவிடுவார் களென்றும் சில சமயங்களில் கருதவேண்டியதாகவும் இருக்கின்றது.
ஏனெனில், அவர்களது பரிசுத்தமான உள்ளம் எதில் பற்றுகொண்டா
லும் துணிந்து, நன்மை தீமையின்னதென்றுகூட யோசியாமல் திடீரென்று பிரவேசித்து விடக்கூடிய சுபாவமுடையதாகி விடுகின்றது.
எதுபோலவென்றால் நமது சிறுபிள்ளைகள் தங்கள் விளையாட்டுக் காக, எப்படி அவ்வப்போது காணப்படும் காரியங்களை யாதாரமாய்க் கொண்டு விளையாடுகின்றார்களோ, அதாவது ஒரு ஊரில் அல்லாசாமிப் பண்டிகை வந்தால் அந்தப்பண்டிகைத் தீர்ந்து பதினைந்து நாட்கள் அல்லது ஒரு மாதம்வரையிலும் எல்லாப் பையன்களும் புலிவேஷம் போல் சதா ஆடிக்கொண்டிருப்பதும், மாரியாய் பண்டிகை வந்தால்,
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மாரியாய்ப் பண்டிகை தீர்ந்த ஒருமாதம் வரையிலும் ஆண்டியைப்போல் நெருப்பு ஓடு எடுத்து ஆடுவதுபோல் ஆடுவதும், புரட்டாசி மாதம், மார்கழி
மாதம் பஜனை காலம் வந்தால் அம்மாதங்கள் தீர்ந்து ஒரு மாதம் வரை யிலும் பஜனைப் பாடுவதுமாகிய காரியங்களையே தங்கள் விளையாடல் களாகக் கருதுகின்றார்களோ அதுபோலவும், நாடகக்காரன் வந்து ஒன்று, இரண்டு மாதங்கள் நாடகமாடிவிட்டு போனால், அந்நடிகர்கள் ஊரை விட்டுப்போய் ஒன்று அல்லது இரண்டுமாதங்கள் வரையிலும் அந்தப் பாடல்களையும் ஆட்டங்களையும் பையன்களாடிக் கொண்டிருப்பது போலவும், நமது வாலிபர்கள் அவர்களுக்குக் காணப்படும் காரியங்க ளிலும், ஸ்தாபனங்களிலும், இயக்கங்களிலும் வீழ்ந்து, அவற்றையே தங்களது வாலிபப் பருவத்தினாலேற்படும் பயமற்றதும், சுயநலமற்றதும், தியாகத்திற்கு தப்பாயிருப்பதுமான அரிய குணத்தைப் பயன்படுத்திவிடு கின்றார்கள். இந்த மாதிரிபயன்படுத்தப்பட்டக் காரியங்களின் பயன் தான் இன்றுபல வாலிபர்கள் தாசி வீடுகளில் திரிந்துகொண்டு, தங்கள். நேரத்தையும், சரீரத்தையும், செல்வத்தையும் பாழாக்கிக் கொண்டு திரிவதும், அதுவே அந்த வாலிபன் ஜன்மமெடுத்ததின் பயனென்று கருதுவதும், அவர் சார்ந்திருக்கும் அந்த தாசிக் கூட்டங்கள் சொல்லுமுபதேசங்களும், நடவடிக்கைகளும் அவர்களுக்கு உண்மையாய்த் தோன்றுவதற்கும் காரணமாயிருந்து வருகின்றன. அதுபோலவே மற்றும் பல வாலிபர்கள்
குடி, காலித்தனம், சீட்டாட்டம், குதிரைப்பந்தயம் முதலிய சூதாட்ட மென்
பதும், தெய்வபக்தராவதும், மதபக்தராவதும், மதப்பூச்சுகள் பூசுவதென்பதும், படிப்பதென்பதுமாகிய அநேக காரியங்களிலீடுபடுவதுகளும் ஆகிவிடு கின்றன. வாலிப வயதிலுள்ள எழுர்சியும், வேகமும், பயமற்றத்தன்மையும் பொறுப்பெது வென்றுணர்வதற்குப் போதிய அவகாசமும், செளகரியமும், அனுபவமுமில்லாத காலபலனும் அவர்களையேதாவது கண்மூடித்தன மானக் காரியங்களிலிழுத்து விட்டு, அருங்குணங்களை வீணாக்குவதோடு, பின்னாலும் அவர்களது வாழ்க்கையில் கஷ்டப்படவும் செய்து விடு கின்றன. ஆதலாலேயே சிற்சில சமயங்களில் நான் வாலிபர்கள் “ஜாக்கிர தையாகவே” யிருக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லுவதுடன், அவர்களது வேகம் பொருந்திய ஊக்கம் சிற்சில சமயங்களிலபாயகரமாய் நாட்டுக்குப் பயனற்றதாய் சில சமயங்களில் கெடுதியையும் ஆபத்தை
யுமுண்டாக்கக் கூடியதா யேற்பட்டு விடக்கூடுமென்று சொல்லுவதுமுண்டு.. அவர்களது எழுர்ச்சியின் வேகத்தினால் செய்யப்பட்டக் காரியங்கள். அவர்களுக்குப் பலன் கொடுக்காததாலோ அல்லது அக்கம் பக்கத்திய சார்பால் வேறுவித யெண்ணங்கள் தோன்றிவிடுவதாலோ, அதாவது தாங்கள் சகவாசம் செய்தவர்களுடைய சகவாச தோஷத்தால் மற்றும் சுயநலமோ, பெருமையோ யேற்படுத்திக் கொள்ள வேண்டுமென்கிற ஆசையேற்பட்டுவிடுகின்ற காரணத்தால், அவர்களது முன்னைய வேகத்தின் பலனானது கெடுதியை (Reaction) யும் சில சமயங்களில் உண்டாக்கி விடுகின்றது. அதாவது, வேகமாய்போகும் எழுர்ச்சியென்னும்
குடி அரசு - 1981 (2) 22
வண்டியானது அனுபோகமின்மை அறியாமை சுயநலமென்னும் சுவற்றில் முட்டினால், வேகத்தின் மிகுதியினால் சுவரும் கெட்டு, வண்டியும் பழுதாகி, அக்கம்பக்கத்தவர்களுக்குத் தொல்லையையும் விளைவித்து விடுகின்றது.
இத்தியாதி காரணங்களால் வாலிபர்கள் மிக்க ஜாக்கிரதையாக, பொறு மையாக யோசித்தே ஒவ்வொரு காரியத்திலும் தங்களருங்குணங்களைப் பயன்படுத்தவேண்டும். வாலிபர் உள்ளம் பெட்ரோலுக்குச் சமமானது. உலக. இயக்கத்தோற்றங்கள் நெருப்புக்குச் சமமானது. வகையற்ற முறையில் பக்கத்
தில் வந்தால் நெருப்புப் பிடித்து எண்ணையை வீணாக்கி மற்றவர்களுக்குத் தொல்லையை விளைவித்து விடும். ஆகவே “வாலிபர்களே! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! ” யென்று நான் உங்களுக்குச் சொல்லவேண்டியவனாக யிருக்கின்றேன்.
இன்று இங்கு கூடியிருக்கும் வாலிப சங்க ஆண்டு விழா வரவேற்புத் தலைவருரையும், காரியதரிசியவர்களறிக்கையுரையும் நான் கேட்ட வரையி லெனக்கு சரியென்று பட்டவிஷயங்கள், கொள்கைகள் முதலியவை களையே அவர்களும் தங்களது கொள்கையாகவும், நோக்கமாகவும் கொண்டிருப்பதாகயுணர்கிறேன். ஒன்று அவை சிறிது அபிப்பிராய பேதத்திற்கிடமானதாகவிருக்கலாம். ஆனாலும் எல்லாவற்றையுமே இன்னமுமாராய்ந்து பார்க்கும்படியும், அவர்களுக்குத் தோன்றுமனு போகஸ்தர்களைக் கொண்டும் சுயநலமற்றவர்களைக் கொண்டும், முன்பின் நடவடிக்கையை யாராய்ச்சி செய்ய செளகரியமுள்ள வழிகாட்டி மனிதர். களைக் கொண்டும் அக்கம் பக்க தேசநிகழ்சிகள் அவற்றின் அனுபவங்கள் ஆகியவைகளைக் கொண்டும் விஷயங்களை அறிந்து; தங்கள் கொள்கைகளையும், திட்டங் களையு முறுதிபடுத்திக் கொள்ள வேண்டுமாய் விரும்புகின்றேன். இவைகளைத்தான் நான் என்னை மதிக்கும் வாலிபர் களுக்குச் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது.
வாலிப பருவத்தின் கோலத்தையும், அதனது பலனையும் நான்
சிறிது அறிந்தவனேயாவேன். வெகுகாலம் நான் வாலிபனாகவிருந்தவன். வாலிபனாகவேயிருந்து சாகவேண்டுமென்ற ஆசையை யுடையவன். அப்பருவத்தின் சக்தியையும் மேன்மையையுமனுபவித்தவன். அந்த அனுபவம் தப்பான வழியிலுமிருக்கலாம் சரியான வழியிலுமிருக்கலாம். ஆனால், நான் வாலிபப்பருவத்தை அனாவசியமாய் விட்டு விடாமல் அதைப்பல வழிகளில் கசக்கிப் பிழிந்தவன். இந்த உண்மை மற்றவர்களைக் காட்டிலும் நீங்களும், உங்கள் பெரியோர்களும் நன்றாயுணர்ந்தவர்களா
வீர்கள். ஏனெனில், நான் உங்களிலொருவனாகவும், உங்கள் குடும்பஸ்தர் களிலொருவனாகவுமிருந்து வந்தவன். ஆகவே, இங்கு, இவ்வளவு தைரியமாய் எனது சகோதரர்களுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லுவது போல் இவ்விஷயத்திலுங்களுக்கு இவ்வளவு எச்சரிக்கை செய்கின்றேன்.
23 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மேலும் சகோதரர்களே! நமது நாடு இன்று இருக்கும் நிலைமை யிலிருந்து சிறிது மாற்றமடைய வேண்டுமானாலும் மதசம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இந்நாட்டில் சுயநலக்காரரும், சோம்பேரிகளும், மற்றவர்கள் உழைப்பில் வாழ முடிவுசெய்து கொண்டு தங்கள் வாழக்கையை நடத்திவருபவர்களும் இரண்டுவித உணர்ச்சியால் மக்களை கட்டுப்படுத்தி மூடர்களாக்கி, அடிமைகளாக்கி வைத்து பயன் பெற்று வருகின்றார்கள். அவை எவை எனில் மத இயல் அரசியல் என்பவை
களாகும். மதத்தின் பெயரால் மோக்ஷலக்ஷியமும் அரசியலின் பெயரால் சுயராஜ்ஜிய லக்ஷியமுமே மனிதனின் வாழ்நாளில் முக்கியமானது என்று
மக்களுக்குள் புகுத்தப்பட்டு விட்டது. இரண்டு விஷயத்திலும் பிரவேசித்து இருக்கும் மக்களில் 100க்கு 90பேர் இரண்டுக்கும் அருத்தம் தெரியாத வர்களாகவே அதில் உழன்று கொண்டு இருக்கின்றார்கள். பொருள் தெரிந்த சில பெயர்கள் தங்கள் சுய நலத்தை உத்தேசித்து அவற்றை வியாபாரமாய் நடத்தி வருகின்றார்கள்.
மக்களின் சுபாவம் பொருள் தெரிந்த காரியத்திற்கு பயப்படுவதை விட பொருள் தெரியாத காரியத்திற்குத்தான் அதிகம் பயப்படும். ஏனெனில் பொருள் தெரிந்த காரியங்களுக்குப் பரிகாரம் செய்து கொள்ளக் கூடுமான தினால் அதற்குப் பயப்பட மாட்டான். பரிகாரம் செய்து கொள்ள முடியாத தற்கே அதிகம் பயப்படுவான்.
அதுபோலவே ஒரு வீட்டுக்குள் பிரவேசிப்பவனுக்கு அவனைப் பிரவேசிக்காமல் இருக்கச் செய்ய “அங்கு தேள் இருக்கும் பாம்பு இருக்கும்” என்று சொன்னால் அவன் அதற்குப் பயப்படாமல் கையில் தடியையும், காலில் பூட்சையும் போட்டுக்கொண்டு உள்ளே பிரவேசிக்கத் துணிந்து விடுவான். அல்லது கையில் நெருப்புப் பந்தத்தை எடுத்துக் கொண்டாவது பிரவேசிக்கத் துணிந்து விடுவான். ஏனெனில் தேளைப்
பற்றியும், பாம்பைப் பற்றியும் அவனுக்குத் தெரியுமாதலால் அவைகளின் கஷ்டத்தில் இருந்து விலக ஏற்பாடு செய்து கொள்ளத் தெரியும். ஆனால் அதேவீட்டில் பிசாசோ, பூதமோ இருப்பதாகச் சொல்லிவிட்டால் அந்தவீதியில் நடக்கக்கூட பயந்து கொள்ளுவான். என்ன சொன்னாலும் அந்த வீட்டில் இருக்க சம்மதிக்கவே மாட்டான். காரணம் என்னவென்றால் பிசாசு. பூதம் என்பது இன்னது இன்ன மாதிரியாய் இருக்கும் என்கின்ற விபரம் அவனுக்குத் தெரியாது. ஆதலால் அதிலிருந்து தப்ப உபாயம் செய்துகொள்ள அவனுக்கு முடிவதில்லை.அதுபோலவேதான் மனிதனுக்கு மோட்சம் என்பது என்ன? சுயராஜியம் என்பது என்ன? என்று தெரிந்திருந்
தால் அவற்றின் பேரால் இவ்வளவு மக்கள் ஏமாந்திருக்க முடியாது. அருத்தம் தெரியாததையும் மனதில் பட முடியாததையும் பிரசாரம் செய்வ
தால் மக்கள் ஏமாந்து விடுகின்றார்கள். ஏதோ தனக்கு பெரிய லாபம் வரு கின்றது என்று கருதுகின்றான். வியாக்கியானம் செய்து பார்க்கும்படி
குடி அரசு - 1931 (2) 24
சொன்னால் மோக்ஷத்தையும் சுயராஜியத் தையும்பற்றி அனேக “பெரியார்கள்” ஏற்கனவே சொல்லி இருப்பதால் அதைப்பற்றி சந்தேகப் படுவதோ அல்லது விளக்கிக்கொள்ள ஆசைப்படுவதோ குற்றமானது என்று கருதுகின்றான்.
இந்த மனப்பான்மையிலேயே தான் மனிதன் வாழ்க்கையை நடத்து
கின்றான். இதனாலேயே தான் பாமர மக்கள் சிறிதும் தலைதூக்க முடியாமல் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றார்கள். “பகுத்தறிவைப் பயன்படுத்து வதே பாவம்” என்று சொல்லப்பட்ட ஒரு ஆயுதமே மக்களை அழுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றது. அர்த்தமற்ற உண்மையற்ற சொற்களுக்கு நடுங்கச்செய்கிறது. உதாரணமாகப் பாருங்கள். மனிதனுடைய மூடத் தனத்துக்கு ஒரு உதாரணம் காட்டுகின்றேன்.
மனிதன் திருடுவான், நம்பிக்கை துரோகம் செய்வான், மோசம் செய் வான், கொலையும் செய்வான். ஆனால் ஒருபறையன் கொண்டுவந்த தண்ணீரை தொட்டு குடி என்றால் நடுங்குவான்.
பாவம் என்று ஒன்று இருந்தால் மோசம் செய்வதைவிட, நம்பிக்கை துரோகம் செய்வதைவிட, பதரப்பதர கொலைசெய்வதைவிட, வேறு ஒன்றும் அதிகபாவம் இருக்கமுடியாது. ஆனால் இவற்றையெல்லாம் பஞ்சாமிருதம் சாப்பிடுவதுபோல் செய்து விட்டு பறையனை திண்ணையில் உட்கார. வைப்பது என்றால் நடுங்குகின்றான் என்றால் மனித சமூகத்தை எவ்வளவு சுயநலமாக இருக்கும்படியாகவும், முட்டாள்தனமாக இருக்கும்படியாகவும் வாழ்க்கை முறைகள் மதமுறைகள் மோட்ச நரக முறைகள் அமைக்கப் பட்டிருக்கின்றது என்று பாருங்கள். இதுபோலவே அரசியலிலும் அரசாங் கத்தாருக்கு அனுகூலமாக இருக்கின்றவர்கள் யார்? யாருடைய துரோகத்
தால், சுயநலத்தால் இந்நாட்டில் அக்கிரமமான அரசாங்கம் இருந்து வரு கின்றது? என்பவைகளை முக்கிய காரணமாய் உணர்ந்து அந்ததுறையில்
ஒரு சிறு வேலையும் செய்யாமல் பாமர மக்களிடம் சுயராஜிய வியாபாரம் நடத்துவது என்பதை மக்கள் உணர முடியாமல் இருப்பதோடு உணர்ந்து சொல்லுகிறவர் களையும் மக்கள் வெறுக்கும்படி செய்யப்பட்டிருக்கின்ற தென்றால் அரசியலின் பேரால் மக்கள் எவ்வளவு முட்டாள்கள் ஆக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். உங்கள் அறிக்கையில் கண்ட விஷயங்களைப்பற்றியே எடுத்துச்சொல்லி வருவதில் மேலும் கிராம புனருத்தாரணம் என்பதைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
கிராம புனருத்தாரணம்
கிராம புனருத்தாரணம் என்பது கிராமங்களின் பழைய நிலைமை களை மறுபடியும் புதுப்பிப்பது என்கின்ற அருத்தத்தில் வேலை செய்வதா னால் இனி இந்த தேசத்தில் கிராமம் என்பதே இல்லாமல் போய்விடும்.
25 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அந்தப் படி இல்லாமற்போவதே மேல். இருக்கும்படி செய்யவேண்டு மானால் கிராமத்திற்குள் புதிய தன்மைகளை புகுத்தவேண்டும். நமது கிராமங்களைப்பற்றி மேயோ சொல்லி இருக்கும் முறைகள் தான் நமது பழைய கிராம நிலையாகும். நமது அரசியல் துறையில் பாடுபடும் பெரியார் ஒருவர் சமீபத்தில் ஒரு கிராமத்தைப்பார்த்து “இந்த கிராமத்தைப் பார்த்ததும் எனக்குப் பழைய கால கிராம காக்ஷி தென்படுகின்றது. நானும் ஒரு கிராம வாசியானதால் பழைய கிராமக்காக்ஷியைக் கண்டு மகிழ்ச்சி அடை கின்றேன் என்பதாகப் பேசினாராம்.
பழைய மாதிரி கிராமம் இருப்பதனால் கிராமங்கள் ஒழிந்தே போய்
விடும். யாரும் கிராமத்தில் இல்லாமல் எல்லோரும் பட்டணங்களுக்கே குடியோடிப் போவார்கள்.
கிராமங்களை பட்டணமாக்கவேண்டும். பட்டணவாசிகளின் வாழ்வு
முழுவதும் கிராமவாசிகளின் உழைப்பேயானதால் கிராமவாசிகளே தான் உலகபோக போக்கியங்களை அடைய உரியவர்களாவார்கள்.
கிராம வாழ்க்கை ஒரு விதம் நகர வாழ்க்கை ஒரு விதம் என்பது பித்தலாட்டக்காரியமேயாகும். கிராமவாசிகளைப்பார்த்து கண்ணீர். வடிக்கும் பட்டணவாசியான முதலாளியும், வக்கீலும், உத்தியோகஸ்தனும், பார்ப்பனனும் பித்தலாட்டக்காரர்களேயாவார்கள். அவர்களது வஞ்சகமும், கெட்ட எண்ணமும்தான் கிராம வாசிகளான பெரும்பான்மை மக்களை கால்நடைகளாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு விஷயத் திலும் கவலை கொண்டு பகுத்தறிவைப் பயன்படுத்தி தக்க முறையில் சேவை செய்யவேண்டுமென்று விரும்புகிறேன்.
குறிப்பு: 28.06.1931 ஆம் நாள் சென்னிமலைநகர் போர்டு பள்ளியில் நடைபெற்ற சென்னிமலை யுவர் சங்க ஆண்டுவிழாவில் தலைமையேற்று ஆற்றிய
உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931
குடி அரசு - 1981 (2) 26
வொருணாதாரம்
சகோதரர்களே!
பொருளாதார மென்னும் விஷயத்தைப்பற்றி என்னைப் பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், வரும்படி அடைவ
திலும் நம்நாட்டு மக்கள் எந்தநிலைமையிலிருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த வருவாயென்ன பலளளிக்கின்றது? அவர்களுக்கதிக வருவாய் கிட்டவுமது தக்க பயனளிக்கவும் வழியென்ன? என்பவைகள் போன்றது தான் பொருளாதாரமென்பது பற்றி நான் பேசப்போகும் விஷயத்தில் முக்கிய கவனிப்பாகும். ஆகவே இவ்விஷயங்களில் நமது நாட்டிற்கும் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்குமுள்ள வித்தியாசங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் மேல் நாட்டார் சராசரியாக ஒவ்வொரு நபரும் தினம் 2 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். நம் நாட்டார்களோ சராசரியாக ஒவ்வொரு வரும் தினம் 2 அணா வீதமே சம்பாதிக்கின்றார்களென்பது யாவருமறிந்த விஷயம். அன்றியும் இதுவே
நம் நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய பல்லவியுமாகும். இது உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் மேல் நாட்டில் பல லக்ஷ ரூபாய் சம்பாதிப்பவனிலிருந்து தினம் கால் அணா சம்பாதிப்பவன் வரையில் சகலரையும் ஒட்டு மொத்தம் கணக்கு சேர்த்துப் பிரித்து வகுத்துப்பார்த்தால் ஆளொன்றுக்கு வருமானம் ரூ 2-0-0 ஆகும்.அதைப்போலவே இந்திய
நாட்டின் பெரிய ஜமீன்தாரனிலிருந்து மகாராஜாக்களிலிருந்து மடாதிபதி களிலிருந்து தினம் ஒரு காசு பிச்சை எடுப்பவன் வரையில் ஒட்டு மொத்தம் கணக்குப் பார்த்து ஆள் ஒன்றுக்கு வருமானமென்னவாகுமென்று பிரித்து ஈவு பார்த்தால் ஆள் ஒன்றுக்கு 2 அணா வீதமே வரும்.
இவ்விதம் மேல்நாட்டில் வருமான மதிகமாவதற்கும் அதாவது சராசரிரூ.2-0-0 வருமானமாவதற்கும் நமது நாட்டில் வருமானம் குறைவ
தற்கும் அதாவது ஆள் ஒன்றுக்கு சராசரி0-2-0 அணாவே கிடைப்பதற்கும் காரணமென்ன வென்பதைக் கண்டு பிடிப்பதுதான் பொருளாதாரப் பிரச் சினையில் முக்கியமானதாயிருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.
மேல் நாட்டான் பணம் சம்பாதிக்க வென்று உழைக்கிறான். நாமுமது போல வே தானுழைக்கிறோம். ஆனால் தினம் 0-2-0 அனா சம்பாதிப்பதற்கு
27 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நமது மக்கள் படுகின்ற கஷ்டத்தினளவு மேல் நாட்டில் தினம் ரூ. 2-0-0 சம்பாதிக்கின்ற ஆட்கள் கஷ்டப்படுவதில்லை. சம்பாதனை விஷயத்தில் நமது கஷ்டமும் சரீரப்பிரயாசையும் சிறிதும் குறைந்த பாடில்லை. ஆனால் நாட்டு வளப்பத்தில் நம் நாட்டை விட மேல் நாடு சிறந்ததென்று யாருமிது வரை சொல்ல வரவில்லை. அப்படியிருக்க அதாவது வளமுள்ள நாட்டிலிருப்பவன் தினம் இரண்டணாவும் வளமில்லா தேசத்திலிருப்பவன் தினமிரண்டு ரூபாயும் சம்பாதிக்கக் காரணமென்ன என்பதில் தான் பொருளாதாரப் பிரச்சினையின் சாவி இருக்கின்றது. மலைவளம், நீர்வளம், நிலவளம், செழிப்பு வர்த்தக மூலப்பொருள்கள் பல தானியங்கள் விளை:
வுக்கு வேண்டிய செளகரியங்களாகியவை மற்ற நாடுகளைவிட நமது நாட்டிலதிக முண்டல்லவா? இத்தகைய வளம் கொழுத்த நமது நாட்டில், செல்வத்திற்காக வென்று ஒரு தனி கடவுளையும் ஏற்படுத்திக் கொண்டு, அதற்காக பூஜைநைவேத்தியம் உற்சவம் பிரார்த்தனை முதலியவைகளும் செய்து வரும் நமது நாட்டில் “தரித்திரம் தலைவிரித்தாடக்” காரணமென்ன? மக்கள் சுகமாயிருக்க வீடில்லாமல் கட்டத்துணியில்லாமல் உண்ண உண வில்லாமல் வாடுகிறார்கள் வதங்குகிறார்களென்று சொல்லப்படக் காரண மென்ன? வென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரணத் தினுண் மையைக்கண்டு பிடித்து விட்டால் பொருளாதார பிரச்சினை வெகு சுலபமாகத் தீர்ந்துவிடும்.
பொருளாதார சீர்திருத்த நிபுணர்களுக்கு இந்த விடத்தில் தானாதிக வேலையிருக்கிறது. இதைக்கண்டுபிடித்து நேர் செய்யாமல் “நமது செல்வம் கொள்ளை போகின்றது! கொள்ளை போகின்றதே! தென்று பேசுவதால் - தலையிலும், வாயிலும், வயிற்றிலுமடித்துக் கொள்வதாலொருபயனுமே யுண்டாகாதென்பது எனது அபிப்பிராயம்.
உண்மையைப் பேசத்துணிந்தோமேயானால் 1. இந்த நாட்டில் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? 2. இருந்தால் யாருக்கிருக்கின்றது?
3. அது ஏனிருக்கின்றது? 4 யாராலிருக்கின்றது? என்பவைகளாகிய விஷயங்களில் கவனம் செலுத்திப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோமானால் அந்த முடிவின் அபிப்பிராயங்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள் தலைவர். கள் என்பவர்களது அபிப்பிராயங்களுக்கு விறோதமாகவே இருக்கும். இருந்தபோதிலும் இவ்விஷயங்களில் எனக்குத்தோன்றிய உண்மையை உங்கள் முன் பேசுகின்றேன்.
சகோதரர்களே! இன்று பொருளாதாரக் கஷ்டமென எங்காவது உண்மையிலிருக்கின்றதா? விவசாயங்கள் நடைபெறுகின்றன. தொழில்கள்: நடைபெறுகின்றன. சில இலட்சம் பிறவிப் பிச்சைக்காரர்கள் தவிர, சில கோடி பிறவிச் சோம்பேறிகள் தவிர மற்ற மக்களெல்லோரும் வேலை
செய்கின்றார்கள்.1,000,10,000,100,000,10,00,000,100 00 000, 1,00000000 ரூபாய் களென்பதான சொத்துக்கள் கொண்ட செல்வவான்கள் நமது
குடி அரசு - 1981 (2) 28
நாட்டிலில்லையா? 100, 1,000, 10,000, 1,00,000, 10,00,000 பல 10,00,000 ரூபாய்களென்பதான வருஷ வரும்படியைக் கொண்ட வரும்படிக்காரர்கள் நமது நாட்டிலில்லையா? மாதம் ஒன்றுக்கு 10, 100, 1000, 10,000 ரூபாய்கள். வீதம் சம்பளமும், சம்பாதனையுமானவரும் படியுள்ள உத்தியோகஸ்தர்கள்
வக்கீல்கள், வைத்தியர்கள் முதலிய மக்கள் நமது நாட்டிலில்லையா? ஒவ்வொரு வீடுகளில் 1000, 10,000, 100,000 ரூபாய் பெறும்படியான
நகைகளும், 1000, 10,000, 1,00,000, 2,00,000 பெறுமான கட்டடங்களும், கோட்டை கொத்தளம் போன்ற வீடுடையவர்களும் நமது நாட்டி வில்லையா? வென்று யோசித்துப்பாருங்கள். பூமி விஷயத்திலும் ஆள்.
ஒன்றுக்கு 5, 10,100, 1000, 10000, 20,000, 50,000 ஏக்கர்: விஸ்தீரணம் கொண்ட பூமியையும், வயல்களையும், தோட்டங்களையும், மலைகளையும், சோலைகளையும் அவற்றுள் அழகிய நீரோடைகளையும் கொண்ட மக்கள் நமது நாட்டிலில்லையா? பெரிய பெரிய நதிகள், வாய்க்கால்கள், ஓடைகள், ஏரிகள் நமது நாட்டிலில்லையா? என்று யோசனை செய்து பாருங்கள். ஆகவே இந்த நாட்டில் செல்வமில்லை என்று எப்படி, எந்த ஆதாரத்தைக் கொண்டு சொல்லக்கூடும்? என்பதை சற்று நடு நிலைமையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். எனவே, சகோதரர்களே!இவ்வளவு செல்வமிருக்கும் போது இந்த நாட்டைப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்ற நாடாக எப்படி சொல்ல முடியும்? அப்படித்தானெங்காவதிருப்பதாக சொல்லுவதானால், யாருக்குப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றது? பாடுபடுகின்றவர்களாய், பாமர மக்களாயிருக்கின்ற - சாது ஜனங்களாக இருக்கின்றவர்களுக்கும், எந்தக் காலத்திலும் எந்த விதத்திலும் பொருளற்றவர்களாகவே இருந்து தீரவேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றவர்களுக்குமேயல் லாது, மற்ற யாருக்குப் பொருளாதார கஷ்டமிருக்கின்றது? என்று உங்களை நான் கேட்கின்றேன்.
தங்களை யுயர்ந்த ஜாதியரென்றும், மேல்வருணத்தவரென்றும், பாடு படுவதற்கு உரிமையில்லாதவர்களென்று மேற்பாடு செய்துகொண்ட கூட்டத் திற்கெங்காவது பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? என்று பார்த்தீர்களா னால் இந்தக் கூட்டத்தாருக்கு எங்காவது சிறிதாவது பொருளாதாரக் கஷ்டமிருப்பதாகவோ, ஜீவனத்திற்குக் கஷ்டப்பட வேண்டியிருப்ப தாகவோ, அதனால் பசியுடன் வாடிக்கொண்டோ, கல்வி கற்க மார்க்க மில்லாமலோ இருப்பதாக நீங்கள் சொல்ல முடியுமா? என்பது உங்களுக்கு விளங்கும். ஆகவே, இந்தக் கூட்டத்தவர்களல்லாமல் மற்றவர்களுக்குப் பொருளாதாரக் கஷ்டமென்பதிந் நாட்டிலேனிருக்கின்றது? யாராலிருக் கின்றது? என்பதை இப்போது யோசித்துப்பாருங்கள். அப்போதுதான் நாட்டி லுள்ள செல்வங்களை சகல மக்களும் சரியாய் அனுபவிக்க முடியாம லிருக்கும்படிக்கும், பாடுபடுகின்றவன் பட்டினியாகவும், சோம்பேறி யாயிருப்பவன் நன்றாகத் தாராளமாய் சாதாரண அளவுக்கெத்தனையோ மடங்கதிக மாயனுபவித்துக்கொண்டு வாழும்படியாகவுமிருப்பதும் அதற்கு
29 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆதாரமாக நமது சமூகவாழ்க்கைக் கிரமத்திலதற்கேற்ற திட்டங்களேற்
படுத்தி வைத்திருக்கும் சூக்ஷியும், பித்தலாட்டமும், ஏமாற்றமும் நன்றாய் உங்களுக்கு விளங்குவதோடு இதைத்தவிர மற்றபடி வேறொன்றும் “பொரு ளாதாரக் கஷ்டத்திற்கு” காரணமில்லை யென்பதை நன்றாயுணருவீர்கள்.
சகோதரர்களேஇந்தப்படியாய்த் திட்டம் செய்வதற்கு மூலகாரண: ஸ்தர்களாகயிருப்பவர்கள் மேல்ஜாதியார், மேல்வருணத்தாரென்கின்ற சூஷிக்கார சோம்பேறி வாழ்க்கைக் கூட்டத்தார்களா? இல்லையா? வென்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இப்படிப்பட்ட நிலைமையில், இந் நாட்டி லிருப்பதாய் சொல்லப்படும் பொருளாதாரக்கஷ்டத்தை எப்படி யொழிப் பது தென்பதுதான் இனி முக்கியப்பிரச்சினையாக யோசிக்கப்படவேண்டும்.
சகோதரர்களே/இந்த இடத்திலுங்களது நியாயமான புத்தியையும், நடு நிலைமையான கவனத்தையும் செலுத்திப் பாருங்கள். பொருளாதாரக் கஷ்டத்தின் தத்துவங்கள் சுலபமாக உங்களுக்கு விளங்குவதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன். இன்றையத்தினம் ரூ. 1-க்கு பட்டணம் படியினால் 6 படி அரிசி விற்கும்படியான நிலைமை நம் நாட்டில் இருந்தும் (அதாவது ஒரு தம்படிக்கு ஒரு பெரிய இட்டலி விற்கக்கூடிய அளவு மலிவாக இருந்திருந்தும்) இன்று ஒரு மனிதன் ஒரு இட்டலி 6 தம்படி கொடுத்து வாங்குவதும் அதே இட்டலியை வேறு ஒருவன் ஒரு தம் படிக்கோ அல்லது இரண்டு தம்படிக்கோ விற்றால்கூட அவனிடம் வாங்காம லதிகவிலை கொடுத்து வாங்கி, நஷ்டமடைந்து வயிறார இட்டலி வாங்கி சாப்பிடக்கூட செளகரியமில்லாமல் கஷ்டப்படுவதும், அதிக விலைக்கு விற்பவன் பெண்டு பிள்ளைகள் கெம்பு வைரக்கம்மலும், அட்டிகையும், ஜப்பான் சில்க் கும், பிராந்தி, விஸ்கிக்குடியுமாகியவைகளான போக போக்கியங்களை அனுபவித்துக் கொண்டு அவன் பிள்ளைகள். பி.ஏ.பி.எல்., படிக்கின்றார்கள் என்றால் இது இந்நாட்டுப்பொருளாதாரக் கஷ்டத்தின் பயனா? அல்லது சிலருக்கெப்போதும் பொருளாதாரக்கஷ்டம். சதா இருக்கும்படியாகச் செய்யப்பட்டிருக்கும் சமூகவாழ்வு ஏற்பாடா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்.ஆகவே, இந்தப்படியான, அதாவது செல்வத்தையும், பொருளையும் மக்கள் சமமாயனுபவிக்க முடியாதபடி வெகுகாலத்திற்கு முன்பிருந்தே செய்யப்பட்டிருக்கு மேற்பாட்டை-கட்டுப் பாட்டையுடைத் தெரிந்தீர்களானால் இங்குப் பொருளாதாரக் கஷ்டமேற்பட மார்க்கமிருக்குமா? என்று கேட்கின்றேன்.
மேல் நாட்டில் சக்கிலிமகன் பிரதம மந்திரியாகின்றான். குயவன் மகன் லார்டு Lord “பிரபு” சபையில் அங்கம் வகிக்கின்றான். கப்பலில் சட்டி பானைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றவன் குப்பைக் கூழங்களைக் கூட்டு கின்றவன் மகன் இராஜப் பிரதிநிதியாகின்றான். வண்ணான் மகன் கவர்ன ராகின்றான் என்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது நாட்டில் சக்கிலி
கள் வீதிகளிலும் நடக்கக்கூடாது.
குடி அரசு - 1981 (2) 30
பறையன் சுடுகாட்டிலிருந்துகொண்டு, பிணங்களுக்குக் கட்டியத் துணியைக்கிழித்துக் கட்டிக்கொள்ள வேண்டுமென்றும், பிணங்களுக்கு வாயில் போடும் வாய்க்கரிசியைப் பொறுக்கியெடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கவேண்டுமென்றும் திட்டங்களிருந்தாலெப்படிப் பொருளாதாரத் திட்டம் பெருவாரியான பாடுபடும் மக்களுக்கு திருப்திதரக்கூடியதாக விருக்குமென்று யோசித்துப்பாருங்கள்.
இந்த நாட்டில் மேல் ஜாதிக்காரனென்பவன் எவனாவது சரீரத்தால் பாடுபடுகின்றானா? வென்று கவனித்துப்பாருங்கள்.
இந்தநாட்டில்மக்களை பிராமணன், க்ஷத்திரியன், வைசியன்,
சூத்திரன் பஞ்சமனென்று பிரித்து, இதில் அவர்களுக்கு அந்தஸ்தும், வேலையும் பிரித்து, அதாவது பிராமணன் படிப்பதற்கும்- படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மருகனென்றும், க்ஷத்திரியன் அரசு செலுத்தி - உத்தியோகங்
கள் பார்க்க அருகனென்றும், வைசியன் வியாபாரியாய் வியாபாரம் செய்து ஜமீன்தாரணாய் விவசாயக்குடித்தனம் செய்விக்கச்செய்து, பணம் சம்பாதிக்க அருகனென்றும், சூத்திரன் சரீரப்பிரயாசைப்பட்டு, உயிர்வாழுமளவுக்கு மாத்திரம் ஊதியம் பெற, கூலிபெற அருகனென்றும், பஞ்சமனென்பவன் இந்த சூத்திரன் அதிகாரம் செய்யவும், அவனுக்கு வெட்டி வேலை செய்ய
வும் அவன் உண்டுகழித்த கஞ்சியையும், உடுத்திக்கிழித்த கந்தையையும் பெற்று, உண்டு உடுத்தி இழிபட்ட மிருகங்களிலும் கேவலமாயிருக்க அருகனென்றும் யேற்பாடுகள் செய்ததிட்டமே - வருணாச்சிரம தர்மமே தான் - இன்று இந்த நாட்டில் பாடுபடுபவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையையடைய முடியாமல் இருக்கின்றதேயொழிய, வேறுகாரணமில்ல வேயில்லை. இந்தக்கூட்டம் அதாவது பாடுபடுகின்றவர்கள் எண்ணிக்கை
யில் மற்றவர்களைவிட அதிகமாயிருப்பதால் நாடு ஏழையாகவும், தரித்திர மாகவுமிருப்பதாக தெரிகின்றது. இவர்களது இந்த நிலைமையை மேல் ஜாதிக்காரர்கள் மற்றவர்களுக்கு - வெளியாருக்கு எடுத்துக்காட்டி, “இந்தியா ஏழைநாடு, தரித்திரநாடு, பொருளாதாரத்தில் கீழான நாடு” என்பதாக ஒப்பாரிவைத்து அதாவது ஒரு பிச்சைக்காரி பிச்சைப்பெறவேண்டுமானால் யாரிடத்திலாவதுள்ள ஒரு மொண்டிக் குழந்தையையோ, குருட்டுப்பிள்ளை யையோ வாடகைக்குப் பெற்றுவந்து, தனது குழந்தை “குருடு” என்றும், *மொண்டி” என்றும் சொல்லி, தெரியாதவர்களுக்குக்காட்டி, காசு, பணம் சம்பாதித்துக்கொண்டு பிறகு குழந்தைகளைப் பெற்றோர்களிட மொப்பு வித்து விடுவதுபோல் இந்தியாவின் கீழ்பட்ட மக்களென்பவர்களின் நிலைமையை கைமுதலாக வைத்து மேல் நிலைமையில் மிக்க செளகரிய மாக இருப்பவர் தாங்கள் மிகவும் பரிதாபப்படுவதாக வேஷம்போட்டு அரசாங்கத்தில் சுயநலத்திற்கு அனுகூலமான லாபத்தை மேலும் மேலும் அடைவதற்குச் செய்யும் சூகரியேதான் இன்றையப் பொருளாதாரக் கஷ்டமேயொழிய வேறில்லை.
21 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இந்தியப் பொருளாதார நிலைமை சிறிது உயரவேண்டுமானாலும் இந்திய ஜனத்தொகையில் 100க்கு 75 பாகத்திற்கு மேலான இந்த சமூகங்கள். பொருளாதாரத் துறையில் மேல் வருவதற்கு சமூகத்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைக்கச்செய்தால் ஒழிய வேறு வழியில் இந்திய மக்கள் பொருளாதாரத்துறை சீர்படுத்தப்படுமென்பது சிறிதும் முடியாத காரியமே
யாகும். ஆகவே இதைத்தவிர மற்ற வழியில் பொருளாதாரத் துறையைப்
பற்றி பேசுபவைகளவ்வளவும் புரட்டும், ஏமாற்றமுமேயல்லாமல், அதில்
சிறிதும் அறிவுடைமையோ, நாணயமோ உண்மையோ யில்லையென்றே சொல்லுவேன். ஆதலால் நமது நாட்டுப் பொருளாதாரக் கஷ்டமென்பது இம்மாதிரியான ஒரு பெருமிந்திய சமூகத்திற்கிருந்து வருவதற்குக் காரணமே இந்தமாதிரியான வருணாச்சிரம முறையேயல்லாமல் வேறல்ல யென்பதே எனது அபிப்பிராயம். இந்திய நாட்டிலெவ்வளவு பஞ்சமிருப்ப தாக சொல்லப்பட்டாலும், எவ்வளவு தரித்திரமிருப்பதாக சொல்லப்பட்டா
லும், எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக்கொண்டும் மேற்கண்ட உயர்ந்த ஜாதிக்கூட்டமானது ஒரு நாளாவது, ஒரு நிமிஷமாவது, கஷ்டப்படு வதாகவோ பட்டினிக்கிடப்பதாகவோ சொல்ல முடியவே முடியாதென்பதை நீங்கள் கூர்மையாய் யோசித்துப்பார்த்தீர்களானால், உங்களுக்கு விளங்கா
மல் போகாது.
மற்றுமின்னுமொரு விஷயத்திலும் நமது பொருளாதார நிலைமைக் கஷ்டமாகக் காணப்படுவதற்குக் காரணம் சொல்லவேண்டியிருக்கின்றது. அதாவது நமது பொருளாதார வருவாய்களும் செல்வர்களுடைய செல்வத்
தின் பயன்களும் நாட்டு நலனுக்கும், பெரும்பான்மையான ஏழை மக்கள் பாடுபடுகின்றவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் அவர்களது முன்னேற்றத்
திற்கும் போக முடியாமல் சாமி பேராலும் மதத்தின் பேராலும் சடங்குகளின்
பேராலும் நாசமாகும் ஒரு பெரிய மோசமான துறையேயாகும்.
இந்தநாட்டுச் செல்வவான்களெல்லோரும் பணம் சம்பாதித்து செல்வ வான்களானதற்குக் காரணமிந்த நாட்டுப்பெரும்பான்மையான மக்கள் சரீரப்பிரயாசையின் பயனாலேற்பட்ட தென்பதை சிறிதும் உணராது “கடவுள் தங்களுக்குக்கொடுத்தா' ரென்பதாக யெண்ணிக்கொண்டு, அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் முறையிலும், இன்னும் மேன் மேலும் செல்வம் பெருக வேண்டுமென்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகின்றார்கள். இதன் பயனா கவே இந்த நாட்டில் வருஷமொன்றுக்கு பல கோடி ரூபாய்கள் பாழாவதைப் பார்க்கலாம். நமது தமிழ்நாட்டில் மாத்திரம் வருஷமொன்றுக்கு இரண்டு கோடி அல்லது மூன்றுகோடி ரூபாய்கள் வரும்படி வரத்தக்க மூலத்துகை:
கள், சொத்துக்கள் கோவிலின் பேரால் மதத்தின் பேரால் முடங்கிக் கிடக் கின்றன. மற்றும் மூன்றுகோடி, நான்குகோடி ரூபாய் வருஷம் ஒன்றுக்குப் பொதுமக்களின் வருவாயும், சிலவிடங்களின் கைமுதலும் பாழாகும்
குடி அரசு - 1981 (2) 32
வண்ணம் கிராமதேவதைகள் முதல் உயர்தரக் கடவுள்கள் வரையுள்ள இலட்சக் கணக்கான கடவுள்களுக்குப் பூசை, நைவேத்தியம், உற்சவம், காணிக்கை முதலிய செலவுகளும், கோவில் திருப்பணி கும்பாபிஷேகம் முதலிய செலவுகளும், மற்றும் இரதம், தேர், வாகனம், பாத்திரம், பணம், துணிமணி,நகை முதலிய செலவுகளும் தேசத்தின் பொருளாதார நிலைமை யைப் பாழாக்குகின்றன. தமிழ்நாட்டில் மாத்திரம் இவ்வளவென்றால் இந்தியா மொத்தமு மெப்படியிருக்குமென்று நினையுங்கள். இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டி இந்த நாசமாய்ப்போகும் பொருளாதாரத்தைக் காப்பாற்றி அச்செல்வங்கள் இந்திய மக்களுக்குப்
பயன்படுத்தச் செய்யா மல் இத்துறையில் சிறிது முயற்சியுமில்லாமல் “நமது செல்வம் அன்னிய நாட்டுக்குப் போகின்ற” தென்கின்ற ஜாலமந்திரத்தைப் பிரயோகித்து முட்டாள்களை ஏமாற்றி உண்மை அறியாமலிருக்கும்படி பொதுநலத்தின் பேரால் அரசியலின் பேரால் சூக்ஷிகள் செய்யப்பட்டு வருகின்றதை நமது மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.
இந்த நாட்டுச் செல்வம் வெளியில் போகின்றதென்பதை அடியோடு நிறுத்தப்பட்டுப் போவதுடன் வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் நமது நாட்டுக்கே வருவதாக வைத்துக்கொண்டாலும், இன்றைய வருணாச்சிரம முறையும், மத சம்பந்தமான கடவுள் சடங்குகளின் முறையுமிப்படியே இருக்கும் வரை மேற்கண்ட, அதாவது பாடுபடாமல் சோம்பேறியாய் வாழ உரிமையுள்ளவனும், பணக்காரனாக உரிமையுள்ளவனும், உத்தியோகம்
பார்க்க உரிமையுள்ளவனும், பொதுஜனப்பிரதிநிதியாக உரிமையுள்ளவனும்
தான் இப்போதையைவிட இன்னுமதிகமாகக் கொள்ளையடிக்கவும், போக போக்கியங்களனுபவிக்கவும், கஷ்டப்படுபவர்களை பட்டினி கிடப்ப வர்களை இன்னும் அதிகமாய் கொடுமை செய்யவும் அருகதையுடையவர் களாவார்களே தவிர, ஒரு நாளும் இந்தியாவிலின்று பொருளாதாரத்தால் கஷ்டப்படும் ஏழைமக்கள், பட்டினிக் கிடப்பவர்க ளென்கின்றவர்கள் ஒரு
நாளும் யாதொரு விதத்திலும் சீர்பட முடியவே முடியாதென்பதை உணருங்கள்.
மேலும் இந்தியப் பொருளாதாரத் துறை என்பதை சீர்படுத்த மற்றொரு துறையில் பாடு படவேண்டியிருக்கின்றது.
அஃதென்னவெனில் மனிதன் தனது வாழ்வுக்கும், தாழ்வுக்கும் கடவுளே காரணமென்று எண்ணிக்கொண்டு கடவுள் மீதே சகல பொறுப்பும் போட்டுவிட்டு மாடுபோல் உழைப்பதை மாத்திரம் தன் கடமையாய்க் கொண்டிருக்கும் கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதாகும்.
நம் நாட்டில் பாடுபட்டு ஏழையாய் பட்டினியாய் இழிவாய் இருந்து கஷ்டப்படுபவன் மாத்திரம் தான் கடவுள் உணர்ச்சி கொண்டு நசமாய்ப் போகின்றானேயொழிய செல்வமுடையவனும், பணமுடையவனும்,
33 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சோம்பேறியாய் வாழ்பவனும் ஒருநாளும் உணர்ச்சிகொண்டு கடவுளுக்குப் பயந்து நடப்பது என்கின்ற கொள்கையில் ஈடுபடுவதே இல்லை.
மேலும் எவ்வளவு அக்கிரமமும் மோசமும் செய்தாலும் அந்தக் குணங்களால் சம்பாதித்த பொருளில் ஒரு பாகத்தை கடவுளுக்குக் கொடுத்து மன்னிப்பு பெற்று விடலாம் என்றும் மேலும் மேலும் செல்வம் பெறுவதற்குக் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்றுமே கருதுகின்றான்.
ஆகவே கடவுளுணர்ச்சியானது பாடுபடுபவன் கஷ்டப்படவும் பித்தலாட்டக்காரன் சோம்பேறி ஆகியவர்கள் செல்வம் பெற்று சுகப்படவும் தான் உதவுவதாயிருப்பதால் அதை ஒழிக்க வேண்டிய விஷயத்திலும் பாடு பட வேண்டியது அவசியமாகும்.
கடைசியாக பொருளாதாரத் திட்டத்திற்கு மற்றொரு துறையிலும் பாடுபட வேண்டியது அவசியமாகும். அதாவது மனிதன் பொருள் அடை வதற்காக செய்யும் தொழில்கள் எல்லாம் பழைய முறைப்படி 1000, 2000, வருஷங்களுக்கு முன்னால் செய்து வந்த முறைப்படி செய்து வர வேண்டும் என்கின்ற மூடநம்பிக்கையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து புதிய மாதிரியில் அதாவது யந்திரம் முதலியவற்றில் பாடுபடும் பொருள் சம்பாதிக்கு முறையில் பாடுபட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இதைப்பற்றி வேறு பல சமயங்களில் விசேஷமாகப் பேசி இருப்பதால் அவற்றைக் கவனித்தால் தெரியவரும்.
ஆகவே இவ்விஷயங்களை எல்லாம் நீங்கள் தக்கப்படி கவனித்து உங்களுக்கு பட்டபடி நடவுங்கள்.
குறிப்பு சென்னிமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 05.07.1931
குடி அரசு - 1931 (2) 34
காந்தியிண் வினக்கம்
பெருமான் மாறி வபத்தப் வருமாணாணார்
உயர்திரு. காந்தியவர்கள் சென்றமாதம் 12-ந்தேதி பரோடா சமஸ் தானம் மரோலி என்ற கிராமத்தில் மதுபானத்தைப் பற்றிப் பேசிய விபரங் களைப் பற்றிச் சென்ற வாரத்திற்கு முந்திய “குடி அரசு” பத்திரிகையில் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்னும் தலைப்பில் திரு. காந்தி சொன்ன வார்த்தைகளை அப்படியே எடுத்து எழுதி அதின்மீது நமது அபிப்பிரா யத்தையும் எழுதியிருந்தோம்.
இதைப் பார்த்த சில பார்ப்பனர்கள் அதாவது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உடனே திரு. காந்திக்குத் தந்தி கொடுத்தார்கள்.
எப்படி என்றால், “தாங்கள் மதுபானத்தைப் பற்றி இம்மாதம் 12ந் தேதி மரோலியில் பேசிய பேச்சானது இங்கு சிலருக்கு பலவித அருத்தம் கொள்ளுவதற்கு இடமளிப்பதாய் இருப்பதால் அதை சரியானபடி விளக்க வேண்டும்” என்பதாகக் கேட்டார்களாம்.
மற்றும் பலர் திரு. காந்தியைப் பாராட்டி அதாவது இப்போதாவது மதுபானத்தின் தத்துவத்தை அறிந்து அது விஷயமான கொள்கையை மாற்றிக்கொண்டதற்காக அவரைப் பாராட்டியும் எழுதினார்களாம்.
ஆகவே இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் முறையில் திரு. காந்தியவர்கள் இம்மாதம் 25-ந் தேதியில் பம்பாயில் இருந்து எழுதுவதாக சுதேசமித்திரன் 26ந்தேதி பத்திரிகை 4வது பக்கம் 6வது கலத்தில் காணப்
படுவதாவது,
“இந்தியா முழுமைக்கும் ஒருமணி நேரத்திற்கு என்னை சர்வாதிகாரியாய் நியமித்தால் முதல் முதலில் நான் சாராயக் கடை களை எல்லாம் மூடிவிடுவேன்..
கள்ளு கொடுக்கும் மரங்களை எல்லாம் வெட்டி விடுவேன். தொழிற்சாலை வைத்து நடத்துபவர்களை தொழிலாளர்களை இரக்கத்
துடன் நடத்தும்படி வற்புறுத்துவேன்.
35 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தொழிலாளர்களுக்குச் சிற்றுண்டி சாலைகளையும், பொழுது போக்கு சங்கங்களையும் ஏற்படுத்தச் சொல்லுவேன்.
குற்றமில்லாத பானங்களும் பொழுதுபோக்குக்கு ஆக்ஷே பகரமில்லாத சில வசதிகளும் அளிக்கும்படி செய்வேன்.
தொழிற்சாலை வைத்திருப்போர் இதற்குப் பணமில்லை யென்று சொன்னால் அந்தத் தொழிற்சாலைகளை மூடிவிடும்படி சொல்லுவேன்.
தொழிற்சாலையை மூடி விடுவதால் வேலை இல்லாமல் கஷ்டப்படும் ஆட்களை உடனே மாதிரிப் பண்ணைகளுக்கு (விவசாயத்திற்கு) அனுப்பி விடுவேன்.
ஐரோப்பிய நண்பர்களும், காயலாக்காரரும் வைத்தியர் யோசனைப் படி சாராயம் சாப்பிட வேண்டி இருந்தால் அவர்களுக்கு அனுமதிச்சீட்டு கொடுத்து குறிப்பிட்ட அளவு கவர்ன்மெண்ட் செலவில் வாங்கிக் கொள்ள அனுமதியளிப்பேன்.
இதனால் கவர்ன்மெண்டுக்கு வரும்படி குறைந்து விட்டால் நான் உடனே இராணுவச் செலவைக் குறைத்து விடுவேன்.
சேனாதிபதியானவர் தனது சாமர்த்தியத்தால் புதிய நிலைமைக்கு ஏற்றவாறு சமாளிக்க வேண்டியது தான்.
தொழிற்சாலைக்காரர்கள் நான் சொன்ன நிபந்தனைகளின்படி லாபகரமாகவே தொழிற்சாலைகளை நடத்தலாம் என்று சொன்னால், பழையபடி தொழிற்சாலைகளை நடத்த அனுமதியளிப்பேன்.”
என்று எழுதி இருக்கின்றார்.
இதுதான் நாம் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்று எழுதியதற்கு விளக்கமாகும்.
இதனாலேயே இவ்வியாசத்திற்குக் “காந்தியின் விளக்கம்” என்று பெயர் கொடுத்தோம்.
இந்த விளக்க சமாதானத்தை நன்றாய் ஊன்றிப்படித்துப் பார்த்தால்
திரு. காந்தியவர்கள் முன் சொன்ன அபிப்பிராயங்களை இந்த விளக்க சமா தானத்தால் பலப்படுத்துக்கின்றாரே யொழிய சிறிதும் அதற்கு மாறுபடும் படியான அபிப்பிராயம் கொண்டிருப்பதாகக் கொஞ்சமும் விளங்க வில்லை. அதாவது,
குடி அரசு - 1981 (2) 36
“எனக்கு ஒரு மணி நேரம் சர்வாதிகாரம் கொடுத்தால் கள்ளு சாராயக் கடைகளை மூடிவிட்டு கள்ளு மரங்களையும் வெட்டி விடுவேன்” என்ப
தாகச் சொல்லிவிட்டு உடனே “தொழிலாளிகளுக்கு கள்ளு சாராயம் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருக்கும்படி வேறு பல காரியங்கள் செய்வேன்” என்பதாக சொல்லி இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது “தொழிலாளிகளுக்கு தொழிற்சாலை
களில் வேலைகளை குறைப்பேன்”, “அவர்களை இரக்கத்துடன் நடத்தும்
படி செய்வேன்”. “சிற்றுண்டி சாலை வைக்கும்படி செய்வேன்”, “பொழுது போக்குச்சங்கம் வைக்கச் செய்வேன்” “குற்றமில்லாத பானங்களை கொடுக்கச் செய்வேன்”, “இந்தப்படி செய்ய முடியாத தொழிற்சாலைகளை மூடிவிடும்படி சொல்வேன்” என்று சொல்வதிலிருந்து இன்றைய நிலைமை
யில் தொழிலாளிகளுக்கு மதுபானம் அவசியமென்பதையும் மதுபானத்தை
நிறுத்துவதானால் அதற்குத் தகுந்த பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதையும் அவர் நன்றாய் வலியுருத்தி இருக்கிறார் என்பதை
பகுத்தறிவும் நாணையமும் உள்ள யாவரும் மறுக்கமுடியாது. அதோடு கூட “ஐரோப்பிய நண்பர்கள் குடிப்பதற்கு அனுமதிச் சீட்டு கொடுத்து (சுயராஜிய) கவர்ன்மெண்ட் செலவில் சீமைச் சாராயம் வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்வேன்” என்றும் சொல்லி இருக்கிறார். ஆகவே, திரு. காந்தியின் மதுவிலக்குப் பிரசாரத்தில் உள்ள முக்கியம் ஐரோப்பியர்கள் (சுயராஜிய!
சர்க்கார் செலவில் வேண்டிய அளவு சீமைச்சாராயம் குடிக்க வேண்டியதும் நமது தொழிலாளிகள் தங்கள் சொந்தச் செலவில் உள்நாட்டு கள்ளு, சாராயம் குடிக்கவேண்டியதும் என்பதாகத்தான் புலப்படுகின்றதே தவிர இன்றைய நிலையில் நமது தொழிலாளிகள் கள், சாராயம் குடிக்கக் கூடாது என்றோ, குடிக்காமல் இருக்க முடியும் என்றோ ஒரு இடத்திலும் அவர் கருதுவதாக
நமக்குத் தெரியவே இல்லை. தொழிலாளர்களுடைய குடியை நிறுத்த வேண்டுமானால் அதற்கு பல பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட திரு. காந்தி அந்தப்பரிகாரம் செய்யப்படுமுன் எதற்காக கள்ளுக் கடை மறியல் செய்யச் செய்து கலவரம் உண்டாக்கி வீண் விளம்பரம் செய்யச் செய்கின்றார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. திரு. காந்தி அவர்கள் இன்றையதினம் இந்திய மில் வைத்து நடத்தும் முதலாளிகளிடம் எல்லாம் ஒப்பந்தம்பேசி இருக்கிறார். அவரது பிரிதிநிதிகள் மில் முதலாளி களிடம் சில நிபந்தனைகள் கண்டு கையெழுத்தும் வாங்கி இருக்கிறார்கள். அந்நிபந்தனைகளில் மில்லின் “நிர்வாகஸ்தர்கள் பெரும்பாலும் இந்தியர். களாய் இருக்க வேண்டும். பங்குக்காரர்கள் பெரும் பகுதி இந்தியர்களாய் இருக்க வேண்டும். கதர் வியாபாரிகளுக்குக் கஷ்டம் உண்டாக்கும்படியான
18 நெம்பருக்கு கீழ்ப்பட்ட நெம்பர் நூல் நூற்கக் கூடாது” என்பதாக வெல்லாம் நிபந்தனைகளைக் கண்டு கையெழுத்து வாங்கி அந்தப்படி கையெழுத்திட்ட மில் நூல்களை மாத்திரம் வாங்கி நெய்ய வேண்டும் என்று உத்திரவு போட்டார்களே யொழிய தொழிலாளிகள் குடிக்காமல்
37 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இருப்பதற்கு திரு. காந்தியவர்கள் சொல்லும் பந்தோபஸ்து செய்யும் படியான நிபந்தனைகளை அதில் போட்டார்களா என்று கேட் கின்றோம்.
இன்றையதினம் தமிழ்நாட்டில் குடி மறியலின் பேரால் எவ்வளவு பேர்கள் அடிபடுகின்றார்கள்? எவ்வளவு கலவரங்கள் ஏற்படுகின்றன? இதனால் பொதுஜனங்களுக்கு எவ்வளவு தொல்லைகள் ஏற்படுகின்றன?
பைத்தியக்காரர்களிடமும் பயங்காளிகளிடமும் சுயநலக்காரர்களிட
மும் பணம் வசூலித்து வேலைத்திண்டாட்டம் உள்ள சிறுவர்களையும் பெற்றோர்களுக்குக் கீழ்படிய இஷ்டமில்லாத சிறுவர்களையும் பாடுபடக் கஷ்டப்படும் சிறுவர்களையும் வேடிக்கை விளையாட்டில் விளம்பரத்தில் பைத்தியமுள்ள சிறுவர்களையும் கூட்டி வைத்து சோறு போட்டு இந்தப்படி கலவரம் செய்வதில் லாபம் என்ன? என்றுதான் கேட்கின்றோம். ஒரு சமயம் இதனால் ஏதாவது ஒரு பயன் உண்டு என்று திரு. காந்தியாகிலும் சொன்னா
ரானால், ஏதோ ஒரு விதத்தில் சிலர். சமாதானமாவது! சொல்லப் புரப்படலாம். “கள்ளுக்கடை மூடுவதால் குடி நிற்காது” என்றும் " "குடிகாரர்களை தடைப் படுத்தி ” “குடிக்காமல் செய்வதால் குடி நிற்காது” என்றும், “குடிப்பவர்கள்
எப்படியும் திருட்டுத்தனமாகவாவது குடித்துத்தான் தருவார்கள்” என்றும், “கள்ளு சாராய வியாபாரிகள் திருட்டுத்தனமாக கள்ளு விற்றுத் தான் தீருவார்கள்” என்றும், “சரீரத்தால் பாடுபட்டு உழைப்பவர்களுக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றவர்களுக்கும் அவர்களது களைப்
பும். சலிப்பும் தீருவதற்கு கள் அவசியமானது” என்றும், “நானே (திரு காந்தியே) அவர்களது களைப்பைப் பார்த்து மனமிறங்கி சாராயக் கடைக்குப்போய் சாராயம் வாங்கி வந்து அன்பாய் கொடுத்து இருக்கின் றேன்” என்றும் சொல்லி கள்ளின் அவசியத்தையும், குடிக்க வேண்டிய தையும் ஒப்புக் கொண்டு வெளிப்படுத்தி இருக்கும் போது மறுபடியும் ஆங்காங்கு கள்ளுமறியல் செய்வது என்றால் கள்ளுமறியல் செய்யப் படுவது அருத்தமற்றதென்றும், புரட்டு என்றும் ஏன் சொல்லக்கூடாது? என்று கேட்கின்றோம்.
தவிர, தொழிற்சாலை முதலாளிகள், தொழிலாளிகள் கள்ளு குடிக்
காமல் இருக்கத்தகுந்த மாதிரியில் “அவர்களது வேலைகளை சுளுவாக்கி
கள்ளுக்குப் பதில் வேறு கெடுதி இல்லாத பானங்களும், செளகரியங்களும் செய்யாவிட்டால் தொழிற்சாலையை மூடிவிட உத்தரவு போடுவதாக
திரு. காந்தி எழுதி இருக்கிறார். ஆனால் இந்தப்படி மூடிவிட்டபிறகு அந்தத் தொழிலாளிகளுக்கு வேலை வேண்டுமே என்றால் “அவர்களை எல்லாம் மாதிரிப்பண்ணை விவசாயத்துக்கு அனுப்பி விடுவேன்” என்று சொல்லு
கின்றார்.
ஆகவே தொழிலாளிகளுக்கு சுயராஜிய அரசாங்கத்தில் ஏற்படும் நன்மைகள் எல்லாம் தொழிற்சாலையில் சிறிது செளகரியமும், அதுசெய்ய
குடி அரசு - 1981 (2) 38
முதலாளி சம்மதிக்காவிட்டால் அந்தத் தொழிலாளிகளை விவசாயம் செய்ய
ஏர் உழுகும்படியும், மண் வெட்டி எடுத்து மண் வெட்டும்படியும் சொல்லுவ தைத்தவிர வேறு வேலை இல்லை என்பதை நன்றாய் விளக்கி இருக்கிறார்.
ஆகவே, சுயராஜியத்தில் தொழிலாளர்களுடைய நிலைமை இன்ன தென்று விளங்கி விட்டது. “காந்தியின் உண்மைத் தோற்ற” மெனும் முந்திய வியாசத்தில் நாம் எழுதி இருந்த அபிப்பிராயத்தை மாற்றவேண்டும் என் கின்ற எண்ணத்தின் மீது நமது பார்ப்பனர்களும், நமது காங்கிரஸ் பக்தர்களும் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாய் எடுத்துக்கொண்ட சிரமமானது “பெருமாள் என்கின்ற பெயரை மாற்றிக் கொள்ளும்படி கொடுத்த பணத்தின் பயனாய் பெத்த பெருமாள் என்கின்ற பெயரை வைத்துக் கொண்டான்” என்பதுபோல் திரு. காந்தியவர்கள் நன்றாய் அழுத்தந் திருத்தமாகக் கள்ளு சாராயம் குடிக்க வேண்டிய அவசியத்தை
யும், தொழிலாளிகளுடைய (சூத்திரர்களுடைய) நிலைமையையும் பலப்படுத்திவிட்டார். இதைக்கண்ட தொழிலாளிகளான சூத்திர) காங்கிரஸ் பக்தர்கள் இனி என்ன சமாதானம் சொல்லுவார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. வயிற்றுப் பசியின் கொடுமையினால் வேறுவழியில் மனிதர்களாக வாழ முடியாததின் நிலை யினால் தங்களை ஆதரிப்ப வர்களுக்கு நன்றி காட்டவேண்டுமே என்கின்ற சொந்த அவசியத்தினால் நம்மை வையலாம்.“குடி அரசை” வையலாம். ஆனால் தாங்கள் செய்யும் இந்த மாதிரியான யோக்கியப் பொறுப்பும் நாணையமுமற்ற காரியத்திற்கு அறிவாளிகளுக்கு என்ன பதில் சொல்லு வார்கள் என்று தான் கேட்கின்றோம்.
எவ்வளவு யோக்கியதை யற்றவனாகவும், இழிவானவனாகவும் இருந்தாலும் அவனால் “நமக்கு ஒரு ஓட்டுக்காவது மார்க்கமுண்டு” என்று ஒருவன் அறிந்தால் அவனைப் பிரமாதப்படுத்தி “இந்திரனே! சந்திரனே!” என்று கூறி ஏமாற்றி கையில் ஏதோ கொடுத்து அனுப்புவது சிலரின் இயற்கையேயாகும். இதையே ஆதாரமாய்க் கொண்டு பிழைக்க வேண்டி
யதும் சிலரின் இயற்கையேயாகும். ஆனால் சுயநலமற்ற பொது மக்களும் கஷ்டப்படுகின்ற பாட்டாளிகளும் இந்த வியாபாரத்தில் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்கே இதை நாம் எழுது கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 05.07.1931
39 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ட வில்லிங்டணின் எச்சரிக்
லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென் னவென்றால்,
“நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கிறேனே யொழிய ராஜியைக் காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை” என்று பேசியிருக்
கிறார். ஆகவே, சமாதானப்பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனே யானால் ராஜியைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத்திற்காக எந்த முறையையும் அனுசரிக்க வேண்டிவரும்” என்று சூசனை காட்டி இருக்
கிறார். அதோடு ராஜி விஷயத்தைப்பற்றியும் பேசும்போது காங்கிரசுக் காரர்கள் “ராஜியை ஒரு சமாதான அறிகுறியென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்கு தயார் ஆவதற்கு ஏற்படுத்திக்கொண்ட செளகரியமே என்பதாக
காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள்” என்றும், “இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் - இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய்ச் சொல்லுகிறேன்” என்றும் சொல்லி இருக்கிறார்.
இவ்வளவும் போறாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு காந்தியவர்கள் தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தனைக் கேட்டு முடியாமல் போயிற்றோ, அதா வது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ அந்தப் போலீசுகாரர்களையே லார்ட் வில்லிங்டன் நன்
நாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம். மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றிப் புகழ்ந்து இருக்கிறார். அதோடு, இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.
இதன் கருத்து “முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்து கொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னமும் இருக்கின்றது என்று சூசனை காட்டுவதேயாகும்.
குடி அரசு - 1931 (2) 40
இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணையம் எப்படி இருக்கின்றதென்பதையும் சர்க்காராரும் காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணையமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த ராஜியின் பயனாய் இந்திய
மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டு விட்டது என்பது புலனாகும்.
கள்ளுக் கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த்துக் கொண்:
டால் நாணையத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 05.07.1931
41 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தொழிலானர்களும் காங்கிரஸ் இயக்கமும்
ஸ் தலைவர்கள் வீழ்க!
டில்லி ஒப்பந்தக்காரர்கள் ஒழிக!”
சுபாஸ் சந்திரபோஸ் மீது நம்பிக்கையில்லை!!! ”
சக்லத்வாலா சேதி.
- யார் எழுதினாலென்ன
கல்கத்தாவில் தொழிலாளர்காங்கிரஸ் ஒன்று திரு. சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் கூடிற்று. அது சமயம் பம்பாய் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் “காங்கிரஸ் தலைவர்கள் ஒழிக, டில்லி ஒப்பந்தக்காரர்கள் (அதாவது காந்தி! ஒழிக” என்று கோஷித்துக்கொண்டிருந்தார்கள்.
லண்டனிலிருந்து பொது உடைமைக்கட்சி திரு. சக்லத்வாலா அவர்
கள் “சென்ற தடவை நான் இந்தியாவுக்கு வந்திருந்த பொழுது காந்தியின் வண்டவாளத்தையும் அவரைப் பின்பற்றுகின்றவர்களின் புரட்டுகளையும், துரோகங்களையும் வெளியிட்டேன். ஆனால் இந்த சமயம் பிரிட்டன் என்னை அங்குவர அனுமதிக்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் உள்ள பொது உடைமைமக்கள் காந்தியின் பித்தலாட்டத்தை தைரியமாய் வெளிப் படுத்தவேண்டும்” என்று எழுதியிருந்தார்.
சுபாஸ் சந்திரபோஸ் தலைமை பிரசங்கத்தில், கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தை வரவேற்று, அதில் காணும் வார்த்தைகளைவிட கருத்து நல்லதென்று சொன்னதுடன் ரஷிய மாஸ்கோ கட்டளைக்கு சரணாகதி அடைய வேண்டியதில்லை என்றும் சொன்னார். இதனால் மறுநாள். குழப்பம் ஏற்பட்டு “சுபாஸ் சந்திர போஸ் மீது நம்பிக்கை இல்லை” என்பதாக பொது உடமைக்கக்ஷி தொழிலாளர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதில் சுபாஸ் சந்திர போசும் இருந்து கொண்டார். ஒரு ஓட்டினால் அது தோல்வி யுற்றதானாலும் கூட்டத்தை ஒத்திபோட்டு விட்டதாகச் சொல்லிவிட்டு சுபாஸ் சந்திர போஸ் வெளியேறிவிட்டார்.
குடி அரசு - 1931 (2) 42
பிறகு எல்லோரும் கூடி “சுபாஸ் சந்திர போஸ் மீதும் அவரது கோஷ்டி
மீதும் நம்பிக்கை இல்லை” என்கின்ற தீர்மானம் நிறைவேற்றி விட்டார்கள்.
பொது உடைமைக் கக்ஷி தொழிலாளர் அறிக்கை
“திரு. சுபாஸ் சந்திர போஸ் விவாதத்தில் கலந்துகொள்ளுவதில்லை என்று வாக்களித்ததினால் அவர் மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்
திற்கு அக்கிராசனம் வகிக்க அனுமதித்தோம். ஆனால் அவரும் ஓட்டு கொடுத்ததால் ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோற்றுப்போய் விட்டது. அத்தீர்மானம் முதலில் தோற்றுவிட்டதற்குக் காரணம் இதுதான் காரண” மென அவ்வறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறார்கள்.
இது ஜீலை 15 6, 7 தேதி திராவிடன், சுதேசமித்திரன், இந்தியா, தமிழ்நாடு ஆகிய பத்திரிகைகளில் காணப்படுகின்றன. எல்லாப் பத்திரிகை களையும் வைத்துப் பார்த்தால் இன்னும் பல விஷயங்கள் விளங்கும்.
தமிழ்நாட்டில் உள்ள சில தொண்டர்கள் “காங்கிரசும், நவஜீவன் பாரத சபையும் பொது உடைமைக்காரர் கொள்கையும், தொழிலாளர் கொள்கையும் ஒன்று என்று சொல்லுவதும்” “காங்கிரஸ் தொண்டர்களும், காங்கிரசை ஆதரிப்பவர்களும், நவஜீவன் பாரத சபை மகாநாடு நடத்துகிறோம்” என்பதும் ஒரு கடையில் லாபத்தின் நிமித்தம் பல சாமான்கள் வைத்து விற்பதையே யொக்கும்.
திரு. சக்லத்வாலா தொழிலாளர் காங்கிரசுக்கு அனுப்பிய சேதியில் நன்றாய் எழுதியிருக்கிறார். “நான் முன் இந்தியாவுக்கு வந்த போது காந்தி
யின் வண்டவாளத்தை நன்றாய் விளக்க முயற்சித்தேன். இவ்வருஷம்
சர்க்கார் என்னை இந்தியாவுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால் நீங்கள். (பொது உடைமைத் தொழிலாளர்கள்) இந்த சமயத்தில் காந்தியின் பித்தலாட். டங்களையும் அவரது கோஷ்டியின் மோசங்களையும் துரோகங்களையும் நன்றாய் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்” எனக் கேட்டுக் கொண்டி
ருக்கின்றார். ஆகவே தொழிலாளிகள் மனிதர்களாய் வாழவேண்டுமானால், இந்தியாவில் பொது உடைமை தத்துவம் ஏற்படவேண்டுமானால், முதலா வதாக காங்கிரசும், காந்தியும், அவரது கோஷ்டியும் ஒழிந்தாக வேண்டு மென்பதே அவர்களது அபிப்பிராயம் என்பது நன்றாய் விளங்குகின்றது.
இதே திரு சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் கராச்சி காங்கிரசில் திரு. காந்தியவர்களால் அழைக்கப்பட்டு காந்தியைப் பார்ப்பதற்கு முன் பேசிய பேச்சில் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் உண்மை விளங்கும். அதாவது-
“காங்கிரஸ் நமக்கு சுதந்திரத்தை சம்பாதித்துக் கொடுக்கு மென்ற நம்பிக்கை எனக்கில்லை. காங்கிரசின் கொள்கை பயனற்ற
தாயும், பலஹீனமானதாயுமிருக்கிறது.
43 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காங்கிரஸ் தலைவர்கள் கூறுவதில் முன்னுக்குப்பின் முறணா னவைகள் பல யிருப்பதோடு அவர்கள் சொல்லொன்றும், செய லொன்றுமாகச் செய்து வருகிறார்கள். அவர்களுடைய வேலைத் திட்டம் புதிய மாறுதலை யுண்டாக்கும் நோக்கங் கொண்டதா யில்லை.ஆனால் விஷயங்களைச் சரி கட்டிக்கொண்டு போகிறவை களாகவே யிருக்கின்றன.
ஜமின்தாரர்களுக்கும், குடிகளுக்கும், பணக்காரனுக்கும், கூலிக்காரனுக்கும், தீண்டப்படாதாரெனக் கூறப்படுகிறவர்களுக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், யாவருக்கும் நல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதென்பதையே அவர்கள் தங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
என்று சொன்னார்.
பிறகு திரு.காந்தியைப் பார்த்த பிறகு திரு.சென்குப்தா கக்ஷியின் தொல்லைக்குப் பயந்து திரு.காந்தியை சரணாகதி அடைய நேர்ந்ததின் பயனாய் “காங்கிரசுக்கு ஜே! காந்திக்கு ஜே!” போட வேண்டிய அவசியத்
தில் வந்து விட்டார். “பாவம்” இல்லையானால் ஒரு மணி நேரத்தில் எப்படி ஞானோதயம் ஏற்பட்டிருக்கும் என்பதை யோசித்தால் இந்த உண்மை விளங்கும்.
இப்பொழுதும் நமது நாட்டில் காங்கிரசு தொண்டர்கள், தலைவர்கள். என்பவர்கள் பொதுஉடைமை தத்துவம் பேசுவது என்பது பொது உடைமை தத்துவத்தை ஒழிப்பதற்காகச் செய்யும் காரியமாகத்தான் முடி யுமே யொழிய மற்றபடி அதனால் எவ்வித பயனும் ஏற்படப் போவ தில்லை என்பது உறுதியானாலும் இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் இலக்ஷியம் செய்யாமல் பொது உடைமை உணர்ச்சி ஏற்படக்கூடிய வேகம் நமது நாட்டில் தோன்றி விட்டதால் இதற்காக யாரும் பயப்பட தேவை யில்லை என்பதையும் ஆனால் தைரியமாய் உண்மையை வெளிப்படுத்
திக் கொண்டு வரவேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
குடி அரசு - கட்டுரை - 12.07.1931
குடி அரசு - 1931 (2) 44
காங்கிரசும் - சுயமரியாதையும்
அன்புள்ள தலைவரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!!!
இன்று, இங்கு சுயமரியாதை வாசகசாலை ஆண்டுவிழாவை உத்தே
சித்து நடைபெறும் உபந்யாசங்களில் நான் “காங்கிரசும் சுயமரியாதையும்” என்பதுபற்றி பேசவேண்டும் என்பதாய் குறிக்கப்பட்டிருக்கின்றது..
இது விஷயமாய் எனது அபிப்பிராயங்கள் அனேகமாக தமிழ்நாடு முழுவதும் அறிந்ததேயாகும். எப்படியெனில் “குடி அரசு” பத்திரிகை வாயிலாகவும் அனேக உபந்யாசங்கள் மூலமாகவும், சுமார் 5, 6 வருஷங்க. ளாக வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றேன். அவற்றில் இருந்து மாறும்படியான நிலைமை இப்போது ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.
சமீபகாலத்தில், அதாவது இந்த ஒருவருஷ காலத்தில் காங்கிரசிற்கு செய்யப்பட்ட விளம்பரத்தின் காரணமாய் பொது ஜனங்களில் பலருக்கு ஒரு உணர்ச்சி தோன்றி அதைப்பற்றி பேசப்படுகின்றது என்பதை தவிர. வேறில்லை. ஒரு நாட்டில் புதிதாக ஏதாவது விஷயம் தோன்றினால் அதைப் பற்றி எங்கும் பேச்சாய் இருப்பது சகஜமேயாகும். அதுபோல்தான் இப்போது காங்கிரசைப் பற்றியும் பேசப்படுகின்றது. ஆதலாலேயே தான் நீங்களும் என்னை அதைப்பற்றியே பேசக்கேட்டு இருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். காங்கிரஸ் ஏற்பட்டு சுமார் 45 வருஷமானபோதிலும், அது எதை உத்தேசித்து, எப்படிப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பது காங்கிரஸ் அனுபோகம் பெற்ற யாவரும் அறிந்ததேயாகும். அது இராஜ விசுவாசப் பல்லவியைப் பாடி உத்தியோகம் பெற ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமேயாகும். உதாரணம் வேண்டுமானால் நமது நாட்டில் இதுவரை:
யிலும், இப்போதும் பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய வக்கீல்கள், பெரிய பட்டதாரிகள் முதலியவர்கள் எல்லாம் காங்கிரசினாலேயே பெரிய மனிதர்களானவர்கள் என்பதை கவனித்துப் பார்த்தால் விளங்கும். நானும்
10 15 வருஷங்களுக்கு முன்பு இரண்டொரு பழைய காங்கிரசுகளுக்கும் சென்றிருக்கிறேன்.
45 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இராஜ விசுவாசம்
அப்பொழுதெல்லாம் காங்கிரசின் முதல் தீர்மானம் இராஜவிசுவாசத் தீர்மானமேயாகும். உதாரணமாக 1914-ம் வருஷம் சென்னையில் கூடிய காங்கிரசுக்கு நான் சென்றிருந்தபொழுது கல்கத்தா திருவாளர் பூபேந்தரநாத் போஸ் தலைமை வகித்திருந்தார். காங்கிரசு நடவடிக்கை நடந்து கொண்டி ருக்கையில் சென்னை கவர்னர் லார்ட் பெண்ட்லண்ட் துரையவர்கள் காங்கிர
சுக்கு விஜயமானார். அவர் விஜயமானதும் மற்ற நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு திருவாளர் சுரேந்திரநாத் பானர்ஜி அவர்கள் உடனே எழுந்து ஒரு இராஜவிசுவாசத் தீர்மானத்தை பிரேரேபித்து, வெகு அழகாக அதாவது “இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கடவுளால் அனுப்பப்பட்ட” தென்
றும், “இந்திய மக்கள் தலைமுறை தலைமுறையாய் இராஜவிசுவாசிகளா யிருக்க வேண்டுமென்றும் பேசி முடித்தார். பலர் ஆமோதித்துப் பேசிய
பின், 5 நிமிஷ நேர கரகோஷத்துடன் அது (இராஜவிசுவாச தீர்மானம்! நிறைவே றிற்று. சென்னை “அமிதவாத தேசியவாதி ” களான அய்யங்கார் கூட்டத்தினர் கள் சமீபகாலம் வரை எட்வார்ட் மன்னரும், ஜார்ஜ் மன்னரும் விஷ்ணு அம்சமென்றே பேசி வேதங்களிலிருந்தும், சாஸ்திரங்களிலிருந்
தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டி வந்தார்கள். (அதாவது அரசர்கள் விஷ்ணு அம்சமென்று வேதம் கூறுவதாக உரைத்துக்கொண்டு வந்தார்கள்.
ஒத்துழையாமை
கடைசியாக சமீப காலந்தொட்டுதான் அதாவது காங்கிரசின் பலனை உத்தியோகங்களை! ஒரே கூட்டத்தார் (பார்ப்பனர் மாத்திரம்) அனுபவிப்
பதில் “பொறாமைப்” பட்ட சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் “காங்கிரசின் பலன் எல்லோருக்கும் கிரமமாய் பங்குகிடைக்க வேண்டு” மென்று கேட்க ஆரம்பித்தது முதல் அதுபோலவே காங்கிரசு பலனும் எல்லோருக்கும் பங்குபோக ஆரம்பித்த பிறகே இராஜவிசுவாசம் போய்ஒத்துழையாமையாகி இராஜவிசுவாசமாய் இருப்பவர்களை " “தேசத் துரோகிகள்” என்றும், “சுயநலக்காரர்கள்” என்றும், “வகுப்பு வாதிகள்”
என்றும் சொல்ல வேண்டியதாகி வழக்கமாய் அனுபவித்து வந்த பலனை அடைய முடியாமல் போனவுடன் காங்கிரஸ்வாதிகள் பார்ப்பனர் தேசிய வாதிகளாக பரிணமிக்கத் துடங்கி விட்டார்கள். ஜஸ்டிஸ் கக்ஷி என்ப தாகவும், முஸ்லீம்லீக் என்பதாகவும் மற்றும் வகுப்புச் சங்கங்கள் என்பதா
கவும் சில ஸ்தாபனங்கள் தோன்றி காங்கிரஸ் பலனில் உத்தியோகங்களில்! பங்கு கேட்காது இருந்திருக்குமானால் இன்றையதினம் இந்தியாவில் இராஜவிசுவாசம் என்பது காங்கிரசுக்கே சொந்தமான ரிஜிஸ்டர் செய்யப் பட்ட (டிரேட் மார்க்காய் அதாவது உரிமை செய்த வியாபாரக்குறியாய் இருந்து வரும். சென்னபட்டணம் ஜார்ஜ் டவுன் ஆனதுபோல் பார்ப்பனர் மக்கள் பெயரும் ஜார்ஜ் அய்யர், ஜார்ஜ் சாஸ்திரிஆயிருக்கும். உதாரணமாக,
குடி அரசு - 1931 (2) 46
ராஜா விஷ்ணு அம்சம் என்பது கூட பார்ப்பனர் சொல்லி இருக்கா விட்டால் இன்று மற்ற யாருக்குமே தெரிந்திருக்காது என்பதேயாகும். அவர்.
கள் அப்படிச் சொன்னதிலிருந்து இன்னும் பலர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிற்க,
காங்கிரஸ் யாருக்கு?
இன்றும் காங்கிரஸ் என்பதற்கும் ஆறரைக்கோடி தீண்டாதார் என்ப வர்களுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. அவர்கள் இராஜவிசுவாசிகள்.
மேலும் 8 கோடி மகமதியர் என்பவர்களுக்கும் காங்கிரசுக்கும் சம்பந்த மில்லை.இவர்களும் இராஜவிசுவாசிகள். வருணாச்சிரமம் பேசும் பார்ப்பனர் களும் தங்களை இராஜவிசுவாசிகள் என்றே சொல்லிக் கொள்ளுகிறார்கள். இந்த இரண்டு மூன்று கூட்டத்திலும் 100-க்கு ஒருவர் இருவர்கூட காங்கிரஸ்: காரர்களாய் இருக்கிறார்கள் என்று தைரியமாய்ச்சொல்ல முடியாது. ஒரு சமயம் மகமதியர்களில் ஒருவர், இருவர் என்கின்ற எண்ணிக்கை இருந்தா
லும் கூட தீண்டப்படாதார் என்பவர்களில் சுத்தமாய் “தேசீயவாதிகள்” இல்லை யென்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவர்களிலும் மிகச் சிலரே இருக்கக்கூடும். அவர்களும் வயிற்றுப்பாட்டிற்கு சர்ச்சுகளில் இராஜ வாழ்த்துப்பாடிவிட்டு வெளியில் வந்து வேடிக்கை கூட்டத்தில் “ஜே! போடு பவர்களாகத்தான் இருக்க முடியுமேயொழிய “இராஜா வேண்டாம்” என்கின்றவர்கள் இல்லை என்றேசொல்லலாம். மற்றபடி சென்னை மாகாணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் தவிர பார்ப்பனரல்லா தார்களில் வயிராரக் கஞ்சி குடிக்கும் 100 க்கு 95 பேருக்கு மேலாகவே காங்கிரசினிடம் கவலை யில்லாதவர்களும் அதை ஒப்புக்கொள்ளாதவர் களுமே இருப்பார்கள். வேண்டுமானால் தேர்தலில் ஓட்டுப்பெற வேண்டி யவர்கள் இரண்டுக்கும் நல்லபிள்ளைகள் போல காட்டிக்கொள்வார்கள்.
மற்றும் இதை ஒரு வியாபாரமாய் கருதுகிறவர்கள் அதுவும் லாபநஷ்டம் பார்த்து இதை பயன்படுத்திக் கொள்ளுபவர்களாகவே இருப்பார்கள். இவற்றைத்தவிர வகுப்பு மாநாடுகள் என்பவைகள் பெரிதும் இராஜ விசுவாசப்பல்லவி பாடிக்கொண்டுதான் வருகிறது என்றாலும் ஒரு சில வாலிபர்கள் பார்ப்பனரல்லாதாரிலும் காங்கிரசை பயன்படுத்திக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நான் மறக்கவில்லை. அதுவும் அப்படிப்பட்ட வாலிபர்களும் ஒரே கொள்கையாய் தொடர்ந்து அதில் இருக்கின்ற வாலிபர்கள் என்பவர்கள் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டியவர் களாகவே இருப்பார்கள். எந்த ஸ்தாபனமானாலும் அது ஒரு சம்பளம் கிடைக்கும் ஸ்தாபனமாகவும் வாழ்வுக்கு செளகரியமான ஸ்தாபனமாகவும் விளம்பரத்துக்கு அனுகூலமானதாகவும் ஏற்பட்டுவிட்டால் பிறகு அதில் கலந்து கொள்ளும் மக்கள் ஏராளமாகி விடுவார்கள் என்பதையும் அந்த ஸ்தாபனத்தைப்பற்றி புராணம் பாடுவார்கள் என்பதையும் நான் உங்களுக்கு எடுத்துச்சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை.
47 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆதலால் அதைப்பற்றியே காங்கிரசின் யோக்கியதையை நிர்ணயித்து விடமாட்டீர்கள்.
காங்கிரஸ் கொள்கை
ஆகவே இவை ஒருபுறமிருக்க காங்கிரசின் கொள்கைகள்தான் என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்.
எந்தக்காரணங்களால் இந்த நாடு“அன்னியநாட்டார்” என்பவர்களின் ஆட்சிக்கு ஆளாக நேரிட்டதோ, அதிலும் பார்ப்பனர்கள் ஆதிக்கம் தலை சிறக்க நேரிட்டதோ அந்தக்காரணங்களை இல்லாமல் செய்ய இந்தக்காங்கிர
சில் ஏதாவது ஒரு கொள்கை இருக்கின்றது என்பதாக யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றேன். இந்தியாவின் பெருமையைப்பற்றி யார் என்ன பேசுவதாயிருந்தாலும் இந்தியாவில் பலமதம், பலஜாதி, பலவித உயர்வு தாழ்வு என்பவைகள் இருந்து வருகின்றதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் தெருவில் நடக்காத, கண்களில் தென்படாத *இழிமக்கள்' இருந்துவருவது இரகசியமல்ல. இந்தக் காரணங்களே இன்று அன்னிய ஆட்சி இந்த நாட்டில் இருந்து வருவதற்கும், பார்ப்பனன் பாடு படாமல் வாழ்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்கும் காரணம் என்பதையும் ஒப்புக் கொள்ளாதவர்கள் இல்லை. இதைச்சரிப்படுத்த யார் என்ன செய்தார்கள்? எந்தக்கொள்கையை காங்கிரஸ் திட்டத்தில் ஏற்படுத்தி இருக் கின்றார்கள்? அல்லது அன்னிய ஆட்சியை ஒழித்த பிறகாவது இதற்கு என்ன மார்க்கம் செய்வதாகக் காங்கிரஸ் தலைவர்கள் சொல்லியிருக் கிறார்கள்? என்பதை கவனித்துப் பாருங்கள்.
சுயராஜ்ய உரிமை
சுயராஜ்யத்தில் “மதங்கள் ஒழிக்கப்படும்” என்றாவது “மத ஆதிக் கங்கள் ஒழிக்கப்படும்” என்றாவது அல்லது அதுதான் இல்லாவிட்டாலும் “ஜாதிகள் ஒழிக்கப்படும்” என்றாவது “ஜாதிப்பாகுபாடுகள் ஓழிக்கப்படும” என்றாவது எங்காவது தீர்மான ரூபமாகவாவது எழுதப்பட்டிருக்கின்றதா? எங்காவது யாருடைய வாயினாலாவது சொல்லப்பட்டிருக்கின்றதா? என்று கேட்கின்றேன். மற்றும் மதங்களையும் ஜாதிப் பாகுபாடுகளையும் காப்பாற் றப்படும் என்று உறுதிகூறப்படுகிறதா? இல்லையா? என்றும் கேட்கின்றேன்.
அதாவது மதத்தில் நடுநிலைமை வகிப்பதாகவும், வருணாச்
சிரமம் காப்பாற்றப்படும் என்பதாகவும், ஜாதியில் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பாருடைய உரிமைக்கும் பங்கம் விளைவிக்கப்பட மாட்டாது என்பதாகவும் எந்த மனிதனுடைய மாறுபட்ட அபிப்பிராயத்தை யும் புண்படுத்தப்பட மாட்டாதென்பதாகவுமல்லவா ஒவ்வொரு ஜாதி மத ஆதிக்கக்காரனுக்கும் உறுதி கூறப்பட்டு வருகின்றது. பிரஜா உரிமைத்
குடி அரசு - 1931 (2) 48
திட்டத்தில் 14வதாக “மத விஷயங்களில் சர்க்காரார் தலையிடமாட்டார்கள்” அதாவது மதக் கொள்கைகளை மாற்ற முயற்சிக்க மாட்டார்கள் என்றும், 17வதாக “மாறு பட்ட அபிப்பிராயங் கொண்டோர் மனது புண்படும்படியாக எந்த காரியமும் செய்ய மாட்டார்கள்” என்றும், அதாவது “பிராமணர்கள்” மனம் புண்படும்படி எதுவும் செய்யப்பட மாட்டாது என்றும் ஸ்பஷ்டமாகக் குறிக்கப்பட்டிருக்கின்றதா?இல்லையா?
ஆதியிலும், இந்தத் கொள்கைகளையேதான் நமது பார்ப்பனர். பிரிட்டிஷ் கவர்ன்மெண்டையும் ஒப்புக்கொள்ளச் செய்து இதையே அரசி யலிலும் அனுசரிக்கும்படி சட்டமாக்கி கட்டாயப்படுத்தியதன் பயனாகத்தான் இதுவரை இந்தக் கவர்ன்மெண்டில் சரியான சீர்திருத்தம் ஏற்படுத்த முடியாமலேயே இருந்து வருகின்றது. உதாரணமாக, சாரதா சட்டம் எடுத்துக் கொள்ளுங்கள். விவசாரிகள் சட்டம் எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்காரால் சட்டமாக்கப்பட்டும் ஒரு சில ஜனங்கள் மனம் புண்படுகின்றதென்ற காரணம் கொண்டு அவர்களது முட்டுக்கட்டை யாலேயே எதுவும் சரிவர அமுலுக்கு வரமுடியாமல் இருந்துகொண்டு வருகின்றது. பார்ப்பனீயத்தொல்லை இல்லாதிருக்குமானால் அவை தானாக அமுலில் இருக்கும். இவ் விஷயத்தில் இன்றும் சட்டத்தை மீறுகின்றவர்கள் ஜனங்களா? சர்க்காராரா என்று கேட்கின்றேன். இந்த நிலைமை புதிய அரசாங்கத்திலும் 14, 17 பிரிவுகளை வைத்துக்கொண்டு எப்படி மாற்றக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். பாமரமக்கள் - பகுத்தறிவற்ற மூடமக்கள் ஏமாறும்படி பேசிவிட்டால் போதுமா? உண்மையை பகுத்தறிவுடன் யோசித்துப் பார்க்க வேண்டாமா? என்று
கேட்கின்றேன்.
மனம் புண்படாது
மத நடு நிலைமை வகிக்கும் சர்க்காரால் - எந்த மனிதனுடைய மனதும் புண்பட சகியாத சர்க்காரால் அது தன்னை எவ்வளவுதான் பூரண சுயேச்சை உடையது என்று சொல்லிக் கொண்டாலும் அதனால் நமக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? வேண்டுமானால் பார்ப்பான் இன்றைய வாழ்வைவிட இன்னம் பலமடங்கு மேலாகவே வாழக்கூடும். ஆனால் தெருவில் நடக்க உரிமையில்லாத “பறையன்” நிலைமையும் சரீரத்தில் பாடுபட்டாகவேண்டிய “சூத்திரன்” நிலைமையும் என்னவாகும்? என்றுதான் கேட்கின்றேன். இப்பொழுதும் பறையன் வீதியில் நடந்தாலே எத்தனை பார்ப்பனர் மனம் புண்படும் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் மனமும் புண்பட சகிக்காத சுயராஜியம் யாருக்குப் பயன் படக்கூடும்?
49 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கோவில் பறிமுதல்
மற்றும் ஒரு சமயம் திரு ஜவஹர்லால் அவர்கள் பார்ப்பனரிடையே பேசும்போது “யாவருடைய எந்த வகுப்பாருடைய உரிமையும் சுயராஜ்யத்
தில் பரிக்கப்பட மாட்டாது” என்று சொன்னார். ஆனால் உடனேயே மற்றொரு கூட்டத்தில் பேசும்போது “தீண்டாதாரை அனுமதிக்காத கோவில் பறிமுதல் செய்யப்படும்” என்று சொன்னார். இவற்றை திரு காந்தியவர்களும் ஆமோதித்து வருகிறார்.
அப்படியானால் மக்களின் மத, சாஸ்திர பழக்க வழக்க சம்பந்தமான உரிமைகளை எல்லாம் என்ன செய்வது? அவற்றை ஒழிக்க ஆரம்பித்தால் யாருடைய மனதும்புண்படாதா? எந்த வகுப்பாருடைய உரிமையாவது இதனால் பாதிக்கப்படாதா? என்று யோசித்துப்பாருங்கள். இன்றைய நமது நாட்டு வாழ்க்கையே மேல்கண்ட மதம், சாஸ்திரம், புராணம், பழக்க வழக் கங்களை ஆதாரமாகக் கொண்டுதானே இருந்து வருகின்றது? எனவே, இதிலிருந்து ஒருவனுடைய உரிமை என்றால் என்ன என்பதைக் கவனித்து
முடிவு செய்ய வேண்டாமா? காங்கிரசில் மனித உரிமை என்பது மதக் கொள்கைப்படி ஏற்பட்ட உரிமையா? சாஸ்திரத்தில் ஏற்பட்ட உரிமையா? அல்லது இதுவரை அனுபவத்தில் பழக்க வழக்கத்தில் ஏற்பட்ட உரிமையா? அல்லது தேச ஆதாரத்திற்கு ஏற்பட்ட உரிமையா? மனித இயற்கைக்கு ஏற்பட்ட உரிமையா? எதைக் குறிக்கின்றது என்று கேட்கின்றேன்.
மத உரிமை என்றால் இந்து மதத்தின்படி மேளமடிக்க வேண்டும். இஸ்லாம் மதத்திற்கு மேளம் கூடாது என்பது போன்ற உரிமைகளில் எதைக் காப்பாற்றுவது?
பார்ப்பனனுக்கும், பறையனுக்கும் உள்ள மதக்கொள்கை உரிமை, சாஸ்திர உரிமை, பழக்க வழக்க உரிமை ஆகியவைகள் என்ன ஆவது? மக்களுக்கு மக்கள், ஜாதிக்கு ஜாதி, ஊருக்கு ஊர் மாறுபட்ட தேசாச்சார உரிமை என்ன ஆவது? மனித இயற்கை உரிமை என்றால் பழக்க வழக்க மத உரிமை என்ன ஆவது? முதலாளி பாதுகாப்பும், ஜமீன்தாரன் பாது காப்பும், வருணாச்சிரம பாதுகாப்பும் என்ன ஆவது?
ஆகவே, இவர்கள் இருவரும் இதைக்கேட்கும் மக்களை முழு மூடர்
கள் என்று கருதிக் கொண்டே இந்தப்படி அதாவது யாருடைய உரிமையும் காப்பாற்றப்படுமென்று ஒருபுறமும், பறிமுதல் செய்யப்படும் என்று மற்றொரு புறமும் பேசுகின்றார்கள் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில்,
ஜன நாயகமா? ஏக நாயகமா?'
முதலாவது திரு. காந்தியும், திரு. ஜவஹர்லாலும் கேட்கும் சுயராஜி
யம் ஜனநாயக சுயராஜியமா? ஏகநாயக சுயராஜியமா என்பதை முதலில்
குடி அரசு - 1981 (2) 50
விளக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜனநாயகமானால் தீண்டாதவர்களை “கோவிலுக்குள் விடமாட்டேன், குளத்தில் விடமாட்டேன்” என்று சொல்லு கின்றவர்கள் யார்? பிறகு அந்தக் கோவிலையும், குளத்தையும் பரிமுதல் செய்கின்றவர்கள் யார்? என்று யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் விடமாட் டேன் என்று சொன்னால் அந்த ஜனப்பிரதிநிதி சர்க்கார், யார் மனதையும் புண் படுத்தாத சர்க்கார் கோவிலை எப்படி பரிமுதல் செய்ய முடியும்? கோவிலுக்குள் பறையனை விட இஷ்டப்படாத ஜனங்கள் இஷ்டப்படும் பிரதிநிதியை தெரிந்தெடுப்பார்களா? என்பதை யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய் நடக்கும் இராஜியபாரம் ஜனநாயக ராஜியபாரமாகுமா? மற்றும் இந்திய ஜனங்கள் தங்களுக்குள் இருக்கும் ஜாதி வித்தியாசத்தையும், தீண்டாமையையும் ஒழிப்பதற்கு ஜனநாயக சுயராஜியம் வேண்டுமென்றால் இது பித்தலாட்டமா? அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பதை யார் வேண்டாமென் கின்றார்கள்? இஸ்லாமானவர் ஆக்ஷபிக்கின்றார்களா? கிறிஸ்துவர்கள் ஆக்ஷேபிக்கின்றனர்களா? அல்லது கிருஸ்துவ அரசாங்கம் ஆக்ஷபிக் கின்றதா? ஆரம்பித்திலேயே புரட்டு பேசும் சுயராஜியம் அதிகாரம் வந்தால் கொடுமை செய்யுமா? நன்மை செய்யுமா? இன்று தீண்டாமை அனுசரிக்கும் ஜனங்களுக்கு சர்வ அதிகாரம் தந்தால் தீண்டாமையை பலப்படுத்துவார் களா? தளர்த்துவார்களா? எந்த அரசாங்கத்தில் தீண்டாமை இருந்தாலும் தீண்டாமையை அனுசரிக்கின்றவர்கள் இன்று சுயராஜியம் கேட்கும் இந்துக்களே யொழிய வேறல்ல.
ஆகவே இந்தமாதிரி வார்த்தைகள் மக்களை ஏய்க்கும் தந்திர வார்த்தை அல்லவா என்பதை யோசித்துப் பாருங்கள்.
சகோதரர்களே! காங்கிரசில் நான் இருக்கும்போது “காங்கிரசில் ஜாதி வித்தியாசம் பாராட்டக் கூடாது” என்று ஒரு தீர்மானம் காங்கிரஸ்
கமிட்டியில் நானும் திரு. எஸ். இராமநாதனும் சேர்ந்து எங்கள் சொந்த செல்வாக்கில் நிறைவேற்றி வைத்தோம். ஆனால் உடனே திருவாளர்கள் சி.இராஜகோபாலாச்சாரி, டாக்டர் இராஜன், டி.வி.எஸ். சாஸ்திரி, என்.எஸ். வரதாச்சாரி, கே.சந்தானம் முதலாகிய காங்கிரஸ் தலைவர்கள் என்கின்ற பார்ப்பனர்கள் இராஜினாமாச் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் பணத்தில் காங்கிரஸ் பக்தரால் நடத்திய குருகுலத்தில்தானே “எல்லோரையும் சமமாய் வைத்து சாப்பாடு போட வேண்டும்என்று நாங்கள் சொன்னதற்கு மேற்கண்ட தலைவர் களேதான் “அது அவரவர்கள் இஷ்டமேயொழிய யாரையும் கட்டாயப் படுத்தி யாருடைய மனதையும் புண்படுத்தி யாருடைய உரிமையையும் பறிக்கக் கூடாது” என்று பதில் சொன்னதோடு அதற்காக அந்த குருகுலமே கலைக் கப்பட்டு இப்போது அதை ஒரு பார்ப்பனர் தனது சொந்த சொத்தாக
51 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அனுபவிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கின்றேன்.
இந்த விஷயத்தை திரு காந்தியும் ஒப்புக்கொண்டு அது அவரவர் தனி அபிப்பிராயம் என்று செட்டிமார் நாட்டு சுற்றுப்பிரயாணத்தில் சமாதானம் சொல்ல வில்லையா? என்று கேட்கின்றேன்.
இந்த மகாத்மாக்களும், தியாகிகளும், தலைவர்களும் இதற்குள்ளாக இப்போது புடம் போட்ட தங்கமாய் விட்டார்களா? அல்லது சலவை செய்த மக்களாய் விட்டார்களா? என்று கேட்கின்றேன். அல்லது இந்த விஷயங்கள் பொய்யா? என்று கேட்கின்றேன். அல்லது இன்றைய சுயராஜ்ய திட்டத்தில் பார்ப்பனருக்குள்ள இந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதா? அல்லது இந்த யாருடைய மனமும் புண்படக்கூடாது என்கின்ற “தர்ம நீதி” எடுத்தெறியப் பட்டு விட்டதா? என்று கேட்கின்றேன்.
காங்கிரஸ் அங்கத்தினரில் ஜாதி வித்தியாசம் பாராட்டப்பட்ட தில்லை என்று ஒரு நண்பர் சொன்னார். என்னுடைய சொந்த அனு போகத்தை இங்கு எடுத்துச்சொல்லுவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அதாவது நானும் உயர்திரு எஸ்.சீனிவாசய்யங்காரும் காங்கிரஸ் பிரசார விஷயமாய் திண்டுக்கல்லுக்குப் போன போது ஒரு பார்ப்பனர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்தக்காலத்தில் நான் வேறாக வைத்தே சாப்பாடு போடப்பட்டேன். ஆனாலும் பகலில் சாப்பிட்ட எச்சிலை அப்படியே இருக்க அதன் பக்கத்தில் தான் இரவும் இலை போடப்பட்டு சாப்பிட்டேன்.
இது இப்படியிருக்க, மற்றொரு சமயம் நானும் தஞ்சை திரு. வெங்கிடுசாமி பிள்ளையும் காங்கிரஸ் பிரசாரமாக பெரிய குளத்திற்குப் போனபோதும் ஒரு காங்கிரஸ் பார்ப்பனர் வீட்டில் இறக்கப்பட்டோம். அப்போது காலை பலகாரம் சாப்பிட்ட எச்சில் இலைக்குப் பக்கத்தில் பகல் சாப்பாடும், பகல் சாப்பாடு சாப்பிட்ட எச்சிலைக்குப் பக்கத்திலும், காலை பலகாரம் சாப்பிட்ட எச்சிலைக்குப் பக்கத்திலும் இராத்திரி சாப்பாட்டுக்கும் இலை போடப்பட்டு எறும்புகளும், பூச்சிகளும், ஈக்களும் ஊரிக் கொண்டி ருக்கவே சாப்பிட்டு வந்தோம். இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல்
தான் காங்கிரசில் உழைத்தேனானாலும் காங்கிரசில் ஜாதிவித்தியாசம் பாராட்டப்படுவதில்லை என்பதை நான் ஒப்ப முடியாது என்பதற்காக இதை: சொல்லிக்கொள்ளுகின்றேன்.
ஜாதி போய் விட்டதா?
இவ்வளவு தூரம் போவானேன்? இன்றும் காங்கிரசிலுள்ள காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்யும் மற்றும் “காங்கிரசும் மகாத்மாவும் தான் இந்தியாவுக்கு விடுதலை, சமத்துவம் வாங்கிக் கொடுப்பவர்?” என்று சொல்
லும் பார்ப்பனரில் 100க்கு 5 பேராவது ஜாதி வித்தியாசம் விட்டவர்களா? விடத் தயாராயிருக்கின்றவர்களா? என்று கேட்கின்றேன். பார்ப்பனரல்லா
குடி அரசு - 1981 (2) 52
தார்களில் 100க்கு 10 பேராவது ஜாதி வித்தியாசம் விட்டவர்களா? என்று கேட்கின்றேன். மூடிவைப்பதில் பயனென்ன? “வாயிக்கு உருசியான சாப்பாடு எங்கு கிடைத்தாலும் சாப்பிடலாம்” என்கின்ற ஒன்றிரண்டு “துறவி” களைப் பார்த்து முடிவு கட்டலாமா? என்று கேட்கின்றேன்.
சுயராஜ்யம் வந்த காலத்திலும் இந்த மனிதர்கள் தானே இந்த நாட்டு மக்களாயிருக்க முடியும்? இவர்களது பிரதிநிதிகள் தானே ஜனநாயக ஆட்சி செலுத்துவார்கள். ஆகவே இந்த நிலையில் என்ன மாறுதலை
ஏற்படுத்திவிட முடியும்?
பொருளாதாரம்
மற்றும் பொருளாதாரத் துறையில் செல்வவான்களுக்கும், உத்தியோ கஸ்தர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் தவிர மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய சுயராஜ்யத்தில் திட்டமிருக்கின்றது என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். பணக்காரன் பணத்தைப் பிடுங்கி மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. தேசத்துப் பணமெல்லாம் சர்க்காருடையதானதானால் ஆகட்டும் .இல்லையானால் பணம் ஒரே பக்கம் போய்ச் சேருவதற்கு மார்க்கமில்லாமலிருக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இன்றையதினம் பணக்காரன் பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பங்கு போட்டுக்கொடுத்து விட்டால் இந்த ஏழை நாளைக்கு கயா சிரார்த்தமும், மதுரைவீரன் பூஜையும், காவடி அபிஷேகமும், பண்டிகையும் செய்து வீட்டில் உட்கார்ந்து கொண்டேபணத்தைத் துலைத்து விடுவான் என்பதும், பிறகு பழையபடி புரோகிதனும், தந்திரக்காரனும், ஏமாற்றுக்காரனும்தான் மறுபடியும் பணக்காரன் ஆய்விடுவான் என்பதும் எனக்குத்தெரியும். ஆதலால் தான் நாட்டுச் செல்வம் ஒரு பக்கமே போய் குவியாமல் இருக்கும் திட்டமே போட வேண்டும் என்றும் யாருக்கும் எந்தத்தொழிலும் செய்யவும் எல்லோரும் எதையும் படிக்கவும் செளகரி யமும், அனுமதியும் இருக்க வேண்டும் என்றும் தான் சொல்லுகின்றேன்.
வருணாச்சிரம சுயராஜ்யத்தில் - யார் மனதையும் புண் படுத்தாத சுயராஜியத்தில் இது முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
மதமும் கோவிலும்
மற்றும் இன்றைய இந்தியா நாட்டின் அடிமைத்தனத்துக்கும், தரித்திரத்திற்கும் ஆதரவாயிருப்பது மதமும் கோவில்களும் என்பது
நீங்கள் எல்லோருமே ஒப்புக்கொண்ட விஷயமாகும். ஆகவே காங்கிரசினால் இந்த மதமும் கோவில்களும் ஒழியுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இன்று நமது நாட்டில் காங்கிரசில் இருப்பவர்கள் பெரிதும் மதப்புரோகிதக் கூட்டத்தாரும் அவர்களது மக்களும், கோவில்
53 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பூசாரி மக்களும் அல்லவா? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள் இவற்றை ஆதரிக்கின்றவர்கள் அல்லவா? என்று
கேட்கின்றேன். மதமும் கோவிலும் போய் விடுவது உண்மையானால் இந்த ஆட்கள் “காங்கிரசுக்கு ஜே!” “காந்திக்கு ஜே!!” என்று கத்துவார்களா? என்பதையும் யோசித்துப்பாருங்கள். ஏதோ பார்ப்பனருக்கு கையாளாய் இருப்பதின் மூலம் ஏதோ ஒருவிதத்தில் வாழ்க்கை நடைபெறுகின்றது என்பது தவிர காங்கிரசின் யோக்கியதை அறியாத காங்கிரஸ் பக்தர்கள் யார். இருக் கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே சகோதரர்களே! காங்கிரசு பைத்தியம் என்கின்ற பார்ப்பன ஆட்சியில் இருந்து விலகி மக்களுக்கு உண்மை சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டாலொழிய இந்த நாட்டுக்கோ, மக்களுக்கோ எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை என்பது
தான் எனது உறுதி.
குறிப்பு : 04.07.1937 ஆம் நாள் நாகர்கோயிலில் நடைபெற்ற நாகர் கோயிலைச்சேர்ந்த கோட்டாறு சுயமரியாதை வாசக சாலையின் இரண்டாம் ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 12.07.4931
குடி அரசு - 1931 (2) 54
சுமறாசியமும் சுதேச சமஸ்தானமும்
இந்தியாவுக்கு வரப்போகும் சுயராஜியம் என்பதும் சீர்திருத்த மென்பதும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான அடிமை விலங்காகவே வந்து முடியப் போகின்றது.
இந்தியாவுக்கு வந்த சைமன் கமிட்டியானது இந்தியாவின் உண்மை நிலைமையையும், தேவையையும் அறியத் தொடங்கியதால், நமது பார்ப் பனர்கள் அதற்கு இடம் கொடுத்தால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமென
கருதி, ஏதாவது ஒரு தந்திரம் செய்து கமிஷன் விசாரணையை வெற்றிய டையாமல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தின்மீது அநேக சூட்சிகள் செய்தார்கள். அவைஷன்றும் தமிழ்நாட்டு மக்களிடம் பலிக்காமல்போகவே, கடைசியாகச் சத்தியாக்கிரகம் என்பதாக ஆரம்பிக்கச்செய்து ஒருபக்கம் கலகம் செய்தார்கள். இவற்றிற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் என்பதான பார்ப்பன ஸ்தாபனம் ஒன்று அவர்களுக்கு கை ஆயுதமாய் இருப்பதால்
எதுவும் செய்ய முடிகின்றது என்பதுடன் மற்ற மக்களுக்கும் அதனால் பல தொல்லைகள் ஏற்பட முடிந்தன. இதனாலேயே சென்ற வருஷம் சத்தியாக் கிரகம் என்னும் பேரால் பார்ப்பனதிதொல்லை நிகழ்ந்தது எனினும், மற் றொரு பக்கம் சமதர்ம உண்மைக் கொள்கைகள் முன்னிலும் அதிகமாகத் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது. இந்த நிலைமையில் அரசாங்கத்தார். வருணாச்சிரம தருமத்திற்கு ஆதரவுகொடுத்தால் சமதர்மக்காரர்கள் தொல் லையும், மற்ற நேச தேச அரசர்கள் இகழ்ச்சியும் ஏற்படுவதாய்க் காணப் படுகிறது. சமதர்மத்திற்கு ஆதரவு கொடுப்பதானாலோ, தங்கள் போக போக் கியங்களை விட்டுவிட வேண்டியதாக ஏற்படும் போல் காணப்படுகின்றது. ஆகவே, இந்தக் கஷ்டத்தில் இருந்து தப்புவதற்குப் பிரிட்டிஷார் பார்ப்பனர். களுடன் கலந்தே ஒரு தந்திரம் செய்யவேண்டியதாய்ப் போய்விட்டது.
அதாவது, தங்கள் (பிரிட்டிஷார்! நிலைமையை பந்தோபஸ்தாய் இருக்கும்படி பார்த்து வருணாச்சிரமக்காரர்கள் நிலைமையும் கெடாமல், ஏதாவது வழிகள் கண்டு பிடித்து, அதை இந்தியர்கள் ஒப்புக்கொள்ளும்படி செய்து, சரிப்படுத்திக் கொண்டு வரவேண்டியது என்கின்ற ஒப்பந்தத்தின்
மீது மற்ற விஷயங்களில் எந்தவிதமானாலும் சரி என்கின்ற முறையில் ஒரு புதிய வழி கண்டு பிடித்தார்கள்.
55 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அதாவது இந்தநிலைமையில் இந்தியப் பார்ப்பனரும், பிரிட்டிஷா
ரும் சேர்ந்து, இருவர் நிலைமையும் காப்பாற்றக்கூடிய சுதேச சமஸ்தான மன்னர்களையும், சீர்திருத்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதென்றும், காங்கிரஸ், அதாவது திரு. காந்தி இதற்குச் சம்மதித்தால் எந்தவித அரசியல் கொள்கையை வேண்டுமானாலும் ஒப்புக்கொள்வதென்றும் முடிவுகட்டி, இராஜியின் மூலம் முதலில் திரு காந்தியை இதற்குச் சம்மதிக்கும்படி சரிபடுத்திக் கொண்டார்கள். திரு காந்தியும் வருணாச்சிரமம் காப்பாற்றப்பட வேண்டி ஐக்கிய அரசியல் திட்டத்தையும், அதில் சுதேச மன்னர்கள் கலப்பையும் ஒப்புக்கொண்ட பின்பு தங்களுக்கு இனி எவ்வித ஆபத்தும் இல்லை என்கின்ற நிலைமையில் வெகுபந்தோபஸ்தாக இருக்கின்றார்கள்.
காங்கிரசுக்கும் யார் என்ன சமதர்மம் பேசினாலும், சுதேச அரசர்கள் வருணாச்சிரமத்தை காப்பாற்றுவதோடு சமதர்மத்திற்கும் விரோதமாயிருப் பார்களாதலால் எப்படியானாலும் அவ்விருவருக்கும் பயமில்லை என்
கின்ற நிலைமையிலிருக்கின்றது.
இந்தத் தைரியத்தினாலேயே திரு காந்தி வருணாச்சிரமம் பேசுவதும், திரு.ஜவஹர்லால் சமதர்மம் பேசுவதுமாயிருப்பதுடன் திரு. ஜவஹர்லால் பேச்சை கண்டிப்பவர்களுக்குக் காந்தி பேச்சைக் காட்டி மயக்குவதும், திரு.காந்தி பேச்சைக் கண்டிப்பவர்களுக்கு திரு.ஜவஹர்லால் பேச்சைக் காட்டி மயக்குவதுமான வேலையில் ஆட்களைப் பிடித்துப் பிரசாரம் செய்து, காங்கிரசை ஆதரிக்கச் செய்து வரவும் பாடுபடுகின்றார்கள்.
ஆகவே இதிலிருந்து இனிவரப்போகும் சுயராஜியம் வருணாச்சிரம இராஜியமாகவும், சமதர்மத்திற்கு முட்டுக் கட்டையான இராஜிய மாகவும்தான் ஏற்படப் போகின்றது என்பது உறுதி!உறுதி!உறுதி!!!
நமது சுதேச மன்னர்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் இக் காலத்தில் - இயற்கையாகவே அவர்கள். அழிந்து, ஒழிந்து போக சகல செளகரியமும் ஏற்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தில், காங்கிரசானது அவர்களுக்குச் சிரஞ்சீவிப் பட்டத்தைக் கொடுக்க முனைந்து கொண்டிருக்கின்றது.
ஆகவே பார்ப்பனிய சூட்சி வெற்றி பெறப்போகின்றது.ஏனெனில் நமது சுதேச சமஸ்தான அரசர்கள் என்பவர்கள் பார்ப்பனீயத்தைவிட மோசமானவர்கள். பார்ப்பனீயமோ பிச்சை கேட்பதின் மூலம் பாடுபடுபவர் களின் செல்வத்தைக் கொள்ளை கொள்வதாகும். சமஸ்தானமோ பாடுபடு பவர்களின் செல்வத்தை அடித்து, உதைத்துப் பிடிங்கிக்கொள்வதேயாகும்.
பார்ப்பனர்களுக்கோ நமது நாட்டைப்பற்றிய எவ்விதப்பொறுப்பும் இல்லை. அதுபோலவே சமஸ்தானங்களுக்கும் நாட்டைப்பற்றிய எவ்வித கவலையும் இல்லை.
குடி அரசு - 1981 (2) 56
இந்திய சமஸ்தானங்களில் நடக்கும் அக்கிரமங்கள் போலவும், அவர்கள் செய்யும் அதிக்கிரமங்கள் போலவும் இந்த உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாது.
உதாரணமாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் சொல்லுவோம். இவைகள் தக்க ஆதாரத்தின் மீதே சொல்லப்படுவதாகும்.
அதாவது இந்திய சமஸ்தான அரசர்கள் அரசியல் நடவடிக்கை யையும், ஐரோப்பிய சமஸ்தான அரசர்கள் அரசியல் நடவடிக்கையையும் பற்றிய சில குறிப்புகளை குறிப்பிடுவோம்.
இந்தியாவிலுள்ள அரசர்கள் தங்களுடைய சொந்த செலவுக்கென்று சமஸ்தான மக்கள் வரிப்பணத்திலிருந்து பெறும் தொகையானது அவர்களது சமஸ்தான மொத்தவரும்படியிலிருந்து ', 8. . 7, I, ], வீதம் பங்கு
பாகத்துக்குக் குறைவில்லாமல் பெற்றுக் கொள்ளுகிறார்கள். உதாரணமாக நம்மரசர்களென்று சொல்லப்படும் திருவிதாங்கூர் மகாராஜா தேச வரும்படியில் 17ல் ஒருபாகமும் (அதாவது மாதம் 1,00,000 ரூபாயும்) மைசூர். மகாராஜா 14ல் ஒரு பாகமும் (அதாவது மாதம் 2,00,000 ரூபாயும்) ஐதராபாத் நவாபு பதின்மூன்றில் ஒரு பாகமும் (அதாவது மாதம் 4,00,000 ரூபாயும்! தங்கள் சொந்த செலவுக்காகப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
பரோடா அரசரும் தனது வரும்படியில் 13ல் ஒரு பாகமும், காஷ்மீர், பிகானீர், இந்தூர் முதலிய அரசர்கள் 5ல் ஒரு பாகமும், மற்றும் சில ஆழ்வார். முதலிய அரசர்கள் 3ல் ஒரு பாகமும், சிலர் வரும்படியில் சரிபகுதியுமாக தங்கள் சொந்த செலவுக்கெனப் பெற்று, அனுபவித்துக்கொண்டு வரு கின்றார்கள். ஆனால் ஐரோப்பிய அரசர்களோ, அவர்கள் பெறும் சொந்தச் செலவுப் பணத்தைக் கணக்குப் பார்த்தால், இந்திய அரசர்களைவிட எத்தனையோ மடங்கு குறைந்த அளவாகத்தான் பெற்று வருகிறார்கள்.
உதாரணமாகச் சமீபத்தில் பட்டத்திலிருந்து துரத்தப்பட்ட ஸ்பெயின் தேசத்து அரசர் தனது தேச வரும்படியிலிருந்து 50060 ஒரு பாகமும், ஜப்பான் அரசர் 400ல் ஒரு பாகமும், டென்மார்க் அரசர் 3006 ஒரு பாகமும், இட்டாலி அரசர் 500ல் ஒரு பாகமும், நெதர்லேண்ட்ஸ் அரசர் 600ல் ஒரு பாகமும், நார்வே அரசர் 700ல் ஒரு பாகமும், பெல்ஜிய அரசர் 1000ல் ஒரு
பாகமும், நமது சக்ரவர்த்தியும் இங்கிலாந்து அரசருமான ஐந்தாவது ஜார்ஜ் அரசர் 1600ல் ஒரு பாகமும்தான் பெற்று வருகிறார்கள். அப்படி யிருந்தும், ஜனங்கள் அரசர்களைப் பட்டத்தைவிட்டு இறக்க வேண்டுமென்று அந்நாடுகள் முயற்சி செய்து கொண்டு வருகின்றன. ஆனால் 2ல் ஒரு பாகமும் 3ல் ஒரு பாகமும், 8ல் ஒரு பாகமும் கொள்ளையடிக்கும் நமது நாட்டு அரசர்களை இன்னமும் பட்டத்தில் வைத்திருப்பதை சகித்துக் கொண்டிருப்பதோடல்லாமல், இந்திய அரசாங்கத்திலும் அவர்களுக்கு
57 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆதிக்கம் கொடுக்க வேண்டுமென்று நமது “பூரண சுயேச்சைக் கொள்கை கொண்ட காங்கிர'””சானது சத்தியாக்கிரகம் செய்து வருவதைப் பார்த்தால் நமது நாட்டு அரசியல் ஞானமும், யோக்கியதையும் நன்றாய் விளங்கும். நிற்க,10 லட்ச ரூபாய் வரும்படியுள்ள ஒரு அரசர் வருஷம் ஒன்றுக்கு 4,20,010 ரூபாய் வீதம் தனது சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்வதோடு, இவ்வள
வும் போறாமல் 15,00,000 ரூபாய் கடனையும் வைத்துக்கொண்டு முழுச் செலவையும் விபசாரத்திற்கே பயன்படுத்திக் கொண்டிருப்பதோடு, பல தாசிகளையும் இராணிகளாகக் கலியாணம் செய்து கொண்டிருப்பதோ டில்லாமல், ஒரு தாசி இராணியின் சகோதரனும், சொந்தக்காரர்களும் அரசாங்கத்தில் செல்வாக்குள்ள ஆதிக்கக்காரர்களாயிருந்து கொண்டு, அரசாங்கத்தை ஆட்டி வருகின்றார்கள்.
மற்றொரு அரசர் 219,000 ரூபாய் வரும்படியுள்ள சமஸ்தானத்தில் 136,000 ரூபாய் வீட்டுச் செலவுக்கென கொடுக்கப்பட்டு வருகின்றார். இது தவிர அவருடைய குதிரை லாயத்திற்கென வருஷம் 14,000 ரூபாயும் செலவு செய்யப்பட்டு வருகின்றது.ஆனால் அந்த இராஜியத்தின் சுகாதாரத்திற்காக 5000 ரூபாய்தான் வருஷத்தில் செலவு செய்யப்படுகின்றது.
மற்றும், இந்தூர் சமஸ்தானத்தைப் பற்றி 14.6.27ல் வெளியான “சர்வென்ட்ஸ் ஆப் இந்தியா” என்னும் பத்திரிகையில் காணப்படும் குறிப்பாவது:-
“இந்தூர் சமஸ்தான வாசிகளுக்கு 1926ம் ஆண்டானது மிக முக்கிய மான ஒரு வருடமாகும். ஏனெனில், அந்த ஆண்டில்தான் சிம்மாதனத்தை வகிப்பவர்களில் ஓர் பெரிய மாறுதலேற்பட்டது. துக்கோஜிராவ் அவ்வாண்
டின் ஆரம்பத்திலேயே தனது சிம்மாதனத்தைத் துறந்துவிட்டார். அவருக்
குப் பதிலாக அவருடைய குமாரர் எஸ்வந்ராவ் என்பவர் மகாராஜாவாக முடி சூட்டப்பட்டார். அவ்வித மாறுதலால் எத்தகைய வித்தியாசங்கள் ஏற்பட்ட போதிலும்கூட, அரண்மனைச் செலவில் மட்டும் சிறிதுகூட வித்தியாசமேற் படவில்லை. 1924-25 வருஷத்தில் அரண்மனை செலவென 21,28,257 ரூபாயாக இருந்ததானது, அடுத்த வருஷத்திலேயே 23,22,924 ரூபாயாக உயர்ந்து விட்டது. அவ்வருஷத்திய வருமானம் 128,10,887 ரூபாய் தான் ஆகின்றது. ஆகையினால், அரண்மனை செலவுமட்டும் கணக்கிட்டால் 100க்கு 18 விழுக்காடாக ஏற்படுகின்றது. அரண்மனை செலவென்று குறிப் பிட்டிருக்கும் இதர கணக்கையும் நாம் இத்துகையுடன் சேர்த்தோமானால், அப்பொழுது அரண்மனையின் மொத்த செலவு இன்னுமதிகமாகவேயிருப்பதைக் காணலாம். ஆனால், அந்த செல வெல்லாம் பல விஷயங்களுடனும் சேர்க்கப்பட்டு விட்டதால், இதுமட்டும் தனியாக காட்டப்பட்டிருப்பதே இத்துகையாகின்றது. அத்தகைய அரண்மனை செலவு என்னும் தலைப்பின் கீழ் “லால்பாக் அரண்மனை
குடி அரசு - 1981 (2) 58
வேலை” என்பதற்குச் செலவான துகையையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியமாகும். இதனுடைய செலவுமட்டும் சுமார் ஆறு.
லட்சமாகின்றது, ஆனால் ஆச்சரிய கரமாகவே “மகாராஜாவின் வாசஸ்தான
ரிப்பேர் செல”வென்பதாக குறிப் பிட்டு, இச்செலவையும் மராமத்து இலாகாவின் செலவோடு சேர்க்கப் பட்டிருக்கின்றது. உண்மையில் அரண்மனை ரிப்பேர் செலவு அவ் வருஷம் ஏறக்குறைய 6000 ரூ. தானாகின்றது. இம்மாதிரியாகவே தான் வேட்டையாடுவதினிமித்த மேற்பட்ட செலவு சுமார் 12,000 ரூபாயும் “பாரஸ்ட்ஸ்” என்னும் தலைப்பின்
கீழ் காட்டப்பட்டிருக்கின்றது. இவ்வித மாக செலவிடப்படும் பணங்களை எல்லாம் நாம் மொத்தமாகச் சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தோமேயானால், அப்பொழுது அவை சமஸ்தான மொத்த வரும்படியில் நூற்றுக்கு 18-பங்கு அல்லவென்றும். ஆனால், நூற்றுக்கு 22 பங்கு வீதமெனவும் ஏற்படும். இம்மாதிரியாக “அரண்மனை செலவு ” என்னும் தலைப்பின்கீழ் அபரிமித மான பணம் செலவிடப்படுவதால்தான், அச்சமஸ்தானத்திலுள்ள, மக்கள் விருத்தியடைவதற்குரிய கல்வி நிலையங்களும், சுகாதார நிலைமையும் கவனிக்கப்படாமலிருக்கின்றன.
மற்றொன்று
“பிரிட்டிஷாரின் பாதுகாப்பில், இந்திய அரசர்கள் அதாவது “Indian
Princes Under British Protection ” என்னும் புஸ்தகம், பக்கம் 147ல் திரு.சட்கர்' என்பவர் கீழே காணுவது போலுரைத்திருக்கின்றார்.
“தனது அரசாங்கத்தின் வரும்படியில் 100க்கு பத்துவீதம் தான் தன்னு டைய சொந்த செலவுக்கென எடுத்துக்கொள்ளுவதாகக் கூப்பாடு போட்டு வரும் பிகானீர் மகாராஜா அவர்கள், தான் வாசம் செய்யும் அரண் மனையைப் பழுதுபார்ப்பதாலேற்படும் செலவையும் “சிவில் ஓர்க்ஸ்” என்னும் தலைப்பின்கீழ், அரசாங்க செலவோடு சேர்த்து விடுகின்றார்.1926- 27வது வருடத்திய பிகானீர் அரசாங்க அறிக்கையில் “பழுது பார்க்க வேண்டிய” தென்னும் தலைப்பின்கீழ் 47 இனங்கள் குறிக்கப்பட்டிருக் கின்றன. அவைகளுக்கென்று 40,000 பவுனும் செலவிடப்பட்டிருக்கின்றது. ஆனால் அவ்வறிக்கையில் காணப்படும் 47 இனங்களிலும், 4 இனங்கள். மட்டுமே தான் அரசாங்கப்பொதுக் கட்டடங்களாகும். அவைகளைப் பழுதுபார்ப்பதற்காக ஏற்பட்ட செலவோ மொத்த துகையில் 100க்கு 5 வீதம்தான் எனவு மேற்படு கின்றது”.
மற்றுமோர் சான்று
1925-26வது வருடத்திய ஜாம்நகர் சமஸ்தானத்தின் அறிக்கையை கவனித்தோமே யானாலும் இம்மாதிரியேதான் “சிவில் லிஸ்டு” என்னும் தலைப்பின் கீழ் செலவான மொத்தத் துகை 40000 பவுன் அல்லது 4,80,000
59 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ரூபாய் என, அதாவது கட்டடங்களைப் பழுதுபார்த்ததனாலேற்பட்ட செலவென்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. “அரண்மனை செலவு” என்னும் தலைப்பின்கீழ் அரசரின் சொந்த செலவுக்கென மட்டும் 1,25,000 பவுன் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டின் மொத்தத்தொகையும் 165,000 பவுன்களாகின்றது. அதாவது சமஸ்தானத்தின் மொத்தவரும்படியில்
100 க்கு 20 வீதமாகின்றது. இத்துடனின்றி “அரண்மனைச் செலவு” என்னும் தலைப்பின் கீழ் காணப்படுபவைகளைத் தவிர்த்து மீண்டும் தனியாக மோட்டார் செலவெனவும், அரண்மனைச் செலவு மென்பதாகவும் குறிப்பிட்ட வகைகளில் செலவானது 2,00,000 பவுனாகும். இதையும் அரசருடைய சொந்த செலவில் சேர்ப்போமேயானால் அப்பொழுது அவருடைய செலவுமட்டும் மொத்தம் பிரதி வருடமும் 3,75,000 பவுன் என அதாவது சமஸ்தான வருமானத்தில் சரிபாகம் தனது சொந்த செலவுக்காக அரசர் செலவிடுகின்றாரெனவும் ஏற்படுகின்றது. 1926-27 வருடத்திய அறிக்கையை நாம் பார்ப்போமேயானால், அப்பொழுது நாமின்னும் இதைவிடப் பன்மடங்கு பிரமிப்படைய வேண்டி வரும். அரசருடைய சொந்த செலவைக் குறிப்பிடப்பட்டிருக்கும் 6,00,000 பவுனிலும் 2,00,000 பவுன் எதிர்பாராத செலவு என்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கின்றது”.
மற்றுமோர் அரசாங்கத்தில், (பெயரைப்பற்றி நாம் அதிகக்கவலைப் பட வேண்டியதில்லை. சில வருடங்களுக்கு முன்பதாகத் தான் முதன் முதலாக வரவும் - செலவும் கணக்கிடப்பட்டது.
அந்த சமஸ்தானத்தின் அதிபர் தனது சொந்த செலவைக் குறைப்ப தானது தன்னுடைய கெளரதையைக் குறைத்துக்கொண்டதாக வேற்படும் என நினைத்துக் கொண்டிருந்ததால் அவருடைய சமஸ்தானத்தின் வரவு - செலவின் விபரமே ஒருவருக்கும் புலப்படாமலிருந்தது. பிறகு, அவரைப் போலுள்ள சகோதர அரசர்களால் தூண்டப்பட்டு, இப்பொழுதுதான் முதலா வதாக அவருடைய வரவு-செலவு கணக்கெடுக்கப்பட்டது. கடைசியில் மொத்தம் பார்த்தபொழுது, அந்த அரசாங்கத்தின் மொத்த வருமானம் ஒரு கோடி ரூபாயிக்கும் சற்று அதிகமெனவே ஏற்பட்டது. இந்த அறிக்கை யானது தான் யாவரும் பின்பற்றக்கூடிய தெனவும் கூறப்பட்டு வந்தது. அவ்வறிக்கையை சுருக்கிக் கூற வேண்டுமானால், கீழே காணுவது போலதான் உரைக்க வேண்டும்.
அதாவது:-
அரசாங்கத்தின் மொத்த வருமானம் 125 லட்சம் இந்த 125 இலட்
சத்தில் 50 இலட்சம் “சம்பளம்” என்னும் தலைப்பின் கீழ் செலவிடப் படுவதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டது. இத்தலைப்பின்கீழ் அரசாங்கத் திலுள்ள பட்டாளத்திற்குச் செலவாகும் 20 லட்சமும் சேர்ந்ததேயாகும்.
குடி அரசு - 1981 (2) 60
அவ்வப்போதேற்படும் செலவினிமித்தமென 15 லட்சம் தனியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த 15 லட்சத்திலும் 10 இலட்ச ரூபாய் தனியாக அரண் மனை (அரசருடைய! செலவுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டது. படிச்செல வென்பதாகவும், வேலையிலிருந்து நீங்கியவர்களுக்கு உபகாரச் சம்பள மென்பதாகவும் 5 லட்ச ரூபாய் ஒதுக்கி வைக்கப்பட்டது. இவைகள் போக
மீதி யிருக்கக்கூடிய 55 லட்ச ரூபாயும் அரசருடைய சொந்த செலவுக்கென ஒதுக்கப்பட்டு விட்டது. ஆகையினால்,அவ்வப்போதேற்படும் செலவு, படிச்செலவு, உபகாரச்சம்பள செலவு என்பதாக அரசாங்கத்திற்கு மொத்தம்
40 லட்சமே செலவிடப்படுகின்றது. இந்த 40 லட்சத்திலும் கல்விக்காக செலவிடப்படும் 2 லட்சமும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவ்வப் போதேற்படும் செலவுக்கு என ஒதுக்கி வைக்கப்பட்ட 15 லட்சத்தில் அரண் மனை (அரசருடைய) செலவுக்கு என ஒதுக்கி வைத்திருக்கும் 10 லட்சமும், வருமானத்தில் செலவு போக மீதியேற்படும் 55 லட்சமும், ஆக 65 லட்ச ரூபாய் அரசரின் செலவுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பொருளா தாரத் துறையைக் கவனித்துக்கொண்டு வரும் மாணாக்கர்களுக்கு 125 லட்ச ரூபாய் வரும்படியுள்ள ஒரு சமஸ்தானத்தில், 65 லட்ச ரூபாய் சமஸ்தான அதிபதியின் சொந்த செலவுக்கெனவும், 40 லட்சம் அரசாங்க சிவில் நிர்வாகத்திற் கெனவும், 20 லட்சம் ரூபாய் அரசாங்க மில்டேரி நிர்வாகத்தின் செலவுக் கெனவும் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதானது ஒரு சமயம் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இந்த சமஸ்தானத்தில் கல்விக்கென இரண்டு லட்ச ரூ.மட்டும் செலவிடப்படுவதானது இதைவிட இன்னும் பன் மடங்கு ஆச்சரியத்தை விளைவிக்கும்”.
இவர்களது தர்பார் செலவு விஷயங்கள் இவ்விதமிருப்பதொரு புறமிருக்க, இவர்கள் அரசநீதி, அரசாட்சி செய்யும் அரசியல் நீதி எப்படி யிருக்கின்றதென பார்த்தோமானால், ஒன்னே முக்கால் கோடி ரூபாய் வரும் படியுள்ள ஒரு இராஜபுதன அரசாங்கத்தில் 3,25,000 ரூபாய் மோட்டாருக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கல்விக்கோ 2,75,000 ரூபாய் மாத்திரமே செலவு செய்யப்பட்டு வருகின்றது.
தவிர தலையொன்றுக்கு 15 ரூ. வீதம் வரிவசூல் செய்யும் பிகானீர். அரசாங்கம் கல்விக்குத் தலையொன்றுக்கு 5 அணா வீதமே செலவு செய்கின்றது. தலையொன்றுக்கு 20 ரூபாய் வீதம் வரிவசூல் செய்யும் நவநகர் அரசாங்கம் தலையொன்றுக்கு 6 அணா வீதமே கல்விக்காக செலவு செய்கின்றது. தலையொன்றுக்கு 10 ரூபாய் வீதம் வரிவசூல் செய்யும் ஆள்.
வார் அரசாங்கம் தலையொன்றுக்கு 3 அணா வீதமே கல்விக்காக செலவு செய்கின்றது. சுகாதாரத்திற்கோ தலையொன்றுக்கு 1 அணா வீதமே செலவு செய்கின்றது.
61 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆனால், இந்தியாவில் தலையொன்றுக்கு 6-4-0 ரூபாய் வீதம் வரிவசூல் செய்யும் இந்திய அரசாங்கம் கல்விக்காகத் தலையொன்றுக்கு 9 அணா வீதம் செலவு செய்கின்றது.
இவை “பிரின்சுலி இந்தியா” என்னும் பத்திரிகையில் காணப்படும். விபரங்களாகும். இந்திய அரசர்களின் நிர்வாகம் இந்தப்படி பல
இருந்தாலும் இவர்களுடைய ஒழுக்கங்களைப் பற்றி யோசிப்போமானால் ஒரு அரசர் தன்னுடைய அதிகாரியொருவருக்கு எழுதிய கடிதத்தைப் பார்த்தாலே விளங்கும். அதாவது:-
“ பிரியமுள்ள ... க்கு உம்முடைய லீவ் (ரஜா) விண்ணப்பம் கிடைத்தது. ரஜா அனுமதிக்கப்பட்டது. உன்னுடைய கடிதத்தில் காணப்படும் உறுப்படிகளுடன் நீர் சீக்கிரம் திறும்பி வரவேண்டும். அவைகள் மிக்க அழகாயிருக்கவேண்டும். அவைகளென்மனதிற்குத் திருப்தியை அளிக்குமானால் அப்பொழுதுதான் உம்மை இராஜபக்தியுள்ள
ஓர் சிப்பந்தியாகக் கருதுவேன்.
உம்முடைய அன்பான
ராஜா சாகிப்”
என்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
இந்த ரஜா விண்ணப்பம் எழுதிய சிப்பந்தி அந்த சமஸ்தானத்தில் ஒரு பெரிய அதிகாரியேயாகும், இந்தப்படிக்கு எத்தனையோ அரசர் களுடைய நடவடிக்கைகள் நமக்கு வெளிப்படையாகவும், வெளிப்படை யான இரகசியமாகவும் தெரிந்தே வருகின்றது என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட அரசர்களைக் கொண்டுவந்து நம்முடைய இந்திய அரசாங்கத்தில் ஒன்றாகச்சேர்த்து விட்டால் இந்தியாவில் எந்தவித. மான சீர்திருத்தத்தை எதிர்பார்க்க முடியும்? என்பதை காங்கிரஸ் பக்தர்கள் தான் யோசிக்கவேண்டும்.
இவர்களோடு நமது நாட்டுப் பார்ப்பனர்களும், ஜமீன்தாரர்களும், மற்றும் நமது நாட்டு பெரும் மிராசுதாரர்களும், மைனர்களும், வக்கீல்களும், முதலாளிகளும் கலந்து கொண்டால் நாட்டில் எப்படி சமதர்மமும், பொருளாதார சமத்துவமும் ஏற்படுத்த முடியுமென்பதை சுயராஜ்யக் காரர்கள் தான் விளக்கவேண்டும்.
ஒரு சமயம் “சுயராஜ்யம் வந்து விட்டால் சுதேச அரசர்களையும் கூட சேர்த்து, திருத்தப்பாடு செய்யலாமென்று சிலர் சொல்லக்கூடும். இது
குடி அரசு - 1981 (2) 62
வார்த்தைக்கு அலங்காரமானதும், மூடர்களுடைய செவிக்கு இன்பமானதாக வுமிருக்கலாம். எல்லா மனிதர்களுக்குமே ஓட்டுரிமை இருப்பதாயிருந் தாலும், இந்த அரசர்கள் தேர்தலில் தங்களுடைய ஆட்களை நிறுத்தி, 10 லட்சக்கணக்கான பணங்களை செலவு செய்ய முன்வந்து, அவர்களுக் குதவியாக நமது நாட்டு ஜமீன்தாரர்களையும், மிராசுதாரர்களையும், பார்ப்பனர்களையும், முதலாளிகளையும் சேர்த்துக் கொண்டு, இப்போதைப் போலவே கூலி தேச பக்தர்களைக்கொண்டு, பிரசாரம் செய்யச்செய்தால் எப்படிப்பட்ட பிரதிநிதிகள் வரக்கூடுமென்பதைப் பற்றியும், எப்படிப்பட்ட நிர்வாகம் நடைபெறுமென்பதைப்பற்றியும் நாம் நமது வாசகர்களுக் கெடுத்துக் கூற வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
உலகம் இயற்கையாகப் போகும் போக்கானது இப்பொழுது எவ் வளவோ முன்னேற்றத்தையும் விடுதலையுணர்ச்சியையும், கண்விழிப் பையும் மக்களுக்குத் தானாக அளித்துக்கொண்டு வருமிந்த சமயத்திலிம்
மாதிரி புதிய ஆபத்தொன்று முளைத்து, மக்களை இன்னும் அடிமைப் படுத்தத்தக்க நிலைமையேற்பட்டிருப்பதானது, அதுவும் “பூரண விடுதலை”
யின் பேராலும் “சுயராஜ்யத்தின்” பேராலும் யேற்பட்டிருப்பது மிகவும் துக்கப்படத்தக்க விஷயமேயாகும் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 12.07.1931
63 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அதிசயச்சாமியாரும், நம் பாமர மக்களும்
நமக்கேண் ௬ுமாராசியம்?
சகோதரர்களே!
இராமநாதபுரத்திற்கடுத்த சுமார் 15-மைலுக்கப்பால் திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கின்றார். அவர் மகமதிய சாமியாராம்.
அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆயிற்றாம். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம்.3- மாத காலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக் குடிக்குச் சென்று அங்குள்ள ஓர் வரண்ட குளத்தில்போய் அவர் கைவைத்த மாத்திரத்தில் தண்ணீர்பெருகிவிட்டதாம். அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்துத் தண்ணீரை எடுத்துவரச்சொல்லி கொடுக்கின்ராறாம். அதைச்சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் ரோகங்களும் நிவர்த்தி யாகின்றதாம். ஆஹா!என்னே ஆச்சரியம்! இவ் விருபதாம் நூற்றாண்டில் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லு
வதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது ஒரு மனிதன் மேற் சொன்ன கடவுளும் செய்யொணாத காரியங்கள் செய்வதென்றால், பகுத் தறிவுள்ள எவரும் நம்ப ஹேது வுண்டா?
நிற்க இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்டமாத்திரத்தில் கெர்ப்பம் உற்பத்தி யாகின்றதாம்!.
முன்தேவர்களுடைய கலிதமான இந்திரியத்தைச் சாப்பிட்டபின்னா வது குழந்தைகளோ மிருகங்களோ உற்பத்தியானதாகப் புராணங்கள் சொல்லுகின்றன. இப்பொழுதோ குளத்துத் தண்ணீரைக்குடித்த மாத்திரத்தில் குழந்தை உற்பத்தியாகின்றதென்றால், என்போன்ற சகோதர ஆண்பிள்ளை களுக்கு இனி அந்த சம்மந்தப்பட்ட வேலையில்லை என்றே நினைக்
கின்றேன்.
குடி அரசு - 1931 (2) 64
இருந்தாலும் குழந்தை பெரும்வழி இலேசானதாக இருந்தாலும் கர்ப்பத்தடை அவசியம் என்பதை சகோதரர்கள் அறிவார்கள் என்று நம்புகின்றேன்.
இந்த சாமியாரிடம் வரங்கேட்க நூறு மைல் சுற்றுப்புறமிருந்து நம் இந்து சகோதர சகோதரிகள் பதினாயிரக்கணக்காக வந்து குவிந்து ஒரு செம்பு தண்ணீர் கொண்டு போகின்றார்கள். செலவோ:- ரயில் சார்ஜ், கார்.
சார்ஜ், வண்டி சார்ஜ், சாப்பாட்டுச்செலவு, சாமியார் த௲௲ணை, சிப்பந்திகள் பிடுங்கள் வகைகளில் லக்ஷக்கணக்காக விரயமாகின்றது. கூடிய சீக்கிரம் அவ்வூரில் ஜனநெருக்கமிகுதியால் காலரா போன்ற வியாதிகள் கண்டிப்
பாய் வரும் போலிருக்கின்றபடியால் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அதை உடனே நிவர்த்தி செய்ய வேண்டுமாயும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளு கின்றேன்.
நம் இந்தியர்கள் இந்த அற்ப விஷயத்தில் பகுத்தறிவைச்செலுத்த அசக்தர்களாயிருக்கையில் சுயராஜியபாரத்தைத் தாங்குவதற்கு அருகதை யுள்ளவர்களா என்பதைச்சற்று யோசித்துப்பார்த்தால் பள்ளிப்பிள்ளைகளும் நகைப்பார்களென்றால், கனம் மிஸ் மேயோ போன்றவர்கள் நமக்கு புத்தி புகட்டுவதில் நாம் அவர்களை குற்றம் சொல்லுவது பொறாமையும் ரோஷ மின்மையுமல்லவா! ஆதலால் சகோதரர்களே! சகோதரிகளே!இம்மூன்று மாதங்களும் உங்களுடைய உடல், பொருள், ஆவி ஆகியவைகளை வீண்:
விரயம் செய்தது போதும் போதும்!! இனியாவது நம் யேழைப் பாமர மக்க ளுக்கும், நம் உடன் சகோதரர்களான தாழ்த்தப்படுத்தி வைத்திருப்பவர் களுக்கும் உதவிபுரியும் வண்ணமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளு கின்றேன்.
குடி அரசு - கட்டுரை - 12.07.1931
65 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
விருதுநகர் விருந்து
கனவான்களே!
திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் தேவஸ் தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக்கேட்பது ஒரு நல்ல கேள்வியே யாகும்.
நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 45 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும் இருந்தேன். தேவஸ்தான செல்வங்களை பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலைதான். அங்கு போக வேண்டியதும் அவசியந் தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ் தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால் அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.
ஆகவே நான் இராஜிநாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும் நான் வேறு வேலையில் இந்த கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான். இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்ட் திரு. இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கிறார். அது கைகூடுதவற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற்சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக்காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.
ஆதலால் கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும் கோவில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்
திற்கு உதவவும் வேலை செய்யவேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தமில்லை என்று நாம் சும்மா இருந்து விட்டால் அவர்களுக்கு நன்மையேயொழிய நட்டம் ஒன்றும் இல்லை.
குடி அரசு - 1981 (2) 66
ஆகையால் இந்தவித அபிப்பிராயமுள்ள திரு. இராமசாமியைத்
தெரிந்தெடுத்தவர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத்திருப் பார்கள். ஏனென்றால் திரு.வி.வி.இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு.இராமசாமி தனது கடமையைச் செய்வார் என்பதில் சந்தேக மில்லை.
இதுபோலவே கல்வி இலாகாவுக்கும் திரு. கந்தநாடார் பி.ஏஃபி.எல்., அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு இலாபமேயாகும். கல்வி இலாகா பார்ப்பனீயமயமாய் இருக்கின்றது. கல்வி வருணாச்சிரமக் கல்வி யாய் இருக்கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக்
கின்றது. இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இன்று இந்தியாவின் இழி நிலைமைக்கு மதமும், கல்வியுமேயாகும்.. பழையகால கல்வியை சங்கத்தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனீயத்
திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து விட்டார்கள். புஸ்தகங் களை அறங்கேற்றுவது என்பதே கட்டுப்பாடுயாகும் என்பது தான் அருத்
தம். இப்போதைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அறங் கேற்றுவது டெக்ஸ்ட்புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்
கின்றது.
அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள் இருக்க வேண்டும்.நமது யூனிவர்:
சிட்டிப் படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்துவதாகும். இதிலிருந்து
யாரும் அறிவு பெற்றுவிட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆக
லாம். ஆதலால் அத்துறைகளில் சுயமரியாதைக்காரர்கள் புகுந்து முதலா வது உபாத்தியாயர்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்படி நியமிக்க வேண்டும். உபாத்தியாயர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதாரமான புஸ்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுபட வேண்:
டும். இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேருவது நன்மையே யாகும்.
ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்று கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.
குறிப்பு: 06.0716517ஆம் நாள் விருதுநகர் காஸ்மாபாவிட்டன் கிளப்பில் திரு. கந்தநாடார் அவர்கள் கல்விச்சங்க உறுப்பினராகவும் திரு. விவிஇராமசாமி அவர்கள். தேவஸ்தானக்கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பேற்றதற்கு நடைபெற்ற பாராட்டுவிழா விருந்தில்தலைமையேற்று ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 19.07.1931
67 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இண்ணுமைண்ண சந்தேகம்?
“Spmpann! உண் வாக்குப் பலித்தது!”
ஒரு பார்ப்பனன் தன் பெண் ஜாதியின் நடத்தையில் சந்தேகங் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை “விபசாரி, விபசாரி” என்று கூறிக் கொண்டே வந்தான்.
ஆனால் அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக்கொண்டே வந்தாள்.
இப்படி இருக்கையில், அந்த பார்ப்பான் தன் மனைவி அன்னிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப் பிடியாய் பிடித்துவிட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப்போக்கும், சமாதானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் “பிராமணா! உன் வாக்குப் பலித்து விட்டது! அதற்கு நான் என்ன செய்யட்டும்?” என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே
குற்றத்தைச் சுமத்தினாள்.
அதாவது, புருஷனைப் பார்த்து “நீ அடிக்கடி என்னை விபசாரி, விபசாரிஎன்று உன் வாயால் சொல்லிக்கொண்டே வந்ததாலல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது, அது எப்படியும் பலித்துவிடும்) என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி நீர் பரிசுத்தமான பிராமணரான
தால் உமது வாக்குப் பலித்துவிட்டது. உமது வாக்குப் பலிப்பதற்காகவே இந்தப்படி கடவுள் செயலால் ஏற்பட்டு விட்டது. அதற்கு நான் என்ன செய் வேன்? நீர் ஏன் என்னை அப்படிச் சொன்னீர்?” என்பதாகச் சொன்னாளாம்!
அதேபோல் காங்கிரஸ் காரியக்கமிட்டியும், திரு காந்தியும் சேர்ந்து 12-7-31 உசெய்த பிரஜா உரிமை தீர்மானமானது நாம் காங்கிரசையும் அதன் தலைவர்கள் என்பவர்களையும் பற்றி, அவர்கள் எப்படிப்பட்ட அபிப் பிராயக்காரர்கள் என்று குற்றம் சொல்லி வந்தோமோ, அதே அபிப்பிராயம் இனி வேறு யாரும் வேறு எவ்வித வியாக்கியானமும், தத்துவார்த்தமும்
குடி அரசு - 1981 (2) 68
செய்ய முடியாதபடி நன்றாய் வெளிப்படையாய் அழுத்தந்திருத்தமாய் சொல்லப்பட்டு விட்டது.
அது என்ன வென்றால்,
அரசியல் சட்டத்தில் ஜனங்களுடைய ஜீவாதாரமான உரிமை என்பது பற்றிய, விதிப்பிரிவுகளில் “இந்தியாவில் உள்ள சகல சமூகத்தாருக்
கும், “அவர்களது கலைகள், சமூக நாகரீகங்கள், பாஷைகள், எழுத்துக்கள், தொழில்கள், பழக்கவழக்கங்கள், மதம், மத தர்மங்கள் ஆகியவை காப்பாற் றப்படும்” என்பதாக ஒரு உத்திரவாதம் அதாவது ஜாமீன் கொடுக்கப்படும் என்கின்ற நிபந்தனையும் சேர்க்கப்படும் என்பதாகத் தீர்மானித்திருக் கின்றார்கள்.மற்றும், “ஒவ்வொரு சமூக உரிமைகளைப்பற்றிய சட்டங்களும் காக்கப்படும்” என்பதாகவும் “ஒவ்வொரு மாகாணங்களிலுள்ள சிறு பான்மை வகுப்புகளின் உரிமைகளின் அரசியல் உரிமை, மற்றும் இதர உரிமைகள் ஆகியவை காப்பாற்றப்படும் நிபந்தனையானது அரசாங்கத்
தின் ஆதிக்கத்திற்குள் இருக்கும்” என்பதாகவும் தீர்மானித்து இருக்கின்
றார்கள். இது அசோசியேட் பிரஸ் சேதியாகும்.
மற்றும் 13-ந்தேதி வெளியான எல்லாத் தினசரிகளிலும் காணப்
படுவதுமாகும்..
அன்றியும், இத்தீர்மானங்களை ஆங்கிலத்தில் உள்ளபடியே மற் றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டு மிருக்கின்றன. ஆகவே, வாசகர்களுக்கு இவ் விஷயத்தில் இன்னுமென்ன சந்தேகம் இருக்கக் கூடும்? என்பது
நமக்கு விளங்கவில்லை...
“கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது” என்று
வாய்த் தப்பட்டை அடித்ததெல்லாம் சுத்த “ஹம்பக்” என்பதாகவோ, அல்லது அது அதனுடைய உண்மை அர்த்தத்தை அறிந்துகொள்ள முடியாத மக்களின் கூற்று என்பதாகவோ இப்போது யாவருக்கும் நன்றாய் விளங்கி இருக்குமென்றே கருதுகின்றோம். ஏனெனில், ஒவ்வொரு வகுப்பாருடைய, அதாவது இந்தியாவில் எத்தனை சமயத்தார், வகுப்பார். உண்டோ அத்தனை வகுப்பாருடைய உரிமைகளையும் பொருத்த கலை
ஆதாரங்கள், அதாவது வேதசாஸ்திர புராணங்கள், அவர்களது பாஷைகள், பாஷை எழுத்துக்கள். வகுப்பு கல்விகள், வகுப்பு தொழில்கள், அந்தந்த வகுப்பு பழக்க வழக்கத்தில் இருந்துவரும் நடவடிக்கைகள், ஒவ்வொரு வகுப்பாருடைய மதங்கள், அதாவது சமயம், உட்சமயம், புறச்சமயம், அந்தந்த மததர்மங்கள், அதாவது கோவில், கோவில்சொத்து, மடம், மடங் களின் சொத்துக்கள், மததர்மமான மற்ற காரியங்கள் செய்வதற்கு விடப் பட்டிருக்கும் தர்ம சொத்துக்கள் ஆகியவைகள் எல்லாம் காக்கப்படும் என்பதாக காங்கிரஸ் உறுதிகூறி இருப்பதோடு உத்திரவாதமுமேற்றுக் கொண்டிருக்கின்றது.
69 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆகவே, இது சமதர்மக் கொள்கையாகுமா? அல்லது சுயமரியாதைக் கொள்கையாகுமா? அல்லது நவஜவான் பாரதசபைக் கொள்கையாகுமா?' அல்லது போல்ஸ்விக் கொள்கையாகுமா? என்பதை நம்நாட்டு வாலிபர். களை யோசித்துப் பார்க்கும்படி விரும்புகின்றோம். இந்த மாதிரியான சுய ராஜியம் ஏற்படுவதற்காக வெள்ளைக்காரன் இருக்கும் அரசியல் அதிகாரத் தைப் பறித்து இந்த மாதிரிஉத்திரவாதம் ஏற்றுக்கொண்ட காங்கிரசுக் காரரி டமும் “மகாத்மா” இடமும் திரு ஜவஹர்லால் இடமும் ஒப்படைக்கலாமா? என்று நிதானமாய் யோசித்துப் பாருங்கள் என்று மறுபடியும் நினைப்பூட்டு கின்றோம்.மற்றும் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் பக்தர்களே!இந்த உத்திரவாத மானது காரியக்கமிட்டிக்கு உயர்திருவாளர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், பண்டித மாளவியா ஆகிய “பிராம்மணோத் தமர்””களால் கொண்டுவரப் பட்டு ஏகமனதாய்த் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதையும் உணருங்கள் என்றே சொல்லு கின்றோம். உலகில் வயிறு வளர்ப்பதேதான் பிரதானமான காரியம் என்று கருதி இருப்போமேயானால், மனித உருவாய் பிறந்ததற்கு வருத்தப்பட வேண்டியது தான் என்பதே நமது அபிப்பிராயம். மற்றபடி சுயமரியாதை யே பிரதானமானது என்று கருதுகின்றவர்களுக்குத் தான் மனிதனாய்ப் பிறந்ததைப்பற்றி சில சமயங்களிலாவது மகிழ்ச்சி யடைய இடமுண்டு என்று சொல்லலாம். நிற்க,
பம்பாய் காரியக்கமிட்டியின் உத்தரவாத தீர்மானத்தைக்கொண்டு காங்கிரசின் உண்மையான தன்மையை ஒரு வரியில் கூறவேண்டுமானால் “காங்கிரஸ் என்பது சுயமரியாதைக் கொள்கைக்கு நேர்மாறான முரண்பட்ட ஸ்தாபனம்” என்று சொல்லுவதை விட வேறு என்ன சொல்ல முடியும்? என்று அறிவும், நாணையமும், மானமும் உள்ள மக்களை யோசித்துப்பார்க்கும்படி வேண்டுகின்றோம். நிற்க,
காரியக்கமிட்டியின் இந்த உத்திரவாத தீர்மானத்தைப்பற்றி தேசியப் பத்திரிகை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் “தமிழ்நாடு” பத்திரிகை
13 ௨ தனது உபதலையங்கத்தில் எழுதி இருப்பதையும் இந்தச்சமயத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த உப தலையங்கத்தின் ஒவ்வொரு எழுத்தும் வெகு நடுக்கத்துடன் எழுதப்பட்டிருந்தாலும் கூட அதில் உண்மை ஒருவாறு வெளியாகியே விட்டது.
அதாவது:-
“இந்திய தேசிய காங்கிரசுக்கு தலைகுனியும்படியான காலம் வந்ததைக் குறித்து நாம் மிகவும் துக்கப்படுகின்றோம்”.
“காங்கிரசின் தேசீய லக்ஷியம் இப்போது பின்னடையும்படி நேர்ந்து விட்டது”.
குடி அரசு - 1981 (2) 70
“பிரதி வகுப்பாரின் பாஷை, எழுத்து, கல்வி, ஆசார அனுஷ் டானம், மதம், தர்ம சொத்துக்கள் ஆகிய விஷயங்களுக்குத் தக்க பாதுகாப்பளிப்பதாக (காங்கிரஸ்) காரியக்கமிட்டி கூறுவதின் கருத்து நமக்கு விளங்கவில்லை”.
“மற்ற மக்களுடைய பிரஜா உரிமை, சுயமரியாதை, மனிதத் தன்மை ஆகியவற்றிற்குப் பங்கம் விளைவிக்காத வரையில் பிரதி மனிதனுடைய மதம், ஆச்சாரம், அனுஷ்டானம் பாதுகாக்கப்படும் என்று காரியக்கமிட்டி கூறி இருந்தால் அதன் பொருள் தெளிவாக
ஏற்பட்டிருக்கும்” இந்தியாவின் சமதருமத்தை நிலைநிறுத்துவதற்கு காரியக்கமிட்டியின் முடிவு முட்டுக்கட்டையாக அமையுமென்று அஞ்சுகின்றோம்”.
என்பதாகக் குறிப்பிட்டு இருக்கின்றது.
இவை எப்படி இருந்தபோதிலும் “இன்றையதினம் இந்த நாட்டில்
இருந்துவரும் ஜாதிமத பேதங்களும், ஆச்சார அனுஷ்டானங்களும், மதங்
களும், மத தர்ம சொத்துக்களும் காப்பாற்றுவதற்காக நமக்கு சுயராஜியம் வேண்டும் என்ற கருத்தின் மீது தான் இன்றைய “தேசீயக் கிளர்ச்சி” நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்று சொன்னவர்களின் வார்த்தைகளில்
எந்த எழுத்தாவது தப்பிதமானது என்று இதிலிருந்து யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
அன்றியும், காங்கிரஸ் கூட்டத்தில் இத்தனை காலம் பிரஸ்தாபிக்கப் படாத ஒரு புதிய விஷயமும் இந்த ஜவாப்தாரிதீர்மானத்தில் சேர்க்கப்பட்டு விட்டது கவனிக்கத்தக்கதாகும். அதாவது பழக்க வழக்கம், தொழில், மத தர்ம சொத்துக்கள் ஆகியவைகளும் காப்பாற்றப்படும் என்பதோடு, அதற்கு ஜவாப்தாரித்தனமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதாகும்.
ஆகவே, இனிமேல் இந்தியாவைக் காங்கிரஸ் பார்ப்பனீய சுயராஜிய மாக்க இனிசெய்ய வேண்டிய வேலை எது பாக்கி? என்பதாக நமக்கு விளங்கவில்லை. இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால், காங்கிரசும், காந்தி கோஷ்டியும் இப்பொழுது உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சமதர்ம- பொதுவுடைமை உணர்ச்சியை அழிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து கொண்டு பாமர மக்களுக்குச் செய்யும் சதியும், துரோகமும் அல்லவா என்று யோசித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். இந்த உண்மையை உணர்ந்துதானே ரஷிய சம தர்மக்காரர்கள் “காங்கிரஸ் பொது ஜனங்களுக்கு துரோகமான” தென்றும், “காந்தி பொதுஜன துரோகி” யென்றும் தைரியமாய்ப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அன்றியும் மாஸ்கோவில் இருந்து வந்த சேதி ஒன்று “தமிழ்நாடு” வில் பிரசுரித்திருக் கின்றபடி “ருஷியாவில் “இந்தியா”
71 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
என்பதாக ஒரு நாடகம் ஆடப்படுவதாகவும், அதில் பிரிட்டிஷ் ஆட்சி கொடுங்கோண்மையானதென்றும், காந்தி பொதுஜனங்களை தப்பான வழியில் ஏமாற்றி நடத்திக்கொண்டு போகின்றவர் என்றும் கருத்துவைத்துச் சரித்திரம் எழுதி நாடகம் நடைபெறுகின்றதென்பதாக குறிப்பிடப்பட்டி ருக்கின்றது.
இவற்றை யெல்லாம் பார்த்த பிறகும், நன்றாய் உணர்ந்த பிறகும், இனியும் சுயமரியாதைக்காரர்கள் காங்கிரசைப்பற்றி சிறிதுகூட தாட்சண்யம். பார்க்கவேண்டியதில்லை என்பதாகவும், அது ஒரு பெரிய ஜன சமூகத் துரோக சபையாகவும், தாழ்த்தப்பட்ட ஏழை மக்களை ஏமாற்றிக் கழுத்தறுக்
கும் வஞ்சக சபையாகவும் இருக்கின்ற உண்மையைப் பொது ஜனங்களுக்
குப் படும்படி விளக்க வேண்டியதையே முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்றும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். இந்தக் கடமைக்கு யாரும் பயப்படுவது சிறிதும் மனிதத்தன்மை யாகா தென்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இதற்காக நாம் யாரையும் காங்கிரஸ் கூட்டத்தில் கலகம் செய்யும் படியாகச் சொல்லவில்லை. அது மிகவும் தப்பானதும், பயங்காளித்தன மானதுமான காரியமாகும். ஆதலால் ஒவ்வொரு இடங்களிலும் இதற் கென்றே தனிக்கூட்டம் கூட்டியே பேசவேண்டுமென்று வலியுறுத்திச் சொல்லுகின்றோம்.
அப்படிப்பட்ட கூட்டத்தில் காங்கிரசுக்காரர்கள் குழப்பம் செய்தால் அதற்காக யாரும் பின் வாங்க வேண்டியதில்லை. அதன் மூலமாகவே காங்
கிரசு என்பது “காலித்தனமும் உடையது” என்பதை ருஜுப்பிக்க ஒரு சந்தர்ப்பம் கூடப் பெறலாம். ஆகையால் அதற்குப் பயப்படவேண்டிய தில்லை. ஆனால், “சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்து விட்டார்கள்?” என்று கேட்டால், “காங்கிரசின் புரட்டை வெளிப்படுத்திக் கொண்டிருக் கின்றார்கள்” என்று சொல்லிவிடும் பதிலே அதற்குப் போதுமான
பதிலாகும்.
ஏனெனில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு நேர்மாறான கொள்கைகளேதான் பெரிதும் காங்கிரசில் இருப்பதை மனதார உணர்ந்தும் “சுயமரியாதையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்று தான்” என்று சிலர். விஷமப்பிரசாரம் செய்வதால் அதை ஜனங்கள் அறியும்படி செய்வதன் மூலமே சுயமரியாதைக் கொள்கைகளை எடுத்துச் சொல்ல வசதி ஏற்படு கின்றது. எனவே இந்த சமயத்தில் அலட்சியமாய் இருக்கக்கூடாது என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 19.07.1931
குடி அரசு - 1981 (2) 72
ஈட முணியாசிலிட்முமும், செண்ணை அளசாங்கமும்
ஈறோ௫ மகாணங்கள் கண்டணம்
ஈரோடு முனிசிபல் டவுனுக்கு எலக்ட்ரிக் விளக்குகள் போடும் விஷயமானது 1922-ம்ஹ முதல் ஈரோடு முனிசிபல் கவுன்சில் ஆலோசனையிலிருந்து வந்ததாகும். 1928 ம் வருஷம் முதல் இவ் விஷய மாய் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு கவர்ன்மெண்டாருடன் கடிதப் போக்குவரவுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது மைசூர் கவர்ன் மெண்டார் மேட்டூருக்கு மின்சாரசக்தி சப்ளை செய்துவந்தபடியினால் மேட்டூர் ஹெட்வர்க்ஸ்களிலிருந்தே ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மின்சார
சக்தி கொண்டுவர வேண்டுமென்ற ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் பிரேரே பனையானது உடனே மதறாஸ் கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பிறகு ஈ.மு.கவுன்சில் மைசூர் கவர்ன்மெண்டாருடன் இது விஷயமாய் கடிதபோக்குவரவுகள் செய்து மைசூர் கவர்ன்மெண்டு எலக்டிரிக்கல் இன்ஜினீயரவர்களை சந்தித்துப் பேசி முடிவு செய்யும் பொருட்டு ஈரோடு முனிசிபல் சங்கத்தார் ஒரு கமிட்டியை நியமுகம் செய்தார்கள். அந்தக் கமிட்டியார் மைசூர் கவர்ன்மெண்டுடன் கலந்து பேசிய
பிறகு அவ்விஷயம் அனுகூலமாய் முடிவுபெறும் நிலைமையில் இருக்கையில் மதறாஸ் கவர்ன்மெண்டார் இவ்விஷயத்தில் பிரவேசித்ததின். பேரில் திடீரென்று மைசூர் கவர்ன்மெண்டார் மின்சாரசக்தி சப்ளை செய்ய மறுதளித்து விட்டார்கள். பின்பு ஈரோடு கவுன்சில் தாங்களே இயந்திரம் வைத்து மின்சார சக்தியை உற்பத்தி செய்து வினியோகிப்பது நலமெனக்
கருதி மெட்றாஸ் மெஸர்ஸ்சாரிஅண்டு சாரிலிமிடெட் கம்பெனியாரிடம் கேட்கத் தீர்மானித்து அவர்களை யோசனை கூறும் இன்ஜினீயர்களாக வைத்துக் கொண்டு இதற்கு வேண்டிய பிளான்களும் எஸ்டிமேட்டுகளும் தயார் செய்யும்படி முனிசிபல் சங்கத்தார் அவர்களுடன் ஏற்பாடு செய் தார்கள். இது கவர்ன்மெண்டாருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் இந்த வேலை களை செய்து முடிப்பதற்காக ரூ. 2/,லக்ஷம் கடன் கொடுக்கும்படி சர்க்கா ருக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்கள். அதன்மீது கவர்ன்மெண்டு இடை வருஷத்தில் கடன் கொடுக்கக்கூடிய நிலைமையில் இல்லை என்பதாக தெரிய வந்ததால், கோயம்புத்தூர் டிஸ்திரிக்ட் போர்டாரிடம் கடன்
73 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வாங்குவதற்கு கவர்ன்மெண்டார் தங்களது 12.4.29 தேதிய 13546-1L&M மிமோராண்டத்தின் மூலம் கடன் வாங்கிக்கொள்ள உத்திரவும் அளித் தார்கள்.அதன் பேரில் கோயமுத்தூர் டிஸ்திரிக்ட்போர்டாரவர்களை ஈரோடு முனிசிபாலிட்டியார் கடன் கேட்டதில் அவர்கள் வருஷம், 100க்கு 5ரூ.வீதம் வட்டி கொடுத்து 20 வருஷத்தில் கடன் தொகையை திரும்பக் கொடுத்து விடவேண்டுமென்ற நிபந்தனையின்பேரில் கடன் கொடுக்க சம்மதித்
தார்கள். உடனே 7.5.29ல் இது விஷயம் கவர்ன்மெண்டுக்கு தெரிவிக் கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் கோரப்பட்டது. இதற்குள் அதோடு கூடவே இதற்கு வேண்டி பிளான்களும் எஸ்டிமேட்டுகளும் சங்கத்தாரின் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களால் தயாரிக்கப்பட்டு பிளான் எஸ்டிமேட்டு டன் லைஸென்சுக்காக ஒரு அப்ளிகேஷனும் கவர்ன்மெண்டாருக்கு அனுப்பப்பட்டது. இதன்பேரில் இரண்டுமாதம் பொறுத்து “முனிசிபாலிட்டி யாருக்காவது அல்லது வேறு யாதாமொரு கம்பெனிக்காவது லைஸென்ஸ்' கொடுத்து மின்சார சக்தியை ஈரோட்டிற்கு கொண்டு வந்து சில்லரையில் செலவு செய்யும் விஷயம் ஆலோசனையிலிருந்து கொண்டிருப்பதாய் ஹைட்ரோ எலக்ட்ரிக் சீப் இன்ஜினீயரிடமிருந்து தமக்குத் தகவல் வந்திருப்பதாயும் அதனால் ஈரோடு கவுன்சில் அனுப்பி வைத்த பிளானும் எஸ்டிமேட்டும் பரிசீலனை செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது” என்று கவர்ன்மெண்டு எலக்டரிக் இன்ஸ்பெக்டரிடமிருந்து 9.9.29 ல் ஒரு கடிதம்
வந்தது.
விஷயம் இப்படியாக இருக்கையில் கல்கத்தா ஆக்ட்டேவியஸ்
ஸ்டீல் கம்பெனியார் என்கிற ஒரு வெள்ளைக்காரரிடமிருந்து தாங்கள் ஈரோட்டுக்கும் சேலத்திற்கும் மின்சாரசக்தி சப்ளை செய்ய கவர்ன்மெண்
டுக்கு அப்ளி கேஷன் செய்திருப்பதாயும் தங்கள் அப்ளிகேஷனை ஈரோடு முனிசிபல் சங்கத்தார் ஆதரிக்கவேணுமாயும் கோரிஒரு லெட்டர் வந்தது. உடனே முனிசிபல் கவுன்சில் தங்கள் கவுன்சிலுக்கு இல்லாமல் மற்ற அன்னியர்களுக்கு கவர்ன்மெண்ட் லைஸென்ஸ் கொடுக்கக்கூடாதென்று கவுன்சில் தீர்மானித்து தத்களுடைய ஆக்ஷேபனையை மதராஸ் கவர்ன் மெண்டாருக்கும் ஆக்ட்டேவியஸ் கம்பெனியாருக்கும் அனுப்பி விட்டார்
கள். இது இப்படி இருக்க முன் அனுப்பிய விண்ணப்பமானது அதாவது கடன் வாங்குவதற்கு அங்கீகாரம் கொடுக்கும் படி கேட்டுக்கொண்ட விஷய மானது கவர்ன்மெண்டாரிடம் அதிகக் காலமாக பைசல் செய்யப்படாம லிருந்து வந்தது கவனிக்கப்பட்டு கவர்ன்மெண்ட்டின் 410295 தேதி போட்ட 30983-1- C.L & M நெம்பர் மிமோராண்டத்தில் “கடன் அப்ளிக்கேஷன் கெஜட்டில் பிரசுரம் செய்யப்படும். சேர்மேன் லைசென்சுக்கு அப்ளிகேஷன் செய்ய வேண்டும்” என்று கவர்ன்மெண்டாரால் தெரிவிக்கப்பட்டது.
கவுன்சிலால் லைசென்சுக்கு விண்ணப்பம் செய்வதற்கு வேண்டிய முயற்சிகள் எடுத்து மசோதா லைசென்ஸ் வகையறா அச்சடிக்கப்பட்டது.
குடி அரசு - 1931 (2) 74
அதோடுகூடவே தீவிரமாய் வேலை துவக்குவதற்கு வேண்டிய கடிதப் போக்குவரவுகளும் செய்து கொண்டிருக்கையில் மறுபடியும் திடீரென்று கவர்ன்மெண்டார் தாங்களே ஈரோட்டுக்கு மின்சார சக்தி சப்ளை செய்யத் தயாராயிருப்பதாகத் தெரிவித்தார்கள். அதன் பேரில் சங்கத்தார். சர்க்காராரே அவ்விதம் மின்சார சக்தி சப்ளை செய்வதாயிருந்தால் தாங்கள் எடுத்துக் கொள்ளுவதாகத் தெரிவித்து விட்டார்கள். என்றாலும், இதற்குள் ளாக கவுன்சிலால் மசோதா லைசென்ஸ் அச்சடிக்கும் விஷயமாயும், பேப்பர்களில் பிரசுரம் செய்யும் விஷயமாயும், இன்னும் லைசென்ஸ் பெறுவதற்கு வேண்டிய முன்நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளும் விஷயமாயும் ஏராளமான பணச் செலவு செய்யப்பட்டுவிட்டது..
மெசர்ஸ் சாரி அண்டு சாரி லிமிடெட்டுக்கு பிளான்களும், எஸ்டி மேட்டுகளும் தயார் செய்வதற்கும், மசோதா லைசென்ஸ் அச்சடிப்பதற்கும்,
மற்றும் இதர செலவுகளும் நீங்கலாக லைசென்ஸ் பீசும் பிரசுரச் செலவும்
மாத்திரம் ரூ.1000 ஆகி விட்டது. அப்புறம் கடன் வாங்குவதற்கு அங்கீகாரம் கொடுக்கும் விஷயம் கவர்ன்மெண்டாரால் பைசல் செய்யப்படாமல் ரொம்பகாலம் பாக்கியிலிருந்து கொண்டிருந்தது. கடைசியாக “மேட்டூரி லிருந்து மொத்தமாய் மின்சார சக்தி சப்ளை செய்யும் விஷயம் முடிவாகத் தீர்மானம் செய்யும் வரை கடன் வாங்கும் விஷயம் நிறுத்தி வைக்கப்பட வேண்டு” மென்று 7.2.30ல் 4446ம் நெம்பர் மிமோராண்டத்தின் மூலமாய் கவர்ன்மெண்டாரவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இது ஒரு புறமிருக்க முன் ஹைடிரோ எலக்டிரிக்கல் டிபார்டுமெண்டு
சீப் எஞ்சினீயரால் அனுப்பப்பட்ட ஸ்கீமானது 1930 மே மாதத்தில் சாங்கிஷன் செய்யப்பட்டுவிட்டது. ஈரோடு கவுன்சிலர்கள் தங்களுக்கே லைசென்ஸ் கொடுக்கவேண்டுமென்று கவர்ன்மெண்டாரை கேட்டுக் கொண்டிருக்கும்போதே தாங்கள் இவ்வித வேலை செய்வதில் மிக்க அனுபவமுள்ளவர்கள் என்றும், கவுன்சில் தீர்மானத்தை புனர்ஆலோசனை செய்யவேண்டு மென்றும், மறுபடியும் வெள்ளைக்கார கம்பெனியாகிய கல்கத்தா மெஸர்ஸ் ஆக்ட்டேவியஸ் ஸ்டீல் கம்பெனியாரிடமிருந்து கவுன்சிலுக்கு ஒரு லெட்டர் வந்தது. கவுன்சிலால் தாங்கள் அவ்விதம் செய்ய முடியாதென்று மறுபடியும் தீர்மானித்து கம்பெனியாருக்குத் தெரிவித்து விட்டார்கள். மறுபடியும் 1930 சூன் மாதம் 24-ந்தேதி கூடிய முனிசிபல் சங்கத்தில் ஒரு அயல் கம்பெனிக்கு லைசென்ஸ் கொடுப்பதை ஆட்சேபித்தும், தக்க லாபம் கிடைக்கக்கூடிய ஒரு காரியத்தைச் செய்வதற்குக் கவர்ன்மெண்டார் ஒத்தாசை செய்யவேண்டு மென்றும் தீர்மானங்கள் பாஸ் செய்யப்பட்டன. மின்சார சக்தியை மொத்தத்தில் வாங்கிப் பிரித்துக் கொடுப்பதற்காவது லைசென்ஸ் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்ளப்பட்டது. தாங்கள் உடனே மொத்தத்தில் மின்சார சக்தி பெற்றுக் கொள்ள தயாராக இருக்கும் பொருட்டு வேண்டிய வேலைகளை
75 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உடனே துவக்க லைசென்ஸ் கொடுக்க வேணுமாய் கவர்ன்மெண்டாரைப் பன்முறையும் கேட்டுக் கொள்ளப் பட்டது. இத்தருவாயில் கடன் கேட்கப்பட்ட தொகையை 1930 செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுக் கொள்ளாவிட்டால் 100க்கு 5Y, வீதம் வட்டி கொடுக்கவேண்டுமென்று கோயமுத்தூர் ஜில்லா போர்டார் தெரிவித்தார்கள். இதை உடனே கவர்ன்மெண்டாருக்குத் தெரிவித்துக் குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்கும் வீதம் உடனே கடன் வாங்கிக் கொள்ளும்படி சாங்கிஷன் கொடுக்கவேணுமாய்க் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இது விஷயம் ஆலோசனையிலிருப்பதாக 15-2-30ல் கவர்ன்மெண்
டார் தெரிவித்தார்கள். திரும்பவும் உடனே கவுன்சிலுக்கே லைசென்ஸ் கொடுக்க வேண்டுமென்றும் அவ்விதம் கொடுக்காவிட்டால் கவுன்சிலுக்குப் பலவிதமான வகையில் பொருள் நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுமென்றும் கவர்ன்மெண்டாருக்கு விபரமாக எழுதப்பட்டது.
இவ்வளவு செய்தும் சென்னை அரசாங்கமானது பொது ஜன அபிப்பிராயத்தை லட்சியம் செய்யாமலும் கவுன்சிலர் வேண்டுகோளைச் சிறிதும் கவனிக்காமலும் “கல்கத்தா கம்பெனியார் மிகுந்த அனுபோக சாலிகள். சரியாய் நடத்துவார்கள் என கவர்ன்மெண்டார் கருதுகிறார்கள்” எனக்குறிப்பிட்டு விட்டு கல்கத்தா மெஸர்ஸ் ஆக்ட்டேவியஸ் ஸ்டீல் கம்பெனியாருக்கு லைசென்சு கொடுத்துவிட்டதாக 11-12-30-ந் தேதி போட்ட 11034 / £30-7 உத்திரவு கிடைத்தது.
எனவே மேல்கண்ட இந்த விஷயங்கள் தான் ஈரோடு முனிசிபா லிட்டியின் மின்சாரத்திட்ட விஷயமான வெளிப்படையான சரித்திரமாகும். (இனி இரகசியமான சரித்திரங்கள் பல உண்டு. அவற்றை பகிஷ்கார காலத்தில் வெளியிடுவோம்?
ஆகவே, இதை அதாவது இந்த வெளிப்படையான சரித்திரத்தையே கவனித்து பார்ப்போமானால் சென்னை அரசாங்கமானது இவ்விஷயத்தில் எவ்வளவு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டிருக்கின்றது என்பது விளங்கும். நாம் சென்னை அரசாங்கம் என்று சொல்லுவதானாலும் சென்னை அரசாங்கத்தில் இந்த இலாகாவுக்கு தலைவர்களாயிருப்பவர்கள் இந்திய கனவான்களேயாகும். ஒருவர் ஆந்திர தேசத்து ஜனப் பிரதிநிதி மந்திரி யாவார். மற்றவர் கேரள தேசத்தவராயிருந்தாலும் சர்க்கார் உத்தியோ கஸ்தர் என்பதாகச் சொல்லக்கூடுமானாலும் சர்க்காருக்கேப் பொறுப்பா னவர் என்று சொல்வதானாலும் அந்த ஸ்தானமும் ஜனப்பிரதிநிதிகளுக்கு என்று ஒதுக்கி வைத்த ஸ்தானமேயாகும்.
ஆகவே ஸ்தலஸ்தாபன இலாகா மந்திரியும், சட்ட மெம்பரும் என்ற இரு இந்திய கனவான்கள் ஆதிக்கத்தில் உள்ள இந்த ஈரோடு மின்சாரதிட்ட
குடி அரசு - 1981 (2) 76
காரியமானது இந்த நாட்டு ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அனுகூலமாயில் லாமல் அதற்கு விரோதமாக ஒரு வெள்ளைக்காரருடைய நன்மைக்கு பயன்படும்படி நடந்து கொண்ட விஷயத்தை கண்டிக்காமலிருக்க முடிய
வில்லை...
அன்றியும், ஈரோடு பொதுஜனங்கள் பொதுக்கூட்டம் கூடி அரசாங் கத்தைக் கண்டித்தும் செய்த தீர்மானத்தை நாம் மனப்பூர்வமாக ஆதரிக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றோம். சென்னை அரசாங்க சட்டசபை அங்கத்தினர்கள் உண்மையான ஜனப்பிரதி நிதிகளாயிருப்பார்களேயானால் கண்டிப்பாய் இந்த அரசாங்கத்தின் மீதோ அல்லது இதற்கு ஆஸ்பதமா யிருந்த அதிகாரிகள் மீதோ கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியேயிருக்க வேண்டியவர்களாவார்கள். என்ன செய்வது! பாவம்!! ஒவ்வொரு ஜனப்பிரதி
நிதி என்பவர்களும் வேறு எவ்வளவோ காரியத்தை உத்தேசித்து பெரும் பெரும் தொகைகள் செலவு செய்து ஜனப்பிரதிநிதிகளாயில்லாமல் பணப் பிரதிநிதிகளாகவும் தங்கள் தங்கள் சுயநலப்பிரதிநிதிகளாகவும் சென்று இருப்பவர்கள் இம்மாதிரி காரியத்திற்காக எப்படி தங்கள் பிரதிநிதித்துவ உரிமையை செலவழிக்க முடியும்?
ஆகையால்தான் ஈரோடு மகாஜனங்கள் அரசாங்கத்தையும், அரசாங்க இந்திய மெம்பரையும் ஜனப்பிரதிநிதி மந்திரியையும், ஜனப்பிரதி
நிதி சட்டசபை அங்கத்தினர்களையும் நம்பாமல் ஈரோடு மகாஜனங்க ளாகிய தங்களையே நம்பி தீர்மானம் செய்து கொண்டிருக்கிறார்கள். இனி ஈரோடு மகாஜனங்களும் இந்திய மக்களேயாதலால் இந்திய பொதுமக்கள் என்பவர்கள் மற்ற காரியங்களில் நடந்து கொள்வது போலவேதான் அல்லது அவர்களது வழிகாட்டிகள் என்பவர்களும் பிரமுகர்கள் என்பவர்.
களும் நடந்து கொள்வது போலவேதான் நடந்து கொள்ளுவார்களோ அல்லது தங்கள் சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் உத்தேசித்து தீர்மானம் செய்தபடி நடந்து கொள்ளுவார்களோ என்பது பலர் சந்தேகிக்கக் கூடியதானாலும் நமக்கு இவ்விஷயத்தில் இவ்வூர் பொதுமக்களிடமும் சிறப்பாக பிரமுகர்களிடமும் பூரண நம்பிக்கை இருக்கின்றதென்றே சொல்லுவோம்.
ஏனெனில், தங்களையே நம்பிய ஜனங்கள் தங்களாலேயே நம்பிக் கைத் துரோகம் அடைய அருகதை ஆகிவிட்டால் மற்றபடி அன்னியர் களை நம்பினவர்கள் நம்பிக்கை மோசமடைவது அதிசயமல்ல. ஆகை யால், எந்தக் காரணம் கொண்டும் இந்த அரசாங்கமும் ஜனப்பிரநிதிகளும் அனியாயத்திற்கும், கொடுமைக்கும், நம்பிக்கை துரோகத்திற்கும் பரிகாரம். ஏற்படாதவரை தங்களையே நம்பி இருக்கும் ஈரோடு மகாஜனங்கள் கண்டிப்பாய் மின்சார சக்தியை வாங்கி உபயோகித்துக் கொள்ளக்கூடாது என்றும், சர்க்காரார் ஒரு சமயம் முனிசிபாலிட்டியார் மீது ஆதிக்கம்
77 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
செலுத்தி முனிசிபாலிட்டியாரை கட்டாயப்படுத்தினாலும் ஈரோடு முனிசிபாலிட்டியார் அதற்கு இணங்கி மின்சாரத்தை நமது முனிசிபாலிட் டிக்கு உபயோகித்துக் கொள்ளுவார்களேயானால் கண்டிப்பாய் முன்சிபாலிட்டியுடனும் ஒத்துழைக்கக்கூடாது என்றும் செய்துள்ள தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டு வரச் செய்யவேண்டியது பொதுமக்கள் கடமையாகும்.
மற்றும் ஷே வெள்ளைக்காரக் கம்பெனியார் இதற்காக ஏற்படுத்தி இருக்கும் புதிய கம்பெனியிலும் யாரும் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதும் தீர்மானத்தின் ஒரு பாகமாதலால் அதையும் அமுலுக்கு கொண்டு. வரவேண்டியது யோக்கியமாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.07.1931
குடி அரசு - 1981 (2) 78
தியின் திண்டாட்டம்
உயர்திரு காந்தியவர்கள் லண்டன் மகாநாட்டிற்கு வருவதாக சர்க்காரிடம் உறுதிகொடுத்து ராஜிசெய்து கொண்டதிலிருந்து அவர்பாடு மிகத் திண்டாட்டமாகவேபோய்விட்டது. ஏனெனில் தான் வட்டமேஜை மகாநாட்டிற்கு போனால் என்ன செய்வது என்பது அவருக்கே புரியாததாய் இருக்கின்றதுடன் இவரது அபிப்பிராயத்தை ஆதரிக்க அங்கு போதிய ஆட்கள் கிடைக்குமா என்பதே பெரிய சந்தேகமாகி விட்டது. அரசியல்.
றது. ஆதலால் திரு காந்திக்கு அங்கு செல்வாக்கு இருக்கமுடியாது. திரு காந்தியை லங்காஷயர் உள்பட அநேக ஊர்காரர்கள் கூப்பிடுவதாயிருந் தாலும் அவர்கள் இவரைப் பார்க்க ஆசைப்படுவார்களே ஒழிய இவர் பேச்சைக் கேட்பவர்களாய் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இது அவருக்கே தெரியும். ஆதலால் ஏதாவது ஒரு சாக்கைப் போட்டு போகாமல் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றார் என்பதாகவே நாம் கருதுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை அவர் போவதும் போகாததும் ஒன்றேதான். ஆனால் அவரைப்பொறுத்தவரை அவர்போகாமல் இருப்பதே அவருக்கு நன்று. இது அவருக்கும் தெரியும். ஆதலால் அநேகமாய் அவரும் போகமாட்டார் என்றுதான் கொள்ள வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 19.07.1931
79 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சுயமரியாதை வீரப்ப வட்மயாருக்கும்
சுய ஆகூறி சுப்பையருக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
சு.ம.வீரைய்யசெட்டியா। என்ன ஓய்!சு.ஆ. சுப்பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக் கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர். வேஷ்டியும், கதர் குல்லாயும், தடபுடலாயிருக்கின்றதே?
சு.ஆ:- சுப்பையர்:- ஒன்றும் விசேஷமில்லை. இன்று முதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன்.
சும.வீ- அதென்ன திடீரென்று சேர்ந்து விட்டாய் காங்கிரசைப்பற்றி
குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே.
சு.ஆ.ச:- நான் பி.ஏ. பாஸ் செய்து எத்தனை நாள் ஆச்சுது?
சு.ம.வீ:- 3 வருஷ மாச்சுது.
சு-ஆ.சு:- உத்தியோகத்திற்கு எத்தனை விண்ணப்பம் போட்டேன் உனக்குத் தெரியாதா?
சூம.வீ௪- ஆம், சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது?
சு.ஆ.சு:- ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா சொல்
பார்ப்போம்?
சும.வீ- அது சரி அதற்கு யார் என்ன செய்வார்கள். உத்தியோகம் இருந்தால் தானே கிடைக்கும்.
சு.ஆசு:- உத்தியோகம் காலியாகவா இல்லை? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி பாசு பண்ணின அப்துல்ரகிமான், பறக்கருப்பன், ஜோசப்பு,
குடி அரசு - 1981 (2) 80
இரங்கசாமி நாயக்கன், இராமசாமி நாடான் இவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்துக் காயமாகி ஒன்று இரண்டு பிரமோஷன்கூட ஆகிவிட்டது. நான்
பி.ஏ. பிரசிடென்சி9தாவதாகப் பாசு பண்ணி இருக்கின்றேன். என் விண்ணப் பத்திற்குப் பதில் கூட இல்லை. இந்த கவர்ன்மெண்டை என்ன பண்ணுவது?
சு.ம.வீ:- அது ஏன் அப்படி? உன் விண்ணப்பங்கள் போய்ச் சேருகிறதில்லையா?'
௬.ஆஃசு:- இல்லையப்பா உங்கள் எளவுதான்.
சு.ம.வீ:- என்ன சங்கதி?
சு.ஆஃ.சு:- சுயமரியாதை என்று ஒரு கலகத்தை உண்டாக்கி அதில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று கூச்சல் போட்டுக் கடைசியாக அது எங்கள் தலையில் வந்து விடிந்தது.
சு.ம.வீ:- அடபாவி அதற்கு நாங்களா ஜவாப்தாரி. ஜஸ்டிஸ் கட்சிக் காரரல்லவா? அந்தப்படி கேட்டது.
௬.ஆஃசு:- அது எனக்குத் தெரியும். ஜஸ்டிக்கட்சிக்காரர்
முக்கிமுக்கிப் பார்த்தும் ஒன்றும் முடியாமல் போய் கடைசியாக அவர்களே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்கின்றபோது உங்க எளவு சுயமரியாதைக் கலகம் வந்து அதற்கு உயிர் உண்டாக்கி எங்கள் தலையில் கையை வைத்து விட்டது.
சு.ம.வீ- சரி அதற்கும் - கதருக்கும், காங்கிரசுக்கும் என்ன சம்பந்தம்?
௬.ஆ.சு:- அதனால்தான் காங்கிரசில் சேர்ந்தேன்.
சு.ம.வீ:- ஏன்?
௬ச.ஆ.சு:- இந்தக் கவர்ன்மெண்டை ஒழித்துவிட்டு வேறு வேலை பார்ப்பது என்றுதான்.
சு.ம.வீ:- உங்களால் ஒழித்து விடமுடியுமா?
௬.ஆஃசு:- ஏன் முடியாது? மாளவியாவே சொல்லி விட்டாரே. ஒரு
மாதத்தில் சுயராஜியம் வரப்போகின்றது என்று சொல்லிவிட்டாரே. ஒரு சமயம் காந்தி சொன்னாலும் சந்தேகப்படலாம். அவர் இப்படியே 5.6 தரம் சொல்லிச் சொல்லி ஏமாற்றி விட்டார். மாளவியா வாக்குத் தவராது.
சு.ம.வீ:- அப்படியே சுயாராஜியம் வந்து விட்டதாகவே வைத்துக் கொள். அப்போது மாத்திரம் உனக்கு உத்தியோகம் கிடைத்து விடுமா?
81 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சு.ஆ.சு:- ஏன் கிடைக்காது? இந்த வகுப்புவாரி பிரதிநிதிக் குண மெல்லாம் தவுடு பொடியாகிவிடாதா? அதற்காகத்தானே சுயராஜியம் கேட்பது. இந்த வெள்ளைக்கார ஆட்சி கூட வகுப்புவாரிபிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்றுசொன்னால் அதனிடம் எங்களுக்கு என்ன சண்டை?
சு.ம.வீ:- வகுப்புகள் இருக்கும்வரை வகுப்புவாரிஉரிமை வேண்: டாமா?
சு-ஆ.சு:- வகுப்புவாதம் கூடாது என்றுதானே காங்கிரஸ் சொல்லுது.
சு.ம.வீ:- வகுப்புவாதம் கூடாது என்பது சரிதான். வகுப்பு போக வேண்டும் என்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டாமா?
சு.ஆஃசு:- அதுவும் போகத்தான் வேண்டும்.
சு.ம.வீ- அப்படியானால் உங்கள் சுயராஜியத்தில் இந்து, மகமதியன், கிறிஸ்தவன் முதலாகிய வகுப்பெல்லாம் போய்விடுமா?
சு.ஆஃசு:- இவைகளை எப்படிப் போக்க முடியும்?
சு.ம.வீ:- அப்படியானால் அவரவர்களுக்குள்ள உரிமை கொடுக்கத்தானே வேண்டும்.
சு.ஆ.சு:- ஒவ்வொருவருக்கும் தனித்தனி உரிமை கேட்டால் அது வகுப்புவாதமில்லையா?
சு.ம.வீ:- வகுப்பு போகாத சுயராஜியத்தில் வகுப்பு உரிமை வேண் டாமா?
சு.ஆ.சு:- அது எப்படியோ போகட்டும். இந்துக்களுக்குள் கூட வகுப்புவாதம் எதற்கு?
சு.ம.வீ:- உங்கள் சுயராஜியத்தில் இந்துக்களுக்குள் சூத்திரன், பஞ்சமன் என்கின்றதாகிய வகுப்புகளாவது இல்லாமல் போய்விடுமா?
சு.ஆ.சு:- இப்படிப் பேசுவதுதான் வகுப்பு வாதம் என்பது?
சு.ம.வீ:- எப்படி?
சு.ஆ.சு:- வெகுகாலமாய் பெரியவாள் காலம்தொட்டு இருக்கின்ற வழக்கத்தை கேவலம் இந்த சுயராஜியத்திற்காக ஒழிக்கவேண்டும் என்று சொல்வது நியாயமாகுமா? இதனால் தான் உங்களை தேசீய பத்திரிகைகள் வகுப்புத்துவேஷிகள் என்று கூப்பிடுகின்றார்கள். சுயராஜியம் இல்லாவிட்
குடி அரசு - 1981 (2) 82
டாலும் பரவாயில்லை. சூத்திரன், பஞ்சமன் ஆகிய வகுப்புகள் இல்லாமல் செய்ய நாங்கள் சம்மதிக்க மாட்டோம்.
சு.ம.வீ:- ஏனப்பா அது என்ன அவ்வளவு கஷ்டம்?
௬.ஆ.சு:- இன்றைக்கு சூத்திரன் என்கின்ற வகுப்பு வேண்டாம், நாளைக்கு பஞ்சமன் என்கின்ற வகுப்பு வேண்டாம், நாளானண்ணைக்கு பிராமணன் என்கின்ற வகுப்பு வேண்டாம் என்பதாக வரிசையாய் சொல்ல
ஆரம்பித்து விடுவீர்கள்.
ச.ம.வீ:- சொன்னால் என்னப்பா முழுகிப்போகும்.
சு.ஆச:- குதிரையும், கழுதையும் ஒன்று என்றால் நீ ஒப்புக்கொள்:
வாயா?
ச.ம.வீ:- அப்படியானால் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என் கின்றவர்களில் யார் குதிரை யார் கழுதை? அதற்கு என்ன அடையாளம்? சொல் பார்ப்போம் (என்று சட்டையை முழங்கைக்குமேல் ஏற்றிச் சுருட்டி
னார் வீரைய்யன்.)
சு.ஆஃ.சு:- அதெல்லாம் எனக்குத்தெரியாதப்பா. சங்கராச்சாரிசுவாமி களிடமிருந்து “பிராமணாள் எல்லாரும் காங்கிரசில் சேருங்கள்” என்று ஒரு ரகசிய ஸ்ரீமுகம் வந்ததாக எங்கப்பா சொன்னார் அதனால் சேர்ந்தேன். எங்கப்பாவும் எங்க மாமாவும் பேசிக்கொண்டிருந்ததை நான் சொன்னேன். என் மேல் கோபித்துக்கொள்ள வேண்டாம். என்னமோ என் வேலையை நான் பார்க்கின்றேன் உன் வேலையை நீ பார். நமக்குள் சண்டையெதற்கு. என் அபிப்பிராயமெல்லாம் உனக்குத் தெரிந்ததுதானே? நான் போகிறேன் நேரமாச்சுது ( என்று சொல்லிக்கொண்டே நழுவிவிட்டார். )
குடி அரசு - உரையாடல் - 26.07.1931
83 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காங்கிரஸ் புரட்டும் - காந்தியிண் தவறும்
தலைவரவர்களே! சகோதர சகோதரிகளே!
இன்று இக்கூட்டத்தில் நான் “காங்கிரஸ் புரட்டும் - காந்தியின் தவறும்”என்னும் விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்தத் தலைப்பைப் பார்த்த சிலருக்கு ஆத்திரமுண்டாகி யிருக்கலாம். கலகம் செய்யலாமா என்றுகூட கருதிக்கொண்டு வந்திருக் கலாம். இந்தப்படி ஆத்திரம் ஏற்படுவது சகஜமேயாகும். ஆனால், நான்
மாத்திரம் 5,8 வருஷ காலமாகவே காங்கிரசை ஒரு புரட்டு ஸ்தாபனம் என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட ஸ்தாபனமென்றும் சொல்லி வந்திருப்பதோடு. “திரு காந்தியவர்கள் பார்ப்பனப் பிரசாரகர்
என்றும், பார்ப்பனீயத்திற்கு பாடுபடுகின்றவர்'” என்றும் சொல்லி வந்திருக் கின்றேன். இந்த அபிப்பிராயம் எனது அனுபவத்தில் நாளுக்கு நாள் பலப்பட்டுகொண்டு வந்திருக்கின்றதேயொழிய சிறிதாவது குறைவுபடவே இல்லை.
காங்கிரசு ஒரு வகுப்புவாத சபையேயாகும். “தேசிய”ப் போர்வை போர்த்த வகுப்புவாதக் குரங்கேயாகும். அதாவது பிடிவாத வகுப்பு வாத மாகும். தேசீயம் என்னும் பித்தலாட்ட வார்த்தையைச் சொல்லிக்கொண்டே வகுப்புவாதங்களை அதாவது “உயர்” வகுப்பு உரிமைகளைக் காப்பாற்று வதற்கு ஏற்பட்ட ஸ்தாபனமாகும்.
இந்திய தேசீயம் என்னும் வார்த்தை ஒழிந்தாலொழிய வகுப்புவாதம் நமதுநாட்டை விட்டு ஒருநாளும் ஒழியப்போவதில்லை. பித்தலாட்டமாக
வும், வஞ்சகமாகவும், சூகஷியாகவும், வகுப்புவாதத்தை வலியுறுத்துவது தான் இந்திய தேசீயம் என்பதை நினைவில் வையுங்கள். இதை எங்கு வேண்டு மானாலும் ருஜுப்படுத்தத் தயாராயிருக்கிறேன். தேசீயப்புரட்டு
ஒழிந்து தீர வேண்டியது எல்லாவற்றையும்விட மிகமிக அவசியமென்றே எனக்கு இப்போது பலமாய்த்தோன்றி வருகின்றது.
நமது பாமர மக்களின் பகுத்தறிவு அற்ற தன்மையும், ஜீவனத்திற்கு வேறு யோக்கியமான வேலையற்ற தன்மையுமே வகுப்புவாத தேசீயத்திற்கு
குடி அரசு - 1931 (2) 84
இவ்வளவு ஆதரவு கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இனி அது ஒரு குண்டுமணி அளவும் இருக்க முடியாது. வகுப்புவாத தேசீயத்தின் செல்வாக் கையும், அதனின் காலித்தனத்தையும் கண்டே மக்கள் பயந்து, வெளியில் உண்மையைப் பேசத்தயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் இருவராவது இந்த வகுப்புவாத தேசீயப்புரட்டை வெளியாக்க உயிர்த்தியாகம் செய்து தீரவேண்டியது மிக்க அவசியமாகும். என்றாலும் சமீப காலத்தில் அதன் யோக்கியதை வெளியாகிவிடும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நன்றாய் சிந்தனா சக்தியுடன் யோசித்துப்பார்த்தால் வகுப்புவாத சூக்ஷி இல்லாத வெரும் தேசீயம் என்னும் வார்த்தையே வகுப்பு வாதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பது தெளிவாய் விளங்கும். தேசீயத்தின் அடிப்படையே வகுப்புவாதம்தான்.
இன்றையதினம் நமது தேசீயம் என்பது ஐரோப்பியம், இந்தியம் என்னும் வகுப்புவாதத்தைக் கொண்டதே தவிர வேறில்லை. இந்தியாவில் ஜாதிப்பிரிவு இருப்பதால், இதன் தேசீயம் ஜாதி வகுப்பு வாதமாகவும், மேல் நாடுகளில் தொழில் பிரிவுகள் இருப்பதால் அங்கு தொழில் வகுப்புவாத மாகவும், தேசீயங்கள் நடைபெற்று வருகின்றன.“இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டும்?” என்பதே வகுப்புவாதமா? அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவை இன்னவிதமான கொள்கை, இன்னவிதமான ஆக்டி முறைமையில்தான் ஆளப்படவேண்டும் என்று சொல்வதானால் அதில் வகுப்புவாதம் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அந்தப்படி சொல்லுவது என்பது நமது தேசீயத்தில் கடுகளவுகூட காணமுடியவில்லை.
“ ராணுவம் இந்தியமயமாக்க வேண்டும், உத்தியோகம் இந்தியமயமாக்க வேண்டும், அதிகாரம் இந்தியமயமாக்கவேண்டும்”” என்கின்றதான இந்திய வகுப்புவாதமேதான் இந்திய தேசீயத்தில் மேலோங்கி நிற்கின்றதே தவிர அதில் எவ்வித கொள்கையாவது மேலோங்கி நிற்பதாகக் காணப்பட வில்லை.
அந்தப்படி ஏதாவது ஒரு கொள்கை மேலோங்கி நிற்கின்றது என்று சொல்லுவோமானால் இந்திய தேசீயம் என்பதிலுள்ள எந்தக் கொள்கைக் காவது இந்திய மக்களின் 100-க்கு 10-பேர்களுடைய ஆதரவாவது இருக் கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். மக்களின் ஆதரவில்லாத கொள்கைகளை யாரோ சிலர் வாயில் சொல்லிக்கொண்டோ அதிகார உத்தியோக ஆதிக்க சுயநல ஆசைக்கு வியாபாரமுறையில் ஆட்களை வைத்துப் பேசிக்கொண்டோ இருப்பதில் என்ன பயன் ஏற்படக்கூடும்?
ஆகவே தேசீயசபை எனப்படும் காங்கிரஸ், வகுப்பு வாதத்தை வேறு முறையில் நடத்தும் ஒரு புரட்டு ஸ்தாபனமே தவிர வேறு அல்ல என்று தைரியமாய்ச் சொல்லுகின்றேன். இந்த இலக்ஷணத்தில் அது மற்றவர்களை அதுவும் கஷ்டப்படும், மிதித்து, அழுத்தி நசுக்கப்படும்- இழிவுபடுத்தப்படும் மக்களின் கஷ்டத்தையும், கூக்குரலையும் பார்த்து
85 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சிறிதும் அனுதாபப்படாமல்... பரிதாபப்படாமல், அவற்றை யெல்லாம் ஒரே
மூச்சில் வகுப்புவாதம் என்று சொல்லுகின்ற போக்கிரித்தனத்தைப் பார்த்தால் தேசீயத்தில் உள்ள புரட்டு மாத்திரமல்லாமல் அதில் இருக்கும் வகுப்பு வாதத் திமிரும் நன்றாய் விளங்கும். இழிஜாதிக்காரனென்று மதத்தின் பேரால் தீர்மானிக்கப்பட்ட பறையன், சக்கிலி, பள்ளன் என்று சொல்லப் பட்ட மக்கள் ஒரு புறம் குடிக்கத்தண்ணீர் இல்லாமல், நடக்கத் தெருவில்லா
மல் திண்டாடுகின்றார்கள். தொழிலாளி, குடியானவன் என்று சொல்லப்படு. கின்றதான “சூத்திர” வகுப்பு என்கின்ற மக்கள் பாடுபட்டும் கஞ்சியில்லா
மல் தவிக்கிறார்கள். “மிலேச்ச” வகுப்பு என்பதில் சேர்க்கப்பட்ட மகமதி யர்கள் தாங்களும் இந்தியர்களாக இருந்தும் தங்களது உரிமை தங்களுக்கு அளிக்கப்படவில்லை என்று கூக்குரலிடுகின்றார்கள்.
இவ்வளவையும் பார்த்தும், கேட்டும் சிறிதும் ஈவு இரக்கமின்றி ஒரே வார்த்தையில் “இதெல்லாம் வகுப்பு வாதம், வகுப்பு வாதக்காரர்கள் எல்லாம் தேசத்துரோகிகள், இது தேசீயத்திற்கு முட்டுக்கட்டை” என்கின்ற ஒரே ஆயுதத்தால் அடித்து நொறுக்கிவிடப் பார்த்தால் இதை யார் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும்? என்று கேட்கின்றேன். காங்கிரஸ் காரியக் கமிட்டியார் தீர்மானங்களையும் அவற்றிற்கு திரு.காந்தியின் மேலொப்பத் தையும், சற்று நாணையத்துடன் கவனித்துப்பாருங்கள். அது வகுப்பு வாதமா? அல்லவா என்று கேட்கின்றேன். அதுவும் நாம் எந்த வகுப்பு வாதத்தை ஒழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்றோமோ அந்த வகுப்பு வாதத்தை நிலைநிருத்த உறுதிப்படுத்தச் செய்யும் வகுப்பு வாதமா? இல்லையா? என்று கேட்கின்றேன். ஆகவே காரியக்கமிட்டியின் தீர்மானம் என்ன? என்பதைச் சொல்லுகின்றேன் கேளுங்கள்.
அதாவது:- “இந்தியாவிலுள்ள சகல வகுப்பாருக்கும் அவர்களது சாஸ்திரங்கள், பாஷைகள், கல்வி, தொழில், மதசம்பந்தமான பழக்க வழக்கம், மத தர்ம ஸ்தாபனங்கள் ஆகியவைகள் தேசீயத்தில் காப்பாற்றப்
படும்” என்பதாகும்.
இந்தத் தீர்மானம் வகுப்புவாத தீர்மானமா? அல்லவா? என்று கேட்கின்றேன். பறையன் தொடக்கூடாதவன் என்பதும், முஸ்லீம் தொடக் கூடாதவன் என்பதும், “சூத்திரன்” மற்ற வருணத்தாரை தொடக்கூடாதவன்
என்பதும், இந்து மதத்தின் பழக்கவழக்கமா? அல்லவா? என்று கேட்கின்
றேன். அன்றியும், இது வகுப்பு வாதமா? அல்லவா? என்று கேட்கின்றேன். இந்த முறை ஒழிக்கப்பட வேண்டுமென்பது வகுப்பு வாதத்தை ஒழிப்பதா காதா? என்று கேட்கின்றேன், இப்படி இருக்க இந்த வகுப்பு வாதம் ஒழிக்கப் பட வேண்டும் என்கின்ற முயற்சிகளை யெல்லாம் வகுப்பு வாதம் என்று சொல்லிவிட்டு இன்று இந்நாட்டில் இருக்கின்ற இந்த வகுப்புவாதங்கள் காப்பாற்ற உறுதி கூறி காங்கிரஸ் தீர்மானம் செய்திருக்கின்றது. இதற்கென்ன
பதில் சொல்லப் போகின்றீர்கள்?
குடி அரசு - 1981 (2) 86
காங்கிரஸ் தீர்மானத்தின் பயனாய் இங்குள்ள மக்களுக்கு சம உரிமை உண்டா? மனிதத்தன்மை உண்டா? என்று யோசித்துப் பாருங்கள் என்று கேட்கின்றேன்.
பார்ப்பனர்கள் வருணாச்சிரம மகாநாடுகளில் செய்யப்படும் தீர்மானங்கள் தான் காங்கிரஸ் காரியக்கமிட்டியில் வேறு பாஷையில் செய்யப்பட்டிருக்கின்றது என்பதல்லாமல் வேறு என்ன? கவனித்துப் பார்க்
கப் போனால் வருணாச்சிரம மகாநாட்டுத் தீர்மானங்களைவிட காங்கிரஸ்
தீர்மானம் மோசமானதென்று சொல்லுவேன். ஏனெனில், வருணாச்சிரம மகாநாடுகளில் தங்கள் வகுப்பு தர்மங்களில் கவர்ன்மெண்டார் பிரவேசிக்கக் கூடாது என்று மாத்திரம்தான் சொல்லுவார்கள். ஆனால் காங்கிரஸ் தீர்மானத்தில் “வர்ணாச்சிரம தர்மங்களை வகுப்பு தர்மங்களை நாங்கள்
காப்பாற்றித் தருகின்றோம்” என்று உறுதி கூறி யிருக்கின்றார்கள்.
ஆகவே இப்போது நமது நிலை “பிச்சை போடவேண்டாம். தயவு செய்து நாயைப்பிடித்துக் கட்டு” என்பது போல்தான் இருக்கின்றது.நமக்கு சுயராஜ்யம் வேண்டியதில்லை, வகுப்பு தர்மம் காப்பாற்றப்படாமல் இருந்தால் அதுவே போதும் என்று கேட்டுக் கொள்ள வேண்டியவர்களா யிருக்கின்றோம். இவைகள் எல்லாம் திரு காந்திக்கு தெரியாத விஷயம் என்று கருதி விடாதீர்கள். அவர் சூதாட்டத்தில் இரங்கிவிட்டார். அவர் படித்ததெல்லாம் சீமையில் இருக்கும்போது சட்ட புஸ்தகமும், இந்தியா வுக்கு வந்த பிறகு டால்ஸ்ட்டாய் உபதேசமும், மற்றபடி துளசிதாஸ் இராமா யணமும், பகவத் கீதையுமேயாகும். மற்றபடி, இதைத் தவிர அவருக்கு உலக அனுபவம் போதுமானது இல்லை என்றே சொல்லுவேன். ஏனெனில் மடாதிபதிகள்போல் சிஷ்யர்களிடம்பேசுவதும், பக்தர்கள் கூட்டத்தில்
தனக்குத் தோன்றியதைப் பேசுவதுமே தவிர வேறு வழியில் உலக ஞானம் பெற அவருக்கு சந்தர்ப்பம் இருந்ததே கிடையாது. அவரிடம் தெய்வத் தன்மை இருக்கின்றது என்பவர்களுக்கு நான் இதைச் சொல்ல வரவில்லை. அவரும் ஒரு மனிதர்தான் என்று கருதி இருக்கின்றவர்களுக்கே நான் இதைச் சொல்லுகின்றேன். ஆகையால் நாம் திரு காந்தியிடம் இராமாயணத்
திற்கும் கீதைக்கும் மேற்பட்ட விஷயங்களையும், சட்டத்திற்கும் டால்ஸ் டாய் உபதேசத்திற்கும் மேல்பட்ட விஷயங்களையும் எதிர்பார்ப்பது நமது பிசகேயாகும். பார்ப்பனர்கள் ஆதரவிலிருக்கும்படியான நிலைமை அவருக்கு ஏற்பட்டு விட்டதால், பார்ப்பனீயத்திற்கு பாடுபட வேண்டிய தாகவும் ஏற்பட்டு விட்டது. ஆகவே இனி எந்தக்காரணத்தை முன்னிட்டும் திரு காந்தியிடம் நாம் சமதர்மத்தை எதிர்பார்க்கக் கருதினோமேயானால் நாம் தான் மூடர்களாய்த் தீருவோம். அவரது ஆயுள் காலம் முடியும் வரை அவரிடம் சமதர்மத்தையோ ஒற்றுமையையோ காணமுடியாது. அவர் வடநாட்டுப்பணக்காரர்களையும் தென்னாட்டுப் பார்ப்பனர்களையும் தான் மனிதராய் கருதுகின்றார். அவர்களது சாவகாசம்தான் அவருக்கு உண்டு.
87 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஏழைகள் பிழைக்கவும், தாழ்த்தப்பட்டவர்கள் உயரவும் அவருக்கு இரண்டு வழிதான் தெரியும். ஒன்று இராட்டினம் சுற்றுவது இரண்டாவது “தீண்டாமை பாராட்டுவது பாவம்” என்று வாயால் சொல்லுவது. இந்த இரண்டும்கூட
சொல்ல வேண்டி வந்துவிடும். ஆகவே சகோதரர்களே! எனக்குக்கொடுத்த பயம் தலையாய்க் கொண்டு என் மனதில் உண்மையென்று பட்டதை நான் ஒழிக்காமல் சொல்லி விட்டேன். இவை அவ்வளவையும் கலப்பற்ற உண்மையென்றோ முடிந்த முடிவு என்றோ கருதி கண் மூடித்தனமாய் ஒப்புக்கொள்ளாதீர்கள். நான் இந்த படி சொல்லுவதற்கு எனக்குப்பல காரணங்கள் இருக்கலாம். சுய நலமிருக்கலாம். பொறாமை இருக்கலாம், வெறுப்பு இருக்கலாம். ஆகையால் நீங்கள் இவற்றை ஒவ்வொன்றையும் வைத்து உங்கள் சொந்தப் பகுத்தறிவை நடுநிலை தன்மையையும் கொண்டு ஆராய்ந்து பார்த்து, பிறகு உங்களுக்குப்பட்டபடி முடிவு செய்து கொள்ளுங்கள்.
குறிப்பு:தஞ்சைமாவட்டத்தில் சுயமரியாதைப் பிரச்சாரத்தை ஓட்டி 15.07.0931 இல் மாயவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 16.077937இல் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சருக்கம்.
குடி அரசு - சொற்பொழிவு - 26.07.1931
குடி அரசு - 1981 (2) 88
வஹனலாணா ஹைனகத் அவி
மெளலானா ஷெளகத் அலி அவர்கள் முஸ்லீம்களுக்கு பிரதிநிதி யல்லவென்பதாகக் காங்கிரஸ் காரியக்கமிட்டி முடிவு செய்து விட்டது என்ப தாக உயர்திரு. காந்தியவர்கள் தமது 16-7-31 தேதி “யங் இந்தியா”
பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதிவிட்டார். இதற்கு பதிலாக மெளலானா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் மற்றொரு
பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மெளலானா ஷெளகத்அலி அவர் களை “முஸ்லீம்கள் பிரதிநிதியல்ல” வென்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்திருப்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் காங்கிரசானது யாரை:
யும் இலட்சியம் செய்யாமல் தனது போக்கில் மிகவும் தைரியத்தையும், உறுதியையும் கொண்டு விட்டதாகத் தான் சொல்ல வேண்டும். திரு. காந்தி யவர்களும் காங்கிரஸ் காரியகமிட்டியின் இந்த முடிவைப்பற்றி சிறிதும் யோசனை செய்யாமலும், காரியக்கமிட்டியைக் கண்டிக்காமலும் தமது பத்திரிகையில் விளம்பரம்படுத்தி விட்டதிலிருந்து அவரும் துணிந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது “காந்தி-இர்வின்” ஒப்பந்தம் முடிந்தவுடன் “இந்து முஸ்லீம் ஒப்பந்தம் ஏற்படாவிடில் மேலால் என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும்” என்று அவர் சொன்ன காலத்திலேயே இந்த உத்தேசத்தை வைத்துத்தான் சொல்லியிருக்க வேண்டும் என்றும், யார் யார் தனக்கு ஒத்து வரவில்லையோ அவர்களையெல்லாம் இம்மாதிரியாகச் சொல்லி ஒழித்து விடுவதுதான் தனக்குத் தெரிந்த வழியென்று அப்போதே. கருதிவிட்டார் என்றும், அந்த எண்ணத்தின் பிரதிபிம்பமே தான் அவரை: இவ்வளவு தைரியமாய் எழுதச் செய்தது என்றும் தான் நாம் கருதுகின்றோம். ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் அலி சகோதரர்கள் இருவரையும் தன்னுடன் கூடவே கூட்டிக்கொண்டு இவ்விருவரையும் தனது இரு பக்கமும் நிறுத்திக்கொண்டு அவர்களைப் புகழ்ந்து பேசி “அலி சகோதரர். களுடைய சட்டைப்பையில் நான் இருக்கிறேன். அவர்கள் தான் என்னை நடத்துகிறார்கள்” என்றெல்லாம் பேசி அவர்களுக்கு உற்சாகத்தை யூட்டி அவர்கள் மூலமாகவே காந்தி, மகாத்மா காந்தி, மகாத்மா என்றெல்லாம் சொல்லச்செய்து, இந்தியத் தலைவர் ஆன பின்பு இப்போது ஒரு வரியில்
89 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
“மெளலானா சாயபை முஸ்லீம்களின் பிரதிநிதி என்பதாக காரியக்கமிட்டி ஒப்புக் கொள்ளவில்லை” என்று துணிந்து எழுதிவிட்டார். இவரது பத்திரிக்கையான “யங் இந்தியா” உலகில் பல பாகங்களிலும் செல்லுவது டன் இந்த வாக்கியத்தை உலகத்திலுள்ள பத்திரிக்கைகள் எல்லாம் எடுத்துப் போட்டிருக்கின்றன.
எனவே திரு. காந்தி இப்படியெழுதியதின் மூலம் மெளலானாவை ஒழித்துவிடலாம் என்கின்ற அபிப்பிராய மாத்திரமல்லாமல் இந்திய
முஸ்லீம்கள் தலையிலும் கையை வைத்துவிடலாமென்கின்ற தீர்மானத் துடன் இருந்துதான் எழுதியிருக்கிறார் என்றே முடிவு செய்ய வேண்டி யிருக்கின்றது. அன்றியும், தானாக இப்படிச் சொல்லுவதற்கு பயந்து தான் “காரியக் கமிட்டி முடிவு செய்திருக்கின்றது” என்பதாக எழுதுகின்றார் என்று தான் கருத வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமலிருந்தால் உடனே திரு. காந்தியவர்கள் காரியக்கமிட்டியின் இம்மாதிரியான முடிவை கண்டித்திருப்
பார். அதுமாத்திரமல்லாமல் தனது பத்திரிகை தலையங்கத்திலும் இவ்வளவு வெளிப்படையாய் பிரசரித்திருக்கவுமாட்டார்.
நிற்க, மெளலானா ஷெளகத் அலி அவர்களை இந்திய முஸ்லீம் பிரதிநிதியல்ல வென்று தீர்மானம் செய்து விட்டால் பிறகு வட்டமேஜை மகாநாட்டில் இந்தியா முழுமைக்கும் திரு. காந்தியே பிரதிநிதி என்றாய் விடுவதோடு அவரது அபிப்பிராயத்தை எதிர்த்துப் பேசவும் ஆட்கள் இருக்கமாட்டார்கள். பிறகு அவருக்கே ஏக நாயகப் பிரதிநிதித்துவம் சித்தித்து விடும் என்கிற உள்எண்ணமே திரு. காந்தியின் சிஷ்யர்களை இப்படி முடிவு செய்ய இணங்கும்படி தூண்டி இருக்கின்றது என்றுமேதான் கருத வேண்டியிருக்கின்றது.
என்றாலும், இந்த மாதிரியான சூக்ஷிக்கு மெளலானா ஷெளகத் அலி கொடுத்த பதிலும் சரியான பதிலேயாகும். என்னவென்றால், “திரு. காந்தி இந்திய மக்களுக்கு எவ்வளவு பிரதிநிதியோ அதைவிட அதிகமான அளவு
நான் முஸ்லீம்களுக்கு பிரதிநிதி” என்று சொல்லி இருக்கின்றார். இதை நாமும் அப்படியே ஆதரிக்கின்றோம். இதற்கு ஆதாரம் என்னவெனில் இன்றையதினம் இந்தியாவில் மெளலானா ஷெளகத் அலியை தங்களுக்கு
பிரதிநிதி அல்ல என்று சொல்லுபடியான முஸ்லீம்களை ஒட்டுமொத்த
முஸ்லீம் சமூகத்தில் 1000க்கு ஒருவரையாவது கண்டுபிடிக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.
சென்னையில் சில முஸ்லீம் கனவான்கள் மைலாப்பூர் திரு. சீனிவா சய்யங்காரை தலைவர் என்று சொல்லிக் கொண்டிருந்தது போல் ஒரு சில முஸ்லீம்களால் அதுவும் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களால் திரு. காந்தி தலைவர் என்று சொல்லிக் கொள்ளப்படுவது தவிர வேறு யாரையாவது காட்டக்கூடுமா?
குடி அரசு - 1981 (2) 90
அன்றியும், இந்தியாவிலுள்ள இந்துக்கள் என்பவர்களிலும் திரு. காந்தியை தங்கள் தலைவர் என்றோ, பிரதிநிதியென்றோ சொல்லக்கூடிய வர்கள் 100க்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பதாக தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டு பார்ப்போம். விளக்கமாகப் பேச வேண்டுமானால் திரு. காந்தியின்இராமராஜியத்தையும், அதன் வருணாச்சிரமதர்மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்ற மக்களில் பார்ப்பனர்களை தவிர பார்ப்பனரல்லாதார்களில் 100க்கு ஒருவராவது இருக்கின்றார்களா? என்று பந்தயங்கட்டி கேட்கின் றோம். மேலும் பார்ப்பனரல்லாதார்களில் ஒரு குறிப்பிட்ட ஆசாமியின் பெயரை யாவது சொல்லக்கூடுமா? என்று மறுபடியும் கேட்கின்றோம்.
உண்டியல் எடுத்துக்கொண்டு பிச்சை எடுப்பவர்கள் செம்புக்கு நாமம் போட்டுக் கொண்டு மஞ்சல் துணிகட்டி “வெங்கிட்டரமண கோவிந்தா![கோவிந்தா!!” என்று கூப்பாடு போடுவது போல் தேசீயத்தின் பேரால் வாழ்க்கையை நிர்த்தாரணம் செய்து கொண்டவர்கள் காந்திக்கு ஜே! என்று சொல்லுவதும் அதைக்கேட்டுகொண்டு விளையாட்டுப் பிள்ளை
களும், வேலையில்லாத பிள்ளைகளும் மற்றும் ஓட்டுகளை எதிர்பார்த்துத்
திரியும் பெரிய ஆட்களும் கூப்பாடு போடுவதுமல்லாமல் மற்றப்படி யாருக்கு திரு. காந்தி பிரதிநிதி என்று கேட்கின்றோம்.
பார்ப்பனர்களுடைய பிரசார சாமர்த்தியத்தாலும், இல்லாமல் தீராத இயற்கை அவசியத்தாலும் யாரோ ஒருவர் சங்கராச்சாரியாகி உலக குரு ஆவதுபோல் பார்ப்பனர்களுடைய பிரசார சாமர்த்தியத்தால் திரு.காந்தி அவர்கள் இந்தியப் பிரதிநிதியாக காணப்படுகின்றார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் காரியக்கமிட்டி தீர்மானத்தை கையிலெடுத்துக் கொண்டு திரு.காந்தியவர்கள் கப்பலேறியவுடன் பார்ப்பனரல்லாத மக்கள், சுயமரியாதை உணர்ச்சியுடைய மக்கள், சமதர்மக் கவலையுள்ள மக்கள் “திரு. காந்தியவர்கள் எங்களுடைய பிரதிநிதியல்ல, அவர் வருணாச் சிரமக்காரருக்கும், மேல் ஜாதிக்காரருக்கும், முதலாளிகளுக்குந்தான் பிரதிநிதி” யென்று வட்ட மேஜை மகாநாட்டுக்கு தந்தி கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் காரியக்கமிட்டி தீர்மானத்தை நினைத்தால் சுயமரியாதைக்காரனுக்கும், சமதர்மக்காரனுக்கும் இரத்தம் கொதிக்குமென்றே சொல்லுவோம்.
ஆகவே, இந்நிலைமையில் உள்ள காங்கிரசைப்பற்றியும், திரு. காந்தியைப்பற்றியும் மெளலானா சாயபு அவர்கள் “முஸ்லீம்களுக்கு திரு.காந்தியைவிட நான் அதிகமான பிரதிநிதித்துவம் பொருந்தியவன்” என்று சொன்னதில் சிறிதும் தப்பிதமில்லை என்றே கருதுகின்றோம்.
நிற்கவும், மெளலானா சாயபு அவர்கள் மற்றும் இரண்டொரு விஷயங்களில் உண்மையை தைரியமாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றார் என்பதையும் குறிப்பிடாமலிருக்க முடியவில்லை. அதாவது “முஸ்லீம்கள்:
91 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கடைக்கு முன்னால் நின்று கொண்டு மறியல்கள் செய்யப்படுமானால் கண்டிப்பாகக் கலகங்கள் உண்டாகும்” என்றும், இந்தியாவில் ஏதாவது “இரத்தம் சிந்தும்படியான ரணகளம் ஏற்பட்டால் அதற்கு திரு.காந்தியே ஜவாப்தாரியாவார்” என்றும் எச்சரிக்கை செய்யும் முறையில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இன்றைய நிலைமையைப் பார்க்கும்போது தேசீயக் கிளர்ச்சி என்பதின் பலன் நாட்டிற்கு இந்த நிலைமையைத்தான் கொண்டு வந்து விடக்கூடும் என்றே நாமும் கருதுகின்றோம். முஸ்லீம்களுக்கும்- இந்துக்களுக்கும் மாத்திரம் தான் கலவரம் நடக்கும் என்பது மாத்திர மல்லாமல் பார்ப்பனர்களுக்கும்- பார்ப்பனரல்லாதார்க்கும், ஜாதி இந்துக்
களுக்கும் - தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கும் கூட கலவரமும், ரணகளமும் ஏற்பட்டுத் தான் தீரும் என்றே கருதுகின்றோம். யார் தோற்பார்கள், யார் ஜெயிப்பார்கள் என்கின்ற சங்கதி ஒருபுறமிருந்தாலும், நிரபராதிகள் பலர். கஷ்டமும், நஷ்டமும், தொல்லையும் அடையக்கூடும் என்பதில் சந்தேக மில்லை. ஏனெனில் மெளலானா சாயபு சொல்லியிருப்பது போல் அதாவது “காங்கிரஸ் ஆரம்பித்த காலம் முதலே அது முஸ்லீம்களிடம் விஷமத்தன மாகவே நடந்து வந்திருக்கின்றது” என்று சொல்லியிருப்பது போலவே காங்கிரஸ் ஆரம்பமான காலம் தொடங்கியே பொது ஜனங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு துரோகமாகவே நடந்து வந்திருக் கின்றது என்பதோடு காரியக்கமிட்டி தீர்மானம் என்பதில் இதை காயம் செய்யப்பட்டு விட்டது.
ஆகவே இந்த நிலையில் இருக்கும் காங்கிரசும், திரு. காந்தியும் “மெளலானா ஷெளகத் அலி முஸ்லீம்களின் பிரதிநிதியல்ல”என்று சொல்லி முடிவுகட்டி இருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
மேலும் காங்கிரசும், அதன் தலைவர்களும் எப்போதுமே தங்கள் சொற்படி தாளம் போடாத இந்துக்களையும் கூட அவர்கள் யாராயிருந் தாலும் இந்தப்படியே அதாவது அவர்கள் “இந்தியப் பிரதிநிதிகளல்ல” என்று சொல்லிவிடுவதிலும் அதிசயமொன்றுமில்லை. காரியக்கமிட்டிக்கு மாத்திரமல்லாமல், திரு.காந்தியவர்களுக்கு மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு
யார் தலைவர்களாய் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் இந்த குணம் தான்
இருந்து வந்திருக்கிறது.
உதாரணம் வேண்டுமானால் தமிழ்நாட்டிலும் ஒரு சமயம் பார்ப்பன
ரல்லாதாரில் சிலர் பார்ப்பனரல்லாதார்களுடைய உரிமையைப்பற்றிக் கேட்டவுடனேயே இங்குள்ள பார்ப்பனர்கள் காங்கிரஸ் தலைவர்கள் ஸ்தானத்தில் இருந்த காலத்தில் அடியோடு தங்களை தலைவர்களாக்கி னவர்களை யெல்லோரையுமே அதாவது திருவாளர்கள் வரதராஜலு நாயுடு, ஆரியா, கல்யாணசுந்திர முதலியார், சக்கரை முதலிய அநேகரை பெயர்களைக் குறிப்பிட்டே “இவர்களை யெல்லாம் காங்கிரசை விட்டு
குடி அரசு - 1981 (2) 92
ஒழித்தால் தான் காங்கிரஸ் பரிசுத்த மடையும்” என்று சொன்னதே போது மான உதாரணமாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார். விஷயம் இருப்பது போல் இந்தியாவைப் பொருத்தவரை இந்துக்கள் - முஸ்லீம்கள் விஷயம் இருந்து வருகிறது.
ஆதலால் இரண்டும் ஒன்றுபோலவேதான் நடைபெறுகிறது. தமிழ் நாட்டிற்கு திருவாளர்கள் சீனிவாசய்யங்காரும், ராஜகோபாலாச்சாரியுமா னால் இந்தியாவுக்கு திருவாளர்கள் மாளவியாவும் காந்தியுமாவார்கள். இதில் ஒன்றும் புதிய நடவடிக்கைகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
எனவே மெளலானா ஷெளகத் அலி அவர்கள் “முஸ்லீம் பிரதிநிதி யல்ல” என்று காரியக்கமிட்டி முடிவு செய்து அது காந்தியின் மூலம் வெளிப்பட்டிருப்பதின் யோக்கியதையைப் பற்றி சுருக்கத்தில் ஒரு வார்த் தையில் சொல்லி முடித்துவிட வேண்டுமென்றால் திரு.காந்தி தலைவர் பதவிக்கு ஏறிச் சென்ற ஏணியையே உதைத்துத் தள்ளி விட்டாரென்று தான் சொல்ல வேண்டும்.
குடி அரசு - தலையங்கம் - 26.07.4931
93 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
விருதுநகர் மகாநாடு
மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 89 தேதிகளில் திருவாளர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடத்த தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்மரமாய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம். இம் மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவை தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர் பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனாலும், இப்போது முன் நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதை விட பன்மடங்கு விசேஷமாக நடந்தேர காரியங்கள் நடந்து வருவதானது தலைவர் திருவாளர் செளந்தர பாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப்பிரயாணம் முதலிய வைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால நிலைமையும் முன்னைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப்படுவது மற்றொரு விசேஷமாகும்.
அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று. தண்ணீர். செளகரியத்திற்கு சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ் விரண்டையும் விட சுயராஜ்ஜியம் என்னும் அரசியல் கிளர்ச்சி என் பதின் இரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால் ஒரு வகையில் வெளியானதின் பயனாய் சுயமரியாதை இயக்கத்தின் அவசியத்தை, அதை
குற்றம் சொல்லிக்கொண்டு இருந்த மக்கள் முதல் யாவரும் அறிய நேர்ந்தது மூன்றாவதாகும். இப்படியாக இன்னும் பல நன்மைகள் ஏற்பட்டது முக்கிய அனுகூலங்களாகும்.
இந்த மகாநாடானது முன்னைய இரண்டு மகாநாடுகளை விட சற்று முக்கியமானதென்றே சொல்லுவோம். சுருக்கமாய்ச் சொல்லுவதானால் இம் மகாநாட்டில் இயக்கத்தின் முற்போக்கை ஒரு விதம் நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கும். வரவேற்புக் கமிட்டியார் அறிக்கைகளிலிருந்து ஏராளமான பிரதி
நிதிகள் வருவதாய் தெரிவித்துக் கொண்டிருக்கின்றதாய் தெரியவருகின்ற தானாலும் எல்லாப் பாகங்களில் இருந்தும் வாலிபர்கள் தாராளமாய் வந்து சேரவேண்டுமென்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடி அரசு - 1931 (2) 94
மற்றும் மகாநாட்டிற்கு விஜயமாகும் பிரதிநிதிகள் அவசியம் தங்கள் தங்கள் வீட்டு பெண் மக்களையும் அழைத்து வரவேண்டியது மிகவும் அவசியமென வேண்டிக் கொள்ளுகின்றோம். பெண்கள் வருவதன் மூல
மும், அவர்கள் உணர்ச்சி பெருவதன் மூலமும் தான் நமது கொள்கைகள் வீரிட்டெழ முடியுமேெயொழிய ஆண்களின் “வீர உரைகளால் மாத்திரம்” காரியங்கள் சாத்தியமாகி விடாது.
ஆதலால் பெண்மணிகளும் தாராளமாய் விஜயம் செய்ய வேண்டு மென்று ஆசைப்படுகின்றோம். பெண்மக்களுக்கு சாப்பாடும், பிரவேசமும் இலவசமென்று வரவேற்புக் கமிட்டியார் தீர்மானித்திருப்பது போற்றக் கூடியதாகும். பெண்கள் மகாநாட்டுக்கு திருமதி இந்திராணி பாலசுப்பிர மணியம் அம்மாள் அவர்களும், வாலிபர்கள் மகாநாட்டிற்கு திரு. நாராயணப் பெருமாள் M.LC. (திருவனந்தபுரம்) அவர்களும் தலைமை
வகிப்பார்கள்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931
95 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
குத்தும் ககாலை முயற்சியும்
பம்பாய் கவர்ணர் ௬டப்பாட்டார்
இவ்வாரத்தில் அரசியல் சம்பந்தமாய் குத்தும், கொலை முயற்சியும், கலகமும் நடைபெற்றிருப்பதாக பல இடங்களிலிருந்து செய்திகள் கிடைத்
திருக்கிறது.
பம்பாய் கவர்னரை பூனாவில் ஒரு வாலிபன் ஒரு புத்தகசாலையைப் பார்வையிடும் போது அவரை கொல்லக் கருதி துப்பாக்கியால் சுட்டிருக் கிறான். ஆனால் அக்கவர்னர் அதிசயமாய் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அதாவது அவரது சட்டப்பையில் இருந்த ஒரு தினக்குறிப்புப் புத்தகத்தின் மூடிப் பொத்தானின் பேரில் அக்குண்டு பட்டதால் அது உடலில் பாயாமல் சட்டைப் பையிலேயே அக்குண்டு தாங்கிவிட்டது. மற்றொரு தரம் சுட்டும் அது அவர்மீது படவில்லையாம். ஏனெனில் அவன் குறிபார்க்கும் போதே கவர்னர் அந்த வாலிபனைப் பிடிக்கப் போனதால் வாலிபனின் குறி தவறி குண்டு அவர்மேலே படாமல் போய்விட்டது. பிறகும் கவர்னரே தான் அந்த வாலிபனை எட்டிப் பிடித்தாராம்.
இந்தமாதிரி மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் “கடவுளே அந்த சட்டைப் பையிக்குள் வந்து இருந்துகொண்டு குண்டைப் பிடித்துக் கொண்:
டார்” என்றுதான் சொல்லுவார்கள். ஆனபோதிலும் இந்த கவர்னருடைய தைரியத்தையும், அவருடைய மன உறுதியையும் நாம் மிகவும் பாராட்டு கின்றோம். அவர் தப்பித்துக் கொண்டதைக் கூட நாம் அவ்வளவு பாராட்ட வில்லை. என்றைக்கிருந்தாலும் ஏதோ ஒருவகையில் செத்துத் தீரவேண்டிய அந்த கவர்னர் இந்த வாலிபன் குண்டினால் செத்திருந்தால் உலகம் ஒரு
புரம் தாழ்ந்து போய்விடாது. ஆதலால் கவர்னர் தப்பித்துக் கொள்வதும் இறந்து போவதும் ஒன்று என்றேதான் கருதுகின்றோம். ஆனால் அகிம்சை அகிம்சை என்று பல்லவி பாடுவதின் தத்துவம் என்ன ஆயிற்று என்றுதான் கேட்கின்றோம். இதுபோலவே பஞ்சாப்பிலிருந்து வந்த இரண்டு இராணுவ அதிகாரிகளையும் யாரோ ஒருவன் குத்திவிட்டு ஓடிவிட்டான் என்றும் தெரியவருகின்றது. இவர்கள் இருவர்களுங்கூட பிழைத்துக் கொண்டார். களாம். இதனாலும் நாம் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால்
குடி அரசு - 1981 (2) 96
அஹிம்சைப் போரால் விளையும் பயன் என்பதை மக்கள் அறிய இதையும் ஒரு உதாரணமாய் எடுத்துக் காட்டுகின்றோம். அபிப்பிராய பேதப்பட்டவர். களையும் தங்கள் நன்மைக்கு விரோதமாக இருப்பவர்களையும் கொல்லு வதோ கொல்ல நினைப்பதோ மனித இயற்கைதானே ஒழிய வேரில்லை. கொல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம். அதற்காகத்தான் அரசாங்கம், சட்டம், தண்டனை ஆகியவைகள் இருக்கின்றன. ஆதலால் அதிலும் ஆச்சரியப்படயிடமில்லை என்றாலும் தன் உயிருக்கும் துணிந்த ஒருவன் மற்றவனை கொல்ல நினைத்தால் அதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த உணர்ச்சியை தப்பான வழியில் கிளப்பிவிடுவது என்பது மாத்திரம் பிசகு என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோம். ஏனெனில் இச் சம்பவத்திற்கு அதாவது அவரைச் சுட்டதற்கு அச்சிறுவன் பொருப்பாளி யல்ல. மற்றபடி யார் என்றால் அவ்வுணர்ச்சி அவனுக்கு உண்டாகும்படி நடந்து கொண்டவர்களே, உண்டாவதற்கு தகுந்தபடி பிரசாரஞ் செய்தவர். களே தான் பொருப்பாளியாக வேண்டும். சுடுபட்ட கவர்னர் இதை அறிந்து அந்த வாலிபனைப் பார்த்து “இந்த முட்டாள்தனமான காரியம் செய்ய உன்னை தூண்டியவர்கள் யார்?” என்று கேட்டிருக்கிறார். எப்படியிருந்
தாலும் இனி இம்முறைகள் தான் எல்லா நிலைகளிலும் சகஜமாக இருக்கப் போகின்றது என்பது மாத்திரம் நமது உறுதி. இந்தப்படி இனிநடப்பதற் கில்லாமல் இருக்க வேண்டுமானால் உலக வாழ்க்கைப் பத்ததியானது அடியோடு திருத்தி அமைக்கப்பட வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 26.07.1931
97 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் டவுன் முனிசிபல் சங்கத்தார் முனிசிபாலிடி வரியை வழக்கப்படி ஐந்து வருடங்களுக்கொரு தடவை பரிசீலனை செய்வது போன்ற முறையில் புதியவரிவிதிக்கப்பட்டதின் காரணமாக பொதுஜனங்கள் தங்களுடைய குறைகளை சமஸ்தான தலைமை அதிகாரி யாகிய உயர்திரு ராகவையாவிடம் கூட்டமாகச் சென்று சொல்லிக்கொண்ட
தில் அவர் அளித்த பதில் திருப்தியில்லாமல் போனதின் காரணமாய் ஜனங் கள் ஆத்திரப்பட்டு, பொறுமையிழந்து, பெரிய கலவரம் விளைவித்து விட்டதாகச் செய்தி கிடைத்திருக்கின்றது. அச்செய்திகளில் கலவரத்தின் பயனாய் பலாத்காரங்களும், அடிதடிகளும், உயிர்ச்சேதங்களும், பொருள் நஷ்டமுமேற்பட்டிருப்பதாக வும் தெரிய வருகிறது.
அதிகாரிகள் கலவரத்தை யடக்க சக்தியற்றவர்களாகி அவர்களும் நிலைமை தவறி நடந்து கொண்டதாகவும், உயிருக்கு பயந்து ஓடிவிட்ட
தாகவும் தெரியவருகிறது. அதிகாரிகள் ஓடியொழிந்துகொள்ள நேர்ந்ததை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கலகம் செய்தவர்கள் வரி போடப் பட்டக் காரணத்தைக் கொண்டு கலகம் செய்தார்களென்றாலும், கலகத்தின்
தன்மையும், முக்கியமும் பார்ப்பனர் பேரிலுள்ள ஆத்திரமென்றே காணப் படுகின்றது.
அதாவது அந்த சமஸ்தானத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அவர்களால் மக்களுக்கேற்பட்டு வந்த குறைகளே கலகத்தை சுலபத்தில் ஆரம்பிக்கச் செய்து விட்டதாய்த் தெரிகிறது. மெயில் பத்திரிகையில் காணப்படும் ரிப்போர்ட்டின் படி பார்த்தால் கலகக்காரர்களில் ஒருசாரார். பார்ப்பன அதிகாரிகளை உதைக்கவும், பார்ப்பனர் வீடுகளைக் கொள்ளை
யடித்து நாசமாக்கவும், அவர்களது பெண்களை பயமுறுத்தும் வேலை யிலுமே ஈடுபட்டிருந்ததாய்த் தெரியவருகின்றது. புதுக்கோட்டை சமஸ் தானமானது வெகுகாலமாகவே தென்னிந்தியாவில் பார்ப்பன ஆதிக்கத்தில் தலைசிறந்து விளங்கி வந்திருக்கின்றது. அச்சமஸ்தானத்து பார்ப்பனர்கள் கால நிலை யறிந்து தங்களது நிலைமையைச் சரிபடுத்திக் கொண்டிருப்பார் களே யானால் இக்கலகம் இவ்வளவு கடினமான முறையில் நடைபெற்றி
குடி அரசு - 1981 (2) 98
ருக்காதென்றே சொல்லுவோம். புதுக்கோட்டை கலகத்தின் தத்துவமானது புதுக்கோட்டையுடன் நின்றுவிடுமென்றோ, பார்ப்பனர்- பார்ப்பனரல்லாதா ரென்கின்ற முறையுடன் தான் நடைபெறுமென்றோ நாம் தீர்மானித்து விடமுடியவில்லை. மற்ற பிரதேசங்களிலும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்.
கீழ் ஜாதிக்காரர் - மேல் ஜாதிக்காரர், இந்துக்கள்-முஸ்லீம்கள்-முதலாளி- தொழிலாளி, ஜமீன்தரான்-குடியானவன், காங்கிரசுக் காரன்-காங்கிரசல்லாத வன் என்பன போன்ற முறைகளில் நடைபெற்றுத் தான் தீரும். ஏனெனில் மேற்கண்ட மாறுபட்ட பெயர்களின் மூலம் ஒருவரையொருவர் அடக்கி ஆளுவதும், ஏமாற்றி வருவதும் கஷ்டப்படு கின்ற ஜனங்களுக்கு விளக்க
மாய் தெரிந்து விட்டதோடு, மக்களுக்குள் சுயமரியாதை உணர்ச்சியும் தோன்றிவிட்டது. எந்த உணர்ச்சியையும் மனிதன் அடக்கக்கூடுமானாலும், சுயமரியாதையின் உணர்ச்சியை அடக்கக் கூடுமென்பது மிகவும் சிரமமான காரியமேயாகும். ஏனெனில், மனிதர்களுக்கு உயிரைவிட சுயமரியாதையே பிரதானமென்பதாய்க் கருதுவது மனிதத்தன்மையின் பிறப்புரிமையாயிருப் பதால், அது காக்கப்படும் முறையில் கலவரங்கள் நடைபெற்றுதான் தீரும். அதை இனி எந்த அரசாங்கமோ, எந்த சுயராஜியமோ சுலபத்தில் அடக்கி விட முடியுமெனக் கருதுவது கனவாகத்தான் வந்து முடியும்.
ஆகையால், ஆங்காங்கு மக்களை ஏமாற்றியதன் மூலம் ஆதிக்கத்
தில் உள்ள மக்கள் இதை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொண்டு நடந்து கொள்ள வேண்டுமாய் விரும்புகின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 26.07.1931
99 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
முகமதுரயி பிறந்தநாள் வகாண்டாட்டம்
சகோதரர்களே!
இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் ஒரு மதசம்பந்தமான இந்த
முக்கியக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததை உண்மையிலேயே நான் ஒரு பெருமையாய்க் கருதுகின்றேன்.
ஏனெனில், என்னைப்பற்றி எல்லா மத பக்தர்களும் சொல்லும் குறை கள் உலகம் அறிந்ததேயாகும். அதாவது நான் மதங்களைக் குற்றம் சொல்லுகின்றவன் என்றும், மதமே கூடாதென்று சொல்லுகின்றவன் என்பதோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றியே கூடத் தகறாரு சொல்லுகின்றவன் என்றும் சொல்லப்படுகின்றவனாவேன்.
அப்படிப்பட்ட என்னை, உலகத்திலுள்ள மற்ற மதக்காரர்களை எல்லாம் விட அதிகமான மதபக்தி கொண்டவர்கள் என்று சொல்லப்படு கின்ற இஸ்லாம் மார்க்கத்தை அனுசரிக்கின்றவர்கள் என்பவர்களாகிய நீங்கள் கூப்பிட்டிருப்பது மிகவும் அதிசயமென்று சொல்லப்பட வேண்டும் அல்லவா?
நீங்கள் என்னைக் கூப்பிட்டது போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அவர்கள் மதசம்பந்தமான ஒரு நாயன்மாரோ, ஆழ்வாரோ பிறந்த நாள், செத்த நாள் “திருநக்ஷத்திரம்”” என்று சொல்லப்
படும் “விஷேச நாள்” கொண்டாட்டத்திற்கு ஒரு முஸ்லீமையோ, ஒரு கிறிஸ்துவனையோ சுலபத்தில் கூப்பிட்டு விடமாட்டார்கள். அது மாத்திர மல்லாமல் அவர்கள் பக்கத்தில் நீங்கள் இருக்கவும் சம்மதிக்க மாட்டார்கள். உங்களைத் தொட்டுவிட்டால் மறுபடியும் குளிக்காமல் அங்கு போக மாட்டார்கள். அவ்வளவு தூரம் போவானேன்: என்னையே கூப்பிட மாட் டார்கள். மற்றும் எந்த நாயன்மாருக்கும், எந்த ஆழ்வாருக்கும் குரு பூசை
யும், திருநக்ஷத்திரமும் நடத்துகின்றார்களோ அவர்கள் ஜாதி யாரையே கூப்பிடவோ, பக்கத்தில் வைத்து சாப்பிடவோ, தொடவோ சம்மதிக்க மாட்டார்கள்.
குடி அரசு - 1981 (2) 100
ஏனெனில், அந்தப்படி தொடாமலும், பக்கத்தில் வைத்துச் சாப் பிடாமலும் இருந்து கொண்டு, மற்றவர்களை வெறுப்பாகவும், இழிவாகவும் கருதுவதுமேதான் அவர்களது மதம் (இந்துமதம் என்று கருதிக் கொண்டி ருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தான் அநேகமாய் என்னை மதத் துரோகி என்று அழைப்பதாக நான் அறிந்து வருகின்றேன்.
பொதுவாகவே உலகத்தில் அநேகமான மக்களுக்கு “மதம்” பிரதானமென்று கற்பிக்கப்பட்டிருக்கின்றதே தவிர மதம் என்றால் என்ன?' அது எதற்கு? என்கின்ற அறிவே மதபக்தர்கள்-மதத்திற்காக பிராணனைக் கொடுக்க இருக்கின்றவர்கள் என்பவர்களிலுங்கூட ஆயிரத்தில் ஒருவருக்
கும் தெரியாதென்றே நான் தைரியமாய்ச் சொல்லுவேன். என்னைப் பற்றியே மதஞானமில்லாத மக்கள் பலவிதமாகப் பேசுவதையும், எழுது வதையும் நான் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும்தான் வரு
கின்றேன்.
அதாவது பெளத்த மதத்தைப் பற்றியும். இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அவற்றில் காணப்படும் ஏதாவது விஷயங்களைப்பற்றியும் பேசும்போது “மதமே தப்பானது, மதமே கூடாது என்று சொல்லுகின்ற சுயமரியாதைக்காரன் எப்படி இந்த மதங்களைப் பற்றி மாத்திரம் பேசலாம்?” என்பதாகச் சொல்லுகின்றார்கள். இப்படிப்பட்ட இவர்களை ஒருவித தெளிவற்றவர்களும், ஆத்திரத்தால் அறிவிழந்தவர்களும் என்று சொல்லு வதைவிட வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை.
மதத்தைப் பற்றி நான் பேச ஆரம்பித்த காலத்திலேயே நான் நன்றாய் விளக்கிவிட்டே பேசுகின்றேனேயொழிய பேசிவிட்ட பிறகு தத்துவார்த்தம் சொல்ல வருவதில்லை.
அதாவது “மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப் பிற்கு ஒரு வழிகாட்டியானக் கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது கால தேசவர்த்தமானப் படி மக்கள் செளகரியத்திற்காக திருத்தியமைக்கக்கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது” என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும் அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. அந்தப் பொருளின்மீது இருப்பதாக ஒப்புக் கொள்ளுகின்ற மதங்களிடம் எனக்கு அதிகத் தகாறாரே கிடையாது.
அப்படிப்பட்ட மதம் என்பது வேண்டியதேதான். அதாவது ஒரு பொதுசங்கமோ, ஒரு வாசகசாலையோ, ஒரு வியாபாரச் சங்கமோ, ஒரு வக்கீல் சங்கமோ, ஒரு விளையாட்டுச் சங்கமோ, ஒரு சீட்டாட்ட சபையோ என்பதாக ஒரு ஸ்தாபனமிருந்தால் அந்த ஸ்தாபனத்திற்குச் சில விதிகள் இருக்க வேண்டியது அவசியமேயாகும். அந்த விதி அந்த ஸ்தாபன மக்கள். நன்மைக்கும், ஸ்தாபனம் சரிவர நடற்தேறுவதற்கும் அனுகூலமானதாகவும்,
101 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அந்த ஸ்தாபனக்காரர்களால் ஏற்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பது போலவே கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப்
பெயர், கொள்கை என்றாலும், திட்டம் என்றாலும், மதமென்றாலும் மார்க்கமென்றாலும் ஒன்றேதான்.
நமது நாட்டில் பல பாஷைகள் வந்து கலந்து விட்டதால் கொள்கை களுக்கு மதமென்றும், சமயமென்றும், மார்க்கம் என்றும் சொல்லப்படு கின்றது என்பதாகப் பண்டிதர்கள் சொல்லுகின்றார்கள். ஆதலால் அந்த அளவில் நான் எந்த மதத்துடனும் தகறாருக்கு வரக்கூடியவனல்ல. இதில்
ஒன்றும் ஒளிமறைவோ, தத்துவார்த்தமோ இல்லை. வெளிப்படையாகவே சொல்லுகின்றேன்.
ஆனால் “மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது. அது கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது - கடவுளைக் காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாயிருப்பது-அதை உண்டாக் கினது கடவுள், அல்லது கடவுள் அவதாரம், அல்லது கடவுள் தன்மை, அல்லது கடவுள் மகன் அல்லது மனிதத் தன்மைக்குமேற்பட்ட ஒரு தெய்வீகத்தன்மை -அதில் என்ன சொல்லியிருந்தாலும் அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும் அது பயன்படாவிட்டாலும் மனிதனால் பின்பற்ற முடியாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக் கொண்டுதான் தீரவேண்டும். அதன் பேரால் ஏற்பட்ட நூல்கள் சாஸ்திரங்கள் என்பவைகளை எல்லாம் நம்பித்தானாக வேண்டும்- தனக்கு விளங்காததை யெல்லாம் நம்பித்தானாக வேண்டும்-அதில் ஒரு விஷயத்தைக் கூட நழுவவிடக்கூடாது-மாற்றவும் கூடாது-புதிய மாதிரி செளகரியத்திற்குத் தகுந்தபடி எதையும் சேர்த்துக் கொள்ளவும் கூடாது” என்பது போன்ற “நீதியையும், நிபந்தனைகளையும் கட்டளைகளையும் கொண்டதுதான் மதம்” என்று சொல்லப்படுமெதையும் நான் என்னைப் பொறுத்தவரை சிறிதும் ஒப்புக்கொள்ளாதவன் என்பதோடு அப்படிப்பட்ட மதம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும், சுதந்திரத்திற்கும், முற்போக்கிற்கும், சுயமரியாதைக்கும் விரோதமானது என்று சொல்லுவ தோடு கூட மனித சமூக நன்மையை உத்தேசித்து அவை அழிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் கருதுகின்றேன். அன்றியும் நான் எந்த மதம் என்பதைப் பற்றிப் பேசும் போதும் இந்த விஷயங்களுக்கு மாறாக நான் எப்போதும் பேசினதே கிடையாது. நான் பெளத்த மதத்தைப்
பற்றியும், இஸ்லாம் மதத்தைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் பேசும் போதெல்லாம் இந்த முடிவின் பேரிலேயே பேசுகின்றேன். இந்த உண்மைப்
படியுள்ள தாரதம்மியங்களைப் பற்றிதான் ஒரு மதத்திற்கும் மற்ற மதத்திற் கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றியும் பேசுகின்றேன். இந்த உண்மையின் பேரில்தான் எந்தமதத் தலைவர்களைப் பற்றியும் நான் பேசுகின்றேன்.
குடி அரசு - 1981 (2) 102
திரு.முகமது நபியவர்களையும் மற்றபடி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும் மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் ஆணும் பெண்ணும்! கூடிக் கருத்தரித்து பிறந்த பிள்ளையென்றும் கருதிதான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அநேகத்தை நான் புகழ்கின்றேன். அதற்காகவே அவரை:
யும் பாராட்டுகிறேன். அப்படிச் சொல்லப்படுபவைகளே அந்த மார்க்கத் திற்கு ஒரு பெருமை என்றும் நினைக்கின்றேன். பெளத்தரும் அப்படித்தான். ஆனால் மற்ற மதக்காரர்களோ தங்கள் மதத்தலைவரை ஒரு மனிதர் என்று சொன் னாலே கோபித்துக் கொள்ளுகின்றார்கள்.
கழுதையினுடையவோ, குதிரையினுடையவோ, நாயினுடையவோ வயிற்றிலிருந்து தோன்றினார் என்றாலும் ஒப்புக்கொள்வார்கள். மனிதனுக்
கும் மனுஷிக்கும் (கலந்து) பிறந்தது என்றால் அதில் கெளரவமில்லை என்றே கருதுவார்கள். மனிதத்தன்மைக்கும் மனிதன் அறிவிற்கும் மேற் பட்டதாக மக்களுக்குப் புரியாத ஏதாவது ஒன்றைச் சொல்லாமல் ஒரு மதத்தை நிர்ணயிக்க அநேக மக்கள் சம்மதிப்பதேயில்லை.
இஸ்லாம் இந்து வித்தியாசம்
நிற்க, நான் இந்து மதத்தைப் பற்றியோ இஸ்லாம் மதத்தைப்பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீகைஷ மாணவனுக்குக் கொடுத்துவிடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் பேசுவது என்பது இரண்டு மதத்தைச் சேர்ந்ததாகச் சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை யான மக்களிடை இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமானக் காரியங்களையும் அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்து வரும் பலன்களையும் பற்றித் தான் பேசுகின்றேன்.
பொதுவாகவே மதத்தின் தன்மையை இதிலிருந்துதான் நிர்ணயிக்க வேண்டுமே யொழிய ஏட்டில் என்ன இருக்கின்றது என்று பார்ப்பதில் பயனில்லை. அது போலவே அந்தந்த மதக்காரர்கள் போட்டுக் கொள்ளும் வேஷமே தான் மதம் என்றாலும் அதிலும் பயனில்லை.
அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? மக்கள் எப்படி நடத்தப் படுகின்றார்கள்? அதனால் அந்த சமூகம் என்ன பலனடைந்திருக்கின்றது? என்பது போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமேயானால் அநேக விஷயங்களில் இந்து மதத்தைவிட (கொள்கைகளைவிட) இஸ்லாம் மதமே (கொள்கைகளே) மேன்மையான தென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இஸ்லாமானவர்களிடத்தில் இந்துக்களிடம் இல்லாத பல நல்ல கொள்கைகள் இருக்கின்றன. அதனால் இந்து மதத்தில் இல்லாத மேன்மை
103 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இஸ்லாம் மதத்தில் இருப்பதாகத்தான் கருதவேண்டும். அதாவது இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம் ஒற்றுமை அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் இலக்ஷியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு - தாழ்வு இல்லை அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை.கிட்ட இருந்து சாப்பிடக்கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாத மனிதன் குளத்தில் இறங்கக்கூடாத மனிதன் கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும்.
இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங்குவதில்லை. அதற்குப் பெண்டு பிள்ளை வைப்பாட்டி கற்பிப்பதுமில்லை. அதற்குப் பூஜை நைவேத்தியம் உற்சவம் நகை துணிமணி முதலியவற்றிற்குக் கோடிக் கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை. மற்றும் அவர்களது பெண்களுக்கு சொத்துரிமை கல்யாண ரத்து விதவைமணம் ஆகியவை களும் உண்டு. அவர்களுக்குள் அன்பையும், வீரத்தையும் பார்த்து நாம் அவர்களை முறடர்கள் என்கின்றோம். அதுபோலவே இந்துக்களுக்குள். ஒருவருக்கொருவர் உள்ள துவேஷத்தையும் பயங்காளித்தனத்தையும் நாம் பார்த்து அவற்றை நாம் சாதுத்தன்மை என்று சொல்லிக்கொள்ளுகிறோம்.
ஒரு கிராமத்தில் ஒரு இஸ்லாமானவனை ஒரு இந்து அடித்தால் 100 இஸ்லா மானவர்கள் வந்து விழுந்து விடுகின்றார்கள். இதைத்தான் நாம் முறட்டுத் தனம் என்கின்றோம். ஒரு இந்துவை ஒரு இஸ்லாமானவன் அடித்தால் மற்ற இந்துக்கள் “அவன் யாரோ அடிபடுகிறான், நமக்கென்ன கவலை” யென்று சொல்லி சும்மா இருந்து விடுகிறார்கள். இல்லாவிட்டால் அடிக்குப் பயந்து கொள்ளுகிறார்கள். இதைத்தான் சாதுத்தனம் என்று பெருமை பேசிக் கொள்ளுகிறோம். அன்பும் சகோதரத்தன்மையும் இந்துவிடம் எங்கிருக் கின்றது? “ஆடு கோழி தின்னாதே” என்று சொல்லுவதில் மாத்திரம் இருக் கின்றது.மக்களை இழிவாய்க் கருதுவது பிறவியின் பேரால் தாழ்த்தி இம்சிப் பது கொடுமைப்படுத்துவது ஆகிய காரியங்களைச் செய்து கொண்டிருப்ப வன்தான் “அன்பு! அன்பு! ஜீவகாருண்யம்!” என்று பேசுகிறான். அன்பின் உண்மையை அறியவே இல்லை. இஸ்லாம் கொள்கையில் வேறு எங்கு எப்படி இருந்தாலும் சமூக வாழ்விலும், ஆண்டவன்” முன்னிலை என்பதி
லும் மனிதனை மனிதனாய்க் கருதப்படுகின்றது.
இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் “கடவுள்” முன்னிலை என்பதிலும் மனிதனை மிருகத்தைவிட, மலத்தை வாயில் கெளவிக்கொண்டு சொல்லும் மிருகத்தை விடக் கேவல மாய் மதிக்கப்படுகின்றது. இதை நாம் பிரத்தியக்ஷத்தில் காண்கின்றோம். இதைத் தான் அன்புமதம் சமத்துவமதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.
குடி அரசு - 1981 (2) 104
மதத் தத்துவ நூலை-வேதம் என்பதை இஸ்லாம் மார்க்கம் செருப்புத் தைக்கிற சக்கிலியும் மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும், பார்த்தாக வேண்டும், கேட்டாக வேண்டும் என்று சொல்லி கற்றுக் கொடுப் பதையும் பார்க்கின்றோம். இந்துமார்க்க வேதம் என்பதை ஒரே ஒரு சிறுகூட்டம் தவிர (பார்ப்பனன் தவிர) மற்றயாவரும் அவன் பிரபுவானாலும்
சரி ஏழையானாலும் சரி யோக்கியனானாலும் சரிஅயோக்கியனானாலும்
சரி ஒருவனுமே பார்க்கவும் கேட்கவும் படிக்கவும் கூடாது என்று இன்னும்
நிர்பந்தப்படுத்தி அந்தப்படியே இன்றும் நடந்து வருகின்றது. இதைத்தான் சமத்துவ நோக்கம் கொண்ட மதம் என்று இந்துக்கள் இன்றும் இன்னமும் சொல்லுகின்றார்கள். “மொண்டி முடம், கூன் குருடு ஆகியவர்களுக்கே உதவி செய்” என்று இஸ்லாம் மதம் பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது. *சோம்பேரிகளுக்கே - ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவர்க்கே உதவி செய்”என்று இந்துக்களின் கொள்கை பிரத்தியக்ஷத்தில் சொல்லுகின்றது.
இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கின்றது. இந்தியாவில் கொஞ்சகாலத்திற்கு முன் ஒரு கோடியை விட குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லீம்கள் இன்று 8 கோடி மக்களாய் சேர்ந்து இருக்கின்றார்கள். இன்றும் யாவரையும் எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ள கையைநீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கை எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்ட வனையும் உள்ளே விட மறுத்து வாசல்படியில் காவல்காக்கின்றது. தன்ன வனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.
கள் குடியைப் பற்றி வாய்த் தப்பட்டை அடிக்காத இஸ்லாம் கொள்கை முஸ்லீம்களில் 100க்கு 99 பேர்களை குடியிலிருந்து விலக்கி யிருக்கின்றது. குடிக்கக் கூடாதென்று சதா வாயில் தப்பட்டை அடித்துக் கொண்டு ஓட்டு வேண்டியபோது கள்ளுக்கடையில் நின்று மறியல் செய்யும் இந்து கொள்கையானது இந்துக்களில் 100க்கு 51 பேர்களுக்கு மேல் குடிகாரர்களாகச் செய்திருப்பதோடு இந்து கடவுளுக்கும் குடி வகைகள் வைத்து கோயில்களில் பெரிய பெரிய ஜாதியார் என்பவர்களால் நைவேத்தியம் செய்து பிரசாதமாய் சாப்பிடப்படுகின்றது.
இஸ்லாம் கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இஸ்லாமியர்கள் அதிகமாயுள்ள நாடுகள் இஸ்லாம் அரசர்களால் ஆளப்படு கின்றன. இந்து கொள்கையை வலியுறுத்துகின்ற காரணத்தாலேயே இந்துக்கள் அதிகமாகியுள்ள நாட்டை “அன்னியர்கள்'ஆளுகின்றார்கள்.
இந்தப்படியாக வெளிப்படையாய்த் தெரியும் கொள்கைகளாலேயே
இந்துக் கொள்கைகளை விட இஸ்லாம் கொள்கைகள் எவ்வளவோ மேன்மையான பலன் கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் படி நான் சொல்லுவதற்காக கோபிக்கும் சகோதரர்கள் முதலில் நான்
105 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சொல்லுவது உண்மையா? அல்லது அடியோடு பொய்யா? என்று பார்த்துப் பிறகு பேசுங்கள். பிறகு “கொள்கைக்காக உயிரை விடுங்கள்”.
ஏன் சொல்லுகிறேன்
ஆதிதிராவிடர்களை நான் “இஸ்லாம் கொள்கையைத் தழுவுங்கள்” என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவுமில்லை, சொல்வதையும் கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். ஏனெனில் “மோட்சம் அடைவதற்காக” வென்று நான் ஆதிதிராவிடர்களை: இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை, அல்லது *ஆத்மார்த்தத்திற்கோ” “கடவுளை அறிவதற்கோ” நான் அப்படிச் சொல்ல வில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது, சத்தியாக்கிரஹம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன். இனியும் சொல்லுகின்றேன்.
சட்டம் செய்வது கஷ்டம். செய்தாலும் அமுலில் வருவதும் கஷ்டம். சத்தியாக்கிரஹம் செய்வதும் கஷ்டம். செய்தாலும் வெற்றி பெறுவதும் சந்தே
கம். இவற்றால் துன்பமும், தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம்கொள்கையை ஏற்றுக் கொண்: டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆஸ்தீகனாய் இருந்தால் என்ன? நாஸ்தீகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனாலென்ன?
யாருக்கும் எவ்வித கஷ்டமும் இல்லாமல், வேண்டுமானால் எந்தவித மன மாறுதல் கூட இல்லாமல் தன்னுடைய இழிவையும் கஷ்டத்தையும் விலக்கிக் கொள்ள ஆசையும் அவசரமும்பட்ட ஒரு மனிதன்தான் மாலை 5-00 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டதாய்ச் சொல்லி 5- 30மணிக்கு “தீண்டாதவன்” என்கின்ற இழிவிலிருந்து மீண்டு தெருவில் நடக்க உரிமை பெற்று மனிதனாவதில் ஏன் மற்றவர்கள் ஆக்ஷேபிக்க வேண்டும்? என்பது எனக்கு விளங்கவில்லை. கேவலம் வயிற்றுச் சோற்றுக்
காக 100க்கு 90 மக்கள் என்னென்னமோ அவரவர்களாலேயே இழிவான குற்றமான காரியம் என்று சொல்லப்படுவதை எல்லாம் செய்கின்றார்கள். அப்படி இருக்க இதில் என்ன இழிவோ குற்றமோ இருக்கின்றது என்று கேட்கின்றேன். உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும். அதுபோது இந்த ஆதிதிராவிடர்கள் ஏற்றுக் கொண்டதும் ஒழிந்துபோகுமே தவிர அது மாத்திரம் நிலைத்து விடாது.
குடி அரசு - 1981 (2) 106
அதற்காக அதிகக் கஷ்டமும் இல்லை. ஆகையால் எது எப்படியானாலும் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது என்பது ஒரு வழியேயாகும்.
ஏன் கிறிஸ்து மதத்தைத் தழுவக்கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? என்று கேட்கலாம். கிறிஸ்துமதக் கொள்கைகள் புஸ்தகத்
தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்லவரவில்லை. பிரத்தி யட்சத்தில் பறக்கிறிஸ்துவன், பார்ப்பாரக்கிறிஸ்துவன், வேளாளக் கிறிஸ்து வன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்.
இஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம், நாயுடு முஸ்லீம், நாடார் முஸ்லீம் என இருக்கின்றதா? என்று கேட்கிறேன்.
இங்குள்ள கிறிஸ்துவ சகோதாரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாக தெரிவித்துக் கொள் கிறேன். ஆரியசமாஜம் என்பதும் ஒரு வேஷமேதான். அதுவும் பயன் அளிக்கவில்லை...
உதாரணமாக வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஆரிய சமாஜத் தீயர். களையும், கிறிஸ்துவப் புலையர்களையும் தெருவில் நடக்கவிடவில்லை. இஸ்லாமானவன் தாராளமாய் விடப்பட்டான். பாலக்காட்டிலும் அப்படியே நடந்தது. ஒரு நாள் பாலக்காட்டில் ஒரு செர்மன் என்கிற இழிவுபடுத்தப்பட்ட ஜாதியிலிருந்த தீண்டாதவன் ஒருவன் இஸ்லாமாகி தடுக்கப்பட்டத் தெரு வழியாகப் போனான்.அப்போது அவனை ஜவுளிக் கடைப் பார்ப்பனரும் வெற்றிலைக் கடை நாயரும் தெருவுக்கு வந்து நின்று பார்த்தார்கள். உடனே அங்கு இங்கிருந்த ஒரு மாப்பிள்ளை (இஸ்லாமானவன்! “எந்தடா? பன்னிக்
கூத்தச்சி மகனே, அவனெ நோக்குன்னு” என்று கேட்டான். அதாவது “என் னடா? பன்றி தேவடியா மகனே! அவனைப் பார்க்கிறாய்” என்று கேட்டான். செர்மனாயிருந்த இஸ்லாம் சிரித்துக் கொண்டே போனான். பார்ப்பனனும் நாயரும் தலைகுனிந்து கொண்டார்கள். இது பிரத்தியட்சத்தில் நடந்த சம்பவம் - சந்தேகமில்லாமல் இனியும் நடக்கக் கூடிய சம்பவம்.
ஆகவே இஸ்லாம் மார்க்கம் செய்கின்ற நன்மை இந்து மார்க்கம் செய்வதைவிட அதிகமா? இல்லையா? என்று பாருங்கள்.
ஆனால் நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாருந் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோத மான கொள்கைகளைப் பார்க்கிறேன். இந்து மார்க்கத்தில் எதை எதை
குருட்டு நம்பிக்கை மூடப்பழக்கம் பாமரத்தன்மை என்கின்றோமோ
107 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அவைபோன்ற சில நடவடிக்கை இஸ்லாம் சமூகத்திலும் பலர் செய்து வருவதைப் பார்க்கின்றோம். சமாது வணக்கம் பூஜை நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல் இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய “ஸ்தல விசேஷங்களும்” சந்தனக்கூடு
தீமிதி முதலிய உற்சவங் களும் நடைபெறுகின்றன. இவைகள் குர்ஆனில் இருக்கின்றதா? இல்லையா? என்பது கேள்வியல்ல. சமூகத்தில் பிரத்தியட் சத்தில் நடக்கின்றதா? இல்லையா? என்பது தான் கேள்வி. ஒரு சமயம் களை முளைத்தது போல் புதிதாக தோன்றினவையாகவுமிருக்கலாம். சாவகாச தோஷத்தால் ஏற்பட்ட வைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை
கள் ஒழிக்கப்பட்ட பின்பு தான் எந்த சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கை
கள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு விசேஷம், சென்ற வருஷம் ஈரோடு அல்லாசாமி பண்டிகையைப் பற்றி ஈரோடு கூட்டத்தில் நான் கண்டித்துப் பேசினேன். எனது ஈரோடு முஸ்லீம் சகோதரர்கள் அதற்கு சிறிதும் கோபித்துக் கொள்ளாமல் வெட்கப் பட்டார்கள். அதன் பயன் இந்த வருஷம் அடியோடு அந்தப்பண்டிகை அங்கு நின்றுவிட்டது எனக்கு மிக சந்தோஷம். கோபித்துக் கொண்டி ருந்தால் இந்த வருடமும் நடத்தியிருப்பார்கள். ஆனால் இந்து மார்க்கத் திலோ என்னுடைய ஆதிக்கத்தில் இருப்பதுபோல பிரத்தி யாருக்கு காணப்பட்ட சில உற்சவங்களை நிறுத்த ஏற்பாடு செய்தேன். கடைசியாக அது இந்த இரண்டு வருடமாய் என்னால் நடத்தப்படுவதாகக் காணப் பட்டு வந்ததைவிட பலமடங்கு மேலாக நடத்தப்பட்டுவிட்டது. இந்தக் கூட்டத்தார் தான் தங்களை மேலான மதக்காரர் என்றும் தேசீயவாதிகள் என்றும் பகுத்தறிவுக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளுகின்றார்கள்.
அதோடு மாத்திரமல்லாமல் எம்மீது கோபித்துக் கொண்டு பாமர மக்களைத் தூண்டி விட்டு வையும்படியும் “சாபம்” கொடுக்கும்படியும் செய்தார்கள். இதன் பயனாகவே இந்தத் தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பர் தேர்தலுக்குக்கூட ஓட்டு கிடைக்காது. அது எப்படியோ போகட்டும். உலகமெல்லாம் ஒரு கொள்கையின் கீழ்வர வேண்டுமானால் இஸ்லாம் கொள்கையும் இணங்கிவரத் தயாராயிருக்க வேண்டும். உலகம் சீர்திருத்தத்திற்கு அடிமைப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள். மனித சமூகம் அடையவேண்டிய சீர்திருத்தம் இன்னமும் எவ்வளவோ இருக்கின்றது என்பது உறுதி.
மனிதன் காலதேசவர்த்தமானத்திற்கு கட்டுப்பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோ கூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்ப தைக் கொண்டு சொல்லுகின்றேன். வழி என்பது அடிக்கடி மாறக்கூடியதே
யாகும். கால்நடை வழி, ஆடு, கழுதை, குதிரை மூலம் செல்லும் வழி, கட்டை
குடி அரசு - 1981 (2) 108
வண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமானவழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்கு தகுந்ததுபோல் வழி திருத்தப் படவேண்டும். அதுபோலவே மனித வாழ்க்கை வழியும்
காலத்தின் கோலமாய் தேசத்தின் தன்மையாய் சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆகவேண்டும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.மாறுதலுக்கு இடம்கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.
உதாரணமாக இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துக் கொண்டாலும், துருக்கி இஸ்லாம் சமூகத்தின் நடவடிக்கையும், ஆப்கானிஸ்தான் சமூக நடவடிக்கையும், இந்தியா இஸ்லாம் சமூக நடவடிக்கையும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவிலேயே ஈரோட்டுக்கும், தஞ்சைக்கும், சாத்தான் குளத்திற்குமே அனேக வித்தியாசம் காணப்படுகின்றது. இவைகள் மூன்றும் ஒன்றுபடும்போது யாராவது இருவரோ அல்லது மூன்றுபேரும் ஆளுக்குக் கொஞ்சமோ தங்கள் பழக்க வழக்கங்களை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். நான் சொல்லும் மாற்றமெல்லாம் முக்கியமாய் நடை உடை பாவனையைப் பொருத்ததேயாகும். மனமாற்றத் தைப் பற்றி இப்போது சொல்ல வரவில்லை. அவை அவரவர்கள் சொந்த சொத்து. மற்றவர்களுக்குத் துன்பமோ தொல்லையோ இல்லாத வழியில் எவ்வித அபிப்பிராயத்தையும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. அறிவு
பெருக்கமும் அதனால் மனமாறுதலும் சுபாவமேயாகும்.
ஆகவே சகோதரர்களே! நான் சொன்னவை எனது சொந்த அபிப் பிராயம். என் சொந்த அனுபவ வாயிலாகக் கண்டது என்பவைகள் என்று
தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆதலால் இதையே முழு உண்மையென்று கருதி விடாமல் உங்கள் அறிவு அநுபவம் ஆகியவைகளைக் கொண்டு முடிவுபெற்று உங்கள் இஷ்டப்படி நடக்க உரிமையுடையவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
குறிப்பு:28.07637ஆம்நாள் சாத்தான்குளத்தில் (திருநெல்வேலிமாவட்டம்/ நடைபெற்ற முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டத்தில்தலைமையேற்று ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 02.08.1931
109 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
P .
சிக்கணமா? வரி குறைப்பா?
உணவுப் பொருள்களின் விலை சுமார் 30 வருஷத்திற்குமுன் இருந்தது போலவும், சிலவற்றிற்கு அதைவிட மலிவாகவும் குறைந்து போய் சர்க்காரார் வரிகட்டுவதற்கு மார்க்கமில்லாமல் குடியானவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிகக்கஷ்டம் ஏற்பட்டு மக்கள் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பொதுஜனத் தலைவர்கள் என்பவர்களும், தேசீயத் தலைவர்களென்பவர்களும், தேசீய ஸ்தாபனம் என்பவைகளும்
சிறிதும் ஈவு, இரக்கம் யோக்கியப் பொறுப்பு இன்றி உத்தியோகங்கள். பெறவும், பெரும் பெரும் உத்தியோகங்களை சிருஷ்டிக்கவும் முயற்சிகள் செய்வதிலும், அவற்றிற்காகப் போட்டி போடுவதிலும் காலத்தைக் கழித்துக் கொண்டு வருவது இந்திய தேசத்திற்கே பெரிய மானக்கேடானதும், குடி களுக்கு அதிகக் கஷ்டம் கொடுக்கக் கூடியதுமான காரியமுமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
இந்தக் கொடுமையையும், அக்கிரமங்களையும் பொதுஜனங்கள் ஒருவாறு உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த சர்க்காராரும், ஜனத் தலைவர் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும், பொது ஜனங்களை ஏமாற்ற சிக்கனம்-சிக்கனமென்ற பல்லவியைப் பாடிக்கொண்டு, ஒரு சிக்கன நாடகத்தை ஆரம்பித்து, பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட முயற்சித்து வருகின்றார்கள்.
இதுவரை நடந்து வந்த எல்லாப் பித்தலாட்டங்களையும் விட இந்தச் சிக்கன நாடகப் பித்தலாட்டமானது மிகவும் மோசமான பித்தலாட்டம் என்றே சொல்லுவோம்.
ஏனெனில், சர்க்காரார் ஆங்காங்கு சிக்கனம் செய்வதற்காக ஏற்பாடு செய்யும் கமிட்டிக்கு பெரிதும் பெரும் பெரும் சம்பளம் வாங்கிப் பிழைக்கும் உத்தியோகஸ்தர்களையே நியமித்து இருக்கின்றார்கள். அவர்கள் சிக்கனத்தின் பேரால் கூடிக்கூடிப் பேசிவிட்டு 100-க்கு 3ரூ. 4ரூ. 6ரூ. குறைக்கலாம் என்று சொல்லிவிட்டு, பாக்கி போறாதததற்கு புதிய
குடி அரசு - 1981 (2) 110
வரியைப் போடவேண்டியது தான் என்னும் முடிவுக்கு அனுகூலமாய் இருக்கப் போகின்றார்கள் என்பதில் நமக்குச் சந்தேகமே இல்லை.
இப்பொழுது தேசம் இருக்கும் நிலைமையில் முதலில் சிக்கனக் கமிட்டி ஏற்படுத்துவதைவிட வரிகொடுப்போரின் நிலைமையை நன்றாய் விசாரித்தறிந்து, அவர்களது தேவைக்குப் போக மீதி எவ்வளவு வரி கொடுக்கக்கூடும் என்பதைக் கண்டறிந்து வரியைக் குறைக்க வேண்டியதே முதல் வேலையாகும். பிறகு அந்த வரிவசூல் கணக்கைப் பார்த்து நிர்வாகச் செலவை ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் இரண்டாவது வேலையாக இருக்க வேண்டும். ஏனெனில் நிலவரி கொடுக்க சக்தி இல்லாமல் மக்கள். திண்டாடுகின்றார்கள்.
ஆனால், காங்கிரசும், தேசீயமும், ஜனப்பிரதிநிதித்துவமும் ஏற்பட்ட
நாள் முதல் முதலில் செலவை நிர்மாணித்துக் கொண்டு பிறகு அதற்குத்
தகுந்தபடி வரிபோடப்படுகின்றது. அதாவது செருப்புக்குத் தகுந்தபடி காலை வளர்க்கப்படுகின்றது. இதற்கு இராஜரீகம் என்றோ, நிர்வாகமென்றோ சொல்லுவதை விட (இராஜரீகத்தின் பேரால் அடிக்கப்படும்) பகற்கொள்ளை. என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கொள்ளை நாளாவட்டத்தில் ஜனப் பிரதிநிதிகள் என்பவர்கள் சம்மதத்தின் பேரில் போடப்பட்டே வந்திருப் பதால் பொது ஜனங்களும் இந்தக் கஷ்டங்களை உணராமல் முட்டாள். தனமாக வைத்த பாரத்தையெல்லாம் சுமந்து கொண்டே வந்திருக்கின் றார்கள்.
உதாரணமாகக் காங்கிரசு ஏற்படுவதற்குமுன் இந்த நாட்டு அதாவது இந்தியாவின் வரியெல்லாம் வெரும் ஐம்பது, அறுபது கோடி ரூபாயாக இருந்ததானது இப்போது 150160 கோடி ரூபாய்க்கு மேலாகப் போய்விட்டது. இதனால் காங்கிரசு ஏற்படுவதற்கு முன் அன்னக்காவடிகளாய் பிச்சைக்காரக் குடும்பமாய் இருந்தவர்கள் மாதம் 1-க்கு 500, 1000, 4000, 5000 ரூபாய் வீதம் சம்பளம் பெறும்படியானவர்களாக யானார்களே யொழிய பொதுமக்கள். நிலைமை கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்பவர்கள் குடும்ப நிலைமை
சிறிதும் உயர்த்தப்பட்டதாகத் தெரியவில்லை.
உழுது பயிர் செய்கின்றவனுடைய குடும்பத்திற்கு எவ்வளவு தேவையோ அதைவிட 10 மடங்கு முதல் 100 மடங்குவரை அதிகமாக நிர்வாக அதிகாரிகள், சிப்பந்திகள் என்கின்றவர்களுக்குத் தேவை ஏற்பட்டு அதற்குத் தக்கவிதமாக நிர்வாகச் செலவு அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதுபோலவே நிர்வாக உத்தியோகங்களும் அதிகப்படுத்தப்பட்டு வந்து விட்டது.
இந்திய மக்களின் மொத்த சராசரிவரும்படி ஆள் ஒன்றுக்கு நாள். ஒன்றுக்கு 0-1-7 என்று கணக்குக் கண்டுபிடித்த பிறகும் பொது ஜன
111 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சிப்பந்திகளுக்குக் கொள்ளை கொள்ளையாய் அதாவது, நாள் ஒன்றுக்கு 1- 8-0 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை அள்ளிக் கொடுப்பதென்றால் இது எவ்வளவு கொடுங்கோன்மையான ஆக்ஷி என்பதையும், அயோக்கியத் தனமான ஜனப்பிரதிநிதித்துவம் என்பதையும் நாம் எடுத்து காட்ட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
நாட்டின் நலத்திற்குப் படித்தவர்கள் என்பவர்கள் எப்பொழுது முதல் ஜனப்பிரதிநிதியாகக் கூடிய அக்கிரம நிலைமை ஏற்பட்டதோ அன்று முதலே பாட்டாளிகள் பணம் கொள்ளைபோக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலைமையில் இனி இந்திய மக்கள் இவ்வளவு வரிகொடுப்ப தென்பது கண்டிப்பாய் முடியவே முடியாது. பகல் கொள்ளைக்குச் சமமான சுயராஜியப் புரட்டில் மக்கள் முட்டாள்தனமாகச் சிக்குண்டு வரிக்கஷ்டம் அனுபவிப்பதை விட வரிக் கொடுமையிலிருந்து தப்புவதற்கு முயற்சிப்பது
தான் முதன்மையான வேலையாய்க் கருத வேண்டியிருக்கிறது.
ஆகவே, இனி கண்டிப்பாகப் படித்த கனவான்கள்-உத்தியோகத் திற்கு ஆசைப்படும் நபர்கள் ஜனப்பிரதிநிதிகளாவதை விடப் பாடுபடும் குடியானவர்களே பிரதிநிதிகளாகத் தகுந்த முயற்சி செய்ய வேண்டியதுதான் தேசீய வேலையாய்ச் செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த நிலைமை அடையாத இராஜரீகம் மக்களுக்கு இனி பெருத்த கஷ்டமாகத்தான்
முடியும்.
நிற்க இப்போதைய சிக்கனக் கமிட்டிகள் சென்னை, பம்பாய் முதலிய மாகாணங்களில் அந்தந்த மாகாண நிர்வாகத்திற்கு வசூலாகும் வரிப் பணத்தைக்கொண்டு சரிசெய்யும்படி ஏற்பாடு செய்யவே நியமிக்கப் பட்டும் அவர்களாலும் வரவு செலவு சரிக்கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாக தெரிய வருகின்றது. இதனால் அவர்கள் சிறிதும் நாணையமாய், யோக்கியமாய் வேலைச் செய்யவில்லை என்று தைரியமாய்ச் சொல்லுவோம்.
ஏனெனில், உத்தியோகங்களை குறைக்கும் வகையில் அவர்கள்.
சிறிதும் கவலை செலுத்தவே இல்லை. இப்போது சம்பளத்தைக் குறைப்பதை விட அனாவசிய உத்தியோகங்களைக் குறைத்தால் நிர்வாகத்
திற்கு குறைவு படும் துகை சுலபத்தில் மீதியாகிவிடும். பிறகு சம்பளத்தைக் குறைத்தால் வரிப்பளுவை தாராளமாய்க் குறைத்து விடலாம்.
உத்தியோகங்களை குறைக்கும் விஷயத்தில் முதலாவது யாதொருக் கஷ்டமும் இல்லாமல் மந்திரிகளையும், நிர்வாகசபை அங்கத்தினர்களை'
யும், இப்போது இருப்பதில் பகுதி ஆக்கி விடலாம். ஏனெனில் இவர்கள். தங்களை ஜனப்பிரதிநிதிகளே யொழிய, சர்க்காரார் உத்தியோகஸ்தர்கள் அல்லவென்று சொல்லிக் கொள்ளுபவர்கள்.
குடி அரசு - 1981 (2) 112
ரெவினியூ போர்டு ஆபீசை அடியோடு எடுத்துவிடலாம்.
சிவில் இலாகாவிலோ ஹைகோர்ட் ஜட்ஜுகளில் பகுதியை குறைத்து விடலாம்.
சப் ஜட்ஜுகளையும், முன்சீபுகளையும் மூன்றில் இரண்டு பாகம் குறைத்து விடலாம். இல்லாவிட்டாலும் பகுதியைக் குறைத்துவிடுவதில் எவ்வித குந்தகமும் வராது. அதுபோலவே ரெவினியூ இலாகாவில் டெபுட்டி கலக்டர்கள் என்கின்ற உத்தியோகத்தையே அடியோடு எடுத்து விடலாம்.
டெபுட்டி கலக்டர் உத்தியோகம் வெரும் தபாலாபீசு போலவேதான் இருந்து வருகின்றது. இவர்களுக்கு ஆதியில் இருந்த வேலைகள் எல்லாம் குறைந்தும், சில அடியோடு எடுபட்டும் போய்விட்டன.
1. இன்கம்டாக்ஸ் வேலை இல்லை.
2. ஸ்தல ஸ்தாபன மேல் பார்வை வேலை இல்லை.
3. ரெவின்யூ வேலை மிகமிகக்குறைந்து விட்டது. தாசில்தார் இடம் இருந்த மேஜிஸ்ட்ரேட் வேலை எடுபட்டு போனதால், அவரே எல்லா வேலையும் பார்க்கிறார்.
4. பெஞ்சு கோர்ட்டுகள் ஏற்பட்டுவிட்டதால் கிரிமினல் வேலையும், அப்பீல் வேலையும் 100-க்கு 80பாகம் குறைந்து விட்டது. மீதியிருப்பதற்
கும் இப்போது தாசில்தாருக்கு முதல் வகுப்பு மேஜிஸ்ட்ரேட் பவர் இருப்ப
தால் அவர் பார்த்துக் கொள்ளக்கூடும்.
இன்னும் மற்ற இலாகாக்கள் வேலையும், அதாவது சிவாஜிநாமா என்குரோச்மெண்டு முதலிய வேலைகள் கீழ் அதிகாரிகள் மூலமே முடிவு செய்யப்பட்டு கடைசி உத்திரவுக்குத்தான் டெபுட்டி கலக்டர் ஆபீசு முத்திரை போட்டு ஜில்லா கலக்டருக்கு அனுப்பப்படுகின்றது. டெபுட்டி கலக்ட் டருக்கு என்று யாதொரு அசல் (original) வேலையும் கிடையாது. ஆகவே இந்த உத்தியோகத்தை எடுத்து விட்டு கலக்டருக்கு இன்னமும் ஒரு பெர்ச னல் அசிஸ்டெண்ட் அதுவும் ஒரு தாசில்தார் யோக்கியதையில் உள்ளவ
ராய் வைத்து விட்டால் இதன் மூலம் அதாவது டெபுட்டிகலக்டர்கள் எடுத்து விடுவதும் அவர்கள் ஆபீசு எடுத்து விடுவதும் ஆகிய வகையில் வருஷம். 1-க்கு 3500000 முப்பத்தி ஐந்து லக்ஷ ரூபாய் மீதியாகக்கூடும்.
பொது ஜனங்களுக்கும் இந்த இலாகாவுக்கு என்று கொடுக்கப்படும்
லஞ்சம், சப்ளை வக்கீல் பீசு, பிச்சைக்காசு முதலிய செலவு தொல்லைகள்
ஒழியும்.
112 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
போலீசு
இதுபோலவே போலீசு இலாகாவிலும், டிப்டி சூப்ரெண்டு என்கின்ற ஒரு சிறிதும் உபயோகமும், பயனுமற்ற உத்தியோகம் எடுபட்டு விடத் தகுந்ததாகும். அதற்கும் யாதொரு அசல் வேலையும் கிடையாது.
1.போலீசுகாரர்..
2. ஏட்டு.
3. சப் இன்ஸ்பெக்டர்.
4. சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.
5. டிப்டி சூப்ரெண்டு. 6.ஜில்லா சூப்ரெண்டு.
7. டிப்டி இன்ஸ்பெக்டர் ஜனரல்.
8. இன்ஸ்பெக்டர் ஜனரல்.
9. கவர்ன்மெண்ட் (போலீசுபோர்ட்போலியோநிர்வாகசபை மெம்பர்.
இந்த மாதிரி ஒவ்வொரு இலாகாவுக்கு ஒன்பது படிகள் இருக்கின் றன. இதை கவனித்துப் பார்த்தால் நாளைக்கே டிப்டி சூப்ரெண்டுகளை: எடுத்து விட்டாலும் எவ்வித ஆபத்தும் வந்து விடாது. இதுவும் அநேகமாய் ஒரு தபாலாபீசே யொழியே வேறில்லை. ஆகவே இதை
எடுப்பதின் மூலம் இந்த இலாகாவிலும் வருஷம் ஒன்றுக்கு சுமார் பத்து லக்ஷ ரூபாயுக்கு குறையாமல் மிகுதிப்படுத்தலாம். இப்படியே கலால் இலாகா முதலிய அநேக இலாகாக்களில் இலாகா ஒன்றுக்கு ஒருபடியை மாத்திரம் எடுத்து அதை மேல் கீழ்படிகளுக்கு பங்கிட்டு அமைத்து விட்டால் கோடிக்கணக்கான ரூபாய்கள் மீதப் படுத்தப்பட்டு வரிசெலுத்து வோருக்கு உதவியும், நன்மையும் செய்யலாம். முக்கியமாக கல்வி இலாகாவும் மிகுதியும் திருத்தி அமைப்பதின் மூலம் எவ்வளவோ பணத்தை
மீதம் செய்து கல்வியை இப்போதையைவிடப் பல மடங்கு அதிகமான நன்மையும் பயனும் படக்கூடியதாகச் செய்யலாம். கல்வி அதிகாரிகளுக்
குக் கொடுக்கும் சம்பளம் கொள்ளை கொள்ளை என்றே சொல்லவேண்டும். அதிகாரிகள் எண்ணிக்கையும் அதிகம். அது போலவே உபாத்தியாயர்கள். சம்பளம் இரட்டிப்புக் கொள்ளை என்றுதான் சொல்லுவோம்.
அவசியமான கீழ்தரப் படிப்புச் சொல்லிக்கொடுக்கும் உபாத்தியா யருக்கு 15, 20, 25 ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, மத்திய தரப்படிப்பு, மேல்தரப் படிப்பு, கலாசாலைப் படிப்பு என்பவற்றிற்கு 70, 80 முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பது என்றால் இது தீவத்திக் கொள்ளையா? அல்லவா? என்று கேட்கின்றோம்.
உபாத்தியாயர்களுக்கு இந்தச் சம்பளம் கொடுப்பதால் பிள்ளை: களின் பெற்றோர்களிடம் அதிகச் சம்பளம் வாங்க வேண்டியிருக்கிறது. அதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடிவதில்லை.
குடி அரசு - 1981 (2) 14
இப்படி எல்லாம் இருந்தும், இன்று பி.ஏ. எல்.டி. பாசு செய்தவன், உபாத்தியாயருக்குத் தகுதியானவன், 40 ரூபாய் சம்பளத்திற்கும், எம்.ஏ பாசு செய்தவன் 35 ரூபாய் சம்பளத்திற்கும் வரக் கெஞ்சுகின்றான். இப்படியிருக்க இவர்களுக்கு 100, 200, 500, 1000 என்பது எவ்வளவு அக்கிரமமானதும் மக்களைப் படிக்கவிடாமல் தடுப்பதுமானதுமான காரியம் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் சர்க்காரார்நிர்வாக அதிகாரிகளுக்கு
மாதம் 1000 ரூபாய் சம்பளத்திற்கு மேல் போகக்கூடாது என்று சுயமரியாதை மகாநாடு தீர்மானித்துக்கூட இப்போது அதிகம் என்று தோன்றும்படியாக நாட்டின் நிலைமை அதாவது, உணவுப் பொருள்கள், ஆடைப்பொருள்கள் விலை மிகவும் மலிந்து விட்டது. ஆகவே சம்பளத் திட்டத்தில் மனிதன் தேவையை நிர்ணயிக்கும்போது பொது ஜனங்களின் நிலைமை அதாவது
100க்கு 75பேர்கள் இருக்கும் நிலைமை அனுபவிக்கும் செளகரிய நிலைமை ஆகியவைகளைப் பார்த்தேதான் நிர்வாகஸ்தர்களை நிர்ணயித்து சம்பளத்
திட்டம் போடப்பட வேண்டுமே தவிர கனவு காண்கின்ற நிலைமையை யுத்தேசித்து இந்திய மக்களில் 1000க்கு ஒருவன் கூட அனுபவிக்கச் சாத்திய மில்லாத நிலைமைப்படி சம்பளம் போடுவது என்பது யோக்கியமான இராஜரீகமாகாது..
கடைசியாக ஸ்தலஸ்தாபனங்களிலும், ஜனங்கள் வரிகொடுக்கச் சக்தி இல்லாமல் கஷ்டப்படுகின்றார்கள். ஸ்தலஸ்தாபனப் பணமெல்லாம் சிப்பந்திகளும், கன்றாக்டர்களுமே கொள்ளை கொண்டு கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி முதலிய காரியங்களுக்குப் பணம் போறாமல் திண்டாட வேண்டி இருக்கின்றது. அவைகள் செய்ய வேண்டிய அளவும் செய்ய முடியாமல் இருக்கின்றன.
ஆகவே இந்தப்படி வரியும் பளுவாகவும், சரியான பலனும் இல்லா மலும் போனதற்குக் காரணம் அந்த ஸ்தாபனங்கள் “பொதுஜனப் பிரதி நிதிகள்” என்பவர்கள் கைக்கு வந்ததேயாகும்.
அவர்களுக்குக் கண்டிப்பாய் பொறுப்பே கிடையாது. 100க்கு 90பேர்கள் கொள்ளையடிப்பவர்களும், கூட்டுக்கொள்ளைக்காரருமேயா வார்கள். சிலர் அனுபவ ஞானமற்றவர்களும், அன்னியர் கை ஆயுதங் களுமாயிருப்பவர்களுமாவார்கள்.
இவர்களால் ஏற்படும் வீண்செலவு, தா்ஷணியச் செலவு ஆகியவை களைக் கழித்துப் பார்த்தாலே 100க்கு 25 வீதம் வரியையும் குறைத்து நல்ல வேலையையும் செய்யலாம். தனிக் கொள்ளையும், கூட்டுக்கொள்ளையும் எடுபட்டால் 100 க்கு 50 வீதம் வரி குறைக்கலாம். ஆகவே ஸ்தல ஸ்தாபன தற்கால சுயாக்ஷி முறையை எடுத்துவிட்டு, நிர்வாக அதிகாரி ஒருவரை:
15 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஒவ்வொரு ஸ்தல ஸ்தாபனத்திற்கும் போட்டு, வேண்டுமானால் அவர்களுக்கு ஆலோசனை சபை ஏற்படுத்தி நிர்வாக முறையை மாற்றி.
னால் அதிலும் எவ்வளவோ பணம் மீதியாகி மக்களுக்குப் பலன் அதிக முண்டாகும். இந்தக் காரியங்கள் செய்ய வெள்ளைக்காரர்கள் முட்டுக் கட்டையாக இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. இந்தியர்கள். இந்தியப் பிரதிநிதிகள், இந்திய தேசீயவாதிகள், இந்திய பூரண சுயேச்சை வாதிகள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் உண்மையானவர்களாக
வும், யோக்கியமானவர்களாகவும் இருந்தாலுமே போதும். பிறகு வெள்ளைக் காரர்களைப் பார்த்து நாம் “போடு கரணம்” என்றால் அவர்கள் “எண்ணிக் கொள் போடுகின்றேன்” என்று சொல்லுவார்கள். இப்படிக்கில்
லாமல் இப்பொழுது சிக்கனம், சிக்கனம் என்றுபேசுவதெல்லாம் நமது படித்த
மக்கள், “தேசீய” மக்கள் கொள்ளையடிப்பதைக் காப்பாற்றவும், வெள்ளைக்காரன் மேல் மாத்திரம் பழி சொல்லி தப்பித்துக் கொள்ளவும்
செய்யும் சூகஷியே தவிர வேறில்லை.
ஆகவே ஒவ்வொரு மாகாணங்களிலும் அடுத்த சட்டசபை கூடும் கூட்டங்களில் “சர்க்காரார் நிர்வாகத்தில் ஒரு வெள்ளைக்கார நிர்வாக சபை மெம்பரையும், ஒரு இந்திய நிர்வாக சபை மெம்பரையும், 2 மந்திரிகளையும் தேவையில்லை” என்று தீர்மானம் கொண்டு வருவதுடன், “மீதி இருக்கும்
நிர்வாக மெம்பர் சம்பளமும், மந்திரி சம்பளமும் தாராளமாய் குறைக்கப்பட வேண்டும்” என்றும் தீர்மானங்களும் கொண்டு வந்தார்களேயானால் பொதுஜனப் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ள அருகதையாவார்கள். பிறகு மற்ற பெரிய சம்பளக்காரர்கள் இந்த வருஷத்திலேயே 100க்கு 50 வீதம் தானாகவே குறைத்துக் கொள்ள வருவார்கள். அதில்லாமல் மற்ற சம்பளங்களில் ஒரு காசு குறைத்தாலும் ஒரு உத்தியோகம் எடுத்தாலும் அது வஞ்சகமும், வஞ்சனையுமாகவுமே கருதப்படும்.
ஏனெனில், கீழ்தர சம்பளக்காரர்கள் தங்களுக்கு சம்பளம் போத வில்லை என்று சொல்லுவதின் காரணமே இதர சிப்பந்திகள், நிர்வாக அதி காரிகள் ஆகியவர்கள் சம்பளங்களைப் பார்த்தே யொழிய “சாப்பாட்டுக்குப் போதவில்லை, துணிக்குப் போத வில்லையென்றல்ல” என்பதைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதை முடிக் கின்றோம்.
மற்றபடி நிர்வாக முறையையும், சம்பளத் திட்டத்தையும் சர்க்காரார்
நிலவரித் திட்டத்தையும் பற்றி மற்றொரு சமயம் நமது அபிப்பிராயத்தை வெளியிடுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 02.08.1931
குடி அரசு - 1981 (2) 16
சித்தோடு சீர்திருத்த ௫ங்கம்
தலைவரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!!!
இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரிகூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும் அதைக் கொண்டாடினால் மோக்ஷம் அடையலாம் என்றும் பிரசங்கம் செய்யக் கூட்டுவார்கள். ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ள வனை கப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும்.
இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலைவரைக் கண்டு பிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும். தலைவர் திரு.வி.எஸ்.செங் கோட்டையா அவர்கள் பெரும் செல்வவான், பொதுஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர், அநேக நல்ல பொதுக்காரியங் களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மதசம்மந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வரு பவர். ஆதலால் அவரை இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களை பாராட்ட வேண்டியதே. எனது உபன்யாசம் பயன்படு மானால் தலைவரால் சீர்திருத்தத்துறைக்கு அநேக லாபம் ஏற்படும். அவர்கள் என்னை குரு வென்றும் மற்றும் பிரமாதமாய் புகழ்ந்து பேசினார். நான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை. நானும் அவரும் மற்றும் இந்த ஊர்காரர்களும் ஒன்றேயாவோம். 30, 40 வருஷங்களாகவே தாய் பிள்ளை கள்போல் நெருங்கி பழகினவர்கள். ஒரே துறையில் வியாபாரம் செய்து வந்தவர்கள். அநேகர் எனக்கு வரவு செலவுகாரர்களாய் இருந்தவர்கள். அக்கிராசனர் வியாபாரத் துறையில் மேலோங்கி விட்டார். நான் வேறு துறையில் இறங்கிவிட்டேன். இவ்வளவுதான் வித்தியாசம். தலைவரும். இந்தத் துறையில் இறங்கியிருந்தால் அபாரமான காரியங்களை சாதித்து இருப்பார். ஆதலால் அவரைவிட நான் ஒன்றும் சிறந்தவனல்ல. அவர். போன்றவர்கள் இவ்வித உபன்யாசங்களுக்குத் தலைவராகக் கிடைத்து மனமாறுதல் அடைந்தால் நாட்டில் எவ்வளவோ திருத்துப்பாடு ஏற்படும். தவிரவும் வயதில் மூத்தவன் என்கின்ற காரணத்திற்காக மரியாதை செய்வது
117 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
என்கின்ற மூடப்பழக்க வழக்கத்தை ஒழிப்பது சீர்திருத்தத்தில் பட்டது என்று தலைவர் திரு.செங்கோட்டையா அவர்கள் கருதாததால் தன்னை வயதில் சிறியவன் என்று பல தடவை சொல்லிவிட்டார். அது சரியல்ல. அறிவுள்ளவர்களும், அரும்பெரும் காரியங்களை தன்னலமற்று தியாகபுத்தியுடன் செய்கின்றவர்களும்தான் பெரியவர்களே யொழிய, வெரும் வயதைப் பார்த்து, நரையைப் பார்த்து நடுக்கத்தைப் பார்த்து பெரியவர்கள் என்று மயங்குவது தவறுதலாகும். ஆகையால் இன்று நமக்குக்கிடைத்த தலைவர் சரியான தலைவரேயாவர். பெரியவரேயாவர். மற்றும் எனக்கு பல வரவேற்புப் பத்திரங்கள் கொடுத்தீர்கள். அதில் நீங்கள் எனது கொள்கைகளை நன்றாய் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், அந்தக் கொள்கைகளுக்கு என்னை ஊக்கமாய் உழைக்கும்படி எதிர்பார்க் கின்றீர்கள் - தூண்டுகின்றீர்கள் என்றுமேதான் கருதி அவற்றை நன்றியறி தலுடன் ஏற்றுக் கொள்ளுகின்றேன்.
சீர்திருத்தம்
தவிர “சீர்திருத்தம்” என்பதைப்பற்றிப் பேசுவதில் யாருக்கு சீர்திருத்
தம்? எப்படிப்பட்ட சீர்திருத்தம்? எதற்காக சீர்திருத்தம்? எது சீர்திருத்தம்? அவற்றை எப்படி நிர்ணயிப்பது? அதற்கு முட்டுக்கட்டை எது? பிறகு அவற்றை எப்படி அமுலுக்கு கொண்டு வருவது? என்பவை போன்ற விஷயங்கள் சீர்திருத்தத் தலைப்பில் பேசவேண்டிய முக்கிய விஷயங் களாகும். அப்படிப் பார்த்தால் சீர்திருத்தம் இப்போது பேசுவது இந்திய மக்களுக்குத்தான் என்றும் அறிவுக்குட்பட்ட சீர்திருத்தம் என்றும் மனிதத் தன்மையும் சுதந்திரமும் அடைவதற்கு என்றும் உலக அக்கம்பக்கங்களை நோக்கி பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து உறுதியான மனதுடன் பழைமை யுடன் போராடி சீர்திருத்தமடைய வேண்டுமென்றும் தான் சொல்லக்கூடும். எவ்வித சீர்திருத்தத்திற்கும் பல விரோதிகள் உண்டு. அவை பழைமை, முன்னோர் வாக்கு, மகான் வாக்கு, வேதத்தின் கட்டளை, சாஸ்திரசம்மதம், வெகுநாளாய் நடந்துவரும் பழக்கவழக்கம், நம்பியே ஒப்புக் கொண்டாக வேண்டியது என்பவை போன்ற நிர்பந்தம் முதலியவைகள் எல்லாம்
சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டையும் விரோதமானவைகளுமாகும்.
தன்னை சீர்திருத்தக்காரன் என்று சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் மேற்கண்ட அவ்வளவையும் தங்கள் அறிவால் பிரத்தியக்ஷக்கண்களால் அலசிப்பார்க்க உரிமையும், தைரியமும் உடையவர்களாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு “மற்றதெல்லாம் சரி” ஆனால் “மதத்தைப்
பற்றி பேசலாமா? கடவுளைப் பற்றி பேசலாமா? தேசீயத்தைப் பற்றி பேசலாமா? புராணங்களைப் பற்றி பேசலாமா? மகான்களைப் பற்றி பேசலாமா? மகான்கள் அபிப்பிராயத்தைப் பற்றி பேசலாமா? நமக்கு அவ்வளவு யோக்கியதை உண்டா” என்பது போன்ற பிடிவாதகுணங்களும்,
குடி அரசு - 1981 (2) 118
தன்னம்பிக்கையற்ற குணங்களும், “ஆனால்” களும் உடையவர்களால் ஒரு நாளும் எவ்வித சீர்திருத்தமும் கைகூடாது. ஆதலால் சீர்திருத்தக்காரருக்கு உரமும், தனது அறிவில் நம்பிக்கையும் பரீக்ஷிக்கும் தாராளதன்மையும் வேண்டும். இது சமயம் உலகமெல்லாம் சீர்திருத்தமடைந்து விட்டது. நாம் மாத்திரம் யாரைத் தொடலாம்? யார் வீட்டில் சாப்பிடலாம்? எதைச் சாப்பிட லாம்? என்பது போன்றவைகளில் இப்பொழுது, இந்த இருபதாவது நூற்றாண்டில் கவனித்து வருகின்றோம்.
உலக மக்கள் ஆகாயத்தில் பறக்கின்றார்கள். நம் மகான்கள் பிணங் கள்போல் மக்கள் தோள்களின் மீது சுமந்து செல்லப்படுகின்றார்கள். மற்ற நாட்டு மக்கள் புதிய, புதிய இயந்திரங்களை உற்பத்தி செய்து சீர்திருத்த மடைகின்றார்கள். நமது நாட்டு மக்கள் நம் பாட்டன் காலத்தில் இருந்த சாதனத்தை தேடிப் பிடித்து அட்டாலியில் இருந்து இறக்கி அமுலுக்குக் கொண்டு வருகின்றார்கள்.
முன்னேற்றம், சீர்திருத்தம் என்கின்ற துறையே நமது நாட்டு மக்களுக்குத் தடைப்படுத்தப் பட்டு விட்டது. அந்தப் பக்கம் திரும்புவ தென்றால் “உயிரை விடுகின்றேன்” என்கின்றார்கள். ஏனெனில் இன்றைய இந்திய நிலைமை நமது பாட்டன் காலத்து நிலைமை ஆகிய எல்லாம் சோம்பேரிகள் வயிற்றுப்பிழைப்புக்கும் ஒருவர் பிழைக்க ஒருவர் உழைக்
கும் முறைமைக்கும் அனுகூலமாய் கற்பிக்கப்பட்டிருப்பதால் அதிலிருந்து மாறுவதற்கு சோம்பேரிகளும்,ஊரார் உழைப்பில் சாப்பிடுகின்றவர்களும் ஒருநாளும் ஒப்பமாட்டார்கள். ஆதலால் நம் நாட்டுமக்களே நம் முன்னேற் நத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்கள். இந்தக்கூட்டம் ஒரு நாளும் இந்தியாவை-இந்து மக்களை முன்னேறவிடவே விடாது. சுதந்திரமாய் வாழவும் சம்மதிக்க மாட்டார்கள். அதனாலேயேதான் அவர்கள் பாமர மக்கள் கல்வி இல்லாமல் இருக்கும்படிக்கும், அவர்களுக்கு செல்வம் சேராமல் இருக்கும்படிக்கும் பல தடைகளை மதத்தின் பெயரால், கடவுள் பெயரால், தேசீயத்தின் பெயரால் ஏற்படுத்தி 100-க்கு 90 மக்களை 100-க்கு
10 மக்கள் ஏமாற்றி வருகின்றார்கள். இந்த சூகி மாறுதலடைய வேண்டு மானால் கடவுள், மதம், தெய்வீகம், தேசீயம் முதலாகிய எல்லா புரட்டு களையும் வெளியாக்கி உடைத்தெரிய வேண்டும்.
அதற்கு மக்கள் சம்மதிப்பதென்பது மிக்க கஷ்டமான காரியமாகும். ஏனெனில் இவை சம்பந்தமான மூட நம்பிக்கையும் பிடிவாதமும் நம் மக்களது இரத்தத்தில் ஊறிப்போய்விட்டது. அதுமாத்திரமல்லாமல் இந்த மூன்று துறைகளின் பிரசாரத்தையும், வயிற்றுப்பிழைப்பாய்க் கொண்ட மக்கள் நாளுக்கு நாள் வளர்த்து கொண்டு வருகின்றார்கள். அவர்களது தொல்லை அடியோடு ஒழிந்தாலல்லாது சீர்திருத்தமோ, முன்னேற்றமோ சுலபமான காரியமல்ல.
119 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உதாரணமாக மதம் என்கின்ற சாக்கின் பெயரால் அரைக்காசு அசலாகும் ஒரு இட்டலியை 6 காசுக்கு விற்கும் ஒரு பார்ப்பானிடம் சென்று ஜாதி வித்தியாசம் தப்பு, பழக்கம் வழக்கம் தப்பு என்றால் ஒப்புக் கொள்ளு வானா? என்று பாருங்கள். அன்றியும் அவனது மதம், ஜாதி, உயர்வு தாழ்வு பாகுபாடு ஒழிவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பானா? அல்லது இருக்க மாட்டானா? என்று பாருங்கள். அன்றியும் மதப்பிரசாரம் செய்யவும் வெளி கிளம்பமாட்டானா? என்றும் பாருங்கள். இதுபோலவே கடவுள், தேசீயம் என்பதின் பயனாய் வயிரு வளர்க்கும் சோம்பேரிகள் அப்புரட்டை வெளி யாக்க சம்மதிப்பார்களா? என்றும் பார்ப்பதோடு அவர்கள் கடவுள் பிரசாரம், தேசீய பிரசாரம் செய்ய மாட்டார்களா? என்றும் யோசித்துப் பாருங்கள்.
இந்த முட்டுக்கட்டையும் எதிர்பிரசாரக் கூட்டமும் இயற்கையே யானாலும் அவை யொழிந்தாக வேண்டும். நமது மக்கள் படித்தவர்கள் என்றாலும், பாமரமக்கள் என்றாலும் இவ்விஷயங்களில் ஒரே மாதிரி மூடர்களாகவே இருக்கின்றார்கள்.
உதாரணமாக ஒரு “வடுகனோ” ஒரு '“கைக்கோளனோ” ஒரு *செட்டியோ' என்பவன் எவ்வளவுதான் சுத்தமாய் இருந்து கொண்டு. ஒருபடி அரிசிக்கு 30 இட்டலி போட்டு இட்டலி 1-க்கு கால் அணாவுக்கு விற்றாலும் நமது அறிவாளிகள் என்பவர்கள் வாங்குவதில்லை. ஆனால் பார்ப்பனன் என்கின்ற ஒருவன் எவ்வளவு அழுக்குத் துணியுடனும் சொரி சிரங்குடனும், வேற்வை நாற்றத்துடனும், வெள்ளைப் படையுடனுமிருந் தாலும் ஒரு படிக்கு 60 இட்டலி வீதம் போட்டாலும் இட்டலி ஒன்று 0-0-6 பை வீதம் முன் பணம் கொடுத்து “சாமி சாமி” என்று “சொக்கவாசல் பிரசாதம்” போல் கேட்டு வாங்கிச் சாப்பிடத் தயாராயிருக்கின்றோம். இது பாமர மக்களிடம் மாத்திரம் இருப்பதாக நான் சொல்ல வரவில்லை. பண்டிதர்களிடமும், நாகரீக செல்வவான்களிடமுமே இந்த குணத்தை நான் பார்க்கின்றேன்.
ஆகவே சீர்திருத்தத்திற்கு யார் முட்டுக்கட்டை என்று பாருங்கள். இதுபோலவே கடவுள் விஷயத்திலும், கடவுள் என்பதை மனிதன் தனது அக்கிரமங்களுக்கு பரிகாரம் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை: இம்சித்து தப்பித்துக் கொள்வதற்கும், ஏமாற்றுவதற்கும், தான் மற்ற மக்களை. விட அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி அதனால் அடைந்த பயனை நிலை நிறுத்திக் கொள்ள கடவுளை ஒரு சாக்காய் வைத்து அதற்குக் கோவில் கட்டவும், கும்பாபிஷேகம் செய்யவும், விளக்குப்போடவும், அதன் தலையில் பால், நெய், தயிர், பஞ்சாமிர்தம், தேன் ஆகிய வஸ்துக் களைக் கொட்டிப் பாழாக்கவும், அதை ஆதாரமாய்க் கொண்டு இந்தக்
காரியம் செய்து வயிர் பிழைப்பதையே ஒரு தொழிலாய்க் கொண்டு அநேக சோம்பேரிகள் பிழைக்கவுமான காரியத்தில் அமர்ந்திருக்கும் கூட்டத்தார்,
கடவுள் புரட்டை வெளியாக்க சம்மதிப்பார்களா? மேலும் முட்டுக்
குடி அரசு - 1981 (2) 120
கட்டையாய் இருக்க மாட்டார்களா? மற்றும் கடவுள் பிரசாரமும் செய்ய மாட்டார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
இந்தப் புரட்டில் ஏமாறுகின்றவர்களும், இதற்கு அனுகூலமாய் இருப்பவர்களும் எல்லோரும் முழு மூட மக்கள் என்றே சொல்லி விடலாமா? என்றும் பாருங்கள்.
அப்படியும் இல்லையே. நல்ல சாமர்த்தியக்காரர்கள், வெகுதந்திர மாய்ப் பணம் சம்பாதிப்பவர்கள், ஜாலவித்தைபோல் கெட்டிக்காரத்தனம் செய்து மற்ற மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கும் யுக்திசாலிகள் ஆகிய மக்களே இவ்வளவு புத்தினுட்பத்துடனும், தந்திரத்துடனும், கஷ்டத்துடனும் எத்தனையோ மக்கள் வயிரெறிய - எறிய அதைக்கொஞ்சமும் சட்டை செய்யாமல் கல்மனதுடனும், பசியுடன் குழந்தைகளும், பெண்களும், மொண்டி முடங்களும், கிழடுகளும் பசியால் பதரப் பதர அதை சற்றும்
லட்சியம் செய்யாத உலுத்த சிகாமணிகளும் ஆயிரம் ஆயிரமாய், லட்சம் லட்சமாய் இம்மாதிரிகடவுள் புரட்டு காரியங்களில் செலவு செய்து பாழாக்குவதென்றால் இதை முட்டாள்தனமென்றும் அறியாத்தனமென்றும் சுலபத்தில் அசட்டுத்தனம் என்றும் சொல்லிவிட முடியுமா? என்று யோசித்
துப் பாருங்கள். ஆகவே இந்த மக்கள் கடவுள் புரட்டை வெளியாக்க முட்டுக் கட்டையாயிருக்கமாட்டார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
மற்றும் இந்த மாதிரி ஆட்களின் காரியங்களால் பிழைக்கவிருக்கும் கோயிலைக் காத்துப் பிழைக்கும் மக்கள் கடவுள் பிரசாரம் செய்ய மாட்டார் களா? என்று யோசித்துப்பாருங்கள்.
இதுபோலவே தேசீயமென்பதும், ஏழைகளுக்குத் துன்பம் விளை: வித்து வருவதும் குடியானவர்களுக்கு தொல்லை விளைவித்து வருவதும், தொழிலாளிகளுக்கும், சரீரத்தால் பாடுபடுகின்றவர்களுக்கும் அரைபட்டினி யையே அளித்துவருவதும் சோம்பேறிகள் மூன்றுவேஷ்டி யுடன் வாழவும் சரீரத்தில் வேர்வை ஏற்படாமல் மெலுக்காக வெள்ளை வேஷ்டியுடன் திரியவும், பதவி ஓட்டுக்கும், உத்தியோகத்திற்கும் அலையும் கூட்டத்தார் இத்தேசீயத்தை நம்பியே முன்னுக்கு வரவேண்டுமென்று கருதி யிருக்கும் கூட்டத்தார், கண்மூடித்தனமாய் வியாபாரத்திற்கு முன்முதல் போடுவது போல் தேசீய அர்ச்சகர்களுக்கு-தரகர்களுக்கு அள்ளி அளித்துக் கொண் டிருக்கும்போது தேசீயப்புரட்டை வெளியாக்குவது சுலபமா? அல்லது சாத்தியமா? என்றும் யோசித்துப்பாருங்கள். இவர்கள் முட்டுக் கட்டையாயி ருக்கமாட்டார்களா? என்றும் யோசித்துப் பாருங்கள். அது மாத்திர மல்லாமல் ஒரு கூட்டம் சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பிரசாரமும் செய்ய மாட்டார்களா? என்றும் கருதிப்பாருங்கள்.
ஆகவே எந்தப் புரட்டையொழிக்க வேண்டுமானாலும் அதனால் லாபமடைகின்றவர்கள் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டார்கள். பேசிப்பேசி
121 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
எழுதியெழுதி இந்தக்கூட்டத்தார்களால் வசவும் தொல்லையும் பட்டுப்பட்டு பிறகு ஏதாவது சிறிது கண் விழிப்பை உண்டாக்க முடியுமே யொழிய மற்றபடி உண்மை சீர்திருத்தம் என்பது திடீரென்றாகக்கூடிய சுலபமான காரியமல்ல.
ஆனபோதிலும் விடாமுயற்சியுடன் சுயநலப்பற்றற்ற வாலிபர்களும், நம்பிக்கையுள்ள பெரியவர்களும் பாடுபட்டால் சீர்திருத்தம் சீக்கிரம் அடைய முடியும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் சீர்திருத்தப் பக்கம் திரும்பி விட்டது. இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரி காசம் செய்கின்றது. ஆதலால் தானாகவே சீர்திருத்தத்திற்கு பல நற்குறிகள் காணப்படுகின்றன. நான் உங்களைக் கேட்பதெல்லாம் அதைத் தடுக்க வராதீர்கள் என்பதேயாகும். சீர்திருத்தக் காரியங்களில் வேறு காரியத்தைப் போட்டு குழப்பாதீர்கள். சீர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன்வாருங்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறிதும் வித்தியாச
மில்லாமல் ஒன்று போலாக்குங்கள். பிறகு உங்களால் என்ன காரியமாகாது என்று நினைக்கிறீர்கள்? “சுயராஜ்யம்” “பரராஜ்யம்” என்பதெல்லாம் உங்கள் காலடியில் தானாகவே வந்துவிடும். அதில்லாமல் வெறும்கூப்பாடு உண்மைப் பயனளிக்காது. இந்த ஊரில் சுயராஜ்யக்காரர் 100க்கு 75 பேர்கள் இருப்பதாகக் கத்தலாம், கதர் கட்டலாம், கொடி பிடிக்கலாம், காந்திக்குல்லாய் போடலாம், தீண்டாமை விலக்குவதுதான் சுயராஜ்யத்தின் முதல் கொள்கை: என்று சொல்லலாம், மகாத்மாவுக்கு ஜே! என்று கத்தலாம், “சுயமரியாதை இயக்கம் தேசீயத்திற்கு விறோதம்” என்றும் சொல்லலாம். ஆனால் இந்த ஊர் தண்ணீர் கிணற்றில் ஒரு பறையன் வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர். மொள்ள ஒரு நான்குபெயர்கள் சம்மதிப்பார்களா? தண்ணீர் மொண்ட வனை உதைக்காமல் இருப்பார்களா? பாருங்கள். சுயராஜ்யம் என்பது வந்தால் மாத்திரம் இந்த ஊர் ஜனங்களுக்குப் புத்தி மாறிவிடுமா? யோசித்துப்பாருங்கள்.
ஆகவே ஒருவன் “கங்காதரா மாண்டாயோ?” வென்றால் எல்லாரும் விபரம் தெரியாமல் அழுகாதீர்கள். இந்த பலக்குறைவேதான் சீர்திருத்தத்
திற்கு முட்டுக்கட்டை. ஆகையால் கவனித்து உங்களுக்குத்தோன்றுகிறபடி நடவுங்கள். நான் சொன்னதை யோசித்து ஆராய்ந்து பார்க்காமல் நம்பி விடாதீர்கள்.
குறிப்பு: 02.08.1931 அன்று ஆடிப்பெருக்கைக் கருத்தில் கொண்டு, ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் செங்குந்தர் சாவடியில் சித்தோடு சீர்திருத்தச் சங்கத்தார்
ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 09.08.1931
குடி அரசு - 1981 (2) 122
ஈகோட்மல் திரு. முகமதுநயி பிறந்தநாள்
கொண்டாட்டம்
சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண்: டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படி யிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத்
திலும் இதேமாதிரிகொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேக ருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப் பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட
நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையி லேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். என்பதும் நியாயத்தை ஒத்துக்கொண்டு அதன்படி உடனே நடப்பவர்கள் என்பதும் இதிலிருந்து ஒருவாறு உதாரணமாய் விளங்குகிறது. ஆனால் இன்னும் அநேக விஷயங்களில் திருத்துப்பாடு ஆகவேண்டி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். முஸ்லீம் சீர்திருத்தத் தலைவர்கள் இதை
வலியுறுத்திக் கொண்டே வருகின்றார்கள். கூண்டு திருவிழா முதலிய வற்றையும் நிறுத்தி விடுங்கள். இதனால் எல்லாம் இஸ்லாம் கொள்கைகள் கெட்டுப்போகாது. இவை இருந்தால் தான் பரிகாசத்திற்கிடமானதாகும். இந்த முக்கியமான நாள் என்பதில் வேலூர் மெளல்வி சாயபு அவர்கள்.
குர்ஆனின் மேன்மையையும் திரு. முகமது நபி அவர்களின் உபதேசத்
தின் பெருமையையும் பற்றி சொன்னார்கள். என்னால் அந்தப்படி சொல்ல முடியாது. ஏனெனில் நான் அவற்றை படித்துப் பார்த்தவனல்ல. அந்த வேலைக்கு நான் போவதுமில்லை. நான் அதற்கு அருகனுமல்ல. அப்படி
122 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஏதாவது நான் படித்து அதைப்பற்றி இங்கு பேசுவது என்பதும் அதிகப் பிரசங்கித்தனமேயாகும்.ஏனெனில் பெரிய பெரிய மெளல்விகள் இருக்கும். போது அவர்கள் முன் நான் என்னதான் படித்தாலும் என்ன பேச முடியும்? அன்றியும் புஸ்தகத்தில் இருப்பதை விட பிரத்தியக்ஷத்தில் உள்ளதைப்
பற்றிப் பேசுவதே பலளளிக்கக்கூடும். நான் இந்த சந்தர்ப்பத்தை எதற்கு உபயோகித்துக் கொள்ளகூடுமென்றால் மக்களிடம் பிரத்தியக்ஷத்தில் காணும் விஷயங்களைப் பற்றியும் இன்னமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற விஷயத்தைப்பற்றியும் பேசுவதும் பயன்படுவதாகும் என்று கருதுகின்றேன். திரு.நபி அவர்களின் இவ்வளவு அருமையான உபதேசம் என்பவற்றில் உலக மக்கள் எல்லாம் பயன்அடையும்படி செய்ய என்ன என்ன செய்யவேண்டும் என்பதற்கு ஆகவே நீங்களும் இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளப்பார்க்க வேண்டும் என்றே கருதுகிறேன்.
செட்டி முடுக்கா? சரக்கு முடுக்கா?
இஸ்லாம் மார்க்கம் “மக்களுக்கு உபதேசிப்பதிலும் வேதவாக்கி யங்களிலும் மேன்மையானதாய் இருக்கின்றது” என்கின்ற திருப்தியானது மனிதசமூகத்திற்கு எல்லாப் பயனையும் அளித்துவிடாது. ஆனால் அதன் தத்துவத்திற்கொப்ப காரியத்தில் அதன் பயனை உலகத்தில் மேன்மையுறச்
செய்து மக்களுக்கு நல்ல வழிகாட்டியாகி உலகமக்களை ஒன்றுபடுத்தவும் அனைவரையும் சகோதரத்தன்மையுடனும் இருக்கவும் பகுத்தறிவுடனும், சுயமரியாதையுடனும், சுதந்திரத்துடன் வாழவும் செய்யவேண்டும். எந்தக் கொள்கைக்காரனும் புஸ்தகத்தில் இருப்பதைக்கொண்டு தங்கள் முன்னோர்.
கள், பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் கொண்டு இனி உலகத்தை ஏய்க்க முடியாது. உலகம் பகுத்தறிவுக்கு அடிமையாகி எதையும் பிரத் தியக்ஷ அனுபவத்தைக் கொண்டு பரீக்ஷித்து சரிபார்க்க வந்துவிட்டது. அதற்கு துணிந்தும் விட்டது. செட்டி முடுக்கு செல்லாது. சரக்கு முடுக்காய்
இருந் தால்தான் இனி செலாவணியாகும். “என் சரக்கை பரீக்ஷிக்கலாமா?” என்கின்ற அடக்குமுறை இனிப்பலிக்காது. “அவர் ஒஸ்தியென்று சொன்
னார்.” “இவர் ஒஸ்தியென்று சொன்னார்” “ஆண்டவன் சொன்னான்” என்ப தெல்லாம் அனுபவத்திற்கு நிற்காவிட்டால் காரியத்தில் நடந்து காட்டா விட்டால் இனி மதிப்புப்பெற முடியாது. ஆதலால் எந்தச்சரக்கின் யோக்கி யதையும் கையில் வாங்கிப்பார்த்துதான் மதிக்கவேண்டியதாகும். அந்த முறையில் இஸ்லாம் கொள்கை என்பதும் முஸ்லீம் மக்களின் நடத்தையைக் கொண்டும் அவர்களது பிரத்தியட்சப் பயனைப் கொண்டும் தான் மதிக்கப்
படமுடியும்..
உலகம் சிரிக்காதா?
இந்துக்கள் தேரிழுப்பதைப் பார்த்து முஸ்லீம்கள் பரிகாசம் செய்து விட்டு முஸ்லீம்கள் கூண்டுகட்டி சுமந்து கொண்டு கொம்பு, தப்பட்டை,
குடி அரசு - 1981 (2) 124.
மேளம், பாண்டு, பாணம் வேடிக்கைசெய்து கொண்டு தெருவில் போய்க் கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்கமாட்டாதா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இந்துக்கள் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போய் பணம். செலவழித்துவிட்டு “பாவம் துலைந்துவிட்டது” என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லீம்கள் சிறித்துவிட்டு முஸ்லீம்கள் நாகூருக்கும், முத்துப் பேட்டைக்கும், மக்காவுக்கும் பணத்தை செலவு செய்து கொண்டு போய் விட்டு வந்து தங்கள் “பாவம் எல்லாம் துலைந்து விட்டது” என்று கருதிக் கொண்டு புதுக்கணக்குப்போட வந்தார்களானால் மற்றவர்கள் சிறிக்க மாட்டார்களா? என்று நினைக்க வேண்டும். மக்கள் மார்க்கத்தைக் காப் பாற்றுவதென்றால் கொள்கைகளை பகுத்தறிவுக்கு இணங்கி இருக்கும்படி ஜாக்கிரதையாய் பார்த்து பயன்படுத்தவேண்டும். “தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விறோதமாய் சொல்லி இருக்கமாட்டார்கள்” என்று கருதி அவற்றை தன் இஷ்டப்படி அருத்தம் செய்து கொண்டு பிடிவாதமாய் இருப்பது மூட நம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூட நம்பிக்கையின் பய னாய் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதின்
கருத்தையும், உண்மை யையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.
பகுத்தறிவு
நமக்குப் பகுத்தறிவையும் நடுநிலைமையையும் எதிலும் பயன் படுத்த உறுதியும், துணிவும் இருந்தால்தான் உண்மையைக் கண்டு பிடிக்கவே முடியும். நாம் அறிவை உபயோகப்படுத்தாமல் நபிகள் வாக்கியத்திற்கு புரோகிதர்கள் சொல்லுகின்றபடி தப்பர்த்தம் செய்து கொண்டு “இதுதான் நபிகள் சொன்னது” என்று சொன்னால் நபிகளுக்கு மரியாதை செய்ததாகுமா? நமது சொந்தக்கண்ணை பரிசுத்தப்படுத்திப் பரீட்சித்துப்பார்க்க வேண்டும். சாளேசரம் இருந்தால் சரியாய்த் தெரியாது. பக்கப்பார்வையாய் இருந்தாலும் சரியாய்த் தெரியாது. இரண்டுக்கும் தகுந்தபடி தூரத்தை சரிபடுத்தி நல்ல கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டும். மஞ்சள் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால் மஞ்சளாகத்தான் தெரியும்.
சிகப்பு சிகப்பாகவும், பச்சை பச்சையாகவுந்தான் தெரியும். நல்ல சுத்தமான எந்தவித நிறமும் இல்லாத கண்ணாடிகொண்டு பார்க்கவேண்டும். அது போலவே தைரியமான பகுத்தறிவுடன் சுத்தமான நடுநிலைமை மனதுடன் எதையும் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தங்களுக்கு தெரிந்த தப்பிதங்களை மூடி வைத்திருந்தால் கடைசியாக ரிபேர் செய்யமுடியாத அளவு மோசமானதாகி விடும். நீங்கள் பார்க்கின்ற கண்ணும், நீங்கள் செய்
கின்ற அருத்தமும், நீங்கள் அறிந்த மாதிரியும் யுக்திக்கும், அனுபவத்திற்கும் பொறுத்திப் பாராமல் எல்லாம் சரியானதாகத்தான் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களைப்போன்ற மற்றவர்கள் எப்படி நினைத்தார். கள்? நினைக்கிறார்கள் என்று பாருங்கள்.
125 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மற்றவர்கள் மதிப்பது
நபி அவர்கள் உபதேசங்களை துருக்கியர் எப்படி மதிக்கின்றார்கள்? எப்படி அர்த்தம் செய்கின்றார்கள்? அவர்கள் என்ன பலன் அடைகின்றார்.
கள்? என்பவைபோல உலகத்தின் முஸ்லீம்களின் நடப்பு முழுவதையும், அமுலையும், பலனையும் நன்றாய் கவனித்துப் பார்க்க வேண்டும். உங்கள். “எதிரி” மதத்தை (கொள்கைகளை! பரிசோதிப்பதுபோல் எதிரிஆதாரத்தை எந்தெந்த வழியில் பரிசோதித்து நியாயம் அநியாயம் சொல்லுவோமோ அந்த நோக்கத்துடன், அந்த வேகத்துடன் உங்கள் கொள்கைகள் என்று உங்களுக் குப்புரோகிதர்களால் போதிக்கப்பட்டு நீங்கள் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கவேண்டும். கண்ட உண்மையை வீரத்துடன் வெளியிட்டு குற்றமிருப்பின் திருத்தவேண்டும். மனிதன் முடிவுபெற்ற முற்போக்கானவன் என்று யாரும் கருதிவிடக்கூடாது. உலகமும் முழு முற்போக்கை அடைந்து விட்டதாகக் கருதிவிடாதீர்கள். திருத்தம் அவசியமானால் திருத்தியாக வேண்டும். திருத்தம் சரியென்று பட்ட வழியில் மனம் திரும்ப பயமோ வெட்கமோ அடையக்கூடாது.
இந்தியாவும் அப்படித்தான்
நபி அவர்கள் தோன்றிய காலத்தில் அரேபியாதேசம் எப்படி இருந்த தென்று மெளல்வீ சாயபு அவர்கள் சொன்னார்களோ அப்படியேதான் இன்ன மும் இந்தியா-இந்து கொள்கைகள் இருந்து வருகின்றது. அரேபியர் களிடத்தில் பெண் குழந்தை பிறந்தால் துக்கப்பட்டு கொல்லுகின்ற வழக்கம் இருந்ததாக மெளல்வி சாயபு சொன்னார்கள். இந்துக்களிடத்திலும் பெண்: குழந்தை பிறந்தால் துக்கப்படும் வழக்கம் இன்னும் இருக்கின்றது. சமீப காலம் வரை பெண்களை - பெரிய பெரிய பெண்களை புருஷன் இறந்துபோனால் பக்கத்தில் உயிருடன் வைத்து நெருப்புக் கொளுத்தும் வழக்கம் இருந்து வந்தது. இன்றும் பெண்களை அதைவிடக் கேவலமாய் விதவை என்று சொல்லி சகுனத்தடையாகப் பாவித்து கொடுமைப்படுத்தும் முறை இருந்துதான் வருகின்றது. அரேபியர் பல கடவுள்களை வணங்கின
தாகச் சொன்னார்கள். அதுபோலவே இன்றும் இந்துக்கள் ஒவ்வொருவரும் பல கோடிக்கணக்கான கடவுள்களை உருவத்துடன் மாத்திரமல்லாமல் பெண்டு,பிள்ளை வைப்பாட்டி ஆடு மாடு குதிரையானை எலி பெருச்சாளி மயில் கெருடன் பாம்புவாகிய உருவங்களுடன் வணங்குகின்றார்கள்.இவை யெல்லாம் கீழ் மக்கள் என்று சொல்லுகின்றவர்களிடம்தான் இருக்கின்றது என்று நினைத்து விடாதீர்கள். மேல்மக்கள் என்று மதத்தின்பேரால் முடிவு கட்டப்பட்ட மக்களிடமே இருக்கின்றது. ஆதலால் திரு.மகமதுநபி அவர்கள் தோன்றுவதற்கு முன் அரேபியா பாலைவனம் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் இருந்ததோ அதுபோலவேதான் இன்றைய வரையில் இந்தியாவின் இந்து சமூகம் இருந்து வருகின்றது. இந்த
குடி அரசு - 1981 (2) 126
லட்சணத்தில் இதை எடுத்துச் சொன்னால் இந்துக்களுக்கு வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்தமாதிரியான ஒரு மதசம்பந்தமான முக்கிய நாள் என்பதற்கு உங்களைப் போல் இந்துக்கள் என்னைக் கூப்பிட
வும் மாட்டார்கள். நான் ஏதாவது சொன்னால் பொறுக்கவும் மாட்டார்கள். என்னை வைவதையே அவர்கள் மதப்பிரசாரமாய் கருதுவார்கள். ஆனால் இஸ்லாம் கொள்கை என்பது எவ்வளவு பெருமையாய் எவ்வளவு சகோதரத் தன்மையாய் யாரையும் எந்தவித அபிப்பிராயக்காரனையும் கூப்பிடவும் அவர்கள் சொல்லும் எதையும் பொருமையாய் கேட்கவும் இருக்கின்ற சுதந்திரத்தைப் பார்த்து இவ்விஷயத்தில் இந்துக்கள் வெட்கப்பட வேண்டு மென்றே சொல்லுவேன்.
துலுக்கர் துடுக்கரா?
மெளல்வி ஆஜீஅப்துல் கரீம் சாயபு அவர்கள் துலுக்கன் துடுக்கன் என்று இந்துக்களால் சொல்லப்படுவதாய்ச் சொன்னார். இது இந்துக் களுக்குள் பலமில்லாத காரணத்தாலும் தங்களுக்குள் வீரமும் ஒற்றுமையும் இல்லாத காரணத்தாலும் சொல்லப்படுவதேயாகும். முஸ்லீம்களுக்குள்: இருக்கும் ஒற்றுமையும் வீரமும் இந்துக்களுக்கு துடுக்கர்களாய் காணப் படுவது அதிசயமில்லை. என்னை ஒரு சாயபு அடித்தால் ஒரு அய்யரோ ஒரு செட்டியாரோ ஒரு முதலியாரோ சிபாரிசுக்கு வரமாட்டார். ஏனெனில் ஜாதிப்பிரிவு காரணமாக இந்துக்களுக்குள் சகோதரத்தன்மை இல்லாமல் போய்விட்டது. ஒருவனுக்கு மற்றவர்களிடம் அன்பு இல்லாமல் போய் விட்டது. ஜாதிப்பிரிவு இல்லாத காரணத்தாலேயே முஸ்லீம் மக்களுக்கு சகோதரத்தன்மை இருந்து வருகின்றது. சகோதரர்களை தாராளமாய் உடையவனைக் கண்டால் யாரும் அஞ்சுவது வழக்கம்தான். ஆதலால் இந்துக்கள் உங்களை குற்றம் சொல்லுகிறார்களே என்று கருதி உங்கள். சகோதரத்தன்மையையும் வீரத்தையும் நழுவவிட்டு விடாதீர்கள். எண்ணிக் கையில் கொஞ்சமாயிருந்தாலும் உலகத்தில் நீங்களும் தலைசிறந்து விளங்கக் காரணமே உங்கள் சகோதரத்தன்மையே யாகும். ஆகையால் அதைவிட்டு விடாதீர்கள். ஆனால் மற்ற கொள்கைக்காரரையும் உங்கள் சகோதரர்களாக ஆக்கிக்கொள்ள முயலுங்கள். அதற்குத் தடையாயிருக்கும் சாதாரண காரியங்களையும் வெரும் வேஷமாத்திரத்தால் இருக்கும் வித்தியாசங்களையும் லக்ஷியம்செய்யாமல் ராஜிக்குத் தயாராயிருங்கள். இந்த வகையில் தான் ஒவ்வொரு கொள்கையும் செல்வாக்குப் பெற்று தலை சிறக்கமுடியும். இஸ்லாம் கொள்கையைப்பற்றி யாராவது தப்பிதமாய் நினைத்திருந்தால் தைரியமாய் திருத்த முற்படுங்கள்.
சந்தேகத்தை திருத்துங்கள்
உதாரணமாக மக்கா யாத்திரையைப் பற்றி மலேயா நாட்டில் உள்ள கிடாசுங்கப்பட்டானியில் என்னிடம் ஒரு இந்து என்பவர் ஒரு கேள்வி
127 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கேட்டார். அதாவது “இந்துக்களது காசி ராமேஸ்வரம் மதுரை யாத்திரையை மூடநம்பிக்கை என்கின்றாயே, இஸ்லாமானவர்கள் மக்கா யாத்திரை செய்ய மலேயாவில் அநேக முஸ்லீம்கள் செல்வதால் கஷ்ட நஷ்டப்படுகின்றார். களே” என்றார். நான் பதில் சொல்லமுடியாமல் அப்படியானால் முஸ்லீம்கள். அநுசரிக்கும் கொள்கைகள் முழுவதும் பகுத்தறிவுக்கொள்கை என்று நான் சொல்லவரவில்லை என்றும் அதில் அநேக நல்ல கொள்கை பிரத்தியட்
சத்தில் பார்க்கிறேன் என்றும் சொன்னேன். பிறகு சென்ற வருஷம் இதே. கொண்டாட்ட நாளில் ஈரோட்டிற்கு வந்த மெளல்வி அப்துல் அமீது சாயபு பாகவியவர்களைக் கேட்டேன். அவர் விளக்கமாக்கினார். முஸ்லீம்கள். மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீர திடத்திலும் தகுதியுள்ளவர்கள். தான் போகவேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லை யென்றும் அந்த இடம் முகம்மதுநபி அவர்கள். உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்தஇடம் என்பதற்காக அங்கு போவது என்பது தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை, உடை, நாகரீகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும் “கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்லுவது தப்பு” என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை என்றும் சொன்னார். யாராவது அந்தப்படி போனாலும் அது தெரியாத்தனமென்றே சொன்னார்கள்.
ஆகவே மக்களிலேயே பிறவியில் வித்தியாசமில்லை என்று சொல்லும் கொள்கையில் இடத்திற்கு இடம் வித்தியாசம் கற்பிக்கப்பட்டு இருக்காது என்பது பகுத்தறிவில் பட்டதேயாகும். ஆனால் இந்து கொள்கை
கள் என்பவற்றில் “ஒரு மனிதன் எவ்வளவு அயோக்கியனாயிருந்தாலும், கொலை செய்தாலும், திருடினாலும், நம்பிக்கை துரோகம் வஞ்சகம் முதலிய காரியம் செய்தாலும், ஒரு ஊரை நினைத்தால்-ஒரு ஊருக்குப் போனால் ஒரு ஊரில் ஒரு குளத்திலுள்ள தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்
டால் பாபம் பரிகாரமாகிவிடும், மோட்சமடைந்து விடுவான்” என்று எவ்வளவோ அடியோடு பொய் பெருமைகளை கற்பித்து மூடநம்பிக்கை உண்டாக்கி அங்குள்ள சோம்பேறிகள் பிழைக்க ஸ்தல யாத்திரை ஏற்படுத் தப்பட்டிருக்கின்ற தென்றும், அப்படிப்பட்ட ஸ்தல யாத்திரைப்புரட்டுகள் எல்லாம் பகுத்தறிவுக்கு விறோதமானது-மூடநம்பிக்கையில் பட்டது என்றும் சொல்லும்போது மற்றவர்கள் யாராவது அது போல் செய்தாலும், அந்தந்த தலைப்பின் கீழ்தான் வருமல்லவா? என்பதை யோசித்து நடக்க வேண்டியது மக்கள் கடமையாகும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நாள்
ஆகவே இப்படிப்பட்ட அருமையான நாட்களை மனிதன் மேன்மைக்கும் முற்போக்கிற்கும் ஒற்றுமைக்கும் அறிவு விளக்கத்திற்கும்
குடி அரசு - 1931 (2) 128
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இங்குள்ள இந்து முஸ்லீம்களை சகோதரர்களாகக் கருதியே என் மனதில் பட்டதைச் சொன்னேன். மெளல்வி சாயபு அவர்கள் இருவரும் சொன்ன விஷயங் களிலும் பெரிதும் அறிவுக்குவிறோதமானதோ கேள்விக்கு இடமானதோ இல்லை என்பதை முக்கியமாய் முஸ்லீம்களும் மற்ற இந்துக்களும் கவனித்துப்பார்த்து இதுபோலவே எல்லாக் கொள்கைகள் விஷயங்களிலும் பகுத்தறிவுடனிருக்க வேண்டுமென்றே கேட்டுக் கொள்ளுகிறேன்.
மற்றும் நான் சொன்ன விஷயங்களில் உங்கள் பகுத்தறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஒப்புக் கொள்ளாததைத் தள்ளி விடுங்கள். மற்றும் இம் மாதிரி நாட்களை வெறும் விருந்துக்கு உபயோகித்துக் கொள்ளாதீர்கள். இன்று சுமார் 500 ரூ. வசூல் செய்து பெரிய விருந்து சாப்பாடு செய்து சாப்பிட்டதாகத் தெரிகின்றது. இது பிரயோஜனமில்லை. பணங்கள் வசூல் செய்து பகுத்தறிவு பிரசாரம் செய்யவும் ஏழை மக்களுக்கு கல்விக்கும் கொள்கைகளின் உண்மை தத்துவத்தை பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்த்து பயன்படுத்தும் தத்துவத்திற்கும் உபயோகிக்கச் செய்யவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
குறிப்பு: 02081931 அன்று ஈரோடு முஸ்லீம் வாலிப சங்கக்கட்டிடத்திற்கு முன்: நடைபெற்ற நபிகள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆற்றியதலைமையுரை.
குடி அரசு - சொற்பொழிவு - 09.08.1931
129 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதற்கு எண்ண சொல்லுகிறீர்கள்?
உயர்திரு காந்தி அவர்கள் தமது 30-7-31 ௨ “யங் இந்தியா” பத்திரிகை யில் “நாம் இன்று செய்ய வேண்டியது எது?” என்னும் தலைப்பின் கீழ் “பொது ஜனங்களால் அதிகமாகக் கண்டிக்கப்படும் கராச்சி காங்கிரஸ் ஜீவாதார உரிமைகளைப் பற்றிய தீர்மானங்கள்” என்று ஆரம்பித்து, அவைகளை எல்லாம் எடுத்தெழுதி, அவைகளைப் பற்றி தமதபிப்பிராய மென்பதாக எழுதியிருப்பது என்னவென்றால்,
“ஜீவாதார உரிமைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட பல விஷயங்
களில், அனேக விஷயங்களை இன்றே நடத்தி வைக்கக்கூடியவை களாகும். ஆதலால், அவற்றுள் சர்க்காரார் மூலம் சட்டம் செய்து நிறைவேற்றப்பட வேண்டிய சில விஷயங்கள் தவிர, பொது ஜனங்
களால் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்பொழுதே நாம் செய்து முடிக்காவிட்டால் பிறகு, இதே பொது ஜனங்கள் தயவாலே இருக்கவேண்டிய அரசாங்கத்தால் எப்படி அவைகள் செய்து முடிக்கப்பட முடியும்?”.
“இன்றைய தினமே, கண்டிப்பாய் மாற்றித்தீர வேண்டிய முக்கிய விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டால், நமக்கு
அதிகாரம் வந்தபிறகு அவற்றில் நமக்கு அலக்ஷியம் ஏற்பட்டு விடும்.” உதாரணமாக
1 ஒருவருக்கொருவர் மதங்களை மரியாதை செய்வது,
2 பெண்களை எல்லா விஷயங்களிலும் சமத்துவமாய் நடத்துவது,
3. தீண்டாமையை ஒழித்து விடுவது......... ஆகிய காரியங் களைச் செய்ய இப்பொழுதே நம்மால் முடியாவிட்டால் சுயராஜியம் வந்தபிறகு சுயராஜிய அரசாங்கத்தாருக்கு மக்களை நிர்ப்பந்தப் படுத்தி மேற்கண்ட சீர்திருத்தங்களைச் செய்வதற்கு சக்தியில்லாமல் போய்விடுமென்றே நான் தீர்க்கதரிசனம் சொல்லுவேன். ஏனெனில் ஜன அபிப்பிராயங்களுக்கு விரோதமாக ஒரு ஜன செல்வாக்குப்
குடி அரசு - 1981 (2) 130
பெறவேண்டிய அரசாங்கமானது ஒரு நாளும் ஒரு காரியத்தையும் செய்ய முடியவே முடியாது. அப்படியேதாகிலும் செய்ய முடியுமே யானால், அந்த அரசாங்கம் உடனே அழிக்கப்பட்டு விடும்”.
“பகுத்தறிவு ஞானமும், கட்டுப்பாடுமுள்ள ஜனநாயகம் தான் சரியான ஜனநாயகமாகும். அப்படிக்கில்லாமல் பாரபட்சமும், பாமரத்தன்மையும், மூட நம்பிக்கையுமுள்ள மக்களின் ஜனநாயக மானது எப்படியிருந்தாலும் முடிவில் வீண் குழப்பமேற்பட்டு தானாகவே அழிந்தே தீரும்”.
“ஆகவே, தீண்டாமை யொழித்தல் முதலிய விஷயங்கள் கொண்ட ஜீவாதார உரிமைகளென்பது இப்பொழுதே செய்து தீர வேண்டியதே யொழிய, பின்னால் செய்ய வேண்டியதென்றோ, செய்துவிடலா மென்றோ சொல்லக் கூடியவைகளல்ல. தேசம், உண்மையான சுயராஜியத்திற்கு தயாராயிருக்கின்றது என்று சொல்லுவதானது வாஸ்தவமானால், மேற்கண்ட வேலைகள் செய்வது சிறிதும் கஷ்டமானதல்ல. ஆதலால் ஆங்காங்குள்ள காங்கிரசுக்காரர்கள், ஆங்காங்குள்ள முக்கிய குறைகளென்று தங்களுக்குத் தோன்றும் காரியங்களை முன்னதாகத் திட்டங்கள் போட்டுக்கொண்டு அதற்காக வேலை செய்ய வேண்டும்”
என்று எழுதியிருக்கின்றார்.
இதே அபிப்பிராயங்களை நாம் இதற்குமுன் பலதடவைகளில் எடுத்து சொல்லி, பேசியும், எழுதியும் வந்திருக்கின்றோம். உதாரணமாக திருவாங்கூர் (கோட்டாறு! உபன்யாசத்தில், “முதலாவது திரு. காந்தியும் திரு. ஜவஹர்லாலும் கேட்கும் சுயராஜியம் ஜனநாயக சுயராஜியமா? ஏகநாயக சுயராஜியமா? என்பதை முதலில் விளக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஜன நாயகமானால் தீண்டாதவர்களை கோவிலுக்குள் விடமாட்டேன் குளத்தில் விட மாட்டேன்” என்று சொல்லுகின்றவர்கள் யார்? பிறகு அந்த கோவிலை
யும் சொத்தையும் பறிமுதல் செய்கின்றவர்கள் யார்? என்று யோசித்துப் பாருங்கள். ஜனங்கள் விடமாட்டேன் என்று சொன்னால் அந்த ஜனப் பிரதிநிதி சர்க்கார், யார் மனதையும் புண்படுத்தாத சர்க்கார், கோவிலை எப்படி பறிமுதல் செய்ய முடியும்? கோவிலுக்குள் பறையனைவிட இஷ்டப் படாத ஜனங்கள், இஷ்டப்படும் பிரதிநிதியை தெரிந்தெடுப்பார்களா? என்பதை யோசித்துப்பாருங்கள். ஜனங்கள் இஷ்டத்திற்கு விரோதமாய்
நடக்கும் இராஜியபாரம் ஜனநாயக இராஜிய பாரமாகுமா? மற்றும் இந்திய ஜனங்கள் தங்களுக்குள் இருக்கும் ஜாதி வித்தியாசத்தையும், தீண்டாமை யையும் ஒழிப்பதற்கு ஜனநாயக சுயராஜியம் வேண்டுமென்றால் இது பித்தலாட்டமா அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பதை யார் வேண்டாமென்கின்றார்கள்? இஸ்லாமானவர்
131 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கள் ஆக்ஷேபிக்கின்றார்களா? கிறிஸ்துவர்கள் ஆக்ஷேபிக்கின்றார்களா? அல்லது கிறிஸ்துவ அரசாங்கமும் ஆக்ஷேபிக்கின்றதா? ஆரம்பத்திலேயே புரட்டு பேசும் சுயராஜிய அதிகாரம் வந்தால் கொடுமை செய்யுமா? நன்மை செய்யுமா? இன்று தீண்டாமை அனுசரிக்கும் ஜனங்களுக்கு சர்வ அதிகாரம் வந்தால் தீண்டாமையை பலப்படுத்துவார்களா? தளர்த்துவார்களா? எந்த அரசாங்கத்தில் தீண்டாமை இருந்தாலும் தீண்டாமையை அனுசரிக்கின்ற வர்கள் இன்று சுயராஜியம் கேட்கும் இந்துக்களே யொழிய வேறல்ல,
ஆகவே, இந்த மாதிரி வார்த்தைகள், மக்களை ஏய்க்கும் தந்திர வார்த்தை அல்லவா என்பதை யோசித்துப்பாருங்கள்”” என்றும் சொல்லி யிருக்கின்றோம்.
ஆனால், அவற்றை நாம் சொல்லும்போது அவைகளைப் பார்த்த நமது நாட்டு “தேசீய வீரர் களும், “ காங்கிரஸ் பக்தர்” களும் ஆத்திரங் கொண்டிருப்பார்கள். இப்பொழுதோ அவர்களுடைய “குருநாதர்” “மகாத்மா” “காங்கிரசின்-தேசீய சபையின் ஏகநாயகர்” “உலகம் போற்றும் உத்தமர்” “தேர்களிலும் இரதங்களிலும் கடவுளுக்குப் பக்கத்திலிருத்தி வைத்து, பூஜை, நைவேத்தியங்கள் செய்து கும்பிடவேண்டியவ” ரென்று சொல்லப்படுபவரான திரு.காந்தியவர்களின் 30.7.31ந் தேதி “யங் இந்தியா”
வில் இம்மாதிரிசொல்லியிருக்கின்றாரே இதற்கென்ன சமாதானம் சொல்லப் போகின்றீர்கள்? என்றுதான் கேட்கின்றோம். அதோடு கூடவே மற்றொரு விஷயத்தையுமிப்பொழுதே குறிப்பிட விரும்புகின்றோம். அதாவது, திரு.
“காந்திக்கு அடுத்தவ”ரென்றும், “தென்னாட்டு காந்தி” யென்றும் பல தேச பக்தர்களால் கொண்டாடும்படியான திரு. சி. இராஜகோபாலாச்சாரியார வர்கள் தமது குழாத்துடன் ஈரோட்டிற்கு வந்து, காந்தி பிரசாரம் செய்த காலத்
தில் ஈரோடு காங்கிரஸ் பக்தர்களான, நவஜவான் பாரத சபை வீரர்களான சில நண்பர்கள் திரு. ஆச்சாரியாரை நடுக்கூட்டத்தில் “தீண்டாமை விஷய மாக தாங்கள் ஏன் எவ்வித பிரசாரமும் செய்வதில்லை? காங்கிரசிலும் வேலைத்திட்டமாக நடத்துவதில்லை? அதைப்பற்றி ஒரு வார்த்தைக்கூட
ஏன் பேசுவதில்லை?” என்று கேட்டபொழுது, அதற்கு திரு.ஆச்சாரியார வர்கள் சொன்ன பதில் என்னவென்றால்,
“எங்களுக்குத் தீண்டாமை பிரசாரம் செய்ய மகாத்மா காந்தியவர்கள் கட்டளையிடவில்லை. ஆதலால் நாங்களதைப் பற்றி ஒன்றும் செய்யவில்லை” யென்று தைரியமாய்ச் சொன்னார்.
ஆனால், திரு. காந்தியவர்களின் இந்த மேற்கண்ட வாக்கியங்க ளிலோ, “சுயராஜ்யம் பெறுவதற்கு முன்பாகவே தீண்டாமை விலக்கு வேலை செய்தாகவேண்டும். அதைச் செய்ய முடியாத ஜனங்களால் சுயராஜ்யம் வந்தால் தீண்டாமை யொழிக்கப் பட முடியாமல் போவதோடு. கிடைத்த சுயராஜியம் தானாகவே அழிந்து நாசமாய்ப் போய்விடும்” என்று
குடி அரசு - 1981 (2) 132
அழுத்தந் திருத்தமாக சொல்லியிருப்பதுடன், “காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லைகளுக்குள்ளிருக்கும் ஜீவாதார உரிமை விஷயங்களில் எதை முன்னால் செய்யவேண்டுமென்று யோசித்துப் பார்த்து, திட்டம் போட்டுக்கொண்டு அவைகளை உடனே செய்ய புரப்பட வேண்டு” மென்பதாக எழுதியிருக்கின்றார்..
( இவையெல்லாம் 4-8-31ந்தேதி “சுதேசமித்திரன்” 10ம் பக்கம், 5- வது கலத்திலிருக்கிறது) ஆகவே திரு. இராஜகோபாலாச்சாரியாரவர்களும், அவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராய்க் கொண்ட காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களென்று சொல்லிக் கொள்பவர்களும் மற்றும் சுயமரியாதையியக்கத்தை வைது வாழும் தேசீய வீரர்களும் இதற்கென்ன
பதில் சொல்லுகின்றார்களென்று கேட்கின்றோம்.
ஜவுளிக்கடை மறியலினால், வெளிநாட்டுக்குப் போகும் செல்வம் நமது நாட்டில் நிற்கலாமென்றே வைத்துக் கொள்ளுவோம். அதனால் லட்சாதிபதியாயிருக்கும் மில் முதலாளிகள், கோடீஸ்வரர்களாகிவிடுவார்க சென்றே வைத்துக் கொள்ளுவோம். அவர்களால் காங்கிரசுக்கும் லட்சம் லட்சமாய் பணம் கொடுக்கப்பட முடியுமென்றும் வைத்துக்கொள்ளுவோம்.. ஆனால் இன்றைய தினம் இந்திய பொருளாதார நிலைமையில் எந்தக் கூட்டம் கஷ்டப்பட்டு கால் பட்டினி, அரைப்பட்டினியாயிருக்கின்றதோ அவர்களுக்கு என்ன லாபம் என்பதை யோசித்தால் அதன் பயனற்ற தன்மையும் விளங்கும். வெளிநாட்டுத்துணி ஒரு அங்குலம் கூட இந்தியா வுக்குள் இரங்காமல் செய்தாலும் நூற்பவர்களுக்கு தினம் 1-க்கு 1 அணா வுக்கு மேல் கூலியில்லை யென்பதை அதுவும் கட்டுகின்றவன் ஒன்றுக்கு இரண்டாய், மூன்றாய் விலை கொடுத்தால் தான் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.
அதுபோலவே கள்ளு மறியலால் கள்ளுக்கடைகள் எல்லாம் எடு பட்டுப் போனதாகவே வைத்துக் கொள்ளுவோம். சர்க்காராருக்கு வரும்
கள் இலாக்கா வரும்படியைக் குறைப்பதின் மூலம் சர்க்காராரை ஸ்தம்பிக்கச்
செய்து விடலாமென்றே வைத்துக்கொள்ளுவோம். குடிகாரர்களும் பகிரங்க மாய்க் குடிக்கும் கள்ளுக்குடியை விட்டுவிடுவார்களென்றே வைத்துக் கொள்ளுவோம். இவைகளெல்லாம் கீழ்ஜாதிக்காரனென்றும், தீண்டாதவ னென்றும் தெருவில் குளத்தில் பிரார்த்தனை ஸ்தலத்திலிருக்க, அருகில் வரமுடியாதவரென்று சொல்லப்படுகிற இழிவை ஒரு நிமிஷ நேரமாவது வைத்துக்கொண்டிருக்கும் அவமானத்தைவிட முக்கியமானதா? என்று கேட்கின்றோம்.
மற்றும் “திரு. காந்தியின் உண்மைத்தோற்றம்”” என்னும் தலைப்பின்
கீழ் மதுவிலக்கு விஷயமாய் திரு காந்தியவர்கள் எழுதிய விஷயத்தை எடுத்துப்போட்டிருந்தோம். அதாவது,
133 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
“கள்ளு, சாராயக்கடைகளை மூடுவது நம்முடைய வேலையல்ல.”
“குடிகாரர்கள் திருட்டுத்தனமாய் கள்ளு, சாராய உற்பத்தி செய்து எப்படியாவது குடித்துத்தான் தீருவார்கள்.”
ஆதலால், கள்ளு, சாராயக்கடைகள் மூடப்பட்டாலும் இப்பொழு திருப்பது போலவே கள்ளு, சாராயம் விற்பனையாகிக்கொண்டும், குடிக்கப்
பட்டுக் கொண்டுந்தானிருக்கும்”
என்று திரு. காந்தியவர்கள் எழுதியிருந்ததை எடுத்துக்காட்டியிருந் தோம். அப்படியிருந்தும் மறியல்களென்பது ஒரு நாடகம் போல் நடத்தப் பட்டுக் கொண்டு வருகின்றது.
திரு காந்தியவர்கள் எழுதின விஷயத்தை காற்றில் பறக்கவிட்டு விட்டு “காந்திக்கு ஜே! ” என்று கூப்பாடு போட்டுக்கொண்டே கள்ளுக் கடைகளிலும், ஏலம் விடப்படும் இடங்களிலும் தொண்டர்கள் மறியல் செய்து கொண்டு வருவதும், இம்மறியலால் குடி நின்று விடுமா? என்றால் “அரசியல் காரியத்திற்கு மறியல் செய்கின்றோம்” என்பதும், அரசியல் மறியல் செய்து கைவிடப்பட்டு விட்டதே என்றால் “ஒழுக்கத்துக் காக செய்கிறேன்” என்பதுமாய் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி மறியல் செய்யப் பட்டு வருகின்றது.
இதனால் கவர்ன்மெண்டுக்கு வரும்படி குறைந்து போகலாம். ஆனால் இந்தக் காரணத்தைக் கொண்டே கவர்ன்மெண்டார் செய்து தீரவேண்டிய அநேக நல்ல விஷயங்கள் கல்வி, சுகாதாரம், போக்குவரவு முதலிய துறைகள் இந்தச் சாக்கைச் சொல்லிக்கொண்டு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டும் போக நேரிட்டுத் தீருமேயல்லாமல், எந்த உத்தியோகஸ் தருடைய சம்பளமாவது லஞ்சமாவது காலணா குறைந்து விடுமா என்று பாருங்கள்.
அன்றியும் இதனால் பொதுஜனங்களுக்கோ, குடிக்கின்ற கூட்டத்தார். களுக்கோ ஒருவித இலாபமும் ஏற்படப்போவது கிடையாது. ஏனென்றால்,
இன்றைய தினம் ஏலம் மறியலால் ஏலத்துகை மாத்திரம் குறையுமே யன்றி, ஏலத்தில் எடுத்தவர்களுடைய வியாபாரங்களொன்றும் பிரமாத மாய்க் குறைந்து விடப்போவதில்லை. அவர்கள் பதினாயிரம், லட்சம் என்ப தாக லாபம் அடைந்து மறியல் தொண்டர்களுடன் வியாபாரம் பேசி தாராள மாய் செல்வவான்களாகப் போகின்றார்கள். எப்படியும் முன்னிலும் செல்வாக்காய் கிளர்ச்சியாய் வேடிக்கையாய் வியாபாரம் நடக்கத்தான் போகின்றது. குடிகாரர்களும் நன்றாய்க் குடிக்கப்போகிறார்கள். இந்தப் படியல்லாமல் ஒரு சமயம் கொஞ்சநஞ்சம் மறியல் நடப்பதாயிருந்தாலும், சந்துக்கடைகள் மூலமும், தோட்ட விற்பனைகள் மூலமும், திருட்டுத்
குடி அரசு - 1981 (2) 134
தனமாய் சாராய வகைகள் காய்ச்சியும், சாராயக் கடைகளிலிருந்தும் வீடு வீடாய் கொண்டுபோய் கொடுத்துக் கொண்டிருக்கின்ற காரியங்களால்,
குடியும், குடி வியாபாரக்காரர்களுடைய லாபமும் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டு தானிருக்கப் போகின்றது.
ஆகவே, இன்றைய கள்ளுக்கடை, ஏலஸ்தலம் ஆகியவைகளின் மறியல், குத்தகைதாரர்களுக்கு இலாபத்தைக் கொடுக்கப் போகின்றதென் பதைத் தவிர, கலால் இலாக்கா சட்டங்களும், ஹத்தும் இயற்கையாகவே அமுலுக்கு வராதிருக்கும்படியாக செய்யப்படுவதைத் தவிர, வேறு ஒரு இலாபமும் ஏற்படப் போவதில்லை...
ஆகவே, இதுவரையில் நாம் காங்கிரசையும் காங்கிரஸ் நடவடிக்கை களையும் குற்றம் சொல்லிக் கொண்டு வருகின்றோமென்று நினைத்துக் கொண்டிருந்த வஞ்சனை, சூட்சியறியாத பாமர மக்களும், மூடப்பழக்க வழக்கங்களிலடிமைப்பட்டு, பகுத்தறிவை யுபயோகிக்கத் தைரியம் பெறாத பொதுஜனங்களும் இவ்விஷயங்களையெல்லாம் நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்த பிறகாவது, சுயபுத்தியுடன் ஒரு முடிவுக்கு வர மாட்டார்களா வென்று ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 09.08.1931
135 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சம்பனக் குறைவ
மத்திய மாகாண அரசாங்க கல்வி மந்திரி உயர்தர வகுப்புப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சம்பளங்களை அதாவது ஹைஸ்கூல் பிள்ளை களுக்கு 8-ல் ஒரு பங்கும், கலாசாலை மாணவர்களுக்கு 3-ல் ஒரு பங்குமே குறைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் சொல்லும்போது “ஏழைக் குடியானவர்களுடையவும், தொழிலாளிகளுடையவும் பிள்ளைகள் படிப்பதற்கு இப்போதைய சம்பளம் மிக அதிகமாயிருப்பதால் அதை குறைத்து அவர்களுக்குச் செளகரியம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குறைக்கப்படுகின்றது” என்று சொல்லி இருக்கிறார். இதை அந்தச் சர்க்காராரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அது இந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதலே அமுலுக்கு வரப்படுமாம்.
அந்தப்படி இங்கும் நமது கல்வி மந்திரி பிள்ளைகள் சம்பளத்தை ஏன் குறைக்கப்படாது என்பதற்குக் காரணம் நமக்குத் தெரியவில்லை.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.08.1931
குடி அரசு - 1981 (2) 136
விருதுநகர் மகாநா௫ 1
“சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார்
56 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந்
தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டு வருவது யாவருமறிந்ததேயாகும்.
மற்றும் அது சம்பந்தமான பிரசாரங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கு தினந்தோறும் நடைபெற்று வருவதும் யாவருமறிந்ததாகும்.
இவற்றின் பயனாய் இந்துக்களென்று சொல்லிக்கொள்ளப்படும் பெரும்பான்மை மக்களுக்குள் ஒரு தலைகீழான பெரிய மனமாறுதலும்
மற்றும் மத சம்பந்தமான சமூக சம்பந்தமான காரியங்களில் செய்கையிலே யுங்கூட ஒரு பெரிய மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும்.
இந்த இயக்கமும் இதற்கு ஏற்பட்டுள்ள பல அதிதீவிரக் கொள்கை
களும் மதவுணர்ச்சிக்கும் பழக்க வழக்கத்திற்கும் நேர் மாறுதலானதாயிருந்
தும் இவ்வளவு சொற்ப நாளில் இவ்வளவு தூரம் பரவியதற்குக் காரணம் என்னவென்றால் இவ்வியக்கம் கண்டும் இவ்வியக்கத்திற்கு சேவை
புரிந்தும் வரும் மக்கள் யாவரும் ஏறக்குறைய எல்லோரும் வெகுகால மாகவே பொது வாழ்வில் அதாவது, “தேசீயத்”துறை என்பதிலும் “சமூகத் துறை” என்பதிலும் “சமயத்துறை” என்பதிலும் ஈடுபட்டு மனப்பூர்த்தியாய் உழைத்து வந்து சிறிதும் பயன்பெறாமல் ஏமாற்றமடைந்தவர்களானதால் இந்தப் புதிய முயற்சியால் அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையும் அனுபவ
மும் மன உறுதியும் தீவிரப் பிரசாரத்திற்கு தூண்டுகோலாகி பொதுமக்க ளின் பகுத்தறிவைப் பிடித்து ஆட்டி அசைத்துப் பலரை சொன்னபடி கேட்க வேண்டியதாய் செய்து வந்ததுடன் ஒவ்வொருவரையும் இணங்கி இதில் இரங்கி வேலை செய்யும்படியும் செய்து விட்டது.
137 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதன் பயனேதான் ஆங்காங்கு தனக்குத்தானே பிரசாரங்கள் நடக்கவும் மகாநாடுகள் கூடவும் அதிதீவிர தீர்மானங்கள் செய்யவும் ஏற்பட்டு வருகின்றது என்பது மிகையாகாது.
இந்த முறையிலேயே இம்மாதம் 89 தேதிகளில் விருதுநகரில் மாகாண மூன்றாவது சுயமரியாதை மகாநாடு என்பதாக ஒரு பெரிய மகா
நாடு கூடி ஏராளமான தமிழ் நாட்டு வாலிப மக்களை அழைத்து வைத்து பல தீர்மானங்களைச் செய்திருக்கின்றது. அதனுடன் கூடவே சுயமரியாதை பெண்கள் இரண்டாவது மகாநாடும், சுயமரியாதை வாலிபர்கள் 3-வது மகாநாடும் நடத்தப்பட்டு பல தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இம் மகாநாடுகளில் வரவேற்புக்கமிட்டித் தலைவர்கள், தலைவர்கள். ஆகியவர்களின் சொற்பொழிவுகளும், தீர்மானங்களும் பெரிதும் இரண்டு முக்கிய தத்துவங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பது கவனித்த வர்களுக்கு விளங்கி யிருக்கும்.
அதாவது ஒன்று மத சம்பந்தமாகவும், கடவுள் சம்பந்தமாகவும், சமூக சம்பந்தமாகவும், நமது தேசத்தில் இருந்துவரும் பல பழைய கொள்கை களையும் பழக்க வழக்கங்களையும் மனவுணர்ச்சிகளையும் அடியோடு அழிக்கவும், சிலவற்றைப் புதுப்பிக்கவும் வேண்டுமென்பது.
இரண்டாவது:- தேசீயம், சுயராஜியம், சுதந்திரம் என்னும் பேர்களால் மேல் கண்ட அதாவது மத சம்பந்தமாகவும், கடவுள் சம்பந்தமாகவும், பழக்க வழக்க சம்பந்தமாகவும் இருந்து வரும் பழங்கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபட்டுவரும்படியான ஸ்தாபனங்களையும், முயற்சிகளையும், சூக்ஷி களையும் வெளியாக்கி எதிர்த்து அவைகளால் நமது முயற்சிகளுக்கு இடை யூறு ஏற்படாமல் இருக்கும்படி செய்வது, என்கிறதான இந்த இரண்டு லக்ஷியங்களையே பெரிதும் முக்கியமாகக் கொண்டதாக இருப்பது விளங்கி இருக்கும்.
ஏனெனில் இந்தியதேசத்து மக்கள் இன்று உலகத்தின் முன் மானத்
தோடும், சுதந்திரத்தோடும், அறிவோடும், க்ஷமத்தோடும் வாழுவதற் கில்லாமல் பெரும்பான்மையானவர்கள் இழிமக்களாய், மூடர்களாய், தரித்தி ரர்களாய், அடிமைகளாய் விளங்குவதற்கு மேல்கண்ட இரண்டு தத்துவங் களுமே காரணமாய் இருந்து வந்திருக்கின்றது-இருந்தும் வருகின்றது என்ற காரணத்தினாலே யாகும்.
இந்தப் பெரியதும் தலைகீழ் புரகஷியானதுமான மேல்கண்ட இரண்டு தத்துவ பரிகாரங்களுக்கும் எதிர்ப்புகள் பலமானதும் தொல்லைகளை விளைவிக்கும் படியானதுமான எதிரிகளும், எதிர்ப்புகளும் இருந்து தீரும் என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. இவ்வித எதிர்ப்புகள் இவ்வித காரியங்களுக்கு உலகம் ஏற்பட்ட நாள் முதல் அதுவும் சீர்திருத்த உணர்ச்சி ஏற்பட்ட காலம் முதல் இருந்து வந்ததேயாகும்.
குடி அரசு - 1931 (2) 138
ஏனெனில், எவ்வித மாறுதல் ஏற்படுவதானாலும் பழைமையினால் பயன் அடைந்து வந்தவர்களும், பழைமை நிலைமையையே தமது வாழ்க் கைக்கு நிர்ணயித்துக் கொண்டிருக்கிறவர்களும், சுய அறிவற்று பிடிவாதக் காரர்களாய் இருக்கின்றவர்களும், சார்புக்காரர்களும் சாதாரணத்திலேயே மாறுதலுக்கு விறோதிகளாய் இருக்க வேண்டியவர்களாவார்கள்.
உதாரணமாக,
இன்றைக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் பல நூற்றுக் கணக்கான வருடங்களுக்கும் முன்னால் மேல்கண்ட துறைகளில் மாறுதல் செய்ய முன் வந்த சித்தார்த்தர் (புத்தர்) இயேசு (இயேசுகிறிஸ்து) முகமது (முகமதுநபி) சாக்ரட்டீஸ்-மார்டின் லூதர் என்னப்பட்ட பெரியார்கள் அடைந்ததாக சொல்லப்படும் எதிர்ப்புகளும் கஷ்டங்களுமே போதுமான அத்தாக்ஷியாகும்.
ஆகவே தான் இத்துறைகளில் இரங்கிய ஒவ்வொருவரும் தங்க ளுக்கு ஏற்பட்ட, ஏற்படக்கூடிய எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும், தொல்லைகளையும் சிறிதுகூட லக்ஷியம் செய்யாமல் இரங்க வேண்டியவர் களானதுடன் அவைகளுக்காக ஒரு சிறிதும் கலங்காமலும் தங்களது கொள்கைகளை சிறிதும் தளர்த்துவதற்கு இணங்காமலும் இருக்க வேண்டிய
வர்களானார்கள்..
ஆகையினாலேதான், வரவேற்புக்கமிட்டி தலைவர் திரு. WPA செளந்திரபாண்டியன் அவர்கள் தமது வரவேற்பு உபந்யாசத்தில்,
“காங்கிரசும் சுயமரியாதை இயக்கக் கொள்கையும் ஒன்று என்று சொல்லுகின்றவர்கள் இரண்டையும் சரியாய் உணராதவர்கள் என்றே சொல்லுவேன்” என்றும், “கராச்சி காங்கிரஸ் பிரஜா உரிமைத்திட்டத்தில் மத நடுநிலைமையும்.... மதஸ்தாபன பாதுகாப்பும் பிரமாதப்படுத்தப்பட்டிருக் கின்றன. இந்த ஒரு பகுதியே காங்கிரசானது சுயமரியாதை இயக்கத்தை அரைகூவி போருக்கழைக்கின்றதாய் இருக்கின்றதே” என்றும் “திரு.காந்தி
யாரின் பிரசாரமும், உபதேசமும் அவர் அனுஷ்டிக்கும் முறையும் மக்களின் அறிவைக்கெடுத்து மதப் பைத்தியத்தை அதிகரித்து வருகிறது” என்றும்,
“தராச்சி காங்கிரஸ் தேர்ந்தெடுத்த காரியக்கமிட்டியில் இருந்து விலக்கப்பட்டிருந்த திருவாளர்கள் மாளவியாவையும், ராஜகோபாலாச்சாரி யையும் காரியக்கமிட்டி தங்களுடன் சேர்த்துக் கொண்டதின் இரகசியம் என்ன? ”
“இவர்கள் இருவரும் இந்துக்களையும் இந்து மத ஸ்தாபனங் களையும் விர்த்தி செய்யும் டிரஸ்டிகளல்லவா? ஆகையால் காங்கிரசால் வரும் சுயராஜியம் இந்து ராஜியம்-ராமராஜியமாகத்தான் இருக்கும் என்று
139 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உணர்ந்த முஸ்லீம்கள் தனிக்கிளர்ச்சி செய்வது போல் காங்கிரசின் சமுதாய லக்ஷியம் வருணாச்சிரமதர்மத்திற்கு பாதுகாப்பு அளிப்பதாக இருப்பதால் அதன் முயற்சிகளை எதிர்த்துப் போராடவேண்டும்”.
“காந்தியின் வாக்கால் வைதீகப் பிரசாரம் செய்துகொண்டு ஜவகர் லாலின் பொதுவுடமைப் பிரசங்கத்தில் நம்மை மயக்கப்பார்க்கும் காங்கிரஸ். வலையில் சிக்க வேண்டாம் என்று எனது வாலிப நண்பர்களை எச்சரிக்கை. செய்கின்றேன்”.
“காங்கிரஸ் நமது இயக்கத்தை கொல்லும் வழியில் பிரயோகப்
படுத்தப்படுகிறது.”
“மேலும் மகான்களால் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மதக் கொடூரங்களையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறியுங்கள். அவைகளை வேரறுப்பது நமது கடமை”.
என்பதாக சிறிதும் தளர்ச்சியும் சந்தேகமும் இல்லாத வலிமையான வார்த்தைகளால் வீர கர்ச்சனை புரிந்திருக்கின்றார்.
மகாநாட்டுக்குத் தலைமை வகித்த திரு. ஷண்முகம், BABL MLA அவர்களோ அதைவிட வீரமாய் பேசி இருக்கின்றார். அதாவது:-
“நமது இயக்கத்தில் தேசீயமில்லை என்று சொல்லுவது நமது எதிரி களின்-போலி தேசீயவாதிகளின் சூக்ஷியேயாகும்”.
“நமதியக்கத்தில் உள்ள எல்லோரும் உண்மை தேசீயவாதிகள்”.
“தேசீய இயக்கமென்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள் வெள்ளைக் காரனை மாத்திரம் வைதுவிட்டு அதிகாரம் பதவிகளைப் பற்றி மாத்திரம் பேசிவிட்டு தங்கள் சகோதரர்களை யெல்லாம் தாழ்த்தி இழிவுபடுத்தி அடக்கி வைத்திருக்கும் கொடுமைக்கு பரிகாரம் செய்யாமல் இருக்கின்றார்கள்”.
“ஒரு ஜாதியாரோ, ஒரு வகுப்பாரோ மற்றொரு ஜாதியாரைவிட, வகுப்பாரைவிட உயர்ந்தவர்கள் என்பதான தத்துவம் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாடு எவ்வளவு கொடுமையானதான ஒரு அன்னிய அரசாங்க கொடுமையைவிட மிகப்பெரிய அக்கிரமும் கொடுமையுமான தென்றே சொல்லுவேன்”.
“தாங்கிரசானது எல்லோருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்படும் என்றும், மத நடுநிலைமை வகிக்கப்படும் என்றும், மதக்கொள்கைகள் காப்பாற்றப்படும் என்றும் தீர்மானம் செய்துவிட்டது. இதை நாம் ஒப்புக் கொண்டால் நாம் சுயமரியாதையையோ அடிமைத்தனத்திலிருந்து
குடி அரசு - 1981 (2) 140
விடுதலையையோ அடைய முடியாது”.
“ மத நடுநிலைமையைக்கொண்ட இயக்கம் எதுவானாலும் அது தேசீய இயக்கமாகாது”.
“மத பாதுகாப்பை தகர்த்தெறிய வேண்டும்”.
“காங்கிரஸ் தீர்மானங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு கோடரிக் காம்பு”.
“அத்தீர்மானங்கள் கொண்ட ஸ்தாபனங்களோடு எதிர்த்துப் போராட வேண்டும்”.
என கர்ஜித்திருக்கிறார்.
மற்றும் வாலிப மகாநாட்டு வரவேற்புக் கமிட்டித்தலைவர் திரு. எஸ். ஐயராம் பி.ஏ. அவர்கள் தமது உபன்யாசத்தில் “சமதர்மம் ஓங்கவே நாம் இங்கு கூடி இருக்கின்றோம். சமூக விடுதலையே இராஜிய விடுதலையை விட அவசியமானது”.
“ அன்னிய அரசாங்கம் இருக்கும்பொழுதே தீண்டாதவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏதாவது கதிமோட்சம் ஏற்பட்டால் தான் உண்டு. இல்லாவிட்டால் அவர்களுக்கு ஒரு காலமும் விடுதலை யேற்படாது என்பது நிச்சயம்”.
“திரு. காந்தியவர்கள் மூலம் வருமென்று எதிர்பார்க்கும் இராம ராஜியத்தில் இவர்களுக்கு விடுதலை ஏற்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை. அக்காலத்தில் இதைவிட ஜாதிச் சண்டைகள் அதிகரிக்கும்; ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஒரு அரசாங்கத்தில் தீண்டாதார் கஷ் டத்தை ஒழித்து விடுதலையை எவ்விதம் அமுலுக்குக் கொண்டுவர முடியும்?சமூக விடுதலை இல்லாத தேசீய விடுதலை தேசீய விடுதலை யாகாதென்று சர். கே.வி. ரெட்டிநாயுடு சொல்லி இருக்கிறார். ஆகையால் சம உரிமை விரும்பும் நாம் அரசியல் இயக்கங்களுடன் சேர்வதை விட்டு சமதர்ம இயக்கத்தை தனியாக நிறுவி வேலை செய்யவேண்டும்”.
“பகுத்தறிவைக் கொண்ட நமது இயக்கத்தில் போலிக்கடவுள்களும், மதங்களும் சின்னா பின்னப்படுவது ஆச்சரியமல்ல. நாஸ்திகப் பட்டத்திற்குப் பயப்படக்கூடாது”.
“விதவைகள் கண்ணீர் விடுவதையும், பெண்களை மிருகங்களை விடக் கேவலமாய் நடத்துவதையும் இனிப் பொறுக்கமுடியாது”..
“கடவுளோ, சாஸ்திரமோ, வேதமோ எதுவானாலும் அவற்றின்
எதிர்ப்புக் கஞ்சாமல் போராடவேண்டியது இளைஞர் கடமை”.
141 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
என்பதாக வீரமுழக்கம் செய்திருக்கின்றார்.
அதுபோலவே வாலிப மகாநாட்டுத் தலைவரான, உயர்திரு. டி.வி. சோமசுந்திரம், பி.ஏ.பி.எல். அவர்களும் தமது தலைமை உரையில்,
“சுயராஜியம் வந்தவுடன் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அவர்கள் உரிமைகள் வழங்கப்படுமென்று காந்தியார் சொல் வதை உண்மையென்று எப்படி நம்பமுடியும்?”'
“நம் நாட்டுத்தலைவர்கள் திரு. காந்தி உள்பட ஒருவரும் வருணாச் சிரமப் பிடியிலிருந்து வழுவவில்லை”.
“சமத்துவமும், சகோதரத்துவமும் பரவவேண்டுமானால் மதமெல்
லாம் மறையவேண்டும்”.
“சமதர்மக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பவேண்டும்”.
“சொத்து, குடும்பம், நிதி, சட்டம் ஆகியவற்றில் உள்ள பழைய எண்ணங்கள் தகர்க்கப்பட வேண்டும்”.
“சுருங்கக் கூறுமிடத்துக் காங்கிரஸ் முதலாளிகள் ஜமீன்தார்கள் பக்கமே சாய்ந்திருக்கிறது” என்று முழங்கி இருக்கிறார்.
சுயமரியாதைப் பெண்கள் மகாநாட்டு வரவேற்புத் தலைவி திருமதி பத்மாவதி திருவண்ணாமலை அம்மாள் அவர்கள் வரவேற்பு உபன்யாசத்தில்,
“எப்படியோ, நமக்கு விழிப்பு ஏற்பட்டுவிட்டது. இனிமேல் நம்மை ஏமாற்ற முடியாது?” “கடவுள்கள் காலம் வேறு இப்போதைய நிலைமை வேறு.” “ஆண்கள் எவ்வித சுதந்திரத்துடன் வாழ்கின்றார்களோ அவ்வித சுதந்திரத்துடன் நாமும் வாழவேண்டும்”.
“கல்யாண விஷயங்களில் நமக்கு சுதந்திரம், சொத்து சுதந்திரம் வேண்டும் ”.
“நாம் கூசாமல் கிளர்ச்சி செய்யவேண்டும். உதவிக்கு சுயமரியாதை இயக்கம் இருக்கிறது.”
“சுயமரியாதை இயக்கத்தைப் பலப்படுத்துவதே நமது விடுதலையின் அஸ்திவாரமாகும்” என்று முழங்கி இருக்கிறார்கள்.
பெண்கள் மகாநாட்டுத் தலைவி திருமதி இந்திராணி பாலசுப்பிர மணியம் அம்மாள் அவர்கள் செய்த தலைமை உபன்யாசமோ மிக அருமையானது. சற்று நீண்டதாயிருந்தாலும், ஒவ்வொருவரும் படித்துப்
குடி அரசு - 1981 (2) 142
பார்க்க வேண்டியதொன்றாகும். அநேக விஷயங்களைப் புள்ளி விவரங்களுடன் எடுத்தாண்டிருக்கின்றார்கள். அவையாவன:-
“இந்நாடு அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று பெண்களை அடிமைகளாக்கினது. இரண்டு பிறப்பால் ஜாதி வகுத்தது, மூன்று மனிதனுக்கு மனிதன் தீண்டாதவனாக்கினது. நான்கு மூடபழக்க வழக்கங்கள் சடங்குகள்”.
“விதவைகளை மக்கள் செய்யும் கொடுமைகளாலேயே பெண்மணி களின் உயிர் நாடிகள் நசுக்கப்பட்டுவிட்டது. சாரதா சட்டத்திற்குப் பயந்து பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மணம் முடித்துவிட்ட பாதகர்கள் நம் நாட்டில் பி.ஏ, யம்.ஏ படித்த மனிதர்களாய் விளங்குகிறார்கள்.
“கற்பு நாயகிக்கு மாத்திரந்தானா? நாயகனுக்கு இல்லையா?:” “மறு மணம் வேண்டுமானால் இருபாலருக்கும் வேண்டும்”.
“ஒரு பிறவிக்கு ஒரு நீதிகொண்ட கற்பு அடிமைப்படுத்துவதில் ஆசைகொண்ட மூர்க்கத்தனமேயொழிய அதில் யோக்கியமும், நாணை யமும் இல்லை”.
“வானத்தில் மேகம் தவழ்வது போலவும், கடலில் அலை எழும்பு வது போலவும், பறவை தனது அழகிய சிறகை விரித்துப்பறப்பது போல
வும் பெண் மக்களுக்கு தங்களுடைய உள்ளத்திலெழும் விருப்பப்படி நடக்கும் உரிமை இருக்க வேண்டும்”.
“வலுத்தவன் இளைத்தவனை அடக்கி ஆள்வதற்கு அத்தாட்சி ஜாதி வித்தியாசமேயாகும்.”
“இதனால் நமது நாடு மிருகத்தன்மையில் இருந்து மனிதத் தன்மைக்கு இன்னமும் வரவில்லை என்பது புலனாகிறது ”.
“ஜாதி வேற்றுமை ஒழிவதில் தான் நமது நாட்டு விடுதலையிருக் கிறது”.
“சிலர் சுயநலத்திற்காகவே ஜாதிவேற்றுமை காப்பாற்றப்படுகிறது”..
“நம் சகோதரர்களுக்கு நாம் சகோதரத்தனம் காட்ட வில்லையானால்
பிற நாட்டார் இடம் நாம் எந்த முகத்துடன் சகோதரத்துவம் கேட்பது?”
“பிற நாட்டார் எண்ணை இல்லாமல் மோட்டார் விடலாமா? மார்ஸ் நக்ஷத்திர மண்டலத்தில் மக்கள் இருக்கின்றார்களா? என்பது போன்ற
ஆராய்ச்சி செய்கிறார்கள். நம்நாட்டார் கோவிலுக்குள் இன்னாரை விட லாமா? வேண்டாமா? குளத்தில் தண்ணீர் எடுக்க இன்னாரை விடலாமா? வேண்டாமா? பொது ரஸ்தாவில் இன்னார் நடக்கலாமா? வேண்டாமா? என்
143 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கின்ற ஆராய்ச்சிக்கு நம்நாட்டுப் பணம், நேரம் ஆராய்ச்சி ஆகியவை செலவழிக்கப்படுகின்றன”..
“இது ஒரு பைத்தியக்காரர்கள் வாழும் நாடாயிருக்கிறது”..
“கோவிலுக்காக பல ஜாதியாரால் செலுத்தப்படும் பணம் பல ஜாதி யாருக்கும் பயன்பட வேண்டாமா?”
“பிரார்த்தனை, காணிக்கை முதலிய விஷயங்களில் ஆண்களை
விடப் பெண்களே அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்”.
கடைசியாக “சென்னை மாகாணத்தில் ஆண்களைவிட 6 லக்ஷம் பேர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள 23641936 பெண்களுக்கு சென்னை சட்டசபையில் ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கொடுத்திருப்பதானது எவ்வளவு வருந்தத்தக்க விஷயமாகும்” என்று பேசி இரத்தக் கண்ணீர். வடித்துப் பேசியிருக்கின்றார்கள். ஆகவே இந்த அபிப்பிராயங்கள் எல்லாம். உலகஞானமும் கல்வியறிவும் உள்ள பெரியோர்களால் மிகவும் பிரத்தியக்ஷ அனுபோகத்தின் மீதும் ஆழ்ந்து யோசித்த நடுநிலைமை முடிவின் மீதுமே பேசப்பட்டவைகளே யொழிய வெறும் மூட நம்பிக்கைகளின் மீதும் இவ் வித அபிப்பிராயங்களுக்கு செல்வாக்கிருக்கின்றதென்கின்ற கண்மூடித்தன மான தைரியத்தின் மீதும் கிளிப்பிள்ளை தன்மைபோலும் வயிற்றுப் பாட்டை உத்தேசித்தும் பேசப்பட்டவைகள் அல்ல என்பது உலக அனுபவ
மும் நடுநிலைமை ஞானமும் சிறிதாவது முள்ள எவருக்கும் விளங்கும்.
இன்றைய தினம் சுயமரியாதை இயக்கத்தின் மீது சிலரால் சொல்லப்
படும் குற்றமெல்லாம் “இவ்வியக்கத்தில் தேசீயம் இல்லை” என்பதும் “காங்கிரசைக் கண்டிக்கின்றது” என்பதும் “திரு. காந்தியவர்கள் அபிப்பிரா யத்தை மறுக்கின்றதே” என்பதும் ஆகியவைகளே முக்கியமான குற்றங் களாக சொல்லப்பட்டு வருகின்றன. 35-கோடி மக்கள் கொண்ட ஒரு பெரிய
தும் சகலவித வளமும் கொண்டதுமான ஒரு புராதன தேசம் ஆயிரக்கணக் கான வருடங்களாக அடிமைப்பட்டு கல்வியறிவில்லாமல் சிறிதும் முற் போக்குமில்லாமல் மிருகப் பிராயத்தில் இருந்து கொண்டு எச்சிலைக்கு மானத்தையும், மனிதத்தன்மையையும் விற்றுக்கொண்டு மனிதனுக்கு மனிதன் இழிவு என்று கருதும்படியாகவும் நாட்டு செல்வங்கள் எல்லாம்
நாட்டு மக்கள் யாவரும் சமமாயும் அனுபவிக்காமலும் பாட்டுக்குத் தகுந்த
படியும் அனுபவிக்க முடியாமல் கடவுளென்றும் மதம் என்றும் பழக்க வழக்க மென்றும் சமூகக்கட்டுப்பாடு என்றும் சொல்லிக்கொண்டு வீணாக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலைமையைப் பற்றி யோசியாமலும் அதற்குக் காரணங்கள் கண்டுபிடிக்க முயலாமலும், உண்மையான விடுதலைக்கு முயற்சியாமலும் மற்றும் மக்கள் எண்ணத்தையும் முயற்சியையும், உபயோகமற்றக் காரியங்களில் திருப்பிவிட்டுக்
குடி அரசு - 1931 (2) 144
கொண்டிருந்தால் அறிவுள்ள யார்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்? இந்த நாட்டுக்கு விடதலையையோ ஞானத்தையையோ உண்டாக்க
முயற்சிகள் செய்யப்பட்ட காலங்களில் எல்லாம் மதத்தின் பேராலும் வேறு ஏதாவது ஒரு போலியான சூக்ஷி விஷயத்தின் பேராலுமே பார்ப்பனர்கள். அவ்வப்போது பார்ப்பனரல்லாத கூலிகளைப் பிடித்து முட்டுக்கட்டை போட்டே வந்திருக்கின்றார்கள்.
அதுபோலவேதான் இந்த சமயமும் உலகமே விழித்தெழுந்து கொண்டிருக்கின்ற இந்த நூற்றாண்டில் இந்தியாவுக்கு மாத்திரம் விழிப்பு ஏற்படுவதற்கு வகையில்லாமல் பார்ப்பனரும் பார்ப்பனீயமும் தேசீயத்தின் பேரால் முட்டுக்கட்டையாகத் தோன்றி பின்னால் இழுத்துப்பிடித்துக்கொண் டிருக்க நேர்ந்தது மிகவும் வருந்தத்தக்க சம்பவமேயாகும். உலகிலுள்ள எல்லா நாட்டாருக்கும் எல்லா சமூகத்தாருக்கும் புதிய புதிய சீர்திருத்தக் காரர்கள் தோன்றி பழைமைகளை உடைத்தெரிந்து காட்டு மிராண்டித்தனத் திலிருந்து ஆச்சரியப்படத்தகுந்த மனிதத்தன்மைக்கு கொண்டுவந்து எவ்வளவோ முற்போக்குகளை உண்டாக்கி மக்களை மானமுடையவர்களா
கவும், சுதந்திரமாகவும், அறிவாளிகளாகவும் வாழும்படி செய்துவிட்டார்கள்.
சைனா, ஜப்பான், துருக்கி, பிரஞ்சு, இங்கிலாந்து, ருஷியா , ஜர்மனி முதலிய ஒவ்வொரு தேசத்திலும் தோன்றிய சீர்திருத்தக்காரர்கள் எல்லாம்
முதலில் பழைமையை அழிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாயிருந்து வந்திருக்க நமது தேசத்தில் மாத்திரம் சீர்திருத்தக்காரராய் விடுதலைக்கு உழைப்பவராகத் தோன்றின திரு.திலகரும், திரு.காந்தியும் முதலிய யாவ ருமே பழைமையைக் காப்பாற்றுவதிலும் புதுமையை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதிலுமே கண்ணுங் கருத்துமாய் இருந்து விட்டார்கள். இன்னும் இருந்தும் வருகின்றார்கள்.
*லோகமான்யர்” என்னும் திலகருக்கு வர்ணாச்சிரம தர்மமும், கீதையின் தத்துவ உபதேசமும் எவ்வளவு தேசீயமாய் இருந்ததோ அதை விட ஒருபடி அதிகமாகத்தான் திரு.காந்தியும் அவற்றை தேசீயமாய் உபதேசிக்கின்றார்-நிலை நிறுத்தவும் பாடுபடுகின்றார் என்பதல்லாமல் மற்றபடி திலகரை விட காந்தியார் எந்த விதத்தில் மேலானவர் அல்லது
சமத்துவத்திற்கு சமதர்மத்திற்கு அனுகூலமான காரியம் செய்தவர் அல்லது திட்டம் கையில் வைத்திருப்பவர் என்பதை யோசித்தால் உண்மை
விளங்கும். திலகர் காலத்திலாவது அவருக்கு புராண ராஜ்ய தர்மத்தைப்
பற்றி பேச பயமிருந்தது. திரு.காந்தி காலத்திலோ புராண தர்மம் மிகவும் வலிவும் செல்வாக்கும் பெற்று விட்டன. போதாக்குறைக்கு திரு. மாளவியா வுக்கு விடுதலை ஸ்தாபனத்தில் கெளரவமான உச்சஸ்தானம் கிடைக்கப் பட்டுவிட்டது.
145 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆகவே, விடுதலைக்கு தேசீய திட்டம் வகுக்க வேண்டியது திருவாளர்கள் மாளவியா, இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி போன்றவர் களாகவும், அதை வெளிப்படுத்த வேண்டியது காங்கிரசாகவும், நிறைவேற்றி வைக்க வேண்டியது திரு.காந்தியாகவும் ஏற்பட்டுவிட்டது. வாலிபர்களை மயக்க திரு. ஜவஹர்லாலை விட்டு ஏதாவது சொல்லச் செய்து விட வேண்டியது என்கின்ற இந்த முறையில் வருணாசிரமமும், இந்து
மதமும், புராண தர்மமும் அரசியலின் பேரால், விடுதலையின் பேரால் இந்த நாட்டில் இந்தக் காலத்தில் தாண்டவமாடுவதானது மக்களின் எவ்வளவு பாமரத் தன்மையைக் காட்டுகின்றது என்பதற்காகத்தான் இவைகளை எடுத்துக் காட்டுகின்றோம்.
இந்தக் காரணங்களால் தான் தேசீய இயக்கம் என்கின்ற போர்வை யைப் போற்றிக் கொண்டிருக்கும் வருணாசிரம-பார்ப்பனீய-முதலாளித் தத்துவக்கொள்கைகளைக் கொண்ட காந்தீயத்தை வெட்டிப் புதைக்கும் வேலையை இப்போது சுயமரியாதை இயக்கம் கைகொண்டு வேலை செய்ய வேண்டியதாகிவிட்டது. இதைச் செய்யாமல் சுயமரியாதை இயக்கம் மற்றத் துறைகளில் செய்யும் வேலைகள் எல்லாம் நதிக்கரையில் ஆற்றோரத்தில் கட்டுகின்ற கட்டிடங்களைப் போலத்தான் முடியும். ஏனெனில் சமய சமூகத் துறையில் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு வேலை செய்து வைத்திருந் தாலும் பார்ப்பனீய காந்தியரசியல் ஆதிக்கம் வரும்போது ஒரே அடியில் அவை கவிழ்க்கப்பட்டதாகி விடும். பெரும்வெள்ளம் வந்தால் நதிக்கரை:
யில் இருக்கும் வீடுகளுக்கு எப்படி ஆபத்தோ அது போலவே ஆகி விடும். இந்தக் காரணத்தால் தான்அரசியல் என்பதுடனும், காந்தீயம் என்பது
டனும் போராட வேண்டியிருக்கின்றதேயொழிய வேறில்லை.
இதைப்பற்றித் தப்பர்த்தம் கொள்கின்றவர்களுக்கு மாத்திரம் திரு. காந்தியார் உரைத்த ஒரேயொரு விஷயத்தை மாத்திரம் எடுத்துக் காட்டி விட்டு இதை முடிக்கின்றோம்.
அதாவது “மனித சமூகத்தில் வீதி கூட்டுவது ஒருவனது தர்மம் என்றும் கணக்கு எழுதுவது மற்றொருவனது தர்மம் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கின்றது. இதில் குப்பை அள்ளுவது இழிவு-கணக்கு எழுதுவது மேன்மை என்று கருதப்பட்டாலும் குப்பை அள்ளுகின்றவன் தனது தர்மத்தை விட்டுவிட்டு மற்றவன் தர்மத்தில் பிரவேசிக்க நினைத்
தாலும் அவன் தர்மமிழந்தவனாகிறான். இவனால் சமூகத்திற்கும் கேடு விளையும்” (காந்தி) என்பதே திரு. காந்தியவர்களின் சமூக சீர்திருத்தமும் அரசியலில் அவர் ஏற்றுக்கொண்ட ஜவாப்த்தாரித்தனமுமாகும். இதுவே சுயராஜ்யத்தில் ஜீவாதார உரிமைத் திட்டமுமாகும். மற்ற விஷயங்களைப்
பற்றி மறுமுறை எழுதுவோம்.
குடி அரசு - தலையங்கம் - 16.08.1931
குடி அரசு - 1981 (2) 146
குமிழ் தினசரி
“சண்டமாருதம்” என்னும் தமிழ் தினசரிப் பத்திரிகை திருச்சியில் இருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு ஆக சுயமரியாதை சங்கத் தலைவர்க ளுடைய முயற்சியின் மீது ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 7ந்தேதி முதல் வெளியாகி இருக்கின்றது. அதை ஒரு லிமிடெட் கம்பெனி மூலம் வெளி யாக்கக் கருதி இருந்த விஷயம் பத்திரிகைகள் மூலம் ஏற்கனவே வாசகர்: களுக்குத் தெரிந்ததாகும். லிமிடெட் கம்பெனி ரிஜிஸ்டர் செய்து பங்கு சேர்ந்த பிறகே பத்திரிகை வெளிவருவதென்றால் சற்று நாளாகும். ஆதலால் மகாநாடு நடைபெறும் நாளிலேயே எப்படியாவது பத்திரிகை வெளி யானால் அதற்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்கின்ற ஆசையின் மீது உயர்திரு.செளந்திரபாண்டியன் அவர்கள் தற்கால சாந்தியாக சொந்தத்தில் ஏற்பாடு செய்து திரு.முருகப்பா அவர்கள் ஆசிரியத் தன்மையில் வெளிப் படுத்தப்பட்டதானது மிகுதியும் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத்தக்க
துமாகும்..
கூடிய சீக்கிரத்தில் கம்பெனி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உயர்திரு. பாண்டியன் முதலியவர்கள் பங்கு சேர்க்க வருவார்கள். அந்தச்சமயம் பொது மக்களும் சிறப்பாக இயக்கத்தில் ஆர்வமுள்ள கனவான்களும்
ஆதரவளித்து பங்குதாரர்களாகச் சேர்ந்து *சண்டமாருதத்தை” என்றும் நிலையானதும், மேலானதுமான ஒரு முக்கிய பத்திரிகையாய் நின்று நமது இயக்கத்திற்குழைக்க தங்கள் தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டி
யது பொது மக்கள் கடமையாகும். பத்திரிகை நடத்துவது என்பது லேசான காரியம் அல்ல வென்பதும் அதிலும் ஒரு இயக்கத்திற்குப் பிரசார பத்திரிகையாய் ஒரு தினசரியை நடத்துவது என்பது சுலபமான காரியமல்ல வென்பதும் நண்பர்கள் உணர்ந்ததேயாகும். ஆதலால், கனவான்கள் எவ்வித யோசனையுமின்றி ஆதரவளிக்க வேண்டுகின்றோம். ஆங்காங்குள்ள நமது இயக்க நண்பர்கள் “சண்டமாருத”த்திற்கு ஒவ்வொரு வருஷ சந்தா தாரர்களாக அநேக சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்து தாங்களும் சந்தா தாரராய் சேரவேண்டுமாய் வேண்டிக்கொள்கின்றோம். ஒரு வார முயற்சி
யில் தினசரிப் பத்திரிகை வெளிவருவதற்கும், போதிய அளவு முன் பணம் உதவி செய்ததுமல்லாமல் மற்ற முயற்சிகளுடன் மகாநாட்டு வேலைத் தொந்திரவையும் எடுத்துக் கொண்ட உயர்திருவாளர்கள் செளந்திர
147 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பாண்டியன், முருகப்பா, விஸ்வநாதன் முதலிய கனவான்களின் ஊக்கத் தையும் உதவியையும் போற்றுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.08.1931
குடி அரசு - 1981 (2) 148
“ஒர் 33.
வாணியர் கூத்திரரில் சசர்ந்கவராணானும் வாணியர்
“வாணிய வகுப்பார்” என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு வகுப்பார் இந்தியாவில் எங்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் தாராளமாய் இருந்து வருகிறார்கள். அவர்கள் வியாபாரத்துறையில் மிகுதியும் ஈடுபட்டு பல இடங்களில் மிக செல்வந்தர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும், நாகரீக முடையவர்களாவும் இருந்து வருகின்றார்கள். பலர் ஆங்கிலக் கல்வியில் தேற்சியடைந்து உத்தியோகத்திலும், வக்கீல் தொழிலிலும் ஈடுபட்டு மிகப் பிரக்கியாதியாகவும் இருந்து வருகின்றார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நாகரீகமான சமூகம் இந்தியாவில் பிறந்ததி னாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதாலும் இந்த 20வது நூற்றாண்டிலும் தீண்டாதவர்களாகப் பாவிக்கப்பட வேண்டிய வர்களாக இருந்து வருகின்றார்கள். எப்படியெனில் திருவனந்தபுரம் ராஜிய எல்லைக்குள் அவர்கள் “அவர்ணஸ்தர்கள்” என்றே “ஈன ஜாதியார்” என்றே அரசியல் சமுதாய இயல்களில் எல்லாம் பதிவு செய்யப்பட்டு கோவில் பிரவேசமும், குளப்பிரவேசமும் தடுக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை மாகாணத்திலும், திருச்செந்தூரில் அவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இப்போது சமீபத்தில் இந்த வாரத்திலேயே தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள வேதாரண்யம் கோவில் சம்பந்தமாய் அக்கோவிலுக்குள் வாணியர்கள் பிரவேசிக்கக் கூடாது என்று
தீர்ப்பு ஆகி அப்பீலிலும் உறுதி ஆகிவிட்டது. அத்தீர்ப்பில் ஜட்ஜு குறிப் பிட்டு இருக்கும் விஷயம் மிகவும் மோசமானதேயாகும். அதன் சாரமாவது, “வாணியர்கள் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக்கொள்வது ஆதார மற்றதாகும்”..
“அவர்கள் எள்ளைப் பிழிந்து எண்ணை எடுப்பதாகிய இழிவான தொழிலைச் செய்வதால் அவர்கள் தாழ்ந்த ஜாதி இந்துவாக கருதப்
149 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
படுகிறார்கள். “சூத்திரர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை உண்டு என்றா
லும் வாணியர்கள் இந்து கோவிலுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்த போதெல்லாம் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் அவர்களுக்குக் கோவில் பிரவேச உரிமை கிடையாது” என்பதாக தீர்ப்புச் செய்து அப்பீலை தள்ளி விட்டார். இந்தப்படி ஜட்ஜு தீர்ப்பு சொன்னதற்கு ஆதார மாக தனது தீர்ப்பில் மனுதர்ம சாஸ்திரத்தை எடுத்துக்காட்டி இருக்கிறார். எனவே இந்தத் தீர்ப்பின்படி இனி “சூத்திரர் கள் என்று சொல்லப்படும் மக்கள் அதாவது, பார்ப்பனர் தவிர ஏனையோர் விஷயத்திலும், கோர்ட்டு நடவடிக்கைகளுக்கு மனுதர்ம சாஸ்திரம் தான் ஆதாரமாய் இருந்து தீர்மானிக்கப்போகின்றது என்பதில் ஆஷேபனை இல்லை. கோவில் நிர்வாகிகளுக்கும், உள்ளூர் கலகக்காரர்களுக்கும் காசு பணம் கொடுத்து சரிசெய்து கொள்ள முடியாமல் கோர்ட்டுக்கு போகும் இன்னும் சில சமூகங்களுக்கும் இந்தக் கதிதான் நேரக்கூடும். அதாவது கீழ்ஜாதி என்று தீர்ப்புப்பெற வேண்டிய தாகிவிடும் என்பது ஒருபுறமிருந்தாலும் இனி வரப்போகும் “சுயராஜிய”த் தில் இம்மாதிரி நடவடிக்கைகளுக்கு மனுதர்ம சாஸ்திரம் கூட தேவை யில்லாமல் போய் விட்டது. மற்றென்னவெனில், இதற்குக் காங்கிரஸ் காரியக்கமிட்டியின் பிரஜா உரிமைத் தீர்மானமே போதுமானதாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 16.08.1931
குடி அரசு - 1981 (2) 150
யில் ௩யிகள் .
பிறந்தஙான் வையவம்
தலைவரவர்களே! நண்பர்களே! முஸ்லீம் சமூகத்திற்கே முக்கியமான இந்த நாளில் எனக்கும் ஒரு சந்தர்ப்பமளித்து இங்கு பேசும்படி செய்ததற்கு எனது நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இங்கு எனக்கு முன்பாக மெளல்வி சாயபு அவர்களும் ராவ்சாகிப் இராமச்சந்திரன் செட்டி யார் அவர்களும் மிக்க அருமையான விஷயங்களை தக்க நூல் ஆதார ஆராய்ச்சியுடன் எடுத்துச்சொன்னார்கள். நானோ அந்தக் காரியத்தில் சூனியமானவன். அதாவது நூலராய்ச்சி என்பது எனக்கு கிடையாது. நான்
அதில் அதிகக் கவலை செலுத்தியதுமில்லை. அது மாத்திரமல்லாமல் பெரியவர்கள், மதத்தலைவர்கள் என்பவர்களின் பெருமைகளும், அவர்களது உபதேசப் பெருமைகளுமே ஒரு சமூகத்தின் மேன்மைக்குப் போதுமானது என்று நான் கருதுகின்றவனுமல்ல. ஆதாரங்கள் எப்படிப் பட்டதாக இருந்தாலும், மதத்தலைவர்கள் “மத அவதார புருஷர்கள்” என்பவர்கள் எவ்வளவு பெருமை பொருந்தியவர்களாக இருந்தாலும், இன்றைய நம்முடைய யோக்கியதை பிரத்தியட்சத்தில் எப்படி இருக் கின்றது? உலக மக்கள் வரிசையில் நமது நிலைமை என்ன? நமது பிரத்தி யட்ச அனுபவ நடவடிக்கையும், மதிப்பும் எவ்வளவில் இருக்கின்றன? இதற்கு என்ன காரணம்? என்பவை போன்றவைகள் தான் எனது ஆராய்ச்சி யாகும். அவைகளை ஆதாரமாகக் கொண்டு தான் பேசவேண்டுமென்பது எனது அபிப்பிராயம். அன்றியும் மெளல்வி சாயபு அவர்கள் தங்களது மதப்
பெரியார் அவர்கள் பெருமையையும் மத ஆதாரமாகிய குர்ஆன் பெருமையையும் எடுத்துச்சொன்னது போல் நான் சொல்ல வேண்டு மானால் எனது மதம் என்று சொல்லப்படும் இந்து மதத்திற்கு யார் மதப் பெரியார்? எது மத ஆதாராம்? என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டமான பிரச்சினையாக ஏற்பட்டு விடும். ஒரு சமயம் எனக்கு கஷ்டமாக இருப்ப தற்கு காரணம் இருந்தாலும் இருக்கலாம். ஏனெனில் நான் நூலாராய்ச்சி அற்றவன். அது மாத்திரமல்லாமல் *மதங்களுக்கே விரோதி, அதிலும் இந்துமதத்திற்கே ஒரு பெரிய துவேஷியாகவும், துரோகியாகவும் இருக்கின் றவன்” என்பதாகவெல்லாம் சொல்லப்படுகின்றவன். ஆதலால் என்னைத்
151 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தள்ளிவிட்டாலும் மற்றபடி வேறு எந்த இந்துமதப்பக்தர்களோ, uflurasi களோ, அபிமானிகளோ, பண்டிதர்களோ, ஆராய்ச்சியாளர்களோ, மத குருமார்களோ யாராக இருந்தாலும் அவர்கள் இந்து மதத்திற்கு யார். தலைவர்? எது ஆதாரம்? என்பது போன்ற விஷயங்களை எடுத்துச் சொல்வது என்பது சுலபமான காரியமாயில்லை. மத ஆதாரம் என்று சொன்னால் முஸ்லீம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் ஒருவராவது “நபி அவர்களையும் குர்ஆனையும் பற்றிக் கேட்டிராத வர்களும், அவைகளை ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்று மறுப்பவர்களும் இருக்கவே மாட்டார்கள். ஒப்புக் கொண்டே தீருவார்கள். ஆனால் இந்து என்று தங்களை சொல்லிக் கொள்ளுகின்றவர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு உறுதியான, எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படியான, யாராலும் மறுக்க முடியாததான ஒரு மதத்தலைவரோ, ஒரு மத ஆதாரமோ இருப்பதாக
இந்துக்கள் யாரும் சொல்ல முடியாது. அதுமாத்திரமல்ல ஒன்றை மற் றொன்று ஆட்சேபிக்கும்படியானதாகவும், ஒருவரை மற்றொருவர் குற்றம் சொல்லும்படியானதாகவும் தான் மதத் தலைவர்களும், மத ஆதாரங்களும் இருக்கின்றன.
நண்பர்களே!
உலகமெல்லாம் விழிப்படைந்து மதங்களின் மீது வெருப்படைந்து அவ்வளவோடு மாத்திரமல்லாமல் கடவுளைப்பற்றிய ஆராய்ச்சியிலேயும் இறங்கி சிலர் “கடவுளே இல்லை” யென்றும், சிலர் “சந்தேகம்” என்றும் சிலர். “இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? நமக்கு அதைப் பற்றிய கவ லையே வேண்டாம்” என்றும், கடவுள் உணர்ச்சியே உலக முற்போக்குக்
கும், அறிவு வளர்ச்சிக்கும், சமத்துவத்திற்கும், சமதர்மத்திற்கும் தடையானது
என்றும், “கடவுள் உணர்ச்சி ஒழிந்தாலொழிய சமதர்மம் நிலவ முடியாது” என்றும் சொல்லிக்கொண்டும், உலகில் தேசம், மதம், ஜாதி, நிறம், வகுப்பு என்பவைகளான வித்தியாசங்களே இல்லாமல் எல்லா மக்களும் சமத்துவ முள்ள சகோதரர்களே என்பதாகவும், “உன் தேசம், என் தேசம்? என்று சொல்லுவதே குறுகின நோக்கமும், வகுப்பு துவேஷ உணர்ச்சியும் கொண்ட தென்றும், தேசத்துக்கு தேசம் யுத்தம் என்பதே கூடாதென்பதாகவும், ஜாதி மதத் தேசப்பிரச்சினையே உலகத்தில் இருக்கக்கூடாதென்றும் பேசப் படுகின்ற, அவற்றிற்காக பெரிய பெரிய முயற்சிகளும் செய்யப்படுகின்ற இந்தக் காலத்தில் தனித் தனி மத நூல்கள் ஆராய்ச்சியில் இறங்கி அவற்றி லிருந்து உண்மைகளைக் கண்டுபிடித்து மக்கள் யோக்கிதையையும், போக்கையும் நிர்ணயிப்பது என்பது இனி ஒருநாளும் பயனளிக்கக் கூடிய தாகாதென்பதே எனது அபிப்பிராயம். மதப்பிடிவாத காரணமாகவும், பிரத்தியக்ஷ காரியங்களைக் கொண்டு தங்கள் தங்கள் நாட்டையும், சமூகத் தையும் மதிக்காமல் ஆதாரங்களைக்கொண்டு தங்களைப் பெருமையாய் நினைத்துக்கொண்டு, முற்போக்கில் கவலை இல்லாமல் இருந்ததாலுமே
குடி அரசு - 1981 (2) 152
இந்த நாடு இன்று உலக மக்கள் முன்பு மிகக்கேவலமாகவும், இழிவாகவும் கருதப்பட்டு வருகின்றது என்பது எனதபிப்பிராயமாகும். மற்றும் இதனா லேயே பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்த நாடு அடிமை நாடாக
வும், அடிமை சமூகமாகவும் இருந்து வருகின்றது என்பதும் எனது அபிப்பி ராயமாகும். உலகத்தில் புத்தரை தங்கள் மதபோதகராக சொல்லிக் கொண்டு ஒரு பெரும் சமூகம், சுதந்திரத்துடன் வெகு மேன்மையாய் வாழுகின்றது.. கிறிஸ்துவை தங்கள் மதபோதகராகச் சொல்லிக்கொண்டு மற்றொரு பெரிய
சமூகம் சுதந்திரத்துடன் மேன்மையாய் வாழுகின்றது. அது போலவே முகமது நபியை தங்கள் மதபோதகராகச் சொல்லிக்கொண்டு இனியும் ஒரு பெரிய சமூகம் மிக மேன்மையாகவும், சுதந்திரமாகவும் வாழுகின்றது..
ஆனால் இந்திய சமூகம் யார் பேரைச்சொல்லிக் கொண்டாவது எப்போதாவது மேன்மையாக வாழ்ந்ததாகவோ, சுதந்திரமாய் இருந்த தாகவோ கதையாவது இருக்கின்றதா? காரியத்திலாவது இருக்கின்றதா? என்று பாருங்கள். ஏன் இல்லை? புத்தர் கிறிஸ்து முகமது நபியாகியவர்கள் சீர்திருத்தக்காரர்களாய் தோன்றினார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அப் பெரியார்களது சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டார்கள். நடவடிக்கையில் அவர்கள் வேறு எந்த எந்த விஷங்களில் தவறுதலாய் நடந்தவர்கள் என்று சொல்வதானாலும் தங்கள் தங்கள் சமூகத்தைப் பெருக்கி, எல்லோரையும் இழுத்துப் பிடித்து ஒன்றாக்கி, ஒற்றுமை உணர்ச்சியும், சமத்துவ உணர்ச்சியும், சகோதர உணர்ச்சியும் கொண்டு நடந்து கொள்ளுவதில் ஒருவரும் தவறவேயில்லை. அந்த ஒரு காரியமே அந்தந்த சமூகத்தை மேன்மையாய் மானத்துடன் வாழச் செய்கின்றது.
நம் நாடு, நம் சமூகம் என்னும் இந்து சமூகம் இந்தக்காரியத்தில் சுத்த சூன்யதிசை அடைந்து, தனது சமூகத்தை மற்ற எல்லா சமூகத்தாருக்கும் வினியோகித்துக்கொண்டு க$ணதிசை அடைந்து வருகின்றது. இன்றைய தினம் இந்தியாவில் 8- கோடி முஸ்லீம் மக்கள் வாழுகின்றார்கள். இனியும் வருஷ வருஷம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றார்கள். இந்த நாட்டில் இவர்கள் எப்படிப் பெருகினார்கள்? இதற்குக் காரணம் அவர். களுடைய சமத்துவ உணர்ச்சியும், சகோதர உணர்ச்சியும் அல்லாமல் வேறு எதைச் சொல்லமுடியும்? என்று கேட்கின்றேன். “முஸ்லீம்கள் பலாத் காரத்தை உபயோகித்து தங்கள் சமூகத்தைப் பெருக்கினார்கள்'”” என்று சுலபமாய் சொல்லிவிடலாம். அவர்கள் அதை மறுத்தும்கூட நாம் வாஸ்த வம் என்றே வைத்துக்கொண்டாலும் அதுபோலவே இந்துக்களையும் பலாத்காரத்தை உபயோகிக்க வேண்டாம் என்று யார் தடுத்தார்கள்? எந்த மதக்கொள்கை தடுத்தது? இந்துக்களும் பலாத்காரத்தை உபயோகிக்க வில்லை என்று யாராவது சொல்லிவிட முடியுமா? புராணங்களில் சொல்லப்படும் தேவர்கள்-அசுரர்கள் சண்டையெல்லாம் சாத்வீகமா? இராமாயண, பாரத சம்பவங்கள் என்பதெல்லாம் அஹிம்சாத் தத்துவமா?
153 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சமணர், சைவர் கொலைபாதக சரித்திரமெல்லாம் அன்புமயமா? சமணரைக் கழுவேற்றிய உற்சவங்கள் பலாத்காரமற்ற தன்மையைக் காட்டுகின்றனவா?' பெளத்தர் கோயில்களை இடித்து, விக்கிரகங்களை உடைத்து, உறுக்கி
சீரங்கம் கோவில் கட்டிய வைணவ சமய உண்மைகள் என்பவை எல்லாம் சமரச நோக்கமா? என்பனவற்றை யோசித்துப்பாருங்கள். இப்படியெல்லாம்
இருந்தும் ஏன் இந்து சமூகம் பெருகவில்லை - மேன்மையாக வாழ வில்லை - மானத்தோடு பிழைக்க முடியவில்லை? இந்திய நாடு மாத்திரம் அடிமை நாடாக வெகு காலமாகவே இருந்து வரக் காரணம் என்ன? என்பவைகளை யோசித்தால் உண்மை விளங்காமல் போகாது.
ஒரு மதம் அந்த மத மக்களை மோட்ச லோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைக் கடவுளிடத்தில் உட்கார வைக்கின்றதா? என்பதல்ல எனது மத சம்பந்தமானக் கவலை. மற்றென்னவென்றால் ஒரு
மதம், அந்த மத மக்களை மானத்தோடு, சுதந்திரத்தோடு, சாந்தியோடு வாழச் செய்கின்றதா? என்பதுதான் எனது கவலை.
இந்த நாடு விடுதலை பெறாததற்கு இந்நாட்டு மதமும், சமூகமுமே முக்கிய காரணங்கள் என்று தான் சொல்லியாக வேண்டும்.மக்கள் யாவரும்
ஒரு சமூகமாய், ஒரு மதமாய், ஒரே சகோதரத்துவமுள்ளவர்களாயில்லாத
நாடு ஒரு நாளும் உண்மையான விடுதலையைப் பெறமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்திய நாடு ஏன் ஒரு சமூகமான, சகோதரத்தன்மையான நாடாக யிருக்கவில்லை? என்பதை யோசித்துப்பாருங்கள். முக்கியமாய் மதங்களின் முட்டுக்கட்டைகளே அல்லாமல் வேறு என்ன காரணம் சொல்லக்கூடும்?
சகோதரத்தன்மையும், சமத்துவமுமுள்ள கொள்கையை ஏன் எல்லோ
ரும் தழுவக்கூடாது? இதற்குப்பெயர் இந்துமதம் என்பதாய் இருந்தாலென்ன? இஸ்லாம் மார்க்கம் என்பதாய் இருந்தாலென்ன? வேறு என்னவாய் இருந்தாலென்ன? சகோதர மார்க்கம், சமத்துவ மார்க்கம், ஒற்றுமை மார்க்கம் என்பதாக உள்ள எதையும் அறிவுள்ள மனிதன் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இந்த முக்கியத் தத்துவங்களை விட்டு விட்டு மார்க்கம் என்றால் கடவுளை அடைவதென்றும், வெறும் வேஷம் என்றும் மாத்திரம் நினைத் துக்கொண்டு மக்கள் ஒருவருக்கொருவர் விருப்பு, வெருப்பைக் காட்டு கின்றது அறிவீனமேயாகும். இந்தக் காரணங்களால்தான் நல்ல பயளளிக்
கும் மார்க்கங்கள் கூட பெருக்கமடையாமல் போகின்றன. ஒரு மனிதனைப் பார்த்து வேஷமாத்திரத்தினால் இன்ன மதக்காரன் என்று சொல்லிவிடக் கூடியதாய் இருந்தால் - தன்னை இன்ன மதக்காரன் என்று காட்டிக் கொள்வ
தற்கு இந்த வேஷமேபோதும் என்று நினைப்பதாயிருந்தால் அது ஒரு நாளும் நல்ல-பயனளிக்ககூடிய மார்க்கம் என்று சொல்லிவிட முடியாது.
குடி அரசு - 1931 (2) 154
இஸ்லாம் மார்க்கம் மேன்மையான மார்க்கம் என்றால் அது இந்தியா வின் மனித சமூகம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொள்ளவேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாய் இருப்பவைகளை ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.மத சம்பந்தமான பழக்க வழக்கங்கள், வேஷங்கள் என்பவைகள் எல்லாம் ஒழியவேண்டும். பகுத்தறிவுக்கு ஏற்ற எந்தக் காரியத்தையும் செய்ய சுதந்திர மிருக்கவேண்டும்.
மக்களிடத்தில் அன்பு வைத்து சகோதரத்தன்மை காட்டி அன்பு உண்மை என்பவைகளிடத்தில் நம்பிக்கை வைத்து மனிதர்கள் எல்லோரை:
யும் சமம் என்று கருதிக் கொண்டு மனித சமூகத்திற்கு சேவை செய்வதே
தன் கடமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்கள் எல்லாம் இஸ்லாம் மார்க்கக்காரர்கள் என்று சொல்வதானால் என்னையும் மற்றும் என் நண்பர்.
கள் பலரையும் இஸ்லாம் கொள்கைக்காரர்கள் என்று தான் முஸ்லீம்கள் எண்ண வேண்டுமேயொழிய தாடியையும், தலையையும், உடையையும் பார்த்து இஸ்லாம் என்றும், இஸ்லாம் அல்லாதவன் என்றும் பிறிப்பதாய் இருக்கக் கூடாது. துருக்கியில் வேஷமாத்திரத்தால் மதம் இல்லை. அதுபோலவே இந்தியாவிலும் வேறுபாட்டை பார்வையிலாவது மறையும்
படி மக்கள் எல்லோரும் முதலில் ஒரே மாதிரியான நடை, உடை, பாவனை யாக வேண்டும். பிறகு எண்ணங்களைப் பறிமாரிக்கொள்ள வேண்டும். பகுத்தறிவுக்குப் பொறுத்தமான கொள்கைகளையே மனித வாழ்க்கைக்கும் மார்க்கங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லீம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படி சொல்ல மற்ற மார்க்கக்காரர்களுக்கு ஏன் தையரிமில்லை? ஏனெ
னில், திரு. முகமதுநபி சமீபகாலத்தில் தோன்றி சமீபகாலத்தில் ஏற்படுத்திய கொள்கைகள் ஆனதினாலும் அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது.
ஆகவே முஸ்லீம்கள் பகுத்தறிவுக்கு விரோதமாய் ஏதாவது இருந் தால் அது தங்களது மார்க்கக் கட்டளை அல்ல என்று தள்ளிவிடவும் அவற்றை நீக்கிவிடவும் பகுத்தறிவுக்காரரையெல்லாம் தங்கள் சகோதரர்கள். என்றும், இஸ்லாம் என்றும் சொல்லவும் தயாராயிருக்க வேண்டும். அது மாத்திரமல்லாமல் அவர்கள் தங்கள் சமூகம் என்றும், அன்னிய சமூகம் என்றும் வித்தியாசம் பாராட்டக்கூடாது. எல்லோரையும் பகுத்தறிவு மார்க்க மாக ஆக்க முயற்சிக்க வேண்டும். உலகமெல்லாம் ஒரே மார்க்கமாவதற்கு- பகுத்தறிவு மார்க்கமாவதற்கு முஸ்லீம்கள் பாடுபடவேண்டும். அவர்க ளுக்கே அதிக செளகரியமிருக்கின்றது. ஆதலால் அதுவே உலகமத போதகர் என்று சொல்லப்படும் திரு. முகமது நபி அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். இதுவே அவரது பிறந்தநாளாகிய இந்த முக்கியமான நாளில் நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மையாகும்.
155 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
“மதங்கள் ஒழிந்த பிறகு தான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்படமுடியும்?””என்பது அநேக அறிஞர்களது அபிப்பிராயமானாலும், அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போது “உலக சமா தானம் ஏற்பட்டு விட்டது” “சாந்தி ஏற்பட்டுவிட்டது” என்று சொல்லப் படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத்தானிருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அது சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய
காரியங்களில் உலகில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமானக் கவலை
எடுத்து வருகின்றது.
துருக்கியையும், ஆப்கானிஸ்தானத்தையும் பார்க்கும்போது அவை எவ்வித சீர்திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளத் துணிந்து தயாராயிருக் கின்றதாகவே காணப்படுகின்றது.
ஆகவே இந்திய முஸ்லீம்களும் அதைப் பின்பற்றினால் இஸ்லாம் கொள்கைகள் உலகக் கொள்கைகளாவதில் எவ்வித கஷ்டமும் இருக்கா தென்றே கருதுகிறேன்.
குறிப்பு: கோவை அதார்ஜமாத் மஜீத் கமிட்டியார் நடத்திய முகமதுநபி பிறந்தநாள் கூட்டத்தில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 23.08.1931
குடி அரசு - 1981 (2) 156
விருதுநகர் மகாநாடு 1T
மதவமாழிப்புத் தீர்மாணம்
விருதுநகரில் கூடிய மூன்றாவது சுயமரியாதை மகாநாட்டு நடவடிக் கைகள் விஷயமாகவும்,மகாநாடுகளின் வரவேற்புத் தலைவர்கள், தலைவர்: கள் ஆகியவர்கள் உபன்யாசங்களைப் பற்றியும் சென்ற வாரம் எடுத்து எழுதி யிருந்தோம். மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப்
பற்றி மறு முறை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந்தோம். ஆகவே அங்கு நிறை வேற்றப்பட்ட சில தீர்மானங்களைப்பற்றி இதில் ஆராய்வோம்.
“மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாயிருப்பதாலும், மதங்கள் ஒழியாமல் சகோதரத்தன்மை வளராதாதலினாலும் எல்லா மதங்களும் ஒழிந்து போக வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.” என்பது முதல் தீர்மான
மாகும்.
இத்தீர்மானமானது இந்தியாவில் உள்ள தேசீய வாதிகள் என்பவர்கள் யாருக்குமே விரோதமானதாகும் என்பதோடு, தேசீயத் தலைவர்களுக்கும் தேசீயத்தொண்டர்களுக்கும் மிகமிக விரோதமானதாகும்.
மற்றும், “இந்தியத் தொழிலாளர்கள் தலைவர்களான”, திரு.கிரி திரு. சிவராவ் போன்றாருக்கும், சமதர்மத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற “நவஜவான் பாரத சபை வீரர்கள்” என்று சொல்லிக் கொள்ளும் திரு.போஸ் கூட்டத்தாருக்கும், இந்தியாவில் பூரண சுயேச்சையையும், போல்ஸ்விசத் தையும் பற்றிப்பேசிப் “பொது உடமைக்காரர்” என்று சொல்லிக்கொள்ளும் திரு.ஜவஹர்லால் கூட்டத்தாருக்கும் இத்தீர்மானம் விரோதமானதேயாகும். இது மாத்திரமல்லாமல் அகிம்சா தர்மத்தையும் இராம இராஜியத்தையும்
பற்றிப் பேசி வருணாசிரமத்தில் பூரண நம்பிக்கை வைத்து இருக்கும் ஸ்ரீமத் பகவத்கீதை உபாசகராகிய “மகாத்மா” காந்திக்கும் அவரது கூட்டத் தாராகிய திரு.இராஜகோபாலாச்சாரி போன்றாருக்கும் விரோதமானதும்,
காதால் கேட்பதற்கே சகிக்க முடியாத அளவு கர்கைடூரமானதுமாகும். இவை
157 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மாத்திரமல்லாமல், சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களிலேயே சிலருக்கு இது பிடிக்காத தீர்மானமாகும் என்பதிலும் உண்மை இல்லாமல் போகாது.
ஆகவே இந்தியாவின் ஜனத்தொகையில் முஸ்லீம், கிறிஸ்தவர்கள் முதலிய அன்னிய மதக்காரர்கள் என்பவர்கள் உள்பட 100 க்கு 90 பேர். களுக்கும், இந்தியாவின் பொதுநல ஸ்தாபனங்கள் என்பவைகளில் 100-க்கு
99 'l ஸ்தாபனங்களுக்கும், உலக மனித சமூகத்திலேயே 100-க்கு 80
பேர்களுக்கும் திருப்தியளிக்காததும், விரோதமானதுமான தீர்மானமாகும்.
இத்தீர்மானத்திற்கு இத்தனைவித எதிர்ப்புகளும், அதிருப்திகளும் இருக்கக் காரணமென்னவென்று பார்ப்போமானால், மனிதனுடைய அறிவைக் கெடுக்கும் மயக்கம்தரும் போதை வஸ்துக்களைப் போலவே மதத்தின் தத்துவங்களும் இருக்கின்றபடியால் அதில் ஈடுபட்ட எவருக்கும்
மத போதை ஏற்பட்டு, பகுத்தறிவு மழுங்கி, மூடபக்தியும், குருட்டு நம்பிக் கையும் ஏற்பட்டு, சுயம் என்னும் சுவாதீனத்தை இழக்க வேண்டியவர்களாய் விடுகின்றார்கள் என்பதே யாகும்.
உதாரணமாக, இந்து மதம் என்பதைப் பற்றியே முதலில் எடுத்துக் கொண்டோமானால் அம்மதத்தினால் மேன்மையடைகின்றவர்களும், மதத்தின் பயனாய் சோம்பேறிகளாகவே இருந்து பாடுபடாமல், ஊரான் உழைப்பில் வயிற்றை நிறப்பி மேன்மையாய் வாழுகின்றவர்களும் இந்து மதத்தைக் காப்பாற்ற நிலைநிறுத்தப் பாடுபட வேண்டியதும் அதற்கு எதிரி டையாய் இருப்பவர்கள் மீதும், அதை ஒழிக்க முயற்சிப்பவர்கள் மீதும் ஆத்திரப்பட்டு, மதம் ஒழிக்கப்படாமல் இருக்கத் தடை கல்லாய் - முட்டுக் கட்டையாய் இருக்க வேண்டியதும் இயற்கை என்று வைத்துக்கொண்டா
லும், இந்துமதத்தின் காரணமாய் ஈஎனஜாதியாய், இழிகுலமாய், அடிமையாய், வேசிமகனாய், கீழ்ஜாதியாய்க் கருதப்படுகின்ற மக்களும் சரீரத்தைப் பிழிந்து பாடுபட்டுப் பாட்டின் பலனை சோம்பேறிகளுக்கும், சூட்சிக்காரர். களுக்கும், கொள்ளை கொடுத்து விட்டு நாயினுங்கீழாய், மலந்தின்னும் நாய்க்கிருக்கும் சுதந்திரத்திற்குக்கூட உரிமையில்லாத ஜந்துவாய் இருந்து கொண்டிருக்கின்ற “அசையும் பிணங்களான மக்கள்” தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய இந்துமதத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றார்கள்- ஒழிக்க முயற்சிக்கின்றவர்களையும் எதிர்க்கின்றார்கள் என்றால் மதங்களால் ஏற்பட்ட மதியீனத்திற்கும், மானமற்ற தன்மைக்கும் வேறு என்ன உதாரணங் கூறக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை.
கள்குடி வெறியன், சாறாயக் குடிவெறியன் ஆகியவர்களால் நாட்டுக்கு, மக்களுக்கு, மனித வாழ்க்கைக்கு, மனிதத்தன்மைக்கு ஏற்படும். தொல்லையை விட கேட்டைவிட மதவெறியர்களால் ஏற்படும் தொல்லை
யும் கேடும் அளவிடமுடியாத அதிகமென்றே சொல்லுவோம்.
குடி அரசு - 1981 (2) 158
இன்றையதினம் இந்த நாட்டு ஆட்சிக்கு “வெள்ளைக்காரனுடைய ஆதிக்கம் கூடாது” என்னும் அரசியல் கிளர்ச்சி என்பதும் தேசீயக்கிளர்ச்சி என்பதும் மதத்தை-ஜாதியை அடிப்படையாகக் கொண்டதா? அல்லது மானத்தை, சுதந்திரத்தை விடுதலையை அடிப்படையாகக் கொண்டதா? என்பதை யோசித்தால் மதவெறியின் தன்மை தானாக விளங்கும்.
சாதாரணமாக வெள்ளைக்கார அரசாக்ஷியின் ஆதிக்கத்தை இன்றைய தினம் இந்துக்கள் ஒழிக்க வேண்டும் என்பதின் கருத்தெல்லாம் அவன் வேறுமதக்காரனாய் இருக்கின்றான் என்பதல்லாமல் வேறு என்ன தத்துவத்தில் இன்று அன்னிய ஆக்ஷி என்பதற்கு காரணம் சொல்லப்படு கின்றது? என்பதை கவனித்துப்பாருங்கள். வேண்டுமானால், இன்னும் ஒரு காரணம்அதிகமாய்ச் சொல்லலாம். என்னவென்றால், பொருளாதார சம்பந்த மான காரணம் - அதாவது “இந்தியர்கள் செல்வம் அன்னிய நாட்டிற்கு போகின்றது” என்பதுமாகும். என்றாலும், இது பாமர மக்களை ஏமாற்று வதற்குச் சொல்லிக் கொள்ளப்படும் காரணமேயாகும்.
ஏனெனில், இந்துமதத்தால் இந்தியநாட்டுச் செல்வம் நாசமாவதை விட - ஏழைத்தொழிலாளிகள் கொள்ளை அடிக்கப்படுவதைவிட அன்னிய ஆக்ஷியால் அதிகக்கஷ்டம் இல்லையென்றாலும், இதை ஆக்ஷேபணை: சொல்லாமல் ஒரு காரணம் என்றே ஒப்புக்கொண்டு பார்த்தாலும் கூட ஒரு மனிதனுக்கு அவனுடைய சுதந்திரமும் சுயமரியாதையும் முக்கியமானதா? அல்லது பொருளாதாரத் தத்துவமே முக்கியமானதா? என்று யோசித்தோ மேயானால் பொருளின் முக்கியாம்சம் எவ்வளவோ கீழானபடிக்குப் போய்விடும். ஆனால் சுதந்திரமும், சுயமரியாதையும் மேலானது என்பதை எப்படிப்பட்ட மோசக்காரனும் ஒப்புக்கொண்டுதான் தீருவான்.
ஆகவே, இந்த நிலைமையில் இந்திய மக்களுடைய சுதந்திரமும், சுயமரியாதையும் பாதிக்கப்படுவது வெள்ளைக்கார ஆக்ஷியாலா? இந்து மதத்தாலா? என்பதை இப்போது நடுநிலைமையில் இருந்து யோசித்து
பார்த்தால் தானாகவே உண்மை விளங்கும். மேலும் இந்துமதத்தினால் தான் இந்தியாவில் “கீழ்ஜாதி மனிதனும் ஈன ஜாதி மனிதனும் எந்த நிலைமை யிலும் சுதந்திரம் பாராட்டக் கூடாத சூத்திரனும், சண்டாளனும் தெருவில் நடக்கவும் குளத்தில் தண்ணீர் மொள்ளவும் கோயிலுக்குள் புகவும் அருகில் வரவும் யோக்கியதையற்ற மக்களும்” இருந்துவருகின்றார்களா? அல்லது வெள்ளைக்கார ஆக்ஷியின் பயனாய் இருந்து வருகின்றார்களா? என்று கேட்கின்றோம்.
ஆகவே மனிதத்தன்மையும், சகோதரத்தன்மையும் ஏற்பட வேண்டு மானால் மதங்கள் ஒழிய வேண்டும் என்பதாக விருதுநகர் மகாநாடு தீர்மானம் செய்திருப்பதில் அறிஞர்கள் உண்மைச் சுதந்திர வாதிகள் - சுயமரியாதை உள்ளவர்கள் - சமதர்மத்தை விரும்புகின்றவர்கள் என்ன
159 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
குற்றம் சொல்ல முடியும்? என்று கேட்கின்றோம்.
அன்றியும் இந்நாட்டின் இன்றைய சுதந்திர ஆக்ஷிக்கு, சகோதரத்து வத்திற்கு, சினேக தத்துவத்திற்கு மதங்களே அதாவது இந்து, முஸ்லீம், கிறிஸ்து முதலிய மதங்களே இடையூறாய் இருந்துகொண்டு உட் பகை யையும், சாந்தியற்ற தன்மையையும் உண்டாக்கி வருவதை நாம் நேரிலேயே தினமும் பார்த்தும், கேட்டும் வருகின்றோமாதலால் விருதுநகர் மகாநாட்டில் “ மக்களுக்குள் எவ்வித மதஉணர்ச்சியும் இருக்கக்கூடாது”
என்றும் தீர்மானிக்க வேண்டியதாயிற்று.
ஆகவே மதமானது ஒரு மனிதனுக்கு புறத்தன்மையிலும், அகத் தன்மையிலும் கேடுசூழ்வதாகவே இருக்கின்றபடியால், உலகத்திற்குப் பொதுநலசேவை என்பது முதலாவதாக மதங்களை அழிப்பதே, மத உணர்ச்சிகளை ஒழிப்பதே என்பதாகத்தான் முடிவுகொள்ள வேண்டியிருக்
கின்றது.
மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்தகாலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்-மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டுமிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
அவையாவன,
ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில் (அதாவது மதநம்பிக்கையுள்ள இடத்தில்) வேறு எதை
ஏற்படுத்தப் போகின்றீர்கள்?”
இரண்டு “நீங்கள் ஏன் வெறும் அழிவு வேலைகளையே செய்து வருகின்றீர்கள்?” என்பவைகளேயாகும்.
இந்தக் கேள்விகள் மதவெறியால் மயக்கமெய்திய அடிமைத்தன்மை
யின் பிரதிபிம்பமேயொழிய மற்றபடி இக்கேள்விகளில் எவ்வித ஜீவத் தன்மையும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் மதமோ அல்லது வேறு எதுவோ ஒன்று அதாவது மனிதனை அடிமைகொண்டு, அவனது சுயஅறிவைக் கெடுக்கக்கூடியதான சாதனம் மனித வாழ்க்கைக்கு அவசியமானது என்று கருதுவதினாலேயே இம்மாதிரிகேட்கச்செய்கிறது.
குடி அரசு - 1981 (2) 160
ஆனால் அப்படிப்பட்ட எதுவும் மனிதத்தன்மைக்கும், வாழ்க்கை முற்போக் குக்கும் தடையானது கேடானது என்று முடிவு செய்யப்பட்ட பிறகு அந்த இடத்தில் வேறு எதை நம்மால் வைக்கமுடியும் என்பது நமக்கு விளங்க வில்லை. இன்னமும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு உதாரணத் தைச் சொல்லிக் காட்டுகின்றோம்.
அதாவது,
ஒரு மனிதனின் சரீர சுகத்திற்கு விரோதமான ஒரு நோயை ஒழிக்க வேண்டுமானால் அந்த மனிதனுக்கு இந்த வியாதி ஒழிந்து போனால் அந்த இடத்தில் வேறு எதை வைக்கின்றது என்று யாராவது கேட்டால் அவரை: அறிவுள்ள மனிதன் என்று யாராவது சொல்லக்கூடுமா? ஒரு சிலந்தி கட்டியை அறுக்கும் வைத்தியனிடம் போய் இந்தச் சிலந்திக்கு பதில் வேறு என்ன கட்டியை உண்டாக்கப் போகிறாய்? என்று கேட்டால் வைத்தியன் என்ன சொல்லுவான்?
மதத்தின் பயனாய் மனித சமூகத்தின் அறிவு தடைப்படுகின்றது, மானம் தடைப்படுகின்றது, ஒற்றுமை தடைப்படுகின்றது, மனிதனுக்குள் தோன்றும் சுதந்திரவுணர்ச்சி தடைப்படுகின்றது, செல்வம் பாழாகின்றது, அடிமைத்தனமும் வளர்கின்றது, சாந்தி என்பதே இல்லாமல் பகையும் குரோதமும், போரும் வளர்ந்து வருகின்றது என்றால் “அதற்குப்பதில் என்ன செய்யப்போகின்றாய்? ” என்று எதற்காகக் கேட்பது என்பதை யோசித்தால் அந்தக் கேள்வி ஒரு முட்டாள்தனமான கேள்வி என்பதைவிட அதற்கு வேறு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லையென்றே கருதுகின்றோம்.
நோய் ஒழிந்தால் எப்படித் திரேக செளக்கியம் தானாகவே ஏற்பட்டு விடுமோ அதுபோல் மதம் ஒழிந்தால் மனித சமூகம் தானாகவே சுதந்திரத்
தையும், அறிவையும், ஒற்றுமையையும் பெற்று மேன்மையடையும் என்கின்
றோம்.
ஆகவே, இந்த வேலை ஆக்க வேலையா? அழிவு வேலையா? என்பதை யோசித்தால் இதனுள் பொதிந்து கிடக்கும் ஆக்கத்தன்மையும் தானாகவே விளங்கும்.
தீமையை அகற்றுவது அழிவு வேலையானால் மதத்தை ஒழிப்பது என்பதும் அழிவு வேலையாய் இருந்து போகட்டும். அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்ற தீர்மானங்களைப்பற்றி பின்னால் விளக்கலாம்.
குடி அரசு - தலையங்கம் - 23.08.1931
161 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வகுப்புவாதம்”
இன்றைய அரசியலில்-தேசீயத்தில் ஒரு மனிதன் அரசியல் ஞானி யாகவும், தீவிர தேசீயவாதியாகவும் ஆகவேண்டுமானால் அவன் எவ்வளவு அயோக்கியனாகவும், எவ்வளவு சுயநலக்காரனாகவும்,
சமயத்திற்குத் தகுந்தபடி குட்டிக்கரணம் போடுபவனாகவும் இருந்தாலும் ஒரு வார்த்தையை மாத்திரம் சொல்லிவிட்டால் போதும்.
அதாவது,
“வகுப்புவாதம் கூடாது” என்றால்,
உடனே அவனுக்கு வேண்டிய விளம்பரங்களும் தேசாபிமானி- தேசபக்தன் என்கின்ற பட்டங்களும், அரசியல் ஞானி-தீவிர தேசீயவாதி என்கின்ற நாமகரணங்களும் ஏற்பட்டுவிடும்.
நமது பார்ப்பனர்களும் அப்படிப்பட்டவனை ஊரூராய் இழுத்துக் கொண்டு போய் உபசாரப் பத்திரங்கள் வாங்கிக்கொடுத்து, கூட்டம் கூட்டு
வித்து, மாலைகள் போட்டு மறியாதை செய்து புகழ்மாலை பாடி அனுப்பி விடுவார்கள்.
மற்றபடி ஒருவன் எவ்வளவு யோக்கியனாயிருந்தாலும் நாணையக் காரனாகவும் உண்மையில் தேசத்திற்காகவே மக்களுக்காகவே பாடுபடு கின்றவனாகவும் பல தியாகங்கள் செய்து கஷ்ட நஷ்டப்பட்டவனாகவும் இருந்தாலும், “வகுப்பின் பேரால் கொடுமைப்படுத்தப்பட்டு மக்களோடு, மக்களாய் சேர்க்கப்படாமல் சட்டத்தின் படியும் சமூகப்பழக்க வழக்கத்தின்
படியும் பிறித்து வைத்திருக்கும் மக்களுக்கு மற்ற மக்களுக்குண்டான வகுப்புரிமை கொடுக்கவேண்டமா” என்று கேட்டுவிட்டால் “நமது தேசீய” வாதிகளுக்கு உடனே வந்துவிடும் கோபம்.
அவனை தேசத்துரோகி என்றும், வகுப்புவாதி என்றும், தேசீய ஞான மற்றவனென்றும் தேசவிடுதலைக்கும், சமரசத்திற்கும், சுயராஜ்ஜியத்திற்கும் முட்டுக்கட்டை போடுகிறவன் என்றும் தூற்ற ஆரம்பித்து விடுவார்கள்.
குடி அரசு - 1981 (2) 162
அதுதான் போகட்டும் “மதம் எல்லாம் ஒன்றாக வேண்டும், வகுப்பு எல்லாம் ஒன்றாகவேண்டும் மதப்பிரிவு வகுப்புப்பிரிவு என்பது கூடாது,
மதத்தின் பேராலும், வகுப்பின் பேராலும் மக்கள் சட்டத்திலும், சமூக வாழ்க்கையிலும் பிறிக்கப்படக்கூடாது உயர்வு தாழ்வு கூடாது” என்று ஒருவன் சொன்னால் உடனே அவனை “துலுக்கனும் மலுக்கனும் ஒன்றா?” “பார்ப்பானும் பறையனும் ஒன்றா?” என்ன “நீ மதத் துரோகியாயிருக் கிறாயே வகுப்பு துவேஷியாயிருக்கின்றாயே” என்று சொல்லிவிடுவார்கள்.
“அப்படியானால் அவர்களுக்கு தனிஉரிமை கொடுக்க வேண்: டாமா?” என்றால், “இதெல்லாம் தேசத்துரோகம் தேசீயத்திற்கு விரோதம்” என்று சொல்லி தூற்ற ஆரம்பித்து விடுவார்கள்.
இந்தக் காரணத்தினாலேயே தேசத்திற்காக இரவும் பகலும் பாடு பட்டு ஜெயிலுக்குச் சென்று கஷ்டப்பட்டு இந்திய மக்களைத்தட்டி எழுப்பின வீரர்களாகிய மெளலானா ஷெளகத் அலி போன்றவர்கள் எல்லாம் இன்று தேசத்துரோகிகளாகவும், மக்களுடைய பிரதிநிதிகள் அல்லாதார்களாகவும் “ஆகிவிட்டார்கள்”.
நகத்தில் அழுக்குப்படாமல் பட்டு வெல்வெட்டின் மீது நடந்து கொண்டு ஊரைவிட்டு வீட்டைவிட்டு அசையாமல், தங்கள் தொழிலையும் விடாமல், தேசீயத்தின் பேரால் பெருமை பெற்று பணமும் சம்பாதித்துக் கொண்டு கெளரவமாயிருந்துகொண்டு பெரும்பெரும் கூட்டங்களில் தலைமை வகிக்க மாத்திரம் வந்து புகழ்மாலை பெற்றுப் போய்க் கொண்டி
ருக்கும் திருவாளர்கள் டாக்டர் அன்சாரி, முத்துரங்கம், விஜயராகவாச்சாரி போன்ற “பெரியார்கள்” இன்று தேசீய வாதிகளாய் இந்திய மக்கள் பிரதிநிதி களாய்- காங்கிரஸ் தலைவர்களாய்-திரு.காந்தியின் உத்தமதோழர்களாய் விளங்குகின்றார்கள். காங்கிரஸ் மண்டபங்களுக்கு தங்கள் பெயர் இடப்படத் தக்கவர்களாய் விளம்பரம் செய்யப்படுகின்றார்கள்.
வகுப்புவாதமே! உனக்கு ஏற்பட்டு இருக்கும் இழிவுதான் எவ்வளவு? நினைக்கவே பயமாயிருக்கின்றதே! இதிலிருந்து “தேசீய” வாதத்திற்கு பெருமையும் சுகமும் கீர்த்தியும் கிடைக்கின்றதென்பதும் “வகுப்பு” வாதத்திற்கு சிறுமையும், கஷ்டமும், துரோகமும் கிடைக்கின்ற தென்பதும் நன்கு விளங்குகின்றது. இருந்தாலும் பறவாயில்லை. நாம் வகுப்பு வாதியே
தான். எது வரையில்? என்று கேட்கின்றீர்களேயானால் இந்தியாவில் வகுப்பு பிரிவு என்பது எதன் பேரினாலும் சரி,
163 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தேசீயவாதிகளே! கோபித்துக்கொள்ளாதீர்கள்! கோபித்துக் கொள்ளா தீர்கள்!!! ஏனெனில் நாம் மாத்திரம் வகுப்பு வாதியல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
மற்றும் யார்? யார்? எனிலோ ஒவ்வொரு வருணப்பிறிவில் நம்பிக்கை இருக்கும் ஒவ்வொரு வருணத்தின் உரிமையையும் காப்பாற்ற
முயற்சிக்கும் உங்கள் “மகாத்மா” வருண வகுப்புவாதி.
ஒவ்வொரு மதத்தையும் காப்பாற்றும் - மத நடுநிலைமை வகிக்கும் உங்கள் காங்கிரசு வகுப்புவாதி.
எந்த வகுப்பாருடைய எந்த ஜாதியாருடைய மனமும் புண்படாமல் நடந்து கொள்ளும் உங்கள் “போல்ஸ்விக் வீரர்” ஜவஹர்லால் வகுப்புவாதி.
ஒவ்வொரு வகுப்பாருடைய கலைகள் -ஆதாரங்கள்-பழக்க வழக்கங்கள், தொழில் முறைகள் முதலியவைகளைக் காப்பாற்ற ஜாமீன் கொடுக்கும் உங்கள் காங்கிரசுக் காரியக்கமிட்டி வகுப்பு வாதி..
ஹிந்தி தெரியாதவர்களுக்குக் காரியக்கமிட்டியில் இடமில்லாத காங்கிரஸ் தேர்தல் வகுப்புவாதி.
கதர் கட்டாதவர்களுக்கு ஓட்டில்லை என்கின்ற காங்கிரசு தேர்தல் ஓட்டர்களின் யோக்கியதாபக்ஷம் வகுப்புவாதி.
தீண்டாதவர்களுக்கு கோயில்-குளம்-பள்ளிக்கூடம் தனியே கட்டிக் கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லுகின்ற திருமாளவியா வகுப்புவாதி.
கடைசியாக மதங்களும், வகுப்புகளும் இருந்து வருவதைக் கண்: ணில் நேரில் பார்த்துக் கொண்டும், அதனதன் உரிமைகளைத் தவறாமல் அளிப்பதாக வாக்களித்துக் கொண்டும் இருக்கின்ற மக்கள் அந்தந்த வகுப்பினருக்கு பிரதிநிதித்துவ உரிமை கொடுப்பதற்கு மறுப்பதும்-யாரா வது கேட்டால் அதற்கு வகுப்புவாதம் என்று பெயர் கொடுப்பதும் எல்லா வற்றையும் விட பெரிய வகுப்புவாதி என்னப்படும்.
தேசமே வகுப்புகளின் கண்காட்சிசாலையாய்-மதங்களின் கண்: காட்சி சாலையாய், ஜாதிகளின் வகுப்புகளின் கண்காட்சி சாலையாய் இருக்கும் போது சட்டசபையிலும், உத்தியோகத்திலும், மதவகுப்புப் பிரதி நிதித்துவம் இருந்தால் என்ன முழுகிப்போகும்? என்று கேட்கின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 23.08.1931
குடி அரசு - 1981 (2) 164
சட்டசபையில் திரு.பாண்மூயண் தீர்மாணம்
உயர்திரு. W.PA செளந்திரபாண்டியன், எம்.எல்.சி. அவர்கள் “இராமனாதபுரம் ஜில்லா தேவகோட்டை முதலிய சுற்றுப்பக்கங்களிலுள்ள ஆதி திராவிடர்கள் என்பவர்களை அங்குள்ள உயர்ந்த ஜாதியார். களென்பவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி வருவதால் அரசாங்கத்தார். அதை விசாரித்து உண்மை அறிந்து அதன்மேல் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள ஒரு கமிட்டி நியமிக்க வேண்டு” மென்று சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசாங்க இந்திய அங்கத்தினரும் பார்ப்பன சட்டசபை அங்கத்தினர்களும் எதிர்த்தும், மந்திரிகள் விரோதமாய் ஓட்டுக் கொடுத்தும் தீர்மானம் நிறைவேறியது குறித்து மகிழ்வெய்துகின்றோம். ஆயினும் சர்க்காரார் அத்தீர்மானத்தை மதித்து ஒரு சரியான கமிட்டி நியமிக்கக் கவலையெடுத்து கொள்வார்களோ, அல்லது தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களோ என்பது சந்தேகமேயாகும். எனினும் திரு.பாண்டியன் அவர்களின் இம் முயற்சி போற்றத்தக்கதேயாகும்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 23.08.1931
165 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஈரறோட௫ அர்பண் பாங்குத் தேர்தல்
ஈரோடு அர்பன் பாங்கி டைரக்டர்கள் (நிர்வாகஸ்தர்கள்! தேர்தல் இம் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதில் இப் பாங்கி ஏற்பட்டு இதுவரை: இல்லாத அளவு ஊக்கமும் பரபரப்பும் காணப்பட்டது.
கடைசியாக 9 பார்ப்பனரல்லாதாரும் 2 பார்ப்பனரும் தெரிந்தெடுக் கப்பட்டார்கள். பார்ப்பனக்கோட்டையாயும் அவர்களது உண்மை சிஷ்யர்.
களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மழைக்குக்கூடத் தங்குவதற்கு இடமில்லா திருந்த இந்த அர்பன்பாங்கி பார்ப்பனரல்லாதார் இரண்டொருவரின் தியாகத்தின் காரணமாய் அவர்கள் வெளிப்படையாய் “கெட்டபேர்” வாங்கத் துணிந்ததின் காரணமாய் 9 பார்ப்பனரும் இரண்டு பார்ப்பனரல்லா தவருமாய் இருந்த ஸ்தாபனம் நாளாவட்டத்தில் சுயமரியாதை உணர்ச்சி யேற்பட்டு இப்போது 11-பேர்களில் 9-பேர் பார்ப்பனரல்லாதார் டைரக்டர். களாய் வர முடிந்தது. இதுவும் சரியான தேர்தல் என்று நம்மால் சொல்லிவிட முடியாது.
தீண்டாதார் வகுப்புக்கு ஒரு டைரக்டரும் பெண்கள் வகுப்புக்கு
குறைந்தபக்ஷம் ஒரு டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது உண்மையான பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியென்றே சொல்லலாம். அன்றி
யும் இப்போது தெரிந்தெடுக்கப்பட்ட 11 பேர்களிலும் வக்கீல்களும் பாங்கர். களுமே 100க்கு 90-வீதம் டைரக்டர்களாகி இருக்கின்றார்களே ஒழிய யாருடைய உபயோகத்திற்கு, யாருடைய நன்மைக்கு என்று அர்பன் பாங்கி கள் ஏற்பட்டனவோ அந்தக் கூட்டத்தாரின் பிரதிநிதிகளை பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடிப்பிடிக்க வேண்டியதாய் இருக்கின்றது. ஆதலால் அடுத்த தேர்தல்களில் இம்மாதிரியாக அதாவது பார்ப்பனர்கள் கையில் இருந்து பறிக்கப்பட்ட ஸ்தாபனம் மற்றொரு வழியில் அவர்களைவிட மோசமானவர்களான லேவாதேவிக்காரர்கள் கைக்கும், முதலாளிகள் கைக்கும் போகாமல் தொழிலாளர்கள் கைக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் கைக்
கும் போகும்படியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்பு கின்றோம்.
தகுதியானவர்கள் கிடைப்பதில்லை என்கின்ற காரணத்தைச் சொல்லிக் கொண்டு உலகம் உள்ள நாள் அளவும் ஏமாற்றுவது என்பது
குடி அரசு - 1981 (2) 166
பார்ப்பன சூக்ஷிகள் எல்லாவற்றையும்விட மோசமான சூக்ஷியேயாகும்..
அன்றியும் பாங்கி நிர்வாக செல்வாக்கை மற்ற சுயநல சம்பந்த காரியங்களுக்கு உபயோகித்துக் கொள்ளும் உத்தேசமுள்ளவர்களுக்கு இதில் இடம் இருக்க நேர்ந்தால் அதுவும் ஒரு மோசமான காரியமாகும்.
ஆதலால் அடுத்த வருஷ தேர்தல்களில் ஓட்டர்கள் இன்னமும் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றோம். நிற்க தெரிந் தெடுக்கப்பட்ட டைரக்டர்களில் சிலர் தங்களுக்குத் தலைவர் ஸ்தானம் கிடைக்காது என்கின்ற காரணத்தால் தங்களுக்கு (அடங்கிய மற்ற டைரக்டர்களையும் தேர்தலுக்கு போகவிடாமல் செய்யவும் கோரமே இல்லாமல் செய்யவும் முயற்சித்ததாகவும் தெரியவருகின்றது. இது அவ் வளவு மேன்மையான காரியமென்றோ, புத்திசாலித்தனமான காரிய மென்றோ சொல்லிவிட முடியாது.
டைரக்டர்களில் யாருக்காவது, சொந்த விரோதம் இருந்தால் அப்படிப்பட்டவர் பாங்கியின் நன்மையைக் கோரி ராஜியாகப் பார்க்க வேண்டும். முடியாவிட்டால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அல்லது தன்னாலான நன்மையைச் செய்ய செளகரியமுள்ளபோது செய்து விட்டு
சும்மா இருக்க வேண்டும். அப்படிக்கு இல்லாமல் தலைவராக வரக்கூடிய அளவு மெஜாரிட்டி பலம் இருக்கின்றவருக்குக் காரியத்தை நிர்வகிக்கச் சக்தி யில்லை என்பதாக ஒரு சமயம் யாருக்காவது தோன்றினால் அப்படிப்பட்ட
வர் மெஜாரிட்டியாரையும் தன்னைப்போலவே மதித்து தனது அபிப்பி ராயத்தை மாற்றிக் கொண்டிருக்கவேண்டும். இல்லாதவரை தன்னால் கூடிய உதவி செய்து நிர்வாகம் திறமையாய் நடைபெற உதவி செய்ய முன் வரவேண்டும்.
இவைகள் ஒன்றுக்கும் கட்டுப்படாமல் தனக்குக் கிடைக்கத்தக்க நிலைமை இல்லை என்று காணப்படாததாலேயே மெஜாரிட்டி அபிப்பிரா யத்திற்கும், பாங்கியின் நன்மைக்கும் எதிரியாயிருந்து நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்குக் கட்சி சேர்ப்பதும், “ஒரு கை பார்க்கின் றோம்” என்பதும் பொது நலத்திற்கு விரோதம் என்பதோடு யோக்கியப் பொறுப்புக்கும் விரோதமான காரியமாகும் என்பது நமது தாழ்மையான
அபிப்பிராயமாகும்..
அன்றியும் இந்த முட்டுக்கட்டையின் கெடுதியை அறியவும் மற்றும் பாங்கியின் நல்ல நிர்வாகத்திற்கு எதிரியாய் இருந்தவர்கள் யார் என்பதைத் தெரியவும் முடியாதபடி அவ்வளவு அறிவற்றவர்கள் என்று ஓட்டர்களை இந்த முட்டுக்கட்டைக்காரர்கள் நினைத்து விடுவார்களேயானால், அடுத்த தேர்தலில் அதன் பயனை அறியும்படி ஓட்டர்கள் செய்து விடக்கூடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். தவிர தொட்டதற்கெல்லாம் நிர்வாகத் திறமையைப் பற்றிப்பேசுவது 100க்கு 99 விஷயங்களில் மதிப்பற்ற
167 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தாகவும், சுயநலங் காரணமான வார்த்தை என்பதாகவும் வரவரப் பொது ஜனங்களால் கருதப்பட்டு விட்டது.
இனி அதைப் பற்றிப் பேசுவது பேசுபவர்களுக்குத்தான் பகுத்தறி வில்லையென்று சொல்லப்படுமே தவிர மற்றபடி அது ஒப்புக்கொள்ளக் கூடிய காரியமாகாது என்றும் சொல்லுவோம். ஏனெனில் நிர்வாகத் திறமைக்கு அளவு எடுக்கும் கருவி எது என்ற பிரச்சினைக்கு மறுமொழி சொல்லுவது இம்மாதிரி ஆசாமிகளுக்குக் கஷ்டமான காரியமா யிருப்பதால்தான். மற்றபடி யாருடைய நாணையத்திலாவது ஒழுக்கத் திலாவது குற்றம் சொல்லக்கூடுமானால் அதை யாரும் கவனிக்க வேண்டிய தேயாகும்.
இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரசிடெண்ட், வைஸ் பிரசிடெண்ட் என்பவர்கள் நடவடிக்கையைப் பற்றிச் சொல்லப்பட்ட குற்ற மெல்லாம் “இருவரும் விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டுக்குப் போய்
விட்டு வந்தவர்கள்” என்றும், “பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியுள்ளவர்கள்”
என்றும் சொல்லப்படுவதை தவிர வேறொரு குற்றமும் இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ சொல்லப்படவே இல்லை.
(மேலும் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இதே பாங்கியில்
சில காலம் டைரெக்டராகவும் பல தடவை முனிசிபல் கவுன்சிலராகவும் மகாஜன ஹைஸ்கூல் காரியதரிசியாகவும் மற்றும் லிமிடெட் பாங்கி வைஸ் பிரசிடெண்டாகவும் சொந்தத்திலேயே ஒரு பாங்கராகவும் இருந்து வருவது டன் ஈரோடு பஞ்சாயத்துக் கோர்ட்டு பிரசிடெண்டாகவும் இருந்தவர். முன்னிருந்த பிரசிடெண்டுக்கும், வைஸ்பிரசிடெண்டுக்கும் இருக்கும் பெருமையெல்லாம் அவர்கள் பார்ப்பனர்கள் என்றும், ஒருவர் வருணாச் சிரம தர்ம சபைத்தலைவர் என்றும் மற்றவர் பார்ப்பன தர்மகர்த்தர் என்றும் சொல்லப்படுவதைத் தவிர மற்றபடி அவர்களைவிட இவர்களுக்கு வேறு விஷேசம் ஒன்றும் சொல்லப்படவேயில்லை. இந்தக் காரணங்கள் தேர்தல் களுக்கு யோக்கியதாபக்ஷங்களாகக் கவனிக்கப்படுமானால் அவரவர்கள் தங்களாலான வரையில் பார்க்க வேண்டியது நியாயமேயாகும். ஏனெனில் எப்போதாவது இந்தக் கலகம் முடிந்துதானாக வேண்டும். அதை வீணாக நாள் கடத்துவதில் பயனில்லை.
ஆகவே இதைத் தவிர அந்த பாங்கியின் நன்மையை உத்தேசித்தோ அல்லது அந்த கெளரதையை அடைய எல்லாருக்கும் உரிமை உண்: டென்பதை உத்தேசித்தோ கவனிக்கப்படுமானால் யாரும் நிர்வாகத்துடன் ஒத்துழையாமை செய்யாமல் அதற்கு முட்டுக்கட்டை போடாமல் அனுகூல மாயிருக்க வேண்டியது நியாயமாகும். பார்ப்பனரல்லாதார் வருகின்ற காலங்
களில் எல்லாம் “தகுதி போராது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்
குடி அரசு - 1981 (2) 168
காலத்திற்கு இனி யோக்கியதை இருக்காது என்றும் கக்ஷி கட்டுவதால்
இருவருக்கும் நஷ்டமே தவிர ஒருவர் மாத்திரம் நஷ்டமடைந்து மற்றவர்
கள் நஷ்டமில்லாமல் இருந்து விடலாம் என்றும் கருதுவது ஏமாற்றமாய்
முடியு மென்றும் வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 30.08.1931
169 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சாதா சட்டத்தை ஒழிக்க கூழ்ச்சி
சாரதா சட்டத்தை ஒழிப்பதற்காக இப்போது தென்னாட்டுப் பார்ப் பனர்கள் முஸ்லீம்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு சூட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூடும் சட்டசபைக்கு தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் பிரதிநிதியான திரு. கிருஷ்ணமாச்சாரியார் என்னும் பார்ப்பனர் திருத்தம் என்னும் பெயரால் ஒரு தீர்மானம் அனுப்பி இருக் கிறாராம். அதில் சாரதா சட்டத்தில் இருந்து முஸ்லீம்களையும், பார்ப்பனர். களையும் பிரித்து விட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றதாம். ஆகவே “தீர்திருத்தங்களுக்கு சர்க்காரார் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் தேசீயவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை.
இது ஒரு புறமிருக்கட்டும். இத்திருத்தத்திற்கு சர்க்காரார் இணங்கி னால்தான் அது நிறைவேறக்கூடுமென்று தெரிய வருவதால் சர்க்காரார். இதற்கு இணங்கமாட்டார்களென்பதோடு நடுநிலைமையும் வகிக்காமல் எதிர்த்துத் தோற்கடிப்பார்களென்றே நம்புகின்றோம்.
ஏனெனில், இந்திய தேசீயவாதிகளால் மகாத்மா என்றும், சத்திய கீர்த்தி என்றும் சொல்லப்படும் லார்ட் இர்வினிடம் முஸ்லீம்களும், பார்ப்பனர்களும் இது விஷயமாய் தூது சென்ற காலத்தில் லார்ட் இர்வின் அவர்கள், “சாரதா சட்டம் என்பது மதப் பிரச்சினையிலோ வகுப்புப் பிரச்சினையிலோ பட்டதல்ல. அது பொதுவாகவே மக்கள் வைத்திய சம்பந்தமானதும், சுகாதார சம்பந்தமானதுமாகும். ஆதலால் சர்க்காரார் இதில்
மதத்தையும், வகுப்பையும் கருதி ஒரு கூட்டத்திற்கு ஒரு மாதிரி மற்றொரு கூட்டத்திற்கு ஒரு மாதிரி என்பதாகச் செய்ய முடியாது” என்று அப்போதே. சொல்லி இருக்கின்றார்.
ஆகவே, இப்போது சர்க்காரார் எந்த விதத்திலும் இதை மதவகுப்புப் பிரச்சினையாகக் கருதி பின் வாங்கமுடியாதென்றே கருதுகின்றோம்.
தவிரவும் அந்தப்படி கருதி ஒரு மதத்தையோ ஒரு வகுப்பையோ அந்தச் சட்டத்தில் இருந்து விலக்குவதானால் பார்ப்பனர்களைப் போலவே சிறு
குடி அரசு - 1981 (2) 170
குழந்தைகளை கல்யாணம் செய்யும் வேறு பல சமூகங்களின் கதி என்ன ஆவதென்று கேட்கின்றோம். சாதாரணமாக பார்ப்பனர்களைப் பார்த்து காப்பி அடிக்கும் கோமுட்டிகளென்றும்,ஆரிய வைசியர்களென்றும், செட்டிகளென்றும், விஸ்வப் பிராமணர்களென்றும் மற்றும் பல விதமாய்ச்
சொல்லிக் கொள்ளக் கூடியவர்களான சிறு பெண்களைக் கல்யாணம் செய்
யும் வகுப்பார்கள் கதி என்னாவதென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில்
சர்க்காரார் ஏதாவது கோழைத்தனமாகவாவது நாணையத் தவறுதலாக வாவது நடந்தால் சர்க்காருக்குப் புத்தி கற்பிக்க வேண்டியது சீர்திருத்தவாதி களது முக்கியக் கடமையாகுமென்பதை நாம் அழுத்தமாகச் சொல்லு கின்றோம். தவிரவும், முஸ்லீம்கள் இந்தச் சட்டத்தை எதிர்ப்ப தென்பது சிறிதும் அறிவுடைமையாகாது என்பதுடன் அதுவும் மதத்தின் பேரால் எதிர்ப்பதென்பது தங்கள் மதம் பகுத்தறிவுக்கேற்றதென்று சொல்லக் கூடியவர்கள் வெட்கப்பட வேண்டியதுமாகுமென்றே சொல்லுவோம்.
வேறு காரணங்களை மனதில் வைத்துக் கொண்டு அதற்காக மதத் தைக் கொண்டு பொறுப்பாக்குவதும் அதன் மறைவில் நிற்கப் பார்ப்பதும் மதத்தை இழிவுபடுத்துவதேயாகும். ஆகையால் சென்னை மாகாண: முஸ்லீம் நண்பர்கள், வைசிராய் அவர்களுக்கு முஸ்லீம்கள் பேரால் சாரதா சட்டத் திருத்தப் பிரேரேபனையை எதிர்த்துத் தந்திகொடுப்பதுடன் ஆங்காங்குள்ள சீர்திருத்தவாதிகளும், தனிப்பட்ட முறையிலும், சமுதாய முறையிலும் திருத்தப் பிரேரேபனையைக் கண்டித்துத் தந்திகள் அனுப்ப வேண்டுமாய் விரும்புகின்றோம். திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்கள். இத்திருத்தம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியக் கடமையாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
திருச்சி, தஞ்சை ஓட்டர்கள் திரு. கிருஷ்ணமாச்சாரியாரை இந்தியா சட்டசபைக்குத் தெரிந்தெடுத்ததிற்கு வெட்கப்பட்டு இனியாவது மானத்துடன் நடந்து கொள்வார்களென்று எதிர்பார்க்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 30.08.1931
171 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பயமுறுத்தல் o o
அன்பர் திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்களை காங்கிரஸ் “பக்தர்”களில் யாரோ ஒருவர் வெட்டிப் புதைத்து விடுவதாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அது திரு.ஜோசப் அவரது மனைவியாரால் போலீசில் ஒப்பு விக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் பார்த்தோம்.
இக்கடிதம் எழுதக் காரணம் “குடி அரசில் வார வாரம் வெளியான திரு.ஜோசப் அவர்களின் “காந்தியின் இராமராஜியம்” என்பது பற்றிய வியாசங்களின் காரணமாகவே இருக்கலாம். இருந்தாலும்,
இம்மாதிரி கடிதம் நமக்கும் பல வந்து கொண்டிருக்கின்றன.
நண்பர்கள் திரு.ஏ.இராமசாமி முதலியார், திரு.பி.வரதராஜுலு நாயுடு ஆகியவர்களுக்கும் பல வந்ததாக நாம் சென்னையில் இருக்கும்போது பத்திரிகைகளில் பார்த்தோம். நமக்கு வந்த கடிதங்கள் 100க்கு மேற்பட்ட தாகும். வசவு கடிதங்கள் வர்ணிக்க முடியாத கருத்துக்களால் எழுதப்பட்ட வைகளும் இரத்தத்தினால் துவைத்து கையெழுத்துப் போடப்பட்டவை
களும் ஆபாசமான சித்திரம் எழுதிக் காட்டியவைகளுமாக அநேக கடிதங் களுண்டு. இவை பெரிதும் பார்ப்பனர்களால் எழுதப்பட்டவைகள் என்று
கருதக் கூடியவைகளானாலும் சில பார்ப்பனர்களல்லாத வாலிபர்களாலும் இருக்கலாம். ஒன்றிரண்டு மதப் பைத்தியம் (அதுவும் சைவ மதப்பைத்தி
யம்) காரணமாகவே யிருக்கலாம் என்றும் எண்ணக்கூடியவைகளாகும்.
இவைகள் எல்லாமுமே நம்மை அவர்கள் (எழுதினவர்கள்) கொல்ல வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதோ அல்லது கொன்று விடலாம் என்கின்ற தைரியத்தின் மீதோ எழுதப்பட்டவைகள் அல்ல என்பதுதான் நமது அப்போதையதும் இப்போதையதுமான அபிப்பிராயமுமாகும்.
ஆனால் நம் பேரிலுள்ள கோபத்தின் வேகம் அந்த வழியில் (அந்தப்படி ஒரு கடிதம் எழுதி) ஒரு விதம் தணித்துக்கொள்ளப்பட்டது என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஏனெனில் நமது நடவடிக்கைகள் அவர்களுக்கு அவ்வளவு ஆத்திரத்தைக் கொடுக்கின்றது என்பதாக தெரிகின்றது. அதற்கு யார் என்ன செய்யக்கூடும்?
குடி அரசு - 1981 (2) 172
கொன்று விடுவதாக எழுதின வீரனுடைய வீரத்தனத்திற்கு பயமுறுத் தப்பட்டவர்களுடைய வீரம் சிறிதாவது குறைந்து இருந்தால் அவர்கள் தங்களது குரலைக் கொஞ்சம் தளர்த்தியிருக்கலாம் - பேனாவை சற்று குறுக்கியிருக்கலாம்-சரீரத்தை சற்று மறைத்தாவதிருக்கலாம்.
ஒருவனைக் கொல்வதின் மூலம் ஒருவன் வீரனாகப் பார்ப்பது போலவே ஒருவனால் கொல்லப்படுவதின் மூலமும் ஒருவன் வீரனாகப் பார்க்க உரிமையுண்டு - வழியுண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.
எப்படியெனில் சாமி சிரத்தானந்தாவைக் கொன்றவன் தனது “வீரத் தினாலேயே கொன்று வீரனானான்” என்று வைத்துக்கொண்டாலும் கொல்லப் பட்ட சிரத்தானந்தஜீயும் வீரராகாமல் போகவில்லை.
பகத்சிங்கை தூக்கிலிட்டு சர்க்காருக்குக் கிடைத்த வீரப்பட்டத்திற்குச் சிறிதும் குறைந்ததல்ல பகத்சிங்குக்குக் கிடைத்த வீரப்பட்டம். உண்மை யிலேயே ஒரு மனிதனுடைய லட்சியத்திற்கு வெற்றி ஏற்படவேண்டும் என்று கருதுகின்ற மனிதனுக்கு அவன் ஆசை நிறைவேறவேண்டுமானால் அந்த லட்சியத்திற்கு அவனது உயிரைக் கொடுத்ததாய் அதாவது அந்த லட்சியத்தின் பயனாய் அவனது உயிர் இழக்கப்பட்டதாய் ஏற்பட்டால் அது உண்மையில் பயளளிக்கக்கூடியதேயாகும்.
ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் சாவு உறுதி. அந்த சாவு 1000ல் 999 நோயிக்கும் அகஸ்மாத்தான சம்பவத்திற்கும் தன்னை அறியாமலும் தான் பறிகொடுக்கப்படத்தக்கதாய் நடைபெற்று வருகின்றனவே தவிர ஒரு மனிதன் தனது சாவை தக்க விலைக்குக் கொடுத்ததாகக் காணப்படுவது மிக்க அரிதாகவே யிருக்கின்றது.
பகத்சிங் காரியம் சரியா? தப்பா? என்பது சிலருக்காவது விவ காரத்திற்கிடமானதாயிருந்தாலும் அவரது சாவு அவரது லட்சியத்திற்குத் தக்க பயனளித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அதுபோலவே காங்கிரஸ் லட்சியத்திலோ மத லட்சியத்திலோ நம்பிக்கை இருக்கின்றவர்கள் தங்களது சாவை தக்க விலைக்கு பயன்படுத்து வது என்று கருதிய முடிவினால் ஒருவனைக் கொல்ல எண்ணுவதில் ஏதாவது குற்றமிருக்கின்றதென்று நாம் சிறிதும் கருதமாட்டோம். அதாவது தமது லட்சியத்திற்கு விரோதமானவன் - தடையானவன் என்று கருதப் படுகின்றவனை சாகடிப்பதின் மூலம் தனது சாவை பயன்படுத்தலாம் என்று எண்ணுவதில் இயற்கைக்கு விரோதம், அனுபவத்திற்கு விரோதம், ஞாயத்
திற்கு விரோதம் இருப்பதாகக் காணமுடியவில்லை.
அதுபோலவே சாகடிக்கப்படுகின்றவனும் தனது லட்சியத்திற்காக அந்த லட்சியம் கைகூடுவதால் யாரொருவர் நஷ்டமடையக்கூடியவரோ,
173 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கஷ்டமடையக் கூடியவரோ அல்லது லட்சியமே நாட்டுக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல வென்றோ கருதப்படுபவரோ ஆகியவர்களால் சாக டிக்கப்பட நேருவதிலும் அதிசயமோ இயற்கைக்கு விரோதமோ, நடப்
பிற்கு விரோதமோ, நியாயத்திற்கு விரோதமோ இருப்பதாய் கருதவும் முடியவில்லை.
எந்த மனிதனாவது தனது லட்சியத்தைப் பிரதானமாய்க் கருதி அதற்கே உழைத்துத் தீர வேண்டுமென்று முடிவு கட்டிக் கொண்டு இருப் பானேயானால் அவன் அதற்காக உயிரை இழக்க நேருவதுதான் அவனது லட்சியத்தில் அவனுக்குள்ள உறுதியையும் அவன் அடைய வேண்டிய
வெற்றியையும் காட்டுவதாகும். அதோடு அந்த லக்ஷியத்திற்கும் அவன் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்துவிட்டதான தனது கடமையையும் நிறைவேற்றியதாகும்.
அன்றியும் லக்ஷியக்காரன் உயிருடன் இருந்து லக்ஷியத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருப்பதில் எவ்வளவு பயன் ஏற்படுமோ அதைவிட
கண்டிப்பாய் பல மடங்கதிகமான பலனும் ஏற்படக்கூடும். அறிவாளிகளின் வேலையும் அதுவேயாகும்.
ஆதலால் சாவுக்கு பயந்து யாரும் தங்கள் லக்ஷியங்களின் வேகத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இதை எழுதினோம்.
தவிர “நான் செத்துப் போனால் என் பெண்டுபிள்ளை என்ன கதி யாகும்?” என்கின்ற ஒரு மனப்பான்மை தான் இந்தியர்களை சுயமரியாதை யற்ற கோழைகளாகச் செய்து கொண்டு வந்திருக்கின்றது. இந்த மனப் பான்மை இந்தியாவில் தான் அதிகம் உண்டு. செளகரியமிருப்பவன் இம் மாதிரி காரியங்களில் பிரவேசிக்கும் போதே பெண்டுபிள்ளைகளது உயிர். வாழ்க்கைக்கு ஏதாவது செய்துவிட வேண்டியது அறிவுடைமையாகும். செளகரியமில்லாதவன் அதற்காகவே உயிர்வாழ வேண்டும் என்று கருது வானேயானால் அப்படிப்பட்டவன் தயவுசெய்து இம்மாதிரியான பொது நல காரியங்களில் பிரவேசிக்காமல் இருப்பதே நலமாகும். ஏனெனில், இம்
மாதிரி லட்சியக்காரர்களாலேயே அதாவது “பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்ற இருக்கின்றோம்”. அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது லக்ஷியம் அல்லது கடமை” என்று கருதிக் கொண்டிருக்கிறவர்கள் பொதுக் காரியங்களில் பிரவேசிப்பதாலேயே உண்மையான லட்சியங்கள் - பொதுக்காரியங்கள் பாழாகின்றன. அன்றியும் அவர்களுடைய பொதுநல சேவையும் நாணயக் குறைவானது - ஹம்பக்கானதும் என்று கருதப்பட வேண்டியதுமாகி விடுகின்றன. ஆகையால் அதைப்பற்றி யாரும் கவலைப்படக்கூடாது. நிற்க இந்தப்படி நாம் எழுதுவதில் லக்ஷியத்திற்காக ஒருவனை சாகடிப்பது அல்லது ஒருவன் சாவது என்கின்ற இரண்டு
குடி அரசு - 1981 (2) 174
காரியங்களையும் நாம் ஒன்றாகவே கருதி இருப்பதாக யாரும் கருதிவிடக் கூடாது என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சுயமரியாதை இயக்கத் தைப் பொறுத்த வரையில் அதன் லக்ஷியம் நிறைவேற ஒருவனை சாகடிப் பதை விட லட்சியத்தின் எதிரி ஒருவனால் சாவதே மேல் என்று தான் இன்று கருதுகின்றோம். ஏனெனில் செத்தவனை இருவரும் போற்றுவார்கள். செத்த வனிடத்தில் இரு கூட்டத்தாரும் அனுதாபம் காட்டுவார்கள். அதன் மூலம் லட்சியத்திற்கு ஆக்கம் ஏற்படும். சாகடித்தவனை ஒரு கூட்டம்தான் போற்ற லாம். அதுவும் தைரியமாய் வெளிப்படையாய் போற்றமாட்டார்கள். அதிலி ருந்தே எதிர்ப்பின் ஆக்கமும் குன்றலாம். அதுவும் தவிர கொல்லுபவன் ஒளிந்திருந்து பயந்து வேலை செய்ய வேண்டும். கொல்லப்படுபவன் தைரியமாய் வெளிப்படையாய் இருந்து உயிர் கொடுக்கலாம். மற்றும் சில நன்மைகள் உண்டு. ஆதலால் சாவுக்கு துணிந்து லட்சியங்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்கவேண்டியது உண்மை லட்சியக்கார மனிதனின் கடமை என்பதை வலியுறுத்துகின்றோம்.
திரு.ஜோசப் அவர்களின் மனைவியார் அக்கடிதத்திற்குப் பயந்தது பெண்கள் உலகத்திற்கே ஒரு “மாசு” என்றுதான் சொல்லுவோம். அவ் வம்மையார் தனது புருஷன் கொல்லப்பட்டு விட்டால் “ராட்டினம் சுற்றி” பிள்ளைக்குட்டிகளைக் காப்பாற்ற வேண்டுமே என்று பயந்திருக்கலாமோ அல்லது தனது வாழ்க்கையின் மேன்மை குன்றி விடுமே என்று பயந்திருக் கலாமோ என்று நாம் நினைக்கவில்லை. ஆனாலும் தமது அன்புள்ள காதலன் பிரிந்துவிட்டால் என்ன செய்வது என்று காதலை உத்தேசித்து பயந்திருக்கலாம் என்றே கருதினாலும் அதுவும் சரியல்ல என்றே சொல்லு வோம். தனது காதலனுக்கு அவரது லட்சியத்திற்காக அவரது உயிரைக் கொடுக்க நேர்ந்தது என்னும் ஒரு மேன்மையும் அவரது லட்சியம் நிறை வேறுவதற்கு அனுகூலமாக அது பயன்பட்ட லாபத்தை விட காதலனை இழந்து விட்ட நஷ்டம் சிறிதும் அதிகமல்ல என்றே சொல்லுவோம். சாப்பாட்டிற்கு ஏதாவது ஒரு வழிவேண்டுமானால் பள்ளிக்கூட உபாத்தி யாய ராகலாம். முடியா விட்டால் சரீரத்தில் வலுவிருக்கின்றவரை ரோட்டில்
கல் உடைக்கலாம். மற்றபடி தனக்கு வேண்டிய பெருமையையோ கெளர தையைப் பற்றியோ யோசிப்பதானாலும் இந்தக் காரணங்களால் அம்மை யாரின் கெளரவத்திற்கு எவ்வித குறைவும் ஏற்பட்டுவிடாதென்றே தைரிய
மாய்ச் சொல்லுவோம், சொல்லுவோம்.
திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகோ வெட்டிப் புதைக்கப்பட்ட பிறகோ திருமதி ஜோசப் அம்மையாருக்கு மாஜி முதல் மந்திரியான டாக்டர் சுப்பராயன் அவர்களது மனைவியாருக்கும் இப்போதைய முதல் மந்திரியான திவான்பகதூர் முனுசாமி நாயுடு அவர்களது மனைவியாருக்கும் இந்திய நிர்வாக சபை சட்டமெம்பரான
சர்.சி.பி. இராமசாமி அய்யர் அவர்களது மனைவியாருக்கும் இந்நாட்டில்
175 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உள்ள கெளரதையில்-பெருமையில்-தன் மதிப்பில் அனேக பாகம் அதிக மாகத்தான் இருக்குமே தவிர எள்ளளவாவது சிறிதாயிருக்கும் என்று கருது வதற்கு இடமிருக்காது என்று உறுதியாய் சொல்வோம். ஆகையால் அம்மையார் பயப்படாமல் தனது காதலனை அலங்கரித்து யுத்த களத்திற்
குத் தைரியமாய் நல்லதொரு பேனாவைக் கையில் கொடுத்து “எனக்காகக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி அனுப்பிப் கொடுக்க வேணு மாய்ப் பிரார்த்திக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 30.08.1931
குடி அரசு - 1981 (2) 176
காந்தியின் யாத்திரை
கபோணாஸைண்ண? போகாவிட்டாஸண்ண?
உயர்திரு. காந்தியவர்கள் இங்கிலாந்து போகும் விஷயமாய் போகா
மல் தப்பித்துக் கொள்ள முயற்சித்துச் சர்க்காரார் மீது எவ்வளவோ குற்றப் பத்திரிகை வாசித்துப் பார்த்தும் கடைசியாக இப்போது அந்தப் பிரச்சினை யானது ஒன்று, “போய்த் தீரவேண்டியது” அல்லது “தாம் குற்றவாளியாக வேண்டியது” என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டதால் போவதா? இல்லையா? என்பது ஒவ்வொரு வினாடியும் ஒரு பெரிய விடுகதையாகவே
இருந்து வந்தது.
திரு. காந்தியவர்கள் சர்க்காரார் மீது ஒரு வண்டி குற்றங்கள் சுமத்தி நீண்டதொரு குற்றப் பத்திரிகை படித்தார். ஆனால் சர்.சி.பி.இராமசாமி அய்யரை சட்ட மந்திரியாகக் கொண்ட சர்க்காரார் அவ்வளவுக்கும் ஒரே அடியில் பதில் சொல்லி குற்றப்பத்திரிகை ஏற்படுத்தினவர்களை நடுங்கச் செய்து விட்டார்கள். அதன் சுருக்கமாவது:-
“திரு.காந்தியவர்களே! நீங்கள் சாட்டிய குற்றப் பத்திரிகையை சர்க்காரார் ஒப்புக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஒப்பந்தத்தை மீறி தப்பு செய்து வந்திருப்பவைகளை சர்க்காரார் அவ்வப்போது உங்களுக்கு
எடுத்துக் காட்டி வந்திருக்கின்ற விபரம் தங்களுக்கே தெரிந்ததாகும்”..
“காங்கிரஸ் செய்த தப்பிதங்களுக்கு பதிலுக்கு பதில் செய்யாமல்
சர்க்காரார் சாதாரண சட்டத்தின்படியே நடவடிக்கைகள் நடத்தி அவைகளை சமாளித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஒப்பந்தத்தில் காணப்படாத பல விஷயங்களில் கூட சர்க்காரார் உங்களுக்காக வேண்டியே இணங்கி வந்திருக்கின்றார்கள் என்பதும் உங்களுக்கே தெரியும்”.
“லண்டன் மகாநாட்டுக்கு போவதை மறுப்பதானது ஒப்பந்தத்தின் பிரதானமான கொள்கையை பாழ்படுத்துவதாகும் என்பதை உணருங்கள்”.
“ஒப்பந்தத்தில் சாதாரண சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்துக் கொள் வதை நிறுத்தி வைக்க நிபந்தனை கிடையாது என்பதையும் உணருங்கள்.
177 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தனிப்பட்ட சம்பவங்களையும் நிலைமையையும் சமாளிக்க ஒப்பந்தப்படி சர்க்காராருக்கு எப்பொழுதும் உரிமையுண்டு”. “இதுவரை சர்க்காரார் கூடு மானவரை பொருமையுடனேயே இருந்து வருகின்றார்கள். இனியும் இருக்க முயற்சிக்கின்றார்கள்”.
“ஆனால் அந்தப்படி இனியும் சர்க்காரார் பொருமையாயிருந்து வருவது என்பது காங்கிரசின் நடவடிக்கையைப் பொறுத்தது என்பதை உணருங்கள். எப்போதும் பொருமையாகவே இருப்போம் என்று சர்க்காரார்.
உறுதி கூற முடியாது”
என்பதாக பதில் தெரிவித்து விட்டார்கள்.
இதன் பிறகுதான் காங்கிரஸ்காரர்கள் வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத - தப்பித்துக்கொள்ள முடியாத நிபந்தனையாகப் பாவிக்க வேண்டியதாகி விட்டது.
திரு. காந்தியவர்கள் நிலைமை “போனாலும் கஷ்டம் போகா விட்டாலும் கஷ்டம்” என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டது. போகாமல் இருப்பதில் இரண்டு வித கஷ்டங்கள். போவதால் ஒருவித கஷ்டம். அதாவது போவதால் காங்கிரசின் குட்டு வெளியாவதுடன் போய்விடும். போகாவிட்டால் பழையபடி கிளர்ச்சித் தொல்லையை இழுத்துப்போட்டுக் கொள்ள வேண்டியிருப்பதுடன் “உலகத்தின் முன்பாக காங்கிரசின் நாணையம் வெளுத்துப்போகும்” என்கின்ற இரண்டு கஷ்டங்கள் ஏற்ப டுகின்றன.
ஆகவே ஏதாவது ஒரு வகையில் சர்க்காரார் மீது குற்றம் சுமத்தி போகாமல் இருக்கவே முயற்சித்துப் பார்த்தும் அது வெற்றிபெற இடமில் லாமல் போனதால் ஒரு மொண்டிச் சாக்கையாவது வைத்து போய் விட்டே
வந்து விடலாம் என்று முடிவு செய்ய வேண்டிய நிலைமை திரு. காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. சர்க்காரார் அதற்கும் இடம் கொடுக்கா மலிருந்ததால் ஒப்பந்த நிபந்தனை சம்பந்தமான பிரச்சினைகளைவிட “ஏதோ ஒரு பஞ்சாயத்துக்கு ஒப்புக்கொண்டால் போதும், நான் போகத் தயாராயிருக் கின்றேன்” என்று சொல்ல வேண்டியதாகி விட்டது. அதாவது இந்த பஞ்சாயத்தானது செய்யும் முடிவுக்கும் “நான் லண்டன் போவதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. எப்படியாவது பஞ்சாயத்துக்கு ஒப்புக் கொண்
டால் இப்போதே போய்விடுகிறேன். பிறகு நீங்கள் எப்போதோ யாரையோ பஞ்சாயத்து நியமித்து என்னமோ செய்து கொள்ளுங்கள்” என்கின்ற நிபந்தனையின் மேல் போவதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் தெரிகின் றது. ஆகவே லண்டன் போவது ஒப்பந்தப்படி அவசியம் என்பதாக உணர்ந்து விட்டார் என்றே ஊகிக்க வேண்டியதாய் இருக்கிறது. எப்படி இருந்தாலும் லண்டன் மகாநாட்டால் இந்தியாவுக்கு அரசியல் சம்பந்தமான
குடி அரசு - 1981 (2) 178
நன்மை ஒன்றும் ஏற்படப்போவதில்லை. அதாவது,
இப்போதைய வரி குறையாது. உத்தியோகம் குறையாது.
உத்தியோகக் கொள்ளை குறையாது. பார்ப்பனீயக் கொடுமை சூக்ஷி குறையாது.
பணக்கார ஆதிக்கம் குறையாது.
படிப்பு என்னும் பேரால் சோம்பேரிகள் வாழ்க்கையும் அவர்களது கொள்ளையும் பொறுப்பற்றவர்கள் கைகளுக்குப் போகும் அரசியல் ஆதிக்கமும் குறையாது. இவைகளுக்குப் பதிலாக அவைகள் அதிகப் படலாம்.
சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளுக்கு எவ்விதத்திலும் கஷ்டம் குறையாது. வேண்டுமானால் தீண்டாதவர்களுக்கும் பெண்களுக்கும் முன்னேற்றமேற்பட சற்று மார்க்கமுண்டாகலாம்.
இதற்கும் காங்கிரசும் பார்ப்பனர்களும் முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் தான் - திரு. காந்தியவர்கள் வருணாச்சிரம மூட்டையை வட்ட மேஜையில் அவிழ்க்காதிருந்தால்தான் முடியும்.
நிற்க திரு. காந்தியவர்கள் லண்டன் சென்றதாலேயே கடைசிவரை இருந்து “காரியம் ஏதோ ஒரு விஷயத்தில் சமாதானமாக முடிந்தது” என் கின்ற நிலைமையை ஏற்பட இடங்கொடுப்பார் என்று நம்புவதும் பிசகே யாகும். ஏனெனில் “அதற்குப்பிறகு காங்கிரசுகாரருக்கு வேலை என்ன வென்பது ஒரு பெரிய விடுகதையாகும்.” இன்றைய நிலைமையில் “வட்ட மேஜை மகாநாடு முடிவுப்படி ஒரு திட்டம் ஏற்பட்டுவிட்டது” என்று வைத்துக் கொண்டாலும் அதன் பயனாய் ஏற்படும் உத்தியோகங்கள் காங்கிரசுக்காரர்களுக்கு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. எங்கு எப்படியானாலும் தென்னாட்டில் கண்டிப்பாய் கிடைக்கவே மாட்டாது.
ஆதலால் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கும் தேசீயத்தின் பேரால் வாழ்வை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் வேறு ஒரு வழி வேண்டியது அவசியமேயாகும்..
தவிரவும் காங்கிரஸ் அடங்கியவுடன் இனிப் புறப்படப் போகும் கிளர்ச்சி சமதர்மக் கிளர்ச்சியேயாகும். இதில் திரு.காந்தியும் சேரமுடியாது. சேர்ந்தாலும் அவருக்கும் மதிப்பு இருக்காது என்பதுடன் அவர் கலந்த கிளர்ச்சியும் நாணையமானதாய்க் கருதப்படாததாய் போய் விடலாம். பிறகு பணக்காரன், மில் முதலாளி, படித்த ஆட்கள் ஆகிய இந்தக் கூட்டமும்
179 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதில் சேர முடியாது. இவ்வளவும் தவிர தென்னாட்டுப் பார்ப்பனர்கள். அதன் கிட்டக்கூட வர முடியாது. ஆகவே இவர்களுக்கெல்லாம் உலகத்தில் இடம் வேண்டுமானால் காங்கிரசின் கிளர்ச்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டாவது உயிர் வைத்திருக்க வேண்டியது திரு.காந்தியின் கடமை யாகும். ஆதலால் ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லிக்கொண்டு வருணா சிரமத்திற்கு மோச மில்லாமல் பார்த்து விட்டு திரு.காந்தியவர்கள் ஓடிவந்து விட வேண்டிய வரேயாவார்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.08.1931
குடி அரசு - 1981 (2) 180
விருதுநகர் மகாநாடு ஈர
மத ந௫ங்லைமைக் லகான்கை கண்டனத் தீர்மாணம்
விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்னும் தீர்மானத்தைப்பற்றி சென்ற வாரம் விளக்கி இருந்தோம்.
இவ்வாரம் மதநடுநிலைமை கொண்ட ஸ்தாபனங்களை மறுத்தும் மத நடுநிலைமை கொள்கையைக் கண்டனம் செய்தும் தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தைப் பற்றி சற்று விளக்குவோம். தீர்மானமாவது:-
“சமுதாய முற்போக்குகள் ஏற்படுவதற்கு ஆன முயற்சிகள் செய்யப் படும்போதெல்லாம் “மதம்போச்சு மதம் போச்சு” என்று பிற்போக்காளர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே முட்டுக் கட்டையாய் இருந்து வருவதால் அரசாங்கத்தார் அனுசரித்து வரும் மத நடுநிலைமையை கண்டிப்பதோடு அதை ஆதரிக்கும் எந்த அரசியல் ஸ்தாபனங்களையும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதாக இந்த மகாநாடு தீர்மானிக்கிறது” என்பதாகும். அது போலவே “வர்ணாச்சிரம தர்மத்தை ஒப்புக்கொள்ளும் எந்த அரசியல் ஸ்தாபனத்தையும் ஒப்புக்கொள்ள முடியாது” என்பதுமாகும்.
இவை காங்கிரசையும் திரு.காந்தியையும் கண்டித்து செய்யப்பட்ட
தீர்மானம் என்றே சொல்லலாம். ஏனெனில் மத நடுநிலைமையை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகின்றது. வருணாச்சிரம தர்மத்தை திரு.காந்தியவர்கள் ஒப்புக் கொள்ளுகிறார். ஆகவே இவ்விரு கொள்கைகளும் அவைகளை ஒப்புக் கொள்ளும் ஸ்தாபனங்களும் கண்டிக்கப்படுமானால் மேல் கண்டபடி காங்கிரசும், திரு.காந்தியும் கண்டிக்கப்பட்டவர்களேயாவார்கள். இப்பொழு தாவது பொதுஜனங்கள் சுயமரியாதைக்காரர்கள் ஏன் காங்கிரசை, காந்தியை கண்டிக்கின்றார்கள்? என்பதை உணர வேண்டுகின்றோம். மதநடுநிலை மையை ஒப்புக்கொண்டால் மதக்கொள்கைகளில் யாரும் பிரவேசிக்கவே கூடாது என்பதுதான் அதன் தத்துவமாகும்.ஆகவே இந்தத் தத்துவம் காப்பாற்றப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டோமேயா
னால் மதக் கொள்கைகள் மத சம்பந்தமான கட்டளைகள், மத சம்மந்தமான
181 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
விதிகள் என்பவைகளில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என்பதை நாம் ஒப்புக் கொண்டதாகவே ஆகும். அப்படியானால் இன்றைய நிலைமையில் மனித தர்மத்திற்கு ஏற்ற எவ்வித சீர்திருத்தத்தையும் செய்யக்கூடாது என்பதாகத் தான் முடியும்.
ஒரு சிறு சீர்திருத்தம் கொண்டு வருகின்ற காலத்திலும், சீர்திருத்த விரோதிகள் எழுந்து நின்று “வந்து விட்டது மதத்திற்கு ஆபத்து”, “மதம் போச்சுது மதம் போச்சுது” என்று கூப்பாடு போட்டால் இந்த நிலைமையில் சீர்திருத்தக்காரர்கள் என்ன செய்ய முடியும்? என்பதை யோசித்துப் பாருங்
கள். ஏறக்குறைய பிரிட்டிஷ் அரசாங்கம் வந்து 150 வருஷ காலமாகியும் இனியும் சரியான சீர்திருத்தங்கள் ஏற்படாததற்கு இந்த மத நடுநிலைமை யென்பதே முக்கிய தடங்கலாயிருந்து வந்திருக்கின்றது என்பதுடன் சர்க்கா ராரும் சில சமயங்களில் அதன் நிழலில் ஒளிந்து கொண்டு தப்புவித்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதையும் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகின்றோம்.
ஆகவே இந்த மத நடுநிலைமைக் கொள்கையை இந்திய காங்கிரசும் இந்திய அரசியல் வட்டமேஜை மகாநாடும் ஒப்புக்கொள்ளுமானால் அக் கொள்கைளின் கீழ் எவ்வித சீர்திருத்தத்தை எதிர்பார்க்கமுடியும் என்பதை யோசித்தால் அக்கொள்கையினால் ஏற்படும் ஆபத்து விளங்காமல் போகாது. காங்கிரசு இந்த மதநடுநிலைமையை ஒப்புக் கொள்ளுவதா லேயேதான் காங்கிரசை நாம் வைதீகத்தை - பார்ப்பனீயத்தை காப்பாற்றும் ஸ்தாபனம் என்று கூறுகின்றோம். இதை மறுப்பதற்கு யாரிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்கின்றோம்.
விவாக சம்பந்தமான - ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வை நீக்கும்படி யான பல அரிய தீர்மானங்கள் சட்டசபைகளுக்கு வந்தும், அவை தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம்? என்றும், இன்னும் சாதாரண விஷயங் களுக்கெல்லாம் மத நடுநிலைமை என்று வைதீகர்கள் கூப்பாடு போடுவ தற்கு என்ன காரணம்? என்றும் வாசகர்களை கேட்கின்றோம். தவிர இத் தீர் மானத்தை எதிர்க்கின்றவர்களில் சிலர்,
“இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு மாத்திரம் தான் இந்த நிபந்தனையே யொழிய மற்றபடி இந்துக்களுக்குள்ளாக நடக்க வேண்டிய சீர்திருத்தங் களுக்கு இது கட்டுப்படாது” என்று சொல்லிப் பாமர மக்கள் கண்களில் மண்ணை வாரிப்போடப் பார்க்கின்றார்கள்.
மதநடுநிலைமை என்கின்ற பேச்சை முஸ்லீம்களோ, கிறிஸ்துவர் களோ உபயோகிப்பது ஒரு தடவையானால் அந்தக் காலத்திற்குள் இந்துக்கள் 100 தடவை உபயோகித்து வருகின்றார்கள். தேவஸ்தான பரிபாலன சட்டத்தின் போது மதநடுநிலைமை வந்து புகுந்து அந்த சட்டமே
குடி அரசு - 1981 (2) 182
குப்பைத் தொட்டியில் கிடப்பதற்கும் லாயக்கில்லாததாய்ப் போய் சிலர். கொள்ளை அடிப்பதற்கு மாத்திரம் தான் அதுபயன்படக்கூடியதாகிவிட்டது.
மதபரிபாலனச் சட்டம் என்னும் தேவஸ்தானச் சட்டம் ஏற்படுவதற்கு முன்பு தேவாலயங்களுக்குள் சென்று வந்த வாணியர் முதலிய ஜாதியருக்குச் சட்டம் ஏற்பட்டபின்பு உள்ளே போக யோக்கியதை இல்லாமல் போய் விட்டதுடன் இவ்விஷயத்தில் வெகு தைரியமாய் மனுதர்மசாஸ்திரத்தை எடுத்து, கோட் செய்து தீர்ப்பு எழுதப்பட்டுமாய் விட்டது. இந்த மத நடுநிலைமை காரணமாகவே சாரதா சட்டமும் இன்று உயிருக்கே ஊஞ்ச லாடிக் கொண்டிருக்க வேண்டியதாகி விட்டது. இவைகளை எல்லாம் அற்ப மான காரியங்கள் என்று சொல்லி ஏமாற்றி விடமுடியாது.
மற்றும், பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்.
தீண்டாதவர்களுக்குத் தீண்டாமை போக வேண்டும்.
என்று நாம் தீர்மானங்கள் சட்டசபைகளுக்குக் கொண்டு போனோ மேயானால் மத நடுநிலைமை கொள்கையுடைய அரசாங்கத்தாரால் முதலா வதாகத் தீர்மானம் அனுமதிக்கப்படுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். அரசியல் சம்பந்தமான மூடநம்பிக்கை இல்லாத பகுத்தறிவு உள்ளவர். களுக்கு இவை விளங்காமல் போகவே போகாது. வேண்டுமென்றே பேசு கின்றவர்களுக்கு மாத்திரம் விளங்குவது சிறிது கஷ்டமாகும்.
ஆகவே சமதர்மத்தை விரும்புகின்ற மக்களுக்கு மத நடுநிலைமை கொண்ட ஒரு அரசியல் ஸ்தாபனம் ஒரு பெரும் முட்டுக்கட்டையேயாகும்.
அதுபோலவே வருணாச்சிரம தர்மத்தை ஆதரிக்கும் விஷய முமானதால் அதைப்பற்றி அநேக தடவைகள் எழுதப்பட்டிருப்பதால்
இதில் அதிகம் எழுதவில்லை. இந்தக் காரணங்களாலேயே இவ்விரண்டை
யும் கண்டித்து விருதுநகர் மகாநாடு தீர்மானித்திருக்கிறது.
மத விடுமுறை
மற்றபடி சர்க்காரார் விடுமுறை நாட்களில் “மத சம்பந்தமான லீவு நாட்கள் நீக்கப்பட வேண்டும்” என்று மற்றொரு தீர்மானம் செய்யப் பட்டிருக்கின்றது.
நமது அரசாங்கத்தில் வருஷம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் 52 நாட்கள் கழிந்து விடுகின்றன. இது கிறிஸ்துவ சமயத்தை ஒட்டி ஏற்படுத்தப் பட்ட நாளாகும். மற்றபடி குறைந்தது எல்லா மத சம்பந்தமாக
வும் வருஷத்தில் 35 நாட்கள் விடுமுறையாகப் பாவிக்கப்படுகின்றன. இவைகள் அரசாங்க இலாகாக்களிலும், பள்ளிக்கூடங்களிலுமே கையாளப்
183 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பட்டு பிறகு எல்லாக் காரியாலயங்களுக்கும் பரவி வரப்படுகின்றது.
இதனால் அந்த நாட்களின் தொழில்கள் கெடுவதுடன் கைப்பணமும் செலவழிக்கப்படுவதோடு மத உணர்ச்சியையும் வலுப்படுத்துவதாக ஏற்பட்டு வருகின்றன.
அன்றியும், ஒரு சமூகத்தாரின் விடுமுறைக்காக மற்ற சமூகத்தாரின் வேலை கெடுவதுடன் இதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு மற்ற மதக்காரர். களும் நஷ்டமடைய வேண்டியவர்களாகின்றார்கள். ரம்சானுக்காக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? வைகுண்ட ஏகாதசிக்காக இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏன் நஷ்டமடைய வேண்டும்? கிறிஸ்துப் பிறந்தநாள் பண்டிகைக்காக இந்துக்களும், முஸ்லீம்
களும் ஏன் நஷ்டமடையவேண்டு? மென்பதையும் மற்றும் மத சம்பந்த மான விஷயங்கள் எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த விடுமுறை நாட்களுக்காக ஏன் நஷ்டமடைய வேண்டுமென்பதையும் கவனித்தால் மதத்தின் பேரால் மக்கள் பலவந்தப்படுத்தப்பட்டு கஷ்ட நஷ்டமடைவது
விளங்கும். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை என்பதையும் அது மத சம்பந்த மானது என்பதற்கு ஆகவே மாற்றி பொதுவாகவே ஒருவித விடுமுறை களை ஏற்படுத்தி அவற்றிற்கும் எல்லோரும் அனுபவிக்க செளகரியங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
சாதாரணமாக பள்ளிக்கூடங்களுக்கு விடப்படும் விடுமுறை நாட்கள் வாரத்தில் சனி, ஞாயிறு என்பதில் 52 வாரத்திற்கு 104 நாட்களும், வெயிற்
காலம் 2-மாதம் என்பதில் சனி ஞாயிறு நீங்கி 45 நாட்களும் இவை தவிர ஜனவரியில் 10 நாட்களும் மற்றும் பண்டிகைகளில் 25 நாட்களும் ஆக
ஒட்டு மாதம் வருஷத்தில் 6 மாதகாலத்திற்கு மேலாகவே 200 நாட்கள் வரை: கூட விடுமுறை நாளாக பயன்படுத்தப்படுகின்றது.
இதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பொருள் நஷ்டம் கால நஷ்டம் எவ்வளவு என்று பார்த்தால் அதன் கஷ்டம் விளங்கும். இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மத சம்பந்தமாக அரசாங்கத்தில் ஏன் லீவு விட வேண்டும் என்பதும், அவசியமாயிருக்கின்றவர்கள் தங்கள் தங்கள் சொந்த லீவாக வாங்கிக்கொள்ள செளகரியம் அளிக்கப்பட வேண்டும் என்பதும் இதன் மூலம் மத உணர்ச்சியை எவ்வளவு குறைக்கப்படக்கூடுமோ அவ்வளவு குறைக்க வழி தேடவேண்டும் என்பதுமே இத்தீர்மானத்தின்
கருத்தாகும். மற்றபடி ஓய்வோ விடுமுறையோ மக்களுக்கு கூடாதென்ற கருத்தின் மீது இத்தீர்மானம் செய்யப்படவில்லை என்பதையும்
தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 30.08.1931
குடி அரசு - 1981 (2) 184.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனானாது 25-8-31 தேதி முதல் இப்போது
இருந்து வந்த ஸ்டேஷனுக்கு சுமார் ஒரு மைல் தூரம் மேற்கு புறமாகத் தள்ளி கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டுவிட்டது. சுமார் ஒருகோடி ரூபாய் வரை செலவு செய்து கட்டடங்கள் பல கட்டப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் உள்ள பெரிய ஸ்டேஷன்களில் இதுவும் ஒரு பெரியதும் அதிக செலவிட்டு கட்டப்பட்டதுமாகும். நாளாவட்டத்தில் ஈரோடு தென் இந்திய ரயில்வே பெரிய வண்டிப்பாதைகளுக்கு ஒரு முக்கிய ஸ்தலமாக செய்யப்படக்கூடும். இதன் பயனாக சுமார் ஆயிரம் குடிகள் ஈரோட்டிற்கு அதிகமாகலாம். ஆனால் பிரயாணம் செய்கின்ற ஜனங்களுக்கு சிறிது கஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என்னவெனில் ஸ்டேஷனுக்கும் ஊருக்கும் முன்னையைவிட சற்று அதிக தூரமாகி விட்டது. ஸ்டேஷனுக்கு இரவு காலங்களில் முன்போல் தைரியமாய் போக முடியாமல் பயப்பட வேண்டியதாய் விட்டது. மோட்டார் கூலி வண்டி வாடகை முதலியவைகள் அதிகமாய் விட்டன. ரயிலுக்கு போவது வரு
வதில் பிரயாணிகளுக்கு அரைமணி நேரம் அதிகம் செலவு செய்ய வேண்டியதாகி விட்டது. பொது ஜனங்களுக்கு இதுபோல் இன்னும் சில அசெளகரியங்கள் ஏற்பட்டிருந்தாலும் ரயில்வே ஸ்டேஷன் மாற்றம் விஷயம் சுமார் 20 வருஷங்களாகவே யோசனையில் இருந்து வந்ததாகும். இவ்வித அசெளகரியங்கள் பிரயாண வசதிகளில் ஏற்படுவது சகஜமே
யாகும்.
ஆனாலும்கூட இந்த ஸ்டேஷன் கட்டிய பணத்தைக் கொண்டு ஒரு புதிய ரயில்பாதை ஏற்பாடு செய்திருந்தால் ஈரோட்டிற்கும் மைசூருக்கும் ஒரு ரயில் பாதை போட்டிருக்கலாம். என்ன காரணத்தினாலோ அவர்களுக்கு புதிய ரயில் பாதையை விட ஈரோடு ஸ்டேஷன் பெரியதாகக் கட்ட வேண்டியது அவசியமாகிவிட்டது. என்றாலும் இந்த ஸ்டேஷனால் ஈரோடு பட்டணத்திற்கு சற்று முற்போக்கேற்பட்ட தென்றே சொல்லலாம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 30.08.1931
185 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
முஸ்லீம்கள் பிரச்சிணை
தணித்காகுதிக்க ஊணாப் கமால் மகமது ஆதாஷ
சென்னையில் பிரபல வியாபாரியும், இந்திய தோல் அரசரும் (ndia
Leather King) முஸ்லீம் சமூக பிரமுகருமான திரு. ஜமால் மகமது சாயபு அவர்கள் தலைச்சேரி மாப்பிள்ளை முஸ்லீம்கள் மகாநாட்டில் தலைமை வகித்துப் பேசியதில் “ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட கூட்டுத் தொகுதி நல்லதானாலும் பல காரணங்களால் சென்னை முஸ்லீம்கள் செய்துள்ள தனித்தொகுதித் திட்டத்தைத் தான் ஆதரிப்பதாகவும் எல்லா முஸ்லீம் களும் ஆதரிக்கவேண்டு மென்றும் சொல்லி இருக்கிறார்.
ஆகவே, தனித்தொகுதிக்கு எந்த முஸ்லீம் பிரமுகர் விரோதமாக இருக்கின்றார் என்பதை விளக்க வேண்டியது தேசீய முஸ்லீம்கள் என்பவர் களின் கடமையாகவும் தேசீய இந்துக்கள் என்பவர்களின் கடமையுமாகும்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 30.08.1931
குடி அரசு - 1981 (2) 186
சுயமரி . ..
புராணமரியாதகைக்காரணுக்கும் சம்பாஷணை
- சித்திரபுத்திரன்
சுயமரியாதைக்காரன்:- வாருங்கள் ஐயா புராணமரியாதைக் காரரே! வெகுநாளாய்க்காணோமே, எங்கு சென்றிருந்தீர்கள்?
புராண மரியாதைக்காரன்:- எனது வயிற்றுக் கொடுமை தான் உமக்குத் தெரியுமே! புராணக் காலக்ஷேபம் செய்யப் போயிருந்தேன்.
௬-ம:- அப்படியா? உங்கள் புராணக் காலக்ஷேபம் சரியாய் நடக் கின்றதா? ஜனங்கள் முன்போல் புராணங்களை மரியாதை செய்து கேட்கின் றார்களா?
பு-ம:-அதை ஏன் கேட்கின்றீர்கள்? வரவர புராணம் என்றாலே மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நம்மை யாரும் லட்சியம் செய்வதே கிடையாது.
சு-ம:-ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? புராணங்கள் எல்லாம் பகவான்கள், ரிஷிகள், பரமசிவன், மகாவிஷ்ணு முதலியவர் வாக்கு என்ப தாக இருக்கும்போது புராணங்களுக்கு மரியாதைப் போய் விட்டது என்பது அதிசயமாகவல்லவா இருக்கிறது?
பு-ம:- என்னைப் பரிகாசம் செய்கின்றீர்களா? என்ன? நீங்கள் போடு கின்றபோடுதான் நாட்டையே பாழாக்கி விட்டதே. நம்மைக் கண்டால் பையன்கள் கல்லெடுத்துப்போடுகின்றார்கள்? “ரிஷிகள் சொன்னார், பக வான் சொன்னார்” என்றால் “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட் கின்றார்கள்.
சு-ம:- இப்படியிருக்க சற்று முன் நீங்கள் புராணக் காலக்ஷேபம் செய்யப்போயிருந்தேன் என்று சொன்னீர்களே?
187 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பு-ம:அதுவா கேட்கின்றீர்கள். நான் இப்போது காங்கிரசில் சேர்ந்து அதிலிருந்து கொண்டு காங்கிரஸ் மேடைகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சம் புராணப் பிரசங்கம் செய்து வருகின்றேன். இந்த சமயத்தில் காங்கிரசில்லாவிட்டால் புராணங்கள் நெருப்பில் போடப்பட்டிருக்குமே?
ச-ம:- காங்கிரசில் எப்படி ஐயா புராணப் பிரசங்கம் செய்ய முடியும்? அதில் அரசியல் பிரஸ்தாபம்தானே செய்ய முடியும்?
பு-ம:- அந்த இரகசியம் உங்களுக்குத் தெரியாது போல் இருக்கின் றது. இனி அதிலும் கைவைத்து விடாதீர்கள்.
சு-ம:- தெரியாதே.
பு-ம:- முதலில் மேடையில் ஏறினவுடன் “மகாத்மா காந்திக்கு ஜே, வந்தேமாதரம்!” “ஜெயஜெயபாரத”என்று சொல்லும்போதே “நமப் பார்வதிபதஹே”” என்றும் “ஹரஹர சங்கரமகாதேவ!வெங்கிட்ரமண கோவிந்தா!!கோவிந்தா!!!” என்றும் சொல்லுவேன். அங்குள்ள எல்லா உறுப்படிகளும் கூடவே கத்தும். பிறகு இரண்டொரு தேவாரம்பாடுவேன்.
பிறகு மெள்ள “மகாத்மா காந்திவாள் இருக்காளே, அவாளை மனிதப்பிறப்பு என்று எண்ணி விடாதீர்கள்! அவர் ஒரு அவதாரபுருஷராக்கும்!!! மகா விஷ்ணுவே அவதாரம் செய்திருக்கிறாராக்கும்!! அதாவது பகவான் ஸ்ரீமத் பகவத்கீதையில் திருவாய் மலர்ந்தருளி இருக்கின்றபடி “யுகா யுகங்கள். தோறும்!!!” என்பதாக ஆரம்பித்துவிட்டு பாரதம், ராமாயணம், பாகவதம் முதல் பெரிய புராணம், சின்னபுராணம், மச்சபுராணம், தவளை புராணம், கெருட புராணம், பெருச்சாளி புராணம் வரையில் சும்மா அளந்து கொட்டிவிடுவேன். முண்டங்கள் வாயைத்திறந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நின்றது நின்றபடியே இரவு 10 மணிவரையில் கேட்டுக் கொண்டிருக்கும். உடனே மேல் வேஷ்டியை விரித்துக் கொண்டு கதர் குல் லாய் போட்ட ஒரு பையனை அந்தக்கூட்டத்தில் ஒரு சுத்து சுத்திவர சொன்னால் 10 ரூபாய்க்கு குறையாது வசூலாகிவிடும்.மற்றும் எத்தனையோ உறுப்படிகள், சற்று ஸ்குரு லூஸ் ஆனதுகள், பவுண்டன் பேனா, மோதிரம், பேனாகத்தி, கை சங்கிலி, கெடியாரம் முதலியவைகளையும் கழட்டி போட்டுவிடும் பிறகு என்ன குறை?
சு-ம:- பவுண்டன் பேனா கடிகாரமெல்லாம் ஏன் போடுவார்கள்?
பு-ம:- நான் அந்த மாதிரி சொல்லுவேன்.
சும:- எந்த மாதிரி?
பு-ம:- “சத் விஷயம் கேட்டுவிட்டு சும்மா போகாதீர்கள். மடியில் உள்ளதைப் போடுங்கள். அணில் பாலம் கட்ட ராமபிரானுக்கு சிறுமணல்
குடி அரசு - 1981 (2) 188
மேலே பூசிக் கொண்டு வந்து உதரி உதவி செய்ததது போல் அவதார புருஷராகிய மகாத்மா காந்தியின் இப்புனிதமான கைங்கரியத்திற்கு தங்களால் கூடியதை உதவுங்கள், அந்தப்படி உதவாவிடில் நீங்கள் பாவி யாகிவிடுவீர்கள். உங்களுடைய வஞ்சனையை பகவான் உங்கள் மடி யிலிருந்தே அறிந்து கொண்டிருக்கிறார்.” என்று சொல்லுவேன். சொன்ன வுடனே முண்டங்கள் மடியைப்பார்த்தும் ஜேபியைப் பார்த்தும் உள்ளதை எடுத்துப்போட்டுவிட்டு ஒரு கும்பிடு கும்பிட்டு விட்டுப்போய்விடுவார்கள்.
காசும் பணமும் இல்லாதவர்கள் பேனா,கத்தி, மோதிரம், சங்கிலி முதலி யவைகளைப் போடுவார்கள். பிறகு அதையே ஏலம் போட்டால் அது வேறே ஒன்றுக்கு இரண்டாய் பணம் வரும். இவ்வளவு தான் நமது புராணக்காலக்ஷேபம். ஏதோ ஒரு வழியில் ஜீவனம் நடக்கின்றது. மகாராஜன்
காந்தி தோன்றினான் எங்களையெல்லாம் காப்பாற்ற.
௪-ம:- இப்படிச் செய்தால் திரு.காந்தி முதலிய யாவரும் இதற்கெல் லாம் ஒன்றும் கணக்குகேட்க மாட்டார்களா?
பு-ம:- அந்த வழக்கம் தான் இதில் கிடையாது. அதல்லவா காங்கிரசில் இருக்கும் ஒரு பெருந்தன்மை.
ச-ம:- அதென்ன அப்படி? ஏன் கணக்குக் கேட்கமாட்டார்கள்?
பு-ம:- கேட்டால் தெரியும் சங்கதி? கேட்க ஆரம்பித்தால் திரு.காந்தி முதல் அவர்கள் அப்பன் வரை பதில் சொல்லியாக வேண்டும்.அது மாத்திர மல்ல. இதே மாதிரி கணக்குக் கேட்டு “அவன் பணம் எடுத்துக்கொண்டான். இவன் பணம் எடுத்துக் கொண்டான்” என்று கணக்கு வெளி வந்துவிட்டால் பிறகு எவனுக்கும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள். அப்புறம் காங்கி
ரசுக்கு ஆளே சேராது. ஆதலால் திருட்டு வசூலைக் கண்டு பிடித்தாலும் வெளியில் சொல்லமாட்டார்கள். அந்த ஒரு பெருந்தன்மை காங்கிரசுக்குத் தான் உண்டு. நீங்களே பாருங்களே எத்தனையோ பேர் திருப்பதி உண்டியல் மாதிரி வசூல் நடத்துகிறார்கள் யாராவது பேசுரார்களா?பாருங்கள்.
சு-ம:- இந்த முறையில் ஒருவாறு உங்களுக்கும் மற்றும் சில ஆட் களுக்கும் வாழ்க்கை நடந்து வருகின்றது என்பதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால் புராணங்களின் யோக்கியதைகளைப் பற்றி உண்மை யிலேயே உங்கள் அபிப்பிராயம் என்ன?'
பு-ம:- அதென்ன அப்படி கேட்கின்றீர்கள்? அதெல்லாம் ஒரு மாதிரியாய்த்தான் இருக்கும். அதை வெளியில் சொல்ல முடியுமா? ரிஷிமூலம் நதி மூலம் கேட்கலாமா? பொதுவாகவே புராணங்களை யாராவது குற்றம் சொன்னால் எனக்குக் கோபம் தான் வரும்.
௬௪-ம:- சரி, சரி கோபித்துக் கொள்ளாதீர்கள். அதை நான் குற்றம்
189 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சொல்ல வரவில்லை. அதைப்பற்றி ஏதாவது சந்தேகமிருந்தால் கேட்க லாமா?
பு-ம:- பேஷாய்க் கேளுங்கள்.
சு-ம:- அப்படியானால் ஒரு சந்தேகம். ஆனால் நீர் கோபித்துக் கொள்ளக்கூடாது.
பு-ம:- கோபம் என்ன? சந்தேகத்திற்குக் கோபிக்கலாமா?
சு-ம:- உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மல்லிகைச் செடியின் அடியில் ஒரு குழந்தை அப்பொழுதுதான் பிறந்ததாகக் காணப்படக் கூடியது அழுது கொண்டு கிடக்கக் கண்டீர்களேயானால் அதைப்பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?
பு-ம:- என்ன நினைப்பது? யாரோ பெற்றுத் திருட்டுத்தனமாய்க் கொண்டு வந்து போட்டு விட்டு போய் விட்டார்கள் என்றுதான் நினைப்பேன்.
ச-ம:- யார்? எப்படிப்பட்டவர்கள் பெற்றார்கள் என்று நினைப் பீர்களா?
பு-ம:- யாரோ “ திருட்டு கர்ப்பம் ” அதாவது விதவையோ, கல்யாணமாகாத பெண்ணோ புருஷன் ஊரில் இல்லாமல் தேசாந்திரம் போனவருடைய மனைவியோ,சோரத்தனமாய் கர்ப்பம் ஆகி, அதைப் பெற்று நமது தோட்டத்தில் கொண்டு வந்து போட்டுவிட்டாள் என்று தான் நினைப்பேன்.
சு-ம:- சரி. இதுதான் நல்ல பகுத்தறிவு என்பது.
பு-ம:- அதென்ன? அப்படிச் சொல்லுகிறீர்கள்? இதுகூடவா மனிதனுக்குத் தெரியாது? இந்தப்படி அல்லாமல் பின்னை என்னமாய் நினைக்க முடியும்? மல்லிகைச் செடியா பிள்ளை பெறும்? அல்லது ஆகாயத்தில் இருந்து வந்து விழுமோ? ஒரு மூடன் கூட இதற்கு மாறாக சொல்ல முடியாது.
சு-ம:- தாங்கள் சொல்லுவது நிரம்பவும் சரி. வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடியின் கீழ் இருந்தால்தான் அப்படிச் சொன்னீர்கள். ஒரு சமயம் துளசிச் செடியின் கீழ் கிடந்தாலோ?'
ச-ம:- எங்கும் அப்படித்தானே கிடக்கும். துளசிச்செடிக்கு மாத்திரம் என்ன கொம்பா முளைத்திருக்கும்? அல்லது அது கர்ப்பமாகி பிள்ளை பிறக்குமோ? இதென்ன சிறுபிள்ளைகள் மாதிரி கேட்கின்றீர்களே?
குடி அரசு - 1981 (2) 190
௬-ம:- இல்லை, ஏதோ ஒரு புராணத்தில் துளசிச்செடி அடியில் ஒரு குழந்தை கிடந்தது. அதைக்கடவுள் அவதாரமாய்க் கருதினார்கள். பிறகு அது கடவுளே ஆகிவிட்டது. இப்போதும் அது கடவுளாயிருக்கின்றது என்று பார்த்ததாக எனக்கு ஞாபகம். ஆதலால் அந்த புராணங்களை யெல் லாம் தாங்கள் நம்புவதுண்டா? அல்லது நம்பும்படி காலக்ஷேபம் செய்வ துண்டா? என்று தெரியலாம் என்பதாக ஆசைப்பட்டுத்தான் தங்களைக் கேட்டேன்.
பு-ம:- நீர் ௯.ம. என்பது தெரிந்தும் உம்மிடம் நான் பேசியது சுத்தத் தப்பு. புராணத்தை சந்தேகப்படுகின்ற-தர்க்கம் செய்கின்ற-நாஸ்தீகர்களு டைய முகாலோபனமே செய்யக்கூடாது என்ற பெரியவாள் இதற்காகத் தானே சொல்லி இருக்கின்றார்கள். சு.ம.என்றாலே நாத்திகம் தானே. உம்மோடு பேசிய குற்றத்திற்காக நான் ஒரு முட்டாள் ஆக வேண்டியதும் நியாயம் தானே?
௬ச-ம:- இப்படிக் கோபித்துக் கொள்ளலாமா? நீங்கள் சொன்னதை உங்கள் வாயைக் கொண்டு, சொன்னதைக் கொண்டு உங்களை என்ன சொல்லுகின்றீர்கள் என்று தான் கேட்டேனே ஒழிய நான் ஏதாவது குற்றமான வார்த்தை சொன்னேனா? அல்லது என் அபிப்பிராயமாக ஏதாவது சொன் னேனா? ஏன் இவ்வளவு கோபம்?
பு-ம:- கோபம் ஒன்றும் இல்லை எனக்கு வேலையிருக்கின்றது. கொஞ்சம் அவசரம். நான் போய் விட்டு வருகின்றேன் (என்று சொல்லிக் கொண்டே நழுவிவிட்டார்)
குடி அரசு - உரையாடல் - 06.09.1931
191 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ச்சங்கோடமல்
ஊயனாமாாசம்
நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேசவேண்டியிருக்கும் என்று கருதவேயில்லை. ஜமீன்தாரர் டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வரவேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன்.
சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசெளகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தார் அவர்கள் சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேச வேண்டியவனாக இருக்கிறேன். இன்று பேசவேண்டிய விஷயம் “தற்கால இராஜ்ய நிலைமை” என்பதாக நோட்ட
சில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ இராஜிய திட்ட சம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட ஒரு அபிப்பிராயம் கொண்டிருப்பவன். இராஜிய துறையில் சிறிதுகாலம் இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில் அதிருப்தி கொண்டு வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத்துறையில் வேலை செய்து கொண்டிருப்பவன். அப்படிப்பட்ட நான் இராஜிய நிலைமையைப் பற்றி என்ன பேசமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
சகோதரர்களே இன்றைய நிலைமையில் நான் இராஜியத்துறை கொள்கைகளில் மாத்திரம் அப்பிராய பேதங்கள் கொண்டவனல்ல. தற்கால இராஜிய விஷயம் என்பதையே நாணையமானதல்ல என்று கருதுவதோடு இந்தியநாட்டின் விடுதலைக்கு இந்த இராஜியத்துறை அவ்வளவு முக்கியமானதல்லவென்றும், மற்ற விஷயங்களின் வரிசைக்கிரமத்தில் அரசியல் சீர்திருத்தம் என்பது எவ்வளவோ பின்னால் இருக்க வேண்டியது என்றும் கருதுகின்றவன். நமக்கு இருக்கும் வேலை எல்லாம் நாம் செய்யவேண்டிய முதல் வேலை எல்லாம் சமுதாய சம்பந்தமானதே தவிர:
அரசியல் வேலையல்ல...
குடி அரசு - 1981 (2) 192
ஏனெனில் சமூகத்துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத் தனத்தின் கொடுமை எவ்வளவு? இவைகளுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையை கொஞ்சமும் பெரிதாகக் கருதி லட்சியம் செய்ய மாட்டானென்றே கருதுகின்றேன். உங்களில் யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மத சம்பந்தமான சமூக சம்பந்தமான அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து மான
மிழந்து இழி ஜாதியாய் வாழுகின்றோமே யொழிய அரசியல் அடிமைத் தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மையானதாக விரும்பவில்லை. உத்தியோ கத்தை பிரமாதமானதாகக் கருதவில்லை. அதிகாரத்தை ஆசைப்பட
வில்லை...
என்னுடைய நாட்டு மனிதன் ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருதவேண்டும்,அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன். இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான் என்னை வருத்துகின்றது. நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது, நெஞ்சம் குமுறுகின்றது. இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள். அப்பொழுது அந்த அரசியலைப் பற்றி கவனிப்போம் அதை யொழிப்போம். இல்லா விட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக்கின்றார்களோ அவற்றை யொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள். அதைவிட்டு விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு “அரசியல் அரசியல்” என்றால் என்னஅருத்தம்? இது யாரை ஏமாற்றுவது? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே காலத்தை கடத்துவது? என்பவைகளை யோசித்துப் பாருங்கள்.
“அரசியலைப் பற்றிக்கூட நமக்குக் கவலையில்லை. அன்னியனை ஒழிக்க வேண்டாமா?” என்று சிலர் கேட்கின்றார்கள். இதிலும் உண்மையோ அறிவுடைமையோ இருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் யார். அன்னியன்? என்பதை முதலில் கவனித்துப் பாருங்கள்.
என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வரவேண்டாம் - தொடவேண்டாமென்பவனும், கிட்ட வந்தாலே - கண்ணில் தென்பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதை சாப்பிட் டால்-என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அன்னியனா? அல்லது “உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை, தொட்டாலும் பரவாயில்லை, நாம் எல்லோரும் சமம்தான்” என்று சொல்லுகின்றவன் அன்னியனா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
193 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நமது ஜனங்கள் 100க்கு 90 பேர்கள் மூடமக்களாக யிருந்து வரு கின்றார்கள். கல்வி வாசனையும் இல்லை. அறிவு வாசனையும் இல்லை. இருந்தாலும் அறிவு சுதந்திரமில்லை. இவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு யார் என்ன பேசினாலும் கைதட்டுவார்கள். கூடவே கோவிந்தா போடுவார்கள். ஆகவே சரி எது? தப்பு எது? என்று தெரிந்து கொள்ளும் அறிவு யில்லாதவர்கள். இவர்கள் முன் எதைச் சொன்னால் தான் என்ன? என்கின்ற முறையில் தேசத்தில் எத்தனையோ புரட்டுகள் நடக்கின்றன. இதைப் பார்த்துக் கொண்டே இந்த நிலைமையை மாற்ற வேண்டியதே நமது
முதல் வேலையாயிருக்கவேண்டும் என்பதை யாருமே கவனிப்பதில்லை.
எந்தத் தலைவருமே நினைப்பதில்லை. இப்படியே காலம் கடந்தால் நமக்கு எப்போது விடுதலை கிடைக்கக்கூடும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.
“பொருளாதாரத் துறையில் நாம் அடிமையாய் இருக்கின்றோம். நமது பொருள் கோடிக்கணக்காக வெளியில் போகின்றது. அதை நிறுத்த வேண்டாமா?” என்கின்றார்கள் மற்றொரு கூட்ட அரசியல் கூட்டத்தார். இதையும் என்னால் லட்சியம் செய்யவோ, ஒப்புக்கொள்ளவோ முடிய வில்லை. ஏனென்றால் பொருள் நஷ்டம் என்பது இப்போது நமது நாட்டில் யாருக்கு இருக்கிறது? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டில் சமூகத்துறையிலேயே பிறவியிலேயே பொருளாதார உரிமை அநேக மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக புரோகிதன், உத்தியோகஸ்தன், வக்கீல், வியாபாரி, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன் ஆகியவர்களின் கூட்டங்களுக்குத்தான் பொருளாதார உரிமை இருக்கின்றதேயொழிய மற்ற ஜனங்களுக்கு வயிற்றுக்கு எவ்வளவு வேண்டும் என்கின்ற அளவுக்குட்பட்ட அடிமை உரிமைதானே இருந்து வருகின்றது? முற்கூறிய கூட்டங்களுக்குப் பொரு ளாதார உரிமை என்பது பிறவியிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுடன் மற்றவர்கள் அதற்கு அருகரல்லாமல் இருக்கும்படியான நிர்பந் தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, ஒரு இட்லிக்கடைப் பார்ப்பானுடைய மகன் ஹை கோர்ட் ஜட்ஜாக வரலாம். ஒரு பஞ்சாங்கப் பார்ப்பனன் மகன் மந்திரி ஆகலாம். ஒரு தோட்டியினுடைய மகன் ஹைகோர்ட் ஜட்ஜாக வர முடியுமா? யோசித்துப் பாருங்கள். ஜாதியின் பேரால் வகுக்கப்பட்டிருக்கும் பிரிவா னது இம்மாதிரி சிலருக்கு நன்மையையும், சிலருக்குத் தீமையையும் செய்து வருகின்றது, வெகுகாலமாய் செய்தும் வந்திருக்கின்றது. இனிமேல் இந்தப்படி செய்யாமல் இருக்க நமது “அரசியல் சுயராஜியத்தில்” எவ்வித.
திட்டமும் இல்லை என்பதோடு இந்த முறைமையைக் காப்பாற்றவும் திட்டம் போடப்பட்டிருக்கின்றது என்றால் அறிவுள்ள மனிதன் எப்படி இந்த அரசியலை ஒப்புக் கொள்ள முடியும்?
குடி அரசு - 1981 (2) 194.
இன்றைய தினம் இந்த திருச்சங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப் போடக்கூட அவனிடம் இட்லி வாங்கமாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ்வளவு மோசமாயிருந்தாலும் “சாமி சாமி” என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமூக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?
ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளையும் கீழ்ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும், கொடுமைப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங்களையும் கவனித்து, அவர்களை அவர்களு டையக் கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்ய முடியாத அரசியல் திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன்? மேல் ஜாதிக்காரனுக்
கும் முதலாளிக்குமல்லவா அது பயன்படும். தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர முதலாளி எவ்வளவு லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடாது என்பதாக யாராவது திட்டம் போடுகிறார்களா? பாருங்கள்.
நமது மக்களின் இழிவும், அடிமைத்தனமும், பொருளாதாரக் கஷ்டமும் நமது மதத்தின் பலனாய் சமுதாய முறையின் பயனாய் இருந்து வருகின்றதா? அல்லது இல்லையா? என்று பாருங்கள். பணக்காரனும் ஜமீன்தாரனும் பணக்கார பிரபுவும் தங்கள் பணங்களை இந்நாட்டில் என்ன செய்கிறார்கள்? என்று சற்று கவனித்துப்பாருங்கள். மதத்தின் பயனாய் ஏற்பட்ட முட்டாள்தனத்தின் காரணமாய் இதோ எதிரில் தெரிகின்ற கோவி
லின் பேரால் பாழாகின்ற பணம் இவ்வளவென்று உங்களுக்குத் தெரியாதா? பணம் சேரச் சேர மண்ணால் கட்டின கோவிலை இடித்து கல்லால் கட்டு கின்றான். பிறகு சலவைக்கல்லால் கட்டுகிறான், சித்திரவேலை செய்கிறான், பிறகு வெள்ளியிலும், தங்கத்திலும் வாகனம் செய்கின்றான். தங்க ஓடு போட்டு கோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூடமக்களைக் கொண்ட நாட்டிற்கு பணம் மிச்சமாவதால் என்ன லாபம்?
பாமர மக்களை அறிவாளிகளாக்கி அவர்கள் கையில் பணத்தை ஒப்புவித்தால் தான் அந்தப் பணம் நாட்டின் நலத்திற்கு பயன்படும். அப்படிக்கில்லாமல் பாழாவதற்கும் சோம்பேரிகளும், சூக்ஷிக்காரர்களும் பிழைப்பதற்காக பணத்தைக் காப்பாற்றுவதில் என்ன பலன்? என்று யோசித்
துப் பாருங்கள். மற்றொரு கூட்டத்தார் நமக்கு “சமத்துவம் வேண்டிய தற்காக சுயராஜியம் வேண்டு” மென்கிறார்கள். இதுவும் அர்த்தமற்றதும் அறி வற்றதுமான பேச்சு என்றுதான் சொல்லுவேன். பார்ப்பனனும், பறையனும்
195 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இருக்கும் நாட்டின், இருக்க வேண்டிய நாட்டின், இருக்கும்படி காப்பாற்றப் படவேண்டிய நாட்டின் மக்களுக்கு சமத்துவம் சம்பாதிப்பது என்பது புரட்டா? அல்லது நாணையமானதா என்று யோசித்துப்பாருங்கள். வீண் வாய்பேச்சில்-வெட்டிப்பேச்சில் மயங்குகின்ற பாமர மக்களைக் கூட்டு
வித்துப் பேசி விடுவதினாலேயே எந்தக்காரியமும் நடந்துவிடாது. எப்படி யானாலும் ஒரு காலத்தில் வெளியாய்த்தான் தீரும். நாட்டிற்கு உண்மை விடுதலை வேண்டுமானால் விடுதலைக்கேற்ற அரசியல் சுதந்திரம் வேண்டு மானால் பயன்படத்தக்க நாணையமானதான சுதந்திரம் வேண்டுமென்று தான் சொல்லுகின்றேன். வரப்போகும்-வரவேண்டுமென்று கேட்கப்படும்- சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்கமாட்டானா? என்று கேட்கின்றேன். பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா? என்று கேட்கின்றேன். இன்றைய தினம் சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின் றேன். இன்றையதினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா? என்று கேட்கின்றேன். குடும்பத் துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும் பாடுபடாமல் இருந்து கொ குடும்பத்தோடு மேன்மையாய் வாழ்பவனும் இருக்கமாட்டானா? என்றும் கேட்கின்றேன். ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய் விடுவார்களா? என்றும் கேட்கின்றேன். இவைகளை ஒழிக் காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்? இந்த வித்தியாசங்கள் இருக்கும் “சுயராஜியத்திற்கும்” இப்போது இருக்கும் “அன்னிய ராஜியத்திற்கும்” என்ன வித்தியாசம் இருக்கக்கூடும்? என்பதை யோசித்து பாருங்கள். மத மூடநம்பிக்கையில் மக்கள் அறிவீனர்களாய் இருப்பது போலவே அரசிய
லிலும் மூடநம்பிக்கையுள்ளவர்களாயிருந்து அறிவீனர்களாகி தாங்களும் கெட்டு அன்னியரையும் கெடுத்து நாட்டின் முற்போக்கை: பாழாக்குகிறார்கள்.
நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் இதுவரை சமூக சம்பந்தமான முற்போக்கு ஏதாவது ஏற்பட்டிருக்கின்றதா? என்று பாருங்கள். சமூக முற்போக்கு-சீர்திருத்தம் என்பவை ஏற்பட தீவிர முயற்சி செய்யப்படும் போதெல்லாம் அரசியல் என்பது குறுக்கிட்டு தடைகல்லாய்
இருந்து வந்திருக்கின்றதே ஒழிய என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது? என்று சொல்லுங்கள் பார்ப்போம். இவ்வளவு விழிப்பான இந்தக்காலத்திலும் அரசியல் தலைவர்கள் வருணாச்சிரம பாதுகாப்பும் மதநடுநிலைமையும் என்று சொல்லிக்கொண்டு தானே இன்று சுயராஜியம் வேண்டுமென்கிறார். கள்-சுயராஜியமும் வாங்கப் போயுமிருக்கின்றார்கள். எந்தத் தலைவராவது சுயராஜியத்தில் வருணாச்சிரமம் ஒழிக்கப்படும், மதக்கொடுமை ஒழிக்கப்
படும், மத சம்பந்தமான பழக்கவழக்கம் கீழ்-மேல் நிலைமை ஆகியவை கள் ஒழிக்கப்படும் என்று சொன்னார்களா? சொல்லுகின்றார்களா? என்று நன்றாய் கவனித்துப்பாருங்கள்.
குடி அரசு - 1981 (2) 196
வருணாச்சிரமமும் மதக்கொடுமையும் ஒழியவேண்டுமென்கிற நான் எப்படி இந்த அரசியலை சுயராஜியத்தை ஆதரிக்க முடியும்? மத நடுநிலை மையில் பறையன் ஒழிவானா? சூத்திரன் ஒழிவானா? என்று ஆராய்ந்து பாருங்கள். அப்படியிருக்க சுயராஜியக் கிளர்ச்சியில் பறையன் என்பவனுக்
கும், சூத்திரன் என்பவனுக்கும் அறிவும் மானமும் இருந்தால் அதில் சேரக்கூடுமா? என்று யோசித்துப்பாருங்கள்.
நண்பர்களே! நான் இதுவரை பேசியது தங்களில் யாருக்காவது அபிப்பிராய பேதத்திற்கோ அதிருப்திக்கோ இடமிருக்கக் கூடியதாக இருந்தாலும் இருக்கலாம். ஆனால் நான் எனது அபிப்பிராயம் என்கின்ற முறையில் இந்த இடத்தில் எனக்குப் பட்டதை பேசவேண்டுமே ஒழிய
கூட்டத்திற்குத் தகுந்தபடி சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி என்று பேசக்கூடாது என்கின்ற முறையில் பேசினேன். இந்தக் கருத்துக்கள் தப்பாக இருக்கலாம். இவற்றையெல்லாம் அடியோடு நீங்கள் கண்டிக்கக்கூடியதாகவும் இருக்க
லாம். ஆனால் என் அபிப்பிராயம் என்கின்ற முறையில் வெளியிட எனக் குள்ள பாத்தியதையில் உங்களுக்கு ஆக்ஷேபமிருக்காதென்று கருதியே பேசினே னேயொழியே வேறில்லை.
ஆகவே தூங்கள் நான் சொன்னதையும் இனியும் கனவான்கள் பலர் சொல்லப்போவதையும் தயவு செய்து ஒத்திட்டு ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு இஷ்டப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றே கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு: 01.08.7937 அன்று திருச்செங்கோட்டிற்கு டாக்டர்.பி.சுப்பராயன் அவர்களைக் காண சென்றிருந்தபோது ஈவெராமசாமியவர்களை அங்கு “தற்கால ராஜியநிலைமை என்ற பொருள்பற்றி பேச ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வேண்டுமென திரு.டி.வி. நடேச முதலியாரும் பிறரும் வற்புறுத்தியதன் பொருட்டுடாக்டர்பி.சுப்பராயன் அவர்கள் தலைமை வகிக்க கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 06.09.1931
197 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சத்தியாக்கிரகம்
“சுயமரியாதை இயக்கமானது எவ்வித சத்தியாக்கிரகமும் செய்ய வில்லை” என்பது இன்றைய தினம் அதன் மீது துவேசமும், பொறாமையும் கொண்டவர்களால் சொல்லப்படும் ஒரு பெரிய குற்றமாகும்.
மற்றபடி அதன் கொள்கைகளைப் பற்றி யாரும் இதுவரை எவ்விதக் குற்றமும் சொல்லவில்லை. அன்றியும் இந்த மேற்கண்ட குற்றத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் “சுயமரியாதை இயக்கம் இதுவரை என்ன சாதித்துவிட்டது?'”” என்பதாகவும் சிலர் நம்மைக் கேட்கின்றார்கள்.
சுயமரியாதை இயக்கம் “சத்தியாக்கிரகம்” என்பதாக ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்து சில வாலிபர்களைச் சேர்த்து அவர்களுக்கு சாப். பாடும் விளம்பரமும் கொடுத்து, ஏதோ இரண்டொரு கோலில்களின்
£ரியங் களைச் செய்திருக்குமேயானால் அந்தக் காரியங்களால் நமது லட்சியம் வெற்றி பெற்றாலும்-பெறாவிட்டாலும் லட்சியத்திற்கே முட்டுக்கட்டையாக இருந்தாலும்கூட, சிறிதும் கவலை இல்லாமல் “சுயமரியாதை இயக்கம் நிரம்ப காரியம் சாதித்துவிட்டது”” என்பதாக நமது மக்கள் கருதி விடுவார்
கள். மற்றபடி இவ்வியக்கத்தால் பயன்பட்டதான காரியம் எவ்வளவு நடை பெற்றிருந்தாலும் நமது மக்கள் தெரிந்து கொள்ளுவது என்பது சாத்தியமற்ற
காரியமாகும்.
ஏனெனில், முதலாவது நமது மக்களுக்கு பெரும்பாலும் பகுத்தறிவு ஆராய்ச்சி என்பது தடைபடுத்தப்பட்டு விட்டது.
இரண்டாவதாக, ஏதாவது சிலருக்குப் பகுத்தறிவு உணர்ச்சி இருந்தா
லும் அதை நேர்வழியில் பயன்படுத்த யோக்கியமோ, நாணையமோ, நன்றி யறிதல் தன்மையோ கிடையாது.
குடி அரசு - 1981 (2) 198
ஆகவே, இந்த இரண்டு காரணங்களாலேயே பொதுநல வாழ்க்கை: நாணையமாய் இல்லாமல் இருப்பதுடன் ஒன்றிரண்டு நாணையமாய் உண்மையாய்ப் பாடுபட்டாலும் அதை மக்கள் அறிய முடியவோ, நன்றி செலுத்தவோ முடியாமல் போய்விடுகின்றது.
நிற்க, சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் அரசியலில் இரண்டு காரியத்தை லட்சியமாய் கொண்டு ஆரம்பத்திலிருந்தே கதறி வந்திருப்பது டன், அந்த லட்சியத்திற்காகவே சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் காங்கிரசிலிருந்து பிரிந்தும் வந்ததுமான காரியம் யாவரும் அறிந்ததாகும். அந்த லட்சியம் ஒருவாறு வெற்றிப்பெற்றது என்பதை இன்று அதன் எதிரி
களும் மறுக்கமாட்டார்கள்..
அதாவது, இவ்வியக்கம் தோன்றிய காலம் தொட்டு அரசியல் பிரதிநிதித்துவ தேர்தலிலும், அரசியல் உத்தியோகத்திலும், பல மதம், பல வகுப்பு. கீழ்-மேல் நிலைமை ஆகியவைகள் ஏற்பட்ட இன்னாட்டு மக்களுக்கு வகுப்புவாரிஉரிமை ஏற்பட வேண்டுமென்று கூப்பாடு போட்டு வந்ததேயாகும். சுயமரியாதை இயக்கம் இந்த மாதிரிகூப்பாடு போட்டு இந்தப்படிக் கேட்பதை இழிவான தேசத்துரோகமான காரியமென்று திரு.காந்தியும், காங்கிரசும் பிரசாரம் செய்தும் அது இழிவானதல்ல, தேசத் துரோகமானதல்ல என்பதான உணர்ச்சியை மக்களுக்குள் உண்டாக்கி அந்தப்படி இழிவென்றும் தேசத்துரோகமென்றும் சொல்லி வந்த அதன் எதிரிகளையெல்லாம் முறியடித்து வந்திருக்கின்றது.
மேலும் “சுயமரியாதை இயக்கம் எந்த சமூகத்தாருக்காக வகுப்பு வாரி உரிமை கேட்டுவந்ததோ அந்த சமூகத்தாரின் நன்மைக்காக ஏற்பட்ட தாகச் சொல்லிக்கொண்டு உத்தியோகங்களையும் பதவிகளையும் சுய நலத்துக்குக் கொள்ளையடித்தக் கூட்டத்தார்களாலேயே வகுப்பு வாரி உரிமைக்கு விரோதமாய் செய்யப்பட்ட செய்கைகளை சமாளித்தும், மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள், தேசீய ஸ்தாபனங்கள், பார்ப்பனத் தலைவர்கள், மகாத்மாக்கள் முதல் அனேகர் அதற்கு விரோதமாயிருந்தும் அவ்வள வையும் சமாளித்து, அரசியல் - பிரதிநிதித்துவங்களிலும், பதவிகளிலும், உத்தியோகங்களிலும் அரசாங்கத்தாராலேயே வகுப்புவாரி உரிமையை ஒப்புக்கொள்ளச் செய்தும், அதை அமுலுக்கு கொண்டுவரச் செய்தும் இன்றைய தினம் அமுலில் நடந்தும் வருகின்றது.
நாளையதினம் வரப்போகும் அரசியல் சீர்திருத்தத்திலும் 1000 மகாத்மாக்கள் விரோதமாய் இருந்தாலும் கூட இந்தக் கொள்கைகள் ஒப்புக்கொள்ளப்பட்டு அமுலில் வரவும் போகின்றது.
மற்றும் அடுத்த மாதம் நமது நாட்டில் நடக்கப்போகும் ஸ்தல
199 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மற்றும் மனித சமூகத்திலேயே சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்று இழித்துக்கூறி, தாழ்மையாய்க் கருதி, அடிமைகளாய் நடத்தி வந்த “பொட்டை” என்னும் பெண்மக்களும் தேர்தலில் நின்று வெற்றிபெற்று மனித உணர்ச்சியுடன் சபையில் வந்து சுதந்திரத்துடன் உட்காரப் போவதும்.
உறுதி. மற்றபடி மகமதியர், கிறிஸ்துவர்கள் என்பவர்களும் தங்கள் மானத்தையும் மனசாக்ஷியையும் இழக்காமல் ஸ்தானம் பெறக்கூடிய யோக்கியதை அடைந்திருக்கிறார்கள்.
இதுபோலவே சர்க்கார் உத்தியோகத்திலும் சுயமரியாதை இயக்கம் விரும்பியவாரே இத்தனை பறையன், இத்தனை பார்ப்பனன், இத்தனை பார்ப்பனரல்லாதவன், இத்தனை முகமதியன், இத்தனை கிறிஸ்துவன் என்று விதி ஏற்பட்டு அநேக விஷயங்களில் அந்தப்படி நடைபெற்றும் வருகின்றது. இனி கூடிய சீக்கிரம் பெண்களுக்கும் இந்த உத்தியோகங்களில் பங்கு கிடைக்க முயற்சிக்கிறது.
இவைகளெல்லாம் சுயமரியாதை இயக்கத்தால் ஏற்பட்டதா? அல்லது அல்லவா? என்பதை விவகாரத்தில் வைத்து கொண்டாலும் சுயமரியாதை இயக்கம் என்று ஒன்று ஆரம்பமான காலத்தில்- அதன் (அவ்வியக்கத்தின்! அவசியத்திற்காக - கொள்கையாக சொல்லப்பட்ட காரணங்களில் இந்த வகுப்புவாரி உரிமையேதான் முக்கியமாய் சொல்லப்பட்டதா? அல்லது அல்லவா? என்பதில் ஒரு கடுகளவு விவாதமும் செய்யமுடியாது. யாராவது செய்யக்கூடுமானால் அவர்களுக்கு திருவண்ணாமலைக் கான்பரன்சும், காஞ்சீபுரம் கான்பரன்சும், கதர் ஸ்தாபன தகராறும் முதலாகியவைகளும் “குடிஅரசி”ன் 1926-ம் வருஷத்திய தலையங்கங்களும், உப தலையங் கங்களும் மற்ற நிரூபங்களும் தோல்ப்பிக்கத் தயாராய் இருக்கின்றன.
நன்றி அறிதலற்ற தன்மை, குறோதம், பொறாமை, எதிரிகளிடம் கூலிபெறுவதால் அதற்குத் தகுந்தபடி பேச வேண்டியதாகிய குணங்கள் இல்லாதவர்கள் இதை ஒப்புக்கொள்ளுவார்கள் என்றே கருதுகின்றோம்.
ஆகவே மேற்கண்டபடி அரசியல் துறை மாத்திரமல்லாமல்
சமுதாயத் துறையை எடுத்துக்கொண்டோமேயானாலும் ஜாதி அகம்பாவம், ஆணவம் ஆகியவைகளை வெளிப்படையாய் காட்டும் மனோபாவம் நமது நாட்டில் 100க்கு 50 வீதமாவது மறைந்திருப்பதைக் காணலாம்.மற்றும் மத சம்பந்தமான சடங்கு, உற்சவங்கள் விஷயமாய் உள்ள உணர்ச்சிகளும்
100க்கு 50 பங்கு அறிவாளிகள் என்பவர்கள் மனதிலேயே முக்கியஸ்தமும் பிடிவாதமும் குறைந்து ஏதோ கடன் கழிப்பது என்கின்ற முறையில் நடத்த
குடி அரசு - 1981 (2) 200
வேண்டியதாகி, சிறிது சிறிதாய் குறைந்து வருவதைக் காணலாம். இவை ஒருபுறமிருந்தாலும் பார்ப்பனர் உட்பட எல்லா ஜாதி மக்களும் இன்று
சமபந்தியில் இருப்பதற்கு முன் போல் பயப்படாமலும், கஷ்டப்படாமலும் தாராளமாய் இருந்து உண்பதையும் காணலாம். அது மாத்திரமல்லாமல் ஸ்பரிச தோஷமில்லாமல் பல உயர்ந்த ஜாதியினர் சமமாக ஆகாரம் உட்கொள்ளுவதையும் காணலாம்.
உதாரணமாக, ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிலிலும், விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டிலிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே பந்தியில் சமமாக உட்கார்ந்து சாப்பிட்டதை இயக்க எதிரிகளும் கூட இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். எவ்வித ஒழிமறைவுமில்லாமல்
கள்.ஈரோட்டில் பறையர்கள் முதல் எல்லா ஜாதியாரும், எல்லாமதக்காரரும் பறிமாறினார்கள். சைவ வேளாளர், தொண்டமண்டல முதலியார், காரைக் காட்டு சைவர், பார்ப்பனர், நாடார், நாயக்கமார், செங்குந்தர், வாணிய வைசியர், நாடார், க்ஷத்திரியர், நாட்டுக்கோட்டை-வைசியர் ஆகிய எல்லோருமே சமமாக உட்கார்ந்து, ஒன்றாகச் சாப்பிட்டார்கள். அதுவும்
பந்தி 1-க்கு 150 பேர் வீதம் சாப்பிட்டார்கள். எந்த அரசியல் மகாநாட்டிலும் பார்ப்பனரல்லாதார் சமையல் செய்ததோ, “தீண்டா” ஜாதியார் பறிமாறி னதோ பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒரு பந்தியில் இருந்து சாப்பிட ஏற்பாடு செய்ததோ இதுவரையில் நாம் அறிய நடந்ததே இல்லை.
மற்றும் பெண்கள் ஆண்களுடன் சரிசமமாக தங்களைக் கருதிக் கொண்ட
தும் மற்றும் அவர்கள் நிர்பந்தங்கள் ஒழிந்ததுமான சம்பவங்கள் இவ் வியக்
கத்தின் பயனாய் காணப்பட்டதுபோல் வேறு எதிலாவது காணப்பட்டது என்று யாரும் சொல்ல வரமாட்டார்கள். மற்றும் கடவுள், மதம், சமயம், வேதம், புராணம் முதலியவைகளைப் பற்றியும், இனியும் பல காரியங்
களும் ஏற்பட்டதை சொல்லாமலே விட்டுவிடுகின்றோம். அதை அவரவர் களே நினைத்துப் பார்த்தால் தெரியும். ஆகவே சொன்னவரையிலும் கூட இதன் தன்மைக்கு ஒரு விஷயத்தை ஞாபக மூட்டுகின்றோம்.
அதாவது, எந்த மக்களுக்கு என்ன விதமான நன்மை செய்ய வேண்டுமென்று கருதினோமோ அந்த மக்களின் எதிர்ப்புக்கிடையிலேயே இவை செய்யப்பட்டது என்பதுடன், பலன் அடைந்த சமூகத்தாரே இன்றும் எதிரிகளாய் இருந்து வருகின்றார்கள் என்பதையும் ஞாபகமூட்டுகின்றோம்.
மேலும் சுயமரியாதை மகாநாடுகளின் தீர்மானங்களின்படி பால்ய மணம் தடுப்பு - பெண்களுக்குச் சொத்துஉரிமை-விவாகரத்து-விதவை உரிமை-தீண்டாமை விலக்கு முதலியவைகளுக்கு சட்டசபைகளில் சட்டங்
கள் கொண்டு வரப்பட்டு கில நிறைவேறியும் சில விவாதத்திலும் யோசனை யிலும் இருந்து வருகின்றன. தீண்டாதவர்கள் என்பவர்கள் விஷயத்தில் அவர்களுக்குக் கல்வி வசதியும் பூமி வசதியும் சிற்சில இடங்களில் சர்க்
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காரால் நடத்தப்பட புதிய உத்திரவுகளும் போடப்பட்டு வருகின்றன. இவை கள் எல்லாம் சுயமரியாதை இயக்கத்தால்தான் ஆயிற்றா? என்பது ஒரு முக்கிய கேள்வியாய் இருக்கலாம். அதற்கு பதில் சொல்ல நாம் ஆசைப்பட வில்லை. ஆனால் ஒன்றை மாத்திரம் நினைப்பூட்டுகிறோம். அதாவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்-சுயமரியாதை இயக்கத்தின் தேவைகள்-விருப்பங்கள் ஆகியவைகள் பற்றி அவ்வியக்கம் தெரிவித்துக் கொண்டபடி காரியங்கள் நடந்து வந்திருக்கின்றது-நடந்தும் வருகின்றது
டன் இவைகளைப்பற்றி இதுவரை எந்த அரசியல் இயக்கமும் தெரிவிக்க வில்லை - தனது லட்சியமாய்க் கொள்ளவும் இல்லை என்பதாகும். ஆகவே இவை யாரால் ஏற்பட்டதாய் இருந்தால் என்ன? என்பதோடு இனியும் எவ் வளவோ ஆகவேண்டி இருக்கின்றது என்பதையும் நாம் மறைக்க வில்லை.
சத்தியாக்கிரகம்
இனி எடுத்துக் கொண்ட விஷயத்தைக் கவனிப்போம். அதாவது சத்தியாக்கிரகம். மேற்கண்ட இந்தக் காரியங்கள் செய்வதற்கு சுயமரியாதை. இயக்கமானது இதுவரை எவ்வித சத்தியாக்கிரகமும் செய்யவில்லை. அன்றி
யும் எவ்வித பலாத்காரமும் செய்யவில்லை.
மற்றபடி அது என்ன செய்ததென்றால் மனதில் உள்ளதை உள்ளபடி தைரியமாய் வெளியில் எடுத்துச் சொல்லிற்று. பேனாவைத் தாராளமாக ஓட்டிற்று. தத்துவார்த்தத்திற்கு இடம் கொடுக்கவில்லை. ஊர் ஊராய், கிராமம் கிராமமாய், பட்டணம் பட்டணமாய் சென்று பட்டி தொட்டிகளிலும், காடு மேடுகளிலும் கூப்பாடு போட்டது. சமயத்துக்குத் தகுந்தபடி பேசவில்லை. பின்னால் போகவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றும் பிரமாதமாகச் செய்து விடவில்லை. மக்களுக்குள் இயற்கையாய் ஏற்படும் சுயநலமும், உத்தியோகப் போட்டியும், பொறாமைகளும் இவ்வியக்கத்தில் கலந்து கொண்ட சிலருக்கு சற்று குறைவாய் ஏற்பட்டு இருந்திருக்குமானால் சுய மரியாதை இயக்கத்தால் இன்னமும் சற்று அதிகமான பலன்கள் ஏற்பட்டி
ருக்கும் என்பதை நாம் மறைக்கவில்லை. அவைகள் சற்று அளவுக்கு மீறி அதிகமாக ஏற்பட்டுவிட்டதால் ஏற்பட்ட பலன்கள் குறைவாய் இருப்பதாகக் கருத வேண்டியிருக்கின்றது. இவை எப்படியோ ஆகட்டும். பொதுவாகவே சுயமரியாதை இயக்க வேலையானது வெறும் விளம்பரக் கிளர்ச்சியும்
மக்களின் மூடத்தன்மையை பயன்படுத்திக் கொள்ளுவதும் அல்லவாகை யால் அதன் வேலை சற்று கஷ்டமானதாக இருந்து வருகின்றது.
குடி அரசு - 1981 (2) 202
ஆகையால் சுயமரியாதை இயக்க வேலை அக்கஷ்டமான காரிய மாயிருக்கின்றதா
2 என்பதை பொறுப்புடன் இருந்து யோசித்துப்
பாருங்கள். உண்மையிலேயே நம் (சுயமரியாதை இயக்கத்து) எதிரி என்ப வனும் அதாவது எதற்காக எவனிடம் நாம் சத்தியாக்கிரகம் செய்ய வேண்டு மென்று கருதுகின்றோமோ அவனும், அதற்காக அந்தக் காரியத்தை
சத்தியமாகக் கருதி சத்தியாக்கிரகம் செய்யும் முறையிலேயே நமது சத்தியாக் கிரகத்தை எதிர்த்து நம்மோடு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றான்.வாசகர்கள் இந்த இடத்திலுள்ள ஒரு முக்கியமான கஷ் டத்தை நன்றாய் கவனிக்க வேண்டுகின்றோம்.
ஆனால், சுயமரியாதை இயக்கக்காரர்களோ தெய்வீகம் என்பதி லேயேசத்தியாக்கிரக கர்த்தர் போன்ற நம்பிக்கையுடையவர்களல்ல. சத்தியா கிரகத்தை ஒரு தெய்வீக சக்திப் பொருந்திய காரியமாக அவர்கள் கருதுவது மில்லை.
மற்றும், சத்தியாக்கிரகம் என்பதின் பேரால் செய்யப்படும் காரியங்
கள் எல்லாம் சத்தியமானதாய் இருக்கவேண்டுமென்றோ, அல்லது சத்திய மானதாய் இருந்து விட்டதாலேயே வெற்றிபெற்றுவிடுமென்றோ, வெற்றி பெறக் கட்டுப்பட்டதென்றோ கருதுவதில்லை.
ஏனெனில், சத்தியம் என்பது ஒரு விஷயத்தில் எல்லாருக்கும் ஒன்று போலவே படும் என்று நினைக்கக் கூடியதாய் இல்லை.
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உதாரணமாக மாட்டை அறுத்து அதன் மாமிசம் சாப்பிடுவது சத்திய மானதாகவும், நியாயமானதாகவும் மெளலானா செளக்கத் அலிக்குத் தோன் றலாம். அதைத் தடுக்க வேண்டியது சத்தியமாகவும், அதற்காக சத்தியாக் கிரகம் செய்ய வேண்டியது நியாயமாகவும் திரு.காந்திக்குத் தோன்றலாம்.
“இருவரும் கடவுள் பக்தர்கள்-மத பக்தர்கள் இருவரும், சத்தியத்தில் அதாவது-கடமையிலிலும், நியாயத்திலும் நம்பிக்கை வைத்தே இந்தப்படி
முடிவு காண்கின்றார்கள் என்றால் இதில்
எது சத்தியம்?
எது அசத்தியம்?
எது சத்தியாக்கிரகத்திற்குறியது?
எது துராக்கிரகத்திற்குறியது?
இதற்கு என்ன பரீகைஷ? என்பவனற்றை கவனித்துப்பாருங்கள். மற்றும் கள்ளும், சாராயமும் சாமிக்கு வைத்துப்படைத்துக் குடித்து, கூத்தாட வேண்டியது கருப்பன், காட்டேரி, மதுரை வீரன், முருகன் முதலியவை களைக் கடவுளாக கும்பிடும் பல ஜாதி மக்களுக்கு தர்மமாகவும், நியாய
மாகவும் தோன்றலாம்.
அதைத் தடுக்க வேண்டியது தர்மமாகவும், நியாயமாகவும் அதற்கு சத்தியாக்கிரகம் செய்ய வேண்டியது அவசியமாகவும் காங்கிரசுக்காரருக்
குத் தோன்றலாம். இதில் எது நியாயமானது? இதற்கு என்ன ஆதாரம்? என்று பாருங்கள்.
மற்றும் “மற்றொருவன் சமைத்ததை சாப்பிடுவது பாவம்” என்றும் “மற்றொருவன் தொட்ட தண்ணீரை குடிப்பது தோஷம்” என்றும் “மற்றொருவன் பார்க்க தண்ணீர் சாப்பிடுவது நரகம் சித்திக்கக்கூடியது” என்றும் பண்டித மாளவியா போன்ற “உத்தம பிராமணர்” களுக்குத் தோன்றலாம். ஆனால் இந்தப்படி நினைப்பதே மகா அக்கிரமமென்றும், ஜாதி ஆணவமென்றும், அறிவீனம் என்றும், சுயநலம் என்றும், அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய நாடு ஒற்றுமையும், முன்னேற்றமும், சமத்து வமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாக்கிரகம் செய்ய வேண்டு. மென்றும் சமூக சீர்திருத்தக்காரருக்குத் தோன்றலாம்.
குடி அரசு - 1981 (2) 204
இப்படியே இன்னும் பல உண்டு. இவற்றுள் எது சத்தியம்? எதைப்பற்றிச் செய்யும் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுவதற்குரியது? என்று யோசிப்போமானால் என்ன முடிவுக்கு வர முடியும்?
முதலாவது சத்தியத்திற்கு இலக்ஷணம் என்ன என்பதை நிர்ணயிக்க நம்மிடம் என்ன பரீகைஷக்கருவி இருக்கின்றது? அப்படியே கண்டுபிடித் தோமாயினும் அந்த சத்தியம் ஜெயித்தாக வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரமோ, நிர்பந்தமோ, அல்லது நடத்துவிக்கும் சக்தியோ இருக்கின்றது?
சத்தியத்தையும், அசத்தியத்தையும் பற்றி தீர்ப்புச் சொல்ல அருகர்.
யார்?
சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றதாலேயே சத்தியாக்கிரகம் செய்யப் பட்டதற்காக இணங்க வந்தவன் தான் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு விட்டதாக நினைத்து திருப்தி அடைகிறானா? அல்லது நிர்பந்தத்திற்காக தொல்லை சகிக்கமாட்டாமல் அதாவது திருடனது அடி பொறுக்கமாட்டாமல் மறைத்து வைத்திருந்ததை, குரங்குப்பிடியாய் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்ததை எடுத்துக் கொடுத்து விட்டதுபோல் இணங்கவேண்டியதாயிற்றே என்று கருதுகின்றானா? என்பனவாகியவற்றை யோசித்துப்பார்த்தால் சத்தியாக் கிரஹத்தின் யோக்கியதை விளங்காமல் போகாது.
நாம் கடை வைத்து வியாபாரம் செய்யும்போது நல்ல வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு பிச்சைக்காரன் மேலெல்லாம் அசங்யத்தைப் பூசிக்கொண்டுவந்து கடைக்கெதிரில் நின்று கொண்டு “ஐய்யய்யா ஐய்யய்யா” வென்று கூப்பாடு போட்டால் உடனே காசு கொடுத்து அனுப்புகின்றோமே? இதற்கு என்ன பெயர்? மற்றொருவன் அசங்யமான புண்ணைக் காட்டிக் கொண்டு எதிரில் நின்று கெஞ்சினால் என்ன சொன்னாலும் போக மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தால் அவன் முகத்தைக் கூட பார்க்காமல் பேசாமல் காசு கொடுத்து அனுப்புகி றோமே? இதற்கு என்ன பெயர்? இந்தக் காரியங்கள் எல்லாம் சத்தியாக் கிரகமாகுமா? அல்லவானால் இவை எப்படி வெற்றி பெறுகின்றன? என்பவைகளைப் பார்த்தால் சத்தியாக்கிரஹம் வெற்றி பெருவதின் இரகசி
யம் விளங்காமல் போகாது.
சாதாரணமாக சண்டித்தனத்திற்கு 100-க்கு 50க்கு மேற்பட்ட விஷயங்களில் வெற்றி ஏற்படுகின்றதை நேரில் பார்க்கின்றோம். இந்த சண்டித்தனத்திற்கு வேண்டியதெல்லாம் மானாவமானம் கருதக்கூடாது, மற்றவன் செய்யும் கொடுமைக்குப் பின் வாங்கக்கூடாது என்பவைகளே யாகும். ஆகவே இக்காரியங்களுக்குத் தயாராய் இருந்தால் ஏறக்குறைய அனேக காரியங்களில் வெற்றி அடையலாம். ஆனால் சத்தியாக்கிரக எதிரி
யும் மானத்திற்குப் பயந்தவனாகவும் தொல்லைக்கு ஈடுகொடுக்க சக்தி
205 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
யில்லாதவனாகவும் இருந்தால் தான் முடியும். அவனும் சத்தியாக் கிரகிகளைப் போல் சண்டித்தனத்திற்கு மானாவமானமற்ற தன்மைக்குத் துணிந்து விட்டானேயானால் யார் ஜெயிப்பார்கள்? என்பது சூதாடுவது போலத்தான் முடியும். எப்படியானாலும் இவ்வெற்றிகளுக்கு “ஏமாற்றி ஜெயித்து விட்டோம்” “தந்திரம் செய்து ஜெயித்துவிட்டோம்” என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய சத்தியத்தினால் என்று சொல்ல முடியவே
முடியாது. சுருக்கமாக உண்மையைச் சொல்லவேண்டுமானால் இந்த வெற் நிக்குநாணையத்தையும் சுயமரியாதையையும் விலையாகக் கொடுத்துதான் வெற்றி பெற்றோம் என்று சொல்ல வேண்டுமேயொழிய மற்றபடி நியாயம் வென்று விட்டது-சத்தியம் ஜெயித்துவிட்டது என்று சொல்லுவது பித்தலாட்' டமே யாகும். ஆகவே சத்தியாக்கிரஹம் என்கின்ற பெயரே அர்த்தமற்ற தாகும் என்பதும் அதன் பேரால் கையாளப்படும் முறைகளும் தன்மதிப் பற்றதாகும் என்பதும் ஒருவனுடைய முடிவானால் அவன் தன்மதிப்பைப் பறிகொடுத்து ஒரு காரியத்தை நிறைவேற்றுவது என்பது கண்ணை விற்று
சித்திரம் வாங்குவது போலவேயாகும்.
அன்றியும் சத்தியாக்கிரகத்தில் அகிம்சை இருக்கின்றது என்றும், பலாத்காரம் இல்லையென்றும், ஆதலால் வெற்றிபெற அது ஒரு சாதனம் என்றும் சொல்லப்படுகின்றது. இதிலும் ஏதாவது உண்மை இருக்கின்றதா என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. இம்சை என்பதற்கு அருத்தம் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் சரீரத்தை நோகச் செய்வதோ ஒரு மனிதனுடைய மனதை நோகச் செய்கின்றதோ ஆகிய இரண்டு காரியங்களும் இம்சையில் பட்டதேயாகும். இது ஒவ்வொரு மனிதனுடையவும் அனுபவமேயாகும். யாருடைய சரீரமும் நோகாமல், மனமும் நோகாமல் எந்தக் காரியத்திற்கா கிலும் சத்தியாக்கிரகம் செய்யக்கூடும் என்று யாராலும் சொல்லமுடியாது.
ஆகவே சத்தியாக்கிரகத்தில் அகிம்சை இருக்கின்றது என்று சொல்வ
தெல்லாம் உண்மையை மறைத்தும், திரித்தும் சொல்லுவதாகுமே யொழிய மற்றபடி நாணையமான வார்த்தை யாகாதென்றே சொல்லுவோம்.
நிற்க, மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சுயமரியாதை இயக்கத்தின் லட்சியம் சமதர்மத்தன்மையும், சமஉடைமைத் தன்மையும் என்று முடிவு செய்து கொண்ட பிறகு, கையில் வலுத்தவனும், தந்திரத்தில் வலுத்தவனும், உலக சுகபோகங்கள் தனக்கே வரும்படி செய்து கொண்டு இளைத்தவனையும், சாதுவையும் அடிமைகளாக்கி ஆண்டு, பயன்பெற்று வரும் போதும், இதுவே சத்தியம், இதுவே தருமம், இதுவே
நீதி, இதுவே கடவுள் கட்டளை,
பேரால் எதற்கு சத்தியாக்கிரகம் செய்யமுடியும் என்பதை யோசித்தால்,
குடி அரசு - 1981 (2) 206
சத்தியாக்கிரகத்தின் பயன்படாத தன்மை விளங்கும். கோயிலை இடிப்ப
தும், சாமி சொத்துக்களையும் மடாதிபதிகள் சொத்துக்களையும் பறிமுதல் செய்து “பஞ்சமர்களுக்கு”ப் பிரித்துகொடுத்து, மடாதிபதிகளை விவசாயத்
தில் போடுவதும், ஜமீன்தார்கள் பூமிகளைக் குடிகளுக்கு பங்கு போடு
வதும், அரசர்களும் பிரபுக்களும் நாழி அரிசியுடனும், நான்குமுழத் துண்டு டனுமேதானிருக்க வேண்டுமென்பதும் முதலாகிய காரியங்களுக்கெல்லாம் சத்தியாக்கிரகம் செய்ய முடியுமா? செய்தால் அதற்கு சத்தியாக்கிரகம் என்கின்ற பெயர் தகுமா? என்பவற்றை யோசித்துப்பாருங்கள்.
இவைகளையெல்லாம் நன்றாகக் கவனித்து பகுத்தறிவுடன் சமதர்ம நிலைமையில் இருந்து பார்த்தோமேயோனால் சத்தியாக்கிரகம் என்னும்
வார்த்தையும், அதன் பிரசாரமும், அனுபவமும் மறைமுகமாய் வைதீகத்தை
- வருணாசிரமத்தை பிரசாரம் செய்யப்படுவதேயொழிய வைத்கத்திலும், தெய்வீகத்திலும் நம்பிக்கை உண்டாக்கச் செய்வது என்பதைத் தவிர மற்ற
படி நமது மக்களுக்கு இன்று உண்மையாய் கிடைக்க வேண்டிய மனிதத் தன்மையான நியாயத்தையும் அதை நிறைவேற்ற வேண்டியதான தர்மத்தை
யும் உணர்த்துவதாகாது என்பது நன்றாய் விளங்கும்.
எனவே, இதுவரை சொல்லி வந்தவைகளில் இருந்து ஒரு மனிதன் தனது லக்ஷியம் வெற்றி பெறுவதற்கு சத்தியாக்கிரகம் செய்யப்படுவது என்பது பொருளற்றதென்றும், தன்மதிப்பற்ற தென்றும் தான் எடுத்துக் காட்டப் பட்டதேயன்றி, லக்ஷிய சித்திக்காக எவ்வித முயற்சியோ, தியாகமோ செய்யப்படாது என்பதற்காக சொல்லப்பட்டவைகள் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இனி லக்ஷியத்திற்காக மனிதன் சுயமரியாதைக்காரன் கையாளப் பட வேண்டிய முறைகளைப் பற்றியும், தியாகம் செய்யவேண்டிய துறை களைப் பற்றியும் பின்னால் விவரிப்போம்.
குடி அரசு - தலையங்கம் - 06.09.1931
207 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மானவியார$
சேர்மாதேவி குருகுல சம்பந்தமாய் தூத்துக்குடி டிஆர்.மகாதேவய்
யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? “பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாய் உட்காரக்கூடாது” என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜீ அவர்கள் எந்த விதத்தில் திரு.மகா தேவய்யரைவிட மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் - நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜீ அவர்களோ, “கீழ்ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது” என்றும், “அவர்களுக்கு வேறு இடம் வேறு கோவில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்” என்றும் சொல்லுகிறார்.
தனது சம்மந்தி பார்ப்பனரல்லாதவனிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அவரை ஜாதியைவிட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி இந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார். இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்திய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? என்றுகேட்கின்றோம். இன்றைய
தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத்
குடி அரசு - 1981 (2) 208
தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றவர். சுய ராஜியம் வாங்கப்போகும்போதுகூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர் களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்த
தாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜி
யம் கிடைக்கும் என்பதை “தேசபக்தர்கள்” கவனிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். இதைச்சொன்னால் நம்மை கெட்டவன் என்றும், பாவி என்றும் சொல்லுகின்றார்களேயொழிய அவர் அப்படிச் செய்வது நியாயமா? அல்லது சுயமரியாதைக்கேற்றதா? என்று யாரும் சிந்திப்பதில்லை யென்றால் பிறகு நாம் என்னதான் செய்வது? இவர்களைப்பற்றி நாம் என்ன தான் நினைப்பது? நமது மக்களை எப்படித்தான் நினைப்பது? என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதைக்காக பாடுபடுவதாகச் சொல்லுகின்ற வர்கள் இதையெல்லாம் எப்படி மறைத்து வைப்பது என்பதும் நமக்கு விளங்கவில்லை.
பண்டித மாளவியாஜீ அவர்கள் நம்மெதிரில் சாப்பிடுவதால் நமக்குப் பசி அடங்கிவிடும் என்பதாகக் கருதி நாம் அதை இங்கு குறிப்பிட வில்லை. ஆனால் அவர் அப்படி மறைவாய் சாப்பிடும் போது நம்மை என்னமாய்க் கருதி அப்படிச் சாப்பிடுகின்றார் என்பது தான் கவனிக்கத் தக்கது என்று சொல்லுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1931
209 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காந்திலீ
திரு காந்திஜி அவர்களோ உலகம் தோன்றியது முதல் காணப்படாத வேடிக்கை மனிதராக இருந்து வருகின்றார். அதாவது தான் அரை வேஷ்டி கட்டி இருப்பதற்குக் காரணம் உலக மக்களுக்குத் தேவையான துணி கிடையாதாம்! ஆதலால் சிக்கனத்தை உத்தேசித்து அரை வேஷ்டியுடன் இருக்கின்றாராம்!! இதை உலகம் ஒப்புக்கொண்டு அவரை சபர்மதி ரிஷி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் நமது அரசியல் பாகவதர்கள். ஆனால் நம் நாட்டுமக்களில் அநேகருக்குக் கஞ்சிக்கே மார்க்கமில்லாமலி
ருக்கும் போது ஆட்டுப்பாலும், ஆரஞ்சிப்பழரசமும் சாப்பிடுவது கவலைப் படக்கூடியதல்லவாம்! அது எப்படியோ போகட்டும். இதற்காக நாம் அவரை: அவருக்குப் பிடிக்காத உணவை சாப்பிடச் சொல்லவில்லை. காந்திஜி அவர்கள் தனது காலுக்குச் செருப்பு போட்டுக்கொள்ள வேண்டிய தற்காக தானாகவே செத்த மாட்டுத்தோலொன்றை கையில் கொண்டு போகின் றாராம்! “என்ன ஜீவகாருன்யம்!” என்பதை நினைத்துப் பாருங்கள். உலகி லுள்ள 175 கோடி மக்களில் வேறு யாருக்காவது இந்த எண்ணம் தோன் றுமா? என்று பாருங்கள். சமணர்களுக்குக் கூட இவ்வளவு ஜீவ காருண்யம் இருந்த தாகக் காணமுடியவில்லை. திரு காந்தியைத் தவிர மற்ற மனிதன் எல்லாம் கொலை பாதகர்கள் என்றும் திரு காந்தி ஒருவரே அஹிம்சா தரும மூர்த்தியென்றும் கருதவேண்டுமென்பது தானே இந்தச் செய்கையினு டையவும் இதன் விளம்பரத்தினுடையவும் தன்மையாகின்றது. அஹிம்சா தர்மம் எப்படியோ போகட்டும் அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தில்லையென்று வைத்துக்கொள்ளலாம்.
இனி அவரது வருணதருமம் என்னவென்பதை யோசித்தால் அதாவது “வருணாச்சிரம தர்மம் சரிவர நடந்து வராததாலேயே இந்தியா வுக்கு சுராஜ்ஜியம் இல்லாமல் போய்விட்டது” என்று அவர் சொல்வதை யோசித்தால் அவர் நமக்கெல்லாம் எப்படி - எந்த முறையில் பிரதிநிதி என்பது விளங்கவில்லை.
இது மாத்திரமல்லாமல் “சுயராஜியம் கிடைத்தாலும் கடவுள் செயல், கிடைக்காவிட்டாலும் கடவுள் செயல்” என்று சொல்லிக்கொண்டு போகின்
குடி அரசு - 1981 (2) 210
றார்.ஆகவே எவ்வளவு பொறுப்புடன் போகின்றார் என்பதும், எவ்வளவு தன்நம்பிகையுடன் போகின்றார் என்பதும் இதிலிருந்தே அறியலாம். பொறுப்பும் இல்லாமல், தன்நம்பிக்கையும் இல்லாமல் இருக்கும் ஒருவரே இந்தியப் பிரதிநிதியாய் போகின்றார் என்றால் இதை ஒப்புக்கொள்ளுபவர்.
கள் எவ்வளவு ஞானமுள்ளவர்கள் என்பதையும் கவனித்தால் விளங்காமல் போகாது.
எந்த இந்தியன் வாய்திறந்தாலும் “மகாத்மா அவதார புருஷர், ரிஷி, முனிவர்” என்பவைகளான “தெய்வீகத் தன்மைகளை அவர் மீது ஏற்றிச் சொல்லுவதாலேயே மத சம்பந்தமான மூடநம்பிக்கைக் கண்ணைக் கொண்டே திரு காந்தியைப் பார்க்கின்றார்களேயொழிய பகுத்தறிவுக் கண்ணைக் கொண்டு ஒருவராவது பார்க்கவில்லை என்பதும் மத சம்பந்த மான மூடநம்பிக்கைப் பிரசார முறையிலேயே மக்களை ஏமாற்றுகின்றார்கள்' என்பதும் வெளிப்படையாய் விளங்கவில்லையா ? என்று கேட்கின்றோம். இந்தப்படி இன்று எந்த நாட்டிலாவது ஒரு அரசியல் மனிதரை அவதார
மூர்த்தி மகாத்மா என்பது போன்ற தன்மைகளால் கருதுகின்றார்களா? என்று யோசித்துப்பாருங்கள்.
ஆகவே நமது நாட்டுக்கு இன்னமும் எத்தனை காலத்திற்குத் தான் ரிஷிகளும், அவதாரங்களும், மகாத்மாக்களும் தோன்றிக்கொண்டிருப்பது என்பதும் அவர்களது “தெய்வீகத் தன்மை”க்கு ஆளாய்க்கொண்டிருப்ப தென்பதும் நமக்கு விளங்கவில்லை.
(இஸ்லாம் மதக் கொள்கைப்படியாவது “இனிமேல் நபிகள் கிடை
யாது” என்பதுபோல் நமக்கும் “இனிமேல் மகாத்மா கிடையாது. அவதார புருஷர் கிடையாது” என்று ஏற்பட்டாலொழிய இந்தியர்களுக்கு ஒரு
நாளும் பகுத்தறிவு உண்டாகப் போவதில்லை.)
இவைகளெல்லாம் மத சம்பந்தமான எண்ணங்கள் அல்லவா ? என்று தான் கேட்கின்றோம். இதற்காக நம்மீது கோபித்து என்ன செய்வது? வெட்டுவதாகவும், குத்துவதாகவும் - மிறட்டுவதால் என்ன பயன்?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1931
211 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஈண் காண்டரும் தவைவரும் நவ
நவஜவான் பாரத வீரர்கள் “காந்தி ஒழிக” என்று சொல்லி தடுத்து நன்றாய் அடிப்பட்ட சேதி ஒரு பக்கம் இருக்க, நவஜவான் பாரத வீரர் சபை தலைவரான திரு. சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் திரு. காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போவதைப் பற்றி தங்களது திருப்தியையும் தாங்கள் திரு. காந்தியவர்களையே பின்பற்றி வருவதாகவும் உறுதிகூறி தந்தி அடித்திருக்கின்றார். (இது 29.8.31 தமிழ்நாட்டு பத்திரிகையில் இருக்கிறது! இதிலிருந்து பாரத நவஜவான் சபை கொள்கைகளின் யோக்கியதையும் தலைவர்களின் யோக்கியதையும் விளங்குகின்றது.
நவஜவான் பாரத வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலிபர்கள் கவனிக்கத் தக்கதாகும்.
குடி அரசு - செய்திக் குறிப்பு - 06.09.4931
குடி அரசு - 1981 (2) 212
M.A,LT. உமாத்தியாரின் கடவள் பாடம்
உபாத்தியாயர்:- பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?
மாணாக்கன்: - தெரிந்தது சார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.
உபாத்தியாயர்: - என்ன சொல்?
மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார்
சார்?
உபாத்தியாயர்:- முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.
மாணாக்கன்:- ஏன் சார்? கேட்டால் என்ன சார்?
உபாத்தியாயர்:- அது! நிரம்பவும் பாவம்.
மாணாக்கன்:- பாவம் என்றால் என்ன சார்?
உபாத்தியாயர்:- & வாயை மூடு. நீ அயோக்கியன், “குடிஅரசு” படிக்கிறாயோ? ஏறு பெஞ்சி மேல்.
குடி அரசு - உரையாடல் - 13.09.1931
213 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இந்தியாவிண் வாருள் நஷ்டத்திற்கு காரணம்
இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள் ஜமீன்தார்கள் முதலிய செல்வவான்களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆன பிரபுக்கள் மற்ற நாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வருகின் றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும். அதுபோலவே வியா பாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்து வருகின்றன.
விவசாயத்துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமான இயற்கை நீர் பாசான வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்கரா, சிலர் லக்ஷம் ஏக்ரா - பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத்துறையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது.
இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திர மான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது என்பதை தேச முற்போக்கில் கவலை கொண்டவர்கள் யோசிக்கத்தக்கதேயாகும்.
முதலாவது, இந்தியாவின் மேல்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத் தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்
கள் சில வகுப்பு மக்களுக்கே உரியதாகவும் அனுபவிக்கத் தக்கதாகவுமான சமூக அமைப்பு முக்கியமான காரணமாகும்.
அதாவது, வருணாச்சிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில்- இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இரண்டாவது, ஒரு வகுப்பு மக்கள் அதாவது 100க்கு 90
குடி அரசு - 1981 (2) 214
பேர்களுக்கு மேலாகக்கொண்ட சமூக மக்கள் அவர்களது வயிற்றுக்குப் போதுமான அளவுக்கு மேல் பெறமுடியாத நிபந்தனைக்குள்ளாக்கி வைக் கப்பட்டதுடன், அவர்கள் கையில் தங்கள் வயிற்றுக்கு வேண்டிய ஆகாரத்
தின் அளவுக்கு மேற்பட்ட எந்தப் பொருளையும் வைத்திருக்க உரிமை யில்லாதவர்களாக்கப் பட்டிருக்கின்றது என்பது இரண்டாவது காரணமாகும். இந்த உண்மைக்கு ஆதாரம் மனுதர்ம சாஸ்திரத்தில் நன்றாய்க் காணலாம்.
அதாவது, “சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால் பிராமண:
னுக்கு ஆபத்தாக முடியும்”; “சூத்திரன் பொருள் வைத்திருந்தால் பிராம ணன் பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம்.
“சூத்திரன் பொருளை பிராமணன் எப்படிவேண்டுமானாலும் கொள்ளை அடிக்கலாம்”.
“அடிமையான சூத்திரன் பொருள் வைத்திருக்க உரிமை உடைய வனல்ல” என்கின்ற அனேக ஆதாரம் இந்து மத தர்ம சாஸ்திரங்களில் இருக் கின்றன. (இங்கு சூத்திரன் என்பதற்கு பொருள் தொழிலாளிகள் என்பதே யாகும்.)
இந்த மாதிரியான திட்டங்களை ஏற்படுத்த ஆதாரமாயிருந்தது வருணாச்சிரம தர்மமேயாகும்.
வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது
சிறிது மாற்றமடைந்து ஏதோ 100௦ல் ஒருவர் ஆயிரத்தில் ஒருவர் செல்வ வான்கள் ஆகவும் வருணமுறை தவரி பணம் சம்பாதிக்க உரிமை உடைய வர்களானாலும் கூட அந்தப் பணமானது மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட் டுள்ளதுபோல் அதாவது “சூத்திரன் செல்வத்தை பிராமணன் எந்தவிதத் திலானாலும் கொள்ளை கொள்ளலாம்” என்கின்ற தர்மப்படி “சூத்திரன்” செல்வத்தை கொள்ளை கொள்ளவே ஸ்தலம், கோவில், குளம், புண்ணியம், பாவம், சடங்கு முதலிய காரியங்களின் மூலம் கொள்ளை அடிக்கப்பட்டு விடுகின்றன.
இந்தக்காரணத்தாலேயே “சூத்திரர்கள்” என்கிற வகுப்பினரில் 100-
க்கு 75-பேர்கள் கடன்காரர்களாகவே இருக்க நேரிட்டு இருக்கின்றது.
இவை ஒருபுறமிருந்தாலும், இன்று பொருளாதாரக் கஷ்டத்தையே பெரும்பாலும் எடுத்துச் சொல்லி அதை நிவர்த்திப்பதற்காக இந்தியாவுக்கு சுயராஜியம் வாங்கித் தருகின்றதாய்ச் சொல்லும் அரசியல் தலைவர் திரு.
காந்தி அவர்களும் இந்த வருணாச்சிரம முறையை அடிப்படையாகக் கொண்டதான சுயராஜியமேதான் வேண்டும் என்று சொல்லி அதற்காகவே பாடுபட்டு வருகின்றார்.
215 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதற்கு உதாரணம் வேண்டுமானால் அவர் அவ்வப்போது பேசி யிருக்கும் பேச்சுகளும் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயங்களுமே போது
மானதாகும்..
முதலாவது திரு.காந்தி அவர்கள் தன்னை ஒரு வருணாச்சிரம தர்மி என்றும், இந்தியாவில் வருணாச்சிரம தர்மம் குறைந்ததாலேயே அன்னிய ஆக்ஷி ஏற்பட்டதென்றும், அதனால் வருணாச்சிரம தர்ம ஆக்ஷியை ஏற்படுத்தவே தான் பாடுபடுவதாகவும் பல தடவைகளில் தாராளமாய் வெளிப்படையாய் எடுத்துச் சொல்லி இருக்கிறார். அந்தப்படியே சொல்லி
யும் வருகின்றார். ஆனால் இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு மயக்கம் ஏற்படலாம். அது என்ன வென்றால், திரு. காந்தியவர்கள் வருணாச்சிரம தர்மத்தைப்பற்றிப் பேசும்போது தனது “வருணாச்சிரம தர்மம் வேறு” என்று சொல்லி வருகின்றதால் அது வேறாயிருக்கலாம் என்று கருதி இருக்கலாம். அது எப்படியிருந்தபோதிலும் அதாவது ஜாதி உயர்வு, தாழ்வு சம்பந்தமான காரியம் எப்படியிருந்தபோதிலும், வித்தியாசம் இருக்க வேண்டும் என்ப
திலும் அவனவனுடைய பரம்பரைத் தொழிலையே அவனவன் செய்ய வேண்டுமென்பதிலும், அவர் சந்தேகத்திற்கு இடம் இருக்கும் படியாகக்
கூடப் பேசாமல் தெளிவாகவே ஜாதி பாகுபாடுகளும் சுதர்மமும் (அதாவது அவனவன் குலத்தொழிலும்) கண்டிப்பாய் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்றே சொல்லுகின்றார். (இது அவர் எழுதியிருக்கும் பகவத்கீதை மொழி பெயர்ப் பில் கூட இருக்கின்றது.18-ம் அத்தியாயம் 41 முதல் 48 வரை உள்ள
சுலோகங்கள்.)
இவை ஒரு பக்கம் இருந்த போதிலும் சமீபத்தில் அவர் பரோடா சமஸ்தானத்தில் பேசிய போதும் இந்தக் கருத்தையே வற்புறுத்திப் பேசிக் காட்டியிருக்கின்றார்.
அதாவது, “கிராம வாசிகள் செருப்புத்தைத்தல், ஆடு,மாடு மேய்த்
தல் முதலிய தொழில்களைச் செய்யவேண்டும், அவர்கள் பெட்டிகளில் அதிகப்பணம் வைத்திருக்கக்கூடாது. அவர்கள் பம்பாய் வியாபாரிகளைப் போல் (வைசியர்களைப்போல்) பணக்காரர்களாக இருக்க நினைக்கக் கூடாது” என்று பேசி இருக்கின்றார். ஆகவே இப்போது திரு.காந்தியவர் களால் கேட்கப்படும் சுயராஜியம் என்பது இந்திய மக்களின் பொருளாதார நிலைமையை எப்படி முன்னுக்கு கொண்டு வரக்கூடியதாகும்? என்பது யோசிக்கத்தக்கது.
நிற்க, நமது நாட்டு மக்களின் பொருளாதார நிலைமை மோசமா யிருப்பதற்கு மற்றும் சில காரணங்களும் உண்டு.
அதாவது நமது ஜனங்களின் மத தத்துவமே இவ்வுலக வாழ்க்கை: “பொய்” என்பதும் “மாய்கை” என்பதும், செல்வத்தை மோட்சத்தில் இடம்
குடி அரசு - 1981 (2) 216
பிடித்து வைக்கவும், அடுத்த ஜன்மத்தில் நல்ல பிறவியாய் பிறக்க ஏற்பாடு செய்து கொள்ளவும் செலவழிக்க வேண்டும் என்கின்றதான எண்ணங்கள். செல்வங்களைப் பாழாக்கி விடுகின்றன. அன்றியும் பாடுபடுகின்ற மக்க
ளுக்கு தங்கள் மதக்கடமை, ஜாதிக்கடமை என்பது மாத்திரமல்லாமல் முன் “ஜன்ம கர்மத்தின்” பயன் என்றும் எண்ணும் எண்ணங்களையேப் புகுத்தப் பட்டு தங்கள் கஷ்டங்களையும் தரித்திர நிலைமையையும் உணராமல்
இருந்து வருகின்ற குணமும் தகுந்த பயனை அடையமுடியாமல் செய்து விடுகின்றன. இவை தவிர நமது நாட்டு தர்ம ஸ்தாபனங்கள் ஏராளமான செல்வங்களை தன்னுடையதாக்கிக்கொண்டு அவைகள் மக்களுக்குப் பயன்படாமல் வீணாக்கப்படுகின்றன.
சாதாரணமாக சென்னை மாகாணத்தின் சர்க்காரார் வரி எவ்வளவு ரூபாய் இருக்குமோ, அதில் 4-ல் ஒரு பங்குக்குக் குறையாமல் இம் மாகாணத்தில் வரும்படி வரத்தக்க சொத்துக்கள் தர்மஸ்தாபனங்களாய் இருக்கின்றன. அவற்றின் மற்ற செலவுகளுக்கு என்று நமது மக்களால் செய்யப்படும் செலவுகளின் மொத்தம் நாம் செலுத்தும் வரித் துகைக்குக் குறையாத தென்றே சொல்லலாம். இவை இந்த நாட்டு மக்களுக்குப் பயன் படாததோடு வீண் செலவினமாகவே ஏற்பட்டு விடுகின்றன. அன்றியும்
தர்ம ஸ்தாபனங்களில் வரும்படி இல்லாமல் வெறும் முடக்கமாய் இருக்கும் சொத்துக்கள் தங்கம், வெள்ளி, கல் நகைகள், இடங்கள் முதலியன கோடிக்கணக்கான ரூபாய் வரும்படி வரக்கூடிய அளவு உள்ள சொத்துக்கள் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கின்றது.
இவை ஒருபுறமிருக்க இராஜாக்கள் என்றும், ஜமின்தாரர்கள் என்றும் ஏற்பட்டக் கூட்டங்கள் அனுபவிக்கும் பொருள்கள், மற்றும் அவர்கள் நகை, பொக்கிஷம், புதைத்து வைத்திருப்பது முதலிய செல்வங்களின் அளவு நூற்றுக்கணக்கான கோடி என்றே சொல்லலாம்.
இவ்வளவும் தவிர இந்திய மக்களின் வருமானம் என்பதோ அவர்கள் தங்களது தொழில் முறைகளை சிறிதும் மாற்றிக்கொள்ளாததால் பிரயாசை அதிகமும், சாமான் யோக்கியதை குறைவும், உற்பத்திக்குறைவும் இதனால் வரும்படிக் குறைந்ததுமாக இருப்பதுடன் மனிதனுடைய தேவைக்கும் போக போக்கியங்களுக்கும் வேண்டியவைகளுக்கெல்லாம் ஏழை முதல் செல்வவான், மகாராஜாக்கள் வரை வெளி நாட்டுப் பொருள் களையே உபயோகிக்க வேண்டியவர்களாகி அதன் மூலம் செல்வம் ஏராள மாய் வெளியில் போய் விடுவதால் ஒருவித நஷ்டத்தை அடைய வேண்டி யதாக ஏற்பட்டுவிடுகின்றது.
ஆகவே, இத்யாதி காரணங்களால் நாட்டின் பெரும்பாகமான மக்கள் ஏழைகளாக - தரித்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்களாகவே இருக் கின்றார்கள். பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய
217 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வேண்டுமானால் அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்
காமல் மக்களுடைய மதியீனத்தையும், பகுத்தறிவற்ற தன்மையையும்
ஆதரவாய் உபயோகித்துக்கொண்டு வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக்கடைகளை மூடி விடுவதாலும் பொருளாதாரத் துறையை சரிப்படுத்தி விடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணையமானதோ, அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லி விட
முடியாது.
இந்தியாவின் பொருளாதாரத்துறை சீர்படுவதற்கு முதலாவது வருணாச்சிரம முறை ஒழியவேண்டும்.இரண்டாவது மத சம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்படவேண்டும். மூன்றாவது கோவில், குளம், சடங்கு, சாத்தான், சனி விலக்கு ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.
இவைகளை யெல்லாம் மறைத்து வைத்துக்கொண்டு-இந்தத் துறைகளில் எல்லாம் புகுந்து அழிக்க வேலை செய்யாமல் இருந்து கொண்டு இருப்பதுடன், வருணாச்சிரம தர்மத்தையும் புராண மரியாதை யையும் பலப் படுத்திக்கொண்டு பொருளாதாரத்துறை சீர்படுத்துவதற்குச் சீமைக்குப் போய் “வெள்ளைக்காரனிடம் வியாபாரம் பேசப் போகின் றேன்” என்று சொல்லுவது அடியோடு அர்த்தமற்றதும், நாணையமற்றது மாகுமா? அல்லது இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - தலையங்கம் - 13.09.1931
குடி அரசு - 1981 (2) 218
ஒரு வண்ணுக்கு பல புருஷர்கள்
இந்தியாவில் ஒரு புருஷனுக்கு பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரணமாகவும், அவ்வழக்கம் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர்களுக் குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் ஒருவித சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்கார தேசத்தை, அவர்களது நாகரீகத்தைப் பின்பற்றிய வர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்கு மேல்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டிகள் கட்டின சாமியையும் கும்பிடுவார்கள். அதற்கு, கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்து கும்பாபி ஷேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண். களிடம் சாவகாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன் படுத்தியும் வருவார்கள். ஆனால் வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக் கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அருத்தம் தெரியாதவர்களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப் படவேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரீகத்தைத் தாங்களும் வாயினால் பேசுவதின் மூலம் தங்களை “நாகரிகக்
காரர்” என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே இதன் நன்மை
தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்கவேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பி ராயமாகும். புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண். சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே
219 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராயமாகும். இந்து மத ஆதாரங்
களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிருந் தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2, 3 புருஷர்கள். இருந்தால் அவர்கள் 2, 3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவியாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இது தவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தீபேத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது. ஒரு பெண்ணுக்கு நான்கு ஐந்து புருஷர்கள் கணவர்களாக இருந்து வருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டை சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி யிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க நல்ல குணங்களும் நாணையங்
களும் இருந்து வருகின்றதாம். இதை தீபேத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டுவந்த ஒரு பிரஞ்சு மாதாகிய திருமதி லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப் பற்றி வியக்தமாக எழுதுகிறார். (இந்த விபரம் 9-9-31-தேதி “நவசக்தி”யில் காணலாம் ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத் தமோ, முற்போக்கோ என்பவைகளைப்பற்றி சுதந்திர உணர்ச்சியோ-சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். எந்தப்பழக்க வழக்கம் சீர்திருத்தம் என்றாலும் நம்நாடு-நம் மதம்-நம் ஜாதி-நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது? என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச் செலுத்த அருகதை உள்ளவர்களாயிருக்கின்றார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது? எப்படியிருக்கின்றது? என்பவைகளைப் பற்றி கவனிப்பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன? இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப் படுகின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பது போன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோ கிடையவே கிடையாது என்று தான் சொல்லவேண்டியிருக்கின்றது. இந்தக்காரணமே தான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடுதலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டிருக்கின்றது என்று சொல்ல வேண்டியும்
இருக்கின்றது.
ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சை யாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க செளகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1931
குடி அரசு - 1981 (2) 220
சி.அாராககோயாலாச்சாரியாரின்
ஜாதிப் பிரசாரம்
உயர்திரு சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செம்டம்பர் 10- தேதி “இந்து” பத்திரிகையில் ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதை சட்டமாக்க வேண்டும் என்பதற்கு சமாதானம் எழுதும் முறை
யில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை:
ஜாதிப் பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்
கிறார். உண்பது, பருகுவது மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப் படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப் பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும், வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாயமென்றும் வற்புறுத்துகிறார். மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். “காங்
கிரஸ் வருணாச்சிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபன மென்று நாம் கூறிவருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார். கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசீயமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழுதாவது பொது ஜனங்கள் கண்டு கொள்வார்களென்று நம்பு கிறோம். வகுப்புவாதம் கூடாதென்றும், வகுப்புவாரிப்பிரதிநிதித்துவம் கூடா தென்றும் பறையடிப்பவர்கள், ஜாதிப் பஞ்சாயத்துகள் மூலம் பலவந்தத்தை உபயோக்கிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணையமுண்டா? ஜாதிக்கட்டுப்பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா? தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள். துயரத்திற்கும், பெண்ணடிமைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டு மென்று கருதுகின்றோமோ அதைக்காப்பாற்ற வேண்டும்.
என்பதும், அதன் மூலம் செய்யப்படும் கொடுமையாலும்,பலாத்காரத்தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டுமென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத் தக்கதாகும்.
குடி அரசு - கட்டுரை - 13.09.1931
221 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கர்ப்ப ஆகூறி முறை
நமது நண்பர் ஒருவர் கருப்பத்தடையின் அவசியத்தைத் தான் ஒப்புக் கொண்ட போதிலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய முறையைப் பற்றி அடியிற்கண்டவாறு ஆக்ஷபிக்கிறார்:- அதாவது,
“தர்ப்ப உற்பத்திக்கு ஹேதுக்கள் சுக்கிலம் சுரோணிதம் என்று கூறப்படுவனவேயாகும். கலவி காலத்தில் ஆடவனிடமிருந்து சுக்கிலமும், ஸ்தீரியினிடமிருந்து சுரோணிதமும் வெளியாகிறது. கர்ப்ப உற்பத்திக்கு
சுக்கில ஸ்கலிதம் தான் அவசியமானதேயொழிய சுரோணித ஸ்கலிதம் அவசியமல்ல. உதாரணமாக ஒரு ஸ்தீரி பத்துக் குழந்தைகள் பெற்றிருக்
கலாம். அவளுக்கு சுரோணிதமே ஸ்கலிதமாகாமலிருக்கலாம். அதாவது புருஷ இச்சையே பூர்த்தியடையாமலிருக்கலாம்.
ஸ்கலிதமான சுக்கிலம், கருப்பையின் வாயிலை நோக்கி நழுவிப் போகும்போது, நிதம்பத்தின் வரைகளில் தங்கியிருக்கும் சுரோணிதக் கிருமிகள், சுக்கிலத்திலுள்ள ஆண் சினைகளிடம் ஸ்வீகரித்துக் கொண்டு கருப்பையில் பிரவேசிக்கிறது. உடனே கருப்பை வாய் மூடிக்கொள்ளுகிறது. அதிலிருந்து மாதவிடாய் நின்று கர்ப்ப உற்பத்தி உண்டாகிறது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து சுக்கில சுரோணித கிருமிகள் கருப்பையில் பிரவேசித் தால்தான் கர்ப்பம் ஏற்படும் என்பது புலனாகிறது. கிருமிகளை கருப்பையில் புகவிடாமல் செய்தாலும், அல்லது அவற்றை சக்தியிழந்து போகும்படி செய்தாலும், அழித்துவிட்டாலும் கர்ப்பம் தரிக்காது”..
தடைமுறை
சக்தியை இழந்து விடும்படி செய்வதோ அல்லது அழிந்துவிடும்படி செய்வதோ, ஸ்திரிகளுக்கு கெடுதலை உண்டு பண்ணும். ஆதலின் செக் பெச்சாரி(0௯4: Pessary) என்று சொல்லப்பட்ட ஓர் ரப்பர் கருவியைப் பெண்களுக்கு அணிவித்து போகித்தால் ஸ்கலிதமான விந்து உள்ளே பிரவேசியாமல் ரப்பர் பையிலேயே தங்கி விடுகிறபடியால் கர்ப்பந்தரிக்க
குடி அரசு - 1981 (2) 222
முடியாது என்று சொல்லிவிடலாம். இந்த முறையைத்தான் அநேகமாக ஸ்ரீமதி கார்மைக்கேல், மேரிஸ்டோப்ஸ் உள்பட யாவரும் கூறுகிறார்கள். உலகில் பெரும்பாலான இடங்களில் அனுஷ்டானத்தில் இருப்பதும் இது தான். இதைத்தவிர கர்பத்தடை மருந்துகள் என்று சில போலி ஆசாமிகள் செய்து விற்கும் மருந்துகளால் யாதொரு பயனுமில்லை என்று நிச்சயமாய்க் கூறலாம். மற்றப்படி கருப்பச்சிதை வுண்டுபண்ணும் மருந்துகள் உள வென்று ஒப்புக் கொள்ளலாமே யொழிய கர்ப்பத்தடை மருந்துகள் என்று ஒரு மருந்தும் கிடையவே கிடையாது. ஆதலால் யாரும் ஏமாந்து போகக் கூடாது.
“நிற்க, டெரப்பர் கருவியை உபயோகிப்பதால் கர்ப்பத்தடை பெற்று விடும் என்பது உண்மையே. அதனால் ஆண்,பெண் இருபாலரும் அனுபவிக்கும் இன்பம் எத்தகையது என்று ஆராயப்புகின் ஒருக்காலும் அத்தகைய கருவியை எவரும் உபயோகிக்க முற்படார் என்பது திண்ணம்.
ஸ்திரியின் ஜனனேந்திரியம் வெகுநுட்பமானதும் ஸ்பரிச உணர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளதுமாகும். அத்தகைய நுட்பமான இந்திரியத்தில் பிரவேசிக்
கும் இயல்பையுடையதும், பிரவேசித்தால் இன்பத்தையன்றி இடரையளிக் காததுமான இந்திரியம் ஆண் உருப்பொன்றே யாகும். இரண்டு இந்திரி யங்களும் வெகுநுட்பமானவை. எலும்பில்லாமல் வெறும் தசை நரம்பு களாலானவை. உணர்ச்சியை மூளைக்கு அறிவிப்பது நரம்பு. ஆகவே வெறும் நரம்புத் தொகுதிகளாலான ஓர் அங்கத்திற்கு எத்தகைய நுட்பமான உணர்ச்சி உண்டு என்பதை வாசகர்களே தெரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட கருவிகள் ஒன்றோடொன்று பொருத்தினால் ஏற்படும் இன்பம் எத்தகையது என்பதையும் பெண் உறுப்பின் தசையின் மிருதுத் தன்மைக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத ரப்பரை அணிந்து கொண்டு அதுவும் ஆண் உறுப்புக்கும் ஏற்படும் சேர்க்கையின்பம் எத்தகையது என்பதையும் அனுபவிகளே கூறமுடியும்.ஒருமுறை இத்தகைய ரப்பர் கருவியை உபயோகித்தவர் மறுமுறை அதை உபயோகிக்க மனம் ஒருப்படார் என்பது திண்ணம்.
இந்த ரப்பரை யணிந்து கொள்ளும் ஸ்திரீகளுக்கு போககாலத்தில் அத்யந்தப் பிரியமாவது உல்லாசமாவது ஏற்படாது என்பதுடன் அரை மருங்குகளில் முதலில் உறைசலை உண்டு பண்ணிவிடும். ஸ்தீரிபுருஷ ஜனனேந்திரியங்களின் கூட்டுறவால் ஏற்படும் இன்பத்தில் அணுவளவும் இத்தகைய கருவியால் எதிர்பார்க்கமுடியாது. மேலும் ஆண்உறுப்பின் இயற்கையும் நாளடைவில் மாறிவிடவும் கூடும். போககாலத்தில் பஞ்சேந்திரியங்களும் தத்தம் சுவாதீனத்தையிழந்து இன்பக்குவட்டின் மிசை அமரும் தன்மை இத்தகைய ரப்பர்கருவியால் தடையுறும் என்பது திண்ணம்.”
223 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இந்தப்படி எழுதிய நண்பரின் ஆக்ஷேபனையில் சில உண்மை களிருந்தபோதிலும் கர்ப்ப ஆகி ரப்பர் கருவிகளை உபயோகிப்பதில் அவர் நினைக்கிற அளவு கஷ்டமிருக்கவில்லை. கருவியை அனுபவத்தில் பரீக்ஷித்துப் பார்த்தால் அவருக்குத் தோன்றிய சந்தேகங்களுக்கு ஆதார மில்லை என்பது தெரியவரும்.
இயற்கையாய் ஏற்பட்டதல்லாமல் மனிதன் செய்கையாய் ஏற்படுத்திக் கொள்ளும் எந்த சாதனங்களையும் கையாளுவதில் ஆரம்பத்
தில் சில கஷ்டங்கள் தோன்றுவது சாதாரணம். உதாரணமாக, பல் விழுந்த ஒருவர் செயற்கைப் பல்லை செய்து வைத்துக்கொண்டால் ஆரம்பத்தில் சிறிது வலியும், பெருத்த மனக்கஷ்டமும் ஏற்படுவதுண்டு. மூக்குக் கண்ணாடி போட்டுக் கொள்ளுவதிலும் முதலில் சிறிது சிரமமேற்படு வதியல்பு. ஆனால் சிறிது நாட்கள் கழித்தபின் செயற்கைப்பல் வைத்திருப்ப வரும், மூக்குக் கண்ணாடி யணிந்திருப்பவரும், அம்மாதிரி ஒரு செயற்கை சாதனத்தைத் தான் அணிந்திருப்பதையே மறந்து விடுகிறார்கள். அதே மாதிரி ஒரு ரப்பர் கருவியை மிருதுவான ஒரு பாகத்தில் அணிந்து கொள்: ளுவதில் ஆதியில் கொஞ்சம் அருவருப்பும், சிரமமும் தோன்றலாம். ஆனால் கொஞ்சகாலம் பொருத்துக் கொண்டிருப்பதால் அந்த உணர்ச்சி தானாகவே மறைந்து போகின்றது.
நமது நண்பர் கருதுவது போல் ரப்பர் கருவியானது எவ்வித தடங்க லையும் உண்டாக்கக் கூடியதல்ல. உறுப்பில் உணர்ச்சியுள்ள பாகத்தை அது தடைப்படுத்தவில்லை. கருப்பையானது உள்ளே பதிந்து கிடக்கின்றது. அதிலுள்ள சிறு துவாரத்தையே இந்த கருவி மறைக்கின்றதே அல்லாமல் நிதம்பத்தில் மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஒரு விரலில் அங்குஸ்தான் தரிப்பது போல் கருப்பையின் மேல் இக்கருவி தரிக்கப்படுகிறது. கலவி போகத்தில் கருப்பை சம்பந்தம் இல்லை. போக உறுப்புகள் முன்பாகத்திலேயே இருப்பதால் நண்பர் நினைக்கும் தடங்கல் ஏற்படக் காரணமில்லை. அப்படிப்பட்டத் தடங்கலிருந்தால் அமெரிக்கா விலும், ஐரோப்பாவிலுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் இக்கருவிகளை உப யோகிக்கமாட்டார்கள். ஆனால் இக்கருவிகளை உபயோகிக்கும் மாதிரியை பிசகில்லாமல், முடியுமானால் டாக்டர்களின் மூலமே அறிந்து கொள்ள வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 20.09.1931
குடி அரசு - 1981 (2) 224
காசில்லாமல் நடத்தலாம்
- சித்திரபுத்திரன்
ஐயா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்ட்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலி கட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை பொட்டகிராப் பிடித்து அதை மணவரையில் வைத்து தாலிகட்டி விடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலி கட்டி விடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும் வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதி ரத்தை மாட்டி கழுத்தில் மாலை போட்டு கையைபிடித்து அழைத்துக் கொண்டு போகலாம்.
குடி அரசு - சிறு குறிப்பு - 20.09.1931
225 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!
சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேசவேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு.பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொது கூட்டத்தில் பேசவேண்டுமென்றஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலா மென்றே கருதுகின்றேன்.
சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளை யெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானதா யிருக்குமென்றே கருதுகின்றேன்.
ஏனென்றால் இதற்குமுன் இங்கு இந்தப் பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின். உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப்படக்கூடியதாகாது.. ஆதலால் உங்களுக்கு சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டிய
வனாயிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, ஐந்து வருஷங்களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த நிலையில் பேசினேனோ அது போல் முதல் பாடத்திலிருந்து பேச வேண்டியவனாகயிருக்கிறேன். ஏன் இந்தப்படி சொல்லுகிறேன் என்றால் திரு.பெருமாள் வீட்டுக் கல்யாணத்திற்கு பார்ப்பான் வரவழைக்கப்படாததாலேயே இவ்வூரார் அவர்மீது மிகுந்த கோபமாய் இருப்பதாகவும், நான் கோவில் குளங்களைப் பற்றி குற்றம் சொல்லுகின்றவன் என்பதாகவும் ஜாதிகளையெல்லாம் ஒன்றாக்க வந்திருக் கின்றேன் என்பதாகவும் குற்றம் சொல்லி இந்தக் கூட்டத்திற்கு யாரும் போகக்கூடாதென்று சிலர் பிரசாரம் செய்தார்களாம். இப்படிப்பட்ட முயற்சிக் காரர்கள் முன்னால் பார்ப்பனர்களின் நடத்தையையும் கோவில் குளங்க ளினுடைய தொல்லையையும் எடுத்துச் சொன்னால் எப்படி அது உங்க ளால் நடுநிலையில் கிரகிக்கப்படும் என்பதை நீங்களே நினைத்துப்
குடி அரசு - 1981 (2) 226
பாருங்கள். புதிய சங்கதி எதுவானாலும் காதைமூடிக்கொள்ளவே நமது மக்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றார்கள்.சிறு குழந்தைப் பருவத்தில் நமக்குப்
புகுத்தப்பட்ட விஷயங்களையே ஆராய்ச்சியின் மூலம் அறிவின் மூலம் கண்ட முடிவென்று கருதி அதற்குத் தலைகொடுத்துக்கொண்டு இருக்கின் றோம். நமது உள்ளத்தில் எது எது பதிக்கப்பட்டு விட்டதோ அதெல்லாம் தேர்ந்த ஞானிகளாலும் தெய்வத் தன்மை பொருந்திய அவதார புருஷர். களாலும் சொல்லப்பட்ட உண்மைகள் என்ற உறுதியுடனே புகுத்தப்பட்டி ருக்கின்றோம்.ஆகையால் புதிய நோக்கங்களையும் தோற்றங்களையும் காண சகிக்காதவர்களாக இருக்கின்றோம்.
உலகப் போக்கை நாம் தெரிய நேர்ந்தாலும், பார்க்க நேர்ந்தாலும் அதன் அனுபவத்தின் மேன்மை அடையவும், பாராட்டிப்பேசவும், தயாராய் இருக்கின்றோமே அல்லாமல் அதை நமது வாழ்க்கையுடன் நமது நாட்டு எண்ணங்களுடன் பொருத்திப் பார்ப்பதற்கு சிறிதும் எண்ணுவதே கிடை
யாது. நமது மக்களின் இந்த மாதிரியான நிலையைப் பார்த்துப் பார்த்து மனம் கஷ்டப்பட்டதால் தான் நாங்கள் இந்த துறையில் இரங்கி தொண்டு செய்ய வேண்டியவர்களானோம்.
சுயமரியாதை இயக்கம் என்பதின் முக்கிய கொள்கைகள் என்பவை ஒன்றும் புதிதானதோ அல்லது ஏதாவது அதிசயமானதோ என்று நீங்கள். மலைக்கவேண்டியதில்லை. அது மனிதன் அறிவுபெறவும் சமத்துவம் அடையவும் சுதந்திரம் பெறவும் பாடுபடுகின்றது. அறிவுக்கும் சமத்துவத்
திற்கும் சுதந்திரத்துக்கும் எதிராயும் தடையாயும் இருக்கும் எதையும் அடியோடு ஒழிக்க தைரியம் கொள்ளுகின்றது. இந்த நிலையில் மக்களின்
மூடத்தனத்தினாலும் தாழ்வினாலும், அடிமைத்தனத்தினாலும் பயனடைந்து வாழ்கின்றவர்களுக்கு சுயமரியாதை இயக்கம் ஒரு கோடாலியாய் காணப் படுவதானால் அதிசயமொன்றுமில்லை. எங்களைக் கண்டால் துவேஷமும், வெறுப்பும் ஏற்படத்தான் செய்யும். எங்களை வையவும் தொல்லைப் படுத் தவும் அவரவர்கள் மனம் தூண்டத்தான் செய்யும். இவ்வியக்கத்தை கையாளுகிறவர்களுக்கு அவற்றையெல்லாம் சமாளிக்க சக்தி இருந்தால் தான் இவ்வியக்கத்தால் ஏதாவது பலன் ஏற்பட முடியும். எதிர்ப்புக்கும் தொல்லைக்கும் பயந்தால் ஒரு காரியமும் நடவாமல் போவதோடு பிற் போக்கும் ஏற்பட்டுவிடும்.
சாதாரணமாக நாங்கள் இந்த ஊர் பொதுஜனங்களின் பாராட்டு தலையும் வணக்கத்தையும் மரியாதையும் பெற்று கொஞ்சம் பணமும் சம்பாதித்துக் கொண்டு போகவேண்டுமானால் எங்களால் சுலபத்தில் முடிந்து விடும். நமது ஜனங்களின் முட்டாள்தனம் எங்குஎங்கு இருக் கின்றது என்பது எங்களுக்கு நன்றாய்த் தெரியும்.
227 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உதாரணமாக நாங்கள் தேசபக்தர்களைப்போல கதர் வேஷம் போட்டு கையில் கொடியைப் பிடித்துக்கொண்டு பாரதமாதவுக்கு ஜே! சுயராஜியத்திற்கு ஜே! மகாத்மாவுக்கு ஜே! என்று கூறிக்கொண்டோ, அல்லது பெரிய கடவுள் பக்தர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு மஞ்சள் உடையோ, காவி உடையோ கட்டிக்கொண்டு பட்டை நாமம் போட்டுக் கொண்டு குடை, சேகண்டி இவைகளுடன் நாராயண மூர்த்தி கோவிந்தா, கோவிந்தா என்றோ சொல்லிக்கொண்டு பஜனைக் கோஷ்டியுடனோ கூட்டமாய் வந்தோமானால் நீங்கள் கும்பிட்டு காசுகொடுத்து விட்டுப் போவீர்கள் என்பது எங்களுக்கு நன்றாய்த்தெரியும். இதற்காக ஒரு துரும்பைக் கிள்ளிப்போட வேண்டிய அவ்வளவு சிறிய கஷ்டம் கூட நாங்கள் படவேண்டியதில்லை.
ஆனால் நாங்களோ இன்று அப்படி சொல்லி வயறு வளர்ப்பதனு டைய புரட்டுகளை எடுத்துச் சொல்லுகின்ற வேலையை மேற்போட்டுக் கொண்டிருக்கின்றோமாதலால் சோம்பேரிப் பிழைப்புக்காரர்களுடைய கோபத்திற்கும் பழிதீர்த்துக்கொள்ளும் வஞ்சகத்திற்கும் ஆளாக வேண்டிய வர்களாக இருக்கின்றோம். இந்திய நாடு சூக்ஷிகாரருடைய ஆகஷிக்கு உட்பட்ட காலம் முதலே எங்களைப்போல் ஒரு கூட்டம் பல தடவை தோன்றி சூக்ஷிகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றதானாலும் சூக்ஷிக்
காரர்களின் சாமாத்தியமானது, அவற்றை லக்ஷியப்படுத்தக்கூட முடியாமல் செய்து கொண்டே வந்திருக்கின்றது.
இன்றைய தினம் அறிவு வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்கும் சுதந்திரத் திற்கும் விரோதமான காரியங்கள் என்று எதை எதை நாங்கள் கருது கின்றோமோ அவற்றையெல்லாம் எங்களுக்கு முன்னும் அநேக பெரியார்
கள் கருதி வெகு கடினமாக கண்டித்து பேசி இருக்கிறார்கள்.
உதாரணமாக ஜாதி மதத்தை கண்டித்தும் வேத சாஸ்திரங்களைக் கண்டித்தும் கோவில், குளம், கல்லுருவம், தாம்பர உருவம் ஆகியவை களை கண்டித்தும் பூஜை, உற்சவம், சடங்கு ஆகியவைகளைக் கண்டித்தும் எத்தனையோ பெரியார்கள் பேசியிருக்கின்றார்கள். “சாஸ்திரத்தைச் சுட்டு சதுர்மரையைப் பொய்யாக்கி சூத்திரத்தைக் கொண்டு சுகம் பெருவதெக் காலம்” என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். ஒரு பெரியவர் “கல்லையும் செம்பையும் வணங்கும் கசடர்கள்'” என்று சொல்லியிருக்கின்றார். சாதி மத பேதமெல்லாம் சூட்சியால் ஏற்படுத்தப்பட்டது என்றும் சொல்லியிருக் கின்றார். இன்னும் எவ்வளவோ சொல்லியிருக்கின்றார்கள். ஆனால் நம் மக்களோ அப்பெரியார்களையெல்லாம் தெய்வீகத்தன்மை கொண்டவர்கள். என்றும், ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் கருதி இன்றும் வணங்கு கின்றார்கள். ஆனால் அப்பெரியார் சொன்னவைகளை கவனித்துப் பார்க்கும்படி யாராவது சொன்னால் மாத்திரம் அவர்கள் மீது மிருகப்
பாய்ச்சல் பாய் கின்றார்கள். இது ஒன்றே போதாதா நம்மக்களின் அறிவின்.
குடி அரசு - 1981 (2) 228
திரத்தை அளந்து பார்ப்பதற்கு என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரியான பாமர உணர்ச்சியும் பயங்காளித்தனமும் வைத்ததைச் சுமக்கும் மிருக சுபாவமும் இன்னாட்டு மக்களின் உயர்குணங்களாகப் பாவிக்கப்
பட்டு வருவதாலேயே உலகத்தில் இந்திய நாடு மாத்திரம் வெகுகாலமாகவே அடிமை நாடாகவே, கூலி நாடாகவே சுயமரியாதையும் அறிவும் ஞானமும்
அற்ற நாடாகவே இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் இன்னது தான் என்பதை கண்டுபிடிக்க நம்மவர்களுக்கு இன்னமும் அறிவு ஏற்படவில்லை. ஒரு நாய் வளர்த்துகின்றவன் தன் நாயை மற்றவன் மேல் ஏவிவிடுவது போல் நம்மை யார் சூட்சி செய்து இக்கெதிக்கு ஆளாக்கினார்களோ அவர்களே தான் அச்சூக்ஷியை ஒழிக்க வரும் ஆட்கள் மேல் நம்மை உசுபடுத்தி விடுவதால் உண்மையை உணர கவலை கொள்ளாமல் அவர்கள். கை காட்டின பக்கம் திரும்பிக் கொண்டு கத்துகின்றோம்.
நமது நாட்டு அடிமைத்தனம் எத்தனை காலமாய் இருந்து வருகின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். தர்மராஜ்யம், இராமராஜ்யம்,
சத்தியகீர்த்தி அரிச்சந்திரராஜ்யம் முதலிய அவதார ராஜ்யம் முதல் தெய்வீகத்தன்மை பொருந்திய மூவேந்தர் முதலிய சரித்திர ராஜ்யம் வரை: இந்திய மக்கள் நிலைமையை சற்று ஞாபகப்படுத்தி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டு பாருங்கள். அந்த நிலைக்கு இந்த நிலை மேலானதா?' கீழானதா? என்று சுயமரியாதைக் கண்ணாடி மூலம் பாருங்கள். ஞானக் கண்ணாடி மூலம் பாருங்கள். சுதந்திரம், சமத்துவம் என்கின்றதான கண்ணாடிகள் மூலம் பாருங்கள்.
நீங்கள் எந்த பார்ப்பனர்களையும் கேட்டுப்பாருங்கள். தங்கள் நிலை “இன்றையைவிட அன்று அதாவது அவதார ஆட்சியிலும் மூவேந்தர். ஆட்சியிலும் மேலாயிருந்தது. ஆனால் இன்று கீழாயிருக்கின்றது”' என்று தான் சொல்லுகின்றார்கள். ஆனால் அவர்கள் தவிர மற்ற மக்களாகிய “சூத்திரர்கள்” பெண்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியார்கள் என்று இழிவுபடுத்தி இருக்கிற நம்மில் 100க்கு 99 ஜனங்களை கேட்டு பாருங்கள், நெஞ்சில் கையை வைத்து நினைத்துப் பாருங்கள். அன்றுக்கு இன்று எவ்வளவு மேலான நிலையில் இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு துறையாய் ஆராயுங்கள். உண்மை காண்பீர்கள். இதோடு நின்று விடாமல் இந்த நிலை யோடு திருப்தி அடையாமல் இன்னும் மேலே போக வேண்டும் என்று சொல்லுங்கள். எவ்வளவு மேலே போகவேண்டுமானாலும் நானும் கூடவே வர பாடுபடுகின்றேன். ஆனால் பழைய நிலையேமேல் அதற்கே போக வேண்டும் என்று சொன்னால் அதை சகிக்க முடியவில்லை.அரை நிமிஷம் கூட அதை ஆதரிக்க முடியாது. உலகம் அறிவு பொருள் முதலிய அகத்
திலும் புறத்திலும் சமத்துவத்தையும் பூரண சுயேச்சையையும் அடைய தீர்மானித்து விட்டது. இந்தியா மாத்திரம் மூடர்களாய், அடிமைகளாய் இழி மக்களாய் இருக்கும் அவதார ராஜியத்திற்கு போக வேண்டுமென்றால் இந்நாடு அடியோடு அழிந்து போவதே மேலான காரியமல்லவா?
229 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நண்பர்களே உலகத்தை ஒரு கண்ணில் பார்த்து இந்தியாவை ஒரு கண்ணில் பார்த்து, இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள்.நம் கல்வி, செல்வம், வாழ்வு, விவசாயம்,வீரம், மானம், அறிவு ஆராய்ச்சி, முற்போக்கு ஆகியவைகள் எல்லாம் எப்படி இருந்து இருக்கிறது. மற்ற நாடுகள் எப்படி இருந்தது இருக்கின்றது என்பவைகளை சிந்தித்துப் பாருங்
கள் என்று சொல்லி ஒவ்வொன்றிலும் வெளி தேசத்தையும் இந்தியாவையும் ஒப்பிட்டு பார்க்கும்படி விளக்கிக் காண்பித்து விட்டு உட்கார்ந்தார்.
“உபசாரப் பத்திரம்”
இந்த சமயத்தில் ஒரு வாலிபர் கடலூர் வாலிபர்கள் சார்பாக திரு. இராமசாமி பெரியாருக்கு உபசாரப்பத்திரம் படிக்க வேண்டும் என்று: சொல்லி அதன் பிரதி ஒன்றை தலைவரிடம் கொடுத்தார். தலைவர் அதை வாங்கி தானே வாசித்துப் பார்த்தார் அவ்வுபசாரப்பத்திரத்தில் முதல் இரண்டு மூன்று வாக்கியங்களில் திரு. இராமசாமியை பாராட்டும் பவனையாகவும்
பின் இரண்டு வாக்கியத்தில் கதரைப் பற்றிய அபிப்பிராயத்தை விளக்க வேண்டு மென்றும், தாலிகட்டுவது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்றும். சொல்லும் தங்கள் மனைவியார் ஏன் தாலிகட்டி இருக்கின்றார்கள் என்றும் கேள்வி கேட்கும் பாவனையாக எழுதப்பட்டிருந்தது. தலைவர் எழுந்து கதரைப் பற்றிய விபரம் தெரிய வேண்டுமானால் தானே சொல்லுவதாகச் சொல்லி அதைப்பற்றி புள்ளிவிபரங்களுடன் 15 நிமிஷம் பேசினார் (அது ஒரு தனி வியாசமாக சீக்கிரத்தில் பிரகரிக்கப்படும்) அதன் பேரில் கடலூர் திரு தேவநாயக அய்யா அவர்கள் பேச விரும்பியதின் மீது சில விஷயங்கள் பேச அனுமதிக்கப்பட்டார் அவர் கதரைப்பற்றி பேசினார்.
பின்னர் திரு.இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக்கொண்டிருப்பது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று அனேக பெண்கள் இன்னமும் உணரவில்லையென்றும் உணர்ந்த பல பெண்களும் தாங்கள் அடிமைகளாய் இருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறார்.
கள் என்றும் சிலர் சமூகத்துரைக்கு பயந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்றும் எந்த எண்ணத்தின் மீது தனது மனைவியார் கட்டிக் கொண்டிருந் தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோதமாய் பலவந்தம் செய்யத் தான் துணியவில்லை என்றும் சொன்னார். ஒருவர் மத்தியில் எழுந்து “உங்கள்
குடும்ப மனைவியையே நீங்கள் அடக்கி ஆள முடியவில்லையானால் மற்றவர்களை எப்படி திருத்தமுடியும்” என்றார். இதற்கு திரு._இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனைவியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக்கொண்டு பேசுகின்றாறேயொழிய அவர்கள். இஷ்டப்படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியா
மல் சொல்லுகிறார் என்றே கருதுகின்றேன் என்றும், பெண்களுக்கு
குடி அரசு - 1981 (2) 230
கல்வியறிவும் சுதந்திர உணர்ச்சியும் சுயமரியாதையும் ஏற்பட்டால் தானாகவே தாலியை அறுத்தெரிந்து விடுவார்கள் என்றும் சுதந்திர உணர்ச்சி உள்ள பெண்கள் இனி தாலிகட்ட கழுத்தைக் கொடுக்கமாட்டார்கள் என்றும் இவ்விஷயங்களில் மற்ற வெளிஜனங்கள் என்பவர்களுக்கும் குடும்பத்தார். என்பவர்களுக்கும் பிரமாத வித்தியாசம் இல்லையென்றும் சொல்லிவிட்டு கடைசியாக இந்தக்கூட்டத்தில் அரசியல் சம்மந்தமான பேச்சை தான் வேண்டுமென்றே பேசாமல் விட்டுவிட்டதாகவும் ஏனெனில் இதுவே முதல் கூட்டமானதால் அதிகமான விஷயங்களை ஜீரணம் செய்விக்க முடியா தென்று கருதியே அப்படிச் செய்ததாகவும் ஆனபோதிலும் காங்கிரசுக்காரர்.
கள் என்கின்ற முறையில் சிலர் அவர்களாகவே நம்மை பேசும்படி
செய்ததால் தான் அதற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறி கதரைப்பற்றியும் அதற்கும் அரசியலிற்கும் பொருளாதாரத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றியும் அது எவ்வளவு தூரம் தொழில் முறையிலோ, பொருளாதாரத் துறையிலோ உதவி இருக்கின்றதென்றும் அது சமதர்ம கொள்கைக்கும் மனிதனின் இயற்கையான ஆசாபாசங்களுக்கும் முன்னேற்றத்திற்கும் எவ்வளவு இடையூரென்றும் எடுத்துக் காட்டியதுடன் திரு.காந்தியே மில்லை ஆதரிக்க வந்து விட்டதுடன் புதிய இயந்திரம் கண்டுபிடிக்க ஆசைப்பட்டு கண்டுபிடிப்பவருக்கு ரூ. 100000 சன்மானம் கொடுக்க முன்வந்து விட்டார் என்றும், கதர் தற்கால சாந்திதான் என்பதாக திரு. ராஜகோபாலாச்சாரியார் சொல்லி யிருக்கும் அபிப்பிராயங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு கதரை ஒரு தர்ம கைங்கரியமாக வைத்துக் கொண்டாலும்கூட ஏழைகள் பிழைக்க வென்று மக்களிடம் கதரின் பேரால்
4 அணா வசூலித்து அவர்களுக்கு ஒரு அணா போய்ச் சேரும்படி யிருப்பது தர்ம கைங்கரியம் ஆகாதென்றும் எப்படியெனில் ஒரு நாளைக்கு
கால் ராத்தல் நூல் நூற்று ஒரு அணா கூலி அல்லது ஒண்ணே கால் அணா கூலி பெருகின்றார்கள் என்றால் அந்த கால் ராத்தல் நூலால் நெய்யப்பட்ட கதரை வாங்க வேண்டியவர் 6 அணா கொடுக்கிறார். இந்த நீளமுள்ள துணியை, மில் துணியாக வாங்கினால் 0-2-6 அணாவுக்கு வாங்கலாம். ஆகவே ஒரு அணா தர்மம் செய்ய மற்றவனிடம் 3-6 தட்டிப் பரிக்க வேண்டி இருக்கின்றது என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக்காட்டினார். பிறகு திரு. தேவனாயகய்யா பேச அனுமதிக்கப்பட்டார்.
அது சமயம் அவர் கதர் விலை இப்போது அதிகமாயிருந்தாலும்
நாளாவட்டத்தில் குறைந்து விடும் என்றும் மூன்று நான்கு வருஷத்திற்கு முன் கதர் கஜம் 0-10-6 அணாவாக இருந்தது இப்போது 0-9-6 அணாவாக இருக்கின்றதென்றும் சமதர்மம் ஆரம்பித்தால் நமக்குள் கலகம் வரும், போலிசார் கவர்மெண்டார் அனுகூலமாய் இருக்கமாட்டார் என்றும் சொன்
னார். இதற்கு திரு.இராமசாமி எழுந்து கதர் விலை கெஜத்திற்கு ஒரு அணா குறைந்ததற்கு கதர் முன்னேற்றமடைந்ததால் அல்லவென்றும் பஞ்சு பாரம் 350 ரூ. இருக்கும்போது கெஜம் 0-10-6 அணாவுக்கு விற்றது இப்போது
231 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பஞ்சுபாரம் 116 ரூ. க்கு வந்த பிரகு அதாவது மூன்றில் ஒரு பங்குக்கு பஞ்சு விலை வந்தபோது கதர் விலையில் 10-ல் ஒரு பங்கு குறைத்து ஒரு அணா மாத்திரம் குறைக்கப்பட்டிருக்கின்றது என்று கதரின் குணத்தில் பார்த்தாலும் கூட தான் கதர் இலாக்காவில் இருக்கும்போது 50 இஞ்சு 10கெஜம் மூன்றறையே அரைக்கால் மூன்றேமுக்கால் றாத்தல் இடைதானிருந்தது. இப்போது 4 ராத்தல் இடை ஆகிவிட்டது என்றும் எடுத்துச் சொல்லிலிட்டு திரு தேவநாயக அய்யா அவர்களை இனியும் ஏதாவது கேட்கின்றீர்களா என்று கேட்டார். அவர் இவ்வளவுதான் என்று சொன்னார். பிறகு இனியும் யாருக்காவது தான் பேசியதில் ஏதாவது சந்தேகம் உண்டா என்றார். மற்றொரு வாலிபர் ஒரு சந்தேகம் என்று சொல்லி வருணாச்சிரம தர்மத்தின் அவசியத்தையும் அர்ச்சகர் புரோகிதர்கள் அவசியத்தையும் பற்றி பேசினார். தலைவர் தாங்கள் சந்தேகங்களையோ கேழ்விகளையோ சொல்லுங்கள் என்றார். உடனே அவர் 1 கடவுள் உண்டா இல்லையா? 2. கடவுளை அடை
யும் மார்க்கம் என்ன? 3. மனிதன் கடமை என்ன என்று கேட்டார்.
இதற்கு திரு._இராமசாமி கடவுள் என்பதை தான் ஒரு அர்த்தமற்ற வார்த்தை என்று கருதி யிருப்பதாகவும் ஆனால் கடவுளைப் பற்றி பேசு பவர்கள் அதற்கு தனித்தனி அர்த்தம் கற்பித்து கொள்ளுகிறார்கள் என்றும் கேழ்வி கேட்பவர் கடவுளுக்கு இன்ன விதமான அர்த்தம் கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தால் அது உண்டு இல்லை என்றும் எப்படி அடைவதென்றும் ஒரு வார்த்தையில் முடித்து விடலாம் என்று சொன்னார். இதற்கு கேள்வி கேட்டவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
பிறகு மனிதனுடைய கடமை என்பது தனியாக ஒன்று இல்லை என்றும் அவரவர் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் சரி என்று பட்ட விஷயங்களின்படி அவரவர் நடந்து கொள்ளுவதைதான் கடமையாக கொள்ள வேண்டுமென்று சொன்னார்.
குறிப்பு-13:09:1931அன்று கடலூர் பழையடவுனில் நடந்த பொதுக் கூட்டத்தி. ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 20.09.1931
குடி அரசு - 1981 (2) 222
கடனுூரில் திருவாணர் ஈணஃகறாமசாமி
சகோதரர்களே! சகோதரிகளே!! மணமக்களே!!! புதிய முறையான திருமணம் இப்பகுதிக்கு இது புதியது. பூசைமேடு கோவிந்தசாமிதிருமணம் முன் நடைபெற்றது. அதன்பின் இன்று இங்குவந்திருக்கிறோம். தலைவர்
முனிசிபல் கவுன்சிலர் புதிய முறையில் திருமணம் நடைபெறுமென்று கூறியபடி சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? நான் இங்கு வந்ததும் உறவினர், தோழர் முதலியவர்களின் அதிர்ப்தி ஏற்பட்டதாகக் கேள்விப் பட்டேன். அதன் காரணம் பகுத்தறிவில்லாமையே. மதம், புராணம், பழக்கம், வழக்கம், மோக்ஷம், நரகம் கற்பிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிர்ப்தியும், பயமும், நடுக்கமும் தான் தோன்றும். நன்கு யோசித்து திரு.பெருமாள் அவர்கள் போல் துணிவுடன் செய்தால்தான் வரும்கால உலகிற்கு பயன் தரும். இதுபோன்ற திருமணங்கள் பலவிடங்களில் நடந்துகொண்டு வருகிறது. சிலவிடங்களில் விளம்பரத்திற்காக சிறிது ஆர்பாட்டத்துடன் சுயமரியாதை இயக்கத்து திருமணம் நடைபெறுகின்றது.
நான் கூறுவது சிலருக்கு வியப்பாகத் தோன்றினாலும் தோன்றலாம். உங்கள். அறிவுப்படி கொள்ளவும் தள்ளவும் உரிமை உங்கட்கு உண்டு. பழமை,
புதுமை என்ற பாகுபாடின்றி பகுத்தறிந்து முடிவுப்படி செய்யுங்கள். திரு மணம் என்பது ஒரு பெண்ணும் ஒரு ஆணும் வாழ்க்கைக்கு அடிகோலும் ஆரம்ப நாளே திருமணம் என்பதாகும். பல சடங்குகளுக்கும் விழாக் களுக்கும் தத்துவார்த்தம் வேறாக யிருக்கலாம். ஆண் பெண் கூடி வாழ இச்சைக்காக, சந்தோஷத்திற்காக ஒன்றுகூடும் ஜதை சேர்தலே திருமண மாகும். திருமணம் ஆணும் பெண்ணும் தங்களுக்குள் நேரில் சம்மதம் பெற்று இருவரும் இன்பத்தோடு ஒன்றுபடுதலே எல்லா நாட்டாராலும் கையாளப்படுவதாகும். நம்நாட்டிலோ தாய் தகப்பன்மார்களின் வியாபார மாக “ஜதை” சேர்க்கப்பட்டு முடிவு கூறப்படுகிறது. திருமணம் என்பது ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு வாழ்வது “தெய்வீக” மென்பதாகவும் மறு உலகில் இடம் பெறுதற்கான காரியங்கட்கு இங்கு வாழ்வதாகவும், காலவினை, பொருத்தம், முடிச்சு, நமது கடமை, தேர்தல், முயற்சி என்ற காரணத்தையும் மறக்கின்றோம். ஜாதிக்கொவ்வொரு விதமாக பழக்கவழக்க மென்ற காரணத்தால் சடங்கு, பணக்கேடு, நேரக்கேடு, மக்கள் ஊக்கக்கேடு ஆகிய கஷ்டத்தோடு தான் திருமணம் நடத்துகிறோம். மாற்றமடைவதில்
233 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நாம் பெரியார்கட்கு பயந்து பழைமையையே குரங்குப் பிடியாகப் பிடித்து கொள்கிறோம். ஆண் பெண்ணுரிமையைப் பற்றியோ வெனில் ஆண் இச்சைக்கும், வேலைக்கும், ஏவுதலுக்கும் என்றே பெண்கள் சேர்க்கப்படு
கிறது. சொத்துரிமை சமஉரிமை பெண்கட்கு வழங்கப்படுவதில்லை. புதிய முறை என்பது ஒவ்வொருவரும் சிந்திக்கவும், ஆராயவும் வேண்டுவதுதான் இத்திருமணம் நிகழ்ச்சியாகும். இதுபற்றி மாலை பொதுக் கூட்டத்தில் விரிவாகப் பேசுவோம். இங்கு நடைபெறும் நடைமுறை நிகழ்ச்சிகள். பெரிதும் பெண்கட்கு பயமாகத் தோன்றலாம். காரணம் அடுப்பூதவும், வேலை செய்யவும் அடிமை என்று பழக்கியும் வந்ததோடு “கல்வி” அறிவு போதாக்குறைதான். செலவுசுருக்கம், நாள்குறை, வேலைகுறை, பெண்கள். உரிமை, மணமக்கள் சம்மதம், கடன்படல், பின்கடன் தீர்க்கப்பாடுபடல் ஆனால் இன்று நடக்கும் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு பேர் என்று கேட் கலாம்.அது ஒரு சாட்சிக்காகத்தான். ஒரு கடை வைப்பவன் மற்ற கடைக் காரர்களை அழைப்பதும், புது பேரேடு போடுவதும், அவர்களது ஒப்பந் தத்தை எடுத்து ருஜுப்பிக்க பேசுவதும் சாட்சிக்காகத்தான். ஆகவே சாட்சி முறை அவசியம்.நமக்கு ஆதாரம் சாட்சிதான். முகம்மதியர் ஒரு புத்தகத்தில் கையொப்பம், கிறிஸ்துவர்கள் கோவில் முன்பாக ஒப்பம், நாம் அதற்காகவே இங்கு சாட்சியாகவே கூடியிருக்கிறோம். சாட்சியில்லாததால் சமீபத்தில் ஒரு “கல்யாணம்” தள்ளுபடியாயிற்று. ஆதலால்தான் நாம் கூடி சாட்சியளிக்கின் றோம். பெண் அடிமைப் படுத்துதல் ஒப்பந்தத்தில் சம உரிமையுடன்
திட்டம் காணல் வேண்டும். வீணாக பழைய சென்மப்பலன், தலைவிதி என்று கட்டாயப்படுத்தி வருவதால் பெண்கள் இளி கட்டுப்பட்டு வாழாது. நம்மில் ஒருவர் வியாபாரியிடம் முதல் கஷ்டப்பட்டு பாடுபட்டு பின்
சுதந்திரம் பெற்று தனித்து வியாபாரியாகுவதை பார்க்கிறோம். புருஷன் தாசி வீட்டிற்கு போதல், கள் குடித்து அடித்தல் போன்ற காரணத்தால் கஷ்டப்
படும் பெண்கட்கு விடுதலை வேண்டுவதாகும். நாங்கள் ஏன் இங்கு வந் தோம்? புரோகிதம் செய்ய வரவில்லை. ஆரம்பத்தில் பலருக்கு விளங்காத
தால் நாங்கள் வந்து இம்முறையை விளக்க வேண்டுமென்று திருபெருமாள். விரும்பியதற்காக வந்தோம். இன்னும் 10 வருஷங்களில் புருஷன் பெண்சாதி தேர்ந்தெடுப்பது கூட எவருக்கும் தெரியப்போவதில்லை. பிற எல்லா நாட்டு நாகரீகங்களைப் பற்றி மட்டும் நாம் கூற தேவையில்லை. அவரவர்கள் அறிவுப்படியே அறிவு வளர்ச்சிப்படியே இத் திருமணம் நடைபெறும். மற்றும் மாலை விரிவாகப் பேசுவோம்.
குறிப்பு:13.09.93/ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற கடலூர் திரு.பெருமாள். இல்லத்திருமணம் திருமதி,இரங்கம்மாள்- திரு.விஜயன், திருமதி.பேபி அம்மாள்- திரு.வெங்கிடசாமி ஆகியோரின் (இரண்டு ஜோடி மணமக்கள்! திருமணத்தை நடத்திவைத்து ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 20.09.1931
குடி அரசு - 1981 (2) 234
சுயமரியாதை இயக்கமும் ர்கன்ரம்
சமீபத்தில் விருதுநகரில் நடந்த 3-வது சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களில் மதங்களைப் பற்றிச் செய்யப்பட்ட தீர்மானத்தைப்பற்றி அதாவது, “மதத்தின் பேரால் அனுஷ்டிக்கப்படும் பழக்கங்களும் பயிற்சி களும் சமூக சீர்திருத்தத்திற்கு தடையாயிருந்து வருவதால், மதங்கள் ஒழியவேண்டும் என்றும் மதங்கள் ஒழியாமல் சகோதரத்துவம் ஏற்படா தென்றும் மதச்சண்டை ஒழியவேண்டுமானால் மக்களுக்குள் மதத்தைப் பற்றிய உணர்ச்சி ஏற்படுவதை நிராகரிக்க வேண்டுமென்றும்” செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வங்காளத்தில் வெகுகாலமாய் நடைபெற்று வரும் “மாடர்ன் ரிவ்யூ” என்னும் பிரபல பத்திரிகையின் ஆசிரியராகிய உயர்திரு இராமானந்த சட்டர்ஜீ அவர்கள் மேற்படி பத்திரிகையில் சில ஆக்ஷே பணைக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்.
அதன் சாராம்சமாவது:-
“மக்களுக்குள் எப்பிரிவினராயினும் சுயமரியாதையைப் பெற விரும்புவறேல் அதற்கு ஒவ்வொருவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மான விஷயத்தில்
நாம் பின்வருமாறு நினைப்பது தவராயிருந்தால் திருத்தவேண்டுமாய் கோறுகிறோம்.
தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தார் சொல்லும் எல்லாக் கொள்கைகளிலும் நியாயமிருக்கின்றதென்று நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
விருதுநகர் மகாநாட்டின் தலைவர் திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்.
கள் பேசியதாக நமக்கு எட்டிய செய்தியில்,
“இந்தியாவில் மதம் என்று சொல்லப்படும் பலம் பொருந்திய ஸ்தாப
னம் மக்கள் முற்போக்கிற்கு தடையாகயிருந்து வருகின்றது” என்று பேசி யிருக்கின்றார்.
235 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதை அனுசரித்து மதங்கள் மறையவேண்டும் என்பதாக ஒரு தீர்மானமும் அம்மகாநாட்டில் செய்யப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து சுயமரியாதைக்காரர்களின் நோக்கம் தெளிவாக விளங்குகின்றது.
திரு. ஷண்முகம் இந்தியாவின் நிலையைப் பற்றி பேசியதால் இந்தியாவின் பண்டை கால மத நிலையைப் பற்றி சற்று ஆராய்வோம்
என்று ஆரம்பித்து,
முற்காலத்தில்
வேதங்களை ஏற்படுத்திய ரிஷிகளும் அது யாருக்கு ஏற்படுத்தப் பட்டதோ அவர்களும் பிறவியில் பிராமணர்களாயில்லாமலிருந்தும் அனைவராலும் பிராமணர்கள் என்றே கருதப்பட்டிருக்கின்றார்கள்.
பிரம்மத்தை வழிபடுபவர்கள் என்ற காரணத்தாலே பலர் பிராமண: ரானார்கள். கீதாச்சாரியாரும் கீதை கேட்டவரும் பிராமணராகக் கருதப்
பட்டார். ஆதலால் மக்கள் சீர்திருத்தமடைய அக்காலத்தில் மதம் தடுக்கவில்லை.
மத்திய காலத்தில்
புத்தரால் “புத்த மதம் ஜாதி முறையைத் தகர்த்தது. நானக்கரும் குரு கோவிந்தரும் தாழ்ந்தோர்களை உயர்த்தி அவர்களைச் சகோதரர். களாக்கினார்கள். வங்காளத்தில் சைதன்னியர் முஸ்லீம்கள் உள்பட பலரை: ஜாதிமத பேதமின்றி சிஷ்யராக்கிக் கொண்டார். கபீர்தாஸ் பல உயர்ந்த உபதேசங்களைச் செய்திருக்கிறார்.
தற்காலத்திலும்
ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை உண்டாக்கினார். கேசப் சந்திரசேனர் அதை விர்த்தி செய்தார். ஜாதியை விட வேண்டுமென்றும் சொன்னார். தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜம் உண்டாக்கினார். ஈஸ்வர: சந்திர வித்தியாசாகர் விதவாவிவாகத்தை புகுத்தினார். வீரேசலிங்கம் பந்துலு சமூக சீர்திருத்தம் செய்தார். விவேகானந்தர் அரிய உபதேசங்களைச்
செய்தார். மகாத்மா காந்தி பிராமணர் பிராமணரல்லாதாருக்கும் ஒரே மாதிரி போதிக்கிறார். ரவீந்திரநாதர் ஒரு பெரியார். இவர்கள் எல்லோரும் செய்த காரியங்கள் மதவுணர்ச்சியை நீக்கி செய்யப்பட்டவைகளல்ல. இப்படி யிருக்க இனி மத நம்பிக்கையில்லாதவர்கள் செய்த காரியம் என்ன என்பதை யோசனை செய்து பார்க்கட்டும். சுயமரியாதைக்காரர் ரஷியா வைப் பின்பற்றுவதாகத் தெரிகின்றது. அங்கும் மதம் அடியோடு அற்றுப் போகவில்லை”
என்பவை கருத்தாக எழுதியிருக்கிறார்.
குடி அரசு - 1931 (2) 236
இவற்றிற்கு நாம் சமாதானம் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். திரு.இராமாநந்த சட்டர்ஜீ அவர்கள் ஒரு உண்மை சீர்திருத்தவாதி என்ப தாகவே நாம் கருதி இருக்கின்றோம். சுயமரியாதை மகாநாட்டுக்கு அவரைத் தலைமை வகிக்கச் செய்ய வேண்டுமென்று ஒரு பிரச்சினை கூட இருந்து வந்தது யாவருக்கும் தெரிந்ததேயாகும்.
ஆகவே அவரது நல்லெண்ணங்களில் நமக்கு சந்தேகம் கொள்ள இதுவரையில் எவ்விதத்திலும் இடமில்லை.
ஆனால் திரு.சட்டர்ஜீ அவர்களால் சொல்லப்பட்ட விஷயங்கள் மக்களுக்குள் ஒரு செல்வாக்குப் பெற்ற அபிப்பிராயமும் சிறிதும் யோசித்துப் பார்க்காமல் சப்த மாத்திரத்திலேயே ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்கு பழக்கமும் விளம்பரமும் கொண்டதாகும். ஆதலால் அவ்வபிப்
பிராயங்கள் கொள்கின்றவர்களுக்கெல்லாம் உள் எண்ணம் கற்பிக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுகின்றோம்.
முற்காலம்
ஆனால், திரு.சட்டர்ஜீ அவர்கள் காட்டிய முற்கால கதைகளை அப்படியே ஒப்புக் கொண்டு பார்த்தாலும் கூட முற்காலத்தில் ரிஷிகள், தீர்க்கதரிசிகளான பெரியார்கள், கீழ் ஜாதியிலிருந்து பிராமணர்களாகப் பாவிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் எல்லோருமே மதத்தினாலேயே அந் நிலையை அடைந்தார்கள் என்றாலும் தனித்தனி மனிதர்கள் என்கின்ற முறையில் தனித்தனியான “தெய்வீக” அதாவது மனித சக்திக்கு மீறியதான காரியங்கள் செய்தவர்கள் என்கின்ற நம்பிக்கை காரணத்தினால் தான் பெரியவர்களானார்கள் என்பதோடு அந்த மாதிரி தெய்வீகசக்தி என்பது அவர்களிடம் இருக்கின்றது என்று பாவிக்கப்பட்ட காரணமே அவர்கள் பெரியவர்களாவதை-ஆனதை யாராலும் தடுக்க முடியாமல் செய்து விட்டதே தவிர மற்றபடி யெல்லோருக்கும் அந்தமுறை பயன்பட்டதாக இல்லை என்றும் இப்போதும் எல்லோருக்கும் பயன்படாதென்றும் சொல்லுகின்றோம்.
மத்திய காலம்
மத்தியகாலத்தில் பல பெரியார்கள், பல சீர்திருத்தங்கள் செய்திருக் கின்றார்கள் என்றால் அவற்றுள் புத்தர் ஒருவர் செய்த சீர்திருத்தத்தால் தான் இன்று அனேக மக்கள் ஒன்றுபட்டிருப்பதை காணலாம். ஆனால் புத்தர் ஒரு கடவுளையோ ஒரு மதத்தையோ ஆதாரமாய் வைத்துக் கொண்டு தனது சீர்திருத்தத்தைச் செய்தார் என்று சொல்லி விடமுடியாது. ஆதலா லேயே அவர் சுயமரியாதைக்காரர்கள் போல் இந்துக்கள் முதலிய எல்லா மதக்காரர்களாலும் இந்துக்களின் புராண இதிகாசங்களாலும், நாஸ்திகர். என்றும், மதமற்றவர் என்றும் இன்றும் சொல்லப்பட்டே வருகிறார்.
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மற்றபடி நானக், குரு கோவிந்தர், கபீர், சைதன்னியர் முதலியவர் களும் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ள லாமே தவிர அவர்களது உபதேசங்கள், முயர்ச்சிகள் ஆகியவைகள் மக்களில் சிறு சிறு கூட்டம் கொண்ட பலப் பல பிரிவுகளை உண்டாக்கிற்று என்பதைத்தவிர இந்திய பொதுமக்களுக்கு என்ன சீர்திருத்தம் செய்தது என்பது நமக்கு விளங்கவில்லை.
ஒவ்வொரு பெரியார் என்பவர்களின் பேரால் ஒவ்வொரு கூட்டம்
தனித்து இருந்து கொண்டு மற்றக் கூட்டத்தினரிடம் அதிருப்தியுடன் வாழ்ந்து வருகின்றன என்பதை பிரத்தியக்ஷமாய்க் காண்கின்றோம்.
தற்காலத்திலும்
ராஜாராம்மோகன் ராய் அவர்களால் செய்யப்பட்ட சீர்திருத்தத்தின் பயனாய் சிற்சில இடங்களில் மாத்திரம் பிரம்ம சமாஜம் என்னும் பேரால் சில லக்ஷம் பேர்களும், தயானந்த சரஸ்வதி அவர்களால் செய்யப்பட்ட சீர் திருத்தத்தின் பயனாய் ஆரிய சமாஜத்தின் பேரால் சில இடங்களில் சில லக்ஷம் பேர்களும் ஒரு தனித்தனிப் பிரிவினராக இருந்து வருகிறார்கள்.
விவேகாநந்தர் உபதேசம் எவ்வளவு மேன்மையானது என்று சொல்லப்பட்டாலும் அது பெரும்பாலும் தர்க்கவாதத்திற்கு இந்தியப் புராத னப் பெருமையை பேசுகின்ற சந்தோஷ சமயத்திற்கும் மாத்திரம் பயன்படு வதன்றி காரியத்தில் என்ன பயன் ஏற்பட்டது என்பதை சென்னை மைலாப்
பூரில் இருக்கும் ராமகிருஷ்ணா ஹோமை போய்ப்பார்த்தால் விளங்கும். அதாவது, ஊராரிடம் பணம் பறித்து பிள்ளைகளுக்கு பட்டை நாமமும், சாம்பலும் பூசப்பட்டு தனித்தனி அரைகளில் உட்கார வைத்து சாப்பாடு போட்டு, ஜாதி வித்தியாசம் கற்பிக்கப்பட்டு உயர்வு தாழ்வு நிலை நிறுத்தப் பட்டு வருகிறது. திரு.காந்தி அவர்கள் பிராமணருக்கும், பிராமணரல்லா தாருக்கும் செய்யும் உபதேசம் தென்னிந்திய பிராமணரல்லாதாரால் எப்படி கருதப்படுகின்றது என்பதும், காந்தி அவர்கள் மக்களை எந்தக்கால உலகத்திற்கு கொண்டு போக பாடுபடுகின்றார் என்று எண்ணிக் கொண்டிருக் கிறார்கள் என்பதும் தென்னிந்தியாவில் உள்ள காந்தி சீஷர்களில் பார்ப்பனர் தவிர மற்றவர்கள் திரு.காந்தியை மத சம்பந்தமான விஷயங் களில் ஏற்றுக்கொள்ளுகின்றார்களா? என்பதும் நடு நிலைமை விசாரணை செய்து பார்த்தால் உண்மை விளங்கும்.
அன்றியும் அவரது சீர்திருத்த உபதேசம் இன்றைய கெடுதிகளில் எதை மாற்றக்கூடியதாயிருக்கின்றது என்ற விஷயத்தை முடிவு செய்ய திரு.சட்டர்ஜீ அவர்களுக்கே விட்டு விடுகின்றோம்.
ஆகவே முற்காலம்-மத்தியகாலம்-தற்காலம் என்று சொல்லப்பட்ட காலங்களில் எத்தனையோ பெரியார்கள் ஏற்பட்டு மதத்தின் பேரால்
குடி அரசு - 1981 (2) 228
அல்லது மதத்தை தள்ளிவிடாமல் மத உணர்ச்சியால் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் என்னப்பட்டவைகள் செய்த காரியங்கள் என்னவாய்
இருந்தபோதிலும் இச் சீர்திருத்தவாதிகள் தோன்றுவதற்கு முன் இந்தியா இருந்த நிலைமையைவிட இன்று என்ன துறையில் எவ்வித மாறுதல் அடைந்திருக்கின்றது என்கின்றதான பிரத்தியகஷ அனுபவங்களைக் கொண்டுதான் நாம் மதத்தை சேர்த்து செய்யப்படும் சீர்திருத்த வேலைக்கும். மதத்தை நீக்கி செய்யப்படும் சீர்திருத்த வேலைக்கும் வித்தியாசங்கள். பார்க்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.
திரு. சட்டர்ஜி அவர்கள் எடுத்துக்காட்டிய பெரியார்களின் வாக்கை- கொள்கையை இன்று ஒப்புக்கொண்டு நடக்கும் மக்கள் எத்தனைபேர்கள் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பதை கவனிக்குமுன், இப்பெரியார்களை. பெரியார்களாக, தெய்வாம்சம் பொருந்தியவர்களாக கருதி வணங்கும் மக்களில் ஆயிரத்தில் ஒருவராவது அவர்களது கொள்கையை ஒப்புக் கொண்டு நடக்கிறார்களா என்று கேட்கின்றோம். இதற்குக் காரணம் மதமா? அல்லது அப்பெரியார்களின் மீதுள்ள அலட்சிய புத்தியா? அல்லது மனிதனின் முட்டாள்தனமா? என்றும் தெரிய விரும்புகிறோம்.
முற்கால மத்தியகால தற்கால தெய்வீகப் பெரியார்கள், தீர்க்கதரிசிகள், சுவாமிகள், மகாத்மாக்கள் ஆகியவர்கள் மதத்தின் பேரால் செய்து வந்த சீர்திருத்த வேலையின் பலனை ஒரு வாக்கியத்தில் அடக்க வேண்டுமானால் இந்தியாவில் இந்து மதத்தின் பேரால் எத்தனை ஆயிரம் ஜாதிகள்? எத்தனை லட்சம் பிரிவுகள்? எத்தனை கோடி தீண்டக்கூடாத-கிட்ட வரக் கூடாத-கண்ணில் தென்படக்கூடாத மக்கள், எத்தனை பத்துக் கோடி கீழ்
ஜாதி “சூத்ரஜாதி'” மக்கள்? எத்தனை பத்துக்கோடி தற்குறிகள்? என்பவற்றை கவனித்து பார்க்கும்படி திரு.சட்டர்ஜி அவர்களை வணக்கமாய்க் கேட்கின்றோம்.
திரு. சட்டர்ஜீ அவர்களால் எடுத்துக் காட்டப்பட்ட பெரியார்களில் யாராவது நாம் சொல்லும் மதத்தை அடியோடு ஒழித்து வேலை செய்திருப் பார்களானால், அப்பெரியார்கள் வேலை வெற்றி பெற்று இருக்குமானால், வெற்றி பெற அறிஞர்கள் உதவி இருப்பார்களானால் இன்று நாம் மேல் எடுத்துக்காட்டியதான இத்தனை ஆயிரக்கணக்காகவும் லட்சக்கணக் காகவும் கோடிக்கணக்காகவும் பத்துக்கோடிக்கணக்காகவும் வித்தியாசங்
களும் மேல்கீழ்படிகளும், மாச்சரியங்களும், இழிவுகளும்,கொடுமைகளும், காட்டு மிராண்டித்தனமான உணர்ச்சிகளும் இருந்து வருமா? என்று பின்னும் பின்னும் வணக்கமாய் கேட்கின்றோம். மதத்தில் ஆழ்ந்திருக்கும் எண்ணமானது அதன் பயனாய் ஏற்பட்ட இவ்வளவு பயங்கரமான பலன்களையும் அலட்சியமாய் எண்ணியிருக்கும்படி மனதை அவ்வளவு இரும்பாக்கி விட்டது.
239 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மேலும் திரு.சட்டர்ஜீ அவர்கள் மதத்தில் நம்பிக்கை அற்றவர்கள் இதுவரை என்ன செய்திருக்கின்றார்கள்? என்று ஒரு கேள்வி கேட்கின்றார். அது மிகவும் சரியான கேள்வியேயாகும். ஆனால் மத நம்பிக்கை அற்றவர்.
களின் வேலையானது எப்படி இருந்தபோதிலும் மதநம்பிக்கை உள்ள
வர்கள் வேலையின் பயன் அவர்கள் செய்யும் வேலையின் செளகரி யத்தைப் போல அவ்வளவு சுலபமான வேலையாயில்லை..
ஏனெனில் முற்சொன்னவர்களது வேலையானது திரு.ராமானந்த சட்டர்ஜி போன்ற பெரியார் முதல் கொண்டு அதிர்ப்தி படவேண்டியதும் சங்கடப்பட வேண்டியதுமான ஒரு எதிர் நீச்சல் வேலையாய் இருக்கின்றது. இவ்வேலை செய்பவர்களோ, பெரியார்கள், சீர்திருத்தக்காரர்கள் அறிஞர்கள், கற்றவர்கள், செல்வவான்கள். ஏழைகள், “பெரிய ஜாதியார்கள்” “இழி மக்கள்” என்று சொல்லப்பட்டவர்கள் எல்லோராலும் வெறுக்கப்பட வேண்டியவர்களாகவும் எதிர்க்கப்பட வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். மதத்தினால் தங்கள் தங்கள் யோக்கியதைக்கு மீறின செளகரியமும், மேன்மையும் அடைந்து வருகின்ற
வர்கள் மாத்திரமல்லாமல் கஷ்டமும் இழிவும் அடைகின்றவர்களும் தங்களை இக்கெதிக்கு ஆளாக்கியதின் பயனை அனுபவிக்கின்றவர். களுடன் சேர்ந்து கொண்டு நம்மை நமது வேலை நடக்கவொட்டாமல் தடுக்கின்றார்கள் என்றால் மதத்தின் கொடுமைக்கு வேறு எதை சமானமாகச் சொல்லலாம் என்பதும், இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆதாரமான மதத்தை ஒழிப்பது என்பதானது தீர்மானம் செய்யப்பட்ட மறுநாளே பலன் பார்க்கக் கூடியதா என்பதும் திரு.சட்டர்ஜி அவர்களால் தர்ம சிந்தனையோடு கவனிக்கப்படவேண்டிய தாகும்.
மதமற்றவர்களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன என்பதை கணக்கு பார்க்க இன்னமும் காலம் வரவில்லை என்றுதான் சொல்லுகின்றோம். மதத்தின் பேரால் கட்டிப்போடப்பட்டிருக்கும் மக்களுக்கு சுயஞானம் ஏற்பட்ட பிறகும் மதத்தின் பேரால் பயனடைந்து வருகின்றவர்களுடைய எதிர்ப்புகளை சமாளிக்க செளகரியம் செய்து கொண்டபிறகும் தான் மத நம்பிக்கை அற்றவர்களின் வேலையை கணக்குப் பார்க்க வேண்டும் என்று வணக்கமாய் தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம்.
மத நம்பிக்கை அற்றவர்கள் தங்கள் வேலையில் வெற்றி பெருவார் களா? என்கின்ற விஷயத்தில் நாம் உறுதிகூற துணியவில்லை. ஆனால் நாம் கூறும் மதநம்பிக்கை அற்றால்தான் அதன் பேரால் இழிவுபடுத்தப் பட்ட-பிரிவுபடுத்தப்பட்ட-சூக்ஷி செய்து ஏமாற்றப்பட்ட மக்கள் விடுதலை பெற்று சமத்துவமடைந்து உலக சகோதரத்துவம் கொண்டாட முடியும் என்பதில் நமக்கு சிறிதும் சந்தேகமில்லை என்பதோடு இதுவே வைரம் போன்ற நமது உறுதியான எண்ணமாகும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - 1981 (2) 240
தவிர “தென்இந்திய சுயமரியாதைக்காரர்கள் ரஷியாவை பார்க் கிறார்கள்” என்று எழுதி இருப்பதைப் பற்றி சுயமரியாதைக்காரர்கள் அவ மான மடையவில்லை. ஏனெனில் ரஷியா எவ்வித இழிவான வேலை யையும் மகாபாதகமான வேலையையும் செய்வதாக நாம் கருதவில்லை.
ஒரு சமயம் ரஷியா முட்டாள்தனமான வேலை செய்வதாக வேண்டு மானால் சொல்லிக் கொள்ளட்டும். முட்டாள்தனமான காரியம் சூகஷியான வேலையைவிட கெட்ட காரியமாகி விடாது. திரு. ராமானந்த சட்டர்ஜி அவர்கள் தென் இந்தியாவை, தென்இந்தியப்பார்ப்பனரைக் கொண்டும், அவர்களது பத்திரிகையைக் கொண்டும், அவர்களது அரசியல் இயக்கங் களைக் கொண்டும் பார்க்காமல் வாழ்க்கையில் சகல துறைகளிலும் கீழ் ஜாதியார்களாகவும் சூத்திரர்களாகவும், நாஸ்திகர்களாகவும், தேசத்துரோகி களாகவும், பிராமணத்துவேஷிகளாகவும், சர்க்கார் தாசர்களாகவும் பெயர். சூட்டி ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் மூன்றே முக்கால் கோடி மக்களின் மூலமாக பார்ப்பாரேயானால் ருஷியாவைப் பற்றிய அபிப்பிராயம் அந்த நாட்டுக்கு சரியென்றோ, தப்பென்றோ பட்டாலும் தென் இந்தியாவுக்கு அவசியம் என்று உணருவதோடு ரஷியாவுக்கு வழிகாட்டக் கூடிய சக்தியைக்கூட பெற்று விடுவார் என்றே கருதுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.09.1931
241 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கேன்வி
ன்று கன்றுக்குட் .
மூன்று பசுவின் கன்றுக்குட்டிகள் ஒன்றாய் ஒரு காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் குடியானவர் வீட்டுக்கன்றுக்குட்டி:-
“நண்பர்களே வீட்டுக்கு போகலாம், பால் கரக்கும் நேரமாய் விட்டதால் நாம் போய் பால் குடிக்கலாம்” என்றது.
செட்டியார் வீட்டு கன்றுக்குட்டியானது “பால் கரக்கின்ற நேர மானால்தான் என்ன முழுகிப் போய்விட்டது? வயிரார பால் கிடைக்கவா போகின்றது?” என்றது.
மூன்றாவதான அய்யர் வீட்டுக்கன்றுக்குட்டியானது “நீங்கள் என் னமோ பேசிக்கொள்ளுகின்றீர்களே? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே” என்றது.
ஒவ்வொன்றும் இந்தப்படி பேசியதின் கருத்து என்ன?
பதில்
குடியானவன், கன்றுக்குட்டிக்கு வயிராரப் பால் கொடுப்பது வழக்கம்.
செட்டியார், கன்றை அவிழ்த்து விட்டு முலைக்காம்பில் வாய்வைத்து முட்டி கொஞ்சம் பால் குடித்தவுடனேயே கன்றுக்குட்டியை பிடித்துக்கட்டி விடுவது வழக்கம்.
அய்யரோ, கன்றுக்குட்டியை மாட்டுக்கு எதிரில் காட்டுவதைத்தவிர: பக்கத்தில் கட்டி இருக்கக்கூட சம்மதிக்காமல் பால் கரந்து கொள்ளுவார். ஆதலால் அவை தன் தன் அனுபவங்களையே பேசின.
குடி அரசு - விளக்கக்குறிப்பு - 20.09.1931
குடி அரசு - 1981 (2) 242
தற்கா ஈஷியாவிண் கல்விமுறை
அறிவில்சிறந்த தலைவர் அவர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!
இங்கு இன்று இந்தக் கூட்டமானது இந்தப் பள்ளிக்கூடத்துப் பிள்ளை களின் அறிவுப் பெருக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டூடன்ஸ் லிட்டரரிஅசோசியேஷனின் இவ்வருஷ ஆரம்பக் கொண்டாட்டத் திற்காக கூட்டப்பட்டதாகும். இதில் தலைமை வகிக்கும் கனவான் திரு.எஸ்.ராம நாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் கல்வி அறிவில் தேர்ச்சிபெற்ற ஒரு பெரிய பண்டிதராவர். இப்போது இங்கு எனக்கு முன் முதலாவதாக உபன்யாசம் செய்த உபன்யாசகர் திருமதி சி.பி.காமாக்ஷியம்மாள் எம்.ஏ.எல்.டி. அவர். களும் கல்வியறிவில் தேர்ச்சிபெற்ற ஒரு பண்டிதை யாவார்கள். இங்கு கூடி யிருக்கும் கனவான்களும் அனேகமாக கல்வியில் தேர்ச்சி பெற்ற பெரிய பெரிய பி.ஏக்களும், எம்.ஏக்களும் எல்.டி. களுமா யிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் இங்கு செய்யப்படவேண்டிய உபந்யாசமும் கண்டிப்பாகக் கல்வி யைப் பற்றியதாகவே இருக்க வேண்டியது பெரிதும் பொருத்தமானதாகும்.
ஆகவே இப்படிப்பட்ட சமயத்தில் இங்கு உபன்யாசம் செய்ய அழைக்கப்பட்டிருக்கும் நானோ, இப்படிப்பட்ட கல்வி இல்லாதவனும், ஆங்கிலத்தில் ஏதுமே கற்காதவனுமாய் இருக்கின்றேன். ஆதலால் நீங்கள் என்னிடமிருந்து முந்திய உபன்யாசகர்கள் உபன்யாசித்தது போன்ற அருமையான விஷயங்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நான் கல்வி என்பதைப்பற்றி ஏதாவது பேசுவதென்றால் பள்ளிக்கூடத்தின் மூலமோ, புஸ்தகத்தின் மூலமோ கற்ற கல்வி என்பதைப் பற்றி ஏதுமே பேசமுடியாது. ஆனால் ஏதோ எனது பிரத்தியட்ச அனுபவத்தின் மூலம் கேள்வி மூலம் கல்வி என்னும் விஷயமாய் நான் கொண்ட ஏதாவது சில அபிப்பிராயங்களைப் பற்றித்தான் சிறிது பேசமுடியும்.ஆனால் அவை அனேகமாகப் பள்ளிக் கூடக்கல்விக்கும் புஸ்தகக் கல்விக்கும் மாறுபட்ட அபிப்பிராயமாக இருந்தாலும் இருக்கலாம். ஆதலால் நீங்கள் நான் சொல்வதை ஆதார மாய்க்கொள்ளாமல் ஒரு தனி மனிதனின் கேள்வி அனுபவ அபிப்பிராயம்
243 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
என்கின்ற முறையில் கவனித்து அதை அலசிப் பார்த்து ஒப்புக்கொள்ளத் தக்க விஷயம் ஏதாவது இருக்கின்றதா என்று கவனித்து அவற்றுள்
உங்களுக்கு பிடித்தது ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு மற்றதை குப்பையில் தள்ளிவிடுங்கள். அந்த உணர்ச்சியோடு தான் மற்றும் எந்த விஷயத்தையும் கவனிக்க வேண்டு மென்பது முறையானாலும் சிறப்பாக நான் சொல்லும் விஷயத்தை நடு நிலையில் இருந்து நன்றாய் யோசித்துப் பார்த்த பிறகே அதை மதியுங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
கல்வி முற்கால கல்வி
சகோதரர்களே! கல்வி விஷயத்தில் இந்த சகாப்தத்தில் இருக்கும்
மக்கள் மிகவும் மேன்மை பெற்றவர்களே ஆவார்கள். ஏனெனில் முந்திய சகாப்தத்திற்கும் பிந்திய சகாப்தத்திற்கும் கல்வி கற்பிப்பதில் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. முதலாவது நம் சகாப்தத்திற்கு முந்திய காலத்தில் இன்ன இன்னார் தான் கல்வி கற்பிக்க உரிமையுடைவர்கள் என்கின்ற நிபந்தனை இருந்தது. இன்ன இன்ன விஷயந்தான் கற்பிக்கப்படலாம் என்கின்ற நிபந்தனையும் இருந்தது. இதோடு மாத்திரமல்லாமல் இன்ன இன்னார்தான் கல்வி கற்பிக்கப்பட உரிமையுடையவர்கள் என்கின்ற நிபந்தனையும், இன்ன இன்னவர்களுக்கு எழுத்துவாசனையே கற்பிக்கப் படக்கூடாது என்கின்றதான நிர்ப்பந்தமும் இருந்து வந்தது. இந்த மாதிரி யான நியமங்களினாலும், நிர்ப்பந்தங்களினாலும் கல்வி என்பது “மூடுமந்தி
ரம்” போன்று ஒரு ரகசியப் பொருளாகவே இருந்து வந்தது. இந்தக் காரணங்களால் முற்காலங்களில் ஆயிரத்தில் ஒருவர் இருவரே கல்வி கற்றவர்கள் என்று சொல்லும்படியான மாதிரியில் இருந்து வந்ததோடு கல்வி கற்றவர்கள் என்பவர்களே எல்லா மக்கள்மீதும் எல்லாக் காரியத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாய் இருந்து வந்தார்கள். அன்றியும் மேல் சொல்லப்பட்ட இந்த நிபந்தனைகளும், ஆதிக்கங்களும், எல்லாம் மக்கள்
பிரிவில் ஒரு தனிபிரிவார் மாத்திரம் அதுவும் பிறவிகாரணமாய் உரிமை கொண்டாடத் தக்கதாய் இருந்து வந்ததே அல்லாமல் மற்றபடி பொதுத் தகுதியைக் கொண்டதாகவோ, எல்லோருக்குமே சம உரிமையைக் கொண்டதாகவோ சிறிதும் இருந்து வரவில்லை.
சாதாரணமாய் நமது இந்தியாவை முழுவதும் எடுத்துக்கொண்டு பழைய கல்வி போதனாமுறை என்பதை ஒரு முறையாக வைத்துப் பார்ப்போமானால் இந்தியாவில் உள்ள 35 கோடி மக்களில் 17 Y, கோடி மக்களான பெண்களுக்கு எந்தக்காரணத்தைக் கொண்டும் கல்வி கற்பிக்க முடியாததாகும். மற்றொரு பிரிவில் 7 கோடி ஜனசமூகம் ஆகிய தாழ்த்தப் பட்ட மக்கள் என்பவர்கள் விஷயத்திலும் படிப்பு என்பது நினைப்பதற்கே முடியாத காரியமாய் இருக்கும். மற்றும் பார்ப்பனர்கள், அரசர்கள், வியா பாரிகள் என்கின்ற வெகு சிறிய கூட்டத்தார்கள் மாத்திரம் கல்வி கற்க
குடி அரசு - 1931 (2) 244.
உரியவர்களாவார்கள். அவர்களிலும் கல்வி கற்பிப்பதில் பிரிவுக்கு பிரிவு வித்தியாசமிருக்கும்.
இன்றைய கல்வி
ஆனால் இன்றைய கல்வி போதனை விஷயத்தில் இவ்வித வித்தியா சங்கள் ஏதும் இல்லாமல் யாருக்கும் யாவரும் கல்வி கற்பிக்கப் படலாம் என்கின்ற ஒரு நியமம் இருந்து வருகின்றது. ஆகையினால் நான் முந்திய சகாப்தங்களை விட பிந்திய சகாப்தம் கல்வி விஷயத்தில் பாராட்டக் கூடியது என்று சொன்னேன். ஆனபோதிலும் கல்வியின் இன்றைய லட்சிய மும் கற்பிக்கும் போதனாமுறையும் பாராட்டக்கூடியது என்பதாகச் சொல்லிவிட முடியாது.
ஏனெனில் கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும்.
அதாவது ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர்பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்ட வேண்டிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய ஞானத்தோடு வாழத் தகுதியுடையவனாக வேண்டும் என்பதேயாகும். அன்றியும் கல்வி கற்பிக்கும் கடமையில் இருக்கும் ஒவ்வொருவரும் கல்வியின் அவசியத்திற்கு இந்தக் காரணங்களைத்தான் சொல்லுகின்றார்
கள். கற்பிக்கப்படுபவர்களும் இந்த எண்ணத்தின் மீதுதான் தாங்கள் கற்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கல்வியின் பயன் இந்த லக்ஷியத்திற்கு அனுகூலமாயிருக்கின்றதா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.
பொதுவாக, எந்த தேசீயத்திலுமே மக்களுக்கு கல்வி கற்பிக்கும் பொருப்பில் இருப்பவர்கள் எல்லோரும் கல்வி போதிக்கும் விஷயத்தில் ஒருவிதமான உள் கருத்தை வைத்துதான் அதை கல்வியின் மூலம் போதிக்
கும் முயர்ச்சியில் இருந்து வருகின்றார்கள். அந்த மாதிரியான உள் கருத்தை போதிப்பதில் கல்வியானது மக்களுக்கு அறிவுக்கும் வாழ்க்கையில் சுதந்திர மாய் வாழ்வதற்கும் பயன்படுகின்றது என்கின்ற கொள்கையை விட தாங்கள் கொண்ட உள் எண்ணத்தையே மிகமுக்கியமாய் கருதுகின்றார்கள். உதாரணமாக ஒரு தேசத்தார் தேசபக்திக்கு ஏற்ற கல்வி இருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். மற்றொரு தேசத்தார் மத பக்திக்கு ஏற்றதான கல்வி வேண்டுமென்று கருதுகிறார்கள். மற்றொருவர் வீரம் ஏற்படவேண்டுமென்று
கருதுகிறார்கள். இன்னொருவர், அந்த நாட்டு பழமையான பழக்க வழக்கம் ஏதோ ஏற்படுவதற்குத் தகுந்ததாயிருக்கவேண்டுமென்று கருதுகின்றார்கள். மற்றும் சிலர் கடவுள் பக்தி புகட்டுவதற்கு அனுகூலமாய் பார்க்கின்றார்கள்.
245 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இப்படியாகவே பல உட்கருத்துகளை பிரமாதமாய் கருதி கல்வி முறை ஏற்படுத்துவதில் கல்வியின் உண்மையான பிரயோஜனம் ஏற்படாமலே
மறைந்து போய்விடுகின்றது.
கல்வியும் மதமும்
இந்தக் காரணங்களால் கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளாய் இருக்கமுடியாமல் எந்த உள் காரணத்தை வைத்து கற்பிக்கப்பட்டார்களோ அதற்கு மாத்திரமே பயன்படுகின்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள். கல்வி கற்பிப்பதில் இக்குறைபாடுகள் தவிர மற்றொரு பலமான கெடுதி என்ன வென்றால், கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக் காக கல்வி என்பது மாறி முட்டாள் தனமும், விசாரணைஅற்ற தன்மையும் வருவதற்கே கல்வி பயன்படும்படியாக ஆகிவிடுகின்றது. இது இன்று
உலகத்தில் இரண்டொரு தேசம் தவிர மற்ற தேசங்களிலெல்லாம் நடந்து வரும் சம்பவமாகும்.
இதற்கு காரணமென்ன வென்றால், கல்வியின் பொருப்பு எல்லாம் மதங்களினுடையவும், மத ஸ்தாபனங்களினுடையவும் ஆதிக்கத்தில் சிக்கி மதபோதகர்கள், மதகுருக்கள், மதத்தலைவர்கள் ஆகியவர்களால் நடத்தப் பட்டு வருகின்றவைகளாய் இருப்பதே காரணமாகும்.
மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்ப தில்லை. ஏனெனில் அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின்
மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழிமரித்து கண்மூடித்தனமான செயர்க் கையில் திருப்புவதையே ஜீவநாடியாய் கொண்டிருக்கின்றது. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடமில்லா மலே போய் விடுகின்றது. எப்படி எனில் மதங்கள் என்பவைகள் எல்லாம், ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் இருந்தே காணப்படுபவைகள்
ஆகும்.
ஆகவே, மத சம்பந்தமான கொள்கைகள், அபிப்பிராயங்கள், முதலியவைகள் எல்லாம் அந்தக் காலத்திய உலக நிலை, அறிவு நிலை, ஆராய்ச்சி சவுகரிய நிலை, கல்வி நிலை ஆகியவைகளுக்கு ஏற்றவை களாகவே இருக்கும். ஆதலால் அவை இந்தக்கால அறிவு, ஆராய்ச்சி சவுகரியம் முதலியவைகளுக்கு ஏற்றதாக இருக்க முடியாது. இந்த குறைபாடானது உலக தோற்றத்தின்-மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தன்மையிலும் இருக்க வேண்டியதாகிவிட்டது. ஆதலால் கல்வியும்
மதமும் கலந்தால் அறிவு சூன்யமாக வேண்டியதைத் தவிர வேறில்லை.
குடி அரசு - 1981 (2) 246
பகுத்தறிவும்-மதமும்
உதாரணமாக தற்கால நிலைமையின் பயனாய் ஏற்பட்ட ஆராய்ச்சி சவுகரியத்தை கைகொண்ட ஒரு வான சாஸ்திரி கிரகணத்திற்கு காரணம் சொல்லுவதாய் இருந்தால், அவன் பூமியுடையவும், சூரியனுடையவும் நடப்பைக் கொண்டு கணக்குபோட்டு பார்த்து ஒன்றின் நிழலால் மற்றொன்
நின் ஒளி இன்ன காலத்தில் இன்ன அளவுக்கு மறைக்கப்படுகின்றது என்று சொல்லுவான். இதே விஷயத்தைப் பற்றி மத சாஸ்திரியை கேட்டால் அவன் சூரிய, சந்திரன்களுக்கு ஏற்பட்ட சாபத்தின் பயனாய் றாகு,கேது என்னும் இரண்டு கெட்ட கிரகங்களால் ஏற்படும் பீடைகள் என்று சொல்லுவான்.
இதில் இருக்கும் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், ஒரே ஆசாமி வானசாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக்கும்போது பூமியின் நிழ
லால் மறைக்கப்படுகின்றதென்றும் மத சாஸ்திரியாய் இருந்து பாடம் கற்பிக் கும்போது சூரியன், சந்திரன் என்னும் தேவர்களை றாகு,கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றன என்றும் சொல்லுவான்.
இதுமாத்திரமல்லாமல் வானசாஸ்திரியாய் இருந்து சூரியக்கிரகணத் தன்மையைப் பிரதியட்சப் பாடமாக சில சாதனங்களைக் கொண்டு பிள்ளை. களுக்குப் பாடம் கற்புவித்துவிட்டு வீட்டுக்குப் போனவுடன் றாகு, கேது பாம்புகள் விழுங்குகின்றன என்பதற்குத் தகுந்தபடி தோஷ பரிகாரத்திற்கு ஸ்நானம் செய்யவும் தற்பணம் செய்யவும் சங்கல்பம் செய்து கொள்ளவும் சாந்தி செய்யவுமான காரியத்தில் ஈடுபடுகின்றான். ஆகவே கல்வியுடன்
மதத்தையும் கலக்குவதால் மனிதனுடைய பகுத்தறிவும் அறிவு சுதந்திரமும் எவ்வளவு கேவலமான நிலைமைக்கு வந்து விட்டது என்பதை நினைத்துப் பாருங்கள்.
அதிலும் நமது மதசம்பந்தமான அபிப்பிராயங்களும், குறிப்புகளும்
மிகமிகப் பழமையானதினால் காட்டுமிராண்டித்தனமான காலத்து எண்ணங் களையும் அதன் முடிவுகளையும் இன்று எவ்வளவோ தெளிவான காலத்
தில் கட்டிக்கொண்டு அழுவதுடன் அதைக் கல்வியுடன் கலக்கி கல்வி யையே பாழ்படுத்தி விட்டோம்.
உபாத்தியாயர்கள்
இன்றைய கல்வியில் முக்கியமாக நமது நாட்டுக் கல்வியில் இருக் கின்ற ஆபத்தும் பயனற்ற தன்மையும் எதனால் என்று பார்ப்போமானால் நமது கல்வி போதகர்கள் எல்லாம் மதத்தின் சாக்கினால் மேன்மையடைந்து வருகின்றவர்களாகவே ஏற்பட்டு விட்டதாகும். மதம் என்னும் உலோகத்தி னால் ஒரே அச்சில் உருக்கி வார்க்கப்பட்ட உருவங்களேதான் இன்று பெரிதும் உபாத்தியாயர்களாக அமைந்து இருக்கின்றார்கள். இம்மாதிரி
247 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உபாத்தியாயர் களிடம் படிக்கும் பிள்ளைகளுக்குக் கல்வியினால் எப்படி அறிவும் சுதந்திர ஞானமும் உண்டாகமுடியும் என்பதை யோசித்துப் பாருங்கள். அறிவு வேறு மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டு பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளரவிடாமல் செய்து விட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?
இரண்டும் இரண்டும் ஐந்து என்றால் எப்படி ஐந்து? என்று கேள்க் கக்கூட உரிமை இல்லாதமுறையில் கல்விகற்பித்தால் கணக்கில் ஒரு மனிதன் தேர்ச்சிபெற முடியுமா? அதுபோலவே இயற்கை விஷயங்களில் காட்டுமிராண்டிக் காலமுதல் கர்ண பரம்பரையாக கேட்டு வந்த சேதியையே சொல்லிக்கொண்டு அதையே போதித்து வந்தால் அதன் மூலம் எப்படி இயற்கை அறிவு ஏற்படுத்த முடியும்?
பிள்ளைகளுக்கு சுதந்திர ஞானம் பரவச்செய்யும் கல்விக்காக சில தப்புகள் செய்ய வேண்டி வந்தாலும் அனுமதிக்கத்தான் வேண்டும். ஆனால் அத்தப்பிதத்தை அனுமதிக்கும் முறையில் வேண்டுமானால் நாம் சற்று ஜாக்கிரதையில் இருந்து அத்தப்பிதத்தினால் ஏற்பட்ட பயனைக்கொண்டு பிரத்தியட்ச அனுபவ அறிவுபெறத் தகுதியாக்கவேண்டும். உபாத்தியாயர். களின் புத்திசாலித்தனத்தை இங்குதான் பார்க்கவேண்டுமேயொழிய எதிரொலிபோல் கூப்பாடு போட்டு உறுப்போடவும் கண்மூடித்தனமாய் விஷயங்களைப் பதிய வைக்கவும் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. ஆகவே நமது கல்வியின் ஜீவநாடி எல்லாம் லக்ஷியத்திலும் போதனா முறையிலும் தான் இருக்கின்றது. உபாத்தியாயர்கள் பகுத்தறிவாளர்களாய் இருக்க வேண்டும். அறிவின் முடிவின்படி நடப்பவர்களாய் இருக்க வேண்டும்.
பிரார்த்தனை
இன்று இங்கு இந்த விழா துவக்கப்படுமுன் நிகழ்ச்சி குறிப்பில் குறிப்பிட்டிருந்த பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய் நடிப்பு நடிக்கப் பட்டதானது உங்களுக்குத் தெரியும். பிரார்த்தனை என்று தலைவர் சொன்ன வுடன் சில பிள்ளைகள் வந்தார்கள், கைகட்டினார்கள்,கண்களை மூடிக் கொண்டார்கள், “ஜனகணமன....” என்று எதையோ சொன்னார்கள். அது போலவே சிலபெண்கள் வந்தார்கள். கைகட்டினார்கள். கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்கு பெயர் பிரார்த்தனை
யாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு ஆகவாம், நண்பர்களே! இதில் ஏதாவது அறிவோ நாணையமோ இருக் கின்றதா? என்பதை நிதானமாய், பொருமையாய் யோசித்துப்பாருங்கள். தயவு செய்து ஆத்திரப்படாதீர்கள்.
குடி அரசு - 1981 (2) 248
கடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கியமானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லி வருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல் குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில் இருந்ததா? பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்று சிறுவர்கள் அவர்களுக்கும் அவர்களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை இந்த சபையில் உள்ள சுமார் ஒரு ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து சொல்லிவிட்டு போவது என்றால் இதற்கு சமமாக எதை சொல்லுவது?
அநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல்லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள், புரியாத கருத்துக்கள் கொண்ட பாடல்களாகவும் வாக்கியங்களாகவும் இருக்கின்றனவே தவிர பக்தி என்பதற்கு பொருத்த மானதாய் இருக்கின்றதா? பாருங்கள். எந்த பக்தி பாட்டும் சங்கீத பிரதானி
யத்திலும், இலக்கண இலக்கிய பிரதானியத்திலும், வேஷப் பிரதானியத்
திலும், சடங்குப் பிரதானியத்திலும் இருக்கின்றதே தவிர உண்மை பிரதானி
யத்தில் சிறிதாவது இருக்கின்றதா? பாருங்கள். இந்த மாதிரிவேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப்பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்த பக்திக்கு ஏதாவது ஒரு துரும்பளவு யோக்கியதையாவது இவர்களது பிற் கால வாழ்வில் உண்டாகிறதா? என்று யோசித்துப்பாருங்கள்.
மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத்தையும் நாணையக்குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா?' இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள்.
பெண்கள்
அன்றியும் இந்தமாதிரியான மதம் கலந்த கல்வியானாலும் வேஷத் தன்மையானாலும் நமது பெண்கள் நிலையும் மிகவும் மோசமாகி விடு கின்றது. அவர்கள் மதத்தையும் பக்தியையும் வாழ்க்கையில் பிரமாதப்
படுத்தி அதனால் பெண் சமூகம் முன்னேறவே மார்க்கம் இல்லாமல் செய்து கொள்ளுகின்றார்கள். பெண்களை இன்றையதினம் ஒரு உபாத்தியாயராக வாவது இருக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது மதமும் பக்தியும் அல்லவே அல்ல. ஆனால் மதமும் பக்தியும் தான் அவர்களை இதுவரை அடிமைகளாக்கி வைத்திருந்தது. அவையெல்லாம் மாறி அவர்களுக்கு சிறிதளவாவது சுதந்திரமேற்படக் காரணம் மதத்தை அலட்சியம் செய்து செய்யப்பட்ட சீர்திருத்த பகுத்தறிவு உணர்ச்சியல்லவா? அப்படிப்பட்ட பெண்மக்கள் இப்போது சிறிது விடுதலை பெற்று உபாத்தியாயரான பிறகு
தங்கள் அடிமைத் தனத்திற்கு காரணமாய் இருந்த மதத்தை பிள்ளைகளுக்கு கல்வியுடன் புகுத்துவார்களானால் அவர்களை மத சம்பிரதாயத்தில்
249 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஈடுபடுத்துவார்களே யானால் இவர்களிடம் நமது பிள்ளைகளை ஒப்புவிக்க லாமா? என்பது பயமாகவே இருக்கின்றது.
இப்பெண்கள் கண்மூடித்தனமாய் மதத்தில் ஆழ்ந்து கல்வியோடு அதை கலக்கி குழப்புவதிலிருந்து அவர்கள் மருபடியும் அடுப்பூதவும், சட்டி சுரண்டவுமான உலகத்திற்கு போக ஆசைப்படுகின்றார்கள் என்றுதான் விளங்குகின்றது. இனி பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கும் வேலை முழுவ
தும் பெண்களுக்கே கொடுக்க வேண்டும் என்று எண்ணிய என் போன்ற வர்கள், மனதெல்லாம் பெண் உபாத்தியாயர்கள் நிலைமையைப் பார்த்த பிறகு மனம் பயப்படுகின்றது.
ஆகவே, பெண் உபாத்தியாயர்கள் பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமேயொழிய ஆண் உபாத்தியாயர்களை பின்பற்றக்கூடாது என்று
கேட்டுக் கொள்ளுகிறோம். இல்லாதவரை தங்கள் பழய தொழிலுக்காவது போய்விடவேண்டும். குழந்தைகளை கெடுத்து விடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
தேசீயம்
தவிர இந்த லக்ஷணத்தில் உள்ள கல்வியோடு இப்போது வரவர: தேசபக்தி என்பதாக ஒன்று புகட்டப்பட்டு விடுகின்றது. இது அறிவு வளர்ச்சிக்கு மற்றொரு ஆபத்தான காரியமாகும். கடவுள் பக்தி, மத பக்தி ஆகியவைகளைப் போலவே இந்த தேச பக்தியும், மனிதனின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கி விடுகின்றது. அதிலும் நமது நாட்டு தேசபக்தியோ நினைப்பதற்கே பயங்கரமானதாய் இருக்கின்றது. தேசபக்தியும், தேசீயமும் பழமையைப் பார்த்துக் கொண்டு பின்னால் போகப்பார்க்கின்றதே தவிர முன்புரம் திரும்பிப் பார்ப்பதில்லை. முற்போக்கில் கவலைகொள்வதில்லை. தேசீயத்திற்கும் புதியதுக்கும் ஜென்மப் பகையாய் இருந்து வருகின்றது. தேசீயம் என்றாலே பழமை என்றே கருதப்பட்டு விட்டது. புதுமை என்றாலே தேசத்துரோகம் என்றாய்விட்டது.
ஆகவே, கல்வி என்று பேர் வைத்து அதன் சாக்கில் மதத்தை போதித்து தேசியம் என்ற உணர்ச்சியையும் அதன் மூலமாகவே ஏற்றி விட்டால் குரங்குக்கு கள்வார்த்தது போல் தான் ஆகுமே தவிர அங்கு
பகுத்தறிவுக்கும்,ஆராய்ச்சிக்கும், முற்போக்குக்கும், சுதந்திரத்துக்கும் இடமே இல்லாமல் போய்விடும். இந்தக் காரணம் தான் உலகத்தில் இந்தியாவுக்கு மாத்திரம் கீழ்படியில் முதல் ஸ்தானம் கிடைத்திருக்கின்றது.
முடிவுரை
ஆகவே, கல்வி கற்பிப்பதை விட கல்வியின் லக்ஷியத்தையும், போதனையின் தன்மையையும் மாற்ற வேண்டியது இந்தியாவுக்கு மிகவும்
குடி அரசு - 1981 (2) 250
அவசியமானதாகும் என்பதே எனது அபிப்பிராயம். நண்பர்களே! ஏதோ கல்வி என்னும் தலைப்பின் கீழ் எனக்குப் பட்ட, நான் சரியென்று கருதிய சில விஷயங்களை தங்களுக்கு விண்ணப்பித்துக் கொண்டேன். இவற்றை நன்றாய் அலசி பார்க்க வேண்டுமாயும், அதாவது சரி என்று பட்டால் மாத்திரம் எடுத்துக்கொள்ளும் படியாகவும் தப்பாயிருந்தால் தயவு செய்து உடனே மறந்து விடுங்கள் என்றும் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
குறிப்பு:1709951அன்று ஈரோடுமகாஜன ஹைஸ்கலில் ஸ்டூடன்ஸ் விட்டரரி அசோசியேஷன் என்னும் மாணவர் இலக்கிய சங்க வருட ஆரம்பநாள் விழாவில் ஆற்றிய உரை:
குடி அரசு - சொற்பொழிவு - 27.09.1931
251 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
புதுக்கோட்டை
இச்சென்னை மாகணத்திலிருக்கும் 2, கோடி மக்கள் உள்ள தமிழ் நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஒன்றுதான் தமிழ்மன்னர் ஆட்சியில் இருந்து வருகிறது என்று சொல்லக்கூடியதாகும்.
ஆனாலும் அதுவும் வெகுகாலமாகவே பார்ப்பன ஆதிக்க ஆட் சிக்கே அடிமையாயிருந்து வந்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முன் வரமாட்டார்கள். ஆட்சி முறை மாத்திரம் தான் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்த தென்று சொல்லிவிட முடியாது. அச்சமஸ்தான பட்டத்திற்கு
வரும் அரசர்கள் வாரிசிலும் அரசு செலுத்தும் முறையிலும் பார்ப்பன ஆதிக்கம் புகுந்து அச்சமஸ்தானம் பார்ப்பனர்கள் இஷ்டப்படி ஆட்டு விக்கப்பட்டதாய் இருந்து வந்திருக்கின்றது.
புதுக்கோட்டை ராஜியபார பட்டத்திற்கு வரவேண்டியவர் அரசரின் குமாரர் என்பது அச்சமஸ்தானத்தின் சட்டமாயிருந்தாலும் பார்ப்ப
னீயத்தின் காரணமாகவே வருணாச்சிரமக் கொள்கை தாண்டவமாடி அரச குமாரருக்கு பட்டமில்லாமல் வேறு ஒருவருக்குப் பட்டம் ஏற்பட்டது.
அந்தப்படி வேறு ஒருவருக்கு ஏற்பட்ட பட்டமும் ஒரு சிறு குழந்தைக்கு ஏற்பட்டதால் அக் குழந்தை பெரியதாகி பட்டம் ஏற்க இனியும் 10 வருஷ
காலத்திற்கு மேலாகவே செல்லக்கூடிய நிலைமை உண்டாகி அதற்கு பார்ப்பனர் ஒருவர் ரீஜண்டாக நியமிக்கப்பட்டு அவ்வரசாட்சியானது பார்ப்பனீய ஆட்சி என்று சொல்லும்படியாகவே இதுவரை அரசாட்சி
நடந்து வந்திருக்கின்றது.
அச்சமஸ்தானத்திற்கு வெளியில் அதாவது பிரிட்டிஷில் எப்படி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சி ஏற்பட்டதோ அது போலவும், இம்மாகாணத்திலுள்ள மற்ற சுதேச சமஸ்தானங்களில் எல்லாம் எப்படி அவ்வுணர்ச்சி ஏற்பட்டதோ அதுபோலவும் புதுக்கோட்டையிலும் சற்று ஏற்பட்டு அச்சமஸ்தான உத்தியோகங்களில் சிலவற்றையாவது இரண்டொரு பார்ப்பனரல்லாதாருக்கும் கொடுக்க வேண்டியதாயிற்று.
குடி அரசு - 1981 (2) 252
இந்தக்காரணமே அதாவது பார்ப்பனரல்லாதாருக்கு அரசாங்கத்தில் சில உத்தியோகங்கள் கொடுக்கும் காரணமே எப்படி அச்சமஸ்தானத்திற்கு வெளியிலுள்ள மற்ற இடங்களிலும் தேசீயம் என்றும் காங்கிரஸ் என்றும் கூப்பாடு போட்டு பாமர ஜனங்களையும் முட்டாள் ஜனங்களையும் அரசாங் கத்திற்கு விரோதமாக கிளப்பி விட்டும், கஞ்சிக்கு வகையற்ற ஆட்களைப் பிடித்து கூலி கொடுத்தும் பார்ப்பனரல்லாத அதிகாரிகளையும் பிரதிநிதி களையும் அரசாங்கத்தையும் வையும்படி தூண்டிவிடப்படுகின்றதோ அது போலவே புதுக்கோட்டையிலும் அவ்வரசாங்கத்தின் மீது வெறுப்பு உண்டா
கும் படியாகவும் அங்குள்ள பார்ப்பனரல்லாத அதிகாரிகள் மீதும் ஜனப் பிரதிநிதிகள் மீதும் துவேஷம் உண்டாகும்படியும் தாராளமாய் பார்ப்பனர். களால் “தேசீய” பிரசாரமும். “காங்கிரஸ” பிரசாரமும் செய்யப்பட்டு வந்திருக்கின்றதையும், யாரும் மறுக்க முடியாது. உதாரணம் வேண்டு மானாலும் பல எடுத்துக்காட்டலாம்..
அச்சமஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுக்க ஏற்பட்டது முதல் இதுவரை சமஸ்தானத்திற்கு விறோதமாய் பிரசாரம் செய்யப்பட்டதாகவும், ஜனங்களை கிளப்பி விட்டதாகவும், திருவாளர்கள் சுந்திரேசய்யர், சாமிநாதய்யர், விஸ்வநாதய்யர், சுப்ரமணிய அய்யர், ராம கிருஷ்ணய்யர், நாகரத்தினமய்யர், சென்னை எஸ்.சத்தியமூர்த்தி அய்யர் முதலிய அனேக பார்ப்பனர்கள் மீதே புதுக்கோட்டை அரசாங்கம் நட வடிக்கை எடுத்து இருப்பதும், இன்னமும் சில பார்ப்பனர்களை சமஸ் தானத்துக்குள் இருக்கக் கூடாதென்றும், பிரவேசிக்ககூடாதென்றும், போடப் பட்ட தடை உத்திரவுகள் அமுலில் இருப்பதும் போதுமான அத்தாக்ஷி
யாகும்.
இந்தப்படி பார்ப்பனரல்லாதாருக்குள் இதுவரை ஒருவராவது அவ்வரசாங்கத்தின் மீது துவேஷம் உண்டாகும்படியாக பிரசாரம் செய்த தாகவோ மக்களை தூண்டி விட்டதாகவோ நமக்கு தெரிந்த அளவில் எவரும் இருந்ததாக சொல்லமுடியவில்லை. நாம் பார்த்தவரை எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவரவுமில்லை. இந்த நிலையில், இதுவரை அங்கு நடந்து வந்த தேசீய காங்கிரஸ் பிரசாரத்தின் பயனாய் அங்குள்ள பொது ஜனங்களுக்கு அரசாங்கத்தினிடம் ஒருவித வெறுப்பு ஏற்பட்டிருந்த சமயத்தில் சமஸ்தானத்தில் புதிதாக வரியும் உயர்த்தப்பட்டுவிட்டது.
இந்தவரி உயர்த்தப்பட்ட சமயமானது சற்று பொருளாதார நெருக்க டியுள்ள சமயமாய் இருந்தபடியால் ஜனங்களுக்கு ஏற்கனவே அரசாங்கத்
தின் மீது ஏற்படுத்தப்பட்டிருந்த வெறுப்புக்கு இவ்வரி உயர்வானது புகைந்து கொண்டு இருக்கும் நெருப்பின் மீது நெய் வார்த்து ஊதிவிட்டது போல் ஆகிவிட்டதால் ஜனங்கள் சற்று ஆத்திரமடைந்து வரிஉயர்வுக்கு எப்படியாவது பரிகாரம் தேடவேண்டியவர்களானார்கள். ஜனங்களின் ஆத்திரத்தோடு கூடிய இந்த முயர்ச்சியை சமாளிக்கத் தகுந்த ராஜதந்திரம் 253 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இல்லாத காரணத்தாலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்ப்பனர்களாய் இருந்து கொண்டு அச்சமஸ்தானத்தில் பெருவாரியாய் இருக்கும்பார்ப்பனரல்லாத மக்களிடம் அனுதாபமில்லா
மலும் ஏழைகளின் கஷ்டத்தை கவனிக்காமலும், தகுந்தபடி சமாதானம் சொல்லி திருப்தி செய்யாமலும் இருந்ததாலும், மேல் குறிப்பிட்டபடி அரசாங்கத்தின் மீது ஏற்கனவே வெறுப்பு ஏற்பட்டு இருந்ததோடு அரசாங்க ஆட்சிக்கு பார்ப்பன அதிகாரிகளும் ஆதிக்கமுமே காரணம் என்பதாக பொது ஜனங்கள் கருதி குழப்பத்தில் பிரவேசித்து இருக்கலாம் அல்லது இந்த குழப்பமானது அரசாங்க அதிகாரிகள் மீதும் காரியாலயங்களின்
மீதும் பிரயோகமாகும் போது அதிகாரிகள் பெரிதும் பார்ப்பனர்களாயிருந்த படியால் அவர்கள் மீதும் தங்கள் கண்ணோக்கங்கள் செலுத்தப்பட்டி
ருக்கலாம்.
இதன் பயனாய் பார்ப்பன அதிகாரிகளும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளும் கஷ்டப்பட்டார்கள் என்று சொல்வதனாலும் இக்கலகத்தை “தூண்டி விட்டவர்” என்று பார்ப்பனர்களால் கட்டுப்பாடாய் பிரசாரம் செய்யப்பட்டும் பார்ப்பனரல்லாத அதிகாரியான போலீசு கமிஷனருக்கே தான் அதிகமான கஷ்டமும், உயிருக்கே ஆபத்தும் ஏற்படும்படியான பலாத்கார செய்கைகளின் பலன்களும் ஏற்பட்டிருக்கின்றன. அரசாங்க காரியாலயங்களும் தாக்கப்பட்டன.
இந்த நிலையில் இனி இச்சம்பவங்களின் உண்மையை நடுநிலைமை:
யில் இருந்து அறிய முற்படவேண்டியது நியாயம் என்பதையும் இச் சம்பவத்திற்கு தகுந்த பரிகாரம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதையும் யாவருமே மறுக்கமாட்டார்கள்.
மேல் கண்ட சம்பவ சம்பந்தமாக, சம்பவத்திற்கு பின் நடந்த நடவடிக்கைகள் எப்படிப்பட்டது என்பதை முதலில் சற்று யோசிப்போம். அதென்ன வெனில் அங்கு ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த பார்ப்பனர். எல்லாம் ஒன்று கூடி அச்சம்பவங்களுக்கு உண்மையாய் இருந்த காரண காரியங்களை நன்றாய் மரைத்து சம்பவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தப் பட்டிறாததான “பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார். உணர்ச்சி” என்றும் “அதற்கு சுயமரியாதை இயக்க பிரசாரமே காரண” மென்றும் ஒரு கதை கட்டிவிட்டு இக்கலக விசாரணை என்பதை ஆதாரமாய் வைத்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் முன்னேற்ற உணர்ச்சியை அடியோடு ஒழிக்கவும், சுயமரியாதை இயக்கத்திற்கு எதிர் பிரசாரம் செய்யவும் ஆன காரியங் களுக்கு உபயோகித்துக் கொண்டார்கள்.
மேலும், அந்த சமஸ்தானத்தில் இனி எந்த எந்த பார்ப்பனரல்லாதார் முன்னுக்கு வரக்கூடுமோ, அரசாங்கத்தில் உத்தியோகம், பதவி, பெருமை முதலியவைகள் அடையக்கூடுமோ, அப்பேர்பட்ட கனவான்களை யெல்
குடி அரசு - 1981 (2) 254
லாம் இந்த சாக்கைக்கொண்டே ஒழித்துவிடலாம் என்று கருதி அவர்கள். பேரிலேயே “கலகத்துக்கு இவர்களே ஆஸ்பதமானவர்கள்” என்பதான பழிகளை சுமத்தி அவர்களையெல்லாம் கஷ்டத்தில் கொண்டு வந்து விடத் தக்க ஏற்பாடுகளும் செய்தார்கள்.
இதன் பயனாய் திருவாளர்கள் முத்துசாமி வல்லத்தரசு பி.ஏ. பி.எல்,
எம்.எல்.சி உள்பட அனேக பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் பிடித்து சிறையில் அடைக்கச் செய்து விட்டார்கள். “காளை மாடு கன்றுபோட்டது என்றால் கன்றைப்பிடித்து தொழுவத்தில் கட்டு” என்று சொல்லும் தன்மை போல் திடீரென்று திரு.வல்லத்தரசை பிடித்து ஜெயிலில் அடைத்தார்கள்.
திரு. முத்துசாமி வல்லத்தரசு அவர்கள் குற்றவாளியாய் இருந்தால் தண்டிப்பதில் பாரபக்ஷம் காட்டும்படி நாம் யாருக்கும் யோசனை சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு பொருப்புள்ள கனவானை பெரும் பதவிக்கு வர அருகதை உள்ளவராய் இருக்கும் கனவானை ஏதோ ஒரு கலவரம் நடந்ததற்காக என்று அவரேதான் காரணஸ்தராய் இருந்தாரென்று ஒரு கதை கட்டிவிட்டதின் பயனாய் சிறையில் போட்டு அடைத்துக் கொண்டு “கலகத்தைப்பற்றி விசாரணை செய்து நியாயம் வழங்கு கின்றோம் என்று சொன்னால்” இச்செய்கைகளால் எப்படி சரியான நீதி கிடைக்க மார்க்கம் உண்டாகும் என்று நம்பக்கூடும்.
பார்ப்பனரல்லாத பிரமுகரான திரு.முத்துசாமி வல்லத்தரசை ஜெயிலில் வைத்து விட்டு “கலகத்திற்குக் காரணம் பார்ப்பனர் பார்ப்பன ரல்லாதார் உணர்ச்சியும் சுயமரியாதைப் பிரசாரமும் தான்” என்ற கற்பனையைப் பரப்பி விட்டு விசாரணை ஆரம்பித்தால் விசாரணையில் கலகத்திற்கு உண்மையான காரணம் வெளியாகக்கூடுமா என்பதை வாசகர்கள் தான் யோசித்தறிய வேண்டியது. முத்துசாமி வல்லத்தரசை ஜெயிலில் வைத்த உடனே அங்குள்ள பார்ப்பனரல்லாதார் எல்லோருமே பயந்து இருப்பார்கள் என்பதிலும் அங்குள்ள பார்ப்பனர்கள் எல்லோருமே தைரியங் கொண்டு எதுவேண்டு மானாலும் சொல்லலாம் என்று துணிந்திருப்பார்கள் என்பதிலும் சிறிதாவது சந்தேகத்திற்கு இடமிருக்க முடியுமா என்று கேள்க்கின்றோம்.
கலக விசாரணை அதிகாரிமுன் சாட்சிகொடுத்த பார்ப்பனர்கள் அத்தனைபேரும் அனேகமாய் ஒரே பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து பாடஞ் சொல்லிக்கொடுத்த பிள்ளைகளைப் போலும் ஒரு கிராமபோன் தட்டை திரும்பத்திரும்ப கேட்டால் எப்படி இருக்குமோ அதுபோலும் பெரிதும் ஒரேமாதிரியாகவே சாட்சி சொல்லி இருக்கின்றார்கள்.
அரசாங்கமானது தனது விசாரணையில் பாரபட்சமில்லாமல்
ப்பதை நன்றாய் காட்டிக் கொள்ள முயற்சி செய்திருக்குமானால் ஒன்! ரு த நன்று டி முயற்: ருக்கு ஒன்று
255 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்ற காரணத்திற்காக கலகம் நடந்தது என்பதாக அரசாங்கத்தார் நினைத்து விட்டார்கள் என்று ஜனங்கள் நம்பும்படியான தன்மையில் திரு. முத்துச்சாமி வல்லத்தரசை சிறைப்படுத்தா திருந்திருக்க வேண்டும். அல்லது அந்த மாதிரிஜனங்கள் கருதக்கூடாது சர்க்காரார் இன்னமும் ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று ஜனங்கள் நம்ப வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் பிராமணரிலும் சிலரை: சிறைப்படுத்தித் தங்கள் நடுநிலைமையை காட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
அந்தப்படி பார்ப்பனத் தலைவரான திரு.சாமிநாதய்யரையோ வேறு ஒரு தலைவரையோ பிடித்திருந்தால் கிராம்போன் பெட்டி போன்ற பார்ப்பன சாக்ஷியங்கள் ஒன்றுகூட தலைகாட்டி இருக்கமாட்டாது. அல்லது வேறு மாதிரியாகவாவது இருந்திருக்கும் என்பதோடு பார்ப்பனரல்லாதார். சாட்சிகளும் பயமில்லாமல் வந்து உண்மைகளைச் சொல்லியிருக்கும். அப்படிக்கில்லாமல் பார்ப்பனரல்லாதார் பிரமுகரை மாத்திரம் சிறைப் படுத்தியதால் உண்மை வெளியாவதற்கே மார்க்கமில்லாமல் போய்விட்ட தென்று பயப்பட வேண்டியதாய்த்தான் இருக்கின்றது.
இப்பொழுதும் ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை. ஏதோ ஒரு வழியில் பொதுவிசாரணை நடந்துவிட்டது. அதைப்பற்றிய அறிக்கையும் வெளியாகியிருக்கலாம்.
இனிமேல் கோர்ட் நியாயஸ்தல விசாரணை நடக்க வேண்டியிருக் கின்றது. இவ்விசாரணையில் உண்மை வெளியாக வேண்டியிருக்கின்றது. நடுக்கண்ட நியாயத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமையில் “அரசாங்கம் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் இருக் கின்றது, பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாயிருக்கின்றது” என்று பாமர: மக்களுக்குள் எண்ணம் ஏற்படாமலிருக்க வேண்டியது அவசியமாகுமா தலால் திரு.வல்லத்தரசை வெளியில் விட்டு அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துக்கொள்ளவோ அல்லது அரசாங்கம் இரு கட்சிக்கும் பொதுவாய் இருக்கிறார்களென்று கருதுவதற்காக பார்ப்பனர்களிலும் முக்கியமான ஒருவரை அடைத்து வைக்கவோ செய்யவேண்டியது நடு நிலைமை நியாயம் வழங்கப்பட வேண்டியதை உத்தேசித்து அவசியமான காரியமாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.09.1931
குடி அரசு - 1981 (2) 256
வைதீகர்கள் கூக்கால்
பரிகாரக் லசய்கிறார்கள்?
இந்திய நாட்டின்கண் வாழும் மக்களே! “வைதீகம்” செய்யும் கொடுமைகளை பிறந்த நாள் முதல் இறக்கும் வரை கண்கூடாகக் காணும் மானிடர்களே! நம்மை ஆதிக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் கொடுமை களை கண்ணுற்றும், போதாக்குறைக்குப் பிராமணர்கட்குத் தாசராய் அடிமை கொண்டு சுற்றித்திரியும் தலைவர்களே! காந்தியின் குட்டித்தலைவர்
கள் என்று சொல்லி, ஊர் ஊராய் பிரசங்கம் செய்யும் ராஜகோபாலாச் சாரியின் அடிச்சுவட்டை பின்பற்றும் தலைவர்களே! அடியேன் கீழே கொடுக்கும் உறையை நன்றாய் கவனித்து சுயமரியாதைக்காரர்கள். சொல்வது உண்மையா-பொய்யா என்று ஆராய்ந்து அதன்பின் வசைப் புராணம் தொடங்குவதை ஆரம்பியுங்கள். கூலிக்கு உண்மையையும், மானத்தையும் விற்கும் பேர்வழிகளைக் கொண்டு, பத்திரிகை நிரப்ப வேண்டி, வியாசம் எழுதும் சாம்பராணிகளே! கவனியுங்கள்! மந்தப் புத்தியை அகற்றி சொந்தப் புத்தியை கொண்டு பார்த்தால் அடியேன் சொல்லுவது உண்மை என்பது நன்கு புலப்படும்; இனி நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆராய்வோம்.
தென்னிந்திய நாட்டிலே தஞ்சை, திருச்சினாபள்ளி ஜில்லாக்களின் இந்திய சட்டசபை அங்கத்தினரான திருவாளர் வைதீகம் கிருஷ்ணமாச்சாரி
யார் இந்தியா சட்டசபையில் சாரதா மசோதாவிற்கு பங்கம் விளைவிக்க முயற்சி செய்து வருவதாகப் பத்திரிகைகள் மூலம் காணக்கிடக்கின்றது; ஐயோ! சிசுமணத்தால் பெண்மணிகள் அல்லற்படுவதை கண்ணாற் பார்த்தவர்கள் அறியக்கூடும். இக்கொடுமைகள் மேற்ஜாதி மக்களென்று பறை சாற்றும் பார்ப்பனர் ஜாதியில் கிடைப்பதைக் கிருஷ்ணமாச்சாரியார். பார்க்கவில்லை? “கண்ணிருந்தும் குருடனிடத்தில் படும் கஷ்டம் தெரிந்தும், அதனை மற்றவர்கள், அல்லற்படுவதை கண்டு தக்க வழி
257 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கண்டுபிடித்து வெகு ஆண்டுகளாய் அமுலில் கிடந்த மசோதாவை நன்னிலைமைக்குக் கொண்டு வந்த திரு.ஹிரிவிலாஸ சாரதா அவர்கள். செய்த சாரதா சட்டத்திற்கு அழிவுதேட புறப்பட்ட வைதீகப்பித்தரே! பார்ப்பனர் ஏஜண்டே! நமது ஆசாரப்படி செய்யாது, சட்டசபையில் மெம்பராக வீற்றிருக்கும் மமதை கொண்ட வைதீகரே! எமது ஆர்ப்பாட்டம் எத்தனை நாளைக்கு நடைபெறும், அதோடு நில்லாது, நமது கோஷ்டி களையும் தூண்டிவிட்டு, ஊர் ஊராகப் பிரசங்கம் புரியச் சொல்லி சாரதா சட்டத்தை அழிக்கப் பார்ப்பது உங்கட்குத் தருமமா? இதுதான் உயர். குலத்தில் உதித்தோமென்ற சொல்லிற்குப் பயனோ? என்னவிந்தை! என்ன கொடுமை!!! பார்ப்பனர்களே!!! முப்பத்துமுக்கோடி இந்திய மக்களில் சிலராகிய தாங்கள் யாவரையும் அடக்கி ஆள எத்தனித்த காலம் மலை யேறிப் போய் விட்டது. ஜெகசால புரட்டு மாய்ந்ததென்பதை அறியுங்கள். புத்துணர்ச்சி பெற்ற மக்களுண்டென்பதை நன்கு நிதானப் புத்தியுடனிருந்து யோஜித்து நாங்கள் சொல்வது உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நாங்கள்தான் தேசத்தலைவர்கள், சுயராஜ்யமின்றி வாழ்வது கூடா தென்று பறைசாற்றும் தொண்டர்களே, சாரதா சட்டம் குலைய கெடுக்கும் பார்ப்பனர்களை என்ன செய்தீர்கள், பத்திரிகைகளில் பாரத நாட்டிற்குப் பாடுபடுவதாக வரைந்து கொண்டு, அங்கு நடக்கும் கொடுமைகளை கவனஞ் செலுத்தாது-கூலிக்கு ஆசிரியராய் அமர்ந்து “பத்திராதிபர்”” என்ற மமதையால் எழுதிவிட்டால் போதுமா? புத்தியின்றி வாழும் மானிடர்கள் போன்று போக்குஇடம் கொடுத்து, பார்ப்பனர்கள் செய்யும் சாரதா மசோதா விற்குத் தடை செய்யும் திரு. கிருஷ்ணமாச்சாரியார் கூட்டத்திற்குத் தக்க சவுக்கடி கொடுக்க வேண்டாமா? அப்படிக்கில்லாது நான்தான் காந்தியின் குட்டித் தலைவர், என் சொற்படிதான் நடக்க வேண்டும், தேசமே எமது ஆட்சி, ஆங்கிலேயர் இந்நாட்டைவிட்டு ஓடவேண்டும், சுயராஜ்யம்
எங்கள் கையில் விரைவில் ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் லண்டன் சென்று போராடுவோம் என்றெல்லாமோ சொல்லும் எந்தாய் நாட்டில் வாழும் தேச பக்தர்களே! காந்தியின் பேரைச் சொல்லிக் கொண்டு.
நகர் நகராய் பணஞ்சேகரித்து அதற்குத் தலைவர் நாம்தானென்று சுற்றித்
திரியும் மணிகளே! உலகமக்கட்கு அதாவது சிசுக்கட்கு உபசாரமாய் நடை முறையில் இருந்து வரும் மசோதாவிற்கு உலைவைக்கப் பார்க்கின் றார்களே இதற்கென்ன தேசத் தலைவர்கள் செய்கிறார்களென்பதே எமது கேள்வியன்றோ! இதற்கும் ஒன்றும் பரிகாரம் தேடாது மெளனஞ் சாதிப்பது தேசத் துரோகமில்லையா? பார்ப்பனர் அடிமைத்தனத்தில் சிக்கி வாழும் பார்ப்பனரல்லாத தேசபக்தர்களே! சுயமரியாதைக்காரனாகிய எம்மைக் கண்டு நீங்கள் ஆத்திரப் படலாம், பத்திரிகை முழுவதும் எழுதலாம், ஆனால், நாங்கள் உண்மையை உள்ளன்புடன் சொல்வோம். தக்கவிடை அளித்தாலும் பதிலுரை கொடுக்கவும் தயாரென்பதை சித்தத்துடன் தெரிவித்துள்ளேன்.
குடி அரசு - 1981 (2) 258
பார்ப்பனரல்லாத வாலிபர்களே! சுயமரியாதைத் தலைவர்களே! வாலிபர்களே! சட்டசபையில் கொண்டுபோகத் தயாராயிருக்கும் திரு. கிருஷ்ணமாச்சாரியாரின் இளம் மணஞ்செய்து கொள்ளலாமென்று தக்க முகாந்திரத்துடன் சொல்லும் திட்டத்திற்குப் பயனளிக்காது பாடுபட முன்
வாருங்கள், பார்ப்போம், பார்ப்போம், பார்ப்பனர்கள் அட்டகாசத்தைப் பார்ப்போம். பாரினில் தலை எடுக்காது ஆழ்த்தி வைப்போம். இனியும் விட்டுக் கொடுக்காது தலைகுனியும்படி செய்ய வேண்டுமாய் சுயமரியாதை வீரர்களை கேட்டுக் கொண்டு எனது கட்டுரையை முடித்துக் கொள்ளு
கிறேன்.
வைதீகம் வீழ்க!
சாரதா சட்டம் நிலை பெறுக!
- சுயமரியாதைத் தொண்டன்.
குடி அரசு - கட்டுரை - 27.09.1931
259 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
100000. க்ஷம் ரூபாய் இணாம் !
புதிய மாதிரி ராட்மண இயந்திரப் பரி௬க்கு.
அக்டோபர் 2௨ வரை வாய்தா
இப்போது இருந்துவரும் நூல் நூற்கும் ராட்டினமானது நூற்கும் விஷயத்தில் அதிக நேரமும் கொஞ்ச உற்பத்தியும் ஆவதின் மூலம் நூற்பவர்களுக்கு பிரயாசை அதிகமாகவும் கூலி குறைவாகவும் கிடைத்து வருவதை உத்தேசித்து புது மாதிரியான, அதாவது கொஞ்ச நேரத்தில் கொஞ்சப் பிரயாசையில் அதிக நூலும் அதிக கூலியும் கிடைக்கும்படியான அபிவிர்த்தியுள்ள ஒரு புது மாதிரியான ராட்டின எந்திரத்தைக் கண்டு பிடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் (100000 ரூ) இனாம் கொடுப்பதாக உயர்திரு காந்தியவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பு வெளிப்படுத்தியிருந்தார். இது வரையில் அம் மாதிரியான ஒரு அபிவிர்த்தி இயந்திரம் யாராலும் கண்டுபிடிக்கப்படாததால் அப் பரிசுக்கு இன்னமும் சிறிது காலம் வாய்தா அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப் பதாய் ஆமதாபாத் குஜ்ராத் வித்தியா பீடத்தார் தெரிவிக்கிறதாக தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது,
“400000 ரூ. பரிசுக்காக புதிய ராட்டின யந்திரம் கண்டுபிடிப்பவர்கள் அதை அக்டோபர் மாதம் 31 தேதிக்குள் குஜராத் வித்தியா பீடத்திற்கு அனுப்பிக்கொடுக்கலாம்” என்பதாகும்.
ஆகவே திரு.காந்தியவர்கள் கொஞ்ச நேரத்தில் அதிகமான சாமான் உற்பத்தியும் பணவரும்படியும் கிடைக்கும்படியான கொள்கையை விரும்புகின்றாரா ? இல்லையா ? என்பதும் அவர் விரும்புகின்றபடி ஏதாவது ஒரு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் அது யந்திரமாகக் கருதப்படக் கூடியதாகாதா என்பதையும் அதனால் இயந்திர முற்போக்கை திரு காந்தி ஒப்புக்கொள்கின்றார் என்பது விளங்கவில்லையா ? என்பதை
யும் அந்தப்படி ஏற்படும் இயந்திரத்தின் பயனாய் அதாவது அப்புதிய இயந்திரம் ஒரு நாளைக்கு கால் ராத்தல் நூல் நூற்பதற்கு பதிலாக ஒரு
குடி அரசு - 1981 (2) 260
மணிக்கு கால் ராத்தல் நூல்நூற்கும்படியானதாக ஏற்பட்டிருந்தால் அதன் பயனாய் அவ்வியந்திரம் ஒரு நாளைக்கு 8 பேர் செய்கின்ற வேலையை ஒரே ஆள் செய்யும்படி யானதாக ஆகி பாக்கி “ ஏழுபேர்கள் கூலி வாயில் மண் விழுகாதா”” என்பதையும் காந்தி பக்தர்களின் இயந்திர பகிஷ்கார கதர். பக்தர்கள் கவனித்துப் பார்த்து பிறகு இயந்திர முறையைக் கண்டிக்க வேண்டுகிறோம்.
குடி அரசு - வேண்டுகோள் - 27.09.1931.
261 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சமதர்ம அறிக்கை
முகவுரை
தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவை களின் பேரால் அரசாகஷிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு உண்மையாகும்.
இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர் களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக் கின்றன.
சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங் களைப்பற்றியும். கொள்கைகளைப்பற்றியும் வெளியில் எடுத்து
மக்களுக்குத் தெரியும்படியாக மகாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகின்றது. அதாவது 1847 ம் வருஷத்திலேயே லண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள. சமதர்மவாதிகளுடைய மகாநாடு (காங்கிரஸ்) ஒன்று நடந்திருப்பதாகவும், அதன் பயனாய் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் தெரியவரு கின்றது. ஆனால் அதை சீக்கிரத்தில் கையாளப்படவும் அனுபவத்திற் கொண்டு வரவும் முயற்சித்த நாடு ரஷியாவாக ஏற்பட்டு விட்டது.
இது சம்பந்தமாக நமக்குக் கிடைத்த ஒரு அறிக்கை சரித்திரத்தில் சமதர்ம உணர்ச்சி பெற்றவர்களில் முதன்மையான முக்கியஸ்தர்கள் ஜெர்மனியர்களாயிருந்தாலும், அதற்காக மகாநாடு கூடினது லண்டன் பட்டணமாய் இருந்தாலும், அதற்கு அப்பொழுதே கிளர்ச்சி நடந்தது
பிரான்சு தேசமாயிருந்தாலும், அது முதல் முதல் அனுபவத்தில் கொண்டுவர முயற்சிக்க வேண்டிய இடம் ரஷியாவாகவே ஏற்பட்டுவிட்டது சிலருக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாயிருந்தாலும் அந்தப்படி ஏற்படு வதற்கு நியாயம் இல்லாமலில்லை.
குடி அரசு - 1981 (2) 262
என்ன நியாயமென்று வாசகர்கள் கேட்பார்களேயானால் அதற்கு நமது சமாதானமானது எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்கு தான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறு கொண்டு எழவும் சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.
எனவே இந்த நியாயப்படிப் பார்ப்போமானால் உலக அரசாங்கங் களிலெல்லாம் ரஷிய ஜார் அரசாங்கமே மிக்கக் கொடுங்கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனாலேயே அங்கு சமதர்மமுறை அனுப வத்திற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால் அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷியா தேசத்தை விட இந்தியாவுக்கே முதன் முதலாக ஏற்பட்டு இருக்கவேண்டியதாகும். ஆனால் அந்தப்படி ஏற் படாமல் இருப்பதற்கு இங்கு அனேகவித சூட்சிகள் நடைபெற்று வந்திருப்ப தூலும், சூட்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகு ஜாக்கிரதையாகவே கல்வி, அறிவு, உலக ஞானம், சுயமரியாதையுணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் இல்லாமல் காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோக்ஷ சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், அதே சூட்சிக்காரர்கள் அடிக்கடி வேற்றரசர்களை அழைத்து வந்து மக்களை மிருகத்தனமான ஆதிக்கத்தால் அடக்கி ஆளச் செய்து வந்ததாலும் உலகில் சமதர்ம உணர்ச்சி முதன் முதல் இந்தியா விலேயே ஏற்பட்டிருக்க வேண்டியது மாறி ரஷியாவுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டியதாயிற்று.
ஆன போதிலும் கூட இப்போது உலகில் மற்றும் எல்லாப் பாகங் களிலும் ஏற்பட்டு விட்டதின் காரணமாய் இந்தியாவிலும் ஏற்பட வேண்டியது தவிற்க முடியாத அவசியாய் போய்விட்டதால் இங்கும் தலை காட்ட ஆரம்பித்து விட்டது. ஆனால் உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி பணக்காரன் வேலை யாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார்- கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிக மாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வரு
கின்றது. ஆதலால் இங்கு சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை.
இவ்விபரங்கள் இந்த அளவில் நிற்க, முன் குறிப்பிட்டதான அதாவது சமதர்மக் கொள்கை சம்பந்தமாக அந்தக்காலத்தில் வெளியான
263 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஒரு அறிக்கையை மக்கள் உணரும்படியாக வெளிபடுத்தலாம் என்று நாம் கருதுவதால் அதை மொழிபெயர்த்து வெளியிடலாம் என்கின்ற கருத்துக்கு மேல்கண்ட வாக்கியங்களை முகவுரையாக எழுதினோம். இனிமேல் வருபவைகள் முழுவதும் அவ்வறிக்கையின் மொழிபெயர்ப்பேயாகும். அதில் நமதபிப்பிராயம் என்பது சிறிதும் இல்லை. ஆகையால் வாசகர்கள் அதை 1847-@ & இரண்டு ஜர்மனியர்களுக்கு ஏற்பட்ட அபிப்பிராயம் என்பதாகவே கருதி வாசிக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
ஈ.வெ.ரா.
குறிப்பு: 1847 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற சமதர்ம காங்கிரசு வேண்டுகோளுக்கிணங்க காரல்மார்க்ஸ் - பிரடரிக் ஏங்கெல்ஸ் ஆகியோர் வெளியிட்ட சமதர்ம அறிக்கை ( Manifesto of communist partyy ) ( 1872 இல்: முதன்முதல் ஜெர்மனியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது! யை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து குடி அரசில் வெளியிட்ட போது எழுதிய முகவுரை;
குடி அரசு - நூல் முகவுரை - 04.10.4931
குடி அரசு - 1981 (2) 264
அரசாங்கமும் தேசீயமும்
“வேகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம்” என்பதாக ஒரு பழமொழி யுண்டு.அது போலவே இன்று பிரிட்டிஷ் அரசாங்கமும், இந்திய தேசீயமும் நடைபெற்று வருகின்றன. ஏனென்று கேட்பதற்கு ஆளில்லை. இரு கூட்ட
மும் சேர்ந்து பாடுபட்டுழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் சூட்சியை அறியத்தக்க புத்தி இந்திய மக்களுக்கு இல்லை. ஆனால்
சீர்திருத்தத்தைப் பற்றியும், சுதந்திரத்தைப்பற்றியும், சுயராஜ்யத்தைப் பற்றியும் பேச்சுக்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மாத்திரம் குறைவில்லை. பொருளாதாரத் துறையைப்பற்றி நீலிக்கண்ணீர் விடுவதிலும், சுதேசி பிரசாரம் செய்வதிலும் மதுபானத்தைப் பற்றி மிக்கக் கவலைப்பட்டவர்கள். போல் நடித்து காங்கிரஸ் ஒரு புறம் பகிஷ்காரமும், மறியலும் அரசாங்கம். ஒரு புறம் பிரசாரமும் செய்வதாக செய்யும் ஆர்ப்பாட்டங்களிலும் குறை
வில்லை...
அதே சமயத்தில் “பொருளாதார நெருக்கடியை சரிப்படுத்த” சர்க்காரார் புதிய புதிய வரி போடுவதிலும் காங்கிரஸ் மக்களுக்கு அதிக செலவை உண்டுபண்ண கதர்த்தொழிலை விர்த்தி செய்வதிலும் குறை வில்லை. இந்த இரண்டு காரியங்களிலும் தேசத்தில் பொருளாதாரக் கஷ்ட
மும், அடிமைத்தன்மையும், அறியாமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றதேயொழிய வேறில்லை.
ஆனால் இந்தியாவிலுள்ள இந்திய மக்கள் நிலைமையோ- இவைகளுக்கு காரணம் என்ன? இக்கஷ்டங்களிலிருந்து எப்படி விடுதலை பெறுவது? என்கின்ற உணர்ச்சியே சிறிதுமின்றி, தெய்வத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு, காந்தி ஜயந்தி பண்டிகை கொண்டாடுகின்ற வேலையில் முனைந்து நிற்க பிரசாரம் செய்யப்படுகின்றார்கள். இந்த முயற்சிகளானது இந்தியாவில் 20, 30 நூற்றாண்டுகளுக்கு முன் இருந்ததாகக் காணப்படும் நிலைமையிலேயே மக்களை இறுத்தி வைக்கும் முயற்சியாக காணப்படு வதல்லாமல் மற்றபடி அதில் வேறு எவ்வித பரிகாரமோ, விடுதலையோ முற்போக்கோ இருப்பதாகக் காணமுடியவில்லை.
265 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது என்றால் அது யாருக்கு ஏற்பட்டிருக்கின்றது? எதனால் ஏற்பட்டது? என்கின்றதான இரண்டு விஷயத்தையும் கவனித்து யாருக்கு எவ்வித செளகரியம் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்பதைக் கவனிக்க வேண்டியது நீதியையும் பொறுப்பையும் உணர்ந்த - நல்லெண்ணமுடைய ஒரு அரசாங் கத்தின் கடமையாகும்.
இன்றைய நிலைமையில் நம் தலையில் சுமத்தப்பட்டுள்ள அரசாங் கமோ சிறிதாவது நியாயத்தையும், பொறுப்பையும் லட்சியம் செய்யாமல் *வேகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம்” என்கின்ற பழமொழிப்படி ஜனங் களுக்கு அவர்களது வாழ்க்கையை நடத்திக் கொண்டு போக இன்னமும் அதிகமானப் பொருளாதாரக் கஷ்டத்தைக் கொடுக்கும் மாதிரியில் வரியை அதிகமாக உயர்த்துகின்று வேலையையே பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்குச் செய்யப்படும் வேலை என்று சொல்லிக் கொண்டு அந்தப் படியே செய்து வருகின்றது.
ஆகவே, அரசாங்கத்தார் இப்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி இருக்கின்றது என்று நினைத்திருப்பதெல்லாம் அரசாங்க உத்தியோகஸ்தர் களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் இருப்பதைத்தான் பொருளாதார நெருக்கடி என்று கருதி இருக்கின்றார்களேயொழிய, குடி ஜனங்கள் வரி கொடுக்க முடியாமல், வாழ முடியாமல் இருக்கின்ற நிலை மையை ஒரு நாளும் பொருளாதார நெருக்கடி என்று கருதுவதாய்த் தெரிய வில்லை. சர்க்காரார் உத்தியோகஸ்தர்களுக்குச் சாதாரணமாய் 20 வருஷத்
திற்கு முன் இருந்த சம்பளங்கள் இன்று அநேக விஷயங்களில் ஒன்றுக்கு ஒன்றரை, இரண்டு ஆகவும், சிலருக்கு ஒன்றுக்கு மூன்றாகவும் ஏற்பட்டிருக் கின்றன. சம்பளங்கள் மாத்திரமல்லாமல் உத்தியோகஸ்தர்களின் எண்ணிக் கையும் ஒன்றுக்கு இரண்டாய், மூன்றாய் சில உத்தியோகங்கள் நான்கு பங்கதிகமாகவும் அதிகப்படுத்தப்பட்டு விட்டன. உதாரணமாக, ஒரு போலீசுகாரனுக்கு மாதம் 7 ரூபாய் முதல் 8 ரூபாய், ஒரு ஏட்டுக்கு 14 முதல் 25 ரூபாய், ஒரு இன்ஸ்பெக்டருக்கு 70 முதல் 150 ரூபாய் இருந்ததானது, இப்போது போலீஸ் காரனுக்கு 18 முதல் 22 ரூபாயும்,ஒரு ஏட்டுக்கு 25 முதல்
35 ரூபாயும், மத்தி யில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் அதிகமாகி
60 முதல் 175 ரூபாயும், இன்ஸ்பெக்டருக்கு 175 முதல் 300 ரூபாய் வரையும் ஏற்படுத்தப்பட்டு போலீசுகாரர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு விட்ட தென்றால் சாதாரணமாக இது 20 வருஷத்திற்கு முன் இருந்த நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் எவ்வளவு பங்கு உயர்ந்திருக் கின்றது என்பதை யோசித்துப் பாருங்கள். இது கீழ்தர்ஜா நிலைமைக்கு உதாரணம் கூறப் பட்டது.
குடி அரசு - 1981 (2) 266
இனி மேல் தர்ஜா நிலைமை என்பதைப் பற்றி கவனிப்போமானால் சென்னை அரசாங்க நிர்வாகசபை 5300 ரூபாய் சம்பளமுள்ள இரண்டு அங்கத்தினர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்ததானது இப்போது 5300 சம்பள: முள்ள ஏழு அங்கத்தினர்களால் நிர்வகிக்கப்படுகின்றது என்றால் எவ்வளவு விகிதாச்சாரம் அதிகமாக மக்கள் மீது அரசாங்க பளுவு சுமத்தப்பட்டிருக் கின்றது என்பதை நினைத்துப் பாருங்கள். இனி நீதி வழங்கும் இலாகா நிலைமையையும் சற்று கவனித்தோமேயானால் 3000 ரூபாய் சம்பளமுள்ள 5ஹைகோர்ட்டு ஜட்ஜிகளால் நடைபெற்றுவந்த நீதி நிர்வாகம் இன்று 4000ரூ. சம்பளமுள்ள 15 ஜட்ஜிகளால் ஹைகோர்ட்டு நீதி நடைபெற்று வருகின்றது. இந்த விகிதாச்சாரத்தை அனுசரித்தே இந்திய இராணுவச் செலவும் 22 கோடி ரூபாயில் இருந்தது 60 கோடி வரை உயர்த்தப்பட வேண்டிய அளவுக்கு ஏறிவிட்டது. இந்தக் காரியங்கள் அவ்வளவும் தேசீயத்தின் பேராலும், நல்ல அரசாகஷியின் பேராலும் உயர்த்தப்பட்டதேயொழிய வேறில்லை என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, தயவு செய்து மேலே படியுங்கள். ஆகவே, நல்ல அரசாகஷியும், தேசீயமும் மக்களின் நன்மைக்காக என்றே ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு இந்த நாட்டுக்கு இன்று இந்த நிலைமை யைக் கொண்டு வந்து விடப்பட்டிருக்கின்றது.
அரசாங்கம் இந்த அளவுக்கு தலைகனத்து, சிறிதும் ஈவு இரக்க மில்லாமல் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்படியானதாக ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் இந்திய தேசீயம் என்கின்ற ஒரு பெரிய பித்தலாட்டமான சாதனமேயாகும்..
இந்தப் பித்தலாட்டமான தேசீயம் இவ்வளவு அட்டூழியங்களைச் செய்ய அனுகூலமாயிருந்ததற்குக் காரணமெல்லாம் நமது இந்திய மக்களின் முட்டாள்தனமும், வயிற்றுப் பிழைப்புக்கு எதையும் விற்கத் தயாராய் இருந்த மானமற்றத் தனமுமேயாகும். இதை இன்னமும் விவரித்துச் சொல்லவேண்டுமென்பதாக நமது “குடி அரசு” வாசகர்கள் ஆசைப்படமாட்டார்கள் என்றே கருதுகின்றோம். ஆனாலும் இரண்டொரு வருக்காவது இரண்டொரு விஷயங்களாவது விளங்க வேண்டி இருக்கு மானால் நமது மாகாணத்தின் தேசீயத்தைப் பற்றி மட்டும் சிறிது ஜாடை
காட்டி விட்டு பிறகு மேலே போகலாம் என்று கருதுகின்றோம்.
அதாவது இந்திய தேசீய காங்கிரசுக்கு நமது மாகாணத்தில் மாத்திரம் தலைவரானவர்கள், காரியதரிசி ஆனவர்கள் ஆகியவர்களைப் பற்றியும் , அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்ட நலனைப் பற்றியும், அவர்களது நாணயம், தேசபக்தி, தேசிய கொள்கை ஆகியவைகளைப் பற்றியும் சற்று யோசித்துப் பாருங்கள்.
திருவாளர்கள் சர்.சி. சங்கரநாயர் முதல் சர்.மணி அய்யர், எஸ். சீனிவாச அய்யங்கார், சி.விஜயராகவாச்சாரியார், சி.பி. ராமசாமி அய்யர்,
267 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி அய்யர் முதலியவர்கள் ஆவார்கள். இன்றைய தினமும் இந்த மாதிரி ஆட்களுடைய யோக்கியதை
சற்று வெளியாகி விட்டதால் இதே கூட்டத்தில் உள்ள ஆட்களே சற்று வேறு வேஷம் போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். அதாவது சிலபேர். “வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு பிச்சைக்குப் போனால் லக்ஷியம் செய்ய மாட்டார்கள்” என்று கருதி “காவிவேஷ்டி கட்டிக் கொண்டு
பிச்சைக்குப் போவது” போல் சந்நியாசி, துறவி என்கின்ற பேரால் அதாவது
வக்கீல் உத்தியோகம் செய்வதை விட்டு விட்டவர்கள் என்கின்ற பெயரால் அதே தேசீயத்தை அதே முறையில் அதே கூட்டத்தார்களே இன்றும் நடத்துகின்றார்களேயொழிய வேறு எந்த விதத்திலும் நாணயமுடையவர். களோ, யோக்கியமும், நல்ல எண்ணமும் உடையவர்களோ இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லிவிட முடியுமா? உதாரணமாக,
திரு. காந்திக்கு திரு. ஏ. இரங்கசாமி அய்யங்கார் அரசியல் காரியதரிசி யாகவும், திரு. சி.இராஜகோபாலாச்சாரியார் சமுதாய காரியதரிசியாகவும் இருக்கிறார்கள் என்பதும், திரு. எஸ்.சத்தியமூர்த்தி தான் கான்பரன்ஸ்: தலைவராகவும் இருக்கிறார் என்பதுமே போதுமானதாகும்.
மற்ற மாகாணக்காரர்களின் யோக்கியதை தமிழ்நாட்டு தேசீயவாதி களை விட உயர்ந்திருக்கும் என்று கருதி நாம் அவர்களைப் பற்றி எழுதாமல் விட்டு விட்டதாக யாரும் கருத வேண்டியதில்லை. தேசீயம் என்கின்ற அச்சில் எந்த மாகாணத்து மக்களை உருக்கி ஊற்றினாலும் ஒரே மாதிரி உருவந்தான் தோன்றும். இந்த மாகாணத்தில் அதற்கென்றே முன்னணியில் நிற்க ஒரு தனி ஜாதியே ஏற்பட்டு விட்டதால், அது சற்று வேறு மாதிரியாக காணப்பட இடமுண்டாகின்றது என்றாலும் எங்கும் பொதுவில் வக்கீல் கூட்டம் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்த மாதிரியான தேசீயமானது (வக்கீல் கூட்டமானது! எப்படிப் பட்ட அரசாங்கத்துடன் தேசீய வியாபாரம் செய்ய ஆசைப்பட்டதென்று பார்ப்போமேயானால், வக்கீல் கூட்டத்தின் மனப்பான்மையின் தத்துவத்
திற்குச் சிறிதும் பின் வாங்காததான (வியாபாரத் கூட்டத்தினரான? வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தில் முட்ட ஆரம்பித்தது. இரண்டு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று இளைக்காததான தந்திரமும், சூகஷியுமுடை யதாததால் இரண்டும் முட்டிக்கொள்ளும் போது இந்திய மூடப்பாமர ஜனங்
கள் மத்தியில் சிக்கி, கச ௧௪ வென்று நகங்க வேண்டியவர்களாகி விட்டார்கள். மேற்கண்ட இந்த இரு வர்க்கத்தினர்களின் சுயநல வியாபாரமே தான் இன்றும் “நல்ல ஆட்சி*யின் பேராலும், “தேசீயத்தின்” பேராலும் நடக் கின்றது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். வாசகர்களே! இது மாத்திர மல்லாமல், இன்று சீமையில் நடக்கும் வட்டமேஜை மகாநாடு என்பதும் சர்க்காரும் /வெள்ளைக்காரரும்) தேசீயமும் (வக்கீல்களும்! சேர்ந்தது. இந்திய மக்களை ஆலையில் கொடுத்து நசுக்கிப்பிழியும் படியான தன்மை
குடி அரசு - 1981 (2) 268
பொருந்திய அளவு கொடுமை கொண்ட ஒரு சதியாலோசனை என்பதை விட மற்றபடி அதற்கு வேறு ஏதாவது பெயர் கொடுக்க முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்தியாவின் முப்பத்தைந்து கோடி ஜனங்களுக்கும் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு சீமைக்குச் சென்றிருக்கும் திரு. காந்தி அவர்கள்
தன் தலையில் சுமந்து கொண்டு போயிருக்கும் சுயராஜ்யத் திட்டம் வருணாச்சிரமக் கொள்கையும், முதலாளி ஆதிக்கக் கொள்கையும் கொண்ட தான ஒரு பெரிய மூட்டையா? அல்லவா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
அவர் விஷயம் அப்படியிருக்க, மற்ற பிரதிநிதிகளின் யோக்கி யதைகள் தான் என்ன என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். ஏழை மக்களுக்கும், பாடுபட்டு உழைத்துவிட்டு பட்டினி கிடக்கும் மக்களுக்கும் பிரதிநிதியாக யாராவது போயிருக்கின்றார்களா? என்பதை சற்று நடு நிலை மையில் நல்ல புத்தியோடிருந்து யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.
ஒரு சமயம் திரு. காந்தி அவர்கள் தன்னை அடிக்கடி தான் “இந்தியாவில் பாடுபட்டு உழைத்து பட்டினி கிடக்கும் கிராமத்து ஏழை மக்களின் பிரதிநிதி” என்று சொல்லிக்கொள்ளுகின்றாரே என்று கருதி அவரை ஏழை மக்களின் உண்மையான பிரதிநிதி என்று கருதியிருப்பீர் களேயானால் நீங்கள் ஒரு முட்டாள்களேயாவீர்கள் என்று நாம் சொல்லு வதற்காகயாரும் அவசரப்பட்டு மனவருத்தமடைய கூடாதென்று கேட்டுக் கொள்ளுகிறோம். ஏனெனில், திரு. காந்தியவர்கள் தன்னை எந்த விதத்தில் ஏழை மக்களின் பிரதிநிதி-கிராமவாசிகள் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதைக் கவனித்தால் இதன் உண்மை விளங்கிவிடும்.
அதாவது “ஏழை மக்கள் கிராமத்தில் ஆடுமாடு மேய்த்து, நெய்,
பால், மோர் விற்றும், செருப்புத் தைத்தும் வாழ வேண்டியது. அவர்களது கையில் காசு சேரும் படியான வேலை எதுவும் செய்யக்கூடாது. மற்றும் பம்பாய் மில் முதலாளிகளைப் பார்த்து பொறாமைப்படக் கூடாது. அவர். களைப்போல் பணக்காரர்கள் ஆவதற்கு எண்ணவும் கூடாது” என்பதான கொள்கையுடன் தான் கிராமத்து ஏழை மக்களின் பிரதிநிதி என்று அவரே
ஒரு தடவைக்கு மேலாகவே சொல்லி இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
அதாவது, வருணாச்சிரமக் கொள்கைபடி மக்கள் இருக்க வேண்டிய அளவுக்கு சுயராஜ்யம் கொண்டுவரப் போயிருக்கும் பிரதிநிதியேயாவார்.
மற்றபடி, வட்டமேஜை மகாநாட்டின் பார்ப்பனரல்லாதார் பிரதிநிதி களான திருவாளர்கள் இராமசாமி முதலியார், பன்னீர் செல்வம் முதலியவர். களின் யோக்கியதையையும் நாம் வெளியில் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தென்பதில்லை. ஏனெனில், திரு.இராமசாமி
269 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
முதலியார் ஜஸ்டிஸ் கட்சி என்னும் ஒரு தேசீயக் கட்சிப் பிரதிநிதியாவார். ஆதலால், ஜஸ்டிஸ் கட்சியின் தேசீயக் கொள்கை என்ன என்று தெரிந்தவர்.
களுக்கு திரு.முதலியாரின் பிரதிநிதித்துவத்தை பற்றி தெரிவிக்க வேண்டிய தில்லை. திரு.பன்னீர் செல்வம் அவர்களோ இந்திய கிருஸ்துவர் பிரதிநிதி ஆவார். அவருடைய மத சமுதாயக் கொள்கைகள் தெரிந்தவர்களுக்கு அவரது பிரதிநிதித்துவத்தைப் பற்றியும் நாம் தெரிவிக்க வேண்டியதில்லை.
மற்றும் சென்னை மாகாண பார்ப்பனப் பிரதிநிதிகளுக்காக தலையங் கத்தை வளர்க்க மனமில்லாததால் விட்டு விட்டோம்.
பெண்கள் சார்பாகவோ, திருமதி.ராதாபாய் சுப்பராயன் அம்மாள் நமது பிரதிநிதியாவார். அந்தம்மாள் ஒரு ஜெமீன்தாரணியாவார். பெண்களுக்கு எல்லா பிரதிநிதித்துவமும், மந்திரி வேலை வரை பதவியும் கிடைக்க வேண்டுமென்பதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் வஞ்சகமில் லாமல் வாதாடுவார்கள். ஆனால், புருஷனிடம் அடியும் உதையும் பட்டுக் கொண்டு, தற்கொலை பண்ணிக்கொள்ளவும் செளகரியம் இல்லாமல் கஷ்டப்படும் பெண்களைப் பற்றிய கதை அந்த அம்மையாருக்கு சிறிதுமே தெரியாது. ஆகவே, அந்தம்மாளிடம் பெண்களுக்கு முக்கியமாக எவ்வித விடுதலை வேண்டுமோ அந்தக் காரியம் மாத்திரம் எதிர்பார்க்க முடியாது. இவை இப்படி இருக்க, மற்றபடி வட்டமேஜை மகாநாட்டில் நமது சர்க்காரார்' பிரதிநிதித்துவம் எவ்வளவு யோக்கியதை உடையது என்று பார்த்தால் ஒரு
வரியில் முடிவு கண்டு விடலாம். அதாவது “இந்தியாவை இந்துசமஸ்தான மன்னர்களும், இந்திய வக்கீல்களும், வியாபாரிகளும் சேர்ந்து ஆட்சி புரிய வேண்டியதாகும்” என்கின்ற கொள்கையே தான் சர்க்காராருடைய கொள்கையாகும். மற்றபடி நமது மாகாண தீண்டாதவர்கள் பிரதிநிதித் துவத்தைப் பற்றி பேசுவதென்றாலோ நமது பிரதிநிதியாய் சென்றிருப்பவர் தங்களுக்கு என்ன வேண்டும்? என்பதையே சரியாய் உணராதவர்கள் ஆவார்களா என்பது சந்தேகம்.
ஆகவே, இப்படிப்பட்ட வட்ட மேஜை மகாநாட்டை மேலே சொன்ன படி 35 கோடி மக்களை வதைத்து தாங்கள் வாழ நினைத்திருக்கும் பலவித சுயநல எண்ணங்களைக் கொண்ட ஒரு சிறு கூட்டத்தாரின் சதியாலோசனை மகாநாடு என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என்று மறுபடியும் கேட்கின்றோம். சுதந்திரம், சுயராஜ்யம், பொருளாதாரக் கஷ்டம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கும் இந்த காலத்திலேயே அதுவும் அக் கூச்சல்களுக்கு மத்தியிலேயே இந்தியாவில் “பொருளதார நெருக்கடியை குறைக்க” என்று புதிய வரி போடுவதினுடையவும், அடக்கு முறை சட்டங்கள் ஏற்படுத்துவதினுடையவும் கொடுமையை நினைத்தால் யாருக்கு தான் வயிறு பற்றி எரியாது? அரசாங்கம் என்பது இப்படித்தான் இருக்கும் என்று சொல்லுவதானால், தேசீயம் இப்படித்தான் இருக்கும் என்று
குடி அரசு - 1981 (2) 270
சொல்லுவதானால் மக்களுக்கு ஒரு அரசாங்கமோ, தேச்யமோ அடியோடு வேண்டியதில்லை என்கின்றதான நிலைமையே மேலென்று சொல்லுவோம். தேசம் தன்னரசு நாடாகி, எங்கு பார்த்தாலும் கலகமும் கொள்ளையும்
நடக்கும் நிலைமை வந்தாலும் இந்திய மக்கள் இன்று அரசாங்கத்தாலும், தேசீயத்தாலும் கஷ்டப்படுகின்ற இம்சையில் இருந்து 100- க்கு 50 பங்கு மேலாகவே குறைவாகத் தான் கஷ்டப்படுவார்களேயொழிய, இதைவிட ஒரு சிறு கடுகளவும் அதிகமாய்க் கஷ்டபட முடியாதென்று தைரியமாய்ச் சொல்லுவோம்.
அப்படி ஏதாவது, யாராவது அந்த சமயம் இன்றைய நிலை மையை விட சற்று அதிகமாகக் கஷ்டப்பட கூடியதாகும் என்று சொல்லக் கூடுமானால், அப்படிக் கஷ்டப்படும் கூட்டம் வெகு சிறிய கூட்டமாகவும், அதுவும் இன்று மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்தி, சோம்பேறியாய் வாழும் பார்ப்பன-வக்கீல்-உத்தியோகம் ஆகிய கூட்டமும், பாட்டிற்குத்
தகுந்த கூலிகூட கொடுக்காமல் ஏழைகளை ஏமாற்றி வாழும் முதலாளி, ஜமீன்தாரர் கூட்டமும் தான் சின்னா பின்னப்படுமே தவிர, மற்றபடி 100-
க்கு 90 பேர் கொண்ட ஏழை மக்களுக்கு ஒரு கஷ்டமுமே வந்து விடாது.
ஆகவே, இவற்றிலிருந்து அரசாங்கமும், தேசீயமும் சோம்பேரி களையும், செல்வவான்களையும் காப்பாற்றுவதற்கேற்பட்டதேயொழிய ஒரு நாளும் ஏழை மக்களைக் காப்பாற்ற ஏற்பட்டதல்ல என்றே உரக்கக் கூறுவோம்.
ஏழை மக்கள் கூப்பாடு வெளியில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவே தான், அதாவது எப்படி அடித்தாலும் அழுகக் கூடாது என்பதற்காக மேலும் மேலும் அடிப்பது போலவே இன்று இந்திய சட்டசபையில் பத்திரிகைச் சட்டம் கொண்டு வந்தாய் விட்டது. இச்சட்டம் கொண்டு வரப் பட்டதற்கும், அமுலில் வரப் போவதற்கும் திரு.காந்தியும், தேசீயமுமே நூற்றிற்கு 51 பாகத்திற்கு மேலாகவே பொறுப்பாளியாவர் களென்று சொல்லுவோம்.
அடித்தவனை தண்டிக்கவோ, கொலை செய்தவனை கொலை செய் யவோ கூடாதென்று நாம் எப்பொழுதும் சொல்லவரவில்லை. ஏனெனில், தண்டனையடைய தயாராயிருப்பவன் தான் பெரிதும் அடிக்க வருவான். சாகத் துணிந்தவன் தான் மற்றவனைக் கொல்ல வருவான். ஆகையால் அதில் தப்பித்துக் கொள்ள ஆசைப்படுபவர்களை விட்டுவிடும்படி நாம் சொல்ல வரவில்லை. அதற்காக ஒரு மனிதன் தனது அபிப்பிராயத்தைக்கூட வெளியில் எடுத்துச் சொல்லக் கூடாது என்று சட்டம் செய்வதானால் இது
எப்படி நாகரீகமான சுயேச்சைக்கு இடமளிப்பதான ஆட்சி என்று சொல்ல
முடியும்?
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஒவ்வொரு “தேசீயப்பத்திரிகையும்” ஒவ்வொரு “தேசீயவாதியும்” அனேகமாய் இவ்விஷயத்தில் வழவழவென்றே பேசி சர்க்காருக்கு தைரியத்தையும் ஆக்கத்தையும் அளித்துவிட்டார்கள். “நான் ஓயாமல் அழுகிறேன். நீ நோகாமல் அடி”“யென்பது போலவே நடந்து கொண்டி ருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பேசினார்களேயல்லாமல் வேறில்லை.அதாவது “ஒரு சட்டம் வேண்டியது தான்...ஆனால்” என்று தான் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவித்து இருக் கிறார்கள். கொலை செய்தவனைத் தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருக்கின்றது. கொலைக்குத் தூண்டியவனையும் தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருக்கின்றது. அப்படியிருக்க, அடியோடு பத்திரிகை சுதந்திரத் தையே அழிக்கத்தக்க சட்டம் எதற்காக செய்யப்பட வேண்டும்? என்பது நமக்கு விளங்கவில்லை. என்ன குறைந்தாலும் இந்தியா தேசத்தில் நாள்.
1க்கு நூற்றுக்கணக்கான கொலைகளுக்குக் குறையாமல் மனிதனை மனிதன் வெட்டிக்கொண்டோ, குத்திக் கொண்டோ, சுட்டுக்கொண்டோ தான் கொலைகள் நடைபெறுகின்றன. இதற்காக உலகத்தில் கத்தி இல்லாமல் போய்விட்டதா? துப்பாக்கி இல்லாமல் போய்விட்டதா? கைகள் இல்லாமல் போய் விட்டதா? என்று கேட்கின்றோம். கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு, துவேஷப்பட்டு குத்துவதும், வெட்டுவதும், சுடுவதும் கோழைத்தனமென் பதையும், முட்டாள்தனம் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். அதற்காக மக்களுக்கு உண்மை விளங்காமலும், விஷயஞானமேற்படா
மலும் இருக்கும்படி செய்வதா? என்பது தான் நமது கேள்வி.
ஆகவே, இந்த சமயத்தில், அதாவது இந்தியாவுக்கு *சுதந்திரம்” வழங்கப்போகும் சமயத்தில், பொருளாதாரக் குறை நீங்கப் போகும்
சமயத்தில், அதுவும் “அஹிம்சா தர்மமூர்த்தியாகிய மகாத்மா காந்தி” உலகத்தை அஹிம்சா தர்மத்தில் திருப்பி அஹிம்சையின் மூலமே ஒரு சொட்டு இரத்தம் சிந்தாமல் ஏழைகளுக்கு வேண்டிய “சுதந்திரம் வாங்கிவர:
சீமைக்குப் போயிருக்கும்” சமயத்தில், கதரின் மூலம் மணிக்கு ஒரு தம்படி வரும்படியான “பொருளாதாரக் கஷ்டத்தை நீக்க” விருக்கும் சமயத்தில் இதுவரையில்லாத புதிய வரி உயர்வும். இதுவரையில்லாத புதிய அடக்குமுறை சட்டமும் ஏற்படுவது என்றால், இந்த தேசீயத்திலும், இந்த
சர்க்காரிலும் ஏதாவது நாணையமோ, யோக்கியமோ இருக்கமுடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். எனவே, ஜனங்களின் முட்டாள்தனத்தால் தேசீயம் இவ்வளவு அயோக்கியத்தனமாய் நடைபெறுவதும், தேசீயத்தின் அயோக்கியத்தனத்தால் அரசாங்கம் இவ்வளவு அக்கிரமமாகவும், கொடுமையாகவும் நடைபெற வேண்டியதானதுமான காரியங்களை நிதைத்துப்பார்த்தால் இவை நமக்கு அதிசயமாய்த் தோன்றவில்லை.
ஏனெனில், மக்களின் முட்டாள்தனம் நீங்கும் போதுதான் இந்தக் கொடுமையும், அக்கிரமமும் எல்லாம் சரிபட முடியும். அதுவரை யார்
குடி அரசு - 1981 (2) 272
என்ன பாடுபட்டாலும் ஒரு காரியமும் சாத்தியப்பட மாட்டாது. இப்படியே
தான் மேலும் மேலும் நடந்து கொண்டே இருக்கும்.
ஆதலால் இன்று மக்களின் முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கை யையும் ஒழிக்கும் வேலை தான் தேசீய வேலையாகவும், நல்ல அரசாட்சி ஏற்படுத்தும் வேலையாகவும் கொள்ள வேண்டியதாகும் என்பதை பொது ஜனங்களுக்கும், தேசாபிமானிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதினோம்.
குடி அரசு - தலையங்கம் - 04.10.1931
273 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பெண்களுக்குச் சாத்துரிமை
மைசூர் அரசாங்கத்தில் வபண்களுக்குச் வசாத்தூரிமை
0 க்கச் சட்டம்
1931-னுஅக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்தமான விஷயங் கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதின் மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக் கொண்டு வரப்
படும்.
அவையாவன :-
பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக்கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர், தான் சுயார்ஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு..
ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.
பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமை களிலும் கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதை தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்: ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்குக் கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை
குடி அரசு - 1981 (2) 274
தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.
பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண்: ஜாதிக்குக் குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்ப சொத்தில் கணவனுக்குள்ள பாகம் சர்வசுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்து விட வேண்டும். குடும்ப சொத்துக்கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப் பட்டக் காலங்களிலும் அச்சொத்துகளின் மீது பெண்களுக்கு ஜீவனாம்சத்
திற்கு உரிமையுண்டு என்பதாகும்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 04.10.1931
275 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நாகையில் வபாதுக் கூட்டம்
தலைவரவர்களே! சகோதரர்களே!! சகோதரிகளே!!! தலைவர் அவர்கள் சும்மா இருந்த உங்களை தூண்டிவிட்டு கேள்விகள் கேட்கும்படி செய்துவிட்டார். நான் வம்பு சண்டைக்கு வரவில்லை. வலியவந்தால் நான் எப்படி ஓட முடியும்? உங்கள் சந்தேகத்தையெல்லாம் தீர்க்கக் கூடிய தீரனல்ல நான். எனக்கு தோன்றியதை, நான் சரியென்று கருதியதை சொல்லுகின்றேன். உங்களுக்கு சரி என்று பட்டதை ஒப்புக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளி விடுங்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும். என்னை ஒரு மகாத்மா என்றோ, மனித தன்மைக்கு மீறிய சக்தி உடையவனென்றோ கருதி ஒன்றையும் கேட்டுவிடாதீர்கள். சாதாரணமான மனிதன் என்று கருதி நான் சொன்னவற்றில் உங்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் கேளுங்கள். எனக்கு தோன்றியதை சொல்லுகிறேன். சரி தப்பு என்று கூட என்னிடம் சொல்லாதீர்கள். உங்களுக்குத் தோன்றியபடி நினைத்துக் கொள்ளுங்கள். திருந்துங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை, நான் பேசு பவற்றில் தப்பிதங்கள் இருக்கலாம் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் நான் சரி என்று நினைத்ததைச் சொல்ல எனக்கு உரிமை உண்டு என்பதில் நான் சந்தேகப்படவில்லை.
என்னை பற்றி
நண்பர்களே! முதலில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ளுகிறேன். அதாவது சாப்பாட்டு ஜாகைக்கு போகும் வழியில் என்னைப் பற்றியும், என் மனைவியைப் பற்றியும் சுவர்களில் கண்டபடியெல்லாம் எழுதி இருந்தது,
மற்றும் சிலரைப் பற்றியும் எழுதி இருந்தது.
பதிலுக்கு பதில் எழுதும் முறையிலோ என்னமோ மற்றும் சிலரைப் பற்றியும் எழுதி இருக்க கண்டேன். தவிர, தலைவர் திரு. குப்புசாமி அவர்: களிடம் யாரோ ஒருவர் “நாங்கள் ஜாதியைக் கெடுக்கின்றோம்” என்றும் “சுயமரியாதைக்காரர்கள் தங்கள் பெண்களை பறையருக்கு கொடுப்பார் களா?” என்றும் கேட்டார்களாம். அதற்கும் “பதில் சொல்லுங்கள்” என்றார்.
குடி அரசு - 1981 (2) 276
நண்பர்களே! என்னைப் பொறுத்தவரை நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதுவும் என் மனப்பூர்த்தியாய் சொல்லுகிறேன். என்னவென்றால், என்னை ஒருவர் மகாத்மா என்றோ தெய்வத் தன்மை பொருந்தியவர் என்றோ, சித்தர் என்றோ, புத்தர் என்றோ, ஞானி என்றோ கூப்பிடுவதை விட கருதுவதை விட என்னை அயோக்கியன் என்றும், திருடன் என்றும், முட்டாள் என்றும், சுயநலக்காரன் என்றும், பணம் சம்பாதிப்பவன் என்றும் மற்றும் இழிவான வேலை செய்கின்றவன் என்றும் சொல்லுவதில் எனக்கு லாபம் இருக்கின்றது என்று கருதுகின்றேன்.
ஏனெனில், எனது வேலையானது இராமசாமி என்று ஒரு மகாத்மா வோ, மற்றும் தெய்வத்தன்மை பொருந்திய ஒரு ஒப்பற்ற மனிதர் இருந்தார். என்று மூட ஜனங்கள் சொல்லிக் கொள்ளவோ,எனது படத்தை பூஜையில் வைத்து பூஜிக்கவோ, தேரில் வைத்து இழுக்கவோ, கோவிலில் என் பெயரில் விக்கிரகம் செய்து பூசை உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்த குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று கருதி வெளிப்பட்டவன். ஆகவே, என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைகளுக்கும் துணை புரிந்தவர்களாவார்கள்.
ஏனெனில் வண்ணான், நாவிதன், பறையன், பள்ளன், செட்டி, நாயக்
கன், நாடார் என்று சொல்லப்பட்ட “இழிகுல” மக்கள் என்பவர்கள் எல்லாம் இன்று ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியும், பூஜித்தும், உற்சவம் செய்யப் பட்டும், நாட்டுக்கோ, அச்சமூகங்களுக்கோ ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன்.அதன் பேரால் அவர்கள் கதைகளைச் சொல்லி சிலர் வயிறு வளர்க்கின்றனர். சிலர் சோம்பேரிகளாய் வாழ்கின்றார்கள் என்பதைத் தவிர. வேறு ஒன்றும் இல்லை.
அதுபோலவே இராமகிருஷ்ண “பரமஹம்சர்”, விவேகானந்த “சுவாமிகள்” , லோகமன்ய திலக “மகரிஷி”, இராமலிங்க “வள்ளலார்” என் கின்ற சமீபகால மக்களால் நாட்டுக்கு ஏற்பட்ட பயன் என்ன? இவர்கள் படம் பூஜிக்கப்படுவது எனக்கு தெரியும். இவர்களை 100க்கு 75 மக்களுக்கும் தெரியும். ஆனால் 100 ல் ஒருவருக்கு நடந்த நன்மை என்ன? அதுபோலவே இன்று பிரத்தியட்சத்தில் இருக்கும் காந்தி மகாத்மாவும், திருப்பாலக்குடி மஸ்தானும் வணங்கப்படுவதும், அவதாரமாகவும், நபியாகவும் கருதப்படுவதும், அதோடு மாத்திரமல்லாமல் அவர்களது
மலம் முதல் சுவாசக் காற்று மலம் வரை மதிக்கப்படுவது எனக்குத் தெரியும்.
திரு, காந்தியை விட “மஸ்தான்” சாயபுக்கு உண்மையிலேயே மதிப்பு அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், அனேகர் திரு.காந்தியை
277 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மனிதனாகவே கருத வேண்டுமென்றே தங்கள் சுயநலத்திற்கும், ஆதிக்கத்
திற்கும், வயிற்று வளர்ப்புக்கும், திரு காந்தியை ஏமாற்றுவதற்கும் அவரை மகாத்மா என்று சொல்லுகிறவர்கள், திருப்பாலக்குடிசாயபை உண்மை யிலேயே தெய்வத்தன்மை பொருந்தியவராக மதித்து, பூஜித்து வருகிறார்கள்.
எங்கள் ஊரில் இருந்து அனேக பி.ஏ., பி.எல்., எம்.ஏ., முதலியவர்களும், உயர்ந்த ஜாதியார் பிராமணர் என்று தங்களை சொல்லிக் கொள்ளுபவர். களுமே போய் அவரது எச்சிலை சாப்பிட்டுவிட்டும் வந்தார்கள். எச்சில் கலந்த தண்ணீரே பழனி பஞ்சாமிர்தம் போல் டின்னில் அடைத்துக் கொண்டு வந்து இருக்கின்றார்கள். ஆனால் , இவர்களால் நாட்டிற்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்கின்றேன்.
திருப்பாலக்குடி சாயபை ஒரு சாதாரண மனிதன் என்று எண்ணாத காரணத்தால், அவரது எச்சில் கலந்த தண்ணீரை குடித்து லாபம் பெறலா மென்று கருதி, மக்கள் மூடர்களாக வேண்டியதாயிற்று. அதுபோலவே, திரு.காந்தியை மகாத்மா என்று கருதியதால், அவரது காரியத்தால் ஏற்படும் தீமைகளும், நஷ்டங்களும், இழிவுகளும் எல்லாம் அதற்குமாறாக கருதப் படவேண்டியதாயிற்று. ஆனால் என்னுடைய காரியங்களுக்கு அப்படிப் பட்ட விபரீதபலன் ஏற்படவேண்டாம் என்றே கருதுகிறேன். எனக்காக எந்த மனிதனும் எவ்வித நஷ்டமும் அடையவேண்டாம். எதையும் நம்ப வேண்டாம். நான் கூறுபவைகளை வெகு ஜாக்கிரதையாய் அலசிப் பார்க்க வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஆகையால், நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தையை
ஆராய்ந்துப் பார்க்க மாட்டார்கள். “நான் அயோக்கியன்” என்று சொல்லப் பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாக கவனிக்கப்படும். உதாரணமாக, இன்றைய கீதை என்பதை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் இருக்கும் அக்கிரமம், தந்திரம், முன்னுக்குப்பின் முரண், மக்களை மக்கள். இழிவுப்படுத்துவது என்பவைகள் யாருடைய புத்திக்காவது விளங்கு கின்றதா? ஏன் விளங்கவில்லை? அதைச் சொன்ன மனிதனை இன்னான் என்றே, எதற்காகச் சொன்னான் என்றே உணரமுடியாமல் “பகவான் சொன்
னார்” என்று சொல்லப்பட்டதால் இன்றைய உலக மக்கள் எல்லாருக்குமே அது பொருந்துவதாகும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு புகழப்படு கின்றது. அது போலவேதான் புராணங்கள். சாஸ்திரங்கள், வேதங்கள் என்கின்ற ஆபாசக் களஞ்சியங்கள் எல்லாம் மதிக்கப்படுகின்றன.
ஆகவே, அந்தப்படி மதிக்கப்படாமல் எனது வார்த்தைகள், அபிப் பிராயங்கள் அதற்குண்டான சரியான மதிப்புப்பெறவேண்டுமானால், நான் அயோக்கியனாகவும், பணம் சம்பாதிப்பவனாகவும், திருடனாகவும், கருதும்படியான பிரசாரம் செய்பவர்கள் உதவி செய்தவர்களாகவே ஆவார்கள். எந்த காரணத்தைக் கொண்டும் மனிதத்தன்மைக்கு மீறிய எந்த குணத்தையும் என் மீது சுமத்திவிடாதீர்கள்.
குடி அரசு - 1981 (2) 278
தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் “இராமசாமிக் கழுதைக்கு செருப்படி” என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுக வில்லை இங்கும் “இராமசாமிக் கழுதை செத்துவிட்டது” என்றும் “இராம சாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி” என்றும் எழுதி இருந்தது.
“இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும்” என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால் “இராம
சாமிக் கழுதை செத்துப் போய் விட்டது” என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அதுபோலவே, “இராமசாமி மனைவி கற்புக்கரசி” என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழை வரச் செய்து பயன் பெற்று இருந்தால் “இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி” என்பதற்கு நான் விசனப்பட வேண்டும்.
ஆகவே, அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால், இவைகளி லிருந்து ஒரு அளவுக்கு நான் “வெற்றி பெற்று விட்டேன்” என்பதை
மாத்திரம் உணருகிறேன். என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்பு பெற வேண்டுமென்று கருதி இருந்தாலும், நானே, எனக்கு தீங்கு தேடிக்கொண்ட வனே யாவேன். அது எப்படியோ போகட்டும்.
பறையனுக்குப் பெண் கொடுப்பாயா?
ஜாதியை நாங்கள் ஒன்றாக்குகின்றோமாம் ஆம், ஆக்கமுயற்சிக் கின்றோம். அதில் சந்தேகமில்லை. ஆனால் சீக்கிரத்தில் முடியுமா என்பது சந்தேகம். மனிதஜாதி ஒன்றாகித்தான் தீர வேண்டும். அதற்கு தடை செய் கின்றவர்கள் அயோக்கியர்கள், மடையர்கள் என்று தைரியமாய்ச் சொல்லு கின்றோம். எங்கள் பெண்களை பறையனுக்கு கொடுப்போமா? என்று கேட்கப்படுகின்றது.
இது ஒரு அறிவீனமான கேள்வி, அல்லது அயோக்கியத்தனமான கேள்வி என்றே சொல்லுவேன். ஏனெனில், எங்கள் பெண்களை நாங்கள் அவர்களுக்கு இஷ்டப்பட்டவர்களுடன் கூடிவாழ செய்யப்போகின் றோமே யொழிய, எங்களுக்கு இஷ்டமானவர்களுக்குக் கொடுக்கும் உரிமையைக் கொண்டாடுகின்றவர்கள் அல்ல. பெண்களை ஒரு சாமானாக கருதி ஒருவருக்கு கொடுப்பது என்கின்ற முறையை ஒழிக்க முயற்சிக் கின்றோம்.
நண்பர்களே! நாங்கள் ஆதிதிராவிடர்களைப் பற்றி பேசும் போது பார்ப்பனர்கள் மனவருத்தமடைவதில் அருத்தம் உண்டு. ஆனால் பார்ப்பனரல்லாதார் மனவருத்தமடைவதில் சிறிதும் அர்த்தமில்லை. அது
வெறும் முட்டாள்தனமும், மானமற்றதன்மையுமேயாகும். ஏனெனில், நமது சமூகத்தில் பார்ப்பனர் என்கின்ற கூட்டத்தாராகிய 100 -க்கு 3வீதமுள்ள
279 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஜனத்தொகை நீங்கி,மற்ற ஜனங்களுக்கு இந்த நாட்டில் சூத்திரன், (அடிமை! ஆதிதிராவிடன் (பறையன்! என்கின்ற பட்டமில்லாமல் வேறு எந்தப் பட்டத்தோடாவது யாராவது இருக்க முடியுமா? இருக்கின்றார்களா? என்று கருதியும், அனுபவத்தையும் கொண்டு பாருங்கள். சூத்திரன் என்கின்ற கலத்தில் நீங்கள் பதியப்பட்டிருப்பதில் உங்களுக்குச் சிறிதாவது மானம் இருந்தால் பறையன் என்கின்ற பட்டம் போகவேண்டுமென்பதில் கடுகள வாவது வருத்தமிருக்குமா?என்று கேட்கின்றேன்.
பறையன் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய் விடும் என்று கருதினீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களே யாவீர்கள்.
மற்றும், பேசப்போனால் பறையன் சக்கிலி என்பதற்கு இன்னார் தான் உரிமையென்றும், அது கீழ் ஜாதியென்பதற்கு இன்னது ஆதாரமென்றும் சொல்லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை. ஆதலால், அதாவது சீக்கிரத்தில் மறைந்து விடக்கூடும். உங்கள் சூத்திரப்பட்டத்திற்கு கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம், கோவில் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு. இத்தனையையும் நாசமாக்கி அடியோடு ஒழித்தாலல்லாமல் உங்கள் தலையில் இருக்கும் சூத்திரப்பட்டம் கீழே இறங்காது. ஆகவே, யாருக்காவது மான உணர்ச்சி இருந்திருந்தால் “நீங்கள் ஜாதி ஒன்றாக்குகின்றீர்களே”” என்று நம்மைக் கேட்டிருக்க மாட்டார்கள். ஆகவே, ஆதிதிராவிடர் நன்மையைக்கோரி பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சிகளும், ஆதிதிராவிட ரல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்லாருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள்.
நான் மாறுவது
நான் அடிக்கடி கொள்கைகளில் மாற்றமடைவதாக சொல்லப்படு கின்றது வாஸ்தவமாக இருக்கலாம். நீங்கள் ஏன் அதை கவனிக்கின்றீர்கள்? ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால் அவன் மகாயோக் கியனா? என்று கேட்கின்றேன். எந்த மனிதனும் ஒரே நிலைமையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகின்றீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? மாறுதல் முற்போக்குள்ளதா? பிற்போக் குள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்பன போன்ற வைகளை கவனிக்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
மற்றும், பொது நன்மையை உத்தேசித்து கஷ்டப்படுகின்ற மக்கள் நன்மையை உத்தேசித்து மாறினானா? அல்லது சுயநலத்திற்கு அக்கிரம
குடி அரசு - 1981 (2) 280
மான லாபமடைவதற்கு மாறினானா? என்று பார்க்க வேண்டும். யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளி, பொறுப்பாளி, கவலையாளி ஆகியவர்கள் மாற வேண்டியது அவசியமாகலாம். அதைப்பற்றிய கவலை ஏன்? யார் எப்படி மாறினாலும் பார்க்கின்றவர்களுக்கு புத்தியும் கண்ணும் சரியாய்
இருந்தால் மாற்றத்தைப் பற்றி ஒன்றும் ஆபத்து வந்து விடாது.
நான் பல தடவை மாறி இருக்கலாம். பல குட்டிக்கரணங்கள் போட். டிருக்கலாம். சுயநலத்திற்காகவும் குட்டிக்கரணம் போட்டிருக்கலாம். பச்சோந்தியாய் இருக்கலாம். அதனால் உங்களுக்கென்னகெடுதி? நாடகக் கொட்டகையில் நாடகம் பார்க்கின்ற போது ஒரு மனிதன் எத்தனை வேஷம் மாறி மாறிப் போட்டு நடிப்பதை நீங்கள் காசு கொடுத்து பார்த்து விட்டு, நடித்தவனையும் புகழ்ந்துகொண்டு போகின்றீர்களா? அல்லது இல்லையா? என்பதை நினைத்துப் பாருங்கள். அதனால் நீங்கள் ஏமாந்து போய் விடுகின்றீர்களா? அதுபோல் எங்களை நினைத்து கொண்டு வந்து நாங்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு போங்கள்.
பிறகு, உங்கள் புத்திக்கு பட்டதை ஒப்புக் கொள்ளுங்கள். மற்றதை தள்ளிவிடுங்கள். இன்றைய தினம் நான் சொல்லுபவைகள் கூட எனக்கு முடிந்த முடிவா என்பது சந்தேகம் தான். அன்றியும் உங்களுக்கு இன்றைய நிலைமையில் கால வர்த்தமானத்தை பொறுத்தவரையில் இவ்வளவுதான் சொல்லலாம் என்று கருதிக்கொண்டு சில விஷயங்களில் அளவாகவே பேசுகின்றேன் என்றும் சொல்லலாம்.
கோயில் கட்டிய மக்கள் கோயிலை இடிக்க வேண்டியவர்கள் ஆகி விடுவார்கள். அஹிம்சை பேசுபவர்கள், பலாத்காரத்தை பேசவேண்டியவர். களாகி விடுவார்கள். இராஜவிசுவாசிகள் இராஜ துரோகிகள் ஆகிவிடுவார்
கள். திருடக்கூடாது என்பவர்கள் கொள்ளை அடிக்கச் சொல்லுவார்கள். இப்படியாக அபிப்பிராயங்கள் மாறிக் கொண்டுபோகலாம். இவற்றையெல்
லாம் அபிப்பிராயங்கள் மாறியதாலேயே குற்றம் என்று சொல்லிவிட முடி யாது.தங்களை நல்ல சூத்திரர்கள் என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் கால்களைக் கழுவிய தண்ணீருக்கு பவுன் கொடுத்து சாப்பிட்டவர்கள், *இன்று சூத்திரன் என்றால் ஆத்திரங்கொண்டடி” என்றும் “பார்ப்பனர்கள். ஜாக்கிரதை” என்றும் ஏன் சொல்லுகின்றார்கள்? இந்த மாற்றத்தால் இப்படிச் சொன்னவர்கள் அயோக்கியர்களாகிவிட முடியுமா? தவிர “சூத்திரன் பணம் வைத்திருந்தால் பிராமணர்கள் பலாத்காரத்தால் அதைப்பறித்துக் கொள் ளலாம்” என்று மனுதர்ம சாஸ்திரத்தில் இருந்தது மாறி இப்பொழுது வெள்ளையர் தர்மத்தில் “தந்திரங்களினாலும் சூக்ஷிகளாலும் மாத்திரம் தான் பறித்துக் கொள்ளலாம்” என்கின்றதான மாறுதல் ஏற்பட்டுவிட்டது. நாளை ஒரு சமயம் சமதர்ம காலத்தில் “பிராமணன் (சரீரத்தில் பாடுபடாத வன் சொத்து வைத்திருந்தால் மற்றவர்கள் பலாத்காரத்தில் பிடுங்கிக்
281 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கொள்ளலாம்” என்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். இந்த மாதிரி மாறுதல்கள்: காலத்திற்கும், பகுத்தறிவுக்கும், நாட்டின் முற்போக்குக்கும் ஏற்றார்போல் நடந்து தான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படவில்லை. நாளை நான் எப்படி மாறப் போகின்றேன் என்பது எனக்கே தெரியாது. ஆதலால், நான் சொல்வதை கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்.
தேசியத்திற்கு விரோதியாவது
மற்றும் நான் தேசீயத்திற்கு விரோதியென்று சொல்லப்படுகின்றது. கடவுளுக்கும், மதத்திற்கும் விரோதியான ஒருவன் கேவலம் தேசீயத்திற்கும் விரோதியாவது ஒரு அதிசயமல்ல. மற்ற யாருடைய தேசீயத்திற்கும் நான் விரோதியா? அல்லது இல்லையா? என்பது விவகாரத்திற்கிடமான தாயிருந்தாலும், உயர்திரு.காந்தியவர்களின் தேசீயத்திற்கு நான் சரியான விரோதியேயாகும்.அதிலும் பார்ப்பனீய தேசீயத்திற்கு எவ்வளவு விரோதி யோ அதை விட பலமடங்கு அதிகமான விரோதியேயாகும். கராச்சி நவ ஜவான் வீரர்கள் “காந்தி வீழ்க! காந்தியம் வீழ்க!” என்று சொல்வதற்கு 2.3
வருஷத்திற்கு முன்பிருந்தே நான் காந்தி தேசீயத்திற்கு விரோதியாகி இருக்கின்றேன். காந்தீயம் ஒழிந்தாலொழிய இந்த நாட்டிற்கு விடுதலையோ, சமத்துவமோ, சுயமரியாதையோ இல்லை என்று கருதிக் கொண்டு இருக் கின்றவன். காந்தி தேசீயமெல்லாம் வெள்ளைக்கார ஆக்ஷியைப் பிடுங்கி, பார்ப்பனனிடமும், பணக்காரனிடமும் கொடுத்து, வருணாச்சிரம ஆட்சி ஆக்க வேண்டும் என்கின்ற ஒரே கொள்கை கொண்டதுதான்.
உதாரணம் வேண்டுமானால் அவரது கதர் தத்துவத்தையும், கிராம முன்னேற்றத் தத்துவதையும் நன்றாய் கவனித்துப் பார்த்தால் அப்பொழுது அவைகள் வருணாச்சிரமத்தை ஆதரிப்பதே ஒழிய வேறில்லை என்பதை விளக்கும்.அன்றியும், திரு.காந்தியே “வருணாச்சிரமத்தை நிலைநிறுத்தவே சுயராஜ்யத்தை வேண்டுகிறேன்” என்பதுவாக பல தடவை சொல்லி இருக்கிறார்.
அவர் எண்ணமெல்லாம் “இந்தியாவைப் பழங்கால நிலைமைக்கு கொண்டு போக வேண்டு” மென்பதேயாகும். இந்தக் கருத்தை உள்ளே வைத்துக் கொண்டுதான் அதற்கு இடையூறாயிருக்கும் பிரிட்டிஷ் ஆட்சி மீது மக்களுக்கு விரோதம் ஏற்படும்படி நடிக்கின்றார். ருஷிய ஆட்சியை
விட, மற்றும் ஏதாவது ஆட்சியை விட, பிரிட்டிஷ் ஆட்சி மோசமானதாக இருக்கலாமேயொழிய இராமன், அரிச்சந்திரன், கிருஷ்ணன், மனு, சேர சோழ பாண்டியன் முதலியவர்களின் ஆட்சியை விட 1000 பங்கு வெள்ளை.
யாட்சி மேலானதென்றே சொல்லுவேன். உதாரணமாக, திருஇரவீந்திரநாத் டாகூர் அவர்கள் முந்தாநாள் பேசியதை கவனியுங்கள்.
குடி அரசு - 1981 (2) 282
*பகுத்தறிவின்மை, மூட நம்பிக்கை, ஜாதிப்பிரிவு, மதத்துவேஷம் முதலியவைகள் தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள். அன்னிய ஆட்சியை விட அவை கொடியன. இவை ஒழிந்தாலொழிய பூரண: சுயேச்சை என்பது கிடையாது” என்று சாந்தி நிகேதனத்தில் இருந்து உலக மக்களுக்கு சேதி அனுப்பியிருக்கின்றார். திரு. காந்தி தேசீயம் இந்தியாவின் மேற்படி விரோதிகளை ஒழிக்குமா? அல்லது அதை கொடுமையினதல்லாத அன்னிய ஆட்சியை ஒழித்து, அக்கொடுமைகளை நிலை நிறுத்துமா? யோசித்துப் பாருங்கள். தேசீயம் என்று சொல்லிவிட்டதாலேயே பாம்புப்
புற்றில் கையைவிட வேண்டுமா? நெருப்புக்கு முத்தம் கொடுக்க வேண் டுமா? என்று கேட்கின்றேன். சகோதரர்களே! நமது கொள்கை காந்தி தேசீய மாகிய காங்கிரசுக்கு விரோதமானதேயாகும். வருணாச்சிரமத்திற்கும், முதலாளி தத்துவத்திற்கும் விரோதமானதேயாகும். மேலும், அவற்றிற்கு அனுகூலமாயிருக்கும் கடவுள், மதம் என்பனவாகியவற்றிற்கும் விரோத மேயாகும். இன்னும் எங்குபோய் நிற்கும் என்று என்னாலேயே சொல்ல முடியாது. ஆகவே, நீங்கள் எதற்கும் உங்கள் பகுத்தறிவை தைரியமாய் உபயோகியுங்கள்.
குறிப்பு-நாகையில் 03107931 அன்றுநடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உறை:
குடி அரசு - சொற்பொழிவு - 11.10.1931
283 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வகுப்புவாரி பிநதிநிதித்துவம்
இன்றையதினம் “இந்தியா தேசத்தில் இந்திய மக்களுக்குள்
இருந்துவரும் ஜாதி மத பேதங்களுக்குத் தகுந்தபடியான பிரதிநிதித்துவம் ஏற்படக்கூடாது” என்பதே தான் இந்திய காங்கிரஸ் கொள்கையாகவும், தீவிர தேசீயமாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் இந்தப்படி சொல்லுகின்ற வர்கள் தான் தேசீயவாதிகளாகக் கூடும். நம்மைப்பொறுத்தவரையிலும், “ஜாதி மத வகுப்புப்படி மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்:
டும்” என்று சொல்லுவதாலேயே தீவிர தேசீயவாதிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்படாமல், வகுப்புவாதிகள் தேசத்துரோகிகள் லிஸ்டிலும் நமது பெயர். பதியப்பட்டுவிட்டது. ஆனபோதிலும் ஜாதி, மதம், வகுப்பு ஆகியவை களை அடியோடு அழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற “ஜாதிமதத் துரோக” லிஸ்டிலும் நமது பெயர் மாத்திரமேதான் இருக்கின்றதே யொழிய மற்றபடியான “தீவிர தேசீயவாதிகள்' பெயரெல்லாம் ஜாதிமத வகுப்பைக் காப்பாற்றும் லிஸ்டிலேயே தான் பதியப்பட்டிக்கின்றன. இதில் இருந்து பகுத் தறிவுள்ள மக்கள் ஜாதிமத வகுப்புவாதிகள் யார்? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சொந்த அறிவே சிறிதும் இல்லாத பாமரமக்கள் நம்மை குறைகூறாமல் இருக்கமாட்டார்கள். இந்த நாட்டில் நாமறிய சுமார் 20 வருஷகாலமாகவே பிராமணர்கள் மகாநாடு, வருணாச்
சிரம மகாநாடு, கிருஸ்துவர் மகாநாடு, முஸ்லீம்கள் மகாநாடு, சைவர் மகாநாடு, வைணவர் மகாநாடு, ஆரியதர்ம பரீக்ஷித்து மகாநாடு, மற்றும் க்ஷத்திரியர், வைசியர், பார்ப்பனரல்லாதார், பறையர், சக்கிலியர், வண்ணார், நாவிதர், நாயக்கர், பள்ளர்கள், வணியவைசியர்கள், வேளாளர், படையாட்சி, வேடுவர், கோமுட்டி வைசியர், நாட்டுக்கோட்டை வைசியர், அகமுடையர், உடையார், நாடார், மறவர், கள்ளர், வீரசைவர், தேவாங்கர், இராஜபுத்திரர், சாலியர், மராட்டியர், கைக்கோளர், செளராஷ்டிரர்கள், பலிஜியர்கள், குயவர்கள், கோனார் முதலிய பல முக்கிய வகுப்புக்காரர்களின் தனித்தனி மகாநாடுகளும், மற்றும் இவற்றுள் நூற்றுக்கணக்கான உட்பிரிவு வகுப்புகள் மகாநாடுகளும் நடைபெற்ற வண்ணமாகவே இருந்து வருகின்றன.
மற்றும் தேசீய கொள்கைகள் என்பவைகள் எல்லாம் ஜாதிமத வகுப்புகளை காப்பாற்றுவதிலும் அவற்றின் பரம்பரை உரிமைகளை
குடி அரசு - 1981 (2) 284
காப்பாற்றுவதிலும் பழக்க வழக்கங்களை காப்பாற்றுவதிலும் தவரமாட்டோ மென்று அந்த வகுப்பாருக்கு உறுதிக்கொடுப்பதாகவே தான் தீர்மானித்
திருக்கின்றன. சர்க்காரார் கணக்கிலும் ஜாதிக்கொரு கலமும், மதத்திற்கொரு
கலமும், வகுப்புக்கொரு கலமும் போடப்பட்டு அதை அனுசரித்தே சிவில் கிரிமினல் சட்டங்களும், ஆகஷியும் நடத்தப்பட்டு வருகின்றன. வியாபாரத் துறையிலும் ஜாதி வகுப்புகள் ஆதிக்கமும், விவசாயத்துறையிலும் ஜாதிமத
வகுப்புகள்ஆதிக்கமும் இருந்து வருவதோடு சமூகத் துறையிலும் ஜாதிமத வகுப்பு ஆதிக்கம் தலை சிறந்தே விளங்குகின்றன.
உதாரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.இராஜ கோபாலாச்சாரியார் அவர்களே தலைவர் ஹோதாவில் “எவனாவது கள் குடித்தால் அவனை ஜாதியை விட்டும் வகுப்பைவிட்டும் பகிஷ்காரம் செய்து அதாவது அவனுக்கு நீர், நெருப்பு. பூமி ஆகியவை யாரும் கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதான ஜாதி வகுப்பு கட்டுப்பாட்டை பலப்படுத்துங்கள்” என்று அறிக்கை விட்டிருக்கின்றார். இந்த மாதிரியான முறையில் தேசீயம் முதல் காந்தீயம் வரை ஜாதி மத வகுப்பு பிரிவினை களுக்கு இரும்புப் பூண்கள் போடப்பட்டது போல்உறுதிப்படுத்தி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இவை சுலபத்தில் ஒழிக்கப்பட யாராலும் சம்மதிக்க முடியாது என்பதிலும் எவரும் எவ்வித சந்தேகமும் கொள்ள முடியாது. ஒரு பறையர் ஒரு பொதுத் தெருவில் நடந்தால் இன்ன தண்டனை, ஒரு வாணிய வைசியர் ஒரு பொது கோவிலுக்குள் போனால் இன்ன தண்டனை, ஒரு நாடார் க்ஷத்திரியர் ஒரு பொதுக் குளத்தில் தண்ணீர் மொண்டால் இன்ன தண்டனை என்கின்ற பினல் கோட் சட்டமும், அதற்காக இன்ன நஷ்டம் கொடுக்க வேண்டும் என்கின்ற சிவில் கோர்ட் சட்டமும், கிராம முன்சீப் முதல் பிரிவி கவுன்சில் வரை செலாவணி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றது.
அன்றியும் இதற்கு விரோதமாய் பேசுபவன் ஒவ்வொருவனும் ஒவ்வொரு ஜாதி மத வகுப்புக்கும் விரோதியேயாகின்றானேயொழிய, அவன் சமரசகாரனாவதில்லை. இவை மாத்திரமல்லாமல் பொது ரோட்டில் ஒரு இந்து மேளம் அடித்தால் மகமதியர்கள் கத்தியால் குத்துகிறார்கள். பொதுத் தெருவில் ஒரு மகமதியர் மாட்டைப் பிடித்துக்கொண்டு போனால் இந்துக்கள் அவரை கத்தியால் வெட்டுகிறார்கள். சீக்கியரும், முகமதியரும் தங்களை ஒருவருக்கொருவர் ஜன்ம விரோதிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறார்கள். “பிராமண'ருக்கும் “சூத்திர"ருக்கும் இருக்கும் “ஒற்றுமை”யை எடுத்து காட்ட வேண்டியதில்லை. இந்த நிலை மையில் உள்ள மக்களுக்கு ஜாதிப்படியோ, மதப்படியோ, வகுப்புப்படியோ
பிரதிநிதித்துவம் மாத்திரம் கூடாதாம்!
ஏனெனில், அது தேசீயத்திற்கு விரோதமாகி விடுமாம்! ஆனால் அப்படிப்பட்ட ஜாதிமத வகுப்புகளை என்றும் நிலையாய் இருக்கும்படி
285 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காப்பாற்றுவது மாத்திரம் தேசீயமாம். அதற்காகவே திரு.காந்திக்கும் காங்கிர
சுக்கும் சுயராஜ்யம் வேண்டுமாம். இந்தநிலைமையுள்ள இதன் யோக்கியதை ஒரு புறம் இருக்க பொது ஜனங்களுக்கு அளிக்கப்படும் (பிரதிநிதிகளை தெரிந்தெடுக்கும் முறை) நிலைமையைப் பற்றி சிறிது யோசிப்போம்.
ஓட்டானது கல்வியைப் பொறுத்ததாகவும் பணத்தைப் பொறுத் ததாகவும், வரும்படியைப் பொறுத்ததாகவும் இருக்க வேண்டும் என்ற அளவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மற்ற எந்த
மதத்திற்கும், எந்த ஜாதிக்கும், எந்த வகுப்புக்கும் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் இருந்தாலும் பஞ்சமர், ஆதிதிராவிடர், தீண்டப்படாதார், என்கின்ற 7 கோடி மக்களில் கல்வியோ, சொத்தோ குறிப்பிட்ட வரும் படியோ 1000ல் ஒருவருக்காவது இருக்கின்றதா என்று பார்த்தாலே அதன் இல்லாமை உண்மை நன்றாய் விளங்கும். பார்ப்பனர்களுக்கு 100க்கு 100பேர் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் எல்லாமும் அல்லது ஏதாவது ஒன்றும் உடையவர்கள் ஆகவேதான் இருப்பார்கள். ஆதலால் அவர்கள் எல்லாருமே எப்படியும் எந்த தொகுதியிலும் ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றபடி “மேல் ஜாதிக்காரர்” என்பவர்களிலும் அரைவாசிப் பேராவது ஓட்டர்களாக ஆகிவிடுவார்கள். நடுஜாதிக்காரர் என்பவர்கள் அரைக்கால் வாசிப்பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றும் சில
“கீழ் ஜாதிக்காரர் என்பவர்களும் வீசம் வாசிப்பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள். ஆனால் பறையர், சக்கிலியர், பள்ளர் முதலிய “தீண்டாத” வகுப்பார் என்பவர்களில் முந்திரிப் பெயராவது அதாவது 300ல் ஒரு பாகம் பெயர்களாவது ஓட்டராக இருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பாருங்
கள். நிற்க, மற்றொரு விதத்திலாவது அதாவது அவர்களுக்கென்று சில ஸ்தானங்களை பொதுதேர்தலில் ஒதுக்கி வைத்தாலும் உண்மையான பறையரோ, சக்கிலியரோ வர முடியுமா? என்பதை சற்று யோசித்துப் பாருங்
கள். பறையனிலேயே பட்டை நாமம் துளசிமணி போட்டுக் கொண்டு “மற்ற பறையனைத் தொட்டால் தீட்டு” என்று கருதுகிறவனும், விபூதி, உத்திரா க்ஷம் போட்டுக் கொண்டு பறத்தெருவுகளுக்குள் போய் வந்தால் குளிக் கின்றவனும், தனது சொந்தநலத்திற்கு சமூகத்தை விற்பவனும் தான் வர: முடியுமேயொழிய இவற்றிற்கு செளகரியமில்லாதவன் வரமுடியுமா? என்று பாருங்கள். ஒருக்காலும் முடியாது. ஏனெனில், உண்மையாகவே தங்கள் சமூகம் முன்னேற வேண்டும் என்று கருதுகின்றவனையும், தன்னை ஏன் மற்றவர்கள் பறையன் என்று சொல்லுகின்றார்கள் என்று கருதுகின்ற வனையும் மற்ற ஜாதியார்கள் (“மேல் ஜாதியார்கள்”) தெரிந்தெடுக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள் . மற்றபடி கிராமங்களிலோ, அங்குள்ள மிராஸ்தாரர்கள் தங்கள் குதிரைக்காரனையும், நாய்க்கு பதிலாய் இருக்கும் அடிமையையும் மாத்திரம்தான் தெரிந்தெடுத்ததாய் சடங்கு செய்து, அவனை தங்கள் கைத்தடிமுனையிலேயே வைத்திருப்பார்களேயொழிய தங்களுடன் சரி சமமாய் உட்கார நினைப்பவனை கிராமத்திலேயே வைத்திருக்க மாட்டார்கள்.
குடி அரசு - 1981 (2) 286
இவை நிற்க, 21 வயது வந்த ஆண்களுக்கெல்லாம் ஓட்டு உரிமை கொடுப்பதாய் வைத்துக் கொண்டாலும், அந்த அந்த கிராமத்து மிராசுதாரன் சொன்னபடி தான் ஆசாமிகள் அபேக்ஷகர்களாக நிற்கவும், ஓட்டர்கள்
ஓட்டுகள் போடவும் முடியுமே அல்லாமல், மற்றபடி பிரதிநிதித்துவத்திற்கு தகுந்தவர்கள் என்று ஒரு நாளும் வரமுடியவே முடியாது. ஆகவே, மற்ற ஜாதி மத வகுப்பார் இடம் நம்பிக்கை இல்லை என்று கருதுகின்ற எந்த சிறுவகுப்புக்காரர்களாயிருந்தாலும், அவர்களுக்கு
பிரதிநிதித்துவம் இருக்கும்படியாகவும், அந்த பிரதிநிதித்துவத்தை அவர் களே சகல உரிமைகளுடன் தெரிந்தெடுத்துக்கொள்ள தகுந்ததாகவுமே தான் சுயராஜ்ய ஆக்ஷிமுறை ஏற்படுத்தப்படவேண்டும். அப்படிக்கில்லையா னால் ஒரு பொதுவான, அதாவது இந்திய ஜாதி மத வகுப்பு வித்தியாசத்தில் கட்டுப்படாத ஒரு கூட்டத்தின் ஆக்ஷியில்தான் விடவேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதைவிட்டுவிட்டு “என் ஜாதி உயர்வையும், அனுபவத்தையும் விடமாட்டேன்” ஆனால் நான்
கீழ் ஜாதி என்று வதைத்து , கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றவனுக்கு நான் தான் தர்ம கர்த்தவாய் இருப்பேன்” என்றால் அது வடிகட்டின அயோக் கியத்தனமேயாகும்.
நிற்க, திரு. காந்தியவர்கள், “முகமதியருக்கும் சீக்கியருக்கும்
மாத்திரம்தான் தனிப்பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலமாய் வேண்டுமா னாலும் கொடுக்க சம்மதிப்பேன். ஆனால் தீண்டாதார் என்கின்ற வகுப்
புக்கு மாத்திரம் கொடுக்க மாட்டேன்'என்று சொல்லுவதும், திருமாளவியா அவர்கள் “அதற்கும் ஆமாம் சாமி” போடுவதும் என்றால், இதில் கடுகள வாவது நீதியோ அல்லது நல்ல எண்ணமோ இருக்கின்றதா என்று பார்க்கும் படி வாசகர்களை கேட்கிறோம்.
சாயபு வாய்வார்த்தை வாயில் இருக்க, முதலில் கையை நீட்டி விடுகிறார். உடனே ஆயிரக்கணக்கான சாயபுகள் மேல்விழுந்து நசுக்கிவிடு கின்றார்கள். அவர்களிடத்தில் அவ்வளவு கட்டுத்திட்டமும்,வீரமும் இருக்கின்றது. ஆதலால், அவர்களுக்கு பதில் பேசாமல், 'கொடுப்பதற்குள் என்ன சாயபே அவசரம்” என்று மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கின்றது. அதுபோலவே சீக்கியர்களும் வாய் வார்த்தை வாயிலிருக்க கிருபானை (கத்தியை! எடுத்துக் கொள்ளுகிறார்கள்.
அன்றியும், சீக்கிய பூச்சாண்டிகாட்டி சாயபை ஏமாற்ற வேண்டியும் இருக்கின்றது. ஆதலால் சீக்கியர் எண்ணிக்கை லக்ஷக்கணக்குள் இருந்தா
லும், அவர்களுக்கு தனித்தேர்தல் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டியிருக் கின்றது. ஆனால், தீண்டாத ஜாதியார் என்பவர்களோ ஏழு கோடி பேர் இருந்தாலும் அவர்களுக்கு மானம் இல்லாமல், மனிதத்தன்மை நினைத்துப் பார்ப்பதற்கில்லாமல் வீரம் என்பதற்கு அர்த்தமே தெரியமுடியாமல், உதைத்த காலுக்கு முத்தம் இடும் மிருகத்தன்மையில் அடக்கி வைக்கப்
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பட்டிருக்கிறார்கள். ஆதலாலும், அவர்கள் இன்னும் “மேல் ஜாதியார்” களுக்கு உழைத்துப் போடவேண்டிய அடிமைகளாயிருக்க வேண்டியிருப்
பதால், அவர்களை முன்னேற்றமடைய விடமுடியாதென்று சொல்லி அவர்: களுக்கு தனித்தேர்தல், தனிப்பிரதிநிதித்துவம் காங்கிரசும், காந்தியும், மாளவியாவும் மறுக்கவேண்டியதாகி விட்டது.
ஆகவே, காங்கிரசின்- திரு.காந்தியின், திரு.மாளவியாவின் தேசபக்தியும், தேசீயமும் வகுப்புப் பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதல்லாமல் வேறு கொள்கை ஒன்றும் முக்கியமானதல்லவென்றே சொல்லுவோம்.
தவிர, “சர்க்காரார் தான் ஜாதி மத வகுப்பு பேதங்களால் ஜனங்களை பிரித்துவிட்டு, சுயராஜ்யம் கொடுக்காமல், சூட்சி செய்கின்றார்கள்” என்று திரு.காந்தியும் கிளிப்பிள்ளை தேச பக்தர்களும் அடிக்கடி சொல்வதுண்டு. ஜாதிமத வகுப்புகளை பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்ததா? அல்லது இந்திய இராம இராஜ்யம் பிரித்ததா என்று கேட்கின்றோம்.
அன்றியும், முஸ்லீம்கள் விஷயத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவதிலிருந்து தப்பித்து கொள்ளுவதற்காக தேசீய முஸ்லீம் என்றும் தேசத் துரோக முஸ்லீம் என்றும் பிரித்து வைத்து, “நீங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். உங்கள் பங்கைக் கொடுக்கத் தடையில்லை” என்று சொல்லுவது திரு.காந்தியா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? என்று கேட்கின்றோம். திரு. காந்தி அவர்களின் சட்டைப்பையின் டிக்கட் பாக்கட்டில் இருக்கும் திரு. அன்சாரியைத் தவிர தேசீய முஸ்லீம் தலைவரோ, தொண்டரோ, பின்பற்றுபவரோ வேறு முஸ்லீம் யார்? என்று கேட்கின்றோம்.
அப்படித்தான் இருந்தாலும் 8 கோடி முஸ்லீம்களில் எத்தனை கோடிப் பேர்கள் “தேசிய” முஸ்லீம்கள்? எத்தனை கோடி பேர்கள் “தேசத் துரோக முஸ்லீம்கள்” என்று சொல்லக் கூடும்? என்று கேட்கின்றோம். “ஏழைகளுக்காக திக்கற்றவர்களுக்காக, வாயில்லாப்பூச்சிகளான கிராம வாசிகளுக்காக, சிறுபான்மையோருக்காக, தாழ்த்தப்பட்டவருக்காகத் தான் நான் பாடுபடுகிறேன். அவர்கள் பிரதிநிதியாகத் தான் நான் வட்டமேஜை மகாநாட்டிற்கு வந்து இருக்கின்றேன்” என்று பல்லவி பாடி மந்திரம் ஜபிக்கும் திரு.காந்தியவர்கள் உண்மையில் யாருடைய பிரதிநிதியாய் சீமை சென்றிருக்கிறார்? என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். ஆகவே, வரப் போகும் சுயராஜ்யத்தில் எவ்வளவு சிறிய சுதந்திரம் கிடைத்தாலும், எவ்வளவு பெரிய சுதந்திரம் கிடைத்தாலும் அது இந்தியாவில் உள்ள - இருக்க வேண்டிய எல்லா ஜாதி மத வகுப்புக்கும் சரியான பிரதிநிதித்துவ
மாய் இருக்கக் கூடியதாய் இருந்தால் தான், இந்திய மக்களால் ஒப்புக் கொள்ளக்கூடியதாகும். இல்லாதவரை எதிர்க்க வேண்டியதாகும்.
குடி அரசு - தலையங்கம் - 11.10.1931 குடி அரசு - 1931 (2) 288
நாகை முகலாவது சுயமரியாதை மகாநா௫
தலைவர் அவர்களே! நண்பர்களே! “இத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர்களால் தான் இத்தீர்மானத்திற்கு பெருத்த ஆதரவளிக்கப் பட்டதாக கருதுகின்றேன். திரு.சிவஞானம் எதிர்த்ததால் தான் அத் தீர்மானத்தை உங்களுக்கு விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு சமயம் ஒருவர் இருவராவது தாக்ஷண்ணியத்திற்காக கைதூக்கவேண்டியிருக்கும். ஆதலால் நான் சொல்வதை நன்றாய் கவனித்து உங்கள் இஷ்டத்தை தெரிவியுங்கள். தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் மீது கோபிப்பது கோழைத்தனமாகும். தீர்மானத்தில் உண்மையும், வீரமும் இல்லை என்று கருத வேண்டியதாகும்.
தவிர எதிர்ப்பவர்கள் அநேகர் உண்மையாகவே அவர்களுக்கு விளங்காமல் எதிர்த்தாலும் எதிர்க்கலாம். அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது நமது கடமை. அதனால் மற்றவர்களுக்கும் விளங்கும். அன்றி
யும் அவ்விளக்கம் மற்றவர்களுக்கு பிரசாரம் செய்யவும் உதவும்.
நண்பர்களே! கள்ளுக்கடை மறியலானது குடி நிறுத்துவற்காக செய்யப்படுவதில்லை என்பது எனது அனுபவ ஞானமான முடிவு.
நான் தென்னாட்டில் மறியலை நடத்தி இருக்கின்றேன். என் மனைவி யையும், சகோதரியையும், என் பந்து சிநேகிதர்களின் தாயார், மகள் முதலிய வர்களையும் கொண்டு நடத்தினேன்.அநேக கடைகளை மூடினேன். எனது 600 தென்னை மரங்களை வெட்டினேன். 300,400 மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சாமல் தானகவே காய்ந்து போகும்படி செய்தேன். மறியலுக்காக நானும் எனது ஈரோட்டு நண்பர்கள் சுமார் 100 பேரும் ஜெயிலுக்குப் போனோம். திருச்சியில் நூற்றுக்கணக்கான பேர்களை எம்.ஏ., பி.எல்., உட்பட சிறைக்கு அனுப்பினேன். கையில் 500 தொண்டர்களை வைத்துக் கொண்டு, ஆயிரம் தொண்டர்களை லிஸ்டில் வைத்துக் கொண்டு நானும் நண்பர் திரு.இராமநாதனும் மதுரையில் தினம் நான்கு நான்கு பேர்களாக 100 தொண்டர்கள் வரை ஒவ்வொரு வருஷ தண்டனைக்கு அனுப்பினேன்.
289 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மதுரை சர்க்காரார் தினறினார்கள். அந்த சமயத்தில் திடீரென்று திரு.சி.இராஜ கோபாலாச்சாரியார் மறியலை நிறுத்தும்படி உத்திரவு செய்தார். அடிதடி, வசவு, பலாத்காரம் ஒன்றுமே நாங்கள் செய்யவில்லை. தொண்டர்கள் தண்டிக்கப்பட்டவுடன் அதிகாரி என்னிடம் வந்து பேசுவார். போலீசார். எனக்கு வெகுமரியாதை செய்வார்கள்.அதிகாரிகள் வெட்கப்படுவார்களே யொழிய நம்மீது குரோதமோ, துவேஷமோ இல்லை. அப்படிப்பட்ட
சமயத்தில் மறியலை நிறுத்த நானும் திரு.இராமநாதனும் சம்மதிக்க வில்லை. அப்படியிருக்க நாங்கள் மறியலை நிறுத்த சம்மதிக்காவிட்டால்
தான் இராஜினாமா செய்து தனது தலைவர் பதவியை திரு.எஸ்.சீனிவாசய் யங்காருக்கு அளித்து விடப்போவதாய்ச் சொல்லி பயமுறுத்தி மறியலை நிறுத்தி விட்டார். 100 பேர் சிறையில் ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டிருக்க, 500 பேர் தயாராய் இருக்க மறியலை நிறுத்திய உடன் எங்கள் மனம் கஷ்டப் பட்டு விட்டது. காரணம் என்ன என்று பார்த்தபோது நாகப்பூர் கொடி சத்தியாக்கிரகத்திற்கு தொண்டர்கள் போதவில்லை என்றும் ஜமநாத பஜாஜ் ஆரம்பித்த சத்தியாக்கிரகம் தோல்வி அடைந்ததால் அவருக்கு அவ மானம் என்றும், அவர் வேலையை விட்ட வக்கீல்களுக்கு பல லக்ஷ ரூபாய் கொடுத்தவர் என்றும் திருஇராஜகோபா லாச்சாரியார் சமாதானம் சொன்னார்.
அந்தக் காரணமாக எல்லா மறியலும் நிறுத்தப்பட்டது. இதனால், மறியலுக்கு பயந்து கள்ளுக்கடை ஏலமெடுக்காதவர் நஷ்டப்படவும், துணிந்து குறைந்த துகைக்கு ஏலத்தில் எடுத்தவர் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் சர்க்காரார். இந்த நஷ்டத்தின் சாக்காய் இந்திய மக்களின் ஆரம்பக்கல்வியின் வாயில் மண்ணைப் போடவுமே ஏற்பட்டது. மற்ற பெரிய கல்வி இலாகா அதிகாரி
கள் சம்பளம் சிறிதும் குறையவில்லை. மறியலால் கள்குடி குறைபாடு குறை
யாது, முக்காலும் குறையாது என்று உறுதி கூறுவேன்.
இத்தீர்மானத்தை எதிர்த்தவரே தான் பேசும் போது ஒரு வார்த்தை சொன்னார். அதாவது தங்கள் மறியலால் கடையில் வியாபாரம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தெருக்களில் பலகாரம் விற்பதுபோல் பாட்டல் பாட்டல்களாய் எடுத்துச் சென்று விற்கப்படுகிறதென்றும் சொன்னார். ஆகவே மறியல்காரர்களை நான் ஒன்று கேட்கின்றேன், அதாவது தங்கள் மறியலின் காரணமாக கள்ளுக்கடைகளில் கள்ளு விற்பதைத் தடுத்து, வீதி வீதியாய் விற்கும்படியான நிலைமை ஏற்பட்டதற்கு மறியல் தொண்டர் களோ அவர்களது “உலகம் போற்றும்” ஒப்பற்ற தலைவரோ என்ன
பரிகாரம் செய்ய போகிறார்கள்? என்று கேட்கின்றேன். கள்ளு இலாகாவை
நடாத்தும் மந்திரியையாவது, கள்ளு இலாகா அதிகாரிகளையாவது வீதியில்
கள் விற்கும் மக்களையாவது இந்த மறியலின் மூலமாக அசைக்க முடியுமா? என்று கேட்கின்றேன். கள்ளுக்கடை மூடிவிட்டால் தெரு விற்பனைகள் எங்கு போய்விடும்? லைசென்சு இல்லாமல் மரம் கட்டி இறக்கும் கள் எங்கு போய்விடும்? ஆகவே, மறியல் குடியை நிறுத்துவதற் காகவா? அல்லது வயிற்றுப் பிழைப்புக்கோ விளம்பரத்திற்கோ, கள்ளுக்
குடி அரசு - 1981 (2) 290
கடைக்காரரிடம் வியாபாரம் பேசி, ஆச்சிரமம் வைத்து, கொடிதூக்கிக் கொண்டு திரிந்து, பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்கும் ஓட்டு வாங்கி கொடுப்ப தற்காகவா? என்று உங்களை கேட்கின்றேன். மறிய
லால் கள் குடி நிறுத்த முடியாது என்று நான்மாத்திரம் சொல்ல வரவில்லை, திரு. இராஜகோபாலாச்சாரியார் சொன்னதையும் இப்போது நான் சொல்ல வரவில்லை. ஆனால் திரு.காந்தி- உங்களால் “மகாத்மா” என்று சொல்லப்
படும் உங்கள் தலைவரான திரு.காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தருளி யதை சொல்லுகின்றேன் கேளுங்கள்.
அதாவது “குடிகாரர்கள் தாங்களாகவே குடியை விட்டாலொழிய குடியை நிறுத்த முடியாது. கள்ளுக்கடைகளை மூடிவிடச் செய்வது நம் வேலை அல்ல. மூடினாலும் திருட்டுத்தனமாக இப்பொழுது இருப்பது போலவே வியாபாரமும், குடியும் இருந்துதான் வரும். சரீரத்தால் தொழில் செய்கிற மிருகங்களைப்போன்ற உழைப்பாளிகட்கு கள்ளு அவசியமானது. நானே வாங்கிக் கொடுத்திருக்கிறேன்'” என்று திரு.காந்தியே சொல்லியிருக்
கிறார். இதிலிருந்து சட்டங்களின் மூலம் கூட மதுபானத்தை நிறுத்தி விட முடியாது என்பதே அவரது அபிப்பிராயமாகும். இப்படியிருக்க இந்த
மறியல் என்பது நாடகம் என்றும், பாமரமக்களை ஏய்ப்பதின் மூலம் தாங்கள் தலைவர்களாகவும், தேசபக்தர்களாகவும் ஆவதற்கு செய்யப்படும்
சூக்ஷி என்பதல்லாமல் வேறு என்ன வித உண்மையோ, நாணையமோ இந்த மறியலில் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இப்பொழுது அநேக ஊர்களில் கள்ளு குத்தகைக்காரர்களுடன் வியாபாரம் பேசிக் கொண்டு மறியலை நிறுத்திக் கொண்டார்கள். சிலர் பலாத்காரத்திற்கு பயந்து கொண்டு நிறுத்தி விட்டார்கள். சிலர் பொதுஜனங்களிடம் வாங்கிய பணத்தை பங்கு போடுவதில் சண்டை போட்டு கொண்டு நிறுத்திவிட்டார்
கள். சிலர் தேர்தலில் ஓட்டு பெற கூலி கொடுத்து நடத்துவதால் எதிர். அபேக்ஷகர்கள் உண்மையை வெளிப்படுத்துவதால் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் “மறியல், மறியல்” என்று ஏன் இளம் வாலிபர்களை அயோக்கியர்களாகவும் வாழ்க்கைக்கு உதவாதவர்களுமாகவும் ஆக்க வேண்டும்? என்று கேட்கின்றேன். தவிரவும் இந்துமதக் கடவுள்களில் சிலவற்றிற்கு குடம் குடமாய் கள் வைத்துப் படைத்து குடிப்பவர்களை எப்படி நிறுத்தி விட முடியும்? தவிர வட்டமேஜை மகாநாடு திரு.காந்தி இஷ்டப்படி முடிவு பெற்று விட்டால் மறியல் நடக்குமா?என்று யோசித்துப் பாருங்கள். அப்பொழுது இவர்கள் என்ன சொல்லுவார்கள்? “சர்க்காரா ரோடு ராஜி ஏற்பட்டு விட்டது. ஆதலால் மறியல் வேண்டாம். மறியலால்
மது நின்று விடாது. ஒன்றோ சட்டத்தாலோ அல்லது வேறு உபாயத்தாலோ நிறுத்தலாம்” என்று தானே சொல்லுவார்கள். மற்றும் சமூக சம்பந்தமான குறைகளைப் பற்றி பேசி காங்கிரசுக்காரர் ஏன் அவ்விஷயத்திற்குப் பொது ஜனங்களிடம் வசூலிக்கும் 10 லக்ஷக்கணக்கான பணத்தில் ஒரு காசும் செலவு செய்வதில்லை என்றும், ஒரு வேலையும் காங்கிரஸ் தொண்டர்கள்
291 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வேலை திட்டத்தில் இல்லை என்றும் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்பதை கவனியுங்கள். “அதெல்லாம் சுயராஜ்ஜியம் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றும் “ஒரு வரியில் சரிப்படுத்தி விடலாம்” என்றும் சொல்லுகின்றார்கள். அப்பேற்பட்ட சமூக சம்பந்தமான பழக்க வழக்கங்களை சுயராஜ்ஜியம் வந்த பிறகு ஒரு வரியில் சரிப்படுத்தி விடுவதானால், அது சாத்தியமானால் - உண்மையானால் கள்ளு குடியை
நிறுத்த மாத்திரம் தானா பல வரிகளாலும் முடியாமல் போய் விடும்? என்று கேட்கின்றேன்.
தவிரவும் தீர்மானமானது யாரையும் குடிக்கும்படி சொல்லவில்லை. கள்ளுக்கடைக்கு குடிகாரர்களை கூட்டிக் கொண்டு போகும்படியும் சொல்லவில்லை. மறியல் மறியல் என்று சொல்லிக் கொண்டு செய்யும் முட்டாள்தனமான காரியத்தால் கள்ளு வியாபாரிகளை கொள்ளையடிக் கும்படியாகவும், தெருக்களில் எல்லாம் கள்ளு சாராயம் விற்கும் படியாக
வும், பாமர ஜனங்கள் இந்த முட்டாள் தனமும் சூட்சி நிரம்பியதுமான வார்த்தை களை நம்பி பொறுத்தமும், நாணயமும், யோக்கியப் பொறுப்பும் அற்ற சுயநலமிகளை ஜனப் பிரதிநிதியாக்க விடாமலும் செய்ய வேண்டு. மென்பதுதான் இத்தீர்மானத்தின் தத்துவமாகும். நமது மக்கள் பாமர மக்களானதினாலும், 100 க்கு 90 பேர் எழுத்து வாசனை அறியாத மக்களான
தினாலும், அவர்களை மூட நம்பிக்கையிலும், பகுத்தறிவற்ற தன்மையிலும் பார்ப்பனர்களும், அரசாங்கத்தாரும் வைத்திருக்கின்றார்களானதினாலும், காந்தி, காங்கிரஸ், கதர், பகிஷ்காரம், தேசீயம், மறியல் முதலிய காரியங்க ளால் ஏமாந்து போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே
இத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கின்றதே தவிர வேறில்லை என்று சொல்லுகின்றேன். நமது வாலிபர்களிடமிருக்கும் அபிமானமே என்னை இப்படிச்சொல்லச் செய்கின்றது. எழுச்சியான-வேடிக்கையான- பரபரப்பை உண்டாக்கத் தக்க எதுவானாலும் இளம் வாலிபர்களின் மனதைக் கவர்வது இயற்கை. புரட்டாசி மாதம் வந்தால் அநேக வாலிபர்கள் நாமம் போட்டு, பஜனைக்குப் போய் விடுவார்கள். அல்லா பண்டிகை வந்தால் அநேக வாலிபர்கள் தங்களை மிருகமாக்கி புலிவேஷம் போட்டுக் கொள்ளு வார்கள். வேடிக்கைப் பார்த்த ஒன்றுமறியா சிறு குழந்தைகளும் பண்டிகை நின்று ஒரு மாதம் வரை இவர்களைப் போல் ஆடிக்கொண்டே இருப்பார்கள். ஆதலால் ஒவ்வொருவரும் தங்கள் அறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்து சரியென்று தோன்றியபடி நடவுங்கள்.
குறிப்பு : 03,04.101931 நாட்களில் நடைபெற்ற நாகை வட்ட முதலாவது சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது தீர்மானத்தை விளக்கி. ஆற்றிய உரை.
குடி அரசு - சொற்பொழிவு - 18.10.1931
குடி அரசு - 1981 (2) 292
* தீர்மானம்
பார்ப்பனர்களும், சுயநலக்காரர்களும், வயிற்றுப்பிழைப்புக்காரர். களும் காங்கிரஸ் மறியல் பகிஷ்காரம் என்ற வார்த்தைகளால் பாமரமக்களை ஏமாற்றி தேசத்தைப் பழைய அதாவது பார்ப்பன ஆதிக்க காலத்திற்கும், சோம்பேரிகள், பணக்காரர்கள் ஆதிக்கத்திற்கும் கொண்டு போகப் பார்க் கின்ற படியால் அவ்விதம் நடைபெறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டு மென்றும், ஆங்காங்குள்ள சுயமரியாதைக்காரர்கள் கவனித்துக்கொள்ள வேண்டு மென்றும் இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.
293 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வட்டமேகை மாநாடு முறிந்தால் கவலைப்பட வேண்றமதில்லை
வட்டமேஜை மகாநாட்டின் முதல் சப்கமிட்டி கூட்டமானது முறிந்து முடிவு பெற்று விட்டது. எப்படி எனில் “இந்தியர்களாகிய நாம் நமக்குள் இருக்கும் வகுப்பு வித்தியாசங்களுக்கு பரிகாரம் செய்து கொள்ள நமக்குள். ளாகவே ஒரு பைசலுக்கு வரமுடியவில்லை” என்கின்றதான முடிவுக்கு வந்து விட்டது. எவ்விஷயத்தில் நமக்குள்ளாக நாம் ஒரு முடிவுக்கு வர: முடியவில்லை என்கின்ற முடிவுக்கு வரப்பட்டது என்றால், நமக்கு அடுத்தாற்போல் பிரிட்டிஷாரால் வழங்கப்படப்போகும் சுதந்திரத்தையோ, அல்லது அவர்களிடம் இருந்து “கை பலத்தால்” தட்டிப் பிடுங்கிக் கொள்ளப் போகும் சுயேச்சையையோ நமக்குள் நாம் எப்படி பங்கிட்டுக் கொள்வது என்கின்ற காரியத்தில் நாம் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்று தீர்மானம் ஏற்பட்டு விட்டதோடு, இந்தியாவின் “ஏக தலைவர்” அல்லது “ஏகப்பிரதிநிதி”” நானே தான் என்று சொல்லப்படும்-சொல்லிக் கொள்ளவும் உரிமை கொண்டாடும் திரு.காந்தியவர்களாலேயே “நமக்குள்
நாம் ஒரு முடிவுக்கு வரும் விஷயத்தில் நான் எவ்வளவோ பாடுபட்டும் தோல்வி அடைந்து விட்டேன்” என்று விளக்கமாகத் தத்துவார்த்தத்திற்கு இடமில்லாமல் ஒப்புகொள்ளப்பட்டாய் விட்டது.
இந்த நிலைமையில் இனி மேலால் நடக்க வேண்டிய காரியம் என்ன என்கின்ற விஷயத்தில் ஒருவருக்கொருவர் தந்திரமும், சூக்ஷியும் செய்ய வேண்டியதவசியமாய் விட்டதுடன் திரு.காந்தி அவர்கள் தான் தோல்வி அடைந்து விட்டதற்கு ஏதாவது ஒரு சமாதானத்தை சொல்லித் தீர வேண்டி யதாய் விட்டது. இந்த இரண்டும் சேர்ந்து காங்கிரசினுடையவும், திரு.காந்தி யினுடையவும் உண்மையான நிறத்தையும், தத்துவார்த்தத்தையும் வெளி
படுத்தி விட்டது.
அதென்ன வெனில்:-
திரு.காந்தி அவர்கள் இந்தியாவில் இருந்து சீமைக்குப் புறப்படும் விஷயத்தில் அவரது அபிப்பிராயத்தை கேட்ட போது “இந்து முஸ்லீம்
குடி அரசு - 1981 (2) 294
பிரச்சினை ஏதாவது ஒரு வழியாய் முடிவு பெற்றாலொழிய நான் சீமைக்குப் போவதில்லை” என்று சொன்னதானது யாவருக்கும் தெரிந்ததேயாகும். ஆனால், உப்புப் போரானது பிராண அவஸ்தையில் இருந்து சிலேத்துமம் இழுத்துக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதா
வது ஒரு வகையில் “உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்” என் கின்ற கவலையின் பேரில் லார்ட் இர்வினிடம் சென்று ராஜி பேச வேண்டி யிருந்தால் உப்புப் போர் சம்பந்தமாய் “சிறை பிடித்தவர்களை விடுதலை செய்து அடக்குமுறையை நிறுத்திவிட்டால் உப்புப் போரை நிறுத்தி விடுவ தோடல்லாமல் நான் சீமைக்கும் போகத் தயாராய் இருக்கிறேன்” என்று
வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றாமலிருக்க முடியாத மாதிரியில் திரு.காந்தியை லார்ட் இர்வின் வைத்து விட்டுப் போய்விட்டதாலும், லார்ட் வில்லிங்டன் திரு.காந்தியவர்களை “போகிறீரா? என்ன சொல்லுகிறீர்? இர்வின் பிரபு உப்புப் போரை அழிக்கவிட்ட பாணம் இதோ இருக் கின்றது” என்று காட்டி மிரட்டியதினாலும் திரு.காந்திக்கும் அவரது சிஷ்யர். களுக்கும் சீமைக்குப் போக இஷ்டமே இல்லாமல் இருந்தும் “கடவுள்” அவர்களது கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் கொண்டு போய் வட்ட மேஜை மகாநாட்டில் உட்கார வைத்துவிட்டார். இந்த நிலைமையில் என்ன செய்
வார்! பாவம். “கடவுளை” நோகவோ முடியவில்லை, தத்துவார்த்தங்களும் வில்லிங்டன் பிரபுவிடம் செல்லவில்லை. வேண்டுமானால் அஹிம்சை
யைப் பற்றி பேசுவதால் மகாத்மாவாகலாம், கிறிஸ்துவாகலாம், உலகசிரேஷ் டராகவும் ஆகலாம். அதுவும் இவையெல்லாம் யாரிடத்திலாகலாம் என்றால் திரு.காந்தியவர்களை விட அதிகமான “கடவுள் பக்தர்களான” பாதிரிமார் களிடத்தில் ஆகலாம். தன் பேரில் சாமி வந்தது என்று சொல்லிக்கொண்டு பெருமை அடைகின்ற “வீர”ப் பெண்மணிகளை போல் “எங்கள் வீட்டிற்கு
காந்தி வந்தார்” என்று சொல்லிப் பெருமையடையும் பெண்மணிகளிடம் ஆகலாம். ஆனால், “கடவுளோடு” போட்டி போட்டுக்கொண்டு உலகத்தில் பெரும் பாகத்தை ஆக்ஷிபுரியும் வெள்ளைக்கார அரசாங்கத்தினிடம் இந்த கடவுள் பக்தியும், அஹிம்சை பல்லவியும் எப்படிச் செல்ல முடியும்? அதனாலேயே ராம்சே மக்டானால்ட் அவர்கள் தைரியமாய் எழுந்து “திரு.காந்தியவர்களே! உம்முடைய தோல்விக்காக நீர் வெட்கப்படாதீர்கள். சட்டமறுப்புப் பூச்சாண்டியானது எல்லா காரியத்தையும் சாதித்துவிடாது. பேசுங்கள், நாணயமாய் உண்மையாய் நடந்து கொள்ளுங்கள், நான் சொல்லு கின்றபடி கேளுங்கள்” என்று பொருள்பட அழுத்தமாய்ச் சொல்லிவிட்டார். மக்டானல்ட் துரை இப்படி சொல்லிவிட்டதால் திரு.காந்தி பெயரைச் சொல்லி வயிறு வளர்த்து வந்தவர்களுக்கும் அவரால் மனிதராகலாம் என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கும் அவர் விக்கிரகத்தை வைத்து பூஜை, உற்சவம் செய்து ஜீவிக்கலாம் என்று இருந்தவர்களுக்கும் இது சற்று அவ மானமாகக் காணப்படலாம். ஆனால், யார்தான் என்ன செய்ய முடியும்?
முலாம் பூசின கள்ள நாணையம் எத்தனை நாளைக்கு செலாவணியாகக்
295 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கூடும்? பூச்சுத் தேயத்தேய உண்மை சொரூபம் வெளியாகித்தானே தீரும்.
தை கருமத்தின் பயன் என்றாலும் சரி, சையன்ஸ் என்றாலும் சரி அதற்காக த கரு றாலு றாலு தற் நாம் சண்டைக்கு வரவில்லை.
நிற்க, திரு.காந்தியவர்கள் “நமக்குள் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியா மல் போனோம்” என்பதற்கு காரணம் சர்க்காரார் பேரிலேயே பழி கூறிய தோடு நில்லாமல், மற்றும் ஒரு அடி முன் சென்று “இந்தியாவில் இருந்து சர்க்காரால் வரவழைக்கப்பட்ட பிரதிநிதிகள் சரியான பிரதிநிதிகள் அல்ல” வென்றும் “நமக்குள் நாம் ஒரு முடிவுபெறாமல் இருக்க வேண்டும் என்பதற் காகவே சர்க்காரார் பிரதிநிதிகள் அல்லாதவர்களாகப் பார்த்து பொருக்கி எடுத்து அனுப்பி இருக்கின்றார்கள்” என்றும் ஒரு அபாண்டமான குறை கூறியிருப்பதன் மூலம் சர்க்காராரை மாத்திரம் குற்றம் சொல்வதல்லாமல்
இந்தியாவில் இருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளையும் இழிவு படுத்திப் பேசி இருக்கிறார். இப்படிப் பேசியதானது அவர் இதுவரை பேசிவந்த- செய்துவந்த அக்கிரமங்களில் எல்லாம் இது ஒரு பெரிய அக்கிரமமான பேச்சென்றே சொல்ல வேண்டி இருக்கின்றது. இப்போது சீமைக்கு சென்று இருக்கும் பிரதிநிதிகளில் திரு.காந்தியவர்களின் பிரதிநிதித்துவ யோக்கிய தைக்கு குறைந்த பிரதிநிதித்துவ யோக்கியதை உடைய பிரதிநிதிகள் யாரும். இல்லை என்றே சொல்லுவோம். ஒரு சமயம் மற்ற காரியங்களில் அவரவர் களின் சொந்த விஷயத்தில் யார்யார் எப்படி எப்படி நடந்து கொள்ளுகின்ற வர்களாயிருந்தாலும், அவரவர்கள் மதத்திற்கும், அவரவர்கள் ஜாதிக்கும், அவரவர்கள் வகுப்புக்கும் திரு.காந்திக்கு உண்டான பொறுப்புக்கு குறை யாத பிரதிநிதிகள் என்றே சொல்லுவோம். திரு.காந்தியவர்களுக்கு இந்து மதத்தைக் காப்பாற்ற எவ்வளவு அக்கரை உண்டோ பார்ப்பனீயத்தையும் முதலாளித் தன்மையையும் காப்பாற்ற எவ்வளவு அக்கரை உண்டோ அவ்வளவு அக்கரை தங்கள் தங்கள் மதத்தைக் காப்பதிலும் முஸ்லீம் கிறிஸ்துவ பிரநிதிகளுக்கு முன்டென்பதை திரு.காந்தி அறிவாராக.
திரு.மாளவியாவுக்குப் பார்ப்பனீயத்தைக் காப்பாற்ற எவ்வளவு அக்கரை உண்டோ அது போலவே பார்ப்பனீயத்தை ஒழித்து மனிதத் தன் மையைப் பெற திரு.அம்பெட்காருக்கும், திரு.சீனிவாசனுக்கும் அக்கரை உண்டு என்பதைத் திரு.காந்தி உணர்வாராக. இப்படி இருக்கும் நிலைமை
யில் வட்டமேஜை பிரதிநிதிகள் சரியானவர்கள் அல்ல என்றும் கலகக்காரர். களென்றும் திரு.காந்தி அவர்கள் சொல்லுவதென்றால் அது குறும்புத்தன மானது என்று சொல்லுவதை விட வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இந்தியாவில் வகுப்பு சம்பந்தமான பேச்சுகளும், தீர்மானங்களும் வரும் போதெல்லாம் அவைகளைக் கொண்டு வருபவர்களை “வகுப்பு வாதிகள்” என்றும் “தேசீயத்திற்கு விரோதிகள்” என்றும் பார்ப்பனர்களும், அவர்களது கூலிகளும், சிஷ்யர்களும் பேசி மற்றவர்களை வாயடக்கி
குடி அரசு - 1981 (2) 296
வெற்றி கொண்ட தந்திரத்தையும், சூகஷியையுமே சீமைக்குப் போய் அங்கும் காட்ட வேண்டியதாய் விட்டது.
திரு.காந்திக்கு “வகுப்பு வாதம் கூடாது, மதவாதம் கூடாது” என்றும் “காங்கிரசு தான் பிரதானமானது” என்றும் கருதி அந்தப்படியே உண்மையான எண்ணம் இருந்திருக்குமானால் திருவாளர்கள் மாளவியா, மூஞ்சே, சரோஜினி, எ.ரங்கசாமி அய்யங்கார் ஆகிய ஜாதிமத வகுப்பு வாதிகளைப் பார்த்து “மகாநாட்டில் உங்களுக்கு வேலை என்ன? நீங்கள். எதற்காக இங்கு இருக்கிறீர்கள்?” என்று கேட்டு இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.
மாளவியாவுக்கு இடமிருக்கும் மகாநாட்டில் அம்பெட்காருக்கு இடமிருப்பது தகுதி அற்றதென்றோ, மூஞ்சேயிக்கு இடமிருக்கும் மகாநாட்
டில் செளகத் அலிக்கு இடமிருப்பது தகுதி அற்றதென்றோ, ரங்கசாமி அய்யங்காருக்கு இடமிருக்கும் மகாநாட்டில் சீனிவாசனுக்கு இடமிருப்பது தகுதியற்றதென்றோ யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம்.
வகுப்புக் கமிட்டியில் வகுப்புப் பிரதிநிதிகள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தோல்வியுற்றதற்கு காரணம் வகுப்பு சம்பந்தமான அபிப்ராயங் களின் பலன் என்றோ, அல்லது பிரதிநிதிகள் ஒருவரால் ஒருவர் ஏய்க்கப்பட முடியாத சமஜோடியான வீரர்கள் என்றோ சொல்லப்படுமானால் அது மனித தன்மையின் மேன்மையான குணமாகும். அப்படிக்கு இல்லாமல் ஒரு பக்கத்துப் பிரதிநிதிகள் யோக்கியர்கள் என்றும், மற்றொரு பக்கத்துப் பிரதிநிதிகள் அயோக்கியர்கள் என்றும் சொல்லுவது ஒரு விதத்திலும் யோக்கியமான பேச்சாகா தென்பதோடு, இது ஒரு கோழைத்தனமான சமாதானம் என்றும் சொல்லுவோம். ஆகவே இதைப் பார்க்கும் போது திரு. ராம்சே மக்டனால்ட் துரை, திரு.காந்தியைப் பார்த்து “நாணயமாய் நடந்து கொள்ளுங்கள். உண்மையை மறைக்க முயற்சிக்காதீர்கள். உங்களுக்குள் பைசல் செய்து கொள்ள சக்தியில்லாவிட்டால் எங்கள் மீது குறை கூறாதீர்
கள்” என்று சொன்னதோடு “இந்தியாவில் இல்லாத ஜாதி மத வகுப்புகளின்
பிரதிநிதிகள் இங்கு யாராவது தருவிக்கப்பட்டிருக்கின்றார்களா?” என்றும் கேட்டிருப்பதானது மிக மிக பொருத்தமான பேச்சென்றே கருதுகின்றோம். இவைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த திரு.காந்தி அவர்கள் தன் தலையை தொங்கப் போட்டிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் பதில் சொல்ல
முடியாமல் போனதே இதற்கு சரியான உதாரணமாகும். தவிர திருவாளர்கள் மாளவியா, மூஞ்சே, சரோஜினி, ரங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் “காங்கிரசு பிரதிநிதிகளேயொழிய வகுப்புப்பிரதிநிதிகள் அல்ல” என்று சொல்லக்கூடுமானால் திருவாளர் காந்தி “என்னை ஒருவரை மாத்திரம் தான் காங்கிரசு பிரநிதியாய் அனுப்பிற்று” என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்? என்று கேட்கின்றோம்.
297 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அன்றியும் திரு.காந்தி இருக்கும் போது இவர்கள் எல்லாம் எதற்காக வட்ட மேஜை மகாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்? அங்கு இவர்கள் பேசியது எதன் சார்பாக? எதற்கு பிரதிநிதித்துவமாக? என்கின்ற விஷயங் களை கவனித்துப் பார்த்தால் இதன் சூக்ஷி யாருக்கும் விளங்காமல் போகாது. அன்றியும் “இந்தியாவுக்கு பிரதிநிதி ஸ்தாபனம் காங்கிரசு ஒன்றே
தான்” என்றும் “காங்கிரசுக்கு பிரதிநிதி திரு.காந்தி ஒருவரே தான்” என்றும் சொல்லுவதை காங்கிரசும் திரு.காந்தியுமாவது ஒப்புக்கொண்டிருப்பவர். களாயிருந் தால் வட்டமேஜை மகாநாட்டுக்கு மற்றும் சுமார் 10, 20 ஸ்தாபனங் களிலிருந்து 50, 60 பிரதிநிதிகளை சர்க்காரார் தெரிந்தெடுத்திருப்பதையும், அவர்கள் ஏற்கனவே சீமைக்கு ஒரு தரம் சென்று வந்திருப்பதையும் தெரிந்து கொண்ட பின்பும், அந்த பிரதிநிதித்துவங்களை கேன்சல் செய்யா
மல் காங்கிரசும் திரு.காந்தியும் ஏன் தங்கள் பிரதிநிதித்துவங்களை ஒப்புக் கொண்டு அங்கு சென்று இருக்க வேண்டும்? என்றும் கேட்கின்றோம். திரு.காந்தியவர்கள் தன்னோடு கூடவே திரு.மாளவியாவை அழைத்துச் சென்றார் என்பதையும் திரு.மாளவியாவை பிரதிநிதியாய் தேர்ந்தெடுக்க திரு.காந்தியவர்கள் முயற்சியும் உண்டு என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? அது மாத்திர மல்லாமல் முஸ்லீம் சமூகத்திற்கு டாக்டர் அன்சாரி அவர்களை தெரிந்தெடுக்க திரு.காந்தியவர்கள் எவ்வளவோ பாடுபட்டும் முடியாமல் போனதால் அவர் பிரதிநிதியாய் வரவில்லையே என்று திரு.காந்தி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதும் யாராவது மறுக்க முடியுமா? இந்த நிலைமையில் வட்ட மேஜை மகாநாட்டை வகுப்பு மகாநாடாக்கு வதற்கு திரு.காந்தி அவர்களும் ஒரு பங்குக்காரர் தானா?அல்லவா? என்று கேட்கின்றோம். அன்றியும் திரு.காந்தி அவர்கள் சரியாகவோ தப்பாகவோ தனது வாக்கினாலேயே, எப்பொழுது முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக்
கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தனித்தேர்தல் தொகுதி மூலம் கொடுக்கின்றேன் என்றும், அதுவும் அதை காங்கிரசே அனுமதித்திருக் கின்றது என்றும் ஒப்புக்கொண்டாரோ அப்பொழுதே காங்கிரசும் காந்தியும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதம் இல்லை என்பது முடிவு பெற்று விட்டது: அன்றியும் இந்த வகுப்புவாரி உரிமை யின்று நேற்றல்
லாமல் சுமார் 20, 30 வருஷ காலமாகவே காங்கிரசில் இருந்தும் வருகின்றது. ஆகவே இருபது வருஷத்திற்கு முன்னாலேயே காங்கிரசு ஒப்புக்கொண்ட விஷயத்தைப் பற்றி இன்று புது விஷயம் போல் பேசுவதானது ஒரு சூட்சியே ஒழிய வேறு என்ன நாணயம் அதில் இருக்கக் கூடும்? என்று தைரியமாய் கேட்கின்றோம்.
தவிர இப்போது வகுப்புத் தகராறு என்பது முஸ்லீம்கள் விஷயத்தி
லும், சீக்கியர்கள் விஷயத்திலும் இருந்து வருவதைப் பற்றி நாம் பேச வரவில்லை. ஆனால் தீண்டாதார் என்று ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் 7 கோடி மக்களுக்கு வரப்போகும் சுயராஜியத்தில் என்ன விமோச்சனம் செய்யப்பட்டிருக்கின்றது? என்று தான் கேட்கின்றோம்.
குடி அரசு - 1981 (2) 298
திரு.காந்தி அவர்களும் தீண்டாதாருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதை தான் ஒருபோதும் ஆட்சேபிக்க வில்லை என்றும் ஒப்புக்கொள்ளுகின்றார். அப்படியிருக்க வகுப்புவாதம் குறுக்கிட்டு திரு.காந்தியின் தேசீயத்தை எவ்விதத்திலும் கெடுத்து விட வில்லை. ஆனால் தீண்டப்படாதாருக்குப் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்பதில் திரு.காந்தியோ, காங்கிரசோ சூட்சியும், ஏமாற்றுந் தன்மையும் இல்லாமல் உண்மையாய் நடந்து கொள்ளுகின்றவர்களாய் இருந்தால் முகமதி யர்களைப் போலவும், சீக்கியர்களைப் போலவும் பிரதிநிதித்துவம் அடையும்படி தாராளமாய் ஏன் விட்டுவிடக்கூடாது? அப்படிக்கில்லாமல்
“நீயும் வீட்டுக்குள் வரலாம், உனக்கும் இடம் ஒதுக்கி வைத்திருக்கின்றது. ஆனால் வெளிக்கதவை மாத்திரம் தாராளமாய் திறந்து விடும்படி கேட்காதே” என்று சொல்லுவதானால் அது நாணயமானதா? என்று யோசித்துப் பாருங்கள்.
விஷயங்கள் இப்படியெல்லாம் இருக்க வட்டமேஜை மகாநாட்டை சர்க்காரார் கெடுத்துவிட்டார்கள் என்று சொல்லுவதில் பயன் என்ன? திரு.காந்தியவர்கள் தனது ஆத்ம சக்தியாலும், அஹிம்சா தர்மத்தாலும், கடவுள் கருணையாலும் எந்த விதமான சுதந்திரம் பெற்று வந்தாலும் அதை இந்தியாவில் கொண்டு வந்து தான் செலாவணியாக்க வேண்டுமேயொழிய மற்றபடி வேறு எந்த நாட்டிற்கும் கொண்டுபோய் விடமுடியாது. இந்தியா வில் இருக்கும் வகுப்பு, மத, ஜாதிகளை மறைந்து போகும்படியாகவும் எதையும் கொண்டு வந்து விடமுடியாது. ஏனெனில் எல்லா மத வகுப்பு ஜாதிகளையும் காப்பாற்றுவதாக வாக்கு கொடுத்து விட்டே சீமைக்கு கப்பலேறி இருக்கிறார். இந்நிலைமையில் அந்த சுதந்திரத்தில் ஒவ்வொரு மதமும், ஒவ்வொரு வகுப்பும், ஒவ்வொறு ஜாதியும் பங்கு கேட்பதில் மாத்திரம் என்ன கெடுதி இருப்பதாக திரு.காந்தி சொல்ல முடியும்? ஒவ் வொரு ஜாதியும், வகுப்பும், மதமும் சிறு சிறு கூட்டமாய் இருக்குமானால்
ஒரு சமயம் அவர்களை ஏமாற்றிவிடுவது சாத்தியமாக இருக்கலாம். அப்படிக்கில்லாமல் 8 கோடி முஸ்லீம்கள், 7 கோடி தீண்டாதார், முக்கால் கோடி கிறிஸ்தவர், 3 கோடி பார்ப்பனர், 14 கோடி பார்ப்பனர் அல்லாதார். மற்றும் கால் கோடி, அரைக்கோடி, ஒரு கோடி, இரண்டு கோடி என்பதான சில்லரை மதங்களும், சில்லரை ஜாதிகளும், உள் வகுப்புகளும் எத்தனையோ இருக்கும் போது இவர்கள் இத்தனை பேர்களின் கண்களிலும் மிளகாய் பொடி போட்டு எப்படி ஏய்க்க முடியும்? என்பதை யோசித்துப் பாருங்கள். ஏதோ தந்திரத்தாலோ, ஏதோ கைபலத்தாலோ, ஏதோ மூடநம்பிக்கையாலோ ஒரு காலத்தில் ஒரு சமூகமோ, வகுப்போ, ஜாதியோ, மதமோ, உச்சஸ்தானமும், அதிகாரமும், ஆக்ஷியும், பணமும், படிப்பும் பெற்று விட்டால் அவைகள் அப்படியே அவர்களுக்கு எப்போதும் நிலைத்திருக்கும்படியாகவும், கீழ் மக்களாக, அடிமையாக, ஏழையாக, கூலியாக, படிக்காத தற்குறிகளாக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டவர்கள்
299 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
எப்போதும் அதுபோலவே கீழ்மக்களாக, தற்குறிகளாக, கூலிகளாக, ஏழைகளாக, அடிமைகளாக இருக்கும்படி செய்ய முயற்சிப்பதென்றால் அதை எப்படி சுதந்திரம் என்றும், சுயராஜ்ஜியம் என்றும், சுயேச்சை என்றும், சமத்துவம் என்றும், சமதர்மம் என்றும் சொல்லமுடியும்? என்று கேட்கின்றோம்.இம்மாதிரி விடுதலை முயற்சிக்கு பழைய சூக்ஷியையும், அயோக்கியத்தனத்தையும் நிலை நிறுத்தப்பாடுபடும் மற்றொரு புதிய சூக்ஷியும், அயோக்கியத்தனமும் என்று சொல்லாமல் வேறு என்ன பெயர்: கொடுக்க முடியும்?
சாதாரணமாக இனி வரப்போகும் சுயராஜ்ஜியமோ, சுயேச்சையோ எப்படிப்பட்டதாயினும் அதில் முதலில் பரிசோதிக்க வேண்டிய விஷயம் இரட்டமலை சீனிவாசப் பறைய வகுப்புக்கும், அம்பட்கார் பறைய
வகுப்புக்கும் என்ன விடுதலையோ, யோக்கியத்தையோ, மாறுதலோ ஏற்படுமா என்று பார்ப்பது தான் முக்கிய பரீகைஷயாய் இருக்க வேண்டுமே அல்லாது ஏ.ரங்கசாமி அய்யங்கார் பிராமணருக்கும், மாளவியா பிராமண: ருக்கும் இனியும் என்ன புதிய யோக்கியதை ஏற்படும் என்பதைப் பார்க்க வேண்டியதாய் இருக்க கூடாது என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றோம்.
சாதாரணமாக இந்தியா பூராவுக்கும் உள்ள 36 கோடி மக்களில் 12ல் ஒரு பாகமாகிய 3 கோடி மக்கள் வகுப்பாகிய பார்ப்பன ஜாதியாருக்கு அந்த வகுப்பில் மாத்திரம் எத்தனை பிரதிநிதிகள் சென்றிருக்கிறார்கள் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். சாதாரணமாக நமக்கு தெரிந்த அளவில் நமது மாகாணத்தில் இருந்து மாத்திரம் திருவாளர்கள் சீனிவாச சாஸ்திரி, சர்.ராமசாமி ஐயர், ரங்கசாமி ஐயங்கார், ராமச்சந்திர ராவ், திருமதி ராதாபாய் அம்மாள், ராகவய்யா முதலியவர்கள் சென்றிருக்கின்றார்கள். மற்ற பங்குக்கு பிரதிநிதிகளாக திருவாளர்கள் ராமசாமி முதலியார், பாத்ரோ ஆகிய இருவர் மாத்திரம் இந்துக்கள் பார்ப்பனர் அல்லாதாருக்கும், திரு.பன்னீர்செல்வம் கிறிஸ்தவ வகுப்புக்கும், திரு.ஜமால் முகம்மது சாயபு மகம்மதியருக்கும், திரு.இரட்டமலை சீனிவாசன் தீண்டாதாருக்கும் பிரதிநிதியாக சென்று இருக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்தம் 3 கோடி உள்ள
சமூகத்திற்கு இந்த ஒரு மாகாணத்தில் இருந்தே, அதுவும் வகுப்புவாதம் பேசும் மாகாணத்தில் இருந்தே பார்ப்பனர்களில் 6 பேர்களும் பாக்கி 33 கோடிக்கு 5 பேரும் சென்றிருக்கிறார்கள் என்றால் இனி வகுப்புவாதத்தைப்
பற்றி கவலையே இல்லாமல் இருப்பதாக சொல்லப்படும் மற்ற மாகாணங் களில் இருந்து எவ்வளவு மோசமாக பிரதிநிதித்துவங்கள் போயிருக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா? என்று கேட்கின்றோம்.
ஆகவே வட்டமேஜை மகாநாட்டில் “வகுப்புவாதம் வந்து குறுக்கிட கின்றது, குறுக்கிடுகின்றது” என்று கத்துவ தெல்லாம் தாழ்த்தப்பட்டவர் களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் மேலும் மேலும் தாழ்த்தவும், ஒடுக்க
குடி அரசு - 1981 (2) 200
வும் செய்யப்படும் சூடியை வெளியாக்குவதும், உயர்த்தப்பட்டு உச்சம் பெற்ற வகுப்புகளை மேலும் மேலும் உயர்த்தவும் செய்யப்படும் சூட்சியை வெளியாக்குவதும்தான் குறுக்கிடுவதாய் காணப்படுகின்றனவேயொழிய வேறில்லை. ஆகவே வட்டமேஜை மகாநாடு முறிந்த வரையில் கஷ்டப்படும் மக்களுக்கு லாபமேயொழிய நஷ்டமில்லை. வட்ட மேஜை மகாநாடு வெற்றி பெற்ற வரையில் பார்ப்பனர்களுக்கும், பணக்காரர்
களுக்கும் தான் லாபமேயொழிய வேறில்லை. ஆகையால் வட்டமேஜை மகாநாடு முறிந்து போய்விட்டதே என்று யாவரும் கவலைப்பட வேண்டிய தில்லை, கவலைப்பட வேண்டியதில்லை.
குடி அரசு - தலையங்கம் - 18.10.1931
201 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆதி திராவிடர்களுக்கு இந்துக்களின் HICTTHLD
உயர்திரு காந்தி அவர்கள் “ஆதிதிராவிடர்கள் கேட்கும் உரிமையை
என் உயிர் போகும் அளவும் எதிர்த்தே தீருவேன்” என்று சொன்னதில்
இருந்தும்,
“ஆதிதிராவிட தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு லண்டனுக்கு வந்திருப்பவர்கள் ஆதிதிராவிடர்களின் தலைவர்கள் அல்ல” என்று சொன்னதில் இருந்தும்,
“ஆதிதிராவிட தலைவர்கள் வெட்கப்பட்டு (அவமானப்பட்டு! ஓடும் படியாக நான் செய்யப்போகும் காரியத்திற்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்” என்று இந்திய மாணவர்களைக் கேட்டுக் கொண்டதிலிருந்தும், “ஆதி திராவிடருக்கு நான் தான் (காங்கிரசுதான்) பிரதிநிதியே யொழிய வேறு யாரும் இருப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும்,
மற்றும் ஆதிதிராவிட தலைவர்களை அவமானமாகப் பேசியதில்
இருந்தும், ஆதிதிராவிட மக்களுக்கு திரு.காந்தியின் மீது அதிருப்தி ஏற்பட இடமுண்டாய் விட்டது.
இந்த சங்கதி தெரிந்த இந்திய காங்கிரசுகாரர்கள் என்பவர்கள் பலர் ஆங்காங்குள்ள சில ஆதி திராவிட கூலிகளைப் பிடித்து, கூலி கொடுத்து கூட்டி வைத்து, ஆதிதிராவிட தலைவர்களை ஏளனமாகப் பேசும்படி செய்
தும், அவர்களிடம் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், திரு.காந்தி இடமே நம்பிக்கை இருப்பதாகவும் சீமைக்குத் தந்தி கொடுக்கச் செய்ததில் இருந்தும் காங்கிரசுக்காரரிடமும் ஆதி திராவிடர்களுக்கு அதிருப்தி ஏற்பட இடமேற்பட்டது.
இவை மாத்திரமல்லாமல் திரு.காந்தி அவர்கள் தனது சுயராஜ்ஜி
யத்தில் “வருணாச்சிரமமும் பரம்பரைத் தொழிலும் காப்பாற்றபடும் என்று மேல் ஜாதியாருக்கு உறுதி கொடுக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தாலும்
மற்றும் “கிராம வாசிகள் (சூத்திரரும் பஞ்சமரும்) மாடு மேய்த்தும் செருப்
புத் தைத்தும் ஜீவிக்க வேண்டுமேயொழிய அவர்கள் வியாபாரிகளைப்
குடி அரசு - 1981 (2) 302
போல (வைசியர்களைப் போல்) பணக்காரர்களாகி பெட்டியில் பணம் மீத்தக் கூடாது” என்றும் சொன்னதில் இருந்தும் திரு.காந்தியிடம் அவர்களுக்கு அடியோடு நம்பிக்கை இல்லாமல் போகவும் இடம் ஏற்பட்டு விட்டது. இவ்வளவுடன் மாத்திரம் இல்லாமல் இந்திய “தேசீய பத்திரிகை”கள் என்பவை யெல்லாம் அவை பார்ப்பனரால் நடத்தப்படுபவைகளானாலும் பார்ப்பனரல்லாதாரால் நடத்தப்படுபவைகளானாலும், எல்லாம் ஒரே மாதிரி யாக ஆதிதிராவிடர்களுக்கு துரோகமாகவே நடந்து கொள்வதாலும் அதாவது ஆதிதிராவிடர் கேட்பது அக்கிரமமென்றும், காந்தி சொல்லு
வதும் காங்கிரசு சொல்லுவதுமே சரியென்றும் எழுதுவதோடு நிற்காமல், ஆதி திராவிடர்களது சேதியை சரி வர வெளிப்படுத்தாமல் தப்பும் தவறு மாகவும் பொது ஜனங்களுக்கு ஆதிதிராவிடர்கள் மீது தப்பர்த்தமும் துவேஷமும் ஏற்படும்படியாக கட்டுப்பாடாய் பிரசுரித்து வருவதாலும் ஆதிதிராவிடர்கள் மனம் பதறி எந்த வகையிலாகிலும் தங்களுக்குப் பந்தோபஸ்து கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டு விட்டது.
நிற்க, சென்ற வாரம் சென்னையில் கூடிய ஆதிதிராவிடர்களின்
மூன்று கூட்டங்களில் 3 நாளும் சில பார்ப்பனர்களும் அவர்களது கூலிக ளான சில காங்கிரசு சகாக்களும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சென்று கலகம் செய்து இருக்கின்றார்கள் என்பதாக நம்பத்தகுந்த இடத்தில்
இருந்து சேதி கிடைத்திருக்கின்றது.
அதாவது, முதல் நாள் பீச்சு மீட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது சில அய்யங்கார் பார்ப்பன மாணாக்கர்கள் வம்பில் பிரவேசித்து திரு. பொன்னம்பலம் பேசிக் கொண்டிருக்கும் போது “காந்திக்கு ஜெ, வந்தே
மாதரம், அம்பட்காருக்கு ஷேம்” என்று சத்தம் போட்டு கூட்டத்தைக் கலைக்கசூக்வி செய்தார்களாம். ஒரு கனவான் அவர்களிடம் மரியாதையாய் “உங்கள் கூட்டத்திற்கு நாங்கள் வருகின்றோமா? நீங்கள் ஏன் எங்கள்.
கூட்டத்தில் கலவரம் செய்கின்றீர்கள்?” என்று கேட்க, அதற்கு சரியான
பதில் சொல்லாமல் “இதெல்லாம் சுயமரியாதை பசங்களுடைய குறும்பு” என்று சொன்னாராம். பிறகு, அவர்களுக்கு புத்தி கற்பித்த பிறகு போய் விட்டார்கள்.
அடுத்தநாள் இந்த விஷயத்தையும், நடந்த தீர்மானத்தையும் எல்லா பத்திரிகை ஆபிசுக்கு அனுப்பியும் “திராவிடன்” தவிர மற்ற எப் பத்திரிகையும் லக்ஷியமே செய்யாமலும், சில ஒழுங்காய் போடாமல் ஆதிதிராவிடரை கண்டிக்கும் மாதிரியிலும் பரிகாசமாகவும், இழிவு படுத்தும் மாதிரியாகவுமே பிரசுரித்தன. அசோசியேட் பிரசுக்கு இந்த சேதியை நேரில் கொடுத்த போது “இந்த மாதிரி அனாமதேய சங்கதிகள். போட முடியாது” என்று சொல்லி விட்டார்களாம்.
203 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பிறகு, அடுத்த மீட்டிங் நேபியர் பார்க்கில் திரு.சிவராஜ் பி.ஏ, பி.எல்., எம்.எல்.சி. அவர்கள் தலைமையில் கூட்டப்பட்ட போதும் சிலர் கூட்டத்தில் குழப்பம் செய்ய முயற்சித்து பயன்படாமல் போனதால் ஆதி திராவிடர்கள் திரும்பி வீட்டிற்கு போகும் போது அவர்களை காங்கிரசுகாரர் வழிமறித்து அடித்தும், கல் எறிந்தும் தொந்திரவு செய்திருக்கிறார்கள் என்று ஆதிதிராவிட தலைவர் ஒருவர் சொன்னதோடு, போலீசாரும், ஆதி திராவிடர் நன்றாய் உதைபட்ட பிறகு தான் வந்தார்கள் என்றும் சொன்னார்.
இந்த சங்கதியையும் “தேசிய பத்திரிகை” கள் என்பவை “ஆதி திராவிடர்கள் விஷமம்” என்றும் “காந்திக்கு ஆபத்து” என்றும் “ஆதி திராவிடர்கள் குறும்பு” என்றும் தலைப்பு கொடுத்து ஆதிதிராவிடர்கள் மீதே பழி சுமத்தி எழுதிற்றே யொழிய ஒன்றாவது அவர்கள் அடிபட்டதற்கு பரிதாபப்படாமலும், அடிபட்டதே வெளியில் தெரியாமலும் செய்து விட்ட தோடு, அவர்கள் மீது ஜனங்களுக்கு துவேஷம் உண்டாகும்படியாகவே செய்து வந்தன.
ஒரு தலைவர் ஒரு பத்திராதிபரைக்கண்டு இவ்விஷயங்களைச் சொல்லி கேட்டதற்கு “சுயமரியாதைக்காரர்கள் இதில் கலந்ததால் தான் நான். அப்படி செய்தேன்” என்றும் “நீங்கள் அவர்களோடு சேர்ந்தால் இன்னமும். உங்களுக்கு என்ன கதி கிடைக்கின்றது பாருங்கள்” என்றும் “இந்த காரணத்தால் தான் போலீஸ் உதவி உங்களுக்கில்லை” என்றும் சொன்னாராம்.
மூன்றாம் நாள் திரு.எம்.சி.ராஜா எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடந்த எழும்பூர் ஏரி கூட்டத்தில் சுமார் ஏழாயிரம் பேருக்கு மேலாகவே வந்திருந்தார்கள். இக்கூட்டத்திலும் கலவரம் செய்யப் பலர் நினைத்திருந்
தாலும் கூட்டம் பலமாய் இருந்ததால் அங்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டதால், திரும்பிப் போகும் போது வழியில் பெருத்த கலவரம் செய்யப்பட்டிருக்கின்றன. அடிதடிகளும் நடந்ததாய்த் தெரிகின்றன.
இந்த விஷயங்களை எல்லாம் உண்மையாய் எழுதாமல் சில பத்தி ரிகைகள் எல்லாம் கட்டுப்பாடாக ஆதிதிராவிடர்களுக்கு கொடுமையையே உண்டாக்கி வருகின்றன. இது மிகவும் பரிதாபகரமான விஷயமாகும். ஆதிதிராவிடர்களிடமிருந்து மலம் எடுக்கும் தொழில் முதல் கொண்டு எவ்வளவோ இன்றியமையாத வேலைகளைப்பெற்று வரும் இந்து மக்கள் என்பவர்கள், அவர்களுக்கு இவ்வளவு கொடுமையும், துரோகமும் செய்து வருவது எந்த விதத்திலும் பொறுக்க முடியாததேயாகும். இந்த கொடுமை
கள் எப்படியாவது, ஆதிதிராவிடர்களை மெய்யாகவே ஒரு நாளைக்கு வெறி பிடிக்கத் தான் செய்து விடும். இது தவிர்க்க முடியாத இயற்கையாகும். பிறகு இப்போது “புலி வருகின்றது! புலி வருகின்றது!” என்பது போல் ஆதி திராவிடர்களின் மீது சுமத்தும் பழியும், அபாண்ட பொய்யும்,
குடி அரசு - 1981 (2) 304
விஷமப் பிரசாரமும் ஒரு நாளைக்கு உண்மையாய் நடக்க நேரிட்டாலும் நேரிடலாம். ஆகையால் அறிவாளிகள் ஜாக்கிரதையாயும், முன் எச்சரிக்கை
யாயும் நடந்து கொள்ள வேண்டியது புத்திசாலித்தனமாகும். வேதாந்தமும், தத்துவ ஞானமும்,அஹிம்சா தர்மமும் பைத்தியக்காரர்கள் ஆஸ்பத்திரியில் நடக்க வேண்டிய தாகுமே யொழிய ஆதிதிராவிடர் தலையில் கைவைக்க பயன்படுத்துவது தற்கொலையாகவே முடியும். அஹிம்சா தர்மத்தையும், கடவுள் பக்தி நம்பிக்கையையும் கொண்டு கோட்டை வாசலில் துளசியைக் கொட்டிய நாயக்கர் ராஜியம் இன்று பெயர் சொல்ல வார்சு இல்லை என்பதை
யாரும் மறுக்கமுடியாது. நிற்க,
ஆதிதிராவிடர்கள் என்பவர்களும் பொறுமையை இழக்க வேண்டிய அவசியம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை. அவர்கள் இந்த சமயத்தில் பதிலுக்குப் பதில் என்று கூட பலாத்காரத்தில் இறங்குவது மிக மிக தப்பிதமே யாகும். ஆனால் உதைகளை பட்டுக்கொள்ளும்படி நாம் சொல்லவர: வில்லை. பதிலுக்கு பதில் உதைப்போம் என்று எதிரிகள் நினைக்கும்படி நடந்து கொள்ள வேண்டியதானது இப்படிப்பட்ட மக்களுக்கு மிகவும் அவசியமானாலும், பொறுத்தவரையில் அதிக பலம் ஏற்படும் என்பதை ஞாபக மூட்டுகின்றோம்.
நிற்க, இந்த நிலைமையில ஆதிதிராவிடர்கள் இனி இந்துக்களை நம்புவதோ, காங்கிரசையோ, காந்தியையோ நம்புவதோ “தான் சாக மருந்து குடிப்பதை” யே ஒக்கும் என்று தைரியமாய்ச் சொல்லுகின்றோம்.
கண்டிப்பாய் இனி ஆதிதிராவிடர்கள் அரசியலில் தனித்தொகுதி தேர்தல் முறையும், வகுப்புவாரி உத்தியோக முறையும் இல்லாமல் இந்தியாவில் அரைநிமிஷம் கூட மனிதர்களாய் வாழ முடியாது. ஆதலால் அவர்கள் தனித்து நின்றோ, அல்லது தங்களுக்கு வேண்டிய உதவி அளிக்கக் கூடியவர்களுடன் கலந்தோ முயற்சி செய்து லக்ஷியத்தை அடைய கவலை கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ஏமாந்து விடக்கூடாது என்றும்
தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 25.10.1931
305 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தீண்டாதாருக்கு விமோசனம்
முகமதியரைத் தமுஷவதை விட வேறு கதியில்லை
- எவனெழுதினாலென்ன
தீண்டாதார் நிலை
சகோதரர்களே ! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளிவைத் திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை இந்தியாவில் சுமார் 7 கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும்,மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக்கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டு மென்றும், சிலர் குளிப்பதுகூட போதாதென்று ஏதாவது “பிராயச்சித்தம்” செய்து கொள்ளவேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள். இவை தவிர, நமக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணரோ கிடையாது. நாம் எந்தக் குளத்தை யாவது, கிணற்றை யாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச் சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாகவேண்டும்.
நாம் குடி இருக்கவேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக்கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும்கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்துவிடுமாம். நாம் வாழும் இடத்துக்கு சேரி என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை, செத்தை கொண்டுவந்து போட்டுவைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் அவற்றிற்கு காவலாய் இருக்குமாம்.
குடி அரசு - 1981 (2) 306
நமக்கு வேலையோ தோட்டி வேலை தான் பாரம்பரியமாய் சொந்த மானது. மற்றும் ஊர்கூட்டி, மலம் அசிங்கம் முதலியவைகளை எடுத்து
சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்து
வதும், கழணி வயல் முதலியவைகளுக்குக் குப்பை, செத்தை முதலியன கொண்டுபோடுவதும், மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச்சேரும் வரையில் சகலவேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும், மற்றும் இது போன்றவைகளுடன், தப்புக்கொட்டுதல், செத்துப்போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின்மீது போடும் அரிசியை எடுத்துச் சமைத்து சாப்பிடுதல், பிணத்தின்மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக்கொள்ளுதல், இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல், முதலிய காரியங்கள் செய்யவேண்டியதும் நமது பிறப்புரிமை யாகும்.
இவை ஒருபக்கமிருந்தாலும் நமது பிள்ளைகள் படிக்கக்கூடாது என்பது மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாயிருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. எங்காவது ஒன்று இரண்டு பள்ளிக்கூட வசதிகள் இருந்தாலும் நமக்குச் சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக் கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கும் பையனுக்கு சாப்பாடு போடவும் செளகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங் களைப்பற்றி நினைக்கவே கூடாது.
இவை தவிர நமக்கு நாவிதன் கிடையாது, வண்ணான் கிடையாது, நாமாகத் துவைத்துக்கொள்ளலாம் என்றாலும் அதற்கும் கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால் அங்கு 20 பறையர் வீடு இருந்தால் அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடிமக்களுக்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்யவேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சைவாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக்கொண்டுபோய் வீடு வீடாய் *பிச்சைபோடுங்க சாமி” என்று கூப்பாடு போட்டு பிச்சைசோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும். பிச்சைசோறு கேட்கும் சட்டிகூட முழுசாய் இருந்தால் அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத்
தில் பறையன் முழுசட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால் கிராமத்திற்கு கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஒரு ஐதீகம் உண்டு. ஆதலால் நல்ல சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு
தான் சோத்துப் பிச்சைக்கு போகவேண்டும்.
307 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சில இடங்களில் ரொம்பவும் மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்கு பிச்சை சோறு போடமாட்டார்கள். ஏனெ
னில் பறையனுக்கு சோறுபோட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய்(சேஷமாய்) போயிடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக்கொள்கை உண்டு. அதென்ன வென்றால் சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்கு தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குளிவெட்டி புதைத்துவிடும்படி செய்வதும் உண்டு . நமக்கு பிச்சைசோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப்போனதையும், ஊசிப்போனதையும் தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடி ஓடிப்போய்க்கொண்டுவந்து போடுவார்கள்.
நிற்க,
துணிவிஷயத்திலும் இப்படித்தான் நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசுகிடையாது, கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக் காரர்கள் கட்டி கிழித்த கந்தலையே கட்டவேண்டும். அப்படி கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால் வேஷ்டியை இடுப்பில் முழங்காலுக்கு கீழே தொங்கவிட்டு கட்டக் கூடாது, மேலேயும் துணி போடக்கூடாது, பெண்கள் மார்பை மூடக் கூடாது என்பன போன்ற கட்டுப் பாடுகளுடன், மற்றும் தங்கம், வெள்ளி நகை போடக்கூடாது என்பதும் குடைபிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என்
பதும், பித்தளை, வென்கலப்பாத்திரங்கள் உபயோகிக்கக்கூடாது என்பது மான பல நிபந்தனைகளுண்டு.
இவ்வளவும் தவிர தமிழ்நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும், குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம்.
மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது. உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்கமாட்டீர்கள்.
அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை “நாயாடிகள்” என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக்கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில் தான் எந்த ரோட்டிலும் இருக்கவேண்டும். அவர்கள் எங்கும் எவ்வித தொழிலும் செய்யமுடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு “தம்பிரானே தம்பிரானே” என்று கூப்பாடு போடவேண்டும். சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டுவிட்டு போனால் மாலையில் ஒரு வருக்கும்
குடி அரசு - 1981 (2) 208
தெரியாமல் வந்து எடுத்துக்கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத் தவிர எங்காவது வயல்களில் சிந்திக்கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும், மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளை கல்லால் அடித்துப்
பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்யமுடியாது.
இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக்கொள்ளு வார்கள். ஆனால் அவர்கள் தெருவில் நடக்கும்போதே “ஹா” “ஹா” என்று சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டும். ஏனெனில் “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன். எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே ! விலகிக் கொள் ளுங்கள்” என்று குறிப்பு காட்டுவதற்காக. அதாவது மூலை முடக்குகளில் மோட்டார்கார்கள் வரும்போது எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும். அது ஹாரன் ஊதுவது போல் சத்தம் போடவேண்டும்.ஆனால் மோட்டார். மூலைமுடக்குகளில் மாத்திரம் ஊதும். இவர்களோ நேர்ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்குத் தான் கீழ்ஜாதிக்காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக்கொண்டே வரவேண்டியதாகும்.
சமூகத்துரையில் இவை தவிர சமூகத்துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது நாம்
எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆகமுடியாமலும், நாம் ஒரு தனித்தொழில்
செய்து சுதந்திரமாயிருக்கமுடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறுதொழிலில் போய் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப் பட்டிருக்கின்றோம். எவ்வளவு தான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதா
னாலும் சுயராஜிய அரசியலில் பியூன் வேலைக்கு லாயக்காகலாம், மிஞ்சினால் போலீஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம், ஸ்தல சுயாட்சி களில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக் காகலாம். இதுவும் அந்தந்த இலாகா “தேசீயத்தலைவர்கள் ”” தயவு வைத்து கொடுத்தால்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக் காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்கு சமமாக அனேகம்பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப்போலவே எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது 8கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக் குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள். மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், வியாபாரிகளாகவும் விவசாயக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில்
309 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக் கிறார்கள். ஆனால் 7 கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்! தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம், உத்தியோகஸ்தர்களாயிருக்கின்றறோம், பணக்காரர்களாய் மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1000-க்கு ஒருவர் உண்டா? பணக்காரர் 10000 க்கு ஒருவர் உண்டா? பதவி உள்ளவர்கள் 100000 க்கு ஒருவர் உண்டா? இதன் காரண மென்ன?
“ஆதி” பட்டம்
நாம் தானே இந்நாட்டின் பழம் பெரும் குடிமக்கள் என்று ஆதாரம்
இருக்கின்றது. நமக்குத்தானே ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்னாடகர் என்கின்ற பெயர்கள் வழங்குகின்றன. இந்த “ஆதி” பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதார
ராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப் பட்டதே யொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக் கடையச் செய்விப்பதற்கு கொடுக்கப் பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள். ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திர மிருந்தாலும்- பூரண சுயேச்சை இருந்தாலும்-சுயராஜிய மிருந்தாலும் அன்னாட்டிலுள்ள
3-ல் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு. உழைத்து, மற்றவர்களுக்கே போட்டு விட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர்மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிரார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும் படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் அந்த நாடு கொடுங்கோன்மை ஆக்ஷி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல் அதற்கு ஏதாவது மேற் கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இதற்கு காரணம் என்ன? நம் குற்றம் தான்
நிற்க, சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமற் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து
வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச்சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்கவேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
குடி அரசு - 1981 (2) 210
சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப் படுவதற்கும் முக்கிய காரண மென்ன என்பதை யோசித்துப்பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா ஜப்பான்காரர்களிலாவது தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ்ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப் பட வேண்டும்? நாமும் ஏன் வெகு காலமாகவே அதற்கு இணங்கி நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக்கொண்டு இருக்க வேண்டும்? என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.
அன்றியும், வெளி நாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவனாவது, முகமதி யனாவது நம்மைத் தீண்டாதாரராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்துவரும் சைனாகாரன் ஜப்பான்காரன் முதலிய பெளத்தர்களாவது நம்மை தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே...
மற்றபடி யார் நம்மை தீண்டாதாரராய் யார் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மை தீண்டாதாரர். களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள்? என்று பாருங்கள். நாமும் அவர்.
களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால் நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லா
மல் வேறு எந்தக் காரணத்தாலு மல்ல. அதாவது நம்மையும் நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து எல்லோரும் இந்துக்கள் என்றும் இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை. பெரிதும் வேறு நாட்டாரும் வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும் பெளத்தரையும் கிறிஸ்து வரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெ
னில் அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும் சுயமரியாதையே பிரதானமானதினாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே “புத்தி கற்பித்து” விடுவார்கள். ஆதலால் நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் “இந்து” என்னும் மதம் தான் நம்மை தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதே யொழிய வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே நம்மில் எவன் ஒருவன் தன்னை “இந்து” என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் தன்னை மற்றொரு
311 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன். இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நமது முன்னோர்கள் காலம் தொட்டு நாம் “சண்டாளப் பறைய
ராய்” தீண்டாதாராய் நடத்தப் பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக்கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீ ரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல் வேஷம் போட்டுக் கொண்டு “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது” என்று சொன்னால் அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?
ஒரு மனிதன் தன்மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று “என்னைப் பார்த்து யாரும் அசங்கயப் படக்கூடாது. என்னை எட்டிப்போ என்று யாரும் சொல்லக் கூடாது” என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாக வாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசங்கயப் படக்கூடாது எட்டி நில் என்று சொல்லக் கூடாது” என்று இந்தியன் பினல் கோடில் அதாவது கிரிமினல் சட்ட புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு அதற்கு ஒரு வருஷ தண்டணை என்றும் போட்டு விட்டதினாலேயே அந்தப்படி அசங்கயப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்: டொருவரை தண்டித்துவிட்ட தினாலேயே அசங்கயப்படும் குணத்தை மக்களிடமிருந்து மாற்றிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
இதுபோலவேதான், இந்துக்களில் மற்றொரு சாரார் தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களை சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது
என்றும், “சூத்திரனென்றால் ஆத்திரம் கொண்டடி” என்றும் சொல்லு கிறார்கள், எழுதி ஆங்காங்கு தொங்கவிடுகிறார்கள். இதுவும் பேதமைத் தன்மை என்றே சொல்லுவேன். ஏனெனில் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் ( அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனை “சூத்திரன்” என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. அதை மறுப்பவன் மூடனேயாவான். ஏனெனில் இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதும் அது பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கும் உரித்தானது என்பதும் இந்து
வாய் இருக்கும் ஒவ்வொருவனும் ஒப்புக்கொள்ள வேண்டியதே யாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட் பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் [பறையனையும்] ஒப்புக்கொண்டே இருக்கின்றது.
அன்றியும் இந்த முறையானது இந்துமத உட்பிரிவு சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும்,
குடி அரசு - 1981 (2) 312
மற்றும் சமயாச்சாரிகளிலும் இருக்கின்றது என்றால் பிறகு இதை ஆக்ஷே பிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு? என்று யோசித்துப் பாருங்
கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், இராமாயண முதலிய இதிகாச புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால் பிறகு இதை ஆக்ஷபிக்க யாருக்கு-எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத
சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் “பகவான் வாக்கு” களிலும், “ரிஷிகள்” வாக்குகளிலும் இருக்கின்றது என்றால் பிறகு இதை ஆக்ஷேபிக்கின்ற “இந்து” என்பவன் யோக்கியனாகவோ, அல்லது அறிவுடையனாகவோ இருக்க முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். ஆகவே நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப்பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப் பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமே யாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளு கின்றானோ அவனெல்லாம் சூத்திரப்பட்டமும், பஞ்சமப்பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர:
வேறில்லை...
இந்து மதம் உள்ளவரை
இந்தியாவில் இந்துமதம் உள்ளவரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்துமத வேதமும்,
சாஸ்திரமும், இராமாயண பாரதமும், பெரியபுராணம் சிவபுராணம் திரு விளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ள வரையிலும் சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்துவிடுவது என்பது முடியவே முடியாது.
திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும் “சாமி” வேதாசலமும் எவ்வளவுதான் சுவாமியானாலும், “சுவாமி” சகஜானந்தமும் எவ்வளவுதான் சுவாமியானாலும் எதுவரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர் களென்றோ சொல்லிக்கொள்ளுகின்றார்களோ அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாவதவர், பஞ்சமர் [பறையர்] என்பதையும் பிரிவி கவுன்சில் வரையில் ருஜுபிக்கமுடியும். அவர்களை அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை: இந்து மதப்பிரசாரமும், சைவப்பிரசாரமும் செய்கின்றார்களோ அதுவரை: இவர்கள் தங்களுள்பட மக்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலைநிறுத்த முயற்சித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.
313 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சம்பந்தனை ஒப்புக்கொண்ட சைவன், சம்மந்தன் பாடிய “சாமிகளை ஒப்புக்கொண்ட சைவன், சம்மந்தனின் தேவாரங்களையும் சம்மந்தனின் சமயங்களையும் ஒப்புக்கொண்ட சைவன், சம்மந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக்கொண்ட சைவன் ஒருவன் தன்னை சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா? என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்.
அதுபோலவே நந்தனை ஒப்புக்கொண்ட ஒருவன் அதுவும் நந்தன் பறையன். அவன் எங்கள் ஜாதி” என்று ஒப்புக்கொண்ட ஒருவன் தன்னை பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம், “தமிழ்நாட்டில் ஆதியில் ஜாதியில்லை” என்று சொல்லலாம், சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால் தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக்கொண்டு. வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி தன்னை சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலகிக்கொள்ள முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். [சற் சூத்திரன் என்று சொல்லிக்கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது |
காந்தி சுயராஜ்யத்தில் நமது நிலைமை
திரு காந்தியால் வரும்படியான சுயராஜியம் அது எப்படிப்பட்ட தானாலும் எவ்வளவு பயனுள்ளதானாலும் பயனற்றதானாலும் இந்துமதத் தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப் பட வேண்டியதில்லை.
அதுவும் எப்படிப்பட்ட இந்துமத மென்றால் வர்ணாச்சிரம தர்மத் தோடு கூடின பரம்பரை ஜாதித்தொழிலையும் வகுப்புப்பழக்க வழக்கங்க ளையும் நடத்திக்கொடுக்க முயற்சிக்கும்படி-கட்டாயப் படுத்தும்படியான இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆக்ஷேபணையும் கொள்ள வேண்டியதில்லை. ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வர வேண்டும். அந்தக்காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றையதினம் சுயராஜியமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும் , கேட்கும் உரிமையும்கூட ஒருநாளும் அனுபவிக்கமுடியாது என்பதை கெட்டியாய் மனதிலிறுத்துங்கள். ஏனெ னில் காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப்பற்றியும் ஜாதி சம்பந்தமான விஷயங்களைப்பற்றியும் பேசுபவர்கள் எல்லாம் சட்டப்படி 124-A, 153-A என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும்
குடி அரசு - 1981 (2) 314
குற்றமாகக்கருதி தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள்.
அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்” என்பதும் வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில் இந்துமத கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த
மதத்தில் எந்த ஜாதியில் பிறந்தானோ அந்த மதத்தில் அந்த ஜாதியில் தான் சாகின்ற வரையில் இருந்தாகவேண்டும். அதனால் தான் திரு. காந்தியும் “நான் கோறும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்கு பிரசாரமாகிய ஆஸ்பத்திரி பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார். களை யெல்லாம் இந்தியாவை விட்டு விறட்டி விடுவேன்” என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்ன தானது வேண்டுமென்று சொன்னதாக
யாரும் நினைத்துவிடக்கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவான தென்றும் பாபமானதென்றும் அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷ மானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. திரு.காந்தியவர்கள் கிறிஸ்து வர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம் மகமதியர்களிடத்தில் இருக்கும் “முறட்டுத் தனத்தின்” காரணமான பயமே யொழிய மற்றபடி மகமதியர்களை மத
மாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல.. ஆகையால் காந்தீய சுயராஜ்யமென்பது இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடா
தீர்கள்,
திரு. காந்தியவர்கள் பல தடவைகளில் சொல்லியிருக்கும் சமத்துவ தத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக்கொள்ளுங்கள். அதாவது,
“சமத்துவமென்பது ஆத்துமாவுக்கே யொழிய சரீரத்திற்கல்ல” என்று சொல்லியிருக்கின்றார்.
மற்றும் அவர் 1919-20ல் “தீண்டாமை யொழியாமல் நான் ஒரு நாளும்
சுயராஜ்யம் கேட்கமாட்டேன்” என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்” என்றும் சொன்னதோடு “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்
யம் நிலைக்காது” என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் இரணகளமாகும் படியான கலகம் ஏற்படும்” என்றும் சொல்லியிருக்கின்றார்.
இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய்,
“தீண்டாமை ஒழியவேண்டியதும் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக்கொள்ளுகின்றேன்” என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார்.
315 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதன் அருத்தமென்ன? என்று யோசித்துப்பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால் பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால் பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்! பட்டாளத்தில் சேர்த்து இராணுவச்சட்டத்தினால் முஸ்லீம்களையும் தீண்டாதார்களையும் அடக்கி ஓடுக்கிவிடலாம் என்கின்ற எண்ண மில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும்? என்று யோசித்துப் பாருங்கள். ஆகவே எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர் களே! தெருவில் நடக்க-குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க-கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே!!! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று:- இந்துமதத்தை விட்டு வெளியேறுங்
கள். இரண்டு:- முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும்
நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை!! இல்லை!!!
குடி அரசு - கட்டுரை - 25.10.1931
குடி அரசு - 1981 (2) 316
காரண்முல் AT வேண்டும்
- சித்திரபுத்திரன்
ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும். அவையாவன.
1 “கை” பலம் (பலாத்காரம்)
2 “புத்தி” பலம் (சூக்ஷி அல்லது தந்திரம்!
மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள். வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள்.
இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்த தில்லை. ஆதியில் ஆங்காங்குள்ள கொள்ளைக் கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரையாய் ஆண்டிருப்பார்கள்.
ஆனால், ஆரியர்களுடைய சூக்ஷியானது மக்களைப் பிரித்து வைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக்
காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மை
யாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை.
திரு.காந்திக்கு பலமும் இல்லை, புத்தியும் இல்லை. ஆனால் ஆரி யரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூக்ஷியை திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றி கிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்கக் கூடியதாகும். மற்றும் ஆரியருக்கு சிறிது செல்வ வான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளுவார்கள்.
ஆகவே, இந்தியப் பொது மக்களுக்கு வெற்றி அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும். ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய
317 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வேண்டும். ஜாதி வகுப்புபிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும். மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.
பலம் இல்லாமல் சூக்ஷியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும். கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தியம் என்னும் பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும்.
இரண்டும் இல்லாமல் காரிய சித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.
குடி அரசு - கட்டுரை - 25.10.1931
குடி அரசு - 1981 (2) 318
புரட்டு! ௬த்தப் புரட்டு!
நமது செல்வத்தை அன்னிய நாட்டார் கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப் புரட்டு.
நமது செல்வத்தை கொள்ளையடித்து நம்மைப் பட்டினிப்போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர், வட்டிக் கடைக்காரர் ஆகியவர்களுமே
யாவார்கள்.
அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம் முடையதல்ல...
நம்மை கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக் கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.
ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
மேலே சொல்லப்பட்ட இந்தக் கூட்டங்களை ஒழித்தால்தான் நமது செல்வம் நமக்குக் கிடைக்கும்.
அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.
இப்படிக்கு
100 க்கு 90 மக்களாகிய தொழிலாளிகள், வேலையாளர்கள்,
கூலியாட்கள், பண்ணையாள்கள்.
குடி அரசு - பெட்டிச்செய்தி - 25.40.0931
319 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தீயாவனியும் காங்கிரசும்
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணநெருக்கடியின் மூலம் மிகச் செல்வந்தர். என்று கருதப்படுகிறவர்களில் பலர் அன்றாடம் செலவிற்கு வகையின்றி
திண்டாடுகிறார்கள். ஏழைக்குடியானவர்களும், தொழிலாளிகளும் தானிய விலை குறைந்ததின் காரணத்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணத்தாலும் ஏக்கமுற்றிருக்கின்றனர். இந்த நிலையில் மதத்தின் பெயரால் அனுஷ்டிக்கப்படும் பழைய பழக்கவழக்கங்களில் நமது மக்களுக்கு
ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால் தீபாவளியின் போது ஏராளமான பொருள் நமது நாட்டில் வீண் விரையமாக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள்
சுடுதல், பலகார தின்பண்டங்களை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுதல், புது வஸ்திரங்கள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதின் மூலம் நமது நாட்டுப் பொருள் சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவ்வந்நிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட ஜனங்கள் தேவைக்கு வெடி
கள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. தீபாவளியில் தின்பண்டங்கள் தின்ன வேண்டு மென்று இருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாக புசித்து வர வேண்டுமேயொழிய வருஷத்தில் சில தினங்களை மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் பசித்தால் நோயடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் காலரா வென்னும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில் தான் என்பதை சகலரும் அறிவர்.
தீபாவளியில் புது வஸ்திரம் கட்டியாக வேண்டுமென்றிருக்கும் வழக்
கம் மேற்கண்ட மற்ற இரண்டு தீங்குகளையும் விட மிகவும் பாதகமானது. மக்களுக்கு வஸ்திரம் அவசியமெனக் கொண்டாலும் ஒவ்வொருவரும்
குடி அரசு - 1981 (2) 320
தனக்கு வேண்டிய வஸ்திரங்களை நாளடைவில் அந்தந்த சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய வஸ்திரங்கள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது புதிதாய் வாங்கவேண்டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படுங்காலத்தில் கிழிந்த வஸ்திரங்களைக் கூடிய வரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமே யொழிய புதிய வஸ்திரம் வாங்கித்தான் ஆக வேண்டுமென்ற நியதியை கைக்கொள்ளக் கூடாது. ஆனால் தீபாவளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத்தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராள மான வஸ்திரங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த போதிலும், தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும் பண்டிகைக் காலத்தில் புது வஸ்திரம் வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்கு வேண்டிய துணிகளை தீபாவளி சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமல் இருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண்டி இருப்பதால் ஒரு
நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப் பட்டு ஏழைகளுக்கு நஷ்ட முண்டாகிறது. ஆகையால் நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடியிலும், கஷ்டத்திலும் பட்டுழலாமலிருக்கவேண்டுமானால் தீபாவளிப் பண்டிகை யைக் கைவிட வேண்டியதவசியம். தேச நலத்தை விரும்புகின்றவர்களும், ஏழைமக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுகிறவர்களும் தாங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண்டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டு வதும் தவிர தீபாவளியைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனப் பொதுமக்களிடை
தீவிரப் பிரசாரஞ் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.
பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடையில் இவ் விஷயத் தைப் பற்றி அபிப்பிராய பேதமிருக்க இடமில்லை. ஆனால் நமது நாட்டின் தற்காலத்திய பொது வாழ்க்கையில் இவ்விஷயத்தில் மாறுப்பட்டஅபிப்ராய மேற்பட்டிருப்பதிலிருந்து எந்த அளவுக்கு நமது பொது வாழ்க்கை
பகுத்தறிவுக்கு முரண்பட்டிருக்கிறதென்று வெளியாகிறது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் கக்ஷிக்காரருடைய நிலை மேற்கண்ட நமது அபிப்பிராயத்திற்கு
நேர் விரோதமாயிருக்கிறதென்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. தாங் களே மற்றெல்லோரையும் விட தேசமக்களிடை செல்வாக்குப் பெற்றவர். களென்று காங்கிரஸ்காரர் வீறாப்புப் பேசிக்கொள்ளுகிறார்கள். காங்கிரசின் சார்பாய் இங்கிலாந்து சென்றிருக்கும் காந்தியார், தானே இந்திய தேசத்திற்கு ஏகப்பிரதிநிதி யென்றும் இந்தியாவிலுள்ள எந்த சமூகத்தைப்பற்றியும் பேச மற்றெவருக்கும் உரிமையில்லை யென்றும் வட்டமேஜை மகாநாட்டில் மார் தட்டுகிறார். இவ்வளவு செல்வாக்கும், பிரதிநிதித்துவமும் பெற்ற கூட்டத்தார். தற்சமயம் பாமர மக்களிடையே எவ்வித பிரசாரஞ் செய்கிறார்களென்று உற்று நோக்க வேண்டியதவசியம்.
321 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காங்கிரஸ் திட்டத்தில் தற்காலம் அமுலிலிருப்பது இரண்டே அம்சங் களாகும். ஒன்று குடியை ஒழித்தல், மற்றொன்று அன்னிய ஆடையை ஒழித்
தல். இவ்விரண்டுக்குமாக கடைகளின் முன் மறியல் செய்ய கொஞ்சகாலம் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது மதுபான மறியலும், அன்னிய ஆடை மறியலும் பிரயோசனமற்றனவென்று புலப்பட்டுவிட்டது. ஆகையால், தங்கள் திட்டத்தை அமுலுக்குக்கொண்டுவர காங்கிரஸ்காரர். புதிய இரண்டு வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். ஒன்று ஜாதிக்கட்டுப் பாடு, மற்றொன்று பண்டிகை. ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் குடியை நிறுத்துவதென்றும், பண்டிகைகள் கொண்டாடுவதின் மூலம் கதர் வியாபாரத் தைப் பெருக்கி அன்னிய ஆடையை பகிஷ்கரிப்பதென்றும் தீர்மானித் திருக்கின்றனர். நமது தேசமக்களிடையில் ஒற்றுமை யேற்படாமல் பிரித்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான ஜாதிகள், ஜாதிக்கட்டுப்பாடு என்னும் ஒரே ஆயுதத்தின் பலத்தால் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆயினும் நாளாவட்டத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்ற உணர்ச்சியும், அறிவும் பொது மக்களிடம் பரவுவதால் ஜாதிக் கட்டுப்பாடுகள் தளர்ந்து ஜாதிகள் மறைந்து போவதற்கு வசதிகள் ஏற்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஜாதியிலும் கல்வி கற்று முற்போக்கடைந்த மக்கள் ஜாதிக்கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால் காந்தீயமென்னப்படும் வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் ககஷியோவெனில் முன்னேற்ற உணர்ச் சியை எதிர்த்து, மக்களின் அறிவுவளர்ச்சியைத் தடுத்து ஜாதிக்கட்டுப் பாடு என்னும் நாகரீகமற்ற மூட ஜனங்களின் பலவந்தச் செயல்களுக்கு ஆக்கந் தேடுகிறது. மதுவிலக்கின் பெயரால் வருணாச்சிரமத்தை நிலை நாட்டும் காங்கிரஸ் முயற்சியை எதிர்க்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
காங்கிரஸ் திட்டத்தின் இரண்டாவது பகுதி பண்டிகைகள் கொண்டா டுவதின் மூலம் கதர்விற்பனையைப் பெருக்கி அன்னிய ஆடையைப்
பகிஷ்கரித்தல். தற்சமயம் மூலை முடுக்குகளிலெல்லாம் “தீபாவளிக்குக் கதர் வாங்குங்கள்” என்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்டுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் தனது அறிக்கையில் “தீபாவளி நமது தேச மக்கள் அனைவருக்கும் பொதுவான பண்டிகை, ஏழை, பணக்காரர், ஆண், பெண் முதலியவர்கள், குழந்தைகள். எல்லோரும் அன்றைய தினத்தைச் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். முக்கியமாக தீபாவளி விடுதலைக் கொண்டாட்டமாகும். அன்று நரகாசுர னிடமிருந்து உலகம் விமோசனம் பெற்ற நாள். ஆகையால் தீபாவளி என்பது விடுதலைக்கு அறிகுறி. தென்னாட்டில் நாம் அநாதி காலமாக புது ஆடைகள் வாங்கியணிந்து தீபாவளி கொண்டாடி வருகிறோம். ஆயிரக் கணக்காண வருஷங்களாக இவ்வாறு நடத்திவந்தோம். இவ்வருஷ தீபாவளி தமிழ்நாட்டில் கதர் அபிவிர்த்தியைச் சந்தோஷமாய்க் கொண்
டாடும் பண்டிகையாயிருக்கவேண்டும்” என்று எழுதியிருக்கிறார்.
குடி அரசு - 1981 (2) 322
இதிலிருந்து நமது மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடித்தான் ஆக வேண்டுமென்று காங்கிரஸ்காரர் எவ்வளவு அக்கரையாக வேலைசெய் கிறார்களென்பது வெளிப்படுகிறது. அப்படிக் கொண்டாடுவதிலும், புராணத்
தில் இப்பண்டிகையைப் பற்றி கட்டிவிடப்பட்டிருக்கும் பொய்க்கதையில் நம்பிக்கை வைத்தே கொண்டாட வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறது. தீபாவளி விடுதலை தினமென்றும், நரகாசுரன் கதையைப் பாமர மக்கள் நம்ப வேண்டுமென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் பிரசாரஞ் செய்ய முற்படுவது வெட்கக் கேடான விஷயமாகும்.
நரகாசுரன் கதையை திரு.இராஜகோபாலாச்சாரியார் நம்புவதில்லை. ஆனால் பாமர மக்கள் அந்தப்புரட்டில் நம்பிக்கை வைக்கவேண்டு மென்றும், இப்படி குருட்டு நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் இந்து மதத்திலுள்ள மற்ற புரட்டுகளையும் ஜனங்கள் நம்ப இடமேற்படுமென்றும் இப்படி மத ஆதிக்கம் வலுத்து, வருணாச்சிரமம் தழைத்தால் பிராமண: செல்வாக்கு நிலை நிற்கு மென்றும் திருஇராஜகோபாலாச்சாரியார் முதலிய காங்கிரஸ் கக்ஷிக்காரர் கருதியே இம்மாதிரி பிரசாரம் செய்கின்றார்கள். தனது தீபாவளி அறிக்கையில் மற்றோரிடத்தில் திரு.இராஜகோபாலாச்சாரி.
யார் குறிப்பிடுவதாவது.
“ ஆலைத் துணிகளை அணிந்து தீபாவளி கொண்டாடுவது சிரார்த்த பிண்டத்திற்கு சீமை பிஸ்கோத்து வைப்பது போலவேயாகும். ஹோமத்தி
யில் நெய்க்கு பதிலாக கோக்கோஜத்தை விடுவது போலாகும்” என்கிறார்.
இப்படிப் பிரசாரஞ் செய்வதின் மூலம் மக்கள் சிரார்த்தஞ்செய்யவும், ஹோமம் வளர்க்கவும் முற்படுவார்களென்றும் அதன்மூலம் தனது ஜாதியார். என்றென்றைக்கும் சோம்பேரிகளாய் வயிறு வளர்க்க இடமேற்படுமென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் கனவு காண்கிறார். உலக மக்களிடையே பகுத்தறிவு தோன்றிவிட்டதென்பதையும், தமிழ்மக்களிடையே சுயமரியாதை இயக்கம் பரவி வருகிறதென்பதையும், திரு இராஜகோபாலாச் சாரியாருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். நரகாசுரன் கதையில் நம்பிக்கை
வைக்கும் காலம் மலையேறி விட்டது. திரு.ராஜகோபாலாச்சாரியார் தனது சுய ஜாதி மக்களின் நன்மையைக்கோருபவரானால் காலத்திற்கேற்றவாறு அவர்களது தொழிலை மாற்றிக் கொண்டு மதத்தின் பெயராலும், வருணாச்சிரமத்தின் பெயராலும் பிறரை ஏமாற்றி, பண்டிகைகளென்றும்,
சிரார்த்தமென்றும், ஹோமமென்றும் ஏய்த்துப் பிழைக்காமல், அவரவர்: சக்திகேற்ற நாணயமும், கண்ணியமும் வாய்ந்த தொழில்களில் ஈடுபடவேண்டுமென்று பிரசாரஞ் செய்வாராக.
தீபாவளியில் கதர் வாங்க வேண்டுமெனச் செய்யப்படும் பிரசாரத் தைப்பற்றி ஒரு வார்த்தை மட்டும் சொல்ல விரும்புகிறோம். கிராமத்தில் உண்ண உணவின்றிப் பட்டினி கிடக்கும் ஏழைகள் நூற்று, நெய்து பிழைப்
323 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
பதற்காகவே கதர்ப்பிரசாரம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தற் சமயத்தில் கதர் வேஷ்டி வாங்குவதென்றால் சுமார் கெஜம் ஒன்றுக்கு அணா ஒன்பது கொடுக்கவேண்டியதிருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் ஆலைத்துணியில் இந்த கதரைவிட உயர்ந்த காடாத்துணி வாங்குவதென்றால் கெஜம் நான்கு அணாவுக்கு கிடைக்கிறது. கதருக்கு பதிலாக இந்த ஆலைத்துணியை வாங்குவதால் நமது நாட்டுப்பணம் வெளி நாட்டுக்குப் போவதில்லை யென்பதோடு கெஜம் ஒன்றுக்கு ஐந்தனா மிச்சமும் ஏற்படுகிறது. கெஜம் ஒன்றுக்கு ஒன்பதணா கொடுத்து கதர் வாங்கு வதில் ஏழைகளுக்கு நூற்பதில் இரண்டணாவும் நெய்வதில் இரண்டணாவும் கிடைக்கலாம். ஆலைத்துணி வாங்குவதால் ஏற்படும் ஐந்தணா மிச்சத்திலிருந்து இந்த நான்கணாவையும் நேரே நூற்கிறவர்களுக்கும், நெய்கிறவர்களுக்கும் மணியார்டர் மூலம் அனுப்பிவிட்டால் பாக்கி இன்னும் ஒரு அணா வேறு தர்மச்செலவுக்கு மிச்சப்படுகிறது. மேலும் ஆலைத்துணிக்குக் கொடுத்த நான்கணா மூலம் ஆலையில் வேலை செய்யும் எவ்வளவோ ஏழைத்தொழிலாளிகள் பிழைப்பார்கள்.இப்படி ஒரு
தர்ம பண்டு ஏற்படுத்தி கவர்ன்மெண்டார் மூலமோ அல்லது பொது ஜன நம்பிக்கை பெற்ற ஒரு ஸ்தாபனத்தின் மூலமோ ஏழைகளுக்கு உதவுவதே நாகரீக முறையாகும். அதை விட்டு விட்டு ஆயிரக்கணக்கான வருஷங் களுக்கு முன் மனித சமூகம் நாகரீகமடையாமல் காட்டு மிராண்டிகளா யிருந்த காலத்தில் துணி உற்பத்தி செய்த முறையை இன்றைய தினம் பின்பற்ற வேண்டுமென்றும், அதற்காக, கதர் என்ற ஒரு தொழிலை சிருஷ்டி செய்து அதன் மூலம் ஏழைகளுக்கு உதவுவதாகச் சொல்லப்படும் பொருளில் ஒட்டிக்கிரட்டி பொது ஜனங்களை நஷ்டப்படச் செய்வது ஒழுங்கு முறை யாகாது. உணவின்றி வருந்தும் ஏழைகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாகரீகமடைந்த தேசங்களிலுமிருக்கிறார்கள். தற்சமயம் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் உலகத் திலுள்ள எல்லாத் தேசங்களிலும் ஏழைகளின் தொகை பெருகி வருகின்றது.
மற்ற நாகரீகமடைந்த தேசத்தார் ஏழைகளைப் பாதுகாக்க வேண்டி பல நவீன தொழில்களை நாகரீக முறைகளில் சிருஷ்டிக்கிறார்கள். அப்படியும்
தொழில் கிட்டாத ஏழைகளுக்கு உதவ ஒரு பண்டு ஏற்படுத்தி அதிலிருந்து மாதா மாதம் உதவியளிக்கின்றார்கள். நமது தேசத்தாரும் இவ்வித நாகரீக முறையையே கைக்கொள்ள வேண்டும். கதர் என்பது தற்சமயம் நமது நாட்டாரை தேசீயத்தின் பெயரால் அடக்கியாள முற்பட்டிருக்கும் ஒரு சிறு பான்மைக் கூட்டத்தாரின் சூழ்ச்சி யென்று எச்சரிக்கை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.
(5௩)
குடி அரசு - தலையங்கம் - 01.11.1931.
குடி அரசு - 1981 (2) 324
திரிகூட சுந்தாண௱ர் திருமணம்
நண்பர் உயர்திரு. திரிகூட சுந்திரர் அவர்களுக்கு திருநெல்வேலி
யில் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடந்த சங்கதி மற்றொறு பக்கம்
பிரசுரித்திருக்கிறோம்.
அவர் ஒருநாளும் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு எதிராக இருந்த தில்லை.நமது இயக்கத்தை பாராட்டி எழுதி இருக்கும் வியாசங்கள். அநேகம் *குடி அரசி£லும், “ரிவோல்டி” லும் காணலாம்.
உடல் நலிவால் அவரது திருமண அழைப்பிற்குச் செல்ல நமக்கு வசதி ஏற்படவில்லையானாலும் அத்திருமணம் நடந்த முறையை அறிந்து
நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதுடன் திரிகூட சுந்திரரை நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.
மணமக்கள் சீர்திருத்தத் துறையில் தொண்டாற்றி மனித சமூகத்திற்கு விடுதலையையும், சுயமரியாதையையும் உண்டாக்க ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு - வாழ்த்துச் செய்தி - 01.11.1931
325 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தமிமுன்
ஈப்போவில் பிரசுரிக்கப்படும் “தமிழன்” என்னும் தமிழ் தினசரி பத்திரிகையின் வெளியீடுகள் வரப்பெற்றோம். இப்பத்திரிகையானது
தேசத்திற்கும், மக்கள் சுயமரியாதைக்கும் வெகு காலமாக உழைத்து வரும் பெரியார் உயர்திரு.சுவாமி அற்புதானந்தா அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ளது.
சமூக ஊழியமும், சமூக சீர்திருத்தமும் புரிவதே இப்பத்திரிக்கையின் பொது நோக்கமாயிருந்த போதிலும், தீண்டாதார், ஏழை, எளியவர்களின் குறைகளை முக்கியமாக தீர்ப்பதற்காக வெளிவந்துலாவும் ஓர் சிறந்த தமிழ் தினசரி இதுவேயாகும். தமிழ் மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஜாதி மத வித்தியாசங்களையும், பிறவியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் கண்டித்து, தீண்டாமை, நெருங்காமை, பாராமை முதலிய அட்டூழியங்களை அறவேயழித்து, கலப்பு மணம், விதவை மணம், புரோகிதமற்ற மணம், புரோகிதமற்ற ஈமக்கடன் முதலியவைகளை ஆதரித்து, மக்களின் பகுத் தறிவை வளர்த்து, அவர்கள் முன்னேற்றமடையும்படியான துறைகளில் ஈடுபட்டுழைத்தலுமாகிய அரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பாடுபட முன்வந்ததற்காக நாம் அதை முழுமனதுடன் வரவேற்ப துடன், நமது வாசகர்களையும், இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
நாடெங்கும் பண நெருக்கடியால் அல்லலுற்று, பரிதவித்துக் கொண்டிருக்குமிக்காலத்தில், இத்தருணத்தில் நாடெங்கும் சமதர்ம கொள்கைகளைப் பரப்பி, பாமர மக்களைத் தட்டி எழுப்பி, உற்சாகப்படுத்து வதற்காக முன் வந்த “தமிழனின்” நிர்வாகஸ்தர்களுக்கு நமது வந்தனத்தை அளித்துக் கொள்ளுகின்றோம்.
சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்து, மலாய் தேசத்தில் முதன் முதலாக வெளிவந்த தமிழ் தினசரி இதுவொன்றேயாகும்.
குடி அரசு - மதிப்புரை - 01.11.1931
குடி அரசு - 1981 (2) 326
ஈோோ௫ முணிசியாலி
ஈரோடு முனிசிபாலிட்டிக்கு புதிய சட்டப்படி நடக்க வேண்டிய தேர்தலுக்கு இம்மாதம் 4 ந் தேதி ஸ்லிப்பு வாங்க தேதி போட்டிருந்தபடி
4ந் தேதி 24 ஸ்தானங்களுக்கு சுமார் 50 அங்கத்தினர்கள் வரை போட்டி போட ஸ்லிப்பு கொடுத்திருந்தார்கள்.
இவற்றுள் திருவாளர்கள் ஆர்.கண்ணம்மாள் (ஈ.வெ.ராமசாமி சகோதரி) கே.எ.ஷேக்தாவுத் சாயபு இப்போதைய சேர்மென், எம்.கே.மகமது சுல்தான் சாயபு நெல்மிஷன், பி.சின்னுசாமி கவுண்டர் நெல்மிஷன், மாரிமுத்து பண்டாரம் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆகிய ஐவர்களுக்கு போட்டி ஸ்லிப்பே இல்லாமல் வெற்றி பெற்றார்கள். மற்றும் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் இப்போதைய கவுன்சிலர், எம். சிக்கய்ய நாயக்கர் இப்போதைய கவுன்சிலர், ஈ.வி. நஞ்சப்ப செட்டியார் இப்போதைய வைஸ்சேர்மன், ஈ.ஒ.சி. முத்துசாமி கவுண்டர் இப்போதைய கவுன்சிலர், கே.கே.குதரத்துல்லா சாயபு, இப்போதைய கவுன்சிலர், கே.எம்.சீனிவாசபிள்ளை இப்போதைய
கவுன்சிலர், ஜ.ப. மகமட் சுல்தான் சாயபு சராப்புக்கடை, கே.அப்துல் ராஸக் சாயபு உப்பு மண்டி, காதர்சா குமாரர் சி.ரெங்கராஜ் செட்டியார் இப்போதைய
கவுன்சிலர், எஸ்.வெங்கடாஜல முதலியார் ஜவுளி வியாபாரம், கேசவலால் சேட் மண்டி வியாபாரம் ஆகியவர்கள் தங்களுக்கு போட்டியாக ஸ்லிப் போட்டிருந்த கனவான்கள் அவர்கள் ஸ்லிப்பை (போட்டியை! வித்திட்றா செய்து கொண்டதால் இவர்களும் போட்டியில்லாமல் வெற்றி பெற்றவர். களாவார்கள்.
மற்றும் எட்டு ஸ்தானங்களுக்கு போட்டி பலமாக இருப்பதாக தெரிகின்றது. கருங்கல் பாளையத்தில் இரண்டு வார்டுகளுக்கு 5பேர்கள் போட்டி போடுகிறார்கள். அதாவது ஒரு வார்டுக்கு திருவாளர்கள் கே.பி. ஷண்முகபிள்ளையும், (மாஜி கெளன்சிலர்! டி.சீனிவாச முதலியாரும் (மாஜி சேர்மன்! ஒரு வார்டுக்கு மாரிமுத்து பிள்ளையும் (இப்போதைய கவுன்சிலர்! குழந்தை பிள்ளையும், மிராசுதார் ராஜுப்பிள்ளையும் (மாஜி முனிசிபல் உத்தியோகஸ்தர் & மிராசுதார்! ஒக்கிலியத்தெரு வார்டில் அப்பையாக் கவுண்டரும் (பேங்கர்! பாண்டிக் கவுண்டர் என்னும் செளடப்பக் கவுண்டரும் (பேங்கர்) பார்ப்பனத் தெரு வார்டுக்கு வக்கீல் யூ.எஸ்.
327 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சுப்பிரமணிய அய்யரும், வக்கீல் சி.பி.ராகவேந்திரராவும், வளையக்காரத் தெரு வார்டுக்கு இ.எஸ்.கோவிந்தசாமி நாயுடுவும் (கண்றாக்டர்! கருங்கல் பாளையம் மிராசுதார் தேவநாயகமும், ஒப்பணக்காரத் தெரு வார்டுக்கு இப்போதைய கவுன்சிலர் எம்.எஸ்.முத்துகருப்பஞ் செட்டியாரும், மாஜி கவுன்சிலர் வி.ஐ.டேவிட்டும், ஸ்டேஷன் பாக வார்டுக்கு இப்போதைய கவுன்சிலர் பட்டக்காரர் எம்.எல்.சி அவர்களும் , மாஜி கவுன்சிலர் ஆர்.எஸ். விசுவாசமும், ரெவரெண்ட் ஞானமுத்து, ஈ.ஒய்.சுல்தான் சாயபு கண்றாக்டர்! ஆகியவர்களும் போட்டி போடுகிறார்கள் என்றாலும் இரண்டொரு வார்டுகள் தவிர மற்றவைகளின் போட்டி அவ்வளவு மும்முரமாக இருக்காதென்றே கருதுகின்றோம்.
தேர்தல் தேதி குறிப்பிட்ட உடன் ஈரோட்டில் ஏற்பட்ட தடபுடல்களும்
கட்சிகளும் நெருக்கடிகளும் வெகு பலமாக இருந்து வந்தது. இதற்குக் காரணம் இப்போது இருக்கும் சேர்மென் ஜனாப் ஷேக்தாவுத் அவர்கள் மறுபடியும் தான் சேர்மெனாய் வருவதில்லை என்று சொல்லிவிட்டதால் பல கவுன்சிலர்கள் தான் தான் சேர்மெனாக வரவேண்டுமென்று கட்சி சேர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் பார்ப்பன பிரமுகர்களும் இரண்டொருவர். கலந்து தங்களுக்குப் பிடித்த கனவான்களை சேர்மனாக்க தந்திரம் செய்து ககடி சேர்த்தார்கள். பல அபேக்ஷகர்களையும் நிறுத்தினார்கள்.
கடைசியாக திரு.இராமசாமி திருவாளர் பட்டக்காரர் முதலியவர்கள். ஜனாப் ஷேக்தாவுத்சாயபு அவர்களை மறுபடியும் சேர்மனாக இருந்தாக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தி சம்மதிக்கச் செய்த பின்பு தேர்தல் உணர்ச்சி வேறு விதமாய் மாறிற்று என்றாலும், போட்டிகள் மாத்திரம் வெகு பலமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் சேர்மன் ஷேக்தாவுது சாயபு அவர்கள் இப் போட்டி களுக்குள் நுழைந்து தன்னிடம் அன்புள்ளவர், வெறுப்புள்ளவர் என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாரிடமும் சென்று அலைந்து திரிந்து நாள் 1-க்கு
24 மணி நேரம் வீதம் வேலை செய்து மொத்தத்தில் 16 ஸ்தானங்களுக்குப் போட்டியில்லாமல் செய்துவிட்டார். இவ்விஷயத்தில் சேர்மென் அவர்களின் பிரயாசையும், வெற்றியும் மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
புது சட்டப்படி கூட்டப்படும் இந்த நிர்வாகமும், ஜனாப் ஷேக்தாவுது அவர்கள் தலைமையில் ஒழுங்காகவும், வெற்றிகரமாகவும் நடைபெறு மென்பதில் ஆக்ஷ்பணை இல்லை. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் சேர்ம
னுடன் ஒத்துழைத்து ஈரோடு முனிசிபாலிட்டிக்கு இப்போது ஏற்பட்டுவரும் நல்ல பெயரை விர்த்தி செய்வார்களாக.
குடி அரசு - கட்டுரை - 08.11.1931
குடி அரசு - 1981 (2) 328
வகுப்புவாதிகள் அமோக்கியர்கனா?
இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும் இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக்கின்றோம்.
மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங்
களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களை பெரும் பெரும் பிரிவு களாகப் பிரித்துவிட்டதென்றாலும் வருணாச்சிரமத்தையும், ஜாதிப்பிரிவு களையும், பலவகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்துமதமானது எல்லா மதங்களையும் விட மக்கள் சமூகத்திற்கு பெரிய இடையூறாய் இருந்து கொண்டு மக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலி இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும் பகுத்தறிவற்ற
மிருகத் தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு பார்த்தாலே போதும். இந்துகள் என்று சொல்லிக் கொள்ளும் ஜனங்கள் சுமார் மூன்றே முக்கால் கோடி இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் 385 ஜாதிகளாகவும் மற்றும் பல உள் பிரிவு ஜாதிகளாகவும் வகுக்கப் பட்டு இருக்கின்றார்கள். (இந்த ஜாதி பெயர்களும் ஒவ்வொரு ஜாதியரின் எண்ணிக்கையும் காலம் சென்ற திரு.எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை அவர்களால் பிரசுரித்த மெட்ராஸ் இயர்புக் என்னும் புஸ்தகத்தில் காணலாம்! நாளேற நாளேற நாகரீகத்தின் காரணமாகவும் செல்வநிலையின் காரணமாகவும் இன்னும் அதிகமான ஜாதி பிரிவுகளும், உட்பிரிவுகளும் ஏற்படும் படியான நிலையிலேயே தேசம் போய் கொண்டிருக்கிறதே தவிர அவைகள் குறைந்து ஒன்றுபடத் தக்க முயற்சியோ அறிகுறியோ காண்பதற் கில்லை.
329 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இந்தியாவின் 8 -ல் ஒரு பாகம் கொண்ட சென்னை மாகாணத்தில் மாத்திரம் 385 ஜாதிப்பிரிவுகள் இருக்கின்றதென்றால் இனி மற்ற 7-பாக ஜனத்தொகையில் எத்தனை ஜாதிப்பிரிவுகள் உட்பிரிவுகள் இருக்கக்கூடும் என்பதை வாசகர்கள் சற்று சிந்தித்துப் பார்த்தால் தானாக விளங்கிவிடும்.
இந்த ஜாதிப்பிரிவுகள் மாத்திரமல்லாமல் “உயிரினும் தேசத்தினும் முக்கியமாய் கருத வேண்டிய”தானதாய் பாஷை பிரிவுகள் எவ்வளவு? இவ் வளவு ஜாதியும், தாய் பாஷையும் தங்களுக்குள் பிரிபட்டு இருக்கின்றோம் என்று மாத்திரம் நினைத்துக் கொண்டிருக்காமல் தங்களுக்குள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற உள் எண்ண
மும் வெளி நடவடிக்கைகளும் வெறுப்பும் துவேஷமும் எவ்வளவு?
இவற்றையெல்லாம் கவனிக்காமலும், இதை நேர்படுத்த முயற்சிக் காமலும் யாரோ சில சோம்பேறிகளும் சுயநலக்காரரும் “தேசீயம் தேசீயம்” என்று சொல்லி மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட நினைத் தால் நாடு எப்படி க்ஷமம் அடையும்? கொஞ்ச நாளைக்கு மாத்திரம் தான்
இந்த தேசீய வயிற்றுப்பிழைப்பு வியாபாரம் நடந்த முடியுமே ஒழிய இது என்றும் நிலைத்திருக்க முடியுமா என்பது யோசிக்கத்தக்கதாகும்.
*வகுப்பு வாதம் கூடாது” என்று சொல்லுவதன் மூலம் ஏதோ சில பயங்காளிகளையும், வேறு வழியில் பிழைக்க வகையற்ற தேசீயவாதி களையும், உத்தியோகம் பதவிப் பிரியர்களையும் மிரட்டலாமே ஒழிய, வகுப்புப் பிரிவுகளாலும், உயர்வு தாழ்வு வித்தியாசங்களாலும் உள்ள கஷ்டத்தையும் கேட்டையும் ஒழிக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
“வகுப்புவாதம் மதவாதம் ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப் போகின்றது” என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைளெல்லாம் பேசவும் எழுதவும் தொடங்கி விட்டதைக்கண்டு நாம் சிறிது லக்ஷியம் செய்யவில்லை...
அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100க்கு அரைப் பேராவது தங்கள் மதத்தையும், உள் மதத்தையும், ஜாதியையும், உள் ஜாதி யையும் ,வகுப்பையும் உள்வகுப்பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.
ஆகவே தேசீயம் என்பதும், தேசீயப் பிழைப்பு என்பதும் மக்களை எவ்வளவு அயோக்கியர்களாகவும் இழிதகைமை உள்ளவர்களாகவும் செய்து விடுகின்றது என்பது கவனித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.
குடி அரசு - 1981 (2) 330
எப்பொழுது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்று ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்?
வகுப்புவாதம், மத வாதம், ஜாதி வாதம் கூடாது என்கின்ற யோக் கியர்கள் ஒருவராவது மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் அழிக்கச் சம்மதிக்கின்றார்களா? அது மாத்திரமல்லாமல் பார்ப்பனர் முதல் பறையர்: வரை மாயாவாதம் முதல் சைவர்வரை அவரவர்களின் ஜாதி மத வகுப்புக்கு உயிரை விட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின்றார்களேயொழிய ஒருவராவது ஜாதிமத வகுப்புகளை குழிதோண்டிப் புதைக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்களை கண்டு பிடிக்க முடியுமா? மதத்தையும், ஜாதியையும், வகுப்பையும் ஒரு புறத்தில் காப்பாற்றிக் கொண்டு மற்றொரு
புறத்தில் ஜாதி மத வகுப்புப்பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத் தனம், இழிதன்மை என்று சொன்னால் அப்படிச்சொல்லுவது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழிதன்மையும், வஞ்சகத்தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப்பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கின்ற கீழ்மக்கள் தன்மையா அல்லவா என்று கேட்
கின்றோம்.
தேசம்,ஜீவராசிகளுக்கு பொதுவானதாகும், தேச ஆட்சியும் மக்க ளுக்குப் பொதுவானதாகும். எந்த மனிதனுக்கும் ஆட்சியில் அவனது இஷ்டத்தை தெரிவிக்கவும், ஆட்சியில் பங்குபெறவும் உரிமை உண்டு என்பதை எந்த மூடனும் மறுக்க முடியாததாகும். ஏதோ சில அயோக்கிய வஞ்சகர்களது செல்வாக்குக்காலத்தில் அவர்களது ஏய்ப்பில் விழுந்த முட்டாள் மன்னர்களான, ஒழுக்க ஈனமுள்ள அரசர்கள் காலத்தில் ஏற்பட்ட அக்கிரமங்களாலும் கொடுங்கோன்மைகளாலும் ஜாதிமத வகுப்பு ஆணவங்
கள் ஏற்பட்டு ஒரு ஜாதி மத வகுப்பை மற்றொரு ஜாதி மத வகுப்பு அடக்கி ஆளும்படியாகவும், ஒரு ஜாதி மத வகுப்பு உழைப்பில் மற்றொரு ஜாதி மத வகுப்பு சோம்பேறியாய் இருந்து கொண்டு உண்டு வாழும் படியாயும் செய்யப்பட்டு விட்டதினாலேயே எல்லா காலங்களிலும் எல்லா அரசாட்சி களும் அப்படிப்பட்ட வஞ்சகர்களுக்கு உதவியாகவே இருக்கவேண்டுமா
என்றும் யாரோ சிலருக்கு பிழைப்பதற்கு வேறு வழி இல்லாததினாலேயே அந்த ஈனர்களுக்கு கூலியாய் இருக்கும் இழிதகைமையை மற்றவர்களும் அடையவேண்டுமா என்றும் கேட்கின்றோம்.
ஏதாவது ஒரு மனிதன் “என்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், என்னுடைய ஜாதி வலியிழந்த ஜாதியென்றும், என்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்டதென்றும் சொல்லி, அதன்
331 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காரணமாக ஆட்சியில் எனக்குள்ள பங்கு இன்னது என்பதை தெளிவாய்ச் சொல்லி, என்னை நீ அடக்கி ஆள முடியாதபடி செய்துவிடு” என்று சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது என்று கேட்கின்றோம். இதற்கு பதில் சொல்லாமல் அப்படிக்கேட்பது “குலாம் தன்மை” என்றும் தேசத்துரோகத் தனம் என்றும் சொல்லுவதானால் அப்படிச் சொல்லுகின்றவர்களை இப்படிச்சொல்லுவது “வயிற்றுப்பிழைப்புக்கு எச்சிலை பொறுக்கும் இழி தன்மை” என்று ஏன் சொல்லக்கூடாது.
தன் பங்கை தனக்குக் கொடு என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் அனேகமாய் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே, எந்த மதக்காரருடைய பங்கையானாலும், எந்த ஜாதி வகுப்புக்காரருடைய பங்கையானாலும் மறுத்து ஏமாற்றப்பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம். எப்படி கேடுற்றாலும் சில பொருப்பற்ற கூலிகளின் ஜீவனம் நடந்தேறலாம் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆனால் நாடு கெடும் என்பதை உண்மையும் பொறுப்பும் உள்ள மக்களுக்கு எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
சுமார் ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களும், சுமார் எட்டு கோடி முஸ்லீம்களும் தங்களுக்கு இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்று சொன்னால் “எங்களை நம்பித்தானாக வேண்டும் என்று சொல்ல எந்த இந்துவுக்கு உரிமை உண்டு என்று கேட்கின்றோம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தக்க சமாதானம் சொல்லி சரிப்படுத்த முயற்சிக்காமல் “தாழ்த்தப்பட்டவர்களுக்கு காந்தியிடமும், காங்கிரசினிட
மும் நம்பிக்கை இருக்கின்றது. அம்பட்காரிடம் நம்பிக்கை இல்லை” என்று சில பாவங்களுக்கு பணம் கொடுத்து சீமைக்கு தந்தி அடித்து பத்திரிகை களில் விளம்பரப்படுத்தி விடுவது யோக்கியமான செய்கையாகுமா?என்று கேட்கின்றோம்.
உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பார்கள் என்பவர்களில் நூற்றுக்கு கால் பேராவது காந்தியையும், காங்கிரசையும் நம்புகின்றார்களா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.
சீமையில் திரு.காந்தியடிகள் “தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரசும் நானும்தான் பிரதிநிதி” என்று சொன்னபோது திரு.அம்பெட்கார் சொன்ன பதிலுக்கு திரு.காந்தி என்னபதில் சொன்னார்? அம்பெட்கார் அவர்கள் நல்ல வெளிப்படையான பாஷையில் “காங்கிரசுக்கும், தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை, காங்கிரசில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிடையாது, அப்படியிருக்க திரும்பத் திரும்ப திரு.காந்தியவர்கள் காங்கி
ரசும் தானும் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதிகள் என்று சொல்லு வது பொறுப்பற்றவர்கள் சொரணையில்லாமல் பேசும் பேச்சாகும்” என்று எடுத்து சொன்னார். அப்படி இருக்கும்போது மறுபடியும் மறுபடியும்
குடி அரசு - 1981 (2) 332
காங்கிரசுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரதிநிதி என்று சொல்லுகிற வர்களுக்கு சிறிதாவது மானமோ , சுயமரியாதையோ இருக்குமானால் திரு.அம்பெட்காருக்கு பதில் சொல்லிவிட்டு மேல்கொண்டு சமாதானம் சொல்ல வேண்டும். அதாவது இன்ன இன்ன தாழ்த்தப்பட்ட மக்கள் இத்தனை பேர்கள் காங்கிரசில் இருக்கின்றார்கள். அவர்களது நிலைமை இன்னது என்று தெரிவித்துவிட்டு அம்பெட்காரையும் அவரது அபிப்பி ராயத்தையும் கண்டிப்பது ஒழுங்காகும். அப்படிக்கில்லாமல் “அம்பெட்கார் ஒரு குலாம்” “எம்.சி.ராஜா ஒரு குலாம்”, “என். சிவராஜ் ஒரு குலாம்” *மதுரைப்பிள்ளை ஒரு குலாம்” “அவர்களை ஆதரிக்கின்ற மற்றவர்களும்
குலாம் இழி மக்கள்” என்று பேசிவிட்டால் எழுதிவிட்டால் சமாதானமாகி விடுமா என்று கேட்கின்றோம். இந்தப்படி பேசுகின்ற எழுதுகின்றவர்க ளுடைய உண்மை குலாம் தன்மை நமக்குத் தெரியாதா என்பதை அவர வர்களே யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வணக்கத்துடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தன் பங்கைக் கேட்பவனை குலாம் என்றும், அடிமை என்றும், அதிகார வர்க்கத்தினர்கூலி என்றும், எச்சில் பொருக்கிகள் என்றும் சொல்லத் துணிவதின் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்கின்ற தலைகொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாண
யமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட். கின்றோம்.
அன்றியும் வட்ட மேஜை மகாநாட்டு முஸ்லீம் பிரதிநிதிகளை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், முஸ்லீம்களின் தொல்லை என்றும் , முஸ்லீம்களின் முட்டுக்கட்டையென்றும் முஸ்லீம்களின் வஞ்சகம் என்றும் , முஸ்லீம்களின் சூட்சி என்றும், தலையங்கம் கொடுத்து எழுதுவதே
“தேசீயப் பத்திரிகை” களுக்கு ஒரு யோக்கியதையாக விளங்குகின்றது. இது “தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்று சொல்வது போல் நடக்கும் காரியமேயல்லாமல் வேறு என்ன என்று சொல்ல
முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கையிலும், முஸ்லீம்கள் கையிலும் சரியான பத்திரிகைகள் இருந்து அச்சமூகத்தாருக்கு தங்கள் உரிமைக்குப் பாடுபடு வதில் இன்னும் சரியான அக்கரை இருந்து, அப்பத்திரிகைகளை ஆதரித்து பிரபலப்படுத்தி இருந்தால் இந்த சமூகங்களின் தலையில் தேசியத்தின்
பேரால் சுலபத்தில் கல்லைப் போட்டு விட முடியுமா என்று கேட்கின்றோம். மெளலானா ஷெளகத் அலியைப் பற்றி சில பத்திரிகைகள் வெகு இழிவாய்
எழுதத் தொடங்கிவிட்டன. மெளலானா ஷெளகத்தலியின் நாணயத்தை விட எந்த விதத்தில் திருவாளர்கள் காந்தியும், மாளவியாவும், ரங்கசாமி அய்யங்காரும், ராஜகோபாலாச்சாரியாரும், சத்தியமூர்த்தியும் உயர்ந்தவர்.
333 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கள் என்று கேட்கின்றோம். மெளலான ஷெளக்கத்தலி அவர்கள் மகமதிய சமூகமாகிய 8 கோடி மக்களுக்கும் சமமான ஆதிக்கம் வேண்டுமென உழைக்கிறார் என்றே வைத்துக் கொள்ளுவோம்.
ஆனால், மேல் கண்ட திரு.காந்தி முதலியவர்களின் உழைப்பு எத்தனை கோடி மக்களின் ஆதிக்கத்திற்கு என்பதை யோசித்துப் பாருங்கள். இந்திய ஜனத்தொகையில் 100க்கு மூன்று பேராய் உள்ள பார்ப்பன வகுப்புக்கு மாத்திரமல்லாமல், வேறு வகுப்புக்கு ஆதிக்கமில்லா
விட்டாலும் சமத்துவமாவது கிடைக்கும்படி உழைக்கின்றார்களா? என்று கேட்கின்றோம். இம்மாதிரி சுயவகுப்புப் புலிகளான ஆசாமிகளைத் தேச பக்தர்கள் என்றும் உண்மையான முஸ்லீம் பிரதிநிதிகளை வகுப்புவாதிகள், சூட்சிக்காரர்கள், குலாம்கள் என்றெல்லாம் சொல்லுவதென்றால் இது எவ்வளவு மோசடியான தந்திரமென்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.
நிற்க, ஒரு சமூகத்தாரிடமோ ஒரு மதத்தாரிடமோ மற்றொரு சமூகத்
தார் உண்மையில் பயப்பட்டு பந்தோபஸ்து விரும்பினால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி அவர்கள் பயம் தீரும்படியான மார்க்கம் செய்வதை விட்டு விட்டு இந்தப்படியெல்லாம் கேவலப்படுத்தி அவர்களது விருப்பங் களை அலட்சியப்படுத்தி அடக்கி ஆள நினைப்பது ஒரு நாளும் முடியாது என்பதற்காகவும், விஷமப்பிரசாரம் செய்து இழிவுபடுத்தப்பார்ப்பது இனி செல்லாது என்பதற்காகவுமே இதை எழுதுகின்றோம். அன்னியன் கையில் ஆதிக்கமும் பாதுகாப்பும் இருக்கும்போதே இவ்வளவு அக்கிரமங்களும், கொடுமைகளும், வஞ்சகங்களும் மனந் துணிந்து வேண்டுமென்றே செய் கின்ற மக்கள் இனி தங்கள் கைக்கு ஆதிக்கம் வந்தால் என்ன செய்ய மாட்டார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது நடுநிலைமையாளர். கடமையாகும்.
குடி அரசு - தலையங்கம் - 08.11.1931
குடி அரசு - 1981 (2) 334
காங்கிரஸ் புரட்டுக்குத் தோல்வி
சென்னை நகரசபைக்கு செனட்டிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது. அதற்குத் திரு.புர்ரா சத்திய நாராயணாவும், இங்கிலாந்திற்கு வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருக்கும் திவான்பகதூர் ஏ.ராமசாமி முதலியாரும் போட்டியிட்டனர். இவர்களில் திரு.ராமசாமி முதலியாருக்கு 109 ஓட்டுகளும் , திரு.சத்திய நாராயணாவுக்கு 46 ஓட்டுகளும் கிடைத்தன. திரு. ராமசாமி முதலியாரே செனட்டின் பிரதிநிதியாக நகரசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்டார். இந்தியா வுக்கு தானே பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும், காங்கிரசைக் சேர்ந்த திரு.சத்தியநாராயணாவுக்கு செனட்டு அங்கத்தினர்களின் ஆதரவில்லா மையைக் கொண்டு படித்தவர்களிடத்தில் காங்கிரசுக்கு எவ்வளவு செல் வாக்கு இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம். “காங்கிரசுக்கு விரோத. மான ஜஸ்டிஸ்கட்சி'யைச் சேர்ந்த திரு.ராமசாமி முதலியார் அவர்கள் ஊரில் இல்லாதிருந்தும் வெற்றிபெற்றதைப் பாராட்டுகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931
335 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
செண்ணையில் ௬ுமாமரிமாதை
சென்னை நகரத்தில் பல இடங்களில் அநேகமாக நாள் தவறாமல் சுமார் ஒரு மாதமாகப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. சுயமரியாதை இயக்கத் தோழர்கள் திரு.பொன்னம்பலனார், குருசாமி, பண்டிதர் திருஞானசம்பந்தர், எஸ்.ராமநாதன், டி.வி.சுப்பிர மணியம் முதலியவர்கள் சாதிப்புரட்டு, சமயப்புரட்டு, காங்கிரஸ் புரட்டு முதலியவைகளை எடுத்துக்காட்டி சமதர்மப் பிரசங்கங்கள் செய்து வருகின் றனர். ஆயிரக்கணக்கான பொதுஜனங்கள் உற்சாகத்துடன் கூட்டங் களுக்குப் போய் உண்மையுணர்கின்றனர். இவ்வாறு நடைபெறும் பொதுக் கூட்டங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தேசீய பத்திரிகைகள் வெளியிடுவ தில்லை. இதற்கு மாறாக கூட்டங்களில் கலகஞ் செய்வதற்காக காலிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. தேசீயப்புரட்டு வெளியாகி அதனால் பொது ஜனங்கள் விழிப்படையும் போது தேசீயப் பத்திரிகைகளும், தேசீய வாதிகளும் வேறு இதைத் தவிர என்ன தான் செய்யக்கூடும்?
குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931
குடி அரசு - 1981 (2) 336
கோண்டு சந்தேகம்?
- சித்திரபுத்திரன்
1.போக்கிரி : திருமதி ஸ்லேட்டர் அம்மாளை மீராபாயம்மாளாக்கி,
முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரிகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்கு காட்டுகிறாரே அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா?
யோக்கியன்: அதைப்பற்றி கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது.
போக்கிரி: சரோஜனி அம்மாள் அப்படியில்லையே?
யோக்கியன்: மறுபடியும் பேசுகிறாயே?
உ போக்கிரி: சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம். திரு. காந்திக்கு திரு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரி யுமா? தெரியாதா?
யோக்கியன்: தெரியும். ஏன்?
போக்கிரி: அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்?
யோக்கியன்: ஆம்.
போக்கிரி: அப்படி இருக்க, திரு.காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார்.
யோக்கியன்: இது வேண்டுமானால் நல்ல கேள்வி. ஏன் வைத்துக் கொண்டார் என்றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார் “இந்து” *சுதேசமித் திரன்” பத்திரிகைகளின் ஆசிரியாய் இருக்கின்றார் என்பதற்காகத்தான்.
237 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அன்றியும் திரு.ரங்கசாமி அய்யங்காரிடம் திரு.காந்தியின் கைவரிசை ஒன்றும் செல்லாது. ஏனெனில் இந்து பத்திரிகையொன்றாலே திரு காந்திக்கு எப்போதும் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு உண்டு.
போக்கிரி: அதெப்படி?
யோக்கியன்: காலஞ் சென்ற ஒத்துழையாமையின்போது கூட இந்து பத்திரிகை ஒத்துழையாமைக்கு விரோதமாய் விஷமப் பிரசாரம் செய்தும் திரு.காந்தி அடிக்கடி அதன் ஆசிரியருக்குக் கடிதம் எழுதி அவரைக் கைக்
குள் போட்டு, “ஒத்துழையாமையை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்
கள்” என்று கடிதமெழுதி இருக்கிறார். அன்றியும் “இந்து£வும் “சுதேச மித்திரனும் சேர்ந்துதான் திரு.தாசுக்கு விளம்பரம் கொடுத்து அவரை: “தேசபந்து” வாக்கி “மகாத்மாவை” தோற்கடித்து ஒத்துழையாமையைப் புதைத்து விட்டதுகள். ஆதலால் அதுபோலவே இப்போதும் செய்து விடுமோ என்கின்ற பயத்தால்தான் திருரங்கசாமி அய்யங்காரை திரு.காந்தி தனது மந்திரியாக்கிக் கொண்டார்.
போக்கிரி: மற்றவர்களையெல்லாம்விட திரு.ஏ.ரங்கசாமி அய்யங் காரிடம் மாத்திரம் என்ன அவ்வளவு பயம்?
யோக்கியன்: “இந்து” “சுதேசமித்திரன்” என்றால் பார்ப்பனர்கள். என்று அருத்தம். அதுவும் “தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள்” என்று அர்த்தம். திரு.காந்தியைப்போல் ஆயிரம் காந்தியை அய்யங்கார் பார்ப் பனர்கள் ஆக்கவும் கூடும். அழிக்கவும் கூடும்.திரு.காந்தி இவையெல்லாம். தெரியாதவரல்ல. யார்யாரைப் பிடித்து எப்படி எப்படி சரிபண்ணலாம், எப்படி எப்படி விளம்பரம் செய்யலாம் என்பதில் அவருக்கு அனுபவ முண்டு - லார்டு இர்வினை “மகாத்மா இர்வின்” என்று காந்தி கூப்பிட்டாரே எதற்கு? என்பது உமக்குத் தெரியுமா?
போக்கிரி: சரி, விளங்கிற்று இனி ஒன்றும் தெரியவேண்டாம்.
புதிய வதாண்டரும் பமைய தொண்டரும்
புதுத் தொண்டர்: வட்டமேஜை முறிந்து போனால் என்ன செய்வது? “ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டி வரும்” என்று காந்தி சொல்லுகின்றாரே”.
பழய தொண்டர்: அட பயித்தியக்காரா! வட்டமேஜை மகாநாடு
முறிந்தால் தான் நமக்கு நல்லது.
புதுத் தொண்டர்: அதென்ன அப்படி?
குடி அரசு - 1931 (2) 338
பழய தொண்டர்: வட்டமேஜை மகாநாடு முறிந்து போனால், திரு.காந்தி இந்தியாவுக்கு வந்து, மறுபடியும் ஏதாவது சத்தியாக்கிரகம்- சட்டமறுப்பு- என்பதாக, எதையாவது ஒன்றைச் செய்யச் சொல்வார்.
புதுத் தொண்டர்: அதனால் நமக்கென்ன லாபம்? ஜனங்களுக்கு கஷ்டம் தானே?
பழய தொண்டர்: அட முட்டாளே! ஜனங்கள் எக்கேடு கெட் டேனும் தொலையட்டும். அதைப் பற்றி நமக்கென்ன கவலை? நமக்கு
எப்படியும் ஒரு வேலை இருக்குமல்லவா? அதனால் உண்டி வசூலிக்கவோ, பணம் வசூல் செய்யவோ, தேசாபிமானியாகவோ சவுகரியம் இருக்கும். அப்படியில்லா விட்டால் நம்மை எவன் சட்டை பண்ணுவான்?
புதுத் தொண்டர்: நமக்கு வேலை வேண்டியதற்காகவா தேசியத் தொண்டு செய்வது?
பழய தொண்டர்: சரி! சரி! உனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள்.
வீட்டில் ஏதோ சோற்றுக்குக் கொஞ்சம் வகை இருக்கின்றது போல் தெரி
கின்றது, அதனால் உனக்கு வட்டமேஜை முறிய வேண்டிய அவசிய மில்லையென்று தோன்றுகின்றது.
புதுத் தொண்டர்: அதென்ன அப்படி சொல்லுகின்றாய்?
பழய தொண்டர்: வட்டமேஜை ஏதாவது ஒரு வழியில் வெற்றி பெற்று விட்டால், இந்தியாவில் வேலையில்லா கஷ்டம் எவ்வளவு அதிகரிக்
கும் தெரியுமா? முக்கால்வாசிப் பத்திரிகைகள் ஒழிந்து போகும்.முன்பெல்
லாம் பாமர மக்களை ஏமாற்ற மதம் ஒன்று தான் இருந்தது. இப்போது நமது பிராமணப் பெரியோர்கள் தயவினால் தேசீயம் என்பதாக ஒன்று ஏற்பட்டு
, இதில் அனேகம் பேருக்கு ஜீவனோபாயம் உண்டாயிற்று. மகாத்மா காந்தி அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார். அதனால் இப்போது நம்போலியர்க்கெல்லாம் சோற்றுக்குச் சோறு, துணிக்குத்துணி, கை. செலவுக்குத் தாராளமாகக் காசு இவ்வளவும் தவிர, போகின்ற பக்கம், வருகின்ற பக்கம் எல்லாம் திருப்பதி குடை யாத்திரைக்காரருக்கு காலில் தண்ணீர் விட்டு விழுந்து கும்பிட்டு, தட்டத்தில் காசு போடுகின்ற மாதிரியான மரியாதை-இவ்வள வெல்லாம் இருக்கின்ற போது, இவை அத்தனையும் ஒழிந்து போகின்ற மாதிரியில் “வட்டமேஜை வெற்றி பெற்றால்” என்று கேட்கின்றாயே, பாவி! இதைக் கேட்டதும் எனக்குத் திகீர். என்கின்றது.
புதுத் தொண்டர்: கோபித்துக் கொள்ளாதீர்கள்! எனக்கு அனு போகம் இல்லாததினால் இப்படிக் கேட்டேனே ஒழிய, உங்கள் பிழைப்பில் நான் கை வைக்கவில்லை.
339 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சத்தியாக்கிரகமும் தடையும்
கேள்வி: சத்தியாக்கிரகம்” என்பதை குற்றம் சொல்லுவதின் காரணம் என்ன?
விடை: சத்தியாக்கிரகம் என்கின்ற வார்த்தையில் மனிதத் தன்மைக்கு மீறினதான, ஏதோ ஒரு “தெய்வீக*சக்தி இருப்பதான கருத்து இருக்கின்ற படியால், தெய்வத்தன்மை என்பதை ஒப்புக்கொள்ளாதவன் சத்தியாக் கிரகத்தை ஒப்புக் கொள்ளமுடியாது.
கேள்வி: அப்படியானால் முழுச் சுயமரியாதைக்காரர்கள் என்பவர் கள் கூட சத்தியாக்கிரகம் செய்கின்றார்களே அதன் அருத்தம் என்ன?
விடை: பசிக் கொடுமையால் உலகில் நடக்கும் எத்தனையோ விதமான அற்புதமல்லாதவைகளில் சுயமரியாதைக்காரர் என்பவர்கள் சத்தியாக்கிரகம் செய்கின்றார்கள் என்பதும் சேர்ந்ததாகும். “யாரைவிட்டது காண் பசிக் கொடுமை எவரை விட்டது காண் பசிக் கொடுமை” என்பதும், “பசி வந்திடப் பத்தும் பறந்து போம்” என்பதும் இதில் சேர்ந்தவைதான்.
கேள்வி: “மகாத்மா” காந்தி எத்தனையோ காரியத்திற்கு சத்தியாக் கிரகம் செய்கின்றாரே? இந்த தீண்டாமைக்கு ஏன் சத்தியாக்கிரகம் செய் வதில்லை?
விடை: அவர் தீண்டாமை விலக்குவதில் சத்தியம் இருக்கின்றதா இல்லையா என்பதில் இன்னமும் முடிவு காணாமல் இருக்கின்றார். ஆதலால் தான் தீண்டாமை ஒழிப்பதற்கு சத்தியாக்கிரகம் செய்யும் விஷயத்தில் பயப்படுகிறார்.
கேள்வி: அப்படியானால் வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு அவர் எப்படி உதவி செய்தார்?
விடை: வைக்கம் சத்தியாக்கிரகம் திரு காந்தி ஆரம்பித்ததல்ல. மற்றவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். “நம்பிக்கை இருக்கின்றவர்கள் செய் யுங்கள்” என்று அனுமதி மாத்திரம் கொடுத்துவிட்டார்.
கேள்வி: வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு “மகாத்மா” பணம் கூட கொடுத்தாரே.
விடை: ஆம். அந்தப் பணம் கொடுத்தது எதற்கென்றால் வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்தப் பஞ்சாப்பில் இருந்து சீக்கியர்கள் பதினாயிரக் கணக்கான ரூபாய்களுடன் வந்து விட்டார்கள். அவர்களைக் கொண்டு சத்தியாக்கிரகம் நடந்தால் ஜனங்கள் சீக்கியர்கள் ஆய்விடுவார்களே என்று
கருதியும், மற்றும் பணம் தாராளமாய் இருந்தால் தீண்டாமை விலக்குக்கு
குடி அரசு - 1981 (2) 340
நினைத்த இடங்களில் எல்லாம் சத்தியாக்கிரகம் தொடங்கப்பட்டு விடுமே என்று பயந்தும், சீக்கியர்களை திரும்பிப் போகும்படி செய்துவிட்டார். அதனால் சிறிது உதவி செய்ய வேண்டியதாயிற்று.
குடி அரசு - உரையாடல் - 15.111931
341 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மக்களே! யார்ப்யபணிபம் ஊாக்கிரதை!!
BEWARE OF BRAHMINISM
தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் மறுபடியும் கதர், காங்கிரஸ், மறியல் என்னும் பெயர்களைச் சொல்லி மூடமக்களிடம் உண்டியல் பிச்சை, தட்டப்பிச்சை முதல் பல தந்திரங்களால் பணம் வசூலிக்க வழிகளுண் டாக்கி, பார்ப்பனரால்லாதாரையே கூலிகளாகப் பிடித்து அவர்கள் வசம் அம் மார்க்கத்தை ஒப்புவித்து கூப்பாடு போடச்செய்து, பிரசாரம் செய்ததின் பயனாய் அடங்கிக்கிடந்த பார்ப்பனீயம் இப்போது மறுபடியும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.
பார்ப்பனீயத்தின் கருத்தெல்லாம், தேசம் பார்ப்பனர்கள் ஆதிக்கத்
திற்கு வரவேண்டுமென்பதைத் தவிர வேறு ஒரு காரியமும் இல்லை என்பதும் வெகு காலத்திற்கு முன்பே விளங்கிய விஷயமாகும். அதற்காக என்று செய்யப்படும் கதர்-காங்கிரஸ்-மறியல் முதலிய பிரசாரத்தின் கருத் தெல்லாம் சட்டசபை தாலூகா, ஜில்லாபோர்டுகள் முனிசிபாலிட்டி முதலிய வைகளை பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பிடுங்கி பார்ப்பன ஆதிக்க வசம் ஒப்புவிக்கும் தரகர் வேலை என்பதைத் தவிர மற்றபடி இவற்றால் எல்லாம் மதுபானமோ, ஏழ்மைத்தன்மையோ, அடிமைத்தன்மையோ ஒழியப்போவ தில்லை என்பதும் நிச்சயமான உண்மையாகும்.
“தேன் அழித்தவன் புறங்கை நக்கமாட்டானா” என்பது போல் “பார்ப் பனர்களுக்கு போகமுடியாத சமயத்தில் ஒன்று அரை உத்தியோகமோ, ஸ்தானமோ நமது கைக்கு வராதா” என்று எண்ணுகின்ற தொண்டர்களும்
சிலர் இருக்கலாம் என்றாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இது சமயம் ஏமாந்தால் கடைசியில் ஆபத்தாய் முடியும்.
உதாரணம் வேண்டுமானாலும் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விளங்கும். இப்போது, முனிசிபல் எலக்ஷனும், தாலூகா ஜில்லாபோர்ட் எலக்ஷனும் சமீபித்த உடனே எத்தனை “வரி செலுத்துவோர்'சங்கம், “நகர நல உரிமை”சங்கம், “குடியானவர்கள்” சங்கம், “ரோட்டில் நடப்பவர் கள் சங்கம், “ரயிலில் பிரயாணம் செய்கின்றவர்கள்”சங்கம், “மதுவிலக்கு”
சங்கம், “சுகாதார” சங்கம், “தொழிலாளிகள் சங்கம், “உழுது பயிர் செய்வோர்”
குடி அரசு - 1981 (2) 342
சங்கம், “வேலையற்றவர்கள்”சங்கம் என்பவைகளாகிய அநேக சங்கங்கள் புறப்பட்டு வருகின்றதை கவனித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும். 1920- ஹத்திய சீர்த்திருத்தத்தின்போதும் சட்டசபை தேர்தலை உத்தேசித்து கிளப்பப்பட்ட காங்கிரஸ் கிளர்ச்சியானது ஒத்துழையாமையில் ஆரம்பித்து,
தேர்தல்கள் வந்தவுடன் சட்டசபைப் பிரவேசமாக மாறி எலக்ஷன் முடிந்த உடன் எல்லாமுமே அடங்கிப்போய்விட்ட சங்கதி யாவரும் அறிந்ததே. இப்போதும் அதுபோலவே 1931ம் வருஷத்திய சீர்திருத்தத்தை எதிர்பார்த்து, சட்டசபை தேர்தல்களை உத்தேசித்து, ஒரு வருஷத்திற்கு முன்னால் இருந்தே போடுகின்ற கூச்சல் இது என்பதைத் தவிர மத்தியில் இந்த 5, 6 வருஷங்களாய் ஏதாவது நடவடிக்கைகள் நடந்ததா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இவற்றிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு
தேர்தலின் போதும், சட்டசபை காலாவதி முடிவதற்கு “மூன்று நாள்” இருக்கையில் காலம் சென்ற “தேசபக்த சிகாமணி” மோதிலால் நேரு உள்பட, பல “தேசபக்த சீஷர்கள்” பின்பற்றுபவர்கள் உள்பட அநேகர் சட்டசபையின் மீது “கோபித்து” ராஜினாமா கொடுத்து விட்டுவந்து ,
மறுபடியும் மூன்று நாளில் அடுத்த காலாவதி தேர்தலுக்கு நின்றது முதலிய காரியங்களையும் யோசித்துப்பாருங்கள்.
இன்று தென் இந்தியாவிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவர்
கள் எல்லோருமே 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே அந்த கூட்டத்
தினரும், அதில் நேரில் கலந்து இருந்தவர்களும் பார்ப்பனர்களுமாகவே இருக்கின்றார்களா இல்லையா என்பதையும், மற்ற பொது “தேசீய ஸ்தாபனங்கள், கூட்டங்கள் ஆகியவைகளின் தலைவர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களும் அனேகமாய் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
மற்றும் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காங்கிரஸ் காரர்கள் என்கின்ற முறையில் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போயிருக்கும் பிரதிநிதிகளும் பார்ப்பனர்களா? அல்லவா?என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
கடைசியாக சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவர்களும் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப்பாருங்கள். இவைகளை எடுத்துக்காட்டுவது வாசகர்களுக்கு ஒரு
சமயம் பார்ப்பனத் துவேஷமாய் காணப்பட்டாலும் படலாம். என்றாலும் தொண்டர்கள் என்பவர்கள் மாத்திரம் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல் லாதார்களா? அல்லவா? என்பதையும், அத்தொண்டர்களின் ஜீவனம் பெரிதும் அக்காங்கிரஸ் சம்மந்தத்தின் பேரினாலேயே இருக்கின்றதா? இல்லையா? என்பதையும், இத்தொண்டர்களுக்கு காங்கிரசினால் ஜீவனம் இல்லாவிட்டால் இவர்கள் அங்கு இருப்பார்களா? என்பதையும், இவர்கள்.
343 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காங்கிரசின் மூலம் ஜீவிப்பதைத் தவிர வேறு வழியில் பாடுபட்டுப் பிழைக்க
100க்கு 10 பேராலாவது முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
மற்றும் ஒரு விஷயத்தையும் யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். அதென்னவென்றால்:-
பார்ப்பனர்களின் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களே காங்கிரசில் தலைவர்களாயிருக்கவும், பார்ப்பனரல்லாதார்களில் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரி கள் முதலியவர்கள் அதுபோல் காங்கிரசில் சேராமலிருக்கவும் காரணம் என்ன? பார்ப்பனரல்லாத வகுப்போ, ஜாதியோ, அதாவது வயிற்றுப் பிழைப்பை காங்கிரசின் மூலம் நடத்துகின்றவர்கள் தவிர மற்ற பார்ப்பன
ரல்லாதார் சமூகமே “தேசத்துரோகிகளா”? அல்லது “குலாம்களா”? அல்லது *நக்கிப்பொறுக்கிகளா?” என்பதை யோசித்துப் பாருங்கள்.
திருவாளர்கள் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கட் ரமணய்யங்கார், பாஷ்யம்அய்யங்கார், ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன், மகாலிங்கய்யர் ஆகியவர்களுக்கு இருக்கும் “சுயராஜ்ய தாகம்” “சமதர்ம
உணர்ச்சி” முதலியவைகள் திருவாளர்கள் வெரிவாட செட்டியார், இரத்தின சபாபதி முதலியார், டாக்டர் நடேச முதலியார், தம்மண்ண செட்டியார், குமார சாமி செட்டியார், காயாரோகணம் பிள்ளை முதலியவர்களுக்கு ஏன் இல்லை. முற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் தான் யோக்கியர்கள், நாணையக்காரர்கள், தேசபக்தர்கள், தியாகமூர்த்திகள் ஆகியவர்களா? பிற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் அந்தப்படி அல்லாதவர்களா? அல்லது தேசத்தின் பேரால் பணம் சம்பாதித்து அதனால் சாப்பிட்டுக் கொண்டிருப் 'பவர்களா?
இவைகள் ஒருபுறம் இருந்தாலும், இன்று தமிழ் நாட்டு காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவரிடமாவது, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடமாவது இன்று காங்கிரசில் வேலை செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்களில் 100க்கு 5 பேருக்காவது நம்பிக்கையோ, அல்லது மரியாதையோ இருக்கின்றதா? என்று காங்கிரஸ் பக்தர்களையும் தொண்டர். களையும் கேட்டுப்பாருங்கள். பார்ப்பனரல்லாத தொண்டர்கள் ஒவ்வொரு வரும் அவர்களிடம் அடியோடு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லு வார்கள், சொல்லுகிறார்கள்.
அப்படி யிருக்க அவர்களை தலைவர்களாக்கியதும், தலைவர்க ளாகக் கொண்டாடுவதும், அவர்களது தலைமையில் தொண்டாற்றுவதுமான
காரியம், வெறும் - பரிசுத்தமான வயிற்றுப் பிழைப்பு நாடகமாக இராமல், கடுகளவாவது நாணையமோ, சுயமரியாதையோ உடைய தேசியமாகவோ, தேசபக்தியாகவோ இருக்க முடியுமா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்.
குடி அரசு - 1931 (2) 344
சைவ மடங்களில் வெட்டிச் சோறு இல்லாவிட்டால் அங்கு எப்படி நூற்றுக்கணக்கான மொட்டைப்பண்டாரங்கள் இருக்கமுடியாதோ அது போலவே, காங்கிரஸ் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்க இடம் இல்லா விட்டால் இன்று இத்தனை தேச பக்தர்கள் தேசிய வீரர்கள் , தொண்டர்கள், காங்கிரசில் இருந்து “தொண்டாற்ற” முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்று காங்கிரசில் வயிறு வளர்ப்பவர்களில் 100க்கு
90 பேர் இதில் வந்து சேர்வதற்கு முன் எங்காவது நாணையமான, கெளரவ மான தொழிலில் ஈடுபட்டு தாராள முறையில் சுதாவில் வயிறு வளர்த்தார்களா என்றாவது யோசித்துப் பாருங்கள்.
எங்கோ இரண்டு ஒன்று மூளையிலுள்ள கோளாறாலோ வேறு காரியங்களை எதிர்பார்த்தோ இந்த கூட்டத்தில் சேர்ந்திருப்பதாலேயே அவர்களை உதாரணமாகக் கொண்டு வராதீர்கள். அதிகம் பெயர்களின் யோக்கியதைகளையே கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்.
இவற்றையெல்லாம் “குடி அரசு” ஆரம்பித்த காலத்திலேயே பக்கம்
பக்கமாய் எழுதியிருந்தாலும் மேடை மேடையாய் கூப்பாடு போட்டிருந் தாலும் இப்போதும் அதை ஏன் திருப்புகிறோம் என்றால், உண்டியல் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு மேடையேறி கள்ளு, சாராயக்கடைகளில் குடி காரர்களும், கீழ்மக்களும், வெறிகாரர்களும் பேசுவதுபோல் வாயில் வந்த படி மற்றவர்களைப் பேசும் இழிதன்மையின் யோக்கியதையையும் காரணங்களையும் மக்களுக்கு எடுத்துக்காட்டவே நாம் எழுத நேரிடு
கின்றது.
காங்கிரஸ் தொண்டர்கள் என்பவர்கள், காந்தி பக்தர்கள் என்பவர்கள், அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் என்பவர்கள் வெளிப்படை
யாய் தேர்தல் கூலிகளான பிறகும், கூலிக்கு மற்றவர்களை வையத் தொடங் கிய பிறகு அவர்களது யோக்கியதையை பொது ஜனங்களுக்கு வெளிப்
படுத்தாமல் இருக்க முடியவில்லை.
காந்தியைக் கும்பிடுவதிலோ, அவர்மீது புகழ் மாலை பாடி ஜீவனம் செய்வதிலோ நமக்கு பொறாமையில்லை. கல்லைக் கும்பிட்டு அதன்மீது புகழ்மாலை பாடி அதன் பெயரை சொல்லிக் கொண்டு வயிறுவளர்க்கும், முட்டாள்தனத்தை விட, இதை நாம் அதிகமாக குற்றம் சொல்லவரவில்லை. ஆனால், அதற்காக தேர்தலில் ஏன் பிரவேசிக்க வேண்டும் என்று தான் யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.
ஏற்கனவே இருக்கின்றவர்களை விட இவர்கள் தரகர்களாயிருந்து வேலை செய்வதன் மூலம் கொண்டு வந்து நிறுத்தப்படுபவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்று சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். தொண்டர்களுக்கு கூலி கொடுத்து, அல்லது கூலி
345 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கிடைக்கச் செய்து மற்றவர்களை வாய்கொண்டமட்டும் வையச் சொல்லு கின்றார்கள் என்பதைத்தவிர வேறு என்ன அதிகமான யோக்கியதை இருக்கின்றவர்களுக்கு இவர்கள் கங்காணிகளாக இருக்கின்றார்கள்?
எந்த காங்கிரஸ்-கதர்-மறியல் தொண்டருக்கும் தேர்தலைப்பற்றி பேசவும், பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப்பற்றி வசைபாடவும் என்ன அவசியம் இருக்கின்றது? சர்க்காராரை வைதுவிட்டு வயிறு வளர்ப்பதில் அக்கரை இல்லை. மற்றபடி தேர்தல் ஸ்தாபனங்களில் இருக்கும் நபர்களைப் பற்றி பேசவேண்டிய காரியம் எதற்கு? அதுவும் பார்ப்பனர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு எதிர் அபேக்ஷகர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு பேசுவது என்றால் யார் சகிப்பார்கள்? அந்தப்படி எதற்காக சகித்துக் கொண்டு இந்த இழிவான வேலையில் ஒரு கூட்டம் பிழைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.
மனிதர்களுடைய சொந்த குணங்களின் உண்மையை இருபுறமும் சொல்லுவதைப் பற்றி நமக்கு சங்கடம் இல்லை.ஆனால் அவர்கள் அந்தக் கக்டிக்காரர் இந்தக் கக்ஷிக்காரர் என்றும் காங்கிரஸ் ககஷிக்காரர் அல்ல என்றும் சொல்லுவதனால் அதில் நாணையம் உண்டா என்றும் பாருங்கள்.
காங்கிரஸ் கக்ஷிக்காரர் என்றால் என்ன அருத்தம்? “தொண்டர் களுக்கு சோற்றுக்கு கொடுக்கின்றவர்” என்பதைத் தவிர வேறு என்ன வித மான நல்ல அபூர்வ- பொது நன்மைக்கு ஏற்ற நாணையமான குணம் இருந் தது - இருக்கின்றது-இருக்கும் என்று சொல்ல முடியும்? அளவுக்கு மிஞ்சி னால் எதுவும் கெடுதி என்பதை உணராமல் மக்கள் எல்லோரையும் மூடர்கள் என்று எண்ணிக்கொண்டு வேலை செய்வது என்பது என்றைக்கானாலும் ஒரு நாளைக்கு வெளியாக்கப்படவேண்டியதாய் தான் முடிகிறது.
ஆதலால் பொது ஜனங்கள் பார்ப்பன தந்திரத்தைக் கண்டும், பார்ப்பனக் கூலிகளின் நாடகத்தைக் கண்டும் ஏமாந்துபோக கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.
நிற்க பல “தேசபக்தர்கள்” தாங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்ததை பிரமாதமாகப் பேசி மக்களை ஏய்க்கின்றார்களாம். அனேகருக்கு வீட்டுச்சாப்பாட்டை விட இப்போதைய ஜெயில் சாப்பாடு நல்ல சாப்பாடு என்பதையும்,வீட்டிலிருப்பதை விட அங்கு செளக்கியம் அதிகம் என்ப
தையும் யாவரும் அறியாமல் இல்லை. இதற்கு மற்றொரு உதாரணமாக 511315 தேதியின் “இந்தியா” வாரப்பத்திரிக்கையில் உண்மையில் நடந்ததாக எடுத்துக்காட்டியிருக்கும் ஒரு விஷயத்தை குறிப்பிடுகின்றோம். அதாவது, “வேலையில்லா திண்டாட்டத்துக்கு பரிகாரம்” என்ற தலைப்பின் கீழ்.
குடி அரசு - 1981 (2) 346
“ஒரு அதிகாரி ஒருவனுக்கு 12 மாதம் தண்டனை விதித்தார். அதற்கு எதிரி பிரபுவே உமக்கு வந்தனம். எனது கஷ்டத்தை கொஞ்ச காலத்திற்குத் தீர்த்து வைத்தீர்கள். என்னைப்போல் வேலையில்லா
மல் திண்டாடும் ஒவ்வொருவரும் இதை அடைவது நலம் என்று சொல்லி அதாவது (ஒரு வருஷத்திற்காவது தனக்கு சாப்பாட்டிற்கு வழியேற்றப்பட்டதே என்று சந்தோஷப்பட்டான்
என்பதாகும்.
இந்தப்படி விஷயங்களைப் பச்சையாய் எடுத்துச் சொல்லுவதில்
சிலருக்கு சங்கடம் இருக்கலாம். உண்மையாய், யோக்கியமாய் வேலை செய்கின்ற தொண்டர்களைப்பற்றி நாம் யாதொன்றும் கற்பிக்க வரவில்லை. அப்படிக்கில்லாமல் மேல் கண்டபடியெல்லாம் பேசுவதும், உண்மைக்கு விரோதமாக துவேஷபுத்தியுடன் சுயநலத்துக்கு விஷமப் பிரசாரம் செய்வதும், மற்றும் ஒருவருக்கொருவர் உள்ள சொந்த மனஸ்தாபங்களில் புகுந்து ஒருவரிடம் கூலி வாங்கி மற்றவர்களை வைய உபயோகித்துக் கொள்வதுமான “தேச சேவை”யைக் கண்டிக்காமல் இருப்பது பயங்காளித் தனமாகும் என்பதோடு, ஒழுங்குக்கும் சமாதானத்திற்கும் பங்கமேற்படுத்து வதுமாகும் என்றே வெளிப்படுத்துகிறோம்.
கடைசியாக ஒரு வார்த்தை சொல்லி இதை முடிக்கின்றோம். அதா வது:- இந்தமாதிரி “தேசீயத்தொண்டர்' களைச் சுவாதீனம் செய்து, அவர். களை ஏவி விட்டு, தங்கள் பகைமைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் காரியம் செய்கின்றவர்களுக்கு இன்று சற்று சந்தோஷமா
யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய, நாளைக்கு இதே தொண்டர்களை சற்று அதிகக்கூலி கொடுத்து வாங்கி, இவர்கள் மீதே உசுப்படுத்திவிடுவது என்பது பிரமாதமான காரியம் அல்லவென்பதை நினைவிலிருத்தும்படி
தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 15.11.1931
347 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
திரு.காந்தி கணித்வதாகுதியை மறுப்பதின் ரகசியம் I
சீர்திருத்தம் கூடாது எண்பதேயாகும்
- தேசீயத்துரோகி
திரு.காந்தியும், காங்கிரசும், பார்ப்பனர்களும் தனித்தொகுதி கூடாது கூடாது என்று கூச்சலிட்டுக் கொண்டு வருகின்றனர். தனித்தொகுதி இருந்தால், அரசியலில் எல்லா வகுப்பினர்களும் சம உரிமை பெற முடியும். ஆகையால் தனித்தொகுதியோடு கூடிய அரசியல் சீர்திருத்தமே வேண்டுமென்றும், நாட்டில் உள்ள சிறுபான்மை வகுப்பினர்களும், அவர்களின் தலைவர்களும் கூறுகின்றனர். இதை நாட்டின் உண்மை நிலையைத் தெரிந்த நடுநிலையாளர்கள் சரியென்று ஒப்புக் கொள்ளுகின்
றனர். ஆனால், தனித்தொகுதிக்கு எதிராக இருக்கின்றவர்கள், தனித்தொகுதி வேண்டுமென்று கூறுபவர்களையும், அதை ஆதரிப்பவர்களையும், வகுப்பு வாதிகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் தாராளமாக பிரசாரஞ் செய்கின் றனர். தேசீயப் பத்திரிகைகளும், இவர்கள் பாடும் பல்லவியையே பாடி வருகின்றன.
இந்த முறையிலேயே பார்ப்பனரின் மகாத்துமாவாகிய திரு.காந்தி
யும், அவரைப் பின்பற்றுபவர்களும், ஒரேயடியாகத் தனித்தேர்தல் முறை கூடாது என்று கூறுவார்களானால் அதில் ஏதாவது தேசிய நோக்கம் இருக்க
லாம் என்றாவது சொல்ல இடமுண்டு. ஆனால் இங்கிலாந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப் போன பின் திரு. காந்தியும், மாளவியா போன்ற வைதீகர். களும், முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும், தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்கச் சம்மதிப்பதாகவும், தீண்டத்தகாதார்களுக்கும், மற்ற சிறுபான்மை சமூகத்தாருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்கக் கூடாதென்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
திரு.காந்தியவர்கள், “எனது உயிரை விட்டாவது தீண்டாதாருக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை மறுப்பேன்”” என்று வெகு உறுதியாகப் பலவிடங்களில் சொல்லி வருகிறார். வட்டமேஜை மகாநாட்டிலிருக்கும்
குடி அரசு - 1981 (2) 348
மற்ற வைதீகர்களும், திரு.காந்திக்குத் துணையாக நிற்கின்றனர். ஆனால் திருவாளர்கள் சாப்ரூ, பாத்ரோ போன்ற அரசியல் வாதிகளும், முஸ்லீம் களும், தீண்டாதாருக்கும் சிறுபான்மையோருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை உறுதியாக ஆதரித்து நிற்கின்றனர்.
முஸ்லீம்களும், தீண்டாதார்களும், மற்ற சிறுபான்மை வகுப்பினர்
களும் சேர்ந்து ஒவ்வொரு மாகாணச் சட்டசபையிலும், தலைமைச் சட்ட சபைகளிலும், ஒவ்வொரு வகுப்பினருக்கும், இத்தனை இத்தனை பிரதிநிதி
கள் இருக்க வேண்டுமென்று ஒரு திட்டம் தயார் செய்து, அதை முதல் மந்திரி, திரு.மெக்டனால்டு அவர்களிடம் கொடுத்து விட்டார்கள். அத்திட்டத்தினாலும், தீண்டாதார்களுக்கு அரசியல் சமூகப்பங்கு கிடைக் கிறதே அல்லாமல் சமத்துவம் பெறுவதற்குத் தடை இருக்கிறதாயினும், திரு.மெக்டனால்டு அதை ஒரு முக்கியமான திட்டமாகக் கருதி, சிறுபான் மையோர் பிரச்சினைக் கமிட்டியின் கடைசிக் கூட்டத்தில், “சிறுபான்மை யோர் உரிமைகளை முடிவு செய்யும் போது அத்திட்டத்தையும், முக்கிய மான ஒரு கருவியாக வைத்துக் கொண்டு முடிவு செய்யப்படும்” என்று கூறிவிட்டார். ஆகவே, பிரிட்டிஷாரும், முஸ்லீம்களும், கிருஸ்தவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், ஐரோப்பியரும், வட்டமேஜை மகாநாட்டு இந்தியப்பிரதிநிதிகளில் மெஜாரிட்டியாரும், தீண்டாதாருக்கும், மற்ற சிறுபான்மையினருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை ஆதரிக்கின்ற காரணத்தால் வட்டமேஜை மகாநாடு வெற்றிகரமாக முடிந்தால் தனிப்பிரதி நிதித்துவம் விரும்பும் சமூகத்தாருக்கு அது கிடைப்பது நிச்சயம். இவ்வாறு தனிப்பிரதிநிதித்துவம் கேட்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மை யினருக்கும் வெற்றியேற்படாமலிருக்கத் திரு.காந்தியும் எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பார்த்தார். முஸ்லீம்களுக்கு அவர்கள் இஷ்டப்படி பாது காப்பு கொடுக்கச் சம்மதிப்பதாகவும், ஆனால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர். களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க மறுக்கும் விஷயத்தில் தன்னோடு ஒத்துழைக்கச் சம்மதிக்க வேண்டு மென்றும் கேட்டார். ஆனால்
முஸ்லீம் பிரதிநிதிகளோ இந்த மோசமும், சூழ்ச்சியு மான உடன்படிக்கைக்
குச் சிறிதும் சம்மதிக்கவில்லை.
இவ்வாறு தீண்டாதார்களுக்கும், மற்ற சிறுபான்மை வகுப்பினரான
கிருஸ்தவர், ஐரோப்பியர் முதலானவர்களுக்கும் ஒரே பிடிவாதமாகத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க திரு.காந்தியவர்கள் மறுப்பதன் இரகசியம் என்ன என்பதைக் கவனிப்போம். திரு,காந்தியும், மாளவியா, ரங்கசாமி அய்யங்கார் முதலானவர்களும் வருணாச்சிரம தருமத்திற்கு முள்வேலி போடுகிறவர்கள் என்பதை அவர்கள் பேச்சிலிருந்தும், நடவடிக்கைகளிலி
ருந்தும் நன்றாய் அறியலாம். வரப்போகும் சுயராச்சியம், வைதீகர்களுக்கும், அவர்கள் மதங்களுக்கும், கலைகளுக்கும், நாகரீகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் சுயராச்சியமாக இருக்க வேண்டும் என்பது திரு.காந்தியினு
349 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
டைய கொள்கையும், காங்கிரஸ் கொள்கையும் ஆகும் என்பதைக் கராச்சி காங்கிரஸ் செய்திருக்கும் தீர்மானத்திலிருந்து அறியலாம்.
முஸ்லீம், கிருஸ்தவர், தீண்டாதார், ஐரோப்பியர் ஆகிய எல்லோருக்
கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுத்து விட்டால், சட்டசபைகளில் இவர்களின் சரியான பிரதிநிதிகள் கண்டிப்பாக வந்து சேர்ந்து விடுவார்கள். மேற்கண்ட வகுப்பினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் இந்துக்களின் பிரதிநிதிகளுக்கு சற்றேறக்குறைய சமமாக ஆகிவிடுவார்கள். முஸ்லீம்
களும், கிறிஸ்தவர்களும், ஐரோப்பியர்களும், தீண்டாதார்களும், வைதீக இந்துக்களைப் போல் வருணாச்சிரமதர்மவாதிகள் அல்லர்; சமதர்ம விரோதி
கள் அல்லர். ஆகையால் சீர்திருத்த தீர்மானங்களும்சமூக சமத்துவத் தீர்மானங்களும், சமதர்மத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படலாம். இவை
களின் மூலம் வைதீகமும், வருணாச்சிரம தர்மமும் அழிக்கப்படலாம். ஆகவே வருணாச்சிரமதர்மமும், வைதீக இந்து மதமும் அழிய வேண்டிய நிலைக்கு வந்து விடும். இந்தக் கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான் வருணாச்சிரமத்தையும், வருணாச்சிரம இந்து மதத்தையும் காப்பாற்றவே
பிறந்திருக்கும் திரு.காந்தி தீண்டாதார்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க மறுக்கிறார் என்பதில் சந்தேகப்பட வேண்டியதில்லை. திரு.காந்தி
யின் மனப்பாங்கை நன்றாய் அறிய வேண்டுமானால் மற்றொரு விஷயத் திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அதாவது திரு.காந்தியவர்களை: “முஸ்லீம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்கச் சம்மதிக்கும் போது தீண்டாதவர்களுக்கு அவ்வாறு கொடுக்க ஏன் ஆட்சே பிக்கிறீர்கள்” என்று கேட்ட போது திரு.காந்தி “லெட்சுமணபுரி காங்கிரஸ் ஒப்பந்தப்படி அவர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுப்பதைக் காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகிறது” என்றார். மறுபடியும் “லெட்சுமணபுரி ஒப்பந்தப்படி சீக்கியர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவம் கொடுக்க ஏற்பாடு. இல்லையே” என்று கேட்ட போது, இதற்குத் திரு.காந்தி “சரித்திர சம்பந்த மான காரணங்களால் முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனிப்பிரதி
நிதித்துவம் கொடுக்க வேண்டியதிருக்கிறது” என்று கூறினார். இவ்வார்த்தை.
யில் தான் திரு.காந்தியின் மனப்பான்மை நன்றாய் விளங்குகிறது. முஸ்லிம் களும், சீக்கியர்களும், பரம்பரையாகப் பெருமையோடு வாழ்ந்தவர்கள். அரசர்களாக இருந்து ஆட்சி புரிந்தவர்கள் ஆகையால் அவர்கள் அரசாங்க உரிமைகளுக்குப் பாத்தியமுடையவர்கள். ஆகவே அவர்களுடைய உரிமைக்குப் பங்கம் உண்டாகாதபடி அரசியல் பாதுகாப்புகள் வேண்டியது என்னும் கருத்தும், தீண்டாதார்களோ பரம்பரையாகச் சுதந்தரமின்றி அடிமையாகத் தாழ்த்தப்பட்டே வாழ்ந்தவர்கள். அவர்கள் ஆட்சி புரிந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அல்லர். ஆகையால் அவர்களுக்கு அரசியலில் பங்கு பெறுவதற்குப் பாதுகாப்பு வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தும் அடங்கியிருக்க வில்லையா? இக்கருத்துக்கும் வருணாச் சிரம தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்னும் அபிப்பிராயத்திற்கும்
குடி அரசு - 1981 (2) 350
வித்தியாசம் என்ன இருக்கிறது. வருணாச்சிரம தருமம் எவ்வாறு பரம்பரையாக உயர்வு பெற்று சுதந்தரம் அனுபவிப்பவர்கள் அவ்வாறே அனுபவிக்கவும், பரம்பரையாக அடிமையாக இருந்து தொழிலாளிகளாய் கூலிகளாய் அல்லற்படுபவர்கள் அவ்வாறே இருக்கவும் அரண் செய்கிறதோ அவ்வாறு தானே திரு.காந்தியின் மேற்கண்ட அபிப்பிராயம் இருக்கிறது என்பது யோசித்துப் பார்ப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது.
இன்று தீண்டத்தகாத வகுப்பினர்கள் இந்தியாவில் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது திரு.காந்திக்குத் தெரியாததல்ல. பொது ரோட்டில் நடக்க முடியாத தீண்டத்தகாதவர்கள்-பொதுக் குளம், கிணறுகளில் தண்ணீர். எடுக்க முடியாத தீண்டத்தகாதவர்கள்-பொது இடமான கோயில் சத்திரம் முதலியவைகளில் பிரவேசிக்க முடியாத தீண்டத் தகாதவர்கள்-ரயில்வே ஸ்டேஷன் ஹோட்டல்களிலும், மற்றும் தனிப்பட்டவர்கள் வைத்திருக்கும் ஹோட்டல்களிலும் போக முடியாதிருக்கும் தீண்டத்தகாதவர்கள் பொதுத் தொகுதியில் நின்று உயர்ந்த ஜாதிக்காரர்களால் சட்ட சபைக்குத் தெரிந் தெடுக்கப்படுவார்களா? என்பது திரு.காந்திக்குத் தெரியாததல்ல. வயது வந்தவர்கள் எல்லோருக்கும் ஓட்டுரிமை கொடுக்கும் காரணத்தாலும், திரு.காந்தியின் காங்கிரசின் முயற்சியாலும் ஒரு தீண்டத்தகாத வகுப்புப் பிரதிநிதி தெரிந்தெடுக்கப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும் (ஏற்படுவதே சந்தேகம்! திருவாளர்கள் அம்பெட்கார், ஆர்.சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற உண்மையான-சுயமரியாதையுள்ள அவ்வகுப்புப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படமுடியாமல் உயர்ந்த ஜாதிக்காரர்களின் தயவை நாடி அவர்களுடைய அபிப்பிராயத்தை அனுசரித்து நடக்கும் ஒரு போலி வருணாச்சிரம வைதீகப்பிரதிநிதிதான் தெரிந்தெடுக்கப்படக்கூடிய நிலை ஏற்படும் என்பதும் திரு.காந்திக்குத் தெரியாததல்ல. தெரிந்திருந்தும் அவர்களுக்குத் தனிப்பிரதிநிதித்துவம் கொடுக்க மறுத்தால் அதை ஒரு கூழ்ச்சியாகத்தானே கொள்ள வேண்டும்?
உள்ளபடியே தனிப்பிரதிநிதித்துவம் இல்லாமலே தீண்டாத வர்களுக்கு அரசியலில் சம உரிமையும் சமூகத்தில் சம உரிமையும் கொடுத்து விடலாம் என்று திரு.காந்தி நினைப்பாரானால் அதை நாம் எவ்வாறு ஒப்புக்கொள்ள முடியும்?
சென்ற ஒத்துழையாமையின் போது திரு.காந்தி, தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென்பதைக் காங்கிரசில் முக்கியமாகச் சேர்த்த காரணத்தால் தானே ஒத்துழையாமையும் தோல்வி யடைந்து, காங்கிரசில் இருந்த பார்ப்ப னர்களும் பிரிந்து சுயராஜியக்கட்சியை ஆரம்பித்தார்கள். திரு.காந்தியையும் மூலையில் தூக்கிப்போட்டு விட்டார்கள். இப்பொழுதும் தீண்டாதவர்கள் சார்பாகத் திரு.காந்தி உண்மையாக ஏதாவது நன்மை செய்யவேண்டு மென்று நினைத்தால் பார்ப்பனர்களும், காங்கிரசும் தன்னைக் கை விட்டு விடுவதோடு முன்போலவே மூலையில் உட்காரவைத்து விடுவார்கள்
351 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
என்பதை அவர் அறியாதவர் அல்லவே. இந்த எண்ணம் கொண்டு தான் திரு.காந்தியவர்கள் ஒத்துழையாமை செத்தபிறகு தென்னாட்டுக்கு வரும் போது வருணாச்சிரம மூட்டையைத் தலையில் தூக்கிக்கொண்டுவந்து வருணாச்சிரம பிரசாரம் செய்து பார்ப்பனர்களை சுவாதீனம் செய்துகொண்டு போனார். அந்த உறுதியினால் தான் அவரது உப்பு சத்தியாக்கிரக இயக்கத் துக்கும் எல்லா பார்ப்பனர்களும் அவரோடு ஒத்துழைத்து விளம்பரம் கொடுத்து மகாத்மா பட்டத்தை அரங்கேற்றினார்கள்.
ஆகவே இப்போது திரு.காந்தி தீண்டாதவருக்கும், மற்ற சிறு பான்மை வகுப்பினருக்கும் தனிப்பிரதிநிதித்துவம் கொடுப்பதை மறுப்ப
தின் காரணமும், உயிர் போனாலும் ஒப்பமாட்டேன் என்று சொல்லும் காரணமும், வருணாச்சிரமத்தையும் வைதீக இந்துமதத்தையும் பாது காக்கவேதான் பாடுபடுவதாக பார்ப்பனர்கள் உணர வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை யென்று உறுதியாகக் கூறுகிறோம்.
திரு.காந்திக்கு இந்த அபிப்பிராயம் இருப்பதை அனுசரித்துத்தான் இங்குள்ள வருணாச்சிரம தர்மக்காரர்களும் திரு.காந்தியை வானம் அளாவ மகாத்மா என்றும், அவதார புருஷரென்றும் கொண்டாடுகிறார்கள். மற்றும் தான் “தீண்டாதாரின் தனிப்பிரதிநிதித்துவத்திற்கு விரோதி என்கின்ற பெயருடன் இந்தியாவுக்குத் திரும்பி வருவாரேயானால் கண்டிப்பாக திரு.காந்தியை “மகாத்மா காந்தி” என்பதோடு மாத்திரமல்லாமல் “பகவான் மகாத்மாகாந்தி” என்கின்ற பட்டம் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும். இந்த விஷயங்களையெல்லாம் நன்றாய் உணர்ந்ததினால் தான் தீண்டாதார் சமூகத்தாரும் தங்கள் சமூக சங்கங்கள் மூலமும், மகாநாடு மூலமும், பொதுக் கூட்டங்கள் மூலமும் திரு.அம்பெட்கார், திரு.சீனிவாசன் ஆகியவர்களே தங்கள் பிரதிநிதிகள் என்றும், திரு.காந்தியும், காங்கிரசும் தங்கள் பிரதிநிதிகள் அல்லவென்றும் தீர்மானங்களை நிறைவேற்றி யிருக் கிறார்கள். இதற்கு மாறாக இங்குள்ள வருணாச்சிரமதருமிகள் சில போலி களைப் பிடித்து திரு அம்பெட்காரும், திரு.சீனிவாசனும் தாழ்த்தப்பட்டவர். களின் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர் என்றும் திரு.காந்தியும், காங்கிரசுமே தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளென்றும், புரட்டுத்தந்திகள் கொடுத்திருக்கிறார்கள். இந்த வருணாச்சிரம தர்மவாதிகளை அனுசரித்தே தேசீயப் பத்திரிகைகளும் பெரும் பிரசாரம் செய்கின்றன. தேசீயவாதிகளும். ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். ஆகவே இவர்கள் செய்யும் புரட்டுகளும், ஆரவாரங்களும் தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் கை வைக்கச் செய்யப் படும் சூழ்ச்சிகள் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
குடி அரசு - கட்டுரை - 22.11.1931.
குடி அரசு - 1981 (2) 352
ர்ப்வாரோஷன் தேர் ற்றி பார்ப்பனர்
குறை கூறுவதன் ரகசியம் IT
- தேசீயத்துரோகி
சென்னை கார்ப்பொரேஷனில் திரு.ஏ.ராசசாமி முதலியார் தலைவ ராயிருக்கும் காலத்தில், தலைவர் தேர்தலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு அதனால் வகுப்புச் சண்டையை வளர்க்கும் தொல்லையை நீக்குவதற்காக ஒரு சமரசமான முடிவு செய்து கொண்டனர். அந்த முடிவின்படி ஒவ்வொரு வருஷமும், தலைவர் தேர்தல் கஷ்டமில்லாமல் நடக்க ஏதுவாயிற்று. அவ்வொப்பந்தம் சென்னையில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள். தங்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு கார்ப்பொரேஷனில் தலைமைப்பதவி பெற வழிசெய்தது. அவ்வொப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் அனேகமாக எல் லோரும் அதை நியாயமான ஒப்பந்தம் என்று பாராட்டினர். அவ்வொப்பந்த மாவது,
1 பிராமணரல்லாதார்
2 பிராமணர்: 3.பிராமணரல்லாதார்
4 கிருஸ்தவர்.
5 பிராமணரல்லாதார்
6.முஸ்லீம்
7. பிராமணரல்லாதார் 8.தாழ்த்தப்பட்டவர்கள்
என்று இவ்வாறு குறிப்பிட்டபடி அந்தந்த வகுப்பிலிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டியது என்பதாகும். இவ்வொப்பந்தப் படியே முதலில் திரு.பி.டி.குமாரசாமி செட்டியார் அவர்கள் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். அவருடைய உத்தியோக காலமாகிய ஒரு வருஷம் முடிந்தபின், அடுத்த தலைவர் தேர்தல் சென்ற 12-11-31ல் நடைபெற்றது. இத்தேர்தலில் முன் ஏற்படுத்திய திட்டப்படி ஒரு பிராமணர்: தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவராவார். ஆகையால் பிராமணரல்லாத வகுப்பினரும் மற்ற வகுப்பினரில் யாரும் தலைவர்
353 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தேர்தலுக்குப் போட்டியிடவில்லை. ஆனால் பிராமணர்களுக்குள்ளேயே போட்டி உண்டாயிற்று திரு.ஜி.ஏ.நடேசன் அவர்களும் திரு.டி.எஸ்.ராமசாமி அய்யர் அவர்களும் போட்டி இட்டனர். இப்போட்டியில் திரு.டி.எஸ். ராமசாமி அய்யரே வெற்றி பெற்றார். திரு.ஜி.ஏ.நடேசன் தோல்வியுற்றார். பார்ப்பனரல்லாத கார்ப்பொரேஷன் அங்கத்தினர்கள் திரு.டி.எஸ்.ராமசாமி அய்யருக்கு ஓட்டுச் செய்தனர். பார்ப்பன அங்கத்தினர்களும், ஐரோப்பிய அங்கத்தினர்களும் திரு.ஜி.ஏ.நடேசனுக்கு ஓட்டுச் செய்தனர். திருநடேசன் தோற்றதும், திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் முதலிய பார்ப்பனரும் மற்றும் பார்ப்பன தாசர்களும் ஐரோப்பியரும் “ஒப்பந்தம் முறிந்து விட்டது” “முறிந்து விட்டது” என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். ஆனால் உண்மையில் ஒப்பந்தம் முறிந்து விட்டதா என்றால் முறியவில்லை என்ப
தில் சிறிதும் சந்தேகம் இல்லை. எப்படி எனில் இது வகுப்புவாத சம்பந்த மான ஒப்பந்தமே யொழிய வேறில்லை. உண்மையிலேயே ஒப்பந்தம் முறிந்துவிட்டதென்றால், பிராமணருக்குப் பதிலாக மற்றொரு பிராமண: ரல்லாதாரோ, கிறிஸ்தவரோ, தாழ்த்தப்பட்டவரோ தலைவராக வந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி ஒரு பிராமணரே தலைவராக வந்திருக்கும் போது, ஏன் ஒப்பந்தம் முறிந்து விட்டதென்று கூச்சலிடவேண்டும் என்பதை நன்றாய் யோசித்துப் பார்த்தால் அதில் உள்ள இரகசியம் விளங்கும்.
முதற் காரணம் பார்ப்பனர்களின் மனத்திற் கிசைந்த ஒரு பார்ப்பனர் தெரிந்தெடுக்கப்படாததாகும். திரு.ஜி.ஏ. நடேசன் அவர்கள் பிராமணீயத்தை
யும், பிராமணர்களையும் அனுசரிக்கும் முழு வகுப்புவாதியாக இருக்கலாம்.
இக் காரணத்தைக் கொண்டுதான், பார்ப்பனர்கள் அவரை ஆதரித்தனர். ஐரோப்பியர்களைப் பற்றி நாம் சொல்லவேண்டிய தில்லை. அதுவும் சென்னையில் உள்ள ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் சகோதரர். களாகவோ, சம்பந்திகளாகவோ ஒருவரோடு ஒருவர் சேர்ந்திருப்பவர்கள் என்பது நாடறிந்த விஷயமாகும்.
அன்றியும் பார்ப்பனர்களால் ஆதரிக்கப்படுகிறவர் பார்ப்பன ரல்லாதார்களுக்கு விரோதியாய் இருப்பார்கள். அப்படியிருப்பவர்களைத் தான் பார்ப்பனர்களும் ஆதரிப்பார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. பார்ப்பனர்களில் வகுப்புவாதம் இல்லாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது உண்மையானாலும் இரண்டு பிராமணர்கள் போட்டி போடும் போது அவர்களில் அதிக மோசமில்லாத ஒருவரை ஆதரிப்பதால் பிராமணரல்லாதார் செய்கையில் குற்றமாகாது. இந்த உத்தேசத்தின் பேரிலேயேபார்ப்பனரல்லாதார் திரு.டி.எஸ்.ராமசாமி அய்யரைத் தேர்தலில் ஆதரித்தனர். அன்றியும் பார்ப்பனரல்லாதாருடன் நெருங்கிப் பழகுபவர். களிடம் பார்ப்பனர்களுக்கு எப்படி விருப்பம் இருக்கக் கூடும்?. ஆகை யால்தான் ஒப்பந்தம் முறிந்து விட்டது என்று அவர்கள் வீண் புரளி செய்
குடி அரசு - 1981 (2) 354
கின்றனர். இது ஒரு புறமிருக்க இதை விட முக்கியமான இரகசியம் என்னவென்றால் இவ் வொப்பந்தத்தை அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்னும் நோக்கமும் ஆகும். ஏனெனில், இன்னொருமுறை பிராமணர் தலைவராய் வர 7 வருஷங்கள் ஆகும். அதுவரையிலும் பிராமணரல்லா
தாரும், கிறிஸ்தவரும், மகமதியரும், தாழ்த்தப்பட்டவருமே தலைவரா யிருக்க முடியும். இவ்வாறு மற்ற வகுப்பினர்கள் நீண்ட காலம் பதவி வகிப்பது பார்ப்பனர்களுக்குப் பொறுக்குமா? அன்றியும் ஒவ்வொரு தேர்தல்களிலும் பார்ப்பனர்கள் உள்ளே புகுந்து கலகம் செய்து கக்ஷி சேர்க்கவும் இவ்வொப்பந்தத்தால் இடமில்லாமல் போய்விட்டது. இந்தக் காரணங்களால் பார்ப்பனர்கள் ஒப்பந்தத்தை ஒழித்து விட வேண்டிய அவசியத்தில் வந்துவிட்டார்கள். வெள்ளைகாரரும் பார்ப்பனர்களுடைய தாயாதிகளேயானதால் இந்த ஒப்பந்தத்தால் வெள்ளைக்காரருடைய தயவுக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆதலால் அவர்களுக்
கும் தங்கள் தயவு தலைவர் அபேக்ஷகர்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்கின்றதைக் கொண்டு தங்களை யாரும் இனி லக்ஷியம் செய்ய மாட்டார்கள் என்று பயந்து கொண்டதுடன், இனித்தேர்தலிலும் தங்கள் தாசர்களைக் கொண்டு வரமுடியாமல் போய்விடுமே என்ற ஆத்திரத்தி னாலும் ஒப்பந்தம் முறிந்துவிட்டது என்றும் புரளி செய்கின்றனர். பார்ப்பன பத்திரிகைகளாகிய சுதேசமித்திரனும், இந்துவும் இவ்வெண்ணத்தோடு தான், ஒப்பந்தம் முறிந்துவிட்டது என்று எழுதியிருக்க வேண்டும்.
திரு.ஜி.ஏ. நடேசன் தோற்றதனால் வருத்தமடைந்தவர்கள் சீனியர். அங்கத்தாராகிய திரு.நடேசன் அவர்களையே பார்ப்பனரல்லாதார். ஆதரித்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். சீனியருக்கும் ஒப்பந்தத்
திற்கும் சம்பந்தமில்லை. சென்ற வருஷத் தேர்தலில் திரு.டாக்டர் நடேசன் அவர்களைத் தேர்ந்தெடுக்காமல் திரு.பி.டி.குமாரசாமி செட்டியாரைத் தெரிந்தெடுக்க வில்லையா? அப்பொழுது ஒப்பந்தம் முறிந்து போயிற்று
என்று ஒருவரும் சொல்லவில்லையே. இப்பொழுது பார்ப்பனர்களுடைய முழு நம்பிக்கைக்குப் பாத்திரமுடையவரும், பார்ப்பனரல்லாதார் நம்பிக் கைக்குப் பாத்திரமில்லாதவரும் ஆகிய ஒருவர் வெற்றி பெறமல் வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தான் இந்தக் கூச்சல் உண்டாயிற்று என்பதை யோசிக்கும் போது பார்ப்பனர்கள் சத்தம் போடுவதின் ரகசியம் விளங்குகிறது. ஆகவே இதன் ரகசியம் எந்த வகையிலாவது ஒப்பந்தத்தை முறியச் செய்யவேண்டும் என்னும் சூழ்ச்சியேயாகும் என்று கூறி முடிக் கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 22.11.1931
355 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மற்வாரு ‘Falud’ “கார்த்திகைத் தீபம்”
மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது
நாட்டுச் செல்வங்களும்,மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு. வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதி
யும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை. “அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்” என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக்களை வெளிப்
படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக் கூடும் என்று கருதியே நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வரு கிறோம்.
சென்ற மாதத்தில் தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையைப்பற்றி எழுதியிருந் தோம். அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேக மில்லை.
இந்தப் பத்துகோடி ரூபாயும், அனாவசியமாய் துணிவாங்கிய வகை யிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப்
புகையும், கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாயிருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்கவேண்டும். என்பதைக் கருதி ஏழைமக்கள் கள், சாராயம், பிராந்தி, விஸ்க்கி, ஜின், வொயின், பீர், ராமரசம் முதலிய வெறிதரும் பானங்களை குடித்துக் கூத்தா
டிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப்பண்டிகையினால் வெற்று நாளில் மறந்து போயி ருந்த சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூடநம்பிக்கை
மக்கள் மனத்தில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு, அவர்களுடைய செல்வமும் கொள்ளைப்போகும் நிலை ஏற்பட்டது.
குடி அரசு - 1981 (2) 356
இவ்வளவு மாத்திரம் அல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய், தினக்கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன்வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு! வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு! தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப்
பின் சில நாட்களும், தீபாவளியைக்கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுக்களிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத் திய காரணத்தால் அவர்களுடைய படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு! அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இந்த ஓய்வால் தடைபட்ட காரியங்
கள் எவ்வளவு?
இவ்வளவு தொல்லைகளையும் உண்டாக்கிச் சென்ற தீபாவளிப் பண்டிகையின் ஆர்பாட்டம் மறைந்து இன்னும் ஒரு மாதங்கூட ஆகவில்லை. சரியாய் 15 நாட்களுக்குள்ளாகவே மற்றொரு “சனியன்” தொடர்ந்து வந்து விட்டது. இவ்வாறு தவறாமல் ஒவ்வொரு மாதமும் நமது
நா ச் செல்வத்திற்குச் * சனியன்” பிடிப்பது வழக்கமாகவும், அவ்வழக்கம், “தெய்வீகம்” என்று சொல்லப்படுவதாகவும் “மதத்தின் முக்கியபகுதி” என்று சொல்லப்படுவதாகவும் இருந்து வருகிறது. இப்பொழுது வரும் *சனிய*னாகிய பண்டிகை “கார்த்திகைத்தீபம்” என்பது தான். இந்தக் “கார்த்திகைத் தீபப்பண்டிகை”யை ஒரு பெரிய “தெய்வீகம்” பொருந்திய சிறந்த நாளாகக் கருதி இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை இந்து மதத்தில் உள்ள சைவர், வைணவர், வீரசைவர், ஸ்மார்த்தர் முதலிய எல்லாப் பிரிவினரும் கொண்டாடுகின்றனர்.
சாதாரணமாகக் கார்த்திகை நட்சத்திர தினத்தைச் “சுப்பிரமணியன்” என்னும் சாமிக்கு உகந்த சிறந்த நாளாகக் கருதியே “பக்தர்கள்” என்பவர்கள் விரதங்களும், பூஜைகளும் நடத்தி வருகின்றனர். சாதாரண காலத்தில் வரும் கார்த்திகைகளைவிட, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையே மிகவும் சிறந்த பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் பொருட்டுத் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களுக்கு யாத்திரை போய்ப்பணத்தைச் செலவு செய்து விட்டுத் திரும்பும்போது அங்கிருந்து வாந்திபேதியைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் கார்த்திகைக்காக, வைத்தீஸ்வரன் கோயில், குன்றக்குடி, திருப்பரங்குன்றம்,
திருச்செந்தூர், சுவாமிமலை முதலிய ஊர்களுக்கு மக்கள்சென்று செலவு செய்யும் செல்வங்களே பதினாயிரக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் ஆகும்போது “பெரிய கார்த்திகை” என்று பெயர் பெற்று கார்த்திகை மாதப் பண்டிகை நாளில் செலவாகும் பொருள் கோடிக்கணக்கில் குறைவுபடுமா? இதில் எவ்வாறு பொருள் வீணாக்கப்படுகிறதென்பதை நினைத்துப் பாருங்கள்! தீபாவளிக்காக வர வழைத்து விற்பனையாகாமல் கடைகளில்
357 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தங்கிக்கிடக்கும் பட்டாசுகளுக்கு செலவுவந்து இந்தப் பட்டாசுகளின் மூலம் பணம் படபடவென்று சத்தமிட்டு வீணாக்கப்படும்.
வீடுகளுக்குள்ளும், வெளிப்புறங்களிலும், காடுகளிலும், மேடு களிலும், குப்பைகளிலும், கூளங்களிலும் எண்ணற்ற 100, 1000, 10000,100000 கணக்கான விளக்குகளைக் கொளுத்தி வைப்பதன் மூலம் செலவாகும் நெய் எண்ணெய்ச்செலவு எவ்வளவு! கோயில்கள் என்பவைகளுக்குச் “சொக்கப் பானை” கட்டி நெருப்புவைப்பதற்காகச் செலவு செய்யும் நெய், எண்ணெய், விறகு முதலியவைகளுக்காகும் செலவு எவ்வளவு! கார்த்திகைப் பண்டிகைக்காகத் திருவண்ணாமலை முதலிய ஊர்களுக்குப் பிரயாணஞ் செய்வதன் மூலமாகும் ரொக்கப்பணச் செலவு எவ்வளவு! அங்கு கம்புக்கு (சொக்கப்பானை! செலவாகும் விறகு, கற்பூரம், வெண்ணெய், நெய் ஆகியவற்றிற்காகும் செலவு எவ்வளவு! இவ்வாறு பல வகையில் செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணங்களால் நமது நாட்டிற்குக் கடுகள வாவது பயனுண்டா என்று ஆலோசித்துப்பாருங்கள்.
இன்னும் இப்பண்டிகையினால் மக்களுக்குண்டாகும் மூடநம்பிக்கை யையும், அதனால் உண்டாகும் மூடப்பழக்கவழக்கங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! கார்த்திகையைப்பற்றி வழங்கும் புராணக்கதை இரண்டு. அவைகளில் ஒன்று:-
ஒருசமயம் “அக்கினி தேவன்' (நெருப்பு) என்னும் “கடவுள்” சப்த ரிக்ஷிகளின் மனைவிமார்களைப் பார்த்து மோகங்கொண்டானாம். அதை அறிந்த அவன் மனைவி “சுவாகாதேவி” என்பவள், அந்த ரிக்ஷிகளின் மனைவிகளைத் தொந்தரவு செய்தால் அவர்களால் தன் கணவன் சபிக்கப் படுவான் என்று எண்ணினாளாம். அதனால் அவள் வசிஷ்டரின் மனைவி
யாகிய அருந்ததி உருவத்தை மாத்திரம் விட்டுவிட்டு, மற்ற ஆறு ரிக்ஷி களின் மனைவிமார்களைப்போல் உருவங்கொண்டு தன் கணவன் ஆசையை நிறைவேற்றினாளாம். இவ்வாறு சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை என்று பெயராம். இவைகள்தான் கார்த்திகை. நட்சத்திரமாக காணப்படுவதாம். இந்த நட்சத்திரப் பெண்கள்தான் “சுப்பிர மணியன்” என்னுஞ் சாமி குழந்தையாக இருக்கும்போது அதையெடுத்து வளர்த்தார் களாம்! என்பது ஒருகதை.
இக்கதையினால்தான் கார்த்திகை நட்சத்திரத்திற்குப் பெருமை. இக்கதை நமது மக்களுக்குக் கற்பிக்கும் மூடநம்பிக்கையைப் பாருங்கள். பிறர்மனைவி மேல் ஆசைப்பட்டு விபசாரம் பண்ணுவது குற்றம் இல்லை என்பது ஒன்று, மனைவி தன் கணவன் எந்தத் தகாத காரியத்தை விரும்பி னாலும் அதை எப்பாடு பட்டாவது பூர்த்திசெய்து கொடுக்கும் அடிமைக் கருவியாக இருக்க வேண்டுமென்பது ஒன்று. இவைமட்டும் அல்லாமல் இயற்கைப் பொருள்களின்மேல் எல்லாம் “தெய்வீகம்” என்னும் மூட
குடி அரசு - 1981 (2) 358
நம்பிக்கையை உண்டாக்கும் துர்ப்போதனை ஒன்று, ஆகவே இவற்றை ஆராயும் போது இக்கதையும் இதன் மூலம் ஏற்பட்ட விரதம், பண்டிகை முதலியனவும் புரட்டு என்று உணரலாம்,
இனி, இக்கார்த்திகையைப் பற்றிய இரண்டாவது கதையாவது:-
ஒரு காலத்தில் பிரம்மா என்னும் கடவுளும், விஷ்ணு என்னும் கடவுளும் தாம் தாமே ஆதி மூலக்கடவுளர் என்று கூறிக்கொண்டதனால் இருவருக்கும் முதலில் வாய்ச் சண்டை உண்டாகி, பிறகு அது கைச் சண்டையாக மூண்டு ஒருவரோடு ஒருவர் அடிபிடி சண்டை செய்தனராம். அவர்களுடைய சண்டை சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கும் வரவில்லையாம். ஆகையால் அப்பொழுது “பரமசிவன்” என்னும் “கடவுள்” அவர்கள் மத்தியில் ஒரு பெரிய “ஜோதி” உருவத்தோடு வானத்திற்கும் பூமிக்குமாக நின்றாராம். உடனே சண்டைக்காரக் *கடவுள்”கள் இருவரும் ஒன்றும் தெரியாமல் திகைத்து நின்றார்களாம். அப்பொழுது “ஜோதி” உருவாக நின்ற பரமசிவக் கடவுள் ‘g பிரம்ம விஷ்ணுகளே! இந்த “ஜோதி”யின் அடிமுடிகளை யார் முதலில்கண்டு வருகிறாரோ அவர்தான் உயர்ந்தவர்” என்று ஒரு அனாமதேய (அசரீரி வார்த்தை சொன்னாராம். உடனே விஷ்ணு பன்றி உருவங் கொண்டு அடியைக்காண பூமியைத்துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பி வந்து விட்டாராம். பிரமன் அன்னப்பறவை உருவம் கொண்டு ஜோதியின் முடியைக்காணப் பறந்து மேலே செல்லும் போது வழியில் ஒரு தாழம்பூ வந்துகொண்டிருந்ததாம். அதைக் கண்டு பிரமன் “தாழம்பூவே, எங்கேயிருந்து எவ்வளவு காலமாக வந்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்க: அது “நான் பரமசிவனுடைய முடியிலிருந்து கோடிக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டிருக் கிறேன்” என்று சொல்லிற்றாம். உடனே பிரமன் “நான் சிவனுடைய
முடியைப் பார்த்து விட்டதாக அவனிடத்தில் எனக்காக சாட்சி சொல்லுகி றாயா என்று கேட்க, அதுவும் சம்மதிக்க, இருவரும் பரமசிவனிடம் வந்து முடியைக்கண்டு வந்ததாகப் பிரமன் கூற, தாழம்பூவும் அதை ஆமோதித்த தாம். அது கண்ட சிவன் கோபங்கொண்டு இருவரும் பொய் சொன்னதற் காக,பிரமனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமற் போகக் கடவது” என்றும், “தாழம்பூ இனிமேல் தனக்கு உதவாமல் போகக் கடவது” என்றும் சாபம் கொடுத்தாராம். பிறகு பிரமாவும் விஷ்ணுவும் தங்கள் கர்வம் ஒழிந்து பரம சிவனே பெரியவர் என்று எண்ணி இருவரும் அவரை வணங்கி, எங்கள். வழக்கைத் தீர்த்து வைத்ததற்கு அடையாளமாக இந்த மலையின் மேல் ஒரு “ஜோதி” உருவாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் களாம். “பரமசிவனும்” அதற்குச் சம்மதித்து “ஒவ்வொரு வருடத்திலும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகை பண்டிகையில் நான் இந்த மலையின் உச்சியில் ஜோதியாகக் காணப்படுவேன்” என்று சொன்னாராம். இதுதான் திருவண் ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணத்தில் சொல்லப்படும் கார்த்திகைப் பண்டிகைக் கதை.
359 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டுதான் இன்றும் “சைவப் பெரியார்கள்” என்பவர்கள் சிவன் என்பவரே மற்ற “கடவுள்” களைவிட உயர்ந்தவர் என்று சண்டை போடுகின்றனர். இந்தக் கதையைக் காட்டிச் சிவனை உயர்த்தியும் மற்றவர்களைத் தாழ்த்தியும் பாடாத சைவப் புராணங்களும், தேவாரங்களும், திருவாசகங்களும், தோத்திரங்களும் இல்லை. இதற்கு எதிராக மற்ற மதத்தினர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் பல. இவ்வாறு மதச் சண்டையை உண்டாக்குவதற்கு இக்கதை
முதற் காரணமாக இருப்பதை அறியலாம். இந்தக் கதையில் தாழம்பூ பேசுவது ஒரு வேடிக்கை! “கடவுள்'களுக்குள்ளேயே சண்டை வந்தது ஒரு விந்தை! இதுபோலவே ஆராய்ந்தால் பரிகாசத்திற்கும் வேடிக்கைக்கும் இடமாக இக்கதையில் அநேகம் செய்திகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவ்வாறு இரண்டு முரண்பட்ட வேடிக்கைக் கதைகளை ஆதார மாகக் கொண்ட இந்தக் கார்த்திகை பண்டிகையினால் நமது மக்கள் மனத்
தில் குருட்டு பக்தியும், மூடநம்பிக்கையும், முட்டாள்தனமும் அதிகப்படும் என்பதில் சந்தேகம் உண்டா? இது நிற்க மேலே கூறிய கதைகளில் இரண்டாவது கதையைச் சைவர்கள்தான் “சிவனுக்கு” பெருமை கற்பிக்கிற தென்று நம்பி கார்த்திகை பண்டிகை கொண்டாடுகிறார்கள் என்றால் வைண வர்களும் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. வைணவர்களின் “கடவுளை” மலந்தின்னும் பன்றியாக்கிக் கேவலப்படுத்தியிருப்பதுடன் சிவனுடைய பாதத்தைக் கூட காணமுடியாத அவ்வளவு சக்தியற்ற தெய்வம் என்று இழிவுபடுத்தியிருப் பதை அறிந்தால் அவர்கள் இந்தப் பண்டிகையைப் பெருமையாகக் கொண் டாடச் சம்மதிப்பார்களா? இவர்கள் போகட்டும், ஏதாவது ஒரு கடவுளாவது இருக்கிறார் என்ற நம்பிக்கையில்தானே கடவுள் என்னும் கொள்கையுடைய ஸ்மார்த்தர்களும் இக்கதையை நம்பிப் பண்டிகை கொண்டாடுகிறார்களே! இதில்தான் என்ன அர்த்தம் இருக்கிறது? இவற்றையெல்லாம் யோசிக்கும் போது இவர்கள் முட்டாள்தனம் காரணமாகவாவது, வீண் ஆடம்பரம் காரணமாகவாவது இப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது. அல்லது அறிந்தோ அறியாமலோ நமது மக்கள் மனத்தில் “பண்டிகைகள் புண்ணிய நாட்கள் அவற்றைக் கொண்டா டுவதால் புண்ணியம் உண்டு. கொண்டாடா விட்டால் பாவம்” என்னும் ஒரு குருட்டு எண்ணம் குடிகொண்டிருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வர: வேண்டியிருக்கிறது.
ஆகவே, இதுபோன்ற பண்டிகைகளால், நமது நாட்டில், பொருட் செலவும், வறுமையும், மூடநம்பிக்கையும், வீண் காலப்போக்கும் நிறைந் திருப்பதை எடுத்துக் கூறத் தொடங்குகிறவர்களுக்கு உடனே பகுத்தறிவற்ற வைதீக மூடர்கள் “தேசத் துரோகி” “மதத் துரோகி” “வகுப்புவாத” “நாஸ்தி
கன்” என்ற பட்டங்களைச் சூட்டி விடுகின்றனர். சிறிதேனும் பொறுமை
குடி அரசு - 1981 (2) 360
கொண்டு சொல்லும் விஷயத்தைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்க்கின்றவர்களில்லை.
இத்தகைய வீண் காரியங்களை ஒழித்து மக்களைப் பகுத்தறிவு டையவராகச் செய்ய இதுவரையிலும் எந்த தேசீயத் தலைவர்களாவது, எந்த தேசியத் தொண்டர்களாவது எந்த தேசீயப் பத்திரிகைகளாவது முயற்சி எடுத்து கொண்டார்களா? இன்னும் இதுபோன்ற மூடநம்பிக்கைக்கான விஷயங்களை “சுயராஜியம்” “சுதந்தரம்” “காங்கிரஸ்” “பாரதமாதா” “மகாத்மா காந்தி” “காந்தி ஜயந்தி” என்னும் பெயர்களால் பிரசாரஞ் செய்து மற்றும் பண்டிகைகளையும், உற்சவங்களையும், விக்கிரகங்களையும், கற்பித்து மக்களை ஏமாற்றிக்கொண்டுதானே வருகிறார்கள்.
இவ்வாறு தேசீய பிழைப்புக்காரர்கள் ஒருபுறமும், பண்டிகையில் நம்பிக்கையுள்ள வைதீக மூடர்கள் ஒருபுறமும், பணம் சேர்க்க ரயில்வே கம்பெனிக்காரர்கள் ஒருபுறமும் புராணப் பிழைப்புக்காரர்களும். குருக்கள்களும், புரோகிதர்களும் மற்றொருபுறமும் பண்டிகைப் பிரசாரம் பண்ணினால் மக்களுக்குப் பகுத்தறிவு விளங்குவது எப்பொழுது?
குடி அரசு - தலையங்கம் - 22.11.1931
361 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
95 சர்கம் LI ) - o
புதிய மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன் திருவாங்கூர் சமஸ்தானக் குடிமக்களுக்கு இனியேனும் உண்மையான சுதந்தரம் உண்டாகும் என்று நம்பினோம். இதற்கு அறிகுறியாக கப்பற் பிரயாணம் செய்து அந்நிய நாடு சென்று வந்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த கோயில்களுக்குள் அவர்களும் போகலாம் என்று முன்னிருந்த தடை நீக்கப்பட்டது. இதைக்கொண்டு “இனி திருவாங்கூர் மக்கள் வைதீகக் கொடுமையிலிருந்தும் நீக்கப்படுவார்கள் போலும்” என்றும் சந்தோஷப் பட்டோம். ஆனால் இப்பொழுது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களை மேன்மை தங்கிய மகாராஜாவுக்கு அரசியல் ஆலோசனை கூறும் உத்தியோ கஸ்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து கப்பலேறி அந்நிய நாடுகளுக்குச் சென்றுவந்த சர்.சி.பி. ரா. அய்யர் அவர்கள் கோயிலுக்குள் போவதற்குத் தடை இருக்கக் கூடாது என்பதற்காகவே முன்னிருந்த தடை நீக்கப்பட்டது என்றே நினைக்க வேண்டியதிருக்கிறது. அன்றியும் இப்பொழுதிருக்கும் மகாராஜா அவர்கள், ஒரு சமயம் சர்.சி.பி.ரா. அய்யர் அவர்களுடன் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்து வந்தால் அப்பொழுது மகாராஜா கோயிலுக்குள் போவதற்கு யாதொரு தடையும் இல்லாமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக இக்காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் நினைக்க வேண்டி இருக்கிறது.
அன்றியும் இப்பொழுது பட்டத்திற்கு வந்திருக்கும் மகாராஜா அவர்கள் காலத்தில் முன்னிருந்ததைக் காட்டிலும் இன்னும் பார்ப்பன ஆதிக்கம் அதிகப்பட்டு உறுதிப்படும் என்றும் கருதி திருவாங்கூர். பிரஜைகளின் சார்பாக இரக்கப்படுகிறோம், இவ்வாறு நடக்கக்கூடும் என்ப
தற்கு அடையாளமாக மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன், முன்பே திரு. சுப்பிரமணியஅய்யர் என்னும் பார்ப்பனர் திவாணாயிருக்க, சர்.சிஃபி.ராமசாமி அய்யரும் அரசியல் ஆலோசனை கூறும் அதிகாரியானார். ஆகவே இப்பொழுது திருவாங்கூர் ராஜ்ஜியம் இரண்டு பார்ப்பன அதிகாரிகளின் வசம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.
குடி அரசு - 1981 (2) 362
திருவாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனர்களின் அதிகாரத்தில் அகப் பட்டு, அச்சமஸ்தான மக்கள் பார்ப்பனீயத்தால் நசுக்குண்டு கிடப்பது இன்று அல்லது நேற்று முதல் நடைபெறும் விஷயமல்ல; நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே இப்படியிருந்து வருகின்றது. இதைக் கீழ்வரும் விஷயத்தால் தெளிவாய்த் தெரிந்துகொள்ளலாம்.1817 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டு வரையிலும் திருவாங்கூர் திவான் உத்தியோகத்தை 24
பேர் வகித்து வந்திருக்கின்றனர். இந்த 24 பேர்களில் திருநாணுப்பிள்ளை என்பவர் 1877 முதல் 1880 வரையில் 3 வருஷமும் இப்பொழுது சென்னை அரசாங்கத்தில் சட்ட மந்திரியாய் இருக்கும் திரு. கிருஷ்ணன் நாயர் 1914 முதல் 1920 வரை 6 வருஷமும், திரு வாட்ஸ் என்னும் ஐரோப்பியர் 1925 முதல் 1929 வரை 4 வருஷமும் திவானாக இருந்திருக்கின்றனர். இவர்கள் திவானாக இருந்த 13 வருஷங்கள் போக பாக்கி 101 வருஷங்களும் பார்ப்பனர்களே திவான்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்தக் கணக்கைப் பார்த்தாலே திருவாங்கூர் ராஜ்ஜியம் எப்பொழுதும் பார்ப்பன மயம் என்பதில் ஏதேனும் தவறு உண்டா?
சுதேச சமஸ்தானமாகவும், பார்ப்பன ஆதிக்க ராஜ்யமாகவும், “பத்ம நாபசுவாமி' என்னும் “கடவுளின்” ராஜ்யமாகவும் இருக்கும் அந்த சமஸ் தானம் எந்த நிலையிலிருக்கிறது? 40 லட்சம் ஜனத்தொகையுள்ள அந்த சமஸ்தானத்தில் சுமார் 20 லட்சம் பேர் முகமதியர், கிறிஸ்தவர் முதலிய அந்நிய மதத்தினராகவும், சுமார் 12/, லட்சம் மக்கள் தீண்டக்கூடாதவர். களாயும், பார்க்கக்கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக்கூடாதவர்களாக
வும் இருக்கின்றார்கள். இவைபோக சுமார் 7 17, லட்சம் “இந்துக்கள்” என்பவர்களே “பத்மநாபக்கடவுளின்” அரசாங்கமாகிய இந்துராஜ்யத்தில் இருக்கின்றார்களென்றால் இதை என்ன ராஜ்யம் என்று சொல்வது? பார்ப் பனர்களின் அதிகாரத்தின் காரணமாக - பார்ப்பனீயமாகிய இந்துமதக் கொடுமை காரணமாக - இந்து மதத்திலிருந்து விலகியவர்கள்தான் இப் பொழுது அச்சமஸ்தானத்தில் இருக்கும் 20 லட்சம் வேறு மதக்காரர்களும் என்பதை யார் இல்லையென்று சொல்லமுடியும்? இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் தானே இன்று 12/, லட்சம் பேர் தீண்டத் தகாதவர்களாகவும், பார்க்கக்கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாத வர்களாகவும், மிருகத்தினும் கேடாக மதிக்கப்பெற்று கொடுமை செய்யப் பட்டுக் கிடக்கிறார்கள்? இவர்களும் அந்நிய மதத்தினர்களாக ஆகி விட்டால் இவ்வளவு கொடுமைக்கு ஆளாவார்களா?
இந்த இழிவான நிலையில் உள்ள இச்சமஸ்தானம், எல்லா மக்களும் கண்விழித்துச் சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிற இந்நாளிலுமா பார்ப்பனர் வசமும் பார்ப்பனிய வசமும் சிக்கித் துன்பப் பட்டுக் கொண்டி ருக்க வேண்டும்? என்ற உணர்ச்சியுடன் திருவாங்கூர்ப் பிரஜைகள் அனை வரும் சர்.சி. பி.ரா. அய்யரின் நியமனத்தைச் சரியான காரணங்களுடன் கண்டித்துத் தீர்மானங்கள் செய்வதை நாம் பாராட்டுகிறோம்.
262 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
இதோடு மற்றொரு வதந்தியும் உலாவுகிறதென்று அறிகிறோம். அதாவது, இப்பொழுதுள்ள திவான், திரு. சுப்பிரமணிய அய்யர் திவான் பதவியை விட்டு விலகியவுடன், அப்பதவிக்கு சென்னையில் உள்ள திரு.டி.ஆர். வெங்கட்டராம சாஸ்திரி அவர்களும், மற்றும் இரண்டு பெரிய இந்திய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் முயற்சி செய்கிறார்களாம். இவ்வாறு முயற்சி செய்துகொண்டிருக்கும் திரு. டி.ஆர் வெங்கட்டராம சாஸ்தியார் அவர்களோ, அல்லது வேறு ஒரு “சாஸ்திரியார்” அல்லது “அய்யர்” அல்லது “அய்யங்கார்” அல்லது “ஆச்சாரியா” ரோ திவானாக வந்தால் திருவாங்கூர் ராஜ்யம் இன்னும் மோசமான பார்ப்பன ராஜ்யமாக ஆகவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறுதியான விஷயமாகும். உதாரணமாக சர். சி 19 ரா. அய்யர் அவர்களின் யோக்கி யதையைப் பார்த்தாலே இது விளங்கும். முதலாவது, திரு.அய்யர், தன் அதிகாரத்தால் செய்யக்கூடிய எந்த உத்தியோகங்களையும், நன்மைகளை
யும், தன் இனத்தார்களாகிய பார்ப்பனர்களுக்கு மாத்திரம் செய்யக் கூடியவர்: என்பது நாம் அறிந்த சங்கதி. இரண்டாவது, எல்லா மக்களும் சமசுதந்தரம்
பெற்றுச் சகோதரர்களாய் வாழ வேண்டும் என்னும் சமதர்மக் கொள்கைக்கு எதிரான வருணாச்சிரம தரும வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பது யாவருக்
கும் தெரிந்த செய்தி. மூன்றாவது,
அவர் எப்பொழுதும் பிரிட்டிஷ்காரருக்குச் செல்லப் பிள்ளையாக நடந்து தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ளக்கூடியவர் என்பது அவருடைய “அரசியல் நாடகம்” அறிந்தவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இதனால், பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து சுதேச சமஸ்தானத்திற்குப் போகும் எந்த பார்ப்பனரும், பெரும்பாலும் இந்த மாதிரியான யோக்கியதை உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆகையால் திருவாங்கூர் பிரஜைகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு இத்தகைய விஷயங்களை, இந்திய அரசாங்கத்தாருக்கும், மேன்மை தங்கிய மகாராஜாவுக்கும் எடுத்துக்
காட்டிப் பரிகாரம் தேடிக்கொள்ளும்படி அவர்களுக்கு நினைப்பூட்டி, நாமும் இந்தச் சமஸ்தானம் பார்ப்பனருக்கும், பார்ப்பனீயத்திற்கும் அடிமைப்பட்டு வருவதைப் பலமாகக் கண்டிக்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.11.1931
குடி அரசு - 1981 (2) 364
வங எரா vl bR கா த்சிகைனி 14௨ (9-ல் வள் ன
| சுவாச்புங்கள 1 கேணிவுள்கள் b s e P ப்ரம் மங்க G sy பரிகபெற்றுது
| டாக்டர் எங்காரம் அவர்களின்
365 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
எல்லாம் பழுய ஆதிக்கம் சானுத்தவே
நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்ததன் பலனாகவும், ஏழு ஆண்டுகளாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப்
புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறிப் பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணாச்சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும் இருந்த பார்ப்பனர். களுடைய கெளரவமும் குறைய தொடங்கிவிட்டது என்பதும் உண்மை யாகும். ஆகையால், அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோ கத்தின் செல்வாக்காலும் மற்றும் பல பொது இயக்கங்களின் பெயராலும் தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானிகளாகவும் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள். இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன். வேறுபல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கின்றார்கள்.
நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது மக்கள் உயர்வாக
கருதுவதற்குக் காரணமாக இருந்த “மதம்”, “வேதம்”, “புராணம்”, “ஸ்மிருதி”, “கடவுள்',*ஆன்மா', “மோட்சம், “நரகம்”, “பாவம்*“புண்ணியம்' முதலிய அடிப்படைகளிலேயே கை வைத்து அவைகளை அழிக்கத் தொடங்கிய வுடன் அவர்கள் விழித்துக் கொண்டு அந்த அடிப்படைகளை மறுபடியும் புதுப்பித்து அவைகள் மூலம் மீண்டும் பழய ஆதிக்கத்தைப் பெறவே வழி தேடுகிறார்கள். இதற்காகவே பார்ப்பனர்கள் காங்கிரசின் பெயரால், “மகாத்மா”, “பாரதமாதா”, “அவதாரம்”, “கதர்”, “ஹிந்தி”, கொடியேற்ற வணக்கம்”, “ஜெயந்தி விழாக்கள்” முதலியவைகளைக் கொண்டு பாமர
மக்களின் மனத்தில் பழய வருணாச்சிரம தருமத்தையும், மூட நம்பிக்கை: களையும் உண்டாக்குவதோடு மட்டும் அல்லாமல், “பிராமண சபை”, *சனாதன தர்ம சபை”, “தருமரக்ஷணசபை”, *வேதோத்தாரணசங்கம்”, “அத்வைத சபை” “ஹிந்துமத சபா” முதலிய சங்கங்களை அமைத்துக்
குடி அரசு - 1981 (2) 366
கொண்டு இவைகள் மூலமாகவும், மக்களுடைய பகுத்தறிவைத் தடுத்து அவர்களை வைதீக மூடநம்பிக்கையுடையவர்களாக்க முயற்சி செய்கிறார்.
கள். இந்தமாதிரியான வைதிக சபைக்காரர்களுக்கு நாம் நன்றி பாராட்டு கிறோமேயொழிய உண்மையில் அவர்களிடம் துவேஷமோ, கோபமோ அடையவில்லை. ஏனெனில், அவர்கள் பிராமணர்களின் உண்மை மனக்கருத்தை அச்சபைகளிற் செய்யும் பிரசங்கங்களின் மூலமாகவும் தீர்மானங்களின் மூலமாகவும் வெளிப்படுத்துவதால், பிராமணரல்லாதார். ஏமாறாமல் இருக்கவும் பிராமணர்களை நம்பிக் கொண்டிருக்கும் மக்களை
எச்சரித்துத் திருத்தவும் முடிகிறது என்கின்ற இந்த காரணத்திற்காகவே நாம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவதாக கூறுகிறோம். பார்ப்பனர்களுடைய உண்மையான அபிப்பிராயத்தை அறியவேண்டுமானால், சென்ற 2311316 கும்பகோணத்தில் கூடிய தஞ்சை ஜில்லா பிராமணசபையின் இரண்டாவது வருட கொண்டாட்டத்தின் நிகழ்ச்சிகளைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அப்பொழுது, பணக்காரர்களாகவும், ஆங்கிலம் படித்தவர்களா கவும், வக்கீல் தொழில் செய்பவர்களாகவும் அரசாங்க உத்தியோகத்திலி
ருந்து உபகாரச் சம்பளம் பெற்று நீங்கியவர்களாகவும், உபாத்தியாயர்களாக
வும், ஒன்றுந்தெரியாத வைதீகர்களாகவும் உள்ள பார்ப்பனர்கள் ஒன்று கூடிப் பேசிய வார்த்தைகளின் சில பகுதிகளை கவனிப்போம். (இந்நிகழ்ச்சி சென்ற
26.11.31ந் தேதி வெளியான “தமிழ்நாடு” பத்திரிகையில் காணப்படு கிறது.
“நவநாகரீகத்தில் அகப்பட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் தங்கள் தர்மத்தை மறந்து நிற்கிறார்கள். மாமிசம் உண்ணும் பிராமணர்களையும், குடிக்கும் பிராமணர்களையும் நாம் இப்போது பல இடங்களில் காண்கிறோம். எனக்குப் பிரத்தியட்சமாய்
தெரிந்ததைத் தான் கூறுகிறேன். டில்லியில் ஒரு விருந்து நடந்தது. அதில் சற்றும் அச்சமில்லாமல் மாமிசம் சாப்பிட்ட பிராமணனை
நான் அறிவேன். கவர்னர் முதலிய பிரமுகர்களுக்கு நடத்தும் விருந்துக் கச்சேரிகளில் ஆதிதிராவிடர்களால் பரிமாறப்பட்டு அநேக பிராமணர்கள் சாப்பிடுகிறார்கள். இது என்ன பிராமணீயம் என்று கேட்கிறேன். ஆதிதிராவிடர்களை கோவில்களுக்குள் பிரவேசிக்கக் கூடாதென்று நாம் சொல்லுகிறோம். ஆனால், ஆதி திராவிடர்கள் கையில் போஜனம் செய்யும் பிராமணர்களை நாம் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்கிறோமா? கடல்கடந்து வரும் பிராமணர்களை நாம் வரவேற்று உபசரிக்கிறோம். வைதீகர்கள். பிள்ளைகள் கூட ஐ.சி.எஸ். முதலான பரீட்சைகளுக்குச் சீமைக்கு செல்லுகிறார்கள். அதைப்பற்றி நாம் என்ன செய்கிறோம்?”
என்று தலைமை வகித்த பார்ப்பனர் பேசியிருக்கிறார். இவர் பேசி யிருப்பது முழுவதும் உண்மையான விஷயம் என்பதில் யாரும் சந்தேகப் படவேண்டியதில்லை. இந்த நிலைமையை சீர்திருத்திப் பழைய வைதீக
367 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நிலைமைக்கு மறுபடியும் பார்ப்பனர்களைக் கொண்டு வரவேண்டுமே என்னும் உணர்ச்சியோடு அவர் பேசியிருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. மேற்கூறியபடி “ஒழுக்கம்” கெட்ட பார்ப்பனர்களும் தங்களைப் பார்ப்பனர்களாகவே மதித்துக் கொண்டு மற்றவர்களை “சூத்திரர்களாக” மதிக்கும் அகங்கார மனப்பான்மை தான் ஒழிய வேண்டும் என்று நாம் கூறுகிறோம். ஏதோ இவர் இம்மாதிரி பார்ப்பனர்களின் நடத்தையை வெளிப்படையாகக் கூறிவிட்டாரே ஒழிய செய்கையில் மேற்கூறியவாறு “ஒழுக்கங்கெட்டவர்” களாக உள்ள பார்ப்பனர்களையெல்லாம் பகிஷ்கரிக்க எந்தப் பார்ப்பானும் முன்வர: மாட்டான் என்பதை நாம் அறிவோம். நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த சம்பவத்தைக் கவனித்தாலே இது விளங்கும். திரு.காந்தி, பண்டித ஜவகர். லால்நேரு, லாலா லஜபதிராய் முதலியவர்களைக் கப்பலேறிச் சென்று வந்தவர்கள் என்ற காரணத்திற்காக உள்ளே செல்வதைத் தடுத்த கோயிலில் மகாராஜாவின் உத்தரவு காரணமாக கப்பல் பிரயாணம் செய்த சர்.சி.பி.ராம
சாமி அய்யர் அவர்கள் செல்லவில்லையா? அவர் இல்லாமல் வேறு ஒரு பார்ப்பனரல்லாதாருக்காக மகாராஜாவால் தடைநீக்கப்பட்டு அப்பார்ப்பன ரல்லாதாரும் கோயிலுக்குள் போயிருந்தால் திருவாங்கூரில் உள்ள பார்ப்பனர்களும் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள வைதீகர்களும் சும்மா இருந்திருப்பார்களா? திருவாங்கூரில் “இந்துமதம் அழிந்துவிட்டது” என்று போடும் கூச்சல் ஆகாயத்தைப் பிளக்கும் அல்லவா? அன்றியும், இதே சர்.சி.பி.ராமசாமி அய்யர் அவர்கள் சட்டமெம்பராய் இருந்த காலத்தில் கும்பகோணத்திற்கு வந்திருந்தபோது “உலககுரு” என்று பார்ப்பனர்களால் கூறப்படுகின்ற “சங்கராச்சாரியார்” அவரை “ஆசீர்வதித்து” பாராட்டினாரே. இதுபோலவே “சூத்திரர்கள்” என்கின்றவர்களிடத்தில் பேசினால் “பாவம்” என்ற கொள்கையையுடைய “சங்கராச்சாரியாரும்” மற்றும் வைதீகப் பார்ப்பனர்களும், உத்தியோகப் பார்ப்பனர்களையும், இங்கிலாந்து சென்று வந்த பார்ப்பனர்களையும், கறி தின்னும் பார்ப்பனர்களையும், குடிக்கும் பார்ப்பனர்களையும், வரவேற்றும், ஆசீர்வதித்தும் அவர்களைப் புகழ்ந்தும், அவர்களுடைய வாக்கு உதவியையும், பொருள் உதவியையும் பெற்றார். கள்-பெறுகிறார்களே இவற்றையெல்லாம் யாராவது கண்டித்தார்களா? இல்லையே. ஆகையால் மேற்கூறிய பார்ப்பனர் அபிப்பிராயத்தை வேறு எந்தப் பார்ப்பனரும் ஒப்புக் கொண்டு நடத்தையில் அனுஷ்டிக்க முன்வர: மாட்டார்கள் என்பது நிச்சயம்.
மற்றொரு பார்ப்பனர் “ஆங்கிலப்படிப்பினால்தான் பார்ப்பனீயம் கெட்டது”என்று பேசியதற்குப் பதிலாக “நான் ஆங்கிலக்கல்வி கற்றவனே, ஆனால் என்னுடைய மத தர்மங்களில் அக்கல்வி தலையிட்டிருக்கிறதாய்
நான் சொல்லமுடியாது. முக்கியமாய் நாம் நம் சிறுவர்களுக்கு சமஸ்கிருதக் கல்வியை புகட்டினால் பல தீமைகள் வராமல் தடுக்கலாம். இது மிகவும் முக்கியமான காரியமாகும்” என்று ஒரு சர்வகலாசாலைப் பட்டம் பெற்ற
குடி அரசு - 1981 (2) 368
பார்ப்பனர் பேசியிருக்கிறார். இதிலிருந்து படித்த பார்ப்பனர்களும் உத்தி யோகம் செய்யும் பார்ப்பனர்களும் என்னதான் கெட்டாலும் தங்கள் பிராமணீயக் கொள்கைகளைத் தாம் விட்டுவிட்டதாக நினைத்துக் கொள்வதேயில்லையென்பது விளங்கும். அவர்கள் வருணாச்சிரம தர்ம முறைப்படியே தாங்கள் மேலாகவும் மற்றவர்கள் தங்களுக்குக் கீழாகவும் இருக்கவே விரும்புகிறார்கள் என்பதும், அதற்காகவே உழைக்கிறார்கள். என்பதும் உண்மையென்பதில் சந்தேகப்படவேண்டியதில்லை. மற்றும் “பிராமணீயம் ஒருநாளும் அழியாது அது எந்தக் காலத்திலும் நிலைப் பெற்றிருக்கும் சக்தியை உடையதாகும். சென்ற யுகங்களிலும் அனேக பிராமணர் நாஸ்திக புத்தியை உடையவர்களாய் இருந்தார்கள். இப்பொழுது
இது புதிதல்ல" என்று ஒருவரும்.
“நீங்கள் இவ்விடத்தில் ஒரு சத்தியம் செய்து கொள்ளவேண்டும். பெண்களை நாம் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பக்கூடாது. தகுதியற்ற கல்வியைப் பெண்களுக்குபோதிப்பதனால் தான் நம்முடைய குடும்பங்கள் கெட்டுப்போகின்றன. நம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். சாரதாசட்டத்தை எதிர்த்து அதற்கு நாம் கீழ்ப்படியாமல் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அநேக தீங்குகளை செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால், நாம் முன் ஜாக்கிரதை யுடனிருந்து காரியங்களைக் கவனிக்க வேண்டும்என்று ஒருவரும் பேசியிருக்கின்றனர். இந்தப் பேச்சுக்களிலிருந்தும், இவ்வாறு பார்ப்பனர்.
கள் பிரச்சாரங்கள் செய்து கொண்டு வருவதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. “அவர்கள் அனைவரும், மீண்டும் வருணாச்சிரம தரும ராஜியத்தை நிலைநாட்டவே பாடுபடுகிறார்கள்'என்பது தான். இந்த வகை
யில், பார்ப்பன சபைகளில் உள்ள பார்ப்பனர்களும், காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களும், அரசாங்கத்தில் உத்தியோகஞ்செய்யும் பார்ப்பனர்களும், மற்றும் எந்த இழிவான நிலையில் உள்ள பார்ப்பனர்களும், தங்கள் ஆதிக்கம் அழியாமல் இருப்பதற்கும், தங்கள் ஆதிக்கம் மறுபடியும்
தேசத்தில் நிலைபெற்று பார்ப்பனரல்லாத மக்களை அடிமைப்படுத்துவதற்
கும் பல துறைகளிலும் இருந்து உழைக்கிறார்கள் என்ற உண்மையை
யாரும் மறுக்க முடியாது. இந்தக் காரணத்திற்காகவேதான் மதசம்பந்தமான “அவதார புருஷர்கள்'என்று அவர்களாலேயே கொண்டாடப்படுகின்ற “ஆழ்வார்கள்”, “நாயன்மார்கள்”, “பக்தர்கள் முதலியவர்களிலும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற வித்தியாசத்தை மனதிற்கொண்டு பார்ப்பன ரல்லாத “ஆழ்வார்” களுக்கும், “நாயன்மார்” களுக்கும், “பக்தர்"களுக்கும் பெருமைகெடாமல் பார்ப்பனர்கள் என்பவர்களுக்கே பெருமை கொடுக்
கும் இவர்கள், வருணாச்சிரம தருமத்தைக் குரங்குப்பிடியாக பிடித்திருக்கும் திரு.காந்தியை “மகாத்மா” வாகவும் “அவதார*புருஷராகவும் கொண்டாடு கின்றனர். இந்தியாவில் உள்ள மதங்களுக்கும், கலைகளுக்கும், நாகரிகங் களுக்கும் பாதுகாப்பு வேண்டும் எனக் கூறும் காங்கிரசைப் போற்று
369 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கின்றனர். இன்றேல், திரு.காந்தியை மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு காங்கிரசையும் ஒழித்துவிட அவர்கள் முயற்சி செய்யப் பின் வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயமான செய்தியாகும்.
மக்களுடைய பகுத்தறிவை வளர்ப்பதற்குரிய நூல்களோ, இலக்கியங்களோ இல்லாதததும், வருணாச்சிரமதருமத்தைப் போதிக்கும் துளசிதாஸ் ராமாயணம், பகவத்கீதை, முதலிய நூல்கள் உள்ளதுமாகிய ஹிந்தி மொழியை பிரசாரஞ் செய்கின்றனர். சனாதன தர்மத்தைப் போதிக்
கும் சமஸ்கிருதப் படிப்பை விருத்திச்செய்யவேண்டும் என்றுபேசுகின்றனர்.
இவ்வாறு செய்வதில் உள்ள தந்திரத்தையும் யோசித்துப் பாருங்கள். ஆங்கிலப் படிப்பினால் விஞ்ஞான அறிவும், பிற நாட்டு நாகரீகங்களும், சுதந்திர உணர்ச்சியும் உண்டான காரணத்தால் தான் இன்று பார்ப்பன ரல்லாதார் சுயமரியாதை உணர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தே மேற்கூறியவாறு பிரசாரஞ்செய்கின்றனர் என்று கூறுவதில் தவறு. என்ன இருக்கின்றது என்று கேட்கிறோம்.
இச்சமயத்தில் மற்றொரு விஷயத்தையும், கூறி வைதீக அரசியல் பார்ப்பனர்களின் சூழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறோம். சென்ற சில தினங்களுக்கு முன் “குருவாயூர் கோயில் சத்தியாக்கிரகத்தை கண்டிக்க முன் வந்த திரு.எம்.கே.ஆச்சாரியார், “கோயில் பிரவேசஞ் செய்ய விரும்புகிற
வர்கள், மத பக்தியினால் சுவாமி தெரிசனத்திற்காக கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமவுரிமை வேண்டும் என்பதற்காகவே கோயிற்பிரவேசம் விரும்புகின்ற
னர். ஆகையால், அதைத் தடுக்க வேண்டும், என்ற அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். இதிலும், எப்படியாவது மததர்மம் அழியாமல் காப் பாற்றப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அடங்கியிருப்பதைக் காண
லாம். “மத தர்மத்தை ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்கு கோயில் பிரவேசம் அளிக்கலாம்”என்ற அபிப்பிராயத்தையும் அவரே ஒப்புக்கொண்டிருக்
கிறார்.
இதிலிருந்து மத தர்மம், ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டால் எந்த வகையிலும் பிராமணீயம் அழியாமல் நிலைக்கும் என்பதுதான் அவர்
கருத்து என்பதை அறியலாம். ஆனால், மத தர்மம் ஒப்புக் கொள்ளப் படும்போது, எல்லா வகுப்பினரும் கோயிலுக்குள் செல்லலாம் என்ற உரிமை எப்படி ஏற்படும் என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இன்னார். கோயிலுக்குள் போகலாம், இன்னார் கோயிலுக்குள் போகக் கூடாது என்பதற்
கும் அந்த பாழும் மத தர்மந்தானே காரணமாய் இருந்துக் கொண்டிருக் கிறது. ஆகவே, திரு ஆச்சாரியார் கூறும் மத தர்மத்தையும், பிராமணசபை
யார் பிரசாரம் செய்யும் மததர்மத்தையும் எவ்வாறு நாம் ஒப்புக்கொள்ள முடியும்? ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே முடியாது. அழிக்கப்பட்டே
குடி அரசு - 1981 (2) 270
ஆகவேண்டும் என்றே கூறுகின்றோம். ஆகையால், பார்ப்பனர்கள்
செய்யும், எல்லாப் பிரசாரங்களும், மதத்தையும், மத தர்மத்தையும், அதன்
மூலம் வருணாச்சிரம தருமத்தையும், பார்ப்பனீயத்தையும் காப்பாற்றவே செய்யப்படும் பிரசாரங்களே என்பதை மீண்டும் கூறி எச்சரிக்கை செய்
கிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 29.1.1931
271 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக்கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும், தேசீயவாதிகளும் தேசீயப்பத்திரிகைகளும் பிரசாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால், அவர்கள் பொதுப்பள்ளிக் கூடங்க ளில்கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்.
கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும். சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப்பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீண்டப்படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக்கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டாதவர்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் “கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்
கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப்பள்ளிக்கூடங்களில் சேர்ந்து
படிக்க முடியவில்லை” என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்து நமது தேச நிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்த
லில் வெற்றிபெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்கு சாதகமாக அங்குள்ள பொதுப்பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகச் சேர்த்துப்படிப்பிக்க உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில் பொதுப்பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக் கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைப் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும். கிராமாந் தரங்களிலும், நகரங்களிலும், பொதுப்பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக்கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைக்
குடி அரசு - 1981 (2) 372
கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக்கூடங் கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சி யெடுத்து கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.11.1931.
373 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
மூட்டைப்பூச்சிகணிண் சேஷ்டை
“பம்பாய் ஐக்கோர்ட்டிலிருந்து டாக்டர் அம்பெட்காருக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இங்கிலாந்திலிருப்பதால் இச்சம்மன் திரும்பி வந்து விட்டது. அவர் இந்தியாவில் அடி வைத்தவுடன் அவரை: வரவேற்க இச்சம்மன் தயாரயிருக்கும். ஐந்தாவது மாகாண மாஜிஸ்திரேட் டால் வழக்கு விசாரிக்கப்படும், பம்பாய் எல்பினஸ்டன் ரோடு, கோவாப் பரோட்டிவ் கிரெட்டிட் சொசைட்டியின் காரியதரிசி திரு.ராமகிருஷ்ணா வால் மேற்படி வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. டாக்டர் அம்பெட்கார். அடிதடி கொள்ளை, சட்டவிரோதமான கூட்டத்தில் சேர்ந்தது ஆகியவை களே அவ் வழக்கு தொடர்வதற்கு காரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றது” என்று பத்திரிகைகளில் ஒரு செய்தி காணப்படுகின்றது. இதன் உண்மை என்னவோ அதைப்பற்றி நாம் தற்சமயம் ஒன்றும் கூறவிரும்பவில்லை. ஆனால், காங்கிரஸ், காந்தீயம் இவைகளுக்கு விரோதமான அபிப்பிராயம் உடையவர்கள் யாரோ அவர்களை நம் நாட்டுப் பார்ப்பனர்களும், அவர். களால் தூண்டப்பட்ட கோடரிக்காம்புகளும், சும்மாவிடமாட்டார்கள் என்ப
தும், மூட்டைப் பூச்சிகள் போல அவர்களுக்கு ஏதாவது சில்லரைத் தொந்தரவுகளைச் செய்து கொண்டே இருப்பார்கள் என்பதும் ஆகிய விஷயத்தை மாத்திரம் நினைப்பு மூட்டுகிறோம்.
குடி அரசு - செய்தி விளக்கம் - 29.11.1931
குடி அரசு - 1981 (2) 374
இந்திய வைத்திய கணாசாயையின்
மேல் துவேஷம்
தமிழ் வைத்தியத்திற்கு உலை
- தேசியத்துரோகி
மதம், ஜாதி, பாஷை, கலை, நாகரீகம்பழக்கவழக்கம் முதலிய எல்லா வற்றிலும், தங்களுடையதே பெரிதென்றும், ஆகையால் தங்களுக்கே முதன்மை ஸ்தானம் கொடுக்கவேண்டுமென்றும், நீண்டகாலமாகப் பார்ப்பனர்கள் போராடிக்கொண்டும் பெரும்பாலும், இப்போராட்டத்தில் வெற்றி பெற்றுக் கொண்டும் வருகின்றனர். தங்களுக்கு ஆதிக்கமில்லாத வழியிலும், லாபமில்லாத வழியிலும், மற்றவர்களுக்கு லாபமும், ஆதிக்க
மும் சிறிதளவு உண்டு என்ற வழியிலும் செய்யப்படும் காரியங்கள் எவையா யிருந்தாலும் அவைகளைப்பற்றித் தப்புப்பிரசாரம் பண்ணத் தொடங்கிவிடு கின்றனர். அவைகள் தேசத்துரோகமான செயல்களென்றும், அவைகளால்
தங்கள் மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டதென்றும், பாஷைக்கு ஆபத்து வந்துவிட்ட தென்றும், கலைகளுக்கு ஆபத்துவந்துவிட்டதென்றும், குலைக்கத் தொடங்கி விடுகின்றனர். இது எப்பொழுதும் நமது நாட்டில் பார்ப்பனர்களால் ஆடப்படும் நாடகமாகவே இருந்து வருகின்றது.
இதற்கு உதாரணமாகச் சென்ற 112.31ல் சென்னை ஆயுர்வேத சபை
யின் ஆதரவில் திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். அக்கூட்டம் காலஞ் சென்ற பனக்கால் அரசரின் முயற்சியினால் சென்னையில் ஏற்படுத்தப்
பட்டிருக்கும் இந்திய வைத்திய கலாசாலையின் நடைமுறையையும், இந்தியவைத்திய வளர்ச்சியில் சென்னை அரசாங்கத்தார் அநுசரித்து வரும் கொள்கையையும் கண்டிக்கவே கூட்டப்பட்டதாக இருக்கிறது. இவ்வாறு கூட்டம் கூட்டிக் கண்டனம் செய்வதற்குக் காரணம் என்ன என்பதைக் கூறுவதற்கு முன் அக்கூட்டத்தில் பேசிய *பிராமணோத்தமர்"களின் பேச்சுகளைக் கொஞ்சம் கவனிப்போம்.
375 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
“இப்பள்ளிக்கூடம் ஏற்பட்டதன் பலனாக ஆயுர்வேத வைத்தியப் பழக்கம் உள்ளவர்களுக்குக் கெடுதியும் நேரிடுகிறது. இதனால் ஆயுர்வேத வித்தைக்கே ஆபத்து ஏற்படும் போல இருக்கிறது. இந்திய வைத்தியப் பள்ளிக்கூடத்தில் தேருபவருக்கே உத்தியோகம் கொடுக்கப்பட வேண்டும் என்று கவர்ன்மெண்ட் உத்தரவு பிறப்பித்திருப்பதனால் எங்கள் போன்ற வர்க்கு ஒருவித யோக்கியதையும் இல்லை என்று கூறுவது போலாகிறது'. “இந்திய வைத்தியமுறை விஷயமாக எங்களுடைய யோசனையையும் அனுஷ்டித்து சுத்த சமஸ்கிருத ஞானம் வாய்ந்தவர்களையும் அப்பள்ளிக் கூடத்தில் போதகராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நாங்கள் இங்கு கூறவந்திருக்கும் முக்கியயோசனை”” என்று ஒரு பார்ப்பனர். பேசியிருக்கிறார்.
“புராதன கால வைத்தியமுறை திருப்திகரமான பலன் அளிக்க வேண்டுமாயின் கவர்ன்மெண்ட்டின் இந்திய வைத்தியப் பள்ளிக்கூடம் தற்போது நடப்பதைப்போல் நடத்தப்படுவதைவிட மூடப்படுவதே நலம் என்ற எண்ணம் எங்கள் எல்லோருடைய மனதிலும் தோன்றியிருப்பதை தெரிவிக்கவே முற்பட்டோம்”.
“ஆயிர்வேத வைத்தியம் ஆதிகால மகரிஷிகள் அனுஷ்டிக் கப்பட்ட விதமாக நீடிக்கச்செய்ய வேண்டுமென்று பரம்பரையாகப் பாடு பட்டு வரும் வைத்திய மகான்கள் கவர்ன்மெண்ட் ஆதரவிருந்தால் அந்த சாஸ்திரம் பழய மேன்மை ஸ்திதியை அடையும் என்று நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையினால் தான் இந்திய வைத்தியப்பள்ளிக்கூடம் ஒன்று ஸ்தாபிக்கப்படுவதை ஜனங்கள் ஆதரித்தனர்”.
“இப்பள்ளிக்கூடத்தை பழய முறையில் சாஸ்திர நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் விடவேண்டும். பழய வித்துவான்களைப் போற்றி ஆதரிக்கவேண்டும்” என்னும் விஷயங்கள் அச்சபையின் சார்பாக ஒரு பார்ப்பனரால் வாசிக்கப்பட்ட யதாஸ்த்தில் காணப்படுகின்றன. இன்னும். அக் கூட்டத்தில் செய்த தீர்மானங்களில் “பிராசீன சம்பிரதாய ரீதியில் ஆயுர்வேத வைத்திய சாஸ்திரத்தையும், வைத்திய முறையையும் விருத்தி செய்ய வேண்டும்” என்று அரசாங்கத்திற்கு அறிவித்துக்கொள்ளுவதா
கவும், “இந்திய மருத்துவப் பள்ளிக்கூட நிர்வாகப் பொறுப்பை இந்த (சமஸ்கிருத ஆயுர்வேத! சாஸ்திரத்தில் பரிபூரண ஞானம், பரிபூரண சிரத்தை, பரிபூரண விசுவாசம் நிறைந்த வித்துவான்கள் கையில் விட வேண்டும்” என்றும் காணப்படுகின்றன.
ஆகவே, மேலே கூறிய விஷயங்களை கவனித்துப்பார்த்தால் உண்மை இன்னதென்று எல்லோருக்கும் விளங்கிவிடும். அரசாங்கத்தால் நடத்தப்படும், இந்திய வைத்திய கலாசாலையில் சமஸ்கிருத பாஷையில் உள்ள ஆயுர்வேத வைத்தியத்தையே போதிக்கவேண்டும் என்பதும்,
குடி அரசு - 1981 (2) 376
அதற்காகச் சமஸ்கிருத வைத்தியம் கற்ற பார்ப்பனர்களையே பள்ளிக்கூடத்
தில் பேராசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்பதுமே பார்ப்பனர்களின் உள் எண்ணம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு முடிவு செய்து, இம்முடிவும் அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறையிலும் கைக்கொள்ளப்படுவதால் உண்டாகும் பலன் தான் என்ன என்பதையும் சிறிது யோசித்துப்பாருங்கள்.
இப்பொழுது தமிழ்ச் சித்தவைத்தியமும், ஆயுர்வேத வைத்தியம் யூநானி வைத்திய பாகங்களும், மேல் நாட்டு வைத்திய முறைக்கிணங்க போதிக்கப்படுவதால், அப்பள்ளிக்கூடத்தில் பிராமணரல்லாதார், கிருஸ்த
வர், முஸ்லீம் முதலிய எல்லா வகுப்பு மாணவர்களும் சேர்ந்து படிக்க முடிகின்றது. இவ்வாறின்றிச் சமஸ்கிருத ஆயுர்வேத வைத்தியம் மட்டும் போதிக்கப்படுமானால் சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்கள் மாத்திரமே சேர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும். இதனால் பார்ப்பனர்களுக்கு உத்தியோக வேட்டைக்கு வசதியும் ஏற்படும் என்கின்ற இந்தக் காரணத்தால் தான் இப்பொழுது பார்ப்பன வைத்தியர்கள் கிளர்ச்சி செய்யத் தொடங்கி யிருக்கின்றார்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
உண்மையிலேயே இந்த நாட்டில் ஆயுர்வேத வைத்தியத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதற்கும், ஆயுர்வேத வைத்தியர்களை மட்டும் தான் அரசாங்கத்தார் பாதுகாத்து உத்தியோகம் கொடுக்கவேண்டும் என்ப
தற்கும் ஏதாவது ஆதாரமோ அல்லது நியாயமோ உண்டா? என்று கேட் கின்றோம்.
பரம்பரையாக தமிழ்நாட்டில் வழங்கிவரும் வைத்தியம் சித்த வைத்தியமேயாகும். இப்பொழுதும் நாட்டுப்புறங்களிலும், நகரங்களிலும் நாட்டு வைத்தியர்களாக இருக்கின்றவர்கள் பெரும்பாலும், தமிழர்களும் தமிழ் வைத்தியங் கற்றவர்களுமேயாவார்கள். தமிழ் வைத்தியத்தில் கூறப்படும் மருந்துகளுக்கு வேண்டிய பொருள்கள் யாவும் இந்நாட்டில் கிடைக்கக் கூடியனவேயாகும். தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைமைக்கு ஏற்ற வகையில்- தமிழ் வைத்திய மருந்துகளும் அமைந்திருக்கின்றன. ஆகை யால் தமிழ் வைத்தியத்தை போதிப்பதும், விருத்தி செய்வதும் சுபமான காரியமாகும்.
இதற்கடுத்தபடியாக யூநானி மருத்துவ முறையும் , நம்நாட்டில் எளிதில் விருத்தி செய்யக்கூடியதாகும். முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் எங்கும் பரவியிருந்ததனாலும் முஸ்லீம்கள் நாடு முழுவதும் வாழ்ந்திருப்ப தனாலும் அவ்வைத்தியமும் நாட்டின் நிலைமைக்கேற்றவாறே அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், ஆயுர்வேத வைத்தியமோ இந்த நாட்டிற்கு
சிறிதும் ஒவ்வாததாகும் என்பதே நமது அபிப்பிராயம். அது பழங்காலத்
377 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தில் இமயமலைப் பிரதேசங்களில் வசித்துக் கொண்டிருந்த நாகரீகமற்ற நாடோடிகளால் ரிஷிகள்! கண்டுபிடிக்கப்பட்ட முறைகளேயாகும். அந்த வைத்தியத்தில் சொல்லப்படும் மருந்துக்கு வேண்டிய மூலிகை வகைகளும், மற்றையப் பொருட்களும் இமயமலைப் பிரதேசங்களில் கிடைக்க கூடுமேயன்றி நமது நாட்டில் அகப்படமாட்டா. அன்றியும் சமஸ்கிருத வைத்தியங் கற்ற பண்டிதர்கள் நமது நாட்டில் அதாவது தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?
சென்னை போன்ற நகரங்களில் நாலைந்து ஆயுர்வேத பண்டிதப் பார்ப்பனர்களும், அவர்களால் செய்து விற்கப்படும் மருந்துக்கடைகளும் இருந்து விட்டால் போதுமா? இதற்காக அரசாங்கத்தார் நாட்டில் - அனு போகத்தில் வழங்கிவரும் வைத்தியமுறையை அலட்சியஞ் செய்துவிட்டு அந்த நாலைந்து பூணூல்காரர்களுக்காக ஏழைமக்களின் வரிப்பணத்தை செலவுசெய்ய வேண்டுமா? என்று கேட்கின்றோம். ஒரு சமயம் சமஸ்கிருத ஆயுர்வேத வைத்தியத்தைப் பார்ப்பனர் படித்து அரசாங்க வைத்தியசாலை களில் உத்தியோகம் பெற்றுவந்தால் அதனால்தான் யாருக்கு நன்மையுண்டு என்று பார்ப்போம். சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்கள் கட்டாயம் வருணா சிரமத்தர்மவாதிகளாகவும் ஜாதித் துவேஷம் பாராட்டுகிறவர்களாகவும்தான் இருக்கவேண்டும். இத்தகைய துவேஷபுத்தியுடைய வைத்தியர்கள் பொது ஜனங்களுக்கு எப்படி வைத்தியம் செய்வார்கள்? பிராமணரைத் தவிர. மற்றவர்களை தொட்டால் தீட்டு ஒட்டிக்கொள்ளும் அல்லவா? அதற்காக பட்டுத் துணியை கையில் போட்டு நாடிப் பார்க்கும் பழைய முறையைத் தானே கொண்டு வருவார்கள். இந்தவிதமான மனப்பான்மையுள்ளவர்கள் எப்படி ஒருவருடைய வியாதிகளை அறிந்து தகுந்த மருந்துகளை கொடுத்து அதை குணப்படுத்த முடியும்? என்பன போன்ற விஷயங்களை நன்றாய் ஆலோசனை செய்து பார்க்க வேண்டுகிறோம். நிற்க,
இவ்வாறு பார்ப்பனர்கள் “ஆயுர்வேத வைத்தியத்திற்கு ஆபத்து வந்து விட்டது” என்று மாரடித்துக்கொள்வதில் ஏதாவது அர்த்தம் இருக் கிறதா? இப்பொழுதுள்ள இந்தியவைத்திய கலாசாலையில் சித்தவைத்தியம், யூநானி வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் ஆகிய மூன்றின் பாகங்களும் போதிக்கப்பட்டு வருவதாகவே கேள்விப்படுகிறோம். அப்படியிருந்தும் இவர்கள் கூச்சல் இடுவதற்குக் காரணம் பொறாமையும், துவேஷப் புத்தியும், வயிற்று எரிச்சலுந் தவிர வேறு என்னதான் இருக்கமுடியும்?
நமது நாட்டில், பரம்பரையாக வைத்தியத்தொழில் செய்து வருபவர்.
கள் மருத்துவகுலத்தினர் என்பது யாவரும் அறிந்த விஷயம். அப்படி யிருந்தும், “பரம்பரை ஆண்டியா? பஞ்சத்திற்கு ஆண்டியா?” என்றபடி வயிற்றுப்பிழைப்புக்காக வயித்தியங்கற்றுக் கொண்ட பார்ப்பனர்கள் தங்களைப் பரம்பரை வைத்திய மகான்களென்றும் கூறிக்கொண்டு, தமிழ்
குடி அரசு - 1981 (2) 378
வைத்தியத்திற்கு உலைவைக்க வழிதேடுகின்றனரே, இது எவ்வளவு நாணயமற்ற செயலாகும்? நாம் இவ்வளவும் கூறியது “தமிழ் வைத்தியந்
தான் நமக்கு வேண்டியது மற்ற வைத்தியங்கள் தேவையில்லை” என்ற எண்ணத்தோடு அல்ல, பார்ப்பனர்கள் எந்தெந்த வகையில், தங்கள். ஆதிக்கத்தை நுழைக்க வேலை செய்கிறார்கள் என்பதைக் காட்டவே இவ்விஷயத்தை எழுத முன்வந்தோம். ஆபத்தில்லாமல், சுலபமான: வழியில் வியாதிகளை நீக்கக்கூடிய வைத்தியமுறை எந்த நாட்டு வைத்தியமாயிருந்தாலும் அதை நாம் ஆதரித்து விருத்தி செய்ய வேண்டுமென்பது தான் நமது அபிப்பிராயம். ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது வெகு காலமாக இருந்து வருவது ஆகையால் அதைத் தான் அரசாங்கத்தார் ஆதரிக்கவேண்டுமென்று சொல்லும் மூளையற்ற - துவேஷவாதத்தை நாம் கண்டிக்கிறோம்.
இந்த மூளையற்ற பிடிவாதத்தினாலும் எண்ணத்தினாலுமே, நமது
நாட்டு தொழில்களும், கலைகளும் நாசமடைந்தன என்பதை நினைப்பூட்டு கிறோம். இவ்விடத்தில் மேலே கூறிய ஆயுர்வேத சபைக் கூட்டத்தில் தலைமை வகித்த திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் கூறிய “இங்கு கூடியுள்ள ஆயுர்வேதப் பண்டிதர்களுக்கு ஒரு வார்த்தை, நீங்கள் கேவலம் ஆஷாட பூதிகளாகச் சொன்னதையே சொல்லிக் கொண்டு பழய ஏட்டைப்
புரட்டிக் கொண்டிருக்கக்கூடாது. இந்தப் பெரிய சாஸ்திரத்தை மேன்மேலும் முன்னுக்குக்கொண்டுவந்து தற்கால அவசியத்திற்கு ஏற்றவாறு ஆகர்ஷணை செய்ய வேண்டும்” என்னும் வார்த்தையையே நாமும் எடுத்துக் காட்டுகிறோம். திரு. சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் எந்தக்
கருத்தோடு கூறியிருந்தாலும் அது வார்த்தையளவில் கண்மூடித்தனமுள்ள வைதீகர்களுக்கு நல்ல சவுக்கடி கொடுக்கக் கூடியதாகவேயிருக்கிறது என்பதை நினைவூட்டி முடிக்கிறோம்.
குடி அரசு - கட்டுரை - 06.12.1931
379 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
அண்று சொன்னதற்கு அழிவில்லை
கொஞ்ச நாளாக நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் கிளர்ச்சிப் பத்திரிகைகளைப் படிக்க ஆவல் உண்டாக்கிக் கொண்டிருந்த
தும், விடிந்து எழுந்தது முதல் படுக்கைக்குப்போகும் வரையிலும் வேலை யற்றவர்கள் வேலையுள்ளவர்கள் ஆகிய எல்லோராலும், எங்கும் பேசப் பட்டுவந்ததுமாகிய வட்டமேஜை மகாநாட்டின் இரண்டாவது கூட்டம் முடிந்துவிட்டது. “திரு.காந்தி அவர்கள் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போயிருக்கிறார், அவர் தமது அபாரமான சக்தியினால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்துச் சுயராஜ்யத்தை வாங்கி முன்னதாக இந்தியாவுக்கு பார்சல் அனுப்பிவிட்டுத்தான் இங்கிலாந்தைவிட்டுப் புறப்படுவார்” என்று “காந்தி பக்தர்கள்” நினைத்துப் பேசிக் கனவுகண்டு கொண்டிருந்த சுயராஜ்ய
மும் இன்னதென்று தெரிந்து விட்டது.
ஆனால், இந்த சுயராஜ்யமும் காங்கிரசின் பிரதிநிதியாகிய திரு.காந்தி அவர்கள் வட்டமேஜை மகாநாட்டிற்குப்போன பிறகுதான் கிடைத்தது என்று சொல்லுவதற்கில்லாமற் போய்விட்டது பற்றி காங்கிரஸ்காரர்கள் ஆயாசப்படுவதோடுங்கூட ஆத்திரமும் படக்கூடும் என்பதில் சந்தேக மில்லை. காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமல் நடைபெற்ற முதல் கூட்டத் திலேயே- சென்ற ஜனவரி மாதத்தில் பிரிட்டிஷ் முதல் மந்திரி வெளியிட்ட அறிக்கையிலேயே இன்னமாதிரியான சுயராஜ்யந்தான் கொடுக்கமுடியும் என்று கூறினார். அதே சுயராஜ்யத்தைத்தான் இப்பொழுதும் கொடுப்பதாக
முதல் மந்திரி தமது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார். முதல் வட்டமேஜை மகாநாடு நடந்தபோது, அம்மகாநாட்டைத் “தேசத் துரோகிகள் கூட்டம்” என்றும், “சர்க்கார் தாசர்கள் கூட்டம்” என்றும், “உத்தி யோக வேட்டைக்காரர்கள் கூட்டம்” என்றும், “வகுப்புவாதிகள் கூட்டம்” என்றும் பலவாறு நமது நாட்டுத் தேசீயப் பத்திரிகைகள் என்பனவும், தேசீயத் தலைவர்கள் என்பவர்களும், தேசீயத்தொண்டர்கள் என்பவர். களும், கை வலிக்க எழுதினார்கள்: தொண்டை வலிக்கக் கத்தினார்கள். பிறகு, “காந்தி-இர்வின் ஒப்பந்தம்” ஏற்பட்டதன் பலனாகத் திரு.காந்தி வட்டமேஜை மகாநாட்டிற்குப் போகும் படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவரும் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போகாமல் நழுவவிடுவதற்கு
குடி அரசு - 1981 (2) 380
எத்தனையோ வகையில் சாக்குப்போக்குகள் காட்டியும்கட போக முடியாமல் இருக்க ஒன்றும் சரியான காரணம் கிடைக்காமையால் “கடவுள்” தலையின்மேல் பாரத்தைப் போட்டுப் போய்ச் சேர்ந்தார். காங்கிரஸ்காரர். களும், *ஆசீர்வாதங்'கூறி “ஜே' போட்டுக் கப்பலேற்றி அனுப்பினார்கள். ஆனால், அப்பொழுதே திரு.காந்தியாரால் புதிதாக ஒன்றும் சாதித்துக் கொண்டு வரப்போவதில்லை என்று தெரிந்த “நவஜவான்"காரர்கள் கருப்புக் கொடி பிடித்தார்கள். “காந்திக்கு வெட்கம், காங்கிரசுக்கு வெட்கம், காந்தி ஒழிக, காங்கிரஸ் ஒழிக” என்று கூச்சலிட்டார்கள். அப்பொழுதும் திரு.காந்தி யவர்கள் வெகு ஜாக்கிரதையாக “கடவுள்” என்னைப் போகச்சொல்லுகிறார். “கடவுள்” எந்த மாதிரியான சுயராஜ்யத்திற்கு வழி விடுகிறாரோ அதன்படி நடக்கட்டும். என்னால் ஒன்றும் ஆகாது. எல்லாம் “கடவுள் சித்தம்”என்னும் பல்லவிகளைப் பாடிக்கொண்டு தான் போனார்.
திரு.காந்தி அவர்களுக்குத் துணையாக திரு.மாளவியா, திரு.ரங்கசாமி அய்யங்கார், திருமதி.சரோஜினி தேவி முதலியவர்கள். “காங்கிரஸ் பிரதிநிதிகள்” என்ற பெயரில்லாவிட்டாலும் அநாமதேயப் பிரதிநிதியாகப் போய்ச் சேர்ந்தார்கள். இவர்கள் சென்றுங்கூட முதல் மகா நாடாகிய “தேசத் துரோக, வகுப்புவாத, உத்தியோக வேட்டை”க் கூட்டத்
தில் எந்தவிதமான சீர்திருத்தம் கொடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் சம்மதித்ததோ, அதைவிட ஒன்றும் அதிகமாக கொடுத்துவிட இப்பொழுது சம்மதித்துவிடவில்லை. “அன்று கண்டதிற்கு அழிவில்லை”என்பது போல முன்பு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தான் திரும்பவும் சொல்லப் பட்டது. ஆகவே, இவர்கள் போய்த்தான் என்ன பிரயோஜனம் உண்டாகி விட்டது? போகாமல் இருந்த காலத்தில் தான் என்ன நஷ்டம் வந்து விட்டது என்று கேட்கிறோம்.
திரு. காந்தியவர்கள் வட்டமேஜை மகாநாட்டில் பேசும்போதெல்லாம். “காங்கிரஸ் ஒன்றே தான் இந்தியாவுக்குப் பிரதிநிதி ஸ்தாபனம், அதனுடைய அபிப்பிராயமேதான் இந்தியாவின் அபிப்பிராயமாகும். காங்கிரசை ஆதரிக்காத வகுப்பினர்கள் இந்தியாவில் இல்லை. என்னைத்தான் காங்கிரஸ் தனது பிரதிநிதியாக அனுப்பியிருக்கிறது. ஆகையால் நான் கூறும் அபிப்பிராயந்தான் காங்கிரஸ் அபிப்பிராயம். என் அபிப்பிராயமே இந்தியாவில் உள்ள 35கோடி ஜனங்களின் அபிப்பிராயமாகும். நான் கேட்கும் சுயராஜ்யம் கொடுக்காவிட்டால் இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத் தோடு மறுபடியும் “ஆத்மசக்தி” கொண்டு போர் செய்யும் என்று இம் மாதிரியே தன்னையும், காங்கிரசையும் பற்றி வெகுவாகப் புகழ்ந்து 50 நிமிஷம் அதிகமான பிரசங்கம் செய்வார். அதன்பின் 10 நிமிஷத்தில் “காங்கிரசின் நோக்கம் பூரண சுயராஜ்யமே யாகும். பூரண சுயராஜ்யம் கொடுத்து விட்டால், இந்தியாவிலுள்ள வகுப்புக்கலகங்கள் யாவும் ஒழிந்து போகும். இந்தியாவிலுள்ள மதச் சண்டைகளும் ஒழிந்து விடும், பூரண
381 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
சுயராஜ்யம் கொடுத்து விட்டால் இந்தியாவை எங்களால் காத்துக்கொள்ள முடியும்” என்று பல்லவி பாடி முடிப்பார். இவருடைய பல்லவி முடிந்தபின்
“காந்தி பக்தர்”களாக இருக்கின்ற இரண்டொரு பிரதிநிதிகளும் அநுபல்லவி
யும் பின்பாட்டும் பாடிமுடிப்பார்கள். திரு. காந்தியின் பேச்சுக்கு மாறாக “ஓவ்வொரு வகுப்புக்கும் பாதுகாப்பு இருக்கவேண்டும். பூரண சுயேச் சைக்கு இந்தியா இன்னும் யோக்கியதை யடையவில்லை. பூரண சுயேச்சை கொடுத்துவிட்டால், சிறுபான்மை வகுப்புகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பு களும், செல்வாக்குப் பெற்ற பெரும்பான்மை வகுப்புகளிடம் அகப்பட்டு நசுங்குண்டு அழியும்படி சம்பவிக்கும். ஆகையால், தக்க பாதுகாப்போடு கூடிய சீர்திருத்தமே வேண்டும்” என்று பேசுகின்றவர்களையும், அவர்களை ஆதரிப்பவர்களையும், இந்தியாவின் பிரதிநிதிகள் அல்லவென்றும், அவர் களுக்கு இந்தியாவில் செல்வாக்கில்லை வென்றும், பிரிட்டிஷ் அரசாங்கத்
தாரின் தரகர்களென்றும் மகாநாடு வெற்றிகரமாக முடியாமலிருக்க வேண்டு மென்றே பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டவர்களென்றும், நியாயமின்றியும் நாணயமின்றியும் பேசிக் கொண்டு வந்தார். இதற்கு அவ்வப்போது மற்ற பிரதிநிதிகள் தக்க சாட்டை கொடுத்தார்களென்றாலும் அவர் தனது புலம்பலைக் கடைசி வரையிலும் விடவேயில்லை.
இவ்வாறு திரு.காந்தியவர்கள் என்னதான் கூறினாலும் கடைசியில் ஒன்றும் பலிக்காமல் போய்விட்டது. கடைசிக்கூட்டத்தில் பிரிட்டிஷ் முதல் மந்திரி வெளியிட்ட அறிக்கையில்,
“இந்தியாவிற்கு மாகாண முழு சுய ஆட்சியும், மத்திய அரசாங்கத்தில் பொறுப்புள்ள ஆட்சியுமே கொடுக்கப்படும். ராணுவ இலாகாவும், வெளி நாட்டு சம்பந்த இலாகாவும் கவர்னர் ஜெனரலின் பொறுப்பில்தான் ஒதுக்கப்படும். சில நிபந்தனைகளுடன் நிதி சம்பந்த மான பொறுப்பை மத்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படும். இந்தியாவின் செல்வநிலைக்குத் தீங்குவராமல் பாதுகாக்கும் பொறுப்பு கவர்னர் ஜெனரலிடமே இருக்கும். குறைந்த வகுப்பினர். களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் கவர்னர்ஜெனரலி டமே இருக்கும். தேசத்தின் அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவருடையதே. இனி ஐக்கிய அரசாட்சியின் அமைப்பு முறை யைப்பற்றி முடிவு செய்வது, சிறுபான்மை வகுப்புப்பிரச்சினை யைப் பொறுத்தாகும். உங்களால் இதுவரையிலும் சிறுபான்மை வகுப்புப் பிரச்சினையைச் சமரசமாகத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இனியாவது நீங்கள் முயன்று ஒரு முடிவுக்கு வாருங்கள். இல்லாவிட்டால் நானே முடிவுசெய்து விடுகிறேன். இந்தியாவில் உள்ள எல்லா வகுப்புகளுக்குள்ளும் சமரசம் ஏற்படாத காரணமே பொறுப்பாட்சிக்குத் தடையாக இருக்கிறது. இனி ஐக்கிய அரசாங்கத்
தில் ஒவ்வொரு விஷயமும் எப்படி எப்படி இருக்கவேண்டுமென்
குடி அரசு - 1981 (2) 382
பதைப்பற்றி இந்தியாவில் கூடப்போகும் மூன்றாவது கூட்டத்தில் தனித்தனிக் கமிட்டிகளின் மூலம் முடிவு செய்யப்படும்.
என்று மிகவும் தெளிவாகக் கூறிவிட்டார். இதுதான் முதல் மந்திரியின் அறிக்கையில் உள்ள சாரமாகும்.
இவ்விஷயத்தை அறிந்தவுடன் திரு.காந்தியும், “தான் வந்தும் ஒன்றும் அதிகப்படியான காரியம் நடைபெறவில்லையே இதற்கு என்ன சமாதானம் கூறலாம்” என்று பல மணி நேரங்கள் ஆலோசனை செய்து பார்த்தார். கடைசியாக “நான் இந்தியாவை விட்டு வந்த காலத்தில் நம்பிக்கை. இழந்ததைவிட இப்பொழுது ஒன்றும் அதிகமாக இழந்துவிடவில்லை” என்று வெகு சாதுர்யமாகச் சமாதானங்கூறிவிட்டார். ஆனால், பூரண சுயராஜ்
யம் வாங்கித் தருவதாக திரு.காந்தியும், காங்கிரசும் சட்டமறுப்புப்போர். நடத்தியதற்குப்பலனாக ஒன்றையும் காணோம். சட்டமறுப்பினால் நாட்
டிற்கு ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லையென்றும், அதற்குப் பதிலாக மக்களுக்குத் துன்பமே உண்டாகுமென்றும் நாம் ஆதி முதல் கூறி வந்தது இப்பொழுது என்னவாயிற்று? ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என்பவர்கள் அடிபட்டதும், சிறைபட்டதுந்தான் லாபம். சுயராஜ்யம் வாங்
கித் தருகிறோம் என்று ஏழை மக்களிடம் உண்டியல் வசூலும், பணவசூலும் செய்து காங்கிரஸ்காரர்கள் சாப்பிட்டு ஏப்பமிட்டதுதான் பலன். நாட்டில் உள்ள வியாபாரிகள் வியாபாரத்தில் நஷ்டமடையவும், அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கப்படவும், அதன் மேல் தபால், தந்தி, உப்புவரி, நிலவரி, இறக்குமதிவரி முதலிய பலவகையில் அதிகவரி ஏற்பட்டு ஜனங்கள். கஷ்டப்படவும், சட்டங்களை மீறுதல் என்ற எண்ணம் படிந்ததனால் மக்கள் ஒழுங்கீனமான வழிகளில் பிரவேசிக்கவும், கொள்ளைகளும், கொலை களும், தாராளமாக நடைபெறவும், “தேசீய வீரர்கள்”, “தியாகிகள்” என்ற
பட்டங்கள் பெறவும், செய்ததுதான் லாபம். வேலையில்லாமல் திண்டாடிய வர்களும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத காலிகளும் ஏதாவது ஒரு கிளர்ச்சியான காரியத்தைச்செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்களும், ஏதாவது ஒரு இயக்கத்தின் பேரால் தனக்கு வேண்டாதவர்களை அவதூறுசெய்யவேண்டும் என்னும் நோக்க முடையவர்களும், ஜவுளிக்கடை மறியல், கள்ளுக்கடை மறியல் என்ற பெயர்களால் காலித்தனம் செய்ததுதான் லாபம். இம்மாதிரி பலவகையில் தேசத்திற்குக் கஷ்டமும், மக்கள் மனதிற்குத் தொல்லையும், தேசத்தின் செல்வத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டதைத்தவிர சட்டமறுப்பு இயக்கத்தினால்
ஒரு கடுகளவு நன்மையும் ஏற்படவேயில்லையென்று முன்னமே கூறி னோம், இப்பொழுதும் கூறுகின்றோம்.
அல்லாமலும் காங்கிரசினால் நாட்டிற்கு ஏற்பட்ட மற்றொரு பெருங் கெடுதியையும் இச்சமயத்தில் சொல்லாமல் இருப்பதற்கில்லை. அதாவது
383 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
காங்கிரஸ் பிரசாரம் செய்யும் ஆட்கள் வருணாச்சிரமவாதிகளாயிருந்து கொண்டு மக்களுக்கு “ஆத்மசக்தி”, “தெய்வபக்தி”, “புராண நம்பிக்கை” முதலிய புரட்டுகளைப் போதித்துக் கொண்டு வந்தார்கள்.திரு.காந்தியையும் *தெய்வ புருஷர்” ஆக்கி அவர்மீது மூடநம்பிக்கை கொள்ளும்படி ஜனங்களுக்குப் போதித்தார்கள். இந்தக்காரணங்களால் இப்பொழுதும் திரு. காந்தியைப் பற்றி தெரிந்துக் கொண்டிருகிற பாமர மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் பேர் திரு.காந்தியை ஒரு “மகான்”, *அவதாரபுருஷர்”, “தெய்வீக சக்தி” வாய்ந்தவர், “தெய்வீக சக்தி” யினால் வெள்ளைக்காரர்களை நமது நாட்டைவிட்டு ஓட்டிச் சுயராஜ்யம் வாங்கிக்கொடுத்து விடுவார்” என்ற அளவில் காங்கிரஸ் *பக்தர்"களால் சொல்லத் தெரிந்து கொண்டு “காந்திக்கு ஜே” என்று கத்துகிறார்களே யல்லாமல் “அவர் ஒரு அரசியல்வாதி வருணாச்சிரம தருமி”என்று தெரிந்து கொண்டிருக்கிறவர்கள் எத்தனைபேர் என்று கேட்கிறோம்.
ஆகவே, காங்கிரசும், திரு.காந்தியும் நடத்திய சட்டமறுப்பு இயக்கத்
தால், காந்தி மதமும், வருணாச்சிரம தருமமும், மூடநம்பிக்கையும், காலித் தனமும் பரவியதைத் தவிர வேறு ஒன்றும் இல்லையென்பது நடுநிலைமை யிலிருந்து சொந்த அறிவோடு யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. வேண்டுமானால் அடுத்த எலக்ஷனிலும், இப்பொழுது நடை பெறும் ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும், காந்தி, காங்கிரஸ், தேசீயம், சுயராஜ்யம் என்னும் பெயர்களைச் சொல்லி ஓட்டு வாங்கவும், ஓட்டுக் கேட்பவர்களுக்குத் தரகர்களாய் இருக்கவும் பிரயோசனப்படும்; பிரயோ சனப்படுகின்றது என்று சொல்லிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஆட்சேபனை யில்லை. இவ்விஷயம் இவ்வளவோடு இருக்கட்டும்.
இனி வரப்போகும் அரசியல் சீர்திருத்தத்தால் நாட்டின் ஏழை மக் களுக்கு- தொழிலாளர்களுக்கு- தீண்டத்தகாதவர்களுக்கு- பெண் மக்க ளுக்கு- நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்து அரைவயிற்றுக்குக் கூட உணவில்லாமல் துன்பத்திலும், கவலையிலும், கொடுமையிலும் காலங்
கழிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது நன்மை விளையுமா என்பதை
யும் சிறிது ஆலோசித்துப் பார்ப்போம்.
சிறுபான்மையோர், பெண் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கஷ்டப்
பட்டு உழைப்பவர்கள் முதலானவர்களுக்கு என்னதான் பாதுகாப்பு அளித்தாலும், அவர்கள் சமூக சமத்துவம் பெற்று, அவர்களுக்குள்ள கஷ்டங்களெல்லாம் நீங்கி, அவர்களுக்கு “உயர்ந்த ஜாதிக்காரர்” என்ப
வர்களால் செய்யப்படும் கொடுமைகள் தொலைந்து, மேலான நிலைமைக்கு வந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது. இதற்குப் பதிலாக படித்தவர்கள் அதிகமான உத்தியோகங்களைப் பெறவும், பணக்காரர்களும், ஜமீன்தார்.
களும், பட்டங்களும், பதவிகளும் பெற்று ஏழைமக்களைக் கொடுமைப்
குடி அரசு - 1981 (2) 384
படுத்தவும், வருணாச்சிரம தருமக்காரர்கள் இன்னும் தங்கள் சனாதன தருமத்திற்கு நிலையான ஆதரவு தேடிக் கொள்ளவும் தான் செளகரியம் உண்டாகும்.மற்றபடி விவசாயிகளும், தொழில் செய்பவர்களும், கொடுத்து வரும் வரியில் ஒரு சிறிதும் குறைவேற்படப்போவதில்லை. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் அவர்களிடம் வாங்கும் வரிகள் அதிகமாகவே ஆகக்கூடும். நமது செல்வம் பயனற்ற வழியில் மதத்திற்கெனவும், திருவிழாகளுக்கென்றும், புரோகிதர்களுக்கென்றும் செலவாகி வருவது குறைந்து, அச்செல்வம் தேசமக்களின் தரித்திரத்தையும், நஷ்டத்தையும், போக்குவதற்கும்பயன்படப்போவதில்லைஎன்றும்உறுதியாகக் கூறுகிறோம்.
மத்திய அரசாங்கத்தில் உண்டாகப் போகும் ஐக்கிய அரசாட்சியில், சுதேச ராஜாக்களும், சமீன்தார்களும், பணக்காரர்களுமே பதவி வகித் திருப்பார்கள். அங்கு திரு.மாளவியா, தர்பாங்கா மகாராஜா போன்ற வருணாச் சிரம தருமவாதிகளுக்கே செல்வாக்கு மிகுந்து நிற்கும். இத்தகைய சபையின் மூலம், கஷ்டப்படுவோர் நன்மைக்களுக்காகச் சீர்திருத்த
சமதர்மச் சட்டங்கள் தோன்ற முடியுமா? என்று ஆலோசியுங்கள்.
ஆகவே, இனி வரப்போகும் சீர்திருத்தத்தினாலும், இப்பொழுது நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்களினாலும் எள்முனையளவு நன்மையும் நமது நாட்டிற்குக் கிடைக்க போவதில்லை என்பதை மீண்டும், மீண்டும் கூறுகிறோம்.
ஜாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் நடைபெறபோகும் அரசியலால் பொதுவான சமதர்மத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?
சாதிகளும், மதங்களும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நிலைத்து வேரோடி, மக்கள் மனத்திலும், இரத்தத்திலும் ஊறிக்கலந்து போயிருக்கின்ற நமது தேசத்தில் ஜாதி, மத ஆதிக்கமும் பாதுகாப்பும் உள்ள அரசியலைத் தவிர வேறு அரசியலை ஸ்தாபிக்கவும் முடியாதென்பது உண்மைதான். நமக்குள் ஜாதி.,மத துவேஷங்கொண்டு வலுத்தவர்கள் இளைத்தவர்களைத் துன்பப்படுத்தி-கொடுமை புரிந்து ஆளுவதைவிட “ஜாதி, மதங்கள் ஒழிந்து சமரசமாக வேண்டும்”என்பதற்கு அதிக அநுகூலஞ்செய்யாவிட்டாலும், பிரதிகூலம் செய்யாமலிருக்கும் அந்நியர் பாதுகாப்பிலிருப்பது ஒரு வகையில் மேன்மையானதென்று தான் நாம் சொல்லுகிறோம்.
நமக்குள்ளிருக்கும், சாதிப்பிணக்குகள், சமயச்சண்டைகள், அடிமை மனப்பான்மை, புரோகித ஆதிக்கம் முதலியவைகள் ஒழிந்து பகுத்தறிவு பெற்று விட்டால் அந்நியர்க்கு இங்கு வேலையில்லை. நாமும் நம் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் திறமையுடைவர்களாகி விடுவோம். ஆகையால், நமது சுதந்திரத்திற்குத் தடைகளாக இருக்கின்ற ஜாதி, மதம், கடவுள், வேதம், புராணம், மூடப்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஒழித்து
385 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஏமாற்றுகிறவர்களுக்குக் கஷ்டப்படுகிறவர்கள் அடிமையாகாமல் எல்லா மக்களும் சுகமடைந்து வாழக்கூடியது சுயராஜ்யமானாலும், பூர்ண சுயேச் சையானாலும் ஐக்கிய ஆட்சியானாலும், அந்நிய ஆட்சியானாலும், வேறு யாருடைய ஆட்சியானாலும் அதை நாம் வரவேற்கத் தயாராக இருக்கி றோம் என்று கூறி முடிக்கின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 06.12.1931
குடி அரசு - 1981 (2) 386
நமது ஆசிரியாரிண் ஐரோப்பா பிரமாணம்
இன்று 13-12-31-6 நமது ஆசிரியர் திரு.ஈவெஇராமசாமி அவர்கள். திரு இராமனாதன் அவர்களுடன் (Ambosie) அம்போய்சி என்னும் பிரஞ்சு கப்பலில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு புறப்பட்டு விட்டனர். திரு இராமசாமி அவர்கள் உடல்நிலை தொடர்ந்த பிரயாணத்திற்கு இடங்கொடுக்க முடியாத நிலையிலிருப்பினும் இயக்க வளர்ச்சியை
முன்னிட்டு என்ன நேர்ந்த போதிலும் தமது சுற்றுப் பிரயாணத்தை முடித்து வருவதென்ற எண்ணத்துடனேயே புறப்பட்டு விட்டார். சுற்றுப்பிரயா ணத்தை முடித்து விட்டு மீண்டும் நம் நாடு திரும்புவதற்கு ஏறக்குறைய 34 மாதங்கள் செல்லுமெனத் தெரிய வருகின்றது. இவர்களது சுற்றுப்பிரயாண நிகழ்ச்சிகளும், அவ்வப்போது நமதியக்க சம்பந்தமான கட்டுரைகளும், நமது பத்திரிகையில் வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். மேலும் மேல் நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பற்றி நமது
மக்கள் நன்கு தெரிந்து கொள்ளுமாறு இது வரையிலும் மேல் நாடு சென்ற
எந்த இந்தியரும் நடு நிலைமையான தாராளமனப்பான்மையுடன் அபிப்பி ராயம் கூறியதில்லை. இது மாத்திரமல்லாமல் மேல் நாடு சென்று திரும்பி யுள்ள இந்தியர்களான நம்மவர்கள் பெரும்பாலும் அரசியல், கல்வி, மத விருத்தி இவைகளைப் பற்றியே தான் இதுவரையிலும் ஆராய்ந்திருக்கின். றனரேயொழிய அத்தேசத்து மக்கள் வழக்கபழக்கங்கள், மதபக்தி, கடவுள் பக்தி இவைகளை அவர்கள் எந்த அளவுக்குத் தங்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்திக் கொள்ளுகின்றனர் என்பதைப் பற்றி சிறிதும் கவலை கொண்டதுமில்லை அவைகளைப் பற்றி நமது மக்களுக்கு எடுத்துக் கூறியதுமில்லை. காரணம் எதுவாகவிருக்கலாமென கருதுகின்றீர்கள். அந்த நாடுகளின் உண்மையான நிலை நமது மக்கள் தெரிந்து கொண்டால் “இந்து” மதத்தின் கெதி என்னவாகுமோ என்னும் பயமே தான் காரண
மாகும்.
இத்தகையவர்கள்தான் இன்று நமது நாட்டில் மேல் நாடு சென்று திரும்பியவர்கள் என்ற புகழுக்குள் புகுந்து கொண்டு மக்களை மிருகங்க ளெனக் கருதி வேட்டையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட சமரசமற்ற மனப் பான்மையுடையவர்கள் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போடுவதே நமது
287 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆசிரியரின் சுற்றுப்பிரயாண நோக்கமாகும். ஐரோப்பா சுற்றுப்பிரயாணத்
தின் பொழுது ஆங்காங்கு நமது நாட்டு சமூக நிலையையும், நமது இயக்கக் கொள்கைகளையும் பிரசாரம் செய்தும் வருவார்கள். இதனால் மேல் நாட்டு மக்களுடைய ஆதரவும் நமதியக்கத்திற்கு ஏற்படும் என்பது திண்ணம்.
உலக ஒற்றுமை வேண்டுமேயானால் சகல தேசமக்களுக்கும் பொருத் தமான சமூகச்சட்டங்கள் ஏற்படுதல் வேண்டும். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதற்கு நமது நாட்டில் முன்வருவோரைவிட தடை செய்கின்றவர்கள் அல்லது குறை கூறுகின்றவர்கள் தான் மலிந்துக் காணப்படுகின்றனர். இத்தகைய மக்களுக்கிடையே இம்மாதிரியான உணர்ச்சி தோன்றுவதென்பது இலகுவான காரியமல்ல. அதிலும் அனுஷ் டானத்திற்குக் கொண்டு வருவதென்பதோ அதிக கஷ்டமான காரியமாகும். இப்படிப்பட்ட காரியங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவருவதற் கான வழிகளைக் கண்டுபிடித்து மக்களையும் அவ்வழியையே பின்பற்று
மாறு செய்வதென்ற நோக்கத்துடன் தங்களது திரேக நிலையையும், பொருட் செலவையும் கவனியாது, சுற்றுப்பிரயாணத்திற்குத் துணிந்த நமது கிழச்
சிங்கத்தையும், அவரது வலக்கையாம் இராமநாதனையும் எவ்வாறு நமது மக்கள் போற்றாதிருக்க முடியும். நம்மைப்பொருத்தவரையில் வெற்றியும், தோல்வியும் ஒன்றேயானாலும், வெற்றியும், தோல்வியும் சந்தர்ப்பத்தை பொருத்தாகுமென்பதுதான் நமதியக்க அபிப்பிராயமேயல்லாது திரு. காந்தியவர்களைப் போல் “கடவுள் செயல்” என்று ஒருபோதும் கருதுவ தில்லை. மேலும் நமது ஆசிரியரும், திரு.ராமநாதன் அவர்களும் திரு.காந்தி அவர்களைப்போல் வெற்றி மாலை சூடிவருவதாகச் சென்று “கடவுள்”
சித்தத்தால் “தோல்வியடைந்து விட்டேன் என்ற முகாரி இராகப்பல்லவி யைப் பாடிக்கொண்டு இந்தியா திரும்பப் போவதில்லை. ஏன் எனிலோ? நமது சமூக விடுதலை நமது சமூக ஒற்றுமையால் தான் ஏற்பட முடியுமே யல்லாது பிறரை எதிர்பார்த்துத் தூரதேசம் சென்று கிடைத்து விடமாட்டாது என்ற மாற்றமுடியாத அபிப்பிராயமே தான் காரணம்.
ஆகவே, நமது ஆசிரியரவர்கள் வெற்றியையோ, தோல்வியையோ
எதிர்பார்த்து ஐரோப்பா செல்லவில்லை. தனது உடல் நலன், நமதியக்க
வளர்ச்சி, மேல் நாட்டு மக்கள் பழக்கவழக்கங்கள், பொருளாதாரச் சமரசம், தொழிலாளர்கள் நலன் இவைகளைப் பற்றி ஆராயவும் தங்களது ஆராய்ச்சி யால் கிடைக்கப்பெற்றவைகளை இந்திய மக்களுக்கு எடுத்துக் கூறவுமேயாம். இத்தகைய நல்லசந்தர்ப்பத்தை நாம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் சந்தர்ப்பம் இப்பொழுது தான் இடங்கொடுத் திருக்கின்றது.
இனி இச்சமயத்தில் நமது கடமை என்னவென்பதையும் சற்று யோசித்துப் பார்த்தல் வேண்டும். வைதீக, தேசீய, வருணாசிரம, பிராமண,
குடி அரசு - 1981 (2) 388
இந்து மகாசம்ரட்சணா சபைகளெல்லாம் தங்களது வேலைகளை வெகு
தீவிரமாகச் செய்து கொண்டு வருகின்றனவென்பது வெளிப்படை. அகில இந்திய காங்கிரஸ் சப் கமிட்டியோ, நாசிக் தீண்டாதார் சத்தியாக்கிரகத்தை ஆதரிக்க மறுத்து விட்டது. குஜராத் சாதி ஹிந்துக்களோ ஆதிதிராவிடக் குழந்தைகள் தங்களுடைய குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து படிப்பதற் காகத் தீண்டப்படாதார், பயிர், பச்சைகளையெல்லாம் நெருப்பிற்கிரை
யாக்கினர்.
வைதீகக் கோஷ்டியினரோ குருவாயூர் சத்தியாக்கிரகத்திற்கு எதிர். சத்தியாக்கிரகம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். திரு.காந்தியவர்களோ தீண்டாதாருக்குத் தனித் தொகுதி கொடுப்பதை தனது உயிரைத் தியாகம் செய்வதன் மூலமாகவாகினும் தடை செய்வதாக கர்ஜிக்கின்றார். நம் நாட்டுப் பார்ப்பனர்களோ சாரதா சட்டத்தைக் கொளுத்திவிட வேண்டுமெனத் துள்ளுகின்றனர். மதக்கர்த்தாக்களோ தங்களது கொள்ளையடிக்கும் திட் டத்தை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டே போகின்றனர். பணக்காரர் களோ அவர்களுக்காதரவளிக்கின்றனர். போதாக்குறைக்கு நமதியக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த பல நண்பர்களும் இன்று பொருளாதார நிலையை யுத்தேசித்து நம்மை எதிர்க்கவும் ஆரம்பித்து விட்டனர். இம்மாதிரியான பல திறப்பட்ட எதிர்ப்புகளுக்குள் இன்று நமது இயக்கம் பரவி வருகின்ற தென்றால் இன்னும் கொஞ்சம் தியாக புத்தியுடன், பொறுப்புணர்ந்து ஒற்றுமையுடன் வேலை செய்ய முற்படுவோமானால்
நமதியக்கத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமுடையதாகவிருக்கு மென்பதை
யும் சிந்தித்தல் வேண்டும். நமக்குள்ளிருக்கும் சில சில்லரை விவகாரங் களை இயக்க சம்பந்தப்படுத்தி இயக்கத்திற்கு கேடு விளைவிப்பதான வழியில் செல்லுவது நியாயமானதாகாது. ஆகையால் நமது ஆசிரியர், திரு.ராமசாமியும், திரு.இராமநாதனும் ஐரோப்பா சுற்றுப்பிரயாணம் செய்யும்பொழுது நாமும் நமது வேலையைத் தீவிரமாய் இங்கு நடத்த வேண்டும். பிறப்பதும், இறப்பதும் உலக இயற்கையேயாயின் பிறப்பிற்கும் இறப்பிற்கும் மத்தியிலிருக்கும் நாட்களை சேம்பேறித்தனமாய்க் கழிப்ப தென்பதன்று. ஆகையால் ஒன்று கூடுங்கள், இயக்கத்தைப் பற்றிய வேலை களில் உங்கள் சிந்தையையும், நேரத்தையும் செலவிடப் பிரயத்தனப் படுங்கள். இவைகள்தான் ஐரோப்பா சென்று திரும்பும் நமது ஆசிரியருக்
கும், திரு.இராமநாதனுக்கும், நாம் அளிக்கும் பரிசாகும். ஆகவே, நமது கடமைகளில் நாம் எப்பொழுதும் தவர மாட்டோமென்று உறுதி கூறுவது டன், ஐரோப்பா சுற்றுப் பிரயாணம் வெற்றியுடனும், செளகரியத்துடனும், மன சமாதானத்துடனும் இருக்க வேண்டுமென விரும்புகின்றோம்.
குடி அரசு - தலையங்கம் - 13.12.1931
389 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
SumBsaidn வீரச்சசயல்
நமது நாட்டுத் “தேசீய வீரத் தியாகிகள்” ஆகிய காங்கிரஸ்காரர்கள் இதுவரையிலும், மற்றவர்களைப் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தது போக, இப்பொழுது அவர்களே பதவிகளுக்கு ஆசை கொண்டு நுனி நாக்கிலிருந்து தண்ணீர் சொட்டும்படி ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். இவ்விஷயத்தை, ஸ்தல ஸ்தாபனத் தேர்தலுக்குக் காங்கிரஸ் காரர்கள் பலர் ஆங்காங்கே போட்டி போடுவதைக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், இந்தத் “தியாகிகள்” எதற்காக ஸ்தல ஸ்தாபனங் களுக்குப் போகிறோம் என்று சொல்லுகிறார்கள் என்பதைக்கேட்டால் தான் இவர்களுடைய அரசியல் ஞானமும், தேசாபிமான மிகுதியும், ஸ்தல ஸ்தாபனங்களின் பிரயோசனத்தை இவர் எவ்வாறு அறிந்து கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தியும் விளங்கும்.
ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற முன் வருகின்றவர்கள், “நான் நகரின் சுகாதாரத்திற்காக உழைப்பேன். ஏழை ஜனங்களின் வரிகளைக் குறைக்கப்பாடுபடுவேன். நகரில் தண்ணீர் வசதியுண்டாக்கப் பாடுபடுவேன். விளக்கு வசதிகளை அதிகப்படுத்த முயலுவேன். ஏழை மக்களுக்கு
குடியுருப்பு வசதிகளை உண்டாக்க முயலுவேன். நகரில் பள்ளிக்கூடங்களை மிகுதிப்படுத்தவும், கட்டாயக்கல்வியை உண்டாக்கவும் பாடுபடுவேன். பிச்சைக்காரர்களின் தொல்லைகளை ஒழிக்கவும், வேலையில்லாதவர்: களுக்குத் தொழிற்சாலைகள் ஏற்படுத்தவும் உழைப்பேன். ரோடுகளையெல்
லாம் கப்பி ரோடுகளாகச் செய்யவும் தார் போட்ட ரோட்டுகளாக்கவும் பாடு படுவேன்” என்று இம்மாதிரியான விஷயங்களைக் கூறி ஓட்டுக் கேட்பார்.
கள். இதுவே எந்த நாட்டிலும் நடைபெறும் வழக்கம். இவ்விஷயங்கள் ஒரு நகர சபை, ஒரு நகரத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களுமாகும். இவ் விஷயங்களை உணர்ந்து இவைகளுக்காக முயலும் குணமுடையவர்கள்
தான் நகரசபைகளில் அங்கம் பெறுவதற்கும் தகுதி வாய்ந்தவர்களாவார்கள்.
ஆனால், நமது நாட்டுத் “தியாகிகள்” எதற்காக நகரசபைக்குச் செல்லுகிறார்களென்றால் நான்கே காரியங்களுக்காக செல்லுகின்றார்கள். அந்த நான்கு காரியங்களாவன:- நகரசபைக் கட்டிடங்களிலும், அதன்
குடி அரசு - 1981 (2) 390
அதிகாரத்திற்குட்பட்ட மற்ற இடங்களிலும் தேசீயக்கொடியை நட்டுப் பறக்க விடுவதாகிய பயனற்ற காரியம் ஒன்று.
நகரசபையின் கீழ்த்தர உத்தியோகஸ்தர்களுக்கு அதிக நாள் உழைக்
கக் கூடிய கெட்டியான துணியைக் குறைந்த தொகையில் வாங்கிக்கொடுப் பதை நிறுத்திவிட்டு, கொஞ்சநாளில் கிழிந்து தொலையக்கூடிய பயனற்ற கதர்த்துணியை அதிக விலைக்கு வாங்கிக் கொடுப்பதன் மூலம் எப்பொ
முதும் இதற்காகும் செலவைக் காட்டிலும் அதிக செலவாகும்படி செய்வ தாகிய காரியம் ஒன்று.
நகரசபையைச் சார்ந்த பள்ளிக்கூடங்களில் வாசிக்கும் சிறு பிள்ளை களுக்கு, நாகரீக- விஞ்ஞான சாஸ்திர - யந்திர அறிவைத் தடைப்படுத்து
வதும், மூளையை மழுக்கக் கூடியதுமாகிய தக்ளியிலும், ராட்டினத்திலும்
நூல் நூற்கக் கற்றுக் கொடுப்பதாகிய காரியம் ஒன்று.
பள்ளிக்கூடப்பிள்ளைகளுக்குப் பகுத்தறிவுக்கு இடமில்லாமல், மூட நம்பிக்கையை உண்டாக்கக் கூடிய புராணங்களும், கதைகளும், மத நூல்களும் மாத்திரம் உள்ள திருத்தப்பெறாத பயனற்ற பாஷையான ஹிந்தி யைப் போதிக்கச் செய்வதாகிய காரியம் ஒன்று.
ஆகிய இந்த நான்கு வீர சூர பராக்கிரமத்தனமான காரியங்களுக்
காகத் தொண்டைத் தண்ணீர் வற்ற, உயிர் கொடுத்துப் போராடவே காங்கி
ரஸ் தேசீயப்புலிகள் ஸ்தல ஸ்தாபனங்களுக்குள் செல்லுகின்றனர் என்பதை அவர்கள் செய்யும் பிரசார மூலமாகவும், சில ஸ்தாபனங்களில் அவர்கள். கொண்டு வரும் தீர்மானங்களைக் கொண்டும் அறிந்திருக்கிறோம்.
சமீபத்தில் சென்னை நகர பரிபாலன சபையிலும், பள்ளிக்கூடங் களில் ஹிந்தி பாஷையும், சர்க்கா, தக்ளி இவைகளில் நூல் நூற்கக்கற்றுக் கொடுப்பதும் போதிக்கப்படவேண்டும் என்னும் தீர்மானம் காங்கிரஸ் காரர்களால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்விஷயத்தில் நம்பிக்கையில்லாத அங்கத்தினர்களும், மேற்படி தீர்மானத்திற்கு எதிராக இருந்தால் எங்கே அடுத்த தேர்தலில் சபையில் அங்கம் பெறாமல் போய் விடுவோமோ என்ற பயத்தினால் ஆதரித்து நிறைவேற்றி விட்டார்கள்.
அன்றியும் மற்றொரு நகரசபையில் தற்போதுள்ள தலைவருடன் காங்கிரஸ்காரர்கள் சமரசம் பேசும்போது கதர், ஹிந்தி முதலியவைகளுக்கு ஆதரவளித்தால் சேர்மன் ஸ்தானத்திற்குப் போட்டியிடுவதில்லை என்று ஒப்பந்தம் பேசினார்களாம். இன்னும் பல நகரசபைகளில், காங்கிரஸ்காரர்கள் என்று இருப்பவர்களும், அவர்களுடைய அனுதாபத்தைப் பெற ஆசைப் பட்டுக் கொண்டிருப்பவர்களும் இவ்விஷயங்களுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அறிகின்றோம்.
391 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆகவே காங்கிரஸ்காரர்களின் மதச்சின்னங்களாக இருக்கின்ற மேற் கூறிய நான்குமே நகர பரிபாலன சபைகள், தாலூகா போர்டுகள், ஜில்லா போர்டுகள், சட்டசபைகள், யூனிவர்சிட்டிகள் ஆகியவைகளின் முக்கிய மான வேலைகளாக ஆகிவிட்டால் நமது நாடு எப்பொழுது அந்நிய தேசங்
களுக்குச் சமத்துவமான நிலையை அடைய முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.
அந்நிய தேசங்களில் உள்ள ஸ்தல ஸ்தாபனங்கள் போன்ற பொது நிலையங்கள் யாவும், நாட்டு மக்கள் அனைவரையும், திடகாத்திரமுடைய- அறிவுடைய-சுதந்திரமுடைய - சகோதரத்துவமுடைய -துன்ப வாழ்க்கை
நீங்கி இன்பவாழ்க்கையில் வாழக்கூடிய-நல்ல நகர ஜனங்களாக்க முயன்று கொண்டிருக்கின்றன. ஆங்குள்ள தேச நன்மையைக் கருதும் அரசாங்கங் களும், கட்சிகளும் தன்னையே தமது கொள்கையாக வைத்துக் கொண்டு வேலை செய்கின்றன.
ஆனால், நமது நாட்டில் உள்ள இந்த “தியாகிகள்” தேச மக்களை
இன்னும் கோழைகளாகவும், அடிமைகளாகவும், சண்டிகளாகவும், மூட நம்பிக்கையுடைவர்களாகவும் இருக்கச் செய்யவே முயற்சி செய்கின்றார்கள். இம்முயற்சிக்கு ஒன்றுந்தெரியாத ஜனங்களில் சிலர் ஏமாந்து, காங்கிரஸ் தொண்டர் என்பவர்கள் தங்கள் மதச்சின்னங்களுடன், பிச்சைக்குவரும் போதும், ஓட்டுக்குவரும்போதும் உதவியும் செய்து விடுகின்றனர். ஒன்றுந் தடை செய்யாமலும், இம்முயற்சியினால் உண்டாகும் லாப நஷ்டங்களை உணராமலும் இருந்து வருகின்றார்கள். ஆகையால், நாம் இந்த நிலை
ஒழிந்து ஜனங்கள் உண்மையான அறிவு பெறவும், நமது தேசம் உண்மை யான முன்னேற்றம் பெறவும், எத்தகைய வெற்றிக்கும், தோல்விக்கும்,
மதிப்புக்கும், அவமதிப்புக்கும் லட்சியம் பண்ணாமல் உழைக்க வேண்டி யதே கடமையாகும், தேசாபிமானமாகும், தேசத்திற்கு - தேசமக்களுக்குச் செய்யும் சிறந்த ஊழியமாகும் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொண்டு இப்பொழுது இவ்வளவோடு நிறுத்துகின்றோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.12.1931
குடி அரசு - 1981 (2) 392
காண்டு ஆச்சாரியார்கள்
தணி உரிமையும் மதமும் வேண்டுமாம்.
- தேசீயத்துரோகி
மத நடுநிலைமையின்' ஆபத்து
நாசிக்கில் உள்ள கோயிலில் பிரவேசிக்கவும், “ராமகுண்டம்” என்னும் தீர்த்தக் குளத்தில் குளிக்கவும் தீண்டாதார்கள் சத்தியாக்கிரகம் செய்து வருகின்றனர். இச்சத்தியாக்கிரகத்தை வைதீக இந்துக்கள் தடுத்து வருகின்றனர். இதைப்பற்றி “இந்திய சனாதன வைதீகசபை”த் தலைவர், திரு.காசிகிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார். அவ்வறிக்கையில்,
“நாசிக்குக்காக மிஸ்.மேயோவை மறுபடியும் இந்தியாவின்
மீது கிளப்பி விட்டுவிடாதீர்கள். சனாதன தர்மிகளும், பஞ்சமர் களும் சுயநலக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஒருகாரியத்தை யும் செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். சத்தியாக்
கிரகத்தின் நோக்கம் “சத்தியத்தைக் காப்பதேயாகும்”. “ராமகுண்ட
தீர்த்தம்” பொதுச்சொத்தல்ல. அது பொதுச் சொத்தாக இருந்தால்
தான், தீண்டாதார்களும் ஜாதி இந்துக்களைப் போல அதில் உரிமைக் கொண்டாட முன்வரலாம். காங்கிரசும் மற்றும் பொருப்புள்ள ஸ்தாபனங்களும், மூலாதார உரிமைகளை ஒப்புக்கொண்டிருக்கின் றன. சொந்த அதிகாரமுள்ள சொத்துக்களையும், தர்ம ஸ்தாபனங் களையும் பொதுச்சொத்துக்களாக மாற்ற மேற்படி ஸ்தாபனங்கள்
ஒப்புக் கொள்ள முடியாது”
என்ற விஷயங்கள் காணப்படுகின்றன. இதிலிருந்து காங்கிரஸ் மதநடுநிலைமையின் ஆபத்தை உணரலாம். எந்தக் கோயில்களும், தர்ம ஸ்தாபனங்களும் ஒருவர் அதிகாரத்திலேயோ, அல்லது ஒரு கமிட்டியின் அதிகாரத்திலேயோ அடங்கிதான் இருக்கும். அப்படிப்பட்ட ஸ்தாபனங்
களில் மற்றவர்கள் பிரவேசிக்க உரிமையில்லை என்பதே திருஆச்சாரியா
ரின் வாதம். இதுதான் காங்கிரசின் நடுநிலைமைக்கும் வியாக்யானம். இந்நிலைமையில் தீண்டாதவர்கள் எப்படி பொது ஸ்தாபனங்களில் சமத்து
393 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
வம் பெற முடியும்? “மிஸ்.மேயோவைக் கிளப்பிவிட வேண்டாம்” என்று திரு ஆச்சாரியார் கூறிகிறார். யார் மிஸ்மேயோவைக் கிளப்பிவிடுகிறவர்? ஒரு குளத்தில் தீண்டாதவர்களும் குளிப்பதற்காகத் தடைகூறும், திரு. ஆச்சாரியார் போன்றவர்கள் மிஸ்.மேயோவை கிளப்பிவிடுகிறார்களா? அல்லது குளத்தில் குளிக்க எங்களுக்கும் பாத்தியம் வேண்டுமென்றுக் கேட்கின்ற தீண்டாதவர்கள் கிளப்பிவிடுகிறார்களா? நன்றாய் யோசித்துப் பாருங்கள். சத்தியாக்கிரகம் என்றால் சத்தியத்தைக் காப்பாற்றுவதாம்! எது சத்தியம்? நாசிக் கோயிலில் ஜாதி இந்துக்கள் மாத்திரம் செல்ல உரிமை இருப்பது சத்தியமா? “ராமகுண்டம்” என்னும் குளத்தில் ஜாதி இந்துக் களுக்கு மாத்திரம் குளிக்க உரிமையிருப்பது சத்தியமா? இவைகளில் தீண்டாதார்கள் பிரவேசிக்காமலிருப்பது சத்தியமா? திரு.ஆச்சாரியார். கருத்துப்படி தீண்டாதவர்கள், தீண்டாதவர்களாகவே ஒன்றிலும் சுதந்திரம் இல்லாமலிருப்பதும், ஜாதி இந்துக்கள் வழக்கமாகத் தங்களுக்குள்ள ஏகபோக உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதுந் தான் சத்தியம் என்று கருதுகிறார் எனத் தெரிகிறது.
இது சத்தியமானால், இதற்காக சத்தியாக்கிரகமானால், இதை மற்றொரு வருணாச்சிரம தர்மம் என்பதில் என்ன தவறு இருக்கிறது? ஆகையால் இத்தகைய சத்தியம் வேண்டவே வேண்டாம். இன்னும் எத் தனை மேயோக்கள் வந்தாலும் வரட்டும், அதைப்பற்றி கவலையில்லை. வேண்டுவது எல்லாருக்கும், எல்லாவிடங்களிலும் சமவுரிமை தான். கோயில்களும், தர்ம ஸ்தாபனங்களும், சிலருடைய ஆதிக்கத்திலிருந் தாலும் அவைகள் பொதுச் சொத்துக்கள் தான். அவைகளைப் பொதுச் சொத்துக்களாக ஆக்கித் தேசத்திற்கு பயன்படச் செய்யவேண்டுமென்பது
தான் நமது கொள்கை. இதற்குத் தற்கால நிலைமையில் சத்தியாக்கிரகம்
சிறிதும் பயனளிக்காது.
மதத்தைக் காப்பாற்ற வேண்டும்
நமது சனாதன வைதீக நண்பர், திரு.எம்.கே.ஆச்சாரியார் அவர்கள். ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“அரசாங்கத்தார், மதவிஷயங்களில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பதை ஞபாகத்தில் வைத்திருப்பார்கள் என்றும், இதைப்பற்றி வட்டமேஜை மகாநாட்டில் வற்புறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், லார்ட் இர்வின் இந்தியாவை விட்டுப் புறப்படுமுன் பாரத தர்ம மகா மண்டலத்திற்கு உறுதி கூறியதாகத் தெரிகிறது. ஆனால், சாரதா சட்டம் சம்பந்தமாக அவர் நடந்து கொண்டதிலிருந்து இவ்வுறுதிமொழி பயனற்ற தாகும். சாதாரண ஐரோப்பியர்களுக்கும், நவீன நாகரிகத்திலுள்ள இந்தியர். களுக்கும் “மதம்” என்பதன் கருத்து வைதீக இந்துக்களுக்கு இருப்பது போல் தோன்றுவதில்லை. “மதத்திற்கும் கல்யாணம் போன்ற சமூக
குடி அரசு - 1981 (2) 394
விஷயங்களுக்கும் சம்பந்தம் இருக்கக்கூடாது” என்று அவர்கள் கூறுகின்ற
னர். இவர்கள் எது மத விஷயம்? எது மதவிஷயமல்லவென்பதில் தங்கள் அபிப்பிராயத்தை வைதீக இந்துக்களின் மேல் பலவந்தமாக சுமத்த அனுமதிக்கக்கூடாது. இதே மாதிரி காங்கிரசும் மத சுயேட்சை அளிப்பதாக உறுதி கூறியிருப்பதும் பிரயோஜனமற்றதாகும். காந்திக் கட்சியினர் “ஆலய சத்தியாக்கிரகம்” என்று கூறுவதைக்கொண்டும், “தீண்டாமையை ஒழிப்ப
தாகக் கூறுவதைக் கொண்டும்” மதவிஷயத்தில் அவர்கள் நடுநிலைமை வகிக்கும் விதம் விளங்குகின்றது... மேல் நாடுகளில் மதத்தையே ஒழித்து விட்டனர். இந்தியாவிலும் ஒழிக்க முயலுகின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது”
என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து சீர்திருத்த விஷயத்தில் வைதீகர்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்ற விஷயத்தைத் தெளிவாய் அறிந்து கொள்ளலாம்.
அரசாங்கத்தார் சாரதா சட்டத்திற்கு ஆதரவு அளித்து விட்டதனால், அரசாங்கம் மத நடுநிலைமை வகிக்கவில்லையாம். கல்யாணம் போன்றவை கள் மதவிஷயங்களாம். அப்படியானால், சாப்பிடுவது, குளிப்பது, பல் விளக்குவது, ஒன்றுக்குப் போவது, வெளிக்குப் போவது முதலியவைகளும் மத விஷயங்கள் தான் போலும். இவைகளுக்கும் தான் சாஸ்திரங்களில் விதிகள் கூறுகின்றன. “மற்ற வருணத்தாருடைய சொத்துக்கள் எல்லாம் பிராமணருக்கே சொந்தமானது” என்பது பார்ப்பனர்களின் ஸ்மிருதிக் கொள்கை. ஆகையால் இதுவும் மத விஷயம் ஆனதால் பார்ப்பனர்கள்
யார் வீட்டில் கொள்ளையடித்தாலும், யார் சொத்துக்களைக் கவர்ந்தாலும் அவர்களைப் பிடிக்கவோ, விசாரிக்கவோ, தண்டிக்கவோ பொது ஜனங்க ளுக்கும், அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அதிகாரமில்லையென்றும் சொல்லலாம். இதுவும் மத விஷயம்தானே! இவற்றில் எல்லாம் அரசாங்கத்
தார் நடு நிலைமை வகிக்க வேண்டும் என்று சொல்லுவது போலத்தான் சமூகச் சீர்திருத்த சட்டங்களுக்கு அரசாங்கத்தார் ஆதரவு அளிக்கக் கூடாது என்று சொல்லுவதும், ஆதரவு அளித்தால் அரசாங்கத்தார் மதத்தில் தலையிட்டு விட்டார்கள் என்று சொல்லுவதும் ஆகும். அடுத்தபடியாக, மதம் என்பதன் கருத்து வைதிக இந்துக்களுக்குத் தோன்றுவதுபோல் நாகரீகமுடையவர்களுக்குத் தோன்றுவதில்லையாம். இது உண்மைதான். நவீன நாகரீகமும், ஆராய்ச்சியும், அறிவும் உடையவர்களுக்கு மதம் இன்னது சமூக விஷயம் இன்னது என்று தெரியும். ஆகையால், அவர்கள் சமூகச்சீர்திருத்தஞ் செய்வதற்குப் பின்வாங்க மாட்டார்கள். வைதீக இந்துக்கள் பகுத்தறிவற்றவர்கள். சுருங்கவும் விளங்கும்படியும் கூறவேண்டு மானால் “முட்டாள்கள்” ஆகையால் அவர்கள் சமூக விஷயங்களையும் மதம் மதம் என்று சொல்லிக் கொண்டு ஒரு சீர்திருத்தத்திலும் மன
மில்லாமல் பழைய இருட்டு உலகத்திலேயே வசிக்க விரும்புவார்கள்.
395 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆகையால், வைதீகர்கள் அபிப்பிராயத்தை அலட்சியம் செய்தால் தான் சமூகம் முன்னேற்றம் அடைய முடியும். திரு.ஆச்சாரியார் போன்றவர்.
களின் அபிப்பிராயத்தால் சமூகம் சமத்துவமும், விடுதலையும் பெற முடியாது என்று சொல்லுகிறோம்.
அடுத்தபடியாக, காங்கிரஸ் ஒரு காரியமும் செய்யாமலிருக்கும் போதே, காங்கிரசைச் சேர்ந்த சிலர் வாயளவில் ஆலய சத்தியாக்கிரகத்தை ஆதரித்துப் பேசும்போதே, காங்கிரஸ்காரர்கள் தீண்டாமை போகவேண்டு மென்று மேடைக் கூச்சலிடும்பொழுதே நமது திரு. ஆச்சாரியார் அவர்கள். காங்கிரஸ் மத நடுநிலைமை தவறிவிட்டது என்று கூச்சலிட ஆரம்பித்து
விட்டார். உண்மையிலேயே காங்கிரஸ் இவ்வேலைகளைச் செய்ய எண்ணு மானால் நிச்சயமாக நமது திரு.ஆச்சாரியார் போன்ற வைதீகர்கள் அதை ஒழித்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அடுத்தபடியாக, மேல் நாட்டில் மதம் ஒழிந்துவிட்டதாம். நமது நாட்டில் அப்படி ஒழியாமல் பாதுகாக்க வேண்டுமாம். மதம் பாதுகாக்க வேண்டுமென்றால் பிராமண ஆதிக்கம் நிலைநிற்க வேண்டுமென்று தானே அர்த்தம். இனியும், மதத்தைக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்று எச்சரிக்கிறோம். பகுத்தறிவும், கஷ்டமும், பொருளாதாரச் சங்கடமும் அதிகப்படுகின்ற காலத்தில் மதம் தூள் தூளாகப் பறக்கவேண்டியதைத் தவிர நிலைக்க முடியாது.ஆகையால் திரு. ஆச்சாரியார் வீண் கனாக் காண வேண்டாம் என்று மீண்டும் எச்சரிக்கின்றோம்.
குடி அரசு - கட்டுரை - 20.12.1931
குடி அரசு - 1981 (2) 396
துடைமையமரங் கிண்ணி விட்டுத்
தொட்முமையரும் ஆட்டுதல்
கலகம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் முதலிய காரியங்களைப் பார்ப்பதி
லும், அவற்றில் ஈடுபடுவதிலும் சாதாரணமாக எல்லா மக்களுக்கும் ஒரு உற்சாகமும், ஆசையும் உண்டாவது இயல்பான விஷயமாகும். அமைதியாக -பொறுமையாக-தடபுடலான காரியம் ஒன்றுமில்லாமல்- இருப்பதால் மனத்திற்கு ஒருவித உற்சாகமும் இருப்பதில்லை; என்னமோ ஒருவிதமான மந்தமாகவே இருக்கும். ஆகவே, அமைதியாக இருக்கும் மக்களை-கிளர்ச்சியான-கலகமான-ஆர்ப்பாட்டமான காரியங்களைச் செய்யும்படி தூண்டி விடுவது மிகவும் சுலபமான விஷயமாகும். கொஞ்சம் பேசுந்திறதமையுடைய- எழுதுந்திறமையுடைய எவராலும் இக்காரியம் செய்யமுடியும். மக்களை அடக்கி வைத்திருக்கின்ற ஒரு ஸ்தாபனத்தின் மீதோ, அல்லது ஒரு தலைவன் மீதோ அல்லது ஒரு சமஸ்தானத்தின் மீதோ, அல்லது ஒரு ஜமீன் மீதோ அல்லது ஒரு அரசாங்கத்தின் மீதோ பொது ஜனங்கள் ஒப்புக் கொள்ளும்படியான விதத்தில் குற்றங்களையும், பழிகளையும் சுமத்திச் சாதுரியமாகப் பேசினால் போதும். உடனே ஒன்றுந் தெரியாத அவர்கள் துவேஷமும், வெறியும், உணர்ச்சியுங்கொண்டு கலகஞ் செய்வதற்குத் தயாராகி விடுவார்கள். இத்தகைய துவேஷத்தை உண்டாக்கும் தலைவர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் கேட்கப் பொதுஜனங்களும் பின்வாங்க மாட்டார்கள். இதுவே, நமது நாட்டில் மட்டுமல்ல, மற்ற எல்லா நாடுகளிலும் பொது ஜனங்களிடம் படிந்து கிடக்கும் இயற்கை சுபாவமாக
இருந்து வருகிறது. உள்ள நெருப்பை விசிறி கொண்டு வீசிப் பற்றவைப்பது போல் இயற்கை சுபாவத்தைப் பேச்சு வலிமையால் தூண்டிவிடுவது கஷ்ட மான காரியமல்ல. ஆனால், ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதன்கீழ் அடங்கி, உருவான வேலைகளைச் செய்யும்படி மக்களைத் திருப்புவது கொஞ்சம் கடினமான காரியமேயாகும். முதலில் திட்டங்கள் வகுப்பதும், அத்திட்டங் களை எந்தெந்த வழிகளிற்போய் நிறைவேற்றுவது என்பதுமே சாதாரண மானவர்களால் செய்யமுடியாத காரியமாகும். அதிலும், அழிக்கின்ற தொழிலிலேயே ஈடுபட்டுவிட்ட மக்களால் இவ்வாறு ஒரு திட்டத்தின் கீழ் இருந்து வேலை செய்வது மிகவும் கடினமான காரியமேயாகும்.
397 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஒரு நாட்டில் நல்ல அரசியல் நடைபெற வேண்டுமானால் - நல்ல பொறுப்பாட்சி- அதாவது ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டுமானால் அந்நாட்டு மக்கள் மேலேகூறியவாறு கலகத்திலும்-கிளர்ச்சியிலும் ஆர்ப்பாட்டத்திலும் அதிகமாகப் பழக்கப்படாமல் ஒரு திட்டத்தின் கீழ் அடங்கி உருவான காரியங்களைச் செய்வதில் பழக்கப்படவேண்டும். இவ்வாறு பழக்கப்பட்ட பொது ஜனங்களே ஜனநாயக அரசாங்கத்தில் அங்கம் வகித்து அதை வெற்றியோடு நடத்தக் கூடிய சாமர்த்தியமும், அனுபவமும், ஆலோசனையும் உடையவர்களாயிருப்பார்கள். அவர்க ளால் நடத்தப்படும் அரசாங்கமே சிறந்த அரசாங்கமாகவும், மற்ற நாடுகளுக் குப்பின்வாங்காத அரசாங்கமாகவும், செல்வநிலையைப் பெருக்கக்கூடிய, தொழில்கள், விவசாயங்கள் முதலியவைகளைப் புதிய முறையில் விருத்தி செய்யக்கூடிய அரசாங்கமாகவும் இருக்கக்கூடும். நாட்டின் முன்னேற்றத் திற்குரிய புதிய சாஸ்திரங்களையும், சாஸ்திர ஆராய்ச்சி சாலைகளையும் ஏற்படுத்தக்கூடிய அரசாங்கமாக இருக்கக்கூடும். எல்லா மக்களும் செளக்கியமாக வாழ்வதற்கு நாடு முழுவதும் சுகாதார வசதிகளையும், வைத்திய வசதிகளையும் ஏற்படுத்தக் கூடிய அரசாங்கமாக இருக்கக் கூடும். இப்படியில்லாமல் கலகத்திலும், கிளர்ச்சியிலும்-ஆர்ப்பாட்டத்திலுமே போய்க்கொண்டிருக்கிறதிலேயே பழகிக் கொண்டிருக்கிற மக்களிடம் திடீரென பொறுப்புள்ள ஆட்சி வந்து விட்டால், அவ்வாட்சி வெற்றியுடன் நடக்கமுடியாது. கலகத்திலும்-கிளர்ச்சியிலும்-ஆர்ப்பாட்டத்திலுமே அந்த ஆட்சி நடைபெறக் கூடும். இப்படி நடைபெறக்கூடிய ஒரு அரசாட்சியில் ஜனங்களுக்கு எப்படி நன்மையுண்டாக முடியும்? அரசாங்கத்தாரால் கலகங்களை அடக்குவதைக் கவனிப்பதற்கு நேரமிருக்குமா? அல்லது
நாட்டின் நன்மைகளுக்கான உருவான வேலைகளைச் செய்வதற்கு நேரமிருக்குமா? என்று யோசனை செய்து பாருங்கள்.
ஆனால் ஒரு நாடு சுதந்திரம் பெற முயற்சி செய்கின்ற காலத்தில் அந்நாட்டில் பெருங்கலகங்கள் நடப்பது சகஜந்தான் என்பதை எந்நாட்டிலும் நடைபெற்ற சரித்திர உண்மைகளைக் கொண்டு அறிகிறோம். ஆனால், நமது நாடோ நீண்டகாலமாக கலகத்திலேயே மூழ்கியிருந்தாலும்,
சுதந்திரம் பெறுவதற்குரிய வழி ஒரு சிறிதும் ஏற்பட்டதில்லை. இதற்குக் காரணம், ஜாதி, மதவேற்றுமைகளும், அவைகளால் ஏற்பட்ட துவேஷங்க ளுமேயாகும். எந்தச் சுதந்திரங்களுக்கும் இவைகளே தடைகளாக இருந்து வருகின்றன. சமீபகாலத்தில் நமது நாட்டில் அரசியல் கிளர்ச்சி ஏற்பட்ட வுடன் இந்த ஜாதி, மதகிளர்ச்சிகளும், துவேஷங்களும் அதிகப்பட்டுக் கொண்டு வருகின்றதேயொழிய குறைந்தபாடில்லையென்பது நமக்குத் தெரியாத விஷயமல்ல. அரசியல் சுதந்தரம் சிறிது உண்டான பிறகும் அதிக. அரசியல் சுதந்தரம் வேண்டுமென்ற கிளர்ச்சி ஏற்பட்ட பிறகுந்தான் இந்து முஸ்லீம் கலகம், பார்ப்பன பார்ப்பனரல்லாதார் சண்டை, தாழ்த்தப்பட்ட வர்கள் உயர்ந்தவர்கள் சச்சரவு, வெள்ளையர் வெள்ளையரல்லாதார்.
குடி அரசு - 1981 (2) 398
துவேஷம் இவைகள் அதிகப்பட்டன என்பதை யாரும் பொய்யென்று சொல்ல முடியாது. ஆகவே, பல ஜாதிகளும், பலமதங்களும் ஆயிரக் கணக்கான வருஷங்களாக ஜென்மப்பகை கொண்டு அடிக்கடி சண்டை செய்து கொண்டு வாழுகின்ற நாட்டில் சுதந்தரக் கிளர்ச்சி தோன்றுகின்ற போது இந்த ஜாதி மதவேற்றுமைகளும் துவேஷங்களும் முன்வந்து சுதந்தரக் கிளர்ச்சியை நசுக்கி விடுவது இயல்பேயாகும். இதற்கு வேறு உதாரணம் தேட வேண்டிய கஷ்டம் வேண்டாம். நமது நாடே தகுந்த உதாரணமாக இருக் கின்றது.
இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தற்போது நடைபெறும் அரசியல் கிளர்ச்சி உண்மையாக அரசியல் கிளர்ச்சியை உண்டாக்கும் பிரசாரமாக இல்லையென்பதுதான் நமது அபிப்பிராயம். உண்மையான அரசியல் சுதந்தர ஆசையுடையத் தலைவர்களும், தொண்டர்களும் இருந்தால் அவர்களுடைய எண்ணத்தில் நாம் ஒன்றும் குற்றம் கற்பிக்க முன்வரவில்லை. ஆனால், பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களுக்குள் ஜாதித்துவேஷமும், மதத்துவேஷமும் உண்டாகும் வகையில் “அஹிம்சா
தர்மம்” என்ற பெயரால் பிரசாரஞ்செய்து கொண்டு வருகின்றனர் என்பதை
யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு பிரசாரம் பண்ணுவதையே தேசாபிமான மாகவும் கருதுகின்றனர். இவ்வாறு பிரசாரஞ்செய்துவரும் வயிற்றுப் பிழைப்பு தேசாபிமானிகளாலேதான் நமது நாட்டில் கலகங்கள் அதிகப் பட்டுக் கொண்டு வருகின்றன என்பதில் சிறிதும் சந்தேகப்பட வேண்டிய தில்லை. “அஹிம்சா தர்மம்” என்று சொல்லிக் கொண்டு, அந்நிய நாட்டு மனிதர்கள் மேலும், அவர்கள் நிறத்தின்மேலும், அவர்கள் மதக் கொள்கை: யின் மேலும் வெறுப்பும், துவேஷமும் உண்டாகும்படி பிரசாரஞ் செய்து வரும் பொறுப்பற்ற வயிற்றுப்பிழைப்பு தேசாபிமானிகளின் செய்கையால் தான் நமது நாட்டில் புரட்சி இயக்கம் பலப்பட்டுக் கொண்டு வருகிறதென்று கூறுவோம். நீண்டகாலமாக வங்காளமாகாணத்தில் புரட்சி யியக்கம் இருந்து வருவது உண்மையானாலும், ஒத்துழையாமையும் “அஹிம்சா
தர்மத் துவேஷப் பிரசாரமும்” ஏற்பட்ட பின்பு தான் இது அதிக மாக தலை விரித்தாடுகிறது என்பது உண்மையாகும்.
புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வாலிபர்.
கள். வாலிபர்கள் எந்தக்காரியத்தையும் முன் பின் யோசனையில்லாமல் உடனே செய்து முடித்து விடவேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள். அதற்காகத் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் தியாகஞ்செய்ய முன் வரும் குணமுடையவர்கள். இத்தகைய குணமுடையவர்கள் துவேஷத்தை மூட்டும் அரசியல் கிளர்ச்சியின் பலனாக அற்நியர்கள் மீது வெறி கொண்டு கொலைகளும், சதிகளும் தாராளமாகச் செய்ய முன்வந்து விட்டனர் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இச்செய்கைகளே தேசாபிமான முடையதென்றும், சுயராஜ்யம் அளிக்கக் கூடியதென்றும் அவர்கள் கருதக்
399 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
கூடிய நிலைமையை நமது அரசியல் கிளர்ச்சி ஏற்படுத்திவிட்டதென்று கூடக்கூறலாம். இவர்களுடைய இக்கலகச் செயல்களை தேசாபிமானமாக
வும் தியாகமாகவும் ஆரம்பத்தில் நமது நாட்டுத் தேசீயப் பத்திரிகைகள் என்பன பாராட்டவும் தொடங்கின. தேசீயவாதிகள் மேடைகளில் புகழவும் தொடங்கினர். இவர்களுடைய படங்களை வைத்துக் கொண்டாடவும், இவர்களுக்காக விழாக்கள் நடத்தவும் ஆரம்பித்தனர். ஆனால், அப்பொழுதே சில பொறுப்புள்ள தலைவர்கள் இச்செயல்களைக் கண்டித் தனர். நாணயமும், பொறுப்பும் உள்ள எவரும் இச்செயல்களை ஆதரித்து, மேலும் மேலும் வாலிபர்களுக்கு இத்தகைய விஷயங்களில் ஊக்கம் உண்டாக்க முன்வரமாட்டார்கள் என்பது நிச்சயமாகும்.
“தேசாபிமானம்” என்னும் பெயரால் வெறிகொண்டு நிரபராதிகளை
யும், உத்தியோகஸ்தர்களையும் இரக்கமின்றிக் கொலை செய்யும் இந்தப் புரட்சி ஒழிய வேண்டுமானால் பொறுப்புள்ள தேசப் பிரமுகர்கள் அனை வரும் இதனைக் கண்டிக்க வேண்டும். இதனால் வரும்தீமையை வாலிபர்:
கள் உணரும்படி செய்ய வேண்டும். அப்படியில்லாமல் ஒரு பக்கத்தில், அந்நியர்கள் மீது துவேஷத்தைக் கிளப்பிவிடும் “அஹிம்சாதர்ம” பிரசார
மும் . ஒரு புறத்தில் புரட்சியைக்கண்டிப்பதான அறிக்கைகளும் செய்து கொண்டிருந்தால் எப்படி புரட்சி அடங்கும் என்று கேட்கின்றோம். இது, குழந்தையின் துடையையுங் கிள்ளிவிட்டு தொட்டியையும் ஆட்டிவிடுவது போலத்தானே ஆகும்.
சில “தேசீய”ப் பத்திரிகைகள் பொறுப்பின்றிக் கொலைக் குற்றங்க
ளையும், கொலை செய்தவர்களையும், தேசாபிமானமாகவும், தேசாபிமானி களாகவும் போற்றி உற்சாகப்படுத்தும் முறையில் நடந்து கொண்ட காரணத்தால் தானே அச்சுச் சட்டம் ஏற்பட்டது? இவ்வாறு “தேசீய*ப் பத்திரிகைகள் என்பன பொறுப்பற்றதனமாக நடந்து கொண்டிராவிட்டால் அச்சுச் சட்டம் பிறந்திருக்க முடியாது என்பது உண்மை அல்லவா?
அடுத்தபடியாகத் துவேஷத்தைப் பெருக்கிவிடும் முறையில் “அஹிம்சை”ப் பிரசாரம் பண்ணியதன் பலனால் வங்காளத்தில் புரட்சி இயக்கமும் தலைவிரித்தாட தொடங்கவும், அதை அடக்க அரசாங்கத்தார் வங்காள அவசரச் சட்டத்தை ஏற்படுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு விட்டது அல்லவா?
இப்பொழுது ஐக்கிய மாகாணத்தில் வரிகொடாமை இயக்கம்
ஆரம்பித்தவுடன் அரசாங்கத்தாரும் அவசரச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தி விட்டனர். இந்த அவசரச் சட்டங்களை அரசாங்கத்தார் வாபீஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெரும் கிளர்ச்சி செய்கின்றனர். புரட்சி இயக்கத் தையும், வரிகொடா இயக்கத்தையும் நிறுத்துவதற்கு ஒரு முயற்சியும் செய்யா
குடி அரசு - 1981 (2) 400
மல், அவற்றை அடக்க ஏற்பட்ட சட்டங்களின் மேல் மாத்திரம் பழிபோட்டுக் கிளர்ச்சி செய்வதில் என்ன பலனிருக்கிறது? அவசரச் சட்டங்களுக்கு நிரபராதிகளும் ஆளாகிக் கஷ்டப்பட நேரும் என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். அவசரச் சட்டங்களால் இன்னும் அக்கிளர்ச்சி
கள் கொஞ்சம் அதிகப்படும் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், அவசரச் சட்டம் உண்டானதற்கான காரணங்களையும் ஒழிப்ப தற்கு முயற்சி செய்துக் கொண்டு அவசரசட்டங்களையும் வாபீஸ் வாங்கிக் கொள்ளுமாறு கிளர்ச்சி செய்வதே நியாயமும், ஒழுங்குமாகும்.
இவையல்லாமல், மீண்டும் நாட்டில் வரிகொடா இயக்கமும், பகிஷ்
கார இயக்கமும் பலமாக ஆரம்பிக்க வேண்டுமென பிரசாரஞ்செய்யப் பட்டும் வருகிறது. திரு. காந்தியும் சத்தியாக்கிரக சண்டை ஆரம்பிப்பதாகச் சொல்லிக் கொண்டு வருகிறார். “காந்தி - இர்வீன் ஒப்பந்தம்” முடிந்தது முதல், “மறுபடியும் சத்தியாக்கிரக போர் ஆரம்பிப்பதற்கு தயாராய் இருங்
கள்”, என்றே பொறுப்புள்ள காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தனர்; வருகின்றனர். “தேசத்தின் அமைதியையும், சட்டத்தை
யும் , நிரபராதிகளையும் காப்பாற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆகை:
யால், அரசாங்கம் சட்டத்தையும் அமைதியையும் நிலைநிறுத்த பின்வாங் காது” என மேன்மை தாங்கிய வைசிராய் தாம் பேசும் இடங்களில் கர்ஜித்
துக் கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தேசத்தில் மறுபடியும், கலகம் ஏற்படுமாயின் பாமர ஜனங்களுக்குத் தான் அதிகமான கஷ்டமும், நஷ்டமும் உண்டாகும் என்பதில் ஆட்சேபனை உண்டா?
“சுயராஜ்யம்”, “காங்கிரஸ்”, “காந்தி”, “அஹிம்சை”, “தேசாபி மானம்” என்னும் பெயர்களால் காலிகளும், நாணயமற்றவர்களும், பிழைப்பற்றவர்களும் மறுபடியும் ஏமாற்றப் புறப்பட்டு விடுவார்கள். இப் பெயர்களைச் சொல்லி பாமர மக்களிடம் பொருள் பறிக்கத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்களினால் மறுபடியும்
புரட்சியும், அடிதடிகளும், துவேஷங்களும் அதிகப்படக் கூடும். ஆகவே, அரசாங்கத்தார் இவற்றை அடக்கச் சென்ற உப்புச்சத்தியாக்கிரகத்தின் போது அவசரச் சட்டங்கள் பிறப்பித்தது போல இன்னும் பல அவசர சட்டங் களைப் பிறப்பிக்கவும்கூடும்.
இவ்வாறு காங்கிரஸ்காரர்கள் செய்து கொண்டு வரும் பிரசாரங்கள் ஒருபுறமும், புரட்சிக்காரர்கள் நடத்திக்கொண்டு வரும் அக்கிரமங்கள் ஒரு புறமும், அரசாங்கத்தார் இவைகளை அடக்க வெளியிடும் அவசரச் சட்டங்களும், தடையுத்தரவுகளும் ஒரு புறமும் சேர்ந்து நாட்டுமக்களைச் சமாதானமின்றிக் கஷ்ட நிலையில் வாழும்படி செய்வதைத் தவிர வேறு
ஒரு பலனையும் ஏழைமக்கள் காணப்போவதில்லை, அடையப்போவ
401 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தில்லையென்பது தான் நமது அபிப்பிராயம். இதனால், தற்போது உள்ளதைவிட இன்னும், நமது நாட்டின் வியாபார நிலையும், செல்வ நிலைமையும் கஷ்ட நிலைமைக்கு வந்து சேருமென்பது நிச்சயம். மற்றபடி இந்த மாதிரியான வீண் கலகங்களால் ஒரு கடுகளவும் பிரயோஜனம் உண்டாகப் போவதில்லை. நமது நாட்டுச் சாதி மத வேற்றுமைகளுக்கு அழிவுவராமல் இன்னும் கெட்டியாக ஆணியடித்துக்கொண்டு “சுயராஜ்யம்” வேண்டும் என்று கேட்பது கையாலாகத் தனம் என்று தான் கூறுவோம். சுயராஜ்யத்திற்காகச் செய்யப்படும் கிளர்ச்சியில் ஒருபாகத்தை
சாதி, மதங்களை ஒழிப்பதில் செலவு செய்திருந்தால் இதுபோது நாம் எவ்வளவோ மேலான நிலையில் போய் இருந்திருக்கலாம். போதிய சுதந்தரமும் கூடப்பெற்றிருக்கலாம். ஆனால் தேசத்தைக் காட்டிலும், வருணாச்சிரமதருமத்தையும், மதத்தையும் உயிரினுஞ் சிறந்ததாக எண்ணிக்கொண்டிருக்கின்ற “தேசத்தலைவர் களால், நமது நாடு சாதி, மத வேற்றுமை ஒழியப் போவது ஏது? இவைகள் ஒழியாதவரையில் பூரண: சுதந்திரம் கிடைப்பது ஏங்கே ? ஒரு சமயம் கிடைத்தாலும் அதை வைத்து ஆளுந்திறமை தான் இருக்க முடியுமா? என்று தான் கேட்கிறோம்.
ஆகையால் இனியும் உண்மையான சமூக சகோதரத்துவ ஆசையும், உண்மையான தேச முன்னேற்ற ஆவலும் உள்ளவர்கள் அனைவரும் தேசத்தின் அமைதிக்காக உழைக்க முன் வரவேண்டும். புரட்சிச் செயல்
களும், கலகங்களும் நடைபெற வொட்டாமல் எல்லா மக்களுக்குள்ளும் சகோதரத்துவமும், சுயமரியாதையும் தாண்டவமாடக்கூடிய பிரசாரஞ் செய்யவேண்டும். குற்றமற்ற மனமுள்ள வாலிபர்கள் மனத்தில் வெறியை உண்டாக்காமல் அன்பையும், சமதர்ம எண்ணத்தையும் உண்டாக்க வேண்டும். இவ்விஷயங்களைப் பொறுப்புள்ள தலைவர்களும், தொண்டர். களும் மேற்கொள்ள வேண்டுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 20.12.1931
குடி அரசு - 1981 (2) 402
யார் சசயல் 2 யாருக்கு நன்றி 2
காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாச்சிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்க
ளையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண் திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூடநம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லை யென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.
“தென்னாட்டுக் காந்தி” எனக் காங்கிரஸ் கூலிகளால் கொண்டாடப்,
படும் திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப்பற்றி நாம் ஒன்றும் அதிகமாகக்கூற வேண்டியதில்லை.அவர் ஒரு பழுத்த வருணாச்சிரம தரும வாதியாகிய “கடவுள் பக்தர்” ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பையையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத் துணி யையும் சுமந்துகொண்டு போவதைப் போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே
தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப்பற்றியும், புராணங்களைப் பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரசாரத்துடன் கூடவே கடவுள் பிரசாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம் மாதிரியே பிரசாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை யைக் கவனிக்க. வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு :-
“நாளது டிசம்பர் மாதம் 28-தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றைய தினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். அன்று மாலை சாதி, மத, கட்சி பேதங்கள் எல்லாவற்றையும் மறந்து, தமிழ் நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்
403 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
தில் கூடவேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், செளக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டிடங்கள் எல்லாவற்றிலும் தேசீயக்கொடி பறக்க விடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்”. (இந்தியா! என்பது அவ்வறிக்கையாகும்.
இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, “திரு. காந்தியவர்கள் பிரயாணஞ்செய்த காலத்தில் உடம்பு செளக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ்செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங் களைச் செய்து விட்டார். இதற்காக “ஆண்டவன்” என்பவனுக்கு நன்றியும், பிரார்த்தனையும் செய்வது ஒன்று. தேசீயக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்யவேண்டும்” என்பதாகும்.
உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக் காரணம் ஆட்டுப்பாலும் பேரிீச்சம்பழங் களும்,நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக் கெனத் தனியாகப் பாதுகாப்புக்கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.
இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப் பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக் காரணம் ரயில், கப்பல், மோட்டார். முதலியவைகளேயாகும்.
ஆகவே திரு. காந்தி அவர்கள் செளக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்தவேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார். போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார். ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப் பால் சப்ளை செய்த ஆடு
களுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக் கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும். இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங்
கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசீயக்கொடி பறக்க விடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுக வைக் கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.
தேசீயக்கொடி பறக்கவிடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கியிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். சொந்த வீடுகளில் தேசீயக்கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்றுமைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக்கூடும் என்பது நிச்சயம்.
குடி அரசு - 1981 (2) 404
அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசீயக்கொடி பறக்கவிடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திருவிழாவாகவும், கொண்டாடப்பட வேண்டு மென் பதும் திரு.ராஜகோபாலாச்சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திரு
விழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிரஸ் பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக் காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாமலிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு - துணைத் தலையங்கம் - 20.12.1931
405 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
திரு. படேலின் வைதீகம்
திப்பாரா ஜில்லா மாஜிஸ்திரேட்டை இரண்டு மாணவிகள் அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற கொடுஞ் செயலைக்கண்டிக்கும் பொருட்டு பம்பாயில் பெண்களின் கண்டனக்கூட்டம் ஒன்று கூடிற்று. அதில் காங்கிரஸ் தலைவர் திரு. வல்லபாய் படேல் அவர்கள் பேசும் போது கீழ்க்கண்டவாறு கூறினார்.
“இது மிகவும் கொடிய குற்றம். இந்தியப் பெண்களின் பரம்பரை வழக்கத்திற்குத் தகுந்த செய்கையாகாது. இந்தியப்பெண்
கள் சமூகத்திற்கே இது ஒரு நீங்காத பழியாகும். அவர்களுடைய புகழுக்கே கேடு விளைக்கின்றது. உயிர்களை அழிக்கக்கூடிய கருவிகளைப் பெண்கள் கையில் எடுப்பதே தகாத காரியம். உயிரை உற்பத்தி செய்வதும் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையேயன்றி, கொல்லும்படி கட்டளையிடப்படவில்லை”'
என்பது திரு. படேல் அவர்களின் பேச்சு. இதிலுள்ள அபிப்பிராயங்களில் கொலை செய்யும் அக்கிரமத்தன்மையைக் கண்டிக்கும்சொற்கள் முழுவதை
யும் நாம் பாராட்டுகிறோம். இவ்வாறு கொலை செய்த-வெறி பிடித்த பெண்: களின் கொடுந்தன்மையை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம்.
ஆனால் “உயிரை உற்பத்தி செய்வதும் அதைக் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை” என்று கூறிய பழய வைதீக அபிப்பி ராயத்தை நாம் சிறிதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். பெண்கள் பிள்ளை பெற்று வளர்க்கக்கூடிய வெறும் யந்திரங்கள் அல்லர். அவ்வாறு யந்திரங்களாக வைக்கப்பட்டிருப்பதும் தவறு; ஆண் மக்களின் சுய நலம்;
இந்து மதத்தின் ஆபாச வழக்கமாகும். பெண்கள் ஆண்களைப்போலவே சகல உரிமைகளையும் பெறத்தகுதியுடையவர்கள் என்பது திரு. படேல் அவர்களின் பரந்த அறிவுக்குத் தோன்றாமல் போனதைக்கண்டு ஆச்சரியப்படுகின்றோம்.
குடி அரசு - செய்திவிளக்கம் - 20.12.1931
குடி அரசு - 1981 (2) 406
அவர்களும் நாமும்
நாம் விடுதலை பெற்று நம்முடைய துன்பங்கள் எல்லாம் ஒழிந்து சுகத்தோடு வாழ வேண்டுமென விரும்பினால், முதலில் நம்மை நாம் சீர்திருத்தஞ்செய்து கொள்வது அவசியமானதாகும். நாம் விடுதலை பெறுவதற்குப் பெரிய தடைகளாக நம்மைச் சூழ்ந்து கொண்டு நிற்பவை எவை என்று ஆராய வேண்டுவது முதல் வேலை.ஆராய்ந்து கண்டுபிடித்து அத்தடைகளை அடியோடு நீக்குவதற்கான எண்ணத்தைப் பலப்படுத்திக் கொண்டு, பின்பு அவற்றை ஒழிப்பதற்குரிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்; கண்டு பிடித்த அவ்வழிகளை உறுதியோடும், உண்மையோடும், அஞ்சாமலும் கைக்கொண்டு அந்தத் தடைகளை ஒழிக்க முயல வேண்டியதே சிறந்த செய்கையாகும். இவ்வாறு தான் மற்ற நாகரீகம் பெற்ற- சுயேட்சை பெற்ற நாடுகளில் உள்ளவர்கள் நடந்து அவர்கள் தற்காலத் திலிருக்கும் உன்னத நிலையை அடைந்திருக்கின்றனர். நமது நாட்டிலோ பலருடைய மனத்திலும், விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் சில ஆண்டுகளாக உறுதிப்பட்டு நிலைத்திருந்தாலும், எந்த வழியில் அந்த விடுதலையை அடைவது என்பதைப் பற்றிச் சரிவரச்
சிந்திக்காமலும், சரியான முடிவுக்கு வர மனமில்லாமலும் இருக்கின்றனர்.
“விடுதலையை வாங்கித் தருகிறோம்” என்று சொல்லித் தேச மக்களுக்குத் தலைமை வகித்து நடத்துகிறவர்களும், சரியான வழியை மக்களுக்குக் காட்டாமல் இருக்கின்றார்கள். மற்ற நாட்டினர் தங்கள் சமூகத்
தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் குடி கொண்டிருந்த எந்தெந்த நடவடிக்கைகளை ஒழித்ததன் மூலம் விடுதலை பெற்றார்கள் என்பதை இந்தத் தலைவர்கள் என்பவர்கள் அறியாதவர்கள் அல்லர். அறிந்திருந்தும், நம்மிடத்திலும் அது போல் உள்ள அந்த நடவடிக்கைகளாகிய தடை களைப் பற்றிய தீமைகளை ஜன சமூகத்திற்கு எடுத்துக் காட்டாமலும், அவைகளை ஒழிக்க வேண்டுமென்று கூறாமலும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் அவைகளின் மேல் இவர்கள் கொண்டுள்ள ஒருவிதக் குருட்டு நம்பிக்கையேயாகும். அந்த நமது முன்னேற்றத்திற்குத் தடையான நம்முடைய நடவடிக்கைகள், “நமது முன்னோரால் கையாளப்பட்டவை: அவைகள் தெய்வீகத் தன்மை
407 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
யுள்ளவை: ஆகையால் அவற்றை அழிக்கக்கூடாது” என்ற ஒரு பகுத்தறி
வற்ற, பிடிவாதமான எண்ணமே யாகும்.
ஆகையால் தான், நமது நாட்டில் சமூகச் சீர்திருத்தம் செய்ய முன் வந்தவர்களும், வருகின்றவர்களும், அரசியல் விடுதலைப் பெற முன் வந்தவர்களும், வருகின்றவர்களும், பழமையான காரியங்களுக்கு ஒரு கெடுதியும் இல்லாமல் அவைகளுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதை முதன்மையாக வைத்துக் கொண்டே, சமூகச் சீர்திருத்தமும், அரசியல் விடுதலையும் பெற விரும்பினார்கள், விரும்புகின்றார்கள். நாம் வேறொரு நல்ல இடத்தை அடைய வேண்டுமானால், இருந்த பழைய இடத்தை விட்டுப் புறப்பட்டால் தான் குறிப்பிட்ட நல்ல இடத்திற்குப் போக முடிவதைப் போல், பழமையாக நம்மிடம் குடி கொண்டிருக்கும் பல நடவடிக்கைகளை ஒழித்தால் தான் புதுமையான விடுதலையை அடைய முடியும் என்பதை அவர்கள் சிறிதும் சிந்திப்பதில்லை; சிந்தித்தாலும், தமது இரத்தத்துடன் கலந்து உடம்பில் ஊறிப் போயிருக்கும் “பழய நம்பிக்கை” அவர்களைப் பழமையை விட்டு அசைய விடுவதில்லை.
பழமை யென்னும் பாழும் கோட்டைக்குள் உறுதியாக உட்கார்ந்து கொண்டே புதுமையான விடுதலை, சமூக சமத்துவம் இவற்றைப் பெற வேண்டுமெனப் பேசி வருகின்றனர். இதற்காக இவர்கள் செய்யும்படி காட்டுகின்ற முயற்சிகளும், வழிகளும், இன்னும் நாம் பல ஆயிரம் ஆண்டு களானாலும், தற்போது இருக்கும் நிலைமையிலிருந்து இம்மியளவும் மாறாமல் நிறுத்தி வைக்கக் கூடிய வழிகளாகவும் முயற்சிகளாகவுந் தான் இருக்கின்றன.
இவற்றை விளக்கச் சில உதாரணங்களைக் கீழே எடுத்துக் காட்டு கிறோம். அவற்றைக் கொண்டு மேலே நாம் கூறியவைகளின் உண்மையை ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். நாகரீகம் பெற்ற நாடுகளில் வாழுகின்ற அறிஞர்களும், சீர்திருத்தக்காரர்களும், அரசியல் வாதிகளும், தமது நாட்டு மக்கள் மனத்தில் தன்னம்பிக்கையை வேரூன்றச் செய்கின்
றனர்; நன்மை தீமையைப் பகுத்தறிந்து சிந்தித்து ஒரு காரியத்தைச் செய்யும் படி மக்களின் எண்ணத்தைத் திருப்புகின்றனர். பழமையைப் பற்றிச்
சிறிதும் பொருட்படுத்தாமல், காலத்திற்கேற்ப தம்முடைய நடத்தைகளை
யும். எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொள்ளும்படியான மனப்பான்மையை உண்டாக்குகின்றனர்.
நமது நாட்டில் வாழும் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள். செய்கையோ இதற்கு முற்றிலும் வேறு பட்டதாகவே இருக்கின்றது. நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை சிறிதும் உண்டாகாதபடி “ஆண்டவன்” என்பவனை நம்புவதனாலும், பிரார்த்தனைகளை நடத்துவதாலுமே
குடி அரசு - 1981 (2) 408
காரியங்களை முடிக்கலாமென்னும் மூடத்தனத்தைப் பரவச் செய்கின்றனர். எதையும் ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவை உண்டாக்காமல், “மதக் கட்டளை” “கடவுள் மொழி” “பெரியோர் சொல்” “மகாத்மா வாசகம்” என்று சொல்லி அவற்றைச் சரியோ, தப்போ அப்படியே நம்பும்படியான மனப்பான்மையை உண்டாக்குகின்றனர், காலத்திற்குப் பொருந்தாத பழய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் எண்ணத்தை உண்டாக்காமல், “பழமையான நடவடிக்கைகள்” பரிசுத்தமானவை, அவற்றை மாற்றிக் கொண்டால் நமது மதத்திற்கு அழிவு வந்து விடும்; நமது புராதன நாகரிகத்திற்குச் சிதைவு வந்து விடும்; ஆகையால் பழமையை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தை உறுதியாக நிலைக்கச் செய்யக்கூடிய வேலையையே செய்கின்றனர். நாகரீக தேசத்தார்கள், தம்முடைய நாட்டு மக்களை உலக நாகரிகத்திற்கு வேண்டிய சிறந்த கல்விகளை கற்கும்படி செய்கின்றனர். அதாவது:- கைத்தொழில் சம்பந்தமான கல்வி, வியாபார சம்பந்தமான கல்வி, விவசாய சம்பந்தமான கல்வி, விஞ்ஞான சாஸ்திர சம்பந்தமான கல்வி, சுகாதார சம்பந்தமான கல்வி, அரசியல் சம்பந்தமான கல்வி முதலிய உலக வாழ்க்கைக்குப் பயன்படத் தகுந்த கல்வியை வளர்க்க முயற்சி செய்கின்றனர். ஆனால் நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, மேற்கூறிய பலவகைப்பட்ட கல்விகளைக் கற்பதற்கு வசதியுள்ள நூல்கள். நிரம்பிய பாஷையையே நமது நாட்டை விட்டு ஒழித்து விட வேண்டு மென்று வேலை செய்கின்றனர். மக்களுக்கு உலக நாகரீகத்தைப் போதிக் காமல், சோம்பேரித் தனத்தையும், மூடநம்பிக்கைகளையும் உண்டாக்கக் கூடிய சில புராணங்கள் மாத்திரம் உள்ளதும், சிறந்த இலக்கியங்கள் கூட இல்லாததுமாகிய ஹிந்தி பாஷையையே எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று பிரசாரம் பண்ணுகின்றனர்.
மற்ற நாட்டு தலைவர்கள் எல்லோரும், மக்களுடைய கஷ்டமான உழைப்பைக் குறைத்து, எல்லாத் தொழில்களையும் இயந்திரங்களைக் கொண்டு விருத்தி செய்து, நாட்டின் விவசாயம், கைத்தொழில் முதலியவை களை வளர்க்க முயற்சிக்கின்றனர். இதன் மூலம்,நமது நாட்டு விவசாயமும், கைத்தொழிலும், அந்நிய நாட்டு விவசாயத்திற்கும், கைத்தொழில்களுக்கும், சளைக்காமல் அவைகளுடன் போட்டி போடவும், வியாபாரத்தின் மூலம் தங்கள் நாட்டில் செல்வத்தை பெருக்கவும் முயற்சி செய்து வெற்றி பெறுகின்றனர்.
நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ இயந்திரங்களின் மூலம் தொழில்களை விருத்தி செய்யவேண்டும் என்னும் எண்ணமே மக்களிடம் தோன்றாமலிருக்கும்படியும், எல்லாத் தொழில்களையும் பிறர் உதவி இல்லாமல் தாமே கையினால் செய்து கொள்ள வேண்டும் என்னும் குறுகிய மனப்பான்மையையும் “தேசீயம்” என்னும் பெயரால் உண்டாக்குகின்றனர். இதனால் நாட்டின் விவசாயம், கைத்தொழில்கள் முதலியன வளர்ச்சியடைய
409 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஒட்டாமலும், எந்த வகையிலும் அந்நிய நாடுகளுடன் வியாபாரம் செய்து போட்டி போட முடியாமலும், நாட்டின் செல்வ நிலை வளர முடியாமலும் பாழ்படுத்துகின்றனர்.
மற்ற நாகரீகம் பெற்ற நாடுகளிலோ, தொழிலாளர்கள் முதலாளிகள், ஏழைகள் பணக்காரர்கள், தாழ்ந்த சாதிக்காரர்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்ற வித்தியாசங்கள் ஒழிந்து, எல்லா மக்களும், சம சுதந்தரமும், சம சுகமும் அடைவதற்கான வழிகளையும் முயற்சிகளையும் செய்து கொண்டு வருகின்றனர்.
நமது நாட்டில் உள்ள தலைவர்கள் என்பவர்களோ, வருணாச்சிரம தரும மனப்பான்மையைச் சிறிதும் மாற்றிக் கொள்ளாமல், கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றவர்கள் நிரந்தரமாகவே கஷ்டப்பட்டுக் கொண்டே வாழவும், ஏழை மக்களை நசுக்கிப் பிழிந்து அவர்கள் உழைப்பின் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் அப்படியே அனு பவித்துக் கொண்டிருக்கவுமே பாதுகாப்புத் தேடிக் கொண்டு வருகின்றனர்.
மற்ற நாட்டினர், தங்கள் நாட்டு வாலிபர்களுக்குச் சிறந்த கல்விப் பயிற்சியும், தொழில் செய்யும் திறமையும், நாட்டிற்கு ஆபத்து வருங் காலத்தில் அதைக் காப்பாற்றுவதற்காக ராணுவ பயிற்சியும் கொடுத்து அவர்களைச் சிறந்த வீரப்பிரஜைகளாகச் செய்கின்றனர்.
நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, நமது வாலிபர்களுக்குக் கல்விப் பயிற்சியும், தொழிற்பயிற்சியும் கற்றுக் கொள்ளும் படியான ஊக் கத்தை உண்டாக்காமலும்,ராணுவப்பயிற்சியை அடைய வேண்டுமென்னும் எண்ணத்தை மிகுதிப்படுத்தாமலும் வாவிபர்களைக் கோழைகளாக்கு
கின்றனர். அன்றியும் “சத்தியாக்கிரகம்” “ஆத்ம சக்தி” என்னும் பெயர்
களால் நமது வாலிபர்களை அடிபடவும், உதைபடவும், மான ஈனமின்றி உண்டியல் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு, தெருத்தெருவாக, வீடுவீடாகப் போய் பிச்சை வாங்கும் பேடிகளாகவும் செய்கின்றனர்.
மற்ற நாட்டுத் தலைவர்கள், மக்களுடைய பகுத்தறிவுக்கும், தன்னம் பிக்கைக்கும், முயற்சிக்கும் தடைகளாயிருந்து, அவர்களைச் சோம்பேறி களாகவும், மூடர்களாகவும் ஆக்கி வைத்துக் கொண்டு, வெகுகாலமாக நிலை பெற்று வரும் மதங்களையும், கடவுள்களையும், வேதங்களையும், ஒழித்து இவைகள் மக்களின் கவனத்தைக் கவராமல் இருக்க முயன்று ஜெயம் அடைகின்றனர்.
நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ நமது தேசத்தில் ஒன் றோடு ஒன்று கலகம் புரிந்து கொண்டிருக்கும் மதங்கள், கடவுள்கள், வேதங்கள் இவைகளால் உண்டான நாகரீகங்கள் ஆகிய பலவகையான
குடி அரசு - 1981 (2) 410
பிரிவுகள் எல்லாம் என்றும் அழியாமல் நிலைத்திருப்பதற்கு வேண்டிய பாதுகாப்புகளை உறுதியாக ஏற்படுத்தி அவைகளை நிலைக்க வைக்கப் பாடுபடுகின்றனர்.
மற்ற நாட்டுத் தலைவர்கள், மனித சமூகத்திற்குப் பயன்படாமல் ஒரு சிலரின் சுய நலத்திற்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் மடங்களின் சொத்துக்களையும், கோயில்களின் செல்வங்களையும், மற்றும் மத ஸ்தா பனங்களின் பொருள்களையும் பறிமுதல் செய்கின்றனர். அவற்றைத் தேசத்தின் சுகாதாரம், கல்வி, கைத்தொழில் முதலியவைகளுக்குச் செலவு செய்து தேசத்தை உயர்ந்த நிலைமைக்குக் கொண்டு வருகின்றனர்.
நமது நாட்டுத் தலைவர்கள் என்பவர்களோ, மடங்களின் சொத்துக்
களும், கோயில்களின் சொத்துக்களும், மற்றுமுள்ள தரும ஸ்தாபனங்களின் சொத்துக்களும் பரம்பரையாக எந்தக் கூட்டத்தாரின் சுய நலத்திற்குப் பயன் பட்டு வந்ததோ அந்தக் கூட்டத்தாரின் நன்மைக்கே இன்னும் நிலையாக உபயோகப்பட்டு வரவேண்டுமெனப் பாதுகாப்புத் தேடுகின்றனர். இவை களை மாற்றுவது மதவிரோதமென்றும், “கடவுள்” என்பவருக்கு விரோத மான செய்கை என்றும், அவைகளில் தலையிட பொது ஜனங்களுக்கும், அரசாங்கத்தாருக்கும் உரிமையில்லை என்றும் கூச்சலிட்டுக் கொண்டு வரு
கின்றனர். இதன் மூலம் ஏராளமான செல்வத்தை தேசத்திற்குப் பயனில்லா
மல் சில சுயநல கூட்டத்தாரே அனுபவித்து வருகின்றனர்.
மற்ற நாட்டில் உள்ளவர்கள், பெண்மக்களும், ஆண்மக்களைப் போலவே சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் சம சுதந்தரம் அனு பவிக்க உரிமை வழங்கி வருகின்றனர்.
ஆனால் நமது நாட்டிலோ, “பால்ய விவாஹத்தை தடுப்பது மத விரோதமான காரியம்; விதவைகளைக் கல்யாணஞ்செய்து கொள்ள அனு மதிப்பது மதத்துரோகம்; கோஷா முறையை நீக்குவது “கடவுள்” கட்ட ளைக்கு விரோதம்; “உயிர்களை உற்பத்தி செய்வதும், அவைகளைக் காப்பாற்றுவதுந்தான் பெண்களுக்கு இடப்பட்ட கட்டளை” என்று கூறிப் பெண்மக்களுடைய சுதந்திரத்திற்கு விரோதமாக வேலை செய்கின்றனர்.
மற்ற நாடுகளில், ஜனங்களுக்கு லெளகீக ஞானம் உண்டாகும் பொருட்டும், சுகாதாரத்தோடும், பகுத்தறிவோடும் வாழக்கூடிய வழிகளைக் காட்டும் பொருட்டும், சுகாதாராக் காட்சிகள், கல்வி கண்காட்சிகள், விவசாயக் கண்காட்சிகள், கைத்தொழிற் கண்காட்சிகள், விஞ்ஞான சாஸ்திர. சம்பந்தமான கண்காட்சிகள் முதலியவைகளை நடத்தி வருகின்றனர். இவ்வகை யிலேயே ஏராளமான பணங்களைச் செலவிட்டுத் தேச மக்களை அறிவுடைய மக்களாக்குகின்றனர்.
411 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
நமது நாட்டிலோ மக்களுடைய அறிவை மழுங்கச்செய்து அடிமைப் படுத்துவற்காகப் பொய்யாகவும் புனைந்துரைகளாகவும் எழுதப்பட்ட புராணங்களை நம்பி அவற்றில் உள்ள கதைகளையே திருவிழாக்களாக ஏராளமான பொருளைச் செலவு செய்து நடத்தி வருகின்றனர். அல்லா
மலும், புராணக்கதைகளையே ஆதாரமாகக் கொண்ட பண்டிகைகளையும் கொண்டாடுவதுடன், தேசீயத்தின் பேரால் இன்னும் புதுப்புதுப் பண்டிகை களையும் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இக்காரியங்களின் மூலம் மக்களை இன்னும் குருட்டு நம்பிக்கை யுடைவர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும் ஆக்கி வருகின்றனர்; மக்களுடைய முயற்சியையும், நேரத்தையும், பாடுபட்டுத் தேடிய செல்வங் களையும் பயனற்ற வீணான வழியிற் செலவு செய்யும்படி தூண்டி விடுகின்றனர். மற்ற நாட்டில் உள்ளவர்கள், சந்திரமண்டலத்தில் குடியேறு வது எப்படி? அதற்கு மேல் உள்ளதாகக் கூறப்படும் உலகங்களை கண்டுபிடிப்பது எப்படி? ஆண் பெண் சேர்க்கையில்லாமல் மக்களை சிருஷ்டிப்பது எப்படி? ஒவ்வொரு மக்களும் தனித்தனியே ஆகாய மார்க்க மாகப் பறந்து செல்வது எப்படி? என்று ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றார்.
கள். இதற்காக அந்நாடுகளில் உள்ள அறிஞர்கள் தங்கள் காலத்தையும் அறிவையும் செலவழித்து வெற்றிப் பெற்றுக் கொண்டும் வருகின்றார்கள். ஆனால் நமது நாட்டில் உள்ள பண்டிதர்களும், அரசியல்வாதிகளும், தீண்டாதவர்கள் கோயிலுக்குள் செல்லுவதும், அவர்கள் பொதுச்சாலை
களில் நடப்பதும், பொதுப்பள்ளிக்கூடங்களில் படிப்பதும், பொதுக்கிணறு
களிலும், பொதுக்குளங்களிலும் தண்ணீர் எடுப்பதும், மதவிரோதமா? அல்லவா? சாஸ்திர விரோதமா? அல்லவா? கடவுள் கட்டளைக்கு விரோ தமா? அல்லவா? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். அன்றி
யும் ஐந்து தலைமுறைக்கு முன் தாயாதியாக இருக்கும் குடும்பத்தில் ஒருவர்: வெளியூரில் இறந்து போய்விட்டார் என்ற சங்கதியை இறந்த இரண்டு தினங்கள் கழிந்த பின் கேள்விப்பட்டால் அப்பொழுது ஸ்நானம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற விஷயத்தைக் கண்டுபிடிக்க நமது
நாட்டுப் பண்டிதர்கள் சாஸ்திரங்களை புரட்டிக் கொண்டு, ஒருவர்க் கொருவர் அபிப்பிராய வேறுபாடுகளுடன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்.
கள். நாகரீகம் பெற்ற அவர்கள் தம் நாட்டுக் குழந்தைகள், ஆண் பெண்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி போதிப்பதற்காகச் சட்டங்கள் செய்து, அதற்கேற்றாற் போல் நாடெங்கும் ஏராளமான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்திக் கல்வியை விருத்தி செய்து வருகின்றார்கள். நாமோ கல்விக்கு அதிதேவதை “சரஸ்வதி” என்பவள் என்று வைத்துக்கொண்டு ஒவ்வொரு வருஷமும் பூஜை செய்து வருவதோடு, பதினெட்டாம் பெருக்கு என்னும் ஆடிமாதப் பண்டிகையில் நமது புத்தகங்களை எல்லாம் ஆற்றில் கொண்டு போய் போட்டு அழித்து வருகிறோம். இந்த மாதிரியான எந்த விஷயங் களைப் பார்த்தாலும் அவர்கள் முன்னே சென்று கொண்டிருப்பதும், நாம்
குடி அரசு - 1981 (2) 412
பின்னே சென்று கொண்டிருப்பதுமாகவே இருக்கின்றோம். நாகரீகம் பெற்ற நாட்டினராகிய அவர்கள் செய்யும் எந்தக் காரியங்களும் இவ்வுலக வாழ்க் கைக்குப் பயன் தரக் கூடியனவாகவே இருந்து வருகின்றன; இவ்வுலகில் எல்லா மக்களும் அறிவோடும், நாகரீகத்தோடும், சுகத்தோடும், சமத்துவத் தோடும் வாழுவதற்குச் செய்யும் காரியங்களாகவே காணப்படுகின்றன. ஆனால், நாம் செய்யும் காரியங்களோ, இவ்வுலக வாழ்க்கையில் மற்ற நாகரீக நாட்டினருடன் சமநிலைக்கு வர வழியில்லாமல், புராணக் காலத் திலிருந்த அநாகரிக மக்களாகவே இன்னும் இருந்து கொண்டிருக்கவே உபயோகப்படுகின்றன; இன்னுஞ் சிறிது கவனித்துப் பார்த்தால் நமது
காரியங்கள், நமக்குள்ள கடவுள், புராண மத நம்பிக்கைகளின் மூலம் “நாம் இறந்த பின் எங்கேயோ போய் எதையோ அடைந்து சுகம் அனுபவிக்கப் போகிறோம்” என்ற எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டு செய்யப்படும் காரியங்களாகவே இருக்கின்றன. இன்னும் காலப்போக்கை அறிந்த அவர்கள் செய்யும் காரியங்களைப் பற்றிச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூற வேண்டுமானால், அவர்கள், இனி வரப் போகும் காலம் எப்படியிருக்கும் அக்காலத்தில் நமது சமூக வாழ்வு, அரசியல் வாழ்வு இவைகள் எப்படியிருக்கும்? அவைகளுக்குத் தகுந்தபடி நம்மை இப் பொழுதே எப்படிச் சரிப்படுத்திக் கொள்ளுவது? என்ற கவலையோடும், எண்ணத்தோடுமே காரியங்களைச் செய்து கொண்டு போகின்றார்கள். இக் காரியங்களுக்குத் தகுந்த வகையில் தங்கள் கொள்கைகளையும், நம்பிக்கை களையும், பழக்கவழக்கங்களையும் தாராளமாக மாற்றிக் கொண்டு செல்லு கின்றார்கள். நாமோ, “ருக்வேத காலத்தில் எப்படியிருந் தோம்? தொல் காப்பியக் காலத்தில் எப்படியிருந்தோம்?'
அந்தப் பழய நாகரீக நிலைக்குப் போவதே, நாம் செய்ய வேண்டிய தேசப்பணி: மதக்கடமை என்ற எண்ணத்துடன் அவைகளைப் பற்றி ஆராய்வதும், பிரசாரஞ் பண்ணுவதுமாகவே இருக்கின்றோம். இந்த வகையாக இரண்டு வேறுபட்ட வழிகளில் வேலை செய்து கொண்டுவரும் தேசத்தார்களில் எவர் அறிவு படைத்தவர்கள்? எவர் அறிவில்லாதவர்கள்? எவர் முன்னேற்றமடையக்கூடியவர்கள்? எவர், தாம் இருக்கும் கீழ் நிலையை விட்டு மாறாமலே இருக்கக் கூடியவர்கள்? என்பதைப் பகுத் தறிவு கொண்டு ஆலோசித்துப் பாருங்கள். கால நிலைக்கு ஏற்றவாறு தங் களைச் சரிப்படுத்திக் கொண்டு போகின்ற தேசத்தார் முன்னேற்றமடை வார்களா? அல்லது “எது எப்படியானாலும், எமது நாட்டுப் பழய நாகரீ கத்தை விட மாட்டோம்” என்று முரட்டுப் பிடிவாதம் செய்து கொண்டிருக்
கும் தேசத்தார் முன்னேற்றமடைவார்களா? என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று நமது நாட்டில் நடைபெறும் “தேசிய இயக்கம்” என்ப வைகள் நம்முடைய பழைய நாகரீகத்தை நிலை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தானே பாடுபடுகின்றன? “தேசீய இயக்கத்தைச் சார்ந்து நின்று வேலை செய்யும் மற்றவர்களும் இக்கொள்கைக்குத் தானே
413 பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
ஆதரவளித்து வருகிறார்கள். திரு.காந்தியுள்பட எல்லாத் தேசீயத் தலைவர்களும், வைதீக பாழும் கோட்டைக்குள் உட்கார்ந்துக் கொண்டு தானே “ராஜ்ய” சுதந்திரத்திற்குப் போராடுகின்றனர்? தற்சமயத்தில் பரிபூரண ராஜ்ஜிய சுதந்திரம் கிடைத்து விட்டாலும், அதைக் கொண்டு நமது பழய நாகரீகத்தை நிலை நிறுத்தத் தானே முயற்சி செய்யப்படும்? “பழய நாகரீகத்தைக் கொண்டு தான் நமது நாட்டைச் சமாதானமாக வைத்திருக்க வேண்டும்” என்ற கொள்கையைக் குரங்கு பிடியாக பிடித்துக் கொண்டிருப் பவர்கள் கையில் தானே தற்கால நிலையில் ராஜீய அதிகாரம் போய்ச் சேரும்? இத்தகைய வைதீக மனப் பான்மையுடையவர்கள் கையில் தேசம் அகப்பட்டு ஏழைமக்கள், கஷ்டப் படுகிறவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள். முதலியவர்கள் அவர்களுடைய பரிதாபகரமான நிலையிலேயே இருப்பது சரியா? அல்லது இவர்களுக்கு அனுகூலஞ்செய்யாவிட்டாலும், இவர்கள் முன்னேற்றத்திற்குத் தடை செய்யாமல் இருக்கின்ற கூட்டத்தார் கையில் அதிகாரம் இருப்பதனால் இப்பொழுது ஒன்றும் முழுகிப் போய்விடவில்லை என்பது சரியா? என்பவைகளில் எது சரியென்பதை நன்றாய் யோசனை செய்து பாருங்கள்.
அதன் பிறகு, நாம் தேசீயத்தின் போக்கைக் கண்டிப்பதைப் பற்றியும், திரு-காந்தி போன்ற வைதீகர்களின் போக்கைக் கண்டிப்பதைப் பற்றியும் குறை கூறலாம். எதையும் பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்க்காமல், “மதம்”, “கடவுள்”, “வேதம்” இவைகளின் மேல் பாமர மக்கள் வைத்திருக்கும் மூடநம்பிக்கையைப் போலவே, “காங்கிரஸ்”. “காந்தி”, “தேசீயம்”” என்ற பெயர்களின் மேலும், குருட்டு அபிமானமும், மூட நம்பிக்கையும் வைத்துக் கொண்டு சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் குறைகூறுவதில் ஏதாவது பொருள் உண்டா என்று கேட்கிறோம். ஆகையால், குருட்டு அபிமானமில்லாமல், மூடநம்பிக்கையில்லாமல், ஆத்திரமில்லாமல், பொறுமையோடு, பகுத்தறிவோடு நினைத்துப் பாருங்கள்! அப்பொழுது நாங்கள் கூறுவதில் உள்ள உண்மை விளங்காமற் போகாது என்று தான் சொல்லுகிறோம்.
குடி அரசு - தலையங்கம் - 27.12.1931
குடி அரசு - 1931 (2) 414
அருஞ்ணசால் ALITHET
தையற்காரர்கள் விரலில் அணியும்
அங்குஸ்தான்
பூண் இயலாதவர்கள், சக்தியற்றவர்கள். பரண், மேல்மாடி நெறி தவறல், வரம்பு மீறல் வழக்கம், ஒழுக்கம்
அசக்தர்கள் அட்டாலி
அதிக்கிரமம் அனுஷ்டானம் ஆகர்ஷணை ஆஸ்பதம் இராஜிய துறை
ஈர்ப்பு, உள்வாங்குகை
இடம், பற்றுக்கோடு அரசியல் துறை ஒன்றுக்கு இரண்டு, சரிமடங்கு அதிகமாக காதுகளால் கேட்க முடியாத
ஒட்டிக்கிரட்டி
கர்கைடூரம் கலிதம் (ஸ்கலிதம்) காயமாகி
விந்து நழுவுகை, ஒழுகுதல் உறுதியாகி
சிவப்பு இரத்தினக்கல் இராட்டை, இராட்டையின் முன்னேறிய கை கூடிவிடும், வெற்றி கிட்டிவிடும் சளிக்கவ்வம், கோளை தீர்வை விதிக்கப்படாத தரிசு யாருக்கும் உரிமையாக்கப்படாத அரசு நிலம்)
கெம்பு
சர்க்கா
வடிவம்சித்தித்துவிடும் சிலேத்துமம் சிவாஜி நாமா
சுக்கிலம் சுரோணிதம் சூசனை
விந்து கருமுட்டை
குறிப்பு, மறைமுகமாக சுட்டிக்
காட்டுதல்
சூன்ய திசை சேகண்டி
அழிவு வட்ட வடிவமான உலோக மணி வகை
பெரியாரின் எழுத்தும் பேச்சும்: தொகுதி - 13
415
தட்டேந்தி பிச்சை (கோவில்களில் தட்டுகாக!
தட்டப்பிச்சை
நிதம்பம்
அல்குல்
நியமுகம்
நியமனம்
நிர்த்தாரணம்
நிலையிடுகை:
பத்ததி
ஒழுங்கு, வழிகாட்டும் நூல்
பர்த்தி
இட்டு நிரப்புதல், இணை, ஒப்பு புகழ்பெற்ற மீணிலை நிறுத்தம், மறு சீரமைப்பு மன விருப்பெண்ணம்
பிரக்யாதி
புனருத்தாரணம் மனோராஜியம் முகாலோபணம்
முகம் பார்த்தல், முக தரிசனம்
லெளகீக ஞானம் வாசஸ்தானம்
உலகியல் அறிவு இருப்பிடம் தெளிவாக நலிவு வரையறை, எல்லை, அத்து
ஸ்பஷ்டமாக கஷ$ணதிசை
ஹத்து
குடி அரசு - 1931 (2)
416